கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 1990.09

Page 1
K KWN
TAMIJLS
 

·雌 繼
NE TIDSSKRIFT.

Page 2
தபால்காரனும் பாப்பலோ நெருடாவும்.
நிவேதிகா.
தபால்காரன் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் மைக்கல் ரெடிபோட் என்ற இயக்குனர். இத்தாலியின் ஒரு குட்டித்தீவில் கதை திரைக்கு வருகிறது. கடற்கரையும் காட்சிகளும் கிராமத்தின் அப்பாவித்தனமான மக்களும் என்னை எனக்குப் பழக்கமான கடற்கரைக்கு அழைத்துச் சென்று உப்பங்காற்றை சுவாசிப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
ஓர் ஏழை மீனவக் குடும்பத்தில் மாரியோ ஒரளவு படித்தவன். சினிமா தியேட்டரில் செய்திச்சரம் பார்க்கும் மாரியோ பாப்பலோ தனது கிராமத்திற்கு வருவதை அறிகிறான். தெருவில் செக்கினில் செல்லும் வேளையில் தற்காலிக தபாற்காரர் தேவை என்ற விளம்பரம் இவன் கண்ணில் படுகிறது. அந்த வேலைக்கு விண்ணப்பிக்க தபாலகத்திற்கு செல்கிறான். தபாலதிபர் உலக விடயங்களில் ஆர்வமுள்ள ஒரு இடதுசாரி மாபெரும் கவிஞன் தங்கள் தீவுக்கு வரவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் மாரியோவுடன் பரிமாறிக் கொள்கிறார். மாரியோவுக்கு தற்காலிக தபால்காரன் வேலை கிடைக்கிறது.
பாப்பலோவின் வீடு மலைமுகட்டில் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது. மார்யோ அவருக்குரிய கடிதங்களையும் பார்சல்களையும் எடுத்துச் செல்கிறான். கமரா மிகவும் அழகாக வீட்டையும் கடற்கரையையும் சுற்றி நிற்கிறது. மாசீயோவிற்கு வேலை பிடித்துக் கொள்கிறது. பாப்பலோவுக்கு கடிதங்களை எடுத்துச் செல்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறான்.
ஒரு நாள் அந்த கிாமத்தில் இருக்கின்ற பானகசாலைக்கு வருகின்ற மாரீயோ அங்கு பணிபுரியும் ப்ட்ரிஸைக் காண்கிறான். மார்யோவுக்கு காதல் வந்துவிடுகிறது. தனது அவளிப்தையைப் பகிர்ந்து கொள்ள பாப்பலோவிடம் வருகிறான். அவரிடம் தனது காதலைச் சொல்லி அந்தப் பெண்ணைப்பற்றி ஒரு கவிதை எழுதித் தரும்படி கேக்கிறான். நேருடா சம்மதிக்கவில்லை. ஒரு பெண்ணைப்பற்றி கவிதையொன்றை எழுதமுடியாத உங்களுக்கு எப்படி நோபல் பரிசு கிடைக்கும் என்று கோபித்துக் கொள்கிறான்.

நேருடா மரீயோவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார். தான் மெத்தாபோர் எழுதுவதற்காக வைத்திருந்த தனது பிரத்தியேகமான தாள்கள் அடங்கிய குறிப்பெடுக்கும் புத்தகத்தை மாசீயோவுக்கு குடுத்து அதில் அவனுக்குத் தோன்றும் மெத்தபோர்களை (உருவணிகள் ) எழுதும்படி சொல்கிறார். பின்பு மாரியோவை அழைத்துக் கொண்டு அந்த பானகசாலைக்குச் செல்கிறார். மாரீயோ மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கிறான். பானகசாலையில் இருப்பவர்கள் நேருடா என்று முணுமுணுக்கிறார்கள். நேருடா மார்யோவைப் பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார். அந்தக் காட்சியை ப்ரிட்ஸ் ஆச்சரியத்துடன் நோக்குகிறாள். தனக்குதேவையானதைக் கேட்கும் நேருடா ஒரு பேனையையும் கேக்கிறார். தான் மாரியோவுக்கு அன்பயளிப்புச் செய்த அந்தக் குறிப்பேட்டில் நண்டன் மாரியோகுவுக்கு அவனது மெத்தாபோர்களுக்காக என்று கையெழுத்திடுகிறார்.
ப்ரிட்ஸ்சுக்கு மாசீயோ மீது காதல் அரும்புகிறது. அவர்களிடையே காதல் மிகவும் இன்பமாக வளர்கிறது. ப்ரிட்சுக்கு மாரியோ ஒரு காதல் கவிதையை அன்பளிப்புச் செய்கிறான். ப்ரிட்ஸ் அந்தக் கவிதையை வாசிப்பதைக் காணும் அந்த பானகசாலைக்குப் பொறுப்பான வயதான பெண் அந்தக் கடதாசியைப் பறித்துக் கொண்டு பாதிரியாரிடம் சென்று அதை வாசித்துக் காட்டும் படி கேக்கிறாள். கவிதையை வாசித்த பாதிரியர் மாயோ ப்ரிட்ஸை நிர்வாணமாகப் பார்த்து விட்டான் என்று கூறுகின்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வயதான பெண் கடதாசியுடன் நேரடியாக நேருடாவின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். ஆத்திரத்துடன் அவள் வருவதைக் காணும் மாரியோ ஓடி ஒளிந்து கொள்கிறான். நேருடாவிடம் கடதாசியைக் குடுத்து மாரியோ அந்தப் பக்கம் வந்தால் கொலைவிழும் என்று எச்சரித்து விட்டு செல்கிறாள். அந்த வயதான பெண்ணின் ஆத்திரத்திற்கான காரணத்தைப் புரியாத நேருடா கவிதையை வாசிக்கிறார்.
" மாரியோ காதலிக்கு கவிதை அன்பறிப்புச் செய்தாய் அதற்கு நாள் என்னுடைய நண்பிக்கு எழுதியதையா பாவிப்பது " என்று கேக்கிறார்.
"கவிஞர்களின் வேலை கவிதை எழுதுவதோடு சரி அதை நாங்கள் பாவிப்பது பற்றி அவர்கள் கேட்கக் கூடாது' என்று கூறுகிறான் மாரியோ. நேருடா அவனது கருத்தை ஏற்றுக் கொள்கிறார். மாரியோவினதும் ப்ரிட்ஸினதும் திருமணத்தில் நேருடா கலந்து சிறப்பிப்பதோடு தாம் சில்லிக்கு புறப்படும் செய்தியையும் தெரிவிக்கிறார்.

Page 3
நேருடாவிடம் இருந்து தனக்கு கடிதம் வருமென்று மாரியோ மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறான். நேருடா பற்றியும் அவரது பிரயாணங்கள் பற்றியுமான செய்திகளை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுகிறான் தபாலகத்திலுள்ளவருடனும் பகிர்ந்து கொள்கிறான். காலம் ஓடிவிடுகிறது. ஒருநாள் கடிதம் ஒன்று மாரியோவுக்கு வருகிறது பாப்லோவின் காரியதரிசியிடம் இருந்து. விட்டுச் சென்ற பொருட்களை அனுப்பும்படி, மாரியோ மிகவும் ஏமாற்றம் அடைகிறான்.
மாரியோ தபால்காரனாக இருந்த காலத்தில் காதல் தவிரவும் இயற்கை அழகு பற்றியும் அரசியல் நெருக்கடிகள் பற்றியும் கதைத்துக் கொள்கின்றனர். அவர் தனது தோழர்களுக்குச் செய்தி அனுப்புவதற்காக ரேப்ரெக்கோடரில் பதிவு செய்கின்ற வேளையில் மாரியோவும் அதில் கதைத்திருந்தான். வீட்டுக்குச் சென்று பொருட்களை அடுக்கும் மாரியோ அந்த ரெக்கோடரைக் காண்கிறான். தபால் அலுவலகருடன் சேர்ந்து அந்தக் கிராமத்தின் சிறப்பான கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு மீன் வலையிழுக்கும் ஓசை, மாதா கோவில் மணியோசை ப்ரிட்ஸின் கருவிலிருக்கும் குழந்தையின் துடிப்பு ஆகியவற்றைப் பதிவு செய்கிறான்.
அந்தச் சிறிய தீவில் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. கம்யுனிஸ்ட்டுக்களின் மாபெரும் ஊர்வலம் ஒன்றில் கவிதை படிக்கச் செல்லும் மாரியோ கொல்லப்படுகிறான்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு நேருடா அந்தக் கிராமத்திற்கு வருகிறார். துாசி படிந்து அழகிழந்த அந்த பானகசாலைக்குள் நுழைகையில் குழந்தை ஒன்று ஓடி வருகிறது பாப்லிமிடா என்று அழைத்துக் கொண்டு ப்ரிட்ஸ் வருகிறாள். மாரியோ கொல்லப்பட்டதை விபரிக்கும் ப்ரிட்ஸ் மாரியோ நேருடாவுக்காக பதிவு செய்து வைத்திருக்கும் ரெக்கோடரைக் கொடுக்கிறாள். கடலின் இரைச்சலும் அலைகளின் ஆரவாரமான இசையுடனும் படம் நிறைவு பெறுகிறது.
புரட்சிக்கவிஞஞான பாப்பலோ நேருடா பல பிரபல்யமான காதல் கவிதைகளை எழுதியிருந்தார். சிலியில் பிறந்த நேருடா 14 வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டார். ஆனால் நேருடாவின் தந்தைக்கு மகன் கவிஞராக வர வேண்டும் என்ற ஆவல் இருக்கவில்லை.

