கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 1997.08

Page 1


Page 2
வாசகர்களிடமிருந்து படைப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்ப்புக்கு உட்படுத்திக் காத்திருக்கிறது "சக்தி
لکھتے
காலாண்டிதழ் வருட சந்தா - 100 குறோனர் தொடர்புகட்கு: SAKTHI BOKS 99 OPPSAL OG 19 OSLO 65 NORWAY
இதழ் 43
புதிய தாய்மை - பக்1= சுதர்ஷன. பiபி பொம்மைகள் 3 தயாநிதி ரங்கனுக்கு அப்பால் சீ யமுனா ராஜேந்திரன் இப்படியும் கப்பங்கள் -சி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண்ணிலைவாதம் பற்றி 24
சர்வதேசப் பெண்ணியத்தை நோக்கி 25. (தமிழில்)தேவா சகோதரிக்கு 35. (தமிழில்) தேவா பாலரஞ்சனிசர்மா கவிதைகள் -36 தேரிகாதா 38 தமிழில்) சிசிவசேகரம் கலந்துரையாடல் -4-
நூல் அறிமுகம் -45
ஓர் செய்தி பாமதி
 

* Frார் முer 27-F sigftstreet Plais tary ட்ரr E + TT) "Vé: (2087: 832;
சுதர்ஷனா (கனடா)
GleFLI. '96
முகமுடி களையாமல் வாழ்நாள் எல்லாம் மகளாய், மனைவியாய், தாயாய். உன் கடமை கழிக்க களிப்பைக் கரையேற்றி காலமெல்லாம் களிப்பற்ற கடலில் நான், வெறுமையாய், தனிமையாய். சில மணிநேரம் நானாய், உண்மையாய் வாழ வெளித்தோற்றம் காக்கும் கரிசனம் தடையாய்.
உணர்ச்சிகளை சிறைமீட்டு, உரிமைகளுக்கு உயிர் கொடுத்து நான் துளிர்விடும், மொட்டவிழ்க்கும் போதெல்லாம்,
கடமை கடப்பாரை மண்டையைப் பிளக்கும். குற்ற உணர்வு குருதியாய்ப் பெருகி வழிந்தோடி வசந்தம் மீண்டும் வரும்போது
புதிதாய் பல கடமைகள் காளான்களாய் வியாபிக்கும்.
நீ களித்திருந்ததன் பலனாய் நான் சிசுவானேன் உன் கடமை நிறைவேற்றலுக்கு
என் ஆசைகளும் உணர்ச்சிகளும் அடைமானம்.

Page 3
1997 ஆகஸ்ட் | சக்தி
உணர்ச்சி-1
நீ பத்துமாதம் சுமந்ததற்காய் வாழ்நாள் எல்லாம் நான் கடமைக்கடிமை. என்னுள்ளும் ஓர் உயிர் உருவாகி தாய்-மகள் நச்சுச் சக்கரத்தை உயிரூட்டவேண்டாம். இன்றே நான் கருத்தடை செய்கிறேன் - நிரந்தரமாய். உயிர்பெறாத சிசுக்களெல்லாம் விடுதலை நமக்கென கொண்டாடட்டும். அந்த வெற்றிக் களிப்பில் தாய்மையடைவேன் -
கருத்தரிக்காமல்.
உணர்ச்சி-2
பத்துமாதம் சுமந்ததற்காய் என் கருவின் கனிகளை கடமைக் கயிற்றால் கட்டாமல் தனித்தன்மையுடைய அதிசயப் படைப்புக்களாய் காண்பேன்; களித்துக் கழிப்பேன் நாட்களை. கரைசேர்ப்பதே தாயின் கடனென்பதற்காய் உயிரற்ற உறவுகளில் கரைசேர்க்க மாட்டேன். "பத்துமாதம் சுமந்து தந்த உயிரை மீள உயிர்ப்பித்தாள் அன்னை, என் உணர்வுகளை மதிப்பதனால்” என்றெழுந்தென் வாரிசுகள் குரல்கொடுக்கும். வாரிசுகளின் வாரிசுகளும் குரல்கொடுக்கும்,
வருங்காலங்களிலும்.
() {)
2

பர்பி பொம்மை
- தயாநிதி
மார்லின் மன்றோவை நினைவிருக்கிறதல்லவா? யார் இந்த மார்லின் மன்றோ? ஒரு வர்ணனை? ஒரு உடல்? சகோதரர்களுடைய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இவருக்குமான உறவு பற்றி О. எண்ணிலடங்காத கோப்புக்கள். எல்விஸ் யார்? དེ་༽ நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு எல்விஸ் *} இன்னமும் துபுலோ நகரத்திலிருந்து வந்த 2, 3 ரம்மியம் மிக்க காதல் பாடல்களைப் பாடும் O جبراء
** " பாடகர். ஆனால் இளம் சந்ததியினருக்கோ ,
வழக்கதிற்கு மாறாக ஆடைகள், ஆபரணங்கள் * அணிந்து சூழவுள்ள இளவயதினரைவிட வித்தியாசமானவர். அமெரிக்க பிரபல்ய கலாச்சாரத்திற்கு ஒரு அடையாளம் வேண்டுமென்றால் பர்பி பொம்மைகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த பர்பி பொம்மைகள் ஒருபோதும் ஆத்திரப்படுவதில்லை. அவளுக்கு ஒரு குழந்தையும் இருந்ததில்லை. குழந்தைகள் எதுவும் அவளைக் கைவிட்டதும் இல்லை. அவள் ஒருபோதும் அழுக்கடைந்தவளாகவோ சுருக்கம் விழுந்த தோற்றமுடையவளாகவோ காணப்பட்டதில்லை. மேலதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவளோ அல்லது மாறிவரும் நாகரீகத்தைக் கைவிட்டவளோ அல்ல. மற்றெல் என்ற கம்பனியே இந்தக் கட்டுரையின் நாயகியான பர்பியைக் கண்டுபிடித்தது. பலநூறு மனிதர்கள் பர்பியை வடிவமைப்பதையும் சந்தைப்படுத்துவதையும் முழுநேர தொழிலாகக் கொண்டு பர்பியில் தங்கியுள்ளார்கள். பர்பி பொம்மை ஒரு மில்லியாடர் வியாபாரம். உலகில் செக்கனுக்கு ஒரு பர்பி விற்பனையாகிறது. நோர்வேயில் 250,000 பர்பிகள் ஒவ்வொரு வருடமும் விற்பனையாகிறது. ஒரு நோர்வேஜிய பெண்குழந்தை 4, 5 பர்பிகளை வைத்திருக்கிறது. ஒரு வடஅமெரிக்க பெண்குழந்தை 7 பர்பிகளை வைத்திருக்கிறது. பர்பியின் உலகத்தை ஒரு தாய் தனது குழந்தைக்கு அறிமுகம் செய்யும் அதேவேளை, இன்னொரு கவலையடைந்த தாய் தங்களுடைய வீட்டில் பர்பியின் உலகம் நுழைவதினைத் தடுப்பதற்கான போராட்டத்தைத் தொடர்கிறாள்.
மற்றெல் நிறுவன இயக்குனர் ஜேர்மனி சென்றிருந்த வேளையில் கிளுகிளுப்பூட்டும் ஜேர்மனிய பொம்மை லில்லியைக் கண்டு அந்தப் பொம்மையை எப்படி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாக்கலாம் என்ற யோசனையின் விளைவே அந்த பர்பி பொம்மை. அன்றிலிருந்து பர்பி பெண்களுக்குரிய வேலைத்திட்டம் ஆகிவிட்டாள். பெண்களுக்காக பெண்களே வடிவமைத்து, பெண்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் பெண்களே கற்பிக்கின்றனர். என்னுடைய காலத்து குழந்தை யொன்று பத்து வயதாக இருக்கும்போது பர்பி பொம்மையை பரிசுப் பொருளாகப் பெற்றுக்கொண்ட நிலைமை இன்று மாறி, பிறந்து மிகக் குறுகிய காலத்திலேயே பர்பியுடன் பரிச்சயமாகி
|3

Page 4
1997 ஆகஸ்ட் | சக்தி
விடுகின்றனர். குழந்தைகளின் மூன்றாவது நான்காவது வயதிலேயே இந்த மினுமினுப்பான நீலக் கண்களும் பொன்னிற நீள மயிரும் கொண்ட செயற்கையாக அழகுபடுத்தப்பட்ட புருவங்கள், மையூசப்பட்ட இமைகளையும், குறுகிய இடையும் மெலிந்த தோற்றமும், சிலிக்கோன் பதிக்கப்பட்ட மார்பகங்களையும் உடைய குதியுயர்ந்த பாதணிகள் அணிந்த பர்பியைப் பெறுகின்றனர்.
அந்தப் பொம்மைகள் மூலம் எதிர்காலத்தில் எமது குழந்தைகளை எவ்வாறு எதிர்பார்க்கிறோம்? உறுதியும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட, அழகு சந்தையில் ஆர்வம் காட்டாத பெண்களையா?
பர்பி பொம்மையின் வரலாறு பற்றி அண்மையில் வெளிவந்த புத்தகத்தில் (Forever Barbie/ M. G. Lord) ust (5 subub; uit uJIT60Jub வளர்க்கவில்லை; அவள் குழந்தைகளுக்கு தங்கியிராமையை கற்றுக் கொடுக்கிறாள்; ஒரு தன்னிலையுடைய பெண்; அவளால் புதிய புதிய ஆடைகளைத் தெரிவுசெய்யவும், பிரபல பாடகியாக, விண்வெளிக்குச் செல்லும் கலத்தின் (விமான) ஒட்டியாக. பாத்திரங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளாள்; உண்மையில் பர்பி ஒரு பெண்ணிலைவாதி, பெண்களின் முன்னோடி என்று எம்.ஜி.லோட் கூறுகின்றார். Betty Friedan/ Femini Mystique என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல் வேலைகள் முடியவில்லையே என்று பதட்டமடைந்த, களைப்படைந்த, வீட்டிலிருக்கும் பெண்ணல்ல பர்பி. பர்பிக்கு ஒரு ஆண் துணையும் இருந்ததில்லை. ஆரம்பத்தில் பர்பி ஒரு தொழில் பார்க்கும் பெண். இப் பாத்திரம் ஐம்பதுகளில் அமெரிக்காவில் அறியப்படாத ஒன்று. சற்றுப் பிந்திய காலத்தில் கீன் என்ற நண்பன் அறிமுகப்படுத்தப்பட்டான். அவனுக்கு பாலுறுப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஏற்பட்ட சர்ச்சையின் இறுதியில் ஆண்குறி இன்றி உருண்டைகளை மட்டும் தெரிவுசெய்தார்கள். இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக திறப்புக்கள், ரைபிள்கள் என்பன ஆண்மையை அடையாளப்படுத்தின. பர்பியின் உலகத்தின் கீன் என்ற அந்த நண்பன் முக்கிய பாத்திரமேயல்ல. அத்தோடு பர்பியின் உலகத்தில் பர்பி இரண்டாவது பால் (The second sex) அல்ல. பர்பியை உருவாக்கிய பின்பே கீன் வருகிறான். பர்பி மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டாள். அவளது உடலமைப்பு அன்றிலிருந்து இன்றுவரை மாறவே இல்லை. கீன் அடிக்கடி பல மாற்றங்களைச் சந்தித்து இருக்கிறான். விற்பனையிலும் ஒரு கீன் விற்பனைக் காலத்தில் 8 பர்பிகள் விற்பனை செய்யப்பட்டன.
பர்பியின் தோற்றத்திற்குக் காரணமாயிருந்த லில்லி என்கின்ற கிளுகிளுப்பூட்டும் பொம்மை வளர்ந்த ஆண்களுக்குரியது. லில்லியை மாற்றியமைக்க அமெரிக்காவில் முடியாதபோது (சந்தைக்குரிய முறையில் மலிவாக உற்பத்தி செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்ட போதிலும், மார்பகம் கொண்ட ஒரு பொம்மையை தயாரிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பயங்கரமான யோசனைகளே காரணம் என்று லோட் கருதுகிறார்) யப்பானில் பிரதிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி வெற்றியளித்ததை யடுத்து பொம்மையை பத்து வயது அமெரிக்கப் பெண்ணை ஒத்ததாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குரிய சின்னங்களை
4.

அகற்ற முடிவுசெய்து, உதடுகளையும் பாரமான இமைகளையும் குறைத்து, மார்பகங்களை நிரப்பி புதிய தோற்றத்தை உண்டாக்கினார்கள். விற்பனைக்குத் தகுந்த மாதிரி உடைகளைத் தெரிவுசெய்தனர். தந்திரோபாயம் தெளிவாக இருந்தது. பத்து வயதுடைய பெண்ணாகக் கண்டவர்கள் அவளுக்கு உயிருடைய வாழ்க்கையை உருவாக்கி அமெரிக்கத் தோற்றமுடைய அந்தப் பெண்ணுக்கு கவர்ச்சியான வாழ்க்கை முறையையும் உருவாக்கினார்கள். முதற் தடவையாக சந்தைப்படுத்துவதற்கான விளம்பரத்தில் பர்பி பொம்மை என்ற செய்தியே சொல்லப்படவில்லை. 1959 பனிக்காலத்தின் பிற்பகுதியில் பர்பி விற்பனை நிலையங்களுக்கு வந்திருந்தது. கறுப்பு வெள்ளை நீச்சலுடையில் முதல் பார்வையில் யாரையும் கவரவில்லை. பல விற்பனை நிலையங்கள் பர்பியை விற்க விரும்பவேயில்லை. பர்பி கவர்ச்சியாக தோற்றமளிப்பதாகக் கண்டித்தார்கள். வசந்தகாலத்திற்கு முன்பு பர்பி ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் களஞ்சியத்தில்கூட இருக்கவில்லை. இரு வருடங்களுக்குப் பின்பே பர்பி நோர்வே வந்து சேர்ந்தது.
காலமாற்றத்தில் அமெரிக்காவில் பாலியல் பற்றிய சிந்தனைகள் மாற்றமடைந்தன. கறுப்பின மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடினார்கள். 1963 இல் புதிய எழுச்சி 6st IL. Lg5). (Betty frieden /The Feminie mystique) Gl J60ö SLéG5(p60B பற்றிய கருத்துக்கள் உணரப்படத் தொடங்கியது. அமெரிக்கப் பெண்கள் அழகுராணிப் போட்டிக்கு எதிராக ஊர்வலம் சென்றனர். அவர்கள் தாங்கிச் சென்ற சுலோகங்களில்,
*எங்களுடைய காலத்தில் பர்பி உணர்மையிலேயே மாலியல் ரீதியில் ஆட்சிசெய்த நபர் என்று கொள்ள லாம். லில்லி என்ற ஜேர்மனிய ஆணர்களுக்குரிய விளையாட்டுப் பொம்மையிலிருந்து பம்பி தோன்றி யதென்பது எந்தவித சந்தேகமும் இல்லை. பர்பி யின் உடல் அங்கம் அங்கமாக விவரணங்களின் றியே எதிர்ப்பாலுணர்வு கொண்ட ஓர் ஆணுக்கு உணர்ச்சி ஏற்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது”
-கமில்லா பகிலா
"நான் விளையாட்டுப் பொருள் அல்ல!” "நான் ஆசைக்குரிய பிராணியல்ல!” என்பனவும் அடங்கியிருந்தன.
அத்தோடு வியட்நாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. மற்றெல் கம்பனி தனது உற்பத்திப் பொருளான பர்பியைப் பாதுகாப்பதற்கு பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டது. நாளாந்த வாழ்வு அரசியலுடன் சம்பந்தப்பட்டதாக இருந்த காலத்தில் பர்பி யதார்த்த நிலையிலிருந்து விலகியிருந்தது. எனவே பர்பியைப் பற்றி ஒரு கற்பனை உலகத்தைக் கட்டியெழுப்பினர். முன்பு பர்பி பொறுப்பேற்ற பாத்திரத்திற்குரிய பெயரை உடைகளுக்குப் பாவித்தனர். தற்போது ஆடைகளுக்கு எந்தப் பெயரையும் சூட்டாமல் விட்டனர். ஆனாலும் அமெரிக்கக் கல்லுாரி மாணவர்கள் வியட்நாம்
5

Page 5
1997 ஆகஸ்ட் சக்தி
யுத்ததிற்கு எதிராக ஊர்வலத்தில் ஈடுபடுவதோடு சாதாரண உடைகளையே அணிகிறார்கள் என்பதை மெற்றல் கம்பனியினர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலைமை நீடித்தது. மெற்றல் கம்பனியினால் பர்பிக்கு வேறுபட்ட வடிவங்களை, மாற்றங்களை ஏற்படுத்துவதை யோசிக்கக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
1969 இல் பர்பிக்கு கிறிஸ்ரி, யூலியா என்ற இரு கறுப்பு இன நண்பர்கள் கிடைத்தனர். பர்பி தோன்றிய காலம் இளம் சந்ததியினர் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிராகச் செயற்பட்ட காலம். சிந்தரிக் பொருட்களின் நுகர்வினை எதிர்த்த காலம். பர்பியும் பர்பியினது வீடு, குளிக்கும் தொட்டி மற்றும் சகோதரிகள், நண்பன் யாவுமே பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. அத்தோடு பெண்ணிலைவாதிகளும் இடையூறாக இருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதிப் பெண்களுக்கும் பர்பிக்கும் பொதுவான பல அம்சங்கள் காணப்பட்ட போதிலும், Transworld Airlines இல் பணிபுரியும் விமானப் பணிப்பெண்கள், பால் ரீதியான வேறுபாட்டினை இது ஏற்படுத்துவதாக கம்பனிக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். வியட்நாம் யுத்தம் பற்றி பர்பி கவனமாக இருந்தபோதிலும், நிகழும் சம்பவங்கள் பற்றி அலட்சியமாக இருக்கவில்லை. பர்பி புதிய மாற்றங்களுக்குத் தயாரானது. 1970 இல் Living Barbi வந்தது. இந்த பர்பி பொம்மையில் விசேசம் என்னவெனில் பொம்மையின் கால்கள், பாதங்கள் மடித்து நீட்டக் கூடியதாக அமைந்திருந்தன. பெண் ஒடுக்குமுறைக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது பாதங்கள் மிக முக்கியமானதாக இருந்தது. சீனப் பெண்களுக்கு பாதங்கள் சுற்றிக் கட்டப்பட்டும், மேலைத்தேயப் பெண்களுக்கு இறுக்கமான நீண்ட பாவாடையும் குதியுயர்ந்த பாதணிகளும் நிரந்தரமாக இருந்த காலம் அது. இந்த சிந்தனையின் அடிப்படையில் பர்பியின் பாதங்கள் "புரட்சி கரமானதாகப் பட்டது. அத்தோடு பர்பி தனது சகோதரிகளுடன் உலாவர வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சகோதரிகள் பர்பியை விரும்பவில்லை. பர்பி பெண்கள் அமைப்பின் எதிரியாகக் கணிக்கப்பட்டாள். பெண்கள் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையங்களைத் தாக்கினார்கள். இவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகவும் முதல் பக்கச் செய்தியாகவும் வந்தன. பர்பி ஆண்களைக் கவர்கின்ற மாதிரிகளாகவும், பாலியல் பண்டங்களாகவும், வீட்டுக்கு உதவி செய்பவர்களாகவும் தம்மைப் பார்க்கவே பெண் சிறுவர்களுக்கு உதவுகிறது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படன.
பர்பி ஒரு வருடம் நீடித்தது. பின்பு பர்பி வீழ்ச்சியடைந்து விட்டது என்று கொள்ளலாம்.
70 களின் நடுப்பகுதியில் பர்பியின் வாழ்வு இலகுவானது. இளம் சந்ததியினர் நுகர்வுக் கலாச்சார எதிர்ப்பிலிருந்து விடுபட்டிருந்தனர். பழையபடி நுகர்வுக் கலாச்சாரம் வழக்கமாகியிருந்தது. பர்பி மீண்டும் ‘சுப்பர் ஸ்ரார் ஆகியது. 1980 இல் ஜிம்மி காட்டர் வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட காலம். சினிமா நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த வேளை. மக்கள் பென்ஸ் கார்களில் பவனிவந்த 5.T6)ib. gibb (36.6061Tu56) 'Barbi loves Mcdonald', ‘ I am good shape Barbi' என்ற சுலோகங்களில் உடற்பயிற்சிக்குரிய உடைகளுடன் உடற்பயிற்சிக்குரிய பாதணிகளுடன் உடற்பயிற்சி நிலையத்தில் அங்கத்தவர் என்று சந்தைக்கு வந்தது.
6
 

