கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 2001.01

Page 1
இதழ் - 13 தை 2001
வரலாற்றின் இருள் என்னுடன்
உரையாடுவதான வு பெருங்கூட்டமொன்ற
உரையாடலுக்கான இடத்தையும் நீயே சாளரங்கள் கதவுக ஒலிவாங்கிககள் துன் L
துல்லியமான நேரங் அனுமதி வழங்கப்பட
வேதனையின் அலற மொழியின் புதைகுழி நான் பெயர்த்துவை அச்சமூட்டுவதென - அருவெருப்பூட்டுவ அமங்கலம் - இட (வரையறுத்து)
உன் தணிக்கைகோலி தட்டியெறிந்தாய்என்னைத் தட்டியெறி இனி சொற்களற்ற உ நிகழ்த்தலாமென்றாய்
உடன்படுகிறேன் நாடு உன் நாவறுக்கும் , வருவேன்
அந்த மெளன உரை

வெளியில் மிதந்தலையும்
|ண் பெருந்தன்மையை
ரில் பிரகடனப்படுத்தினாய்.
நேரத்தையும் தெரிவுசெய்தாய், ர் அறைந்துபட்டன. ார்டிக்கப்பட்டன காட்டியுடன் பேசுவதற்கான ட்டது.
ஸ்களுடன்
யிலிருந்து த்த சொற்களை
தென - க்கரடக்கள் என்.
இனால்
ய ஏலாத வன்மத்துடன்
- 4527) JIJIJIJITLğ0) Élj
தறுவாளொன்றுடன்
rயாடலுக்கு
- காளிங்கராயன்,

Page 2

gR, Pathmanaba Ilyer 27-189High Street
1Plaistov fondon E13 041D O
él: O208472 8323
கடந்த அம்மா இதழில் (இதழ்-13) வெளியாகியிருந்த மதுசூதனனின் பேட்டியைக் கண்டேன். இந்த மதுசூதனன் யார்?
இலக்கியத்தில் அவருடைய சாதனை என்ன? அவர் என்னைப்பற்றி விமர்சனம் செய்யக்கூடாதென்பதல்ல, என்னை இலக்கியரீதியில் விமர்சிப்பதற்கு இவர் அடைந்த தகமை என்ன?
சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களைக் கூறிக்கொண்டு அதுவே இலக்கியப்பணி, பதிவு என்று சொல்லிக்கொள்வது அறிவு நாகரீகத்துக்கோ, இலக்கிய நாகரீகத்துக்கோ, மனித நாகரீகத்துக்கோ பொருந்தாது.
மதுசூதனன் ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சியில் தளையசிங்கம் தீர்ப்பு வழங்கியுள்ளார் என ஆதாரம் காட்டுகிறார். இந்த ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது? 1963 ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டது. அதன் பின்னர் இந்த 2000 காலப்பகுதிவரையும் நான் மாடுமேய்த்துக்கொண்டா இருந்தேன்?
என்னுடைய சடங்கு தேர்வீ அவா சிறுகதைத்தொகுதிகள், முறுவல் இவை அனைத்துமே அதற்குப்பின்னால் வெளிவந்த என்னுடைய படைப்புகள்.
இன்னொன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து எனக்கு அங்கீகாரம் கிடைக்காதபடியால்தான் நான் வெளியேறினேன் என்கிறார் மதுசூதனன். எவ்வளவு ஒரு சரித்திரப்புரட்டு? 1961ல் அல்லது 1962ல் கொழும்பு ஸாகிரா மண்டபத்தில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டிலே நேரடியாக அவர்களுடன் கருத்துமோதலில் ஈடுபட்டு, அவர்களுடைய கருத்துக்கள் தவறு என்று அறிவித்து, அந்தக்கூட்டத்தை விட்டு வெளியேறி, நற்போக்கு இலக்கியம் என்ற கோட்பாட்டை வைத்து வாழ்ந்தவன் நான். மதுசூதனன் நான் அரசியல் அங்கீகாரம் கிடைக்காததால் அரசியல் பேசுகிறேன்’ என்கிறார்.
தெரியாத கதை தெரியாதென்று சொல்லவேண்டும். சொல்லாடல்கள் செய்து நானும் ஒரு அறிவுஜீவி எனக்காட்டுவது தப்பு.
குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்பு தீராது என்பது போல மதுசூதனனின் வாதங்களில் ஒரு தெளிவில்லை. முன்னுக்குப்பின் முரண்பாடுகள் அநேகம். கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் இப்படிப்பட்ட சீடப்பிள்ளைகளைத்தான் வளர்த்தெடுத்தார்கள். இவரும் அவர்களுடைய சிடப்பிள்ளையோ?
- எஸ். பொ.
O) தை -2001
அம்மா -18

Page 3
பெண்ணுடையதும் தலித்துடையதும் போராட்டங்கள் தொடரட்டும்.
நிறப்பிரிகை இதழ் -10 ல் புலம் பெயர் தமிழ் இலக்கியம்: இருள்வெளி என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்த ஷோபா சக்திக்கு சில வார்த்தை :-
மேற்கத்தைய சனநாயக உரிமைகளையும், சமூகச் சலுகைகளையும், பயன்படுத்தி குடும்பத்தோடும் புருஷனுடனும் கணக்குத் தீர்ப்பதே புகலிடப் பெண்களின் எழுத்துக்களில் எ-கு : புது உலகம் எமை நோக்கி (சிறுகதைத் தொகுதி) முக்கிய பேசுபொருளாய் இருப்பதாய் நாம் காணலாம்.
இத் தொனிக்கு பதில் வைக்கவேண்டிய அவசியம் தெரிகிறது. 1. உதாரணத்துக்கு நீங்கள் எடுத்துக்கொண்ட தொகுதியில் அரசியல் வன்முறையை இன நிறவெறியை மதத்தின் பெயரால் ஒடுக்கப்படுவதை, மேல் சாதியின் அட்டகாசத்தை, ஆண் அடக்கு முறைகளை, யுத்தத்தின் அவலங்களை தெளிவாக முன்வைத்திருக்கும் சில கதைகள் உங்கள், கவனத்திற்கு வரவில்லையா? 2. பெண் குடும்பத்தின் தொழிலாளியாய் காலம் காலமாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதிற்கும் மேலே ஒருபடி போய் ஆணுக்குப் பெண்ணை அடிமையாய் எழுதிவைத்திருக்கும் தமிழ் கலாச்சார சாசனம் என்ற ஒன்று கண்ணுக்குப் புலப்படாததாய் ஆனால் பலமான ஆயுதத்தோடு பெண்ணை அவள் எங்கு போனாலும் காவல் செய்கிறது.
மனித உரிமையை புரிந்து கொண்ட பெண்ணுக்கு அதனை உடைக்க ஒன்றும் பெரிதாக மேற்கத்தைய சனநாயக உரிமை தேவையில்லை. தாயகத்திலும் விவாவகரத்திற்குப்போகும் பெண்களும்,தனியாய் வாழ்வோரும் மறுவிவாகம் செய்வோரும் உண்டு. மேற்குலகில் வாழநேர்ந்த தமிழ் பெண்களுக்கு அந்த உரிமையை பயன்படுத்திக்கொள்ள தெரியாதா என்ன? அதுவல்ல பிரச்சினை பெண்ணுக்கு உரிமை கிடைக்கக்கூடாது என்பதை சாதியை முதுகோடு சுமந்து வந்திருக்கிற மாதிரி அதையும் கொண்டுவந்து சேர்த்து என்ன பாடுபட்டும் இவர்களை காப்பாற்றத்தான் புகலிடங்களில் பிரயத்தனம் நடக்கிறது. அய்ரோப்பிய, ஆபிரிக்க மற்றும் இனங்களின் வாழ்முறைகளை வெறுக்கின்ற (உலகிலேயே தாங்கள் தான் உயர்ந்த கலாச்சாரம் உள்ளோர் என இறுமாந்திருப்பதால்) ஆணாதிக்கப் போக்குடைய தமிழ்ச் சமுகம் இங்குள்ளது. இங்கே பெண் கணவனை விட்டு நீங்கி விட்டால் வேறு நாட்டுக்காரனை, சாதிக்காரனை மணமுடித்தால் தமிழ்ச் சமுகத்தில் அவள் தீண்டப்படாதவள். விளிம்புநிலை மாந்தர். இந்த லட்சணத்தில் பெண்களுக்கு சமூகச் சலுகை இங்கு கிடைக்கிறதா? கண்டு பிடித்துக்காட்டுங்களேன். அது எங்கு கிடைக்கிறது என்று.
புருஷனோடு குடும்பத்தோடு இவள் கணக்குத் திர்க்கப் புறப்பட்டிருந்தால் எத்தனையோ தற்கொலைகள் கொலைகள் நடந்திருக்காது புகலிடத்திலே. தலித் அடித்துக் கொள்ளப்படுவது போல பெண்ணும் குடும்ப கெளரவத்திற்காக சாகடிக்கப்படுகிறாள். அவளை வெள்ளாள ஆண் ஆண்டுகொண்டிருக்கிறான். இதைத்தான் பிராங்போட் ரஞ்சனியும் பெண் பெண்ணாகவே பிறக்கிறாள் என்று கவிதை எழுதினாள். ஆணாதிக்கத்தின் பல்வேறுபட்ட முகங்களை எழுத்துக்களில் பெண் முன்வைக்கையில் அதனைப் புலம்பல்கள் என்றால் இது அதிகாரத்தை நிலைநிறுத்துவதை நியாயப்படுத்தும். பெண்களுக்கு மேலே நடத்தப்பட்டுவரும் வன்முறைகளை அவ்வளவு சுலபமாக இப்படிக்
- 4ம் பக்கம் பார்க்க.
O2) தை -2001
split Dr -13

பாரிஸில் நடந்துமுடிந்த 27வது இலக்கியச்சந்திப்பைப் பார்த்துவிட்டு உது விசர்ச்சந்திப்பு, படுbோர்’ என்று எழுதுவதும் மனச்சாட்சிக்கு ஒவ்வாத விடயம். முதல்நாள் சந்திப்பு அலுப்புத்தான். பொய் சொல்லேலாது. முதல்நாள் கலந்துகொண்டவர்கள் பலரை ஒடஒட துரத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலை சாருநிவேதிதாவின் எதிர் இலக்கியம் பற்றிய உரையோடு சிறிது சூடுபிடித்தது எனலாம். சாரு நிவேதிததா தந்த தகவல்கள் எங்களுக்குப் புதிதுதான். இருந்தாலும் அவரிடமிருந்து நாம் எதிர்பார்த்தவை அதிகம்.
அடுத்தநாள் காலை நீட்சே பற்றிய அமர்வு முதல்நாள் தந்த சோர்வு, தலைப்பைவேறு பார்த்துவிட்டு சந்திப்பில் கலந்துகொள்ளாது விடலாமா என்ற யோசனையை மாற்றியிருந்தது நீட்சே பற்றிய நிகழ்ச்சி. தமிழரசனின் நீண்டுபோன பக்கங்கள். மார்க்சியத்தினூடான ஒற்றை வாசிப்புத்தான். ஆனாலும் பயனற்றது என்று ஒதுக்கிவிடமுடியாது. வின்சற்போல் தயாரிப்பெதுவும் இல்லை. இருந்தாலும் சபையை ஒரு ரெம்ப் இல் நித்திரை கொள்ளவிடாது வைத்திருந்தார். வாசுதேவன் வந்தார் பேசினார் சென்றார். நீட்சே பற்றிய இன்னொரு புரிதலைத் தரமுயன்றார். நீட்சே பற்றிய அறிமுகம் மட்டுமே தேவையாயிருந்த சபைக்கு சிறிது குளப்பமாயிருந்தாலும் நல்ல அமர்வாகக்கொள்ளலாம். அரசியல்வாதிகளால் கவிஞர்களைப்புரிந்து கொள்ள முடியாது. வெறுமனே குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவேமுடியும் என்ற சாருநிவேதிதாவின் கூற்று கவனங்கொள்ளத்தக்கதாக அமைந்தது.
புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியல்ல. முறிந்து போன கிளைதான். அந்த கிளையிலிருந்தும் சில முளைகள் புதிதுபுதிதாகத் தோன்றலாம். இந்த நிலையில் மொமினிக் ஜீவா கூட புலம்பெயர் சூழலுக்கு ஒர் புதிய மனிதரே. ஒன்றரை மணிநேரம் அவையைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். முடிவில் நாடகம் பார்த்தது போலவும் ஒரு உணர்வு. பேசி முடிந்ததும் எல்லோரும் எழுந்துநின்று உணர்ச்சி பொங்க கைதட்டி வரவேற்றது ஒரு இலக்கியப்போராளிக்கு கொடுத்த கெளரவமாகவே கொள்ளமுடியும் விமர்சனங்களுக்கப்பால்.
முதல்நாள் காலை நடைபெற்ற சஞ்சிகைகள் மீதான விமர்சனக் கலந்துரையாடல் சிறிது
விசனத்தை தந்த நிகழ்ச்சியே. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில், இழப்புகளோடு வெளிவரும் இந்த சஞ்சிகைகளை எவரும் படிப்பதில்லையோ என்ற சந்தேகத்தையும்,
கவலையுைம் தந்தது நிகழ்ச்சி.
O30- தை -2001
stisubf -13

Page 4
வெறும் அரட்டைகளோடு காலத்தை ஒட்டுவதும் அதுவே தீவிர இலக்கியப்பணி என்று எண்ணிக்கொண்டிருப்பதும் கொடுமை. சிற்றிதழ் இலக்கியம் அல்லது தீவிர இலக்கியம் என்பது எதிர்க்குரல். ஒரு கலகக்குரல். சமரசங்களுக்கு இடமில்லாதது. இதைப்புரிந்து கொள்பவர்கள் மட்டுமே அந்த தளத்தில் எஞ்சமுடியும். இந்தக்குரல் மிகவும் சிறியதுதான். பெருமக்கள் கூட்டத்தை இது எட்டமுடியாது. எட்டுவது இதன் நோக்கமுமில்லை. ஆனால் 'பெருமக்கள் கூட்டம்" இந்தச்சிறுதிரளை சும்மா எத்திவிட்டுப்போகமுடியாது என்பதே அதன் சிறப்பும்.
எனினும், எங்கள் இயலாமைகளையும், இல்லாமைகளையும் மறைக்க பலவேறு சாக்குப் போக்குகளை சொல்லி தப்பிக்கொள்ள முயல்வதோடு அந்தக்குரலினை வலிமையிழக்கவும் செய்கிறோம் என்கிற உண்மை உணரப்படவேண்டும். 'இன்றைய சூழல் ஒரு கலக்காரனின் வருகைக்காக காத்துக்கிடக்கிறது" என்ற சுசீந்திரனின் கூற்று பொய்யல்ல.
- மனோ -
S. Manoharan , (Esc. 13), 210Ave. du 8 Mai 194593150 Le Blanc Mesnil, 93150 France M1a2n3o4Gaol.com
“அடுத்த இலக்கியச் சந்திப்பு (28வது தொடர்) நோர்வேநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
2ம் பக்கத் தொடர்ச்சி.
கணக்குத் தீர்க்கும் விசயமாக சொல்லிவிடமுடியாது. கலாச்சாரம் தொலைகிறது என குய்யோ, முறையோ போடுகிறவர்களுக்கும் கணக்குத் தீர்க்கிற விடயங்களை புகலிடத்தில் பெண்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
பாமதி, நளாயினி, ஜெயந்திமலா, லக்சுமி, ஜெயா, தயாநிதி, பிரதிபா என நீளும் எத்தனையோ படைப்பாளிகளின் பங்குகளை கவனத்தில் கொண்டு வாருங்கள்.
சமூகக் கெடுமுடிகள் கொடுமைகள், தனியாக பெண்மீது சுமத்தப்பட்டிருக்கும் காரணத்தற்காகவே அவள் எழுதியாகவேண்டியிருக்கிறது. குடும்பத்துள்ளே தலித்தாய் இருக்கிறநிலை தமிழ் பெண்ணிலை. பெண்ணுடையதும் தலித்துடையதும் போராட்டங்கள் தொடரவேண்டிய கால கட்டாயத்தில் இருக்கையில் அவர்களின் குரல்கள் பெருங்குரலாக எழுவதற்காக அவர்கள் ஆக்கங்கள் எழட்டும்.
- தேவகி
-C4O- தை -2001
pubudir - 13

பிரெஞ்சு மொழியில் வெளியாகும் காலைத்தினசரிகளில் விற்பனையில் முன்னணி வகிக்கும் LiBERATION 15.12.2000 அன்றைய பதிப்பில் கீழ்க்கண்ட கருத்துகள் வெளியாகி இருந்தன.
’பிரான்சில் வாழும் 90% அகதிகள் பொய்யான அகதிக்காரர்கள். இவர்கள் அகதிகளுக்கான அனுமதி அட்டைகளோடு பிரான்ஸில் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்துக்காக மட்டுமே பிரான்சில் காத்திருக்கிறார்கள். அது தான் பிரெஞ்சுப்பிரசா உரிமை.”
இந்த மானிடவிரோத கருத்துக்களை உளறியிருப்பவர் தீவிர இனவாதியான லு பென்னோ, அதி தீவிர இனவாதியான சந்திரிகா பண்டாரநாயக் காவோ கிடையாது. இக் கருத்துக்களை உளறியிருப்பவர் தமிழ்-பிரெஞ்சு மொழி எழுத்தாளரான க. கலாமோகன் ஆவார்.
"நான் இங்கு கடந்த 18வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். நான் ஒருபோதும் பிரெஞ்சு பிரசா உரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை. இது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவுமில்லை” என தொடரும் க. கலாமோகன் கொழும்பில் பத்திரிகையாளராக செயற்பட்டு வந்தவராம். (இப்பத்திரிகை அக்காலத்தில் இலங்கை அரசின் பேரினவாதத்திற்கு `சிஞ்சக்” அடித்துவந்த தினபதி”என்பதும், இப்பத்திரிகையை 1983 காலப்பகுதிகளில் ஈழத்துப்போராளிகளும், மக்களும் யாழ்நகர வீதிகளிலே போட்டு கொழுத்தி தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள் என்பதையும் Liberation பத்திரிகையில் பதிவுசெய்ய க. கலாமோகன் மறந்துவிட்டது கவலைக்குரியது ஆகும்.)
பின்னர், 1983 ஆடி வன்செயல்களின் போது தமது பத்திரிகை காரியாலயத்தின் மூன்றாம் மாடியில் இரண்டு வாரங்களாக ஒளித்திருந்தாராம். அங்கிருந்து சாளரத்தின் வழியே வெளியே பார்த்தாராம். பெண்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டன, மனிதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. க. கலாமோகன் அகதிமுகாம் போய்ச்சேர்ந்தாராம். "அட் என்னடா இது நம்ம நாட்டிலேயே நாம அகதியாய் போனோமே” என்றவாறாக விசாரப்பட்டு பிரான்ஸ் செல்ல முடிவெடுத்தாராம்.
அது மெய்தான். 1970களின் இறுதிப் பகுதிகளிலிருந்து பயங்கரவாதத்தடுப்புச்சட்டம், அவசரகாலச்சட்டம், ஆறுமணிச்சட்டம், ஆமிச்சட்டம் என அநேக அயோக்கியத்தனமான சட்டங்களைச் சிங்களப் பேரினவாத அரசு போட்டபின்பு எந்த ஒரு தமிழ்பேசும் சீவனாலும், ஈழத்தின் எந்த ஒரு முலையிலும் கண்காணிப்புகளையோ, கைதுகளையோ, சிறைகளையோ, சித்திரவதைகளையோ, குண்டுவீசும் கொடுமைகளையோ, கொலைகளையோ எதிர்கொள்ளாமல் அனுபவிக்காமல் இன்றுவரை வாழமுடியவில்லை. அரசாங்கத்தை அண்டிப்பிழைக்கும் தமிழ் அரசியலாளர்கள் அறிவுஜீகள் ஆகியோருடைய “நாளை’ எப்படி இருக்கும் என்பதும் தெரியாது. அரசாங்க அதிபர்கள், முன்னாள் அமைச்சர்களைக் கூட இந்த அரசு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறது. அட அவ்வளவு ஏன்?தினபதிநிப்போட்டரே அகதியாய் பிரான்சுக்கு ஓடிவரவில்லையா?
ஆகமொத்தம் எல்லா தமிழ் பேசும் மக்களும் உயிராபத்தின் விளிம்பில் தான் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாளைக்கான உயிர்த்திருப்பு என்பது கடந்த இருபது வருடங்களாய் இயக்க/ வர்க்க/ பால்/ சாதி வித்தியாசமின்றி ஒவ்வோரு தமிழ்பேசும் சீவனுக்கும் கேள்விக்குறியாகவே கிடக்கிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் புகலிடம் தேடும் உரிமையும் இருக்கிறது.
இன்றைக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக ”சாளரம் வழியே’ கொடுமைகளைப் பார்த்த இந்தக் கலாமோகன், கையிழந்து, காலிழந்து பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, சிறைகளில் வாடியோரை அல்லது இவற்றை எதிர்கொள்ளக்கூடிய நெருக்குவாரத்தில் இருப்பவர்களை (தமிழ் பேசும் மக்களில் நூற்றுக்கு நூறுவீதத்தினருக்கும் இந்த ܬܐPESE இருக்கிறது என்பதை மறுபடியும்
தை -2001
9ILibton - 13

Page 5
அடித்துக்கூறவிரும்புகிறோம்) போலி அகதிகள் என்று கூறுவது மானுட விரோதமானது. திமிர்த்தனமானது. அகதிகளைக் கேவலப்படுத்துவது. மற்றவர்களை வெறும் பேயர் விசரராக்குவது.
கருத்துக்களை கூறும் களம் பொருள் இடம் ஏவல் அறிந்து இப்படிக்கூறுகிறார் கலாமோகன். "நான் அகதியாய் வருவதற்கு பிரான்சை தெரிவுசெய்தேன். ஏனெனில் பிரெஞ்சு இலக்கியவாதி மொலியேர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தார்." (தூக்கிக்கொடுத்த தூப்ளக்ஸ், காலை வாரிய கலைஞன் போன்ற காவியங்களை யாத்தவர் இவரே என்று கூறுவோரும் உளர்)
அப்பிடிப்போடு ராசா அரிவாளை. மொலியேரிற்கு முன்பே தாஸ்தாவாஸ்கி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தும் கலாமோகன் சைபீரியாவிற்கு அகதியாய் போக முடிவுசெய்யாததற்கு காரணம் கலாமோகனுக்கு தாஸ்தாவாஸ் கியை பிடிக்கவில்லையா, இல்லை சைபீரியாவை பிடிக்கவில்லையா என்பது பொறுத்த கேள்வியாகும்.
"புகலிடத்தில் வாழ்வதென்பது மரணதண்டனைக்கு ஒப்பானது” என்கிறார் கலாமோகன். அப்படியானால் ஏன் 90% மான போலிகள் எதற்காக, அடாத்தாக மரணதண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இலக்கியவாதியும் அரசியல் விமர்சகருமான கலாமோகன் விளக்கியே ஆகவேண்டும்.
Liberation பத்திரிகை ஒன்றம் லப்பா சிப்பா பத்திரிகை கிடையாது. பிரெஞ்சு வெகுஜனக் கருத்தாடலை உருவாக்குவதில் பிரதான பாத்திரத்தை வகிப்பது ஏற்கனவே எங்களை பொருளாதார அகதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் வெகுஜனஊடகங்கள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு விளக்குப்பிடிக்கப் போயிருக்கிறார் கலாமோகன்.
போலந்து ஆறு விழுங்கியவர்கள் எத்தனை?முடியவாகனத்துள் முச்சடங்கிப்போனவர்கள் எத்தனை? எல்லையைக் கடக்கையில் குளிர்பட்டும் வெடிபட்டும் இறந்தவர் எத்தனை? அத்தனைபேர்களினதும் கல்லறைகளின் மீதல்லவா காறியுமிழ்ந்திருக்கிறார் கலாமோகன். கலாமோகனின் கருத்துக்கள் வெளியாவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாகத்தான் ஜேர்மனியில் அகதிவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு றுலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த ஒரு அகதி இளைஞர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதை க.கலாமோகனுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
நீங்கள் உண்மையான அரசியல் அகதியென்றால் ஏன் இந்தியாவில் தஞ்சம்கோராமல் மேற்கு நாடுகளுக்கு வந்தீர்கள் என யாராவது ஒரு ``அறிவுக் கொழுந்து’ எங்களைப்பார்த்துக் கேட்குமானால் தடா வென்றால் என்ன?”பொடா” வென்றால் என்ன? திப்புமகால் என்றால் என்ன? சிறப்பு முகாம் என்றால் என்ன?துாக்குக் கயிறென்றால் என்ன? கல்விமறுப்பு என்றால் என்ன? நாடுகடத்துதல் என்றால் என்னவென்று அவ் "அறிவுக்கொழுந்து'வுக்கு விரிவாக விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பிரான்சில் வாழும் அகதிகளில் 90% பொய்யானவர்கள். இவர்கள் அனைவரும் பிரசாஉரிமைக்காக மட்டுமே காத்துக்கிடக்கின்றனர் போன்ற அச்சொட்டான வீதக்கணக்கை கலாமோகன் எப்படிக் கணித்தார்? பொய் அகதிகள், உண்மை அகதிகள் என்பதற்கான கலாமோகனின் அளவுகோல்கள் என்ன?
யுத்தத்தால் எனது நாடு அழிந்துவிட்டது, நான் மீண்டும் அங்கு போக விரும்பவில்லை” என்று முடிக்கிறார் கலாமோகன். அப்படியானால் எப்படி இந்த 90% மக்களும் அங்கேயே இருந்திருக்கலாம் என்கிறார் கலாமோகன்? இப்படியாக "இன்ரநசனல் லெவலில் உளறியிருப்பதற்கும் அகதிகள் மீது சேறடித்ததற்கும் கலாமோகன் வெட்கப்படவேண்டும்.
ஷோபா சக்தி சாகனர் அகதி அட்டை இல:7533077810 OeSO அகதி அட்டை இல: 7743634242
தை -2001
egonbior -13

O
மாற்று அ. முத்துலிங்கம்
ஆபிரிக்க பாதை கண்டுபிடித்த சில மாதங்களில் இது நடந்தது. இந்த இருண்ட கண்டத்தில் என்னவும் நடக்கலாம் என்று என்னை மிகவும் தயாரித்திருந்தார்கள். எப்படிப்பட்ட தயாரிப்புகளும் சிலவேளைகளில் பற்றாமல் போய்விடும். ஆனாலும் நான் போதிய தைரியம் இருப்பதுபோல் காட்டுவது என்ற தீர்மானத்தில் இருந்தேன்.
நாலு நாள் வயதுகொண்ட பாம்புகுட்டிகள் போல அவள் தன்னுடைய கேசத்தை தனித்தனியாக சுருட்டியும், பின்னியும் விட்டிருந்தாள். அவள் சாயும் போது அவையும் சாய்ந்தன; நிமிரும்போது அவையும் நிமிர்ந்தன. பாம்பு குட்டி பின்னல்கள் அவளை தோளை தொடப் பயந்ததுபோல ஒருமரியாதையான துாரத்தில் நின்றன. நீளமான கறுப்பு உதடுகளை மெல்லத்திறந்து வணக்கம், என்று சுத்தத் தமிழில் உச்சரித்து எனக்கு திகைப்பூட்டினாள். என் இரண்டு கன்னங்களிலும் பறவை தொட்டது போல சின்னச்சின்ன முத்தம் சரிசமமாக வைத்து உள்ளே அழைத்து சென்றாள். இது எல்லாம் என் நண்பனுடைய சதி என்பதை நான் பின்னால் தெரிந்து கொண்டேன்.
என் முழங்கால்கள் ஆடுவதை மறைப்பதற்கு என் தயாரிப்புகள் உதவவில்லை.
அதிகமான துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். என்னுடைய வயதுதான் அவளுக்கும் இருக்கும். அவள் பேச்சு சுபாவமாகவும், சிநேகமாகவும் இருந்தது.
பாம்புக்குட்டி கேசப் பெண்ணழகியே, குடிப்பதற்கு ஏதாவது பானம் இருக்கிறதா?, என்று கேட்டேன். வாயை முடிய பிறகுதான் எனக்கு தண்ணிர் விடாய்க்கவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. அவள் சட்டைசெய்யவில்லை. பூப்பந்துதட்டுவது போல அந்தகேள்வியை காற்றுபக்கமாக தட்டிவிட்டு என் முன்னே மாதா கோவிலில் மண்டியிடுவது போல கால்களை மடித்து உட்கார்ந்தாள். என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே தலையை பின்னால் எறிந்தாள். அவள் கண்ணின் ஆழம் என்னை திக்குமுக்காட வைத்தது.
'வசதியின்மைக்கு பழக்கப்பட்டவள் நான, என்றாள் திடீரென்று. ஒவ்வொரு நிமிடத்தையும் நிறைத்து இவள் ஏதாவதுசெய்தபடியே இருந்தாள். இப்பொழுது அவள் தன் உடம்பை முன்றாக மடித்துவிட்டாள். என் முழங்கால்களை மிருதுவாகத் தொட்டாள்; அப்படியும் நடுக்கம் தணியாமல் இன்னும் அதிகமாகியது.
பஞ்சிமுறித்தபடி எழும்பி நின்றாள். சுழல் நாற்காலி போல் சுழன்று திரும்பியபோது அவளுடைய மேலங்கி கழன்றுவிட்டது. உள்ளே ஒன்றுமில்லை. முகத்தில் அடித்தது அந்த வயிறு தான்; சுண்டிவிட்டது போல இருந்தது. இதில் எறும்பு ஊர்ந்தால் ஊதலாம்; கிள்ளிப்பிடிக்க முடியாது. அப்படி இறுக்கமாக இருந்தது.
தொலைபேசிகள் துாங்குவதில்லை. ஆபிரிக்காவின் அகாஸியா மரங்களால்
OzO
9ilibidir -13 தை -2001

Page 6
மறைக்கப்பட்ட அந்த விடுதியில் ஒரு தொலைபேசி இருந்தது. இதனுடைய ஒலி ஏணி 1-10 என்று இருக்கும். எங்கள் டெலிபோன் ஒலியை 4ல் பொருத்தி இருந்தார்கள். காதுக்குஇனிமையான ஒலிதருவதற்காக இது பழக்கபட்டிருந்தது. பனிக்குளிர்அடிக்கும் காலத்தில் கணப்பை முட்டிவிட்டு பத்து அடி துாரத்தில் போர்வையால் முடிக்கொண்டு இருக்கும் போது கிடைக்கும் சுகம்போல இந்த டெலிபோன் அடிப்பது காதுக்கு இதமாக இருக்கும். இந்தியா, இலங்கை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என்று டெலிபோன்கள் இரவு நேரங்களில் நலமானதும், துக்கமானதுமான செய்திகளை சுமந்தபடியே வரும். எங்கள் எதிர்காலங்களை நிர்ணயிக்கும் இந்த கருவியை சுற்றி இருந்து நானும், விடுதி நண்பர்களும் மணிக்கணக்காக சம்பாஷிப்போம்.
ஒருநாள்நடுநிசி என்னைத் தேடி ஒரு செய்தி வந்தது. எனக்கு ஒரு தேசம் கிடைத்துவிட்டது. ஜேர்மனி என்று சொன்னார்கள். அன்று முழுக்க நான் துாங்கவில்லை. சந்திரமண்டலத்தின் இருண்ட பகுதியில் இருந்து பேசுவதுபோல அப்பாவின் குரல் அடைத்துப்போய் ஒலித்தது. அம்மா வளையல் இல்லாத கைகளை துாக்கி ஆட்டி விடை கொடுத்தாள். பின்னாத நீண்ட கூந்தலுடன் மகேஸ்வரி தோன்றினாள். தன் கைக்குட்டை எங்கே என்று விசாரித்தாள். என் நினைவுகள் முன்னும் பின்னும் சுழன்றன. அவற்றிலே கணிசமான பகுதியை பாம்பு கேசப்பெண் பறித்துக் கொண்டாள்.
அன்று இருள் ஒருவிதமான சுவாலை வீசிக்கொண்டு பிரிந்தது. ரேஷனுக்கு பால் கொடுப்பதுபோல் ஆகாயத்தில் இருந்து யாரோ கஞ்சத்தனமாக மழைநீரைத் தெளித்துக் கொண்டிருந்தார்கள். நீர் பொட்டு பொட்டாக இங்குமங்கும் விழுந்தது. சில விழுமுன்னே ஆவியாகி திரும்பவும் பிறந்த வீட்டுக்கு போயின.
விமானம் ஒருமணி நேரம் தாமதம் என்றுசொன்னார்கள். இளம்பெண் ஒருத்தி திடீரென்று திரும்பினாள். பாம்பு கேசக்காரிபோல உயரமாக இருந்தாலும் முகம் வேறாக தெரிந்தது. ஒருமந்திரவித்தை போல அந்தப் பெண் திடீரென்று தோன்றலாம் என்றுமணம் அங்கலாய்த்தது. இந்த ஆசை வந்த பிறகு இருக்கைகளில் அமர்ந்தவர்களையும், தடுப்புக்கு அப்பாலிருந்து வரும் பயணிகளையும் பார்க்ககூடுமான வசதியான ஒரு இருக்கைக்கு மாறினேன்.
வெள்ளை சீருடை அணிந்த இருவர் தடுப்பை கடந்து வந்தார்கள். தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே பயணிகளை உற்றுப் பார்க்கும் வேலையை செய்தார்கள். என்னிடம் ஞானக்கண் இருந்தது; ஞானப்பல் இருந்தது. ஆனால் ஞானக்காது மாத்திரம் இல்லை. அவர்கள் ரகசிய குரலில் பேசியது எனக்கு கேட்காமல் போய்விட்டது. நான் அவசரமாக கண்களை தாழ்த்தி boarding pa65 அட்டையை சரிபார்த்தேன். சிறிதுநேரம் கடத்திவிட்டு மறுபடியும் திரும்பி சென்றார்கள்.
கறுப்பும், சிவப்பும், மஞ்சளுமான ஜேர்மன் கொடி வர்ணத்தை தன் உடம்பிலே பூசிக்கொண்ட லுவ்தான்ஸா விமானம் தரையை தொட்டது. ஜயாயிரம் மைல்பறந்துவந்த களைப்புஅதற்கு. ஓர் ஐயாயிரம் மூச்சை அடக்கிவைத்து ஒரேயடியாக வெளியே விட்டு நிதானமாக ஊர்ந்து வந்துநின்றது. முடியநடைபாதை நகர்ந்துபோய் விமானத்தின் கதவுடன் தொட்டு வழி செய்தது. ஒடுதரை விளக்குகள் மறுபடியும் அணைந்தன.
எங்களிடம் இருந்த அரிக்கன் விளக்கை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பாதான் கொளுத்துவார். பின்னேரங்களில் மைமலாகுமுன் அதை கிலுக்கி
-Os) தை -2001
søstblot - 18

