கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 2002.01-02

Page 1

* Patrாமி முரே 27-B High Street ΡίIίς Γίντι. LTIsrTI EI3 ()-IT) “FÉs: (PEL) SF2 323

Page 2
அண்ணளவாக 900 பக்கங்கள் கொண்ட ஆணாதிக்கமும் பெண்ணியமும் என்ற நூலின் முதல் பகுதி, 272 பக்கங்களுடன் வெளியாகியுள்ளது. பெண்ணியம் தொடர்பாக பல தலைப்புகளில் விவாதங்களையும் அதன் மேலான அரசியல் பார்வையையும், உங்கள் முன் இரயாகரனின நூல் கொண்டுவந்துள்ளது. ஐரோப்பாவில் இதை பெற விரும்புவோர்கள் 8 ஈரோ நாணயங்களை
சமர் முகவரிக்கு அனுப்பிப் பெறமுடியும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ளோர் இந்த நூலை பெறவிரும்புவோர் கீழைக்காற்று 10 அவுலியா சாகிப்பு தெரு : ཞིW... எல்லிசு சாலை ہندوستان சென்னை 600 002 இ:3
தொபே (44-8412367
புதிய கலாச்சாரம் வெளியிட்டான திரை முழக்கமான தீக்கொழுந்து வெளிவந்துள்ளது. உலகமயமாதல் 2. எப்படி தேசிய முதலாளிகள் முதல் தேயிலைத் 蠶 தொழிலாளர்களின் வாழ்வை பறித்து அவர்களின்
鹰 鬣 இ வாழ்வை சூறையாடுகின்றது என்பதை ஆவணமாக இ இந்த திரைப்படம், களச்சித்திரமாக உங்கள் முன் ܠܵܐ ܧܵܐ
விரிகின்றது. இதைப் பார்க்க விரும்புவோர் குறுந் தகடா அல்லது ஒளிநாடாவா என்ற குறிப்புடன், 12 ஈரோ நாணயத்தை அனுப்பி பெற முடியும்.
இணையத்தில்
பழைய, புதிய சமர் இதழ்களைப் பார்வையிடவும்
உழைக்கும் மக்களுக்கு எதிரான உலகளாவிய செய்திகை
வாரம் தோறும் பார்வையிடவும் சமுதாய சார்ந்த பலதுறை சார்ந்த கட்டுரைகளை பார்வையிடவும் உலகளாவிய சமூக விடுதலை அமைப்புகளின் இணைய முகவரிகளை கண்டறியவும், தொடர்பு கொள்ளவும் பல பத்து புரட்சிகர மக்கள் பாடல்களை கேட்கவும் சமுதாய நோக்கிலான காட்சிப் படங்களை பார்க்கவும் சமுதாயம் சார்ந்த படங்களை பார்க்கவும் விரைவில் விரிந்த பல தளத்தில் இணையம் மூலம் பார்க்கமுடியும் தற்போதும் வரையறுத்த எல்லைக்குள் இயங்கும் இவ் இணைய முகவரி
http//www.tamilcircle.net
L— ezarri - jዕ} வித-Tசி - 2002
 
 
 
 
 

குறுந்தேசிய இனவாதத்தை இனங்களுக்கிடையில் ஆழமாக்கி, இனங்களை பிளந்த தேர்தல்
பராளுமன்ற சாக்கடையில் புளுத்தெழுந்த பன்றிகள் அனைவரும், உலகமயமாதலை ஆதரித்து அதை நிறைவு செய்வதில் தம்மை ஒத்த கருத்துடையவர்களாக, முரண்பாடு இன்றி திகழ்கின்றனர். ஜனநாயகம், சுதந்திரம், வாக்குரிமை என அனைத்தும், மக்களின் தன்னிறைவான சுயபொருளாதாரம் என்ற தேசியத்தை அழித்து, உலகமயமாதலை நிறுவி பாதுகாப்பதை குறிக்கோளாக கொள்கின்றது.
ஜனநாயகம், சுதந்திரம் என்ற இரண்டுக்கும் காலத்துக்கு காலம் மனித பலியிட்டுடன் நடத்தும் கும்பாபிஷேக தேர்தல் திருவிழாகள் அன்ைமையில் நடந்தன. மனித இரத்தத்தை சாத்துப்படியாக சாத்தி பலன் பெறுவோர். பக்த கோடிகள் பலனடைய முடியும் என்று கூறி நடத்தும் தேர்தல் கூத்துகள், மக்களின் கோவணத்தையும் சாத்துப்படியாக்க கோருகின்றது. மூலதன ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து விரிவாக்க, மக்களின் தன்னிறைவு பொருளாதாரத்தை எப்படி சூறையாடுவது எனக்கூடி விவாதிக்கும் பராளுமன்றமே, ஒரு சக்கடையாகவுள்ளது. விவாதிக்க கூடுபவர்கள் பன்றிகளாக இருப்பது, உலகுகெங்கும் விதிவிலக்கற்ற ஒன்றாகும். ஊழல், லஞ்சம், விலை பேசுதல், மக்களுக்கு பொய் வாக்குறுதிகள், பன்றிகளை விலைக்கு வாங்குதல், அடி உதை மிரட்டல், படுகொலை மூலமே. இந்த ஜனநாயகத்தை, சுதந்திரத்தை பாதுகாக்க சபதம் ஏற்பது பன்றிகளின் பொதுப் பண்பாகும். இதன் ஒரு பகுதியாக அண்மையில் இந்த சக்கடை பன்றிகளின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க நடத்திய தேர்தல் திருவிழாவில், 54 மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்து, 2550 மேற்பட்டவர்கள் *}llա உதை மிரட்டல் சூடு. என்று எண்ணற்ற அபிஷேக வழிகளை கையாண்டனர். மக்களின் (சுதந்திரமான?) வழிபடும் உரிமை போல், வாக்கே தேவையான விருப்பமான ஆட்சியை ஜனநாயக பூர்வமாக தேர்வு செய்வதாக கூறி, நடக்கும் மோசடிகளை եւt| |ւն Ellեն]], மக்கள் தமது கோவணத்தையும் பறி கொடுப்பது இந்த ஜனநாயகத்தின் சிறப்பான இயல்பும் பண்புமாகும்.
இந்த தேர்தலை பலரும் பலவிதமாக கூறி, அந்த சாக்கடைக்கு நறுமனத்தை தெளித்தனர். இடதுசாரியின் பெயரில் யூ.என்.பி முதலாளித்துவ கட்சியாக கூறி (2000 ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி 79 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கியது. ஆனால் இடதுசாரிகளோ யூ.என்.பியே முதலாளித்துவ கட்சி என்று சொல்லி பிழைத்தனர்) அதை எதிர்த்து வாக்களிக்க கோரினர். புலிகள் இதை சமாதானத்துக்கும் புத்தத்துக்குமான தேர்தல் என்று கூறி, சமாதானத்தை ஆதாரிக்க மறைமுகமாக கோரினர். ஜேவிபி இந்த தேர்தலை உலக மயமாதலுக்கு எதிரானது என்றனர். இப்படி பலரும் பலவிதமாக கூறி, இந்த சாக்கடை நாற்றத்தில் புரண்டு ஏழும் கனவுடன், தேர்தல் வக்கிரத்தை பாதுகாக்கவும் ஆதாரிக்கவும் பின் நிற்கவில்லை. தேர்தல் திருவிழா என்றால் வன்முறை படுகொலை முதல் பொய்யான வாக்குறுதி ஈறாக இருக்கும் என்பது, இந்த ஜனநாயகத்தின் குறிப்பான சிறப்பான பண்பாகும் என்ற է: Աb பராம்பரியத்தையும் சமூகமயமாக்கப்பட்டுள்ளது. இந்த சாக்கடை பராளுமன்றம், அதில் கூடி சாத்தடிக்கும் பன்றிகளின் நோக்கத்தையும் அதன் குறிக்கோளையும் அம்பலம் செய்து போராடாதவரை மக்கள் என்பதும், மக்களின் பெயரில் செய்யும் மோசடிகள் வரைமுறையற்றது. தேர்தல் திருவிழாவில் வன்முறை முதல் கள்ள புள்ளாடி போடுவது வரை. எந்தக் கட்சியாவது அல்லது சுயேட்சை குழுக்களாவாது செய்யவில்லை என்றால், அதற்கான அடியாட்படைகளும் கள்ளப்பணமும் இல்லை என்பது தான் அதன் அகராதி, சாக்கடை பராளுமன்றமும் அதில் சுடிக் கூத்தாடும் பன்றிகளும் இணைந்து மக்களின் வாழ்வியல் ஆதாரங்களை பாதுகாக்க முடியும் என்று கூறின், அதை விட மோசடியை
COB)—
-சம 30 = தை-மாசி - 2002

Page 3
இந்த ஜனநாயக பராளுமன்றம் தோன்றிய வரலாறு முதல் யாராலும் காட்டவும் முடியாது, நிறுவவும் முடியாது.
இந்த நிலையில் பல்வேறு பிரிவுகள் பலவிதமான காரணத்தைச் சொல்லி இந்த மோசடியில் ஈடுபட்ட போதும், இந்த கட்டுரையில் குறிப்பாக தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் மோசடி மற்றும் மறைமுகமாக இந்த கூட்டணியை ஆதரிக்க, புலிகள் தேர்தல் பற்றி குறிப்பிட்ட சமாதானத்துக்கும் யுத்தத்துக்கமான தேர்தல் என்ற விடையத்தை ஆய்வுக்கு உள்ளாக்குகின்றது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முன் வைத்து நடத்திய தேர்த் திருவிழாவைப் பார்ப்போம்.
1. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். 2. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்.
3. யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும். 4. வடக்கு - கிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும். இந்த நான்கு அடிப்படை விடையத்தை அரசியலாக வைத்து, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு பிறந்த கதையே தனிக் கதையாகிவிடுகின்றது. சந்திரிக்கா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணியின் பச்சை சிங்கள இனவாதத்துக்கும், புலிகளின் அரசியலற்ற குறுந்தேசிய இராணுவ கண்ணோட்டத்துக்கும் நடந்த விபச்சாரத்தில் தான், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு புலிகளுக்கு கள்ளக் குழந்தையாக பிறந்த போதும், இந்து புராணங்கள் போல் இதுவும் புனிதமாகிவிடுகின்றது. இந்த புனிதம் சார்ந்து பிறந்த தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு பக்கபலமாகவும் வளர்ப்பு தந்தையாக ஏகாதிபத்தியம் இருக்க, தாய் சார்ந்து குறுந்தேசிய தமிழ் இனவாதமும் சீராட்டி வளர்த்த கதையும் தனிக்கதையாகின்றது. சந்திரிக்காவின் பச்சை சிங்கள இனவாதத்தின் தயவிலும், புலிகளின் அரசியல் வறுமையிலும் உருவான தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு தாய் சார்ந்து வளர்வதால், எதிர்காலத்தில் தாயையும் இணைத்து அல்லது தான் சொந்தமாக விபச்சாரம் செய்யும் அளவுக்கு அபாயகரமாக ஒரு சக்தியாக எதிர்காலத்தில் இருப்பதை யாரும் தடுக்க முடியாது. இதை புலிகளின் விமர்சன அரசியலான குண்டுகளாலும், தடுத்து நிறுத்த முடியாது. புலிகளின் தியாக வரலாற்றை தனதாக்கிய தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு, அதையே விற்கத் தொடங்கி விட்டது.
மேலுள்ள நான்கையும் அடிப்படையாக முன்வைத்து தமிழ் மக்களை அணிதிரட்டிய போதே, புலிக்கு சார்பாக வேஷம் போட்டபடி மக்களுக்கு எதிராக இருப்பது அதன் சிறப்பான அடிப்படையாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரன் சுத்திவளைத்து முக்கி முனங்கி மாவீரர் செய்தியில் சொன்ன புதிய உலக ஆக்கிரமிப்பு நிலைமைகளுக்கு எதிரான கருத்தை, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பானது நிராகரித்து, புலிகளின் பெயரில் வரவேற்கும் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர். அதாவது “மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.” என்ற அடிப்படையான உள்ளடக்கம், ஏகாதிபத்தியத்தை பாய் விரித்து விபச்சாரம் செய்ய அழைப்பதாகும். மூன்றாவது மத்தியஸ்தம் என்றால் என்ன?
புலிக்கும், அரசுக்கும் இடையில் மூன்றாவது தரப்பு எப்படி தலையிடும்? எதை அவர்கள் செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? இங்கு புலிகளும் அரசும் பேசும் போது, அவர்கள் அதை பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும், அபிப்பிராயத்தைச் சொல்லிக் கொண்டும் இருப்பதில்லை. மூன்றாவது மத்தியஸ்தம் என்பது உலகமயமாதலின் ஒரு அங்கமாக ஆக்கிரமிப்பாக உதித்து எழுந்தது, எழுகின்றது. அமைதியான உலக ஒழுங்கு, உலகமயமாதல் சுரண்டலுக்கான அடிப்படை நிபந்தனை. இந்த வகையில் உலகளவில் நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது, அடக்கியொடுக்குவதும் உலகமயமாதலின் குறிப்பான தனியான செயலாகவும் பண்பாகவும் இன்று உள்ளது. இந்த நிலையில் போராடும் அமைப்புகளை முத்திரை குத்தி அடக்கியொடுக்கவும், மக்களை ஏமாற்றவும் சமாதான நாடகம் அவசியமாகின்றன. இந்த சமாதானம் போராடும் அமைப்புகளுக்கு ஆட்சி அமைப்பு சார்ந்து அற்ப எலும்புகளை வீசி வாலாட்ட வைப்பது அல்லது
— Guolf - 30
தை-மாசி - 2002

போராடும் ஒரு பகுதியை கெளவ வைத்து மற்றைய பகுதியை, சமாதானத்தின் எதிரியாக காட்டி அழித்தொழிப்பதும் சமாதானத்தின் மையமான குறிப்பான நோக்கமாக உள்ளது. இந்த இடத்தில் புலிகள் முற்றாக அல்லது பகுதியாக முரண்டு பிடித்து போராடின், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பே ஏகாதிபத்திய உலகமயமாதல் வீசும் சமாதான எலும்புகளை கெளவி சூப்புபவர்களாக இருப்பதை எதிர்கால வரலாறு எம்மை ஏமாற்றாது.
சமாதானம் என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தையில் சம்மந்தப்படும் சிங்கள அரசு மற்றும் புலிகள் தரப்பை தாண்டி, மூன்றாவது தரப்பு தலையிடும் போது அது நேரடியாக உலகமயமாகிவிடுகின்றது. இதில் போராடும் அமைப்பு (புலிகள்) சார்ந்து மூன்றாம் தரப்பை கோரும் போது, தனக்கு தானே வேட்டு வைக்க அழைப்பதாகும். இங்கு நோர்வையா? அமெரிக்கவா? இந்தியாவா? அல்லது மற்றொன்றா? எனின், இவற்றுக்கு இடையில் எந்த வேறுபாடு இருப்பதில்லை. உலகளவில் உலகமயமாதல் தனக்கிடையில் வேறுபாட்டை ஒழிக்கின்றது. இதில் வேறுபாடுகள் அனைத்தையும் அரசுகள் கைவிட்டுவிட்டன. அரசுகள் உலக வங்கியினதும், ஏகாதிபத்தியத்தினதும் ஒரு அடியாள் கூலிப் படையாக மாறிவிட்டது. இந்த நிலையில் உலகளவில் போராடும் அமைப்புகளை ஒடுக்க, உலகளாவிய நாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் இன்றைய பொதுவான அம்சமாகியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மத்தியஸ்தம் என்பது, இதில் யார் மூன்றாவது மத்தியஸ்த்தத்தை செய்ய முன்வந்தாலும் முடிவு ஒன்றுதான். அது உலகமயமாதல் ஒழுங்கில் அமைதியான சுரண்டலுக்கு ஏற்ற நிலமையை தகவமைப்பதே. இங்கு தன்னிறைவான சுய தேசியப்பொருளாதாரத்தை அழிப்பதே சமாதானத்தின் மையமான குறிக்கோளாக இருக்கும். இங்கு இனங்களுக்கிடையில் உலகமயமாதல் வீசும் எலும்புகளை பங்கிட்டு சூப்பக் கொடுப்பதே, இந்த மூன்றாவது மத்தியஸ்தத்தின் மையமான சமாதான வேடமாகும். இங்கு இந்த எலும்புகளை சமாதானமாக பங்கிடும் நாடுகளின் குறிப்பான சில பண்புகள், உலகமயமாதலின் நோக்கத்தை நிறைவு செய்யும் வேறுபட்ட அணுகு முறைகளின் ஒரு பகுதியாக மட்டும் உள்ளது. இந்த பண்பு பொதுவாக 'நோர்வை’ எனின் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படையிலும், ‘இந்தியா எனின் நிலப்பிரபுத்துவ அடிப்படையிலும், ‘அமெரிக்கா’ எனின் ஏகாதிபத்திய அதிகார வடிவிலும் சில அணுகு முறையிலான பண்புகளில் வேறுபாடு வெளிப்படலாம். ஆனால் எடுக்கும் முடிவு என்பது, மூவரும் உலகமயமாதல் எல்லைக்குள் அதன் விரிவாக்க நோக்கத்துக்குள் ஒரே மாதிரியே எடுப்பர். இதில் சமாதானத்தை பேச்சு வார்த்தை மூலம் அல்லது ஆயுதம் மூலம் ஏற்படுத்தின், அப்போதும் அவர்களின் நோக்கமும் தீர்வின் எல்லையும் ஒன்றாகவே எப்போதும் இருக்கும். இந்த மூன்றாவது மத்தியஸ்தத்தை யார் எப்படிச் செய்யினும், அவர்கள் இரண்டு தரப்புக்கிடையில் கையெழுத்திடும் உலகமயமாதல் எல்லைக்குள்ளான நோக்கத்தை அமுல் செய்யும் அதிகாரத்தை இயல்பாக பெற்றுவிடுவர். இது உலகமயமாதலை விரிவாக்க காலத்துக்கேயுரிய பொதுவான உத்தியும் விளைவுமாகும். உலகமயமாதல் அங்கீகரிக்கும் சமாதானத்தை கண்காணிக்க, அழுல் படுத்த மூன்றாவது மத்தியஸ்தம் அதிகாரத்தை பெறுகின்றது. சர்வதேச உலமயமாதல் படைகளை "மூன்றாம் தரப்பு மத்தியஸ் தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.” என்ற கோரிக்கை ஊடாகவே, இலங்கைக்குள் இயல்பாகவே கொண்டு வந்துவிடும். இது மாவீரர் செய்திக்கு முற்றாக முரணானது. அத்துடன் இந்த மத்தியஸ்தம் நடக்கும் போது, தமிழ் தரப்பில் இருந்தே இந்த சர்வதேச படையை கொண்டு வரும் கோரிக்கை வருவது இயல்பாக இருக்கும். காலாகாலமாக தமிழ் மக்கள் சிங்கள இனவாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாற்று தொடர்சியை சுட்டிக் காட்டி, கையெழுத்திடும் ஒப்பந்தத்தை சிங்கள அரசு அமுல் செய்யாது என்ற காரணத்தை முன் வைத்தே, ஒப்பந்தத்தை அழுல் செய்யும் அதிகாரத்தை சர்வதேச ஏகாதிபத்திய படைகளிடம் வழங்குவது, போராடும் அமைப்பு சார்ந்து கோருவதன் ஊடாக நிகழும். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும், யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும், வடக்கு - கிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். என்ற கோரிக்கை இயல்பாக புலிக்கு சார்பானதாக இருந்தாலும், இதை அரசு நடைமுறைப்படுத்துவது இலகுவானது. கடந்த காலங்களில் பொருளாதாரத் தடை நீக்கம், யுத்த நிறுத்தம், புலிகளுடன் மட்டுமான பேச்சு வார்த்தை எல்லாம்,
O5)-
- ƏfLDİİ - 30 = 6,025-lipom/#9 - 2002

Page 4
இந்தக் கோரிக்கையைத் தாண்டி நடக்கவில்லை. புதிதாக புலிகளின் தடையை நீக்க வேண்டும் என்பது இணைந்துள்ளது. இது முன்பும் வைக்கபட்ட போதும் நிபந்தனையாக இருக்கவில்லை. இன்று இதன் மூலம் சர்வதேச தடையை தகர்க்கலாம் என்பது, இதன் குறிப்பான நோக்கமாகின்றது. சர்வதேச தடைக்கும், இலங்கையின் தடைக்குமிடையில் உள்ள இடைவெளி புரிந்து கொள்ளாமல் முன் வைக்கின்றனர். பேச்சு வார்த்தைக்கு தடையாக இல்லாத வகையில், பேச்சு வார்த்தையின் போது தற்காலிகமாக புலிகளின் தடையை அரசு நீக்க தயாராகவே இருக்கும். ஆனால் சர்வதேசத் தடையை இது மாற்றியமைக்காது. சர்வதேசத் தடைகளை ஒரு நிரந்தர உலகமயமாதல் சமாதானமின்றி, தற்காலிகமாகக் கூட மாற்றியமைக்காது. இந்த தடையை நீக்கக் கோருவது ஒன்றும் தமிழ் மக்கள் சார்ந்த அடிப்படையான தேசியம் சார்ந்த முக்கிய கோரிக்கையல்ல. தடை நீக்கத்துக்காக எமது தேசிய தன்னிறைவு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்கு, ஏகாதிபத்தியத்துக்கு சலுகை வழங்க வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தை என்பது, எமது தேசியத்தை அடக்கியொடுக்க ஏகாதிபத்தியத்துக்கு கம்பளம் விரிப்பதாகும். இதை எந்த அரசியல் அடிப்படையுமற்ற வெற்றுக்கோச அனாதைகள், தமது அரசியலாக்கி தமிழ் மக்களை அதன் பின் அணிதிரட்ட முடிந்தது, எமது வரலாற்றில் மற்றொரு தற்கொலையாகும்.
இந்த தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு என்ன என்பதை, ஏகாதிபத்தியத்துடன் புனித கூட்டை வைத்து தேசியத்தை திரித்து பிழைக்கும், கிறிஸ்துவ வெரித்தாஸ் வானொலி ஜெகத் கஸ்பர் ராஜ் கூறுவதில் இருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும். வெரித்தாஸ், மற்றும் ஐ.பி.சி வானொலியிலும், ஈழநாடு (9.11.2001) பத்திரிகையிலும் “இன்று தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் தமிழ் மக்களின் அடிப்படையான அடையாளம், அவர்களது சுயமரியாதை, அவர்களது மொழி ஒரு சமூகமாக அவர்களுக்குள்ள அரசியல் இறைமை, அவர்களது வாழும் உரிமை, அவர்களது தாயகம் ஆகியவைதான் இன்றைய அரசியல் சிக்கலின் மூலாதாரங்கள்” என்கின்றார். இதையே புலிகள் உட்பட தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஈறாக, தமிழ் மக்கள் சார்பாக பேசுகின்ற அனைவரும் முன்வைக்கின்றனர். இதையே தமிழீழ மக்கள் கட்சியும், தமிழீழ புதிய ஜனநாயக கட்சியும் இதைத் தாண்டி எதையும் கோரவில்லை. இந்தக் கோரிக்கையை மூன்றாவது மத்தியஸ்தம் சார்ந்து ஏகாதிபத்தியத்தை ஏற்பதில் எந்த முரண்பாடும் இருக்கப்போவதில்லை. இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் குறுந்தேசிய இனவாதிகள் முதல் ஏகாதிபத்தியம் மற்றும் கிறிஸ்தவ புனிதங்கள் வரை, தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தை விளக்கி தேசிய அடிப்படையை சிதைத்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் தேசியம் என்பது என்ன? தமிழ் குறுந்தேசிய வாதிகள் தொடங்கி ஏகாதிபத்திய புனித கூட்டைக் கொண்ட ஏகாதிபத்தியம் தேசியம் பற்றி கூறுவதற்கு அப்பால், தமிழ் தேசியம் என்பது தன்னிறைவான தேசிய பொருளாதாரத்தை, தமிழ் மக்கள் தமது மூலதனத்தை ஆதாரமாக கொண்டு தமது உழைப்பை கொண்டு நிர்மாணிப்பதே. இதன் மேல் தனது மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிலத்தொடர் சார்ந்து, தம்மைத் தாம் ஆளும் அரசின் மேல் கலாச்சார பண்பாட்டை கட்டமைப்பதே தேசியமாகும். சிங்கள இனவாத அரசுகளும், ஏகாதிபத்தியமும் தமிழ் மக்களின் தன்னிறைவான பொருளாதார தேசிய வளத்தை அழித்தும், அந்த மக்களின் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டே, தேசியத்தின் அடிப்படை உள்ளடக்கத்தை அழிக்கின்றன. ஒரு தேசத்தில் எதை சிங்கள இனவாதிகளும், எகாதிபத்தியமும் அழித்து சுரண்ட முனைகின்றது. உண்மையில் தேசிய வளங்களையும், அந்த வளங்கள் மேலான மக்களின் உழைப்பையும் தான். இதை புலிகள் உட்பட ஏகாதிபத்தியம் வரை மறுப்பதால், எமது தேசியம் விலை பேசப்படுகின்றது. மக்களின் அடிப்படை உரிமை மீது துரோகமிழைத்த தரகுகளாகவும், சுரண்டல் வாதிகளாகவும் உலவும் கடைந்தெடுத்த பராளுமன்ற பன்றிகள் முதல் ஏகாதிபத்திய புனித கூட்டில் உலகில் உயிர்த்திருக்கும் கிறிஸ்துவ சாத்தான்களும், தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமையை கொச்சைப்படுத்தி ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமை நாயாக வாழ “இன்று தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் தமிழ் மக்களின் அடிப்படையான அடையாளம், அவர்களது சுயமரியாதை, அவர்களது மொழி ஒரு சமூகமாக அவர்களுக்குள்ள அரசியல் இறைமை,
L-சமர் - 30 தை-மாசி - 2002 Coo

அவர்களது வாழும் உரிமை, அவர்களது தாயகம் ஆகியவைதான் இன்றைய அரசியல் சிக்கலின் மூலாதாரங்கள்” என்று மக்களின் உரிமைகளை திரித்துக் காட்டுகின்றனர். தமிழ் மக்கள் யார்? அல்லது யார் தமிழ் மக்கள்?
விவசாயத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட அதே நேரம், சிறுகைத் தொழில் உற்பத்தியையும் அடிப்படையாக ஆதாரமாகவும் கொண்ட ஒரு சமூகமாக இயங்குகின்றது. அத்துடன் மூளை உழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களைக் கொண்டே, எமது இனம் நீடிக்கின்றது. இதற்கு வெளியில் பல்வேறு சமூக முரண்பாடுகளை கொண்டிருந்த போதும், ஒரு இனமாக நீடிக்கின்றது. இந்த உழைக்கும் மக்கள் தமது தேசியம் சார்ந்து விவசாயத்தை பாதுகாக்கவும், சிறுகைத் தொழில்களை பாதுகாக்கவும், அதன் மேலான உழைப்பின் வளத்தை பேணவும், விவசாயம் சார்ந்த அன்னிய இறக்குமதிகளைத் தடை செய்யவும், சிறு கைத்தொழிலை அழிக்கும் இறக்குமதிகளை தடைசெய்யும் வகையில் தேசியழி கட்டமைக்கப்பட வேண்டும். தேசிய உற்பத்திகள், ! கைத் தொழில் முயற்சிகள், தேசிய தொழிற் சாலைகள் பெருகும் வகையில், தேசியம் மக்கள் உற்பத்தி அதனுடன் இணைந்த உழைப்பு சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் தேசத்தில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, உற்பத்தி மறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள சீமைப் பன்றிகளுக்கு தேவையானது எதுவோ, அதை உற்பத்தி செய்வது என்ற கண்ணோட்டம் மறுதலிக்கப்பட வேண்டும். அது போல் அமெரிக்க ஏகாதிபத்திய சீமான்கள் சீமாட்டிகள் சொகுசாக வாழ்வதற்காக, எமது தேசியத்தை அழிக்கும் இறக்குமதிகள் தடை செய்யப்பட வேண்டும். மக்களுக்காக, அவர்களின் வாழ்வுக்காக, அவர்களின் உற்பத்திக்காக, அவர்களின் உழைப்புக்காக, போராடுவதே தேசியம். இது மக்களின் தன்னிறைவை பூர்த்தி செய்யும் அடிப்படை உற்பத்தி மற்றும் உழைப்பை பாதுகாத்து தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும். இது புலிகளின் புலித் தேசியத்துக்கு பதில், மக்கள் தேசியத்தை ஆயுதபாணியாக்கும். புலித் தேசியத்தின் பின் தொங்கிக் கொள்ளும் ஏகாதிபத்திய எட்டப்பர்கள் முதல் புனித கத்தோலிக்க பிழைப்புவாதிகள் வரையிலான, அனைத்து மக்கள் விரோதிகளையும் தெளிவாக தோலுரித்து, போராட்டத்தை துரோகத்தில் இருந்து பாதுகாக்கும். தமிழ் மக்களின் தேசியம் என்பது அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையுடன், தெட்டத் தெளிவாகவே தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள மறுப்பவர்கள், மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய அடிப்படை தேசியப் பிரச்சனை மீது போராட்டத்தை முன்னெடுக்காத வரை, அப்போராட்டம் புலியின் போராட்டமாக சீரழிந்து கொண்டிருப்பதை யாரும் தவிர்க்க முடியாது.
இந்த நிலையில் "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும். வடக்குகிழக்கு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும். என்ற கோரிக்கை தமிழ் மக்களின் பிரச்சனையை எப்படித் தீர்க்கும்? புலிகளின் தனிபட்ட சில நலன்களுக்கு இவை தீர்வு தரலாம். ஆனால் தமிழ் மக்களின் நலனுக்கு இது எந்தத் தீர்வு தரப்போவதில்லை. தமிழ் மக்களை இந்த கோரிக்கையின் பின் அணிதிரட்டிய என்பது, உண்மையில் மக்களை கேலிக் கூத்தாக்குவதே நடந்தது. புலிகளுடன் மட்டும் பேசி இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூறுகின்றது. இது சாத்தியம் இல்லை. ஏனெனினல் புலிகள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல உண்டு. முஸ்லீம் மக்களுக்கான தீர்வு முதல் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை வரை புலிகள் இது வரை தீர்க்கவில்லை. மாறாக புலிகள் ஜனநாயக விரோத அரசியலை அதன் ஆணையில் வைத்துள்ளனர். இதைத் தாண்டி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை தீர்க்க முனைவதன் மூலம், புலிகளுடன் மட்டும் பேசி பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்கின்றனர். அரசு இதை செய்ய மறுப்பதால் தான், தாம் இதை அரசியலில் முன்வைப்பதாக முழங்கும் அவர்கள், நடக்கப் போகும் பேச்சு வார்த்தையை புலிகள் குழப்பினால் அல்லது புலிகளின் அணுகு முறையில் முரண்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த கேள்வியை எந்த நபரும் எழுப்பவுமில்லை. அதேபோல் அவர்களும் எழுப்பி இதுவரை பதில் தரவுமில்லை. இது கண் மூடி பால் குடித்த
- சமர் - 30 ○ーl
தை-மாசி - 2002

Page 5
பூனையின் கதை போல், தமிழ் மக்களை அறிவியல் இருட்டில் நிலைநிறுத்தி பிழைப்பதாகும். இதைத் தாண்டி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பதும், பராளுமன்ற சாக்கடைக்கு 15 பன்றிகளை அனுப்பியது ஒரு மோசடியாகும். இலங்கையில் நடக்கும் யுத்தத்துக்கு தீர்வு காண எடுக்கும் முன் முயற்சிக்கு புலிகளின் தடை நீக்கப்படுவதும், புலிகளுடன் (மட்டும்) பேசுவது, பொருளாதார தடை நீங்குவது, யுத்தத்தை நிறுத்துவது என்பது, அடிப்படையானது. இது அனைவருக்கும் தெரிந்த விடையமே. இதை வைத்து கோசமெழுப்பி, தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கத் தேவையில்லை. ஐரோப்பாவில் புலிகள் நடத்தும் ஊர்வலங்களில், எமது தலைவர் பிரபாகரன் என்று கோசம் எழுப்பவதன் மூலம் எதைச் சொல்ல முனைகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதை யாரும் மறுத்தார்களா? இல்லையெனின் புலிகளுக்குள் போட்டி தலைமை உள்ளதா? இல்லையெனின் அதை முன்வைப்பது கேலியாகிவிடுகின்றது. அதுபோல் பேச்சு வார்த்தைக்கு வைக்கும் நிபந்தனைகள் உள்ளன. பேச்சு வார்த்தை ஒன்று நடக்குமாயின், இந்த கோரிக்கைகள் நிறைவு செய்யப்படுவது இயற்கையானது. கடந்த போன பேச்சு வார்த்தைகள் கூட இந்த எல்லைக்குள் தான் நிகழ்ந்தன. இனியும் அப்படித்தான் நடக்கும். இதற்கு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற விபச்சாரப் பிறப்பு அவசியமற்ற ஒன்றாகும். இது புதிய காட்டிக் கொடுப்புக்குரிய தயாரிப்பை செய்ததாகும். முந்திய துரோகத்தை மிஞ்சும் ஒரு வரலாற்றை உருவாக்கி கொடுத்ததாகும். இந்த துரோகம் முந்திய வரலாற்றைப் போலன்றி கட்டுப்படுத்த முடியாத சர்வதேச ஆதரவுடன், அதன் ஆசியுடன் உருவாகியுள்ளது. இங்கு புலிகள் அற்ப நலன்களை அடைய இதற்கு மறைமுகமாக முண்டு கொடுத்தது, மக்களுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் இழைத்த ஒரு வரலாற்று துரோகமாகும். பேச்சு வார்த்தை மேடையை உருவாக்குவதன் மூலம் புலிகள் சில பொருளாதார சலுகைகைளை உடன் பெறவும், ஈ.பி.டி.பி தமிழ் மக்கள் மத்தியில் பெற்று வந்த செல்வாக்கை முறியடிக்கவும், இந்த தேர்தலை புலிகள் ஆயுதமாக கருதி மறைமுகமாக ஆதரித்தனர். ஆனால் புலிகள் இம்முறை இதை சாதிக்க முடியாது. இம்முறை பேச்சு வார்த்தை ஏகாதிபத்திய தலையீட்டுடன், ஏகாதிபத்திய உலகமயமாதல் விரிவாக்க தேவையுடன் தொடர்புடையதாக பேச்சு வார்த்தை தொடங்கும். இந்த நிலையில் புலிகள் குறுகிய நலன்களுடன் தம்மை முன்னிறுத்தி முரண்டு பிடித்தால் ஈவிரக்கமற்ற வகையில் அம்பலப்படுத்தி அழிக்கப்படுவார்கள். இதை எதிர் கொள்ளும் வகையில், புலிகளின் அரசியல் கண்ணோட்டமே இவர்களுக்கு எதிராக உள்ளது. மக்களின் அடிப்படை கோரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், அதை நோக்கி சர்வதேச சமூகத்தை அணிதிரட்டவேண்டும். அதை விடுத்து பொருளாதார தடையை நீக்குவதன் மூலம், பொருட்களை கொண்டு வரவும், சர்வதேச ரீதியாக ஆயுதங்களை கொண்டு வரவும் பேச்சு வார்த்தையை தந்திர உபாயமாக புலிகள் அரசியலை நகர்த்தின், அது அவர்களுக்கே மண்ணை அள்ளிப்போடும். அத்துடன் தேசிய பொருளாதாரம் ஊடாக தன்னிறைவு பொருளாதாரம் என்ற கொள்கையை மறுதலிக்கின்றது. எப்போதும் சுய தன்னிறைவான தேசியப் பொருளாதாரமே தேசியத்தின் மையக்கூறு. இது போராட்டத்திலும் சரி பேச்சு வாாத்தையிலும் சரி இதுவே அனைத்திலும் மையமானதும் முதன்மைக் கூறுமாகும் இதில் இருந்தே அணைத்தையும் திட்டமிடவும், கோரவும் வேண்டும். ஈ.பி.டி.பி என்ற துரோக குழுவின் கைக்கூலி அரசியல் செல்வாக்கு என்பது, புலிகளின் அரசியல் வறுமையில் இருந்து உருவாகின்றது. ஈ.பி.டி.பி பொருளாதார உதவிககளை கொடுப்தன் மூலமும், புலிகளை விட மக்களின் உறவை கையாளும் அணுகு முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் உறவாக்கத்திலும் இருந்தே அரசியல் செல்வாக்கை பெற முடிகின்றது. குறிப்பாக ஈ.பி.டி.பி யில் உள்ள முக்கிய ஒரு சில தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தி, கடந்த காலத்தில் போராடியவர்கள். இந்த மக்களின் கணிசமான செல்வாக்கை ஈ.பி.டி.பி பெற்றுள்ளது. வரலாற்று ரீதியாக புலிகள் தமிழ் மக்களின் தன்னிறைவு தேசிய பொருளாதாரத்தை ஊக்குவித்து தேசிய பொருளாதாரத்தை வளர்க்காமையே, அரசு மற்றும் ஏகாதிபத்தியத்திடம் கைக்கூலியாகி பெற்று வழங்கும் ஈ.பி.டி.பியின் பொருளாதார உதவிக்கு, மக்கள் சரணடைகின்றனர். அத்துடன் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை, அவர்களின் கருத்து, எழுத்து, பேச்சு
l-lot - 30 தை-மாசி - 2002

சுதந்திரத்தை அடக்கியொடுக்கியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உயர் சாதிய அடக்குமுறையுடன் கூடிய நீரோட்டம் சார்ந்த கண்ணோட்டம், புலிகளின் அரசியல் வறுமையை மேலும் ஏழ்மையாக்குகின்றது.
இந்த ஏழ்மையை பயன்படுத்தி கிறிஸ்துவ குழுக்கள் முதல் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு வரை, புலிகளின் தியாகத்தைத் தாண்டி அரசியலில் செல்வாக்கு பெற முடிகின்றது. இது புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, அரசியல் அதிகாரத்தை நோக்கி நடைபோடுகின்றது. தேசிய சுய தன்னிறைவு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் மக்களின் சிந்தனை செயல் அனைத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டிய தேசிய பொறுப்பை, புலிகள் என்றுமே அவர்களின் போராட்ட வரலாற்றில் செய்ததில்லை. இதுவே புலிகளை அரசியலில் அனாதையாக்குகின்றது. புலிகளின் அரசியல் ஏழ்மையை போக்க, பினாமிகள் அவசியமாகின்றனர். இந்த பினாமிகளே புலிகளின் அரசியல் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கட்டமைத்து, புலிகளை அந்த வலைக்குள் கட்டிவிடுகின்றனர். இந்த பினாமியாக தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முதல் புனித ஏகாதிபத்திய கூட்டைக் கொண்ட கிறிஸ்தவம் வரை, நாற்றம் கண்ட வகையில் தேசியத்தை விளக்கி புலிகளின் கோட்பாட்டாளராகின்றனர். இந்த மக்கள் விரோத பினாமி அரசியலையே புலிகளுக்கு கோட்பாடாக்கி, தலைகீழாக்கி புலிகளையே ஏற்க வைக்கின்றனர். புலிகளை வானளவு தலையில் உயர்த்தி புகழ்ந்தபடி கையாளும் பினாமி அரசியல் விபச்சாரம், தமிழ் மக்களின் சுயபொருளாதாரத்தை அழிக்கவும், அதற்கு இசைவான வகையில் தேசியத்தை வரையறுக்கவும் திட்டமிட்டே இயங்குகின்றனர். திட்டமிட்டே “மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.” என்று கூறுவதன் மூலம், ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கத்தை பாய் விரித்து அழைக்கின்றனர். தேர்தலுக்கு முன் கூட்டமைப்பு உருவானவுடன், அமெரிக்கா அழைக்க ஒடோஒடோடிச் சென்று வாலாட்டி குரைத்து விசுவாசத்தை காட்டினர். தேர்தல் முடிந்தவுடன் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஏகாதிபத்திய விசுவாசத்துடன், இந்தியா, அமெரிக்காவுடன் கூடிக்குலாவிய படி சதிகளைத் தொடங்கிவிட்டனர். இதில் கூட தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு உள்ள முரண்பாடுகள் தெளிவுபடவே, இந்த கைக்கூலித்தனத்தை வெளிக் கொண்டு வருகின்றது. புலிகளின் பெயரில் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய தேர்தல் கூத்தில், தமது கடந்த கால நடத்தைகளையிட்டு எந்த சுயவிமர்சனத்தையும் நடத்தியது இல்லை.
“சோறா சுதந்திரமா?” என்று 1977 இல் இதே போன்ற தேர்தல் திருவிழா ஒன்றில், தமிழ் மக்களின் வாக்குகளை ஆபாசமாக கவர்ந்தவர்கள், சோறையும் கொடுத்தில்லை. சுதந்திரத்தையும் கொடுத்தில்லை. ஆனால் பதவி சுகத்தில் சொக்கிப் போய், சொத்து சேகரித்தது முதல் தேசிய எல்லை கடந்து வெளிநாடுகளில் தம்மையும் தமது குடும்பத்தையும் சொகுசாக வாழ இந்த தேர்தல் உதவியது. "சோறா சுதந்திரமா?” என்ற கேள்வியால் உந்தப்பட்ட இளைஞர்கள் சுதந்திரத்துக்காக போராடிய போது, அவர்களை காட்டிக் கொடுக்கவும் பின்நிற்கவில்லை. இளைஞர்களின் போராட்டம் தேர்தல் மூலம் பெற்ற அதிகாரத்தை, பதவிகளை எல்லாம் ஆட்டம் கண வைத்தன. இந்த ஆயுதம் எந்திய சுதந்திர வேட்கையை தடுத்து நிறுத்த, அவசரம் அவசரமாக இந்தியா அரசின் துணையுடன், அமிர்தலிங்கம் தனது மகனின் தலைமையில் உருவாக்கிய ஆயுதம் ஏந்திய ரெனா (TENA) இயக்கம், எல்லா இயக்கம் போல் நடத்திய மக்கள் விரோத நடவடிக்கைகள் பல. இது போன்று நான்கு கட்சிகளும் மக்களுக்கு செய்யாத துரோகம், வராலாறால் மூடிமறைக்க முடியாது. ஏமாற்றி பிழைப்பது, மோசடியுடன் கூடிய கைக் கூலித்தனம் முதல் பச்சை துரோகம் வரையிலான நடத்தைகளே, அவர்களின் அரசியல், இந்த அரசியலில் எந்த மற்றத்தையும் அவர்கள் இம்மியும் கூட செய்யவில்லை. சர்வதேச நிலைமையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, தமது துரோகத்துக்கும் கைக் கூலித்தனத்துக்கும் இசைவாக தமது கோசங்களை மாற்றி களமிறங்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் விடுதலை, சுதந்திரம் என்ற கூறி, வாக்குவேட்டையாடிய சுகபோகமாக வாழ்ந்த அந்த மோசடியை பற்றி ஒரு வார்த்தை கூட, தமிழர் விடுதலைக் கூட்டணி பேசவில்லை. இலங்கை இந்தியா அரசுடன்
- சமர் - 30 ങ്ങക്ര-lDifി - 2002 O9)-

