கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 2000.09

Page 1


Page 2

R. Pathmanaba Iyer
27-1B High Street Plaistoruv
fondom E13 0241D
ባ1ይ[: 020 84ፖ2 8323 لري
O புலனாகும் பிரபஞ்சம்
ப.வி. சிறீரங்கன்
பெருவெடியினர் முன்கதை: இரண்டாம் உலகயுத்தத்திற்குப்பின் இன்னொரு யுத்தத்தாண்டவம் வரமுடியாது. . அதுவும் மகாயுத்தமாக உலகுதழுவி வரமுடியாது என்பதில், என் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது: இருக்காதா பின்ன? செல்களும், குண்டுகளும், தோட்டாக்களும் பொலுபொலுவென்று உடம்பெல்லாம் பட்டுத்தெறித்து உயிர்குடிக்கும்போது, "ஐயோ கடவுளே வரந்தரமாட்டியா உயிர்தப்ப?' என்று பெருமுச்சு விட்டல்லே அகதியாக ஜேர்மனிக்குள் கால் பதிச்சது (இப்படித்தாம் யாழ்ப்பாண பிரபஞ்ச பந்து இறுகிஅமுங்கி "Big Bang" கண்டது)
இந்த யுத்த சாட்சியங்களில் எந்தச்சாரமும் இல்லாது போனதாக நான் உணர்ந்தபோது - அட கடவுளே! என்னால் ரொம்பக் காலத்திற்கு உயிர்வாழமுடியாது என்பதில் ஒருவித கோபமும் இருந்துகொண்டே வந்தது
. அம்மாவுக்கு இருத்திவைச்சு சோறுபோடவேணுமெண்டு அடிக்கடி யோசிப்பதில் என்னைவிட வேறு எவரும் இருக்கமுடியாது. அப்பன்தாம், எனக்கு 11வயதாகும்போது - ஒருநாள் காச்சல், மறுநாள் மஞ்சள் படர்ந்த உடம்பாய் மாறி. அடுத்தநாள் உடல் வீங்கி, யாரும் யோசிப்பதற்குள் பொதுக்கனெ நாற்பத்தியொன்பதே வயதோடு "வேண்டாமடா சிவனே இந்தச் சீவியம், எண்ட கதையாய் செத்துப்போக. ' கஷ்டப்பட்டு உழைச்சுத்தந்த மனுசனுக்குச் சோறு போடமுடியேல்ல, அம்மாவுக்காவது சோறுபோடவேணுமெண்டு யோசிச்சதுதாம் நிசமாய்போனது.
"அட ராசா: என்ர சின்ன ராசா, எப்படியடி இருக்கிறாய்?" என்றெழுதிய அம்மா ஒருநாள் "சோத்துக்கு வழியில்லை ராசா: யாழ்ப்பாணத்துக்குள்ள ஆமிவந்து கொடியேற்றி, விலையெல்லாம் கொடி உயரத்தில பறக்குது ராசா கொஞ்சம் அம்மாவுக்கு "ஏதன" அனுப்பு குஞ்சு" என்று எழுதப்போய், நானும் நரம்பு புடைக்க உணர்ச்சிவசப்பட்டு அடடா, அம்மா பாவம் கொஞ்சம் அனுப்புவமெண்டால், "இந்த நாயன் தர்ற சம்பளம் வீட்டு வாடகைக்கே போதுதில்லை: இந்த லட்சணத்தில "சோசல்ல போய் பிச்சசை எடுத்துவந்ததில் ஒரு கொஞ்சம் அம்மாவுக்கு அனுப்புவமாப்பா? எண்டு இழுக்க, " இரண்டைப் பெத்துப்போட்டு, அதுகளுக்கு ஒழுங்கான துணிமணி இருக்கா? வெளியில நாய்க் கோலத்தில போறம். வாறமாதம் 'கிண்டர்காடன் பெரியவனுக்கு, அவனை ஒழுங்கா அனுப்பவேண்டாமா? எண்ட எதிர்ப்பாட்டில், சரியான சங்கீதம் முறைப்படி கற்றது தெரிய.
பெருவெடியின் முன் கதைத்தொடர்ச்சி :
பெட்டிச்சாப்பாடும், கூழ், கஞ்சி என்ற படி ஜேர்மனிய அகதியக்கோல அடையாளங்களுடன் அலையோ அலையென்றலைஞ்சு (துகள்கள் விரிவடைவதாக எடுக்கவும்), சுவரிலடித்த பந்தாய் மீளவந்து (பிரபஞ்சம் இதற்குள் சுருங்கிவிடுகிறதா?) குந்திக்கொண்டு, உலகமகா மார்க்கம் தேடிய பெருமூச்சில் நசிந்துபோன ஆசைகளோடு (நிறையீர்ப்பு) "அம்மாடி ஒரு பெட்டை" சுகம் கிடைக்க மார்க்கமுண்டா கந்தா?"என்ற கும்மியடிப்போடு அங்குமிங்கும்

Page 3
அலைந்து: அரியோ அரியென்று அரிந்து. (என்னத்தை அரிந்திருப்பேனென்று நீங்கள் யோசிப்பீங்கள், அதற்காக நானே சொல்லியும் போடணும்; மற்றவர்களின் கழுத்தையல்ல பொறுமையைத்தான்: வேலைகேட்டுத் துளைப்பதும் மறுபுறம்.) ஒரு மாதிரி சுப்பற்ற கொல்லைக்குள்ள தூண்டில் போட்டு ஒட்டி மீனொண்டை பிடிச்சுப்போட்டதற்கு.
.'அம்மாவும் ஆட்டுக்குட்டியும், தன்ர சொந்த மக்களுக்கே சோறுபோடமுடியாத நாட்டுக் கொரு பெயர்: ரீலங்காவும், மசிரும் எண்ட என்ர இயல்புக்குள் எல்லையில்லாத்திருப்தி முட்டிமோத அம்மா எப்பவோ மறந்துபோய். "கழுதைக்கு உபதேசம் காதிலுரைத்தாலும் "அது, அபயக்குரலென்றெண்ணி ஆவதுண்டோ?" என்ற போக்கில் அம்மா ஆறுமாத இடைவெளிக்குப்பின் ஞாபகத்தோடு.
"இனியும் உன்ர கதையைக்கேட்டால் அங்கயிருந்து கடிதமில்ல காடாத்தி வரும்"எண்ட என்ர குலைப்பில - சோளப்பொரியாய் நானிருப்பதில் அவள் அச்சமோ இல்லை எதுவோ பெற்றாளோ தெரியாது, மறைந்திருந்து தாக்கும் பாணியில் பின்வாங்க - ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு ஏற்பட்ட மகிழ்வைவிட என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாதிருக்க, ஒடோடிப்போய் 300 மார்க் அனுப்பி வைத்துவிட்டு "அப்பாடா என்ன பெரிய சாதனை, இதை விட உலகத்தில் என்னபெரிய சாதனை இருக்கு? இவான் லெண்டிலும் விம்பிள்டன் வென்றால்கூட என்ர மகிழ்ச்சி/சாதனையை ஈடுசெய்யமுடியாது போல், ஒரு நினைப்பில் வீடு வந்து மீண்டபோதுதாம் "ஆடினாள், பாடினாள், சாடினாள் ஓடோடத்தாம்" என்ற கதையாய்.
பெருவெடியின் முன்கதைத் தொடர்ச்சி: "என்னடாப்பா இந்த பஸ் இல்லாட்டி இன்னொரு பஸ்சில் ஏறிப்போட்டு போவன்ரா" என்று சொன்ன என்ர கூட்டாளி: "இவன்போட்ட தூண்டிலில நல்ல புழுஇருக்கு, நீதிண்டுபோட்டால் கொழுவோ, கொழுவெண்டு கொழுப்பாய் கூடவே நல்ல நல்ல , கலர் கனவுகள் நித்திரையில் வருமெண்டு சொன்னதாலோ வெண்னவோ ஒட்டிமீனும் வடிவாய்வந்து மாட்டிப்போட்டு எவ்வளவுபோராடியும் தன்னை விடுவிக்கமுடியாமல் திண்டாடியபடி.
இந்தச்சரியான விடாப்பிடியில்: K--G.M1M2/2 என்று நியூட்டன் போட்ட விதியாக ஒன்றும் : Ruv-1/2guvR=XTuV என்று ஐன்ஸ்ரன் போட்டவிதியாய் ஒன்றும் உருவாகி சிக்கலிட்ட சமாச்சாரத்தை:V2Y-8ர2M/h2 (E-V)Y என்று குவன்ரன்பிசிக்ஸ் சொறுடிங்கர் விளக்குற பாணியில் சொல்லிப்போடுவதற்குப் பதில் பிரபஞ்சமாம்: அறிக: புலனாகும் பிரபஞ்சமென்று.
வீறுகொண்ட என்ர ஆண்மனசு "சாண்பிள்ளை எண்டாலும் ஆண்டபிள்ளை"எண்டு அம்மா சொல்விச்சொல்லி வளர்த்த வார்த்தை வந்து கண்முன் விரிய 'அடியேய் இனியும் பொறுக்கமாட்டேன்"எண்டு நான் கருணாநிதிப்பாணியில் விரவசனம் பேசித்துலைக்க, அவள் ஜெயலலிதாபாணியில் கலைகொள்ள இறுதியில் aft Lafau/ பாராளுமன்றப்பாணியில் உருண்டு, புரண்டு எழும்ப, நாங்கள் உருவாக்கிய விதிகளி'
இரண்டும் கூடியிருந்து பார்த்துப்பார்த்து அழுதகாலம்தொட்டு தூக்கியகை தூக்கியதாய் தொடர"நாசமாய்போவான். நல்ல வளர்ப்பில வளரேல்ல; வங்கோலை ராஷ்க்கோல' எண்டு பாடிக்கொண்டிருந்தவளை "குஞ்சு, குட்டி, என்ர செல்லம்" எண்டு நல்லாவொரு பப்பா மரமாகப்பார்த்து ஏற்றிவிட அடுத்து அரைமணி நேரத்துக்குள்ள "குஞ்சுகள் நீங்கள் ரி.வி. பாருங்கோ பாருங்கோ" என்று என்ர 'விதிகளுக்கு'கூற - அவர்களும் அப்பனிட்ட கட்டளையை செப்பனிட்டபடி செய்ய "கட்டிலும் கிறீச் கிறிச் சென்று ஆடி ஓய்ந்துவிட

"என்னப்பா இந்த பெட் சீற்றெல்லாம்." "அதை மாத்தினாப் போச்சு' என்று நான் ஏப்பமிட "தோய்க்க நானொருத்தி இருக்கிறன்தானே?' 'நீ எங்க தோய்க்கிறாய்? வோஷிங் மிஷின்தானே?." நான்பாட்டுக்கு வாயை வைச்சிருக்கத்தெரியாமல் வைச்சிருக்க "இனிமேல் வருவாயா பாப்பம்" என்ற பாணியில் அவள்.
2. இன்றைக்கு சுமார் பதினொருஆண்டுகளுக்கு முன் எந்தஸிBag'க்கோடு அவனிடம் (எனக்குத் தெரிந்தவன்) போனேனோ அதே "Bag'க் கோடு (பிடியறுந்துபோன வித்தியாசம் மட்டும்) சில அவனங்களுமாக (இன்னும் கொஞ்சம் வித்தியாசம் சொந்தமாய் ஒரு ஓட்டைக்காரும் இருக்குது; அதுவும் கூடவே.) அவன் முன்போய் நின்றேன்.
அவனுக்கு தெரிந்திருக்கும் / புரிந்திருக்கும் என் வருகையின் காரணம். மதியமே "கோல்" போட்ட ஆட்டத்தை அவனுக்கு போனில் சொன்னதன்பொருட்டு "என்விஜயம் அவனுக்கு புதிராக இருக்கவில்லை" என்று அவன் விழிகளிலிருந்து நான் தெரிந்துகொண்டவிதம் ஒன்றும் கோவூரின் ஜிப்னாடிச கலைமாதிரிஇல்லைத்தாம்.
"இனிமேல் சரிப்பட்டுவராது: நான் °Seidung செய்யப்போறேன்
என்று சொல்லியும் அவன் எந்தச் சலனமுமின்றி விசுவாமித்திரன் தவக்கோலம்போல இருந்தான்: நான் நதியாக மாறி வித்தைகள் போட்டாலும் அவன் கிறுங்கமாட்டான். அப்படி அவன் ரொம்பப் பழுத்த ஞானப்பழம். என்தரப்பு நியாயங்களை அடுக்கிப்போட்டுவிட்டால் "நல்லபிள்ளை இவண்:ஒண்டும் மோசமானவன் இல்லை எண்டு நினைப்பானவன் என்பதற்கு எந்த உறுதிப்பாடுமில்லை. என்றாலும்.
"பிரச்சினை ஒரு சின்னவிசயம்" உப்புச்சப்பில்லாத பிரச்சினைதாம். உருப்படியாய் சொன்னால் ஒரு சிகரட்டு, (நான் பத்திப்பார்த்தது சிகரட்டல்ல, சுருட்டு வனிலாபோட்ட வாசச்சுருட்டு. சிகரட்டென்று ஒருபொய்) பத்தியதன் வினை.
எல்லோரும் தூங்கப்போய் நடுஇரவு தாண்டிய பின் யன்னலைத்திறந்து வைத்துக்கொண்டு - புகையை வெளியில் தள்ளித் தள்ளிப்புகைச்சும், பாழாய் போன சிறுநீர் அவளுக்கு முடுக்க, வந்தது வினை."என்ன சிகிரட்டும் பத்துறியோ! பரதேசி! (அப்பாடா என்ன புருஷகரிசனை) நல்ல வளர்ப்பில வளர்ந்திருந்தால் சிகரட் பத்துவியா? நாய். விடியட்டும் உன்னை ரெண்டில ஒண்டு பார்க்கிறன்" சொல்லிக்கொண்டே கட்டிலுக்குப் போனவளை இடைமறித்து "நானென்ன பில் கிளண்டனைப்போல சுருட்டை அமுக்கி எடுத்தா பத்தினான்? இல்லையே!, எண்டொரு போடுபோட- "நீ பேசாத நாயே, என்று என்னிருப்புக்குச் சான்றிதழ் தந்து படுத்துக்கொள்ள விடுவேனா? இருக்குத்தானே கைவசம் நல்ல கசாயம் எடுத்துக்கலந்து குடுத்தால் எல்லா வகை விசமும் இறங்கிவிடுமே.
"என்ரகுட்டி, குஞ்சு, அம்மா, ஏணிப்பிடித்துள்ளுறாய்?" வாயால் சவாடல் போட்டு கையால் தடவிக்கொள்ள 'எடடா நாயே கையை" இதற்கு மேலும் இந்தப்பருப்பு அவியாது. இது இருநீர் கலப்புத் தண்ணிர்: இதற்கு வேறுவகை மருந்தை தேடிக்கொண்டேன்.
3. ஒவ்வோரு வீட்டுக்குள்ளும் ஒரு ஈராக் இருக்கின்றது. சதாமாக புருஷன்கள் மாறும்போது பொண்டுகள் அமெரிக்காவாக மாறுகிறார்கள். ஆள் அணி திரட்டிய பூரிப் போடு

Page 4
குசினிக்குள் ஏதோ செய்வதுபோல் அவள்பாசாங்கு செய்ய - அவள் அப்பன் 'என்ன நீங்கள் சிகரெட்டும் பத்துறிங்களாம்?' (யார் கொடுத்த உரிமையோ?) முப்பத்தியேழு முழுகிய எனக்கு எஜமான்கோலத்திலொரு மாமா)"ஆருசொன்னது? அவள் கண்டவளே?" எடுத்த எடுப்பிலேயே சோ ராமசாமியாய் மாறிப்போய் இருந்தேன். "நீர் எப்பிடி அவளுக்கு அடிப்பீர்?" 'அடிப்பேன்; இப்ப உமக்கு முன்னாலும் அடிப்பேன், நீர் முதல் இடத்தை விட்டுப்போம்.உறுமிக்கொள்ளும்போது கூட என் எஜமான் விடுவதாக இல்லை'எங்க அடியும் பாப்பம்" என்றபடி. இறுதியில் அடி அவளுக்கு மட்டுமல்ல "ஆள் அணிகளுக்கும்தான்" கூடவே வீட்டைவிட்டு நான் வெளியேறியது: ஒரேயடியாய் வெளியேறத்தாம்.
என்ன செய்ய, அடிக்கிறது என் தொழிலாய் போச்சு? பார்க்கிறது என் "விதிகளுக்கு" தொழிலாய்போச்சு இப்பவே கண்ணில போட்டுவைச்சாத்தானே அவர்களும் நாளைக்கு "ஆண்"களாக இருப்பார்கள்?
"நிச்சயமா பொம்பிளையஞக்கு அடிக்கிறதை நான் ஏற்கமாட்டன்" அவன் என்ர கூட்டாளி சொல்லிக்கொண்டான். ஆனால் அந்தநேரத்தில இந்த உண்மைதெரியாமல், ஐன்ஸ்டனின் விதிபோலத்தானே இருக்கு?
"இண்டைக்கு இந்த இரவை இஞ்ச கழிச்சுப்போட்டு விடிய"Seidung" செய்ய "Rathans க்கு போகப் போறன்: எங்கடமுடிவை நாங்கள்தாம் தீர்மானிப்பது" என்ற கருத்துக்கு
"சரியென்று" தலையாட்டினான் அவன்.
இரவும் விடிந்தது, நானும் தூக்கம் விட்டெழுந்ததும் உண்மை.
பிற்குறிப்பாய்ச் சில:
1. ஓரிரவு புருஷண் இல்லாத சூழல் அவளை வாட்டியிருக்கு: பிள்ளைகள்
"அப்பாப்பாட்டு" நன்றாக பாடியுள்ளார்கள்.
2. ஆள்அணிகள், தம் பிழைகளென சிலவற்றை கொட்டியுள்ளார்கள் (நானில்லாத
சூழல் நல்லகாரியம் செய்திருக்கு)
3. மீண்டும் வீடுமீண்ட நான் முதல் செய்தவேலை: வக்கீலுக்குப்போன் செய்து
"மணமுறிவு" செய்ய நேரம் குறித்தெடுத்தது; இதற்குப்பின்பு: ஒரு விவாதம் வந்து வடிவாய் கதைத்து அவரவர் உரிமையை(?) அவரவர் மதிக்கத்தக்கபடி வாழ்வது, அல்லது பிரிந்துபோவது என்ற நோக்கு எனது.
4. நடந்தது: கொஞ்சம், கொஞ்சமாக கிட்ட நெருங்கி: 'பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு பிரிந்துபோ: நான் என்ர வாழ்வை முடிக்கிறேன்" என்ற பச்சோதாபத்தை படரவிட்டு "உரசல் கிள்ளல்; முத்தம்" பின் நானே தொடங்கி முடித்துவைக்க-தொடர்ந்தும்; மீள்வதும் X குலைவதும் X தொடர்வதும்.
1= சமுக உதவிக்காரியாலயம் 2= நேசறி அல்லது பாலர் பாடசாலை 3= மணமுறிவு அல்லது விவாகரத்து 4= கச்சேரி அல்லது பதிவுக்காரியாலம்.
džo

O
ரவுடி ரதி
- ஷோபா சக்தி -
முதலாவது பகுதி பருத்தித்துறை ரியூட்டரி மாணவி கமலம் கொலைவழக்கு பற்றின புதினங்கள் நியூஸ் பேப்பருகளில அமளியா வந்துகொண்டிருந்த ரைமில எங்கட அக்காச்சியை யாழ்ப்பாண ரவுணுக்கு ரியூசனுக்கு போகவேண்டாம் எண்டு சொல்லி வீட்டில மறிச்சுப்போட்டினம்.
சாப்பிடமாட்டன், ஞாயிற்றுக்கிழமைப் பூசை காணப் போகமாட்டன் எண்டு அடாத்துப்பண்ணிக்கொண்டிருந்த அக்காச்சி ஒருநாள் கொஞ்சம் தெமறோன் மருந்தைக் குடிச்சுப் போட்டு தனக்கு மேலால ரெண்டு காவோலையையும் இழுத்துப் போட்டு முடிக்கொண்டு தோட்டக்காணிக்குள்ள படுத்திற்றா. அக்காச்சியை இந்தக்கோலத்தில கண்ட நான் அர்ச்சிட்ட சிலுவை அடையாளத்தால எங்கட சத்துருக்களிட்டயிருந்து. எண்டு செவம் சொல்லிக்கொண்டே ஓடிப்போய் அம்மாவிட்டச் சொன்னன்.
கார்பிடிச்சு அக்காச்சியை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோனம், டொக்ரர் அக்காச்சிக்கு கண்னம் கன்னமாய் போட்டு அடிச்சான். வாய்க்குள்ள முக்குக்குள்ள றயர் பைப்புகளை விட்ட கங்காணி முழங்காலால அக்காச்சியின்ர நெஞ்சிலும் வயித்திலும் இடிச்சான். தற்கொலை செய்ய முயற்சித்ததுக்காக அய்நுாறு ருவாய் குற்றக்காசும் கட்டிப்போட்டு அக்காச்சியை விட்ட கூட்டிக்கொண்டு வந்து விசாரிச்சால் அக்காச்சி அவவிலும் பதின்முண்டு வயசு முப்பான ரியூட்டிரி வாத்தியோட கதைக்கிறாவாம்.
பிறகு அக்காச்சி அந்த வாத்தியாரையே கலியாணம் முடிச்சா. வாத்தி பிறகும் பிறகும் ரியூட்டறியில பெட்டையளோட சேட்டை விடுறதெண்டு சொல்லி வாத்தியாரை வேலையால நிப்பாட்டிப்போட்டினம். வாத்தி காலம்பிறக் கள்ளு, பின்னேரக் கள்ளு, காய்வெட்டிக் கள்ளு, நாலாங்கட்டைக் கள்ளு எண்டு குடிச்சுக்குடிச்சு றோட்டு றோட்டாய் விழுந்தெழும்பிதிரிய அக்காச்சி சவுதிக்கு கவுஸ்மேட் வேலைக்குப் போனா.
அக்காச்சி சவுதிக்குப் போன நாள் தொட்டு பின்னேரக் கையானால் வாத்தி நிறைதண்ணியில வந்து எங்கிட வீட்டுப் படலையை உலுக்கி உலுக்கி"நம்மஊரு சிங்காரி சிங்கப்பூரு போனாளாம். மானங்கெட்ட குடும்பம், ரோசங்கெட்ட குடும்பம், விட்டுவாங்கிக் குடும்பம்." எண்டு குளறிக்கத்தி அட்டகாசம் செய்வார். அந்தத் துண்டுக்குள்ளதான் நான் முன்னம்முன்னம் பெண்ரர் கட்டத்தொடங்கினது. பென்ரர் தெரியக்கூடியதாக சாரத்தை துாக்கி சண்டிக்கட்டும் கட்டிக்கொண்டு அக்காச்சி சவுதியிலையிருந்து அனுப்பியிருந்த யப்பான் உருளோசையும் வலுகவனாய் கையில இருந்து கழட்டி "இதக்கொஞ்சம் பிடியண" எண்டு அம்ாவிட்ட குடுத்துப்போட்டு றோட்டுக்கு ஏறி வாத்தியின்ர நெஞ்சிலும் முஞ்சியிலும் பாய்ஞ்சு பாய்ஞ்சு காலால உதைப்பன். ஒரு உதைக்கு வாத்தியார் முண்டு கரணமடிச்சு விழுவார். ஒரு நாள் நான் வாத்தியாரை றோட்டில விழுத்தி அவற்றை நெஞ்சில காலால ஒரு தட்டுமறிப்பு பூட்டுப்போட்டன். அம்மா அந்த வெறிகாரன விடு ராசா எண்டு என்னைக்

Page 5
கும்பிட்டு மண்டாடிக் கேட்ட பிறகுதான் வாத்தியை விட்டன்.
இப்ப மகள் பெரிசாய் வளர்ந்து போட்டாள் எண்டு சொல்லி அக்காச்சி சவுதிக்குப் போறதில்லையாம். ஆனால் வாத்தியாரின் அட்டகாசமும் கொஞ்சமும் குறையயவில்லையாம். நாட்டுப்பிரச்சினை அதைவிடப்பெரிய பிரச்சினையான வாத்தியாரின்ர பிரச்சினை எல்லாத்தையும் கணக்கில எடுத்துக் கொண்டு அக்காச்சி பெட்டையையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வள்ளத்தில போகப் போறதா கடிதம் போட்டா. அக்காச்சியின்ர பெட்டையை இந்தியாவில இருந்து நான் பிரான்சுக்கு கூப்பிடுறதாய் அக்காச்சிக்கு மறுமொழி அனுப்பியிருந்தன். இதுக்கு கொஞ்சநாள் செல்ல வாத்தியாரிட்ட இருந்து எனக்கொரு லெற்றர் வந்துது.
அன்பும் பட்சமுமுள்ள மச்சானாருக்கு எல்லாசுகத்தையும் கொடுக்குமாறு உத்தரிய மாதா தாயை வேண்டிக்கொண்டு உமது அத்தார் கண்ணிரில் தொட்டு எழுதும் கடிதம். உமது அக்காவும் நானும் பதினேழு வருடங்களாய் மேடையேற்றிவந்த நாடகத்தின் கடைசிக்காட்சி போனமாசம் மேடையேறியது. இந்த நாடகத்தை இயக்கிய புத்திசாலி டைரக்டர் யார் என்பதை எனக்கு அறித்தரவும். உமது மருமருமளையும், உமது அக்கா தாளி அபராஞ்சி தன்னைப் போலவே வேசையாடித்திரிய எண்ணிடமிருந்து பிரித்துக்கொண்டு ஓடிவிட்டாள். நான் மீண்டும் குடிக்கத் தொடங்கிவிட்டேன். அம்மாவுக்கு ஒரு பொட்டு
அப்பாவுக்கு ஒரு பொட்டு
அத்தானுக்கு ஒரு பொட்டு
அக்காவுக்கு ஒரு பொட்டு ஆனால் மனைவிக்குப் பொட்டு இல்லை. நான் கூடிய சீக்கிரம் என் மனைவிக்கு பொட்டம்மான் பொட்டு வைப்பேன்.
இப்படிக்கு
உமது அத்தானார்
மா. ஆரோக்கியராஜா (முன்னாள் தமிழ் ஆசிரியர், விக்கினா கல்வி நிலையம்)
1983 ஆடிக் கலவரத்தில தமிழற்ற வீடுகளையும் கடைகளையும் கொள்ளையடிச்சவங்கள் அண்ணர் வேலைசெய்த வி.என்.ஆர். புகைமில கொமரிசன் வியாபாரம் நடந்த செக் கட்டித் தெருவ கொள்ளையடிக்க கொஞ்சம் கஸ் ரப்பட்டாங்களாம். முதலாளிமாரெல்லாம் போட்டது போட்டபடி ஓடிப்பறிஞ்சுவிட பொடியள் தரவளியள் கொஞ்சம் நிண்டு பிளேன் சோடாப்போத்தல் எறிஞ்சு அடிபட்டாங்களாம். இந்த அலக்கு மலக்குக்க அண்ணர் காசுப்பட்டறையில கையை விட்டிருப்பேர் எண்டு நினைக்கிறன். அடிச்ச காசை ஏஜென்சிக்கு கட்டி அடுத்த கிழமையே அண்ணர் பிரான்சுக்கு பிளைட் ஏறியிற்றேர்.
எல்லாம் முடிய முதலாளி நாரந்தனை சூசைப்பிள்ளையன் அவன்ர கோளையாக்களோட எங்கட விட்டுக்குவந்து அண்ணரைத் தேடினான். அண்ணர் களவெடுத்துக்கொண்டு வந்த காசு எங்க? எண்டு கேட்டு வெருட்டினான். அண்ணியையும் அப்ப ஒரு வயசுக்குழந்தையாய் இருந்த ரதியையும் மாஞ்சுபோட்டு மறியல் வீட்டில அடைக்கப் போறதாய் சொன்னான். இப்படியான காலத்திலதான் நான் இயக்கத்தில சேர்ந்தனான்.
நான் கொம்பனியில இருந்த காலத்தில அண்ணர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தேர்.

இயக்கமெல்லாம் பொய்வேலை நீ இயக்கத்துக்கு துண்டு குடுத்துப்போட்டு பிரான்சுக்கு வா, நான் காசு அனுப்புறன் எண்டு எழுதியிருந்தேர். நான் அண்ணியிட்ட உங்கட புரியன் வெளிநாட்டுக்கு கோப்பை கழுவப்போனால் கோப்பை கழுவுற அலுவலைப் பாக்கவேணும். அதை விட்டுப் போட்டு விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கிற வேலையள வைச்சுக்கொள்ள வேண்டாமெண்டு உங்கட புரியனுக்கு மறுமொழி எழுதிப்போடுங்க எண்டு சொல்லிப்போட்டுப் போட்டன். ரதிக்கு ஒரு ஏழுவயசு இருக்கேக்க அண்ணியும் ரதியும் அண்ணரிட்ட பிரான்சுக்கு போய் அண்ணிமட்டும் எனக்கு ஒரு பிறந்தநாள் கார்ட் போட்டா. அண்ணி அடுத்த கார்ட் போடுறதுக்கு முன்னம் நான் பிரான்சுக்கு வந்திற்றன்.
நான் பிரான்சுக்கு வந்து சேர்ந்த பிறகு கூட அண்ணர் என்னட்ட முகம் குடுத்துப் பறையிறதல்ல. நான் பிரான்சில சீவிக்கிற இம்மட்டுக்காலத்தில முண்டுதரம் மட்டும் அண்ணற்ற வீட்டுக்குப்போய் போன கையோட திரும்பி வந்திருக்கிறன்.
நான் இருக்கிற பரிஸ் சிற்றியில இருந்து ஒரு எழுவது எண்பது கிலோமீற்றருக்கு அங்கால அண்ணற்ற குடும்பம் இருந்தது. அந்த ஏரியாவில தமிழ் ஆக்கள் வலு குறைவு. கடைசியா நான் அண்ணர்விட்ட போகயிக்க பயணத்தில வாசிக்கிறதுக்கு ஒரு தமிழ்பேப்பர் கொண்டு போனனான். அந்தப்பேப்பரில முன்பக்கத்தில விஜயகாந்தின்ர படம் இருந்தது. அண்ணர் அந்தப் படத்தைப்பார்த்து "இது ஆர் பிரபாகரனோ? எண்டு கேட்டார்.
ரதி இரவு பத்துக்கும் வீட்ட வாறாள், பன்ரெண்டுக்கும் வீட்ட வருவாள், விடியவும் வருவாள். எண்னக் கண்டால் பொன்சு செவ் எண்டு கட்டிப்பிடிச்சு கொஞ்சுவாள். நல்லா சிகரெட் பத்தப்பழகியிற்றாள் எண்டு அவள் என்ன கொஞ்சயிக்க தெரியுது. தாய்தகப்பன் எங்க போறாய் ? எங்க வாறாய்? எண்டு அவளக் கொன்றோல் பண்ணுமாப்போல தெரியேல்ல.
வாத்தி வோர்னிங் லெற்றர் போட்டதப்பற்றி அண்ணருக்கு ரெலிபோன் அடிச்சுச் சொன்னன். "எங்கட குடும்பமே ஒரு சேர்க்கஸ் குடும்பமப்பு. ஒருத்தரும் சொல்வழி கேக்காயினம் எண்னத்தையெண்டாலும் பட்டு உத்தரிக்கட்டும்" எண்டு அண்ணர் சளாப்பல் கதை கதைச்சார், பிறகு அண்ணி எண்ணட்ட கணநேரம் கதைச்சா. ரதிக்கு வயித்தில பிள்ள தங்கி அழிச்சதாம்,
ஆரோ அவளோட படிக்கிற வெள்ளத்தோலோட தொடுப்பாகி பிள்ளய வாங்கியிற்றாளாம். அவன்ர ஸ்கூட்டர வாங்கிக்கொண்டு ரெண்டுநாளா பள்ளம் புட்டியான இடங்களிலஸ்கூட்டர் ஓடித்திரிஞ்சும் அவளால பிள்ளையைக் கரைக்கேலாமல் போய், பிறகு கிளினிக்கில போய் பிள்ளையை அழிச்சதெண்டு எல்லாம் முடியத் தான் ரதி தாய்க்காரியிட்ட சொல்லியிருக்கிறாள்.
அந்தப்பொடியன கலியாணம் செய்யிறதெண்டால் செய் எண்டு அண்ணரும் அண்ணியும் சொல்லியிருக்கினம். அதுக்கு ரதி "அவனொரு அலுப்புத்தட்டுற சோம்பேறி" எண்டு சொல்லிப்போட்டாளாம். ஆனால் ரதியின்ர நெஞ்சில பிள்ளையை அழிச்சதால கொஞ்சம் கவலை இருக்குமாப்போல தெரியுதெண்டும் அண்ணி சொன்னா.
அடுத்த கிழமை ஒரு ஊத்தைச்சட்டை, ஒரு கிளிஞ்ச களிசான் காலுக்குச்சில்லுப்பூட்டி ஒடுற சப்பாத்துகள் தோளில தொங்க கையைப் பொத்தி ஸ்ரைலாய் இருமிக்கொண்டே ரதி என்ர ரூமுக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிண்டாள். கொஞ்சம் ஊதிப்போயிருந்தாள்.