நேருடா தனது முதலாவது கவிதைக்கு தனது செக்கிஸ்க்க நண்பன் ஒருவனுடைய பெயரினை தினஏடு ஒன்றிற்குப் பாவித்திருந்தார். பின்பு O ஒருகாலத்தில் ப்ரகாவிலுள்ள ஸ்திராவில் அந்தப் பெயரினை ஈந்த சகோதரனுக்கு நன்றி கூறி அவனது கல்லறைக்குப் பூக்களை வைத்துள்ளார். 1953 இல் ஸ்பாலின் பரிசினையும் 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்ற பாப்பலோ சில்லியில் ஆயுதக்கிளர்ச்சி ஏற்பட்டு சில வாரங்களில் மரணமானார்.
தனது சுயசரிதையில் தபால்கார நண்பன் பற்றி எந்த குறிப்பையும் கூறாதபோதும் தனது வாழ்வில் ஒரு முழுமையான மிகச் சந்தோசமான காலத்தினை மிகவும் எளிமையாக மக்களுடன் கழித்ததாகக் குறிப்பிடுகிறார்.
எம்மிடம் கீழ்குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் விற்பனைக்குண்டு.
செட்டைகழற்றிய நாங்கள். ரவி.
பெரியாரியம் ( நிறப்பிரிகைகட்டுரைகள்)
மயைாதமறுபாதி ( புகலிடப் பெண்கள் கவிதைத் தொகுதி)
பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு. (வெளியீடு பெண்கள் சக்தி நிறுவனம்.)
தொடர்புகளுக்கு. சக்தி த.பெ.இ 99 ஒப்சால் 0162 ஒஸ்லோ.
தொலைபேசி 22110181 பி.ப.20. இலிருந்து 28 வரை.

Page 4
சர்வாதிகாரிகள்.
கருமபுக காடடில- அநத வாசனை சதுப்புநில அசிங்கமான தண்ணீரைப் போல் இன்னும் இருக்கிறது. ஈரமான மூக்கோடு. இரத்தமும் நிணமும் கலந்து குழம்பி வாந்தி எடுக்க வைக்கின்ற வாசனை பரப்பும் கரும்பு சோலைகள்.
ஓசை எழுப்பாத நனைந்த மிருக முகத்தோடு வெறுப்பு வளர்ந்து வளர்கிறது.
தென்னை மரங்களிடையே உடைந்த எலும்புகள் நிரம்பிய சவக்குழிகள் தொண்டைக்குழியிலிருந்து புறப்படுகின்ற பாப்பலோ நேருடா.
பாசையில்லா மரணச் சத்தங்கள்.
அந்தச் சின்னச் சிறிய அரண்மனை புத்தம் புதிய கடிகாரம் போல பளபளப்பான தொப்பிகளோடு பட்டுச் சரிகை மெருகோடு அங்கே சர்வாதிகாரி பேசிக் கொண்டிருக்கிறான்.
நாசூக்கான ஓசைகள் அடிக்கடி கையுறையணிந்த கனவான்களின் சிரிப்புக்கள். மாளிகை முற்றங்களைத்தாண்டி அவ்வப்போது மரணஒசையோடு கலக்கின்றது.
அழுபவர்களைப் பார்க்க முடிவதில்லை. ஓயாது கண்ணுக்குத் தெரியாமல் செடிகள் சொரிகின்ற விதைகள் போல அவர்கள் அழுவது கண்ணுக்குத் தெரிவதில்லை.
இருட்டிலும் வளரும் குருட்டுக் குருத்திலைகள் போல அவர்கள் அழுது கொண்டிருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை.
வெறுப்பு வளர்கிறது. தோலுக்குமேல் தோல் சேர்ந்து ஒவ்வொரு அடிவிழும் போது, தோல்மேல் தோலோடு வெறுப்பு வளர்ச்சி வருகிறது.

சினிமாவில் பெண்கள்.
றஞ்சிசுவிஸ்
எல்லாக் கலைஇலக்கிய வடிவங்களுக்குள்ளும் சினிமா பலம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இன்று உலகளவிலும் அது ஒரு கனவுத் தொழிற்சாலையாக உருவெடுத்திருக்கிறது. உணர்வுகளைச் சீண்டிவிட்டு பார்ப்பவர்களைப் பார்வையாளராகவே வைத்துக் கொண்டு உணர்ச்சிகளின் வடிகால்களாகப் பிரதிநிதிகளை (கதாநாயகன் கதாநாயகி ) உலவவிடுகின்றது. வெளிப்படையில் கதைசொல்லலே சினிமாவின் முக்கிய அம்சம் போல் பாமரத்தனமாக தோன்றினாலும் உண்மையில் காட்சிப் படிமங்களே பார்வையாளர்களைப் ஆழமாய் பாதிக்கிறது. சமத்துவம் சகோதரத்துவம் என்று வசனங்களை யெல்லாம் வெட்டி ஒட்டும் சினிமாவில் கூட காட்சிப் படிமம் மூலம் இதைச் சிதைப்பதில் வஞ்சகத்தனமாக செயல்படுகிறது இந்த உத்திகளைப் புரிந்து கொள்ள முடியாத மேலோட்டமான பார்வையுடைய ரசிகை ரசிகனை படிமங்கள் பாதித்து விடுகின்றன. இந்த வஞ்சகமான உத்திகள் தமிழ் சினிமாவில் கெட்டிக்காரத்தனமாகப் புகுத்தப்படுவதை ஆழ்ந்த பார்வையில் கண்டுகொள்ள் முடியும்.
எல்லாக் கலை இலக்கியங்கள் போலவே சினிமாவும் ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதுதான். சினிமா மொழியிலிருந்து காட்சிப் படிமங்கள் வரை இந்த ஆண் நோக்கு ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுகிறது. கமூகத்தில் நிலவும் சகல ஆண் நோக்கு கருத்தியல்களும் சினிமாவில் உள்ளடக்கமாகிறது. குழந்தைப்பருவத்திலிருற்து வயோதியம் வரை ஒரு பெண்ணுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் அவர்களுடைய கடமைகள் ஒழுக்கம் என்பன பற்றியெல்லாம் அது கற்பிக்கும். ஆணுக்கு அடங்கி நடப்பது பணிவிடை செய்வது ஆணின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்றவைக ளெல்லாம் சினிமாக்களில் பெண்ணின் கடமைகளாக மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப் படுகிறது. பெண் பாசம் மிக்கவளாகவும் கவலை இரக்கம் உள்ள அழுது வடியும் பிறவியாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
தாயை ஒரு தெய்வப் பிறவியாகக் காட்டும் அதே படத்தில் பெண்களின் உடலை அசைவுகளை பாலியல் கவர்ச்சியாக காமரா காட்சிப்படுத்தும் முரண்நிலை இயல்பாயிருக்கும். சமூகத்தில் பாலியல் சம்பந்தமாக இருக்கும் கருத்தியல்களையே இது வெளிப்படுத்துகிறது. ஆண் பல பெண்களோடு உடலுறவு கொண்டு விட்டு போகலாம் பெண்ணானவள் கணவனோடு மட்டும் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற முரண் விபச்சாரி என்ற கருத்தியல்

Page 5
ரீதியில் இழிவு படுத்தப்பட்டுக் கொண்டே தொடர்பு முறைமூலம் சொதப்பப் படுகிறது. ( உண்மையில் இதையும் கள்ள உறவு மூலம் இதை நடைமுறைப் படுத்தும் அதே ஆண்கள் கமூகக்கட்டுப்பாடு ஒழுக்கம் பற்றிக் கூக் குரலிடுகிறார்கள்.) இந்த முரண் அம்சம் கமரா மூலம் சினிமாவில் அதன் மொழியில் எழுதப்படுகிறது.
ஆண் பெண் குடும்ப உறவு திருமணம் சீதனம் போன்றவற்றை எல்லாம் பெரும்பாலான சினிமா ஆண் நோக்கிலேயே சொல்லுகிறது. ஒரு ஆணால் பாதுகாக்கப்பட வேண்டிய பரிதாபத்திற்குரியவள் பெண் என்றும் வலியுறுத்தப்படுகிறது . தாலி, பூ, குங்குமம் போன்றவற்றை ( தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப) முக்கியத்துவப் படுத்துகின்றன. கணவன் உயிரோடு இருக்கும் போது இவை அழிந்து போவதையோ அழிக்கப்படுவதையோ காட்டும் போது கமரா கூட அதிர்ந்துவிடும். பூமி சுழன்று அடி மழை மின்னல் புயல் என்றெல்லாம் கிளம்புவது போல காட்சிக்ள் விறுவிறுப்பாகிவிடும். முற்போக்கானது என்று காட்டப்படும் சினிமாவில் பெண் தாலியைக் கழற்றி எறியும் காட்சிகள் கூட பரபரபப்பான பிண்ணனிகளுடன் நடந்தேறும். அதுவும் அந்த தாலி ஒரு அம்மன் சிலையிவோ ஒரு மரக் கொப்பிலோ போய் கொழுவிக் கொள்ளும் நிலத்தில் விழாது. இப்படியாகத் தாலி கற்பு குடும்பம் போன்றவை புனிதமாக ( வசனங்களை விட ) காட்சிப் படிமங்களால் பார்ப்பவரை ஆண்நோக்குக் கருத்தியலில் நிலை நிறுத்துகிறது.
ஆக ஆணாதிக்கம் பெண்கள் சம்பந்தமாகப் புனைந்திருக்கும் கருத்தியல்கள் (கட்டுப்பாடு, ஒழுக்கம் நடத்தை உட்பட ) படிமங்களாகும் காட்சி நிலமாக சினிமா செழித்து வளர்ந்திருக்கிறது. சில சிறிய சீர்திருத்தங்கள் என்றளவில் சில சினிமாக்களும் வெளிவருகின்றன இருந்தாலும் பெண்ணிய நோக்கில் வெளிவரும் சினிமாக்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவையாகவே உள்ளன. ஆண்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் சினிமாத்தொழிற்சாலை இயங்கும் போத இதனுாடாக பெண்ணிய நோக்கிலான சினிமாக்களை வெளிக்கொணர எந்தளவு முயற்சிகள் சிரமங்கள் தேவைப்படும் தடைகள் ஏற்படும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே காணப்படுகிறது.

