கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களும் மனிதர்கள் என்றுணர

Page 1
ல்வரன் த
து. கெளரிள
 
 
 

ர்கள் எனறுணர.
- BITL5 எழுத்துரு
விவேகானந்தராசா

Page 2

பெண்களும் மனிதர்கள் என்றுணர.
- நாடக எழுத்துரு -
து. கெளரீஸ்வரன் த. விவேகானந்தராசா
மூன்றாவதுகண் பதிப்பு >حلگ
“തല്ക്കര് മഴമ്പർ രാര് മൃത്തதங்கிந்தபோம்”

Page 3
முன் அட்டைப்படம் மட்/விவேகானந்தா மகளிர்/மகா வித்தியாலய மாணவர்களுடன் இணைந்து ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் மேற் கொண்ட ஓவியக்களப்பயிற்சியின்போது (ஜன், ஜூலை-2007) மாணவர்களால் ஆக்கப்பட்ட ஒவியங்களின் ஒரு பகுதி

சமர்ப்பணம்
பெண்ணிலைச் சிந்தனைகளை நாம் அறிந்து, உணர்ந்து செயற்பட வழிகாட்டிய பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்
அக்கா, கமலா வாசுகிக்கு.

Page 4
நூல் பெண்களும் மனிதர்கள் என்றுணர.
விடயம் நாடகம்
ஆசிரியர்கள் து. கெளரீஸ்வரன், த. விவேகானந்தராசா
முகவரி 30. பழைய வாடிவிட்டு வீதி,
மட்டக்களப்பு, இலங்கை,
முதற்பதிப்பு ஐப்பசி 2007
பக்கங்கள் 40
அட்டை
வடிவமைப்பு சுசிமன் நிர்மலவாசன்
வெளியீடு மூன்றாவது கண்,
உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு
அச்சகம் வணசிங்கா அச்சகம்,
126/1, திருமலை வீதி, மட்டக்களப்பு.
விலை ரூபா 50.00
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் 2006ம் ஆண்டின் தமிழ் மொழித்தின நாடகப் போட்டிக்காக தரம் 08 தொடக்கம் 12 வரையான மாணவர்களுடன், மூன்றாவதுகண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த து. கெளரீஸ்வரன், த. விவேகானந்தராசா ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நாடக
உருவாக்கத்திற்கான, களப்பயிற்சிகளினூடாக இந்நாடகம் ஆக்கப்பட்டது.

முன்னுரை
நாடகங்களை தயாரிப்பது பல்வேறு வகையில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. நாடக எழுத்துருவை எழுதி நெறிப்படுத்தும் நெறியா
ளர்களையும், வேறொருவரது நாடக எழுத்துருவை நெறிப்படுத்தும் நெறியாளர்களையும் நாம் பொதுவாக அடையாளம் காணலாம்.
இத்தகைய போக்கு நவீன நாடகத்தின் பண்புகளுள் ஒன்றாக அமைகின்றது. இவ்விதம் உருவாக்கப்படும் நாடகங்களில் நாடக ஆற்று கையில் செலுத்தப்படும் கவனம், அந்நாடகத்தின் கருவிற்கும் அதனை ஆற்றுகை செய்வோருக்கும் உள்ள உணர்வுபூர்வமான விளக்கங்கள் குறித்து மிகப் பெரும்பாலும் முக்கியப்படுவதில்லை. அழகான ஆற்றுகை என்பதே இந்நாடகங்களின் பிரதான குறிக்கோளாகக் கொள்ளப்படும்.
இவ்விதமிருக்க, நாடக ஆற்றுகை என்பதை ஓர் செயல்வாதமாக மேற்கொள்ளும் போக்கு உலகந்தழுவி இடம் பெறுவதையும் அவதானிக்கலாம். செயல்வாத அரங்கில் இயங்குவோர் தாம் மேற்கொள்ளும் செயற்பாட்டினை ஏனைய மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சாதனமாக நாடகத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்தவகையில் செயல்வாத அரங்கில் அழகான ஆற்றுகை என்பதுடன் அந்த ஆற்றுகையில் பங்கு கொள்ளும் அனைவரும், தாம் இந்த ஆற்றுகையை ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? எதனைச் செய்கிறோம்? எப்படிச் செய்வதற்குத் தயாராகினோம்? என்கின்ற வினாக்களுக்கு தெளிவான பதிலைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இத்தகைய புரிதலோடு நாடக ஆற்றுகைசெய்வோர் இருப்பது செயல்வாத அரங்கில் மிக மிக இன்றியமையாதது.
-1-

Page 5
செயல்வாத அரங்கில் நாடக எழுத்துரு என்பது மிகப் பெரும்பாலும் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டதாக அமைவதில்லை. மாறாக செய்யப்போகின்ற விடயம் சார்ந்து அதனை ஆற்றுகை செய்பவர்களுடன் உரையாடி அவர்களது பங்குபற்றல்களுடன் உருவாக்கம் பெறும் வடிவமாகவே இங்கு எழுத்துரு உருப்பெறும்.
இந்நிலையில் இங்கு நாடக நெறியாளர் என்பவர் நவீன அரங்குகள் அறிமுகப்படுத்தும் நெறியாளரைப் போலல்லாது குறித்த விடயம் சார்ந்த நாடக உருவாக்கத்தின் ஊடாக முதலில் ஆற்றுகைக் குழுவினருடனும் அடுத்து ஏனையவர்களுடனும் ஆக்கபூர்வமான உரையாடல்களை, படைப்பாக்கங்களை மேற்கொள்வதற்கான ஓர் இணைப்பாளராகவே தொழிற்படுவார்.
எனவே செயல்வாத அரங்கில் இணைப்பாளர்களாக செயற் படுபவர்கள் பங்குபற்றுபவர்களைக் கொண்டு அவர்களுக்கூடாக அழகான நாடக ஆற்றுகையினை உருவாக்கிக் கொள்ளும் திறனுள்ளவர்களாக இருக்கவேண்டிய அதேநேரம் தாம் செய்யப் போகின்ற விடயம் சார்ந்த தெளிவான கருத்து விளக்கம் உடைய வர்களாகவும் அதுசார்ந்த செயற்பாட்டாளர்களாகவும் வாழ்வதுடன் விடயம் சார்ந்து பங்குபற்றுனர்களுடன் ஆக்கபூர்வமாக உரையாடி நாடகத்தை உருவாக்குகின்ற அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பது அவசியமாகின்றது.
இங்கு இணைப்பாளர்கள் களப்பயிற்சிகளை நடத்தக் கூடியவர்களாக இருப்பது அவசியமாகின்றது. களப்பயிற்சிகள் ஊடாகவே செயல்வாத அரங்குகளை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
ஏனெனில் களப்பயிற்சி என்பது, பங்குபற்றுனர்களின் பங்களிப்புடனும், வெளிப்பாட்டுடனும் செய்வதன் ஊடாக கூடிக் கற்றலுக்கான சிறந்த கற்கைச் சூழலாக அமைவது.
இத்தகைய களப்பயிற்சிகளை நடத்துதலில், செயல்வாத அரங்குகளை முன்னெடுத்தலில் பல்வேறு நிலைகளிலும் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழுவின் கல்வியியல் அரங்க முன்னெடுப்புக்களின் ஒரம்சமாக மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நாடகக்
-ii

களப்பயிற்சிகளின் ஊடாக உருவாக்கம் பெற்ற நாடக எழுத்துருவும் பங்கு கொண்டோரின் நாடகவாக்க அனுபவப் பகிர்வுகளுமே இங்கு நூலுருப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
போட்டி முறைமைகளை ஊக்குவித்து அதனுடாக தனிமைப் படுத்தல்களையே வலுப்படுத்திடும் இன்றைய கல்விச்சூழலில், குறித்த கற்கைத்திட்டமிடலுக்கேற்ப செயற்படும் ஒரு சிலரே முதன்மையானவர் களாகவும் முக்கியமானவர்களாகவும் அடையாளப்படுத்தப்படும் அதேவேளை ஏனையோரது பல வகைப்பட்ட ஆற்றல்களின் வெளிப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதென்பது மிக அரிதாக உள்ளது.
மாறாக மாணவர்களிடையே பாகுபாடு காட்டாது மாணவர் களின் வித்தியாசம் வித்தியாசமான ஆற்றல்களை இணங் கண்டு அவற்றை மதித்து முன்னெடுப்பதாகவும், குழுவாக இயங்கச் செய்வதாக, மாணவர்களின் சுய சிந்தனைக்கும், கற்பனைக்கும், சுயதேடலுக்கும், ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பிற்கும் இட்டுச் செல்லக் கூடியதுமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக பங்கு கொள்வோர் அனைவருக்கும் ஆத்ம திருப்தியை, மனமகிழ்வை வழங்குவதாகவும் அமையும் அரங்கச் செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்க வேண்டியது ஆக்கபூர்வமான மனிதர்களை உருவாக்க முனையும் செயற்பாடுகளில் அவசியமானதாகின்றது.
ஏனெனில் வகுப்பறைகளில் பெறமுடியாதுள்ள ஆனால் மாணவர்கள் அவசியம் பெற்றாகவேண்டிய கற்றல் அனுபவங்களை பாடசாலை கல்வியியல் அரங்கு வழங்குகின்றது. இந்த வகையில் மாற்றுக் கல்வி முறைமையாகவுமுள்ள இதன் முக்கியத்துவம் உணரப்படுதல் இன்றியமையாததாகின்றது.
குறிப்பாக, பாடசாலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள பாடவிதான திட்டமிடல்களுக்கப்பால், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதுவும் நாடகச் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிக அரியதாகவே உள்ளமையையும், அவைகூட போட்டிகளையும் ஒரு சிலரை மாத்திரம் பங்கேற்க வைக்கத்தக்க கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளமை கவனிப்பிற்குரியது.
-ii