பார்ப்பார்.அதுகொடுக்கும் சத்தத்தில் இருந்து எவ்வளவு எண்ணெய் உள்ளே இருக்கிறது என்று ஊகித்துவிடலாம். அந்த லாம்பின் சிமிலியை பத்து நிமிட காலம் சீலையினால் அலுக்காமல் ‘துடைப்பார். அளவாக மண்ணெண்ணய் ஊற்றி, திரியை துாண்டி கத்தரிக்கோலால் சமன் செய்து வெட்டிவிடுவார். இந்த சிறந்த வேலை வேறு ஒருவருக்கும் பங்குபோட்டு கொடுக்க முடியாதது.
என்அப்பாவுக்கு இரவில் நீண்ட கனவுகள் வரும். நித்திரை முடித்து அவர் எழும்பியபிறகும் அவை தொடரும். என்னை வெளிநாட்டுக்குஅனுப்பும் கனவுஅப்படித்தான் பல நாட்கள் வளர்ந்தது. விரோதித்தனம் காட்டாமல் சாதுவாகப் பறந்த விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தன. எங்களைச்சுற்றி சாவுகள். நான் பிரியும் காலம் வந்துவிட்டது. அன்று அப்பாவின் நேரடியான கண்காணிப்பில் சிமிலி துடைக்கும் வேலை எனக்குகிடைத்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நான் பயணப்படுவதற்கான நாள் நெருங்கிய போது அப்பாவின் வாஞ்சை அதிகமாகியது. அதை எப்படியும் காட்டிவிட வேண்டுமென்று துடித்தார். 'தம்பி, என்றுஅழைப்பார், பிறகுநாக்கு மந்தமாகிப்பேசமட்டார். ஏதாவது சொல்ல வருவார் பிறகு சொல்லமல் விட்டு விடுவார். அலிஸின் அதிசய உலகில் வரும் முஞ்சூறு போல அப்பா முடிக்காமல் விட்ட கதைகளும், வசனங்களும் பலவாக இருந்தன. அவை எல்லாம் அவர் படுக்கும் மரக்கட்டிலுக்கும், கூரைக்கும் இடையில் இன்றுவரை அந்தரத்தில் சுற்றிக்கொண்டே இருப்பதுபோலன்னக்குஅடிக்கடி தோன்றும்.
எங்கள் குடும்பத்து வேலைகள் சரிசமமாக பங்குபோட்டு கொடுக்கப்பட்டிருக்கும். அம்மா தோசை பிரட்டுவாள்; அக்கா தலைக்கு சீயக்காய் பிரட்டுவாள்; அப்பா காசு பிரட்டுவார். அப்படித்தான் அப்பா பயண முகவருக்கு காசு கட்டி என்னை அனுப்பி வைத்தார்.
இந்த பயண முகவரை இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது. மிகவும் ஒடுங்கிய வாசலுக்கால் போகப் படைக்க பட்டவர் போல ஒடுங்கிய வடிவம் கொண்டராக காணப்பட்டார். பொய் இவருக்கு இயற்கையாக வந்தது. எங்கள் சீனியர்குலசிங்கம் பதினொருமாதங்களாக இங்கு இருண்ட விடுதியில் தங்கியிருக்கிறான். என்னை கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்தான். தனக்கு ஒரு நாடு படைக்கப்பட்டுவிட்டது அதனுடைய பெயர்தான் இன்னும் தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான். மகேஸ்வரி எந்த இடத்திற்கு வந்தாலும் அங்கே அவள் வனப்பு தொற்றுவியாதிபோல பரவிவிடும். இருப்பதற்குமுன் ரெண்டு பக்கமும் பார்த்துவிட்டு நீண்ட தலைமுடியை இழுத்துஇழுத்து பிருட்டத்தின் கீழ் வைத்து மெத்தையாக மடித்து அதற்குமேல் தான் இருப்பாள்.மலர்வதற்கு இன்னும் இரண்டுநாள் அவகாசம் உடையமல்லிகை மொட்டுகளைத்தான்அவள் கோத்து கூந்தலில் அணிந்திருப்பாள். அந்த மல்லிகை விரிந்து நான் பார்த்ததில்லை. விரிய முதல் வரும் ஓர் இளைய மணம் தான் அவளிடமிருந்து வரும்.
ஒட்டகத்தின் கண் இமைகள் அடர்த்தியாக இருப்பது பாலைவனத்துமணல் வீச்சை தடுப்பதற்காக என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பெண்ணின் இமைகளும் அப்படித்தான் அடர்ந்து, கறுத்துபடபட வென்று அடிக்கும். வேண்டாத ஆடவர்களின் பார்வையை அவள் அப்படித்தான் துரத்தினாள் போலும்.
நான் பயணம் புறப்படும்போது அந்தக் கண்களால் சாடை செய்தாள். ஒருவரும் அறியாமல் வந்து ஒரு கடிதமும் கொடுத்து அதை பிளேன் புறப்பட்டபிறகு படிக்க சொல்லி என்னிடம் உத்திரவாதம் வாங்கிக் கொண்டாள்.
-Os) தை -2001
9ILBLOA - 13

Page 7
அந்தக் கடிதம் ஓர் உறையில்கூடப் போட்டு சிறப்பு செய்யப்படவில்லை. அப்பியாசக் கொப்பியின் கடைசி ஒற்றையை அவசரமாகக் கிழித்து அதில் எழுதியிருந்தாள். நாலாக மடித்து மிகவும் பாதுகாக்கப்பட்டு, அவளுடைய கை வியர்வையில் நனைந்து, பலஎதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, என் சட்டைபையில் கிடந்தது.
டெஸ்டிமோனாவின் கைக்குட்டை களவு போனதுபோல இவளுடையதும் களவு போயிருந்தது. எடுத்ததுநான்தான். பயணம் புறப்படும் வரை அவள் அதுபற்றி அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான்பிரிந்த போது, இதற்கு முன்புஉபயோகப்படுத்தாத ஒரு புன்னகையை வைத்திருந்து எனக்காக வீசினாள். உள்ளங்கையை கூட மறைக்கமுடியாத சிறிய கைக்குட்டை அது முலையிலே சிவப்பு பூ போட்டது. இருபதுகைக்குட்டைகளா அவளிடம் இருக்கிறது? இருப்பது ஒன்றுதான்! எப்படி தெரியாமல் போகும். அது பற்றி கட்டாயம் கடிதத்தில் எழுதியிருப்பாள் என்று எதிர்பார்த்தேன்.
அப்பாவின் கையெழுத்து தென்கொரிய தேசிய கீதம் போல வாசிப்புக்குஅப்பாற்பட்டதாக இருக்கும். அம்மாவினுடையது கால், கொம்பு, விசிறி, சுழி ஒன்றுக்கும் தரவேண்டிய மரியாதை தராமல் ஒரு கோபத்தோடு எழுதிய மாதிரிநட்டுக்கொண்டு நிற்கும். என்னுடைய மகேஸ்வரியினுடையது அப்படியல்ல. மலர் முகைபோல அவளுடைய அட்சரங்கள் தனித்தனியாகவும், குண்டுகுண்டாகவும் இருக்கும்.
அந்தக்கடிதம் படிக்கும்போது சொண்டைவிட கண் வேகமாகப் பறந்தது. எங்கே கடைசிவரியில் 'அன்பான தங்கை, என்று முடித்துவிடுவாளோ என்ற பயம் பிடித்து ஆட்டியது. ஒரு கிழவியின் கடிதத்திற்கான சகல தகுதிகளுடன், புத்திமதிகளால் மிகவும் களைத்துபோய் அது காணப்பட்டது. நல்லாய் படிக்கவேண்டுமாம். விரைவில் உத்தியோகம் பார்க்க வேண்டுமாம். இவ்வளவு நம்பிக்கையோடு அனுப்பி வைக்கும் பெற்றோரை ஏமாற்றக்கூடாதாம். மேல் நாடுகளில் கெட்டுபோவதற்கு பல சந்தர்ப்பங்கள் உண்டாம். இந்த வகையாக கஸ்துாரிபாய் எழுதுவதுபோல எழுதியிருந்தாள்.
அந்த வரிகளையெல்லாம் துடைத்தும், துளைத்தும், முகர்ந்தும் பார்த்தேன். எங்கேயாவது காதல் ஒளித்திருக்கிறதா என்ற ஆசையில். அப்பொழுதுதான் கடைசி வரியில் ஒரு கதவு திறந்தது; மத்தாப்பு வெடித்து விரிந்தது. போனால் போகிறது என்றுமுத்தங்கள் முன்னுாறு, என்று முடித்திருந்தாள். இவள் எப்படி முன்னுாறு முத்தங்கள் என்று சொல்லலாம். ஒரு சின்னி விரலைக்கூட அவள் தொடுவதற்கு அனுமதித்தில்லை. முன்னுாறு முத்தங்களாம்! இதிலே என்ன கஞ்சத்தனம். உண்மையிலே சொண்டுகள் வற்ற கொடுக்கப் போகிறாளா? ஓர் எழுத்துத்தானே! ஒரு முவாயிரம், முன்று லட்சம், மூன்றுகோடி என்றால் என்ன குறைந்தாவிடப் போகிறது? ஏதோ நான் கல்குலேட்டர் வைத்து எண்ணிப் பார்த்துவிடுவேன் என்று பயந்ததுபோல முன்னுாறு என்று எழுதி முடித்திருந்தாள்.
என் அம்மாவின் வாசனை மறந்துகொண்டு வந்தது. அதைஞாபகத்தில் கொண்டுவருவது சிரமமாயிருந்தது. ஒரு நாள் ஒலிம்பிக் வட்டம்போல அவள்தன் தங்க வளையல்களை நிலத்தில் பரப்பிவிட்டு ஏதோஆலோசனையில்இருந்தாள். அந்த வளையல்கள் வெகு சீக்கிரத்தில் என்னுடைய பயணசீட்டு செலவுகளுக்கு மாற்றப்படும் என்பது எனக்குதெரியாது. வளையல்கள் இல்லாத கைகள் முற்றிலும் மாறி என் அம்மாவை அந்நியப்படுத்தின.எனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? பயணமுகவர் தயாரித்த பாஸ்போட்டில் நடுங்கியபடி பிளேன் ஏறியதும் , அப்பா முகத்தை துடைத்ததும், அம்மாவின்
-Old தை -2001
stbor -13

வளையல் இல்லாத கை அசைந்ததும், அக்காவின் அழுது வீங்கிய கண்களும் எவ்வளவு சீக்கிரத்தில் மறந்து போனது.
என் சிந்தனை என்னை அறியாமல் சானல் மாறி ஆபிரிக்க பெண்ணின் வசம் வந்துநின்றது. காய்ந்த சருகிலே நெருப்பு பற்றுவது போல சிலபேரைக் கண்டதும் ஆயிரம் காலமாக அறிந்ததுபோல ஒர் உணர்வு வரும். இதற்கு தேசமோ, மொழியோ, நிறமோ தடையில்லை. அவளுடைய அனுபோகம் என்பயத்தை துரத்தியது. உடல் கூச்சத்தை துறந்தது. இந்தக் கணத்துக்காகவே நான்படைக்கப்பட்டதுபோல உணர்ந்தேன். இதற்கு சாட்சி அவளுடைய ஸ்பரிசத்திற்கு முன்போ, பின்போ எனக்கு ஒருவித குற்ற உணர்வும் தோன்றாதது தான்.
குலசிங்கத்தின் விசா இன்னும் தயாராகவில்லை. எனக்கும் அப்படியே என்று தினமும் செய்தி கொண்டு வந்தான். எனக்கு வயிறு கலங்கிக் கொண்டு இருந்தது. இந்த நாட்டு சிறைச்சாலை பற்றி நான் மிகவும் தெரிந்து வைத்திருந்தேன். அங்கு போனவர்கள் மீள்வது அரிது. இதற்கு முன்வந்த குருப்பில் ஒருவன் பிடிபட்டு இன்னும் அங்கேயே இருந்தான். அவன் ஒருவரையும் காட்டிக்கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஆபத்தின் ஆழம் தெரிந்திருந்தது. ஆனாலும இன்னும் ஒருநாள் தவறினால் இன்னொரு இரவு கிடைக்கக்கூடும் என்ற அற்ப ஆசையும் இருந்தது.
இந்தநேரத்தில் அந்தப்பெண் வேறொரு ஆடவனுடன் இருப்பாள் என்பது எனக்குநிச்சயமாக தெரிந்தது. என்வசம் இருந்த அந்த சொற்பநிமிடங்களில் அவள் தன்னை என்னிடம் ஒன்றும் மிச்சம் விடாமல் ஒப்படைத்து விட்டாள். அதில் ஒருவித சந்தேகமுமில்லை. ஒருவேளை அவள் வந்து விடக்கூடுமோ என்று அடிக்கடி பார்த்தவாறே இருந்தேன்.
வேரோடு என்னை இழுத்து மாரோடு அணைத்து ‘என் இனிய குவியலே, என்று என்ன காரணத்தோடோ அழைத்தாள். ஒரு சொட்டும் மிச்சம் விடக்கூடாது என்பதுபோல என் வசம் இருந்த முத்தங்களை என்னிடம் கேட்காமல் பிடிவாதமாக துடைத்து எடுத்துக்கொண்டாள். அவள் மிகச்சிறந்த நடிப்புக்காரியாக இருக்கவேண்டும்; அல்லது அவளுடைய பாலைவனத்து மனதில் ஈரலிப்பு எங்காவது ஒளிந்திருக்க வேண்டும்.
வீங்கியிருக்கும் மேலுதடை அவள் எதிர் பாராத ஒரு தருணத்தில் தனியாகக் கவ்வி நீண்ட நேரம் சுவைத்தேன். அவளை ஆச்சரியப்படுத்துவது கடினம். புறங்கையால் துடைக்காமல் அலட்சியத்தோடு திரும்பிச் சென்றாள்.
அந்த இதழ்களை நான் மற்றவர்களுக்காக விட்டுவிட்டு வந்துவிட்டேன். எங்கள் பயணமுகவரின் கையாள் றுர் இத்தாலியன். அவன் எங்களை கண்காணிக்க இரவு பத்துமணிக்கு பிறகு, இரண்டு கதவு வைத்த காரில்,ரகஸ்யமாக வருவான். தாட்சண்யம் இல்லாமல் எங்களிடம் கடுமையாக நடந்து கொள்வான். பேய்க்கு சாப்பாடு போடும்போது நீண்ட அகப்பை வேண்டுமென்று சொல்வார்கள். இவன் வரும்போது நாங்கள் துார அகன்றுவிடுவோம்.இவனுடைய பெயர் அந்திரிய தாமணினி, அந்த பெயரிலே இரண்டு எழுத்துக்கள் மெளனமாக உட்கார்ந்திருந்தன. இது ஏன் என்று விளங்கவில்லை. தேசம்இல்லாமல், முகம் இழந்து திரியும் எங்களைப்போல அந்த இரண்டு அட்சரங்களும் ஒலியை கொடுக்கும் சக்தி பெறவில்லையென்றே நினைக்கிறேன்.
நாங்கள் பதினொருபேர் விடுதியில் இருந்தோம். இதில் சோமாலியப் பையன் ஒருவனும் அடக்கம், அவனுக்கு பதினைந்து வயதிருக்கும். கோயில் சுவர் கலரில் கோடுகள் போட்ட
CO தை -2001
அம்மா - 13

Page 8
நீண்ட அங்கி அணிந்திருப்பான். கர்வமானவன். ஐந்து நேர தொழுகையும் தவறாமல் செய்வான். பறவை இறைச்சி தொடமாட்டான்; அதைச் சாப்பிடும் எங்களை ஏளனமாகப் பார்ப்பான். இத்தாலியன் வரும் நாட்களில் மலர்ந்து போவான். இத்தாலிய பாஷை அவனுக்கு சரளமாக வரும். இவன் தயவினால்தான் நாங்கள் எப்போது பிளேன் வரும், எந்த நாட்டை எமக்கு தரப்போகிறார்கள் போன்ற மேலதிக விபரங்களை அறிய காத்திருப்போம். ஆனால் அவனிடத்தில் விரும்பத் தகாத பழக்கம் ஒன்று இருந்தது. கிட்டதட்ட, என்ற வார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகித்தான. இன்று எத்தனை பேர் போவார்கள் என்று கேட்டால் ‘கிட்டதட்ட இரண்டு, என்று பதில் கூறுவான்.
நெருப்புடன் எனக்கு நெருக்கமான சினேகம் இருந்தது. கணப்புக் கொழுந்து சுவாலைகளை பார்த்துக்கொண்டே இருக்கப் பிடிக்கும். கறுப்பும், சிவப்பும், நிலமும், மஞ்சளும் கலந்த இந்தத் தீநொடிக்கொருதடவைதன் உருவத்தை மாற்றிவிடும். காற்றுக்கும், சாம்பலுக்கும் இடையில் இருக்கும் ஒரு கணத்தில் வாழ்ந்து முடித்துவிடுகிறது. வாழ்க்கையை தீர்மானிக்கும் இந்த நொடிப்பொழுதில் விமானப் பணிப்பெண் பயணிகளை அழைக்கும் வாசகத்துக்காக காத்திருந்தேன்.
அந்த வெள்ளை உடை அதிகாரிகள் மறுபடியும் என்னை நோக்கி வந்ததுபோல தோன்றியது. மிருகங்கள் சண்டைக்கு தயாராகும்போது தலையை கீழே இறக்கி முன்னேறுவதுபோல இவர்களும் சிரசை கவிழ்த்துவந்தார்கள். என் இருதயம் விலா எலும்பை தொட்டுக் கொண்டு அடிக்கத் தொடங்கியது. கம்பியூட்டரில் undo விசையை தட்டுவதுபோல என் மனதும் விசைகளைத் தேடின. இரண்டு கமக் கட்டிலும் கட்டுக்கடங்காமல் வியர்வை பெருகி, நீலமும், வெள்ளையுமான நைல் நதிகள் ஒம்டுர்மானில் கூடுவதுபோல என் நாபிக்கமலத்தில் கலந்தன. நான் கண்களை கீழே இறக்கினேன். அப்படியும் நாலு கறுப்பு சப்பாத்துகள், லேஸ்கள் சரிஅளவில் கட்டப்பட்டு, என்னை குறிவைத்துவருவது தெரிந்தது. வெளிக்காற்றை சுவாசிக்கும் அவகாசம் கிடைத்த அந்த கடைசி நிமிடத்தில் என் கண் முன்னே அப்பாவோ, அம்மாவோ, அக்காவோ காட்சியளிக்கவில்லை; மகேஸ்வரியும் தோன்றவில்லை. பாம்பு கேசப் பெண்தான் தோன்றினாள்.
அம்மா - 18 ഞ8 -2001
 

எம். கே. எம். ஷகீப்
"பஸ் வந்திட்டு. எழும்பி ரெடியாகு" என்கிறான் பவர். கண்ணக் கசக்கிட்டு குருட்டு வெளிச்சத்துல டைமப் பாக்கிறன். நாலர. "இந்த விடியக் காத்தாலயா போற?" எண்டு அவனுக்குக் கேக்கிற மாதிரிச் சொல்றன். "தொர, ராவு இங்க ஆக்கள் படுக்கவே இல்ல தெரியுமா? ஊருக்குப் போறண்ட ஆசயில ஒத்தருக்கும் ஒன்னும் வெளங்கயில்ல." சொல்லிட்டு சுபவற் (அதிகாலைத் தொழுகை) தொழுவுறான். நானும் எழும் புறணி, போறத்துக்கெணிடு வந்தாச்சு.இனிமேப் படுக்கேலா, விடிகாலத் தண்ணி குளிராயிரிக்கிமொகத்தக் கழுவி ஒழுச் செய்றண் (தொழுகைக்கான சுத்தம்). புத்தளத்துக் காத்து வேற குளிரேத்துது. ரூமுக்குள்ள போறன். சாப்பாடும் ரெடியா வச்சிருக்காங்க. "இந்த விடியக் காத்தாலயா?” எண்டதும் இன்னொரு பார்வ வீசறான். தொழுதிட்டு அவனோட குந்திச் சாப்பிடுறன். பஷீரின் உம்மா நல்லாச் சாப்பிடுங்க மகன்" என்கிறா. "போற வழியில ஒழுங்கான சாப்பாடு கெடக்கிமோ Gifurl?" கிட்டத்தட்ட இவங்க வந்து எட்டு வருஷமாச்சி. இவங்கண்டா பவுர்ட குடும்பம் மட்டுமில்ல. ஒரு ... A ஊர்.ஒரு சமூகம் வந்தெண்டா.இவங்கலா வந்தெண்டில்ல.வெரட்டப்பட்டு வந்தாங்க. இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சது தானே. இப்ப இதெல்லாம் வரலாறு மாதிரி ஒரு கனவு மாதிரி. கல்வெட்டு மாதிரி ஆகிடிச்சி. வரலாறெண்டா யார் யாரோ யார் பற்றியெல்லாமோ எழுதுவாங்க.கண்வெண்டா எதிர்பாக்காத, நெனக்காத எல்லாம் நடக்கும். கல்வெட்டுண்டா அப்படியே இருந்துகிட்டேயிருக்கும்! இவங்கட வாழ்க்கையும் இப்படித்தான்.பல கோணங்கள்ல..! "எல்லாத்தையும் எடுத்திட்டீங்களா மகன் எணர்டு பவுர்ட உம்மா கேட்கிறா. "எங்கட ஊரப் போய் பாத்திட்டு வாங்க எப்படியிரிக்கெண்டு" சொன்னவ "பொம்புளயள் கொஞ்சப் பேரக்
Olso தை -2001
9this pH - 13

Page 9
கூட்டிட்டுப் போமாட்டெண்டுட்டீங்களே." என்கிறா கொஞ்சம் வெப்புசாரத்துடன். வடக்கிலிருந்து முஸ்லிம்கள புலிகள் வெரட்டக்குள்ள நான் படிச்சிட்டிருந்தன். அப்பயெல்லாம் எனக்கு பிரக்ஞையெணர்டு சொல்லுவாங்களே அந்த மணர்ணாங்கட்டி கொஞ்சங் கூடக் கெடையாது. இதெல்லாம் ஒரு செய்தியாகவே படல்ல எனக்கு. இப்படித்தான் மூதூர் லோஞ்சி தாண்டு நூத்தி சொச்சம் பேர் மெளத்தாப் போனதுங்கூட என்ன ஒண்டுஞ் செய்யல. என்னோட மன்னார்யாழ்ப்பாணத்துப் பொடியன்கள்ளாம் படிச்சாண்கதான்.ஆனா அந்த டைம்ல அவங்கட நெலமய எண்ணால வெளங்க முடியல.ஆனா ஒண்டு இப்ப. அவங்களுக்கு ஊருக்குப் போற தூரம் கிட்டயாப் போச்சி எட்டுப் பத்து மணித்தியாலப் பயணம் இப்ப மூணு நாலு மணித்தியாலமாப் போச்சி! எனக்கு சும்மா காலைல திணர்டாலே வயித்தக் கலக்குற.இந்த விடியக் காத்தாலயில சும்மாயிரிக்கிமா? பஸ்ஸில ஏற மொத கக்கூசுக்குப் போனா நல்லம். எங்கள எங்கேயோ வெளிநாட்டுக்கு அனுப்புற மாதிரி பஷிச்ட உம்மா கணிகலங்குறா. பஷீர்ட சின்னத் தங்கச்சிக்கிட்ட "ஓங்கட ஊர்லேர்ந்து என்ன கொண்டு வர” எண்டு கேட்கிறன் சிரிச்சிட்டு உம்மாட சீலைக்குள்ள ஒளியிறா. 'அதுட ஊர் இதுதான்" என்கிறா உம்மா. நாங்க வரக்குள்ள இது எண்ட வயித்தில அஞ்சு மாசம்" உம்மாவும் தங்கச்சியும் வாசல்ல வந்து வழியனுப்புறாங்க. பஷீர்ட வாப்பா எங்களோட வாறார் பஸ்ஸடி மட்டும். மகன் போறத்தால அவரால வரமுடியாதெண்ட கவல குடும்பத்துல ஒராள் அதுவும் முசலிப் பிரதேச ஆக்களெண்டு தான் இந்தப் பயண அரேஞ்ச்மெண்ட் மூணு சிடிபி மஞ்சள் பஸ் ரோட்டடியில நிக்கிது. சுத்திலும் ஒரே கூட்டம். நாங்க ஒரு பஸப்ல ஏறி எங்கட சாமான்கள வைக்கிறம். நான் ஜன்னல் சீட்ல எடத்தப் புடிச்சிட்டன் பொறகு எறங்கி அந்த சிட்டிவேஷனை போட்டோ புடிக்கிறேன். அது எண்ட தொழிலுக்குத் தேவை! சொன்ன நேரத்த விட லேட்டாத்தான் பஸ் பொறப்படுது. போறாக்கள்ட மொகத்துல இனம்புரியாதெண்டுவாங்களே அந்த மாதிரி சந்தோஷம். எனக்கு அந்த சந்தோஷத்த புரிஞ்சிக்க முடியுது வர்ணிக்க முடியல. இந்தக் கூட்டத்துல நானும் டரைவர்மார்களுந்தான் வேற ஆக்கள். வேற ஆக்களெண்டா.இந்த ஊராக்களோட நேரடிச் சம்பந்தமில்லாதவங்க. ஆனா இப்பவெல்லாம் மானசீகமா, தார்மீகமா ஒரு ஒறவு. ஒரு ஒணர்வு வளரத் தொடங்கிரிச்சி. எங்கட நபிநாயகம் சொல்லியிரிக்காங்க" ஒரு முவுற்மின் (முவுற்மினெண்டா இறைவிசுவாசி) இன்னொரு முகூற்மின்ட சகோதரன். எப்படி ஒரு உறுப்புக் காயப்பட்டா மத்த உறுப்புக்களுக்கும் வலியெடுக்குமோ அது மாதிரித்தான் முவுற்மினுக்கும், தண்ட சகோதரனுக்கு எதுவும் நடந்தா அது மத்தவனையும் பாதிக்கும்" உணர்மதான் இந்த வலியெல்லாம் நானிப்ப நல்லா ஒணர்றேன். பஸ்ஸில இருக்கிற ஆக்களுக்கு நான் புதுசு. என்ன வித்தியாசமா ஆன நல்ல மாதிரிப்பாக்கிறாங்க. பவுர் அவங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திச் சொல்றான். நான் சிரிக்கிறன். எண்ட வயசாக்கள் என்னோட நெருக்கமாகுறாங்க, பளப் சிலோவாகுது. முன்னால ஒரு செக்பொயிண்ட் "இதான் புத்தளத்து பிரிகேட் கொம்மாண்ட் இந்தக் கேம்ப் பிரிகேடியர் தான் எங்கட ஊரப் போய் பாத்திட்டு வாறத்துக்கு இப்படியொரு ஏற்பாட்டச் செஞ்சவர்" என்கிறான் பஷீர். எல்லாரையும் எறங்கச் சொல்றான்கள். ஊர்லயிருந்து வரக்குள்ளயெல்லாம் பஸ் சிலோவாகிற எடத்துல எறங்கி எறங்கி பழக்கப்பட்டாச்சி.இங்கயும் அப்படித்தானாக்கும். "போறத்துக்கெடயில எத்தன செக்பொயிண்ட்?" என்கிறன். "ஏழெட்டு இரிக்கி இங்க எல்லாத்தையும் முடிச்சிட்டா நாங்க எறங்கத் தேவையில்ல. இங்கிருந்து ஸ்கொட் தருவாங்க" என்கிறான். இந்த ஊர் காட்டுற பயணத்த ராணுவத் E” ஏற்பாடு செஞ்சிரிக்கி இந்த வருஷ தை -2001
gDubufour - 13

ஆரம்பத்துல இங்காலப் பக்கம் தங்கட கைவரிசையைக் காட்டி நெறய எடத்தப் புடிச்சதா பீத்திக்கிட்டாங்க.அந்த உற்சாப்புலயும். முஸ்லிமாக்கள வச்சு எதையாவது இழுத்தடிக்கவும், புலிகள்ட மனநெலய அறியவுந்தான் இவங்கள ஊர் காட்டுறம் எண்டு கூட்டிப் போறாங்க. போய்ப் பாத்தாத்தான் நெலம தெரியும். எல்லாரையும் பஸ்சுக்குள்ள ஏறச் சொல்றான் ஆமிக்காரன். அவங்கவங்க எடத்துல எல்லாரும் இரிக்கிறாங்க. எங்கட பஸ்தான் முன்னுக்கு நிக்கிது. பஸ்ட முன் வாசல்லயும் பின் வாசல்லயும் ரெண்டு ஆமிக்காரங்க நிக்கிறாங்க. தோளில "Guன்" எனக்கு இளவாளை விஜேந்திரனின் கவித ஞாபகத்துக்கு வருது."சும்மா சிவனேயெண்டு தோளில கெடக்கிற துப்பாக்கியிலதான் எனது பயம், உனதும்" எண்டு. இவனொள்தான் ஸ்கொட்டா இருக்கும். சரியான சின்னப் பொடியன்கள். மீசபும் இன்னும் மொளக்கயில்ல. இப்ப பஸ் போய்க் கொண்டிருக்கு. கொஞ்சக் கொஞ்சப் பேரா பழைய ஊர்க் கதையளக் கதச்சிட்டு வாறாங்க. இருந்திருந்துட்டு என்னப் பத்தியும் செலர் விசாரிக்கிறாங்க. செல கேள்வியளுக்கு பஷீர் தான் பதில் சொல்றான். ஒன்னுரெண்டு எளந்தாரிப் பொடியன்கள் எங்கட சீட்டுக்கிட்ட வந்து கதைச்சிட்டு வாறாங்க. நசார் எண்ட பொடியன் நல்லா மூவா(Move)கிறான். பண்ரெண்டு மணியாப் பொய்ட்டு. அனுராதபுரத்துக்கிட்ட வந்துட்டம். இங்கயிருக்கிற ஆயிக் கேம்ப்ல தான் எங்களுக்கு சாப்பாடு அரேஞ்ச் பணிணியிருக்காங்க" என்கிறான் பஷிர் பஸ் ஆமிக் கேம்படிக்கிட்ட நிக்கிது. ரெண்டு மூணு ஆமிப் பெரியாக்கள் வந்து எங்கள கூட்டிட்டுப் போறாங்க. பெரியொரு வரிசையில அவங்களுக்குப் பின்னால நடக்கிறம். ஆனா அது கைது செஞ்சு கூட்டிட்டுப் போற ஒணர்வத் தரல்ல. எங்களால ஆளுக்காள் கதைக்க முடியுது. சிரிக்க முடியுது. நாங்க இப்ப விருந்தாளிகள் தானே. இன்னொரு புதினம் இண்டைக்கு எல்லா ஆமிக்காரன்களும் மனிசன்களப் பாத்துச் சிரிக்கிறாங்க.
பெரிய மேசையில சாப்பாட்டப் பரத்தி வச்சிருக்காங்க. ஒவ்வொத்தராப் பொய்ட்டு எடுத்து வந்து சாப்பாட்டு மேசையில வச்சு சாப்பிடுறாங்க. "ஓங்கட மொறப்படி ஒங்கட ஆக்கள் ஆக்கின சாப்பாடுதான்.பயப்படாம சாப்பிடுங்க" என்கிறான் கொஞ்சம் பெரிய தரத்துல உள்ள
ஆமிக்காரன்.
சாப்பிட்டு முடிய முவுறர் (பகல் நேரத் தொழுகை) டைமாச்சி ஒரேயடியா தொழுதிட்டுப் போனா நல்லம்" என்கிறார் எங்களோட வந்த ஒரு மெளலவி. கேம்ப்புக்கு முன்னால இருக்கிற சின்னக் குளத்துள எல்லாரும் ஒளுச் செய்றம். அந்த மௌலவிதான் ஜமாத் (கூட்டுத் தொழுகை) நடாத்துறார். நாம பயணிகள் தானே ரெண்டு நேரத் தொழுகைய "கஸ்று ஜம்உ (சுருக்கியும். சேர்த்தும்) செய்யலாம்.
மீண்டும் பளப் பொறப்பட்டுட்டு. இப்ப மன்னாருக்குப் போற பாதய நெருங்கிட்டம். பஸ் நிக்கிது. அவடத்துலயும் சின்னக் கேம்ப். ஆமி இல்ல. பொலிஸ்காரன்கள தான் நிக்கிறாங்க. எங்களோட வந்த ஸ்கொட்காரண்கள் அந்தக் கேம்ப் பெரியாள்ட எங்கள பொறுப்பு மாதிரி கொடுக்கிறான்கள். மன்னாருக்குப் போற ரோட்டுல ஒரு பிக்கப்பும், ஆமி ஜீப்பும் நிக்கிது. அதுல வந்த ரெண்டு அதிகாரிமார் எங்கள் வரவேற்கிறாங்க. இப்ப புதிய எப்கொட்காரன்கள் ஏற பஸ் ஸ்டார்ட் ஆகுது.
எனக்கிப்ப கொஞ்சம் பயம் புடிக்கிது. இவ்வளவு நேரமும் வந்த ரோட் பிரச்சினையில்ல. இனிமப் போறது அவங்கட ஏரியா. தப்பித் தவறிதுரஸ்பயர் அது இதெண்டு மாட்டுப் பட்டா
அம்மா - 13 தை -2001

