கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேலிகள்

Page 1


Page 2

வேலிகள்
கடல் புத்திரன்
குமரன் பப்பிளிஷர்ஸ் 79, முதல் தெரு, குமரன் காலனி,
வடபழநி, சென்னை - 600 026.

Page 3
முதற்பதிப்பு
விலை
Title
Subject
Author
No. of Pages
Types
Paper
Binding
Price
Publishers
Sales rights in India
1998
ரூபாய். 35.00
Veeligal
A Collection of Short Novels & Short Stories
Balamurali (Kadal Puthiran)
60
10.5 Point 11.6 kg Cream Wove.
Art Board
Rs.35/-
Mankai Pathippagam 38, Thorncliffe Park Dr, #510, Toronto, Ontario, M4H 1 JG, CANADA.
Kumaran Publishers 79, Ist Street, Kumaran Colony, Vadapalani, Chennai - 600 026.

O (UA60Igo)I6OII
இந்த என் எழுத்து முயற்சிக்கும் சிறிய வரலாறு இருக்கிறது.
முதலில் 6-9 வகுப்பு வரையில் எனக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த அப்பச்சி மகாலிங்கம் ஆசியரை குறிப்பிட்டேயாக வேண்டும். நான் எழுதுகிற கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருந்தபோதும், அவற்றை பொறுமையுடன் படித்து எடுத்த விசயங்களையும், சம்பவங்களுயும் பாராட்டியே வந்தார். “அ” னாவையும் ‘சு’ னாவையும் கவனித்து எழுது. வித்தியாசமில்லாமல் எழுதுகிறாய் கவனமாகவிரு உன்னால் கொஞ்சமாவது எழத முடியும்” என்பார். அவர் பத்திரிகைகளில் எழுதும் பிரபலமான எழுத்தாளர் அவருடைய வீரகேசரிப்பிரசுரமான ‘கமலம்’ நாவலும், ‘தோணி’ சிறுகதையும் சிறப்பானவை.
அது ஒரு மாத்திரை.
பிறகு எழுதவேணும் என்று ஆசைப்பட்டு எவ்வளவோ முயற்சித்தேன். மற்றவர்களைப் பார்த்து 'தர்ம ஒளி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையில் கூட எழுதிப்பார்த்தேன். என் தங்கச்சி அவற்றை வாசித்தாளோ இல்லையோ தனது சினேகிதிகளிடம் கொடுத்து படிக்கச் செய்து எழுத்தாக்கங்களைப் பெற்றுத் தந்தாள். அதனால், சுமார் ஆறேழு மாதங்கள் வரை தொடர்ச்சியாக எழுதி வர முடிந்தது.

Page 4
கொக்குவில் தொழினுட்பக் கல்லூரியில் சேர்ந்தபோது, வகுப்பில் படித்த இலக்கிய நண்பர்களுடன் பாலை வனம்’ என்ற ஒரே ஒரு கையெழுத்துப் பத்திரிகையை தயாரித்தோம். அது ஏனைய சக தோழர்களினாலும் விரும்பிப் படிக்கப்பட்டது.
ஆனால் எழுத்தைப் பொறுத்தவரையில் நான் பத்திரிகைகளில் வரக்கூடியளவிற்கு வெற்றி பெற்றவனில்லை.
ஆதங்கம் நீண்டகாலம் மனநிம்மதியற்ற நிலையையே நிலவ வைத்திருந்தது. வாசிக்கும் பழக்கம் எனக்கு நிறையவிருந்தது. ரஷ்ய விடுதலைப் போராட்ட அமைப்பான 'போல் சேவிக் கைப் போல எம் பகுதியிலும் எழுந்த அணியினர் சில தவறுகளை விட்டிருந்தபோதும் பல பழமைவாதக் கருத்துக்களை ஆட்டம் காணவே வைத்திருக்கிறார்கள்.
ஜனநாயகக் கொள்கைகளிலுள்ள தவறுகளை மட்டும் பிடித்துக் கொண்டு, தம்மை அரசர்களாக நினைத்து குரூரங்களை நிகழ்த்தும் அரசியல்வாதிகளால் எம்மேல் அவலம் கவியப்பட்டிருக்கிறது.
இவற்றைக் களைய நடத்தும் போராட்டத்தில் எம் தரப்பு அணியினரை பல்வேறு சக்திகள் பயன்படுத்தி விடுகிறார்கள் என்பது தான் கவலைதரும் விசயம்.
போராட்ட நியாயங்கள் ஒருபுறம் இருக்க, இச்சக்திகளால் தூண்டப் பட்டு நிகழும் தனிநபர் முடிவுகளால் நாம பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்து கொண்டேயிருக்கிறோம்.
இவ் விழப்புக்களைப் புரியாது வீரம் பேசும் பகுதியினர் ஒரு புறம்.
அவலம் சூழ்ந்த இக்காலகட்டத்தை தற்போதைய சாமானியப் பத்திரிகைகள் செய்திகளாக மட்டும் தருகின்றனவே தவிர இலக்கியமாக்க பின்வாங்கியே நிற்கின்றன. W
சில தனி இளைஞர்களின் முயற்சியினால், இலக்கிய மாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட பத்திரிகைகளில் ஒன்று தான். கனடாவிலிருந்து வெளிவந்த
தாயகம்

- 5 சுமார் ஐந்து வருவும் தொடர்ச்சியாக வெளிவந்த சாதனை அதற்கிருக்கிறது.
இப்பத்திரிகைகளில் வந்த பல தொடர்கள் புத்தகமாக வந்தால் நல்லது. இந்தப் பத்திரிகை வந்ததால் தான் எனது எழுத்துக்களும் அச்சில் வந்தன. அச்சிறு எழுத்துக்களையும் வாசகர்களாகவிருந்து உற்சாகப் படுத்தியவர்கள் எனது தங்கச்சியும் அண்ணரும்தான். முதற்சிறுகதையாக ஏழை வந்த போது அவள் அதை தன் சினேகிதிகளிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டபோது அவர்களில் ஒருத்தியின் தந்தையரான இலக்கியவாதியிடமும் சென்றது. அவர் “கனமான தன்மை இருப்பதாக பாராட்டியிருந்தார். அதனால், அடுத்ததாக “பெண்ணும்’ “செல்லாச்சி’யும் வெளிவந்தன.
அதற்குப் பிறகே “வெகுண்ட உள்ளங்கள்’ குறு நாவலாக வெளியானது. அதை நான் 3 சிறுகதைகளாகவே எழுதி, முயற்சித்திருந்தேன். அச்சில் வரவில்லை. பிறகு மூன்றையும் சேர்த்து ஒரு நாவலாக்கினேன். 'தாயகம்’ பத்திரிகை சீர்தூக்கிப் பார்த்து வெளியிட்டது.
இயக்க இளைஞர்கள். மக்களுக்குமத்தியில் நிலவிய தொடர்புகள் அநியாயத் தடைகள் (மக்கள் மத்தியிலும் இயக்கங்கள் மத்தியிலும்) இலைமறை காயாக கிடக்கும் ஏக்கங்கள் எமது நியாயமான உரிமைகள் இவைதான் ‘வெகுண்ட உள்ளங்கள்
வெகுண்ட உள்ளங்களைப் போல ‘வேலிகளும் சம்பவங்களின் தொகுப்பே. “எங்குமே நிகழ்கிற சம்பவங்களுக் கிடையில் தொடர்புகள் நிலவுகின்றன. அசட்டுத்தனமான காரணங்களை முன்வைத்து உருவாவதாக வெளியில் தெரிந்தாலும் உள்ளுக்குள் வேறொரு சம்பவத்தின் தாக்கம் இருக்கும். இதை பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. “என்பது என்னுடைய சுழிபுரத்து நண்பர்களின் கருத்து. இவ் எழுத்தை மதிப்பிடும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன். ரொரன்டோ கடல் புத்திரன்
J360571-17.

Page 5
உள்ளடக்கம்
. வேலிகள்
. வெகுண்ட உள்ளங்கள்
. செல்லாச்சியம்மா
. பெண்
. ஏழை
1 32
1 53

வேலிகள்
காலங்காத்தாலே அம்மாட நச்சரிப்பை தாழமுடியாது பாண்வாங்க சைக்கிளில் வெளிக்கிட்ட வேலன், சேர்ச்சந்தியிலே திரும்பியபோது எதிர்ப்பக்கத்தில் வீதியோரமாகவிருந்த வயிரவர்" கோவிலடியில் மக்கள் நிற்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது. போனான்.
சிவத்திற்கு விசர் பிடித்துவிட்டது.
கதிரேசு குமுறிக்கொண்டிருந்தான். பேச்சில் வீரம் எல்லாம் வந்து போய்க்கொண்டிருந்தது.
சிறிது தள்ளி "கையை வெட்டவேண்டும்” கள்ளுமுட்டியோடு நிற்கிற செல்லன் சொல்லிக்கொண்டிருந்தான். இவன் பகிடிக்காரன். அவனை பெரியவர் சிறியவர் சூழ்ந்திருந்தார்கள். அவன் சீரியஸாக கதைப்பதாகப்பட்டது.
அப்படி என்ன நடந்துவிட்டது?
ஒரமாக நிற்கிற ராசையாண்னை "ரத்தம் தொடர்ந்தும் சிந்தப் போகிறதோ?’ முணுமுணுப்பதை பார்த்தான் முத்தனின் பெரியப்பா. பாரதூரமாக ஏதோ நடந்துவிட்டதைப் புரிந்து கொண்டான்.
"அண்ணை" கிட்டப்போய் “என்ன நடந்தது?" கேட்டான். 'உன்ர கூட்டாளிக்கல்லோ மண்டாவாலே ஏத்திப்புட்டான்கள்’

Page 6
8 O வேலிகள் குரல் அடைக்கச் சொன்னார்.
“முத்தனுக்கா.’ பதறிக் கேட்டான்.
"ஒம்” என்றார்
“இப்ப எப்படி?” வார்த்தை வரவில்லை.
“பொன் பெடியள் ஆஸ்பத்திரிக்கு கொண்டோடி யிருக்கிறார்கள்” ஒருவித ஆறுதலுடன் சொன்னார்.
'சிவம்’ எந்தாளை என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. பல சிவம் அங்காலயிருந்தனர்.
"அண்ணை வாரன்” சைக்கிள்ளை கடைப்பக்கம் விட்டான்.
பவித்திரா கடைக்கு முன்னால் இருக்கிற வீதி போக் அங்கால பெடியன்களின் கேந்திரப்பகுதி. மாலை நேரங்களில் வரிசையாக இருபக்கமுமிருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். பிரச்சனை நடந்தாலும், லீவு நாளாகவிருந்தாலும் கனபேர் நிற்பார்கள்; அவன் வகுப்புத் தோழர்களை சந்திக்கலாம் என்று நினைத்தான். கனகன் மட்டுமே இருந்தான்.
“எங்கடா சுரேஷ்" கேட்டான்.
“முத்தன் கூட போயிருக்கிறான்” என்றான்.
என்னடா நடந்தது?
“நளினியை தெரியும்தானே (வகுப்புப்பெண்) அவளிட
கையை பிடித்து இழுத்தவனாம்?" அதிலே தொக்கி நின்ற பலாத்காரம் புரிய. உணர்ச்சிய்ை புரிந்துகொள்ள முடிந்தது. எவ்வளவு பெண்ணடிமைத்தனங்களை நாம் மேற்கொண்டாலும், மற்ற சாதி இன மதத்தைச் சேர்ந்தவன் நம்மூர் பெட்டைகளோட கதைத்து விட்டாலே ரத்தம் கொதித்து விடுகிறது. முத்தன் தவறாக நடப்பவனில்லை. கையைப்பிடித்து இழுத்துவிட்டால் சிக்கல்தான்.
மண்டா வீரர்-சிவம்-நளினிட சித்தப்பா என்பதை புரிந்து கொண்டான்.
− o y o அவன் அப்படிப்பட்டவனில்லையே' என்றான் கவலையுடன்.

கடல் புத்திரன் O 9 "நானும் நம்பவில்லை. வருகிற கதைகள்; அவன் கத்தியோட நின்றது எல்லாம் பிரச்சினையின் இறுக்கத்தையே காட்டின" என்றான்.
பெண்ணை விரும்பாதவன் யாரிருக்கிறான்? 8ம் வகுப்போட படிப்பை நிறுத்தியவன் பருவமாற்றத்தினால், சபலப் பட்டிருப்பானோ? இயற்கையே! இருந்தால்.பெண்ணடிமைத் தனத்தைக் குறித்து நியாயம் வழங்கப்படவேண்டும். அதை விட்டுட்டு சாதிக்கொடியை தூக்கிப்பிடித்தபடியே நிற்கிறார்கள்.
கனகன் விபரித்தான்.
“எங்கடயாட்கள் தடிகளோடு சூழ்ந்து நின்றார்கள். சிறிது வெறியோடு இருந்த சிவத்தான் மண்டாவை மறைவாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். எல்லாம் நொடியிலே நடந்துவிட்டன” என்றான்.
எதுவுமே எங்கட கையிலே இல்லை’ என்ற சலிப்பு அவன் பேச்சில் இருந்தது.
x: s 来源
“பாண் வாங்கிட்டு வாரன்” என்று கடைக்கு போனன். சைக்கிள்.கனகனிற்கு கிட்ட ஒரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அம்மாட நச்சரிப்பு ஞாபகம் வர விரைவாக வந்தான். முள்ளி அவ்விடத்திற்கு ஒடிவந்தான். சின்ன செட் பகிடிக்காரன் இவர்களோடு ஒட்டித் திரிகிறவன்.
“கனகண்ணை கத்தி பொல், மண்டா, தடி எல்லாவற்றையும் மாமா வீட்டில் மறைவாக குவிச்சு வைச்சிருக்கான்கள்” என்ற சீரியஸ்ஸான செய்தியை சொன்னான். அவர் வீடு ரோட்டுப்புறத்தில் இருந்தது.
முத்தன் பகுதி அடிபட வந்தால், எதிர்த்து தாக்க இங்காலயும் கொஞ்ச பேர் தயாராகி விட்டார்கள்’ என்று புரிந்தது.
பெடியளால் பெரிய செட்டை கட்டுப்படுத்த முடியாது. கழகத்தில் காரசாரமாக கேள்வி கேட்பதாலும் ‘இன்னமும் சாதிப்பிரச்சினையை தூக்கிப் பிடிக்கப்போறிர்களா’ என்று

Page 7
10 O வேலிகள் சூழவுள்ளவர்களோடு பரவலாக பேசுவதாலுமே கொஞ்சம் தனிக்கமுடியும்.
“பொன்’னின் உறுதிப்பாட்டுக்கு அவர்களும் கணிசமானளவு காரணம் எனவே பெடியளின் பேச்சை சிறிதாவது கேட்கவேண்டியிருக்கும். கிராமத்திலே ‘கழகம்’ நல்லபேரை சம்பாதித்து வைத்திருந்தது. அவசரப்பட்டு அடிபாடுகளில் இறங்கமாட்டார்கள்’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
ஆனால் இந்த முன்னேற்பாடுகள் பயங்கரமானவை. மொக்குத்தனமாக அடுத்தபகுதி உணர்ச்சிவசப்பட்டு இறங்கிவிட்டால் ரத்த ஆறு பயங்கரமாக பெருகித்தான் நிற்கும்.
அமெரிக்கனிடம் அணுகுண்டு இருக்கப்போய்தானே 'ஏலா’க்கட்டத்தில் ஜப்பானில் போட்டான். இவர்களும் முதலில் தடிகளோடு அணுகிப் பார்ப்பார்கள். ஏலாக்கட்டம் வந்தது என்றால்.மண்டாக்களும் (மீன் முள்ளு) திருக்கைவால்களும் வெளியவந்து விடும். இவற்றுக்கெதிராக பாளை சீவல் கத்தி துளி நேரம் கூட நிற்கமாட்டாது.
米 x x
சிறிதுநேரம் கதைத்துவிட்டு லேட்டாக வந்தான். வீட்டில் அர்ச்சனைதான்.
லீவுநாளான அன்று அம்மாவும் தங்கச்சிமாரும் யாழ்ப்பாணத்திலிருக்கிற ஆச்சி வீட்ட போய் காலைச் சினிமாவுக்கு போறதுக்காகவிருந்தார்கள்.
7.00 க்கு போனவன் 8.30 போல வந்தால் எதிர்பார்க்க கூடியதுதான். அவர்களுக்கு ஊர்ச்சோலி பற்றி. அவன்ர நண்பனைப்பற்றி கவலை ஏது? தன் பிள்ளை, குடும்பம், சுகம் என்ற குறுகிய வட்டங்களே சரியானவை’ என்று சொல்லி வாழ்கிறவர்களாச்சே!’
பின்னேரம் கோவில் வளவுக்கு போன.போது சுரேஷ், கனகன் எல்லோரும் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
எதிர்த்தரப்பிலே சிவத்தான் இருந்தான். அவசரப்பட்ட

கடல் புத்திரன் O 11 செயற்பாடு அவனை 'வில்லத்தன்மையான கதாநாயகனாக்கி விட்டிருக்கிறது. குகன், பரமு போல சமயத்தில் நல்லாய் விளையாடுறவன். இன்றைக்கு.விளையாட்டு சுமாராக இருந்தது. கனகன் சொன்னதுபோல குடித்ததனால்தான் அப்படி நடந்துவிட்டானோ?
விளையாட்டு முடிய, அவனைப் பார்த்து உயிர்ப்பில்லாமல் சிரித்துவிட்டுப் போனான். அவன், சுரேஷ், முத்தன் மூவரும் கூட்டாளிகள் என்பது அவனுக்குத் தெரியும்.
காலையிலே, அவன் சில விஷயங்களை கனகன் மூலமாக அறிந்திருந்தான்.
நளினிட மச்சாள் பார்வதியின் 7-வது பிறந்தநாள் கொபை டாட்டம் நேற்றிரவு நடந்தது. வழமைபோல பலகாரம் இவைகளோடு வாடகைக்கு வந்த வீடியோ விடிய விடிய ஒடியது. நளினியும் சரோசாவும் 2வது படத்தோடயே போய்விட்டினம்.
வயிரவரும் (நளினியின் அப்பர்) சிவத்தானும் அங்கேயே தங்கி.கொஞ்சம் மருந்தும் சாப்பிட்டிருந்தார்கள் காலையிலும் வெறி அவ்வளவாக கலைந்திருக்கவில்லை.
வயிரவனின் வளவின் பனைகளை கணபதி சீவல் குத்தகைக்கு எடுத்திருந்தான். முத்தனையே அங்கே அனுப்புறார். அவன் 7-8 மணிக்கெல்லாம் சீவிவிட்டுப் போய்விடுவான்.
தூக்கக் கலக்கத்திலே போன வயிரவர்.களே பரத்தை ஏற்படுத்த, முத்தனும் எம்.ஜி.ஆர் கணக்கில் கத்தியை காட்டியிருக்கிறான். சந்தர்ப்பம் சதி செய்துவிட்டது.
வந்த சுரேஷிடம் “அவனுக்கு எப்படியடா இருக்கிறது?" என்று கேட்டான்.
“நல்ல காலம் குடல் வெளிய வரல்லை" என்றவன் "5 இழை பிடிச்சது” என்றான்.
“வார்ட்டிலே 3 நாளைக்காவது கடைசி மறிச்சி விடுவார்கள்”
என்று உதவி நேர்ஸ் சொன்னதைச் சொன்னான்.

Page 8
12 O வேலிகள்
போக்கிலே போய் அமர்ந்தார்கள். எதிர்ப்பக்கத்தில் குகனும் 3-1 நண்பர்களும் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். பஸ் ஒன்று விரைந்தது. ஏ 40 கார் 3 விரைந்தன. வேலையால் பிந்தின வட்டுக்கோட்டை தொழிலாளர் பட்டாளம் ஒன்று சைக்கிள்களில் வந்தது
“நீ ஏன் விளையாடக்கூடாது” என்று சுரேஷ் கேட்டான். “மற்றவயள் என்னம் சொல்லுவினம்” எங்கேயோ பார்த்து பதிலளித்தான்.
இருவருக்குமிடையிலிருக்கிற சாதியமே காரணம். சுரேஷ்க்கு புரியாமலில்லை.
“நான் கேட்டு வைக்கிறேன் நாளைக்கு விளையாடவா" என்றான். ஒருவேளை மறுப்பு வந்தால் ஒன்றும் செய்யமுடியாது. இருந்தாலும் நம்பிக்கை. தவிர அவன் அக்கிராமத்தில் படிப்பிக்கிற ரீச்சரின் மகன்.
அடுத்தநாள் நளினியை விசாரிக்க காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமாகவிருந்தது. அவவோட திரியிற கீதாவும் வரவில்லை. “உடற்பயிற்சி பாடவேளையில் கூட விளையாடாமல் அவர்கள் வகுப்பிலே இருந்தார்கள். ‘முத்தனிலே பிழையிருக்குமோ?” என்று பாபு கேட்டான். ‘நளினி விரும்பியிருந்தால் கூட. ஏற்கமாட்டார்கள்” என்றான் சுரேஷ்.
“சம்பவத்தை தெளிவு படுத்தாமல் மற்றவர்களைப்போல கதைக்கக்கூடாது" என்றான் அவன்.
"நியாயம் பிழங்கிறவர்கள் தமது தவறுகளை மறைக்கவும் பல கதைகளை கட்டிவிடுகிறார்கள். அதன் குழப்பம் அப்பாவிகளை போர்க்கோலம் பூண வைத்துவிடுகின்றன’ உணர்ச்சி மனிதர்களை அவ்வாறு பாபு சொன்னான்.பாபு ரேடியோ திருத்துறவன்.நாள் கணக்கிலே ரேடியோவில் பிழை தடவி, கடைசியில் பிடித்து விடுறவன். சமயங்களில் அவனிடம் சில விஷயங்களில் நிதானம் பிறளாமல் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து காட்டிவிடுற தன்மை இருந்தது.

கடல் புத்திரன் O 13
“முத்தன் பகுதியிலே படிப்பில்லாததும்.பெரிய குறைபாடு” என்றான் சுரேஷ்.
"அவர்களை அடிமை குடிமைகளிலிருந்து விடுபட முடியாதவாறு சாதியக் கொள்கைகளை நாம் வைத்திருக்கிறது தவறு. பக்கவிளைவுகள்தான் இந்த மாதிரி சம்பவங்கள்” என்றான் அவன்.
“பொதுவாக எல்லா சாதியிலும் முற்போக்கான இளைஞர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள்” என்றான் சுரேஷ்.
ஒருத்தியின் கழுத்தில் தாலிகட்டிய பிறகு இப்படி பேசியதை மறந்துவிடுவானோ? அவனுள் நினைப்பு ஒடியது.
சுரேஷ் தொடர்ந்தான். "ஆனால் அவ்விளைஞர்கள் அக்கொள்கைகளை கடைசி வரை கைவிடாது முன்னெடுக்கவேண்டும்”
"உன்ர குடும்பம் முழுதுமே பாதிக்கப்படும். ஆமா உன் தங்கச்சிட சீதனத்துக்கு எங்கே போவாய்?” கேட்டான் பாபு.
“ஏன் நீங்கள் எல்லாம் இல்லையா?”
நேரிடையாக கேட்டான்.
இருவரும் சிரித்தார்கள். “ஒருவேளை சாத்தியப்படக்கூடியதாயிருக்கலாம் உன் பெற்றோர்கள் உந்த விசப்பரிட்சையில் இறங்கமாட்டார்கள் தவிர. என் வீட்டிலே சீதனம் கேட்பார்கள். வேலன்ர பெற்றோரும் சூழ்நிலைக்கைதிகள்” என்றான் தெளிவாக பாபு.
"அப்ப என்ன வழி” சுரேஷ் சோர்வாக கேட்டான். “உதுக்கு குடும்ப உறவுகளை அறுத்துக்கொண்டு
re ஒடவேண்டும்" என்றான் அவன் தீர்க்கமாக, பிறகு இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணம் நடக்காது. ஏற்கனவே பெண்ணடிமைத் தனத்திலிருக்கிறவயள் பெட்டைகள். எவள் கட்ட முன் வருவாள்?” பாபு கேட்டான்.

Page 9
14 O வேலிகள்
"எதையும் 70% கூட எதிர்வு கூற முடியாது” என்று இழுத்தான்
'உண்மைதான் ஆனாலும் 70% பாஸ் மார்க்ஸ் ஆச்சே, நம்மவர்களுக்கு இவ்வளவும் போதும் என இருந்தது விடுவார்கள் திருப்பம், மாற்றம் இவற்றுக்கெல்லாம் மினக்கெட மாட்டார்கள்’ சிரித்தான்.
சாதி சமய வாழ்க்கை முறைக்கு அமைய வாழ்றதைவிட வேற வழியில்லை என்கிறாயா?” சுரேஷ் தீவிரமாக கேட்டான்.
“நமது இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று வெளிக்கிட்ட இளைஞர்களைப்பார்” அவன் சுட்டிக்காட்டினான். “என்ன நடந்தது?” சாதாரணமாகக் கேட்டான் பாபு. தொடர்ந்தான்.
“அவர்களுடைய சுகதுக்கங்கள் பாதிக்கப்பட்டு விட்டன. என்றதை அறிந்திருந்தும்.கொஞ்சகாலங்கள் இழுத்தார்கள். 30-35 வயசு கடந்ததுதான் மிச்சம். மக்கள் அவர்களை கவனிக்கவே யில்லை. சிலர் குடியிலே வீழ்ந்துவிட்டார்கள். அடுத்தத் தலைமுறை பக்குவப்படவில்லை. அது நல்லாவே அவர்களை விமர்ச்சிக்கிறது” “குடிகாரர்கள், பெண்லோலர்கள், விடுதலைப் போராட்டத்தை விற்றுவிட்டார்கள் (விட்டு விட்டார்கள் என்று சொல்லத் தெரியவில்லை) பக்குவம் பத்தாது. இன்னும் கொஞ்சபேர் கல்யாணம் கட்டி. பாபு தொடர சுரேஷ் மறித்தான்.
“என்ன நீ கல்யாணம் கட்டுறதை பிழை என்கிறாயா?” “இல்லையப்பா. உன் நளினியை யாரும் கவர்ந்து கொண்டு ஒடமாட்டார்கள்” என்று அவன் சிரித்தான்.
“நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால்.பழைய வாழ்க்கையிலே சரணாகதி அடைந்துவிட்டார்கள்’ என்பதைத் தான், அவர்களின் தோல்விக்குரிய சமூக நிலைமையை புரிந்துகொள்ளாமல் பிரயோக கணிதத்தில் ஒரு நிறுவலைப் போட்டுப் பார்ப்பதுபோல அரைகுறை மார்க்சிச அறிவுடன் பகிரங்கமாகவே கணக்குப் போட்டார்கள். பிழைச்சு விட்டது.

கடல் புத்திரன் O 15 இனி ஆராய நின்றார்களானால் 40-50 வயசிற்கு போய் நிற்கவேண்டிவரும் பயத்திலே.
விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்பது கணக்கிலே ‘நான் சரியாய் தான் இருந்தேன். இவன் ஏமாற்றி விட்டான். உவன் ஒருத்தனிலே பிழை, எல்லா சந்தர்ப்பங்களையும் குழப்பி இன நெருப்பை இங்காலையும் தூண்டி விட்டிருக்கிறான் சேச்சே எல்லாரும் கள்ளர்கள் இப்படியான பேச்சுகள்.
சிறிய மகள் ‘அப்பா’ என்று வர “என்ன மேளே’ என்று கொஞ்சி விட்டு 'எனக்கு இந்த பொறுப்புக்கள் போதும் ஆளைவிடு” ஒடுகிறார்கள்.
“வாப்பாட பேச்சிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனா நாங்களும் என்னம் செய்தாக வேண்டும்?” என்றான் அவன். ஒருத்தருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. பெல் அடிக்க வீட்ட வெளிக்கிட்டார்கள்.
* * *
வேலன் பின்னேரம் கோவில் வளவில் மைதானத்தோடு இருந்த கேணியடியில் வந்து நின்றான். அரச உத்தியோகம் பார்க்கிற நடுத்தரமானவர் பலர் பேப்பரும் கையுமாககதையளக்கிறவர்கள் - கட்டிலே இருந்தார்கள். சுருட்டுப்பிடித்துக் கொண்டு ஒரிரு கிழவர்கள், அவ்விடம் மக்கள் கூடுற கூட்டமாக விருந்தது.
விளையாட்டில் ரசனையுடைய பெடியளில் கனகலிங்கம் யாரி பிரித்துக்கொண்டிருந்தான். சுரேஷ் “வேலனும் விளையாடக் கேட்கிறான்” என்றான்.
"கூட்டிக்கொண்டு வாயன். இதைப்போய்க் கேட்கிறாய்” என்று பதிலளித்துவிட்டு “அவன் உன்ர பக்கம் சுந்தரம் இங்கால.” முடித்தான்.
“டேய் வாடா" சுரேஷ் கையை அசைத்து கூப்பிட்டான். பலபேர் சார சண்டிக்கட்டுடன் நின்றார்கள். அவனும். கட்டினான், புதிதாக தொடங்கியதால். ஒரு நிலை என்றில்லாமல்

Page 10
16 O வேலிகள்
.பந்தை துரத்தியும், நேரே வந்தால் அடி வாங்கியும், விளையாடினான். சுரேஷின் அண்ணன் குமார். 'ஒல் ரவுண்டர்” என்று அவனை பகிடியாக கூப்பிட்டான்.
வெட்டக்கூடிய ஆட்கள் இலகுவாக அவனை உச்சினார்கள். சமயங்களில் வென்று மிருந்தான் பொதுவாக இடைஞ்சல் என நினையாமல் அரவணைப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
மண்டாவால் குத்துற அளவுக்கு மோசமாகவிருந்த சிவத்தான் கூட நல்லதனமாக விளையாடினான். போறபோது அவனைப் பார்த்து சிரித்து விட்டும் போனான். 'தன் தவறை உணர்ந்து உள்ளுக்கு வருந்துகிறானோ?”
来 *
அடுத்த நாள் வகுப்பிற்கு மட்டம் அடித்துவிட்டு மூவரும் முத்தனைப் பார்க்க கிளம்பினார்கள். வழுக்கியாற்றுப் பாலத்தைக் கடந்தார்கள். ஆற்று வாய்க்காலோடு அண்டிய நவாலி ரோட்டுக்கு புறமாகவிருந்த கொத்துக் கலட்டி வெளியில், மாரி காலம் என்றால் வெள்ளக்காடாகவிருக்கும். கோடை காலத்தில் சனங்கள் வீதியால் சிறிது தூரம் சென்ற நவாலிரோட்டில் ஏறாமல் மேடு திட்டமாக விருந்த அவ்வெளிக்கூடாக விழுந்ததுபோய் சிறுபாதை அமைத்திருந்தார்கள். சைக்கிள்காரர்கள் அதிலே பறப்பார்கள். நவாலிக்கு போக குறுக்குப்பாதை.
சர்க்கசில் ஒடுறது போல சைக்கிள்கள் ஒடியதால் ஒரு நிமிசத்திலே நவாலிக்கு வந்தார்கள். யாழ்ப்பாணம் போக இது சுத்துவழி. சுரேஷகும் அவனும் அவ்வழியை தேர்ந்ததால் பாபுவும் சம்மதித்து வந்தான் காலை நேரம் வெய்யில் கொடுமை கிடையாது. நேரே போயிருந்தால் காங்கை தீவிலே நின்றிருப்பார்கள். அது தீவு இல்லை. மீன் விற்கிற சிறு சந்தையையுடைய தோணித்துறை காத்தும் கிடையாது. சந்தடி மிக்க பாதையாலே போறதில் மனநிறைவு இருக்கிறதடா என்றது அவர்களது வாதம்.
‘பெட்டைகளை’ பார்க்கிறதுக்குதான் அவர்கள் முக்கியமாக
அதாலே வந்தது.

கடல் புத்திரன் O 7
நவாலி, மானிப்பாய் ஆனைக்கோட்டை என ஒவ்வொன்றாக பார்த்து வந்தார்கள்.
“வெள்ளை யூனிபார்மிலே அழகாய் இருக்கினம்" என்றான் சுரேஷ், “நளினியை விட்டிட்டியே” பாபு சிரித்தான். “சொல்ல மறந்திட்டேன் அவ சாமத்தியப்பட்டுட்டாளடா. 2 கிழமைக்கு வரமாட்டாள்” என்றான். சில பெட்டைகள் அவர்களை கடுகடுவென பார்த்தார்கள்.
“வில்லனாகவே நினைச்சிட்டினம்" என்றான் பாபு. "சீதனம், கெட்டுப்போனவள். வாழாவெட்டி போன்ற அடக்குமுறைகளால் நிறையவே பயப்படுகிறார்கள் அதன் விளைவு" என்றான் அவன். “எப்பப் பெடியள் விழிக்கப்போகினமோ” அங்கலாய்த்தான் சுரேஷ்.
"உவயல் வேண்டாமா?” பாபு கேட்டான். தொடர்ந்து “இவர்களில் மாற்றம் வராதவரையில் எதுவுமே நடக்கப் போவதில்லை" என்றான்.
9.00 மணிக்கு ஆஸ்பத்திரியை அடைந்தார்கள். 10 மணிக்குப் பிறகே நோயாளிகளை பார்க்க விடுவார்கள். அதுக்கு முதல் டொக்டரின் வருகை, நேர்ஸ்மாரின் ஊசிக்குத்தல்கள் போன்றன நடந்துவிடும். அங்கே வேலை செய்யிற அராலிப் பெடியளின் செல்வாக்கால் உடனேயே போனார்கள்.
முத்தன் வயித்துக் கட்டுடன் பலவீனமாக படுத்துக் கிடந்தான். கண்ணப்பன் அவர்களை கண்கலங்க வரவேற்றார்.
“எப்படியடா இருக்கு" அவன் முத்தனின் நெற்றிலே கையை வைச்சுக் கேட்டான். “வலிக்கிறதா' ஆதரவாக பாபு கேட்டான். சுரேஷ் நடைபாதைக் கடையில் வாங்கிய தோடம்பழங்களை சிறிய மேசையில் வைத்துவிட்டு ஒன்றை எடுத்து வெட்டினான். கிளாசிலே சாறைப் பிழிந்து தண்ணிர் விட்டு ஜூஸ் ஆக்கினான். ஒன்றை கண்ணப்பனிடம் கொடுத்து ஒன்றை முத்தனிடம் நீட்டினான்.
R p காய்ச்சல், வலியாகவும் இருக்கிறதடா” மெல்லச் சொன்னான்

Page 11
18 O வேலிகள் ஜூஸையும் குடித்தான். சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். வெளி விராந்தைக்கு வந்து பாபுவிடம் ஆழமானது இனி அவனால் மரம் ஏறமுடியாது’ என்று டொக்டர் தெரிவித்ததை கண்ணப்பர் சொன்னார்.
"அவனை படிக்க விட்டிருக்கலாமே ஐயா" என்று பாபு அவரைக்கேட்டான்.
"கஸ்டம் தம்பி’ முணுமுணுத்தான். பார்க்க பாவமாகவிருந்தது. அவரிலே பிழையில்லை சமூகநிலை அத்தகையது. மற்றயவைகளின் ஆதரவில்லாமல் அவர்களால் தலையெடுக்க
(Մ)ւգ, աng/.
முற்போக்குத் தனம் எங்குமே துளியும் இருக்கவில்லை பெடியள் மட்டுமே சளசளத்தார்கள்.
அது சிறிய சைகை, கணிசமான நம்பிக்கையில்லை. உள்ளே வந்தார்கள். “எப்ப துண்டு வெட்டுவினம்” பாபு கேட்டான்.
"அநேகமாக நாளை என்றவையள்” கண்ணப்பர் பதிலளித்தார். "அப்பா நீங்க. வீட்ட போய் சாப்பிட்டுட்டு வாங்கோ” என்று முத்தன் மெதுவாக சொன்னான்.
ஆஸ்பத்திரிகாரர் அவருக்கும் சாப்பாடு கொடுக்க மாட்டினம். நிலமை புரிய சுரேஷ் மிச்சமாக வைத்திருந்த 5 ரூபாய் எடுத்து “அண்ணை கடையிலே போய் சாப்பிடுங்கோ’ என்று கொடுத்தான். வாங்க அவர் மறுத்தார்.
“டேய் முத்து வாங்கச் சொல்லடா” என்று பாபு சொன்னான். ‘வாங்கணை’ என்று சாடை காட்டினான். அவர் வெட்கத்துடன் வாங்கிக் கொண்டார்.
ஆளுக்கு 5 ரூபாய் படி கொண்டுவந்தார்கள். அதிலே 10க்கு தோடம்பழம் 3 வாங்கினார்கள். மீதியை செலவுக்கு வைத்திருந்தார்கள். பெரிசாயில்லை. டீயும் பங்கீட்டு வடையும் வெட்டலாம்.
ஆனால் அங்கத்தைய நிலமை அதைவிட மோசம்.

கடல் புத்திரன் O 19
அவன் அவர்களைப் பார்த்துச் சொன்னான் “போகேக்க ஆச்சிவீட்ட போய்யிட்டு போவோம்” என்றான்.
அங்கேயிருக்கிற சின்னம்மா வாறவையளுக்கு நல்ல டீ போட்டு உபசரிக்காமல் அனுப்புவதில்லை. முத்தனையும் விசாரிக்கிற நிலமையில்லை. அவன் நட்புள்ளங்களால் மனநிறைவு பெற்றிருந்தான்.
கண்ணப்பர் வர விடைபெற்றார்கள்.
sk >X< k;
உச்சி வெயில்
ஆச்சி வீட்டில் குடித்த டீ. பசியை ஆற்றவில்லை. அதே பாதையாலே வந்தார்கள். நிழலை நாடி போறது இப்ப தவிர்க்க முடியாதிருந்தது.
பெட்டைகளை மருந்துக்கும் காணவில்லை. தூரத்தை நினைக்க பயமாக இருந்தது. ஆனால் அச்சூழலில் போவது சுகமாயுமிருந்தது. இரண்டொரு நெசவு சாலை பெட்டைகள் போனார்கள். கடைப்பரபரப்பு. சில கள்ளுக்கடைகளில் இருந்து எழுந்த களை கட்டிய பாட்டுக்கள் பழசு. வயசு, சிறுசு என்ற மக்கள் சூழலில் போறபோது துாரம் தெரியவில்லை.
கொத்துக்கலட்டி வெளியை அடைந்தபோது, அந்த அருமையெல்லாம் போய்விட்டன. மண்சூடு. பாலையில் போறதுபோல முகத்தில் அடித்தது.
பாலத்தில் ஏறினபிறகு கடல்காற்று தந்த குளிர்மை - அக்காற்றை நல்லாய் சுவாசித்தார்கள்.
களைச்சு கிராமம் வந்து சேர்ந்தார்கள்.
அவனிடம் வீட்டுத் திறப்பு இருந்தது. அடுக்களையை கிளறினதில் பானும் கறியும் இருந்தன. முகத்தை அலம்பிவிட்டு மூவரும் சாப்பிட்டார்கள். பின்னேரப் பள்ளிக்கூடம் முடியும் வரையில், அவனின் முன் அறையில், 'செட்டிலே பாட்டையும் போட்டுவிட்டு தூங்கி வழிந்தார்கள்.

Page 12
20 O வேலிகள்
அம்மா வந்து அவனை தட்டினபிறகே, இருவரும் முகத்தை கழுவி விட்டு வீட்ட வெளிக்கிட்டார்கள். வந்தபோது கொண்டுவந்த புத்தக கட்டை தூக்கிக்கொண்டு போனார்கள்.
வீட்டுக்குப் புரியவைப்பது எங்குமே கஷ்டமாகத்தானிருந்தது.
* 岑 §
அன்று 5.30 மணியோட விளையாட்டை நிறுத்திவிட்டார்கள். வழக்கமாக இருளும் வரை நடக்கும்.
"இண்டைக்குமீட்டிங்" என்றான் சுரேஷ். "வாறேன்ரா" என்று அவன் சைக்கிளை எடுத்தான். “எங்கே போறே கொஞ்சநேரம் இரடா” என்று மறித்தான். "மற்றவயள்?” என்று அவன் பரிதாபமாக இழுத்தான். “ஒன்றும் நினைக்கமாட்டார்கள்” தனக்குப் பக்கத்தில் இருந்திக் கொண்டான்.
பைல் கட்டுடன் கேணியடிக்கு லட்சுமணன் காரியதரிசி வந்தார்.
கூடகொமிட்டி அங்கத்தவர்களும் வந்தார்கள். நடுத்தர வயசுடைய இளைஞர்கள் சிலர்-விளையாட வருகிறவர்கள், சமயங்களில் வாழைக்குலை, பிஸ்கெற் என்று சொல்லி பெட்டுக்கு விளையாடுறவர்கள். விசேட நாட்களில் கல்யாணம் கட்டியவர்கள் என்று தனியாக பிரித்து போட்டிக்கு நிற்பார்கள்-‘பொன் கழகத்தின்’ உறுதிப்பாடு குலையாது கட்டிக் காப்பவர்கள்’ தூண்கள்.
முதலில் பழைய அறிக்கை வாசிக்கப்பட்டது. வெளிநாட்டு அங்கத்தவர்கள் அனுப்பிய பணத்திற்கு 'பந்து, ஜெர்சி” வாங்கிய செலவை தெரிவித்தார். மைதானத்தின் ஒரமாக குறையில் நின்ற நாடக மேடையை கட்டி முடிக்கவேண்டும்’ என்று சொல்லி அது சம்பந்தமாக கதைத்தார்கள். பலபிரச்சினைகளை அலசிவிட்டு கேள்விகள் கேட்கலாம் பகுதியில் வந்து நின்றார்கள். முத்தனின் பிரச்சினையை ஒரு அங்கத்தவர் ஞாபகப்படுத்தினார்.

கடல் புத்திரன் O 2
“என்ன இருந்தாலும் மண்டாவாலே குத்தினது பிழை கன காலமாக எங்கட அயலிலே, சீவுறவர்களில் கண்ணப்பனும் ஒருத்தன். எனவே அவன்ர பக்கம் போய் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்” ஒருத்தர் துணிவாக தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.
கணிசமான பெடியள் செட் கரகோசம் எழுப்பியது. நடுத்தர இளைஞர் ஒருவர் "ஐயாவுக்கு ஒசியிலே கள்ளு குடுத்திருக்கிறான் அது தான் நன்றியிலே பேசுகிறார்" என்று கடுமையாக தாக்கினார்.
“பிழையை ஒப்புக்கொள்றதில் என்ன தவறு" என்று பெடியள் செட் கேட்டது.
‘அது பலவித பிரச்சினைகளை கிளப்பிவிடும்’ என்பதால் கொமிட்டி “உது சாதிப்பிரச்சினை இல்லை. தனிப்பட்டவர்களிட பிரச்சனை பெண் பிரசையோட சேட்டை விடுறதை எந்த குடும்ப அங்கத்தவன் பார்த்துக்கொண்டிருப்பான்? பிழை எனவே யாரும் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை" என்று சாதாரணமாக மறுத்துவிட்டது. இருந்த நல்ல மனிதர்களும் அமைதியானார்கள்.
岑 *
இருவரும் 'போக் கட்டிலே வந்து இருந்தார்கள். கார்காரர் ஒருத்தன் வேகத்தை குறைக்காமல் பறந்தான். விசரன், சந்தி சன நடமாட்டம். இதையெல்லாம் பார்க்கவேண்டாம். யாழ்ப்பான ரோடுகளில் நிறைய சரிவான போக்குகள் இருக்கின்றன. எந்த இடத்திலும், சைகைப் பலகைகள் கிடையாது. "மச்சான் ஒருநாள் எங்கேயும் கவிண்டு கிடப்பார்” என்றான் சுரேஷ். "எவனுமே சுயலாபம் மட்டுமே பார்க்கிறான்” பேசாமல் சுரேஷை அவன் பார்த்தான். மச்சானிட மனநிலை சரியில்லை (ஒரு குமுறல் வெடிக்கப்போகிறது?) கார்காரர் வாங்கிக் கட்டிக்கொண்டான். மெளனமாகவேயிருந்தான். எனவே அவன் கவனத்தை தளர்த்த ஏதோ பேசினான். “கொஞ்சநேரம் யோசித்துப்பார். கலவரக் காலங்களில் அரசியல்வாதிகளும், குண்டர்களும் (நம்மூர் சண்டியர் போன்றவர்கள்) நிகழ்த்திய கொலைகளை சித்திரவதைகளை, கற்பழிப்புக்களை சொல்லிச் சொல்லி.

Page 13
22 O வேலிகள் எம்மக்கள் மனதிலேயும் இன நெருப்பையே எரிய விட்டிருக்கிறோம். விசயம் அறியாத சிறுவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுவதற்காக அந்த நேரம் மனிதர்களாக உதவிய சிங்கள மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தோம். ஒவ்வொரு கிராமத்திலும் பல பெடியள் திரும்பிவர அவர்கள் தான் காரணம். இருந்த போதும் அதை ஒதுக்கிவிட்டு நாம் பிரச்சாரத்தையே பரப்புகிறோம்.
‘அரச பேரினவாதம் மேலோங்கி நிற்பதால், இங்கால பக்கம் இருக்கிற தவறுகள் தெரிவதில்லை; யாருமே கதைப்பதில்லை. சாதிப்பிரச்சனைகளிலேயும், பூசிமெழுகி ஒருவித நியாயவாதத்தையே வைக்கிறோம். இந்தப் பிரச்சனையும் அப்படிப்பட்ட தொன்றே பார்.
இனப்பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்ட இளைஞர்கள் மத்தியிலும் சகோதரப் பாசம், குடும்பச்சூழ்நிலைகளே குழம்பிவிட்டன என்று அவன் நீண்ட பிரசங்கம் வைத்தான். "ஐயா கொஞ்சம் சிவப்பு மட்டை புத்தகங்களை படிச்சிட்டார்” என்று சுரேஷ் மெல்லச்சிரித்தான்.
“இப்படியான சாதி அவஸ்தைகளும் பேசவைக்கும்” பதிலுக்குச் சொன்னான்.“பகிடியடா. வா முத்தனைப் பார்த்திட்டு வரலாம்” என்று எழும்பினான் சுரேஷ். சாதுவான இருட்டு.
எதிரான ஒரு சமூகம். அவன் சிறிது தயங்கினான். “இந்த நேரத்திலா?” "ஏன்?” ஆச்சரியமாக கேட்ட சுரேஷ் "எனக்கு என்னம் நடந்தா, நீ பொறுப்பாளி இல்லை. வேணுமென்றால் வா கட்டாயமில்லை” என்றான். திரும்ப முருங்கை மரத்திலே ஏறுது?
“அதில்லையடா உன் வீட்டிலே தேடமாட்டினமா?” என்று சமாளித்தான்.
‘தேடட்டும் வா போவோம்’ என்றான். அங்கால
'குடிவெறியில் பிரச்சனைபடுற நேரம் எதுவும் நடக்கலாம் என்ற நிலமை அதை அவனுக்கு விளங்கப்படுத்த முடியாது. இருவரும் முத்தனின் குடியிருப்பிற்கு வந்தார்கள். நகரத்தைவிட கிராமங்களே

கடல் புத்திரன் O 23 சாதிக்குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அடிமை குடிமையாக எல்லார் சாதிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். பயன்படுத்தாத கலட்டி வளவுகளில் வெவ்வேறு ஆட்களின் பொறுப்பில் இருந்த கோவில் வளவுகளில் (சிதம்பரம், சிவன்கோவில்) அத்துமீறி குடியேறி, கத்திவெட்டு.முதலான உடற்காயங்களை பெற்று, அப்படியே இருந்தவர்களாகையால் அச்சமுகத்துடைய குடியிருப்பு மட்டும் எல்லாப் பகுதிகளிலும் திட்டு திட்டாக பரந்து கிடந்தன. முத்தனின், சேர்ச்சடி ஒரம் இருந்த பகுதி "ஆ" சுரேஷ் தம்பியா வா வா" என ஒழுங்கையிலே கண்டு விட்ட கண்ணப்பன் வரவேற்றான். ‘அப்பாடா' மனநிம்மதியுடன் அவன் அவர்களோடு நடந்தான் “முத்து இப்ப சுகமா?” என விசாரித்தான் சுரேஷ், குடிவெறியில் வந்த சின்னராசு “அங்கால ஆளா”.என்று குமுறிக் குறுக்கிட்டான். கண்ணப்பன் அடக்கினான்.
“சும்மா கிட இவன் தான் முத்தனைக் காப்பாற்றினவன்” உடனே பிளேட்டை மாத்தி அவன் கையை பிடித்துக்கொண்டு "அங்கால போய்ச் சொல்லு தம்பி’ என்று ஏதேதோ அலட்டினான்.
‘பாதிப்புகளை அறிவேன்' என்பது போல ஆதரவாக அவர் கையை சுரேஷ் அமுக்கினான். வேடிக்கை பார்த்துக்கொண்டு அவன் வந்தான்.
வீடுவர “சரி விடு சின்னராசு வீடு போய்ச் சேர்றா” என்று கண்ணப்பன் அனுப்பிவிட்டு பரவாயில்லை. உள்ளே வாங்க தம்பி” என அழைத்துச்சென்றான். முன் விராந்தையிலிருந்து தேத்தண்ணி குடித்துக்கொண்டிருந்த முத்தன் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தான் “டேய் நீங்களா” என்றவன் அப்பனைப் பார்த்துவிட்டு நேரிடையாகவே சொன்னான்.
“டேய். எங்கடயாட்கள் நிதானமாய்யிருக்கிறயவயள் இல்லையடா. இந்த நேரத்திலே வாறது ஆபத்து”
GC - 9s o
உங்கடப்ாட்களை நம்புறேன்ரா' என்றான் சுரேஷ் திடமாக,

Page 14
24 O வேலிகள்
“என்ன நடந்தது?” வேலனைப் பார்த்து கேட்டான்.
“பொன்னிட கூட்டம் நடந்தது கொஞ்சபேர் கண்ணப்பனுக்காக போய் பொது மன்னிப்பு கேட்கணும் என்றார்கள். கொமிட்டி மறுத்துவிட்டது. அதுதான்". என்று அவன் விளக்கினான்.
கண்ணப்பனுக்கு நெஞ்சு பெருமிதமாகவிருந்தது எனக்காகவும் கதைக்க ஆட்கள் இருக்கிறார்கள்’ ‘தம்பி கொமிட்டியிலே பிழையில்லை. தேசவழமைச் சட்டத்தை மீறமுடியவில்லை. அதனாலே அப்படி கதைச்சிருக்கு” என்றார்.
"அப்ப, சட்டத்தை மாற்றலாம் தானே” என்று சுரேஷ் கேட்டான்.
“அதுக்கு எனக்காக கதைத்தவன் கூட ஒப்புதல் கொடுக்க மாட்டினம்" என்று சிரித்தார். தொடர்ந்து “அதுக்கு இந்த சாதியமைப்புகளை விட பலமான ஒரு அமைப்பு வரவேண்டும். எங்கட பகுதியை ஆள்கிற அரசுபோல தமிழீழமாக கூடவிருக்கலாம் விளங்கப்படுத்தினார்.
தமிழீழம் சரியோ? பிழையோ? அது எத்தனை தூரம் எல்லாருடைய மனதிலேயும் வியாபித்திருக்கிறது என்பது அவனுக்கு புரிந்தது.
கமலமக்காட சிறுசுகளில் ஒன்று "சுரேஷ் அண்ணா” என்று வந்து விளையாடியது அவனிடம் மற்றது தீபனோ ரவியோ (பெயர் ஞாபகம் வரவில்லை) வர தூக்கி தன் மடியில் வைத்துக்கொலண்டு கதை குடுத்தான். தாய்க்காரி அவர்களுக்க தேத்தண்ணி கொண்டு வந்து வைத்தார்.
"இனி என்னடா ஐடியா?” என்று சுரேஷ் கேட்டான். "ஏதாவது கடை வைக்கலாம்” என்று இழுத்தான்.
“சைக்கிள் கடையை போடு” என்று யோசனை சொன்னான் சுரேஷ் தொடர்ந்து “ஆரம்பச்செலவுகள் குறைவு. எம்மாலும் உதவி செய்யக்கூடியது” என்றான்.