Page 6
இந்நிலையில் போட்டி, வெற்றி, பரிசில் என்பவைகளுக்கப்பால் மாணவ நலன் நோக்கிலான பயில்வுக்கான வாய்ப்பாக குறித்த அரிய சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வோரும் உள்ளமை கவனிப்பிற்குரியது.
இவ்வழியில் கடந்த வருடம் தமிழ்த்தினப் போட்டிக்காக மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில், பாடசாலை அதிபரின் திட்டமிடலிலும், பொறுப்பாசிரியர்களின் ஒருங்கிணைப்பிலும், மாணவர்களின் பங்குபற்றலிலும் இடம் பெற்ற நாடகப் பயிற்சிகளின் ஊடாக உருவாக்கம் பெற்ற நாடக எழுத்துருவும், நாடவாக்க அனுபவப் பகிர்வுகளுமே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
இன்றைய சூழலில் கல்வியல் அரங்கச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை ஏனையோரும் விளங்கிக் கொள்ளவும், முன்னெடுக்கவும் இத்தகைய செயற்பாட்டுப் பகிர்வுகள் அவசியம் என்பதை அடிப்படையாகக் கொண்டே மூன்றாவதுகண் இந்நூலை பதிப்பிக்கின்றது.
இச்சிறுநூலின் உருவாக்கத்தில் பெரு ஊக்கம் தந்து வழி காட்டிய மூன்றாவதுகண் இணைப்பாளர் அவர்கட்கும், சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர், பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் மூன்றாவது கண் நண்பர்களுக்கும் மற்றும் வணசிங்கா அச்சகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
து. கெளரீஸ்வரன் த.விவேகானந்தராசா
-iv

போட்டி இல்லையேல். பங்குபற்றலில்லை? பொற்கிளி இல்லையேல். பாட்டுமில்லை!புலமையுமில்லை!
ஈழத்தமிழர்கள் மத்தியல் கல்வியியல் அரங்கச் செயற்பாடு முக்கியமான பங்கை வகித்து வருகின்றது. முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தீர்க்கமான வரலாறும் (எழுதப்படாததாயினும்) அதற்கு உண்டு. ஆனாலும் முழு வீச்சிலும் முழுப் பரிமாணத்திலும் அதன் உண்மையான அர்த்தத்திலும் கல்வியியல் அரங்கச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவது சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
மாணவர்கள் குழுநிலையில் பங்குபற்றி விளையாட்டாகவும் கற்றலாகவும் செயற்பாடுகள் மூலமாகத் தங்களது கற்பனைகளை, கருத்துக்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவது; ஆற்றல்களைக் கண்டுபிடிப்பது, வெளிப்படுத்துவது, கொண்டாடுவது என்பதனுாடாக சுயமான படைப்பாக்கத்திறன், சிந்தனைத்திறன், விமரிசன நோக்கு, செயற்பாட்டுத்திறன் என்பவற்றை வளர்த்துக்கொள்ளும் செயல் மையக் கற்றல் முறைமை கல்வியியல் அரங்கின் சாராம்சமாகும்.
ஆனால் பாடசாலைசார் போட்டிகளும், போட்டி விதிமுறைகளும் கல்வியியல் அரங்கின் சாரம்சமான ஆற்றல்களைக் கண்டுபிடிப்பது ஆற்றல் களைக் கொண்டாடுவது என்பதற்கு மாறாக தோல்வியைப் பழிப்பதும், வெற்றியை மட்டும் கொண்டாடுவதும் போற்றுவதுமாகிச் சுருங்கிக் கிடக்கிறது.
பாடசாலைகளில் கல்வியியல் அரங்கின் நிலை மிகப்பெரும்பாலும் “பிள்ளையார் பிடிக்கக் குரங்காகி” இருப்பது உண்மை; வெறும் இகழ்ச்சியில்லை.

Page 7
மேலும் போட்டி இல்லையேல் மாணவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று விவாதிக்கவும்படுகிறது. இங்கு போட்டி என்பது மாணவர்களை ஊக்குவிப்பது என்ற பெயரினாலான மறைமுகக் கையூட்டாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்றமை கவனத்திற்குரியதாகும்.
இங்கு போட்டி முறை மட்டுமல்ல அதனை அறிமுகப்படுத்தும் நோக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் சுயதேடலும் செயற்பாடும் கொண்ட சமூக உருவாக்கம் பற்றிச் சிந்தித்துச் செயற்படப் போகிறோமா?, பொற்கிளி இல்லையேல் பாட்டும் இல்லை புலமையும் இல்லை என்றதான சமூகத்தை வலுப்படுத்தப் போகின்றோமா? என்பது முகத்தில் அறையும் முக்கிய கேள்வியாகி இருக்கின்றது.
இச்சூழ்நிலையில் கல்வியியல் அரங்கச் செயற்பாடு வித்தியாசமான மகிழ்ச்சிகரமான கல்வி முறைமையாக முன்னெடுக்கப் படுவது மிகவும் அவசியமானதாக உணரப்படுகிறது.
ஏனெனில் சிந்தனைத்திறனும், படைப்பாக்கத்திறனும், விமரிசன நோக்கும், செயற்றிறனும் கொண்ட சமூக உருவாக்கம் சுதந்திரத்தினதும் சுய வளர்ச்சியினதும் சாராம்சமாகும்.
எனவே அதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவது, முறைமை களை உருவாக்குவது, சிந்தனைத்திறனும், படைப்பாக்கத் திறனும், விமரின நோக்கும், செயற்றிறனும் கொண்ட மாணவர் சமூகம் உருவாவதற்கு வழியமைக்கும்.
மாணவர்களது பங்குபற்றலுடன் விளையாட்டுக்கள், ஆடல்கள், பாடல்கள், உரையாடல்கள் மூலமாக உருவாக்கப்படுகின்ற நாடக ஆற்றுகைகள், அவற்றின் எழுத்துருக்கள், பங்குபற்றுனர் புதிதளித்தல்கள் அனுபவக்குறிப்புகள் என்பவை கல்வியியல் அரங்கின் உண்மையான அர்த்தத்தைப் புரிதலுக்கு துணை செய்யும்.
இந்த வகையில் கல்வியியல் அரங்கு மாற்றுக் கல்வி முறைமை யாகி சுயாதீனம் மிக்க மாணவர் சமூகங்களை விளைவிக்கும் களங்களாகும். சி.ஜெயசங்கர் இணைப்பாளர், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு.
a-V-

பாடசாலை அதிபரின் வாழ்த்துரை
முத்தமிழ் வித்தகன் முனி விபுலானந்தன் புகழொடு தோன்றிப், புகழொடு பணியாற்றிப் புகழ் பெற்ற இக்கிழக்கிலங்கையில் இன்று நாடகத்தமிழின் வளர்ச்சி வேகம் மிக மந்தமாகவே உள்ளது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.
மாணவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தவும், அவர்களது ஆக்கத்திறனை விருத்தி செய்யவும் ஒரு களமாக அமைவது நாடக அரங்குகளே. ஆனால் இயல்பான பாடவிதானத்தின் மத்தியில் இதற்காக ஒதுக்கப்படக்கூடிய நேரம் மிகக் குறைவே. எனவே மாணவர் மத்தியில் இதற்கான முன்வருதல் மிகக் குறைவாக இருந்தது.
ஆனால் மாணவர் உயர் மட்டச் செயற்பாடுகட்கான ஊக்குவிப்பு கல்வியமைச்சின் செயற்திட்டத்தினுடாக முன்னெடுக்கப்பட்டமை மாணவர் நாடக அரங்கிலும் காலடி வைப்பதற்கு வழிகோலியது.
எமது மாணவர்களால் போட்டிக்காக மேடையேற்றப்பட்ட நாடகம் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டுக் குழுவினரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது. அரங்க ஆற்றுகை என்றால் என்னவென அறியாது இருந்த மாணவருக்கு அரங்க நுட்பங்கள் பற்றி விளக்கவும், அவர்களது ஆக்கத்திறனை வளர்க்கவும் ஒரு பாதை சமைத்துக் கொடுத்த பெருமை இக்குழுவினரையே சாரும். இதில் பங்கேற்ற ஒவ்வொருவரும் மாணவரைக் கலையாற்றல் எனும் சிற்றுளி கொண்டு சிற்பங்களாக உருவாக்கினர் என்றால் மிகையல்ல.
எனவே மாணவரின் ஆற்றல்களின் வெளிப்பாடாக உருவான நாடக எழுத்துரு, நூல்வடிவம் பெறுவது குறித்து நாம் மிகுந்த மகிழ்வு அடைகின்றோம்.
திருமதி. இந்திராணி புஷ்பராஜா, அதிபர், மட்/ விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம்
-V1

