கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடை பிழைத்த கணக்கு

Page 1
\くFNBくくSVA
 


Page 2


Page 3

விடை பிழைத்த கணக்கு
திக்குவல்லை கமால்
வெளியீடு மல்லிகைப் பந்தல் 234-8, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 4
மல்லிகைப் பக்தல்
வெளியீடு : 15 ஜூலை : 1996
-flapid Luisa
விலை ரூ. 26-00
"மல்லிகை"யில் வெளிவந்த ஆசிரியரின் சிறுகதைகளின்
தொகுப்பு இது.
தமிழ்நாட்டில் கிடைக்குமிடம் : குமரன் பப்ளிஷர்ஸ் 79 முதல் தெரு, குமரன் காலனி, வடபழநி, சென்னை-600 026.
அச்சிட்டோர் :
சித்ரா பிரிண்டோ கிராபி, 24, பொன்னுசாமி தெரு, இராயப்பேட்டை, சென்னை-600914,

சமர்ப்பணம்
Tsir
asam Sů ušesad6MT io6ðsla Dasů u dhasar Urdb
அச்சுக்கோர்த்த LD6 of disgth திரு. கா. சந்திரசேகரன் அவர்களுக்கு,
ஆசிரியரின் பிற நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள் :
கோடையும் வரம்புகளை உடைக்கும் குருட்டு வெளிச்சம் விடுதலை
prald :
ஒளி பரவுகிறது

Page 5
கொடியில் பூத்த மலர்கள்
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் நிரம்பி வாழும் பிரதேசம் திக்வல்லை. அந்தப் பிரதேசத்தில் ஒரு குறிப்பிடக் கூடிய பகுதியில் செறிந்து வாழ்ந்து வருபவர்கள்தான் தமிழ் மொழியைத் தாய்ப் பாஷையாகக் கொண்டு வாழும் முஸ்லிம் மக்கள். யோகனபுர என அழைக்கப்படும் அந்தச் சிற்றுாரில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, ஓர் ஆசிரியராக முகிழ்ந்து பின்னர் எழுத்தாளனாகப் பரிணமித்தவர்தான் இந்தச் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர், திக்குவல்லைக்கமால் அவர்கள்.
திக்குவல்லை என்ற நாமம் இன்று ஈழத்து இலக்கிய உலகில் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றது. அதற்குக் கமால் போன்ற பல இளைஞர்கள் தம்மை இலக்கிய உலகிற்கு அர்ப்பிணித்துச் செயலாற்றி வருவதேயாகும். சிங்கள மக்கள் செறிந்து, சூழ்ந்து வாழும் அப்பிரதேசத்தில் தமிழ் மொழியையும் முஸ்லிம் கலாசாரத்தையும் முனைந்து வளர்த்து வரும் இவரைப் போன்ற இளைஞர்கள் தேசிய இலக்கிய நீரோட்டத்துடனும் தம்மை இணைத்துப் பிணைத் துச் செயலாற்றுவதில் என்றுமே பின் நிற்பவர்களுமல்ல.
பரந்து பட்ட உலகத்துப் பார்வையைத் தமது இலக்கியக்
குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வரும் இவர்களில் கமால்முன்னணியில் திகழ்பவர்.

每
இளம் வயசிலிருந்தே- மாணவப் பருவம் தொட்டேகமால் அவர்கள் படைப்புத் துறையில் ஆழ்ந்த அக்கறை காட்டி வந்துள்ளார்.
தன்னைச் சூழ்ந்துள்ள சகல மக்களினதும் பழக்க வழக்கங்களையும் கூர்ந்து அவதானித்து தனது படைப்புத் கிதாழிலுக்கு மூல வித்தாக அவற்றைக் கையாண்டு வந்துள்ளார். மலையாள எழுத்தாளர்களைப் போல, வெளியே தனது கதைக் கருக்களைத் தேடி அலையாமல், தான் வாழ்ந்து வரும் சூழ்நிலையையும் மக்கள் பிரச்சினை களையும் உள்வாங்கிச் சீரணித்துப் பின்னர் அந்தச் சம்பவம் களை சூழ்நிலைக்குத் தகுந்த வண்ணம் இணைத்துப் பிணைத்துப் படைப்பாக்கம் செய்துள்ளார்.
மல்லிகையின் ஆரம்ப காலங்களில் இருந்தே அதன் விருப்பு வாசகராகவும், தொடர்ந்து அதன் தொடர் படைப் பாளியாகவும் பரிணாமம் பெற்றுத் தன்னைத் தானே ஈழத்து இலக்கியக் களத்தில் நிலை நிறுத்திக் கொண்டார். பலரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டார்.
ஆழமான சமூக விமரிசகராக இவர் திகழ்ந்த போதிலும் கூட, மிக அடக்கமாகவே காணப்படுவார். கூட்டங்களிலே நேர்ச் சம்பாஷணைகளிலோ அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார் அதே சமயம் தனது கருத்துக்களை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்.
பலர் இவரது கதைகள் புரிவதில்லை எனச் சொல்வது முண்டு. தொடர்ந்து இவரைப் படித்து வந்தால் இவரைப் புரிந்து கொள்வது இலேசு. இந்தத் தொகுதியில் இருபது கதைகள் அடங்கியுள்ளன:
இந்த இருபது கதைகளுமே மல்லிகையில் மலர்ந்தவை தாம். இப்படி ஒரே சஞ்சிகையில் மலர்ந்த ஒரே எழுந்தாள

Page 6
னின் இருபது சிறுகதைகளும் ஒருங்கு சேர்ந்து ஒரே நூலாக வெளிவந்தபோது என்னைப் பொறுத்தவரையில் இதுவாகத் தான் இருக்கும் என நான் நம்புகின்றேன்.
இப்படியான தனிப் புகழுக்குரிய தொகுதியாக இது விளங்குமாக இருந்தால் மல்லிகையின் ஆசிரியர் என்கின்ற முறையில் மெய்யாகவே தான் பெருமைப்படுகின்றேன்.
அந்தக் காலத்தில் இருந்தே நண்பர் கமாலை நான் அவதானித்து வந்துள்ளேன். ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தேடல் முயற்சியில் அடிக்கடி தன்னைத் தானே ஈடுபடுத்தி வருவதைக் கண்டிருக்கின்றேன். இலக்கிய விவாதங்களில் அதிகம் பேசாமல் கூர்ந்து அவதானித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளும் பழக்கமும் இவரிடம் நிறைய உண்டு.
எந்தச் சிறிய இலக்கியக் கூட்டமானாலும் அங்கு சமூக மளிக்க இவர் தவறுவதில்லை. இவரிடம் எனக்குப் பிடித்தமிகவும் பிடித்த-அம்சமே இதுதான். சகோதர எழுத்தாளர் களின் நன்மை தீமைகளில் அதிக அக்கறை காட்டி விசாரிப் பார். பழகுவார்.
ஒரு சுற்றுவட்டப் பிடிக்குள் தன்னைச் சிக்கவைத்துக் கொள்ளாமல், தனது பிரதேசத்தையும் கடந்து முழு நாட்டி லும் நடைபெறும் சமூக மாற்றங்களை, இலக்கியப் போக்கு களை உள்வாங்கி உள்வாங்கித் தன்னை நெறிப்படுத்தி வளர்ந்தவர்.
மல்லிகையில் வெளிவந்த தனது கதைகள் மல்லிகைப் பந்தல் மூலம் வெளிவர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர். தனது ஆசையை அடிக்கடி என்னிடம் வெளி விட்டவர்.

7
இந்த ஆசையின் நிறைவேற்றம் அவருக்கு மாத்திரம் திருப்தியல்ல. எனக்கும் பெருமைதான். மல்லிகையின் ஆசிரியர் என்கின்ற முறையில் மெய்யாகவே நான் மகிழ்ச்சி யடைகின்றேன்.
மல்லிகையில் எழுதி ஈழத்து இலக்கிய உலகில் வே? பதித்த நண்பர் கமால் முதற் தடவையாக மல்லிகைப் பந்தல் மூலம் தனது படைப்புக்கள் நூலுருப்பெறுவதைப் வார்க்கின்றார். அவருக்கு இது மகிழ்ச்சியைத் தரும் என்பது எனது நம்பிக்கை.
அட்டையை புதிய முறையில் வரைந்து தந்துள்ள ஒவியர் பூரீதர் பிச்சையப்பா அவர்களுக்கும் இந்த நூலை இவ்வளவு சீக்கிரம் வெளிவர ஒத்தாசை புரிந்த இளம் நண்பர் க. குமரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்.
2348, காங்கேசன்துறை வீதி CALTussufå gadar யாழ்ப்பாணம் 16-5-96.

Page 7
கான் சொல்ல நினைப்பது இதுதான்
"மல்லிகை சஞ்சிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வருகிறது. ஆசிரியர் டொமினிக் ஜீவா. " நீங்களும் இதற்கு எழுதலாம்" என்றவாறு எனக்கு நீட்டினார் இதழொன்றை. எடுத்து நான் புரட்டிப் பார்த்தேன். பெரிய பெரிய ஷயங்களெல்லாம் அதில் அடங்கியிருப்பதாக எனக்குப் பட்டது. கொஞ்சம் யோசித்தேன்.
'இதற்கு எப்படி நான் எழுதுவது?" எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு எனக்கு மல்லிகையை அறிமுகம் செய்தவர் கவிஞர் ஏ. இக்பால் அவர்களே. அழுத்கம ஸாகிறாவில் நான் படித்துக்கொண்டிருந்த போது அவர் அங்கு ஆசிரியர். இலக்கியம் சம்பந்தமாக உரையாடுவதற்கும். எழுதிய பிரதி களை திருத்திக் கொள்வதற்கும். வாசிப்புக்காகப் புத்தகங் களைப் பெறுவதற்கும் அவரது வீட்டுக்கு அடிக்கடி போய் வரும் சந்தர்ப்பத்திலேயே இது நடைபெற்றது.
இதே மல்லிகை எமது விஞ்ஞான ஆசிரியர் திரு இரா. சந்திரசேகரன் அவர்களது பாடப் புத்தகங்களுக்கிடையேயும் அவ்வப்போது தலை காட்டுவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. அவரது தங்கை" என்ற கதை அதில் வெளி வந்த போது அதை வாசித்து நான் மிகுந்த ஆனந்தமடைந் தேன்.
பின்னர் எனது கிராமத்தின் இலக்கியகாரர்களான எம்.எச்.எம் சம்ஸ், யோனகபுர-ஹம்ஸா ஆகியோரிடை யேயும் மல்லிகை பேசப்படுவதைக் கவனித்தேன். அவர்களிட மிருந்து ஆரம்ப இதழ்கள் சிலவற்றைப் பெற்று ஆறுதலாகப் படித்துப் பார்த்தேன். எனக்கு அதன்மீது ஒரு பிடிப்பு

9
உண்டாயிற்று. ஆயினும் பயிலுநர் எழுத்தாளராக இருந்த காரணத்தால் எதுவும் எழுத நினைக்கவில்லை.
1970ம் ஆண்டென்று ஞாபகம். மல்லிகை இதழொன்றில் சிறுகதைப் போட்டியொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அபூதாலிப் அப்துல் லத்தீஃபின் "இன்ஸான்" சிறுகதை களின் பாதிப்பாலும், அதற்கு சில கதைகள் எழுதிய அணுப வத்தோடும் அந்தப் பாணியில் அமைந்த ஒரு சிறுகதையை மல்லிகைப் போட்டிக்கு அனுப்பிவைத்தேன். முடிவு வெளி பெயர் பெற்ற எழுத்தாளர்களே பரிசும் பெற்றிருந் தாாகள.
எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் போட்டிக்கனுப்பிய வெறி தீர்ந்தது" என்ற கதை மல்லிகையில் பிரசுரமாகி யிருந்தது. ஏதோ சிறுகதைப் படைப்பில் உச்சத்தையே தொட்டுவிட்டதான பூரிப்பு எனக்கு.
எனது கிராமத்தின் வாழ்நிலையை. அங்கு வாழும் மக்களின் பேச்சு மொழியில். சமய, கலாசாரப் பகைப் புலத்தில் எழுதிய சிறுகதையை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஓர் இலக்கிய இதழ் வெளியிட்டமை எனது சித்தனையைத் தட்டிவிட்டது. அதன் பின்பே டொமினிக் ஜீவாவை. அவர் சார்ந்த நிலைப்பாட்டை. தேசிய இலக்கியக் கோட்பாட்ட்ை. முற்போக்கு எழுத்தாளர் வளர்ச்சிப் போக்கை தேடித் தேடிக் கற்கத் தொடங்கினேன்.
**கமாலின் கதைகள் புரிவதில்லை" என்ற குரல் யாழ்ப் பாணம், கொழும்பு, ஏன் சென்னையிலும்கூட ஒலிக்காம லில்லை. அதற்கெல்லாம் மல்லிகை ஆசிரியரே பொருத்த மாகப் பதில் சொல்லி வந்தார்.
இதற்கிடையில் பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு பயிற்சிக்காக (1973-74) தெரிவு செய்: "ப்பட்டேன். அப் போது மேலோங்கி நின்ற ஒரே உணர்வு மல்லிகை ஜீவாவை சந்திக்கப் போகிறேன் என்பதுதான். வார இறுதிகளில் அன்பு ஜவஹர் ஷா , மூதூர் முகைதீன், ஜவாத் மரைக்கார் TTTT TTTMMTLL TTTTC LTTTLLLLLLL AMLMLL TLLT TTL LALAL TTT TTTTTTTTTTTS TTTMMTLTTTLLLLL LLL STLL TTLS0LL LLLLL LLLLLL திரு சந்திரசேகரனே எப்போதும் எங்களை புன்னகையோடு வரவேற்பார். ஜீவா அவர்களுடன் பல விடயங்கள் தொடர்

Page 8
10
பாகவும் உரையாடுவோம். இரண்டு ஆண்டுகளாக இதே இயங்கு நிலை. பயிற்சிக் கல்லூரிக்கும் பலமுறை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். ஒரு தடவை பரபரப்பாகவே ஒரு கூட்டம் முடிவுற்றது.
மல்லிகைக் காரியாலயத்தில்தான் எத்தனைச் சந்திப்பு கள். சந்திப்புகள். தெணியான், சபா ஜெயராசா, ரத்ன ஸ்பாபதி அய்யர், நெல்லை. க. பேரன் இப்படிப் பலபேரை அந்தக் காரியாலயத்திலேயே முதன் முதலில் சந்தித்திருக் கிறேன். உரையாடியிருக்கிறேன்.
இதே காலகட்டத்தில்தான் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. 1973ல் தென்னிலங்கை இலக்கிய விழாவை மலர் வெளியிட்டு சிறப்பாகக் கொண்டாடிய போது திரு டொமினிக் ஜீவா சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். வடபகுதிச் சஞ்சிகை ஆசிரியரொருவர் திக்கவல்லைக்கு விஜயம் செய்தமை எமக்கெல்லாம் பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
காலம் தாவிப் பாய்ந்தது. பலாலியில் ஆசிரியப் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேற வேண்டிய நிலை அத்தோடு இத்தொடர்பு அற்றுப் போய்விடவில்லை. அப்போதெல்லாம் மாத இறுதி யில் மல்லிகை ஜிவா கொழும்புக்கு வருவார். எப்போது எங்கே சந்திக்கலாமென்பதை 10ல்லிகை மூலமே அறிவித்து விடுவார். இருந்தாலும் கொழும்பு வந்து சேர்ந்ததும் ப. ஆப்டீன், லெ, முருகபூபதி, மேமன்கவி இவர்களில் ஒருவர் தந்தி மூலம் தகவல் தந்துவிடுவார்கள். இனி யென்ன. கொழும்புச் சந்திப்பு குதூகலமாக இருக்கும். பலதையும் பேசிப் பேசிக் களிப்போம். அது ஒரு சுவையான காலம் , நினைத்தால் கூட இனிக்கிறது.
மல்லிகை அவ்வப்போது பிரதேச சிறப்பு மலர்கள் போடுவது கலைஞர்களுக்கு தெரிந்த விஷயம் ஐயாயிரத் துக்கு மேற்படாத அதுவும் நூறுவீதம் முஸ்லிம்கள் வாழும் திக்குவல்லையை சிறப்பிப்பதென்றால். அப்படியொரு சாதனையை மல்லிகையால்தான் செய்ய முடியும். ஆமாம் 1976 பெப்ரவரி இதழ் திக்குவல்லை சிறப்பிதளாக மலர்ந்தது. பல புதியவர்களும் இதன்மூலம் அறிமுகமானார்
56.
மல்லிகை மூலம் அறிமுகமானவர்கள் மாத்திரமன்றி, * "மல்லிகையில் எழுதினேன்" என்று சொல்லிக் கொள்வதி

லேயே ஒரு பெருமையுண்டு. தெணியான், ராஜபூரீ காந்தன், லெ. முருகபூபதி, சு. முருகானந்தன், கோகிலா மகேந்திரன், சுதாராஜ், நாகேசு தர்மலிங்கம், நெல்லை. க. பேரன் இப்படி இன்னும் இன்னும்.
வீச்சுள்ள முஸ்லிம் எழுத்தாளர்களை வளர்த்தெடுத்த தில் மல்லிகையின் பங்கு தனியானது. ப. ஆப்டீன், எஸ். எம் ஜே பைஸ்தீன், எம். எச்.எம். சம்ஸ், மு பசீர். மேமன்கவி, சோலைக்கிளி, இப்னு அஸாமத் இப்படி இன்னொரு பட்டியல் தொடர்கிறது. ஏன். எம். ஏ. ரஹீமா, கெக்கிராவ ஹைானா போன்ற பெண் படைப்பாளிகளையும் மல்லிகை எமக்கு இனங்காட்டியிருக்கிறதே
ஒருநாள் பொரளையில் நடைபெற்ற சிங்கள தமிழ் இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு விட்டு வரும் போது " " கமால், உம்முடைய தொகுதியொன்று போட்டால் என்ன?" என்று கேட்டார் திரு ஜீவா.
**நல்லது போடுவோம்' என்றேன். **கொஞ்சக் கதைகள் தொகுத்துத் தாரும். இந்தியாவில் போடக் கூடிய வாய்ப்பிருக்கு' என்றார் அவர்,
இந்த ஏற்பாட்டில் சென்னை என்ஸிபிஎச் மூலம் 1984ல் 'கோடையும் வரம்புகளை உடைக்கும்" தொகுதி வெளிவந்தது. அது இங்கு விற்பனை ரீதியாக வராமல் போனதும், அதனால் இங்குள்ள வாசகர்களுக்கு கிட்டாமல் போனதும் வேறுவிஷயம்.
மல்லிகையின் 25வது ஆண்டு மலர் வெளியீட்டு விழாவுக் காக 1990ல் தெளிவத்தை ஜோஸ்ப், அந்தனி ஜீவா, அல் அஸாமத் இன்னும் சில நண்பர்களுமாக கொழும்பி லிருந்து புறப்பட்டோம். யாழ்ப்பாண புகையிரத நிலையத் தில் திரு. செங்கை ஆழியான் எங்களை வரவேற்று அவரது காரில் நல்லூர் கம்பன் கோட்டத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.
கம்பன் கழகத் தலைவர் திரு. இ. ஜெயராஜாம் அவரது சகாக்களும் அந்த நான்கு நாட்களும் உபசரிப்பால் எங்க ளைக் குளிர்வித்தார்கள்.
டாக்டர் எம். கே. முருகானந்தம் தனது இலக்கிய வண்டியில் பருத்தித்துறை வரை எம்மை அழைத்துச் சென்: றார். ஈழத்து சிறுகதை மூலவர்களில் ஒருவரான திரு எஸ்

Page 9
12
சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியமை எவ்வளவு பெருமைப்படக்கூடிய வாய்ப்பு.
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. டிவகாலாலா, பூபாலசிங்கம் புத்தகசாலை திரு பூருரீதர்சிங் போன்றோர் விருந்தளித்து கெளரவித்தார்கள்.
எல்லாவற்றுக்கும் உச்சமாக நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற ஆண்டு மலர் வெளியீட்டு விழவின் போது, மல்லிகை எழுத்தாளன் என்ற வகையில் பேசக்கிடைத்தமை என்றும் நெஞ்சை விட்டகலாத இனிய நினைவாகும்.
மல்லிகையின் வளர்ச்சிக்கட்டமாக, மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் வர ஆரம்பித்தன. அதனைச் சீராக நடை முறைப்படுத்த இயலாமல், சமகாலப் பிரச்சனைகள் குறுக்கே நிற்பது உண்மைதான். எப்படியோ மல்லிகைப் பந்தல் மூலம் எனது தொகுப்பொன்று வரவேண்டுமென்ற ஆவலை ஜீவா அவர்கள் புரிந்துகொள்ளத் தவறவில்லை.
மல்லிகையில் ஐம்பதுக்கு மேற்பட்ட கதைகள் எழுதி புள்ளேன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதை களின் தொகுப்பாகவே இருக்கவேண்டும். அப்போதுதான் மல்லிகை எழுத்தாளனாக என்னை இனங்காட்டிக்கொள்ள முடியும் என்று அழுத்திச் சொன்னேன். தனக்கேயுரிய நிதானத்தோடு பல அபிப்பிராயங்களை முன்வைத்து என் னோடு உடன்பட்டார். அதன் விளைவே இப்போது உங்கள் கைகளிலுள்ள "விடைபிழைத்த கணக்கு" என்ற இந்தத் தொகுப்பு.
மல்லிகையும் ஜீவாவும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு சரித்திரம். ஒரு சகாப்தம். அதில் நானும் ஒரு துளியாக இணைந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
இதற்கெல்லாம் சேர்த்து மரபுப்படி 'நன்றி சொன் னாலும்கூட, அந்த உணர்வு வார்த்தைகளுக்குள் சிறைம் படுத்த முடியாதப்டி மனதின் அடியாழம் வரை வியாபித்து நிற்கிறது
காதோடு ஒரு செய்தி. இது. மல்லிகைக் கதைகளின் முதற் தொகுப்பே. 1913, அட்டுலுகம திக்குவல்லை கமால்
usń7 Lr Uslo-0785, இலங்கை.

இவை உண்மையான கதைகள்
*மனிதனைவிட எனக்கு உன்னதமானவன் யாரு மில்லை" என்றார் மார்க்சிம் கார்க்கி. இந்த நெறியைக் கைக்கொண்டு எழுதிய படைப்பாளிகள் சர்வதேச இலக்கி யத்தில் புதுச்செழுமையைக் கொடுத்ததோடு மட்டுமன்றி மக்களை மேன்மைப்ப்டுத்தப் போரிடும் இயக்கங்களுக்கெல் லாம் இந்தப் படைப்புகளையே போராயுதமாகவும் வழங் கினர். இந்த ஆயுதம் இன, மொழி, தேச எல்லைகளைக் கடந்து இன்னமும் தன் வலிமை குன்றாமல் வாழ்ந்து வகு கிறது. கார்க்கியின் "தாய்" ஒஸ்ட்ரோ வொஸ்கியின் வீரம் விளைந்தது' , ஹவார்ட் பாஸ்ட்டின் "ஸ்பாட்டகஸ்", ஜேர்மன் நாவலான 'மீனவர் எழுச்சி", கே. ஏ. அப்பாஸின் "இன்குலாப்", ரகுநாதனின் "பஞ்சும் பசியும்", டி. செல்வ ராஜின் "தேநீர்" செ. கணேசலிங்கனின் "போர்க்கோலம்", போன்ற நாவல்கள் இன்னும் இன்னமும் முற்போக்கு எழுச்சிக்கு குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் இவற்றின் அடிநாதமாகத் தொனிப்பது ஒடுக்கு முறைக்கு எதிரான வலிமையான ஆக்ரோஷக்குரலாகும்.
திக்குவல்லை கமாலின் எழுத்தை கால் நூற்றாண்டு காலமாக நான் அறிவேன். ந்த எழுத்தில் மேற்கூறிய இதே குரலை பிசிறின்றி சுத்ததொனியிலே நான் கேட்டு, வியந்து, பாராட்டி, கண்ணிரிமல்கியிருக்கின்றேன். நெஞ்சு மீண்டும் நினைத்து திரும்பவும் வாசிக்க வைக்கின்ற கருப் பொருள் தேர்வு கமாலுக்கு இயல்பாக வாய்ந்ததற்கு அவரின் ஆளுமையே காரணம். மானிடநேயமும், போர்க் குணமும், துணிச்சலுமுள்ள படைப்பாளியாக நான் கமாலை உணர்ந்திருக்கிறேன்.
கமாலின் கதைகள் உண்மையானவை. அவரைச் சுற்றி வாழ்ந்து வருகின்ற அடித்தட்டு மக்கள் அவரின் எழுத்தில் ரத்தமும் சதையுமாய் வாழ்கிறார்கள். அவர், அவர்களோடு வாழ்கிறார். ஆனால் அவர்களின் இயக்கத்தில்: குறுக்கிடவில்லை கமால். அதுதான் சிறந்த படைப்பாள

Page 10
14
னின் வெற்றி தனித்துவம். பள்ளி ஆசிரியராய் வாழும், கமால் அரசியலினால் பட்ட அவலத்தை மனது நெருட எழுதுகிறார். ஆனால் அங்கே அவரின் தனி அவலமும், அவசரமும் பேசப்படவில்லை. மோசமான அரசியலில்சிக்கி உழலும் நல்லாசிரியனை வகை மாதிரியாக நடமாட விடு கிறார் அவர்.
திக்குவல்லை கமால் இலங்கைப் படைப்புலகில் முன் னணி முற்போக்கு எழுத்தாளராய் எழுதத்தொடங்கி, தமிழக வாசகர் நடுவேயும் அறியப்பட்டிருப்பவர். ஆர்வமோடு அவர் கதைகள் இங்கே வாசிக்கப்படுவதுண்டு. பலர் என்னோடு கமாலின் கதைகளைப் பற்றிப் பிரமித்துப் பேசியபோது நான் பெருமிதமடைந்திருக்கிறேன். அதை என் மகிழ்வாக ஏற்று மகிழ்ந்திருக்கிறேன்.
கமாலுக்கு பல சிறப்புகள் தரப்படவேண்டும். பாரம் பரியத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு வெகு தொலைவில், சிங்கள மொழி பேசும் மக்கள் சூழலிலுள்ள கிராமத்தில் தமிழைப் பாதுகாத்து வரும் முஸ்லிம் மக்களிடையே இருந்து படைப் பிலக்கியத்தை உருவாக்கி வருபவர் அவர். நிறைய வசதி, யீனங்களிடையே நிறைவான படைப்பாளியாக அவர் பரிண மித்திருப்பது மிகவும் பெருமையான விஷயம். நவீன ஈழத்து இலக்கிய வரலாறு தெற்கே வாழும் இவர் போன்ற எழுத் தாளர்களைப் பெருமையோடு குறித்துக் கொண்டுதான் பின்னுள்ள காலத்துக்கு தகரமுடியும்
பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டில் வாழ்ந்து, இங்குள்ள எழுத்தை அவதானித்து வருகின்றேன். முற்போக்கு எழுத்தே பல இடங்களில் நசிவுற்று, தயங்கி நிற்கிறது, வரட்டுத் தத்துவங்களை அணிந்து பம்மாத்துக் காட்டும் அவலத்தில் நிற்கிறது. யதார்த்தவாதம் செத்துவிட்டது என்றுகூட முனகுகிறது. ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களே "ஜய ஜய சங்கரா" சொல்லி நீர்த்துப் போய்விட்டனர். இந்தச் சூர் நிலையில் திக்குவல்லை கமாலை ஒப்பிடுகின்றபோது அவரின் கம்பீரத்தையும் பெருமையையும் நான் உணர்ந்து சொள்கிறேன். s
கமாலின் இருபத்தைந்து ஆண்டுகால எழுத்தை இத்
தொகுதியில் படிக்கலாம். ஆனாலும் பாருங்கள், தீர்க்கமும் தீர்மானமும் பிடிவாதமும் கொண்ட சித்தாந்தச் செறிவு

1.5
என்ன துல்லியமாய் இவருக்கு வசப்பட்டு, தெளிவான எழுத் தாய் கோலமிட்டிருக்கிறது. எந்தத் தளப்பமும் இல்லாத சிந்தனைச் செறிவு, அவரின் பெண்களான ஹிதாயாவும், கதிஜதுல்குப்ராவும் எவ்வளவு துணிவோடு நிற்கிறவர்களாய் நம் மனதில் பதிந்து போய் விடுகிறார்கள். இவர்கள் திக்கு வல்லைக்கு மட்டும் உரியவர்களா? இல்லை, திரும்பத் திருமப எம்மை யோசிக்க வைக்கின்ற இவர்கள் எகிப்தின் குக்கிராமத்திலோ, மொறெக்கோவின் ஒதுக்கு ஊரிலோ, கியூபாவின் புறநகரிலோ, கோயில் பட்டியின் தனிக் குடிசிை யிலோ கூட இருக்கக் கூடியவர்கள். இந்தப் பகுதியின் சிறந்த எழுத்தாளர் படைப்பில்கூட இவர்கள் அவர்களின் மொழியில் பேசி, உலவிக் கொண்டிருக்கலாம்.
ஆயினும் கமாலைப் புதிதாக அணுகுகின்றோருக்கு சிறிய சிரமம் வரவே செய்யும். அதென்ன? கமலின் மனிதர் பேசுகின்ற மொழி சிலரின் அருகே வருவதற்கு சிரமம் ஏற் படவே செய்யும், அந்தப்பகுதி மனிதர் பேசுகின்ற தமிழ் மொழியை ஆர்வமுள்ள வாசகன் சிறிது சிரமப்பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பிரயத்தனமே, 'புரிந்து கொண்ட பின்னர் கவிதையை வாசிப்பதாகக் கூட ஆகி விடும். இது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆசிரியர் கதையை விவரிக்கிறபோது வாசகனுக்கு அருகே சென்று அவனை எட்டும் மொழியில் கூறிட வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன். தமிழ்ப்படைப்பிலக்கியத்தில் மோசமான உதாரணமாகிவிட்ட கி. ராஜநாராயணனின் Jéffluu நடையை, எவரும் பின்பற்றலாகாது என்பது என் எண்ணம், வேண்டுகோள்.
* விடை பிழைத்த கணக்கு"-இருபத்தைந்து ஆண்டுகால சமுதாய, அரசியல், கலாச்சார வாழ்வின் இழைகளைக் கொண்டு பின்னப்பட்ட அழகானதொகுதி, அழகு என்றால் கருத்து, வடிவம் யாவிலும்.
இந்தக் கதைகள் யாவையும் "மல்லிகை" இதழில் வெளியிட்டு கமாலை முன்னோக்கிடச் செய்த திரு. டொமினிக் ஜீவாவையும், கமாலையும் பாராட்டுவதில் நான் பெருமையடைகின்றேன்.
சென்னை-26 Cle. Curanr.dr. 16 - 7. 96

Page 11
1.
197.
972 1973
1975
1975
975 1976
1976
1978
1982
1983
1984
1985
1985
1986
1988
1989
1991
1993
1994
செப்.
செப். *R* ஆகஸ்ட் -
g"-sör ങ്ങ ஆகஸ்ட் - டிசம்பர் - ஏப்ரல் -
ஆகஸ்ட் - ஏப்ரல் --
ஆகஸ்ட் -
பெப்ரவரி
ஜான் -
мнатны.
ஆகஸ்ட் -
p m
ஏப். - மே -
செப். ങ്ങബ
ஆகஸ்ட் -
Driji: amsos "
ஜனவரி --
பூக்கள்
பக்கம் வெறி தீர்ந்தது 7 மாறு சாதி 23 முரண்பாட்டின் பின்னணியில் 32 ஆற்றல்கள் அனாதைகளாக 39 பாரப்பட்ட பதனா 44 உலகம் எங்கள் கைகளுக்குள் 51 பெயர்ப் பலகைகள் 59 வீராங்கனைகள் வரிசையில் 65 LJu68ortb 7. விடை பிழைத்த கணக்கு 77 அந்நியம் 82 சம்பளக்காரன் 86 மையத்து வீட்டுச் சோறு 92 வேலி 97 புதிய பாடம் 104. ஒரு கண் இரண்டு பார்வைகள் 111 மகனுக்கு ஒரு வண்டி 17 பதினான்கு நிமிடம் 22 நிழற்போர் 27
வைராக்கியம் 131.

வெறி தீர்ந்தது
லாம்பை சற்று தூண்டி சுருட்டைப் பற்ற வைத்து இரண்டு மூன்று "தம் இழுத்தூதிவிட்டு முன் படிக்கட்டில் போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டான் காஸிம். மாலை வேளையில் தேநீருக்குப்பின் ஆறுதலாக ஆறுசத சுருட்டொன்றைப் புகைப்பதை அவனால் தவிர்க்க இயல வில்லை.
மூன்று உயிர்களுக்கும் இரை போடும் அந்தக் குச்சில் கடைதான் அவர்களது ஜீவ நாடி. சனநடமாட்டமற்ற பகுதி யில், நீண்டு வளைந்து செல்லும் களி மண் பாதைக்கருகில், அது அமைந்திருந்த போதிலும் நாலைந்து வருடமாக இயங்கி வருவதென்றால். அதற்குப் பிரத்தியேகமான சிறப்பியல்புகள் இருக்கத்தானே செய்யும்.
சூரிய கஹவல பகுதியில் வாழும் முஸ்லிம்களும் சிங்கள வர்களும் காய்கறி சாமான்கள் வாங்குவதென்றால் சற்றுத தூரம் செல்லத்தான் வேண்டும். மழை நாட்களிலும் பொது வாக இரவு நேரங்களிலும் போவதென்றால் கொஞ்சம் சிரமம்தான். இந்த உத்தேசங்களின் அடிப்படையில் எழுந் ததுதான் அக்கடை,
நாளாந்தம் அதிகாலையில் வலஸ்கல சந்தைக்குப்போய் வந்தால் முற்பகல் பத்து மணிக்கெல்லாம் மாட்டு வண்டியில் பலாக்காய். தேங்காய். கீரை. கறி வகைகள் எல்லாம்
வி-2

Page 12
8 விடை பிழைத்த கணக்கு
வந்துவிடும். அந்த வேளையில் அக்கடையில் கலகலப்பு. கூடவே அவனது மனைவியும் ஒத்துழைப்பதால் பெண்களும் அக்கடையை நாடுவதை விரும்புவார்கள் தானே.
புகைந்து முடிந்த சுருட்டின் கடைசி "தம்மை இழுத் தூதி ஒருமுறை இருமித் துப்பிவிட்டு எழும்ப முனைந்தவன். மீண்டும் சற்றுத்தள்ளி அமர்ந்து கொண்டான்.
வழமையாக இரவு ஒன்பதரை மணிக்குப்போய் பஸ் டிப்போவில் வேலை செய்யும் ஜினதாஸ் போனபின்தான் அவன் கடையைப் பூட்டுவான். ஆனால் இன்றோ இப் பொழுதே இழுத்து முடிவிட்டு படுத்துக் கொண்டாலும் நல்லதுபோல் பட்டது காஸிமுக்கு. இப்படி ஒரு மாதிரியான யோசனைகளுக்கெல்லாங் காரணம் காலையில் நடைபெற்ற சம்பவம் தான்.
இன்று காலை எட்டுமணிபோல் அப்துல் காதர் முதலாளி அவரது கையாள் ஒருவனுடன் அப்பக்கமாக வருவதைக் கண்டதும் ஏதும் விசேடங்கள் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான். அதுபோல் அவர்கள் வந்து கடைக்குள்ளேயே புகுந்தபோது காஸிமுக்குப் பெரிய ஆச்சரியமாய்ப் போய்விட்டது. மற்றவர்களைப் போன்று அவருக்கு அர்த்தமற்ற இராஜ மரியாதைகளைச் செய்ய முனையாது, சும்மா முக மலர்ச்சியுடன் மாத்திரம் நின்று erar.
"“காஸிம் ஒனக்கு அடுத்தசல் புஞ்சிபண்டாவந் தெரீக் தானே" தனது வேலைக்காரன் ஒருவனிடம் கேட்பது போன்ற கம்பீரம்,
இதைக் கேட்டதுமே அவனுக்கு விஷயம் தெட்டத் தெளிவாகப் புரிந்துவிட்டது.
"ஒ" அந்த அர்னோலிஸ் அப்புட மகனத்தானே செல்லிய" என்று சிரித்தபடி கேட்டான்.