Page 6
கூடிக் குலாவிய படி ஏகாதிபத்திய தரகுகளாக செயற்பட்டு தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகத்தை பற்றி, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இளைஞர்களின் போராட்டத்தை சிதைக்க மாகன அபிவிருத்திச் சபையை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்று, தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து 1981 இல் இதற்கான தேர்தலில் குதித்த வரலாற்று துரோகத்தை பற்றி, ஒரு வார்த்தை கிடையாது. இந்தியா அரசுடன் கூடிக்குலாவி படி இயக்கங்களின் கைக் கூலிக்கு உடந்தையாக இருந்ததுடன், இந்தியா ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவித்து தனது கைக் கூலித்தனத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படி அடுக்கடுக்காக பல வரலாற்று துரோகங்கள் கூட்டணியின் துரோக அரசியல் வரலாறக நீள்கின்றது.
ரெலோ இந்தியக் கைக்கூலியாக ஆயுதம் ஏந்தி வளர்ந்த, வளர்ப்பு பிள்ளையாகும். இந்தியா அரசால் ஏவி விடப்பட்ட அனைத்து பாசிசத்தையும் மானவெட்கமின்றி, தமிழ் மக்கள் மேல் ஏவியவர்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் இந்தியா எதிர்ப்பாளர்களை வேட்டை ஆடுவது வரை, தனிச் சிறப்பாக ஒடுக்கியவர்கள். இந்தியா கைக் கூலித்தனத்தை மெய்பிக்க சீக்கிய போராட்டத்தை ஒடுக்கி, பல படு கொலைகளில் ஈடுபட்ட அந்த பன்றித் தனத்தை இவர்கள் என்றுமே சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இந்தியா இலங்கை கைக்கூலியாக செயற்பட்ட இவர்கள், தொடர்ந்தும் கைக்கூலியாக செயற்படும் வகையில் ஆயுதம் ஏந்த தயரான வகையில், புதிய இளைஞர்களை இணைத்து பல முகங்களை இராணுவ பாதுகாப்புடன் புலிகளின் எல்லைகளில் தொடர்ந்தும் வைத்துள்ளனர். வன்னிக்குச் செல்லும் பொருட்களுக்கு வரி விதித்தும், கப்பம் வாங்கியும் இயங்கும் மக்கள் விரோத சட்டவிரோத குழுவாக நீடிக்கின்றது. இன்றும் இந்தியாவே இவர்களின் வளர்ப்பு தந்தையாக இருப்பது ஒன்று புதிய விடைமல்ல.
ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரேமச்சந்திரன் அணி 1987 இல் இந்தியா இராணுவத்தின் வருகையுடன், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்தவிட்ட கைக்கூலித்தன படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகளின் மனித விரோத வரலாறு, புலிகளின் அரசியல் வறுமையினால் கருத்துச் சுதந்திர மறுப்பினாலும் எழுதப்படவில்லை. தமிழ் தேசமே கற்பழிக்கப்பட்ட அந்த வரலாற்று கதநாயகனான பிரேமச்சந்திரனும் அவரின் அணிக்கும் புது அவதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வரதர் அணிதான் இந்த குற்றத்துக் காரணம் என்ற பூச்சூட்டுகின்றனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் வரலாற்றில், நாபா உண்மையில் இயக்க தலைவர் அல்ல. நாபா ஒரு பொம்மைதான். அவர் ஒரு கெளவுரவத் தலைவராக நெயற்பட்டவர். அனைத்தும் பிரமச்சந்திரனே திட்டமிட்டு செய்தான். இந்தியா கைக் கூலித்தன அரசியல் முதல் அனைத்து எடுபிடி நடத்தை அனைத்துக்கும் பிரமச்சந்திரனே நேரடி வழிகாட்டியாக செயற்பட்டவர். இங்கு வரதராஜபெருமாள் பிரமச்சந்திரனால் ஆட்டுவிக்கப்பட்ட ஒரு ரவுடிதான். வரதராஜபெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் மத்தியகுழு உறுப்பினராக கூட இருந்தவன் அல்ல. இந்தியா கைக் கூலியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் களத்தில் இறங்கிய போது வரதராஜபெருமாள் அதைச் செய்ய தகுதியான ஒரு நபராக இருந்த காரணத்தினால், பிரமச்சந்திரனால் முன்னிலைப்படுத்தி கொண்டு வரப்பட்டவன். இந்தியா ஆக்கிரப்பை கைவிட்டுச் செல்லும் அளவுக்கு, இலங்கை மற்றும் புலியின் நிர்ப்பந்தால் வெளியேறிய போது ஈ.பி.ஆர்.எல்.எவ்ம் அதிகாரம் இழந்தது. இந்த நிலையிலும் இந்தியா அதிகார வர்க்கம் புதிய ஆக்கிரமிப்புக்கு தயார் செய்யும் வகையில், வருடம் இரண்டு கோடி இந்தியா ரூபா செலவு செய்து வரதராஜபெருமாள் பாதுகாத்தனர். கால ஒட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இழந்த வாழ்வின் சொகுசுகளை தக்கவைக்கும் அதிகார போட்டி, உள் முரண்பாடாக வெடித்து. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் அனைத்து துரோக தலைவர்களும் தனிப்பட்ட சொத்துகளை பல லட்சம் செலவில் இந்தியாவில் வாங்கி கொடுத்தனர். அந்த சொத்து பகிர்விலும் (இந்த சொத்து பகிர்வில் நாபாவின் மனைவியும், மனைவி குடும்பம் கூட போட்டியிட்டது) எற்பட்ட முரண்பாடுகளிலும் இணைந்தே, ஈ.பி.ஆர்.எல்.எவ் உடைந்தது. இன்றும் வரதர், பிரேமச்சந்திர அணியின் முரண்பாடு கடந்து, இந்திய கைக்கூலிக்கு வெவ்வேறு அளவில் விசுவசமாக இருக்கவும் செயற்படவும் தயாராக உள்ளனர். பிரமச்சந்திரன் அணி கூட இராணுவ பாதுகாப்பில், புலிகளின் எல்லையோரங்களில புதிய இளைஞர்களை இணைத்த படி இளைஞர்களைக் கொண்ட முகங்களை, ஆயுதம் எந்த தயார் நிலையில் வைத்தேயுள்ளனர்.
|-കഥf - 30 தை-மாசி - 2002

தமிழ் காங்கிரஸ் மிக மோசமான தமிழ் மக்கள் விரோதியாக அதன் வரலாறு தொடங்குகின்றது. 1950 இல் தமிழ் கங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழரசு கட்சி தந்தை செல்வாவின் தலைமையில் தனியாக தோன்ற, தமிழ் கங்கிரஸ்சின் துரோகமே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருந்தது. மலையக மக்களின் வாக்குரிமைகளை பறிக்க, இனவாதத்தையும் சுரண்டல் வக்கிரத்தையும் அடிப்படையாக கொண்டு சிங்கள இனவாத சுரண்டல் ஆட்சிக்கு தூணாக துணை நின்ற மக்கள் விரோதிகளே இவர்கள். இன்று டக்ளஸ்சின் துரோக வழியில், அன்று தமிழ் காங்கிரஸ் யூ.என்.பியுடன் ஒட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட துரோக கட்சிதான் தமிழ் கங்கிரஸ். சொந்த பெரும் சொத்துகளை பாதுகாக்கவே அரசியலை பயன்படுத்திய இக்கட்சி, தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டனர். அண்மைய துரோக வரலாற்றில் அரசியலில் அனாதையாகி கொழும்பில் கூடாரம் அடித்திருந்த இந்தக்கட்சி, இனவாத சிங்கள அரசின் வரைமுறையற்ற இனவாதத்தை கொழும்பில் கண்டிக்க தொடங்கியது முதல் புதுயுயிர்ப்பு பெற்றது. பெரும் முதலாளியான குமார் பொன்னம்பலம் அரசியலில் வாரிசுரிமை பெற்றவர். அதன் வழியில் அவரின் மகனும் இன்று களமிறங்கியுள்ளார். புலிகளின் அரசியல் ஏழ்மையை பயன்படுத்திய அதில் இருந்தே பிழைக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த பிழைப்புக்கு புலிகளின் அரசியலின் ஏழ்மையே வழிகாட்டியாகின்றது. அதே நேரம் இந்த ஏழ்மை ஏஜாமன் விசுவாசத்தை காட்டி குலைக்கின்றது. இந்த வழியில் தான் அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு, அரசியலில் ஜன உபதேசம் பெற்று உயிர்ப்பு பெற்றது. கொழும்பில் சொத்தும் சுகமுமாக அரசியல் பேசும் இக்கட்சி, தமிழ் ஈழத்தை ஒருக்காலும் ஆதாரிக்க போவதில்லை. எல்லாம் ஏகாதிபத்திய மூன்றாவது மத்தியஸ்த்த ஆக்கிரமிப்பில் எலும்புகளை சூப்பி குளிர் காய விரும்புபவர்களே.
தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்தோர் கடந்தகாலத்தில் இழைத்த மனித விரோத நடத்தைகளை இவர்கள் தவறு என்று சொல்லவில்லை. உதாரணமாக 1984 இல் ரெலோ இந்தியா கைக்கூலிகளாக எமது மண்ணில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய காலத்தில், என்னை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்ல உத்திரவிட்டு தேடினர். எனது வீட்டை நடு சமாத்தில் சுற்றி வளைத்து, வீட்டை நோக்கி பொலிந்த வேட்டுகளின் கதை போல் பல உண்டு. இதன் போதே தேசிய போராட்ட வரலாற்றில் இயக்கத்துக்கு எதிரான, முதலாவது மக்கள் போராட்டத்தை நாம் நடத்தினோம். அந்தப் போராட்டம் தெல்லிப்பளைச் சந்தியில் வீதி மறியலாக மாறியபோது, அதன் மேலும் பொலிந்த வேட்டுகள் எமது தேசத்தையே நடுங்கவைத்தது. இதே போல் கூட்டணியின் தேர்தல் மற்றும் மோசடிகளை நாம் “தேர்தல் திருவிழா” என்ற நாடகம் மூலம் 1981-1983 களில் அம்பலப்படுத்திய போது, கூட்டணியினர் ரவுடிகளை கொண்டு மிரட்டி குழப்ப முயன்ற வரலாறுகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய கூலிபட்டாளமாக வந்திறங்கிய போது, கம்யூனிஸ்டுகள் இந்தியா அரசின் எதிரிகள் என்ற அடிப்படையில், எம்மைத் தேடி அலைந்த வேட்டை நாய்த்தனத்தை என்ன என்பது. இப்படி எத்தனையோ மக்கள் விரோத வரலாறுகள், தனித் தனியாகவும் சமூக ரீதியாகவும் உண்டு. ஆனால் அதை இனியோரு போதும் செய்ய மாட்டோம் என்று, கடந்த கால மீதான சுயவிமர்சனத்தில் இருந்து இவர்கள் சொல்லவில்லை. இந்தியா அரசின் ஆக்கிரமிப்பை, தலையீட்டை கண்டிக்கவில்லை. ஆனால் இந்தியாவுடன் வாலாட்டியபடி நக்கி வாழ்வது தொடருகின்றது. ஏகாதிபத்தியம் தேசியத்தை அழிக்கும் என்றும், அதை எதிர்த்து போராடுவோம் என்று சொல்லவில்லை. தன்னிறைவான சுய பொருளாதாரத்தை பாதுகாக்க, அதை எதிர்க்கும் மற்றும் அழிக்கும் அனைவரையும் எதிர்த்து போராடுவோம் என்று சொல்லவில்லை. அதே நேரம் அதை தாமே அழிப்போம் என்று, கோசம் போடுகின்றனர். பேச்சு வார்த்தையை புலிகள் குழப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லை. அதாவது எப்படி நங்கள் ஏகாதிபத்தியத்துக்கும் (மூன்றாவது தரப்புக்கும்) அரசுக்கு முண்டு கொடுப்போம் என்பதை சொல்லவில்லை.
அது மட்டுமா, கடந்த காலத்தில் நீங்கள் வேட்டையாடிய மனிதர்களின் மரணங்களுக்கு பதிலளிக்கவில்லை. இந்தியாவின் எதிரிகள் என்றும், புலிகளின் ஆதாரவாளர்கள் என்றும், புலிகளின் இரத்த உறவுகளான தாய் தந்தை சகோதார சகோரிகள் என்று நீண்ட படு கொலைக்கு உள்ளான, அந்த மனிதர்களுக்காக ஒரு வார்த்தையும் பேசவில்லை.
CID
- சமர் - 30 தை-மாசி - 2002

Page 7
புலிகளும் அதை செய்தமையால், நாம் அதை பற்றிச் சொல்லத் தேவையில்லை என்ற தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு புலிகளுடன் இரகசிய உடன்பாடு கொண்டுள்ளதோ! அத்துடன் முஸ்லிம் மக்கள் மேலான படுகொலை, தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் செய்த படுகொலைகள், பெண்கள் மேலான பாலியல் வன்முறை என்று வரலாற்று பட்டியல் நீள்கின்றது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக பேசும் வி.ஆனந்தசங்கரி “கடந்த காலத்தில் எந்தெந்த அமைப்பு எப்படி எப்படி இயங்கியது என்பதைப் பற்றி இன்று விவாதிக்கத் தேவையில்லை. இரகசியமாக நாம் செயற்படவில்லை. பல்வேறு ஸ்தாபனங்கள், அமைப்புகள், பிறநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள், பத்திரிகைகள் அனைத்தினதும் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு வந்துள்ளோம்.” என்று கூறி கடந்த கால மக்கள் விரோதத்தை மூட்டை கட்டி வைத்தபடியே, புதிய துரோகத்தை தொடங்குகின்றனர். இந்த கூட்டு என்பது புலிகளின் அரசியல் வறுமையை பயன்படுத்தி, ஏகாதிபத்தியத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே. அதானல் அது முன்றாவது தரப்பு மத்தியஸ்தம் என்ற, தொப்பிள் கொடியுடன் பிறந்துள்ளது. இதை ஆழமாக நாம் புரிந்து கொள்ள, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ் காங்கிரஸ்சுக்கும் இடையிலான முரண்பாட்டில் இருந்தே தெளிவாக இனம் காணமுடியும். "புலிகளின் தேசிய தலைமைப் பாத்திரத்தை தவிர்த்து மாற்றுத் தலைமையை உருவாக்க சிங்களம் மட்டுமல்ல அமெரிக்காவும், இந்தியாவும் கூட முயல்கின்றது” என்ற கூறி இந்த தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு பின் வேடத்தை மட்டுமல்ல, அதன் வெளுப்பையும் அம்பலமாகியுள்ளது. இப்படியெல்லாம் நாடகமாடும் இவர்கள், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் வெற்றி புலிகளின் வெற்றி என்ற பிரகடனம் செய்யவும் பின் நிற்கவில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பின் நோக்கம் "பிரபாகரனே தமிழினத்தின் தலைவர் என்பதை வெளிப்படுத்துவோம்” என்று ரெலொ சிறிகாந்தா திருக்கோவில் கூட்டத்தில் பேசுகின்றார். அத்துடன் "ஒரே கொடி, ஒரே தலைமை, ஒரே கோட்பாடு” என்று கூறி, தமிழ் ஈழத்தின் ஜனநாயக மறுப்பை அரசியலில் ஆணையாக்கின்றார். ஆனால் அவர்கள் அதற்குள் இதுவரை இணையவில்லை. அதாவது புலிக்கொடி, புலித் தலமை, புலிகளின் மக்கள் விரோத இராணுவ கோட்பாட்டை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஏற்றுவிடவில்லை. ஆனால் மக்ளுக்கு அதை கூறுகின்றனர். ஒரு பாசிட்டுகளின் பினாமிகளுக்கு மட்டும் பொருந்திய அரசியல் நடத்தைகள். யாழ்ப்பாணத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தமிழ் கங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி "புலிகளே ஏக பிரதிநிதிகள் என்பதை, சிங்கள பேரினவாதிகளுக்கும் வெளி உலகத்திற்கும் எடுத்துக் காட்டவே நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றோம்" என்றார். புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்க நடத்திய இரத்த பலியொடுப்புகளுக்கு, அரசியல் பூச்சு பூசுவது தான் தமது வேலை என்கின்றனர் பச்சோந்திகள். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் ரெலோ உபதலைவர் நி. இந்திரகுமார் "அளப்பரிய தியாகங்களைச் செய்த புலிகளை பயங்கரவாத இயக்கம் என்ற கூற அனுமதிக்க முடியாது” என்று பேசினர். புலிகள் மட்டுமா போராட்டத்தில் தியாகம் செய்தனர். பயங்கரவாதம் என்பது அரசின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான, மக்களின் பயங்கரவாத நடவடிக்கையில் இருந்தே தொடங்குகின்றது. இது ஒன்று இழிவானவையல்ல. மக்களின் ஆயுதப் போரட்டத்தை எதிர்க்கும் உங்களுக்கு அது பயங்கரவாதமாக இருக்கலாம். இங்கு பயங்கரவாதமாக முத்திரை குத்துவது, மக்கள் அல்லாத இயக்கம் மக்கள் மேல் பயங்கரவாதத்தை கையாளும் போதே நிகழ்கின்றது. இதை பாதுகாக்க கூட்டமைப்பு வக்காளத்து வாங்குகின்றது. இப்படி பல தளத்தில் மக்களுக்கு எதிராக புலிகள் சார்பாக பேசியதுடன், கிடைக்கும் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு வெற்றி புலிகளின் வெற்றி என்றனர். இதை புலிகள் மறைமுகமாக அங்கீகரித்து ஆதாரவுவளித்தனர். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளி வந்தபோது புள்ளிவிபரங்களை திரித்தும் புரட்டியும், தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக அனைத்து தமிழ் மீடியாவும் செயற்பட்டன. மறு தளத்தில் எதிர் தரப்பின் வெற்றிகளை கள்ளவோட்டு மற்றும் வன்முறையில் சாதிக்கப்பட்டதாக ஒரு தலைப்பட்சமாக கருத்துக் கூறினர். இந்த புள்ளிவிபர மோசடியில் உண்மையை திறனாய்வு செய்ய தயாரற்ற தன்மையை தெளிவாக தமது பினாமிய வழியில் கையாண்டனர்.
-சமர் - 30 தை-மாசி - 2002

தமிழ் மறறைய ஸ்லீம் I மற்றைய பிரதேசம் கட்சிகளின் பிரதான தமிழ் கட்சிகள்
Jon LL60)LDÜL கட்சிகள் பெற்றவை வன்னி 41 950 16857 35 699 யாழ்ப்பாணம் 102 324 80910 3364 LDL L35856T'L 86 284 10373 26 725 55 716 திருகோணமலை 56 121 2O89 - 102 928 அம்பறை 48 789 21874 75 257 134 295 கொழும்பு 12 120 - ஒட்டு 348 164 50 101 105 346 மொத்தமாக மேல்
தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக 348 164 வாக்குகளே பெற்றனர். இங்கு கள்ள வோட்டுகளை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு பெற்ற போதும் வாக்களிக்க தடை இருந்த போதும், இது புலிக்கு ஆதாரவாக நான்கு கோரிக்கைக்கும் சார்பாக விழுந்தாக எடுக்க கோருகின்றனர். இது தவறனதாக இருந்தாலும், மற்றயை தமிழ் கட்சிகள், சிங்கள கட்சிகள் இதற்கு சமனாக வாக்கை பெற்றுள்ளது. அதே நேரம் முஸ்லீம் வாக்கு தனியாக உள்ளதுடன், வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாது பெரும்பகுதி பகிஸ்கரித்துள்ளது. 2001 கணக்கெடுப்பின் படி கொழும்பில் மொத்த தமிழ் வாக்காளர்கள் 249 915 யும், இந்தியா தமிழ் வாக்காளர் 26 036யும், முஸ்லீம் வக்காளார் 203 558 யாகும். கம்பறா மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழ் வக்காளர் உள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 40 ஆயிரம் தமிழ் வாக்காளர் உள்ளனர். கொழும்பில் 12 120 வாக்குகளை கூட்டமைப்பு பெற்று படுதோல்வியடைந்துள்ளது. 2.5 லட்சம் தமிழ் வாக்காளர்கள் அவர்களின் குடும்பத்துடன் தமிழ் தரப்பு குறுந்தேசிய கொடுமையால் கொழும்பில் புலம் பெயர்ந்து வாழும் அவர்கள், இந்த கூட்டமைப்புக்கு எதிராகவே வக்களித்துள்ளனர். இதுபோன்று கம்பறா, களுத்துறை மாவட்டத்திலும் கூட்டமைப்பு தேர்தலில் குதித்திருப்பின் இங்கும் இந்த சோகம் நிகழ்ந்திருக்கும். உண்மையில் கூட்டமைப்பு 3.5 லட்சம் வாக்குளை பெற்ற அதேநேரம், பெரும்பகுதி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டே உள்ளனர். இலங்கை சனத் தொகையில் தமிழ் மக்களின் விகிதசாரத்தக்கு ஏற்ப, தமிழ் வாக்களர் எண்ணிக்கையும் இருக்கின்றது. அளிக்கபட்ட செல்லுபடியான வாக்கில் 3.89 சதவீதத்தை பெற்ற அதே தளத்தில் கூட்டமைப்பின் குரோதத்தை அம்பலமாகின்றது. வாக்களிக்காத எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடின், இந்த வீகிதம் மேலும் ஆழமாக சரியும். வாக்களிப்பு வீகிதம் இலங்கை முழுக்க சமாந்தரமாக இருப்பதால், மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப கூட்டமைப்புக்கு எதிராக அளிக்கப்பட்ட தமிழ் வாக்கு வீகிதம் அதிகமானது.
தமிழ் பல்கலைக்கழகங்கள் தொடங்கி கிறிஸ்துவ ஆயர்கள் வரை ஆசி பெற்று தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு வாக்கு கோரினர். அதே நேரம் சங்கிலியன், எல்லாளன் படை தொடங்கி இராஜசிங்கன் படை வரை நடத்திய ஜனநாயக தேர்தல் நடைமுறை ஆயுத மிரட்டல்களின் ஆசியிலேயே, கிடைத்த வாக்கு மிகமிக குறைவானதாகும். அதாவது தமிழ் மக்கள் பெரும்பகுதி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு வெளியில் வாக்களித்துடன், கணிசமான பெரும் பகுதி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மொத்த வாக்களிப்பில் கூட்டணி பெற்ற வாக்குகள் 3.9 சதவீதமட்டுமேயாகும். இங்கு முஸ்லீம் மக்களை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பும் எதிரியாக, புலிகளை போல் பார்த்த அணுகியதும் நிகழ்கின்றது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்ட் கிழக்கில் நிகழ்த்திய உரைகள் மற்றும் செவ்விகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் இருந்தன. முஸ்லீம் மக்களை தமிழ் மக்களாக கருத தயாரற்றவர்கள், அவர்களை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக கூட அங்கீகரிக்கவும் தயாராக இல்லை. மாறாக தமக்கு அடிமையாக அடங்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் அணுகப்பட்டது. இந்த நியிைல் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்களின் பிரச்சனையை, புலிகளுடன் மட்டும் பேசி எப்படித்
- சமர் - 30 தை-மாசி - 2002 C13)-

Page 8
தீர்க்க முடியும். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீங்கள் பிரச்சனைக்கு தீர்வற்ற வன்முறையிலும், அவர்களின் நலனை பேசாத தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு எதைத்தான் அந்த மக்களுக்கு வழங்க முடியும். புலிகளுடன் மட்டும் பேசக் கோரும் ஜனநாயகம், முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாகும். உண்மையில் நடந்த தேர்தல் குறுந் தேசிய இனக் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டே நடந்தன. சிங்கள் கட்சிகள் தொடங்கி தமிழ் முஸ்லீம், மலையக கட்சி ஈறாக, இனவாத வாக்குகளை அடிப்படையாக கொண்ட குறும் இனத் தேசிய தேர்தலாக இது மாறியிருந்தது. இலங்கையில் பலலினங்களின் ஐக்கியத்தை முன்வைத்த கட்சிகள், படு தோல்வியடைந்தன. இந்த தேர்தல் மேலும் ஆழமாக இனவாதத்தை பிரித்து பிளந்துக் காட்டியுள்ளது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்து இந்த இனவாதத்தை குறுந்தேசிவாதமாக மீண்டும் ஒரு முறை பிளந்துள்ளனர். இம் முறை முஸ்லீம் மக்களையும் கூட ஒதுக்கிய வகையில், தனது வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
இங்கு கள்ள வாக்குகள் மூலமே மற்றைய கட்சிகள் வாக்கு பெற்றதாக கூறுவதும், தம்மை தாம் புனிதர்களாக காட்டுவதும் கூட ஒரு மோசடியே. கள்ள வாக்கு என்பது சில கட்சிகள் தலைமையில் இருந்தே அதை திட்டமிடவும், மறு தளத்தில் அதை கீழே இருந்து தன்னியல்பான ஆர்வம் சார்ந்தும் அனுமதிக்கப் படுகின்றது. அதிகாரத்தில் இருந்து தோற்பவன் மேல் இருந்து கள்ள வாக்கை போடுவதும், அதிகாரத்தை புதிதாக பெறுபவன் இயல்பான ஆதரவு தளத்தை கள்ள வாக்கு போட பயன்படுத்துகின்றான். தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூறுவது போல் ஈ.பி.டி.பி மட்டும் கள்ள வாக்கு போடவில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூட கீழ் இருந்து உருவாகிய தன்னியல்பான கள்ளவாக்கு போடும் இயல்பை, தனக்கு சதாகமாக பயன்படுத்தினர். அதாவது மற்றவன் கள்ள வாக்கு போடுவதாக கூறி, இது ஊக்கவிக்கப்பட்டது. உண்மையில் கிடைத்த வாக்கில் சரிக்கு சமன், எதிர் எதிராக கள்ள வாக்கை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே இந்த ஊழல் மிக்க சாக்கடை தேர்தலை, ஜனநாயகமாக்கினர்.
தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு வாக்குளை பெறவிடாது, வன்முறை மூலம் ஈ.பி.டி.பி தடுத்தது என்பது ஒரு தலை பட்சமானது. ஈ.பி.டி.பி யின் வன்முறை, அதிகார மோசடி, ஊழல், கள்ள வாக்குகளை எந்தளவுக்கு பயன்படுத்தி அதை ஜனநாயகமாக கருதியதோ, அந்தளவுக்கு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு அதன் தயவில் தான் செயற்பட்டது. சங்கிலியன், எல்லாளன் படை தொடங்கி இராஜசிங்கன் படையின் மிரட்டலை சாதகமாக்கியும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாம் மட்டும் பிரச்சாரம் செய்யும் உரிமை பெற்று தேர்தலை ஜனநாயகமாக்கினர். புலிகளின் ஒரு சில வேட்பாளர்களை படுகொலை செய்ததுடன் கடத்தியும் சென்ற நிலையில், பொது மிரட்டலை தனக்கு சதாகமாக கொண்டே இந்த ஜனநாயகத்தை தக்கவைத்தனர். ஊர்கவத்துறை எப்படி ஈ.பி.டி.பியின் சர்வாதிகாரத்தில் ஜனநாயகம் பூத்துக் குலுங்கியதோ, அதேபோல் புலிகளின் பிரதேசமும் அதன் எல்லையிலும் தமிழ் கட்சிக்ளின் கூட்டமைப்பின் ஜனநாயகம் பூத்து குலுங்கியது. படுகொலை, வன்முறை, மிரட்டல், ஊழல் என்று ஜனநாயகத்தின் அனைத்து சிறப்பு இயல்புகளுடன் நடைபெற்ற இந்த தேர்தலில், இனங்களை தனித்தனியாக தமது குறுந்தேசிய இனவாத அடிப்படைகளை ஆழப் பிளந்தே, சுதந்திரமாக ஜனநயாக பராளுமன்ற சாக்கடையை நிறுவிக்கொண்டது. இந்தச் சாக்கடையில் இறங்கி புளுத்த பன்றிகள் பொய் வாக்குறுதிகள், மேசாடி, ஊழல், அதிகார பிரயோகம், வன்முறை முதல் படு கொலை ஜனநாயக அரசியலையே, தமது ஜனநாயகச் சின்னமாக கொண்டே இந்த தேர்தலில் தமது சொகுசுக்கான வாழ்வுக்கு அடிதளமிட்டனர். இந்த தேர்தல் மக்களின் அதிகாரத்தையோ, அவர்களின் குறைந்த பட்ச நலன்களைக் கூட தீர்க்கப் போவதில்லை. ஏகாதிபத்திய உலகமயமாதலை விசுவசமாக, மக்களுக்கு எதிராக அவர்களின் தன்னிறைவு தேசிய பொருளாதாரத்தை சிதைப்பதற்கு முரண்பாடு இன்றி அனைவரும் உறுதி எடுத்து, அதை ஜனநாயக வன்முறை மூலம் மக்கள் மேல் நிறுவ தயாராகவே உள்ளனர். இந்த மக்கள் விரோத தேர்தலையும், அந்த போலி ஜனநாயகத்தை எதிர்த்து, மக்கள் அதிகாரத்தை தமது சொந்த கரங்களில் எடுக்கும் ஒரு வழி மட்டும் தான், மக்களின் பிரச்சனைக்கு தீர்வை தரும்.
l-lot - 30
G3)-
தை-மாசி - 2002

தேசிய பொருளாதாரத்தை தேசிய அடிப்படையாக கொள்ளாத, ஒடுக்கப்பட்ட உலக மக்களின் ஆதரவை திரட்டாத எமது போராட்டம்.
புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை மீது
வழமை போல் இம்முறையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தினச் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்தவும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எமது தேசியத்தை உயர்த்திப் போராடவும், செய்ய வேண்டிய வரலாற்று பணிகளை இந்தச் செய்தி அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. குறிப்பாக புலிகளின் விடுதலைப் போராட்டம் செய்த தவறுகள் மீதான சுயவிமர்சனம் மற்றும் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை திரட்டும் வகையில், ஒரு போராட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று தார்மீகப் பணியைப் பற்றி வழக்கம் போல் எதுவுமில்லை. புலிகள் தம்மையும் தமது தவறான அரசியல் வழியில் இருந்து மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதை, மீண்டும் நெருக்கடியான இன்றைய தருணத்திலும் செய்தியாக தாங்கி வெளிவந்துள்ளது. புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வால் பிடித்து செல்வதும், கருத்துக் கூறுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இம்முறை வழமையான வலது கண்ணோட்டத்துக்கு பதில், இடது தன்மை கொண்ட வலது கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் புலிகளின் தலைவரின் செய்தி, புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே ஒரு அதிர்ப்தியை வலது கண்ணோட்டம் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. மறு தளத்தில் சொல்லத் தவறியது, செய்யத் தவறியது என்ற விடயத்தை விட்டு, சொன்னதுக்குள்ளான சிலவற்றின் மீதான விமர்சனத்தைப் பார்ப்போம்.
"தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்து வந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாக, கெளரவத்துடன் வாழவிரும்புகிறார்கள். அவர்களது அரசியற் பொருளாதார வாழ்வை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள விரும்புகிறார்கள்” என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகின்றார். பொதுவான தளத்தில் இது சரியான வாதமாக தென்பட்டாலும், புலிகளின் வரலாற்றுடன் ஆழமாக பார்க்கும் போது இது முரண்படுகின்றது. ஒரு தேசியம் என்பது என்ன என்ற கேள்விக்கு புலிகளின் அகராதி தேசிய மறுப்பைக் கொண்டுள்ளது. ஒரு தேசியத்தின் மையமான விடையம் என்ன? அது எப்போதும் எங்கும் தேசிய பொருளாதாரமாகும். தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஒரு நிலத்தொடர் அனைத்தும் தேசிய பொருளாதாரம் மீது கட்டமைக்கப்பட வேண்டும். தேசியம் இதைத் தாண்டி விளக்கம் பெறின், தேசிய பொருளாதாரமல்லாத ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு அடிமையாகவே வாழ்வதை குறிக்கும். சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் எதை அழிக்க விரும்புகின்றனர்? ஏகாதிபத்தியம் எதை அழிக்க பயங்கரவாத முத்திரை குத்துகின்றது? அனைத்து தேசிய பொருளாதாரத்தையும் அழித்து, அதன் மேல் உலகமயமாதல் பொருளாதாரத்தை நிறுவுவதேயாகும். தேசியத்தை கோரும் மக்கள் தமது சொந்த வளங்கள் மேல் தமது சொந்த உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்வதே, தேசியத்தின் அடிப்படையும் ஆதாரமுமாகும். அந்த உழைப்பு சூறையாடப்படுவதையும், தேசிய வளங்களை அன்னியன் எடுத்துச் செல்வதையும் தடுக்கும் வகையில், தேசியம் தன்னைத் தான் அரசியல் மயமாக்கி ஆயுதபாணியாக வேண்டும். அதன் அடிப்படையில் விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உற்பத்தி மையமான அடிப்படையான கோசமாக வைத்து, அதை நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும். யுத்த நிறுத்தம், பேச்சு வார்த்தை என அனைத்திலும் தேசிய பொருளாதாரம் என்ற மையமான கோசமே, முதன்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று தமிழ் மக்கள் சார்பாக யாரும் தேசிய பொருளாதாரம் சார்ந்து போராட்டத்தை வகுப்பதில்லை, விளக்குவதில்லை. அரசுடன் அல்லது எதோ ஒரு மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தையின் போதும் இந்த தேசியமே மையக் கோசம் என்பதை, புலிகள் முதல் தேசபக்தன் ஈறாக கவனத்தில் எடுப்பதில்லை.
தேசிய பொருளாதாரம் என்ற விடையம் சுயநிர்ணயத்தில் மிக ஆழமானதும் மையமானதும் L-சமர் - 30 தை-மாசி - 2002 C15)-

Page 9
மிகவும் முக்கியத்துவமுடையதுமாகும். சிங்கள இனவாத பெருந்தேசியத்தை தனிமைப்படுத்தவும், இந்த தேசிய பொருளாதாரம் மிக முக்கியத்துவமுடையது. தமிழ் மக்களின் தேசிய பொருளாதாரத்தை மட்டுமல்ல, சிங்கள மக்களின் தேசிய பொருளாதாரத்தையும் முன்வைத்து போராடவும், பேசவும் முனையும் போது மட்டுமே, ஒரே தேசத்தில் வாழ்கின்ற ஐக்கியம் சாத்தியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் ஜே.வி.பி முதல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஈறாக கட்டமைக்கப்பட்டுள்ள தேசிய இனவாத ஏகாதிபத்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்தி, சிங்கள மக்களின் தேசிய பொருளாதாரம் என்ற கோரிக்கையை, தமிழ் மக்கள் முன்வைத்து போராடவேண்டும். சமாதானம், ஐக்கியம் என்ற பொது அடிப்படையில் ஒன்றுபட்ட வாழ்வுக்கு, தேசிய பொருளாதாரமே அடிப்படையான மையமான விடையமாகும். தேசியத்தை முன்வைப்பதன் மூலம் இதை மறுக்கும் இலங்கை அரசு, மற்றும் ஏகாதிபத்திய ஜனநாயக விரோதத்தை தோல் உரிக்க வேண்டும். இலங்கையில் இனவாத யுத்தம் கட்டமைக்கப்படுவதும், ஏகாதிபத்தியம் தேசியத்தை பயங்கரவாதமாக காட்டி ஆக்கிரமிக்க முனையும் எல்லாப் போக்கிலும், தேசிய பொருளாதாரமே அழிக்கப்படுகின்றது. இந்த தேசிய பொருளாதாரம் என்ற மையமான கோசம், உலகமக்களின் ஆதரவை எமக்கு பெற்றுத்தரும். ஏனெனின் ஏகாதிபத்தியம் உலகளவில் தேசிய பொருளாதாரத்தை அழிக்கின்றது. மக்கள் அதற்கு எதிராக உலகெங்கும் போராடுகின்றனர். அவர்கள் தேசிய பொருளாதாரம் என்ற மையமான கோசத்தில் ஒன்று இணைவது இயற்கையாகும். அதே நேரம் ஏகாதிபத்தியம் குத்தும் பயங்கரவாத முத்திரையும், அதன் ஆக்கிரமிப்பும் அம்பலப்படும். பெரும் தேசியத்தின் பின் கட்டமைக்கப்படும் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிங்கள மக்களையும் சொந்தத் தேசிய பொருளாதாரத்தின் கீழ் தேசிய பொருளாதாரக் கோரிக்கை அணிதிரள வைக்கும். இந்த நிலையில் ஐக்கியமான இலங்கையில், சுயநிர்ணய அடிப்படையில் இரண்டு தேசங்கள் என்ற வெற்றிகரமான தேசியத்தை நிறுவவும், ஏகாதிபத்தியத்தை ஒன்றுபட்ட உலக மக்களின் ஆதரவுடன் எதிர்த்து போராடமுடியும்.
தமிழ் மக்களின் "அரசியல் பொருளாதார வாழ்வு” என்பது எதைக் குறிக்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதாரம், அதன் அடிப்படையிலான பண்பாடு கலாச்சாரம் எம் மண்ணில் ஊடுருவுவதை எதிர்த்து, இந்த “அரசியல் பொருளாதார”த்தை புலிகளின் தலைவர் கோருகின்றாரா எனின், நிச்சயமாக இல்லை, போராட்டம் ஏகாதிபத்திய பொருளாதார ஊடுருவலை எதிர்த்து, அதன் பண்பாட்டு கலாச்சார வேர்களை எதிர்த்து, ஏன் தேசியத்தை முன்வைத்து போராடவில்லை? அதன் அடிப்படையில் போராட்டம் தனது கோசங்களை ஏன் முன்வைக்கவில்லை? மக்களின் உழைப்பு, அவர்களின் தேசிய வளம் மீது தேசியத்தை கட்டமைக்கவும், அதை பாதுகாக்கவும் அதன் அடிப்படையில் போராட்டத்தை ஆயுத பாணியாக்க தவறுவது ஏன். புலிகள் வைக்கும் ஏகாதிபத்திய பொருளாதார தேசியம், தேசிய பொருளாதாரத்தையும் அதன் அடிப்படையிலான தேசியத்தையும் அழிக்கின்றது, சீரழிக்கின்றது. எமது போராட்டத்தின் தியாகங்கள் அர்த்தமற்ற வகையில் ஏகாதிபத்திய தேசியத்தை உலகமயமாக்கின்றது.
“எமது ஆயுதப் போராட்டமானது இன்று தமிழரின் அரசியல் போராட்ட வடிவமாக வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டிருக்கிறது” என்று கூறுவதன் மூலம், அரசியலை ஆயுதத்தின் நீட்சியாக தொடர்வதையே புலிகள் மீண்டும் முன்வைத்து, அதன் அடிப்படையிலேயே அனைத்தையும் கோருகின்றனர். இதிலிருந்தே தேசிய பொருளாதாரத்தை அரசியல் ஆணையில் வைக்க மறுக்கின்றனர். மாறாக ஆயுதத்தை ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து கடத்துவது போல், ஏகாதிபத்திய பொருளாதாரத்தையும் அதை ஊக்குவிக்கும் கொள்கையையும், தமது அரசியல் ஆணையில் வைக்கின்றனர். ஒரு தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட தேசியத்துக்கு பதில், ஏகாதிபத்திய பொருளாதாரத்தை உலகமயமாக்கும் கொள்கையை பாதுகாக்கும் ஏகாதிபத்திய கைக் கூலியாக செயற்படும், தமிழர் ஆட்சியை முன்வைக்கின்றனர். தேசிய பொருளாதாரத்தை காலால் மிதிக்கின்ற, அந்த மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கின்ற கொள்கையே, புலிகளின் அரசியலாக உள்ளது. தேசிய பொருளாதாரத்தை முன்னெடுக்கின்ற எந்த முன்முயற்சியும், மண்ணில் புலிகளால் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் எமது “தேசிய" போராட்டம் முன்னேறுகின்றது என்ற வாதம் தேசிய அடிப்படையில் அர்த்தமற்ற ஒன்றாகும்.
l-l@lot - 30 தை-மாசி - 2002

மேலும் அவர் "ஒடுக்குமுறையாளர் எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அரசு அதிகாரம் உடையவர்கள். ஆயுதப் படைகளை வைத்திருப்பவர்கள். ஒடுக்கப்படுவோர் எப்பொழுதுமே ஆளப்படும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தோராக, சுரண்டப்படும் மக்கள் சமூகமாக, ஏழைகளாக, அடிமைகளாக இருப்பார்கள்.” என்று புலிகளின் தலைவர் குறிப்பிடும் இந்த பகுப்பாய்வை, ஏன் புலிகள் தமது இயக்கத்திலும் சர்வதேச அரசியலிலும் நடைமுறையில் கையாள்வதில்லை. இந்த அறிக்கையில் கூட எகாதிபத்தியம் பற்றிய மதிப்பீட்டில் ஒடுக்குமுறையாளர்கள் என்பதற்கு பதில், சந்திரிக்கா அரசால் தவறாக வழிநடத்தப்பட்ட மேற்கு நாடுகள் என்றல்லவா கூறப்படுகின்றது. எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான விளக்கம். ஏகாதிபத்தியங்கள் பற்றிய இந்த விளக்கம் தங்களுக்கு தாங்களே வலிய ஆப்பு வைப்பதாகும். ஒடுக்கும் வர்க்கங்களை (இது ஏகாதிபத்தியம் முதல் நிலப்பிரபுத்துவ வர்க்கம் வரை உள்ளடங்கும்) ஒடுக்கப்பட்ட வர்க்கம் எதிர்த்து போராடுவது நியாயமானதாகும். அந்த போரானது மனித இயங்கியலின் உந்து சக்தியும் கூட. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்கும் வர்க்கத்தை எதிர்த்து போராடும் போது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவின் ஐக்கியம் அடிப்படையானதும் நிபந்தனையானதுமாகும். இதை புலிகள் நடைமுறையில் கையாளாமல் முன்வைக்கும், கருத்துகள் ஆச்சரியகரமானது. தமிழ் மக்கள் மத்தியில் ஒடுக்கப்படும் மக்கள் யார்? தேசிய இனம் என்ற ரீதியிலும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் சிறுபான்மையினாரால் சுரண்டப்படும் மக்களும், பெண்களும், ஒடுக்கப்பட்ட சாதிகளும், சிறுபான்மை இனங்களும் (முஸ்லீம் மக்கள்) என்ற விரிந்த தளத்தில் காணப்படுகின்றது. இவர்களை இவர்களின் நியாயமான கோரிக்கையுடன் புலிகள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கி போராட வேண்டும் அல்லது இந்த மக்களின் கோரிக்கையுடன் போராடும் வெவ்வேறு பிரிவுகளுடன் ஐக்கியப்பட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதை முன்னெடுக்கும் போது, ஒடுக்கும் வர்க்கம் சார்ந்த பிரிவுகளின் கோட்பாடுகள் முதல் நடைமுறை ஈறாக எதிர்த்து போராட வேண்டும். ஆனால் தேசியம் தனது நடைமுறையில் சுரண்டப்படும் வர்க்கங்களின் மேலான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறையை, ஆணாதிக்கத்தை அடிமைத்தனத்தை வாழ்வாக கொண்ட பெண்களின் கோரிக்கைகளை, அவர்களின் விடுதலைகளை புலிகள் நிராகரிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட இந்த பிரிவுகளை, அவர்களின் கோரிக்கைகளை கூட ஒடுக்கும் வர்க்கத்தின் நிலைக்கு இட்டுச் சென்று, ஒடுக்குவதையே புலிகளின் போராட்ட வரலாறு செய்து வந்தது, வருகின்றது. இதை நிலையை மாற்றியமைக்காத வரை, நடைமுறையில் அந்த மக்களையும் அது சார்ந்த கருத்துகளையும், போராட்டங்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளாக அங்கீகரித்து, நட்பையும் ஐக்கியத்தையும் கோராத வரை, ஒரு இயக்கத்தின் தலைவரின் உரை கூட நடைமுறைக்கு உதவாத வெற்றுக் கோசமாகிவிடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வரையறையை சர்வதேச எல்லைவரை விரித்துப் பார்க்க வேண்டும். முஸ்லீம், சிங்கள மக்கள் முதல் சர்வதேச மக்கள் என்ற விரிந்த தளத்தில் உலகு எங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமது சொந்த ஒடுக்குமுறை அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடத்தும் போராட்டத்துடன் நாம் கைகோத்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் பணியை, நடைமுறை ரீதியாக போராடி ஐக்கியத்தை நிறுவவேண்டும். இல்லாத வெற்று உரைகள், புலிகளுக்கும் மக்களுக்கும் எதையும் பெற்றுத் தரப்போவதில்லை.
. தமிழரின் தேசிய இனச்சிக்கலானது சமாதானம், போர் என்ற இரு முரண்பட்ட துருவங்களில் அரசியல் சக்திகளை ஈர்த்து வருகின்றது” என தேர்தல் பற்றிய நிலைப்பாட்டையும் புலிகள் வெளிப்படுத்த தவறவில்லை. இந்தத் தேர்தல் சமாதானம் அல்லது யுத்தம் என்ற எல்லைக்குள் நடக்கின்றது என்பதன் மூலம், சமாதானக் கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மறைமுகமாக தெரிவித்துள்ளனர். இந்தப் பகுப்பாய்வு என்பது நிலைமையை அதன் வரலாற்று வழியில் இனம் காணத் தவறி, தேர்தல் ஊடான சமாதானம் பற்றிய கற்பனைகளை விதைக்கின்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிரான, தமிழ் மற்றும் சிங்கள எதிர்க் கட்சிகளை மறைமுகமாக புலிகள் ஆதரிக்கின்றனர். அரசியல் ரீதியாக இது மாபெரும் அரசியல் தவறாகும். சந்திரிக்கா முதன் முதலில் ஆட்சி ஏறிய போது, இந்த சமாதானம் என்ற கோசமே
- சமர் - 30 602تستستستستت 2002 - اگ07ا- زویی CID

