கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 1999.03-04

Page 1
@@U画
 


Page 2
இந்தமலரின் இதழ்கள். 0 கோசல்யா சொர்ணலிங்கம் 0 விஜயா அமலேந்திரன் 0 விக்னா பாக்கியநாதன் 0 சசிவதனி பாஸ்கரன் 0 ரவி செல்லத்துரை 0 எழிலன் 0 ஏ.ஜே.ஞானேந்திரன் 0 கு.விக்கினேஸ்வரன் 0 க.ச.கந்தசாமி 0 அரங்க முருகையன் 0 ஏ.தேவராஜன் 0 தங்க ஜெய்சக்திவேல். 0 தமிழண்ணா
 
 
 
 
 
 
 
 

உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம்
இனிய தமிழ் ஏடு
இரு திங்கள் ஒன்று
இதழ் 68
பங்குனி-சித்திரை 1999.
Mainz-April. "99
Poovarasu Taninilische Kultur Magazini
ஆTழந்: இந்ஜ99ற்ஜ்
முகவரி:
Poovarasu
Postfach: 10 34 01, 28034Bremen, Germany

Page 3
வணக்கம்.
இந்த இதழ் சற்றுத் தாமதித்த வருகிறத. ஒரு சிறிய இடைவேளை~ பூவரசுக்கும் உங்களுக்கும்! பூவரசுக்கு என்னாயிற்று? என்று அக்கறையோடு நலம் விசாரித்தக் கொண்டவர்களுக்கு நன்றி. உங்கள் ஒத்துழைப்பு உள்ளவரை பூவரசு தொடரும். நீங்கள் ஓய்வெடுக்கும்போது அதவும் ஓய்வெடுக்கும்.
ஆரம்பம் என்ற ஒன்றுக்குப் பின்னால் எப்போதம் முடிவு என்ற ஒன்று தொடர்ந்த கொண்டுதான் இருக்கும்.
இது இயற்கையின் நியதி. பூவரசுமட்டும் விதிவிலக்காகிவிடமுடியுமா என்ன? பூவரசுக்கும் ஒரு முடிவு உண்டு-காலக்கணக்கில் ஆனால் அந்த முடிவு அண்மையில் இல்லை என்பதைமட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
புலம்பெயர் மண்ணில் கலை இலக்கியத்துறையில் பூவரசுக்கென்று ஒரு தனியிடம் உண்டு என்று நீங்கள் பாராட்டும்போதெல்லாம் இன்னும் அதன் பணிகளை விரிவுபடுத்தவேண்டும் என்ற எண்ணமே என்னுள் மேலெழும்.
பூவரசின் ஆணிவேர் நீங்கள். அதன் வளர்ச்சியில் உங்கள் ஆதரவு பெரிதம் வேண்டப்படுகிறத. உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தொடர்வோம்!
அன்புடன் இந்துமகேஷ் (ஆசிரியர்,பூவரசு)
2. பூவரசு
 

R. Pathmanaba Iuer 27-1B High Street Plaistozuv f.ondon E13 021D Tel 020 84728323
வாழ்த்துப் பூக்கள்!
ΣΚ
DX K
6th LTOlg5 geauer நிறைவுமலர் அற்புதமான ஒவியத்துடன் அழகாகப் பூத்திருந்தது. வாழ்த்துக்கள்!
பூவரசு பொய்க்கவில்லை- என்றும் பூத்திருக்தம் மஞ்சனதாய் காத்திருக்கும் நிழல்தர கதியாலாய் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் சுந்தான படையலோடு அதன் வித்தாக நிலம் ஊன்றும் நிலம் ஊன்றும் வித்துக்கள் வினையது Atafioso இது புலம்பெயர்ந்த பூவரசு நலம் குன்ற7 குலம் விளங்க
செழிக்கட்டும் சீரானதாய், வழித்துக்கள்/
திரு.கே.எஸ்.சொர்ணலிங்கம் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம்,
(முல்கைம்)
ganges

Page 4
பூவரசு எட்டாவது ஆண்டுமலர் கிடைக்கப் பெற்றேன். நன்றி அழகிய அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ள பூவரசு இதழின் ஆக்கங்கள் தரம் மிக்கவையாக இருந்தது மேலும் சந்தோஷத்தை அளித்தது. யாழ்ப்பாணத்து மண்ணுக்கே உரித்தான பூவரசை இந்த மண்ணில் இனி எங்கே காணப் போகிறோம் என்ற ஏக்கத்தைத் தவிர்ப்பதுபோல அந்நியமண்ணில் இந்தப் பூவரசு அழகாகக் கிளைபரப்பி வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது மனதை மகிழ்ச்சி ஆக்ரமிக்கின்றது. இந்தப் பூவரசு இன்னும் ஆழமாய் வேரூன்றி இன்னும் பல பல ஆண்டுகளை நிறைவு செய்யவேண்டும் என்பதே என் பேரவா! உங்கள் உயரிய கலைப்பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
அன்புடன்
ஏ.ஜே.ஞானேந்திரன். (பாசல், சுவிஸ்)
பூவரசு ஏட்டுக்கு எழுதுவதென்றாலே பூவரசு மரத்தடியில் அமர்ந்திருப்பதுபோல-அதுவும் உச்சி வெய்யில் வேளையிலே அதன் நிழற்ககத்தை அனுபவிப்பதுபோல ஒரு சுகம். பெருமையாகத் தோற்றத்திலிருக்கும் மனிதர்கள் பலர் சிறுமையாகச் செயலில் இருப்பதுண்டு. பெரிய பத்திரிகையாகக் காட்ட விழையும் சில பத்திரிகைகளும் தரத்தில் குறைந்து இருப்பது உண்டு. தரமாக ஆனால் ஆடம்பரமற்றதாக வெளிவரும் ஒருசில நல்ல சஞ்சிகைகளுள் பூவரசு தனித் தன்மையுடன் திகழ்வது பூவரசு வாசகர்களுக்கும் பங்காளிகளுக்கும் உரிமைமிக்க பெருமையென்றே நான் கருதுகின்றேன். பூவரசு ஏட்டின் வாசகன் என்பதில் நான் பெருமைப்படுகின்றேன். வாழ்க உயர்க பணிநோக்கில் சிறந்து திகழ்க! என்று வாழ்த்துவதில் மனநிறைவு கொள்கிறேன்.
(மெற்றிங்கன்)
பூவரசு

பூப்பூவாக பூத்துக் குலுங்கும் பூவரசே!-நீ பூத்துக் குலுங்கி எட்டுவருடத்தை முடித்துவிட்டாய் உனக்குள்ளே அடக்கி இருப்பது தமிழினத்தின் உறவு
பாரெல்லாம் போற்றட்டும் பூவரசே உனது புகழ் இளந்தளிர்களுக்காய் நீ தரும் பகுதி அதில்
தாமதமின்றி பூத்துக் குலுங்க எங்க்ள்"வாழ்த்துக்கள்
உலகிலே நீ இடம் பிடித்தது உனது செயலின் ஆற்றல் பரவட்டும் உனது தமிழ்ப்பணி
இனிய நிகழ்வாய் போட்டி, தளிவிட்டு இலைவிட்டு பூப்பூவாய்
-ஸ்ரான்லி டேவிட் குடும்பத்தினர் (ஏர்வ்ஸ்ரட்)
பூவரசு எட்டாவது ஆண்டுமலர் வாசித்தேன். அத்தனை அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன புலம்பெயர் மண்ணில் பெற்றோர்முன் பிள்ளைகள் கேள்விக்குறியா? என்ற திரு.வி.ஆர்.வரதராஜாவின் ஆக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. எல்லாப் பெற்றோரும் வாசிக்க வேண்டிய விடயம். இப்பொழுது தமிழ் ஆசிய வானொலி வேந்தபின் புத்தகங்கள் வாசிப்பது குறைவாகிவிட்டது. இந்தக் கட்டுரையை வாசித்தபின் இனிமேல் பூவரசை தொடர்ந்து ஒருவரிவிடாமல் வாசிக்கவேண்டும் என மனதில் ஒரு திடம் வந்துவிட்டது.
திருமதி மாலினி குணராஜன், (பிறேமன்)
புலம்பெயர்ந்த எம் இதயங்களில் பூவரசு மலரட்டும்வழட்டும்! தங்கள் சேவை மேலும்வளர எடிது வாழ்த்துக்கள்/ என்றென்றும் பூவரசின் வாசகன்
அ.வேணுகோபாலன்
(லண்டன்)
. பூவரசு

Page 5
பூவரசு 8வது ஆண்டுமலர் உட்பட அனைத்து பூவரசு இதழ்களும் கிடைத்தன.
மிக்க மகிழ்ச்சி
புலம்பெயர் வாழ்வில் பல
நெருக்கடிகளுக்குள்ளும் சோதனைகளையும்
வேதனை
களையும் சாதனைகளாக்கி உள்ளத்தில் உறுதியுடன் இவ் இதழை ஆேண்டுகளாக வெளியிட்டு பல இலக்கிய
ஆர்வலர்களை அறிமுகப்படுத்தியதையிட்டு ஒன்றியத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-கேரிகணேசலிங்கம் uppg (உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம்)
பூவரசில் எனது ஆக்கங்கள் வெளியிட்டமைக்கு எனது நன்றி! இம்முறை பூவரசு மிகவும் அழகான தோற்றத்துடன் வெளிவந்துள்ளது. முகப்பு அட்டை நேர்த்தியாக உள்ளது. சிறுகதை, கட்டுரை, கவிதை என்பன அருமை. ஒரு சஞ்சிகையைத் தயாரித்து அதை வெளியிடுவதில் உள்ள கஷ்டங்களை நான் அறிவேன். உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். ஈழத்தவர் சஞ்சிகைகள் எதுவாயினும் அதை வாங்கி வாசிப்பது எமது கடமை. எம்மவர்களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பது எனது கொள்கை. பூவரசு 9வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதுபற்றி நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அறியாமை புரியாமை தெரியாமை போக்க பூவரசு உதவட்டும் என வாழ்த்துகிறேன்.
-ரவி செல்லத்துரை.
(கவிஸ்)

S \". തു' է: -- 8வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசுபெறும் படைப்புக்கள்.
சிறுகதை:
முதற்பரிசு
பிரான்ஸ் மா.கி.கிறிஸ்ரியன் எழுதிய
மறுதலிப்பு
இரண்டாவது பரிசு: நோர்வே வண்னேரியூர் சிவா எழுதிய
பாதுகாப்பு
மூன்றாவது பரிண்ே நெதர்லாண்ட் கபூரீதாஸ் எழுதிய திசைமாறிய உணர்வுகள்.

Page 6
கட்டுரை:
முதலாவது பரிசு லண்டன் அவேனுகோபாலன் எழுதிய
இளையதலைமுறையே எழுந்துவா சொல்கின்றேன்!
இரண்டாவது பரிசு ஜெர்மனி இசம்பந்தன் எழுதிய
மானல்ல தேனல்ல மலரல்ல பெண்.
மூன்றாவது பரிசு ஜெர்மனி சி.இரவீந்திரன் எழுதிய
புதுயுகம் நோக்கி இனிப் புறப்படுவோம் வாருங்கள்
முதலாவது பரிசு ஜெர்மனி த.பவானந்தராஜா எழுதிய இளைய தலைமுறைகள்
இரண்டாவது பரிசு சுவிஸ் ஏ.ஜே.ஞானேந்திரன் எழுதிய
தலைமுறைகள்
song
மூன்றாவது பரிசு ஜெர்மனி சி.இரவீந்திரன் எழுதிய
2000 ஆண்டில் நாங்கள்

பூவரசும் நானும் என்ற தலைப்பிலான கட்டுரைகளில் சிறப்புப் பரிசு பெறும்படைப்பாளர்கள்:
டென்மார்க் வேலணையூர் பொன்னணர்ணா
ஜெர்மனி அ.கணேசலிங்கம்
ஜெர்மனி ஜெயா நடேசன்
போட்டிகளில் பங்குகொண்டு சிறப்பித்த படைப்பாளர்கள் யாவருக்கும் எங்கள் அணிபுகனிந்த நண்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிகளில் பரிசுபெற்ற படைப்புக்கள்தவிர்ந்த ஏனைய படைப்புக்களில் பிரசுரத்துக்குத் தேர்வானவையும் அடுத்துவரும் பூவரசு இதழ்களில் வெளியாகும். நன்றி!
அன்புடன்
இந்துமகேஷ்.

Page 7
9-MEDARBŠS GADèwu.
இருபத்தியோராம் நூற்றாண்டில் புகுமுன் அனைவரும் திருத்திக்கொள்ள இயலும் இருபத்தொரு கருத்துக்கள்.
0 நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் 0 அர்த்தமில்லாமலும் தேவை இல்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள் 0 எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாகக்காகக் கையாளுங்கள் 0 விட்டுக்கொடுங்கள் ( சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்தத்தான் ஆகவேண்டும் என்று
0 நீங்கள்சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் 0 குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் 0 உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் 0 மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் தாழ்வாக நினைத்து வருத்தப்படாதீர்கள் 0 மற்றவர்களைவிட உங்களையே எப்போதம் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் 0 அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள் 0 கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள் L அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள் ...
0. ngas

0 உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் 0 மற்றவர்கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் 0 மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் L) புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும்கூட நேரமில்லாததபோல நடந்துகொள்ளாதீர்கள் 0 பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள் L அவ்வப்போது நேரில் சந்தித்த மனம்திறந்த பேசுங்கள் 0 பிரச்சினைகள் ஏற்படும்போத அடுத்தவர் முதலில் இறங்கிவரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் தவக்க முன்வாருங்கள்
ஏற்பட்ட மனவிரிசல்கள் பெரிதாகி பாதிக்கா மலிருக்கவும்i மேற்கூறிய கருத்து முத்துக்களைக் கோர்த்து வாழ வாழ்த்திடும்
-தங்க ஜெயசக்திவேல்.
(நன்றி-சர்வதேச தமிழர்- நோர்வே)
11- ҷамта

Page 8
நண்பனுக்கு எதிரி நண்பனே!
உனக்கு பல நண்பர்கள் உண்டு என்று பெருமைப்படாதே ஏனென்றால் அதேபோல் உனக்கு பல எதிரிகளும் இருப்பார்கள். காரணம் உனது நண்பர்களின் எதிரிகளும் உன்னை எதிரியாகவே நினைப்பார்கள். இதுதான் எமது சமுதாயத்தின் போக்கு
எதிரிக்கு எதிரி உனக்குப் பல எதிரிகள் உண்டு என்று கவலைப்படாதே ஏனென்றால் உன் எதிரியின் எதிரி உனது நண்பனாகிவிடுவான். இதுதான் எமது சமுதாயத்தின் போக்கு.
அன்றும் இன்றும். அன்று நான்சொன்னதையெல்லாம் அவள் செய்தாள். இன்று அவள்சொன்னதையெல்லாம் நான் செய்கிறேன். காரணம்- அவளை நான்திருமணம் செய்ததே
-ரவி செல்லத்துரை (சுவிஸ்)
18. பூவரசு