திக்குவல்லை கமால் 19
"ஆ. ஆ. அந்த நாய்ப் பயல்தான்' "எனத்தியன் அப்பிடிச் செல்லிய? அவன் ஏண்ட கூட் டாளிதான்'
**அந்தக் கூட்டாளித் தனத்தியன சீக்கிரமா உட்டுப் போடு. எங்குளுக்கு தொரோகம் செய்தவனியயோட என்ன கூட்டாளித்தனம்'
அவருடன் நட்பில்லாதவர்களுடன் ஊரில் வேறு எவருமே ஒற்றுமையாக இருக்கக் கூடாதென்பது போன்றிருந்தது அவரது ச்ேசு. அதெல்லாம் அவரது பக்தர்களின் வழிபாடு தான். ஆனால் காஸிமைப் போன்றவர்கள்.
** அதுசரி மொதலாளி. அவன் இன்டவரக்கும் எனக் கொரு தொரோகமும் செய்யல்லியே வேண்டிய நேரத்தில வேண்டிய ஒதவிச் செய்த" என்று அவரது வேண்டு கோளை நிராகரித்ததாகப் பதில் கொடுத்தான்.
இந்தக் கணத்தில் அவரது முகம் 'குப்" பென்று சிவந் தது சினம் பொங்கியபடி "அப்ப அந்தச் சிங்களவனியள் தான் ஒனக்கு நல்லம்போல" என்று ஒரு பிரிவினையை இழுத்துப் போட்டு நிறுத்தினார்.
* சிங்களவன்சரி தமிழன் சரி எங்களுக்கு ஒதவி ஒபகாரம் செய்தபோல வேறதாரன் வந்து செய்யப்போற" அவரது முகத்தில் அறைந்தாற்போல சொன்னான்.
'ஹா ஹா. மிச்சம் மிச்சம்பேச்சித்தேவில்ல. ஒன்னால தான் அவன் இன்டக்கி இந்த மட்டுப் பெருத்துப் பெய்த்திக் கான். இதுக்குப்பொறகு அவன் இந்தக் கடேல நிக்கியத்தக் கண்டா உள்ளுக்கே வந்தடிச்சியன்ன' பின்னால் நின்று கொண்டிருந்தவரின் வீரக் குரல் இது.
"ஓ அதேம் ஏன்ட கண்ணால பாக்கத்தான் போற.
மறுபேனம் ஒங்களியலுக்கு கைகாலோட பொகக்கெடக்கி யல்ல" தானும் அவர்களுக்கு குறைந்தவனல்ல என்பதை

Page 13
20 விடை பிழைத்த கணக்கு
ஊர்ஜிதம் செய்யுமாப்போல் ஸாரத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டான் காஸிம்,
இனியும் தாமதித்தால் நிலைமை மோசமாகிவிடுமே என்பதை உணர்ந்த அங்கு கூடியோர், அவர்களை அமைதிப் படுத்தி அழைத்துச்செல்ல, அதற்கிடையில் அப்துல் காதர் முதலாளி திரும்பி "டேய் பறநாய். நீ இவளவு பெருத்துப் பெய்த்தாய், ஒங்கட ஆச்சியப்பன் எங்கட ஊடுவாசல்ல சட்டிமுட்டி வழிச்சித் தின்டவங்க' என்று தங்களுக்கிடை நிலான ஏற்றத்தாழ்வை குத்திக்காட்ட நினைத்தார் போலும்!
'ஆ அதுதான், அன்டக்கும் இன்டக்கும் நாங்க கஷ்டப் பட்டுத்தான் தின்னிய, கள்ளச்சாமான் வித்துத்தின்னல்ல" எல்லோருக்கும் தெரிந்த மெளன ரகசியத்தை இனி என்ன நடந்தாலும் சரியென்ற எண்ணத்தில் போலும் உரத்துக் கூறிவிட்டான்.
நடுச்சந்தியில் வைத்து இப்படித் தன் மானத்தைக் கலைந்துவிட்டானே என்ற வேதனை அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது.
* டேய் ஓன்ட வாய்க்கு இன்டக்கே நல்ல மருந்து செய்தன் பாத்துக்கோ" தனது கடைசி எச்சரிக்கையையும் விடுத்துவிட்டு, முயற்சியில் தோல்வி கண்ட போதாக் குறைக்கு அவமானத்தையும் வேறு சுமந்துகொண்டு நடந் தார் காதர் முதலாளி.
புஞ்சிபண்டாவும் காஸிமும் நீண்ட காலமாக நண்பர் கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்வதில் பின் நிற்பதில்லை. ஒருவித கொள்கைப் பிணைப்பு அவர்களை நண்பர்களாக்கியது. توز
புஞ்சிபண்டா ஒரு சாதாரண விவசாயி. அவனது காணிக்கு முள்ளுக்கம்பி அடிப்பதற்காக சென்றவாரம் காதர்

திக்குவல்லை கமால் 21.
முதலாளியின் இரும்புக் கடைக்குச் சென்றபோது, அவனுக்கு முள்ளுக்கம்பி இல்லையென்று விட்டார். பின்பு அங்கே ஒளித்து வைத்துக் கொண்டு கூடிய விலைக்கு விற்பதை அறிந்து விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கையும் மெய்யுகாகப் பிடித்துக் கொடுத்து விட்டான். இச்செய்தி கேள்விப்பட்டதும் அவனை முதன்முதலில் பாராட்டியது காஸிம்தான்.
அதைத் தொடர்ந்து அவனை அடிப்பதற்கு சிலரை ஏவி விட்டு அது முறியடிக்கப்பட்டபோது. காஸியின் ஒத்துழைப் பின்றேல் இதைச் சாதிக்க முடியாது என்ற முடிவில் அதற்கும் முனைந்து படுதோல்வி அடைந்தபின், அவரின் கோபவெறி இப்பொழுது காஸியின் மேல் திரும்பியுள்ளது.
**இந்தாங்கொ ஆறுபணி பிந்தீட்டு லைட்டப் பத்த வெய்ங்கொ' மண்ணெண்ணெய் போத்தலை நீட்டியபடி உள்ளேயிருந்து மனைவி வந்தபோது பெருமூச்சுவிட்டபடி வாங்கிருந்து எழுந்தான்.
லைட்டைத் தூக்கிவிட்டு சாமான்களைப் பார்த்தவன் 'மவீகா. இந்தத் தேங்க கொஞ்சமும் பழசாகீட்டு கொறஞ்ச வெலக்காவது வித்துப்போடுங்கொ'" அதைத் தொடர்ந்து.
**ராவக்கி மையோர் கெழங்கு கொஞ்சத்தேம் அவிச்ச புளித்தண்ணியொண்டும் சகச்செடுத்தா எப்பிடியன்" என்று ஆலோசனை கேட்க.
** எதுசரி ஒங்குளுக்கு புரியமான மாதிரி' " அதையே ஆமோதிப்பதாகக் கூறிவிட்டு உள்ளே சென்றாள். வீடு, கடை, சமையலறை எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதானே.
கடைப்படியிலிருந்து பாதைக்கிறங்கி இரு புறமும் எட்டிப் பார்த்தபோது அங்கே வாகனமொன்று வருவது தெரிந்தது. அந்த ரோட்டில் ஏதும் வாகனங்கள் வருவதென்

Page 14
22 விடை பிழைத்த கணக்கு
ஜால் அதிசயந்தான். வாகனம் நெருங்க நெருங்க அது ஜீப் வண்டியென்பதை அறிந்ததும் 'எங்கசரி சூதுகீது வெளாடியா யீக்கும்" என்று எண்ணிக்கொண்டே திரும்பினான்.
என்ன ஆச்சரியம் கடையெதிரே ஜீப் வந்து நின்ற தோடு நாலைந்து பொலிஸ்காரர்கள் "தடபட"வென்று பாய்ந்து கடையின் நாலுயுறமும் சுற்றி எதையோ தேடத் தொடங்கிவிட்டார்கள்.
காஸிமுக்கு நடுக்கத்துடன் வியர்த்துக்கொட்ட எதுவுமே புரியாமல் மரத்தூணைப் பற்றிப் பிடித்துக் கொண்டான். அக்கம் பக்கத்தாரெல்லாம் நொடிப் பொழுதில் அங்கே நிறைந்துவிட்டார்கள்.
இடப்பக்க கிடுகு வேலிக்குள்ளிருந்து பொலிஸ்கார னொருவன், கடதாசியில் சுற்றிய பார்ஸலொன்றை இழுத் தெடுத்துக்கொண்டு வந்து விரித்துக் காட்ட. இன்ஸ்பெக் டர் உறுமிக் கொண்டுவந்து காஸியின் வயிற்றுப்பக்க ஸார மடிப்பை இறுக்கிப் பிடித்து உலுக்கி.
"பொய்க்கு கட போட்டுக்கொண்டு கஞ்சா யாவாரம்' தனது பாஷையில் கத்தினான்.
'இல்லில்ல. நோ. நோ."
**ஏறுடா ஜிப்பில..??
காஸிம் ஊமைபோல் போய் ஏற, இரைந்துகொண்டு ஜீப் கிளம்பியது.
" அல்லாவே. இதென்ன நளீபன். அந்த ஹரபாப் போனவனியடை தலேல இடிவிழ" சகிக்க முடியாத வேதனையில் மலிகா ஒப்பாரி வைக்க. போதாக் குறைக்கு நான்கு வயதுச் சிறுமியின் அழுகையும் சேர்ந்துகொண்டது.
1971 செப்டம்பர்

மாறுசாதி
முன்வாசலில் எரிந்து கொண்டிருந்த குப்பி லாம்பின் வெளிச்சம் கதவுக்கிடையில் புகுந்து, அடுத்த அறை எதிர்ச் சிவரில் கோடு வரைந்தாற் போல் படிந்திருந்தது, கரையில் ஒரு பக்கமாகப் பதித்திருந்த கண்ணாடிக்குள்ளால் ஓரிரண்டு நட்சந்திரங்களும் மின்னிக்கொண்டிருந்தன.
இவை இரண்டையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ஹிதாயா.
ஏழெட்டு வருடங்களாக நாளாந்தம் இதே நேரத்தில் விரிந்து பழகிப்போன அவளது கண் இமைகள் இன்றும் விரிந்து கொண்டதில் தவறில்லைதான்.
இந்த ஒரு மாதத்தையும் மாத்திரம் தவிர்த்து, அதற்கு முன்பெல்லாம் அவள் இந்த நேரத்தில் நிச்சயமாகக் குசினிக் குள் குந்தி அடுப்பெரித்துக்கொண்டு அல்லது கோப்பி கலக்கிக் கொண்டுதானிருப்பாள்.
அதிகாலையிலேயே பொட்டணியைச் சுமந்தபடி வெளிக் கிடும் ஜெஸில் நானாவிற்கு, அந்தக் கோப்பிக் கோப்பையில் எத்தனையோ நம்பிக்கைகளும் மன நிறைவுகளும்தான்.
ஆனால் இந்த ஒருமாத காலமாக.எல்லாம் அடிதலை மாறிப்போயிருக்கிறதே.
அவள் இன்னும் கண்களைத் திறந்தபடி புரண்டுகொண் டிருந்தாள். வெளியே காகங்கள் கத்திப் பறக்கத் துவங்கிய

Page 15
24 விடை பிழைத்த கணக்கு
தைத் தொடர்ந்து, விடிந்துவிடுமுன் தண்ணிர் எடுத்து வரக் கிளம்பும் கன்னியர்களின் கலகலப்பு அவளை ஒன்றும் செய்து விடவில்லை.
மாறாக முன்வாசலிலிருந்தெழும்பும் அந்த நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் ஒலி.
“ “ asgno. . . . . . கஹ்.கஹ்கஹ்"
தலையைக் கிளப்பி ஓய்ந்து விடுகிறதா என்ற எதிர்பார்ப் புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அங்கே, அது தொடர்க் கதையாக நீண்டுகொண்டிருந்தது.
சடக் கென்றெழுந்து, நிலத்தில் உராய்ந்து இழுபட்டு வரும் பிடவையைக் கூட கவனிக்காமல் முன்வாசலுக்குப் போய் கணவனின் நெஞ்சை மேலிருந்துகீழாக இடைவிடாது தடவியபோதுதான் ஒருவாறு இருமல் ஓய்ந்தது.
அதே கைப்பட மேசையிலிருந்த 'சுடுதண்ணிர்ப் போத்த லிலிருந்து வெந்நீரில் கொஞ்சம் வாத்தெடுத்து நன்றாக பிடித்துகொண்டு தருவதற்கத்தாட்சியாக வெளிச்சம் பலபுற மும் பரவிக் கொண்டிருந்தது.
கதவைத் திறந்றகொண்டு வெளிக்கிட்டவள் பின்பக்க மாகக் கட்டிவைததிருந்த இரண்டு ஆடுகளையும் அவிழ்ந்து விட்டுக் காலைக் காரியங்களில் ஈடுபடலானாள்.
அதிகாலை வேளையில் பனிக் குளிரில் கணவனை அது வும் நேயாளியாக இருக்கும் நிலையில் வெளிக்கனுப்ப விரும் பாவ அவள், அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து தான் வைத்திருந்தாள்.
அப்போது நேரம் ஏழு மணியைத் தாண்டியிருக்குமென் பதை குர்ஆன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுகொண்டிருந்த சிறுவர், சிறுமியர் மூலம் தெரிந்துகொண்டதும் சீக்கிரம் போய் மருந்துக் குழிகைகளை எடுத்து அவருக்கு விழுங்கச் செய்துவிட்டு முற்றத்தைப் பெருக்கத் துவங்கினாள்.

திக்குவல்லை கமால் 25
உடற்கட்டுக் கலைந்து நோயாளியாகக் கிடக்கும் ஜெஸில் நானாவை, பொட்டணி ஜெஸில்" என்று சொன் னால்தான் எவருக்கும் ஒரேயடியாகப் புரிந்துகொள் வார்கள்.
வசதியாக வாழும் பலர் அவர்களுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும் அவர்களுக்குப் பல்லைக் காட்டித் தலை சொறியும் பழக்கம், வாழ்க்கை வசதியற்று இப்படி நோயாளி யாக அவதிப்படும் நேரத்திலும் கூட அவரிடத்திலில்லை.
அவர் கல்யாணம் சேய்துகொண்ட புதிதிலெல்லாம் உதவிக்கு இன்னொருவரையும் இருத்திக்கொண்டு பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய்ப் பிடவை வியா பாரம் செய்துகொண்டிருந்தார். நாட்பட நாட்பட இயற்கை யான வாழ்க்கைச் சோதனைகளால் தாழ்த்தபபட்டு உள்ளூர்ப் பொட்டணி வியாபாரியாக மாறிவிட்டார்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பொட்டணியைத் தலையிற் சுமந்து முழக்கோலைக் கையிலெடுத்தாரென்றால் இனி ஐந்தாறு மைல்கள் காற்தோல் தேய "நடடாராஜா" தான், பின்பு - மாலையில் விளக்கேற்றும் வேளையில் தான் சாப்பாட்டுச்சாமான்.காய்கறிகள் சகிதம் வீடு வந்து சேருவார்.
வாராவாரம் எப்படியோ கடைகளில் பிடலைத் தினுசுகள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார். அவளும் அப்பகுதி பெண் களின் ஓய்வு நேரக் கைப்பின்னலான "ரேந்தை'களை வாங்கியும், சட்டைப் பிடவைகளுக்கு பூவேலைகள் செய்து கொடுத்தும் கணவனுக்கு ஒத்துழைப்பாள்.
""முதலாளி இன்னவத;""
இக்குரலைக் கேட்டதும் சரிந்து தோளில் விழுந்திருந்த பிடவையை இழுத்துத் தலையிற் போட்டபடி கழுத்தை உயர்த்திப் பார்த்தாள். அங்கே வெற்றிலைக் காவியேறிய

Page 16
26 விடை பிழைத்த கணக்கு
பற்களால் சிரித்தபடி ஒரு சிங்களவர் நின்றுகொண்டி ருந்தார்
* ஒவ் எதுவட என்ன? " என்றவாறு துடைப்பக் கட்டையை மூலையில் வைத்துவிட்டு, உள்ளேபோய் இரண் டாம் அறைக்கதவு இடையால் பார்த்தபோது அவர் உள்ளே வந்தமர்ந்து கணவனிடம் சுகம்விசாரிப்பதை அவதானித் தாள.
அப்போது அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டி ருந்தது. அவளுக்கு வசதியாகப் போய்விட்டது. உடன் தேநீர் தயாரித்தவள் ஒரு கணம் தயங்கியபோது.வந்திருப்ப வருக்கு அதனைக் கொண்டுபோய்க் கொடுக்க வேறு யாரும் இல்லையே என்பதால் அவளாகவே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.
'உம்மா. ஆப்பா.உம்மா ஆப்பா' விழுத்தெழுந்து விட்டு மகள் ஓடிவந்து அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவோ முகம் கழுவவோ போகாத நிலையில் அடம்பிடித்த போது அவளுக்குப் பலத்த கோபம், வந்து முட்டியது. பாவம்; சிறு பிள்ளைகளுக்கே உரித்தான இயல்புதானே.
அன்று ஞாயிற்றுக்கிழமை; நேற்றைய நாளும் எப் படியோ கழிந்து போய்விட்டது. இன்றாவது அவளைக் கட்டிக்கொண்டுபோய் நீராடாவிட்டால் பின்பு பாடசாலை நாட்களில் அதை நினைத்துப் பார்க்கவே இயலாதல்லவா? அதே நேரத்தில் வீட்டில் சேர்ந்திருத்த அழுக்குத் துணிகளும் கூடி அவளை மேலும் உசார் படுத்தியது.
அடுத்த கணம் " "வா மகன் குளிக்கப் போக." "சிறுவ னையும் அழைத்தபடி துணிமணிகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தயாரானாள்.
"எனக்கேலும்மா.பெளத்த நோவு"

திக்குவல்லை கமால் 27
எங்கிருத்துதான் அவனுக்கிந்த நோய் திடீரென்று வந்ததோ. குளிக்காமலிருக்க அவன் போடும் போலிக் காரணம்தான் அது என்பது அவளுக்குந் தெரியாதா என்ன?
"குளிக்க வந்தாத்தான் ஆப்ப தார'
இந்த மந்திரத்தை அவள் சந்தர்ப்பம் பார்த்து உச்சரித் ததுதான் தாமதம்; தன்னிச்சையாக அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.
"அம்ஜத்து. அம்ஜத்து. வாளியக் கொஞ்சம் எடுக்கவா" அடுத்த வீட்டை அண்மிக் குரல் கொடுத்தாள் ஹிதாயா.
**ஆ.நானும் குளிக்கப் போகணும். சொணக்காமக்? கொணுவாங்கொ' உள்ளேயிருந்து நிபந்தனையுடன் அனுமதி வந்தது.
இரவல் வாளியையும் சுமந்து கொண்டு நடக்கத் துவங் கினாள். பாவம் ஒரு பொண்ணாக இருந்த போதிலும், அவளுக்குத்தான் எத்தனைப் பொறுப்புகளும் வேலைகளும். . விடிவுகாண முடியாத சிந்தனைகளும்.
இன்னும் மூன்றே மூன்று தாட்கள்தான் இருக்கின்றன. டாக்டரின் உத்தரவுப்படி ஜெஸில் நானாவை வீரலில” கயரோக ஆஸ்பத்திரியில் கூட்டிக்கொண்டுபோய் சேர்க்க வேண்டும். குறைந்த கணக்கில் அதற்கு இருபத்தைத்து ரூபாவாவது கையிலிருக்கவேண்டும்
இந்த ஒரே மாதத்திற்குள் கையில் மடியில் இருந்ததெல் லாம் விற்றுச் சுட்டு முடித்தாகிவிட்டது. யாரியமும் கேட்டுப் பெற்றுப் பழக்கப்படாத அவள் வேறெதுவுமே செய்யமுடி யாத நிலையில் கடக்காவது கேட்டு வைப்போமென்று தான் நேற்று கண்ணாடி முதலாளியின் பெண்சாதியை நாடினாள்.

Page 17
28 விடை பிழைத்த கணக்கு
'உம்மா பகலக்கி மீன் வாங்கேம் சல்லில்ல' என்பது தான் அவனது பதில்.
வெட்கித்து வெட்கித்துக் கேட்டால் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கையில் வாய் திறந்த முதல் முயற்சியே இப்படிப் படுதோல்வியை அரவணைத்தபோது அதற்குப் பிறகு இன்னுமொருவரிடம் போய் வாய் திறக்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை.
'எனக்கேல உம்மா.பெனத்த நோவுது" " கிணற்ற டியை அடைந்ததும் மீண்டும் சிறுவனின் போலிச்சாட்டு.
நிறைந்திருந்த பெண்களுக்கிடையே அவளும் நுழைந்து அவசர அவசரமாக துணிகளைத் துவைப்பதிலும் குளிப்பதி னும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கு புறமும் மதில்கள் எழுப்பிப் பெண்களுக்கென்றே விஷேசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுதான் அந்தப் பள்ளிக் கிணறு. இடைவிடாது பெண்கள் கூடிக்கொண்டி ருக்கும் அங்கு, வழமை போ9 அன்றும் உள்ளூர்ச் சம்பவங் களின் விமர்சனங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்குக் காது கொடுக்கும் நிலையில் அவளில்லை.
அவளுக்குத்தான் எத்தனையெத்தனை பிரச்சினைகள் முக்கால் மணி நேரத்துக்குள் துணிகளைத் துவைத்து மகனைக் குளிப்பாட்டி, தானும் குளித்துப் புறப்படத் தயா ரான போதுதான் அந்த வேண்டுகோள்.
"வாளியக் கொஞ்சம் தா-.நான் குளிச்சிட்டு அனுப்பியன்'
எதிரே, காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் பள பளக்க மார்பு ரவிக்கையைக் கழற்றியபடி நின்று கொண்டி ருந்தாள் " "கண்ணாடியின் முதலாளி"யின் மனைவி
அவள் சிறிது யோசித்தாள். இரவல் கொடுத்தவள் உடனே கொண்டுவந்து தரும்படி சொல்லியிருக்கிறாளே,

திக்குவல்லை கமால் 29
* புரியமில்லாட்டி எடுத்துக்கொணு போடி ஒன்ட
அருமச் சாமன'
* 'இல்ல இது ஏன்டயல்ல; அடுத்தூட்டு வாளி." அவள் காரணம் காட்ட முனைந்தாள்.
*" போதும் போதும் சாட்டு. நீ இப்ப பெரிய மனிசி தானே, " அப்பெண் அனாவசியமாக வார்த்தைகளைப் பொழிந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை.
"நாங்க பெருக்கேயில்ல.சிறுக்கேமில்லே.எப்போதும் ஒரு மாதிரித்நான்'
வாயப் பொத்து நாணயக்காரி.நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு, மறுசாதிய ஊட்டுள்ளுக்குப் போட்டுக் கொண்டு கூத்தாடியவள்.ஒண்ட ரசம் பட்டுத்தானே ஒத்தனொத்தனா வாரானியள்.
அங்கு கிளர்ந்து வெடித்த சிரிப்பொலி அவளை இன் னும் அதிரச் செய்துவிட்டது. குனிந்தவர்களும், நிமிர்ந்த வர்களும் தண்ணீர் அள்ளுபவர்களும் முதுகு தேய்ப்பவர் களும்.அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கி யதைப் பார்த்ததும், அவர்களெல்லோரும் "கண்ணாடி முதலாளி"யின் மனைவியின் குரலை ஆமோதிப்பது போவி ருந்தது.
அவள் வேறு எதுவும் பேச முடியாதவளாக.பேசியும் பயனில்லையே என்பதால் மகனையும் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டி ருந்தாள்.
**மாறுசாதி ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு"
இந்தச் சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவள் செவி யில் எதிரொலித்து அவளது உள்ளத்தைத் துகள் துகளாக் கிக் கொண்டிருந்தது.

Page 18
30 விடை பிழைத்த கணக்கு
இருக்கின்ற துயரங்களும் வேதனைகளும் போதாக் குறைக்கு இம்படியும் ஓர் அவமானமா?
இந்த ஏழு வருட காலமாக ஜெஸில் நானா அன்றை யன்றைக்குப் பணம்தான் சம்பாதித்து வந்தார் என்றுதான் அவள் நம்பியிருந்தாள். ஆனால் அவர் பணத்தை மாத்திர மல்ல பல மனித உள்ளங்களைக்கூடச் சம்பாதித்துள்ளார் என்பதை, அவர் நோயாளியாக மாறிய இந்த ஒரே மாதத் துக்குள் அவள் நன்குணர்ந்து கொண்டாள்.
ஒவ்வொரு நாளும் அவர் பழகிய பகுதிகளான ஊராமம், ரதம்பல, பிடதெலி முதலிய பகுதிகளிலிருந்து வந்து போய்க்கொண்டிருக்கும் சிங்களச் சகோதர சகோதரி களே அதற்குச் சான்று.
சொந்தக்காரர்களென்றும் ஊரவர் என்றும் இகுப்பவர் களெல்லாம் புறக்கணித்து வைத்திருக்கும் இந்நிலையில், பழக்கப் பிணைப்பால் வந்து போய்க் கொண்டிருப்பவர் களைக் கூட விட்டுவைக்காது கெட்ட கதைகளைத் தொடுக் கும் இவர்களின் விகாரத் தனத்தை யாரிடம் சொல்வது?
"உம்மா.ஆப்ப.உம்மா ஆப்ப" வீட்டை அடைவதற்கும் சிறுவன் மீண்டும் கோரிக்கை விடுவதற்கும் சரியாக இருந்தது.
முதன் முதலில் அவனுக்குக் காலைச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு, கணவனைப் பார்க்கமுன்னே ஓடிச் சென்றாள் ஹிதாயா.
அப்பொழுதுதான் இருமி ஓய்ந்தாரோ என்னவோ? நெஞ்சை தடவியபடி சுருண்டு கொண்டிருந்தான் அவள் கணவன்" அவரைக் கண்டதும் கிணற்றடியில் நடைபெற்ற சம்பவம் அவள் நினைவில் கீறல் போட்டது.
"நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு.மாறுசாதிய ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு.

திக்குவல்லை கமால் 81.
ஹிதாயா பற்களை நறநறவென்று கடித்துக் கொண் டாள். சடுதியாக அவள் பார்வை கீழ்நோக்கிப் பதிந்தது. தோடம் பழங்கள் கீரைகறிகள் நிறைந்த கடையொன்று அவள் கண்ணிற் பட்டது. அது காலையில் வந்தவர் கொண்டு வந்ததாகத்தானிருக்க வேண்டும். அவர் மாத் திரமா? ஒவ்வொரு நாளும் வரும் அத்தனை பேரும் இப்படித்தான்.
“ “ Asió5 TU IT. . . . . . எனத்தியன் பாக்கிய, அது வெள்ளன வந்த மாட்டின் மஹத்தயா கொணுவந்தது. அவரு என் னோட உசிரு மாதிரி. நான் போனா ஒரு மொழம் நேரந்த யாவது எடுக்காம அனுப்பியல்ல. நல்ல வரும்படிக்காரன். நான் வாணாண்டு செல்லச்செல்ல இதேம் தத்திட்டுப் பெய்த்தார்,' என்று சொல்லியவாறு தலையணைக்கடியிலி ருந்து அதனையெடுத்து நீட்டினார். ஆமாம் ஐம்பது ரூபாத் தாள். அவள் இதற்காகத்தானே நேற்று முயற்சித்து இனி மேல் அந்த முயற்சியே வேண்டாமென வெறுத்து, இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் கணவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல என்ன வழியென்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்,
அவனது தெஞ்சுப் பாரம் சட்டடென்று இளகியது போன்ற உணர்வு.
இப்பொழுது அவளுக்குள் புது நம்பிக்கையொன்று சுடர் விடுகிறது.
1972 (oril-bur.

Page 19
முரண்பாட்டின் பின்னணியில்
காலையில் எழுந்து முகம் கழுவிக் கொண்டால் எனக்கு அடுத்துள்ள முதல் வேலை அப்பம் வாங்கப் போவதுதானே. பேஸனைத் தூக்கிக்கொண்டு குசினிப்பக்கத்தால் வெளிக் கிட்டு ஆசிதாத்தா வீட்டை நெருங்குகையில்.ஏதோ சத்த மாய்க் கேட்டதெல்லாம் இங்கே சண்டை பிடிப்பதுதா னென்று விளங்கி விட்டது.
சண்டை பிடிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதென்றால் எனக்குத் தனி விருப்பம். அப்பக்கார வீட்டுக்குப் போய் சைக்கொடுத்து பேஸனையும் வைத்துவிட்டு, உடனே திரும்பி அங்கே நிறைந்திருந்த சனத்துக்கிடையில் நானும் புகுந்துகொண்டேன்.
அடியே ஒனக்கு எப்பசரி கஷ்டப்பட்டு சம்பரிச்சித்திண்டு பழக்கமீக்காடி.ஊடூடாத் தின்டு திரீத ஏரப்பாளிப் பழக்கம் பறவேச.செய்த வேலயச் செஞ்சிட்டு பேசேம் வந் திட்டாள்-'
ஸ்பரா உம்மா கீச்சுக் குரலில் கைகளை ஆட்டியபடி தனிக் கவர்ச்சியுடன் குமுறினாள். அவளது குடிசை சற்று மேட்டிலிருந்ததால், கீழிருந்து பார்ப்போருக்கு நிச்சயமாக ஏதோ நாடகமொன்றைப் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டிருக்கும்.
நாசமாப் போனவள்.நீ நல்ல மனிசியாடீ.கொமரு காலத்தில கூத்தாடின கூத்தும் ஆடின ஆட்டமும் எங்களுக்கு

திக்குவல்லை கமால் 3S
தெரியான்டு நெனச்சா.வெக்கம் கூச்சமில்லாம நாலுபேரடி முன்னுக்கு மொகத்தத் தூக்கிக்கொண்டு வந்திட்டா"- பாத்துனாச்சியாவும் குறைந்தவளல்ல என்பதை நிரூபிக்கு மாப் போல் இப்படியொரு வெட்டுப்பேச்சு.
**கத்தம் பொறக்க நாணிப்ப எத்தின பைனம் சென்னன் அவள் வேண்டியத்தச் செல்லட்டு.ரெண்டு கையேம் தட்டி னாத்தான் சத்தம்.ஒரு கையத் தட்டினத்துக்கு சத்தமில்ல. மணிசர்மான்ஜாதிட முன்னுக்கு வந்திட்டாங்க"- வீட்டி னுள்ளிருந்து வெறும் மேலுடன்வந்த பாகிர்நானா, தனது மனைவி பாத்துனாச்சியாவைக் கண்டித்து உள்ளே அனுப்ப முயன்றார்.
இந்தப் பெண்கள் சண்டை பிடிக்கத் தொடங்கினால் யார்-எவர் வந்து, எப்படித் தடுத்தாலும் குறைந்தது மூன்று நாளாவது இழுத்துப் பிடித்த பின்புதான் அக்கம் பக்கத்தவர் களுக்கு அமைதியாகத் தூங்க முடியாது.
ஸொபஹாக்கு பாங்கு செல்லச் செல்லே தொடங்கின சண்ட, இப்ப எட்டு மணியாகீம் முடிஞ்சபாடில்ல" பார்வை யாளர்களில் ஒருவர் அலுத்துக்கொண்டார்.
மலைவளவுக்கும் பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட. பிரதான வீதியிலிருந்து நூறு யார் போல் தள்ளி அமைத் துள்ள பகுதிதான் அது. ஒழுங்கற்ற மேடு பள்ளங்கள்.மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட ஒலைக் குடிசைகள் , இடைக் கிடை களிமண் வரிச்சு வீடுகள்.அவர்களைப் பிரதான வீதியோடு தொடர்புபடுத்துவதும் இடுக்குமுடுக்குகள்தான்.
சொற்ப நேர அமைதியைக் கிழித்துக்கொண்டு, மீண்டும் ஸபரா உம்மா ஓடிவந்ததும் சண்டை இனியும் தொடரு மென்றுதான் நினைத்தேன். ஆனால் அவளின் முறைப் பாடு அங்கே கூடி நின்றவர்களிடம்தான்.
. 3-سس-6fd

Page 20
34 விடை பிழைத்த கணக்கு
'பாருங்கொ மக்களே. எங்களுக்கிங்க இரிக்க வழில்ல அவளியல் செய்த குத்தமெல்லாம் செய்யோனும். நாங்க பாத்துக்கோ நிக்கோணும். கொஞ்சம் சரி இதெனத்திய னென்டு கேட்டா ஊரழிக்க சத்தம் போடத் தொடங்கிய. "மழபேஞ்சா அவள்ட ஊட்டுத்தண்ணியெல்லாம்இங்கல பொகத் திருப்புட்டிக்கி...எந்த நாளும் ஊத்த சீத்தய எங்கட முத்தத்தில போடிய-எல்லம் பொறுத்து பொறுத்தீந்தத் துக்கு முக்கேம் வெச்சிகொண்டிக்குடாம இன்ட ஸொபஹயில செஞ்சீக்கிய வேல."
இவ்வளவு நேரமாக நானும் எல்லாம் மறந்து கேட்டுக் கொண்டிருந்த போதிலும் எதற்காக சண்டை பிடிக்கிறார் களென்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவேயில்லை.
"நானா உம்மா சீக்கிரம் வரச் சென்ன"'-தம்பி வந்து என்னைத் தொட்டுச் சொன்னபோதுதான் வெகு நேரம் இங்கு நின்றுவிட்ட உண்மை ஏனக்குப் புரிந்தது,
அடுத்தகணம் 'ஆப்ப அடுப்படிக்கு" எடுத்தேன் ஒட்டம்.
'வா புள்ள ஒனக்குத்தான் சுடுகிய, அந்தக் குத்தித் துண்டில கொஞ்சநேரம் இருந்துக்கோ-'
ஆசிதாத்தா என்னை வரவேற்று அமர வைத்தாள்.
இரண்டு அடுப்புகளில் அப்பச் சட்டிகள் வைக்கப்பட்டி ருந்தன. பக்கத்திலே மாக்கரைத்த முட்டி. அகப்பையால் அள்ளி ஊற்றுவதும், தணல் சட்டிகளைத் தூக்கி வைப்பதும், நெருப்புப் போடுவதுமாக.இயங்கிக் கொண்டிருந்த காட்சி கள் எல்லாம் நாளாந்தா அனுபவம்தான்.
என்னைப்போல் இன்னும் எத்தனைப் பேர் அங்கே தவங்கிடந்தார்கள். என்னைப் பொறுத்தமட்டில் எவ்வளவு நேரம் அங்கிருந்தாலும் அலுப்பத் தட்டுவதில்லை. இடை

திக்குவல்லை கமால் 35
விடாது அங்கு பல கதைகள் தொடரிந்துகொண்டே விருக்கும்.
"எனத்தியன் ஆசிதாத்தா வெளனேலிந்து சண்ட-" ஒரு கிழம் கேள்வியொன்றைப் போட்டபோது நான் சட்டென்று ஆசிதாத்தாவைக் கவனித்தேன். அந்த நொடிப் பொழுதுக்கும்.
* குஸ்ஸென்று சட்டியில் மாவையூற்றி அகப்பையால் தேய்த்து, கைக்குறுந்தடிகளால் தணல் சட்டியைத் தூக்கி வைத்து, பிடவைத்தொங்கலால் முகத்தைத் துடைத்தபடி விளக்கம் சொல்லத்தயாராகிவிட்டாள்.
**அநியாயந்தானே. மொகத்தில அடிச்ச மாதிரி அதியடை நேர் முத்தம்.ஊத்த சீத்தயெல்லாம் கொட்டியது போதாத்துக்கு..இன்டக்கி பாத்துநாச்சியட பொடியன் பேண்டு வெச்சிக்கேன்...”*
"ஒ ஓ. ஆறு மணிக்குப்போல அவன் சரஸ்புடுஸ் ஸென்டு கனிசன் துண்டப் போட்டுக்கொண்டு எங்கியோ போறது கண்ட".
*எனத்தியோ கோமேந் சோதினயாம். ஒரு அவ சரத்துக்கு இருட்டில...அப்பிடிச் செஞ்சாலும் பொறகு அள்ளிப் போட்டா முடிஞ்சேன். அப்ப இத்தின சண்டோம் 6 ATTAT. M
ஆசிதாத்தாவின் கதையில் நியாயம் இருப்பதாகப் பட்ட தோடு சண்டைக்கான காரணமும் எனக்குப் புரிந்துவிட்டது. அதே நேரத்தில் இன்றைக்குத்தான் நவோதய புலமைப் பரீட்சை நடைபெறும் ஞாபகமும் வந்தது.
'இந்தா மகன் ஆப்பயக் கொணுபோ-' ஆசிதாத்தா தூக்கித் தந்த பேஸனை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்ட தோடு சாடையாக மேல்பக்கமாகவும் நோட்டம்விட்டேன்.