Page 10
அவ்வளவுதான். நாங்க இப்படியொரு பயணம் வாறது அவன்களுக்குத் தெரியுமோ தெரியா. தெரிஞ்சிருக்கத்தான் வேணும். ஏனெண்டா வந்த அதிகாரிமார் எப்படியும் அந்தப் பக்கத்துலயும் எதயும் அறிவிச்சித்தானேயாகனும்.
ஸ்கொட்காரன்கள் ஏதோ ஜேம்ஸ்பொண்ட நெனப்புல இடுப்புல கையக் குத்திட்டு வாசல்ல நிக்கிறாங்க. கண்டாங்களெண்டால் அவ்வளவுதான். ஏதோ பழமொழி சொல்வாங்களே.அத நம்பின மாதிரித்தானிக்கி.
ரோட்டுஞ் சரியான மோசம். ஒரே குலுக்கல். ஸ்பீட்டாவும் போறானில்ல. அதுக் கெடயில எத்தனையோ ஆமிக் கேம்ப். ஒவ்வொண்டுலயும் சிலோவாக்கி போட்டிருக்கிற தடையள்ள ஏறியிறங்கி.இப்ப எங்கட பஸ் நடுவுல போகுது.பஸ்சுக்குள்ள எல்லாருக்கும் கதையாத்தான் கெடக்கு.
"மண்ணார் எல்ல வந்துட்டு" எண்டு ஏதோ ஒரு எடத்தக் காட்டுறான் பஷீர். ஆட்கள்ட பார்வையெல்லாம் ஜன்னலுக்கு வெளியில போகுது. ஏதோ பேர் சொல்றான். எனக்கொண்டும் படல்ல. மெல்ல மெல்ல சூரியன் மறைய இருட்டத் தொடங்குது. ரெண்டு பக்கமும் காடாத்தான் கெடக்கு எடையில சண்முள்ள ரெண்டு மூணு எடம் கடந்திச்சு. இப்ப ஒண்டயும் காணம். கொஞ்சம் தூரத்துல மாட்டுக் கூட்டமொண்டு போவுது, ஒராள் யார் யார்டையோ.எல்லாம் நம்மடதுகளாத்தான் இரிக்கிம்" என்கிறார். ஒவ்வொத்தரும் ஒவ்வொத்தர்ர பேரச் சொல்லி "அந்தா.ஒண்ட மாடு போவுது.இந்தா ஒண்ட மாடு போவுது” எண்டு சொல்லிச் சிரிக்கிறாங்க. அந்தச் சிரிப்புல மறஞ்சிருக்கிற ஏக்கம் கவலயெல்லாம் எனக்கு வெளங்குது.
"கிட்டப் போனா குறிய வச்சு யார் யார்ரையெணர்டு கண்டு பிடிக்கலாம்" என்கிறான் பஷீர். சொல்லிட்டு ஒராளக் காட்டுறான். "அவர்ட நெறய மாடுகள் இருந்திச்சு.ஏன் ஒவ்வொத்தர்ட வீட்லயும் ரெண்டு மூணெண்டு நிக்கும்" எண்டு சொல்லிட்டு மெளனமாவுறான்.
இப்ப கொஞ்சம் நல்லாவே இருட்டாயிட்டு. செல ஆக்களுக்கு-எனக்குந்தான்- ஒண்டுக்கு முடுக்குது. யாரோ ஒராள்-அவருக்கு கடுமையா இருக்கும்- ட்ரைவர்ட பொய்ட்டு 'மணியக் கட்டுறார்" ட்ரைவர் ஆமிக்காரண்ட சிங்களத்துல சொல்றார். அவன் அடுத்த கேம்படிக்கிட்ட நிப்பாட்டுவம் என்கிறான்
அடுத்த கேம்ப் பத்து நிமிஷமும் ஆகல்ல. அதுக்குள்ள வந்துட்டு. ட்ரைவர்ட கேட்டாள்தான் மொதல்ல எறங்கி ஒடுறார். பாவம். ஒண்டுக்கோ ரெண்டுக்கோ தெரியா. மத்தாக்களும் போறாங்க. ஒவ்வொருத்தரா ஒவ்வொரு பத்தைமறைவுக்குள்ள குந்துறாங்க. செலாக்கள் செங்கல் துண்டுகள பொறக்கி எடுக்கிறாங்க. ஒடச்சிப் போட்ட வீடுகள் தான் நெறயக் கெடக்கெ! தண்ணி இல்லாத நேரத்துல செங்கல் துண்டு மாதிரி ஒத்தி எடுக்கக் கூடியதால சுத்தஞ் செய்யிறது எங்கட ஆக்கள்ட வழம.
நான் கொஞ்சம் தாமதிக்கிறன். எங்காவது மிதிவெடி கிதிவெடி கெடந்திடப் போகுதெண்ட பயம். ஆக்கள் போய் வந்த வழியால போய் பேஞ்சிட்டு வாறன். அப்பாடா இப்பதான் நிம்மதி!
(led தை -2001
pubudir - 13

வெளியில "புல்"லாஇருட்டாக, உள்ளுக்குள்ள கவனந் திரும்புது. இன்னும் எல்லாருக்கும் கதையாத் தான் கெடக்கு. நானும் கத குடுக்கிறன் ஊர், பேர் அது இதெண்டு எல்லாத்தையும் கேக்கிறன். மறிச்சிக்கட்டி, பணிடாரவெளி. சிலாவத்துற, நானாட்டான் எண்டு நெறய குட்டிக்குட்டிப் ஊர்ப் பேர்கள். மன்னார்ல முசலிதான் முஸ்லிமாக்கள் நெறயயிருந்த பிரதேசமாம். எப்படியெப்படி இருந்தாங்க எண்டத்த ஒவ்வொத்தரா ஏக்கத்தோட சொல்றாங்க.
இப்ப பளப் தலமன்னார நெருங்கிட்டு. "வெளிச்சந் தெரியுதே.அதான் மன்னார் டவுன். இங்காலப் பக்கந்தான் தாராபுரம் எருக்கலம்பிட்டி எண்ட செல ஊர்கள் இரிக்கி. அந்த ஊர்லயெல்லாம் நெறய ஆக்கள் திரும்ப குடியேறிட்டாங்க. நம்மட ஊரெல்லாம் நாம வந்த வழியில முருங்கன் எண்ட எடமிரிக்கே.அதால உள்ளுக்குப் போவணும் எண்டு வெளக்கமா சொல்றான் பஷீர்.
"வரக்குள்ள கரணர்ட் வாற டவர் எல்லாம் கீழ கெடந்திச்சு தானே. எப்படி இங்கால கரணர்ட்.ஜெனரேட்டரா?” என்கிறனர். தலையாட்டுறான். "ஆனா டவுனுக்குள்ள மட்டுந்தான்.அதுவும் எட்டு மணி மட்டும்"
வெளிச்சம் தெரிஞ்ச எடம் பெரிய ஆமிக்கேம்ப். அதத் தாணர்டி பாலத்து ரோட்டால பளப் போகுது. அங்காலப் பக்கமும் கேம்ப். ஆனா.பெரிசா வெளிச்சமில்ல. அதயுந் தாண்டிப் போப் பஸ் ஒரு எடத்துல நிக்கிது. கடும் இருட்டாக் கெடக்கு. எட்டு மணி பிந்திட்டுத் தானே கழுத கத்துற சத்தம் கேட்குது. நம்மட கூட்டாளிமார்கள்ட சத்தத்தக் கேட்டு எத்தன வருஷமாச்சி." எண்டு ஜோக்கடிக்கிறான்கள். நாங்களும் வெறாஸ்டல்ல இருக்கக்குள்ள மன்னார் பொடியன்கள் இத வச்சுத்தான் நக்கலடிக்கிற, ஏனோ தெரியா மன்னார்ல மட்டும் இதுகள் நெறயக் கெடக்கு. பளப்ஸ நிப்பாட்டிருக்கிற எடம் கச்சேரி என்கிறான். ஆனா ஒரு காட்டுக்குள்ள நிப்பாட்டின மாதிரி கடும் இருட்டாயிரிக்கி பொறுப்பான ஆக்கள் எறங்கி எங்கேயொ போறாங்க. எங்கள கூட்டிட்டு வந்த அதிகாரிங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு பஸ்ஸா ஏறி ஏறி எல்லாரையும் சொகம் விசாரிச்சி கதைக்கிறாங்க. அதுல ஒராள் நசார்ட நானா எண்கிறான் பஷீர். நசார் அவர்ட பொய்ட்டு கதைக்கிறான். மத்தாளும் கச்சேரியில பெரியாளாம். டேவிட்டோ என்னவாம் பேர். நல்ல மனிசன் என்கிறாங்க செலர் அவர் போனத்துக்குப் பொறகு. அவங்களோட பஷீரும் எறங்கிப் பொய்ட்டான். செலாக்கள் அந்த இருட்டுக்குள்ளயும் டவுனுக்குள்ள இருக்கிற அவங்கட சொந்தக்காரங்கள தேடிப் பொப்ட்டாங்க. நான் பஸ்சுக்குள்ளதான் கெடக்கிறன். ஒவ்வொரு ஆட்கள்ட ஒணர்வுகள்ட வெளிப்பாட்ட நல்லா அவதானிக்கிறன். எதையும் அன்னியமா நிண்டு செய்யிறது எனக்குப் பழக்கமில்ல. ஆக்களொட ஆக்களா எறங்கிறணும். அப்பதான் எதிலயும் உயிரோட்டமிரிக்கும். போனாக்கள்ளாம் வந்து ஏர்றாங்க. "தாராபுர ஸ்கூல்லதான் எல்லா ஏற்பாடாம். இப்ப அங்க தான் போப்பறம்" சொல்லிட்டு "என்ன டயர்ட்டா இரிக்கா?" என்கிறான். சிரிச்சிட்டு தலையாட்டுறன். பளப் திரும்ப வெளிக்கிடுது. போற வழி ஆக்கள் குடியிருக்கிற ஏரியா. செல வீடுகள்ல இருந்து மங்கலா லாம்பு வெளிச்சம் வருவுது. அந்த நேரத்துல என்னடா மூணு பஸ் ஒன்டா சனத்தோட போகுதெண்ட ஆச்சரியத்தில செலர் வாசலுக்கிட்ட வந்து பாக்கிறாங்க. தாராபுர ஸ்கூல்லடியில பஸ் நிக்கிது. எல்லாரும் அவங்கவங்கட பேக்குகளோட எறங்கிறாங்க. என்ன பஷீரும் நசாரும் கூட்டிப் போறாங்க. பள்ளிக்கூட விறாந்தையக் கழுவி பாப் தலவாணியெல்லாம் போட்டு வச்சிருக்காங்க. ஊராக்களும் கவனிக்கிறாங்க. அந்த அதிகாரிகளும் எங்களோடதான் நிண்டு அதயும் இதயும் 二苍° பொறகு எல்லாரயும் கூட்டி கதைக்கிறார். தை -2001
-9LbLor -13

Page 11
நாளைக்கு ஒன்பது மணிக்கு கச்சேரியில ஒரு கூட்டமிருக்கு. ஜி.ஏ உங்களையெல்லாம் சந்தித்து ஏற்பாடுகளைப் பற்றிப் பேசுவார். அது முடிந்ததும் நேராக ஊர் பார்க்கப் போகலாம். இப்ப சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுங்கள்" என்றிட்டுப் போகிறார். ஆளுக்கொரு சோத்துப் பார்சல் தாறாங்க. சாப்பிடறம். தொழுதிட்டுப் படுத்தா நல்லம். இனி விடிஞ்சாத்தான் மத்தது. நெனச்ச மாதிரிப் படுக்கேலாமக் கெடக்கு. நொளம்புக் கெளயளி விடமாட்டேங்குது. ச்சா என்ன சைளப் நொளம்பு எல்லாப் பக்கமும் நொளம்படி சத்தமாத்தான் கெடக்கு, கனகாலத்துக்குப் பொறகு மனிச ரத்தங் கெடச்சிருக்காக்கும். கொஞ்சப் பேர் எழும்பிப் பொய்ட்டு உரிமட்டயும், வேப்ப எலயும் கொண்டு வந்து பத்த வக்கிறாங்க. பொகைக்கு எல்லாம் போயிரும். மொதலும் சின்னத்துல இப்பிடித்தான். உம்மம்மாட வீட்ல இருக்கக்குள்ள உரிமட்ட பத்த வச்சித்தான் படுக்கிற நாங்க.
00000 அஞ்சு மணிக்கெல்லாம் எல்லாரும் எழும்பத் தொடங்கிட்டாங்க. பஷீர் தான் என்னயும் எழுப்புறான். "கெதியா பிரஷ்ஷ எடுத்துட்டு வா வெளிக்கிறதுக்கு மொத கக்கூசுக்குப் போகணும்" என்கிறான். "ஏன்?" "பொறகு.இவ்வளவு பேருக்கும் கக்கூஸ் வேணுமே." சிரிச்சிட்டுப் போறம். குருட்டு வெளிச்சமாக் கெடக்கு. "சரி.நீ அங்காலப் பக்கம் போய் எங்கயாவது குந்து" சொல்லிட்டு அவன் வேற பக்கத்தால போறான். எனக்கு இப்பயும் சின்னக் காலத்து நெனவுதான் வருது. பெரியபாலத்துல இருக்கக்குள்ள பின்னால உள்ள காட்டுக்குள்ளதான் கக்கூசுக்குப் போற போங் வரக்குள்ள வீரப்பழம், சூரம்பழம். எளந்தப் பழமெல்லாம் பொறக்கிட்டு வருவம். சரி.அந்த வேலயும் முடிஞ்சிட்டு. சின்னக் கொளமொண்டுல பொய்ட்டுக் கழுவுறம். முத்தப் பக்கத்தால பொய்ட்டு மொகம் கழுவுறம். சரியான அரிகண்டம் தான். என்ன செய்யிற இப்ப நாங்க ராவு வந்த எடத்துல நிக்கிறம். நேரமும் எட்டரயாப் பொய்ட்டு. ராவு இருந்த இருப்புக்கும். இப்பத்தேய இருப்புக்கும் என்ன மாறி வித்தியாசம் நம்ப ஏலாமக் கெடக்கு. நல்ல பெரிய டவுணி நேரத்தோடயே கள கட்டிட்டு. ஜீ. ஏ ஒபீசுக்கும், லைப்ரரிக்கும் நடுவால போற ரோட்டுலதான் பஸ்ஸயல்ெலாம் நிப்பாட்டியிருக்காங்க. எல்லாருக்கும் புதுசா உயிர் வந்த மாதிரி தெம்பா இரிக்காங்க. நானும் கெமராவோட எறங்குறன். நெறய ஆம்புளயள், பொம்புளயள் மூட்ட முடிச்சோட பெரிய கியூவுல நிக்கிறாங்க. ரெண்டு மூணு சென்றி பொயிண்ட். பஸப் ஸ்டாண்ட் கூட்டம் அப்பிடியிப்படியெணர்டு அமர்க்களமாத்தான் கெடக்கு. ரோட்டடியில ஒரு பொம்புள நெறய பேக்குகள வச்சிட்டு யோசனையோட குந்திட்டிருக்கா. பக்கத்துல சைக்கிளொண்டு நிக்கிது. யாரையாவது காத்துட்டிருக்கா போல, அவவ போட்டோ எடுத்தா நல்லம் (பார்க்க-யுகம் மாறும்) நேரம் அப்பிடியிப்படியெணர்டு போய் இப்ப பத்து மணியாயிட்டு. இப்பதான் அதிகாரிகளும் வாறாங்க, கூட்டம் நடக்குது. மொதல்ல எங்கள வரவேத்துப் பேசுறாங்க. பொறகு ஒவ்வொத்தரா மூண்டு காலங்கலப் பத்தியும் பேசுறாங்க. மேடயில யுஎன்எச்சிக்காரன் ஒத்தனும், ஒரு பொம்புளயும், இன்னக் கொஞ்சம் பேரும் இரிக்காங்க. அவ கறுப்பா ஆனா அழகா இருக்கா.டி.எஸ்ஸா இருக்கோணும். ஜி.ஏ நல்ல ஸ்மாட்டான ஒசந்த ஆள். இப்ப அவர்தான் பேசுறார். பேசிட்டிருக்கக்குள்ள பின்னால யாரயோ பாத்து கையக் காட்டறார். எல்லாருந் திரும்பிப் பாக்கிறாங்க. ரெண்டு மூணு "பொடியண்கள்" போறாண்கள். மன்னார் முஸ்லிமாக்கள்ட நெலமயப் பத்தித்தான் பலரும் பல மாதிரிப் பேசுறாங்க. இந்தாக்கள்ட மொகத்துல ஒரு பிரகாசந் தெரியுது. நாங்க அடுத்த மாசமெண்டாலும் வாறம்" என்கிறாங்க செலர். எதுக்கும் "அவங்களோடயும்" கதச்சிட்டு முடிவெடுத்தாத் தான் நல்லம் என்கிறாங்க
-OILöLDT - 13 தை -2001

இன்னும் செலர். அவங்க தான் சரி. "ஏனெண்டா எங்கட ஊரெல்லாம் அவங்கட கட்டுப்பாட்டுல தான் இரிக்கி. அவங்களுக்குத்தான் நெலம தெரியும்" என்டு வெளக்கமும் சொல்றாங்க. ஒரு மணி மட்டும் எப்படியோ கூட்டத்த இழுத்தடிச்சிட்டாங்க, சாப்பிட்டுட்டு வெளிக்கிட்டா பின்னேரம் முசலிக்குப் போயிறலாம். பாலத்தடிச் செக் பொயிண்ட்ல செக் பணிணி முடிய மூணு மணியாயிட்டு.
000000 முருங்கன் சந்தியில பஸ்ஸ நிப்பாட்டிட்டாங்க. எல்லாரும் முசலிக்குப் போற ரோட்டுக்கு ஆர்வத்தோட ஒடுறாங்க. ஆனாஅது சரி வரல்ல. எல்லாரையும் சென்ரில நிண்ட ஆமிக்காரங்க நிப்பாட்டுறாங்க. "இப்ப அஞ்சு மணி பிந்திட்டு.யாரும் போவயுமேலா வரயுமேலா” என்கிறான். இவங்க நெலமயச் சொல்றாங்க. அவன்கள் "அப்ப பெரிய மாத்தயாக்கிட்ட கதைங்க" என்கிறாங்க. பெரிய மாத்தயாக்கிட்ட எல்லாரும் போவேலாது. நாலஞ்சு பேர் போறாங்க. போனவங்க பெரியவரோடேய ஆக்கள் நிக்கிற எடத்துக்கு வாறாங்க. அவர் நல்லா சிரிச்சுப் பேசி நெலமயச் சொல்றார். "இப்ப கொஞ்ச நேரத்துல நல்லா இருட்டாயிரும். இருட்டுல ஒணர்ணயும் நீங்க பாக்கேலா. இதுக்குப் பொறகு நீங்க தங்கற ஏற்பாட்ட அங்காலப் பக்கஞ் செய்யவுமேலா,நான் ஒங்களுக்கு இங்கால தங்குறத்துக்கு எற்பாட்டச் செய்யிறன். தங்கிட்டு காலைல போங்க" என்கிறார். எல்லாரும் ஒண்ணுஞ் செய்யேலாம தலையாட்டுறாங்க. வந்த பஸ்ல திரும்ப ஏறுறம் எல்லாரையும் பக்கத்துல உள்ள ஒரு பெரிய சேச்சுக்கு கூட்டிட்டுப் போறாங்க. இருட்டாக் கெடக்கிறதால எதயுஞ் சரியாப் பாக்கேலாமக் கெடக்கு கொஞ்ச நேரத்துல ஒரு பெரிய மண்டபத்துக்கு முன்னால வந்து எறங்குறம். பக்கத்துல சேர்ச். நல்ல பெரிசு. ருெ°ரஸ்டல்ல தங்கிப் படிக்கிற பொடியன்கள் வந்து ஒத்தாச பணிறாங்க. தேத்தண்ணியும் கொடுக்கிறாங்க. இருட்டுக்குள்ளேயே கதைகயோடேயே நேரம் போகுது. பத்துப் பத்தர போலத்தான் சாப்பாடு வருகுது. பானும் கறியும், செலதுல ஜேமும் பட்டரும்பூசியிருக்காங்க. ராவயில இனிப்பு வேணாம்! - விடிஞ்சிட்டு. மிச்சங் கஷ்டப்பட்டுத் தான் இந்த மாதிரி நேரத்துல என்னால எழும்ப முடியுது. காலத்துக்கமெண்டா எனக்கு அந்த மாதிரி சரி.சரிரெண்டு மூணு நாளைக்குத் தானே.அதுவும் எப்பயாச்சும் ஒருக்கா. மெல்லிய குளிரோட காலக் கடன்கள ஒவ்வொருத்தரா முடிக்கிறாங்க. இங்க கக்கூசுக்குப் போறத்துக்கு கவுரவமான எடங்கள் நாலஞ்சி இரிக்கி. ஆனா.என்ன கொஞ்ச நேரங் காத்திருக்கோணும்.அவ்வளவுதான். "ச்சா என்ன தாழ்ப்பமான கெணறுடாப்பா இது." ஆச்சரியத்தோட சொல்றான் நசார். உடுப்பு மாத்தியாச்சு. காலச் சாப்பாட்டுக்குப் பொறகு போறதென்றாங்கள். நானாட்டான் பகுதியாக்கள் நேரத்தோடேயே பொய்ட்டாங்களாம். அவங்கட எடம் வேற பக்கம். நானும், பஹீரும், நசாரும் பாதர்மார்ட குவாட்டசுக்குப் போறம். எங்கள அன்பா வரவேற்கிறார். பலதும் கதைக்கிறான்கள். நான் நிதானமா அவதானிக்கிறன். பாதரின் வாயிலிருந்து "மிக நிதானமாகவும் மெதுவாகவும் வார்த்தைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆளுக்காள் பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துறாங்கள்.
0000 இப்ப மீணடும் நேத்து வந்த முருங்கன் ஜங்ஷனடியில நிக்கிறம். பெரிய்ய வரிசை. முசலிக்குப் போற ரோட்டுல குறுக்கால ஒரு தடைக் கம்பு போட்டிருக்காங்கள். அங்காலப் பக்கமும் பெரிய்ய கியு. அவங்க டவுனுக்குப் போறத்துத்தெணர்டு நிக்கிறாங்கள். எங்களத் தான் மொதல்ல
9 ibi Dr -- 13 தை -2001

Page 12
செக் பணிணி அங்கால அனுப்புறான். அங்காலப் பக்கம் நிக்கிறவங்கள கடந்து போறம். அவங்க புதினமாப் பாக்கிறாங்க. செல தெரிஞ்சாக்கள் தெரிஞ்சாக்களோட கதக்கிறாங்க. நானும் நசாரும் பஷீரும் ஒண்டாப் போறம். நடதான். சரியான தூரம் போகோணுமென்கிறான்கள். எங்களுக்கு முந்தி கொஞ்சப் பேர் கால்ல ரோத பூட்டுன வேகத்துல பொய்ட்டாங்க. புதினம் பாத்துக் கொண்டு போறம் ரோட்டோரத்துலவுள்ள ஒவ்வொரு வளவுக்குள்ளயிருந்தும் தலைகள் தெரியுது. செல எடத்துல நாய்கள் கொரச்சிக் கொண்டு வருகுது. நாங்க புது ஆக்கள் தானே.அதான். கொஞ்சத் தூரம் பொய்ட்டு. எடப்பக்கமா ஒரு கொளம். நெறயப் பேர் குளிக்கிறாங்க. எனக்கும் குளிக்கோனும் போலயிரிக்கி அதத் தாண்டி ஒரு ஸ்கூல் பில்டிங் தெரியுது. மத்த எடத்தவிட அதுக்கிடட சனநடமாட்டமாவும் இரிக்கி. எங்களுக்கு முந்திப் போனாக்களும் நிக்கிறாங்க. எல்லாரும் ஒண்ணாப் போவமெண்டு நிக்கிறாங்களாக்கும். கிட்டப் பொய்ட்டம். கிட்டத்தட்ட வந்த எல்லாருமே அதுல குழுமி ரவுண்டா நிக்கிறாங்க. நான் ஆக்கள வெளத்திக் கொண்டு முன்னுக்குப் போறன். ஒரு இருபது இருபத்தியொரு வயசுப் பொடியன் கையில வோக்கியோடயும், இடுப்புல பிஸ்டலோடயும் நிக்கிறான். பக்கத்துலயும் ரெண்டு பொடியன்கள். அவன்கள்ட கையில பெரிய "கண்" எனக்கு லேசா அதிர்ச்சி. செக் பணிணினாங்க எண்டா நான் மாட்டி. ஏனென்டா நான் இந்த ஊரில்லத்தானே! எல்லாரும் கப்சிப்பாயிட்டாங்க. எப்படிக் கலகலப்பா கதச்சுக் கொண்டு வந்தாங்க. இப்ப பொட்டிப் பாம்பாயிட்டாங்க. பக்கத்துல இப்ப கச்சேரிப் பெரியவரும் வந்து நிக்கிறார். "எல்லாரும் வந்தாச்சா?” எண்டு அந்தப் பொடியன் தான் மெளனத்தக் கலைக்கிறான். சுத்திமுத்தும் பாத்திட்டு ஒமென்றாங்க. அவன் நிதானிச்சு தொண்டயக் கனச்சிட்டு கதைக்கிறான்- "யாரிட்டக் கேட்டிட்டு யாரிட அனுமதியோட வந்தனிங்கள்?" இதக் கேட்டதும் எல்லாருக்கும் பேயறஞ்ச மாதிரிப் பொய்ட்டு. ஒத்தருக்கும் ஒரு வார்த்தையும் வருகுதில்ல. எனக்கெண்டா எங்கேயோ அறுவைக்கு வந்திருக்கிறம் போலத்தான் கெடக்கு லேசான ஒதறல் வேற. சரி.சரி தொழிலுக்கேத்த துணிவோட இருப்பம். பக்கத்துல கையக் கட்டிக் கொண்டு கச்சேரியாள்தான் நெலமயச் ပို့ရှုံး ‘’ ...................." சொல்லி மெளனத்தக் கலைக்கிறார். அவனுக்கு“ " ܀"ܐ "י, அது சரியான பதிலாயில்லப் போல."இது எங்கட கட்டுப்பாட்டுல உள்ள ஏரியா. எங்கட அனுமதியில்லாம யார் உங்கள வரச் சொன்னவை?" இதத்தான் மாறிமாறி வேறு வடிவத்தில கேக்கிறான்.
எங்களோட வந்த ஒராள் "ஓங்கட பெரியவங்கதான் எங்கள அனுப்புனத்தப்பத்தி மனவருத்தப்பட்டு கதச் சிருக்காங்க. பேட்டியெலலாம் குடுத்திருக்காக க. முஸ்லிமாக்கள் எப்பயெணர்டாலும் வரலாமெணர்டெல்லாம் சொல்லியிருக்காங்க.அந்த நம்பிக்கையில தான் வந்தம்" எண்டு விஷயத்தோட சொல்றார். "அவங்க அப்பிடிச் சொன்னாலும் இங்கத்தேய நெலைமகள் எங்களுக்குத் தான் தெரியும்.நீங்கள் எங்கள்ட முதல்ல அனுமதி எடுத்திருக்கோணும். * நெலம நல்லாயில்ல.ஒங்கட ஆக்கள்தான் O தை -2001
pluñupro - 13
 

போன மாசமும் எங்கள திருகோணமலைல காட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறான். எனக்கிப்ப ஸ்பெஷலா நடுக்கம் வருகுது. கொஞ்சம் மெளனத்துக்குப் பொறகு. "சரி வந்திட்டீங்க. ரெண்டு மணித்தியாலத்துல பாத்திட்டுத் திரும்பிரனும்.எண்னத்தப் பாக்கப் போறிங்க.அங்க ஒண்ணுமேயில்ல" எண்டு அவநம்பிக்கைய வீசுறான். எனக்கு கச்சேரியாக்கள்ள கோபமாக் கெடக்கு. இங்காலயும் கதச்சி ஏற்பாடு செஞ்சிருப்பாங்க எணர்டு தான் எல்லாரும் நெனச்சம். ரெண்டு மணித்தியாலம் காணாதெண்டு எல்லாரும் மொறப்பட "சரி.ரெண்டு மணிக்குள்ள வந்திரனும்" என்கிறான். கச்சேரியாள் ஏதோ அவன் காதுக்குள்ள கதைக்க " மாடு அறுக்க தெரிஞ்ச ரெண்டு மூணு பேர் நில்லுங்க" என்கிறான். இப்ப திரும்ப எல்லாருக்கும் சந்தோஷம் வருகுது. வேகமான நடையில் திரும்பவும் பொறப்பட்டாச்சு. செலர் யுஎன்எச்சி லொறில ஏறிக் கொள்றாங்க.
000
அவன் சொன்ன மாதிரி பாக்கிறத்துக்கு ஒண்ணுமில்ல தான். சிலாவத்துற பள்ளிவாசல், பாழடஞ்சி போன பள்ளிக் கூடத்து ஒடஞ்ச சொவர்கள் காடு மாதிரி வளந்து கெடக்குற பத்தைக்குள்ளாள தெரியுது. "எப்படியிருந்த ஊர் தெரியுமா இது." என்கிறான் நசார். "வா எங்கட வீட்டப் பாப்பம்" எண்டு தெரிஞ்ச அடையாளங்கள வச்சு கூட்டிட்டுப் போறான். அத்திவாரமும் சொவர்களும் இரிக்கி நெறய வீடுகள் இருந்த அடையாளமே தெரியாமக் கெடக்குது. கவலய வெளிக்காட்டாத சந்தோஷத்தோட உள்ளுக்குள்ள போய்ப் பாத்திட்டு வாறான். "எண்னத்தப் பாக்க இரிக்கி எண்டு அலுத்துப் போய் வா அங்காலப் பக்கம் போவமெண்டு சேர்ச் பக்கம் கூட்டிட்டுப் போறான். அதுவும் அரகுறையாத்தான் கெடக்குது. அங்காலப் பக்கம் ஆக்கள் குடியிரிக்காங்க. கடல் தொழில் செய்றாங்க. அவங்களும் அங்கயிங்கயெணர்டுஅகதியா அலஞ்சிட்டு இப்பதான் குடியேறியிருக்காங்க எண்டு அங்கயிருந்த கடக்காரர்ட கதாயில அறிய முடியுது. தென்ன மரங்கள் நெறய நிக்கிற கடக்கரப் பக்கம் போறம். ஓரளவு பெரிய வீடொண்டு இரிக்குது. மத்ததெல்லாம் குடிசைகள்தான். "அந்த வீட்டாக்கள் எனக்கு நல்ல பழக்கம்" என்றிட்டு கூட்டிட்டுப் போறான். கடைக்கள்ள பொம்புள ஒருத்தி நிக்கிறா "ராணியக்கா" என்றிட்டு சின்னப் புள்ளயர் தாய்மார்ட ஓட்ற மாதிரிகைய நீட்டிக் கொண்டு போறான். "அடேய் நசார் எப்படா வந்தனிங்க "எண்டு அன்பொழுகக் கூப்பிடுறா. ரெண்டு பேரும் நெறயக் கதைக்கிறாங்க. பழய நெனவு, பழய வாழ்க்க எல்லாம் கண்ணக் கசக்கிக் கொண்டு வருகுது. ரூமுக்குள்ள இருந்து ரெண்டு பெட்டையள் வெளிய வருது. நசார்ஆச்சரியத்துல வாய் புளக்கிறான். "எண்ண.சின்ன சைஸ்ல இருந்ததுகள்.இப்ப எப்படியெண்டு பாறன்" என்றிட்டு அதுகளோட கதக்கிறான். பின்ன எட்டு வருஷத்துல அதுவும் பொம்புளப் புள்ளயஸ் வளராம இருக்குமா? பெரிய போத்தல் பெண்டா ஒடச்சி குடிக்கத்தாறாங்க. மெலியன் பிஸ்கட்டும் வச்சிருக்கு பசிக்கும் தாகத்துக்கும் நல்லம்தான். அங்காலப் பக்கம் ஊரெண்டு எண்ணத்தத்தான் பாக்கிற. இவங்களோடேயே கதச்சிட்டு எங்கட நேரம் போகுது. கொஞ்ச நேரத்துல "வா எண்ட பழய ஆளப் பாப்பம்” எண்டு கூட்டிட்டுப் போறான். ராணியக்காட்டயும் அவவப் பத்திக் கேக்கிறான். "டேய் நீ அவள மறக்கயில்ல என எண்டு நக்கல் போட்டிட்டு வெளிய வந்து குடிசையொன்ற கைநீட்டிக் காட்டுறா, அவவிட்டப் பயணஞ் சொல்லிட்டுப் போறம். நாங்க கொஞ்சந் தூரத்துல நடக்க அவன் முன்னுக்குப் பொய்ட்டு ஏதோ பேர் சொல்லிக் கேக்கிறான். முத்தத்துல வல பிணிணிக்
s-9LỗLDT - 13 தை -2001

