கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சீலாமுனை கூத்து மீளுருவாக்கம்

Page 1

மீளுருவாக்கம்

Page 2

சீலாமுனை கூத்து மீளுருவாக்கம்
-sher.fishpauleisuh
மூன்றாவது கணி பதிப்பு حلگے۔

Page 3
விடயம்
ஆசிரியர்
முகவரி
முதற் பதிப்பு
பக்கங்கள்
அளவு
பிரதிகள்
வெளியீட்டாளர்
அட்டை வடிவமைப்பு:
அட்டை புகைப்படம்:
கணினி வடிவமைப்பு:
அச்சகம்
சீலாமுனை கூத்து மீளுருவாக்கம் - அனுபவப் பகிர்வு - 1
கூத்து
செ. சிவநாயகம்
ஜேம்ஸ் வீதி, சீலாமுனை,
மட்டக்களப்பு, இலங்கை.
ஜூன் 2007
48
A5
5OO
மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு.
சுசிமன் நிர்மலவாசன்
சீதை ஆர்ப்பனகைவதை - மீளுருவாக்கிய வடமோடிக் கூத்து - 2005, இராமர், சீதை, இலக்குவன் வரவுக்காட்சி
6oup. arLJпShagenf
வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி: 06o 2650361
OO/ =

oftoffflueOrff)
எனது தந்தை அமரர். சி. செல்லையா அவர்களுக்கும், சீலாமுனையின் கூத்துப் பாரம்பரியத்தை வளர்த்த காலஞ்சென்ற அண்ணாவிமார்கள், கூத்துக் கலைஞர்கள்
அனைவருக்கும் இந் நூல் சமர்ப்பணம்

Page 4
ன்னுரை
காலனித்துவம் கட்டமைத்து விட்டுள்ள நவீன கல்விக் கொள்கைகளின்படியான ஆய்வு முறையியல்களின் கீழ் எந்த வொரு துறையினைச் சார்ந்தும் பின்னிப்பிணைந்து வாழ்ந்து கொண்டி ருக்கும் சாதாரண மனிதர்களுடைய கருத்துக்கள், அபிப்பிராயங்கள் என்பவை கணக்கில் கொள்ளப்படாத தன்மைகளே இருந்து வருகின்றன.
நவீன ஆய்வு எழுத்துக்களில் ஆய்வுத் துறைகளுடன் சம்பந்தப்பட்ட மக்கள் அரைகுறையான அறிவு கொண்டவர்களாக வும், புத்தி கம்மியானவர்களாகவும் வலியுறுத்தப்பட்டு, ஆய்வாளர்க ளுக்கு சில தகவல்களை வழங்கும் தகவல் வழங்கிகளாக மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பதனைக் காண முடிகின்றது.
நவீன ஆய்வு முறைமைகள் மக்களை மையப்படுத்தாது மாறாக ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளரை மட்டும் மையப் படுத்தி, ஆய்வினை மக்களிடமிருந்து பிரித்து வரையறுக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்திற்குரியதாக ஆக்கியிருப்பதனைக் காணலாம்.
இந்த நவீன ஆய்வியலின்படி பிரச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வின் உருவாக்கம் என்பது பிரச்சினையுடன் சம்பந்தப் பட்ட மக்களை விடுத்து வேறு சிலரால் வடிவமைக்கப்படும் விடயமாக அமைந்து விடுகின்றது.
உதாரணமாக இதுவரை காலமும் ஈழத்துப் பாரம்பரிய அரங்குகள் பற்றி முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ள ஆய்வுகள், மாநாடுகள், கருத்தரங்குகள் என்பவற்றில் எல்லாம் எந்தளவு அந்த அரங்குகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரம்பரியக் கலைஞர் களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் இடம் வழங்கப்பட்டிருக் கின்றது என்பதை ஆராய வேண்டியுள்ளது.

மிகப்பெரும்பாலும் பாரம்பரியக் கலைகளுடன் சம்பந்தப் பட்ட பாரம்பரியக் கலைஞர்களையும், மனிதர்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நவீன அறிஞர்கள்? தாம் விரும்பியபடி ஒருதலைப்பட்சமாக முடிவுகளை, தீர்மானங்களை நிறைவேற்றியு ள்ளார்கள்.
இத்தகைய ஒருதலைப்பட்சமான முடிவுகளையும், தீர்மானங் களையும் தமது அறிவின் அதிகாரப் பலத்துடன் அரங்க அறிவி யலாக கட்டமைத்தும் கற்பித்தும் வந்துள்ளார்கள்.
இந்தவகையான நவீன ஆய்வியலின் பொருத்தமின்மைகள் பற்றிய உரையாடல்கள் உலகம் முழுவதும் கேள்விகளுக்குட் படுத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க, ஆசியக் கண்டங்களில் வாழ்ந்த காலனிய நீக்கப்போராளிகளால் இவ்விடயம் மிகுந்த விமர்சனத்திற் குட்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இந்த முன்னெடுப்புக்களின் விளைவாக காலனியம் கட்டமைத்துக் கற்பித்துவந்த நவீன சிந்தனைகள், கருத்தியல்கள், ஆய்வுமுறையியல்கள் என்பவற்றிற்கு மாற்றான புதுப்புதுச் சிந்தனைகள் கருத்தியல்கள், ஆய்வு முறையியல்கள் என்பன செயல்வாதங்களாக உருவாக்கம் பெற்றன.
இந்தவகையான செயல்வாதச் சிந்தனைகள், கருத்தியல்கள், ஆய்வு முறையியல்கள் யாவும் பின்நவீனச் சிந்தனைகள் என அடையாளங் காணப்படுகின்றன.
இந்த வகையில் நவீன ஆய்வு முறைமைகளுக்கு மாற்றாகக் கண்டறியப்பட்ட ஓர் ஆய்வு முறைமையாகவே பங்குகொள் ஆய்வு முறைமை அமைந்துள்ளது.

Page 5
பங்குகொள் ஆய்வு முறைமையானது அதன் சரியான நடைமுறைகளுடன் செயற்படுத்தப்படும்போது அங்கே மக்கள் மையப்பட்ட அபிவிருத்திக்கான வழிகளின் சாத்தியப்பாடுகள் அதிகரிப்பதனைக் கண்டு கொள்ளமுடியும்.
ஆய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்ட மக்கள் பிரச்சினை களுக்கான தீர்வினை ஆராயும் ஆய்வாளர்களாக உருவாக்கம் பெறுவார்கள்.
இவ்விதம் தமிழ் அரங்கச் சூழலில் குறிப்பாக ஈழத்து தமிழ் அரங்க ஆய்வு வரலாற்றில் முதற் தடவையாக மேற் கொள்ளப்பட்டுள்ள, சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் பங்கு கொண்ட சீலாமுனை யைச் சேர்ந்த மூத்த கூத்துக் கலைஞர்களுள் ஒருவரான திரு செ. சிவநாயகம் அவர்கள் இந்த ஆய்வுச் செயற்பாட்டின் ஊடாகத் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்து கொள்கின்றார்.
சீலாமுனையின் கூத்துப்பாரம்பரியத்தில் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு கொண்டு வந்துள்ள இவருடைய அனுபவப் பகிர்வுகள் பொதுவாக கூத்துப்பற்றியும், சிறப்பாக சீலாமுனையில் இடம்பெற்றுள்ள கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு குறித்தும் விளங்கிக் கொள்ள உதவும் ஆதாரங்களுள் ஒன்றாக அமைகின்றது.
- து. கெளரீஸ்வரன் -

gboonafhrfluff 22 GDI
கூத்துக்கலை தொன்றுதொட்டே சமூகங்களால் முன்னெடுக்கப் பட்டு வரும் ஓர் கலை. இவ்வாறு இருந்துவரும் கூத்துக்கள் அரச அதிகாரங்களை மேம்படுத்தியும், மனிதர்களைச் சாதி என்ற அடிப்படையில் பிரித்தும் அச்சாதிகளை இழிவுபடுத்தியும், பெண் களை அடக்கி ஒடுக்கியும் ஆண் ஆதிக்க அதிகார நோக்கில் அதிகார வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்களைக் கொண்டே ஆற்றுகை செய்யப்பட்டு வந்துள்ளன.
காலங்காலமாக கூத்துக்களில் இதே நிலமைதான் நீடிக்கப் பட்டு வந்தன. இக் கூத்துக்கலை பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படும் இன்றைய நிலையில், 2002ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவு ரையாளர் திரு.சி. ஜெயசங்கர் அவர்களால் சீலாமுனைக் கிராமத் தில் முதல் முதலாக கூத்து மீளுருவாக்கப் பங்கு கொள் ஆய்வுச் செயற்பாடொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாய்வுச் செயற்பாட்டில் முழுமையாகப் பங்கு கொண்டவர் என்ற வகையில் இச்சிறு நூலை எழுதுவதற்கான அறிவும் ஆற்றலும் எனக்கு ஏற்பட்டன.
காலனித்துவம், நவகாலனித்துவம், உலகமயமாக்கல் என்ற காலச்சூழலில் இவற்றை எதிர் கொள்ளும் வகையில் எமது மொழி, பாரம்பரிய மரபு பண்பாடு கலை கலாச்சார விழுமியங்களை பாதுகாத்துக் கொண்டு சமகாலத்திற்கேற்ப கூத்துக்களை மீளுரு வாக்கம் செய்து கொள்ள இக் கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செயற்பாடு வழிபுரிந்துள்ளது.
இந்த வகையில் இச்சிறு நூலை எழுதுவதற்கான

Page 6
உற்சாகத்தை வழங்கியவரும் எனது எழுத்துக்களை செழுமை செய்தவருமான கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ஜெயசங்கர் அவர்களுக்கும், இச்சிறுநூல் வெளிவருவதற்காக அயராது உழைத்த திரு.து.கெளரீஸ்வரன் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்துடன் இந்நூலை வடிவமைத்துள்ள ஒவியர் சுசிமன் நிர்மலவாசனுக்கும், கணிணியில் பதிப்புச் செய்த வணசிங்கா அச்சகத்தை சேர்ந்த மை.சுபாஜெனி அவர்கட்கும், சிறப்பாக அச்சிட்டுள்ள வணசிங்கா அச்சகத்தினருக்கும் எனது நன்றிகள்.
விசேடமாக சீலாமுனையில் இடம்பெற்ற கூத்துமீளுருவாக்க ஆய்வுச் செயற்பாட்டில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு வந்துள்ள சீலாமுனையைச் சேர்ந்த அனைத்து கூத்துக்கலைஞர்களுக்கும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-செ.சிவநாயகம், சீலாமுனை, மட்டக்களப்பு.

கூத்துக்கலையின் தனித்துவமும், அதன் பாரம்பரிய மரபுமுறை வளர்ச்சியும், இக்கலை மூலம் நான் பெற்ற அனுபவங்களும், பயிற்சிகளும்
கஉத்துக்கலை என்பது ஒரு தெய்வீகக் கலையாகும். இதனாலோ என்னவோ ஆதி இறைவனாகிய சிவபெருமானுக்குக் கூத்தன் என்று பெயர் வந்தது போலும். இக்கலை தொன்றுதொட்டே, ஈழத்தமிழர்களின் உரித்துடைய கலைகளுக்குள் ஒன்றாக மிகச்சிறப்புடன் விளங்கியது. தற்போதும் இலங்கையின் வடகிழக்கு, மலையகத் தமிழ் மக்களினால் பேணிப்பாதுகாக்கப்பட்டும் ஆடப்பட்டும் வருகின்றது.
இக்கலைக்கு வடமோடி தென்மோடி என இரு பிரிவுகளும், இவ்விரு மோடிகளும் கலக்கப்பட்ட விலாசம் என்ற பிரிவும் உண்டு. என்றாலும் வடமோடி, தென்மோடி ஆகிய இரண்டுமே மிகப் பிரதான மானவை. இடைக்காலங்களில் சினிமா நாட்டிற்குள் அறிமுகப்படுத்தப் பட்டதால், அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் அதற்குள் சிக்கிவிட்டதால், இக்கலைபற்றி அறிந்து கொள்வதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டாததனாலும், படித்தவர்கள் எனப்படுவோரின் இக்கலை பற்றிய அலட்சியப் போக்கினாலும் தமிழர்களின் பாரம்பரி யமான இக்கலை மெல்ல மெல்ல பலராலும் மறக்கப்பட்டு வந்தது.
இதைக் கண்ணுற்ற, அக் கால கட்டத்தில் வாழ்ந்த அண்ணாவிமார்கள் இக்கலை முற்றாக அழிந்துவிடாவண்ணம் பல கூத்துக்களை இயற்றிப்பாடி, பல கஸ்ரங்களின் மத்தியிலும் பல கூத்தர் களை உருவாக்கி பாடி ஆடவைத்து பல தடவைகள் ஊர்களுக்குள்ளும் அவ்வூர் சார்ந்த கோயில்களிலும் அரங்கேற்றம் செய்தார்கள். இவ் அண்ணாவிமார்களுடையதும் கூத்து ஆர்வலர்களுடையதும் செயல்க ளினால் இக்கூத்துக்கலை முற்றாக அழிந்துவிடவில்லை என்பதை எம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.
இக்காலகட்டத்தில் பல அரங்கேற்றக் களரிகளைக் கண்ணுற்ற பலகல்விமான்கள் இக்கலையால் கவரப்பட்டு அண்ணாவிமார்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இக்கலை சம்பந்தமாக அவர்கள் மூலம் பல விடயங் களை அறிந்து கொண்டு ஆச்சரியப்பட்டு இவ் அண்ணாவிமார்களின் துணையுடன் ஆய்வுகளை நடத்தி வந்துள்ளார்கள்.

Page 7
என்றாலும் இக்கல்விமான்கள் கூத்துக்கலை பற்றி அறிமுகப் படுத்திய நடைமுறைகளில், கூத்துக்கலையின் தனித்துவமும் மரபு முறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதே எனது கருத்தாகும். கூத்து என்று அரங்கேறும் போது அது முழுக்க முழுக்க வட்டக்களரியிலேயே அரங்கேறும். இதுவே ஈழத்தமிழர்களுக்கு உரிமையான எம்முன்னோர் களால் கண்டுபிடிக்கப்பட்ட அரங்காகும். இவ்வரங்கே இக்கலைக்குரிய மரபுமுறையும் இதன் உயிர்நாடியும் தனித்துவமும் ஆகும்.
கூத்து என்று சொல்லி தற்போது பாடசாலைகளில் ஆடப்படும் கூத்துக்களை படச்சட்ட மேடைகளில் அரைமணித்தியாலத்திற்குள் ஆடி முடித்து விடுகிறார்கள். இதைக்கூத்து என்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்.
1. கூத்து என்று ஏற்றுக்கொள்வதாயின், பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருவது போல கூத்தர் தன்னையும் சுற்றிக் கொண்டு கூத்துக்களரியையும் சுற்றிக்கொண்டு தாளங்களுக்கு ஏற்றாற்போல சுற்றி ஆடும் பாரம்பரியமான ஆடும் முறையே கூத்துக் களில் உண்டு. படச்சட்ட மேடையில் கூத்து என்று சொல்லி ஆடுவதால் மேடையைச் சுற்றி எப்படி ஆடுவது என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
2. படச்சட்ட மேடைகளில் கூத்து என்று சொல்லி கூத்தை ஆடுவதால் கூத்தில் உள்ள பாரம்பரியப் பரிமாணங்களும்; கூத்தின் தனித்துவமும்; மரபு முறையும் இழக்கப்படுகிறது.
3. ஈழத்தமிழர்களுக்கென்று முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரங்கின் உருவம் மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்படுகிறது. இது கூத்துக்கலைக்கும் எம் முன்னோர்களுக்கும் செய்யப்படும் துரோகம் மட்டும் அல்ல கூத்துக்கலையின் அழிவிற்கே வழிகோலுகிறது.
4. முற்காலங்களில் கூத்துக்கள் ஆரம்பம் முதல் அரங்கேறும் வரை அண்ணாவியாரின் நெறிப்படுத்தலின் கீழேயே கூத்து சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் நடந்தேறுகின்றன. இதனால் அண்ணா வியாருக்கே அங்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. இதுவே கூத்தின் மரபு முறை. ஆனால் படச்சட்ட மேடைகளில் வரும் கூத்துக் களில் அண்ணாவியாரைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.