இதைவிட ஆச்சரியப்படக் கூடியது என்னவென்றால் Our girl can do anything' என்ற பிரச்சாரத்துடன் அடுத்த பர்பி வெளிவந்ததுதான். பர்பி மீண்டும் தான் ஆரம்பித்த இடமான தொழில் பார்க்கும் பெண் என்ற பாத்திரத்திற்கே வந்து சேர்ந்தாள்.
இடைக்காலம் தான் மிகவும் முக்கியமானது. பர்பி உருவாக்கப்பட்ட காலத்தில் அவளைக் கண்டுபிடித்த பெண்கள் உண்மையிலேயே தம்மைச் சூழவிருந்த பெண்களால் உற்சாகப்பட்டு இருந்தவர்கள். பர்பியின் தலைமயிரை உதாரணத்திற்கு கிம் நொவாக்ஸிதை ஒத்ததாக இருந்தது என்றார்கள். ஆனால் 80 களில் நிலைமை தலைகீழாக மாறி பெண்கள் தங்களை பர்பியுடன் ஒப்பிட்டுக் கொண்டார்கள். மிகவும் பிரபல்யமான சிந்தி ஜக்ஸன் பர்பியின் தோற்றத்தையொத்த தோற்றத்தைப் பெறுவதற்கு 19 சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பர்பிக்கள் தனியே பாலுக்குரிய கட்டமைப்பைக் கொண்டவையல்ல. அமெரிக்காவில் வர்க்கம் என்ற சொல் இல்லாமல் இருந்தாலும் வர்க்கக் கட்டமைப்பையும் கொண்டவை. திட்டவட்டமாக பர்பி உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவள் அல்ல. அப்படியானால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவளா? பல மேற்தட்டு வர்க்கப் பெண்களை சந்தித்து உரையாடிய போது, பல பெண்கள் பர்பியை எதிர்த்தார்கள். அவர்கள் பர்பியை எதிர்த்ததிற்கான காரணங்கள் பெண்களின் உரிமை பற்றிய காரணங்களாக அமைந்திருந்தன. இந்த உடல் பெண்ணுக்குரியதல்ல என கூறப்பட்டது. நீண்ட நேரம் மனம் திறந்த உரையாடலின் பின் மனத்தின் ஆழத்திலிருந்து சில கருத்துக்கள் வெளிவந்தன. மேல்தட்டு மக்களுக்கு பர்பி மலிவானவளாகத் தெரிந்தாள். பர்பி செல்வம் உள்ளவள்; ஆனால் மேலதிக செல்வம் உடையவளல்ல. புத்திசாலி; ஆனால் நற்பண்புகள் உடையவள் அல்ல. அழகானவள்; ஆனால் வசீகரமானவள் அல்ல என்று தெரியவந்தது.
பெண்ணிலைவாதியான கமில்லா பகிலா கூறுகிறார், “எங்களுடைய காலத்தில் பர்பி உண்மையிலேயே பாலியல் ரீதியில் ஆட்சிசெய்த நபர் என்று கொள்ளலாம். லில்லி என்ற ஜேர்மனிய ஆண்களுக்குரிய விளையாட்டுப் பொம்மையிலிருந்து பர்பி தோன்றியது என்பது எந்தவித சந்தேகமும் இல்லை. பர்பியின் உடல் அங்கம் அங்கமாக விவரணங்களின்றியே எதிர்ப்பாலுணர்வு கொண்ட ஓர் ஆணுக்கு உணர்ச்சி ஏற்படக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார். பிளேபோயில் பர்பி கிளுகிளுப்பூட்டப்பட்ட படங்களால் ஆர்வம் ஊட்டப்பட்டவளாகக் காணப்படுவது போன்ற படங்களைப் பிரசுரித்தார்கள். நோர்வேயில் 'ஆண்கள்’ என்ற சஞ்சிகையில் பர்பியையும் கீனையும் உடலுறவு நிலைகளில் பிரசுரித்தமைக்காக வழக்குத் தொடுக்கப் போவதாக மெற்றல் கம்பனி அச்சுறுத்தியுள்ளது.
பர்பி இப்போது சந்தையில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டாள். ஒவ்வொரு வருடமும் 10-15 மில்லியன் பர்பிகள் விற்பனை செய்யப்படுகிறது. இப்பொழுது பர்பி கணணி அறையிலும் உலாவரத் தொடங்கி விட்டாள். பர்பியைக் கண்டுபிடித்தவர்களுக்கு இது ஒரு வெற்றிகரமான தொடர் நவீனம். ஆனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய பாத்திரமா? O
7

Page 6
1997 ஆகஸ்ட்
Faudar :
by NDRINGOON,
- யமுனா ராஜேந்திரன்
பர்மியப் பெண்மனித உரிமையாளர் ஆங் ஸன் சூ கி
ஆங் சூகிக்கு 1991ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சூகி பர்மிய இராணுவ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கான (Pro democracy) இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் பெண்மணியாவார். பர்மிய இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றாலும் கூட, 1988ம் ஆண்டு ரங்கூன் பல்கலைக் கழகத்தை கொலைக்களமாக்கியதோடு அவரை வீட்டுக் காவலில் வைத்து துன்புறுத்தியது பர்மிய இராணுவம். அவரது கணவரும் குழந்தைகளும் உயிருக்குத் தப்பி வெளிநாடு களுக்குச் சென்றபோதும் சூகி இன்றுவரை பர்மிய அரசியல்
ஜனநாயகத்திற்காகப் போராடி வருகிறார்.
இந்தத் தீரமிக்க பெண்மணியையும் அவரது ஜனநாயகத்திற்கான போராட்டம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுவது பற்றிய சம்பவங் களையும் மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் ரங்கூனுக்கு அப்பால் (Beyond Rangoon) . பர்மிய, இந்தோனேசிய, கிழக்கு திமோர் மக்களின் போராட்டங்கள், இராணுவத்தின் மிருகவதைகள் பற்றிய விரிவான விவரங்களை புகழ்பெற்ற பத்திரிகையாளரும் இடதுசாரி அரசியலாளரும் விவரணப் படக்காரருமான ஜான் பில்ஜர் (John Pilgar) g}6öt ujjö5áblálab6úl6ö g}Göböl egélu6uTLb. Lóles நெருக்கடியான காலகட்டத்தில் கூட பர்மா சென்று ஆங் சூகியைச் சந்தித்து நேர்முகம் கண்டு விவரணப் படமொன்றை இயக்கி அதை உலகெங்குமுள்ள தொலைக்காட்சிகளில் வெளியிட்டவர் ஜான் பில்ஜர்.
8
 

நாம் இங்கு பேசவிருக்கும் ரங்கூனுக்கு அப்பால் திரைப்படத்தை இயக்கியவர் ஜான் போர்மென். போர்மென் ஏற்கனவே அமேசன் காடுகளின் அழிவிற்கு எதிரான படமான The Emara)d Forest படத்தை எடுத்தவர். தென் அமெரிக்க மக்களின் தொல் மரபுகளையும் மாந்திரீகங்களையும் வாழ்க்கை முறையையும் கெளரவப்படுத்திய படம் The Emara1d Forest. அந்த மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தும் கிளர்ச்சியையும் அப் படம் சித்தரித்தது.
மழைக் காடுகளை காப்பதும் தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதும் செவ்விந்திய பூர்வகுடி மக்களுக்கு ஒரே பிரச்சினையின் அங்கம்தான் என உலகுக்குச் சொன்ன படம் அது. செவ்விந்திய மக்களின் சுதந்திர வேட்கையை திரையில் சொன்ன அவரேதான் இப்போது பர்மிய மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தையும் சொல்லியிருக்கிறார்.
ரங்கூனுக்கு அப்பால்' படம் 1988ம் ஆண்டு ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்களின்
தலைமையில் நடைபெற்ற ஜனநாயத்திற்கான எழுச்சி பர்மிய இராணுவத்தால் குருதியில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.
அமெரிக்காவிலிருந்து சுற்றுலாப் பயணியாக பர்மாவுக்கு வருகிறார் லாரா போர்மென் எனும் பெண்மணி அவரது சகோதரிதான் லாராவை அழைத்து வந்திருக்கிறார். லாராவின் சொந்த வாழ்வு சோகம் கவிந்தது. லாரா ஒருநாள் வெளியிலிருந்து விட்டுக்கு வரும்போது தனது கணவனும் சின்னஞ்சிறு மகனும் கொள்ளையர்களால் கொலைசெய்யப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறாள். விடு குறையாடப் பட்டிருக்கிறது.
9

Page 7
1997 ஆகஸ்ட் சக்தி
தனது கணவனும் குழந்தையும் ஏதும் காரணமற்று இரத்த வெள்ளத்தில் உறைந்து கிடப்பதைக் காணும் லாரா அவள் வாழ்வு இடிந்து விழக் காண்கிறாள். டாக்டரான அவளுக்கு தன் குழந்தையின் உடல் முழுக்க நனைந்த இரத்தத்தைக் கண்டபின்னால் எவரது காயம்பட்ட உடலையும் இரத்தத்தையும் அவளால் தனது சொந்த துக்கங்களின்றி கையாள முடிவதில்லை. டாக்டர் தொழிலை கைவிடுகிறாள். இச் சந்தர்ப்பத்தில்தான் பர்மாவுக்கான அவளது சுற்றுலா ஏற்படுகிறது.
தனது குழந்தையின் நினைவில் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் லாரா மெதுவாக மனம் அமைதிப்பட்டு படுக்கையில் அமிழ்கையில் ரங்கூன் தெருக்களின் கோசங்களும் ஜனங்களின் காலடியோசையும் கேட்கிறது. ஊர்வலத்தினர் ஆங்குகியின் பேனரையும் எடுத்துக் கொண்டு போகின்றனர். லாரா எழுந்து ஊர்வலத்தினரை நோக்கி அந்த இரவில் வருகிறாள். ஒருபுறம் இராணும். மறுபுறம் ஊர்வலம். பொழுது புலர்ந்து விட்டது. அது ஜனநாயத்திற்கான போராட்ட ஊர்வலம் ஆங்குகி வருகிறார். இராணுவம் அவரை திரும்பிப் போகச் சொல்கிறது. மறுத்தால் சுட்டுக் கொல்வோம் என்கிறது. குகி புன்னகைக்கிறாள். அமைதியாக நிதானமாக நடந்து நீட்டிய துப்பாக்கிகளின் இடையே புகுந்து மக்களைச் சந்திக்கிறாள். காற்றுக் குழலின் நாதம் போல் அவளது நடை மக்கள் திரளுக்குள் நுழைகிறது.
ஊர்வலம் முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பும் லாரா கூட்டத்தில் தனது பாஸ்போர்ட் களவாடப்பட்டதை அறிகிறாள். ஹோட்டலில் அவளை விசாரிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் இருக்கிறார்கள். தமது நாட்டு அரசியலிலிருந்து விலகி நிற்குமாறு சொல்லி எச்சரித்துவிட்டுப் போகிறார்கள். நிலைமையின் நெருக்கடி கருதி சுற்றுப் பிரயாண மேலாளர் அனைவரும் அடுத்தநாள் காலை பாங்காக் செல்ல ஏற்பாடுகள் செய்யும்படி கோருகிறார். லாராவுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் லாரா போகமுடியாது. அமெரிக்க எம்பஸியில் விண்ணப்பித்து எடுக்க ஓரிரு நாட்களாகும். அதுவரை மற்றவர்கள் காத்திருக்க முடியாது.
அனைவரும் போய்விட தனித்து விடப்பட்ட லாரா, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விட்டு, அது வரும்வரை இடைப்பட்ட நாட்களில் ரங்கனுக்கு அப்பால் கிராமப் புறங்களுக்குச் சென்று வர நினைக்கிறாள். உத்தியோகபூர்வமான சுற்றுலாக்கள் அரசால் தடைசெய்யப்பட்டு விட்டது. ரங்கூன் பல்கலைக் கழகத்தின் முன்னைநாள் பேராசிரியர் ஒருவர் தனது பழைய காரொன்றை வைத்துக் கொண்டு இராணுவ செக் போஸ்டுகளுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி வெளியே போகலாம் என்கிறார். லாரா ஒப்புக் கொள்கிறாள்.
போகிற வழியில் கார் பழுதுபட்டு விடுகிறது. பக்கத்திலிருக்கும் தனது நண்பர்கள் விட்டுக்குப் போய் பழுதை சரிசெய்து விட்டுப் போகலாம் என்கிறார் பேராசிரியர் அங்கு போகும் பாதை இறங்குமுகமானது காரை தள்ளிக் கொண்டு போகும் வழியில் நண்பர்களை சந்தித்துக் கொண்டு அவர்களுடன் அன்றிரவு தங்குகிறார்கள் லாராவும் பேராசிரியரும் அந்த விட்டுக்காரர்கள் பேராசிரியரின் பழைய மாணவர்கள். 1970
O

களில் இராணுவத்திற்கெதிரான பல்கலைக்கழகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பழிவாங்கப் பட்டவர்கள். அவர்களில் ஒருவரைக் காப்பாற்றியதற்காகவே பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். அதிலிருந்து அவர் படிப்பிப்பதை நிறுத்த வேண்டியதாகி விட்டது.
அடுத்தநாள் பொழுது பரபரப்பாக விடிகிறது. இராணுவச் சட்டம் பர்மா எங்கும் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. விமான நிலையங்கள் முடப்பட்டு விட்டது. ரங்கூனில் மக்கள் எழுச்சிகளின் மீது இராணுவம் தாக்குதல் தொடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த மக்கள் எழுச்சியில் பங்குகொள்வதென அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கிளம்புகிறார்கள். ரங்கூனுக்குப் போகும் வழியெங்கும் காவல் முகாம்கள், சோதனைச் சாவடிகள். பேராசிரியரும் லாராவும் அவரது மாணவரும் வந்த கார் சோதனையிடப்படுகிறது. பேராசிரியர் துப்பாக்கியால் அடிக்கப்பட, தடுக்கப்போகும் அவரது மாணவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். லாரா காயம்பட்ட பேராசிரியரை காரில் போட்டுக்கொண்டு இராணுவத் தடைகளை தகர்த்துக் கொண்டு அடர்ந்த கானகத்தினுள் வாகனத்தைச் செலுத்துகிறாள். பேராசிரியருக்கு ம7ர்பில் குண்டடிபட்ட காயம் பின்னால் இராணுவம் துரத்துகிறது. மரங்கள் தாவரங்களை துவம்சம் செய்தபடி சிறிப் போகும் கார் ஆற்று வெள்ளத்தில் முழ்குகிறது. இராணுவம் தேடுகிறது. லாராவும் பேராசிரியரும் அவர்களிடமிருந்து தப்பி ஒரு சரக்கு படகுக்காரனின் உதவியோடு ரங்கூன் நகருக்குள் நுழைகிறார்கள் இடைப் பயணத்தில் ஒரு கிராமத்து வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் பென்சிலின் தேடிப்போகும் லாரா அங்கு ஒரு பர்மிய இராணுவ சிப்பாயை சுட்டுக்கொல்கிறாள்.
லாராவுக்கு இப்போது இரத்தமும் சாவும் பழகிவிட்டது. சிலவேளை உயிர்களைக் காப்பாற்றவும் அன்பின் பொருட்டும் கூட இதை செய்யவேண்டி இருப்பதை அதுவும் ஓர் ஒடுக்குமுறைச் சூழலில் இது தவிர்க்கவியலாது என்பதை- லாரா அனுபவமாக அறிந்து கொள்கிறாள்.
ரங்கூனுக்கு வரும் லாரா நேராக அமெரிக்க எம்பளயிக்குப் போகிறாள். எம்பளமியின் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பர்மாவில் அமெரிக்காவைத் தலையிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் எம்பளமிக்குள் போகவிடாமல் தடுக்கிறது பர்மிய இராணுவம் லாரா பேராசிரியரைக் காப்பாற்றியது தெரிந்த ஒரு இராணுவ அதிகாரி லாராவைக் கைதுசெய்யுமாறு சொல்கிறார்.
லார7 தப்பி ஓடுகிறாள். ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள், தாதிகள், புத்தமத துறவிகள், குழந்தைகள் கொன்று குவிக்கப் படுகிறார்கள். நகரமெங்கும் தி கொழுந்து விட்டு எரிகிறது எங்கெங்கும் செம்பதாகைகள், நெற்றியில் கட்டிய சிவப்புப் பட்டைகள் ஆயிரக்கணக்கான மக்களோடு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாய்லாந்து எல்லை அகதிமுகாம்களை நோக்கி ஓடுகிறார்கள் லாராவும் பேராசிரியரும் மாணவர்களும்
இடையில் பேராசிரியரின் நண்பர்களும் மாணவர்களும் சுட்டுக் கொல்லப் படுகிறார்கள் தாய்லாந்தின் எல்லையில் பர்மிய இராணுவத்தை எதிர்த்துப் போராடும் கெரில்லாக்களின்