Page 13
கொண்டிருந்த பொடியன் ஒரு மாதிரியாப் பாத்திட்டு கலா கலா எண்டு உள்ள பாத்துக் கூப்பிடுறான். ரெண்டு மூணு நிமிஷமா சத்தமில்ல.பொறகு ஒருத்தி வாறா, கன்னம், கண்ணெல்லாம் செவந்திருக்கு. சாதாரண நெலயில ஆள் இல்ல. பழய லவ், இத்தன காலப் பிரிவு எந்த வெளிக்காட்டலும் அவவிடத்தில இல்ல. எல்லாத்துக்கும் வல பிணர்ணிக் கொண்டிருந்தவன் தடையா இருக்கலாம். நோமலாக் கதைக்கிறாங்க. நெலம வெளங்க நாங்க போவமெண்டு அவசரப்படுத்தறம். "அவள அடிச்சிருக்கான் போல" போகக்குள்ள நசார் சொல்லிட்டு பழய லவ்க் கதைய சொல்றான். நான் அந்த எடங்களயெல்லாம் போட்டோ புடிச்சிக் கொண்டு வாறன். பன்னிரெண்டர. திரும்பிப் போறம். "அவ்வளவு தூரமும் நடக்கோனுமடா" என அலுத்துக் கொள்றன். கொஞ்சந்தூரப் போனதும் யுஎன்எச்சிக்காரன் ஒருத்தன் பிக்கப்ல வாறான். எங்களக் கண்டு நிப்பாட்டி "மெதுவா நடங்க நான் அந்த சேச் மட்டும் பொய்ட்டு வரக்குள்ள ஒங்கள ஏத்திட்டுப் போறன்" என்கிறான். அப்பாடா பெரிய ஆறுதல். 000 திரும்பவும் அந்தப் புலிப் பொடியன் கதச்ச எடத்துல எல்லாருங் கூடிட்டம். எல்லாரும் ஒரு மாதிரியான சந்தோஷத்துல இரிக்கிறாங்க. அதுக்கிட்டயிருந்த கொளத்துள கொஞ்சப் பேர் குளிக்கிறாங்க. எனக்குஞ் சரியான ஆச. இப்பிடிக் குளிச்சி எவ்வளவு காலந் தெரியுமா? இடிமன் ஆத்துலயும் பெரியபாலக் கட்டுலயும் குளிச்சதெல்லாம் நெனவுக்கு வருது. எல்லாருக்கும் ட்ரிப் வந்த மாதிரியிரிக்கு அவ்வளவு சந்தோஷம். அப்ப.மொத இங்க சொந்த ஊர்ல இருக்கக்குள்ள எப்படி சந்தோஷமா இரிந்திருப்பாங்க தெரியுமா? நடந்த அலுப்பும் குளிச்ச பிரஷ்சும் பசியேற்படுத்துது, மாடு அறுக்க ஆக்கள நிப்பாட்டுனாங்கள்.(யார்ட இவங்கட யாரோ ஒருத்தர்ட மாடாத்தான் இரிக்கும்.ஊராவூட்டு கோழியறுத்து உம்மாட பேர்ல கத்தம் ஒதுறதெண்டும், தெருத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு ஒடைக்கிறதெண்டும் இதத்தான் சொல்றதாக்கும்).சரி.நம்மஞக்குப் பசிக்கிது. மூன்டர போலதான் சாப்பாடு வருகுது. அதுக்கெடயில எல்லாரும் முருங்கன் ஜங்ஷண்ட வந்துட்டம். நல்ல சின்ன மாடு போல, எறச்சி நல்ல "சொப்டா இரிக்கி ஷொப்பிங் பேக்லதான் சோத்தயும் கறியயும் போட்டிருக்காங்க, மரக்கறியெண்டு ஒண்னுமில்ல. நாங்க மாடு திண்ணிகளெண்டு நெனச்சிருப்பாங்களாக்கும். சரி சரி நாமென்ன சாப்பாட்டுக்கா வந்தம்? 000 இப்ப பஸ் மீண்டும் புத்தளத்த நோக்கிப் போய்க் கொண்டிரிக்கு வெளிய தெரியிற எல்லாப் பக்கமும் இருட்டாத்தான் கெடக்கு உள்ளுக்குள்ள மட்டுந்தான் லேசான வெளிச்சம்.
சில குறிப்புகளிர் ! தகவல்களிர் : 1.இதை ஒரு கதையாக ஜீரணிக்க முடியாவிடின் ஒரு பத்திரிகையாளனது கள
அறிக்கையாகக் கொள்ளவும். 2. 1997 டிசம்பரில் இலங்கை அரசு சார்பில், இராணுவத்தின் உதவியுடன் மன்னார்
முஸ்லிம்கள் சிலர் ஊர் பார்க்க அழைத்துச்செல்லப்பட்டனர். (புலிகளிடமும் அனுமதி பெற்றதாகச் சொல்லப்பட்டது) 3. மன்னார் அரச அதிபர் பின்னர் (1999 ல்) புலிகளுக்கு உடந்தையாகச்
செயற்பட்டார் என அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டார். 4. இதில் குறிப்பிடப்படும் அன்பு என்பவர் பின்னர் கொல்லப்பட்டதாக
பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. 5.இந்த ஒக்ரோபருடன் வடக்கு முஸ்லிம்கள் விரட்டப்பட்டுபத்துவருடங்கள்
நிறைவுறுகின்றன. 6. வடக்கு முஸ்லிம்கள் இன்னும் அகதிமுகாம்களிலேயே வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
(22- தை -2001
pbp - 13

ST(5 நிவேதிதா
சாருநிவேதிதா, 47 ണ്ണിരി ബീമിശ്രമ பேண்ஸியனியனும், விரோ டிகிரி நாவல்கள். நேநோ சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றைப் புனைந்தவர் மற்றும் மொழி பெயர்ப்பாளர். திரைப்படப்பிரதியாளர், நாடகக்காரர் என பல தளங்களில் இயங்கிவருபவர். அவரோடு முத்துக்குமார் உரையாடியபோது.
4. தத்துவ-இலக்கிய உலகத்திற்குள் எப்போது நுழைந்திரகள்? ஏன்? அப்போது எனக்கு பதினான்கு வயது. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்தச்சமயத்தில் எனக்கும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்பட்டது. எனக்கு அந்தப்பெண் அபூர்வமாகத்தோன்றினாள். அவள்பேச்சு, சிரிப்பு, உடம்பு, கைகளில் இட்டுக்கொண்டிருக்கும் மருதாணி, கொலுசு, ஜடைகுஞ்சலம்வைத்தே ஜடைபின்னியிருப்பாள். அவள் நடக்கும்போது அந்தக்குஞ்சலம் அவள் பிருஷ்டத்தின் இரண்டு பக்கங்களிலும் டென்னிஸ் பந்தைப்போல் மாறி மாறிச்செல்லும். இப்படி அவள் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களும் எனக்கு உயிர். எனக்காகவே அனுப்பப்பட்டவளைப் போல் இருந்தாள் அவள். குறும்பு செய்வாள். கோபிப்பாள். சீண்டுவாள. நீ ஒரு ஒம்போது என்பாள. உனக்கு அது எவ்ளோ நீளம்? என்று கேட்பாள்.
பிரபஞ்ச ரகசியங்களைப்போல் மர்மங்களையும் புதிர்களையும் கொண்டதாக இருந்தது அவள் உடல், முத்தமிடும் போது காலம் மறந்து போயிற்று. ஒரு மணி இரண்டு மணிநேரம் என்று நீடிக்கும் அந்த முத்தம். அதுமுத்தமல்ல, தியானம் என்று பிற்பாடு புரிந்தது எனக்கு. நாங்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கவில்லை. உடலின் மர்மங்களை அறிந்துகொள்ள முயற்சிசெய்தோம்.உடல் களியாட்ட வெளியென மாறியது.மனமும் சிந்தனையும் அற்றுப்போன சூன்யத்தின் பெருவெடிப்பு அது. இருத்தலிலிருந்து சூன்யத்திற்குச் சென்ற நிகழ்வு அது.
மூன்று ஆண்டுகள் நீடித்தது இந்தச் சந்திப்பு-எனக்கு காசநோய் வரும்வரை, பள்ளி இறுதி வகுப்பு துவங்கிய போது-நான் பள்ளிக் கூடமே செல்லமுடியாதவனானேன்.ரத்தம் ரத்தமாகக் கக்கினேன்.முற்றிய நிலையிலு இருந்ததால் ஒரு முழு ஆண்டுக்கு சிகிச்சை
glitbudir - 13 தை -2001

Page 14
அளிக்கப்பட்டது.தினம் ஒன்று என 150 ஊசி போட்டார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான உணவுவகைகள் கொடுக்கப்பட்டன. உடல்நிலை சற்றேதேறிய பிறகு கொஞ்சகாலம் தென்னங்கள்ளும் கொடுத்தார்கள் அம்மா.
இப்படியாக போக இருந்த உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் என் சிநேகிதியின் தாயார் காச நோயால் இறந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.
பிற்பாடு நீண்டகாலம் சென்று நான் தில்லியில் இருந்தபோது விடுப்பில் ஊருக்குச்சென்றிருந்தவேளையில் என்சினேகிதியைக் காண நேர்ந்தது. அப்போது அவள் உடலெல்லாம் அழுகிக் கொண்டிருந்தது. அவள் தாயும், பிறகு அவளும் செய்து வந்த தொழிலே அவளுக்கு அந்தவியாதியை அளித்திருந்தது. அது வேறு ஒரு கிளைக்கதை.
ஆனால் காச நோயினால் செத்துப்பிழைத்த நான் செத்தேபோயிருந்தால் என்னவாகியிருக்கும்? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அந்த விசாரணை என்னை மரணம் பற்றிய ஆதாரமான கேள்விக்குள் தள்ளியது.
அப்போது சூஃபி ஞானி ஒருவரின் பரிச்சயம் ஏற்பட்டது. அவர் பெர்ஷியன், அரபி, வஹீப்ரூ போன்ற மொழிகளில் பாண்டித்யம் பெற்றவராக இருந்தார். அவர்முலமாக இறையியலில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது. மிகச்சாதாரணமாக அதிசயங்களை நிகழ்த்தக்கூடி யவராயிருந்தார். நவீன அறிவுத்துறைகளிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார். அவர்தான் எனது முதல் ஆசிரியர் என்று சொல்லவேண்டும்.
அப்போது மீண்டும் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் ஊரில் இருக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. ஊரில் செல்வாக்கான குடும்பத்தைச்சேர்ந்த பெண் அவள். கொலை செய்யும் நோக்கத்தில் அவள் குடும்பத்தார் என்னைத்தேடுவதை அறிந்து இரவோடு இரவாக ஊரைவிட்டுக் கிளம்பினேன். அதோடு ஊருக்கும் எனக்குமான தொடர்பு அறுந்துபோனது. நான் கிளம்பிய சில ஆண்டுகளில் என் பெற்றோரும் ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.
மீண்டும் பழைய கேள்விகளால் துரத்தப்பட்டேன். மரணம் குறித்த அச்சம் தொடர்ந்தது.
சமணம், பெளத்தம், சைவம், வைணவம், இஸ்லாம் என்று எல்லா சமய நூல்களையும் படிக்கத்தொடங்கினேன் ஆய்வுக்கட்டுரைகள் சமயப்பத்திரிகைகளில் பிரசுரமாயின - நிவேதிதா என்ற பெயரில்,
திருவண்ணாமலைக்குச்சென்றேன். அந்தப்பகுதிகளில் நீண்டநாட்கள் திரிந்தேன். பல துறவிகளைச்சந்தித்தேன். ஒரு துறவியிடமிருந்து ஹடயோகம் பயின்றேன். பிராணயாமம், நெளலி போன்ற பயிற்சிகளையும் கற்றுக்கொண்டேன். சர்ப்பத்தைப்போல் குடலை நடனமிடச் செய்யம் பயிற்சியே நெளலி. கலவியின் எந்த நேரத்திலும் ஸ்கலிதத்தை அடக்கி அதை நமது இச்சைக்கு உட்பட்டதாக ஆக்கிவிடக்கூடிய யோக முறைகளும் உண்டு. நமது சிசுவின் gender ஐக் கூட கலவியின்போது நாமே நிர்ணயித்து விடமுடியும், (இதை வித்தையாகக் கற்றுக்கொண்ட சில கிரிமினல்களே சாமியார்போர்வையில் அலைந்துகொண்டிருக்கிறார்கள் )
ஆகாரம் எதுவும் இல்லாமல் அருகம்புல்லை மட்டுமே உட்கொண்டு வாழும் வித்தையை
ea) தை -2001
gibor -13

அறிந்துகொண்டேன்.பிற்பாடு பல ஆண்டுகள் கழிந்து-உணவுக்கு வழியில்லாத நிலமைக்குத் தள்ளப்பட்டபோது அந்த வித்தை எனக்கு உதவியது. ஆறுமாத காலம் வெறும் அருகம்புல் சாறுமட்டுமே உண்டு வாழ்ந்தேன். அப்போது என்தேகத்தில்கூடியிருந்த ஒளி பிறரால் புரிந்துகொள்ளக்கூடியதல்ல. இப்போதும்கூட என் நண்பர்களின் பரிகசிப்புக்கு உள்ளாகும் என்னுடைய பல பழக்கவழக்கங்கள் வறடயோகத்திலிருந்து நான் பெற்றவை. இந்த யோகத்தை இப்போதும் என்னால் யாருக்கும் கற்பிக்கமுடியும். (இந்த விஷயத்தை இப்போது யோசித்துப் பாாக்கும்போது தோன்றுகிறது-அப்போது கற்றுக்கொண்ட வறடயோகம்தான் இப்போது உடல் வெளியாக என் எழுத்தில் மாற்றம் கொள்கிறதோ 6T6............... )
நீண்ட நாட்கள் ஏதும் பேசாமலேயே அலைந்துகொண்டிருப்பேன். சேஷாத்ரி சுவாமிகள், விவேகானந்தர்,ரமணர், சுவாமிசிவானந்தா என்று பல ஞானிகளின் உபதேசங்களைக் கற்றேன் ரிஷிகேசம் சென்று சிவானந்த ஆசிரமத்தில் தங்கினேன். அங்கிருந்து கிளம்பி இமயமலைப் பிரதேசங்களில் சுற்றித்திரிந்தேன். அங்கிருந்த மக்கள் குளிராலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன் பீகாரை விடவும் நிலமை மோசமாக இருந்தது. கடும்பனியில் பட்டினியில் வாழ்வதென்பது மிகப்பெரியகொடுமை. கண்ணெதிரே மக்கள் மடிந்து கொண்டிருந்தார்கள்.
அப்படி அலைந்து திரிந்தபோது ஒரு முறை ஜம்முவுக்கு அருகிலுள்ள வைஷ்னோ தேவி மலைக்கோவிலுக்குச் செல்ல நேர்ந்தது. எட்டு மணிநேரம் தொடர்ந்து செங்குத்தான மலையில் ஏறினால் அந்த குகையை அடையமுடியும். அவ்வளவு கடினமாக ஏற முடியாதவர்கள் மட்டக்குதிரைகளில் சென்றார்கள். குதிரையோட்டிகள் அனைவரும் ஏழைமுஸ்லிம்கள். அவர்கள் பயணியை குதிரையில் அமர்த்திக்கொண்டு மேலே நடந்து செல்வார்கள். வேகமாக நடந்து ஏறுவதையும் இறங்குவதையும் பத்து மணி நேரத்தில் முடித்துவிட்டு அடுத்த சவாரியைத்தேடுவார்கள். மனித உடல் உழைப்பின் உச்சக்கட்ட கொடுமை அது. குதிரையில் உட்காரமுடியாத முதியவர்களை, சிலர் டோலியில் உட்காரவைத்து முன்னும் பின்னும் ஒவ்வொரு ஆளாகப்பிடித்தபடி மேலே ஏறுவார்கள். சிலர் குழந்தைகளை தோளில் உட்காரவைத்து துாக்கிச்செல்வார்கள். எல்லாவற்றுக்கும் சொற்பமான கூலி. வருடத்தில் ஆறுமாதங்கள் பனிக்காலத்தில் மேலேபோக பாதை கிடையாது. இந்தக் கொடுமையான மனித உடல் உழைப்பை வார்த்தைகளால் விளக்கிப்புரிந்து கொள்ளச் செய்வது கடினம். நேரில்தான் பார்க்கவேண்டும். அந்தக்கூலிகளும் அவர்களுடைய மட்டக் குதிரைகளைப் போலவே இன்றோ நாளையோ என எலும்பும் தோலுமாக இருப்பார்கள். குதிரைகளால் இனி ஏற முடியாதென்கிற நிலை வருகிற போது குதிரையை மலையிலிருந்து உருட்டி விட்டு விடுவார்கள்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கதறிக்கொண்டு தஞ்சாவூருக்கு வந்துசேர்ந்தேன். அப்போதுதான் என் வாழ்வின் முக்கியமான அந்தச்சம்பவம் நடந்தது.
களச் செயலாளியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மார்க்சியத் தோழரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பின்போது நான் மெளனவிரதத்தில் இருந்தேன். அவரோடுஎதுவும்பேச முடியவில்லை எனபது கூட ஞாபகம் வருகிறது. பிறகு நாங்கள் தொடர்ந்து விவாதித்தோம்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்தை அவரே எனக்கு அறிமுகப் படுத்தினார். அதிலிருந்து மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாக மாறினான். கிரேக்க தத்துவவாதிகளிலிருந்து
-62s தை -2001
அம்மா - 13

Page 15
துவங்கி கிர்க்கேகார்ட், விட்ஜென்ஸ்டைன், ஹைடேக்கர், சார்த், லெவிஸ்ட்ராஸ், ஃபூக்கோ வரை வந்தேன். இன்றளவும் மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாகவே இருந்து வருகின்றேன்.
இலக்கிய உலகிற்குள் நுழைந்ததுஇன்னும் சற்று பெரிய கதை. இருந்தாலும் சுருக்காமாகச் சொல்கின்றேன். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெண்போன்ற நளினமான தோற்றம் கொண்டிருந்தேன் ஆண்பிள்ளைகள் யாரும் என்னை சகஜமாக ஏற்றுக்கொண்டதில்லை. ஏற்றுக்கொண்டாலும் என் தேக நிலை அதற்குத் தகுந்ததாக இல்லை. ஒரே ஒரு நாள் கபடி விளையாடச்சென்று ஒரு பையன் மோதியதில் வலது கை எலும்பு முறிந்து போனது. ஒரே ஒருநாள் பட்டாசு வெடிக்கச்சென்று, இடது கண்ணில் வெடித்து பார்வை இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளவே இரண்டுமாதங்கள் ஆயிற்று. பாவையில் தீ படாததால் பார்வை திரும்பக்கிடைத்தது. இதே ரீதியில் போனால், சைக்கிள் கற்றுக் கொள்ளச் சென்று கை காலை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் சைக்கிளையே தொடவில்லை.
இப்படியாக, பையன்களோடு சேர்வதில்லை. அதோடு இன்னொரு விஷயமும் அவர்களோடு சேர்வதற்கு தடையாக இருந்தது கொஞ்சம் பெரிய பையன்களாக இருப்பவர்கள் வுேறாமோ செக்ஸ்க்கு அழைத்தார்கள்.
ஏதேனும் இசைக்கருவி கற்றுக்கொள்ளலாம் என்று முயற்சி செய்தேன். தமிழ் சினிமாவில் மட்டும் பார்த்திருந்த பியானோ ஒரு கனவாக மட்டுமே இருந்தது. கிடார் மட்டுமே சற்று அருகில் இருந்ததால்-அதுவும் லுசி கிடார்-அதைப் பயில ஆரம்பித்தேன். ஆனால் அது எங்கள் சேரியைச் சேர்ந்த பையன்களுக்கு கெளரவக் குறைச்சலாக இருந்தது. அவர்களை அவமதிக்கவே நான் கிடார் கற்றுக்கொள்வதாகப் புரிந்து கொண்டு என்னைக் கல்லால் அடித்தார்கள். கிடார் கைவிட்டுப் போனது.
பெண்களோடு இந்தப்பிரச்சனைகள் ஏதும் இல்லை. எனக்கும் இயல்பாகவே பெண்களின்மீது அதீத பிரியம் இருந்தது. (அது இன்றளவும் தொடர்கிறது) பெண்கள் எனக்கு நிறைய கதைகள் சொன்னார்கள். என்னையும் சொல்லச் செய்தார்கள். செக்ஸ் கதைகளும் கூட உண்டு. எனக்கு கற்பனை வறட்சி அதிகம். அதனால் அவர்களுக்குக் கதைகள்
சொல்வதற்காகவே நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ்க் கதைகள் அவர்களுக்கும் தெரிந்திருந்ததால் ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்தேன்.மேரி கோரல்லி, அலெக்ஸாந்தர் துமா, டெகாமரான், சர் வால்டர் ஸ்கார்ட், மார்க் ட் வேய்ன் என்று. இப்படியாக பெண்களோடும் கதைகளோடும் ஆரம்பித்தது என்னுடைய எழுத்து.
2 நீங்கள் ம7ர்க்சிட்ரா? a Tig5 (5 ypop GaitsiroTri-marxism is the only unsurpassable philosophy of our time என்று இன்னமும் மார்க்சியத்தை தாண்டிய ஒரு தத்துவம் தோன்றி விடவில்லை என்றே நினைக்கிறேன். அதுவரை எந்த ஒரு மனிதருமே அடிப்படையில் மார்க்சீயராகத்தான் இருந்தாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தெரீதா எழுதி வெளிவந்த spectre of marx என்ற புத்தகம் கூட மார்க்சீயத்தை மிகவும் சாதகமான முறையிலேயே அணுகியிருப்பதாக அறிகிறோம்.
மீண்டும் சார்த்தையே மேற்கோள் காட்டுகிறேன். ஒருமுறை சொன்னார். பசியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு எதியோப்பிக்குழந்தைக்கு முன்னால் எனது நாளியிய7வுக்கு எவ்வித அர்த்தமும் இல்லை என்று. 62s
goyibon -- 13 தை -2001

துவக்கத்திலிருந்தே இந்த இரண்டு துருவங்களுக்கிடையேதான் ஊடாடிக் கொண்டிருக்கிறேன். ஒருபக்கம்கலையும் இலக்கியமும்,இன்னொரு பக்கம் பசியால் சாகும் குழந்தை. இந்தக் குரூரம் என்னை ஒரு மனநோயாளியாக ஆக்கிவிடக் கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எழுத்தைப் பற்றிக்கொள்கிறேன்.
3. சிறு மத்திரிகைகனில் தீவிரமாக எழுத ஆரம்பித்தது எப்போது? நான் தஞ்சாவூரில் படித்துக்கொண்டிருந்தபோது ட்ரக்ஞை என்ற பத்திரிகையின் தீவிர வாசகனாக இருந்தேன். பிறகு சென்னை வந்தபோது அதன் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களைச் சந்தித்தேன். வீராச்சாமி என்னை வெகுவாக ஈர்த்தார். ஆனாலும் நான் அப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே எழுதிக்கொண்டிருந்தேன்.
1978 இல் தில்லி சென்றேன். கொல்லிப் பாவை, படிகள் போன்ற பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பட்டது. படிகள் பத்திரிகை என்னை மிகவும் ஊக்குவித்தது. வெங்கட்சாமிநாதனுடன் ஏற்பட்ட நட்பு மறக்கவே முடியாதது. சுமார் இரண்டு வருட காலம் அவரோடு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது விவாதிக்காத நாளே கிடையாது என்று சொல்லலாம். சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான்.
அப்போது இலக்கிய வெளிவட்டம் என்ற ஒரு பத்திரிகை வந்தது. அதன் ஆசிரியர் நடராஜன் வத்தராயிருப்புக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற குக் கிராமத்திலிருந்து அந்தப்பத்திரிகையைக் கொண்டுவந்தார். அதிலும் என்னுடைய முக்கியமான பல கட்டுரைகள் வெளிவந்தன. நடராஜன் அப்போது கிழிந்த ஜாக்கட்டுகளுக்கு ஒட்டுப்போடும் டைலராக வேலை பார்த்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிடவேண்டிய விஷயம். அவரிடமிருந்து நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் குடும்பம் என்ற அமைப்பினால் அமுங்கிப்போனவர்களில் அவரும் ஒருவராகப் போனது துரதிர்ஷ்டமே.
4. எக்ஸ்பிஎப்டென்ஷியலிசமும் பேண்பியனியனும், எரோ டிகி/7 எண்றும் பெயர் வைக்க காரணம் என்ன? சார்த்தையே மீண்டும் குறிப்பிடவிரும்புகிறேன் ஒரு ஐரோப்பியனாக இருந்த என்னை மூன்றாம் உலகத்தை நோக்கித் திருப்பியவர் ப்ரான்ஸ் பாணன் என்றார் சார்த். பாணனின் wretched of the earth என்ற நூாலை வாசித்திருப்பீர்கள், சேகுவேராவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் சார்த். தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மாவோயிஸ்டுகளோடு மட்டுமே அவர் உரையாடி வந்தார். அதனால்தான் அவரால் அப்போது ஸ்ட்ரக்சுரலிசத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.
இந்தப் பின்னணியில் எக்ஸிஸ் டென்ஷியலிசம் என்ற தத்துவத்தைப் பாருங்கள், எக்ஸிஸ்டென்ஷியலிசமும், பேன்ஸி பணியனும் நாவலில் ஒரு வாசகம் வருகிறது, the main threat to existentialism is non-availability of good quality Condoms. iDiridsduis ITg5a56it எக்ஸிஸ் டென்ஷயலிசத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பற்றிய கிண்டலே அந்தத்தலைப்பு. ஒருவேளை சுய கிண்டலாகவும் இருக்கலாம்.
zero visibility என்பார்கள் பார்வையே தெரியாத பனி முட்டம். பனி என்பது மரணம். பச்சையின் எதிர் முனை பணி. பச்சை துவக்கம். பனி முடிவு. பனி என்பது apocalypse. tDabsTLITJ25tb apocalypse 36taplgáing. one hundred years of solitude ibiT6 gubapocalypseஇலேயே முடிகிறது. பனியைப்பற்றி யோசிக்கும் வேளையில் ஒரு நிகழ்ச்சி ஞாபகம்
-627) தை -2001
J911b. Dit -13

Page 16
வருகிறது. லட்சக்கணக்கான யூத உடல்களை அப்புறப்படுத்துவது எப்படி என்று யோசிக்கிறார்கள் நாஜிகள். பனிப்பாறைகளால் உறைந்துகிடக்கும் நதியில் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நதியில் யூத உடல்களைப் போடுகிறார்கள். ஸிரோ டிகிரியில்-வாழ்வின் அவலத்தால் துரத்தப்பட்டு பனிப்பாறையில் தனித்து அலைகிறான் ஒருவன். அவன் சொர்க்கத்துக்குச் செல்லவில்லை. நாய் பின்தொடரவில்லை. மார்க்கமேதும் விளங்கவில்லை. மறிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் ரூபமென பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும் தள்ளிவிட்டு மண்டியிட்டுக்கதறுகிறான்.
கிரேக்க துன்பவியல் காவியங்களில் கேட்கும் கோரஸ் இது.
-gg (b 6.5LDIT60, 667tdisabib. 365 (SuT6), joy, Celebration, langhter, ecstacy, frenzy, eroticism, parody, humour 676irugbirds6jib on 27 2ai07760)u 6JTafdab60Tib.
it is a blend of apolonian and dionysian characters, gi5 655,556) 67.577 424,2760)u ஒரு நீட்ஷேவிய நாவல் என்று சொல்லலாம்.
அதோடு, monthirigme36 என்பதற்கு எதிர்ப்புள்ளியிலிருந்து அந்த நாவல் உடலை மையப்படுத்துவதையும் ஒருவர் மிகச்சுலபமாக கண்டுகொள்ளமுடியும். உடல் Carnival-ஆக மாறுகிறது. எல்லா அர்த்தங்களுக்கும் அறிவுக்கும் உடலே ஆதாரம், ஆரோக்கியமும் வலிமையும் முக்கிய பண்புகளாக அங்கீகரிக்கவேண்டும். என்று ஜரதுாஸ்ட்ராவில் நீட்சே எழுதுவதையும் இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றொரு இடத்தில் நீட்ஷே 6TpgáépTif «a mere disiplining of feelings and thouht amounts to almost nothing ........ one must first persuade the body...it is decisive for the fate of peoples and humanity that one begins in cul Catina culture in the proper place-not in the « soulx... the proper place is the body.Xaestures X diet physiology; the rest will follow.X இங்கே நாம் தாவோவுக்குகும், நீட்ஷேவுக்கும் உள்ள ஒற்றுமை- உடலை மையப்படுத்தும் ஜென் பெளத்தம்-ஜப்பானிய martial art5-நான் ஏற்கனவே குறிப்பிட்ட வறடயோகம் எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இங்கே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் உன்னதம் பத்திரிகையின் ஆசிரியர் கெளதம சித்தார்த்தன் புதுவகை எழுத்து அல்லது நவீன எழுத்து என்று ஏதோ ஒரு அசட்டுத்தனமான தலைப்பு - தலைப்பு சரியாக நினைவில்லை. அந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். ஈரோட்டில். முக்கிமான பேச்சாளரான எம்.டி.எம்.வராததால்-பார்வையாளனாகச் சென்றிருந்த என்னை பேசுமாறு அழைத்தார் சித்தார்த்தன். நான் அப்போது நவின எழுத்து என்பதிலெல்ல7ம் எனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்து விட்டு, வேட்டை பற்றியும், விதவிதமான சமையல் முறைகள் பற்றியும், மலையேற்றம், ஸ்கீயிங், பயணம் பற்றியும் பேசினேன். அந்தப்பேச்சைப்பற்றி குறிப்பிடும் போது நவீன எழுத்து பற்றியும் பேசுங்கள் என்ற7ல் சமையல் பண்ணி சாப்பிடுவது பற்றிப் பேசினார் சாரு என்று எழுதி என்னை ஒரு முட்டாளாகச் சித்தரிக்கமுயன்றார்.
இவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டு முதலில் நீட்ஷேவைப் பயில வேண்டும் என்று விண்ணப்பித்துக்கொள்கிறேன்.
5. நேநோ என்றால் என்ன?
rine என்பதன் முலவார்த்தை. ஒன்பது ஆவிளிம்பு my preoccupation with numberKuns தை -2001
gefiðDAT -13

nine is mystical. it is a precipice, you will fa into an abyss-numberle6-void- begining of nothingnee. grilasgbibgigstoir 6m5Gym (gdé if g56 feasings. but 