(கவடு பதினாறு)
தொடர்ந்து அனுபவித்தவரும் சில பழக்கங்களின் தாக்கமானது மனிதரை அவை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் தாம்மட்டுமே அவற்றை அனுபவிக்க உரிமைமிக்கவர் என்றும் நினைக்க * வைத்துவிடுவதுண்டு.
இதனால்தான் வசதிமிக்க மனிதர்கள் தமது நிலையைத் }
தக்கவைத்துக்கொள்ள சாதியடிப்படை என்ற அணுகு முறையைக் கைகழுவவிடாமல் பார்த்துக் T கொண்டிருக்கிறார்கள், பணக்கார வர்க்கம் என்னும் வறியவர் வர்க்கம் என்றும் இரு வட்டங்களைத் திட்டமிட்டு வகுத்து வைத்துக்கொண்டு அதற்குள்ளேயே சமுதாயம் இருந்துகொள்ளவேண்டும் என்று செயற்கையாக வர்க்க வேறுபாட்டுவாதிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றார்கள். அவர்களது பாதுகாப்பான எதிர்காலத்துக்காகக் கடவுளையும் மதத்தின் பெயரால் இழுத்து வைத்துக்கொண்டு தெய்வத்தின் பெயராலே ஏழைமனிதனை இழிவாக்கி வசதிபடைத்தவன் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். மதம்வகிக்கும் இந்தக் கொடிய பங்களிப்பினால் மனிதம் சித்திரவதைப்பட்டுக் கொண்டிருப்பதை மதவாதிகள் ஊக்குவித்துக்கொண்டிருப்பது தற்செயலாக நடப்பதல்ல. வசதிகளின்பக்கமே நின்றுகொண்டு தமது தேவைகளை தங்குதடையின்றி பெற்றுக்கொண்டு கெளரவத்தொழிலாக சமயவாதிகள் இப்பழிக்குரிய செய்கைகளை அங்கீகரித்து நிற்கின்றார்கள். அதனால்தான் பயத்தின் அடிப்படையில் மக்களின் மதநம்பிக்கைகளை அவர்கள் உருவகப்படுத்தி கதைகளாக புராணங்களாக மந்திரங்களாகப்படைத்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு அதில் மூழ்கிட வற்புறுத்துகிறார்கள். சிந்தித்து நியாயத்தைக்கேட்பவனைப் பழிசொல்லி பகைக்கவைத்துப் பலன்பெற்று அவர்கள் நிரந்தர பாதுகாப்பிலும் மக்கள்எப்போதும் பதைபதைப்பிலும் இருந்துவருதலை உறுதியான சட்டமாக இயக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். மிகக்கவனமாக அவதானித்தால் தங்களுக்கு அடுத்தபடியாக அரசியல்வாதிகள்தாம் உலக அமைதிக்கு அடித்தளம் உடைக்கும் அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் தென்னாப்பிரிக்காவின் நிலையிருந்த
வரலாற்றைப் படிக்கையிலே அந்த நிலையொப்ப நிலை அங்கே மாறியிருந்தாலும்
13. augas

Page 9
உலகின் பிற இடங்கள் பலவற்றிலும் தொடர்ந்து நிலைபெற்றுக்கொண்டிருப்பதைக் உணரமுடிகின்றபோது எனது இதயத்தில் துயரம் கசிவதை உணரமுடிகின்றது. உதிரம்கொதிப்பதை உணர முடிகின்றது.
மதத்தின்பெயரால் அன்றொரு கூட்டம் மக்களைக் கொளுத்திக்கொண்டாடியது. இன்று? இன்னொரு கூட்டமும் அதையே செய்துவிட்டு, கொக்கரித்துக்கொண்டு தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றது. ஆண்டவனின் பெயராலும்சரி அரசியலின் பெயராலும்சரி மனிதம் இழுக்குற வைக்கப்படுவதை சகித்து நிற்கின்ற நாகரீகத்தைக் குழிதோண்டிப்புதைக்காமல் சமாதானம், அமைதி, பக்தி, புண்ணியம் எல்லாமே புதையுண்டே கிடந்துவரும் என்பதைத்தான் இவை உறுதிப்படுத்துகின்றன எனலாம். வெள்ளையர் கறுப்பர் நட்புறவு என்பது மிகமிக அரிதாவும் அசாதாரணமானதாகவும் இருந்துவந்த அந்த நாட்களிலே டொனால்ட் குடும்பத்தினரின் இதயம் இனத்துவேஷ வெள்ளையர் கொள்கையின் எதிர்த்திசையில்நின்று சிந்தித்து வந்தபடியினால் தங்களின் நண்பனான பிக்கோவின் இதயத்தை அவர்கள் ஆழங்கான நம்பிக்கையுடன் முயன்றுகொண்டிருந்தார்கள். அதில் ஓரளவிற்கு ஆரம்ப வெற்றியும் பெற்றிருந்தார்கள்.
தாழ்வுமனப்பாண்மையையே தமது வாழக்கையின் தலைவிதியாக நினைத்து வாழ்ந்துவந்த அன்றைய மக்களின் இப்புதிய தலைமுறை எங்கும் தலைநிமிர்ந்து நடந்ததும் தயங்காமல் முன்னின்றதும் பொதுவாக பயமின்றி அவைநடத்தைகளைப் பேணியதும் மிகமிக அசாதாரணமான காரியங்களாகவே அன்றைக்கு இருந்தன. சுருங்கச் சொன்னால் எந்தவிதமான அடக்குமுறைக்கும் உட்பட்டறியாத மிகச் கதந்திரமான மக்களாகவே புதிய சிந்தனைவாதிகள் நடமாடிவரப் பயிற்சிபெற்று இயங்கிக்கொண்டிருந்தார்கள். ஓர் அடிமைத்தனப் பாலைவனத்தில் கதந்திர ஊற்றினை அனுபவித்த பாவனையை அவர்களின்நடவடிக்கைகள் பறைசாற்றிக்கொண்டிருந்தன. கறுப்பரின் மனங்களில் விதைக்கப்பட்டிருந்த தாழ்வுணர்வுடன்கூடிய அச்சம்தான் அவ்வினத்தின் எதிர்காலத்தின் அடிப்படைத் தடைக்கல் என்பதை உணர்த்திவிட்ட பிக்கோவின் சிந்தனையின் சக்தி திரு.டொனால்டின் சிந்தனையில் தட்டிக்கொண்டேயிருந்தது. அடிக்கடி அவர் தமது மனைவியுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு பிக்கோவைப்பற்றிய தமது கருத்துக்களுக்கு உரமேற்றிக்கொண்டிருந்தார்.
கல்விக்கும் உயர்வுக்கும் உரிய ஒரே இனமாக வளர்க்கப்பட்டுவந்த வெள்ளையரினத்துக்கு அதிலும் டொனால்டபோன்ற சிந்தனைவாதிகளுக்கு மனவியல் ரீதியாகவும் சிந்தனைத்தெளிவிலும் பெரும்பான்மையான பின்தங்கிய இனத்தில் ஏற்படத் தொடங்கியருந்த மாற்றங்களும் புதிய துணிவுமிக்க தன்னம்பிக்கையின் பிரதிபலிப்புக்களும் ஒரு புதிய பள்ளிப்பாடமாவே அமைந்துவிட்டது எனலாம். அவர் புதிய சந்ததியின் வளர்ச்சியில் புதிய தென்னாபிரிக்காவின மலர்ச்சியை மானசீகமாக உணர முற்பட்டார் என்றுகூடச் சொல்லக்கூடியதாக இருந்தது.
14. பூவரசு

தாம் தமது அயல்நாடான சம்பியாவுக்குச் சில வருடங்களுக்கு முன் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர் நினைத்துப் பார்த்தார். அந்நாடு சுதந்திரமடைந்தபோது அவர் கண்டகாட்சிகள் அடுத்த தலைமுறைக்குள் முற்றாகவே மாறிப்போயிருந்தன என்ற உண்மையை அவர் அவதானமாக சிந்தனைக் குறிப்பேட்டில் பதித்திருந்தார். அங்கே அவர் கண்ட புதிய இளந்தலைமுறையானது இப்போது பிக்கோவின் விழிப்புணர்வூட்டலின் வழிகாட்டலினால் சிலிர்த்துநிற்கும் இளந்தலைமுறையையே பிரதிபலித்துநின்றதை அவர்கவனம் குறிப்பு செய்தது.
தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக shiu இளமக்கள்-அதிலும்குறிப்பாக இளம்பெண்கள் நடந்துகொண்டதை அவர் அவதானித்திருந்தார். அவர்களின் முகபாவனைகளிலோ அல்லது செயற்பாடுகளிலோ வழமையாக அண்றைய கறுப்பு மக்களுக்கு வெள்ளையர்வரவின் பாதிப்பின் தாக்கத்தினால் ஏற்பட்டிருந்த அடிமையுணர்வின் எந்தப்பாதிப்புமே தென்பட்டதாகவோ அல்லது அதுபற்றிய பயமிருந்ததாகவோ தெரியாமலிருந்தமையை அவரே வியப்புடன் கவனித்திருந்தார்.
தமது நாட்டின் வெள்ளையின மாணவ சந்ததி ஒரு கறுப்பின மாணவியை இப்படியான நிலைகண்டு அனுபவப்பட்டிருக்கமுடியுமா என்ற நினைவில் தமது இன இளம் சமுதாயத்தின்மேல் இரக்கம்தான் அவருக்கு ஏற்பட்டது. செயற்கையாக ஆனால் இயற்கைபோல் இருநிற இளம் தலைமுறைகளும் எட்டி நின்று வாழும் நிலையை அவரால் சீரணிக்க முடியவில்லை.
தோல்நிறத்தை வைத்து பகடையாடும் போலிக் கொள்கைகள் மனித பெறுமதியை எவ்வளவுக்குக் குறைத்து வைத்து தமது போலியான நிலைப்பாட்டை நியாயப் படுத்திவருகின்றன என நினைக்க நினைக்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் தாங்கமுடியாத ஆத்திரமாகவும் இருந்தது அவருக்கு.
தம்நாட்டு இளஞ்சமுதாயத்துக்குத் தமது நாட்டில் வாழும் கறுப்பின பெண்ணானவள் ஒன்றில் சமையலறைக்குள் ஒன்றிவிட்டபிண்டமாக அல்லது பள்ளி ஆடையுடன் பரட்டைத் தலைக்கோலமாக நடமாடும் பத்தாம்பசலியாக மட்டுமே தென்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதும் தாம் சந்தித்த புதிய தலைமுறை தமக்கு ஈடாக எந்த விடயத்திலும் வாதாட-இன அடக்குமறைமட்டுமல்ல பாலியல் விடயத்திலும்கூட-வல்லவர்கள் என்பதை இவர்கள் அனுபவப்பட வாய்ப்பு இல்லாதவர்களாயிருப்பது அவர்களின் துரதிர்ஷ்டம்கூடத்தான் என நினைத்தாரவர்.
உண்மைய அளக்க உதவிய அனுபவமும் உண்மையை உணர்த்தியவர் உள்ளத்தில் பதிந்தவையும்
டொனால்டின் மெர்சிடஸ்வாகனம் பறந்துகொண்டிருந்தது. கிங்வில்லியம்ஸ் டவுனை நோக்கியே அவ்வாகனத்தின் பயணம் தொடர்ந்து
1. பூவரசு

Page 10
கொண்டிருந்தது. பிக்கோவை ஒரு முக்கிய பேச்சுக்காக அவர் சந்திக்கவேண்டியிருந்தது. டொனால்டின் சிந்தனையில் ஒரு சிறிய பளிச்!
'ஜெக்ஸ் பிளேஸ்'
அங்கேதான் இருந்தது மிகப்பிரபல்யமான அந்த உணவகம். வெள்ளையர்மட்டுமே நுழையக்கூடிய கடும் சட்டத்துக்குட்பட்ட ரெஸ்ட்டுரன்ட் அது. அப்பார்த்தைட் என்ற இனவெறி வெள்ளையாட்சி கடைப்பிடித்துவந்த துவேஷத்துக்குத் தீவைத்து ஒத்துழைக்கும் கொள்கைக்கு ஒரு அடி கொடுக்க நல்லவொரு சந்தர்ப்பமிது. நுழுவவிடாமல் அதைச் செய்தாலென்ன என்று டொனால்டின் மூளை துள்ளித்துடித்து உற்சாகமூட்டிக்கொண்டிருந்தது. பிக்கோவை அதற்குள் அழைத்துச்சென்று பகலுணவு உட்கொண்டால்.? வெள்ளை வெறியரசின் தடைச்சட்டத்துக்குச் சரியான சவால்விடும் செய்தியாக ஒன்று உருவாகிவிடுமே விட்டுவிடலாமா? அவரது முகத்தில் புன்முறுவலுடன் எச்சரிக்கையும் தவழ்ந்துகொண்டிருந்தது. தற்செயலாக இருவரும் நுழைந்துவிட எவராவது அனுமதிக்க மறுத்து அதனால் பிக்கோவுக்கு அவமானம் ஏற்பட்டால் என்னசெய்வது? மனம் பதைத்தது.
வருமுன்காப்பது மதியூகம் அல்லவா? அதுவும் ஒரு வெள்ளையரால் கறுப்பருக்கு.என்றால்? வாகனம் நெருங்க நெருங்க அவரது மூளை வேகமாக இயங்கி முடிவெடுத்துக் கொண்டது.
முதலில் உள்ளே சென்று அனுமதி பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். நமக்குத் தெரிந்தவர்தான் என்பதால் எதுவும் விபரீதமாக நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளலாம் சரிவந்தால் வெற்றி தவறினால் பெரும்பாதிப்புமில்லை. இவ்வாறு யோசித்தவாறே வண்டியை நிறுத்தியவர் உணவகத்துக்குள் நுழைந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக அவருக்கு ஒரு பதில் உணவக உரிமையாளரிடமிருந்து வநதது. அனுமதிப்பதற்கு தனிப்பட்ட விதத்தில் தமக்கு ஆட்சேபணையில்லையென்றும் அரச நிர்வாகிகளும்கூட முன்புபோல் பெரிதுபடுத்தாமல் அனுமதியுடன் பங்குகொள்ள இடம்கொடுத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். சந்தர்ப்பங்கள் சில நேரங்களில்தான் மிகவும் சாதகமாக நடந்துகொள்கின்றன. அப்போது அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் இல்லையோ இன்னொரு சாதகமான சந்தர்ப்பத்துக்காக தவமேயிருந்தாலும்கூட சாத்தியப்படாமல் போய்விடலாம். அல்லவா?
எனவே ഉ__ങ്ങ് அனுமதிபெற்றுத்தரும்படி டொனால்ட் அவரிடம்
வேண்டுகோள்விடுத்தார்.
தொலைபேசி பல நிமடங்களாகப்பலதிசைகளை நோக்கியும் அலறயலறி யார்யாரையோ
16. பூவரசு