Page 8
1997 ஆகஸ்ட் | சக்தி
முகாம்களை சென்றடைகிறார்கள் பேராசிரியரும் லாராவும் அடுத்தநாள் ஆற்றைக் கடந்து தாய்லாந்துக்குள் நுழைவது நோக்கம்
தாய்லாந்து எல்லையிலிருக்கும் பர்மிய இராணுவ சிப்பாயான இளைஞன் ஒருவன் தனது மக்களைக் கொல்வேன் என்கிறான். அவன் கை நடுங்குகிறது; முகம் அழுகிறது. பேராசிரியர் அவனைச் சமாதானப்படுத்த, அவனுடன் சேர்ந்து அனைத்து மக்களும் ஆற்றின் மரப் பாலத்தினூடு தாய்லாந்துக் கரைநோக்கி நகர்கிறார்கள். பர்மிய இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி பாலத்தைத் தகர்க்கிறார்கள் ஜனங்களின் உடல்கள் சிதறுகின்றன. விசியடிக்கும் தண்ணி ஆற்று வெள்ளம் இரத்த நிறத்தில் சுழன்றோடுகிறது. லாராவும், பேராசிரியரும், அவர்கள் தங்கிய விட்டுப் பெண்களும், குழந்தைகளும் தப்பிப் பிழைக்கிறார்கள். அக்கரை அகதிமுகாமிலிருக்கும் தனது மகளை லாராவுக்கு அறிமுகம் செய்கிறார் பேராசிரியர் அவளுக்கு அழகான ஒரு குழந்தை.
தாயை இழந்த குழந்தை, காதலனை கணவனை இழந்த பெண், நண்பனை இழந்த மனிதன், நாட்டை இழந்த தேசபக்தர்கள். என கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு அந்த அகதிமுகாமின் வாழ்வு நகர்கிறது.
லாரா முகாமுக்குள் போகிறாள். காயம் பட்டவர்கள், கால் கை இழந்தவர்கள், இரத்தம் உறைந்த உடல்கள். லாரா வெள்ளை கிளவ்ஸ்களை கைகளில் அணிகிறாள். அருகிலிருக்கும் பிறிதொரு பெண் டாக்டரிடம் சென்று நான் ஒரு டாக்டர் நான் உதவி செய்ய விரும்புகிறேன்” என்கிறாள். "எவ்வளவு காலம் இருக்கப்போகிறீர்கள்” என்னும் கேள்விக்கு, "எத்தனை காலம் நான் இவர்களுக்குத் தேவையோ அத்தனை காலம்" என்கிறாள் லாரா.
சீனாவில் நடந்த தியான்மென் சதுக்கப் படுகொலை உலகெங்கும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. ஆனால் ரங்கூனில் நடந்த 1988 படுகொலை எவருக்கும் தெரியாமல் இராணுவ ஆட்சியால் மறைக்கப்பட்டது. இச் சூழலில் இப் படத்தை ஜனநாயகத்திற்கான இயக்க மாணவர்கள் தம் போராட்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். ஆங் சூகி பற்றி உலகம் அறிய இப் படம் உதவிசெய்தது. "இப் படத்தின் விளைவாக 1995ம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டேன்; அதற்கான பெரிய உந்துதலாக இப் படம் இருந்தது' என்கிறார் ஆங் சூகி. பர்மிய அரசின் நெருக்கடியினால் மலேசியாவில் இதற்கான படப்பிடிப்பு முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் நிறைய பொய்யான கதைகளை மலேசிய அரசுக்குச் சொல்லி இப் படம் படம்பிடிக்கப்பட்டது. படம் அமெரிக்காவில் தோல்வியடைந்தது என போர்மன் குறிப்பிடுகிறார்.
சினிமா ஒரு கலைச் சாதனம். காட்சிருபக் கலைவடிவம். அரசியல் கருத்தியல் வடிவம். அந்த வகையில் பல்வேறு விமர்சனங்கள் இப் படம் பற்றி நமக்குள் வரும்,
12

இப் படத்தில் தியான்மென் ஸ்கொயர், பர்மிய மாணவர்களின் இயக்கம், கம்யூனிஸ்ட்டுகளின் இயக்கம், அகில பர்மிய மக்கள் அமெரிக்காவிடம் உதவி கேட்கிறார்கள் போன்ற செய்திகள் காட்சிகளாகக் கட்டமைக்கப்படுகிறது. அமெரிக்க எம்பஸிக்கு முன்னால் HELP என்று பெரிதாக எழுதப்பட்ட பேனர் ஒன்றை ஊர்வலத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தி முழுத் திரைக்கும் C)ose up ஆகக் காட்டுகிறார் இயக்குனர்.
பழைய இராணுவத்தைச் சேர்ந்தவனும், இந்நாள் ஜனநாயக இயக்க ஆதரவாளனுமான ஒருவன் பேசுகிறபோது “மாணவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று இராணுவம் சொன்னதை நான் நம்பினேன். ஆகவேதான் நான் மக்களைக் கொன்றேன்” என்கிறான். “இப்போதும் இராணுவம் அப்படிச் சொன்னதை நம்புகிறாயா” என்கிறாள் லாரா. “இல்லை” என்கிறான் பழைய இராணவத்தினன்.
பேராசிரியருக்கும் மாணவருக்கும் லாராவுக்குமான உரையாடல் ஒன்றில் 'அமெரிக்க சமூகம் போல் பாதுகாப்பான அரசியல் சுதந்திரம் உள்ள சமூகம் அல்ல பர்மிய சமூகம்' என்கிற விசயங்கள் இடம்பெறுகிறது.
இப் படத்தின் அரசியல் என்பது உலகின் ஜனநாயகப் பாதுகாவலராக அமெரிக்காவை முன்னிறுத்துவதுதான். ஆனால் இதே அமெரிக்கப் பாதுகாவலரும் மேற்கத்திய அரசுகளும்தான் சதாம் ஹ"சைனிலிருந்து இந்தோனேசியா ஆட்சியாளர்கள் வரை இராணுவ அரசுகளை உற்சாகப்படுத்தி ஆயுதம் விற்று பலப்படுத்தியவர்கள். எமது மக்களின் ஒடுக்குமுறைக்கு மூன்றாம் உலகின் இராணுவ ஆட்சிகள் /எதேச்சாதிகார அரசுகள் பாவிக்கும் ஆயுதமும் தொழில்நுட்பமும் பல்லாண்டுகளாக அமெரிக்காவும் மேற்குலகும் கொடுத்தவைதான்.
சமீபத்தில் பிரிட்டனில் தொலைக்காட்சியில் ஒரு சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. மூன்றாம் உலக சமூகங்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதாகச் சொல்லப்படும் Christian Aid , இங்கிலாந்தின் ஆயுத உற்பத்தி நிறுவனமொன்றில் முதலீடு செய்து இலாபம் ஈட்டிய விபரம்தான் அது. அது இலாபம் தரும் நல்ல வியாபாரம் என்று தொழில் ரீதியாகத்தான் முதலீடு செய்தோம் எனச் சமாளித்த Christian Aid பிற்பாடு அவற்றை வாபஸ் பெற்றது. இதுதான் ஏகாதிபத்தியங்களதும் சேவை அமைப்புகளினதும் மனித உரிமை அரசியலின் பொய்முகம்.
இவ்வாறு நாம் விவாதிக்கிறபோது மனித உரிமை கருத்தே அர்த்தமற்றது என்று கொள்வது அல்ல. இப்படிப்பட்ட மேற்குலக நலன்களை விமர்சித்துக் கொண்டு தமது விவகாரம் உள்நாட்டு விவகாரம், தேசபக்தி எனப் பேசி சொந்த மக்களை ஒடுக்குபவர்களாகவே மூன்றாம் உலக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
உதாரணம் சதாம் ஹ"சைன். வளைகுடா யுத்தத்தில் பெரும்பாலான இடதுசாரிகளால்
13

Page 9
1997 ஆகஸ்ட் சக்தி
சார்பான நிலைப்பாடு எடுக்கமுடியவில்லை. அமெரிக்க மேற்குலக தலையீட்டை விமர்சிக்க முனைந்து, ஆனால் சதாம் ஹ"சைனின் குவைத் படையெடுப்பை, குர்திஸ் மக்களை சதாம் கொன்று குவித்ததை நியாயப்படுத்த இடதுசாரிகளால் முடியவில்லை.
இத்தகைய இடைவெளிகளில் பிரதேசங்களில்தான் மனித உரிமை அரசியலும், அதைப்பற்றிய கலைப் படைப்புக்களும் அதன்மேலான விமர்சனங்களையும் மீறி (upd535ugbg56)|Lib Guglépg5). Neither Moscow nor Washington 6T6örp 905 இடதுசாரி இயக்கம் கோசமாக வைத்துள்ளதை இப்படியே விளங்கிக் கொள்ள
(plgul D.
இந்தச் சூழலிருந்து மனித உரிமை அரசியல் /படைப்புக்கள் பற்றிய ஒரு சுயாதீன அரசியலை நாம் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமை அரசியல் பற்றிய மேற்கின் சட்டகங்களை விமர்சன பூர்வமாகப் பார்க்கிற, நமக்கேயுரிய மனித உரிமை மற்றும் ஜனநாயகம் பற்றிய கண்ணோட்டம்.
எமது நாடுகளில் நிலவும் ஒடுக்குமுறை அமைப்புக்களின் தன்மையில் இத்தகைய கலைப் படைப்புக்கள் வருவது சாத்தியமில்லை. இத்தகைய சந்தர்ப்பத்திலேயே Beyond Rangoon மாதிரி படங்கள் தருகிற சம்பவங்கள், அனுபவம் போன்றவற்றை அங்கீகரித்துக் கொண்டு, இவைகளை விமர்சனபூர்வமாகப் பார்ப்பதன் மூலம் நமக்கான கலைப் படைப்புக்களை சிறிய அளவிலேனும் உருவாக்கிக் கொள்ள முயல வேண்டும்.
இப் படம் நமக்குள் ஏற்படுத்துகிற, சில காட்சிகள் தருகிற அழகியல் தத்துவ அனுபவங்கள் நம்மை நெகிழ்த்திவிடுபவை. தனது சொந்த வாழ்வின் சோகத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சோகங்களைக் கண்ணுறும் லாரா, அப்பாவிகள் தனிப்பட்ட காரணத்தினால் மட்டுமல்ல அரசியல் காரணங்களுக்காகவும் கொல்லப்படுகின்றார்கள் என உணரும் லாரா, தன் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கண்டுகொள்வதை தன் வாழ்வினுாடு கண்டு கொள்வதை படம் ஆதார மானுட வள்ர்ச்சியாகக் கொண்டு செல்கிறது.
லாரா ஒவ்வொரு முறையும் தனது இறந்த மகனின் நினைவாக விழித்துக் கொண்டு எழும்போது பத்து அடிகளுக்குள் குழந்தைக்குப் பாலுாட்டும் பிறிதொரு பெண்ணின் அன்பை வாஞ்சையை மிக அண்மையிலிருந்து காண்கிறாள். தனிமையான தன் வாழ்வை நெகிழ்த்துபவையாக பர்மிய மக்களின் அன்பும், புத்தமதம் சொல்கிற அமைதியும் அவருக்கு அமைகிறது. லாராவின் பாத்திர வளர்ச்சி மிகுந்த தர்க்கத்துடன் அமைகிறது.
ஆசியாவின் வயல்களும் கிராமப்புறங்களும் எருமைகளின் சத்தமும் கூட்டுவாழ்க்கையின் அன்பும் நம்மை அம் மக்களின் சுக துக்கங்களுக்குள் கொண்டு போகிறது.
மூன்றாம் உலக சமூகங்கள் பற்றிய, அதன் அரசியல் கொந்தளிப்புகள் பற்றிய படங்கள் என்பது ஐரோப்பிய /அமெரிக்க சினிமா இயக்குனர்களிடம் ஒரு வகையினமாக
14

இடம்பெற்றுவிட்டது. இப் பிரச்சினைகளில் இரு வேறு வகைப் பார்வை கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அமெரிக்க தேசபக்தியை வலியுறுத்திக் கொண்டு எம் மக்களை தாராளவாத பரிவுடன் பார்ப்பவர்கள். உ-ம் ஜோன் போர்மன், ஆலிவர் ஸ்டோன். ஆலிவர் ஸ்டோனின் சில படங்கள் தேசபக்திக் கண்ணோட்டத்தில் அமெரிக்கத் தலையீட்டை விமர்சிக்கவும் செய்கின்றன. இதுவன்றி ஏகாதிபத்தியத்தை விமர்சித்து முற்றிலும் எமது சார்பு நிலை எடுப்பவர்களும் உண்டு. உ-ம் கோஸ்டா காவ்ரஸ், ஜில்லோ பொன்டெகார்வே போன்ற இயக்குனர்கள்.
இப் படம் பேசுகிற அரசியல், காட்சியமைப்புக்கள் அனைத்திலும் ஊடாடி இறுதி உண்மை எனும் அளவில் இப் படம் நமக்கு இரண்டு செய்திகளைக் கொண்டிருக்கின்றது.
1. சோகங்கள் நமக்கு மட்டுமே உரியவை அல்ல. நம்மைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சோகங்களைச் சுமந்து கொண்டு காரணகாரியமற்று கொல்லப்படுகிற மக்கள் இந்த உலகில் ஜீவிக்கப் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
2. எமது சொந்தச் சோகங்கள் எல்லாவற்றையும் தாண்டி இம் மக்களில் ஒருவராக எம்மையும், எம்மில் ஒருவராக அவர்களையும் அனுபவம் கொள்ள நாம் என்ன செய்யப் போகிறோம்?
லாராவாக நடித்திருப்பவர் பார்ட்றீஸியா, அர்க்வட் (Puricia Arquette) . லாராவாக வாழ்ந்து வேதனைப்பட்டிருக்கிறார் பார்ட்றீஸியா.
பல்வேறு விமர்சனங்களைத் தாண்டியும் யோசிக்கவும் விவாதிக்கவும் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளவும் நம்மைக் கோரும் படம் "ரங்கூனுக்கு அப்பால்'. ரங்கூனுக்கு அப்பால் மட்டுமல்ல, நம்முடைய அவரவர் இருப்பிடங்களுக்கு அப்பாலும் உலகெங்கும் துன்புறும் மக்களும் போராடி மடியும் மக்களும் இருக்கின்றார்கள்.
அத்தகைய ஆன்ம பலம் கொண்ட ஆங் ஸன் சூகி எனும் மெலிய பெண் குறித்த படம் "ரங்கூனுக்கு அப்பால்'. O குறிப்பு :
1. இந்தப் படம் தற்போது மேற்குநாடுகளில் வீடியோவில் கிடைக்கிறது. எமது நாடுகளில் நிலவுகிற அரசியலின் பொருட்டு அநேகமாக எமது நாடுகளில் திரையிடப்படாது என்றே நினைக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் எழுதினால் அனுப்பும் செலவுகளை ஏற்றுக்கொண்டால்- என்னால் பிரதிகள் அனுப்பி உதவமுடியும்.
2. Christian Aid சம்பந்தமான விபரங்கள் இலண்டன் தமிழ் தகவல் மையத்தைச் சேர்ந்த திரு. வரதகுமாருடன் பேசிய ஒரு உரையாடலிலிருந்தும் மேலதிக விபரங்கள் தெரிந்து கொண்டேன். அவருக்கு என் நன்றி.
|15

Page 10
சக்தி
1997 ஆகஸ்ட்
ர்த்தி அவசரமாக வேலைக்கு
வெளிக்கிட்டான் லலிதா கணவனுக்
காக புட்டும் பொரியலும் ஒரு குழம்பும் செய்து கட்டிக் கொண்டிருந்தாள்.
குழந்தை அகிலா தாய் தகப்பனின் அவசர த்தை உணராமல் அயர்ந்த நித்திரை யில் ஆழ்ந்திருந்தாள் அகிலாவுக்கு ஐந்து வயது உலகம் தெரியாத வயது. உலகத்தை சரியாகப் புரியத் தெரியாத வயது "லலிதா” கணவன் முர்த்தியின் குரலில் அளவுக்கு மற்றிய பதட்டம் தொனித்தது. வேலைக்கு நேரத்தோட போகாவிட்டால் அவன் பதட்ட மடைந்து விடுவான்.
இப்படியும் கப்பங்கள்
நேரத்தையும் காலத்தையும் கணக்கில் எடுக்காத பெரும்பான்மையான தமிழர்களில் அவன் வித்தியாசமானவன். எதையும் சரியான நேரத்திற்கு செய்பவன் சரியான விசயங்களையும் சரியான நேரத்தையும் கண்டிப்பாகப் பார்ப்பவன் முர்த்தி லலிதா அவனை திருமணம் செய்தபோது அவனைப் பற்றி அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் ஒரு நல்ல பெடியன்’ என்பதே. முர்த்தி ஒரு நல்ல பையனாக அறிமுகமாகி இன்று அவளுக்கு ஒரு நல்ல கணவனாகவும் இருக்கிறான். சிங்கள பேரினவாதத்தின் கொடுமைக்குப் பயந்து இலங்கைத் தமிழர் கூடுகளிழந்த பறவைகளாக உலகெங்கும் உயிரைக் காத்துக் கொள்ள ஓடியபோது லலிதாவின் ஊரிலிருந்தும் எத்தனையோ வாலிபர்கள் உலகத்தின் நாலாபக்கங்களு க்கும் ஓடிப் போனார்கள்.
நாட்டுப் பற்றுள்ளவர்கள் தமிழ் உணர்வுள்ள வர்கள், இன்று இறந்தாலும் ஒன்று நாளை
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இறந்தாலும் ஒன்று என்று நினைக்கும் தத்துவ மனப்பான்மையுடையோர், இந்தச் சிங்களவனுக்குப் பயந்து கோழைகளாவதா என்ற உணர்ச்சியால் உந்தப் பட்டவர்கள், ஏஜென்சிக்கு காசு கொடுக்க வசதியற்றவர் கள், ஏகப்பட்ட சொத்துக்களை விட்டுவிட்டு ஓட முடியாதவர்கள், நோயாளர், முதியவர், நல்ல உத்தியோகத்திலிருப்பவர்கள், குடும்பப் பொறுப்பை விட்டு விடுதலை பெற முடியாதவர்கள், குடும்பத் தலைமையை ஏற்றுக்கொண்ட தாய்மார்கள், விதவைகள், இளம் பெண்கள் என்போர் தமிழ்ப் பகுதி களில் தங்கிவிட ஏனையோர் விமானம் ஏறி அந்நிய உலகத்திற்குப் போய்விட்டார்கள்
முர்த்தியும் அவன் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஏதோ ஒரு இயக்கத்தின் ஆதரவாளனாக இருந்தவன். தமிழர் பிரச்சினையை அறிவுபூர்வமாக ஆராயாமல் உணர்ச்சிபூர்வமாக ஆராய்ந்து கொந்தளித்த வர்களில் முர்த்தியும் ஒருத்தன்
"லலிதா” . முர்த்தி இன்னொரு தரம் கூப்பிட்டான். ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த லலிதா பதட்டத்துடன் தன்னைக் கூப்பிடும் கணவனை ஏறிட்டு நோக்கினாள் இவனை ஏறிட்டு சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் வாழ்க்கை பறக்கிறதே ஏக்கத்துடன் நினைத்தும் கொண்டாள்.
"லலிதா." முர்த்தியின் குரல் தாழ்ந்து தொனித்தது. மனைவியின் தலையை தடவிவிட்டான். அவன் ஏதோ மிகவும் முக்கியமான விடயத்தை சொல்லப் போகின்றான் என்று அவளுக்குத் தெரிந்தது.
6