Page 17
அநேகமாக அது மாமியார் கொடுமை புருஷன் கொடுமை அல்லது முதல் காதல் எனபதாக இருக்கும். கற்பனையே கலக்காத அச்சு அசல் உண்மைச் சம்பவங்கள், என்னிடம் கொடுத்துப் படிக்கச்சொல்வார்கள். அழகான பெண்கள் என்றால் பொய் சொல்லிவிடுவேன். அதை வைத்து மேற்கொண்டு பேசவும் பழகவும், எக்ஸெட்ரா, எட்ஸெட்ரா என்று மனம் கணக்குப் போடும்.
அந்தமாதிரிக் கதைகளின் தரத்தில் இருக்கிறது புதுமைப்பித்தன் கதைகள் . அவருக்கு எழுதத்தெரியவில்லை. வாயிலேயே வைக்க வழங்காத சமையலைப் போல் இருக்கிறது அவர் கதைகள்.
நான் ஒரு connoi66eur மிகத்தேர்ந்த சமையல்காரன். உலகின் அற்புதமான பதார்த்தமான அக்கார அடிசலை அதி ருசியாய் சமைப்பேன். லுலன் போன்ற வழக்கொழிந்து போன உணவுவகைகளும் தெரியும. அதேபோல் அசைவ உணவு வகையில் top9ber, நியூசிலாந்திலிருந்து இங்கே இறக்குமதியாகும் ஒரு வகை மீன். trout) மீன் என்று நூற்றுக்கணக்கான உணவுவகைகள் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த உணவுவகைகள் எனக்கு அத்துப்படி. என் நண்பன் ஒருவன் என் சமையலைச் சாப்பிட்டு விட்டு செativity யின் உச்சம் இதில் நூற்றில் ஒரு பங்கையாவது உன் எழுத்தில் காண்பிக்கக்கூடாதா?என்று கேட்டான். (அவனுக்கு என் எழுத்துப் பிடிக்காது)
சமையல் என்பது ஒரு கலை. ஆனால் அதை நாம் பெண்களுக்கென ஒதுக்கி விட்டதால் ஏதோ தினந்தோறும் மலம் கழிப்பதுதான் வாழ்வின் ஆதாரமான கடமை என்பது போலவும், அந்த ஆதாரமான செயல் தடங்கல் ஏதும் இல்லாமால் நடக்கவேண்டும் என்பதற்காகவே எதையோ தின்ன வேண்டும் என்பது போலவும் தான் சமையல் என்கிற கலை உருமாறியிருக்கிறது. பாவம் பெண்கள்.
நுாறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஸ்யாவின் நிலக் கரிச் சுரங்கங்களில் கை விரல்களாலேயே நிலக்கரியைச் சுரண்டுவார்களாம். நகங்கள் கிழிந்து குருதி ஒடும் தொழிலாளர்களின் அவலம் பற்றி அப்போதைய ரஸ்ய இலக்கியங்கள் சொல்லுகின்றன. அந்தத் தொழிலாளர்களின் நிலையில் இருக்கிறார்கள் நமது பெண்கள்.
ஆனால் சமையல் என்பது கலை. நல்ல சமையல் தீவிரமான கலவியைப்போல் இன்பம் அளிக்கக்கூடியது. புதுமைப்பித்தனுக்கு சமைக்கத் தெரிகிறதோ இல்லையோ, எழுதத் தெரியவில்லை. அவருக்குள்ளிருந்த படைப்புத்திறனை எழுத்தாக மாற்றத் தெரியவில்லை. ஆனால் அதற்காக அவர்மீது எனக்கு கோபமில்லை. ஒருவருக்கு எழுதத்தெரியாதது ஒரு குற்றமா என்ன? ஆனால் எழுதத்தெரியாத ஒருவர்-தான் உலக இலக்கியம் படைத்துவிட்டதாகப் பீற்றிக் கொள்ளும்போது தான் கோபம் வருகிறது. சமகாலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பிடித்திருக்கும் இந்த வியாதியைப் பரப்பியவர்கள் மெளனியும் புதுமைப்பித்தனும், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் சீரழிவின் முலவர்கள் இவர்கள்.
ஆனால் தமிழ் இலக்கியவாதிகளே பெரும்பாலும் mediOCre களாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருப்பதால் இவர்களுக்கு மெளனியையும் புதுமைப்பித்தனையும் உயர்த்திப்பிடிப்பது வசதியாகப் போயிற்று.
வெகுஜன அரசியல், கலாச்சாரத்தில் எவ்வகை மனோபாவம் இயங்குகிறதோ அதே தான்
-(3d தை -2001
அம்மா - 13

சிறுபத்திரிகை எழுத்தாளர்களிடமும் இயங்குகிறது என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். வெகுஜன தளத்தில் எப்படி icore உருவாக்கப் படுகிறார்களோ அதைப் போலவே தான் சிறுபத்திரிகைத்தளத்திலும் மெளனி, புதுமைப்பித்தன் என்ற iconத உருவாக்கப்படுகிறார்கள்.
நகுலனை ஏன் இவர்கள் திண்டவே இல்லை? கரிச்சான் குஞ்சு, லா. ச. ரா., எம்.வி. வெங்கட்ராம் என்று எத்தைனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.எம்.வி. வியின் பைத்தியக்காரப்பிள்ளை-உலகத்தரமான ஒரு சிறுகதை. குடும்பம் என்ற அமைப்பின் சீரழிவை இதை விட வலுவாக வேறு எந்தக்கதையும் சொல்லவில்லை. லா.ச.ராவின் வேண்டப்படாதவன் என்ற சிறுகதை. உலகிலேயே மிகக் கொடுமையான ஒடுக்குதலுக்கு ஆளாகிறவர்கள் சிறுவர்கள். அதேபோல், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். லா.ச.ராவின் கதையில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன். கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் என்ற நாவல். இப்படிப் பார்த்தால் மெளனியிடமும், புதுமைப்பித்தனிடமும் கூட ஒன்றிரண்டு கதைகள் தேறலாம். தி.ஜ.ர. என்று அழைக்கப்பட்ட தி.ஜ.ரங்கநாதனிடம் ஒரு கதை தேறுவதைப்போல. இப்படி தமிழில் எழுதிய ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கதை கிடைக்கலாம். யார் கண்டது. திருவாளர் சுஜாதாவிடமிருந்து கூட ஒரு நல்ல கதை கிடைக்கலாம்! ஆக, மெளனிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டும் என்ன தனி மரியாதை என்று கேட்கிறேன்.
7. புதுமைப்பித்தன் தன் காலகட்ட ஜாதிய ஒடுக்குமுறைக்கு பாராமுகமாய் இருந்தார் என்கிறீர்கள், அப்படியானால் பாரதி-பகத்சிங் காலத்தில் மாயாவாதக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார் என்பதைத் தாண்டி பாரதியை எப்படிப் பார்க்கிறீர்கள்? புதுமைப்பித்தன் மட்டுமல்ல, என் குற்றச்சாட்டில் மெளனியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் காலகட்ட ஜாதிய ஒடுக்குமுறைக்கு பாராமுகமாய் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கதைகளே அந்த ஜாதிய ஒடுக்கு முறையை ஆதரிப்பதாகவும் நியாயப்படுத்துவதாகவும் இருக்கின்றன.
மெளனியின் மாற7ட்டம் என்ற கதையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவனை மற்றொருவன் கைதட்டிக் கூப்பிடுகிறான். இவனைப் பொறுத்தவரையில் கைதட்டிக் கூப்பிடுவது அநாகரிகம். காட்டுமிராண்டித்தனம். யார் அப்படிக் கைதட்டிக் கூப்பிடுவது- அப்பேர்ப்பட்ட பிராணியைப் பார்ப்போமென்று தலையைத் திருப்புகிறான். இன்னும் வேகமாகத் தட்டிக்கொண்டே உங்களைத்தானுங்க. என்று கூச்சிலிட்டுக்கொண்டு நெருங்குகிறான் இங்கே வரும் ங்க என்ற பிரயோகத்தைக் கவனியுங்கள். உலகத்தில் பிரளயமே வந்திருந்தாலும் கூட அவன் அப்படி பீதி அடைந்திருக்கமாட்டான். அந்த அளவுக்கு ஆடிப்போய் விடுகிறான் . பக்கத்தில் வந்து உங்களைத்தானுங்க. என்று உரத்தே சொல்கிறான் இவனுக்கு அவனை முக்கைப்பிடித்து குலுக்க வேண்டும் போல் ஆத்திரம் பீறிடுகிறது.
ஆமாங்க, எனக்குத் தெரியுங்க என்றான் நாட்டுப்புறத்தான். இவனை மேலும் கீழும்
உற்றுப்பார்த்துக் கொண்டே அவன் ஒரு முடிச்சு மாறியாக ஏன் இருக்கக் கூடாது. அப்படி
இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய ஸில்க் ஷர்ட்டுக்குப்பை இல்லை. மடியிலும் பர்ஸ்
இல்லை. ஒருக்கால் தாசி வீட்டுத் தரகனாக இருக்கலாமோ? அப்படியாயின் தன்னைப்பற்றி
என்ன நினைத்துக்கொள்ளுவார்கள் அப்போது பார்க்கும் தனது நண்பர்கள்? ஒருக்கால்
தன் ஊர்ப்பண்ணை ஆளோ என்றும் எண்ணுகிறான். தன் பெருமையை மிகவும் நோவச் செய்ததில் மனது இவனுக்கு உருகியே போய் விடுகிறது.
GsID தை -2001
pitibioir - 13

Page 18
நாட்டுப் புறத்தானை ஒருவழியாக தவிர்த்து விட்டு வேறு பக்கம் சென்று விடுகிறான் இவன். ஆனால் என்ன துரதிஷ்டம். அங்கேயும் வந்து உங்களைத்தானுங்கோ. என்கிறான் நாட்டுப்புறத்தான். சரி தொலையட்டுமென்று உனக்காகத்தான்கரத்திருந்தேன்என்கிறான் இவன்
ஆம7ங்க-தெரியுங்க என்று அவன் பின் தொடர்கிறான். இவன் அவனது முக்கை கவனிக்க அவன் ஆம7ங்க என்னைப்பார்த்தாலே மறக்காதுங்க-எண் முக்குங்க-என்கிறான்.
இப்படியாக ஆம7ங்க.சரிங்க என்றபடி உரையாடல் தொடர்கிறது. ஸில்க் ஷர்ட்காரன் நாட்டுப்புறத்தானை டா போட்டுப் பேசுகிறான். இதில் ஒரு குறைபாடு என்னவென்றால் அந்த நாட்டுப்புறத்தானும் பிராமண பாஷை பேசுவதுதான். கவனியுங்கள்.
அவங்கரம்பிலிலேஎண்ணைத் தெரிஞ்சுண்டு.அந்த ஜடாஎங்கிட்ட சொன்ன7ரு-கொடுத்தாரு
நாட்டுப்புறத்தான் கதையின் போக்கில் பட்டிக்காட்டான் ஆகி விடுகிறான்.
உங்களைப் ப7ர்த்தே தெரிஞ்சுடுத்தே எனக்கு/என்றான் பட்டிக்காட்டான்.
கடைசியில் கதையின் Klabyrinthx என்னவென்றால் வக்கீல்சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று நினைத்து அந்தப் பட்டிக்காட்டான் அதே அடையாளமுள்ள (சில்க் சட்டை, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம்) மற்றொருவனைப்பிடித்து விடுகிறான். எப்படி இந்தத் தவறு நேர்கிறதென்றால், அன்று சாயங்காலம் ஜவகர் அவ்வூருக்கு வருகிறபடியால் அய்யங்கார் சில்க் சட்டைக்கும் , விசிறிமடிப்புக்கும் ரஜா கொடுத்து விட்டு ஜிப்பாவும் குல்லாவுமாக வந்து விட்டார். கதாநாயகனோ அன்று எதேச்சையாக சில்க் சட்டையும், விசிறிமடிப்புமாக வந்து விட்டான்.
கதையின் முத்தாய்ப்பைக் கவனியுங்கள்.
தனியாக டைத்தியக்காரத்தனத்தில்தான் இருப்பதாக எண்ணம் முதலில் பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாகப் பேரப் விட்டதோ, என்ற யோசனையும், சம்சயமும் கடைசியாக,ஒன்றுமே புலப்படாமல் பைத்தியக்காரத்தனம் என்று ஒருதரம் முணுமுணுத்து முச்சவிட்டான். ய7ர்ய7ர் எப்படி எப்படி என்பதை அவன7ல் உணரமுடியவில்லை அப்போது
இப்படி கதை எழுதுகிறவர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்று தோன்ற வில்லையா உங்களுக்கு? மெளனியையும், புதுமைப்பித்தனையும் phietines என்கிறேன் நான்.
ஆனால் என்னுடைய முக்கியக் குற்றச்சாட்டு இது அல்ல. அவர்கள் எழுதிய கதைகள் குப்பைக்கூடைக்குப் போயிருக்க வேண்டியவை-இலக்கியமாகத் தேறாதவை என்பதுதான்.
பாரதி அப்படி அல்ல. தலித்துக்களைப் பற்றி அவர் எழுதிய ஆறில் ஒரு பங்கு என்ற கதை சர்வதேசத்தரம் வாய்ந்தது அல்ல எனினும் அவர் கவிதைகள் பல உலக கவிதைகளுக்கு நிகரானவை. மேலும் அவர் கவிஞர் மட்டுமல்ல, பத்திரிகையாளர், விடுதலைப் போராளி, சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என்று பல்வேறு இலக்கிய வடிவங்களையும் செழுமைப் படுத்தியவர். மிகப் பெரிய கலகக்காரர். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக்கிடைக்காத diorysian epirit ஐ என்னால் பாரதியின் எழுத்தில் மட்டுமே காண முடிகிறது. அதைப்புரிந்து கொள்ளாமல் மாயாவாதக் கவிஞர் என்று குறுக்குவது
அம்மா - 13 தை -2001

வறட்டுத்தனம். பாரதி கஞ்சா உட்கொண்டது உட்பட அவரது வாழ்வும் எழுத்தும் uniaபe ஆனவை. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக்கிடைக்காதவை.
8. சிறு பத்திரிகைத் தளத்தில் தாஸ்தாவ்ஸ்கி கொணர்டாடப் பட்ட அளவுக்கு டால்ஸப்டாப் கொண்டாடப்படவில்லை. உங்கள் இலக்கிய மதிப்பீட்டின் படி டால்ஸ்டாய் தானே உங்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என்பது சரியா? என்னைக் கிண்டல் செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி என்றே இதைப் புரிந்து கொள்கிறேன். டால்ஸ்டாய் ஒரு நீதிமான். உய்விப்பவர், மன்னிப்பு வழங்குபவர், புத்துயிர்ப்பு அளித்து பரலோக சாம்ராஜ்யத்திற்கு இட்டுச் செல்பவர்.
கிறித்தவம் குறித்து நீட்ஷே எழுதியவற்றை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால் தாஸ்தாவ்ஸ்கி குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர், சூதாடி, சைபீரிய சிறைச்சாலைகளில் இருந்தவர்,நோயாளி, பதிப்பகத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியாமல் வழக்குகளைச் சந்தித்தவர். அப்படி ஒரு முறை அவரது நரம்பு வியாதியின் காரணமாக குறித்ததேதிக்குள் நாவலை முடித்துக்கொடுக்க முடியவில்லை. பதிப்பகத்தார் கடைசித் தவணையாக ஒரு தேதியைக் குறிக்கிறார். கடும் குளிர், உடல் உபாதை, கொடிய வறுமை, நரம்புத்தளர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. பேனாவைத் தொடவே முடியவில்லை. மீண்டும் சைபீரியாவா என்று பதறுகிறார்
அப்போது அவரிடம் acribe ஆக வந்து சேர்கிறாள் அன்னா என்ற இளம் பெண்.
தாஸ்தாவ்ஸ்கியின் கதை சொல்லும் வேகம், அவரது passion, உக்கிரம் , வெறி எல்லாம் சேர்ந்து அவள் அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள். அவரது மரணம் வரை உற்ற துணையாகவும் காதலியாகவும் இருக்கிறாள்.
தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போன்றது. குற்றவாளிகளின் உலகம் அது. ஒரு பத்தாண்டுக் காலம் நான் தாஸ்தாவ்ஸ்கியின் உலகத்தில் வாழ்ந்தேன் என்று சொல்லலாம். எனது எழுத்தியக்கத்தின் எக்ஸிஸ்டென்ஷியலிச கால கட்டம் அது.
பின்னர் லெவிஸ்ட்ராஸ், ரொலான் பார்த், பூக்கோ என்று ஸ்ட்ரக்சுரலிசத்தின் பக்கம் நகர்ந்த போது போர்வேற, நபகோவ் போன்றவர்களைக் கண்டடைந்தேன். தாஸ்தாவ்ஸ் கியை விட நபகோவ் இப்போது எனக்கு மிகுந்த நெருக்கமானவராக இருக்கிறார். விளக்கங்கள் இல்லாத-புதிர்களும் மர்மங்களும் நிறைந்த உலகம் அது. பதிமுன்று வயதுப் பெண்ணின் மேல் ஐம்பது வயதுக்காரனுக்கு எப்படிக் காதல் ஏற்படும்?
loia வில் விளக்கங்கள் இல்லை. t just happer6.
நபகோவ் தாஸ்தாவ்ஸ்கியை நிராகரிக்கிறார். அவர் ஒரு கிரைம் ரைட்டர். தினசரிகளில் க்ரைம்நியூஸ் படித்து எழுதுகிறவர் என்கிறார்நபகோவ். தாஸ்தாவ்ஸ்கிக்கு தினசரிகளைப் படிப்பது பெரிதும் விருப்பமான விஷயம். என்றாலும் அவரது எழுத்தை நான் அப்படி நிராகரிக்கமாட்டேன். மேலும் ஒரு சுவாரசியமான தகவல்-நபகோவ் ஒரு வண்ணத்துப்பூச்சி சேகரிப்பாளர். உலகெங்கிலும் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் நபகோவின் வண்ணத்துப்பூச்சி ஆய்வுகள் பாடத்திட்டத்தில் உள்ளன. நான் இலக்கியத்த7ல் சாதித்ததைவிட வண்ணத்துப்பூச்சி ஆய்வில் சில பெருமைக்குரிய சாதனைகளைச் செய்திருக்கிறேன் என்கிறார்நபகோவ். அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் பெரும் சாகசங்களைக் கொண்டவை,சுவாரசியமானவை. இலக்கியம் தவிர வேறு துறைகளையும்
-(3so தை -2001
அம்மா -13

Page 19
நாம பயில வேண்டியுள்ளது. ஆனால் இலக்கியமே தயிர்வடையாக இருக்கும் தமிழ்ச் சூழலில் என்னுடைய எதிர்பார்ப்பு அதிக பட்சமானது தான்!
9. எந்த ஒரு கலைஞனும் தன்னுடைய காலத்திற்கு உணர்வுள்ளவனாக ஏன் இருக்கவேண்டும்? JKK டோல்க்கீன் போன்றவர்கள் கற்பனையின் உச்சத்தில்தானே சிறந்த எழுத்தாளராகிறார்கள்? ஒரு political algேory யைக் கூட அவர் மறுத்தார் என நான் படித்திருக்கிறேன்.
ஒரு எழுத்தாளர் அரசியல் பிரக்ஞை கொணடவராக இருந்தாகவேண்டும் என்பது என் நிபந்தனை அல்ல, கட்டாயம் அல்ல. போர்வுேறக்கு அரசியல் தெரியாது. தென்னமெரிக்காவின் கொந்தளிப்பான, புரட்சிகரமான அரசியல் சூழலில் இருந்து தன்னை முற்றாக விலக்கிக்கொண்டவர். இடதுசாரி எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடியவர். அவருக்கும் கொர்த்தஸாருக்கும் நடந்த கடும் விவாதங்களை நீங்கள் நினைவு கூரலாம் எல்லா எழுத்தாளர்களுமே கொர்த்தஸாரைப்போல், மார்க்வெஸைப்போல் அரசியல் பிரக்ஞை கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று நாம் நிர்ப்பந்திக்கமுடியாது. இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், மாரியோ வார்க்காஸ் லோஸா-தென்னமெரிக்காவின் மிகச்சிறந்த கதை சொல்லியான அவர் பெருவில் பயங்கரவாத அரசின் பக்கம் நின்றவர். புரட்சியாளர்களை எதிர்த்தவர். சில காலம் பாஸிஸ் அரசின் ஜனாதிபதியாக இருந்தவர். ஆனால் அவருடைய real life of alejanfro majla வை நீங்கள் படித்தால் நீங்களே Lydful IIT6ng Tab LDITS65GB6iiabóir. conversations in the Cthedral-BIT6656, Quebsisi அவலத்தை-ஒரு தேசமே குப்பைத்தொட்டியாகக் கிடப்பதை-பெருவின் கொடுரமானரத்தக் கறைபடிந்த அரசியலை எவ்வளவு வலுவாக எழுதியிருக்கிறார்! முழுக்கவும் இந்திய நிலைமைக்குப் பொருந்திவருகிற ஒருநாவல் அது. தெருவில் திரியும் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் அடித்தேகொல்லும் அந்த முனிசிபாலிட்டி ஊழியனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
லோசாவினால் இது எப்படி சாத்தியமாகிறது? கூடு விட்டு கூடு பாய்கிறான் லோசா, அலெஜாந்த்ரோ மாய்த்தா என்ற புரட்சியாளனாக. முனிசிபாலிட்டி ஊழியனாக ரேடியோ நாடக சீரியல் எழுதும் கதைவசன கர்த்தாவாக- புரட்சிகரப் பாதிரியாராக-இன்னும் நுாற்றுக்கணக்கான பாத்திரங்களாக மாறுகிறான் லோசா. இதைத்தான் traveling into the other என்கிறேன். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கோ other என்பதே இல்லை.
இங்கேதான வாசிப்பு என்ற செயல்பாடும் வருகிறது. போர்வுேறயின் வாசிப்பு எப்படிப்பட்டது? அவர் ஒரு நடமாடும் நூலகம் என்பார்கள். இந்தியச் சமுகத்தைப் பற்றி ஒரு பத்து புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்வதை விட போர்வேறயின் the way to al-mutaaim என்ற ஒரே ஒரு சிறுகதையின் முலம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். வரலாறு, மானுடவியல் , மொழியியல், அமைப்பியல் வாதம் போன்ற பல துறைகளில் அறிஞர்கள் கண்டுபிடித்த ஆய்வு முறைகளை போர்வுேற வெகு எளிதாக தனது கதைகளினுாடே கண்டடைகிறார். போர்வுேறக்கு அமைப்பியல் வாதம் தெரியாது என்றாலும் கூட அமைப்பியல்வாதிகள் எதிர்கொண்ட பல புதிர்களை போர்வுேறயின் எழுத்துவிடுவிக்கிறது.
மண்ணில் ஆழமாக ஒரு துளையிட்டால் நீர் பீறிட்டு அடிக்கும். ஆழம் எவ்வளவு போகிறதோ அவ்வளவு வீர்யமாகவும் உக்கிரமாகவும் இருக்கும் நீருற்றின் வேகம். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கிய வெளிவட்டத்தில் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் நீட்ஷே இந்த உதாரணத்தைக் கொடுத்திருப்பதைப் படித்தேன்.நான் டோல்க்கினை இன்னமும் படித்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால்
649- தை -2001
giubbar - 13

இவரது எழுத்தை தர்மு சிவராமு எனக்கு அறிமுகப்படுத்தினார். இதே போல் கார்லோஸ் காஸ்டனாடாவைப் படிக்க வேண்டுமென ஒரு நண்பர் சிபாரிசு செய்கிறார். இதோடு, நானே தெரிவுசெய்த சிலரை இன்னமும் படிக்காமல் வைத்திருக்கிறேன். இப்படி பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. ஒருவேளை டோல்க்கினின் நீரூற்று வெகு உக்கிரமானதாக இருக்கலாம்.
10. இரண்டுவிதமான செயல்பாடு-ஒன்று-அரசியல் போராட்டம் பற்றிய பிரக்ஞை. இரண்டுதுறவு- மனப்பாண்மையுடன் செயல்படுவது-தத்துவத் தேடல் - இதுபோன்று. கலைஞனின் செயல்பாட்டை இப்படி இரண்டு எல்லைகளுக்குள் குறுக்கமுடியுமா? இந்த விஷயத்தை வேறொரு விதமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். தென்னமெரிக்காவிலும், இன்னும் உலகின் பல்வேறு முலைகளிலும், அதிகாரத்திற்கெதிரான போராட்டங்களுக்கெல்லாம் சேகுவேராவின் பெயர் ஒரு g5n5uilitat (36), LDTijujubdiaspg. 365 (SuT6) richard feynmann, stephen hawkina போன்றவர்கள் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளவை அதிகம்.
ஆக, கலைஞன் என்று தனியாக யாரும் இல்லை என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களைவிட பெரியாரின் பங்களிப்பே அதிகம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
11. பயணம் பற்றி கூறினீர்கள். நீங்கள் சொல்லும் பெரியாருக்கு என்ன பயணம் இருக்கிறது? உங்களுடைய இலக்கிய அரசியல் கொள்கையில் பெரியாரின் இடம் என்ன? இரண்டு விதமான பயணங்கள் உள்ளன. எனக்குத்தெரிந்த பெரியவர் ஒருவர் இருக்கிறார், நரசிம்மன் என்பது பெயர். வயது எண்பதுக்கு மேல் இருக்கும், எனது வட இந்தியப் பயணங்களில் அவரே எனது வழிகாட்டி. என்னோடு உடன் வராவிட்டாலும் ஒவ்வொரு இடமாக எனக்கு சொல்லித்தருவார். இமாசலப் பிரதேச எல்லையில் இருக்கும் ரோத்தங் பாசுக்கு எப்படிப் போகவேண்டும் -தேசிய நெடுஞ்சாலை எண்.1 என்ற அந்தச்சாலையின் அகலம் எவ்வளவு அங்கிருந்து எப்படி எப்படிச் சுற்றி இந்தியாவின் மற்றொரு எல்லைப்புற மாவட்டமான லவுேறால் ஸ்பிட்டிக்கு வரவேண்டும்-எவ்வளவு காலம்ஆகும்-அங்கே இருக்கும் பனிக் குகைகள் -வளைவுகள்-இன்னும் சொல்லப்போனால், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவரின் பெயர். அவரைச்சந்தித்தால் என்னென்ன சாதகங்கள். என்று மணிக்கணக்கில் சொல்லுவார். இமய மலைப் பிராந்தியத்தில் அவர் கால்படாத இடமே இல்லை என்பது என்னுடைய எண்ணம். ரிஷிகேஷ் பற்றிச் சொல்லுவார். காசியிலுள்ள அத்தனை இடங்களும், சந்து பொந்துகளும், படித்துறைகளும் அவருக்கு அத்துப்படி. காசியில் சுடுகாட்டுப் பொறுப்பாளராக இருக்கும் வுறரிசிங். அங்கே கங்கைக் கரையில் மரணத்திற்காகக் காத்திருக்கும் முதுமையின் விளிம்பில் நிற்கும் ஆண்கள்,பெண்கள் என்று ஏராளமாகச் சொல்லுவார். போய்ப் பார்த்தால் எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் சமீபத்தில்தான் தெரிந்தது-அவர் சென்னைக்கு வடக்கே சென்றதே இல்லையென்று.
போர்ஹேயும் அதிகம் பயணங்கள் செய்ததில்லை. இந்தியாவிற்கு அவர் வந்ததே இல்லை. ஆனால் இந்தியாவைப்பற்றி அவர் நிபுணர். காரணம்-வாசிப்பதே அவரது பயணமாக இருந்தது. பெரியாரும் அப்படியே. உலகம் பூராவையும் சுற்றுவதைவிட அதிக அளவு தமிழ் நாட்டில் சுற்றியவர் அவர்.
ES) தை -2001
pubuDar - 13

Page 20
12. இக்கியவாதிகளுக்கு அரசியல் பிரக்ஞை தேவை? அரசியல் வாதிகளுக்கு-பெரியார் போன்றவர்களுக்கு இலக்கியம் தேவையில்லையா? எழுத்தாளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?
பெரியாருக்கு பியானோ வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மைக்ரோ பயாலஜியில் ஈடுபாடும் ஒரு விஞ்ஞானிக்கு மலையேற்றம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? பெரியாரின் துறை வேறு. அதில் அவர் ஒரு சாதனையாளர். அவர் சிந்தித்த பல விஷயங்கள் 96 iggs at Tsugg5ibg, LÖab6gib (p6760TT6i Gaoitmoods. some people are born posthumously என்பார் நீட்ஷே. இது நீட்ஷேவுக்கே மிகவும் பொருந்தும் என்று சொல்லுவார்கள். இது பெரியாருக்கும் பொருந்தும், அவரது சிந்தனைகள் அவரது இறப்புக்குப் பின்னும் புதிதாக
@_6了6s6ös。
உலகிலேயே மிக அதிகமான சொற்களைப் பேசியவராக அவர் இருக்கக்கூடும். ஒருநாளில் ஐந்து கூட்டங்கள் இப்படியே ஐம்பது ஆண்டுகள், மலைப்பாக இருக்கிறது.
முத்திரம் போவதற்கான டீயூப்பைப் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக அலைந்த அந்தப் பெரியவர் ஒருநாவலின் முக்கியப் பாத்திரமாகவே எனக்குள் கற்பிதங் கொண்டிருக்கிறார். பெரியாரின் இயக்கத்தை இலக்கியத்துக்கும் கடத்துவதே எனது எழுத்தின் அடிப்படை என்று நினைக்கிறேன்.
ஆனால் இந்தப் பதிலில் எனக்குத் திருப்தியில்லை. அவரை ஒரு அரசியல் வாதியாகக் குறுக்கமுடியுமா? முடியாது. வில்லியம் பர்ரோஸ்க்கும் பெரியாரின் நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. பெரியார் வெளிநாடு சென்றிருந்தபோது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆலன் இன்ஸ்பெர்கின் நிர்வாணப் படம் நமக்குத் தெரியும். beat Writer5 என்று அழைக்கப்பட்ட-பின்னாளில் வறிப்பி இயக்கத்துக்கு முன்னோடியாகவும் உந்துசக்தியாகவும் இருந்த-வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரோவாக் போன்ற எழுத்தாளர்களின் கலக இயக்கத்தோடு பெரியாரின் வாழ்வும், எழுத்தும், பேச்சும் இணைத்துப் பார்க்கத்தக்கது. எழுத்தாளர்கள் தங்கள் தேசம், மதம், சாதி போன்றவற்றுக்கு விசுவாசிகளாக இருந்தவேளையில் பெரியார் ஒருவர்தான் தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்ற மூன்றையும் ஒருவர் துறக்கவேண்டும் 6T6itol Qait 6760TTif. how can a literary person possess anything? Sigy 65556i Gurful IIT60T g(5 literary phenomenon 676ig Glafits (56.6it.
இதற்கும் மேலாக , நீட்ஷேவுக்கும் பெரியாரின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் நீங்கள் கவனிக்கவேண்டும். இது விரிவான ஆய்வுக்குரியது என்பதால் பிறகு இதுபற்றிப் பேசுவேன்.
13. நீங்கள் கூறும் இலக்கிய அளவுகோல்களின் படி சுந்தரராமசாமியின் பள்ளம், கி. இராயநாராயணனின் கதவு போன்று இன்னும் பல கதைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது. நீங்கள் தமிழ் எழுத்தை வறட்சியாக பார்ப்பது ஏன்?
நீங்கள் இப்படி இரண்டு கதைகளைக் குறிப்பிட்டால் நான் என் பங்குக்கு இரண்டு கதைகளைக் குறிப்பிடுவேன். ஏற்கனவே சொன்ன எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப்பிள்ளை.லா.ச.ராவின் வேண்டப்படாதவன். இப்படியே ஒரு பட்டியல் போட்டால் கடந்த ஐம்பது ஆண்டுகளின் முக்கியமான கதைகள் என்று ஒரு முப்பது
6ed தை -2001
அம்மா - 13

தேறுமா? போனால் போகிறதென்று மெளனிக்கு ஒருகதை, புதுமைப்பித்தனுக்கு ஒரு கதை என்று கொடுத்தால் கூட முப்பது தேறுமா என்பது சந்தேகம் . சரி, ஒரு பேச்சுக்கு-முப்பது கதைகள் தேறுகின்றன என்று வைத்துக்கொண்டால்-இது ஒரு மொழிக்கு வெட்கக்கேடான விஷயம் இல்லையா?
நான் குறைந்தபட்சம் பதினைந்து உலகச் சிறுகதைகளையேனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கடல்கன்னி என்று ஒரு கதை. இதற்கு இணையான ஒரே ஒரு தமிழ்க் கதையை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.கொர்த்தஸாரின் சந்திப்பு என்று ஒரு கதை, ரத்த வேட்கை-என்று ஒரு 5adean கதை. மொழியில் பலவித சோதனைகளைச் செய்து பார்க்கும் ரொனால்ட் சுகேணிக்கின் ஒரு சிறு கதை மழை என்ற மேஜிகல் ரியலிசக் கதை,
தமிழில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இங்கே செயல்பட்டிருப்பது apolinian principle. Guit(B6it?individual as separate from the rest of reality. 61607(36), individual 256floid ul(6) போகிறார். (அதுகூட தமிழில் காத்திரமாக வெளிப்படவில்லை)இங்கே dionysian apirit) இல்லை. Chorus இல்லை. நாம் முழுமையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அதனால்joy இல்லை-pleasure of the text இல்லை-carnival இல்லை-immediacy இல்லை-Gorrow இல்லை-தமிழ் வாழ்வின் துக்கமும் சந்தோசமும் கொண்டாட்டமும் கோரஸாக மாறவில்லை.
இதுவே தமிழ் இலக்கியத்தின் குறைபாடு. தயிர்வடை Gensibility என்று சொன்னதற்கு விளக்கம் கேட்டவர்கள் இப்போது நான் சொல்வதை விளங்கிக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். எதிர்கொள்ளவேண்டும்.
14. தலித்தியம், பெண்ணியம்-இதை பிரதிநிதித்துவப் படுத்துவதுதான் இலக்கியத்தின் அடிப்படைத் தேவையாக இருக்கவேண்டுமா? இலக்கியத்துக்கு இலக்கியம் என்பதைத்தவிர வேறு எவ்வித முன் நிபந்தனைகளும் கிடையாது. ஆனால் தலித்துகள் பெண்கள் என்ற பகுதிகளிலிருந்து தமிழில் பதிவுகளே இல்லை. அதனால் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. apologia வை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் ஒரு தலித்-அதன7ல் முப்பது ரண்கள் எடுத்து விட்டால் அது செஞ்சரிஎன்று சொன்னால் அதைநான் ஒத்துக்கொள்ள மாட்டேன். விவியன் ரிச்சட்ஸ் தன்னுடைய ஒவ்வொரு 4-ஐயும் வெள்ளை இனவெறிக்கு எதிரான அடி என்று கூறினான்.
ஆனால் இங்கோ அச்சு பிச்சு என்று உளறி வைத்துவிட்டு தலித் இலக்கியம் என்கிறார்கள். இதற்கு உதாரணம் இமையம். அவர் எழுத்து எனக்கு 3anctum earctorum ஐயே நினைவுபடுத்துகிறது. புனிதப்பு/னிப்பு தாங்க முடியவில்லை. க்ரியா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தப் புனிதங்களை துாக்கிவிடுவதன் அரசியலும் இதனால்தான்.
வேறு சிலர் வெறும் கோபதாபங்களையும், ஏச்சுகளையும், வசைகளையும் எழுதி தலித் எழுத்து என்கிறார்கள். தான் ஒருதலித் என்பதனாலேயே தான் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்கிற அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.
இலக்கியம் என்பது மிகுந்த உழைப்பை வேண்டும் ஒரு கலை. நீட்ஷே போன்றவர்கள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படித்தார்கள் என்று அறிகிறோம். ஒருஇசைக்கருவியைப் பயின்று கொள்வதற்கே தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்யவேண்டியிருக்கிறது.
ー●- தை -2001
Sgoilor — 13