எல்லாம் அழைத்து அழைத்து அனுமதிக்காகப் பிரயாசைப்பட்டுக்கொண்டிருந்தது. டொனால்ட் மிக ஆவலுடன் சாதகமான பதிலுக்காகப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார்.
கடைசியாக உணவக உரிமையாளர் முறுவலித்தார். "மிஸ்டர் டொனால்ட்.உங்கள் கறுப்பு விருந்தினரை நீங்கள் உள்ளே அழைத்து வரலாம் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது." ஆவலுடன் அப்பா கையைப்பார்த்திருக்கும் குழந்தையின் கைகளில் அவர்கை மிட்டாயைத் திணித்தால் எப்படி அது மகிழ்ச்சியால் குதிக்குமோ அப்படி அவரது உள்ளம் குதித்தது.
ஆனால் வெளிப்படையாக அதைக்காட்டிக் கொள்வது நல்லதா என்று தெரியவில்லை.
எனவே அமைதியாகப் புன்சிரிப்பைமட்டும் உதிர்த்துக்கொண்டு அவர் திரும்பித்தமது காரைநோக்கிச்சென்றார். ஆனால்.
(தொடரும்)
திெரு. எஸ். திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு
வெளிவரும் தமிழர் தகவல் இதழின் வேது ஆண்டு சிறப்புமலர் வெளியீடும் பல்துறைசர்ந்த வித்தகர்களுக்கு விருதுவழங்கும் வைபவமும் கடந்த மாசிமாதம் 1ம்திகதி கனடா ரொறன்ரோ நகரசபைமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பிரபல ஓவியரும் வெற்றிமணி ஆசிரியருமான திருமுகசு. சிவகுமாரன் (கண்ணா) அவர்களுக்கு தமிழியல் பணிக்கான விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.தமிழர் தகவல் இதழ்.
0கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் கண்ணாவுக்கு ஓவியக்கலைவேள் என்னும் பட்டத்தினையும் வழங்கிச் சிறப்பித்தது. விருதுபெற்ற ஓவியக்கலைவேள் திரு முகசு.சிவகுமாரன் அவர்களை பூவரசு கலை இலக்கியப் பேரவை சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம்.
-இந்துமகேஷ்.
17. பூவரசு

Page 11
மொழியாலும் இனத்தாலும் கலை கலாச்சாரப் பண்பாட்டாலும் தொப்புள்கொடி உறவோடு ஒன்றிவிட்ட தமிழக ஈழத்தமிழர்களைக் காலம்காலமாக அரசியல் எனும் சதுரங்க விளையாட்டாலும் மாற்று இனத்தாரின் மாற்றாந்தாய் மனப்பாண்மையாலும் சிக்குண்டு விரிசலடைந்த நிலையிலுள்ள தமிழக- ஈழத்தமிழரின்- உறவுகள்எவ்வாறு உள்ளன? உண்மை நிலையென்ன? எமக்காகக் குரல் கொடுப்பவர் யார் எவர்? அவர்தம் நோக்கங்கள் என்ன எம்மினம்படும் வேதனைகளை நீறுபூத்த நெருப்பாகச் சுமக்கும் இளம் இன உணர்வாளர்கள் நிலையென்ன? என்பனபோன்ற எத்தனையோ கேள்விகள் வருடக்கணக்காக எண்மனதைக்குடைந்து கொண்டிருந்தன. இவற்றிற்கான பதில்களை பத்திரிகைகள் வாயிலாகவும் சஞ்சிகைகள் வாயிலாகவும், ஒரளவே அறியக்கூடிய நிலை இருப்பதாலும், தணிக்கை எனும் பூதத்தையும் தாண்டிவரும் செய்திகளிலுள்ள நம்பகத் தன்மை- இவற்றை எடைபோட்டுப் பார்த்து வந்த நேரத்தில்தான். நேரில் தமிழகம் சென்றுவர வாய்ப்புக்கிட்டியது. தமிழகத்தையும் அங்குவாழும் நம்மவர்கள்பற்றியும் இயற்கை வளங்களையும் பழைமை வாய்ந்த ஆலயங்களையும் அவற்றின் தற்போதைய நிலைகளையும் புலம்பெயர் மண்ணில் 10 வருடங்களைத் தொலைத்துவிட்டபோது மனதில் பதிந்த அனுபவக் கீற்றுக்களை- யாவும் கற்பனைகளற்று, நம்மண்ணில் வாழ்ந்தபோது குறுக்கிட்ட சம்பவங்களையும் யாதர்த்தத்தினூடு சுவைகலந்து குழைத்துபெற்ற தாயின் ஆசியோடும் நிழல்தரும் பூவரசின் கனிவோடும் பூவரசு இனிய தமிழேட்டின் அன்பு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென விழைகின்றேன். போறுப்பதும் போற்றுவதும் உங்களிபம்.
மணிபல்லவன் எழுதும் கியூத்த நெருப்புகள்
கட்டுரைத்தொடர் ஆரம்பம்
19. பூவரசு
 

GazavZaīda A7z
சுமைகள் சகமாக நெம்புகோல்கள் அவை சுகப்படுத்தர நெருப்புக் கோல்களாய் எடுப்பிதைத்தணிக்க இதோ இளம்தலைமுறை தாகதாரிகளின் வேட்கை தப்பவே முடியுமா?
கையில் கிடைத்த எல்லாவற்றையுமே தூக்கி எறிந்துகொண்டிருந்தான் ராஜேஸ். தூக்கியெறிந்தவை தானாக உடைந்தும். ബങ്ങബuങ്ങബ அங்கிருந்த கண்ணாடிப் பொருள்களின்மீது மோதி தானாக இரண்டுமாய் நொருங்கியும். இது அவன் உடைவதுபோலவும், அவனைச் சார்ந்தவற்றை உடைப்பது போலவும் இருந்தது. கோபம் கொள்பவர் தாமும் உடைந்து மற்றவர்களையும் உடைக்கின்றார்கள் என்பது தான் யதார்த்தம். ராஜேஸின் கைகள் ஓய வாய்வழியாக மனதிலிருந்தவை வந்துகொட்டின வக்கிரமாக வார்த்தைகளாய்.
-கோசல்யா சொர்ணலிங்கம்
1. augas

Page 12
என்ன தந்தவை? எதைக் கிழித்தவை? என்னைக் கண்டபின்தான் எல்லாம் கண்டவை. காதலிச்சன் என்ற குற்றத்திற்காக, கட்டியடித்தவை. பரதேசிகள் விளக்குமாற்றுக்கு ஒரு குஞ்சம்போல பட்டப்படிப்பு வேறு. சி பிழைவிட்டிற்றண்" - வேகமாய் எதுகைமோனை சேர வார்த்தைகள் வந்து விழுந்தன. இது இந்துவுக்கு ஒன்றும் புதிதல்ல.அடிக்கடி நிகழ்வன.
நேற்றைய பகல் வேலைக்கெனப் போயிருந்த ராஜேஸ் இடையில் வந்திருந்தான். அவ்வேளை. கதவுதட்டும் சத்தம் கேட்டு இந்து கதவைத் திறக்காமலே"ஹலோ யாரது?"என்றாள் பயம்கொண்டவளாய். "ஏன் நான்தான் கதவைத்திற வேறு யாரு இவ்வேளை வாறது?” அதட்டலாய் கனவண்குரல்கேட்டுத்திறந்த இந்து, "ஏனப்பா உங்களிடம் திறப்பு இருக்கிறதுதானே" என்றவளை "உனக்கென்னவேலை TR ஒளி பார்க்கிறாயா? குழ்பிவிட்டேனாக்கும். என்னைவிட அது முக்கியம்." -நிறைமதுவில் குளறலாய் வார்த்தைகள் வந்தன. ராஜேஸிடம் திறப்பு இருந்தது. அதை ஒழுங்காய் துவாரத்தினுள் போட்டு திறக்கும் தெளிவை இழந்திருந்த இரகசியத்தை ஒளிக்கவே இந்துமீது இந்த ஆவேசம். இப்போது இந்துவுக்குப் புரிந்தது. மெல்லியதாய் இதற்குள் சிரிப்பும்வந்தது இந்துவுக்கு. இன்று விடுமுறை என்பதால் பிள்ளைகள் கரன், பவி வீட்டிலிருந்தனர். தம் அறையோடு அவர்கள் மீண்டும் நேற்றைய நெருடல்களைச் சமாளிக்க இன்று இப்படியொன்றைத் தேடி முன்னெடுத்தான். தான் கோபமாக கொதிப்போடு இருப்பதான தலைமையாக. "வெளியில்போய் ஒரு ஐம்பது மார்க் உழைக்கத் தெரியவில்லை. பிள்ளை வளர்ப்புச் சரியில்லை. மனைவிக்குரிய மனைமாட்சியில்லை. மாய்ந்துபோவது நான்தான். மகனையும் கூட்டிக்கொண்டு வெளிய போய்விடுவன் அப்பதெரியும்." பேசியவன் பேசியபடியே இருக்க இந்து எதுவுமே பேசவில்லை. யாரில் யாருக்கு இங்கே கோபம் வரவேணும் என்பதெல்லாம் மனுநீதிக்கு அப்பாற்பட்ட விஷயம். ராஜேஸ்வீட்டில் மனத்துக்குள் சிரித்தாள். தவறியும்கூட அது வெடித்து வெளிவராது.அப்படி அது வந்தாலும் அதை வைத்தே அமர்க்களமாகிவிடும் வீடு. இந்துவுக்கும் பிள்ளைகளுக்கும் பழக்கமான விடயமிது. கிண்டர்சிம்மர் (Kindezimmer)இலிருந்த பிள்ளைகள் குரல்கேட்டது. இந்து செவிகளைத் தீட்டினாள் அந்தப்பக்கமாக, "அண்ணா நோபல்பரிசு ஏன் கொடுக்கினம்?" "அது திறமைக்கு குறிப்பிட்ட ஒன்றில் சிறப்பிருந்தால் கொடுப்பினம். அன்னை திரேசாவுக்கும் கிடைத்தது" "அப்படியென்றால் இன்னும் கனபேருக்குக் கொடுப்பினமா?”
*0. aliga

"ஒமோம் பவி ஏன் கேட்கிறாய்?" "அப்ப எங்கடை அப்பாவுக்கும் கிடைக்கும்" என்றாள் "எதற்கு யாராம் கொடுப்பது?" என்ற கரனைப்பார்த்து பவி, "தன்ர பிழையை ஒளித்து அம்மாவோடு அப்பா போடும் சண்டைக்குத்தான் நோபல் பரிசு கொடுக்க வேணும்” பவியின்முதுகைத் தட்டியபடி கரன் பலத்துச் சிரித்தான். "பொத்தண்ணா வாயை கேட்கப்போகின்றது" அதனையும் மிஞ்சி சிரித்த கரனின்வாயைப் பவி பொத்தினாள். இவர்களின் உரையாடலில் இந்தும் ஒன்றை உணர்ந்துகொண்டாள். எங்கள் பிரச்சனைகள் அவர்களுக்கும் புரிகின்றது. அதன்தாக்கம் என்ன விளைச்சலைத் தருகின்றதோ என்ற பயமும் தொட்டது. குழந்தைகள் கூர்மையோடு வளர்கின்றார்கள் என்ற இதமும் ஏற்பட்டது.
ராஜேஸ்க்குள்ளாய் எத்தனைமனிதர்கள். அவனிடம் மெய்முகமில்லை. 'எனக்குத்தெரியும் என்றது அவள் மனம்.
பூத்திருக்கும் எல்லாமே பேரழகுதான்.
அது தன் தேவைக்கும் மலர்ந்திருக்கும்
மனதுக்கு எங்கே தெரியப்போகின்றது?
வாலிபர் பளிங்குத் தரை பளபளப்பாய்
கையில் நெய்நிறைந்த கிண்ணம்
கால்தவறின் வழுக்கிடும் பாதை.
கணிதவறின் நெய்கொட்டும் தரையில் அடிக்கடி வரும் அவள் நண்பியின் கவி வரிகள். அவளும் அவள் கவிதையும் இந்துவுக்கொரு தெம்புதரும். நேசமாய் நினைப்பாள். அந்நாளில், "இங்க பயப்படாதையும் எனக்கு ஒன்றுமே வேணாம். உனக்கு இரண்டு அக்காமார் இருக்கினம் அவையள் படித்து, பட்டமாகி கல்யாணம்கட்ட எத்தனை வருசமோ? உங்கட அம்மாவும் தனிய மாங்காயும் தேங்காயுமாய் விற்று மாப்பிள்ளை தேடலில் முடியுமா என்ன? என்போன்ற ஆண்கள்தான் வாழ்வு கொடுக்க முன்வரவேணும்." சீர்திருத்தம் பேசுவதாக நினைத்து பேசிக்கொண்டுபோன ராஜேஸ்ை இடைமறித்து இந்து, "உங்கடைபேச்சு எனக்குப்பிடிக்கவேயில்லை. அதென்ன வாழ்வுகொடுப்பது? நானும் இப்ப இதற்கு சம்மதித்தால் உங்களுக்கு நான் வாழ்வுகொடுப்பது மாதிரித்தானே? இப்ப நாம்வாழும் வாழ்க்கை வாழ்க்கையில்லையா? அதென்ன கல்யாணம் மட்டும்தான் வாழ்வா? பொறுப்பாய் பொறுக்கவேணும் அக்கா சொல்வா ஆணும்பெண்ணும் சமமென்பது உங்கபேச்சு எனக்குத் தோதில்லை" என்றவளை ராஜேஸ் விடவில்லை. இந்துவுக்கு ராஜேஸ்மேலிருந்த அற்ப பிடிப்பும் தளர ஆரம்பித்தது. தன்மேல் ஒரு நல்லெண்ண மதிப்பதை வளர்க்க இந்துவின் தாயாரை அண்மித்தான் ராஜேஸ். பல பொழுதுகளில் மிக உதவியாகி நின்றான்.
21. பூவரசு
தொடர்ச்சி ம்ே பக்கம்)

Page 13
ஒளிவதற்குவந்த ஓடி தேசி க்ள் ஒளியைப் பிடுங்கிக்ெ ண்டு ஒளிந்துகொண்டிருப்பதை LPasa L
சுழியத்தைச் சுடர்மதியால் ஆராதிக்க முடியுமா?
பகல் கொள்ளைக்குப் பாத்திரமாக்கிக் கொண்டவன் தொடக்கத்தில் தொட்டிலின்றி
பின்பு
தொட்டவையெல்லாம் தாம் இட்டவையென்றான்!
முேதுபோக்குக் கதை பின்பொருநாள்
ymgais
 

காலைக் கனவானது சோக வியப்புத்தான்!
தமிழினத்தின் தலைமயிரில்
பட்டாசு கொளுத்துவதைத் தம் பொழுதாக்கிக்கொண்டாண்
வெடித்துக்கொண்டிருப்பது சரித்திர இனத்தின் சகிப்பு இதயங்கள்
யாதும் ஊரே என்றவனுக்கா கால்வாரல்?
LD6viñrGalin'taq?
சைனட்குப்பி அவதானித்துக்கொண்டிருக்க
குட்டித்தீவின்
புரப் பிணங்கள் குவலயத்தை நீதி நீட்டி அசசுறுததும
மானுடம்
இந்துமகேஷ்
எழுதிய
ரட்டையுேம்
நெடுங்கதை
(A(p6OLnt. Tes
Sauer శ్రీp-శ్రీమిE0లో இதழில் வெளியாகிறது
23. augas

Page 14
நாள் உண்டு!
மண்ணும் அதிர்ந்து குலுங்கிடவே உயிர் மாய்த்திடும் பூகம்பம் தோன்றுதல்போல் கண்ணிர் வடிக்கும் எம்தமிழர் துயர் கட்டி ஒழித்திடும் நாள் உண்டு
மேனி தழுவிடும் பூந்தென்றல் பின்னர் மேவி சுழல்புயல் ஆவதுபோல் கூனி குறுகிடும் எம்தமிழர் துலர் கட்டி ஒழித்திடும் நாள் உண்டு
சாம்பல் உள்ளுறை அக்கினியும் காற்று தாவ நெருப்பு காணாததுபோல் தேம்பி அழுதிடும் எம்தமிழர் சக்தி கூட்டி குதித்தெழும் நாள்உண்டு
சாந்தி நிலவும் பெருங்கடலும் சில சந்தர்ப்பம் பொங்கி மறிவதுபோல் நீந்து துயர்க் கடல் ஏழினையும் இன்ப நிலவில் ஏவிடும் நாள் உண்டு
-க.ச.கந்தசாமி
(கனடா)
4. பூவரசு
 