Page 6
"செவ் வீட்டில கொஞ்சம் சண்டை. ஒரு கிழமைக்கு உங்களோடதான் நிக்கப்போறன்" எண்டாள். இப்பிடித்தான் திடிரெண்டு வருவாள். 50பிராங் காசு வேணுமெண்டுவாள். சிலநேரம் என்ர ரூமில தங்குவாள். அவள் போனாப்பிறகு ரூமில காசோ, மோதிரமோ, புது ஜீன்சோ ஏதாவதொண்டு காணாமல் போயிருக்கும். சரியான வறுவாஸ் கள்ளி.
ரதியோட ஒரு கடைகண்ணிக்கோ சபை சந்திக்கோ போய் வர ஏலாது. முதல் பிரச்சினை ரெயினில ரிக்கட் எடுக்கமாட்டாள். நான் எடுத்துத்தாறனெண்டாலும் "செவ் நீங்கள் பெரிய றிச்சோ?" எண்டு நளினம் பண்ணுவாள். ரிக்கட் செக்கரோட நாளும் பொழுதும் சண்டை. போன வரியம் தன்ர சினேகிதப்பெட்டையோட காருகள் லொறியளில லிப்ட் கேட்டுக் கேட்டே ஜெர்மனிக்கு ரூர் போய் வந்தவளாம்.
இங்கத்தைய சுப்பர் மார்கட்டுகளில எத்தின செக்குருட்டி? எத்தின எலெக் ரோனிக் மெஷின்? ஒண்டுக்கும் அஞ்சாள். என்னோட ஒண்டுந் தெரியாத வவா மாதிரி சுப்பர்மார்க்கட்டுக்கு வருவாள். வெளியில வந்து எனக்கொரு கூலிங்கிளாசோ, சொக்லேட் பக்கட்டோ பிறசென்ற் பண்ணுவாள். எப்பிடித்தான் கடத்திக்கொண்டு வாறாளோ? பிடிபட்டால் நானும் சேர்ந்து பரிசுகெடுவன்.
றோட்டில நடக்கயிக்க சிவப்புலைற்றும் பாக்காளாம். பச்சை லைற்றும் பாக்காளாம். குறுக்கு மறுக்காய் ஓடினாள். அடிக்கிறமாரி வந்த றைவர்மாருக்கு விரலடிச்சுக் காட்டி "ஓங்குலே' எண்டு கத்தினாள். ஓங்குலே எண்டால் பிரெஞ்சில படு தூசணம். பாவி கடைக்குப் போனாலும் ஓங்குலே, ரயிலில ரிக்கற் செக் கரோடும் ஓங்குலே. ரி.வி. பாத்துக்கொண்டிருந்தாலும் ஓங்குலே, சில நேரம் தன்னாரவாரமும் ஓங்குலே. சரியான பொம்புள ரவுடி.
ரதி வந்த அண்டு இரவு நான் வைன் குடிச்சுக்கொண்டிருந்தன். அவள் ஒரு அரைக்கிளாஸ் குடிச்சாள். "செவ் டான்ஸ் ஆடுவம் வாரீங்களா? எண்டு கேட்டாள்? "எனக்கு டான்ஸ் ஆடத்தெரியாது' எண்டு சொல்லிப் போட்டன். என்னோட பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில"செவ் நீங்கள் முந்தி இயக்கத்தில இருக்கேக்க நிறைய ஆமிக்காரரையா கொலை செய்தனிங்கள்?' எண்டு கேட்டாள்.
எனக்கு ஒரே கொண்பியூசன். என்னைப்பாாத்து நீ மாற்று இயக்கத்தை படுகொலை செய்தனியா? உங்கட இயக்கத்துக்கேயே படுகொலை செய்தனியா? அப்பாவி மக்களைக் கொலை செய்தனியா? எண்டுதான் இதுவரை கேட்டிருக்கினம். இவள் புதுமாதிரியாக் கேட்கிறாள்.
யாழ்ப்பாண டச்சுக்கோட்டை ஆமிக்காம்பைச் சுத்தி எங்கிட சென்ரி பொயின்ருகள் இருந்திச்சு. ஆமிக்காம்பில ஷெல் குத்துற சவுண்டைக்கேட்டாலே அந்த சவுண்டை வைச்சே குத்தினது என்ன ரைப் ஷெல், எத்தின இஞ்சி எண்டு கல்குலேட் பண்ணிச் சொல்லுற அளவுக்கு விண்ணன்களும் எங்களிட்ட இருந்தாங்கள்.
ஷெல்குத்தினால் அது காத்தில ஆத்துப்பறந்து இருபது இல்ல முப்பது செக்கனில விழுந்து
வெடிக்கும். ஆனால் எங்க விழுந்து வெடிக்கும் எண்டு தெரியாது. எங்கட சென்ரி பொயின்ரில கூட விழுந்து வெடிச் சாலும் வெடிக்கும். மண்முட்டையஞக்குப்பின்னால

காதைப்பொத்திக்கொண்டு பல்லுக்கு நடுவில சீலத்துண்டை கடிச்சுக்கொண்டு கண் ரெண்டிலும் சாதுவான பயமும் சாதுவான திரில்லும் ஒருமிக்க கலந்திருக்க ஷெல்லுக்காய் பாத்துக்கொண்டிருப்பம். இப்ப என்ர மறுமொழிக்காய் பாத்துக்கொண்டிருக்கிற ரதியின்ர கண் ரெண்டும் அப்படித்தான் இருக்கு.
காலம்பிற பத்துமணிக்கு ஆரோ கோலிங் பெல் அடிச்சினம், கண்ணை முழிச்சுப்பாத்தன். ரதி ஒரு முலைக்குள்ள ஓவெண்டு காலை விரிச்சுப் படுத்துக்கிடந்தாள். இப்பயும் அவளின்ர கடவாயில வீணி வடியுது. அவளை உலுக்கி எழுப்பினான். எழும்பி தலைவிரிகோலமாய் கண்ணை கண்ணை புலுந்திக்கொண்டிருந்தான். கதவைத் திறக்க கொம்யூனிஸ்ட் துரையர் நிக்கிறார். அவரும் கண்ணைச் செம்மிக்கொண்டுதான் நிக்கிறார்.
"என்ன நேற்று லாச்சப்பலில ஒரு மொறிசியஸ் பொட்டையோட போனியாமோ?' எண்டு கேட்டுக்கொண்டு ரூமுக்குள்ள உள்ளிட்டவர் ரதியைக்கண்டவுடன சைலண்டாகி ஒரு முலையைப் பிடிச்சு சுவரில சாஞ்சு இருந்து கொண்டார்.
இண்டைக்கு உத்தரிப்புஸ்தலம்தான்.
ஊரில எங்கடவீடும் கொம்யூனிஸ்ட் துரையற்றவிடும் ஒரு வேலி. இந்த நாடுகளில பதினெட்டு வயசு வந்தஉடன பொடிபொட்டையள் தாய்தேப்பனை விட்டுப்போட்டு வெளியில போய் சீவிக்கிறமாதிரி முந்தி எங்கட ஊரில பன்ரெண்டு பதின்முண்டு வயசு வந்ததும் எல்லாப் பொடியளும் கொழும்புக்கோ இல்லாட்டி அளவை, நிற்றம்புவ, வியாங்கொட எண்டு சிங்கள நாட்டுப்பக்கத்துக்கோ கடையளில வேலைக்குப்போகவேனும், அப்பிடிப்போன துரையர் எப்பிடி கொம்யூனிஸ்ட் துரையர் எண்டு பட்டம் வாங்கினார் எண்ட காரியம் எனக்குச் சரியாகத் தெரியாது.
ஆனால் செல்வநாயகமும் வி. பொன்னம்பலமும் காங்கேசன்துறை பார்ளிமென்ற் தொகுதியில நேரடியாக மோதேக்க கொழும்பிலிருந்து ரெண்டுமாசம் லிவெடுத்துக்கொண்டு வந்து கொம்யூனிஸ்ட் துரையர் வி.பொன்னம்பலத்துக்கு எலெக்சன் வேலை செய்தது அப்ப ட்ஸ்ற் பொடியனாய் இருந்த எனக்கும் சாடையாய் தெரியும்,
ஒருநாள் கொம்யூனிஸ்ட் துரையருக்கு கூட்டணிப்பொடியள் சாறுபறக்க அடிச்சுப்போட்டாங்கள். ரெத்தம் ஒழுக ஆளை வீட்டில கொணந்து பாயில வாழையில விரிச்சு கிடத்தியிருந் தினம். இந்தா முளை துடிக்குது, அமுதம் துடிக் குது ஆள்முடியப்போகுது எண்டு பறைஞ்சுகொண்டே கார்பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவையள். அது வலியசீவன், நாலாம்நாளே ஆஸ்பத்திரியில துண்டை வெட்டிக்கொண்டு நேர வி.பொன்னம்பலம் விட்டதான் போனேராம்.
ஆனால் அந்த லெக்சனில வி.பொன்னம்பலம் தோத்துப்போனேர். அதுக்குப்பிறகு ஒரு கூட்டத்தில வி.பொன்னம்பலம் பேசேக்க "எனக்கு வாக்களித்த தொழிலாள வர்க்கமே! உங்களுக்கு நன்றி. ஆனால் நானோ எனது வாக்கை தந்தை செல்வாவுக்குத்தான் போட்டேன்" எண்டு சொன்னேராம்.
இந்த இடத்திலதான் அரசியல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்பாதைக்கு தான் திரும்பினதாய் இண்டைக்கும் கொம்யூனிஸ்ட் துரையர் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கும் ஆயுதத்துக்கும் உள்ள ஒரேஒரு சம்பந்தம் என்னவெண்டால்

Page 7
எழுபத்தேழுக் கலவரத்தில இவற்றை கையை சிங்களப்பொலிசுக்காரர் துவக்குச் சோங்கால அடிச்சு முறிச்சது மட்டும்தான்.
நெளிவு, சுழிவு தெரியாத ஆத்துமம். அந்த இயக்கப்பொடியளை ஏன் சுட்டனிங்கள் எண்டு இந்த இயக்கத்திற்றயும், இந்த இயக்கப்பொடியளை ஏன் சுட்டனிங்கள் எண்டு அந்த இயக்கத்திற்றயும் நியாயம் தெண்டி ஊரில இருந்த எல்லா இயக்கத்திட்டயும் அடிவாங்கின ஆள். பிரான்சுக்கு வந்து கொஞ்சக்காலம்தான். ஆனா ராப்பகலா வேலை செய்து மனிசி பிள்ளையளையும் எடுப்பிச்சுப்போட்டார். என்னோட கொம்யூனிஸ்ட் துரையர் வலுநேசம், ஆனால் ஆள் தண்ணி போட்டுதெண்டால் ஊத்தை. ஊத்தை. படுஊத்தை. ஆளுக்கு இண்டைக்கு காலம்பிற வெள்ளணவே நல்ல டிம்.
ரதியோட கொம்யூனிஸ்ட் துரையர் நடப்பு நாட்டுநிலவரங்களை டிஸ்களில் பண்ணிக் கொண்டிருந்தார். ரதியின்ர படிப்பு, வேலை வாய்ப்பு, தன்ர பிள்ளையள படிப்பிக்கவேண்டிய படிப்பு எண்டு கதைச்சுக்கொண்டிருந்தேர். ரதி கண் ரெண்டையும் விரிச்சுக் கொண்டு ஏதோ பரம்பர பிரெஞ்சுக்காரி சாங்கத்தில துரையருக்கு விளங்கப்படுத்திக்கொண்டிருந்தாள்.
எனக்கு என்னெண்டு தெரியாத ஒரு எரிச்சல், "அண்ண உங்கிட பொட்டையள் பெரிசான உடன அதுகளோட இந்தியாவுக்கு போய் செற்றிலாகுங்கோ இங்சயிருந்தால் பிள்ளையஸ் சீரளிஞ்சு போகுங்கள்". எண்டு துரையரிட்ட சொன்னன். கடைக்கண்ணால ரதியக் கவனிச்சன். அவளின்ர முகத்தில ஒரு சேஞ்சும் இல்லை.
"என்ன காரணங்களை அடிப்படையா வைச்சு நீ இந்தக் கருத்தை சொல்லுறாய்" எண்டு நிமிந்து ஒரு விவாதத்துக்கு ரெடியானார் துரையர். அவற்றை குரலில பேச்சில ஒரு கொம்யூனிஸ்ட் ரியூன் ஓடத்தொடங்குது.
"அண்ணே எத்தின காலம் இந்த நாட்டில நாங்கள் சீவிச்சாலும் எங்கடதோல் கறுப்புத்தான" எண்டன் இப்பயும் ரதிய கவனிச்சன். அவளில சேஞ்சில்ல.
கொம்யூனிஸ்ட் துரையருக்கு எனக்கு ஒரு பெரிய பதில தரவேணுமெண்ட ஆசை இருக்கிறது தெரியுது. ஆனால் வெறிக்கொடுமையில அவரால நிதானமா கதைக்க ஏலாமல் கிடக்குது எண்டு நினைக்கிறன்.
"தம்பி டேய் இதக்கேள். ஆரட்ட இல்ல நிறவெறி. எங்களட்ட இருக்கிற நிறவெறி உங்க ஆரிட்ட இருக்குது? என்ர மனுசி என்னெண்டு என்ர பிள்ளைக்கு சோறு தீத்திறாள்? சாப்பிடு இல்லாட்டி கறுவலிட்ட பிடிச்சுக்குடுத்துப்போடுவனெண்டு சொல்லித்தித்திறாள். எப்பிடி வீரகேசரியில மணமகள் தேவை அட்வடிஸ்மன்ட் குடுக்கிறாங்கள்? சிவந்த அழகிய பெண் தேவை எண்டு விளம்பரம் செய்யிறாங்கள். இந்த இடத்திலதான் நிறவெறியே தொடங்குது" எண்டு கையிலிருந்த வைன் கிளாசை ஒருக்கா நிலத்தில் மெதுவாக குத்தினார் துரையர்.
பிறகு கொஞ்சம் மெதுவாய் பல்லைக்கடிச்சுக் கொண்டு சொன்னேர் "சிவத்தைப்பொம்பிளையும் கறுத்தப்பொம்பிளையும் . காத்தியக்கிடக்க .லைற்றை
நுாத்தா எல்லாம் ஒண்டுதான்."
எனக்குப்பத்திக் கொண்டு வந்துது. என்ன கதைக் கிறேர் இவர்? தண்ர

பொம்பிளப்பிள்ளையஞக்கு முன்னால இப்பிடி விளக்கு நூக்கிற கதை கதைப்பாரோ? இந்த ரதிச்சனியன் இப்பிடி சரிக்குச்சரியாய் இருந்து வைனும் குடிச்சுக்கொண்டு இருக்கிறதால மரியாதையில்லாமல் இப்பிடி தூசணம் சொல்லுறாரோ? துரையரை இழுத்துப்போட்டு மின்னவேணும் போல கிடந்துது. என்ர இடக்கையில இருந்த வைன்கிளாசுக்கு வலக்கையை பொத்திப்பிடிச்சுக் குத்தினன். "கதையை நிப்பாட்டுங்கோ."எண்டு நறுமினன். கிளாஸ் முண்டு துண்டாய்ப் போச்சு, ரதி திடுக்கிட்டு எழும்பி நிண்டாள். கொம்யூனிஸ்ட் துரையரும் சுவரைப் புடிச்சுக்கொண்டு மெல்ல எழும்பினேர்.
"ஏன் இப்ப கிளாஸை உடைச்சனி?"
"அண்ணே, உங்களுக்கு கூடிப்போச்சு. நீங்கள் வீட்டை போங்கோ. நான் நாளைக்கு உங்களோட கதைக்கிறன்"
"டேய் நீ என்ன பெரிய சண்டித்தன மயிரோ? தெரியுமா கைவரிசை. தம்பி உன்னைத் தெருவில கலைச்சுக்கலைச்சுக் காரால அடிச்சுக்கொல்லுவன். தெரிஞ்சுகொள்."
"சரியண்ணே நீங்க போங்கோ நாளைக்கு கதைப்பம்" எண்டு ஆளைப்பிடிச்சுறும் கதவுக்கு கொண்டு வந்தன். கொம்யூனிஸ்ட் துரையர் என்னை ரெண்டு கையாலையும் உன்னித் தள்ளினேர்.
"டேய் தள்ளி நில்லு, தேகத்தில முட்டாத. தொட்டியெண்டால் உறண்டல் நாயே கொலை செய்துபோடுவன். நான் எத்தின கொலை செய்தனான் எண்டு தெரியுமாடா உனக்கு? துரையருக்கு நேரா நிக்கேலாமல் கிடக்கு. அவர் கையை துவக்கு சுடுற பொஸிசனில புடிச்சுக்கொண்டு கொலைக் கணக்கு வழக்கு கதைக்க, எனக்கு பயங்கர சிரிப்பு வந்துது, சிரிச்சுக் கொண்டே 'ஓமணர்ண நீங்கள் கன கொலயள் செய்தனிங்கள்" எண்டு கதவைத்திறந்து அவர வெளியில விட்டன். கதவை அடிச்சுச் சாத்தினன்.
இப்ப ரதியைப் பாத்தால் விறைச்சுப்போய் நிக்கிறாள்.
"என்ன பிள்ளை' எண்டு கேட்டன், ரதி பல்லைக்கடிச்சுக் கொண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறாள். அவளின்ர கன்னத்தில கண்ணிர் ஓடுது. "செவ் நான் எங்கட விட்ட போறன்"
"என்ன ஒரு கிழமை என்னோட இருப்பன் எண்டாய்" "இல்ல செவ் நான் விட்ட போறன்" எண்டு நடுங்கிக்கொண்டு சொன்னாள்.
இரண்டாவது பகுதி
அதுக்குப்பிறகு ரதி என்ரறுாமுக்கு வாறதல்ல. எனக்கு போன் அடிக்கிறதும் இல்ல, கொஞ்ச நாளைக்குப்பிறகு அண்ணியோட கதைக்கேக்க "ரதி அண்டைக்கு ஏன் என்ர ரூமிலை இருந்து அழுதுகொண்டு போனவள்" எண்டு கேட்டன். அதப்பத்தி ரதி அண்ணிக்கு பயந்துகொண்டே சொல்லியிருக்கிறாள். 'துரை அங்கிள் நான் எத்தின கொலை செய்தனான் தெரியுமோ? எண்டு கேக்க சித்தப்பா சிரிச்சுக்கொண்டு நிண்டவர்"

Page 8
గిగే UN Tఫ్రీలై
போன அம்மாவில் உரைகற் பகுதியில் இலக்கியம், பின்நவீனத்துவம் இவைகளின் "வாதி"யாய் அடையாளம் காணப்படும் சாருநிவேதிதா தன்னையும் தன் ஐரோப்பிய கூட்டுக்களையும் மையப்படுத்தி பாதுகாப்பு வலயத்தை அமைத்தபடி ஒரு அதிகாரவகைப்பட்ட எழுத்துவருகை தந்திருக்கிறார். யாராலும் கேள்விகேட்கப்படமுடியாத புதியதான புனித கருத்தியல் அதிகார மையத்தைக் கட்டிஅமைக்க முயன்றிருக்கிறார். விவாதம் என்பது மனிதர்களின் அறியும் சக்தியுடனான மோதல் கலகம் என்ற சாதாரண புரிதலுக்குக் கூட தன்னைச் செலவுசெய்யாத சிந்தனைச்சிக்கனம். ஆனால் அவரின் பின்நவீனத்துவ விசாரணைக்கு மட்டும் உயர்ந்த அதிகாரத்தொனியோடு கூடிய அதிதீவிர ஆர்ப்பாட்டங்களோடு வெளிப்படும் உரிமை, சமர்ரயாகரனின் அரசியல் மற்றும் இலக்கியப்பிரதிகளின் மேலான வாசிப்புக்கு புறப்பட்டவர் அந்த வாசிப்பையும் விமர்சன வேலிகளையும் தாண்டி கடந்து அப்பாலுக்கும் அப்பால் நீண்ட நெடுந்தூரம் பயணித்து தீவிரமான மனித வெறுப்பைக் கொட்டியிருக்கிறார். தன் எழுத்து முர்க்கத்தால் பின் நவீனத்துவத்தின் கற்பையும் புனிதங்களையும் காப்பாற்ற போராடியிருக்கிறார். பின்நவீனத்துவங்கள் தாமே பிரகடனப்படுத்திக்கொண்ட "மற்றதாய் இருக்கும் உரிமையையும்" "படைப்பாளி இறந்துவிட்டான்" என்று சொல்லி பிரதியை தம்விருப்புக்கு சுயங்கெட்டு ஏற்ப வாசிப்பையும் கைவிட்டமையின் முலம் தம்மரபுகளோடும் பின் நவீனத்துவ ஒழுக்க விதிகளோடும் தாமே முரண்பட்டுக் கொள்கிறார். இங்கு சாருநிவேதிதா வெளிப்படையாகவே மல்லுக்கு நிற்கின்றார். பின்நவீனத்துவம் ஏற்கனவே இலக்கியம் பற்றிய அறிவும் சிந்தனையும் "தெரிதா மற்றும் பூக்கோவுக்கு முன்பு இருந்தது கிடையாது இருண்டகாலங்களே நிலவின என்பதாய் விங்கிமுட்டித்திரிந்தது. காலத்துக்குக் காலம் இவை வெவ்வேறுவடிவங்களில் பெயர்களில் நிலவியே வந்துள்ளன என்ற வரலாற்று அரிச்சுவடி பின்நவீனத்துவத்தின் பிரதிநிதியாக கட்டுடுடைக்கக்கிளம்பியவர்களுக்கு எட்டாமற்போனது யாவும் பெருங்கதையாடல் என்பவர்கள் மறுதலையாக பின்நவீனத்துவம் மட்டுமே "முழு உண்மை" என்ற ஒருதலைச் சார்பான தத்துவங்களில் மாட்டுப்பட்டுக்கொண்டனர், அதிகாரத்தை எதிர்ப்பதாய் கத்திக்குழறுபவர்களின் இறுதிவிருப்பங்களும் புதிய அதிகாரங்களை புதிய மையங்களை நிறுவுவதற்கே என்பதற்கான எழுத்துச் சாட்சியத்தை சாரு நிவேதிதா எமக்குக் காட்டித்தருகின்றார். பின் நவீனத்துவத்தை சந்தேகிப்பது அதனிடம் வெற்றிடங்கள் போதாமை உண்டு என்று சந்தேகிப்பது பின் நவீனத்துவத்தின் தனிஉரிமையான வாசிப்புச்செய்யும் உரிமையை மற்றையோர் அபகரித்துக்கொள்வது அவர்களின் எழுதப்படாத மரபுகளின் படி கடுங்குற்றமாகும். மீறின் யமுனாராஜேந்திரன், ரயாகரன் போன்றோருக்கு நடந்ததே நடக்கும். நீங்கள் வார்த்தைகளால் முகத்தில் அறையப்படுவீர்கள். மாபெரும் சிந்தனைக் கருவூலமான பின் நவீனத்துவத்தை எதிர்த்த கடுங்குற்றத்துக்காக இதே ரயாகரனுக்கு "நீ செத்துப்போ" என்று அறம்பாடி கல்வெட்டுப்பாடியதெல்லாம் பழம் சங்கதியாய் இருக்க புகலிடத்துக்கு அம்மாமூலம் சாருநிவேதிதிதா தரும் செய்தி எச்சரிக்கை. பின் நவீனத்துவத்தின் விரிந்தகன்ற பன்முகப்பார்வையின் வீச்சோடு எவ்வாறு வெளிப்படுகிறது? சாரு நிவேதிதா ரயாகரனை எப்படிச் சங்காரம் செய்கிறார் பாருங்கள்?" எங்கள் எழுத்துப் பிடிக்கவில்லையானால் பேசாமல் உங்களதை பொத்திக்கொண்டு போங்கள்" இதை நாம்

எழுத்துக் காடைத்தனம் இழிவபடுத்தும் வன்முறை சார்ந்த எழுத்து என்று சொன்னால் சமுகத்திலே வன்முறையும் காடைத்தனமும் மையங்கொண்டு இருக்கவில்லையா? அதையே நாம் பிரதிபலிக்கின்றோம். எழுத்திலே காட்டித் தருகின்றோம் என்று எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைப்பார்கள் அல்லது அச்சொற்களை சரியாய் வாசிப்புச் செய்யவில்லை. அச்சொற்கள் வெளிப்படுத்தாதவைகளை வாசிப்புச்செய்யவேண்டும் என்பார்களோ? (உதாரணமாய் நாய் என்பது யானை அல்ல பூனைஅல்ல மாடு அல்ல மரை அல்ல என்ற வகையில்) தற்போது புகலிடத்தில் பல்வேறு வகையான அரசியல் இலக்கியப்போக்குகள் நடப்பில் நிலவுகின்றன. அவை பல்வேறுபட்ட வித்தியாசமான மனித அனுபவங்கள் வர்க்கப்பார்வைகள் அவற்றின் தேவைகளின் விளைவு. இவைகளிடையே ஒரு சுதந்திரமான வாதிடலுக்கான களம் என்பது மிகவும் நீண்ட போராட்டம் ஒன்றினூடு பெறப்பட்டது. தம்மை சகல இடத்திலும் வன்முறையால் வலுக்கட்டாயமாய் நிறுவிக்கொள்ளும் ஒற்றைக்கருத்தியல் போக்குகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு நொந்துகெட்டுப் போனவர்கள் நாங்கள். இன்றைய பின்நவீனத்துவப்போக்காளர்கள் அதிகாரக்கருதியல்களை தகர்க்கப்பபோவதாய் சொல் எறிந்து வெளிக்கிட்டது சரிதான். ஆனால் இதே அதிகாரக்கருத்தியலை மட்டுமல்ல நேரடியான உடல் ரீதியான வன்முறைகளை கொலைகளை புகலிட எழுத்துக்கள் கண்டும் சந்தித்தும் போராடியும் தான் உயிர்தப்பியுள்ளது. மோசமான குழுவாதத்தாலும் அதிர்ச்சி அளிப்பதையும் சொற்சாகசங்களிலும் நம்பிக்கை கொண்ட இன்றைய பின் நவீனத்துவம் ஐரோப்பியச் சூழலோடு புகலிடப்பிரச்சினைகளோடும் போதிய பழக்கமற்ற சில பின்நவீனத்துவக் குருவானவர்களால் தமிழ் நாட்டிலிருந்து வழிநடத்தப்படுகிறது. இப்படியாக புகலிட பின்நவீனத்துவத்துக்கு புதிய கட்டளையிடும் வழிநடத்தும் அதிகாரமையங்கள் தமிழ்நாட்டில் உருவாகின. புகலிடத்தின் கடந்தகாலத்தில் மாற்றுச்சிந்தனைகட்கு எதிரான கொலைகள், ஆட்கடத்தல், முகமுடித்தாக்குதல்கள், இருட்டடி, இரும்புக்கம்பியடி, தொலைபேசி மிரட்டல், நேரடி மிரட்டல், பத்திரிகைகள் மேலான பயமுறுத்தல், வன்முறை என்பன நடைபெற்றபோதிலும் இவைகட்கெதிராக எந்த தமிழ்நாட்டு பின்நவீனத்துவ வீரவாண்களும் எதிர்ப்புக்காட்டியது பேசியது பறைந்தது கிடையாது. அவர்களின் புகலிட வருகைகளிலும் இவையற்றி தொகை தொகையாய் பலபத்துப்பேர்களால் கதைகள் சொல்லப்பட்ட போதிலும் அவற்றிற்கெதிராக அவர்களின் எந்த எழுத்தும் பேச்சுமுச்சுக்காட்டியதில்லை. புகலிட எழுத்தின் மேலான வன்முறைகளைக்கண்டித்தது கிடையாது. மாறாக இவைகளில் சிக்குப்படாமல் கருத்து வெளியிடாமல் தப்புவதை அவர்கள் திட்டமிட்டுச் செய்தார்கள். ஆகவே புகலிட எழுத்துக்கள் தமிழ் மக்களுக்காகவே பிறவி எடுத்துள்ளதாய் சொல்லப்பட்ட இயக்கங்களின் வன்முறைக்கெதிராய் தன்னந்தனியே விடப்பட்டன. இவை சற்றுத் தணிந்து புகலிட எழுத்துக்கள் சற்று முச்செடுக்க முயற்சிக்கும் வேளையில் இன்று ஆயுதமற்ற எழுத்து வன்முறை அதற்குச் சமமான கருத்தியல் பயங்கரவாதம் ஊகத்தையும், சந்தேகத்தையும் அடிப்படையாய் கொண்ட தனிமனிதர்களைச் சண்டைக்கிழுக்கும் அவமானப்படுத்தி மனோவியல் வதைக்குள்ளாக்கி அழிக்கும் எழுத்துப்பரப்பிலிருந்து துடைத்தெறிய முயலும் போக்குகள் வளர்கின்றன. "தலையெடுக்க விடக்கூடாது" என்ற வண்மத்தடன் இவை வெளிப்படுகின்றன. இவை ஒருவகை எழுத்துச்ச்ர்வாதிகாரமாய் எந்தவித மனிதக்கூச்சமுமற்று தம்மை அறிவிக்கின்றன. தம்மையும் தம் சிந்தனையையும் கேள்விநியாயங்களுக்கு அப்பாற்பட்ட புனித பீடங்களுக்கு நகர்த்தும் முயற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு குழு அடிப்படையில் இயங்குகின்றன. இவர்கள் தம் கருத்தை சோதனைசெய்யும் வாசிப்புச் செய்யும் உரிமைகளை மறுப்பதோடு ஒன்று குவிக்கப்பட்ட புதிய அதிகார கருத்தியல் மையங்களை தம்மை அறியாமலே படைக்கின்றனர். அதன் ஊழியர்களாக அதன் கட்டளைகளை

Page 9
சிரமேற்கொள்பவர்களாக மோசமான கருத்தியல் ஏகபோகத்தையும் தீவிரவாத்தையும் வெளிப்படுத்துகின்றனர். தம்மை நிறுவிக்காட்டி எதிர்க் கருத்துக்களை துவம் சம் செய்யமுடியாத நிலையில் ஒற்றைக்கருத்தியல் உலக்கைகளை தூக்கி வருகின்றார்கள். தனி மனிதர்களை இகழ்வதும் அவமானப்படுத்தும், பழித்து மனமுடையவைத்து எழுத்துக்களிடமிருந்து துரத்த முயல்வதும் தீர்வாகி விடுகின்றது. இதனால் கருத்து முரண்படுபவனை அரசியல் எழுத்தால் துடைத்தெறிவதை விடுத்து 'நீ மரணமடையக் கடவாய்" என்று கல்வெட்டெழுதும் எழுத்துக்கொடுமைகளை மரணத்தை ஞாபகமுட்டி வதைத்துக்கொல்லும் கொடுரமான தந்திரங்களாக இவை இழிகின்றன. எழுதுபவனை தனிப்பட்டமுறையில் எள்ளி நகையாடி அவனின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி உடல்ரீதியான அழிவை ஞாபகமுட்டி சிதைத்துச்சிதறடிக்கும் போக்குக்கு ஒப்படைக்கும் நிலை. இது பயங்கரவாதமே. எழுத்துப்போர்வையிலான வன்முறையே.
இப்போ பின்நவீனத்துவத்துக்காக வாதிட வந்துள்ள சாருநிவேதிதா செய்வதென்ன? சமர். ரயாகரனை முறையாக எதிர்கொள்ளமுடியாமையை ஈடுகட்ட மொழியாடல்களோடு சாகசத்தன்மை காட்டுகின்றார். அரசியலின் நுண்ணிய உண்மைகளை கண்டறிய பலமற்றநிலையில் விளிம்புமனிதர்கள் பற்றிய பிரமிப்புகளை ஊட்ட முயல்கின்றனர். ரயாகரன் சோசலிசத்தின் பல்துறைசார்ந்த புரிதலை தன்ஸ்ராலினிச வாசிப்புக்கு ஏற்ப வகைப்படுத்துகின்றார். சமூகவியலின் இயக்கமற்ற முரட்டுத்தன்மையதான சோசலிசம் பேசுகின்றார். இலக்கியம் பற்றிய சோசலிசத்துக்கு முரணாணன கோணலான கருதுகோள்களை வெளியிடுகின்றார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் பின்நவீனத்துவக் கட்டுடைப்பு ஜோதியில் கலக்கும் அருகதையுடையவராய் காட்சிதரும் சாருநிவேதிதா ரயாகரனின் ஸ்ரானிச சோசலிசத்தை உண்மையான சோசலிசசிந்தனையிலிருந்து பிரித்துக்காட்டி, விளக்கி வேறுபடுத்தி அரசியல் மோட்சமடையும் வழியுமற்று நிற்கிறார். ரயாகரன் எழுத்தை அரசியல் ரீதியில் தீர விசாரிக்கும் தகமையற்றபோது சொற்களோடும் மொழியோடும் வித்தைகாட்டப்போய்விடுகின்றார். பின் நவீனத்துவத்தால் ஏதோ பிரபஞ்ச தரிசனமே நிகழ்திக்காட்டப் போவதாய் பிரமிப்பூட்டியவர்கள் இவ்வாறாக ஏதுமற்றுப்போயினர். அய்ரோப்பியச்சிந்தனைஉலகு வெகுகாலம் முன்பாகவே பின் நவீனத்துவ சிந்தனைகளை உதறிவிட்டுப் போய்விட்டது. அதன் இன்றைய அடையாளங்களையும் மிச்ச சொச்சங்களையும் கண்டறிய ஒரு அரசியல் பார்வையுள்ளநபர் கூட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அய்ரோப்பிய சமுகத்தின் ஒருகாலத்திய ஒருபகுதியின் வர்க்கப்பிரிவின் முரண்பாடுகளை இயல்புகளை சொல்ல எழுந்த சிந்தனை அது. தன் உதிரிச்சிந்தனைகளின் பகுதியான பார்வையின் குறைபாடுகளுக்கு ஏற்ப அவையின் குறுகிய கால வாழ்வு முடிந்துவிட்டது. மரணம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
அதை அய்ரோப்பிய சமூகத்தின் பொருளாதார நிலைகளை வாழ்வியல் போக்குகளை ஒருபோதும் எட்டாத இந்தியச் சமுக நிலமைகட்கு பொருத்திவிட முயல்கின்றனர். பின்நவீனத்துவத்தின் மொழி மற்றும் மனித உளவியல் சார்ந்த ஆய்வுத்தன்மைகளை இலக்கியப்போக்குக்கு அப்பாலும் அதோடு சம்பந்தப்படாத ஏனைய அறிவுத்துறைகட்கும் விரிவுபடுத்தி சர்வமயப்படுத்தி விடுகின்றார்கள். அது அரசியல் முன்பு நிராயுதபாணியாய்
அய்ரோப்பியச்சிந்தனை உலகு வெகுகாலம் முன்பாகவே பின் நவீனத்துவ சித்தனைகளை உதறிவிட்டுப்போய்விட்டது. அதன் இன்றைய அடையாளங்களையும் மிச்ச செச்சங்களையும் கண்டறிய ஒரு அரசியல் பார்வையுள்ளநபர்கூட மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். அய்ரோப்பிய சமூகத்தின் ஒருகாலத்திய ஒருபகுதியின் வர்க்கப்பிரிவின் முரண்பாடுகளை இயல்புகளை சொல்ல எழுந்த சிந்தனை அது. தண் உதிரிச்சிந்தனைகளின் பகுதியான பார்வையின் குறைபாடுகளுக்கு ஏற்ப அவையின் குறுகிய கால வாழ்வு முடிந்துவிட்டது. மரணம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது
 
 
 
 
 
 
 
 
 
 

நிற்கின்றது. பின்நவீனத்துவம் தன் எல்லைகளைக் கடக்கும்போது அது சுமையாகவும் கோளாறானதாகவும், காலப் பொருத்தமற்றதாயும் ஆகிவிடுகிறது. இதை இந்தப்போக்காளர்கள் ஒப்புவது கிடையாது. எதிர்விளைவுகள் விமர்சனங்கள் வரும்போது தம் எழுத்துக்களில் பூரண நம்பிக்கையற்றநிலையில் அதன் கருத்தியலின் முழுமையில் ஏற்படும் சந்தேகங்கள் சங்கடங்கள் தம் அரசியல் அரைமயக்கநிலையை மறைக்க உடல் உடல்வன்முறைக்கு முன்பான மொழிரீதியான வசைச்சொற்களாய் வண்முறைக்கு முன்பான முன் அறிவித்தலாய் ஆகிவிடுகின்றது. நாம் நாகரீகமாக எழுதுங்கள் என்றால், அய்யய்யோ! நாங்கள் விளிம்பு மனிதர்கள் உங்கள் நாகரீகத்தை கண்டறியோம்! கேட்டறியோம்! என்று தம்மை தம் தம் மத்திய வர்க்க இருப்பை மறைக்க வீரிடுவார்கள். வெறித்தனம் காட்டும் மட்டம் வரை செல்வார்கள், நாங்கள் பஞ்சை பராரிகள். இங்கிதத்தையும் பண்பாட்டையும் அறியோம் என்று தம் உண்மை இருப்புக்கு மறைப்பிடுவார்கள். இந்த முடக்குவாதம் நாடகத்தனம் வழக்கமான தந்திரமே, பின்நவீனத்துவ உபாயமே அதிர்ச்சியளிப்பது. சொற்சண்டித்தனம் விடுவது. கருத்தை சிதறச்செய்து விவாதத்தில் சிந்தனையை ஒன்றுகுவிப்பதை விலக்கி வேறுதளங்களுக்கு இட்டுச் சென்று தப்பிக்கின்றனர். இவர்களின் சுயாங்கள் அதிகாரத்துவ மொழியான ஆங்கிலம் தம் ஆங்கில மொழிப்பெருமையிலும் மேற்கத்தைய கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புக்களின் கடாட்சத்திலும் மறைந்துகொள்கின்றன. இவர்கள் உண்மையில் எந்த அய்ரோப்பிய மையவாதம் பற்றிக்கூச்சல் இடுகின்றார்களோ அதே அய்ரோப்பிய மையசிந்தனைகளாலேயே சிறைசெய்யப்பட்டுள்ள துர்அதிஸ்டத்தை உணர்வதில்லை, தம் சொந்த சுதேசியத்தோடு போதிய ஆழமற்ற நிலையில் இந்திய மரபுகளை பிராமணியம், இந்து சமயம், இவைகட்கப்பாலும் மேலும் பின்நோக்கிச்சென்று காணமுடியாத நிலையில் இவர்கள் அய்ரோப்பிய மெய்யியலைச் சரணடைவது தவிர்க்கமுடியாததே. பின்நவீனத்துவ இன்றைய தமிழ்நாட்டு வாசிப்பாளர்கள் ஆங்கிலம் கற்ற நகர்ப்புறம்சார்ந்த தேசிய உலக விவகாரங்களோடு ஓரளவு பரீட்சயமுள்ள சாகசப்புனைவுகளிலும் துணிச்சல் வாதத்திலும் நம்பிக்கையுடைய நடுத் தரவர்க்கம் சார்ந்த போக்குமட்டுமே. இது சாதாரண தலித்தியத்தையே நகரங்கட்கு வெளியேயான ஒடுக்கப்பட்ட மக்களையோ விளிம்பு மனிதர்களையோ கடைசிமட்டும் தன் வர்க்கப்பொருத்தமின்மையால் எட்டமுடியாது.
இந்தக் கூட்டத்தின் பிரதிநிதியான சாருநிவேதிதா அரசியலின் உடலுக்குள் ஊடுருவமுடியாத நிலையில் சித்தாந்த பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு விடாத எச்சரிக்கையோடு இலக்கியத்தில் தொடங்கி பின்புறத்தால் கள்ளப்பாதையால் சோசலிசம் பேசமுனைகிறார். சோசலிசம் பற்றிய விளக்கங்களில் சிக்குவதைவிட சோசலிசத்தையும் பாசிசத்தையும் சமப்படுத்திவிடுவதின்மூலம் இந்த தப்பித்தல் நிகழ்கிறது. அரசுவகைப்பட்ட சோசலிசம், ஸ்ராலினிசக்கட்சி, அதிகாரம் இவைகளைப்பற்றிய புதிய வாசிப்புச்செய்து பழையவாசிப்பின் குறைபாடுகளை உடைத்து அதிசயங்கள் எதையும் நிகழ்த்தவில்லை. சாருநிவேதிதாவின் சோசலிசம் பற்றிய வாதம் இங்கு வெளிப்படையாகிவிடுகின்றது. எனவே சொந்த முதலாளிய சிந்தனையையும் பின்நவீனத்துவ மொழியாடல்களின் உதவி ஒத்தாசையோடு நிதானமான ஆழமான வாசிப்புக்குப்பதில் தம் இரண்டும் கெட்டான் சுயத்திற்குஏற்ப சொற்களை ஏவிவிட்டு ஆத்திரமுட்டி சோசலிசத்தை இழிவுபடுத்தும் சோசலிசத்தையும் நாசிசத்தையும் ஒரேகுணாம்சமுள்ளதாய் வடிவமைக்கும் போக்கு, பின்நவீனத்தும் மேலான வெறி. காலத்தின் முடிவற்றபுள்ளியில் ஒடுங்கக் கோரும் சூனியவாதச் சூத்திரங்களின் பலவீனத்துக்கே உரிய முறையில் முதலாளியப்பிரச்சாரத்துக்கு போய்ச்சேருகிறார். இவர்களின் பின்நவீனத்துவக் "கட்டுடைப்புக் காரியங்கள்" எங்கே போயின. ஏன் இவர் உலகின் முதலாவது சோசலிசப்புரட்சியின் சகலஅம்சங்களையும் அதற்கு விதிக்கப்பட்ட