Page 21
贺● விடை பிழைத்த கணக்கு
“கேலக்கி மட்டுமா ராவக்கும் எத்தினாயிரம் பேரு இவடத்தாவ போறவாரன். தாரஞ் செஞ்சென்டு இவள் கண்வெச்சிப் பாத்துக்கோ நின்டா" " VK.
'நான் கண்டடி.தண்ணிக்குப் பொகக் கதவத் தொறக் கச் செல்லே, ஒன்ட பொடியன் ஒழும்பி ஓடிவந்த "'
காதில் விழுந்ததைக் கேட்டுக்கொண்டு நான் வீட்டுக்கு ஓடினேன்.
சாப்பிட்டு முடிக்கையில் அன்ன தாஸிம் மெம்பர் ஒக்சகப் போற" என்ற செய்தியோடு வாப்பா வீட்டுக்குள் வந்தார்.
போதாதா இனி.அந்த நிமிடமே வெளியே பாய்ந்து விட்டேன்.
இப்பகுதியில் சண்டை-குழப்பங்களை தீர்த்து வைக்கும் வலிமை கிராம சேவகருக்கோ, பொலிஸாருக்கோ இல்லை: சம்பளமற்ற உத்தியோக, சமாதானத் தூதராக இருப்பவர் மெம்பர்தான். எந்த முறைப்பாட்டுக்கும் அவரிடம்தான் ஓடுவார்கள்: பெரும்பாலும் அவராகவே வந்து இரு பக்கத் தினரையும் சமாதானப்படுத்தி. சனங்கள் மத்தியில் தனக் குள்ள மதிப்பை நிலைநாட்டிக்கொள்வார்.
தாஸிம் மூன்றாம் முறையாக ஏழாம் வட்டார கிராம சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். esetén. ருக்கு பின் ஒவ்வொரு முறையும் அவரின் தகப்பன்தான் அதுவும் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவாராம்.
நான் அங்கு செல்லும்போது எல்லோரும் மெம்படி சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்பகுதி பெண்கள் கூட்டமே அதிகம்.
இதெல்லாம் சின்னப் பிரச்சினை. முனியாண்டிய அனுப்பினா ஒரு நிமிஷத்தில் எல்லாம் வெளிசாக்கிப் போடுவான். - தாஸிம் மெம்பர் நைஸார் சொன்னார்,

திக்குவல்லை கமால் 37
"அப்பிடி வெளிசாக்கிப் போட்டா இன்டக்கி சண்ட முடி யும். மறுபேனம் இனுமொரு நாளைக்கிம் இதப்போல சண்ட வரும்தானே-" " இது ஒரு கேள்வி.
தன்னை அவமதிக்கும் பாணியில் இப்படியொரு கேள் வியா என்ற மனப்பாங்குடன் கண்களைச் சுழற்றினார் மெம்பர்.
**இந்த ஏழ பவாயியலுக்கெடேவ சண்ட வந்த இவங் களுக்கு கக்குஸ இல்லாத்திலதானே..நாலஞ்சி கக்குல கெட்டிக் குடுத்தா பெரிய ஒதவியாக்கும்-' asg74SJ"AäöA5 குரலில் ஒரு கிழவனார் இப்படிச் சொன்னார்.
* அதுக் குத்தானே நான் தெண்டிச்சிக்கோ நிக்கிய போன மாசமும் கம்ஸபாவில கேட்ட. சீக்கிரம் பாஸாக்கு வாங்க**
முன்பு பேசியதைவிட ஓரளவு இறங்கி வந்து, சிரித்த பாணியில் இதமாகச் சொன்னார். சும்மா வோட்டுக்காக மாத்திரம் பாவித்து வந்த எளிய சனங்கள், கொஞ்சம் சிந்தித்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ.
** கோச்சிக்கொளவான, அல்லாவுக்கா நீங்க இந்தச் செய்தியமட்டும் செல்லவாண. நீங்க மொதலாம் பைணம் இலக்சன் கேக்கச் செல்வே சென்ன ஒரு மாஸத்தில கெட்டித் தாரென்டு.நெனவிக்கா " அவர் இங்கு வருவதற்குக் காரணமாயிருந்த-சண்டை பிடித்த-பாத்துணாச்சியாதான் இப்படி முகமுடியை மெல்லக் கிழித்தாள். -
**ம்.இவரட வரப்பா எனத்தியன் சென்ன. அங்க தெரீத பதனமல" அது அவரடதான். அதில சொந்தச் சல்வீல கெட்டித்தாரென்டேன் சென்ன - இன்டவரக்குக் கண்டதொன்டுமில்ல'- ஆமோதித்துப்பேசி வரலாற்று விளக்கம் கூட முன்வைத்தாள் வேறுயாருமல்ல, பைரா உம்மாதான்.

Page 22
88 - விடை பிழைத்த கணக்கு
தாஸ்லிம் மெம்பர் இே புறமும் மிரள மிரள Li Tiġiżg5zri. யார் யாரைச் சமாதானம் செய்துவைக்க வந்தாரோ, அவர் கள் தானாகவே சமாதானமாகித் தனக்கெதிராக வந்து விட்டது போன்ற தவிப்பு. இடையிடையே எழுந்த சிரிப்பு கள் அவரை தலைகுனிய வைத்தது.
'நீங்களியள் யோசிக்காம இப்பிடிப் பேச வாண. தாள் சீக்கிரமா கெட்டித் தாரதுக்கு தெண்டிக்கியன்'-என்ற வாறு மெதுவாகத் திரும்பி நடக்கத் தொடங்கினார்.
'இவளவு காலமும் கக்குஸ் கெட்டித்தார கெட்டித்தா ரெண்டு செல்லிச்செல்லி எங்கள ஏமாத்தின. இதுக்குப் பொறகு பத்துருவத் தாளியள எடுத்துக்கொண்டு வோட்டுக் கேக்க மட்டும் வரவான, " -யாருமே எதிர்பார்க்காமல் ஓர் இளைஞன் சத்தமிட்டு இப்படிக் கத்தினான்,
"இதத்தானே நாங்க எல்லாப் பைணமுன் கேக்கியா. செஞ்சி தந்திந்தா ஒரு கரச்சலுமில்லேன்'-பெண் தங் களுக்குள் குசுகுசுத்துக்கொண்டார்கள்.
இவ்வளவு காலமும் மெம்பராகவும்,கூட்டி முதலாளியாவு மிருக்கும் தாஸிம் மெம்பர், கக்குஸ் பிரச்சினையை எந்த ரீதியிலாவது தீர்த்துவைத்திருந்தால் இன்று இப்படியொரு சண்டை நடந்திருக்கத் தேவையில்லையே என்பதை நினைத் துப் பார்க்கும் பொழுது எனக்கும் அவர் மீது கோபம்கோப மாக வந்தது. &
தனது வோட்டுக் கோட்டையின் ஒரு பக்கம் சரிந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையில்தான் போலும் வெகுதூரத்தில் மிக வேகமாக நடந்துகொண்டிருந்தார் தாளிம் மெம்பர்,
-1973 ஆகஸ்ட்

ஆற்றல்கள் அனாதைகளாக.
பச்சைக் கிளியின் சொண்டுக்குப் பூசிய செஞ்சாயம் தற் செயலாகச் சற்றுக் கீழே வழிந்ததுபோல், அதன் சொண்டு, பொருந்திய இடத்திலிருந்து சாடையாகச் செவ்விரத்தம் பொசிந்து கொண்டிருந்தது. "பச்சை" என்ற அடை மொழியோடுதான் அழைத்தாலும்கூட இறகுகளின் நுனிப் பகுதி.கால்கள்.கழுத்து மாலைகளெல்லாம் வெவ் வேறு நிறக் கலப்பு.
அக்கிளி குருமணிக் கண்களை உருட்டியுருட்டி சூழ்ந்தி ருந்தவர்களைப் பார்த்து எதையோ முறையிடுவது போலி ருந்தது. இரண்டு சொண்டுகளையும் இடைக்கிடை விரித்து, உள்ளத் துயரைச் சொல்ல முயற்சித்ததோ என்னவோ? எங்கே பறந்துவிடக் கிடைக்குமென்ற நப்பாசை யில்தான் கைமாற்றும் போதெல்லாம் சிறகுகளை அடித்துப் பார்த்துக் கொண்டதோ? இத்தகைய பிரயத்தனங்களை யெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.
அதனைச் சிறைப்பிடித்து வைத்திருந்த பத்துப் பன்னி ரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவனின் முகத்திலோ பெரிய சாதனை மகிழ்ச்சி மலர்ந்திருக்கவில்லை" ஏதோவொரு சோகக் கீறல்தான். அங்கே சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்திருந்த ஒத்த வயதுக்கூட்டத்தின் நகைப்புத்தான், உச்சக் கட்டத்திலிருந்தது.

Page 23
விடை பிழைத்த கணக்கு
அங்கே அதற்காக அனுதாபப்படும் ஒருவன் உன்டென் றால், அது நான் மாத்திரந்தான் போலும் அதுவும் ரம்மிய மான இயற்கை லயிப்பிலே காற்று வாங்கி பலன்களுக்கும் மனதுக்கும் ஆறுதல் தேடவந்த வேளையில்.
பரந்து விரிந்து குமரிப் பருவத்தில் தலைநிமிர்வில் செழித்திருந்த நெல் வயலுக்கூடாகச் செல்லும் மண்பாதை தான் அது சற்றுத் தொலைவில் மேடமைத்துக் கட்டப் பட்டுள்ள புதுப்பாலம். அதன் கரையில் அல்லது இருபக்கப் படிகட்டுகளில் ஒன்றில் அமர்ந்தால், கண்னொட்டும் தூரம் வரையில் வளைந்து நெளிந்தோடும் சிற்றாறு. அதிலே சிறு வள்ளங்களில் மீன் பிடிப்போரின் இசைப்பாக்கள். தரை யோரங்களில் அமர்ந்து ஒற்றைவலை வீசுவோரின் இயக்கங் கள்.இதைவிடக் கண்மட்டத்தைச் சற்று உயர்த்தினால், சுற்றுவட்ட எல்லைகளில் நிறைந்திருக்கும் மரங்கனின் இறுக்கச் செரிவு. அதற்கு மேலும் கண்மட்டம் உயர்ந்தால் ஏதோவொரு அழிந்த சித்திரத்தைப் பார்த்ததுபோல் நினைவையூட்டும் மேகக்காட்சிகள்.
பாலப் படிகட்டிலேறி நான் சொகுசாக அமர்ந்து கொண்டேன். ஜ்ல்லென்று மென்காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. வயல வரம்புகளுக்கிடையில் கிராமத்துப் பெண்கள். புல்லுக் கட்டுகளைத் தலையிற் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களது உடம்பிலும் சேறு படிந்திருந்த போதிலும், மற்றவர்களின் பார்வைக் கணிப்பு களை எண்ணிப் பார்க்காத உழைப்பு வீறு அவர்களில் நிறைந்திருந்தது
மீன்கொத்திப் பறவைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து.தொப்பென்று வீழ்ந்து மீன்களை ஒரேயடியாாக் கொத்தித் தங்கள் திறமையை ரசிக்கும்படி செய்துகொண்டி ருந்தன.
"கீச்.கீச். #ở......'"

திக்குவல்லை கமால் 41
மேலே பச்சைக் கிளிகள் கூட்டமொன்று மகிழ்ச்சியோடு பறந்துகொண்டிருந்தது. அவை எனக்கு மீண்டும் அந்தப் பச்சைக் கிளியின் நினைப்பை இழுத்து வந்து நெஞ்சில் நிறுத்தியது. இல்லாவிட்டால், இந்நேரத்தில் அதுவும் இப்படியொரு கூட்டத்தோடு பறந்து கொண்டிருக்கு மல்லவா?
எனது கட்புலனைக் கவர்ந்துகொண்டு பறந்த அக்கிளிக் கூட்டர், சற்றுத் தூரத்தில் வயலுக்குள் இறங்கியதுதான் தாமதம் " எறங்கீட்டு எறங்கீட்டு' என்ற கீச்சுக் குரல்கள் என் பார்வைக் கோட்டைத் திசை திருப்பியது,
பாலத்துக்கண்மையில் அதே சிறுவர் கூட்டம். அவர் களில் நடுநாயகமாக நின்ற அந்தச் சிறுவனில் என் கண்கள் நிலைகுத்தின.
அவனது கையில் ஒரு "கெட்டபொல்" ஏதோதொரு தண்டில் " வை வடிவத் தோற்றப் பகுதியை வெட்டி யெடுத்து. அதன் இரு முனைகளிலும் மெல்லிய இறப்பர் பட்டிகள். அவற்றில் தொடுப்பாக தோல் துண்டொன்று. நாலைந்து சிறு சுற்களையும் கையிலெடுத்துக்கொண்டு பாலத்துக்கருகால் வரம்புக்கிறங்கி, ஸாரத்தையும் உயர்த் திக் கட்டியபடி அக்கிளிக் கூட்டம் இறங்கிய பக்கமாக மெல்ல மெல்ல நடந்தான் அவன்.
" "கிளியள் பறக்காம நின்டா கவரா அடிச்சிக்கொண்டு தான் வருவான்"
"ஒடா அவன் சரியா லெக் பாக்கிய.ஸ்கூலுக்கும் வராம ஒரு நாளைக்கி நாலஞ்சி அடிச்சி விக்கியாஸ் நானும் அவனுக்கிட்ட முந்தநாத்து ரெண்டுருவக்கொத கிளி வாங்கின"'
இரண்டு சிறுவர்கள் கதைத்துக் கொண்டிருந்தததையும் உள் வாங்கியபடி நான் அவனையே பார்த்துக் கொண்டி ருந்தேன். நேரே நடந்தவன் இடப்புறமாகத் திரும்பி

Page 24
42 விடை பிழைத்த கணக்கு
நடக்கத் தொடங்கியபோது. அவனது இடுப்புக்கு மேற் பக்கம் மாத்திரம்தான் தெரிந்தது. நெற் கதிர்களுக்குள்ளால் அவன் மிக மெதுவாக சத்தம் கேட்காமல் நடப்பதால்தான் போலும் அசைவாட்டம் குறைவாக இருந்தது.
" "ஹம்.இவனெங்கியன் அடிக்கிய."நான் மனதுக் குள்ளால் நினைத்துக் கொண்டேன்.
'டேய் கிளி எறங்கின எடம் கிட்டடா. பறக்காமீந்தாச் சுவர் சொட்தான்"
* அன்ன அன்ன" பக்கத்தில் நின்றவன் சொல்லி வாயெடுப்பதற்குள் கிளிக்கூட்டம் நாலா பக்கமும் சிதறிப் பறந்ததால் எதிர் LU 7 TT5 தாக்குதல் நடந்துவிட்டதென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
* புழுந்திட்ட. புழுந்திட்ட' அவன் நெற்கதிர்களை விலக்கிக்கொண்டு வயலுக்குள் பாய்ந்து கிளியைத்தான் போலும் இருகைகளாலும் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
மீண்டும் பாதைக்கு வந்தேறிய அவவைச் சிறுவர் கூட்டம் சூழ்ந்துகொண்டது.
என் மனம் அமைதியாக அழுவது போலிருந்தது. இரண்டு கிளிகள் என் கண் முன்னாலேயே. மீண்டும் ஒரு புதுக் கிளிக்கூட்டம் " "கீச்.கீச்.’’ என்ற சத்தத்தோடு மேலே பறந்தது. நல்ல காலம் கண்ணெட்டும் தூரம் வரை, என் பிரார்த்தனைபோல் இறங்கவேயில்லை.
காற்று ஓரளவு குளிராக வீசத் தொடங்கியது. இருள் மெல்லப் பிரசவமாவது போலிருந்தது. அந்த நேரத்திலும் பச்சை வயல்கள் ரம்மியமாக அமைதியைத்தான் எழுப்பிக் கொண்டிருந்தன. நான் நடக்கத் தொடங்கினேன்.

திக்குவல்லை கமால் 43
இடையில் நின்று, அச்சிறுவர் கூட்டத்துக்குள் சொற்ப நேரம் கண்களைச் சொருகாமலிருப்பதைத் தவிர்க்க முடிய வில்லை.
குறுமணிக் கண்களை உருட்டியுருட்டி எனக்கென்ன நடந்ததென்று கேட்பது போன்றிருந்தது அந்தப் பச்சைக் கிளியின் பார்வை. அதற்கு அவ்வளவு கடுமையான காய மெதுவும் இருப்பதாக அடையாளம் தெரியவில்லை.
முன்புபோல் ஒரு பேச்சுமேயின்றி அமைதியாக நின்றி ருந்த அவனுடைய கூர்மையான கண்களை நான் அப் போதுதான் கவனித்தேன். அக்கண்களைத் தவிர அவனது தோற்றத்தில் வேறெதுவுமே விஷேடமாகச் சொல்வதற் கில்லை, பாவம்; எங்கோ நொந்து வெந்து வாழ்க்கை யோடு போராடும் யாரோ இருவரின் எச்சம்தான் அவன்.
இரண்டு கிளிகள் மீதும் எனக்கு அனுதாபந்தான். அதைவிட, எங்கோ மகோன்னதமானதொரு பயன் பாட்டுக்கு வளர்க்கப்படவேண்டிய அச்சுட்டிப் பயலின் அபார திறமை இங்கே பாவம் கிளிகளை வதைப்பதற்காகப் பிரயோகிக்கப் படுகிறதேயென்று கவலை என் நெஞ்ச மெங்கும் வியாபித்துப் படர்ந்தது.
நான் ரம்மியமான சூழலிலிருத்து விடைபெற்று நடந்து கொண்டிருந்தேன். எதிர்பார்த்து வந்த அமைதி. அது அவ்வளவுதான்,
y
இப்படி எத்தனை ஆற்றல்கள் பயன்படுத்தப்படாமல் அவமாகிக் கொண்டிருக்கிறதோ..
நான் நடந்து கொண்டிருந்தேன். எங்கோ கிளிக்கூட்ட மொன்று கீச்சிட்டுக் கொண்டு பறப்பது போலிருந்தது.

Page 25
பாரப்பட்ட பதனா
"அடி ரஹ்மா வாயே. ரெண்டுமணி பிந்தீட்டு இன் னேம் ஒனக்கு வெட்டக்கெறங்கேலாவா"
* எனா எனா எங்கியன் பறக்கப்போற. அடுப்படியக் கொஞ்சம் ஒதுங்க வெச்சிட்டு வாரனே. சட்டி முட்டி கழுகின பாதி கழுகாத பாதி"
'ஒனக்கு மட்டுமா எனக்கும் இடுமூச்சின இல்லாத வேல. ரெணுமூணு கெழமயா தலயக் கொஞ்சம் பாத்துக் கொளல்ல. ராவக்கி ஒரு கண்ணுரப் படுக்கேல ஒரே சொறிச்சல்" கீழ் கழுத்து மயிர் கற்றைகளுக்குள்ளால் கைவிரல்களைப் படரவிட்டு ஒரு பாட்டம் சொறிந்து ஓய்ந்தாள்.
இப்படி இளமைத் துடிப்போடு ஒருவருக்கொருவர் கதைத்துக் கொள்வதைப் பார்த்தால், ஏதோ பதினெட்டு வயதுக் குமரிக்குட்டிகள் என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை ஐம்பதைத் தாண்டிய கிழடுகள் என்பது தான். மண் சோறு சமைக்கும் குறும்பருவம் முதல் ஒன்றாக விளையாடி வளர்ந்த அவர்கள் இப்படியெல்லாம் கதைப்பதில் நியாயமில்லாமலுமில்லை
"வாணான்டு செல்லச்செல்ல பொடியன் செகத்து மீனொருவாக் கொணந்து போட்டான், ஏய். ஊடு வாச லெல்லாம் ஒரே பிலா நாத்தம்" கழுவிய கைகளைப்

திக்குவல்லை கமால் 45
பிடவைத் தொங்கலால் துடைத்தபடி குசுனிக் கதவால் வந்து சேர்ந்தாள் ரஹ்மா.
தூசிதட்டி படிக்கட்டுக்கண்மையில் பாயைவிரித்து, சீப்பு-எண்ணெய் போத்தல் சகிதம் வந்தமர்ந்தாள் ஜொஹரா.
ஏறுபடியில் அமர்ந்த ரஹ்மானின் முழங்கால் விரிப்புக் கிடையில் ஜொஹராவின் தலைநிலைக்க. கைவிரல்கள் வகிடு பிரித்து அசைய. பேன் பார்க்கும் படலம் ஆரம்பமாகி விட்டது.
""ஊ. இந்த காதுரெண்டுக்குமடில செரியான அருப்பு. கொஞ்சம் ஊன்டிக் குத்துடீ’’
பெருவிரல்கள் மயிர்க் கற்றையை இருபுறமாகவும் விரிக்க. ஆள் காட்டி விரல்கள் அதனைத் தொடர. இப்படி யாக வகிடு தொடர்கையில் எதிர்ப்படும் பேன்களின் பாடு, இரு பெருவிரல் நகங்களுக்கிடையில் "திக் "கென்ற ஒலியோடு படுகொலைதான்.
* அந்த எண்ண போத்தலயக் கொஞ்சம் தா.எல்லாமே கட்டக் கட்ட நாம்பனியள்தான் ஓடுது." Y. உயிரியல் சாஸ்திரிகள் பெயர்வைக்க மறந்தார்களோ என்னவோ அதனை ஈடுசெய்ய ஒவ்வொரு பருவத்திற் கேற்ப, ஈரு. நாம்பன். கெடியன் என்றெல்லாம் பெயர் குட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
" "நேத்து மோணாத்தெல்லாம் ஊரெல்லாம் ஒரே தாத்தமாயீந்த பள்ளத்தூட்டு பாத்தும்மட மகள்ட செய்தி தெரீமா ஒனக்கு" கதையோடு கதையாக சோம்பலின்றிக் காரியத்தைக் கொண்டு போகலாம் என்பதனால் போலும் ஜொஹரா இப்படியொரு கிளரலைத் தொடங்கினாள்.
"'இதோ. இதுதான் குஞ்சிகுறுமாறுக்கெல்லாம் தெரிஞ்ச செய்தியேன். அந்தக் குட்டிசிங்ான ஸ்கூல்வேன்

Page 26
46 விடை பிழைத்த கணக்கு
படிக்கப்போற. அவனொரு ஹால்விதில்லாதவள் எங்க டுரானியள். எங்க டூராணியவிக்கே ஒன்ட ஒம்பதாக்கு வானியள்."
சொற்ப நேர அமைதி.
**ம். ஒனக்குத் தெரியாமலீக்குமா இந்த மாதிரி செய்தியள். சின்னக் காலத்திலிந்தே இப்பிடிச் செய்திய லெல்லம் தாரட வாயால கையால புழுந்தொடன நீ தானே ஓடிவந்து எனக்கிட்டச் செல்லிய.'
" "ஹம். இனியினி” " இன்னும் கொஞ்சம் ஐஸ் வைத்து பேசவைக்க முனைந்தாள்.
'இப்ப ரெணுமுணு வருஷமா எங்கட அசல் பொடியனி யலேம் கொஞ்சம் கொஞ்சமா சிங்கள ஸ்கூலுக்கும் படிக்க னுப்பியாங்க. அதப்பாத்து அந்தக் குட்டியேம் ஆறாம் வகுப் போட சிங்கள ஸ்கூலுக்கு அனுப்பிக்கானியள். இப்ப ஒன்பதாம் வகுப்பு படிக்கியாம்.""
"ஏன்ட மூக்குப் பொட்டி அடக்கிய மாதிரி, சட்டேக்கு னால தூள் டப்பியக் கொஞ்சம் தாயே, '
ஒ இனி நல்ல நல்ல படிப்பென்டாக்க பாத்துப் பாத்து ஏன்டமாதிரி படிக்கோணுந்தானே. அந்தக் குட்டி படிச்சி முன்னுக்கு வந்தா ஏழ பலாயியலுக்கு ஒதவாமலயா பொகும்.'"
அ. அ. அக்குஷ். இனிச் செல்லியத்தக் கேளே. ஒரு ஸ்கூலென்டா கூத்தியளிக்கி. வெளாட்டியளிக்கி. இது எங்கட பள்ளத்திஸ்கூல்ல போன கெழமேம் ஒரு கொண் டாட்டம் வெச்சானியள். அதுல பெடியபெடிய குட்டியல்லம் பாடல்லயா. கோலாட்டமடிக்கல்லயா. அதப்போல அந்தி கூல்ல அந்தக் குட்டி நல்ல சொகா பாட்டுப்பாடியாம். ம். அவள்ட உம்மாம் அந்தக் காலத்தில நல்ல பாட்டுக்காரி தானே. கேட்டுக்கோ இதொரு குத்தமாம்.'"

திக்குவல்லை கமால் 47
ஏன்ட கத்தமே. இதொரு செய்தியாமா வோஸ்பீக்கரி பெலப்படுத்திக்கொண்டு பேசியத்துக்கு. இனியினி வேறெனத் தியாம்.'"
* 'இனுமோருநாள் ஒரு புராஜல் போனாமேன். அதிலேம் அந்தக் குட்டி பெய்த்தீக்கி. மாஸ்டர்மாரு டீச்சர் மாரோடதானே போற. எங்கட ஜாதியப் பாக்க மத்த ஜாதி நல்லசொகா புள்ள குட்டியள பாத்துக்கொளுகிய, அதில போன டையில சிங்களப் பொடியனியனோட பேசினாம் சிரிச்சாம். இது இனுமொரு குத்தமாம்.'
* ஏன்டல்லாவே ஒருவெடத்தில பழக்கியென்டா கதக் காம சிரிக்காம புட்டுபுஸ்ஸியனாட்டமாமா ஈக்கோணும். இதப்பாக்க எத்தின குத்துண்டுபோன கூத்தியள் இந்தசல்ல நடக்கிய . நாங்க கண்டாலும் அல்லா உண்டுமென்டு மறுபொக்கத்த பாத்துக்கொண்டெலியன் போற. ஒன்டயர ஒம்பதயா செல்லியானியள்.'"
**ம். நீ கதகேட்டுக்கேட்டிரீ. ஏன்ட இடுப்பொட யப் பாக்குது. ஒரு பொக்கத்தால கண்ணிருட்டிய, கொஞ்சம் ஏன்ட தவயேம் பாத்துடு" என்றவாறு கைகால்களில் சொட்டு முறிய எழுந்து நின்றாள் ரஹ்மா.
இருவரும் இடம்மாறி அமர ஜொஹரா ரஹ்மாவின் தலையை வாரத் தொடங்கினாள்.
""ஊ ஊ. எனத்தியணிது ஏன்ட தலயப் பிச்சித் தின்னப் போற."
"மாஸ்தேக் கணக்கில எண்ண பட்டில்ல தலேல. செறி யான சிக்கு. அந்த எண்ணபோத்தலயத்தா. '
உள்ளங்கையைக் குழியாக்கி எண்ணெய் ஊற்றி
கைகளைத் தேய்த்து கொண்டையைக் கோதி. மென்மை au Brášáa Bahr(6ub GnJ propras @ AsrLituáaawradir Gay Praprar.

Page 27
些8 விடை பிழைத்த கணக்கு
"அதுப்பொறகு கேக்கல்லயா செய்திய, இப்பிடிப்பிடி குத்தம் கொறயெல்லாம் சரிக்கெட்டிக்கொண்டு, பாத்தும்மட ஊட்டுக்குப் பெய்த்து செல்வீக்கியானியள். மார்க்கத்துக்கு மாத்தமா நடபடுது. இதப்பாத்து இன்னமுள்ள புள்ள குட்டி யளும் கெட்டுப் போறொண்டும். ஆதச்சொட்டிம் அங்கிந்து மகள நிப்பாட்டிக்கோங்கோ, ஒணுமென்டா சோனே ஸ்கூலுக்கு உடுங்கோ என்டு"
"இனி இனி. பாத்தும் எனத்தியாம் சென்ன '
" "அவள். அவளுடுகியா. அவளட மாப்பிளக்காரன் சென்னாம். எங்களுக்கெனத்துக்கன் சும்ம அன்னம் அநியாயமா கெட்டபேரு, புள்ள ய நிப்பாட்டிக்கொளோ
மென்டு. அதொரு வெக்கம் கூச்சமான மனிசனெ லியன். அவள் வேங்கப்புலி மாதிரி நின்டிக்கி. இவனியள்ட பேச்சக் கேட்டு ஒம்பதாம் வகுப்பிலசைன்ஸ் படிக்கிய புள்ள ய நிப் பாட்டவா. போன வனியள் மொகத்தத் தூக்கி சூத்தில் அமுக்கிக்கொண்டு வந்திட்டாளியனாம்"
"தாராம் இப்பிடி மார்க்கம் பேசிக்கொண்டு போன வங்க. "'
"வேறதாான். மொமணிப காக்கட போஸ்கெடி அப்ப வொன்டிக்கே. இப்ப ஊருக்கு பெரிய மனிசன் அவரு"
"ஏன்ட ஸ"பஹானல்லா நாயனே. அவனா எல்லாத் திலேம் பெரிய மனிசனாகப் போற. ஊரத் தின்டு திள்டு ஊரத் திருத்தேம் போயாமா. அவன்ட தங்கச்சி பென்னம் பெரிய கொமரு. இங்கிரிஸ் ரெண்டெழுத்துப் படிச்சிக் கொண்டு திரீத திரிச்சல் நல்ல மாமா. மார்க்கம் பேச வந் திட்டானியள்.""
"அவனியள் நெனச்சிப் பாக்காத மாதிரி பாத்தும்ம மொகத்தில பாஞ்சி ஏசினது பொறுக்கேலாம. பெரிய கெட்டுமனேயே கெட்டி ஊரக் கொழப்பிப் போட்டானியள்.

திக்குவல்லை கமால்
அந்தக் கட்கு சிங்களவனோட பாஞ்சி பொகப் போறா
If it " '
, அரிய எட தலேல நெருப்பு மழ பேயோனும் ஹராடப்போவானியள். நாளேப் பின்னுக்கு சமைத குட்டி பெலீபா கொமருப் பா வமென்டா லேசா. குஞ்சி குழந்தேட தலயால எடுத்துக் கெட்டுவானியள்.'"
இல்லாட் டிம் அந்த மணிசி பொறுத்ததுக்கு இன்னு மொத்தெரென்டா பொறுக்கியல்ல ஆ. போதும் போதும் கொண்டய இறுக்கி முடிஞ்சுடு, அஸராகீட்டு போல "
ஒன்டுமில்லடி இவனியள் பொறாமை ஹஸதில இந்தக் நடித்தெல்ம் கூத்தாடிய அவனியள்தான் சல்பீலேம் ஓதல் படிப்பிலேம் எந்த நாளும் பெரிய மனிசனா இரிக்கோணு மென்ட கோளுக, தங்கச்சிமாரெல்லம் பொறத்தீஸ் உசுப்பு சிப்பிப் படிக்கப் பெய்த்து பேண்டுக்கொண்டேன் வந்தீக்கிய, இந்த ஏழ பலாயியள் சிங்களத்தால பெடிய படிப்புப் படிச்சி வத்தா அவனியள்ட தங்கச்சிமாரட மதுப்புக் கொறயுமென்ட பயத்தில கள்ள நாயியள் மார்க்கம் பேசவார '
உம்மும்மோவ். கோப்பி ஊத்தட்டாம்' அடுத்த விட்டிலிருந்து அழைப்புக்குரல் ரஹ்மாவுக்குத்தான்.
ஒ. இன் வாா. சீக்கிரம் முடிஞ்சுடே. ஆ. சரியா ' ரஹ்மா எழுந்து பிடவையை உதறிக்கொண்டு மெல்ல நடந்தாள்.
ஜொஹரா பாயை தட்டி மடித்துவைத்துவிட்டு தும்புத் தடியை எடுத்து அவ்விடத்தைப் பெருக்கத் தொடங்கினாள். பாத்தும்மாவின் மகளைப் பற்றிய பிசுபிசுப்பை இரண்டு நாளாய் மனதில் ஊறவைத்திருந்து. இன்று விவரம் அறிந்து கொண்டபோது அவளது நெஞ்சு வெடித்துவிடுவது போன்ற ஆத்திரம்.
வி-சி

Page 28
50 விடை பிழைத்த கணக்கு
ஹம். வேசமகனியள். இன்னேம் ஊரில பெரிய மனிசனாகிக் கொண்டீக்கியானியள். இவனியள் எங்கியள் மத்தவனியள சமய உடுகிய, அவனியஞக்கு சீக்கிரமா நல்ல பாடம் படிப்பிக்கோணும். ஏன்ட புள்ளயொன்டு இப்பிடிப் படிக்கப் பெய்த்து. ஓ. எனக்கு மட்டும் புத்தி செல்ல வந்தீந்தா. ஏசி மட்டுமல்ல. அவனியள்ட கன்னங்கன்ன மென்டு பழஞ்செருப்பாலதான் அடிச்சீப்பன். தூ. கஸ"கந்த நாயியள்.'"
1975-ஆகஸ்ட்

உலகம் எங்கள் கைகளுக்குள்.
பகல் சாப்பாட்டுக்குப்பின் போய்ச்சேர்ந்த நாலைந்து இளைஞர்களுக்கும் மூன்று மணிபோல் சமீம் மாஸ்டர் வீட்டி லிருந்து வெளிக்கிட்டபோது அவர்கள் முகங்களிளெல்லாம் என்றுமில்லாத மகிழ்ச்சி.
** இனித்தான்டா எங்களுக்கு நல்லகாலம் பொறக்கப் போற"'
* 'இல்லப்பா இப்பதான் நல்லகாலம் எங்களத் தேடி வந்தீக்கி"
எங்களுக்கெனத்தியன்டா தொரீம் எல்லாம் அந்த சமீம் மாஸ்டராலதான்' "
தங்களது மனமகிழ்ச்சிக்கும் ஏற்றவிதத்தில் பாராட்டு தலும் கருத்தும் வெளியிட்டவாறு அவர்கள் நடத்துக்கொண் டிருந்தார்கள்.
தஜீப் விடைபெற்றுக்கொண்டு தான் வேலை செய்யும் மில்லை நோக்கினான். அவன் கடந்த ஐந்து வருடங் களாக - எப்போது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத் தானோ, அடித்தநாள் முதல்- அங்குதான் முற்றுபெறாத வசனமாய் வேலைசெய்து வருகிறான்,
ஆனால் அவனது நண்பர்களுக்கோ நிலையான வேலை யென்று எதுவுமில்லை. அவ்வப்போது எங்காவது எதிரி

Page 29
52 விடை பிழைத்த கணக்கு
பார்க்காமய் கிடைப்பதுதான். அதை ஊரவர்களின் பாஷை யில் சொன்னால் வேலபாழ்' கூட்டம்தான் தேர்தல் காலங் களிலும் பரபரப்பான வேலைகளின் போதும், ஏன் சில வேளை கோஷ்டி சண்டைகளுக்கும் கூட அவர்களைப் பயன் படுத்துவதுண்டு, மற்றப்படி அவர்களின் வாலிபம் வீணாகிக் கொண்டிருப்பதையும் எதிர்காலம் சூன்யமாக விரிந்திருப்ப தையும் எண்ணிப்பார்ப்பவர்கள் ஒன்றுமே இல்லாத நிலை தான்.
அன்று ஒருநாள் ஸல்மான் நானாவின் தேநீர் கடைய ருகில் நின்றுகொண்டிருந்த நஜீப், முதுகில் விழுந்த தட்டுக்கு திரும்பிப் பார்த்தபோது, ஆங்கே சிரித்தவாறு நின்றுெெகாண்டிருந்தார் சமீம் மாஸ்டர்.
எனத்தியன் நஜீப் எந்நநாளும் இப்படி நின்டுகொண் டிந்தாச் சரிவாரா. ராவக்கி எங்க டாக்க  ெள ல் லாம். வாறாங்க. நீங்களும் ஊட்டுப் பொக்கத்துக்கு வாங்கோ'
எனத்துக்கன் Gemi” "
சும்மா எல்லாரும் சேந்து கதக்கோமே-" என்றவாறு
விடைபெற்றார். ダ
அன்று இரவு எல்லா விடயங்களையும் விளக்கி தெளிவு படுத்தியபோது தங்களில் மாத்திரமல்ல ஏழை மக்களின் மீதும் அவர்களது எதிர்காலம் பற்றியும் சமீம் மாஸ்டர் கொண்டிருந்த அக்கறையும் ஆர்வமும் அவர்களையும் வியப் படைய செய்து விட்டது.
இறுதியாக விண்ணப்பப் படிவங்களையெல்லாம் நிரப்பி, ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வேண்டிக்கொண்டு மற்ற ல்லா ஏற்பாடுகளையும் தானே செய்து முடிப்பதாக வாக் களித்து மூன்றே மாதங்கள் தான் சென்றிருக்கும்.
இன்று அதன் பிரதிபலன் வெற்றியாக முடிந்திருக் திறது. இனி வீதியிலும் சந்தியிலுமாக அந்த இளைஞர்கள்

திக்குவல்லை கமால் 58.
அலைய வேண்டியதில்லை. அவர்களது உடல் வலிமை இறிங்கல் பிடுங்கலற்ற உழைப்பின் மொத்த உருவமாக முத்திரை குத்தும் காலம் கனிந்து விட்டது.
! எனத்தியன் நஜீப் ஒங்களுக்கெல்லம் சரிப்பெய்த்துப் போல. ' அவன் கடைப்படியில் கால் வைக்கும்போதே இப்படியொரு கேள்வியென்றால், விஷயம் சாடையாகப் பொசிந்திருக்கத்தானே வேண்டும்.
அவன் டக்கென்று சேட் பொக்கற்றைத் தொட்டுப் பார்த்தான். கடிதம் இரண்டாக மடிக்கப்பட்டபடி பத்திர மாக இருந்தது.
முதலாளியிடம் போய் திறப்பை எடுத்துக்கொண்டு கடைக்குப் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள அரிசி மோலுக் குள் புகுந்தான். அங்கே என்றும்போல் அரிசி தீட்டுவதற் காக ஒரு பட்டாளமே வந்து தவங்கிடத்தது.
ஐந்தே நிமிடத்துக்குள் எல்லாம் சரிப்ார்த்து இஷ்டாட் கொடுத்துவிட "டக்கு.டக்கு.டக்கு." என்று வேலைக்குத் தயாராகி விட்டது. V
**ஆ.தாரன் மொதலாவது வந்த, *நான் நான்-" பல குரல்கள்.
'ஒத்தரும் சத்தம் போட வாண. எனக்குத் தெரீம் தாரென்டு இங்க வா"-இப்படிக்கத்தி நிலைமையைச் சமாளித்து, ஒழுங்கை ஏற்படுத்துவது அவனுக்குப் பழக்க மாகிப் போய்விட்டது. அந்தச் சிறுமி வந்து தயாராக நின்றாள்.
* எத்தின கூப்பன்டயன்?"
* எட்டு "
அரிசிப் பையைத் தூக்கி, கம்பு வடிவக் கொள்கலத்தில் போட்டு, மற்ற அமைப்புகளை இழுத்து அழுத்திச் சரிபடுத்தி

Page 30
54 விடை பிழைத்த கணக்கு
வாளியைத் தூக்கி வைக்க தூவுமாப்போல் தீட்டப்பட்ட அரிசி சரஸ் ஸென்ற மெல்லிய சத்தத்தோடு வாளியில் வந்து விழத்தொடங்கியது. கையைக் குவித்து கொஞ்சம் எடுத்துப் பார்த்து, மீண்டும் சரிப்படுத்தி.ஏழெட்டு நிமிடத் துக்குள் அவ்வளவும் தீட்டப்பட்டாகிவிட்டது. வாளியைத் தூக்கி பைக்குள் அரிசியைக் கொட்டியபின்.
**ம். அடுத்தாள். எத்திய கூப்பன்டயென். '
அசிரி கொள்கலத்தில் போடப்பட்டது.
隸
魏
"டக்கு.டக்கு.
இங்கு மகத்தான ஐந்தாவது வருஷம் அவனுக்கு. இந்த வருடம்தான் பத்து ரூபாய் சம்பள உயர்ச்சியோடு மாதம் சம்பளம் எழுபத்தைந்து ரூபா. ஆனால் இதுவரை அப்படி யொரு தொகையை அவன் பெற்றுக்கொண்டதாய் சரித்திர மில்லை. அதே கடையால்தான் அவன் தேவையான சில்லறை சாமான்களை வாங்கிக் கொள்கிறான், அந்தக் கழிவுகளெல்லாம் போக முதலாளி கொடுப்பதை மறுபேச் சின்றி அவன் பெற்றுக்கொள்வான்.
**ஆ அடுத்தாள்'"
இடையிடையே மறுபக்கத்தில் கொட்டப்படும் தவிடு அங்குமிங்கும் பரவாமல் பெருக்கல், தவிட்டு மூடைகளை சணல் கயிற்றால் கட்டல், இத்தியாதி வேளைகளையும் அவன் கவனிக்கத் தவறுவதில்தை எல்லாம் பழக்கப் பயிற்சிதான்.
'''LldsG5... . . . டக்கு.டக்கு."
ஆறுமணி நெருங்கும்போது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டான். இன்னும் இரண்டே நாட்களுக்குத்தான் இங்கே வேலையென்பதை நினைக்கும்போது அவனுக்கு ஒரு மாதிரியாகவிருந்தது.