5. படச்சட்ட மேடைகளில் கூத்தை ஆடுவதால் பார்வையாளர்க ளுக்குக் கூட சுதந்திரம் இருப்பதில்லை. காரணம் கூத்துக்களில் வரும் சம்பவங்களைப்பற்றி உடனுக்குடன் உரையாடுவது அங்கு தவிர்க்கப்படுகிறது. வட்டக்களரியில் கூத்தை ஆடும் போது பல சுதந்திரங்களைப் பார்வையாளர்கள் பெறுவார்கள். நிலத்தில் படுத்துக்கொண்டே கூத்தை ரசிப்பார்கள். பக்கத்தில் உள்ளவர் களிடம் கூத்தின் செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்த நேரத்தில் களரியை விட்டு வெளியில் சென்றுவருவார்கள். இப்படியான சுதந்திரங்களைப் படச்சட்ட மேடையில் காணமுடியுமா?
6. படச்சட்ட மேடையில் கூத்தர் கூத்து ஆடும்போது மறைந்துநின்று மத்தளம் வாசிக்கும் அண்ணாவியார் எப்படி கூத்தரின் கால்தாளங் களைக் கவனித்து மத்தளம் வாசிப்பது? கூத்தர் சிலவேளைகளில் பாடல்களிலோ, கால்தாளங்களிலோ பிழைகள் ஏற்படும் பட்சத்தில் அப்பிழைகள் வெளியே தெரியாவண்ணமும் கூத்தர் அப்பிழைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணமும் மத்தளத்தின் மூலம் தாளங்களை மாற்றி மேல் எழுப்புவது ஒரு சிறந்த அண்ணாவியாரின் திறமை யினாலேயாகும். இதைப் படச்சட்ட மேடைகளில் மறைந்து நிற்கும் அண்ணாவியாரால் செய்ய முடியுமா?
7. அரை மணித்தியாலத்தில் படச்சட்ட மேடையில் கூத்தைச் செய்வ தாயின் கூத்தின் முழு அம்சங்களும் மரபுமுறையும் இழக்கப் படுகிறது. என்பதே எனது கருத்தாகும்.
கல்விமான்களும், ஆய்வாளர்களும் ஒரு கூத்தை மேடை ஏற்று வதாயின் அண்ணாவிமார்களின் துணை இல்லாமல் மேடை ஏற்றியதில்லை. கூத்துக்கலையின் தனித்துவத்தை உணராத ஒரு சில அண்ணாவிமார்கள் மேடைகளில் நடைபெறுகின்ற கூத்து என்று சொல்லி ஆடப்படும் கூத்துக்களுக்கு மத்தளம் வாசிக்கப் போவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்அண்ணாவிமார்கள் கூத்துக்கலை நடை முறைபற்றி கல்விமான்களுடன் கலந்துரையாடி விவாதிக்காது அவர்கள் படித்து பட்டம் பெற்றவர்கள் என்ற பயத்தின் காரணமாகவோ என்னவோ அவர்களுடன் ஒத்துழைத்து மேடைக் கூத்துக்களுக்கு மத்தளம் வாசிக்கச் செல்வது விமரிசனத்திற்குரியது.
தமிழ் வளரவேண்டும். தமிழ்க்கலாசாரங்கள் வளரவேண்டும் என்று பாடுபடுவர்கள் தமிழ்க் கலாசாரத்துடன் ஒன்றாகப்
/2/2 G3)Z

Page 8
பிணைந்திருக்கும் தமிழர்களுடைய பாரம்பரியமான இக்கூத்துக் கலையை அதற்குரிய வட்டக்களரியில் ஆடுவதைவிட்டு, மேலைத்தேய அரங்குமுறையான படச்சட்ட மேடைகளில் கூத்து என்று சொல்லி அரங்கேற்றுவதை தயவு செய்து கைவிடவேண்டும். அதைக் கூத்து என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கூத்துச் செயற்பாடுகள் பரம்பரையாக எம்முன்னோர்கள் கடைப் பிடித்து வந்த நடைமுறைகளாகும். இம்முன்னோர்கள் பின்வந்தவர் களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் அறியக்கிடக்கிறது. இதற்குச் சான்றாக எனது தந்தையாரும் கூத்தில் வரும் பல விடயங்கள் பற்றி எனக்குச் சொல்லித்தந்திருக்கிறார். எனது தந்தை அக்காலங் களில் பல கூத்துக்களை ஆடி பல அனுபவங்களைப் பெற்ற நல்ல குரல் வளமுடைய ஒரு சிறந்த கூத்து கலைஞர் ஆவார்.
எனவே எழுத்து ஆவணங்களைவிட பரம்பரை பரம்பரையாக வாய்மொழி உபதேசமாகப் பெறப்பட்ட கூத்து விடயங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் சீலாமுனை என்னும் கிராமத்தில் கூத்தாடும் கலைஞர்களாகவும் அண்ணாவிமார்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மிகநீண்ட கூத்தின் பாரம்பரியத்தைக் கொண்ட கலைஞர்களாகத் தற்போதும் கூத்துக்களை ஆடி அரங்கேற்றும் மிகச் சிறப்பான கலைஞர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனது தந்தையார் அக்காலங்களில் எனக்கு கூத்தின் பல விடயங்களைச் சொல்லிக் கொடுத்தார். அதில் முக்கியமான விடயம் ஒன்றை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஒரு கூத்தைப் பழக ஆரம்பிக்கும் போது அதன் பாடல்கள், ஆட்டத்தன்மைகள், தாளங்கள், நடிப்பாற்றல்கள், பாத்திரங்களுக்கேற்ப ஆட்களைத் தெரிவு செய்தல். கூத்தர்களின் குரல்வளங்களைப் பாடச் சொல்லிப் பரீட்சித்தல் போன்ற பல முக்கிய விடயங்களும்; படையெடுப்பு, சண்டை ஆட்டக்காட்சிகளின் போது மத்தளத்தின் மூலம் மெட்டுக்கள் தாளங்கள் மாற்றப்படும் முறைகளைச் சொல்லித்தந்ததை தற்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
கூத்துக்களுக்கு மெருகூட்டுவது முக்கிய வாத்தியங்களான மத்தளமும் சால்ராவும் (சல்லரி) சதங்கையுமே ஆகும். எமது தனித்துவமான கூத்துக்கலையில் எமது முன்னோர்கள் மேலைத்தேய வாத்தியங்களைப் புகுத்தவில்லையே, சகல காட்சிகளுக்கும் மத்தளம்,

சல்லரி, சதங்கை மூலமாகவே காட்சிகளுக்குத் தகுந்தபடி தாளங்களை மாற்றி மாற்றி மெருகூட்டினார்கள். நாடகம் என்பது அதிகமாக வசனங்களால் ஆக்கப்பட்டதென்பதே பலருக்கும் தெரிந்த உண்மை. இதில் ஒரு சில இடங்களில் பாடல்களும் வருவதுண்டு. கூத்துக்கள் முற்று முழுதாகப் பாடல்களால் ஆக்கப்பட்டது. இதிலும் ஒரு சில இடங்களில் வசனங்கள் வருவதுண்டு. கூத்திலிருந்துதான் நாடகம் பிறந்ததோ என்னவோ முன்னோர் களின் கூத்து ஏடுகள், கூத்துக்களைப்பற்றி எழுதப்பட்ட எழுத்தாவன ஏடுகளை நான் பார்வையிட்டபோது நாடகம் என்ற சொல் இறுதியில் முடிந்திருப்பதைக் கண்ணுற்றேன்.
உதாரணமாக இராமாயணத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கூத்தை இராம நாடகம் என்றும் இதேபோன்று பாரதக் கதையைமையமாகக் கொண்டு எழுதப்பட்ட கூத்தை தர்மபுத்திரா நாடகம் என்றும் இதேபோல வாளபீமன் நாடகம், நொண்டி நாடகம், அணுஉருத்திர நாடகம், கற்பலங்காரிநாடகம், இதேபோன்று இன்னும் பல கூத்து ஏடுகளில் நாடகம் என்ற சொல் உள்ளடக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன்.
மாணிக்கவாசகப் பெருமான் சிவபொருமானை உருகி பின்வருமாறு பாடியுள்ளார்.
ஆடுகின்றிலை கூத்தடை யான் கழற்கு அன்பிலை ~ என்புருகி பாடுகின்றிலை பதைப்பதம் - செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதமிலை - தணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றிலை தெருவதோறநீலை செய்வதொன்று அறியேனே
கூத்து, கூத்தன் என்ற சொற்கள் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகின்றது. இக்கூத்துக் கலையின் அனுபவங்களும் பயிற்சிகளும் நான் எந்தப் பள்ளிக் கூடங்க ளிலோ பாடப் புத்தகங்களிலோ படிக்கவில்லை. சீலாமுனைக் கிராமத்தில் கூத்துக்களை ஆடும் சமுகத்திற்குள் இருப்பவர்களில் நானும் ஒருவன் அனுபவ ரீதியாகவே நான் இவ் விடயங்களை அறிந்து கொண்டவன். பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறாத மேதைகள் இக்
G5% ހުށަހަހަހަހަކަހަހަހަހަ2/ޗޗަޗ/.

Page 9
கூத்தாடும் சமூகத்திற்குள் இலை மறை காயாக இருந்து கொண்டி ருப்பதை நான் கண்டிருக்கின்றேன்.
இப்படிப் படித்துப் பட்டம் பெறாத மேதைகளான அண்ணா விமார்கள் திடீரென்று பாட்டுக்களை எழுதி அவர்களாகவே மெட்டு அமைத்து அதற்கான தாளங்களையும் அமைப்பதில் வல்லவர்களாக தற்போது கூட சிறந்து விளங்குகின்றார்கள். இவ் அண்ணாவிமார் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களின் பல நுணுக்கங்களைக் கற்றுத் தேறியவர்கள். பல கல்விமான்களுக்கு கூத்துக்களின் பல விடயங் களைக் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
இப்படியான அண்ணாவிமார்கள் மிகத் திறமைவாய்ந்த மேதைகளாக இருப்பினும் கல்விமான்கள் கூத்துவிடயங்களைப் பற்றி அறிந்து கொள்ள அவர்கள் காலடிக்கு வரும்போது கூத்து விடயங்கள் பற்றி முழுமையான அறிவும் ஆற்றலுமிக்க அண்ணாவியார் கூத்தின் முழுப்பங்கையும் சொல்லிக் கொடுக்காது சிலவற்றை மட்டும் கூறிவிட்டு மற்றையவைகள் தனக்குத் தெரியாததுபோல் நடித்து விடுவார்கள். கல்விமான்களும் இவருக்கு இவ்வளவுதான் தெரியுமென்று நினைத்து வேறு அண்ணாவிமார்களைத் தேடுவார்கள்.
பல கல்விமான்களுக்குப் பேட்டி அளித்த கூத்துக் கலையில் மிகத் தேர்ச்சி பெற்ற ஒரு அண்ணாவியாருடன் சில வருடங்களுக்கு முன் கூத்து விடயங்கள் பற்றி கலந்துரையாடியபோது (தற்போது அவர் இறந்துவிட்டார்) நான் கேட்காமலே பல விடயங்களை அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
தம்பி கூத்துக்கலை பற்றி அறிந்து கொள்வதற்காக பல கல்வி மான்கள் என்னிடம் வந்தார்கள். சில விடயங்களை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு நீங்கள் எங்கள் கூத்தாடும் சமுகத்துடன் சேர்ந்து ஒரு பாத்திரம் ஏற்று கூத்தை ஆடுவீர்களா என்று கேட்டேன். யாருமே எம்முடன் இணைந்து கூத்தாடுவதற்கு முன்வரவில்லை. எல்லோருமே மறுத்து விட்டார்கள். பின் ஏன் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து மற்றவிடயங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது என மழுப்பி அவர்களை அனுப்பி விட்டேன். அவர்களுடைய தேவைகளுக்கு மட்டுமே என்னை நாடினார்கள் என்பதை பின்னால் நான் அறிந்து கொண்டேன். இப்படிப்பட்டவர்களுக்கு கூத்துக் கலை பற்றி முழுவிடயங்களையும் சொல்லி கொடுப்பதா என்றுகூறி

உங்களைப் போன்றவர்களுக்கு நாங்கள் கூத்துக்கள் பற்றி முழு வதையும் சொல்லித்தருவோம் என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறினார்.
காரணம் நீங்கள் கூத்துக்கலை பற்றி மரபுமுறை தவறாது கூத்துக்களில் பங்குகொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் அப்படி அல்லவே என்று என்னிடம் கூறியதைத்தான் நான் மேலே குறிப்பிட்டி ருக்கிறேன்.
1954ம் ஆண்டு நான் பிறந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் என்னும் கிராமத்தில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கூத்தைப் பழகிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஆறுவயதாக இருந்ததனால் கூத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இக் கூத்துப் பழகும் இடத்திற்கு தந்தையுடன் நானும் செல்வேன். தந்தை கூத்துக் கலைஞராக விளங்கியதால் அக்கூத்தைப் பழக்கிய அண்ணாவியாரு டன் சேர்ந்துக் கொண்டு அக்கூத்தைப் பழகிக்கொண்டிருந்த கலைஞர்களுக்கு எப்படித் தாளங்களுக்கு ஏற்றாற்போல கால்களை வைப்பதென்றும், எப்படிப் பாடல்கள் முறிவடையாமல் பாடுவதென்றும், எப்படி விருத்தங்கள் தாளங்களுக்கேற்ப ஏற்றி இறக்கிப் பாடுவதென்றும் சொல்லிக் கொடுத்ததை தற்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அக்கூத்தில் பங்குகொண்ட எனது தந்தை உட்பட பல கலைஞர்கள், அண்ணாவிமார்கள் பிற்காலங்களில் சகலருமே இறந்து விட்டார்கள். ஆனால் ஏறாவூரைச் சேர்ந்த திரு. நற்குணசிங்கம் என்பவர் மட்டுமே தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இக்கூத்துப்பழகும் இடத்திற்கு தந்தையுடன் சென்று பார்த்துக்கொண்டிருப்பேன். இதுவே கூத்துக்களில் நான் பெற்றுக் கொண்ட முதலாவது பயிற்சி என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். அச்சம்பவங்கள் ஆறுவயதாக இருந்த போதும் எனது மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டன.
பின் எங்கள் குடும்பம் இடம் பெயர்ந்து மட்டக்களப்பில் உள்ள சிலாமுனை என்னும் கிராமத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1956ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் சீலாமுனையில் பல கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றம் செய்தார்கள். இவ்விடைப்பட்ட காலங்களில் நான் சிறுவனாக இருந்த போதும் இக் கூத்துக்கள் பழக்கப்படும் இடங்களுக்கு தந்தையுடன் சென்று கூத்தை எப்படிப் பழக்குகிறார்கள் என்பதைப் பார்க்கத்
泛形
Z
''/%