Page 10
உள்நாட்டு வெளிநாட்டு நிபந்தனைகளை அது தோன்றிவளர்ந்து மடிந்த நிலைகளை ஏன் பன்முக வாசிப்புச்செய்யவில்லை?உளவியல் சார்ந்த அரசியல் மழுங்கிய தனிமனிதவாதச் சிந்தனைகள் புடைசூழ நாசிசமும் நாசிசமும் சோசலிசமும் இரண்டும் சமம் எனும் திமிர். முதலாளியம் நேரடியாகவே சோசலிசத்தை பாசிசத்தோடு அணிகட்டிவிட சாருநிவேதிதா பின்நவீனத்துவத்தின் துணையோடு மாற்றுவழிகளில் செய்கின்றார். ஆனால் அவரின் ஆவணங்கள்முதலாளியத்திலிருந்து திருடப்பட்டவைதான், ஸ்ராலின் காலக்கொடுமைகள் பற்றிய கட்சிமற்றும் அரசுவகைப்பட்ட அதிகாரம், சோவியத்தின் அன்றைய விவசாயக்குணாம்ச தொழில் மயப்படுத்தப்படாத நிலை இவைகளை நின்று நிதானித்து விளக்கத் தெரியாதபோது ஒற்றைக்கருத்திலை சரணடைகிறார். புரட்சியின் பாதகமான அம்சங்களை மட்டுமே அழிவுமட்டுமே தூக்கிப்பிடிப்பதும் மற்றய அம்சங்களை பேசமறுப்பதும் தான் பின்நவீனத்துவத்தின் கட்டுடைப் போ. ஸ்டாலின் கால மனிதக் கொடுமைக்கும் அப்பால் சோவியத்புரட்சி சாதித்த மில்லியன் கணக்கான மக்களின் நல்வாழ்வு சமுகப்பெறுமானங்கள், உழைக்கும் மக்களின் சாதனைகள் பாசிசத்தை முறியடித்து உலகின் பெரும்பகுதியை விடுவித்த தியாகம் என்பன சாருநிவேதிதாவின் வாசிப்புக்குள் வரவில்லை. மாறாக பாசிசத்தோடு சோடிசேர்த்துவிடும் ஆத்திர அவசரம்தான் தெரிகிறது. இது அரைநூற்றாண்டுகாலமாய் முதலாளியம் ܗܝ பிரச்சாரப்படுத்திவரும் சந்தர்ப்பவாதக்கருத்தியல்தான் குட்டிமுதலாளிய மனிதாபிமானம் பேசிக்கொண்டு சோசலிசம்முழுவதையும் சர்வாதிகாரக் கருத்தியல் முலமாக்குவது முதலாளித்துவ பிரசங்க முறைதான். வழக்கமாய் பின்நவீனத்துவம் மதிப்பிடும் சோசலிசத்தின் கட்சியமைப்பு அதுகோரும் வரலாற்றுரீதியான அதிகாரம். சிறுகுழுக்களின் பிரிவுகளின் பொது அடையாளத்தை பொதுமைப்படுத்திவிடல் என்ற அடிப்படையில்கூட விமர்சனத்தின் போக்கில்கூட விளக்குமளவு பலமற்றநிலையில் சாருநிவேதிதா அதிதீவிரபிரேமைகளில் முழ்கிவிடுகிறார். இவரின் தகர்ப்பு நிகழ்வதான நினைப்பு வெறும் சொற்களின் மீதான பிரேமையே.
கிட்லர் 90லட்சத்தை அழித்தான். ஸ்டாலின்காலம் 60லட்சத்தை அழித்தது என்று சாருநிவேதிததா முதலளித்துவக் கணக்கு வழக்குச்சொல்கிறார். ஜேர்மனிய முலதனம் முட்டிய இரண்டாம் உலகயுத்தம் பலிகொண்ட உலகமக்கள் தொகை 50மில்லியன். முழு அய்ரோப்பாவிலும் ஜேர்மனியப்பாசிசம் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்திய தொகை யூதமக்களை உள்ளடக்கி 20மில்லியன் ஆகும். ஸ்டாலின் காலத்தில் புரட்சியைப்பாதுகாக்க உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளை எதிர்த்துப் போரிட்டு மடிந்த புரட்சியாளர்கள் மற்றும் மக்கள், ஸ்டாலினால் கொல்லப்பட்ட போல்சுவிக்கட்சியின் தலைவர்கள், செம்படையின் தளபதிகள், இடதுசாரி அறிஞர்கள் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் தொழிலாளரின் எதிர்அணிகள், விவசாயிகள் இவர்களோடு புரட்சியின் எதிரிகளான 14நாடுகளைச் சேர்ந்த கூலிப்படைகள், விரோதிகள், உள்நாட்டுவெண்படையினர், வேலைமுகாம்களில் மடிந்தோர் என்று மடிந்தவர்தொகை 30மில்லியன் ஆகும். புரட்சியை எதிர்த்துப் போரிட்ட உள்நாட்டு வெளிநாட்டு விரொதிகளையும், ஏகாதிபத்திய கூலிப்படைகளையும் அழிவையும் சேர்த்துக் கூட்டிக் கணக்குக் காட்டுவது வழக்கமான முதலாளியத் தந்திரம். இதையே சாருநிவேதிததாவும் பேசுகின்றார். இதில் ஒன்றரைமில்லியன் போல்சுவிக்கட்சியின் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான கட்சியின் ஊழியர்களாவர். ஸ்டாலினிசம் புரட்சியின் எதிரிகளை மட்டுமல்ல உண்மையான கட்சியின் முன்னணி வீரர்களையும், கொம்யூனிஸ்டுகளையும், உறுதிமிக்க பழையபோல் சுவிக் புரட்சியாளர்களையும் கொலைசெய்தது. உயர்ந்த கொம்யூனிச நடைமுறைகளையும் ஒழுக்கங்களையும் உடைய புரட்சியாளர்கள் கொல்லப்பட்டது பற்றி சாருநிவேதிதா மட்டுமல்ல றயாகரன்கூட பேசுவது கிடையாது. சாருநிவேதிதாவிடம் <岱“ விசமத்தனமும் திரிப்பும்,

நேர்மையின்மையும்தான்,
சாருநிவேதிதாவின் பின்நவீனத்துவ அருள்வாக்கு தொடர்கிறது. அரசியல் விடலைத்தனம் முத்திப் போன நிலையில் இப்படி எழுதுகிறார். "நாசிசத்தை உயர்த்திப்பிடிக்கும் படைப்புகளும் சமுகம் சார்ந்தவைதான". இங்கு இவர் உபயோகிப்பது ஒரு மயக்கமான சொல்லாடல். வர்க்கங்கட்கு அப்பாலான பின்நவீனத்துவ சட்டதிட்டங்கட்கு உட்பட்ட சொல்லாட்சிதான். நாசிசத்தை உயர்த்திப்பிடிக்கும் படைப்புக்கள் யாரால் எந்த வர்க்கத்துக்கு சேவை செய்யப்படைக்கப்பட்டன? அவைகளின் அரசியல் இலக்குகள் என்ன? என்ற பல்துறைக் கேள்விகளை எழுப்பி சாருநிவேதிதான தண் அறிவையும் நேர்மையையும் நாட்டியிருக்காவிட்டாலும், பின்நவீனத்தும் அனுமதித்திருக்கின்ற கட்டுடைப்பு எல்லைகளிலாவது உலாவியிருக்கலாம். பாசிசக்கருத்தியலின் அடிப்படைகள் மக்களிடம் இருந்தது. நிலவியது என்று கட்டுடைப்புவாதிகள் கருதுவார்களேயானால் அம்மக்களைத் தாங்கும் சமூகஅமைப்பு விசாரணை செய்யப்படல் வேண்டும். அதன் இறந்தகாலத்தையும், நடப்பையும், எதிர்காலத்தையும் விடைபகரும்படி கோரவேண்டும். இவைகளை தனியே மரபுகளிடமும் தொல்படிவக் கருத்தியல்களின் தொடர்ச்சியில் தொங்கிக் கொண்டு அரசியல் சமுக அடிப்படைகளை கைவிட்டுவிட்ட நிலையில் இவைகுறைபாட்டுப்பார்வையாகிவிடுகின்றது. பாசிசக்கருத்தியல்களின் பின்புறம் இயங்கிய பொருளாதார இராட் சதத் தொழிற்துறைக்கு சந்தையும் முலப்பொருட்களும் தேடி புதியவளம் மிக்க செல்வாக்கு மண்டலங்களையும் பிரதேசங்களையும் தேடிஅலைந்த ஜேர்மனிய முலதனமே பாசிசத்தை ஊட்டி வளர்த்தது. முலத்தை விட்டு பகுதிக்காரணிகளில் தொத்திக்கொள்வதே பின்நவீனத்துவங்களின் பழக்கவழக்கம்,
சோசலிச எழுச்சிதோன்றுவதற்கான வரலாற்று நியாயத்தை அதன் சமுகத்தேவையை விளங்காதவர்கள் சோசலிசத்தின் பெயரால் ஏற்பட்ட தவறுகட்கு ஆகச் சோசலிசச் சிந்தனையையே ஒதுக்கமுடியும் என்று திருவுளங்கொள்வார்களேயானால் அதே தவறுகளை மனித அழிவுகளை காரணம் காட்டி நாம் சகலபோராட்டங்களையும் மனித எழுச்சிகளையும் நிராகரிக்கமுடியாதா?
இலங்கையின் தமிழ் மக்களின் தேசிய எழுச்சி சிங்களப் பெரும் தேசியவாதத்தை எதிர்க்கவென்று புறப்பட்டு சாதாரண சிங்களமக்களையும் முஸ்லிம்மக்களையும் அழித்து அவர்களை எதிரியாக்கிக்கொண்டு தம் சொந்தமக்களையும் அடக்கிநிற்கிறது. இங்கு குறுகிய தமிழ் தேசியவாத இயக்கங்களின் அரசியல் இராணுவ வெற்றுத்தனங்களைக் காரணம் காட்டி முழுத்தமிழ்மக்களின் தேசியவிடுதலைப் போரின் எழுச்சியின் அடிப்படைகளை மறுக்கமுடியுமா? புறக்கணிக்கமுடியுமா? ஒட்டுமொத்தப்பிரச்சினையை மறந்துவிட்டு பகுதியான கிளைக் காரணங்களில் நிபந்தனைகளில் உறங்கிப் போய்விடலாமா? தலித்மக்களிடையே தமிழ்நாட்டில் பலபத்துச் சாதி இருக்கிறபடியால் இந்தியாமுழுவதும் அவர்கள் 1070 சாதியாய் கூறுபட்டும், பிளந்தும் கிடக்கிறபடியால் இவர்கள் அடிக்கடி தம் பொது எதிரியை இலக்கை மறந்து தம்மிடையே முட்டிமோதி அடிபட்டு வெட்டுக்குத்துப்பட்டுக்கொண்டிருப்பதால் பிராமணியத்தோடு இரத்தக்களரியான யுத்தத் தொடர்ச்சிக்கு சாத்தியம் இருப்பதாலும் தலித் விடுதலை தேவையில்லை தலித் என்ற சொல்லே பெருங்கதையாடல் தான் என்று உதறிவிடலாமா? ஏன் சாருநிவேதிததா பேசும் விளிம்புமனிதர்களான பிச்சைக்காரர்கள், திருடர்கள்,
சோசலிச எழுச்சிதோன்றுவத்ற்கான வரலாற்று நியாயத்தை அதன் சமூகத்தேவைை விளங்காதவர்கள் சோசலிசத்தின்பெயரால் ஏற்பட்ட தவறுகட்கு ஆகச்சோசலிசச் சிந்தனையையே ஒதுக்கமுடியும் என்று திருவுளங்கொள்வார்களேயானால் அதே தவறுகளை மனித அழிவுகளை காரணம் காட்டி நாம் சகலபோராட்டங்களையும் மனித எழுச்சிகளையும் நிராகரிக்கமுடியாதா?

Page 11
கைதிகள் நாடோடிகள், அண்னியர்கள், பைத்தியக்காரர்கள், அலிகள் இவர்களிடையே முரண்பாடும் ஏற்றத்தாழ்வும் சுயம்பேணும் அவாவவும் இருக்கிறபடியால் ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற படியால் இந்தமனிதர்களுக்கு சமுகவிடிவு வேண்டாம் என்று சொல்லி ஓடிவிடலாமா? சகலதையும் துறந்துவிட்டு மனிதச் சுரண் டலையும் அரச அடக்குமுறைகளையும் நிற, இன, மத பிராந்திய வேறுபாடுகளையும் பெண் விடுதலையையும், வர்க்க வேறுபாடுகளையும் பிராமணியத்தையும் மறந்துவிட்டு மனிதகுலவிடுதலையை பெருங்கதையிலிலும் கற்பிதங்களின் வரிசையிலும் இருத்திவிட்டு தலித் விடுதலையை சிறுகதையாடலின் வரிசையிலும் இருத்திவிட்டு விளிம்புமனிதர்களின் தத்துவமே சரணமென்று காலத்தின் முடிவற்ற தன்மையில் கரைந்து போகலாமா?
சாருநிவேதிதாவின் அரசியல் மற்றும் தத்துவ பின்துணையற்ற சுயத்துக்கு ஓய விருப்பமில்லை மீண்டும் அறிவிக்கிறார்! "நாங்கள் பிச்சைக்காரர்கள், அலிகள், பைத்தியக்காரர்கள், அலிகளால் எந்தச் சமுகமாவது அழிந்திருக்கிறதா? இப்படியாக தன்னையும் ஐரோப்பிய நண்பர்களையும் எம்மிடம் அறிமுகப்படுத்தி இரங்கக் கோருகின்றார். எம்மைப்போன்றவர்களால் எந்தத்திமையும் இல்லை என்று அழுது முறையிடுகின்றார். உண்மையில் அவரும் அவரின் புகலிடக்கூட்டாளிகளும் இரங்கத்தக்க நபர்களா? பிச்சைக்காரர்களா? அலிகளா? நாடோடிகளா? விலாசமற்றவர்களா? இதை ஏற்கும்படி நிர்ப்பந்திப்பது ஏன்? அதன்மூலம் இவர் சொல்லும் செய்தி என்ன? எம் புத்திக்கு எட்டிய வரையில் இவர்கள் அனைவரும் சகல செளபாக்கியங்களும் பல்வேறு பலபத்துப்பேறுகளும் பெற்றுவாழ்பவர்கள் தான். எம்தேச விளிம்பு மனிதர்களை விட பலமடங்கு உயர்ந்தவாழ்வும் சமுக அந்தஸ்தும் வாய்க்கப்பெற்றவர்கள்தான். பின் நவீனத்துவத்தால் பிரபஞ்சத்தையே இரட்சிக்கவல்லவர்களாய் காட்டும் இவர்கள் தமக்குத்தாமே இவ்வாறு இரங்கற்பா பாடுவதேன்? இந்தப் பூமிப்பரப்பில் தாம் மட்டுமே தன்னந்தனியே விடப்பட்டுள்ளதாய் ஏன் இந்த அறிமுகங்கள்? சுயம் தொலைத்த சுயபரிதாபக்கூத்துகள், இதுவரை விளிம்பு மனிதர்கட் காகப் பேசியும் எழுதியும் வாதாடியும் வந்தவர்கள் எப்படித்தாமே விளிம்புமனிதர்களாக அவதாரம் எடுத்தனர்? விளிம்பு மனிதர்களை இரட்சிக்கப்போவதாய் சொற்களின் அணிவகுப்பை நடாத்தியோர், தம் அனாதரட்சகர் கோலத்தை துறந்து தம்மைத்தாமே விளிம்பு மனிதர்களாக்கிக்கொண்டு உண்மையான விளிம்புமனிதர்களின் இடங்களைக் கைப்பற்றிக்கொண்டதேன் என்று நியாயமாய் கேட்கலாம். இவர்கள் நிகழ்த்தியுள்ள அதிசயங்கள் கூடுவிட்டுக்கூடுபாயும் வித்தைகள் பின்நவீனத்துவ நடுத்தரவர்க்கத்தினை நாயகர் நாயகிகளது அரசியல் சித்துவிளையாட்டுக்குரியதாகும். தம்மை விளிம்புமனிதர்களாக பாவனைகள், பாசாங்குகள் செய்துகொண்டு தம்மைச்சூழவுள்ள மனிதர்களையும் சமுகத்தையும் கனவுப்பொருளாக்கிக் கொண்டு உளவியல் சார்ந்த மாயை மயக்கங்களில் புகுந்துகொள்கின்றார்கள். இவர்கள் தமக்குள்தாமே அடைக்கலம் புகுந்துகொள்வதும் தம்மைச்சுற்றி வார்த்தையாடல்களில் சொல் அலங்காரங்களில் புனைவுகளை சிருஷ்டித்துக்கொள்வதும் சுய இரக்கம் ஒருபுறமும் அசட்டுத்துணிச்சல் மறுபுறமுமாய் இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது மதில்மேற்பூனையான எதையும் பாரம் எடுத்துவிடாத சமுகப்பொறுப்பற்ற தான் மட்டுமே தப்பிப்பிழைப்பதற்கு வழிதேடும் குணமாகும். தீவிரமான கோரிக்கைகளை கொண்டவர்களாகவும்,அரசியல் பிடிவாதம் கொண்டவர்களாயும், கட்டுக்கடங்காதவர்களாயும் தென்படும் இவர்களின் வெளித்தோற்றம் இவர்களது அரசியல் இயலாமையின் நிறைவின்மையின் வெளிப்பாடுதான். அதிதீவிரவாதம்தான் இவர்களது அரசியல் மூலதனமாய் இருக்கும். அதை முன்நிறுத்தி ஆர்ப்பாட்ட அட்டகாசங்கள் செய்வார்கள். யதார்த்தத்தின் அரசியல் சமுக கொதிநிலைகள் ஏற்ற இறக்காக இவர்கள் நடவடிக்கைகள் ஏறு

இறங்குமுகமாக இருப்பதை யதார்த்தத்தை நிராகரிக்கும் இந்த அகநெருக்கடிகளை முதன்மைப்படுத்தி இயங்கும் இவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. தனிமனித வக்கிரங்கள், பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் என்ற பெயரில் ஆணாதிக்க ஆபாசங்களைக்கொட்டல், அலட்சியம், பரபரப்புமுட்டல் இவைகள் தம்மை அனைவரையும் கவனிக்கச்செய்யும் உத்தியாகவும் வெளிப்படுகின்றன.
சாருநிவேதிதா அவர்களே! கஞ்சித் தண்ணியும், பள்ளிப்படிப்பும், வீடுவாசலும் இல்லாமல் சமூகத்திட்டாய், அன்னியர்களாய் தள்ளிவைக்கப்பட்டுள்ள உண்மையான விளிம்புமனிதர்களை எம்நாட்டில் நாம் மிகமிகநன்றாக அறிவோம். இங்கு ஐரோப்பாவில் விளிம்புமனிதச்சிந்தனைதோன்றி மடிந்தஇடத்தில் தம்மை விளிம்புமனிதர்களாக அடையாளம் காட்டிக் கொள்ளும் அற்பசொற்ப மனிதர்களை உங்கள் தமிழ்நாட்டு பின்நவீனத்துவ இரவல்ஆசான்களின் 'மேக்கப்' போடலுக்கும் அப்பால் நேரடியாக அவர்களோடு வாழ்ந்துபெற்ற அனுபவத்தினுாடு அறிவோம். நாங்கள் அன்னியர்கள், அகதிகள், கறுப்பர்கள் என்பதால் எம்மை விளிம்புமனிதர்களாக்கிக்கொண்டு இங்குவாழும் மக்களோடும் சமுகவிடுதலைச் சக்திகளோடும் எம் உறவுகளைத் துண்டித்துக்கொண்டு எம்மை மென்மேலும் தனிமைப்படுத்தி குறுங்குழுவாதப்போக்குள் சிறைப்பட்டு சிக்கிஅழியவும் பொது எதிரிக்கெதிராய் தன்னந்தனியே நின்று கொள்ளையிலே போகவும் நாம் விரும்பவில்லை. எம் சுயங்கள் தனித்துவங்கள் மேலான உண்மையான ஆக்கிரமிப்பாளர்களை நாம் பின்நவீனத்துவம் ஒதும் "எல்லோருக்குமான உண்மை பொதுநீதி அறம் இல்லை" என்ற புதிய பெருங்கதையாடலுக்கு அரசியல் புரட்டுகட்கு அப்பால் அறிவோம். உண்மையான விளிம்புமனிதர்களின் இடத்தையும் குரலையும் இவர்கள் பலவந்தமாய் அபகரித்துக்கொள்வதும் அத்துமீறிப்புகுந்து கைப்பற்றிக்கொள்வதும் நேர்மையான செயலல்ல. விளிம்புமனிதர்களுக்கு மாற்றீடாக தம்மைக்காட்டி எம்மை நம்பக்கோருவது மோசடித்தனமானது. தம்மை விளிம்ப மனிதக்கூட்டத்துள் பலவந்தமாய் திணித்துக்கொள்ளும் இவர்கள் உண்மையில் விளிம்புமனிதர்களை தம்மையங்களைச்சுற்றி அணிவகுக்கவும் ஈர்க்கவும் முயல்கிறார்கள் என்பதைக்காண்பது சிரமமல்ல.
'அலிகளால் எந்தச் சமுகமாவது அழிந்திருக்கிறதா? அலிகளின் வரலாற்றில் எந்த வதைமுகாமாவது இருந்திருக்கிறதா?" இது சாருநிவேதிதாவின் வெற்றிகரமான வாசிப்பு. ஏன் அலிகளால் நாடோடிகளால் கொலைசெய்ய முடியாதா? கொலைசெய்தது கிடையாதா? சமுகத்திமைகளில் ஈடுபடமுடியாதா? இந்த மனிதப்பிறவிகளும் இந்தச்சமுக அமைப்பில்தானே வாழ்கிறார்கள். தாம் வாழும் சமுகத்தின் அத்தனை குறைகளும் மனிதக்கொடுமைகளும் அவர்களிடம் மட்டும் எவ்வாறு இல்லாமல்போகும். இவைகளிடமிருந்து தனித்தொதுங்கி எந்தமனிதர்களாலும் வாழ்ந்துவிடமுடியுமா? விளிம்புமனிதர்காளால் புனிதர்களாக மாசுமறவற்ற மனிதஜிவிகளாக அடுத்தமனிதனுக்கு துன்பம் விளைவிக்காத அப்பாவிகளாய் வாழ்ந்திடமுடியுமா?
நாம் அனைவருமே வாழ்வின் நெருக்கடிகளில் உருச்சிதைந்து மனிதம் சிதைந்து சின்னாபின்னம் அடைந்துவிட்டமனிதர்தாம்.
சுரண்டலை நிர்வகிக்கும் அதுசார்ந்த கருத்தியலைப்பேனிவளர்க்கும் நோய்ச்சமுகத்தில் எந்த மனிதப்பிரிவும் குழுவும் வர்க்கங்களும் மனிதஇழிவுகட்கு ஆட்படுவதிலிருந்து தப்பிக்கமுடியாது. வாய்ப்புக் கிடைக்கும் போது அலிகளும் நாடோடிகளும் பிச்சைக்காரர்களும் கைதிகளும் திருடர்களும் வதைமுகாம்களை உருவாக்கமுடியும், சரித்திரத்தில் இத்தகையோர் கொடுஆரசுகளை உருவாக்கிஇருக்கிறார்கள்.

Page 12
சமுகத்தின் புறக்கணிப்பு, அவமானப்படுத்தும் தன்மை, சுரண்டல், வன்முறைக்குணம், பொருளாதார சமமின்மை காரணமாக விளிம்புமனிதர்களிடம் அடிமைத்தனம், பணிவு என்பவை மட்டுமல்ல ஏனையவர்களை விட கோபமும் முரட்டுத்தனமும் நீதிகோரி தாறுமாறாய் வெளிப்படும். ஆனால் இவை தம்கையில் அதிகாரங்கள் கிட்டும் போது கடந்தகால மனித இழிவுகட்கு வஞ்சம் தீர்க்கும் உணர்வாகவும் வெளிப்படும். இவை வரைமுறையற்ற மனிதக்கொடுரங்களாகவும் உருவாகும் என்பதற்கு வரலாற்றுச் சாட்சியம் உண்டு. கிட்லரும், முசோலினியும், இடிஅமீனும் விளிம்புமனிதர்கள்தான். சமுகத்தின் அடிமட்டத்தில் உதிரிவர்க்கங்களிடமிருந்து மிதிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு சமுகவாய்ப்புகள் அற்று இருந்து வரலாற்றுவிபத்தால் பாசிசத்துக்கும் முதலாளியத்துக்கும் தொண்டு செய்யப் போனவர்கள்தான். அதை வழிநடாத்தியவர்கள்தான். கிட்லர் நாடோடியாகவும், சமபாலுறவாளனாகவும் தன் யூதக் கலப்புச் சம்பந்தமாய் தாழ்வுணர்ச்சிச்சிக்கலும் கொண்டிருந்தவன்தான். முசோலினி தம் உணவுக்காக திருட்டுநடாத்தும் உதிரிவர்க்கப்பின்புலத்திலிருந்து வந்தவன்தான். பின்பு இவர்கள் இருவரும் தம் விளிம்பு மனித அடையாளங்களோடு துறந்துவிட்டு பாசிசத்தின் தலைமைக்குச் செல்லவில்லையா? செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனாய் உதிரிப்பாட்டாளி வர்க்கத்திலிருந்து பிறந்துவந்த ஸ்ராலின் பின்பு உழைக்கும் மக்களின் முதல் மனித எழுச்சியை சிதைக்கவில்லையா? அன்று சோவியத் யூனியனை சூழஇருந்த ஏகாதிபத்திய முற்றுகைகள் உள்நாட்டு தொழில்வளர்ச்சியற்றநிலைமைகளோடு ஸ்ராலின் என்ற தனிமனிதரினை கட்டமைத்த வளர்ச்சியடையாத பிற்போக்கான விவாசாயச் சமுகக்குணாம்சமும் சமுகத்தில் தனித்து அலட்சியப்படுத்திவிடப்பட்ட உதிரிவர்க்க உளவியலும் அதன் சகிப்பற்ற முர்க்கமும் காரணமாகும். ஒரு புதிய அமைப்பிலும் பழையசமுகத்தின் கட்டுமானமும் கருத்துக்களும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஆதிக்கம் செலுத்துவதும் மனிதகுணாம்சங்களை வழிநடத்துவதும் தவிர்க்கமுடியாததே. அதிஉயர்ந்த அரசியல்சித்தாந்த நடைமுறையும் ஒழுக்கமும் மட்டுமே இவற்றைவெல்லும் போராட்டத்தின் முதல் நிபந்தனைகளாகும். இவைகளைப்பெறத்தவறிய ஸ்ராலினிசம் கொடுரமும் ஆதிக்கமனோபாவமும் கொண்ட ஸ்ராலின் என்ற விளிம்புமனிதரின் இயல்புகள் சோவியத்புரட்சியின் உலகநம்பிக்கையைச்சிதைத்து புதிய அதிகார வர்க்கத்தை நிறுவ துணைக்காரணமாகிவிட்டது. ஸ்ராலின் மிகக்கடுமையானதும் சகிப்புத்தன்மையுடனும், ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் கூடியதுமான சித்தாந்த வழியை கைவிட்டமைக்கு ரஷ்யப்புரட்சி சந்தித்த சகிக்கவொணாத நெருக்கடிகள் மட்டும் காரணமல்ல. அது நடத்திய வாழ்வா சாவா என்ற போராட்டம் மட்டும் காரணமல்ல, புரட்சியின் தலைைைமயை கையகப்படுத்திக்கொண்ட ஸ்ராலினின் சொந்தவிளிம்பு மனிதக்குணமும் காரணமாகும். மக்களின் கருத்துக்கள் சமுக உளவியல் என்பன புதிய சமுக அமைப்பில் அதன் சமுக பொருளாதார அரசியலின் விளைபொருளாக மாற ஒரு வரலாற்றுக்காலம் தேவைப்படும். அதுவரை பழைய சமுகத்தின் கருத்துத் தொடர்ச்சியை மக்களின் உளவியல் தொடர்ச்சியை அழித்துவிடமுடியாது. சமுகவளர்ச்சியின் வேகமே இதை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். இங்கு பின்நவீனத்துவம் எல்லாக்கருத்துகட்கும் தோற்றம், வளர்ச்சி, இறப்பு உண்டு. சாகாதவை எதுவும் இல்லை என்பதை சமுக இயக்கவியல் போக்கில் புரியப்பலமற்றபோது அது மாறாநிலைவாதப்போக்குகளிடம் சரணடைகிறது. இவர்கள் சமுக கருத்தியல்களை சாகாவரம் பெற்றவைகளாக வரையறுத்துவிடுகின்றனர். சமுகத்தின் வளர்ச்சிவிதிகள் பற்றிய அக்கறையற்ற இவர்கள் சமுகக்கருத்துக்கள்

மாறுவதும் சிதைவதும், வளர்ச்சியடைவதையும், புதுப்பிக்கப்படுவதையும் அச்சமூகத்தின் சுரண்டும் வர்க்கநலன்கள் அதற்கு அனுசரணையான கருத்துக்கள் யாவுக்கும் அடிப்டையாய் இருப்பதையும் காணமறுத்து மரபில் தொல்கருத்துக்களின் எச்சங்களை மிச்சமீதிகளை தேடப்போய்விடுகின்றனர்.
இறுதியாக, பெண்விடுதலைபேசும் சாருநிவேதிதா மறுபக்கம் "என் ஆண்குறிதான் என் சமுகம் என்பேன்" . என்று தன் ஆணாதிக்கத்தை நாட்டிக்காட்டுகின்றார். தன் முரண்பட்ட போக்குகளையும் பின் நவீனத்துவ பலவீனங்களையும் நிரூபிக்கின்றார். ஒருவகை வெறிகொண்டநிலை அனைவரையும் அசட்டை செய்யும் பொருட்படுத்தாத போக்கு பாலியல், பாலுறுப்பு சம்பந்தப்பட்ட சொற்களை அதிர்ச்சியூட்டும் தன்னை கவனிக்கத்துாண்டும் உத்திக்கு பயன்படுத்துவது: இவை சாருநிவேதிதாவிடம் மிகுதி. இவைகட்கு எதிர்க்கலாச்சாரம் கலகம் என்று பெயர்சூட்டப்படுகின்றது. பாலியலை சர்வமயப்படுத்தி பாலியலூடாக உலகைப்பார்க்கும் பழைய காலங்கடந்த பிராய்டிசப்பார்வை எப்பவோ கப்பல் ஏறிவிட்ட கருத்தியல்தான். அதை தூசிதட்டி முதன்மைப்படுத்தி அதில் தொங்குகின்றார். பின் நவீனத்துவம் மேற்கத்திய கலாச்சார நெருக்கடியின் பிறப்பே. அரசியல் இயலாமைகொண்ட உதிரிவர்க்கங்களின் பெருமுச்சு, இரண்டாம் உலகயுத்தம் ஏற்படுத்திய மனித அழிவுகள் ஸ்ராலினிசம் மேலான அவநம்பிக்கை அரசியற்போக்கிடமற்ற நிலை, குடும்பம், மற்றும் சமுக உறவுகளில் ஏற்பட்ட இடைவெளி, வளர்ச்சிபெற்றுவந்த இயந்திர மயமாக்கல், இவைகளின் விளைவாகவே பின்நவீனத்துவம் நகரவாழ்க்கையின் உதிரிவர்க்கத்துயரங்களோடு படைக்கப்பட்டது. நகரவாழ்வின் தனிமை, விரக்தி, Dackel கலாச்சாரம் (பெரும்பாலும் தனியே இருப்பவர்களால் வளர்க்கப்படும் ஒரு இனநாய்) போட்டி என்பவற்றோடு மேலைத்தேய முதலாளியத்தில் மொழிமலிவு எழுத்துகட்கும் விளம்பரத்துக்கும் பயன்படும் நிலைக்கும் இறங்கிப் போய்விட்டதைக்கண்ட மொழியியல்துறை சார்ந்தவர்களின் ஆத்மசாந்தி சிந்தனைகள் தோன்றின. இவை இலக்கியப்பரப்புகளில் ஊடுவின. அரசியலைத் தீண்ட முயன்றன. இவை முழுமையாக அய்ரோப்பாவில் விரல்விட்டு எண்ணத்தக்க நகரங்கட்கும் பகுதியான மாணவர்கள் வேலையற்றவர்கள் மற்றும் உதிரிவர்க்கங்களின் சிந்தனையாகும். இதை அரசியல் அரசியல் சோர்வுக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாகியுள்ள தமிழ்நாட்டு நகர்ப்புறம் சார்ந்த நடுத் தரவர்க்கமும் கல்வித்துறைசார்ந்த குட்டிமுதலாளிய புத்திஜீவிகளும் சிக்கெனப்பிடித்திருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஸ்ராலினிசத்தை மார்க்சியமயமாக்கும் சமர்-ரயாகரனை எதிர்கொள்ள பின் நவீனத்துவ இலக்கியத் தளங்களில் இரைமீட்டுத்திரியும் சாருநிவேதாக்களால் பின்நவீனத்துவ இலக்கிய டப்பாக்களால் முடியாது.
. கார்லீப்னெக்ட். ஜெர்மனி, 27.1299

Page 13
4 உரையாடலும் 4 அவிழ்ப்பும்
- நாடகம் - ஆக்கம், "இயக்கம்" அனைத்தும் அசோக்குக்கு மற்றும் அண்ணன்மாருக்கு நன்றியுடன் - சேனன் -
பாத்திரங்கள் :
அண்ணன் (9) மற்றும் அண்ணன் (DS) பேமானிப் பசங்க (பே.ப) செருப்புநாய்கள் (செநா) குறிப்புக்காரன் (கு) கட்டிக்காரன்
கட்டியக்காரன் :
30 கலிபர் ஆட்லறிச்சத்தங்களை பக்கத்திலிருந்து சுவாசித்துப்பழகிய காதுக்குள் பட்டினிகிடந்து பட்டினிகிடந்து பஞ்சடைஞ்சுபோச்சு. கன்னா பின்னாவென்று கையிலபோட்டு காலிலபோட்டு(நன்றி X) கனாவில கிடந்து நினைவும் தப்பித்தடுமாறி தெளிவு சிதறிப்போச்சு லண்டனுக்கு வந்து கண்டறியாத இங்கிலிசில பேசிப்பேசி தமிழ் கட்டவிழ்ந்து போச்சு. முக்கியமாக "ஆழம்" "தெளிவு" "அற்புதம்" முதலான சொற்களுக்கு துண்டற அர்த்தம் மறந்துபோச்சு. தமிழில வொக்காயிலறி கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்.
ஆதலின் ஞாம் பறையும் கேவும் செய்திகளை இக்காதால் வாங்கி அக்காதால் விட்டு நட்புக்கொண்டாடி நலமடைவீர் பெரியீர்!
குறிப்புக்காரன் தமிழ் சொற்களுக்கு பின்நவீனத்துவ முறையில் தருவித்துக்கொள்ளும் சொற்களை புதுப்புது அர்த்தங்களை தயவுசெய்து எமக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி. நன்றி. நன்றி.
அண்ணன் லண்டனில் ஒர் உலகப்பெயர்பெற்ற இலக்கியக்கூட்டம் நடந்ததாமே! உனக்குத்தெரியுமா?
மற்றும் அண்ணன் : உண்மையில் உன்கேள்வி இன்றைய காலத்தின் ஒரு முக்கியமானகேள்வி. நான் கிளின்டனிலிருந்து பிரபாகரன் வரை மீற்றிங் செய்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். சிவத்தம்பி கலந்துகொண்டதாலும் அரவிந்தன் புத்தகம் வெளியிட்டதாலும் இது ஒரு முக்கியமான கூட்டம் என்றே நான் சொல்வேன்.
செருப்பு நாய்களும் பேமாணிப் பசங்களும் ஓம் ஓம் ஒம் ரீஓம் நமவுற (அல்லது) அடிசக்கை அம்மன் கோயில் புக்கை.
அ. . நீ ஒரு மாமேதை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு அடுத்தகேள்வியைக்கேட்கிறேன். பொன்னையா ஜெயஅழகி, அருணகிரிநாதன் உரையைப்பற்றி நீ எப்படி அளவீடு செய்கிறாய்?
ம. அ. அவர் இன்னும் கொஞ்சம் முயற்சி *** ஒரு கிலோமீற்றரை

இலகுவாகத் தாண்டியிருக்கலாம். இருப்பினும் 3x2x2 உயரப்பெட்டிக்குள் பாதுகாக்கப்படவேண்டிய சரக்கு. ஒரு மயிரும் விளங்காத சிவத்தம்பி குட்டித்துாக்கம் போட்டதாக வதந்தி விடுகிறார்கள். மெய்மறப்பது பற்றி ஞானிகளுக்கு மட்டும்தான் விளங்கும்.
செ.நா., பேடி : சொறி மைக்கும் பிள. காதும் பிள. சரியாக் கேக்கல்ல. சனத்தோட சனமா ரீ, வடை, சுண்டலுக்கு அடிபடவே சரியாய் போச்சு. சாய்பாடு அருமையான சாப்பாடு சார். ஆனா சிவத்தம்பி நித்திரையில கதிரையால விழப்பாத்தது தெரியும்,
அ. ஒட்டவாவில் நடந்த உலகமாநாட்டில் நீ உன்னதமான உரைகள் ஆற்றியுள்ளாய். இக்கூட்டத்தில் யாரோ மு.நித்தியானந்தன் என்ற நபர் கொஞ்சநேரம் சொதப்பினது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ம. அ. நான் அந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லை. இருந்தாலும் அந்தாளை பேசவிட்டதே பாவம். சும்மா எங்கட மு.பொ.வை தீட்சை தீட்சை என்று திட்டி புனிதச்சொற்களை தூசணம் மாதிரி பாவிச்சுப்போட்டு இக்கிக்கீ எண்டு இழிச்சு பாக்கவே பாவமாய் இருந்திச்சு. சிவ சிவா.
செ. நா., பே.ப. அந்தாள் பாவமப்பா, எந்த மீற்றிங்கில இருக்கிறம் எண்டதும் விளங்கிறேல்ல. உருப்படியா கதைச்சா எடுபடுமா? "ஆழமான பரிட்சயம்", "மிகவும் சிறப்பு" "கனதி" "விரிவான விமர்சனம்" (நன்றி : உயிர்நிழல்) முதலான சிறப்பான விமர்சனக்கணிப்பீடுகளை தட்டிச்சென்ற பொ. ஜெயஅழகிக்குப் பக்கத்தில் நிக்கேலாது.
அ. நீ ஆய்வு செய்வதில் ஒரு கரைகண்டவன் உதாரணத்திற்கு நீ, பெரியார் பற்றி செய்த வாசிப்பு உலகப்பிரசித்தம். ஆனபடியால் "கற்கால ஆய்வுகளை பு:பெ.மக்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்கவில்லை" என்று சிவத்தம்பி குறிப்பிட்டதுபற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ம. அ. நான் ஒரு அலுப்பில்லாத வாசகன், ஆய்வுகள் சம்பந்தமான நூல்களை பொறுக்கி துடைத்து தேறியுள்ளேன் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றுஅல்ல என்பதை உணர்வாயானால் நான் கூறவருவதை உன்னால் புரிந்துகொள்ளமுடியும். நமது நண்பர்கள் அக்கருத்தை "மையங்கொள்ளாத கருத்து" என்பது சரியே! தமிழில் தறிப்புக்"குறிகள்" பற்றிய முக்கிய ஆய்வுகள் எங்கிருந்து வந்தன என்கிறேன்? குழந்தைகள் தமிழ்படிக்க வேணுமா வேண்டாமா என்பதை தொல்காப்பியம் இல்லாமல் எப்படி ஆய்வது? புறநானூறு இல்லாமல் புலிகளை ஆதரிப்பதா இல்லையா? என்று எப்படி ஆய்வு செய்வது? சிவத்தம்பி ஒரு உலகமகா மார்க்சிய அறிஞர். ஆனாலும் சிலநேரம் இப்படிச் சில கழண்டகதைகள் கதைப்பதும் உண்டு. கண்டுகொள்ளாமல் விடுங்கள். என்பதை நான் முடிவாகக் கூறுகிறேன்.
அ. பு:பெ. இலக்கிய முயற்சிகளின் அத்திவாரத்தை மிகத்தெளிவாக முன்வைத்த அராணி பற்றி? ம. அ. சொல்லி மாளாது. அருமையான அறிமுகஉரை, ஆழமான சொற்பொழிவு. அடக்கமான அறிவான கருத்துக்கள். உன்னதம். அற்புதம். ஆனந்தம்,
செ.நா., பே.ப.: Speachless சார். ஆனந்தராணிக்கு ஐஸ்வைக்கோனுமெண்டா நேரடியா வைக்கிறதுதானே. எண்டாலும் எமக்கு கருத்து முரண்பாடுஇல்லை. வானொலியில் செய்தி வாசிக்கும் புகழ் ஆனந்தராணி தன் அருமையான குரலில் உரையாற்றி கேட்டிருந்தவர்களை அழவைத்தார். அச்சா அச்சா.
அ. சும்மா கத்தித்திரியும் நண்பர்களுக்கு மார்க்சிய அறிவுதான் இல்லைஎன்று நினைத்திருந்தேன். அவர்கள் குருவாக மதிப்பவரே அவர்களுக்கு பிராவும் தெரியாது புறாவும் தெரியாதென்று ஒதுக்கிவிட்டார். இத்தருணத்தில் சிவத்தம்பி, யமுனா, ரெறி ஈகிள்டன், தமிழவன் முதலானவர்கள் கூடி இயங்க முடிவெடுத்திருப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ம. அ. பின்நவீனத்துவத்தை ஏறக்கட்டிவிட்ட ஒரு முக்கிய வரலாற்றுக்கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை முதலில் உணர்த்திக்கொண்டு இந்த list ல் நீ என்னையும் சேர்க்காததை

Page 14
வன்மையாக கண்டிக்கிறேன்.
செ.நா., பே.ப.: இந்த மண்டைகாயும் ஆய்வுகளை அளந்துணரும் அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை. அண்ணன் அடிக்கடி சொல்லுறமாதிரி நிறைய புத்தகங்கள் படிக்கவேண்டிக்கிடக்கு. அலுக்காமல் அடி கொடுக்க தோழர் ரயாகரன் இருப்பதால் ஒரு நிம்மதி.
"சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான உண்மைக்காரணமும் சிவத்தம்பி / யமுனாவின் முதலாளிவர்க்கச்சதியும்"என்ற கட்டுரையை அடுத்தசமரில் படிக்கவும். (வாழ்க சமர்-வளர்க றயா)
தலையங்கம் அப்பிடி இப்பிடி மாறினாலும் யமுனா அனாவசியமாய் ஸ்ராலினை இழுத்ததால் அடிவிழாமல் அடுத்தசமர்வராது.
குறிப்புக்காரன் : ஸ்ரொக்சிச அல்லது Spritual (கவனிக்க இங்கிலீசு) என்பதற்கு இவர்கள் கதையாடும் Spritual என்பதற்குமான வேறுபாட்டை WWWWsws.com க்கு ஈ-மெயில் அனுப்பி தெரிந்துகொள்ளவும். சிவத்தம்பியை ரொக்சிஸிஸ்ட் ஆக்குவதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அ. தலமை வகிப்பதற்கு இலக்கணமாக யாரை தெரிவுசெய்வாய்? ம. அ. சந்தேகமில்லாமல் யமுனா. அரசியல் இல்லாமல் அரசியல் கதைக்கவும் யார்யாருக்கு எவ்வளவுநேரம் கொடுக்கவேண்டும் என்ற வர்க்க உணர்வும் நேரம் போச்சென்று யார்யாரை குட்டி இருத்தவேண்டுமென்ற ஆழ்ந்த அறிவும் அப்பப்பா யாருக்கு வரும்.
சொ.நா., பே.ப.: புதுமையாக்கும் சக்தி வற்றிப்போன, கதைக்கப்பேசத்தெரியாத கழுதைகளுக்கென்ன கருத்தும் அரசியலும்? தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஈகிள்டனைத்தெரியுமா? பேந்தென்ன மண்ணாங்கட்டிக்கு அரசியல்?
குறிப்புக்காரன் : கக்கூசு இருப்பதற்கும், வர்க்கப்போராட்டத்துக்குமான தொடர்பு என்ன என்ற மார்த்தா ஸ்லோவ்ஸ்கியின் ஆய்வை கட்டியழும் மனிதர்கள் விழிப்பு உமக்குமா? நீவிர் நிண்டழிவீர்.
எதிர்வினை.