Page 21
ஒரே ஒரு நாள் பயிற்சி தவறினாலும் தொடர்ச்சி விட்டுப்போகிறது. அப்படியானால் எழுத்துக்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்?
ஒரு மாட்டை அறுத்துக் கூறு போடுவதற்கும், ஆழ் கடலில் மீன் வேட்டைக்கு சென்று வருவதற்கும் எவ்வளவு பெரிய பயிற்சி தேவைப்படுகிறது? அதுவேதான் எழுத்துக்கும்.
மேலும், தலித், பெண் என்றெல்லாம் இனிமேல் ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால்-ஒரு மேட்டுக்குடி பிராமணப் பெண்ணைவிட ஒரு தலித் ஆண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறான். ஒரு தலித் பெண்ணை விட ஒரு ஏழை பிராமணப்பெண் பாலியல்ரீதியாக அதிக ஒடுக்குமுறைக்கு ஆளாகிறாள். இவர்கள் எல்லோரையும் விட அலிகளின் நிலமை மிகவும் அவலமானது. இன்னும் நிறைய விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். சிறு குற்றவாளிகள்-நாடோடிகள்-செக்ஸ் தொழிலாளர்கள்-வுேறாமோ செக்சுவல்கள்-அனாதைகள்-குழந்தைத் தொழிலாளர்கள். பிச்சைக்காரர்கள்- என்று. இவர்கள் எழுதினால் அந்த எழுத்தையும் தலித்தியம் என்று சொல்லமுடியுமா? எந்த எழுத்துமே universalae ஆக மாறவேண்டும். mediOCrityக்கு இலக்கியத்தில் மன்னிப்பே கிடையாது.
15. எதார்த்தவாதம் பிரதிநிதித்துவம் செய்யும் போது மனிதன் அக/புறப் பிரச்சினைகளை பேசிய காலம் போக, சாதி-குலக்குறி நோக்கிச்செல்லும் போக்கு, தனித்த அடையாளக் கூட்டமைப்பு போன்றவைகளைப் பெருக்கும் நிலை ஆரோக்கியமானதா? இன்றைய நிலையில் பெரியாரையே நாம் திரும்ப வாசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. வெகுஜன அரசியல் போக்குகளின் செல்வாக்கையே தமிழ் எழுத்திலும் காணமுடிகிறது. வெகு ஜனத்தளத்தில் சாதிச் சங்கம் என்றால் இலக்கியத்தில் சாதிய இலக்கியம், சுய இரக்கம், மத்தியதர வர்க்க மதிப்பீடுகள், தாங்களே அதிகபட்சம் ஒடுக்கப்பட்டதான கற்பிதங்கள், ஜாதி அபிமானம்-போன்றவை இவ்வகை எழுத்துக்களின் அடையாளங்கள். இந்தவகையில் தமிழ் எழுத்து இன மையவாதத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது. தனது அடையாளத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த அடையாளத்தை transcerd செய்ய வேண்டும்.
வில்லியம் பர்ரோஸ்- அமெரிக்க ராணுவத்தின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக தன்னை/தனது உடலை தகுதியில்லாததாக ஆக்கிக் கொள்வதற்காக போதை ஊசிகளை தனது உடலில் ஏற்றிக் கொண்டான். அப்போது அவன் குறிப்பிட்டான்- நான் போட்டுக் கொள்ளும் ஒவ்வோரு(போதை) ஊசியும் அமெரிக்க ராணுவம் வியத்நாமில் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிரானது. அவனது naked lurch போன்ற நாவல்களும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைத் தாண்டிச் செல்லக்கூடியது. தமிழ் இலக்கியம் உலகத்தரமான எழுத்தை உருவாக்க முடியாததன் காரணம்-இந்த transcenderice இங்கே நடக்கவில்லை என்பது தான்.
O
{SSD தை -2001
அம்மா -13

9ILBLDIT -13
பொறிமுறைவரைதலிலிருந்து ஓவியத்துக்கு
மற்றக் கோடுகளின் தொனிகளைப் பற்றிய தனிப்பட்ட தொகுப்புக்குறிப்புக்கள் இவை.
சீதைக்கும் சஞ்சீவிக்கும் சில சில்லறைக்குமாய் கடலைத்தாண்டும் அனுமார்க்கான நெறிக்கையேட்டு வழிகாட்டியுமாம்.
கட்டித்த கோடுகளைக் கச்சிதமாய் வெட்டிக்கொண்ட வரைகலைஞர்க்கும் ஒழுக்கமை கோட்டுக்குள் ஓவியம் ஓடவிட்ட கன்டின்ஸ்கியுக்கும் கனச்சித்திரக்காரருக்கும் (புதிது) ஆன குறிப்புகள் அல்ல இவை.
வட்டத்தை வண்டிவளையமென்றும் அகல்விட்டத்தின்பேரிலும் வில்லமை நாண் துண்டத்தே தொக்கித்த துளிமுனையிலும் கண்டுகொள்கிறவர்க்கான கணினிக்குறிப்பிது.
முக்கோணச்சட்டப்பொருத்தெல்லாம் மேலுத்திரமுகடென்று,
H> H B (typ60)6ÖI LD(gpñl86, நேர்கோட்டு உத்திரவாதம் தக்கவைத்துக்கொண்டோர்கான பனைக்கறுப்பு E நுனித் திசைப்படிவு இக் கைக்கூற்று.
அடி, பாகை, ஆழத்து அளவுக்கப்பால், அடங்கா வளைகோட்டு மீறல்களை மீட்டிக்கொள்ள வேண்டியோர்க்காய் மிகுந்திருப்பவையும் இஇவற்றுள் அடக்கம்.
சிறைக்கோடுகளைச் சிரைத்துக்கொண்ட செல்கோலங்களின் செறிவிருப்பு.
மட்டங்களும் மானிகளும் தலை முட்டியுடைத்த மரணச் சித்திரக்குறிப்புகளும் இவற்றுட் சுருங்கும்.
பொறிமுறைவரைதலிலிருந்து ஓவியத்துக்கு.
கையேட்டுக்குறிப்புகளைச்
சொல்லாமற் போகின்றேன் சொல்லியும்கூடத்தான்.
"O O> ge6, 25
۔۔۔؟ "
தை -2001

Page 22
காலத்தின் தொலைந்த குழந்தை
வருங்காலத்தின் தொலைந்த குழந்தை நான். பேரரசர் பெருத்தவுந்திக்கும் அந்தப்புரநாயகியர் பந்து நெஞ்சுக்கும் மலைமாலைப்பொழுது மைதுனப் பின் விருந்தாய் உமிபடிந்த நெல்லுச்சோற்றை என் தோழர் அவித்திருந்த களப்பிரர்காலத்து இருட்களின் நிழற்பொழுகளில், இன்றைய காடுகளில் அலைந்த குழவி இது.
நான் நட்சத்திரத்திரங்களும் அண்டமும் தொலைத்த சிறுவன் எரிகுழம்பு பரவு விம்பங்களின் இடைப்படு பிடியிடைத்துடிக்கும் காலப்பூச்சி கடித்ததொரு தூக்கமிலி. செவ்விய ஆள்கூற்றுக் கேத்திரகணிதம் பிழைக்கும் நேரம் புதைத்தடித்த நாட்கனவு, என்றுமெனது. ஒரடர் இருட்துளை யுள்ளிழு துகள்தன் நேரம் தூண்டிய இயக்கம், என் மெல்லிய உடலின் கோண லெரும்புரு அசைவு. வெளியிற் தேங்கித் தங்கிய
குறையெரி மரக்குற்றி.
எண்ணிலா எந்தன் யாத்திரையிடையே, தொன்மை ஞானத்திற் கேங்கு மன்னரைக் கண்டேன் கூடவே கண்டேன், தத்துவப் பிறப்பையும் ஊர்வையும். ஊர்ந்தவை உருமாறி, உன்மத்த மதமாகி பேரொலி ஊளையிட்டுக் கொல்லவும் கண்டேன், மெய்ஞானமும் விஞ்ஞானம்தன் உயிரும், மேலும், பொல்லாக் காலத்தே, தானே வேரோடித்துளிர்த்திரு உள்ளத்துறுத்தலும். ஆயினும், நானோர் காலப்பயணி - பார்த்தலும் கேட்டலும் மட்டும்கூடு காலப்பயணி வருங்காலத்தே முடித்த இடத்தே முன்னே வினை புரிய அனுமதியிலா காலப்பயணி.
இன்றைக்கு, முன்னைய உடல் இன்றைப்போதுக்கிணங்க தள்ளப்பட்ட மனிதன். அந்தோ! இன்னமும் எனது எண்ணத்தே பயணித்து, வருங்காலம் தீர்க்கும் சமர்களைப் போரிட வெகுகாலத்தின் முன்னே தள்ளுற்ற சிறுகுஞ்சு. இ.தென் ஆசியா சாபமா?
நீயோ கூறுகின்றாய், நீ வாழ் பூமியிலே தொலைந்துற்ற ஆத்மா நானென்று. இணங்குகின்றேன் காலமென் காதுள்ளே நம்பகமாயோர் பேச்சுரைக்கும், <பேசாமல் என்னோடு கூட நட் விலகிச்செல் இந் நெருக்குவெளி -அண்டத்தின் கழிப்பறையே விலக்கப்பட்டதொரு
a
spilfilot -13 தை -2001

முப்பரிமாண மழையூறித் தோய் கடதாசிப்பெட்டிை
காலத்துக்கும் வெளிக்குமிடை நெய்யுற்ற மீன் வலையின் துளையிடையின் முடிவினிலே மீண்டும் சந்திக்கக்கூடும் இருவர் நாம் அல்லது, எம்மிருவர் விதிகளும் தோலுரித்துத் துகளாகிப் போகவும்கூடும் தொலை தொலைவாய்.
ஏற்றுக்கொள் இதை, என் அன்பே. எனது வெளி, நேரத்தின் நிறப்படு திரிகளாற் புரியப்பட்டது. டாலி தன் நினைவுகளின் நிலைப்பிலோ முக்கோண மணிநேரத்து முகத்திலோ கெளவி முடியத் தவித்துத் தோற்ற முயற்சி. நானொரு காலப்பயணி, கட்டிப்படு E=MC* கட்டியமைத்து, கணத்தையும் பல்கூறீட்டுக் கட்டு மாலைக்கருகற் பொதிகளின் தொடர்களிற் தொலைந்து போனவன். எனது வெளியை இங்கிருக்க ஒத்து, உடலை அவ்வெற்றிடத்தேயிட்டு, தொலையந மோனநிழல்நேரத்துப் பைகளுள்ளே சறுக்கி மறைவேன்
நான.
நானொரு தொலைந்த குழந்தை - மீட்சியுறா கவிச்சாபம் நிரம்புசிந்தை நேரங்கொள் பேதலித்த விஞ்ஞானிகள் போன்றோன் யான். நேரத்தே பறப்பேன் நரம்பு வலையிடைப் பசி பிறக்க, தின்னுவேன் என்றும் வளர்ந்திடும் ஒளியோலைக்கிற்று அவை நகர் கதிகளின் தொனி மறந்து நரிமூளை ஒலியலைகளுடன் வாள்வீசுவேன்
வேறொரு பால்வீதி புதை குளிர்ந்திடு சூரியனின் சுடு வறிலியம்குமிழிகளிடை எனைக் கேட்பாய், நீ. மோதித் தகர் மூர்க்கவால்வெள்ளியின் ஆடும் மூசு வாலில் பேச்சிற்கூட எனைக் காணலாம் நீ. செவிட்டுக் செவியினால் எனைக் காணலாம் இருட்டு விழியினால் எனைக் கேட்கலாம் வேண்டினால், ஒரு நகர்ப்பூங்காவில் மாலைப்பொழுதே கூடவும் நடக்கலாம் என்னுடனே. என்றோ செத்ததோ ருடுவின் மின்னு புள்ளி, இவ்வுலகிடை மெல்ல ஒளிருபொழுதெல்லாம், நாளையின் இந்த ஓய்வில்லா ஒல்லிக்குழந்தை, நேரத்திடை நடுங்கு பூமிப்பரப்பு வேண்டா ஒடும் அகதி, ஊசிப்பரவும் நாளைதன் சொற்றுளிகளை உதடு விரித்துரைப்பான்.
இந்தக் கணத்தே, என்னை ஆழமறியா நேரத்தே தொலையவிடு விழைந்தால், முடிந்தால், உந்தன் சமன்படா மூளைக்கலங்களின் இடுக்கிடை எனைப் பதமிடு. ஒரு போது, செங்குத்தாக உன் பாதையை மேற்கிருந்து கிழக்கே கடக்கலாம் நான்
(40 தை -2001
plubLDA - 18

Page 23
மேலுமொருமுறை வடக்கிருந்தும் மீண்டும், விண்ணிந்து மண்ணுக்கு இறுதித்தடவை எரியுடுவாய் மின்னலடிக்கவும் கூடும் நான். நேரத்திரவத்துத் தொட்டிச்சுழி அவிழ் புதிர்களில் சடுதியிற் மிதக்கும் பயணமே எனது.
நான் கடக்கலாம் அல்லது நான் இறக்கலாம் ஆயினும் இன்றைக்கு, உன்னிடை வெளியிருந்து நேரச்சட்டத்தே என் ஆத்மா துறந்திழியும். நானொரு காலத்தே கிறுக்கியலை நாடோடி, செங்கிரகத்து மண் தோய், ஒயா சொல்நட்சத்திரத்திரம் விசிறு கழைக்கூத்தாடி - Mon, 11 Sep 2000
மணற்றிடர் மாந்தருக்காய்."
இங்கே, படகுகளை இழந்துவிட்ட மணற்றிட்டு மனிதருக்காக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
*女**火
எதைப் பற்றியும் எவரும் அவரவர் ஆசைக்கேற்ப எழுதலாகாது, சுண்டெலியின் சுருங்கற் றலையைத் தவிர.
உன்னைப் பற்றி உன் அண்ணனும் என்னைப் பற்றி என் தம்பியும் மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும் மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம் வரிக்கவிதை என்றாலும், எலியைப் பற்றி இழுக்கலாம் எவரும் சிறிய வால்.
புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம் ஏனென்றால், இங்கே நாம் எல்லோரும் சாம்பற் பூனை.
கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம் நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம் எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம் ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.
கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம் வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்
62) தை -2001
sup, Libl Dr - 18

எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம் ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும் நாமெல்லாம் குறி நிமிர்த்திய தெருத்திமிர்கரும்பூனை.
紫*演**发
என்னை விடு எனக்கென்ன குறை? எழுதிக்கொண்டிருக்கின்றேனே எலியைப் பற்றியாவது, எவரையாவது பற்றியேதாவது என்னவரை, மண்ணவரை, எங்கேனும் ஆழிமணற்றிட்டில் திக்கற்றுத் தனி நின்றவரை, படகை, கடலை, மீனை, தமிழை, நிலத்தை, நெருப்பை, பனையை, முனியை, நினைவை, கனவை, சனியை, பனியை, சளியை, வளியை, வலியை, கலியை, இரவே கவிந்த இருளின் செறிவை, குனிந்த புருவத்தை, கொன்ற நற்காலத்தை, பனித்த சடையை, பாவக்கரங்களை, மதர்த்த கொங்கையை, மடிந்தவெம் பெண்டிரை, உடைத்த பொற்பாதத்தை, உடையா நம்பிக்கையை, முனித்த சேனையை, முடியாத் துயரத்தை, வனைத்த பானையை, கொடி வள்ளியை, மண் விளையா மலைக்குறமாதை, சினைத்த கர்ப்பத்தை, சிதிலித்த பிண்டத்தை, நரிப்படு மனிதரை, நாய்ப்படு நம்வாழ்க்கையை, தமிழ்ப்படு பெருந்தாயகத்தை, தவறிய எம் கட்குறிவிச்சை, குறைப்படு நோக்கினை, கொல்குற்றப் பெருஞ்சாட்டினை, எதைப்படவோ இருக்காமல் எழுதுவேன், எழுதுவேன் இங்கே எங்கோ என் உயிரிரந்த ஈரப்பூமியில், தங்காவோட்டங்காண், தமிழ் எழுத்தாணி இற்றல்வரை.
இதில் வயப்படா நண்ப, எம் திசை கிளைப்படு மிங்கே. புறப்படு நீ போ, போய் புக்குன் உடற்சிறைக்குள். மாது அணைப்பினுட் சேஞ் நம்மூழ் மறந்துறவாடு. சினைப்படப் பெருக்கு சிக்கிக்கொள் உன்னுள்ளே செய்சித்தம் வசித்திரு வுலகு தானே வழிப்படச் சிறக்குமென் றன்றோவுன்னிருப்பு?
நினைவிற் கடற்பரப்பில் வாழ்வேன் என் கைக்களைப்பினைக் காண்பேன். அந்தோ! மணற்றிடர் மாந்தர் மீண்டும் கடல் புறப்பட்டார் கண்டேன் யானே. செல் திசைக்குறிப்பறியா மூடர், மீண்டும் வலிந்து சென்றார் வடக்கினை வழியென் றெண்ணி. உன்னில் வடக்கிருந் திறந்தால் வாழ்வி
(43 தை -2001
SttbtDir — 18

Page 24
லெமக்கு வழி பிறக்குமோ, சொல் - கடல் மணற்றிட்டே?
★决 ★**女 இதிலேதென்றாலும், என்னையிங்கு விட்டுவிடு எனக்கென்ன குறை இனி?
படகுகளை இழந்துவிட்ட கடல் மணற்றிட்டு மாந்தருக்காய் கவி பாடிக்கொண்டிருப்பேன், ஒரு பனிப்பசுமைத்தேசத்து, குளிர்பதன அறையிருந்து. -/ 17 ஜூன், 2000
# &A group of Tamil refugees has been refused entry to India and handed over to the Sri
Lankan navy on a remote uninhabited island off india's Southern Coast.)
- BBC> Saturday> 17 June2 2000> 15:56 GMT 16:56 UK http://news.bbc.co.uk/hi/english/world/south asia/newsid_795000/795230.stm
இந்த மாநகருக்கு என் வாழ்க்கையின் முதல் வேலையை எடுத்துக்கொண்டு வந்தபோது, நான் மாணவப்பருவத்தின் பழக்கத்திலிருந்தும் கிறக்கத்திலிருந்தும் இன்னும் வெளிவராதவனாகவேதான் இருந்தேன். இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, நான் கல்யாணம் செய்துகொள்ள மூன்று வருடங்கள் இருந்தபோது. மாநகரத்தின் மத்தியிலே வேலையென்றாலும், புறநகரிலே வாழ்ந்துகொள்வதுமட்டும்தான் அமெரிக்காவிலே பாதுகாப்புக்குரியதும் கட்டுப்படியானதுமாகும் என்று ஏற்கனவே இங்கே வாழக்கற்றுக்கொண்ட சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். நானும் சூரியகுமாரும் இரண்டறை-ஒரு குடிலிலே, மாதச்சம்பளத்தின் காலிலும் சமையல்மணம் சட்டையிலும் என்று வாசம் செய்ய முடிந்தது. வாரநாட்கள் போதாமலும், மீதிநாட்கள் போகாமலும் இருக்கின்ற மிகுதுயர் வேறு அமெரிக்கப்பிரமச்சாரியத்துக்கு உண்டு. அதனால், வார இறுதிகளிலே, மாநகரத்துத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவிலே திரையிடப்படும் தமிழ்ப்படங்களைப் பார்க்கவும், சூரியகுமாருடன் கூடி மொட்டைத்தலைக்குஜராத்தி ஆலயத்துக்கும், அதன்பின்னர்- இரவிலே மாறுவேடத்திலே இயற்கைநடனங்கள் காண நகர்வலமும் போவதுண்டு. Dr. Jekyl and Mr Hyde என்பது போன்ற இரட்டைத்தினச்சீவியம் எமதான வாரஇறுதி.
ஆரம்ப காலத்தில் மொழிப்பற்று என்பதற்கான எனது வரைவிலக்கணத்தை அத்திவாரம் போட்டு, சுவரெழுப்பி நிறுத்திவைத்திருந்ததெல்லாம், எனது ஆறாம் வகுப்புத்தமிழறிவும் அந்தக்கால்த்து அரசியற்கூட்ட ஆவேச உரைகளுமே. அதனால், ஒரு சமயத்திலே, தமிழ்ப்படம் திரையிடுவதிலும்விட இன்னும் கொஞ்சம் முன்நோக்கிக் கால் வைத்து, அமெரிக்காவுக்கு -மகனிடமோ, "ಶ್ರೆ" வந்துபோகும் தமிழிலக்கியத்தின்
தை -2001


Page 25
ஆளில்லை. கதாநாயகி அழுகின்றபோது, உலகை ஓர் அரை வட்டம் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அடித்து வந்து, F1 இலேயிருந்து H-1B க்கும், H-1B இலே இருந்து பச்சைக்கும், பச்சையிலே இருந்து முழுப்பாதுக்காப்புக்கும் கவனம் வைக்கிற என்னைப்போன்ற ஏனைய இலட்சியவாதிகள் கலங்குகிறதைப் பார்த்துச் சிரிப்பது, ஒரு திருப்தியை எனக்குட் தருவதுண்டு. படம் முடிந்தபின்னர், வந்த வதனங்களினைத் தரிசிக்கும் கணங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறது மட்டும் மற்றோரோடு எனக்கும் பொது. திரும்பவரும்போது, சூரியகுமாருக்கும் எனக்கும் பேச எத்தனையோ விடயங்கள் பொதுவாக இருக்கின்றது தெரியவரும் எவ்வளவு புரிந்துணர்வு உள்ள நண்பர்கள் என்பதுவும்தான் பிறகு, அன்றைக்குச் சமையல் யார் என்பதிலே அது அப்படியே அழுங்கி முழுதாய் இனி முளைவிடாது என்பதுபோல் மறைந்தும்போகும்.
இப்படியாய் இயல்பாகிப்போன வாழ்க்கைச்சூழலிலே, ஏதோவொரு சேவல்-கோழி கேவற்படம் முடிந்தபின்னர், காரிலேறுமுன்னர் உந்தலிலே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த என்னிடம், சூரியகுமார் சாந்தகலாவைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகம் செய்தபோது, அவசரவசரமாக புகையை இடக்காற்சப்பாதின் கீழே புதைத்தேன். வணக்கம் சொன்னேன். கையைக் கூப்பி பெண்களுக்கு வணக்கம் சொல்ல சொந்தநாட்டைவிட்டு நகர்ந்தபின்னரே கற்றுக்கொண்டேன். இதைப்போலவேதான், எனது பண்பாட்டின் பக்கவிளைவுகள் பலதினையும் நாட்டுக்கு வெளியேதான் நான் மிதந்துதிரியக் கண்டு, கெளவிப்பிடித்து கைக்கொண்டேன் என்பதையும் வெட்கத்தினை விட்டு ஒத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்கநண்பர்கள் எனது பண்பாட்டின் தொன்மையினைப் பற்றிக் கேட்டகேள்விகளுக்கு, ஒரு வரிக்கேள்விக்கு ஒன்பது நிமிடங்கள் என்ற ரீதியிலே விபரமாகப் பதில் சொல்லிவிட்டு விபரம் தெரிந்தவனாக வெளியே வந்து, வேறு யாரிடமிருந்தாவது அவற்றிற்கான விடையினைக் கற்றுக்கொண்ட காலமும் அநேகம்.
கலாவுக்குத் தமிழ்பேசவராது - சூரியகுமார்.
எனது ஒரு தென்னாசியனின் பெண்ணின் மீதான மதிப்பினை, பண்பாட்டின் ஒற்றைக்குறியீட்டுடாக, கையைப் பொத்திக்குவித்துக் காட்டமுடியாது போனது கவலைதான்.
'வுறலோ.
கையைக் கொடுத்தேன். இறுகப் பற்றி உறுதியாக, அதே நேரத்த்திலே தன் மென்மைகிழ் வழுவாது குலுக்கினாள். நான்தான் எனது ஆளுமையைச் சரியாக வெளிப்படுத்தாது, தொய்வுடன் உள்ளங்கையிலே இரத்தோட்டத்தைக் குறைத்துவிட்டேன் என்று தோன்றியது.
ஆங்கிலத்திலே பேச வராது. ஆனால், பிறர் பேசுவது புரியும் என்றாள் பிறர் பேசுவது சரி நான்? மொத்தமாக, எனக்கே நான், என்ன சொல்கின்றேன் என்று புரிய இரண்டு நாளெடுக்கும் ஏன் சொன்னேன் என்று புரிய இன்னும் இரண்டு நாளெடுக்கும்.
அதிசயம் பேசுவதா பெரியவிடயம்! அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்தும், சொந்தமொழியைப் புரிந்து கொள்கின்றீர்கள் என்பதே மிகவும் ஆச்சரியத்தினையும் ஆனந்தத்தையும் தருகின்றது. இத்தனைவருட இந்நாட்டு வாழ்க்கையிலே இப்படியான ஒரு பெண்ணைக்காண்பது இதுதான் முதற்றடவை. அழகான பெண்ணைக்கண்டதால், உள்ளபடி உண்மை வந்ததா, இல்லை உளறிக் கொட்டினேனா என்று எனக்குப் பிடிபடவில்லை. நான் முன்னமே சொல்லவில்லையா, நான் என்ன பேசுகின்றேன் என்று எனக்கே புரியவில்லை என்று?
6-so தை -2001
spitbudir - 13

நன்றி என் அப்பா பேசுவது போலவே பேசுகின்றீர்கள். (வெட்கித்தும் பெருமித்தும்) சிரித்தாள். அவள் அப்பாவின் ஆங்கிலம் இத்தனை அகோரமாக இருக்கிறதை எண்ணிக் கவலைப்படமட்டுமே முடிந்தது. என்ன மனிதர் இவர்! இத்தனை நாள் இருந்தவர் கொஞ்சம் திருத்தம் முயற்சித்திருக்கலாம்.
வீட்டிலே ஒரு பண்பாடும் வெளியிலே ஒரு பண்பாடும் என்று கலந்து பொருந்)த, மிதமாய் காவியங்களிற் கதைபுனையப்பட்ட அன்னப்பட்சி தண்ணிரைத் தவிர்த்து தனக்கு வேண்டியதைமட்டும் தனித்தெடுத்து உண்டதுபோல வளர்ந்துகொண்ட பெண்களின் நடை உடைபாவனைகள் எனக்குப் பிடித்த பிரமச்சாரிய காலம் அது.
அண்மையிலே உள்ள பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருப்பதாகத் தெரிந்தது. பெற்றோர் வசிப்பது கிழக்கமெரிக்காவின் கீழ்க்கரை. பனியைப் பற்றிக் குறை சொன்னாளா, உயர்த்திச்சொன்னாளா என்பது எனக்குப் புரியவில்ல்ை எனக்குப் பணியைப் போலவே, அவளுக்குப் பணி புதிதானதால் பிடித்தும் இருக்கிறது, பழகாததால் பிடியாமலும் இருக்கிறது என்று தோன்றியது. என்ன செய்வது? என்னை வைத்தே எவரையும் எடைபோட்டுப் பழகிவிட்டது.
சூரியகுமார் ஆங்கிலத்திலே, கலா நல்ல கர்நாடக சங்கீதக்காரி பிரபல்ய சங்கிதவிற்பனர்கள் அமெரிக்கா வரும்போது, சிலவேளை பின்னால் இருந்து தம்பூரா மீட்டும் சந்தர்ப்பங்களைக்கூடப் பெற்றவளாக்கும். பாடினால், பறக்கின்ற குயில் தோற்கும் என்றான். எருமைத்தலையன்! பிறபறவைகளின் கூடுகளுக்குள்ளே திருட்டுத்தனமாக முட்டைபோட்டும் சோம்பேறிக் குயிலோடு இப்படிப்பட்ட இளம்பெண்ணையா எவரும் ஒப்பிடுவார்கள்? கல்யாணாமாகாமல், பருவக்கோளாற்றிலே பிள்ளையைப் பெற்றுவிட்டு, அனாதை ஆச்சிரமங்களுக்கு முன்னால், ஏணை தொட்டிலே விட்டுச்செல்லும் எவளையாவது அல்லவா ஒப்புவமை சொல்லவேண்டும்! இந்த மடையனின் முளை!
நான் பாடக்கேட்டுவிடுவேனோ என்று பயந்தோ என்னவோ, அப்படியெல்லாமில்ல்ை ஆனால், முழுமையாகச் சங்கிதம் கற்றிருக்கின்றேன் என்பது மட்டுமுண்ம்ை அப்பா, எங்கள் தமிழ்ச் சங்க்த் தலைவர். அதனால், சிலவேளை சங்கீதவிற்பனர்களின் தம்பூராக்காரர்களுக்கு இயலாதவிடத்து, நான் தம்பூரா மீட்டுவதுண்டு. உண்மையான பெண் சுத்தி வளைத்து சுத்தப்பொய்யை சேற்றுச்சுவற்றுக்கு வெள்ளை வர்ணம் திட்டுவதுபோல சிதப்பாமல், இவ்வளவுதான் நான் இதுக்குமேலுமில்லை ஏதும் கீழுமில்லை ஏதும் என்று சொல்கின்றது இன்னொருவரைக் குறிப்பாக, சங்கீதம் முறைப்படி கற்றுக்கொள்ளாத, குரல்வளம், கலைநயம் கட்டித்தோயக் கற்றுக்கொண்டோரெல்லாம் பாக்யவான்கள் என்றெண்ணிக்கொள்ளும் பிரமச்சாரிய இளைஞர்களை கவரக்கூடிய பண்பு.
அவளது பெற்றோரின்மீதான என் மதிப்பு அதிகரித்தது. ஒருவருடவேலைக்குள்ளே கிடைக்கும் ஒய்வுநேரத்திலேயே, ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுக்கும் Homerun பற்றி புள்ளிவிபரம் சேர்க்கும் மனிதனாக மாறிப்போன நானெங்கே, முப்பதுவருடங்களாக, அதற்குமுன்னே இருபத்தைந்து வருடங்கள் பழகியிருந்த உலகத்தைப் பேணிவைத்திருக்கும் இந்த மனிதர்களெங்கே? தன் மொழியே பேசவராதபோதும், தம்மிசையைப் பொத்திப் போற்றிக் கற்றுக்கொடுத்த அவர்களை, அறியாதபோதும் உள்ளாரப்பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
சூரியகுமார் அவளை விடுவதாயில்ல்ை நீங்கள் நல்ல கர்நாடக சங்கீதத் துண்டுகள்
-2, ZO- தை -2001
JNLb4 DT - 13