என்ன சொல்லப் போகின்றான் என்றும் அவளுக்குத் தெரியும். ஆனால் அந்த விடயத்தை வாய்விட்டுக் கதைப்பதையே அருவருப்பாக நினைக்கிறாள் அதை அவன் புரிந்து கொள்வான் என்று தெரியும்.
"லலிதாக் குஞ்சு” அவன் மிகவும் நெருக்க மான உணர்வுகளுடன் அவளைக் கூப்பிடும் போது தான் குஞ்சு' என்ற சொல்லை பாவிப்பான்.
அவளுக்கு அழுகை வந்தது. அவனின் அன்பான இதயத்துள் தன்னைப் புதைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
புட்டுப் பார்சலை மேசையில் வைத்துவிட்டு அவன் மார்பில் முகம்புதைத்தாள் அவனை வேலைக்கு அனுப்பும்போது அழுது ஒப்பாளி வைக்க அவள் விரும்பவில்லை.
"இரவு நடந்ததுக்கு என்னை மன்னித்துக் கொள் லலிதா' அவன் குரலின் நெகிழ்ச்சி அவள் அடக்கி வைத்திருந்த அழுகையை மீறப் பண்ணி விட்டது.
"எங்களுக்கு ஏன் இந்த கொடிய வாழ்க்கை” அவள் விம்மி விம்மி அழுதாள் இலங்கைத் தமிழர்களான லட்சக்கணக்கான மக்கள் கேட்கும் கேள்வியிது.
அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.
"மனிதர்கள் எல்லாம் மிருகமாய் நடக்கினம்" அவள் கண்னர் அவனின் சேட்டை நனைத்து அவன் தோலைத் தழுவியது. இந்த விம்மல் அவன் இதயத்தை குடைந்து LIT Liggs.
'இல்லை லலிதா மிருகங்கள் தான் மனித முகமுடிகள் போட்டுக் கொண்டும், குட்டும்
7ן
கோட்டும் மாட்டிக் கொண்டும் கெளரவமான வர்களாய்த் தெரிகிறார்கள்”
பக்கத்துத் தெருவில் காரின் ஒலிகள் கேட்கத் தொடங்கின. இனி இந்த ரோட்டில் திருவிழாக் கோலமாகத்தானிருக்கும்.
"நேரமாகுது' அவள் கணிணிரைத் துடைத்துக் கொண்டாள்.
'அவன் சொன்னது எல்லாவற்றையும் மறந்துவிடு லலிதா” கணவன் இன்னொருத் தனுக்காக இவளிடம் கெஞ்சினான்.
"நெருப்புச் சுட்டா தோல் எரியும், அந்த நீசனின் சொல்லுகளால் நெஞ்சே எரியுதே' அவள் தன் துயர் மறைக்க தன் உதட்டை கடித்துக் கொண்டாள். 'லலிதா நரிலவைப் பார்த்து நாய் குரைத்தால் நிலவென்ன தேய்ந்தா விடும்” அவளுக்கு ஆதரவு சொல்வதற்காக ஏதோ (ിffങ്ങിങ്ങffങ്ങി. நிலவுக்குப் பயந்து பரதேசம் போகலாமா? அவள் யோசித்தாள் அவன் போய்விட்டான் அழும் குழந்தையைத் தேற்றுவது போல் என்னவெல்லாமோ சொல்லி அவளைத் தேற்றினான்.
அவன் சொன்ன எல்லாப் புத்திமதிகளும் அவள் காதில் நுழையவில்லை. நுழைந்த சில புத்திமதிகளை நினைக்க கோபம் வந்தது. தன்னை சிறையிலிருக்கப் பண்ணி யவனில் அவளுக்கு கோபம் வந்தது.
"வெளியில் ஒரு இடமும் போகாதே. குழந்தை அகிலாவை பக்கத்து விட்டுக் குழந்தையுடன் பாடசாலைக்கு அனுப்பி
முர்த்தி சொல்லிவிட்டுப் போனவை காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. நேற்றிரவு நடந்தது உண்மையில் நடந்தது

Page 11
சக்தி
1997 ஆகஸ்ட்
தானா என்று அவளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
கருணாகரன் என்பவன் முர்த்தியரின் நண்பனாக ஒரு காலத்தில் பழகியவன். சின்ன வயதில் ஒன்றாகப் படித்த பழக்கத்தில் தொடர்ந்த உறவு அது இன்று கருணாகரன் பணத்தின் திமிரால் உலகத் தையே விலைக்கு வாங்கப் பார்க்கிறான். கருணாகரனை நினைக்க அவளுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறது.
கருணாகரன் கேட்ட கேள்வியை ஞாபகப் படுத்திக் கொண்டால் நெஞ்சே குமுறுகிறது. இந்த கருணாகரன் போன்றவர்கள் தங்கை, அக்காமார்களுடன் பிறக்கவில்லையா? அம்மாவின் அன்பை உணரவில்லையா? ஆச்சிகளின் புத்திமதி கேட்டு வளரவில் லையா? மாமி மருமகள்களிடம் மரியாதை கொடுத்துப் பழகவில்லையா? தங்கள் குடும்பத்தை பாதுகாக்க எந்தப் பெண்ணும் தன் கண்ணையும் கொடுக்கத் தயங்காள் இவன் பெண்மையைக் கேட்கிறானே! பெண்கள் இல்லாத பாலைவனத்திலிருந்து குதித்தவனா இந்தப் பாவி கருணாகரன்?
"அம்மா." மகள் அகிலாவின் நித்திரை கலந்த குரல் லலிதாவின் நினைவைத் துண்டாக்கியது.
கடந்த ஒரு கிழமையாக லலிதா வெளியில் போகவில்லை. கருணாகரன் போன்ற கயவர்கள் வெளியில் திரிவார்கள் என்ற பயமும், ஏன் பிரச்சினையை விலைக்கு வாங்குவான் என்ற யோசனையும் அவளை விட்டோடு அடைத்துவிட்டது.
முர்த்தியின் பயமும் கொஞ்சம் குறைந்தது. "ஏன் இந்த நாய்களுக்குப் பயந்து நான் கூண்டில் அடைந்து கிடக்க வேண்டும்? "
என்று லலிதா சண்டை பிடிப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் ஒரு கிழமை யாக விட்டோடு அடைந்து கிடப்பது ஒரு விதத்தில் நிம்மதியாகவும் மறுவிதத்தில் கருணாகரன்மீது ஆத்திரத்தையும் உண்டாக் கியது.
லலிதா எப்படியோ தன் கோபத்தைத் தணித்துக் கொண்டாள். ஒரு கிழமைக் காலம் என்றது அவளின் நெஞ்சிற் படர்ந்த நெருப்பைக் கொஞ்சம் தணிந்திருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை, குளித்து முழுகிவிட்டு குழந்தையை அடுத்த விட்டு மிளமிஸ் யோசப் என்ற பெண்மணி யுடன் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு விட்டு வேலையை கவனிக்கத் தொடங்கினாள் லலிதா.
மிளமிஸ் யோசப் தான் வாசித்து முடித்த வுடன் லலிதாவுக்கு பத்திரிகைகளைக் கொடுப்பாள். ஏதோ புரட்டிக் கொண்டிருந் தவள் கண்ணுக்கு பத்திரிகையின் முன்
 

பக்கத்தில் போட்டிருந்த படம் கண்களை உறுத்தியது.
பூகோஸ்லாவாக்கியாச் சண்டை காரணமாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் சேர்பியன் துருப்புகளின் அட்டூழியத்தால் அழிந்து முடிகிறார்கள். அந்த அக்கிரமத்தில் முக்கி யமாகப் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர் களும் யுவதிகளுமே, சேர்பியன் இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு தூங்கி தற்கொலை செய்துகொண்ட பெண் ஒருத்தியின் படம் இந்தப் பத்திரிகையின் முன்பக்கத்தில் போடப்பட்டிருந்தது.
ஒருகணம் அவள் தன்னை அந்தப் படத்தின்
இடத்தில் வைத்து கற்பனை செய்து கொண்டாள். கருணாகரன் போன்ற ஆண்களுக்கும் இந்த சேர்பிய இராணுவத்தினருக்கும் என்ன வித்தியாசம்? தங்கள் ஆண்மையின், ஆதிக்கத்தின் பலத்தை பென்மையில் திணித்து அழிக்கப் பார்க்கிறார்கள். சிங்கள இராணுவம் செய்த கொடுமையால் அழிந்த தமிழ்ப் பெண்களின் தொகை எத்தனை? முர்த்தி பாவம் தன் மனைவியை இன்னொ ருத்தனின் இச்சையிலிருந்து காப்பாற்ற என்ன பாடுபடுகிறான்?
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்ட அன்றைய இராவணன்களும் துரியோதனன் களும் இன்னும் எங்களிடையில் வாழ்கிறார் கள் இருக்கும் இடங்கள்தான் வித்தியாசம் அவர்கள் நினைக்கும் பாவங்கள் எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது.
அந்த உலகில் முர்த்தி போன்ற கண்ணிய
மான மனிதர்களும் உண்டு லலிதாவை முர்த்திக்கு மனைவியாகக் கேட்டு வந்த
|19
போது லலிதாவின் தாய் தகப்பன் மிகவும் யோசித்தனர். முர்த்திக்கு பெரிய குடும்பம், அவனுக்கு பெரிய பொறுப்பு அவனுக்கு கட்டிக் கொடுத்தால் தன் மகள் கஷ்டப்பட வேண் டும். மைத்துனிகளின் சுமையையும் இவள் தாங்கவேண்டும் என்று பயந்தார்கள்
தன்னை விரும்பிக் கேட்டவன் தாய் தகப் பன் தனக்காக வைத்திருக்கும் சீதனத்தை கேள்விப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றுதான் லலிதா நினைத்தாள்.
தனக்குத் தெரிந்த சினேகிதிகளின் தமயன் ஒருத்தன் ஒருகாலத்தில் முர்த்தியுடன் ஏதோ ஒரு தமிழ் இயக்கத்திலிருந்தவன் என்று தெரிந்ததும் அவனின் முலம் முர்த்தியைப் பற்றி விசாரித்தாள் லலிதா.
"முர்த்தி நல்ல பையன் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டவன். தங்கை தமக்கை இல்லாவிட்டால் தனக்கு என்று சீதனம் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான் என்றான் சினேகிதியின் தமயன் சினேகிதி யின் தமயனை லலிதா நன்றாக விசாரித்த பின் முர்த்தியை தான் சந்திக்க விரும்பு வதாக சொல்லியனுப்பினாள் லலிதா.
இவள் சொல்லியனுப்பி அவன் வந்து இவளைக் கான வருவதற்கிடையில் இவள் ஊரில் ஒரு பெரிய பயங்கரமே நடந்து விட்டது. சமாதானப்படை என்ற முகமுடி யில் வந்த இந்திய இராணுவம் இலங்கைத் தமிழ்ப் பெண்களை நடத்திய விதம் கண்களைக் கூசவைத்து, காதுகளை செவி டாகப் பண்ணி வாயை ஊமையடையச் செய்யும் விதமாகும்.
லலிதாவைப் போன்ற எத்தனையோ பெண் களின் பெண்மை பலவந்தமாக ஆக்கிரமிக் கப்பட்டது. லலிதாவின் தமயனைத் தேடிவந்த இராணுவம் மைத்துனியின்

Page 12
சக்தி
1997 ஆகஸ்ட்
பெண்மையைச் சூறையாடியதும், அதனால் அவள் தன்னைத் தானே அழித்துக் கொண்டதும் ஏதோ கனவில் நடந்ததுபோற் தானிருந்தது. சிங்கள இராணுவம் தமிழரு க்குச் செய்த அதே கொடுமையை இந்திய இராணுவம் செய்துகொண்டிருந்தது. அந்த ஊரில் உள்ள நாய்களும் பூனைகளும் சுதந்திரமாகத் திரிய மனிதர்கள் இந்திய இராணுவத்தால் மிருகங்களென வேட்டை u JITIL LIL JILL - Tiffab6ħ.
நிலவும் காற்றும் மாறவில்லை. மனிதர் களின் நினைவுகளில் பயங்கர வடுக்கள் பதிந்தன. நீரும் நிலமும் கசக்கவில்லை. ஊர்தேடி வந்த இராணுவம் மனித நிழலையே கசக்கப் பண்ணும் விதத்தில் தன் மிருக வெறியைக் காட்டியது.
முர்த்தி லலிதாவைக் காணவந்தபோது அந்த வட்டில் இரண்டு சவங்களை அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். காவலுக்கு வந்த இந்து இராணுவம்' இரண்டு தமிழ்ப் பெண்களின் உயிரை கப்பம் எடுத்துக் கொண்டது. மைத்துனி அவள் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டாள். அவள் உடலை எரித்து அடுத்த நாள் முர்த்தி லலிதாவைப் பார்க்க வந்தான்.
போன மாதமாயிருந்தால் "உனது முற் போக்குக் கொள்கைகள் என்ன, சீதனம் வாங்குவதைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று குறும்பாகக் கேட்டிருப்பாள்.
இன்று அவன் வந்தபோது அவள் குடும்பத்தில் யார் இந்த அந்நியன் என்று யாரும் பெரிதாகக் கேள்வி கேட்கவில்லை. லலிதாவின் தாய் மனைவியையும் குழந்தை யையும் இழந்துபோய் உடைந்து போயிருக்கும் மகனை தேற்றிக்கொன்
டிருந்தாள். இவன் சைக்கிள் கேற்றடியிற் சாத்தப்பட்ட சத்தம் கேட்டு கிணற்றடியில் வேலையாய் இருந்தவள் வந்தாள்.
நான். நான் முர்த்தி." என்றான். லலிதா வீட்டில் நடந்த துன்பம் கேள்விப்பட்டிரு ந்தான். இவளை எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். ஏதோ ஒரு நெருங்கிய உறவு குரலில் தொனித்தது.
அவளுக்கு இவனைத் தெரியாது. இவன் எத்தனையோ தரம் ரியூட்டரிக்குப் போன பாதையில் தன்னை கண்டிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறாள்.
கண்டதும் தொண்டையடைத்தது. கண்கள் சொரிந்தன.
"எங்கடை விட்டிலை இரண்டு பேர் செத்துப் போய்ச்சினம்" அவள் கேவிக் கேவி அழுதாள். "தமிழர்கள் நிறைய செத்துப் போய்ச்சினம்’ அவன் முணுமுணுத்தான். "செத்த இரண்டுபேரும் என்ர சொந்தம்’ அவள் பைத்தியம்போல் சொன்னாள் "உங்கட மச்சாள் பெரிய முட்டாள்" அவன் நிதானமாகச் சொன்னான். அவள் நீள்வடிந்த கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"மிருகங்கள் கழச்சால் மனிசர் செத்துப்போக நினைக்கக் கூடாது. கான்சர் வந்த காலை வெட்டிப் போடுற பெரிய விசயம்தான் இந்த அசிங்கமான விடயத்தை நினைவில் இருந்து எடுக்கிறதும்." அவன் பேசிக் கொண்டே போனான்.
列
妙
'இராணுவக்காரன்கள் தன் எதிரியின்ர ஆண்மையை முகங்கொடுக்க முடியாத கோழைத்தனத்திலைதான் எங்கள் பெண் களை இம்சை செய்யினம் அதற்காக நாங் கள் எங்களை அழிச்சுக்கொள்ள முடியுமா?"
2O

முர்த்தி இவளை தேற்றுவதற்குப் பதிலாக மைத்துனியை குற்றஞ்சாட்டியதை இவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"லலிதா. உங்கட மைத்துனி போன்ற பெண்களை சாகப் பண்ணுற எங்கட சமுதாயத்தை நாங்கள் திருத்த வேணும். இராணுவத்தால் அவள் பலவந்தப்படுத்தப் பட்டது அவள் குற்றம் என்று நினைக்கப் பண்ணியதும் அவளை சாகப் பண்ணியதும் எங்களின்ர கலாச்சாரத்தின் சீரழிந்த கருத்து கள் எண்டுதான் நினைக்கிறேன்"
அவள் மெளனமானாள் இந்திய இராணுவ த்தால் துவம்சம் செய்யப்பட்ட இந்தக் குடும்பத்தில் இனி யாரும் பெண்ணெடுக்க வரமாட்டார்கள் என்று யோசித்துக் கொண்டி ருந்தவளுக்கு இவன் சொல்லிய விதம் வாயடைக்கப் பண்ணியது.
ரெலிபோன் மணி அடித்தது. லலிதா தன் சிந்தனை மடலை முடிவிட்டு ரெலிபோனை எடுத்தாள்.
பாடசாலையிலிருந்து ஆசிரியர் கதைப்பதாக வும் அகிலாவுக்கு ஏதோ காயமாம் என்று சொன்னதும் லலிதாவை நிலைகுலையப் பண்ணியது.
கொஞ்ச நாளைக்கு வீட்டைவிட்டு வெளியே போகவேண்டாம் என்று முர்த்தி சொன்னதை uQO3/j6g5/ 62fil L l/76ft.
"வாங்கிய கடனைத் தராவிட்டால் உன்ர பொஞ்சாதியை ஒருநாளைக்குத் தாவன்." என்ற கருணாகரனின் கேவலமான குரலை மறந்துவிட்டாள் லலிதா.
பத்தாம் மாடியில் இருக்கிறது அவள் பிளாட். லிப்ட்டுக்கு காத்திருந்தபோது இருதயம் நின்றுவிடும்போல் பக். பக்.
2
என்று அடித்துக் கொண்டது.
"பாவம் அகிலா. சின்னக் காயம் என்றாலும் துடித்துப்போவாளே." தாய்மனம் தவித்தது.
லிப்ட்டால் கீழே வந்ததும் ரோட்டில் அவசரமாக ஓடினாள். முர்த்திக்குப் போன் பண்ணி விடயத்தைச் சொல்லவில்லை என்பதைக்கூட அவள் அப்போதுதான் யோசித்தாள்.
அவனின் வேலைத்தலத்துக்குப் போன் பண்ணியபோது அவன் இப்போதுதான் வெளிக்கிட்டுப் போனதாகச் சொன்னார்கள் பாடசாலை ஆசிரியர் அவனுக்கு போன் பண்ணிச் சொல்லியிருப்பார் என்று தன்னை தானே சமாதானம் செய்துகொண்டாள் லலிதா. உலகமெல்லாம் அந்நிய முகங்கள், அந்நிய மொழி.
அவள் ஓடினாள். யாரோ அவளை காரில் தள்ளியதும் இன்னொருத்தன் அவளின் வாயைப் பொத்தியதும் கனவில் நடப்பதுபோல் இருந்தது. தலையில் ஏதோ பாரமான அடி. அவள் வாழ்க்கையில் விழுந்த பலத்த அடி. எதிர்காலத்தைச் சிதறிய பயங்கர அடி. நினைவு தவறிவிட்டது.
நரினைவு வந்தபோது கலிகாலத்தின் அதர்மமெல்லாம் கருணாகரன் என்ற பெயரில் அவள் பெண்மையைத் துவம்சம் செய்துவிட்டது.
பிரமாணடமான உருவத்தில் அவன் அவள் முன்னால் தன் கோரப் பற்களைக் காட்டிச் சிரித்தான். அசுரர்களின் அவதாரமா இந்த மனிதன்? லலிதா துவண்டுபோய்க் கிடந் தாள். திரெளபதிக்கு துகில் உரியப்பட்ட போது கண்ணன் வந்தான். சீதை சிறைை வக்கப்பட்டபோது அனுமான் தோன்றினான்