படைப்பின் ஊற்றுக்கண்
எழுத்துப்பணி என்பது கடினமானது. சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. எழுதுவதற்குப் பேனாவை எடுக்கிறோம் என்றால் நமது 2000ஆண்டு பண்பாட்டையே சுமக்கத் தொடங்கிவிட்டோம் என்பதுதான் பொருள். எழுத்தின் இந்தச் சுமையை உணராத யாரும் கவிஞனாகவோ, சிறுகதை எழுத்தாளனாகவோ முடியாது என்பதுதான் வரலாற்று உண்மை. கவிஞர்கள் தற்காலச் சமூக மதிப்புகளோடு எப்பொழுதும் முரண்படத் தெரிந்திருக்கவேண்டும். முரண்களின் மோதலில்தான் கவிதைத் தீ பிறப்பெடுக்கிறது. கவிதை புதிது புதிதாய்க் கோலம் கொள்ளுகிறது.
முரண்படத் தெரியாதவன் மோதுதல் ஒன்றிற்கு மனத்தளவில் தயாராகாதவன் ஒருபோதும் இலக்கியவாதியாக வரலாற்றில் விளங்கியது இல்லை. சமூகம் ஏழை - பணக்காரன், சிறுபான்மையினர் - பெரும்பான்மையினர், தாழ்ந்த வகுப்பினர்உயர்ந்த வகுப்பினர், படிக்காதவன்-படித்தவன், கிராமத்தான்நகரத்தான், ஆளப்படுகிறவன் - ஆளுகிறவன், பெண் - ஆண், தனக்குத்தானே முரணுதல் என்று பலவாறு முரண்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.
முரண்களின் முற்றல்தான் வளர்ச்சியின் படிநிலைகள், ஆனால் இந்த முரண்களின் கவிஞர்கள் யார்பக்கம் நிற்பது? வரலாறு முழுக்கக் கவிஞர்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றுதான் செயல்பட்டுள்ளார்கள். இந்தச் சார்புநிலை இல்லாமல், நடுநிலைமை என்பது கவிஞனது வாழ்வில் சாத்தியமில்லை. இந்தப் புரிதல் இல்லாத பட்சத்தில்தான் பல எழுத்தாளர்கள் இந்த மண்ணில் பரிசு, பதவி, பட்டம் என்று ஆசையுற்று தங்கள் படைப்பின் ஊற்றைப் பெரிய பாறாங்கல்லால் அடைத்துவிடுகிறார்கள்.
*முனைவர் க பஞ்சாங்கம். (புதுவை) நன்றி சிற்றிதழ்ச்செய்தி இதழ்-31)

Page 15
பூவரசு-இளையோர் பகுதி)
அண்பான தம்பி தங்கைகளே! எங்கள் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வேது ஆண்டு நிறைவையொட்டி எங்கள் இளந்தளிர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்த
எமதுவாழததுககளையும பாராட்டுக்களையும்
6T86TLD, அடுத்த பக்கத்தில் பரிசுபெறுபவர்களின் பெயர்கள்
நமது எதிர்காலச் சந்ததிகளான உங்கள் தமிழார்வத்தை வளர்க்கும் நோக்கத்துடனேயே எங்கள் இளந்தளிர்கள் என்னும் இந்தப்பகுதி உருவாக்கப்பட்டது. உங்கள் விருப்பத்தைப் பொறுத்தே இதில்
எனவே உங்கள் கருத்துக்களை எமக்கு
நாம்வாழத் தமிழ்வாழும் தமிழ்வாழ நாம்வாழ்வோம்!
அன்புடன் தமிழண்ணா.
2. பூவரசு
 

எங்கள் இளந்தளிர்கள் கட்டுரை, உறுப்பெழுத்து, சித்திரப் போட்டிகளில் பரிசுபெறுவோர்.
|கட்டுரைப்போட்டியில் சிறப்புப் பரிசுபெறுவோர்:
நாடும் விடும் கஜிநாத்தவம் (என்னபெற்றால், ஜெர்மனி)
தமிழ்வாழ நாம் வாழ்வோம் ssira Gems6zf SGLSei (ஹவிக்ஸ்பெக், ஜெர்மனி)
எனது அம்மா ஆனந்த் குலதாசன் (பிறேமன்,ஜெர்மனி)
சிவகாந்த் சிவராசா டியூஸ்பேர்க், ஜெர்மனி)
பிரசன்னா குனராஜன் (பிறேமன், ஜெர்மனி)
கற்நாத் தவம் (என்னப்பெற்றால், ஜெர்மனி)
ஆனந்த் குலதாசன் (பிறேமன், ஜெர்மனி)
(u18Apupsi 6ghoaf)
பிரவினா குனராஜன் (Napuloa, 6getuIDGT)
பூவரசு

Page 16
எங்கள் இளந்தளிர்கள்.
எண்களை இணைத்துபாருங்கள்.
பூவரசு
 

எங்கள் இளந்தளிர்கள்.
イ
Ձ
மேலேயுள்ள படத்தில்
இலக்கங்கள் இடப்பட்டுள்ள இடங்களுக்கு வர்ணம் திட்டுங்கள்.
1. மஞ்சள் 2. பச்சை 3. நீலம் 4. மண்ணிறம்
29. பூவரசு

Page 17
எங்கள் இளந்தளிர்கள்
தாய்த்திருநாட்டைப் போற்றுவோம் -தம்பி தரணியில் அதன் புகழ் வளர்த்திடுவோம்! தீய்த்த கட்டுப்பாடுதனை நீக்குவோமடா!-நம்மில் தீண்டாமையைத் துரத்தி விடுவோமடா! தேய்கின்ற வளத்தினை மீட்போமடா - கூடித் தொழில்செய்து குதூகலிப்போமடா! பாய்ந்துவரும் வெள்ளமென அன்பு கொள்ளடா பாசமிகு சோதரராய்க் காலந்தள்ளடா
பஞ்சமென்ற பதத்தினைப் போக்கிடுவோம் படிமிசை எல்லோரும் சமமடா தம்பி கஞ்சத் தனத்தையே கருவறுத்திடுவோமடா காலமெல்லாம் நேர்மையா யுழைப்போம் வஞ்சனையாளருக்கு ஒருகுழி தோண்டுவோமடா!-தம்பி வாழவிட்டால் அதை வளரும்மோசமே! தஞ்சமென்று வந்தவரைத் தாங்கிக்கொள்ளடா தயாளகுணம் உந்தனுயிர் மூச்சடா
உண்மைக்காக எதையும் இழந்துவிடு- தம்பி எதற்காகிலும் உண்மையை இழக்காதே கண்மணிபோல் தாய்மொழியைக் காத்திடடா காயந்த உள்ளம் உனக்கு வேண்டாமடா! விண்முட்டத் தாய்நாட்டுப் புகழ்பரப்பிடடா வேண்டாத செய்கைதனைச் சாகடித்துவிடு என்ணித் துணிந்திடுவோம் காரியத்தில்-தம்பி ஏற்றமிகு பாதையில் அடி வைப்போம்
-திருமதி வி.பாக்கியநாதன். Aே.
30. பூவரசு
 

மனனம் செய்வது எப்படி? எதையாவது மனப்பாடம் செய்யவேண்டுமென்றால் பகுதி பகுதியாகப் படித்து மனனம் செய்துகொள்வது சுலபம் என்று எண்ணாதீர்கள். மொத்தமாகப்படித்து மனனம் செய்வதுதான் சுலபமானது எட்டுவரிகள்கொண்டு ஒரு பாட்டை மனனம்செய்யவேண்டுமென்றால் அதை இரண்டிரண்டாகப் படித்தால் மனப்பாடம் வராது. எட்டுவரிகளையும் மொத்தமாகப் படியுங்கள். சிலதடவைகள் படித்தாலே போதும். ஒரு வாக்கியத்துக்கு மறுவாக்கியம் தொடர்பு ஏற்பட்டு மொத்தப்பாட்டும் நினைவில் பதிந்துவிடும். 624706845986193261832 என்ற எண்ணை மனப்பாடம் செய்ய உங்களுக்கு எவ்வளவு நேரமாகும்? ஃபிவ்க்கில்டன் என்ற போலந்துநாட்டுப் பேராசிரியர் 4.43 விநாடியில் இதை மனனம் செய்து ஒப்பித்தார். அந்த எண்ணை மூன்றுமூன்று பகுதிகளாக பிரித்துக்கொண்டு மனதில் பதிய வைத்துக்கொண்டதாகச் சொன்னார் அந்தப் பேராசிரியர், -LDafalafaer.
குதிரை,
வேகமாக ஓடும் குதிரை வேலி மதில்கள் பாயும் குதிரை தானியங்கள் உண்ணச் தலையை நீட்டி உண்ணும் குதிரை
நாலுகால் பாய்ச்சலிலே நெடுந்துரம் செல்லும்குதிரை வண்டி நிறையப் பாரம்ஏற்ற வேகமாக இழுக்கும் குதிரை
கடினமாக உழைக்கும் குதிரை
கோபம்கொள்ளாக் குதிரை
ந்தில்லாப் ம்
ஆறுதல் அளிக்கும் பயணம்
சிக்கனமான பயணம்-எங்கள்
குதிரைவண்டிப்பயணம்
-குப்பிளான் வையோகேஸ் 30. auges

Page 18
தமிழுக்குப் புதிய இலக்கணநூல் எழுதத் தமிழ்நாட்டரசு அறிஞர்குழு ஒன்றை அமைக்கும் எனக் காந்தி கிராமியப்பல்கலைக் கழகத்தில் கடந்த 18 ஆண்டு மேமாதம் 13 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்ற அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர்கள் மன்ற 2வது மாநாட்டில் தமிழ்நாட்டரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் முதமிழ்க்குடிமகன் தெரிவித்தார்
0 தமிழக அரசுடைமை;
கப்பலோட்டிய தமிழர் வடசிதம்பரனார், திரு விக, மறைமலையடிகளார், தேவநேயப் பாவாணர், கவிமணி தேசிகவிநாயகனார், நாமக்கல் வெ. ராமலிங்கனார், பஜீவானந்தம், சுத்தானந்தபாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பரலி சுநெல்லயைப்பர், கவி காமுஷெரீப், காரைக்குடி சாகணேசன், கல்கி, வரா, ஏஎஸ்கே அய்யங்கார், வவேசு அய்யர், சதுசுயோகியார் ஆகியோரின் நூல்களைத் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது.
() தமிழ்ச்செம்மல்கள்:
தமிழிலக்கியத்தொண்டு புரிந்த தமிழண்ணல், நீதிபதி எம்எம்இஸ்மாயில், மீயசோமு, முதன்ணன் ஆகியோரைப் பாராட்டுமுகத்தான் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ச்செம்மல் விருது வழங்கியுள்ளது.
() பாவேந்தர் விருது:
மலேசியநாட்டுக் கவிஞர் முரசு நெடுமாறனுக்குத்தமிழக அரசு 19ம் ஆண்டுக்கான பாவேந்தர் விருது வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
32. பூவரசு
 

| alarábg
ஞானி எனப்படும் கோவை பழனிச்சாமியின் இலக்கியத்தொண்டைப் பாராட்டி அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒன்றியம் விளக்கு என்னும் இலக்கிய விருதையும், 25 உருவாய் கொண்ட பணமுடிப்பும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
0 பழந்தமிழ்ச்சுவடிகள்:
கடந்த 3 ஆண்டுகளில் ஜெர்மானியர்கள் தமிழர்களைப்பற்றியும், தமிழ்நாட்டைப்பற்றியும் எழுதியுள்ள இரண்டு லட்சம் குறிப்பேடு(டயரிகள், கடிதங்கள், பதிவு ஏடுகள் போன்றவை ஜெர்மனியிலுள்ள மார்ட்டின் ஐதர் பல்கலைக்கழகத்தில் செல்லரித்துக்கிடக்கின்றன. அதுபோலவே இலண்டனிலுள்ள பிரிட்டிசு துலக்தில் இதுவரை அச்சேறாத நூற்றுக்கணக்கான பழந்தமிழ்ச்சுவடிகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்து அச்சிட்டால் பழந்தமிழர் மொழிவளம், கலைபண்பாடு மருத்துவம் குறித்த அரிய தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு.
0 நூற்றாண்டு:
தமிழ்நாடு, காந்தி, வந்தேமாதரம், தினமணி, தினசரி, ஜனயுகம், பாரதம் ஆகிய இதழ்கள் நாளிதழ்களின்
ஆசிரியராக இலங்கிய தமிழ் இதழியல்துறைப் பேராசிரியர் திருடிஎஸ்சொக்கலிங்கத்துக்கு தென்காசி சங்கரலிங்கம் சொக்கலிங்கம்) இது நூற்றாண்டாகும்.
-அரங்க முருகையன்.
S. பூவரசு

Page 19
சில நிமிடங்கள். தமிழ் இலக்கிய உலகினி அனுபவமிக்க முதுபெரும் எழுத்தாளரும் பத்திரிகையாசிரியரும் பதிப்பாசியரும் நூல் வெளியிட்டாளரும் சீர்திருத்தச் சிந்தனைவாதியுமான பிரபல எழுத்தானர் இனம்பிறை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஜூரோப்பாவின் பலநாடுகளுக்கும் விஜயம்செய்து இலக்கியப் பாலமமைக்கும் தமது தோக்கத்தை ஒரோப்பா வழி தமிழர் பலருடனும் பகிர்ந்து (Fagyariawaii. சிறுகை நீட்டி’ என்ற தமது சிறுகதைத் தொகுதியை ஜெர்மனியின் வெளியிடவும் பிறகு ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் சென்று இலக்கிய நண்பர்களைச் சந்தித்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புதிய அணுகுமுறைகளை
வகுத்திருந்தார். * - - - 62 வாகனத்தை இயக்கிவைக்கும் அதன் இயந்திரம் வெளியில் பகட்டாகத் தலையைக் காட்டிக் கொண்டிருப்தில்லை. அதுபோலவே எத்தனையோ படைப்பானிகளுக்கு ஏணியாகவும் முதுகெலும்பாகவும்
S. ganga
 