உரையாடல்:
மதுசூதனன் ஷோபாசக்தி as as a 6-year
1。 கடந்த சில காலங்களாக தமிழகத்தில் வாழ்கிறிர்கள் தமிழ் சிறு பத்திரிகைகளுடனும் இலக்கிய வாதிகளுடனும் நேரடித்தொடர்பைப் பேணுகிறீர்கள். புலம்பெயர் இலக்கியம் எனச்சொல்லப்படும் "இது'குறித்து கருத்தரங்ககளில் உரை நிகழ்த்துகிறீர்கள். இந்த அனுபவங்களினூடாக புலம்பெயர் எழுத்துக்கள் குறித்து தமிழகச்சூழலின் கவனம், எதிர்வினை ஆகியவை குறித்து உங்கள் அவதானம் என்ன? புலம்பெயர் எழுத்துக்கள் குறித்து தமிழகச்சிறுபத்திரிகைச்சூழலில் போதுமான கவனம் ஏற்பட்டுள்ளதாக கூறமுடியாது. குறிப்பாக மிகச் சிலர் அக்கறையுடன் புலம்பெயர் எழுத்துக்களை கவனித்து வருகிறார்கள் என்பதைத் தவிர எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் அவ்வப்போது புலம்பெயர் இலக்கியம், தலைமை, அடுத்த நூற்றாண்டு என சில உதிர்ப்புகளை உதிர்ப்பதை தவிர பரவலாக வேறெந்த வகையிலும் புலம்பெயர் எழுத்துக்கள் போதிய கவனம் பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.
2. புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆகப்பெண்ணம் பெரிய தொகுப்பும் பரவலாம் கவனம் பெற்றதுமான பனியும் பனையும் தொகுப்பை எஸ். பொன்னுத்துரை தொகுத்திருந்தார். இத்தொகுப்புக்கான முன்னுரைகளை இன்றுவரை ஈழத்தமிழர்களின் மொழி செவ்வாய்க்கிரகத்து மொழியை ஒத்திருக்கிறது என லொள்ளுப்பேசிவரும் சுஜாதாவும், தனது எழுத்துக்களின் அடிநாதமாக இந்துமதத்தையும், பார்ப்பனியத்தையும் கோர்த்து சரடுவிடும் இந்திரா பார்த்தசாரதியும் எழுதியிருக்கிறார்கள். இதில் இந்திரா பார்த்தசாரதியும், சுஜாதாவும், எஸ். பொ.வும் எந்தப்புள்ளியில் இணைகிறார்கள் எனக்கருதுகிறீர்கள்?
என்னத்தை கருதுகிறது? எஸ். பொ. வுக்கு எப்போதாவது உறுதியான அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள் இருந்திருப்பின் இந்தக்கூட்டுப்பற்றி ஏதாவது ஆராயலாம். எஸ். பொ. தனக்கென்று கொள்கையோ அடையாளமோ இல்லாத நபர்தான். ஈழத்தில் முற்போக்கு சங்க எழுத்தாளர் மத்தியில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் தான் அவருடைய செயற்பாடுகள் முற்போக்கு சங்க எழுத்தாளர்களுக்கு எதிராக அமைந்திருந்தன. அவருடைய புனைவுகள் பொய்கள் ஆகியவற்றை ஏற்கனவே மு. தளையசிங்கம் போன்றவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள். இவரின் சொல்விளையாட்டுக்களும் சில்மிசங்களும் "ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி"யில் அம்பலப்படுத்தப்பட்டாயிற்று. இன்று எஸ்.பொ. புலம் பெயர் இலக்கியம் பற்றிபேசுவதெல்லாம் தன்னை தக்கவைப்பதற்கான முயற்சிகளே. இந்த முயற்சியில் அவருக்கு சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி போன்ற நட்சத்திர எழுத்தாளர்களின் கூட்டு தேவைப்படுகிறது. உதாரணமாக சுந்தரராமசாமியின் நாவல் வெளியீட்டிற்கு தான் அழைக்கப்பட்டதையே பெரும்பேறெனச்சொல்லி விழாவில் சுரா வை ஆகா ஓகோ என புழுகித் தள்ளியவர் தனிப்பட்டமுறையிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் அதற்கு எதிர்மறையாய் பேசிவருகிறார். இவையெல்லாம் தேவைகளுக்கேற்றவாறு செயற்படும் உத்திகள்தான். இதன் ஒருபாகம் தான் புலம்பெயர் இலக்கியமும் தலைமையும். இப்போது

Page 15
எஸ். பொ. குறித்து பேசுவதே தேவையற்றவேலை எனக் கருதுவேன்.
3. புலம் பெயர் எழுத்துக்கள் போத7ய கவனம் பெறவில்லை என்கிரீர்கள். ஆனால் நடைபெறவிருக்கும் இனி தமிழ் -2000ல் புலம்பெயர்ந்த எழுத்துக்களுக்கான தனி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த எழுத்துக்கள் தமிழகத்தில் பெற்றுவரும் கவனத்தைத் தானே சுட்டுகிறது? ஒரு பெரிய கருத்தரங்கை கூட்டுவதில் சில சம்பிரதாய நடைமுறைகள் இருக்கின்றன அல்லவா? இப்போது தமிழக கருத்தரங்குகளில் புலம்பெயர் இலக்கியம் பற்றி பேசுவதும் ஒரு சம்பிரதாயமே.
4. வெறும் சம்பிரதாய விளையாட்டுமாதிரி தெரியவில்லையே சரிநிகர், உயிர்நிழல் போன்ற போன்ற பத்திரிகைகளுக்கு கருத்தரங்கை ஏற்பாடுசெய்வதில் பெரிய பங்களிப்பு/உள்ளது. தவிரவும் L/6/66//u/f புலமையாளர்களும், புலமைப்பரிசிலாளர்களும் கலந்துகொள்ளப்போகிறார்களே7? கருத்தரங்கு நடந்து முடிவதற்கு முன்பாகவே முன்முடிவுகளோடு நாம் பேசக்கூடாது. ஆரோக்கியம் அல்லது அலங்கோலம் என்பவற்றிற்கு அப்பால் இது புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஈழத்தவர்களுக்கும், தமிழகத்தவர்களுக்கும் ஒரு சந்திப்பு மையமாய் திகழக்கூடும். ஆனால் கருத்தரங்கு குறித்து சில அவதானங்களைச் சொல்லலாம். கடந்த தமிழ் வரலாற்றை நாங்கள் திரும்பிப்பார்க்கப்போகிறோமெனில் இது மிகவும் காத்திரமாகவும் பொறுப்புணர்வோடும் செய்யப்படவேண்டிய பணி. ஏற்கனவே தமிழை எப்படிப் பார்த்திருக்கிறோம்? பார்த்ததில் என்னென்ன தவறுகள் உண்டு? எவை பார்க்கப்படாமல் விடுபட்டுப் போயுள்ளன? நிராகரிக்கப்பட்டுள்ளன? ஒரங்கட்டப்படுள்ளன?என்பவற்றை குறித்து ஆரம்ப உரையாடல்களை பரவலாய் நிகழ்த் தி ஒரு நிரல் ஒன்றை உருவாக்கி எதைப்பற்றிப்பேசலாம் எனத் திட்டமிட்டு செயற்படும் போதுதான் ஓர் கருத்தரங்கு பூரணம் பெறுகிறது. இன்றும்கூட கருத்தரங்குகள் நடைபெற்றவண்ணம்தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாய் சிறுகதைகள் கவிதைகள் குறித்து தனித்தனி கருத்தரங்குகள் நடைபெற்றவண்ணம் தான் உள்ளன. சென்ற வருடம் உலகத்தமிழாராச்சி நிறுவனம் நடத்திய அயலகத் தமிழ் மாநாடு இந்த தனிகளை இணைத்து ஒரு மாநாடு நடத்தியது. இவைகளைத்தான் மீண்டும் மட்டையடிக்கப்போகிறோம் என்றால் இனித்தமிழ் 2000 அர்த்தமில்லை. புலம் பெயர் இலக்கியம் குறித்து ஏற்கனவே கருத்தரங்குகளில் பேசப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து இந்த 2000 மாநாடு எந்தளவுக்கு வித்தியாசப்படப்போகிறது அல்லது ஒருபடி மேலேபோகப்போகிறது என்பதுதான் கேள்வி.
5.
இந்த இடத்தில் பக்தி இலக்கியம், தேசிய இலக்கியம், மார்க்சிய இலக்கியம், உள்ளொளி இலக்கியம் ஆகிய புனிதப்பெருங்கதையாடல்களின் வரிசையில் அண்மைக்காலங்களில் புலம்பெயர் இலக்கியமும் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்ற துக்ககரமான சேதியை நான் உங்களுக்கு அறியத்தருகிறேன். புலம்பெயர் இலக்கியம் என்ற லேபிளின் முற்றவெளி உரையாடலையும், முனியப்பர்கோயில் சுண்டலையும் நினைத்து நினைத்து ஏங்கி ஏங்கி ரெளப்ரோரண்ட், கோப்பை, குளிர், தனிமை ஆகியவற்றை முக்கிய கச்சாப்பொருட்களாகக் கொண்டும், இழந்த சொர்க்கம், பக்காவான தமிழ் குடும்ப, கலாச்சார செட்டப் ஆகியவற்றை முக்கிய இலக்குகளாகக் கொண்டும் புனையப்படுபவையே புலம்பெயர் இலக்கியம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சமாந்தரம7ய எழுந்துவரும்

இன்னொருபோக்கான தமிழ் அடையாள உதிர்ப்பு, புலம்பெயர்ந்த காரணத்தினால் நேரடி அடிமை-குறுமை முறையிலிருந்து தப்பித்துக் கொண்ட தலித்துக்களின் குரல், தாயக நினைவை மீட்டியே பார்க்கவிரும்பாத பெண்களின் எழுத்துக்கள் ஆகியவை இந்த பு: பெபுலம்பல் இலக்கியத்துள் அடங்கிப்போய்விடும் அபாயம் தெரிகிறது. அவையெல்லாம் நடைபெறவிருக்கும் கருத்தரங்குகளில் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை நிகழ்ச்சிநிரலில் பின்நவீனத்துவம் இல்லை. மேலும் கருத்தரங்கத்தின் தற்பாட்டாளர்களான சேரன், உயிர் நிழல் போன்றவர்கள் தலித்தியம் குறித்து கள்ள மெளனம் சாதிப்பவர்கள், இன்னொரு ஏற்பாட்டாளர்களான காலச்சுவடு கும்பலின் இந்தியமரபு, ஆன்மிகச்சாய்வு போன்ற காரணிகளுமாக சேர்ந்துகொண்டு இந்த மாநாடே மொத்தத்தில் டர்போக்குத்தனமாய் மாறிவிடுவதற்கான காரணங்களும் உள்ளதல்லவா? முற்போக்கு பிற்போக்கு எல்லாவற்றையும் நிகழ்வு நடந்தபின்புதான் கூறமுடியும். இப்போது சில ஊகங்களை மட்டுமே கூறலாம். பின் நவீனத்துவத்தை சேர்த்துக்கொள்ளாததற்கு அவர்கள் வேறுசாட்டும் சொல்லலாம். புதிய விமர்சனப்போக்குகள் என்ற வகைக்குள் அதை அவர்கள் அடக்கிவிடலாம். இன்று தமிழகத்தில் எழுந்துள்ள பின்நவீனத்துவ தலித்திய விவாதங்களின் அருட்டலில் புலம் பெயர் சூழலிலும் ஈழத்திலும் இவை உக்கிரமாக விவாதிக்கப்படுகின்றன. இவை எமது சூழலுக்கு பொருந்துமா பொருந்தாதா என்ற சப்பைக்கட்டு விவாதங்கள் தேவையற்றவை. ஏனெனில் ஈழம் தனக்கென கலை, அரசியலில் தனித்துவத்தை பேணுகிறதோ அதேபோல் தமிழகத்து கலை அரசியலுடனும் தொடர்ந்து ஊடாடிக்கொண்டுதாணிருக்கிறது. மார்க்சிய கருத்துக்கள் விவாதங்களிலும் சரி ஏனைய துறைகளிலும் சரி ஈழத்துக்கு கணிசமான பங்கிருக்கிறது. இப்போது பின் நவீனத்துவம் தலித்தியம் திராவிடம் போன்றவை எமக்கு பொருந்தாது என சிலர் எமது சூழலில் கூறிவருதை நாம் சந்தேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும். இந்த வாக்குமுலங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலை கண்டுபிடிக்கவேண்டும்.
6.
தமிழக"அருட்டல்கள்" மட்டுமே இன்று ஈழத்திலும் புலம்பெயர்குழலிலும் பின்நவீனத்துவம். தலித்தரியம் பேசுவதற்கான குழலை தோற்றுவித்துள்ளது என்பது மிக எளிமைப்படுத்தப்பட்ட கூர்து யமுனா ராஜேந்திரன், சிவத்தம்மி, நூஹர்மானி, போன்றவர்களும் Lபிரச்சினையை இப்படித்தான் எளிமைப்படுத்துகிறார்கள். ஆனால் எண்பதுகளின் பிற்பகுதியில் குறிப்பாக IPKF வருகையோடு விடுதலை இயக்கங்களின் வங்குரோத்து அரசியல் அம்பலப்பட்டுப் போனதாலும் தொண்ணுாறுகளில் சோவியத்யூனியன், கிழக்கைரோப்பிய இடதுசாரி அரசுகள் உடைந்து கொட்டியதாலும் நாங்கள் மாற்றுகளைத்தேடினோம். இக்கால கட்டத்தில் தமிழகத்திலும் மாற்றுக்கள் குறித்த கருத்துக்கள் பரவலாகி வர அவையும் எமக்கு உறுதுணையாயின. எங்களுடைய இன்றைய அரசியல் என்பது வெறும் அருட்டல் அல்ல. நதிற்க, தலித் அரசியல் என்பது ஈழத்திற்குப் பொருந்தாது என'முன்றாவது மனிதனிலி சிவத்தம்பி எழுதுகிறார்?இது பற்றி. சிவத்தம்பி என்னுடைய நெருங்கிய நண்பர் தான். அவருடைய நீண்டகால பணியில் மதிக்கப்பட வேண்டிய பணிகளும் உண்டு. அதே போல் நிராகரிக்கப்பட வேண்டிய வேலைகளும் உண்டு. சிவத்தம்பியின் வாக்கு வேதவாக்கு கிடையாது. அவரையும் விமர்சனக் கண்ணோடு விசாரித்தே ஆகுவேண்டும். குறிப்பாக எண்பதுகளுக்கு பின்னாலான மாற்றங்கள் குறித்து சிவத் தம்பியிடம் போதுமான தெளிவு இல்லை. எண்பதுகளுக்கு முன்னான தன்னுடைய ஆய்வுகளில் சாதியம் குறித்து பல துல்லியமான விடயங்களை இதே சிவத்தம்பிதான் சுட்டிக்காட்டியுள்ளார். எண்பதுகளில் எழுச்சிகொண்ட தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு சிவத்தம்பி அடிபணிந்து போய்விட்டார் என்றுதான் நான்

Page 16
கருதுகிறேன். தேசியம் என்ற போர்வையின் கீழ் சாதிமுதலிய சமூக வித்தியாசங்களை ஏற்றத்தாழ்வுகளை அவர் கண்டுகொள்ள மறுக்கிறார். பேசாதபொருளையெல்லாம் பேசுபொருளாக்கும் சிவத்தம்பி சாதிமுரண்பாடுகளின் தீவிரம், சூழல்குறித்து பேச மறுக்கிறார். இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இனங்களின் முரண்பாடுதான் என்று எண்ணிக்கொண்டு மற்றயமுரண்பாடுகளை கண்டும் காணாமலும் சுயதணிக்கை பண்ணிக்கொள்கிறாரோ என்றும்கூட நான் சந்தேகம் கொள்கிறேன். சிவத்தம்பிக்கே நன்றாகத் தெரியும் அமைதிப்படையின் காலங்களில் அகதியான தலித் மக்கள் சிவத்தம்பியின் வீட்டுக்கு அருகே உள்ள ஒடுக்கும் சாதியனரின் கோவிலொன்றில் அகதிகளாக மிகுந்த போராட்டங்களின் பின்பு தங்கினார்கள். பின் அக்கோவிலை விட்டு அவர்கள் வெளியேறியபின் கோவில் கழுவித்துடைத்து கும்பாபிசேகமும் செய்யப்பட்டது.
7. சிவத்தம்பி ஏதோ கோவில் கும்பாட்ரிசேக மலரில் ஒரு ஆப்வுக்கட்டுரை எழுதியிருப்பதாக சொல்கிறார்களே அது இந்த கும்பாயிசேக மலரில் தானா? அதைப்பற்றி தெரியவில்லை. தலித்மக்கள் கோவில் பாத்திரங்களை உபயோகித்தார்கள் என்பதற்காகவே அப்பாத்திரங்கள் கோவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதை சிவத்தம்பி அவரின் வாயாலேயே என்னிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இதைப்பற்றி சிவத்தம்பி ஆழமாக ஏன் பேசமறுக்கிறார் என்பதுதான் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
8. சிவத்தம்பி மொத்தப் பிரச்சினைகளையும் அனைத்துலகப் பின்புலத்தில் ஆராயப்பவர். ஆனால் இந்த சாதிப்பரச்சினைகள் குறித்து மொண்ணைத்தனமாய் அடக்கிவாசிப்பதற்கும் அதன்முலம் நமக்கு சந்தேகத்தை கிளப்புவதற்கும் அவரது உயர்த்தப்பட்ட சாதிப்பின்புலம் காரணமாய் இருக்கிறதா? யாழ்ப்பாண சமுக அமைப்பில் சிவத்தம்பியின் சாதி உயர்த்தப்பட்ட சாதியாக இருப்பினும் கூட அந்த அடுக்குக்கும் மேலாக உயர்த்தப்பட்ட வேளாளர்களால் சிவத்தம்பியின் சாதி ஒடுக்கப்படுகிறது. சிவத்தம்பியின் சாதியபின்புலத்தாலேயே சிவத்தம்பிக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய இடங்கள் யாழ், பல்கலைக்கழகத்தில் மறுக்கப்பட்டுள்ளது. சாதியத்தின் கொடுரங்களில் ஒரு பகுதியையாவது சிவத்தம்பி அனுபவித்துள்ளார் என்பது உண்மையானது. சேர். பொன். இராமநாதனை அவரின் அவரின் சாதியுப்பின்புலத்தில் வைத்து விமர்சித்த காரணத்தினாலேயே இராமநாதன் நுண்கலைப்பகுதியின் பொறுப்பை சிவத்தம்பி இழக்கநேரிட்டது. சிவத்தம்பியை நாங்கள் விமர்சிக்கும்போது அவரும் யாழ்ப்பாண சமுக அமைப்பின் அசிங்கங்களுக்கு முகங்கொடுத்து வருபவர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் பல்வேறு இழப்புகளையும் சந்தித்துள்ளார். ஆனால் இவற்றிற்கு மேலாய் அவர் ஏன் யாழ்ப்பாண சமுகஅமைப்பை கேள்விகேட்க மறுக்கிறார், தக்கவைக்கமுயல்கிறார் என்றுதான் நாங்கள் கேள்வியைப்போடமுடியும்.
9. கணையாழி இதழில் கண்டபாட்டுக்கு சிவத்தம்பி எழுதியிருக்கும் "மார்க்சியமும் இலக்கிய விமர்சன சமகாலச் செல்நெறியும்"என்ற கட்டுரை குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன? அக்கட்டுரை குறித்து அ. மாாக்ஸ், பொ. வேல்சாமி, தமிழவன் ஆகியோருடைய எதிர்வினைகளையும் படித்திருப்டர்கள் உங்களுக்கு கூட அக்கட்டுரையாக்கத்தில் ஒரு பங்கிருப்பதாக சிவத்தம்பி குறிப்பிடுகிறார். உண்மையாகவே சிவத்தம்பி அண்மைக்காலங்கள்வரை பின்நவீனத்துவம் விளிம்புநிலை

அரசியல் போன்றவற்றைபற்றி போதிய அக்கறையும் தெளிவும் இல்லாமலேயே இருந்துவந்தார். ஆனால் இன்றைய அரசியல் நெருக்கடிகள் அவரை இவைகுறித்து பேச. நிர்ப்பந்திக்க அவர் "சீனு'க்கு வருகிறார். கடந்த பல தசாப்தங்களாக அவருக்கே உரிய திறமைகளுடன் இயங்கிய சிவத்தம்பி அந்தப்புலமைப் பின்னணியை மட்டும்வைத்துக்கொண்டே ஒரு பாய்ச்சலை நிகழ்த முனைகிறார். அந்த பாய்ச்சலில் நடந்த விபத்துதான் அந்த கணையாழிக் கட்டுரை. இன்னுமொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஈழத்தில் நடந்த அரசியல் விவாதங்களில் ஒரு தொடர்ச்சியோ முழுமையோ இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக மாக்சியம் குறித்த விவாதங்களிலே ஒருதட்டையான விவாதத்தை நடத்திவந்தேமே ஒழிய மார்க்சியத்தின் பல்வேறுமுகங்களை நாம் தரிசிக்கமுயலவில்லை. கைலாசபதி சிவத்தம்பி போன்றவர்கள் தமதுபுரிதல்களுக்கு அடக்கமாக நடத்திவந்த மார்க்சிய கதையாடல்களையே நாங்கள் ஒட்டுமொத்தமான மார்க்சியம் என்று நம்பிவந்திருக்கிறோம். அதுபோலவே அவர்களும் நம்பிவந்திருக்கிறார்கள். இந்த மயக்கத்தோடயே நடந்துகொண்டிருக்கும் தத்துவாாத்த - அரசியல் விவாதங்களை புரிந்துகொள்ளாமலே சிவத்தம்பி பின்நவீனத்துவம்குறித்து தனது கருத்துக்களை கணையாழியில் முன்வைத்திருக்கிறார். அந்தக்கட்டுரை மிகவும் விமர்சனத்திற்குரிய கட்டுரைதான்.
10.
விமர்சனம் என்றால் எதிர்மறை விமர்சனமா? இதில் நேர் எதிர் விமர்சனங்கள் என்று பேசிப்பலனில்லை. சிவத்தம்பி இந்தப்புதிய போக்குகள் குறித்து பேசமுயல்வதே நல்ல அறிகுறிதான். சிவத்தம்பி இந்த விவாதங்களில் ஈடுபடத்தொடங்கியிருக்கும் காரணத்தினாலேயே ஈழத்தின் மரபுசார்ந்த இடதுசாரிகளால் "மார்க்சிய விரோதி" எனத் திட்டப்படுபவர். சிவத்தம்பி புதிய போக்குகுறித்து அரைகுறையாய் பேசுகிறார் என நாங்கள் கருதுகிறோம். இந்த அரைகுறைக்கே அவர் அடிக்கடி மரபு இடதுசாரிகளிடம் திட்டுவாங்குகிறார்.
11. எனக்கு விளங்கவில்லை. இடதுசாரிகள் தரன் திட்டுகிறார்கள்? சிவத்தமர்டரி தன்னை உறுதியான மார்ச்சியராகவும் மின்நவனத்துவ எதிர்ப்பாளராகவும் தானே அடையாளப்படுத்திவருகிறார்?
சூழல் அப்படித்தான் உள்ளது.
12. ஈழத்திலும் இடதுசாரிகள் வக்கிரத்துடனும் வெறும் வாய்வெட்டோடும் தானி இருக்கிறார்களா? ஈழத்தில் இடதுசாரிகளிடம் புதிய அரசியல்போக்குகள் குறித்த புரிந்துணர்வு அறவே இல்லையென்றே சொல்லலாம். பின்நவீனத்துவம் தலித்தியம் என்று யாராவது வாயைத் திறந்தாலே தமது காதுளை முடிக் கொண்டு கண்டபாட்டுக்கு திட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
13. புலம்பெயர் எழுத்துக்களில் ஒருமாற்றத்தை புதிய விச்சைநீங்கள் காணர்திரர்களா? புலம்பெயர் எழுத்துக்களை ஈழத்துஇலக்கியத்தின் நீட்சியாகத்தான் நான் பார்க்கிறேன். எனினும் சேரன், ஜெயபாலன் போன்று ஈழத்திலேயே எழுதஆரம்பித்து தங்களை நிலைநிறுத்திக்கொண்ட கல்வியாளர்களுக்கும் அவர்களுக்கு பின்னாக புலம்பெயர்ந்த

Page 17
எழுதஅபூரம்பித்த தமிழில்மட்டுமே எழுத, தமிழில் மட்டுமே வாசிக்கத் தெரிந்த எழுத்தாளர்களுக்குமிடையே பாரிய முரண்பாடு இருப்பதை நான் அவதானிக்கிறேன். வாழ்வியல் ரீதியாகவும் பெற்ற அனுபவங்கள் ரீதியாகவும், இலக்கிய பயிற்சிரீதியாகவும் சேரன், ஜெயபாலன் தலைமுறைக்கும் புதியதலைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது. புதிய தலைமுறையின் எழுத்து தாங்கள் அனுபவித்தைைத உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்ய எத்தனிக்க முயல்வதை நான் அவதானிக்றேன்.
14. சுகன், கலாமோகனர், விர்ைசன்ட் போன்றவர்கள் இதுவரையான மொழி, கலாச்சார மதிப்பீடுகளை குலைத்துப்போட்டு அதிரடி எழுத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் உதாரணமாய் சுகனின் 'மதிப்பு மறுப்பறிக்கை' எனும் புனைவைக் குறிப்டமிடலாம். இந்தவகை எழுத்துக்கள் குறித்து? கலாமோகன், சுகன் போன்றவர்கள் பிரச்சினைகளை பார்க்கிற கோணங்களும் அவர்களது மொழியும் தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதே. ஏற்கனவே நிறுவப்பட்ட கலை கலாச்சார மதிப்பீடுகளின் வழி இவர்களின் எழுத்தைப்பார்த்தால் இவை, புரியாத, குழப்பமான, ஆபாச எழுத்துக்கள்தான். ஆனால் நிறுவப்பட்ட மதிப்பீடுகளை குலைத்துப் போட்டு எழுதுவதென்பது இவர்களின் அகதி அனுபவத்தின்முலமும் பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கு முகங்கொடுப்பதன்முலமும் விளம்புநிலை வாழ்பனுபவத்தினுாடும் சாத்தியமாகியுள்ளது. இந்த எழுத்தாளர்களில் 99வீதமானவர்கள் கல்விச்சாலைகளின் கறைபடியாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவர்களின் எழுத்து வித்தியாசமாகத்தான் இருக்கும்.
作5。 புலம்பெயர் சிறுபத்திரிகைகளில் அண்மைக்காலங்களாக மாக்சியம், பின்நவீனத்துவம், தலித்தியம் குறித்த விவாதங்கள் உக்கிரமடைந்துள்ளன. இவ்விவாதங்கள் ஓர் ஆரோக்கியமான திசையை நோக்கி நகருவதுபோல உங்களுக்குத் தெரிகிறதா? இந்த விவாதங்கள் எல்லாம் காலங்காலமாய் மனிதவாழ்வில் நடந்துவருபவைதானே. இதில் என்ன புதினம் கிடக்கு? ஆனால் இந்த விவாதங்களை மேற்கொள்ளுபவர்கள் வாய்க்குவாய் மாற்றுக் கருத்து, கருத்துச் சுதந்திரம் என்று பேசிவரினும் இவர்கள் மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பண்பட்டவர்களா? என . அவர்களின் எழுத்துக்களிலிருந்து நான் சந்தேகிக்கிறேன். ஜனநாயத்தை தீவிரமாக கோருவதென்பதே ஜனநாயகமறுப்புக்கான காரணமாகியும் விடலாம்.
16.
நீங்கள் என்னைக் குழப்பப்பார்க்கிறிர்கள். அதாவது நாங்கள் பன்மைத்துவத்தை வலியுறுத்துகிறோம். மாற்றுக்கருத்துக்களை வலியுறுத்துகிறோம் என்று நாங்கள் பேசிக்கொள்கிறோம். ஆனால் சாதாரண நட்பு முரண்பாடுகளை கூட ஆவேசத்துடன் ஆத்திரத்துடன் எதிர்கொள்ளுமொருபோக்கை புலம்பெயர் எழுத்துக்களில் அவதானிக்கிறேன். ஒடுக்கும் சக்திகளோடு நாம் சமரசம் பண்ணக்கூடாது என்பது வேறு நமக்குள் நாமே குழுக்கள் கட்டி ரீபுடுங்குப்படுவதுஸ்லி வேறு என்றே கருதுகிறேன்.
17. இதை வெறும் குமுசார்ந்த மோதல்களாக மட்டும் குறுக்கமுடியாது என்றே நினைக்கிறேன் இவை பழைய குழுவிவாதங்களின் தொடர்ச்சியுமல்ல எடுத்துக்காட்டாய் இன்று தமிழ்

அடையாள உதிர்ப்பு, தமிழ் தேசிய நிராகரிப்பு போன்ற கருத்தாடல்கள் புலம்பெயர் குழலில் தோன்றியுள்ளன. பல தசாப்தங்களாக தமிழ் தேசிய வெறியூட்டி வளர்க்கப்பட்ட ஒரு சமுகத்தில் இந்த தேசியத்திற்காகவே தமது பலவருடங்களை செலவழித்துவிடுதலை இயக்கங்களில் இயங்கிவந்தவர்களில் ஒரு பகுதியினர் இன்று தமிழ் தேசியத்தினர் உறுதியான விமர்சகர்கள7ாக, எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். இது ஒரு முரனும் உடைப்புமல்லவா? நான் நீண்டகாலமாக அண்மைக்காலங்கள் வரை ஈழத்துச்சூழலில் வாழ்ந்தவன். இன்றைய உக்கிரமடைந்த இனவாத நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவன். எனது மொழிகாரணமாகவே ஒழிந்து தலைமறைவாகி கூனிக்குறுகி வாழ்ந்தவன். என்னைத் தமிழனாய் அடையாளப்படுத்துவதாலேயே பல பல கண்காணிப்புகளையும் வதைகளையும் அனுபவித்தவன். எனவே தமிழ் அடையாளம் பற்றிய பிரக்ஞை எனக்கு தவிர்க்கமுடியாததே. நீங்கள் இனவாதநெருப்புக்குள்ளால் தப்பிப்போய் பலவருடங்களாக வெளிநாடுகளில் இருந்துகொண்டு தமிழ் அடையாள உதிர்ப்பு பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நான் சிங்கள பேரினவாதத்தின் முன்னாக எனது தமிழ் அடையாளத்தை உயர்த்திப்பிடித்து போராட வேண்டிய சூழலில் வாழ்கிறேன். என்னாலும் தமிழ் தேசிய பெருங்கதையாடலுக்குள் புதைந்துபோன சாதிய பால் முரண்பாடுகள்குறித்து அக்குவேறு ஆணிவேறாய் விமர்சிக்கமுடியும். விமர்சிக்கிறேன். எனினும் தமிழ்தேசிய பிரக்ஞை என்பது என்னளவில் தவிர்க்கமுடியாதது என்றே கருதுவேன். 1960களில் தமிழரசுக்கட்சி பேசிய தமிழ் தேசியத்துக்கும் பின்பு விடுதலைஇயக்கங்கள் பேசிய பேசிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியத்திற்கும் இந்த அனுபவங்களுக்கூடாக பாடங்களை கற்றுக்கொண்டு நாண்பேசும் தமிழ் தேசியத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு. தமிழ் தேசியம் என்றால் ஒன்றுதான் அது முடுண்டதுதான் என்று நாம் கருதக்கூடாது.
18. ாuடF தமிழ் தேசியமோ பாE ன் தமிழ் தேசியமோ இல்லை PLOT, பிற எந்த இயக்கங்களின் தமிழர் தேசியமோ எமக்கு சனநாயக மறுப்பையும், அதிகாரத்தையும் தானே //ரிசளித்திருக்கின்றன? நீங்கள் சொல்லும் இந்தப்போக்குகளை நான் மிகவும் எச்சரிக்கையோடு அவதானித்து வந்திருக்கிறேன். குறிப்பாக இலங்கை அரசியலில் தமிழர்களின் வகிபாகம் என்ன என்ற கேள்வியுடன்தான் இந்தப்பிரச்சினையைப் பார்க்கவேண்டியுள்ளது.
19. நான் எண்ன கேட்கிறேனர் என்றால் ஈழத்தமிழ் அரசியலில் ஒடுக்கப்பட்டவர்களின் தலித்துக்களின் வகிபாகம் என்ன?இந்தப்புள்ளியிலிருந்துதான் நாங்கள் தமிழ் அடையள உதிர்ப்பு பற்றி சிந்திக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. இல்லையா? நான் தமிழ்த்தேசியம் எனக்குறிப்பிடும் போது காலாதிகாலமாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாழ். சைவவேளாளர்குல ஆதிக்க தலைமைத்துவத்தையுடைய தமிழ் தேசியத்தை குறிப்பிடவில்லை.
20.
இதற்கு அங்கால ஒரு தமிழ்தேசியம் உண்டா? கட்டமைக்கலாம். அதை நோக்கிய தேடல்களும் முயற்சிகளும் நாம் செய்யவேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
21.
(31)