Page 13
சக்தி
1997 ஆகஸ்ட்
லலிதாவின் இதயவீணை உடைக்கப்பட்டு எதிர்காலம் சிதைக்கப்பட்டபோது இந்த ஆங்கிலேய நாட்டின் நான்கு சுவர்களும் மெளனக் கண்ணிர் வடித்தது.
கடன்பட்ட கணவனிடம் அவன் மனைவியின் பெண்மையை கப்பம் கேட்ட கருணாகரனை காறித் துப்பியவள் லலிதா. அவள் உதடு களில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"இந்த வாயாற்தானே என்னை காறித் துப்பினாய்."
அதன்பின் அவன் சொன்ன விடயங்களும் நடந்து கொண்ட விதமும்.
தமிழன் என்ற பெயரில் நடமாடும் இவர்கள் அவள் படித்த அஆ வையா படித்தார்கள்? அ என்றால் அம்மா என்றும், ஆ என்றால் ஆதிபராசக்தி என்றும் பெண்மையைப் படித்திருப்பானா?
மனிதத்தின் முதற்குரல் பம்மா’ என்பதை இவன் சொல்லியிருக்க மாட்டானா? மாட்டுக் கன்று கூட ம்மா’ என்றுதானே குரல் எழுப்பும். இவன் என்ன ஆண் உருவில் ஊரும் விஷப் பாம்பா? லலிதாவின் உடம்பு அடித்த நாராகத் துவண்டது. எத்தனை நாள், எத்தனை மணித்தியாலம், அல்லது எத்தனை வருடங்கள் இந்த மிருகம் இந்த அறையில் அவளை அடைத்து வைத்திருக்கிறான்?
"உன்ர புருஷன் தன்ர தங்கச்சியின்ரை கல்யாணத்துக்கு வாங்கிய கடன் திருப்பித் தராட்டா தன்ர பொஞ்சாதியைத் தான் தரவேணும் எண்டு போய்ச் சொல்'
கருணாகரன் கொடுத்த கடனில் முர்த்தியின் தங்கையின் கழுத்தில் தாலி கருணாகரன் அவளை நகைத்தான் ஆண்மையின் அகர
வெறிக்கு இந்த மெல்லிய பெண்னுடல் துவண்டது. அடித்துப் போட்டுக் காரில் ஏற்றியது போல் இழுத்து வந்து அவனும் அவன் சினேகிதனும் காரில் ஏற்றினார்கள்
"புருஷன் வரமுதல் குளிச்சு முழுகி பொட்டு வைச்சுக்கோ" கருணாகரன் என்ற தெய்வத் தின் பெயரை வைத்துக் கொண்ட கயவன் உறுமினான்.
இரண்டு நாளைக்கு தொட விடாதே, அவன் உன்ர காயத்தைப் பற்றி கேள்வி கேட்டான்"
நாய் குரைத்தது.
இனி நான் அடிச்சுக் காரில் போடமாட்டேன் போன் பண்ணினா வந்துவிட்டுப் போ. பொலிசுக்கெல்லாம் போற கதை வச்சா உன்ர மச்ச7ள்மாரின்ர குடும்பத்திற்கெல்லாம் கதையை எப்படிச் சொல்லுவன் என்று யோசிச்சுப் பார்” கருணாகரன் கர்ச்சித்தான் இப்படி மிரட்டித்தான் எங்கள் தமிழ்ப் பெண்களை ஊமையாக்கி விட்டார்களா? லிப்டில் தள்ளிவிட்டான் கருணாகரன். சிதைந்த சிலையாகக் கிடந்தாள் லலிதா. இந்திய இராணுவத்தால் துவம் சம் செய்யப்பட்ட மைத்துனியின் கதறல் லிப்டில் கேட்டது. அவளின் இறந்த உடல் கிணற் றில் மிதந்தது ஞாபகம் வந்தது. சிங்கள, இந்திய சேர்பிய இராணுவம், கருணாகரன் போன்ற கயவர்களுக்கு வலுவற்ற பெண் களின் உடல்கள் என்ன போர்க்களமா வெற்றிக் கொள்ள?
பத்தாவது மாடியின் ஜன்னலால் விடுதலை யைத் தேடலாமா? தோல்வியைத் தாங்கா மல் தற்கொலையை நாடுவது கோழைத் 560/Isis 606 ul III?
அடிவயிறு நொந்தது. அதனடியில் என்ன வெல்லாமோ கடுத்தது. அவளுக்கு சத்தி வந்தது. பூமி பிளந்து அவளை விழுங்கிக்
22

கொள்ளதா என்றிருந்தது. மார்பகங்கள் இரத்தம் சிந்தின. இதழ்கள் விண் விண் என்று வலித்தன. தன் உடலையே அவள் வெறுத்தாள் விஷம் பரந்த உடம்பா இது? என்ன செய்ய?
ஜன்னல் திறந்திருந்தது. மேகம் நிர்மல மாயிருந்தது. சூரியன் அவசரமாய் மேற்கு நோக்கி ஓடினான். எரிமலையும் வெடித்து விட்டுத் தணிந்து விடும் அடைமழையும் அணையுடைந்து பாய்ந்தோடும் இவள் உடம்பில் பட்ட கறை எப்படித்தான் நீங் குமோ? என்ன சொல்லி இவள் அழுவாள்?
ரெலிபோன் செய்தி வந்ததற்கும் இப்போதை க்கும் இடையில் ஆறு மணித்தியாலங்கள் தான் கழிந்திருந்தன.
அடுத்த பிளாட் மிஸஸ் யோசப் அகிலா வைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். தான் வீட்டில் இல்லாததைக் கண்டதும் தனது பிளட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் வைத்திருக்கலாம்.
முர்த்தி தன் வேலையிலிருந்து விடு திரும்ப இரவு பத்து மணியாகும். இரணர்டு வேலைகள் செய்கிறான். தங்கைகளின் வாழ்க்கையரில் விளக்கேற்ற அவன் இயந்திரமாக உழைக்கிறான். அவன் மனைவியின் வாழ்க்கையரில் இருள் குழ்ந்தது தெரியாமல் இன்று பத்து மணிக்கு வருவான்.
லலிதா ஜன்னலால் உலகத்தைப் பார்த்தாள். பெரிய பெரிய மாடமாளிகை கள். இவள் இந்த ஜன்னலால் பாய்ந்து இறந்துவிட்டால் உலகத்திற்கு ஒன்றும் தெரியப் போவதில்லை. முர்த்தி என்ன நினைப்பான்?இவள் இல்லாவிட்டால் அவன் தாங்க மாட்டானே. கணவனுக்காகக் காத்திருந்தாள். அவளால் தெளிவாக
23
ஒன்றும் சிந்திக்க முடியவில்லை. என்ன சொல்வான் மூர்த்தி?
இவள் மைத்துனியை இந்திய இராணுவம் கொடுமை செய்ய, அவளை இறக்கப் பண்ணியது சமுதாயம் அவளைப் பார்த்த அசிங்கப் பார்வை. அந்த சமுதாயத்தைத் திருத்த வேண்டும் என்று டபிரசங்கம் செய்தானே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்ணின் வாழ்க்கையை சிதறடிக்கும் கருத்துகளுக்குச் சாவுமனி அடிக்கவேண் டும் என்று பாரதிபோல் முழங்குவானே!
இப்போது எப்படி நடந்து கொள்வான்!
இவன் மனைவியை இன்னொருத்தன் அசசிங்கப்படுத்தி விட்டானே! என்ன சொல்வான் முர்த்தி? இவள் சீதையாய் தியிறங்கித் தன் தூய்மையை உலகுக்கு நிருபிக்க வேண்டுமா? ஊருக்கு உபதேசம் உனக்கில்லை லலிதா என்று சொல்லி விட்டால் இவளுக்கு வாழ்வேது? அவன் இதயத்துக்குள் தன்னை புதைத்துக் கொள்ளத் துடிப்பாளே அந்த இதயம் அவனுக்காகத் திறந்திருக்குமா?
ஜன்னல் திறந்திருக்கிறது. தற்கொலைதான் வழியா? அம்மாவின் இறப்பை எப்படி அகிலாவால் சகிக்க முடியும்?
இவளில்லாமல் அந்தக் குழந்தை வளர்ந்தும் இன்னொரு கருணாகரனிடம் கைதியாக மாட்டாள் என்று என்ன நிச்சயம்?
இராவணர்களும் துரியோதனர்களும் எந்த முலையிலும் இருக்கின்றார்களே. லலிதா வின் நீர் வழிந்த கண்களில் காலையில் பத்திரிகையில் பார்த்த பெண்ணின் படம் தென்பட்டது. சேர்பியன் இராணுவத்தால் பெண்மை இழந்த பெண்ணின் தற்கொலை!

Page 14
சக்தி
1997 ஆகஸ்ட்
லலிதா இறந்து விட்டால் அவள் இறப்பும் நாளைக்கு ஒரு சிறு செய்தியாக ஒரு பத்திரிகையில் வரும்.
லலிதா பெருமுச்சு விட்டாள்
இல்லை. இல்லை. நான் என்னை அழித்துக் கொள்ளப் போவதில்லை. பொலிசுக்குப் போனால் என்ன நடக்கும் என்று கருணாகரன் கிண்டலாகச் சொன் னான். இவளைக் குற்றவாளிக் கூண்டில் வைத்து எத்தனை கேவலமான கேள்விகள் கேட்பார்கள் என்றும் தெரியும்.
மைத்துனி மாதிரி. பொஸ்னிய இளம் பெண் மாதிரி.
அல்லது முர்த்தியிடம் சொல்லிவிட்டு அவன் தன்னை எப்படி நடத்துவானோ என்ற பயத் துடன் வாழ்க்கையெல்லாம் துடித்துக் கழிவதா? அல்லது கருணாகரன் போன்ற கயவர் களுக்கு பாடம் கற்பிப்பதா? பெண்களுக்கு விடிவு பெண்மையின் சிற்றத்தில்தான் பிறக் கும். பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. லலிதாவின் கைகள் பொலிசின் நம்பரைச் சுழற்றுகிறது. கண்ணகிகள் இன்னும் சாகவில்லை!
மனமோ அவள் கணவனின் ஆதரிப்புக்கும் அன்புக்கும், இவள் எடுக்கும் செய்கைக்கு ஊக்கம் தரவேண்டும் என்றும் பிரார்த்திக் கிறது. முர்த்தி ஒரு நல்ல பையன்
O
'6ിUരീതബേ) ;
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
சி) கேள்விகள்’
18ம் நுாற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கும் தென் னாசியப் பெண்களுக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா?
ஐரோப்பிய ஏகாதிபத்தியமானது ஐரோப்பிய உற்பத்தி முறையை காலனியாக்கப் பட்ட நாடுகளோடு நேரடியாக இணைத்து, பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. இம் மாற்றங்கள் அரசியல் , நிர்வாக ரீதியானதாக மட்டுமல்லாது, ஏற்கனவே நிலவி வந்த பொருளாதார/சமூக அமைப்பின் அடிப்படைகளையே மாற்றியமைத்ததன் மூலம் காலனித்துவ நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கை அடிப்படையையே மாற்றி யமைத்துள்ளன. அந்த மாற்றங்களால் பெண்களும் பாதிக்கப்பட்டனர். காலனித்துவ ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளும் செயல்திட்டங்களும் பெண்களை அவர்கள் முன்பிருந்த நிலையிலிருந்து கீழே தள்ளின. உதாரணமாக காலனித்துவத்திற்கு முந்திய சமூகங்களில் பெண்கள் உணவுற்பத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். காலனித்துவ காலத்தில் பெண்கள் உணவுற்பத்தியில் ஈடுபட்டாலும்
24

விவசாய உற்பத்திமுறைகள் பணப்பயிர்ச்செய்கைக்கு மாற்றப்பட்டதன் விளைவாக தொழிற்சாலைகள், சுரங்கங்களில் மட்டுமல்லாமல் தேயிலை, கோப்பி, றப்பர் முதலிய பெருந்தோட்டங்களிலும் அவர்கள் வேலைசெய்ய உந்தப்பட்டனர். ஐரோப்பியப் பெண்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டதைப் போலவே, தென்னாசியாவிலும் பூர்சுவா வர்க்கப் பெண்கள் இருந்தனர். ஆனால் இவர்களில் சிலர் ஓரளவு கல்வி கற்க அனுமதிக்கப்பட்டு சில அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அடிப்படைச் சட்டங்கள் ஆணை எந்தவித எதிர்ப்புமின்றி தலைவனாக ஏற்றுக் கொள்ளுகின்ற தந்தைவழிச் சமூக அமைப்பை மேலும் உறுதிப்படுத்தவே உதவின.
எனவே முதலாளித்துவ வளர்ச்சியுடன், ஐரோப்பாவிலும் காலனித்துவ நாடுகளிலும் தந்தைவழிச் சமூக அமைப்பு மேலும் வலுவாக்கப்பட்டது. வீட்டு உற்பத்திகளில் முன்பிருந்த உரிமைகளையும் இழந்து, வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் பெண்கள் சுரண்டப்பட்டார்கள் அல்லது வீட்டிற்குள் முடக்கப்பட்டார்கள். காலனித்துவ வாதிகளினால் 19ம் நுாற்றாண்டில் தொடக்கி வைக்கப்பட்ட ஏகாதிபத்தியக் கலாச்சாரமானது தந்தைவழிச் சமூக அமைப்பையும் அதன் வழிப் பொருளாதார பெறுமானங்களையும் மேலும் வலுப்படுத்தியது. துரதிஸ்டவசமாக எமது முந்திய காலனித்துவ ஆட்சியாளர் களுடனான தொடர்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது பொருளாதாரக் கட்டுமானம் மட்டுமல்லாது, அரசியல்/சட்ட/கல்வி முறைகளும் இன்னமும் பிரித்தானியர் களின் முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
தந்தைவழிச் சமூக அமைப்பு என்ற பதத்தை சுருக்கமாக விளக்க முடியுமா?
தந்தைவழிச் சமூக அமைப்பு என்பது தந்தை அல்லது குடும்பத் தலைவன் ஒருவனின் ஆணைப்படி இயங்கும் குடும்ப அமைப்பைக் கொண்ட சமூகமாகும். அதன்படி தந்தையானவன் குடும்பத்திலுள்ள அனைவரையும், சகல சொத்துக்களையும், வேறு பொருளாதார ஆதாரங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் உரிமைகளை அவனே தக்கவைத்துக் கொண்டிருக்கவும் முடியும். ஆண்கள் பெண்களைவிட உயர்வானவர்கள் எனக் கருதப்படுவதும், பெண்கள் ஆண்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய சொத்தாக எண்ணப்படுவதும் நம்பப்படுவதும் இச் சமூக அமைப்புடன் தொடர்புடையதே. இந்தச் சிந்தனையின் அடிப்படையில்தான் நமது பல மதங்களின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் அமைவதோடு, பெண்களை வீட்டுக்குள் சிறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறைகளைக் கட்டுப்படுத்தும் சகல சமூக நடைமுறைகளுக்கும் விளக்கம் கொடுக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கு அதிக உரிமைகளைக் கொடுக்கும் இரட்டைத் தன்மை கொண்ட ஒழுக்க நியதிகளும் சட்டங்களும் இந்த தந்தைவழிச் சமூக அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதுதான். எனவே தந்தைவழிச் சமூகம் என்ற பதம் உபயோகிக்கப்டும் போது, அது சொந்த வாழ்விலும், பொதுவாழ்விலும் பெண்களை ஒடுக்கி அவர்களை கீழ்ப்படிவுள்ளவர்களாக வைத்திருக்கும் ஒரு சமூக அமைப்பையே குறிக்கிறது.
(தொடரும்)
25

Page 15
1997 ஆகஸ்ட் 1 சக்தி
நோக்கி. சர்வதேசப் பெண்ணியத்தை
(இக் கட்டுரை Sangharsh என்ற பத்திரிகையில் 1984 இல் வெளிவந்திருந்தது. இதை எழுதியவர் அசோகா பண்டாரகே. இவர் அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பெண்மணியாவார்)
பெ ண்ணியத்தின் சர்வதேசம் தழுவிய வளர்ச்சி முரண்பாடுகள்
நிறைந்த அறிவியல், அரசியல் நிகழ்வாகச் சமகாலம் நமக்கு அறிவுறுத்துகின்றது. காலங்காலமாக ஆழ வேரோடிய பெண்களின் இரண்டாந்தர நிலைமை, அவைகளை மாற்றுவதற்கான வழிவகைகள் என்பனபற்றி பெண் குரல்கள் உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
1975 இல் ஐக்கிய நாடுகள் அடுத்த பத்தாண்டுகளை பெண்கள் ஆண்டாக மெக்சிக்கோ நகர் மாநாட்டில் பிரகடனப்படுத்தியது. பல அரசுகள் 1980 இல் நடைபெறவிருந்த அரைப்பத்தாண்டு மாநாட்டிற்கான ஆயத்தமாக தமது நாடுகளில் பெண்கள் பணிக் காரியாலயங்களைத் தொடங்கின. 1985 இல் நைரோபியில் நடைபெறவிருக்கும் பத்தாண்டுக் காலத்தின் இறுதி மாநாட்டிற்கான விரிவான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளின் உந்துதலில் புதியதோர் துறை 'வளர்ச்சியினுாடே பெண்கள் (Women in Development) என்ற பெயருடன் அறிவியல் முக்கியத்துவத்தைப் பெற்று, மூன்றாம் உலக நாட்டுப் பெண்கள் பற்றிய அறிவியல் அடிப்படை ஆய்வு, அது சம்பந்தமான கொள்கை வகுப்புத் திட்டங்கள் என விரிவுபெற்றது. பெண் சமூக ஆய்வாளர்கள், சர்வதேச உதவி நிறுவனங்கள், உலகவங்கி போன்றன இந்தத் துறையின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பி தங்களது சார்பை இனங்காட்டின. இவர்களின் கொள்கைகளும் திட்டங்களும் மூன்றாவது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, பொருளாதார நவீனப்படுத்தலில் பெண்களின் பங்களிப்பைப் பெற முனைந்தன. பல அரசு சார்பற்ற நிறுவனங்களும் வலைப்பின்னல் அமைப்புகளும் சர்வதேச, தேசிய, மாநில ரீதியில் இன உற்பத்திக் கட்டுப்பாடு (குழந்தைகள் பெறுவது), பாலியல் வன்முறை என பெண்களுக்கே உரித்தான பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. பெண்களின் எழுச்சிக்கு தங்களின் கடல்கடந்த விரிவாக்கமே காரணமென பல்நாட்டு வியாயபார அமைப்புகள் கூட காரணம் சொல்கின்றன.
பெண்கள் மத்தியிலான தோழமையோ நோஞ்சான் தன்மையாக நலிந்தே காணப்படுகிறது. ஒவ்வொரு சர்வதேசப் பெண்கள் சந்திப்பிலும் இனம், நாடு, வர்க்கம், மரபுத்தன்மை போன்றன அவர்களிடையே பிளவுகளை உருவாக்கி அடிப்படை நோக்கினையே பலவீனப்படுத்திவிடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிக் குழு இதுபோன்ற பலவீனப்படுத்தும் நிகழ்வுகளை தடுப்பதற்கான வழிவகைகளை நைரோபி மாநாட்டில் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றில் இவ்வாறான பிரிவினைகள்
26