Page 10
தவறுவதில்லை. இதன் காரணமாக கூத்துக்கலையின் ஆட்டங்கள், தாளங்கள், பாடல்கள், கூத்துக்கலையிலுள்ள சில நுணுக்கங்கள் போன்ற வைகளை கூத்துக் கலைஞர்களுடனும், அண்ணாவிமார்களுடனும் கலந்துரையாடியதன் காரணமாக இக்கலை பற்றி என்னால் ஓர் அளவு புரிந்து கொள்ள முடிந்தது. அக் காலங்களில் பல மெட்டுக்களில் உருவாக்கப்பட்ட பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இதுபோல பாடல்களை நாமும் எழுத வேண்டும் என்று அப்போதே எனது மனதில் சிந்தனைகள் உருவாகியது. 1969ம் ஆண்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும். நரசிங்க வயிரவ சுவாமி முன்றலில் இராம நாடகம் என்னும் கூத்துப் பழக்கப்பட்டு அதே இடத்தில் வெகுசிறப்பாக அரங்கேற்றமும் செய்யப்பட்டது. இது பழக்கப்பட்ட நாட்களில் தினமும் அவ்விடம் சென்று அந்த ஆட்ட முறைகளை அண்ணாவியாரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.
பின் 1975ம் ஆண்டளவில் எமது கூத்தாடும் சமூகத்தால் மதுரவாசக நாடகம் என்னும் கூத்து பழக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இது சின்ன உப்போடையில் நடந்தேறியது.
இதற்குப் பின் 1983ம் ஆண்டளவில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் அண்ணாவிமார்கள் பலபேர் மரணம் அடைந்து விட்டமையாலும் கூத்தாடும் சமூகத்திற்குள் ஏற்பட்ட பொருளாதாரக் கஷரங்கள் காரணமாகவும் சமூகத்திற்குள் கூத்துக்கள் ஆடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் நீண்ட இடைவேளைக்குப் பின் 1990ம் ஆண்டளவில் நாட்டில் தற்காலிக சமாதானம் ஏற்பட்ட கால கட்டத்தில், சீலாமுனைப் பகுதியில் தர்மபுத்திர நாடகம் எனும் கூத்து முறையாகப் பழக்கப்பட்டு இரண்டு தடவைகள் அரங்கேற்றமும் செய்யப் பட்டது. இதே கால இறுதிப்பகுதியில் சின்ன உப்போடைக் கிராமத்தில் பிரமராட்சத யுத்தம் என்னும் கூத்தும் பழக்கப்பட்டு அரங்கேறியது. இவ்விரு கூத்துக்களிலும் முக்கிய பங்கு கொண்டவன் நான்.
தர்மபுத்திரன் எனும் கூத்தைப்பழக ஆரம்பித்தபோது நான் பெற்ற சில அனுபவங்கள் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இக் கூத்திற்கு முதல் அண்ணாவியாராக மறைந்த திரு. அ.பூ.மு கிருஸ்ணப்பிள்ளை என்பவரே இருந்தார். இவர் இரண்டு கண்களும் பார்வையற்றவர். வடமோடிக் கூத்தில் சகல தாளங்களும் அறிந்தவர் மட்டுமல்லாது மத்தளம் வாசிப்பதில் மிகவும் வல்லவர். அது மட்டுமல்லாது நினைத் தவுடன் பாடல்களை இயற்றும் வல்லமை கொண்ட ஒரு திறமை

மிக்க அண்ணாவியாராக விளங்கியவர். பல அண்ணாவிமார்களுக்கும் குருவாக விளங்கியவர். நானும் இவரையே குருவாக மதிப்பவன். கூத்துப் பாடல்களை எப்படி இயற்றுவது என்பதை நான் முதன்முதலாக இவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். கூத்துக்களில் வரும் பல தாளங்களை இவர் எனக்கு சொல்லித்தந்திருக்கின்றார்.
எம்மிடம் இருந்த தருமபுத்திரன் கூத்துப்பிரதிகள் மிகவும் பழுதடைந்தும்; எழுத்துக்கள் அழிந்தும் இருந்ததனால் எனக்கு அப்பாடல்களை முழுமையாக பாடமுடியவில்லை. நல்ல நிலையில் உள்ள பிரதிகளை வேறு இடங்களில் பெற முயற்சித்தும் ஒன்று மேகைகூடவில்லை. உடனே நான் அண்ணாவியாரை அழைத்து “பாரதக் கதையை முழுமையாகத் தெரிந்து கொண்டவர் நீங்கள். மற்றும் இதற்கு முதலே தர்மபுத்திரன் நாடகம் எனும் கூத்தையும் பழக்கியிருக் கிறீர்கள். எனவே இக் கூத்திற்கான சகல பாடல்களையும் நாம் இருவரும் சேர்ந்து பாடித் தொகுப்போமே” என்று அவரிடம் கூறினேன். அவரும் இதற்குச் சம்மதித்துப் பழைய, அழிந்துபோன அக் கூத்துப் பிரதியை அடிப்படையாக வைத்துப் பாடல்களை பாடித் தொகுக்கத் தொடங்கினோம்.
இப்படி பாடல்களைப் பாடித் தொகுக்கும் வேளையில் எனக்கும் அண்ணாவியாருக்கும் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. காரணம், அண்ணாவியார் ஒரு பழமைவாதி. பழைய காலங்களில் பாவிக்கப்பட்ட மரியாதைக் குறைவான சில சொற்களை வைத்தே பல பாடல்களை இயற்றினார். இவை எனக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல பெண் பாத்திரங்களுக்கு பாடல்களை எழுதும் போது அவர்களை மிகவும் இழிவு படுத்தி பாடல்களை இயற்றினார். நாம் பாடல்களை அமைக்கும் போது காலத்திற்கு ஏற்றவாறு பாடல்களை அமைக்கவேண்டும். மற்றும் பாடல் கூத்தருக்கும் பார்வையாளருக்கும் இலகுவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினேன்.
நீண்ட நேரச் சிந்தனையின்பின் அவர் என்னுடைய கருத்திற்கு உடன்பட்டு நானும் அவருமாக பாடல்களை பாடித் தொகுத்தோம். என்னுடைய பாடல்களுக்கு பல திருத்தங்களையும் செய்து பாடினார். இக் கூத்துப் பிரதியே 1990 ஆண்டில் ஆடப்பட்டு அரங்கேற்றம் செய்யப் பட்டது. இக் கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டபின் நாட்டில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கியபடியால் கூத்தாடுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்குப் பின் 1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் நரசிங்கவயிரவ சுவாமி
G9 22

Page 11
சடங்கிற்காக தர்மபுத்திர நாடகம் எனும் கூத்திலிருந்து சுருக்கியெ டுக்கப்பட்ட “அருச்சுனன் பாசுபதம்’ என்னும் கூத்தை மூன்று மணித்தி யாலங்களுக்குள் முடியக்கூடியவாறு நானும் அண்ணாவியார் அவர்க ளும் பாடல்களைச் சுருக்கி அதே ஆண்டில் நரசிங்க வயிரவ சுவாமி ஆலயமுன்றலில் வட்டக்களரியில் அரங்கேற்றம் செய்தோம்.
நாட்டுப் பிரச்சினைகளின் மத்தியிலும் 1996ம் ஆண்டு நடுப்பகுதியில் திரு. செ.சின்னராசா என்பவரின் பொறுப்பின் கீழ் திரு.சி.ஞானசேகரம் அவர்களை அண்ணாவியாராகக் கொண்டு பழக்கப்பட்ட இராவணேசன் எனும் கூத்தை பூரீ மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் மேடை ஏற்றினோம். இக்கூத்தில் நானும் முக்கிய பங்கு வகித்தேன். கூத்துக்களை மேடை ஏற்றுவதுதான் நவீனம், சீர்திருத்தம் என்று மயங்கிக்கிடந்த காலம். கூத்தின் தனித்துவத் தன்மையை உணராத காலம் சிந்தனைகள் இருந்தும் சிறந்த வழிகாட்டல்கள் ஏற்படாத காலம் இவை. மேடை ஏற்றி அனுபவமடைந்த பிறகே மேடை ஏற்றுவதால் ஏற்பட்ட பிரச்சினைகளை உணர்ந்த பிறகே இதை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் கூத்தின் ஆட்ட மரபு முறைகள் மீறப்பட்டு ள்ளது என்பதை சிந்திக்கத் தொடங்கினேன். இதைக் கூத்தின் தனித்துவ மரபு முறையை மீறும் செயல் என் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதன் பின் நாட்டுப் பிரச்சினைகள் உக்கிரம் அடைந்ததால் சீலாமுனைப் பகுதியில் எவ்வித கூத்துக்களும் அரங்கேற்றப்படவில்லை
கூத்துக்களை ஆடும் முறையை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம். இதை ஏன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் என்றால் தற்போது கூத்தாடும் சமூகத்திற்குள் புதிதாகப் படிக்கும் இளைஞர்கள் கூத்துக்களை ஆடி வருவதனால் பிற்காலங்களில் மேற்படிப்பிற்காக அவர்கள் இக்கலை பற்றி ஆய்வு செய்வதற்கு இக்கட்டுரை உதவக் கூடும் என்பதால் முன்னோர்கள் எப்படி கூத்தை ஆடி அரங்கேற்றி னார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
நான் மேலே குறிப்பிட்டது போல கூத்தை ஆடிய முறைகளை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம் அதாவது, 1. முற்காலம் 2. இடைக்காலம் 3. தற்காலம் இவற்றுடன் எதிர்காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

முதலில் கூத்துக்களை முன்னோர்கள் எப்படி அரங்கேற்றினார்கள் என்பதைப் பார்ப்போம்.
முற்காலங்களில் கூத்து ஒன்று முதன் முதலில் துவங்குவதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வாழும் கூத்து ஆர்வலர்கள் முதலில் ஒன்று கூடித் தீர்மானித்து, அவ்வூர் பெரியவர்களிடம் இது விடயமாகக் கலந்துரையாடியபின் அக்கிராமத்தில் வாழும் கூத்தாடும் சமூக மக்களின் வீடுகள் அனைத்திற்கும் சென்று ஒரு நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு, ஒரு கூத்தை நமது கிராமத்தில் பழகி அரங்கேற்றுவதற்காகத் தீர்மனித்து இருக்கின்றோம், இது விடயமாக ஊர் பெரியவர்களின் ஆலோசனைகளையும் பெற்று இருக்கின்றோம். எனவே இது விடயமாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற இருப்பதால் தவறாது சமூகம் கொடுக் குமாறும் அவர்களைக் கேட்டுக் கொள்வார்கள்.
அக்கிராமத்தில் வசிக்கும் அண்ணாவிமார்களுக்கும், ஏடு பார்ப்பவர்களுக்கும் பழைய கூத்து கலைஞர்களுக்கும் விசேடமாக அறிவிக்கப்படும். மேற்குறிப்பிட்டவர்கள் சகலரும் ஒன்று கூடியதும், முதலில் இறைவணக்கம் செய்து பின்பு ஒருவர் கூட்டத்திற்குத்தலைமை தாங்கி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிய பின் கூத்தைப் பழக்கி அரங்கேறும் வரை சகல பொறுப்புகளுக்கும் முதல் நின்று நடத்துபவராக ஒருவரைத் தெரிவு செய்வார்கள். இவரையே முன்னிடுகாரர் என அழைப்பார்கள். இவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவைத் தெரிவு செய்வார்கள். இக்குழுவைப் பஞ்சாயக்காரர் என அழைப்பார்கள். பின் அண்ணாவியார், உதவி அண்ணாவியார்கள் தெரிவு செய்யப்பட்டு ஏடு பார்ப்பவரும் தெரிவு செய்யப்படுவார்கள். பின் அண்ணாவியார் எழுந்து கூத்து ஆடவிருப்பமுள்ளவர்களை வேறு ஓரிடத்தில் சென்று அமரும்படி கேட்டுக் கொள்வார்.
இவர்கள் இப்படி வேறு இடத்தில் அமர்ந்ததும், எந்தக்கூத்தை பழக வேண்டும் என்று ஆராயப்படும். கூட்டத்தில் இருக்கும் அனைவரும் தங்களுக்குப் பிரியமான கூத்தின் பெயர்களை ஒவ்வொருவராகச் சொல்வார்கள். இவர்கள் சொல்லிய ஒவ்வொரு கூத்துக்களின் விசேட தன்மைகளையும் அக்கூத்துக்களில் உள்ள கதையம்சங்கள், பாடல்கள், விருத்தங்கள், அகவல்கள், கந்தார்த்தங்கள், கொச்சகங்கள், உலாக்கள், பரணிகள், தேவாரங்கள், கழிநெடில்கள், கலித்துறைகள், பாடல்களின் மெட்டுக்கள், தாளங்களின் வகைகள், ஆட்டமுறைகள்
G1D
公
24ހަ///fl

Page 12
போன்ற அம்சங்கள் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு இறுதியில் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மேற்குறிப்பிட்ட சகல அம்சங்களும் பொருந்திய ஒரு கூத்தைப் பழகுவதற்குத் தெரிவு செய்வார்கள்.
பின் கூத்தாட விருப்பமுள்ளவர்கள் பக்கம் அண்ணாவியார் சென்று கூத்தின் கதையம்சத்திற்குப் பொருந்தக்கூடிய தோற்ற முள்ளவர்களை தெரிந்தெடுத்து, அவர்களது குரல் வளங்களைப் பரீட்சிப்பதற்காக புதிதாகக் கூத்தாட வந்தவர்களை தாங்கள் விரும்பிய கூத்துப்பாடல்களை பாடுமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்வார். அவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பாடிக்காட்டுவார்கள். அண்ணா வியாருக்குத் திருப்தி ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பாத்திரங்களுக்கு ஏற்ப ஆட்களைத் தெரிவு செய்வார். திருப்தி ஏற்படாத பட்சத்தில் மற்றையோரை நீக்கிடுவார். இதற்கான அதிகாரங்கள் அக்காலங்களில் அண்ணாவிமார்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இப்படியாகப் பாத்திரங் களுக்கு ஆட்களைத் தெரிவு செய்வது அண்ணாவியாரின் முழுப்பொறுப் பிலேயே நடைபெறும்.
சில வேளைகளில் கூத்து ஆடவிருப்பமுள்ளவர்கள் அதிகமாக இருந்தால் ஒரு பாத்திரத்திற்கு இருவராகத் தெரிவு செய்யப்படுவார்கள். இதற்கு அடுத்த நிகழ்ச்சியாக கூத்தைப் பழக்கி அரங்கேற்றும் காலம்வரை அண்ணாவியாருக்கும் உதவி அண்ணாவியாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைகள் சம்பளமாகக் கொடுப்பது எனத் தீர்மானித்து மூன்று தவணைகளில் கொடுப்பனவு கொடுப்பதாக தீர்மானிக்கப்படும். முதல்நாள் ஒரு தொகையும் சதங்கை அணிவிழா அன்று ஒரு தொகையும் அரங்கேற்று விழா நடைபெறும் அன்று ஒருதொகையும் செலுத்துவதாகத் தீர்மானிக்கப்படும்.
இதை அடுத்து கூத்தர்கள் அண்ணாவியாரிடமிருந்து பாத்திரங் களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இப்படிப் பாத்திரங்ளை ஏற்கும்போது தலையின் மேல் ஒரு வெள்ளைத் துணியைப் போர்த்திக்கொண்டு அண்ணாவியார் எழுத்துருவில் கொடுக்கும் பாத்திரத்தை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு அண்ணாவியாரின் கால்களில் விழுந்து வணங்கி அவருக்குச் சன்மானம் கொடுத்து தாம் கூத்தில் ஏற்று நடிக்கப்போகும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்வார்கள். இதைச் சட்டம் கொடுத்தல் என அழைப்பார்கள்.
பின் கூத்தை முதன் முதலாக ஆரம்பிப்பதற்காக ஒரு சுப