ஆனாலும் இந்த நிலைமைகளை வெற்றி கொண்டு சில பெண் படைப்பாளிகள் பெண்ணிய நோக்கிலான சினிமாக்களை வெளிக் கொணரவே செய்கிறார்கள். அவர்களில் ஏவாஒவ்மான்(யேர்மனி)லரர்சியா(அமெரிக்கா )அக்னேஸ் (பிரான்ஸ்) போன்ற சில மேற்கத்தைய படைப்பாளிகளைக் குறிப்பிடலாம். இந்தியாவிலும் பெண் இயக்குனரான அபர்ணாசென் என்பவர் இரு திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். 36 செளரங்கி லேன. பரோமா என்ற இரண்டுமே பெண்ணுரிமைக் கருத்தையும் கணவன் மனைவி உறவுமுறையில் ஏற்படும் முரண்பாடுகள் மீறல்களைச் சித்தரிக்கின்றன. இவை ஆணாதிக்க வாதிகளை எரிச்சலடைய செய்த படங்களாகும். இப்படியாக ஒருசில முயற்சிகள் பல்வேறு மொழிப்படங்களிலும் சிறியளவிலாவது செயற் படுத்தப்படவே செய்கின்றன. இந்த ஆணாதிக்க சமூக அமைப்பிலே பெண்விடுதலைக்கான அமைப்புக்கள் எந்த அளவு சிறியனவாக இருந்தாலும் அந்தக் குரலுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆழம் இருக்கிறது என்றளவில் இதற்கு வளர்ச்சியிருக்குமே ஒழிய தேய்வு இருக்கப்போவதில்லை இது சினிமாக்கலையிலும் பெண்ணிய நோக்கிலான சினிமாக்களின் வளர்ச்சிக்கும் பொருந்தும்.
இறுதியாக ஷப்னா ஆஸ்மியின் கூற்றொன்று .
நடிகைக்குரிய அழகோ? உடற்கட்டோ ? இல்லாதவள் என விபரிக்கப்பட்ட ஷப்னா ஆஸ்மி கூறினாள் " சினிமா உலகில் ஒரு பெண் அழகுக்கும் கவர்ச்சிக்கும் தானா தேவைப்படுகிறாள் ? பெண்ணின் அழகை மட்டும் வைத்து செயற்படும் இந்த
மோசமான சினிமாவை நான் ஒரு அவமானமாகவே கருதுகிறேன். என்று சினிமாவின் முகத்தை இக்குரல் வெளிச்சமிடுகிறது.
கிடைக்கப் பெற்றோம்.
செல்வி சிவரமணிகவிதைகள் ( தாமரைச் செல்வி பதிப்பகம்.)
பெண்கள் சந்திப்பு மலர் ( பெண்கள் சந்திப்பு மலர் வெளியீட்டுக்குழு)

Page 6
பெய்யெனப் பெய்யும் மழை !
அலுத்துப்படுத்து விழித்துப் பார்க்க கடிகாரமுள் கண்ணைக் குத்தும்
கருக்கலின் மார்பில் ஆவின் சுரக்கும் பெண்ணின் கனவுகள் நெஞ்சில் வரவும் தவிக்கும் குழந்தைக்கு அழுத்திப் பால் கொடுக்க கிழக்கில் இரத்தம் கட்டும்,
பரபரக்கப் சோறு பொங்கி
பேருந்து பிடிக்க அன்னநடை தொலைந்து போகும்.
நெருக்கும் பயணத்தில் நடக்கும் பாதையில் கண்களின் வக்கிரம் உடற் தோல் உரிக்கும்.
பாத்திரம் துலக்கி துணி வெளுத்து ஒய்ச்சலின்றி அடங்கும் விசும்பலில் பெய்யெனப் பெய்யும் கற்பின் மழை.
கணவனுக்கு குழந்தைக்கு குடும்பத்துக்குப்
பங்கு போட்டபின் மீதமிருக்கும் இரத்தம் சம்பளத்தில் வடியும்.
கல்லாய் மண்ணாய் கருதிய கணவன் ஒண்ணாந்தேதி உவமை சொல்வான்
காந்தள மலர் கைகள் உன் கைகள்
துரைசண்முகம்
நன்றி புதிய கலாச்சாரம்.

எழுத்தில் இல்லாதது.
மல்லிகா .
இண்டைக்கு காலநிலை சரியே இல்லை. ரிவியில காலநிலையறிக்கை வாசிச்ச பொம்பிளை இடைக்கிடை சூரியன் வரும் எண்டு கொன்னமாதிரி கிடந்தது. சரி செய்தியில சொல்லுற எல்லா விசயங்களும் நடந்திடும் எண்டால் பிறகேன்?
ஏன் காலங்காத்தால இந்த தத்துவ வியாக்கியானத்துக்குப் போவான்? எழும்பி வேலையள முடிச்சுப் போட்டு வேலைக்குப் போவம். அங்க எத்தினை பேர் சிக்கோ ? எத்தினை பேர் சரியில்லாத மனநிலையில வேலைக்கு வந்திருக்கினமோ? எங்கையாவது ஒரு சின்ன துரும்பு கிடைச்சவுடனே ஏதோ கோபம் எல்லாத்தையும் சேர்த்து காட்டிப்போட்டு . . பிறகு அப்படிக் கோவித்து விட்டோமே என்று என்னைக் காணும் போதெல்லாம் சந்தோசமாக ஓர் சம்பாசணையை ஆரம்பிக்க முயலும் என்னுடைய சக தொழிலாளர்கள். இதுவும் ஒரு வாழ்க்கைதான்.
சிலருக்கு சிலதுதான் ராசியெண்டு அம்மா அடிக்கடி சொல்லுவா. ஆனா 40 வயதாகியும் எனக்கு என்ன ராசியெண்டு நான் இன்னும் கண்டு பிடிக்கேல்ல. சில நேரத்தில மனசுக்குள்ள ஒரு மூலைல சின்னதா ஒரு குரல் சொல்லும் காதலுக்கும் உனக்கும் - அதாவது ஒரு ஆம்பிளயோட காதல் வைக்கிறதுக்கும் உனக்கும் வெகுதுாரம் எண்டு.
இந்த பேச தெரியாத பூனைய குறுக்கறுத்துப் போட்டுது எண்டு திட்டிற மாதிரியான விடயங்களில எனக்கு நம்பிக்கையில்ல. ஆனா இந்த தடவை சொல்லுறது மனசு. என்னோட இருந்து வளந்து என்ர எல்லாத்திலையுமே கூடவே இருந்த மனசுதான் சாடையா சொல்லுது. இருந்தாலும் மனசுக்கு நான் ஆறுதல் சொல்லிக் கொள்ளுறன். இந்த ஒரு தடவை மட்டும் ஒரேயொரு தடவை மட்டும் கடைசியாக முயற்சிக்கிறன். இது கூட சரிவரேல்லையெண்டா எனக்குத்தான் இருக்கவே இருக்குதே எத்தினையோ முகமூடி தரித்த உலகங்கள் அதில ஒண்டில அல்லது பலதில கால வைச்சு முகமூடிக்குள் முகமூடியாக ஐக்கியமாகி உலகத்தில நடக்கிற மனிதர்களுக்கு ஒவ்வாத சகலதிற்கும் எதிராக எதையாவது திருப்திக்காக செய்யிறது.

Page 7
நான் நினைக்கிறன் இந்த சமறுக்கு நான் கொஞ்சம் தடுமாறித்தான் போயிற்றன் போல. இல்லையெண்டா பணிவிழும்போது முகிழ்த்து பணி கரையமுன்னமே கருகிப்போன என்னுடைய காதலும் அது பதித்த சுவடுகளும் இன்னும் மாறாது இப்ப தொட்டால் கூட வலிக்கின்ற அளவுக்கு வலிமையுடையதாக இருந்தும் நான் தடுமாறிப் போனேனே என்று நினைக்கும் போது எனக்கு என்மேலேயே எரிச்சல் வருகிறது. எரிச்சல் படுவது கோபப்படுவது இதெல்லாம் மனதுக்கோ உடம்புக்கோ ஆரோக்கியமானதல்ல. இவைகளின்ர ஆளுமைக்குள்ள ஒருவர் தன்னை உட்படுத்திக் கொள்ளவே கூடாது.
இப்ப என்ன செய்திட்டன்? ஒரு மனிதனை எனக்குப் பிடித்து விட்டது. அதை மனசுக்குள் பூட்டி வைக்காமல் அந்த மனிதனிடமே சொல்லியும் விட்டேன் இவ்வளவுதான். என்னைப் பொறுத்த வரையில அது நேர்மையாக பட்டது. இதே தவறை ஏற்கனவே செய்து பட்ட " உதை" நன்றாக நினைவில் இருந்தும் அதையே திரும்ப செய்யிறது என்ன நியாயம்?
ஒருமனிதனைப்போல இன்னொரு மனிதன் இருப்பதேயில்லை என்பதில் நேற்று வரை எனக்கு அசையாத நம்பிக்கை இருந்தது ஆனா அதில ஆட்டங் காணுற அளவுக்கு நிலைமை வந்து விட்டது. போகட்டும். எதுவும் நிரந்தரமானதில்லைப் போல.
இந்த மனிதன் நான் வேலை செய்யிற இடத்திலதான் கன காலமாக " குப்பை கொட்டிறான்" நான் வீட்ட போற பாதையில இடையில இறங்கிப் போறான். வெளியுலகத்துக்கு நான் வைச்சிருக்கிற முகத்துக்கும் அந்த மனிதன் வைச்சிருக்கிற முகத்துக்கும் ஐக்கிய இலங்கைக்கும் தமிழ் ஈழத்துக்குமான இடைவெளி.
ஒருவரை ஒருவருக்குப் பிடித்துக் கொண்டது என்ற எடுகோளின் கீழ் இரண்டு தனித்தனித் தீவுகளுக்கிடையில் பாலம் போடும் முயற்சியில் நாமிருவரும் ஈடுபட்டோம். எதிர்காலத் திட்டங்கள் அத்தியாவசிய தேவைகள் குறுக்கிட்டன.
" வீடு ஒண்டை வாங்கிக் கொண்டு சேரலாம் "