திக்குவல்லை கமால் 55
கிணற்றடிக்குப்போய் முகம் கைகளைக் கழுவிக் கொண்டு, கதவை இழுத்து மூடிக்கொண்டு கடைக்கு வந் தான். அங்கே முதலாளியுடன் இன்னொருவர் ஏதோ பிஸ்னஸ் விசயமாகத்தான் போலும் கதைத்துக்கொண்டி ருந்தார்.
திறப்பைக்கொடுப்பது மாத்திரந்தானென்றால் பிரச் சினையில்லை. தான் இங்கிருந்து விலகவேண்டியிருப்பதை யும் அதனால் கணக்கு வழக்கை நேரக்காலத்தோடு முடித் துக்கொள்வது வசதியென்றதாலும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் ஆறுதலாகக் கதைப்பதற்காக ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான்.
"ஒரு பிஸ்னஸச் செய்யா இல்லாட்டி காணி பூமிய வெச்சிக்கொண்டீக்கவா. எல்லாத்திலேமே கையடிச்சிக் கொண்டு தானிக்கியானியள் -' மேசையில் கையடித்து உணர்ச்சிவசப்பட்டுக் கதைத்தபோது, இரண்டு வாரங் களுக்கு முன்பொருநாள் முதலாளிக்கும் சக்கூர் காக்காவுக்கு யிடையே நடைபெற்ற உரையாடல் அவன் மனதில் விரிந்தது.
மொதலாளி காணி உச்ச வரம்பு இன்னம் கொறக்கச் செல்லி செல எம்பீமார் கேட்கப்போறாம்" பேப்பரும் கையு மாக வந்த சக்கர்தான் இப்படிச்சொன்னார். அவர் அக்கடை யின் கணக்குப் பிள்ளையாச்சே,
**எனத்த இன்னம் கொறக்கப்பேறாமா. '-முதலாளி எகிரித் துடித்தபடி பரபரப்படைந்தார்.
இல்லில்ல அப்பிடிச் செல எம்பீமார் கேக்கப்போறாங் களாம். எத்தினயோ சங்கமியளும் கேட்டீக்காம்";-என்று கொஞ்சம் மெலிதமாகச் சொன்னபடி பேப்பரை மேசையில் போட்டார். அதைப் படித்து விளங்கும் மனநிலை அவருக் கிருந்ததால்தானே.

Page 31
56 விடை பிழைத்த கணக்கு
"அவனியள்ட தலேல இடிபுழ சொரசொரென்டு ஏன்ட இருநூத்துச் சொச்சம் ஏக்கர எடுத்துப் போட்டாளியள். அது போதாத்துக்கு இன்னம் கொறக்கவாமா...”*
போற போக்கென்டா ஒரு போக்காத்தானிக்கி’’-இது சக்கர் காக்கா,
*".அஞ்சாயிரத்துக்கு மேல்பட்ட மொதலாளிமாரிட காணியள்ள கைவெச்சீக்கியானுயள் இவங்கலெல்லம் திரும்பி நின்டா மறுபேணம் தூசேம் தேடேலாத போக்குத்தான் பொகுவாங்க"-சூளைரைத்தபடி வியாபாரத்தில் இறங்கி னார் முதலாளி.
* "எனத்தியன் நஜீப் நின்டுக்கோனிக்கிய."
முதலாளியின் குரல் கேட்டு நினைவுத்தடத்தை உதறி விட்டுப் பார்த்தபோது, ஏற்கனவே கதைத்துக் கொண்டிருந் தவர் வெளியேறிக் கொண்டிருத்தார்.
" "நான் இன்னம் ரெண்டு நாளக்கித்தான்.அதச் செல்லத்தான்.கணக்கு வழக்கேம்.' வசனத் துண்டு களைக்கூட சொல்லி முடிப்பதற்கிடையில்.
** எனத்த வெளப்பமாச் செல்லு" " கண்களைச் சுருக்கி. வாயைப் பிளந்து.
"'நான் வெலகப்போற" "-மிகச் சுருக்கமாக..! *" எனத்தியள் கொற ஒனக்கிங்க நடந்தீக்கிய, "
* கொறயொன்டுமில்ல மொதலாளி.எனக்கு அம்பிலிப் பிங்டில காணி $கெடச்சிக்கி. அங்க பொகோணும்.அதச் சொட்டீந்தான்'-அவனை அறியாமலேயே கைவிரல்கள் பொக்கற்றுக்கு மேலான் கடிதத்தைத் தடவிப் பார்த்தன.
'ஆ..இதா.ஒனக்கு மட்டுமா.இல்லாட்டி"
* 'இல்ல எங்கட அசல்ல ஏழெட்டுப் பேருக்குக் Gas Lidid' '

திக்குவல்லை கமால் 57
** மணிசர் மாஞ்சாதி வாழில பொக்கமா அது.காட்டுக் குள்ளேம் பெய்த்துக் கஷ்டப்படுகியத்துக்கு..எங்க செஞ்ச பாவமோ தெரிய'-அவர் பெரிதாக அனுதாபப்பட்டார்.
"நாங்க மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலிந்தும்.""
'ம். அந்தக் காட்டுக்குள்ள பெய்த்து கண்டவன் நின்டவனோடயெல்லதம் பொழங்கினா.கொஞ்ச நாளேல அல்லா ரஸால மறந்து பெய்த்திடும்'- மத ஈடுபாடு குறைந்துவிடுமென்ற இரண்டாவது அனுதாபம்
"அப்ப எனத்தியன் செல்லிய.பொகவா யோசின." அனுதாபம்-அதன் உள்ளிட்டான புத்திமதி.
இவற்றுக்குப் பின்னாலாவது மனமாற்றங்கள்.
* "நான் நாலஞ்சி வருஷமா சம்பாரிக்கியென்டு ஒன்டும் மிச்சமில்ல மொதலாளி. உம்ம-வாப்பம் வயஸாக்குப் பொய்த்து ஊடு வாசலும் ஒழுங்கில்லை.ஆ.எனக்கென்டு கெடக்கியத்த உட்டுப் போடியது மேட்டுத்தலம்" தனது யதார்த்தத்தை பிரஸ்தாபித்தான்,
‘'நீ போவத்தப்பத்தி எனக்கொண்டுமில்ல, ஒன்ட கணக்கு வழக்க நாளக்கே பாத்து முடிச்சிப்போடியன். ஆனா நீங்க போற எடத்திலயென்டா ஒன்டும் சரிவராது. நான் நெனக்கிய கோமேந்தால பறிச்செடுத்த காணியளாயிக்கும் பிரிச்சுக் குடுக்கிய, அது மத்த மணிசரட நெருப்பு. அதில அல்லா பரக்கத்தக் குடுக்கியல்ல" -
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு பெருமூச்சுவிட்டப்படி சற்றே யோசித்தார்.
* 'சரி பெய்த்திட்டு நாளக்கி வா' " அவன் வெளியிறங்கி நடந்தான்.
ஐம்பதைம்பதாக குடும்பத்துக்குள் எழுதி முடித்த பின்னரும் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை இழந்த வேதனை அவரைஎன்ன வதைவதைக்கிறது.

Page 32
58 விடை பிழைத்த கணக்கு
** மசான் நஜீப் இப்பவர வார'-என்று கேட்டவாறு மூன்று சகபாடிகள் இணைந்துகொண்டார்கள்.
தங்களுக்கென்று எதுவுமே இல்லாதிருந்த ஏழை இளை ஞர்கள். இன்னும் இரண்டே நாட்களில் கொஞ்ச நிலத்துக் கேனும் சொந்தக்காரர்களாகப் போகின்ற வீரியம் அவர் களது நடையிலே தெரிந்தது.
* "சீக்கிரம் வாங்கப்பா ராஸிக்கேம் கூட்டிக்கொண்டு மாஸ்டரப் பார்க்கப்போம்"-அவர்கள் அவசர அவசரமாக மெல்லிய இருளைக் கிழித்துக்கொண்டு நடந்துக்கொண்டி ருந்தார்கள். − -
* "நாங்கள் ஏழயள். ஒடலால கஷ்டப்படுகியவங்க, இப்ப எங்கட காலந்தான் வந்தீக்கிய நாங்க பின்னுக்கா காம முந்துமயா முன்னுக்குப்போனா இந்த உலகத்தேம் புடிச் சிரேலும்" "-இன்று பகல் சமீம் மாஸ்டர் சொன்னது நஜியின் காதுகளில் எதிரொலித்தது.
-1975-டிசம்பர்

பெயர்ப் பலகைகள்
பசியின் அகோரம் பொறுக்கமுடியவில்லை. எங்காவது போய் எதையாவது சாப்பிடவேண்டும் போலிருந்தது எனக்கு. எனக்கு மட்டுமல்ல அடுத்த நண்பர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.
அப்புஹாமி ஆபன சலாவ, சாந்தி கபே இன்னும் பெயர் பொறிக்கப்படாத எத்தனையோ ஹோட்டல்களும் நகர்ந்து விட்டன . محم
முன்னே நடந்துகொண்டிருந்த நண்பர்களின் பின்னால் நானும் தொடர்ந்துகொண்டிருந்தேன்.
நண்பர்களாயினும் இந்தப் பயணத்தில் நான் அவர் களில் தங்கியிருப்பதால் என்னைக்கட்டுப்படுத்திக் கொண்டி ருந்தேன்.
**வா.ஸ்லீம்'-எதையோ அவதானித்துக்கொண்டு வந்த எனக்குத்தான் இந்த அழைப்பு.
ஆறுதல் பெருமூச்சோடு மூவரும் உள்ளே ஏறினோம். காசு கொடுப்பதும் எடுப்பதுமான நெருக்கடிக்குள்ளும் கசியர் எங்களையும் ஒருமுறை பார்த்துப் புன்னகைத்தோடு, மேசை யில் பொருத்தியிருந்த சுவிட்சை அழுத்திபோது "ட்ரீங்ங்'" என்று மணி அலறியது. அது எங்களைக் கவனிக்குமாறு பணிக்கும் வியாபாரப் பாஷைதான் போலும்.

Page 33
60 விடை பிழைத்த கணக்கு
நண்பர்கள் நான்கு புறமும் சுழன்றனர். உள்ளே ஒரு மாளிகை மின்விளக்குகளின் பளபளப்பு. சுவர் நெடுக ஒன்றரை அடியகல கண்ணாடிப் பாலங்கள் பொறுத்தப்பட்டி ருந்தமை, கடையின் உள்வளகை இன்னும் விரித்துக்காட் டியது. நடுவில் உணவுப்பண்டங்கள் பரத்திய கண்ணாடிக் கேஸ்கள் வீட்டுக்கும் வைக்கப்பட்டிருந்தன. எங்கும் சுவை யூறும் காட்சிகள் என்னைக் கிறங்க வைத்ததில் வியப் பில்லையே,
'ஆ மஹதுரு கெஹாட என்ட-" பார்பல் மேசையை அழுத்தித் துடைத்தபடியே எங்களை நோக்கி இந்த அழைப்பு.
அங்கே ஒரேயொரு மேசை மாத்திரந்தான் மூன்று அமரத்தக்கதாக காலியாகவிருந்தது. மூவரும்போய் அமர்ந்துகொண்டோம்.
* "கொஞ்சம் தண்ணி தாங்கோ-' தங்களை இனங் காட்டிக்கொண்டதான நினைப்பு ஜப்பாருக்கு.
மூன்று பெரிய கிளாஸ்களில் வந்து சேர்ந்த தண்ணீரின் குளுமையினூடே, உடலில் அப்பியிருந்த களைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கலைவது போல.
** என்ன தொரே சாப்பிடப்போறிங்க." **எனத்தியன் ஸ்லீம் தின்னிய, "-முஸ்தஃபா என்னைப் பார்த்துக் கேட்டான்.
** என:த்த சரி. "' மரியாதைக்காகக் கேட்ட கேள்வி தானே. அதற்கேற்ற பாணியிலேயே நானும் பதில் சொன்னேன்.
மனதுக்குள் சோகேஸ்களில் தெரிந்த ரோஸ் கோழி. இறைச்சிப் பொரியல் இத்தியாதிகள் சுழன்று மறைந்தன.
* மூனு சோறு போடவா?'-வெய்ட்டரின் கேள்வி.

திக்குவல்லை கமால் 6.
* கொஞ்சம் லைட்டாத் தின்டா நல்லாயிக்கும் - ஜாபிரின் யோசனை. κ.κ.
* புட்டு...இடியப்பம்.வீச்சொரட்டி எல்லம் புதிசிதான். ரொட்டியென்டா சுடச் சுடத்தரேலும்"
"இடியப்பம் கொணிவாங்கொ'
ஒரு தட்டு நிறைய இடியப்பம்-வெறும் கோதுமைத் தயாரிப்பு - வந்து சேர்ந்தது. கூடவே பிளேட்டுகளும் வந்தன.
ஆட்டெறச்சி. மாட்டெறச்சி.மீன். என்ன தொரே வேணும், "'
"மாட்டெறச்சி கொனுவாங்கொ'
சிறிய பேஸனொன்றில் வந்து சேர்ந்த இறைச்சிக் குழம்னபப் புரட்டிப் பார்த்தபடி முஸ்தஃபா கேட்டான்.
* வேற கறியள் இல்லையா?’’
'இல்ல தொரே-' ஒரு கணம் யோசித்து, இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த மேசைக்குத் திரும்பினான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடுக்கு இடியப்பத்தை வைத்துக்கொண்டோம். எப்படியும் ஏழெட்டுக்கு மேல்போ காது. ஜாபிர் ஒவ்வொரு துண்டு இறைச்சி பகிர்ந்து போட்டான்.
தகித்துக்கொண்டிருந்த பசி என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. வீட்டில் சாப்பிடும் நினைவோடு. இடியப்பத்தை பிசையப் பழைய வெறும் பசை உருண்டை யாக மாறிநின்றது. உருட்டி விழுங்குவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்
ரோஸ்.பிஸ்டேக்.இஷ்பெஷல்' வெய்ட்டர் மேசை யில் கையூன்றி உதவக் காத்திருந்தான்;

Page 34
62 விடை பிழைத்த கணக்கு
** வேண்டாம்" என்ற பொருள்படும் தலையசைவை நான்தான் முன்வைத்தேன்.
அடுத்தடுத்த மேசைகளில் டவுன் வியாபாரிகளும் கடைச் சிப்பந்திகளும் ஒருகை பார்த்தவண்ணமிருந்தனர்.
சுற்றிச் சுழன்ற என் கண்கள் சுவர்க்கண்ணாடியில் நிலைகுத்தியபோது என்னையே நான் கண்டு தலை குனிந்தேன்.
நான் உடுத்தியிருந்த சேட்-ஸாரங்களுக்கு இன்றோடு மூன்றாவது நாள். வியர்வை கசிந்து பளபளக்கும் முகம். இரண்டு நாட்களாக முகம் வழிக்காத உறுத்தல் வேறு. என்னைவிட சகபாடிகள் அவ்வளவு வித்தியாசமாகத் தோற்ற மளிக்காதது எனக்கு நிம்மதியைத் தந்தது.
* தின்னப்பா எனத்தியன் பார்த்துக்கோ நிக்கிய "- முஸ்தஃபா எனனைப் பார்த்துச் சொன்னான், இன்னொரு அடுக்கு இடியப்பத்தைத் தனது தட்டில் வைத்தபடி,
விடுவேனா. நானும் அந்த வழிக்காட்டலைத் தொடர் கையில், இன்னொரு பேஸன் இறைச்சியில்லாத குழம்பு வந்து சேர்ந்தது.
ஊரிலிருந்து புறப்பட்டு இரண்டொரு "பொல' களையும் பஜார்களையும் பார்த்துக்கொண்டு. இரத்தினபுரி வத் தடைந்த மூன்றாம் நாள் இன்று. ஆனால் மூன்று நாட் களுக்குரிய குறைந்த பட்ச சம்பாதிப்பாவது கிடைக்கமால் போனதை நாட்கூலி ஆளாக இருந்தபோதிலும் என்னால் உணரமுடிந்தது. சுமந்துவந்த தொப்பி, நுளம்புவலை, பேபிஸாட்டுகளில் பெரும்பாலானவை இன்னும் பெட்டிக்குள் ளேயே தவம் கிடந்தன. அதற்காக செலவுகளை எப்படிச் சுருக்கிவிட முடியும். பின்னால் கொஞ்சம் திறமாக இருந் தால்தானே சாப்பாடும் தரமாக அமையும்.

திக்குவல்லை கமால் 68
நான்தான் முதன்முதலில் கைகழுவும் படலத்தைத் தொடங்கிவைத்தேன். சுமாரான சாப்பாடுதான்
"டீ குடிக்கியா தொரே'-அப்படியான இடங்களில் தானே "தொரே " அந்தஸ்து மிக இலகுவாக எவருக்கும் கிடைக்கும்.
‘'தேவில்ல.முனு ஃபோரேஸஸ் தாங்கொ?? சிகரட்டுகளோடு பில்லும் வந்து சேர்ந்தது. ""பதினாலறுவதா?"
முஸ்தபாவின் குரலைக் கேட்டு, சிகரட் பற்றவைத்த பேப்பர் துண்டை கீழே போட்டுக் காலால் கசக்கிவிட்டு கசியரை நோக்கினேன். அவரது முகத்தில் வரவேற்பின் போதிருந்த சிரிப்பையோ மலர்ச்சியையோ காணமுடிய வில்லை. காசு எடுக்கும் நேரமல்லவா.
"இவளவு வராதே."-துண்டில் தவறுலாகக் குறிக்கப் பட்டிருக்குமென்ற எண்ணத்துடன் கசியருக்கு அதனை நீட்டினான் முஸ்தஃபா.
"ட்ரிங்.ண்'-சிவிச் அழுத்ததுடன் இங்க எவளவு கணக்கு. "
**ஆ.பதினாலறுவது-" உள்ளேயிருந்து எட்டிப் பார்த்துச் சொல்லிவிட்டு, அவன் தனது வேலையில் ஈடுபட் டுக்கொண்டிருந்தான்.
முஸ்தஃபா முகம் சிவந்துவிட்டது. "இந்தஅநியாயத்தை யாரிட்டச் செல்ல" என்றோ என்னவோ!
உண்மையில் அந்தச் சாப்பாட்டுக்கு எனது மதிப்பீடும் ஏழைம்பதுக்குமேல் போகவில்லை.
பத்து ரூபாவும் ஐந்து குபாவுமாக இரண்டு நோட்டுக்
களை நீட்டிய அவன் சில்லறைகளைப் பெற்று சேப்பில் போட்டுக்கொண்டு சொன்னான்.

Page 35
64 விடை பிழைத்த கணக்கு
**ம்.எங்கள நாட்டானுகளுக்கு கணக்கெடுத்தா இப்பிடிச் செஞ்ச"
'' . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
எந்தப் பதிலும் இல்லை.
மூவரும் அந்த ஹோட்டலிலிருந்து வெளியிறங்கினோம்.
* மசான் எனக்கிப்பிடி நடக்கோணும்டா பசிவந்தா கெடச்செடத்தில ஏறித்தின்னாம.கண் நோக நோக போட்
பாத்துப்பாத்து வந்ததுக்கு-" " ஜாபீர் தன்னை நொந்து கொண்டான்,
முஸ்தஃபா மெளன நடையில் கண்ணாயிருந்தான்.
நான் ஜாபிரின் நக்கலின் உந்துதலால் சாடையாகத் அக்கடையின் போர்டைப் படர்த்ாதன்.
சின்னச் சின்ன பலவர்ண அலங்கார பல்புகளால் அந்த பேர்ட் மினுமினுத்துநின்றது.
ஆங்கில எழுத்துக்களை ஒருவாறு எழுத்துக்கூட்டி வாசித்துமுடித்தேன்.
நிஹாரா ஹோட்டல்"
1976-ஏப்ரல்

வீரர்ங்கனைகள் வரிசையில்.
மையத்து வீட்டின் உள்வாசலில் பெண்களும் வெளி முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரைகளில் ஆண்களுமாக அமர்ந்தவண்ணம் மெதுமெதுவாக எதையோ கதைத்தவர் களாக இருந்தனர். அதுபோக, வருவதும் போவதுமாக பலரும் தமது இறுதி மரியாதையை அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். மையத்து esfGIšGs e fuu சோபையை நிலைநாட்டுவதாக அங்கே, அமைதியும் சாம்பிராணிப் புகை மணமும் செறிந்திருந்தது.
ரஸ்ஸாக்நானா இன்னும் பல்லாண்டு வாழ்ந்து குறைந்த பட்சம் தனது குடும்பத்துக்காயினும் ஏதாவது கொடுப்பார் என்பதை எதிர்பார்க்க இயலாதுதான். வயது மூப்பும் பக்கவாத நோயும் பார்க்க வருபவர்கள்கூட "ஈமான ஸ்மாமத்தாக்கு" என்று பிரார்த்திக்க வேண்டிய நிலைமை யைத் தான் தோற்றுவித்திருந்தது. சும்மாவா கடந்த ஒன்பது மாத காலமாக, கட்டிலோடு கட்டிலாய். மருந்தோடு மருந்தாய். கழிந்ததென்றால், நிலைமையைக் கேட்கவா வேண்டும்.
மையத்து முன்வாசலில் கிப்லாவை நோக்கி அடிக்கழுவி வைக்கப்பட்டிருந்தது கட்டில் சட்டங்களோடு சேர்த்து கட்டி யிருந்த கம்பு நுனிகளை இணைத்து மேல்பிடவையொன்று விரிக்கப்பட்டிருந்தததும், கட்டில் கால்களைச் சுற்றி
வி-5

Page 36
66 விடை பிழைத்த கணக்கு
சுண்ணாம்பு தூவப்பட்டிருந்ததும் பூச்சிகள், தூசிதுணிக்கை கள் வந்து சேராமல்தான் போலும். முகத்தை மாத்திரம் திறந்து பார்கத் தக்கதாக உடல் வெண்பிடலையொன்றால் மூடப்பட்டிருந்தது. V
உள்ளே. கதீஜதுல் குப்ரா கண்ணிர் சிந்திக்கொண் டிருந்தாள். விதவையாக்கப்பட்டபின் கண்ணிர் கசியாமலா இருக்கும். மரக்கட்டையாக இருந்தால்தான் என்ன. கணவன் என்ற அந்தஸ்தில் ஒருவன் இருப்பது எவ்வளவு நிம்மதி. ஆறுதல் என்பது ஒரு மனைவிக்கல்லவா தெரியும். சுற்றிச்சூழ அக்கம் பக்கம் பெண்களெல்லாம் ஆறுதல் வார்த்தைகள் ஆயிரமாய் அள்ளிச் சொரிந்த போதிலும், அவளது ஒவ்வொரு கண்ணிர்த் துளியாலும் அவை ஆற்றல் இழந்து பலவீனமடைந்து போயின.
மையத்து என்றால் சும்மா கண்ணிரைக் கொட்டிக் கொண்டிருப்பது மாத்திரத்தானா. இல்லையே. அந்த இறுதிக் கிரியைக்காக எத்தனை ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அதைப்பற்றிய பிரச்சினை களை யாருமே அவளுக்கு விட்டுவைக்கவில்லை. உனக் கெனக்கென்று அங்கு கூடியவர்களே சேர்ந்து, அவற்றைக் கவனிப்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. கபுறு தோண்டுவது முதல் தகவல் அனுப்புவது வரை எதையுமே அவர்கள் விட்டுவைக்கவில்லை.
அடித்தள அதிர்வு சுவர்களில் ஒட்டையாய் நெளிவது போல, அவளது நெஞ்சத்தில் அவர்பற்றிய நினைவுச் சுழிகள்.
சும்மாவா. அவளது நெஞ்சத்தில் ரஸ்ஸாக் இடம் பிடித்த கதை. வாலிப மிடுக்குடைய அந்தக் காலத்தில் கிரலே சைக்கிளில் அவன் போகும்போது அவள் சிறு பிள்ளைக்குரிய மனநிலையோடுதான் பார்த்து ரசித்தான். ரெலே சைக்கிள் ஊருக்குள் ஒன்றிரண்டே நடமாடிய காலம். இக்காலப் பிள்ளைகள் டொயாடோகாரை எப்படியொரு

திக்குவல்லை கமால் 67
பார்வை பார்த்து மனதுக்குள் கற்பனை வளர்ப்பார்களோ அப்படித்தான் ,
காலை புலரும் வேளையில் அந்த சைக்கிளில் ரஸ்ஸாக் சும்மா போக மாட்டான். அதன் பின்னால் பெரியதொரு பொட்டணி கட்டப்பட்டிருக்கும். அதனுள்ளே முழுக்க முழுக்க பலவகையான பிடவை வகைகள். அயலுரர்களுக்குப் போய் வியாபாரம் செய்துவிட்டு மாலையில் திரும்புவதுதான் நாளாந்தத் தொழில்.
கதீஜதுல் குப்ராவின் வாப்பா, எங்கிருந்தாவது அத்தகைய பிடவை சட்டைகளைக் கொண்டுவந்து கொடுக்க லாந்தான். என்றாலும் ரஸ்ஸாக்கின் பொட்டணியைத் திறந்து அவற்றையெல்லாம் ஒருமுறை பார்த்து லயிக்க வேண்டுமென்பது அவளது நெடுநாள் ஆசை. இளமைக்கே உரிய இயல்பல்லவா அது.
பள்ளிவாசல் புதிதாக் கந்தூரி வந்ததும்தான் வந்தது. அங்கே மற்றக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தரிக்காய் வாழைக்காய் வெட்டப் போயிருந்த போதுதான். ரஸ்ஸாக் தற்காலிகக் கடை வைத்திருக்கும் செய்தியை அவள் கேள்விப் பட்டாள், விடுவாளா? அடுத்த கணம் எல்லோருமாக அங்கே போய், விரித்துப் போடப்பட்டிருந்த துணிமணிகளைப் பார்த்து, கற்பனை ராகங்களில் கிறங்கி நின்றபோதுதான்.
*" எனத்தியன் புள்ளயஸ் சட்டப்பொடல பாக்கியா. ஆ. எங்கட மமரெனபு மாமட மகளே இது" என்று வாயெல்லாம் சிரிப்பாக அவன் கேட்டான்.
அவள் இதனை எதிர்பார்க்கவில்லை. சின்னக் குட்டி யான தன்னை, எல்லோருடைய கவனத்துக்குமுரிய ரஸ்ஸாக் தெரிந்து வைத்திருக்கிறாரே என்பதை நினைக்க அவளுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. கூடவந்த கூட்டாளி கள் "ஆய். ஊம்" என்று வேறு குழப்ப. அடுத்த நொடி அவளோடு சேர்ந்து எல்லோரும் ஒரே ஒட்டந்தான். அதன்

Page 37
68 விடை பிழைத்த கணக்கு
பின்பு எங்காவது ரஸ்ஸாக்கைக் கண்டால் போதும் ஓடி ஒளித்துவிடுவான்.
அந்த வருடந்தான் அவளுக்குக் கடைசிக் கந்தூரி. அதன் பின்பு இயற்கை அவளுக்கு தடைவிதித்துவிட்ட போதும், அந்தக் கடைசிக் கந்தூரியே அவள் வாழ்வில் ஒரு முக்கிய தலைவாசலாகவும் அமைந்துவிட்டது.
கதீஜதுல் குப்ரா "பெரிய மனிசியாகி இரண்டே வருடத் ,
துக்குள் ஒருநாள் அவள் சற்றுமே எதிர்பார்க்காதபடி நிக்காஹ் நடைபெற்றது. கல்யாணமென்றால் சும்மாவா எத்தனை நடைமுறைகள்- egrassuth. . . . . . FITU rGassir. . . . . . ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் ரஸ்ஸாக்- கதீஜா திருமணம் நடைபெற்று முடிந்தது. அவளுக்கு ஏதோ புதிராக இருந்த போதிலும் தனது மனதுக்குள் ஏற்பட்ட தற்செய லான விருப்பமொன்று இப்படியெல்லாம் அவளையறியாம லேயே வேரூன்றிவிட்டது வியப்பானதுதான்.
பெரிய மத்திச்சத்தின் மகளுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஸ்ஸாக் தன் முனைப்பாக இந்தக் கல்யாணத்தைச் செய்துகொண்டதை, அவனைச் சார்ந்தோரால் பொறுக்க முடியவில்லை. வீடுாணி- பூமியோடு வர இருந்தவனை ஒதுக்கிவிட்டு, சும்மா பெண்ணை மாத்திரம் தூக்கிக்கொண்டால் பொறுக்க pliquor என்ன இதன் வெளிப்பாடாக. தனது σπιρίτείδη சட்டிகளைக் கொண்டுவரப்போன ரஸ்ஸாக்கிற்கு விழுந்தது அடி. உதைகள், கடைசியில் சைக்கிள் மாத்திரந்தான் ஏக சொத்தாக அவனுக்குச் சேர்ந்தது.
அதுமட்டுமல்ல அதிக நாட்கள் கடக்குமுன்பே வாப்பச வழியாக அவனுக்குக் கிடைக்கவிருந்த சொத்துக்கள் அவர் இருக்கும் காலத்திலேயே அடுத்த சகோதிரர்கள் சேர்ந்து பிரித்தெழுதிக் கொண்டார்கள். என்ன இருந்தாலும் ரஸ்ஸாக் ஆண்பிள்ளை அல்லவா. கொஞ்ச காலத்துக்குள்

திக்குவல்லை கமால் ஃ 69
ளேயே தனது குடும்பத்தை வழி நடத்தத்தக்க அளவுக்கு முன்னேறிவிட்டான். w
'தாஹா மொதலானி வந்தீக்கி" முன்பக்கமிருந்து அலைபரப்பிய செய்தி கதீஜாவின் காதுகளை எட்டியபோது நினைவு கலைந்த அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவு மிருந்தது. '', 's அவர்தான் மையத்தின் மூத்தநானா. ரஸ்ஸாக்கிற்கு சொத்துக்கள் சேராமல் வழிவகுத்த திட்டதாரி. என்ன இருந் தாலும் மெளத்தான பின்பாவது சகோதர பாசம் அவரை இழுத்து வந்திருக்கிறதே.
* தம்பிக்கி அவருதானாம் கபன் போடிய' தாஹா முதலாளியின் விருப்பம் அவள் செவிகளை வந்தடைந்தது. அதற்கவள் விருப்பம் தெரிவிக்க வேண்டாமா.
கபன் போடுவதென்று வாய்ப்பேச்சுக்கு சொன்னாலும் மையத்து தொடர்பான செலவுகளை அது குறிக்கும். இதை எப்படியும் உறவு வழியானவர்களே செய்வர். சில நேரம் களில் "நானா? நீயா?" என்ற போட்டிகளும் நிகழ்வதுண்டு. பிணக்குகளால் பிரிந்துபோனவர்கள் திரும்பவும் ஒட்டிக் கொள்ளவும் இது நல்ல வாய்ப்பு. அந்த நிலையில்தான் தாஹா முதலாளியும் வந்திருப்பார் போலும். இந்தத் தள்ளாத வயதிலாவது இப்படியொரு எண்ணம் வந்ததை யிட்டு பலருக்கும் மகிழ்ச்சி.
கதீஜா புரியும் செல்லுங்கொ" " பெண்கள்தான் கேட்டனர்.
* 'வாண. அவரு கபன் போடத்தேலில்ல. அவர்ர, சொத்துக்கித்தெல்லம் பயிச்சித் தின்டிட்டு. நசல்ல இவளவு காலமீந்த, ஒரு கண்ணுக்கு பாக்க வரல்ல. இப்ப சும்ம பூசிக் கொள வந்தீக்கி’’ அவள் வெடியாக அதிர்ந்தாள்.
அது சரி மகள். இது கூடப்பொறந்தத்தட கடசிப்பங்கு நடந்தலதல்லம் அல்லா பொறத்தில வெய்ங்கொ. வாரு

Page 38
70 விடை பிழைத்த கணக்கு
வழக்கத்துக்கு மாத்தமா நடக்கவான" ஒரு முதுமையின் குரல் ,
"வாணன்டா வாண். அந்த மனிசன்ட ஹக்கல்லாம வேறொன்டேம் நான் சேத்தியல்ல. வந்தா மையத்தப் பாத்திட்டுப் போகட்டும்' அவளின் வியாக்கியானம் உறுதி யாக ஒலித்தது.
தாஹா முதலா6ரியின் நெஞ்சிலே பலத்த அடியாக இது விழுந்தது. ஊரெல்லாம் இச்செய்தி பரவியபோது கூனிக் குறுகிப் போய் நின்றார் அவர்.
எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியானதைத் தொடர்ந்து அவருக்குப்பின் கலிமா ஒதலுடன் மையத்தைத் தூக்கினார் கள்,
சோகம் பொருந்திய அவள் கண்மணிகள் இறுதி மரியாதையாகத் தூவிய கண்ணிர்ப் பூக்கள். கன்ன மேட்டில் தவழ்ந்து வழிந்து நெஞ்சக் கூட்டில் விழுத்தபோது, அவளை அறியாமலேயே கைவிரல்கள் மார்பைத் தடவ, உள்ளே மாத்திரமல்ல வெளியேயும் அப்பொழுதுதான் ஒரு வேறுமையை உணர்ந்தாள்.
அங்கே சவடி இருக்கவில்லை. ரஸ்ஸாக் தன் அன்புக் கரங்களால் நிக்காஹ் நடந்த அந்த இரவில் தொட்டுச் சூடிய தங்கச் சவடி. இன்றுதான் அவரோடு சேர்ந்து அதுவும். அதனைக் கழற்றிவைக்கும் மரபுகள் எதுவும் இல்லைதான்.
இறுதிச் செலவுகளுக்காக அதுதான் நகைக்கடையைச் சென்றடைந்து விட்டதே!
1976 ஆகஸ்ட்

பயணம்
புத்தங்களும் கையுமாக, நாலைந்து நாள் இடைவெளிக் குப் பின் பாடசாலைக்குப் புறப்பட்டேன். பாடசாலை. அதுதான் எங்கள் தலைவிதியாயிற்றே. ஆனால் முன் போலல்லாது மனம் மிகவும் கனத்துக் கிடந்தது. சொல்லம்பு கள் இதயத்தை ஊடறுத்து இறுகி நின்றால் இனி வேறெப் படித்தான் இருக்க முடியும்.
**இவன இந்த ஸ்கூல்ல வெக்கப்படாது. புள்ளயலெல் லாம் அசடாக்கியது போதாத்துக்கு. இவளவு நாளா ஒளிஞ்சி மறஞ்சி நின்டுகொண்டு கூத்தாடின கூத்து. ஹ்ம். இவன தண்ணில்லாத காட்டுக்குத்தான் அனுப் போனும் "'
நேற்றிரவு செவிப்பறையைக் கிழித்த சொற்கணைகள் என் நினைவைப் பிளக்கின்றன. அதுவும் அந்தத் தூக்க இரவு வேளையில் அறைச் சுவர்களைத் தாண்டி வந்து.
* மாஸ்டர் ஸ்கூலுக்கா?"
"ஆம்" என்பதற்கு ஒலி வடிவற்ற மொழி வடிவாக தலையாட்டியபடி நான் முன்னோக்கி நடந்தேன். இடையில் இப்படியிப்படி எத்தனை முக தரிசனங்கள். ஐந்தாண்டு அனுபவப் பழக்கமாயிற்றே ஆயினும் அந்த முகங்களையும் அதில் இழையோடும் மென் சிரிப்புகளையும் வழமையான தாகக் கருத மனம் இடம் தரவில்லையே.