கடல் புத்திரன் O 25
'எனக்கு இந்த யோசனை வரவில்லையே' என்று அவன் நினைத்தான். இந்த விசயங்கள் சுரேசுக்கு கொஞ்சம் அத்துப்படி. "ஆனால் பணப்பிரச்சினை” என்று தொடர்ந்து இழுத்தான் முத்தன்.
“கவலைப்படாதே நாங்க இருக்கிறோம்” என்றான் சுரேஷ், “இடம் எங்கையாவது பார்த்திருக்கிறாயா?” கேட்டான். “ரோட்டோரமாகவிருக்கிற சின்னையன்ர (சித்தப்பா) வீட்டு வளவிலே தாரளமாக போடலாம் என்றிருக்கிறார்” என்று பதிலளித்தான் முத்து.
“டேய், நீ 100 ரூபா கடனாக மாறி முயற்சியிலே இறங்கு வாற திங்கள்கிழமை (4நாள் இருந்தன) 50 ரூபா தாரேன் அடுத்ததில் 50 தாரேன்” என்றான். முத்தனின் கண்கள் கலங்கிவிட்டன.
எப்படி உழைக்கப்போறான்? அவனுக்கும் புரியவில்லை. “நான் பூட்ஸ் ஜேர்சி வாங்க சனி ஞாயிறிலே மேசன் வேலைக்கு போய்த்தான் சமாளிச்சனான். நீ நம்பலாம்” என்று விளக்கினான்.
அவனுக்கும் ரோசம் பிறந்தது “டேய் நீ போறபோது என்னையும் கூட்டிப்போ. இரண்டுபேர் வேலை செய்தால் கெதியிலே கடை போடலாம்” என்றான்.
“சரி நாகரத்தினம் அண்ணையிடம் சொல்லி வைக்கிறேன்” என்றான் சுரேஷ்.
இருவருடனும் ரோட்டு வரை வந்து கண்ணப்பன் வழியனுப்பிவைத்தார்.
அந்த நண்பர்களின் உள்ளம் கனநேரமாக அக்குடும்பத்தை ஆகர்சித்திருந்தது.
அடுத்தநாள் சுரேஷ் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. இரண்டு நாளுக்கு முதல் சொல்லியிருந்தது. அவனுக்கு மறந்துபோயிருந்தது.
ஏன் வரவில்லை? மூளையை உடைத்தான்.

Page 15
26 O வேலிகள்
இடைவேளையில் அவனுடைய பக்கத்து வீட்டுப் பெடியன் நந்தனைத் தேடி ஐந்தாம் வகுப்பிற்குப் போனான். ஒரு மாதிரி தண்ணி குடித்துக்கொண்டிருந்த அவனை கண்ட பிறகு நிம்மதியாகவிருந்தது.
“நந்து, சுரேஷ் அண்ணா எங்கே போயிட்டார்” என்று அவன் முறையிலே கேட்டான்.
“என்னண்ணா உங்களுக்குத்தெரியாதா வசந்தியக்காட கல்யாணம் நாளைக்கல்லோ, உதவி செய்யிறத்துக்கு போயிருக்கிறார்” என்றான்.
மளமளவென ஞாபகம் வந்தது. வட்டுக்கோட்டையிலிருக்கிற
பெரியம்மாட மகள். சுரேசிற்கு ஒன்றைவிட்ட அக்காவுக்கு சனிக்கிழமை கல்யாணம். அந்த வீட்டோட அவனுக்கு ஒட்டுறவு கூட. வேலன் கூட பலதடவை சுரேஷோட போயிருக்கிறான். அவனும் மறந்திட்டான். 'சனிக்கிழமை வேலைக்குப்போய் வேற திங்கள் கிழமை காசு தாரேனென்றிருக்கிறான்’ பெரிய பிரச்சனைகள் சிறிய ஞாபகங்களை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன.
‘அடுத்த கிழமையிலிருந்தே.முத்தன் கடைக்கான இடத்தை துப்பரவாக்கிறது’ என்று சொல்லியிருந்ததால் அவன் பின்னேரம் கோவில் வளவு பக்கம் வந்தான். 'வொலிபோல் சீசன் தொடங்கியிருந்தது. பவித்திரா கடை ஒழுங்கைக்க அண்மையில் இருந்த வளவொன்றில் ‘வொலிபோல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் கால்பந்துக்கு அடுத்ததாக பிடித்த விளையாட்டு. சைக்கிளை நிறுத்திவிட்டு ஒழுங்கை பக்கம் நின்றவர்களோடு பார்த்தான்.
விதிமுறைகள் தெரியாது.
“லவ் ஒல்’ என்று அடிப்பதும் “லவ் லவ். என்று எண்ணப்படுவதும் “ஈச்’ என்பதுமாக விளையாட்டு ரசனையாக
நடந்துகொண்டிருந்தது.

கடல் புத்திரன் O 27. வாழைக்குலைக்காக நேர்ந்ததால் விளையாட்டு ‘களை’
கட்டியிருந்தது.
பழத்தை வென்ற அணி எல்லார்க்கும் பகிர்ந்து கொடுத்தது. இருள. நிலவு பெரிய பந்து போல தெரிந்தது. அதை கால்பந்தாக
விளையாடினால் எப்படியிருக்கும்? என்று நினைத்தான்.
米 米 se
சனிக்கிழமை. ஆச்சிவீட்ட போய் வாரது போல சில அலுவல்களில் காலை கழிந்தது. சின்னம்மா கடனாக மாறி தந்த பணத்திலே அண்ணர் வெளிநாடு போயிருந்தார். கொஞ்சம் அனுப்பியிருந்தான்.
அ த கொடுப்பதற்காக போனான். ஆச்சியோட கதைப்பதில் வேறு அவனுக்கு ரசனையிருந்தது. சமுதாயச் சீரழிவுகளால் ஒவ்வொருத்தரும் பந்தாடப்பட்டே வருகிறார்கள். அவர் வாழ்க்கையும் ஒரு காவியம்.
பின்னேரம் வந்தபோது, சுரேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். ஒருவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்க
"கல்யாணம் நல்லாய் நடந்ததா” என்று விசாரித்தான். “நடந்தது” சுரத்தில்லாமல் சொன்னான். “மாப்பிள்ளை “பாங்கிலே’ வேலை. ஏன் சலிக்கிறே?” என்று ஆச்சரியத்துடன் அவன் கேட்டான்.
மெளனமாகவிருந்தான். "சீதனம் கூடிப்போச்சுதா?” ஆதரவாகக் கேட்டான்.
“ஊர் நியாயம் என்று ஒன்றிருக்கிறதே. இரண்டு லட்சம் காசாகவும் ஒரு லட்சம் வீடு வளவாகவும் கொடுத்தபிறகும் கணேசும் விமலும் ஆளுக்காள் 10,000 படி பிற்காலத்தில் கொடுக்கவேண்டும் என்றும் உறுதிஎழுதி வாங்கிவிட்டினம். உனக்குத் தெரியும் தானே நந்தனைப்போல சின்னப்பெடியள்

Page 16
28 O வேலிகள் தவிர இன்னம் 2 பெட்டையள் வேற இருக்கினம்” வெறுப்புடனும் கோபத்துடனும் கொட்டினான்.
“வெளியப்போனா - இது சுண்டைக்காய்க்காசு. கவலைப்படத் தேவையில்லை” என்று ஆதரவாக பதிலளித்தான்.
“அவங்களுக்கு சுய சிந்தனைகள் ஆசைகள் இருக்கக்கூடாது. பலிக்கடாவாக வேண்டிய நிலை. அவர்கள் வயசுக்க வருகிறபோது மோசமாக சீதனம் பேசப்போகிறார்கள். ‘காதல்’ என்ற தம்பிமார் ஒடமுடியாது. மனிதனாக வாழ எல்லா உரிமைகளும் இருந்தும் தேசவழமையான சிலந்திச்சிக்கலுக்காக வாழ நிர்ப்பந்திப்பது எவ்வளவு கேவலமானது" குமுறினான் சுரேஷ்.
இவனுக்கு ஏதாவது தலையில் கழண்டுவிட்டதா’ என்று பார்த்தான். சுகமாய்தானே இருக்கிறான்.
“உனக்கு தலையிடிக்குது என்றால் விடு. கதைக்கேலை” என்றான்.
"அப்படியொன்றுமில்லை. இந்த விசயத்தை நீயும் நானும் கதைத்து பிரயோசனமில்லை இளைய தலைமுறை முழுதுமே கதைக்கவேண்டும் இனப்பிரச்சினையால் வேலைவாய்ப்பில்லை. வெளிநாடு போக காசை எப்படி பெறுவார்களாம்? அதுதான் இப்படியெல்லாம் நடக்கிறது. பெண்களிடம் கேட்டுப்பார். அவர்களும் எதிர்ப்பதில்லை" 'வொலிபோல் மைதானத்தில் ஆட்கள் ஒவ்வொருவராக கழன்றுபோனார்கள். "நீயும் வந்து பழகு" என்று கூட்டிச் சென்றான் சுரேஷ்.
சேவிஸ் கீழ்க்கை மேல்க்கை எடுப்புக்கள். கையை பொத்துற அடிக்கிற விதம். எல்லாம் பழக்கினான்.
எதிர்பகுதியில் போய் நின்ற அவனிடம் பந்தை அனுப்பி அடிக்க வைத்தான். நின்று விளையாடிக்கொண்டிருந்தவர்களும் கழர அவர்கள் மட்டுமே நின்றார்கள்.
நீ கையைப்பொத்துற விதம் பிழை என திருத்தினான்.
ஒருமாதிரி விளையாடக் கற்றுவிட்டான்:

கடல் புத்திரன் O 29
மேலும் இருள.நிறுத்தவேண்டியதாயிற்று. “நாளைக்கு வேலைக்குப் போறியா?” என்று கேட்டான் அவன.
“ஏழரை மணிக்கு என்ரை வீட்டை வா” என்றான் சுரேஷ்.
இரண்டுபேர் போவதால் சனிக்கிழமை போகாதது பாதிக்கப் போவதில்லை என்று பட்டது.
se xk *
மேசன் கரண்டி, மட்டக்கோல், நீர்க்குமிழி, மட்டம் தூக்குக் குண்டு போன்ற தொழிற்சாமான்களை உரப்பையால் சுற்றி பின் கரியரில் கட்டிய, நாகரத்தினத்தோடு ஒரு பட்டாளம் விரைந்து கொண்டிருந்தது. பின்னாலே அவனும் சுரேஷம் ஒரு சைக்கிளில் வந்தார்கள். இளங்காலை நேரம் இதமாகவிருந்தது. கடற்கரையோடு கிடந்த அந்த கல்லுண்டாய் ரோட்டு ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளை கடக்க ஒவ்வொருச் சூழலாகவிருந்தது. நவாலி ரோட்டை கடக்கும் வரையில் கடல்நீரின் காய்ந்த.மணம்.
மாட்டொழுங்கையை அண்மிக்க வயல்வெளியில் தவழ்ந்து வந்த தூய்மையான காற்று. எதிர்த்தாற்போல் இருந்த தென்னைமரங்களுடன் கூடிய குடியிருப்பிலிருந்து தவழ்ந்த சீதளத்தென்றல் கடலோடு அண்டிய ரோட்டுப்பகுதியில் (காக்கை தீவடியில்) மீன் மணம் கடக்க.நாவாந்துறை குப்பை மேடுகளின் அழுகிய மணம், அதை சமப்படுத்தி தகரம், சாக்குகள் அடைப்புக்கள் செய்து வேய்ந்த உயரம் குறைய கட்டிய சிறிய குடிசைகளில் 4-5 குடும்பங்கள் வாழ்கிறார்கள். அந்த காலையிலேயும் ராத்திரி கடைசியாக கொட்டிய குப்பைகளை அவர்களின் பிள்ளைகள் கிளறிக் கொண்டிருந்தார்கள்.
ஆண்டவன் படைப்பில் எத்தனை மனிதர்கள்? சிலர்க்கு அளவுக்கு மிஞ்சிய பணம். பலருக்கு சமூகவியாதிகள். ஏழைகளுக்கு பசியோடு கூடிய சுகாதாரமற்ற வாழ்க்கை. விபச்சாரம் சீரழிவுகள் எல்லாம் பசிக்கு முன்னால் தூசாகி போய்விட்ட நிலையில் இந்த மக்கள். ஆனால்.மற்றவர்களிடமில்லாத சந்தோசம் அங்கே நிலவுமோ?

Page 17
30 O வேலிகள்
இப்படி நினைத்துக்கொண்டு வந்தான். தமிழ் இனவாதத்தை தூண்ட சிங்கள ஆமி ‘பெண்களை’ கெடுத்ததையே சொல்லித் திரிகிற பெடியளும், அரசியல்வாதிகளும் இவர்களைப்பற்றி கவலைப்படுவார்களா? இன்னம் கூட காணி சாதிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வை நாம் முன்வைக்கவில்லை. எங்களைப்போல பலவீன முடையவர்கள் தானே அரசுவாதிகள்.
இனப்பிரச்சனைக்கான தீர்வை அவர்கள் எங்கே வைக்கப் போகிறார்கள்?
ஒட்டு மட வீதியாலே போய் நாவலர் பெருமான் சந்தியை கடந்து சிறிய தொலைவிலிருந்த ஒழுங்கையால் உள்ளுக்கை போனார்கள்.
5-6வது வீடு பின் விராந்தையோடு கூடியதாக மேலதிகமாக ஒரு அறை கட்டலும் சற்றுத் தொலைவில் ஒரு தண்ணிர் தாங்கி கட்டுதலுமே வேலைகள்.
இவ்வளவு கடக எண்ணிக்கையில் மணல், சீமேந்து போட்டு சாந்து குழைப்பதும் சமயத்தில் சல்லி போட்டு கொங்கிறீற் கலவை குழைப்பதும் காய்ந்த கற்களை (கொங்கிறீற் கல்) தூக்கி கொடுப்பதுமான தொட்டாட்டு வேலைகள், அன்று கல் அறுவையிருக்கவில்லை.
வேலையில் நேரம் பறந்தது. 10.00 மணிக்கு “டீ’ வந்தது. களையாகவிருந்ததால் ருசியாகவிருந்தது. மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆளுக்கு 5 ரூபா கிடைத்தது. கொஞ்ச தூரம் தள்ளியிருந்த கடையிலே மலிவுச் சாப்பாடுகளை (இடியாப்பம் சொதி சம்பல்) சாப்பிட்டார்கள்.
பிறகு 3.00 மணி போல “டீ திரும்பவும் வந்தது. ஒரு 15 நிமிட ஒய்வு. 400 மணியிற்கு வேலையை நிறுத்தினார்கள்.
குளித்து வெளிக்கிட்ட போது அசதியாகவிருந்தது.
தினக்கூலி முறைப்படி வேலை எடுத்ததால் நாகரத்தினம் அன்றைய கணக்கை எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார்.

கடல் புத்திரன் O 31
அவர்களுடைய கூலி 50 ரூபா. அவர்க்கு 15 ரூபா போக 35 கையில் கிடைக்கும். ஒவ்வொருவரும் அவ்வாறே பெற்றார்கள். பொதுவான தொழில்முறை.
உபகரண வாடகை பல்வேறு செலவுகளுக்கு அந்த 15/= எடுக்கப்பட்டது. சமயங்களில் அப்பணம் உபரியாக அமையும்.
பணக்காரன் மேலும் பணக்காரனாவான் என்பது ஐதிகம். சிறு பணக்காரன் கூடத்தான்.
இரவு சுரேஷ் ஜே.பி.மாமா வீட்டபோய், டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான்.
※ ※ 米
வகுப்பில் நளினி சிறிது சோர்வுடன் வீற்றிருந்தாள். முகத்தில் களை கூடியிருந்தது. நண்பர்களுக்கிடையில் சலசலப்பு நிலவியது. “PT.நேரத்திலே, அவளோட எப்படியும் கதைத்துவிடு” என்று பாபு சுரேஷிடம் சொன்னான்.
முத்தனை நம்பினாலும் அவளும் சம்பந்தப்பட்டவள். அவளுடனும் கதைக்காத வரையில் வதந்திகள் தெளிவுறமாட்டாது. ஒரு பெடியனுக்கு பெட்டையிலே ஆசை ஏற்படுவது இயற்கை. சாதியும் சமயமும் குற்றப்பத்திரிகை வாசித்தாலும் கூட அதை தவறென்று சொல்ல முடியாது. PT 5வது பாடமிருந்தது; 4 வது பாட நேரத்திலே எதை? எப்படி? கேட்கிறது என்று மூளையை உடைத்துக் கொண்டிருந்ததால் சுரேஷ் விஞ்ஞான டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் சரிவர சொல்லத் தவறினான். ஏச்சு வாங்கிக் கொண்டான்.வெளியில் நிறுத்தி விட்டதால் நோட்ஸ் எழுத முடியாமல் போய்விட்டது.
நாளைக்கு பரீட்சை வைக்கப்போவதாக வேறு பயமுறுத்திவிட்டுப்போனார்.
PT. பாடத்திற்கு வகுப்பு கலைந்து போயிருந்தது. ஆண்கள் பிரிவு கிரிக்கெட்டில் ஈடுபட்டது. அவனும் பாபுவும் சுரேஷிலே பொறுப்பை விட்டுவிட்டார்கள். பெண்கள் பிரிவு பெரிய பாலை நிழலிலே கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்தது. நளினி

Page 18
32 O வேலிகள் வேர்ப்பகுதியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனதில் புதிதாக என்னென்ன பயங்களோ? சுரேஷ் அவளை நாடிப்போனான்.
“நளினி உங்கட விஞ்ஞானக் கொப்பியை ஒருக்கால்தாறிங்களா எழுதிப்போட்டு தாரேன்” என்று கேட்டான்.
e 99 o
தாரேன்' என்று எழும்பி வந்தாள். வகுப்பறையில் இருவர் மட்டுமே இருந்தார்கள். கட்டிட நீள இருபக்கத்திற்கும் 'சீலிங் தடுப்புக்கள் வைத்து வகுப்புக்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அக்கட்டிடம் நாற்சதுர அமைப்பில் அமைந்திருந்தது. 5ம் வகுப்பு வரையில் சிறிது தள்ளி நீளமண்டபமாக வேறொரு கட்டிடம் இருந்தது. நாற்சதுரத்தின் ஒருபக்கம் யன்னல்களைக் கொண்டதாக அமைக்கப்பட்ட அறைகளாகவிருந்தன.
ஒபிஸ் விஞ்ஞான ஆய்வுக்கூடம். சிறிய லைபிரரி மற்ற பகுதி முழுதும் அரைச்சுவருடன் திறந்த அமைப்பு. கிரவுண்ட்ஸ் பக்கமாக அவர்களுடைய வகுப்பு இருந்தது. நடுப்பகுதியில் வாழை, செவ்வந்தி, கனகாம்பரம் போன்ற மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று தண்ணிர் பைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.
கொப்பியை கொடுத்துவிட்டு சுவர்க்கட்டிலே கையை ஊன்றி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கொப்பியை பிரித்தான். அழகான முத்தெழுத்துக்கள் தன்னுடைய பிரிஸ்கிரிப்சன் எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தான். அவளும் அழகாய்த்தானிருந்தாள். பெருமூச்சு வந்தது. “நளினி உங்ககிட்ட ஒன்று கேட்பேன் கோவிக்க மாட்டீங்களே” என்று கேட்டான். ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தாள். “முத்துவை தெரியும் தானே” என்று கேட்டான் 'ம்' என்றாள்.
நேரிடையாக விசயத்திற்கு வந்தான். “உங்கட கையை பிடித்து இழுத்தவனா?”

கடல் புத்திரன் O 33
((
இல்லை' என்றாள்.
(ť o • ን› o
உங்கப்பா அப்படித்தான் சொன்னவர் வெறுப்புடன் சிரித்தான்.
அங்குள்ள பெண்களுக்கு கூட்டம் எதுவும் தெரியாது. படிப்பை நிறுத்தினால் நெசவு வேலைக்குப் போய் வருவார்கள் அல்லது மகளிர் சங்கம் ஒன்றை நிறுவ போராடி வரும் வனஜா அக்காவிடம் தையல், கைவேலை பழக போவார்கள்.
கட்டினால் சமையல், குழந்தை குட்டி என்று அப்படியே அமுங்கி கிழவியாகி உதிர்ந்து விடுவார்கள்.
கணிசமானவர்கள் பள்ளிக்கூடம் போய்வந்தாலும் (O/Lஐ) சாதாரண பிரிவை பாஸ் பண்ணியவர்கள் ஒருசத வீதமாகவே இருப்பார்கள். வேலை பார்த்திருந்தால் வெளியுலகம் சிறிதாவது புரிந்திருக்கும். ஆண் மனோபாவமும் மோசம். வேலை பார்த்த சிலரையும் முடிச்ச பிறகு வீட்டிலே இரு’ என்று நிபந்தனைகள் போட்டிருக்கிறார்கள் அவன் வகுப்பு சுகுணனின் தாய் ரீச்சராயிருந்தவர். வீட்டிலேயிருக்கிறார்.
“என்னம் கூடாம பேசினவனா?”
தொடர்ந்து கேட்டான்.
“இல்லையே” என்றாள்
"தண்ணி கேட்டவனா?” சுரேஷ்.
"ஒம்” என்று தலையை ஆட்டினாள்.
“என்னை பேர் சொல்லி கூப்பிட்டது தான் அப்பனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவனும் அவசரப்பட்டு கத்தியை எடுத்ததாலே குத்து விழுந்து விட்டது” என்றாள்.
பெண்களுக்கு சம உரிமை கொடுத்திருந்தால் உப்படியான பிரச்சனைகள் இருந்திராது என்று பட்டது. சினிமாவிலேயே உரிமையை கொடுக்க பஞ்சிப்படுகிறார்கள். −
“ரொம்ப நன்றி நளினி. இப்ப, இவ்விசயம் பழங்கஞ்சி.

Page 19
34 O வேலிகள் மேற்கொண்டு பிரச்சனைப்படமாட்டேன்” " என்று உறுதி கூறினான்.
வீட்ட வாறபோது நண்பர்களிடம் முத்தன்ர பேச்சு உண்மை என்றான்.
米 米
‘வொலிபோல் ரசனையுடன் நடந்து கொண்டிருந்தது. கனகன் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தான். பக்கத்தில் நின்ற சுரேஷ் "பயப்படாமல் விளையாடு” என்று உற்சாகப்படுத்தினான்.
அங்கால சேவிஸ்க்கு போனபோது "இண்டைக்கு கூட்டம் இருக்கிறது” என்றான்.
5.30 மணிக்கெல்லாம் நிறுத்திவிட்டார்கள். அவ்வளவில் கூடினார்கள். கொமிட்டியும் வந்து சேர கூட்டம் தொடங்கியது. “குளங்களை சிரமதான முறையில் செய்யிறதுக்கு தேனீர் செலவுகளை உப அரசாங்க பிரிவு தருகிறது. அப்பணத்தை வைத்து மேடையை கட்டி முடிக்கலாம் GT Gór gou தீர்மானித்திருக்கிறோம். என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள்.
அவ்விடத்து பெடியன் உழைக்கிறதுக்கு பின்நிற்பவர்கள் இல்லையே! ஆதரவு தெரிவித்தார்கள்.
கடைசியாக ‘கேட்போர்’ நேரத்தில் ஒருத்தன் வேலனின் அங்கத்துவம் பற்றிக் கேட்டான்
“அவனிட்டயும் சந்தா வாங்குங்களன்" அவனுக்கு சரி என்றே பட்டது. கொமிட்டிக்கு சட்டவிதிகள் முரணாகவிருந்தன. இதுவரையில் மற்றவயளில் யாரும் சேர்ந்து விளையாடியதில்லை. கொஞ்சநேரம் தமக்குள் சலசலத்தார்கள். பிறகு காரியதரிசி"வெளியூர் அங்கத்தவர் போல ஏற்கிறோம்" என்று பதிலளித்தார்.
“அவனுக்கு வோட்டுரிமை கிடையாது. சந்தா கட்டவேண்டியதில்லை. என்னம் உதவி செய்ய விரும்பினால்

கடல் புத்திரன் O 35 அன்பளிப்புகள் செய்யலாம்’ என்று விளங்கப்படுத்தினார். இரண்டாம் பிரஜை என்றது அவனுக்கு ஒரு மாதிரியாயிருந்தது. தேசவழமையை மீற யாரும் விரும்பவில்லை. சிறிலங்கா அரசு ஆச்சரியமானதில்லை. எவ்வளவு நாம் வாய் கிழிய கத்தினாலும் இது எல்லா சமூகங்களிலும் கடைப்பிடிக்கிற பொதுவிதி. சாதியம் பிடியாத பெடியள்களை இவ்விதிகள் செயல்பட விடாது கட்டுப்படுத்திவிடும்.
米 米 米
பள்ளிக்கூட நேரம் ரீச்சர்மாரின் உருக்குதல், படிப்பித்தல் தமது பராக்கிரமத்தை அளத்தல் எனப் போயிருந்தது. முதல் நாள் நடந்த கூட்டம் பற்றி இருவரும் கதைக்கவில்லை.
‘முத்துவீட்ட போறது என்றிருந்தததால் பாபு அவன் வீட்டிற்கு வந்திருந்தான். சுரேசும் வந்தான்.
“எங்கடயாட்கள் மாற மாட்டான்களடா. மன்னிச்சிடடா" என்று சுரேஷ் கவலையுடன் சொன்னான்.
“சேச்சே நான் ஒன்றம் நினைக்கேல்லை” என்று அவன் போலியாக பதிலளித்தான். “என்ன விசயம்” என்று பாபு கேட்டான். இரண்டாம் பிரசை விசயத்தை சுரேஷ் விளக்கினான்.
米 米 来源
முத்தன் தனியாக நின்று புல்பூண்டுகளை செதுக்கி கற்களை கிளறிக்கொண்டிருந்தான்.
மூவரும் இறங்கினார்கள். ஒரு நொடியில் துப்பரவாக்கி விட்டார்கள். வேலிக்கம்பியை வெட்ட கத்திரிக்கோல் இல்லை என்றபோது சுரேஷ் சைக்கிளில் விரைந்து பெரியப்பா கடையிலிருந்து எடுத்துவந்தான். திறந்து மூடக்கூடியதாக அக்கம்பிகளைக் கொண்டே கதவொன்றை அமைத்தார்கள்.
கமலம் அவர்களுக்கு தேனிர் கொண்டு வந்தார். கனகசபை வீட்டில் கதியாலுக்கும். சிவநேசன் வீட்டில் கிடுகுக்கும் முத்தன் ஒடர் குடுத்திருந்தான்.

Page 20
36 O வேலிகள் கதியால்களை அவர்களே வெட்டி எடுக்கவேண்டியிருந்தது.
பாபு மரத்தில் ஏறி மளமளவென்று வெட்டினான். சுரேசும் அவனும் குழைகளை முத்தன் வீட்டு ஆட்டுக்கு கொண்டுபோய்விட்டார்கள். கிடுகையையும் அவர்களே சுமந்து வந்து அன்டன் வீட்டுச் சுவரோடு சாய்ச்சுவிட்டார்கள்.
நாளைக்கு தொடர்வதென.தீர்மானித்து அன்றைய வேலையை நிறுத்தினார்கள்.
முத்தன், சுரேஷ் கையிலே 50 ரூபாயை வைத்து “உன் பெரியப்பாவைக் கேட்டு 'அடிப்படைச் சாமான்களை நாளைக்கு வாங்கிட்டு வாடா" என்றான்.
விடை பெற்றுச் சென்றார்கள்.
米 米
பெரியப்பாவிடமிருந்து வாங்கிய லிஸ்டை கொண்டு வந்திருந்தான் சுரேஷ். சிறு கத்தி, குறடு, சுத்தியல், போல்ஸ் செட், ‘ரிம் பக்கல் சாவி, என நீண்டிருந்தது."50 ரூபா பத்துமா?" என்று கேட்டான் அவன்.
“50 தொடக்கம் 100/= என்றாலும் சமாளிக்கலாம் தவிர சிறிய அளவுகளிலும், கொஞ்சமாகவும் வாங்குவதால் பிரச்சனை வராது.நினைக்கிறேன்’ என்ற சுரேஷ் ‘வேற பெரியப்பா வாங்கிற கடையிலே. அவருக்குத்தான் சாமான்கள் வாங்குவதாக சொல்லச்சொன்னார். 5% விலைக்குறைப்பு இருக்கிறது என்றான். ‘முத்தனிட்டப்போய் கொஞ்சம் காசு எடுக்கலாமா என்று பார்த்திட்டு போவோமா" கேட்டான் அவன்.
“வேண்டாம் இதுக்க வாங்கப் பார்ப்போம். கடைக்கு கொஞ்ச சாமான்கள் ரெடியாயிருந்தால் சரி. பிறகு வாங்கிக்கொள்ளலாம்” என்றான். முத்தனுக்கு கரைச்சல் கொடுக்கவிரும்பவில்லை.
“சரி, வாடா போவோம்” வெளிக்கிட்டார்கள். சைக்கிளில் போனபடியே முத்தனின் இடத்தைப் பார்த்தார்கள். புதிதாக ஒரு கொட்டில் முளைத்திருந்தது. முத்தன்ர நண்பர்களான சுமன், பத்து, ரவி, பூர்ணம் போன்றவர்கள் வேலையாலே வந்தபிறகு இரவிரவாக போட்டு விட்டார்கள்’ என்பது புரிந்தது.

கடல் புத்திரன் O 37
“கெதியிலேயே திறந்து விடுவான்’ என்றான் சுரேஷ், “டேய் "பம்ப் முக்கியமே. மறந்திட்டியே ஞாயமான காசு வேணுமே” திகிலுடன் கேட்டான் அவன். சுரேஷ் புன்முறுவல் பூத்தான் "பழைய பம்ப் ஒன்றை எடுத்து திருத்தி ரெடியாய் பெரியப்பா வைத்திருக்கிறார்” என்றான். “முத்தன் குடுத்து வைச்சவன். உன்னை நண்பனாகப் பெற்றதற்கு" அவன்.
“மறந்திட்டியே. பெரியப்பாவை’ என்று சிரித்தான். உண்மைதான் (கலவர காலத்தில் சிங்களவர் மத்தியிலிருந்து காப்பாற்றி உதவியவர்கள்போல.) எங்குமே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். "கடையை திறக்க முதல் முத்தனை ஒரு பகல் தன்னுடைய கடையிலே வந்து நிற்க சொன்னவர். எங்களைப்போல நிலையில் இருப்பதால் செய்முறைகளில் ஏற்படுகிற தவறுகளை சொல்லிக்கொடுப்பதற்கு" என்றான் சுரேஷ்.
“இவன் பயப்படப்போறான்” என்றான் அவன்,
ce
பகிடி விடுறா யா. பெரியப் பாவோட யாருமே நெருங்கமாட்டார்கள்” என்ற நிலமையை தெரிவித்தான். தொடர்ந்து ‘சிவத்தான் வெறியிலே உணர்ச்சி வசப்பட்டுவிட்டான் மிச்சம்படி வன்மம் வைச்சு சாதிப்பவனில்லை” என்று பதிலளித்தான். மனிதர்க்கு சமயங்களில் பலவீனமும் ஏற்பட்டுவிடுகிறது.
மணியம் ஸ்ரோர்ஸை அடைந்தபோது 5.30 ஆகியிருந்தது. சாமான்கள் 50/-ஐ தாண்டவில்லை. வாறபோது முத்தனிடம் கையளித்து விட்டு வந்தார்கள்.
2k xk 米
பவித்ரா கடையிலே ஏதோ சாமான் வாங்க வந்த நளினி அவர்கள் நிற்பதை பார்த்துவிட்டு சைக்கிள் கடைக்கு “வந்தாள் ‘எப்ப நீங்கள் கடையை வாங்கீனீர்கள்” என்று பகிடியாக கேட்டாள்.
“முத்து, எப்படி உங்க காயம் மாறிவிட்டதா?’ அன்புடன்

Page 21
38 O வேலிகள் விசாரித்தாள். முகம் மலரசுகம்” என்றான் முத்தன். “நேரமாகிறது வாரன்” என்று விடைபெற்றாள்.
'கடை எப்படிப்போகுமோ? என்றிருந்த கலக்கம் அவன் முகத்திலிருந்து நீங்கியிருந்தது.
அவனுக்கு தந்திருந்த பம்பை காட்டினான். நல்ல நிலையிலிருந்தது.
“எப்ப கடையை திறக்கப்போறாய்?” கேட்டான். சுரேஷ். "திங்கள் நல்ல நாளாம் அக்கா சொல்றா” என்றான். “பள்ளிக்கூடம் முடியத்தான் எங்களால் வரமுடியும்" என்றான் சிறிது நேரம் கதைத்துவிட்டு சாப்பிட ஒடினான். வகுப்பிலே,
s விளையாட வருவியா?" என்று வேலனைக் கேட்டான்.
“இரண்டாம் பிரஜை என்ற பிறகு மனம் வெறுத்துவிட்டது. நீயிருக்கிற போது மட்டும் விளையாடுவேன்” என்றான். அவன் “எப்படி முத்தன்? கடையை திருப்பி வைத்திருக்கிறானா?” பகிடியாக கேட்டான்.
“டேய், நளினி வந்து கதைத்துவிட்டு போனாள். முத்தனுக்கு ஆறுதலாக இருந்தது” என்றான். ரீச்சர் வர பாடங்களில் அமுங்கிப்போனார்கள்.
அன்று சுரேஷ் வெள்ளிக்கிழமை போட்டி ‘மச்’ என்று சொல்லியிருந்தான்.
水 米 米
சங்கானையில் எங்கேயோ ஒரு கோவில் வளவு என்று அடையாளம் காட்டினாலும் தேடிப்பிடிப்பது கஷ்டமே. ஊரிப்பட்ட வளவுகள் இருந்தன. ஆனால் ஒழுங்கைகளுக்கு பேர் இல்லை. வீதியிலே சனத்தைக் காணவில்லை. அவன்ர காலத்திற்கு கிருபன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிலேயிருந்து வெளிக்கிடுவது தெரிந்தது. கிருபன் வகுப்புத்தோழன் “மச்சு’க்குத்தானே நானும் அங்கேதான்” என்றான் அவனைப்பார்த்து.

கடல் புத்திரன் O 39 நீள வயல் பாதையில் சைக்கிள்கள் ஆடி அசைந்து ஒடின. ஒடக்கரையை (கடல்துறை இல்லை. பக்கத்தாலே வழுக்கியாறு. ஒன்று தான் ஒடுது. ஒருவேளை அதிலே பழங்காலத்தில் ஒடத்திலே வந்தார்களோ?) அண்மியபோது. "இப்ப, உங்க போறதில்லையா?” என்று கிருபன் பகிடியாகக்கேட்டான்.
சங்கானையின் 13 கிராமப்பிரிவுகளிலே ‘உடன் கள்ளு இனிப்புக்கள்ளு”-க்கு பேர்போன கொட்டில் அங்கேயேயிருந்தது. அங்கே, கிழவி ஒருத்தியின் ஆட்டு, மாட்டுக்குடல்களை அறுத்து வதக்கிய டேஸ்டும் பிரசித்தம். சிலசமயம் வதக்கிய ரத்தமும் (ஆடு மாடு) வைத்திருப்பாள். அதனாலே கள்ளு டேஸ்டாகவிருந்ததோ? என்னவோ?
“கீரிமலைக்குப்போனா, வாரபோது போறனான். கால் உளைவு தெரியாது" என்று பதிலளித்தான் அவன். கிருபனுக்கு சங்கானை கொஞ்சம் தெரியும். சந்தியிலே ஏறி, சண்டிலிப்பாய் பக்கமாக சிறிது ஒடி மண் ஒழுங்கையிலே விழுந்து, நீள ஒடி. விளையாட்டு மைதானத்தை அடைந்தார்கள்.
ஆட்டம் 4 மணிக்கே தொடங்கிவிட்டிருந்தது. அடுத்ததாக, பொன், பருத்தியோடு மோதவிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த் அப்பு ஒருவர் இவர்களைப்பார்த்துக் கேட்டார்.
“என்ன தம்பிகளா! பொன்னும் பருத்தியும் பேர்கள். என்ர பேரனைச் சொல்லி இவ் ஒழுங்கையில் ‘புண்ணாக்கு’ என்று ரீம் தொடங்கப்போறேன்” என்றார்.
“வள்ளி தெய்வானை கடவுள் இல்லையா? அப்பு நீயும் ஒரு தெய்வானையைப்பிடி. வாழ்க்கை ஜாலியாகவிருக்கும்” என்றான் அவன். அப்பு விலகிப்போனார்.
தாசனும், ரங்கனும், இன்ஜினியரும் டாஸ் அடித்து கலகலப்பூட்டினார்கள்.

Page 22
40 O வேலிகள் "ஒரு தடவை சுரேஷ் பின்னுக்கு நின்று கஷ்டமான பந்தை நிலத்தில் விழாது எடுத்துக்கொடுத்தான். ஆட்டம் விறுவிறுப்பாகவிருந்தது. இரண்டும் ஆவேசமாக மோதின.
பருத்தி அடிச்ச டாஷை எடுக்க முயன்ற சுரேஷ் கீழே விழுந்தான்.
பந்து கணக்கில் ஆனது. பொன் அடிச்ச டாஸ் ஒன்று நூலிழையில் வெளியபோனது. சந்தர்ப்பத்தை பாவித்துக்கொண்டு பருத்தி ஒரு மாதிரி அடிச்சு வெற்றியைப் பெற்றுவிட்டது.
கைகுலுக்கி விடைபெற்றார்கள். சுரேஷ் அவர்களிடம் வந்தான். “லக் இல்லையடா, அடுத்த முறை நிச்சியம் வெல்லு வீங்களடா” என்றான் அவன்.
செமி பைனலில் தோற்றது. அவர்களுக்கு வருத்தமாகவே யிருந்தது.
※ 米 ※
சுரேஷலிம் அவனும் சொலூசன் பூசி சிறிய கொம்பவுண்ட் துண்டை வைத்து உலரவிட்டார்கள். சுரேஷ் றபர் துண்டை எடுத்து அதே மாதிரி கத்தியால் பிராண்டி தூசை ஊதிவிட்டு சொலுசன் பூசி உலர விட்டான்.
ஒரு நொடியிலே வேலையை முடித்து காத்தடித்து சைக்கிளை கொடுத்தார்கள்.
முத்தனின் கஜானாப்பெட்டியில் வந்தவர்கள் 1/-ஐப் போட்டார்கள்.
2.00 மணிக்கு யார் வரப்போகிறார்கள். பிரித்த சைக்கிள் பகுதிகளுக்கு ஒருத்தன் கிறீஸ் வைத்து போல்ஸ் வைக்க, அவன் கழுவாத பகுதியை மண்ணெய்த்துணியால் கழுவிக்கொண்டும் இருக்க, பாபு பூட்டிய பகுதிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான். இடையிடை ‘ச்சூ ச்சூ’ என்று சொல்லிக்கொண்டார்கள்.
“என்னடா" என்று முத்தன் கேட்க, “ஈ விரட்டுகிறோம்"

கடல் புத்திரன் O 41 என்றார்கள். “உங்களுக்கு வேற வேலை இல்லை” என்று விட்டு வேலையில் கவனத்தை பதித்தான்.
வந்த கண்ணப்பன் அவர்களைப் பார்த்து ஆச்சரியமாய் கேட்டான். “எப்ப தம்பியள் வந்தனிங்கள்?’
"அக்காட்ட தண்ணி வைக்கச்சொல்லணை” என்று அவரிடம் முத்தன் சொன்னான். கண்ணப்பன் போனபிறகு அந்த செய்தி வந்தது.
செட்டியா மடத்து வயல் கிணற்றிலே பூபதி தன் 3 குழந்தைகளையும் போட்டு விட்டு தானும் விழுந்து செத்துவிட்டாளாம். அச்செய்தி அவர்களை உலுப்பியது.
க்ைகிளை அவசரமாக துணியில் துடைத்துவிட்டு, கடையை மூடிவிட்டு ஒடினார்கள்.
பூபதிக்கு 20 வயசிருக்கும். இளம்பெண் 16 இலே கட்டியிருப்பாள். காட்டுப்புஷ்பங்களாக அழகான குழந்தைகள். ஒருத்தன் பெடியன்
இருவர் சிறுமிகள், நண்பகலிலே குதித்து விட்டாள். ஆள் நடமாற்றிருந்த வேளை.
ஒரிருவர் நடமாடியபோதும் கிணற்றை யாரும் வயல்பக்கமாகவே இறங்கி எட்டிப்பார்க்கவில்லை. பின்னேரம் பள்ளியாலே வயலுக்கு அப்பாலிருந்து வறிய சிறுவர்கள் வீதியிலும் வயல் வரப்பிலுமாக விளையாடிக்கொண்டு போனபோது கண்டிருக்கிறார்கள். செய்தி காட்டுத்தீயாகியது.
“கட்டி யவன் ஒழுங்காய் இருந்தால் இவள் ஏன் சாகப்போறாள்? என்றும் உழைச்ச காசை குடிச்சிட்டு வாறதாலே உவள் 3 நாளாய் வீட்டிலே பட்டினியோட கிடந்தாள். பிள்ளைகள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் கஞ்சி வடிச்சுக் கொடுத்தேன் பெட்டச்சி மனசு வெறுத்து இப்படி முடிவை எடுத்திட்டாளே காவேரியக்கா அழுதுகொண்டிருந்தாள்.
"குழந்தைகளை விட்டு அவளால் வயல்வேலைக்கு வரமுடியவில்லை”

Page 23
42 O வேலிகள் சிநேகிதி ஒருத்தி கரைந்தாள். தண்ணியிலே சிறிது பலவீனமாக நின்ற மணியம் முதல் ராத்திரி சாப்பாடில்லை என்றபோது அடித்து துவைத்திருக்கிறான் அச்செய்தியும் வதந்தியாக வந்தது. பலவித விமர்சனங்கள்.
அவளை விரும்பி (காதலித்து) கட்டியவன் குடியினால் உள்ள நிலைமையை உணரத்தவறிவிட்டான். எதிரே மூழ்கி கிடந்த பிரேகங்கள் அவனை பைத்தியம் பிடிக்கவைத்தன.
யார் மேலே குற்றம் சொல்வது? எதற்கும் சாவு தீர்வில்லை என்று வாதாடுகிற அவர்களுக்கும், என்ன சொல்றது என்று தெரியவில்லை. சோகத்துடன் நின்றார்கள்.
“எங்கட சமூகத்திலே நெடுக இப்பிரச்சினைகள்” சலித்துக் கொண்டான் முத்தன்.
இரவிலும் தென்னோலை தோரணம் கட்டி 7.30 மணிக்கு சவத்தை எடுத்தார்கள். சிவில் சேவையாளர், பொலிசார் இல்லையா? நடுநிலை தவறிய ஆட்சியாளர்களால் மக்களுக்கும் அவர்கள் மேல் நம்பிக்கையற்று விட்டது. வடபகுதியில் யாரும் அவர்களை நாடுவதில்லை.
சிறிய மழைத்தூறலில் புருஷன்காரர் சட்டியை காவ, 2 பாடையில் உடல்களை கிடத்தி காவிச் சென்றார்கள். சவப்பெட்டி உபயோகிக்கிறதெல்லாம் மற்றச் சாதியினர்தான். குறுகிய நேரத்தில் எவர்க்கும் இரக்கம் பொத்திக்கொண்டு வராது! கனநேரமாய் நீரிலே கிடந்ததாலும், எம்பாம் பண்ணாததாலும் உடனேயே எடுத்தார்கள்.
நீண்ட தூரத்தைக் கடந்து சென்ற சவம் பாலத்தடி கடலையை அண்மியது. மணிசர்களில் ‘தேவர்கள் இருந்து தொலைந்து விட்டார்களே! அச்சாதியினரை அச்சுடலையில் எரிக்கமுடியாது. காவிச்சென்று வாடிப் பக்கமாகவிருந்த சுடலையிலே எரிக்கமுடியும். நீண்டதூரம் மற்றச்சாதிகள் கூட அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒவ்வொன்றும் தான் ஒடுக்கப்படுகிறோம் என்ற பதாகையை வைத்திருந்ததே தவிர தமக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்கியே வந்தது.

கடல் புத்திரன் O 43 பள்ளிக் கூடத்தடியைச் சேர்ந்த பெடியள் சற்று துணிச்சல் உடையவர்கள். கணிசமானவர்களுக்கு நகர வேலையை நாடியதால் குடிமை வேலைகள் வேண்டியிருக்கவில்லை. பெற்றோரும் பெண்களுமே அதிலே சிக்குப்பட்டிருந்தார்கள். 'வாசிகசாலை ஐக்கியம் பேணி அம்மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக விருந்தார்கள். தவிர, அதிபருடன் சேர்ந்து சிறுவர்களை படிக்க தூண்டி வந்தார்கள். அப்பெடியள்களே செத்த வீட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
மழைத்தூறல் சிறிது பெலக்க. காவி வந்த நகுலன் “டேய்.
சவத்தை உந்த சுடலையிலே எரித்தால் என்ன?” என்று கேட்டான்.
பேச்சு சலசலத்தது.
Ké
பாடையை திருப்பு முத்தனின் மச்சான் குணத்தான் உரத்துச் சொன்னான். கிட்டடியில் தான் பள்ளிக்கூடத்துப் பெட்டையை முடித்து அப்பகுதிக்கு போயிருந்தான்.
பழசுகளும் நடுத்தர ஆட்களும் பயந்தார்கள். விறகு போய்க் கொண்டிருந்த ஒற்றைத் திருகல்வண்டியை சஞ்சயன் திருப்பிக்கொண்டு வந்தான்.
தயங்கியவர்கள் மெதுவாக சுடலைக்கு வந்தார்கள். மணியம் சட்டியை உடைத்து எரி மூட்டினான்.
率 米 米
வேலனுக்கு அரைகுறை மழையிலே குளித்ததால் சளி பிடித்திருந்தது. அதிகாலை 6.00 மணிக்கு மழை அடித்து ஊத்த தொடங்கிவிட்டது. காலையிலே காடாத்தேடு (சாம்பல்) எடுத்திருக்கமாட்டார்கள். மழை அடித்துக்கொண்டு போயிருக்கம் போலப்பட்டது. பூபதி ஆண் இனத்தின் மீது சாபம் போட்டு விட்டாளோ? அவனை விட 4. வயது வித்தியாசமாகவிருந்தததால் அவன்ர பட்ச் என்ற நினைப்பு. அவள் சார்பாக நின்று எல்லார் மீதும் குமுறும் போக்கு ஏற்பட்டிருந்தது. 2 தரம் தும்மினான். வீட்டிலே பள்ளிக்கூடம்

Page 24
44 O வேலிகள் ஒருத்தரும் போகவில்லை நண்பர்களும் போயிருக்கமாட்டார்கள் என்று பட்டது.
10 மணி போல மழை சிறிது நிற்க. குலனைக்கு வெளிக்கிட்டான். ஒழுங்கையின் சமனின்மையால் கலங்கல் தண்ணிர் வெள்ளமாகவிருந்தது. சைக்கிள் வாறி அடித்தபடி, மட்காட் டயர் கழுவுப் படசென்றது. குலனைப்பாதையை அடைநதபோது திகைத்துப்போனான். விளையாட்டு மைதானத்தை ஊடறுத்துக்சென்ற பாதையை காணவில்லை. வெள்ளம் மூடியிருந்தது. ஏற்கனவே பாதை சரியில்லை. மழை பெய்தால் சேறும் சகதியுமாக மாறிவிடும். எப்படி மக்கள் போய் வருகிறார்களோ? பாபு வீட்டபோற எண்ணத்தை கைவிட்டான்.
அப்படியே மடத்தடி ஒழுங்கையாலே ஏறி வயல் வெளிகளை பார்த்தபடி. சுமார் 3 மணிநேரமாக அடித்து ஊத்தியதில் எங்குமே வெள்ளக்காடாகவிருந்தது. சிலர் வரம்புகளை உடைத்து நீரை பாயவிட்டார்கள். என்ர காணித்துண்டுக்க எப்படி விடுவாய் என சண்டை பிடிப்பவர்களும் நின்றார்கள். பரந்த மனப்பான்மையும், அறிவியல் வேட்கையும் அற்றவர்களாகவே யிருக்கிறார்கள். அதனாலேயே அரைக்கரைவாசி துன்பங்களை பெறுகிறார்கள்.
பின்னேரம் போல பாபு வீட்ட வந்தான் "ஒழுங்கை பரவாயில்லையா?” கேட்டான். “வெள்ளம் வடிந்துவிட்டது. கூலாய் சறுக்கிறதாகவிருக்கிறது. போன வருஷமும் இந்த பிரச்சனை வந்தது வி.சி.ஐக் கொண்டு திருத்தலாம் என்று பெரிசுகள் தட்டிக் கழிச்சு விட்டினம்.”
அரச நிறுவனங்களில் பேரினவாதமும், சாதியமும் விளையாடுகிறபோது சுயமாக வாழ்கிறதே சரிபோல இருக்கிறது “பெடியளாய் சேர்ந்து திருத்துவதாக முடிவு செய்திருக்கிறோம்" என்றான்.
“நல்ல முயற்சி” என்றான் அவன்.
பொறி தட்ட “AM 47 (ரேடியோவில் சனலற்றதாகவிருந்த

கடல் புத்திரன் O 45 மீற்றர்) இலே அறிவித்தல் செய்தனியா’ கேட்டான். புன்முறுவல் பூத்தான்.
“இந்த அடைமழை பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. பெடியள் அணி இந்த கிழமையில் ரோட்டை திருத்துவதாக மார் தட்டி எழும்பிவிட்டார்கள் என்ற நற்செய்தியை அறியத்தருகிறோம். ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு ரோடு போடுவது பற்றிய செய்திகளை கேட்கலாம்’ என்று அறிவிப்பாளர் போல பேசினான்.
அவ்விடத்து பெடியள்கள் புத்திசாலிகள். ஒரு விசயத்தில் இறங்கினார்கள் என்றால் கச்சிதமாக முடித்தே விடுவார்கள்.
e 3s 4.
எப்ப தொடங்கப்போறிர்கள்?’ கேட்டான்.
“கொஞ்சம் தரைக்காய. நாளைக்கு. நாளன்றைக்காய் இருக்கும்" என்று பதிலளித்தான்.
நடைமுறை 'ஒரு ஆமை' என்பது தெரிந்த விசயம்.
“மண்ணுக்கு எங்கே போவீர்கள்?” கேட்டான்.
“பாலத்தடிப்பக்கம் இருக்கிற.உவர்ப்பு வெளிகளிலே மண் குவியல்கள் இருக்கின்றனவே! தவிர கிணறு தோண்டியபோது எடுத்த மக்கி மண்ணை, கல்லுகளை தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
'ட்ராக்டருக்கும் சொல்லி விட்டோம். டீசலோடு இரவிலே வருவதற்கு செல்லமுத்தண்ணை சம்மதித்திருக்கிறார்” என்று விளக்கமாக சொன்னான். அவர் கிழக்கராலியைச் சேர்ந்தவர். குலனைப் பாதையையே அடிக்கடி பாவிப்பவர். சரியான முறையில் பலவற்றை இணைக்கிறதுக்கு யாரோ ஒரு ஆள் பின்னணியில் இருக்கவேண்டும்’ என்று நினைத்தான்.
பாபு புத்திசாலி தான். ஆனால் இந்தளவுக்கு செயல்படக் கூடியவனில்லை.
"அப்ப பிரச்சினையில்லை. என்கிறாய்.” என்றான் அவன்.