Page 10
எங்கும் எல்லா தரப்பிலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மோசமான யுத்த வெறியர்களாக மாறியது எப்படி? ஆளும் கட்சியாக இருக்கும் போது யுத்த வெறியர்களாகவும், எதிர்க் கட்சியாக உள்ள போது சமாதான வாதிகளாகவும் இருப்பது உலகளவில் ஜனநாயகம் செய்யும், ஒரு சுதந்திரமான ஒரு மோசடியாகும். மக்களை ஏமாற்றவும், பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும் மோசடியாகும். இது போன்றே தமிழ்க் கட்சிகளும் செய்கின்றன. அதிகாரமிழந்து இருக்கும் போது தேசியத்துக்கு ஆதவாகவும், அதிகாரத்தைப் பெறும் போது துரோகிகளாகவும் பவனிவருகின்றனர். இந்தத் தேர்தல் மற்றும் பாராளுமன்றம் என்பதே வாக்குகளை பெறவும், அற்ப சலுகைக்கு குண்டி கழுவி நக்கி வாழவும் உள்ள ஒரு சாக்கடையான ஒரு வழித் துவாரமாகும். இது பச்சை இனவாதத்தை மேலும் ஆழமான விபச்சாரமாக்கி தேசியமயமாக்கின்றது. இந்தச் சாக்கடையில் சமாதானத்துக்கான கூறுகளைக் கொண்டு ஒரு பிரிவு இயங்குகின்றது என்ற புலிகளின் மதிப்பீடு, அந்த சமாதானம் என்ன என்பதை வரையறுப்பதில்லை. தமிழ்க் கூட்டணியின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்று ஏகாதிபத்திய தலைமையிலான பேச்சு வார்த்தையும், யூ.என்.பியும் அதே உள்ளடக்கத்தில் நடத்தும் கூத்துகளில், தமிழ் சிங்கள தேசியத்தை எகாதிபத்தியத்திடமே விபச்சாரத்துக்கு விடுகின்றனர். இது பற்றி விரிவாக மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.
தேர்தல் என்பது சமாதானத்துக்கும் யுத்தத்துக்குமானது அல்ல. மாறாக ஜனநாயக தேர்தல் ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதலை விரிவாக்கும் மூலதனக் கொள்கையை, யார் எப்படி எதன் ஊடாக சிறப்பாக கையாள்வது என்ற அடிப்படை முரண்பாட்டை அடிப்படையாக கொண்டது. இங்கு எந்தத் தேர்தல் கட்சியும் இதைத் தாண்டி, இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆட்சிக்கு வராத வரையும், ஆட்சியை முண்டு கொடுக்காத வரையும் உலகமயமாதல் எதிர்ப்பு மற்றும் சமாதானம் என்ற கோசங்கள், உயிர் வாழ்தலுக்கான ஒரு பித்தலாட்ட நெம்பாக உள்ள சொல்லடுக்குகளே. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் தேசிய பொருளாதார கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட ஒரு ஐக்கியப்பட்ட நாட்டில் வாழ, பேச்சுவார்த்தை மற்றும் சமாதானம் என்று யாரும் முன்வைக்கவுமில்லை சொல்லவுமில்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதார எல்லைக்குள் சமாதானம் ஐக்கியம் என்று கூறுவதன் மூலம், தேசியத்தை அழிப்பதையே தேர்தல் தனது அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்கின்றது. இதில் ஒரு பகுதியை புலிகள் மறைமுகமாக முண்டு கொடுத்து ஆதரிப்பது என்பது, குரங்கு ஆப்பிழுத்த கதை தான் நிகழும்.
அடுத்து அவர் தனது உரையில் “இன்றைய உலக ஒழுங்கு மாறிவருகிறது. சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.” என்று கூறுவது, நிலைமைகளின் பின் வால் பிடித்து முன்வைப்பதாகும். தீர்க்கதரிசனமான தலைமை என்பது, இதை முன் கூட்டியே முன்வைப்பதும், அதை அடிப்படையாக கொண்டு போராட்டத்தை வழிநடத்துவமாகும். ஏகாதிபத்திய உலக ஒழுங்கு என்பது எப்போதோ ஆரம்பித்த ஒன்று. அதை அடிப்படையாக கொண்டு தேசியங்களையும், தேசங்களையும் விழுங்கி செரிப்பதே ஏகாதிபத்தியத்தின் அடிப்படை உள்ளடக்கமாகும். உலகமயமாதல் பொருளாதார விரிவாக்க கட்டமைப்பு வேகம் பெற்ற காலத்திலேயே, எமது தேசிய போராட்டமும் சமாந்தரமாக இருந்து வந்துள்ளது. இந்த உலகமயமாதல் எமது நாட்டை விழுங்கிச் செரிக்கின்ற சமகாலத்தில் எல்லாம், புலிகள் இது பற்றி ஒரு வார்த்தை தன்னும் பேசியதில்லை. ஆனால் அண்மையில் தனிமனித பயங்கரவாத வழியில் அமெரிக்கா மீது நடந்த எதிர் தாக்குதலைத் தொடர்ந்து, உலக ஆக்கிரமிப்பு ஒரு பாய்ச்சல் நிலையைக் கண்டுள்ளது. இந்த உலகமயமாதல் ஆக்கிரமிப்பு புலிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்ததைத் தொடர்ந்தே, அவசர அவசரமாக உலக ஒழுங்கு மாறி வருவதாகவும் சர்வதேச உறவுகள் மாறி வருவதாகவும் கூறுவது என்பது, அரசியல் ரீதியாக தவறானது. மாறாக அது முன் கூட்டியே இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்ததே, தற்போதுள்ள புதிய நிலைமையாகும். புலிகள் இதை புதிதான ஒன்றாக தவறாக விளக்கும் போது, ஏகாதிபத்தியம் பற்றிய தப்பெண்ணங்களையும் விதைத்து தமது சொந்த அரசியல் தவறுகளை மூடிமறைத்து விடுகின்றனர். இதை இந்த உரையும் கொண்டுள்ளது. ". சந்திரிக்காவும் அவரது வெளிவிவகார அமைச்சரான திரு. கதிர்காமரும் எமது இயக்கத்தையும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும் ፊዎLዐff - 30 தை-மாசி - 2002 C18)

பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டிச் சர்வதேச அரங்கில் தீவிர பரப்புரைப் போரைத் தொடுத்தனர். இதன் விளைவாக அமெரிக்காவும் பிரிட்டனும் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கனடாவும் எமது விடுதலை அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளன.” என்று புலிகளின் தலைவரின் விளக்கம் ஏகாதிபத்தியம் பற்றி அப்பாவித்தனமாக முன்வைப்பதாகும். சந்திரிக்காவின் சொல் கேட்டு ஏகாதிபத்தியங்கள் தடை செய்தது என்று புலிகள் கூறுவது கண்டனத்துக்குரியது. இந்த வாதம் சிரிப்புக்குரியது. இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. மாறாக ஏகாதிபத்திய சொல் கேட்டே சந்திரிக்காவும் சரி ஏன் உலகமே ஆடுகின்ற போது, அதை தவறாக புலிகள் விளக்குவது ஏகாதிபத்தியம் பற்றிய வலதுசாரித்தனக் கண்ணோட்டமே காரணமாகும். தேசிய பொருளாதாரத்துக்கு பதில் ஏகாதிபத்திய பொருளாதாரம் மீது புலிகள் கொண்டுள்ள மோகம் கூட, இதற்கு அடிப்படையாக உள்ளது. ஏகாதிபத்தியம் என்பது என்ன? உலகமயமாதல் என்பது என்ன? தேசம் கடந்த தேசிய வளங்களையும் உழைப்பையும் சூறையாடுவதே அதன் மையமான ஒரே குறிக்கோள். ஏகாதிபத்தியம் தனது பொருளாதார நலனுக்கு எதிரான அனைத்தையும், பயங்கரவாதமாக முத்திரை குத்தி ஈவிரக்கமின்றி ஒடுக்குவது இயல்பானது இயற்கையானது. இதற்கு சந்திரிக்கா அரசு வெளிச்சம் பிடித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை. புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அழிக்க முனைப்புப் பெற்று செயற்படும் நிலையில், புலிகள் ஏகாதிபத்தியங்களுக்கு தங்களையும் போராட்டத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரத்துடன் போராடுவதுடன், எகாதிபத்திய பொருளாதாரங்கள் மேல் கடுமையான தாக்குதலை நடத்துகின்றனர். அண்மையில் நேபாளம் மற்றும் ஆந்திராவில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக போராடும் அமைப்புகள், அமெரிக்க மூலதனம் சார்ந்த கொக்கோ கோலா தொழிற்சாலையையே குண்டு வைத்து தகர்த்தனர். தடை செய்யப்படாத இனத் தேசியத்தை முன்வைக்காத வர்க்க அமைப்புகள் சொந்தத் தேசிய பொருளாதாரம் சார்ந்து, அமெரிக்காவுக்கு எதிராக போராடும் போது, புலிகள் கெஞ்சுவது விசனத்துக்குரியது. அத்துடன் உலக ஆக்கிரமிப்பை இந்த உரை நியாயப்படுத்துவது வேதனையானதும் கண்டனத்துக்குரியதுமாகும். அதைப் பார்ப்போம்.
"பயங்கரவாத வன்முறைக்கு எதிராகப் போர்தொடுத்து நிற்கும் மேற்குலக நாடுகளின் ஆவேசத்தையும், அச்சங்களையும், நிர்ப்பந்தங்களையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையான பயங்கரவாதிகளை இனங்கண்டு தண்டிக்கும் நோக்குடன் சர்வதேச உலகம் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம்.” என்று உலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்தை அங்கீகரிப்பதும், மறுதளத்தில் புலிகளையும் புலிகளின் போராட்டத்தையும் அங்கீகரிக்க கோருவது சிறுபிள்ளைத் தனமானது. உலக பயங்கரவாதத்தை ஆணையில் வைத்தே, தேசிய பயங்கரவாதங்களை ஏகாதிபத்தியங்கள் உலகளவில் கட்டமைக்கின்றன. இதில் எதிர்த் தாக்குதல் நிகழும் போது பயங்கரவாதமாக சித்தரித்து அடக்கியொடுக்குவது தான் நிகழ்கின்றது. இது தான் அமெரிக்கா மீதான தாக்குதல் மற்றும் ஆப்கான் மேலான பயங்கரவாத ஆக்கிரமிப்பு. இது தொடர்பாக விரிவாக சென்ற சமரில் முன்வைக்கப்பட்டுள்ளது. நாளை ஏகாதிபத்தியம் புலிகளின் கடந்தகால மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியல் இட்டுக், காட்டியும் பயங்கரவாதமாக சித்தரித்து அடக்கியொடுக்கும் போது, புலிகள் போல் கருத்து சொல்லின் அது ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். எதிரியை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து உலகளவில் இனம் கண்டு கொள்ளவும், அவர்களை எதிரியாக இனம் கண்டு வெளிப்படையாக முன்வைத்து போராட வேண்டிய சர்வதேசிய வரலாற்று நிலைமைகளை புலிகள் புறக்கணிப்பது, எமது தேசியத்தை அழித்து ஒழிக்க முனைவதாகும்.
அடுத்து "பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுத்துள்ள போரில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசுகளும் அணிசேர்ந்து நிற்கின்றன. இனவாத ஒடுக்குமுறைக்கும், மனித உரிமைக்கும் புகழ்போன பல அடக்குமுறை அரசுகளும் இந்தச் சர்வதேசக் கூட்டணியில் இணைந்து நிற்கின்றன. அதாவது காவற்துறையினருடன் கொலைக்குற்றவாளிகள் கைகோர்த்து நிற்பது போல. நாம் இங்கு சிறீலங்கா அரசை மட்டும் குறிப்பிட விரும்புகின்றோம்.” என்று கூறுவதன் முலம் சர்வதேச எதிரிகளை இட்டு, தெளிவான பதிலுக்கு பதில் ஊசலாட்டமே அதன் அரசியலாகின்றது. அரசுகள்
- சமர் - 30 தை-மாசி - 2002

Page 11
பற்றி (ஒடுக்கும் பிரிவு பற்றி) முன்பு சொன்ன கருத்துக்கு மாறாக, இலங்கை அரசை மட்டும் கூறுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட உலக மக்கள் மற்றும் உண்மையான நண்பர்களை எட்டி உதைப்பதாகும். உலகளவில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து மக்களையும் ஆதரித்து, அவர்களின் ஆதரவை வென்று போராட வேண்டிய எமது தேசியம், அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியுடன் கூட்டுச் சேரும் ஒரு மானக்கேடான நிலைக்கு இந்த உரை தாழ்ந்து போகின்றது. மேற்கு நாடுகள் ஒரு ஏகாதிபத்தியம் என்பதையும், அவர்கள மறு காலனித்துவத்தை நோக்கிய உலகமயமாதலை தமது அரசியலாக ஆக்கிரமிப்பாக கொண்டுள்ளனர். இதற்கு மேற்கு நாடுகள் மனித உரிமை மீறலை ஜனநாயகமாகவும், அடக்குமுறையை சுதந்திரமாகவும் கொண்டு இயங்குகின்றன. இதை அங்கீகரிக்கவும் பாதுகாக்கவும் ஐ.நா ஒரு சர்வதேச விபச்சார மையமாக கொண்டு இயங்குகின்றது. இந்த நிலையில் புலிகள் இலங்கை அரசை மட்டும் குறித்துக் காட்டி மற்றையவற்றை பாதுகாப்பது என்பது, மற்றைய மக்களையிட்டு அக்கறையற்று குறுந்தேசிய இனக்கண்ணோட்டமாகும். இது சர்வதேச ஒடுக்கும் பிரிவுகளுக்கு கம்பளம் விரிப்பதாகும். இதுவே புலிகளின் தேசியத்தை ஏகாதிபத்தியம் பயங்கரவாதமாக முத்திரை குத்தி தனிமைப்படுத்தி, அழிக்க போதுமான பலத்தை வழங்கிவிடுகின்றது.
மறு தளத்தில் புலிகளின் “இந்த புதிய போக்குக் காரணமாக சர்வதேச அரங்கில் எமது சுதந்திர இயக்கத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுவருகின்றது” என்று சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிலை சார்ந்து கருத்தை முன்வைக்கின்றனர். இங்கு அவப்பெயர் யாரிடம் இருந்து ஏற்படுகின்றது என்று புலிகள் கவலைப்படுகின்றனர். பயங்கரவாத முத்திரை குத்தப்படும் ஏகாதிபத்திய அரசு நிலையை இட்டுத்தான் புலிகள் கவலைப்படுகின்றனர். ஏகாதிபத்திய மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள மக்கள் எமது நண்பர்கள் என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு, இந்த பயங்கரவாதம் என்ற முத்திரைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதை புலிகள் நிராகரிக்கின்றனர். மாறாக அந்த மக்களுக்கு எதிரான அரசுகள் புலிகளை பயங்கரவாதியாக முத்திரை குத்துவதையிட்டே கவலைப்படும் புலிகள், அந்த நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி அனுகுகின்றனர். மக்களின் எதிரியான ஒடுக்கும் அரசு பற்றி பூசிமொழுகும் புலிகளின் நாடகம், தம்மைத் தாம் கழுவில் ஏற்ற கடிவாளம் இடுகின்றனர். ஏகாதிபத்தியம் சொந்த மக்களுக்கு பயங்கரவாதம் என்று சொல்லி முத்திரை குத்தி ஆக்கிரமிக்கும் நடத்தைகளுக்கு, புலிகளின் மக்கள் விரோத செயல்களை அக்கம் பக்கமாக எடுத்து அடுக்கிவைக்கின்றனர். புலிகள் மக்களுக்கு எதிராக இழைத்த, இழைக்கின்ற பல மனித உரிமை மீறல்களை இட்டு மெளனத்துடன், சுயவிமர்சமின்றியும் அதையே அரசியல் ஆணையாக கொள்ளும் வரலாற்று தொடர்ச்சியில், ஏகாதிபத்திய முத்திரை குத்தலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் இவை ஒரு வலுமிக்க ஆயுதமாகின்றன. புலிகள் தம் கடந்த கால நிகழ்வுகளை சுயவிமர்சனம் செய்யவும், நிகழ் காலத்தை மாற்றி அமைக்கவும், எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களை அணிதிரட்டி போராட வேண்டிய வரலாற்று தர்மிகப் பொறுப்பை செய்யத் தவறுகின்ற நிலையில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இலங்கை மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தை அழிப்பதையும் எதிர்த்து, உலகளாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அந்த நாடுகளில் போராடும் போது, ஆக்கிரமிப்பாளின் நோக்கம் சர்வதேச சமூகத்தால் முறியடிக்கப்படும். இதை நோக்கி எமது போராட்டம் தன்னைத் தான் சுயவிமர்சனம் செய்து, மக்களின் உரிமைகளைச் சார்ந்து மாறிச் செல்லுமா?
ஒரு நிமிட அஞ்சலி
-சுகந்தன்.
செப்டம்பர் 11ம் திகதி மனித இனத்தின் வரலாற்றில் ஒரு காலக்கோட்டை கிழித்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் இருந்த உலகம் அதற்குப் பின்னர் சடுதியில் மாற்றமடைந்து தனது இயல்பிலிருந்து முற்றிலும் மாறிப்போய் விட்டது என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்கா 3000 பேர்களையும்
-சமர் - 30 ഞക്രഥfക്ഷി - 2002 QD

தனது சுரண்டல் பொருளாதாரத்தின் சின்னமாக உயர்ந்தெழுந்து நின்ற இரட்டைக் கோபுரத்தையும், உலக ஆதிக்க ஆக்கிரப்பு இராணுவத்தின் கட்டளை மையமாக அச்சுறுத்தி நின்ற பென்டகனையும் அழிவுக்குள்ளாக்கிய போது மட்டும் தான் உலகம்
DT3 (8uj6ī (pņuļuD ? உலகம் மாறவில்லை. அதை உங்களின் பின்னால் கைகட்டி நிற்கும் பொம்மையாக நீங்கள் தான் மாற்றி வைக்க விரும்புகிறீர்கள்.
இந்த செம்டம்பர் 11 ம் திகதியை துக் கதினமாக ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனப்படுத்தியுள்ளது. நோர்வேயில் செப்டம்பர் 14ம் திகதி பகல் 12 மணிக்கு 3 நிமிட அமைதி காக்கும்படி வேண்டப்பட்டது.
அப்படியாயின் நாளோ கிழமைகளோ வருடங்களோ போதாத அளவுக்கு பட்டியலிட்டு மெளனம் காக்க வேண்டிய சம்பவங்கள் செப்டம்பர் 11 ம் திகதியை தூசுக்கும் ஈடாகாத வகையில் தள்ளி வைக்கும் கோரமாக சம்பவங்களையும் மனித நாகரீகம் காணாத படுகொலைகளை அழித்தொழிப்புக்களை செய்த அமெரிக்க பேயாட்டங்களையும் எந்த துக்கதினமாக பிரகடனப்படுத்துவது ? இந்த உயிர்ப்பலிகளை யார் நினைவு கூர்வார் ? கட்டிடங்களை, கால்வாய்களை, உயிர் மூலத்துக்கான ஆதாரங்களை அத்துமீறி படையெடுத்து அழித்த வரலாற்று நினைவுகளுக்கு துக்க நாளேது ? பிரான்சின் பாசிஸ்ட் Jacques Chirac பசுபிக் தீவுகளை அணு ஆயுத பரிசோதனையில் அழித்தொழித்த போது ஒரு நிமிட மெளனம் ? இல்லை. பிரான்சில் முன்னாள் பாசிட்டும் பின்னாள் பிரான்ஸ் பொலிஸ் மா அதிபரும் 1963 இல் 300 மேற்பட்ட அல்ஜீரியரை படுகொலை செய்து, இரகசியமாக செயின் நதியின் அடியில் புதைத்தானே, அந்த மக்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி இல்லை. அல்ஜீரிய விடுதலையைக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கே இந்த படுகொலை தண்டனை. அண்மையில் இதை கண்டித்து பாரிஸ் மாநகரசபை தீர்மானம் கொண்டு வந்த போது, பாசிஸ்ட் Jacques Chirac வாரிசுகள் அதை பகிஸ்கரித்து கூக்குரல் இட்டனர். இதை தலைமை தாங்கிய பப்பன், 1940 இல் சில நுாறு யூதக் குழந்தைகளை படு கொலை செய்ய தலைமையேற்றவன். அவன் இன்று பதவி இழந்த நிலையில் தான், 1940 ஆண்டுக்குரிய குற்றத்துக்கு பல தடைகளை தாண்டி தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டான். அவனின் வயது காரணமாக விடுவிக்க வேண்டும் என்ற குரல்களும், குறித்த வயதுக்கு மேல் சிறையில் வைக்க முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்த விடுவிக்கும் ஒரு முயற்சி, ஜனநாயகத்தின் வக்கற்ற வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றது. இந் நிலையில் அண்மையில் அவன் சிறையில் இருந்தும் தப்பியோடினான். தப்பியோடிய போது லட்சக்கணக்கில் அவன் கையில் பணமும், தப்பியோட கெலிகொப்ரரையும் பயன்படுத்தும் அளவுக்கு சிறையில் சொகுசாக வாழ்கின்றான். இந்த பாசிட்டுக்கள் கொன்ற மக்களுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி? இல்லை நிறவெறிபிடித்த நாசிகள் தெருக்களில் வெளிநாட்டவரை வெட்டி வேட்டையாடும் போது ஒரு நிமிட மெளனம் ? இல்லை. பாலஸ்தீனம், கொலம்பியா, கியூபா, ஈராக், கோசவோ நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அமெரிக்கா அழித்தொழித்த உயிர்கள் ” மனிதாபிமானப் படையெடுப்புக்கள் ” என்று பெயர் கொண்டு பெறுமதி இழந்த போது, ஒரு நிமிட மெளனம் ? இல்லை. போதைவஸ்து பயிர்கள் அழிப்பு என்ற போர்வையில், பொருளாதார ஆதாரமாக விளங்கும் கொலம்பியாவின் காடுகளையும் மந்தைப் புல்வெளிகளையும், விளைச்சல் நிலங்களையும் கண் கொண்டு காணாமல் விமானத்தில் இருந்து நச்சுத் தூவி அழிக்கின்றபோது, அந்நிலத்தின் விளைச்சல் தன்மையை மலடாக்கும் இரசாயனத்தால் அழிந்தொழியும் விளைநிலம் அதையே ஒரேயொரு வாழ்வின் ஆதாரமாக கொண்டு வாழும் அப்பகுதி மக்களை பசியால் வாடித் துடித்து கொல்ல வைக்கின்ற போது, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய சமூக அமைப்புக்களும் இதற்கு ஆசி வழங்கி நிற்கும்போது, ஒரு நிமிட மெளனம் ? இல்லை. துருக்கி- இங்கு அமெரிக்காவின் நீண்ட கரமாக இயங்கும் NATO மிகப் பிரயத்தனத்தில் இரகசியமாக்க முனையும் துருக்கிய பாசிச அரசின் குர்டிஸ் மக்கள் மீதான
G2D
L– ታuoff - 30 தை-மாசி - 2002

Page 12
கொடுங்கோன்மை திட்டமிட்ட படுகொலைகள் அடக்குமுறைகள் எதிர்ப்பார் பேசுவோர் யாரும் இல்லை. இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு பலியாகும் பலஸ்தீனக் குழந்தைகள் உயிர் அற்பமானது. இஸ்ரேல் ஆக்கிரமித்து நின்று கொண்டே எதை நிபந்தனைாயாக்குகின்றதோ அதையே மீண்டும் வாந்தியெடுக்கும் அமெரிக்க மேற்குலக மேலாண்மைக் குணம். அடிமை உயிரல்லவா இவைகள் அற்ப பெறுமதியாகுமா ? அமெரிக்கா தலைமையில் , பிரிட்டனின் செருக்குடன் உலகமெங்கும் நடாத்தப்படும் அட்டூழிய படுகொலைகளுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்த விழைந்தால் நாட்கள் வருடங்கள் கூடப் போதாது. ஆனால் இந்த நியூயோர்க் கோபுரகட்டிட இடுபாடுகளுக்குள் மடிந்தழிந்த இழப்புக்கள் என்றுமே நடந்திராத பேரழிவாக பெறுமதி தரப்பட்டு உலகமெங்கும் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. ஏதற்கு அநுதாபம் தெரிவிக்க வேண்டும் எதற்கு தெரிவிக்கக் கூடாது என்பதற்கு கூட கிளின்ரனும் புஷ்சும் சொன்னால் தான் சரி. அவர்களது கருத்துக்கு மறுகருத்குள்ள யாரும் பயங்கரவாதிக்கு ஆதரவானவர்கள்.
அமெரிக்க அட்டூழியங்களையிட்டு மூச்சுவிடாமல் இருக்கும் இவ்வூடகங்கள் இது ஜனநாயகத்துக்கு பயங்கரவாதிகளால் விடப்பட்ட சவால் என்றும் ஜனநாயகத்தின் மேல் போர் தொடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமெரிக்க மேற்குலக அரசுகளின் அதிகார வர்க்கங்கள் கக்கும் வார்த்தைகளை மீண்டும் மெருகோடு திருப்பிக் கக்கி வைக்கிறார்கள். தாக்கியழிக்கும் இலக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களான உலக சந்தை மையம் உயர்தெழுந்து நின்று பறைசாற்றியதென்னவெனில் இது தான் உலகைச் சூறையாடிக் கொழுக்கும் பணக்கார வர்க்கத்தின் இறுமாப்புச் சின்னம் என்பதையே. இந்த இறுமாப்புச் சின்னம் உலகமெங்கும் வாழும் வறுமைமிக்க மக்களின் சீற்றத்துக்கு, ஆட்படும் என்பது புரிந்து கொள்ளப்படக்கூடியது. படைகளை ஏவும் இராணுவ அதிகார கட்டளை மையமாக விளங்கும் பென்ரகன் தாக்கப்படுவது என்பது ஜனநாயகம் தாக்கப்படுவதற்:கு ஈடானது என அவர்கள் சொல்வதில் தவறேதுமில்லை. ஏனெனில் ஒரு கொள்ளையிடும் கூட்டத்தின் உலகத்தின் பெரும்பாலான மக்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை ஏழைகளாக உழல விடும் ஐனநாயகத்தின் சின்னங்கள் தான் அவை. அவர்களது வளங்களை தனது ஆக்கிரப்புக்குள்ளாக்கி இலாபம் பெருக்குவதற்கு இடைஞசல் தரும் தடைகளை அகற்ற இராணுவ பலத்தை ஏவிவிட்டு சின்னாபின்னமாக்கும் ஜனநாயகத்தின் இருப்பிடம் தான் பென்ரகன். அவர்கள் பேசிக் கொள்வது பணக்காரச் சுரண்டலுக்கு உரிமை வழங்கும் ஜனநாயகம். ஜனநாயகம் உலகச் செல்வந்தர்களுக்கே உரித்தானது.
இந்த ஆத்திரம் நியாயமானது. உலகமெங்கணும் நாடுகளுக்குள் நுழைந்து அந்நாட்டுச் சுதேசிகளை அழித்து அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்தி கேவலப்படுத்தி செல்வங்களை கொள்ளைகொண்டது மட்டுமல்லாமல் காலனி நாடுகளாக அடிமை கொண்டு ஆண்டு வந்து அவர்களின் கலாச்சார பாரம்பரியங்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்ட வெள்ளை இனத்துக்கு, அதன் முகத்தில் கிடைத்த முஷ்டி இடிதான் இது. விதைத்த பயிரின் அறுவடைதான் இது. தேர்ந்தெடுக்கப்பட்ட முறை பயங்கரவாதமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, வேறு வழியின்றிய ஒரு செய்த வினைக்கான பதிலடி தான் இது என்பது அமெரிக்க மக்களால் கூட உணரப்படப் கூடியது.
இந்தப் பின்னணியில் விமானங்கள் மோதி நொருங்கி தீப்பிடித்து சாய்ந்து சிதறிக்கொண்டிருந்த உயர் மாடிக் கட்டிடத்திலிருந்து அவலச்சாவிலிருந்து தப்பிப் பிழைக்க துடிதுடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை தொலைக் காடசிகள் உலகமெங்கும் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த செப்டம்பர் 11 ம் திகதி எந்தக் காலக் கோட்டையும் புதிதாக கிழித்துவிடவில்லை.
ஒரு நிமிட அஞ்சலியல்ல ஒரு ஆயுள் போராட்டம் தான் இதற்கெல்லாம் பதிலாக
(ւpւգսկtb. - சமர் - 30 G2
தை-மாசி - 2002

ஏகாதிபத்திய பயங்கரவாதமே, அனைத்து பயங்கரவாதத்துக்குமான அச்சாணி
மூலதனம் உலகமயமாகின்ற இன்றைய வரலாற்றுப் போக்கின் உள்ளடக்கமே, மக்களின் வாழ்வியல் மேலான பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதத்தை எதிர்த்து மக்கள் போராட, இதன் மீதான எதிர் பயங்கரவாதம் அவசியமான நிபந்தனையாகின்றது. இந்தவகையில் பாட்டாளி வர்க்கம் மக்கள் முன்னெடுக்கும் பயங்கரவாதத்தின் உறுதிமிக்க பங்காளியாகவும், அதை தலைமையேற்று நடத்தும் முன்னணிப் படையுமாக, வர்க்க வரலாறு முழுக்க நீடிப்பது அதன் புரட்சிகர வர்க்க குணம்சமாகும்.
உலகைச் சூறையாட ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையிலான போட்டியுடன் ஆப்கான் மீது நடத்திய ஆக்கிரமிப்பு, மேலும் ஆழமான ஏகாதிபத்திய உட்பிளவை அகலமாக்கி வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தாக்குதலை தொடங்கவும், மற்றைய ஏகாதிபத்தியங்கள் பல்வேறு வழிகளில் ஆப்கானில் காலூன்றத் தயங்கவில்லை. அந்த மக்களின் சொந்த அவலங்கள் மேல், தமது சொந்த நலனை அடைவதை அடிப்படையாக கொண்டே ஏகாதிபத்தியங்கள் தலையீடுகின்றன. உலக மக்களை ஏமாற்றி, ஆப்கான் மக்களின் அவலத்தை புதிய வழியில் சூறையாடத் தொடங்கிவிட்டனர். ஆப்கான் தேசிய வளங்களையும், அவர்களின் உழைப்பை சூறையாட விரும்பும் ஏகாதிபத்திய மூலதனங்கள், எல்லை கடந்த வகையில் தேசிய நலன்களை அழித்து சூறையாடுவதில் போட்டி போடுகின்றன. இந்த போட்டிகள் ஆப்கானில் கைக் கூலிகளை உருவாக்குவதிலும், அந்த கைக் கூலிகளை உள் முரண்பாட்டில் இருந்தே தேர்ந்தெடுப்பதன் மூலம் புதிய மோதல்கள் தயார் செய்யப்படுகின்றன. அதிகாரப் போட்டிகளை தற்காலிகமாக மூட்டைகட்டி வைக்க கோரும் சர்வதேச நிலைமை, வலுக்கட்டாயமாக ஒரு மூட்டையாக்கியுள்ளனர். ஏகாதிபத்திய முரண்பாடும், உள் முரண்பாடுகளும் இணைந்து, இந்த மூட்டையை சிதறடிக்கும் அளவுக்கு வீங்கிப் போய் கிடக்கின்றது.
40 000 உளவுத் தகவல்களை ஆதாரமாக கொண்டு 279 540 கோடி ரூபா (இலங்கை) செலவில், அமெரிக்க தன்னிச்சையாக பில்லாடனை அழிக்கத் தொடங்கிய யுத்தம், உலகளாவிய அனைத்து நாடுகளையும் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட வைத்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களையடையத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்புக்கு தேவைப்பட்ட பணத்தை, உலக வங்கி, ஐரோப்பிய வங்கி, இஸ்லாமிய வங்கி ஊடாக அறுவடை செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகளாவிய மக்களின் அற்ப சேமிப்புகளை எல்லாம் கொள்ளையிட்டு, அந்த மக்களின் உழைப்பை சூறையாடியும், தேசிய வளங்களை வரைமுறையற்ற வகையில் கற்பழித்து வரும் இந்த வங்கிகளே, இந்த ஆக்கிரமிப்புக்கான பணத்தையும் வழங்குகின்றது. ஆப்கான் மக்களின் உழைப்பு, அவர்களின் தேசிய வளத்தை வரைமுறையற்ற வகையில் கற்பழித்து சூறையாடவும், அயல் நாடுகளின் எண்ணை வயல்களை கொள்ளையிடவும் இந்த ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியத்துக்கு அவசியமான நிபந்தனையாக இருந்தது.
முன் கூட்டியே தயாராக இருந்த இந்த ஆக்கிரமிப்புக்கு தேவைப்பட்ட ஒரு காரணத்தை, பில்லாடன் என்ற அடிப்படை மதவாதியின் தனிமனித பயங்கரவாத நடவடிக்கையே துணை போனது. அமெரிக்க இராணுவ தலைமையகம் மற்றும் அமெரிக்க இதயமான பொருளாதார கோபுரங்கள் மேல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்பை நியாப்படுத்தி நடத்த ஒரு நெம்பாகியது. ஐ.நா ஊடான ஆக்கிரமிப்பை அமெரிக்கா அல்லாத ஏகாதிபத்தியம் முன் மொழிந்த நிலையிலும், அதை நிராகரித்த அமெரிக்க தனியான ஆக்கிரமிப்பையே முன் வைத்து தொடங்கியது. இதற்கு துணை நிற்க மற்றைய ஏகாதிபத்தியத்திடம் அமெரிக்க கோரிய போதும், அதை நிராகரித்த ஏகாதிபத்தியங்கள் தனித் தனியாகவே அவை ஒவ்வொன்றும் ஆக்கிரமிப்பை திட்டமிட்டன.
L– Juoff • 30 தை-மாசி - 2002 G23)-

Page 13
ஐ.நா ஊடான ஆக்கிரமிப்பு ஆப்கானிலும் அயல் நாடுகளிலும் ஏகாதிபத்திய நலன்களை தமக்கிடையில் பங்கிடமுடியும் என்று கருதியே அதை அமெரிக்கா அல்லாத ஏகாதிபத்தியங்கள் கோரின. இதற்கு மாறாக அமெரிக்கவோ நேரடி ஆக்கிரமிப்புக்கு ஊடாக தனது நலனை மட்டும் அடையக் கோருவதை தனது நோக்கமாக கொண்டிருந்தது.
இந்த ஏகாதிபத்திய முரண்பாட்டில் அமெரிக்கா படை தனது ஆக்கிரமிப்பை தொடங்க முன்பே, ருசியா முந்திக் கொண்டது. வடக்கு கூட்டணிக்கு 182 டாங்கிகளையும் (tank), 36 கெலிகளையும், 50 ஏவுகனைகளையும் அதற்கான செலுத்திகளையும், 10000 ஏ.கே ரக துப்பாக்கிகளையும், 150 தொன் மற்றைய ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளையும் முதற் கட்டமாக வழங்கியது. இதன் மூலம் அமெரிக்கா நலன்கள் மேல் பாரிய அடியை ருசியா ஏகாதிபத்தியம் வழங்கியது. இது போன்ற உதவிகளை பல்வேறு குழுக்களுக்கு ஈரான் முதல் ஐரோப்பிய நாடுகளும் வழங்கின. ஐரோப்பிய படைகளும், பிரிட்டிஸ் படைகளும் எல்லை யோரங்கள் முதல் உட்பகுதிவரை தன்னிச்சையாக இறக்கப்பட்டன. அனைத்தும் மனிதபிமான உதவி என்ற பெயரில், உலகத்தின் முன் சத்தியம் செய்தனர். ருசியா படை தலைநகரில் தீடிரென இறங்கி இராணுவ முகாம் ஒன்றை அமைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. காபூலுகான முதல் உயர் மட்ட மூன்று அமைச்சுகளின் விஜத்தை ருசியா நடத்தியது. ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையில் போட்டியிட்டபடி, ஆப்கானை தனது இராணுவ பொருளாதார செல்வாக்கு மண்டலமாக கொண்டு வரும் தன்னிச்சையான ஆக்கிரமிப்புகளின் தொடர்ச்சியில், ஆழமான முரண்பாடுகள் வெடிப்பதை தடுத்து நிறுத்தவே ஐ.நா தலையீடு தொடங்குகின்றது. ஐ.நாவுக்கு ஊடான கூட்டு ஆக்கிரமிப்பை மறுத்த அமெரிக்கவும், அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பை நடத்த மேற்கு மற்றும் ருசியாவும் முயன்று தோற்ற நிலையில், தன்னிச்சையான படையிறக்கங்களை நடத்தினர். இந்த ஏகாதிபத்திய முரண்பாட்டின் தொடர்ச்சியில் தான், ஐ.நா கொண்டு வரப்படுகின்றது. தத்தம் நலன்களை தக்க வைத்தபடி, இந்த ஆக்கிரப்பின் செலவுகளை ஈடுகட்டவும், உலக மக்களை ஏமாற்றவும், ஐ.நா ஒரு விபச்சார தரகனாக களமிறங்கியுள்ளது. சர்வதேச அமைதிகாக்கும் படை என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளனை ஒருங்கிணைக்கும் ஐ.நா., ஏகாதிபத்திய நலன்களை தக்க வைப்பதை நிபந்தனையாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. அதன் அடிப்படையில் தான் சர்வதேச அமைதிப்படை ஆக்கிரமிப்பின் மேல் நிறுவுகின்றது.
பில்லாடனை பிணமாக்குவது அல்லது உயிருடன் பிடித்தல் என்று கூறியபடி அமெரிக்கா தொடங்கிய ஆக்கிரமிப்பு யுத்தம், மேலும் ஆழமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பில்லாடனை உயிருடன் பிடிக்கவோ, பிணமாக மீட்கவும் முடியவில்லை. அதே நேரம் ஆப்கானை தனது முழுமையான செல்வாக்கு மண்டலமாக கொண்டு வரவும் முடியவில்லை. ருசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ஆதாரிக்கப்பட்டு ஆயுதபாணியக்கப்பட்ட கைக்கூலிப் படையான வடக்கு கூட்டணியின் முன்னேற்றம், அமெரிக்காவின் முழுமையான நலன்களை சிதறடித்துள்ளது. தலைநகரான காபூலுக்குள் வடக்கு கூட்டணி உட்புகக் கூடாது என்ற எச்சரிக்கையை மீறி, வடக்கு கூட்டணி காபூலைக் கைப்பற்றியது. ஏகாதிபத்திய மோதல்கள் அப்பட்டமாக தெருவுக்கு வந்த நிலையில், அமெரிக்க உள் நாட்டு மோதலை துரிதப்படுத்தும் புதிய செயல்களிகளில் வலிந்து செயற்படுகின்றது. ஆப்பகானில் தலிபான் மற்றும் அல்காயிதா இராணுவம் சிதறிக்கப்பட்ட நிலையில், வடக்கு கூட்டணி மற்றும் உள்ளுர் குழுக்களும் ஆப்கானை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். ஆனால் அமெரிக்கக் குண்டு வீச்சை தாலிபான்கள் அல்லது அல்காயிதா மேலாதாக கூறிக் கொண்டு, மக்கள் மேல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலை கூட கால இடை வெளியில் நடத்தி, கொத்து கொத்தாக மக்களை கொல்லுகின்றனர். இதன் மூலம் ஈராக்கில் விட்டுவிட்டு நடத்தும் தாக்குதல் போன்று ஆப்கான் மீதும் தாக்குதலை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம், தொடர்ச்சியாக ஏகாதிபத்திய முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட ஆக்கிரப்புக்குரிய சூழலை தக்கவைத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியில் புதிய உலக நெருக்கடிகள், ஆசியாவை சுற்றி அகலமாக வித்திடப்படுகின்றது. இந்தியா பாகிஸ்தான் யுத்த நிலை, இலங்கையில் இனப்பிரச்சனை மேலான தீர்வு ஊடான தலையீடு, ஈராக் மற்றும் ஆப்கான் என்று விரிந்த தளத்தில், ஏகாதிபத்திய மோதல்களை அடிப்படையாக கொண்ட நெருக்கடிகள்
L-சமர் - 30 தை-மாசி - 2002 QD—