முகூர்த்த நாள் தெரிவு செய்யப்பட்டு அம்முகூர்த்த நாளில் ஒரு சுபநேரத்தைக் கணித்து அந்நேரத்தில் இக்கூட்டம் நடக்கும் இதே இடத்தில் கூத்துச் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்று தீர்மானித்து கூட்டத்தை அத்துடன் முடித்து வைப்பார்கள். பின் குறிப்பிட்ட நாள் வந்ததும் குறித்த நேரத்தில் கூத்து சம்பந்தப்பட்ட அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி பிள்ளையாருக்கு ஒரு மடையும் கலைவாணிக்கு ஒரு மடையும் வைத்து இறைவணக்கம் செய்த பிற்பாடு அண்ணாவியார் பிள்ளையாருக்கும் கலைவாணிக்கும் காப்பு விருத்தங்கள் பாடிய பின்னர் ஏட்டு அண்ணாவியாரால் கூத்தின் வரலாற்று விருத்தம் பாடப்படும் இதை நாடகத் தலைப்பு விருத்தம் அல்லது நாடக நோக்க விருத்தம் எனச் சொல்வார்கள்.
இந் நிகழ்ச்சியின் பின் கூத்தாடும் கலைஞர்கள் அனைவரையும் கூத்தாடும் இடத்திற்கு அண்ணாவியார் வரவழைத்து வட்டவடிவமாக நிற்கச் சொல்லி தத்தித்தா தித்தித்தெய் என்ற தாளத்தை அண்ணா வியார் சொல்லி மத்தளம் வாசிக்க மற்றும் இருவர் அல்லது மூவர் அண்ணாவியாருடன் சேர்ந்து வாய் மூலம் தாளத்தைச் சொல்லி சல்லரிகள் தட்ட அத்தாளத்திற்கு ஏற்றாற்போல் ஆடிமுடிப்பார்கள். இதுவே வடமோடிக் கூத்தின் முதல் ஆட்டமுறை என சொல்லப்படும்.
அடுத்து முதல் வரவாக வரும் கட்டியகாரன் என்ற பாத்திரத் திற்கு ஆடும் கூத்தருக்கு பாட்டுக்கள் தாளங்கள் அண்ணாவியாராலும் உதவி அண்ணாவியாராலும் சொல்லிக் கொடுக்கப்பட்டு அடுத்தடுத்த வரவில் அரச கொலு ஏற்று ஆடும். கூத்தர்களுக்குச் சுமார் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை கூத்து பழக்கப்பட்டு இறுதியில் காப்பு விருத்தம் பாடி முடிவடைந்தவுடன் அண்ணாவியாரால் மீண்டும் ஒரு களரி அடி மத்தளம் மூலம் வாசிக்கப்படும். இதை இறை வணக்கம் என்றும் குரு வணக்கம் என்றும் கூறுவார்கள். இந் நேரத்தில் அண்ணாவியார் மத்தளம் வாசிக்கும்போது வாய்மூலம்யாரும் தாளம் சொல்வதில்லை. அண்ணாவியாரின் மத்தளவாசிப்பு ஒலி மூலம் தொட்டுக்கும்பிடுஎன்ற வார்த்தை மிக நன்றாகவே விளங்கக் கூடியவாறு இருக்கும். இத்துடன் அன்றைய நிகழ்ச்சிகளை முடித்துவைப்பார்கள்.
இக்கூத்தை சுமார் மூன்று மாதங்களாக தினமும் இரவில் பழகுவார்கள். இதற்கான செலவுகள் கூத்தில் சம்பந்தப்பட்ட அனை வராலும் பகிர்ந்தளிக்கப்படும். மூன்று மாதங்கள் முடிவடைந்த பின் கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு
%G13%

Page 13
அக்கூட்டத்திலேயே சதங்கை அணி விழா நடத்துவதற்காக ஒரு சுபமுகூர்த்த நாள் தெரிவு செய்யப்பட்டு பின் கூத்து பழக்கப்படும் இடத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ ஒரு கொட்டில் அமைக்கப்படும். அக்கொட்டில் கிழக்கு முகம் பார்த்தவாறு அமைக்கப்பட்டு தென்னை மரத்தால் ஆன ஒரு இருக்கையும் அமைக்கப்படும். இதைக் கொலுக்குத்தி என்று சொல்வார்கள்.
இதற்கான செலவுகளை கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். சுபமுகூர்த்த நாள் அன்று தத்தித்தா தித்தித் தெய் தாளத்தைத் தவிர கூத்தின் ஆரம்ப நிகழ்ச்சி எப்படி நடைபெற்றதோ அது போன்று நடாத்தப்பட்டு கூத்தின் பிரதான பாகம் ஏற்று ஆடும் கூத்தரை அண்ணாவியார் அழைத்து அவருடைய கால்களில் சதங்கையை வைப்பார். கூத்தரால் அண்ணாவியாருக்குச் சன்மானம் கொடுக்கப்படும். பின் கூத்தர் அண்ணாவியாரை வணங்கிக் கால்களில் சதங்கையை அணிந்து கொள்வார். அன்றைய தினமே முதன்முதலாக கூத்தர்கள் கால்களில் சதங்கையை அணிவதனாலேயே இதை சதங்கை அணிவிழா அல்லது சலங்கை கட்டு விழா என அழைப்பர்கள்.
இச் சதங்கை அணி விழாவிற்காக கூத்தில் பங்கு பற்றிய அனைவரும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் அழைப்புக்கள் கொடுப்பார்கள். அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சிறப்பிப்பார்கள். இச்சதங்கை அணி விழா அன்றுதான் கூத்தர்கள் வில்லு, அம்பு, தண்டாயுதம், கட்டரி போன்ற மற்றும் வேறு ஆயுதங்களைக் கையில் கொண்டு கூத்து ஆடுவார்கள். இப்படியாக காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்படும் கூத்து நிறைவுவரை ஆடப்பட்டு வாழித்தரு, காப்பு விருத்தங்கள் பாடப்பட்டு வழமைபோன்று களரி அடியுடன் முடிவடையும். இப்படியாக அன்றைய நிகழ்வுகள் முடிவடைந்ததும் கூத்தில் பங்குகொண்ட அனைவரும் கூடி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை கூத்தை ஆட வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். இத்தீர்மானத்திற்கமைய அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூத்து ஆடப்படும் இப்படி நான்கு கிழமைகள் கூத்து ஆடிமுடிவடைந்ததும் ஒரு நாளைத்தெரிவு செய்து அந்நாளில் ஆரம்பநாள் அன்றும் கிழமைக் கூத்துக்களின் ஆரம்ப இறுதி நிகழ்ச்சிகள் எப்படி நடந்ததோ அது போன்று நடாத்தப்பட்டு அன்று இரவு எட்டு மணிக்கு கூத்து ஆரம்பமாகி விடிய விடிய ஆடப்பட்டு மறுநாட்காலை

ஆறு மணியுடன் முடிவடையும். இதை அடுக்குப்பார்த்தல் என்று சொல்வார்கள். இதுவே பிற்காலங்களில் ஒத்திகை பார்த்தல் என அழைக்கப்படுகிறது.
இவ் அடுக்குப் பார்த்தல் வைபவம் முடிவுற்றதும் கூத்தில் பங்குபற்றிய அனைவரும் கூடி இக்கூத்தை அரங்கேற்று விழா நடாத்துவதற்காக மழைவராத சாத்தியக்கூறுள்ள நாட்களைக் கணித்து ஒரு சுபமுகூர்த்த நாளைக் குறிப்பிட்டு அந்நாளில் இக் கூத்தை அரங்கேற்றுவிழா நடத்துவதற்காகத் தீர்மானிப்பார்கள். குறித்த நாளன்று ஒரு திறந்த வெளியிலோ அல்லது கொட்டில் இருந்த இடத்திலோ கொட்டிலைப் பிரித்து சுற்றி ஆடக்கூடியவாறு வட்டவடிவில் ஒரு பெரிய அரங்கம் அமைத்து அவ்வரங்கத்தின் மேற்பகுதி ஒரு குடைபோன்று கட்டுப்படும். இதை அரங்கேற்றும் களரி என்று அழைக்கப்படும். இவ்அரங்கேற்று விழா அன்றே தான் கூத்தர்கள் தாம் ஆடும் பாத்திரங்களிற்கேற்ப உடை அலங்காரம் செய்து ஆடுவார்கள். அரங்கேற்ற நாளன்று முழுக்கிராமமுமே விழாக்கோலம் கொண்டு தங்கள் வீடுகளில் நடக்கும் திருமண விழாக்கள் போல் கிராம மக்கள் அனைவருடைய மனங்களிலும் குதூகலம் நிரம்பிவழியும்.
இப்படியாக இவ் அரங்கேற்றவிழா ஆரம்ப இறுதி நிகழ்ச்சிகள், சதங்கை அணிவிழா, அடுக்குப் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் எப்படி நடைபெற்றதோ அதேபோன்று நடைபெறும். இதற்கும் சதங்கை அணி விழாவிற்கும் இவ் அரங்கேற்ற நிகழ்ச்சியிலன்று இரவு 8.00மணிக்குத் துவங்கப்பட்டு மறுநாள் காலை 6.00 மணியுடன் முடிவடையும் மறுநாட்காலை கூத்து முடிந்ததன் பிற்பாடு அனைவரும் கூடி அருகாமையில் உள்ள ஆலயத்திற்குச் சென்று இறைவணக்கம் செய்து கூத்தின் ஒரு சிறு பகுதியை ஆடி முடிப்பார்கள்.
ஆலயத்தில் ஆடிய பின் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கூத்தின் சிறுபகுதிகளை ஆடுவார்கள். கிராம மக்களும் இவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்று உபசரித்து சன்மானமும் வழங்குவார்கள். இதை வீட்டுக்கு வீடு ஆடுதல் என அழைப்பார்கள். இப்படிக்கிராமத்தில் வீட்டுக்கு வீடு ஆடும்போது முதல் தடவையாக கூத்தை ஆடிய கூத்தரின் வீட்டைத் திருமண வீடு போல் அலங்காரம் செய்து மணஅறை போன்று ஒரு மேடை அமைத்து அம்மேடையை நன்கு அலங்கரித்து அம்மேடையின் மேல் முதன் முதலாக கூத்தாடிய கூத்தரை அமரச் செய்து அண்ணாவியாரை
%

Page 14
அழைத்து கூத்தருடைய தலையில் பலகாரம் சொரியச் சொல்வார்கள். இதையடுத்து கூத்தருடைய தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் ஏனைய கூத்துக் கலைஞர்கள் பலகாரம் சொரிவார்கள். இவ்வேளை பெண்கள் குரவை இடுவார்கள். இதைக் கண்ணுாற்றுச் சடங்கு என்று சொல் வார்கள். இப்படியாக வீட்டுக்கு வீடு ஆடியதால் கிடைக்கப் பெற்ற பணத்தை சேகரித்து முன்னிடுகாரர் வீட்டில் கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விருந்து உபசாரம் வழங்கப்படும்.
இதன் பின் இரண்டு கிழமைக்குப் பிற்பாடு அதே இடத்தில் இக்கூத்து அரங்கேற்றப்படும். இதை இரண்டாம் களரி அரங்கேற்றம் என்று சொல்வார்கள். இரண்டாம் களரி அரங்கேற்றத்தில் வீட்டுக்கு வீடு ஆடப்படுவதில்லை. பின் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பிற்பாடே மூன்றாம் களரி அரங்கேற்றப்படும்.
இதை அடுத்து ஆலயங்களில் நடைபெறும் விழாவிலும் ஆறாம் ஏழாம் களரிகள் அரங்கேற்றப்படும். அக்கால முன்னோர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கூத்தை ஆடிப் பழகி அரங்கேற்றினார்கள். முன்னோர்கள் உடையலங்காரத்திற்காக பிரம்பு களினால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்தே கூத்தாடினார்கள். இதைக் கரப்பு உடுப்பு என்றே முன்னோர்கள் பெயரிட்டு அழைத்ததாக அறியக் கிடக்கிறது.
இனி இடைக் காலங்களில் எப்படிக் கூத்தை பழகி அரங்கேற்றி னார்கள் என்பதைப் பார்ப்போம்.
முன்னோர்கள் கூத்தைப்பழகி அரங்கேற்றிய பெரும்பாலான நடைமுறைகளையே இடைக்காலங்களிலும் பின்பற்றினார்கள் என்றாலும் கூத்தின் நிர்வாக நடைமுறைகளிலும் சிற் சில மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். என்றாலும் கூத்தின் பழைய மரபுமுறைகளை மீற வில்லை. உடையலங்கார விடையங்களில் சிற்சில கரப்பு உடையலங் காரத்திற்குப் பதிலாக சிறு சிறு மணிகளை வைத்துக்கட்டப்பட்ட உடுப்புக ளும், கை கால்களில் வெள்ளை உறைகள் அணிந்தும் ஆடினார்கள். நிர்வாக விடயங்களில் கூத்துச் சம்பந்தமாக ஆரம்பக்கூட்டம் நடை பெறும் போது முன்னிடுகாரருக்கும் பஞ்சாயக் குழுவினருக்கும் பதிலாகப் பத்துபேர் அடங்கிய ஒரு குழுவைத் தெரிவுசெய்து அந்தப்பத்துப் பேர்களுக்கும் முகாமையாளர்கள் என்று நியமித்து இப்பத்துப்

பேர்களுமே கூத்து தொடங்கப்பட்டு முடியும்வரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இம் முகாமையாளர்கள் நியமிக்கப் பட்ட காலம் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே நியமிக்கப் பட்டிருக்ககூடும் என்பதைக் கருத வேண்டியுள்ளது.
இடைக்காலங்களில் முன்னோர்கள் ஒரு வருடத்திற்கொருமுறை ஆடியது போல இடைக்காலங்களில் கூத்துக்கள் ஆடப்படவில்லை. என்றாலும் பல பொருளாதாரக் கஸ்ரங்களுக்கு மத்தியிலும் இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடமோ அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றினார்கள். கூத்துக்களை ஆடும் சமூகங்களில் 1989 வரை மேற்கூறப்பட்ட நடைமுறைகளே பெரும்பாலும் கூத்துக்களில் பின்பற்றப்பட்டு வந்தது.
1990ம் ஆண்டிலே கூத்துக்கள் ஆடப்பட்டகாலம் தற்காலம் எனக் கொள்ளலாம். இவ்வாண்டின் நடுப்பகுதியிலேயே சீலாமுனைப் பகுதியில் தர்மபுத்திர நாடகம் என்னும் கூத்து முறையாக பழையமரபு முறைகளில் பழக்கப்பட்டு இரண்டு தடவைகள் அரங்கேற்றமும் நடை பெற்றது. கூத்தாடும் விடயங்களில் முற்கால இடைக்காலங்களில் கடைப்பிடித்த நடைமுறைகளையே தற்காலத்திலும் கடைப்பிடித்தார்கள். ஆனால் நிர்வாக விடயங்களில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது முன்னிடுகாரர், பஞ்சாயக் குழு, மனேஜர்மார்குழு, என்பதற்குப் பதிலாக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏழு பேர் கொண்ட ஒரு நிர்வாக சபையே கூத்துத் தொடங்கப்பட்டு பொறுப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.
1990ம் ஆண்டு இறுதிப்பகுதியில் மீண்டும் நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டபடியால் மீண்டும் கூத்துக்கள் ஆடுவது தற்காலி கமாக நிறுத்தப்பட்டது. நான் முன்னரே குறிப்பிட்டதுபோல நாட்டின் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 1993ம் அண்டு 1996ம் ஆண்டு சீலாமுனைக் கூத்துக்கள் ஆடும் சமுகத்தால் கூத்துக்கள் ஆடி அரங் கேற்றப்பட்டது. 1996 இற்குப் பின் எவ்வித கூத்துக்களும் அரங்கேற்றப் படவில்லை. என்றாலும் நீண்ட இடைவெளிக்குப்பின் கூத்துவிடயமாக திரு.சி. ஜெயசங்கர் அவர்கள் என்னைச் சந்திக்க இருப்பதாக பல் கலைக்கழக மாணவரும் எனது மருமகனுமாகிய திரு.து.கெளரீஸ்வரன் அவர்கள் என்னிடம் கூறினார். நானும் இதற்கு உடன்பட்டு அவரைச் சந்தித்தேன். எடுத்த எடுப்பிலேயே அவர் விடயத்திற்கு வந்துவிட்டார். ஒரு கூத்து தொடங்கப்பட்டு முடியும்வரை இடையில் ஏற்படும்