Page 25
46 O வேலிகள்
“இருக்கிறது” பாபு. “என்ன?’ கேட்டான்
"கொமிட்டிப் பெரிசுகள் ஆதரவு தரமறுக்கினம். VC-ggé கொண்டு போடுவோம். என்று இந்த முறையும் அளக்கிறார்கள்” என்றான் பாபு.
"அப்ப காசுப்பிரச்சனை கொஞ்சம் இறுக்கப் போகிறதே" என்று கேட்டான்.
“பெடியள் மேசன் வேலைகளுக்கு பகுதியாக அல்லது முழு நேரமாக போய்வாரது தெரியும்தானே. ஆளுக்கு 50 ரூபாய் போட்டு தொடங்கப்போறோம்” என்றான்.
கொஞ்சநேரம் இருந்து கதைத்துவிட்டுப்போனான். ரேடியோவைத்திருப்பினான். “இரவு ஏழு மணிக்கு பெடியளை வாசிகசாலையில் கூடும்படி இத்தால் அறிவித்தல் விடப்படுகிறது. டீ முதலான உதவிகளை செய்ய விரும்புகிறவர்கள் வீரப்பனிடம் கொடுக்கலாம்” என்று குலனைப் பெடியன் ஒருத்தன் பேசியதைக் கேட்க சந்தோசமாக இருந்தது.
அவனுக்கும் அவர்களோடு செயற்படவேண்டும் போலிருந்தது.
ஆனால் “வீட்டிலே படிக்கிறதில்லை’ என்ற அர்ச்சனைகள்; ஆறு மணிக்கு முதல் வந்திடணும் என்ற கண்டிப்பு. சுயநல பழக்க வழக்கங்களையும், தேசவழமைகளையும் ஒட்டிய ஒழுக்கநெறிகளை பின்பற்ற போதிக்கிறார்கள். அவை மக்கள் மத்தியிலேயே வேலிகளை போட்டுக்கொண்டு வருவதை அறியாமல்.
ஆனால் பாபுவின் நடுத்தர வர்க்கத்தில் சிறிதளவு தளர்வுகள் இருந்தன. உத்தியோகத்திற்கு போன கொழும்பர்கள்; கடலுக்குப்போன மூதாதையர்; மற்றும் மேசன் தொட்டு நகர வேலைகளில் கனகாலமாக ஈடுபடுவதாலும் ஏற்பட்ட மாற்றங்கள். இன்று அவர்கள் மத்தியிலிருக்கிற டொக்டர்களும், இன்ஜினியர்களும் ஒரு காலத்திலே பகுதி நேரமாவது நகர

கடல் புத்திரன் O 47 வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே! அதனால் அவர்களுக்கு எவ்விதத்திலும் ஒருவித வக்கிரத்தனம் காணப்படவில்லை.
‘அங்கே நானும் பிறந்திருக்கக்கூடாதா’ என்ற ஏக்கம் அவன் மனதை அரிப்பதுண்டு.
‘வீட்டுக்கு தெரியாமல் போவோமா? என்று நினைத்தான். அப்பர் நந்தி போல முன் விராந்தையிலிருந்து கதைப்புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். 'எதிர் காலத்தில் இந்த வேலிகளை எல்லாம் உடைத்தாக வாழவேண்டும் கறுவிக்கொண்டான்.
米 sje 米
பாணுக்கு கடைக்கு போற போது குலனைப்பக்கம் சைக்கிளை விட்டான். பாபு வீட்ட அந்த காலமை போகமுடியாது. அவர்கள் வீட்டில்.பெண்கள் பள்ளிக்கூடம் வெளிக்கிடுவதாக விருப்பதால் சரியாகப்படாது. இரவில் போடப்பட்ட ரோட்டைப்பார்த்தான் 15 தூரம் உரம் போட்டு வளர்ந்திருந்தது உரம் போடுறதுக்கு அவர்களுக்கு சொல்லியா தரவேண்டும். அவ்வளவு தூரமும் சைக்கிள்.துள்ளாமல் ஒடியது ‘பாணைக்காணாமல் திட்டு விழலாம்’ என்பதால் திரும்ப ஒடி, வாங்கிக் கொண்டுபோனான்.
米 半 岑
அன்று ஆசிரியரின் அறுவை அவர்களை வருத்தியது. திடீரென பரீட்சை என்று. வைக்கப்பட்டிருந்தது. மூளை, ஒரு தடவை திரும்பிப் பார்க்காட்டி சிதம்பரச் சக்கரமாகவே பார்க்கும். தலை விண் விண் என்று வலித்தது. சுரேஷ்க்கும் பாபுவுக்கும் அதே நிலைதான். அவர்கள் அவனை சீண்டி விடைகள் கேட்டார்கள்.
“டேய் எழுதிய விடை இதுதான்! சரியா? என்று சொல்லேலாது” என்று சொன்னான்.
நளினியின் வரிசையைப் பார்த்தான். வீட்டிலே அடைப்பட்டுக்கிடப்பதால் இப்ப நல்லாய் படிக்கத் தொடங்கி விட்டினம் அவள் சிம்பிளாக எழுதிவிட்டு நெட்டி முறித்தாள்.

Page 26
48 O வேலிகள்
சுரேஷைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ‘மச்சான் வென்றிட்டான் போல. அவனுக்கும் பெண் சகோதரம் 3 பேர். நளினி வீட்டிலே 4 பேர். சீதனப்பிரச்சனையில் பந்தாடாமல் தப்பினால் போதும். ஆனால் நடைமுறை அப்படி ஒப்பேற்றிவிடுமா? நீண்ட பெருமூச்சு விட்டான்.
ஆசிரியர் எல்லா விடைத்தாள்களையும் சேகரித்துக்கொண்டு போனார்.
“ராத்திரி ரோடு போட்டதில் படிக்கலையடா’ என்றான் பாபு. “நாங்க மட்டும் கிழிச்சோமா? இந்தப் பரீட்சையை தெரிந்திருந்தால் தட்டிப் பார்த்திருப்பேன்" என்றான் அவன்.
“T.V. பார்த்ததில் நான் கோட்டை விட்டிட்டேன்” என்ற சுரேஷ், தொடர்ந்து “உவரும், (ஆசிரியரும்) TV பார்த்தவர் அப்ப என்னைக் கண்டவர். அதனாலே அறுத்துவிட்டார்” சொன்னான்.
“நீ, நளினியை கொப்பியடிச்சிருக்கலாம். பாஸ்மார்க் வந்திருக்கும் என்னை நம்பினது பிழை” என்றான் அவன்.
“கண்டறியாத பரீட்சை விடடா கடைசிப் பரீட்சைக்கு. இது ஒன்றும் உதவாது” என்று சுரேஷ் சொன்னதில் உண்மை இருக்கவே செய்தது.
எல்லார் மூளையும் சமன் நிலைக்கு வர பிரிந்தார்கள். கோவில் வளவு பக்கம் பந்தை தட்டிவிட்டு வந்தபோது ரேடியோவிலே பாபுவின் குரல் ஒலித்தது.
“படியாமல் இருந்துவிடாதீர்கள்.” T.V. பார்ப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன..என்று கொஞ்ச நேரம் அறுத்தான்.
te
பெரியவர்கள் ஒத்துழைக்க முன் வாரததுக்கு நன்றி" என்று சொன்னான், சேர்ந்துவிட்டார்கள் போல.
விளையாட்டு மைதானத்தை ஊடறுத்துக்கொண்டு பாதை இருந்ததால் அதை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை

கடல் புத்திரன் O 49 பெடியளுக்கே இருந்தது. அதனால் பெரியவர்கள் நாடகம் ஆடினார்களோ?.தோன்றியது.
“வேலை தொடங்குவதால் விடைபெற்றுக்கொள்கிறேன்” என்று முடித்துக்கொண்டான்.
பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தவன் இடையில் ஒரு தடவை ரேடியோவை.திருப்பினான்.
“மீண்டும் ஒரு நன்றி” என்று அறிவித்தல் வந்தது. “சேவை நோக்கில் தோளோடு சேர்ந்து நிற்கும் செல்ல முத்தண்கைக்கு நன்றிகள்” என்றான் பிறகு,
“பாதை வீடற்ற காணி வளவுவரையில் மைதானத்தை சுற்றிக்கொண்டு போயிருக்கிறது” என்றான். அதுவே சரியான
முறை.
விடைபெற்றுக்கொண்டான். “வேலை முடிந்த பிறகும் அலட்டிவிட்டே படுப்பான்’ என்று தோன்றியது.
சுரேஷஸூம் ரேடியோ கேட்டிருந்தான். இருவரும் பாபுவை பள்ளிக்கூடத்திலே பாராட்டினார்கள். இவர்கள் பேச்சை அரைகுறையாய் கேட்ட தமிழ் வாத்தியார் சுந்தரம் நவாலியிலிருந்து வாறவர், பேப்பரிலே கதை-கட்டுரை என எழுதுற ஒரு இலக்கியவாதி “டேய் இங்க வாங்கடா தம்பி” என்று கூப்பிட்டு “என்ன விசயம்?” என்று கேட்டார்.
அவர்களுக்கு பிடித்த வாத்தியார் அவர் கல்லுண்டாய்க் கடலிலே கடல் அட்டை பிடித்தவர்களைப்பற்றி சிறுகதை ஒன்று பேப்பரிலே எழுதியவர். அதை சுரேஷ் வெட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். ‘நல்லகதை’ ஆனைக்கோட்டை மக்களின் நிசமான வாழ்க்கை’ என்று சொல்லலாம். யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் விளாசியிருந்தார்.
ஒட்டை வாய்கள் என்றதைவிட அந்த வாத்திக்கு தெரிந்தால் ‘எந்தகால குலனை மக்களும் வாசிக்கக்கூடிய வரலாறாக

Page 27
50 O வேலிகள் படைத்துவிடுவார் என்பதால் ரோடு போட்டதை விளக்கமாகச் சொன்னார்கள் ‘பரீட்சை வேணாம்' என்ற அறுவையைச் சொன்னபோது சிரித்தார். பாபு வெட்கத்துடன் நின்றான்.
அவன் தோளில் தட்டி, “ரேடியோ திருத்துற அறிவை நீ நல்லாய் வளைர்த்துக்கொள். பகிடி வேணும். நீ நிலமையை பகிடியாய் சொல்லியிருக்கிறாய். வெட்கப்படாதே துணிந்து மேலும் கூடிய விளக்கத்துடன் செய்யப்பார்” என்று பாராட்டினார்.
米 米 米
பின்னேரம். முத்தனின் கடையிலே மூவரும் இருந்தார்கள். சுரேஷ9ம் விளையாடாமல் வந்திருந்தான். “நீ ரேடியோ பற்றி சொல்லலையடா நானும் கேட்டியிருப்பேன்’ என்றான் முத்தன். “.இனிக்கேளன்.” என்றான் பாபு. சுந்தரம் வாத்தியோடு கதைத்ததையும் சொன்னார்கள்.
“ரோட்டு வேலை இண்டையோட முடிஞ்சுவிடும்” என்றான் பாபு “பிறகு சினிமாப்பாட்டுகள் தான் கேட்க முடியும்’ சிரித்தான்.
4-5 பஞ்சர்கள் வந்தன. மனதை கவ்வியபடி இரண்டொரு பெட்டைகள் சைக்கிளில் போனார்கள் “உதுகளிற்கு பஞ்சர் வராதா” நேர்ந்தார்கள்.
சிறிது இருள அரிக்கன் லாந்தரை ஏற்றினான். “டேய், ஏண்டா கள்ளக்கறன்ட் எடுக்கவில்லை" என்று கேட்டார்கள்.
“செய்யனும் என்றிருக்கிறேன் ஒலைக்கொட்டில் என்பதால் கொஞ்சம் யோசனை’ என்று பதிலளித்தான்.
யாழ்ப்பாணத்தில் வசதியற்ற மக்கள் சிவில் நிர்வாகம் குழப்பியதால் வீதிக்கறன்ட் வயரில் ஒரு வயரை கொளுவி ‘வயறிங் செய்து மற்ற வயறை பைப் ஒன்றில் சேர்த்து கிடங்கு கிண்டி உப்பைப் போட்டு சரியான எர்த் அமைப்பை ஏற்படுத்தி எளிய விட்டார்கள். சிறிது ஆபத்துதான்.

கடல் புத்திரன் O 51
மழைச் சமயங்களில் வயறில் வோல்ட்டேஜ் கூட வரும்போது எரிந்துவிடலாம் கிடுகு ஒலைகள் ஒரேயடியாய் எரிந்துவிடும். வாழ்க்கையே போராட்டம்தான். “பழைய பெற்றோல்மாக்ஸ் இருந்தாலும் நல்லம் தான் எங்கடப் பக்கம் விசாரித்துப் பார்க்கிறேன்” என்றான் சுரேஷ்.
“ரோடு போடணும் நான் போகிறேன்” என்று எழும்பினான் பாபு. அந்நேரம் ஊரே கலவரப்பட்டதுபோல செய்தி வந்தது. யாரோ சிலர் குணத்தானின் தோளிலே வெட்டிப்போட்டு ஒடிவிட்டார்களாம்.
கடையை மூடிவிட்டு பள்ளிக்கூடப்பக்கம் ஒடினார்கள். சில தகவல்களை அறிந்தபிறகே வெட்டியவர்கள் பற்றி சிறிது அனுமானிக்க முடிந்தது.
米 水 米
வாசிகசாலையை அண்டிய காணித்துண்டுகளில் ஒன்றில் கனகாலமாக நெல்லு விதைக்கப்படுவதில்லை. கலட்டித் தரையாகவிருந்ததும் ஒரு காரணம். ஆடுமாடுகளை அவ்விடத்தில் மக்கள் கட்டி வந்தவர்கள். சிவனோ, சிதம்பரக் காணித்துண்டு என்று கதைத்தார்கள். ஆனால் அது தெற்கராலியாட்களின் பொறுப்பிலேயிருந்தது.
உண்மையான விவசாயிகள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் அவர்கள். குழந்தை, குட்டி, பெடியள்,குமருகள், பெற்றோர் என எல்லோரும் வயலிலே இறங்கி வேலை செய்கிறவர்கள், கடின உழைப்பாளிகள், வடக்கராலியாட்களுக்கு அவர்களில் பலரைத் தெரியும். தவிர உறவுத் தொடர்புகளும் அதிகம்.
தொழில் வாரியான சாதியம் அங்கே நிலவியது. தொழில் துறையில் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்ததால் கடுமையான போக்குகள் நிலவவில்லை ஆனால் அரச உத்தியோகம் VC. விவசாய உத்தியோகத்தர் முதலானவைகளை தம்மவர்களே கைப்பற்றிவிடவேண்டும் என்ற மெளனப் போட்டியிருந்தது.

Page 28
52 O வேலிகள் அதில் ஆட்சியுடையவர்களாக அவ் விவசாயப் பிரிவினரே இருந்தனர். அதுவே அங்கே சாதியமாகவே நிலவ வைச்சது எனலாம். தம்மவர்களை சேர்ப்பது, மற்றவர்களை ஒதுக்குவது.இப்படி இழைகள் வடக்கராலியிலே, மேம்போக்கான விவசாயப் பிரிவினரே இருந்தனர். மண்ணோடு ஒட்டியவர்களாக இவர்கள்ளிருக்கவில்லை (நிலப்பிரபுத்துவர்போல), குடிமைச் சாதியினரே மண்ணின் மைந்தர்களாகவிருந்தனர். இருந்தாலும், இருவரும் ஒரே சாதியினர் என்று சொல்லிக்கொண்டார்கள்.
தெற்கராலிப் பெடியளைக் கேட்டால், சொல்லுவார்கள், “எல்லாக் காணிகளுமே வடக்கராலியினர் கையிலேயிருந்தன. குத்தகைக்கு எடுத்து சிறிமாவோ காலத்திலே வெங்காயம், மிளகாய், புகையிலை பயிரை வைச்சு உழைச்ச காசிலே பெரும்பாலும் வாங்கிய காணிகளே தற்போது எங்களுடையதாக விருப்பன’ என்பார்கள். கோயில் காணிகள் மண் தொடர்பு காரணமாக இரு பக்கங்களிலும் ஒரிரண்டு இருந்தன. அக்காணிகள் பொதுவாக பொறுப்பு வகிக்கிறவர்களின் உரித்தாகவேயிருந்தன. 25-30 வருஷமாக மலிவுக்குத்தகை கட்டிய பிறகு கோயில்காரர்களின் 6) 96) விட்டு நழுவியிருந்தன. ஆனால் உறுதி கோயில்காரர்களிடமே இருந்தன. அக்காணிகளை யாரும் விற்க முடியாது.
பொதுவாக முத்தன்ர சமூகத்தினரின் குடியிருப்புகள் கணிசமானவை. அத்தகைய காணிகளிலே இருந்தன.
குடிமைச் சாதியாக சீரழிந்த அவர்களுக்கு ஏது பணபலம்? கோயில் காணிகளை மனமுவந்து கொடுக்க. எல்லாச் சாதியினருக்கும் வருவதில்லையே! காணியிலே விழுந்த பற்றும், அதை விரிவாக்கும் சிந்தனை நோய் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அரசிடம் காணப்படுகிற மண் அபகரிப்பைப்போல.அத்துண்டிலே, குணம் கனநாளாய் கண் வைத்திருந்தான்.
வடக்கராலியாட்களின் காணித்துண்டாகவிருந்ததால் இத்தனை தூரம் பிரச்சனை இருந்திராது. ஊரான் என்பதால் அல்ல.

கடல் புத்திரன் O 53 அவர்கள் மண்ணோடு பிணைக்கப்பட்டவர்கள் இல்லை. சில சமயங்களில் சிலர் அறுவடைக் காலத்தில் மட்டும் இறங்கி வேலை செய்யிறது. இருந்தது. அவை மட்டும் ஆழப்பிணைப்பை ஏற்படுத்த போதியதில்லை. தெற்கராலியாட்கள் நிலமை வேறு. 300 நாளாவது காணியிலே இருப்பவர்கள். புருஷன் வேலைக்கு போயிருந்தால், பெஞ்சாதி குழந்தை குட்டியோட நிற்பாள்.
காணியற்றவர்களாக சீரழிந்து கஷ்டப்பட்டு .பெற்றிருந்ததால் அதைக் கட்டிக் காக்கிற தன்மை கூடுதலாக காணப்பட்டது. ஆனால் குணத்தானும் மாமா, மாமி வீட்டிலே எத்தனை நாள் இருப்பான். வடக்கராலிக்காரர்.என்று தேடிப்போக முடியுமா? தவிர குடியிருப்புக்களோடேயே இருப்பது போல வருமா?
‘அத்துமீறல் வருவது வரட்டும் என்று முதல் நாளிரவு நண்பர்களுடன் ரகசியமாக கொட்டில் போட்டிருந்தான். பகலில் வேலியடைத்திருக்கிறான். வெளிப்படையாக எதிர்ப்பு வராததால்.பயம் போயிருந்தது. நண்பர்களும் அகன்றிருந்தார்கள். ஏதும் நடந்தால் ‘கூப்பாடு’ போடுவதாகவிருந்தது.
வயல் இருட்டோடு நாலைஞ்சு பேர் வந்து குணமண்ணை குணமண்ணை’ என்று கூப்பிட்டார்கள். ‘தெரிஞ்சவையள்’ என படலைக்கு வந்திருக்கிறான். இருட்டிலே யார் என சரிவரத்தெரியவில்லை. துணிஞ்சு வெளிய வர ஒருத்தன் மடக்கி வாயைப் பொத்திப் பிடிக்க, மற்றவன் காலைப் பிடித்து சத்தமில்லாது தூக்கிக்கொண்டு வயல் புறமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வரம்பிலே வாயை துணியால் அடைத்துவிட்டு கையை பின்னுக்குக் கட்டிப்போட்டு தடிகளால் அடித்து துவைத்திருக்கிறார்கள். முன்கோ பக்காரரான ஒருத்தன் வில்லுக்கத்தியை எடுத்து தோளில் இழுத்துவிட்டான். ஆழமாக விழுந்த காயம்.
அவர்களுள் குழப்பம். வெறுமனே அடித்துவிட்டு போகவே வந்திருக்கிறார்கள். தோள் காயத்தை துணியால் ரத்தம்

Page 29
54 O வேலிகள் போகாதவாது இழுத்து கட்டிவிட்டு, கைக்கட்டை அவிழ்த்து விட்டு ஒடிப்போயிருக்கிறார்கள்.
மனுசிக்காரி கனநேரமாய் காணவில்லை என்று வெளிய வந்து பார்த்திருக்கிறாள். முணங்கிற சத்தம் வயல்பக்கமிருந்து மெதுவாக கேட்க, கலவரமுற்று கத்தி ஊரைக்கூட்டினாள். குணத்திற்கும் ஆட்களை சரிவர தெரியாது. ‘காணிக்காரர்கள் தான் செய்திருக்கவேண்டும்’ என்று அனுமானித்தார்கள்.
பாபு இவர்களுடன் இழுபட்டு 8.00 மணிக்கே போனான். இவ்விசயத்தால் செல்லமுத்தண்ணையும் 9.00 மணிக்கே வந்தார். அவர் மனநிலையும் சரியில்லை. இன்னும் கொஞ்ச வேலையேயிருந்தது.
குலனை மக்களுக்கு அச்செய்தி ஒரு பொருட்டாகவிருக்கவில்லை. பெடியளுக்கும் கூடத்தான். தன் மகனிடம் ட்ராக்டரைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு போய்விட்டார்.
“சொந்த சகோதரர் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ பாரதியாரின் வரியே பாபுவுக்கு ஞாபகம் வந்துகொண்டிருந்தது.
米 米
வடக்கராலிச் சமூகம் சுடலைப் பிரச்சனையை நெஞ்சில் வைச்சுக்கொண்டு ‘காணித்துண்டை விடாதீங்கடா’ என்று தெற்கராலிக்கு அட்வைஸ் பண்ணியது. பள்ளிக்கூடம் வெட்டினதுக்கு நட்ட ஈடுபற்றி பிரலாபித்தது.
ஆத்திரத்தில் தம், பெரியவர்களைப் பார்த்து ‘அங்கால பக்கம் சாவீட்டுக்க விறகடுக்கல், கிடங்கு வெட்டல் முதலான குடிமை வேலைகளுக்கு போகக்கூடாது” என்று கட்டுப்படுத்தியது. வடக்கராலியில் சிதறிக்கிடக்கும் தம்மவர்களைப்போய் பார்த்தும் கேட்டது. "இனிமேல் குடிமைவேலைக்கு போகாதீர்கள்."
“நீ யார் கேட்க, எங்கட வாசிகசாலைப் பெடியள்ளையே நாம்
கேட்போம்” என்று இலகுவாகப் புறக்கணிக்கப்படவே பெடியளை அணுகினார்கள்.

கடல் புத்திரன் O 55 “பல விளைவுகளை சமாளிக்க சூழல் சாதகமாக இல்லை. நாம் வற்புறுத்தமாட்டோம் ஏலுமென்றால் சொல்லிப் பார்க்கிறோம்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
அப்பெடியளுக்கு தம்மத்தியிலுள்ள சீரழிவு முதல் தடவையாக திகைக்க வைத்தது. அந்த முயற்சியை கைவிட்டார்கள். கோபமுற்ற மற்ற சமூகம் பள்ளிக்கூடத்தடி ஆட்களை யாரும் வேலைக்கு எடுக்கக்கூடாது. சாந்தனின் (பள்ளியைச் சேர்ந்தவன்) கடையிலே சாமான்கள் வாங்கக்கூடாது” என்று வீடு வீடாக பெடியள் அணியை அனுப்பி பிரச்சாரம் செய்தது. கடைவிசயம் சுகுணனின் சதி.
அராலியிலே குறிப்பிடக்கூடிய கடைகளில் ஒன்றாக சாந்தன் விடாமுயற்சியுடன் புத்திசாலித்தனத்துடனும் கட்டியிருந்தான். தரமான சாமான்கள் என்று எல்லோரும் அக்கடையை நாடினார்கள். பலர்க்கு கடையிலே கொப்பிகள் இருந்தன.
சுகுணன் புதிதாக கடையை திறந்தவன் அவனால் ‘கொப்பிகள் வைக்கமுடியவில்லை; தவிர சிறிய விலை அதிகரிப்பாகவும் இருந்தன எனவே சூழலை சாதகமாக பயன்படுத்தமுயன்றான்.
சாந்தனின் நிலமை மோசமானது. எதைக் குறித்தும் சரிபிழைகளைப் பார்க்காமல் இருபெடியள் அணிகளும் தம்பக்கமிருக்கிற துருப்புகளை வைத்து பகடைக்காய்கள் ஆடின. வேலியடைத்தல், வயல்வேலைகள், கோழிப்பண்ணைகளைப் பார்த்தல், ஆடுமாடுகளைக் கவனித்தல் பழப்புளிக் காலங்களில் அதோடு ஒட்டிய வேலைகள் என கணிசமான குடிமை வேலைகளை செய்தார்கள். அதைவிட பாரம்பரியமானவை.என சாவீட்டிலே தட்சணை பெறும் வேலைகள் (அடிமை குடிமையை ஞாபகமூட்டுவதாகவிருந்தன) சிலவும் இருந்தன.
வேலையற்றிருந்ததால் ஆண்கள் சீவின கள்ளை தாமே குடித்துவிட்டு ஒழுங்கை வழிய அடிபட்டு மண்ணில் புரண்டார்கள். தடுக்கப்போன பொஞ்சாதி, பிள்ளைகளையும் அடித்து என ஒருவித குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

Page 30
56 O வேலிகள் வீம்பாக மறுதலித்த சமூகமும் மற்றபகுதி ஆட்களை வேலைகளுக்கு புதிதாக சேர்த்தது. ஒரே சமூகத்திலே ஒருவர் அழவும், மற்றவர் வேலை செய்யிற போக்கும் பெடியளுக்கு சிறிய கலக்கத்தைக் கொடுத்தது.
ஒரே நாளில் அவர்களில் கணிசமான பேர் களவுகளில் ஈடுபடுவதை அச்சமூகத்தினர் கண்டார்கள். பெடியளை விட்டுவிட்டு பிற்பகல் 6.00 மணிக்கு சர்ந்தனின் கடையிலே ஏறி, சாமான்கள் வாங்கிக்கொண்டு வேலைக்கு பழையபடி வரச்சொல்லி அச்சமுகம் அறிவித்தது.
“பாரம்பரிய பழக்கமான குடிமை வேலைகளை மட்டும் செய்யாதீர்கள். மற்றவேலைகளை செய்யலாம்” என்று பள்ளிக்கூடத்தடியும் அடக்கி வாசித்தது.
நட்டஈடு பிரச்சனையால் காணிக்காரர் யாரும் பிறகு வரவில்லை
இப்படி நிறைய வேலிகள் ஒவ்வொரு கிராமங்களிலேயுமே போடப்பட்டிருக்கின்றன.
யாருமே பிடுங்கி எறியவுமில்லை; நிலமைகளை ஆய்வுக்குள்ளாக்கவுமில்லை.
யாழ்ப்பாண நகரத்தில் கூட சாதிக்குறிச்சிகளை சிறிதளவு இனம் காணமுடியும். அங்கு “கம்யூனிஸ்ட் கட்சியினரின் இடையறாத தேந்க்கடை, கோயில், சுடலை திறத்தல்.” என எடுத்த போராட்டங்களால் சிறிதளவு திருந்திய நிலை காணப்படுகின்றது. அத்தாக்கங்கள் கிராமங்கள் வழியேயும் ஒருசதவீதமாவது பரவியேயிருந்தன.
வேரோடியிருந்த சாதியத்தால் அவை சீர்திருத்தங்களாகவே யிருந்தன. தற்போதைய அரசியல் கட்சிகளைப்போல.மனம் ஒப்பாத அரசியலே நிலவின. அங்கே, கோயில் பிரச்சனை ஒன்றும் பிறகு ஏற்பட்டு மறைந்திருந்தது.
திருவிழாக் காலங்களில் ஒரு திருவிழாவை குடிமைச் சமூகத்திற்கு கொடுத்திருந்தார்கள். இருந்தாலும் உள்பிரகாரத்திலிருந்து

கடல் புத்திரன் O 57 (பிள்ளைத் தண்டில்) சாமியை கட்டி வாரதை மேல் சமூகப்பெடியள்ளே செய்தார்கள்.
வெளிய வந்து அது கொம்புகளில் கட்டிய பிறகே பள்ளிச்சமூகம் தூக்கி வெளிவீதியில் வலம் வந்தது.
கோயிலுக்குள் போகவிட்டிருந்தாலும், இந்த வழக்கம் மட்டும் நீடித்தே வந்தது.
காணிப்பிரச்சனையால் முறுகல் அடைந்த ‘பெடியள் “பிள்ளைத்தண்டையும் நாம்தாம் சுமப்போம்” எனப் பிரச்சனைப்பட்டார்கள்.
“அதை, இந்து இளைஞர் கூட்டத்திலே பேசி முடிவெடுத்த பிறகே சொல்ல முடியும்” όΤόζΤ மற்றவர்களால் இழுத்தடிக்கப்பட்டன.
கடைசியில் தயங்கியே அவ்வுரிமையைக் கொடுத்தார்கள். அதேசமயம் 'இன்னொரு கோவிலே சித்திராபெளர்ணமிக் கஞ்சி ஊத்தலை உள்ளே செய்து வந்தவர்கள் திடீரென வெளிவாசலில் வைத்து ஊத்த ஆரம்பித்தார்கள். எல்லார் சமூகத்தினரையுமே அங்கேயிருந்து வாங்க வைத்தார்கள். கோயிலுக்குள் வராது கட்டுப்படுத்த இப்படி ஒரு மாதிரியை பின்பற்றினார்கள்.
மேளக்கச்சேரி, வில்லுப்பாட்டுக்கள் வெளிவீதியிலே வைக்கப்பட்டு வார சிறிய கோவிலாக விருந்ததால், அவர்களை யாரும் குறை சொல்ல முடியவில்லை.
கோவில் சம்பவங்களை எழுதி தர்மஓளி’ என வாசிகசாலையில் வேலன் போட்ட கையெழுத்துப்பத்திரிகை கிழித்தெறியப்பட்டது.
"நீ வாசிகசாலையில் எதையும் போடலாம் அது உன்னுடைய உரிமை. அதை நாம் எரிக்கலாம். கிழிக்கலாம். அது உங்கtஉரிமை” என்று இன்றைய அரசாங்கம் போல வக்கிரமாக பெடியள் அணி சொல்லியது.

Page 31
58 O வேலிகள்
எங்குமே வேலிகள். சொந்தச் சமூகத்தில், வெளிச்சமூகத்தில் நட்புகரம் நீட்டிய முற்போக்கு இளைஞர்கள் மத்தியில்.எல்லாம் நிறைய வேலிகள்.அங்கே,
கலப்பு திருமணங்களை யாரும் அனுமதித்ததில்லை. செய்தவர்கள் ஒதுங்கியவர்களாக.அல்லது வேறு பிரதேசங்களுக்கு (முன்னர் தீவுக்கு, திருமலை, மட்டக்களப்பு, வவுனியா) சென்றவர்களாகவேயிருக்கிறார்கள்.
வேலிகள் உறுதியாக நிற்கின்றன. காலம் ஒடி.இயக்கச்சூழல் கவிந்தபோது பெடியள், சாதியமைப்புகளைவிட மேலானவை என இயக்கங்கள் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அதிலே, அனைவரும் சகோதரர்களாக இணைதல் நடந்தது. “சாதியம் இனி எழும்ப முடியாது’ என்பது அவர்களின் கருத்தாகவிருந்தது. மூவரும், வேலிகள் உடைத்தெறியனும் என்ற ஆவேசத்தில் தம் நண்பர்கள் மூலம் சிற்சில இயக்கங்களுடன் தொடர்புகொண்டு ஒடினார்கள்.
பாபு வீட்டோடு நிற்க, வேலன் ஒன்றிலே, சுரேஷ் இன்னொன்றிலே, முத்தன் கூட ஒன்றினுடைய ஆளானான். இயக்கங்கள் ஒன்றுபட்டிருந்தால் நண்பர்களில் சகோதரத்துவம் மேலும் வளர்ந்திருக்கும். பிளவுபட்டதாலும்.அரசியல் புகுந்ததாலும் இப்ப, அவர்கள் இயக்கப் பிரதிநிதிகளாக விருக்கிறார்கள்.
முந்தி சாதி, இப்ப இயக்கம். பெரியவர்கள் இயக்கத்தைப் பார்க்கவில்லை. சாதியை மட்டும் பார்த்தார்கள் அதேபோல, பெடியள் புதிதாக பார்க்கிற சாதியாக இயக்கங்கள்.
எரிசட்டியிலிருந்து தப்பி, கொதிக்கிற எண்ணெயில் விழுந்தது போல.
‘மக்கள் விடுதலைக்காக போராடுவதால், எல்லோரும் ஏதோ ஒருநாள் என்று சேர்வார்கள்’ என்ற நம்பிக்கையை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

வெகுண்ட உள்ளங்கள்
சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைத்து சில பொதுவான அபிப்பிராயங்களை கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன்.
இயல்பான பேச்சுத்தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படியே எழுத முயன்றேன். “பேச்சுதமிழ் பற்றிய ஆய்வுப் புத்தகம்” (வன்னிய சிங்கம் எழுதியது) ஒரு உற்சாகத்தைத் தந்தது. இரு தமிழ் வழக்கை விட்டு (உரையாடலை பேச்சுத் தமிழிலும் மற்றதை செந்தமிழிலும் எழுதுதல்) ஒரு தமிழில் (எல்லாவற்றையும் பேச்சுத் தமிழில்) எழுதிப் பார்க்கப்பட்டது
இது என்னுடைய கன்னி முயற்சி. இந்த தொடர்கதை ஒரு சமயம் தரம் பெற்றுவிட்டால் எழுத்துலக வழிகாட்டியான ராஜம் கிருஷ்ணனுக்கு, கிரிதரனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.
மற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
சாமானிய ஒருவனின் தற்கொலைக்கு சமூகச்சீரழிவு காரணமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கிராமப்புறத்திலும் அல்லது ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் நிகழும் அசாதாரணச் சாவுகள் அவ்விடத்திலேயிருப்பவர்கள் அறிந்தேயிருப்பார்கள். அதிலுள்ள நியாய மறுப்புகளை எல்லாம் அனைவரும் அறிந்தேயிருப்பார்கள்.

Page 32
60 O வேலிகள் அவற்றை கதையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அவர்களுக்கு அஞ்சலி மலர்களைத் தூவுங்கள்.
இந்த வகையிலும் தமிழீழத்தின் மண்ணில் மரணத்தைத் தழுவியவர்களின் கணக்கெடுப்பு வெளிப்படட்டும்.
ஒரு சந்ததியாவது நமது மண்ணில் நிகழும் அநியாயச் சாவைத் தட்டிக் கேட்கட்டும்.
நாவலில் நமது மண்ணின் பெயர்களை தாராளமாகப் பாவிக்கலாம் என்ற கொள்கையை ஏற்றிருக்கிறேன்.
பாத்திரங்களின் பெயர்களை மாற்றியும் கற்பனை கலந்து உருவாக்கியும் நடமாட விட்டிருக்கிறேன்.
இதில் நாவல் பண்புகள் பேணப்பட்டிருக்கிறதா என்பதை அறியேன்.
இருந்தபோதும் ஒரு முயற்சியாக உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன்.
se : 米
தீவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கிற அந்த சிறிய கடல்பரப்பு ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கனகனின் பூட்டன் காலம் அல்லது அதற்கு முந்தியதாக இருக்கலாம். அங்கே சிறிய துறையிருந்ததற்கு அடையாளமாக உள்ளே சென்ற மேடையொன்று அழிந்து சிதைந்து காணப்பட்டது.
அவன் அப்பன் சிலவேளை "அப்படியே றோட்டு தீவுக்குச் சென்றது. இப்ப கடல் மூடிவிட்டது" என்று கதையளப்பான். ஒருவேளை அப்படி யிருக்குமோ என்று அவனும் நினைப்பதுண்டு. ஏனெனில் தார்ப்பருக்கைகளோடு கூடிய றோட்டு ஒன்று கடலுக்குள்ளே போயிருப்பதையும் யாரும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
அவ்விடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் பாவிக்கிற இடமாகவே அது கனகாலமாக புளங்கி வருகிறது. அவர்கள் தங்குவதற்கான ஒரு நீண்ட வாடி ஒரு புறத்தில் அமைந்திருந்தது.
முந்தி ஒலைக்கொட்டகையாக இருந்ததை ஒருமாதிரியாக அரச

கடல் புத்திரன் O 61 மானியத்தைப்பெற்று அஸ்பெஸ்டாஸ் கூரையோடு கூடிய சீமெந்துக் கட்டிடமாகக் கட்டியிருந்தார்கள்.
அந்தப்பகுதி பிரபல்யமாகவும் அவசியமானதாகவும் வரும் என்று எந்த மீனவனும் நினைத்திருக்கமாட்டான். சிறிய வள்ளத்தில் சென்று மீன்பிடித்து வருகிற அவர்களை புதிதாக ஒரு பிரச்சினை மூழ்கடிக்கப்போகிறது என்று மூக்குச் சாத்திரமா அவர்களுக்குத் தெரியும்.
கடல் பரப்பு அமைதியாக இருந்தது. மனதில் எரியும் கனலை அடக்க முடியாதவர்களாக அண்ணன் முருகேசு, கோபாலு, தில்லை, சப்பை போன்ற பிரதிநிதிகள் இடுப்பில் ஆயுதத்தைச் சொருகியிருந்த அந்த திக்குவாய்ப் பெடியனை சூழ்ந்திருந்தார்கள்.
கனகன், அன்ரன், நகுலன், நடேசு செட் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரமாக நின்றது.
“தம்பி, இது சரியில்லை. அவங்களை அந்தக் கரையிலிருந்து ஒடுறதுக்கு நீ ஒப்புதல் தந்தாய். இப்ப, ஒரு வள்ளம் இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருக்கிறது. உவங்களுக்கு சரியான பாடம் படிப்பிக்கேலும். நீ ஒப்புதல் தந்திருப்பதால் நாம எல்லாம் பொறுமையாக இருக்கிறம். அவங்களுக்கு நீ திட்டவட்டமாக வரையறை சொல்லி அதைக் கடைப்பிடிக்க வைக்க வேணும்" முருகேசின் கோபப்பேச்சு கனகனை சிறிது கிலி கொள்ள வைத்தது.
இவன் பயம் அறியாதவன். உயர் சாதிப்பெண்ணைக் காதலிச்சு, கூட்டிக்கொண்டு வந்து வாழ்கிறவன். நண்பர்கள் சிலருடன் எளிமையாக ஐயனார் கோவிலில் தாலி கட்டுறபோது அந்த சாதியினர் ஊருக்குள் அட்டகாசம் செய்யவந்தார்கள். திருக்கை வால், மண்டா, ஆயுதங்களுடன் துணிவாக தனியாக எதிர்கொண்டவன். ஆட்தொகை, ஆயுதம் பற்றிக் கவலைப் படாதவன்.
இப்ப.இயக்கப்பெடியன் ஒருத்தனையே காட்டமாக

Page 33
62 O வேலிகள் எதிர்கொள்கிறான். ஆனால் இவர்கள் சடாரெனச் சுட்டுத்தள்ளி விடுவார்கள். கனகனால் அவனை மறிக்க முடியுமா? எனவே பயந்த மனதுடன் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தீவு மக்கள் முன்னர் பண்ணை வழியாலும் காரைநகர் வழியாலுமே சென்று கொண்டிருந்தார்கள். கோட்டையில் அரசபடைகள் குவிக்கப்பட்டு பண்ணைப்பாதையில் மண்டை தீவு முகாம் திறக்கப்பட்டபோது அது அடைபட்டுவிட்டது. காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக்காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக இரண்டாவதும் தடைப்பட்டுவிட்டது.
இதனால் கவனிப்பாரற்று கிடந்த அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவை பிரசித்தமடைந்தன.
இவ்விடத்தில் சிறிய வள்ளங்களை மட்டும் அதிகமாக கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள் தலைக்கு இரண்டு மூன்று ரூபா என வசூலித்து தீவுப்பகுதியில் கொண்டுபோய் விடத் தொடங்கினார்கள்.
இரு கரைகளிலும் மினிபஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வரத்தொடங்கின. பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க்கடை, தேத்தண்ணிக்கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
கடல் வலயச் சட்டங்களால் மீன் பிடிப்பு அறவே இல்லாதிருந்தது.
கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்தார்கள்.பொதுவாக எல்லா மீனவர்களுமே சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தார்கள்.
தொழிலற்றிருந்த நவாலி, ஆனைக்கோட்டை மீனவர் தம் பெரிய வள்ளங்களை கல்லுண்டாய் கடலினுாடாக ஒட்டிவந்தார்கள். அவர்களின் ஒரு வள்ளத்தில் இரு வள்ளங்களை அடக்கலாம். ஒரு ட்ரிப்பிலே வந்தவர்கள் அதிக பணம் உழைக்க.இவர்களுக்கு கோபம் உண்டாகியது.

கடல் புத்திரன் O 63 கரையிலிருக்கிற எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப் பகுதி பொறுப்பாளரான ஒரியக்கத்தின் அந்த திக்குவாய்ப்பெடியன் ஒரளவுக்கு ஏற்றிருந்தான். அதன்படி வாலையம்மன் பகுதியினர் தீவுக்கு ஆட்களை, சாமான்களை கொண்டு போவதென்றும் மற்றவர்கள் தீவுப்பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பார்ப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது.
காலையிலே பெரிய வள்ளம் ஒன்று இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருந்தது. அப்பட்டமான மீறல். எனவே வாலையம்மன் பகுதியினர் படகு ஒட்டத்தை நிறுத்திவிட்டு நியாயம் கேட்கத் தொடங்கினர். மற்றவர்களில் ஒரு சிலரும் ஒரமாக நின்றார்கள்.
ரவுண்பக்கமிருந்து.உத்தியோகத்திற்குப் போக வந்தவர்களும், ரவுணிற்கு பல்வேறு தேவைகளுக்காக போக வந்த தீவு மக்களும் இருபகுதியிலும் குவியத் தொடங்கினார்கள்.
கடற்பரப்பு வள்ள ஒட்டமற்று இருந்தது. புயலுக்கு முன்னால் வருகிற அமைதிபோல.
அந்தப்பெடியன் அமைதியாயிருக்கச் சொல்லிக் கேட்டிருந்தான்.
'ஒட்டிய ஆட்கள் யார்’ என அவர் விசாரிக்கையில் அக்கரையிலிருந்து சனத்துடன் ஒரு பெரிய வள்ளம் கரை நோக்கி வந்துகொண்டிருந்தது.
கதைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை விழுந்து போனது "டேய் ஒட்டுறவனிட கையை முறியுங்கடா" கத்தினான் முருகேசு. சிறிய வள்ளத்தில் 5, 6 பேர் தாவி ஏறினார்கள். வள்ளம் நேரே பெரிய வள்ளத்தை நோக்கி ஒடியது. ஒட்டிகள் இருவரையும் இழுத்து எடுத்து துடுப்புத்தடிகளால் போட்டு சாம்பித் தள்ளிவிட்டார்கள். ஒருத்தனுக்கு முழங்கால் உடைந்துபோனது. மற்றவனுக்கு பலமான கண்டல்காயங்கள்.
அந்த வள்ளம் திரும்ப கரை நோக்கி ஒடியது. வெற்றிப்

Page 34
64 O வேலிகள் பெருமிதத்துடன் இவர்கள் கரை சேர்ந்தனர். பதினைந்து நிமிடம் இருக்கும். அக்கரையிலிருந்து ஐந்தாறு பெடியள்களுடன் நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி விரைந்து வந்தன.
அவர்களுக்கு திகில் பரவத் தொடங்கியது. “வருகிறவர்கள் மற்ற இயக்கத்துப் பெடியள்” என தில்லை கத்தினான். “நீதானே ஒப்புதல் தந்தாய்” என்று முருகேசன் தொட்டு பலர் அவனைச் சூழ்ந்துகொண்டனர்.
நிலைமை சீர் கேடாகிவிட்டது என்று அனைவருக்கும் புரிந்தது. கனகன் அண்ணணை இழுக்க ஒடினான். மற்றவர்களும் தம் உறவினரை இழுத்துக்கொண்டு வர ஒடினார்கள்.
அதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடந்துவிட்டன.
வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து மேல்வெடி வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்துவிட்டார்கள். யாரோ ஒருவன் அவன் மண்டையையும் உடைத்துவிட்டிருந்தான்.
இரத்தக்காயத்தோடு அவன் நின்றபோது வள்ளங்கள் கரை சேர்ந்தன. “எவன் எங்கட பெடியள்களை அடிச்சது’ பொறுப்பாளர் போல இருந்தவன் கோபமாக தரையில் குதித்தான்.
வடிவேலு நின்ற கோலத்தை பார்த்தபோது அவனுக்கு நிலமை விளங்கவில்லை. பொதுவாக தீவில் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் ஒரளவு பகைமையற்ற இழைக்கள் காணப்பட்டன. “தோழர், டொக்டர் யாரிட்டைப் போவோம். காயத்திற்கு இழை பிடிக்கவேண்டியிருக்கும்” என்று கேட்டான்.
“பறித்தவைகளைத் தராதவரைக்கும் நான் உவ்விடத்தை விட்டு நகரமாட்டன்” என்று உறுதியாகத் தெரிவித்தான். சர்வேசனுக்கு விளங்கவில்லை. “அவன் பாடு’ என்று விட்டு விட்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தோரணையில் கேட்டான்.
“எவன் கையை முறித்தது:”

கடல் புத்திரன் O 65 வடிவேலனின் கரை ஆட்கள் வானில் வந்து சேர்ந்தார்கள். தலைவர் போல இருந்தவர் அவனை வானில் ஏறச்சொன்னார். அவன் மறுக்கவே இழுத்து வானில் ஏற்றி விட்டு “யாருமே வள்ளம் ஒடவேண்டாம்” என்று அறிவித்தான்.
‘வோக்கியை’ எடுத்து யாரோடேயோ சிறிதுநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பிறகு வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப்பார்த்து "இனிமே இயக்கங்கள் வள்ளம் ஒட்டும்’ என தெரிவித்துவிட்டு வானில் ஏறிப்பறந்தான். கனகனுக்கு நாசமாய்ப் போன படகு ஒட்டம் என்றிருந்தது. ஒட்டிகள் எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். இயக்கப்பெடியள் எல்லா வள்ளங்களையும் எடுத்தனர். ஒரு நுனியில் கயிறைக்கட்டி அவற்றை மூன்று நான்கு பெடியளுடன் நீரில் தள்ளினார்கள்.
குவிந்திருந்த சனம் இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறியது. நிறைந்ததும் கயிறை வைத்திருந்தவன் கடலில் நனைந்தபடி முன்னால் இழுக்க பக்கப்பகுதியில் நின்று ஒருவன் தள்ள, பின்பகுதியில் ஒருத்தன் தள்ள, வள்ளங்கள் நகரத் தொடங்கின. முக்கால் மைல் நீளமான அந்தக் கடல் ஆழமற்ற அலைகளற்ற தன்மையைக் கொண்டிருந்ததால் ஒட்டிகளின் உதவி இல்லாமலே சமாளிக்க முடிந்தது.
அன்று மக்களுக்கு இலவச சேவை.
‘உவங்கள் எதற்கும் துணிந்தவர்கள்’ என்ற வியப்பு கண்களில் படர கனகன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
se le se
வாலையம்மன் கோவில் வாசிகசாலை அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூடியிருந்தது. கமிட்டி உறுப்பினர் முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல்தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் நின்றிருந்தனர்.
அவர்கள் சார்பில் வாசிகசாலைக் கமிட்டி இயக்கக்

Page 35
66 O வேலிகள் காம்புக்குப்போய் மன்னிப்புக்கேட்பது என்று தீர்மானித்தார்கள்.
ஆனால் இரண்டையும் (இயக்கங்களை) உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு இருக்குமோ? அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாகிவிடும். எனவே கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது.
அவர்கள் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. கமிட்டி ஆட்களை, தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், கமிட்டி உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு பயம் வயிற்றைக் கலக்கியது.
தலைவரையே கைது செய்து விட்டது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கிவிட்டது.
இனி மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப்போகிறதோ? எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள் இருந்த போதும் அவர்களுக்கு அக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை.
தீவுப்பகுதி இன்னொரு ஏ.ஜி.ஏ. அமைப்பு.
ஏ.ஜி.ஏ. மட்டங்கள் மத்தியிலே இயல்பான தொடர்புகள் நிலவின. வீட்டில் விளக்கேற்றியபிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலேஉட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.