ஆசியாவில் குவிய வைத்துள்ளது.
உலகளாவிய ஏகாதிபத்திய மோதல்களும், உள்நாட்டில் அதற்கெதிரான போராட்டமும் கூட உலகளாவிய நிகழ்ச்சிகளாகிவிட்டன. இதன் தொடர்ச்சியல் தனிமனித பயங்கரவாத வலதுசாரி குழுக்கள் தொடங்கி மக்கள் திரளமைப்பைக் கொண்ட வர்க்கப் போராட்டம் வரை உலகளாவிய போராட்ட நிகழ்ச்சித் திட்டமாகிவிட்டது. இந்த நெருக்கடியில் மூலதனம் ஏகாதிபத்தியங்களையும் அதன் கைக் கூலி அரசுககளையும் ஆதாரமாக கொண்டு, சொந்த மக்களை அடக்கியாளவும் மூலதனத்தை உலகமயமாக்க கோருவதுடன், அதை நிபந்தனையாகவும் விதிக்கின்றது. இதன் தொடர்ச்சியில் உலகெங்கும் பயங்கரவாதக் கொடூர சட்டங்களை, மக்களுக்கு எதிராக ஜனநாயக பராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமாக்கியுள்ளனர், சட்டமாக்கின்றனர். ஜனநாயக அரசுகள் ஜனநாயகம் என்ற சுரண்டும் வர்க்கம் சார்ந்த சட்ட எல்லைக்குள், தொடர்ந்து சுரண்டவும் தேசிய வளங்களை சூறையாடவும் அதை தக்க வைக்கவும் முடியாத நிலையில், பயங்கரவாத சட்டத்தை ஆதாரமாக கொண்டே மக்களை அடக்கியாள தொடங்கிவிட்டன. இங்கு ஒரு மனிதனுக்கு சுரண்டல் அமைப்பின் எல்லைக்குள் பெற்றிருந்த ஜனநாயக உரிமையை வழங்க மறுப்பதே, பயங்கரவாத சட்டத்தின் அடிப்படையும் உள்ளடக்கமுமாகும். அதாவது ஒரு மனிதன் தனது உழைப்புக்கு சொந்தம் கொண்டாடடும் உரிமைக்காக போராடடும் உரிமையையும், தனது உழைப்பின் ஆதாரமான தேசிய வளத்தை பாதுகாக்க போராடும் உரிமையை மறுப்பமே பயங்கரவாத சட்டத்தின் மையமான குறிக்கோலாகும். இதன் அடிப்படையில் ஒரு மனிதன் தான் எழுத, பேச, சிந்திக்க, அமைப்பாக இணைய, அதை அடிப்படையாக கொண்டு போராடும் உரிமையை நசுக்குவதே, இந்த பங்கரவாதச் சட்டத்தின் அடிப்படையான நோக்கமும் குறிக்கோலுமாகும். இந்த சட்டமூலம், வரைமுறையற்ற வகையில் ஒரு மனிதனை சிறையில் கேட்பாரின் அடைக்கவும், சித்திரவதை செய்யவும், அவனின் சிந்திக்கும் சிந்தனை ஆற்றலை அழிக்கவுமே, பயங்கரவாதச் சட்டம் இந்த சுரண்டும் ஜனநாயக அரசுகளுக்கு அவசியமாக நிபந்தனையாகவும் இருக்கின்றது. ஆதாரங்கள், சாட்சிகள் மேல் நீதி விசாரணையையே இந்த ஜனநாயக அமைப்புக்குள் கோரும் உரிமையை, இந்த பயங்கரவாத சட்டங்கள் தனி மனிதனுக்கும், அவனைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் நேரடியாக மறுக்கின்றது. இதன் மூலம் சமூகத்தின் மேல் நேரடியான அடக்குமுறையை ஜனநாயகம் கையாளுகின்றது. இராணுவச் சட்டங்கள் மற்றும் பயங்கரவாதச் சட்டங்கள் இந்த உலகமயமாதலை விரிவாக்க அடைப்படையாகவும் நிபந்தனையாகவும், ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கைக் கூலியரசுகளுக்கும் அவசியமாகிவிட்டது. அமெரிக்க, பிரிட்டன், கனடா, இந்தியா. முதல் ஆர்ஜென்ரீனா வரையிலான உலகெங்கும் இந்த அவசரகாலச் சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்கள் மட்டுமே, அந்த மக்களை அடக்கி ஆளவும் அடிபணிய வைக்கும் ஒரு நவீன ஆயுதமாகிவிட்டது. பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்களை அடக்கியாள்வதே உலகின் புதிய வகையான ஜனநாயகமாக, சுதந்திரமாக மாற்றப்படுகின்றது.
எஞ்சியுள்ள சொந்த தேசிய எல்லைக்குள் இந்த ஜனநாயக விரோத சட்டங்களை ஆழமான வகையில் வக்கிரமாக கையாளப்படுகின்றது. அகதி, மதம், இனம், நிறம், பால், சாதி, வர்க்கம் என்று முன்னிலைக்கு வரும் முதன்மை சமூக முரண்பாடுகள் மேல், வரைமுறையற்ற கற்பழிப்பை இந்த பயங்கரவாதச் சட்டம் ஜனநாயகமாக்கின்றது. மக்களை அகதி, மதம், இனம், பால், நிறம், சாதி, வர்க்கமாக பிளந்து, அந்த பிளவை நியாப்படுத்தும் வகையில், இந்த பயங்கரவாதச் சட்டம் செயற்படுகின்றது. அப்பாவி மக்கள் முதல் குறிப்பான நபர்கள் வரை பல பத்து என்று தொடங்கி ஆயிரக்கணக்கில் சிறைகளில் தள்ளி சித்திரவதையை இந்த சுரண்டல் அமைப்பு ஜனநாயகமாக்கின்றது. இந்தியாவில் தடா என்ற பயங்கரவாதச் சட்டம் சீக்கிய - காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க என்ற பெயரில், இரண்டு வருட ஆயுளுடன் அழுலுக்கு வந்தது. ஆனால் 1985 முதல் 1994 வரையிலான 9 வருடமாக ஆட்டம் போட்ட இந்த வக்கிர ஜனநாயகம், இந்தியா முழுக்க வரைமுறையற்ற கைதையும் சித்திரவதையையும் நடத்தியது. மொத்தமாக ஒன்பது வருடத்தில் 76 000 பேரை இதன் கீழ் சித்திரவதை செய்து சிறையில் அடைத்தனர். இதில் எந்த விதமான குற்றச் சாட்டுமின்றி 25 சதவீதம் பேரை நீண்ட காலத்தின் பின் விடுவித்தனர். 35 சதவீதமான கைதுக்கே வழக்குகள் நடத்தி
- சமர் - 30 தை-மாசி - 2002 GS)-

Page 14
முடிக்கப்பட்டன. இதில் 95 சதவீதம் குற்றம் நிரூபிக்கப்படமால் விடுவிக்கப்பட்டனர். ஒரு சதவீதத்தினருக்கு குறைவாகவே குற்றம் நிருபிக்கப்பட்டது. 1994 தடா நீக்கப்பட்ட பின்பான 1997 இன் இறுதியில் கைதானோர் 4528 பேர். இதில் 6 சதவீதம் பேர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 5 சதவீதம் பேருக்கு குற்ற அறிக்கை தாக்குதல் வெய்யப்பட்டது. 89 சதவீதம் பேர் எந்த வழக்குமின்றி சிறையில் அடைத்து சித்திரவதை செய்கின்றனர். அதே நேரம் தடா சட்டத்தின் கீழ் 6 709 பேர் சிறைகளில் அடைத்து வதைத்தனர். இவர்களில் 6 சதவீத வழக்கே விசாரிக்கப்பட்டது. இவற்றில் 65 சதவீத வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்படமால் விடுவிக்கப்பட்டனர். 2.5 வீதம் மட்டுமே குற்றம் நிருபிக்கபட்டது. 2000ம் ஆண்டு மாசி வரையில் காசுமீர் மாநிலத்தில் தடாவின் கீழ் 20000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் எந்த ஒரு வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஒரு பயங்கரவாதச் சட்டத்தின் வெட்டமுகத் தோற்றம் இதுதான். இந்த உலகளாவிய வகையில் இதன் பொதுத் தன்மை ஒன்றேயாகும். புதிய பொடாவும் இதைத் தாண்டி செயற்படுவதில்லை. மக்களின் உணர்வு பூர்வமான சிந்தனைகளை மழுங்கடிக்கவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை நலமடிக்கவுமே, இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகாரத்தில் உள்ள சுரண்டும் வர்க்க சுதந்திரமே ஜனநாயகம் என்பதை, சுரண்டும் வாக்கத்துக்கு ஏற்படும் நெருக்கடிகளின் போது தெளிவுபடவே பயங்கரவாதச் சட்டம் மூலம் நிறுவி விடுகின்றனர்.
இன்று உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய விரிவாக்க நலன்களை உலகமயமாக்கும் ஜனநாயகத்தை தக்கவைக்க, உலகளவில் பயங்கரவாதச் சட்டம் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளப்படுகின்றது. இதை உதிரியான தனிநபர் பயங்கரவாத தாக்குதல்களின் போது அல்லது மக்கள்திரள் பயங்காரவாத போராட்டங்களின் போது அமுல் செய்யப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க இராணுவ தலைமையகம் மற்றும் மூலதன கோபுரங்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் பயங்கரவாதச் சட்டம் அழுலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் சந்தேகத்தின் பெயரில் 2000 மேற்பட்டோரை சிறையில் தள்ளியுள்ளனர். இவர்கள் வெளியாருடன் தொடர்பு கொள்ள முடியாத, ஜனநாயக இருட்டில் சித்திரவதை செய்து வதைத்து ஒப்புதல் வாக்கு மூலங்கள் பெறப்படுகின்றன. பல வருட சிறை முதல் ஆயுள் தண்டனை மரண தண்டனை என்று அமெரிக்க ஜனநாயக சுதந்திரம், வக்கரித்து கிடக்கின்றது. வெளி நாட்டவர்கள் வரைமுறையற்ற வகையில் கைது விசாரணை என்று அவமானப்படுத்தப்படுவதுடன், சந்தேக கண் கொண்டு நோக்கும் அமெரிக்க கொலிவூட் கலாச்சாரம் பண்படாக மாறிவிட்டது. இந்த வக்கிரத்தை புரிந்து கொள்ள இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் மகனும், எதிர் காலத்தில் ஏகாதிபத்திய இந்தியா கைக் கூலியாக செயற்பட முனையும் குடும்ப வாரிசையும் கூட, 6 மணி நேரம் சந்தேகத்தின் பெயரில் அமெரிக்க ஜனநாயக பாசிசம் கைது செய்து வைத்திருந்தது. சாதரண மக்களின் கதியை நாம் இதனுடன், ஒப்பிட்டே தெளிவாக புரிந்து கொள்ள முடியும். “அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எப்போதும் குறுதி படிந்துள்ளது” என்ற எழுதிய விமர்சகர் ஒருவர் எழுதினர். அதை கனடா ஜனநாயக பராளுமன்ற பிரதிநிதிகள், அமெரிக்க எதிர்ப்புவாதி என்று முத்திரை குத்தி கண்டனம் செய்தனர். நான் "அமெரிக்காவை வெறுக்கின்றேன்” (“I hate America") என்று கூறியவருக்கு 60 நாள் சிறைத் தண்டனையை அண்மையில் கனடா ஜனநாயகம் வழங்கியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ச் புஸ் “நீங்கள் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக யோசித்த பிற்பாடே சொல்லுங்கள். இல்லையேல் சிக்கல்கள் ஏற்படலாம்” என்று அமெரிக்க ஜனநாயகத்தின் பெயரில் உலகையே மிரட்டுகின்றார். தனிமனிதனின் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதை உலகமயமாக்கின்றார்.
இதன் அப்பட்டமான வக்கிரத்தை இயல்பான வடிவமாக்கின்றன இன்றைய செய்தி அமைப்புகள். டைம்ஸ் பத்திரிகை இந்த தாக்குதலை "மேற்கத்திய நாகரிகம் மற்றும் மதிப்புகளின் மீதான வெறுப்பு” என்று வருணித்து யுத்தவெறியை பிரகடணம் செய்கின்றது. "தொலைக் காட்சிகள் சண்டைக்கு போவதை காட்டுகின்றார்களே, சண்டை நடப்பதாக கூறுகின்றார்களே, ஆனால் சண்டையின் விளைவை காட்டவில்லையே” என்று எனது மகள் ஒரு கேள்வியாக என்னிடம் கேட்டாள். இந்த கேள்வி ஆழமான அறிவியிலடிப்படையில் கேட்காது. தற்செயலாகவே என்னிடம் எழுப்பப்பட்டது. ஆனால்
L-சமர் - 30 ങ്ങുകൃ-lOffി - 2002

இந்த கேள்வி விட்டுச் செல்லும் சமுதாயம் பற்றிய பார்வை ஆழமானவை. யுத்த விளைவையும் அதன் பதிப்பையும், இன்றைய நவீன செய்தியமைப்பு மக்களுக்கு மறுப்பதை திட்டவட்டமாக இந்தக் கேள்வி நிர்வணமாக்கின்றது. யுத்த விளைவுகள் மூலதனத்தின் நகாரிக காடடுமிரண்டித் தனத்ததை, அதன் செய்திப் L(3D அம்பலாப்படுத்திவிடும் என்ற அளவுக்கு யுத்த கொடுரங்கள் வக்கரித்துவிடுகின்றது. செப் 11ம் திகதி தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க சார்பு பத்திரிகை முதல் அமெரிக்காவுக்கு எதிரான முற்போக்கு பத்திரிகை வரை கோபுரத்தை மையப்படுத்தி, அதை மட்டுமே செய்தியாக்கின்றனர். உலக ஆக்கிரமிப்பு தலமையகமான பென்டகன் தாக்குதல் பற்றிய செய்தியை திட்டமிட்டே மறைப்பதில் தொடங்கி உலகமயமாதலுக்கான அமெரிக்கா செய்தியை மீள அனைவரும் வாந்தியாக்கின்றனர். அமெரிக்கா ஆக்கிரமிப்பின் நேரடி விளைவு மற்றும் அதன் விளைவுகளை பற்றிய எந்த செய்தியையும் இந்த செய்தியமைப்பு செய்தியாக்குவதை ஜனநாயக விரோதமாக கருதுகின்றனர். ஆக்கிரமிப்புக்கு எதிரான மேற்கு போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் மிகவும் கடினமான நிலையிலும் நாள் தோறும் இடிபாடுகளின் அருகிலேயே நடக்கும் சிறு பிரச்சார பணியிலான எதிர்ப்பு போராட்டங்களை மூடிமறைத்தனர், மூடிமறைக்கின்றனர். அதேநேரம் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான பிதற்றல்களை முன்னிலைப்படுத்தி, ஆக்கிரப்பை நியாப்படுத்தினர். போபுரங்களின் அடியில் 6000 மேற்பட்ட மக்கள் இறந்து போனதாக கொலிவூட் பாணியில் சொல்லி நடத்திய ஆக்கிரப்பு நியாயவாத கதையும் அண்மையில் பொய்யாகி போனதுடன், 3000 உட்பட்ட தொகையினரே இதில் சிக்கியதாக அண்மைய செய்திகள் வெளியாகியுள்ளது. மூலதனத்தின் வாரிசுகளான மேட்டுக்குடி பன்றிகளின் வக்கிரத்தை நியாப்படுத்தும் வாதங்களையே, இந்த செய்தியமைப்புகள் தமது சுதந்திர செய்தியாக்கினர். இந்த சுதந்திர ஜனநாயகத்தை புரிந்த கொள்ள, இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பன்நாட்டு தொலைக்காட்சியான “சானல் வீ” பம்பாய் வீதியில் பெண்களுக்கு ஒரு போட்டியாக, யார் நடனம் ஆடியபடி தமது உடுப்பை களைந்த அதிகமான அங்கத்தை காட்டுகிறர்களோ, அவர்களுக்கு சுதந்திரத்தின் பெயரில் ஜனநாயகத்தின் பெயரில் பரிசு என பிரகடணம் செய்தது. அதை பம்பாய் வீதியில் இருந்தே தொலைக் காட்சியூடாக வீட்டுக்குள் நேரடியாக ஒளிபரப்பியது. இதன் மூலம் மேட்டுக்குடியின் ஜனநாயகமும் சுதந்திரமும் பீற்றபட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடத் தொடங்கவே, இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த “சானல் வீ” தொலைகாட்சி தயாரிப்பளார்கள் "உங்களுக்கு ஆபாசமாகத் தெரிவது, எங்களுக்குப் பண்பாடாகத் தெரிகின்றது” என்று கூறி, தொலைகாட்சியின் நோக்கத்தை தெளிவுபடவே பிரகடணம் செய்தனர். இதை போன்றே தலிபான் மத அடிப்படைவாத காட்டுமிரண்டிகளிடம் இருந்து ஆப்கான் மக்களை புதிய விபச்சார தரகர்களின் உதவியுடன் அடிமைப்படுத்திய போது, ஆப்கான் மக்கள் ஆபாச படங்களையும், இந்திய மற்றம் அரபு பெண்களின் அங்கங்களை குலுக்கும் நடனத்தை சினிமாவாக பார்த்து ரசிப்பதாக இந்த செய்தியமைப்புகள் செய்தியாக்கின. இதைப் போன்றே கம்யூனிசத்தில் இருந்து மேற்கின் சூறையாடலுக்கு திறந்துவிட்ட ஜனநாயகத்தில் அந்த மக்களும் அனுபவிப்பதாக செய்தியாக்கினர். இதைத் தான் ஜனநாயக தெரிவாகவும், தனிமனித சுதந்திரமாகவும் செய்தியமைப்புகள் கோடிட்டு காட்டின. உண்மையில் செய்தியமைப்புகள் இதை அந்த மக்களுக்கு வக்கிரமான ஒரு பண்பாடாக எடுத்துச் செல்லுகின்றன. இன்றைய கொலிவூட் வக்கிரத்தையே உலகமயமாக்கின்றனர். இதன் மூலம் மக்களின் உணர்வுகளை வக்கரிக்க பண்ணி நலமடிக்கும் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பண்பாடக்கின்றனர். இதை தவிர மக்கள் எதையும் இந்த உலகமயமாதல் ஆக்கிரமிப்பில் இருந்து, இலவசமாக பெறுவதில்லை. இந்த செய்தியமைப்புகள் தான் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் பயங்கரவாதம் பற்றி ஊளையிட்டு, மக்கள் மேல் பயங்கரவாதச் சட்டத்தை இறுக்கின்றது. மக்களின் அவலங்கள், அவர்களின் வாழ்க்கையின் துயரங்கள் எதையும் இந்த செய்தியமைப்பு ஒருக்காலும் மக்களுக்கு முன்வைக்கப் போவதில்லை. மூலதனம் வீறுநடைபோடும் வக்கிரத்தை திசை திருப்பி, மக்களின் சிந்தனைத் தளத்தை ஆபாசமான நுகர்வுத்தளத்தில அனைத்தையும் கட்டமைப்பதே குறிப்பான நோக்கமாக உள்ளது. யுத்த ஆதாரவுடன் கூடிய யுத்த வெறியை பிரச்சாரம் செய்யும் செய்தியமைப்புகள், அதனால் மக்கள் படும் துன்பத்தை இட்டு ஒரு துளி தன்னும் கவலைப்படுவதில்லை.
- சமர் - 30 தை-மாசி - 2002 G2)-

Page 15
அடுத்த நேர உணவுக்கு கையேந்தும் மக்கள் வீதியில் யதார்த்தமாக நிர்வாணமாக இருக்க, மூலதனத்தின் தயவில் ஆடம்பரமான வாழ்கையை நடத்தும் நிகழ்ச்சி தயாரிப்படாளர்களின் செய்தியமைப்புகள் எப்படி குறைந்தபட்சம் நடுநிலையக இருக்க முடியும்? செய்தியமைப்புகள் மூலதனத்தின் எடுபிடியாக அதை விரிவாக்கும் ஒரு கருவியாக, மக்களின் உணர்வுகளை மழுங்கு அடைக்கும் எதிரிகளின் ஒரு ஆயுதமாகவே உள்ளது. மக்கள் விரோதத்தை நியாப்படுத்தும் போக்கில் அமெரிக்க தொலைக்காட்சிகள், எதிர்தரப்பு மத அடிப்படைவாதிகளின் பிதற்றல்களை ஒளிபரப்பாக்கும் போது, அவை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் நோக்கத்தை கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. இதனால் அமெரிக்கா தனது நாட்டின் செய்தியமைப்பை மிரட்டத் தயங்கவில்லை. அதே நேரம் கட்டார் நாட்டு தொலைக்காட்சியை அமெரிக்கா மிரட்டவும் தயங்கவில்லை. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் கட்டார் நாட்டு அதிபரிடம் “உங்கள் நாட்டு தொலைக் காட்சி நிறுவனமாகிய அல்சிசீராவை அடக்கி வையுங்கள்” என்று எச்சரிக்கின்றார். தனிநபர் பயங்கரவாத அடிப்படைவாதிகளின் பிதற்றல்களே, ஏகாதிபத்திய காட்டுமிரண்டித்தன ஆக்கிரமிப்பை ஆட்டம் காண வைக்கின்றது எனின், மக்கள் திரள் அமைப்புகளின் செய்திகள் இந்த செய்தி அமைப்புக்குள் வரின், ஏகாதிபத்தியம் நொருங்கி தவுடுபொடியாகிவிடும்.
இந்த செய்தியமைப்புகளின் எல்லையற்ற ஜனநாயக காவலர்களின் தலைவர் ஜோர்ச் புவர் ‘பின் லேடன் குற்றவாளியா இல்லையா என்று விசாரணை நடத்த வேண்டியதேயில்லை. பேச்சு வார்த்தைக் கே இடமில்லை என்ற ஏற்கனவே சொல்லியாயிற்று. எனவே, அவர்கள் கூறுவதை நிராகரிக்கிறேன்.” என்று கூறியபடி, மக்கள் மேல் குண்டு வீசியே ஆப்கானை துாசு மண்டலமாக்ககினர். மற்றவனின் கருத்துக்கு பதிலாளிக்கும் ஜனநாயகம் அவசியமற்றது என்பதே, அமெரிக்கப் பயங்கரவாதிகளின் காட்டுத்தர்பார். இங்கு குற்றவாளியா இல்லையா என்பது, அமெரிக்கவுக்கு அவசியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. இதை எந்த ஒரு செய்தியமைப்பும் இதை ஒரு பிரச்சைனையாக்கியதுதில்லை. ஏகாதிபத்தியமல்லாத ஏகாதிபத்தியத்தக்கு எதிரானவர்கள் இதைச் சொல்லியிருப்பின், முட்டையில் மயிர் புடுங்குவது போல் இந்த செய்தியமைப்புகள் வக்கரித்திருக்கும். மூலதனமே செய்தியமைப்பான பிற்பாடு, அது மக்களையிட்டு ஒரு துள்ளிதன்னும் அக்கறைப்படுவதில்லை. அமெரிக்கா மற்றவனை குற்றவாளியாக நிறுவ ஆதாரம் அவசியமற்றதாக இருக்கின்ற அதேநேரம், தனக்கு எதிரானவர்களை குற்றவாளியாக்குவதில் கொலிவூட் பாணியை பண்பாடாக அடிப்படையாக கொள்கின்றது. சர்வதேச போர் குற்றத்தை விசாரிக்கும் நிரந்தர நீதிமன்றம் ஒன்றை அமைப்பதை எதிர்க்கும் அமெரிக்கா, தனக்கு எதிரானவர்களை விசாரிக்கும் சர்வதேச நீதி மன்றத்தையே தேவைக்கு ஏற்ப அமைக்கின்றது. அத்துடன் "அமைதியை நிலை நாட்டியவர்களின்’ போர் குற்றத்தை விசாரிக்க முடியாது என்று கூறுகின்றது. இங்கு போர் குற்றம் என்பது அமெரிக்க மூலதனத்தின் நலன்களுடன் தொடர்புடையதாக வரை முறைக்குள்ளாகிவிடுகின்றது. அமைதியின் பெயரில் மக்களை கொன்று போட்டு கற்பழிக்கும் குற்றத்தை விசாரிக்க முடியாது என்பது, அமெரிக்காவின் ஜனநாயகம் மட்டுமின்றி அதன் சமூக நீதியுமாகும்.
உலகத்தையே கொள்ளையிட்டு ஆளத் துடிக்கும் உலகமயமாதல் விரிவாக்கதின் போது, இழைக்கும் போர் குற்றத்தை விசாரிக்க முடியாது என்பதே அமெரிக்காவின் ஜனநாயகம், அதாவது உலகமயமாதலை எதிர்க்கும் அல்லது அமெரிக்காவின் அதிகாரத்துக்கு எதோ ஒரு காரணத்தில் அடிபணிய மறுக்கும் அரசுகளை, நபர்களையே போர்குற்றவாளியாக அமெரிக்கா நிறுவும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஜனநாயகத்தையே, அமெரிக்க உலகமயமாக்கின்றது. இதை கெளல்விக் கொண்டு குலைக்கும் நாய்கள் உலகு எங்கும், இதன் பெயரில் கொக்கரிக்கின்றன.
அமெரிக்காவுக்கு எதிரானவருக்கு எதிராக தனிநபர் பயங்கரவாதத்தை கையாண்ட போது, அவர்களை குற்றவாளியாக என்றுமே கருதுவதில்லை. 1996ம் புரட்டாசி மாதம் அமெரிக்கா அரசு தலிபான் மற்றும் பில்லாடான் பற்றிய தனது அறிக்கையில் "நாட்டை முன்னேற்றுவதில் சரியான பாதையில் செல்கின்றனர்" என்று குறிப்பிட்டனர். அங்கு பெண்கள் மற்றும் மத அடிப்படைவாதத்தின் காட்டு மிராண்டித் தனத்தையிட்டு, ஜனநாயக
l-്ഥf - 30 @ෂී-l
தை-மாசி - 2002

அமெரிக்கா புலம்பவில்லை. தலிபான் மற்றும் பில்லாடான் மக்களை 1500 வருடத்துக்கு முந்திய மத சட்டத்தின் பெயரில் மக்களை ஒடுக்கி, தனது எண்ணை வழி பாதையை திறப்பதற்கான அங்கீகாரத்தை வேண்டி ஒடுக் கவதை ஆதாரித்து நின்றனர். செய்தியமைப்புகளும் அதன் வழியில் அதன் பின்னால் அதையே முரண்பாடின்றி செய்தனர். இன்று இந்தியாவில் இந்து அடிப்படைவாதிகள், முஸ்லீம் கிறிஸ்தவ மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் நடத்தும் காட்டுமிரண்டித்தனமான அடக்கமுறையையிட்டு, உலக பொலிஸ்காரன் சரி உலக கவலான செய்தியமைப்புகள் சரி ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. பாபர் மசூதி தகர்க்கபட்ட நிலையிலும், அந்த வானரங்கள் இன்று ஆட்சியில் நடத்தும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் துணையில் தான், அமெரிக்கப் பயங்கரவாதம் உலகமயமாகின்றது. ஏன் பில்லாடனை பயங்கரவாதி என்று உலகுக்கு அறிவித்தபடி உலகை அடக்கியாள, பில்லாடனை மூலதனத்தின் கைக்கூலியாக ஆடி 2001ம் ஆண்டு துபாய் வைத்தியசாலை ஒன்றில் பில்லாடனை சிஐஏ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போதும் சிஐஏ நம்பிக்கையுடன் ஆப்கான் ஊடாக எண்ணைக்கான பாதையை திறக்க கனவு கண்டது. இதற்கு முன்பே சூடான் மற்றும் ஆப்கான் மீது அத்துமீறி தாக்குதலை அமெரிக்க நடத்தியிருந்தும், அதே நபர்களை வளைத்துப் போட மீளவும் முயன்றது. அமெரிக்க எண்ணை வயல் மூலதனங்களை பாதுகாப்பாக பாதுகாத்து விரிவாக்க பில்லாடன் துணை போக தயாராக இருந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்பதே பேச்சு வார்த்தையின் நோக்கமாக இருந்தது.
இங்கு மூலதனத்தை விரிவாக்கும் நலன்களை அடிப்படையாக கொண்டே குற்றத்தை வரையறை செய்தது. 1960 முதல் 1970 வரை அமெரிக்கவின் செல்வாக்கு மண்டலங்களில், 12 மக்கள் விரோத ஜனநாயக விரோத தேசிய பாதுகாப்பு அரசுகள் தோற்றவித்து பாதுகாத்தது. அத்துடன் உலகளவில் சித்திரவதையை ஜனநாயகமாக அரசின் சுதந்திரமாக கொண்டு அதைக் கையாண்ட 35 அரசுகளில், 29 அரசு அமெரிக்கா அரசை சார்ந்து ஜனநாயகத்துக்கு புது விளக்கம் கொடுத்தது. இங்கு இவர்கள் யாரும் மனித உரிமை மீறலுக்காக நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இங்க யாரும் பயங்கரவாதிகளாக இருக்கவில்லை. ஈராக் சதாம் குசைன், கியுபா பிடல் கஸ்ரோ, ஆப்கான் ஒமார். என்று அமெரிக்க தயாரிக்கும் பட்டியல் மட்டும் தான், மக்களின் எதிரியாக காட்டப்படுகின்றது.
அமெரிக்கா கைக்கூலியாக செயற்பட்ட ஈரான் ஷா துக்கியெறியப்பட்ட பின், ஈரானை பழிவாங்க ஈராக்கை அமெரிக்க யுத்தத்தில் ஈடுபடுத்தியது. 1988 இல் ஈராக்கு உதவச் சென்ற அமெரிக்கா போர் கப்பல், ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு 290 அப்பாவி மக்களை கொன்றது. இந்த போர்க் கப்பல் தளபதிக்கு 1990 இல் "ஒப்பற்ற சேவைக்கு” லிஜியன் ஆப்மெரிட் பதக்கம் வழங்கப்பட்டது. அமெரிக்க மூலதன நலனுக்கு சேவை செய்யும் மனித விரோத குற்றவாளிகள் போற்றப்பட்டு, பதக்கம் வழங்குவதே ஏகாதிபத்திய பயங்கரவாத்தின் குறிப்பான நடைமுறையாகும். இதையே உலக பண்பாடாக கருதுவதும் போற்றுவதும் பொது நடைமுறையாக உள்ளது. இன்று அமெரிக்க உலகெங்கும் 50 நாடுகளில் தனது இராணுவ தளத்தை நிறுவி, உலகமயமாதலை விரிவாக்கி மறுகாலனியதிக்கத்தை விரைவுபடுத்தி வருகின்றது. இந்த விரிவாதிக்க ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மூலதனத்தை குவிக்கின்றது. இதனால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் திடீரென உயர்வடைகின்றன. அமெரிக்காவில் கொலிவுட் வாழ்க்கை வாழும் மக்கள், ஆயுதங்களை வாங்கி குவிக்கும் தன்மை அதிகாரித்துள்ளது. மறுதளத்தில் ஒரு டொமோ டராக் ஏவுகணையின் விலை 10 லட்சம் டாலர். குறி தவறமால் வீசும் குண்டின் விலை 20000 - 30000 டொலராகும். இதனால் ரேதியொன், லாக்கெட் மாாட்டீன் போன்ற ஆயுத நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு யுத்ததால் கொழுக்கின்றன. ஆப்கான் ஆக்கிரமிப்பு என்பது சர்வதேச எண்ணை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் உரிமை மற்றும் மூலதனக் குவிப்பினை அடிப்படையாக கொண்டது. அந்த எண்ணை வளம் சார்ந்த இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் பின்னணியில் காப்புறுதி நிறுவனங்களின் கொள்ளை என்று, ஒரு தொடர் சங்கிலியாக பன்னாட்டு தேசங்கடந்த உலகமயமாதல் மூலதனத்தின் நலன்களை அடங்கிகிடக்கின்றன.
- &#LDif - 30 தை-மாசி - 2002
G29)-

Page 16
இந் நிலையில் “சுதந்திரத்தைக் காப்பற்றவே ஆப்கான் மீது யுத்தம்” என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார். ஆப்கானின் எந்த சுதந்திரத்தை பாதுகாக்க என்று யாரும் கேட்பதில்லை. ஆப்கான் மக்கள் தமது தேசிய லளத்தை சார்ந்த தன்னிறைவான தேசியத்தை கட்டியெழுப்பும் சுதந்திரத்தை அல்ல என்பது, அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையில் ஏகாதிபத்தியங்கள் ஆப்கான் தேசிய வளத்தையும், மக்களின் உழைப்பையும் வரைமுறையின்றி கொள்ளையிடும் தமது சுதந்திரத்தையே, இங்கு சுதந்திரமென்று கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜோர்ச் புஸ் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலக யுத்தம்’ என்று கொக்கரிக்கின்றான். பயங்கரவாதத்தை உலக ஜனநாயமாக கொண்ட அமெரிக்க கொலிவூட் பாணி தனிமனித கவர்ச்சி அரசியலை அடிப்படையாக கொண்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக பிதற்றுகின்றான். பயங்கரவாதத்தை உருவாக்கியபடி அதை ஒழிப்பதாக அமெரிக்கா போன்ற முட்டாள்களின் நாடுதான் கூறமுடியும். இங்கு பயங்கரவாதம் என்பது, மக்களின் அடிப்படை உரிமையாக உள்ளது. பயங்கரவாத நடைமுறை என்பது இன்றைய மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து, மக்கள் தமது அதிகாரத்தை மீளக் கைப்பற்றம் ஒரு அரசியல் வழியாக, பாதையாக, நடைமுறை ரீதியான ஒரு போராட்ட மார்க்கமாக உள்ளது. இங்கு இந்த பயங்கரவாதத்தை பாட்டாளி வர்க்கம் ஆதாரித்து தலைமை தாங்கி போராடும் அதேநேரம், தனிமனித கவர்ச்சிகரமான பயங்கரவாதத்தை எதிர்த்தே போராடுகின்றது. அராஜக வாத வழியிலான பயங்கரவாதம் முதல் மக்கள் திரளை நிராகரித்த தனிமனித பயங்கரவாதத்தை எதிர்த்து, மக்கள் திரள் பயங்கரவாதத்தை ஆதாரித்து நிற்கின்றது. பயங்கரவாதம் என்ற பொது கோட்பாட்டில் அதன் கோட்பாட்டு அடிப்படைக்காக, அது கற்பழிக்கப்படுவதற்கு எதிராக நாம் போராடுவோம். சுரண்டும் அரசு மற்றும் ஏகாதிபத்திய பயங்கரவாதத்துக்கு எதிராக, மக்கள் பயங்கரவாதத்தை கையாளுவதையும் அதை கட்டியெழுப்புவதை பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்க கடமையாக நடைமுறையாக கொள்கின்றது. நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டுமின்றி மக்கள் மேலான அனைத்து பயங்கரவாதத்தையும் எதிர்த்து, பயங்கரவாத வழியில் போராடும் ஜனநாயக உரிமையை பாதுகாத்து அதன் வழியில் போராடுகின்றோம்.
ஏகாதிபத்தியம் இதை எதிர்த்து கொக்கரிக்கின்றது. உலக நாடுகளையும் மக்களையும் ஜோர்ச் புஸ் "நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும். இல்லையெனில் பயங்கரவாதிகள் பக்கம் இருப்பதாகவே கருதப்படுவீர்” என்று பயங்கரவாத வழிகளில் மிரட்டுகின்றார். இந்த மிரட்டலுக்கு உலக நாடுகளில் வீற்றிருக்கும் கைக்கூலி அரசுகள், எடுபிடி செய்தி மீடியாக்கள், எடுபிடி எழுத்தாளர்கள் அடிபணிந்து உலகமயமாதல் சமுதாயத்துக்கு இசைந்து செல்லுகின்றது. ஆனால் பாட்டாளி வர்க்கம் உலகம் தளுவிய வகையில் தனித்துவமிக்க வழிகளில், இந்த மிரட்டலை எதிர்த்து மக்கள் திரள் வன்முறையை ஆதாரித்து போராடுகின்றது. இதை உலக அளவில் மூடி மறைப்பதில், உலகாளவில் ஜனநாயகம் இரும்பு திரையிட்டுள்ளது. உதாரணமாக 18.11.2001 அன்று லண்டனில் 50000 மேற்பட்ட மக்கள் யுத்தத்துக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பட்டம் செய்தனர். இப்படி உலகு எங்கும், இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக பல நுாறு போராட்டங்கள் நடத்தப்பட்டன, நடத்தப்படுகின்றன. ஏகாதிபத்தியம் தனது சொந்த மக்களுக்கும், உலகத்துக்கும் இதை ஜனநாயக பூர்வமாக கொண்டு செல்ல இரும்புத் திரையிட்டபடி தான், தனிமனித சுதந்திரம் பற்றி பீற்றுகின்றனர். ஆனால் தனக்கு எதிரானவர்களுக்கு எதிரான தனிமனித முயற்சியைக் கூட, பெரிதாக வீங்க வைக்கும் வக்கிரமே இந்த ஜனநாயக அறிவித் துறையின் பொது நடைமுறையாகும்.
இப்படி பீற்றிய படி தான் "அமெரிக்காவின் எதிரிகள் சுதந்திரத்தின் எதிரிகள். அவர்கள் ஏன் நம்மை வெறுக்கின்றார்கள் என்று சில அமெரிக்கர்கள் கேட்கிறார்கள். அவர்கள் நம்மை வெறுப்பதற்குக் காரணம் அவர்கள் சுதந்திரத்தை வெறுப்பதுதான். நம் நாட்டில் உள்ள மத சுதந்திரம், கருத்து சுதந்திரம், வாக்களிக்கும் சுதந்திரம், கருத்து வேறுபடுவதற்குள்ள சுதந்திரம் ஆகியவற்றை அவர்கள் வெறுக்கின்றர்கள், அதனால் தான் நம்மை வெறுக்கிறார்கள்’ என்று ஜோர்புஸ், செப் 20திகதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார். என்ன மனித வக்கிரம். அமெரிக்காவின் எதிரி சுதந்திரத்தின் எதிரி என்பது, கொலிவூட் அறிவின் உச்சம். அமெரிக்காவின் சுதந்திரம் என்பதும், அதுவே உலக சுதந்திரம் என்பது நகைப்புக்குரிய செய்தி. அமெரிக்க
ሪዎLዐff - 30 தை-மாசி - 2002

கொலிவூட் தனிமனித வக்கிரத்தை அடிப்படையாக கொண்ட அறிவும், உலக ஆதிக்கத்தை நியாப்படுத்தும் அறிவைத் தாண்டி, பொது சமூக அறிவு என்பது அமெரிக்க மக்களுக்கு கிடையாது. அமெரிக்க மக்கள் பலருக்கு பிரான்ஸ் எங்கே இருக்கின்றது? என்ற பொது அறிவு கூட கிடையாது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, வாக்களிக்கும் உரிமை மறுக்பட்ட ஒரு நிலையிலேயே, இதைச் சொன்ன ஜனாதிபதி புஸ் ஆட்சிக்கு வந்தவர். இந்த ஜனநாயகம் கவர்ச்சியை அடிப்படையாகவும், குண்டர்கள் தயவிலும், தேர்தல் மோசடியிலும், பணத்தை ஆதாரமாக கொண்டே, தனக்கு சார்பான அதிகார வர்க்கத்தின் துணையுடன், நிறவெறியை ஆதாரமாகவும் அடிப்படையாக கொண்டே, இன்றைய ஜனாதிபதி ஜோர்ச் புஸ் அதிகாரத்துக்கு வந்தவர். இந்த சுதந்திரத்தை, ஜனநாயகத்தை வெறுக்கும் பயங்கரவாதிகளே, அமெரிக்காவை தாக்குகின்றார்களாம். என்ன வேடிக்கை. இந்த ஜனநாயகத் தேர்தலில் பங்கு கொள்ளும் வேட்பளாரக தெரிவு செய்ய, உட் கட்சிக்குள் 750 கோடி ரூபா (இலங்கை) லஞ்சம் வழங்கியே ஜோர்ச் புஸ் வேட்பாளராக தெரிவானவர். தேர்தலின் போது கறுப்பின மக்களை வாக்களிக்க விடமால் தடுத்தும், தனக்கு எதிரான பகுதிகளுக்கு பழுதடைந்த இயந்திரத்தை அனுப்பியுமே, சொந்த ஜனநாயகத்தை பாதுகாத்தவர். இறுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் 7:2 என்ற வீதத்தில் வென்றவர். இந்த 7 நீதிபதியையும் இன்றைய ஜனாதிபதி புஸ்சின் அப்பா அதிகாரத்தில் இருந்த போது நியாமனம் பெற்றவர்கள். மற்றைய இரண்டு நீதிபதிகளும் கிளிண்டனால் நியாமிக்கப்பட்டவர்கள். நீதி மற்றும் நீதி மன்றத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்க நீதி சந்தி சிரித்தது. தொலைக்காட்சிகளின் ஒரு பக்க சார்பான பிரச்சாரத்தில், முதல் இரண்டு வேட்பளாரையும் முன்னிலைப்படுத்தி செய்த பிரச்சாரம், மற்றும் விவாதம் என்று ஜனநாயகத்தை நலமடித்த பல கோமாளிக் கூத்தில் தான், இன்றைய ஜனாதிபதி சுதந்திரமாக தெரிவு செய்யப்பட்டார். இந்த ஜனாதிபதியின் அறிவு, சாதாரண கொலிவுட் அமெரிக்க பாணி மக்களின் அறிவு போல் ஒரு மக்குத்தான். இந்த மக்கு ஜனாதிபதி "நைஜீரியா நாட்டை ஒரு கண்டம்” என்று அறிவித்தவர். இவர்தான் இன்றைய உலக ஜனநாயகத்தின் தலைவன். உலக பயங்கரவாதத்தை ஒழிக்கும் தளபதி. இந்த மக்கு தளபதி ஜோர்ச் புஸ் ஆக்கிரமிப்பு யுத்தத்தை "இந்த யுத்தம் இஸ்லாமிற்கு எதிரானதல்ல" என்ற கூறியபடி, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு புது விளக்கம் கொடுக்கின்றார். தொடர்ந்தும் "சிலுவை யுத்தம், முடிவற்ற நீதி, இந்த யுத்தத்தில் கடவுள் நடுநிலைமை வகிக்கமாட்டார்” என்கின்றார். அமெரிக்க ஜனதிபாதிகளின் அறிவியல் என்பது மத அடிப்படை வாதத்ததுக்கள் இருந்து நிறவாதத்தை ஆதாரமாக கொள்கின்றனர். சிலுவை யுத்தம் என்பது அடிப்படையில் முஸ்லீம் மதத்துக்கு எதிரான மத யுத்தம் தான். நிற வாதத்ததையும், கிறிஸ்தவ மதவாதத்தையும் அடிப்படையாக கொண்ட அமெரிக்கா இராணுவம், ஆக்கிரமிப்பு யுத்த கோசங்கள் ஊடாகவே ஆப்கானை ஆக்கிரமித்துள்ளது. கடவுள் நடுநிலை வகிக்க மாட்டார் என்பதன் மூலம், கிறிஸ்தவ மத அடிப்படைவாத்தில் இருந்து தான் மற்றைய நாடுகளை நாடுகளாகவே மதிப்பதில்லை. இதையே 10 கோடி சிவப்பிந்திய மக்களை மக்களாக கருதாது அழித்து, அந்த இரத்தத்தின் மேல் அமெரிக்காவை நிறுவிய முந்திய பரம்பரையின் இன்றைய வாரிசுகள் பழைய வழியில் உலகை அழிக்க ஆர்ப்பாரிக்கின்றனர். உலகத்தை கிறிஸ்தவம் முதலாம், இராண்டாம் ஆயிரம் ஆண்டுகளில் சூறையாடிய வரலாற்றின் தொடாச்சியில் தான், முன்றாவது ஆயிரம் ஆண்டை ஆசியாவில் ஏகாதிபத்தியங்கள் தொடக்கி வைத்துள்ளன. இதை அழகாகவே போப் 2000 ஆண்டு இந்தியா சென்ற போது கூறினர். “முதலாவது ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவில் கிறித்துவம் பரப்பப்பட்டது; இராண்டாவது ஆயிரம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் கிறித்துவம் பரப்பப்பட்டது; இந்த மூன்றாவது ஆயிரம் ஆண்டில் ஆசியாவில் கிறித்துவம் பரப்பப்பட வேண்டும்” என்றார். இதையே நடுநிலை வகிக்காத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஆதாரவான கடவுள் துணையுடன், அமெரிக்க தலைமையிலான சிலுவை யுத்தத்தை ஆசியாவில் தொடங்கி வைத்துள்ளனர். இந்த சிலுவை யுத்தம் என்பது உலகமயமாதல் விரிவாக்கத்தை அடிப்படையாக கொண்ட, மூலதன யுத்தம்தான். இப்படி அறிவித்தபடி தமது ஆக்கிரமிப்பை நியாப்படுத்த பலவிதமான விளக்கத்தை அடிக்கடி முரண்பட்டபடி கூறுகின்றனர்.
G3D——
- சமர் - 30 தை-மாசி - 2002