" வீடு வாங்கிறதோ " என்று தொடங்கின நான் இப்ப வீடெல்லாம் சரியா விலை கூடிப்போச்சு இந்த நேரத்தில வீடுவாங்கித்தான் சேர்ந்திருப்பம் என்றது எனக்கு நல்ல யோசனையாகப்படவில்லை எண்டு மிச்சத்தை மனசுக்குள் அமத்திக் கொண்டு
" வீடு வாங்கிறதெண்டா நிரந்தர வேலை வேணும் பாங் கடனும் தரவேணும் "
" அப்ப நீங்க பாங்கில கேட்டுப் பாக்கிநீங்களே "
" எனக்கு தரமாட்டாங்கள் என்ர பேரில லோன் எடுத்து வாங்கின வீடுதானே காசு கட்ட ஏலாம பாங் எடுத்துப் போட்டுதெல்லே உங்களுக்குத் தெரியும் தானே
ம்
"நோர்வேயில லோன் எடுத்தா சாகும் வரைக்கும் கட்டவேணும் எனக்கு பள்ளிக்கூட லோனும் கிடக்கெல்லே நீங்கள் கேட்டுப்பாருங்கோ "
" எனக்கு இது நிரந்தரமான வேலையில்லை தராயினம் "
வீட்டு யோசனையில் இழுபறிப் பட்டு கடைசியாக வேலை செய்யிற இடத்தில குடும்பமாக இருக்கிற வீட்டுக்கு விண்ணப்பிப்பம் என்று இணங்கிக் கொண்டோம். வருமானம் கார் அது இது என்று பிராண்டுப்பட்டு இரண்டு பக்கமும் தங்கட தங்கட கொஞ்சங்களை விட்டுக் குடுத்து பாலம் போட்ட மாதிரி. எனக்கோ மனசுக்குள்ள கொஞ்சம் அமைதி மாதிரி. என்னைப்பற்றி நானே பாராட்டிக் கொள்கிறேன். நான் கெட்டிக்காரி. ஒரு மனிதனோடு சேர்ந்திருக்க கூடிய இயல்புகளைப் பெற்றிருக்கிறேன் என்று. ஆனாலும் சில சில இடங்களில முரண்டு பிடிக்கிறமாதிரி சமரசம் என்ற வார்த்தைக்கே இடமில்லாதமாதிரி. பிள்ளைக்குப் பேர் வைக்கிற , கலியாணத்தை எந்த சடங்கில வைக்கிறது ? இதிலதான் கடைசியில கடுமையான கஷ்டம் வந்தமாதிரி.
" எனக்கிந்த சேந்திருக்கிற செற்றப் எல்லாம் சரிவராது. தாலியக் கட்டி . எழுத்த எழுதிப் போட்டு சேந்திருப்பம் நாளைக்கு நாலுபேர் நாக்கு வளைக்காமல் "

Page 8
எனக்கு கிடைச்ச தகவல்களின் அடிப்படையில பாத்தால் இந்த மனிதனுக்கு எண்ணி இரண்டு சொந்தக்காரர். எனக்கு அதுவும் இல்லை. எந்த நாலு சனத்தை இந்த மனிதன் குறிப்பிடுகிறார் என்று எனக்கு விளங்கேல்ல. எனக்கு இந்த சம்பிரதாய, சமய பொருள் சம்பந்தமான சடங்குகள் துப்பரவுக்கு ஒட்டுதேயில்ல. சுற்றிவர நடந்த நடந்து கொண்டிருக்கிறத பாத்துப்பாத்து அதில ஒட்டியிருக்கிற போலித்தன்மைய கண்டோ என்னவோ ஹறாம் தான்.
சட்டபடி கட்டி அவிழ்க்கிறதிலையும் ஒத்துவரமாட்டன் எண்டிது. என்ன ஒரு மனிதன் மீது இன்னொரு மனிதனுக்கு பரபஸ்பர நம்பிக்கையும் பிடிப்பும் இல்லையெண்டா ஏன்தான் சேர்ந்திருக்க வேணும்?
நம்பிக்கையில்லாம விட்டுப் போட்டு ஓடிப் போகாம இழுத்துப்பிடிச்சு எழுதி வைச்சு தாலியக் கட்டி . . நான் அப்பிடி இல்லாட்டி வேற இடத்த போயிடுவான் இப்பிடி இல்லாட்டிப் போயிடுவான் ( மற்றப் பக்கம் நான் ஆம்பிளையா இல்லாட்டி போயிடுவாள்) எண்டு இரண்டு பேரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு வேஷம் கட்டி ? இதுக்குத்தானா இரண்டு மனிதர்கள் சேர்ந்திருக்கிறது ? இந்த நம்பிக்கைமீனத்தோட குழந்தை , குட்டி. குஞ்சு
" ஏதாவது ஒண்டுக்கு சம்மதிக்க வேணும் . இஞ்ச சட்டப்படி செய்வம் இல்லையெண்டா சிங்கப்பூரில அம்மா அப்பாவ கூப்பிட்டு கலியாணத்தை வைப்பம். "
எனக்கெண்டா ரெண்டும் ஒண்டுதான் செலவுகளில தான் கூடக்குறைய வரும் இத நான் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.
கலியாணத்து வாறவை வருவினம் வந்து சாப்பாட்டை சாப்பிட்டுப்போட்டு இவருக்கு இது எத்தினையாவது எண்டோ . இவவுக்கு இது எத்தினையாவது தாலியெண்டோ விசாரிச்சு எங்கள வாழ்த்திப் போட்டுப் போவினம் . எங்கட சனத்துக்கு பரந்த மனசு எண்டுதான் சொல்ல வேணும். இல்லாட்டி இந்த மனிதனுக்கு எத்தினையாவது கலியாணம் எண்டதையும் எனக்கு இது எத்தினையாவது காதல் என்டதயும் எங்கள் கலியாணத்தன்று நினைவில் வைத்திருக்கிறார்களே! வாழ்க.

இந்த வாழ்க்கையில ஒரு கலியாணம் செய் அல்லது செத்துமடி எண்டு எங்கையாவது சட்டம் இருக்கா என்று எனக்குத் தெரியேல்ல. தாலியக் கட்டி எழுத்த எழுதித்தான் . . எல்லாம் எண்டதையும் எங்கையாவது எழுதி. . ?
கடைசியில இந்தக் கலியாணமும் காலாவதியாகிப் போனது.
خلهخه
எனக்குள்ளே
செல்வி
வெம்மையுடன் புழுதியையும் கொண்டுவரும் சோளகம் எரிச்சலைத் தோற்றுவிக்கும் ஓர் மாலைப் பொழுதில் அம்மா என்னை அறைக்குள் இருத்தினாள் குறுக்கும் நெடுக்குமாய் முறைப்புடன் உலாவினார் அப்பா, கதவிடை வெளியால் சின்னத்தங்கை எட்டிப்பார்த்து " விளையாட வருகிறாயா அக்கா என்றாள்.
வானவெளிக்கு, அதற்கப்பாலும் நீண்டு நீண்டு விரிந்ததென் கனவுகள் அன்றே ஒடுங்கின யன்னல் கம்பியும் வீட்டு மதிலும் எனது இருப்பை வரையறை செய்தன.
s
பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென எனது மனமும் கொதிக்கும் குழுறும் பார் நீ ஒருநாள் வாமனன் நானென நினைக்கும் உமது எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்.
སྤྱི་
வானமெங்கும் அதற்கப்பாலும் நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள் பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய் எனதுகால்கள் அழுந்திப் புதையும்
பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல் சீறியெழுந்து எரிமலையாவேன்.

Page 9
விடிவு தேடிவிரையும் பெண்கள்!
நிலவுக்கு உவமை வேண்டின் நாம்தான் வேண்டும். நிலவறைக்குப் பதுமை வேண்டின் நாம்தான் வேண்டும்!
மலருக்கும் உவமை சொல்ல நாம்தான்வேண்டும். மயிலின் நடை காட்டிடவும் நாம்தான் வேண்டும்!
கயல் மீனும் பாய வழியில்லை கயல் வழி என்றார் பெண்ணின் கண்ணை வயல் ஒன்று சீதனமாய் இல்லையென்றால் வடிவில்லை அவளளெனக்கு என்று சொல்வார்
சந்தன உடல்வாகு என்று சொல்வார் 1 சட்டியுடன் அவள் அடக்கம் எனவும் மெல்வார் சிந்தனை அவளுக்கு உதித்ததென்றால் சீ நீயும் பெண்ணா? எனக் கொதிப்பார் 1
துடிபோலும் அவளிடை என்றும் சொல்வார் ! படிதாண்டி அவள் வந்து நின்று விட்டால் பத்தினியே இல்லை அவள் என்றுரைப்பார்
சீதனத்தில் விலையாகப் பெண்தான் தேவை ! சித்திரத்தில் கலையாகப் பெண்தான் தேவை! சிவனிலும் பாதியாக பெண்தான் தேவை ! சிறப்பான சமையலுக்கும் பெண்தான் தேவை
இப்பொது எமக்கு விடியல் தேவை! இனி மதி வழி திறப்பதே எமது வேலை தப்பேதும் நீர் காண முனைந்தால் சேலைத் தலைப்பிலே முடிவோம் உமது காலை.
GITGid கிழக்குப் பல்கலைக்கழகம்.