கடல் புத்திரன் O 67 அன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது.
கமிட்டியில் வயசானவர்கள், O/L வரைபடித்த பெடியள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள் ஆகியோர் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே அரஸ்ட் பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது எனப் புரியாமல் குழம்பிக் கிடந்தார்கள்.
கடைசியில் பழசுகளின் கோஷ்டி அண்டனைத் தேடி வந்தது. "தம்பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்னமாதிரி நடந்தது என்பதை உங்கடயேயருக்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக்குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லிவிடு” என்றார் தியாகப்பு. கனகனுக்கு எல்லாரையும் பார்க்கப் பாவமாய் இருந்தது.
ஆளுக்காள் கலைய, பன்னிரண்டு ஒரு மணி இருக்கும். நித்திரையில் ஆழ்கிற நேரம் திடும் என வீடுகளில் அல்லோகலம் ஏற்படத் தொடங்கியது.
யாரோ பெடியள் அணி ஆயுதத்தோட வந்து சூழ்ந்துவிட்டார்களாம். அடுத்த இயக்கம் வந்துவிட்டது என்று அவனுக்குப் புரிந்தது.
அண்ணன்ரை சேதி என்னவாக இருக்குமோ என மனம் அடிக்க விழுந்தடித்து ஒடினான்.
அண்ணன் உட்பட அடிசவையளை அவர்கள் அரெஸ்ட் பண்ணிவிட்டார்கள். இருளைக் கிழித்தபடி வாகனம் கரையை நோக்கி ஒடியது.
அவர்கள் வள்ளத்தில் ஏற்றப்பட்டு அக்கரைக்குப்போக, பீதியில் குழம்பிய நிலை அதிகமானது. அன்டனுக்கும் நகுலனுக்கும் வந்தவர்களைத் தெரிந்திருக்கவில்லை.
தனியாயிருக்கப்பயந்து அண்ணி கலாவையும் பாபுவையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார். மற்ற வீடுகளிலும் இதே நிலை. தனிக்கட்டையாக இருந்தவர்கள் வீடுகளில் சோகம்

Page 36
68 O வேலிகள் கூடுதலாகக் குமைந்தது.
விடிந்தபிறகு, முதிர்ந்த பெண்களை காம்புக்கு அனுப்பி கதைத்துப் பார்ப்போமா என்று பெடியள் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்க.வயதானவர்கள் மறுத்துவிட்டார்கள்.
கடைசியில் அன்டனையும் நகுலனையுமே விரட்டினார்கள்.
கனகன் பாரில் அன்டனை ஏற்ற, நகுலன் தனிய வர சைக்கிள்கள் அயற்கிராமத்தை நோக்கி விரைந்தன. தேத்தண்ணி ஒரு வாய் குடித்த கையோட வெளிக்கிட்டிருந்தார்கள். பிடிபட்டவர்களுக்கு அடிவிழாமல் காப்பாற்றிவிடவேண்டும் என்ற அந்தரம் அவர்களுக்கு இருந்தது.
அங்கேயிருக்கிற அவர்களின் பொறுப்பாளரையும் எழுப்பிக்கொண்டு ஒடவேண்டும்.
பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் பேரில் ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கம் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யை சந்திக்க முதல்விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்கவேண்டும். பிறகு அவர்களது ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்கவேண்டும். ஏ.ஜி.ஏ.களுக்கு மத்தியில் அடிக்கடி கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ.கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால். சாதாரண விதானையார் பிரிவுகளுக்கு அயலில் இருந்த மானிப்பாய் விதானையாருடன் இருந்த பழக்கம் அவர்களோடு நிலவவில்லை.
பெரிய பிரச்சனைகளை பொதுவாக ஏ.ஜி.ஏ.மட்டத்தினர் கதைத்து தீர்த்துக்கொள்வர். பிரச்சனை மோசமானால் அவர்கள் எல்லாருக்கும் தலைமையாயிருக்கிற அரசாங்க அதிபருக்கு கொண்டு போவார்கள்.
எல்லா அமைப்புகளையும் பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது. விதானையார், ஏ.ஜி.ஏ. தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜி.ஏ. அமைப்புகளுக்குக் கொண்டுபோகலாம்.

கடல் புத்திரன் O 69 அந்த நடைமுறையிலேயே முதலில் விதானை யாரைச் சந்திக்கப்போய்க்கொண்டிருந்தார்கள்.
மற்ற இயக்கத்தைப் போய்ச் சந்திப்பதென்றால் அவர்களுடைய பிரதேசக்காம்புக்கு நேரடியாகப் போகவேண்டும். ஆயுதங்களோட அவர்கள் எந்த நேரமும் புழங்குவதால் பெடியளை அனுப்பப் பயப்பட்டார்கள்.
இயக்கப் பகைமை அதிகம் காணப்பட்டதால் மற்ற இயக்கத்தின் பெடியளும் வாரவயளில் கலந்திருப்பார்கள் என.அவர்கள் கடுமையாக அணுகுவார்கள். எனவே கிழடு கட்டைகளை அதற்கு அனுப்புவதென முடிவெடுத்திருந்தனர்.
காலையிலே வெளிக்கிட்டுவிட்டதால், சாமிக்கிழவர், அல்லது தியாகப்பு தலைமையில் போனார்களா என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இருவரும் ஒரளவு விசயங்களை புரிந்து கொள்கிற அனுபவம் முதிர்ந்தவர்கள். அவர்கள் ஆதரவாலே வாசிகசாலைக்குழு நல்ல முறையில் இயங்குகிறது. முந்தி அடி பிடி, சண்டை, ஆதரவின்மை என்பவற்றால் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள். இப்ப ஒரே குழுவாக ஐக்கியப்பட்டு, பலம் பொருந்தியதாக இயங்கி வருகிறது.
இயக்கப்பிரச்சினை என்பதால் கையாளுவதில் எல்லாருக்கும் பிரச்சனை.
விதானையார் லிங்கனை தேடிப்பார்க்க.அவன் தலைமைக் காம்புக்குப் போயிருக்கிறான் என்ற தெரிவித்தார்கள். அப்படியே தலைமைக் காம்பை நோக்கி விரைந்தார்கள். குறைந்தது ஆறு ஏழு மைலாவது சைக்கிள் ஒட்டம் இருக்கும். அண்டன் குறுக்குப் பாதைகளினூடாக விட்டு விரைந்தபோதும். தூரம். தான் போய்ச்சேர்ந்த போது எட்டரை ஒன்பதாகிவிட்டது.
நல்ல காலம் லிங்கனும் அவர்களுடன்.அந்த பொதுவான தேர்முட்டிப் படியில்ேஇருந்தான். அது கோயிலின் தேர் நிறுத்தக் கட்டியிருக்கும் மேடையோடு கூடிய கட்டடம். பெரிய திறந்த வளவுடன் அமைந்த கோயிலுக்கு முன்னால் உள்ள அந்த மேடையையே இலகுவாக மக்கள் சந்திப்பதற்காக

Page 37
70 O வேலிகள் தெரிந்திருந்தார்கள். லிங்கனைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அன்டன் விசயத்தைச் சொன்னான். தீவுப்பகுதிப் பெடியனின் கை முறிந்த செய்தி அவர்களுக்கு முதலே வந்திருந்தது. ஆனால் அவன் பகுதி ஆட்களால் நடந்தது என்று அப்பவே தெரிய, அவன் அவர்களைக் கூட்டிக்கொண்டு மற்றவர்களைச் சந்திக்க சென்றான்.
“பிரபா தெற்குப்பகுதியிலும் கட்டாயம் பொறுப்பாளன் ஒருத்தனை நியமிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பக்கத்தில் போய் அமர்ந்தான். கனகன், அன்டன், நகுலன் ஆகியோரும் பக்கத்தில் போய் அமர்ந்தார்கள்.
“இவயள் பகுதியில் இருக்கிறவயள் இயக்கப்பெடியள் என்று தெரியாமல் கையை உடைத்துவிட்டார்களாம். இரவுபோல் தீவு அமைப்பு வந்து இவர்களில் ஆறு பேரை அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போய்விட்டது” என்று தெரிவித்தான்.
பிரபாவுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இன்னொரு ஏ.ஜி.ஏ. அமைப்பு அனுமதியில்லாமல் அவர்களுடைய ஏ.ஜி.ஏ.பிரிவுக்குள் நுழைந்த்து ஒருமாதிரியாக இருந்தது. இத ஜி.ஏயோட கட்டாயம் கதைக்கவேண்டும். ஆனால் எங்களின்ரை பெடியளின்ரை கையை முறித்திருக்கிறார்கள். மண்டைதீவுப்பக்கம் சென்றியில் நிற்கிற பெடியள். எங்களோட சொல்லிப்போட்டுச் செய்திருக்கலாம்” என்றான் பிரபா. மண்டைத்தீவுக்காம்ப், பண்ணைக் கடலைக் கடந்து ஏறுகிறபாதை மூன்றாகப் பிரிந்துபோகும் பகுதியில் உள்ள கணிசமான பரப்பில் வீதியை மறித்து போடப்பட்டிருந்தது.
கனகனுக்குத் திகிர் என்றது. அண்ணனைப்போட்டு அடிச்சிருப்பாங்களோ? ஆனால் இவயள்ட பிரச்சனைகள் வேறுபட்டவை விட்டுக் கொடாமல் கதைத்தாலும் பிரபா உடனே நடவடிக்கை எடுத்தான். லிங்கனை இன்னொருத்தனோடு மோட்டார் சைக்கிளில் தீவுப் பக்கம் அனுப்பினான். இன்னுமிருவரை ஜி.ஏ.யிடமும் அனுப்பினான். லிங்கன், அண்டனைப் பிறகு சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான்.

கடல் புத்திரன் O 7. பிரபா அவர்களைப் பார்த்து ஆதரவாகச் சொன்னான். “உண்மை தெரிந்தால் எங்கட பெடியள் சும்மா அடிக்கமாட்டினம். போய் வாருங்கோ” வெறும் தேத்தண்ணியோட வெளிக்கிட்டதால் மூவருக்கும் பசி வயிற்றைக் குடைந்தது.
அருகில் உள்ள தேத்தண்ணிக் கடையில் புகுந்து வடையும் தேத்தண்ணியும் வெட்டி விட்டு வெளிக்கிட்டார்கள். தேர்முட்டியில் கூட்டம் அதிகமாகியது. அவர்களின் சட்டசபை கூடிவிட்டதாக அண்டன் கூறினான். “கனகு, இண்டைக்கு நிலவரம் தெரிந்துவிடும்.
தீவுப் பகுதி ஆட்கள் அடிக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்கட ஆட்கள் வடிவேலனோடு மட்டும் தான் கதைச்சவங்கள். மற்ற இயக்கங்களோடு கதைக்கவில்லை. ஒரியக்கம் மற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதுதான் பிரச்சினை” என்ற சிந்தனை வயப்பட்டுச் சொன்னான்.
1.30 மணி போல் லிங்கன் வாசிகசாலைக்கு வந்தான். “இண்டைக்கு பின்னேரம் மூன்றரை நான்கு மணி போல எல்லாரையும் விட்டு விடுவினம். உன்னோடு கதைத்தது போதும் என ஒரு சிலர் உளறியதால் அடி கொஞ்சம் விழுந்து விட்டது. எல்லா இயக்கங்களும் இன்னமும் ஒரு பொதுவான ஐக்கியப்பாட்டுக்கு.வரவில்லை. அதனாலும் நீங்கள் பிரச்சனைப்பட வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனான்.
லிங்கன் போன கொஞ்ச நேரத்திற்கு பிறகு மற்ற இயக்கத்தின் வான் வாசகிசாலையில் வந்து நின்றது. அதிலிருந்து கமிட்டி இறங்கியது. உருட்டல், மிரட்டல்கள் அவர்களை வாயடைக்க வைத்திருந்தது. “ரிவால்வரை, மகசீனை, கிரனேட்டை 8 மணிக்குள்ள கமிட்டி வாங்கிவிடவேண்டு ம்” என்று அதிகாரமாக கெடு விதித்து விட்டு போனார்கள்.
மற்றவர்களையும் பிடித்தது அவர்களுக்கு அப்பவே தெரிந்தது. லிங்கன் போய் சந்தித்ததையும் பின்னேரம் விடப்படுவார்கள்

Page 38
72 O வேலிகள் என்ற செய்தியையும் அறிந்து கொண்டார்கள். எல்லாமே குழுவை மீறிய விசயங்கள். நடப்பதை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.
4 மணிபோல் மற்றவர்கள் வள்ளத்தில் வந்து. கரையிலிருந்த ஒரு மினி பஸ்ஸில் ஏற்றப்பட்டு வாசிகசாலைக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள்.
பொதுவாக எல்லாருக்குமே அடி விழுந்திருந்தது. சிலருக்கு உள்நோவு. குமாருக்கும் பஞ்சனுக்கும் புக்கை கட்டவேண்டியிருந்தது. முருகேசனிடம் ஒரு களைத்த தோற்றம் காணபபடடது.
இயக்கங்களோடு சும்மாவேனும் பிரச்சனைக்கு போகக்கூடாது
என்ற நினைப்பு எல்லாருக்கும் ஏற்பட்டிருந்தது. மெளனம்.
கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தபோது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “மீட்டிங்குக்கு உங்களை உடனடியாக வரட்டாம்” அண்டனுக்கும் நகுலனுக்கும் தெரிவித்தான். “கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத் தாரியோ” என்று அன்டன் கேட்டான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கவில்லை. வாசிகசாலைக்குழு அடிபட்ட பிறகு இயக்கத்துக்கு உதவுவதை வெறுப்பாகப் பார்த்தது. “கொண்டு போ என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்தான்’ முந்தினமாதிரி இருந்தால் வளர்ந்தவனாயிருந்தாலும் கோபத்தோடு தடுத்திருப்பான். இப்ப எதிலேயும் பற்றற்றவன் போல ஈழநாடு பேப்பரில் கவனத்தை பதித்திருந்தான். சனமும் தீவிரமாக வாசிப்பதுபோல் மெளனமாக இருந்தனர். இந்தச் சூழல் கனகனின் மனதை சிறிதுநோக வைத்தது.
அவனைப் பிடிச்சுக்கொண்டு போனபோது அழுதுகொண்டு அண்ணியும் பிள்ளைகளும் ஒடி வந்தது ஞாபகம் வந்தது. அண்ணன் ஒரு வித்தியாசமான பிறவி முன்னர் அண்ணியின் ஊர்ப்பக்கமிருந்த செல்லாச்சி மாமி வீட்ட அடிக்கடி போய் வந்தான். மாமி மகள் வதனியில் ஒரு பிடிப்பு இருப்பதாக.அவன் கூட நினைத்திருந்தான். ஆனால் பக்கத்து வீட்டிலே இருந்த

கடல் புத்திரன் O 73 அண்ணியைப் பார்க்கத்தான் போனான் என்பது யாருக்கும் தெரியாது.
யாழ்ப்பாணத்தில் கலப்பு மணம் என்றால் இலேசிலே எத்தரப்பினரும் அனுமதிக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்குள் செய்யவே கட்டுப்படுத்தினார்கள். முருகேசன் அண்ணியைக் கூட்டிக்கொண்டு வந்தபோது கத்தி, பொல் சகிதம் தொடர்ந்து வந்திறங்கிய அவர்களை தனியனாக திருக்கைவாளோடு துணிஞ்சு எதிர்கொண்டவன். பிறகு மண்டா, மீன் முள்ளு, தடி என கையில் பட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பஞ்சன், தியாகு, அவன் என ஊரே திரண்டு வர ஒடிவிட்டார்கள். வாசிகசாலைக்குழு நிலைமையை கவனத்தில் எடுத்துச் சமாளித்தது. எல்லாரும் கட் யம் அமைதி காக்கவேண்டும் என கட்டுப்பாட்டை விதித்தது. அங்குள்ள வாசிகசாலை (சனசமூக நிலையம்) குழுவுடன் நேரே சென்று பேச்சு நடத்தியது. “புனிதம் அவனோடயே வாழவிரும்புவதால் இப்படியே விடுறதுதான் நல்லது” எனக் கேட்டுக்கொண்டது. “அவயள் பேச்சை நம்ப மாட்டன்” என்று சத்தம் போட்டுக்கொண்டு அவளுடைய அண்ணன் குழுவோடு அங்கே வந்தான். அந்த நேரம் “நான் வரமாட்டேன்” என மன்னி அவர்கள் மத்தியில் ஒடிஒளிந்தது எல்லார் மனதையும் கரைத்தது.
பிறகு அண்ணன் மன்னி வாழ்வு நல்லபடிவாயே ஒடியது. வெளிநாடு போற ஆசை அண்ணனுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கிடையில் காசு போதியளவு கிடைக்காமையால் பூசல்கள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. ‘என்னடாப்பா வீட்டில் சத்தம் கேட்கிறது’ என்று அவனுடைய நண்பர்கள் கேட்க.ஒரளவு அடங்கிப் போயிருந்தான்.
இயக்கம் அவனை பிடிச்சபோது மன்னி “விடமாட்டேன்” என குழறிப்பிடிச்சார். அப்படியும் கொண்டுபோய் விடவே, வீட்டை ஒடிவந்தார்கள். திரும்பியபிறகு அடிவாங்கியவர்கள் இரண்டு மூன்று நாள்.நோவால் வேலைக்கு போகமுடியாமல் தவித்தார்கள். கனகனை, அண்டனை, நகுலனைக் கண்டால் பகிடியாக நிலைமையை தெரிவித்தார்கள். அண்ணனோடு

Page 39
74 O வேலிகள் நேற்றுவந்த பஞ்சன் அவனைப்பார்த்து-விட்டு “உங்கட ஆட்கள் மோசமில்லையடா, ஆனா, அடி வாங்கினால் 2,3 நாளைக்கு கட்டாயம் புக்கை கட்டவேணும்” என்றான். அவனுக்கு சிரிப்பு வந்தது. அண்டனும் நகுலனும் நண்பர்களாகவிருப்பதால் அவனையும் இயக்கமாக கருதி முறைப்பாடு தெரிவிக்கிறார்கள். அந்த விதத்திலே இப்ப அண்ணனும் மெளனமாக இருப்பது சங்கடமாக இருந்தது. அவனைக்குறித்து புறுபுறுத்தாவது இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் என்ற மரியாதையும் அவர்களுக்கு இருக்கவே செய்தது. எனவே இயக்கத்தோடு இழுபடுகிறவர்களையும் சப்போட் பண்ணுறவர்களையும் அவர்கள் தடுக்கவிரும்பவில்லை.
se se se
ஏ.ஜி.ஏ கூட்டத்திலே, புதிதாய் ஒருத்தனை அறிமுகப் படுத்தினார்கள். இருவருக்கு அவனை முன்னமே தெரியும். “இவன், தற்காலிகமாக தெற்கு அராலிப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்படுகிறான்” என அறிவித்தார்கள்.
சங்கானை உப அரசாங்கப் பிரிவில், அராலியும் இருந்தது. மற்ற 12 கிராமங்களைப்போலவே ஒரு கிராமமாக பதியப்பட்டிருந்தது. அதன் வடக்கு தெற்கு பகுதிகள் ஒவ்வொன்றுமே.நிலப்பரப்பு சாதிப்பிரிவுகளைப் பொறுத்தவரையில் தனிக்கிராமத்துக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருந்தன. முழு கிராமத்துக்கு ஒரு கிராமசேவகரை அரச பிரிவால் நியமிக்கப்பட்டதால் சாதாரணமாக மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். அதை ஒட்டியே இவர்களும் வடக்கைச் சேர்ந்த லிங்கனை ஜி.எஸ்.ஆக தெரிந்துவிட்டிருந்தனர். ஆனால், தெற்குக்கு இன்னொரு ஜி.எஸ்.ஐ நியமிக்க வேண்டிய தேவையிருந்தது.
தற்காலிகமான திலகனின் தெரிவு.வாலையம்மன் பகுதி ஆட்களுக்கு நிச்சயம் ஆச்சரியமளிக்கப்போகிறது. மற்றைய கிராம அங்கத்தவர்கள் பலரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு அவனை தெரிந்திருக்க நியாயமில்லை.

கடல் புத்திரன் O 75 “இவன், மானிப்பாய் ஏ.ஜி.ஏ. பிரிவைச் சேர்ந்தவன். எங்கட பிரிவிலே இயங்க வந்திருக்கிறான்” அவனைப்பார்த்து “உனக்கு அந்தப் பகுதி பிரச்சனையாயிராது” என்றான் பிரபா. எல்லாரையும் பார்த்து “தெற்கராலியில், பலர் பேர் பதிந்து வேலை செய்யவில்லை. சப்போட்டர்ஸ் என்ற முறையில் இயங்குகிறார்கள். அதனாலே நாங்கள் இவனை நியமிக்கிறோம்.” எனப் பகிடியாகச் சொன்னான். தொடர்ந்தான். “அவ்விடத்து துறை முக்கிய கேந்திரமாக இருப்பதால் சில செயற்பாடுகளை நாம் செய்யவேண்டியிருக்கிறது. கூடிய சீக்கிரம் உங்களில் ஒருவனை ஜி.எஸ்.ஆக நியமிப்போம்” அன்டன் ஆட்கள் இருந்த பகுரியைப் பார்த்து.பிரபா பேசுவதைப் பார்த்து எல்லாரும் கேடT *கொண்டிருந்தார்கள். ஈடுபட இருக்கும் செயற்பாடுகளை அவ ைவிவரித்தான்.
“கரையில் வாலையம்மன் பகுதி நடத்திய படகுச் சேவையை இனி இயக்கங்கள் செய்வதாக முடிவெடுத்ததால் எம் சார்பிலும் படகு சேவை நடத்தத் திர்மானித்திருக்கிறோம்" கூட்டம் அன்று முடிய லேட்டாகியது.
இருவருக்கும் பசித்தது. கடையிற்கு ஏறி பசியாற கையில் காசிருக்கவில்லை. சைக்கிளைக் கொடுக்க கனகனின் வீட்டுக்கு வந்தார்கள். இயக்கம் என அலைந்து திரிய வெளிக்கிட்டபிறகு அவர்கள் பொதுவாக சரியாக சாப்பிடுவதில்லை. “டேய் பசிக்குதடா.மீன் குழம்பு ஏதும் இருக்கிறதா?” என்று அன்டன் கேட்டான். “நில்லு பார்த்துச் சொல்லிறன்” என்றுவிட்டு உள்ள போனவன் குழம்புச் சட்டியோடு பாணையும் எடுத்துவந்தான். “டேய் கையை கழுவிப்போட்டு வாங்கடா" என்று பாணை தட்டில் வைத்து குழம்பை ஊத்தி வைத்தான். தண்ணியை ஊத்தி அம்மா அடுப்பில் வைத்தார். “என்னடா சேதி? கூட்டத்தில் என்ன சொன்னாங்கடா" கனகன் அவசரமாகக் கேட்டான். “கொஞ்சம் பொறடா. சாப்பிட்டுவிட்டு கதைக்கிறோம். ஆனா, பெரிய ஆச்சரியம். எல்லாம் காத்திருக்கடா” என்றான் அன்டன், “எங்க பகுதிக்கு புதிதாய் ஜி.எஸ்.ஒருத்தன் நியமிக்கப்பட்டிருக்கிறான்.

Page 40
76 O வேலிகள் யார் தெரியுமா?” என்று நகுலன் கேட்டான்.
“எனக்கென்னடா மூக்குச் சாத்திரமா தெரியும்? யாரும் பொதுவான ஆளாய் இருப்பான்.ம்.யார்? அந்த நரேனையா நியமிச்சிருக்கிறாங்கள்’
நரேன் சாதி அபிமானம் அற்றவன். சமயத்தில் சென்றியால் வரும்போது அன்டனை வாசிகசாலையில் இறக்கி விட்டுப்போறவன். பழக இனிமையானவன். ஆனால் அங்கே நிலவுகிற சமூகக் கட்டமைப்பால் அவன் மாற்றுச் சாதிக்காரன்’ அவர்கள் மட்டுமே எல்லாரையும் தோழர்களாக ஏற்றிருக்கிறார்கள். சாதி முறை நீண்ட காலம் நிலவிய தன்மையாலும், விழிப்புணர்ச்சி இளைஞர் மட்டத்திலே நின்றுவிட்டதாலும் சமூக மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தென்படவில்லை. அவனை என்ன, வேறு அவ்விடத்து ஆட்களைக் கேட்டாலும் நரேனையே நினைப்பார்கள். ஒரு இயக்கத்துக்கு எல்லாப்பக்கமும் வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கவேண்டும். சமயங்களில் உதவிகள் திரட்டக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். மளமளவென இருவரும் சாப்பிட்டார்கள். கனகன்ரை அம்மா போட்டுத் தந்த தேத்தண்ணியை குடிச்சபிறகு அவர்களுக்கு களைப்பு பறந்திருந்தது.
இயக்க கெடுபிடிகளால் இரண்டு மூன்று நாட்களாக அப்பனும் தொழிலுக்குப் போகாதிருந்ததால் ஒருபுறம் வைத்திருந்த உலர்ந்த வலைக்குவியலில் போய் மூவரும் படுத்திருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று குளிமையாக வீச அப்படியே தூக்கம் வந்துவிடும் போலிருந்தது.
உடுப்புகள் காயப்போட அங்கே வந்த அம்மா “உங்கம்மாமார் தேடி வரப்போகினம்” என்று ஞாபகமூட்டினார்.
“இயக்கத்திற்கு என ஒடிய பிறகு எங்களைப்பற்றி கவலைப்பபடுகிறதை விட்டிட்டினமக்கா” என்றான் அன்டன். திடீரென அப்பகுதியில் இருவரும் ரெயினிங் என்று போனதும் உடனே அவர்களின் அம்மாமார் இருவரும் அந்த வீட்டுக்கே ஒடி வந்தார்கள். கனகன் இருப்பதைப் பார்த்துவிட்டு “தம்பி உனக்குத்

கடல் புத்திரன் O 7ל தெரியாமல் இருக்காது. எங்கே தம்பி போயிருக்கிறார்கள்” என்று தவித்துக்கேட்டது அவருக்கு ஞாபகம் வந்தது. பிறகு கனகனே தபால்காரனாக அவர்களுக்கிடையில் வேலைபார்த்தான். ஒன்றரை மாதம் கழிய இருவரும் திரும்பிவந்தார்கள். லிங்கன் மற்றும் பலர் அப்பகுதிக்கு பரிச்சயமானார்கள்.
“யாரடா வரப்போகிறான். வேறு ஊரைச் சேர்ந்தவனா?” என்று நக்கலாக அவன் கேட்டான்.
“லிங்கன்ரை சொந்தக்காரப் பெடியனடா" என்று அன்டன் சொல்ல நகுலன் சிரித்தான். ‘அதிலே ஒன்றும் ஆச்சரியமில்லையே என்ற கனகனுக்கு அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள்
போலப்பட்டது.
லிங்கனும் நரேனும் அன்டனையும் நகுலனையும் தேடி வாசிகசாலைக்கு வந்தார்கள். இருவரின் சைக்கிள் பாரிலும் ஆளுக்காள் ஏறினர். லிங்கன் கையில் வைத்திருந்த புத்தகக் கட்டை அன்டன் வாங்கிக்கொண்டான்.
“அதிரடி நடவடிக்கை ஏலுமா? கனகன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு கேட்டான்.
சைக்கிள்கள் விரைந்தன.
சந்தியில் அவர்களுடன் இன்னும் பலர் சேர்ந்து கொண்டார்கள்.
தெற்குப்பக்கமாகவிருந்த ஒழுங்கையில் இறங்கி விரைந்த அந்தப் பட்டாளம் பூட்டிக்கிடந்த ஒரு பழைய வீட்டை அடைந்தது. நூறு வருடங்களை கடந்துவிட்டிருக்கிற மூப்பின் அடையாளங்கள் வீட்டில் காணப்பட்டன. பூச்சு கழன்று உப்பு சிறிது பூத்த சுவர். சுண்ணாம்புக்கல் அதிகமாகப் பாவிக்கப்பட்டு கட்டப்பட்ட உறுதியான பழைய வீடு.
அவ்வீட்டை நரேன் தெரிந்திருந்தான். முன்னாலுள்ள பாதை. அயலிலுள்ள இரண்டொரு வீட்டைக் கடந்தால் கரையை நாடியே

Page 41
78 O வேலிகள் போகிறது. பனைமரங்களும் நெல்வயல்களும் இருமருங்கிலும் கணிசமாக இருந்தன.
நரேன். அண்டன், குமார் மூவரும் பக்கத்திலிருந்து வீட்டுப்பக்கம் நடந்தார்கள். அவ்வீட்டு க்காரர்“யார் தம்பி நரேனா வா. வா" என வரவேற்றார். அவன் அவருக்கு தூரத்து உறவு. அவனைப்பற்றி முன்னமே தெரிந்து வைத்திருந்தார்.
“பழைய வீட்டை எடுக்கிறோம். அதன் திறப்பை தரமுடியுமா?” என்று அவன் கேட்டான்.
“குறை நினைக்கவேண்டாம் தம்பி அவயள் கொழும்பிலிருந்து வரவிருக்கினம்” தரமாட்டேன் என்பதை நாசூக்காக தெரிவித்தார். “அவயள் வரேக்கை எழும்பிவிடுறம். நீங்க பயப்படத்தேவையில்லை. வீட்டைப் பொறுத்தவரை சேதம் ஏற்படாது. தாங்கோ” என்று நரேன் சிறிது நக்கல் தொனிக்க கேட்டான். அவர் மசிவதாகத் தெரியவில்லை. தட்டிக்கழிக்கவே அவர் முயன்றார் "உனக்குத் தெரியாததா? தரக்கூடியதாக இருந்தால் தராமல் இருப்பேனா?” தொடர்ந்தும் முரண்டு பிடிக்க நரேன் அன்டனை லிங்கனைக் கூட்டி வா’ என்று சொல்லி அனுப்பினான்.
அவர்கள் வீட்டை திறந்துவிட்டிருந்தார்கள். ‘எங்கே நரேன்’ என்று லிங்கன் கேட்டான். நிலைமையைச் சொன்னான். “தெரிஞ்சவையளா, அப்படியென்றால் வேற ஆளை அனுப்பியிருக்கலாம். சரி வா. நீங்க வீட்டை ஒதுக்கி துப்புரவாக்குங்கள். கவனம். சாமான்களை ஒரு அறையில் போட்டு பூட்டி விடுங்கள். கண்டிப்பாய் அதிலை ஜாக்கிரதையாயிருங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தான்.
“நரேன் நீ போ” என்று அனுப்பிவிட்டு வீட்டுக்காரனுடன் கதைத்தான்.
“எங்கட தோழர்கள் தங்கி போறதுக்கு வீடு தேவைப்படுகிறது. சும்மா பூட்டிக்கிடக்கிற வீடு என்று எங்களுக்கு நல்லாய் தெரியும். திறப்பை தந்தீங்க என்றால் நன்றாயிருக்கும்” என்று கேட்டான்.

கடல் புத்திரன் O 79 “அதில்லை தம்பி.அவயள் கொழும்பிலேயிருந்து வரவிருக்கினம்” வீட்டுக்காரர் நரேனுடன் கதைத்ததுபோல முயன்றார். “பரவாயில்லை. நாங்க வீட்டை திறந்துவிட்டோம். நீங்க ஒருக்கா வந்து வீடு ஒதுக்கிறதை பார்த்தால் மட்டும் போதும். உங்க பொறுப்பிலே இருக்கிறதாலை கேட்கிறோம். எங்கேயோ இருக்கிற வீட்டுக்காரர் ஒருவேளை உங்களை கேட்டால் நீங்கள்.இயக்கம் மிரட்டி சாவியை வாங்கிவிட்டது என்று சொல்லலாம். உங்க பாதுகாப்புக்காக தான். இனி உங்க இஷ்டம்.” லிங்கனின் முடிவான பேச்சு அவரை கலக்கிவிட்டது. பேசாமல் திறப்பை எடுத்துக்கொடுத்தார். அவர்களோட கூட வந்தார். முக்கிய சாமான்களை தனியறையில் வைத்து பூட்டிவிட்டு அந்த ரூம் சாவியை நரேன் அவரிடம் கொடுத்தான்.
“உங்களுக்கு பிரச்சனை வாரபோது எங்கட பெடியளிடம் கூறுங்கள். உடனே நடவடிக்கை எடுப்போம். கொஞ்சகாலம் மட்டுமே தேவைப்படும் என நினைக்கிறேன்” என்று லிங்கன் ஆதரவாக சொன்னான். அவர் வீட்டிலேயிருந்து அவர்களுக்கு டீ வந்தது. நரேனுக்காக செய்வதுபோல அனுப்பினார்.
"ஆள் பரவாயில்லை அன்டன்” என்று அவன் சொல்லிச் சிரித்தான்.
“டேய் வீடு ஒன்று எடுத்துவிட்டோம்” என்று வந்த அன்டனைப்பார்த்து கனகன் சிரித்தான். அவனுக்கு அந்த விசயம் தெரிந்ததேயிருந்தது. “வா, அண்ணன் வீட்டபோவம்" என்று கூட்டிக்கொண்டு போனான். அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப்பார்த்தபோது இருவருக்கும் விசயம் விளங்கிவிட்டது.
“மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே" என்று கேட்டான்.
“உங்க வீட்டை விட என்ன புதிதாய் இருக்கப்போகிறது தம்பி" என்றார். அண்ணன் கறிக்கு கொண்டு வாரபோது அவன் வீட்டயும் குடுத்து அனுப்பிவிடுவான். அப்பன் கரையிலிருந்து

Page 42
80 O வேலிகள்
மிச்சத்தை விற்றுவிட்டு வருவான். தண்ணியை எடுத்து அடுப்பிலே வைச்சவர். “தம்பி கொதிச்சதும் கூப்பிடுறேன்” என்றார். கனகன் அவர்களிடம் வந்தான். 'திலகன் சரியான ஆளடா இவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தனும் என்று நினைச்சோம். நீ இங்க வந்து குட்டை உடைச்சுவிட்டாய்” என்றான் நகுலன்.
"நீ பொடி போட்டு கதைத்தபோதே எனக்கு ஒரு சந்தேகம். ஆனால், நான் இவனை எதிர்பார்க்கவில்லை” என்றான் கனகன். கதைத்துக்கொண்டிருக்கையில் மன்னி “குரல் கொடுத்தார். “இதோ வாரோம் வாங்கடா எல்லோரும்” என்று சொல்ல.போய் ஆளுக்காள் தேத்தண்ணியை எடுத்துவந்தார்கள்.
அவ்விடத்திலே எல்லோருங்குமே ஆச்சரியம் தான். மன்னியிட தம்பிக்காரன் அப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்பட்டிருக்கிறான் என்றால்.? பொதுவாக பலர் வரவேற்றபோதும் முருகேசனைப் பொறுத்தவரையில் பற்றற்ற நிலையில் இருந்தான்.
மனிசியை திரும்பிப் பாராது இருந்தவயள். அதுவே வீட்டிலே பிரச்சனையாகி தினமும் சண்டையாய் வளர்ந்தது. ஏதேதோ எல்லாம் நடந்தபிறகு அவன் அவயள் வீட்டை ஏறி கேட்டதுக்காக மட்டும் முதல் தடவையாக படியேறி வந்தவன் ‘எப்ப இவன் இயக்கத்திற்குப்போனான்?
தங்கிறதுக்கு சனம் இருக்கிறது. உவனுக்கு படகு ஒட்டம் பற்றி என்ன தெரியும்? ஆனால் என்ன கதைக்க முடியும்? அவள் சந்தோசமாயிருக்கிறாள் என்பதால் ஒன்றும் பேசாமல் இருந்தான். தம்பி முதலே இவர்களோட சேர்ந்தவன்.
திலகனுக்கு படகு ஒட்டம் பற்றி தெரியாதபோதும், “மேலிடம் சொன்னதைக் கடைப்பிடித்தான். படகுச் சொந்தக்காரனையும் அவுட்போட் மோட்டார் கொண்டு வந்தவனையும் ஒட்டிகளாக அனுமதித்தான். இரண்டிற்கும் ஒருத்தனே உரித்தவனாய் இருந்ததால்.அவன் மற்றவனை தெரிவு செய்யலாம் அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களை போடாதபோது, படகுக்கு சேதாரம் கூடுதலாக ஏற்பட்டன. ஆழமற்ற கடலாததால் ஒடி ஒடி அழமான பாதைகண்டு ஒடவேண்டும். இல்லாது போகிறபோது படகு தரை

கடல் புத்திரன் O 8 தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல்பகுதியில் ஏறுகிறபோது பக்கப் பகுதியில் ஒட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அனுபவமிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்தினான். V
ஒருநாள் சம்பளமாக அவன் ஒட்டிக்கு 75 ரூபா கொடுத்தான். இருவருக்கும் 150. வள்ள ஒட்டம் சீராக, நடைபெற்றது.
அன்டனும் நகுலனும் அவனுக்கு வலதுகரமாக நின்றார்கள். ஒரு அவுட்போட் எஞ்சின் அன்று பழுதுபடவே, அவர்கள் வலுவாகக் கஷ்டப்பட்டுவிட்டார்கள். காரைநகரைச் சேர்ந்த படகுக்காரன் மட்டுமே ஒடினான். அன்டன் அணியத்தில் இருந்து பாதை காட்ட நகுலன் காசைச் சேர்த்தான். அந்தப் பிரச்சினையைக் கதைக்க திலகன் ஏ.ஜி.ஏ.யிடம் போயிருந்தான். கரைப்பக்கம் வார லிங்கனிடம் சேர்ந்த பணத்தை கொடுக்க சொல்லி வைத்தான். ஒட்டியின் சம்பளம், சாப்பாட்டுச்செலவு போக மீதியை கொடுத்துவிட்டு கனகனிடம் வந்தார்கள்.
“வந்திட்டாங்கள் வெட்டிப்பொழுதைக் கழிக்க” அவனது அப்பரின் வழமைக்கு மீறிய பேச்சு இருவருக்கும் ஒருமாதிரியாக இருந்தது. இயக்கம் என தாம் சீரழிவதுபோலப்பட்டது. இவர்களால் எங்களைப் புரிந்துகொள்ள முடியாதா? களைப்பு வேறு அவர்களை மூட் அவுட்டாக்கியது. இன்னும், எத்தனை பெடியள்கள் எல்லாம் ஏன் சீரழிகிறார்கள்? சிந்திக்க மாட்டார்களா?
இயக்கம் இவர்களைப் பிடித்து அடிச்சதுக்காக பழகிய முகங்களையே முறிக்கிறார்கள். புரிந்தது. இனிக் கனகனிட்டயும் முன்னை மாதிரி வரமுடியாதோ? என சிந்தனை தலையை அழுத்தியது. “அப்ப, நாங்கள் போயிட்டு வாறம்” வந்த கையோடு கிளம்பினார்கள்.
“நில்லுங்கடா தம்பி. அது விவரம் இல்லாமல் உளறும். தண்ணி குடிச்சுவிட்டு போங்கடா” அவன் அம்மா மறித்தார். அதில் இழைந்த வாஞ்சையை மீறமுடியாமல் உள்ளே வந்தார்கள்.

Page 43
82 O வேலிகள் 'உழைக்காமல் வீட்டில் இருப்பதாலே.அப்பன் இப்படிக் கதைக்கிறான்’ எனக் கனகன் நினைத்தான். நெடுக இப்படியே இருக்கிறது. நல்லதாகப்படவில்லை. அண்ணன் அப்பனோடு தொழிலுக்குப் போவதால் அவனுக்குப் புதிதாக யாரையும் தெரிந்ததாகவேணும். “டேய் உங்களுக்குத் தெரிந்து தொழிலுக்குப் கேட்கிறவர் யாராவது இருக்கினமடா” என்று கேட்டான்.
வள்ளம் ஒன்றை அவிழ்க்கப்போவதாக சொல்லித் திரிந்த செல்லண்ணையின் ஞாபகம் அன்டனுக்கு வந்தது. அவர் மூத்தியப்புவோடு தொழில் பார்த்தவர். அப்புட பேரன் வளர்ந்துவிடவே தொழிலுக்குள் இழுக்க விரும்பினார். அதை அப்பு செல்லனுக்கு தெரியப்படுத்தினார். அவர் நவாலி பக்கத்திலே சிறிய வள்ளத்திற்கும் வலைக்கும் பேசியிருந்தார். உதவிக்க அன்டனைக் கேட்டிருந்தார்.
“டேய் வெல்லலாமடா" என்றான் உற்சாகத்துடன்.
朱 米 米
கனகனை வலைப்பொத்தல்களை தைக்கச்சொல்லிவிட்டு செல்லன் காய்வெட்டிக்கொண்டு கள்ளடிக்கப்போயிருந்தான். தலைவிதியை நொந்தபடி தனியக்கிடந்து போராடிக் கொண்டிருந்தபோது திலகன் அண்ணி வீட்டுப்பக்கம் இருந்து வருவது தெரிந்தது.பட்லையைத் திறந்துகொண்டு வந்த அவன் “டேய் அன்டனைக் கண்டனியா?” என்று விசாரித்தான்.
அன்டனோடயே கனகனும் ஒரேயடியாய் வீட்டிலேயிருந்து வெளிக்கிட்டு வந்தவன் “ஒரே அலைச்சலப்பா?”இப்படி ஏதேதோ வளவளத்துவிட்டு, கனகன் செல்லனின்ரை வளவுக்குள்ள நுழைய அவன் காம்ப்பிற்கு விடைபெற்றுப்போயிருந்தான்.
“ஒ, இண்டைக்கு வெள்ளை மோட்டார், திருத்தவாரன்
என்றவன், மறந்துபோனன்” எனச் சொன்னவன் “எப்படி
92 உன்ரை தொழில் போகிறது?’ என்று கேட்டான்.
e w
உந்த ஒட்டை வலையிலும் சின்னவள்ளத்திலும் அதிகமாக எதிர்பார்க்கமுடியாது” என்று பகிடியாக கனகன் பதில்

கடல் புத்திரன் O 83
அளித்தான்.
R • • ን ን s
உன் ரை பாட்டைச் சொல்லன் என்று பதிலுக்கு விசாரித்தான்.
“நட்டமாகத்தான் ஒடுகிறது. அங்கால அமைப்பிடமே
கொடுத்து ஒன்றாக ஒடுகிறது நல்லது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதனால் செலவைக்குறைக்கலாம்” இருவரும் கதைத்துக் கொண்டிருக்க மாலை மங்கியது. செல்லனின் இருபுதல்விகளான கமலமும், செல்வமணியும் சேரவந்தார்கள். அவ்விடத்தில் உள்ளவர்களைப்போல் சுமாரான அழகு பெற்றவர்கள்.
அவர்களைப் பார்த்துவிட்டு திலகன் “பரவாயில்லை, உனக்கு பொழுதுபோகும்” என கண்ணைச் சிமிட்டியபடி பகிடியாகச் சொன்னான்.
தாய்க்காரி இருவருக்கும் தேனீர் போட்டு மணி மூலமாக அனுப்பினாள்.
அவனை பொதுவாக அவ்விடத்தில் எல்லாருக்கும் தெரியும். எனவே அவனைக் குறிப்பாகப் பார்த்து முறுவலித்தாள். அவள் பார்வையில் வேறு சாதிப்பெடியன் என்ற ஆச்சரியமும் இயக்கத்தில் சீரழியிறவன் என்ற அனுதாபமும் இருந்தது. செல்லன் வரவே.விடைபெற எழும்பினான். “எப்படியிருக்கிறாய்” என விசாரித்தவர் “தம்பி கருவாடு இருக்கிறது; காம்ப்பில் சமைச்சுச் சாப்பிடுங்களன்” என்றார்.
உள் பக்கம் திரும்பி “எடியே புள்ள கருவாடு கொஞ்சம் பையில போட்டு தம்பிட்ட குடு” என குரல் கொடுத்தார். அன்டனும் நகுலனும் அவனை மதிப்பதால் உதவி செய்ய நினைத்தார்போலும்.
காம்ப்பிலே ஆறு ஏழுபேராவது இரவில் தங்குவது வழக்கம். ஒருதடவை அன்டனோடு போன கனகன் அங்கே கருவாட்டுக் குழம்புடன் சோற்றை ஒரு கை பார்த்திருந்தான். யாருடைய கைவண்ணமோ ருசியாக இருந்தது. அங்கேயே திலகன் அதிகமாய்

Page 44
84 O வேலிகள் தங்கிறவன். சமயங்களில் மன்னி வீட்டு விராந்தையில் பாயை விரித்து படுத்திருப்பான். காற்று நேரங்களில் கனகனோடு இருந்துவிட்டு அவன் வீட்டு மணலில் படுக்கை விரித்து விடுவான்.
அன்டன் நகுலனைப்போல் இப்ப திலகனையும் அவனோடு காணக்கூடியதாக இருந்தது.
செல்லன் வீட்டை அண்ணியும் அடிக்கடி தம்பியைத் தேடி வந்து அவனை விசாரிப்பார்.
திலகன் எப்படி இயக்கத்திற்குப்போனான் என்றது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதோடு அண்ணிக்கு ஏற்பட்ட அந்த சம்பவமும் அனுதாபம் சேரக்காரணம்.
ஊரிலுள்ளவர்களைப்போல அப்ப அண்ணனுக்கும் வெளிநாடு போகிற ஆசை பிடித்திருந்தது. அதற்காக காசுக்காக இழுபறிப்பட்டது ஒரு சோகக்கதை. கைகூடாது என்று நிச்சயமாகத் தெரிந்தபோது அண்ணன் குடியில் விழுந்தான். பாபும் லதாவும் பிறந்தபோதும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை.
அண்ணியின் சகோதரங்கள் வந்து பாராதது வேறு அவரை வெகுவாகப் பாதித்தது. சண்டையும் பூசலும் இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. அண்ணன் அவருக்கு அடிக்கவே தொடங்கியிருந்தான். யாருடனும் அதிகமாக பழகியிராத அண்ணிக்கு கமலம் ஒருத்தியே சினேகிதியாக இருந்தாள். அவளை பின்னேரங்களில் பிள்ளைகளோடு அங்கே வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருப்பதைக் காணலாம். அப்படியிருக்கிற ஒருநாள் லதா கத்தியால் விரலைச் சீவிக்கொண்டாள். சதையில் ஆழமாக வெட்டு விழுந்திருந்தது. சிறிது தொங்கியது. அண்ணியோட கமலமே தொலைவிலிருந்து கொட்டக் காடு ஆஸ்பத்திரிக்கு ஒடினாள். தொடர்ந்த நாட்களில் அண்ணனோடு அவளுக்குப் பிரச்சனை முற்றிவிட்டது.
அதனால் அடி கூட வாங்கினாள். அயலவர்களுக்குத் தெரிந்தபோதும் யாரும் தலையிட முடியவில்லை. கடைசியில் அம்மா அண்ணனைக் கூப்பிட்டுக் கண்டித்தாள்.

கடல் புத்திரன் O 85 "பாவம் புள்ள, அவளுக்கு நாங்க தாண்டா துணையாயிருக்க வேணும்"
அடுத்த இரு நாட்களுக்கு பிறகு பாபு நெருப்பிலே கைவைத்துவிட்டான். அதுவும் பெரிதாக கொந்தளித்து அடங்கியது. உடன்பிறப்புகளின், புருசனின் புறக்கணிப்பால் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். மாரிகாலம் வேறு சூழலைச்
சேறாக்கியது.
ஊர்மனையில் ஏற்பட்ட வெள்ளம் வாய்க்கால் வழிய ஒடி குளங்குட்டைகளை நிரம்பி வழியச்செய்தன. ஒரு
மாலைப்பொழுதில் கமலத்தோடு கதைத்துக்கொண்டிருந்த அண்ணி“கொல்லைக்குப் போயிட்டு வரேண்டி பிள்ளைகளைப் பார்த்துக்கொள்” என்று விட்டு பின்புறமாக காய் வெட்டிக்கொண்டு கிழக்கு வயல்குளத்தை நாடிச்சென்றார். நீச்சல் தெரியாது என்ற துணிச்சல் அவர் நடையை வேகப்படுத்தியது. நீர் நிறைஞ்சு வழிஞ்சு.பயங்கரமாகவிருந்தது. அக் குளத்தில் இறங்கினார்.
அவ்விடத்தாலே தற்செயலாக வந்த அன்டனின் அப்பா தத்தளித்துக்கொண்டிருந்த அண்ணியைக் காப்பாற்றினார். பிறகே, அண்ணன் திருந்தினான். அவளிட ஊர்ப்பக்கம் போய் ஆறுதலுக்கு யாரும் ஒருத்தராவது வந்து பார்க்கச்சொல்லி இரந்து கேட்டுவிட்டு வந்தான்.
அப்பதான் முதல்தடவையாக திலகன் வந்தான்.
அவன் வந்தபோது கனகனுக்கு கூட வரவேற்பளிக்கிற மனநிலை இருக்கவில்லை. அங்கே நடந்த களேபரங்கள் அவன் மனதைப் பாதித்திருந்தன. சாதித்திமிரில் வந்தவயள், என்ற ஆவேசம் அவனுள்ளும் பற்றியிருந்தது. முன்னம் அம்மா மளிகைச் சாமான்களை அவன் மூலமாக அண்ணிக்கு அனுப்பும் போதெல்லாம் அவர்.திலகனை நினைத்து வாரப்பாடாக ஏதாவது
சொல்வார்.
“தம்பி உன்னைப் பார்க்கையில் தம்பி ஞாபகம் வருகுதடா”

Page 45
86 O வேலிகள் என்பார். “உன்வயசு தான் அவனுக்கும் இருக்கும்” என்பார். “நான் உங்கண்ணாவோடு வரும்போது அவன் விபரம் தெரியாதவன்”கரைவார். இருந்தபோதும், வெறுக்கவே செய்தான்.
அப்ப, திலகன் வந்ததால் அதிகம் மகிழ்ந்தவர் அவர் ஒருத்தர்தான். அவன் அங்கே ஒருநாள் பகற்பொழுது முழுவதும் இருந்துவிட்டுப்போனான். அது அவருக்குப் பெரும்மன ஆறுதலை அளித்திருந்தது. அதற்குப்பிறகு அவனைப்பற்றி கதைப்பது இன்னமும் கூடிவிட்டிருந்தது.
இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு. இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக.இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாக இருந்தன. இளைஞர்கள் பழைய பிற்போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு ஒடி ஒடி சேர்ந்தார்கள். அதனால் பொதுவாக எல்லாரும் அவர்களை மரியாதை உணர்வுடன் பார்த்தார்கள்.
இவன் எப்ப? எப்படி? போனான். நிச்சயம் அறியவேண்டும். தன்னை சிறிது ஒப்பிட்டுப்பார்த்தான். அவனுக்கு அரசியல் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் அவனால் இயக்கத்திற்கு போய்ச்சேர முடியும் போலவும் படவில்லை.
வலையில் உள்ள பொத்தல்கள் அலுப்பூட்டின. வேலையை அவனிடம் பொறிஞ்சு விட்டு செல்லன் ஊர்வம்புக்கு போய்விட்டிருந்தான். அனேகமாக வளவில் தனிமை அவனைச்
சிந்திக்கவைக்கும்.
போறவாற சமயங்களில் நண்பர்களில் யாராவது ஒருவன்.வலைக்குவியலில் கொஞ்சநேரம் இருந்து கதைத்துவிட்டுப்போவான்.
அவனுக்கு ஆறுதல் அளிக்கிற பொழுதுகள் அவையே.
இயக்கச்செய்திகள், நாட்டு நடப்புகள், ஆமியின் செல்லடிகள், அவர்கள் பேச்சில் இடம் பெறும். காம்ப்புக்கு வரும் துண்டுப்பிரசுரம் புத்தகங்கள் எல்லாம் அவனுக்கு முதலில் வந்துவிடுகின்றன.