இருந்து வழிகாட்டிய இவரும் மிகமிக
எளிமையாகத் தனினடக்கத்தோடே திகழ்த்தமை சொல்லும்செயலும் ஒன்றான உணமை மனிதனாக அவரை உறுதிப்படுத்தியது.
அவரது ஐரோப்பிய விஜயத்தின் நோக்கங்களைப் பற்றி பூவரசு சரியில் அவரோடு கலந்துரையாடியபோது.
கேள்வி- திரு.ரஹ்மான் அவர்களே! தமிழகத்தில் ஏராளமான பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. இங்கேயும் அதாவது புலம்பெயர்ந்து வாழும்நாடுகளிலும் பற்பல சஞ்சிகைகள்,நூல்கள் வெளிவருகின்றன. இங்குள்ளவர்களுக்கு அங்குள்ள ஏடுகள்பற்றித்தெரிந்திருக்கும் அளவிற்கு அங்குள்ளவர்களுக்கு இவை அறிமுகப்படுத்தப்படுவதை நீங்கள் அவசியம் என்று கருதுகிறீர்களா? ரஹ்மான்,- எனது வரவின் நோக்கத்தின் முதல்காரணமே அதுதான். அதாவது அங்குள்ள நூல்கள் இங்கும் இங்குள்ள நூல்கள் அங்குமாக பரஸ்பரம் அறிமுகப்படுத்தப்படவேண்டும். நானறிந்தவரையில் ஒன்றிரண்டு சஞ்சிகைகளும் நூல்களுமே அறிமுகமாகியுள்ளன. இங்குவந்தால் எத்தனை எத்தனையோ மிகத்தரமான ஏடுகள் எல்லாம் வெளியாகிக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. ஏன் அவற்றையெல்லாம் அங்கேயும் அறிமுகம் செய்யாமலிருக்கிறார்கள்? என்னுடன் தொடர்புகொண்டு ஆவன செய்யலாமே! அதுமட்டுமல்ல மிக மலிவாகவும் தரமிக்கதாகவும் சஞ்சிகைகள் நூல்கள் அச்சிட்டுத் தருவதென்றாலும்கூட தமிழிலக்கிய வெற்றியை நோக்கில்வைத்து மிகச்சிறப்பாக நான் செய்து தரல்முடியும். அதுமட்டுமல்ல இருவழிச்சந்தைமூலம் அதாவது ஆண்டுக்கொரு தடவை இங்கும் அங்குமாக படைப்புக்களைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி ஆர்வமிக்க வாசகர்களைப் பெருக்க வாய்ப்பு ஏற்படுத்துதலும் சாத்தியமே.
கேள்வி- அடிக்கடி வெளிவரும் படைப்புக்களையும் ஏடுகளையும் விமர்சனம் செய்து வாசகர் வட்டத்தில் ஆர்வமூட்டும்திட்டமேதும் இருக்கின்றதா?
ரஹற்மான்,-- fašisu Rors அப்படியொரு ஆசை எனக்கு உண்டு. அறிமுகமானவற்றையும் அறிமுகப்படுத்த வேண்டியவையற்றியும் தகவல் தரத்தக்க இதழொன்றை வெளியிட்டால் அதன்மூலம் மக்கள் நல்ல நூல்கள்பற்றியும் சஞ்சிகைகள்பற்றியும் அறிந்துகொள்ள நல்ல வாய்ப்புண்டு. இதுபற்றி அங்குள்ள எழுத்தாளர்களையும் இங்குள்ள படைப்பாளிகளையும் சந்தித்துக்கலந்து பேசியபின் முடிவெடுக்கும் எண்ணமிருக்கிறது.
கேள்வி-உங்கள் எழுத்துப்பணியைப்பற்றி. ரஹ்மான்,- 1962ல் நான் கொழும்பில் இருந்தேன். அப்போது அரசு வெளியீடு நிறுவனத்தை நிறுவி 37 நூல்களை வெளியிட்டேன். அது தவிர 50ற்கு மேற்பட்ட
8. gaya

Page 20
நூல்களை வேறுசில நிறுவனங்கள்மூலமாக பதிப்பித்தும் கொடுத்தேன். கதைவளம் என்ற ஒரு சிறுகதை விமர்சன சஞ்சிகையும் வெனமிட்டு வந்தேன். 1964ல் இளம்பிறை என்ற திங்கள் இதழை ஆரம்பித்தேன். 1978வரை அது வெளிவந்தது. இந்த ஏடுதான் என்னை இளம்பிறை ஏற்மான் என்று அழைத்துக்கொள்ள வைத்தது.
கேள்வி- எப்போது தமிழகத்துக்குச் சென்றீர்கள்? ரஹீமான்,-1976ல்தான் தமிழகம்வந்தேன். 1977ல் அங்கே மக்களாட்சி என்ற ஏடு வெளிவரத்தொடங்கியது. அதன் சிறப்பாசிரியராக நாவலர் நெடுஞ்செழியன் இருந்தார். நான் பொறுப்பாசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அந்த அனுபவம் என்னை மேலும் ஊக்குவித்தது. 1978ல் இஸ்மி என்னும் மாத இதழைத் துவங்கினேன். அதன் சிறப்பான அம்சங்கள் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தை ஈர்த்தது. என்னை அழைத்து தாம் அதைத் தமது ஏடாக நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்கள். நல்ல காரியங்கள் யார்மூலமாயினும் நல்லபடியாக நடந்தால்போதும் என்று அவர்களுக்கு அதன் பொறுப்பைக் கையளித்து விட்டதுடன் அதன் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிசெய்து ஒத்துழைத்தேன். அது வளர்ந்து இன்னும் மாதஇதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
கேள்வி- நூல்கள் வெளியிடும் பணியை இப்போது எவ்வாறு- அதாவது எந்த நிறுவனத்தின் மூலமாகச் செய்துவருகிறீர்கள்? ரற்மான்,- எனது நூல் வெளியீட்டு நிறுவனமாக மித்ர நூற்பதிப்புத்துறையை அமைத்துப் பணிபுரிகின்றேன். தமிழ்நாட்டிலே புதியாணியில் வெளியீட்டுத்துறையிலே இத்துறை இயங்குவதாகப் படைப்பாளிகளும் வாசகப்பெருமக்களும் பெருமைப்படும் அளவிற்கு இப்பதிப்பகம் சிறப்பாகவும் மலிவாகவும் அச்சிட்டுத்தருவதால் ஐரோப்பாவிலிருந்தும் அவுஸ்திரேலியா மலேசியா போன்ற பல நாடுகளிலுமிருந்தும் படைப்புக்கள் நூலுருப் பெறுவதற்காக வந்துகுவிகின்றன. தரமாகவும் அதே சமயம் மலிவாகவும் திட்டமிட்டுச்செய்வதால் என்னால் படைப்பாளிகளையும் வாசகர்களையும் ஒரேசமயத்தில் திருப்திசெய்ய முடிகிறது. எனது இலக்கியப்பணியில் இது ஒருசாதனை என்பதைவிட எனது கடமையை நான் சரியாகச் செய்வதாகக் கிடைத்திருக்கும் சான்றிதழ் என்றுதான் கூறுவேன்.
கேள்வி- இளம்பிறை பதிப்பகம் எப்படி இயங்குகின்றது? ரஹம்மாள்- தமிழ்ப்புத்தகம் வெளியிடுவோருக்கு அதுவும் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளின் நூல்களுக்கு தமிழ்நாட்டின் விற்பனைக்களத்தினை விரிவுபடுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவம் எனக்கு மிகத் தெளிவாக விளங்குவதால் மிக விசேஷ அக்கறை எடுத்து கணிசமான விதத்தில் வெற்றிபெற்றும் வரமுடிகின்றது. இதில் இளம்பிறை பதிப்பகத்தின் முழுப்பங்களிப்பும் இருக்கின்றது எனலாம்.
S. ngas

கேள்வி- பூவரசு ஏட்டினைப் பார்த்ததாகக் கூறினீர்கள் அதைப்பற்றிய தங்கள் கருத்தை அறியலாமா? ரற்மான்,- இவ்வளவு நல்ல ஏடு தமிழகத்தில் சரியான முறையில் அறிமுகப்படுத்தப் படவேண்டும் என்று நான் கருதுகிறேன். இதன் ஆசிரியர் திரு.இந்துமகேஷ் அவர்களைச் சந்திக்கமுடியாமல் திரும்பநேர்வது எனக்கு மிகவும் கவலையையே தருகின்றது. வாசகர் உள்ளங்களை உணர்ந்து தேவைகருதி ஏற்ற கருத்துக்களைக் கொண்டு இயங்கிவருவது சிறப்பு, வெறும்கடைகளில் தொங்கும் ஏடுகளைப் போலல்லாமல் பணியில் தூய்மைகொண்டு இயங்குவதை அதிலுள்ள படைப்புக்களை அவதானித்தபோது உணர்ந்துகொள்ள முடிந்தது. பூவரசு ஏட்டினை விரும்பினால் தமிழக இலக்கிய வட்டத்துக்குள் சுழலவிட மிக ஆர்வத்தோடே ஆயத்தமாயிருக்கின்றேன். நல்லமுயற்சி தொடர்ந்துசெய்யுங்கள். அது திங்களுக்கொரு தடவை வருவதாகத் தெரிகிறது.விரைவில் அது ஒரு திங்களுக்கு இருதடவை
ஆசியும் ஒத்துழைப்பும் பூவரசுக்கு என்றும் உண்டு.
வணக்கம்வாழ்த்துக்கள்.
பூவரசுக்காகச் சந்தித்தவர்- எழிலன்,
அடுத்த இதழில்
பூவரசு வேது ஆண்டு நிறைவுப் போட்டிகளில்
முதற்பரிசு பெற்ற சிறுகதை, கவிதை, கட்டுரை என்பன இடம்பெறுகின்றன.
$7。 பூவரசு

Page 21
ம்ேபக்கத் தொடர்ச்சி) ஆண்களற்ற அந்தவீடு அவனுடைய உதவிக்காக அவ்வப்போது கடன் கொண்டது. இதன் பின்னாக தன் விருப்பத்தை இந்துவின் தாயார் ஈஸ்வரியிடம் சொன்னபோது ஈஸ்வரிக்கும் இதில் விருப்பு இருந்தது. ஈஸ்வரியின் வாழ்வில் ஏற்பட்ட இழப்பும் அதனாலான பாதிப்பும் இதற்கொரு நெம்புகோலானது. நான்குபெண்பிள்ளைகள். கணவரும் காலமாகிப்போன ரணங்களோடு அவள். மூத்தபெண்களின் படிப்புபதவிகளில் திருப்தி கொண்டிருந்ததால் ஈஸ்வரி இந்து ராஜேஸ் திருமணம் ஒரு வாய்ப்பான காரியமென நினைத்து ஆயத்தமானபோது இதில் இந்துவின் இணக்கம் கணங்கியது. தாயாரின் கண்ணிர் இந்துவைக் கரைத்தது.
கல்யாணம் நடந்தது. வீட்டிற்கொரு ஆண்வரவு. அந்த ராஜபந்தத்தோடு சிலநாள் ராஜேஸ். அப்புறம் ஐரோப்பிய நாட்டிற்கு இந்துவோடு புலம்பெயர்ந்தான். வருடம் பத்தும் ஆயின. வாழ்வுகொடுத்தேன் என்ற எண்ணமே முன்நின்றது அவனுக்கு, ஆண்களுக்கென வளர்ப்பு ஒன்று. பெண்களுக்கென இன்னொன்று. இதை வளர்த்தெடுக்கும் சமூகத்தைப்பார்த்து நொந்தாள் இந்து. மனம் நிறைய தன்தாயை மன்னித்தாள். ராஜேஸ் ஒருகோழை என்பதைக் காலத்தாலும் வாழ்ந்துகொண்ட வாழ்விலும் கண்டுகொண்டாள். எண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது இப்போது. அவளுள் எழுபவை. சிந்தனை கலைத்த பவி "அம்மோய்." "அம்மா இண்டைக்குப் பார்க்குக்கு கூட்டிப்போவதாகச் சொன்னிங்க.போவமா? அண்ணாவும் வாரீயா?” "இல்ல தான் வரேல்ல" என்ற கரனைவிட்டு ராஜேஸ் தூங்கப்போனதும் அரவமின்றி வெளிக்கிட்டுப் பார்க் பக்கம் போனார்கள். பவியைக்கண்டதும் பவியோடு படிக்கும் கோபி கூட விளையாட ஓடிவந்தான். இந்து அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் இருக்க "பவி நீ ஏன் தமிழ் வகுப்புக்கு வரேல்ல?” "அப்பாவுக்கு சுகமில்லை. அதாலை அம்மா கூட்டிவரேல்ல, ஆனா வீட்டிலிருந்து சிறுவர் முற்றம் கேட்டனான். ஜோதி அன்ரி 'அம்மா சொல்லித்தந்தமொழி வடிவா சொல்லித் தந்தவ' "அப்ப நீ தமிழ்படிக்க வரமாட்டியா? கணக்க எழுத்து என்ன?" வருவன் தமிழ்பிடிக்கும், ரிச்சரையும் பிடிக்கும் வருவன் "சரி விளையாடுவம் வா! வீடுகட்டுவமா மணலில்'
. பூவரசு
i

நான் கட்டுறன். நீ சோறுகறி வை” பவி சொன்னதும், வி உனக்கு வீடுகட்டி அறைவைக்க தெரியாது பார். அது ஆம்பிள வேலை. நீ பட்டை, சோறு கறி வை” இல்ல எனக்குத் தெரியும்" கட்ட ஆரம்பித்த பவியை விடாது காலால் தட்டி ழப்பினான். பாறுக்க முடியாத பவி தன் சப்பாத்தால் ஓங்கியடித்தாள். மாறிமாறி அடிபட்டனர். வனித்த இந்து ஓடிவந்து இருவரையும் விலக்கி, அடிபடாமை விளையாடவேணும் குஞ்சுகள்” என்றதும், அவன்தான் முதல் குழப்பினவன். எப்பவும் விளையாடக் கேட்பான். பிறகு தான் ஆம்பிளை, எல்லாம் தனக்கே தெரியும் என்பான். அழாப்பி'என்று சிணுங்கினாள்.
UPPLAT SprůF" தாடர்ந்து விளையாட மறுத்த பவியை அணைத்தபடி இந்து வீட்டிற்கு வந்தாள். Nப்போது இந்துவுக்கு இன்னொன்றும் விளங்கியது.
வியின் சப்பாத்து எல்லாம் மண்நிரம்பியிருந்ததுகண்டு கரன், ஏன் பவி இவ்வளவு மணல்' அது கோபி கொட்டினான்.” இனி நானும் உன்னோடை கராத்தே பழக வருவன். அடிக்கிறவைக்கு திருப்பி அடிக்க வேணும். அம்மா மாதிரி அப்பாவிட்ட அடி வாங்கமாட்டன்” சொன்னது கேட்ட ராஜேஸ் கேளாத மாதிரி எங்க உலாத்தல் தாயும் மகளும்? அவன் ஆண்பிள்ளை அடுப்படியில் ரொட்டி டுகிறான் - முறைப்போடு கேட்டான். இல்லையப்பா நான் விரும்பித்தான் அம்மா குழைத்து வைத்த மாவில் ரொட்டி போட்டன். கொஞ்சம் அம்மாவுக்கு உதவியாக" கரன்! ஏன் ராசா என்னோட பேசவில்லை நேற்றுமுழுதும்?"
தனிப்பாசத்தைக் காட்டிய ராஜேஸ் கேட்டபோதுஅதப்பா நீங்க அற்ககோல் பாவித்திருந்தீங்க.அப்ப நானும் பாவித்திருந்தால்தானே உங்கடை கதையும் என்ர கதையும் தோதாக பொருந்திநிற்கும்” என்றான். நெருப்பள்ளிக் கொட்டினாற்போன்ற உணர்வு ராஜேஸ்க்கு. வி கராத்தே, கரன் அற்ககோல். மாறிமாறி பயம்தொட்டது. மிழிப்போடு வளரும் வித்துக்கள் இந்துவோடு இதைக்கதைக்க கூச்சமாகவும்இருந்தது. வேலையிருந்த வேளைபார்த்து வீட்டிற்குப் போன்பண்ணினான். உன்னது வாரிசுகள் சரியானவழியில் தலை எடுக்கின்றனர்" அன்றோடு அவர்கள் வீடு அமைதியான அலாதியான குடும்பமாகியது.
சேதியை எனக்காய் தந்த இந்து,
39. augas