Page 26
இரண்டு பாடித்தான் ஆகவேண்டும், கலர் இல்லாவிட்டால், நாங்கள் உங்களை இங்கிருந்து போகவிடமாட்டோம் . அங்கிருந்து அவள் கொஞ்சம் தரித்துப் போவதிலே எனக்கு சம்மதந்தான் ஆனால், என்ன இருந்தாலும், நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் அறியவந்த ஒரு பெண்ணைப் போகவிடமாட்டேன் என்று சொல்லக்கூடிய துணிவும் தொந்தரவுத்தன்மையும் உள்ள ஆளில்ல்ை என் சொந்த வாக்குக்கும் சேர்த்து அவன் தனது புள்ளடியை அவள் காதிலே போட்டு முகத்திலே வழிந்த மையைத் துடைத்துக் கொண்டான்.
கடவுளே இதுவென்ன கடம் என்றோ, அல்லது இதற்குத்தான் காத்திருந்தேன் என்றோ, ஒரு சிறு செருமலுடன் (இந்தக்குறித்த கணத்திலே, இவளின் இயற்கையொத்த ஓரிணை ஏகாரச்செருமலுக்கு முன்னால், என்ன இன்பத்தைச் சங்கீதம் விளைவிக்கும் என்று நான் எண்ணியதேதோ உண்மைதான்), பாடத்தொடங்கினாள்.
அவளின் எத்துணை குரலினிமையானது என்பது அதற்குப்பின்னும் இன்னும் எத்தனையோ மேலதிகாரிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஏச்சுகளுக்கும் கீழே இன்னமும் 66 செவிப்பறையிலே ஒட்டியிருந்து, அவ்வப்போது கீச்சுக்கீச்சுமுட்டுவதுண்டாதலால், சொல்லிலே உணர்த்தமுடியாதது. ஆனால், அவளின் பாடலின் அர்த்தம் பாடல் மொழி காரணமாகப் புரியவில்லை.
பாடிமுடிந்தபின்னர், மிகவும் அற்புதமான குரல்வளம் என்றேன். பிறகு ஒர் ஐந்து நிமிடங்கள் சூரியகுமாரின் புகழாரத்துக்கு ஒதுக்கியபின்னர், இப்போது பாடியது, சூரியகுமாருக்காக் இனி, எனக்காக இன்னொரு பாடல் பாடமுடியுமா என்று குரலிலே வேண்டுதலும் விழைவும் தொனிக்கக் கேட்டேன். எனக்கு சிலர் மறுக்கமுடியாமல், கனிவாகக் கேள்வியைப் போடும் சித்துவித்தைக்ள் சில சமயம் கைவருவதுண்டு,
இந்தத்தடவை அறிந்தமொழியினூடேயும் அவளின் குரல்முடிச்சு அதிர்வுகளின் மீட்டலைக் கேட்க, செவிச்சுவை திகட்டும் உச்சத்தை முட்டித்தட்டித்த்ள்ளும் என்றெண்ணிக்கொண்டது எனது அடிப்படை அளவுகோல். திரும்பவும் எனக்குக் கருத்துப்புரியாமே பாடவேண்டும் என்பதுபோல அவளின் குரல்நடவடிக்கை. கொஞ்சம் உள்ளம் சுருங்கிப்போனேன் ஆனால், காட்டிக்கொள்;ம் உரிமை எனக்கு இல்ல்ை தானம் கொடுக்கும் மாட்டிலே பல்லைப் பிடித்து, அவதானம் இல்லாத முடன்தான் எண்ணிப்பார்ப்பான்.
ஆனால், பாடல் முடிந்ததும், பாராட்டுக்குப் பின்னால், கேட்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால், அவளின் உள்ளம் சிறிதும் சுரண்டுப்பட்டுக்கொள்ளாமற் கேட்கவேண்டும். மகாகவி பாரதி அழகுவாய்ந்தது என்று பாராட்டியது இந்த மொழி, எனது சுளுவான பேச்சுக்கு என்னையே நான் பாராட்டிக்கொண்டேன். பாரதி? அது ஒரு பெண்ணின் பெயரல்லவா? இல்லை எனது குழியைத்தான் நான் வெட்டியிருக்கிறேன் நேரடியாகவே கேள்வியைக் கேட்டிருக்கலாம். இதற்குள் சூரியகுமார், பாரதியைப் பற்றி விபரமாக, எட்டையபுரம் தொடக்கம், யானை மிதித்தது வரை ஒரு சின்ன உரை நிகழ்த்தினான். ஆர்வமாகக் கேட்டாள் அவனின் உற்சாகவேற்றலுடன், நான் எனது கேள்வியை நேரடியாகவே போட்டேன். இந்தப்பாடலின் கருத்து உங்களுக்குப் புரிகின்றதா?
அவளின் நாவுக்குப் பதிலாக முகமும் முழுத்தலையுமே பதிலைச் சொன்னது. பிறகு சொன்னாள், இந்த இருபாடல்களும் சங்க விழாக்களிலே, பாடகர்களிடம் மிகவும்
a
pitibiot -13 தை -2001

வேண்டிக் கேட்கப்படுகின்றவை. அதனால், அவற்றினைக் கருத்தறியாதபோதும் பாடிய பெருமிதம் அவளிடம் தெரிந்தது. தமிழ்ப்பாடல் ஒன்று பாடிக்காட்டவேண்டும் உங்கள் தமிழ்உச்சரிப்பு எப்படி இருக்கின்றதென்று பார்ப்பதற்கு என்று நகைச்சுவையாகப் பேசுகின்றேனாம் என்ற தோரணையிலே எனது அடுத்த வேண்டுகோள்.
பாட எனக்கும் விருப்பம்தான் ஆனால், அதற்கான முறையான பயிற்சியில்லையே? கல்கியும் அண்ணாமலைச் செட்டியாரும் செத்தே எத்தனை வருடங்கள் ஆகின்றன? என்ன பெற்றோர். இந்தளவு அறியாதமொழியிலே பாடச்சொல்லிக்கொடுக்கும் ஆர்வத்தோடு இருக்கின்றவர்கள், இப்படியா, ஒரு தமிழ்ப்பாட்டு, குறைந்தபட்சம் ஒரு கும்மியோ கீதமோ சொல்லிக்கொடுக்கக் குருவிடம் கேட்காமல் இருப்பார்கள்?
அவளோடு வந்த சக மாணவர்கள் திரும்பிப்போவதற்காகத் தேடிக்கொண்டுவர, அவள் அதற்கிரு வாரங்கள் பின்னால் வரும் திரைப்படத்தின்போது சந்திப்பதாகச் சொல்லிப் போனாள்.
நான் காரோட்ட, சூரியகுமார் பக்கத்திலே இருந்து சள சள வென்று அவளைப்பற்றி ஆதிதொட்டு அருகிலே இருந்தன்போல, அந்நியோனியமாகப் பேசிக்கொண்டு வந்தான். எனது எரிச்சலினைக் காட்டிக்கொள்ளவில்ல்ை காரோட்டிகள் உளநிலையளவிலே நிதானமாக இருத்தல் அவசியம் என்று திரும்பத் திரும்ப எனக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டேன்.
அவளது பெற்றோர்கள் எவ்வளவு அக்கறையாக எங்களது பண்பாட்டினை மறக்காமல் அவளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா? - என்றான்.
அடக்கமுடியாமல், மொழிக்கும் பண்பாட்டுக்கும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் உள்ள நெருக்கம்போலும் பண்பாட்டை மட்டும் எவரும் எங்கே போனாலும் தம் பிள்லைகளுக்குப் படிப்பித்துப் பட்டம்விடவைக்க மறக்கிறதில்லை' - எரிந்துவிழுந்தேன்.
இன்னமும் அவளின் குரலிலே மிதந்துகொண்டிருந்தான் போலும். நான் சொன்னது, காதிலே ஏறாமல், என்ன? என்று அசிரத்தையாகக் கேட்டான்.
அவனுக்குப் பதில் சொல்லாமல், எனக்கு நானே. பார்த்துக்கொள் இதுதான் பொன்னகரம் என்று பற்றிக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, சிவப்பு விளக்குக்கும் நிறுத்தாமல், ஆள்நடமாட்டமில்லாத வீதியைக் கடந்ததையும்கூட அவன் கண்டுகொள்ளவில்லை.
'00 ஒக்டோபர், 06 -சித்தார்த்தசேகுவேரா
அம்மா - 13

Page 27
எல்லோருடைய நன்மைக்காகவும் - ஒரு நனவிடைதோய்தலை துலைத்தேனும் எஸ். பொ. வை ஏறக்கட்டவேண்டியிருப்பது எல்லா குஞ்சு குருமன்களினதும் இன்றைய கடமையாயிருக்கிறது.
சும்மா எஸ்.பொ. வைதுரசுதட்டிவிட்டுப்போக முடியாது என்று எங்களுக்குநல்லாத் தெரியும். அம்மட்டோ, இம்மட்டோ அன்னாரின் புகழ்வெள்ளம் என்பதுவும் தெரியும். ஆண்மையைப்படிச்சு அழுஅழு என்று அழுதகண் இன்னும் ஆறவில்லை. & புத்திர சோகத்துக்கும் மேலான ஒரு சோகம் கிடையாது) (அசோகன் இல்லை இது எஸ்.பொ.) என் செய்வோம் சிவரமணிக்கு, செல்விக்கு மற்றும் மரணித்த தோழர் தோழிகளுக்கு "பெண்மை' எழுதி 'ஆண்மை' எழுதி எம்மை அழவைக்க வைராக்கியமும், திமிரும், அறிவதிகாரமும், எழுத்து ஊழியமும் உள்ள அப்பன், ஆத்தை இல்லாதது ஒரு பெரிய வெக்கக்கேடு.
அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த புண்ணாக்கு நற்போக்கு நல்லதிமிரோடு மார்தட்டி நிற்கிறது. 'திருந்தமாட்டன்' மாறமாட்டன் ' என்ற பிடிவாதத்தோடு பிற்போக்கில் பிடிவாதமாய் நிற்கிறது. இருட்டடிப்பு இருட்டடிப்பு என்று ஒப்பாளியிட்டுத் தன்னை தலையில் காவவில்லை என்று முற்போக்குதலைகளை உருட்டும் எஸ்.பொ. தான் இல்லை என்றால் டானியலும் இல்லை, ஜீவாவும் இல்லை என்று பச்சைப்பொய் சொல்லி இறுமாப்புறும் எஸ்.பொ. நித்தியானந்தன் முன்மொழிய வழிமொழிந்து தான் பரதேசங்களோடு படுத்தெழும்பி பரதேசங்களுக்காய் எழுதுவதாகக்கூறும் எஸ்.பொ. ஞானம் ஆத்மீக வெளிச்சம் என்று ஆயிரத்தெட்டு பெரிய விசயங்களின் பெயரில் இன்றைக்கு படங்காட்டும் பாரம்பரியத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
அவர் வைரமுத்துக்களோடும், சுஜாத்தாக்களோடும் கண்ணாம்பூச்சி விளையாடுவது பற்றி எமக்கு ஒரு அக்கறையுமில்லை. விரல் சூப்பிய காலத்தில் நாம் வைரமுத்துவை காதலித்திருக்கலாம். ஆனால் இன்று அவை பொருட்டல்ல. ஆனால் அதுகளை இதுதான் தமிழ்நாடு என்று காவிக்கொண்டுவந்து எமக்கு தமிழ்நாடு காட்டவேண்டாம். நாமொன்றும் செவ்வாய் கிரகத்தில் இல்லை. உடனடியாக யமுனா ராஜேந்திரன் மறுப்புத்தெரிவித்ததற்கும் எந்ததவித பலனுமில்லை. சும்மா புலம்பெயர் இலக்கியம் என்று புலம்பிக்காட்டவும் வேண்டாம். எஸ். பொ.வுக்கு புலம்பெயர் இலக்கியம் என்றால் என்னவென்று ஏதாவது தெரியுமா என்று நியாயமாகக் கேட்கிறேன். பெறாமகன் கலாமோகனைத் தவிர வேறு எந்த படைப்புக்கள் பற்றியாவது படைப்பாளிகள் பற்றியாவது எங்காவது எழுதியிருக்கிறாரா எஸ்.பொ.? புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லாடலே ஒரு பிதற்றல் என்று உருவாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வைரமுத்துவைக் காவிக்கொண்டுவந்து 'நாங்கள் யூதர்கள் மாதிரி" என்று வெக்கமில்லாமல் நெஞ்சுநிமித்திக்கூறுகிறார். இங்கிலாந்து வாழ் யூதர்களே தங்களை யூதர்கள் என்று கூற கூச்சப்படும் காலம் இது. பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்று ஒரு மயிரும் தெரியாது. அவர்களுக்கு முஸ்லீம்களை ஒடுக்க ஒரு யூதக்காரணம் கிடைத்துள்ளது. கூட்டத்தில் ஒரு முஸ்லீம் நண்பர் நியாயமாக கேட்கமுனைந்தகேள்வி முடக்கப்பட்டது. ஆத்திர அலைகள் எழுந்து பொசுக்கியது. இந்தமாதிரியான ஒரு பொறுக்கித்தேசியவாதத்தை பொறுத்துக் கொள்ளவேண்டி ய அவசியம் யாருக்கேனும் இருப்பின் அதன் அடிப்படை இரகசியம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். கண்டபாட்டுக்கு கருத்துவிட்டு, புத்தகம் விக்க இங்குவந்து எங்கள் வேதனைகளைக் கிளறவேண்டாம். பாசிசத்தில் குளிர் காய்ந்தவர்கள் வரிசையில் எஸ்.பொ.வை. வைத்து எதிர்காலம் பூசித்துத்தள்ளும். உங்களால் முடிந்தளவுக்கு ஒன்றோ, பத்தோ எழுதி எல்லோரும் எஸ்.பொ.வுக்கு தர்ம அடி வழங்கும்படி மிகவும் தயவாகக்கேட்டுக்கொள்கிறேன்.
Mubas - 18 தை -2001
 
 
 
 

'விலங்கிலிருந்து நீமனிதவிலங்கானது
காணும் இனி நீ மனிதவிலங்கிலிருந்து
மனிதனாகும் தருணம் வந்துவிட்டது
- நீட்சே
அவர்மையில் சமர் இதழில் தமிழரசன் நீட்ஷேயையையும் கைடேக்கரையும் பற்றி எழுதியிருந்தார். கடந்த பதினைந்து பதின்னாலு வருடங்களாக கைடேக்கரின் நாசித்தொடர்புபற்றி ஏராளமான கட்டுரைகள் புத்தகங்கள் வெளிவந்துள்ளது. இது ஒண்டும் புதிய கண்டுபிடிப்பல்ல. தீடிரென தமிழரசனுக்கு ஏன் ஞானம் பிறந்தது என்பது புதிராக இருக்கிறது. அதைவிட புதிரான விடயமாக இதுவரை காலமும் இல்லாதபடிக்கு ஸ்ராலினிசமும் ஸ்ரொக்சிசமும் ஒன்றாக சேர்ந்தவிடயம் எம்மை குலுக்கிவிட்டது. கொலைகளின் கணக்குவழக்குப்பார்த்தால் ஸ்ராலின் கொன்ற மேதைகளினதும் பொதுமக்களினதும் தொகை எங்குபோய் முட்டும் என்பது தமிழரசனுக்குத் தெரியும். ஸ்டாலின் நிண்டுதான் பீ விடோனும் என்று எழுதியிருந்தால் நிண்டு பீவிடாத ஆக்கள் தண்டிக்கப்படவேணும் என்று எழுதக்கூடிய ஆள்றயாகரன் என்றும் தமிழரசனுக்கு நல்லாத் தெரியும். கனக்கத் தெரிஞ்ச தமிழரசன் பி.நவீனத்துவத்தை புறங்கொள்ள ஸ்ராலினிசத்தோடு கூட்டுச்சேர்ந்திருப்பதை வரலாற்றுக்கட்டத்தில் வைத்து நாம் ஆய்வுசெய்து அதன் வர்க்க, சாதிய, பால் சார்புகளை உன்னித்து பாட்டாளிவர்க்கத்து புரட்சியின்போது சரியானபடி கவனித்துக்கொள்ள ஆயத்தம் கொண்டபோது(1) அடுத்த சமர் வந்து(1) ரொட்ஸ்கி பின்நவீனத்துவவாதி என்றும் பெயர்குறிப்பிடாது அவர் இவர் அவன் என்று தமிழரசனுக்கு அடியும் ஒடுகாலிப்பட்டங்களும் தாங்கிவந்த சமர் மீண்டும் வேதாளமாக முருங்கைமரமேறியது.
நீட்சேயை மொழிபெயர்த்தவர்கள் நுணுக்கமாக ஆய்வுசெய்தவர்கள் எல்லோருமே வரலாற்றில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒருவனாக நீட்ஷேயைக் கண்டு அழுதுதள்ளியிருக்கிறார்கள். தமிழரசன் நாசிகள் மட்டுமே அவரைச் சரியாக விளங்கிக்கொண்டு விட்டதாக நம்புகிறார். நாசிகள் எதைத்தான் மாத்தி எழுதவில்லை?"V பொம் கண்டுபிடித்த விஞ்ஞானியும் ஒரு நாசிதான். இன்னொரு விஞ்ஞானிகள் கூட்டம் ஆர்கியோலொஜியையே மாத்தி எழுதியது. ஒலிம்பிக் விளக்கை இன்று உலகின் மொத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டு காவித்திரிவதை கண்டு குளிர்கின்றோம்? அதுவும் நாசி ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான். எல்லாக் குழந்தைகளும் பார்த்துப்பூரிக்கும் டிஸ்னி காட்டுன்பாணியின் தாய் தகப்பன்களும் நாசிகள்தான். நாசி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துத் தள்ளிக்கொண்டிருந்த பலவிசயங்களை உலகு கஸ்டப்பட்டு உளவுசெய்து கண்டுபிடித்துத் தான் தப்பித்துக்கொண்டது. ஸ்டாலின்மாதிரிசும்மா கண்ணைமுடிக்கொண்டு சுட்டுத்தள்ளாமல் நாசிகள் எத்தனையோ யூதமுளைகளை சுரண்டித்தள்ளியிருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்தேசிய நாசம் கிளம்பியிருக்கிற இனவாதவெளிச்சத்தில் தமிழரசன் 'சுயநிர்ணய உரிமை' என்று முற்போக்கு பேசுபவர்களுடன் சேர்ந்துகொண்டு மேற்கண்ட நாசிகளை விமர்சிப்பதில் அர்த்தமில்லை.
நாசிகள் கூட்டத்துக்குள் கைடேக்கரை வைத்துக்கதைத்து வருசம் பதினைந்துக்கு
es) தை -2001
It is of -13

Page 28
மேலாகிறது. கைடேக்கர் நீட்சே பற்றி வழங்கிய முக்கிய விரிவுரைகள் போருக்குப் பிந்தியவை, போருக்கு முந்திய கைடேக்கர் Hussert ன் Phenomenology யால் கவரப்பட்டவர். போருக்கு முதல் National Soscialismத்துக்கு முன்புகைடேக்கர் எழுதிய Being and Time புத்தகத்தை அவர் Hussent லுக்கு அர்ப்பணித்துள்ளார். Hussert ன் பிறந்தநாளின்போது அவருக்கு அப்புத்தகத்தை வழங்கினார் கைடேக்கர்.
19096ib Alubert Luduic Uni u576ü Pritshood ulutqdöa5ğ5Qg5/TLIßuaé9u u 60ba5(3Lldödg5ñr 1919 6ö95IT6ör 9igbig (pigsabiliq60TTit. Tisis so Sociology of Jesus Luggisgb6 it solds(3Ldisabi. Tississio
Theological Leminary யில் பலவருடம் கல்விபயின்றவர் ஸ்ராலின். ஸ்ராலின்
மதப்பள்ளிக்கூடத்திலிருந்து தானாக விலத்தவில்லை. பரீட்சைகள் பாஸ்பண்ண முடியாத
மொக்குக்கட்டை என்று நிறுத்தப்பட்டவர்.
1925ல் Phylosophy chairற்கு கைடேக்கரை தெரிவுசெய்யும் கோரிக்கை மறுக்கப்பட்டது கைடேக்கர் வாழ்வின் ஒரு முக்கிய கட்டம். Lack of Literary Work என்று காரணம் சொல்லப்பட்டது. அடுத்தவருடம் Being and Time எழுதி வெளியிட்டார் கைடேக்கர். பல்கலைக்கழகத்தினதும் புத்திஜீவிகளினதும் கவனத்தை இழுக்கவும் ஒரு புதிய ஆய்வை செய்யும் நோக்கத்தோடும் எழுதப்பட்ட Being and Time கைடேக்கரின் நாசிசம் பற்றிய முடியாத விவாதத்துள் விடுவது சரியாகப்படவில்லை. கைடேக்கர் நாசிகளுக்காகவோ பாதிரிகளுக்காகவோ அப்புத்தகத்தை எழுதியதாக யாரும் கருதமுடியாது.
கைடேக்கரும் நாசியமும் பற்றி ஏராளமாக ஏற்கனவே வந்த புத்தகங்கள் வரிசையில் கடந்தமாதமும் கூட இரண்டு புதிய புத்தகங்கள் சேர்ந்துள்ளன. பல பழையபுத்தகங்கள் மீள் பதிப்புச்செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஸ்ராலின் கிட்லருடன் கொண்டிருந்த தொடர்பு இன்றுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டே வந்துள்ளது. அதுபற்றி எத்தனை கட்டுரைகள் எடுதப்பட்டுள்ளன? உடைந்துபோன சோவியத் யூனியனுக்கு பிறகு அண்மையில் வெளியடப்பட்டுள்ள சோவியத்தின் பழைய ஆவணங்கள் தற்போது எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சோவியத் ஆய்வாளர் ஒருவர் தற்போது ஸ்ராலினுக்கும் கிட்லருக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் பற்றிய ஆவணங்களை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் உரையை நேரில் கேட்டதன்படி ஸ்ராலினிசத்துக்கு இன்னும் இன்னும் புனிதவரலாறு சேர்ந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்திச்சொல்லமுடியும்.
எல்லோரும் சேர்ந்து படிப்பம் என்று அ. மார்க்ஸ் கேட்பதில் என்ன தவறு? நீட்சே என்பரை ஒருத்தரும் தொடேலாது என்று யாராவது சொல்கிறார்களா? ஏற்கனவே, அ. மார்க்ஸ் கைடேக் கருக்கும் நாசிகளுக்குமான தொடர்புகளை விமர்சனக் கண்கொண்டு எழுதியிருப்பது தெரியாது மார்சுக்கு அடிச்ச சந்தோசத்தில் முந்திக்கொள்கிறார் தமிழரசன். கழிசடை சாருநிவேதிதாவைக்கொணர்ந்து என்னோடு ஒப்பிடுகிறாயா என்று சிறுகிறார் றயா.
நாசிசத்தை தலையில் காவிக்கொண்டு எல்லா ஜேர்மன் பிரஜைகளும் பிறக்கவில்லை. கிடலர் எப்படி சாதாரண ஜேர்மன் மக்களை தொழிலாளர்களை - விவசாயிகளை நாசிசத்துக்கு இழுத்தெடுத்தான், அங்கிருந்த மார்க்சிசக் கட்சிகள் எப்படிக் காட்டிக்குடுப்புச்செய்தன? என்ற வரலாறு தமிழரசனுக்குத்தெரியும். வலம் இடம் என்று பச்சதாபம் பார்க்காமல் களவெடுத்திருக்கிறான் கிட்லர் என்றும் தெரிந்திருக்கும். பிபிசி கைடேக்களின் நாசிசம் பற்றி ஒலிபரப்புச்செய்யதது தவிர்க்கமுடியாததுதான். Chanel 4
-(52) தை -2001
JpubLDH - 13

நாசி எப்படி சமத்துவஆசை காட்டி பொதுமக்களை இழுத்தது என்பது பற்றி ஒளிபரப்புச்செய்ததும் தவிர்க்கமுடியாததாகவே இருந்துவிட்டது. இன்றைக்கு ஸ்ராலினும் அதற்கு ஒத்துதியுள்ளான் என்ற செய்தி மெதுவாக கசிந்துகொண்டு வருகிறது.
நீட்சேயும் ஆரம்பகாலத்தில் மதப்பள்ளிக்கு போனவன்தான். வாக்னைரக் கொஞ்சக்காலம் தலையில்வைத்து இசை புரட்சியின் வடிவம் என்று பினாத்தித் திரிந்தவன்தான். பிறகு வாக்னர் ஒரு சுத்தப்பேத்தல் என்று கத்தியவன்தான். நீட்சே எல்லோரையும் எதிர்த்திருக்கிறான். பித்தனாகவும், சுத்தமான கருத்துக்களின் எதிரியாகவும் இருந்திருக்கிறான். நீட்சே ஒரு எதிர்மனிதன். எல்லாப்பொதுமைப்போக்குகளையும் எதிர்த்திருக்கிறான். இப்படியான குழப்படிதான் பிற புத்திஜீவிகள் அவன்பால் மோகங்கொள்ள காரணமாயிற்று. கிட்லர் யூதர்களைக் கொன்றான் என்றால் அதற்குக்காரணம் நீட்சே என வாதாடும் தமிழரசன் மார்க்சியத்தின் பேரால் ஸ்ராலின் யூதர்களைக்கொன்றதற்கு மார்க்ஸ்தான் காரணம் என்று ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது எமக்குத்தெரியும்.
மார்க்ஸைவிட மிகப்பெரிய தத்துவ மறுப்பாளன் யார்? மார்க்ஸ் தத்துவ வரலாற்றின் தொடர்ச்சியல்ல. புரட்சிகர பாட்டாளிவர்க்கத் தத்துவம் கற்பனை வடிவமல்ல. அரசியலுக்கும் அப்பால் மனிதகுலத்தை தத்துவப்பேய் ஆட்டவல்லது என்று இன்று எமக்குத்தெரியும். இருத்தலுக்கான கேள்வியும் வயித்துப்பிழைப்புக்கான கேள்வியும்தான் என்பதும் எமக்குத்தெரியும். ஏன் தத்துவமறுப்பை மறுக்கவேண்டும்? ஏன் தத்துவமறுப்பாளர்களை மறுக்கவேண்டும்? ஏதோ ஒரு தத்துவத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டுதான் காலம் காலமாக வாழ்ந்துகொண்டுவருகிறோம். மாறும் என்ற விதியைத்தவிர எல்லாம் மாறும் என்ற என்ற மார்க்சின் விதியை சுலபமாக குப்பைக்கு அடித்துவிட்டு நிம்மதியாக எழுதிக்கிழிக்கிறோம். இப்படியான மனிதர்களைப்பார்த்துத்தான் நீட்சே அழுதான் - குளம்பினான்.
விலங்கிலிருந்து நீமனிதவிலங்கானது காணும் இனிநீமனிதவிலங்கிலிருந்து மனிதனாகும் தருணம் வந்துவிட்டது என்று கத்தினான். This spoke Zarathstra வின் முதல் பாகம் கடவுள் இறந்துவிட்ட செய்தியோடு தொடங்குகிறது. கடவுள் செத்த செய்தி உனக்கு இன்னும் ஏற்படவில்லையா என்று கேலிசெய்கிறான். இதை நாசிசம் என்று வரையறுக்கவேண்டிய கட்டாயம் தமிழரசனுக்கு எங்கிருந்து வந்தது?
நீட்சே உயர் மனிதம் ஆரியம் என்று சொல்லவில்லை. போதாக்குறைக்கு நீட்சே யூத எதிர்ப்பாளன் என்று தமிழரசன் பகிடி விடுகிறார். யூதர்கள்போல் மிகஅறிவுகூடிய இனம் உலகில் எதுவும் இல்லை என்றும் அவர்களுடன் திருமணத்தொடர்பு வைத்துக்கொள்வது ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் நீட்சே கொண்டிருந்த கருத்து அண்மையில் SEP இணையத்தில் பிரசுரித்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே கருத்தைத்தான் அமெரிக்கவிஞ்ஞானி ஒருவர் தனது Bel Curne என்ற புத்தகத்தில் விஞ்ஞானபூர்வமாக விளக்குகிறார். (Genetic பாகுபாட்டு ஆய்வு) போதாக்குறைக்கு இன்றைக்கு பூதப்பல்கலைக்கழகத்தில் நீட்சே போதிக்கப்படுகிறார். நீட்சேயை தூய்மைப்படுத்தும் நோக்கம் கொஞ்சமும் கிடையாது. அவன் ஒரு குழப்பமான மனிதன் என்பதிலும் சந்தேகமேயில்லை. அவனது சிந்தனைகள், கருத்துக்கள் அவனோடு நித்தம் கலகம் செய்துகொண்டே வந்துள்ளது என்ற கருத்தில் மாறுபாடு இல்லை. ஆனால் நீட்சேயை ஒரு நாசியாக பார்ப்பதில் எவ்விதத்திலும் உடன்பாடுகொள்ளமுடியாது.
அம்மா - 13

Page 29
ஸ்ராலினோ, நீட்சேயோ, கைடேக் கரோ சிறுவயதில் மதப்பள்ளிக்குடத்திற்கு போனதற்காக அவர்கள் மதம்சார்ந்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள். அவர்களின் கருத்துக்களில் மதம் ஊடுருவி இருந்தது என்ற கருத்துக்கு வந்துவிடமுடியாது. ஸ்ரொட்ஸ்கி கூடத்தான் சிறுவயதில் தான் எப்படி குட்டிபூர்சுவாவாக இருந்தார் என்று வர்ணித்துள்ளார். அதே ஸ்ரொட்ஸ்கிதான் எதிர்காலத்தில் ஒவ்வோருசாதாரண மனிதனும் ஒரு மார்க்ஸின் ஐன்ஸ்டீனின் அறிவுகொண்டவனாக இருப்பான் என்று உயர்மனித கனவுகண்டும் எழுதியிருக்கிறார். நீட்சேக்கும் கிட்டத்தட்ட அதேகனவு இருந்தது தவறா?
நீட்சே மொழிபெயர்த்த Walter Kaufmann கதறி அழுதிருக்கிற கதை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய கதை. நீட்சே பற்றி எழுதுபவர்கள், பேசுபவர்கள், அவர்பற்றி எழுதியவற்றை மேற்கோள்காட்டமுனைபவர்கள் எல்லோரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய கத்தல் அது. பிரெஞ்சில் தெளிவாக நீட்சே மொழிபெயர்க்கப்பட்டதுபோல் ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்க்கப்படவில்லை என்ற கத்தல்தான் அது. ஏராளமான பிழைகள் வரிசைப்படுத்திக்காட்டப்பட்டுள்ளன. இவற்றை நுணுக்கமாகப் பார்ப்பது நீட்சேயைப்படிப்பதற்கும் உதவியாக இருக்கும். ஏனென்றால் விடப்பட்ட பெரும்பாலான பிழைகள் மொழிபெயர்த்தவர்களின் ஜேர்மன்மொழி பற்றாக்குறையால் விடப்பட்ட பிழைகள் அல்ல. மாறாக அவர்களின் புரிதலின் அடிப்படையில் ஏற்பட்ட குறைபாட்டையே அப்பிழைகள் காண்பிக்கின்றன. நீட்சேபைபிளைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறான். அவனை மொழிபெயர்த்தவர்கள் The Last Super ஐ Super என்றும் Unknown God g Unfamiliar God 676irplub QuprigGuujirgig5ubdisd5pmirab6ft. Sgruins Walter Kayman பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
«Mary of Nietzsche's plays on words are ofcourse esentially suggestive. To give one example amona scores, there is his play on Eheschiessa, Ehebrechen.Ehe-hieaen, Ehefugen, in section of old and new tablets. Here the old translation did not authenty, and it is surely compensation common aratutiously introud usess elswhere in the book & sumpher assess and asseesses» or coina « baddesty in a passage in which Nietsche says « most evilx. Infact Nietsche devotet one third of his geneology of morals to his distinction between kbadX and & evilx).
இது மட்டுமல்ல. நீட்சேயிடமிருந்த கிண்டல் தொனியும் நகைச்சுவையும் எந்த தத்துவஞானியிடமும் இருந்ததில்லை. இதுவும் புரிதலில் குழப்பத்தை உண்டுபண்ணிற்று. 'Man does not Strike for pleasure, only the the englishman does' 616irm Éi' (8ar எழுதியதுபற்றி Walter Kaufman பின்வருமாறு குறிப்பிடுகிறார். இங்கு நீட்சே ஆங்கிலேயரின் சமையல்பற்றியோ Cromwell பற்றியோ குறிப்பிடவில்லை. அவர் டேவிட் கியூமினதும், மில்லினதும் சிந்தனைகள் பற்றியே குறிப்பிடுகிறார். இந்தக்கருத்தை நேரிடையாக கிட்லர் எடுத்துக்கொண்டால் என்னசெய்வது? Wich So fortunathy aided his defeal. Speaking of influence here is sheer naivetée.
ஆங்கிலத்தில் வந்திருக்கிற மொழிபெயர்ப்புக்கே இந்தக் கதி என்றால் இந்தி, மலையாளம், தமிழ் பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. தமிழில் வந்திருக்கிற மார்க்சிய மொழிபெயர்ப்புகளிலேயே ஏராளமான மொழிபெயர்ப்புப் பிழைகள் இருக்கின்றது. இப்படியான சூழலில் நீட்சேயை எல்லோரும் படிப்போம் விமர்சிப்போம் என்று எழுதுவது
-(sa) தை -2001
Hilbudt – 13