Page 15
பிரச்சினைகளையும் அதைத் தீர்வு கண்டு சமாளிக்கும் திறமைகளையும் மற்றும் வடமோடிக் கூத்தின் ஆட்டமுறைகள், தாளவகைகள், பாடல்களின் மெட்டுவகைகள் போன்றவற்றை அவர் கேட்க நானும் தெரிந்தவரையில் பதில் கொடுத்தேன்.
கூத்து விடயங்களில் அவரிற்கு ஆழ்ந்த அறிவும் ஆர்வமும் இருந்ததை அன்றே அவதானித்தேன்.இவர் கூத்து விடயங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர் ஆவார் என்பதையும் அன்றே அறிந்து கொண்டேன். இவரிற்கு முன் என்னைச் சந்தித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள் கிராமத்தில் ஆடப்படும் கூத்து விடயமாகவும் ஆலயங்களில் நடைபெறும் சடங்கு விடயமாகவும் பல தகவல்களைக் கேட்டறிந்து கொண்டு உங்களைப்போல் இவ்விடயங்களை அறிந்து கொண்டவர்கள் நிறையப்பேர் இருந்தால் எங்களைப்போல் ஆய்வு செய்வோருக்கு பேருதவியாக இருக்கும் என்று பாராட்டிச் செல்வார்கள். இது விடயமாக மேலும் மேலும் விபரங்களை அறிவதற்கு எக்காலத் திலும் எம்மிடம் தொடர்பு கொள்வதில்லை. ஊரிற்குள் வந்து கூத்துக் கலையை ஊக்குவிப்பதற்காக எம்முடன் இணைந்து வேலை செய்வது மில்லை. தங்கள் நோக்கம் நிறைவேறியவுடன் ஆளைவிட்டால் போதும் என்று நினைத்தோ என்னவோ அரைகுறையான விடயங்களை மட்டும் அறிந்து கொண்டு போனவர்கள் இக்கலை கிராமத்தில் வளர்வதற்காக இக் கூத்துக்கள் ஆடும் சமுகங்களுடன் இக் கலை நலன் கருதி எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. இக் கூத்து ஆடும் சமுகங்க ளுடன் கூத்துக்களை ஆடினால் தானே இன்னும் மேலதிக தகவல்களை யும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிந்திப்பதில்லை.
இவர்களைப் போல்தான் திரு.சி. ஜெயசங்கர் அவர்களும் இருப்பார் எனவும் நான் முதல் நினைத்திருந்தேன். காரணம் அவரைச் சந்தித்தபின் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வரையும் அவர் என்னுடன் எவ்வித தொடர்பும் ஏற்படுத்தவில்லை. இதன் பின் திரு. து. கெளரீஸ்வரன் அவர்கள் என்னிடம் வந்து எதிர்வரும் நரசிங்க வைரவ சடங்கு விழாவில் ஏதாவது ஒரு கூத்தைப் பழகி ஆடிஅரங்கேற்ற வேண்டும் என்று என்னிடம் பல முறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நானும் இதற்குச் சம்மதித்து ஒரு கூத்துத் தொடங்குவதற்கு முன் பழைய மரபு சம்பிரதாய நடைமுறைகளை சொல்லிக்கொடுத்து சமுகத்திலுள்ள சகல கூத்தர்களையும் ஒன்றிணைத்து ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டி கூத்தை ஆரம்பிக்குமாறு அவரிடம் கூறினேன்.

இதற்கமைய கூத்துச் சமுகத்தில் வாழ்ந்த சகலரையும் ஒன்றிணைத்த பொதுக் கூட்டத்தில் “அருச்சுனன் பெற்ற பாசுபதம்" எனும் கூத்தைப்பழகி அரங்கேற்றுவதாகத் தீர்மானித்து இதற்கு அண்ணாவிமார்களாக திரு.சி.ஞானசேகரம் அவர்களையும் திரு.த.கிருபாகரன் அவர்களையும் நியமித்து அக்கூத்துக் கொப்பி யிலுள்ள பாடல்களைப்பாடித் தொகுக்கும்படி என்னையும் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நானும் அக்கூத்தில் வரும் பாடல்களைப் பாடித் தொகுத்தபின் கூத்து பழைய மரபுகளிற்கமைய ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நாள் அன்றே திரு.சி. ஜெயசங்கர் அவர்கள் அங்கு பிரசன்னமாக இருந்ததைக் கண்டவுடன் எனக்கு ஆச்சரியமே ஏற்பட்டது. நான் முன் குறிப்பிட்ட ஆய்வாளர்கள் போல் இவர் இருக்கமாட்டார் என்பதை நான் அன்றே உணர்ந்து கொண்டேன்.
இப்படியாக நாங்கள் ஒவ்வொரு இரவும் இக் கூத்தைப் பழகும்போது திரு.சி.ஜெயசங்கர் அவர்களும் தினமும் இரவில் வருவதுண்டு. இக்கூத்துப் பழகுவதற்கு கெளரீஸ்வரன் மூலமாக ஊக்கு வித்தவரும் இவரே என அறிந்தவுடன் இவர் மேல் உள்ள மதிப்பு மேலும் அதிகமாகியது. வெறும் பார்வையாளராகவே இருந்து வந்த இவர் நாளடைவில் பல ஆலோசனைகளையும் கூறுவார். இதனால் அக்கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் பல தடவைகள் கூத்து விடயமாக அவருடன் கலந்துரையாடுவோம்.
இதனால் கூத்தாடும் சமூகமாகிய எங்களுக்கும் இவருக்கும் ஒரு இறுக்கமான நட்பு நிலை ஏற்பட்டு இக் கூத்து அரங்கேறுவதற்கு தன்னால் ஆன சகல ஒத்துழைப்புக்களையும் கருத்துக்களையும் ஆலோச னைகளையும் வழங்கி இக்கூத்து இனிதாக நிறைவேறுவதற்கு சிறந்த ஒரு வழிகாட்டியாகவும் ஒரு உந்துசக்தியாகவும் திகழ்ந்தவரென்றால் மிகையாகாது. இவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னுடைய கருத்துக் களையோ ஆலோசனைகளையோ இதைத்தான் செய்யவேண்டுமென்று திணித்ததில்லை. இக்கூத்து 26.06.2002ல் நரசிங்க வைரவசுவாமி ஆலயத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் அரங்கேற்றப்பட்டது. இது இரண்டவாது தடவையாக ஏறாவூர் பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் மூன்றாவது தடவையாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும் அரங்கேற்றப்பட்டது.
இதன்பின் திரு. சி. ஜெயசங்கர் அவர்களுடன் ஏற்பட்ட நட்புறவினால் 1990ம் ஆண்டில் ஆடி அரங்கேற்றப்பட்ட தர்ம புத்திர
G19 公グク

Page 16
நாடகம் என்னும் கூத்தை மீண்டும் பழகி அரங்கேற்றுவதற்காக தீர்மானித்து அதற்கான ஆரம்ப வேலைகளில் நான் ஈடுபட்டிருந்தபோது திரு. சி. ஜெயசங்கர் அவர்கள் என்னை அழைத்து பல பாரதக் கதை நூல்களைத் தந்து அதை மீண்டும் மீண்டும் படித்து அதில் உள்ள கதையோட்ட சம்பவங்களை நன்றாகச் சிந்தனை செய்து அதற்கான கருத்துள்ள கூத்துப் பாடல்களை அமைக் குமாறு என்னை அறிவுறுத்தினார் இதனால் கூத்துக் கலைஞர்களும் நானும் அடிக்கடி அவருடன் இது விடயமாகப் பல கருத்தரங்குகளை நடாத்தினோம்.
இவர் தந்துதவிய பல பாரதக்கதைப் புத்தகங்களை நான் மீண்டும் மீண்டும் படிக்கத் தொடங்கியதும் பாரதக்கதை பற்றிய பல பல புதிய சிந்தனைகள் எனது மனதில் விரியத்தொடங்கியது. எந்த விடயத்தைப் பற்றி ஒரு ஆய்வாளன் ஆய்வு செய்கிறானோ அவ்விடயங் களை நன்றாக அறிந்து வைத்திருக்கும் சமூகத்துடன் இணைந்து செயற்படுவதே ஒரு சிறந்த பண்பாகும். இவருடைய செயற்பாட்டின் காரணமாக கூத்துக்கலையும் வளர்ந்தது. கூத்தாடும் சமூகமும் வளர்ந்தது என்றே நான் கூறுவேன்.
1990ம் ஆண்டில் நாங்கள் தர்மபுத்திரன் என்னும் கூத்தை அரங்கேற்றியபோது அதன் கதை ஓட்டத்தின் கரு தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற யுத்தமென்றும் பாண்டவர்கள் எல்லா விடங்களிலும் தர்மவான்கள் என்றும் கெளரவர்கள் எல்லா விடயங்களிலும் அதர்மவான்கள் என்றும் சித்தரித்திருந்தோம். இதுவே காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த கதை. பாரதக்கதை பற்றிய புதிய சிந்தனைகள் ஏற்பட்ட பிற்பாடே அக்கதைகளில் உள்ள சில ஒடுகுமுறைகள் எங்களுக்கு புரியத்தொடங்கியது. இச்சிந்தனைகள் மூலமாகப் பிறந்ததே “சிம்மாசனப்போர்’ என்ற வடமோடிக் கூத்தாகும். “சிம்மாசன போர்” என்ற கூத்தின் பாடல்களை நான் எழுதத் தொடங்கிய போது புதிய சிந்தனைகளால் சாதிகளைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்ட பாடல்களைமுற்றாக நீக்கினேன். அப்போது துரியோதனன் சாதிகள் பற்றி அரசசபையில் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது.
அரசசபையில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியின் போது கர்ணனும் ஒருவனாக போட்டியில் நுழைந்தபோது அங்கிருந்த அவைப்பெரியோர் கர்ணனுடைய சாதியைக்காரணம் காட்டி விற்போட்டி யில் பங்கு பெறத்தகுதி இல்லாதவன் என்று தடுத்தபோது துரியோதனன் கூறியதாவது படித்தவன். பண்பாளன், கற்புடைய பெண்கள்,

கொடையாளன் போன்றோருக்கு சாதி என்பதே கிடையாது திருமால் தூணில் பிறந்தார். சிவபெருமான் மூங்கிலில் பிறந்தார். முருகன் தண்ணில் பிறந்தார் துரோணர் குடத்தினில் பிறந்தார். இவர்களை தெய்வங்களாகவும் குருவாகவும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா?
எனவே சாதியையோ அல்லது ஒருவரின் பிறப்பையோ வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூற முடியாது.
துரியோதனனால் கூறப்பட்டது எவ்வளவு அருமையான தத்துவம். இத்தத்துவம் சாதிகளை இழிவு படுத்தும் முறைக்கு முற்றிலும் எதிரானதே. அடுத்து பெண்களின் சுதந்திரமான நியாயமான உரிமைகளை இச் “சிம்மாசனப்போர்” கூத்து மூலம் நிலை நாட்டியது. அதாவது சூதாட்டத்தில் தருமர் திரோபதியின் அனுமதி இல்லாமல் பந்தயப்பொருளாக சூதில் வைத்துத் தோற்றதை பிரதிகாமி மூலம் அறிந்து துரோபதி மனம் குழறி அதிர்ச்சியும் கோபமும் கொண்டது பெண்களின் நியாயமான உரிமைகளை மதிக்கத் தெரியாத பாண்டவர்கள் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இதுவே பெண் அடக்கு முறை என்று சொன்னோம்.
இதன் காரணமாகவே பின்வரும் பாடலை அமைத்தேன்.
தன்னைத் தோற்று பின்பு என்னைத் தோற்றாரோதான் சொல்வாய் அடா சொல்வாய் என்னைத் தோற்ற பின்பு தன்னைத் தோற்றாரோதான் கேளாய் கேட்டுவாராய்
மற்றும் துரோபதி சபையில் புலம்பியபோது
தாரத்தை வைக்கவும் உரிமைதான் உமக்குண்டோ பாவியே
உங்கள் தாட்வீக வீரத்தைத்தானே பறித்தாரோ பாவியே
公ク公 G2D %22%/2ހަޗް//%ޗި/fl222%;

Page 17
இப்பாடல்களின் மூலம் திரோபதியின் மனக் குமுறல்களை எடுத்துக் காட்டியது. அது மட்டும் அல்லாது பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நடை பெற்றபோராட்டம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போராட்டம் அல்ல அரசு உரிமைக்கே நடந்த போராட்டமாக கதையைச் சித்தரித்து இப் போராட்டத்தினால் அனேகமான அப்பாவி மக்களே அநியாயமான மரணங்களைத் தழுவிக்கொண்டனர் போன்ற சம்பவங்களை சித்தரித்துக்காட்டியது.
இக் கொடிய யுத்தம் தான் நேர்மையான முறையில் நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லை. யுத்தம் ஆரம்பமாகும் முதலே மாயவன் தந்திரத்தால் அரவானைக்களப்பலி கொடுத்தது துவக்கம் துரியோதனனை யுத்ததர்மம் மீறி வீமன் நாபிக்கும் கீழ் அடித்துக் கொன்றதுடன் முடிவடைந்த யுத்தத்தில்தான் எத்தனை யுத்ததர்மங்களை இரு பகுதியாருமே மீறினார்கள் என்றும் இருபகுதியாருமே தர்மவான் களும் அல்ல அதர்மவான்களுமல்ல என்று சித்தரித்துக் காட்டியது. துரியோதனனுடைய அநீதிகளை மாயவன் எடுத்துக் காட்டியது போன்ற பாடல்களையும் மாயவன் தந்திரங்களையும் துரியோதனன் எடுத்துக் காட்டியது போன்ற பாடல்களையும் கதைக்கேற்றவாறு அமைத்து இப்படியாக பாடல்களை நான் எழுதி முடித்தபின்பு அப்பாடல்களைத் திருத்துவதற்காக திரு.சி. ஜெயசங்கர் அவர்களும் நானும் கூத்தில் பல அனுபவங்களைப் பெற்ற பல அண்ணாவிமார்களும் மூத்த கூத்துக் கலைஞர்களும் பல பண்டிதர்களும் ஒருமித்து இருந்து ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ந்து தேவையான திருத்தங்களைச் செய்து இக்கதையை மீளுருவாக்கிய செயற்பாட்டின் மூலம் உருவானதே சிம்மாசன போர் என்ற வடமோடிக் கூத்தாகும்.
பாடல்களை நாம் அமைக்கும்போது பின்வருவனவற்றைச் சித்தரித்தே பாடல்களை அமைத்தோம். அவையாவன,
கூத்தின் மரபு முறை தவறாது பாடல்களை அமைத்தது. * பாத்திரத்தின் குணாம்சங்களுக்கு ஏற்ப பாடல்களை அமைத்தது.
* பாடல்களின் கருத்துக்கள் எல்லோருக்கும் இலகுவில் விளங்கக் கூடியதாக பாடல்களையும் விருத்தங்களையும் அமைத்தது.
இக்கூத்தின் மீளுருவாக்கம் என்ற சிந்தனைகளும் செயற்பாடுக ளும் திரு.சி. ஜெயசங்கர் அவர்களின் தொடர்பிற்கு பின்னே ஏற்பட்ட