Page 8
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
நாடகப்பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றிய
யோ.
சி. சிவதர்சினி
கு. காயனா
கார்த்திகா
த. சரணியா
ஆ. பிரபாகினி நி. தனுஜா சி. சிறிரஞ்சனி க. கஜேந்தினி எஸ். டிலானி
த. சுகந்தினி
ஜெ. கேஷனா த. சண்முகப்பிரியா ல. நிவேந்தினி கு. ரஜிதா (5. Dufo LDT உ. அமலநிரோஜினி
ச. பிரசன்யா
சு. ஹிருவழினி
மாணவர்கள்.
19. சி. சிவாநந்தினி
20.
21.
22.
23.
24.
25.
26.
27
28.
29.
30.
31.
32.
33.
F.
:
ஹர்ஜனா
பிறேமானந்தி சுதர்ணிகா
டிலானி
இந்துஜா
கே. தாட்சாயினி விவேக்கா
த. பிருந்தா
வே. அனுஜா ஜெ. திவ்வியா
க. சுரேனிக்கா
அ. அனோமிக்கா
க. மேரி
9.
சிந்துஜா
ரா. சஜானா
34. ம. சந்திரிக்கா
35. ர. ஜனனி
பயிற்சிப்பட்டறைத் தயாரிப்பு
வழங்குனர்,
நாடக எழுத்துரு நெறியாள்கை து. கெளரீஸ்வரன் த. விவேகானந்தராசா

பெண்களும் மனிதர்கள் என்றுணர.
பார்வையாளர் பகுதியிலிருந்து நடிகர்கள் வரிசையாக மேடையை நோக்கி, பின்வரும் தாளக்கட்டினையும் அதற்கேற்ப பாடலினையும் பாடியாடியவாறு (சிறுவர்களாக, மகிழ்வு நிலையுடன்) மேடையின் முன் இரு பகுதிகளினுடாகச் செல்வர்.
தாளக்கட்டு :- ததிந்தத் தாத ததிந்தத் தத்துமி
ததிந்தத் ததிந்தத் ததிந்தத்தா - 2
பாடல் -ேசின்னஞ்சிறு சிறுவர் நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்.
இன்பமான உலகினிலே சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடுவோம். ததிந்தத் தாத. ஒடிப்பாய்ந்து கூடித்திரிந்து ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம் ஆடிப்பாடி மகிழ்ந்திடவே கூடிக்குலாவி வாழ்ந்திடுவோம். ததிந்தத் தாத. ஆண் பெண் என்ற பேதமில்லை இன்று எங்கள் உலகினிலே கள்ளங்கபடம் ஏதுமில்லை என்றும் எங்கள் உள்ளத்திலே ததிந்தத் தாத. தத்தித் திரியும் வயதினிலே தாவிக் கூடிக் களித்திடுவோம். கொஞ்சும் மழலைப் பேச்சினிலே கோடி இன்பம் கண்டிடுவோம். ததிந்தத் தாத.
(இவ்வாறு பாடியாடி மேடையில் நுளைந்த பின்பு அங்கு பல்வேறு
ஆட்டக் கோலங்களாக ஆடி அரை வட்ட நிலையில் பார்ப்போரை நோக்கி நிற்க.)
-1-

Page 9
நபர் 1 (சிறுவர்) :- (எல்லோரையும் பார்த்து) விளையாடுவோமா..?
ஏனைய சிறுவர்கள் :- ஒம் ஓம் விளையாடுவோமே.
நபர் 2 :- நபர் 3 :- நபர் 4 :- நபர் 1 :- நபர் 2 :- நபர் 4 :- நபர் 1 :-
பலர் :-
சிலர் :-
நபர் - 5 :- நபர் - 6 - நபர் - 5 :-
நபர் - 2 :-
நபர் 5 - ஏனையோர் :-
நபர் 2 :- ஏனையோர் :- நபர் 2 :- ஏனையோர். நபர் - 2 :-
என்ன விளையாட்டு? என்ன விளையாட்டு?
கொத்திருக்கு கொத்து விளையாடுவம். சீச்சீ. பிள்ளையார் கட்ட விளையாடுவம். இல்ல இல்ல பூக்குட்டி விளையாட்டு முதல்ல கொத்திருக்கு கொத்து விளையாடுவம், பிறகு பூக்குட்டி விளையாடுவம் என சரியா..? ஓம் ஓம் விளையாடுவோம். சரி, சரி விளையாடுவோம். எனக்கேலாப்பா இந்த விளையாட்டுக்கு. ஏலாட்டிப் போ.
இல்ல இல்ல நானும் வாறன். நான் தான் முதல்ல சொல்வனாம். சரியா..? சரி சரி சொல்லு (என உரையாடி வட்டமாக அமர்ந்த பின்பு விளையாட்டுத் தொடங்குகிறது கொத்தினால் எல்லோரது தலைகளிலும் மெதுவாக தட்டியவாறு.) "கொத்திருக்கு கொத்து.'
என்ன கொத்து
மாங்கொத்து.
6k6ö60I LDI.
L6sfl LOT.
போட்டுத்து போ சரி இரவு, கண்ண மூடுங்கோ
-2-

நபர் 6 - ஏனையோர் :- நபர் 6 - ஏனையோர் :- நபர் 6 - ஏனையோர் :- நபர் 6 :- ஏனையோர் :-
நபர் 6 -
(என்று கூறி தனக்கு விருப்பமான ஒருவரது அருகில் கொத்தைப் போட்டு விட்டு பகல் எனக் கூறிட, கொத்து போடப்பட்டவர் கொத்துப் போட்டவரை துரத்தி அடிக்க முற்படுவார், ஏனையோர் கைதட்டி உற்சாகம் கொடுப்பர். கொத்துப்போட்டவரை அடித்தால் மீண்டும் அவரே சொல்வார் அடிக்காதவிடத்து அடிக்காதவர் தொடர்வார். உதாரணமாக.).
காப்பிருக்கு காப்பு.
என்ன காப்பு.
தங்கக் காப்பு.
போட்டுத்துப்போ. (மீண்டும்) சீலை இருக்கு சீலை.
என்ன சீலை.
பட்டுச் சீலை.
போட்டுத்துப் போ
சரி, இரவு.
(என்றிட ஏனையோர் கண்களை மூடுவர். தனக்கு விருப்பமான
ஒருவருக்கு கொத்தைப் போட்டு பகல் என்று சொல்லி ஓட்டமெடுப்பர்.
விளையாட்டுத் தொடரும். உதாரணமாக.)
நபர் 5 - ஏனையோர்:-
நபர் 5 :-
ஏனையோர். நபர் 5 -
ஏனையோர் :-
நபர் 5 :-
ஏனையோர்:-
நபர் 5 :-
கொத்திருக்கு கொத்து. என்ன கொத்து? மாங்கொத்து 6T6ör6OT DIT?
L6s LDI. போட்டுத்துப்போ. போட மாட்டேனே! சரி யாருக்கு வேணும்? எனக்கு எனக்கு. சரி இரவு (என்று சொல்லி ஒருவரிடம் கொத்தைப் போட்டு ஒட்டமெடுக்க.)
-3-

Page 10
நபர் -9 :-
நபர் 8 :-
நபர் 10
நபர் 11 :-
நபர் 12 :-
ஏனையோர் :-
இருவர் :-
GeFrTış 1, :-
(சலிப்புடன் எழும்பி) என்னவாம் இது எனக்கு கொத்துப் போடவுமில்லைஎனக்கேலாப்பா. எனக்கும் ஏலாட்பா வேற விளையாட்டு விளையாடுவம்
அப்ப பூக்குட்டி விளையாடுவம் சரியா..?
சரி சரி விளையாடுவம் (விருப்பத்துடன்) நாங்க °தாச்சி’ (தலைவர்) மற்றவர்கள் பெயர் வைத்துத்து வாங்க (என்றிட, இருவர் இருவராக தோளுக்கு தோள் கைப்போட்ட வண்ணம் மேடையின் பல பாகங்களிலும் தமக்கு விருப்பமான பெயர்களை வைத்து தாச்சியிடம் வந்து.)
உச்சி உச்சி.
தாச்சி (இருவரும்) :- தோல் தோல்.
சோடி 1 :-
தாச்சி 1 :-
தாச்சி 2 :-
சோடி 2 :-
தாச்சி 13
Gafl. 2 -
தாச்சி 22
தாச்சி 1 :-
தாச்சி 2 :-
மாம்பழம் வேணுமா?, தோடம்பழம் வேணுமா? ஆ. எனக்கு தோடம்பழம் வேணும். சரி, சரி மாம்பழம் வா
உச்சி. உச்சி
தோல். தோல் செவ்வரத்தம் பூ வேணுமா? மல்லிகைப்பூ வேணுமா? எனக்கு செவ்வரத்ததான் வேணும். (என்றிட மற்றவர் எதிர்பக்கம் செல்வர். இவ்வாறு அனைவரும் பெயர் வைத்து பிரிந்து இரு குழுக் களாகி எதிர் எதிரே குறித்த தூரத்தில் அமர்வர். பின்பு தாச்சி இருவரும் தங்களது குழுவிலுள்ளவர் களுக்கு பெயர் வைப்பார்கள்) (எதிர் குழுவைப்பார்த்து) நாங்க பழத்தில பெயர் வைக்கிறம், நீங்க பூவில வைங்க. சரி, சரி நாங்க பூவில பெயர் வைக்கிறம்
-4-