Page 18
இந்த தமிழ் தேசியத்தை ஏன் கட்டமைக்கவேண்டும்? அதனால் எதை சாதிக்கமுடியும்? அதன் இலக்கு எது? நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில் சிங்கள பேரினவாத்தின் முகத்தை அரையும் குறையுமாக பார்த் திருக்கிறேன். ஆனால் கொழும்பில் வாழும் போது அதன் முழுப்பரிமாணத்தையும் பார்த்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். முன்பெல்லாம் தேசியம் என்பதை நான் மரபான மார்க்சிய வாய்பாடுகள் மூலமாகவே பார்த்துவந்திருக்கிறேன். ஆனால் கொழும்பில் நான் வாழநேரிட்டபோது ஒவ்வோரு வினாடியும் ஒவ்வொருநாளும் நீ யார்? உன் அடையாளம் என்ன? என்று அணுஅனுவாய் என்னை விசாரித்து நீ தமிழன் நீ தமிழன் என்ற அடையாளம் என்மீது சுமத்தப்பட்டது. நீங்கள் கேட்கிறீர்கள் தமிழ் தேசியத்தால் என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள் என்று. எனக்குத் தெரியாது. இன்றைக்குவரை தெரியாது. ஆனால் புறநிலை என்னை தமிழ்தேசியத்தை நோக்கித் தள்ளுகிறது. இதுதான் பிரச்சினை.
22. ந7ள்கள் பயங்கரமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேனர். உங்களின் தருத்துக்கள் வெறும் உணர்ச்சிகரமாக மட்டுமே இருக்கிறது. நானும் மனிதன். சிந்தனையின் ஒருபகுதியளவில் உணர்வுசார்ந்தவையும் தான். நான் இயந்திரம் இல்லை.
23. வெண்றெடுக்கப்பட்ட தேசியமும் - எடுத்துக்காட்டாம் வங்காளதேசம் - அதிகாரத்தை தானே பரிசளிக்கிறது? இலங்கையின் அரசியல் வரலாற்றை கூர்ந்து கவனித்துவருபவர்களுக்கு ஒன்று தெரியும் இலங்கையில் எவ்வித அடிப்படைஉரிமையும் இல்லாமல் நசுக்கப்பட்டுவரும் தமிழ்பேசும் மக்கள் எப்படி நடாத்தப்படுகிறார்கள் என்பதைப்பொறுத்துதான் இனி இலங்கையின் தலைவிதி தீர்மானிக்கப்படும். இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கும் நிலைவரும் வரை தமிழ் தேசியம் என்பது தவிர்க்கமுடியாததே!
24. அப்படியானால் கடந்த பலவருடங்களாக தேசியத்தின் பெயரால் போராடிவருவதாக சொல்விக்கொள்ளும் புலிகளை நீங்கள் அங்கிகரிக்கிறீர்களா? நான் தமிழ் தேசியம் என்னும்போது யாழ் உயர்த்தப்பட்ட சாதியினரின் தலைமைத்துவம், சனநாயகமறுப்பு, சாதிய முரண்பாடுகள், பால் முரண்பாடுகள் இல்லாத நீக்கிய ஒரு தமிழ் தேசியத்தையே கற்பனை செய்கிறேன்.
25. கற்பனாவாத சோசலிசம் தெரியும். கற்பனாவாத தேசியம் கொஞ்சம் புதுக. அது இனிய கற்பனையாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.
O

எறிபடுநட
புகலிடச்சூழல் திரும்பவும் முனைப்புப்பெறுகிறது என்று எங்களது இயங்குநிலை விருப்புவெறுப்புகளுக்கு ஏற்பஅறிக்கை விடுவது எடுபடாது எனினும் ஒடிப்பிடிப்பவர்கள் பிடித்துக்கொள்க.
3.10.99 நடைபெற்ற இலக்கியக்கூட்டத்தில் அசோக் சுகனுக்கு அடிக்க கதிரை தூக்கிய சங்கதி சாதாரணவிசயமென்றும், அதையொட்டி வந்த "வன்முறைத்து ண்டுப்பிரசுரங்கள்”அநியாயம் அக்கிரமம் என்று வாதாடுபவர்கள் வாதாடிக்கொண்டிருக்க.
கோஷ்டி சேர்ப்புச் சங்கதிகள் அருவெருப்பானவை என்று யாராவது சொன்னால் புரியவா போகிறது.? எங்காவது ஒரு இடத்தில் போய் நிற்கத்தானே வேண்டும். நிற்கட்டும். பணம் படைத்தவன் பலவான். தொலைபேசிச்சேவைகள் வாழ்க.
"எப்பொருள் யார் வாய் மெல்லினும்."
O
இன்றைக்கு தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களாக மின்னலிடுபவர்களில் அநேகர், தங்களது இருபதுகளில் எழுத்துத்துறையுக்குள் நழைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆனால் தற்போது அடையாளங்காணக்கூடிய வகையில் அடுத்தசந்ததி என்று யாரும் நுழைவதாகத் தெரியவில்லை.
இதையொட்டி ஒரு அதிதீவிர இலக்கியநண்பரொருவருடன் கதைத்தபோது “எழுத்தென்பதே விளையாட்டாய்போன பின்நவீனத்துவகாலத்தில் இப்படித்தான் எல்லாமே விளையாட்டாய்
இருக்கும்"என்றுவிட்டு பிரபுதேவாவின் டபுள்ஸ் பார்க்கப் பரக்கப்பரக்க ஒடுகிறார். 'இது நம்மிடையே ஆழ்ந்த சிந்தனையை
கோரி நிற்கிறதல்லவா?"
புலம் பெயர் இலக்கியம் அடுத்தநுாற்றாண்டில் என்ற தலைப்போடு முக்கல்கள் வேறு. தமிழகத்திலும்சரி, இலங்கையிலும் சரி புலம்பெயர் இலக்கியத்திற்கு கொடுக்கப்படும் அதீதமுக்கியத்துவம் வெறுமனே பொருள்சார்ந்ததாய் தான் உணரமுடிகிறது. இதுவரையில் புபெ. இலக்கியம் பெரிதாக எதைத்தான் கிழித்துக்கொட்டிவிட்டது? ஓரிரு எழுத்தாளர்களை இனங்காட்டியதைத்தவிர, இந்த அனாவசிய முக்கியத்துவம் இலங்கைத்தமிழ்ச் சமுகத்திற்கு இன்னுமொரு இறங்குமுகம்.
O பிரான்ஸில் பத்தொண்பதாவது பெண்கள் சந்திப்பு நடைபெற்றது. புகலிடச்சூழலில் பத்தொன்பது தடவைகள் ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் என பல இடங்களில் பெண்கள் சந்தித்திருக்கிறார்கள் எண்பது முக்கியமான விடயம்தான். இவர்கள் சந்தித்து என்ன கதைத்தார்கள், என்னமுடிவெடுத்ததார்கள் என்று முக்கை நுழைப்பது சற்று அத்துமீறிய சங்கதி.
ஆனாலும், புகலிடத்தமிழ்ப்பெண்கள் பிரச்சினையென்பதும், தமிழ்ப்பெண்கள் பிரச்சினையென்பதும் வேறுபடுத்திப்பார்க்கூடிய ஒன்றென்று சொன்னால் யாரும் சண்டைக்குவரமாட்டார்கள' என்று நம்புகின்றேன். புகலிடத்தில் பெண்கள், தம்மீதான ஒடுக்கு முறைகளிலிருந்து மீள்வதற்கும், தனித்து நிற்பதற்குமான

Page 19
சாத்தியங்கள் கிழக்காசிய நாடுகளை விட ஒப்பீட்டளவில் அதிகம்.
புகலிடச்சூழலில் வாழும் பெண்களின் உண்மையான "பிரச்சினை"களை வெளிக்கொணர்வதும் அவைபற்றி பகிரங்கமாக விவாதிப்பதும், பிரச்சினைகளிற் சிக்கற்பட்டு அவதிப்படும் பெண்கள் அவைகளிலிருந்து விடுபட ஆவணசெய்யமுயற்சிப்பதும் சந்திப்பை மேலும் பலனாக்கும் என்பதை முக்கை சற்று வெளி இழுத்துச் சொல்லிக்கொள்ளலாம்.
6psoidu Tao "ladies club' dig எங்களுக்கு ஒரு அவசியமும் வந்திடேல்ல ல என்ற குரலும் எங்காவது ஆழத்திலிருந்து எழுந்துவிடாது பார்த்துக்கொள்வதும் அவசியம்.
O
அசோக் அல்லது அவரது இலக்கிய நண்பர்களால் வெளியிடப்பட்ட "யன்லைத்திறவுங்கள்"கிடைத்தது. நன்றி.
இந்தமாதிரி கடந்த கால "செயற்பாடுகளை" மாறிமாறிகோர்த்து இப்படி ஒரு கைங்கரியத்தை ஒப்பேற்றுவது ஒன்றும் கடினமான காரியமல்ல. நெஞ்சு நிமிர்த்தித் திரிவதற்கும் இதில் ஒரு மண்ணும் இல்லை, பணபலமும் ஊதிவிடும் நண்பர்களும் இருந்தால் போதும். இதல்ல இதற்கு மேலும் செய்யலாம்.
அரசியல் விமர்சனங்களில், கொடும்பாவி எரிக்கிறஅளவுக்கு அதை மிகச்சாதாரணமாகவே செய்யிற அளவுக்கான விமர்சனக்கலாச்சார சூழலில் வளர்ந்தவர்கள்தான் நாங்கள். ஆகவே எழுத்தில் கோரம் வெளிப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமும் கிடையாது. இருந்தாலும், ஆகக்குறைந்தது ஜனநாயகத்தை கோருபவர்களாவது இலக்கிய நேர்மையோடு நடந்து
கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்றும் மிகையான ஆசையல்ல. தவறுகள் மீது கடுமையான விமர்சனத்தை அவரவர் தங்கள் தங்கள் சக்திக்கேற்ப வைத்துக்கொள்ளட்டும். வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அவதூறுகளைபரப்புவதும், ஊகங்களை செய்திப்படுத்துவதும் இயலாமையின் வெளிப்பாடே.
யண்ணலைத்திறவுங்கள் போன்ற பிரசுரங்களளைப் பார்த்து அசோக் போன்ற தனிநபர்மீது கோபம் கொள்வதற்கும் அதிகளவு நியாயமெதுமில்லை. ஜனநாயகத்தைக்கோரும் புலம்பெயர் இலக்கியச்சூழலானது எதையும் எப்படியும் எழுதிவிட்டுப்போகும் தைரியத்தையும் கொடுக்கிறது என்பதுதான் கவலைதரும் விடயம். பிழை, சரிகளை (எவர்மீதாதாயினும்) உடனுக்குடன் பகிரங்கமாக கண்டிப்பது சீர்செய்ய முடியாத பல சிக்கல்களையும் முடிவுக்கு கொண்டுவரும். இல்லை எல்லாமே ரப்பர்மாதிரி இழுபடும். காலவிரயம், பொருள்விரயம். அதற்குமேல் எதுவுமில்லை.
O
நட்புடன் சக்கரவர்த்திக்கு. உங்கள் யுத்தமும் அதன் இரண்டாம் பாகமும் தொகுப்பு படிக்க கிடைத்தது. சில கதைகள் ஏற்கனவே சஞ்சிகைளிலும் படிக்க முடிந்தது. எனது வாசிப்பு அனுபவத்தை போலித்தனமில்லாமலும், தேவையற்ற முதுகுசொறிதல் இல்லாமலும் பகிர்ந்துகொள்ளல் விரும்பத்தக்கது என கருதுகிறேன்.
சஞ்சிகைளில் படிக்கும் போது உங்கள் கதைகள் தந்த சலனம் தொகுப்பாக படிக்கும்போது குறைந்தே காணப்பட்டது. இது வாசிப்பு தொடர்பாக எனது கால இடைவெளி குறித்ததாகவும் இருக்கலாம்.

மற்றும் இத்தொகுப்பை படிக்கிறபோது சரிநிகரில் வெளிவந்த உங்கள் பேட்டியும் கதைகளைப்படிக்கிறபோது படைப்புக்குமேலாக நிழலாடுவதையும் எனக்கு தவிர்க்கமுடியாமல் இருந்தது. பேட்டியைப்பற்றியும் ஒருவரி இந்த இடத்தில் சொல்லிடல் பொருந்தும். யதார்த்தவாத இலக்கியத்துடனே உங்களை நீங்கள் மட்டுப்படுத்திக்கொண்டதும், கனடா தமிழ் இலக்கியவாதிகள் பற்றியகேள்விக்கு நழுவிச்சென்றதையும் தவிர பேட்டி நன்றாகவே, இயல்பாகவும் நறுக்காகவும் இருந்தது. ஏற்கனவே பலர் பாராட்டி விட்டார்கள். நானும் கூட.
உங்கள் தொகுப்பு போர் எதிர்ப்பைக்காட்டும் படைப்புக்கள் என அடையாளப்படுத்தப்பட்டாலும் அவை மறுபுறத்தில் போர்த்தயாரிப்புக்குத் துாபமிடுபவையாகவே அமைகின்றன என்பது எனது வாசிப்பு.
பெரும்பான்மையான கதைகள் முஸ்லிம் சமுகம் எதிர்நோக்குகின்ற அவலங்களை வெளிக்கொணர்பவையாக அமைகின்றன. இன்றைய பெரும்பான்மை தமிழ்ச்சூழலில், சொல்லப்படாத அல்லது சொல்லமுடியாத அல்லது சொல்லமறுக்கின்ற கருப்பொருட்கள் என்ற வகையில் உங்களது இந்தத்தொகுதி முக்கியமான பதிவு ஆனால் தவறுகள் விமர்சிகப்படுகின்ற சுட்டப்படுகின்ற அதேநேரம் இனக்கலவரத்திற்கு தூபமிடுபவையாகவும் அமைந்துவிடுகின்றன. எனது இந்த கருத்து பாரிஸில் நடைபெற்ற விமர்சனக்கூட்டத்தில் எதிர்விமர்சனமாகவும் அவரவர் வாசிப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் துரத்தப்பட்டதற்கும், பள்ளிவாசல் படுகொலைகளுக்கும் அமைதியாக இருந்து ஆதரிக்கின்றவர்களுக்கும்
பொறுப்பிருக்கிறது என்பதில் எனக்கு கருத்துவேறுபாடில்லை. ஆனால் இதன் விளைவு இரண்டு சமுகங்களும் மோதிக்கொள்வதும் பழிவாங்கப்படுவதும் என்ற கருத்துக்கு வந்துசேர்வதில் உடன்பாடு கொள்ளமுடியாது.
எண்ட அல்லா கதையில் வருகிற கணபதி பாத்திரம் வலிந்து செயற்கையாக புகுத்தப்பட்டதான உணர்வே ஏற்படுகிறது. சிலவேளை இது ஒரு உண்மைச்சம்பவமாகவும் இருக்கலாம். ஆனால் நடக்கின்ற எல்லாச் சம்பவங்களும் - கதைக்கருப்பொருளாகிவிடுமென்றோ அல்லது ஆக்கவிடமுடியுமென்றோ நீங்களும் கருதமாட்டீர்கள் என்பது எனது அபிப்பிராயம்.
பாருங்கள்! சிங்கள இனவாத அரசுமீதான வெறுப்பையும் அதன் அடாவடித்தனங்களையும் புனைவுகள் மூலமாக பதிவாக்குவதும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதும் அவசியமான பணிதான். ஆனால் அந்தப்பணி மறுதலையாக ஒடுக்கப்படும் இனத்திற்கு முழுச்சிங்கள சமுகத்திற்கும் மீதான வெறுப்பாகவும், காழ்ப்பாகவும் மாற்றிவிடும் அபாயம் விரும்பத்தக்கதல்லவே. உங்கள் கதைகளில் இந்த பலவீனம் தெரிகிறது.
இன்னும், நிகழ்வுகளில் கலக்காமல் அநியாயத்தை கண்டு கொதித்தெழும், அவசரப்படும் வெறும் ஆக்கிரோச போர்க்குரலாகவும் பெரும்பாலான கதைகள் தென்படுகின்றன.
முதிர்கன்னி, ஆடு புலி புல்லிக்கட்டு எண்னை மிகவும் கவர்ந்த கதைகள். நேர்கோட்டுக் கதைசொல்லல் முறை இப்போ சலிப்புத்தட்டும் விசயங்களிலொன்று. நேர்கோட்டுமுறையில் கதைக்

Page 20
கருப்பொருள் புதியவீச்சைப்பெற்றாலொழிய வாசித்து முடிப்பது சிரமம். விக்ரமாதித்தின் கதை உத்தியை நீங்கள் முதிர்கன்னியில் அழகாகப் பயன்பதியிருக்கிறீர்கள்.
“ஒகஸ்டினாவும் பந்தயக்குதிரையும்" ழகரத்தில் முன்பு வாசித்தபோது இருந்த திருப்தியை இப்போ வாசிக்கும்போது தரவில்லை. இருந்தபோதும் புதிய வித்தியாசமான நல்ல கதை.
அது சரி, கதைகளுக்குமேலே உங்கள் கவிதைவரிகள் சிலவற்றை மேற்காட்டியிருக்கிறீர்கள். "இனச்சுத்தம் இனச்சுத்தம் எனச்சொல்லி சோனகரை எல்லாம் ஒற்றைநாள் இடைவெளியில் நாட்டை விட்டு நாம் விரட்டியடித்தோம் நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்? நம் பூர்வீகமென்ன ஜேர்மனியா?"
நாசிகளுக்குப் பிறந்தவர்களெல்லாம் நாசிகளென்றும், ஜேர்மனியை ப் பூர்வீகமாகக்கொண்டவர்களெல்லாம் அக்கிரமக்காரர் என்ற உங்கள் அபிப்பிராயத்தை திரும்ப ஒருமுறை வாசித்துப்பாருங்கள். கொஞ்சமல்ல மிகவும் வன்மமாகவே இருக்கிறது.
பொதுவாக இலக்கியச்சூழலில், ஆரம்பத்திலேயே குழை அடிஅடி என்று அடித்து நகரவிடாமல் மடித்துக்கட்டுகிற போக்கு அதிகம். புகலிடச்சூழலில் குறிப்பிடத்தக்க ஒருசில புனைகதையாளர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் ஏதாவது அப்படி அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக்கூடாதென்பதும், தொடர்ந்து எழுதவேண்டும் என்பதும் வாழ்த்துக்களுடனான எனது வேண்டுதல்.
அன்புடன்
LDC360TT
கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் எதையும் செய்துவிடலாமா?
கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் எதையும் எழுதவும் (Suefoib, அவற்றை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டிருக்கிற நிலையில் சேனனின் (அம்மா-10) கதையில் வரும் சில எள்ளல்களை - ஒரு முஸ்லிம் என்ற வகையில் -(என்னடா முஸ்லீம், எங்கட மொழியத்தானே பேசுறிங்க என்று உரிமையுடன் யாரும் கேட்டாலும் கேட்கக்கூடும்) எடுத்துச்சொன்னாலும் எடுபடாது என்ற நம்பிக்கையில் மெளனங்கொள்கிறேன்.
சிறுபான்மையோரைப்புண்படுத்துவது என்பது ஏதோ ஒருவகையில் எல்லாவகையான ஆதிக்கசக்திகளின் இயல்பாகிவிடடிருக்கிறது. இது-மொழியென்று வருகிறது. ஏற்கனவே
அடித்துவிரட்டியதில் ஒன்றைப் புரிந்துகொண்டோம். கதையில் அல்லாவற்வை இழுத்துச்
செருகுவதற்கான எந்த நியாயத்தையும் நான் காணவில்லை. .நீங்கள்? நீ சொல்லுகின்ற கருத்தோடு எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லையெனினும் அதைச்சொல்ல இருக்கின்ற உனது உரிமைக்காக எனது உயிரையும் தரத்தயார்என்று வோல்டேயரின் கூற்றுாடு சிலர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது தெரிகிறது! ஆக மீண்டும் மெளனந்தான்.ஆனால் சம்மதத்திற்கானதல்ல.
இதுபோக, அது நான் விரும்பிப் படித்த நல்ல வித்தியாசமான தமிழுக்கு அல்லது எனக்கு புதியகதை!
மதுபாஷினியின் மொழிபெயர்ப்புக்கதைத் தேர்வு நன்றாயிருக்கிறது. இருந்தும் மொழிபேச்சும் எழுத்துமாய்க் கலந்து ஓட்டத்த்ை கலைக்கின்றது. கொஞ்சம் பழைய நினைவை மீட்டினால் . . சேகர் டீச்சரிடம் - மதுபாசினியின் அம்மாவிடம் - முதுாரில் ஆங்கிலம் படித்த நினைவு வருகிறது. ர்நசநறந பழ யசழரனெ வழ உரவ வாந வசநந. படித்த காலத்தில் நாம் சின்னப்பிள்ளைகள். இப்போது பலிக்கடாவும், வேறர்பியும7ய்அம்மாவில் எங்கிருந்தோ அறிந்து கொள்ளக்கிடைப்பது ஆச்சரியமானதுதான்.
. எம். கே. எம். ஷகீப், சவுதி அரேபியா

மரமேறி வாழ்க்கை நடாத்தவேண்டிய நிலையில்
ஒரு சமுகத்தை வைத்திருக்கின்ற
எல்லோரும் சாதி வெறியர்களே!
- 1943ம் ஆணர்டு துணர்டுப்பிரசுரத்திலிருந்து.
சிவத் தம் பியைப் போல் படுமோசமான சாதிவெறியன் இலங்கையில் இல்லை என்பதற்கு மூன்றாவது மனிதன் (ஜனமார்ச் 2000) இதழில் “தலித் “தலித் இலக்கியம்” என்ற வகைபாடு இலங்கைக்குப் பொருந்துமா?’ என்ற கட்டுரையையே இலக்கிய வரலாற்று மாணவர்கள் தற்போது ஆதாரமாகக் கொள்ளலாம்.
கட்டுரையின் தலைப்பின் வஞ்சக நோக்கத்தில் தலித் அல்லாத வாசகர்கள் - இல்லை - அல்லது - பொருந்தாது என்ற பதிலைக்கூற கட்டுரையை வாசியாதே பதிலைத் தயாராக நுனிநாக்கில் வைத்திருப்பர். அந்தப்பதில்தான் கட்டுரையாளருக்கும் தேவைப்படுகிறது.
சிவத்தம்பிக்கு இலங்கையில் தலித் என்ற வார்த்தைக்குப் பதில் சாதிப்பெயர்களையும், தலித் இலக்கியம் என்ற வார்த்தைக்குப் பதில் முற்போக்கு இலக் கரியம் என்ற அவப்பெயரையும் தொடர்ந்து தொடர்ந்து பயன்படுத் தரினால் அவரின் ऊ Iा कृी மனோபாவத்திற்கு மிகவும் உவப்பான விடயமாகத் தொடர்ந்திருக்கும். என்ன செய்வது எல்லாக் காலமும் ஒன்றாயிராதே! சிவத்தம்பியின் புலமைநோக்கு நிலைக்குத் தோதாக, வாகாக தலித் மக்கள் தங்கள் வாழ்க் கையை ஏன் தொடர் நீ து வைத்திருக்கிறார்கள் இல்லை என்பதுதான் யாழ்ப்பாண புலமைச்சூழலில் இன்றைய பிரதான பிரச்சினையே!
இலங்கை தலித் துகளுக்கான தனது ஞானோபதேசமாக “தலித் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல என்ற சிரிப்பிற்குரிய அவதானங்களை முன்வைக்கிறார் சிவத்தம்பி. அவர் கேட்கிறார்.
தலித் என்று சொல்லப்படுபவர் யார்? 1656/lb (560mi2) Schedule Castes 676digal
சொல்லப்படுபவர்கள்தான் தலித்துக்கள்” இது ஒரு பதிலா? ஒரு தலித் ஆய்வாளரின், கல்வியாளரின் வாயிலிருந்து இந்த வார்த்தை எப்போதாவது வருமா? இந்தப் பதிலில் ஒடுக்கும் சாதிமனோபாவம் மட்டும்தான் தெரிகிறது. வேறொன்றும் இல்லை. சித்தலிங்கையா, அரவிந்த மாளகத்தி, மார்க்ஸ் , ராஜ்கவுதமன், ரவிக்குமார் போன்றோர் தலித் என்ற வார்த்தைக்குக் கொடுத்த விளக்கங்கள் ஒவ்வரு தலித்தையும் நெஞ்சை நிமிர்த்தி நிற்க வைப்பவை. ரவிக்குமார் தனது தலித் சஞ்சிகையில் எழுதுகிறார். “தலித் என்ற சொல்லின் வேர் எதுவென்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். தலித் என்பதை விற்பனைக்கு உதவும் முத்திரையாகப் பயன்படுத்தி பிழைப்பு நடத்துகிறார்கள் சிலர். தலித் என்றால் தன்மானம், தலித் என்பது தனித்துவம். சாதி அமைப்பை ஒழிக்கமுற்படும் தீண்டப்படாத மக்கள் தமக்குத்தாமே இட்டுக்கொண்ட அடையாளம் எனச்சொல்லி தலை நிமிர்ந்து நிற்கிறோம் நாம்"
நமது சிவத்தம்பிக்கு அது மிகவும் குறைந்ததாம். "கீழ் மட்டச்சாதி பள்ளத்தமிழர் ஒருவரின் பெயர் இடம்பெற்றது அந்தப்பெயர் போட்ட பஸ்ஸிலே ஏறமாட்டோம் என்றார்கள் இப்படி மறுத்தவர்கள் உணர்மையில் இடைநிலைச் சாதியினர்’ சிவத் தம்பியின் முன்னைய ஆய்வுத் தலைப்புகளில் ஒன்று வாசகர்களுக்கு நினைவிருக்கும்.!
“யாழ்ப்பாண இந்து மக்களிடையே சமூகமேன்னிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும்” இது தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலருக்கு எழுதியது.

Page 21
பாருங்கள் எப்படிக் கொடுக் கறார் இந்துக்களுக்கு “இந்து மக்கள்’ என்ற கெளரவம்.
சிவத்தம்பிக்கு தலித்துக்கள் தங்கள் சாதி அவமானங்களை மறந்து அல்லது பெரிதுபடுத்தாமல் எல்லோரும் தமிழர்கள் என்று நினைக் கவேணி டும் . அப்படி நினைத்தாலும் பள்ளத்தமிழர், பறைத்தமிழர் இப்படி நினைக்கவேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? சிவத்தம்பிக்கு காறித் துப்பவேண்டாமா? சிவத்தம்பி மொழிவது என்னவென்றால், இந்து மக்கள் என்று சொல்லுங்கள், தமிழ் மக்கள் என்று சொல்லுங்கள், ஆனால் தலித் என்று
சொல்லவோ எழுதவோ யாரும் முன்வரக்கூடாது.
தலித்துக் களர் எப்போதும் மேலி - நிலையாக்கத்திற்காக முயற்சிக்கிறார்கள். அப்படி ஆக உயர் அந்தஸ்து
பெற்றுவிட்டார்கள். இன்னும் சில இடங்களில் கீழ்(மட்ட) சாதிகள் இருக்கின்றன. அவர்களும் வேளாளராகவோ மேலோங்கிகளாகவோ விவிைல் வர வேணர் டும் . வரலாம் ! யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினை ஒழிந்தது! அட ஞான சூனியமே!
புலிகளைவிட இலங்கையரில் நிறுவனமயப்படுத்தப் பட்ட ஒடுக் கும் சாதிநிறுவனம் வேறு என்ன இருக்கிறது? யாழ்ப்பாணத்தில் ஒரு தலித் கிராமம், அவர்கள் வேறு இயக்கத்தை ஆதரித்தார்கள் என்பதற்காக அக் கிராமத்தை விட்டே அவர்களை அடித்துத்துரத்தவில்லையா? அல்லது முஸ்லிம்களைத் துரத்தியபின் வேறுபிரச்சினைகளும் இருக்கின்றன என்று புலிகளுக்கு நியாயம் பேசியதுபோல் இதற்கும் பேசலாம் என்கிறாரா சிவத்தம்பி. வேளாளரும், வலதுசாரிகளும், மற்றவர்களும் சேர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், ஐ ஈழப்பள்ளர் என்று அழிக்கமுடிந்தது எப்படி?
இந்த லட்சணத்தில் “கோவேறு கழுதைகள்” வேறு. அதை எழுதியவரின் பெயரையே ஒழுங்காகச் சொல்லத்தெரியவில்லை.
இந்த நாவல் என்றும் சாதி ஒடுக்குமுறை என்றும் இருக்கும். ஒரு சாதியை ஒடுக்கும் சாதரி பிற சாதரியை ஒடுக் குவதைப் பற்றிப்பேசக்கூடாது என்றும் மேற்சாதிகள் தலித்துக்களைத் திண்டாமை பாராட்டுவதற்கு வக்காலத்து வாங்குவதாக இந்நாவலைச் சொல்லலாம் என்றும் ஒடுக் கப்பட்ட சாதியினர் ஒடுக்கப்பட்டது நியாயம்தான். இது இவர்களுக்கு வேண்டும் என்ற பொருள்கோடலுக்கு வழிவகுக்கிறது என்றும் ராஜ் கவுதமன் இதை அடையாளம் காண்கிறார். தலித்தியத்தை அடிப்படையில் ஏற்காதபலரும் இமையத்தின் கோவேறு கழுதைகளை வெகுவாகப் பாராட்டுவது சிவத்தம்பிக்கும் பொருந்திப்போகிறது.
மீண்டும் "இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற பெருங்கதையாடல்: மெள்ள மெள்ள வேளாளராக மாறுவது பற்றி சிவத்தம்பி அவரது வாழ்க்கை முழுவதும் பேசுவார் போற்றான் தெரிகிறது.
சில தலித்துக்கள் கடும் உழைப்பில் கற்று வசதியாக வாழ்ந்தால் சாதித்திமிர் என்ன சொல்லுமெண்ரால் Α/Α ή இவன் வெள்ளாளராக மாறுகிறான், என்று. ஒடுக்கும் சாதித்திமிர் பிடித்தவர்கள்தான் இந்தப்பழமொழியை உருவாக்கியது என்று எந்தவொரு தவித்திற்கும் தெரியும் தலித்துகளிடமிருந்து மெள்ளமெள்ள வேளாளராக மாறினாரே! என்ற குரல் 6777 (ể://727/ớ வந்தது கிடையாது. சிவத்தம்பியின் “யாழ்ப்பான சமுகத்தை விளங்கிக்கொள்ளல், ബ0 கட்டுரையிலும் இதுதான் மெள்ள மெள்ள வேளாளர். - இது மற்றெல்லோரையும் விட
சிவத்தம்மியைத்தான் മിങ്ങ്ഗുമ് அரித்தெடுக்கிறது போலிருக்கிறது. lpങ്ങ് ക്രിബ) குமைந்து குமைந்து
மறுகவைக்கிறது போலிருக்கிறது.
“உயர் சாதியினர் செய்தது என்னவென்றால் ஆளுக?ன்ற ஆட்சியுடன் சேர்நது இருந்துகொண்டு அவர்கள் வழங்குகின்ற சலுகைகளைப பெறர் றுக கொன டு தங்களுடைய நிலமையைக் கீழேஉள்ள
சாதிமுறை அகலுவதற்கு எதிநிலையாழுகளுக்குப் போகாமல் பார்க்கின்ற ஒரு

sy
நிலமையைப்போற்றியது தான் . . என்று சிவத் தம் பியரின் வசனநடையை வாசிக் கும் போது சிவத தம் பரியரின் மற்றெந்தக் கட்டுரைகளையும் விட இக்கட்டுரையில் தெளிவீனங்கள் குறைவு என்று சிவசேகரம் முன்னர் எங்கேயோ எழுதியது ஞாபகத்தில் வந்து தொலைகிறது. தெளிவீனமான மொழிக் கட்டமைப்பால் மட்டும்தான் வாசகர்களை அச்சுறுத்த முடியும் என்பதுதான் நமது புலமைமரபு. இருந்தாலும் அந்தப்பந்தியில் இன்றைய வாசகர்களுக்கு அவர் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் ஏதோ பருவகால மாற்றம்போல் இயல்பாய் இலகுவாக இருந்ததாக அறியத்தருகிறார்.
“சேர் பொன்னம்பலம் இராமநாதனுக்குப் பெருத்த சவாலாக இருந்த பவுல் என்பவர் பறையர் சமுகத்தைச்சேர்ந்தவர்’ சிவத்தம்பி திருவாய் மலர்கிறாள். இவர் குறிப்பிடும் பவுல் வேறுயாருமல்ல “யோவேல் போல்’ என்னும் அன்றைய தலித் தலைவர் தான் . அதென்னடா இராமநாதனுக்கு மட்டும் சேர்! பொன்னம்பலம்! இராமநாதன்!
போல் என்னும் பெயரை சாதரி மனோபாவத்தின்படி பவுல் என்று திரிக்கிறாரோ சிவத்தம்பி என்று எனக்குச் சந்தேகம். “சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” நுாலிலிருந்து தரவுகளை எடுத்தாளும் சிவத்தம்பிக்கு அந்நூலில் யோவேல் போல் பற்றி பக்கத்திற்கு பக்கம் பலதரம் வரும் பெயரைச் சரியாகக் குறிப்பிட முடியவில்லை எனில் என்ன மனோபாவம் இது? 20ம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி’ என்றொரு சிறுநுால் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் அதைப் LIL955(535856), Tib. “இக்காலத்தில் சாதி பேசுபவர்கள் பஸ்களில் சென்று வந்து குளிக்கமட்டுமே முடியும்” என்று மிகவும் சோகமாக சிவத்தம்பி இருப்பது போற் தெரிகிறது.
“இன்று வடக்கு-கிழக்கு தனித்துவங்கள் மறக்கப்பட்டு பொதுப்படையான தமிழன் என்ற எண்னக்கரு நடைமுறையில் உள்ளது.
கைம்மாறு இது.,, 67afalast of. பெ ரு B' த  ைத ய ர ட ல' க எ7 தோலுரிக்கப்பட்ட, தோற்றுப்போன இக்காலத்தில், മങ്ങബfffgിuിളസ്ഥ, உலகம் பூராவும் பின்நவனத்துவத்தைப் புறங்கான புலிவேகத்தில் புறப்பட்டிருக்கும் சிவத்தம்மிக்கு மின்நவனத்துவ சிந்தனைகளில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. “தனது எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்த முடியாத ஒருவரை முழுமையான அர்த் தத்தல் (வன் முறைக் கு) பலியானவரென பாதிக்கப்பட்டவரெனக் &ngb6)Tib. g6ri LT g56 6 Jul L6 Gg 60 (victin) மற்றவர்கள் அடையாளம் காணக் கூட முடியாது. அவர் தன்னை பாதிக்கப்பட்ட ஒருவராக காட்டிக்கொள்ளவும் முடியாது. அவர் பாதரிக்கப்பட்டவர் என்பதை மற்றவர்கள் அடையாளம் காணமுடியாதபடி அவர் முற்றிலும் மொழியால் விலக் கப்பட்டிருப் பார் , அல்லது மூடப்பட்டிருப் பார் ; வரலாற்றாலி அழி க்கப்பட்டிருப்பார். (Jacques Derrida)
அரசியல் ரீதியாக யார் தலைவராக வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை காணப்படுகிறதாமே சிவத்தம்பிக்கு. ஒரு முஸ்லிம் தலைவராக வரமுடியுமா? ஒரு தலித் தலைவராக வரமுடியுமா? புலி தவிர்ந்த வேறுயாராவது இண்று உயரிரோடிருக்க முடியுமா? அங்கு தலித்துக்கள் செய்யும் கோசங்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் இங்கு பிரதரிசெய்ய முடியா தாம் . இங்கு சாதரிப் பிரச்சினைகள் பெருமளவிலி குறைந்துவிட்டதாம் . இந்தியாவிலி தலித்துக்கள் (இளையராஜாவின் மனைவி) மிகக் கவனமாக மேல்நிலையாக்கம் அடைகின்றனர். சமஸ்கிருதமயமாக்கம் அடைகின்றனர் . இலங்கையரிலி சமஸ் கரிருதமயமாக்கத்தை எதிர்க்க முடியுமா? திராவிட இயக்கத்தாலும் முடியவில்லை. தலித் பண்பாட்டின் அடையாள தி தைக் 856, 6OTLDFT as
சிங்கள ஆட்சியாளர்கள் *g

Page 22
பார்க்கவேண்டியிருக்கிறது. பண்பாடு என்றால் எல்லாக்கட்டங்களிலும் மாறுகின்ற ஒன்று. இலங்கைத் தலித்துக்களே! (விடுதலைப் புலிகள் வழியரில் செல்லுங்கள்) தமிழ்ப்பண்பாடு என்பது இந்துப்பண்பாடுதான். சமஸ்கிருதப்பண்பாடுதான்!
தமிழ் பாஸிஸ்டுகளதும் சாதிவெறியரதும் குரலை ஒருங் குசேரக் காணி பதற்கு புத்தாயிரத்தாண்டில் நாம் புதிய கட்டுரைகள் தேடவேண்டியதில்லை.
இலங்கையில் ரகுநாதனையோ, எஸ். பொ.வையோ நாங்கள் ஒரு தலித்தாகப் பார்ப்பதில்லை. டானியல் ஜீவா, தெணியான் போன்றவர்கள் தமிழ்ப்புலமை மரபில் முக்கியமானவர்கள். அவர்கள் தலித் போராட்டத்தினுாடாக அந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை. (அங்கீகரிப்பவர் யார்?) இதுதான் முக்கியம். தலித் எழுத்தாளர்கள் தலித் போராட்டத்தில் ஈடுபடாமலே முன்னுக்கு வரமுடியும். (அய்யோ டானியல் உனக்கு இந்தக் கதியா?) இதுதான் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் வித்தியாசம் (முன்னுக்கு வாற வழியைப் பாருங்கள்) சிவத் தம்பி சொல்வது மிரட்டலாகப் uL66ö6oo6ou uT? விவாத மற்றும் மாற்றுக் கருத்துகளிற்கான தேவைநிமித்தம் சிவத்தம்பியின் கருத்துலகம் வன்முறையானது என்பதை மட்டும் இறுதியாகக்குறித்து பின்தொடரலாம். - சுகன்.
O
அடுத்த இதழில். 356,ongb356YT எம்.கே.எம். ஷகீப் அ. முத்துலிங்கம் வின்சென்ற் கருணாகரமூர்த்தி
பிப்பிக்கு நிகரற்ற பப்பி கதை அருவெருப்பாய் இருந்தது. ஆஸ்திரேலியச் சிறப்பிதழான அம்மா -10 என்னைத் தாமதமாகவே வந்தடைந்தது.
தாமதமானாலும் . அது என் னை வந்தடைந்த தரிலி நிறையவே சந்தோசப்பட்டேன்.
அவ்விதழில் இடம்பெற்ற முதல்ஆக்கமான கெர்பி, ஆஸ்திரேலியப் பழங்குடியினரான aboriginal மேற் தணிக்கப் பட்ட, எனக்குத்தெரியாத துயரந்தோய்ந்த ஒரு வாழ்க்கைச்சிதைவைக் குறிநின்ற அக்கதை என்னை வெகுவாகப் பாதித்தது. கதையைக்கொண்டுசென்ற பாணி மிகவும் நன்றாக இருந்தது. அக்கதையை தமிழில் மொழிபெயர்த்து எங்களிடம் கொண்டுவந்த
ஆழியாழுக் குத் தான் முதலிலி நன்றிசொல்லவேண்டும். வீரசிங்கம் வசந்தன் (அநாதை), யோகன்
(அம்மாவின் கடிதம்), மாவை நித்தியானந்தன் (கார்வாங்குதல்) மூவரின் கதைகளுமே நிகழ்கால நடப்புகளை பிரதிபலிப்பதாய், சொல்லவந்ததை சுற்றிவளைக் காமல் நறுக்குத்தெறித்ததாற்போல் சொல்வதாய் நன்றாக அமைந்திருந்தன.
'பிப்பிக்கு நிகரற்ற பப்பி இக்கதையில் சொல் லவந்ததை கொஞ சம் அழகுற சி சொலி லயரி ருக கலா மீ . அழகுசேர்க்காவிட்டால் கூட பரவாயில்லை. சில இடங்களில் அருவருப்புகளைச் சேர்க்காமல் விட்டிருக்கலாம் . நிஜத்தைத் தானே சொல்கிறேன் என கதாசிரியர் சொல்லலாம். 'ஆடை இல்லாதவன் அரைமனிதன்'என்று சொல்லி நாமே நம் நிஜத்திற்கு ஆடைபோர்த்தித் திரிகிறோம். காலங்காலமாய் பதியப்பட்டு இருக்கப்போகும் இன்றைய எழுத்துக்களுக்கு பட்டுக்குஞ்சம் கட்டவேணும் என்று நான் சொல்லவில்லை. காலங்காலமாய் இருக்கப்போகும் இன்றைய எழுத்துக்களை நிர்வாணப்படுத்ததாமல் இருக்கலாமல்லவா? சந்திரவதனா செல்வகுமாரன் (3egfrLD6s, 5chwäbisch Hall