தென்பதை உறுதியாகக் கூறலாம். சிம்மாசனம் போர் என்ற வடமோடிக் கூத்தின் பாடல்களை நான் எழுதத் தொடங்கிய போது திரு. ஜெயசங்கர் அவர்களும் பாடல்களை உருவாக்கித் தருவார்.
அதனால் இக்கூத்துப் பாடல்களை எழுதுவது பற்றிய சிந்தனைகள் மேலும் மேலும் வளரத் தொடங்கியது. நான் பாடல்களை எழுதும் நேரத்தில் என்னுடன் இருந்து பல இலக்கணச் சொற்களை தந்துதவி கதைக்கேற்றாற்போல வரும் சம்பவங்களிற்கு எப்படி பாடல்களை அமைத்து சொற்களைப் புகுத்துவது என்ற பயிற்சியையும் எனக்களித்து. நான் எழுதிய பாடல்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி வேறு சொற்களை வைத்து என்னை எழுதச் செய்து அப்பாடல்களை செழுமைப்படுத்தியது மட்டுமல்லாது இச்செம்மைப்ப டுத்தியவேளை கூத்தில் நன்கு அனுபவம் பெற்ற பல அண்ணாவிமார்க ளையும் மூத்த கூத்துக் கலைஞர்களையும் என்னுடன் இருக்கச் செய்து எங்களுக்குக் கூத்தின் காட்சியமைப்புகள் பலவற்றின் ஆலோசனைக ளைக் கற்றுத் தந்து எங்களிடம் உள்ள கூத்துக்கலை விடயங்களை தானும் கற்று நான் முன்னரே குறிப்பிட்டது போல இக்கூத்துக் கலை மூலம் தன்னை வளர்த்து எங்களையும் வளர வைத்து எங்களுக்கு இக்கலைமூலம் ஒரு உந்து சக்தியாகவும் ஒரு சிறந்த வழிகாட்டியா கவும் தற்போதும் திகழ்ந்து கொண்டிருப்பவர் திரு. சி. ஜெயசங்கர் அவர்களே ஆகும்.
அதுமட்டுமல்லாது காலம் காலமாக எங்கள் கூத்தாடும் சமூகத்தால் மட்டும் ஆடப்பட்டு வந்த இக்கூத்துக்கலையை தான் ஒரு ஆய்வாளர் என்ற வகையில் எங்கள் கூத்தாடும் சமூகத்துடன் இணைந்து சிம்மாசன போர் என்ற வடமோடிக்கூத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான கிருஸ்ணன் என்னும் பாத்திரத்தை ஏற்று அதைத்திறம்பட ஆடிக்காட்டிய பெருமை திரு.சி.ஜெயசங்கருக்கு மட்டுமே உரித்தானதாகும். காரணம் இக்கூத்தாடும் சமூகங்களிலிருந்து உருவாகிய கல்விமான்களும் ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வு வெற்றியைத் தேடிக்கொள்ளவும் முதுமாணிப்பட்டங்கள் பெறவும் கூத்தாடும் சமூகத்திட மிருந்து பல தகவல்களை மட்டுமே பெற்றுக் கொண்டு போனார்களே தவிர திரு.சி. ஜெயசங்கர் போல கூத்தாடும் சமூகத்துடன் இணைந்து கூத்தை வட்டக்களரியில் ஆடி கூத்தில் போதிய தேர்ச்சி பெறவில்லை என்பதே எனது கருத்தாகும். அதுமட்டுமல்லாது இவர் கூத்தாடும் சமூகம் மேம்படும்வண்ணம் பல நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
公 G.3% ØZA

Page 18
இவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள் இப்போது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது பல்கலைக்கழகங்களிலோ பாடசாலைகளிலோ கற்றுத்தர முடியாத பற்பல விடயங்கள் இக்கூத்துக் கலையில் உள்ளடங்கியிருப்பதை நான் உங்களுடன் இணைந்த பிற்பாடே உணர்ந்து கொண்டேன் என்பதை கூறக்கேட்டதும் நாங்கள் அவர்மேல் வைத்திருந்த நட்பும் மதிப்பும் மேலும் கூடியது. இவர் கூத்துக்கலையை யும் வளர்த்து இக்கூத்துக்கலையைப் பேணி பாதுகாத்து வரும் சமூக மேம்பாட்டிற்காக உழைத்து வரும் முயற்சி பூரண வெற்றியடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் இக்கலைபற்றி மேலும் மேலும் ஆய்வு நடத்தி முதுமாணிப்பட்டம் பெற்று அதற்கு மேல் கலாநிதிப் பட்டம் பெற்று மென்மேலும் அவர் மேன்மையடைய மீண்டும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இறுதியாக ஒரு விடயத்தை அவரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன.
06.10.2003 இல் மட்டு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினமன்று நான் 3ம் ஆண்டில் படிக்கும் எனது மகனைக் கூட்டி வருவதற்காக அக்கல்லூரிக்குச் சென்ற போது மத்தள ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது என் மகனிடம் “என்ன இங்கு கூத்து ஆடுகின்றார்களா?” என்று கேட்டபோது அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்துவிட்டு அக் “கூத்து அவ்வளவு சரியில்லை அப்பா எனக்கு பிடிக்காததனால் நான் வெளியே வந்து விட்டேன்’ என்றார். நான் உடன் அங்கு சென்று பார்த்தபோது கூத்தின் இறுதிப்பகுதியை மேடையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதை வடமோடி என்றும் சொல்ல முடியாது. தென்மோடி என்றும் சொல்ல முடியாது பாடல்கள் தாளங்கள் போன்றவைகள் கூத்துக்களுக்கு முற்றிலும் முரணாக இருந்தது. அங்கு நிரம்பியிருந்த மாணவர்கள் இரைந்து கொண்டும் தேவையற்றதற்காக கைதட்டிக் கொண்டுமிருந்தது இவர்களைக் கேலிபண்ணுவது போல எனக்கு எண்ணத் தோன்றியது. இறுதியில் இதுதான் வடமோடி, தென்மோடி கலந்த நாட்டுக்கூத்து என்று மேடையில் அறிவித்தவுடன் என்னையறியாமலே சிரித்து விட்டேன்.
இவர்கள் உண்மையானகலை வடிவத்தை விட்டு இப்படி அரைகுறையான கூத்துக்கலைக்கு முற்றிலும் முரணான செயற்பாட்டில் ஈடுபடுவதால் உண்மைக்கலையைக் காணாத மாணவர்கள் இதுதான் கூத்தாகும் என நினைத்து அவர்கள் மனங்களுக்கு இப்பாடல்களும் தாளங்களும் பிடிக்காததனால் கூத்துக்கலையையே வெறுக்கிறார்கள்

என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. மூன்றாம் ஆண்டில் படிக்கும் மகன் நாங்கள் கூத்துக்களை ஆடும்போது அதன் தாளங் களையும் பாடல்களையும் கூத்து ஆர்வமிகுதியால் பாடிக்கொண்டிருந்த இவன் அக்கூத்தைப் பார்க்காது வெளியே நின்று கொண்டிருந்ததை நாம் சிந்திக்கவேண்டும். இப்பிஞ்சு மனதில் இக்கூத்துக்களில் நடைபெற்ற வித்தியாசங்களை அறிந்து கொள்ளமுடிந்ததல்லவா?
இத்தகைய செயற்பாட்டினால் கூத்துக்கலை முற்றாக அழிவின் விளிம்பிற்கே போய் விடுகின்றது. இளம்பராய மாணவரிடையே இக்கலை மீது ஒரு வெறுப்பு நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க திரு.ஜெயசங்கர் போன்ற கல்விமான்கள் உடனடியாக கல்லூரி அதிபர்களுடன் தொடர்பு கொண்டு இக்கூத்தைப் பற்றிய போதிய விளக்கங்களைக் கொடுத்து இனிவரும் காலங்களில் கூத்து என்று சொல்லி கூத்துக்கு முரணான விடயங்களை மேடையில் ஆடுவதை அனுமதிக்கக்கூடாது என்று விளக்கம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஈழத்தமிழர்களின் உரிமையான வட்டக்களரி அரங்கை அமைத்து பாடசாலைகளில் மாணவர்களிற் கிடையே இப் பாரம்பரிய கூத்துக் கலையை வளர்த்தெடுக்க வேண்டும்.
இதுவே கூத்துக்கலை வளர்வதற்கு எதிர்காலங்களில் பேருதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே இப்படியான முறையில் இக்கூத்துக் கலையை வளர்த்தெடுக்க முன்னின்று உழைப்பார் என்ற பூரண நம்பிக்கை எனக்குண்டு.
நன்றி
சிம்மாசனப்போர் சதங்கையணி விழா - 2003
。G5Z公 ހައްޗަހައަހަކުރުކުހަހަ2ހަހުށަހަތު2ޗަ2

Page 19
சீதை சூர்ப்பனகைவதை வடமோழக்கூத்து
எழுத்துரு மீளுருவாக்கம் ஓர் உரையாடலுக்கான படைப்பாளர் நோக்கு
கூத்து என்பது ஈழத்தழிழர்களின் பாரம்பரியக்கலையாகும். தொடர்ந்து சமுதாயங்களை இணைக்கும் அரங்காக செயற்படுகிறது. இவ்வாறான கூத்துக்கள் கூறுகின்ற கதைகளை எடுத்துப்பார்க்கும் போது அதாவது புராண இதிகாச அரசகுலக்கதைகளில் பெண் களுடைய பாத்திரப் படைப்பு ஆண்களின் ஆதிக்க அதிகார நோக்கில் உருவாக்கப்பட்டதாக இருந்தது. இவ்வாறு உள்ள கூத்துக்கள்தான் காலம் காலமாக ஆடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
மட்டக்களப்புக்கூத்துச் சமூகங்களில் கூத்து ஏடுகளைப்பராமரித்து வருகின்ற ஓர் பாரம்பரியம் இருக்கின்றது. இப்படியாதுகாத்து வருகின்றவர் களையும் புதுக்கூத்துப் பாடல்களை உருவாக்குபவர்களையும் ஏட்டு அண்ணாவியாரென்றும்; கொப்பிபார்ப்பவர்களென்றும் அழைக்கின்றனர்.
இவ் விதம் மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள நீண்ட வடமோடிக்கூத்து மற்றும் மகுடிக் கூத்து பாரம்பரியங்களைக் கொண்ட சமூகத்தில் மேற்படி ஏட்டு அண்ணாவியார் பாரம்பரியத்திலுள்ள ஒரு நபராக நான் இருந்து வருகிறேன்.
கிராமத்தில் முதல் முதலாக கூத்துக்கள் ஆரம்பிக்கும் போது கிராமத்தில் வாழும் கூத்து கலைஞர்களை ஒன்றிணைத்து ஆடப்படும் கூத்துக்களின் கதையை கூத்தர்களுக்குவிளங்கவைத்து அக்கூத்துப் பாடல்களையும் அப்பாடல்களின் கருத்தாளங்களையும் சொல்லிக் கொடுத்து சட்டம் கொடுப்பது முதல் இறுதி அரங்கேற்றம் வரை கூத்தின் அண்ணாவியாருடன் ஒத்துழைத்து இயங்குவதாக என்னுடைய பணி இருந்து வருகிறது.
கூத்துக்கள் மீளுருவாக்கம்
காலம் காலமாக ஆடப்பட்டு வந்த கூத்துக்களில் பெண்பாத்திரப் படைப்பானது ஆண்களின் அதிகாரத்திற்குள் பெண்களை அடக்கி ஒடுக்கியும் இழிவுபடுத்தியும் சாதிகளையும் இழிவுபடுத்தியும் அடிமைப் படுத்தியதுமான கருத்துக்கள் காணப்பட்டன. இவ்வாறு இருந்த கூத்துக்கள் இன்றைய காலச்சூழ்நிலைக்கேற்ப மீளுருவாக்குவதற்கான

பங்கு கொள் ஆய்வுச் செயற்பாடொன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நுண்கலைத் துறைவிரிவுரையாளர். திரு.சி. ஜெயசங்கர் அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எனது ஊராகிய சீலாமுனை என்னும் கிராமத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடுப்பகுதிமுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ் ஆய்வுச்செயற்பாட்டின் அம்சமாக கூத்துக்கதைகளில் உள்ள பெண்கள்பற்றிய பாத்திரப் படைப்பாக்கம் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு மீளுருவாக்கிப்படைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏட்டு அணி ணா வியார் என்ற வகையில் நான் அதிகம் இயங்கிவருகிறேன். இவ்வாறு பங்கு கொள் ஆய்வுச் செயற்பாட்டினுடாக பெண்நிலைவாத சிந்தனைகளை உள்வாங்கியவிதமும் அதனை வைத்து கூத்துக்களை மீளுருவாக்கிய எனது அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
பெர்ைநிலை வாதச் சிந்தனைகளை உள்வாங்கியவிதம்
1. பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டாளருடன் கலந்துரையாடல்கள்
2. பெண் நிலைவாத செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல்கள்
3. பெண்நிலை நின்று எழுதப்பட்ட படைப்புக்களின் வாசிப்பு.
உதாரணமாக ஆய்வாளர் ஏற்கனவே உள்ள கூத்துக்களில் பெண் பாத்திரப் படைப்புக்கள் பற்றி கேட்ட கேள்விகளும் அதைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான உரையாடல்களும் ஏற்கனவே காலம் காலமாக ஆடிவரும் கூத்துக்களில் பெண் பாத்திரங்களின் படைப்பானது பாராபட்சமாக உள்ளதென்பதையும் சாதிகளை இழிவுபடுத்தியுள்ளதை யும் உண்ர்த்தியதுடன் மீளவும் அப்பாத்திரங்களின் படைப்பை மாற்றி அமைக்கவேண்டுமென்ற சிந்தனை என்உள்ளே உருவாகியது.
இந்தச் சிந்தனையின் அடிப்படையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஊடாக மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்துக்களில் பெண்பாத்திரங்களை நான் பெற்ற அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப இயன்றவரை மாற்றி அமைத்தேன்.