(இவ்வாறு கூறி பெயர்வைத்த பின்பு முதலாவது தாச்சி அடுத்த குழுவிலுள்ள ஒருவரது கண்களை மூடி தனது குழுவிலுள்ளோரை நோக்கி) தாச்சி 1 :- அன்னமின்னாப் பழம் வந்து வந்து குட்டி குட்டி ஒடு (என அழைத்தவுடன் அன்னமின்னாப்பழம் என பெயர் வைக்கப்பட்டவர் உடனே குட்டி விட்டு போய் அமர்வார் தாச்சி மீண்டும்.) "அன்னா வாரன் முன்னாரி இன்னா வாறான் சன்னாசி ஆளப்பாத்து கண்டு பிடி’ (என்று கூறி கண்களை பொத்தியமையை விலக்கிடுவார், ஏனையவர்கள் குறித்த நபரை அடையாளம் காட்டாவண்ணம் சிரிப்பார்கள், எழும்பிப் பாவனை செய்வார்கள், இந்நிலையின் கண்கள் பொத்தப்பட்டு குட்டப்பட்டவர், குட்டியவரை அடையாளம் காட்டினால் குட்டியவர் எதிர்பக்கத்திலும் அடையாளம் சரியாகக் காட்டாவிடின் குட்டுப்பட்டவர் எதிர்பக்கத்திலும் இணைவர், இணைந்தவுடன் அவர்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்பட்டு விளையாட்டுத் தொடரும். இவ்வாறு இரு குழுக்களும் மாறி மாறி விளையாடிக் கொள்வார்கள் இதன் பின்னர்) எல்லோரும் :- (மகிழ்வு நிலையில்)
“தந்தத் தகிர்த தகிர்த தாம் திந்தத் திகிர்த திகிர்த தெய் (என்ற தாளக்கட்டிற்கு ஏற்ப பாடியாடி பார்ப்போரை நோக்கி மேடையின் முன்பகுதிக்கு வந்து) LurTLdö :- சிறுவர் நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்துமே - சந்தோஷமாய்
சிரித்து மகிழ்ந்து வாழப்போகிறோம். - 2 (தந்தத் தகிர்த தகிர்த தாம்.) என பாடியாடிவாறு ஓர் ஒழுங்கு நிலையில் சென்று மேடையின் வலது பகுதியில் சிலர் வீடாகவும் சிலர் வேலிகளாகவும், இடது பகுதியில் சிலர் விளையாடுவதாகவும் அடுத்த காட்சியை அமைப்பர்.
-5-

Page 11
வீட்டிற்குள் அப்பாவாக ஒருவர் கதிரையில் அமர்ந்து ஏதோ வாசிப்பதாகவும் அம்மா வீட்டின் வலது மூலையில் சமையல்
வேலைகளில் ஈடுபடுபவராகவும் இவர்களது மகள் (சுமதி) வேலி
ஒரத்தில் நின்று இடது பக்க மேடைப்பகுதியில் கிட்டிப்புள்
விளையாடப்படுவதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும்
காட்சி அமையும்.
நபர் 1
நபர் 2
நபர் 1
நபர் 3
நபர் 4
நபர் 2
ebHiribuDIT
சுமதி
எங்கடா கிட்டியைக் காணல்ல.
இந்தா கிடக்கு.
உத்தட்டாடா..?, உத்தட்டாடா..? பொறு பொறு. (தன்னை தயார் படுத்திய பின்பு) சரி சரி உத்து. (கிட்டியை உத்திட நபர் - 3இலுள்ளேன். அதைப்பிடிக்கத் தவறிய நிலையில் அவரைப் பார்த்து) என்ன புடிடா புடிக்கிறா, சரி சரி எறிபார்ப்பம். (எறிந்து புள்ளில் படாத நிலையில் நபர் - 1 கிட்டியைத் தட்டி அடிக்க நபர் - 5 அதைப் பிடித்து விடுகிறார்.) (நபர் - 5இலுள்ளோரைப்பார்த்து) சரி பாடு அவர் "ஆலையிலே சோலையிலே.” என்று பாடி ஒட ஏனை யோரும் மேடை யின் பல பகுதிகளுக்கூடாகவும் ஓடிவிளையாடி இடது பக்க மேடையின் அதாவது விளையாட்டு இடம்பெற்ற பகுதியில் களைப்புடன் உறைநிலைக்கு செல்ல வலதுபக்க மேடையிலு ள்ளோர் காட்சி இயக்கம் பெறும்.) (வீட்டின் அங்குமிங்கும் தேடிப் பார்த்தவண்ணம்) சுமதி, சுமதி, ஏய் சுமதி அங்க என்ன பார்க்கிறா? இல்ல அம்மா நானும் விளையாடப் போறனம்மா
-6-

SOlůLT :- -
நபர் 1 :-
நபர் 2 .ே
நபர் 8 :- நபர் 4 :-
தாளக்கட்டு :-
பாடல் :-
என்ன, விளையாடப் போறியா? அதெல்லாம் சரிவராது, முதல்தான் நீ விளையாடலாம் இப்ப விளையாடக் கூடாது; நீ வயசுக்கு வந்த பொம்பிளப்பிள்ளை வீட்டுக்கு போ (என்றிட சுமதி உள் செல்கின்றார்) வேலியாக, வீடாக, அப்பாவாக உள்ளேர்ந்து அதட்டல் குரல்களில்) நீ ஆம்பிளப் புள்ள மாதிரி விளையாட ஆசப்படாத நீ பொம்பிளப் புள்ள வீட்டுக்குள்ள போயிரு. வீடு விறாந்தைய ஒதுங்கப்பண்ணிக் கூட்டு
வாசலக் கூட்டு!
தண்ணி அள்ளித்து வா! கெதியெண்டு தேத்தண்ணியை வை! (இவ்வாறு அதட்டல்களிலான கூற்றுக்கள் ஒலித்து ஒய சுமதி வீட்டின் முன்பாக குனிந்தவாறு உறை நிலையில் அமர்ந்திருப்பார் இச்சமயம் இடது பக்கம் உறை நிலையிலிருந்தவர்கள் பின்வரும் தாளக் கட்டினையும் அதற்கேற்ப பாடல்களையும் பாடிடுவர் தந்தனத் தான தன தானா தன தான தந்தனத் தானானா தந்தனத் தான தன தானா தன தான தந்தனத் தானானா உண்மையை நன்றாய் உரைத்திடவே - நல்ல ஊக்கமாய் நாங்கள் எழுந்து விட்டோம் பெண்களும் மனிதர்கள் என்றுணர - பெண்ணின்
வாழ்க்கை தனை நாம் பேச வந்தோம்
(இப்போது பாடுபவரின் ஒருவர் மேடையின் முன் பகுதிக்கு
வந்து பார்ப்போரை நோக்கிய வண்ணமாக, தலைகுனிந்து
முளங்காலில் அமர்ந்திருந்த சுமதியை கையில் பிடித்து முன் பகுதிக்கு கொண்டு வருவார், தொடர்ந்து)
-7-

Page 12
பாடல் :- பெண் என்றால் பேதை எனச் சொல்லும் - இந்தப் பேதமை இன்றே மறையவேண்டி பெண்களும் மனிதர்கள் என்றுணர - பெண்ணின்
உணர்வுகளை நாம் கூற வந்தோம்.
(எனப்பாடி அனைவரும் தாளக் கட்டிற்கேற்ப அரைவட்டமாக நகர்ந்த வண்ணம் அடுத்த காட்சியை அமைப்பர்)
இருவர் குதிரைகளாகவும் ஒருவர் கம்பீரமாக அதிகாரத்தின் சின்னமாக அதில் சவாரி செய்வதாகவும் பாவனை செய்த வண்ணம்
பின்வரும் தாளக்கட்டிற்கேற்ப ஆடிவர ஏனையோர் அரைவட்ட வடிவில் நின்று பாடிடுவர்.
தாளக்கட்டு :- தகஜொனு தகதரி தாம் தாம் தாம் தெய்ய
தகஜொனு தகதரி தெய் - 3 (எனும் தாளக் கட்டிற்கு ஏற்ப வலது புற முன்பக்க மேடைக்கு வந்து குதிரைகள் உறைநிலையாக,) குறித்த நபர் :-(இறுமாப்புடன்) பெண்கள் எமது நாட்டின் கண்கள்; அவர்களை தாயாகவும் தெய்வமாகவும் போற்றுகின்ற பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் (எனக் கூறி உறைநிலையில் நிற்க அரைவட்டத்தில் நின்ற நபர் - 6 மேடையின் முன்பகுதிக்கு வந்து) நபர் - 6 - வணக்கம் செய்திகள் வாசிப்பவர் நிவேந்தி,
தலைப்புச்செய்திகள். தலவாக்கலை லிந்துலை பகுதியைச்சேர்ந்த தோட்டமொன்றில் வசிக்கும் வாய்ப் பேசமுடியாத பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது.
-8-

(என வாசித்து உறை நிலையில் முன்னோக்கி நிற்க, அரைவட்டத்தி லுள்ள ஏனையோர்
தந்தானந்தினம் தானம் தானினா.” தாளக்கட்டினை மெதுவாக இசைக்க அதற்கேற்ப நபர் - 3 மேடையின் முன்பகுதிக்கு வருவார் பின்னர்)
நபர் - 3 - 6 வயது சிறுமியை 62 வயதுடைய நபர்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளார். இது பற்றிய விசாரணை மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (இவ்வாறு வாசித்து முடித்து முன் பகுதியில் நிற்க
தந்தானந்தினம் தானம் தானினா.” தாளக்கட்டிற்கேற்ப ஒருவர் (மனைவி) அரை வட்டத்திலிருந்து மேடையின் மத்திக்கு வந்து சமையல் வேலைகளில் ஈடுபடுவதாகவும், மற்றொருவர் (கணவர்) மதுபோதையில் ஆடிய வண்ணம் . )
கணவர் :- நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
ராத்திரிக்கு தூங்கவேனும் ஊத்திக்கிறன் கொஞ்சம் (என்று பாடி அசைந்து தள்ளாடி மனைவியை நோக்கி) ஏய் சாப்பாட்டப் போடுடி, ஏய் (மனைவி சாப்பாட்டை பரிமாற சாப்பிட்ட கணவர் ஏதோ குறைபாடு கண்டதாக பாவனையுடன் கோபமாக அதட்டலுடன்,
சாப்பாட்டைத் தட்டியவாறு.)