Page 39
72 விடை பிழைத்த கணக்கு
புன் சிரிப்புகள். சில அனுதாபச் சிரிப்புகள், சில அதி காரச் சிரிப்புகள் போலும். எப்படியான போதிலும் நாட்டி லேற்பட்ட பரவலானதொரு மாற்றம், சின்னஞ் சிறிய. சொற்ப ஊதியத்துக்காக ஒடித்திரியும் இந்தச் சின்ன மனிதனையுமா? தாக்க வேண்டும்?
ஸேர் தண்ணில்லாத காட்டுக்குப் போக ரெடியாகிக் கோங்கொ. '' வழமையாகவே தமாஷ் பாணியில் என் னோடு கதைக்கும் குஞ்சலிக் காக்கா கூறிவிட்டு நகர்ந் தார்.
நடையினூடே என் ஆசிரிய வாழ்க்கையில் இங்கு கழிந்த ஐந்தே வருடங்களையும் ஒரு கணம் மனக்கண்களுக்குள் இழுத்துப் பார்த்தேன்.
பெரும் சேவைகள் செய்ய வேண்டும்; அதன் மூலம் பெயரிட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் செய்யும் நல்ல பணிகளுக்கு முடிந்த அற்ப உதவியையாவது புரியவேண்டுமே!
கிராமப்புறங்களில் கல்வித் துறையில் ஒரு முன்னேற் றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதென்றால் அதுவே ஒரு பெரும் எதிர் நீச்சல்தானே? பின்தங்கிய , வசதியற்ற பிள்ளைகளின் உயர்ச்சியை இலக்காகக் கொள்ளும்போது அங்கு குறுக்கிடும் பெரும் "மலைகளை" உடைத்துத் தகர்க்க முடியாவிட்டாலும் முட்டிமோத வேண்டியாவது ஏற்படும் அல்லவா?
பெறுபேறுகள், உயர் வகுப்புகள், கட்டிடங்கள், கலை நிகழ்ச்சிகள், வெளியீடுகள் இவையெல்லாம் போக கிராமியக் கண்களை மூடிமறைத்து, பின்னணி நாடகமாடிகளின் முகத் திரைகளை அகற்றிக் காட்ட முனைந்தமை!
"ஏன் இந்த வம்பு?" என்று ஒதுங்கியிருக்கலாம் தான். ஆனால் அப்படியிருக்க மனம் இடம் தந்தால்தானே? விளைவு எப்படி இருப்பினும் சொல்லவேண்டியதைச் சொல்ல

திக்குவல்லை கமால் 7S
வேண்டிய இடத்தில் சொல்லும் பழக்கம் புதிதாகப் பூத்துப் பிறந்ததல்லவே!
என்றாலும் நிலைமைகள் மாறும்போது பிடி கயிறு அற்றுப் போய், சுற்றி வனைத்து ஏதாவதொரு வழியிலாவது ஒதுங்கிக்கொள்ள வீதியின்றி, அனாதையாகி, கடைசியில் * வந்தான் வரத்தான் பட்ட பாடு" என்ற கதைதான்.
* ஸேர். ஸ்ே.
பாடசாலை எ லைக்குள் காலடி வைக்கும்போதே மேல் வகுப்பு மாணவர்கள் அன்போடு ஓடி வந்தனர். அவர்களின் வருகையே எனக்கு ஏதோவொன்றைச் சொல்ல வருகிறார் கள் என்பதை உணர்த்திவிட்டது.
மனக் கவலைகளை மறைக்கும் சிரிப்பை நான் உதிர்ப்ப தாக ஒரு நினைப்பு.
ஸேர் ஸ்கூல் சொகரிலயெல்லாம் எழுதிந்தாங்க ஸேர். நாங்க அழிச்சிப் போட்ட.""
'கீழ்த்தரமான வேலைகள நல்லவங்களா செய்யப் போறாங்க" நான் அவர்களைச் சமாளித்துக்கொண்டு மேலே சென்றேன்.
தன்னாதிக்கமுள்ள ஒரு நாட்டில், ஒரு ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியதற்கு இதுதானா பரிசு
அந்தப் புத்தம் பதிய விஞ்ஞான கூடம், அதன் நிர்மாணிப்பில் எனது வேர்வைத் துளிகளுக்கும் எவ்வளவு பங்கு? அந்தச் சுவர்களுமா "குப்பாடி'த் தனங்களுக்குப் பழி யாக வேண்டும்? அழிக்கப்பட்ட கரிக்கட்டை எழுத்துச் சுவடு கள். என் கண்களை உறுத்தின.
19
டேய். வந்தான் வரத்தானே பயணத்துக்கு ரெடி யாகு' இப்படிப் பலப்பல.

Page 40
விடை பிழைத்த கணக்கு
நான் இங்கிருந்தாலென்ன எங்கிருந்தால் என்ன? இறக்கும் வரை வாழ்க்கையே ஒரு பயணம்தானே? என்று சிந்தித்தவாறு வரவுப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, சகோதர ஆசிரியர்களின் குசுகுசுப்புகளையும் தாண்டி வகுப்பை நோக்கினேன்
சில பெரும் புள்ளிகளின் தூய்மைக்கு கரும்புள்ளி குத் தியவனாம் நான் இப்பொழுது எனது வாழ்க்கைக்கே முற்றுப் புள்ளி வைக்கும் சக்தி அவர்களுக்கு கைவரப் பெற் றுள்ளதாம். என்றாலும் அவர்கள் மனதில் கொஞ்சம் கருனைக் கசிவாம். அதனால்தான் பாவம் பார்த்து எங்காவ தொகு காட்டுக்குத் தூக்கியெறிய கார்கள் பறக்கின்றன வரம், "
இது அவர்களின் சூழ்வட்ட அபிமானிகளின் சொற் சிதறல்கள் என்றாலும் எதையும் தாங்கும் இதயமொன்றை ஸ்கி படுத்திக் கொள்ள இதையுமொரு வாய்ப்பாகக் கொள்ளலாமேயென்று நானே என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன்
"அஸ்ஸலாமு அலைக்கும்'
எழிாம் வகுப்பினர் எனக்கு சாந்தி கூறி வரவேற்றனர். நானும் பதில் கூறியபின் ஒருசில நொடிகள்.
இாண்டு மூன்று நாட்களாக மனம் தவித்துத் தவித்து ம்ேபிக் குழம்பி தனிமையில் கலங்கிக் கலங்கி, இனியும் இந்த ஊரில் இந்தப் பிள்ளைகளுக்குப் படிப்பிப்பதா. அதுவும் இன்றோ நாளையே அடுத்த நிமிடமோ தண்ணி யில்லாக் காடு தந்தியில் வர இருக்கும்போது வேண்டவே வேண்டாம்: "தொப்' பென்று கதிரையில் அமர்ந்தேன்.
எல்லாப் பிள்ளைகளும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். இப்படிச் சும்மா அமர்ந்திருந்து பாட நேரத்தை நகர்த்த இந்த ஸேருக்குத் தெரியாதே என்றோ #T:ữT=#T'ogh I T-"

திக்குவல்லை கமால் 75
மீண்டும் ஒருமுறை எல்லா மாணவர்களையும் கூர்ந்து நோக்கினேன். சந்தேகமேயில்லை யார் யாரெல்லாம் என்னை அவமதித்து எனக்கெதிராக இயங்கிக் கொண்டிருந் தார்களோ, அவர்களின் பிள்ளைகள் தம்பி, தங்கை இப்படி பாக. இவர்களுக்காக நான் இனியுமா..?
ஸேர் தமிழ் பாடம் "
ஒருத்தியின் குரல் என் னைத் திடுக்கிடச் செய்தது.
"ஸேருக்கு யோசினடி.." ரஸ்மியா, ரஃபீக்காவின்
காதுக்குள் மெல்லச் சொன்னாள்
"எல்லாரும் கட்டுர எழுதிக்கி பாக்கியல்ல யோ ஸேர்." இது நிஸ்தாரின் குரல்
ஒருளித சிலிர்ப்பில் நான் எல்லாம் மறந்து போனேன். நான் செய்வது சம்பளப் பணி. அதுவும் சமுகப் பணி. இதில் நான் தவறு செய்யலாமா? எனக்கெதிரா யார் தான் இயங்கி னாலும் எதுவும் புரியாத இந்தக் குழந்தைகளுக்கெதிராக நான் இயங்குவதா?
எனது விரக்தி வெறுப்பு ஆவேசமெல்லாம் எங்குதான் ஒளிந்து மறைந்ததோ என்னதானிருந்தாலும் கடமைக்குத் துரோகம் செய்வதா..?
என்ன கட்டுரை தந்தேன்' என்று கேட்டபடி வெண் கட்டியோடு எழுந்தேன்.
எல்லா முகங்களும் மலர்ந்து நகைத்தன. அது என்னில் அவர்கள் கொண்ட ஆர்வமா? அபிமான மா? எதுவாக இருந் தாலும் என் மனதில் அந்த மலர்ச்சியின் பிரதிபலிப்பான நிர்மலத் திருப்தியொன்று மெல்லப் பரவியது
" " மறக்க முடியாத பயணம்' "

Page 41
76 விடை பிழைத்த கணக்கு
* 'இதுதானாம் தலைப்பு. ஒரு வாரத்துக்கு முன்பு கொடுத்த தலைப்பு. அதற்கிடையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தையொட்டியும் என்னைத் தொற்றியும் எவ்வளவு அர்த்தம் பொருந்தியதாக அமைந்துவிட்டது.
இரண்டு பாடங்கள் நகர்ந்து முடிந்தன. மணியோசை என்னை அடுத்த வகுப்பை நாட வைத்தது. அதற்கிடையில் பரபரப்பு. தலைமை ஆசிரியர் ஓடி வந்தார்.
"மாஸ்டர் ஒங்களுக்கு மாத்தம் வந்தீக்கி." தத்தி அவரது கையில் படபடந்தது. இனியென்ன? பயனத்துக்குத் தயாராவதுதானே?
1978 ஏப்பிரல்,

விடை பிழைத்த கணக்கு
"அன்ன ஒங்கள ராவக்கி குர்ஆன் தமாமாக்கி யெண்டு ரம்ஸான் மொதலாளுட்டில வரச்செல்வீட்டுப் போன. இன்டக்கி இருவத்தேழாம் நோம்பெலியன்" ஞஹர் தொழுதுவிட்டு வந்து வாசலில் காலடி வைக்கும் போதே மனைவி இந்த நல்ல செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்தாள்.
** அப்பிடியா ஹைர்." என்று பெருமிதமடைந்தவாறு அமர்ந்துகொண்டார் அஸனா லெப்பை.
சே. இப்பிடி ஒரே நாளில எல்லாருமே வெச்சா எங்குளுக்குத்தான் நஷ்டம். நல்ல நாளென்டு பாத்து ரெடியாகியாங்க. ’’
இப்படியான சங்கதிகள் அஸனா லெப்பை போன்றவர் களுக்கு மகிழ்ச்சியான செய்திகள்தான். அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இப்படி ஏற்பாடாகும்போது அது துரதிர்ஷ்டமாக மாறி விடுகின்றது. எங்காவது ஓரிடத் துக்குத்தானே போக முடியும்?
காலையில்தான் தெளஃபீக் துரை வீட்டிலும் அழைப்பு விடுத்துவிட்டுப் போயிருந்தார்கள். எங்கே போவதென்று தான் அஸனா லெப்பைக்குத் திண்டாட்டமாகவிருந்தது. முதலில் சொன்ன இடத்துக்குத்தான் போவதா? கூடுதலாக ஏதும் கிடைக்கக் கூடிய இடமாகப் பார்த்துப் போவதா?

Page 42
7, விடை பிழைதத கணக்கு
புனித குர்ஆன் அருளப்பட்ட மாதமல்லவா?
கைதேர்ந்த ஒதல்காரர் சிலருக்கு அழைப்பு விடுத்து, ஸஹருக்கு சாப்பாடும் ஏற்பாடு பண்ணி, வீட்டைக் கல கலப் பாக்கி, சந்தோஷமும் கொடுத்து பெயரையும் தட்டிக் கொள் கிறார்கள். அதுவும் போட்டி போட்டுக்கொண்டு.
இதில் அர்த்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அளவினா லெப்பை போன்றவர்களுக்கு லாபம் இருக்கத் தானே செய்கிறது. அதனால் விடுவார்களா என்ன? கத்தம். ஃபாதிஹா மெளலிதுகளையே வழிபாத்துக் காலம் கடத்தும் பிரகிருதிகள் அல்லவா.
'இங்க பாரு ஸெய்னம்பு. போன பருவமும் இப்படித் தான் செஞ்சாங்க அதப்போல இந்த குடிமும் தொஃபிக் தொT ஊட்டிலயும், ரம்ஸான் மொதலாளுட்டிலயும் இன் டக்கித்தான் தமாமாக்கியாங்க' மனைவி இடைநிறுத்தி இந்தத் துரதிர்ஷ்ட நிலையை அவள் தலையிலும் அப்பி, அபிப்ராமம் எதிர்பார்த்தார் அளவினா லெப்பை,
"அதுதானே தானு யோசிச்ச இந்த நோம்பு காலத் தில, ம் பெருநாளும் வார ரெண்டு பேரும் ஒரே நாளேல வெச்சீக்கியத்தால சட்டப் போடவ வாங்கியத்துக்காவது நாலு பணம் கிெடக்கியது இல்லாப் போறேன். ' - கணவன் எதை நினைத்துக் கவலைப்பட்டாரோ, அதே கனத்தில் தான் அவளும் நின்று ஏங்கினாள்
'போன மொற தெனஃபிக் தொர ஊட்டுக்குத்தான் போன. அங்க இருவத்தஞ்சுருவாத்தான் தத்த ஆனா ரம்ஸான் மொதலாளி ஆளுக்கு அம்பது துடுத்தாமென்டு கேள்விப்பட்ட, ""
'ம். அப்படியா? அப்பு இந்த மொற அதப்பாக்கக் கூடத்தானே குடுப்பாங்க அவங்க பெரிய யாவாரியள். இந்த மொபு ரம்ஸான் மொதலாளி ஊட்டுக்கே போங்கொ'

திக்குவல்லை கமால் T)
"ஆனா அது அவளவு சரில்பியே ளெய்னம்பு. தெளஃபீக் தொரதானே மொதல்ல செல்லிக்கி. ஆ.
* 'இதெல்லாம் பாத்துப் பாத்நிந்தா எங்களுக்கு தான் இருவத்தஞ்சி முப்பது சும்ம தரப்போற எங்களுக்கு பாக்கித் தான பொக்கத்துக்கேன் நாங்க பொகோணும்'
அதும் சரிதான்'-அஸனா லெப்பை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தன்னைச் சுதாரித்துக்கொண்டார்.
! வெப்ப நாமோவ்"
"", . . . . . . வாங்க வாங்க"
வந்து சேரும் சிறார்களை வரவேற்றபடி முன் விறாந் தைக்கு வந்தார் லெப்பை அவரது ஒதல் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் தாம் அவர்கள். சுமார் இருபத்தைந்து பிள்ளை களுக்கு அவர் ஓதல் சொல்லிக் கொடுக்கிறார்: அதன் மூலம் சுமார் சில நூறு ரூபாக்கள் அவருக்குக் கிடைக்கின்றன. இது ஒன்றுதான் அவருக்குக் கிடைக்கின்ற நிலையான
வருமானம்.
" "நல்லீர் இவ ஆஸ்மா " என்ற பிரார்த்தனை வபத் தோடு, வழமைபோல அன்றும் ஓதல் பள்ளி ஆரம்பமா கியது. நோன்பு காலமாதலால் கொஞ்ச நேரந்தான் ஓதல் நடப்பதுண்டு.
அன்று இராச்சாப்பாட்டைத் தொடர்ந்து பத்து மணிப் போல், மறக்காமல் தன் மூக்குக்கண்ணாடியையும் கையோடு எடுத்துக்கொண்டு ரம்ஸான் முதலாளி வீட்டுக்குப் புறப் பட்டார் அஸ்னா லெப்பை.
ஒரே நேரத்தில் கல்யாணம் கந்தூரிகளென்று இரண்டு மூன்று இடங்களில் கூப்பிட்டால், முதலில் எங்கே அழைத் தார்களோ அங்கே செல்வதுதான் லெப்பையின் வழக்கம்.
முதற் தடவையாக இன்றுதான் அதனை மாற்றியிருந்தார்.

Page 43
80 விடை பிழைத்த கணக்கு
சொற்ப லாபமாக இருத்தாலும், இந்தக் காலத்தைப் பொறுத்த மட்டில் அதையெல்லாம் பார்க்காதவனுக்கு என்றுமே தோல்விதானே?
ரம்ஸான் முதலாளி வீட்டு முன் கூடம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மின் விளக்குகளெல்லாம் பளிச்சிட்டன. களரியில் அழகான விரிப்புப் போடப்பட்டிருந்தது. பதினைந்து பேர் போல வட்டமாக அமர்ந்திருந்தார்கள். குரல் நிலையைச் சீர்படுத்துவதற்காக கற்கண்டும், மிளகுப் பொடியும் வைக்கப்பட்டிருந்தது. இடையிடையே இரவின் குளிரைச் சமநிலைப்படுத்துவதற்காக சூடான பால் கோப்பி யும் பரிமாறப்பட்டது.
ஸஹர் நெருங்கும் போது ஏராளமானவர்கள் வந்து சேர்ந்தார்கள். குறை சொல்ல முடியாத சாப்பாடுதான், வயதையும் உடல் நிலையையும் கூட மறந்துவிட்டார் அலனா லெப்பை,
அதிகாலை நான்கு மணிபோல் அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டு பள்ளிவாசலுக்கு வந்தார் லெப்பை, நோன்பு ஸஹர் செய்தால் நேரே பள்ளிவாசலுக்குத்தான் எல்லோருமே வந்து சேர்வார்களே. நாட்களிலென்றால் பெரும்பாலோர் சபஹாத் தொழுகையையும் கனவில்தான் நிறைவேற்றுவார்கள் போலும்.
ரம்ஸான் முதலாளி கொடுத்த சந்தோஷம் மடித்த நிலை வில் லெப்பையின் சட்டைப் பையுள் கனத்தது. ஆவல் பிரவகித்து வந்த போதிலும் அதைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளக் கிடைக்காதது பெரிய சங்கடமாயிருந்தது அவ
ருக்கு.
நல்ல சந்தர்ப்பம், ஒன்றுக்குப் போனபோது அங்கே யாரும் இருக்கவில்லை. குந்திருந்த படியே விரல்களை விட்டு மெல்லப் பார்த்தார். இரண்டு இருபது ரூபாத் தாள் கரும் ஒரு பத்து ரூபாவும். "அல்ண்ம்துலில்லா" என்று மனம் சொல்லிக்கொண்டது.

திக்குவல்லை கமால் 8.
சென்ற முறையும் இதே கணக்குத்தான், மாற்றமில்லை. இருந்தாலும் இந்தளவுக்கு வேறு யாரும் கொடுப்பது மில்லையே!
ஸ்பைஹ தொழுவிட்டு வீட்டுக்கு நடைபோடுகையில் வழித்துணையாக காதர்ஸாவும் சேர்ந்து கொண்டார். அவரும் ஓரளவு ஒதல்காரர்தான்.
** எனா லெப்ப ஒங்கள தமாமுட்டில காணல்ல?" காதர்ஸாதான் கேட்டார்.
நான் ரம்ஸான் மொதலாளி ஊட்டுக்குபோன. மொதல்ல கூப்பிட்ட எடத்துக்குத்தானே பொகோனும்?' மனதுக்கு மாறாகச்சொன்னார்.
ஒ.அது சரிதான் லெப்ப. என்னயென்டா தெளஃபீக் தொர ஊட்டில மட்டுந்தான் கூப்பிட்ட எல்லம் ஒரு பத்துப் பன்னென்டு பேருதான். ஆன ஞாயமான குடுமானம் ஆளுக்கு எழுவத்தஞ்சி குடுத்தாங்க. போன பைணமும் நான் போன இருவத்தஞ்சிதான் கெடச்ச" '
லெப்பைக்கு சொக் பட்டது போலிருந்தது. அவரது நபஸாத்தனம் அவரைப் பார்த்து ஏளனம் செய்தது,
அங்கயம் ஞாயமான கணக்குத்தான்" இதற்கு மேல் விபரம் ஒன்றும் சொல்லவில்லை லெப்பை அதற்கிடையில் அவரது வீடும் வந்து சேர்ந்துவிட்டதால் விடை பெற்றுக் கொண்டார்.
ஸ"பஹா தொழுதுவிட்டு வந்தால் அஸனா லெப்பைக்கு நிம்மதியானதொரு தூக்கம் போகும். ஆனால் அந்தத் தூக்கம் இன்று அவரது கண்களுக்கு அப்பால் நின்று விளை யாட்டுப் போட்டது.
"அம்பது ரூவா எழுவத்தஞ்சிரூவா, எழுவத்தஞ்சி ரூவா,அம்பது ரூவா'
1982-ஆகஸ்ட்
வி-6

Page 44
அந்நியம்
அவர் தொழுதுவிட்டு அரை மணி நேரத்துக்கு மேல் கழிந்தாகி விட்டது.
பகல் சாப்பிட்டுவிட்டு ஒதல் பள்ளிக்குப்போன மகள் இன்னும் வந்து சேரவில்லை. அவருக்கு பாங்கு சொல்வ தோடே ஒதல் கூடம் கலைந்துவிடுமே. அப்புறம் தொழு கைக்கு அரைமணிநேரத்தை ஒதுக்கினாலும் கூட.
எங்க இன்னேம் பொடியன் வரல்லியா...???
கோப்பிக் கோப்பையோடுவந்த மனைவியிடம் இப்படிக் கேட்டேன்.
சம்..இன்டக்கி மட்டுந்தானே நீங்க ஊட்டில நிக்கிய, அவனிப்ப கொஞ்சநாளா இப்பிடித்தான். ஒதப்போனா எடேல வந்தாலும் வருவான் இல்லாட்டீம் இல்ல. இனி மஃரிபுக்கித்தான் வாரோண்டும்’ ’-இதுவோர் தொடர்நடை முறையென்பதை அவள் சொல்லிவைத்தாள்.
அத இப்பிடிக் கவனிக்காமீந்தா..." நான் செல்லியத்தக் கேக்கியா, பன்னென்டு வருஷம் பிந்திட்டு. கட்டுமட்டுக்கடங்காத வயஸச்'
அதச்சொட்டீந்தான் செல்லிய, கொஞ்சம் கண்டிப்பா இரிக்கச் செல்லி. கொறஞ்சது போறவார எடத்தயாலும் தெரிஞ்சி வெக்கோனுமே'

திக்குவல்லை கமால் 88
* வேறெங்கயம் போற எங்கடூரில உள்ளதேயொரு கரக்கட""
**ம். அப்பிடியா-' என்றவாறு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியிறங்கினேன்.
எனக்கு ஒரேயொரு விடுமுறைநாள். ஊருக்கு வந்து சேர்ந்தால் வாராந்தச் செலவுகளைக் கவனித்தல்.நோய் நொடி விசாரித்தல்.கந்தூரி-கல்யாணமென்று விடுபட்ட இடங்களை குறைநிரப்பதல். இப்படி இருபத்திநான்கு மணிதேரமும் சுழன்றோடும். இத்தனைக்குள்ளும் புதிய பிரச்சினையாக உருவாகும் மகன்.
கடலலைகளில் ஆரவாரத்தோடு ஜிலுஜிலுவென்ற காற்று என்னை வரவேற்றது. ஒரு கணம் என்னையே மறந்து போய் விட்டேன்.
பரந்த குருத்துமணற் பரப்பு, கடலுக்கு சிரம் தாழ்த்திய தென்னஞ்சோலை திட்டான மேடுகள். தூரத்தில் தெரி யும் கருங்கற் தொடர்கள் எவ்வளவு அழகு. இந்த மண்ணி லேயே வாழ்ந்துகொண்டு இதையெல்லாம் அனுபவிக்காக் வாழ்க்கை.
"ஒ.நாலைந்து பேராகக் கூடிக்கூடிக் கதைப்போ ருக்குள் என் கண்கள் மகனைத்தான் தேடுகின்றன. இந்த நீள் கரையில் அங்கா இங்க. எங்கேதான் அலைவது.""
*எனத்தியன் இந்தப் பொக்கம்."-எனக்காக ஒச் உதவிக்குரல்.
**இல்ல மகனக் காணல்ல.அதுதான் தேடிய**
**இன்ன இந்தப் பொக்கத்தால நாலஞ்சி பொடியனிய னோட போறத்தக் கண்ட"
** அப்பிடியா."

Page 45
84 விடை பிழைத்த கணக்கு
அவர் இந்தப் பக்கமென்று கையால் காட்டிய பக்கமாக நடந்தேன். அவர் அப்படிக் காட்டியபோதே எனக்குள் ஒரு வித வெட்க உணர்ச்சி.
சுவடுகளை உள்வாங்கிக்கொள்ளும் மணற்கரை கால் களைத் தடுத்து என்னைத் தாமதப்படுத்தியது
பள்ளிப் பருவத்தில் நான்கூட.
சில நாட்களில் ஒதல் பள்ளிக்குப் போகும்போதே ஸ்ாரத்துக்குள் களிசானையும் அணிந்துகொண்டுபோய் அப்படியே கடற்கரைக்கு வந்து குளித்துவிட்டு நல்ல பிள்ளை போல் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்துவிடுவேன்.
இன்னும் சில நாட்களில் நண்டு பிடித்துக்கொண்டு போய் ஸ்கூலில் யாருக்கும் தெரியாமல் சகபிள்ளைகளின் asraJqué?6ib 6fau'-G56, அவர்கள் துடித்துக் கூப்பாடு போடும் போது பார்த்து ரசிப்பேன்.
மற்றும் சிலவேளைகளில் கூட்டாளிகளோடு சேர்ந்து சர்க்குகள்வைத்து மணல்வீடு கட்டி எதிர்பாராத பேரலை வந்து அடித்துக்கொண்டுபோகும்போது "ஐயோ" வென்று தலையில் கைவைப்போம்.
ஆனால் அதே வயதுள்ள இந்தக் காலத்துப் பிள்ளைகள்
எனது இலக்கை அடைந்துவிட்டேன். பெருநாட்களில் விஷேமாகவந்து மகிழ்ச்சிகொண்டாடும் * கல்கொட" பகுதி மதில்களால் சுற்றி வளைக்கப்பட்டு, அதனுள்ளிருந்து கூர்நுனிக் கூரைகள் துருத்தி நிற்க, அதன் அயல்கரை யெங்கும்.
சற்று அப்பால் தென்னை மரங்கள். தென்னை மரங் களை இணைத்துக் கட்டப்பட்டிருந்த பலகை அமர்வுகளில் கலைஞர்கள் அதற்கென்றே நாடிவந்து ரசிகர்கள். நான் agat aeráile idir arGoe? ...aacCGss. ••

திக்குவல்லை கமால் 85
** டேய், இங்க வாடா. இதா ஒனக்கு வேல" சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டான்தான். நடுங்கியபடி முன்னே வந்து நின்றால் மகன். அவனது சகபாடிகள் ஆளுக்கொரு பக்கமாக.
*" போடா ராஸ்கள். ஒதல் படிப்பில்லாம.ஆ. இதுப் பொறகு இந்தப் பொக்கத்துக்கு வந்தா கால ஒடப்பன்"
காதைத் திருகித் தள்ளினேன் அவனை. அவன் முன்னே போக, நான் பின்னால் நடந்து கொண்டிருந்தேன்.
அப்பகுதியில் சர்வ சுதந்திரமாக.ஆனந்தமாக. அரை யும் குறையுமாக.ஆண்களும் பென்களுமாக உல்லாசித்துக் கொண்டிருந்தனர் டூரிஸ்டுகள்.
1983-பெப்ரவரி

Page 46
சம்பளக்காரன்
ாகெேனாரு கொடைவள்ளல் என்றால் அதனை யாரும் நம்பமாட்டார்கள். அதேநேரத்தில் நானொரு அரசாங்க வழியன் என்பதையும், அதனோடு கூடவே சொல்லி வைத் தால் நிச்சயமாக நானொரு கொடைவள்ளல்தான் என்பதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.
பாருங்களேன்.இன்று ஒரேநாளில் சுமார் ஓராயிரம் ரூபாவை எத்தனை பேருக்குப் பகிர்ந்து கொடுத்தாயிற்று. இன்று மாத்திரமா? ஒவ்வொரு மாதமும் இது நடக்கும் சங்கதிதான்.
கடைக்காரன், பாண்காரன், அரிசிக்காரி இவர்கலெல் லாம் நாள் பார்த்து வரிசையாக வந்து நின்று விடுவார்களே. இனியென்ன.இழுத்திழுத்துக் கெரடுக்கத்தானே வேண் டும். ம்..சோறும், கறியும், உப்பும், புளியும் மாத்திரம் தானா வாழ்க்கை? இன்னும் எத்தனைத் தேவைகள், நிர்ப் பந்தங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியிலே எதிர் நீச்சல் போடுவதென்றால் அப்பாடா.
"எனா, எல்லம் பங்கிட்டு முடிஞ்சா? ம். இந்த மாஸம் தெரிந்தானே. அதுக்கு ரெடியா நில்லுங்கோ’ மனைவியின் குரல்கள்தான் இது. இயலாமையைச் சுட்டிக்காட்டி, இன்னும் எதையோ சொல்ல வழியைத் துப்பரவு செய்து கொண்டாள்.

திக்குவல்லை கமால் 87
" "அப்பிடியா, எல்லாத்துக்கும் ரெடியாகத்தான் நிக்கியன். ஜெஸிமா பிரச்சினகள்தான் மனிசன வாழத் தூண்டுது-" நான் எனது வழமையான பாணியிலேதான் அவளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினேன்.
'' is...... எத எடுத்தாலும் நீங்க இப்பிடித்தானே செல்லிய, பிரச்சின இல்லாமவாழத்தான் ஒவ்வொருத்தரும் யோசிக்கிய" அவள் விட்டுக் கொடுப்பவளாக இருக்க வில்லை. சும்மாவா; ஐந்து வருடம் என்னோடு வாழ்ந்த அனுபவம் அவளையம் டி டி ரீ நுளம்பாக மாற்றியிருக்காதச என்ன?
**சரி ஜெஸிமா நீங்க செல்ல வந்த இன்னம் செல்லல் வேன். கத குடுக்கத் தொடங்கினா இனி மத்த வேலகள்"
இப்படி நான் சொன்னதும் அவளுக்கு கோபம் வந்து விட்டது. வேலைக்கள்ளியென்று அவளைச் சுட்டுவதாக அதற்கவள் அர்த்தம் கற்பித்துக் கொண்டாள். இல்லாவிட் டால் அவளது சிவந்த முகம் இன்னும் சிவப்பேறவேண்டிய தில்லையே.
' ' . . . . . . நான் அரகொறயா வேல வெட்டிகள் வெச்சா நீங்களா செஞ்சிமுடிச்சுப் போற?"
** மறுபேணம் ஏன்ட கையாலதானே எல்லம் நடக்கோ ணும். எல்லாத்திலயும் கொற கண்டுபடிக்கியதுதான் எங்கட பழக்கம். சரி அதவுடுங்கொ. ரெண்டுமுனு கலியாண ஊடுகளிக்கி. கட்டாயம் பொகோணும். சும்மாம் பொகேலா, ஹதியாவும் குடுக்கோணும். அன்ன நேரத்தோட செல்லிட்ட**
ஜெஸிமா சொல்ல வேண்டியதைச் சொல்லி நிறுத்தி னாள். இதைக் கேட்டதும் எனக்குத் திடீரென்று தலைமேல் இன்னொரு சுமை ஏறிவிட்டது போலிருந்தது. சுமக்க இயலாச் சுமை தலைமேலிருக்கையில் அதற்கு மேல் இன் னுமா சுமை .