Page 17
அமெரிக்க உட்துறை அமைச்சர் "அமெரிக்கா மீது இத்தகைய தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் வேட்டையாடாமல் விடமாட்டோம்” என்று ஒருபக்கம் பிதற்றுகின்றார். ஜனாதிபதி ஜோர்ச் புஸ்சோ "சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் வரை இந்தப் போர் ஓயாது.” என்ற கொக்கரித்து ஒய முன்பே "தலிபான் அரசை வீழ்த்துவதே ஆப்கான போரின் நோக்கம்” என்று கூறி புலம்பல் முடிய முன்பே "ஒரு நபரையோ அல்லது ஒரு அமைப்பையோ அழிப்பதல்ல நமது நோக்கம். ஒட்டு மொத்தமாக பயங்கரவாதத்தையே இந்த உலகத்தை விட்டு ஒழிப்பதே நமது இலக்கு. எனவே இந்தப் போர் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ, ஏன், ஓராண்டிலோ முடிந்து விடாது. பத்தாண்டுகளோ, பல பத்தாண்டுகளோ ஆகலாம். போர் தொடரும்.” என்று ஜோர்ச் புஸ் ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்டபடி புலம்பிய போதும், ஆக்கிரமிப்புக்கான நோக்கத்தைச் சொல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்த யுத்தத்தின் நோக்கம் தெட்ட தெளிவாக தெரிந்ததே. உலகை உலகமயமாக்கம் போராட்டத்தில், அமெரிக்கா மூலதன நலனை உலகில் நலனாக்குவதாகும். அதாவது உலகின் அனைத்து தேசியவளங்களையும் அமெரிக்கா சூறையாடவும், உலகின் அனைத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டவும் உள்ள உரிமையை, ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் கொண்ட உலக ஒழுங்கு உருவாகும் வரை, இந்த பயங்கரவாத யுத்தம் தொடரும் என்பதே அமெரிக்காவின் அறிவிப்பு. பல பத்தாண்டுகள் என்பது ஏகாதிபத்திய முரண்பாடுகள் நீடிக்கும் வரை, இந்த யுத்தம் தொடரும் என்பதையே குறிக்கின்றது. ஏகாதிபத்தியங்களும் அதற்கிடையிலான முரண்பாடு நீடிக்கும் வரை, தேசியங்களும் நீடிக்கும். இந்த தேசியங்கள் நீடிக்கும் வரை அதை பயங்கரவாதமாக அறிவிப்பதும், அதை அடக்குவதும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகுரிய அடக்குமுறையின் சுதந்திர கடமையாக கொள்கின்றது. அமெரிக்க மக்களின் யுத்த ஆதாரவுக்கான தயாரிப்பு மனநிலையை வளர்த்தெடுக்க, பீதியை கிளப்பிவிடுவது ஒரு வடிவமாக கொலிவுட் கண்ணோட்டம் கையாளப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியில், அந்த்ராக்ஸ் என்ற உயிரியல் ஆயுதம் பற்றிய பீதியை கட்டமைத்தனர். இந்த நோய்க்குரிய உயிரியல் ஆயுதத்தை அமெரிக்க நிறவெறி இனவாத குழுக்களான நாசிகளால் பரப்பட்டதாக செய்திகள் வந்த நிலையிலும், பீதியை விதைத்து மக்களின் உணர்வுகளை யுத்த ஆதாரவாக மாற்றினர். அந்த்ராக்ஸ் போன்ற என்னற்ற உயிரியல் ஆயுதங்களை யார் செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றீர்கள்? யாரைக் கொல்ல செய்கின்றீர்கள்? எப்படி தனிநபர்களிடம் இவை கொண்டு செல்லப்படுகின்றன? உயிரியல் ஆயுதங்களை ஏகாதிபத்தியங்கள் உற்பத்தி செய்வதன் நோக்கம், மூலதனத்தை உலகமயமாக்கவும் அதை எதிர்க்கும் மக்களை கொல்லவுமே. இந்த உற்பத்தியில் ஈடுபடும் மனித குல எதிரிகளான விஞ்ஞானிகளின் இயல்பான நிறவெறி இனவெறி சார்ந்து, மூலதனங்கள் மேல் நக்கிப் பிழைக்கும் நுகர்வின் வேட்கையும் இணைந்தே, தனிநபர் பயங்கரவாத குழுக்களின் நோக்கம் கருதியும் நோகமற்றும் சென்றடைகின்றது. உண்மையில் அந்த்ராக்ஸ் என்ற உயிரியல் ஆயுதத்தை உலக மக்களுக்கு எதிராக அமெரிக்கா செய்வதையிட்டு எந்தப் பீதியும் ஏழுப்பப்படவில்லை. அவை மக்களுக்கு எதிராக பாவிப்பதை அங்கீகரிக்கும் அமெரிக்க கொலிவூட் வக்கிர அரசியலையே அரங்கேறியது. இந்த அந்த்ராக்ஸ் என்ற உயிரியல் ஆயுதத்தின் வரலாறு 6T660.
1915ம் ஆண்டு ஜேர்மனி “பல்ரிமோர்” என்ற உயிரியல் ஆயுத தொழிற்சாலையை நிறுவி, முதலாம் உலக யுத்தத்தில் எதிரியின் கால நடைகளை அந்த்ராக்ஸ் கொண்டு படு கொலை செய்தனர். 1941 இல் பிரிட்டிஸ் எகாதிபத்தியம் ஸ்கொட்லாந்தில் 'குருனர்டு தீவுகளில் அந்திராக்ஸ் குண்டுகளை வெடிக்க வைத்த பரிசோதித்தது. அந்த பகுதிக்குள் மக்கள் செல்ல 50 வருட தடையை வேறு விதித்தது. இன்றும் அங்கு மக்கள் செல்ல தடையுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பானும் இரண்டாம் உலக யுத்தத்ததில் இந்த ஆயுதத்தை பாவித்திருந்தன. ஏகாதிபத்தியமான அமெரிக்காவும், சமூக ஏகாதிபத்தியமான சோவியத்தும் பனிப்போரில் ஈடுபட்ட காலத்தில், உயிரியல் ஆயுதம் அவர்களின் மிக முக்கிய ஆயுத உற்பத்தியாக திகழ்ந்தன. 1979 ஆண்டு 2ம் திகதி மஸ்கோவுக்கு கிழக்காக 840 மைல் தொலைவில் இருந்த ஸ்வேர்டோஸ்க் உயிரியல் ஆய்வு மையத்தில், வெளிப்போக்கிக்கு வடிகட்டியை பொருத்த மறந்தால், அந்திராக்ஸ்
L-சமர் - 30 தை-மாசி - 2002 G2

காற்றுடன் கலந்து போனது. இதனால் 94 பேரை இது தாக்கியது. அதில் 64 பேர் இறந்த போனார்கள். குடியிருப்பு அற்ற பிரதேசத்தில் இந்த ஆய்வு மையம் இருந்தால் மட்டுமே, அன்று பல ஆயிரம் மரணங்கள் தவிர்க்கப்பட்டன. 1993 இல் உயிரியல் ஆயுதமான அந்திராக்ஸ் கிருமியை ஜப்பானிய அடிப்படை மதவாதிகள் பரவி விட எடுத்த முயற்சியின் போது, கிருமிகள் செயல் இழந்தால் படு கொலைகள் தவிர்க்கப்பட்டது. இவர்களே சுரங்க ரெயிலில் இரசாயன ஆயுதமான விஷ வாயுவை அனுப்பி 12 பேரை கொன்றனர்.
வரலாற்று ரீதியாக கி.பி 80 களில் ஆசியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி புலம் பெயர்ந்த பறினர்களின் 40000 குதிரைகளும், ஒரு லட்சம் மாடுகளும் அந்திரதக்ஸ்சுக்கு (இதை நாம் 'அடைப்பான்’ என்று தமிழில் அழைக்கின்றோம்.) பலியாகின. இந்த கிருமி விலங்கில் இருந்து வெளியேறிய காற்றில் கலந்தவுடன், ஒரு உறையை போத்தி வித்திகள் என்ற அமைப்பு வடிவத்தை பெறுகின்றது. சூரிய ஒளி, வெப்பம், கிருமிநாசி என கடுமையான சூழல் நிலையை எதிர் கொண்டு, மண்ணில் உறங்கு நிலையை அடைகின்றது. இந்த உறங்கு நிலையில் இருந்து, 80 வருடங்கள் பின்பு கூட வீரியத்துடன் தாக்கக் கூடியது. உலகு எங்கும் மிருங்களை தாக்கும் 1200 குல வகையான அந்திராக்ஸ் கிருமிகள் இருப்பதாக அறிவியல் அறிவித்துள்ளது. ஒரு கிராம் அந்திராக்ஸ் துாளில் 100 கோடிக்கு மேற்பட்ட அந்த்ராக்ஸ் வித்திகள் இருக்கின்றன. 1995ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற அறிவியல் மகாநாடு ஒன்றில் அந்திராக்ஸ் கிருமியையும், உணவை நஞ்சடையாச் செய்யும் பக் கிரியவுடன் இனைத்து, புதிய மரபணுக்களை உருவாக்கியுள்ளதாக ருஷ்சிய அறிவித்தது. இதன் மூலம் புதிய உயிரியல் ஆயுதங்களை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா அந்திராக்ஸ்சின் வீரிய ரகக் உயிரியல் ஆயுதத்தை உற்பத்தி செய்ய, பென்டகன் நிவேடா பாலைவனத்தில் 2000ம் ஆண்டு ஒரு உயிரியல் ஆயுத தொழிற்சாலையை நிறுவியுள்ளது. சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றின் படி தன்னை விலத்தியபடி, உலகில் 17 நாடுகளில் இந்த உயிரியல் ஆயுதம் உள்ளதாக அறிவித்துள்ளனர். 1997 அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உயிரியல் ஆயுத பரிசோதனையில் நேரடியாக இறங்கியது. சி.ஐ.ஏ யின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியான ஜின் ஜேபன்சன் தலைமையில் நடத்திய அந்திராக்ஸ் பரிசோதனையில் பின், 2000 ஆண்டு அதை பரிசோதித்து பாத்தனர். இப்படி உலக மக்களை கொன்று குவிக்க, உயிரியல் ஆயுதத்தை மக்களின் உழைப்பை சூறையாடும் மூலதனத்தில் இருந்து உற்பத்தி செய்தபடிதான், அதைப் பற்றிய பீதியை விதைக்கின்றனர்.
உயிரியல் மற்றும் இரசாயன ஆயுத உற்பத்திக்கான தடையை கொண்டு வர 1899ம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1925ம் ஆண்டு ஜெனிவா பிரகடனமே இதற்கெதிரான முதல் முயற்சியாகும். 1972 இல் உயிரியல் ஆயுதத்துக்கு எதிரான தடை, 1993 இல் இரசாயன ஆயுதத்துக்கான தடையும் பிரகடனமாக வெளிவந்தது. ஆனால் இவற்றை ஏகாதிபத்தியங்கள் துச்சமாகவே கருதி மக்களுக்கு எதிரான பயங்கரவாத ஆயுதத்தை உற்பத்தி செய்கின்றன. மனித குலத்தை படுகொலை செய்து அழிக்கும் கொடுரமான ஆயுத உற்பத்தியில், மக்களின் உழைப்பு பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக எனது நுாலான 'ஆணாதிக்கமும் பெண்ணியமும் என்ற நூலில் எடுத்துக் காட்டியதில் இருந்து இதைப் பார்ப்போம். உலகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஏற்படுத்தவும், அடிப்படை தேவையை பூர்த்தி செய்யவும் யுனிசேவ் 1995 இல் ஒரு அறிக்கையை முன்வைத்தது. ஆரம்ப கல்விக்கு 1300 கோடி டொலரும், சுத்தமான தண்ணிருக்கு 600 கோடி டொலரும், சுகாதாரத்துக்கு 900 கோடி டொலரும், குடும்ப கட்டுப்பாட்டுக்கு 600 கோடி டொலருமாக மொத்தம் வருடம் 3400 கோடி டொலர் இருப்பின், உலகில் குழந்தைகளின் நிலமையை மேம்படுத்த முடியும். ஆனால் உலகமயமாதலின் சுரண்டல் அமைப்பில் இது சாத்தியமில்லை. சுரண்டலை பாதுகாக்கவும், தனிமனித வக்கிர உணர்வுகளை தீர்க்கவும், சமூக விரோதத் தன்மையை வளர்க்கவும், செலவு செய்யும் தொகை மனித குலத்துக்கு எதிராக கையாளப்படுகின்றது. புகைக்கும் சிகரெட்டுக்கு 40000 கோடி டொலரும், குடிக்கு (பீர், வைன்) 24500 கோடி டொலரும், பணக்கார சீமான்கள் விளையாடும் கோல்ட்ப் விளையாட 4000 கோடி டிொலரும், உலக மூலதனத்தை பாதுகாக்கவும் விரிவாக்கவும் உதவும் இராணுவதுக்கு 8db೦೦ கோடி டொலரும் வருடாந்தம் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஏ.கே
l-്ഥf - 30 ങ്ങക്ര-lDfി - 2002 G3)-

Page 18
துப்பாக்கி செய்யும் பணத்தைக் கொண்டு 3000 பேரின் குருட்டுக் கண்ணை நிவர்த்திக்கும் விட்டமின் ஏ குளிசையை வாங்க முடியும். ஒரு கோடி கண்ணி வெடியைக் கொண்டு அதாவது 10 கோடி டொலர்களைக் கொண்டு, ஆறு விதமான குழந்தை தடுப்பூசியை 77 லட்சம் குழந்தைக்கு ஏற்றமுடியும். எப்-16 ரக 23 விமானத்தைக் கொண்டு அதாவது எண்பது கோடி டொலர் கொண்டு, 160 கோடி மக்களுக்கு 10 வருடத்துக்கு அயடின் குறைவால் ஏற்படும் மனவளர்ச்சி குன்றலை தடுக்கமுடியும். 240 கோடி டொலர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் கொண்டு 4.8 கோடி மக்களின் தண்ணிர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தமுடியும். சுமூகத்தையிட்டும் குழந்தைகளையிட்டும் அக்கறைப்படாத உலக ஜனநாயகத்தில், 1990இல் 2.5 லட்சம் குழந்தைகள் கொரில்லாப் போராட்ட களத்தில் இயங்கினர். 10 கோடி குழந்தைகள் பாடசாலை செல்ல வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 15 கோடிக் குழந்தைகள் பட்டினியுடன் படுக்கையை நாடுகின்றனர். 3 கோடிக் குழந்தைகள் வீடற்ற நிலையில் வீதியில் படுத்துறங்கின்றனர். இவைகளால் 40 ஆயிரம் குழந்தைகள் இறந்து போகின்றனர். ஐந்து கோடி குழந்தைகள் உணவற்ற நிறைகுறைவினால் மரணத்தின் பிடியில் சிக்குகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மையின் பால்சுரப்பை 4 முதல் 6 மாதத்துக்கு நீடிக்கும் வகையில் உணவைக் கொடுப்பதன் மூலம், உலகில் 10 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கமுடியும். 1984க்கு முந்திய பத்து வருடத்தில் 50 லட்சம் குழந்தைகள் யுத்தத்தினால் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். 50 லட்சம் பேர் வதிவிடத்தை இழந்தனர். நியூயார்க்கில் 3000 பேர் உயிரிழந்த அதே நாளில், எயிட்ஸ் நோயினால் 8000 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் 8000 பேர் இறக்கின்றனர். ஆனால் உலக அரங்கில் எது பேசப்பட்டது அமெரிக்க இழப்பு பேசப்படாதது இந்த ஏழை நாடுகளின் மனித உயிரிழப்பு. அமெரிக்க உயிர் பொன்னானது. மேலானது. உலகில் பட்டினியாலும் இவர்களால் ஏவிவிடப்படும் அட்டுழியப் போராலும் கொல்லப்படும் ஏழைநாட்டு மக்களின் உயிர் என்பது கோடிக்கணக்கானாலும் நியாயப்படுத்தப்படக்கூடியது. இதுவே அமெரிக்க மேற்குலக ஆயுதப் பயங்கரவாதிகளின் கொள்கை. மக்களின் வாழ்வை சூறையாடும் உலகமயமாதல் கொள்கைக்கு ஏற்ப, மனிதப் பலியீடுகள் மூலதனத்துக்கு அவசியம் என்பதே, இந்த நாகரிகத்தின் பண்பாடு. இதையே மேல் உள்ள புள்ளிவிபரங்கள் தெளிவாக காட்டகின்றன.
இந்த மேற்கு பயங்கரவாத்தை எதிர்க்கும் தனிமனித பயங்கரவாத குழுக்களும், எப்போதும் மக்களையிட்டு வெறுப்பையே கொள்கின்றனர். இதுவும் அந்த அந்த குழு எதை அடிப்படைவாத கண்ணோட்டத்துடன் தொடர்புடையதாக கருதுகின்றதோ, அதன் அடிப்படையில் மக்களை பிளந்து எதிரியாக காட்டுகின்றது. அமெரிக்க முதல் கட்டிடத்தை விமானம் மூலம் தாக்கி அழித்த முகமது அட்டா, தனது உயில் ஒன்றில் தனது இறுதியத்திரையின் போது பெண்கள் பங்கு கொள்ளக் கூடாது, தனது புதைவிடத்துக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் “கர்ப்பமான பெண்களும் அழுக்கான மனிதர்களும் எனக்குப் பிரியாவிடை தரக் கூடாது, அவர்களை நான் மறுக்கின்றேன் எனது உடலைக் கழுவுபவர்கள் துாய இஸ்லாமியாகளாக இருக்க வேண்டும்” என்று கூறும் இவர்கள், உயர் குடி இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளாக, குறுகிய நலன் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த மேட்டுக் குடி அடிப் படைவாதிகள் ஆப்கானில் ஆட்சி அமைத்த போது, பெண் களை அடக்கியொடுக்குவதில் காட்டு மிராண்டிகளாக இருந்தனர். அடிப்படைவாதிகளுக்கு எதிரான ஆப்கான் பெண்களின் போராட்டம் என்பது வரலாற்று ரீதியானது. 1919ம் ஆண்டில் அமனுல்லா கான் ஆட்சியெறியதைத் தொடர்ந்து, சோவியத்யூனியனுடன் நெருங்கிய உறவை வளர்த்தார். அவர் 1923ம் ஆண்டு உருவாக்கிய அரசியல் அமைப்பில் பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவமளித்தார். பெண்களின் விடுதலையே ஆப்கான் விடுதலைக்கு அவசியமானது என்றார். பெண்களின் கல்வி, பல மனைவி முறை ரத்து, முகத்திரையை நீக்கும் சட்டம் என பலவற்றை கொண்டு வந்தார். 1929ம் ஆண்டு இவரின் அரசாட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் மீண்டும் மறுக்கபட்டது. 1965 இல் ஆப்கானில் இடது தன்மை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியே பெண்களின் உரிமை பற்றி பல போராட்டங்களை நடத்தியது. 1978 இல் ஆட்சிக்கு அவர்கள் வந்ததைத் தொடர்ந்த உட்பூாசலில் சிக்கிய நிலையில், அதன் ஒரு பகுதி சார்பாக சோவியத் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. இதைத் தொடாந்து
L-சமர் - 30 தை-மாசி - 2002 = ஜூே

பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 1980 இல் காபூல் பல்கலைகழகத்தில் பெண்களின் பங்கு 65 சதவீதமாக அதிகாரித்தது. மற்றும் பலதுறைகளில் பெண்களின் பங்கு மற்றும் பல முக்கிய துறைகளில் பொறுப்புகளிலும் பெண்கள் முன்னிலையில் இருந்தனர். சமூக ஏகாதிபத்தியமான சோவியத் ஆப்கானில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, இவை அனைத்தும் மீண்டும் முடிவுக்கு வந்தது. ஒரு மக்கள் புரட்சி இன்றி
நடைபெறும் சில சீர்திருத்தங்களின் ஆயுள், பழமைவாதிகளால் குறுக்கப்படுகின்றது என்பதையே வரலாறு மீண்டும் காட்டுகின்றது. மத, இனம், நிறம் என்று நீண்ட அடிப்படைவாத பிற்போக்கு அரசியல் உள்ளடக்கம், சிலவேளை பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போதும், அதை ஆதாரிக்க முடியாத மக்கள் விரோத கண்ணோட்டம் தடையாக மாறுகின்றது. இன்று ஏகாதிபத்தியம் உலகமயமாக்கும் பயங்கரவாத்தை முறியடிக்க, மக்களை அணிதிரட்டி போராடுவதே ஒரேயொரு சரியான அரசியல் வழியாகும். உலகளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவும், உலக மக்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்பவதுமே இன்றைய வரலாற்று புரட்சிகர பணியாகும்.
குறிப்பு: காஸ்சுமீரை முன்வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தம் என்ற நிலைக்குள் சென்றுள்ளனர். அமெரிக்கா பாணியில் இந்தியா யுத்தம் என்ற நிலைக்குள் ஆக்கிரமிப்பை செய்யத் துடிக்கின்றது. காஸ்சுமீர் மக்களின் அபிப்பிராயத்தை நிராகரிக்கும் இந் நாடுகளும், செய்தி மீடியாக்களும் வரலாற்றை திரித்து எழுப்பும் யுத்த வெறியை, இந்த இதழில் இடமின்மையால் இதில் முன்வைக்க முடியவில்லை. காஸ்சுமீர் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போதோ, அவர்கள் பெற்ற போலிச் சுதந்திரத்தின் போதும் சரி, இரண்டு நாட்டுடனும் வரலாற்றில் இணைந்து இருக்கவில்லை. காஸ்மீர் ஒரு தனிநாடாகவே எப்போதும் இருந்தது. இதை பற்றி அடுத்த இதழில் விரிவாக பார்ப்போம். நீங்களும் அதற்கிடையில் இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள முனைவது உங்கள் சமூக கடமையாகும
முரணற்ற சிந்தனை மட்டுமே
உன்னதமான படைப்பை உருவாக்கும்.
இலக்கியம் ஊடாகவே தத்துவத்தை பேசும் சக்கரவர்த்தியின் சிறுகதை தொகுப்பான "யுத்தத்தின் இரண்டாம் பாகம்” அண்மையில் வந்த முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். தெளிவான உள்ளடக்கம் மேல் கலையையும் பல்வேறு பிரதேச மொழியையும் சிறுகதைகள் மூலம் வெகு சிறப்பாக கையாளும் இவர், தன்னை நேருக்கு நேர் தயக்கமின்றி ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டுகின்றார். இந்த வகையில் இவர் இன்றைய இலக்கியவாதிகளுக்குள், கதை சொல்லும் போக்கில் ஒரு நேர்மையைக் கையாளுகின்றார். இலக்கியம் அருவமானது. உருவம் பற்றி பேசத் தேவை இல்லை என்ற போலியை, இவர் தெளிவாகவே உடைத்துக் காட்டிவிடுகின்றார். ஒரு இலக்கியம் மூலம் மக்களுக்கு வழிகாட்ட, விளக்க முடியும் என்பதை படைப்பின் மூலம் நிறுவுகின்றார். இவரின் தத்துவம் சார்ந்த வழிகாட்டல், அது சார்ந்த உள்ளடக்கத்தை மக்களின் விடுதலை சார்ந்து முன்வைக் கின்றாரா? என்ற கேள்வி எமக்கு அடுத்து முக்கியத்துவமுடையதாகும். இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இரண்டு முக்கிய விடயங்களை பேசுகின்றது. 1.இயக்கங்கள் மக்கள் மேல் கையாண்ட வன்முறைகள் பற்றி, பல்துறை சார்நது பேசுகின்றது 2.பெண்களின் பாலியலை பற்றி தன் உணர்வு சார்ந்து, பெண்களைப் பற்றி கூறுகின்றார்.
தமிழ் மண்ணில் இருந்து கனடாவரையிலான புலம்பெயர் சமூகத்தின் பல தளத்தில் கதை சொல்லும் இவர், அதன் முரண்களின் மேல் தன்னை அடையாளம் காட்டுகின்றார். யாரும் பேச மறுத்த, பேசுவதே மரண தண்டனைக்குரிய குற்றமாக துரோகமாக கருதிய இயக்கங்களின் வன்முறைகளையும், அது சார்ந்த நடத்தைகள் தொடர்பாகவும் இவரின் சிறுகதைகளின் ஒருபகுதி பேசுவதால் மட்டுமே, இதன் மீதான விமர்சனம் அவசியமாகின்றது. இயக்கத்தின் உள் மற்றும் வெளி நடத்தைகள், மக்களுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள உறவாக்கம், எதிரிக்கும் அவர்களுக்குமுள்ள உறவாக்கம்
L-சமர் - 30 தை-மாசி - 2002 (35

Page 19
சார்ந்த வன்முறைகள் மீதான இலக்கியங்கள், விமர்சனங்கள் ஒரு மரண தண்டனைக்குரிய குற்றமாக இன்று யதார்த்தத்தில் உள்ளது. இந்த வரலாற்று தொடர்ச்சியில் இதற்கு எதிரான போராட்டங்கள், அதை வெளிக் கொண்டு வந்த எழுத்து முயற்சிகள், பல்துறை சார்ந்த பதிவுகள் என வரலாற்று நிகழ்வாக தொடர் போராட்டமாகவும், மறுதளத்தில் வெறும் பதிவாகவும் மாறுகின்றது. இந்த பதிவாக்கம் கூட ஒரு அங்கீகாரத்தை படைப்பாளிக்கு கொடுக்கின்ற போது, படைப்பாளியின் பிற்போக்கு கூறுகள் கூட மூடி மறைத்துவிடுவது நிகழ்கின்றது. அந்தளவுக்கு தமிழ் சமூகத்தில் சாதாரண மக்கள் முதல் அறிவுத்துறை ஈறாக, சமூக இயங்கியல் வாழ்வின் மீதான தத்துவத்தின் வறுமை காணப்படுகின்றது. ஒரு காலத்தில் எது பயங்கரமாகவும், அபாயகரமாகவும் இருக்கின்றதோ அதை எதிர்த்து, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உணர்வுகள் மதிப்புக்குரியவைதான். ஆனால் அவன் இன்னொரு அநீதிக்கு அது சார்ந்து துணை போவானாயின், அதை நாம் விமர்சனக் கண்கொண்டு விமர்சிக்கவும், அதை எதிர்த்து அம்பலம் செய்யும் பணிதான், அநீதிக்கு எதிரான உயர்ந்த புரட்சிகர பண்பாகவுள்ளது. இயக்கத்தின் வன்முறைகளை பற்றி பேசியபடி, அரசுக்கு குண்டி கழுவுவது எவ்வளவு கேவலமானதோ, அது போன்று அரசை எதிர்த்தபடி இயக்கத்தின் மக்கள் விரோத வன்முறைக்கு துணைபோவதும் கேவலம்தான். இது போன்றே அனைத்தும், அனைத்து துறை சார்ந்து அனைத்து இலக்கியத்துக்கும் பொதுவானது. இலக்கியத்தில் முற்போக்காகவும் பிற்போக்காகவும் வெவ்வேறு விடயம் சார்ந்து செயற்பட முடியாது. இரண்டும் ஒரே தளத்தில் இயங்க முடியும் என்பது, அனைத்தையும் எப்படியும் முரணாக நியாயப்படுத்திவிட முடியும். இயக்க மற்றும் அரசு வன்முறைகள் எதிர்ப்பது முதல் சில நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கலாச்சாரங்களை எதிர்ப்பது ஈறாக, இவரின் மையக் கருவாக உள்ளது. வன்முறை மீதான எதிர்ப்பை ஏகாதிபத்திய சார்ந்த, ஜனநாயகம் சுதந்திரம் என்ற மாமூல் கண்ணோட்டத்தில் நின்றே விமர்சிக்க முனைகின்றார். இந்த எல்லைக்குள் தேசியத்தை எதிர்ப்பதில், தன்னை தெளிவுபடவே அடையாளம் காட்டுகின்றார். மற்றைய கதைகளில் ஆணாதிக்கத்தை ஆதாரமாக கொண்டு பெண்களை இழிவாக்கும் இவர், முதலாளித்துவ ஜனநாயகம் மீது நின்றே இயக்க வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக எல்லைக்குள் மட்டுமே முற்போக்காக செயற்படுகின்றது. இவர் குறிப்பிடும் தத்துவமான "வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை. நிஜம் தேவை.” என்ற கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட இவர், இருக்கும் பிற்போக்கு யதார்த்த மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தை கண்டறிய முயலுகின்றாரா எனப் பார்ப்போம்.
"யுத்தமும்.” என்ற சிறுகதையை எடுப்பின், யுத்தத்துக்கு எதிரான கண்ணோட்டத்தை அதற்கு காரணமான காரணத்தை இழிவாக காட்டி பிரதிபலிக்க முனைகின்றார். பழைய வரலாற்று கதையூடாக நிகழ்காலத்தை பிரதிபலித்து கருத்துக் கூற முற்படும் போது, யுத்த எதிர்ப்பை தவறான முறையில் விளக்க முனைகின்றார். உலகில் அனைத்து யுத்தங்களுமே வர்க்கப் போராட்டங்களே என்ற உண்மையை இவரின் மாமூல் கண்ணோட்டம் காண மறுக்கின்றது. யுத்தத்தை தலைமை தாங்கும் மக்கள் விரோத பிரதிநிதிகள் நியாயமற்ற வன்முறையையும், மக்களின் நியாயமான கோரிக்கைகளில் எழும் போராட்டமும் சார்ந்து வன்முறையையும் கோடுபிரித்தறிய இவரின் மாமூல் கண்ணோட்டம் மறுக்கின்றது. யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை மக்கள் விரோத ஜனநாயக விரோத கோரிக்கைகளை அடைப்படையாக கொண்டு, எதிர்த்து நிற்பது என்பது உள்ளடக்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்து குரல் கொடுப்பதாகும். இங்கு ஜனநாயக கோரிக்கையையும், மக்களை அடக்கியாளக் கோரும் கோரிக்கையையும் கோடு பிரித்து பார்க்கத் தவறுகின்ற மாமூல் தனம், யுத்த எதிர்ப்பை தவறாக விளக்க முனைகின்றது. பழைய வரலாற்று கதையூடாக பேசும் படைப்பாளி, ஏன் வன்னியர் சங்கிலியர் ஆட்சியை சதி மூலம் கவிழ்க்க விரும்பினர் என்ற கேள்வியை, அவரின் மாமூல்ததனம் கேட்க மறுத்துவிடுகின்றது. வன்னியர் விரிந்த ஆட்சி பரப்பை விரும்பினர் எனின் ஏன் அது அவசியமாகின்றது. இங்கு விருப்பாமான மாமூல் காரணத்தை அடிப்படையாக கொண்டே விளக்குவது ஏன் என்ற கேள்வியும், யுத்த எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டவையாகின்றது.
4107 - 30 = 605-1077 - 2002 GG-l

ஒரு ஆட்சியை பிடித்தல் என்பது, சுரண்டும் வர்க்க நலன்களை சார்ந்து அதை விரிவாக்கவேயாகும். இது சொந்த மக்களை அல்லது மற்றைய பிரிவு மக்களை அடக்கியளவும் அவர்களின் உழைப்பை உறிந்து சுரண்டி வாழ்வதுமே நிகழ்கின்றன. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கடந்த வரலாற்றில் ஜனநாயக கோரிக்கையாக, அதன் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து அவை புரட்சிகர யுத்தமாகவும் பெரும்பாலும் இருந்துள்ளது. ஆனால் இந்த வர்க்க அமைப்பில் ஒடுக்குவனை வென்று ஆட்சிக்கு வரும் ஒடுக்கப்பட்டவன் கூட புதிய அடக்குமுறையாளனாக சுரண்டுபவனாக மாறிவிடும் சமூக பொருளாதார உள்ளடக்கம் வழிகாட்டிவிடுகின்றது. இந்த மாமூல்த்தனத்தை எதிர்த்தே வர்க்க அமைப்பை ஒழித்துக் கட்டவும், வர்க்க அமைப்புக்கு எதிரான யுத்த ஒழிப்பை நிபந்தனையாக்கின்றது. இந்த பாதை என்பது வன்முறையை ஆதாரமாக அடிப்படையாக கொள்கின்றது. கடந்த நிகழ்கால யுத்த மரபுகளில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. பழைய மற்றும் நிகழ்கால யுத்தத்தின் போது எழும் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிக்க தவறுகின்ற ஒரு படைப்பாளி, உண்மையில் ஒடுக்கமுறையாளனுக்கே உதவி செய்கின்றான். இந்த நிலையில் ஒரு படைப்பாளி தனது இலக்கியத்தை விரிந்த மாமூல் தளத்தை கடந்து, உண்மையை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளவேண்டும் அதில் உள்ள பிற்போக்கு கோரிக்கைகளை எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை சார்ந்து மக்களின் அதிகாரத்தை கோரவேண்டும். இதை மறுத்து பிற்போக்கு கோரிக்கையை மட்டும் காட்டி, ஜனநாயகக் கோரிக்கையையும் எதிர்த்து நிற்பது என்பது சதாரண மாமூலில் இது அல்லது அது, என்பதில் ஒன்றை முன்வைப்பதுதான்.
வன்னியர் ஏன் நல்லுர் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தனர்? என்பதை ஆராய மறுக்கின்றார். இதை எதிர்த்து கோழை கூட வீரனாகவும், தளபதியாகவும் மாறியதுடன் மனித நியாயம் பற்றி பேசுபவனாகவும், இறுதியாக பிற்போக்கு கட்டளைக்கு அடிபணிந்து போவதாகவும் காட்டுவதன் ஊடாக, ஒரு மனிதனின் மாற்றத்தை காட்டுகின்றார். ஆனால் ஏன் யுத்தம் அவசியமாகின்றது? மதம் மாறியவர்களை ஏன் கொல்ல விரும்புகின்றனர். அதிகார பீடங்களில் யார் என்ன நோக்கத்துக்காக வீற்று இருக்கின்றனர் என்பதை, மயக்கத்துக்குள் மாமூல் சிந்தனைக்குள் விட்டுச் சென்றதன் மூலம், நிஜத்தை கண்டறியத் தவறிவிடுகின்றனர். இதனால் யுத்தம் பற்றி ஒரு தலைப்பட்சமான விளக்கம் முன்வைப்பது நிகழ்கின்றது. இது சமகாலத்தில் நடக்கு தேசிய போராட்டத்தை எதிர்ப்பதாக மாறுகின்றது. இயக்கத்தின் பிற்போக்கு வன்முறை சார்ந்து, தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையான சுயநிர்ணயக் கோரிக்கையை எதிர்ப்பது கட்டமைக்கப்படுகின்றது. மக்களின் நியாமான ஜனநாயகக் கோரிக்கைக்கும், இயக்கத்தின் நியாயமற்ற பிற்போக்கு கோரிக்கைக்கும் இடையில் கோடு பிரித்து வெளிபடுத்த வேண்டியது ஒரு படைபாளியின் கடமை. உண்மையை கண்டறியவும் அதை முன்வைப்பதுமே மாமூல் கடந்த ஒரு கண்ணோட்டமும் படைப்பாளியின் கடமையுமாகும்.
'படுவான்கரை” என்ற சிறுகதையை எடுப்பின் தமிழ் குடும்பம் ஒன்று சந்திக்கும் இயக்க மற்றும் இராணுவ வன்முறையை சித்தரிக்கின்றது. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கை மேல் இதை அம்பலம் செய்ய படைப்பாளி தவறிவிடுகின்றார். மாமூல் இயல்பு வாழ்க்கை சார்ந்து இந்த வன்முறையை எதிர்த்து நிற்கின்றார். மாமூல் வாழ்விலுள்ள வாழ்வுக்கான நியாயமான உண்மையை இவர் தேடி கண்டறியத் தவறிவிடுகின்றார். இயக்கம் மற்றும் இராணுவம் ஒருவனை கைது செய்கின்ற போது, கையாளும் வேறுபட்ட வன்முறையையும், அதன் மொழியையும் தெளிவான ஒரு இலக்கியமாக கொண்டு வருவதில் இந்த கதை வெற்றி பெறுகின்றது. அதே நேரம் இந்த கதையின் இயல்பான ஒட்டத்தில் “யாழ்ப்பாணத்தில் இருந்து புதுசாய் இந்த ஏரியாவுக்கு பொறுப்பாளரு வாறாரு” அதனால் தான் கைது சித்திரவதை என்பது, யதார்த்ததை திரிக்கின்றது. யாழ் அல்லாத இயக்கத் தலைவர்கள் இது போன்ற வன்முறைகளைச் செய்வதில்லையா? இது இருக்கும் யதார்த்த வடிவத்தை திரிக்கின்றது. வன்முறையை யாழ் சார்ந்தாக மட்டும் காட்டும் போக்கு இக் கதையில் தொங்கிவிடுகின்றது. கிழக்கில் இருக்கும் இயக்ககாரர்கள் சித்தரவதை, கைது என்று எதுவும் செய்வதில்லையா? இங்கு யாழ் தலமை மற்றும் உறுப்பினர் என்றால் அவர்கள் வன்முறையிலும் கூட மோசமானவர்கள், கிழக்கில் இருப்போர் அப்படி அல்ல என்ற
L-சமர் - 30 தை-மாசி - 2002 g2)-

Page 20
கண்ணோட்டத்தை, படைப்பாளி மாமூல் கண்ணோட்டம் சார்ந்து பிரதிபலிக்கின்றார். ஒரு இயக்கத்தின் மக்கள் விரோத கைதுகள் சித்திரவதைகள் பிரதேசம் சார்ந்த தலைமைத்துவம் தீர்மானிப்பதில்லை. மாறாக இயக்கத்தின் வர்க்க அரசியல் தான் தீர்மானிக்கின்றது. இயக்க உறுப்பினர்களின் பிரதேசம் சார்ந்த உணர்வுகள் வன்முறையை பிரதிபலிப்பதில்லை. மாறாக வன்முறை கண்ணோட்டத்தை, எல்லா பிரதேச மக்களுக்கு எதிராகவும் பிரதேசம் கடந்து இயக்க உறுப்பினர்கள் ஒரேவிதமாக கையாளுகின்றனர். அடுத்து இராணுவம் அதிகாரி ஒருவர் கொழும்பில் இருந்து வருவதால் கைது என்பது, படைப்பாளியின் இயல்பற்ற ஒரு இயங்கியலற்ற இணைப்பாகும். இலங்கை அரசுக்கும் எதிரானவன் என்பதை தெளிவுபடுத்த, இணைத்துக் கொண்ட ஒரு தொடர்ச்சியாகும். இது கதையின் கலை இயல்பை அழிக்கின்றது. அதுபோல் மனைவி, மற்றும் மனைவியின் தாய் தேடிப் போகவும், அவர்கள் கொண்டு வந்து விடும் தன்மையும் இலக்கிய இயங்கியலற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. இவை இரண்டும் இயல்பாக இல்லை.
படைப்பாளி மாமூல் கடந்து கைது செய்தவர்களிடம் கேட்கவில்லை, ஏன்? என்ன? சந்தேகம் என்று. மனைவி மற்றும் மனைவின் தாய் இயக்கத்தை எதிர்த்து சொந்த துயரம் ஊடாக பேசுகின்ற போது கூட, இயல்பில் இருந்தே விலகிவிடுகின்றார். மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை என்ற உண்மையை படைப்பாளி காண மறுத்து, எதிர்ப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார். மக்களின் நியாயமான போராட்டத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு, இயக்கத்தை நோக்கிய கேள்விகள் எழுப்பப்படவில்லை. ஆனால் மக்கள் இயல்பில் இதை எழுப்புவர். ஏனெனில் சமுதாயம் முன்னோக்கி முன்னேறுகின்ற இயங்கியலில், இருக்கும் யதார்த்த வன்முறையை கடந்து விடுதலை சார்ந்தே மக்கள் சிந்திக்கின்றனர். போராட்டம் மக்களுக்கு எதிராக மாறியபோதும், போராட்டத்தை மக்கள் நிராகரிக்கவில்லை. இதற்கிடையில் உள்ள நேர் எதிர்ப் போக்கினை ஒரு படைப்பாளி இனம் கண்டு கொள்ளாதவரை, ஒரு படைப்பு அரையும் குறையுமாக பிரசுவிக்கப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் சில குறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட படைப்புகள், அதைத் தாண்டி எதையும் சமூகத்துக்கு முன்வைத்து வழிகாட்டுவதில்லை என்பதை இந்தச் சிறுகதை மீண்டும் காட்டுகின்றது.
“எண்டஅல்லாடற்!’ என்ற சிறுகதையைப் எடுப்போம். ஒரு தமிழ் விவசாயியின் வெங்காயத்தை வாங்கிய ஒரு முஸ்லிம் வியாபாரியின் அவலம் சார்ந்த ஒடுக்குமுறை மீது கதை நகர்கின்றது. இயக்கம் இராணுவம் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இராணுவத்தின் அக்கிரமங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் வியாபாரியின் துயரத்தை பேசுகின்றது. தாக்குதலை அடுத்து வெங்காயத்தை விற்க முடியாத நிலையிலும், முஸ்லீம் வியாபாரியின் நேர்மை பற்றியும், முஸ்லிம் வியாபாரி மகன் மூலம் தமிழ் விவசாயிக்கு ஒரு சிறு தொகையை கொடுத்த அனுப்பியருந்தார். இருந்தபோதும், தமிழ் விவாசாயி பணத்துக்கு ஆசைப்பட்ட துரோகத்தால், பணம் கொண்டு வந்தவனை இயக்கம் கொல்ல துணைபோகின்றார். இதுவே கதையின் மையமான செய்தி. சமுதாயத்தின் மேலான இயக்க வன்முறைகள், சந்தேகமே துரோகமாக முத்திரை குத்தவும் படு கொலை செய்யவும் போதுமான காரணமாக உள்ளது. போராட்ட வரலாற்றில் இதுவே ஒரு போக்காக மாறி, பல நுாறு பேர் தம் உயிரை இதற்காகவே இழந்துள்ளனர். இதை ஒரு படைப்பாளியாக கொண்டு வரும் போது, அதன் வடிவங்கள், தன்மைகள், அதன் மொழியைக் கூட தெளிவாக புரிந்த கொண்டு இதை அம்பலம் செய்கின்றார். ஆனால் இதை தொகுக்கும் போது யதார்த்த இயல்பை, உழைக்கும் மக்களின் நேர்மையை புரிந்து கொள்ளத் தவறி, கதையின் ஊடாக கொச்சைப்படுத்திவிடுகின்றார். அத்துடன் ஒரு இனங்களின் குறியீடாக காட்டி, இனங்களை பகை நிலைக்கு கொண்டுவருகின்றார். சொந்த உடல் உழைப்பில் ஈடுபடும் விவசாயி 1500 ரூபா காசுக்கு ஆசைப்பட்டு, முஸ்லிம் மகனொருவனை கொல்ல துணை போனான் என்பது உழைப்பின் வலிமையை நேர்மையை மறுப்பதாகும். இது உழைப்பையும், சுரண்டலையும் புரிந்து கொள்வதில் இருந்து விலகுகின்றது. முஸ்லீம் மக்களுக்கு எதிராக கையாளப்பட்ட இயக்க வன்முறையின் போது, தமிழ் மக்கள் அதை ஆதாரித்து வன்முறையில் ஈடுபடவில்லை. முஸ்லீம் மக்களின் சொத்தை மிக மலிவாகவும், மறு தளத்தில் ஏலம்
L-சமர் - 30 தை-மாசி - 2002 ෙම්-l