அப்படியாயின்
பெண்ணியத்திலிருந்த இல்லை என்பதுபோல் பாசாங்கு பண்ணிக் கொள்ளலாம், அன்றேல் இவைபற்றி ஆராய்ந்து
தனிமைப்பட்டுப்போன பெண்ணியக் கருத்துக்களினுள் இவையை உள்ளடக்கலாம். இது மிகவும் கடினமானதும்
பெணர்கள் வேதனைகளைச் சந்திக்க வேண்டிய பணியாகவும் இருப்பினும் கட்டாயமான
"பிழையான தேவையாகவும் இருக்கின்றது. இல்லையேல் சர்வதேச சகோதரித்துவம் என்பது வெறும்
கொள்கைகளை" சொற்தொடராக மாத்திரமே இருக்கும்.
கடைப்பிடிப்பவர்களா? மாநாட்டுப் பிரகடனங்கள், அறிவியல்
ஆய்வுகள், பெண்கள் வேலைத்திட்டங்கள் என்றெல்லாம் இருப்பினும் உலகின் பல பாகங்களில் பெண்கள் பெண்ணியம் பற்றியும் பெண்களமைப்புப் பற்றியும் இன்னமும் அறிந்து கொள்ளாதிருக்கின்றனர். அவர்களது கல்வி, அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றம் என்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காதவரையில் பெண்ணியம் பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காதுதான் போகும். அதேவேளையில் பெண்ணியம் பற்றி அறிந்த பெண்கள் அதனை ஆதரிக்காமல், எதிர்க்கவும் செய்கின்றார்கள் என்பதும் உண்மை. சமூகத்தில் கற்பிதப்படுத்தப்பட்ட பாலியல் வேறுபாடு ஒரு பெண்ணோ அன்றேல் ஆணோ தனது மனித சாரம்சத்தை அறிந்துகொள்ள ஏன் தடையாக இருக்கவேண்டும்? பெண்ணியத்தினால் எவ்வளவோ முன்னேற்றங்களைத் தங்கள் வாழ்வில் பெறக்கூடிய பெண்கள் தங்களது வாழ்க்கைக்கும் பெண்ணியத்திற்கும் எந்தவித சம்பந்தமேயில்லை எனப் பார்ப்பது அல்லது அதனை தங்கள் வாழ்வில் அச்சுறுத்தலாகப் பார்ப்பது ஏன்?
பெண்ணிய எதிர்ப்பில் பெரும் பங்கை வகிப்பது ஆளுமை. குறிப்பாக ஆணாதிக்கக் கருத்தியல். இது பெண்ணியத்தினால் வரும் கேடுகள், அபாயங்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தினை சாதிக்கிறது. இந்த வெற்றி பெண்ணிய எதிர்ப்பிற்கான முக்கிய காரணியாகின்றது. அமெரிக்க புதிய வலதுசாரிகள் பெண்ணியத்தை பெண்களின் பாதுகாப்புக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டுகின்றனர். பெண்ணிய எதிர்ப்புக் கொண்ட தேசிய இயக்கங்களுள் ஒன்றான ஈரான் பெண்ணியத்தை மேற்கத்தைய நாடுகளின் இழிகலாச்சாரம், கொலனித்துவ வாதிகளின் புதிய சதி என்றவாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதும் மேற்கூறியதற்கு உதாரணமாக அமைகின்றது. பொதுத் தொடர்புச் சாதனங்களும் தங்கள் பங்கிற்கு பெண்கள் மத்தியில் வளரக்கூடிய அனுதாபத்தைக் குலைத்து அடிப்படையில் பெண்ணிய ஆர்வத்தை மழுங்கடித்தது.
அப்படியாயின் பெண்ணியத்திலிருந்து தனிமைப்பட்டுப்போன பெண்கள் 'பிழையான கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களா? பெண்களமைப்பு முன்னோடிகள் இப் பெண்களுக்கு அடக்குமுறை பற்றி, ஆணாதிக்கம் பற்றி சரியான விளக்கத்தைக் கூறினால் சர்வதேச நிலையில் பெண்களின் போராட்டம் கூர்மையடையுமா?
27

Page 16
1997 ஆகஸ்ட் சக்தி
உண்மையில் இதற்கான விடை அவ்வளவு எளிதானதல்ல. ஆணாதிக்கத் தந்திரங்கள் மூலம் பெண்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பிழையான உணர்வுகள், உண்மைகளை திரிக்கும் பொதுத் தொடர்புச் சாதனங்களின் அலைப்போர் போன்ற ஏற்கனவே எமக்குப் பரிச்சயமான காரணிகளிலிருந்து மேல் நகர்ந்து பெண்கள் சமுதாயத்தின் ஆர்வமின்மைக்கான காரணங்களைத் தேடவேண்டும். பெண்களின் இந்த நிலைக்குக் காரணமாக பெண்ணிலைவாத அமைப்புக்களைக் குறைகூறாது கவனமாக பின்வருவனவற்றை ஆராயவேண்டும். பெண்ணிலைவாத அமைப்புக்கள் அவற்றின் கொள்கைகள், திட்டங்கள் என்பன உலகளாவிய பெண் சமூகத்தின் மீதான சரியான கணிப்புக்களைக் கொண்டுள்ளதா? அவர்களின் பிரச்சினைகளை விளங்கி அவர்கள் மீதான அடக்குமுறையை உடைத்தெறியும் தன்மையுள்ளவையா? பெண்ணியத்தினின்று தனிமைப்பட்டுப் போனவர்களை ஒண்றிணைக்கும் வீச்சம் பொருந்தியவையா? என்ற கேள்விளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
கலாச்சார, வர்க்க தன்மையால் சமகாலப் பெண்ணியம், பெண்களமைப்புகள் என்பன ஏதாவதொரு வகையில் குறிப்பிடக்கூடிய பெண்கள் குழுக்கள் மத்தியில் பெண்ணியத்திற்கு எதிரான கருத்தை வலுவடையச் செய்ய துாண்டுகோலாய் இருந்தனவா? கடுமையான போராட்டத்தின் பலனாகக் கிடைத்த வெற்றிகள் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளால் தேக்கநிலை எய்தியதை கணக்கிலெடுப்போ மாயின் பெண்ணியத்தின் மீதான மீளாய்வு, அதன் நோக்கங்கள், திட்டங்கள் என்பன பற்றிய பரிசீலனை நிச்சயமாக தேவையென விளங்கும்.
இன்னுமொரு கேள்வியையும் நாங்கள் கேட்டேயாகவேண்டும். எதை பெண்கள் எதிர்க்கிறார்கள்? பரந்துபட்ட பெண்ணியக் கொள்கையையா? தற்போதைய நிலையிலி ருந்து கூடுதலான சமூக, உளவியல் ரீதியான சுதந்திரத்தையா? அன்றேல் மேற்கத்தைய நாடுகளின் நடுத்தர வர்க்கப் பெண்களின் பெண்ணிய நோக்குகளை இதுதான் பெண்ணியம் என்று பொதுத் தொடர்புச் சாதனங்களும் அச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணியவாதிகளும் கூறுவதையா?. அதே நாட்டின் வறிய சமூகப் பெண்கள் மத்தியிலும் மூன்றாவது உலக நாடுகளின் பெண்கள் மத்தியிலுமான பெண்விடுதலை உணர்வு பற்றிய ஆய்வானது மேற்கத்தைய நாட்டு நடுத்தர வர்க்க பெண்ணியக் கோட்பாடுகளினின்று விலகிய தன்மையைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் பெறுபேறுகள் பல புதிய தகவல்களைத் தந்தன. இப் பெண்கள் பரந்துபட்ட பெண்ணியக் கொள்கையையும் அதன் நோக்குகளையும் வெகுவாக வரவேற்றார்கள். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களும், அமெரிக்காவின் வறிய கறுப்பினப் பெண்களுமே இந்த ஆர்வ வெளியீட்டைக் காட்டியவர்கள்.
உலகாளவிய நிலையில் அதிக பெண்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சித்தாந்தமாக அமையக்கூடிய பெண்ணியத்திற்கும், மேற்கத்தைய நடுத்தர வர்க்கப் பெண்ணியத்திற்கும் இடையிலான தெளிவானதொரு விளக்கத்தை வைப்பது இங்கு மிக அவசியமாகின்றது. ஏனெனில் பெண்ணியம் என்றாலே மேற்குலக மத்தியதர வர்க்கப் பெண்ணியம்தான் என்ற கருத்து சமகாலத்தில் பெண்ணியம் என்ற கருத்துடன் ஒட்டி உறவாடி இரண்டறக்
28

பெண்ணிலைவாத
அமைப்புக்கள் கலந்து கிடக்கின்றது. இந்த வேறுபாடுதான் சர்வதேசப் பெண்கள் மாநாடுகளில் பல்வேறு அவற்றின் பட்ட பெண்கள் குழுக்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டின் ஊற்றுக் கண்ணாகத்
கொள்கைகள், தொழிற்படுவது.
திட்டங்கள் பிரச்சினையின் அடிப்படையே பெண் களிடையே வேறுபாடுகள் இருப்பதுதான் என்பன என்பதல்ல. ஆண்களிடம் இருப்பது போலவே சமூக அந்தஸ்து, வேறுபட்ட நோக்கங்கள், உலகளாவிய வேறுபட்ட சமூகப் படிநிலைகள், இனம்,
o UA தேசம், கலாச்சார வேறுபாடுகள் போன்றவை பெண் சமூகத்தின் மீதான பிரச்சினைக்குக் காரணிகளாக அமைகின்றன. உதாரணமாக ஏகாதிபத்தியம் (பொருளாதார,
சரியான அரசியல், கலாச்சாரம் மீதான மேற்கத்தைய fardj O மேலாதிக்கம்) வெள்ளையினப் பெண்களுக்கு புககளைக மூன்றாம் உலக நாட்டுப் பெண்களையும் கொண்டுள்ளதா? (வெள்ளையினமில்லாத ஆசிய, ஆபிரிக்க,
லத்தீன் அமெரிக்கப் பெண்களையும்) மற்றைய ஐரோப்பியச் சிறுபான்மையினப் பெண் களையும் விட அதிக சமூக அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அதேவேளையில் சமூக அந்தஸ்தில் உயர்ந்த பெண்கள் -ஆண்களுக்கு அடுத்த படிநிலையில் இருப்பினும்- தங்கள் அந்தஸ்துக்குக் கீழான ஆண்கள் பெண்கள் இருபாலாரிலும் மேலான அந்தஸ்தினை உடையவர்களாக இருக்கின்றனர்.
தீவிரமான பெண்ணியக் கோட்பாடு எல்லாப் பெண்களுமே எல்லா ஆண்களாலும் அடிமைத்தனமாக நடத்தப்படுகின்றார்கள் என்று கருதுவதால், பாலியல் சுதந்திரத்தை அது கட்டுப்படுத்துவதுடன் பாலியல் பலாத்காரம் சம்பந்தமான நிகழ்வின் உண்மைத் தன்மை அங்கு அடிபட்டும் போகின்றது. உதாரணமாக அமெரிக்காவில் இனவாதிகள் கறுப்பின ஆண்களுக்கெதிராக பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளில் இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த நாற்பது வருட காலகட்டத்தில் 455 ஆண்கள் மரண தண்டனை பெற்றனர். காரணம் பெண்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டமை. இதில் 405 ஆண்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். எந்தவொரு வெள்ளையின ஆணும் கறுப்பினப் பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக மரணதண்டனை பெறவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது வெள்ளையின, கறுப்பினப் பெண்களுக்கு இடையிலான இனவாதத் தன்மையிலான பால்நிலை வேறுபாடு பற்றிய கற்பிதங்கள்.
முதலாமவர் அமைதியான, தங்கியிருக்கும் நிலையிலுள்ள, மிக மென்மையான,
|29

Page 17
1997 ஆகஸ்ட் சக்தி
பாதுகாவல் அவசியமான ஒருவராகவும் இருக்க, மற்றையவர் பலசாலியான, (பெண்ணாயினும்) முரட்டுத்தனமுள்ள கெட்ட கறுப்பினப் பெண்ணாக அங்கே தள்ளி வைக்கப்படுகின்றார். பெண்களின் இந்த இருநிலைத் தன்மையே சர்வதேச ரீதியில் ஒரேமாதிரியான கட்டமைப்புக்கள் எல்லா கலாச்சாரக் குழுக்களையும் அடக்கிய பெண்களுக்கும், ஆண்களுக்கும் சாத்தியமாகுமா?
இங்கு கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மேற்கத்தைய மத்தியதர வர்க்கப் பெண்ணியம் தங்கள் ஆய்வில் எடுத்துக் கொண்ட உட்பிரிவுகள், மாற்றம் கோரி முன்வைத்த வேலைத்திட்டங்கள் அத்தனையுமே அவர்களுக்கே உரித்தான தனித்துவம் பெற்ற வரலாற்று, வர்க்க, கலாச்சார அடிப்படையைக் கொண்டது. ஆனால் இவை சர்வதேசம் தழுவிய ஆய்வுகளும் தீர்வுத் திட்டங்களுமாக உருவகப்படுத்தப்பட்டு உலாவ விடப்பட்டவை.
மேற்கத்தைய பெண்ணியமும் நடுத்தர வர்க்கக் குணாம்சங்களும்
19ம் நூற்றாண்டின் பெண்கள் துயர் தீர்க்கும் இயக்கம், சமகாலப் பெண்ணியம் என்பவை மத்தியதர வர்க்க அமெரிக்க வெள்ளையினப் பெண்களினாலேயே உருவாக்கப்பட்டன. தங்களது வாழ்க்கையில் முதலாளித்துவ, தொழில்வளர்ச்சிப் போக்குகள் ஏற்படுத்திய முரண்பாடுகளே இவ் இயக்கங்களின் தோற்றத்திற்கு ஆதார சுருதியாய் அமைந்தது. 19ம் நுாற்றாண்டு இயக்கம் கல்வியறிவு பெற்ற நடுத்தர வர்க்கப் பெண்களால் (ஏற்கனவே "பொது விடயங்களில் - குறிப்பாக அடிமைகள் ஒழிப்புக்கான போராட்டத்தில் - தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்) மனையாட்சி’ என்பதற்குள் தாங்கள் அடக்கப்படுவதற்கு எதிர்ப்பைக் காட்டவே தொடங்கப்பட்டது பொதுவாழ்வில் தங்களது பங்களிப்பை வாக்குரிமை மூலம் நிர்ணயிக்கவும், இறுதியாக சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தங்கள் வர்க்க ஆண்களுக்குச் சமானமாவதே அவர்களது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
அதேபோல் சமகாலப் பெண்கள் இயக்கமும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தியிலிருந்தே உருப்பெற்றது. இவர்கள் (சிலர் குடும்பத் தலைவியராகவும்: மற்றையவர்கள் ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபடுபவராகவும் இருந்தனர்) பொதுவாழ்வில் கூடுதல் பங்களிப்பைச் செய்ய விரும்பியும், தாங்கள் விரும்பிய தொழிலைச் செய்யவும், இதன்மூலமாக தங்கள் வர்க்க ஆண்களுக்கு சரிநிகராக வருவதையுமே நோக்காகக் கொண்டிருந்தனர். விரைவாக வளர்ந்து வரும் வீட்டுப் பணித் தேவைகள், வியாபாரமயமாக்கப்பட்ட சூழல், கூலி வேலைக்காக பெண்களை பயன்படுத்துவதின் பெருக்கம் என்ற சமகாலக் காரணிகளின் அடிப்படையிலும் இவ் இயக்கத்தினை நாம் பார்க்க வேண்டும்.
இரு இயக்கங்களுமே அமெரிக்காவில் பொதுவாழ்வில் தங்களுக்கான பங்கினைக்
3O

ஊதியத்தடன்
őa-ig. Itt கேட்டதுடன் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றத்தைக் கோரி நின்றதிலும் ஒன்றாகவே வேலை இருக்கின்றன. இவை இரண்டிலுமிருந்து தன்னை வேறாக இனங்காட்டி, குடும்பத்தினுள்ளே
பெண்களின் பெண்ணினதும் ஆணினதும் உறவை அரசியல் 姆” பார்வைக்குள்ளாக்கியது புதிய அதிதீவிரப் விடுதலைக்கு பெண்ணிய இயக்கமே. அதன் விமர்சனங்கள் (s மற்றைய சமூக நிலைமைகளையும் உள்ளடக் வழிவகுக்குமாயின் கியவையாக இருந்தது. எல்லாத் தேசங்களிலும் சமூகவாழ்வு ஆணாதிக்கம், ஆண் தலைமை
இதுவா த்துவம் என்ற அடிப்படையினையே கொண்டு
ள்ளது; ஆணாதிக்கமும் ஆண் தலைமைத்துவ மனோநிலையும் ஒழியாதவரை பெண்கள் புரட்சி வெற்றியடையப் போவதில்லை என்பது இவர்களது வாதம். இன்றைய பிரபலமான பல பெண்ணிய ஆய்வுகள் எல்லாமே நடுத்தர வர்க்க வெள்ளையினப் பெண்களின் பார்வைகளே. இவைகளனைத்தும் அவர்களுக்கே விசேடமாகப் பொருந்தும். வரலாற்று பூர்வ, தொழில் வளர்ச்சிப் பொருளாதார, முதலாளித்துவ அடிப்படையின் அனுபவங்களினுாடாகப் பெறப்பட்டவை. இதேபோன்று மேற்கத்தைய ஆண்களினது பெண்ணியப் பார்வையும் மத்தியதர வர்க்கப் பார்வையையே அளவுகோலாகக் கொண்டிருப்பதால், மேற்குத் தவிர்ந்த மற்றைய பெண்களுக்கு இது பொருந்தாததுடன் இவர்களை அப் பார்வை தனிமைப்படுத்தவும் செய்கிறது. எனவே இவ் அடிப்படையிலான சமூக மாற்றுத் திட்டங்கள் வறியவர்களுக்கும் மூன்றாம் உலகப் பெண்கள் ஆண்களுக்கும் எதிர்மறை விளைவினைக் கொண்டுவரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளன.
பெண்களின் விடுதலை?
19 நூற்றாண்டின் பெண்கள் இயக்கம் அடிமைகள் ஒழிப்பு இயக்கத்திலிருந்து பிறந்திருப்பினும், பிற்காலங்களில் இனவாத வர்க்க அரசியலில் தங்களது எதிர்ப்பைக் காட்டாது போயிற்று. வெள்ளையின மேலாதிக்க அரசியல்வாதிகள் பெண்களின் வாக்குரிமையை கறுப்பின மக்களின் வாக்குரிமைக்கு எதிராக அரசியலாக்கிய போது, மத்தியதர வர்க்க வெள்ளையினப் பெண்களாகிய இவர்கள் தங்கள் நலன் கருதி அக் கால இனவாத அரசியலுடன் கைகோர்த்துக் கொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் பத்தாண்டுகளில் சில பெண்ணியவாதிகள் தங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரங்களுக்கு ஆதரவைத் தேடியபோது, சமூகத்தில் வேண்டப்படாத குடிகளான கறுப்பினத்தினர் மற்றும் அமெரிக்கர் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கும் எதிர்க் கருத்துக் கொண்டவர்களுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இவ்வாறாக இவர்களது நிலைப்பாடு இனமேம்பாட்டு அமைப்புக்களின் இன வேற்றுமைக் கொள்கையினை வலுப்படுத்துவதாக அக் காலகட்டத்தில் அமைந்து
போயிற்று. மேற்கத்தையப் பெண்ணியம் தன்னை விரிவுபடுத்திக் கொள்ளாவிடில்
3.