Page 13
கணவர் :- என்ன சாப்பாடு இது, சனியன்,
(கையை ஓங்கி அடிக்க முனைந்த நிலையில்) மூதேவி!
மனைவி :- ஐயோ அம்மா. (பயமும் பீதியுடனும்) ஆக இருவரும்
உறை நிலையில் நிற்க
ஏனையோர் :-பூமி மீது வாழும் பெண்களை நிம்மதியாய்
வாழ விடும் மனிதர் வேண்டுமே. - 2 தந்தானந்தினம் தானம் தானினா - தானம் தானின தந்தானந்தினம் தானம் தானினா (எனப்பாடிட அரை வட்டத்திலிருந்து மேடையின் முன் பகுதிக்கு நகர்ந்து)
நபர் 1:- பெண்களை பேச்சளவில் பெருமைப்படுத்தாதீர்கள் அவர்களது யதார்த்த வாழ்க்கையில் அவர்களை மனிதர்களாக மதித்து பெருமைப்படுத்துங்கள்!
(என்று கூறி பின்வரும் பாடலைப் பாடுவர். அரைவட்டத்தில் உள்ளோ
ரும் பாடலில் இணைந்து கொள்வர்)
பாடல் :- பேச்சில் இன்றி செயலில் காட்டுங்கள்
பெண்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் பேச்சில் இன்றி செயலில் காட்டுங்கள் பெண்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
என்று பாடி முடிக்க
தந்தானம் தினம் தானம் தானினா.
தாளக்கட்டிற்கு ஏற்ப அரைவட்ட வடிவில் இருந்து நபர் 2 மேடையின்
முன் பகுதிக்கு நகர்ந்து,
நபர் 2 :- பெண்கள், எங்களை தெய்வங்கள் ஆக்காதீர்கள்
உணர்ச்சியுள்ள மனிதர்களாக மதியுங்கள்.
-10

பாடல் :- பூமி மீது வாழும் பெண்களை நிம்மதியாய் (அனைவரும்) வாழ விடும் மனிதர் வேண்டுமே.
பூமி மீது வாழும் பெண்களை நிம்மதியாய் வாழ விடும் மனிதர் வேண்டுமே. என்று பாடி, தந்தானம் தினம் தானம் தானினா. என்ற தாளக்கட்டிற்கு அனைவரும் சிந்து நடையில் சென்று அடுத்த காட்சியை அமைத்துக்கொள்வர்.
காட்சி-4
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பிரிவினராக அரைவட்டத்தில் நிற்பர் முதலாவது அரைவட்டத்தில் நிற்போர்
தன்னானே தன்னானனே தன தானனானே தன்னான்னே தன்னானே தன்னானனே தன தானனானே தன்னான்னே என்ற தாளக்கட்டிற்கு இணங்க வேகமாக இடப்பக்கம் மூவரும் வலப்பக்கம் மூவருமாக நின்று தேயிலைக் கொழுந்து பறிப்பர். அப்போது.
தன்னானே தன்னானனே தன தானனானே தன்னான்னே தன்னானே தன்னானனே தன தானனானே தன்னான்னே
என்ற மெட்டு இசைக்கப்படும்.
லெச்சுமி அக்கா:- ஏனுங்க! ராசாத்தி ஒங்க கொழந்தைக்கு
என்னபாடுங்க?
ராசாத்தி :- அத ஏன் கேக்கிறீங்க லெச்சுமி அக்கா, ராத்திரி
பூராவும் சரியான ஜொறம். ஆசுபத்திரிக்கு போகலாம்னு பாத்தாக்கா லீவு போட இயலாதே; கங்காணியாரு திட்டுவாருல்ல.
-11

Page 14
எங்கொழந்தைய அந்த மாரி ஆத்தாதான் பார்த்துக்க ணும். (இச் சந்தர்ப்பத்தில் கங்காணியார் வந்து பார்வையிட்டுச் செல்வார்)
5deo - ஏனுங்க புள்ள முனியம்மா ராத்திரி ஒங்க வீட்டுல
செரியான பெரச்சனையாமே..? முனியம்மா:- அத ஏன் கேக்கிறீங்க கமலாக்கா அந்த படுபாவப் பய ராத்திரி பூரா வயிறு முட்டக் குடிச்சிட்டு வந்து எனக்கும் என் கொழந்தைகளுக்கும் போட்டு அடிச்சி புட்டான் அக்கா. ஏன் தான் பொறந்தம் எண்ணு இருக்கு. கங்காணி :- ஏ புள்ள என்ன கத வேண்டிக் கிடக்கு கதைக்கிற
நேரமா இது? வேலயப்பாரு! (தன்னானே தன்னானனே தன தானனானே தன்னான்னே தன்னானே தன்னானனே தன தானனானே தன்னான்னே என்ற மெட்டு இசைக்கப்படும் அப்போது பின் அரை வட்டத்தின் நின்றோர் ஆகாயவிமானம் போல உருவெடுத்து ம்ம்ம். என்று உறுமிக் கொண்டு வட்டத்தில் பறப்பதாய் பாவனை செய்வர். இடது பக்கத்தில் நிற்கும் தேயிலை பறிக்கும் பெண்கள் வலது புறத்திற்கு சென்று, கணவன், மனைவி, வெளிநாடு செல்லும் மற்றுமொரு பெண், தாய், இரண்டு குழந்தைகள் என்று பாத்திரங்களாக மாறுவர்.) (குழந்தைகள் கண்களைக் கசக்கி அழுதல்) தாய் :- அழாதிங்க மகள் நீங்க நல்லா இருக்கணும் என்று தானே அம்மா வெளி நாடு போறன் அழாதிங்க ரெண்டு பேரும் நல்லாப் படிக்க வேணும் சரியா. (என்று கூறி விமானத்தில் ஏற ஏனைய சில பெண்களும் ஏறுவர். விமானம் இவர்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு பறக்கும் அப்போது.
தன்னானே தன்னானனே . என்ற மெட்டு இசைக்கப்படும் அப்போது
-12

எல்லோரும் கலைந்து ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் போல் நிற்க அதை மேற்பார்வை செய்பவர் வந்து எல்லோரும் சரியாக நிற்கிறார்களா என்று பாத்தவாறு நேரத்தை சரிபார்த்துவிட்டு டிங் டிங் டிங் டிங் டிங் என்று மணியை அடிப்பார். அப்போது மின்னல் வேகத்தில் வேலைதொடங்கும் முதலாவது நபர் துணியை வெட்ட ஏனையவர்கள் ஒவ்வொரு பகுதிகளையும் தைத்து பட்டிண் வைப்பர்களிடம் கொடுக்க அவர்கள் தைத்து விட்டு அயன் பண்ணுபவரிடம் கொடுக்க ஒருவர் பொதி செய்ய மற்றையவர் பெட்டியில் அடுக்குவார். இவ்வாறு வேலை தொடர்ந்து கொண்டிருக்கும் போது மேற்பார்வையிடுபவர் தேனீர் கொண்டு வருபவரை பார்த்து வரும்படி கையினால் அழைக்க அவர் வந்து வேலைபார்க்கும் அனைவருக்கும் தேனீரை வைத்துவிட்டுச் செல்ல, களைப்பில் இருந்தவர்கள் தேனிரைக் குடித்துவிட்டு வேலையை தொடங்குவர். இவ்வாறு 3 தடவைகள் வரிசையாக வேலை நடந்த பின் தன்னானே தன்னானனே. என்ற மெட்டு இசைக்கப்பட்ட வண்ணம் அனைவரும் நகர்ந்து அடுத்த காட்சியை அமைத்துக்கொள்வர்)
காட்சி-5
தேயிலை பறிப்பவர்கள் , வெளிநாடு செல்லும் தாயைப் பார்த்து அழும் பிள்ளைகள், ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் என்று நிற்க. டும் டும் டும். டும் டும் டும் என்ற சத்தம் ஒலித்துக் கொண்டிருக்க அவ்வொலிக்கேற்ப நின்றவர்கள் அனைவரும் படிப்படியாக கீழே விழுவர். அப்போது ஒருவர் அதிகார மனிதராக, வேலை செய்து களைத்து விழுந்த பெண்களை மிதித்தவாறு நகர்ந்து வந்து மேடையின் முன் பகுதியில் நின்று, குறித்த நபர் :- நமது நாட்டில் எமது காலத்தில் முன்னைய
காலங்களிலும் பார்க்க பொருளாதாரம் 10%இனால்அதிகரித்துள்ளது. விசேடமாக இவ்
-13