விட்ட போதும் வாங்குவாரற்று காணப்பட்டது. முஸ்லீம் மக்களின் உழைப்பை இயக்கங்கள் கொள்ளையடித்து விற்ற போது, தமிழ் மக்கள் வாங்குவதை மறைமுகமாக எதிர்த்தே நின்றனர். உழைப்பின் பரஸ்பரம் நேச உறவுகளை கொண்ட மக்கள், ஐக்கியத்தை கோருவதில், நடப்பை பேணுவதில் இருந்தே, இன்றும் இவ்விரு சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ முனைப்பு பெறுகின்றான். எதிர்பாராத ஒரு விதிவிலக்குகள் நடந்து இருப்பின், அதை பொதுமைப்படுத்தி ஒரு சமூக வன்முறையாக விளக்குவது ஒரு சமூக கண்ணோட்டத்தையே தகர்ப்பதாகும். அதாவது ஒரு அப்பாவியை குற்றவாளியாக்கி மண்டையில் போடுவது போல், விதிவிலக்கான பாத்திரத்தை கொண்டு ஒரு சமூகத்துக்கே மண்டையில் போடுவது அபத்தமாகும். ஒரு விவசாயி பணத்துக்கு ஆசைப்பட்டு மற்றொரு சமூகம் என்பதால் கொல்ல துணை போவது என்பது, தமிழ் விவசாய சமூகத்தையும் பொது குறியீட்டாக்கி குற்றவாளியாக்குகின்றது. மறு தளத்தில் ஒரு முஸ்லீமின் வர்த்தக நேர்மை பற்றி பேசி அதை முஸ்லீம் பொது குறியீட்டாக்கும் கதைப் பாங்கு, இரண்டு சமூகங்களை நேர் எதிரில் நிறுத்துவதாகும். இது சமூக பிளவை மேலும் ஆழமாக்கின்றது. இங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, சமூகங்களை நேர் எதிராக நிறுத்துவது சமூக மாற்றத்தில் அக்கறையின்மையில் இருந்து எழும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட மாமூல் தன்மையாகும். இரண்டு சமூகங்களை நேர் எதிராக கொண்டு செல்லும் அரசியல், அதில் குறிப்பான பங்கை தெளிவாக அம்பலம் செய்வதே சமூக நோக்கம் கொண்ட படைப்பின் உள்ளடக்கமாக இருக்க முடியும். இங்கு உழைக்கும் மக்களின் மிக சிறந்த மனித இயல்புகளை படைப்பாளி புரிந்து கொண்டு கதை சொல்லாத வரை, உண்மையான நிகழ்வுகளை கற்பனையின் வளம் சார்ந்து சமூகத்தை திரிவுபடுத்தி அதன் மேல் கதை சொல்வது சமூகத்துக்கு எதிரானதாகும். ஒரு விவசாயிக்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடு என்ன? ஏன் இயக்கம் விவாசயிகளை அடிப்படையாக கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. ஏன் அதற்கு எதிராக உள்ளனர்? இந்த அடிப்படை முரண்பாட்டை புரிந்து கொண்டே, பாத்திரங்களை சரியாக தெரிவு செய்ய வேண்டும். முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறைகளை நியாயமானவையா என தமிழ் மக்களிடம் கேட்பின், அதை எதிர்த்தே மக்கள் கருத்து கூறுவர். அதாவது யுத்தத்துக்கு எதிராக சிங்கள மக்கள் கருத்து கூறுவது போல், முஸ்லீம் மக்கள் மேலான இயக்க வன்முறையையும் எதிாத்தே தமிழ் மக்கள் நிற்கின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பின், அதற்கான பொறுப்பை நானும் நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை விட்டு சமூகத்தை மட்டும் குற்றம் சாட்டுவது அபத்தமானதாகும்.
"ஆடு, புலி, புல்லுக்கட்டு” என்ற சிறுகதையை எடுப்போம். ஒரு தற்கொலை தாக்குதலை நடத்தும் ஒருவனின் மனச்சாட்சி ஊடாக கதை சொல்ல முனைகின்றார். தற்கொலையாளி எப்படி தன்னை மறைத்துக் கொண்டு மக்களுக்குள் வாழ்கின்றார், பின்னார் எப்படி அதே மக்களுக்குள் குண்டை வைக்க முனைகின்றார். இதற்குரிய வெடிமருந்துகளையும், வாகனங்களையும், முந்திய குடும்பம் மற்றும் சமூக உறவாக்கத்தை சிதைத்து எப்படி பெறுகின்றனர், என்று தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றார். தற்கொலை தாக்குதலை நடத்த வரும் ஒருவனின் உணர்வுகள், அவன் அதை செய்ய பழகும் மனிதர்களுடன் நடமாடும் போது ஏற்படும் மனமாற்றம், அதை மனச்சாட்சி ஊடாக விமர்சிக்கும் சமூக இணைவின் கண்ணோட்டம, இதை மீறி சமூகத்துக்கு வெளியில் இருந்து வரும் இராணுவ உத்தரவுகள் எப்படி சமூகத்துக்கு எதிராக இயங்க வைக்கின்றது என்பதை, கதை தெளிவபடவே வெளிக் கொண்டு வருகின்றது. இங்கு விமர்சனம் என்பது ஏன் அப்பாவி மக்கள் கூடும் இடங்களை தெரிவு செய்கின்றனர் என்ற குறுந்தேசிய அரசியலை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஏன் இராணுவ இலக்குகளை செய்வது தானே போராட்டம் என்று, படைப்பாளி ஏன் சொல்ல முற்படவில்லை. அதாவது ஒரு போராட்டத்தின் அவசியம், அது எதிரிக்கு எதிராக இருப்பதற்கு பதில் எப்படி அப்பாவி மற்றும் மற்றைய இன மக்கள் மேல் மாறிச் செல்கின்றது என்ற விடையத்தை கேட்க படைப்பு மறுக்கின்றது. மாறாக இவர் இயக்கங்கள் இழைக்கும் மக்கள் மேலான மக்கள் விரோத வன்முறை சார்ந்து, போராடுவதே பிழை என்ற கருத்தை தொங்கவிட்டுவிடுகின்றார். அதாவது ஏகாதிபத்தியம் மக்கள் விரோத தனிநபர் பயங்கரவாதத்தை காட்டி, உலக ஆக்கிரமிப்பையும் மக்களை ஒடுக்குவதை மேல் இருந்து நியப்படுத்துவது போன்று,
L-சமர் - 30 தை-மாசி - 2002 G35»—

Page 21
கதை அதையே கீழ் இருந்து சொல்லப்படுகின்றது.
அடுத்து “பிசாசுகளின் வாக்குமூலம்” என்ற கதை மூலம் ஒரு இயக்கக்காரன் மரணத்தை அடைந்த பின்பு, மரணம் அடைந்தவர்கள் தமது கால இயக்க வன்முறைகளையும், அதை வளர்த்தெடுத்த வடிவங்களையும் பேசிக் கொள்ளும் வடிவில் இயக்க வன்முறைகளை பேசுகின்றது இக்கதை. எப்படி என்ன காரணத்துக்காக இனப் படுகொலைகளை ரசித்துச் செய்தோம், அதன் மூலம் எப்படி புகழையும் இயக்க தலைமைக்கு வந்தோம், தலைமைக்கு இடையிலான அதிகார போட்டியை எப்படி துரோகமாக்கி கொன்றோம், என்று பல தளத்தில் கதை நகருகின்றது. மிக தெளிவாக இதை கதையாக சொல்ல முனையும் இவர், மக்களுக்கான போராட்டத்தின் அவசியத்தை இதன் ஊடாக சொல்ல மறுக்கின்றார். இயக்கம் இழைக்கும் தவறுக்கு அந்த போராட்டமே வேண்டாம் என்கின்ற எதிர் நிலைக்குள், சதாரண மாமூல் எல்லைக்குள் கதை சொல்லும் தன்மையே, இவரின் அனைத்து கதைகளையும் வலுவிழக்கச் செய்கின்றது. ஜனநாயக எல்லைக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய இந்தக் கதைகள், அதைத் தாண்டி கடுவிமர்சனத்துக்குரியதாகின்றது. "போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர்கள் எவரோ - அவரே ஈழம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற்காரணி என்பேன்’ என்று கூறுவதன் மூலம், இலங்கையின் இன ஒடுக்குமுறையை மறுக்கின்றார். இலங்கையில் சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறை தான் இன்னமும் ஈழம் எரியக் காரணமாக இருக்கிறது. அதை இவர் மறுக்கின்றார். அதை தமிழர் தலைப்பில் ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டுகின்றார். ஒரு யுத்தமற்ற முதாலாளித்துவ ஜனநாயகம் உன்னதமானதா? யுத்தம் எங்கிருந்து எப்படித் தோன்றுகின்றன? சமதானம் என்பது என்ன? எந்த சமூக அமைப்பில் யுத்தமற்ற சமாதனம் நிலவும்? இதை கேள்வியாகத்தன்னும் எழுப்பாத இலக்கியவாதி படைப்புகளை உருவாக்கும் போது அவை வலது குறைந்தனவாகிவிடுகின்றன.
இலங்கையில் யுத்தம் தொடர என்ன காரணம்? சமாதனம் எதன் வழிகளில் எப்படி தோன்றும்? இனங்களுக்கிடையிலான அமைதி எந்த உள்ளடக்கத்தில் சாத்தியமானது? மக்களுக்கு எதிரான இயக்க வன்முறைகள் எங்கிருந்து தோன்றின? ஏன் அவை நிகழ்கின்றன? மக்களுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டம் சாத்தியமில்லையா? போராட்டம் எதை எப்படி சாதிக்க வேண்டும்? இது போன்று பலவற்றை படைப்பின் கரு மீது ஒரு படைப்பாளி கேட்டு தெளிவாக மக்கள் சார்ந்து விடை தெரிந்திராத வரை, அந்த படைப்புகள் குறைபாடு கொண்டே பிறக்கின்றது.
அடுத்து இந்த கதையில் ஒரு இனத்துக்கு எதிரான படுகொலைகள், தற்செயலாக சில காரண காரியங்கள் மேல் நிகழ்ந்தாக காட்டுவது தவறானவை. உதாரணமாக பாதை தெரிந்துவிடும் என்ற காரணமே, படு கொலை நடத்தத் தூண்டியது என்பது தவறானது. இது படுகொலை செய்வதை நியாயப்படுத்த முன்வைக்கும், ஒரு எடுகோள் மட்டுமே. மாறாக இனங்கள் பற்றியும், மக்கள் பற்றியும் கொண்டுள்ள கண்ணோட்டம் சார்ந்து, முன்கூட்டியே திட்டமிட்டே படு கொலைகள் நிகழ்ந்தன, நிகழ்கின்றன. இந்த உள்ளடக்கத்தை தனிமனித புகழ் மற்றும் முடிவு சார்ந்தாக, சிந்தனையாகவே இந்த கதை பேசுகின்றது. இது ஒரு படுகொலை வரலாற்றின் மேலான ஒரு திரிபாகும். அவரின் பெண்ணியம் பற்றிய கண்ணோட்டம் முதல் அவரின் சிறுகதை முழுக்க, இந்த திரிபே அரசியல் சாரமாக உள்ளது. தனிமனித நடத்தைகள் சார்ந்த விருப்பு வெறுப்பகவும், பிரதேசம் சார்ந்த முடிவாக இனப்படுகொலைகள் விளக்குவது, அதன் ஸ்தாபான ரீதியான வர்க்க அரசியல் கண்ணோட்டத்தை பூசிமொழுகுவதாக உள்ளது. தனிமனித நடத்தைகள் அந்த இயக்கத்தில் அராசியல் கண்ணோட்த்தில் இருந்தே பிறக்கின்றது என்பதை, இந்த படைப்பாளி புரிந்து கொள்ளவேயில்லை. தனிமனிதனைச் சுற்றி கதை சொல்லும் போது, தனிமனிதனின் தோற்றுவாயை தெளிவாக புரிந்த கொண்டே அதை விமர்சிக்க வேண்டும். தனிமனிதர்கள் ஒரு இயக்க போக்கில் ஒரு பாத்திரத்தை சில விருப்பு வெறுப்புக்கு எற்ப நடித்துக் காட்டுகின்றார்கள் என்பதை, தெளிவாக வேறுபடுத்தியும் காட்டவேண்டும்.
". அதன் இரண்டாம் பாகமும்” என்று புத்தக தலைப்பு சார்ந்த வெளியான இக்கதை,
l-lot - 30
தை-மாசி - 2002

முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்கபட்ட கொடுமையைப்பற்றி பேசுகின்றது. அந்த கொடுமையில் ஈடுபட கோரும் ஒருவனின் ஊடாக, அவனின் எதிர்வாதமாகவும் மறுதளத்தில் இயக்க சத்தியப் பிரமானத்தினுடாக இதை செய்ய நிர்ப்பந்திக்கும் நிலையை, இந்த கதை சிறப்பாகவே வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்கும் யுத்தத்துக்கு எதிரான தத்துவத்தை பேசுகின்றார். "ஆயுதம் மானிடத்தை மீட்கும் என்பது முட்டாள்தனம்” "துப்பாக்கி முனையில்தான் சுபீட்சம் பிறக்கும்” என்பதை எதிர்த்து இந்த கதை தொடங்குகின்றது. இது இயங்கியலில் தன்மை மறுக்கின்றது. ஒரு பொருள் நேர் மற்றம் எதிர் தளத்தில் இயங்குகின்ற பன்மை மறுக்கின்றது. ஒரு அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் இரண்டு தளத்தில் செயற்படுகின்றன. மனிதன் தன் உழைப்பை அடிப்படையாக கொண்டு கண்டறியும் அறிவியல், அவனுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் சமூகத்தில் நாம் உள்ளோம். ஆகவே உழைப்பையும் அதன் அறிவியலையும் நிராகரிக்க முடியுமா? ஒரு அறிவியல் சார்ந்த பொருளை மனித இனத்துக்கு எதிரகவே கையாளும் மற்றொரு மனிதன், எப்படி? எந்த? சமூக அமைப்பில் எது சார்ந்து? ஏன் உருவாகின்றான்? இந்தக் கேள்விகளை விடுத்து மாமூல் கண்ணோட்த்தில் ஆயுதத்தை விமர்சிக்கும் போது, மனித அடிமைத்தனத்தை நியாப்படுத்திவிடுகின்றது. மனிதன் தன் மேல் போடப்பட்டுள்ள விலங்குகளை எப்படிக் களைவது? ஆயுதம் ஏந்திய ஒடுக்கமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டுமா? அல்லது இல்லையா? எப்படி? அதில் ஆயுதத்தின் பங்கு என்ன? இந்த கேள்விகளை படைப்பாளி கேட்டு தெளிவு படுத்துவதற்கு பதில், அதை எதிர் நிலையில் மறுத்துவிடுகின்றார். ஏகாதிபத்தியம் உலக பயங்கரவாத்தை ஒழிக்க, உலகு எங்கும் ஆயுதங்களை களையப் போவதாக கூறுவதற்கு நிகரானது. இந்த கதையிலும் கிழக்கு இயக்காரர்கள் இந்த குற்றத்தை இழைக்கவில்லை, மாறாக யாழ்ப்பாணத்து இயக்ககாரர்கள் தான் இதைச் செய்கின்றனர் அல்லது யாழ் சென்று திரும்புபவர்களே செய்கின்றனர் என்ற வாதங்கள், யாழ் மையவாதம் மீதான எதிர்ப்பை பொருத்தமற்ற வகையில் முன்வைத்து, வன்முறை சார்ந்த அரசியல் வடிவத்தை திரித்துவிடுகின்றார். இயக்கத்தில் யாழ் மையவாதம் என்பது, அதன் அரசியல் சமூக கூறுகள் மேல் இனங்காணக் கூடியவையே. அது அரசியல் கோரிக்கையில் இருந்து சமூகத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை நிராகரிப்பது வரையிலான உள்ளடக்கத்தில் காணமுடியும். யாழ் முஸ்லீம் மக்கள் வெளியேற்றிய நிகழ்வு, கிழக்கு தலைமையால் முன் நின்ற நடத்தப்பட்டது. இதை மறுக்கும் இவர் கிழக்கு முஸ்லீம் மீதான வன்முறைகு யாழ் பிரதேசவாதம் சார்ந்து, கருத்து வைப்பது ஒருதலைபட்சமானவை. அத்துடன் வடக்கில் இருந்த தான் இயக்கம் இங்கு வந்தது என்பது ஒரு தலைபட்சமானவை. ஒரு சமூகம் மீதான ஒடுக்குமுறையை மறுத்து ஒரு பிரதேசம் சார்ந்து கற்பனையில் திணிக்கப்பட்டதாக காட்டுவது ஒரு திரிபாகும். ஒரு பிரேதேசம் முன்னேறிய விழிப்புணர்ச்சியை பெறலாம். ஆனால் அதை மற்றைய சமூகத்துக்கு, பிரதேசத்தக்கு யாரும் திணிக்க முடியாது. வன்முறையை ஒரு பிரதேசம் சார்ந்த மொழியாக நடத்தையாக வருணிப்பது, சொந்த பிரதேசத்தின் வன்முறையையும் அதன் மொழியையும் மறப்பதாகும். இவர் வன்முறையையும், அதன் கொடூரங்களையும் யாழ் பிரதேசவாதத்தில் இருந்தே உருவாகுவதாக கூறி, வன்முறையின் உள்ளடக்கத்தை திரித்து புரட்டுகின்றார். அனைத்தையும் அதன் அரசியலில், அதன் வர்க்க முரணில் கண்டுபிடிக்க தவறுகின்ற போக்கு, இலக்கியத்தின் தனிமனித வாத சுயட்சையைக் கொண்டே அவதாரிக்கின்றது.
பெண்கள் பற்றிய சக்கரவர்த்தியின் பார்வை அவரின் படைப்புளின் மீதான விமர்சனத்தை தெளிவாக்க மேலும் உதவுகின்றது. ஒரு படைப்பாளி சமூகம் மேலான அனைத்து ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் புரிந்த கொள்ள வேண்டும். இதற்கு முரணற்ற தத்துவத்தை ஆதாரமாக கொள்ள வேண்டும். இங்கு ஒன்றில் முற்போக்கு என்பதும் மற்றதில் பிற்போக்கு என்பது சில நியாப்படுத்தலுக்கு உதவலாம். ஆனால் அந்த முற்போக்கிலும் எங்கோ ஒரு குறைபாடு ஒளித்திருப்தை, ஒரு முரணற்ற தத்துவார்த்ததால் தெளிவாக கண்டு கொள்ள முடியும். இது தான் சக்ரவர்த்தியின் யுத்தின் இரண்டாம் பாகம் என்ற நுாலின், இரண்டு பிரதான அடிப்படை உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்க தவறவில்லை. பெண்கள் பற்றி கண்ணதாசனின் கொச்சை வடிவிலான தத்துவ விரச எழுத்துப் போன்று, சக்கரவர்த்தியும் பெண்கள் பற்றிய கொச்சை தத்துவத்தை
-சமர் - 30
தை-மாசி - 2002

Page 22
முன்வைக்கின்றார். இவர் பெண்கள் பற்றி கூறுவதைப் பார்ப்போம். "நம்ம தமிழிச்சிகளுக்கு ஆண் என்றால் எப்படித் தெரியுமா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். கூந்தலை சுற்றி தலையை சுவரில் மோதவைக்க வேண்டும். எதிர்த்தால் பிடறி வீங்க விளாச வேண்டும். துாசன வார்த்தை பேச வேண்டும். வீதியில் போகும் போது இடையையோ மார்பையோ தீண்ட வேண்டும்.” என்று இவர் குறிப்பிடுகின்றார். பாரிசில் வேறு சில பாலியல் வக்கிரம் பிடித்த மனநோயாளர்கள் பெண் பற்றி கூறும் போது இதே பாணியில், பெண்கள் மார்பை இந்தா பிடி இந்தா பிடி என்று சொல்லி நடப்பதாகவும், மூன்று ஆண்களுடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள பெண் விரும்புவதாகவும் கூறுகின்றனர். இப்படிப் பல. ஆனால் அனைத்தும் இலக்கியமாக இலக்கிய சுதந்திரத்தில் குளிர்காய்கின்றது. ஒரு பெண் தனது மார்பை அல்லது இடையை உரசி நடக்க விரும்புகின்றாள் என்பது, எவ்வளவு கேவலமான பெண் பற்றிய ஆணாதிக்க விளக்கமும் பார்வையாகும். இது ஆணின் எண்ணமாக இருக்க, அதை பெண்ணுக்கு மகுடம் சூட்டுவது ஆணாதிக்கத்தின் பண்பாகும். வன்முறையைச் செய்யும் ஆணை பெண் விரும்புகின்றாள் என்பது, பெண் ஒரு உயிரியல் தொகுதி என்பதையே ஆணாதிக்கம் மறுக்கின்ற உள்ளடக்கத்தை அடைப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டது. ஒரு பெண் அடிமையாகவும், இத்தகைய துன்ப துயரங்களை சகித்த படி இந்த வாழ்க்கையை தேர்ந்த எடுக்கின்றாள் எனின், அது தனிப்பட்ட ஒரு பெண்ணின் குற்றமல்ல. மாறாக ஆணாதிக்க சமூக அமைப்பின் ஒரு அடக்குமுறை வடிவமாக பெண் மேல் திணிக்கப்டுகின்றது. இது அனைத்து வன்முறைகள் போன்றதே. சாதரணமாக பெண்கள் மேல் உரசி நடத்தல், நிற்றல் போன்ற ஆணாதிக்க சமூக வன்முறை நிகழும் போது, பெண்ணை அப்படி செய்வதாக தூற்றுவதும் ஒடுங்கி நடக்க நிற்க கோரும் அடக்குமுறையில் இருந்தே பெண் பற்றிய கொச்சை இலக்கியம் பிறக்கின்றது.
குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வீதிகளில் நடக்கும் போது, ஆணுக்கு பின்பாக பெண் பத்தடி வித்தியசத்தில் நடக்கும் பராம்பரியம் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இது மூன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவானது. நிலப்பிரபுத்துவ பெண் அடிமைத்தனத்தை அடிப்படையாக கொண்ட பெண்ணின் பின்தாங்கிய நிலைக்கு, ஆணாதிக்க கண்ணோட்டம் தெளிவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் போதிக்கின்றது. இந்த வரலாற்று போக்கில் பெண் ஆணுடன் சமத்துவமாக அருகில் நடக்க விருபும் ஒரு முயற்சியை, ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் சிந்திக்கும் நிலப்பிரபுத்துவ ஆண், பெண் தனது இடுப்பையும், மார்பையும் உரசி நடக்க விரும்புவதாக கூறுவது இங்கு நிகழ்கின்றது. இங்கு இந்த விடயத்தில் ஏகாதிபத்திய ஆணாதிக்கம் உரசி நடப்பதை கோருகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் உரசி நடப்பதாகவும் கொச்சைப்படுத்தவது நிகழ்கின்றது. பெண் அருகில் சமத்துவமாக நடக்க விரும்பும் விருப்பம், இயல்பானது இயற்கையானது. அதை மறுக்கும் ஆணாதிக்கம் இதற்கு கொடுக்கும் விளக்கம் தான் உரசி நடக்க விரும்பவதாக கூறி கொச்சைப்டுத்துவதாகும்.
"நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்” என்ற சிறு கதை, படைப்பாளியின் ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றார். ஏகாதிபத்திய கொலிவூட் ஆணாதிக்க சினிமா உள்ளடக்கத்தை இவர் மீளவும் முன்வைக்கின்றார். மிக குறைந்த வயதுடைய ஒரு பணக்கார அழகிய செல்லப் பெண் மீது ஆசை கொள்கின்றான். (உண்மையில் அவள் அழகிய அகதிப் பெண்ணாக இருப்பதும், அவனின் வயது முதிர்ந்த முதலாளி தனது பாலியல் தேவைக்கு வைப்பாட்டியாக பயன்படுத்துவதும் பின்னால்தான் அறிகின்றான்.) இந்நிலையில் அவன் வீட்டில் கூலி வேலை செய்தவன், அந்த பெண்ணுடன் இரகசியமாக உறவு கொள்கின்றான். இதைச் சுற்றியே நகரும் கதை. இங்கு பெண்ணின் அழகு, கவர்ச்சி, அதிகாரம், அந்தஸ்த்து, வெள்ளை நிறம் சார்ந்து அவளை அனுபவிக்க துடிக்கும் மனநிலை, பின்னால் அதை நியாயப்படுத்த பெண்ணின் துயரம் பற்றி பேசி உடல் உறவை கொள்கின்றான். ". கறுப்பன். நான் கனவு காணலாம். ஒரு வெள்ளைக்காறிய நினச்சு, அதுவும் இந்தப் பெரிய பண்ணைக்கும் முப்பத்தேழு குதிரைக்கும் சொந்தக்காரியை.” இங்கு அந்த பெண்ணுடன் ஆன உறவை எங்கிருந்து தொடங்குகின்றார். “முக்கால் தொடை தெரியிற மாதிரி காச்சட்டை
l-്ഥf - 30
தை-மாசி - 2002

போட்டிருந்தாள். அதக் கூட மேல்பக்கமா சுருட்டி விட்டிருந்தாள். உள்ளுக்கு கறுப்பு 'பிறா’ போட்டிருக்காள் போல. வெள்ளை வெனியனுக்கு மேலால லேசா தெரிந்து. எனக்கு சங்கடமாயும் இருந்திச்சு. சந்தோசமாயும் இருந்திச்சு” இதற்கு பின்தான் அவளின் வைப்பாட்டி வாழ்க்கை தெரியவருகின்றது. இங்கு தமிழ் கலாச்சார ஆணாதிக்கம் சார்ந்து அவளின் உடுப்பு சங்கடமாகின்றது. அது ஏகாதிபத்திய ஆணாதிக்க கலச்சாரமாக மாறும் போது சந்தோசமாக வெளிப்படுகின்றது. ஒரு பெண்ணின் நடை உடை முதல் அவளின் உயிருள்ள அம்சங்கள் மேலான உயிருள்ள நடத்தைகளை எல்லாம், மூலதனம் தனது வர்த்தக விளம்பர எல்லைக்குள் தீர்மானிக்கின்றது. இந்த விளம்பரம் எல்லாம் உலகமயமாதல் என்ற ஆணாதிக்க எல்லைக்குள் நின்று, பெண் பற்றிய ஆணின் ரசனைக்குள் கட்டமைக்கப்படுகின்றது. ஒரு பெண்ணை அவன் பார்க்கும் பார்வை, நிறம் சார்ந்த பாலியல் வக்கிரம் இந்த கதையில் வெளிப்படுகின்றது. இங்கு அவன் அல்ல, ஆணாதிக்க சமூகமே அப்படியே தான் பார்க்கின்றது. இது கொலிவூட் வகைப்பட்ட சமூக யதார்த்தமாகும். இங்கு அதை நியாப்படுத்தவே பெண்ணின் துயரம் பற்றி அதே வடிவில் புகுத்தப்படுகின்றது. இந்த துயரம் சார்ந்தே ". காப்பத்த வேணும் எண்டு என்ர மனசில எண்ணம் வரத் தொடங்கியது' ஒரு தமிழனாக "பரிவான புள்ள இவள்” என்று சிந்தனை, நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மரபை சார்ந்து வெளிப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்தே பாலியல் ரீதியாக உறவை கொள்கின்றார். கொலிவூட் கதாநாயகர்கள் எல்லாம் சினிமாவில் இப்படித் தான் உறவு கொள்பவர்கள். அந்த பெண்ணின் அசைவுகளை தமிழ் சினிமா மற்றும் கொலிவூட் வகையில் சித்தரிக்கவும் தவறவில்லை. கள்ள உறவை அவன் தெரிந்து கொண்ட போது, ".இதெல்லாம் சகஜம் தானே எண்டு லேசா எடுத்துக் கொள்வானா? டானியல் வெள்ளக்காறன் தானே” என்று கூறுவதன் மூலம், ஐரோப்பிய சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றார். ஐரோப்பிய பெண்களை புரிந்து கொண்ட விதம் ஆபாசமானது. இப்படி இந்த சிறுகதை தனது வெட்டு முகத்தை காட்டும் போது மற்றைய கதைகளை கேள்விக்குள்ளாக்கின்றது.
“ரூபம்' என்ற சிறுகதை தத்துவம் தொடர்பாக தொடங்கி ஏகாதிபத்திய பாலியல் நுகர்வை நியாப்படுத்துவதில் முடிகின்றது. "வெறும் மயக்கங்கள் மாத்திரம் உள்ள மாமூல் வாழ்க்கையில் மாற்றம் தேவை. நிஜம் தேவை.” என்று குறிப்பிடும் இவர், அதை தமிழ் பண்பாடு கடந்து ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரத்துக்குள்ளேயே நிஜத்தைத் தேடுகின்றார். தமிழ் நிலப்பிரபுத்துவ மதவாத பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குள்ளாக்கும் இவர், அதற்கு பதிலாக ஏகாதிபத்திய நுகர்வை முன் தாள்ளுகின்றார். "அப்படி எண்டால் உண்மைதான் தத்துவமா?” “ஏறக்குறைய. ஆனால் உண்மைய விட உண்மை” என்கின்றார். அந்த உண்மை என்ன. உண்மை என்பது இருக்கின்ற வேறுபட்ட சமூக பண்பாட்டு கலாச்சாரக் குறைகள் அல்ல. இருக்கின்ற சமூக பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஏன், எப்படி, எங்கிருந்து, எதற்காக உருவாகி வளர்கின்றது என்ற கேள்வி மீதான உண்மையே, அனைத்தையும் விட அடிப்படையானது. இதை இந்த சிறுகதை தொகுப்பு முற்றாக மறுக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய போலி ஜனநாயகம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் மீது காதல் கொள்கின்றார். அதையே சிறு கதை பிரதிபலிக்கின்றது. இயக்க வன்முறையில் கூட இந்த சுதந்திரம், ஜனநாயகம் என்ற எல்லைக்கள் நின்றே படைப்பு பேசுகின்றது. இது சில வரையறைக்குள் மட்டும் முற்போக்காக உள்ளது.
தொடர்ந்து இந்தச் சிறுகதையில் “ஒரு நாள் அதுவும் ரெண்டோ மூணு மணித்தியாலமோ தான் கதைக்க ஒருத்திக்காக இன்னொருத்தி தன் புருஷனை பங்கு போட ஒம் எண்டு சொல்றது. சே. ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு அசிங்கமாக இருக்கு” என்று பெண் சொல்ல, படைப்பாளி "நாறிப் போன மீனைப் பார்ப்பதுபோல் அவள் முகம் அஷட கோணலாய் நெளிந்தது. இது தமிழ் பெண்களுக்கு மாத்திரமே உரிய அருவருப்பு நெளிப்பு மற்றவர்களும் நெளிகின்றார்களே என்று தானும் நெளிக்கிற பம்மாத்து நெளிப்பு. நெளிக்காது போனால் துாரத்தில் வீசப்படுவோமோ என்கின்ற பயத்தில் எல்லாப் பெண்களும் போலியாகவே போனார்கள்” என்று எழுதும் சக்கரவர்த்தி, தனது உண்மை இது என்கின்றார். இது மாமூல் கடந்த விளக்கம் என்கின்றார். ஒரு பெண் பற்றி இவரின் பார்வை இப்படிபட்டதே. ஒரு எழுத்தளான் தனது இலக்கியம் மீதான நேர்மை போன்றே, பெண்ணின் உடல் மேலான உரிமையும். ஒரு சில மணித்தியாளத்தில்
l-l@ഥf - 30 தை-மாசி - 2002 G3)-

Page 23
கோழைத்தனம் என்று கூறுவது முழுமையற்றது. மாறாக அதை திருட்டுத்தனமாக ஏன் மீறுகின்றனர். இந்த சமுதாயத்தின் அடக்குமுறைகள் சுரண்டலாகவும், ஆணாதிக்கமாகவும், சாதி ஒடுக்கமுறையாகவும் என சமுதாயத்தில் புரையோடியுள்ள பலவேறு ஒடுக்குமுறையால் திருட்டு மீறல்கள் நிகழ்கின்றன. இதுவே சமுதாய மாற்றமாக நிகழ்கின்ற போது, அந்த திருட்டாக இருப்பதில்லை. தனிமனித செய்கின்ற போது, அங்கு திருட்டுத்தனம் உள்ளடக்கமாக இயல்பாக உள்ளது. இதை தமிழ் பெண்களின் பாலியல் மேல் கொச்சைப்படுத்தி காட்டுவது, தமிழ் ஆண்களின் திருட்டுத்தனத்தையும் கோழைத் தனத்தையும் ஆணாதிக்க மூகமுடியின் கீழ் மூடிமறைப்தாகும்.
ஒடுக்குமுறையை நே7ல் அனுபவிப்பவனே
ஒடுக்குமுறையை செய்கின7ற பே/து அதனர் காரணத்தை ஆர7ம்ந்து வின7க்காத படைப்பு/கனர்
67தைத் தானர் சாதிக்கினறது.
கொரில்லா என்ற தலைப்பிலான நாட்காட்டி வடிவத்திலான தொகுப்பு ஒன்றை ஷோபாசக்தி அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த நுால் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி புலிகளின் இயக்க நடத்தைகள் பற்றி பேசுவதால், மிக முக்கியத்துவமானதாகும். கடந்த காலத்தில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கேசவனின் புதியதோர் உலகம், செழியனின் நாட்குறிப்பு, சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் சிறுகதை தொகுப்பு, வீரகேசரி (5.5.1996)யில் வெளிவந்த கூடில்லாத நத்தைகள். ஒடில்லாத ஆமைகள். என்ற செங்கை ஆழியன் சிறு கதையின் தொடர்ச்சியில் கொரில்லா வெளிவந்துள்ளது. இது போன்று இயக்கங்களின் நடவடிக்கைகளைப் பற்றி, பல்வேறு வடிவங்களில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டிய வரலாற்று கால கட்டத்தில் நாம் 2 6f(36TTTLb. தமிழ் மக்களின் ஆயுதம் எந்திய போராட்டம் தொடங்கியது முதல், ஆயுதங்களை ஏந்தியோர் நேரடியாக ஜனநாயகத்தை மக்களுக்கு மறுப்பதில் முரண்பாடு கடந்து ஒன்றுபட்டு நின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்துக்கான தேசிய பொருளாதாரத்துக்கான போராட்டத்தை ஆயுதம் எந்தியவர்கள் மறுத்தது, போராட்டத்தை இயக்கப் போராட்டமாக மாற்றிய காலகட்டம் தொடங்கி, தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரானதாக பலவழிகளில் செயற்பட்டனர். மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் மிதிக்கப்பட்டு, வர்க்க சாதிய ஆணாதிக்க பிரதேச மற்றும் சிறுபான்மை இனங்கள் மீதான இனவாத ஒடுக்க முறைகளை உள்ளடக்கிய, ஆதிக்க பண்பாட்டு கலாச்சார அடிப்படைகளைக் கொண்டு இயக்கங்கள் கையாண்ட வன்முறைகள் வரைமுறையற்றது. இது சொந்த இயக்கம் முதல் மக்கள் மேலான ஒரு அதிகார வன்முறை அரசியலாக பரிணமித்தது. முதலில் ஆயுதம் எந்திய எல்லா இயக்கங்களும், தொடர்ந்து புலிகளும் இதில் விதிவிலக்கற்ற ஒரே அணுகுமுறையை ஒரேவிதமாக கையாண்டனர், கையாளுகின்றனர். மக்கள் இயக்கங்களின் எடுபிடிகளாக, இயக்க நலனை சார்ந்து நிற்க கோரும் வன்முறையுடன் கூடிய அடக்குமுறை நிலவும் எமது தேசிய யதார்த்ததை, வெளிக் கொண்டுவரும் முயற்சிகள் அனைத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வகையில் கொரில்லா என்ற நாட்குறிப்பிலான தொகுப்பை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. நாட்குறிப்பு போன்று தொகுக்கப்பட்ட வடிவம், எழுத்தாற்றலற்ற பலரை இதன் வழியில், சொந்த அனுபவத்தை இலகுவாக தொகுக்க வழிகாட்டியுள்ளது. இந்த வகையிலும் இந்தத் தொகுப்பின் வடிவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி இந்த தொகுப்பின் மீதான விமர்சனத்துக்கு வருவோம். இந்தத் தொகுப்பாக்கம் இயக்க நடத்தைகளை வெறும் பதிவாகவும், மறு தளத்தில் வரலாற்றின் குறிப்பின் மீதான
L-சமர் - 30 தை-மாசி - 2002 G6>-

திரிப்புகளுடன் நின்று விடுவதை, இதன் யதார்த்தம் நியாயப்படுத்துகின்றது. தொகுப்பு உண்மை மற்றும் பொய்மை மீதான கற்பனையையும் இணைத்து புனையப்பட்ட நிகழ்வு என்பது, உண்மையின் நம்பகத் தன்மையை தகர்த்துவிடுகின்றது. எது உண்மை எது பொய் என்ற ஊகத்துக்கு, வன்முறையிலான ஒரு சமூக உண்மையை சிதைத்துக் காட்டும் ஒரு இயக்கப் போக்கை கொண்டு வருகின்றது. இது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஒரு இயக்க நடைமுறையாக இருந்து வருகின்றது. உண்மையையும் பொய்யையும் கலந்து விடுவதன் மூலம், உண்மையை சிதைப்பதாகும். இந்தத் தொகுப்பில் கூட முதல் தண்டனையை பெற்ற ரொக்கிராஜ் மீதான இயக்கத்தின் மறைமுகமான அவதுாறுகள் மீது, உண்மையையும் நேர்மையையும் சிதைக்கும் நோக்கம் தெளிவாகவே வெளிப்படுகின்றது. இங்கு ரொக்கிராஜின் உண்மை நேர்மை மீதே இயக்க அவதுாறு சமூகமயமாகின்றது. இது போன்று எம்மண்ணில் இதுவே பலர் மீதான அவதுாறாகியதுடன், மரணதண்டனை கூட நடந்த பல கதைகள் உண்டு. உண்மைக்கும் பொய்க்குமிடையில் கட்டமைக்கப்பட்ட கற்பனையாக்கம், பொய்யின் நம்பகத்தன்மையால் அனைத்தையும் பொய்யாக்கின்றது. இங்கு உண்மை மடிந்து விடுகின்றது. கொரில்லா என்ற தலைப்புக்குரிய பாத்திரத்தினைச் சுற்றி இருந்த ஒரு இயக்க சூழலின் பொதுத்தன்மையைத் தாண்டி, கொரில்லாவுக்கு வெளியில் அவர் இல்லாத சூழலில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய்கள் மீதான திரிபுகள் மூலம், ஒரு சமுதாயத்தின் மேல் உள்ள உண்மையான ஒடுக்குமுறையை சிதைத்து விடுவதே இங்கு இதன் உள்நோக்கமாக உள்ளது.
இந்தத் தொகுப்பு சமுதாயத்தின் சாதாரண யதார்த்த சூழலில் வாழும் மக்களுக்கிடையில் என்ன விளைவை ஏற்படுத்தும். உண்மையில் இயக்க நடத்தைகள் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளக் கூடியதான ஒரு பூர்சுவா சமூக சூழல் உள்ள யதார்த்தத்தை, மீள ஒப்புவித்த இந்தத் தொகுப்பு அதை நியாப்படுத்துகின்றது. சமுதாயத்தின் மேல் கருத்துச் சொல்லும் முன்னணி சிறுபான்மை நபர்கள் மட்டுமே, இந்த இயக்க நடத்தைகளை இட்டு எதிர் நிலையில் நின்று விமர்சன நோக்கில் அணுகுவர். இன்று கருத்துச் சொல்லும் முன்னணி நபர்கள் இந்தத் தொகுப்பையிட்டு கருத்துச் சொல்லும் போது, தமது முன்னணிக் கருத்து தமக்கு மட்டுமே உரித்தானது என்று கருதும் ஒரு நிலையில், இதை அதன் யதார்த்தத்தை ஏற்படுத்தும் கேவலமான நியாயப்படுத்தலை தாண்டி புகழ்வதே நிகழும். சமுதாய இயக்கத்தில் இருந்து அன்னியமாகி புலியெதிர்ப்பை மட்டும் அடிப்படையாக கொண்ட பிரிவுகளே, தமது அலித்தனத்தில் நின்று விமர்சனமற்ற வழிபாட்டை இது போன்ற தொகுப்புகள் மேல் நடத்துவர். ஆனால் மக்கள் நிலையில் நின்று இந்தத் தொகுப்பை ஆராயின், இதன் மீதான விமர்சனம் கடுமையானவை. ஏனெனின் நிலவும் யதார்த்தம் இயல்பில் பிற்போக்கானவை. அதை அப்படியே மீளத் தொகுக்கும் போது, பிற்போக்கு மேலும் மெருகு ஊட்டப்பட்டு நியாயப்படுத்தப்படுகின்றது.
அண்மையில் வெளியாகிய அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேலின் “சுதந்திர வேட்க்கை” என்ற நாவல் பற்றிய விமர்சனத்துக்கு அப்பால் ஒரு சில விடயத்தை அதில் இருந்து ஒப்பிட்டு பார்க்க முடியும். கள்ளுக்கடை ஒன்றில் சாதி கடந்து தாழ்ந்த சாதி வீட்டில் கூடியிருந்து ஒன்றாக குடிக்கும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றார். இரண்டாவது வன்னியில் இருந்த போது பக்கத்து வீட்டு வறுமையையும், இரவல் வாங்கும் கோழி முட்டையை அடை வைத்தும், குஞ்சு பொரித்ததும் அதில் வறுமையை ஒழிக்க போராடும் வறுமையின் துயரத்தைப் பற்றி பேசுகின்றார். அது போல் இந்தியாவில் அகதி முகாம் வறுமையின் அவலத்தை கண்டு, பிரபாகரனுடன் சண்டை போட்டு அந்த அகதி முகாமுக்கு கொஞ்சம் உதவ முடிந்ததைப் பற்றி பேசுகின்றார். இங்கு வறுமை, அகதி வாழ்வு, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவே அடேல் பேசுகின்ற போதும், அவர் சார்ந்து இருக்கும் இயக்கம் இதை ஒழிக்கப் போராடவில்லை. ஆனால் இங்கு சில மனித துயரங்களை இலக்கிய நயத்தில், சமூக கொடுமையை தத்துரூபமாக கொண்டு வரும் போது, இதனுடன் ஏன் நாம் கொரிலாவை ஒப்பிட முடியாது. சமூகத்தின் எதோ ஒரு அவலத்தையே இரண்டும், நடைமுறை மாற்றம் கடந்து இலக்கிய நயத்துக்காகவே பேசுகின்றது. இங்கு இவற்றுக்கிடையில் வேறுபாடு இருப்பதில்லை.
இதற்கு கொரில்லாவின் உள்ளடக்கத்தில் இருந்தே நாம் தெளிவாகவே இதைக் காட்டமுடியும். இயக்கத்துக்குப் போன ரொக்கிராஜ் இயக்கமாகவே சிந்திக்கத்
|-കഥf - 30 602 قیل-LOT2002 - 7گئ === g