பெண்ணிலைவாதம் பற்றி
சமியக்காலக் கொள்கைகள் பெண்களின் விருதலைக்கு நிச்சயமாக வித்திட்டு இருக்கின்றன . இக் கொள்ளைககள் பெண்களை வீடுகளிலிருந்து வெளியே கொண்டுவந்து அவர்களை உழைக்கும் சக்திகளாக மாற்றி அவர்களுக் பொருளாதார சுதந்திரத்தையும் பெற்றுக் கொருத்திருக்கின்றனவே இதுபற்றி. ?
இம்மாற்றங்களால் ஒரு சில பெண்கள் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்றாலும் அந்தப் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. தேவைகளையும் விருப்பங்களையும் கருதி அவை அதிகமாக்கப்பட வேண்டும் இன்னும் அதிகமான பெண்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறி வந்து உழைக்கும் சக்தியாக மாற வேண்டும் என்றே நாம் கூறி வருகிறோம் ஆனால் அதே நேரம் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குதல் சுகாதாரமற்ற வேலைத்தலங்களின் சூழ்நிலைகள் மேலதிக வேலை, தன்னிச்சையாக வேலைக்குச் சேரத்தலும் விலக்கலுமி தொழிற்சங்க சுதந்திரங்களை மறுத்தல், பாலினரீதியான சுரண்டல் என்று பல வழிகளாலும் பெண் தொழிலாளர்களைச் சுரண்ட அனுமதிக்கும் கொள்கைகளை நாம் வண்மையாக எதிர்க்கிறோம். பொருளாரார சுதற்திரம் பெண்விடுதலைக்கு மிக அவசியமான அடிப்படைகளில் ஒன்று ஆயினும் பொருளாதார சுதந்திரத்தால் மட்டும் பெண்விடுதலையைக் கொண்டு வந்து முடியாது . பொருளாதார சுதந்திரமடைந்த பெண்கள் கூட தம்மோடு சம்பந்தப்பட்ட ஆண்களுக்கும் குடும்பத்தினருக்கும் கீழ்படிவுள்ளவராக இருந்து வீடுகளில் பாரபட்சங்களை எதிர்கொள்ளும் நிலைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது பெண்கள் போராட்டத்தில் ஒருபகுதி மட்டுமே.
நாம் முன்னேற விரும்பினால் இத்தகைய கரண்டல் வடிவங்களை சிறிது காலத்திற்கு சகித்துத்தான் ஆக வேண்டும் நாம்முன்னேறிய பின் அத்தகைய எதிர்மறையான அம்சங்கள் மறைந்துவிடலாம் அல்லவா?
இந்த எதிர்மறையான அம்சங்கள் நம் முன்னேற்றத்துடன் மறைந்துவிடும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் எமக்குக் கிடையாது. உண்மையில் அவை கட்டாயம் மறைந்தேயாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையே பல இடங்களில் எமக்குக் கிடைத்துள்ள கடந்த கால அநுபவங்கள் தெரிவித்துள்ளன. நம் நாடுகளில் நாம் பின்பற்றும் வழிகள் முதலாளித்துவமுறையை அடிப்படையாகக் கொண்டவை. வரலாற்றுரீதியில் முதலாளித்தவ உற்பத்திமுறை வளர்ச்சியானது பெண்கள் பாலின ரீதியாக

Page 10
நிர்ணயிக்கப்ட்ட விசேசமான பணிகளைச் செய்வதைத் தொடர்ந்து செய்ய நிர்பந்தித்தததுடன் பெண்கள் மீதான சுரண்டலையும் உறுதிப்படுத்தியது. உதாரணமாக ஐரோப்பாவில் வீடு ஒரு உற்பத்தி மையமாக இருந்து வந்தது. உணவு,உடைகள். மெழுகுவர்த்தி சோப் போன்ற பொருட்கள் வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டன. இவ்வுற்பத்தியிலும் விவசாயத்திலும் கால்நடைவளர்ப்பிலும் பெண்களே ஒரு முக்கியமான பங்கை வகித்தனர்.எனினும் தொழிற்புரட்சியுடன் பெண்களின் நிலைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஏழைப் பெண்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் ( குறைந்த ஊதியத்திற்காக ) வேலை செய்யவும் அடுத்த தலைமுறைத் தொழிலாளர்களை உற்பத்தி ( இன மறுஉற்பத்தி ) செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். பகவாப் பெண்கள் குடும்பப் பெண்களாக வீடுகளுக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்த தமது சொத்துக்களுக்கு வரிசுகளை மறுஉற்பத்தி செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர் . மாறாக இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்த சுதந்திரமான பூர்சுவாப் பெண்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்ட்டதுடன் தண்டிக்கவும் படடனர. இதனோடு ஏழைப் பெண்கள் சுரண்டப்படுவதும் செல்வந்தப் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவதுமான கருத்தமைவு நீடிக்கப்ட்டிருந்தது. எமது நாடுகளின் வளர்ச்சி நிலைகளைப் பொறுத்து இந்த நிலைகள் ஏற்கனவே இருந்து கொண்டிருந்தன. இவை தொடரவும் செய்யும்.
(தொடரும் )
படிப்பதற்குச் fo) படைப்புக்கள்
பெண் எனும் படைப்பு வெளியீடுசெல்வன் பதிப்பகம். இந்துப் பெண்ணியம் வெளியி சமுதாயசிந்தனை ஆய்வு மையம்
பெண்களும் சினிமாவும் செ.யோகநாதன்.

நடத்தப்படுகின்ற நிலைமையையும், எமது நாளாந்த போராட்டத்தின் தேவையையும் வேதனைகளையும் இவர்களால் பிரதிபலிக்க முடியுமா? என்பதோடு புறநிலையிலிருந்து படைக்கப்படும் படைப்புக்கள் உண்மையிலேயே எம்முடைய வேதனைகளையும் சிரமங்களையும் கொச்சைப்படுத்துகின்றன. எங்களுடைய உரிமைப் போராட்டத்திற்கான ஆண்களது பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாகவே நாம் கொள்ளலாம். பெண்ணியம் பற்றி வாசித்தல், விவாதித்தல், ஆணாதிக்க சமுக அமைப்பு ஆண்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை விமர்சித்தல், ஆணாதிக்க சிந்தனை முறையிலிருந்து எவ்வாறு விடுவித்தக் கொள்ளலாம் என்பதற்கான ஆய்வுகளிலில் ஈடுபடுதல் பெண்கள் உரிமைபோராட்டத்தை விளக்கத்துடன் புரிந்து கொளட்ள முயற்சித்தல் என்று பட்டியலிடலாம். இத்துடன் நிறுத்துகிறேன். சந்திப்போம். ராதிக்கு என் முத்தங்கள்.
இப்படிக்கு ரதி மீளாதபொழுதுகள்
செல்வி. அமைதியான காலைப் பொழுது காலைச் செம்மை கண்களைக் கவரும் காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில் 열 தென்றல் வந்து மேனியைத் தழுவும் རྐྱེ་ 3. எங்கும் அமைதி எதிலும் இனிமை. 景 蟹
e O 器騙彎議覽。 நேற்று வரையும் ਭੋ 8工”忠 அமைதியான காலைப் பொழுது. ཞི་ 器 丽 s 鹦
.盛“s 溶次 பொழுது புலராக் கருமை வேளையில் 翌垦 霹密
o )5* 5 $ e| בי ב தட தடத்துறுமின வண்டிகள் •s ") ..a அவலக்குரல்கள் ஐயோ அம்மா ! 弱魯. a
O O. O. 囊鰓選鹽體電 தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின g 豪.瞬塗 器要 运 அங்குமிங்கும் காக்கி உடைகளாய். s @৯ ক্ল ষ্টে G s
* வெருண்டனர் •S ६ அள்ளி ஏற்றிய இளைஞர்கள் 弱“蛋.器'” •s 8 ற்றிய இளைஞ 體鬱離景影
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும் தங்கையின் விம்மலும் பொழுது புலர்தலின் அவல(மமாய் கேட்டன.