Page 22
"இது சமூகத்திற்கு தேவை. கதையாக்கிவிடேன் கதா"என்றாள் "ஆமாம் அந்த நோபல் பரிசு.அதில் ஒரு மாற்றம்.அது யாருக்கு என்பது, எண்ணில் 3. மாற்றம் இந்து"
"என்னது? நீ எழுத்தாளிதீர்மானி"
"கரனுக்கும் பவிக்கும்தான் இங்கு நோபல்பரிசு” ஏகமனதாக நிறைவேறியது என் விருப்பு.
မှူးမှီur၆ வந்து காகிதத்தில் ஒன்றினேன்.
என் சுவாசமானாய்!
* மலராக நானிருக்க
தேனுண்னும் வண்டானாய் வீசும் தென்றலானாய்அசையும் பூவனமாய் நானிருந்தேன்! பால் நிலவாக நானிருந்தேன். தொடும் வானமானாம் தழுவும் அலையானாய்காத்திருக்கும் கரையாக நானிருந்தேன்
தாலாட்டும் தாயானாய் பொழியும் மழையானாய்நனையும் நிலமாக நானிருந்தேன்! கருவிழியாக நானிருக்க காக்கும் இமையானாய் பச்சைக் கிளியானாய்பேசும் மொழியாய் நானிருந்தேன்! * A எண்ணமாய் நானிருக்க
* தோன்றும் வார்த்தையானாய்
xx கற்பனையானாய்
 

-ஏஜேஞானேந்திரள்.
(கவிஸ் பாசல் நகரிலிருந்து)
D
ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்கு எப்பொழுதுமே ஊர் இரண்டுபட்டால்தான் கொண்டாட்டம், ஊர் இரண்டுபட்டால் பத்திரிகைக்காரர்களுக்கும், வியாபாரிகளுக்கும்கூட கொண்டாட்டந்தான். எப்படி என்று கேட்க வருகின்றீர்களா! பொதுவாக நாட்டை அமர்க்களப்படுத்தும் சங்கதிகள் எப்படிப் பத்திரிகைகளுக்கு நல்ல தீனியாகின்றனவோ அதுபோல வியாபாரிகளுக்குக்கூட இவை வரப்பிரசாதமாக அமைந்துவிடுகின்றன. டைட்டானிக் அலை ஒய்ந்தபின்பு, இப்பொழுது வியாபாரிகள் கவனத்தை ஈர்த்திருப்பது மொனிக்கா-கிளின்ரன் விவகாரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மொனிக்காவின் உடை, கிளின்ரனின் சுருட்டு, என்று எல்லாவற்றையுமே வைத்து பல உலகநாட்டு நிறுவனங்கள், வித்தியாசமான பொருட்களைச் சந்தைப்படுத்தியிருக்கின்றன. இன்டர்நெட் மூலம் விற்பனை செய்யும் யுக்தி குடுபிடித்திருக்கும் இக்காலகட்டத்தில், WWWலுறonica.com என்ற பக்கத்தில் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட எப்படியான பொருட்களை வாங்கிப் பரிசளிக்கலாம் என்பதுபற்றியும் ஆலோசனைவழங்க ஆரம்பித்திருக்கின்றார்கள். உலகம்போற போக்கைப்பாரு. இப்படிப் பாடத்தான் தோன்றுகின்றது) 41.பூவரசு

Page 23
Π கம்யூட்டர் கலாட்டா,
படுவேகமாகத்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. முந்தியவன்பாடு கொண்டாட்டம் என்பதுபோல் எல்லாமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. திருவாளர் கணணியின் விஜயம், எதிலும் வேகம் எங்கும் வேகம் என்ற நிலையை உருவாக்கிவிட்டது. இப்பொழுது இந்த வேகமான பேர்வழியே பிரச்சனைக்குரியவராகி இருக்கின்றார்.
* என்பதுபற்றி அறிந்திருக்கின்றீர்களா? இரண்டாயிரமாவது ஆண்டில் கம்யூட்டர்களுக்கு தலையிடி ஏற்படுத்தப்போகும் விவகாரத்தைத்தான் இப்படி அழைக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் இரு இலக்கங்களையே வைத்துக்கொண்டு கம்யூட்டர்களில் காலத்தைக் கணித்தவர்கள் இனி, அதாவது அடுத்த ஆண்டு கம்யூட்டர்கள் என்று காலத்தைக்காட்ட முழி பிதுங்கி விழிக்கப் போகின்றார்கள். அதாவது இனி * என்பதற்குப்பதிலாக கம்யூட்டர்கள் 18 என்றேகாட்டும், பாரிய நிறுவனங்களில் கோடி கோடியாகப் புரளும் பணம் கொடுபட்ட, வாங்கப்பட்ட திகதிகள் எல்லாம் குழம்பப் போகின்றன. கோடி கோடியாகக் கொட்டிப் பிழைகளைத் திருத்த உலகநாடுகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடும்வேகம் கண்ணைக் கெடுக்கும் என்பது உண்மைதான்.
கீகாரம் தந்தாயிற்றோ?
அரசவிவகாரங்கள் அடிக்கடி பலராலும் அலசப்படுவதுண்டல்லவா? பிரிட்டனின் அரச குடும்ப நிலவரங்களை எப்பொழுதுமே இங்குள்ள பத்திரிகைகள் கண்கொத்திப் பாம்பாக நின்று கவனித்து எழுதுவதுண்டு. இளவரசி டயானாவின் அகாலமரணம் பழையகதையாகிவிட்ட இன்றைய நிலையில், சாள்ஸ் இளவரசரின் நடவடிக்கைகள் டன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவருகின்றன.
2. gage

கடந்த ஜனவரி 28 அன்று, மிக ஜாக்கிரதையாக இலண்டனிலுள்ள ரேட்டல் ஒன்றிலிருந்து ஜோடி சகிதமாக வெளிப்பட்ட இளவரசர் படப்பிடிப்பாளர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றார். இவருடைய பழைய காதலி கமிலா பார்க்கரின் மூத்த சகோதரியின் பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொள்ள வந்தபோதுதான், இப்படி அகப்பட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று. இதுவரைகாலமும் இவர்கள் உறவை அங்கீகரிக்க மறுத்துவந்த இராணி எலிஸபெத் இப்பொழுது பச்சைக்கொடிகாட்டத் தொடங்கியிருக்கின்றார் என்கின்றன நம்பிக்கையான வட்டாரங்கள், காலம் என்பது கணியாததையும் கணிய வைப்பதில் சமர்த்தான
றுதான்.
காட்டிக்கொடுத்த காது.
கேட்பதற்கு உதவுபவர், கெட்டவரைப் பிடிக்கவும் காதுகொடுக்கிறார். மண்ணிக்கவும் கைகொடுக்கின்றார் என்பது தெரியாத செய்திதான், வீட்டுக்குள் புகுந்து திருடியவனை, வித்தியாசமானமுறையில் பிடித்திருக்கின்றார்கள் இலண்டன் மாநகரப் பொலிஸார். கைரேகை எதையுமே விட்டுவைக்காமல், மிகச்சாமர்த்தியமாக தனது திருட்டுப் பணிகளை மேற்கொண்டுவந்தவனுக்கு சிக்கல் வேறுரூபத்தில் தேடிவந்துவிட்டது. திருடப்போகும் இடங்களில், நடமாட்டத்தைக் கவனிக்க இவன் எப்பொழுதுமே கதவுத் திறப்புத் துவாரத்திலோ அல்லது அறை யன்னலிலோ காதைவைத்துக் கேட்டபின்புதான் வீட்டை உடைத்து உள்ளே புகும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான். இவனது இந்தப் பழக்கமே இவனுக்கு எமனாகிவிட்டது. கைரேகை கொண்டுதானே கள்வனைப் பிடிக்கமுடியவில்லை. கண்ணாடியில் பதிந்துவிட்டகாதுரேகைகள் உதவிகொண்டு கம்பி எண்ணவைத்து புதியதொரு சகாப்தம் படைத்திருக்கின்றார்கள் இலண்டன் பொலிஸார். ஐந்துதடவைகள் திருடியதாக இவன் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டிருக்கின்றான். காதுகொடுத்துக் கேட்கும் கள்வர்களே ஜாக்கிரதை
43-yaga

Page 24
பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வாசகர் அரங்கமும் பூவரசு 8வது ஆண்டுநிறைவுமலர் வெளியீடும்.
பூவரசு இனிய தமிழ்ஏட்டின் எட்டாவது ஆண்டு நிறைவுமலர் கடந்த 1819 சனிக்கிழமை மாலை பிறேமன் நகரில் வாசகர்கள்மத்தியில் வாசகர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வாசகி திருமதி பராசக்தி பாலசுப்பிரமணியம், பூவரசு கலை இலக்கியப் பேரவையின் பிரதம ஆலோசகர் திருமதி வில்ரூட் கடெல்கா ஆகியோர் மங்களவிளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தனர். வாசகி திருமதி சாந்தராணி பத்மகுமார் வரவேற்புரை வழங்கினார்.
உரையாற்றிய பூவரசு இனியதமிழ் ஏட்டின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான திரு. இந்துமகேஷ் பூவரசின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பவர்கள் அதன் வாசகர்களும் படைப்பாளர்களும் என்றும் அவர்களது பேராதரவே பூவரசின்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்வளர்ந்துவரும் இளையதலைமுறையினரிடையே உருவாகிவரும் புதிய படைப்பாளர்களின் ஆக்கங்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர் புதியபடைப்பாளர்களின் ஆக்கங்களுக்கு பூவரசு முன்னுரிமை அளித்து வருகின்றது எனவும் எதிர்காலத்தில் சிறந்த பல படைப்புக்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இளம்தலைமுறை எழுத்தாளரிடையே தெரிகிறது என்றும் மகிழ்ச்சிதெரிவித்தார். வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான பூவரசு கலைஇலக்கியவிழா பெரிய அளவில் ஒழுங்கு செய்யப் படவில்லை என்றும் பூவரசு வாசகர்கள் பலரது விருப்பப்படியே இவ்வெளியீட்டு வைபவமும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பூவரசு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பூவரசைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் இந்துமகேஷின் கலை, இலக்கியப் பணிகளைப் பாராட்டிய எழுத்தாளர் திருவீஆர்.வரதராஜா, இப்பணிகளை இந்துமகேஷ் மேலும் தொடர்வதற்கு வேண்டிய ஊக்கத்தினை வழங்கும்படி வாசகர்களையும் படைப்பாளர்களையும் கேட்டுக்கொண்டார்.
எழுத்தாளர் எழிலன் தனது உரையில் எழுத்தாளர்களின் சமூகக்கடமைகளைப்
பற்றிக் குறிப்பிட்டார். எத்தகையநிலையிலும் அஞ்சாது தனது கருத்துக்களைச்
சொல்லும் எழுத்தாளன் சொல்லிலும் செயலிலும் உறுதியாக நிற்கவேண்டும்
என்றும் ஒருசிலரின் அர்த்தமற்ற விமர்சனங்களால் பாதிப்படையாமல் அவன் 44.பூவரசு

தனது பணிகளைத் தொடரவேண்டும் என்றும் வலியுறுத்திய எழுத்தாளர் இராஜன் முருகவேல் தனது பத்திரிகை அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு உரையாற்றுகையில், எதிர்காலத்தில் இன்றைய நமது வாழ்வைப் பிரதிபலிப்பது இன்று எம்மால் படைக்கப்படும் இலக்கியங்களே என்றும், அவற்றை வெளிப்படுத்தும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளுமே என்றும், ஒரு சஞ்சிகையாளன் சந்திக்க நேரிடும் சவால்களை வென்று ஒரு சஞ்சிகையை வெளிக் கொணர்வது அத்தனை சுலபமான காரியமல்ல என்றும் இந்த முயற்சியில் சளைப்பின்றி உற்சாகமாக ஈடுபட்டுவரும் இந்துமகேஷின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை என்றும், பூவரசு எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் தனது கலை இலக்கியப் பணிகளில் வளர்ச்சிபெற்றிருப்பதற்கு காரண கர்த்தாக்களான வாசகர்கள் தொடர்ந்தும் தமது ஆதரவை பூவரசுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
எழுத்தாளர் திரு.செ.யோகநாதன் பேசுகையில் 6:06, கலைஞர்களையும் கலை இலக்கிய ஆர்வலர்களையும் வெளிக்கொணர்ந்து அவர்களது திறமைகளை ஊக்குவிப்பதற்கு ஒருஉதாரணம் வேண்டுமென்றால் தன்னையே உதாரணமாக்கலாம் என்றார். ஓரளவு கவியாற்றல் உள்ள தன்னை முதல்முறையாக 携% கவியரங்கில் மேடையேற்றிய பூவரசு, சுயமாகப்பாடல்களை இயற்றிஇசையமைத்துப் பாடவும் வழிசமைத்தது, பட்டிமன்றத்தில் பங்குகொள்ள வைத்துப் பேச்சாற்றலை வளர்த்தது, என்று பல்வேறு துறைகளிலும் தன்னுள் பொதிந்துள்ள கலையாற்றலை வெளிக்கொணரவைத்தது பூவரசே என்று நன்றிதெரிவித்த அவர், இதுபோல் எத்தனையோ கலை இலக்கியவாதிகளுக்கு ஊக்கமளித்து அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் பூவரசு பல்லாண்டுகாலம் வாழ்ந்து தமிழ்ப்பணிபுரியவேண்டும் என்று வாழ்த்தினார். பூவரசுக்கான வாழ்த்துக்கவிதையொன்றை இளம்எழுத்தாளரான விக்னேஷ் படித்தார். இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான திருஎஸ்தேவராஜா (சால்ஸ்கிற்றார்) பூவரசு வளருது என்னும் தனது வாழ்த்துப்பாடலை வாசகர்களுடன் இணைந்து பாடினார். பாடகர் திருபாலசுப்பிமணியம் பூவரசு ஆண்டுமலருக்கென தான் எழுதி அனுப்பிய வாழ்த்துக் கவிதையை மெட்டமைத்துப் பாடினார். வாசகர்கள்சார்பில் திரு. சுமகேந்திரமூர்த்தி, திருசிவராஜா, பிரம்மபூரீ சசிகரசர்மா, ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினார்கள். வாசகர் அரங்கின் சிறப்பு நிகழ்ச்சிகளாக இந்துமகேஷ் எழுதி பூவரசு இரணடாவது ஆண்டுமலரில் வெளியான
நெஞ்சுக்குள்ளே ஒருத்தீ, நெடுங்கதை இசையும் கதையுமாக மாற்றப்பட்டு
w க்க.பூவரசு தொடர்ச்சி சிம்பக்கம்)