Page 24
தொடங்குகின்றான். சொந்தத் தந்தை கொரில்லா, அவனின் தாய் செனோவா மற்றும் தங்கையான பிரின்ஸயையும் கெட்ட வார்த்தைகளால் துாற்றித் தாக்கும் ரொக்கிராசுவையும், அவனின் இயக்க நடத்தையையும் இந்தத் தொகுப்பு விமர்சனம் செய்யவில்லை. மாறாக பிற்போக்கு சமூக யதார்த்தம் வன்முறை சார்ந்து தாக்குதலை நியாயப்படுத்துகின்றது. இந்தத் தொகுப்பில் இந்தத் கட்டமே மிகவும் மையமான, சமுதாய உறவாக்கம் தொடர்பான, இயக்க வக்கிரம் தொடர்பான விடயமாக உள்ளது. சமூக யதார்த்தம் தந்தையையும், தாயையும், தங்கையையும் சொந்த மகனே இயக்கம் சார்ந்து கேவலப்படுத்தி தாக்கியதை அங்கீகரிக்கின்றது. இதையே படைப்பு மறுபடியும் மீள அங்கீகரிக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தத் தாய் மற்றும் தந்தையின் சொந்த மகள் பிரின்ஸி நிர்மலா (மேஜர் பொற்கொடி) கரும்புலியாக இதன் பின்பு இறப்பது, இங்கு யதார்த்தமாக உள்ளது. சொந்த அண்ணன் ரொக்கிராஜ் இயக்கம் சார்ந்து சொந்த தாய் தந்தையை தாக்கியதும், அதே அண்ணனை வேறு ஒரு காரணத்துக்காக அதே இயக்கம் சித்திரவதையை செய்த பின்பும், பல அவதுாறுகளை சுமத்திய பின்பும், சொந்த தம்பியும் தந்தையும் இயக்கக் குண்டை களவெடுத்து விற்றதையும் தெரிந்து கொண்ட தங்கை தான், பின்னால் கரும்புலியாகி குண்டை வெடிக்க வைத்து இறக்கின்றாள். இதுவே யதார்த்தமாக உள்ளது. இயக்க வன்முறையையும் அதன் வக்கிரத்தையும் நேரில் கண்டும் அனுபவித்த தங்கையே, இதை விமர்சித்து மறுக்கவில்லை. மாறாக அதையே தானும் செய்ய துணிகின்றாள். இதைத் தாண்டி கொரில்லா படைப்பு எதைத்தான் கிழித்துவிடுகின்றது. இந்த நிலையில் படைப்பு இந்த யதார்த்தத்தை மறுபடியும் நியாயப்படுத்துகின்றதே ஒழிய விமர்சிக்கவில்லை.
இங்கு மற்றொரு உதாரணத்தை எனது வாழ்க்கை சார்ந்து குறிப்பிடமுடியும். நான் புலிகளால் கடத்தப்பட்டு உரிமை கோராது காணாமல் போன நிலையில், எனது அம்மா முதன் முதலாக வீட்டைவிட்டு வெளியேறி போகாத இடம் இல்லை, தேடாத இடமில்லை. அப்போது புலித் தலைவர்களின் காலில் ஒரு தாயாக விழுந்து கையால் அவர்களின் காலைத் தொட்டுக் கும்பிட்டு கால்களை கட்டிப் பிடித்து தாய்மைப் பிச்சையைக் கோரிய நிகழ்வுகளின் போதும், அவர்களின் காலால் துாசாக எத்தப்பட்ட சம்பவத்தின் போதும், எனது தம்பி அம்மா அருகிலேயே இருந்தான். ஆனால் அவனே பின்னால் அதே இயக்கத்துக்கு அதையே செய்யச் செல்லுகின்றான். இங்கு யதார்த்தம் அதுவாக உள்ளது. இந்தக் கேவலமான நிகழ்ச்சிகள் சொந்தத் தாய்க்கு நிகழ்ந்த போதும், அண்ணன் சந்தித்த சித்திரவதைகளையும் கொல்லப்பட இருந்தமையையும் தெரிந்து கொண்டவனுக்கு ஏற்படாத விமர்சன சமூக உணர்வுகளைத் தாண்டி, தொகுப்பு யதார்த்தத்தில் எதைத்தான் சொல்லுகின்றது. இது ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது என்பதே இங்கு மையமான விடயம். வாழ்க்கை விமர்சனமற்ற வரட்டு பூர்சுவா கண்ணோட்டம் கொண்ட பாசங்குத் தனத்தில் தமிழ் சமூகம் தித்திக்கும் போது, பிற்போக்குகள் மீண்டும் மீண்டும் அரங்கு ஏறுகின்றன. பல்கலைக்கழக பகிடி வதை எப்படி ஒரு வதையாக தொடர்ச்சியான செய்முறையாக, பாதிக்கப்பட்டவனே முன் நின்று செய்யும் வக்கிரம் விமர்சனமற்ற பூர்சுவா சமூக போக்கே அச்சாக உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் நேரடியாக அனுபவிப்பவனே, செம்மறியாக சமூக பிற்போக்கு யதார்த்தத்தில் பின்னால் செல்லுகின்ற போது, அதை ஒப்புவிக்கும் படைப்புகள் எதையும் செய்துவிடுவதில்லை. மாறாக அதையே பிற்போக்கு யதார்த்தம் சார்ந்து நியாயப்படுத்துகின்றது. இங்கு ரொக்கிராஜ்க்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடு மட்டுமே பிற்போக்கு சமூக யதார்த்த எல்லைக்குள் விமர்சனத்துக்குள்ளாகின்றது. ஒரு அப்பாவி மேல் தண்டனை வழங்கியதாக கூறி தன்னை பாதுகாக்கும் ரொக்கிராஜ், தந்தை தாயை அதே போன்று தானும் தனது இயக்கமும் தாக்கியதை விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. அவர் தனது தொடர்ச்சியான தொகுப்பில் இயக்கத்தில் உள்ள சிலர் தவறு இழைப்பதாகவும், தலைமை சரியாக உள்ளதாகவும் காட்டி விட்டுச் செல்லும் படிமானம் இந்த தொகுப்பில் மையான மற்றொரு செய்தியாகும். இதையே புலிகள் பற்றிய இன்றைய விமர்சனத்துக்கு பதிலளிக்கும் போது, புலிகளும் முரண்பாடின்றி ஒப்புவிக்கின்றனர்.
l-lot - 30 ങ്ങക്രഥfി - 2002

இங்கு கேள்விகள் மிகத் தெளிவானவை. ஒரு படைப்பாளி கேட்க மற்றும் தெரிந்து கொள்ள மறுக்கும் விடயத்தில், யாரும் மக்களை குற்றவாளியாக்க முடியாது. படைப்பவன் இதைச் சொல்லாத செம்மறி இலக்கியம் பேசும் போது, படிக்கும் மக்கள் அந்த மக்களின் இயல்பான யதார்த்தத்தில் இணைகின்றார்கள். உள்ளடக்கம் மீது கட்டமைக்கப்படும் வடிவத்தை விட்டு, வடிவத்துக்கு ஏற்ப உள்ளடக்கத்தை செருகும் படைப்புகள் யதார்த்தத்தை கேள்விக்குள்ளாக்கின்றதா எனப் பார்ப்போம். ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சம்பவமும் ஏன், எப்படி, எதற்காக நிகழ்கின்றன என்ற கேள்வியை, அதன் தொடர்வரிசைகளில் கேட்டுத் தெரிந்து கொள்ள தெரிந்திராத யதார்த்த செம்மறித்தனம், பிற்போக்கை மறுபடியும் நியாயப்படுத்துகின்றது. இதை படைப்பாளியே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அதை விளக்கவும் தெரிந்திராத ஒரு நிலையில், படைப்புகள் விபச்சாரத்தை ஆதாரமாக கொள்கின்றது.
கொரில்லா என்ற சமூகப் பாத்திரம் எப்படி இந்த சமுதாயத்தில் உருவானது? அதன் சமூக பொருளாதார கூறுகள் என்ன? அவனின் ஒவ்வொரு நடத்தையும் ஏன், எதனால், எப்படி, எங்கிருந்து நிகழ்கின்றது. சமூகம் எப்படி பார்க்கின்றது? இயக்கம் எப்படி பார்க்கின்றது? நாம் எப்படி பார்க்க வேண்டும்? சமூகத்தின் நடத்தைகள், எதை ஆதாரமாக கொண்டு நாம் முரண்படுகின்றோம்? இயக்கங்களின் மக்கள் விரோத நடத்தைகள் எங்கிருந்து எப்படி உருவானது? இயக்க குணாம்சங்களை எது உருவாக்கியது? ஏன் உருவானது? எப்படி உருவானது? இந்த இயக்கம் மக்களை எப்படி அணுகியது? ஏன் அப்படி கையாண்டது? இதனால் எதை அடைய முயன்றது? முயலுகின்றது? இயக்கமாகிவிடும் ஒருவன் சொந்தத் தாய் தந்தையை எப்படி தாக்க முடிந்தது? இந்தத் தாக்குதலில் என்ன தர்க்க நியாயம் உண்டு? தாய் தந்தையை இயக்கமாக நின்று அடித்தவனை, பின்னால் வேறு ஒரு காரணத்துக்காக அவனையே தாக்கி விசாரித்த இயக்கம் என்ற எல்லா நிலையிலும், எப்படி தங்கை இயக்கத்தில் இணைய முடிந்தது? இது ஏன் நிகழ்கின்றது? இந்த சமூக யதார்த்தம் எப்படி நிகழ்கின்றது? இயற்கையின் நிலத்துக்கு பாதுகாப்பாக இருந்த மணலை அள்ளிச் செல்ல இருந்த தடையை மீறியும், இயக்க துணையுடன் ஒரு சில புள்ளுருவிகள், அதே இயக்க அடிமட்ட உறுப்பினர்களை மிரட்டி எப்படி அள்ள முடிகின்றது. முதலாளியை ஏன் இயக்கம் பாதுகாக்கின்றது? சொந்த இயக்க உறுப்பினர்களை அவனுக்காக ஏன் தாக்கி கேவலப்படுத்துகின்றனர்? இதன் சமூக பொருளாதார உறவாக்கம் என்ன?
இப்படி இந்தத் தொகுப்பில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் மேல், அது நிகழ்வதற்கான காரண காரியத்தையும், அதன் தொடர்பில் தொடர்ச்சியான கேள்விகளை கேட்டு விடை தெரியாத அல்லது கேட்காத படைப்பாளியின் படைப்பாக்கம், எப்போதும் சமூக பிற்போக்கு யதார்த்தத்தை அப்படி படைத்து பாதுகாக்கின்றனர். ஒரு எழுத்தாளன், ஒரு தொகுப்பாளன் சமூக யதார்த்தத்தை அப்படியே தொகுப்பின், சமுதாய பிற்போக்கு சிந்தனைத் தளத்துக்கும் தொகுப்புக்குமிடையில் வித்தியாசம் இருப்பதில்லை. அது அந்தப் படைப்பின் மேல் செழித்து வாழ்கின்றது. படைப்பாளியே சமூக பிற்போக்கு தளத்தில் இருந்து முன்னேறிவிடுவதில்லை. அந்த பிற்போக்கு சமூக வட்டத்துக்குள் ஒரு துரும்பைப் பரிடித் துக் கொண் டு தொங்குவதற்கு அப் பால , எதையும் சொல் ல லாயக்கற்றவராகிவிடுகின்றனர். ஆனால் காலம் கடந்த ஒரு நிலையில் அல்லது சமூகத்தை மாற்றி அமைப்பவன் மட்டுமே, இதன் மேலான குறித்த கண்ணோட்டத்தை விமர்சன நோக்கில் படைப்புகளில் இருந்து தரவுகளை எடுக்கின்றனர்.
இந்தத் தொகுப்பு அடுத்த தளத்தில் வரலாற்றை திரிப்பதில் கவனமாக செயற்படுகின்றது. யதார்த்தத்தில் வன்முறை சார்ந்த பிற்போக்கு இயக்க நடத்தையாக உள்ள நிலையில், அந்த உண்மைகளை பொய்களுடன் இணைத்து படைப்பாக்கும் செயல் என்பது, திட்டமிட்டே உண்மைகளை அதன் வரலாற்று வேர்களியிருந்து வெட்டி விடுவதாகும். எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை அப்பட்டமான பொய்களின் மேல் கோபுரமாக்கி, அதன் அடித்தளத்தை அதன் சமூக வேரில் இருந்து அகற்றிவிடும் நடத்தைகள், மீண்டும் ஒரு முறை அதே வன்முறையை எவி அதை அழிப்பதாகும். இந்தத் தொகுப்பில் உண்மை மற்றும் பொய்களை இனம் காண முடியாத வகையில் குழப்பியடித்ததுடன், குறித்த காலகட்டத்தை கடந்து மற்றொரு காலகட்டத்து பொய்ச் சம்பவத்துடன் இணைத்த
L-சமர் - 30 தை-மாசி - 2002 GED

Page 25
கரடித்தனம், இயக்க அரசியல் பணியிலானது. சிவத்தம்பி முஸ்லிம் மக்கள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்கும், இதற்கும் வேறுபாடு இருப்பதில்லை. அதாவது முஸ்லீம் மக்களுக்கு புலிகள் ஒரு ஆரொக்கியமான தீர்வை கொடுத்துவிட்டனர், என்ற பொய்யின் மேல் முஸ்லீம் மக்களின் மேலான கொடுரத்தை நலிவடையச் செய்த செயல் எந்தளவு பிற்போக்கானதோ, அதே போன்றதே இந்த கொரில்லாவும், இயக்க வன்முறை சார்ந்த கேவலமான உண்மைகளை படைப்பாக்கும் போது, அதற்கு பொய்யுடன் கூடிய கற்பனை இணைப்புகள் ஏன் அவசியமாகின்றன. கற்பனையான கொலைகள், பொய்கள் உண்மையின் வீரியத்தை இழக்கச் செய்கின்றது. நம்பகத் தன்மையை, பொய்களின் மேல் கட்டமைப்பது படைப்பாளியின் திட்டவட்டமான நோக்கமாக உள்ளது.
இந்தத் தொகுப்பில் அவர் இதை மேலும் தெளிவாக செய்கின்றார். புலி தவிர்ந்த மற்றைய இயக்கங்களை பெயர் குறிப்பிட்டும், இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் என்று எல்லாம் எழுதும் இவர், புலியின் பெயரைக் குறித்து எழுதுவதை திட்டமிட்டே தவிர்க்கின்றார். இயக்கமென்று பொதுவாகவே கூறுகின்றார். அதாவது மிக அதிகமான தொடர்ச்சியான வன்முறையில் ஈடுபடும் புலிகள் பற்றி இவரின் கருத்துகள் பூசி மெழுகப்படுகின்றன. அடிவாங்கிய பின்பும் சரி, கொழும்பில் தலைமைக்கு எழுதிய கடிதத்தை அனுப்பக் கொண்டு திரிந்த போதும் சரி, இந்தத் தொகுப்பை தொகுத்த நிலையிலும், புலியின் அரசியலை அச்சொட்டாக அப்படியே பிரதிபலிக்கின்றார். சொந்தப் பயிற்சி முதல் தன் மீதான தண்டனை பற்றிய விளக்கம் கூட இயல்பானதாகவும், தன் மீதான ஒரு சம்பவத்தை சொல்வதற்கு அப்பால், அதை அங்கீகரிப்பதையே செய்கின்றார்.
இதை மேலும் ஆழமாக பார்ப்பின் இயக்க பயிற்சி மற்றும் வகுப்பு பற்றி பேசும் இவர், திட்டமிட்டே மற்றைய இயக்கங்கள பற்றிய புலி இயக்கத்தின் ஜனநாயக விரோத அரசியல் அபிப்பிராயத்தை மூடிமறைக்கின்றார். ரெலோ அழிப்பில் ஒரு சம்பவத்தை சொல்ல வரும் இவர், ரெலோ அழிப்பு பற்றிய தமது அபிப்பிராயம் மற்றும் இவருடன் இருந்தவர்களின் அபிராயத்தை மூடிமறைக்கின்றார்? அந்த படுகொலை அழிப்பில் துடிப்புடன் எப்படி? என்ன காரணகாரியத்துடன் செய்தோம்? என்பதை சொல்ல மறுத்து எதை பாதுகாக்க முனைகின்றார்.
கடைசியாக இயக்கம் எனக்கு கள்ளப் பட்டம் கட்டிப் போட்டுது என்று குறிப்பிடும் சம்பவத்தை தொடர்ந்து, தந்தையும் தனது சகோதரனுமே வெடி குண்டை களவு எடுத்தனர் என்று தங்கை சொன்ன நிகழ்வு மூலம், கள்ளப் பட்டம் என்பது சமநிலைக்கு கொண்டு வரப்படுகின்றது. முதலில் இயக்கத்தில் இருந்து விலக்கிய போது கள்ளப் பட்டம் கட்டியிருந்ததை, இது மறைமுகமாக மறுக்கின்றது. பொதுவாக இயக்க முரண்பாட்டுக்கு கள்ளப் பட்டம் கட்டுவது இயக்க மரபாக இன்றுவரை உள்ளது. இதை வேறுவிதமாக காட்ட முனைவது ஏன்?
இந்தத் தொகுப்பில் குறிப்பான சம்பவத்தையே அனைத்து வடிவமாக காட்டுவதன் மூலம், ஒரு வரலாற்று திரிபு நிகழ்கின்றது. இயக்கத்தின் மனித விரோத வரலாறு என்பது, குறிப்பான உதிரிச் சம்பவங்களை மட்டும் கொண்டவையல்ல. இந்த உதிரிச் சம்பவங்கள் பொதுவானதில் இருந்து உருவானவையே. இந்தத் தொகுப்பு இயக்கம் சார்ந்து தனிப்பட்ட சில்லறை நடத்தைகளை உள்ளடக்கிய காலத்தில் தான், எமது மண்ணில் பாரிய மனிதவிரோதங்கள் நடந்தன. இந்த மனிதவிரோதம் அனைத்து மக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. ஆனால் இந்த தொகுப்பாளர் அவற்றை எல்லாம் மூட்டைகட்டி மூடிமறைக்கும் வகையில், தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான சில்லறை இயக்க வன்முறைக்குள் மூடிச்சப் போட்டுக் காட்டுகின்றார். தனிப்பட்ட சில்லறை உதிரிச் சம்பவங்களுக்கு மேலாக, சமகாலத்தில் ஒட்டுமொத்தமாக மனித இனத்தையே சிதைக்கும் பல நுாறு சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை மூடிமறைத்து அதன் மேல் தொகுத்து விடும் நிகழ்வு, கேவலமாக மீள ஒருமுறை கையாளும் இலக்கிய வன்முறையாகும். தெரிந்த சம்பவத்தை மட்டும் ஒருவன் தொகுப்பதாக இருந்தால், அதன் மேலான விமர்சனம் வேறானவை. ஆனால் தொகுப்பு அதைத் தாண்டி பொய்கள் மேல் கட்டமைக்கும் கற்பனைகள், வரலாற்றை மூடிமறைக்க முனையும் உள்நோக்கம் கொண்டவையாகும். ஒட்டுமொத்த மக்களுக்கு எதிரான பல நுாறு சம்பவங்களை தனிப்பட்ட நபர்களே தொகுக்க முடியும். சமகாலத்தில் இவற்றையெல்லாம்
|-്ഥf - 30 ഞക്ര-lOffി - 2002 )ே

கையாண்ட இவர்கள், அதையே நளாந்த சொந்த இயக்க வரலாற்றில் பேசியும் நடைமுறைப்படுத்தியவற்றை மூடிமறைப்பது ஏன்? இவர்களும், இவர்களின் இலக்கிய நீட்சைகளும் இலக்கியவாதிகள் தீர்ப்புச் சொல்ல வேண்டியதில்லை, அதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை, எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதில்லை என்று பொச்சடிப்பார்கள். ஆனால் தொகுப்பு பல தீர்வுகளை பேசுகின்றது. உதாரணமாக ராஜீவை கொன்றாலும் சரி, பிரபாகரனை கொன்றாலும் சரி என்று தீர்ப்புக் கூறும் போது, இவர்கள் தம்முடைய சொந்த இலக்கிய மரபை மீறுகின்றனர். இது போன்று பல நுாறு தீர்ப்புகளை இந்தத் தொகுப்பில் வழங்கும் இவர், மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என பேசும் இவர்கள், முக்கியமான பலவற்றில் மெளனமாகிவிடுகின்றார். மற்றவன் என்ன நினைக்கின்றான் என்று யோசித்து தீர்பை வழங்கும் இவர்கள், இயக்க நடத்தைகளை குறித்து மக்களின் மனநிலை சார்ந்தும் மெளனமாகிவிடுகின்றார். அத்துடன் “தொடரும்” என்ற குறிப்பின் மூலம், தனது விபச்சாரத்தை பாதுகாக்க முனைகின்றார். இந்த விபச்சாரம் மீண்டும் தொகுப்பின் காலத்துக்குள் தொடரும் என வாதிடின், அதைப் போல் மோசடி எதுவும் எம் மண்ணில் இருக்காது.
ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட சில்லறை சம்பவங்களை இயக்க வரலாறாக காட்டி, இயக்க மனித விரோத வரலாற்றை மூடிமறைப்பதில் இந்தத் தொகுப்பு தெளிவாக தன்னை தொகுப்பாக்கின்றது. அத்துடன் இந்தத் தொகுப்பின் கால வரையறைக்குள்ளான் இயக்க வரலாற்றை இவரின் சில்லறை நடத்தைகளுக்குள் சுருக்கிக் காட்டி மெளனமாகிவிடுவதன் மூலம், ஒரு வரலாற்று திரிபை அழகாக உள்நோக்கத்துடன் இந்தத் தொகுப்பு தன்னை அலங்கரிக்கின்றது.
மார்க்சியத்தை ஒரு புரட்சிகர தத்துவமாக மீளவும் நிறுவ, நாம் அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சிப்பதே, ஒரு சரியான திசை வழியாகும்.
சமர் 26 இல் தேசபக்தன் மீதான விமர்சனத்துக்கு, தேசபக்தன் இதழ் 20 (ஆடி-2001)
இல் ஒரு தொடர் விமர்சனத்தை எழுதியுள்ளனர். 24 பக்கங்கள் கொண்ட இந்த
விமர்சனம், சமர் எழுப்பிய கோட்பாட்டு பிரச்சனை ஒன்றுக்கும் கூட நேரடியாக
பதிலளிக்கவில்லை. மாறாக கோட்பாட்டு விவாதத்துக்கு பதிலளிப்பதை விடுத்து, பொதுவான நிலைமையை கூறுவதன் மூலம் ஜனரஞ்சகமான சமூக அறியவியலுக்குள் வாசகர்களை அழைத்துச் சென்று திசை திருப்புவது நிகழ்கின்றது. இந்த ஜனரஞ்சகமான
எல்லைக்குள் புதிய முரண்பாடுகளும், புதிய விமர்சன உள்ளடக்கமும் பிரச்சனையை
வேறு திசையில் நகர்த்துகின்றது.
தத்துவ விவாத்ததுக்குப் பதில் கடந்தகால தியாகங்கள் மற்றும் சந்தித்த நெருக்கடிகளை
கட்டுரையாக்கி நீண்ட உணர்ச்சியை எழுப்புவதன் மூலம் தீர்த்துவிட முடியாது. எமது
போராட்ட வரலாற்றில் கலைப்புவாதம் மனிதர்களையே நிறம் மாறச் செய்து, அது
வண்ணம் வண்ணமாக பிரிந்து சிதறிக் கொண்டிருந்த போது, மறு தளத்தில் போராட
முனைபவர்களை ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலம் அழித்தொழிப்பு நடந்து
கொண்டிருந்தது. புரட்சிகர வரலாறு தனது புரட்சிகர சிந்தனையை அதன் போராட்டத்தை படுகொலையிலும், கலைப்பு வாதத்திலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அதில்
எதிர் நீச்சல் அடித்தவர்கள் கடுமையான பலத்த நெருக்கடிகளை தொடர்ச்சியாக
சந்தித்தனர், சந்திக்கின்றனர். இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. ஆனால் ஒரு
தத்துவ விவாதத்தில் விவாதத்துக்கு பதிலளிப்பதற்கு பதில், கடந்த வரலாற்றைச்
- roi - 30 = &D-|
6025-tonrai - 2002

Page 26
சொல்லி தற்காப்பை பெற முடியாது. இது சொந்த தத்துவத்துக்கு சலுகை கோருவதாகும். தனிப்பட்ட சமூக அக்கறையற்ற ஒருவரிடம் இருந்து கூட தற்செயலாக ஒரு அடிப்படையான கோட்பாட்டு விவாதம் எழுப்பப்படின், அதற்கு கோட்பாட்டு ரீதியாக பதிலளிப்பது அவசியமானது. இதற்கு பதிலளிப்பதற்குப் பதில், தமது கடந்தகால தியாகங்கள் மற்றும் கடந்த கால கலைப்பு வாத நடத்தைகளைச் சொல்லி தற்காப்பு எடுப்பது என்பது, கோட்பாட்டு விவாதத்துக்கு சலுகை கோருவதாகும். தத்துவ விவாவதத்தில் கடந்தகால நிலைமைகளைச் சொல்லி, விவாதத்தை திசை திருப்புவதை தேசபக்தன் கட்டுரை தொடர்ச்சியாக செய்கின்றது. எனவே மீண்டும் பழைய அடிப்படை தத்துவ விவாதத்தை முன்வைத்து, சுருக்கமாக பார்ப்போம்.
多名
தமிழீழ புதிய சனநாயக கட்சி தனது விமர்சனத்தில் ". சமரின் முழு விமர்சனத்திலும், தமிழீழ புதிய சனநாயக கட்சியை’ ஒரு கம்யூனிசக் கட்சியாக கருதிக் கொண்டும், புதிய சனநாயகப் புரட்சிப் போராட்டத்தை ஒரு முன்னணியின் பெயரில் தான் முன்னெடுக்க முடியும், கட்சியின் பெயரில் செய்யக் கூடாது என தீர்மானித்துக் கொண்டு, அவ்வாறு கட்சியின் பெயரில் முன்னெடுப்பதைக் கூடத் திரிபுக்கான போக்கு என்ற பார்வையில் முழு விமர்சனத்தையும் எழுதித் தள்ளியுள்ளது” எனக் கூறி விவாதத்தை திசை திருப்பி முன்வைக்கின்றனர். அது சரி, சமர் இப்படி எங்கேயாவது ஒரு இடத்தில் தன்னும் சொல்லியுள்ளதா? இல்லை. அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. “தமிழீழ புதிய சனநாயக கட்சி” பற்றிய எமது விமர்சனத்தில், இது கட்சியா முன்னணியா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம் , அதற்கு இக் கட்டுரை பதிலளிக்கவில்லை. இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் கட்சி என்று கேள்வியை எழுப்பியிருந்தோம். அதற்கும் பதிலில்லை. நாம் இந்த தமிழீழ புதிய சனநாயக கட்சியை பாட்டாளி வார்க்கமல்லாத, மற்றைய வர்க்கத்தின் கட்சியாக எமது விவாதம் மூலம் நிறுவினோம். அதற்குப் பதிலில்லை. நாம் புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறு வர்க்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்டு, பங்களிப்புக்கான தலைமை ஒரு முன்னணியாக இருக்க முடியும் என்றோம். அதற்கும் பதிலில்லை. மாறாக கட்சி தலைமை தாங்க முடியாது என்று சொன்னதாக விடையத்தை திசை திருப்புகின்றனர். நீங்கள் பாட்டாளி வர்க்க கட்சியாக பிரகடனம் செய்யாத வரை, விவாதம் இதற்குள் உள்ளடங்கவில்லை. முன்னணி, இராணுவம் போன்றவற்றுக்கு கட்சி எப்படி தலைமை தாங்கும் என்பது, மற்றொரு விவாதமாகும். உங்கள் பிரகடனம் எது என்பதே சமரின் மையமான கேள்வி. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சியில் பங்கு கொள்ளும் பல்வேறுபட்ட வர்க்க சக்திகளை “தமிழீழ புதிய சனநாயக கட்சி” அணிதிரட்டுமாயின், இதன் வர்க்க அடிப்படை என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். இங்கு இந்த தேசிய போராட்டத்தில் முன்னணிக்குரிய பாத்திரம் என்ன? கட்சிக்குரிய பாத்திரம் என்ன? என்ற கோட்பாட்டு அடிப்படையை எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்க வக்கற்று பிரச்சனையை திசை திருப்பி, சொல்லாதை சொல்லிவிடுகின்றனர். நாம் முன்வைக்காததை நாம் வைத்தாக கூறுவதன் மூலம், அதன் மீதான விமர்சனத்தை செய்தபடி திசை திருப்ப முடிகின்றது. இனி சமரின் பெயரில் அவர்கள் ‘தமிழீழ புதிய சனநாயக கட்சியை' ஒரு கம்யூனிசக் கட்சியாக கருதிக் கொண்டு நாம் கதைப்பதாக கூறுவதன் மூலம், அது ஒரு கட்சி இல்லை என்கின்றனர். அதே நேரம் அடுத்த வரியில் புதிய சனநாயகப் புரட்சிப் போராட்டத்தை ஒரு முன்னணியின் பெயரில் தான் முன்னெடுக்க முடியும் என்று சமர் கூறியதாக கூறி, மறுப்பதன் மூலம் அது முன்னணி இல்லை என்கின்றனர். இந்தத் தொடர் விமர்சனத்தில் வேறு ஒரு இடத்தில் “தமிழீழ புதிய சனநாயக கட்சி ஒரு கொம்யூனிஸ்ட் கட்சியுமல்ல, கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றான கட்சியுமல்ல. ஆனால்
I-சமர் - 30 தை-மாசி - 2002 (52

புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பதில் தெளிவாகவுள்ளது” என்று ஒரு புதியபாணி தத்துவ விவாதத்தை முன்வைக்கின்றனர். இந்தத் தேவை நிராகரிக்காத கட்சியின் வாக்கத் தன்மை என்ன? எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதில் அணிதிரள்வர். ஏன் இக்கட்சி அல்லாத மற்றொரு கட்சி தேவை? ஒரு விடையத்துக்கு வாலும் நுனியும் காட்டும் பாணியில் பதிலளிக்கின்றனர். அது சரி யாராவது 'தமிழீழ புதிய சனநாயக கட்சி’யின் வாலும் தலையும் காட்டும் தத்துவ வாதங்களில் இருந்து புரிந்து இதை விளக்கிச் சொன்னாலும் கூட, அதை நாமும் புரிந்து கொள்ள முடியும். இந்தத் "தேவையை நிராகரிக்காத கட்சி’யின் வர்க்கத் தன்மை என்ன? இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் நலனை எப்படி பாதுகாக்கும்! ஒரு நாட்டின் புரட்சிக்குரிய தலைமை நிச்சயமாக கட்சியை தலைமை தாங்க முடியும், இதை என்றும் சமர் மறுத்துவிடவில்லை. கடந்த காலம் முதல் சமர் இதற்காகவே போராடி வருகின்றது. உங்களுடனான விமர்சனம் அதற்காகவே நடக்கின்றது. ஆனால் புதிய ஜனநாயக புரட்சிக்கு கட்சி நேரடியாக அல்லது மறைமுகமாக முன்னணியூடாக தலைமை தாங்கும் வரலாற்று பாத்திரம், அந்த நாட்டின் குறிப்பான நிலைமையுடன் தொடர்புடையது. முன்னணி தலைமை தாங்கும் ஒரு நிலையிலும், கட்சியே இராணுவத்தை வழிநடத்தும். இது குறிப்பான நிலைமையை அடிப்படையாக கொண்டது. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஜனநாயகக் கோரிக்கைகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் அதற்காக போராடுகின்றன. இந்த நிலையில் அந்த வர்க்கங்களை ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரட்டுகின்ற பாட்டாளி வர்க்கம், ஒரு முன்னணியூடாகவே அவர்களை அணிதிரட்ட முடியும். நேரடியாக கட்சி தனக்குள் அவர்களை அணிதிரட்ட முடியாது. புதிய ஜனநாயகக் கோரிக்கைகள் எப்போதும் ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்ந்த பட்ச அடிப்படையாக கொண்டது. ஜனநாயக கோரிக்கைகளை முன்வைக்கும் பல்வேறுபட்ட வர்க்கங்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு இருக்கின்ற நிலையில், அது ஒரு கட்சியாக இருக்காது.
"தமிழீழ புதிய சனநாயக கட்சி” ஒரு கட்சி இல்லை என்கின்றார்கள். "ஆனால் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி” என்கின்றனர். இங்கு கட்சி என்பது என்ன? உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பது என்ன? இந்த இரண்டுக்மிடையில் வேறுபாடு என்ன என்ற கேள்வி எழுகின்றது? இவை என்ன உள்ளடக்கத்தில், என்ன திட்டத்தில் வேறுபடுகின்றன. இவை இரண்டும் தனித் தனியாக எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன? இதற்கிடையில் என்ன வேறுபாடு உண்டு? கட்சியின் பெயரில் ஏன் இரண்டு அமைப்புகள் தேவைப்படுகின்றன? கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் உள்ள கட்சிகளின் அரசியல் மற்றும் வர்க்க உள்ளடக்கம் என்ன? இந்த விவாதம் என்பது தத்துவார்த்த அடிப்படை சார்ந்தது. இதை வரலாறு சொல்லி புலம்புவதன் மூலம், இதற்கு விடை சொல்ல முடியாது. அதுவுமில்லை இதுவுமில்லை என்று சொல்லி, அதுவும் இதுவும் ஒன்று தான் என்று சொல்லி ஓட்டையை அடைக்க முடியாது. புதிய ஜனநாயகக் கட்சி எந்த வர்க்கத்தை? எப்படி? ஏன் பிரபலிக்கின்றது? என்று விளக்க வேண்டும். இங்கு கீழிலிருந்து கட்டும் ஒரு முன்னணி அவசியமில்லை, கட்சி தான் தேவை என்ற அடிப்படையை விளக்க வேண்டும்.
"ஏகாதிபத்திய கொலணிய முறைக்குள் இருந்த ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதிய சனநாயகப் புரட்சி வெற்றி பெறாத அனைத்து நாடுகளின், தேசிய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின்
l-്ഥf - 30 G3)–
ഞക്ര-lOffി - 2002

Page 27
அரசியல் தலைமைகளும் தாங்கள் எதிர்த்துப் போராடிய குறித்த ஏகாதிப்த்தியத்துடன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக ஏகாதிபத்திய அமைப்புடனும் சமரசம் செய்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன. இத்தகைய நாடுகள் எல்லாவற்றையும், உலக ஏகாதிபத்தியமானது தனது புதிய கொலணிய முறைக்கு இரையாக்கிக் கொண்டது. இதற்கு இரையாகிய நாடுகள் எல்லாவற்றையும் புதுக் கொலணிய (நவ கொலணிய) நாடுகள் என அழைக்கப்படுகிறது” என தமிழீழ புதிய சனநாயக கட்சி வரையறுக்கின்றது. நேரடியான காலனியாதிகத்தை ஏகாதிபத்தியம் கைவிட்டுச் சென்ற அனைத்து நாட்டையும் நவகாலணியம் என்று சொல்லுவதும், அதிலிருந்து விவாதத்தை நடத்துவதும் ஒரு திசை விலகலாகும். ஏகாதிபத்தியம் காலணித்துவத்தை கைவிட்டுச் சென்ற போது, அரைக்காலணி அரை நிலப்பிரபுத்துவ நாடுகளாகவே பெரும்பாலான நாடுகளில் விட்டுச் சென்றன. இந்த அடிப்படை அரசியல் உள்ளடக்கத்தை மறுத்து அனைத்தையும் நவகாலணியாக மதிப்பிடுவதும், அதை இலங்கைக்கு பொருத்துவதும் தத்துவ விலகலாகும். இலங்கை 1948 இல் பெற்ற போலிச் சுதந்திரம், நவகாலணியாக அல்ல, அரைக்காலணி அரைநிலப்பிரபுத்துவமாகவே விட்டுச் சென்றது. ஆனால் தேசபக்தன் இதற்கான காரணகாரியத்தை மறுத்து, நவகாலணியாக கூறுவது ஆச்சரியப்படத்தக்க ஒரு இயங்கியலற்ற முடிவாகும். அத்துடன் இதை உலகம் தழுவிய வகையில் காலணிகளில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளுக்கு பொது முடிவாக வைப்பது, அதை விட கேலிக்குரியதாகும்.
இதை முன்மொழிந்தபடி '. முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகி வருகின்றது” என்ற வாதம், தேசிய முதலாளித்துவ கூறுகள் (பூர்சுவா வர்க்கம்) ஒரு போராட்ட சக்தியாக இந்த உலகமயமாதலில் இல்லை என்கின்றனர். அதாவது ரொக்சியத்தின் கடைக் கொடியை பிடித்துக் கொண்டு, தொங்குவதில் போய் முடிகின்றது. குண இயல்புகள் எல்லாமே ஏகாதிபத்தியமாக மாறினால், இடைப்பட்ட வர்க்கங்கள் இயல்பில் அற்றுவிடுகின்றன. இந்த நிலையில் புதியஜனநாயக புரட்சி கூட அவசியமற்றதாக அல்லவா இருக்க வேண்டும். புதிய ஜனநாயக புரட்சியை முன்வைக்கும் தமிழீழ புதிய ஜனநாயக கட்சி, முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகின்றது என்ற கூற்றுக்கு முரணானது. முதலாளித்துவ தேசியக் கூறுகள் தான், சோசலிசக்கு பதில் புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தை நிபந்தனையாக்கின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையில காணப்படும் இடைப்பட்ட வர்க்கங்கள், தமது நலன்களை தக்க வைக்க ஏகாதிபத்தியத்துடன் போராடும் எல்லைக்குள், நிலவும் முதலாளித்துவ தேசியக் கோரிக்கைகள் தான் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளது. இது முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாவற்றையும் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமிப்பதை மறுக்கின்றது. இடைப்பட்ட பூர்சுவா வர்க்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சரணடைவையும் மீறி தொடர்ச்சியாக போராட முனைப்புக் கொள்கின்றன. இந்த போராட்ட முனைவை பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில், ஜனநாயக கோரிக்கையின் எல்லைக்குள் முன்னெடுக்கும் வழியாகவே, புதிய ஜனநாயக புரட்சியை என்ற குறைந்த பட்ச திட்டமாகக் கொண்டு ஐக்கிய முன்னணியை உருவாக்கின்றது. இதை மறுத்துவிடவே நேரடியான காலணியத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளை “...தேசிய முதலாளித்துவத்தின் போக்கு, புதுக்கொலணிய கட்டத்தில் தரகுமுதலாளித்துவப் போக்காக மாறிவிட்டது” என்று கூறுவதன் மூலம், தேசியக் கோரிக்கைகளை தேசிய முதலாளித்துவம் கைவிட்டுவிட்டது என்கின்றனர். அதாவது தேசிய முதலாளித்துவம் தரகு முதலாளித்துவமாக மாறிவிட்டதால், தேசிய முதலாளித்துவ உற்பத்தியும் அற்று விட்டது என்கின்றனர். இதனால் தேசிய முதலாளித்துவ நலன்களை, குண இயல்புகளை கொண்ட போராட்டம் எதுவுமில்லை. முதலாளித்துவ தேசியம் என்று எதுவும் கிடையாது. இதிலிருந்தே பாட்டாளி வர்க்கமே தேசியமாகவே இருக்கின்றது என்ற தத்துவ
-சமர் - 30 G53)
தை-மாசி - 2002

விளக்கத்தை முன்வைக்கின்றனர். ஆனால் பாட்டாளி வர்க்கம் ஏன் சர்வதேசியத்துக்கு பதில் தேசியத்தை முன் வைக்க வேண்டும் என்று விளக்குவதில்லை. அத்துடன் தேசிய முதலாளித்துவ தேசிய கோரிக்கைக்கும், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கோரிக்கைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுக்கின்றது. இரண்டை ஒன்றாக்க தேசபக்தன் முயல்கின்றது. இதிலிருந்து ஒரு கட்சியின் தலைமையில் தேசியத்தை தலைமை தாங்க முயல்கின்றது. தேசியத்துக்கும், சர்வதேசிய ஜனநாயக கோரிக்கைக்கும் இடையில் வேறுபாடில்லை என்று திரித்துக் காட்ட, புதிய கண்டுபிடிப்பை தேசிய முதலாளித்துவம் சார்ந்து வைக்கின்றனர்.
பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் பெயரில் முதலாளித்துவ தேசியத்தை நியாயப்படுத்த அன்றைய சீன தேசிய முதலாளித்துவம் பற்றிய பண்புகளிலிருந்து இன்றைய புதுக்கொலணிய நாட்டு தேசிய முதலாளித்துவத்தின் பண்புகளை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.” என்கின்றனர். மிக ஆச்சரியகரமான இந்த வாதம் சீன தேசிய முதலாளித்துவம் நிலவிய சம காலத்தில் உருவானதாக கூறும் நவகாலனியம் (இந்த நவகாலணி கூட சீன புரட்சி நடை பெற்ற சம காலத்திலேயே ஏகாதிபத்தியம் உருவாகி விட்டதாக தேசபக்தன் வைக்கின்றது) தேசிய முதலாளிக்கு பொருந்தாது என்பது, தமது எடுகோளையே தலையைச் சுற்றி மறுப்பதாகும். அது காலத்தால் இன்று மாறியுள்ளது என்றால், அதை இந்தக் கட்டுரை உள்ளடக்கம் மறுக்கின்றது. தேசிய முதலாளித்துவ உற்பத்தி பற்றிய அடிப்படை மார்க்சிய கோட்பாட்டையே, தேசபக்தனின் தேசிய முதலாளித்துவம் பற்றிய நிலைப்பாடு திருத்தக் கோருகின்றது. ஒரு தேசிய முதலாளியின் நோக்கம் எப்போதும் தனது தேசிய எல்லைக்குள் தனது உற்பத்தியை சந்தைப்படுத்தக் கோருவதே பொதுவான பண்பாகும். இது சீனாவில் இருந்து இன்று வரை இதில் மாற்றம் காணவில்லை. தேசிய முதலாளியாக உயிர் வாழும் வரை, இந்தக் கோரிக்கை மாறிவிடுவதில்லை. இது காலத்தாலும் மாறுவதில்லை. உற்பத்தி மற்றும் அதன் உறவாக்கமே அவனின் குண இயல்பை தீர்மானிக்கின்றன. உள்நாட்டு தேசிய வளத்தை சார்ந்து உள்நாட்டில் தனது உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த சந்தையை தக்க வைக்கும் போராட்டத்தில் இருந்தே, தேசியம் என்ற கோசம் எழுகின்றது. தேசிய உற்பத்தி அழிக்கப்பட்டு அல்லது தரகாக மாற்றப்படின் தேசிய முதலாளித்துவ குணாம்சம் இழந்து, அதன் பண்பு மாறுகின்றது. ஆனால் தேசிய முதலாளித்துவம் என்ற குணாம்சம், அதன் உற்பத்தி சார்ந்து மாறிவிடுவதில்லை. இதில் இருந்தே பூர்சுவா வர்க்கம், இதை உயிருள்ள கோசமாக தொடர்ச்சியாக முன்வைக்கின்றது.
தேசிய முதலாளித்துவத்தின் ஊசலாடும் வர்க்க நலன்கள் காலாகாலமாக ஏகாதிபத்தியத்துக்கு தொடர்ச்சியாக சரணடைந்தும், மறுதளத்தில் பாட்டாளி வாக்கத்தை நோக்கி தள்ளப்பட்டு வந்த போதும், தேசியக் கோரிக்கையை முன் நிறுத்தி பூர்சுவா வர்க்கம் மீண்டும் மீண்டும் எழுகின்றன, போராடுகின்றன. இந்த பூர்சுவா வர்க்கத்தின் தேசியக் கோரிக்கை இடைப்பட்ட வர்க்க நலன்கள் சார்ந்து உயிருள்ள ஒரு போராட்டமாக இருக்க, அதை தேசபக்தன் மறுத்து “தரகுமுதலாளித்துவப் போக்காக மாறிவிட்டது” என்று கூறி அதை முடித்து வைப்பது ஆச்சரியகரமானது. இதை மறுத்தபடி தான், புதிய ஜனநாயக புரட்சியை வேறு முன்வைக்கின்றனர். தேசிய கடமைகளை பாட்டாளி வர்க்கமே முன்னெடுக்க வேண்டும் என்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் இடைப்பட்ட வர்க்கம் அதன் கோரிக்கையுடன் ஒரு சமூக உற்பத்தி சக்தியாக இல்லாத ஒரு நிலையில், குண இயல்புகளை ஏகாதிபத்தியத்திடம் இழந்து வரும் நிலையில், ஏன் பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயக புரட்சியை முன் வைக்க வேண்டும். பாட்டாளி வர்க்கம் நேரடியாகவே சோசலிச புரட்சியை மேற்கு நாடுகள் போல் கோருவதே சரியானது. இடைப்பட்ட வர்க்கங்கள் தமது உற்பத்தியுடன் முன்வைக்கும் தேசியக் கோரிக்கை தான், புதிய ஜனநாயக புரட்சியை நடத்தும் பொறுப்பை பாட்டாளி வர்க்கத்துக்கு சுட்டிக்காட்டும் சமூக இயங்கியலாகும். இடைப்பட்ட வர்க்கங்கள் தமது உற்பத்தியை
L-சமர் - 30 (55
தை-மாசி - 2002