Page 11
நாம் ஏன் குடும்பம் என்ற அமைப்புக்குள் நுழையவிரும்புகிறோம் என்பதை ஆசிரியர் ஆண்கள் சமூக அந்தஸ்து, நிரந்தர பாலின்பம், வாரிசுக்கு குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு, சலவை, வீட்டை நிர்வகித்தல், விருந்தினர் நண்பரை உபசரித்தல், சீதனம், அந்தஸ்துக்கு ஏற்ப உடையணிந்து கவர்ச்சியாக இருத்தல் என்றும் பெண்கள் சமூக அந்தஸ்து பொருளாதாரத்துடனான பாதுகாப்பு, எதிர்பாராருடனான பாலின்ப ஆரம்பம் ( ஒரு குழந்தை மட்டும் மலடு அல்ல என்று நீரூபிக்க ) என வகைப்படுத்துகிறார். இது இந்திய இலங்கைச் சூழலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கலாம் என்றே நானும் கருதுகிறேன்.
திருமணம் வாழ்க்கையின் அதியுயர்ந்த இலட்சியமாகவும் இல்லறம் புனிதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட எமது சமுகத்தில் குடும்பம் என்ற ஸ்தாபனத்தை எவ்வாறு ஒருவரை ஒருவர் சுரண்டாத ஒடுக்காத அமைப்பாக மாற்றலாம் அல்லது இந்த ஸ்தாபனத்தன் மீது எவ்வாறு கேள்வி எழுப்பலாம் என்பன எம்முன் உள்ள கேள்விகள். புத்தகத்தை வாசித்து விட்டு உனது கருத்துக்களையும் எழுது . இரண்டு வருட குடும்ப அநுபவத்துடனும் ராதிகாவுடனும் இருக்கும் உனக்கு நிச்சயமாக நிறையக் கேள்விகள் எழுந்திருக்கும்.
என்ன இவள் கணேசலிங்கனின் புத்தகத்தை தன்ர விமர்சன கண்ணாடியை உயர்த்தி விட்டு வாசித்து இருக்கிறாளா என்று நீ யோசிக்கலாம்.
ஆண்களின் பார்வையில் எங்கள் பிரச்சனைகள் கதைகளாகவும் நாவல்களாகவும், வருவதுண்டு. புகலிடப்படைப்பாளிகள் சிலரைப் போல்
" நான் என்ன செய்தாலும் என்னை ஆணாதிக்கவாதி என்றுதான் சொல்லுவிங்கள் ஏனெனில் நான் அந்த சமுகத்திலிலிருந்து வந்தவன் " என்றோ
" நான் எப்பிடி பெண்ணிலைவாதியாகலாம் நான் ஆண்தான்" என்றோ வசதிக்கேற்றபடி கூறித் தப்பிக் கொள்பவர்களுடன் பார்க்கும் போது கணேசலிங்கனின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
என்ன நீ அப்பிடியென்றால் ஆண்கள் பெண்களைப்பற்றி எழுதக்கூடர்து என்றா சொல்கிறாய்? என்று நீ நிச்சயமாகக் கேட்பாய்.
எமது அகவுணர்வுகளையும் நாம் இரண்டாந்தரப் பிரசையாக

தொலைமடல்
அன்புடன் சிந்துவுக்கு
எப்பிடியிருக்கிறாய்? எனக்கு வழமைபோல் இங்கு எல்லாம். ஏதோ ஒன்றிற்குள் தலையை நுழைத்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன என்று நினைக்கிறாய் ? குடும்பமாவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அண்மையில் கணேசலிங்கன் எழுதிய ஒரு குடும்பத்தின் கதை வாசித்தேன். கதைச் சுருக்கம் கிட்டத்தட்ட இப்பிடித்தான்.
படித்து முடித்த கற்பகம் திடீரென்று தபால் திணைக்களத்தில் வேலை செய்யும் சங்கரனைத் திருமணம் செய்து தாய், தந்தை சகோதரர், சகோதரிகள் வசிக்கும் குடும்பத்திற்குள் செல்கிறாள். வழமையான கூட்டுக் குடும்பங்களில் ஏற்படும் சிரமங்களை அவளும் அநுபவிக்கிறாள் தனது ஆசிரியர் தொழிலையும் கூட கைவிட்டு. இடமாற்றம் கிடைப்பதனால் நகரத்துக்கு வருகின்றனர் சங்கரனும் கற்பகமும். ஒரு குழந்தையுடன் செலவுகளைச் சமாளிப்பதற்காக மீண்டும் வேலைக்குச் செல்கிறாள் கற்பகம். வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு என்ற கஸ்டங்களைக் குறைத்துக் கொள்ளுவதற்கு உதவும் வகையில் மாமாமியார் மல்லிகாவை நகரத்துக்கு அனுப்பி வைக்கிறார். மல்லிகாவுக்கும் சங்கரனுக்கும் ஏற்படும் உறவை அறியும் கற்பகம் வேலையை விட்டுவிட்டு குழந்தையையும் வீட்டையும் பொறுப்பேற்கிறாள். சங்கரனுக்கும் கற்பகத்துக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைகின்றன.
தினப்பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் மாலா. தொழிற்சங்கத்தில் ஆர்வமுடைய மாதவன் பால் விற்கும் பார்வதி முகுந்தன் அவரது துணைவி இக்கதையில் கணிசமான பங்கினை வகிக்கின்றனர். மாலதி கற்பகத்தினதும் மற்றும் சூழவிருக்கும் முரண்பாடுகளுக்கும் காரணம் தேடிக் கொண்டிருப்பவள் கற்பகத்தின் தோழி. இதுக்கு மேலும் எழுதினால் உனது வாசிக்கும் ஆர்வத்தைக் கெடுத்த நன்மை எனக்குரியதாகிவிடும்.
இக்கதை மத்தியதரவர்க்கத்தை சுட்டி நிற்கிறது. பெண்ணியம் பற்றி கூறப்படுவதற்காக புனையப்பட்டதாக ஆசிரியர் தனது உரையில் கூறுகிறார். இலகுவாக வாசிக்கின்ற தன்மை இந்த நாவலுக்கும் இல்லை அவருடைய வேறு சில நாவல்கள் போல.

Page 12
பொன்வண்ணக்கிண்ணம்.
மார்கிரேத் யோகண்சன்
தேநீர் கறைபடிந்திருந்த அந்தக் கிண்ணம் தோடையின் பழத்தையொத்த மஞ்சள் நிறமா அல்லது தேனைப்போல வெளிர் மஞ்சள் நிறமா இரண்டுக்கும் இடைப்பட்ட ஒர் வர்ணம். ஒர் தடவை வர்ணக்கலவைகளை தீட்டும் வரைபடச் சட்டத்திற்கு பின்னணி வர்ணமாக இந்த வர்ணத்தைத் தீட்டிப்பார்க்க வேண்டும். பொழுதுபோக்கு அறையின் வேலைகள் முடிந்த பின்பு, நேரம் மீதம் இருந்தால் நேரம் கிடைத்தால் 1
அந்தக்கிண்ணத்தில் கோடுகள் மிகச் கச்சித்தமாக வரையப்பட்டிருந்தது. அந்தக் கோடுகளை விரல்களால் தடவும் போது விரல்களில் உற்சாக உணர்வுகள் எழுவதை உணர்ந்தாள். ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்திலும் உடலிலும் எழுந்ததது. கிண்ணத்தை சற்று உயர்த்தி வெளிச்சத்தில் பிடித்துப் பார்த்தாள். அதில் வரையப்பட்டிருந்த கோடுகளை நேசத்துடன் பார்த்தாள். அதன் அழகில் சற்று மெய்மறந்து நின்றாள்.
ஒன்றைப் படைப்பதுதான் வாழ்வு என்று பிர்ண்டீயோ சொல்லியிருந்தார். வாழ்வு என்பது புதியவற்றை உருவாக்குதான். அழகான மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் உனக்கு என்று அவளது அம்மாவும் அவளது துணைவன் லாஷ்ம் சொல்லியிருக்கிறார்கள்.
உன்னுடைய பொழுது போக்கை மறந்துவிடாதே. அதை நீ கைவிடாதே என்றும் லாஷ் சொல்லியிருந்தான். எல்லோருக்கும் ஓய்வு நேரத்தைக் கழிக்க ஒரு பொழுது போக்கு இருக்க வேண்டும். அது ஆரோக்கியமானதும் கூட. அவன் அவளது சின்னசின்னப் படைப்புக்கள் மீது ஆர்வம் காட்டாதவனாயினும் " கெட்டிக்காரப் பெண்" என்று கூறினான். " கெட்டிக்காரக்குட்டி" என்றாள் அவளும். " என்ன சொல்கிறாய் " என்று அவன் அவள் தோள்களில் தட்டி விட்டு அவள் என்ன சொன்னாள் என்பதைக் கேட்காமலே சென்று விட்டான்.
* நீ ஒருவனுக்கு மனைவி, குடும்பத் தலைவி என்ற மிக முக்கியமான ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறாய் என்பதைநினைவு வைத்துக் கொள். இது லாஷின் அம்மா.

" நீங்கள் கிறிஸ்மஸின் தொடக்க நாளன்று எம்முடன் உணவருந்தலாம்" என்றாள் லிசாவின் மாமி.
" நீங்கள் எங்கள் வீட்டில் உணவருந்தி விட்டு எல்லோருமாக பிற்பகல் பிள்ளைகள் வீட்டில் சந்தித்து இரண்டாம் நாள் உங்கள் வீட்டுக்கு வந்து மூன்றாம் நாள் அன்ரி வீட்டுக்கும் சித்தப்பா வீட்டுக்கும் போகலாம் என்று நினைத்தேன் " என்றாள் லிசாவின் தாய்.
இவைகளுக்கெல்லாவற்றிற்கும் பிறகு நான் எனக்கெண்டு கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? "
" உனக்கெண்டு கொஞ்க நேரத்தைக் எடுத்துக் கொள்வதா, என்னது " LDMLR.
" கடவுளே ஏன் உனக்கு இப்படி விநேதாமான சந்தோசமில்லாத யோசனைகள் தான் எந்த நேரமும் வருகிறது. நீ ஒரு போதும் வளரப் போவதில்லையா? லீசா என்னைப் பற்றியாவது கொஞ்சம் யோசித்துப்பார்
" உங்களையா அம்மா ஏன்?
" என்னருமை மகளே நான் உன்னுடைய அம்மா "
" ஓம் அதுக் கென்ன?"
" தேவலோகத்திலிருக்கும் கடவுளே நான் என்ன செய்தேன் ? இப்படி ஒரு கஷ்டமான பிள்ளையைப் பெறுவதற்கு. நீ என்க்காக என்றாலும் சிலவற்றைச் செய்ய வேண்டும் எண்டுதான் எல்லோரும் நினைக்கினம். "
" ஆர் எல்லாரும்
"ஆட்கள் எல்லாரும் தான்"
" ஆர் எல்லாரும்"
" ஆக்கள் எல்லாரும் தான் "
" ஆர் ஆக்கள்