Page 25
யாமாமா நீ யாமாமா யாழி காமா காணாகா காணா கா மா காழியா மாமாயா நீ மாமாயா
என்ன படிப்பதற்கு ஏதோ நிந்தையாக வேடிக்கையாகத் தென்படுகிறதே! சொல்லமைப்பைப் பார்த்தால் ஏதோ பழங்காலத் தொடர்புடைய செய்திபோலவும் தோன்றுகின்றது. எந்த வேலைமெனக்கெட்டவன் (அல்லது கிறுக்கள்) இப்படி யாமா காநீ என்ற எழுத்துக்களைப் பலமுறை திருப்பித்திருப்பி வருமாறு எழுதிவைத்தான்? எப்படிச் சொற்களைப் பிரித்துப் பொருள் பார்த்தாலும் பொருள் விளங்கவில்லையே என்று நீங்கள் அலுத்துக்கொள்ளுவதை என்னால் உணர முடிகிறது. பாடலின் பொருளைப்பற்றி அறியப்புகுமுன் இந்தப் பாவினை இயற்றியவர் திருஞானசம்பந்தர் என்று அறிய நேர்ந்தால் உங்களுக்கு வியப்புமேலிடும். ஐயோ!அந்தக் கருவிலே திருவாய்ந்த- உமையன்னையின் ஞானப்பாலை அருந்தும் அரிய பேறுபெற்ற அந்தப் பெருந்தகையைப் போய் வேலை மெனக்கெட்டவன் என்று எண் அறியாமையால் இகழ்ந்து சொல்லி விட்டேனே. சிவசிவா என்று சொல்லிக் கன்னத்தில் அடித்துக்கொண்டு கழுவாய் (பிராயச்சித்தம்) தேடவேண்டுமென்று இப்போது உண்மை தெரிந்ததும் நினைக்கிறீர்கள் அல்லவா? சரி, இனிப் பாடலின் பொருளை அறிய முயலுவோம். யா-யாவையும், யாம்-நாங்களும், ஆம்-ஆகும், ஆம்நீ- நீயே ஆவாய், யாமா-யாமங்களாக (பல்லுழிக்காலமாக) இருப்பவனே, மாமாட்சிமையுடைய (பெருமைமிகு), யாழீ-ஆழியை உடையவனே, காமா- அனைவராலும் போற்றப்பட்டு விரும்பப்படுகின்றவனே! காணாகா-(காண் நாகா) வனப்புடன் காணப்படுகின்ற பாம்பை அணிகலனாக அணிந்தவனே மாகாழி- பெருமையுறு மணிமாலையைப் பெற்றவனே! யாமா மாயா-பகவாகவும், மற்ற விலங்குகளாகவும், எக்காலத்தும் மாயாத நீயே இருக்கிறாய். மா மாயா - பீடுறு பெருமையும், மாயமான தோற்றத்தையும் உடையவனே (இறைவனே!)
4. marga

அதாவது தாயுமானவ அடிகளர் தமது பாடல்வழிச் சுட்டிக் காட்டியவாறு, "அங்கு இங்கு எனாதபடி எங்கும் எதிலும் எல்லாமாகவும் நீக்கமறக் காலங்காலமாய் நிறைந்திருப்பவனே!" எனபதாம. இப்பாடலில் பயன்படுத்தப்பெற்ற எழுத்துக்கள் எல்லாமே நெடிலெழுத்துக்கள் என்பதைக்கவனியுங்கள். இப்பாடலை இயல்பு போல முன்னிருந்து பின்னாகப் படிக்கினும் அல்லது(மாற்றி) பின்னிருந்து முன்னாகப் படிக்கிலும், ஒரேமாதிரியாக வருவதைக் கூர்ந்து நோக்கி இன்புறுக. இத்தகைய பாக்களை (முன்னிருந்துப் பின்னாகப்படிக்கினும் அல்லது பின்னிருந்து முன்னாகப் படிக்கினும் ஒன்றேபோல் வருவனவற்றை) மாலை மாற்று என்பது இலக்கிய மரபாகும்.
இலண்டண்)
ம்ேபக்கத்தொடர்ச்சி)
திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம் அவர்களால் வாசிக்கப்பட்டது. இக்கதைக்குப் பொருத்தமானபாடல்கள் திரையில் ஒளிபரப்பப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சிக்கு அழகுசேர்த்தது. தொடர்ந்து மனிதநேயம் என்னும் தலைப்பில் விவாதமேடை நடைபெற்றது. எழுத்தாளர் திருஇராஜன் முருகவேல், திருடொன்பொஸ்கோ ஞானச்செல்வம், எழுத்தாளர் திருஎழிலன் ஆகியோர் பங்குகொண்டனர். வாசகர் அரங்கின் இறுதி நிகழ்வாக 182ல் பிவிக்னேஸ்வரனின் தயாரிப்பில் உருவான இந்துமகேஷரின் உதயத்தில் அஸ்தமனம் தொலைக்காட்சிநாடகம் திரையில் காண்பிக்கப்பட்டது. வாசகர் அரங்கம் முற்றிலும் இலக்கிய நிகழ்வாக அல்லாமல் ஒரு தரமான கலை இலக்கிய விழாவாகவே அமைந்தது என்று வாசகர்கள் கருத்துத் தெரிவித்தனர். பூவரசு கலை இலக்கியப் பேரவை சார்பில் திருமதி சசிகலா தேவராஜா அவர்களின் நன்றியுரையுடன் வாசகர் அரங்கம் * நிறைவு பெற்றது.
-வாசகன்
7. aliga

Page 26
வாழ்க்கை என்பது சமமான நிலையில் இல்லாது மேடு பள்ளங்கள், உயர்வுதாழ்வுகள், துயரம் மகிழ்ச்சிகள் என்று அடிக்கடி மாறிமாறி நம்மைச் சுழலவைத்துக் கொண்டிருப்பது. அதை நாம் உணர்ந்துகொள்ளாமல் மாற்றங்களின் தற்காலிகத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் அது நிரந்தரமானது என்று அடிக்கடி நம்பி ஏமாந்துபோகிறோம். நமது மனநிம்மதி இதனால்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றது. நிதானமான சிந்தனையும் நம்மை நாமே புடம்போட்டுக்கொண்டு வாழ்வதும் இந்தத் தொல்லையிலிருந்து நம்மை பெரும்பாலும் காப்பாற்ற வலலது எனறு நமயலாம. நமது குறைகுற்றங்களைப் பிறர் கட்டிக்காட்டினால் நமக்கு வரக்கூடிய கோபம், நம்மை நாமே புடம்போடும்போது வராது. மாறாக நம்மைச் சரியாகச் சிந்திக்கவைக்கும். முயற்சித்துப் பாருங்கள். சிரமமமெடுத்து நாம் அடிக்கடி சிந்தனை செய்து பழகவேண்டும். அமைதியாக அமர்ந்து ஏதாவது ஒரு விடயத்தை எப்படிச் செய்தால் சரியாயிருக்கும் என்று சிந்தித்துப்பார்க்க முயன்றால் அந்தப் பொழுது போக்கு மிகவும் சுவையாக அமைந்துவிடுவதை உணர்ந்து கொள்ளலாம். இன்று இருப்பது நாளை இல்லை. நாளை இருப்பதும் நிலைத்திருப்பது இல்லை. ஆக நாம் செய்த நல்லசெயல்களே நமக்காக நிற்கும். மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வரும் காலமிது. இக்காலகட்டத்தில் சிந்தனையின் வேகம் மிகமிக அதிகமாக வேண்டும். ஏனெனில் உலகம் ஒருநொடிக்குள் கைக்குள்ளிருக்கும் தொலைபேசியிலும் மேசையில் இருக்கும் கணணிக்குள்ளும் சுழன்றுவரும் சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆகவே இன்னும் நாம் புதுமையை அறியவிரும்பாது சிறு சிந்தனைக்குள் வலம்வந்து கொண்டிருக்கக்கூடாது.
48. gamyras
 

நமது நம்பிக்கைகளின் நோக்கங்களில் மற்றவர்க்கும் வழிகாட்டும் வழியிருக்கின்றதா என்று தேடிப்பார்க்கவேண்டும். அப்போதுதான் போலியை நம்பும் மடமை மறையும். மாண்டபின் வரும் சொர்க்கத்தைநம்பி வாழ்ந்திடும் வாழ்வைப் பயனற்றதாக்கிவிடும் போலித்தனத்தின் தவறுகள் புலப்படும்.
வாழ்ந்து மறைந்த பலநூறு கோடி மனிதர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தமக்கென வாழா பிறர்க்குதவிய மாந்தர்கள்தாம் என்பதையே வரலாறு சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஆகவே நமது சக்திக்கேற்ப தமது பங்களிப்பை மனிதத்துக்காக எப்படி வழங்கலாம் என்பதைச் சிந்தித்தால் ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பும் ஒரு சமுதாயத்தின் அத்திவாரத்துக்கு பலமூட்டத்தக்கதே என்பது தெரிய வரும். எத்தனையோ வண்ணங்கள் குழைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சின்ன துரிகையின்றி அவை ஒவியமாக உருப்பெறப் பயன்படா என்பதையே உங்களின் உதாரணமாகக் கொள்ளுங்கள். கடமை என்ற வண்ணம் குழைந்து கிடக்கின்றது. உங்கள் பங்களிப்பு என்ற துரிகையே தேவைப்படுகின்றது. ஆகவே துணிவுடன் எழுந்து கடமையைக் கையிலெடுங்கள். நாமும் வாழவேண்டும் நம்மால் இந்த உலகமும் வாழவேண்டும்.
ஈழத்தில் மானிப்பாயில் பிறந்த சுவாமி ஞானப்பிரகாசர் (1875-1947) 1 மொழிகள் அறிந்தவர். தமிழ்ச் சொற்களின் தாதுக்கள் எபிரேய, மங்கோலிய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் உள்ளனஎன்று கண்டுபிடித்துக் கூறியவர். இவர் உயிருடன் இருந்த காலத்திலேயே இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டு ஜெர்மனி பெருமைப்படுத்தியது.
O. gaga

Page 27
அரங்கம்
முத்தமிழ்க் கலைமன்ற பொங்கல் விழா
தைத்திங்கள் 16ம் தேதியன்று ஜெர்மனி நொயில்நகரத்தில் முத்தமிழ்க் கலைமன்றத்தினர் தமது 5வது பொங்கல்விழாவினை கலை நிகழ்ச்சிகளுடனும், இசை நிகழ்ச்சிகளுடனும் சிறப்பாக நடத்தினார்கள். TRT தமிழ் ஒளி ஒலிபரப்பு நிலையத்தினரின் நேரடி ஒளிப்பதிவும், பிரபல அறிவிப்பாளர் என்.டி.ஜெகனின் நெறிப்படுத்தலும் இவ்விழாவினைக் கலகலப்பாக்கின. சிறப்புவிருந்தினராக எழுத்தாளர் கவிஞர் எழிலன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிச் சிறப்பித்தார். அவருக்குப் பொன்னாடை அணிவித்து முத்தமிழ்க் கலைமன்றம் கெளரவித்தது. மன்றம் நடத்திய பேச்சுப்போட்டிகளில் கலந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இளம்பேச்சாளர்களின் உரைகளும் நடனம், வீணை இசைபோன்ற பல கவர்ச்சிகரமான கலைநிகழ்ச்சிகளும் மனதைக் கொள்ளைகொள்ளும் வண்ணம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பு நிகழ்ச்சியாக நோர்வேயில் இருக்கும் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் புதுக்கோலங்கள், விடியாத இரவுகள் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. கிறுகதைத்தொகுதியை திருஜிவகனும் கவிதைத்தொகுதியை திரு எழிலனும் விமர்சித்து உரை நிகழ்த்தினார்கள். கவிஞர் கோவிலூர் செல்வராஜனுக்கு "மென்னிசைக் கவிஞர்”என்ற பட்டத்தையும், பிரபல வானொலி அறிவிப்பாளர் திரு.என்.ரி.ஜெகன் அவர்களுக்கு "இரசிகரஞ்சகன்" என்ற பட்டத்தையும் அம்மேடையில்வைத்து வழங்கிய கவிஞர் எழிலன் அவர்கள் மிக நல்லநோக்கத்தோடு இயங்கிவரும் முத்தமிழ்மன்றத்துக்கு அதன்சேவைகளைப்
மன்றத் தலைவர் திருநாதன் அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார். மிகச் சிறப்பான கலைநிகழ்ச்சிகளுடன் இறுதியில் கப்பர் பிறின்ஸ் இசைக் குழுவினருடன் இணைந்து பொன். கபாஸ்சந்திரன், கோவிலூர் செல்வராஜன் ஆகியோர் நடத்திய இசைவிருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
தகவல்:- இரசிகன்.

அறிமுக எழுத்தாளர்
இணுவையூர் குவிக்கினேஸ்வரன்.
அன்று யாழ் மாவட்டமே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. வீதி எல்லாம் ஒரே பரபரப்பு. அம்புலன்ஸ்வண்டிகளின் இடைவிடாத கூக்குரல் சத்தம். தமிழீழ விடுதலைப் போராளிகளின் வாகன இரைச்சல்கள். வானத்தில் விமானப் பருந்துகளின் வெறியாட்டம். தமிழீழத்தின் கண்கள் என்று போற்றப்படும் போராளிகளுக்கு மண்ணைக்காப்பதா மக்கனைக்காப்பதா என்ற குழப்பம். எங்கு பார்த்தாலும் காதைப் பிளக்கும் குண்டுகளின் அதிர்வினாலும் ஆபத்தினாலும் மக்களே எங்கேபோவது எப்படி உயிர்தப்புவது என்று துடித்துக்கொண்டிருந்தனர். பொதுவைத்தியசாலையில் பொதுமக்கள் போராளிகள் என காயப்பட்டவர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். . Wr 4. வலிகாமம் மேற்கை நோக்கி இலங்கை இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் பட்டானங்கள் வேட்டையாடிக்கொண்டு முன்னேறியதே இதற்குக் காரணம். அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கையில் கிடைத்தவற்றுடன் உடுத்த உடைக்கு மாற்றுடை இன்றி உணவு இன்றி உறக்கம் இன்றி கால்நடையாக வலி கிழக்கைநோக்கியும் தென்மராட்சியை நோக்கியும் இடம் பெயர்ந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கு உணவு, உடைபோன்று அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் செந்தூரனும் வசந்தனும் அவர்களுடைய தோழர்களுடன் ஈடுபட்டிருந்தனர். அன்று மதியம் இவர்களது கிராமபாடசாலையில் தங்கியிருந்த பலநூற்றுக் கணக்கான மக்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர் செந்தூரனும் தோழர்களும் பாடசாலைக்கு வெளியே நின்ற கூட்டத்தைப் பார்த்து "வெளியிலை ஒருத்தரும்
si. yaga