Page 47
88 விடை பிழைத்த கணக்கு
* கலியாணமியள் நடக்கோணும்தான். அதுக்கு நாங்க கடன்காரனாகோணுமா? காலம் ιδέσειb கஷ்டம். அதுக்கேத்த மொறக்கி ஒன்டயும் மாத்திக் கொள்ள மாட் டாங்க சிறிசாப்பாத்து வாங்க வேண்டியதான்'' பெருமூச்சு விட்டபடி இப்படிச் சொல்லிக் கொண்டே மனைவியின் முகத் தைப் பார்த்தேன்.
'b...... நீங்க ஒங்கட கலியாணத்தேம் ஆடம்பரமாத் தானே செஞ்ச. ஒரே நேரத்தில் எங்குளுக்கு கெடச்ச தெல்லாம் இப்ப ஒவ்வொன்டா குடுக்கவாகிக்கி. குடுக் காட்டி நீங்க அவங்களுக்குக் கடன்காரன்- குடுத்தா நீங்க கடக்காரருக்குக் கடன். இவ்வளவுதான் வித்தியாஷம்"
ஜெஸிமாவின் வார்த்தைகள் எதனையும் என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. சமுதாயத்தில் இடம்பெறும் எத்தனையோ விஷயங்கள் எனக்கு உடன்பாடில்லாதவை தான். அதற்காக அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்கவா முடியும். சமுதாயத்தில் ஓர் அங்கத்தவனாக இருக்கும் வரையில், அந்தச் சமுதாயத்தோடு ஒட்டுறவாகத்தானே செல்லவேண்டியிருக்கிறது.
"எங்கட நிஸ்தாக் சாச்சட மகன் மாப்புள போற. ஒசர வளவு உஸ்மான்ட மகளுக்கு பொற பதினேழில கலியாணம். இருவதாந்தெய்தி மாஸ்டர் மகளுக்குச் சம்பந்தம். மணிசரத் தேவயென்டுதானே கூப்பிடுகிய "
மனைவி பட்டியலையே சமர்பித்துவிட்டாள். இதில் ஒன்றுகூட சாக்குப் போக்குச் சொல்லித் தவிர்த்துக் கொள் னக்கூடியதல்ல. குறைந்தது ஆளுக்கு ஐம்பது ரூபா பெறு மதியான அன்பளிப்பாவது கொடுக்க வேண்டும். ஜெஸிமா அங்கிருந்து குசினிப் பக்கமாகச் சென்றதும் நான் அப்படியே சாய்ந்து கொண்டேன்,
நினைவுக் கழிகள் எனக்குள் கோலமிட்டன. நான் அரசாங்க சேவையில் இணைந்து பத்து வருடங்கள் பறந்தே

திக்குவல்லை கமால் 89
விட்டன. அப்போதெல்லாம் உத்தியோகக் காரனென்றால் எவ்வளவு மதிப்பு. மதிப்பு எப்படிப் போனாலும் கை நிறையச் சம்பளம் கிடைக்கவுழ்தான் செய்தது.
அன்று கிடைக்கிற சம்பளத்தைக்கொண்டு உம்மா வாப்பா இரு சகோதாரிகளோடு பிரச்சினையில்லாமல் ஐந்து பேர்கொண்ட குடும்பத்தையே நிர்வகிக்க முடிந்தது. மாதம் மாதம் கையில் ஏதோ எஞ்சவும்தான் செய்தது. மூத்த தங்கக்ைகு திருமணம் செய்து கொடுத்ததும், வீட்டை ஓரள வுக்காவது கட்டிக் கொண்டதும் இந்தச் சம்பளத்தால் தானே? ஆனால் இன்று.
கல்யாணம் செய்து மனைவியும் பிள்ளையுமான பிறகு, இந்த ஐந்து வருடங்களுக்குள்ளும் வரவரக் குடும்பச் செல வுக்கும் போதாததாக விலைவாசியேற்றம் தொந்தரவு கொடுக்கிறது. கையிலே வாங்கிறதும் பையிலே போடுவதும் காசுபோன இடம் தெரியாமல் விழிக்கிறதும் இப்போதெல் லாம் சர்வ சாதாரண சமாச்சாரமாய் போய்விட்டது.
வெளியே சைக்கிள் மணியோசை கேட்டு நான் எழுந்து பார்த்த போது தபால்காரன் நகர்ந்து கொண்டிருந்தான். அடுத்த வீட்டுச் சிறுவன் எனக்கொரு கடிதத்தைக் கொண்டு வந்து தந்தான். மனைவியும் பின்பக்கமிருந்து வந்துவிட் டாள், இப்படி ஆடை கோடைக்கு எங்கிருந்தாவது எனக் கொரு கடிதம் வரும்,
மாமியா அனுப்பீக்கிய?’’ கடிதம் எழுத எனக்கு வேறு யாருமில்லை என்பதைக்
குத்திக் காட்டிய ஜெஸீமா கேட்டாள். பதிலுக்கு தலையாட் டியபடியே கடிதத்தைப் பார்த்தேன்.
*எனத்தியன காயிதத்தப் பாத்துக்கொண்டு Gr சிய"-மீண்டும் மனைவி இப்படி என்னிடம் கேட்டாள். பதிலுக்குத் தலையாட்டியபடியே.

Page 48
90 விடை பிழைத்த கணக்கு
'இல்ல ஒரு தேவக்காக உம்மா எழுதீக்கி. அவசரம ஆயிரம் ரூபா தேவப்படுகியாம். எப்படிச்சரி அனுப்பச் செல்லிக்கிய. அதுதான் யோசிக்கிய-' என்ன செய்வ தென்றே தெரியாத நிலையில்தான் நான் மனைவியிடம் GlsonsärGsorer,
''b...... ஒங்கட உம்மக்கு இப்பிடிக் கேக்க தாரிக்கன். ஒங்களுக்கிட்டத்தானே கேக்கோணும். எப்பிடிச்சரி அனுப்பப் Ur(5 fiosr...... )
அவள் அழுத்தம் திருத்தமாகவே சொல்லித் தீர்த்துவிட் டாள். அதற்காக எனக்கு வழியிருந்தால்தானே. இப் போதே கடன்காரன். அதற்குள் இன்னும் யாரிடம் கடன் கேட்பது. அவளின் நகை நட்டுக்கூட ஒவ்வொரு தேவைக் காக வங்கியிலல்லவா தவங்கிடக்கின்றன.
*எனத்த செய்யவன்" - எனக்கு எதுவுமே ஒட வில்லை.
"ஆயிரம் ரூவத்தானே, எங்கட சொந்தக்காரருக் கெட்ட கேட்டா எப்பிடிம் தாரொண்டும்'- என் அபிப்ரா யத்தை அறியும் எதிர்பார்ப்போடு தன் கருத்தை முன் வைத்தாள்.
எனக்கு மூக்கு மூட்டக் கோபம் வந்து பொங்கியது. அவளை என்று கைப்பிடித்தேனோ அதன் பின்பு வேறு எவரையும் எதற்காகவும் எதிர்பார்க்கும் எண்ணத்தையே என் மனதிலிருந்து கிள்ளியெறிந்து விட்டவனல்லவா நான். அதற்குக் காரணமுமில்லாமலுமில்லை.
" "ஜெஸிமா எங்களுக்குக் கலியாணம் பேசின நேரத்தில சம்பளக் காரனுக்குப் பொண் குடுக்கியாண்டு கேட்டாங்க. அதுக்கு மேலயும் கேட்ட.ம்.இப்ப அப்பிடிப்பட்டவங் களுக்கிட்ட ஒதவி கேட்ட. சம்பளக்காரனுக்குப் பொண் குடுத்தா இப்பிடித்தானென்டு சிரிப்பாங்க' "
நான் கோபத்தோடு கொதித்த போது ஜெஸிமாவின் முகம் வெளிறிப் போய்விட்டது. சொல்லக்கூடாத வார்த்

திக்குவல்லை கமால் 9.
தைகளை வெளிக் கக்கிவிட்டு இவள் இப்படித்தான் எப் பொழுமே கலங்கி நிற்பாள்.
" என்ன மன்னிச்சுக்கோங்க... இந்த டைமில ஒங்கட உம்மாக்கு ஒதவி செய்ய எனக்கு வேறு வழிபடல்ல. அதால தான்" அவள் கம்மிய குரலில் தவறை ஏற்றுக்கோண்
T6
'ஒதவி செய்ய ஒரு வழியில்லயென்டு உம்மாக்கு கடிதம் போடப்போறன். ஆனா என்னக் கொறச்சி மதிச்சவங்களுக் கிட்ட மட்டும் கைநீட்டப் போகமாட்டான்'- நான் இறுதி யாகவும் உறுதியாகவும் சொன்னேன்.
'நீங்க சொல்லியது மெய்தான்" அவள் நிர்மலமான, மனதோடு சொன்னாள்.
1984-ஜான்

Page 49
மையத்து வீட்டுச் சோறு
"ரினோஸா மன்ஸிலு’க்கு முன்னால் அழகான காரொன்று வந்து நின்றது.
கார்ச் சந்தத்தைக் கேட்டு ரினோஸா உள்ளே இருந்து வகுவதற்கும், காரிலிருந்து இறங்கிய அன்வர் ஹாஜியாரின் மகள் சோற்றுக் கிடுகொன்றைத் தூக்கிக்கொண்டு வாச லண்டை வருவதற்கும் சரியாகவிருந்தது.
* இரிங்கொ. தேத்தண்ணி கொஞ்சம் குடிச்சிட்டு பொகேலும்" ரினோஸா சொன்னாள்.
'குடிச்ச மாதிரிதான். இன்னம் எத்தினயோ எடத் துக்குக் குடுக்கோணும். பெய்த்திட்டு வாரனே' அவர் அடக்கமாகக் கூறிவிட்டு வெளியேறினார்.
அவள் உள்ளே திரும்பிச் செல்லவில்லை. புறப்பட்ட கார் அதிக தூரம் நகரவுமில்லை. இஸ்மாயில் முதலாளி வீட்டுக்கு முன்னால் போய் நின்றது. அதையடுத்து காதர் மத்திச்சம் வீடு. இப்படியிப்படியே.
வழிநெடுக ஒரே வேடிக்கையாகவிருந்தது. காரில் வந்து கிடுகு பகிர்வதென்றால். அதை வெட்டியும் ஒட்டியும் கருத்துக்கள் பரிமாறப்படாமலிருக்குமா? ஏக்கப் பெருமூச் சோடும் ஏமாற்றத்தோடும் சில சிறார்களின் முகத்தோற்றம் சினோஸாவின் கண்களில் படத்தான் செய்தது.

திக்குவல்லை கமால் 9s
அவள் உள்ளே திரும்பியபோது “குப் பென்று கிடுகுச் சோற்றின் மணம் அவள் மூக்கைத் தொட்டது. நாக்கில் சுவையூற்றுக்கள் நிறப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மூடியிருந்த தேக்கிலையை மெல்ல உயர்த்திப் பார்த்தாள். இறைச்சித் துண்டுகள், பருப்பும் கிழங்கும், கழியா இத்தி யாதிகள்.
ஒரு கணம் இதைப்பார்த்து ரசித்தவள் மறுகணம் அதை அப்படியே தூக்கி ஒரு பக்கமாக மறைத்து வைத்தாள்.
அன்வர் ஹாஜியாரின் வாப்பா மெளத்தாகி இவ்வளவு விரைவாக நாற்பது நாட்கள் நகர்ந்து விட்டனவா? நாற்பதாம் கத்தத்துக்கு'ஊரெல்லாம் கூட்டி நூறு ஹைனுக்கு சாப்பாடென்று கதை அடிபட்டுக்கொண்டிருந்ததுதான்.
ரினோஸாவின் கணவனும் அன்வர் ஹாஜியாரும் வியாபாரத் தொடர்புடையவர்கள். வெள்ளவத்தையில் கடை வைத்துள்ளவர்கள்.
* நோனா'
செய்னம்புவின் குரலைக் கேட்டு தலைநிமிர்ந்தாள் áfGerr6ror.
"எனத்தியன் சொனங்கின?" அவளது முகத்தையும் சுவர் மணிக்கூட்டையும் மாறிமாறிப் பார்த்தபடியே கேட்டாள்.
* 'இல்ல நோனா. ஒங்களுக்கும் கிடுகுச்சோறு கொணந்து தந்தென்டு சென்ன. அப்ப சோறாக்கத் தேவில்லதானே. எதுக்கும் பாத்திட்டுப் பொகவென்டு வந்த. "" தன் சுணக்கத்தின் காரணத்தைச் சொன்னாள் செய்னம்பு.
* கிடுகு கெடச்சது மெய்தான். அந்த மையத்துச் சோத்த தாரன் தின்னப்போற. நீ சோத்த ஆக்கு" சினோஸா இப்படிச் சொன்னபோது செய்னம்புவின் எதிரி Aurital auri Gurbashi-g.

Page 50
94. - விடை பிழைத்த கணக்கு
எனக்கு இப்பிடியொரு கிகுே கெடச்சீந்தா. நானும் புள்ளயரூம் எவளவு சந்தோஷமா...' நினைத்தபடி அவள் குசுனிக்குள் போய்ப் புகுந்தாள்.
செய்னம்புவின் இருப்பிடம் ரினோஸா மன்ஸிலுக்கு அன்பக்கமாக இரண்டு வீடுகள் தள்ளி அமைந்திருந்தது. அவளும் இரண்டு பிள்ளைகளுந்தான் வீட்டில். கணவன்
Lயொன்றில் சமையல்காரன்
செய்னம்பு ஒவ்வொரு வேளையும் இங்கு வந்து சமையல் செய்து கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். அதற்காக அவளுக்கு நிலையான சம்பளமென்று ஒன்றுமில்லை. அப்படி எந்த ஒப்பந்தத்தின் கீழும் அவள் வேலை செய்யவுமில்லை. ஏதோ அவ்வப்போது கொடுப்பதை அவள் மறுப்பதுமில்லை.
அவள் அங்கிருந்து எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். அது அவளுக்கு எப்போதுமே மறுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வேளையும் அங்கு எஞ்சுகின்ற சோறுகறிகளை தன் குஞ்சு குழந்தைகளுக்காக அள்ளிக்கொண்டு போவதைத்தான்.
வழமை போல ஞஹருக்கு பாங்கு செல்லும் போது செய்னம்பு சமையல் வேலைகளை எப்படியோ பூர்த்தி செய்து விட்டாள்
உம்மா பசிக்குதும்மா"
விளையாடிக் களைத்தபடி பிள்ளைகள் இருவரும் வந்த போதுதான் ரினோஸ்ா டிவிக்கு முன்னாள் எழுந்தாள். அன்று ஏதோ கிரிக்கெட் மெச் ஒளிபரப்பாகியதுபோலும்.
ஆக்கி முடிஞ்சி புள்ளயள். சோறு போட்டுத் தரவா." எம்.கிடுகுச் சோறு தாங்கும்மா' "
இன்ளைகளின் கோரிக்கை புதிய கோணத்தில் அமைந் Ab • இப்படி வந்து கேட்பார்களென்றோ அதை அறிந்து நிருப்பார்கனென்றோ ரினோஸா எதிர்பார்க்க்வில்லை Asrde ·

திக்குவல்லை கமால் 95
**அதப்பாக்க நல்லசோறு இன்டக்கி ஊட்டில ஆக்கிக்கி’’
"வாண வாண கிடுகுச் சோறு தாங்கொ. எங்களுக்கு காரில கொணுவந்து தந்ததானே. கிடுகுச்சோறு தாங் கும்மா' இருவரும் உம்மாவை விட்டபாடில்லை.
பிள்ளைகளிடமிருந்து தப்புவது அவளுக்கு இலேசான விடயமாகப்படவில்லை. அதே நேரம் இப்படியான சோறு களை பிள்ளைகளுக்கு அவள் கனவில் கூட கொடுப்பது மில்லையே. A
"இங்க. இது மையத்தூட்டால கொணுவந்த சோறு. இதப் புள்ளயஸ் தின்டா மெளத்தாப் போறாம். வெளங் கினா. இங்க பாருங்கொ உம்மாம் தின்னல்ல"
கண்களை உருட்டிப் புரட்டி. நீட்டி இழுத்து. புதிய வியாக்கியானமொன்றை ரினோஸ்ா சொன்னபோது ଔଅନ୍ତି । வரும் மருண்டுபோய் விட்டனர்.
" எனக்கு வாணும்மா." போட்டி போட்டுக்கொண்டு இருவரும் பின்வாங்கி விட்டனர். *
னோஸாவிற்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இறந்தவர்
நினைவாக வழங்கப்படும் அன்னதானம், அதை விரும்பி உண்ணாதவர்களைத்தானா சென்றடைய வேண்டும்.
*செய்ன்ம்பு. செய்னம்பு." * நோனா. எனத்தியன்?"
ரினோஸாவின் அழைப்புக் குரலைக் கேட்டு உள்ளே
யிருந்து ஓடோடி வந்தாள் செய்னம்பு.
* 'சோறாக்கி முடிஞ்சா?"
"மேசக்கி போட்டு வெச்சிட்டன் நோனா?? அவள் கடமை உணர்வோடு சொன்னாள்.

Page 51
96 விடை பிழைத்த கணக்கு
அ. அப்ப கைமொகம் கழுவிக்கொண்டு ரெண்டு பேரும் சோறு தின்ன வாங்கொ'
உம்மா இப்படிச் சொன்னதும் இருவரும் கைகழுவிக் கொள்ள ஓடினார்கள். இதுதான் சந்தர்ப்பமென்று பார்த்து.
இந்தா செய்னம்பு அந்த மேசக்கடில சோத்துக் கிடுகிக்கி, அது அப்பிடியே எடுத்துக்கொண்டு சிக்கிரம் போ'
செய்னம்புவின் மனம் குளிர்ந்து போய்விட்டது. அது அவள் சற்றுமே எதிர்பார்க்காத அதிர்ஷ்டமில்லையா? இனி மகிழ்ச்சி இருக்காதா என்ன?
நல்ல நோனா'
சோற்றுக் கிடுகைத் தூக்கிக்கொண்டு செய்னம்பு பின்புற மாக இறங்கி நடந்தாள் -
*காரில கொணுவந்தவங்க எங்குளுக்கு தரல்லே உம்மா. இது எங்களயன் உம்மா?*
குழந்தைகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்குப் புரியவில்லை. அதற்கான பதிலை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கவுமில்லை,
எம். வாங்கொ வாங்கொ தின்னோம்"
வீட்டுக்குள் புகுந்ததும் மூவரும் எல்லாமே மறந்து போய் விட்டார்கள். வயிறு நிறையமுன்பே கண்கள் நிறைந்து விட்டன.
மையத்து வீட்டுச் சோறுதான். ஆனால் அவர்களுக்கோ பெரும் கொண்டாட்டமான விருந்து.
1985.மே

வேலி
பள்ளிக்கூடம் விட்டாயிற்று. புற்றீசல்போல் ஒன்றாக வெளிவந்த சிறார்களிலிருந்து பிரிந்து தனிவழியே நடந்து கொண்டிருந்தார்கள். நிரோஷவும் தளசீம்கானும்; இருவரும் ஐந்தாம் வகுப்புத்தான்.
**காரு வார. இங்கல் வாங்கொ" நஸின்கான் கவன மாக அவளைப் பாதையோரத்துக்கு இழுத்துக்கொண்டான்.
இருவருக்கும் ஒரே வயதுதான். இருந்தாலும், நலீம் கான் சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையல்லவா. நிரோஷா பள்ளிக்கூடத்துப் போகும்போதும், வரும்போதும் நளிம்கானை தனது பாதுகாவலனாகத்தான் கருதி வரு கிறாள்.
நிரோஷாவின் உம்மாவும் நளீம்கானின் வாப்பாவும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள். அவர்களது பெற்றோருக்கு அவர்கள் இருவருமே குழந்தைகளாதலால், ஒரே வீட்டின் இரண்டு பகுதிகளிலும்தான் இரு குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர். இதனால்தான் போலும் நிரோஷாவுக்கும் நளிம்கானுக்குமிடையே இவ்வளவு நெருக்கம்.
"நிரோஷாக்கு இஸ்கோத்து தரவா?*
வேண்டாமென்றா சொல்வாள். அவள் தலையாட்டி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
-7

Page 52
98 விடை பிழைத்த கணக்கு
அவன் தன் கழுத்திலே தொங்கிக்கொண்டிருந்த பேக்கைத் திறந்து புத்தகங்களை விலக்கி, நாலைந்து பிஸ் கட்டுகளை வெளியெடுத்தி, மூன்றை நிரோஷாவுக்கு கொடுத்துவிட்டு, அவனும் கடிக்கத் தொடங்கினான்.
அவன்தான் ஐந்தாம் வகுப்பு மொனிட்டர். பிஸ்கட் பகிர்வதும் அவன்தான். இதனால் எப்படியும் மேலதிகமாக நாலைந்து அவனுக்கு கிடைக்கவே செய்யும். அவற்றை நிரோஷாவுக்காக வீணாக்காமல் வைத்துக் கொள்வான். அவளுக்கும் நாளாந்தம் மூன்று பிஸ்கட் கிடைக்கத்தான் செய்யும். இருந்தாலும் நஸிம்கான் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வதில் கொள்ளை ஆசை.
"தண்ணி தரவா?"
சற்றுநின்று தன் தோளிலே தொங்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் போத்தலிலிருந்து தண்ணிர் வார்த்து நீட்டினாள் அவள். அவன் குனிந்து அதனைக் குடித்தான்.
வெள்ளை உடுப்புகள், பேக்குகள் சகிதம் களைத்தும்
போனவர்களாக இருவரும் வீட்டு எல்லையை அடையும் போது, அன்று அவர்களுக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது.
வீட்டிலே ஏதோ பரபரப்பான சூழ்நிலை. நிரோஷாவின் உம்மாவும் வாப்பாவும் நடு முற்றத்தில் தடிகளை நட்டு வேலி படைத்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே ସ୍ଥି ଓ பக்கத்தாரும் அகோரமாக வாக்குவாதப்பட்டார்கள்.
நிலைமையைச் சற்றே புரிந்துகொண்டதும் நிரோஷா வின் கண்மேட்டில் கண்ணிர் துளிகள் உருண்டு நின்றன. சோகம் கலந்ததொரு பார்வையை அவள்மீது வீசினான் நளிம்கான் இருவருக்கும் எதுவுமே கதைத்துக்கொள் இயலவில்லை. இருபக்கமாகவும் பிரிந்து சென்றார்கள்.
வெளியே மாத்திரமல்ல வீட்டினுள்ளும்கூட நடுப்பகுதி அவசர கோலத்தில் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு வீடாக அல்ல; இப்பொழுது இரு வீடுகளாக இருந்தன.

திக்குவல்லை கமால் 99
'உம்மா. இதெனத்தியனும்மா" வெள்ளைச் சட் டையை கழற்றி வைக்காமலேயே அவள் கேட்டாள்.
"இங்க வாடீ. இதுக்குப் பொறகு அந்தப் பொக்கத் துக்கு அடிவெக்கப்படாது. ஸ்கூலுக்சரி கடக்கிச்சரி அவ GairmrL- Guir Lurias. '
உம்மாவின் கடூரமான வார்த்தைகள் அவளது சின்ன இதயத்தை சுளிரென்று குத்தியது. அவளால் அன்று சாப் பாடுகூட உட்கொள்ள முடியவில்லை.
மாமாவுடனோ மாமியுடனோ அவளுக்கு கதைக்காம லிருந்துவிடலாம். ஆனால் நஸிம்கானோடு. இவ்வளவு ஒன்றாகவே கைவீசிவீசி பள்ளிக்கூடம் சென்ற அவர்கள், இனிமேல் தனித்தனியாக. நினைக்கும்போதே வேதனை அவளிதயத்தை நாராகக் கிழித்தது.
ܘܶܘ
அன்றும் நிரோஷா பள்ளிக்கூடம்போக வெளிக்கி டாள்; தனியாகத்தான். இப்படித் தனியே அவள் போய்வர ஆரம்பித்து இப்போதைக்கு ஒரு வருடத்துக்கும் மேலா கிறது.
சற்று தூரத்தில். ஆமாம் நளீம்கான் போய்க் கொண் டிருப்பதை அவள் பார்த்துவிட்டாள். அவசர அவசரமாகப் போய் அவனை நெருங்குவோமா என்ற ஆசை. மறுகணம் முன்னைய சில சம்பவங்களின் நினைவுக் கீறல். அவனோடு கதைத்ததற்காக உம்மா அவளது தொடையைக் கிள்ளி யெடுத்த வலி இன்னும் நெஞ்சிலிருந்து அகலவில்லை. -
ஒரு பெருமூச்சு அவளுக்குள்ளிருந்து பழைய நினைவு களையெல்லாம் கிளறிக்கொண்டு வெளியேறியது.
முன்பெல்லாம் சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட் களில் குளிக்கப் போவதே ஓர் ஆனந்தம். மாமாவின் அல்லது வாப்பாவின் கண்காணிப்பில் சென்றாலும் அவன்தான் அவ ளுக்கு வழிகாட்டி,

Page 53
100 விடை பிழைத்த கணக்கு
வயல்வெளிக்கூடாக சுமார் ஒரு மைலுக்கப்பால் கொட வன்ன" என்றொரு வெட்டு வாய்க்கால். அதில் குளிக்கவும் முடியும். லீவு நாட்களென்றால் பிள்ளைகளுக்கு அங்குதான் கொண்டாட்டம். வயலை அண்டிய பற்றைக் காடுகள். அங் கெல்லாம் கரம்பைக்காய். சிமிட்டிக்காய். இத்தியாதிகள்,
நளீம்கானின் கையில் எப்பொழுதும் கெட்டபொல்" இல்லாமல் போகாது. கல்வைத்து எதற்காவது அடித்தா னென்றால் அதைப் பொறுக்க அவள் ஓடுவாள். அந்தளவுக்கு அவனது இலக்கில் அவளுக்கு நம்பிக்கை.
குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கினாலோ அவன் பாடு கொண்டாட்டம்தான். சிலவேளை கரையில் நிற்கும் அவளை உள்ளே தள்ளிவிடுவான். அவள் தத்தளித்துச் சத்தமிடும்போது பாய்ந்து இழுத்து நிறுத்தி விடுவான்.
சாரத்தை மடித்துக்கட்டி பலூன்போல காற்றடித்துக் கொண்டு. காலடித்தடித்து நீந்தி விளையாடுவான். அவ ளுக்கோ பொழுது போவதே தெரியாது.
மாலை வேளைகளில் வீட்டுப் பின்புறமாகவுள்ள மலைச் சாரலில்தான் அவர்களது பொழுது கழியும். ஏதாவதொரு பெருமரம் அங்கு விழுந்துகிடக்கும். நாலைந்து சிறுவர்களை அமரவைத்துக் கொண்டு அவன் தன்னை டிரைவராகக் கற்பனை பண்ணிக்கொண்டு துள்ளித் துள்ளி உதைப்பான். மரம் மேலும் கீழும் ஆடியசையும். அதன் தாக்கத்துக்கு ஈடு பிடிக்க முடியாமல் நிரோஷா சிலவேளை வாய்விட்டுக் கத்து வாள். அப்போது அவனது ஆட்டம் இன்னுமின்னும் அதிக ரிக்கும். ஆனால் அவள் விழுந்துவிடப்பார்த்தாலோ கைதாங்கிக் கொள்ளவும் தவறமாட்டான்.
பருவ விடுமுறை காலங்களில் ‘குஞ்சூடு" அமைக்கும் சிஸன் வந்துவிடும். கம்பு. ஒலைகள் சிகாண்டு சின்னஞ்சிறு விட்டை அமைத்துக் கொள்வார்கள். அங்கே குடும்ப வாழ்வுக்கே ஒத்திகை நடக்கும். பெரும்பாலும் நிரோஷாவை

திக்குவல்லை கமால் 61.
யும் நஸிம்கானையும்தான் கணவனும் மனைவியுமாகத் தீர்மானித்து விளையாடுவார்கள்.
* டணங். டணங்...”*
பள்ளிக்கூட மணியொலித்தது. தன் நினைவலைகளை அறுத்துக்கொண்டு கேற் மூடுவதற்கிடையில் உள்ளே ஒடி னாள் நிரோஷா, ۔۔
ܘܶܘ ܘܶܘ
இலவச புத்தகங்களுக்கு மேலட்டை போட்டுக் கொண் டிருந்தாள் நிரோஷா. அவள் இப்பொழுது எட்டாம் ஆண்டு அல்லவா? முன்வாசலில் கேட்ட காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து தலைநிமிர்ந்தாள் அவள். அவளால் நம்பவே முடியவில்லை. அங்கே அவளது மாமா வந்துகொண்டிருந் தார். aw
ஆ. வாங்கொ. இரீங்கொ நானா' என்றாள் அவளது உம்மா.
• தங்கச்சீ. எப்பேக்கும் நாங்க கோவமா இருக் கேலுமா கோவதாவங்கள மறந்திரோணும். நாளக்கி மகன்ட சுன்னத்து செய்யப்போற. எல்லாரும் நேரத்தோட வந்து வேலவெட்டியள பாத்துக்கேட்டுச் செய்யோணும்" இது மாமாவின் அடக்கமான வார்த்தைகள்.
அவளது மாமா கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந் தார். உம்மா ஊற்றிக்கொடுத்த கோப்பியையும் குடித்து விட்டுத்தான் சென்றார் நிரோஷாவுக்கு இருப்புக் கொள்ள வில்லை.
'மாமா வந்திட்டுப் போற.ம். எந்த நாளும் நாங்க் கோவமா ஈக்கேலுமா. குடும்பத்துக்குள்ள சண்ட சச்சரவு வந்தத்துக்கு எந்த நாளும் நீடிக்கியல்ல. " மகளை நியாயப் படுத்தும் பாங்கில் அவள் சொன்னாள்.

Page 54
விடை பிழைத்த கணக்கு
அடுத்த நாள்.
நிரோஷா கண்விழிக்கும்போது முற்றத்தை இரு கூறிட் டிருந்த வேலியைக் காணவில்லை. அவளது உம்மா வீட்டில் கத்தரிக்காய் அரிந்து கொண்டிருந்தாள். வாப்பாவும் மாமாவும் முற்றத்தில் ஏதோ ஏற்பாட்டில் மூழ்கிப் பேT பிருந் தார்கள்.
அவளும் முற்றுமுழுதாக வேலைகளில் இறங்கிவிட்டாள். அடுத்தடுத்த வீடுகளிலிருந்து கதிரைகள் கொண்டு வருவதும் வீட்டைத் துப்பரவு செய்வதும், கடைக்கு ஒடியாடுவதுமாக
அவளது பொழுது கழிந்து கொண்டிருந்தது. பசுலைக்கு எல்லோருக்கும் அங்குதான் சாப்பாடும் கூட.
மாலை நான்கு மணிக்கெல்லாம் சுன்னத்துச் சடங்கிற் கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. வீடெல்லாம் ஒரே சனமும் ஆரவாமுமாக இருந்தது. வருவோர்க்கு தேநீர்-பல காரங்களை உள்ளேயிருந்து ஒழுங்கு பண்ணிக் கொடுத்தாள் நிரோஷா,
சுன்னத்து மாப்பிள்ளையை உடுப்பாட்டி மாலையிட்டு ஊர்வலமாகப் பள்ளி வாசலுக்கு அழைத்துச் சென்றபோது அவள் நன்கு கூர்ந்து பார்த்தாள். ஸ வாரி ஸ"ட்டோடு நளபீம்கான் மிகவும் அழகாய்த் தான் தோற்றமளித்தான்.
காணிக்கை போட்டுவிட்டு வந்ததைத் தொடர்ந்து முபாரக் லெப்பையின் தலைமையில் "அல்லாஹ் அல்லாஹ்" ஸிக்ரு முழக்கத்திற்குள். நனம்கானின் பிரலாபம் அமுங்கிப் போய். எல்லாம் நிறைவேறி முடிகையில் வெள்ளம் வடிவது போல். சனங்கள் சிறிது சிறிதாக.
முன்னறையில்தான் நவீம்கானுக்கு சுன்னத்துப் படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன சனத்தவர்கள், நளிம்கானின் கூட்டாளிமார்கள் வருவதும் போவதுமாக.
நிரோஷாவுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. கதவு நீக்கலுக்கிடையால் மெல்ல எட்டிப்பார்த்தான்.

திக்குவல்லை கமால் 1.03
அவன் மல்லார்ந்தபடி படுத்திருந்தான். முகத்தில் வேதனை கப்பியிருந்தது. வாப்பா பக்கத்தேயமர்ந்து காற்று விசிறிக்கொண்டிருந்தார். கூரைக்குக் குறுக்காக வெண் பிடவை கட்டி. அதிலிருந்து நூல் தொங்கவிட்டு. அதில் பூட்டுசி போட்டிணைத்த வெண்பிடவை மலையுச்சிபோல் குளிந்து. கழுத்து முதல் கால்வரை மறைத்துக் கொண் டிருந்தது. பாவம் என்று அவள் மனம் சொல்லிக்கொண்டது.
நிரோஷா. எனத்தியனிது. உள்ளுக்குப் பெய்த்து மச்சனப்பாரே. இப்பிடி ஒளிச்சொளிச்சிப் பாக்கோணுமா"
அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாமி இப்படிசி சொன்னதும் அவளுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. இருக்தாதா என்ன? சுன்னத்து அல்லவா? ஒரே ஒட்டமாக உள்ளே ஓடினாள் நிரோஷா,
1985 ஆகஸ்ட்

Page 55
புதிய பாடம்
இரண்டு ஆண்டுகளாகச் சுற்றிச் சுழன்று வந்த கடைக்கு அவன், இன்னும் இரண்டொரு நாட்களில் பிரியா விடை கொடுத்துவிடப் போகிறான். இப்படியொரு கடையில் வந்தமர்ந்து வேலை பார்க்க வேண்டுமென்று மக்பூல் முன்பு எப்பொழுதுமே நினைத்தது கிடையாது. இங்கு அவனின் பிரவேசமே தற்செயலாக நிகழ்ந்ததுதான்.
ஜி.ஸி.ர. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பின் ஏதாவது பொருத்தமானதொரு உத்தியோகமொன்றில் அமர்வதே அவனது நோக்கமாகவிருந்தது. ஆனால் அந்த நோக்கம் நினைவுடன் நிறைவேறக்கூடிய சூழ்நிலை இருக்க வில்லை. ஏதாவது தற்காலிகமாக வேலை பார்த்தால் வீட் டுக்குச் சுமையாக இருக்காதே என்று நினைத்தான். கணக்கு வேலைகளில் அவனுக்கு நல்ல அறிவு இருந்ததால் தான் அப்படி இலேசாக இல்யாஸ் ஹாஜியாரின் இரும்புக் கடையில் சேரும் வாய்ப்புக் கிட்டியது.
மக்பூல் வந்து சேர்ந்தபோது அக்கடையில் வேலை செய்யும் ஊழியர்களின் தொகை பத்தாக அதிகரித்தது. அந்தப் பகுதிக்கே அதுதான் பெரிய கடை. ஏகப்பட்ட வேலைகள். ஆனால் அவனுக்கோ பேனா பிடிக்கும் வேலை தான். அதற்காக அவன் அடுத்தவர்களிலிருந்து அப்புறப் பட்டு நிற்கவில்லை.

திக்குவல்லை கமால் 105
'மக்பூல் எங்கட மொதலாளி ஒங்களுக்கொரு சோதின வெப்பார். அதில பாஸானாத்தான் இங்க நிக்கேலும்." ஒருவன் இப்படிச் சொல்லி வாயெடுப்பதற்கு முன்பே.
"இங்க வேலக்கி வாரவங்களெல்லாம் சல்லிப் பொட்டிய தாக்கிக்கொணுபொக வாரெண்டுதான் எங்கட மொதலாளி நெனக்கிய" அடுத்தவன் இப்படிச் சொல்லி அர்த்தத் தோடு சிரித்தான்.
மக்பூலுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால் ஒரு உண்மை மாத்திரம் அவனுக்குத்தெளிவாகியது. வேறென்ன? பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்பதுதான்.
'ரெண்டு பேரும் கொஞ்சம் வெளங்கச் சென்னா' நல்லது" அதனை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவர்களிடமே கேட்டான்.
**ம். இன்னம் ரெணுமூணு நாளில எல்லம் வெளங் கும். அப்ப எங்கள நெனவு வரும்'" இதற்கு மேல் விளக்கம் கொடுக்க அவர்களுக்கு அவகாசமிருக்கவில்லை. கடமை அழைத்துக் கொண்டிருந்தது.
பில் எழுதுவது, அவற்றைப் பிரத்தியேகப் புத்தகத்தில் பதிவது, மொத்த விற்று வரவைக் கணக்கிடுவது இப்படி யான வேலைகளையே அவன் ஆரம்ப வாரத்தில் தினந் தினம் செய்து வந்தான், அவன் வர்த்தகப் பிரிவில் படித்ததன் காரணமாக இந்த வேலைகளைச் செய்வது அவனுக்குச் சிரமமாகப் படவில்லை. மிக அவசர அவசரமாக இக்காரியங் களைச் செய்வது முதலாளியின் கவனத்தை ஈர்க்காம லில்லை. அவருடைய அனுபவத்தில் கணக்குப்பிள்ளை" என்ற பெயரோடு வேலைக்கமர்த்தவர்களெல்லாம் பள்ளிப் படிப்புப் பேற்றவர்களல்ல; பழக்கப் பயிற்சி பெற்றவர்கள் தான்.