Page 13
" லீசா இனியும் இந்த வெட்கக் கேடுகளை பாத்துக் கொண்டு என்னால இருக்க ஏலாது. ஆக்கள் என்ன கதைக்கினம் எண்டதைப் பற்றியும் நீ கொஞ்சம் யோசிக்க வேணும்
"ஏன் அப்பிடி? "
" ஏனெண்டா எல்லாரும் அப்பிடித்தான் செய்யினம்
அது ஒரு அழகான வடிவமைக்கப்பட்ட கிண்ணம் சில வேளை நான் பாவனைப் பொருட்கள் செய்யும் கைவேலையை தெரிவு செய்திருக்கலாம். அது சிலவேளை இலகுவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் . தெரிந்த விடயங்களைப் பற்றி மக்கள் அச்சம் கொள்வதில்லை. அவள் நுண்கலை பல்கலைக்கழகத்தை தெரிவு செய்தாள். அந்த வேளை அம்மா மிகவும் பெருதமிதப்பட்டுக் கொண்டாள்.
" உங்கள் மகள் உங்களுக்கு கிடைத்த கொடை லீசா முன்னுக்கு வருவதற்கு உங்களுடைய உதவி கட்டாயம் தேவை என்று பேராசிரியர் கூறியிருந்தார்.
" ஆம் திறமைகளை அவள் என்னிடமிருந்து பெற்றிருக்கிறாள். ஆனால் கலியாணம் என்று வரும் போது கலையை விட வேறு விடயங்கள் முக்கியமாகி விடுகிறதல்லவா ? " இது அம்மாவின் கருத்து.
பேராசிரியரிடம் பதில் எதுவும் இருக்கவில்லை. லீசா நுண்கலைக் கூடத்தை விட்டு வெளியேறுகையில்
" லீசா உன்னை உனதாக்கிக் கொள். உனக்கும் உனது கலைக்கும் இடையில் எதையும் குறுக்கிட அனுமதிக்காதே" என்று பேராசரியர் கூறிய போது அந்த வாக்கியங்கள் மிக முக்கியமாகப்பட்டன. அவள் அவருக்கு உறுதிமொழியும் வழங்கியிருந்தாள்.
லாஷ் அவளுடைய வாழ்விற்குள் நுழைந்து விட்டான். முன்னாலிருந்த கிண்ணம் அவளுக்கு தேயிலை, முட்டை, கோப்பி என வீட்டுத் தேவைக்கு சாமான்கள் வாங்க வேண்டும் என்பதை நினைவூட்டியது. அத்தோடு

குணொல்தை பல் வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் லாஷின் கோட்டையும் சூட்டையும் சலவைக்குக் கொடுக்க வேண்டும் மத்தியான சாப்பாட்டுக்கு என்ன செய்யபோகிறேன்?
இந்தக் கிண்ணத்திற்குப் பின்னணி வர்ணமாக நீல வர்ணத்தைத் தீட்டிப் பார்த்தால் என்ன ? வெண்ணிறம் கூடப் பொருத்தமாக இருக்கும் . இதில் அழகான சிறிய பூ வரையலாம். அவள் வர்ணம் தீட்டும் துாரிகைகளையும் வர்ணங்களைக் கலக்கும் பலகையையும் எடுத்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த ஏப்பிரனில் கைகைளை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் மனசு துள்ளிக் கொண்டது. அந்தக் கணம் மிகவும் சந்தோசமாக இருந்தது. நிலவறைக்குள் சென்று அங்கிருந்த பனியில் சறுக்கும் தடிகள், சைக்கிள்கள் ஏனைய பொருட்களை ஒதுக்கி வைத்தாள். இங்கு அவளுடைய படம் வரையும் சட்டத்தில் கிண்ணம் பொருத்தப் பட்டிருந்தது. அவள் மிக விரைவாக குப்பிகளில் அடைக்கப்பட்டிருந்த வர்ணங்களை அழுத்தி வர்ணங்களைக் குழைத்துக் கொண்டாள். வெளிச்சம் போதியதாக இருக்கவில்லை. யன்னல்களைத் திறந்து விட்டாள். குளிர்ந்த காற்று உள்ளே வந்தது. இப்போதும் வெளிச்சம் மங்கலாகவே இருந்தது. சற்று குளிராக இருந்தது.
இலையுதிர்காலத்தில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். தொடர்ச்சியாக வேலை செய்த நாட்கள். லாஷ் அவளைக் கெட்டிக்காரி என்று பாராட்டினான. அம்மா சந்தோசப்பட்டுக் கொண்டாலும் நீ உன்னுடைய மனைவி என்ற பாத்திரத்தையும் தாய் என்ற பாத்திரத்தையும் நினைவில் வைத்துக் கொள் இவையிரண்டையும் தவிர வேறு எதுவும் முக்கியமாதில்லை உனக்கு என்று கூறியிருந்தாள். அப்போது அவள் அதற்கு மறுப்பேதும் கூறவில்லை. ஏனெனில் அந்தத் தடவை எதற்கும் எந்த இடையூறும் வரவில்லை.
இவர்கள் இப்போ என்னுடைய நேரத்தின் பெரும் பகுதியைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். ஏதோ என்னை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டது போல. ஒரு நானைக்கு எங்காவது போய்விட வேண்டும் வர்ணக் குப்பிகளையும் எடுத்துக் கொண்டு. இப்படிப் பல தடவைகள் நினைத்ததுண்டு.

Page 14
அவள் தலையைச் சரித்து கிண்ணத்தைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாள். இந்த உலகில் வர்ணங்களையும் அவற்றின் கலவைகளையும் போல அழகானவை வேறொன்றும் கிடையாதுதான்.
" அம்மா அம்மா " என்ற குணொல்த்தின் குரல் அவளை நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தது.
" நான் நிலவறையில் இருக்கிறேன்"
" என்ன செய்யிறீங்கள் எனக்குப் பசிக்குது.
" செய்து சாப்பிடுங்கோ நீங்க வளர்ந்த பிள்ளை"
நீண்ட அமைதி. இது அவளுக்குத் தேவைதான். இவளுடைய பிழைதான்.
குழந்தைகளின் அழுக்கடைந்த அந்த சிறிய விரல்களின் மீதான இவளது அநுதாபம். இவளது பலவீனம் அது. படிகளில் காலடியோசை கேட்கிறது.
" அம்மா எனக்குப் பசிக்குது குரல் ஆறுதலாக கவனமாக வந்தது.
" சரி நான் வாறன்
" அங்க எண்ணம்மா செய்யிறீங்கள் "
பெயின்ற் பண்ணிறன்"
அப்பா போன வருசம் பெயின்ற் அடிச்சவர்தானே"
" வாங்கோ மேல போய் சாப்பிடுவம்
அப்போது அவளுடைய பதினாறு வயது மகனும் வந்து சேர்ந்தான்.
" நீங்கள் எங்கையம்மா போனனீங்கள் ? "
" நிலவறைக்கு களைப்புடன் பதில் வந்தது.
" நான் கணதரம் வந்து உங்களைத் தேடினனான். நீங்கள் அங்க என்ன செய்து கொண்டு இருந்தனிங்கள் ?

" அதப்பற்றி உங்களுக்குத் தேவையில்லை.
" நான் நினைக்கிறன் நீங்கள் பெயின்ற் பண்ணணிக் கொண்டிருந்திருக்கிறீங்க எண்டு. பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரக் கூடியதாக நீங்க பெயின் பண்ணியிருந்தா பகல் பொழுதை பயனுள்ள உற்பத்திக்காக செலவிட்டு இருக்கிறீங்க அப்பிடியில்லையெண்டால் உங்கட உழைப்பு சக்திய வீணாக்கி இருக்கிறீங்க "
" சரி தலைவர் மாவோ
" நாங்கள் எல்லாரும் முதலாளித்துவம் தொழிலாளர்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும்"
" சரி யூனியர் உங்களுக்கு ஒரு கப் தேநீர் வேணுமா?"
ஓர் அரைமணி நேரத்திற்குப் பிறகு அவள் திரும்பவும் நிலவறைக்குள் வந்தாள். ஆனால் ஏதோ ஒன்று போய் விட்டது. களைப்பாகவும் வெறுமையாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. திடீரென்று ஒரு கூடை அழுக்கடைந்த துணிகள் இருப்பதும் இப்படி இன்னும் எத்தனையோ கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் வரிசையாக வந்துநின்றன. பெரும்பான்மை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கான உழைப்பு .
தன்னைத் தானே கஷ்டப்படுத்திக் கொள்கின்ற உணர்வு எழுந்து வந்து தொண்டைக் குழி வரை வந்து அடைத்துக் கொண்டது. எண்டைக்காவது ஒரு நாள் நான் எங்காவது ஓடி விடவேண்டும். இரண்டு மூன்று நாட்களாவது இல்லாமல் போய்விட வேண்டும். அப்பத்தான் இவர்களுக்கு தெரியும். தன்னுடைய குழந்தைதனமான யோசனைகளையிட்டு அவள் வெட்கப்பட்டுக் கொண்டாள். அவளுக்குத் தெரியும் அவளுக்குப் போதியளவு துணிவில்லையெண்டு. மிக அதிகமான பெண்களுக்கு துணிவு குறைவாக இருக்கிறது. லாஷ். அவனை அவளுக்குப் பிடித்துள்ளது. அன்பானவன் . சிநேகமானவன், கடமைகளைச் சரிவரச் செய்பவன் . ஒரு கண்ணீர்த் துளி விழுந்தது. பிள்ளைகள்