Page 28
நிக்காதீர்கள். பொம்மர் வந்தாலும் கூட்டமா நிக்கிறதைக்கண்டால் இதுக்குள்ளை கொண்டுவந்து குண்டைப் போட்டுவிட்டுடுவான்" என தான்சொல்வது பலிக்கப் போவதை அறியாமல் சொன்னான் செந்தூரன். இவன் சொல்லி வாய்மூடுவதற்குள் வானத்தில் ஊ.ஊ.என்ற இரைச்சலுடன் கிபிர் விமானம் ਨੂੰ வெளிப்பட்டது. "எல்லோரும் உள்ளுக்கைபோங்கோ. உள்ளுக்கை ங்கோ"என்று கத்தினான் வசநதன. "அண்டைக்கு சென்சிற்றர்ஸ் தேவாலயத்திலை குண்டை போட்டு குழந்தை குஞ்சுகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களைப் பலி எடுத்ததுகாணாது என்று இங்கையும் வந்திட்டான்" என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் வயோதிபர்
6i. ”எல்லோரும் உள்ளுக்குப் போங்கோ நாங்கள் சொல்லுறது கேட்கேல்லையா. அவன் இங்கைதான் கத்துறான். அந்தா குத்துறான்.குத்துறான்.எல்லோரும் கீழே கிடவுங்கோ"என்று செந்தூரன் கத்தவும் டமார் டமார் என பாடசாலையை சுற்றி ஆங்காங்கே குண்டுகள் விழுந்து வெடித்தன. பாடசாலை சுற்றுப்புறம் முழுதும் ஒரே புகைமண்டலம். மக்களின் அவலக் குரல்கள். குழந்தைகளின் கீச்சிடும் அலறல்கள். தனது வெறியை தீர்த்துக்கொண்ட திருப்தியோடு விமானம் தனது இருப்பிடத்தை நோக்கி விரைந்தது. குண்டின் அதிர்வில் விழுந்த செந்தூரன் மெள்ளக் கண்விழித்துப் பார்த்தபோது அதிர்ந்தான். பாடசாலை முழுதும் இரத்தக்காடாய்க்கிடந்தது. பல உடல்கள் உருத்தெரியாமல் சிதறிக்கிடந்தன. பலர் காயப்பட்டு கதறியவண்ணம் இருந்தனர்.
~പ
w
இரண்டு பெளர்ணமிகள்.
ܣܡ
மதியை (சந்திரன்) அடிப்படையாக வைத்தே மாதத்தை உருவாக்கினர். இதே கருத்தை ஏற்று மேலைநாட்டார் MOONMONTH என்றமைத்துக் கொண்டனர். அப்படியிருக்க
, தாட்கள்) வரல7மரஇேம்மாதத்தில் (ஜனவரி 9) இரண்டாம் தேதியிலும், 3ம் தேதியிலும் பெளர்ணமி வருகிறது. இதுபோன்று அடுத்த முறை இரண்டு பெளர்ணமிகள் வரும்போது O Ꮿ74220/Ꮡ (அதாவது இன்னும் 9 ー子三ーーー ஆண்டுகட்குப் பின்) ஆகியிருக்கும் அதுசரி கணக்கியலையே அடிப்படையாகக் கொண்ட
ஆவாக
 

இவனும் போராளிகளுடனும் மற்ற தோழர்களுடனும் இணைந்து காயம்பட்டோரை அம்புலன்ஸ் வண்டிகளிலும் சிதைந்த உடல்களை உரைப்பைகளில்கட்டி வேறு வாகனத்திலும் ஏற்றினர். அம்புலன்ஸ்வண்டி வைத்தியசாலையை நோக்கிவிரைய சிதைந்த உடல்களை ஏற்றிய வாகனம் மயானத்தை நோக்கிவிரைந்தது. பாடசாலையில் இருந்த ஏனையவர்கள் இனி இங்கே இருப்பதும் உசிதமில்லை என எண்ணியோ எண்னவோ அங்கிருந்தும் இடம்பெயரத்தொடங்கினர்.
அன்று பாடசாலையில் நடந்த அந்தக் கோரச்சம்பவம் அழியாத வடுவாய் செந்தூரனின் மனத்தைத் துளைத்துக்கொண்டிருந்தது. அந்த சம்பவம் நடந்து ஒரு வாரமாக அவன் உணவு இன்றி உறக்கம் இன்றி சதா சிந்தணைவயப்பட்டிருந்தான். இன்று அங்கே வந்த இராணுவம் நாளை இங்கே வராது என்பது என்ன நிச்சயம்? பாடசாலையில் நடந்த கோர சம்பவம் நாளை எனது வீட்டிலும் நடக்கலாம். எல்லோரும் என்னைப்போலவே தாயகத்தைப்பற்றிக் கவலைப்படாமல் சுயநலமாகவே வாழ்ந்தால் எங்கள் தேசத்தின் நிலை என்ன? இனியும் நாங்கள் கயநலமாக இருப்பது நாம் தாயகத்துக்கு செய்யும் துரோகம். இன்று எமது நிலத்தில் கால்வைத்தவன் நாளை எமது நெஞ்சிலும் கால்வைப்பான். இதையெல்லாம் தடுக்க ஒரே வழி நானும் தலைவரின் பாதையில் செல்வதே. இவ்வளவு நாளும் சோர்ந்திருந்த அவனது மனது தெளிவுபெற்றது. அவனது கண்களிலோ உறுதியின் சாயல், அவனது கால்களே புதிய போராளிகள் இணையும் செயலகத்தை நோக்கி பயணமானது.
வானவியல்நெறி எட்டிப் பிழையாக ஆகியது? வாவியல் Mெர்ணமி எண்ணம் கணக்குப்படி முறையாகவே வருகின்றன. நாத்தாண் சில மாதங்களுக்கு மும்துநாட்கள் என்றும் சிலவற்றுக்கு நாட்கள் என்றும் பெப்ருவரி மாதத்துக்கு 2நாட்கள் (4ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டும் 29 நாட்கள் என்றும் நம் தண்ணல வசதிக்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்னோம். இசுலாமிய யூதர் காலந்தே முறையில் மாதங்கள் 30 நாட்களும் அடுத்து 29 நாட்களும் கொண்டதாயுள்ளன.
-அரங்கமுகுகையன்
3-yages

Page 29
செந்தூரன் போராளிகளுடன் இணைந்து ஒரு வாரமாகிவிட்டது. அவன் போனதில் இருந்து சாந்தி பித்துப்பிடித்தவள்போல் இருந்தாள். தாய் என்ன விசயம் என்று கேட்டதற்கும் பதில் இல்லை. "செந்து. நீங்கள் இப்படிச்செய்வீர்கள் என்று நான் கனவிலையும் நினைக்கேல்லை. என்னட்டை ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கள் என்றால் நானும் உங்களோடை வந்திருப்பன். நீங்கள் இங்கை இல்லாத வாழ்க்கை எனக்குமட்டும் என்னத்துக்கு? "சாந்தி.சாந்தி."என்ற வசந்தனின் குரல் அவளது சிந்தனையை இடைநிறுத்தியது. கண்களில் இருந்து பெருகிய கண்ணிரைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்த சாந்தி வசந்தன் நிற்பதைப் பார்த்து"என்ன வசந்தன் அண்ணா.செந்துவைப்பற்றி ஏதேன் தெரிந்ததா?” "ஓம். சாந்தி அதை சொல்லுறதுக்குத்தான் வந்தனான்.செந்து உங்களுக்கு கடிதம் போட்டிருக்கிறான்.இந்தங்கோ" என்று கடிதத்தை எடுத்துக்கொடுத்த வசந்தன் "மற்றது இன்னுமொரு விசயம் சாந்தி செந்துவைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதேங்கோ அவனை நினைக்க எனக்கு பெருமையா இருக்கு. அவன் எங்கை போனவன். மற்றவர்கள்மாதிரி நாடுவிட்டு நாடும், தேசம்விட்டுத் தேசமும் போகாமல் எங்களுடையதேசத்தை மீட்கவும், எங்களுடைய பாரம்பரியத்தை காப்பாற்றவும் தலைவரின்பாதையில் போயிருக்கிறான். நாங்கள் இன்னும் சுய நலத்தோடையே இருக்கிறம். என் பெற்றோர், என் சகோதரம், என் உயிர் என்று நினைக்கிறமே ஒழிய மற்றவர்களைப்பற்றியோ எங்களுக்காக போராடும் எங்கள் உடன்பிறவா சகோதரர்களைப்பற்றியோ துளியேனும் சிந்திப்பது இல்லை. செந்துவின் உணர்வும் தெளிவும் எங்களுக்கு எப்ப வருதோ தெரியாது" என்றவன் சாந்தியின் பதிலை எதிர்பாராமல் தனது சுயநலத்தை எண்ணியோ என்னவோ தலைகுனிந்தவனாக வீடுநோக்கி விரைந்தான். கடிதத்துடன் தனது அறைக்குள்போன சாந்தி நடுங்கும் இதயத்துடன் கடிதத்தை பிரித்து அதில் தனது பார்வையை செலுத்தினான்.
என்றும் என் அன்பிற்கினியவளுக்கு உன்னையே நினைத்துவாழும் செந்து எழுதிக்கொள்வது. நான் எங்கள் தேசிய தலைவரின் பராமரிப்பில் நலம். அதுபோல் உன் நலத்திற்கும் இறைவனும் தலைவனும் துணைநிற்க. என் பிரிவு உண்ணை வேதனைகொள்ளச் செய்திருக்கும் ஆனால் இக்கடிதத்தை படித்து முடித்தவுடன் இத்தேசத்துக்காக நான் போனதையிட்டு உன்மனதில் தெளிவு பிறக்கும் என நம்புகின்றேன். அன்று பாடசாலையில் நடந்த சம்பவம். அதை இப்ப நினைத்தாலும் என் மனம் வேதனையால் துடிக்கிறது.ஆண்கள் பெண்கள் வயோதிபர்கள் யுத்தம் என்றாலே என்னவென்று தெரியாத பச்சைக் குழந்தைகள் என்று எத்தனைஉடல்கள் சின்னாபின்னமாக சிதைந்த நிலையில் இதோ எனது கைகளால்தான் சிதைந்த உடல் உறுப்புக்களை கூட்டி அள்ளி உரைப்பைகளில் கட்டி மயானத்துக்கு அனுப்பினேன். அப்போது என்மனம் பட்ட வேதனையை எழுத்தில் எழுத முடியாது. நீ அருகில் இருந்து பார்த்திருந்தாயானால் உனக்கு புரிந்திருக்கும். அந்த சம்பவம்தான் என்னைப் பலநாட்கள் சிந்திக்க வைத்தது. இனியும் நாம் கயநலவாதிகளாக இருப்பதில் பயன் இல்லை. இந்த சம்பவம் நாளை எனக்கும் நடக்கலாம். எனது உடலும் இன்னொருவரால் உரைப்பையில் கட்டப்படலாம்.
S. yayas

மரணம் என்பது எங்கே இருந்தாலும் தன் கணக்கின்படி வந்தே தீரும். எனது மரணம் இந்த தேசத்துக்காக வருவதையே நான் விரும்புகின்றேன். அப்படி எனக்கு மரணம் ஏற்படாமல் இருந்து நீயும் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாயானால் விரைவிலே மலரப்போகும் எமது சுதந்திர தமிழீழத்தில் நாம் ஒன்றாக இணைவோம். இப்பொழுது உனக்கு தெளிவு பிறந்திருக்கும் என நம்பி இத்துடன் முடிக்கின்றேன். "வெண்சமர் வென்று வந்தால் வாகைமலர் மாலையிடு புகழுடம்பாய் நான் வந்தால் புலிக்கொடி போர்த்திவிடு"
அன்புடன் உன் செந்து.
கடிதத்தை வாசித்து முடித்த சாந்தியின் கண்களில் தெளிவு இருந்தது. "செந்து நீங்கள் எங்களுடைய தேசத்துக்காக காதலையே தியாகம் செய்திட்டீங்கள். நானும் ஒரு தமிழ்ப்பெண் என்றமுறையில் எனக்கும் அந்தக்கடமையும் உணர்வும் இருக்கு என்று வாய்விட்டே கூறிய சாந்தியின் பாதங்களும் அவனின் பாதையிலேயே.
(முற்றும்)
முன்னேவர முன்.
0 பேசும் முனினால்
எதிரியிடம் கவனமாகக்கேள்!
0 எழுதும் முனினால்
sévígfls (Ruffá 0 செலவழிக்கும் முனினர்
நனிறாகச் சம்பாதித்துக்கொளி
0 பிறரை விமர்சிக்கும்முனினர் a Golfsoof grofoffuri, 0 திருமணம் செய்யும்முனினால்
ஒருபெனினை சகித்துக்கொளிளமுடியுமா எனிறு உண்ணையே ஆய்வு செய்
0 கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்முனி
உணி எதிரியினி குற்றங்களை மணினித்துவிடு 0 ஓய்வுபெறுமுனி
Fis
獸 இழக்கும்முனினால் கொடுத்துவிடு!
-ராபர்ட் கால்டுவெல்.
. garga

Page 30
உலகத் தமிழ்ப்பண்பாட்டியக்கமும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு மாநாடுகளும். − உலகத் தமிழினத்தைத் தமிழுடன் ங்கி க்கே டும் என்ற
எண்ணத்துடன் இலங்கையில் 8.1.1974) அமைநதது இவ்வியக்கம், இதன் மூலவர் குரும்பசிட்டி இராகனகரத்தினம். தலைவராக அமரர் பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் அவர்கள் தேர்வுபெற்றுப் பலநாட்டுப் பேராளர் கொண்ட உலகப்பேரவை அன்று அமைந்தது.
முதல் இது இன்றைய தலைவர் இரநவிரப்பனார் தலைமையில் இயங்குகிறது.
1971ல் சென்னையில் முதல் மாநாடு நடந்தது. 198ல் இரண்டாம் மாநாடு மொரிசியசு நாட்டிலும்,மூன்றாவது மாநாடு 1985ல் தமிழகம் சேலத்திலும், நான்காவது மாநாடு 1981ல் மலேசியாவின் கோலாலம்பூரிலும், ஐந்தாவது மாநாடு 192ல் ஆத்திரேலியா சிட்னியிலும், ஆறாவது மாநாடு கனடா துரந்தோவில் 196லும் சிறப்பாக நடந்து சிறப்புற்றன. உலகளாவிய முதல் பேரியக்கம் என்ற பெருமையும் பேறும்பெற்று இது பாரிசு யுனெசுகோவில் பதிவுபெற்றுத் திகழ்ந்து வருகிறது. தமிழினம்வாழும் முக்கியநாடுகளில் வேரூன்றிய இதற்கு அனைத்துலக ரீதியில் நூற்றுக்கு மேற்பட்ட கழகங்களின் பண்பார்த்த நட்பும் இருபது நாடுகளில் கிளைகளும் உள்ளன.
எனவே இயக்கத்தின் 18 ஆண்டு நிறைவு விழாவையும் மாநாட்டையும் உலகளாவிய தமிழர் ஒருங்கிணைப்புடன் சென்னையில் 1வது மாநாடாக நடத்தப்படவேண்டும் எண்பது முடிவு. உதயஇஏழாவது மாநாட்டுடன் உலகப் பேரவையும் முதன்முதலாகச் சென்னையில் கூடும் வரலாற்றுச் சிறப்பும் இவ்வியக்கத்துக்கு உண்டு.
உதய இயக்க 25ம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவும்
1வது மாநாடும் 1999 ஆகஃடு 21,28,29ம் திகதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
தொடர்பு முகவரி: Secretary | Treasurer, I.C.T.C. 375-8, Arcot Road, Kodambakkam,
Chennai- 600024. India. FaX: Attn. M.A.Rahman, 91-44 - 484 86 44

இந்த இதழிலிருந்து
Gigi
புதியமுகவரிக்கு Dripful Caircrg.
பூவரசு சம்பந்தமான உங்கள் தொடர்புகளுக்கு
Poovarasu, Postfach: 10 3401, 28034 Bremen, Germany.
படைப்பவர் ஆக்கம் தருக! படிப்பவர் ஊக்கம் தருக!
பூவரசு கலை இலக்கியப் பேரவை- ஜெர்மனி

Page 31

TTT" - 4 U LILI - - - - -