கடல் புத்திரன் O 87 செல்லன் வீட்டு விராந்தையில் ஒருபக்கம் வைத்திருக்கிற ஒரு காட்போட் பெட்டியில் அவை கணிசமாக சேர்ந்திருந்தன.
அவனுக்கும் அந்த வீட்டுக்குமுள்ள பிணைப்பைப் பார்த்துவிட்டு, அயலுக்குள்ள இருக்கிற [ 1 fᎢ ᎧuᏪfᎢ அண்ணை.முருகேசனுடன் வருகிறபோது வேலியால் எட்டி-"மாப்பிள்ளை எப்படி சுகம்'என்று கேட்கிறான். ‘செல்லன் தன்ரை மூத்தவளை இவனுக்கே கட்டிவிடப்போறான்’ என்று பகிடியாகச் சொல்லிவிட்டுப்போகிறான்.
அவனுக்கு சிரிப்பு வருகிறது அவன் வேலையில் மூழ்கி விடுகிறான். அவன் மனநிலை.அன்டனுக்கும் நகுலனுக்கும் தான் தெரியும். அவர்களை இப்பவெல்லாம் போர்ட் ஒட்ட மும்முரத்தில் மூழ்கி விட்டதால் காண்பது அரிதாக இருந்தது. பெரும்பாலும் காம்ப்பிலே தங்கிவிடுகிறார்கள்.
அண்ணி அவனைக் காண்கிற போதெல்லாம் “தம்பியைக் கண்டனியா?” என்று விசாரிக்கிறார். அவனும் “கண்டால் சொல்கிறேன் அண்ணி” என ஆறுதலுக்குச் சொல்கிறான்.
அவனே அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். வசந்திக்கு எழுதிய கடிதம் பொக்கட்டில் கனநாளாக கிடக்கிறது. அவளுடைய அண்ணன் ஊர்ச்சண்டியனாக வேறு இருந்ததால் யாருமே பகிரங்கமாக அவளை நெருங்கமுடியாமல் இருந்தது. அன்டன் அவர்களுடைய உறவுக்காரன். அவள் வீட்டில் சகஜமாகப் பழகும் பேர்வழி அவர்களுக்கிடையில் தூது வேலை பார்ப்பான்.
அராலிப் பள்ளிக்கூடத்துக்குப்போய் வந்த பழைய நாட்களில் அவனுக்கு அவள்மேல் கண்விழுந்து விட்டது. அவள் அடுத்த வகுப்பில் படித்தவள். ஒரு துடிப்பான அழகு குடிகொண்டிருந்தது. அவளிடம் வயல்வரம்பிலே அவளிட செட் முதலில் போக.அவனின் செட் பின்தொடரும்.

Page 46
88 O வேலிகள் அவளைக் குறித்து பகிடி பண்ணுவான். பிறகு “டேய் உன்ரை மச்சியைச் சொல்லலையடா’ என்று அண்டனுக்கு சமாதானம் சொல்லி ஏமாற்றுவான். இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெட்டையைப்பற்றி அளந்து கொண்டு வருவார்கள். அன்டனும் தன் பங்குக்கு ‘சிவப்பி எப்படியடா’ என்று கேட்பான்.
குறைந்த பட்சம் அந்தப் பெட்டைகளுக்குக் கூடத் தெரியப்படுத்தாமலே பள்ளி வாழ்க்கை முடிந்தது.
பிறகு.
அன்டன் இயக்கத்திற்கு வேலைசெய்யத் தொடங்கிவிட்டான். நகுலனோடு அவனும் ரெயினிங் எனப்போய்வந்தபோது கோயிலடியில் சபா வைக்கிறது மட்டும் மிஞ்சியிருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கனகன் வசந்தி மேலுள்ள தன் ஒரு தலைக்காதலை வெளிப்படுத்தினான்.
அந்த வருட ஐயனார் திருவிழாவின்போது கோயிலில் சனம் குவிந்திருந்தது. பிரதான கோவில் வீதி ஒரமெல்லாம் கடை கண்ணிகள் முளைத்து கலகலப்பை மூட்டின. "உன்னை அம்மா கூப்பிடுறா" என சினேகிதி செட்டோடு வந்த வசந்தி அன்டனைக் கண்டு விட்டுக்கூப்பிட, நண்பர்கள் அவளை வளைத்துக் கொண்டார்கள்.
“கனகு சொல்லன்ரா.”எனப்பேசி அவனை பேசவைத்துவிட்டார்கள். அவன் ‘விரும்புறதை திக்குத் திணறிச் சொன்னான்.
அவளுக்கு அன்டனின் கூட்டாளி என்தால் நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஒரளவு பழகிய முகம். அவள் விரும்புவதற்கு தடையிருக்கவில்லை.
“இரண்டு பேரும் கதையுங்கோ. நாங்க போயிட்டு வாறோம்" என அன்டன் கிளம்பி நண்பர்களைப் போங்கடா என்று துரத்தினான். பிறகு.
இருவருக்குமிடையில் தபால்காரனாக இருக்கிறான்.

கடல் புத்திரன் O 89
‘எழுத்தில் தான் என்னமா எழுதுகிறாள்.ஒவ்வொரு தடவையும் அவள் கடிதத்தை பெறும்போது கனகனின் மனம் சிட்டுக்குருவியாய் பறக்கிறது. இவன் எங்கே போய் தொலைந்தான்? இப்ப எல்லாம் இவயளைப்பிடிக்கேலாது. அவளிடம் கடிதம் கொடுத்து வாங்கவில்லை என்பதே அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது.
அவர்களில் திலகனே முதலில் களைத்து விழுந்து வந்தான். வலைக்குவியலில் அலுப்புடன் அமர்ந்து கதை அளந்தான்.
Gun ஒட்டத்தை மறுகரைக்கு கொடுத்துவிட முடிவாகிவிட்டது” என்றான். “என்ன விசயம்” என அவன் விளக்கம் கேட்டான்.
“பணவிரையம்” என்றவன் “எங்கட ஒட்டம் வாய்க்கலை” என பகிடியாக வருத்தத்துடன் சொல்லித் தொடர்ந்தான். “சேர்ற காசு எங்களிட காம்ப் செலவுக்கும் ஒட்டிகளின் சம்பளத்திற்கும் தான் Eff). மற்ற இயக்க போட்டியாலை அதிகமாக அலையவேண்டியிருக்கிறது. அலைச்சல் அதிகம். - ஒரே கரையாகச் செயல்பட்டால் ஒரளவு செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று ஜி.ஏ. அமைப்பு கருதுது” அதே சமயம் தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ. அமைப்பு புத்திசாலித்தனமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த ஏ.ஜி.ஏ.அமைப்பு ஒத்துழைப்புக்கொடுத்து செயற்படுத்தியது. அவனோடு சேர்ந்து செயல்பட ஏழெட்டுப்பேரை சர்வேசன் நியமித்தான். காம்பிற்கு பின்னாலுள்ள வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப்பகுதியை மூடி வெல்ட் பண்ணினார்கள்.
காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள்.
மூன்று நான்கு நாட்கள் முழுமூச்சாக செயல்பட்ட அவர்கள் வெற்றியடைந்திருந்தனர். அது முதல்தரமான மிதவையாக

Page 47
90 O வேலிகள் காரைநகர் கடற்பகுதியிலுள்ள பெரிக்கு இணையாக செயற்படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
ட்ராக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக்கொண்டு போய் கடலில் இறக்கப்பட்டபோது பெடியள்கள் கரகோசம் செய்தார்கள்.
கையோடு கொண்டுவந்த பலகைகளை தச்சுவேலை தெரிந்த ஒரு பெடியன்.கம்பிச் சட்டத்தின்மேல் வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக் கொடுத்தபடி பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை இரண்டு மணித்தியாலத்தில் முடிந்தது.
ஆழமற்ற கடலாகையால் மிதவை பாரம் ஏற்ற கணிசமான அளவு தாழும். பாதை கண்டு இதை ஒட்டமுடியாது. அவுட்போட் மோட் டார் பூட்டுறது கஷ்டம் என்று ஒட்டிமார் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
ஒரிரண்டு பிரச்சனைகள் இருந்தபோதும்.தீவுப்பெடியளுக்கு சந்தோசமாக இருந்தது. எங்கட பெடியள் கைவண்ணம் என திலகனுக்கு கூட சந்தோசம் பற்றியிருந்தது.
அதை அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டு போக ஏழெட்டுப்பெடியள் தேவைப்பட்டார்கள். பெரும்பாலும் மார்பளவுத் தண்ணிர் இருந்ததால் அவர்கள் தண்ணில் நனைவது பற்றி அக்கறைப்படவில்லை.
அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. “சுயமூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட், மோட்டார்கள், ஷெல்கள் இந்த வரிசையில் இதுவும் ஒன்று. தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயம் தான். றால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, இயற்கை வாயு உற்பத்தி கூட இவற்றோடு எண்ணப்படக்கூடியவையே.
அதிலே மினிபஸ், கார், ட்ராக்டர் போன்ற வாகனங்கள் இலகுவாக இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்துகொண்டு வரப்பட்டன.
அவர்களுக்கு வேண்டிய சகல உணவு வகைகளும் நீரில்

கடல் புத்திரன் O 9. சிறிதும் நனையாமல் பத்திரமாகக்கொண்டு செல்ல உதவியது.
சாமான் செட்டுக்கள் கொண்டு செல்வதற்குரிய ஒரே மிதவையாக அது இருந்ததால், ஒரே நேரத்தில் எத்தனையோ தொன்களை கொண்டு சென்றதால் மக்கள் பெடியள் பரவாயில்லை என தட்டிக்கொடுத்தார்கள். தம்பிமார் திலகங்கள்’ என்று சிலர் சிலாகித்தனர். தீவு அமைப்பு இதன்மூலம் கணிசமாக உழைத்தது.
திலகன் விபரித்துக்கொண்டு போனான்.
"பகைமை இயக்கத்திற்கு வழமைபோல் இது பொறுக்காத விடயம். அவர்களும் இதைப்போல் ஒன்றைத் தயாரிக்க முயட் ரிறார்கள். ஆயுதஇருப்பு இருப்பதால், எல்லாம் மிஞ்சப்போனா இயக்கமோதலை தொடங்கிவிடுகிற நெருக்கடியான காலகட்டம், அதனாலை எல்லா ஏ.ஜி.ஏ. அமைப்புகளுக்கும் பணம் தேவையாயிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரிரு ஏ.ஜி.ஏ அமைப்புகளையாவது பலமானதாக வைத்திருப்பது நல்லது என்பது ஜி.ஏ.யின் கருத்து.
அனைத்து இயக்கங்களுக்கும் கடை விற்பனை முகவர் நிலையங்களில் எல்லாம் பொருட்களுக்கு வரி விதித்ததால் மக்களிடமிருந்து முன்னைய மாதிரி உதவியை எதிர்பார்க்கமுடியாது. எனவே இப்படி சேரும் பணமே இயக்கத்தை இயக்க உதவியது."
செல்வமணி அவளர்களிருவரையும் அம்மா கூப்பிடுவதாக வந்து சொன்னாள். அவளை கள்ளமாக அளவிடுகிற திலகனின் பார்வை.கனகனுக்குப் புரிந்தது. இவன் விரும்புகிறான்.மனதில் பச்சாத்தாபம் எழுந்தது. இவனைப் பற்றி நான் சரிவர அறியவில்லை எனவும் தோன்றியது.
கூழ் காய்ச்சியிருந்தார்கள். இருவருக்கும் மணி சிறிய குண்டாளக் கோப்பையில் ஊத்திக்கொடுத்தாள். கமலம் ஏதோ தையல் வேலையில் மண்குந்திலிருந்து மும்முரமாக மூழ்கியிருந்தாள்.
米 来 米

Page 48
92 O வேலிகள் சென்னை வானொலியில் அன்று காற்றாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்கள். அதிகமாக அப்படியான அறிவிப்பு அந்தப் பகுதிக்கும் சரியாக இருப்பது வழக்கம். அதனால் யாரும் தொழிலுக்குப்போகவில்லை. லிங்கன் வந்து அன்டனையும் நகுலனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் பாடுபட்டு எழுதிய கடிதம் அன்டனோடு போய் விட்டிருந்தது. நாலைந்து நாட்களுக்கு முன் எழுதியது. அவளிடம் போய் சேராமல் இழுபடவே அவனுக்கு அந்தரமாக இருந்தது. இருளத் தொடங்கியிருந்தது.
"வாவன்ரா.காம்பில தமிழன் சிந்திய ரத்தம் வீடியோ கசட் இருக்கு. சுந்தரம் வீட்டு ரிவில போட கேட்டிருக்கிறம். ஒம் என்றவையள்’ என்று அவனை திலகன் கூப்பிட்டான். அவளின் நினைவை விரட்ட உதவியாயிருக்கும் என்று புறப்பட்டான்.
காம்பில் யாரும் இருக்கவில்லை. சுவரோடு அகன்ற இரு வாங்குகள் போடப்பட்டிருந்தன. ஆளுக்காள் ஒவ்வொன்றில் ஃபிரியாக ஏறி கால்களை நீட்டினார்கள். படுத்துக் கிடந்தபடி கதையளப்பில் ஈடுபட்டார்கள்.
வாங்கில் கிடந்த புத்தகங்களை அவன் கிளறிப்பார்த்தான். சமூக விஞ்ஞான வெளியீடு.மனதைக் கவர்ந்தது. உதைப்போல் நிறையப் புத்தகங்கள் வெளிவரவேண்டும் என்று நினைத்தான். புத்தகங்களை புரட்டியபோது அவன் எதிர்பார்த்ததுபோல் சாதி பற்றிய கட்டுரை ஒன்றும் இருந்தது.
திலகன் எழும்பி ரூ இன் வண் கசட்டில் இதயக்கோவில் கசட்டைச் செருகினான். காம்ப் முழுவதையும் சோகத்தோடு கூடிய பாட்டுக்கள் ஆக்கிரமித்தன. அவன் மனநிலையில் கேட்க நல்லாயிருந்தது.
“இந்த வீடியோவை முன்னம் பார்த்திருக்கிறாயா?” என்று திலகன் கேட்டான்.பெரும்பாலும் உள்ளுக்க ஒடின படம் என அன்டன் சொல்லியது ஞாபகம் வந்தது. இல்லை என தலையாட்டினான்.

கடல் புத்திரன் O 93
"இந்த முறை கலவரத்தால் கொழும்பிலயிருந்து பல கப்பல்கள் அகதித் தமிழர்களை நிறைத்துக்கொண்டு வந்தன. லங்காராணி, மேரி இப்படி கடைசியாக இந்திய சுற்றுலா சிதம்பரக் கப்பலும் வந்திருந்தன.
கே.கே.எஸ்.துறைமுகத்தில் அவர்கள் இறக்கப்பட்டதையும் அயலிலுள்ள நடேஸ்வராக்கல்லூரி காயப்பட்டவர்களை பராமரிக்கும் ஆஸ்பத்திரி போல செயற்பட்டதையும், அவர்களின் சிறிய பேட்டிகளும் வீடியோவாக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் முழுமையாக பங்களித்திருந்தார்கள். அதோடு பழைய கலவர புள்ளிவிவரங்களை இணைத்து’மிதவாத அரசியல் செயற்பாட்டை விபரித்ததும்.இப்பிரச்சனைகளின் காரணிகள் எவை என்பது பற்றி விளக்கம் கொடுத்ததுமாக. நல்லமுறையில் படமாக்கியிருந்தார்கள்” என்று சிறிய விளக்கமே கொடுத்தான்.
“நீ அருளர் எழுதிய லங்காராணி புத்தகம் வாசித்திருக்கிறாயா?” என்று மேலும் அவன் கேட்டான். அவன் அப்புத்தகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறானே தவிர, காணவில்லை. “இல்லை” என்றான்.
திலகன், தானும் இயக்கத்தில் இழுபடாவிட்டால் வாசித்திருக்க மாட்டேன் என்பது சட்ட்ென புரிய, தவறை உணர்ந்து கொண்டான்.
“77 கலவரத்தின் போது கொழும்பிலிருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் லங்காராணி. அந்த கப்பலில் வந்தவர்களில் ஒருவராக இந்த அருளர் இருக்கவேண்டும். எமது மக்களின் அபிலாஷைகளையும் ஊசலாட்டங்களையும் இளைய மட்டத்தினரின் குமுறல்களையும் தத்ரூபமாகவும் அழகாகவும் படைத்திருந்தார்” பெரிய விளக்கமே கொடுத்தான். “அந்தக்கதை ஒரு சாம்பிள்' அதைவிட மோசமான இம்முறை அவலத்தையும் களஞ்சியப்படுத்தும் முயற்சியாக தமிழன் சிந்திய ரத்தம் வீடியோவை எடுத்திருக்கிறார்கள்” என்று மேலும் சொன்னான். "உனக்குப் படம் பார்த்தா விளங்கும்” என்றவன் பாட்டுக் கசட்

Page 49
94 O வேலிகள் ஒரு பக்கம் முடிந்திருக்கவே மாற்றிப்போட எழும்பினான்.
“டீ ஏதும் குடிக்கப்போறியோ. எனக் கேட்டான்.
“போட்டால் குடிக்கிறதுக்கு என்ன” என்றான் கனகன். திலகன் சிரித்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அவனுக்கு அந்தப் பெரிய கட்டுரையை வாசித்து முடிக்க முடியாது என்று பட்டது. மூடி பழைய இடத்தில் வைத்தான்.
அலுப்படிக்கவே, அவனும் எழும்பி உள்ளே போனான். ஹோலின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு கிரனேட்டுக்கள், எம் 80 பிளேட்டுகளுடன் கூடிய தகரக்கூடுகள், சிறிய வயர்க்குவியல், சற்றுத் தள்ளி பேப்பர் புத்தகக் கட்டுகள், சுவரில் பல நோட்டீஸ் படங்கள் என இருந்தன.
கனகன் வியப்புடன் அவற்றைப் பார்த்தவாறு நின்றான். ஒருவித அறியும் ஆர்வம் அவனுள் எழுந்தது. டீயுடன் வந்த திலகன் ஒரு படத்தைக் காட்டி "இவனை உனக்குத்தெரியுமா” என்று கேட்டான்.
தெரியாது என அவன் தலையை ஆட்டினான். “ஒரு தடவை இங்கிருக்கும் அகதி முகாம் ஒன்றுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்களை வள்ளத்தில் ஏற்றிவந்தபோது நேவியால் சுட்டுக்கொல்லப்பட்டவன்’ அவனோடு கூட இறந்தவர்கள் படங்களும் அந்த நோட்டீசில் இருந்தன. “சிறந்த ஒட்டி. அவனுடைய இழப்பு எங்களுக்குப் பெரிய பாதிப்பு” என்றான்.
அவர்களின் வாழ்க்கை இன்னொரு விதமானது என்பது கனகனுக்குப் புரிந்தது. அதில் பெருமைப்படுவது, கல்யாணம் கட்டி வாழ்வதில்லை. அரசியல் பிரச்சனைகளுக்கு உயிரைத் துறப்பது தான். சாதாரணமாக எல்லாருக்கும் உள்ள கடமைகளை மறந்து விட்டதால் இப்படி ஒரு சிலரின் மேல் போராட்டம் பொறிந்துவிட்டது.
முன்விராந்தைப் பக்கம் பழையபடி இருவரும் வந்தமர்ந்தார்கள்.

கடல் புத்திரன் O 95 பனைமரங்களிலிருந்து இதமான காற்று தவழ்ந்து வந்தது.
“எப்படியடா.உன்ரை ஆள்? என்ன சொல்றாளடா?” என்று திலகன் நக்கல் சிரிப்புடன் கேட்டான்.
அவனுக்கு ஒட்டை வாயன்’ என்று அன்டனைத் திட்டவேண்டும் போல் தோன்றியது.
‘எந்த விதமாக இயக்கத்துக்குப் போனான்’ என்பதை அறிய நல்ல சந்தர்ப்பம் என கனகனுக்குப் பட்டது.
“என்னை விடடா.உனக்கு எப்படியடா இதில் இன்ரரஸ்ட் வந்தது” என்று கேட்டான்.
“எதைக் கேட்கிறாய்” என விளங்காமல் திலகன் அவனைப்பார்த்தான். மணியைப் பற்றிக் கேட்கிறானோ என்று நினைத்தான்.
அவன், ‘இயக்கத்துக்குப் போனதைக் கேட்கிறேன்” என்றபோது மூச்சு வந்தது.
EK
ஒ! அதுவா.ஒருவிதத்தில் உங்க நடந்த பிரச்சனைதான் காரணம் என்று சொல்லலாம்” தொடர்ந்தான்."அக்கா தற்கொலை செய்ய முயற்சித்ததை அறிந்தபோது வீட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சின்னக்கா அண்ணனை ஏசினாள். கடைசியில் என்னைப் போகச்சொன்னார்கள். சாதியைத் தூக்கி பிடிப்பதும் அதன் காரணமாக அக்காவை வெறுப்பதும் எனக்குப் பிடிக்காமல் இருந்தது. இங்க வந்தபோது எனக்கு உங்கள் எல்லாரையும் பிடிச்சுப்போச்சு. திரும்பியபோது எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு ஆவலாக செய்திகள் கேட்டார்கள். இருந்தாலும் சின்னக்கா அடிக்கடி போறதை விரும்பவில்லை. அண்ணன் ஏன் அப்படி மாறினானோ தெரியவில்லை. துப்பரவாக போவதை விரும்பவில்லை. சின்னதுகள் அக்காவைப்பற்றிக் கேட்க ஆசைப்பட்டதுகள். அடுத்த கிழமை நானாகவே இங்கு வர வெளிக்கிட்டேன். அக்காவை பார்க்கப்போகிறேன், ஏதாவது சொல்ல வேணுமா என்று விசமத்துக்குக் கேட்டேன். அண்ணன் என்னை அடிச்சு அறையில் பூட்டி வச்சுட்டான். இந்த இயக்கத்தைச்

Page 50
96 O வேலிகள் சேர்ந்த குமார் என் பள்ளி நண்பன். என் பிரச்சினையை அவனோடு ஏற்கனவே கதைத்திருந்தேன். அவன் ஒரு ஐடியா தெரிவித்தான். “டேய் நீ வந்து எங்க காம்ப்பிலே இரண்டு நாள் நிண்டிட்டுப்போ. உன்னை இயக்கத்திற்குப் போனவன் என்று நினைப்பினம். பிறகு உன்னோட யாரும் சோலிக்கு வரமாட்டினம்’ என்றான்.
தம்பி மூலமாக அவனுக்கு செய்தி அனுப்பினேன்.
அவன் வீட்டில் வந்து என்னைக் கூப்பிட்டான். அண்ணனுக்கு இயக்கம் என்றால் சிறிதுபயம். பேசாமல் கதவைத் திறந்து விட்டான். எங்கட ஏ.ஜி.ஏ. பிரிவில் வேலை செய்வது நல்லதில்லை என பட்டதால் இங்கே வந்தேன். இப்ப என் மனசுக்கு ஆறுதல். அக்காவை வெறுக்கிறதுக்கு சரியான காரணமில்லை. சாதி கெளரவப்பிரச்சினைகளை எவ்வளவு காலம் வைத்திருப்பார்கள் பார்க்கலாம்.”
கனகனுக்கு கேட்க ஆச்சரியமாக இருந்தது.
மாலை எட்டு மணிக்கு பெடியள் செட் காம்பிற்குள் புகுந்தது. சுந்தரத்தின் வீட்டில் வீடியோ போட்டுப்பார்க்கும்போது அன்டனும் நகுலனும் வந்துவிட்டார்கள்.
படம் யாழ்ப்பாண மக்களுக்கு உண்மைகளை சிறிதளவாவது உணரவைக்கும் தன்மை படைத்ததாக இருந்தது. அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் ஏமாற்றியதை கோர்வைப்படுத்தி விளக்கமாக தெரியப்படுத்தினார்கள்.
"இந்த வகைப்படங்களையும் செய்திகளையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பதால் தான் எங்களுக்கு ஒரளவு மக்களைப்பற்றி அறிய முடிகிறது. சிந்திக்க முடிகிறது. மக்கள் நல ஆய்வுத் திட்டங்களை வரையறுத்து செயல்படுத்த ஊக்கம் பெறுகிறோம்".திலகனின் பேச்சு சிறிது அசரவைத்தது. இயக்கம் இரு கை நீட்டி கூப்பிடுவதுபோல் பிரேமை தோன்றியது. விலங்கிடப்பட்ட தமிழன்னை விடுதலைக்காக கூப்பிடுவது போலப்பட்டது.

கடல் புத்திரன் O 97 படம் முடிந்தபிறகு பெடியள் கலைய அவர்கள் காம்ப்பிற்கு திரும்பினார்கள்.
வீடியோக் கசட்டை வைத்துவிட்டு பொறுப்பாக நிற்கிற ரவியோட கதைத்துக்கொண்டு சமையலுக்கு உதவி செய்தார்கள். அங்கேயே சாப்பாட்டையும் முடித்துக்கொண்டார்கள். கருவாட்டுக் குழம்பும் சோறும் ருசியாக இருந்தது. புழுக்கமாக இருக்க.
ரவி, நாங்க போயிட்டு வாறம் சில வேளை அக்கா வீட்ட தங்கியிடுவன்’ என்று விடைபெற்றான். திலகன் வரும்போது காற்று அடங்கிவிட்டிருந்தது.
மன்னிவீட்டு வளவில் சாக்கையும் பாயையும் போட்டு படுக்கை விரித்தார்கள். வசந்தி கடிதம் தர அந்தரப்பட்டதையும் வேலை அலைச்சலில் பிறகு வருகிறேன் என காய் வெட்டிப்போனதையும் அன்டன் தெரிவித்தான். திலகன் சிரித்தான். “இதை நீ சொல்லாமலே விட்டிருக்கலாம்” என்றான்.
“ஏன் கனகு நீ அவயள் வீட்டில் நேரே போய் கேட்டுக்கட்டிக் கொள்ளன். எங்களைப்போல நீ இயக்கமில்லையே” என்று நகுலன் கேட்டான். திலகனுக்கு அப்பவேஅன்டனின் நிலைமை புரிந்தது. பாசறை வகுப்புகள் நடைபெறும்போது சுயவிமர்சனம் கடைசியாக நடைபெறும் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய பல விசயங்களை அதிலே தெரிவிப்பார்கள். தம்மைப் பாதித்த சாதி, சுய, பெண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் கணிசமான அளவு சொல்வார்கள். அன்டனும் தன்னுள் மறைத்து வைத்திருந்த வசந்தி மேலுள்ள காதலைத் தெரிவித்திருந்தான்.
காலம் வரதெரியப்படுத்தலாம் என காத்திருந்தான். இயக்கம் என வெளிக்கிட்டபிறகு அவனில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆபத்தை முதலில் எதிர்நோக்கிப் போகிறவர்களாக இருப்பதால் வாழ்வைப்பற்றி திடமாக நினைக்க முடியாதிருந்தது. கனகன் அவளை விரும்பியபோது உதவி செய்திருக்கிறான்.
அன்டன்மேல் அனுதாப உணர்வு பிறந்தது. யார்யார் மேல்

Page 51
98 O வேலிகள் அனுதாபப்படுவது. வெறுப்புடன் சிரித்துக்கொண்டான்.
“டேய், நகுலன் சொல்றது சரிதான். காலத்தைக் கடத்தாமல் வீட்டில் நேரே போய் கதைத்துப்பார். இல்லாவிட்டால் நாங்கள் கதைக்கிறமடா" திலகன் கூறினான். ஆச்சரியத்துடன் கனகன் அவர்களைப் பார்த்தான். ‘இயக்கம் பொதுவாக பலரை மாற்றிவிட்டது. சிந்தனை வீச்சையும் செயல்துடிப்பையும் சிறிது கூட்டிவிட்டது. புரிந்தது. பெடியள் அணியில் திலகனைத்தவிர மற்றவர்கள் உள்ளூர். அவன் சம்பந்தப்படுவதை நல்லபடியாகப் பார்க்கமாட்டார்கள். அண்ணா உட்பட பலர் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தி விடுவார்கள்.
பாவம் அண்ணி.அவட ஒரே இரத்த உறவாய் வந்து நிற்பவன் இவன். தன் விடயத்தால் அக்கா தம்பியின் உறவு பாதிக்கப்படவேண்டாம். கணநேரத்தில் ஒடிய சிந்தனையால் “மச்சான் நேரம் வரேக்கை நானே கேட்கிறேன்” என்றான்.
米 米 米
ஐயனார் திருவிழா அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று ஆடு வெட்டும் வேள்வி சிறப்பாக நடைபெறும். எல்லாரையும் மகிழ்ச்சி பற்றிக்கொள்ளும். ஆண்பகுதியினர் வீட்டிலே கசிப்பு. கள் போத்தல்களைச் சேர்ப்பார்கள். பெண்கள் வீடு மணக்க ஆட்டுக்கறி சமைப்பார்கள்.
ஒவ்வொரு வள்ளக்காரர்களும் இரவில் தம்மொடு தொழிலுக்கு வந்தவர்களை. வருபவர்களை, நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்கள்.
செல்லன் அப்படி கனகனைக் கூப்பிட்டிருந்தான். வீட்டுக்குள் நுழைகிறபோது ருசியான மணம் அவனை மயக்கியது. அவன் வயசு மட்டத்தில் ராஜன், குகன், சபேசன் போன்ற பெடியளும் செல்லன் வயசு மட்ட ஆட்களுமாக பலர் இருந்தனர்.
ராஜன் அண்மைக்காலமாக ஊரால் விமர்சிக்கப்பட்டு வருபவன். குலனைப்பகுதியில் மணம் முடித்தவன். மனைவியைத்

கடல் புத்திரன் O 99 தினமும் அடித்துத் துன்புறுத்துவதாக அவனைப்பற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. வதந்திகள் பல. அதனால் பொதுவாக அவனை பலருக்குப் பிடிக்காதிருந்தது.
வெறியில் இருந்த அவன் கனகனை விமர்சிக்க வெளிக்கிட்டான். “இயக்கப்பிரபு வந்திட்டார்’ அவனின் (திலகனின்) கையாள்தானேடா நீ” என சேட்டைப் பற்றினான். “என்னைப்பற்றிக் கதைக்க உனக்கு என்னடா இருக்கிறது. பொத்தடா வாயை" என அவனைப் பிடித்துத் தள்ளினான். அவன் தொடர்ந்து தாக்க முயற்சிக்கவே.கனகனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. உருட்டித் தள்ளினான். பலருக்கு இவன் அவர்களுடன் சேர்வது பிடிக்காமல் இருந்தது. அந்த நினைப்பினாலும் மறிக்க வந்தவர்களையும் உதைத்துத் தள்ளினான். செல்லன் பாய்ந்து இவன் திமிரப் பிடித்தான். மற்றவர்கள் ராஜனை அமுக்கினார்கள்.
“வளர்ந்துவிட்டவன்’ என்ற நினைப்பு செல்லனுக்கு உறைத்தது. தனியாளாக தொழில் செய்யக்கூடிய வல்லமை படைத்தவன். ராஜனைப் பார்த்தான். அவன் சிறிது மோடன்.
மருண்டு நின்ற கமலத்தையும் செல்லமணியையும் பார்த்தான். அவனுள் ஏதோ யோசனைகள் எழுந்தன. ஒருமாதிரி இருவரையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தான். பரிமாறுகிறபோது கமலம் கனகனை அனுதாபத்துடன் பார்த்தான்.
கை கழுவியதோடு அவன் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான்.
மனசு குழம்பியிருந்தது. நேரே வீட்டை போய் சேர்ந்தான். நேரம் சாமத்தை எட்டுவதாக இருந்தது. கதவு சாத்தியிருந்தது.
தட்டி எழுப்ப மனம் இல்லாததால் முன்னால் இருந்த மண் விராந்தையில் காலை நீட்டிப் படுத்தான். குளிர் தரை மனசுக்கும் இதமாக இருந்தது. முகிற் கூட்டங்களின் அசைவும் நட்சத்திரங்களின் மினுமினுப்பும் சிந்தனை ஒட்டத்தைத் தீவிரப்படுத்தியது.
கூடுதலாக உழைப்பைப் பெற வழிபார்க்கவேண்டும். எப்படி

Page 52
100 O வேலிகள் முயலலாம். தற்போதைய நிலையில் வீட்டுச்செலவுக்கு முப்பது முப்பதைந்தே வருகிறது. அதோடு கொஞ்சம் கறிக்கும் வருகிறது. சிறிய வள்ளங்களில் தொழில் நடப்பதால் அங்கே வளப்பம் நிலவவில்லை. பெரிய வள்ளம் இல்லாதிருந்தும்,கடல் வலயச் சட்டங்களும் அவர்களைப் பெரிதாகப் பாதித்திருந்தன.
‘சுயமான தொழில் ஒரளவு பரவாயில்லை போல பட்டது. பகலிலே கடையும் ஒன்றுபோட்டால் ஒரளவு சமாளிக்கலாம் என நினைப்பு திடப்பட்டது.
அப்படியே கிடந்தவன் தூங்கிப்போனான்.
அடுத்தநாள் தொழிலுக்குப்போக அலுப்பாக இருந்தது. வாசிகசாலைக்குப்போய் பேப்பரைப் பார்த்துவிட்டு.செல்லன் வீட்டுக்குப்போனான். விருந்தின் குப்பைகள் துப்புரவாக்கப் படாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. வலையை எடுத்துப்போட்டு சரிபார்க்கத் தொடங்கினான். திருவிழாவின்போதும் நண்பர் செட்டைக் காணவில்லை. பிறகும் கண்ணில் படவில்லை. ‘எங்கே போய் தொலைந்துவிட்டார்கள்?”
அவனால் யோசிக்க முடியவில்லை.
அண்ணி வீட்ட போகாமல் வந்திருந்தான். கமலம் தேத்தண்ணி கொண்டு வந்து வைத்தாள். அவளுடன் கதைத்துப்பார்த்தால் என்ன? என்று தோன்றியது. மன்னியிட ஃப்ரெண்டு. இவளுக்கு திலகனைப் பற்றி எதுவாச்சும் தெரிந்திருக்கும்.
“மச்சான் ஆட்களை காணவில்லை. உனக்கும் ஏதும் தெரியுமா” என்று கேட்டான். அவள் அவனைப்பார்த்து முறுவல் பூத்தாள். நேற்று நடந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
“அவயள் காம்பை வீட்டை திரும்பகொடுத்திட்டினமாம் என்றாள். மேற்கொண்டு கேட்க தயக்கமாக இருந்தது. மன்னியிட்ட ஒருக்கா போய் வருவது நல்லது போலப்பட்டது. "அப்பா வந்தால் சொல்லு. மன்னி வீட்டை நிற்ணிறேன்” என்று விட்டு கப்பை அவளிடம் கொடுத்துவிட்டு எழும்பினான்.
அங்கே.அவர் சமைத்துக் கொண்டிருந்தார். “உன் ரை

கடல் புத்திரன் O 10 கொண்ணரை காணலை. இண்டைக்கும் ஏதும் பார்ட்டி நடக்கிறதோ?” என்று கேட்டார். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. செல்லனையும் காணவில்லை. ஒருவேளை இருக்குமோ என்று நினைத்தான். தெரியவில்லை என பதிலளித்தான்.
, இண்டைக்கு தொழில் இருக்காது போல தோன்றியது. "மச்சான் ஆட்கள் எல்லாம் எங்கே அண்ணி” என்று விசாரித்தான். “போட் ஒட்டத்தை கையளிக்கினம்’ என்றான். 'நீ காணலையா?” என்றார். "அப்பா வந்திட்டார். உன்னை வரட்டாம்” என்றாள் கமலம். தொழிலுக்குப் போகப்போறார் என்று புரிந்தது. படலையைத் திறந்துகொண்டு போகிறபோது செல்லன் வலையை ஒழுங்கு பண்ணுவதில் மும்முரமாக இருந்தான்.
தொழிலில் ஈடுபடுறபோது.சுயநினைப்புகள் பறந்து போகிறது.
வலையை இழுத்து கடலில் போட்ட பிறகுசிறிது ஒய்வு கிடைத்திருந்தது.செல்லன் பீடி ஒன்றை எடுத்து பத்தவைச்சான். கனகன் அவனிடமிருந்து வெத்திலை பாக்கை வாங்கி வாயில் போட்டுக்கொண்டான். நிலாவெளிச்சம் இரவை பகலாக்கியது. கோட்டைப் பக்கமிருந்து அடிக்கப்பட்ட ஒரு குண்டு எங்கேயோ விழுந்து வெடிக்கிற சத்தம் கேட்டது. கடற்கரைப் பக்கமிருக்கிற அந்தக் கோட்டையால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அயலில் இருந்த குடியிருப்புகளும் கடைகண்ணிகளும் அதிகமாகக் கதி கலங்கின. "சரிதான். இவங்கட கொட்டத்தை அடக்கினால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்” செல்லன் அலுப்புடன் பெருமூச்சுவிட்டான். சத்தம் அடங்கிவிட இயல்பான போக்கில் கதைக்கத் தொடங்கினார்கள்.
ராஜனைப் பற்றிப் பேச்சு வந்தது. இவனைப்பற்றிய விமர்சனம் வாலையம்மன் பகுதி முழுதும் பரவியிருந்தது. ‘இவயள்ட பெடியன் இன்னொரு பகுதியில் முடிச்சுவிட்டு தலைகீழா நிற்கிறான்’ என்ற போது ஊரே திட்டியது. குலனைக்கும் இவர்களுக்கும் இரத்தத்தொடர்பு இருந்தது. அங்கே.அவர்களின் ஒரு வேர்ப்பகுதி (சகோதரர்களின்

Page 53
102 O வேலிகள் பிள்ளைகள் என) வேரூன்றி படிப்பு உத்தியோகம்.இவற்றில் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டிருந்தது. எழுபது எழுபத்தைந்து குடும்பங்கள் இருந்தபோதும் பார்க்கிறபோது எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள். தொழில் செய்பவர்கள் ஒன்றிரண்டுபேர் மட்டுமாய் அருகிவிட்டிருந்தது.
அங்கு இருபது வீதத்தில் அகப்பட்ட ஒரு குடும்பத்தில் ராஜன் முடித்திருந்தான். இளவயதிலே தாய் இறந்துபோனதும் தகப்பன் தாய் மேல் வைத்திருந்த அளவுக்கு அதிகமான அன்புமே அவளை இந்த மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. அதனால் அவள் பிரச்சனைக்குள்ளானபோது அனாதரவானாள்.
அவளின் சித்தப்பன்.அண்ணனின் போக்கைக் கவனித்துவிட்டு நல்ல பெடியன் என்று ராஜனுக்கு கட்டி வைத்திருந்தார். படிப்பறிவுக்கு வாலையம்மன் பகுதி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் அவன் உடம்பு வளர்ந்திருந்தபோதும் காட்டு மனிதன்போல இலகுவில் பொறுமையிழப்பவனாய் இருந்தான்.
அவள் பெட்டையாய் இருந்தாள். இவன் எதிர்பார்ப்புக்கும் அவளுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அதை அறியும் வயசும்அவளுக்கு இருக்கவில்லை. அது இருவர் வாழ்வையும் குட்டிச் சுவராக்கிவிட்டது.
“உவன் மனிசியைப் போட்டு அடிக்கிறானாம்” கனகனின் பேச்சைக்கேட்டு விட்டு செல்லன் சிரித்தான்.
“ஊர் உலகத்தில் நடக்காததா?” உனக்கு அவன் மேல் ஆத்திரம்” என்றான். தொடர்ந்து “குடும்ப விசயம் பாரு. மோசமானாலும் யாரும் கதைக்கேலாது” என்றான்.
"வாசிகசாலைக்குழு தலையிடலாம் தானே” என்றான் அவன். “தம்பி உவயளோட சேர்ந்து இப்படிக் கதைக்கிறாய்” என்றான். இப்படித் தர்க்கித்துக் கொண்டிருக்கிறபோது பிளாஸ்டிக் படகு ஒன்று தீவுப்பக்கமாக நோக்கி இரைந்துகொண்டு வந்தது. கூப்பிடு தொலைவில் வந்தபோது அன்டன் மோட்டரைப்

கடல் புத்திரன் O 103 பிடித்திருப்பது தெரிந்தது.
அவன் ‘அன்டன்’ என்று கத்திக் குரல் கொடுத்தான். அவனும் சிலோ பண்ணி.
திருப்பிக்கொண்டு வள்ளத்திற்க கிட்ட ஒட்டிவந்தான். அவனோடு நகுலனும் திலகனும் இருப்பது தெரிந்தது. “என்னடாப்பா விசயம் பெரியவர் ஒருத்தரையும் ஊர்ப்பக்கம்
y) o
காணலையே' என்று கேட்டான்.
६६ p לל
அக்கா சொல்லியிருப்பாவே' என்றான் திலகன்.
“வீட்டை கொடுத்துவிட்டாச்சா” என்று கேட்டான்.
Ké e c
ஒம்” என்ற திலகன் இவனும், அவனும் இனி அக்கரையிலிருந்து போர்ட் ஒடுவினை" என்றான். “இவன் தலைமைக்காம்புக்கு போய் விடுவானாம்” என்றான் அன்டன்.சோகமாக.
செல்லனுக்கும் திலகன் மேல் அனுதாபம் பிறந்தது. “தம்பி அக்காவைப் பார்க்க அடிக்கடி வருவியோ?” என்று கேட்டார். “வராமல் அண்ணை.கிழமையிலே ஒரிரு நாள் வரக்கூடியதாகயிருக்கும். இந்த ஏ.ஜி.ஏ.யிலே தொடர்ந்து வேலை செய்யக் கேட்டிருக்கிறேன். ஒம் என்றவர்கள்’ என்று விளக்கமளித்தான்.
“எங்களை எல்லாம் மறந்து விடுவியோ?” கனகு கேட்டான். “எப்படி மறக்க முடியும்?” என கண்கலங்க பதிலளித்தான்.
“சரி, கனகு நாங்கள் தீவு ஏ.ஜி.ஏ.யை சந்தித்துவிட்டு திரும்பவும் வேண்டும். பிறகு சந்திக்கிறோம்” என்று விடைபெற்றான். கையசைவோடு பிரிந்து சென்றார்கள்.
நட்பை சுமந்த அவர்களின் நடத்தைகளை சூழவுள்ளவர்கள் எப்படி விமர்சித்தாலும் தொடரவே செய்யும்.
படகு விரைந்தது.

Page 54
104 O வேலிகள்
மூன்றுநாள் கழித்து திலகன் வந்தான். எல்லாப் பகுதியிலும்
வடிவேலின் இறப்புச்செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா!
அவனைக் கொன்று போட்டார்களாம்’ என்றான்.
"நீ என்ன புதிதாய் அறிந்தாய்” என்று கனகன் கேட்டான்.
ஒவ்வொரு பெரிய மரணங்களின் போது பலவித கதைகள் உலவுவது வழக்கம். “பெரிய” என்றது ஒரளவு அநியாயத் தன்மை கொண்டதைக் குறிக்கும்.
“கரையில்.பறிகொடுத்தது.பற்றிய விசாரணைதான் அவனை சாவில் தள்ள விட்டதுபோல் படுகிறதடா.” என்றான். வடிவேலுக்கும் யாழ் பிரதேசப்பொறுப்பாளர்க்கும் மத்தியில் முன்னமே கசப்புகள் இருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் விசாரணை, அது இது என அவமானப்படுத்தி அவனை வெகுவாக வெருளச்செய்துவிட்டார்கள். அதிருப்தியுற்ற அவன் றிசைன் லெட்டரை கையளித்திருக்கிறான். அவன் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக உழைத்தவன். ஒருமுறை இவர்களுக்கு போட்டியாக முளைக்க முயன்ற சிறுகுழுவோடு முழுக்கடீல் பண்ணியவன் இவன் என்பர். போஸ்ட் ஒஃபீஸ், வங்கிக்கொள்ளை, சிவில் நிர்வாகம் குழப்பல் இவற்றில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த குழுக்களில் குமரனின் குழுவும் ஒன்று.
அவன் வடிவேலனின் இயக்கத்தை குருபீடத்தில் வைத்து மரியாதை செலுத்திவந்தவன். ஐக்கியமின்மையால் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் தன் குழுப் போக்கிலே இயங்கி வந்தான். வளர்ச்சியின் ஒரு கட்டமாக அரசபடைகள் வருகிற பாதையில் கண்ணிவெடி வைத்துவிட்டு அருகிலிருந்து பனங்காணியில் பலநாளாய் காத்துக்கிடந்தான். ஊர் அவன் முயற்சியை அறிந்திருந்தது. மோதிரக்கையால் குட்டு வாங்கணும் என்ற ஆசை அவனைப் பிடித்திருந்தது. நிலக்கண்ணி வெடிப்பில் சாதனை படைத்த அவ்வியக்கத்திற்கு அழைப்பு அனுப்பினான். 'வந்து வெடி ஏற்பாடுகளை பார்வையிட்டுக் குறைந்திருந்தால் தெரிவிக்க’ சொல்லி கேட்டாள்.
அந்த நேரம் வடிவேலின் தலைமையில் ஒரு குழுவை இயக்கம்

கடல் புத்திரன் O 105 அனுப்பியது. எல்லாவற்றையும் சரி பார்த்தது. “திறமாக வைத்திருக்கிறீர்கள்” என்ற கருத்து தெரிவித்தவன், எதிர்பாராத தருணத்தில் குமரனை சுட்டுவிட்டு அகன்றான்.
அவனை காம்பிலே வந்து பதிலளிக்கச் சொல்லி பொறுப்பாளர் கட்டாயப்படுத்தியபோது அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் ஆட்கள் (தோழர்கள்) நெருங்கியபோது சயனைட்டைக் கடித்து செய்தியாகிவிட்டான். அதன் எதிரொலியாக அப்பகுதியிலிருந்து பல நண்பர்கள் ரிசைன் லெட்டரைக் கையளித்தார்கள். ஒரு வாரத்தில் கோட்டையாக இருந்த அப்பகுதி இன்று மறுப்பைக் காட்டி நிற்கிறது.
எல்லா இயக்கங்களிலும் உள்ளுக்குள் நடக்கும் குழப்பங்களை தடுத்து நிறுத்தவெளியில் ஒரு பலமான ஐக்கிய அமைப்பு கட்டப்படாமலே இருந்தது. எனவே கட்டுப்பாடற்ற போக்கில் நிகழும் குழப்பங்கள் தொடர்ந்தன. விடுதலைக்கான நம்பிக்கையை அது பெருமளவில் சிதைத்தது.
மணி இருவருக்கும் தேத்தண்ணி கொண்டு வந்தாள். வெளிய வந்த அவளின் அம்மா, "தம்பியைக் கண்டு கனகாலம்” என்று முகமன் விசாரித்தார்.
"இங்காலை அவ்வளவாக அலுவல் இருக்கவில்லையக்கா" என்று மரியாதையாகப் பதிலளித்தான். மணியை அவன் ஏக்கத்தோடு பார்ப்பதை கனகன் பார்த்தான்.
அவள் அழகு திலகனை மயக்கியது. கழுத்தில் முடிச்சுப் போட்டு வாழும் காலம் வருமா? என்ற எண்ணம் அவனை
வாட்டியது.
வலையில்.
நாட்கள் போவது வேகமாகப் பட்டது.
அவன் வலையை கிளறிக்கொண்டிருந்தபோது செல்வமணியும் தாயும் வாசிகசாலையில் படம் ஒடினம் என கிளம்பினார்கள். கமலம் அண்ணி விட்டை டோயிருப்பாள் என நினைத்தான். வீடு

Page 55
106 O வேலிகள் அமைதியாகவிருந்தது. உல்லாசமாக வாய் காதல் பாட்டொன்றை முணுமுணுத்தது. செல்லன் சிறிது தள்ளாட்டத்தோடு வந்தான். ‘கள் அடித்திருக்கவேண்டும்’
“தம்பி இண்டைக்கு சிறிது உள்ள போய் (ஆழ்கடல்) போடணும். சுறுக்காய் முடி’ என அவனும் குந்தி வலையை இழுத்து செக் பண்ணினான்.
“அட பெரிய ஒட்டையாய் கிழிந்திருக்கிறதே" என்றவன் நூல் முடியவே 'தம்பி, உள்ளுக்க போய் யன்னல் கட்டிலே வைச்சிருக்கிற நூலை ஒருக்கா எடுத்துவா” என்று கூறினான்.
‘ஒருவேளை கமலம் இருப்பாளோ? என்ற சந்தேகம் எழ கால்கள் தயங்க நின்றான்.
“யாருமில்லை போய் வா தம்பி” என்று அவன் வற்புறுத்த உள்ளே சென்றான். யன்னல் கட்டை தடவுறபோது வெளிக்கதவை செல்லன் அறைந்துபூட்டியது கேட்டது. சடாரெனத் திரும்பியவன் “என்ன வேணும்” என்ற கமலத்தின் குரலைக் கேட்டான். அவள் சட்டை ஒன்றைத் தைத்துக்கொண்டிருந்தாள். வெளியில் அவனுடைய கூப்பாடும் கேட்டது. “முருகேசு, சுப்பன், தியாகு, நடேசு, ஒடிவாருங்கள். உவனெல்லோ கதவை அடைச்சுப்போட்டு என்ரை வீட்டில் இருக்கிறான்” உடனே, சனம் கூடிவிட்டது. கனகன் அவமானத்தோடு கதவைத்திறந்து வெளியே வந்து நின்றான். பின்னாடி கமலமும் வெளியே வந்தாள்.
இப்படி ஒரு சிலர் தம் மகளை கரைசேர்ப்பது அங்கே வழக்கமாக இருந்தது. "சீ என்னை இப்படி மாட்டி வைச்சுவிட்டினமே மனசடிப்புடன் வாயடைத்து நின்றான். அவனுடைய நண்பர்கள் இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. மச்சான் சொன்னபோது ‘உண்டு இல்லையா’ என வசந்தி விடயத்திலே அணுகியிருக்கவேணும். பாழாய் போன நிதானம். இப்ப மண்டையை உடைக்க வைக்கும்போல இருந்தது.
கமலம் கண்கள் கலங்க விழித்தபடி நின்றாள். ‘அப்பன் இப்படி ஒரு பிளான் வைச்சிருக்கிறான்’ என்று அவள் எதிர்பார்க்கவில்லை. புனிதம் வளவுக்குள் நின்றபடி அவளை

கடல் புத்திரன் O 107 அனுதாபத்தோடு பார்த்தாள். ‘அக்கா’ என ஒடிப்போய் அணுகமுடியாது என்பது புரிந்தது. அம்மாவும், தங்கச்சியும் படத்திற்கு போனதற்கு உள்ளுக்குள் திட்டித்தீர்த்தாள்.
வாசிகசாலைக்குழு அடுத்தநாள் விசாரிப்பதாக அறிவித்தது. அன்றிரவு அவனும் செல்லனும் தொழிலுக்குப்போகவில்லை.
அடுத்த நாள் விசாரணையின்போது அன்ரன், நகுலன் எல்லோரும் கூட்டத்தில் இருந்தார்கள். நண்பனை அநியாயமாக செல்லண்ணை மாட்டி விட்டிருந்தது அவர்களுக்குப் புரிந்தது.
நெடுக அங்கேயே இருந்து வலை சிக்கெடுப்பது, செப்பனிடுவது என்று இருக்கிறவன். விரும்பக்கூடிய சாத்ரியங்களே வெளியில் தெரிந்தன.
“நீ என்ன சொல்கிறாய்?” பரமேஷ் அவனைக் கேட்டான்.
அவள் கழுத்தில் ஐயனார் கோவிலில் வைத்து தாலியைக் கட்ட வைச்சுவிட்டார்கள். அவனுள் பூகம்பம் வெடித்தது. 'உன்னை என்ன செய்கிறேன் பார்’ என அவளை வெறுப்புடன் பார்த்தான்.
பிரேமைக் காதலி.வசந்தியின் ஒவியம் அவனுள் அழிய முடியாமல் கிடந்து படபடத்தது. அவன் உள்ளுக்குள் அழுத அழுகை எழுத்தில் வடிக்கமுடியாது.
செல்லன் கோயில் பக்கமிருந்த தனது நான்கு பரப்பு வளவில் வாசிகசாலைப் பெடியள் உதவியுடன் மண்வீடு ஒன்ற கட்டி ஒலையால் வேய்ந்து கொடுத்தான். கனகனின் நிலைமை புரிந்ததால் அன்டனும் நகுலனும் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். சோகத்தில் மிதக்கவே கனகன் வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்குப் போனான். திரும்பும்போது நிறையக் கள்ளைக்குடித்துவிட்டு போனான்.
கன நேரத்திற்கு பிறகு சுயநினைவு வர தானும் ஒரு மிருகம்’ என்பதை உணர்ந்தான். அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போயிற்று. அவளை ஏறெடுத்து பார்க்கவே வெட்கப்பட்டான்.
அடுத்தநாள் அண்ணியும் அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள்.