Page 56
106 விடை பிழைத்த கணக்கு
அன்றோருநாள். முதலாளி முகமலர்ச்சியோடு மக் பூலை என்றுமில்லாதவாறு அழைத்தார்.
* மஃரிபு தொழுதிட்டு நேரமீக்கிதானே. போன வருஷம் எங்கட இப்ராகீம் கணக்கப்புள்ளதான் கடக்கணக் கெல்லாம் பதிஞ்ச எதுக்கும் எடுத்துப் பாத்துக்கொண்டர் நல்லமெனா..?' என்று வாயெல்லாம் பல்லாக் கேட்டார்.
* சரி மொதலாளி. நான் செக் பண்ணிப் பாக்கியன்' முதலாளி முதல் தடவையாக சிரத்தையோடு விடுத்த வேண்டு கோள். அவரின் நல்லபிப்பிராயத்தை வென்றுகொள்ள வேண்டுமல்லவா? -
* மிச்சம் நல்லம். இங்க மேசக்கு மேல வெக்கியன் மூணு பொஸ்த்தகமீக்கி" என்றவாறு கபேட்டிலிருந்து எடுத்து அங்கே வைத்தார்.
சக ஊழியர்கள் வழமை போல் வெளியே சென்றுவிட் டார்கள். டவுன் பள்ளியில் இஷாத் தொழுத பின்புதான் மீண்டும் அவர்கள் வந்து சேர்வார்கள். மக்பூலுக்கு மாத்திரம் அன்று அவர்களோடு உலாச் செல்ல முடியவில்லை. அவன் வேறொரு பொறுப்பைச் சுமந்துவிட்டானே.
சூடாக ஒரு கப் தேநீர் அருந்திவிட்டுக் கணக்குப் புத்தகங்களும் கையுமாக அமர்ந்தான் அவன். கணக்கு களைச் சரிபார்த்தபடி படபடென்று தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்த மக்பூல் ஒரு கணம் தொடர்பு அற்றவனாக ஸ்தம்பித்து நின்றான். அந்தக் கணக்குப் புத்தகத்துக் குள்ளே. நூறு ரூபாய்த் தாளொன்று. அவனைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.
தற்செயலாக எப்போதோ இதற்குள் சிக்கிக் கொண் டதோ அல்லது என்னைச் சோதிப்பதற்காக முதலாளி வைத்துத் தந்துவிட்டாரோ..? இப்படி இரு வேறாக அவனது சிந்தனை குழம்பியது. அதேவேளை அன்று சக

திக்குவல்லை கமால் 107
நண்பர்கள் கூறிய வார்த்தைகள் மீண்டும் அவனது காது களுக்குள் எதிரொலிப்பது போலிருந்தது*
*"மக்பூல் எங்கட மொதலாளி ஓங்களுக்கொரு சோதின வெப்பார். அதில பாஸானாத்தான் இங்க நிக்கேலும் வாரவங்கெல்லாம் சல்லிப் பொட்டிய தூக்கிக்கொணுபொக வாரெண்டுதான் எங்கட மொதலாளி தெனக்கிய"
இந்த வார்த்தைகளில் தொனிக்கின்ற உண்மை இப் பொழுதுதான் அவனுக்கு வெளிச்சமாகியது. அதனால் அந்தப் பணத்தாள் எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில் வைத்துவிட்டு தனது கடமையைச் செய்து முடித்தான்.
உண்மையாகவே முதலாளி கணக்குகளைச் சரிபார்க்கக் கொடுத்தாரோ அல்லது அவனைப் பரீட்சிக்கத்தான் கொடுத்தாரோ என்பதைப் பற்றியெல்லாம் மக்பூல் அளவுக் கதிகம் யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ளவில்லை.
இப்படியான ஆரம்பத்தோடு அவன் இரண்டு வருடங் களை அங்கே கடத்தியாகிவிட்டான். இந்த இரண்டு வருடத் திலும் அவள் நம்பிக்கையும் நாணயமுமிக்கவனாகத்தான் கடமையாற்றி வந்துள்ளான்.
சில மாதங்களுக்கு முன் வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பதற் கான பரீட்சைக்குத் தோற்றியிருந்த அவன் அதில் தெரிவு செய்யப்பட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
சம். எங்களுக்குப் பொறகு வந்து எங்களுக்கு முந்தி பொகப் போற. அதுவும் பெங்கில வேல. மிச்சம் நல்லம்.
எங்களேம் மறக்க வாண. மொதலாளிக்கென்டா ஒங்கட மேல நல்ல புடி கைதெறயச் சந்தோஷம் தந்துதான் அனுப்பியொன்டும்." மக்பூலின் நண்பர்கள் கவலையும்
கிண்டலுமாக தங்கள் கருத்தை முன்வைத்தனர்.

Page 57
108 விடை பிழைத்த கணக்கு
**இங்க வந்ததில ஒங்கட கூட்டாளித்தனம் கெடச்சது மட்டுந்தான் மிச்சம்" தன் உண்மையான மனோநிலையை அவன் பிரஸ்தாபித்தான்.
'மக்பூல் இங்க வா புள்ள" முதலாளி தன் தடித்த குரலால் அவனை அழைத்தார். தனக்கு விடுதலை கிடைத்து விட்டது போன்ற உணர்ச்சியோடு அவன் அவரருகே சென்றான்.
**ம். நான் வாணான்டா நீங்க கேக்கப் போறா, ஒங்கட முன்னேற்றத்துக்குத்தானே போற. எங்கீந்தாலும் நல்லா இரிங்கொ. இதில ஒங்கட பாக்கிச்சல்லி மூவாயிரத்து முன்னூறு ரூவா ஈக்கி எண்ணிப்பாத்தெடுங்கொ" ஏதோ சும்மா கொடுப்பம் போன்ற பாவனையோடு நீட்டினார்.
சரியாத்தானே எண்ணிக்கும் மொதலாளி' என்ற வாறு தந்ததைப் பெற்றுக்கொண்டு தனதறைக்குச் சென் றான் மக்பூல். அறுபது வருடங்களாகப் பணத் தாள்களை எண்ணிப் பழகிய முதலாளி தவறவிடுவாரா என்ன?
பணத்தை எண்ணிப் பார்த்த போது உண்மையிலேயே முதலாளி தவறவிட்டிருப்பது போலத்தான் தெரிந்தது. இரண்டு மூன்று முறை எண்ணியாகிவிட்டது அதிலே நூறு குபாய்த்தாள்கள் முப்பத்தி நான்கு இருந்தன. முப்பத்தி மூன்றல்லவா அவரது கணக்குப்படி இருக்க வேண்டும்?
*" என்னடா இன்னமே எண்ணி முடியல்லயா? மிச்சமா தந்திட்டார் போலீக்கி" பகிடியாய்ச் சொன்னபடியே வந்தான் நண்பனொருவன்.
" "மெங்தான் மசான் நூறு ரூவாக் கூட இரிக்கி, தவிறித் தந்திட்டார் போலீக்கி" மக்பூல் சொன்னான்.
கலகலவென்று சிரித்தான் அவன்.
'கடசி டைலேம் இப்பிடிச் சோதிக்கோணுமா? நாங்க எவ்வளவு நம்பிக்கயோட சம்பாரிச்சிக் குடுக்கிய. நாங்க

திக்குவல்லை கமால் 1的
படுகிய கஷ்டத்துக்கேத்த சம்பளத்தத் தந்திட்டாவது எங்கள சந்தேகிச்சா மனசிக்கி ஆறுதல்." அவன் அப்போது மிகுந்த உணர்ச்சி வசத்தோடுதான் பேசினான் என்பதை அவனது முகம் பிரதிபலித்தது.
மக்பூல் நேரத்தைப் பார்த்தான். இரவு எட்டு மணி. படபடென்று தனது பேக்கைத் தயார்படுத்தித் தோளில் போட்டுக்கொண்டான்.
எனத்தியன் இந்த ராவேல பொகப் போற. வெளணக்கே பொகேலுமேன்'" நண்பர்கள் இடைமறித்தார்
卤Gs。
*அப்பிடித்தான் தேனச்சிக் கொண்டீந்த. ஆனா இப்பவே போறதுதான் நல்லம் போலிக்கி’’ சற்றே வித்தி F6 மனோநிலை அவனது வார்த்தைகளில் தெறித்தது.
சரி பெய்த்திட்டு வாரன்" பதிலை எதிர்பார்த்து நிற்காமல் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு முன்னே வந்தான்.
மொதலாளி வெளணக்கி பொகத்தான் ஈந்த, கணக்கு முடிச்ச பொறகு நிண்டாம். சந்தேகப்பட இடமீக்கி. இந்தாங்க நீங்க தந்த பாக்கிச் சல்லீல இருநூறு ரூவாக் கூட ஈந்த " என்றவாறு மேசையில் இரண்டு தாள்களைப் போட்டு 6C பதிலைக்கூட எதிர்பாராமல் பாதைக்கிறங்கி விட்டான்"
ஏதோ அவனது தேர்மையைக் கடைசி நேரத்திலும் உரைத்துப் பார்க்க ஒரு துர்து ரூபாய்த்தாளை மேலதிகமாக வைத்தார் போலும். அவனோ அவரை நையாண்டி பண்ணு மாப்போல் இரண்டு தாள்கனை எறிந்துவிட்டுப் போய் af "LITT.

Page 58
110 விடை பிழைத்த கணக்கு
ஏதோ சொல்ல வாயெடுத்தும் முடியாமல் போன நிலை யில் முதலாளி கடைச் சிப்பந்திகளைப் பார்க்க, அவர்கள் CP25°rsfsouů urířis. எதையுமே சாட்டை செய்யாமல் மக்பூல் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தான்.
தான் வைத்த பரீட்சையில் தானே தோல்வியடைந்து, புதியதொரு பாடத்தையும் படித்தவராக வேர்வையில் தோய்ந்தபடி இருக்கையில் அமர்ந்தார் முதலாளி.
1986-LDirfi

ஒரு கண் இரண்டு பார்வைகள்
பார்வையாளர்களுக்குரிய நேரம் முடிவடைவதை உணர்த்த மணியொலித்தது. ஒவ்வொரு கட்டிலையும் சூழ்ந்து கொண்டிருந்தவர்கள் படிப்படியாக விடைபெற்று வெளியேறிக் கொண்டிருந்தார்கள்,
''நரனும் போறன், நாளக்கி வெளனேம வாரன்" என்னுடைய கைகளைத் தடவியவாறு சொன்ன கணவனின் கைகளை நான் இறுகப் பிடித்துக் கொண்டேன்.
உண்மையிலேயே என்னை விட்டுவிட்டுப் போக அவருக்கு மனமில்லை. இருந்தாலும் என்ன செய்வது? விதிமுறையென்று ஒன்றிருக்கிறதல்லவா. அதற்குக் கட்டுப் படத்தானே வேண்டும்.
**இங்க பாருங்கொ எல்லாரும் பெய்த்த. நான் மட்டுந் தான் மிச்சம். "" கைகளை விடுவித்துக்கொண்டே அவர் GFTsirs Tiri.
என் கண்கள் கலங்கிவிட்டன. சொற்ப நேரப் பிரிவாக இருந்தாலும் அதை என்னால் தாங்கவே முடியவில்லை. அது பழக்கமும் அல்லவே,
'ஆ. ஆ. மணியடிச்சி எவளவு நேரமன், போங்கொ
கடுகடுத்த முகத்தோடு அந்தக் கறுத்த தடித்த நேர்ஸ் சத்த மிட்டாள் அவளது பாஷையில்.

Page 59
112 விடை பிழைத்த கணக்கு
சரி. வாறன்" என்னுடைய முகத்தைப் பார்க்காம லேயே சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தார் அவர். மறையும் வரை என் கண்கள் அகலவேயில்லை.
அந்தக் கறுத்த தடித்த நேர்ஸின் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. அவள் எப்பொழுதுமே இப்படித்தான். இந்த மூன்று நாட்களிலும் அவள் முகத்தில் மலர்ச்சியை நான் காணவேயில்லை. அது அவளது இயல்பாக இருந்தால் அதைப்பற்றி நான் இவ்வளவு தூரம் கவலைப்படமாட்டேன். ஆனால்.
தலையணையைச் சற்று உயர்த்தி, கொஞ்சம் உயர்ந்து படுத்தேன். அங்குமிங்குமாகப் புரள முடியாதபடி வயிறு பாரமாக இருந்தது. குழந்தை கிடைப்பதாகச் சொன்ன நாளும் கடந்துவிட்ட பயம் இன்னொரு பக்கம்.
இன்னம் ஒங்களுக்கு நோவு வரல்லியா?" பக்கத்துக் கட்டில் சிரியாவதி அனுதாபத்தோடு கேட்டான்.
அதுதான் பயமாக ஈக்கி. இன்டக்கி ஆறு வரக்கும் பாக்கியதா டொக்டர் நோனா சென்ன" திக்கித் தடுக்கி நான் சொன்னதைப் புரிந்து கொண்டதை அவளது முகம் பிரதிபலித்தது.
நீங்க வந்தது நல்லம். பயப்புடத் தேவில்ல." என்னை மேலும் ஆறுதல் படுத்தினாள் அவள்.
தலைப்பிரசவம் என்பதால் எனக்கு உண்மையிலேயே பயம்தான். அதைவிட அரசாங்க ஆஸ்பத்திரியில், பழக்க மில்லாத சூழ்நிலையில், தனிமையில் வந்து சேர்ந்திருப்பது இன்னும் அதிக பயம். போதாக்குறைக்கு சிங்களம்கூட மூங்காகக் கதைக்க முடியாத சங்கடம். பிரைவட் வாடுக ளென்றரல் வீடு போல என்று சொல்வார்கள். ஆனால் அதைக் கற்பனை செய்யவே முடியாத .
பாவம் என் கணவர் என்னதான் செய்வார். . அவரது சக்திக்கு ம்ேல் எந்த விஷயத்திலும் அவருக்குத் தொல்லை கொடுக்க நான் விரும்புவதில்லை.

திக்குவல்லை கமால் l
களுக்கென்ற சிரிப்பொலி என் கவனத்தைக் கவர்கிறது. அங்கே மூலைக் கட்டிலைச் சூழ்ந்து நாலைந்து பேர் நிற்கின் றனர். அந்தப் பெண்ணுக்கு நேற்று இரவுதான் குழந்தை கிடைத்தது. அவளது இனசனத்தவர் யார் யாரோ வந்திருக் கிறார்கள் போலும். அவர்களோடு சேர்ந்து அந்தக் கறுத்த தடித்த நேர்ஸ் மல்லவா சிரித்துக் கதைக்கிறாள். எவ்வளவு கலகலப்பாகச் சிரிக்க முடிகிறது அவளால். என் கணவர் சற்று நேரம் தாமதித்த போது சட்டம் பேசியவளா இப்படி.
"'உம். மோவ்ஷ்; ”* மெல்லிய வலியொன்று சுவீரென்று மேலே மேலே பரவியது. எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் பயம். விட்டுவிட்டு வலியெடுக்கம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் ஒவ்வொருபடி உயர்த்து. W
"ஏன்டும்மோவ் எனக்கேவா"
O e OO DS) O)
இப்பொழுது நான் எங்கே இருக்கிறேன். "லேபல் ரூம்" என்பது இதுதானா. எனக்குக் குழந்தை கிடைக்கப் போகிறது போல.
டொக்டர் நோனா ஏதோ ஒரு பட்டியை மேல்க்கையில் சுற்றி. அந்த மெஷினில் எதையோ அவதானிப்பது போறுக்க முடியாத வலிக்கு மத்தியிலும் எனக்குத் தெரிகிறது எத்தனையோ நேர்ஸாகள் என்னைச் சூழ்ந்து.
டொக்டர் நோனா சென்றதும் நான் அங்குமிங்குமாகப் பார்க்கிறேன். பதினெட்டுப் பேர் கொண்ட வார்ட்டில் நின்ற நான் இங்கு தன்னந்தனியாக, எல்லா நேர்ஸகேளும் அங்கு
மிங்குமாக நகர்ந்துவிட, ஒரேயொரு நேர்ஸ் மாத் வாஷிங் பேஸனுக்குப் பக்கத்தில் ஏதோ செய்துடி:
"ஏன். டும்மோ எனக்கேலா"
al-8

Page 60
114 விடை பிழைத்த கணக்கு
வயிற்றைப் பிடுங்குவது போன்ற பொறுக்க முடியாத வவி. சத்தம் போடுவதைத் தவிர வேறு எதையுமே செய்ய முடியாத இக்கட்டான கட்டம். அதற்குள்ளும் என் கணவனின் முகம் தெரிகிறது. வழக்கமாக அவர் வருகின்ற நேரம். அந்நேரமாகப் பார்த்து என்னை இதற்குள் கொண்டு வந்து தள்ளி விட்டார்களே.
* ஏன். டும்மோ." 'சத்தம் போடாம இரி. ஒங்களுக்குத்தானே பிரை வெட் வாடுகள் வெச்சிருக்கி' என்னுடைய சத்தத்தை மீறிக்கொண்டு அந்த நேர்ஸ் சத்தமிட்டாள்.
அவள் முகத்தை இன்றுதான் நான் இங்கு கண்டேன். அவளுக்குக்கூட என்மீது வெறுப்பா? இதென்ன இது இவர் கள் எல்லோருமே இப்படித்தானா? அதைவிட அவள் சொன்ன வார்த்தைகள், பிரைவெட் வார்டுகள் இருப்பது எங்களுக்காகத்தானாம்.
சகிக்க முடியாத வேதனையின் போது அழுவதும் ஒலமிடுவதும் தானே நோயாளர்களின் ஒரே உரிமை. இதற்குக் கூடவா அனுமதியில்லை? அல்லாஹ்நே இதைவிட மெளத்தாகிப் போனால்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு டொக்டர் நோனாவும், நேர்ஸ்"களுமாக மீண்டும் வந்து பரிசோதித்தார்கள். டொக்டர் நோனாவின் முகத்திலே மலர்ச்சி, எனது உள் பகுதியெங்கும் ஈரம் படர்வது போல. "சரிசரி, இனிப் பயப்புட வான"' எவ்ளவு இதமான வார்த்தைகள். இந்த டொக்டர் நோனாவைப் போலவே இங்குள்ள எல்லோருமிருந்தால். எனது கால்களை மடக்கிப் பிடிக்கிறார்கள். புதுவித மான உந்துதல் என் வயிற்றிலே கிளர்கிறது. வேதனையும் ஒருவித சுகமும் இரண்டறக் கலந்தநிலை. ஒரு கண நேர மயக்கம் போல.

திக்குவல்லை கமால் 115
கீச்" யென்று என் காதுகளுக்குள் ஒலிக்கிறது ஒரு குழந் தையின் அழுகை,
பரபரப்போடு கணவன் வருவது எனக்குத் தெரிந்தது, நேற்று மாலையில் வந்தபோது என்னைக் காணாமல் திரும்பிப் போனவர் இப்படித்தானே வருவார். ஆனால் அத் தப் பரபரப்பு என்னருகே வந்ததும் பறந்து போய் முகத்திலே ஆனந்தப் பரவுவதை நான் கவனிக்கத் தவறவில்லை.
எனக்குப் பக்கத்தே அவரது ஆண் குழந்தை நிம்மதி யாக உறங்கிக் கொண்டிருந்தது.
அசையோடு குழந்தையைத் தூக்கியேடுத்த அவர் அதற் குரிய கடமையான பாங்கு - இகாமத்துச் சொல்லி வாயில் இனிப்பு வைத்து பரவசத்தோடு குழந்தையைப் பார்த்தார். கூடவே உம்மாவும் வந்து சேர்ந்துவிட்டார்.
**அல்லா லேசாக்கி வெச்சிட்டான்" நான் சொன்னேன்.
**டொக்டர் நோனா எனத்தியன் சென்ன,' " விசாரிக்கிறார்.
"எல்லாம் நல்லா முடிஞ்சாம். புள்ளேம் சோகமளில் இருக்கியாம். இன்டக்கி வெளணக்கி பொகேலுமென்ட. நீங்கதான் சொணங்கி வந்தீக்கிய"
9 Shuff
”“<鹦······ அப்ப ரெடியாகுங்கொ நான் டிக்கட் வெட்டிக் கொண்டு காரொன்டும் பேசீட்டு வாரம்' " அவருக்குள் புது, உசார் சுடர்விட்டது.
உம்மா என்னுடைய சாமான்களையெல்லாம் ஒவ்வொன் றாக பேக்கிலே அடுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே நானும் ஓரளவு தயாராகி நின்றமை லேசாகிப் போய் விட்டது.
நான்கு நாள் அனுபவப் பழக்கங்கள் அந்த ஏழாம் நம்பர் வாட்டில் எஞ்சி நின்ற எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். ஒரு சிறைக்கூடத்திலிருந்து விடைபெறுவது போன்ற பெருமிதம் எனக்குள்.

Page 61
116 விடை பிழைத்த கணக்கு
"சரிபோம்." என்றவாறு கையிலே சில தாள்களோடு வந்தார் கணவன். ܗܝ
"நேர்ஸ்மார்களோட சென்னா?? உம் வழக்க அடிப் படையில் கேட்டாள்.
"ஒ" என்று வாயாலும் *செல்லலவேண்டிய ஆக்கள தான்'-என்று மனதாலும் சொன்னபடி நான்மெதுவாக நடந்தேன்.
வீட்டுக்குப் போவதற்காகக் கூலிக் காரொன்றை ஏற் பாடு செய்திருந்தார் கணவர். இந்தக் கொஞ்ச நாட்களாக விடும் வாடுமாகத் திரிகின்றவர் எப்படித்தான் இந்த மேலதிக செலவுகளைச் சமாளிக்கிறாரோ என்று இன்னும் சில நாட் களின் பின்புதான் தெரியவரும். い × 'ரெண்டு மணித்தியாலமா இந்த கேட்டுக் கிட்ட காத்துக் கொண்டீந்த" கார் திரும்பும் போது அவர் வெறுப் போடு சொன்னார்.
* "டிக்கட் வெட்டியென்டா எந்த டையிலேம் வரேலும் தானே' அப்படி இடைப்பட்ட நேரங்களில் எத்தனையோ பேர் வந்து அழைத்துச் செல்லும் அனுபவத்தோடு நாள் சொன்னேன். -
"அதச் செல்லிம் கேட்டில நிக்கியவன் உடல்லேன், ஆனா எத்தனையோ பேர் ஊடுவாசல் மாதிரி வாறாங்க போறாங்க. ம்.இவனியல் எங்கள மிச்சம் மோகமாத் தான் நடத்தியானியள்'"
அவர் அப்படிச் சொன்னபோது உள்ளே இந்தச் சில நாட்களாக நான் அனுபவித்த மன வேதனைகள் எனக்குள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவு வந்த போது கண்கள் கலங் குவதைத் தவிர்க்க முடியவில்லை.
"இங்க.இதுக்குப் பொறகு இந்த வாட்டுக்கு வாரத்தப் பாக்க புள்ளப் பொறாமிக்கியது நல்லம்.'"
நான் எதைக் சொல்லுகிறேன் என்று நிச்சயம் அவருக்கு விளங்கித்தானிருக்கும். கார் விரைந்துகொண்டிருந்தது.
1988-ᎦᎥhrᏍ-ᏣuᏍ

மகனுக்கு ஒரு வண்டி
பஸ் ஓடிக்கொண்டிருந்தது. முற்றத்தில் மகனின் பஸ் தான். அவனைச் சூழ்ந்து நாளைந்து சின்னதுகள். அக்ரம், ஃபர்வின், ரம்ஸியா சியானா இப்படியிப்படி. அதனை ஒட்டிச் செல்லக் கூடிய வாய்ப்பு தங்களுக்கு எப் போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும்.
"எங்கட பெரியப்பா கொணுவந்த பஸ்"
மகன் சகபாடிகளோடு பெருமையோடு சொல்கிறான். ஆறேழு மாதங்கள் கடந்துவிட்ட போதும் அவன் இன்னும் தான் அதனை மறந்துவிடவில்லை என்பதை நினைக்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது.
இப்பொழுது ஒவ்வொருவராக மாறிமாறி பஸ்ஸை உருட்டிக்கொண்டிருந்தார்கள்.
இவற்றையெல்லாம் அவதானித்தபடி நான் கட்டிலில் சாய்ந்த வண்ணம் இருந்தேன்.
அவனுக்கு அப்பொழுது மூன்று வயது நெருங்கிக் கொண்டிருந்தது. விளையாட்டுப் பருவம். விளையாட்டுப் பொருள்கள் மீது அமோக ஆர்வம், எங்காவது ஒன்றைக் கண்டுவிட்டால் போதும் உடனடியாகவே கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடக்கும்.
கொஞ்ச நாட்களாக பஸ், ஜீப், காரி வேண்டுமென ஒரே தொல்லை. எங்காவது போவதற்கு ரெடியானால்

Page 62
118 விடை பிழைதத கணக்கு
போதும், "வாப்பா கொழும்புக்குப் போனா எனக்கு பஸ் ஸொண்டு கொணுவாங்கொ.சோப்பு பஸ் ஆ. ‘'இப்படி உத்தரவு.
போகுமிடங்களில் இப்படியான "டொய்ஸ்" சாமான் களுக்கா குறைச்சல்? அவற்றைக் காணுப் போதெல்லாம் சின்ன மகனின் விண்ணப்பங்கள் நினைவுக்கு வரும். அதனை இயக்கி மகன் விளையாடுவது போன்றதொரு தோற்றம் மனக்கண்ணில் நிழலாடும்.
பல சந்தர்ப்பங்களில் நானும் ஒரு சிறுவனாக மாறி விளையாட்டுக் கார்களை, பஸ்களைத் தொட்டுப் பார்ப்பேன். ஆசைப்படுவேன்.
மின் கலங்களால் இயங்குபவை ஆயிரம் ரூபாவரை விற்கும். இந்த விலைக்கு இவற்றை வாங்குவதைவிட அத்தியவசியமான பால்மா வாங்கினால் பல வாரங்களுக்குப் பாலிக்கலாம் என்றுதான் மனம் சொல்லும். அதேநேரத்தில் இதையெல்லாம் சின்ன விலையாக நினைத்து அள்ளிச் செல்வோருக்கும் குறைச்சலில்லை.
* வாப்பா பஸ் வாங்கிக் கொணுவரல்லயா?"
எங்காவது போய்வந்தால் போதும், மகன் எழுப்பும் முதல் கேள்வி இதுதான்.
* 'இன்டக்கி கொழும்பில எல்லாக் கடேம் பூட்டி"
இப்படியொரு பொய்யைச் சொன்னால் அதை அவன் அப்படியே நம்பிவிடுவான். ஆனால் மனதுக்குள் அதன் உறுத்தல் ஊசியாக முனைப்பெடுத்துக்கொண்டேயிருக்கும்.
அன்றொரு நாள்.
புறக்கோட்டை சன நெரிசல்களுக்குள் அவசரமாகச் செல்ல முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

திக்குவல்லை கமால் 110
விஸ்ஸய் பஸ்ஸெகக்.விஸ்ஸப் பஸ்ஸெகக்" "- இக் குரலை கேட்டு சட்டென்று நின்று திரும்பினேன்.
QuoTh. . . . . . மஞ்சள் நிற பஸ். பிளாஸ்டிக் வார்ப்புத் தான் சுழலக்கூடியதாகச் சக்கரங்கள். ட்ரைவர், பிரயாணி கள், பல்புகள் அனைத்தும். அச்சிடப்பட்டு ஒட்டிய நிறக் காகிதத் துண்டுகள். விலை இருபதே ரூபாதான். எனது சக்திக்கு உட்பட்டத் தொகை.
உடனே ஒன்றை வாங்கிக்கொண்டேன். அதனைக் கொண்டுபோய் மகன் கையில் கொடுக்கும் போது, அவன் அடையும் சந்தோஷத்தைக் காணும் ஆவல் பிரவாகமெடுத் தது. அன்று அடுத்த வேலைகளையும் அவசர அவசரமாக முடித்துக்கொண்டேன்.
வீட்டுக்கு வந்து சேரும்போது இரவு எட்டு மணியை எட்டியிருந்தது. ஆனால் எனக்குத்தான் ஏமாற்றம். மகன் தூங்கிக்கொண்டிருந்தான். எனினும் காலையில் எழுந்த வுடன் அவன் கண்களில் படும் விதத்தில் மேசை மேல் வைத்துவிட்டேன்.
என்னைவிட மனைவிக்கு ரொம்பச் சந்தோஷம். நாளை முதல் மகன் பெருமையோடு அதனை உருட்டித் திரியும் காட்சி அவள் கண்களிலும் தெரிந்ததோ!
அடுத்த நாள் "டக் டக்கென்று கதவு தட்டும் சப்தம் தான் எங்கள் கண்களை திறக்க வைத்தது. கதவைத் திறந்தபோது அங்கே எனது மூத்த சகோதரன் நின்றார்.
சுமார் நூறு மைல்களுக்கப்பால் குழந்தை குட்டிகளோடு வாழ்பவர் அவர். அவசரச் செய்தி எதுவுமில்லை என்பதை அவரது நிதானம் தெரிவித்தது. ஏதோ தேவையாக இப்பக்க மாகப் பயணம் செய்த வேளையில் இங்கேயும் ஒரு விஜயம். அவ்வளவுதான்.
"புள்ள படுக்கியா?" " நானாவின் கேள்வி.

Page 63
120 விடை பிழைத்த கணக்கு
"ஓ.எட்டு மணிமட்டாகிய அவன் ஒழும்பியத்துக்கு"- மனைவி முந்திக்கொண்டு பதில் சொன்னாள்.
மகனுக்காக அவர் கையில் ஒரு பிஸ்கட் பக்கற் காத் திருந்தது.
சுகம் விசாரிப்புகள். குடும்ப சமாச்சாரங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கும் போதுதான் மகன் விழித்து உள்ளே விருந்து வந்தான்.
வழமையாக எழுந்ததும் தேத்தண்ணி" "கேட்டு அடம் பிடிப்பவன் அன்று பெரியப்பாவையும் மேசை மீதிருந்த பஸ்ஸையும் மாறிமாறிப் பார்த்த வண்ணமிருந்தான்.
அவர் அதிக நேரம் தாமதிக்கவில்லை. பிஸ்கட் பக்கற்றை மகனுக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.
மகனுக்கு பிஸ்கட்டில் கவனம் செல்லவில்லை. அடக்கிக் கொண்டிருந்த ஆவலை கட்டவிழ்த்து ஓடிவந்து பஸ்ஸை எடுத்துக்கொண்டான்.
'உம்மா பெரியப்ப எனக்கு பஸ் கொணுவந்தா?"- மகனின் கேள்வி இது.
மனைவி என் முகத்தைப் பார்த்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். முதற் தடவையாக அவனது ஆசையை நிறைவேற்றிவிட்டு, அதற்கு உரிமை கொண்டாட முடியாத திண்டாட்ட நிலை. மறுபக்கம் பெரியப்பா மீது அவனுக்கு ஏற்பட்ட அபிமானத்திற்கு குறுக்கே நிற்க முடி யாத சங்கடம்.
""ஒ மகன் புள்ளக்கி பெரியப்பா கொணுவந்தீக்கி"- அவனது மனப் பதிவுக்கு நான் அழுத்தம் கொடுத்தேன்.
"ஆவ்டா ஜாதி பஸ்"-ஓட்டம் ஆரம்பித்துவிட்டது.