Page 15
வருட அன்னியச் செலாவணி அதிகரித்துள்ளது. இதனை மேலும் முன்னெடுத்து செல்ல திட சங்கற்பம் பூண்டுள்ளோம். (என்று கூறி உறை நிலைக்குச் செல்ல கீழே விழுந்து கிடந்த பெண்களில் ஒருவர் எழும்பி குறித்த நபரை நோக்கி), நபர் 1 :- அடிப்படை வசதிகள் இன்றி மலையகப் பெருந்தோட்
டங்களில் நாளாந்தம் குறைந்த வேதனத்தில் சுரண்டப்படும் பல்லாயிரக்கணக்கான பெண்களது
உழைப்புத்தானே ஐயா நீங்கள் கூறும் பொருளாதார
அபிவிருத்தி. (என்று கூறி மேடையின் இடது புறத்திற்குச் செல்ல மற்றுமொருவர் எழுந்து) நபர் 2 :- வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் நவீன அடிமைகளாக பல்லாயிரக்கணக்கான பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் ஊடாக ஈட்டப்படுவது தானே நீங்கள் கூறும் அன்னியச் செலாவணி! (என்று கூறி மேடையின் வலது புறத்திற்குச் செல்ல மற்றுமொருவர் எழுந்து) நபர் 8 :- தொழில் உத்தரவாதம் இல்லாது தொழிற் சங்க
உரிமைகள் மறுக்கப்பட்டு ஆடைத்தொழிற்சாலை
களிலும் சுதந்திர வர்த்தக வலயங்களிலும் பாலியல்
தொந்தரவுகளுடன் சுரண்டப்படும் பெண்களது
உழைப்புத்தானே நீங்கள் கூறுகின்ற இந்த
பொருளாதார வளர்ச்சி! (என்று கூறி மேடையின் முன் மத்தியில் நிற்க இன்னுமொருவர் எழுந்து)
-14

நபர் 4 :- ஒம், ஓம் ஒட்டுமொத்தமாக நாட்டில் வாழும்
பெண்களை உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் வதைத்து, வன்முறைகளுக்கு உட்படுத்தி அதன்மூலம் பெறப்படும் வருமானமாகவேதான் உங்கள் அபிவிருத்தி அமைந்துள்ளது. இத்தகையது அபிவிருத்தி அல்ல; பெண்களும் மனிதர்களாக மதிக்கப்பட்டு இந்த நாட்டினிலே அவர்களும் சுயாதீனமாக வாழக்கூடிய வகையில், பல்வேறு உள்நாட்டு பொருளாதார முறைகளை மீள் உருவாக்கம் செய்து அதன்மூலம் ஈட்டப் படுவதுதான் உண்மையான அபிவிருத்தி. இதுவே நாட்டுக்கும் பெருமை பெண்களுக்கும் GLI(560)LD. (எனக் கூறிமுடிக்க, அனைவரும் ததிந்தத் தாத ததிந்தத் தத்துமி. என்ற தாளக்கட்டினை பாடியாடியவாறு மேடையின் முன் பகுதியினுT டாக இறங்கி பார்வையாளர் பகுதிக்கு உரையாடல்களுக்காகச் செல்வர்)
முற்றும்
மூன்றாவதுகண்ணின் கல்வியியல்அரங்கச்செயற்பாடுகளின்போது.
-15

Page 16
பொறுப்பாசிரியரின்நாடகவாக்க அனுபவப்பகிர்வு -1 திருமதி. சுகந்திமலர்ச்செல்வன்.
நாடகங்களை தெருவெளி அரங்குகளில் பார்த்திருக்கிறேன். அது கோவில் விழாக்களின் காலமாகவே இருந்தன. ஹாசியமும் சண்டைக் காட்சியும் பிரமாண்டமான காட்சியமைப்பும் கொண்ட சமூக புராண இதிகாசங்களே நான் பார்த்த நாடகங்கள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதற்கான வசனங்கள் இட்டுக்கட்டி நடிக்கப்பட்ட காலம்.
இச்சூழலிலே பழக்கப்பட்ட ‘நான் நாடகமும் அரங்கியலும்’ கற்பிக்க வந்த சில மாதங்களுக்குள்ளே தமிழ்த்தின போட்டிக்காக நாடகம் போடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். உண்மையில் அப்போது நாடகம் மேடையேற்றக்கூடிய, அரங்கத்தில் காட்சிப் படுத்தக்கூடிய எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. அச் சூழலில்தான் என் கணவரை அணுகி விடயத்தைச் சொன்னேன் அதன் பலாபலந்தான் விவே எனக்கு உதவ முன்வந்தார்.
முதல் நாள் நாடக உருவாக்கத்திற்கான ஒன்று கூடலும் கருத்துப் பரிமாற்றமும் இடம் பெற்றது. விவேகானந்தராஜாவும் எனது கணவரும் மாணவர்களுடன் சம்பாசித்தார்கள். தொடர்ந்து விவே மற்றும் கெளரீஸ்வரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல பயிற்சிகளின் ஊடாக மாணவர்களின் திறன், கற்பனை, சுயாதீனம் என்பன வெளிக்கொணரப்பட்டன. இது உண்மையிலே மிக முக்கியமான விடயம் ஆகும்.
ஏனென்றால் நாடகம் எனும்போது காலம் காலமாக ஒரு எழுத்துரு (Script) கொண்டுவரப்பட்டு அதற்கு பாத்திரம் தெரிவுசெய்யப்பட்டு கொண்டு வருபவரின் கருத்து திணிக்கப்பட்டு நாடகம் மேற்கிளம்புவது வழமை. ஆனால் இங்கு மறுதலையாக மாணவர்களுடாகவே கதை உருவாக்கப்பட்டு நாடகம் வளர்ந்து சென்றது முக்கியமான அம்சமாகும்.
-16

ஆரம்பத்தில் மாணவர்கள் இச் செயற்பாட்டில் பயந்து வெட்கப்பட்டு ஒதுங்கி செயற்பட்டாலும் போக போக பாட்டு இயற்று. பவராகவும், கதை சொல்பவராகவும், பாடக்கூடியவராகவும், நடிக்கக் கூடியவராகவும் விளங்கினர்.
நாடகத்தின் இன்னு மொரு சிறப்பு கூத்தாட்டத்தையும், கூத்து மெட்டுக்களையும் புகுத் தி கிராமிய நடனங்களின் பாலி மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி “பெண்களும் மனிதர்கள் என்றுணர...” நாடகத்தை மிக உச்சத்திற்கு கொணி டு சென்றமையாகும்.
நாடகம் வளர்ந்து உச்சத்திற்கு வந்த சமயம் நடிகர்கள் யார் யாரை நீக்குவது? யார்யாரை உள்வாங்குவது என்ற பிரச்சினை ஏற்பட்டது. ஏனென்றால் சகல மாணவர்களும் நாடகத்தில் திறனுடையவர்களாக உருவாக்கப்பட்டார்கள். இச்செயற்பாட்டிற்கு விவேகானந்தராஜா, கெளரீஸ்வரன் ஆகிய இருவரது செயற்பாடும் வித்திட்டது. மொத்தத்தில் விவே, கெளரீஸ்வரன் ஆகியோரது நாடகச் செயற்பாடுகள் மாணவர்களிடையே சுயதிறனை வெளிப்படுத்தி இருக்கிறது. எனக்கும் நாடகத்தினுடைய இருண்டகதவுகள் திறக்கப்பட்டன.
*:
மூன்றாவதுகண்ணின் கல்வியியல்அரங்கச்செயற்பாடுகளின்போது.
-17

Page 17
பொறுப்பாசிரியரின்நாடகவாக்க அனுபவப்பகிர்வு-11
தருமதி. நிமலினிபால சேகர்
நாடகம் என்பது சமூகத்திலிருந்து பிறந்து சமூகத்தினாலே வளர்ந்து சமூகத்திலே வாழ்ந்து, சமூகத்தை வாழவைக்கின்ற கலைவடிவம். இக்கலை வடிவமானது மனிதரது தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டுத் தோன்றியதாயினும் மனிதருக்கு அறிவினை ஊட்டி, மனிதரின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்கின்றது எனலாம்.
இந்தவகையில் இன்று பல்வேறுபட்ட போர்ச் சூழல்களின் தாக்கத்தினாலும், இயற்கை அனர்த்தங்களின் மத்தியிலும் அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட எனக்கும் என்னுடைய மாணவர்க ளுக்கும் “பெண்களும் மனிதர்கள் என்றுணர” எனும் நாடகம் திருப்பத்தை ஏற்படுத்தியதுடன் பெண்கள் சமூகத்தில் வைத்து நோக்கப்படும் அன்றைய நிலையினையும், இன்றைய நிலையினையும் எடுத்தியம்பியது.
இதனடிப்படையில் முதலில் எமது பாடசாலையைச் சேர்ந்த தரம் 9-11 வரையான மாணவர்கள் பயிற்சிப்பட்டறைக்கு உள்ளிர்க்கப்பட்டார்கள். இத்தகைய பயிற்சிப்பட்டறையை மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த திரு. த. விவேகானந்தராஜாவும், திரு. து. கெளரீஸ்வரனும் இணைந்து நடாத்தினார்கள். இப்பயிற்சியின் போது எமது பாடசாலை மாணவிகளில் பெரும்பாலானோர் தமது ஆடல், பாடல், நடித்தல் திறமைகளை வெளிக்காட்டினர்.
இத்திறமைகளை இனங் கணிடு கொண்டதன் அடிப் படையிலேயே “பெண்களும் மனிதர்கள் என்றுணர” எனும் நாடகத்திற்கான நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களே நடிகன்களாகவும், நடிகைகளாகவும் வேடமிட்டு தமது திறமையினை வெளிக் கொணர்ந்தனர்.
-18