Page 18
1997 ஆகஸ்ட் | சக்தி
(அதன் அடிப்படை அக் காலத்தில் சமூகவுரிமைப் போராட்டத்தைத் தழுவியதாக இருப்பினும்) வெள்ளையின ஆண் அரசியல்வாதி பெண்களையும் உழைக்கும் வர்க்கத்தையும் பிரித்தாள்வதில் வெற்றி கொண்டவனாகவே இருப்பான்.
சமகாலப் பெண்ணியத்தின் புரட்சிகர வெற்றியாக அவர்கள் கருதுவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வேலைக்குச் சமமான ஊதியம் என்றுகூட இருக்கலாம். ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணிற்கு தனது வீட்டுப் பணிகளிலிருந்து விலகி, ஒரு தொழில் செய்யவும் அதில் முன்னேறவும் முடியலாம். இத் தொழிலினால் உண்டாகும் மேலதிக பரபரப்புக்களுக்கு மத்தியிலும் தொழில் செய்வது மனநிறைவைத் தருவதாக அமைகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் உயர் வகுப்புப் பெண்கள் தங்கள் கல்வித்தகைமை காரணமாக ஊதியம் பெறும் வேலைகளில் அமர்வதற்கான சூழல் நிலவவே செய்கிறது.
ஆனால் அதிகளவிலான மற்றைய பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய வேலையெனில் தொழிற்சாலைகளில் கூலிகளாக, அன்றேல் விவசாயக் கூலிகளாக ஆகமட்டுமே சந்தர்ப்பம் உள்ளது. நிலைமை மோசமாயின் நடைமுறை அமைப்பில் வீட்டுப் பணிப் பெண்கள், அன்றேல் பால்வினைத் தொழிலாளராகவே (Prostitute) ஆக வேண்டியுள்ளது. எனவே ஊதியத்துடன் கூடிய வேலை பெண்களின் விடுதலைக்கு வழிவகுக்குமாயின் இதுவா பெண்களின் விடுதலை? நடைமுறையிலுள்ள படிநிலை அமைப்பு சர்வதேச, தேசிய, பிராந்திய ரீதியில் மாறுதல் அடையாமல் இருக்கும்வரை உயர் பதவிகள் குறிப்பிட்ட சில ஆண்களுக்கும் பெண்களுக்குமாகவும், பெருந்தொகையான மற்றையவர்களுக்கு வேலைக்கேற்ற சரியான ஊதியமின்மையோ கீழ்நிலை வேலைகளோதான் பெறக்கூடியதாக இருக்கும். தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது சமூகத்தின் எல்லா வர்க்கத்தினருக்கும் சரியான சந்தர்ப்பங்கள் வழங்காவிடில் வர்க்க பேதம், இனபேதம், நாட்டிற்கு நாடு வித்தியாசங்கள் என்பன பெண்களுக்கிடையே ஆழமான சகோதரித்துவம் உரம்பெற வழியில்லாமல் செய்துவிடும்.
சில மூன்றாம் உலக நாட்டின் முற்போக்குப் பெண்களமைப்புக் கொள்கைகளும் மேற்படி நடைமுறையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. உதாரணமாக “ஆடம்பரமான சமையலறைச் சாதனங்களை இறக்குமதி செய்! ஏனெனில் அது பெண்களின் தேவை; அத்துடன் எங்களது சமையலறைப் பிரச்சினைகளை அது சுலபமாகத் தீர்த்து வைக்கும்” என்பது அவர்களது கோரிக்கை. இவர்களில் பலர் தொழில் புரியும் பெண்கள் என்பதும் கவனிக்க வேண்டியது. அரிதான அன்னியச் செலாவணியை உயர் குடியினர் தங்கள் ஆடம்பரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால் பெரும்பாலான ஏழை மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு அது பயன்படுவதில்லை என்பதும் உண்மையே.
தீவிரப் பெண்ணியம் பற்றி சுருக்கமாகப் பார்ப்போமாயின், "தனிப்பட்ட பார்வைகள் கூட அரசியல் சார்புடையவையே” என்ற கூற்று பரவலாக எல்லா மட்டங்களிலும் எல்லா நாட்டிற்கும் பொருந்தக் கூடியதொன்று. ஆயினும் ஆண் தலைமைத்துவம்,
32

கணவன்-மனைவி
அடிப்படையிலான
வாழ்க்கைத்
தணை நல உறவு
6)
சமூகப் பெண்களுக்கு
ஒரு முக்கிய
உறவாக அமையாதது,
உணர்வுபூர்வமான
பல தேவைகள்
மற்றைய
பெண்களுடனான
இவர்களத
உறவில்தான்
பெறப்படுகின்றதது
அணு ஆயுத அமைப்பு போன்ற மற்றைய துறைகளில் கடுமையான விமர்சனம் இவர் களது எல்லைகளைக் காட்டி நிற்கின்றன. மேற்கத்தைய மத்தியதர வர்க்கத்தைத் தவிர்ந்த மற்றைய நாடுகள் பற்றிய சமுக, கலாச்சார ஆய்வுகள் வேறுவிதமான குடும்ப அமைப்புக்களைக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆகக் குறைந்த அளவிலேனும் மூன்றில் ஒரு குடும்பத் தலைமை பெண்களினதாகவே இருக்கின்றது. எல்லா விடயங்களிலும் குடும்ப அமைப்பு பெண்களை அடிமைப்படுத்தும் முதன்மைக் காரணியல்ல என்பதும் ஆய்வின் அடிப்படை உண்மையாகவுள்ளது. சில சமூகங்களில் குறிப்பாக அமெரிக்காவில் இனவாத அடிமை அமைப்பின் கீழோ, அன்றேல் தென்னாபிரிக்கா வின் ‘அப்பாதைற் அமைப்பின் கீழோ குடும்பம் பெண்ணை அடிமைப்படுத்தும் காரணியாக அல்லாது, பெண்ணின் நிலையை உயர்த்தவே உதவியுள்ளது. இவ்வாறான நிலைமைகளில் தங்கள் குடும்பத்திற்கான உழைப்பு குடும்ப த்தின் மேலுள்ள அன்பின் காரணமாகவேயன்றி அமைப்பு ரீதியான அடக்குமுறைக்காகவல்ல.
மேற்கத்தைய மத்தியதர வர்க்கப் பெண்கள் சிறு நகர வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் தனிமைப்பட்ட நிலையில் இருக்கும்போது சகோதரித்துவம் என்பது புதியதொரு கண்டு பிடிப்பாக இருக்கலாம். பால் பிரிவினைச்
சமுதாயங்களைக் கொண்ட ஆசிய, மத்திய கிழக்கிலாகட்டும், அன்றேல் பெண்களின் தலைமைத்துவ உறவுடைய கரீபியனில் ஆகட்டும், ஏன் உழைக்கும் வர்க்க அமெரிக்கப் பெண்கள் மத்தியில் கூட சகோதரித்துவக் கோட்பாடு ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றதுதான். இச் சமுதாயங்களில் நிலவும் சகோதரித்துவம் பழமைவாதப் போக்குடையதும், ஆண் தலைமைத்துவத்தை உடைப்பதற்காக அல்லாது நடைமுறையில் தங்கள் பிரச்சினைகளின் வடிகாலாக இருந்து வருகின்றதென்பதை
அதற்கான அரசியல் பார்வையும் இங்கு வைக்கப்படவில்லை.
எப்படியிருப்பினும் கணவன்-மனைவி அடிப்படையிலான வாழ்க்கைத் துணை நல உறவு பல சமூகப் பெண்களுக்கு ஒர் முக்கிய உறவாக அமையாது, உணர்வு
33

Page 19
1997 ஆகஸ்ட் சக்தி
பூர்வமான பல தேவைகள் மற்றைய பெண்களுடனான இவர்களது உறவில்தான் பெறப்படுகின்றது என்பதையும் கண்டுகொள்ளத்தான் வேண்டியுள்ளது. இந்தளவிலேனும் பெண்கள் உளவியல் ரீதியாக ஆண்களிடமிருந்து குறிப்பாக தங்கள் கணவர் களிடமிருந்து- விடுபட்ட சுதந்திர உணர்வுடையவர்கள் என்பதை, மேற்கத்தைய மத்தியதரப் பெண்களுடன் ஒப்பீட்டு ரீதியாகப் பார்க்கும்போது, கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. எனவே பெண்கள் விடுதலைப் போராட்டம் என்பது ஓரிடத்தில் உருவாக்கப்பட்டு மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய கொள்கையல்ல. அந்தந்த நாட்டுக் கலாச்சாரச் சூழலின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டிய
ஒன்று.
மேற்கத்தைய மத்தியதர வர்க்கப் பெண்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தையோ அல்லது அவர்கள் தங்களது சுதந்திரத்தை வென்றெடுப்பதையோ கொச்சைப்படுத்துவது இங்கு எனது நோக்கமல்ல. இவர்களது பெண்ணியக் கோட்பாடுகள்தான் வரலாற்றுக் குணாம்சம் கொண்ட எல்லாவிடத்துக்கும் பொருந்தக் கூடிய கோட்பாடென்ற பார்வையினை விமர்சிப்பதே எனது நோக்கம். சமகாலப் பெண்ணியப் போராட்டம் உலகளாவிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இது மனித உறவுகளை மேம்படுத்த, வளப்படுத்தக்கூடிய குணாம்சம் கொண்டவை. பெண்களின் கலாச்சார, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு நடைமுறைப் படுத்தப்படக் கூடிய ஒரு பெண்ணிய அமைப்பு உருவாக வேண்டும். அதனில் எல்லாச் சமூகத்தினரின் நிலைமைகளும் பரிசீலனைக்கு எடுக்கப்படக்கூடிய வாய்ப்புக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படியில்லாவிடின் பெண்ணியத்தின் தேவையே கேள்விக்குறியாகிவிடும்
அபாயமுள்ளது.
(தொடரும்) தமிழில் தேவா (சுவிஸ்)
பெண்ணும் ஆணும் ஒரே தடத்தில் ஒடும் இரு ஒட்டப்
பந்தயக்காரர்கள். ஆண் சுதந்திரமாகவே ஓடுகின்றான். பெண் ஒரு கையில் குழந்தையையும் மறு கையில் சமயலறைப் பாத்திரங்களையும் சமன் செய்து கொண்டு ஒடுகின்றாள். சுமைகளுடனான பெண் ஆணின் வேகமளவிற்கு ஓடினும் மக்கள், பெண்கள் நளினமாக ஓடவில்லை எனக் குறை கூறுகின்றனர். இது ஏனென்று தான் விளங்கவில்லை.
- Zhang Guoying (fort Guaiasotoplolily)
34

Estrella Consolacion, isSugpugitGro
தமிழில் : தேவா
சகோதரிக்கு
இதுபோன்ற ஓர் காலைப்பொழுதை நினைத்துப் பார்க்கின்றேன் மெத்தென்று புதியதாக வடுக்கள் நிறைந்த ஆன்மாவிற்கு மென்மையாக. எனது நண்பிக்கு இதனைக் காட்ட விழைகின்றேன். அவள் இருளில் முடமாக நகர்ந்துகொண்டிருக்கிறாள், தனது வாழ்வே முடிந்து விட்டதாக எண்ணிக் கொண்டு.
ஓர் வெண்நிறக் காலைப்பொழுது கூரொளியுடன் துணிவாக தேவதையின் சொந்தம்போல். ஓர் காலை எஃகு நிழலொளிபோல் நீலமாய் இரும்பின் கடின உறுதியுடன். உனது கனவுகளை எனக்குச் சொல். உனது கையை நான் பற்றிக் கொண்டே என்னை கேட்கவிடு, நீ என்னில் நம்பிக்கை கொண்டு!
KI) ()

Page 20
1997 ஆகஸ்ட் சக்தி
பாலரஞ்சனி சர்மாவின் கவிதைகள்
தினம் ஒரு வீடுகட்டி உடைந்த இடிந்துவிட ஏமாந்துபோய் வர்ண 660)6TUL606) 85T600T606), அகதியானது சிலந்தி. அட, வானில் வானவில்.
வண்டே! ☆ நன்றி! 女
மூங்கிலுக்குள் இசைதந்தாயே.
ஒரு மழைராவில்
இந்த நட்சத்திரம்
காணாமல் போனதே
எங்கே விழுந்து தொலைத்தது
அவள் கண்மணிக்குள். அந்த குட்டி நட்சத்திரம்.
நீலம் பாரித்தும் * மரணிக்கவில்லையே 女
வானம்.
அடுக்கடுக்காய் மின்னல் ஆற்றில் பாதமுதைத்து விளையாடும் சிறுவன்.
குளத்தின் முகத்தில்கூடவா
அம்மைத் தழும்புகள்
ஓமழைத்துளி.
கவனம் மாணவிகாள்!
☆ பாதையில் சகதி ☆
வேகமாய் வரும் வாகனம்.
மாலை வானத்துள் விரியாதே மொட்டே! எப்படிப் புகுந்தது உன்னில் அமர்ந்திருக்கும் மஞ்சள் நதி? பனித்துளிகள் பாவம்
உனக்கேனிந்த விதி? 女 மழைதானுன் மரணமா? 女
ஈசலே சொல்!
36
 
 

வாகன கண்ணாடியிலும்
女 பாகப்பிரிவனை! ☆
மழையின் வீச்சு.
வசந்த நினைவுகளை மெல்ல ஒதுங்கி நில்! இழந்து இழந்தே காற்றுன் வர்ணங்களை இறக்கப் போகிறாயா பட்டமரமே! கலக்கிவிடும் வண்ணத்துப்பூச்சியே!
பறந்து களைத்தது குயில் * உட்கார்ந்து கூவ கிளையில்லை 女
எங்கும் வசந்த பூ!
பெயர் தெரியா சின்னக் குருவியே! நீதானா அது? உயிரென்ன அற்பமோ? நேற்று தடம்புரண்ட வெள்ளமாய் 1ß6ö85tdLus6606ö 6llIöFlb? இன்று சலனமற்ற நதியாய்.
அடடே இத்தனை வைரங்கள் இறைந்து கிடக்க, 女 எப்படி நடப்பேன் புல்வெளியில்!
பெற்றோரில் குழந்தை இரைதேடி வந்து யாருக்குச் சொந்தம்? இரையாகிப்போனாயே சிட்டுக்குருவிக்கு கவிதையும் அப்படித்தான். பாவம் நீ மண்புழுவே!
தேவை ஒரு கூடு!
女 ஆபத்துக்குப் பாவமில்லை, *
ஆளரவமற்ற தொலைவில் மின்கம்பம்.
சிட்டுக்குருவியே உன் சின்ன நிலவுகள் நீங்கள் சின்னச் சொண்டுக்குள் பெரிய மரம் தரையிறங்கக் காரணமென்? உதறிவிடு ஆல விதையை சொல்லுங்கள் மின்மினிகளே!
கண்முன்னே மரணாவளbதை! * பல்லியே உன் வாயில் 女
சின்னப்பூவாய் சிலந்தி! - |37

Page 21
1997 ஆகஸ்ட்
தேரிகாதா
பாடல்களை
ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தோர் உமா சக்கரவர்த்தி
கும்கும்ராய்.
உமா ஒரு
β)υαό ασήμ
வரலாற்றியலாளர்
இவர் பெளத்தத்தின்
ஆணாதிக்கம் பற்றிய
குறிப்புகளையும் தந்துள்ளவர்
சக்தி
தமிழில்
சி. சிவசேகரம்
(கி.மு 6ம் நூற்றாண்டின் பிக்குணியர் (தேரியர்) பாலி மொழிப் பாடல்கள்)
தேரிகாதாவை இந்தியாவின், அனேகமாக உலகின், அறியப்பட்ட பெண்கள் இலக்கியத் தொகுதிகளுள் முதலாவதெனக் கொள்ளலாம். இவை ஆன்மீக ஈடேற்றம் பற்றிய பாடல்களாக இருப்பினும் இயற்றிய பெண்களின் அன்றாட வாழ்வின் துயர்மிகுந்த அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன.
புத்தமதம் இன்றைய பிஹார் மாநிலத்தின் வடக்கே நிலவிய குடியாட்சிகளின் சமத்துவ உணர்வின் சூழலில் உருவானது. இக் குடியாட்சிகள் ஜனநாயகமானவையா என்பது இன்று விவாதத்திற்குரியதாயினும், அயலிலிருந்த முடியாட்சிகளில் இருந்ததைவிட அதிகமாக அதிகாரம் சமுதாயத் தன்மையானதாக இருந்தது. விவசாயமே பிரதான வாழ்க்கை முறையாக இருந்தது. அக் காலத்தின் உபரி உற்பத்தி நகரமாதலுக்கான அளவினை எட்டியிருந்தது. நிச்சயமற்ற ஒரு வாழ்க்கைச் சூழலில் சமண, பெளத்த குழுக்கள் தோன்றின. மரபுசார்ந்த மதம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. புத்த மார்க்கத்தினருள் திருமணமான பெண்களும் திருமணம் ஆகாத பெண்களும் இருந்தனர். இவர்களுள் நகர வாழ்வுடன் பழக்கப்பட்டவர்கள் பலர் இருந்தனர்.
புத்தர் சமூக அந்தஸ்து, சாதி, பால் வேறுபாடின்றி அனைவரையும் பெளத்தத்தில் இணைத்தபோதும் நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவே இருந்தனர். புத்தரது அரசகுல வளர்ப்புத் தாயை சங்கத்தில் துறவியாகச் சேர்ப்பதை புத்தர் எதிர்த்தார். அவரது பிரதம சீடரான ஆனந்தரே புத்தரது மனதை மாற்றி பெண்களை சங்கத்தினுள் அனுமதிக்கச் செய்தார். ஆயினும் பிக்குணிகட்கான கடுமையான எட்டு மேலதிக விதிகள் புத்தரால் விதிக்கப்பட்டன. பிக்குணிகள் பிக்குகட்கு கீழ்ப்பட்டவர்களாகவே இருந்து வந்தனர். ஆயினும் பெண்கள் தொடர்ந்தும் சங்கத்தில் இணைந்தனர்.
38