திருக்குவல்லை கமால் 121
அன்று ஆரம்பித்த விளைாட்டு இன்றுவரை தொடர் கிறது. இப்பொழுதெல்லாம் அதில் ஒட்டியிருந்த தோற்றப் பாடுகளின் சிதைவுகள் கூட இல்லை. எங்கும் அழுக்கும் கீறல்களும் விரவிக் கிடந்தன. அவ்வப்போது கழன்று விழும் சக்கரங்களை அவனே ரெப்பயார் செய்து பூட்டிக்கொள்வது முண்டு.
மகேன் உம்ம கூப்பிடுகிய உள்ளுக்கு வாங்கோ"
எனது அழைப்பைக் கேட்டு பஸ்ஸைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான் அவன்.
'புள்ளக்கி தாரன் இந்த பஸ்ஸக் கொணுவந்து தந்த? "- நான் மீண்டும் ஒரு தடவை இந்தக் கேள்வியைத் தொடுத்துப் பார்த்தேன். *
எங்கட பெரியப்பா"
சிரிப்போடும் மகிழ்ச்சியோடும் அழுத்தமாகவே சொன்
னான் மகன் .
5 rei......... • •.
1989 செப்டம்பர்

Page 64
பதினான்கு நிமிடம்
ஸ்டான்டை பஸ் அடையும்போது நான் வாயிலை நெருங்கி நின்றுகொண்டேன். பஸ் தரிப்பதற்கும் நான் அப்பாடாவென்று இறங்குவதற்கும் சரியாக இருந்தது. இல்லாவிட்டால் முன்டியடித்து இறங்கும் தொல்லையிலேயே இரண்டொரு நிமிடங்கள் பறந்துவிடும். அவ்வளவு நேர நெருக்கடியான கட்டம்.
"டக்" கென்று இடக்கையை உயர்த்தி நேரத்தைப் பார்த்தேன்' ஆறும்ஆறு. நோன்பு துறப்பதற்கு இன்னும் பதினான்கே நிமிடங்கள் , ஆறு இருபதுக்குள் வீட்டை அடைந்தாக வேண்டும். ஊர் பஸ் இருக்கிறதாவென்று கண்களைச் சுழலவிட்டேன். தேவையான வேலைக்கு அது எப்போதுதான் நின்றது!
அவசர அவசரமாக பிரைவட் ஹோல்டை அடைந்தேன். மகிழ்ச்சித் துளிர்ப்பு மனதுக்குள் இருக்கவேண்டிய இடத்தில் ஊர்வேன் இருந்தது. நிரம்பி வழிந்தபடி அது நிற்கவேண் டுமென்ற ஆவலோடு அண்மித்தபோது தூக்கிவாரிப் போட்டது எனக்கு அதற்குள் ஒரு பொம்பிளையும் இன் னொரு வயதாளியும் மாத்திரம்தான்.
பஸ்களும் வேன்களும் வருகின்றன.போகின்றன"/ தொழில்களில் அலைந்த மக்கள் வீடு நோக்கி ஓடும் மாலைப் பொழுதல்லவா. ' அங்கும்மிங்கும் ஆவலோடு பார்க் கிறேன். என்னைப்போன்ற நெருக்கடிக்குடுக்கைகள் வரு கின்றார்களாவென்று. ஏமாற்றம்தான்

திக்குவல்லை கமால் ' 12$
"சீ பத்து நிமிடம் முந்திவந்தீந்தா இந்த டைமுக்கு ஊட்டில-' என் மனம் அலுத்துக்கொண்டது. பஸ்மாறி பஸ்மாறி இது நான்காவது வாக்னம். எனக்குத்தானே அவசரம்.வாகனக்காரர்களுக்கு.
கை மேலே உயர்கின்றது. நேரம் பார்க்கத்தான். ஆறும் எட்டு.
வீட்டுக்குப்போய்த்தான் நோன்பு துறக்கவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை, ஒரு லொசிஞ்சரை வாயில் போட் டாலே போதும், நான் இப்படி அவசரப்படுவதெல்லாம் கையில் இருக்கிறதே கட்லிஸ்-பெற்றிஸ் பார்ஸல். அதற் காகத்தான். நோன்பு துறக்கும் நேரத்தில் அதைச் சுவைப் ரதென்றால் ஓர் அலாதியான இன்பம். அந்த நேரம் கடந்து விட்டாலும் அதைச் சாப்பிட வாந்தான் ஆனால் சுவராஸ்ய மில்லையே.
கை இறுக்கத்திலிருக்கும் அந்த கட்லிஸ்-பெற்றிஸ் பொதியைப் பார்க்கிறேன். எண்ணெய் ஊறிய வட்டவட்ட மான பொட்டுக்கள். அது என்னுடைய மனைவியின் முகம் போல.
ஆமாம்; இது பெருநாளைக்கு உடுப்பு வாங்குவதற் காகப் புறப்பட்ட பயணம். *
'நீங்க ஊட்டுக்கு வாரத்துக்கு எத்தின மணிவாகியன்?" காலையில் மனைவியின் கேள்வி.
* எப்படீம் ஆறுமணியாகிய" நோன்பு வைத்துக்கொண்டு அலையப் போகிறேனே யென்று அனுதாபப்படுவாள், என்ற எண்ணத்தோடுதான் நேரத்தை இப்படி நீட்டிச் சொன்னேன்.
"அப்ப கற்ஸிஸ் பெற்றிஸ் எடுத்துக்கொணுவரேலும் "- அவனின் வேண்டுதல் வேறொரு கோணத்தில்.
**செல்லேல வசதிப்பட்டாக் கொண்டுவாரன்''-பூரண எதிர்பார்ப்புக்கு இடம் வைக்காமல் இப்படிச் சொன்னேன்,

Page 65
124 விடை பிழைத்த கணக்கு
ஆனால் மனசுக்குள்ளோ "எப்பிடிச் சரி கொணுவரோணும்" என்ற முடிவு.
பிரதான விதியில் செல்லும் பஸ்ஸொன்று உறுமிக் கொண்டு தயாராகியது. அதில் சென்றால் சந்தியில் இறங்கி ஒரு அரைமைல் நடக்கவேண்டும். அப்படி நடந்துபோய் விடு ச்ேர்வதற்கிடையில் பாங்கு சொல்லிவிடும்.
இடையில் காண்பவர்கள் விடுவார்களா என்ன? "நோன்பு தொறந்திட்டுப் போங்கொ.நோன்பு தொறந்திட்டுப் போங்கொ??
அப்புறம் தட்டிவிட்டுச் செல்வது முறையா என்ன? பாங்கு சொன்னதும் எவ்வளவு சீக்கிரமாக நோன்பு துறக்க முடியுமே அவ்வளவு சீக்கிரமாக நோன்பு துறப்பதுதானே erfðnúð!
அந்த பஸ் என்னைக் கடந்து செல்கிறது. வேனுக்குள் இன்னும் இருவர்தான். அவர்களும் என்ன தான் செய்வதென்று தவிப்பது எனக்குப் புரிகிறது.
அப்பொழுதுதான் வேனின் நம்பரைப் U Irířáš G3356ăr. பண்டையாவுடைய வேன்தான். இருவருக்குரிய வீட்டில் நான்கு நான்கு பேராய் அமுக்கி, உள்ளே விறகுக் கட்டாய் அடுக்கி, வெளியாலும் பத்துப்பேர் தொங்கிக்கொண்டபின்பு தான் வேனை ஸ்டாட் பண்ணும் பிரகிருதி அவர். சுழற்சி முறையில் காதர் நானாவின் வேன் நின்றிருந்தால் இந் GBT tř...
இரவு ஒன்பதரை பத்து மணிக்குக்கூட இப்படி வேன் களை எடுத்துக்கொண்டு செல்லும் அனுபவம் உண்டு. எட்டுப் பத்துப்பேர் இருந்தாலே போதும் டபல் சார்ஜ் தருவதென்றால் மாடு படுத்துவிடும். அப்படிப்பேசிப் பார்க்கக்கூகி முடியாதபடி முன்றே மூன்றுபேர்.
எப்படியோ ஆறுபத்தாகிவிட்டது. இன்னும் நான் பாதையோரமாகத்தான் நின்றேன். வார் செல்லும் தனியார் கார்கள் வந்தால் அதில்கூட்

திக்குவல்லை கமால் 25
தெரத்திக்கொள்ள முடியுமல்லவா? அப்படியான பழக்கம் எனக்கு இல்லவேயில்லை. மரியாதையாக சம்பந்தப்பட்ட வர்கள் அழைத்தால் செல்வதுண்டு. இன்று அப்படியெல் லாம் பார்க்க முடியுமா என்ன? "கருமம்' என்று சொல்வார் களே, இன்று மருந்துக்குக்கூட ஒரு காரைக் காணவில்லை. இந்நேரத்தில் வீட்டிலே மனைவியும் மகனும் எப்படியெல் லாம் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ரேடியோவை முடுக்கிவிட்டு, உள் வாசலில் பாய்விரித்து, சுப்புரா போட்டு, அதிலே ஈத்தம் சுவைகள்.கஞ்சிக் கோப்பைகளையெல்லாம் பரவிவைத்துப் பார்த்திருப்பார்கள். நானும் போய்ச் சேர்ந் தால்தானே,
அதோடு இன்னொரு தட்டிலே கட்லிஸ் பெற்றிலாம் சேர்ந்துகொள்ளும்.
நோன்பு தொறக்கிய டைமாகீட்டே.வாங்க வாங்க GuTub””
இந்த நேரத்தில் இப்படியொரு அழைப்பு. ஆ. பண்டையா..?கையிலே திறப்போடு தயாராகிறார்.
"மூனுபேர்தானே' - அவரது நாடியைத் தொட்டுப் பார்க்கிறேன்.
அதுக்கெனத்த ஏறுங்கோ ஏறுங்கோ" நான் நேரத்தைப் பார்த்தபடி ஏறினேன். ஆறுபத்து. மூன்று பேரையும் சுமந்தபடி வேன் விரைந்தது. இந்த ரோட்டில் இப்படிக் குறைந்த தொகையோடு வேனொன்று செல்கிறதென்றால் அது இன்றாகத்தான் இருக்க முடியும்.
ஆக இரண்டே கால்மைல்தான் மொத்தத்தூரம், நானென்றால் ஒன்றரை மைல்தொலைவில் இறங்கி விடுவேன். அந்த நேரத்தில் வேறு ஏறுவதற்கும் இறங்குவ தற்கும் இடையில் எவருமே இல்லை. வேன் போகின்ற போக்கைப் பார்த்தால் ஆறு அல்லது ஏழே நிமிடத்தில் போய்ச் சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு,
ar6) Lu” Gadir 67 Gutoom Sidpirt.

Page 66
26 விடை பிழைத்த கணக்கு
அவரும் செய்தி- அறிவித்தல்களை தவறாமல் கேட்கிறார் போலும்.
"இஃப்தார் நிகழ்ச்சியில் முதலில் கிறாஅத்"
est- . . . . தமிழ் மீற்றரைத்தான் பிடித்திருக்கிறார். இன் னும் இரண்டு ஹோல்ட்தாண்டினால் நான்இறங்கிவிடுவேன். அதற்கு இரண்டு நிமிடங்களுக்குமேல் எடுக்காது.
டைம் சரிபோல**
கிறாஅத்தைப் புரிந்துகொண்டு அவர் என்னிடம் சொல் கிறார்.
**ஒ.முன்னுத்து ஹோல்டில எறங்கியன்"
வேன் நின்றது. நான் இறங்கினேன். எப்பொழுதும் ஒரு காலை வைத்து தொங்கியபடி சில்லறைகளை எடுப்பதும் கொடுப்பதுமாக சுறுசுறுப்பாக இயங்கும் * கொந்தா" லிட்டில் ஹாய்யாக அமர்ந்தபடி கையை நீட்டினான். நான் ஒரு ரூபா நாணயங்கள் இரண்டைக் கொடுத்துவிட்டு நேரத் தைப் பார்த்தேன் ஆறு பதினொன்று.
ஆனால் இந்த நேரத்தில் எங்கிருந்து இந்த வலிமை,
* வாப்பா வார. உம்மாவாப்ப வார..”*
வீட்டினுள் நுழைகிறேன்.
*" அல்லாஹ" அக்பர். அல்லாஹா"
தொப்பியப் போட்டுக்கொண்டு அப்படியே வாங்கொ"" மனைவியின் குரல் உள்ளே இருந்து எழுந்தது.
நான் அப்படியே போய்ப் பாயிலமர்ந்தேன், என் எண்ணம் மயிரிழையில் நிறைவேறியிருந்தது. அங்கே கட்லிஸ் - பெற்றிலிம் ஒரு தட்டிலே கண்களை மின்னின.
"பெரிய நோன்பாலிபோல..சிவப்புத் தொப்பியொன்றை யும் போட்டுக்கொண்டு.ஆரவாரமாக ஈச்சம் பழங்களைச் சுவைத்து நோன்பு துறந்தான் மகன்.
நானும் ஈச்சம் பழத்தைச் சுவைத்து நோன்பு துறந்தேன். ஏனோ என்றையும்விட அன்றைய நோன்பு மிகமிக உணர்ச்சிமிக்கதாக எனக்குப் பட்டது. கூடவே டிரைவர் பண்டையாவின் முகமும் தெரிந்தது.
1991-ஆகஸ்ட்

flypsibGLumtir
காதர் மெளலவி வீட்டிலிருந்து வெளியிறங்கினார்.
சம்பிரதாய மெளலவிகளின் வெளிக்கோலங்கள் அளவுக் கதிகமாக அவரிலே அப்பியிருக்கவில்லை.
மகரகமையில் ஏழு வருடங்களாக ஓதிப் பட்டம் பெற்று வெளியேறி இன்னும் இரண்டு மாதம்கூடப் பூர்த்தியாகிவிட வில்லை. சூட்டோடு சூடாக பள்ளிவாசலொன்றைத்தேடி அங்கேயே தஞ்சமென இருந்துவிடும் நிலைப்பாட்டிற்கு அப்பால் நின்றார் அவர்.
* மெளலவியா வெளியான கதீப் வேலதான் செய்யோ ணுமா?’’ இப்படி அவர் சர்வ சாதாரணமாகக் கேட்டு, efG6 rif.
"காதர் மெளலவியா எங்கியன் போற?" எதிர்ப்பட்ட அவரது பால்ய நண்பன் நெளஸ்ார் கேட்டான்.
"புள்ளயஸ் கொஞ்சம்பேரு வரச்செல்லிட்டுப் .ே அதுதான் அந்தப் பொக்கத்துக்குப் போற" மெளலவி சிரித்துக்கொண்டே சொன்னார்.
இன்னும் ஏதேதோ கதைக்கும் ஆவல் அவரது நண்பருக் குள் ததும்பி நின்றது.
'ஏத்தியன் ஒரு மாதிரி பாக்கிய?’’ மீண்டும் காதர் மெளலவிதான் கேட்டார்.
ஒன்டுமில்ல மெளலவி. நீங்க இந்த நெலமக்கி வந்தது எனக்குப் பெரிய சந்தோஷம். ஒங்களால எங்கடுரு பொரோசனமடயோணுமென்டு எனக்கொராச" நெளஸார் கூட்டுமொத்தமாக தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான்.
"அதச்சொட்டீந்தான் கதீப்வேல மதுரளலா வேலயோன் டேம் பாரமெடுக்காமீக்கிய. இதயளப் பாரமெடுத்தச் ஸ்டிமார் அவங்கிவங்க செல்லியத்துக்கு Assuriat

Page 67
128 விடை பிழைத்த கணக்கு
கொண்டிக்கோணும். ம். இப்ப ஒத்தருக்கும் நான் பயபடத் தேவில்ல. எனக்கு வேண்டியத்த செய்யேலும்'
ஒங்கட போக்குத்தான் 夺们”” இருவருமே மகிழ்ச்சியோடு பிரிந்தனர். ஒரு புதிய புத்தகத்துக்கு முன்னுரை எழுதும் தெம்பு அவருக்குள் சுடர்விட்டது. சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவராக சேட் கையை உயர்த்தி நேரத்தைப் urířš5rř. பத்துமணிக்குப் பத்தே நிமிடங்கள். கதையில் அதிகநேரம் கடந்துவிடவில்லைதான். ܀-
பள்ளிவாசல் முகப்பு தெளிவாகத்தெரிய ஆரம்பித்தது. அங்கே அவரது வரவை எதிர்பார்த்து நாலைந்து மாணவர் கள் காத்திருந்தார்கள்
๑ அன்று இஷாத்தொழுகைக்குப்பின்பு தொழுகையாளிகள் பெரும்பாலும் வெளியேறிய நிலையில், ஐந்துபேர் கொண்ட சிறு வட்டமொன்று. ஒரு பக்கமாக ஒதுங்கி அமர்ந்திருந் தார்கள். சில நேரங்களில் பெரிய மனிதர்கள் ஊர்பலாய் கழுவும் இடம் பள்ளிவாசல் தானே.
"காதர் மெளலவிட போக்கு வரவர மோசம். இதுக்கு தாங்க எடமுடப்படாது' தாவூஸ்ஸாப் தஸ்பை மணிகளை உருட்டியபடி மகுராவை ஆரம்பித்து வைத்தார்.
மெய்தான் மெய்தான்' ஆரிஃப் ஹாஜி நெய்வார்த் தார்.
கொஞ்சம் படிச்சிக்கொண்டு ஒதிக்கொண்டு வந்தா இந்த சின்னக் குடும்பத்திலீந்து வாரவனியள் பெரிய மணிசனாகத்தான் பாக்கிய." தனது தாடியைத் தடவியபடி ஜெலால்நானா அழுத்தம்கொடுத்து தாவிக்க ஆரம்பித்தார். 'இதுக்கு நாங்க உட்டுக்கொண்டீந்தா எங்கட வேல* மிச்சந்தூரத்துக்கு மோசமாப் பெய்த்திரும்" பெரிய மனக்கக் கிசத்தோடு அழுத்தம் கொடுத்தார் ஐயூப்லெப்பை.
'பொடியன்மார அசடாக்க ரெடியாகிய போலீக்கி, நாங்கதானே ஸ்டுடன்ட் புரோக்ராம் நடத்திய, எங்கட வேவேல இல்லாத ஜாதி எனத்தியனிக்கிய" மாணவர்

திக்குவல்லை கமால் 129
நிகழ்ச்சிக்குப் பொறுப்பான தாவூஸ்ஸாப் மீண்டும் நெய் யூற்றினார்.
"ஞாயமான மொறக்கிச் செல்லிப் பாக்கோம். உட்டுக் குடுத்தா வாயில மண்தான்" " ஜயூப் லெப்பைக்கு இருப்புக் கொள்ளவில்லை.
எல்லோருடைய உணர்ச்சிப் பிரதிபலிப்புக்களையும் அவ்வளவு நேரமாக அமைதியாக் கேட்டுக்கொண்டிருந்த ரஸிஸ்ஸாபுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சூடேறிக்கொண்டு வந்நது. எல்லோருக்கும் அவர் ஒரு அமீர்போல. பண விஷயத்திலும் குறைச்சலில்லாத பேர்வழி, அதிக நேரம் நகரவில்லை. அவருக்கு ஜெஸாபு ஏறிவிட்டது.
'இவனியஞக்கு ஞாயமாச் செல்லி வேலில்ல. புதிய புதிய ஜாதியள கொணுவர எடமுட்டா பொடியன்மாரு ஹராபாப் பெய்த்திருவானியள். இதுக்கு முந்தீம் இப்பிடி எத்தினயோபேரு ரெடியாகின. ஆனா இவருக்கு மெளலவி யென்ட துணிச்சல் போலிக்கி. நான் நல்ல பாடம் படிப்பிச்சிக் காட்டியள் ' ரஸின்சாப் துணிந்துவிட்டார். இ யென்ன?
முன்னறிவித்தல் இல்லாத மகுரா வெற்றிகரமாக முற்றுப்பெற்ற திருப்தியில் எல்லோரும் எழுந்தார்கள்.
மணிக்கூட்டைப் பார்த்துப் பார்த்திருந்த மோதீனப்பா கேற்றை மூடத் தயாரானார்.
ó O O Oe GQ Og
நான்காவது சனிக்கிழமை. நான்கே பேருடன் ஆரம்பித்த குர்ஆன் விளக்க வகுப் புக்கு அன்று பதினைந்து பேருக்குமேல் கூடி நின்றார்கள். எல்லோருமே ஏஎல். ஒஎல். படிக்கும் மாணவர்கள்தான்.
விளக்கங்களைத் தொடர்ந்து இடம்பெறும் கருத்துப் பரிமாறல், சந்தேக நிவர்த்தி என்பன விஷயமுள்ளவர்களை ஈர்த்து வருவதை காதர் மெளலவி நன்கு கவனித்தார்.
அன்று விளக்க வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது தான் ரளின்ஸாபும் ஆரிஃப் ஹாஜியும் அங்கே வந்தார்கள்.
வி-9

Page 68
130 விடை பிழைத்த கணக்கு
தொழுகை வேளை அல்லாதபோது அவர்கள் அங்கே ஏதோ விஷயத்தோடுதான் வந்திருக்கிறார்களென்பது மெளலவிக்குப் புரிந்துவிட்டது.
'மெளலவி ஏத்தியனிது?" கேள்வியிலேயே ஒரு தகிப்பு. ரஸின்ஸாப் இப்படிக் கேட்டபோது, மரியாதைக்காக எழுந்து நின்றார் காதர் மெளலவி.
**ரெனுமூணு கெழமயா நடக்கியென்டு கேள்வி' " * புள்ளளுக்கு குர்ஆன் விளக்க வகுப்பொன்டு நடத் தியய’ தாழ்ந்த குரலில் சொன்னார் மெளலவி,
* தப்லீக் வேலயல்லாம இந்தப் பள்ளில வேறொண்டும் நடக்கியத்துக்கு நாங்க எடம் குடுக்கியல்ல. கொஞ்சம் திட்டு வந்த ஏன்டுமத்தனம் போலீக்கி போங்கடா பள்ளி பால* ரஸ்பீன்ஸாப் ஜெஸாபில் கத்தினார். அவரது தொள தொள உடல் ஒருகணம் குலுங்கி நின்றது.
பளார்.' W சற்றுமே எதிர்பார்க்கவில்லை. கன்னத்தில் விழுந்த பலத்த அடியினால் காதர் மெளலவி விதிர்விதிர்த்துப்
இானார். என்ன பேசுவது. என்ன செய்வதென்று ஒன்றுமே புரியாமல். ஆத்திரமும் கவலையும் ஒன்றாய்க் கலந்து.
* "பள்ளி ரெஸ்டீம் அவருதான். எனத்தசரி பொய்க் காரணமொன்டக் காட்டி கொணுபெய்த்துப் பொலிஸில அடச்சால்."
ஒரு கணம் எதிர்தாக்குதலுக்குத் துணிந்து, மறுகணம் இப்ப்டி எண்ணிப்பார்த்துதன்னை ஸபூர் படுத்திக்கொண்டு மெல்ல வெளியேறினார் மெளலவி. அவரைத் தொடர்ந்து மாணவர்களும்.
குர்ஆன் வெளக்கமென்ட பேரிலஜமாதே இஸ்லாமிய கொணுவாரானியள். இன்னம் கொஞ்சம் நாளேல மெனலூது ஒதவாண. மூணுநேரம் தொழுங்கொ. எட்டு ரகாத்து தரர்வியா. ஒன்டொன்டா வரும்." வெற்றிப் பெருமிதத்தில் கத்தினார் ரஸின்ஸாப்.
1993 Loyřájí

வைராக்கியம்
*Ciudaoirsiar சகோதரர்களே, e fu u TřsG6mr... ” ” ஓங்கியுயர்ந்த சிரிப்பு அவ்வளவு லேசாக ஓய்ந்துவிட வில்லை. சுற்றயல் வீடுகளின் ஸ்தோப்புகளிலும் முற்றத் திலும் பாய் விரித்து அமர்ந்திருந்தவர்களின் உற்சாகம் தலைமேலேறி அமர்ந்துகொண்டது.
**கொஞ்சம் சத்தம் போடாமரிங்கொ. பயாணக் கேக்கியத்துக்கு' இடையில் எழுந்து நின்ற ஒருவர் உரத்த குரலில் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துவிட்) மெல்லக் குந்திக்கொண்டார்.
**இது ஆகிரஸ்ஸமான் காலம். எங்க பார்த்தாலும் பஸாதுதான் நடந்து கொண்டீக்கி எல்லாப் பாவத்துக்கும் காரணம் தாரென்டு தெரிந்தானே?. ஆ செல்லுங்க பாப் யம். ஆ. அப்ப நானே செல்லியன். எல்லாப் பாவத்துக்கும் காரணம் பொம்புளயள். ம். நாங்க நாங்க எங்கடெங்கட பொம்புளயளக் காப்பாத்திக் கொளோணும்."
மீண்டும் சிரிப்பொலி இருள் மேகத்தினூடே பாய்ந்து செல்லும் மின்னலாகச் சனக்கூட்டத்துக்குள் ஊடுருவியது.
**ஜாதி பயான் மசான். எப்பிடியென்டா இவன் பழகிக் கொண்ட' அன்றுதான் முதன்முதலாக இவரின் பேச்சைக் கேட்ட ஒருவர் அடுத்தவரிடம் விசாரித்தார்.
**இப்ப மையத்தூட்டியல்ல எல்லாருமே இவரத்தான் கூப்பிடிய, ஹஸரத்மாருக்கு மாக்கட்டில்லாப் பெய்த்து" அடுத்தவர் சிறு விளக்கமொன்றை முன்வைத்தார். திரும்பவும் எல்லோர் கவனமும் அவர் பக்கம். *" தெரீந்தானே அந்தக் காலத்தில லூத் நபீட கூட்டத் தாரு செஞ்ச வேல?"

Page 69
132 விடை பிழைத்த கணக்கு
"ப். கஹ்.. கஹ். இடையிடையே பரிமாறும் கோப்பியைக் குடித்துக் கொண்டிருந்த யாரோ ஒருவருக்கு புரைக்கடித்துவிட்டது" முன்னெச்சரிக்கையாக இருக்க எந்த நேரத்தில் இவர் என்ன தான் சொல்லப் போகிறாரென்று யாருக்குத்தான் தெரியும்?
யாரும் அசைந்ததாக இல்லை. புதிது புதிதாக வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். மையத்து வீட்டில் விழித் திருப்பதென்றால் 'தாரன் பயான்?' என்று கேட்டு சனம் சேருமளவுக்கு அத்துஜப்பார் ஸ்டார் ஆகிவிட்டார்.
இவர் ஒன்றும் ஒதிப் படித்துக் கிழித்தவரல்ல. தானும் பயான் பண்ண வேண்டுமென்ற வைராக்கியம் ஏற்பட்ட பின், தானாக முயன்று விஷயம் கால் சிரிப்பு முக்காலுமான ஒரு பாணியில் பயான் செய்யப் பழகியவர்தான்.
‘'தேத்தண்ணி கோப்பி குடிக்கியவங்க பாத்துக் குடிங்கொ.’’ என்றவர், அதை அடுத்தவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை அங்கீகரிக்கும் பாணியில் ஒரு கறுப்பு-வெள்ளைச் சிரிப்பு தீர்த்தார்.
மையத்துவிடு ஹயாத்தாகிக் கொண்டிருந்தது. மூன்றாம் கத்தம் வரையில் இரண்டு இரவுகள் நள்ளிரவுவரை விழித் திருப்பது எப்பொழுது ஆரம்பிக்கப்பட்ட பழக்கமோ தெரிய வில்லை. இழப்பினால் ஏற்பட்ட மனவேதனையில் சம்பந்தப் பட்டவர்கள் அழுந்திப் போய்விடாமல், எல்லோரும் கூடிக் கலகலப்பாக்குவது என்ற வகையிலாவது நல்ல விஷயந் தான்.
"லூத் நபீட விஷயம் என்னென்டு சொன்னால், அதப் போல விஷயம் இன்னக்கி உலகத்தில நடந்து கொண்டிக்கி. அதால பொல்லாத நசலொண்டு உண்டாகிக்கி. அந்த நசல் என்னென்டு சென்னால்."
'இது அத்துஜப்பரா இல்லாட்டி ஸக்காஃப் லெப்பயா?" இடையில் ஒருவரின் கேள்வியும் அதற்குப் பதிலாக ஏகோ பித்த சிரிப்பும் எதிரொலித்தது.

திக்குவல்லை கமால் 133
ஸக்கஃப் லெப்பை கொதுபா ஒதுவதற்காக மிம்பருக்கு ஏறினால் " என்னென்டு சொன்னால்.’’ என்று குறைந்தது நூறு தடவையாவது சொல்லி விடுவார். அதைத்தான் இங்கே இவர் குத்திக் காட்டினார். ஸ்க்காஃப் லெப்பை மட்டுமென்ன, முபாரக் ஆலிம், தாரிக் ஸாப், ஜெமீல் மாஸ்டர் போன்றவர்களும்கூட அவ்வப்போது அவரது பேச்சிலே த  ைவகாட்டத் தவறுவதில்லை.
X **எய்ட்ஸென்ட நசலுக்கு நாகரீகமான நாட்டியல்ல லச்சக்கணக்கான மணிசரு பலியாகிக் கொண்டீக்கி. ஒழுக்க மான குடும்ப வாழ்க்க இஸ்லாத்தில செல்லப்பட்டிக்கி.'"
எந்தத் தலைப்புமின்றி ஆரம்பிக்கப்பட்ட பயான், எங் கெங்கோ தொட்டுத் தடவிச்சென்று, பன்னிரண்டு மணி நெருங்கும்போது நிறைவுபெற்றது. அதோடு ரொட்டி, கிச்சடி. கோப்பி பரிமாறல்.
** அத்து ஜப்பாரு மறந்து பொகாம நாளக்கும் வாங்கொ' மையத்து வீட்டுக்காரரே இந்த அழைப்பை விடுத்தது விளையாட்டுக்கல்ல.
சனங்கள் அங்கிருந்து படிப்படியாக கலைந்து கொண் டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் கதைத்து வியந்து கொண்டதெல்லாம் அத்து ஜப்பாரின் தைரியத்தைப் பற்றித்
தான்.
w
CGO e
கட்டிலில் அமர்ந்து ஓத வேண்டியதையெல்லாம் ஓதி. முகத்திலும் நெஞ்சிலும் ஊதித் தடவிக்கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்தார் அத்து ஜப்பார். அவரது மனமோ நிகழ்ந் ததை நினைக்கத் தொடங்கியது.
முன்புபோல் தடுமாற்றமில்லை. பொருத்தமான்தைத் தொடர்புபடுத்தக்கூட முடிகிறது. சிரிப்பூட்டல் கைவந்த கலை. பத்திரிகைகளில் வெளிவரும் வெள்ளிக் கிழமைக்

Page 70
184 விடை பிழைத்த கணக்கு
கட்டுரைகள். மஸாத் ஆலிம், நியாஸ் மெளலவி போன்ற வர்களின் பீஸ்கள்தான் ரிஷி மூலங்கள். ஐந்தாம் வகுப்புப் படித்த அறிவுகட இல்லாமல் தேடிக் தொகுக்கும் தைரியம் அவருக்குள் குடிபுகுந்து அவரது படித்தரத்தை உயர்த்தி விருந்தது.
அன்றும் இப்படிப்பட்ட ஒரு நாள்தான். பள்ளத்து வளவு ராஹிலாச்சி மெளத்தாகிப் போய்விட்டார். உடனடி யாகச் சில பொடியன்மார்கள் ஒரு மையத்து வசூல் போட்டு காரியத்தை ஒப்பேற்றிவிட்டார்கள். வழக்கம் போல விழித் திருப்பதற்காக பத்து மணிக்கெல்லாம் பள்ளத்து வளவுக்குச் சென்றார் அத்துஜப்பார். ராஹில் கிழவியின் முற்றத்திலே ஒரு பழைய கினாப்பு வைக்கப்பட்டு அதிலே ஒரு பெற்ரோல் மெக்ஸ் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அடுத்தடுத்த வீட்டு செய்துநானாவும் நெய்னாவும் மப்ளரால் காதுகளைச் சுற்றிக் கட்டியபடி பீடியடித்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சியையெல்லாம் மிக விரை வாகப் பதிவுசெய்து கொண்ட அத்துஜப்பாரின் நெஞ்சிலே ஒரு தார்மீகக் கோபம் தீயாய்க் கொழுந்துவிடத் தொடங்கியது.
கூடவே மூன்று நாட்களுக்கு முன்பு சீனாத்தான ஹாஜி வீட்டுக்கு விழித்திருக்கப் போன காட்சிகள் முன்னெழுந்தன. வேறு பாய்கள் கதிரைகள் அயல் வீடுகளிலும் இல்லையென்ற அளவுக்கு சனம், மேலதிக மின் விளக்குகளின் ஒளிப் பாய்ச்சல். அதற்கென்றே வயரின்பாஸ் ஸ்பெஷல் டியுடி. பயான் பண்ணுவதற்கு நீ முந்தி நாள் முந்தியென்று ஸ்க்கஃப் லெப்ப, முபாரக் ஆலிம், தாசீக்ஸாப். எண்ணிப் பார்த்தால் ஒன்பது பேர்.
இதை நினைத்துப் பார்த்து அத்துஜப்பாரின் நெஞ்சு பொறுக்கவில்லை. ஏதோ ஆவேஷித்தவராக உணர்ச்சியால் உந்தப்பட்டவராக, ஊரின் நடுச்சந்திக்கே வந்துவிட்டார். எங்கும் இருள். சந்தியும் மெளத்தாகிப்போய்.

திக்குவல்லை கமால் 1.35
கான் தோண்டுவதற்காக கிண்டிப் போட்டிருந்த மண் திட்டிக்கு மேல் ஏறிநின்று நான்கு "பக்கமும் பார்த்தார். சந்தடியில்லை. வீடுகளுக்குள் மாத்திரம் வெளிச்சக் கசிவு தெரிந்தது. கைகளிரண்டையும் வாயோடு சேர்த்துத் துணை யாக்கி உரத்த குரலில் "" ஏன்டும்மோவ் எனக்கேலா. ஏன்டும்மோவ்" "என்றுஏதோ ஆபத்துப்போல் சத்தமிட்டுவிட்டு டக்கென்று பாய்ந்து ஜசதாத்தாவின் முடுக்கினுள்ளே புகுந்து Gas its LArt.
ஒரு சில நொடிகள்தான் பறத்திருக்கும். எதிர்பார்த்தது தான். எல்லாப் பக்கமிருந்தும் டோச்சும் கையுமாக தடதட வென்று வந்து நிறைந்துவிட்டார்கள். ஒரே பரபரப்பு. எனத்தியன் எனத்தியன்'. 'தாரன் தாரன்" இந்த இரண்டு வார்த்தைகளுமே மாறிமாறி எதிரொலித்தன. அவர்களில் ஒருவனாக அத்துஜப்பாரும் " " எனத்தியன்
எனத்தியன்'. 'தாரன் தாரன்.""
மீண்டும் ஒரு தடவை அதே மண் திடலில் ஏறி நின்றார், அத்துஜப்பார். தேர்தல் காலத்தில் சோடா கொடுப்பதற்காக மேடைக்கு ஏறி, கீழே பார்த்த ஞாபகம் உண்டு. இருட்டுக் குள்ளும் அப்படியொரு காட்சி அவனுக்குத் தெரிந்தது.
எல்லாரும் கொஞ்சம் கேளுங்கொ"
இந்தத் தடித்த கரகரத்த குரல், அந்தப் பகுதியிலேயே எல்லோருடனும் சரளமாகப் பழகும் அத்துஜப்பாருடையது தான் என்பது யாருக்குத்தான் தெரியாமல் போகும். ஆனால் என்ன சொல்லப் போகின்றார் என்பதுதான் எவருக்குமே தெரியாதிருந்தது.
நீங்கெல்லாரும் ஊட்டுக்குள்ள பூந்துக்கொண்டு படுத்தா? ஏழ மையத்தூட்டியளுக்கு முழிச்சீக்கப்பொக, ஒங்களியலுக்கு நெணவ வாரல்லயா..? ஏலாதவங்கட மையத் தூடென்டா மறந்துபோற போல. ஒங்கெல்லாரேம் கூட்டிக் கொணுபொகத்தான் நான் இப்பிடி சத்தம் போட்ட.""

Page 71
136 விடை பிழைத்த கணக்கு
எவருமே செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்ட, அதுவும் ஒரு நல்லெண்ணத்தில் செய்த அத்துஜப்பாரின் பின்னால் பக்தர்கள் போல் எல்லோரும் நடந்தனர் ராஹில் கிழவி என்ன பாக்கியம் செய்தானோ தெரியவில்லை. மையத்து கொண்டுபோகும் நேரம்கூட அவ்வளவு சனம் சேரவில்லையென்றுதான் பேசிக் கொண்டார்கள்.
* சரி. இப்ப எப்பிடிச்சரி சனம் வந்திட்ட, தாரன் பயான் பண்ணிய, தாரச்சரி பெய்த்து கூட்டிக்கொணு வரோணுமே..?" சனத்துக்குள்ளிருந்து நியாயமான வேண்டுதல்,
* "கூப்பிடத் தேவில்ல. ஒதிப் படிச்சவங்க, ஞாயமான வங்க வரோணும். பெரிய எடமென்டா போலினில நிப்பாங்க. இவங்கட வேலவெட்டியப் பாத்தா எனக்கு ஏச்சுத்தான் வார. இன்ஷா அல்லா சீக்கிரமா நானும் எல்லாருக்கும் பேசிக்காட்டியன்" இப்படி வைராக்கியத்தோடு முன்னெ ழுந்த அத்துஜப்பார், உண்மையில் பேசவில்லை. கோபத்தில் கொந்தளித்தார். அந்தக் கொந்தளிப்பு அடங்கும்போது என்ன அதிசயம்! பன்னிரண்டு மணியாகிவிட்டது.
அந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு நகர்ந்துவிட்டது. இன்று அத்துஜப்பார் மையத்துவிடுகளில் பயான் பண்ணுவ தில் கைதேர்ந்தவராகிவிட்டார்.
எங்கோ மணியொலித்தது. பன்னிரண்டரை தான். எழுந்து இரண்டு மூன்று மிடறு பச்சைத் தண்ணிரைப் பருகிவிட்டு.
'ஸொபஹாக்கு அவ்வல் தக்பீருக்கே பொகோணும். இல்லாட்டி விடியவிடிய பயான் ஸொபஹறில்லாம படுக்கிய. இப்பிடிச் செல்லுவானியள்."" −
பெருமிதத்தோடு புரண்டு படுத்தார் அத்துஜப்பார்.
1994 ஜனவரி,
★大冲


Page 72


Page 73
விடை பிழை
மணங்க மானிட தில் நில் ஈழத்து இடம் எ
மாகக் ச நாம் !
விடயங்களை அற்புதமாகக் கலையாக்கி
உங்கள் சிறுகதைகளில் தென்ன துடிப்பு கேட்கிறது. மணம் வீசுகிறது. கி கிராமத்து மக்களின் பேச்சு மொழிை லாவகமாக பதிவு செய்ய முயன்றுள்ளீர்
மனித குலம் எங்கு வாழ்ந்தாஜ் பொதுத்தன்மையுண்டு. மனிதாபிமானத் போது, அது மொழி, இன, தேச எல்லை இந்த உயர் பணியின் பங்காளிகளுள் ஒ
தென்னிலங்கைத் தமிழை, குறிட அந்த மக்களால் அன்றாடம் பேசப்படு அரங்கேற்றம் செய்த பெருமை கமாலை
 

ந்த கணக்கு
தென்னிலங்கையின் வாழ்வை மண் கமழ, கவிதையின் வசீகரத்தோடும்
ப் பரிவோடும், முற்போக்குத் தளத் ாறு இலக்கியமாக்கிவரும் கமாலுக்கு
படைப்பிலக்கியத்தில் முன்னணி :
ப்போதோ உறுதியாகிவிட்டது. "
- செ. யோகநாதன்
மிகச் சிறிய சலனத்தைக்கூட நுட்ப தையாக்குவதில் வல்லவர் கமால். கண்டுகொள்ளாத எத்தனையோ
விடுகிறார் இவர்,
- மு. பசீர்
ரிலங்கை கிராமமொன்றின் இதயத் ராமியச் சித்திரம் உருப்பெறுகிறது. ய இயன்றளவு இயல்பாக வெகு கள்.
- செ. யோகராசா
லும் அதன் பிரச்சினைகளில் ஒரு $தோடு அதனை இலக்கியமாக்கும் களைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. ருவர் கமால்,
- எம்.எச்.எம்.சம்ஸ்
ப்பாகத் திக்குவல்லைக் கிராமத்தில் Iம் தமிழை இலக்கிய மேடையில்
ச் சாரும்.
நெ ய்தல் நம்பி