Page 56
108 O வேலிகள் அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக்கொள்” என்று அவர் தேற்றினார்.
உள்ளே இருவரும் சென்றபோது அவள் தன்னையறியாமல் அண்ணியின் தோளில் சாய்ந்துகொண்டு அழுதாள். அவன் அண்ணனோடு கதைத்துக்கொண்டு வெளியில் இருந்தான். ‘அண்ணி’ என உள்ளே வந்தபோது அவள் அழுதது அவனை குற்றவுணர்வில் தள்ளியது. 'டீ வைச்சுக்கொண்டு வா’ என்று அவளிடம் சொல்ல வந்தவன் “ஒன்றுமில்லை அண்ணி, சும்மா வந்தேன்” என்று விட்டு வெளியேறினான். அண்ணி இருவருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்தார்.
இவர்கள் இருவரையும் பகிடி பண்ணி கதைத்துவிட்டு விடைபெற்றபோது “அக்கா” என கமலம் அவர் கையைப் பற்றினாள். “எடியே, என்னடி விசயம்" என்று அவளை இழுத்தனைத்து ரகசியமாக அவள் கண்களில் உருண்டு வந்த கண்ணிரை துடைத்துவிட்டார். அவருக்கு உதவியாக நின்ற அவளின் பழைய ஞாபகங்கள் வந்தன.
"சீ என்னடா வாழ்வு’ என அவனுக்கு மனம் வெந்துபோய் கிடந்தது.
செல்லனோடு தொழில் பார்ப்பதை விட்டு விட்டான். அவளுடன் முகம் கொடுக்க முடியாமையால் நேரம் சுமையாய் பொறிந்தது. நண்பர்களைப் பார்க்க கரைப் பக்கம் வெளிக்கிட்டான்.
அன்டன் போர்ட்டிலே ஆட்களை நிறைத்துக்கொண்டு நின்றான். நகுலன் அவுட்போட் மோட்டரோடு இருந்தான். அவன் கனகனையும் போர்ட்டில் ஏறச்சொல்லி கையசைத்தான்.
சிறிய அலைகளைக் கிழித்துக்கொண்டு லாவகமாக போர்ட் விரைந்தது. இதமான காற்று வீச கனகன் பண்ணைப் பக்க நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான். டிக்கட்
காசை சேர்த்தபிறகு அன்டன் அவனுக்கு பக்கத்தில் வந்தமர்ந்தான்.

கடல் புத்திரன் O 109
“என்னடா விசயம்" என்று விசாரித்தான்.
t(
டேய் கடையொன்று போட விரும்புறன். நீங்க தான் உதவி செய்யணும்" அவன் கேட்டான். அன்ரனுக்கு கண்கள் கலங்கின. எங்கோ பார்த்துச் சமாளித்துவிட்டு ‘அவனை நேரில் பார்த்துச்சொன்னான். “டேய் உனக்கில்லாததாடா மச்சான்” என்று அவன் தோள்மீது கையை வைத்தான். “ஞாயிற்றுக்கிழமை நேரம் வருமடா, அப்ப வாறமடா" என்றான். அரசியல் பற்றியும் திலகன் பற்றியும் கதைத்துவிட்டு அவன் விடைபெற்றான்.
வீட்டே வந்தவன் “தொழில் இல்லாது நெடுக இருக்கமுடியாது’ என்று பலமாக யோசித்தான். ‘நண்பர்களிடமோ உறவுகளிடமோ கடன் வாங்கியாவது சமாளிக்கவேண்டும்.அவனைக் கண்டால் சிறிது பயத்துடன் ஏறெடுத்துப் பார்க்கிற அவளிடமும் நேரடியாக மன்னிப்புக் கேட்கிறது நல்லதுபோல் கேட்டது.
கமலம் என்று கூப்பிட்டான். அவன் குரல் கம்மியிருந்தது. விளக்கை ஏற்றிக்கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்களைக் கொஞ்ச நேரம் பார்த்தான்.
“உங்கப்பாவோட இனிமே தொழில் பார்க்கப்போறலை” என்றான். அவளுக்கு அக்கரையில்லாத விசயம் போல.குசினிப் பக்கம் போக முயன்றாள். "அப்ப, எனக்கிருந்த குழப்பத்தில் கண்மண் தெரியாமல் குடித்துப்போட்டு வந்து .என்னை மன்னித்துவிடு' என்று எங்கோ பார்த்துச் சொன்னான்.
மிருகம் என நிரூபித்தபின் மனிதன் என்று சொல்கிறான். அவளுக்கு வேடிக்கையாகப் பட்டது . அவள் எழுந்து போனாள். சாப்பிட்டபோதும் அருகருகே படுத்திருந்தபோதும் அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதிகள் என்ற நினைவு நிலவவில்லை. மாறாக பெரிய திரையே விழுந்துகிடந்தது.
வீட்டின் முன்புற வேலியோடு சேர்த்து சிறிய கொட்டில் ஒன்றை நண்பர் உதவியுடன் போட்டான். தாலியை கட்டச்சொல்லி மும்முரமாக நின்ற வாசிகசாலையோ மற்றவர்களோ உதவிக்கு முன் வரவில்லை. கசப்பு சூழ்ந்திருந்தது.

Page 57
10 O வேலிகள்
அன்டன் வீட்டினர் கொஞ்சம் பணம் மாறி கடனாகக் கொடுத்தனர். முருகேசும், செல்லனும் கூட உதவினார்கள். அவன் நவாலி ஆட்களிடம் இருந்து சிறிய வள்ளமும் வலையும் வாங்கினான். கடையையும் ஒரே நேரத்தில் திறந்தான். மாப்பிள்ளை தன்னோடு சரிப்படாவிட்டாலும் சூரன் என்று செல்லன் பெருமையோடு சொல்லிக்கொண்டான். அவனின் இடத்திற்கு ராஜனை புதிதாக சேர்த்துக்கொண்டான். அன்ரனின் தம்பி நடேசன் கனகனோடு உதவிக்கு வந்தான். கூலியாக இருக்காமல் பங்காளியாக இருக்கலாம்’ என்று அவன் விருப்பம் தெரிவிக்கவே, அவர்கள் கடனாகக் கொடுத்ததை பங்காக எடுக்கச் சொன்னார்கள். பிடிபடும் மீனில் அரைவாசியாக இருவரும் பிரித்தார்கள். வியாபாரம் ஒரளவு நடக்க அவன் ஒரு புள்ளியானான். காலையிலேயே தொழிலால் வந்த கையோடு குளித்துவிட்டு சங்கானைச் சந்தைக்கு ஒடினான்.
ஒவ்வொரு நாளும் மரக்கறிகள், மற்றும் மளிகைச் சாமான்களை வாங்கி சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்தான். பத்து மணிக்கெல்லாம் அவன் கடையில் புதிய மரக்கறிகள் வாங்கலாம் என்று கடைக்கு நல்லபெயரும் கிடைத்தது.
ஒருநாள் அண்ணி சாமான் வாங்க கடைக்கு வந்தபோது திலகனும் கூட வந்தான். இரவில் தொழில் பார்த்த அசதியோடு சந்தையில் இருந்து வந்த கையோடு வீட்டில் குந்துபோல் கட்டப்பட்டிருந்த மண் விராந்தையில் படுத்துக்கிடந்தான். கடையில் சனம் குறைந்திருந்தது. அண்ணி “எடியே கமலம், எப்படியடி வாழ்க்கை?” என்று கேட்டாள். அவள் முகமலர்ச்சியற்றிருக்கவே “ஏதும் பிரச்சினையோ” என்று ஆதரவாக கேட்டாள். அவளால் என்ன சொல்ல முடியும்? வெறுமனே சிரித்தாள்.
கனகன் ஒரு மிருகம் என்றால் நம்புவாளா? அவளே கூட நம்ப எப்படிக் கஷ்டப்பட்டாள்? உவன் இப்படி நடந்துகொள்வான் என்று யாரும் முன்னர் சொல்லியிருந்தால் அவளும்கூட கடைசிவரை நம்பியிருக்கமாட்டாள்.
திலகன் அவனோடு கதைத்தபோது “என்னடாப்பா. நானும்

கடல் புத்திரன் O உங்களைப்போல் வந்திருக்கலாம்” என வருத்தத்துடன் சொன்னான். “உன்ரை மகனை வளர்த்து எங்களிட்ட அனுப்பு". திலகன் சிரித்தான். அவனோட கதைத்த பிறகு கனகனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. விடைபெற்றபிறகு யோசித்தான். மனதில் குழப்பம் அதிகமாகிக்கொண்டுபோவதை விட எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி விடுகிறதே நல்லது. விசயங்களை தெரிந்தே வெறுக்கட்டும்.
தொழிலால் வருகிற அவனை அணைக்கவேண்டியதில்லை. ஒரளவாவது முகம் கொடுத்து பேசினால் போதும். இருக்கிற விடுமுறை நாளிலும் குழப்பம் அதிகமானால் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
காற்று அன்று பலமாக வீசவே.வந்த நடேசனையும் திருப்பி அனுப்பியிருந்தான். பொதுவாக யாருமே தொழிலுக்கு போகவில்லை. வேளைக்கே கடையைப் பூட்டிவிட்டு கமலமும் வந்தாள். தேநீர் வைத்துக்கொண்டு வந்து பக்கத்தில் வைத்தாள். அதை எடுத்து அவன் ஒரு புறமாக வைத்தான்.
“கமலம்” என கூப்பிட்டான். என்ன? என்று கிட்டே வந்து அவள் நின்றபோது கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன்மேல் சரிந்து விழுந்தாள். 'கள்ளு மணம் வீசுகிறதா?” என மூச்சை கவனமாக இழுத்து கவனித்தாள்.
“கமலம் உனக்கு நான் என்ரை நிலையைச் சொல்லப்போறன் அதற்குப் பிறகு உன்இஷ்டம். உன்னை உன் விருப்பமில்லாமல் வற்புறுத்தமாட்டன்" அவள் அவனை சிறிது வியப்புடன் பார்த்தாள்.
“உன்னை பிடிக்காமல் பேசமுடியும். ஆனால் நான் சொல்ற முழுதையும் கேளாமல் ஒடிவிடுவாய் என்றதாலை பிடித்திருக்கிறன். உனக்குத் தெரிய நியாயமில்லை. நான் ஒரு பெண்ணை விரும்பினனான். அவளும் என்னை விரும்பினாள். அவள் எழுதிய கடிதங்களை எரிப்பதற்காய் எடுத்து வச்சிருக்கிறன். உனக்கு விருப்பமென்றால் நீயே எரிச்சுவிடு". அவன் மூலையில் கிடந்த சிறிய பிரவுண் பேப்பர் பையைக் காட்டினான். “உன்னை

Page 58
2 O வேலிகள் திடீரென கட்டி வைச்சு விட்டார்கள்.மனக்குழப்பத்தில் குடிச்சுப்போட்டு வந்து பழிவாங்குறதுபோல் நடந்திட்டன். என்னைப் பொறுத்தவரை நீ தான் இனி ஆறுதலாக இருக்கவேணும்' அவளை விடுவித்தான்.
அவள் அந்தப் பையை ஒரு தடவை பார்த்தாள். கடல் மனிதர்கள் ஒன்றில் முரடர்களாயிருக்கிறார்கள். அல்லது பலவீனர்களாயிருக்கிறார்கள். ஒரளவு படிப்பறிவு பெற்றவர்கள் கூட விதிவிலக்கில்லை. அவன் மார்பின் மேல் அவள் சாய்ந்து கொண்டாள். அவன் கண்களில் சூடான கண்ணிர் வந்தது.
சமூகத்தை மேம்பாடாக்கணும். அல்லது ஒரு இயக்கத்திற்கு ஒடி சமூகத்தை எதிர்நோக்கியிருக்கவேண்டும்.
அவள், அணைப்பில் இருந்து விடுபடாது அப்படியே கிடந்தாள். அவன் மனம் சிறிது ஆறுதல்பட தூங்கிப்போனான்.
அவன் அண்ணி வீட்டபோனபோது மச்சானும் இருந்தான். வளவுவேலிக்கு மேலாக அவனைக் கண்டு விட்டு செல்லமணி ஒடி வந்தாள். "அத்தான் அக்கா எப்படியிருக்கிறார்? வயிறு ஊதியர்?" எனப் பகிடியாக கேட்டாள். பாபுவோடு இருந்த திலகனையும் அவள் கடைக்கண்ணால் பார்த்தாள்.
‘இருவரையும் எப்படிச்சேர்த்துவைப்பது? என்று கனகன் யோசித்தான். கமலம் தான் சரியானவள்.
“நல்லாய் இருக்கிறாள்” என்றவன் ‘அண்ணி, மச்சானையும் குடும்பமாக பார்க்கவேண்டாமா?” என்று கேட்டான். தொடர்ந்து "இவளைப்போல ஒரு குட்டியைப் பார்த்து” என்று சொன்ன போது மணி "அக்கா வாறன்" என ஒடிவிட்டாள். தம்பியும் இவளை விரும்புகிறானோ? என்று சந்தேகத்துடன் புனிதம் அவனைப் பார்த்தாள்.
திலகன் சோகமாக சிரித்தவன் ‘உன்ரை வாழ்க்கை எப்படியடா போகிறது?” என்றான்.
“என்னத்தைச் சொல்லிறது?" அவன் அலுத்துக்கொண்டான்.
"பரவாயில்லை. நீயும் குடும்பக்காரன் மாதிரி கதைக்கப்

கடல் புத்திரன் O 13 பழகியிட்டாய்” என்று சொல்லி அண்ணி சிரித்தாள். அண்ணன் வர கொஞ்ச நேரம் இருக்க கதைத்துவிட்டு விடைபெற்றான்.
கடையை மூடி விட்டு கமலம் சமையலில் ஈடுபட்டிருந்தாள். அவள் மூன்று மணிக்கு பின்பே கடையைத் திறப்பாள். அந்த நேரம் கடையில் அவனும் உதவியாய் இருந்துவிட்டு வலைக்கு வந்துவிடுவான். சில சமயம் வாசிகசாலைப்பக்கம் போய் வருவான். பிறகு நடேசனோடு சிக்கலெடுப்பதிலும் பொத்தல்கள் அடைப்பதிலும் நேரம் சரியாகிவிடும்.
சாப்பிட்டபிறகு அவளை அணைத்துக்கொண்டு படுத்தவன்
9 p மச்சான் விசயத்தை சொல்ல விரும்பினான்.
“கமலம்' என்றான். இப்ப அவளுக்கு அவன் மேல் வெறுப்பு அவ்வளவாக வரவில்லை.
“மணியை மச்சான் விரும்புகிறான். எப்படி காரியத்தை வெல்லலாம் என்று தான் தெரியவில்லை” என்றான். அவள் சிறிது எழும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். “அவயள் வேற சாதி. ஒத்துக்கொள்ள மாட்டினம்" என்றாள் தயக்கத்துடன். "அண்ணியும் எங்கண்ணாவும் வாழவில்லையா?” என்று அவன் கேட்டான்.
‘எப்படி? அவளுக்கும் குழப்பமாக இருந்தது."உங்க நண்பர்கள் இயக்கத்தை விட்டு வரமுடியுமா?" என்று கேட்டாள்.
‘சந்தேகம்’ எனப்பட்டது. ‘கேட்டுப்பார்க்க வேணும் என்றான். அன்ரன், நகுலன் கூடவும் கதைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.
米 率 来
கனகன் கடலால் வந்து குளிக்கிறபோத பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடிவந்தாள். “அண்ணை தெரியுமே சுலோ செத்திட்டாளாம்” என்று கத்திவிட்டு “கமலம், கமலம்” என்று
உள்ளே ஒடினாள்.
அவனுக்கு அந்தரமாக இருந்தது. பரபரவென சைக்கிளை ஒழுங்குபடுத்திவிட்டு காசையும் எடுத்துக்கொண்டு ஒடினான்.

Page 59
114 O வேலிகள்
அவன் சந்தைக்கு போற வழியில் குவனை இருந்தது. சுந்தரம் மாஸ்டரின் தோட்டக்காணியில் இருந்த பாழுங்கிணற்றில் இருந்து பிரேதத்தை எடுத்து அருகில் வைத்திருந்தார்கள். காலைப்போதில் தண்ணிர் இறைக்க வந்த மாஸ்ரரின் மக்களே முதலில் கண்டுவிட்டு ஆட்களைக் கூட்டினார்கள். அவர்களுக்கு அதிர்ச்சியில், செத்து மிதக்கிறாள் என்பது புரியவேயில்லை. 'தத்தளிக்கிறாள்’ என்று நினைத்தார்கள். பிறகுதான் இறந்துவிட்டது தெரிந்தது.
அக்கிணற்றிலிருந்து உடலை எடுக்க சிறிது தயக்கம் நிலவியது. முன்பும் யாரோ ஒருவன் அதில் விழுந்து தற்கொலை செய்திருந்தான். அதனால் பேய்க்கிணறு என்று சொல்லப்பட்டது. மாஸ்ட்ரும் வேறு ஒரு கிணறு பக்கத்தில் தோண்டியிருந்தார். அப்பகுதியில் நல்ல தண்ணிர் வந்ததால் ஊரார் குளிப்பதற்கு அங்கே வருவது வழக்கமாக இருந்தது. பழைய குளிக்கிற கிணற்றில்.என செய்தி பரவியபோது சனம் அங்கே திரண்டு விட்டது.
அக்கின்ணற்றில் யாரோ ஒருத்தன் இறங்கி அவள் இடுப்பில் உருகுதடம் மாட்டி, அவளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வர மனிதத்தனம் செத்துவிட்டது வெளியே எடுத்தார்கள்.
எதிர்ப்புறத்தில் தன்னுடைய மரவள்ளிப்பாத்தியில் இருந்து சிவகாமியம்மா கத்தினாள். “இங்கே இரத்தக்கறை, தடிகள் முறிந்து கிடக்கு. எடியே விசாலாட்சி உவங்கள் பிள்ளையை இங்கை போட்டு மல்லுக்கட்டியே இழுத்துக்கொண்டு போய் கிணற்றில் போட்டிருக்கிறாங்கள்” விசாலாட்சியும் “ஓமணை, பெடிச்சியை கொன்றுதான் போட்டாங்கள்” என்றாள்.
சுலோவின் அயல்வீட்டுக்காரி சரசம்மா முணுமுணுக்கிற மாதிரி தெரிவித்தாள். “நேற்றிரவு பிந்தியே இவன் வந்தான். ஒரு பன்னிரண்டரை ஒண்டு இருக்கும். சண்டை நடந்தது. பெட்டைச்சி அழுதுகொண்டிருந்தாள். பாண் வாங்கியாடி என்று அவன் சத்தம் போட்டான். அர்த்தசாமத்தில் மூர்த்தி கடைக்கு வெளிக்கிட்டவள் இப்படிக்கிடக்கிறாள்" வருத்தப்பட்டாள்.

கடல் புத்திரன் O 甘5 மூர்த்தி அவ்விடத்தாள் தான். சிறிய வயல் வெளியைக் கடக்கிற அடுத்த கிராமத்தில் வீடு ஒன்று மலிவாகக் கிடைக்க வாங்கி குடியிருப்பை மாற்றிக் கொண்டவர். அதிலேயே சிறிய கடையும் வைத்திருந்தார். சிகரெட், மற்றும் இரவில்அவசரத்திற்கு சாமான் வாங்க அவர் கடைக்கே குலனை ஆட்கள் ஒடுவார்கள். ஒரளவு நியாயமாய் விற்றதால் கடைக்கும் நல்லபேர். பெரிதாக லாபம் வைத்து விற்காததால் கடை வருமானம் போதியதாக இருக்கவில்லை. எனவே பகலில் பலரைப்போல் அவரும் மேசன் வேலைக்குப்போய் வருவார். குண்டுவீச்சு நடக்கும்போது மேசன் வேலை எங்கே நடக்கும்? கடையில் தான் பெரும்பாலும் நின்றார். தமது கடைப் பெயர் அடிபட “பெட்டைச்சி என்ரை கடைக்கு சாமத்தில் வரவில்லை” என்றார். “அதற்கிடையில் தான் கொன்றுவிட்டார்கள்” என்று சரசம்மா தளதளத்தாள்.
ராஜன் தலையைக் கவிழ்த்திருந்தான். ராணி, “என்ரை சுலோ, ஐயோ.சுலோ. என்னடியம்மா இப்படிச் செய்து விட்டாய்” என்று கரைந்து அழுதுகொண்டிருந்தாள். கனகனுக்கும் துயரமாக இருந்தது.
'கொலை, கொலை என்று ஊர் அழுத்திச்சொல்லிற்று. அதில் அவர்களுக்கு இருந்த ஆத்திரம் தெரிந்தது. ராணியின் புருசன் பஞ்சன் செய்தியை விஜயனுக்குத் தெரியப்படுத்தினான். வானிலே பெடியளுடன் வந்திறங்கிய அவன் முன்னெச்சரிக்கையாக வாசிகசாலைக் குழுவை அணுகினான். அவன் இன்னொரு இயக்கப் பிரதிநிதி.
“நாங்க பிரேதபரிசோதனை செய்ய விரும்புறம் அனுமதி தரவேணும்” தலைவர் வாயைப்பொத்திக்கொண்டு அழுதார். “எங்களை மீறின விசயங்கள்” என்றார்.
“இரண்டு இரண்டரைக்கிடையில் திருப்பி ஒப்படைப்பம்" என்றவன் “டேய் வானில் ஏற்றுங்கடா" என கட்டளையிட்டான். ராஜனை கைது செய்து முன் சீட்டில் ஏத்தினான். சனம் கலையத்தொடங்கிவிட்டது.
கனகன் அப்படியே சந்தைக்கு போய்விட்டான். "சீ என்ன

Page 60
116 O வேலிகள் கொடூரம்? அவனுக்கு கமலம் மேல் இனம்புரியாத காதல் வந்தது.
சாமான் வாங்க வந்தபோது நகுலனைக் கண்டான். அவனும் தன் கடைக்கு சாமான் வாங்க வந்திருந்தான். சைக்கிளில் வைத்துக் க ட்டிக்கொண்டு இருவரும் திரும்பினார்கள். வழியில் “டேய், நீ யாரையும் விரும்பிரியா? என்று கேட்டான். அவன் சிரிக்க டேய் யாரையும் காதலிச்சிடாதை பிறகு கஷ்டம்” என்றான் கனகன்.
“டேய் உன் மாமன் வீட்டில் கசிப்பு பார்ட்டி நடந்ததாக கதைக்கினம். உண்மையோ?” நகுலன் கேட்டான். ஃப்ரெண்ட் ஆனாலும் அவன் இயக்கத்தில் இருப்பவன். அவன் கடமைகள் வேறு என்றது கணநேரத்தில் நினைப்பு வர, “தெரியலையே” என்று பதிலளித்தான்.
வீட்டுக்கு வந்தபின் “கமலம் நேற்று உங்கப்பன் தொழிலுக்குப் போகலையா?” என்று கேட்டான்.
‘போயிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். நான் சொன்ன போதே. உங்க நண்பர்களிட்ட சொல்லியிருக்கலாம். ராஜன் அங்கே தான் இருந்திருப்பான்” என்றாள்.
நாட்டு அரசியலை விட குடும்ப அரசியல் மோசமானதாகப்பட்டது. ஒருவேளை நகுலனுக்குச் சொல்லியிருந்தால் சுலோ தப்பியிருப்பாளோ? அல்லது அவள் அப்பாவியாக தானே போய் அம்முடிவைத் தேடிக் கொண்டாளோ?
விஜயனும் அச்செய்தி அறிந்து அவர்கள் வாசிகசாலைக்கு வந்தான். “யார் வீட்டில் இருந்து கசிப்படித்தவன் தெரியுமோ?” எனக் கேட்டான். “தெரியாது” என்று குழு சொன்னது.
“டேய் உங்களுக்காவது தெரியுமா” என கனகன் தொட்டு நின்ற பெடியள் செற்றைப் பார்த்துக் கேட்டான். அவர்களும் துப்புக்கொடுக்க விரும்பவில்லை. அவன் மெளனமாக இருந்துவிட்டு வீட்டே வந்தான்.
பெண் பிரதிநிதி போல் கமலம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கனகனால் சொல்லமுடியவில்லை. “உண்மையில் அவள்

கடல் புத்திரன் O 17 கொல்லப்பட்டால் எவரும் ஒன்றும் செய்யப்போவதில்லையா?” சமூகக் கட்டுப்பாடுகளை என்னால் மீறமுடியவில்லை என கழிவிரக்கமாக நினைத்தான்.
“பெண்கள் அமைப்பு என்று ஏதாவது அமைத்து வழக்கு மன்றம் நடத்தாத வரைக்கும் உடந்தையாக இருப்பது தொடரப்போகிறது” என்றான் அவன். அவள் துயரத்துடன் சிரித்தாள்.
பின்னேரம் சவம் வந்துவிட்டதாக செய்தி வந்தது. மனம் கேளாமல் அவனும் செத்த வீட்டுக்கு போனான். ராஜனை கிரியைகள் செய்ய அனுமதித்திருந்தார்கள். அங்கே நகுலன், திலகன், லிங்கன் என நண்பர்களைப் பார்த்தபோது அந்த விசயம் எல்லோரையும் பாதித்துவிட்டது தெரிந்தது.
“மச்சான், அண்ணி உன்னைக் கூப்பிட்டவ. போகேக்கை வந்திட்டுப்போ” என்றான் கனகன்.
je sk ske
புனிதத்துக்கு தம்பியை கனநாளைக்குப்பிறகு கண்டபோது கண்ணிர் வந்தது. அவன் வீட்டுக்கு துப்புரவாகப் போறதில்லை, என்று அறிந்தபோது அவளுக்குத் துயரமாக இருந்தது. "நீயும் என்னைப் போலாகிவிட்டாய்” என்று கரைந்தாள்.
அவன் என்ன பதில் சொல்வான்? கனகனைப்பார்த்து மெல்லச் சிரித்தான். அவர் குசினிக்குள் நுழைந்து தண்ணிரை அடுப்பில் வைத்தார். அவர்கள் திறந்த மண்விராந்தையில் இருந்தார்கள். பாபு அவன் மேல் ஏறி பிச்சுப் பிடுங்கிக்கொண்டு இருந்தான். கலாவை கனகன் தூக்கி சமாளித்தான்.
படலையடியில் செல்வமணி அவர்களை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு கடந்துபோனாள். தொழிலுக்கு ஆயத்தம் செய்திருந்த முருகேசு "தம்பி இண்டைக்கு கடலுக்குப் போகலையோ?” என்று கேட்டான்."மனசு சரியில்லை அண்ணை, போகேலை" என்றான். அவன் திலகனை ஆதரத்துடன் பார்த்தான் 'தம்பி தீவுப்பக்கமோ இப்ப?" என்று விசாரித்தான். ‘ஓம்’ என்று தலையாட்டியவன்

Page 61
18 O வேலிகள் பார்வை செல்வமணியைத் தொடர்ந்து போவதைப்பார்த்து கனகன் பெருமூச்சு விட்டான்.
முருகேசு போன பிறகும் கனநேரமாய் அங்கே கதைத்துக்கொண்டிருந்தஈர்கள். அவர்களுக்கிடையில் ஏதும் தனிப்பட கதைக்க விரும்பலாம் என்ற நினைப்பு வர “அப்ப திலகன் நான் வாறன்’ என்று விடைபெற்றான்.
அடுப்படி அலுவல்களை முடித்துவிட்டு வந்த கமலம் "அக்காவும், தம்பியும் என்னவாம்?” என்று கேட்டாள். “வேறென்ன அவவுக்கு அவன் மேல் பாசம் கூட இயக்கத்தைவிட்டு இவயளால் விலக முடியாதா?’ என்ற பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டாள். “அவயள் விலகிறதை பிழை என அரசியல் ரீதியாக விளக்கம் குடுக்கிறாங்கள். அப்படி வந்தாலும், சரியான முறையில் போராடாவிட்டாலும் எதிரியால் சாகமுன் இவங்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிபட்டே செத்துப் போயிடுவாங்கள்” என்றான். “சமூக விரோதிகள் என்று ஆயுதப் பலம் மிக்கது அடிக்கத் தொடங்கும். மக்கள், பெடியள் உறவு முறியும் சனங்கள் முற்போக்காக செயற்படாட்டியும் சீரழிவுதான்” அவன் பேசுவது விளங்காததால் அவள் அவன் அணைப்பில் உறங்கிப்போனாள். அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரபுபோல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணிவெடியை செக் பண்ணும்போது தற்செயலாக ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்திருந்தான். அவனோடு நின்ற ஒருத்தன் இறந்துபோனான்.
சீரியசான அவனை அவசரஅவசரமாக பெரியாஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள். தீவுப்பெடியள் சிலர் திரும்பும்போது புனிதத்துக்கு செய்தியை தெரியப்படுத்தினார்கள்.
அண்ணி அழுதுகொண்டிருந்தாள். வாசிகசாலையும் முருகேசுவும் காரைப் பிடித்துக்கொண்டு அவளை ஏற்றிக்கொண்டு விரைந்தார்கள். கனகன், அன்டன், நகுலன் இன்னும் பலர் சைக்கிளில் பறந்தார்கள். அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பாகி இருந்தது.

கடல் புத்திரன் O 19 ஆஸ்பத்திரியிலும் அண்ணி அழுதது பலருக்கு துயரமாக இருந்தது. வார்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட திலகனை பார்க்க அனுமதித்தார்கள்.
மெல்ல கண் திறந்த அவன் "அக்கா, நீசந்தோசமாயிருக்கணும்" என்றான். கனகனைப் பார்த்தான். "மச்சான் உனக்கு மகன் பிறந்தால் என்ரை பெயரை வையடா?” என்று கேட்டவன் பதிலை எதிர்பாராமல் முருகேசுவை நோக்கினான். அன்டன் கையைப்பிடிச்சுக்கொண்டவன் அப்படியே கண்கன் செருக மூச்சடங்கிப்போனான்.
செத்த வீட்டை வாலையம்மன் பகுதியில் நடத்த அனுமதித்தார்கள். மற்ற சகோதரர்கள் எல்லாம் வந்தார்கள். வாசிகசாலையும் பெடியளும் தோரணம் கட்டி விமரிசையாக நடைபெறச் செய்தார்கள்.
மணியைப் பார்க்கும்போது கனகனுக்கு துக்கம் வந்தது. அவளுக்குத் தெரியாமலே ஒரு காதல் புதைந்து போனது.
லிங்கன், அன்டன் எல்லாரும் அவன் வீட்டில் கனநேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் விடைபெற்ற போதும் துயரச்சூழல் குமைந்தேயிருந்தது.
சுலோவின் கொலையை துப்புத்துலக்க எந்த அமைப்பும் முன்வராததால் விஜயனுக்கு ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. ‘சந்தர்ப்பம் வரும்போது கவனிக்கிறமடா’ என்று ராஜனைக் குறித்து ஆத்திரப்பட்டான்.
அநியாயத்தை அறிந்தோ அறியாமலோ வாசிகசாலை அமைப்புகள் ஆதரிக்கும் வரையில் சந்தர்ப்பங்கள் லேசில் வரப்போவதில்லை. மற்றத் தோழர்கள் ராஜனை அடியாமல் தடுக்க அவன் கண்டிப்பை கையாளவேண்டியிருந்தது.
இரண்டு மூன்று நாள் கழிய ராஜனை விட்டுவிட்டார்கள். ராஜன் குலனையை விட்டு வாலையம்மன் பகுதிக்கே வந்து விட்டான்.
பின்னேரம் போல கரைப்பக்கமிருந்து வேறு களேபரம் ஏற்பட்டது. அக்கரையிலிருந்து இயக்கப் பெடியள் சிலர்

Page 62
20 O வேலிகள் ஆயுதங்களுடன் தனிபோர்ட்டில் ஏறினார்கள். தூரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஹெலி அவர்களைக் கவனித்து விர்ரென்று விரைந்து வந்தது. மாலை மங்கி வருகிற நேரத்தில் அது அராலித்துறையில் நெருப்பு மழையைப் பொழிந்தது. கூட்டம் விழுந்தடித்து ஒடியது.யாரோ ஒருவன் நிலத்தில் படுத்ததைப் பார்த்துவிட்டு பலர் நிலத்தில் படுத்தார்கள். மினிபஸ் ஒன்று ரிவேர்சில் குடிமனைப் பக்கம் வந்து நின்றது. 'போட்டில் வந்த பெடியள் மினிபஸ்ஸில் ஏறி தப்பிவிட்டார்கள். வாடிப்பக்கம் பதுங்கிய வர்த்தகர் ஒருவரின் மகன் வயிற்றில் சூடுபட்டு இறந்தான். இருவர் காயமடைந்தார்கள். இந்த சம்பவங்களால் இரவு கடலில் தொழிலுக்கு யாரும் செல்லவில்லை.
‘மணியை ராஜனுக்கு கட்டிக்கொடுக்க இருக்கினம்’ என்ற செய்தியை கமலம் கொண்டு வந்தாள். “அவள் என்ன சொல்கிறாள்" என்று முட்டாள் தனமாக கேட்டான். கமலம் நூதனமாகப் பார்த்தாள். “அவளும் கழுத்தை நீட்டுறாள்" என்றாள். அவர்களுக்கு அறிவிக்காமலே ஊருக்கும் பரவலாகத் தெரியாமல் ஒரு சிலரோடு ஐயனார் கோவிலில் தாலி கட்டல் நடந்தது. கனகனுக்கு சொல்வதை வேண்டு மென்றே தவிர்த்துவிட்டார்கள்.
'வாசிகசாலை இளிச்சவாயாய் இருக்கிறதால தான் இப்படி நடக்கிறது’ என்று நினைத்தான். ஒவ்வொரு செயலிலும் முற்போக்கைக் கடைப்பிடிக்கிற முறையில் வாசிகசாலையை பலமான அமைப்பாக மாற்றவேண்டும். அது நியாயமற்ற செயல்களுக்கு காவடி தூக்கிறதை அறவே ஒழிக்கவேணும். பொதுச்சேவையில் ஈடுபட்டால் தான் இதெல்லாம் முடியும்’ எனப்பட்டது.
தலைவர் பரமேசிலும் ஒரளவு அநியாயத்தை எதிர்க்கிறபோக்கு இருந்தது. இங்கிருக்கும் வாசிகசாலை குலனை வாசிகசாலை மற்றும் தொழில் பார்க்கிற இடத்திலுள்ள வாசிகசாலை எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி ஒரு இணைப்பைக் கண்டாகவேண்டும். ஒரு பொதுவான கமிட்டியை உருவாக்கவேண்டும். ஆதவைத் திரட்டுவதன்மூலமே அதை சாதிக்கமுடியும் என்று நம்பினான்.

கடல் புத்திரன் O 121 அன்டனும் நகுலனும் தமக்கு தெரிந்த நண்பர், உறவினர் என கதைத்து ஆதரவைத் திரட்டினர். அவனும் சந்தைக்கு வருபவர்கள் மூலமாக முயன்றான். தொடர்புகளை செப்பனிட்டான்.
பரமேசுடன் கதைத்தபோது ஆச்சரியப்பட்டான். அவனுக்கும் அவன்ரை நண்பர்களுக்கும் கல்யாணத் தொடர்புகள் பரவலாக இருந்தன. அவர்கள் முயற்சிக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக கூறினான்.
நாடகம், கடல் பாடல்களை சேகரிப்பது, வாசிகசாலையில் பெண்கள் தையல் வகுப்பு, கயிறு திரித்தல் போன்ற வேலை வாய்ப்புகள் வைப்பதுமாக. அவர்கள் திட்டம் விரிவாகவிருந்தன.
கூடவே அயலிலிருந்த பள்ளிக்கூடத்திற்கு சிறுவர்களை அனுப்பிவைக்கும் போராட்டம் இவையெல்லாம் நடைபெறலாயின. முன்னர் சாதுரியமான வழிமுறைகளைக் கடைப்பிடித்த சாதியினர் இவர்களின் எதிர்ப்பின் முன்னால் பின்வாங்க வேண்டியிருந்தது.
இனிவரும் சந்ததி பழைய கஷ்டங்கள் சிலவற்றைப் பெறாதுபோல் பட்டது. பல நம்பிக்கை விதைகள் உரமாக விதைக்கப்பட இருவரின் மரணங்கள் காரணமாகின.
சுலோவின் படத்தை குலனை வாசிகசாலை மாட்டியது. மலர் மாலையுடன் அப்படம் பேப்பர் வாசிக்கும் பகுதியில் பார்வையில் படக்கூடிய முறையில் இருந்தது. இதில் பிறந்த திகதி, கொலையுண்ட திகதி, என குறிப்பிட்டிருந்தது. ‘ஆண் பெண் வாதத்தை கடைப்பிடியாது வாசிகசாலை அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்’ என்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்த்திருந்தது.
‘சாதித்தன்மையை வெறுத்தவன்’ என்பதால் திலகன்ரை படத்தை இவர்கள் வாசிகசாலையில் மாட்ட வைத்திருந்தான்.
அந்தப் படத்தைப் பார்க்கிறபோது அவனுக்கு பழைய ஞாபகங்கள் மீண்டன. உடலில் அஞ்சலிக்கும் பரவசம் ஒடி மறைந்தது.

Page 63
செல்லாச்சியம்மா
செல்லாச்சியம்மா செத்துப் போனாராம். பிரான்சிலிருக்கும் நேசன் போயிருப்பானோ? நேசன் அவர் மகன். ஒருகாலத்தில் வவுனியாவிலிருந்தபோது எங்கள் அயல் வீட்டிலிருந்த அன்பான ஜீவன். இன்று அவர் இல்லை. அவரின் இறப்புச் செய்தியை கேட்கிறதுக்கு எங்கள் மத்தியில் தொடர்புகள் தொடரவில்லை. கால ஒட்டத்தில் கணிசமான மாற்றங்கள். ஒவ்வொருத்தரின் பிரச்சனைகளின் தாக்கம் எல்லோரையும் தனிமைப்படுத்தி விட்டிருந்தன.
செல்லாச்சியம்மா மெல்லிய சருகு போன்ற காய்ந்த தோற்றம் உடையவர். சுமாரானவர். அவரின் வாழ்வு எழுதினாலும் எழுதாட்டியும் ஒரு காவியம் தான். நெஞ்சுரம், அன்புள்ளம் இவற்றை மூலதனமாகக் கொண்ட மண்ணின் மகள் அவர்.
காலச்சக்கரம் எத்தனை விரைவாக சுழன்று விடுகிறது! மணல், கல் கலந்த அந்த மண் பகுதியில், காடாகவிருந்த போது கந்தர் உடன் அங்கே கால் எடுத்து வைச்சார். அப்ப அவர் புதுமணப்பெண்ணாக இப்பவிருந்ததைவிட பொலிவாகவும் இருந்தார். கந்தர் இளமைக் காலத்தில் புரளிக்காரர். ஊரிலேயே பெண் சேட்டை மோசமாக போனதால் பல பேரோடு அவரின் பெயரும் கெட்டிருந்தது. அப்ப அவருடைய அப்பர் செல்லாச்சியை அவருக்கு கட்டி வைச்சிருந்தார். அவள் அவருக்கு மச்சாள் முறையான பெண்.

கடல் புத்திரன் O 世23
கந்தருக்கு ஆரம்பத்தில் அவரிலே பிடிப்பில்லாதிருந்தது. பிறகு வாழ்க்கை ஒட்டத்தில் இயல்புக்கு வந்துவிட்டார். அவர் ஒருத்தரே வீட்டிலே அரைப்படிப்பையும் சரியாய் படியாது விட்டவர். அந்த நேரத்தில் ரைவிங் பழகி லொரி ஒடக்கூடியவராக இருந்தார். வவுனியாவிலிருந்து லொரி ஒடுகிறதுக்காக அங்கே பெஞ்சாதியோடு காலடி எடுத்து வைத்தார்.
காடாகவிருந்தது அப்பகுதி. அவர்களைப் போல ஒரு சிலர் காடு திருத்தி கொட்டில் வீடு போட்டிருந்தார்கள். மண் குந்துகளுடன் கூடிய சுவர்களை உடைய அவ்வீடுகள் துப்புரவாக காணப்பட்டன. ஒலைக்கூரை. கந்தர் ஒரளவு விவசாயம் தெரிந்து வைத்திருந்தார். அவளுக்கும் நாற்று நடுகை தொட்டு எல்லா வேன பகளும் தெரிந்திருந்தன. அவர் பிரளிப்பட்டதால் ஊரிலே வாழ இருவருக்குமே பிடிக்கவில்லை. அவரிலேயும் பிழையிருந்தது. அது கிராமத்தில் நடக்கிற இளவட்ட லீலைகளில் ஒன்று. பெடியளாக சென்று சேட்டை விடப்போய். ஊரால் கையும் மெய்யுமாக பிடிபட்டிருந்தார். மானம் பறந்திருந்தது. அதனால் அவர் மனம் உடைந்து போயிருந்தார். மச்சான் முறையான அவரிலே வளர்கிற காலத்திலேயே ஒரு மையலை வைத்திருந்த அவளைப் புரிந்திருந்த தாத்தா, இருவரையும் கூட்டி வைச்சு விட்டார் அவரின் தலையிறக்கம் அவளையும் பாதித்தது. எனவே வவுனியாவிற்கு வேலை கிடைத்தபோது கந்தருடன் துணிஞ்சு வெளிக்கிட்டு விட்டவர்.
மன்னார் ரோட் பக்கமான அந்த காட்டில் அரச விடுதிகள் சில கட்டியிருந்தார்கள். அதை அண்மித்த பகுதிகளில் காட்டை அழித்து குடியேறல்கள் நடந்தன. அவர்கள் வந்த போது பொதுக்கிணறு வெட்ட வேண்டியிருந்தது. கந்தர் லொறிச்சம்பளமும் சரீர உழைப்பும் கடனாக பெற்றும் காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரம் அங்கே அரசாங்க தரப்பு தமிழ் ஆள் ஒருத்தர் எம்.பியாக வந்திருந்தார். குணசேகரம். காட்டை வெட்டுங்கள் உங்களுக்கு கொஞ்ச செலவிலே உறுதிகள் எடுத்து தருகிறேன் என்று வவுனியாவிற்கு புதிதாக வருகிறவர்களை உற்சாமூட்டினார்.

Page 64
24 O வேலிகள் அப்போதைய கோசம் ஒன்று இப்படியிருந்தது: “வென்று விட்டால் குணசேகரன் ஒற்றையடிப்பாதையை திருத்தி வைப்பார்”
கந்தர் வீட்டோடு சேர 15 பரப்பு காணித்துண்டை அடைச்சு வேலி போட்டார். நிலத்தை பயன்படுத்தி நாளைக் கழிச்சதில் அவளின் உழைப்பே கணிசமாகவிருந்தது. ஊரிலே பழகிப்போன அவர் பெண் என்று பின் நிற்காமல் சமையல் நேரம் போக காணியிலேயிருந்தார். வவுனியா வெய்யிலில் கறுத்த தோற்றத்தை இன்னும் பெற்றார்.
லொரி ஒடுற பொழுதை விட கந்தரும் கூடமாட காணியிலே உதவியாயிருந்தார். தண்ணிர் பம்ப் இறைப்பதில் தண்ணிர் கட்டுவதில் ஈடுபடுவார். அயல் அட்டையும் உதவிக்கரம் தந்ததால் காணி திருத்தல் வேலை இலகுவானது. பதிலுக்கு இவர்களும் மற்றவர்கள் காணிகளில் போய் உதவி செய்தார்கள். ஒரளவு கூட்டுக்கைகளாக செயல்பட்ட மனிதாபிமானம் நிலவிய காலம்.
பிரம்மனும் செல்லமுத்துவும் காட்டன்றியின் குடும்பமும் அவர்களும் நண்பர்களாக தொடர்ந்த வாழ்வு. காட்டு பன்றிக்கு காவல் இருந்த பொழுதுகள். பிரம்மன் காட்டுத்துவக்கு திருத்திற ஆளாக அவர் விவசாயம் செய்து கொண்டு துவக்கு திருத்திறதையும் தொழிலாக வைத்திருந்தார். காட்டுப்பன்றி துரத்த அவரின் துவக்கே பெரிதும் பயன்பட்டது. துவக்குக்கு காட்ரிஜ்கள் அடைப்பது, எண்ணெய் போடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்தார்.
கந்தர் வீட்டுக் காணியில் மரக்கறி பயிரிட்டார்கள். யாழ்ப்பாண நிலவிலையைப் பார்த்தால் அதிருஸ்டம் என்று தான் இதை சொல்ல வேணும். கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டியிருந்தது. குணசேகரன் சொன்னது போல எல்லாருக்கும் விரைவிலே உறுதியை எழுதி கொடுக்க வைத்தார். ஒரு ஆள் 3 ஏக்கர் காணி வைத்திருக்கலாம். அடுத்த முறையும் அவர் தான் எம்.பி.
மெல்ல மெல்ல அந்த சிறுமண் காட்டுப் பகுதி விசாலமாகி தார் ரோட்டாகி வருகிற போது. லைட் வருகிற போது ஒரளவு நகர நிலைக்கு உயர்ந்து விடும்.