Page 20
மாற்றி அமைத்ததற்கான எடுத்துக்காட்டுக்கள்
ஏற்கனவே இருந்து வந்துள்ள தர்மபுத்திரநாடகம் என்னும் வடமோடிக்கூத்தில் வரும் திரோபதிப்பாத்திரம். முழுக்க முழுக்க ஆண்களின் நோக்கிலேயே ஒரு மனிதரில்லாத சடப்பொருளாகவே படைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் மீளுருவாக்கிய சிம்மாசனப்போர் என்னும் வடமோடிக்கூத்தில் வரும் திரோபதிப்பாத்திரம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தட்டிக்கேட்கின்ற ஒரு ஆளுமைமிக்க பெண்ணாகப் படைக்கப்பட்டாள்.
உதாரணமாக:
தருமர் துரோபதியின் அனுமதியின்றி சூதாட்டத்தில் திரோபதியை பந்தையப் பொருளாக வைத்துச் சூதாடி தோற்றுப்போய் சகலரையும் இழந்து கெளரவர்களிடம் அடிமையாய் நின்றபோது திரோபதியை பிடித்து வருமாறு துரியோதனன் பிரதிகாமிக்கு கட்டளை இட, பிரதிகாமி விடயம் முழுவதையும் திரோபதியிடம் சொல்ல, சாதாரணமான பெண்ணுக்குரிய நியாயத்தை திரெளபதி என்னும் பாத்திரப் படைப்பால் சிம்மாசனப்போர் என்ற கூத்தின் மூலமாகச் சொல்லியிருந்தோம். இந்த நியாயத்தால் தர்மர் சபையில் வெட்கித்தலை குனிந்ததையும் பாடல்கள் மூலமாகச் சொல்லியிருந்தோம்.
திரோபதி பிரதிகாமியிடம் நியாயம் சொல்லும் பாடல்
தன்னைத்தோற்றபின்பு என்னைத் தோற்ராரோதான் சொல்வாய் அடசொல்வாய் என்னைத் தோற்றபின்பு தன்னைத்தோற்றா ரோதான் கேளாய் கேட்டு வாராய்
தருமர் திரோபதியின் நியாயத்தால் சபையில் வெட்கி தலைகுனிந்த பாடல்
தன்னையே தோற்றபின்பு என்னைத் தோற்றாரோ அல்லால் என்னையே தோற்றபின்பு தன்னைத் தோற்றாரோ என்று திரோபதி கூறக்கேட்ட அவளது வார்த்தைதனை பிரதிகாமி சபையில் சொல்ல மனம்நொந்து தர்மராசன் குனிந்திட்டார் தலைகவிழ்ந்திட்டாரே.
公 G8%

இதில் இரண்டு விடயங்கள் மீளுருவாக்கத்தின்
மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
1. பெண்களின் ஒடுக்குமுறைக்கெதிரான நியாயத்தன்மை
2. இந்த நியாயத்தால் பெரும் தர்மவானென்று பெரும் காவியங்களிலும் பழைய கூத்து ஏடுகளிலும் புகழப்பட்ட தர்மர் திரோபதி என்னும் பெண்பாத்திரப் படைப்பான பெண்ணின் நியாயத்தால் தலை குனிந்து வெட்கம் அடைந்தது.
அடுத்து பெண்களின் சுதந்திரமும் உரிமையும் நியாயமும் திரோபதி என்னும் பாத்திரப்படைப்பால் பின்வரும் பாடலால் எடுத்துக்காட்டப்பட்டது.
திரேளபதி தர்மரிடம் நியாயம் கேட்டுப்பாடல்
தாரத்தை வைக்கவும் உரிமைதான் உமக்குண்டோ பாவியே
உங்கள் தாட் வீகவீரத்தைதானே பறித்தாரோ பாவியே
அடுத்து திரோபதியினுடைய நியாயத்தைக் கேட்டு அரச சபையி லிருந்த பெரியோர்கள் வாய்மூடி மெளனம்காத்து இருந்ததன்மையை பின்வரும் பாடல் மூலம் மீளுருவாக்கப்பட்ட கூத்தில் புகுத்தியது. (அப்பாடலானது).
திரோபதி கேள்விக்கணை வலியதாய் செவியில் பாய்ந்து தரியனின் சபைப்பெரியோர் தலைகவிழ்ந்த நியாயம் வீழ்ந்தே சரியிழை சொல்லத் தோன்றா சபை அறிஞ்ஞரும் மழுப்பியே நழுவலானார்
இப்படியாக இம் மாற்றங்களைச் செய்து இக்கூத்தை மீளுரு வாக்கி தர்மத்துக்கும் அதர்மத்திற்கும் நடந்த போர் அல்ல! வெறும் அரச உரிமைக்கும் ஆண்களின் அதிகாரத்திற்கும் நடந்த சிம்மாசனப்போர் என்ற தலைப்புக் கொடுத்து இக்கூத்தின்மூலம் மேற்சொன்னவைகளை எடுத்துக்காட்டி இக்கூத்தை மீளுருவாக்கினோம்.

Page 21
அடுத்து மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்து கடந்த 07/07/ 2004ம் ஆண்டில் மட்டக்களப்பிலுள்ள ரீ மகாநரசிங்கவயிரவர் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இவ்அரங்கேற்று விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பங்கு கொள் ஆய்வுச்செயற்பாட்டாளர் திரு.சி. ஜெயசங்கர் அவர்கள் பேசுகையில் இன்று (07/07/2004) அபிமன்யு இலக்கணன் வதம் என்ற கூத்து மீளுருவாக்கம் செய்யப்பட்டு அரங்கேறுகிறது. இது போல அடுத்து வரும் 2005ம் ஆண்டளவில் சீலாமுனைக்கிராமத்தில் வாழும் கூத்துக்கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் புதிய தொரு கூத்தை முழுக்க முழுக்க தாங்களாகவே எழுதி அரங்கேற்றம் செய்வதற்கான வளங்களைக் கொண்டவர்களாக உருவாகி இருப்பார்கள் என்ற செய்தியை மிகுந்த நம்பிக்கையுடன் அங்கு வெளிப்படுத்தினார்.
எனவே அவருடைய நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையிலும் அவருடைய பங்கு கொள் ஆய்வுச்செயற்பாடு வெற்றி அடையவேண்டு மென்றவகையிலும் மேற்படி இரண்டு கூத்துக்கள் எழுதிய காலகட்டங்க ளிலும் திரு.சி. ஜெயசங்கர் அவர்களின் வழிகாட்டல் மூலம் பெண்நிலை வாதச் சிந்தனை பற்றி நான் பெற்றுக்கொண்ட அறிவு, ஆற்றல், பயிற்ச்சி, அனுபவம் முதலியவைகளைக்கொண்டு முன்னரைப்போன்று ஆய்வாளர் பங்குபற்றல் இன்றி ஆண்களின் அதிகார ஆசையினால் பெண்கள் அடையும் வதைகள்பற்றி எடுத்துக்காட்டுவதற்காக சீதைசூர்ப்பனகை வதை என்னும் மீளுருவாக்கம் செய்யப்பட்டகூத்தை எழுதினேன்.
1933ம் ஆண்டு முதல் எமதுசமூக முன்னோர்களால் பலமுறை ஆடி அர்ங்கேற்றப்பட்ட இராம நாடகம் என்ற கூத்தை அடிப்படையாக வைத்தே சீதைசூர்பனகைவதை என்னும் கூத்து எழுத்துருவில் என்னால் மீளுருவாக்கம் செய்யப்பட்டு 2005ம் ஆண்டில் ரீமகா நரசிங்கவயிர வசுவாமி ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இக்கூத்தில் கதைக்கருப்பொருளாக நான் எடுத்துக் கொண்ட விடயங்கள்.
1. பெண்களைக் கருவியாகக் கொண்டு இராம இராவணருக்கிடையே
ஏற்பட்ட பிணக்கு.

2. பெண்களின் கருத்துச் சுதந்திரங்கள் ஆண்களின் ஆண் ஆதிக்க
அதிகார வெறியினால் அடக்கப்பட்டமை.
3. இராம இராவண யுத்தத்தால் பெண்கள் அடைந்த துயரங்களும்
அதன் வதைகளும்
4. ஆளும் அரசகுல அதிகாரத்தினால் ஆண்கள் பெண்களை
அலட்சியப்படுத்துதல்.
சூர்ப்பனகை தன் உரிமையைப் பேசுதல்
விருப்புடன் வந்த எண்னை மதித்திடா பெண்ணை நீயே அறுத்திட காதம் மூக்கும் ஆண் மகன் தானோ நீயோ உதித்திடும் மனக்கருத்த உரைத்திட உரிமை உண்டு தரத்தினில் குறைந்த ஆண் நீ சடுதியில் நியாயம் காண்பேன்
எண் விருப்பம் உனக்குரைத்தேன் பெண் கருத்துச் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள முடியா நீ என்மேல் வன்முறை புரிந்தாய் இதுதான் உங்கள் அரசகுல பெண் நீதியா? நீ புரிந்த இந்த அடாத்துச் செயலை என் அண்ணன் இராவணனிடம் முறையிட்டு கூடியவிரைவில் பெண்ணான எனக்கு இழைத்த கொடுமைக்கு ஒருமுடிவைக் காண்பேனடா, பெண்களை மதியாதவனே!
இப்படியாக மிகுந்த வேதனையுடன் சூர்ப்பனகை தனக்கு நேர்ந்த அனர்த்தத்தை தன் அண்ணன் இராவணனிடம் முறையிடும் பாடல்கள் பலவற்றை உருவாக்கினேன் அதில் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சூர்ப்பனகை தனக்கு நேர்ந்த அனர்த்தம் பற்றி தன் அர்ைனன் இராவணனிடம் முறையிரும் பாடல்கள்.
அருமை அண்ணாவே கேளாய் அடவியினில் ஓர் ஆண் மகனை சந்தித்து விருப்பம் சொல்ல தம்பியிடம் போகச் சொன்னான்.
தம்பியிடம் சென்றே நானும் எண்மனக் கருத்தச் சொல்ல பெண்ணென்றும் பாரா அவன் அங்கங்கள் அறுத்தான் அண்ணா.

Page 22
இதே வகையில் சூர்ப்பனகைப் பெண் தன் அண்ணன் இராவணனிடம் தனக்கு நேர்ந்த அனர்த்தம் பற்றி முறையிட்ட கட்டத்தில் ஏற்கனவே காலம் காலமாக ஆடி அரங்கேற்றம் செய்யப்பட்ட இராம இராவண யுத்தம் என்ற கூத்தில் இராவணனால் கூறப்பட்ட பாடல் பின் வருமாறு அமைந்து காணப்பட்டது.
மானே என் தங்கா சூர்ப்பனகா சொல்லக்கேளாய் மாவலு சேர்கரன் முதலியோர் மாண்டாலென்ன
தேனே உன் காதோடு முக்கு முலை அரிந்த போட்ட செய்தி ஒன்றும் என்னிடத்தில் செப்பவேண்டாம்
நான் போனேன் கண்டேன் என்று சொன்ன பெண்ணின் மேல் மையலானேன்
ஆயதினால் அவள் வடிவைச் சற்றே அறைகுவாய் என் ஆணை அறைகுவாயே
பெண் நிலைவாதச் சிந்தனையில் சீதை, சூர்ப்பனகை வதை என்ற கூத்து மீளுருவாக்கப்பட்ட முக்கியமான கட்டம் இதுவென்றே கூறலாம் அதாவது லட்சுமணனால் சூர்ப்பனகைக்கு ஏற்பட்ட அனர்த்தத் தால் மனம் குமுறிய சூர்ப்பனகைப் பெண் தன் அண்ணன் இராவணனி டம் முறையிடும் போது ஏற்கனவே இருந்து வந்த கூத்தில் மேற்சொன்ன பாடலின் கருத்தியலான இராவணன் கூற்றுதன் தங்கை அறுபட்ட நிலையிலும் அவளுக்குத் துணையாகச்சென்ற கரன் முதலியோர் லட்சுமணனை எதிர்த்துப் போராடி மரணம் அடைந்துவிட்ட நிலையிலும் இவைகள் ஒன்றையுமே இராவணன் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து சூர்ப்பனகை கண்டுவந்து சொன்ன சீதைப் பெண்ணின் மேல் காதல்உண்டாகி அவள் அழகை மேலும்விரித்துக் கூறுமாறு கட்டனை இடுகிறான்.
பெண் நிலைவாதச் சிந்தனையை உள்வாக்கிக் கொண்ட என்னால் மேற்கூறப்பட்ட பாடலின் கருத்தியலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை காரணம் சாதாரண வாழ்க்கையில் மனிதர்களின் எந்த ஒரு அண்ணனும் தனி தங்கை வேறொருவரால் அனர்த் தப் படுத்தப் பட்டு

அவமானப்படுத்தப்பட்ட கால கட்டத்தில் தன் தங்கையின் நிலையைக் கண்டு மனம் கொதித்து வேறொரு உணர்ச்சிகளும் இன்றி அதற்கு காரணமாய் இருந்தவன் மேல் கோபம் உண்டாகும். இதுவே மனித வாழ்க்கையின் யதார்த்தமாகும். ஆனால் ஏற்கனவே இருந்த கூத்தில் கோபத்திற்குப் பதிலாக சீதைப் பெண்மேல் காதல் உண்டாவதாக மட்டுமல்லாது ஒரு போகப் பொருளான பார்வையில் இராவணன் சீதையைச் சிறைப்பிடிக்கச் செல்கிறான் என்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. எனவே இக் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முடியாத நான் கூத்தில் சீதையை இராவணன் சிறைப்பிடிக்கச் செல்வது அவள் மேல் கொண்ட காதலால் அல்லவென்றும் தன் தங்கையை அனர்த்தத் துக்குள்ளாக்கி யவர்கள் பெண்ணை சிறைப்பிடித்து பழி தீர்த்துக் கொள்வதற்காக கடும் கோபத்துடன் செல்கிறான் என்றும் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இராவணன் மூலம் எடுத்துக் காட்டுவதற்காகவும் சம்பவத்திற்கு ஏற்றவகையிலும் பாடலை மீள் உருவாக்கினேன்.
மீளுருவாக்கம் செய்யப்பட்ட பாடல்
(இராவணன் சூர்ப்பனகையிடம் கூற்று)
சூர்பனகா என் தங்கா சொல்லக் கேளாய் அந்த மானிடனும் மாவீரன் தானோ
பெண்ணேஉன் காதடன் மூக்கறத்த செயலைக்காண என் அங்கமெல்லாம் பதறநிங்கே ஆனதினால் அங்கு சென்று அவர்கள் பெண் சீதையைச் சிறைப்பிடித்தப் பழியும் தீர்ப்பேன்.
வேதனைகள் கொள்ளா நீயும் விரைவுடனே மனம் தேறாய் இங்கே.
இந்த வகையில் சீதையைச் சிறைபிடிக்கச் செல்லும் முன்பாக சிறைப் பிடிப்புப் பற்றி இராவணன் தன் மனைவியான மண்டோதரி யிடம் உரையாடுகிறான் அவ் உரையாடலில் இராவணனுக்காக உருவாக்கப் பட்ட பாடலானது பின்வருமாறு.
லட்சுமணன் போல் பெண்ணுக்கங்கே இழிவு செய்தோன் உலகில் உண்டோ