Page 28
அடிப்படையாக கொண்டு, தனது தேசியக் கோரிக்கையை முன்வைத்த தனது வர்க்க நலனுக்காக போராடுவது இயல்பானது இயற்கையானது. இதன் ஒரு பகுதி தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது அதன் வர்க்க கண்ணோட்டத்தில் இயல்பானது இயற்கையானது. ஆனால் உயிருள்ள ஒரு தேசிய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்வைத்து, அந்த வர்க்க அழிவு வரை போராடுவது மூன்றாம் உலக நாடுகளின் பொதுப் பண்பாக உள்ளது. இதை மறுத்து அவர்கள் அழிந்து விட்டதாக கூறுவதும், அதை புதிய ஜனநாயக கட்சி ஊடாக தலைமை தாங்கி நிலைநிறுத்தக் கோருவதும் அசட்டுத்தனமாகும், அழிந்து விட்ட, சரணடைந்து விட்ட வர்க்கத்துக்காக, அவர்களின் தேசியக் கோரிக்கைக்காக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டிய அவசியமில்லை. வெற்றிடத்துக்காக, பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயக கட்சியின் பெயரில் போராட வேண்டிய அவசியமில்லை. இடைப்பட்ட வர்க்கங்கள் இல்லாத ஒரு நிலையில், இடைப்பட்ட உற்பத்திகள் இல்லாத நிலையில் புதிய ஜனநாயகப் புரட்சி என்பது கற்பனையே. இடைப்பட்ட வர்க்கம் தனது உற்பத்தியுடன் போராடுமாயின், அங்கு புதிய ஜனநாயகப் புரட்சியை இடைப்பட்ட வர்க்கம் சார்ந்து பாட்டாளி வாக்கம் தனது ஜனநாயகக் கோரிக்கைக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றது. இந்த புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறுபட்ட வர்க்கங்கள் தனது நலன்களுடன் போராடும் போது, ஒற்றைப் பரிணாம கட்சி அதை தலைமை தாங்குவது என்பது, அந்தக் கட்சி வர்க்க மோசடியை அடிப்படையாக கொண்டது.
நவகாலணித்துவ அமைப்பில் “முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகி” வருகின்றது என்று கூறியபடி, உருவாக்கும் வர்க்க மோசடிக் கட்சியை நியாயப்படுத்த “புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது” என்று கூறுவதன் மூலம், லெனின் மற்றும் ஸ்ராலின் தேசியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை மறுக்கின்றனர். இது சர்வதேசியத்தின் தேசிய ஜனநாயக கோரிக்கைக்கும், முதலாளித்துவத்தின் தேசியக் கோரிக்கைக்கும் இடையில் உள்ள நேர் எதிரான கண்ணோட்டத்தை மறுக்கின்றது. தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் சர்வதேசியத்தை திரிபுகளின் ஊடாக அடிபணிய வைக்கின்றது. இந்தத் திரிபை நியாயப்படுத்த “புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சினை’ முன்னைய தேசியத்தில் இருந்து வேறுபட்டதாக நாமம் இடுகின்றனர். “தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது’ என்று வைப்பதன் மூலம் சுயநிர்ணயம் என்ற அடிப்படை மார்க்சிய வரையறையை மறுக்கின்றனர். சுயநிர்ணயம் இதனால் கோட்பாட்டு ரீதியாகவே காலாவதியாகிவிடுகின்றது. தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கையாக கோட்புாட்டு ரீதியில் மாறும் போது, தொழிலாளிக்கு நாடு இல்லை என்ற மார்க்சின் சர்வதேசிய கோசம் செயல் இழந்து, தொழிலாளிக்கும் தேசியம் சார்ந்த நாடு உள்ளதாக மாறிவிடும் போது, சுயநிர்ணயம் என்பது சர்வதேசிய எல்லைக்குள் அவசியமற்றதாகிவிடுகின்றது. உலக பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு நாடு இல்லை என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மறுத்து, பாட்டாளி வாக்கத்துக்கு நாடு இருக்க முடியும் என்கின்றனர். “தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது” என்பதன் மூலம், பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவும் இருக்க முடியும் என்கின்றனர். இது தேசியம் என்ற முதலாளித்துவ அடிப்படை கோரிக்கையையும், அதன் உள்ளடக்கம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த தத்துவ அடிப்படைகளை நிராகரித்து, மறு விளக்கம் கொடுப்பதாகும். பாட்டாளி வர்க்கம் தேசிய பிரச்சனையில் சர்வதேசிய வழியில் ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் ஆதரித்து, சுயநிர்ணயத்துக்காக மட்டும் பிரச்சாரம் செய்கின்றது, போராடுகின்றது. தேசிய பிரச்சனைக்கான தீர்வை சர்வதேசிய அடிப்படையில் சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு வெளியில், தேசிய அடிப்படையில் தீர்வை முன்வைத்து போராடுவதில்லை. இதுதான் ஒரேயொரு சர்வதேசியமாகும். இந்த சர்வதேசியத்துக்கு புறம்பாக "புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சனை'யில் சர்வதேசியத்துக்கு புறம்பாக தேசிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்கு என்பது, உண்மையில் அவர்கள் பாட்டாளி
- சமர் - 30 தை-மாசி - 2002 G5o

வர்க்க அரசியலை கைவிட்டு சீரழிந்து செல்வதை தாண்டி விளக்கம் பெற மாட்டாது. இங்கு புதுக் கொலணி நாடுகளுக்கு என்று குறித்துக் (ஏகாதிபத்தியம் அல்லாத அதே நேரம் அவற்றிலிருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளையும், புதுக் கொலணி என்கின்றனர். பார்க்க மேலே) காட்டுவதன் மூலம், அந்த நாடுகளில் “முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமா”வதால் முதலாளித்துவ தேசியக் கோரிக்கையை தங்களுடையது என்கின்றனர். இதனால் புதிய ஜனநாயகப் புரட்சி அவசியமென்கின்றனர். நகைப்புக்குரிய ஒரு எடுகோள் வாதம். முதலாளித்துவ வர்க்கம் தனது தேசியக் கோரிக்கையை முன்னெடுக்க தயாரற்று ஏகாதிபத்திய மயமாகிவிட்டால், ஏன் பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயகம் ஊடாக இடைப்பட்ட வர்க்கங்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இடைப்பட்ட வர்க்கங்கள் தனது குண இயல்புகளை எல்லாம் உற்பத்தி சார்ந்து இழந்து விட்டால், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியம் ஜனநாயகக் கோரிக்கையும் அற்றுவிடுகின்றது. பாட்டாளி வர்க்க கோரிக்கை மட்டுமே, அங்கு பாட்டாளி வர்க்கத்தின் முன் வருகின்றது. இடைப்பட்ட வர்க்கங்கள் இருப்பின் அவை போராடுகின்றன. போராடின் அவற்றின் கோரிக்கையாகவே எப்போதும் தேசியம் இருக்கின்றன. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை அல்ல அதில் உள்ள ஜனநாயகக் கோரிக்கையை தனதாக்கி, சர்வதேசியத்தை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் முன் வைத்து போராட வேண்டுமே ஒழிய, தேசியத்தை முன் வைத்து போராடுவதில்லை. சர்வதேசியத்துக்கு பதிலாக தேசியத்தை வைப்பின், அது உண்மையில் முதலாளித்துவத்தையே முன்வைக்கின்றனர். சர்வதேசியமும், தேசியமும் வேறுபாடு அற்றுவிட்டதாக கூறுவது மர்க்சியத்துக்கு எதிரானது. சர்வதேசியத்தை தேசிய மயமாக்குவதாகும். தேசியத்துக்கும், சர்வதேசியத்துக்கும் இடையில் நேர் எதிரான வர்க்க நலன்களை, அடிப்படையாகக் கொண்டே தனது தனித் தனியான போராட்டத்தை நடத்துகின்றன. புதிய ஜனநாயகம் என்பது தேசிய ஜனநாயகக் கோரிக்கையை குறைந்த பட்ச திட்டமாக கொள்கின்றது. இந்த ஜனநாயகக் கோரிக்கை சார்ந்து பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும், புதிய ஜனநாயக புரட்சியை தத்தமது வர்க்க நலன் சார்ந்து தனதாக்கும் போது, புதிய ஜனநாயகக் கட்சி என்ற ஒற்றைப் பரிணாம கட்சியால் தலைமை தாங்க முடியாது. முடியும் எனின், பாட்டாளி வர்க்க அரசியலை தேசியத்துக்கு தாரைவார்ப்பதாகும். இதனால் தான் சர்வதேசியத்துக்குப் பதில் தேசிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு உண்டு, என்கின்றனர்.
இதை நியாயப்படுத்த கட்சி, ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தெளிவான அரசியல் வேறுபாட்டை மறுப்பதில் தொடங்குகின்றனர். ". எதிரிகளுக்கு எதிரான அனைத்து உள்நாட்டு வர்க்க சக்திகளை அய்க்கியப்படுத்தும் ஒரு புதிய ஜனநாயக வேலைத் திட்டத்தை முன்வைத்து, தொழிலாளி வர்க்க சித்தாந்த அரசியல் தலைமையை, சமரசமற்ற, துார நோக்குள்ள தலைமையை கட்ட வேண்டும். கீழிருந்து கட்டும் இவ் ஐக்கிய முன்னணிக் கொள்கையை முன்னிறுத்தும் வடிவத்தின் பெயர், கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா. என்பதை அந்தந்த அரசியல் இயக்கங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுவதன் மூலம், இந்த மூன்றுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுத்து, ஒரு அமைப்பின் பெயரை தீர்மானிக்கும் உரிமை பற்றிய பிரச்சனையாக்கின்றனர். உங்கள், தீர்மானிக்கும் சுதந்திர உரிமை என்றும் மறுப்புக்குள்ளாகவில்லை. ஆனால் சர்வதேசிய மார்க்சியம், மார்க்சிய லெனியா மாவோ சிந்தனையிலான அரசியல் விலகலை விமர்சிக்கும் உரிமையை கொண்டுள்ளது. “கீழிருந்து கட்டும் இவ் ஐக்கிய முன்னணிக் கொள்கையை முன்னிறுத்தும் வடிவத்தின் பெயர், கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா. என்பதை அந்தந்த அரசியல் இயக்கங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுவது மார்க்சியத்துக்கு புறம்பாக கூறுவதுடன், மார்க்சியத்தை மறுப்பதாகும். உதாரணமாக ஐக்கிய முன்னணியை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் கட்ட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியை வேறு ஒரு பெயரில் கட்ட முடியாது. ஏனெனின் கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கக்
- apř. - 30 தை-மாசி - 2002 (S)-

Page 29
கட்சியாக இருக்க முடியுமே ஒழிய, பல்வேறு வர்க்கத்தின் ஒரு கட்சியாக அல்லது முன்னணியாக இருக்க முடியாது. பல்வேறு வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய ஒரு முன்னணி நிலவ முடியும். இங்கு தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி என்பதும் கூட, பல்வேறு வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய ஒரு கட்சியாக நீடிக்க முடியாது. மாறாக ஒரு வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும். கீழிருந்து கட்டும் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கையை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி என்பது, அந்த ஐக்கியத்தினுள் பல்வேறுபட்ட வர்க்கத்தின் நலன்களைக் கொண்டே உள்ள போது, இது எப்படி கம்யூனிஸ்ட் கட்சியாக அல்லது சர்வதேசியத்தை நிராகரிக்காத புதிய ஜனநாயகக் கட்சியாக நீடிக்க முடியும். புதிய ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகக் கோரிக்கையின் குறைந்த பட்ச திட்டத்தில், வர்க்கங்கள் வர்க்கங்களற்ற கட்சியாக அல்லது பாட்டாளி வர்க்க கட்சியாக சங்கமம் ஆகிவிடுவதில்லை. இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்தி அணிதிரட்டும் முன்னணியல்லாத ஒரு கட்சி என்பது, பாட்டாளி வாக்கமல்லாத முதலாளித்துவ கட்சியாகவே அது உருவாகும். இதில் தேசியமே பாட்டாளி வர்க்க கோரிக்கையாகும் போது, இதை சொல்லத் தேவையில்லை. இதை தெரிவு செய்யும் உரிமையை நாம் என்றும் மறுக்கவில்லை. ஆனால் மார்க்சியத்தை திரிபாக்கி விடும் அரசியலை, நடைமுறையை விமர்சிக்கும் உரிமை பாட்டாளி வர்க்கத்துக்கு என்றும் உண்டு. கீழிருந்து கட்டும் ஐக்கிய முன்னணி "கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா.” என்றதை “பெயரிலிருந்து திரிபுவாதமா - புரட்சியா எனத் தீர்மானிப்பதை விட அவ்வரசியல் இயக்கத்தின் கொள்கை உள்ளடக்கம், புதிய ஜனநாயக வர்க்கங்களின் நலன்களை, அரசியல் கோரிக்கைகளை பிரதிபலிக்கின்றதா.” என்பதிலிருந்து தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். பெயர் முக்கியத்துவமற்ற ஒன்று என்கின்றனர். அந்த அமைப்பின் உள்ளடக்கத்தை பார்க்க வேண்டும் என்கின்றனர். வர்க்கங்களின் நலன்களை பெயருக்கு வெளியில் எப்படி பிரதிபலிக்கின்றன என்பது முக்கியமானவை தான், இதில் மறுப்பில்லை. உங்கள் தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சித் திட்டம் வெளிவரும் போது அதைப் பற்றி நாம் மேலும் கருத்துக் கூற முடியும். ஆனால் பெயர் முக்கியமல்ல என்பது, அதன் உள்ளடக்கத்தையும் அதன் அரசியல் அடிப்படையையும் மறுப்பதாகும். பெயரும் கூட ஒரு முக்கியமான விடையமாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் தற்செயலாக உருவானவை அல்ல. மார்க்ஸ் கம்யூனிசம் என்ற பெயரைச் சொன்ன போது, லெனின் அதை கட்சியின் பெயராக வைத்த போதும், அவற்றுக்கு ஆழ்ந்த அரசியல் அர்த்தங்களை கொண்டிருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் கீழிருந்து பல்வேறு வர்க்கங்களை ஒன்று இணைக்க முடியும் என்பதும், இதில் பெயர் முக்கியத்துவமல்ல என்பதும் ஒரு மார்க்சிய திரிபு தான். இங்கு பெயர் முக்கியத்துவமல்ல என்பதன் மூலம், பெயரில் இருந்தே திரிபு தொடங்குகின்றது. பெயர் சரியாக இருந்தால், ஒரு புரட்சி வந்து விடுவதில்லை தான். அது எந்த வர்க்கத்தைச் சார்ந்து, எப்படி எந்த வர்க்கத்துக்காக புரட்சியை செய்கின்றது என்பதுடன் தொடர்பான விடையம் தான். பெயர் சரியாக இல்லாவிட்டாலும் அதன் உள்ளடக்கம் புரட்சிக்கு எதிராக மாறுகின்றது. கட்சிகளின் பெயர்கள் கூட ஆழ்ந்த அரசியல் அர்த்தத்தைக் கொண்டவை. கட்சி மற்றும் முன்னணி என்ற பெயரில் கூட வர்க்கங்களின் தனித்துவம் மற்றும் ஒன்றிணைவை தெளிவாகவே கோடிட்டு காட்டுகின்றது. பாராளுமன்றக் கட்சிகள் தமது பெயரை, கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றினால் புரட்சி வந்துவிடுவதில்லை. அதுபோல் இருக்கின்ற முதலாளித்துவக் கட்சிகள், ஒரு புரட்சிகரமான திட்டத்தை வைத்தால் புரட்சி வந்துவிடுவதில்லை. நடைமுறை ரீதியாக சரியான அரசியல் மார்க்கம் அவசியமாகின்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில், சர்வதேசிய மா.லெ.மாவோ சிந்தைனையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். பெயர் மற்றும் கட்சியின் திட்டத்தை விட்டு, எமது நடைமுறையை பாருங்கள் என்ற தேசபக்கதன் வழியில், நாளை பலர் சொல்லாலம். மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை மட்டும் பார்க்கச் சொல்லி, தங்களை சர்வதேசிய வழி வந்தவர்களாக சொல்லின், பாட்டாளி வர்க்கம் அவர்களையிட்டு நகைக்க மட்டுமே செய்யும். l-#ഥf - 30 தை-மாசி - 2002

".1983 ல் உருவான 25க்கு மேலான இயக்கங்கள் போல், தமிழீழ சமூகத்தில் இருந்த மற்றைய இயக்கங்களின் கொள்கைகளை, திட்டங்களை படிக்காமல், மற்றைய இயக்கத்துக்கும் - தங்களுக்கும் இடையில் அடிப்படையான மூலாபாய விசயங்களில் முரண்பாடு - உடன்பாடு தெரியாமல், தியாகத்துக்கு (சாவதற்கு) தயரான நபர்களும், சில ஆயுதங்களும் கிடைத்தாதல் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் போல், தமிழீழ புதிய சனநாயக கட்சியோ, ஏன் தமிழீழ மக்கள் கட்சி கூட அப்படி உருவாக்கப்படவில்லை, பிரகடனம் செய்யவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என்கின்றனர். தங்களுடைய பிரகடனத்துடன் நிற்பாட்டாது, தமிழீழ மக்கள் கட்சியையும் சேர்த்து அவர்களுக்கும் சேர்த்து வக்காளத்து வாங்குகின்றனர். கடந்த காலத்தை ஆர அமர ஆராய்ந்து தெளிந்தவர்கள், ஏன் இரண்டு கட்சிகளை உருவாக்கினர். இரண்டு பேரும் சோசலிசத்தை தமது கொள்கையாக சொல்லும் போது, இங்கு உங்களுக்கிடையிலான முரண்பாடுகளை விவாதம் மூலம் எங்கே எப்போது செய்தீர்கள்! சமர் இரண்டுக்கும் எதிராக நடத்திய விமர்சனம் மீது, எங்கே எப்போது நீங்கள் இருவரும் விவாதித்தீர்கள். சமூகத்தில் உருவான 25க்கு மேற்பட்ட இயக்கத்தில் தொடங்கி சமகாலம் வரை பல்வேறுபட்ட கருத்துப் போக்குகளின் முரண்பாடுகள் மேல், உங்கள் கட்சிப் பிரகடனம் செய்யும் அரசியல் அடிப்படைகளை விவாதம் மூலம் எங்கே எப்போது நடத்தினிர்கள். சமர் எழுப்பிய தத்துவார்த்த கேள்விகளுக்கு இதுவரை இருவருமே பதிலளிக்கமாலேயே, கட்சிப் பிரகடனங்கள் வெளிவந்துள்ளன. இங்கு சமருக்கு பதில் அளித்தும் தான் கட்சிப் பிரகடனம் செய்ய வேண்டுமா!, என நீங்கள் நக்கலாக எழுதி தத்துவ விவாதத்தை முடிக்க முயலாம். ஆனால் கேள்விகள் உயிருடன் மீண்டும் மீண்டும் உங்கள் முன் உலாவுவதை, யாரும் தடுக்க முடியாது. எமது நாட்டின் புரட்சி பற்றியும், அதன் அடிப்படையான வர்க்க ஆய்வுகள் மேல் பாட்டாளி வர்க்க கட்சியை கட்டும் பணி என்பது, அனைத்து தத்துவார்த்த விவாதங்களுகக்கும் முரணற்ற வகையில் பதிலளித்து, அதன் மேல் தான் ஒரு கட்சி அமைக்க முடியும். இந்தப் பணியை செய்யாதவர்கள், கடந்த நிகழ்கால தத்துவார்த்த விடையங்கள் மேலான தெளிந்த தெளிவான முடிவில் பிரகடனம் செய்தோம் என்பது, அப்பட்டமான ஒரு வரலாற்று அபாண்டமாகும். ஒரு திட்டம் சார்ந்த அனைத்து விடையத்தையும் சமுதாயத்தின் முன் வைத்து, அதை முரணற்ற வகையில் தீர்த்துள்ளோம் என்பது கற்பனையே. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாளிக்காமலேயே கட்சிப் பிரகடனங்கள் வந்தன, வருகின்றன. உதாரணமாக மூன்றாம் உலகநாடுகள் ஏகாதிபத்திய காலணியவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், நவகாலணியாக இருப்பதாக உங்கள் தெளிவான முடிவு வரையறுக்கின்றது. கடந்த கால அரைக்காலணிய அரை நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை எப்படி தவறானது என்று, மதிப்பிட்ட ஒரு எழுத்தையும் எங்கும் காணமுடியாது. இலங்கை கம்யூனிச வரலாறு இதை எப்படி தவறாக ஏன் கையாண்டது என்ற விளக்கமின்றி, கட்சிப் பிரகடனம் செய்வது நிகழ்கின்றது. நீங்கள் உங்களுக்குள் விவாதித்தீர்கள் எனின், அதை பரந்துபட்ட விவாதத்தை நடாத்தது பிரகடனம் செய்தது கூட பிரகடனத்தின் முழுமையை கேள்விக்குள்ளாக்கின்றது. சீன தேசிய முதலாளித்துவமும், சமகாலத்தில் நேரடி காலணியத்தில் இருந்து நவகாலணியான மற்றைய நாட்டு தேசிய முதலாளித்துவமும் ஒன்று அல்ல என்பதும், இன்று அது ஒன்று அல்ல என்று கூறி தேசிய முதலாளித்துவம் பற்றிய அடிப்படைக் கோட்பாட்டை மறுத்து மார்க்சியத்தை திருத்தும் விவாதங்களை எல்லாம் எப்போது எங்கே நடத்தினிர்கள். இது போல் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவே இன்று உள்ளது என்ற மார்க்சியத்தை திருத்தும் விளக்கங்கள், இப்படி நிறையவே எழுப்ப முடியும்.
அடுத்து கட்சியின் பிரகடனம் ஏன் அவசியமாகின்றது. இதை அவர்கள் விளக்கவில்லை. இதை எழுப்பும் போது தங்களுக்குள் ஏற்றுக் கொண்ட 10 பேருக்குள் குசுகுசுக்கும் அரசியல் செய்வதாகக் கூறியே பதிலளிக்கின்றனர். இங்கு மீண்டும் ஒரு கட்சிப் பிரகடனம் ஏன் அவசியமாகின்றது. கட்சி இல்லாத நிலையில் கருத்துகள் மட்டும் எதைச்
L-சமர் - 30 தை-மாசி - 2002

Page 30
சாதிக்கின்றன. கட்சி பகிரங்கமாக இருப்பது ஏன் அவசியமாகின்றது. குறிப்பான இலங்கை நிலைமையில், இதன் அவசியம் என்ன. இலங்கையில் மக்கள் திரள் வழி கட்சியோ அல்லது அதன் சார்பு அமைப்புக்கள் நடைமுறையில், மக்களின் அன்றாட பிரச்சனைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக முன்னெடுத்து செயற்படத ஒரு நிலையில், கட்சி மக்களை அணிதிரட்ட உதவும் என்று சொல்வது கட்சியின் பிரகடனத்தின் நோக்கத்தை மூடிமறைப்பதாகும். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி எந்த மக்கள் திரள் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் போராடவில்லை. அது தனது பெயரில் எங்கேயும் எந்த இடத்திலும் மக்களை அணிதிரட்டவில்லை. திரட்டும் புறநிலை கூட அங்கு பகிரங்கமாக இல்லை. அப்படி யாராவது தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி நபர்கள் இருப்பின், அவர்கள் கூட கட்சியின் இரகசிய பிரதிநிதிகள் தான். அவர்கள் கட்சியின் பகிரங்கமான நபராக இருப்பதில்லை. அத்துடன் அவர்களின் கருத்துகளும், அவர்கள் அல்லாத ஒரு பகிரங்கத்தில் இதுவரை இல்லை. அதே நேரம் கட்சியின் நிலைப்பாடு சார்ந்து, குறித்த மக்களின் முரண்பாடுகள் மேல் அங்கு இரகசியமாகத் தன்னும் முன் வைக்கப்படுவதில்லை. கனடா நாட்டின் முகவரியுடன் சில முகவரிகளுக்கு கட்சியின் பெயரிலான இதழ்கள் செல்வதற்கு அப்பால், கட்சின் பெயரில் எதையும் மக்களுக்குள் செய்வதில்லை. இதை யாரும் எந்தத் தனிநபரும் செய்யலாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒரு மாநில நக்சல்பாரிகள் அறிவித்தால், அதன் குறுங்குழுத் தன்மை எப்படி பிரதிபலிக்குமோ, அதுபோல்தான் இந்தக் கட்சி பிரகடனமும், பரந்துபட்ட மக்கள் முன் எந்த அடிப்படையான செயல் ரீதியான மக்கள் திரளைக் கொண்டிராத நிலையில், கட்சியை பகிரங்கமாக வைக்க வேண்டும் என்பது சுத்த அபத்தமாகும். பரந்துபட்ட மக்கள் முன் எந்த மக்கள் திரள் முன்முயற்சியுமற்ற நிலையில், இதழ் வழியாக கருத்துகளைக் கொண்டு செல்லும் நிலையில், கட்சிப் பிரகடனம் என்பது குறுங்குழுவாத எண்ணமே எஞ்சி நிற்கின்றது. கட்சிப் பிரகடனம் உண்மையில் வெளிநாட்டுக் கட்சிகளிடம் சலுகை பெறும் ஒரு எல்லைக்குள் தான், குறுகிய நலனில் இருந்து பிறந்ததாகும். இதை மறுக்க முடியாது. மக்கள் என்பது எல்லாம் ஒரு வாதப் பொருளுக்கே உபயோகமாக உள்ளது.
இந்த நிலையில் கட்சி ஊழியர்களை வென்று எடுப்பதே முதற்பணி என்று நான் எழுதிய போது, அவர்கள் அதை கொச்சைத்தனமாக விளக்கி பதிலளிக்கின்றனர். எத்தனை கட்சி ஊழியர்கள் வந்தால் கட்சியை பிரகடனம் செய்யலாம், இதற்கு சர்வதேச விதி உண்டா என பலவேறாக கூறி தம்மை மெச்சுகின்றனர். பொதுவான பாசிச சூழல் நிலவும் எம் நாட்டில், கலைப்புவாதத்தில் அனைத்தையும் கைவிட்டுச் செல்லும் நிலையில், கட்சிக்கான ஊழியர்களை உருவாக்கவதே பிரதனமான பணியாகும். இதை திட்டவட்டமாகவும் கொச்சைத்தனமாக்கி மறுக்கின்றனர். சர்வதேச அளவில் தாம் பல ஊழியர்களை கொண்டு, இலங்கை வரை புரட்சியில் பங்களிப்பதாக கதை சொல்லுகின்றனர். அரசியல் மற்றும் ஸ்தாபன வடிவத்தை எதிர்த்து, கலைப்புவாதத்தை அரசியலாக கொண்ட தனிநபர்களுடனும் குழுக்களுடனும் சமரசவாதத்தை அடிப்படையாக கொண்டு, உறவுகளை பேணுவது ஊழியர் கொள்கையாகாது. ஒரு சிலரைச் சுற்றி சமரசவாதத்துடன் கூடிய ஆதரவுக் கூட்டத்தை அடிப்படையாக கொண்டு, யாரும் புரட்சி செய்ய முடியாது. கட்சி என்பது ஒரு கட்சியாக இயங்க நடைமுறையில் சொந்த மக்கள் மத்தியில் செயற்படவும், சொந்த பலத்தில் சார்ந்திருக்கவும் வேண்டும். அனைத்து நெருக்கடியையும் கட்சி தனது சொந்த பலம் சார்ந்து, தீர்க்கவேண்டும். அது சொந்த ஊழியர்களைச் சார்ந்து, அதை சுற்றி உருவாகியுள்ள மக்கள் திரளைச் சார்ந்து போராட வேண்டும். எமது சொந்த மண்ணில் கிராமப்புற வேலைகளில் தொடங்கி நடைமுறை ரீதியாக தனது கருத்தை இரகசியமாவோ, பகிரங்கமாகவோ முன் வைத்து போராடும் பலத்தைச் சார்ந்தே, கட்சி உருவாகின்றது. அத்துடன் கட்சி சொந்த மக்கள் மத்தியில் இருந்து, பிரகடனப்படுத்த வேண்டும். தமிழீழ புதிய ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் கட்சி போன்று, வெளி நாடுகளில் இருந்து கட்சிப் பிரகடனம் செய்ய
L-சமர் - 30 தை-மாசி - 2002

முடியாது. விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணி நபர்களை அடிப்படையாகக் கொண்டு, கட்சியை பிரகடனம் செய்ய முடியும் என்றால், இது தனிநபர் பிரகடனங்களைக் கூட அங்கீகரிக்கக் கோரும். கட்சி என்பது மக்களுடன் உயிருள்ள பிணைப்பைக் கொண்டது. அந்த உயிர் சமூகத் தளத்தில் எங்கோ ஒரு மூலையில் பிரதிபலிக்க வேண்டும். இல்லாத நிலையில் சில நபர்கள் செய்யும் கட்சிப் பிரகடனங்கள், ஒரு புரட்சிகர போராட்டத்தின் தேவையைக் கூட அது வெளிவந்த வடிவத்தில் இருந்தே கேலி செய்துவிடும். இயக்க வரலாறு போல் இது நீண்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
அடுத்து எனது கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில பதங்களைப் பிரித்தெடுத்து, அது
முத்திரை குத்துவதாக கூறுவது ஒரு விவாதம் அல்ல. சிறுபிள்ளைத்தனம் அல்லது
திரிபுவாதம் என்று ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பின், அது எதன் மீது நாம் ஏன்
சொன்னோம் என்பதைக் கூறி, அது எப்படி தவறாக உள்ளது என விளக்கி அதை
மறுக்க வேண்டும். இல்லாமல் அந்த சொற்களை கட்டுரையின் அரசியல் உள்ளடக்கத்தில்
இருந்து பிரித்தெடுத்து, அதை முத்திரை குத்துவதாக காட்டுவது, அரசியல் ரீதியாக
தத்துவ விவாதத்தை கைவிடுவதாகும். திரிபுவாதம், கலைப்புவாதம், சிறு பிள்ளைத்தனம்
போன்ற அரசியல் தத்துவார்த்த அர்த்தமுள்ள சொற்களை யாரும் பயன்படுத்துவதே
தவறு என்ற நிலைக்கு, தேசபக்தன் தனது சந்தர்ப்பவாத அரசியலுடன் சரிந்து, செல்லுகின்றது. கட்சியின் பெயரில் இருந்து பார்க்கக் கூடாது என்று பெயரையே
மறுத்துரைப்பது போல், இந்த சொற்களையும் மறுத்துரைக்கின்றனர். இந்த சொற்களின்
அரசியல் உள்ளடக்கத்தை நாம் கட்டுரையில் பொருத்திக் காட்டியது தவறானது
என்றால், அதை தத்துவ ரீதியாக விளக்கி நிறுவவேண்டும். இந்த சொற்களை நாம்
கையாண்ட போது, நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் பொறுப்பு உணர்வுடன்
தான் கையாண்டோம். குறிப்பாக உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு சரியாகவே
பொருத்தியுள்ளோம். இது தவறு என்றால், அதை நிறுவும் உங்கள் தத்துவ விவாதத்தை
நாம் கூர்ந்து அவதானிக்க தயாராக உள்ளோம். இல்லாது எழுந்தமானமாக சொற்களை பிரித்தெடுத்து, இதை முத்திரை குத்தல் என்றால் அதை எந்தவிதமான நிபந்தனையின்றியும்
நிராகரிக்கின்றோம்.
". சமர் தங்களைத் தவிர மற்றைய சக்திகள் எல்லாவற்றையும் நீங்களா புரட்சிகர சக்திகள், கட்சிகள்? எனக் கேலி செய்கின்ற அரசியல் போக்கு, பக்குவமற்ற பொறுப்புணர்வற்ற விமர்சனப் போக்கு, விடையங்களை ஆழமாக விளக்கி வென்றெடுப்பதற்குப் பதில் முத்திரை குத்தி அன்னியப்படுத்தும் போக்கு” என்று எம்மைப் பற்றி ஒரு மதிப்பீட்டை தருகின்றனர். நல்லது, அப்படி நாங்கள் அன்னியப்படுத்திய புரட்சிகரமான அந்த சக்திகளை, பொறுப்புணர்வுடன் சுட்டிக் காட்டுவீர்களா? குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை கூட நீங்கள் பொறுபுணர்வுடன் நாம் முத்திரை குத்திய வடிவில் இருந்து எடுத்துக் காட்ட அழைக்கின்றோம். நாம் மிக மோசமாக முத்திரை குத்திய அந்த மற்றைய சக்திகள் யார்? எடுத்துக் காட்டுங்கள். சும்மா சொல்வதை ஒரு அரசியலாக்க முடியுமா! இழிந்து போன பிழைப்புவாத இலக்கிய தனிநபர்கள், சமருக்கு பதிலளிக்க முடியாத தமது அப்பட்டமான அரசியல் வறுமையை இருந்து, இப்படிச் சமர் பற்றி சொல்லி ஆற்றுவது நீண்ட காலமாக நாம் அறிந்ததே. எங்கே எம்முடன் விவாதம் நடத்த முடியாது தோல்வியடைகின்றார்களோ, அங்கே இது ஒரு அவதுாறாக அரசியலாக மாறிவிடுகின்றது. ஆனால் யார் அந்த சமுதாயம் மீது அக்கறை கொண்ட அந்த புரட்சி நபர்கள் என்று கேட்டால், அதற்கு மெளனம் தான் பதில். முதுகுக்கு பின் உலாவும் அவதுாறை கவனமாக பிரித்தெடுத்து தேசபக்தன் எழுத்தில் வைக்கின்றது. நல்லது நாம் முத்திரை குத்திய அந்த புரட்சிகர நபர்கள் யார்? என்பதே எமது கேள்வி.
— Guof - 30
G6)>—
தை-மாசி - 2002

Page 31
இங்கு அடுத்த விவாதம் "சமர் தங்களைத் தவிர மற்றைய சக்திகள் எல்லாவற்றையும் நீங்களா புரட்சிகர சக்திகள், கட்சிகள்?' என்று கேட்டு இதை மறுப்பதன் முஸ்ம், மா.லெ.மாவோ சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட பல கட்சிகள் இருக்க முடியும் என்கின்றனர். நாம் மா.லெ.மானோ சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல கட்சிகள் ஒருக்காலும் இருக்க முடியாது என்கின்றோம். ஒரு விடையத்தை மாலெ.மாவோ சிந்தனையின் பார்வையில் பல விதமாக விளக்க முடியாது. ஆப்கான் போரை பலவிதமாக சர்வதேசியம் விளக்க முடியாது. பலவாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் விளக்கின், அங்கு அதன் புரட்சிகர தன்மையே கேள்விக்கு உள்ளாகின்றது. இன்று சமர் மற்றையவற்றை விமர்சிக்கின்றது என்றால், மா.லெ.மாவோ சிந்தனையின் சரியான தன்மையை அனைவக்கும் வந்தடைவதற்காகவே, இதில் சமர் தவறு இழைத்தால் அதை தத்துவார்த்த ரீதியாக நிறுவ வேண்டும். அதைவிடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புரட்சிகர சக்தி இருக்க முடியும் என்றால், அது மார்க்சியத்துக்கு எதிரானது. இங்கு மற்றைய ஒடுக்கப்பட்ட வாக்கங்களின் கட்சிகளை இது உள்ளடக்கியது அல்ல. அவை மீதான எமது விமர்சனம் தெளிவானவை.
அடுத்து சமர் பற்றி மேலும் "சில கட்சிகள், அதன் உறுப்பினர்கள். தங்கள் கட்சியின் கொள்கை, வேலைகள், போராட்டங்கள் பற்றிப் பேசுவதை, எழுதுவதை விட மற்றைய கட்சிகளின் குறைகளை விமர்சிப்பதையும், ஏளனம் செய்வதையும் தங்களின் முக்கிய கொள்கைகளாக கொண்டிருக்கிறார்கள், சமர் இந்தப் போக்குக்கு பலியாகிவிடக் கூடாது என விரும்புகின்றோம்." நல்லது. ஆனால் நாம் இதைச் செய்வதே எங்கள் பணியெனக் கருதுகின்றோம், இதை நீங்கள் மறுப்பின், மார்க்சியத்தையே மறுக்கின்றீர்கள்! மார்க்ளப் மற்றைய அனைத்தையும் விமர்சித்தே, மார்க்சியத்தை நிறுவினார். லெனினின் எழுத்துகள் பெரும்பாலானவை, சர்வதேச ரீதியாக சமகாலத்தில் நிலவிய மற்றைய அரசியல் கட்சிகளின் தத்துவார்த்த அடிப்படை மீதான விமர்சனமாக முன்வைத்தே, மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். மார்க்சியம் பலமான தளத்தில் நிறுவப்பட்ட நிலையில், மாவோவுக்கு இந்தப் பணி மிக குறைவாக இருந்தது. ஆனால் இன்று மார்க்சியத்தை நிறுவும் பணி எமது மையமான பணியாக மீள உள்ளது. இது நடைமுறை போராட்டத்துக்கு வெளியில் அல்ல. மார்க்சியம் அல்லாத அனைத்து தத்துவ இயலையும் மறுத்து, அதை அம்பலம் செய்து மார்க்சியத்தை நிறுவ வேண்டிய புதிய வரலாற்றில் நாம் உள்ளோம். ஈவிரக்கமற்ற வகையில் சலுகைகளை வழங்காது மார்க்சியமல்லாத அனைத்து கோட்பாடுகளையும் மார்க்சிய விலகல்களையும் எதிர்த்து, யார் தத்துவார்த்த துறையில் சமகாலத்தில் பார் போராடவில்லையோ அவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல. இந்த வகையில் நாங்கள் அந்த பணியை தெளிவுபடனே யாருக்கும் சலுகை வழங்காது, தத்துவத்துறையில் போராடுகின்றோம். நீங்கள் எமது இந்த புரட்சிகர பணிக்கு எதிராக உங்கள் சமரசவாத வழியை முன்வைத்து சுட்டிக் காட்டியதன் மூலம், அந்தப் புரட்சிகர பெருமைக்குரிய பண்பை மேலும் வளர்தெடுக்க முனைவதே, எமது தலையாய பணி என்பதை மீளவும் சுட்டிக் காட்டுகின்றோம்.
மக்களின் வாழ்வை சூறையாடும் உலகமயமாதல்
மக்களின் அற்ப சொற்ப உழைப்பு முதல் அவர்களின் சிறு சொத்துகளையும் கூட அழித்து கொள்ளையிட்டு செல்வது, உலகமயமாதல் விரிவாக்கத்தின் சுதந்திர ஜனநாயகமாகும், அண்மையில் ஆர்ஜென்ரினா மக்களின் தன்னியல்பான எழுச்சியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமும் தெளிவுபடவே, உலமயமாக்கல் விளைவை மீண்டும் உலக மக்களின் முகத்தில் அறைந்தது.
ஒரு டொலர் ஒரு பேர்சோவுக்கு சமனாக திகழ்ந்த ஆர்ஜென்ரினா பனம், அண்மையில்
。_芷M
δαμά, ΙΟΤμή - 2λλ.

வரைமுறையற்ற வகையில் தனது பெறுமதியை இழந்து வருகின்றது. நவீனப்படுத்தலுடன் சுடிய போருளாதார சுதந்திரம் என்ற அடிப்படையான பொருளாதார கொள்கையை முன்வைத்து, அரசு சொத்துகளை தனியார் பமாக்கினர். அத்துடன் தேசிய உற்பத்திகளை அன்னிய உற்பத்தி மூலம் அழித்தும், உலக வங்கிக் கடனில் ஒரவு செலவுகளை திட்டமிட்டும். உள்நாட்டு பொருளாதார கட்டமைப்புளை அவர்களின் ஆலோசனைக்கு இனங்க அழித்துவந்தனர்
தேசிய வருமானத்தில் 33 சதவிதத்தை வட்டிாக செலுத்தும் நிலைக்கு கொண்டு வந்த மக்களின் 3 Eபுட்ன உலக வங்கி சூறையாடியது. அரசின் வெளி நாட்டு கடன் 15 10 கோடி டோராக தன:விரிகோப் ஆட்டம் போடுகின்றது. மக்கள் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோ, ஆதாவது 14 ட்சம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்ட நிேைப்பில், 30 லட்சம் மக்கள் பரிா IேTTITண் வறுமை நிலைக்குள் சென்றுள்ளனர். அரசு புள்ளி விபரமே வேலை செய்ய தகுதியான மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் வேலையற்றவராக மாறிவிட்டதாக அறிவித்ததுடன், அது ஏறிச் செல்வதையே ஒத்துக் கொண்டது. நாள் ஒன்றுக்கு 2000 பேர் புதிதாக வறுமைக்குள் புதும் அளவுக்கு, மக்களின் உழைப்பு அவர்களின் சிறு சோத்துகளும் சூrநயாடப்படுகின்றன. உழைக்கும் மக்களில் அரைவாசி பேர் பாதாந்த னருமானம் 400 டொலராக துறைந்து வறுEDக்குள் கையேந்த வைத்துள்ளது. இதனால் நாட்டின் வங்கும் திறன் 3 முதல் )ே சதங்dதமாக குறைந்து நாட்டின் வர்த்தகமே முடங்கிவிட்டது.
மக்களின் வாழ்பு வாழ்வதற்கான அடிப்படைத் தேவையும் சூறையாடப்பட்ட நிலையில், ஏகாதிபத்திய கைக்கூவி அரசான ஆர்ஜென்ரினோ அரசு. அந்த மக்களை ஒடுக்க THaYuCL LLLS S SSSSYLL LL L SuTuuS TTCaSL 0GT TT TuHuYYTS STTuS S KKCLYS LaLLTS SK aaSTSS மக்களின் வயிற்றுப் பசியை அடக்கி மேளனமாக இருக்க கோரினர். மக்களால் தேர்ந்த எடுக்கப்பட்ட ஜன்நாபக அரசு, அந்த மக்களை அடக்கி அடிமைப்படுத்தும் சட்டத்தை கொண்டுவந்தது. மக்களை அடங்கி இருக்க கோரும் வகையில் உலக iங்கியினதும் ஏகாதிபத்திய ஆலோசனைக்கும் இனங்க உருவான அடிமை சாசனத்தை எதிர்த்து. மக்கள் தன்னிஸ்டாக விதியில் இறங்கின்னர், எங்கும் உண்வுக்கல்சமாக மாறியது. பக்கi கையேந்தி, வயிறுக்கு ஏதும் கிடைக்குமா கான்று ரங்கிE01 கிடப்பதை எல்லாம் பேறவும், கிடைக்காவிட்டால் இருப்பவனிடம் சூறையாடபும் தொடங்கிய நில்ைப்பில், அது பேரும் கலகமாக மாறியது. வறுமையில் வாழ்ந்தவனும், புதிதாக வநுண்மங்ணய நடனர்பங்வனுமாக விதியில் இரத்தம் சிந்தி போராடினர். அரச அடக்கமுறையை ரவி பலரை கொன்று போட்டது.
இது மக்கள் கலகத்தை உச்சத்துக் கோண்டு சென்றது அரசு தப்பியோடுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை. இந்நிலைப்பபிள் மக்களை ஏமாற்ற புதிய ஆட்சி அதிகாரத்தில் ஏறியது. அவர்கள் புதிய மோசடிய ஒன் அனைத்து வெளிநாட்டு கடன்களைபம் கொடுப்பதை தற்காலிகமாக இடை நிறத்துவதாக அறிவித்தனர். அத்துடன் LEபுய பொருளாதார கொள்கையே தொடரும் என்று அறிவித்து. தற்காலிக அமைதியை நி:ை நாட்டினர். பழைய பொருளாதார கொள்கை, தற்காலிகமாக வெளிநாட்டு கடன்களை கோடுப்பதை நிறுத்துவது என்பது உண்மையில் மக்கள் கிளர்ச்சியை உடனடியாக நீர்த்துப் போகச் செய்யும் ஒரு சுட்டு ஏகாதிபத்திய முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இந்த மோசடிக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் எழுந்தையடுத்து புதிய அரசும், அரசை கைவிட்டு ஒடியது. அதைத் தொடர்ந்து புதிய மோசடிகளுடன் ஆட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் விதியில் பாரிய போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துகின்றனர். மீண்டும் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துக் எழுவதை, ஏகாதிபத்தியத்தால் தடுத்து நிறுத்த முடியாவில்லை. மக்கள் தமது விடுதேைப்பை தாமே தீர்மானிக்கும் அந்த நாள் தான். அவர்களின் போராட்டங்கள் ஒப்பும். அதுவரை அந்த மக்களின் போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.
- to • jሾ..! தைரிசி - ? = டு

Page 32
RAY'A KARAN 32. R. LE TTRO LILLIET T) EREIL 92600 ASNIERES
 

து மக்களைப் பற்றிக் கண் Iல்
பெரும் சக்தியாக உருவாகும்.