Page 15
பிற்பகல் லீசா சமையல் அறையில் மேசைக்கருகில் நிற்கிறாள். மஞ்சள் வண்ணக் கிண்ணத்தைத் தேடி எடுத்தாள். ஆறுதலாக நிதானமாக அதைத் துண்டு துண்டாக உடைத்துக் குப்பையில் போட்டுக் கொண்டிருந்தாள். லாகம் பிள்ளைகளும் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
லீசா என்ன செய்யிறாய்? உனக்கு சுகமில்லையா? "
அவள் தான் செய்து கொண்டிருந்ததைத் தொடர்ந்தபடி
* வாழ்வு ஒரு குழப்பமான கனவு எண்டு ஆரோ ஒரு எழுத்தாளர் சொன்னது உண்மைதான் லாஷ். நான் என்னுடைய ஒரு கனவை நொருக்கிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை அந்த மாதிரி வாழ முடியாதபோது அதை
லாஷ் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வரவேற்பறைக்குள் சென்றான்.
* கவனமாகக் கேளுங்கோ நான் நினைக்கிறன் அம்மா கஷ்டமான வயதுக்கு வந்திருக்கிறா எண்டு இதை நாங்கள் புரிந்து கொண்டு அவவுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் " என்ற அவனது வசனங்கள் அவளுக்கு கேட்டது.
கஷ்டமான வயது ? ம் இருந்திட்டுப் போகட்டும் . அவள் குப்பைக் கூடையை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு அலுமாரியை அடுக்கி விடடு மிகுதியாக இருந்த ஒரேயொரு பொன்னிறக் கிண்ணத்தை உள்ளே பத்திரமாக வைத்தாள்.
வாசகர்களிடமிருந்து ஆக்கங்களையும் விமர்சனங்களையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
முகவரி.
SAΚΤ BOKS 99 OPPSAL O6 19 OSLO 6 NORWAY.

இனிவருமா
ஊரில் எனக்குப் பிடித்ததெல்லாம் இராவணன் வெட்டோ சுடுநீர் கிணறுகளோ அல்ல
எங்கள் ஊர் காகங்களைத்தான்.
966)6. சந்தைக்கு முன்னால் கூட்டம் கூடி சம்பாசிக்கும் அழகில் நான் வாய் பிளந்து நின்றதுண்டு.
போருக்காய் வாரிவிட்ட எனது குஞ்சகலத்தீவில் ஓரிரவு நிம்மதிக்காய் ஏங்குகின்ற அம்மா.
சென்றியின்றி ஓர் பொழுது துாக்கத்திற்காய் கனவுகாணும் துப்பாக்கிக்குத் துணை போன எனது தங்கை.
சூரியனோடு பகைகொண்ட பனித்திடலில் உறைந்தமனிதர்கள் உலாவரும் இந்த தேசத்தில் பச்சை துளிர்க்காதா என்ற ஆவலுடன் நான்
இந்தப் பணி துறந்து என் சூரிய தேசத்திற்கு நான் செல்வது?
963)DITGI
p

Page 16
நீடிக்குமா தலைமை?
கவிதா
நோர்வேயின் கிறிஸ்தவ மக்கள் கட்சியிக் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு Q si ELAli 5.606ñLas Valgeird Svarstad Haugeland Glo செய்யப்பட்டுள்ளார்.
இந்த கிறிஸ்தவ மக்கள் கட்சியின் தலைவி பதிவிக்கு ஒரு பெண் தெரிவு செய்யப்பட்டிருப்பது பெண்களின் உரிமைகான போராட்டத்தை எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் நகர்த்தியுள்ளது என பலர் யோசிக்கலாம். ஆனால் எனது நோக்கம் இச் சந்தர்ப்பத்தில் நோர்வேயிலுள்ள அரசியல் கட்சிகளின் பெண்களின் தலைமைத்துவம் எவ்வாறானது என்பதைக் கணிப்பிடுவதே.
இங்குள்ள அரசியல்கட்சிகளுள் தொழிலாளர்கட்சி, வலதுசாரிக்கட்சி, SP யில் பெண்கள் தலைமை பதவியை வகித்துள்ளனர்.இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வலதுசாயிக் கட்சிக்கு அரசாங்கம் அமைத்துக் கொள்ளும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றும் பல பெறுமதியற்ற காரணங்களையும் கூறி கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் படி மறைமுகமாக வலுயுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்த விலகிக் கொண்டார். தொழிலாளர் கட்சித்தலைவியும் தற்போதைய பிரதம மந்திரியும் குடும்ப சூழ் நிலை காரணமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாககூறிக் கொண்டார். ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் நோர்வே இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் வாக்கெடுப்பில் பெற்ற வகையில் Sp தலைவர் இன்னமும் முடிசூடா இளவரசியாகக் கணிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ள கருக்கலைப்புரிமைச்சட்டத் திருத்தம் பற்றிய விவாதங்களும், சேர்ந்து வாழ்வோர் தேவாலயத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும், ஒரேபாலினரைத் திருமணம் செய்திருக்கிறார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு தேவாலயத்தில் சேவை செய்வது மறுக்கப்படக் கூடாது என்றும் திருச்சபையில் பெண்களும் உயர்பதவி வகிக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவதமத்தில் அங்கீகரிக்கப்படாத பல முக்கிய விடயங்கள் மீது கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன.
இந்நிலையில் கிறிஸ்தவமக்கள் கட்சியின் தலைமைப்பதவியில் அவர் எள்வளவு காலம் நீடிப்பார்?

நட்புடன் வாசகர்கட்கு
வழமைபோல் தாமதமாக உங்கள் கரங்களில் , தவறுதலாக இலக்கமிடப்பட்டு இதழ் 41 உங்களுக்கு கிட்டியமைக்கு வருந்துகிறோம். தவறினைச் சுட்டுக் காட்டிய சமர் ஆசிரியர்கட்கு எமது நன்றிகள்.
சக்தி மீதான விமர்சனங்கள் மூலைக்கு மூலை நிகழ்ந்த வண்ணம் இருப்பதையிட்டு எமக்கு மிக்க மகிழ்ச்சி நேரடியாகவும் , தொலைபேசி மூலமும் விமர்சனங்களை முன்வைத்த வாசகர்கட்கு நன்றிகள்.
செத்த வீடாகவும் ' தனியே பெண்கள் பெணிகள் என்று பக்கங்களை நிரப்பி ஒரு வரண்ட பத்திரிகை நடத்துவது தேவையா ? சஞ்கிகையை எல்லோரும் வாசிக்க கூடியவாறு சனரஞ்சகமாக்குங்கள் என்று சலித்துக் கொள்ளும் வாசகர்களின் குரல்களும், சஞ்சிகையில் பெனர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குவதையிட்டு குறைபட்டுக் கொள்வோரின் முறைமீடுகள் என்பன எமக்கு கிடைத்துள்ளன. அத்துடன் எம்மைப்பற்றியும் எமது தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் நாம் பம்மாத்தது விடுகிறோம் என்று பல கோபமான குரல்கள் எம்மை தொலைபேசி வழி வந்தடைகின்றன.
வாசகர்களின் நன்மை கருதி எம்மைப்பற்றி .
நாம் இன்றுவரை எந்த ஒரு அரசு, ஸ்தாபனங்களிடமிருந்து உதவியையும் பெற்றுக் கொள்ளாது சுயமாக இயங்கி வருபவர்கள். அந்த வகையில் சஞ்சிகையின் ஒழுங்கான வரவின்மை, அழகியற்தன்மை போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுவது தவிர்க்க இயலாதாக தற்போது உள்ளது. எமக்கென்றோர் பாரிய அமைப்போ பின்னணியோ முன்னணியோ இலங்கையிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ இருக்கின்றது என்று கூறமுடியாது.

Page 17
எமது நோக்கங்களில் ஒன்று பெண் பழக்கத்தை ஊக்குவிப்பதாகும். இந்த முன்னுரிமை வழங்குகிறோம் என்பது
தோழிகட்கு
சக்தியின் தரம், எவ்வகையான ஆக்க தீர்மானிப்பது உங்கள் கரங்களிலேயே, சஞ்சிகை தரமானதாக அமைய உங்க அவசியம்.
கருத்துக்களுக்கு எழுத்து வடிவம்
கருகிறோம். சஞ்சிகையை வெளியீடு வேலை . வீடு என்ற நாளாந்த பிரச் பெண்களே என்பதை கருத்திற் கொள்
தொடர்ந்து வெளிவர இருக்கும் சக்தி கொள்கின்றனர் என்பதை மிகவும் உ தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆண்டிலும் பல உரிமைகளை
தோழமையுடன் தோழிகள்.
 

களிடையே எழுதும் . வாசிக்கும் வகையில் பெண்களின் ஆக்கங்களுக்கு
பொருத்தமானது.
ங்கள் இடம் பெறவேண்டும் என்பவற்றை தொடர்ந்து விமர்சியுங்கள். எழுதுங்கள். நள் எல்லோருடைய ஒத்துழைப்பும்
கொடுப்பது மிகவும் முக்கியம் என்று நாம் பவர்களும் உங்கள் எல்லோரையும் போல் சனைகளை சந்திக்கும் சாதாரண ர்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
யிெல் புதிய தோழிகளும் இணைந்து ற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன்
வெண்றெடுப்போம்.
塚ーニ