எமது பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகள் பாடசாலை முடிவடைந்த பின்னரும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் வழங்கப் பட்டன. “பெண்களும் மனிதர்கள் என்றுணர” எனும் நாடகத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டபோது எமது பாடசாலை மாணவிகள் பல் வேறுபட்ட அனுபவங்களைப் பெற்றுக் கொண்டார்கள். வெட்கம், கூச்ச சுபாவம் என்பனவற்றில் இருந்து விடுபட்டு ஆளுமையுள்ள மாணவர்களாக மாற்றப்பட்டார்கள்.
இந்த “பெண்களும் மனிதர்கள் என்றுணர” என்னும் நாடகமானது எமது பாடசாலையின் அதிபர் திருமதி. இ. புஸ்பராஜா அம்மணி அவர்களினதும் மூன்றாவதுகண் இணைப்பாளார். திரு. சி. ஜெயசங்கர் அவர்களினதும், எமது பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரினதும் முன்னிலையில் ஒத்திகை பார்க்கப்பட்டு, 2006ம் ஆண்டு தமிழ்த்தின விழாவிற்கான போட்டிக்காக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் அரங்கேறியது.
இந்த “பெண்களும் மனிதர்கள் என்றுணர” எனும் நாடகத்தினை நெறியாள்கை செய்த திரு.த. விவேகானந்தராஜா அவர்களையும், திரு.து. கெளரீஸ்வரன் அவர்களையும் அவரைச் சார்ந்து உதவிய நண்பர்களையும் பாராட்டுவதுடன், அவர்களுக்கு எமது பாடசாலையின் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும்.
ܡܡܪܝ · `* '
\
மூன்றாவதுகண்ணின் கல்வியியல்அரங்கச்செயற்பாடுகளின்போது.
-19

Page 18
நாடகப்பயிற்சிப்பட்டறையில் பங்குகொண்ட மாணவர்களது அனுபவப்பகிர்வுகள்.
9
“பெண்களும் மனிதர்கள் என்றுணர..” என்ற நாடகமானது எமது பாடசாலையில் 2006ம் ஆண்டு, தமிழ்த்தினப் போட்டிக்காக தயாரிக் கப்பட்டது. எனினும், அன்று கிடைத்த அனுபவங்கள் நாங்கள் இறந்தாலும் கூட, எம் ஆத்மாவைத் திருப்திப்படுத்தும். எங்களது பாடசாலை அதிபர், நாடகத்தில் நடிக்க விரும்புவர்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
ஒரு நாள் விவே அண்ணா, கெளரீஸ்வரன் சேர் எங்கள் பாடசாலைக்கு வந்து நாடகம் நடிக்க விரும்புபவர்களை சந்திக்க அழைத்தபோது நாங்கள் மிகவும் பயத்துடனும், பரபரப்புடனும்தான் சென்றோம். காரணம், ஆர்வம் மிகுந்த எங்களை அவர்கள் பதிவு செய்வார்களா? எங்களாலும் நடிக்க முடியுமா? என்ற பயம் தான். ஆனால் மலர்ச்செல்வன் சேர் மற்றும் விவே அண்ணா, கெளரிசேர் எங்களுடன் அன்பாகப் பேசி பல வினாக்களையும், விளக்கங்களையும் விடுத்து எங்கள் மனத்திருளை நீக்கினர்.
இவ்விடத்தில் நாங்களே நாடகக்கரு ஆசிரியர்களாகவும், கதையாசிரியர்களாகவும், பாடலாசிரியர்களாகவும், இசையமைப்பாளர்க ளாகவும் திகழ்ந்திருக்கிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இத்தகைய திறமைகள் எவ்வாறு எங்களுக்குள் ஊற்றெடுத்தது என்பதையெண்ண மனம் பிரம்மிப்பில் ஆழ்கிறது. எங்களுக்குத் தரப்பட்ட கருக்களில் ஒரு விடயத்தை நாங்களே தீர்மானித்து தலைப்பும் இட்டோம். அது தான் “பெண்களும் மனிதர்கள் என்றுணர..” இத்தலைப்பினை ஒரு தலைப்பாக மட்டும் நோக்காமல், நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். இன்று எமது நாட்டில் என்பதைவிட, எமது வீட்டிற்குள்ளே நடக்கும் சமகாலப் பிரச்சினை தான் இது. “உன்னைத் திருத்து உலகம் தானாகத் திருந்தும்” என்பார்கள்.
-20

அதற்கொப்ப, முதலில் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளைப் பேசும்முகமாகவே இத்தலைப்பினை இட்டோம். இந்நாடகத்தினையும் மேற்கொண்டோம். இன்று பெண்களின் நிலை என்ன? என்று தெரியுமா? நாங்கள் லண்டனிலோ அல்லது வேறு நாட்டிலோ வாழும் பெண்களைப் பற்றிப் பேசவில்லை. இவை எங்கள் குடும்பத்தில் நடக்கும் விடயங்களே. இன்று பெண்ணானவள். ஆணுக்கு சரி நிகர் சமமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று கூறித் திரிபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் வீட்டிலும் நாட்டிலும், வேறு இடங்களிலும் பல நிலைகளிலும் பெண்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகின்றது. இத்தகையதான பல உண்மை விடயங்களை எடுத்துக் கூறி உள்ளோம் இங்கு அனைவரும் கலந்தாலோசித்தே இந் நாடகத்தை சிலையாக செதுக் கினோம். அவ் வேளையில் எங்கள் அனைவரினது வார்த்தைகளும், கருத்துக்களும் அவரவர் வீடுகளிலும், ஊர்களிலும் நடக்கும் விடயங்களை படம்பிடித்துக் காட்டியது. உண்மையில் எங்கள் ஆதங்கத்தை யாரிடம் கூறி மனதை ஆற்றிக் கொள்வது?
ஒரு பெண்ணானவள் தன் தாயின் கருவில் உருவாகியது தொடக்கம் இறக்கும் வரை அவர் சொல்லொனா துன்பங்களை அனுபவிக்கிறாள். அனைத்திலும் பாரபட்சம். ஏன் இந்தப் பாகுபாடு? எதற்கு இந்த பாகுபாடு? ஒரு தாய் உண்டாகியிருக்கிறாள் என்றால், பல கட்டுப்பாடுகள். பிள்ளை பிறந்தது முதலே பாகுபாடு காட்டத் தொடங்கிடுவர் பிள்ளை பிறந்து கொடுக்கும் இனிப்பில் கூட வேறுபாடு, உடுக்கும் உடை, சாப்பிடும் உணவு, பெறும் கல்வி அனைத்திலும் பாரபட்சமே.
எங்கள் நாடகத்தை எடுத்து நோக்கும் பொழுது ஒரு தெரு, மேடை நாடகமாக வித்தியாசமான பாணியில் அமைக்கப்பட்டது. இதில் எமது நாட்டில் பெண்கள் படும் வேதனைகளை இயன்றளவு சேர்த்து வடிவமைத் துள்ளோம். அதாவது முதலில் குழந்தைப் பருவத்தை எடுத்துக் காட்டியிருக்கிறோம். சிறு பராயத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி தத்தித்தாவி, சுற்றித்திரிந்து, ஒன்றாய் சேர்ந்து பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பறந்த இவர்கள், ஒரு பருவத்தில்
-21

Page 19
வீட்டிற்குள் அடைக்கப்படுகிறார்கள். பெரிதும் ஆண்களுக்கு மட்டும் கல்வி கற்கும் உரிமை, தெருவில் விளையாடும் சுதந்திரம் அதே நேரம் வீட்டைப் பெருக்கிக்கொண்டும், குடும்பத்திற்கு சமைத்துக் கொண்டும், தண்ணிர் கொண்டு வருவதும், தேநீர் வைப்பதுமாகவே பெண்களது வாழ்நாள் கழிகின்றது.
மற்றும் ஆடைத்தொழிற்சாலைகளில் பெண்களின் அறிவை, உரிமையை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்த நடவடிக்கைகளையும், மலையகப் பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்களின் அவல நிலையையும், அவர்களின் மீதான அடிமைத் தனத்தையும் , தொழில் தேடி வெளிநாடு செல்லும் பெண்களின் அவல நிலையையும், இவர்களால் பிள்ளைகள் படும் வேதனையும் மக்கள் கண்பட காண விளைந்திருக்கிறோம். மற்றும் மிகப் பிரதானமாக வீட்டில் தங்கள் கணவன்மாரினால் பெண்கள் படும் வேதனைகளை காட்ட முனைந்திருக்கிறோம்.
இத்தகைய பலதரப்பட்ட சமூக, கலாசார விடயங்களை எமக்கு இந்நாடகம் மூலம் ஊட்டியவர்கள் வளவாளர்களே. இத்தகைய நிகழ்வின்மூலம் நாம் உளஆரோக்கியத்தையும் பெற்றுக் கொண்டோம். அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டோம். மனதை ஒரு நிலைப்படுத்தி கட்டுப் படுத்தி ஒருவர் மீது ஒருவர் நம்பிக் கையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப் பாங்குடனும் பழகியதால் பல புதிய நண்பர்களையும் பெற்றோம்.
மேலும் இந்நிகழ்வு எங்கள் பெற்றோருக்கும் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்து, எங்களுக்கும் பாடசாலையில் ஒரு மதிப்பை பெற்றுத் தந்தது. இந்நிகழ்வில் செயலாற்றும் போது சிற்சில அசொகரியங்களை அனுபவிக்கத்தான் செய்தோம். பொதுவான பிரச்சனையாக குரல் வளம் போதாமையாக இருந்தது.
காரணம் என்னவெனில் நாங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காக நடிக்கவில்லை. அனைவரும் சந்தர்ப்பத்திற்கு
-22