இது தானுங் தோ பெரியார்
உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு
போய் இருப் it.
அதே
இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும்
வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி
இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும்,
பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்ட கொள்கைகளையும்
திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி
உடையவன் என்றே கருதுகின்றேன்.
பெரியார் ஈ.வேரா அவர்கள் தன்னையும் தன் பணியையும் குறித்து வெளியிட்டமேற்கண்ட பிரகடனத்தை நாம் அனைவ ரும அறிவோம். பெரியாரைப் புரிந்து கொள்ளவும் விமரிசிக்கவும் முற்படும் யாரும் இக் கூற்றைப் பகுப்பாய்வுசெய்தல் அவசியம். தான் பணி செய்ய நேர்ந்த சமுதாயத்தை அவர் உலகிலுள்ள பிற சமுதாயங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் புள்ளி முக்கியமான ஒன்று. உலகிலுள்ள பிற சமுதாயங்கள் என அவர் குறிப்பிடுவது பெரும்பாலும் மேலைச் சமூகங்களை மனதில் கொண்டுதான் என்பதை அவரது பிற கூற்றுகளுடன் இணைத்து நோக்கும்போது புரிந்துகொள்ள முடியும். பிற சமுதாயங்கள் எந்த வகையில் நம்முடையதிலிருந்துவேறுபட்டு நிற்கின்றன? "மானமும் அறிவும் உள்ள வகையில் என்கிறபெரியாரின் கூற்றை விளங்கிக் கொள்ள நாம் சற்றே பின்னோக்கி மேலை கீழை சிந்தனை வரலாறுகளை
மேலை தத்துவ வரலாற்றை எழுதுபவர்கள் அதனைப் () புராதன காலம் 2) மத்திய காலம் (3) நவீன காலம் எனக் காலப்பாகுபாடு செய்வது வழக்கம். புராதன கால கிரேக்க தத்துவங்களுக்கு இணையாக இந்திய துணைக் கண்டத்தில் கங்கைச் சமவெளியில் உருவான வேத லோகாயத புத்த சமண தத்துவங்ளையும் பின்னர் தெற்கில் தமிழ் மண்ணில் விளங்கிய லோகாயத/ புத்த தத்துவங்களையும் குறிப்பிடலாம். கருத்து முதன்மைப் போக்குகளுக்கும் பொருள் முதன்மைப் போக்குகளுக்கும் இடையிலான போராட்டகாலமாக இதனை குறிப்பிடுவர். மேலைச் சூழலுக்கு இணையாகச் சொல்லத்தக்க அளவிற்கு வளமான தத்துவ உரையாடல் கீழைச் சூழலிலும் விளங்கியது.
கி.பி.5 - லிருந்து 15 - ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை மத்திய காலம் என மேலைச் சூழலில் குறிப்பிடுவர். இக் காலகட்டத்தில் உருவான மத்திய Ses) தத்துவம் என்பது அதற்கு முந்திய பொருள் முதன்மைக்கூறுகளை எல்லாம் வீழ்த்தி முற்றிலும் தத்துவத்தை மதத்தின் எடுபிடியாக்கியது என்கிற கருத்தை மேலை சிந்தனை வரலாற்றை எழுதும் மாறுபட்ட கருத்துடையவர்களும் singuisirstsori. "PHILOSOPHY WAS A HAND MAID OF RELIGION" stors சொல்வது வழக்கம். மடாலயங்களின் ஆளுமையின்கீழ் தத்துவமும் மதவியலும் (THEOLOGY) ஒன்றாக்கப்பட்டன. இந்திய துணைக்
கண்டத்திலும் வடக்கிலும் தெற்கிலும் இதற்கு இணையான ஒரு
(41)

Page 23
வரலாற்றைச் சுட்டிக்காட்டமுடியும். புத்த, சமண மதங்கள் வீழ்த்தப்பட்டதோடு அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம் என்கிற வேதாந்தங்களும் இவற்றிலிருந்து பெரிதும் வேறுபடாத சைவ சித்தாந்தமும் இங்கே உருவாகி கோலோச்சின. அரசுகளும் வன்முறையாக ಇಂಗ್ಹ್ಸ್ಗಿ
ஸ்தவமும் இங்கே வேதங்களும் essess A ඝ% இவ்வாறு சிந்தனை, தத்துவம், பண்பாடு, மொழி என எல்லாக்கூறுகளும் மதத்தின் வ்ல்லமைக்குள் ஒடுக்கப்பட்டன. கடவுள் மற்றும் பிரமாணங்களின் மீதான விசுவாசமே முதன்மையாக்கப்பட்டு அறிவு, உணர்வு உள்ளிட்ட மனிதாளுமைக் கூறுகள் கீழ்த்தள்ளப்பட்டன
பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்குப்பின்னர் இப்படி ஒரு ஒே மேலைச் சிந்தனை வரலாற்றிற்கும் கீழைச் சிந்தனை வரலாறாற்றுக்குமிடையே நம்மால் சுட்டிக்காட்ட முடியாது. அறிவியலும் தொழில் நுட்பமும் அதனை ஒட்டிய வணிகம், குடியேற்றம் முதலிய பல்வேறு செயல்பாடுகளும் மேலைச் சூழலில் வியத்தகுமாற்றங்களை ஏற்படுத்தின. இதனை ஒட்டி தத்துவவியல் மேலைச் சூழலில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியுற்றது.
இருபதாம் நூற்றாண்டு, என்றெல்லாம் நவீன காலததைய usుడిమిg உட்ப்பிரிவுகளாகப் பிரிக்கக்கூடிய அளவிற்கு విడిதததுவப பாரம்பரியம் பெருவளர்ச்சி கண்டது. அனுபவ வாதம், வுவாதம
அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்தும் என்றெல்லாம் பல்வேறு தத்துவ அறிதல்முறைப் போக்குகள் உருவாகின.
பதினைந்தாம் நூற்றாண்டை ஒட்டித் தோன்றிய கர்ட்டீசிய அறிதல் முறை அறிதலில் மனிதனின் பங்கை முதன்மைப் படுத்தியது.பகுத்தறிவின் மேன்மையைப் பறைசாற்றியது பகுத்தறிவு கோலோச்சிய காலகட்டமாக, தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளைக் குறிப்பிடுவர்.மேற்குறிப்பிட்ட பல்வேறு தத்துவப் போக்குகளையும் நவீனத்துவம் என்கிற ஒரே பிரிவிற்குள் கொண்டுவரத்தக்க
பொதுமையான அம்சம் என எதையாவது சொல்லவேண்டுமானால் அது தத்துவத்தை மதவியலின் பிடியிலிருந்து விடுவித்தது என்பதுதான். தமக்குள் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டதாயினும் இவை அனைத்தும் கிறிஸ்துவத்தை பிரமாணமாக ஏற்றுக்கொள்வதை மறுத்தன. மொழி, பண்பாடு, கல்வி, அரசியல் எனப் பல துறைகளும் பல்வேறு மட்டங்களில் மத நீக்கம் (SECULARISATION) செய்யப்பட்டன. இவை அனைத்தும் மேலைச்சூழலில் என்பதை நாம் நினைவு கொள்ளவேண்டும்.
பதினைந்தாம் நூற்றாண்டை ஒட்டித் தோன்றிய இந்த மாற்றங்கள் இந்தியத்துணைக்கண்டத்திற்குள் வடக்கிலும் சரி தெற்கிலும் சரி நுழையவேயில்லை. அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அங்கே spill- புரட்சிகரமான மாற்றங்கள் இங்கே தோன்ற இயலாமல் சந்தர்ப்பத்திற்கு ஒத்திவைத்துவிட்டு அதன் விளைவுகளின் மீது
அடிப்படையிலான முக்கிய விளைவு காலனிய அடிமைத்தனம் என்றால் சிந்தனை, தத்துவ பண்பாட்டு அடிப்படையிலான விளைவு என்பது இங்கே இந்த துறைகளில் மத நீக்கம் ஏற்படாமல் போனதேயாகும். இங்கு நிலவிய உலகக் கண்ணோட்டத்தின் சகல அம்சங்களும் வேதங்களை, பார்ப்பனியத்தைப் பிரமாணமாகக் கொண்டவையாகவே தொடர்ந்தன. இந்த அடிப்படையிலேயே
'userer பிலான மனிதத் தன்னி உருவாக்கப்பட்டன. ஒவ்வொருவனும் தன்னை ஒரு பார்ப்பனனாக, சூத்திரனாக, பறையராகவே உணரும் சூழலும் அந்த அடிப்படையில்

விதிக்கப்பட்ட வாழ்நிலையை சகித்துக்கொள்ளும் உள நிலையும் மொழி வழமைகள், அன்றாட நடவடிக்கைகள், அரசியல், சட்டம் என அனைத்தும் மதக்கறை படிந்ததாகவே அதாவது பார்ப்பனியக்கறை படிந்ததாகவே விளங்கின.இந்த மொழியின் ജ്ര சிந்தித்துக் கொண்டு, இலக்கியமாக்கிக் கொண்டு, இந்தக் குறியீடுகளின் ஊடாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு ஒவ்வொருவரும் இந்தச் சூழலுக்குரிய தன்னிலைகளாக (suBJECTS) மாறுவது தவிர்க இயலாதது ஆகியது.
இங்கே முக்கியமாகக் கருதத்தக்க அம்சம் என்னவெனில் வடமொழிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தமிழ் மொழியும், பார்ப்பனியத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சைவவேளாளப் பண்பாடும், வேதாந்தத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட சைவ சித்தாந்தமும், சைவ இலக்கியங்களும் அடிப்படையில் பார்ப்பனியக் கறைபடிந்தவையாகவும் ஏதோ ஒரு வகையில் வருனாசிரமத்தை ஏற்றுக்கொண்டவையாகவும் வேதங்களையும் பார்ப்பனியத்தையும் பிரமாணமாக கொண்டவையாகவுமே இருந்தன என்பதே. சாதிப் படிநிலையில் மேலே மேலே பேகப்போக இந்ததன்மைகள் கூடிக் கொண்டேவருவது குறிப்பிடத்தக்க ஒன்று. இத்தகைய பிரிவினரே சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவாகளாக இருப்பதனால் இத்தகைய பார்ப்பணியக் கண்ணோட்டமே எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி "பொது ஜன அபிப்ராயமாக" சகல மனிதர்களிடமும் நிலவியது. காலனியச் செயற்பாடுகளின் ஊடாக இங்கே நுழைந்த அறிவியலும் தொழில்நுட்பமும் மேலைச் துழலில் மதநீக்கம் செய்யும் கருவிகளாக அமைந்தது போலல்லாமல் இங்கே அவையே மதமயமாக்கலுக்குள்ளாக்கப்பட்டன; அதாவது பார்ப்பனிய மயமாயின. கணிப்பொறி சோதிடக் கருவியாக மாறியது இப்படித்தான்.
இத்தகைய துழலில், பின்னணியில் பணியாற்றக் களம் புகுந்தவர்தான் தோழர் பெரியார். மதநீக்கம் நிறைவேற்றப்படாத சூழலில் மனிதனுக்குச் சுயமரியாதை தன்மதிப்பு இருக்காது. எனவே அவன் மதத்தின் பெயரிலான ஆதிக்கங்களுக்கு அடிமையாகிக் கிடப்பான். இந்தியத் துணைக் கண்டத்தில் மிகத்தெளிவாக வருண அடிப்படையில் இந்த ஆதிக்கச் சக்திகளை அடையாளம் காட்டமுடியும். அவர்களே பார்ப்பனர்கள். பார்ப்பனியத்தின் விளைவாகச் சுயமரியாதை இழந்து கிடக்கும் மக்கள் திரளைப் பெரியார் மூன்று பிரிவினராக அடையாளம் காணுவதை அவரது எழுத்துக்களைப் படிக்கும் யாரும் புரிந்துகெள்ளமுடியும். அவர்கள் (). துத்திரர்கள் 2) தீண்டப்படாதவர்கள் (3) பெண்கள். சுமார் அய்ம்பதாண்டு காலம் * பொதுஜன அபிப்ராயத்திற்கு எதிராக பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்ட பெரியாரின் விளிப்புகள் அனைத்தும் இம்மூன்று பிரிவினரை நோக்கியே அமைந்தன. இம்மூன்று பிரிவினரும் சுயமரியாதை பெறுவதன் மூலமாகவே-அதாவது விடுதலைபெற்ற தன்னிலைகளாக மாறுவதன மூலமாகவே - இங்கே சாதி ஒழியும் தீண்டாமை போகும்; - தன்னிலை உருவாக்கத்திற்கு தடையாக இருப்பது சகல துறைகளிலும் கலந்து கிடக்கும் மத உணர்வே. எனவே இத் சமூகத்தின் சகல அம்சங்ளையும் மதநீக்கம் செய்வதே இந்தச் சமுதாயத்தைத் தன்மானமும் பகுத்தறிவும் உள்ளதாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்ட ஒருவனின் தலையாய பணியாக இருக்கமுடியும். தமிழ் மொழிபற்றிச் சொல்லவரும்போது
தமிழ் மக்களின் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் அல்லண்ட முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும்

Page 24
உதாரணமாக மக்கள், தேவர் நாகர் உயர்தினை' என்றால் என்ன ? நாகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தை போதிக்கும் சூழ்ச்சிதானே இது? பக்கம் 976) எனப் பெரியார் குறிப்படுவதை நாம் இந்தப் பின்னணியிலேயே விளங்கிக் கொள்ளமுடிகிறது. பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேச வரும்போதும் எவ்வாறு சொத்துறவு, தனியுடமை முதலியவற்றோடு ஆணாதிக்கம் இணைந்துள்ளது என்பதை விளக்கமாகச் சொன்னபோதும் (பக். 108, 160-170) நமது சூழலில் எவ்வாறு "கற்பு" போன்ற கற்பிதங்கள் பொருளியல் காரணிகளையும் மீறி மதவியற்கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றார். ஆங்கிலத்தில் கற்பு என்பதற்குச் சமமான CHASTTY VIRGNITY போன்ற சொற்கள் உடலுறவுக்கு முற்ப்பட்ட சுத்தத்தன்மையை மட்டுமே குறியீடு செய்கின்றன.
ஆனால் ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கின்ற பத்த்திற்கு பதிவிரதை என்கின்ற பொருள் கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில் தான் கற்பு என்கின்ற
அபிப்பிராயம். அதாவது பதியை கடவுளாகக் கொண்டவள்; அடிமையாய் இருப்பதையே விரதமாக கொண்டவள், பதியைத்தவிர வேறு யாரையும் கருதாதவள் என பொருள் கொடுத்திருப்பதுடன் புதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி யஜமான், தலைவன் என்கின்ற பொருள்கள் இருப்பதால் அடிமைத் தன்மையை இவ்வார்த் ബ് படுத்துகின்றன. பக்கம் 157) என்பது பெரியார் கூற்று. இத்தகைய பார்ப்பணியமான மொழியியற் / கலாச்சார குறியீட்டுச் செயற்பாடுகள் அடிமைத் தன்னிலை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இவற்றை தகர்ப்பது என்பது இத்தகைய அதிகார்ங்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் எதிரான, இவற்றை ஏற்றுக்கொள்ளாத தன்னிலை உருவாக்கத்தின் முதற்தேவையாகிறது. முதலில்)மானத்தைக் கவனித்துக்கொண்டு பிறகு உடைமை பற்றிக் கவனிக்கலாம்” பக்கம் 94) என்று அவர் கூறுவது அடிமைத் தன்னிலை உருவாக்கம் குறித்த அவரது கரிசனத்தையேக் காட்டுகிறது. உலகிலுள்ள 6f(scu பெருங்கொடுமை இந்தியாவில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைதான் எனச் சொன்ன பெரியார் பக்கம் 69 பெண்ணடிமை ஒழிப்பை போலவே தீண்டாமை ஒழிப்பிலும் பாதிக்கப்பட்டவர்களே அதற்காக மனப்பூர்வமாகப் போராட முடியும் என்பதை வலியுறுத்தியதோடு (பக்கம் 84) அதற்குத் தடையாக இருப்பது நமது அடிமைத் தன்னிலையே எனச் சுட்டிக்காட்
ஆகவே கீழ்ச்சதித்தன்மை ஒழியவேண்டும் என்று கருதுகிற ஒருவன் - அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்ற எண்னத்தை விட்டு விட்டு நமது உழைப்பின் பயனைச் ர், பாடுபடாத மக்கள் அனுபவிக்கக் கூடாது என்கிற உருதி கொண்டு - பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை என்கிற உறுதியோடு,சோம்பேறிக்கூட்டத்திற்கு எதிராக எவன் போர் தொடுக்க முனைந்து நிற்கிறானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக் கொள்ள அருகதை உள்ளவனாக ஆகிறான். அதை விட்டு விட்டு மதக்கட்டளையும் கடவுள் பும் கொண்ட ஒரு அடிமை - ஒரு தாழ்ந்த சாதிக்காரன் - ஒரு நாளும் விடுதலை அடையவோ முன்னேற்றமடையவோ முடியாது பக்கம்72) என தாழ்த்தப்பட்டோர் மாநாடொன்றில் பேசும் போது ப்பிட்ட பெரியார் பெண்களை நோக்கிப் பேசும் போது குறி
அனேக வருடப் பழக்கவழக்கங்களால் தாழ்ந்த சாதியார்

எனப்படுவோர் எப்படித் தங்கள் தாழ்ந்த வகுப்பர் என்பதை ஒப்புக் கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும் நடுங்கவும் விலகவும் முந்துகிறார்களோ, அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண்மக்களின் சொத்துகள் என்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்களென்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில்
வேண்டும யொழிந்து , 紫ே பிற்கும் மூாகும2 படநதக
ept
ஒழியவேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக்கொண்டருக்க வேண்டுமென்கிற கொடுமையான
கள் சட்டங்கள் மாயவேண்டும் கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மையன்பை , காதலை மறைத்துக்கொண்டு -காதலும் அன்புமில்லாதவனுடன் இருக்கவேண்டுமென்கின்ற
எனக்கூறியது குறிப்பிடத்தக்கது. சூத்திரர்களையே தனது பிரதான விளிப்புக்குரியவர்களாக நிறுத்திச் செயல்பட்ட பெரியாரின் சொல்லாடல்கள் கிட்டத்தட்ட முழுமையுமே துத்திரத் தன்னிலையை உடைக்கும் நோக்கிலேயே அமைந்தன. தத்திரன் என்றால் தாசிமகன்" என்கிற பொருளைத் திருப்பித் திருப்பிச் சுட்டிக் காட்டிய அவர் தத்திரர் ம், தாழ்த்தப்பட்ட்வர்க ம், பெண்க தங்களுக்கு விதிக்கப்பட்ட அத்துக்களை மீறவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி வந்தார். சாதி, கோயில், திருமணம் என்கின்ற மூன்று நிறுவனங்களையும் அவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார் தாக்கிவந்தார் இவை குறித்த புனைவுகளைக் கடுமையான பிரச்சாரங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலமாகக் கட்டுடைத்து வந்தார். நமது சூழலில் விடுதலைக்கான தன்னிலைகள் உருவாவதற்கான மூன்று பெரும் தடைகளாக இவற்றை முன்னிலைப்படுத்தி துனைத் தடைகளாக நமது அரசியற் சட்டம், உச்சுநீதி மன்றம், இந்திய ஒற்றுமை இணைநிலைப்படுத்தித் தாக்கிவந்தார். இந்த நிறுவனங்களுக்குப் பிரமாணங்களாக வேதங்களும், பார்ப்பணியமும்
விளங்குவதையும் இந்த நிறுவனங்களுக்குப் பக்கத் துணைகளாக நமது மொழி, இனம், நாடு, பண்பாடு ஆகியவை குறித்தப் புனைவுகளும் விளங்குவதையும் சரியாக அடையாளம் கண்டு அவற்றை தகர்க்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திவந்தார். "பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்" ஆகிய எல்லாவிதமான அபிமானங்களிலிருந்தும் தாழ்த்தப்பட்டவர்கள் விடுபடுவது அவர்களது விடுதலைக்கு அவசியம் என்றார் பக்கம் 75) வேறென்ன அபிமானம் விடுதலைக்கு வழிவகுக்கும்?
தேசாபிமானம் என்ற யோக்கியமற்ற சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாகக்கூடாது. அது சோம்பேறிகள், காவிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நரகம் என்பது போன்ற முடநம்பிக்கையாகும். உங்களுக்கு இன்று சுயயிாயாதை
என்றவர் கூறியுள்ளதைக் கவனிக்கும் போது மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பதொல்லாம் இயற்கையான ஒன்றல்ல, வெறும் கட்டமைப்பே என்கிற புரிதலை அவர் கொண்டுள்ளது விளங்கிவிடுகிறது.
1907 லிருந்து அவரது அரசியல் வாழ்க தொடங்கியதெனினும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய 1925ம் ஆண்டை அவரது இரண்டாவது கட்ட அரசியல் வாழ்வின் தொடக்கப்புள்ளி எனலாம்.1927ம் ஆண்டில் முற்றிலும் அவர் காந்தியச் அடுத்த சுமார் நாற்பத்தெட்டாண்டு கால அரசியல் வாழ்வில்

Page 25
வியக்கத்தக்க அளவிற்கு கருத்து செயல்பாடுகளில் மாற்றமின்றி விளங்கினர் என்பது த்தக்கது. சுயமரியாதை பிரச்சாரம், இந்தி எதிர்ப்பு:நாட்டுப்பிரிவினை, வகுப்புவாரி ஒதுக்கீடு புத்தமத ஆதரவு, பெண்கள் பிள்ளைப் பேற்றை விடவேண்டும் என
மனுநீதி எரிப்பு, அரசியல் சட்ட எரிப்பு, இந்திய தேசப்பட எரிப்பு பிள்ளையனர் சிலை உடைப்பு, ராமன் சிலை அவமதிப்பு தீண்டாமை மற்றும் பார்ப்பனியத்தின் பேரால் ஒதுக்கப்பட்ட வெளிகளுக்குள் அத்துமீறி நுழைதல் என்பன 1923 தொடங்கி 1973 வரை அவரது செயற்பாடுகளாக இருந்துவந்துள்ளன. சமூகப்புரட்சி என்பதைக் காட்டிலும் அத்தகைய புரட்சியை உருவாக்குவதற்கான தன்னிலைகளாகச் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரை உருவாக்குவதே தலையாய பணி என்கிற நோக்கில் செயற்பட்ட அவரது செயற்பாடுகளில் முரண்களைக் காட்டிலும் தொடர்ச்சியே அதிகம்.
பெரியாரை விமர்சிக்க முனைபவர்கள் சற்று அவசரப்பட்டு அவரிடம் கோட்பாட்டுத் தெளிவில்லை என்றும், முன்னுக்குப்பின் முரண்கள் இருந்தனவென்றும், கொச்சைப் பொருள்முதல் நோக்குடன் அணுகினார் என்றும் சொல்வது வழக்கம். -
ஒருசில நண்பர்கள் அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பெரியார் மீதான பல்வேறு வாசிப்புகளில் இவையும் ஒன்று, இவையும் சாத்தியம் என்பதில் நமக்குக் கருத்துமாறுபாடு இல்லை. எனினும் நவீன சிந்தனைகளின் வெளிச்சத்தில் பார்க்கும்போது இந்த விமர்சனங்களில் பல பொருளற்றுப் போவதையும் சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. எடுத்துக்காட்டாக பகுத்தறிவு குறித்த பெரியாரின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தல் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இருவேறு பார்வைகள் ஊடாடுவது விளங்கும்.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிநாடி ஆகும் ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ - a காட்டுமிராண்டி என்பது பொருள் பக்கம் 129 என பகுத்தறிவின் புகழ் பாடியவர் பெரியார். இதனையொத்த ஏராளமான மேற்கோள்களைப் பெரியாரில் நாம் சுட்டமுடியும். பகுத்தறிவாளர் கழகங்களை உருவாக்குவது அவரது நடைமுறைகளில் ஒன்றாகவும் இருந்து வந்திருக்கின்றது.
இதே பெரியார் இன்னொரு பக்கம் மனிதன் மற்ற உயிர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் உயர்வான உயிரல்ல என
தன் பின்ளைக் குட்டி, பேத்து பிதிர் ஆகிய பின் க்கதி ப் பற்றி ட்டாள் ந்தறிவுள்
மனிதனுக்குத்தான் இருக்கிறதேயொழிய பகுத்திவில்லாதவைகளுக்கு இல்லை-பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும்தன்தினத்தை வருத்தி வாழ்வதில்லைதன் இனத்தை கீழ்மைப்படுத்துவதில்லை தன் இனத்தின் உழைப்பிலேயே
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப் படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் த்தின் உழைப்பிலேே க்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து கொள்கிறான்.
உதாரணமாக நாய் கழுதை பன்றி என்கின்ற இழிவான மிருகக் கூட்டத்தில் பார்ப்பன சாதி பறை சாதி நாயுடு சாதி முதலி சாதி என்கின்ற பிரிவுகள் கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்தப் படுகின்

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கின்றான். மனிதன்
வஞ்சிக்கின்றான்.
பகுத்தறிவின் பயன் இதுவாயிருக்கும்போது பகுத்தறிவு இருப்பதாலேயே மனிதன் மேன்னையானவன் என்று எபபடிச
சொல்லழ்யும்? (பக் 19 என்று மனிதனின் பகுத்தறிவைக் கேலி செய்யவும் செய்கிறார் விளங்கிக் கொள்ள நவீன மேலைத் தத்துவ வளர்ச்சியின் சில கூறுகள் நமக்கு உதவி செய்யலாம்.
மேலை மரபில் மதத்தின் பிடி தளர்த்தப்பட்டு பகுத்தறிவு கோலோச்சத் தொடங்கியதைப் பற்றி முன்பு குறிப்பிட்டோம். பகுத்தறிவின் ஆட்சி உச்சத்தில் இருந்த அக் காலகட்டத்திலேயே பகுத்தறிவின் சாத்தியப் பாடுகளையும் எல்லைகளையும் கான்ட் போன்ற தத்துவவியலாளர்கள் கேள்விக்குள்ளாக்கினர். தர்க்க வயப்பட்ட சிந்தனை முறை, பகுத்தறிவு சார்ந்த ஆறிதல் முறை, காட்டீசிய அணுகல் முறை என்பன தொடர்ந்து மேலை மரபில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தன. இருத்தலியல், நிகழ்வியல் பின்
போன்றோரை உள்ளடக்கி ஒரு அதர்க்க வகைப்பட்ட (Non Rational Philosophers) சிந்தனையாளர் பாரம்பரியம் ஒன்றும் அங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அறிவு என்பது எவ்வாறு அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதை ஃபூக்கோ போன்றோர் விளக்கியதோடு அறிவாளிக்கால உருவாக்கங்களான சிறைச்சால மருத்துவமனை, மனநோய் விடுதி போன்ற நிறுவனங்தன் அதிகார உள்ளடக்கங்களைத் தோலுரித்தனர். இவற்றையொட்டி பின் நவீனத்துவச் சிந்தனையாளர்கள் "அறிவின் வன்முறை', "பகுத்தறிவின் பயங்கரம்" போன்ற கருத்தாக்கங்களை முன் வைக்கின்றனர். பகுத்தறிவிற்கு மாற்றாக ஆசை (desire) உடல்,
முரண், பன்மைத் தன்மை போன்றவற்றை இவர்கள் முன்
எனவே பகுத்தறிவு, தர்க்கம் ஆகியவை வருணாசிரமம் உள்ளிட்ட அதிகாரங்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தக் கூடிய சாத்தியத்தை நாம் மறந்துவிடக் கூடாது. பெரியார் இது குறித்த உணர்வுடையவராக இருந்தார் என்பதையே பகுத்தறிவு பற்றின அவரது மாற்றுக் கருத்துக்கள் சுட்டுகின்றன. எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்திற்குமான முரணற்ற தீர்வாக (Meta Narative) அவர் பகுத்தறிவு உட்பட எதையும் முன்வைக்க விரும்பாததையே இது காட்டுகிறது. முற்றுண்மையான (Absoluts) வரையறைகளை உருவாக்குதல், முழுமையான கோட்பாட்டுருவாக்கங்களைச் செய்தல் என்பதற்கு அவர் தொடர்ச்சியாக எதிராகவே இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒழுக்கம் பற்றிய அவரது சொல்லாடலிலும் இதனைக் காண முடியும்.
கடவுளரின் ஒழுக்கக் கேடுகளை அவர் கண்டித்துள்ள விவரங்களை நாம் அறிவோம். "நம்மிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும்" (பக். 1085). "ஒழுக்கக் கேட்டை களைந்தே ஆக வேண்டும்" (பக். 1087) எனவும் குறிப்பிடும் அவரே இன்னொரு பக்கம் பெண்களை நோக்கி ஆசை. நாயகர்களை வைத்துக் கொள்ளுங்கள் (பக். 108) என்கிறார். மேலும்,
பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு தழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது கற்பு காதல் சத்தியம் நீதி ஓமுக்கம் என்பன எல்லாம்

Page 26
பெரியவர்கள், பூச்சாண்டி, பூச்சாண்டி என்பதுபோல் இவை எளியோரையும் பாமர மக்களையும் வலுத்தவர்களும்
என ஒழுக்கம் என்பதை ஒரு சூழ்ச்சியான கற்பிதமாகக் கண்டிக்கிறார். ஒழுக்கம் என்பது எவ்வாறு வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாய்க் கட்டமைக்கப்படுகிறது என்பதை விரிவாக விளக்குகிறார்.
தாசிக்கு ஓமுக்கம் ஒரு புருஷனையே நம்பி
ஸ்திரி என்பவளுக்கு ஒமுக்கம் அயோக்கியனானாலும்
என ஒழுக்கத்தைக் கற்பிதமாகச் சொல்வது கவனிக்கத் தக்கது. எனில் "மனிதனுக்கு ஒழுக்கத்தைப் பரப்ப வேண்டும்" (பக். *084) என அவர் கூறுவதன் பொருளென்ன?
ஒழுக்கம் x பக்தி என்றொரு இருமையைச் சுட்டிக்காட்டி ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது" (பக். 1085) என்று
பேசவில்லை, உடல் சார்ந்த இச்சைகளை அவர் ஒழுக்கக் கேடு எனச் சொல்லவில்லை. மாறாக "உணர்ச்சியும் இந்திரியச் செயலும் ஆசையும் ஜீவ சுவாம்" என்பதோடு "பசி நித்திரை, புணர்ச்சி மூனறும முக்கிய இயற்கை அனுபவம்" பக். 173 என்கிறார்.
ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப்போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஓமுக்கமாகும் பக். 1084) என்பதே அவரது ஒழுக்கம் பற்றியவரையறையாகும். ஏதொன்றையும் சுட்டிக்காட்டி அல்லது அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே என எதிர்மறையாகச் சொல்லாமல் பல்வேறு விதமான தூலமான சாத்தியங்களுக்கும் இடமளிப்பதாக இவ்வரையறை அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வரையறை குறித்த வரையறைகளை அவர் மீறுகிறார்.
கூறுகளை, கறைகளைத் துடைத்தெறிய வேண்டுமெனக்கூறி
மொத்தத்துவப் போக்குகள் அரசியல் ரீதியான எதேச்சாதிகாரங்களுக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறும் நமக்கு நிறுவிவிட்டது. இந்தச் சூழலில் ஹெகலியத் தாக்கமுடைய சாராம்சவாத, மொத்தத்துவக் கோட்பாடுகளையும்

அளவுகோல்களையும் கொண்டு பெரியாரினர் பார்வைகளை கொச்சைப் பொருள்முதல்வாதம் என்றெல்லாம் சொல்வதன் பொருத்தமின்மையையும் ஆபத்தையும் தோழர்கள் யோசிக்க
(Sophisticated Philosopher) gyso6o. UNguluressassonsar Brėsé pař எழுதிக்கொன் தினந்தோறும் அதிகக் கல்வியறிவற் கொண்டிருந்த கச்சாவான சிந்தனையாளர். அவர் எழுதியவை ஆய்வேடுகள் (Theatre) அல்ல. பிரச்சார் வெளியீடுகள். ஒரு மிக நீண்ட காலகட்டத்தில் (சுமார் அரை நூற்றாண்டு) பல்வேறு
அவர். அவர் பேச்சனைத்தையும் உரையாடல்களின் அங்கமாகவே நாம் பார்க்க வேண்டும். அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகள், அவருடைய பேச்சுகளுக்கு வந்த எதிர்வினைகள், அரசியல் களங்களில் ஏற்பட்ட விளைவுகள் எல்லாவற்றையும் சகபிரதிகளாகக் கொண்டுதான் அவரது பிரதிகளை மதிப்பிட வேண்டியிருக்கி
வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல இறந்த பின்னும் பல்வேறு விதமான அவதூறுகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகி வருபவர் பெரியார். பார்ப்பணியமும் இந்துத்துவமும் உயிர் பெற்று வரும் துழல் இது சமீபத்தில், பெரியாரின் மீது கடுமையான அவதூறுகளைப் பொழிந்துள்ள வெளியீடு குணாவால் எழுதப்பட்டுள்ள திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது தனித் தமிழநாட்டு இயக்கங்கள் பலவும் இந்நூற் கருத்துக்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரவேற்பது குறிப்பிடத் தக்கது. கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பெரியார் திட்டமிட்டு தமிழுணர்வை மழுங்கடிக்கும் சதி நோக்குடன் திராவிடக் கருத்தாக்கத்தை முன்மொழிந்து அரை நூற்றாண்டு தமிழ் எழுச்சியைத் தடுத்தார் என இந்நூலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரியார் எதிரிகளிடம் கையூட்டுப் பெற்றார் என்பன போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், இடங்கை - வலங்கை போராட்டங்கள், களப்பிரர் ஆட்சி போனறவை குறித்த திட்டமிட்ட வரலாற்றுத் திரித்தங்கள் போன்றவற்றுடன் வெளிவந்துள்ள குண்ாவின் அபத்தங்களை விரிவாக மறுத்துரைக்க இது ஏற்ற சந்தர்ப்பமன்று. ஒன்றைமட்டும் இங்கே சுட்டிக்காட்டுவது உசிதம் திராவிடர் என்கிற கற்பிதத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டிவந்தது என்பதைப் பெரியாரே பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார். சாதி ஒழிப்பே தன்னுடைய பணி எனச் சொல்லிக் கொண்ட பெரியார் பக். 1012) அதற்குரிய சுயமரியாதை உணர்விற்குத் தடையாக உள்ள பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்றலை முதன்மையாகக் கொள்ள வேண்டியதாயிற்று. பார்ப்பனியத்தைத் தவிர்த்த தன்னிலைத் திரளொன்றை
தமிழன் என்று சொன்னால் பார்ப்பானும் வந்து
சேர்ந்து கொள்வனே என அவர் குறிப்பிட்டார். பார்ப்பான் தன்னை திராவிடன் எனச் சொல்லிக் கொள்ள மாட்டானல்லவா என வினவினார். (பக். 245) பார்ப்பனர்கள் ஆரிய சமாஜம், பிராமண மகாசபை என்றெல்லாம் இணைகிறார்கள். அதற்காக நாம் "தத்திரர்
முடியுமா, அதனால்தான் 'திராவிடர் கழகம்" ஆனோம் என விளக்கமளித்தார் (பக். 85). மற்றபடி அவர் 'திராவிடர் என்ற, என்பதற்கு அவரது பிரதிகளில் ஏராளமான ஆதாரங்களைச் கட்டமுடியும், நரம் தமிழர்கள் (பக்.208)நம்நாடு தமிழ்நாடு'க், 89என்றெல்லாம் கூறியுள்ளார். 'சாதி ஒழிப்புக்கு ஒரே வூழிநாட்டுப் பிரிவினைதான் என்று கூறிய அவர் அந்த நோக்கில் வைத்த முழக்கம் முதலில் (938 "தமிழ்நாடு தமிழருக்கே" என்பதுதான்.