இயற்றியவர்
முததா
எத்துணை சுதந்திரமாய் இருக்கின்றேன்.
எத்தணை சுதந்திரமாய் இருக்கின்றேன்.
எத்தணை உன்னதமான சுதந்திரமாய்
மூன்று அற்ப பொருட்களினின்ற
உரலினின்று, உலக்கையினின்ற , என் வக்கிரமான பிரபுவினின்ற
மறவபிறப்பினின்றம் மரணத்தினின்றாம் விடுபட்டுள்ளேண்
எண்னைக் கீழே அழுத்திய யாவுமே
தார எறியப் படுகின்றன.
இயற்றியவர்
2_JLilf
ஒ! உப்பிரி காட்டினுட் கதறுபவளே
"ஓ! உப்பிரி
*பிரிய ஜீலா, அருமை மகளே! "
என காட்டிவைட் கதறவபவளே
நிதானமடைவாயாக
இந்த பிணக்காட்டில் எண்ணற்ற புதல்வியர் ஒரு காலம் ஜீன மோல் உயிர்ப்பு நிறைந்தவர் எரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் எவர்க்காக நீதயர்ப்படுகிறாய்?”
எண் இதயத்தள் மறைந்திருந்த அம்பு பிடுங்கப்பட்டது,
அங்கு பதிந்திருந்த கூர்முனை அகற்றப்பட்டுவிட்டது. என் இழப்பின் மன உளைச்சலும் என்னை உணர்விழக்கச் செய்த தயகும் போய்விட்டன,
ஏக்கம் அமைதிப்பட்டது.
ஆறிய இதயத்துடன் நான்
39

Page 22
1997 ஆகஸ்ட்
இயற்றியவர்
- சுமங்கல மாதா
நன்கு விடுவிக்கப்பட் ஒரு பெண்! நான் எத்துணை சுதந்திரமாயுள்ளேன்
நன்கு விடுவிக்கப்பட்ட ஒரு பெண்!
நான் எத்தனை சுதந்திரமாயுள்ளேன், அடுக்களையின் அலுப்பினின்றும் மசியின் கடும் பிடியினின்றம் வெற்ற சமையற் மாத்திரங்களினின்றம்
எத்தனை அற்புதமான சுதந்திரமாய், நிழற்குடைகளை இழைக்கும்
அந்த நெறியற்ற மனிதனிடமிருந்தும் சுதந்திரமாய், எல்லா ஆவலும் வெறப்பும் அகற்றப்பட்டு
இப்போது அமைதியுடனும் தெளிவுடனும் உள்ளேன் எண் மகிழ்ச்சியைத் தியானிக்க
பரவும் மரங்களின் நிழலுக்குப் போகின்றேன்.
இயற்றியவர் மேத்திகா
இப்போது நான் பலவீனமாயும் களைத்தும் இருப்பினும்
இப்போது நான் பலவீனமாயும் களைத்தும் இருப்பினும் எண் வாலிப நடை போய் பலகாலமாயினும் இந்தக் கோலை ஊன்றி
மலை முடியை ஏறவேன். என் மேலாடை களைந்தும் என் கிண்ணங் கவிழ்ந்துங் கிடக்க நான் இப் பாறைமேல் அமர்கிறேன். என் உணர்வின் மீதாய்ச் சுதந்திரத்தின் மூச்சு வீசுகிறத, நான் வென்ற விட்டேன் மும்மணிகளை வென்ற விட்டேன் புத்தரின் வழி எனது.
தேரிகாதாவின் ஒவ்வொரு பாடலும் அன்றாட வாழ்வின் வேதனைகளினின்று விடுதலை பெறுவதை மையமாகக் கொண்டது. பெளத்தம் எவ்வாறு வாழ்க்கையை மாற்றியது என்பதே செய்தியாக இருந்தாலும், அன்றைய சமுதாயத்தின் ஆணாதிக்கக் கொடுமைகட்கு சாட்சியங்களாகவும் இப் பாடல்கள் அமைகின்றன. O
4.O
 

As
புலம்பெயர் வாழ்வியலில் பெணிகள்
2/>s
'ഥു', பெண் իմվ 公
(كاااال کالا ناظم (65رقنطارق స్కే ృకో لاق(
○う S
மதி
இன்று பல பெண்கள் தாங்கள் ஒடுக்கப்படுவதை உணராது வாழ்ந்து வருகின்றனர். இதனால் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் ஆராய வேண்டிய காலம் இது. பல பெண்கள் தொழில் பார்க்கவோ, கல்வி கற்கவோ விரும்பினாலும் அவர்களது பெற்றோர்களால், கணவனால் தடுக்கப்படுகின்றார்கள். பெண் என்பவளின் தொழிற்பாடு குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமையல் என்ற அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு அவளது வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தி என்னைப் பொறுத்தமட்டில் பல பெண்கள் திருமணமான நாள் தொடங்கி உடல், உள பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு தகப்பன் தேவையென்ற ஒரே காரணத்தால் மட்டும் பிடிக்காத வாழ்க்கையை பிடித்தது போல் சமூகத்திற்குக் காட்டி பல பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பல பெண்கள் கணவன்மாரின் வன்முறைகளுக்கு ஆளாகியும் வருகின்றனர்.
D6) எனக்குத் தெரிந்த நிறையப் பெண்கள் இப்படியான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர் நாடுகளில் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ள நிலையிலும்
|4

Page 23
1997 ஆகஸ்ட் சக்தி
கூட வன்முறைச் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். பல பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்லப் பயந்தும், அப்படி தான் சொல்லிவிட்டால் தனது வாழ்வே இருண்டுவிடும் என்ற அச்சத்துடனும் வாழ்க்கை பிடிக்காமலே பிடித்த மாதிரி நடித்து வாழ்ந்து வருகின்றார்கள். இப்படியான பெண்கள் வேலைக்குப் போனாலும் சரி போகாவிட்டாலும் சரி கணவனால் பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள். வேலைக்குப் போனால் “நீ என்னைவிட சம்பாதிக்கிறாய் என்ற திமிர்” என்பார்கள். வேலைக்குப் போகாவிட்டால் நான் ஒருத்தன் உழைத்து சம்பாதித்து இந்த குடும்பச் சுமையைத் தாங்குகிறேன்; நீ வீட்டில் சும்மா இருக்கிறாய் என்பார்கள்.
இலங்கையில் பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டில் வாழ்வதைப் போல, இங்கு அதைவிட ஒருபடி மேலாக ஒடுக்கப்பட்டு வாழ்வதை நான் நேரில் கண்டுள்ளேன். நமது நாட்டிலோ பெண்களின் உறவினர்களோ அல்லது அயலவரோ பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால் கனடாவில் ஒரு பெண் வெளியே செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால்தான் பல பெண்கள் குடும்பப் பிரச்சினைகளில் சிக்குண்டு அடிமைப்படுத்தப்பட்டு வாழ்கின்றனர். ஆனால் கனடாவிலும் பெண்கள் சமூக அமைப்புகள், தென்னாசிய பெண்கள் அமைப்புகள் என்பன குடும்பங்களை விட்டு வெளியேறி வந்த பெண்களுக்கு ஆதரவு சேவைகளை வழங்கியும், பெண்களுக்கான பிரச்சினைகளை அணுகியும், அதில் மாற்றத்தைக் கொண்டுவர முற்பட்டும் வருகின்றனர். பெண்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்படுத்தப்பட்டு, பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவ வழி தேடவேண்டும் என்பது என் அன்பார்ந்த கோரிக்கை.
சந்தோசம் என்றால் என்ன? தனிய செக்ஸ் உம், குழந்தை பெறுவதும்தான் சந்தோசம் என பலர் நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் பெண்ணுக்கு ஆகக் குறைந்த சுதந்திரம் கூட இல்லை. இது சின்னப் பிரச்சினை; இதை நீங்கள் இருவருமே தீர்த்துக் கொள்ளுங்கள்; இது கணவன்-மனைவி பிரச்சினை என்கிறார்கள். இதனால் இங்கு சில பெண்கள் தற்கொலைகூட செய்து கொள்கிறார்கள்.
கனடாவைப் பொறுத்தமட்டில் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு, பிரிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட ஒரு பெண்ணால் தனித்து வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் நிரம்ப உள்ளன. மூடநம்பிக்கையும் மடமைத்தனமுமாய் முடங்கிக் கிடக்கும் பெண்களை தட்டி எழுப்ப வேண்டும். பெண்கள் தங்கள் குடும்பப் பிரச்சினைகளை வெளியே சொல்லிவிட்டால் உடனே ஆண்கள் மிரட்டத் தொடங்கி விடுகிறார்கள். பெண்களிடமிருந்து சீதனம் என்ற பெயரில் பணத்தை இலட்சம் இலட்சமாக கொள்ளையடிக்கும் பல ஆண்கள் திருமணம் முடிந்தவுடன் பெண் வடிவில்லை, படிப்பில்லை, கறுப்பு என்று அவளை இம்சைப்படுத்தவும் செய்கிறார்கள்.
42

பல பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கஸ்டங்களும் பிரச்சினைகளும் எண்ணிப் பார்க்க முடியாதவை. அதனால் சொல்கிறேன், பெண்கள் தங்கள் காலில் நின்று தனித்து வாழ்க்கை நடத்த வேண்டும். இப்படியான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் பெண்கள் தங்களது பிரச்சினைகளை மனம் திறந்து கதைக்க முடியும் என்பது எனது கருத்து.
ஜெயா
பல கணவன்மார்கள் தங்களது மனைவியை குழந்தைகள் எதிரிலேயே தரம் குறைத்துக் பேசுவதை நான் அவதானித்துள்ளேன். தாயின் மேல் பாசத்துடன் இருக்கும் பிள்ளைகள் கூட தகப்பனின் கருத்தை ஆமோதிப்பது போல் நடந்து கொள்கின்றனர். நாளடைவில் தாயை அவர்கள் பேசவும், அலட்சியம் செய்யவும் தொடங்கி விடுகிறார்கள். தனது தாய்தான் வீட்டின் முக்கிய உழைப்பாளி என்பதை பிள்ளைகளும் கணவனும் மறந்து விடுகிறார்கள். இதைவிட ஒரு பெண் தான் விரும்பியதை வாங்க முடியாது; கணவனிடம் அனுமதி பெற்றுத்தான் வாங்க வேண்டும். அவள் வேலைக்குப் போய் உழைப்பவளானால், தான் விரும்பியதை வாங்கிவிட்டால் கணவன் தொடங்கி விடுவார்: "நீ கொண்டு வந்த திறத்தில நீ நினைச்சதை செய்கிறாய்” என்றும், “வரவுக்கு ஏற்ற செலவுதான் தேவை” என்றும் திட்டுவார். ஆனால் தான் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்தாலும் பிரச்சினையில்லை. எங்கு போனாலும் பெண்ணுக்கு அடிமை வாழ்வுதானே. என்ன செய்வது! பெண் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி அடிமை வாழ்வு தானே வாழ்கிறாள். அவளும் ஒரு உயிர் உள்ள ஜீவன் என்பதை மறந்து விடுகின்றனர்.
மதி
எமக்கு பசி எடுக்கும்போது நாமே உணவை உண்ண வேண்டும். எமக்காக வேறொருவர் அதனை உண்ணுவதால் பசி எமக்கு போகப் போவதில்லை. அதேபோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு ஒரு அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்த விரும்புவர்களே அதற்கான வழிமுறைகளையும் மாற்றங்களையும் தேட முனைய வேண்டும். சரியான தீர்வை பெண்ணோ அல்லது ஆணோ எடுக்க வேண்டும். கனடாவில் தமிழ்ப் பெண்கள் வன்முறைகளிலிருந்து விடுதலை அடைய தொடர்ச்சியாக தற்கொலையை தீர்வாக்கிக் கொள்கின்றனர். இம் மரணங்கள் சாட்சியங்கள் இல்லாததால் தற்கொலை என கணிக்கப்படுகிறது.
இப் பெண்கள் மேல் வன்முறையை பிரயோகித்தவர் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவதில்லை. இக் கொலைக்கான காரணங்களும் ஆராயப்படுவதில்லை. இப்படியான சம்பவங்கள் சங்கிலித் தொடராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோதும், நாம் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிகிறது. அரசியல் பேசும் ஆண்களே பெண்விடுதலைக்கு முதல் எதிரி. ஏனெனில் அவர்கள் படித்து அறிந்த புத்தகங்களில்
43

Page 24
1997 ஆகஸ்ட் | சக்தி
பெண் எழுச்சிக்கான தன்மைகளே இருப்பதில்லை. பெண்களை ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாப்பதாய் போலி பேசி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் அவர்கள். பெண்களை ஒடுக்கி வைப்பது ஆண்கள் மாத்திரமல்ல, அவர்கள்மேல் சமுகத்தால் திணிக்கப்பட்ட கலாச்சாரமும் சம்பிரதாயங்களும் தான்.
ஜெயா
கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லிச் சொல்லியே பெண்களை ஒடுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள், கலாச்சாரமும் பண்பாடும் உள்ளது சரி, அதை ஏன் பெண்கள் மாத்திரம் கடைப்பிடிக்க வேண்டும்?
மதி
இராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களை சிறு வயதிலேயே பயின்ற எம் பெண்கள் ஒவ்வொருவரும் சீதை போன்று வாழ்வதே சிறந்தது என்று நினைக்கின்றனர். கணவன் இராவணனாக இருந்தாலும்கூட தீக்குளிக்கவும் தயாராக உள்ளனர்.
/Go
எமது ஆண்களும் இராமாயணத்தைப் படித்தவர்கள்தானே. தன் மனைவி கற்புள்ள சீதை போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் மாத்திரமே தவிர, தாங்கள் இராமனாக வாழவேண்டும் என்று நினைப்பதில்லை. பெண்களுக்கு ஓர் நியாயம், ஆண்களுக்கு ஓர் நியாயமா?
IJTF)IT
நாம் எமது சூழலிற்கேற்றபடி மாற்றம் அடைவது ந்ல்லது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கும் இந் நாட்டிலும் கூட தொடர்ந்தும் ஏன் பெண்கள் அடிமைகளாக வாழவேண்டும்
/്
இரண்டு வருடங்களுக்கு முன் கனடாவில் பெண்கள் விரும்பினால் மேலாடை அணியாமல் தெருவில் செல்லலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலாடை அணியாமல் செல்வதினால் பெண்களுக்கு விடுதலை எதுவும் கிடைத்து விடப் போவதில்லை.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு Extreme , அதாவது தீவிரமான போக்கென்றே சொல்லுகிறேன். எங்களால் மாற்றியமைக்க கூடிய விடயங்கள் பல உள்ளன. அதைச் செய்ய நாங்கள் முன் வருவோம். (தொடரும்
44

அம்மா கிழக்கும் மேற்கும்
(சிறுகதைச் சஞ்சிகை) (அனைத்தலகத் தமிழ்ப் படைப்புகளின் தொகுப்பு
தொடர்புகட்கு வெளியிடு : S.Manoharan Tamil Welfare Association (Newham.) UK
(Esc.E13) 33A, Station Road 210, Ave.diu 8 Mai 1945 Manor Park 93150Le Blanc Mesnil, London E125BP
France UK
நான் ஒரு பெண் (பெண்கள் தொடர்பான சரிநிகர் கட்டுரைகள்) قای வெளியீடு : பாரதி வெளியிட்டகம் 决 நீலி மிக அதிகாலை, நீல இருள் s
கவிதைத் தொகுதி - என்.ஆத்மா வெளியீடு : விடியல் பதிப்பகம்
மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பு - இரண்டாவது பதிப்பு வெளியீடு : விடியல் பதிப்பகம்
புதியதோர் உலகம் நாவல்- இரண்டாவது பதிப்பு
கோவிந்தன் வெளியிடு : விடியல் பதிப்பகம்
பெரியார் - சுயமரியாதை சமதர்மம் ஆய்வுநூல், 820 பக்கங்கள் -எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா வெளியீடு : விடியல் பதிப்பகம்
வெள்ளைத் திமிர் (ஐரோப்பிய பயணக் கட்டுரைகள்) - அமார்க்ஸ் வெளியீடு : விடியல் பதிப்பகம் 3, மாரியம்மன் கோவில் வீதி உப்பிலிப்பாளையம்
தோற்று நீ41 015

Page 25
ஓர் செய்திர
கொடிய இருளைக்கிழித்து வ சிறிய ஒளிக்கிற்றே! ஓர் அழகிய கனவாய் வாழ்வதற்கான நம்பிக்கை இக்கணத்தில் ஜனித்திருக்கும் சிசுவே!
உன் வாழ்வு இனம் மதம் பால் அடிப்படையின் கீழ் இக்கனத்தில் இருந்து நிர்ணயிக்கப்படும் உன் காலங்கள் அகதிமுகாம்களிலோ ஆயுதங்களுடன் பயிற்சி முகாம்க
இப்போதெல்லாம்
நாட்கள் புதுசுபுதுசாய் பூப்பதில்ை பனிப்புல் அருகே காளான்கள் மு நாங்கள் வாழ்விற்கான அர்த்தத்
தொலைத்து பல நாட்கள்
எங்களிடம் பகிர்ந்து கொள்ள
வசந்தங்களோ இல்லை.
நீ உறங்கிக் கொண்டிருக்
இப்பரப்பில்
எக்கணமும் குண்டுகள்
என்பதே
இப்போதெல்லாம்
- LITTLD) ܢܠ
(FSALIT)

புடன்
GIT!
முளைப்பதில்லை $ୟ୍ଯ
நம்பிக்கைகளோ
கும்
T GEFÜLJILGÖTTL)
உன்மை,