கடல் புத்திரன் O 125 அவர்கள் காணியில் வசந்தம் பூக்க செல்லாச்சிக்கு வயிற்றில் உண்டாகியிருந்தது. 58ம் ஆண்டு கலவரம் சிங்களப்பகுதியில் நடந்த போது மூத்த மகன் செல்லன் பிறந்தான். சில செவிவழிச் செய்திகள் வந்தன. ஐயர் ஒருவரின் பூணுால் அறுக்கப்பட்டதும். அவர்களின் பெண் பிரசைகள் கெடுக்கப்பட்டதும் பாதிப்பைச் சுமந்தவர்கள ைநரகாசூர அவதாரத்திற்கு தள்ளியது. ஒன்றோ இரண்டு பேர் கொதிக்கிற தார் ஊற்றப்பட்டும் கொல்லப் பட்டார்கள்.
துவேசங்கள் கண்ணை மறைக்கின்ற போது கொடூரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு போய்விடுகின்றன. எப்படியிருந்தபோதும், அவர்கள் தோட்ட காணியில் உற்பத்தியான விளைந்த மரக்கறிகள் பல்வேறு இடங்களுக்கு லொரியில் அனுப்பப்பட்டதால் காசுப்புழக்கமும் இருந்தது. வயற்செலவு கணிசமாக இறைபட்டது. வானம் பொய்க்கின்ற போது புளுதி விதைப்பு நடத்திய அவர்கள் காணிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போய் விடுவதுமுண்டு.
岑 米 *
செல்லாச்சி வயது முதிர்ந்தவர் போல ஒரு களைத்த தோற்றத் தை பெற்றிருந்தார். வவுனியா வெய்யிலும் பொருளாதாரப் பிரச் சினைகளும் மாறி மாறி ஆப்பு வைக்கிறபோது மகிழ்ச்சி என்பது வரைகோடாகி விடுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்த நெற்காணிகளை சகோதரங்களுக்கு எழுதி வைச்சுவிட்டு, காசை மாறிப் போட்டு வவுனியாவில் கல்வீடு கட்டத் தொடங்கியிருந்தார்கள்.
கல்வீடு கட்டுறது வவுனியாவைவிட யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் மலிவு மணல் சீமேந்து எல்லாம் கொண்டு வாற செலவு மட்டுமே, இங்கே ஒடு எடுக்கிறது கொஞ்சம் மலிவு. லொறி ஒடியபடியால் போய் வாறபோது அவர் வீட்டுச் சாமான்களைச் கொஞ்சமாக கொண்டுவரக் கூடியதாக யிருந்தது.
இந்த விபரங்களை எல்லாம் செல்லாச்சி அம்மாவைக் கேட்டும் எங்க அம்மாவைக் கேட்டும் நான் அறிஞ்சுகொண்டேன்.

Page 65
26 O வேலிகள் செல்லண்ணை தலையில் துணியைக் கட்டிக்கொண்டு வயலில் உழைக்கிற கடும் உழைப்பாளியாக மாறிய போது ரமணி, சுரேஷ் எல்லோரும் ஒரளவு வளர்ந்த கட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு அயல்வீடாக நாங்கள் வந்திருந்தோம்.
நேசன் என் வயசுக்காரன். எனவே அவனோடு சினேகிதமாகவிருந்தேன். அதைவிட என் அண்ணனும் அக்காவும் அவர்கள் வீட்டோடு ஐக்கியமாகியிருந்தார்கள். ரமணி அக்காவின் சிநேகிதி. இப்படியே குடும்ப நண்பர்களாக மாறியிருந்தோம்.
பள்ளிக்கூடம் போக மிகுதிநேரம் எல்லாம் நான் அவர்கள் வீட்டிலேயே இருப்பேன். ரமணி டீ போட்டு கொடுக்க அதைக் காவிக்கொண்டு போகிற வேலையை பெரும்பாலும் நேசன் செய்தான். நானும் அவன்கூட இழுபட்டேன். அவர்கள் வயற்காணியில் வேலை நடக்கிறபோது காட்டுவழியில் போறது நல்லாயிருக்கும். “டேய் பாபு இதைக் கொஞ்சம் பிடி’ என தேத்தண்ணிப் பானையை என்னிடம் தந்துவிட்டு மைனா குருவிகளை அவன் கட்டபோலால் அடிப்பான் ஒரளவுக்கு பொயின்ற் பண்ணி அடிக்கக்கூடியவன். கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பேன். அடிப்பட்டு விழுந்து ரத்தக்காயத்துடன் துடிக்கிறதைப் பார்க்கிறபோது கண்கள் சிறிது கலங்கும். அதே சமயம் என்னால் அடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும். எனக்கு கூட கட்டபோல் அவன் கட்டித் தந்தான்.
மாறிமாறி அடிப்போம். என் கல்லுகள் விர் விர்ரென பக்கத்தாலேயே பறந்துபோகும். நேசனின் ஒரிரண்டு அடி பதுங்கி மெனக்கெட்டு அடிச்சதிற்கு பலன் இருக்கும். இருவரும் புளுகப்படுவோம். எங்களோடு அவர்கள் வளர்த்த லக்கி, ஜிம்மி, டைகர் என்ற மூன்று நாய்களும் சமயங்களில் வரும். லக்கி மட்டுமே வெள்ளை நிறம். நேசனுக்கு அதன்மேல் பிரியம் அதிகம். அவன் சின்னக்குழந்தையாயிருந்தபோது ஒரு தடவை மிகக் கிட்டடியில் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்ததாம். அப்ப லக்கியே குலைத்து பாம்பை சீண்டி துரத்தியடிச்சதாம். மற்ற இரு நாய்களும் வயலில் அவர்களோடு தங்க லக்கி மட்டுமே

கடல் புத்திரன் O 127 பெரும்பாலும் எங்களோடு இழுபடும். காடு நாய்களுக்கு வேட்டைக்களமாகயிருந்தது.
பின்னேரங்களில் செல்லண்ணை, சுரேஷ், நேசன், நான், என் அண்ணா எல்லோரும் வேட்டைக்கு நாய்களோடு போவோம். அன்டன், ராசா என்று இரு பெடியன்களும் எங்களோடு வருவார்கள். இருவரும் சகோதரர்கள். கஷ்டப்பட்டு இருக்கிற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சகோதரி எங்க வீட்டிலே சமயத்திலே உதவிக்கு வந்து அம்மாவோடு சமைப்பாள். தகப்பன் ஒரு முனிசிபாலிட்டி எலக்ரிசன். குடிகாரன். சின்னப் பொடியன்களாகவிருந்தபடி யால் அவர்கள் குடும்பம் முன்னேறவில்லை. அவர்களுக்கு விவசாயமும் தெரியாது.
ஜிம்மி, லக்கி, டைகரோடு போனால், முயலோ, உடும்போ, மரஅணிலோ ஏதாவது ஒன்றைப் பிடிச்சே திரும்புவார்கள்.
ஒரு தடவை உடும்பு பிடிக்கிறபோது நானும் இருந்தேன். உடும்பை நிலத்திலிருந்து துரத்திக்கொண்டு நாய்கள் ஒட தடிகளோடு சப்தம் போட்டுக்கொண்டு நாங்களும் அதைத் துரத்தினோம்.
அது பத்தைகள் புதர்களுக்கூடாக ஒடியது. ஒடமுடியாத கட்டத்தில் மரத்தில் ஏறி பட்டையோடு பட்டையாக நின்றது. நாங்கள் கல்லை எறிந்து கலைத்தோம். கடைசியில் மரத்தை விட்டு இறங்குகிற போது டைகர் பாய்ந்தது. லக்கி ஜிம்மி பாதுகாப்பு கொடுத்து கடித்தன. அந்த போராட்டத்தில் அவற்றிற்கு சிறிது சிறிது காயங்கள் கூட ஏற்பட்டன. ஒரு வன்மத்தோடு உடும்பின் தடிச்ச தோலில் பல்லை பதிக்கிறபோது உடும்பால் அசையமுடியாதுபோனது. அந்த நேரம் கயிற்றால் காலை தலையைக் கட்டிக்கொண்டு வெற்றியோடு திரும்பினோம். அன்ரன் ராசாவுக்கு பங்குபோக நேசன்ர வீட்டிலே ஆக்கிறது நடந்தது. அப்ப எங்கள் வீட்டார்க்கு மாட்டிறைச்சி சாப்பிடுறதே பெரிய தலைகுனிவு போல ஒரு நினைப்பு. நாங்கள் மச்சம் சாப்பிடுறது குறைவுதான். செல்லாச்சியம்மா சுடுற பெரிய வட்டரொட்டியும் சம்பலும் கலக்கும். இறைச்சி சாப்பிட

Page 66
128 O வேலிகள் பஞ்சிப்படுவதால் அவ்வளவு வற்புறுத்த மாட்டார். எங்க அம்மா சுத்த சைவம் என்பது எல்லார்க்கும் தெரிந்திருந்தது. நாங்கள் அப்படி யில்லை. ஆனால் சாப்பிடுறதில் அவ்வளவு ரசனையிருக்கவில்லை. பிரம்மன் வீட்டிலேயும், வேட்டை நாய்களான ஜோசி, பார்லி, கரியன் இருந்தன. துவக்கு சகிதம் வேட்டைக்கு இன்னொரு குரூப்பாக போவார்கள். சமயங்களில்.பல தடவை வெறுங்கைகளோட திரும்பினார்கள். பிரமனிடமிருந்த நல்ல மனசில் சிறுக.சிறுக வெறுப்பு சேரத்தொடங்கியது. நாளடைவில்.கூட்டுக்கைகள் உதவிக்கரம் எல்லாம் வலுவிழந்துபோயின.
எங்க வீட்டுக்கு முன்னாலே மாலினி, சுவர்ணா என்ற சிங்களக் குடும்பம் ஒன்று இருந்தது. சுவர்ணாவுக்கு கல்யாணம் கட்டமுதல் மாலினி பிறந்தவள் என என்னவோ கதைகள். சுவர்ணாவின் புருஷன் தச்சுவேலைகள் செய்பவர், அதனால் எல்லாரும் அவரைப் “பாஸ்” என கூப்பிடுவது வழக்கம். பாஸ் செய்த கட்டில்கள் அலுமாரிகள் அவ்விடத்து எல்லார் வீட்டிலேயும் இருந்தன. அங்கேயே மரம் அரிஞ்சு ஒரளவு நியாயவிலையில் செய்து தருவதால் அவருக்கு நல்ல பேர். சிங்களவராகவிருந்த போதும் கலந்து பழகினார். செல்லாச்சி வீட்டுப் பெடியளும் நாங்களும் இவர்களோடேயே பண்டாரிச்சு புளியங்குளத்திற்கு குளிக்கப் போவோம். குளத்திலே குளிக்கிறதிலே எல்லாருக்கும் சந்தோசம். ஞாயிற்றுக் கிழமையிலே பெரும்பாலும் போவோம்.
பாஸ், மாலினி ஆட்கள் நல்லாய் நீந்துவார்கள். சுவர்ணா நாங்க எல்லாரும் கரையிலே படியிலேயிருந்து குளிப்போம். தத்துத் தண்ணியில் குளிக்கிறபோதும் சமயத்தில் படியை விட்டு தவறி விழுந்து விடுவோம். அப்ப அவர்களே கரை எடுத்து விடுவார்கள். பாஸ் வீட்ட எங்களுக்கு நேசம் வளர ஒரு சம்பவம் காரணமாகவிருந்தது. குளத்திலே இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப்போய் வாறதே போட்டியாய் இருந்தது. அதைப் பார்க்கிற என் அண்ணனுக்கும் நீத்திப் போய் வர ஆசை. அவன் தத்து நீச்சல் காரன். வாழைக்குத்தியை குளத்தில் மிதக்க விட்டு அதைக்

கடல் புத்திரன் O 29 கட்டிப்பிடித்துக் கொண்டு நீந்தப் பழகுவான். அன்டன் ராசா தாமரைக் கொடிக்கூடாக விலாசமாக நீந்திப் போவார்கள். வாழைக் குத்தியோடு அவர்களுக்கு பின்னால் நீந்த ஆரம்பித்தான் என் அண்ணன். நடுவில் போன போது கால் சட்டை கழன்று விடவே அதைப் பிடிக்க வாழைக்குத்தியை விட்டுவிட்டான். அப்ப அவனோடு முன்னுக்கு போன அன்டன் ராசாவே குரல் கொடுக்க பாஸ் வேகமாக பாய்ஞ்சு நீந்தி போனார். அன்று பாஸ் இல்லாவிட்டால் அண்ணரை இன்று நாங்கள் பார்க்க முடியாது. எங்கக்கா மாலினியோடு பழகியதில் சிங்களம் நல்லாய் பேசுவாள். சிங்களம் என்றது மொழியில் மட்டம் தான். மிச்சப்படி நல்லவர்கள். எங்கள் பகுதியில் இன்னொரு சிங்கள குடும்பமும் இருந்தது. குசுமா ஆட்கள்; அவர்கள் வீட்டில் பன்றி வளர்த்தார்கள். சிங்களப் பகுதியில் வளர்ப்பது போல சேற்றை வைத்து வளர்த்தது எங்களுக்கு அரியண்டமாக விருந்தது. சிறிய கொட்டில் போட்டு மண்சுவர் எழுப்பி வேலி நல்லாய் அடைச்சு அவர்கள் இருந்தார்கள். வவுனியாவிலிருந்து போகிற கண்டி ரோட் முழுவதும் இப்படி. சிங்களவர்கள் நெடுக வாழ்வதைக் காணலாம். அப்படியான கஷ்டப்பட்ட குடும்பங்களில் ஒன்று அங்கேயிருக்கையில் ஒரு தடவை பெரும் புயல் அடிச்சது. வெட்டி வீழ்த்த முடியாத மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ஞ்சிருந்தன. சில பகுதிகளில் போடப்பட்ட அஸ்பெஸ்ரஸ் கூரைகளைக் காணவில்லை. பல வீட்டுக் கூரைகள் சேதம். தண்ணிர் வெள்ளத்தால் எங்கட வீட்டிலே பாஸ் குடும்பம் ஒதுங்கியிருந்தது. நேசன் வீட்டார்கள் பிரம்மன் வீட்டிலே ஒதுங்கினார்கள். இயற்கையின் விளையாட்டு முடிந்ததும் சில நாட்களின் பின் செயற்கையின் விளையாட்டு நடைபெற ஆரம்பித்தது. எங்கள் மத்தியில் எல்லாம் அதுவே புதிய செய்திகளாக பேச்சாக விளங்கியது. இதிலே சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ நீலச்சட்டைக்காரர்களாம். சிங்கள இளைஞர்கள் சிலர் அரசின் பிழையான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தினார்கள். அனுபவக்குறைவோ அல்லது அரசின் பலம் அதிகமோ நின்று பிடிக்க முடியவில்லை. வவுனியாடவுன் பக்கம் நீலச்சட்டையோடு பிரேதங்கள் ரோடு

Page 67
30 O வேலிகள் வழிய கிடந்ததாக கதைத்தார்கள். சேகுவேரா.? என்ற புதிய பெயரை ஆச்சரியத்தோட எல்லாரும் உச்சரித்தோம் இது நடந்த போது “தமிழ் பெடியன்களையும் சேர்ந்து சுடுகின்றாங்களோ" என்று செல்லாச்சியம்மா கேட்டார். எங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பிறகு அவர்கள் கிளர்ச்சி தோல்வியடைந்ததாக செய்திகள் பேப்பரில் வந்தன. கிட்டத்தட்ட பத்தாயிரம் இளைஞர்களுக்கு மேல் அரசு சுட்டுக் கொன்றிருந்தது. இப்பவும் நாம். வேதம் படிப்பது போலத்தான் போராட்டத்தைப் பார்க்கிறோம். இயக்கப் போர்ட்டுகளையும் சாதி போர்ட்டுக்களையும் காவிக் கொண்டிருப்பதால் எங்கள் நிலை பற்றி எங்களுக்கே இன்னமும் சரிவரத் தெரியவில்லை. ஒருநாள் பிரமன் வீட்டுக்கும் நேசன் வீட்டுக்கும் சண்டையாகி தெறித்துப்போனார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஜிம்மியும் டைகரும் தோட்டத்தில் செத்துக்கிடந்தன. லக்கி நுரை தள்ள நேசனுக்கு அருகில் வந்து நாங்கள் எல்லாம் பார்க்க துடிதுடித்துச் செத்துப்போனது. பிரமன் வீட்டார் நாய்கள் திரிகிற போது சாப்பாட்டோடு எலிபாசாணத்தை கலந்து வைத்துவிட்டிருந்தார்கள் நாய்களின் அருகே வாடையுடன் கக்கலுமிருந்தன. நேசன் கவலையடைந்தான். செல்லாச்சி வயிற்றெரிச்சலுடன் அரற்றினார். பிறகு, அம்மாவுக்கு யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் கிடைக்க நாங்கள் வெளியேறி விட்டோம். அதற்கு அவர்களே நிரம்ப கவலைப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திலும் சிறிது தொலைவு தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் எங்கள் புதிய குடியிருப்பு அமைந்தது. பிறகு நேசன் ஒரிரு தடவை எங்கவீட்ட வந்துபோனான். ஒரு தடவை நேசன் வந்தபோது நானும் அவனோடு சேர வவுனியாவுக்கு போனேன். இப்ப, நேசன் கால்நடைப் பண்ணையில் வேலையில் இருந்தான். நிறைய மாற்றங்கள். பாஸ் குடும்பம் இனக்கலவரத்திற்குப்பிறகு பாதிக்கப்பட்டுவிட்டது.
சிங்களவர்கள் என்றபடியால் இவர்கள் வீட்டை ஆமி வந்து பழகத்தொடங்கியது. சுவர்ணா வேறு வடிவான பொம்பிளை. அவர் தாயாராக இருந்த போதும், ஆமி நடத்தைகளிலிருந்து

கடல் புத்திரன் O 13 தப்பமுடியவில்லை. இயக்கங்களின் சந்தேகத்திற்குள்ளான அவர்கள் குடும்பம் அனைவரும் பெடியளால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தார்கள். மாலினி எப்படியோ தப்பி சிங்களப் பகுதிக்கு போய்விட்டாள். குசுமா குடும்பமும் வெளியேறி விட்டது. பிரம்மன் செத்திருந்தார். திரும்ப ஒரு தடவை சென்றபோது நேசன் அனுப்பிற பணத்தால் டி.வி. வந்திருந்தது. அதைத்தவிர, உசத்திகளைக் கண்டுவிட்டதுபோல ஒரு சிறிய பட்டாளம். சந்தோசமாக விருந்தார்கள் இவர்கள் மத்தியிலும் சீதனப்பிரச்சனை பெரியதாக விருந்தது. செல்லாச்சியின் அன்பில் கடின உழைப்பில் மரியாதை வைச்சிருந்த என்னால் அவர் அப்பாவித்தனத்தையும் புரிஞ்சுகொள்ள முடிந்தது. மகளுக்கு இறைச்ச சீதனத்தை மகன்மாரை வைச்சு மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு மீண்டேன். எத்தனை காலம் கூடவே தனிமையாக்கல். மாற்றங்கள். வாழ்வின் அர்த்தம் அவ்வளவாக விராது போல திரும்ப திரும்ப சுற்றும் ஒரே வட்டம். செல்லாச்சியம்மா, செத்துவிட்டாராம், இப்ப எங்கேயோ ஒரு மனிதரிடமிருந்து செய்தி கிடைத்திருந்தது. நாமும் முழுமையான தனிமையாக்கலுக் குள்ளாகிவிட்டோம்.
§ ති්ද ප්ද්

Page 68
பெண்
தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் இருந்த ஒரு வீடு. அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த கட்டிலில் குந்தியிருந்து வெளியே பார்த்துக்கொண்டு சுலோச்சனா இருந்தாள். அவள் ஒரளவு அழகிதான். இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பிரச்சனைகளில் பெண் எப்படியானவள் என்பது அடிபட்டுப்போய் விடுகிறது. முன்றில். மாமரம். அதில் விளையாடு ற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக டுயட் பாடினாலும். அவற்றின் வாழ்க்கையில் அவ்வளவு அணியாய இழைகள் இராதுபோல பட்டது. அவளுக்கு சற்று தள்ளி துணி ஒன்று வளையில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. 'அம்மாட பழஞ்சீலை அதனுள் ஆறுமாச பெண் குழந்தை
அவள் குழந்தை இண்டைக்கு என்னமோ அழாமல் இருக்கிறது. அங்கே தவழ்கிற குளிர்ந்த காற்றிலே தூங்கிப்போய் விட்டதோ? அவள் மனதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. பொதுவாக பிள்ளையைப் பெற்றால் மகிழ்ச்சி நிலவும். புருசனின் உபச்சாரம் இருபடியாகும். அவள் வாழ்விலே.? அவளைப் போலவே. வாசற்படியிலே சாஞ்சு சிந்தனையில் மூழ்கிக்கிடக்கும் தங்கச்சியைத் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அழுகை வந்தது. சிட்டுக் குருவியாட்டம் பறந்தவள்தலையில் பனங்காயைப் போட்டது

கடல் புத்திரன் O 133 மாதிரி. ஒ. எல். படிச்சுக்கொண்டிருந்தவள். நிச்சயம் பாஸ் பண்ணக்கூடியவள். இப்ப கண்ணில் கருவளையம் விழ.சிந்தனையில் மூழ்கிப்போனவளாய். என்ன வாழ்க்கை, ஏன்தான் கடவுள் இப்படி சோதிக்கிறாரோ? ஜமுனா குழந்தை மனம் மாறாதவள். திடீரென மனிசியாக்கப்பட்டிருக்கிறாள். அவள் வயிறு சிறிது உப்பியிருந்தது. மூன்று மாசம். பெண்களுக்கு என்னமோ சந்தோசமான விசயம். எங்களுக்கு? சங்கரன் காதல் மன்னன்போல. மன்னன் ஆசைப்பட்டதை அடைகிறவன். இங்க இவன்! அவளுக்கு மனசு வெறுத்துப்போய்விட்டது! அவன் அவளை ஏற்கிறேன் எனக்கட்டியபோது எவ்வளவு தூரம் மகிழ்ந்தாள். ஆனால் இப்ப பெற்றோல். ஊத்தியது போலல்லவா இருக்கிறது, அவனை சந்தித்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லைதான். அவள் ஏற்கனவே.சிட்டுக்குருவியின் கனவுகளைத் தொலைத்துவிட்டு நின்றவள். வசந்தம் வருகிறது என..தெரிந்த இந்த நம்பிக்கை. இவ்வளவு குறுகிய காலத்தில் கருகிப்போய்விடும் என்று அவள் நினைக்கவில்லை. அவளுக்கு எல்லாமே அலுத்துப்போனது. கண்ணில் தூசி விழுந்தது. கசக்கினாள்.
தங்கச்சியை திரும்ப.இன்னொரு தடவை பார்த்தாள். இன்னமும் அதே சாஞ்சநிலை. இப்ப என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் படிப்பில் சோடையானவளில்லை. அம்மாவை நச்சரித்தவாறு டியூசன் வகுப்புக்குப் போய்வந்து கொண்டிருந்தாள். “இந்த தடவையே ஈசியாக பாஸ்பண்ணி விடுவேனக்கா பிறகு, ஏ.எல். அதிலும் இதே மாதிரி பாஸ்பண்ணி டீச்சரா வேன். அப்ப, அம்மா வேலைக்குப் போக வேண்டியதில்லை. உனக்கு காப்பும் சங்கிலியும் செய்து போடுவேன்” என்று அடிக்கொருதரம் கழுத்தைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியாகக் சொல்பவள். சோகப் பிறவியாகவிருந்த .எனக்கும் மகிழ்ச்சி தொத்திக்கொள்ளும். இப்படிக் கனவுகளில் இருந்தவளை அவர்களின் அனாதரவு நிலை. இந்த நிலைக்குத் தள்ளிவிட்டதே.
என்னைவிட 4 வயது இளமையானவளாகவிருந்தபோதும் என்மேல் எவ்வளவு அன்பை வைத்திருந்தாள். ஒரு தோழிபோல எவ்வளவு ஆதரவாகப் பழகினாள். கழுத்தைக் கட்டிப்பிடிப்பது;

Page 69
34 O வேலிகள்
கண்ணைப்பொத்துவது அவளோட சீண்டலான பழக்கங்கள். தவிர, பள்ளிக்கூடச் செய்திகள் எல்லாவற்றையும் என்னிடம் கொட்டாவிட்டால் அவளுக்கு அன்றைய பொழுது போகாது. 'இன்ன ஆசிரியருக்கு இன்ன பட்டப்பெயர் தொட்டு இன்ன சினேதிக்கு இவன் மேல் காதல் வரை சகலதும் அதில் அடங்கும்.
அவள் வாசற்படியில் இந்தக் கோலத்தில் இருப்பதை என்னாலே ஜீரணிக்கமுடியாதிருந்தது. எனக்கே இப்படி யென்றால். அவளுக்கு எப்படியிருக்கும்? இருவருக்கும்தான் எதிர்காலம் சதா சிந்திக்கும்படி அமைந்துவிட்டது. அடுத்தவள் செல்லம்.ம்ே வகுப்புப் படிக்கிறாள். டியூசனுக்குப் போயிருந்தாள். அவளாவது நல்லாய் வாழனும். நீண்டப்பெருமூச்சு விட்டாள். அவள் பார்வையில் எதிர்த்தாற்போல் இருந்த கிழுவைவேலி தெரிந்தது.சிறிய கண் மீன்வலைகங்கா அண்ணை வீட்டுப்பக்கம் கொழுவப்பட்டிருந்தது. அதில் ஒட்டுகளை சீர்செய்துகொண்டு சுருட்டோடு அண்ணை நிற்பது தெரிந்தது. அவள் கல்யாணம் நடப்பதில் அவர் பெருமளவு உதவியவர். ‘நல்ல மனிசர்தான்.ம் எங்கட தலைவிதி இப்படியிருப்பதற்கு யார் என்ன செய்ய முடியும்? அவர் இவளைக்காண்கிற போதெல்லாம் “எப்படி இருக்கிற புள்ள” என்று கேட்பார். அவருக்கே இப்ப என்ர கல்யாணம் வெறுத்துப்போய்விட்டது. அயல் அட்டை முழுக்க முழுக்க கடல்த்தொழில் செய்பவர்கள் என்றில்லை. அவரைப்போல கொஞ்சப்பேர் முழுநேரமாக, செய்கிறார்கள். சிலர் தினமும் காலையில் நகர வேலைகளுக்குப் போய்விட்டு இரவில் கொஞ்சநேரம் கடலையும் துலாவுகிறார்கள். இரண்டு வேலை செய்வது அங்கே பொதுவானது. அவள் ஒழுங்கையிலே அவர்கள் சைக்கிள் பட்டாளமாக சாந்து அகப்பை மட்டக்கோல் மற்றும் பல வித தொழில் ஆயுதங்கள் சகிதம் போவதைப் பார்த்திருக்கிறாள். சட்டரிங் (கட்டிடமால்) வேலைக்கு அவ்விடத்து ஆட்கள் பேர் போனவர்கள். கொஞ்சப்பேர் காங்கேசன்துறை சீமேந்து ஆலையில் வேலை பார்க்கிறார்கள். அவள் அப்பா கூட அங்கேதான் வேலை செய்தார். சீமேந்து புகை அங்கே பெரும் பாதிப்பு ரத்தினம் மாமா, அப்பா உட்பட பலர் அந்தப் புகையாலே
அற்பாயிசிலே மண்டையைப்போட்டு விட்டார்கள்.

கடல் புத்திரன் O 135 அவர்கள் வீட்டிலே அவர் செத்தது பெருமளவு பாதித்தது. வீட்டிலே அனைவரும் பெண்கள். எதிர்பாராத.இந்த நிகழ்விற்கு என்ன செய்வார்கள். அம்மாட உறவுகளிலே.சில்லறைப் பிரச்சனைகள்.உப்பிடிப்பிரச்சனைகள் எல்லார்க்கும் 3ம் தரமாகவிருக்கிறபோது.எப்படி தலை போடுவார்கள்? எங்கப்பா மாதிரி ரத்தினம்மாமா வீடும். இன்னும் எத்தனையோ அப்பன்களுக்கு. சீமேந்து ஆலை எம்னாக இருக்கப்போகிறது எங்கட நிலையில் இருக்கிற எத்தனையோ பெண்கள்.வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது?.அவள் முகத்தை முழங்கால்களிலே புதைத்துக்கொண்டு அழுதாள்.
சினிமாவிலே வருகிறமாதிரி பெண் விடுதலைக்கொடியை ஏந்திக்கொண்டு வெளிக்கிடமுடியுமா? சினிமாத்தனங்களை ரசிக்கிற ஆண்களும்.ஏதோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ம். நியவாழ்வு என வருகையில் ‘வாழ்க்கைப்பிரச்சனை’ என்று சொல்லி தட்டிக்கழித்துவிடுகிறார்கள்.இன்று படித்தவர்களில் கணிசமான பேர் வெளிநாடு என போய் சதா தாங்கள் கஷ்டப்படுவதாகவும் சீதனம், சீர் இவ்வளவு தரணும் என்று சொல்லிக்கொண்டு இங்கத்தைப் பிரச்சனைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். ம்.ஒரு பெட்டச்சி பேச்சை யார் கேட்கப்போகிறார்கள். நடுத்தரவர்கள் கணிசமானோர் இரண்டும் கெட்டான்கள் இங்கேயே உருப்படியாய் நின்று கொண்டாலும் “நீ பிழை உவன் பிளை' என்று சொல்லிக்கொண்டு ஒருத்தனை ஒருத்தன் விழுங்கிக்கொள்கிறவனாக சூழல் எத்தனை தூரம் நம்பிக்கையிழந்து போய்க்கிடக்கிறது. ஆளுக்கொரு கொள்கைகள் ஆளுக்கொரு நியாயப்படுத்தல்கள் இன்னும் ஒரு பகுதியினர் அரச உத்தியோகத்தில் இருவர்கள். இவர்களே பொழுது போகாமல் சமூகசேவை செய்வோமே என சிறுசிறு குழுக்களை ஏற்படுத்தி ஏதோ வேலை செய்பவர்கள். குடும்பத்தகராறுகளை, கோவில் விசயங்களை ஒரளவு பேசித்தீர்த்துக்கொள்ள. வைக்கிறார்கள். சேவை குழந்தைகளுக்கு வரும் (அரச) மானியங்களை கிடைக்க வழி செய்கிறார்கள். சமயத்தில் அகதிகளாக வரும் மக்களைப்

Page 70
36 O வேலிகள்
பராமரிக்கிறார்கள். பெயர்களைப் பதிவுசெய்து அரசு, இந்திய நிவாரணம் பெற்றுக்கொடுக்க உதவுகிறார்கள். இப்படி இவர்களின் வேலைகள் பொதுவாக எங்கள் எல்லோர்க்கும் உதவிசெய்பவையே! இவர்களோடு கிளிமாமாவையும் காணலாம். அவர்கள் இளைஞர் அணியின் விளையாட்டுப்போட்டிகளுக்கும் ஆதரவாக நின்றதால் பெடியளின் உதவிகளை பரவலாக பெற்றிருந்தார்கள். அவ்விடம் இரு சாராரும் சேர்ந்து நின்றதனால். கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நின்றது. நம்மவர்கள் நம்மவர்கள் என்று முன்னுக்கு நின்றபோதும் நம்மத்தியில் நடக்கும் சீர்கேடுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சமயத்தில் தங்களுக்கும் பங்கு இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக. ஏதாவது ஒரு தீர்வைத்திணித்து விடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இதுதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. இப்படி எல்லார் மத்தியிலும் இருந்தபோதும் ‘எங்க குடும்பம் அனாதையாவிருக்கிறது போல நினைப்பாள். அவர்களிடமிருந்து கணிசமான உதவியை அவள் வீடும் பெற்றுத்தானிருந்தது. அப்பா இறந்தபோது எங்கட குடும்பம் பெரிய கப்பல் உடைந்து நடுக்கடலில் கட்டு மரத்தைப் பிடிச்சதுபோல தள்ளப்பட்டிருந்தது.
அம்மாட உறவுகள் சிலர் முகமுறித்திருந்தது. அந்த நேரத்தில் மோசமாக பாதித்தது. சின்னம்மாட கல்யாணத்தின்போது சீதன சீர்வரிசையில் ஏதோ.குறைஞ்சு பெரிய பிரச்சனையாகியது. அப்ப, அம்மா பெரியம்மாட்ட.அத்தானை பொறுப்பு நிற்கச்சொல்லிக் கேட்டார். பெரியம்மா புருஷன் கஸ்டம்சிலே வேலை செய்பவர். அவர் நம்பிக்கைக்குரிய ஆளாக.எல்லார்க்கும் இருந்தார். அவரை எல்லோரும் திலகர் அண்ணை என்றே கூப்பிடுவோம். பெரியம்மா கேட்டதற்காக அவரும் பொறுப்பு நின்றார். கல்யாணம் நல்லபடி நடந்தது. பிரச்சனை பிறகுதான் உருவாகத் தொடங்கியது. பாட்டா மண்டையைப் போட்டார். கடைசி மகளின் கலியானத்தையும் கண்குளிர பார்த்துவிட்டு போய்விட்டார். சொத்துப்பத்து என.. அவர்களிடமும் இருக்கவில்லை எங்கப்பா. .திடீரென சீமேந்துப்புகையால்

கடல் புத்திரன் O 137 பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அடுத்தடுத்து பெரிய சாவுகள். கடைசியில் அம்மா கேட்ட குற்றத்திற்காக முகமுறிவு ஏற்படதிலகன் அண்ணை தன் காசைக்கட்டி அழவேண்டியேற்பட்டது. அது நல்லவே அவரைப் பாதிச்சு விட்டது. அவருக்கும் கல்யாணவயசில் பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கையில் வேண்டாத சுமையாக அழுத்தியது. பெரியம்மா அம்மாவை வந்து திட்டி பெரிய சண்டை பிடித்து விட்டுப் பிரிந்தார். சின்னம்மாவோட கதைக்கிறதை சொந்தம் கொண்டாடுறதை அம்மா கட் பண்ணினார். இனி மாமா மட்டுமே ஒரே உறவாக இருந்தார். அவர் சகோதரர்களை ஒற்றுமைப்படுத்த விரும்பினார். பிரச்சனைகள் இருக்கிறபோது அவர் எல்லோர் வீட்லேயும் போய் ஒரே உறவாக இருக்க முடிந்ததே தவிர வேற எதுவும் செய்ய முடியவில்லை. கிளிமாமாட தொந்தரவால் சேவைக்குழு அம்மாவிற்கு உதவ முன்வந்தது. சீனோர் என்ற மீன்பிடிக்கொம்பனியொன்று குழுக்கூடாக அவ்விடத்தில் ஏற்கனவே நேசரி வகுப்புக்கள் மற்றும் சிறுவர் நலத்திட்டங்களை நடத்திவந்தது. இலங்கையும் நோர்வேயும் சேர்ந்து ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஒரே கொம்பனி அது. அவர்களுடைய ஃபாக்ளிகள் காரை நகரிலும் யாழ்ப்பாணத்திலும் அமைந்திருந்தன. பைபர் கிளாஸ், மீன்பிடி படகுகள் செய்தல், மீன்வலை தயாரித்தல், மீன்பிடித்தல் போன்றன அவர்களின் முக்கிய தொழில்கள். தம்மோடு கைகுலுக்கிய தன்மையைப் பாவித்து குழுவும் அம்மாவிற்கு ஒரு வேலை போட்டுத்தரும்படி கேட்டது. அம்மாவிற்கு தையல் நன்றாகத்தெரியும். எங்களுடைய கஷ்டத்தைக் கவனத்தில் எடுத்து அதுவும் நெட்ஃபாக்ரியில் அம்மாவிற்கும் வேலை கொடுத்தது. அம்மாவிற்கு வேலை கிடைத்தது. எங்களுக்கெல்லாம் பெரிய ஆறுதல். அவர்கள் நைட் சிப்ரைத் தவிர்த்து ஒவர்டைம் மும் கொடுத்தார்கள். அதனால் பணக்கஷ்டம் கொஞ்சம் குறைந்தது.
அந்த நேரம் (0/L) படித்துக்கொண்டிருந்த எனக்கு படிப்பு அவ்வளவாக ஒடவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தேன். இருக்கிற வீடும் சின்ன வளவும், 2 பரப்புக்

Page 71
38 O வேலிகள் காணியும்தான் எங்கட சொத்துக்கள். அம்மாவிற்கு கல்யாணத்திலே போட்ட நகைகள் சிலவற்றையும் வைத்திருந்தார். தாலி, காப்பு, சங்கிலி, இப்படி. இந்த நிலவரத்தில் எங்கட குடும்பத்தில் படித்தாலாவது ஒளரவு, நல்லாயிருக்கும். படிப்பை நிறுத்தியதால் நான் வீட்டுக்கு சுமையாக பொறிவது புரியத்தான் செய்தது. என்ன செய்யிறது. அந்த சனியன் பிடிச்ச பாடங்கள் ஏறமாட்டேன் என்கிறதே படிப்பை நிறுத்துவது என்னால் தவிர்க்க முடியாததாகி விட்டது. தலைவிதி. கிளிமாமாவிற்கு என்மேலே தனிப்பட்ட பட்சம் இருந்தது. அவர் “எடியே புள்ள, என்னடி உன்ர படிப்புகளெல்லாம்” என்று முன்னர் கேட்பார். இப்ப அடிக்கொரு தடவை வீட்டிலே வந்து “எடி புள்ள அம்மா எப்படி இருக்கிறா" என்று விசாரித்துவிட்டுப்போவார். அவள் டீ போட்டுக் கொடுப்பாள்.
ஊர்க்கதைகள் சிறிதுநேரம் அலம்புவார். ஒரு தடவை அம்மாவோடு கதைக்கிறபோது “என்ர மூத்தவனை சுலோவுக்கு கட்டி வைச்சால் என்ன? தங்கச்சி நீ என்ன சொல்றே?” என்று கேட்டார். அம்மாவிற்கு முழு விருப்பம். அண்ணன் குடும்பத்திலே சம்பந்தம் செய்வது அவருக்கு உவப்பாகவிருந்தது. அவருடைய மூத்தமகன் சிவம். அவனோடு சின்ன வயசிலே அடிக்கடி சண்டை போட்டிருக்கிறேன். இப்ப கிளிமாமா சொல்லி. அம்மாட்ட ஏதாவது சொல்ல வாரபோது. "அடி சுலோ அம்மாட காதிலே விசயத்தைப் போட்டுவிடு” என்று சொல்லிவிட்டு போறதோடு சரி.
அங்கத்தைய சன சமூக நிலையத்தோட இயங்கிய ‘சம்பியன் ஸ்போர்ட்ஸ் கிளப்' கால்பந்து ரீமிலே விளையாடுகிறவன். அதனாலே தினமும் மாலையிலே கோயில் மைதானத்தில் ஜேர்சி பூட்சகிதம் பிராக்ரிஸ் பண்ணிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அவன் படிப்பைப்பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை. கிளிமாமா அடிக்கடி கறைப்பட்டுக்கொள்கிற விஷயம். "அடி புள்ள, மற்றவைகளாவது. படிக்கிறதா பார்ப்போம்’ பெருமூச்சோடு சொல்லுவார். எனக்கு என்ன பெரிசாய் கனவு
இருக்கிறது எனவே சம்மதம்தான். அம்மா ‘என்னை விருப்பமா’

கடல் புத்திரன் O 139 என்று கேட்கவில்லை. எனக்குப் பிடிக்கவில்லைஎன்றாலும் பொதுவாக என் பேச்ச அங்கே எடுபடாது. எல்லா வீட்டிலேயும்தான். சீதன சீர்வரிசையில் பாஸ்பண்ணினாலும் தொடர்ந்த வாழ்விலும் பெயிலாகிறவர்கள் இருக்கிறார்கள். ‘வெளிநாடு தொழில் வாய்ப்பு’ எனப் புருஷன்மார் திட்டம் போடும் போதெல்லாம். FREE ஆகக்கொடுக்கிற வங்கிகள் பெண்கள் பகுதியினர்தான். அம்மமாட நகைகள் ஒரு பரப்பு நெற்காணி வீட்டிலே அரை பாதி என உறுதி எழுதி அம்மா கையளித்தார். முதலில் ரெஜிஸ்ரேசன் மட்டும் செய்தார்கள். நகைகளை விற்றுப்போட்டு அவரை ஜேர்மனிக்கு அனுப்புவதென புகுந்த வீட்டில் தீர்மானிக்கப்பட்டது. ஜேர்மனியாலே வந்த பிறகு கல்யாணத்தை வைப்பதென. மாமா அம்மாவிடம் சொல்லியிருந்தார். பெரிசாய் என்ன? எளிமையாகத்தான் நடக்கும். நாட்டு நிலவரம் அப்படி. செல்லடிகளும் துப்பாக்கிச்சூடுகளும் அங்கே வஞ்சகமில்லாமல் எல்லாப்பகுதிகளிலும் வானத்திலிருந்து விழுந்தன. ஏதோ புண்ணியத்தில் நாங்கள் தப்பியிருக்கிறோம்.
இனிமேல் இருப்போம் என்பதை திடமாக சொல்ல முடியாது.
எங்கட பள்ளிக்கூடத்தை சில நாட்களாக மூடிவிட்டினம். இப்ப அங்க வேற இடத்து 30-35 குடும்பங்கள் அகதிகளாக வந்திருந்தன. மாமாவிற்கு அந்த அலைச்சலே பெரும் பொழுதை எடுத்தது.
இந்த நிலவரத்தில் கொழும்புக்குப்போய் வெளிநாடு பறப்பதும் அநேகமாக நடந்தது. எங்கட பகுதியிலே 10-15 பேருக்குமேல் சப்ஏஜன்சியாக வேலை பார்த்தார்கள். ஏஜென்சிக்காரர் வேலை வாய்ப்பு இவ்வளவு காலமுமில்லாது இப்ப அதிகமாகவிருந்தது.
மாமா அவளை தங்கட வீட்டிலே வந்து இருக்கச்சொல்லி விட்டார். கல்யாணத்தை ஜாம்ஜாம் என்று நடத்துவதாகவும் வேறு கூறியிருந்தார். வீட்டவிட்டு அவள் வெளிக்கிட்டபோது அவள் அழுதது எல்லாரையும் கண்கலங்க வைத்தது. அம்மாவை, ஜமுனாவை, செல்லத்தை விட்டுப்பிரிவது அவளுக்குத் தாங்க முடியாதிருந்தது. கிளி மாமா “எடி புள்ள நீ எங்க தூரத்திலேயே

Page 72
140 O வேலிகள் போகப்போகிறாய் பக்கத்திலேதான்! இஸ்டப்படுகிறபோது வந்து பார்க்கலாம்” என்று தேற்றினார். மாமா நல்லவர்தான். ஆனால் மாமி அவரை மீறி வீட்டிலே எதுவும் நடக்க முடியாது. என்பதைப் போன ஒரு சில நாட்களிலே புரிஞ்சுகொண்டேன். அவளிட வீடு ஒரே அயலாகவிருந்தாலும், கொஞ்சம் தள்ளியேயிருந்தது. சைக்கிள் காரருக்கு அது தூரமில்லை. நொடிப்பொழுதில் போய் வரலாம். நடக்கிறவர்களுக்கு அது பெரிய தூரம். அவளால் அம்மாவை சகோதரங்களைப் போய்ப்பார்க்க முடியவில்லை. அவர்கள் பாவம். அவளுக்கு ஏதாவது செய்து காவி வந்து.பார்த்தார்கள். "அக்கா எப்படியிருக்கிறே என்ற அந்தப் பாசம். அந்த வீட்டிலே அவள் சதா வேலை செய்வது அதை அவள் சொல்ல விரும்பவில்லை. மகிழ்ச்சியாகவிருப்பதாக காட்டிக்கொண்டாள். சிவம் ஜேர்மனிக்குப்போற அலுவல்கள் நடக்கத்தொடங்கின. அவள் கொண்டு வந்த நகைள் விற்கப்பட்டு ஏஜென்சிக்காரரிடம் கையளித்தது போக, புதுச்சட்டைகள், கோர்ட், சப்பாத்து, சூட்கேஸ்.அவன் போறதுக்காக வாங்கப்பட்டது.அவள் வயிறு சிறிது உப்ப மனிசியாகிக்கொண்டிருந்தாள். பிள்ளை பிறந்தபிறகுதான் கல்யாணம் நடக்கப்போகிறது. சிரிப்பு வந்தது. இப்பவே எளிமையாக வைத்திருக்கலாம். நாட்டு நிலவரம் ஒரு சாட்டு. சிவத்தின் இந்தச் செயல்..?? அவனை ஜேமனிக்கு அனுப்புவதே அவர்களுடைய முக்கிய நோக்கம். மாமாவைக்குறை சொல்ல முடியாது. அவர் ஒருத்தர்தான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மருமகளாக ஏற்கவிரும்புகிறவர். ஆனால் அவர் மூக்கணாங்கயிற்றை மாமியிடமல்லவா கொடுத்துவிட்டார். ஏஜென்சிக்காரன் இந்தக் கிழமை அடுத்த கிழமை என போக்குக் காட்டிக்கொண்டிருந்தான். ஒரு கிழமை பயணம் சரிவர கொழும்புக்கு 2 நாட்களுக்கு முதலே போனான். அப்படியே பிளேனிலே பறந்துவிட்டான். சுலோவிற்கு வயிற்றில் பிள்ளை வளர்வ்து புரிய மலர்ந்துபோனாள். ‘நானும் ஒரு அம்மாவாகப் போறேன்’அவளுள் வசந்தங்கள். சிவத்திடமிருந்து கடிதம் வந்தது. அவளை கவனமாக இருக்கச் சொன்னான். மற்றபடி சுகமாய்ப் போய்ச் சேர்ந்ததாக எழுதியிருந்தான். அகதிகள் முகாமில் கணக்க யாழ்ப்பாணப் பெடியளுடன் தானும் இருப்பதாகக்

கடல் புத்திரன் O 141 குறிப்பிட்டிருந்தான். மாசத்திற்கு ஒன்றாக கடிதம் வந்தது. திடீரென வராமல் நின்றது. அவள் எழுதின கடிதத்திற்கு பதிலைக்காணோம். அவளுக்கு 8 மாசம் ஆகியது. வயிற்றில் சிறிது நோவெடுக்க.தொடங்கியது. புள்ள பிறக்கிற.நேரம் புருசனின் மேல்.அன்பு காட்றாற்று வெள்ளமாக பிரவாகிப்பது எல்லாப் பெண்களுக்கும் ஒன்றதானே! “அதனால் அவள்.கலக்கமாக விருந்தாள். 9 மாசமாகும்போது ஜேர்மனியில் இருக்கிற அயலான் ஒருத்தனின் கடிதம் பெரிய குண்டைத் தாங்கிவந்தது. ‘சிவம் அகதிகள் முகாமை விட்டு வெளியேறி வேலையும் எடுத்துவிட்டான். அவன் கலா என்ற பொட்டையோடு குடும்பம் நடத்துறான். கலா யார் என்பது ,பற்றிய செய்தி தனக்கு அவ்வளவாகத் தெரியாது. அவன் ரூம் மேட்டாகவிருந்தவன் ஒருத்தனின் தங்கச்சி என்று கேள்வி என்று எழுதியிருந்தான். அவளால் தாங்கமுடியவில்லை. என்ன செய்வாள்?அழுதாள். மாமா “என்ர மருமகள் நீதானம்மா! வேற யாரையும் எற்கமாட்டேன். அவனைக்கொல்லுவேன்” என்று கத்தினார். மாமி “சனியன், நீ நல்லபடி நடக்கவில்லை” எனத் திட்டினாள். வயிற்றிலே சுமந்தபிறகும் மாமிக்கு நல்லபடி நடக்கத் தெரியவில்லை. அவளுக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது. வாழ்ந்து என்ன பிரயோசனம் என்று நினைத்தாள். அங்கத்தைய எல்லாப் பெண்களுக்கும் புருஷன்மாரே உலகமாகவிருக்கிறார்கள். அந்த உலகம் அநியாயமாக சுற்றுறபோது, அவர்களுக்கு வாழ்வே இருண்டு விடுகிறது. அம்மாவோடும் தங்கச்சியோடும் அழுது என்ன பிரயோசனம்? அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். பூமிக்கு பாரமாக இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லம். அவள் ஒருநாள் களவாக மண்ணெண்ணையை எடுத்துக் குடித்தாள். அவளுக்குத் தெரிந்த வழி.அதுவொன்றாகவேயிருந்தது? மாமா பதறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டோடினார். “மாமி செத்துப்போகத்தானே குடித்தாள். செத்துப்போகட்டும்” என்று அவளை ஏசியதுபோலக் கேட்டது. அவள் எல்லாரையும் விட்டுப்போகத்தானே போகிறாள்? யார் எப்படியிருந்தால் என்ன? யார் என்ன பேசினால் என்ன?நிம்மதியாக கண்ணை மூடி
மயங்கிப்போனாள்.

Page 73
142 O வேலிகள் வாந்தி எடுக்கவைச்சு செய்த சிகிச்சையால்தான் இன்னமும் எல்லாரையும் விட்டுப்போகவில்லை என்பதை அறிந்து அழுதாள். அம்மா,ஜமுனா, செல்லம் எல்லோரும் சூழ கண்ணிரோடு நின்றார்கள். “எடி விசரி நாங்கள் இல்லையா? ஏண்டி இந்த முடிவுக்கு போன நீ” அம்மா அவள் தலையை ஆதரவாக தடவி அழுதார். மாமா எழுதிய உறுதி எல்லாவற்றையும் மாற்றி எழுதினார். திரும்ப அவர்களிடமே கையளித்த அவரால் நகைகளைக் கொடுக்க முடியவில்லை. நடுத்தர வருவாய் உள்ள உத்தியோகத்தர். அவர் சிவத்தை அனுப்ப அதைப் பயன்படுத்தியிருந்ததால், "இலேசிலே அந்தப்பணத்தைப் பிரட்ட முடியவில்லை. “தங்கச்சி எப்படியும் உனக்குத் திருப்பித்தருவேன்" எனக் கூறினார்.
சிவம் நகைக்காசை தான் அனுப்புவதாக எழுதியிருந்தான். உவன் வந்தால் கொல்லுவேன் என்று திட்டி பதில் கடிதம் போட்டதாகச் சொன்னார்கள். மண்ணெண்ணெய் குடித்ததால் பிரசவம் குறைப்பிரசவமாகி குழந்தை செத்தே பிறந்தது.ம்! பெண்ணுக்கு சொந்தம், துயரம் ஒன்றே! அதற்குப்பிறகு அவள் நடைப்பினம்தான். கனவுகள் கண்டு எழும்பி பயந்துவாழும் பிறவிபோல வருத்தக்காரியாகிவிட்டாள். வீட்டிலே அதிகமாகப் படுத்திருந்தாள். மண்ணெண்ணெய் குடித்தது அவளைத் தொடர்ந்தும் பாதித்தது. அடிக்கடி மயங்கி விழுந்தாள். ஏலாதவள் போல் நடமாடினாள். இவ்வளவுக்கும் அவளுக்கு வயசு 19 பிளஸ். இதற்குள்ளே.ஒரு யுகத்தைக் கடந்தது போல் பாதிக்கப்பட்டு விட்டாள். அந்த நேரம் அவர்களை இன்னொரு கஷ்டமும் வந்து அழுத்தியது. கடவுள் கொடுமைக்காரனாகத் தோன்றினான். அவன் ஒரவஞ்சகம் செய்ய நாங்களா
அகப்பட்டோம்? அம்மா வேலைத்தளத்தில் யோசனையில் மயங்கிவிழ.ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கே எக்ஸ்ரே தொட்டு பல சோதனைகள் செய்யப்பட்டன. அம்மாவிற்கு அநேகமாக .கான்சர்.என
அறிவித்தார்கள். இருந்தாலும். மகரகமைக்கு றிப்போர்ட்டுகளை அனுப்பி பதில் வந்த பிறகே திடமாக சொல்லமுடியும் என்றார்கள்.