Page 23
அங்கங்கள் அறுக்க இவன் அண்ணன் நானும் பொறுக்கல்லாமோ
தன் கணவன் இராவணன் லட்சுமணனின் செயலுக்காக சீதையைச் சிறைப்பிடிப்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியென உணர்த்த அவனிடம் மிகவும் கடுமையாக வாதாடி சீதையை சிறைப்பிடித்து வருவதை தடுக்க முயற்சிக்கும் கட்டத்தில் பின்வருமாறு மண்டோதரி பாத்திரத்திற்கான பாடலை உருவாக்கினேன்.
மண்டோதரி பாடல்
குற்றம் செய்தோர் விட்டு விட்டே கூட இருப்போர் பிடிக்கல்லாமோ ஆற்றல் கொண்ட வீரருக்கு அழகுதானே சொல்வீர் ஐயா
இதனுடாக இராவணனுடைய செயற்பாடு லட்சுமணன் போல் ஒரு நிலைப்பாட்டு நியாயத்தை மட்டுமே எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஏனெனில் லட்சுமணன் பெண்ணான சூர்ப்பனகையை பெண்ணாக மதிக்காமல் அவளை வன்முறைக்கு ஆளாக்குகின்றான் ஆனால் சீதையைத் தூயவள் என்று கூறி பெருமளவு மதிக்கின்றான். இராவணனோ சீதையின் பெண் உரிமையை மதிக்கவில்லை ஆனால் தன் தங்கை என்ற ரீதியில் அவள் அனர்த்தம் கண்டு சூர்ப்பனகையை பெருமளவு மதித்தான், இந்த வகையான சீதை சிறைப்பிடிப்பால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் இவ் இருவருமே ஆவர். இதன் காரணமாகவே இக்கூத்திற்கு “சீதை சூர்ப்பனகை வதை” என்னும் தலைப்புக் கொடுக்கப்பட்டது.
இந்த வகையில் மண்டோதரி, சீதையைச் சிறைப்பிடித்து வருவது பற்றி எவ்வளவோ தடுத்துக் கூறியும் அவை ஒன்றையுமே செவிமடுக்காத இராவணன் மண்டோதரிப் பெண்னை அலட்சியப்படுத்தி அப்பெண்ணின் புத்திமதிகளைக் கேளாது தன் தங்கைக்கு நேர்ந்த அனர்த்தம் காரண மாகவும் அவள் மேற்கொண்ட பாசம் காரணமாகவும் தன் தங்கைக்கு ஏற்பட்ட அனர்த்தத்திற்கு காரணமாய் இருந்தவர்களைப் பழிதீர்த்துக் கொள்வதற்காகவும் சீதையைச் சிறைப்பிடித்தான் என்றே என்னால் சித்தரிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்துவந்த இராம இராவண யுத்தம் என்ற கூத்தில் சீதையின் அழகை சூர்ப்பனகை மூலம் கேள்வியுற்ற இராவணன் அவள் மேல் காதல் கொண்டே சிறைப்பிடிக்கச் சென்றான் எனச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இருந்து வந்த இராமர் சரிதை என்ற கூத்துக்கள் யாவும் இராமனைப் பெரும் வீரனாகவும் நீதி நியாயங்கள் தப்பாது நடப்பவனாகவும் பெரும் புகழ்பாடியே எழுதப்பட்டிருந்தன. ஆனால் பெண் நிலைவாத நோக்கில் சூர்ப்பனகைக்கு ஏற்பட்ட அனர்த்தத்தைப் பற்றி வாயே திறவாத இராமனைப்பற்றி யாரும் கூறுவார் இல்லை. இதேபோல தன் தங்கையின் அனர்த்தத்தைக் கண்ட இராவணனுடைய நியாயமான கோபத்தை யாரும் கூறுவார் இல்லை இதற்கு மாறாக மிகவும் சிவபக்தியுடைய இராவணன் அதர்மவான் என்றும் அவ் அதர்மத்தால் அழிந்தான் என்றும் காலம் காலமாக கூத்துக்கள் மூலம் சொல்லப்பட்டு வந்தன.
இராவணன் சீதையைச் சிறைப்பிடிக்க வரும்போது அவனுடைய யுத்ததத்திரங்களையும் தன்தங்கை மீது கொண்ட பாசத்தையும் எடுத்துக்காட்டுவதற்காக பின்வருமாறு இராவணனுக்குரிய பாடல்களை மீளுருவாக்கினேன்.
இராவணன் உருமாறிவரும்போது அவனுக்கான பாடல் (இராவண சன்னியாசி பாடல்.)
OI மாமனையே மானுமாக்கி மதியினாலே வந்தேன்.
நானும் மதியினாலே வந்தேன் யுத்தத்தில் மாவீரர் தந்திரங்கள் அறிவீர் இத தந்திரங்கள் அறிவீர்
02. தங்கச்சியும் ~ தான் வருந்த பழியும் தீர்க்க வந்தேன்
நானும் பழியும் தீர்க்கவந்தேன் பெண்களையே இழிவு செய்வோர் பெரும் பழியே கொள்வார் இங்கு பெரும்பழியே கொள்வார்.
O3. பெண்களுக்கே வன்முறைகள் புரியும் இந்த ஆண்கள்
இங்கு புரியும் இந்த ஆண்கள் அவரினத ஆண் ஆதிக்கம் அடக்கிடவே வந்தேன் நானும் அடக்கிடவே வந்தேன்.

Page 24
இராவண சந்நியாசி மறு மெட்டுப்பாடல்
ΟΙ தங்கச்சி கண்டே கொண்டகோபம் - இராவணன் வேஷத்தால் சன்னாசியாகவே வந்தேன்.
O2. பெண்களை இழிவு செய்யலாமோ ~ இவர்கள் போல
அங்கம் அறுப்பவர் யாராகில் உண்டோ
இராவணன் சீதையைச் சிறைப்பிடித்துச் செல்லும் போது சீதை மிகவும் காத்திரமான நிலையில் தன் பெண் உரிமையைப் பேசும் பாத்திரமாக உருவாக்கி அதற்கான மீளுருவாக்கப்பாடலை பின்வருமாறு அமைத்தேன்.
சீதை தன் பெண் உரிமையைப் பேசும் பாடல்
பரணிமெட்டு
இராவணனே பெண்சிறை பிடிக்கலாமோ அவர்கள் தம் உரிமை தனை மறுக்கலாமோ பெண் என்றால் பேதை என நினைக்கலாமோ என் உரிமை பேசுகிறேன் இங்கு நானே
ஆண் ஆதிக்கம் கொண்டே நீயும் சிறைப்பிடித்தாய் என்னை இப்போ பெண்கள் தன்னில் ஒடுக்குமுறை நீடிக்காதே நெடுநாளைக்கே
சீதை தன்பெண் உரிமைக்காக இராவணனிடம் பலமுறை வாதாடியும் கேளாதவர் காதில் ஊதிய சங்கு போல இராவணன் இவைகள் ஒன்றையுமே செவி மடுக்காது சீதையைக் கொண்டுவந்து சிறை வைத்து அவளுக்காக காவலாகவைப்பதற்கு திரிச்சடையையும் அவர் தோழிகளையும் அழைக்கிறான் அப்போது இராவணனுக்கும் திரிச்சடைக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் பெண் நிலைவாத
2. G6Z

நோக்கில் பற்றி இராவணனுக்கு திரிசசடை உணர்த்திய பாடல்களை பின்வருமாறு அமைத்தேன்.
திரிச்சடையின் பெண்நிலைவாதக் கருத்தியல் பாடல்கள்.
பெண்ணைச் சிறை பிடிக்கலாமோ தோ, ததிங்கிண) அவர் உரிமை மறுக்கலாமோ (தா, ததிங்கிண) அவர் உரிமை மதியா நீரே (தா, ததிங்கிண) அவர் பழியே தேடிக் கொண்டீர் (தா, ததிங்கிண)
சீதை மேல் கடுங்கோபம் கொண்ட இராவணனோ திரிச்சடை, பெண்கள் உரிமைற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை ஒன்றையும் காதில் வாங்காது தன் அரச அதிகாரத்தால் சீதைக்குக் காவலாக இருக்குமாறு கட்டளை இட்டு இடத்தை விட்டு அகன்று விடுகிறான்.
இராவணன் சென்ற பின் திரிச்சடையும் அவள் தோழிகளும் சேர்ந்து சீதைக்குத் தேறுதல் சொல்லும் மீளுருவாக்கிய பாடல்கள் பின்வருமாறு.
திரிச்சடை பாடல்
பெரியப்பா கோபத்திலே சீதாதேவி நீதி நியாயம் உண்டே ஆனாலும் அவரின் செய்கை அடுக்காது ஆண்களாய் இருப்பவர்க்கே
முதலாம் தோழி பாடல்
ஆண்களின் அதிகாரத்தால் சீதாதேவி அழிவுகள் தான் மிகுதி ஆனாலும் பெண்கள் புத்தி எப்போதமே ஆண்களும் கேட்பதில்லை.
இரண்டாம் தோழி பாடல்
பெண் புத்தி பின்புத்திதான் என்று இங்கே எப்போதம் ஆண்கள் சொல்வார். ஆனாலும் ஆண்களாலே பெண்கள் கண்ட தயரங்கள் அனேகம் அம்மா

Page 25
மூன்றாம் தோழி பாடல்
காலாதி காலமாக கவலை கொள்ள ஆக்கிவிட்டார்பெண்ணை காலங்கள் கடந்தாலும் ஆண்களின் ஆதிக்கம் தொடருதே சங்கிலிபோல்
சீதை சிறைப்பிடிப்பால் தங்கள் தனிப்பட்ட சுய நலனுக்காகவும் தங்கள் தங்கள் சுய கெளரவத்திற்காகவும் அநியாய அழிவுகளைத் தேடிக் கொடுக்கும் யுத்தம் இராம இராவணர்களுக்கிடையே உருவாகிறது. இக்கொடிய யுத்தத்தால் சீதை, சூர்ப்பனகை துயர் அடைந்துததுபோல மூன்றாவதாக மண்டோதரியும் துயர் அடைகிறாள் யுத்தத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக இராவணன் மண்டோதரியிடம் விடை கேட்க வருகிறான் அப்போது இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறது அவ் உரையாடலில் மண்டோதரிப் பாத்திரத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலானது பின்வருகிறது.
மண்டோதரி பாடல்.
பெண் சிறை எடுத்ததால் நாதா ~ பெரும் மோசம் வந்தணுகுதே - உம்மை சீக்கரம் சிறை விட்டுச்சீதை ~ பெண்கள் உரிமைகள் மதித்திடு நாதா.
இது மட்டுமல்லாது யுத்தத்தின் அழிவுகளையும் அதன் அவலங் களையும் மண்டோதரி இராவணனுக்கு எடுத்துணர்த்தியபோது இராவணனுடைய அரசகுல ஆண் ஆதிக்க அதிகாரத்தை எடுத்துக் காட்டுவதற்காக இராவணனுக்கான பாடலை பின்வருமாறு அமைத்தேன்.
TTTMLLTTT CMMMTTTL TLLMMTMM LLLT La LLLCTTTTLLL LLLLLLTTS
O. என்ன சொன்னாய் பேதைப் பெண்னே
எனக்குப் புத்தி சொல்லலாமோ பெண்புத்தி கேட்டானென்ற பெரும் இடரும் எனக்கு வேண்டாம்.
ހަހަރަހަހަށަހަހަހަހަހަހަހީކު2 GD 24ހަހަހަހަހަށަހަހަހަހު//2
 
 

O2. ஒளிந்து நின்று ஓர் கணையால்
வாலி தன்னைக் கொன்ற ராமன் அவனுக்கு நான் அடிபணிந்தே அஞ்சி நான் வாழுவேனோ,
மண்டோதரியோ இராவணனுக்கு யுத்தத்தால் ஏற்படும் அழிவுகளைக் கூறி அவ்யுத்தத்தால் தான் உட்பட பெண்கள் அடையும் துயரங்களையும் அவர்கள் அழிவுகளையும் விபரித்து இவ் யுத்தம் எமக்கு வேண்டாமென்றும் இதனால் ஏற்படப் போகும் விபரீதங்களை எம்மால் தாங்கிக் கொள்ளமுடியாதென்றும் எடுத்துச் சொல்லி இராவணன் யுத்த களம் செல்வதைத் தடுக்க முயற்சிக்கிறாள். இக்கட்டத்தில் மண்டோதரிக்காக உருவாக்கப்பட்ட பாடலானது பின்வருமாறு.
மண்டோதரி பாடல்.
யுத்தகளம் போக வேண்டாமே - என்பிராண நாதா நீதியுடன் நடந்த கொள்வீரே நிச்சயமாய் அழிவு சேரும் இலங்கை நகர் கடலில் மூழ்கும் சத்தியமாய் உமக்குரைத்தேன் அழிவு யுத்தம் எமக்கு வேண்டாம்.
இராவணன் தன் ஆண் ஆதிக்க அரசகுல அதிகாரத்தை மேம்படுத்தி நடந்து கொண்டதன் காரணமாகவும் மண்டோதரியின் அறிவுரைகளைக் கேட்காத விடத்தும் இராம இராவணர்களுக்கிடையே யுத்தம் உருவாகி அழிவுகளும் அவலங்களும் ஏற்பட்டன. இவ்யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களேயாவர் பெண்ணின் அறிவுரைகளை ஆண் ஆதிக்க அதிகாரத்தினால் இராவணன் அலட்சியம் செய்ததன் காரணமாக இறுதியில் இராவணன் முற்று முழுதான அழிவைச் சந்திக்க நேரிட்டது.
மேற் கூறப்பட்ட அடிப்படையிலேயே “சீதை சூர்ப்பனகை வதை” என்னும் கூத்து மீளுருவாக்கம் செய்யப்பட்டது, நான் முன்னர் கூறியதுபோல கூத்து மீளுருவாக்க பங்குகொள் ஆயப் வுச் செயற்பாட்டினுடாக இதற்கு முன் இரண்டு கூத்துக்கள் எமுதிய கால கட்டங்களில் பங்குகொள் ஆய்வுச்செயற்பாட்டாளரான ஆய்வாளர்

Page 26
திரு.சி. ஜெயசங்கர் அவர்களின் வழிகாட்டல் மூலமாக பெண் நிலைவாதச் சிந்தனைகள் பற்றி நான் பெற்றுக் கொண்ட அறிவு, ஆற்றல் பயிற்சி முதலியவைகளைக் கொண்டும் ஆண் ஆதிக்க அரசகுல அதிகார ஆசையும் இந்த ஆசையினால் பெண்கள் அடக்கி ஒடுக் கப்பட்டதையும் அவர்கள் ஆளுமை அற்றவர்களாக ஆக்கப்பட்டதையும் இதனால் பெண்கள் அடைந்த துயரங்களையும் சித்திரவதைகளையும் வெளிக் கொண்டுவந்து எடுத்துக் காட்டுவதற்காக “சீதை சூர்ப்பனகை வதை” என்னும் கூத்தை மீளுருவாக்கம் செய்தேன்.
இவ்வாறு முழு அளவிலான “சீதை சூர்ப்பனகைவதை” கூத்தை சீலாமுனை கிராம கூத்துச் சமூகத்தைச் சேர்ந்த நான் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகள் இன்றி சீலாமுனையை சேர்ந்த கூத்துக் கலைஞர்களுடன் மாத்திரம் பல கலந்துரையாடல்களை நடாத்தி தனி ஒருவனாக எழுத்துருவில் உருவாக்கினேன் இக் கூத்து கடந்த 24.06.2005 இல் மட்டக்களப்பு ரீ மகா நரசிங்க வயிரவர் ஆண்டுச் சடங்கு விழாவில் அக்கோயில் முன்றலில் அரங்கேறியது.
இக்கூத்தை உருவாக்கி அரங்கேற்றியது கூத்துச் சமூகத்தைச் சேர்ந்தகூத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற சமூக அபிவிருத்தியாகவும் இதற்கு முன்னர் பங்குகொள் ஆய்வுச் செயற் பாடான இரண்டு கூத்துக்கள் மீளுருவாக்கத்தின்போது தம் முழுநேர ஒத்துழைப்பையும் வழங்கிய கூத்துக்கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற வெற்றி என்றால் அது மிகையாகாது.
எனவே சீலாமுனைக்கிராமத்தில் கூத்துச் சமூகத்தால் இதுபோன்று பெண்நிலைவாதச் சிந்தனையில் மேலும் மேலும் பல கூத்துக்கள் மிளுருவாக்கத்தில் உருவாக்கப்படும் என்பதை மிகவும் ஊறுதியாக இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பு:
இக்கட்டுரை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட வருடாந்த கருத்தரங்கில் (2005) வாசிக்கப்பட்டது


Page 27
திரு செல்லையா சிவநாயகம்
முனைக் கிராமத்தின் வடமோடிக் வயதிலிருந்தே மிகுந்த ஈடுபாட்டு மூத்த கூத்துக் கலைஞர்களுள் 5 கிழக்குப்பல்கலைக்கழக நுனி விரிவுரையாளர் திரு. சி. ஜெயச சுத்துக் கலைஞர்களுடன் இை மீளுருவாக்கத்திற்கான பங்குகெ முழுமையாகப் பங்கு கொண்ட க சிலாமுனைக் கூத்துப்பாரம்பரி எழுத்துருக்களையும் பாதுகாத்துப் தலைமுறையினருக்கு கற்பித்துவரும் இருவருடைய இந்நூல் பொதுவா சீலாமுனைக் கூத்து மீளுருவாக கொள்ள உதவும் ஆதாரங்களும்
மூன்ற04
 

அவர்கள் மட்டக்களப்பு சீலாகூத்துப்பாரம்பரியத்தில் சிறு டன் பங்குகொண்டு வருகின்ற ஒருவர். 0ண்கலைத்துறையின் சிரேஷ்ட ங்கர் அவர்கள், சீலாமுனைக் னந்து மேற்கொண்ட கூத்து ாள் ஆய்வுச் செயற்பாட்டில் கலைஞர். பத்தின் கூத்து ஏடுகளையும், பராமரித்து அவற்றை அடுத்த b ஏட்டண்ணாவியராக வாழ்பவர் கக் கூத்துப் பற்றியும் சிறப்பாக க்தினைப் பற்றியும் விளங்கிக் ன் ஒன்றாக அமைகின்றது.
பூந்ஜி Uதிப் பு