Page 27
முன்னிட்டு "திராவிடநாடு திராவிடருக்கே" என முழக்கத்தை மாற்றினார். சுயமரியாதை (கட்சி), குடியரசு(இதழ்) போன்ற பெயர்களைே ந்தார். 1944ல் "பச்சைத் r"
ண்ணாவின் இத்: 0 . اس سس۔ خشே சைத தமிழ பெயர் மாற்றப்பட்டது. அதற்கான தீர்மானத்தின் பெயரே அனனத்துரை தீர்மானம் என்பது தான்.
திராவிடப் பகுதிகளை ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசம் என நேரு அரசு அமைக்க முற்பட்ட போது தமிழராகிய நமக்குத்தான் அது ஆபத்து (பக். 729, 730 என அதனை எதிர்த்து நிறுத்தினார். ஆந்திரப் பிரிவினைக்குப் பிறகு "கர்நாடகமும் கேரளமும் சீக்கிரம் ஒழியட்டும்” எள்றார் (பக். 730). அவை எல்லாம் பிரிந்த பின்னர் மீண்டும் "தமிழ்நாடு தமிழருக்கே" (1957) என்கிற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார்.
பெரியார் மீது வைக்கப்டும் விமர்சனங்களில் இன்னொன்று தலித் பிரச்சனையில் பெரியார் போதிய அக்கறைகாட்டவில்லை என்பது இது குறித்து இத்தொகுப்பிலுள்ள கூட்டு விவாதத்தில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளதை வாசகர்கள் காணலாம். ஒன்றை நாம் தெளிவாக்கிக் கொள்வது அவசியம். தலித் விடுதலைக்கான திட்டங்களை முன்மொழிந்தவர் என்றோ அதனைச் செயலாக்கியவர் தகுதியை எந்நாளும் கோரியதில்லை. தன்னை ஒரு சூத்திரனாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். (uá5.1030). தாழ்த்தப்பட்டோர்களையும் பெண்களையும் நோக்கி விளிக்கம் போதெல்லாம் நீங்கள்' என்றே விளித்தார். எனினும் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலித் விடுதலைப் போராளிகளின் சகல முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவாளராகவே எந்நாளும் விளங்கினார். அம்பேத்கரின் மத மாற்றத்தை ஆதரித்து பூனா ஒப்பந்தத்தை எதிர்த்தது 6 எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும்,
பறையர் பட்டம் போகாமல் தத்திரர் பட்டம் போகாது என்பதை எடுத்துரைத்த பெரியார் பக் 57), பிற்படுத்தப்பட்டவர்கள் இழிவாக நடத்தும்போது அதைத் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்துநிற்கவேண்டும், சாத்தியமில்லாவிட்டால் atsoy | புறக்கணித்து வெளியேற வேண்டும் என்றார் (பக். 58) நீதிக்கட்சி மாநாட்டில் தலைமையேற்றுப் பேசும்போது (1940
எப்படி ஆரிய மக்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களே அப்படி திராவிடர்களுக்கு ஆதி திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களப் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக் கோடான நிலைமையாகும். என்பதோடு திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதிதிராவிடர் என்கிற பெயரே மாற்றப்பட்டு இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கிற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பதும், திராவிடருக்கும் ஆதி திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் தேங்களும் ஆந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எனது ஆசை இந்த இரு நோக்கங்களையும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டதென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன் (பக். 74 என்றார். இந்த நோக்கம் ஜஸ்டிஸ் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் என்கிற பாரம்பரியத்தில் திரண்ட இணைந்தது என்பது வேறு கதை. பார்ப்பனியத்திற்கெதிராக தத்திரமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒரு மிக முக்கியமான சனநாயகப் பணி என்கிற வகையில் பெரியாரின்
பங்களிப்பை நாம் மதிப்பீடு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தவிரவும் அம்பேத்கர் அவர்கள் சாதி ஒழிப்பின்றி தீண்டாமை ஒழிப்பு சாத்தியமில்லை எனச் சொல்லியுள்ளதுடன் பெரியாரின் சாதி ஒழிப்புப் பணியை இணைத்துப் பார்க்க வேண்டுவதும் அவசியம். முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டதை ஆதரித்த ஒரே அரசியல் தலைவராக மட்டுமே இருந்தார் என்பதும் இங்கே கருதத் தக்கது.
தமிழ்ச் சூழலில் செயற்பட்ட எதிர்க் கலாச்சாரச் சிந்தனையாளர் பெரியார். தேசீயம், மொழிப்பற்று, ஒழுக்கம் முதலியனவெல்லாம் வெறும் கற்பிதங்களே என்பன போன்ற நவீன கருத்துக்களையும், பெண்ணியம் தொடிர்பான புரட்சிகரமான சிந்தனைகளையும் முன்
மொழிந்தவர். சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பெண்கள் ஆகிய தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடிமைத் தன்னிலைகளைத் தகர்க்கும் நோக்கில் சிந்தனைத் தளத்திலும் செயற் தளத்திலும் நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். அவரது சிந்தனைகளை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவோ எலலாக காலங்களுக்கும் எல்லா மக்களுக்குமான விடிவைச் சொல்லும் பெருங்கதையாடலாகவோ முன் வைப்பது எங்கள் நோக்கமல்ல,
தஞ்சாவூர்
subur 1995
அ. மார்க்ஸ் பொ. வேல்சாமி
ரவிக்குமார்
குறிப்பு: தொகுப்புரையில் காணப்படும் மேற்கோள்கள் யாவும் திரு. வே. ஆனைமுத்து அவர்களின் பெரியார் சிந்தனைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. பக்க எண்கள்
SFSKIS
இதழ் மற்றும் தொடர்புகளுக்கு,
நன்றி:நிறப்பிரிகை
ஷோபாசக்தி Shobasakti(a)hotmail.com
சேனன் SenannGhotmail.com
D(36OTIT
m1a2n3o4GDaol.com S. Manoharan (Esc. 13) 210, Ave. du 8Mai 1945 93150 Le Blanc Mesnil, France (51)

Page 28
.சுணைக்கித - நிரூபா -
கறுப்பு அதில வெள்ளப் புள்ளி. சிவப்பும் நீலமும் கலந்தது. கறுப்பில மஞ்சள் ஊத்திவிட்டமாதிரி. எத்தின வித விதமா. வண்ணாத்திப்பூச்சி! பஞ்சு போல செட்டயள். அடிச்சு அடிச்சு பறக்க எவ்வளவு வடிவாக்கிடக்கு. வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி பறக்கிது 2ார். மறக்கிது மார் அழகான செட்டை அடிக்கிது பார் அடிக்கிது AMர் ரிச்சற சுத்திச் சுத்தி ஒடுறது. ரண்டு கையும் செட்ட நேசறிரிச்சர் சொல் லித் தந்த பாட்டுகளில இப்பவும் பிடிச்சது இதுதான். சில நேரங்களில கும்பலா வரும். எதப் பாக்கிறது எண்டுதெரியாமல் இருக்குமென்ன? வண்ணாத்தி எண்டால் நல்ல விருப்பம். அதப் பிடிச்சு கிட்டவைச்சுப்பாக்கவேணும். பின் வளவில் ஒரு நாள் ரண்டு சிறகுகள கண்டனான். நீலமும் கறுப்பும் கலந்தது. உடம்பக் காணேல. என்ன நடந்துதோ தெரியாது. உயிரோட ஒருநாளைக் கு பிடிச்சுப்பாக்கத்தான்வேணும். செட்டயளக் எடுத்துக்கொண்டுபோய் சமயப் புத்தகத்துக் குள்ள வைச் சிருக்கிறன். எந்தநாளும் பாக்கிறனான். நல்ல வடிவு. இந்தமுற திபாவளிக்குத் தச்ச என்ர சட்டமாதிரி.
zorólową zarólową. Zafazz 4724. Zoraz Zaraoy. Afzny aflauty. சரியான கவலையா கிடக்கு. எங்க திரியிதோ? பாவம் . இனிமேல் அப்பிடியெல்லாம் பிடிக்கக் கூடாது. ரண் டு கையளையும் சேத்துப்பிடிச்சு கூடுமாதிரிவைச் சுத்தான் பிடிக்கவேணும். அண்டைக்கு அந்தச் செந்வந்தியில ஒண்டு வந்து நிண்டிது. நல்ல வடிவானது. பிடிப்பம் எண்டு போனன். பறந்திட்டிது. எப்பிடியும் இண்டைக்கு பிடிக்கத்தான் வேணும். பின்னால
ஓடினன். முருங்க மரத்தில போய் "
ஓடிப்போய் பிடிச்சிட்டன். ஒரு துண்டு செட்டமட்டும் பிஞ்சு வந்திட்டிது. ஐயோ. பாவம் , அதுக் கு நொந்திருக்குமென்ன? பாவம். சிலநேரம் செத்துப்போயிருக்குமே? பிஞ்ச செட்டயோட ஒருநாளும் வண்ணாத்திய பாக்கேல்ல. செட்ட பிரிஞ்சா செத்திடுமெண்டுதான் நினைக் கறன் . வளவு முழுதும் தேடிப்பாத்திட்டன். காணேல்ல. கவலையாக் கிடக்கும். செத்துத்தான் இருக்குமென்ன? இனிமேல் அப்பிடிப் பிடிக்கக்கூடாதென்ன? பாவம்.
zorólową. Zdrólową. 4724 472rzy. zorólową. Zdróavy. afazay afz/y. வேளைக்கு வேலையள முடிச் சிட்டா அம்மாவோடயே போயிடலாம். ஒரே இழுவயில முத்தம் கூட்டிற்றன். இனிச் சாணி தெளிக்கிறதுதான்.
சின்ன விரல்களுக்கிடையில் சாணி பிசிறித் தெறித்தது. அவளது மஞ்சள் பச்சை கலந்த பூப் பூ சட்டையிலும் சில சிதறல்கள் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. வாளி நிறையத் தண்ணிர் நிரப்பியபோது கரிய நிறத்தில் வணி டுப் பிணங்கள் மிதந் தன. சிலதுகளைமட்டும் துக்கி வெளிவே வீசமுடிந்தது. றொக்கட் வேகத்தில் முற்றம் முழுவதும் சாணி மழை. சரியாகக் கரைபடாமல் ஒரு இடத்தில் கட்டியாய். உயிர்தப்பிய வண்டொன்று அதன்மேல் மெல்ல மெல்ல உடலசைந்தது.
ஜீவிக்கு என்ன நடந்தது? தண்ணி அள்ளச் சென்ற பக்கத்து வீட்டு கலா யோசித்தாள்.
ராசமணி நீத்துப் பெட்டியிலிருந்து நான்காவது தடவையாக புட் டைக் கொட் டிக் கொண்டிருக்கும் போது குசினிச் சுவரோடு

தேய்த்துக் கொண்டு நின்றபடி கேட்டாள் அம்மா! முத்தம் கூட்டி சாணியெல்லாம் தெளிச்சிட்டன் உங்களோடயே வரலாம்தானே? இணி டைக் கு இவா ஒருத்த நல ல அடிவேண்டப் போறா. எத்தினதரமெண் டு உனக்குச் சொல்லுறது. ஒரு பிள்ளைக்குச் சொன்னா சொல்லுவளி கேட்கவேணும். விக்கிஅண்ணை மத்தியானம் வருவான். அவனோட வரலா மெணி டெலிலே சொன்னனான். அதுவரைக்கும் சும்மாதானே நிக்கவேனும் அம்மாவின்ர இளகிய மனம் எங்க போனது? கல்லு, கருங் கல்லு. இண்டைக்கு ஏன் இப்பிடி இருக்கிறா? நீர் சும்மாவோ நிக்கப்பேறி. என்ன அப்போத சொன்னனான்? எலுமிச்சம் மரத்தடியில குப்ப குவிஞ்சுபோய்க்கிடக்கு. பின்கோடி வளவு கூட்டவேணும். பேசாமல் பள்ளிக்கூடமே போயிருக்கலாம். ஏன் வீட்ட நிண்டனெண்டிருக்கு. எனக்கு விக்கிஅண்ணயோட வரவிருப்பமில்ல. அவர் எந்த நேரமும் குட்டுவார். காலுக்குக் கிழ ரண்டு போட்டனெண்டால்தான் சரிவரும்போல கிடக்கு. அவனுக்கு வாய்க்கு வாய் காட்டினால் குட்டுவன்தானே பெரியாக்கள் தாங்கள் நினைச்சதைத்தான் செயப் விப் பரினம் , எனக் கு விக் கரி அண்ணையோட போக விருப்பமில்ல.
Aravaz Zoravia afz/g 4/6/7M. Azaazy Zடிக்க/த. தத்தின7 இறுகிகி/மிழக காத கனணோகுதென டெலச் சில சொலiலுதன. அதுதானே இவர்வனவு இறுக்கிப் பொத்திறது മങ്ങഴ Z£ങ്ങ്. ബz ബാക്റ്റമ്പ്രൂീബ്നീ മൃത്ലീ ണജ്?
விளக்குமாற்றை இழுத்தபடி குப்பைகளிடம் போனாள் கோடிப் பக்கமாக. இனி அவர்களுடன்தான் பேச்சு. கிணத்தடியில் முகம் களுவச் சென்ற ராசமணி மகளை அதிகம் திட்டிவிட்டதாய் உணர்ந்தாள் போலும். ஆதலால் சிறிய உடன்படிக்கைக்கு வந்தாள்.
பின்னேரம் பிள்ளைக்கு ஜஞ்சுருபா தருவன் ஐஞ்சு ரூபாய்கு கலாக்கா கடையில எத்தின
மனம் பறந்தது. ரண்டு கல் பணிஸ் , ஒர்றுாபாய்க்கு இனிப்பு. மிச்சம் நாளைக்கு. பரின் னேரம் விளையாடப் போகேக்க வேண்டலாம்.
மத தியானம் ! விக் கரியணி னை ! . நினைத்தபோது இனிப்புக் கனவில் பறந்த மனம் முள்முருங்கையில் விழுந்தது. ஊசி குத்தினமாதிரி நோகுது. பனங்கொட்ட. நீட்டு நீட்டு விரலுகள். எந்தநேரமும் குட்டும். அல்லது நுள்ளும், நானும் விசயாவும் சேர்ந்துதான் பட்டம் வைச் சனாங்கள். நாங்கள் பட்டம் தெளிக் கேக்க பிரபாவும் ஜெகதீசும் காதுக்குள்ள ஏதோ சொல்லிச் சொல்லிச் சிரிக்கினம். அவன்கள் ரண் டுபேரும் இப்பிடித்தான். அவன்களுக்கும் பட்டம் வைச்சிருக்கிறம். முறுக்குச் சட்டி உரிச்ச கோழி!
மத்தியானச் சாப்பாடு கடைப் பார்சல். விக்கிக்கே அந்தப் பொறுப்பு. தகுந்தநேரத்தில் ராசமணி, விலாசய்யாவின் சுமைகளைத் தோளில் தாங்கி ஆண் மகன் இல்லாத குறையை திர்த்துவைப்பான் விக்கி. நல்ல மரியாதையான பெடியன் உதவி என்று எளிமையாகச் சொல்லிவிடமுடியாது. கடமையாகக் கருதினான். ஏன் இவனுக்கு இவ்வளவு அக்கறை என்றுதான் கலா மண்டையைப்போட்டுடைத்தாள். அவன் சொந்தக் காரணாக இருக்கலாம். இல் லாமற் போகலாம் . எனக் கேன் தேவையில்லாத வம்பு? கலா யோசித்தாளே இல்லையோ ஊருக்குள் ஆங்காங்கே வம்பு நடந்துகொண்டுதானே இருந்தது. ராசமணி படலையைச் சாத்தும் சத்தம் மெல்லிதாகப் பின்வளவில் கேட்டது. மனம் இன்னமும் முருங்கையில் கிடந்தது. ஜீவி யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தாள். இது மனதிற்கு திருப்பதியானதாக இருந்தது.
முருகனே நான் வகுப்பில இந்தமுறை முதலாம் பரிள்ளையா வராட்டிலும் பரவாயில்ல. அந்த வேண்டுதல அடுத்த முறை பலிக்கச்செய்து தா. புதுசா இப்ப ஒண்டு கேக்கிறன் இண்டைக்கு விக்கி
இனிப்பு வேண்டலாம்? எண்ணி முடித்தே

Page 29
அனனை வரக் கூடாது. நார்ை நடந்தெண்டாலும் தோட்டத்துக்குப் போவன் விளக்குமாறு ஒவென்ற சத்தத்துடன்
விழுந்தது கூட அறியாமல் இரண டு கைகயுைம் கூப்பரி (p (bat 6f L if சென்றுவிட்டாள்.
ஒவ்வொரு வருடத்திற்கான முதலாம் பிள்ளை வேண்டுகோள்! மாற்றப்பட்டுவிட்டது. கடவுள் கோவிச்சுக் கொள்வாரோ? பயமாக இருந்தது. ஆனாலும் முள்ளில் சிக்கிய மனம் மீண்டும் பக்குவமாக இருப்பிடம் வந்துசேர்ந்ததே! ஊசி நோவும் மறைந்துவிட்டது.
மொனிற்ரர் கொப்பியின் கிளிந்த முன்மட்டை, தேயிலைச்சாயம் பூசப்பட்ட கமலகாசன் முகம், அவன் தோளில் கைபோட்டிருந்த பூரீதெவியின் பாதி கிளிக்கப்பட்ட மார்பு, முக்குடைந்தும், நொருக்கப்பட்டதுமான சில ஊர் முட்டைக்கோதுகள், முழுச்சாறும் பிழிந்தெடுக் கப்பட்ட பின் வீசப்பட்ட தேசிக் காயப் த்தோல்கள் மாவிடமிருந்து பிரியமனமில்லா கடுதாசிப் பைத்துண்டுகள். விளக்குமாற்றினால் தட்டி எடுத்தாள். வரமறுத்தவைகளை சின்ன விரல்கொண்டு பிடுங் கி எடுத் தாள். தணிணிருடனும் மணி னுடனும் 6) நாட்கள் சங் கமரித தரு நீ த ைவகளல லவா ? பிரிவுவேதனையில் அழுதவாறு குவிந்தன கடகத்தினுள். அவர்களுக்கு பின் வளவில் பெரிய கிடங்கில் இறுதியாக அடக்கம் நடந்தது.
உருளைக் கழங்கு பிடுங் கரிற நாள் எப்பவருமெண்டு பாத்திருப்பம். அந்தநாள் பெரிய கொண்டாட்டம்தான். கடைசியில வெட்டுப்பட்ட கிழங்குகள் பொறுக்கத்தான் விடுவினம்.
மத்தியானம் பார்சல் சாப்பாடு. அம்மா எவ்வளவு ருசியாச் சமச்சாலும் பார்சல் சாப்பாடுபோல வராது. பின்னேரம் வடை வாப்பன். குழையள் குவிஞ்சிருக்கும். மலை போல. அதில ஏறி இருந்தனெண்டா எல்லாரும் வீட்டபோகேக் கதான் இறங்குவன். நான் விளையாடிக் கொண்டிருக்கிறதப் பாத்திட்டு
கொஞ்சம் பிடுங்கன் எண்டு. எரிச்சல்தான் வரும் . பெரியாக கள் தாங்கள் நினைச்சபடிதான் செய்விப்பினம். ஓடி ஓடிப் பிடுங்கிறன், வேளைக் குப் பிடிங்கினனெண்டால்தான் விளையாடலாம். இன்னுங் கொஞ்சமெண்டா ஒரு கடகம் நிறம்பிடும். ஆரது? ஏங்கிப்போனன். நிமிந்து பாக்கிறன். நிக்கிது. பனங்கொட்ட தூக்கிக் கட்டின சாரத்தோட. காவில முள்ளுக்குத்திட்டிது ஊசி ஒனர்டு தாறியே? களட்டிக் குடுப்பன்தானே. அதுக்குள்ள தானே வந்து களட்டிறார்.
zrólag zorólową. 4/6/2 z zaź2rzy. Zoraz மரவெடி, யுனியெடி புனியெ4. பசிக்கிது. வெள்ளப் புட்டும் சம்பலும் நல்ல விருப்பம். கால் மேல் கழுவீட்டுவந்து பாக்கிறன். போனவருசம் தீபாவளிக்குத் தச்ச சட்டையை எடுத்துவைக்கச் சொன்னனான். இந்தக் கட்டைப் பாவாட சட்டையை எடுத்துவைச்சிட்டுப்போயிருக்கிறா. வெள்ளப் புட்டோடு கலந்த சம்பல் இவள் காலையில் அணிந்ததிருந்த பூப்புச் சட்டைமாதிரி தெரிந்தது. சின்னச் சின்ன விரல்கள் இறுக்கிபிடிக்க அதுகள் உள்ளே தள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. விக்கி அண்ணை வரமாட்டான். முருகன் எப்பிடியும் வேண்டுதலை நிறைவேற்றிவிடுவார். ஒரே ஒரு முறையைத் தவிர ஏனைய வேண்டுகோள்களை இதுவரையில் முருகன் செய்து முடித்திருக்கிறார். அந்த ஒரு முறை குளிக்காமல் கும்பிட்டதாலதான்.
அப்பவே சொன்னனான் வெள்ளப் புட்டெண்டால் விருப்பமெண்டு. இன்னுமொரு கோப்ப போட்டுச்சாப்பிடுவம்.
படலை திறந்து சத்தம் கேட்கிது. ஐயோ! வந்திட்டார். தூக்கிக் கட்டிய சாரம். நெடுகலும் இப்பிடித்தான் வரும். பெட்டி பெட்டி. அதுக்குக் கீழ ரண்டு பனமரம். பாவக்காய்க் கொட்டையள் மாதிரியெல்லே பனமரத்தில அடையாளங்கள். அதுக்கு செருப்பு வேற. முருங்கக் காயப் மாதிரி
அப்பா சொல்லுவார் ஆட்டுக்குப் "雀立蠍" அதில ஒரு நாளைக்கு பாம்பு

அப் பதான் சரி. நாக Lu MI Ď Lg5 T 6
கொத்த வேணும் . பனங் கொட் ட. கொத்தவேணும். குசினிக்குள்ளதான் வாறார். தண்ணி எத்தின முடர்குடிக்கிறன். புட்டு கீழ இறங்கிதில்ல. ஐயோ. அம்மா. நெஞ்செல்லாம் எதோ செயப் பயிது. மூச் சடைக் கது. தணிணி குடிக்கிறன்.கீழ இறங்குதேயில்ல.
கித்தடிக்கிது. புயல4க்கிது. அக்கக்கா கதவத்திற. இப்பதான் பிள்ளைக்குக் குளிக்கவாத்துக் கொண்டிருக்கிறன்
நாலரைக்கு எல்லாரும் கஜன் வீட்டில சந்திக்கிறது எண்டுதான் சொன்னவன். விசயா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபா எல்லாரும் வருவினமாம். பந்தெடுத்துக்குடுத்து உதவிசெய்து எவ்வளவு நாளுக்குப் பிறது இப்பதான் தாச்சியில சேக்கிறதெண்டு சொன்னவங்கள். நேற்றுப் போகேல்ல எண்டு கோபமாம். இண்டைக்கும் வராட்டி இனிமேல் சேர்க்கவே மாட்டினமாம். பிரபா வந்து நேற்றுச் சொல்லிற்றுப் போனவன். அவன் சொன்னால் அப்பிடியேதான் செய்வான்.
கோடிவளவில் பிலா இலைகள் உதிர்ந்து கிடந்தன. ஒரு கிழமைக்குள் திரும்பவும் இவ்வளவு குப் பைகள். ராசமணியும் விலாசய்யாவும் தோட்ட வேலைகளிலி ஒடித் தரிந்தனர் . இந்த (p. 60) பேவிளைச்சலாம் எண்டு கலாக்கா யாரிடமோ வாயைப் பிளந்ததை ஜூவி கேட்டாள். அக் காமார் களுக்கு சோதனை நெருங்கிவிட்டது. காலை மாலையென்று மொனிற்ரர் கொப்பிகளுக்குள் கிடந்தார்கள். பஸ்ஸில் போய்ப் படிப்பவர்களல்லவா? பெரிய படிப்புக்காரர்தான்.
கோடிவளவ இந்த முறையும் நான்தான்
கூட்டவேணுமாம். ஐஞ்சு ரூபா தருவியளோ எண்டு கேட்டன். காலுக்குக் கீழ ரண்டுதான் தருவன் எண்டா. இப்பிடித்தான் சொல்லுவா ஆனா பிறக தருவா. . . . . . , ஆரவோ நிண்ட மாதிரிக் கிடந்திது, ஏங்கிட்டன். நிண்டமாதிரித்தான் கிடக்கு. பிறகு காணேல்ல. சொறிநாய் மாததிரித்தான் கடந்தது. பயந்திட்டன்.
மூத திர ம் வாறமா தரிக் கரிடக் கு. போயிருந்தால் வருகிதில்லை. எரியிது. திரும் பவும் ஒருக் கால கழுவுவம் . தண்ணிக்குள்ளயே கிடக்கவேணும் போல இருக்கு. கிணறு கிட்ட இருந்தால் இறங்கி நிக்கலாம். கரன் வீட்ட கிடக்கிற தொட்டி மாதிரி இருந்தா எவ்வளவு நல்லம்?
ஐயோ எரியிது ஐயோ எரியிது ஜீவனா இரவில் கத்தினாள். ராசமணி நிறையச் சீனி போட்டு விரலால் கரைத்து ஒரு ரம்ளரில் தண்ணி கொடுத்தாள். சலக்கடுப்பு குளிக்கிறதுக்குப் பஞ்சி
எட்டு நாளாச்சு. ஒன்றை விட்ட ஒரு நாளாக ஜீவனா ஒன்டு ரண்டு என்று இருபத்தைந்து வரும் வரை எண் ண கரிணற்றடியிலி விலாசய்யா சூடு பறக்க தலைக்கு ஊற்றிவிட்டார். சூடு பறந்தது.
எரியிறதுதான் நிக்குதில்ல. சில நேரம் ஊசிகுத்திறமாதிரி. கொஞ்ச நேரம் அமத்திப் பிடிப்பம். சுகமாக்கிடக்கு. என்ன ஜூவி விளையாடப் போகேல்லையே? தண்ணி அள்ளப் போகேக்க கலாக்கா ஏதாவது கவனிச்சிருப்பபாவே? எரிவு நிணி டிட் டி தெணி டு அம் மாவுக் குச் சொல்லிப்போட்டன். கொக்காளவைக்கும் சலக்கடுப்பு வாறதுதான். உனக்குமட்டும் ஒரு கிழமையா நிக்கிதில்லை. என்ன இது புதினமாக்கிடக்கிது.
கித்தடிக்கிது. புயல4க்கிது. அக்கக்கா கதவத்திற. இப்பதான் பிள்ளைக்குச் சாப்பாடு தத்துறன்
நான் பின்னுக்கு ஏறுறன் எண்டுதான் சொன்னனான். சாப்பாடு ஏத்தவேனும் எண்டு முன்னுக் ஏறச் சொல்லிற்ரார். முந்தியும் ஒருநாள் இப்பிடித்தான். பனங்கொட்டை. பெரியாக்கள் தாங்கள் நினைச்சபடிதான் செய்வினம். பாறில இருந்து கணக்க நேரம் ஓடினால் குண்டி வெட்டும். அப்பான்ர சயரிக் களில பின் னுக் கரிருந்துதான் போறனான்.
" கு வளியால வேளைக் குப்

Page 30
போயிடலாம். இவர் சுத்திச் சுத்தித்தான் ஓடுவார். பனையன். அந்தத் தென்னந்தோட்டம் இருக் கெல் லே அது தாணி டி பிறகு பெரியப்பாக்களின்ர தோட்டமடியால போய். இவ்வளவு ஆறுதலா ஆராவது சயிக்கிள் ஒடுவினமே?
விடுங்கோ விக்கி அண்ணை. எனக்குப் பயமாக் கிடக்கு. நான் வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லத்தான் பாவாட ஊசியெல்லாம் களட்டிப்போட்டார். ஆரேன் வரேக்க வெளியால கையை எடுக்கிறார். இது கெட்டபழக்கம். ஆரேன் வரமாட்டினமோ? சொல்லச் சொல்லக் கேக்கிறார் இல்லியே. இது கெட்டபழக்கம். விக்கிஅண்ணை. நிகம் கிறிது. நோகுது விக்கி அண்ணை, கையை
எடுங்கோ. எனக்கு அழுகதான் வருகிது. இதரிலும் பாக்க பள்ளிக் கூடமே போயிருக்கலாம். முந்தியும் ஒருநாள்
இப்பிடித்தான். எனக்கு சரியான அழுகதான் வருகிது.
கரத்தடிக்கிது. Aலடிக்கிது. அக்கக்கா கதவத்திற. இப்பதான் பிள்ளைய நித்திரையாக்கிறன்
கலாக்கா ஒவ்வொரு செவ்வாயும் துர்க்கை அம்மனுக்குப் போட்டுவாறா. தன்ர புருசனோட சேரவேணுமெண்டுதான் வேண்டுதலாம். அம்மாவும் விரதம் இருக்கிறவா. வேண்டுதல மாத்தினது முருகனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சரஸ்வதி பூசைக்கு விரதம் இருக்கிறன் எண்டு வேண்டியிருக்கலாம். முருகன் கோவிச்சிருக்கமாட்டார்.
நேற்றும் விக்கியண்ணை அங்கவந்தவராம். நான் போ மாட் டண் . நாங்கள் விளையாடிக் கொணி டிருக் கேக் குள் ள நெடுகலும் வந்து சொறிதேச் சுக் கொண்டிருப்பார். சொறிநாய். ஒருநாள் இப்பிடிச் சொன்னதுக்கு கன்னத்தப்பொத்தி தந்திட்டிது. பத்துநாள் அவரோட கதைக்கேல்ல. கோவங் கோவங் கோவம் கண்ணக்கட்டிக் கோவம் செததாலும் பாவம். நடுச் சாமத்த7ல பாம்புவந்து கொத்தும் பிறகு வலிய வலிய வந்து கதைச்சிது.
தாச்சி விளையாட்டில இனிமேல் என்னச்
நேற்றுக் கால் தேச்சிட்டுதாம்.
வீடெல்லாம் இண்டைக்கு நான் தான் கூட்டினான். கோடியும் கூட்டியள்ளிற்றன். இப்ப எரிவு கொஞ்சம் நிண்டமாதிரிக்கிடக்கு. மூத்திரம் பெய்யேக் குள்ள மட்டும் தான் எரியிது.
இவளுக்கு என்னதான் நடந்தது? கலா மட்டுமல்ல மொனிற்ரர் கொப்பிக்குள் கிடந்த அக்காமாரும் கண்களை வெளியெடுத்து அதிசயமாக பார்த்துக்கொண்டனர். போய்ஸ் பஸ் கேர்ள்ஸ் பஸ்சை முந்தியதா அல்லது நேற்றுப் போலவே தோற்றுவிட்டதா என்று அக்காமாரிடம் ஒட்டுக்கேட்டு அம்மாவுக்குக் கோழ் சோல்லும் ஜீவனாவுக்குத்தான் என்ன நடந்தது? நீண்ட நாட்களாக அவர்கள் ஆராயவில்லை. கிடைத்த சுதந்திரத்தை கொண்டு பெடியள்பற்றி சுவைத்தார்கள். சோதனைக்குப் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊர்முட்டை வாங்கியல்லோ கை உளை
g அடித் தாள் g T & LD60s முட்டைக்கோப்பி
மாதுழம்மரம். பலாவுக்குப் பக்கத்தில் நின்றது. இலைகள் மஞ்சள்
அடித்துவிட்டிருந்தது. பட்டுப்போடும் போல கிடக்கு எண்டு விலாசய்யா கவலைப்பட்டார். ஜீவியும்தான். இன்றும் ஒரு வாளி தண்ணிர் ஊற்றினாள். கறுப்பு நிறத்தில் சிகப்புப் புள்ளிகள். ஒரு வண்ணத்துப் பூச்சி. மாதுழையில் வந்து ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. அது தன்னையே பார்ப்பதாக உணர்ந்தாள்.
மசுக்குட்டியிலிருந்துதான் வண்ணத்துப்பூச்சி வருகிறது என்பது அவளுக்கு அண்மையில் கிடைத்த செய்தி. பிரபா சொன்னது. மசுக்குட்டி முருங்கையில் அப்பிக்கிடக்கும். பார்த்துவிட்டாலே பத்து அடி தள்ளித்தான் போவாள். சனியன் பிடிச்சதுகள். என்னெண்டுதெரியாது ஒண்டு வெள்ளச் சட்ட யால ஊர்ந்து களுத் தரில வந்து கடிச் சரிட் டிது. மணினெணி னையைக் கொண் டுபோயப்
சேர்க்கவும்மாட்டிம்தானே. பிரபா “འི་ཡ༦༧༧༠ft-ཨོ་

வண்ணாத்திப்பூச்சிக்கும் மயிர் இருக்குமே? அதுவும் சுணைக் குமே? தொட் டால பட்டுப்போல. பாவம் அந்த வண்ணாத்திக்கு என்ன நடந்திதோ? சில நேரம் பிடுங்குப்பட்ட செட்டத்துண்டு வளந்திருக்கும்.
ஆர்வமுடன் இரண்டு கைகளையும் கோர்த்து வளைத்துப் பிடித்தபடி நெருங்கியபோதுதான் அது நிகழ்ந்தது. இப்பிடித்தான் நெடுகலும் பறந்திடிது.
கி/த்தடிக்கிது. //லடிக்கிது. மரக்கனெலலாம் சமுண்டு ஆதிது. அக்கக்க கதவத்திற. தகர வீட்டுக்குள் சத்தம் இல்லை. தீடிரென்று நந்தினி திறந்துகொண்டு ஓடிவந்தாள். ஐயோ எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்களி. பிடிச்சிட்டன் ஜூவியைப் பிடிச்சிட்டன்
தோட்ட வேலைகள் இப்போதைக் கு முடிந்தபாடில்லை. உருளைக் கிழங்கும், வெங்காயமும் பிடுங்கிய நாளிலிருந்து தொடர்ந்து தோட்டத்தில் ஏராளம் வேலைகள். சமையல் சாப்பாடுகள், குளிப்புமுழுக்குகள் தவிர்ந்து ஏனை நேரங்களை பெரும்பாலும் தோட்டத தரிலேயே தம் பதரியினர் செலவழித்தனர். முட்டைக்கோப்பியில் விழித்து காலை ரியூசன், பாடசாலை, பின்னேர ரியூசன் முடிந்து எட்டுமணியாகும் அக் காமார் வீடுவந்துசேர. இருவரும் கடினமாகப் படிப்பதாகத்தான் ராசமணி, விலரசய்யா மட்டுமல்ல கலாவும் நம்பினாள்.
தாச்சியில சேர்க்கவும்மாட்டாங்கள். போகவும் ஏலாதுதானே. ஒருக்கா வேலிக்குள்ளால பாத்தனான். அந்தச் சொறிநாய் நிக்கிது. போமாட்டன். கோவங் கோவங் கோவம் கண்ணக் கட்டிக்கோவம். செத்தாலும் பாவம் நடுச்சாமத்தில நாகபாம்பு வந்து கொத்தும். நாகபாம்பு போய்க் கொத்தத்தான் வேணும். அக்கக்கா அலுத்துப்போச்சு. எப்பவும் நான் தான் பரிடிபடுறது. என் னால மற்றவயள்மாதிரி ஒடேலாது. அதுக்கு நான் என்ன செய்யிறது?
ஒருநாள் பொழுது பட்டுக்கொண்டிருந்தது.
இண்டைக்கு நட்சத்திரம் எண்ணல்ாம். இன்னுங் கொஞ்ச நேரம் போகவேனும். அப்பதான் இருட்டில வடிவாத் தெரியும். வெள்ளி நட்சத்திரம். வால் நட்சத்திரம். குட்டி நட்சத்திரம். குடும்ப நட்சத்திரம். தாச்சிச் சத்தம் தூரத்தில் கேட்டது. பிரபாவின் சத்தம் தாண் . யாரோ அளாப்பியாக்கப்பட்டான். சிமிளியை பக்குவமாகத் துடைத்து வைத்துவிட்டு மாட்டுக் குப் புலி லும் போடுவதற்காக கடகத்துடன் கொட்டில்பக்கம் வந்தாள். காய்ந்து போன புல் லுதான். ஆனால் இந்த மாடு என்னவென்றாலும் தின்னும்,
ஜிவி இப்ப நீ ஏன் விளையாட வாறேல்ல?
விக் கலியன் வந்த சத்தம் கூடக் கேட்கவில்லை. கடகத்தைப் போட்டுவிட்டு ஓடுவதற்கு முன்.
விடுங்கோ. விக்கி அணினை. விடுங்கோ.
இறுக்கமான மாட்டுப்பிடி. இல்லையில்லை. ஐயோ! இது மோட்டுப்பிடி. இம்மியளவும் அசைய முடியவில் லை ஜூவியாலி , பனைமரத்திற்கு இடித்துப்பார்த்தது சின்னக் கால்கள். அசையவேயில்லை. விட டா விடு. என்ன இப்ப விடு. பனங்கொட்டை. சொறி நாய். இப்ப என்ன விடு. நாயே.
அவள் அழ அழ பூப் பூ யங்கியை கீழேவிழுத்திவிட்டு றோக்கற்வேகத்தில் மசுக்குட்டி.
நிரூபா 23-24.08.00
காகன், ஜேர்மனி

Page 31
புகலிடங்களின் இலக்கியச் சந்திப்பு - தமிழரசன் -
1988ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட புகலிடத் தமிழ்பேசும் மக்களின் இலக்கியச் சந்திப்பு தனது 26வது ஒன்றுகூடலை கடந்த யூன் மாதம் 10 - 11 திகதிகளில் ஜெர்மனியின் ஸ்ருட்கார்ட் நகரில் நடாத்தியது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 50பேர் வரை கலந்து கொண்டனர். புகலிடத்தின் இலக்கிய மற்றும் அரசியல் வறுமையைத் துடைத்து அதன் தரித்திர நிலையை போக்கவென பெண்ணியவாதிகள், மார்க்சியவாதிகள், பின்நவீனத்துவவாதிகள், தலித்தியவாதிகள், இலக்கியவாதிகள் போன்றோரோடு எப்போதுக்கும் தாலி கட்டிக்கொள்ளாத தம் பக்குவப்பட்ட பரிபூணர நிலைக்காக பூரித்துப் போயிருக்கும் இலக்கியச் சந்திப்பின் கற்பை பாதுகாக்க திடசித்தம் கொண்டோரும் கலந்து கொண்டனர். புகலிடமானது அட்டகாசமாய் வெளியே கத்திக்குழறி என்னைக்கவனி" என்று எடுப்பு எடுத்துத் திரிவதற்கேற்ப சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் விமர்சனம் போன்ற துறைகளை சத்துமிக்கதாய் வளர்த்தெடுக்கமுடியாமலும் அரசியலில் ஈடேறமுடியாமலும் திக்கித்திணறிக் கொண்டு இருக்கின்றது. ஆரசியலில் அவநம்பிக்கையும் தத்துவ விரோதமும் நடப்பின் கேள்விகளில் இருந்து தப்பி சிறு சிறு குழுவாதங்களிலும் அன்னிய முகங்களை தமதாக்கிக் கொள்வதி லும் முடிவடைகின்றன. தம் சொந்த புகலிடச்சூழலில் விளைந்த படைப்புக்களைப் படைத்து அழகு பார்க்க தெரியாதவிடத்து தமிழ்நாட்டின் அரசியல் இலக்கிய மேய்ப்பர்கட்காக அவர்களின் புனித அருள்வாக்குக்காக காவல்கிடக்கும் போக்கு நிலவுகிறது. இன்றைய ஏகாதிபத்திய உலக ஒழுங்குகள் அதன் இறுக்கமான பொருளாதார கட்டமைப்புள் வாழ்ந்து கொண்டு அரசியலை துறப்பதும் அதற்கு அஞ்சுவதும் உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கைக்குப் பயந்து திரியும் செயலே. தம் சொந்த அடையாளங்களை, இலட்சணங்களை, மூஞ்சிகளை பேணுவதில் அக்கறை கொண்ட பல்வேறு திரட்டல்வாதப்போக்குகளில் சிக்கி உருத்திரிந்த சக்திகளாகவே இலக்கியச்சந்திப்பு சக்திகள் உள்ளன.
இலக்கியச் சந்திப்பு தனது முதல் நிகழ்ச்சியை தொடங்கு முன்பாக புகலிட அரசியல் வாழ்வுக்காக புலிகளால் தண்டிக்கப்பட்ட தோழர் சபாலிங்கத்தை நினைவில் கொண்டு ஆரம்பித்தது. முதலாவதாக நோர்வே சரவணனின் சிங்கள சாதியமைப்பும் தமிழ்தேசிய பிரச்சினையில் அதன் தலையிடும் என்கிற கலந்துரையாடல் நடைபெற்றது. சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் கொய்கம, கராவ சாதிகளது அரசியல் ஆதிக்க நிலையையும் போட்டியையும் ஏனைய சாதியப்பிரிவுகள் பற்றிய பல விரிவான தகவல்களை சரவணன் வெளியிட்டபோதும் அதன் வர்க்கப் பின்புலங்கள் தெளிவாய் ஆராயப்படாமலும் தமிழ்தேசியப் பிரச்சினையுடனான அதன் தொடர்பும் சரியாக விளக்கப் படவில்லை. அடிப்படையான தத்துவார்த்த அரசியல் பற்றாக்குறை பிரச்சினையின் சமூக அரசியல் குணாம்சங்களை சீர்திருத்தவாத கருத்தியல்கட்டு நெருக்கமாய் பின் நவீனத்துவ மொழியாடல்களில் விளக்கு வதில் முடிவடைந்தது. சமகால அரசியல் தேக்கத்தில் தன்னை அறியாமல் தரித்து நிற்பதும் அதன் இறந்த கால தொடர்ச்சியின் கூறுகளை உடைத்துப் பார்க்கமையும் முக்கியமான பலவீனங்களாய் நிற்க்கின்றன. மார்க்சியத்திடமிருந்து சற்றே விலகி நிற்பது இன்று அரசியல் புண்ணியத்திற்கு உரியதாய் இன்றைய அரசியல் கதம்பவாதப்போக்குகள் காட்டித்தருவதால் சரவணனும் அந்தப்புண்ணியத்தை தேடிக்கொள்ளவிரும்புகிறார்.