கடல் புத்திரன் O 143
மகரகமைக்குப்போன நிப்போர்ட்டுக்கு பதிலே வரவில்லை. இனப்பிரச்சினையால் அவசர அமைப்புகள் அனைத்திலும் பாகுபாடுகள் காட்டுறதுக்கு பழக்கப்படுத்திவிட்டார்கள். என்றுதான். மனிதர்கள் இந்தப்பிரச்சனைகளை சுட்டுப் பொசுக்கப்போகிறார்களோ, அம்மாவிற்கு கான்சர் என்பது பயத்தை ஏற்படுத்திவிட்டது. என்னைப்போல அவரும் வருத்தக்காரியாகி படுக்கையில் விழுந்து விட்டார். சீனோர் நிறுவனம் அனுதாபமாக நடந்து கொண்டது. அது அவர்களது வியாபாரத் தந்திரமாகவும் இருக்கலாம். கணிசமான நட்டஈடு கொடுத்தது, 6000 ரூபாய் வரையில். சக தொழிலாளர்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறகொம்பனியிலும். போய்க்காசு சேர்த்து 4000 ரூபா வரையில் கொடுத்தார்கள். அம்மாட இடத்துக்கு அந்தப்பகுதி ஆள் ஒருத்தரை தெரிவு செய்யச்சொல்லி நிறுவனம் குழுவிடம் கேட்டுக்கொண்டது. பணத்தை அம்மா புத்திசாலித்தனமாக வங்கியில் வைப்பு செய்தார். “இனிமேல் பணவருவாய் இருக்கிறதை வைச்சுத்தான் என்பதால் கவனமாக இருக்கவேணும்” என்றார். கொஞ்ச நாளைக்குப்பிறகு பணம் தீர்ந்துபோகும். பிறகு அவர்கள் நிலை? யோசிக்க அவளுக்கு அலுப்பாகவிருந்தது. அதோடு பிரச்சனையாக 3. பொம்பிளைப்பிள்ளைகள். உறவுகள் யார் உதவப்போகிறார்கள்? எல்லார்க்கும் , தம்தம் பிரச்சினைகள்.பாரதப்பிரச்சினைகள். எங்களைக் கவனிக்க இனி அவதாரங்கள்தான் வரவேணும். நடுத்தெருவுக்குப்போற. எங்கட நிலை.தெரிந்தும் மற்றவர்கள். மனிதாபிமானக் குணங்களை விட்டு வாழப்பழகிவிட்டார்கள். தம் தம் பிள்ளைகுட்டிகள் என்ற கனமான பைகளைத் தூக்குவதால் இன வாதிபோல முகத்தை முறித்துக்கொண்டு பேர்ய் விடுகிறார்கள். அம்மாட சகோதரங்கள் மத்தியில் அவவும் அவர்களைப்போல் ஒருத்திதானே! ஒருத்தரின் வாழ்வு அவலமாக முடிந்தால்.மற்றவர்களுக்கு ஒன்றுமேயில்லையா? அப்படி வாழுறதுக்கு சமூகப் பிரச்சினைகள் பெரிதும் காரணமாக விருக்கின்றன. அதை அகற்றுவதற்கு தம்தம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியவர்கள் தாம் நல்லபடியாய் இருப்பது தமக்குக் கிடைத்த வரம் போல இருக்கப் பழகிவிட்டார்கள்.

Page 74
144 O வேலிகள் தங்களுக்கும்.சகோதரப்பிரச்சனைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று முடிவெடுக்கிறபோது.நமது பகுதி சீரழியாமல் என்ன செய்யும்? தம் பிள்ளைகளை பணத்திற்காக சேவகம் செய்ய. பழகிவிடுகிறார்கள். கிராமப்புறங்களில் வாழ்கிற அன்பு, பாசம், இவயெல்லாம்.கொன்றொழிய சிவத்தைப்போல சங்கரனைப் போல் ஆட்கள் ஏன் தோன்றாமல் இருக்கப்போகிறார்கள். அம்மாவைக் கவனிக்கணும் என்ற உணர்வில் நான் கொஞ்சம் தைரியம் பெற்றவளாக வீட்டில் நடமாடத் தொடங்கினேன். வீட்ட கொஞ்சம் அழகுபடுத்தினேன். அவருக்கும் சந்தோஷம். என் மாற்றத்தை தன் நோயிலும் விரும்பினார். கிளி மாமா மட்டும் வந்து கொண்டிருந்தவர் அவரும் என்ர பிரச்சனையால் வருவதைத் தவிர்த்துவிட்டார். வீடு மெளனத்தில் குமைந்துகிடந்தது. கங்கா அண்ணை வேலியருகில் வந்து ஆதரவாக கதைப்பார். அவருக்குத் தொழில் பெருமளவு நேரத்தை விழுங்கியது. அவர் வீட்டிலும் ஒரு கரைச்சல் ஏற்பட்டது. அவரின் மூத்தமகன் கணேஸ்.ஏதோ ஒரு இயக்கத்திற்கு ஒடிப்போய்விட்டான். எந்தப்பிரிவு என்பதை தெளிவாக எழுதி வைக்கவில்லை. அவராலும் அறிய முடியவில்லை. இயக்கங்கள் பலது இருக்கின்றன. என்பதையே தெளிவாக அறியவே நாள் எடுத்தது. ஒவ்வொன்றினதும் துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்தபிறகே இத்தனை வகை இருக்கிறதா? என்று எல்லோர்க்கும் ஆச்சரியம். சமயத்தில் தம்தம் பேப்பர் புத்தகங்களை விற்க வருகிறபோது "இயக்கப்பெடியளாம் என்ற மரியாதையில் அவற்றை வாங்குவது நடந்தது. நாட்டு நிலவரத்தை அறியும் ஆவலில் அவர்களிடம் கதைப்போம். எம்மை சப்போர்ட்டர் என நினைச்சுக்கொண்டு அவர்களும் கொஞ்சம் கூட்டியே கதைப்பார்கள். இயக்கம் என்பது ஒவ்வொரு வியாபாரத்தனம் கொண்ட கடைகளை விரித்து வைப்பதுபோல நடந்து கொண்டன. அரசாங்கத்தின் படைகளோ இனக்காய்ச்சல் கொண்டு யுத்தமே நடத்தத் தொடங்கி விட்டபோது. இவர்களின் கடைத்தனம் அவ்வளவாக உறுத்தவில்லை. தப்பியவையள் எங்களுக்காக வெளிக்கிட்டிருக்கிறார்கள்.

கடல் புத்திரன் O 145
எல்லோரும் ஒன்று சேர்ந்தால்.எங்களுக்கு விடிவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் ஏற்பட்டன. சிற்சில பகுதிகளில் சாதியில் ஒருத்தன் இயக்கத்தில் இழுபட்டால் அவனோடு பிணைக்கப்பட்டவர்களின் கணிசமான சப்போட்டை அந்த இயக்கம் பெற்றது. அது கிளைவிட்டதுபோல யாழ்ப்ாண மூலை முடுக்கெல்லாம் பரவி அவர்களுக்கெல்லாம் ஒரு சாதகமான நிலையை உருவாக்கியது. இதைவிட, அரசியல் கருத்துக்களால் கவரப்பட்டு புதிய தமிழீழம் படைக்கப்படபோகிறது என்ற நம்பிக்கையில் கணிசமான இளைஞர்கள் இயக்கத்திற்குப் போனார்கள். இம்முறையும் கலவரத்தில் கொழும்பு திருகோணமலையே பெரும் பாதிப்புக்குள்ளாகியது. ஆனால் வழக்கத்தை விட யாழ்ப்பாண இளைஞர்கள் கொழும்பில் ஒரு தொகைவாரியே பலியாகிவிட்டனர். அவர்கள் வீட்டில் இருந்ததெல்லாம் ஒவ்வொரு பெடியன்கள். உணர்வூட்டப்பட்டு இயக்கத்திற்குப் போனார்கள். இப்படி இயக்கம் என்று சொல்லி கணிசமான பேர்களை பயிற்சிக்கென இந்தியாவுக்கு அனுப்பும் நடைமுறைகள் எங்கும் நடைபெறலாயின. திருவிழாக்காலங்களில் பெண்கள் முதிர் பெண்கள் சலசலப்பதுபோல எங்கும் இந்த சலசலப்பே நிலவியது. தங்கம் உன்ர பொடி எப்படி? இருக்கிறானா போய்விட்டானா? என்ற அனுதாப விசாரிப்புகள். “வேறு எதற்காகப் போய் இருக்கிறான். கொஞ்சம் யோசித்துப்பார். உந்த சிங்கள ஆமி அறுவான்களிட்டயிருந்து காப்பாற்றத்தானே. கவலைப்படாதே" ஆதரவான அன்பு அலை எங்கும் வியாபித்து பிரவாகித்தது. சமயத்தில் 5-10 ரூபா அரிசி பருப்போ மற்றும் எந்த சாமான் தேவை ஏற்பட்டபோதும் சனங்கள் தயங்காமல் “உனக்கில்லாததா” என்று உதவி செய்தார்கள். வேலி கதியான்கள் பின்னப்பட்ட தென்னங்கிடுகுகள் கூட பணத்தைப் பெருசு படுத்தாது கொடுக்கிற தன்மை அவ்வூர் மக்களிடம் ஏற்பட்டது அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அவரவர் வீட்டிலே பெரிசாய் மதிச்ச பொக்கிசங்களான மகன்மார் போனபிறகு எல்லார் மத்தியிலும் மனிதாபிமானம் கொடிவிட்டுப் படர ஆரம்பித் திருந்தது. இயக்கப்பெடியள்களுக்கான ஒரு வரவேற்பான. பொற்காலம் ஏற்படத்தொடங்கியது. வேலிப்பிரச்சனை,

Page 75
146 O வேலிகள் சீதனப்பிரச்சினை, பங்குப்பிரச்சனை, என சமயத்தில் முரண்டு பிடிப்பவர்களையும் இயக்கப்பெடியள் தட்டிக்கேட்க அடங்கிப்போனார்கள். நாங்களும் அனாதை இல்லை என்ற நினைப்பு மெல்ல மெல்ல எங்கள் நெஞ்சில் ஏற்படத் தொடங்கியது. பெண்களிலும் பயிற்சி பெற்ற மகளிர் அமைப்பு என புற்றிசல்களாக வேலை செய்ய எங்கட அம்மாமார்க்கு எல்லாம் மூக்கிலே ஆச்சரியம் பூத்தது.
ஒவ்வொரு பெயர்களைத் தாங்கி வந்தாலும் மகளிர் அமைப்பு பெண்நலத்திட்டங்களையே நடத்தியது. தையல் வகுப்புகளை வாசிகசாலையில் ஒழுங்குபண்ணியது. பெடியங்களை “தோழர்” என்று அழைத்து காரியங்களை நடத்தும் பாங்கு 'ஒரு ராட்சியத்தை ஆள பெண்ணாலும் முடியும் என்பதைக் காட்டுவது போலவிருந்தது. இப்படி ஒரு நாள் இரவு நேரத்தில் அரசியல் வகுப்பு வைக்கிறதுக்கு எங்கட வீட்டிலே “இடம் தருவீர்களா” என்று கேட்டுக்கொண்டு வந்த கேமா ஆட்களுடன் சங்கரன் வந்தான். அவன் எங்கட பகுதிப்பெடியன் சிவத்தைப் போல சாம்பியன் விளையாட்டுக் கால்பந்துக்குழுவிலே விளையாடு கிறவன் இயக்கம் என தவறி ஒடாமல் இருந்தவர்களில் ஒருத்தன் நடேசன் மாஸ்டருக்கு இரட்டையர்களாக பிறந்த பெடியள்களில் மூத்தவன் 2 மணித்தியாலம் மூப்பு. மற்றவன் ராஜேஷ். ராஜேஷ் கம்பஸ் என்ரர் பண்ணியிருந்தான். இவன் படியாமல்.விளையாடி காலத்தைப்போக்கிவிட்டிருந்தான். தம்பி படிச்சிருப்பது அவனைப் பாதித்தது. படிச்சவர்கள்தான் ஒரளவுக்காவது அரசவேலை எடுக்கமுடியும். மற்றவர்கள் இனக்காய்ச்சலால் அதிகமாகவே சீரழிய வேண்டியிருந்தது. எதிர்கால பயமோ.என்னவோ சோர்வாகவே அவன் இருந்தான். இந்தியாவுக்குப் போகாட்டி என்ன இவனைப்போன்றவர்களை. இங்கேயே வேலைக்குள் இழுக்கவா இயக்கப்பெடியளுக்குத் தெரியாது. சங்கரனைப்பற்றி கங்கா அண்ணை நல்லாவே சொல்லுவார். அவர் அவன் கால்பந்து விளையாட்டில் சொக்கிப்போன ஒரு ரசிகர். தம்பி அங்க விளையாடினால் கோல்போட்டால் இங்க இவர் குதிப்பார் இவனை எனக்கு முதலே தெரியும். கோல் அடிப்பான் என்று

கடல் புத்திரன் O 147 விலாசம் அடிப்பார். சுலோ பொழுது பாராமல் கங்கா அண்ணையோடு வேலிக்கருகில் நின்று பேசிக் கொண்டி ருப்பாள். ஆட்டுக்கும் அப்படியே கிளை ஒடிச்சுவிடுவாள். குருவி பறக்கும் அந்த சூழ அவளுள் பழைய உற்சாகத்தை உயிர்ப்பிப்பதுபோல இருக்கும். அம்மா படுக்கையில் விழுந்தவுடன் ஆடு ஒன்று வாங்கிவிட்டிருந்தார். அவன் இப்ப பெட்டைகளோடு வருகிறபோது இயக்கப்பெடியன் என்ற மதிப்பு எங்களுக்கு இருந்தது. பெட்டைகளும் இலகுவில் என்னுடைய சினேகிதிகளாகிவிட்டனர். அவள்கூட மகளிர் அமைப்பைச் சேர்ந்தவளாகிவிட்டாள். மகளிர் அரசியல் வகுப் போடு சமயங்களில் இரவில் வந்து தங்கிவிட்டு பகலில் போவதும் பழகிப்போய்விட்டது. கேமா அவளின் திக்ப்ரெண்ட் பாதையில் சங்கரனைக்கண்டால், அவளைப்பற்றி விசாரிப்பாள். அவள் தலைவி போன்றவள். அவ்விடத்தில் ஒரளவுக்கு தையல்கிளாஸ், ரைப்ரைட்டிங் வகுப்புகள் ஒழுங்கு பண்ணியதும் அவள் வேறு இடத்திற்கு வேலை செய்யப்போய்விட்டாள். நல்லபடி வீசிய காற்றுதிடீரென மாறி வீசத்தொடங்கியது. இயக்கங்கள் மத்தியில் உள்பூசல்கள், கொழுவல்கள், எம்.ஜி. சிவாஜி ரசிகர் மன்றம்போல் ஒன்றை ஒன்று வம்பம் பாராட்ட வெளிக்கிட்டன. அவர்கள் இடத்துக்கருகில் சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. ஒரு இயக்கத்தில் மேல் ஒரு இயக்கம் திடீரெனத் தாக்குதலை மேற்கொண்டது. அவ்விடங்களில் காம்ப் என்று இருந்த சிறிய சிறிய வீடுகளில் இயக்கப்பெடியள் பிரேதங்களாக நிரைக்கு கிடத்தப்பட்டனர். கங்கா அண்ணை போய்பார்த்து வந்து கண்ணராவியை அழுகுரலில் விபரித்தார். “உவங்களை நேற்று சைக்கிளில்போய் வரேக்கை கண்டனான். இண்டைக்கு இப்படி.” இயக்கம் என்பது விபரீதங்களையும் காவியது என்பது முதல் தடவையாக புரிந்தது. வரவேற்பை காவி நின்ற எல்லோர் நெஞ்சிலும் திகைப்பும் பயமும் கலந்த கலவை ஏற்பட்டது. கிட்டத்தட்ட அந்தப் பகுதியில் இறந்த பெடியளை எல்லாம் ஒரே காம்ப்பில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். 20-25 பேருக்கு கிட்ட இருக்கும்.

Page 76
148 O வேலிகள் அவ்வளவு பேரும் நேற்றுவரை புத்தகங்களை பிரசுரங்களை காவி வந்து படலையில் நின்று “வாங்குங்கோ அக்கா” என்று விற்றவர்கள். சமயங்களில் பல வீடுகளில் “வாருங்கோ தம்பி” என டீ போட்டு கொடுக்கப்பட்டவர்கள். “எப்ப தம்பி விடியல் வரும்” என்று விசாரிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு இயக்கங்கள் மத்தியிலும் கொழுவல்கள் விரிசல்களாகிப் படர்ந்ததால் ஒவ்வொன்றும் அனாதைகளாகவே இருந்தன. ஒவ்வொரு சாதிகளைப்போல அனாதைகளாகவே சீரழிந்தன.
சங்கரனின் பகுதி ஆட்கள் பாதிக்கப்படவில்லை.ஆனால் அவர்கள் மத்தியில் இன்னொரு கரைச்சல். உட்பூசல் மகளிர் அமைப்பு மற்றும் இயக்கப்பெடியள் செயலற்ற நிலைக்கு உள்ளானார்கள். இயக்கத்துக்குப்போன பெடியள் திருப்பி வர்ரதை இப்ப தாய்மார்கள் அவ்வளவாக விரும்பவில்லை. கைவிட்டு எண்ணக்கூடியவர்கள். அவர்களை இந்தியாவிலிருந்தே வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட முயற்சித்தார்கள். ஆனால் சங்கரனின் பகுதியில் அந்த நிலையிலும் ஒரு ஆச்சரியமான விடயம் நடந்தது. இயக்கப் பெடியளில் பலர் மகளிர் அமைப்பினைச் சேர்ந்தவர்களையே கைப்பிடித்தார்கள். சாதி சமய சீதனப்பிரச்சனை அற்று ஏற்பட்ட அந்த மாற்றம் பல யாழ்ப்பாணப் பெண்களை கரை சேர்த்தது. பெண்ணடிமைத் தனங்களை ஒரளவுக்கு பேசியவர்களாக இருந்தால். ஆண் அடக்குமுறையைற்ற வாழ்வை சில பெண்கள் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. கேமாவும் நகுலன் என்ற பெடியனை திருமணம் செய்து விட்டதாகக் கேள்விப்பட்டார்கள்.
இந்த நாட்களிலே சங்கரன் என்ன நினைத்தானோ? திடீரென என்னை திருமணம் செய்யப்போவதாக அம்மாவிடம் வந்து அனுமதி கேட்டான். நடேசன் மாஸ்டரும் பெண்சாதியுமாக வந்து கேட்பதை விடுத்து இவன் மட்டும் வந்து கேட்கிறான் என்றால். உது இந்த இயக்கப்பெடியளின்ரை நடைமுறை போலிருக்கு என்று அவர் தயங்கினார். "தம்பி மாஸ்டரை அனுப்பன். கதைச்சு நல்ல முற்று எடுப்பம்" அவன் முகம் தொங்கிப்போய்விட்டது. அவனுக்கு நேற்றுவரை இயக்கம் இருந்தது. இண்டைக்கு திரும்பவும்

கடல் புத்திரன் O 149 அனாதையாகப்போனவன் போல் சோர்ந்து விருந்தான். “எனக்கு முழு விருப்பம். அப்பாவின் காதில் போட்டு பார்க்கிறன். அவர் மறுப்பு தெரிவிச்சாலும் எனது முடிவில் மாற்றம் இல்லை” உறுதியாகச் சொன்னான். அம்மாவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. கங்கா அண்ணை மாஸ்டர் துள்ள்க் குதிப்பதாக செய்தி கொண்டு வந்தார். “சொத்திலே பங்கு கிடையாது” எனச் சொன்னபோது அவன் ரோசத்தோடு வெளிக்கிட்டு அவர்கள் வீட்ட வந்து விட்டான்.
பிறகு எளிமையாக கண்ணகி அம்மன் கோவிலில் தாலி கட்டியது. குடும்பம் என அந்த சிறிய வீட்டில் இருந்தது. அவளுக்கு கண்ணிர் துளிர்த்தது. அவனோடு மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலைவெட்டி இல்லாத நிலைமை. அவனையே மோசமாகப் பாதித்தது. எங்களையும் பாதித்தது. மாஸ்டர் குடும்பமாக இருந்ததால் அவன் தொழிலுக்குப் பழக்கப்படாதவனாக இருந்தான். அப்படி.ஒரு படி விலகியவர்கள் எல்லாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரே வழி வெளிநாடு போவதாகவே இருந்தது.
மாஸ்டர் முகத்தை முறிச்சதால் அதற்குரிய பணத்தை திரட்டுவது எங்கள் தலையில் விழுந்தது. எங்கட தலையில் பனங்காயை வைச்சுக்கொண்டு இன்னொரு காயை விலைக்கு வாங்கியது போலாச்சு. என்னோட மணவாழ்க்கையால் அம்மா தங்கச்சி இவயள்கூட என்னால் பாதிக்கப்படுகிறது வருத்தமாயிருந்தது.
வெளிநாடு போற எண்ணம் அவனிடம் உறுதியாக விழுந்திருந்தது.
என்னைக் கட்டியதற்காக அம்மா சீதனமாக வீடு வளவில் பாதியை எழுதிவைச்சிருந்தார். அதை உடனடியாக ஈடுவைக்கச்சொல்லி அவன் ஒரே பிடியாக நின்றான். இருக்கிறதே ஒரு வீடு. அதையும் நேற்று வந்தவனுக்காக விட்டால்.ஒருவேளை இவனும் கைவிட்டால் நாங்கள் எங்கே போவோம்? யார் உதவுவார்கள்? ரத்த உறவுகளே பொருளாதாரப் பிரச்சனைகளால் இயக்க வடிவம் எடுத்திருக்கிறபோது எந்த வித உரிமையும்

Page 77
150 O வேலிகள் இல்லாத அயலவனை எப்படி எதிர்பார்க்க முடியும்? நாங்கள் பிச்சை எடுத்தால் என்ன? ஏன் எண்டு கேட்கிறதுக்கு ஆக்கள் இல்லாமல் இருக்கும்.
யோசிக்க யோசிக்க சுலோவுக்கு மண்டை வெடித்தது. கல்யாணம் அவளுக்கு சரிவராத ஒன்று. அலுத்துப்போனாள். அதோடு அவன், வங்கியிலே போட்டு வைத்திருக்கிற பணத்தையும் எடுத்துத் தரச்சொல்லி கட்டாயப்படுத்தினான். அவளால் அவனைப்புரிஞ்சுகொள்ள முடியவில்லை. இயக்கம் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட அநியாயங்களை தட்டிக்கேட்டது. இப்ப குழம்பிப்போய் கிடக்கையில் எல்லாமே பழையபடியே.கோயில் குழுஅதிகாரம் கொண்ட குழுவாக எங்கள் பகுதியில் இயங்கியது. பிரச்சனைகளின் தரத்தைப்பொறுத்து விலத்திவைப்பது, தண்டம் விதிப்பது, கட்டாயப்படுத்துவது அதன் செயற்பாடாக இருந்தது.
விலத்தி வைத்தால் கல்யாணம், செத்த வீடு எதிலும் ஊர்ச்சனம் பங்கு பற்றாது. அந்த வீட்டார் மட்டுமே மாயவேண்டும். அவர்கள் எக்கேடு கெட்டாலும் ஊர் கவலைப்படாது. கோயில்குழு காலங்காலமாக தேசவழமை என்ற பெயரில் சட்ட ஆவணங்களை வைத்திருந்து ஆட்சி நடத்திவந்தது. வருகிறது. இந்த நடைமுறை மற்ற சாதிகளை விட எங்கட சாதியில் அழுத்தம் கூடவாகயிருந்தது. மற்ற சாதிகளின் முரண்பாடுகளினால் பட்ட அனுபவங்களால் நம் முன்னோர் தயாரிச்சது. இருந்தபோதும் சிலவிதிகள் மோசமாகவே இருந்தன. அவற்றை திருத்த யாருமே முயலவில்லை. இயக்கம் வந்த பிறகு சாதி முரண்பாடு குறைந்தது போலிருந்தது.
அதனால் எங்கட குழு அதிகாரமற்று போயிருந்தது. சங்கரனிடம் இந்த டிமாண்ட் பண்ணிறகுணம் எங்கேயிருந்து வந்ததோ? இவனைச் சொல்லிக் குற்றமில்லை. எங்கள் சாதி சனங்களைத்தான் குறை சொல்லவேணும். நாம் கூட எது நடந்தாலும் தட்டிக்கேட்க முடியாத பிறவிகளாய் தானே இருக்கிறோம்.

கடல் புத்திரன் O 151
வீட்டின் மறுபாதி ஜமுனாவின் பெயரில் இருந்தது. ஈடுவைக்க அவளின் அனுமதி தேவையாயிருந்தது. எனக்கும் வீட்டை ஈடுவைக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. அவளைக்காட்டி மறுத்துவந்தேன். அதனால் சங்கரன் ஒருநாள் குடித்துவிட்டு அம்மாவை தங்கச்சியைத் திட்டினான். சத்தி எடுத்தபடி விழுந்து படுத்தான்.
விபரீதத்தின் அறிகுறி அது என்பதை நான் அப்ப யோசித்துப் பார்க்கவில்லை. நாலு நாளுக்குப்பின் ஜமுனாவை இன்னமும் காணேலை என்று தவித்தபோது அவன் இவ்வளவு தூரம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பள்ளிக்கூடத்தால் வந்தவளை "அக்காவை மூளாய் ஆஸ்பத்திரியிலே சீரியஸாய் சேர்த்திருக்கு” என்று சொல்லி சைக்கிளில் ஏத்திக்கொண்டு போனவன், ஆண்கள் பொதுவாக தந்திரங்களில் வல்லவர்கள். ஜமுனா "அக்கா” என்று அழுதுகொண்டு நின்றபோது அவளுக்கு உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.
இனி.? அவன் ஆரவாரமாக அறிவித்தான். “இப்ப என்னடி செய்வாய்? உன்ரை கொம்மாட்டை போய் சொல்லு. எனக்கு இவளும் பெண்டாட்டி என்பதை சேவைக்குழு, கோவில்குழு எல்லாம் பஞ்சாயத்து நடத்தின. 'ஊர் உலகத்தில் நடக்காததில்லை என்று சொல்லி அவளையும் கட்டி வைக்கச்சொல்லி வற்புறுத்தியது. 'உந்த ஆண்கள் எவனாக இருந்தாலும்உந்த மாதிரி ஆண்களுக்கு சார்பாகத்தான் நிற்பார்கள்?
தங்கச்சிட விருப்பம் எடுபடாது. அடுத்தவள் செல்லம். கடைக்குட்டி. அதையும் இந்த பிசாசு ஏப்பம் விட்டு விடலாம். உவனுக்கு சரிநாமம் போட? இங்க பல குழுக்கள். இயக்கங்களுக்கு தங்களுக்குள்ளே சண்டை போடவே நேரம் இல்லை. இனி மக்கள் மத்தியில் காப்பாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. பிரபல உதைபந்தாட்ட வீரன் சங்கரனின் விளையாட்டில் சொக்கிப்போய் நிற்கிற எங்கட பகுதி.இவன்ரை எந்த டிமாண்டையும் நியாயப்படுத்த காத்துக்கிடக்குது.
அவன்ர காட்டிலே மழை. அவனுக்கும் தங்கச்சிக்கும்

Page 78
甘52 O வேலிகள் கலியாணம் என்ற சடங்கு நடந்தது. மஞ்சள் கயிறு அவள் கழுத்திலும் ஏறியது. வீடு வளவு போய் நடுத்தெருவில் நின்றாலும் பரவாயில்லை என அவன் கேட்ட பணத்தை பிரட்டிக்கொடுத்து ஜேர்மனிக்கு உடனடினயாக அனுப்பியாச்சு.
கடனாளியாகப் போய்க்கிடக்கிற எங்களுக்கு இப்படியான ஆண்கள் தான் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதை நினைக்கையில் அவளுக்கு சிரிப்பு வந்தது. இவர்கள் அழுவதையும் சிரிப்பதையும் கவனியாத அதிகாரம் பெற்ற குழுக்கள்.
வாசற்படி யில் படிப்பை விட்டு வயிற்றைத் தள்ளிக் கொண்டிருக்கும் தங்கச்சி எதை நினைச்சுக் கலங்குகிறாள்? வாழ்ந்தாகவேண்டும் என்பதை நினைச்சா?
: se 岑

66OLQ
திலகம் ஐந்து பிள்ளைகளையுடைய ஏழைத்தாய். இளவயதினள். அவள் “பொண்ணு” பெரிசாய் வந்து பிள்ளை பெற்றுக்கிறபோதும் அவள் ஒருவேளை பிள்ளைப் பெற்றுக்கலாம். 16 வயசிலே அவளுக்கு கல்யாணம் நடந்திருந்தது. இப்ப அவளுக்கு வயசு இருபத்தெட்டு.
இது பொதுவான சேரி நிலைமை. மூத்த பையன் பிரதீப்புக்கு எட்டு வயசு, அடுத்த ராணிக்கு ஆறு. ரூபினாவுக்கு நான்கு வயது. நோனாவுக்கு வயது மூன்று. ராஜாவுக்கு இரண்டு. இப்ப வயிற்றிலே ஒன்று. ஆணா பெண்ணா என்பது அவள் கையிலும் இல்லை. மூத்த இரண்டும் பள்ளிக்கூடம் போய்வருகிறார்கள். ஆனால் அவர்கள் படிக்கிறதாகத்தான் தெரியவில்லை.
அவள் அன்றாடம் தேயிலை ஸ்டோரில் பக்கிங் வேலை பார்க்கும் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அம்மா, சகோதரங்கள், அவளுமே அங்கேயே வேலை பார்க்கிறார்கள். தேயிலை ஸ்டோர்கள் கொழும்பில் எல்லாப் பகுதியிலுமே இருந்தன. அவள் புருசன் காபரிலே கூலியாளாக வேலை செய்பவன். அவனும் அப்படியான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். கொழும்புச் சேரிப் பகுதியில் கசிப்புக்கும் கஞ்சாவுக்கும் ஆட்படாத இளைஞர்கள் இல்லை என்றே பொதுவாகச்

Page 79
154 O வேலிகள் சொல்லலாம். அவனும் அந்த பலவீனம் உள்ளவன். கொஞ்ச நாளாய் “வேலைக்குப்போகக்கூடாது. நீ வீட்டிலே இருந்து குழந்தைகளைப்பார்” என்று அவள் கர்ப்பிணித்தனத்தைப் பார்த்துச் சொல்லியிருந்தான். அவன் பேச்சைக்கேட்டு அவளும் வேலைக்குப்போகாது விட்டிருந்தாள். ஆனால் அவன் பேச்சில் உள்ள வீராப்பு செயலில் இல்லாதபோது அவள் வெடித்துக்கொண்டிருந்தாள். ஏசினாள்.
அம்மணமாக ராஜாவும் நோனாவும் அழுதுகொண்டிருந்தனர். பசியால் சிறிசுகள் அழுகிறபோது கர்ப்பிணியான அவளுக்கு பொறுக்கமுடியாது இருந்தது. படுக்கிறதில மட்டும் சமத்துக் காட்டுறபுருசன். 'தன்புத்தியைச் செருப்பால் அடிக்கவேணும் என்று கூறி அழுதாள். கிறிஸ்மஸ் போனசாக நானூறு ரூபாய் என்னவோ அவனுக்கு வேலைத்தலத்தில் கொடுத்திருந்தார்கள். மனிசன் கடன், கிடன் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கசிப்பையும், கஞ்சாவையும் வாங்கிவந்து எதுவுமே கவனியாமல் இருந்தது, அவளுக்கு என்னவோ நெருப்பிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. கல்லுளிமங்கனாக எப்படி அவனால் இருக்கமுடிகிறது? அழுதாள். அவளின் வற்றிப்போன மார்பு, காய்ந்த தேகம், இதன் மத்தியிலே வயிற்றில் பிள்ளை வேறு! அவள் அழகி இல்லை. ஏழை. தன்மேல் கவிந்த விதியை நினைத்து அழுதாள். அவன் வக்கிரம் பிடித்தவனா? இல்லையா? என்பதை அவளால் அறிய முடியவில்லை. மரியம் மர்மமானவனாகவே இருந்தான்.'யேசுவே! என்ர புருசனுக்கு நல்ல புத்தியைக்கொடுத்து பிள்ளைகளை நல்லபடி வாழவைக்கமாட்டாயா? அவள் யேசுவை வேண்டுவாள். “பசியிலே பிள்ளைகளைப் போட்டு அந்தரிக்க விடுகிறாயே நீ ஒரு மனிசனா?” திலகத்தின் சூடான பேச்சு அவள் வயிற்றெரிவில் இருந்துகிளம்பியது. மரியமை நோவதிலும் அர்த்தம் இல்லையா? அவன் சமயங்களில் சொல்வது அவளுக்கு தெரியும். “இதோ பார் கஞ்சாப் புகைக்குப் பலியாகி விட்டேன். இப்ப இது இல்லாமல் என்னால் இருக்கமுடியாது." அவளுக்கு அப்பத்தைய மரியம் ஞாபகத்துக்கு வந்தான். கட்டான கரிய மேனி, தினமும் வாசிகசாலை வளவில் உடற்பயிற்சி செய்கிற ஒரு

கடல் புத்திரன் O 55 நாட்டுப்புற இளைஞன் இளவயசிலே, மக்கோனா பள்ளிக்கு அனுப்பப்பட்டிருந்தான். அது ஆச்சரிமம் போல் ஒரு அமைப்பு. கொழும்பில் மக்கோனாப்பெடியள் என்றால் சனம் திருந்தியவனாக இருந்தாலும் சந்தேகமாகப் பார்க்கும். ஏதோ களவு விசயமாக பெத்தவங்களே அங்கே அனுப்பியது அவனை வெகுவாகப் பாதித்தது. அங்கே அவன் அம்மா, சகோதர உறவுகளின் அன்பை விரும்பி ஏங்குகிற ஒரு பிறவியாக மாற்றப்பட்டிருந்தான். ஆனால் திரும்பி விந்தபிறகும் ஒரு அன்னியப்பட்டவனாக, அனாதையாக, வாழ்ந்தான். சீரழிந்தான். பெத்தவர்கள் அவனைக் கவனிக்கவேவில்லை.
திலகம் மரியத்தின் பக்கத்து வீட்டுக்காரி. அவன் திரும்பி
வந்தபோது அழகியாகப் பருத்திருந்தாள். சாது, தேயிலை ஸ்டோருக்கு சகோதரங்களுடன் வேலைக்குப்போகும் வழியில் மரியம் வந்து நிற்பான். அவளைப்பார்த்து சிரிப்பான். அவன் வேலையில்லாமல் றோட்டு வழிய சீரழிந்த காலத்தில் அவளைக் காதலிக்கிற முயற்சிகளில் இறங்கியிருந்தான். அவன் அனாதையாக நின்றது.திலகம் வீட்டுக்காரருக்கு பரிதாபமாக இருந்தது."எங்கேயும் இப்படி இருப்பார்களா? பெத்ததை எப்படி உதறி எறியமுடிகிறது? றோட்டு வழியே அங்கேயும் இங்கேயுமாய் படுத்து சீரழிந்தபோது அவனைக் கஞ்சாப்பழக்கமும் கசிப்புப்பழக்கமும் தொத்திக் கொண்டது. அதைச் சொல்லி மரியம் இப்பவும் கவலைப்படுவான். அந்த வாழ்வில் அவனுக்கு நண்பர்களும் எதிரிகளும் கூட இருந்தனர். அரசியல் போஸ்டர் ஒட்டுற வேலையை, அடிதடிகளை செய்கிற கூட்டத்தில் அவனும் ஒருத்தன். அந்த மாதிரியான நீச்சலடிப்பின் மூலமே இப்ப அவன் காபரில் கூலியாளாய் இருக்கிறான்.
அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட திலகத்தின் அம்மா அவனுக்கு தங்கள் மாட்டை மேய்த்துக்கட்டுற வேலையைக் கொடுத்தாள். வீட்டிற்கு முன்னால் கட்டிய சிறிய விருந்தினர் கொட்டிலில் படுக்கிறதுக்கும் இடம் விட்டாள். காலையில் கேம்பில் இருந்து மாட்டை விரட்டிக்கொண்டு போய் குளத்தங்கரைப் பக்கத்தில் கட்டி விட்டு வருவான். மத்தியானம் தண்ணி எடுத்து

Page 80
156 O வேலிகள் வைக்கணும். இடம் மாற்றிக் கட்டணும். பிறகு மாலையில் அவிட்டுக்கொண்டு வரணும். இதுதான் அவன் வேலைகள். காம்பில் இருந்து விரட்டிக்கொண்டு போகையில் சந்தோசமாய் அவன் போவதைப் பார்த்திருக்கிறாள். காம்ப் சதுப்புப்பாதையில் அவன் அப்படிப் போறதைப் பார்க்க திலகத்துக்கு வேடிக்கையாக இருக்கும்.
அது ஒரு காலத்தில் ஆமி காம்பாக இருந்த ஒதுக்குப்புறமான பள்ளப்பகுதி. அப்ப, எத்தனையோ கொலைகள், சித்திரவதைகள்நடந்ததாக சொல்வார்கள். ரயில்வேப் பகுதியில் மரக்குடில்களில் இருந்தவர்கள் ஆமிக்காம்பை எடுத்தவுடன் அங்கே வந்து குடியேறத் தொடங்கினார்கள். அரசாங்கமே பிறகு அவர்களுக்கு அந்தப் பகுதியைக் கொடுத்துவிட்டது. இப்ப திலகத்திடபேரில் தனிவீடே அங்கே இருக்கிறது. அவளின் அம்மா கொஞ்சம் கெட்டிக்காரி. தான் குடியேறிய சமயம் மகளுக்கும் என குடிசை ஒன்று போட்டிருந்தாள். தொடக்கத்தில் எல்லாருக்கும் பயம். வெட்டிய பகுதி எல்லாம் மண்டை ஒடு, எலும்புகள் வந்து கொண்டிருந்தன. ம். இப்ப அந்தப் பகுதியில் காணிக்கு விலை அதிகம். இப்ப பாம்புகள் மட்டுமே தொல்லை கொடுத்தன. அடை மழை பெய்தால் அந்தப்பகுதியே வெள்ளக்காடாகப் போய் விடுவதும், அந்த நேரங்களில் நகரப் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக இருந்து விட்டு மீள வருவதும் அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது.
திலகம் அவன் மேல இரக்கப்பட்டாள். கஞ்சி வந்து கொடுக்கும் போது அவளையே முளித்துப் பார்த்து கதைக்கும் போது அவன் மேல் ஏற்பட்ட பரிவு, காதலாக மாறியது. அவனைத் திருத்தணும் என்று முடிவு செய்தபோது அவளுடைய அப்பா சந்னியாசம் பெறுகிறேன்' என்று எங்கேயோ ஒடிப்போய் விட்டார். எங்கே என்று தேடியபோது அவர் இன்னொரு பெம்பிளையைச் சேர்த்துக் கொண்ட சேதி தெரிந்தது. பணக்கஷ்டம், மனக்கஷ்டம் மத்தியிலும் அம்மா வேற அவளுக்கு மாப்பிள்ளை’ ஒருத்தனைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்ப அவள் மரியத்திடம் அம்மாவிடம் நேரில போய் “என்னை உங்க மருமகளாக ஏத்துப்பீங்களா?”

கடல் புத்திரன் O 157 என்று கேட்டாள். அவருக்கு அவள் மேல் நல்ல அபிமானம் இருந்தது. “என் மூத்தவன் தான் உதவாமல் போய்விட்டான். நீ என்ர இரண்டாவது மகனைக் கட்டன்” என்று பரிவுடன் கேட்டார். “இல்லை மாமி, எனக்கு மரியத்தை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கு அவரோட சந்தோசமாக வாழ்ந்து காட்டுகிறேன்” என்று சம்மதம் பெற்றாள். மரியத்துக்கு அவள் மதிப்பானவளாகத் தெரிந்தாள். தன்னைக்கட்டுகிறேன் என்று கட்டியது அவன் நெஞ்சில் வசந்தங்களைத் துாவியது. அவனுக்கு அவள் மேல் ஆழமான அன்பை ஏற்படுத்தியது. அவளது வாழ்க்கை சந்தோசமாக ஒடியது. அவள் ஒவ்வொரு பிள்ளையை பெத்துக்கிறபோதும் அவன் எவ்வளவு ஆதரவாக பொறுப்புடன் இருந்தான்.
ராஜா பிறந்தபிறகு அந்த விபத்து நடந்தது. காபரில் வேலை செய்கிறபோது திடீரெனப் பாரம் இறங்கியதில் அவன் வலது கை மோசமாகப் பாதிக்கப்பட்டது. விரல் நுனி ஒன்று நசிந்து சிதைந்தது. வலியால் துடித்த அவனை அவள் கண்ணை இமைகாப்பது போல் பார்க்க வேண்டியிருந்தது. கவனித்தாள். அவன் அழுதான், அரற்றினான். அதன் பிறகே கஞ்சாப் புகைக்கும் பழக்கம் சற்றுக் கூடுதலானது. விபத்து நடக்க முதல் இருந்த மரியம் திரும்ப வரமாட்டானா என்று அவள் ஏங்குவாள். அவன் அவள் நெஞ்சைக் கவர்ந்தவன். இரவுகளில் அவன் பக்கத்தில் தூங்கும் போது இதைச் சொல்லியே கவலைப்படுவாள். விபத்து நடக்க முதல் நெஞ்சை நிமிர்த்தி அவனை அவளால் மறக்க முடியவில்லை. இப்ப இருக்கிற மரியம் குடும்பத்துக்கு ஒத்து வராத சன்னியாசம் அரைகுறையாகப் பெற்றவன். காம்ப் பகுதியில் “மரியம் நெஞ்சை நிமிர்த்தி நின்ற கோலத்தை அவளால் வாழ்நாளில் மறக்க முடியாது.எத்தனை உயர்வாக என்ர மரியம் நின்றார். இவ்வளவு பிரச்சனைகள் மத்தியிலும் அவள் அவனை விட்டுப் போகாததற்கு அந்த சம்பவமே பெரிய காரணம். இப்ப வயிற்றில் ஒன்றைத் தாங்குவதற்கும். அவளால் அவனை என்றுமே அவமானப்படுத்தி ஒதுக்க முடியாது. அவள் தங்கச்சி விமலா ஒரு முஸ்லிம் பெடியனுடன் ஒடி விட்டிருந்தாள். அவனது பகுதி ஆட்கள்

Page 81
158 O வேலிகள் அவனை ஒதுக்க வேறு வழியில்லாமல் அவர்கள் அங்கேயே திரும்பி வர வேண்டியிருந்தது. சம்சுதீனும் தேயிலை ஸ்டோரில் வேலை செய்கிற சாதாரண தொழிலாளி தான். முஸ்லிம் என்பது பேரில் மட்டுமே இருந்தது. இவன் கடின உழைப்பாளி. அவர்கள் வீடு இல்லாது தவித்தபோது அவள் தன் வீட்டிலே ஆதரித்தாள்.
சம்சுதீன் தம்பி போலப் பழகினான். அவள் அன்புள்ளம் கொண்டவள். கள்ளம் கபடமற்று பழகிற ஆட்களைக்கண்டால் யார் பேச்சையும் கேளாமல் பழகுவாள். உதவுவாள். உரிமை கொண்டாடுவாள் அதே சமயம் நெருப்பு மனம் கொண்டவள்.
அவளின் நேரடிப் பேச்சுகளால் கசப்புற்ற அயலவர்கள் மெல்ல மெல்ல கதை கட்டிவிடத் தொடங்கினார்கள். அது அவள் காதுக்கு எட்டுவதற்கு நாள் எடுத்தது. எட்டியதும் அவள் துடித்துப் போனாள். சம்சுதீனையும் அவளையும் சேர்த்து. ஊருக்கு விவஸ்தையேயில்லை. அவள் அழுதாள்.
ஒரு நாள் பெரிய சண்டையாகி அவள் அம்மா உட்பட உறவுகள் மத்தியில் அவள் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தாள். “அவன் தொட்டுக் கதைக்கிறதுக்கு என்னடி அர்த்தம்?” அவள் என்ன செய்வாள்? விமலா வீட்டை எதிர்த்து ஒடியவள். தங்கச்சியின் புருசன் என்பதால்.அன்பாகப் பழகியதை, தம்பி போல நினைத்துப் பழகியதை எப்படி விளங்க வைப்பாள்? சாதாரணமாக பெண்ணின் குரலுக்கு வீட்டில் மதிப்பில்லை. வெளியில்..? சம்சுதீனும் எப்படியாவனோ? ஒரு வேளை பிளேட்டை மாத்தி அவனே கதைத்து விட்டால்? ஐயோ என்ர புருசன் சந்தேகப்பட்டால். அவளுக்கு மனசு வெறுத்து விட்டது. அம்மா ஆறு பெண் பிள்ளைகளோடு தனித்து நின்று போராடியவள். அவள் புருசன் இன்னொருத்தியிடம் போனபோதும் அவளுக்கு அந்த மன உறுதி இருக்கிறதே. உறவுகள் திட்டும் போது அவர்களிடம் கணிசமாக தங்கியிருந்ததால் அவர் மகளுக்காகப் பேசமுன்வரவில்லை.
திலகத்துக்கு அது தெரியும். கடைசியில் விரக்தியில் வீழ்ந்திருந்தாள். இனி புருசன் என்பவன் வந்து திட்டுறதோ

கடல் புத்திரன் O 159 அல்லது அப்பனைப் போல ஒடிப் போறதோ நடக்கலாம். இருக்கிற மூன்று பிள்ளைகளுடன் அவள் தனிய வாழ்வாள். வேலையால் வந்த மரியம் “என்ன கூட்டம்” என்று அயலில் விசாரித்த போது சம்சுதீன் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தான். பொன்னுக்கிழவர் “தம்பி உன் ரை மனிசி இந்தப் பேச்சுக்களால் பிரச்சனைப்பட்டவள்” என்று அவனைக் கூட்டிக் கொண்டு போய் விளங்கப்படுத்தினார். விமலா வெளிறிப் போன முகத்துடன் நின்றிருந்தாள். மரியம் ஒன்றும் பேசாமல் வெளியே போனான். சம்சுதீனைக் கூட்டிக் கொண்டு வந்தான். திலகத்தின் சின்னம்மா “தம்பி உனக்கென்ன விசரே?” என்று கேட்டாள். அப்ப மரியம் சொன்ன வார்த்தை. அவள் இப்போதும் மெய்சிலிர்ப்பாள். “என்ர மனிசியை எனக்குத் தெரியும். நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம். அதே போல சம்சுதீனையும் எனக்குத் தெரியும். அப்ப நீங்க போlங்களா?”
அந்தப் பேச்சின் காரணமாகவே அவளும் எந்தப் பிரச்சனையிலும். புருசன் சன்னியாசக் கோலத்தில் பொறுப்பற்று நடந்த போதும் ஏழ்மையில் வாடி வதங்கிய போதும் பிரியாமல் இருக்கிறார். மரியத்துக்கு அது தெரியும். ஆனால் நெடுக இப்படி ஏச்சு வாங்க என்னவோ மர்மமாக நடந்து கொள்கிறான். அதுக்குபிறகு அவன். அவளோடு கதைத்தது ஒரு தோழி ஆதரவாகக் கதைத்தது போல் மெத்தென்றிருந்தது.
'திலகம் உனக்கு இங்க இருக்கிறது. அந்தரமாக இருக்கும், இந்த வீட்டில் சம்சுதீனையும் விமலாவையும் விட்டிட்டு நாம வெளியில் ஒரு வீடு பார்த்திட்டுப் போகலாம். அரசாங்கத்தாலே ஒரு குவாட்டர்ஸ் வீடு கிடைக்கும் போலிருக்கு.
பிறகு
காம்பை விட்டு விலகி வந்தது.
மகிழ்ச்சியாக காலம் ஒடியது. விபத்து நிகழ்ந்தது. மரியத்தின் திடீர் பற்றற்ற போக்கு நீள்வது. அவள் நினைத்து நினைத்து அழுதாள்.

Page 82
கடல்
LLI Tjili I JIJ GINTI 7:5, குட கிராமமொன்றைப் பி பாலமுரளி | குடியேறி கடல்புத்திர6 குறுநாவல், சிறுகதைக
இச்சிறுநூல் குறுநாவல்களை பார், உள்ளடக்கியது. 3. வெளிவந்த தாயகம் ( தற்போது தமிழ்
பற்றுள் கா.
இக் கதைகள் ய । । தனித்துவ காட்டுகின்றன. அத்ே a) I Fall")) நிகழ்க (ŠE dopř. (Gl#, TG பாலமுரளியின் எழுத் என்று ஒதுக்கிவிடல் g
ஒரு வரலாற்றுக் கிராபொன்றில் ஆசிரியர் விரித்துக் கிராமத்து அரசியல்,
, । ।।।।।
1, тј. г.

புத்திரன்
ா நாட்டின் கடற்கரைக்
பிடமாகக் கொண்
। 凸TL+sü அகதியாகக்
। ।।।।
வி 1ழுதி வருகிறார்.
அன்சாரின் இரண்டு Pன்று சிறுகதைகளையும் கனடாவிலிருந்து இதழில் வெளிவந்தவை. நாட்டில் நூலுருட்
ாழ். கிராமத்தில் நிலவிய த்தைக் கோடிட்டுக் தாடு ஈழத்தின் சமகால aTL பதிபனைக்கும் அதனால் திே வெறும் கற்பனை இபப்ாது.
żfi II iii) iżda l I jiġifieri, LLJJ LLL, | || || தாக்கங்க1ை1 காட்ட முயன்றுள்ளார். பொருளாதாரம், சமுக கவினோ பார் இக் கதைகள்