ஏற்ற மாதிரி எங்களையும் மாற்றிக்கொள்வதால், பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நிலை காரணமாக பல குரல்கள் அதாவது சிறந்த குரல்வளம் தேவைப்பட்டது. இதற்காக குரல் பயிற்சிகளை வழங்கினர். கூடுதலான பயிற்சிகளைப் பெற்ற பிற்பாடே நாடகத்தில் நாங்கள் சிறப்பான முறையில் ஈடுபடமுடிந்தது. இது சிரமமாக இருந்தாலும் எங்களுக்கு ஓர் சிறந்த பயிற்சியாக இருந்தது. இந்நாடகத்தில் கூத்து பாணியினையும் கலந்து, தருக்கள் அமைந்து மெட்டுக்கள் உருவாக்கி அதற்கு அமைய ஆட வேண்டியும் இருந்தது. ஆரம்பத்தில் இது எமக்கு சிரமமாக இருந் தாலும், தீவிர பயிற்சிகளின் பின் எங்களாலும் சிறிதளவு சாதிக்கமுடிந்தது. “முயற்சி திருவினையாக்கும்” அல்லவா!
எங்கள் நாடகத்தினைப் பழகிய பிற்பாடு முதன் முதலாக திரு.சி. ஜெயசங்கர் சேர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அரங்கேற்றினோம். மிகவும் திறமையாக, பயமில்லாமல் நாடகத்தை செய்து முடித்தோம். கரகோஷம் எழுந்தது. எங்களுக்கும் சந்தோஷம் பிறந்தது.
ஜெயசங்கர் சேர் அவர்கள் எங்களுடன் உரையாடி எங்களைப் பாராட்டி கை குலுக்கி மென்மேலும் நாடகங்கள் செய்து வாழ்வில் உயரவேண்டும் என வாழ்த்தினார். பின் எங்களுடைய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் எங்களுக்குள் இவ்வளவு திறமை ஒளிந்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறி எங்களைப் பராட்டியதுடன் மட்டுமல்லாது தட்டிக் கொடுத்தனர். இவை எல்லாம் மறக்க முடியாத சம்பவங்களாக மனப் பதிவேட்டில் பதிந்து விட்டன. மேலும் எங்கள் நாடகத்தினை விமரிசனத்திற்கு விட்டபோது மாணவர்கள், ஆசிரியர்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினர்.
நாங்கள் அனைவரும் அதற்கேற்றவாறு நாடகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினோம். நாடக வளவாளர்களான விவே அண்ணா, கெளரி சேர் எங்களுடன் பாசமாகவும், கண்டிப்பாகவும் நடந்து கொண்டனர். அத்தகைய கண்டிப்பும், அக்கறையும் தான் இந்த நாடக வெற்றிக்கு அடிப்படைக் காரணம். மேலும் மேடைப்
-23

Page 20
பொருட்களை நாங்கள் வெளியிலிருந்து பெறாமல் எங்களது உடலைக் கொண்டே உருவாக்கினோம்.
நாடகம் என்றால் என்ன? என்று அறிந்து நடிக்கத் தெரியாத எமக்கு, இந்த நாடகம் சிறந்ததொரு படிக்கல்லாக அமைந்தது. எங்களுக்குள்ளே புதைந்து ஒளிந்திருந்த ஆளுமைகளையும், ஆற்றல் வெளிப்பாடுகளையும் வெளிக்காட்டக் கூடியதாகவும், எமக்குப் பயனாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் இப்பயிற்சியின் மூலம் பலரது நாடக அனுபவங்களையும் , ஆற்றலி வெளிப்பாடுகளையும் இனங்காணக் கூடியதாக இருந்தது. இதன் போது பலவகை அறிவுபூர்வ ஆற்றல் வளர்ந்தது. ஞாபகப்படுத்தல், அவதானித் தலி போன்றவற்றை உள்ளடக்கியதாக பல விளையாட்டுகள் நடைபெற்றது எங்களுக்கு மிக ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் நாடகம் நடிப்பதென்பது மிகமுக்கியமானது. நாடகத்தில் நாங்கள் நடிக்கையில் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், அதற்கான பிரச்சினைகளை, உரை நடையிலும், வசனங்கள் மூலமாகவும் முன் வைத்தோம். பெண் என்பவள் அடிமைப் படுத்தப்படாமல் தானும் ஒரு மனித ஜென்மம் என்ற பாங்கிலேயே நாங்கள் நாடகத்தினை இறுதிவரை கொண்டு சென்றோம்.
இவ்வாறான ஆளுமைகளை எங்களுக்கு வெளிக்காட்டிய காரணகர்த்தாக்கள் விவே அண்ணாவும், கெளரீஸ்வரன் சேரும்தான். நாடகக் களப்பயிற்சி நிறைவுற்று, இவர்களைப் பிரிய முற்படும் போது சொல்லொனாத் துன்பம் எங்களை ஆட்கொண்டது. எங்களது வாழ்நாளில் இவ்வாறான ஒரு வசந்த காலத்தை ஏற்படுத்தித் தந்த எங்களது பாடசாலை அதிபருக்கு நாங்கள் நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம். மேலும் எங்களுடன் பழகுவதில் எந்தவிதமான குற்றம் குறையுமில்லாமல் பழகிய அவ்விருவருக்கும் நன்றி கூறுவதற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்
-24

தேக்கமடைந்து காணப்பட்ட ஆற்றல்களை ஊக்கந்தந்து உசுப்பிவிட்டு
நாட்டம் வைத்து நடிக்க வைத்த
கெளரி சேரை மறப்போமா?
ஆடலுடன் பாடலைத்தந்து
தேடலுடன் கல்வியைத் தந்து
வேகத்துடன் விவேகத்தையும் தந்த
விவே அண்ணாவை மறுப்போமா?
சபை, கலை, நிகழ்ச்சியிலே நிலைபெற்று
தொலைக்காட்சியிலே தென்பட்ட
மலை போன்ற ஜெயசங்கர் சேருடன்
உரையாடுவோம் என்று எண்ணிப்பார்த்ததில்லை.
ஆற்றலும் ஆர்வமும் உள்ளிற்குள் தூங்கிவிட
ஊசலாடித் திரிந்த நாம்
ஊராரும் பாராட்ட, சுற்றாரும் சீராட்ட
இந்நிலைக் குள்ளவோம் என்றும் நினைத்ததில்லை.
எத்தனை ஆற்றல்கள் எத்தனை ஊக்கங்கள்
இப்பொழுது எண்ணினும் மனம் பூரிக்கின்றது
இப்படியான தொடர்பு என்றென்றும் வேண்டும்
இதை எண்ணியே இறையிடம் வேண்டுகிறோம்.
தொகுப்பு :- யோ. கார்த்திகா
த. சுகந்தினி நி. தனுஜா ஆ. பிரபாகினி -25

Page 21
வண்களும் மனிதர்கள் என்றுணர.
- ISTL és புகைப்பட ங்கள் -
 

-27

Page 22
TTT "", Fll
 


Page 23

நானந்தினம் தானம் தானினா - தானம் தானின நானந்தினம் தானம் தானின
ண்டாம் என்று சொல்லுகின்றோமே - வன்முறையை ன்ைடாம் என்று சொல்லுகின்றோமே
ண்டாம் என்று சொல்லுகின்றோமே - பெண் அடிமை ண்ைடாம் என்று சொல்லுகின்றோமே
(தந்தானந்தினம் .
மீது வாழும் பெண்களை - நிம்மதியாய் pவிடும் மனிதர் வேண்டுமே
ர்பு நிறைந்த பெண்கள் உள்ளத்தை - மதிப்பதினால் நலகே உயரும் பாருங்கள்
(தந்தானந்தினம் .
Tவு கடந்த அன்பின் பேரிலே - பெண்களுக்கு மைத்தனம் போடக்கூடாதே
1வுடன்ே அன்பு செலுத்துங்கள் - அன்பு என்றும்
க்கமாய் மாறக்கூடாதே
(தந்தானந்தினம் .
1னை போல தந்தை கூடவே - அனைவரிலும் Tபு கொண்டு வாழவேண்டுமே.
ண்டாம் என்று சொல்லுகின்றோமே - வன்முறையை ன்ைடாம் என்று சொல்லுகின்றோமே
தந்தானந்தினம் .
பாடல், மூன்றாவதுகன் உள்ளூர் அறிவுதிறன் யற்பாட்டுக் குழுவினருடன் பெண்ணிலைச் செயற் ட்டாளர் கமலா வாசுகி அவர்கள் மேற்கொண்ட பண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக் திரான ஆண்களின் செயல்வாத களப்பயிற்சியின் ாது மட்'பூ'நீ சித்தி விநாயகர் மகாவித்தியாலய னவி ரா. தனுஜா அவர்களால் ஆக்கப்பட்டது.
விற10ஆதாண் Uதிப் பு