அடுத்த நிகழ்ச்சியாக பெண்களால் வெளியிடப்படும் சக்தி இதழ்பற்றிய அறிமுகம், அதன் வளர்ச்சிபற்றிய கலந் துரையாடலும் தர்மினி, சிறிலதா முல்லர் இருவராலும் நடாத்தப்பட்டது. நடத்தியவர்களுக்கு சக்தி இதழ் பற்றிய போதிய வாசிப்பு தகவலின்றி தடக்குப்பட்டனர் பின்பு சக்தி இதழ் மீதான விமர்சனம் என்ற இலக்கை விட்டு வெளியேறி பெண்ணியம் சார்ந்த சஞ்சிகைகள் என்பதாக பயணப்பட்டது. இந்த விவாதங்களில் உமா, விஜி, மீரா பிரசன்னா ராமசாமி போன்றோர் கலந்து கொண்டனர். அடுத்து நா கண்ணனின் மாறன் மனமும் மறந்து போன புரட்சியும" என்ற தலைப்பிலான ஆழ்வார்கள் பாடல்கள் மேலான இலக்கிய மற்றும் சாதியம் தொடர்பான சமூகவியல் அம்சங்களை பேசும் முயற்சி நடைபெற்றது. நா.கண்ணன் தனக்கு விதிக்கப்பட்டுள்ள பிராமணியம் சார்ந்த சமயவாத கருத்தியல்களை தாண்டாததோடு இன்றைய முன்னேற்றமான தலித்தியல் சார்ந்த கருத்துக்கள் அன்றே சொல்லப்பட்டுவிட்டன என்று நிரூபிக்க முயன்றார். சமூக வளர்ச்சியல் கருத்துக்கள் தொடர்ந்து வளர்ந்தும் மாறியும் வருவதை அவர் கணக்கெடுக்கவில்லை. ஆழ்வார்களின் கருத்துக்கள் எக்காலத்திற்கும் ஏற்றவை என்னும் தொனியில் அவற்றைப் பொதுமைப்படுத்த முயன்று வரலாற்று முரணுக்குப் போய்ச்சேர்ந்தார். ஆழ்வாரின் சாதிய எதிர்ப்புக்கருத்துகள் அவர்கள் வாழ்ந்த காலகட்ட அரசியல் சமூக சமரசங்களுக்கு அவசியமாக இருந்தது. செவ்வியல் இலக்கிய அந்தஸ்தைப்பெறும் ஆழ்வார்பாடல்களை பல ஆயிரம் ஆண்டுகால தலித்திய மக்கள் மேலான மனிதஇழிவு முன்பாக நீதிபோதனையாக நிறுத்த முயன்று தோற்றுப்போனார். கண்ணன் பேசிய அறவுணர் வுகள் மனித நீதி வர்க்கம் கடந்ததல்ல. மாறாக வர்க்க சமூக மனித ஒழுங்குகளை திட்டமிட்டு வரையறுத்து வழி நடாத்த தெரிவு செய்யப்பட்டவையே. சமூக முரண்பாடுகளின் வளர்ச்சி மட்டத்திற்கு ஏற்ப தலித்துகட்கு சில சில சலுகைகள், விட்டுக்கொடுப்புகள் செய்து சமூக நடவடிக்கைகளை குலையாமல் பார்த்துக் கொண்டன. கிளர்ச்சி செய்யும் தலித்திய உணர்வுகளை சாந்தப்படுத்தின. அத்தோடு தம்சமயப்போக்குகளையும் தாபித்துக் கொண்டன. உண்மையில் நா.கண்ணன் பின் நவீனத்துவத்தைக் கண்டு அஞ்சினார். அதன் மொழியாடல் களைக் கண்டு வெருண்டார். அதுவாக தானும் பாவித்துக் கொள்வதன் மூலம் பிரமாணியம் மேலான தாக்குதலை சாந்தப் படுத்தி சக்தி குறையச் செய்துவிட முடியும் என நம்பினார்.எனினும் அரைகால் அவியலாய் உள்வாங்கப்படும் அவரின் பின்நவீன தத்தவக் கருத்துக்கள், நவீன சொல்லாடல்கள் அவரை சமயவாதகருத்தியல்களின் பிடியில் உள்ளவர் என்ற நிலையில் இருந்து மீட்டெடுக்க உதவவில்லை. மாறாக தனக்குத்தானே முரண்படுபவராயும் வினோதமான வராகவும் தோன்றுகிறார். மறுபக்கம் மனிதத்துவ தனிமனிதவாதம் தேடி அலையும் சுயமும் நா.கண்ணனின் சமய சீர்திருத்துவ மூடுதிரையில் பதுங்கிக் கிடக்கும் ஆன்மா பரமாத்மா இவைகளும் ஒன்றுதான் கண்முன்னே காணும் மயாக்காட்சியில் மயங்காதே என்ற சமயவாதியினதும் பின் நவீனத்துவ கருத்துமுதல் வாதத்தின் குரல்களும் இங்கு ஒன்றாய்ஐக்கியப்படுகின்றன.
இந்த இலக்கியச் சந்திப்பில் பின் நவீனத்துவ வாதிகள் நா.கண்ணனை கருத்து ரீதியில் எதிர்கொள்ளாமல் பிராமணியம் இலக்கியச் சந்திப்பை வென்றுவிட்டது" என்று கோஷம் போட்டனர். நா.கண்ணனை பிராமணன் என்று பிறப்பு ரீதியாக அடையாங்காட்டிவிட்டு கருத்தை முன்வைத்து போராடுவதிலிருந்து தப்பிக்கொண்டனர். ஆசிரியனை சாகடித்துவிட்டு பிரதியை தத்தம் விருப்பத்திற்கேற்ப வாசித்து களிபேருவகை அடையும் போக்கிற்கு வழிகாட்டிகள் இவ்வாறாக நா.கண்ணனின் கருத்துக்களை கட்டாக்காலியாக விட்டுவிட்டு தனி மனிதனை நோக்கி தாக்குதலில் நடாத்தினர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து 1998ல் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்ட இந்தியரான அமிர்தயா குமார் சென்னின் கருத்துக்களை ஒட்டி பின் நவீனத்துவத்தைக் கண்டு அஞ்சினார். பின் நவீனத்துவத்தைக் கண்டு அஞ்சினார். பின் நவீனத்துவத்தைக்

Page 32
கண்டு அஞ்சினார். தென்னாசிய மனசாட்சியின் குரல், என்கிற தலைப்பில் சந்தோஷ் பேசினார்.1943ல் வங்காளப்பஞ்சம் முதல் 1990இல் சோமாலியப் பஞ்சம் முதலான மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான வறுமை பஞ்சம், உணவுப்பற்றாக்குறை, கல்வியறிவின்மை, சுகாதாரமின்மை, பெண்கல்வி, குடிநீர்ப் பிரச்சினை இவை பற்றி அமிர்தயா குமார் சென்னின் பொருளாதார தரவுகளுடன் விளக்கிய சந்தோஷ் இவருக்கு முன்னோடியாக இருந்த லத்தின் அமெரிக்க மார்க்சிய பொருளாதார அறிஞருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமையைத் திறந்த பொருளாதா கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா அதனுடானா நலன்களைக்கொண்டுள்ள ஏகாதிபத்திய போக்குள் வைத்துப் பார்க்கவேண்டும். அமிர்தயா குமார் சென்னின் பொருளாதாரப் பரிந்துரைகள் இடைக்காலத் தீர்வாகவும் நிலவும் அமைப்பை கேள்விக்கு உட்படுத்ததாகவும் இருந்தபோதிலும் மறுபுறம் இது ஏகாதிபத்தியத் துடன் முரண்படும் கீழைத்தேச மக்களின் நலன்கள், மற்றும் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடு கவனத்திற்குரியவையே என்றார். இதைத்தொடர்ந்து நடந்த வாதங்களில் அழகலிங்கம், பாரதி, பரா, ராகவன், மணியம், தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். உற்பத்திக்கும் வினியோகத்திற்கும் ஆன உறவை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தி போன்ற விடயங்களை விளக்கி அழகலிங்கம் பேசினார். இந்த நிகழ்ச்சி மிகமிக அருமையாய் பேசப்படும் பொருளாதார பார்வையை கொண்டிருந்தமையே இதன் சிறப்பு. மாக்சியத்தோடு தன்னை இணைத்து அடையாளங்காட்டும் சந்தோஷ் இதை இன்னமும் ஆய்வுநோக்கில் பரிசீலித்து இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்பதை சொல்லாமல் விடுவது தவறாகும்.
இடம் பெயர்வாழ் தமிழர்களும் ஜெர்மன் சட்டமுறைகளும் என்கிற தலைப்பில் யோகநாதன் பேசினார். குடந்த 10 வருடங்கட்கு மேலாக ஜெர்மனிய அகதிச்சட்டங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அரசியல் தஞ்சம்கோரும் அகதிகட்கு உள்ள சட்டரீதியான வாய்ப்பக்கள் இவைகளை விளக்கினார். இது ஜெர்மனிய அகதிச்சட்டங்களை தமிழில் விளங்கப்படுத்தியது போன்றே இருந்தது. அரசின் அகதிகள் மேலான மனித விரோதச்சட்டங்கள், கெடு பிடிகள், இனவாத நடவடிக்கைகள் நீதித்துறை மற்றும் பொலிஸ் எல்லைக்காவல் படைகள், உரிமைமீறல்கள், வன்முறை என்பன கொஞ்சமும் பேசப்படவில்லை. இது மனிதர்களாக அகதிகள் நடாத்தப்படாமைக்கு எதிரான கலகக்குரலாய் இராமல் ஜெர்மனிய அரசையும் அதன் அகதிச்சட்டங்களையும் விமர்சனமற்றுப் பின் தொடரும் போக்காய் காணப்பட்டது.
இரணடாம் நாள் முதலாவது நிகழ்வாக பெரியாரியமும் ஒரு புதிய வாசிப்புக்கான ஒத்திகை" என்கிற பொருளில் அசோக் கருத்து வெளியிட்டார். பெரியாரிய மற்றும் பின் நவீனத்துவப்போக்குகள், பெரியாரை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவராக கட்டமைப்பதை உடைத்துப்பேசினார். பெரியாரிடம் இயங்கிய ஆரம்ப இடதுசாரிக்கருத்துக்கள், தமிழ்தேசியம், சாதிய எதிர்ப்பு, கடவுளர் எதிர்ப்பு, பிரமாணிய எதிர்ப்பு இவைகளோடு இணைந்து இயங்கிய முதலாளியக்கருத்தியல்கள் மறைமுகமான மேல்சாதி மனோபாவம் உயர்வர்க்கக்கூறுகளை விளக்கினார். பெரியாரின் முரண்பாடுகளையும் இறுதிக்கால குறுகிய தமிழ்தேசிய வாதப்போக்குகளையும் ஆதாரபூர்வமாய் கட்டுடைத்தார். இலக்கிய மாநாட்டின் இரணடு நாள் நிகழ்ச்சிகளிலும் இந்த நிகழ்ச்சியும் கலந்துரையாடலும் முக்கிய மானதாகவிருந்தன. இது தொடர்பான வாதங்களில் பாரதி, ராகவன், சோபாசக்தி, கணேஷ், விஜி, சரவணன், பிரசன்னா, ராமாசாமி, நா.கண்ணன், தமிழரசன் ஆகியோர் பங்கெடுத்தனர். பின் நவீனத்துவத்தரப்பிலிருந்து பெரியாரைக்கேவலப்படுத்துவதாக கோபம் காட்டப்பட்டது. தனிதமனித வழிபாட்டுணர்வு அடிப்படையிலான குரல்கள் எழுந் தன. பெரியாரைப் பற்றி பேசவிடமாட்டோம் என்றன. பெரியாரை விமர்சன அடிப்படையில் மதிப்பிட்டு நடப்புக் கேற்ற போக்குகளை தெரிவு செய்வதைவிட்டு அவரின் பிற்போக்கையும் சந்தர்ப்பவாதக்

கருதுகோள்களையும் சமசரத்தையும் பொத்திப் பொத்திப்பார்க்க முனைந்தனர். மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ரொட்ஸ்கி இவர்களிடமும் தம்மால் தவறுகளைக்காட்டமுடியும் என்ற வாதத்தைக் கிளப்பியதன் மூலம் பெரியாரை விமர்சிப்பதை நிறுத்தக்கோரும் மறைமுகமான தடையுத்தரவுகள் பேசுபொருளாயின. தமிழ்நாட்டு எழுத்தாளரான பிரசன்னா ராமசாமி பெரியாரை மார்க்சுடன் ஒப்பிடமுடியாது. மாக்ஸ் சிந்தனையாளர் பெரியார் நடப்பின் முன்னேறிய கருத்துக்களை தொகுத்துச் சொல்பவர் என்கிற கருத்துப்பட பேசினார். மேற்கத்தைய முதலாளிய ஜனநாயகக் கருத்தியல்களோடும் சீர்திருத்த வாத அறிவியலோடும் பெரியாரின் சிந்தனைகள் வேர்கொண்டு இருந்ததையும் அசோக் ஆராயவில்லை. மேற்குலகின் விஞ்ஞான வளர்ச்சியையும் அது சார்ந்த நாகரீகத்திலும் பெரியார் பிரமிப்புக்கொண்டு இருந்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி அனைவரையும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று சொல்வதுவரை சென்றார். பெரியாரின் பெண்கள் மற்றும் மார்க்சியம் பற்றிய கருத்துக்கள் சரியாய் அசோக்கினால் தொடப்பட வில்லை. இத்தகைய சிறு தவறவிடல்கள் இருந்தபோதும் வணக்கத்திற்குரியவராக புனிதராகக் கட்டமைக்கப்பட்டு வரும் அரசியல் வெறுமைகளில் ஆழ ஊன்றப்பட்டு வரும் பெரியாரை விமர்சனப் பாங்கில் மதிப்பீட்டதில் அசோக்கின் வாசிப்பு தத்துவக் கவனிப்புக்குரியது.
இதை அடுத்து வந்த இயந்திரங்களின் பரிணாம வளர்ச்சி என்கிற தலைப்பில் கம்பியூட்டர் துறையில் புதிய கண்டு பிடிப்புக்கள் எதிாகாலத்தில் எவ்வாறு எந்தெந்தத்துறைகளில் பயன்பாடுள்ளதாய் இருக்கும் என்று சுபாசினி விளக்கினார். நீண்ட தயாரிப்புடன் கம்பியூட்டர் திரை முலமான படத்துடன் விளக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கம்பியூட்டரோடு பரீட்சையமுடையவர்கட்கு பெருத்த தகவல்களைத் தந்தது. எனினும் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கும் நவீன கொள்ளையிடலுக்கும் அதி நவீன கம்பியூட்டர் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்கிற அம்சத்தையிட்டு அவர் ஒப்புக்குக் கூட எதுவும் பேசவில்லை. ' .
அடுத்த நிகழ்வாக வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு" என்கிற தொடரில் புஸ்பராஜா பேசினார். சிங்கள, தமிழ், முஸ்லீம் புடுங்குப்பாடுகட்கு அப்பால் மனிதத்துக்காக பேசிய பேச்சாக இது அமைந்தது. முஸ்லிம்மக்கள் மேலான தமிழ்ஈழச்சண்டியர்களின் வன்முறையை விபரித்தது.
விபரித்து இருந்தபோதிலும் சிங்கள மேலாண்மைக்கு எதிராகப் போராடும் அதே சமயம் இஸ் லாமிய மக்களை ஒடுக்கும் தமிழ்தேசியத்தின் அதிகார கருத்தியல்களின் வர்க்க மற்றும் வரலாற்றுப் பின்னணிகளை அவர் தொடவில்லை. இவரையடுத்து ஸ்டாலினின் முஸ்லிம் தேசியமும் தமிழ்பாசிசக் கருத்தியல் அச்சுறுத்தல்களும் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. புலிகளின் யாழ் குடாநாட்டு இராணுவ வெற்றிகட்குப் பின்னர் முழச்சிங்களவர்களையும் துலைக் கவேண்டும், தமிழ்சோனியர்களுக்கு படிப்பிக்க வேண்டும் என்கிற மனிதவிரோதம், வெறித்தனம் வெளிநாடுகளில் சிலகுழுக்களால் விதைக்கப்பட்டு வருகையில் புகலிடத் தமிழ்மக்களை குறுந்தேசியவாத நஞ்சூட்டமுயல்கையில் ஸ்டாலினின் கருத்தியல்கள் புலிகளின் இராணுவ வெற்றிகளையும் இடைக்கால விறுவிறுப்புக்களையும் தாண்டி தமிழ்த்தேசியத்தின் குறுந்தேசிய வாதப்பண்புகளையும் முஸ்லீம் மக்களின் மேலான பயங்கரவாதத்தையும் பேச முயன்றது. புகலிடத்தில் தமிழ்தேசியவிடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது என்கிற பிரகடனத்தின் கீழ் பதுங்கிக் கொண்டு அரசியலுணர்வு கொண்ட, மனித நாகரீகம் கொண்ட அனைவரும் கேட்டு கூசிப்போகுமளவு அரசியலற்ற சிங்களவிரோதம்கக்கும் BCTRTTBC போன்ற பிழைப்புவாத தமிழ் வானொலிகளின் மறைமுகமான முஸ்லீம் விரோதங்கட்கு மத்தியில் புகலிடத் தமிழ்மக்களின் சார்பாக

Page 33
எழுந்த ஸ்டாலினின் குரல் முக்கியத்துவமுடையது. தமிழ் அரசியல் பரப்பில் முற்போக்கை, மானுடத்தை பேசுபவர்களை அமில பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் பேச்சாக அமைந்தது. முஸ்லீம் மக்களைப் பொறுத்து என்ன கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்பதே அரசியல் பேசுபவர்களை அளவிட உள்ள ஒரே ஒரு அளவீட்டுக் கருவியாகும். ஒரு காலத்தில் பரிஸில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக கவிதைபாடி கண்ணிர்விட்ட ஜெயபாலனின் இன்றைய அரசியல் சந்தர்ப்பவாதம் கண்டிக்கப்பட்டது. இந்த வாதங்களில் பாரதி, கணேஸ், அசோக், பரா, விஜி, ரஞ்சி, தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கனடாவில் வாழும் சக்கரவர்த்தியால் எழுதப்பட்ட யுத்தத்தின் இரணடாம் பாகம் என்கிற சிறுகதைத்தொகுப்பு எக்ஸில் சஞ்சிகை குழுவினரால் வெளியிடப்பட்டு சிறு அறிமுக விமர்சனமும் செய்யப்பட்டது. இக்கதைத்தொகுப்பு கூட்டத்தில் இருந்தோரில் பெரும்பாலானோரால் வாசிக்கப்பட்டு இருக்காத நிலையில் பெருமளவு விமர்சனமற்று போயிற்று. இந்த சிறுகதை தொகுதியில் உள்ள பிசாசுகளின் வாக்குமூலம், என்ர அல்லாம், படுவான்கரை போன்ற சிறுகதைகள் மட்டக்களப்பின் பிரதேச மொழியை மிகைபடலின்றி அச்சொட்டாய் பயன் படுத்தியுள்ளன. தமிழ் இயக்கங்களின் படுகொலைகள் மனித அழிப்புக்கள் முஸ்லிம் மக்கள் மேலான பயங்கரவாதம் உட்பட பல வெளியே பேசப்படாத செய்திகளை பதிவு செய்துள்ளது. ஆனால் சக்கரவர்த்தியின் மற்றைய இத்தொகுப்பில் உள்ள பல சிறுகதைகளில் பெண்களை இழிவுபடுத்தும் பச்சையான கரடுமுரடான ஆண் ஆதிக்க வரையறைகளுள் இயங்கும். சிறுகதை அம்சத்துள் இலக்கியத் தகுதியுள் வைக்கப்படாத விழல் கதைகளும் உண்டு.
புகலிடமானது அட்டகாசமாய் வெளியே கத்திக்குழறி என்னைக்கவனி என்று எடுப்பு எடுத்துத் திரிவதற்கேற்ப சிறுகதை, நாவல். கவிதை, நாடகம் விமர்சனம் போன்ற துறைகளை சத்துமிக்கதாய் வளர்த்தெடுக்கமுடியாமலும் அரசியலில் ஈடேறமுடியாமலும் திக்கித்திணறிக் கொண்டு இருக்கின்றது. ஆரசியலில் அவநம்பிக்கையும் தத்துவ விரோதமும் நடப்பின் கேள்விகளில் இருத்து தப்பி சிறு சிறு குழுவாதங்களிலும் அன்னிய முகங்களை தம்தாக்கிக் கொள்வதிலும் முடிவடைகின்றன.
இரணடு நாள் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளின் முடிவிலும் விவரணப்படங்கள் இடம் பெற்றன. முதல் நாள் சுப்பிரமணிய பாரதி என்கிற விவரணப்படம் குமரனின் (கோடையிடிக் குமரன்) அறிமுகத்தோடு தொடங்கியது. இதுவரை அறியப்படாத பாரதி பற்றிய தகவல்களை இது உள்ளடக்கியது. அன்றை சென்னை மாகாணத்திலேயே 13 சந்தாக்கரரர்களை மட்டுமே கொண்டிருந்த ஐரிஷ் மக்களின் விடுதலையை ஆதரித்த அமெரிக்காவின் The Garic American பத்திரிகையின் சந்தா கட்டிய வாசகனாக பாரதி இருந்தான். பாரதி பூனுல் போட்ட தலித்தான ராம் கனகலிங்கம் பற்றிய செய்திகள், திருவல்லிக்கேணியில் யானைக்கு பழம் கொடுக்கும்போது யானையால் தாக்குண்ட பாரதியை துணிவோடு மீட்டெடுத்த பாரதியின் நெருங்கிய நண்பர் புதுவை கிருஸ்ணமாச்சாரி போன்ற அபூர்வத் தகவல்கள் சொல்லப்பட்டது. கவிஞர் ஞானக்கூத்தன் கண்ணன் பாட்டில் பாரதி புதன்மண்டலத்தில் தன் தம்பி இருப்பதை பேசுவதைக் காட்டி பிரபஞ்சத்தில் வேற்றுக்கிரகங்களில் தனக்கு உடன்பிறந்தோர் உண்டு என்று சிந்தனை செய்யுமளவு பரந்தவன் பாரதி என்று எமக்கு காட்டித் தருகின்றார். பாரதியுடன் பழகிய சு.பி.கல்யாணசுந்தரம், நா.பாலசுப்பிரமணிய ஐயர் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரா.சு.பத்மநாதன் போன்றோரும் செவ்வியும் இதில் இடம்பெறுகின்றது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், எழுத்தாளர் வ.கீதா ஆகியோரும் பாரதியைப் பேசுகின்றனர். பாரதி அவர் காலத்திய கருத்தியல் வரம்புகளையும் அரசியல் வரம்புகளையும் கடந்து சிந்தித்தவர் என்றார் வ.கீதா. 1921 செப்டெம்பர் மாதம் 12ந்திகதி இரவு 1மணிக்கு பாரதி மறைவுடன் இந்த விவரணக்குறும்படம் முடிவடைகிறது. பாரதி போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆட்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தான் என்கிற விபரம் இதில் பேசப்படுகின்றது. பாரதி யானையால் தாக்கப்பட்டு நோய்வாய்பட்ட பின்பே வலியை மறக்க அபின் சாப்பிட்டான் என்று நாம் முன்பே அறிந்த செய்தியோடு இது முரண்பட்டது. (பாரதி கஞ்சா புகைக்கும் பழக்கமும் கள்ளு குடிக்கும் பழக் கமும் உடையவர் என்கிற செய்திகளுமுண்டு)
அக்டோபர் புரட்சி வெற்றி பெற்ற 14 நாட்களில் புரட்சியை வாழ்த்திப்பாடிய பாரதி நாட்டுடமை யாக்குவது பற்றி லெனினுக்கு புத்தி சொன்னதும் உண்மையே. ஆனால் இக்குறும் படத்தில் கொள்கையின் வெற்றிக்காக லெனின் இரத்த வெறி கொண்டதை பாரதி கண்டித்தார் என்கிற இந்திரா பார்த்தசாரதியின் வசனம் அவரின் சொந்தக் கருத்தை பாரதியின் புரட்சி மேலான விமர்சனத்துடன் இணைத்துக் கூட்டி கம்யூனிச எதிர்ப்பு சுலோகமாக்கிவிட்டது என்பதைக் காட்டியது. பாரதியை முற்போக்குஉலகுக்கு அறிமுகப்படுத்திய அவனின் உயர்ந்த அம்சங் களை கண்டறிந்து பாரதியியல் என்கிற தனித்துறையைப் படைக்கக் காரணமான ஜீவா, இரகுநாதன், கைலாசபதி, சிவத்தம்பி உட்பட பலர் இங்கு மருந்துக்கும் கூட பேசப்படவில்லை. சுசீந்திரன் பேசும்போது பாரதிக்குக் குருவாய் அமைந்த யாழ்ப்பாணச் சாமியார் பற்றி பேசப்படவில்லை. என்றார். இக்குறும்படம் பாரதியை பிராமணியம் சார்ந்த சூழலில் வைத்து பெரும்பாலும் காட்டுகின்றது. இந்த நிகழ்ச்சியை நடாத்திய குமரன் கால் நூற்றாண்டிற்கு முன்பான யாழ்ப்பாண பட்டிமன்றங்களில் முக்கியமானவர் அவரின் பழையவகைப்பட்ட மொழி வித்தியாசமாய் இருந்தபோதிலும் புதிய மொழியோடும் விடயத் தானங்களோடும் பரீட்சயமற்று திணறினார் அவரின் சொற்பிரயோகம் சம்பந்தமான விமர்சனங்கள் அடிக்கடி எழுந்தன. பெண்ணியவாதிகளால் அடிக்கடி அவர் ஆட்சேபிக்கப்பட்டார்.
இரண்டாம் விவரணப்படமாக மாஞ்சோலை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் ஊர்வலம் மற்றும் அவர்கள் மீதான படுகொலையைப் பற்றிய . ஒரு நதியின் மரணம்" இடம் பெற்றது. இதை சுகன் அறிமுகம் செய்து அதை தலித்துக்களின் போராட்டம் என்றும் பொலிஸ் சாதி ரீதியாக தொழிலாளர்களை அடையாளம் கண்டு தாக்கியதையும் விபரித்தார். சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலம் செய்த தொழிலாளர்களை தாமிரபரணி ஆற்றங் கரையில் வைத்து பொலிஸ் தாக்கி 2 1/2 வயதுக்குழந்தை உட்பட 17பேரை கொன்றது, 40 முஸ்லீம் தொழிலாளர்கள் உட்பட 655 தொழிலாளர்களை கைது செய்தது. பெண்கள் தாக்கப் பட்டு சேலைகளினால் சுற்றப்பட்ட தாமிரபரணி ஆற்றில் உருட்டிவிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல்வேறு சாதிய மதப்பிரிவுகளைச்சேர்ந்த தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் நேரடிப்பேட் டிகள் இதில் இடம்பெற்றன. படம் எல்லோருடைய மனித உணர்வுகளையும் திண்டியிருந்தது. படமுடிவில் விவாதம் தொடங்கியது. தலித்மக்கள் என்கிற மட்டத்தில் மட்டும் ஒடுக்கப்பட வில்லை. சாதிரீதியாக கீழாக மதிக்கப்படவில்லை. முக்கியமாக வர்க்கரீதியாகவும் ஒடுக்கப் படுகின்றார்கள். இந்த இரண்டு நிலைகளையும் மதிப்பிடவேண்டும் என்று அசோக் வாதிட்டார். அழகலிங்கம் இப்பிரச்சினையை தலித் பிரச்சினை, சாதியப்போராட்டம் என்று குறுகிய மட்டத் தில் குறுக்கிவிடாமல் தொழிலாளர்களின் எழுச்சியாகவும் போராட்டமாகவும் அணுகி அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்து ஏனைய தொழிலாளர் மற்றும் சமூகப்போராட்டங்களோடு இணைக்கும் வேலைத்திட்டத்தை முன்மொழிய வேண்டும் என்றார். இந்த விவரணப்படத்தை இங்குள்ள தொழிற்சங்கங்கள், மனிதாபிமான அமைப்புக்கள், மாணவர் இயக்கங்கள் இவை கட்கு வழங்கி ஆதரவு தேடலாம், தொலைக்காட்சிகளில் காண்பிக்க முயற்சிக்கலாம் என்று கிருஷ்ணா, அழகலிங்கம், சுபாஷினி போன்றோர் கருத்து வெளியிட்டனர். இதை தீவிர தலித் வாதிகள் ஏற்கவில்லை. கடும் எதிர்ப்புக் காட்டினர். நையாண்டி செய்தனர். இத்தகைய பேச் சுக்கள் தலித் மக்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகள் பாசாங்குத்தனமானவை, பொய் அழுகை, கழிவிரக்கத்தால் ஏற்படுபவை என்று வாதிட்டனர்.

Page 34
தலித்துக்காக தலித் மட்டுமே பேசவும் வாதிடவும் முடியும் என்கிற இந்தவாதம் ஆபத்தானது. ஒரு போராடும் மக்கள், ஏனைய போராடும் சக்திகள் சமூக விடுதலை உணர்வுடைய போக்குகளிடமிருந்து தனிமைப்படாமல் இருப்பது அவசியம். இங்கு அதிரடித் தலித்வாதிகளின் குறுங்குழுவாதக்குணாம்சம் வர்க்கப்பார்வையை தரிசனம் செய்ய முடியாத வெறுங்கருத்தியல் களில் பிரச்சாரவகைப்பட்ட தன்மைக்கு அப்பால் செல்ல முடியாதுள்ளனர். சுரண்டும் வர்க்கங்களின் மேல் சாதித்திமிர் முன்பு பொருளாதாரம் மற்றும் பிரச்சாரவசதிகள் வாய்க்கப் பெற்றவர்கள் முன்பு தலித் மக்கள் தம் நேசசக்திகள் அற்றும் தம் போராட்டத்தை வெளிப்படுத்தவும் பிரச்சாரப்படுத்தவும் வாய்ப்புக்கள் அற்று தனிமைப்பட்டு அழியும் சாத்தியத்தை இந்த அதீத தலித்தியவாதிகளின் போக்கு படைத்து வருகின்றது. இன்றைய தலித்மக்களின் தம் அடையாளங்களைப் பேணும்போராட்டம் என்பது பொதுவான மனித அடை யாளங்களை அடைய அம்மக்களை அணிவகுக்கவே என்பதையும் தலித் மக்களின் இன்றைய அடையாளங்கள் அவர்கள் உயர்மனித அடையாளங்களை அடைய அம்மக்களளை அணிவகுக்கவே என்பதையும் தலித் மக்களின் இன்றைய அடையாளங்கள் அவர்கள் உயர்மனித அடையாளங்களை சமூக பொருளாதார வாழ்வை பெறும்போது கைவிடவேண்டி யவையே என்பதை நிராகரித்து இந்த அடையாளங்களை என்றென்றமாக பாதுகாக்க முடியும் என்பது சமூக வளர்ச்சிவிதிகளை கவனிக்கத் தெரியாத போக்கே.
இன்று அய்ரோப்பாவில் கறுப்பராய், அகதியாய், ஆசியராய் கருத எந்த சமூக அமைப்பு எம்மை ஒதுக்குகிறதோ அதே சமூக அமைப்பின் வெள்ளைமனிதர்களின் முற்போக்கான பிரிவுதான் மனிதாபிமானச் சக்திகள்தான் எம்மை அரச கெடுபிடிகள் வெள்ளை இனவாதப்பாசிசத்தாக்கு தல்களில் இருந்து பாதுகாக்கின்றன, எம்மை அரவணைக்கின்றன. அகதியை திருப்பி அனுப் பாதே என்றும் வெளிநாட்டாரை கறுப்பின மக்களை வேட்டையாடும் பாசிசசக்திகட்கு எதிராய் போராடியும் பொலிசால் அடி உதை படுபவர்களும் சிறைகளில் இடப்படுபவர்களுமாக அவர்களே உள்ளனர். தென்னாபிரிக்கா, நமீபியா, வியட்நாம், சிம்பாவே, அல்ஜீரியா போன்ற நாடுகளின் விடுதலைக்காக தம் சொந்த தாய்தேசங்களின் வெள்ளை அரசிற்கு எதிராகப்போராடியவர்களும் இவர்கள்தான் எனவே எந்தவொரு எழுச்சியும் தோழமைச்சக்திகளை பெற்றே ஆகவேண்டும் இதை வரலாற்றுணர்வற்றவர்கள் மட்டுமே மறுக்கமுடியும். இங்குள்ள சில தீவிரதலித்வாதிகள் தம் சொந்த மண்ணின் இலங்கைத்தேசத்தின் தலித் மக்கள் பற்றி கால்வரி, அரைவரி கூடப் பேசியது கிடையாது. அம்மக்களின் கடந்தகாலப்போராட்டம் இன்றை தேசியவிடுதலைப் போராட்டநெருக்கடிகளில் அதற்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக அம்சங்கள் இவை பற்றி சராசரி அக்கறை கூடக்காட்டாது இந்திய தலித்துக்காக மட்டும் வரிந்துகட்டுவது ஒருவகைப்போலித் தனமும் அரசியல் ரீதியில் வம்புத்தனமும் கொண்டதாகும். ஒரு நதியின் மரணம் விவரணப்பட நிகழச்சியின் பின்பான விவாதங்களில் முரளி, ராகவன், சோபாசக்தி, நா.கண்ணன், சுபாசினி, தர்சினி, கணேஸ் போன்றோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் திட்டமிட்டபடி புகலிடச்சூழலும் தொடர்பு ஊடகங்களும் நேற்றுவரைக்குமான பிரான்சின் தத்துவப்போக்கு, மறக்கப்பட்ட கடந்தகாலமும் மறக்கப்படும் எதிர்காலமும் போன்ற 3 நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. பொங்குசனி முடிந்து மங்குசனிக்காலம் பின் நவீனத்துவத்துக்கு தொடங்கிவிட்டதை இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் காட்டின. அறுக்ன முடியாதாதன் இடுப்பில் அம்பத்தெட்டு அரிவாள் எனும் கதையாக அதன் இலக்கியம் மொழி சார்ந்த பல்வேறு விமர்சனப்பாங்குகள் செயலற்ற நிலைக்கு தள்ளுவதே இலட்சியமாய் கொண் டவை. இலக்கிய சந்திப்பு தொடர்ந்தும் அரசியலை புறந்தள்ளிவிட்டு இலக்கிய வெட்டிவேலை மட்டுமே செய்து கொண்டு இருக்க முடியாது. என்று நிரூபணமாகிவிட்டது. நிகழ்ச்சிகளை சிவராசா, சுபாசினி இருவரும் நெறியப்படுத்தினர். அழகலிங்கம் நன்றியுரை வழங்கினர். அடுத்த இலக்கியச் சந்திப்பு பிரான்சில் நடைபெறவுள்ளது.


Page 35
...... },
* |×
s.