எமக்குத் தவறாகப்படவில்லை.
நீட்சேயை சுட்டுப்பொசுக்குவதன்மூலம் பி.நவீனத்துவத்துக்கு ஒரு முடிவுகட்டிவிடலாம் என்று சில நண்பர்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும் சீரியஸாக நம்புகிறார்கள். பொதுவாக அவர்கள் போடும் Equations பின்வருமாறு இருக்கிறது. Foucault = Heidegger + Nietzche
Derrida = Heidegger + Derrida
Nietzche - Heideger - Satre - Derrida
மேற்கண்ட மாதிரியான ஏராளமான சமன்பாடுகளின் சில Alex Collincos ன் Against Postmodernism நூலிலும் வருகிறது. அவர் மேலும் Decombes ஐச் சுட்டிக்காட்டி பிரெஞ்சுத்தத்துவம் மூன்று H ஆலும் மூன்று சந்தேகத்தாலும் ஆனது. (Three Hs and Three Masters of Suspician) 6T6ip golfil (Bašpirit. Cyp6ôigp H - Hegel, Husserl, Heidegger
psöM Jß(825éas6ft - Marx, NietzZache, Frerd
பூகோ, அல்துாசர், என்று பலமேதைகள் தாங்கள் கைடேக்கராலும், நீட்சேயாகலும் சாதிக்கப்பட்டதுபற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த எல்லா சிந்தனையாளர்களுக்கும் முளை ஒரே மாதிரியாகத்தான் வேலை செய்துள்ளது. சோசலிசப்புரட்சியை எதிர்ப்பதில் இவர்கள் எல்லோரும் கூட்டுச்சேர்ந்து இரகசிய சதி செய்துள்ளார்கள் என்று எம்மை நம்பவைக்க இந்த வெறும் சமன்பாடுமட்டும் போதாது. இவர்கள் எழுதிய எல்லாவற்றையும் ஆய்ந்து பிச்சுபிச்சுப் போட்டு விளங்கப்படுத்தினால் சிலவேளை விளங்கலாம். தமிழில் ஒருமண்ணும் இன்னும் பெரிதாக மொழிபெயர்க்கப்படவில்லை. மொழிபெயர்க்கப்பட்டவைகளும் மேலும் குழப்பங்கள் உண்டாக்கும் வண்ணம் இருக்குமானால் நாம் எங்குபோய் முட்டுவது? எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து கழுவேற்ற துடிப்பவர்களுக்கு வசதியேற்படவில்லை என்ற மிச்சம் தான்.
றயாகரன் இவர்கள் அல்லது இவைகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகச்சேர்த்து ஒரு நூல்மூலம் கழுவேற்றுவதாக விரதம் கொண்டுள்ளார். இவ்வாறு கழுவேற்ற முனைபவர்களுக்கு ஒரு குறிப்புத் தரவேண்டியுள்ளது.
19276b (8grupanuilso 6) Itgbibg5 Karl Heisenberg 676ip 6?(bigpit Uncertainty Priciple gy என்ற ஒரு பிரச்சினையை விஞ்ஞானத்துக்குக் கொண்டுவந்தார். இது ஒரு பக்கா முட்டாள் Principle என்று ஐன்ஸ்டீன் ஊதித்தள்ளிவிட்டு பின்வருமாறு எழுதினார். "God does not play dice with the universe' alsoTT6) 36irsopdsg, subgs principle பூதாகரமாக வளர்ந்து ஐன்ஸ்டீனையே தின்னுமளவிற்கு வந்துவிட்டது.ஒளியின்வேகம் மாறாத ஒன்று என்று வரையறுத்து தனது சார்பியல் தத்துவத்தையும் சமன்பாடுகளையும் எழுதிய ஐன்ஸ்டீனை தூக்கி எறிந்துவிட்டு மாறும் என்ற விதியைத்தவிர எல்லாம் மாறும் என்ற விதியை மறுபடியும் நிறுவியிருக்கிறார்கள் இந்த நூற்றாண்டின் புதிய ஆய்வாளர்கள். Uncertainity Principle 6) 3055gs sistibg subgubdélin Chaos Theory 676irán) சமாச்சாரம் இன்றைக்கு கணிதத்திலிருந்து காஸ்மோசுக்குப்போய், காஸ்மோசிலிருந்து கம்பியூட்டருக்கு வந்து தத்துவஉலகிலும் புகுந்து ஒரு ஆட்டு ஆட்டிநிற்கிறது.
Rational என்றால் சிந்திக்கமுடிவது. சிந்திக்கமுடிவது என்றால் உலகை வரலாற்று ரீதியாகவும் அமைப்புக்களாகவும் பார்ப்பது என்ற தர்க்கத்தால் கட்டப்பட்ட முளையின்
இயங்குபாணிகளை விஞ்ஞானிகள், தத்த5ணிகள் ġibli (660DL-ċħġbż5Glg5/TLAāċiSluy6i67760i. தை -2001
-9Libtida - 13

Page 30
நாம் கற்றுக்கொள்வதை தர்க்கரீதியாக முளைக்குள் சேர்த்துக்கொள்வதால் உண்மை பற்றிய உண்மையான அறிவை எம்மால் எட்டமுடியாமல் போய்விடுகிறது என்பதை தெரிந்துகொண்டுள்ளோம்.
இப்படியாக இந்த 'குழப்ப விஞ்ஞானத்தை யாராவது எமக்குமார்க்சியபாணியில் நிறுவித் துலைத்துக் கட்டினால் அல்லது ஸ்ராலினிச பாணியில் கழுவேற்றினால் அது உலகுக்குச்செய்த பெரிய கொடையாக இருக்கும். இதே விசயம் பற்றி நீட்சே மிகவும் ஆச்சரியப்படும் வகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
It is a clear that science too rest on a faith; there is no science without presupositions' The question wether the truth needed must not only have been afirmed in advance, but affirme to the esent that the principle, the faith, the conviction is coexpressed nothina is needed more' than truth,and in relation to it everything else has only secondary value.
பின்பு unconditional wil to truth பற்றி ஆய்வு செய்து கொண்டு போகிறார் நீட்சே, Unconditional truth என்பது நீட்சே காலத்தில் மிகப்பெரிய சிந்தனை.
இவையெல்லாம் எப்படிக்கழுவேறுகிறது என்று பார்க்க கட்டுக்கடங்காத ஆசையுடன் காத்துக்கிடக்கிறோம்.
கடைசியாக ஒரு கழிவிரக்கம். 'ஏகாதிபத்திய எச்சிலை நக்கும் ஆய்வுக்குஞ்சுகளாகிய நாம் என்னத்தை எழுதி என்னத்தைக் கண்டோம்? தலையிலடித்துக்கொண்டோம். ஒப்பாரி வைத்தோம். கல்வெட்டும் அடித்தோம். கண்டபயன் என்ன? ஒவ்வோரு சமரிலும் ஷோபாசக்திக்கு பிராக்கட்டில் அடிவிழுவது தவிர மாற்றமேதும் ஏற்பட்டதா?மேற்கண்ட சிக்லான அரசியல் கேள்விகளுக்குப்பதிலாக சில சாதனைகளை குறிப்பிடலாம். 1. M.P. ரொட்ஸ்கி FM. ரொட்ஸ்கி யாகியுள்ளார். 2. பல புதிய கருத்துக்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. (உ-ம் : ஒரு பொருளில் விளிம்பு இருக்கமுடியுமே ஒழிய விளிம்பு சுயமாக இருப்பதில்லை
Fipir 27) (அய்யோ றயா! அதுக்குப்பெயர் விளிம்பல்ல களிம்பு) 3. ட்ரொட்ஸ்கி வாழ்க்கை வரலாறு எழுதிய கதிர் ராமசாமி மறுபடியும்
நினைவுகூரப்பட்டுள்ளார். . சாட் டோடு சாட்டாக முளையை இடறிக்கொண்டிருக்கும் ஒருகேள்வியையும் கேட்கவேண்டியுள்ளது. கிட்லர் கொண்டது, ஸ்ராலின் கொண்டது 2ம் உலகமகாயுத்தம், 1ம் உலகமகாயுத்தம் என்று செத்துப்போன எல்லா மனிதர்களினதும் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தால் அதைவிட அதிகமான மனிதர்கள் போன நூற்றாண்டில் எயிட்சினால் மரணமடைந்துள்ளார்கள். முக்கியமாக ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், மரணவீதம் விண்கட்டிப்பறக்கிறது. இப்படியெல்லாம் பெரிய சாவுகள் ஏற்பட்டும் ஏன் உலக சனத்தொகை வரைவில் தொய்வேற்படவில்லை. சும்மா கட்சியைதுடைக்கிறம், கட்டிறம், அள்ளிறம் என்று 1934-1939 காலத்தில் கட்சியை தூய்மைப்படுத்திய (சமர் 27) சுத்தவானின் சீடர்கள் துட்டகைமுனுவும், எல்லாளனும் தூய்மைபற்றி பேசுவதை ஏன் என்று கேட்க வக்கற்றவர்கள் கதிர் இராமசாமியை படிப்பதை பாடமாக்குவதை நிறுத்திவிட்டு இன்று வந்திருக்கின்ற உருப்படியான புதிய ஆய்வுகளை பார்த்தால் படித்தால் ஒன்றும் குறைந்து போய்விடாது.
- சேனன்.
GSGD- தை -2001
-Sltöton — 13

நானும்
எனது
(p
ப்ெபோதும் போல்
'அந்தவெளி 'இப்போது இருப்பதில்லை உந்துருளியை உதையும் உடலத்தின் வியர்வைத்துளிகளும் அந்தக் காற்றினில் காய்வதில்லை LDITgTuj உள்ளிருந்து உயிர்வதைக்கும் நினைவுச்சுவடுகள் பிறிட்டெழும் பிரளயமாய் என்னுள் ஊறி
எனக்குள் கனன்று நரம்புகளில் குத்திநின்று ஆத்மாவை பார்த்து நகைக்கும் நான் கண்முழித்திருக்க, களவாடப்பட்ட என் சோதரியும் சொந்தங்களும்
சிதைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட கல்வாரியாய் அது என் முன் நீளும் உள்ளாடை வரை உரிக்கப்பட்டபின்னும் இருட்டைத்துணைக்கழைத்தவளின் ஈனஸ்வரமும் நீண்ட வெட்டையின் இருட்டு தின்றுவிட்ட
உயிர்க்கூட்டங்களின் ஊழிக் கதறலும் உப்புக்காற்றுக்குள் உறைந்து நின்று என்மூச்சை அடைக்கும்
எனினும்
எதுவும் முடியாத எதற்கும் அருகதையற்ற இன்னும் உயிர்காவ விரும்பும் 83-LDITU... . .
உதைத்து நகரும் உந்துருளியும் . . . நானும் எனது பயணமும் . . தொடரும். யோ, யோண்சன் ராஜ்குமார்.
sptöidir - 13
67) தை -2001

Page 31
புலம் பெயராத தமிழ் இலக்கியம்
ஒரு இலட்ச ரூபாவில் உருவாக்கப்படுகிறது
ப்ேபோது, புலம் பெயர் தமிழ் இலக்கியம் புலம் பெயராத தமிழ் இலக்கியம் என்று இருவகை DMT grifts(G36MT தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
முற்போக்கு இலக்கியம், யதார்த்த இலக்கியம், தேசிய இலக்கியம் எல்லாவற்றிற்கும் அது
தலித் இலக்கியம்,
இலக்கியம், D6ss
உருவான காரியங்கள் இருக்கின்றன. 30 ஒக்ரோபர் 2000 துடன் மிகப்பழையதாகிவிடும்.
காரண
?6}{960ت 31.12.2000 ற்கு முன்னர் இலங்கையில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் ஒருலட்ச ரூபா வெளிநாட்டிலிருந்து வீசி எறியப்படும் அல்லது இலங்கையில் வைத்துக் கையளிக்கப்படும். எந்த எழுத்தாளராவது கடிபட்டு, குரைபட்டுக் கவ்விக்கொள்ளட்டும். கிடைக்காவிடில் கவலை கொள்ளட்டும். நமது கவலை
அதுவல்ல,
நமது கவனம் புலம்பெயராத தமிழ்பேசும் இலங்கையர்களுக்கான ஒரு இலட்சம் ரூபா பரிசுச் சிறுகதைப்போட்டி - என்ற வாக்கியத்தின் பின்னால் இருக்கும் அரசியலைக் கண்டு பிடிப்பதே. அல்லது கட்டவிழ்ப்பதே அல்லது கேள்விக்குள்ளாக்குவதே.
புலம்பெயர்ந்த தமிழ்பேசும் இலங்கையர் - எழுதுவது புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே
pitibor -13
(sol
இன்னும் ஒரு மாதத்தில் எல்லாவற்றிற்கும் தலைமைதாங்கும் என்பதும் ஏகமனதாக
தெரிவித்தாகிவிட்டது. புலம்பெயராத தமிழ் இலக்கியம் என்பதும் RC5 லட்ச ரூபாவில் ஏற்றுக்
கொள்ளப்பட்டுவிட்டது. (ஒரு காசா! இரண்டு காசா ஆயிரம் பவுண்ஸ் ஆச்சே! ஆயிரம் பவுண்ஸ் ஆச்சே!)
புலம் பெயர்ந்தோர் தமது எழுத்துக்களை புலம்பெயர் தமிழ் இலக்கியம் என தமக்குத் தாமே பெயரிட்டு அழைத்து
வருவதில் அல்லது தமிழ் இலக்கியத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை; நமது வாழ்க்கை வேறானது; 5LDg இலக்கியம்
தனித்துவமானது என இனங்காண்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நான் தமிழ் மட்டுமே தெரிந்த சிங்களவன்.
என்னுடைய அடையாளம் அல்லது
மறைந்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் நினைவாக.
புலம்பெயராத தமிழ்பேசும் இலங்கையர்களுக்கான ஒரு லட்சம் ரூபா பரிசுச் சிறுகதைப் போட்டி
ாட்டிக்கான விதிகள்:
புலம் பெயராத தமிழ் பேசும் இலங்கையராக இருத்தல் வேண்டும். இலங்கையில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் சிறுகதைகள் முன்னர் பிரசுரிக்கப்படாதவையாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் படைப்பாளிகளின் சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே போட்டிக்காக அனுப்பி வைக்க முடியும்.
6. போட்டியாளர்கள் தமது சிறுகதைகளுடன்
அவர்களுடைய முழுப்பெயர், பிறந்த திகதி,
 

அடையாளத்திற்கான எதிர்ப்பு என்பதும்
என் சம்பந்தப்பட்டது. ஆனால் இன்னொருவருக்கு ஒரு அடையாளத்தை வழங்கிவிடுவதில் நான் ஈடுபாடு
கொள்வேனாகில் எனது அடையாள அரசியல் தோலுரிக்கப்படவேண்டும். புலம்பெயர்ந்ததன் எதிர்வாக புலம் பெயராததைக்கொள்ளலாமா? எதிர்வைக் கட்டமைப்பவர் யார்? புலம்பெயர்ந்தது உயர்வானது - மேலானது - மேலிருந்து வழங்குவது (ஒருவர் புலம்பெயர எட்டரை இலட்சங்கள்)
சுபீட்சமான எதிர்காலம்
புலம்பெயராதது : தாழ்வானது, கீழானது, தங்கியிருப்பது, இரக்கத்திற்குரியது. புலம்பெயர் நோக்குநிைையில் புலம்பெயராதவர்கள் பாவங்கள். எதற்கும் வழியற்றவர்கள். அவர்களுக்கு நாம்தான் எல்லாம்.
பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபா என்றவுடன் வெளிநாட்டிலிருந்துதான் அதுசாத்தியம் (கதிர்காமநாதன் என்ன தவம் செய்தனையோ!) என்ற மனநிலை
எல்லோருக்கும் வந்துவிடுகிறது.*(அ.கு.2)
ஒரு கவிதையைத்தன்னும் எழுதாதவனும் நோபல் unfafs கொள்வதைப்போல, ஏங்குவதைப்போல
ஆர்வம்
காலக்கிரமத்தில் நானும் புலம்பெயராத தமிழ்பேசும் இலங்கையர்’ என்று அதன்
வாய்ப்புண்டு. இப்படி புலம்பெயராத தமிழ்பேசும் இலங்கையர்’ என்று தம்மை அழைத்துக்கொள்வதில் எந்தச்சிக்கலும் இருக்காது.
பரிசைப் பெற்றோர் தமது இலக்கியம் புலம்பெயராத தமிழ் இலக்கியம் என்று எந்தச்சிக்கலும்
<翌5 令@ மேற்சாதிக்கட்டமைப்பும், பெயரிடலும்
இனங்காண்பதில் இருக்கப்போவதில்லை.
பெயரிடல்மூலமாக தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தலும் தீர்மானிக்கப்படுகிறது. நமது திமிர்த்தனத்தைக் காட்டியாயிற்று. புலம்பெயர்ந்தவர்களின் குற்ற உணர்ச்சிக்குத் தீனியுமாயிற்று. சஞ்சிகைக்கு சிறுகதையுமாயிற்று. இலங்கையின் இலக்கியப்போக்கு ஒன்றை வெளிநாட்டிலிருந்து தீர்மானித்தும் ஆயிற்று. புலம்பெயர்ந்தவர்களாகிய
எமக்கேற்ப
எம்மைச்
சார்ந்தே அவர்கள் தம்மை அடையாளப்படுத்தவும் இனங்காணவும் வழிகண்டாயிற்று. தலித்துக்கள், மலையகமக்கள், இஸ்லாமியமக்கள், தமிழர்கள் இப்படி வேறுபாடுகள் இருந்தாலும் புலம்பெயராத தமிழ்பேசும் இலங்கையர் என்ற பொது அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுகின்றனர். புலம்பெயராத வாழ்க்கை என்று ஒன்று இன்றுண்டா? தலித், மலையக, இசுலாமிய, தமிழ்ப்
எல்லோரும்
பரிசுத் தொகைக்காக புலம்பெயர்வுகளின் பயங்கரங்களை விட இலங்கையிலிருந்து புலம் படுபயங்கரமானது இதையொட்டிய புகலிட பெயர்ந்தவர்களை நோக்கி ஏங்குவது அரசியல் பிரக்ஞை.
தொடங்கும். கதிர்காமநாதன் அடநாய்களா! டைனமற்றைக் கண்டுபிடிக்காதுவிடினும் பிதாவே! இவர்களை நோபல் பரிசுத்தொகைக்குச் சமனாக மன்னிக்காதேயும்
இப்பரிசுத் தொகை அதிகரிக்க e இவர்கள் தாம் 6Tarar gió DIT -13 (59- தை -2001

Page 32
செய்கிறோம் என்று
தெரிந்தே செய்கிறார்கள் மாற்றுக் கருத்து இருக்கிறது. இருக்கவேணும். கும்பிடுறேனுங்க! - சுகன்.
அடிக்குறிப்புகள் அ.கு.1: ஒவ்வொருவனும் இங்கு தாம் தப்பிவந்து விட்டோமென்ற குற்ற உணர்ச்சியில் அவிந்து சாகிறான். அவன் மறந்தாலும் யாரும் விடுவதில்லை. புகலிடத்தில் பாசிசக் கட்டமைப்பின் அத்திவாரமே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற குற்ற உணர்ச்சியைத்துரண்டி அணையவிடாது அதில் அறுவடை காண்பதே. ஊரில் இருப்பவர்களை புனிதப்படுத்தி, மகிமைப்படுத்தி, பெருமைப்படுத்தி வீரமக்கள் என்றும் வெளிநாட்டில் இருப்பவர்களை அவ்வப்போது தூற்றி கோழைகள், தப்பிவந்தவர்கள் என்றும்
ஒரு பயங்கரமான பாசிசப்பிரச்சாரம்
எப்போதும் நடக்கிறது. இந்த முரண்
கட்டுரைப் போட்டி, கதைப்போட்டிகளுக்கு இலங்கையில் அறிவித்தல் விடுகிறார்கள். பரிசு இன்னும் கைக்கு வந்து சேரவில்லை என அங்கிருந்து வேறு பத்திரிகையில் அழுகிறார்கள்.
பரிசு கொடுக்காமல் விடமாட்டேன் என ஒரு கூட்டமும், பரிசு வாங்கமாட்டேன் என இன்னொரு கூட்டமும் இன்று வரை மோதிக்கொண்டே இருக்கிறது. இலக்கியத்தின் பேரில் எந்த ஒரு விருதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அறிவித்தார். 1990ல் இந்தியாவின் சிறந்த இளம் இலக்கியவாதிக்கான 20ஆயிரம் ரூபா பெறுமதியான சம்ஸ் கிருதி விருதை புறக்கணித்தார்’ என ஆரண்யம்(ஐப்பசி - மார்கழி99) பரிசுகுறித்து பதிவு செய்திருந்தது. பிரான்சிலிருந்து வெளிவந்த பள்ளம் (தை- மாசி90) இதழ் பரிசு குறித்து கேள்வி பதிலாக பின்வருமாறு எதிர்வினை ஆற்றியிருந்தது.
எதிர்வையும் புலம்பெயராத தமிழ் பேசும் கேள்வி : எந்தக்கருத்தையும் இலங்கையர்” என்ற புனிதப்படுத்தலில் சுதந்திரமாக எழுதக்கூடியதாக புதைந்திருக்கிற பாசிசத்திற்கான உலகளாவியரீதியில் வித்தையும் ஒருவர் இன்னொரு தமிழ்ச்சிறுகதைப் போட்டியொன்று கோணத்தில் இனங்கண்டிருக்கலாம் - பிரான்சில்நடக்குதாமே? காணவேண்டும்.
பதில் சுதந்திரமாக எழுதுகின்ற அ.கு. 2 எழுத்தாளர்கள்மேல் தொடுக்கும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சமூக அழுத்தம் இது போட்டிக்காக ஐரோப்பா என உலகத்தமிழரிலிருந்து பரிசிற்காக எழுதும்நிலையை ஊரில்லாத நாய்வரை வானொலிகள், உருவாகசூதனமூலம பத்திரிகைகள், சங்கங்கள் எல்லாம் எழுத்தாளர்களின் அடிப்படைச் எவ்வித கூச்சநாச்சமின்றியும், சுதந்திரம்பறிக்கப்படுகிறது. தயக்கங்களின்றியும் கவிதைப்போட்டி,
ac
அம்மா -18 YM தை -2001

அங்கே சிரிய்பவர்கள் சிரிக்கட்ரும் - அது ஆணவச்சிரிப்பு
அண்பே பாரதி!! நீங்கள் தி, தினவு, பொய், புனைவுமிவை நாலும் கலந்து உயிர்நிழலில் ஒரு மயிர்பிளக்கும் விவாதம் முனைந்து தோழர். அ. மார்க்சுக்கு திட்டிய மற்றும் திட்டிய மடல் கண்டேன்.
உங்களைப்பற்றியும் புகலிட நிலைமைகள் குறித்தும் எழுதுமாறு பல நண்ப, நண்பிகள் உங்களை வேண்டி விண்ணப்பித்ததன் நிமித்தம் நீங்கள் அந்த ஒப்பிண் லெற்றரை எழுதியிருந்ததாக சொல்லியிருந்தீர்கள்.
முதற்கண் அந்த நண்ப, நண்பிகள் யார், எவர் என்று குறிப்பிடுங்கள். ஏனெனில் இப்படியாக மொத்தம் எத்தனைபேர் கிளம்பியிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவல்.
தமிழ் இனி 2000 மாநாடு மகாமோசமானது அல்ல என்று நிரூபிக்க நீங்கள் மிகவும் பிரயாசைப்பட்டிருந்தீர்கள். மாவோயிசம் / ஒப்பின் / வரலாறு / சுயம் என்று வார்த்தை முத்துக்களை சிந்திச்சிதறி எதை எடுக்க எதை கோர்க்க என்னுமளவிற்கு எங்களை குழப்பத்தில் வீழ்த்தி விட்டீர்கள்.
அன்பே, பாரதி உங்களைப்போல் இம் மாநாடு குறித்து பூவுஞ் சரி புள்ள சொன்னதுஞ் சரி எனப்புசத்தாமல் தமிழ் இனி 2000 மெகா பொறுக்கித்தனமானது என சில பொறுக்கியெடுத்த புள்ளிகளால் நிரூபிப்பேன். இப்புள்ளிகளை வேறு வேறு விதங்களில் ஏற்கனவே எமது தோழர்கள் சுட்டியிருந்தும் உங்களுக்குச் சுடாததால் சுணைக்காததால் இப்போது வாழைப்பழத்தை உரித்து உங்கள் வாயில் வைக்க என்னை அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். 1. விரிந்து செல்லும் தமிழ் இலக்கியத்தின் தடங்களிலிருந்து உலகத்தமிழ் இலக்கியம் என்ற ஒரு பொது அடையாளத்தை உருவாக்குவதே தமிழ் இனி 2000 அரங்கின் முதன்மையான நோக்கம் என மாநாட்டு அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பொது எந்தப் பொது? தலித் இலக்கியம், பார்ப்பன இலக்கியம், பெண்ணிய இலக்கியம், தலித் பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம், வெள்ளாள இலக்கியம், புகலிட இலக்கியம், தயிர்வடை இலக்கியம், போர்க்கால இலக்கியம், சரணாகதி இலக்கியம், பக்தி இலக்கியம், ஆபாச இலக்கியம், மார்க்சிய இலக்கியம், முதலாளித்துவ இலக்கியம், மலையக இலக்கியம், மனோரதிய இலக்கியம், முஸ்லிம் இலக்கியம், திராவிட இலக்கியம், உள்ளொளி இலக்கியம் இன்னும் இன்னோரன்ன இலக்கியங்களை எந்த பொது நிபந்தனையின் பெயரில் இவர்கள் இணைக்கப்போகிறார்கள்? எந்தப்பொது அடையாளத்தை உருவாக்கப் போகிறார்கள்? மில்லியன் கணக்கான ரூபாய்களை நாசமாக்கி இப்படியொரு தமிழ் பொதுவை உருவாக்க இப்ப என்ன
அவசியம் வந்தது?
GO தை -2001
pÈD - IS

Page 33
டானியலின் பஞ்சமருக்கும், சுஜாதாவின் நைலான் கயிறுக்கும் என்ன சவம் பொதுவாய்க் கிடக்கிறது?ழமணியின் வெக்கைக்கும் ஜெயமோகனின் கன்யாகுமரிக்கும் எது பொதுவாய் கிடக்கிறது?ப. சிங்காரத்தின் புயலில் ஒரு தோணிக்கும் அசோகமித்திரனின் ஒற்றணுக்கும் எது பொதுவாய் பொங்குகிறது?பாமாவின் கருக்குக்கும் சிவசங்கரியின் சுட்டமண்ணுக்கும் எது பொது?
நிறுவப்பட்ட தமிழ் இலக்கிய பொது என்பது பார்ப்பன வேளாள ஆணாதிக்க பொதுவே! இந்தப் பொதுவை மறுத்து வித்தியாசம் வித்தியாசமாய் வெடித்துக்கிளம்ப ஆரம்பித்திருக்கும் மாற்று இலக்கிய அடையாளங்களை சோக்கோல்ட் பொதுவைப்பிரயோகித்து குழிதோண்டிப்புதைக்கும் முயற்சி அல்லவா இது. ஒன்றுக்கொன்று நேரெதிரான அடையாளங்களை பொதுமைப்படுத்தி ஓரணிக்குள் உள்வாங்கி பின் செரித்து விடுவது தானே காலங்காலமாய் அதிகார மையங்கள் செய்துவரும் தந்திரம் மிகவும் இளைய எளிய, அதிகாரங்கள் பறிக்கப்பட்ட சனநாயகம் மறுக்கப்பட்ட மாற்றுக் குரல்களும், அடையாளங்களும் இந்த அதிகார சக்திகளிடமிருந்து ஒதுங்கி நிற்பது அவசியம்.
2. வட்டிக்கடை பூரீராம் முதற்கொண்டு காசு தண்டி, வட்டி அட்வடைஸ்மன்ற்
தட்டிகளின் பின்னணியில் இருந்து புரட்சியோ புரட்சி பேசுவதும் மகாகேவலம். 3. இந்தப் பரிசுகெட்ட மாநாட்டை மேலும் பரிசுகெடுக்கும் நோக்கத்துடன்
பேராளர்களுக்கு பரிசு வழங்கப்போவதாக கூறி கிளம்பிவந்த தமிழா தமிழா.கொம் நிறுவனத்தினர் மாநாட்டின் மனேஜிங் டைரக்ரர்களான சேரனையும், அவர் தம் நண்பரையும் அணுகி பாரதியாரின் கவி வரிகளை தாம் வழங்கவிருக்கும் பரிசுச்சின்னத்தில் பொறிப்பதற்காக முன்மொழிய சேரனும் நண்பரும் சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் என்ற வரிகளை வழிமொழிந்ததாக சேரன் காலச்சுவடு (நவ-டிச) கட்டுரையில் அறிவிக்கிறார். தோசையின் திறத்தில் ஆட்டுக்கல்லுக்கொருமாலை கணக்காய் இக்கட்டுரையை சரிநிகரும் மறுபிரசுரம் செய்திருந்தது.
மிகவும் இந்துத்துவ ஆணாதிக்க சாய்வுடைய ஆத்திக வரிகளை ஆத்துப்பறந்து சேரனும் அவர்தம் நண்பரும் தேர்வு செய்ய காரணம் என்ன? (*சிவம் இல்லாமல் சக்தி உண்டு எனச் சபதமிட்டு சிவத்தையே சலஞ்ச் செய்து தட்சனின் யாகத்துக்கு சென்றவளல்லவா சக்தி)
பாரதியாரின் மிகவும் அற்புதமான கவித்துவம் மிளிரும் வரிகளான :
- பேராசைக்காரனடா பார்ப்பான்.
- சாதிகள் இல்லையடி.
- பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே.
தண்டச் சோறுண்ணும் பாப்பு.
போன்ற வரிகளை தெரிவு செய்ய நினைக்காமல் ஏன் சேரன், சிவசக்தியுடன் கிடந்து
pTuůáéDTiř?
சரி, பார்ப்பன எதிர்ப்பு வரிகளை பரிசுச்சின்னத்தில் பொறித்தால் சுஜாதா, ஜி.எஸ்.ஆர்.
கிருஷ்ணன் போன்றவர்கள் பரிசுச் சின்னத்தையே சேரனின் முஞ்சியில்துக்கி அடித்துவிட்டு போய்விடுவார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. தவிரவும் லண்டன் இ. பத்மநாபன் போன்ற
(G2- தை -2001
* நன்றி : ஏ. பி. நாகராசன்
J9Libtor - 13

மாநாட்டு அமைப்பாளர்களின் முஞ்சியில் நாளைக்கு பொழுதுக்கு சேரன் முழிப்பதும் சிக்கலாகிவிடும்.
இப்படி முகத்துக்கு அஞ்சித்தான் பாரதியின் வரிகளை தேர்வுசெய்யவேண்டிய கட்டாயம் சேரனுக்கு இருந்திருப்பதால்வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்புதுடிக்குதடி" என்ற வரிகளை பரிசுச் சின்னத்தில் பொறிக்குமாறு சொல்லியிருந்தாலாவது தலைக்கு வந்தது தாடியோடு போயிருக்கும். அதை விடுத்து அப்பட்டமான இந்துத்துவ ஆணாதிக்க வரிகளை தெரிவுசெய்ய முயன்றது மனேஜிங் டைரக்ரர்கள் சமகாலப் பிரச்சினைகளான மொழி/ சிந்தனை சனாதன எதிர்ப்பு / சாதி எதிர்ப்பு போன்றவற்றில் கொண்டுள்ள அலட்சியத்தையே சுட்டி நிற்கிறது.
நிற்க, அன்பே பாரதி! நீங்கள் குறிப்பிட்ட புகலிடப்பிரச்சினைக்குள் காலைவிடலாம் வாருங்கள். நீங்கள் ஏதோ சோசலிசக்கட்சியில் இருந்து பண்ணிய வீரப்பிரதாபமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் முதலில் அது என்ன கட்சி அதன் பெயர் என்ன? அதன் விலாசமென்ன?என்பதை அறிய மிக்க ஆவலாயுள்ளேன். அதைத் தெரிவியுங்கள். அதன் பின்பு அது சோசலிசக் கட்சியா? இல்லை சோத்துமாடுகளின் கட்சியா? இல்லை திரிபுவாத தேசியவாதக் கட்சியா? அது தமிழ் விடுதலை இயக்கங்களை விட முற்போக்கானதா? நற்போக்கானதா? என்று விவாதிப்போம். அதனுடுதான் உங்கள் வீரப்பிரதாபங்களையும் வர்க்கவரலாறையும் அடையாளம் காண எங்களுக்கு தோதுவரும்.
நாங்கள் மேதின ஊர்வலங்களில் கூட கலந்துகொள்ளாதவர்கள் என்று தனகுகிறீர்கள். பிரான்ஸிலே - அய்யகோ இந்தப்புரட்சிப்பூமியிலே - இப்போது அரசின் அனுமதியைப்பெற்று அரசு அனுமதித்த பாதைகளின் வழியே பதாைைககளை உயர்த்திப்பிடித்துவந்து மேதின ஊர்வலத்துக்கு தலைமையேற்று நடத்தி ஒழுங்கமைப்பவர்கள் C.G.T., F.0 போன்ற பிரான்சின் ஆகப்பெரிய கருங்காலித்தொழிற்சங்கங்களும் P.K.K, LTTE, JVP போன்ற குட்டிமுதலாளிய இயக்கங்களுமேயாவர்.
1995 மேதின ஊர்வலத்தில் ஜேர்மனியின் டுசல்டோப்நகரத்தில் ஊர்வலத்தில் தொழிலாளர் பாதை பத்திரிகைகளை விநியோகித்துக்கொண்டிருந்த நான்காம் அகிலத்தின் தோழர்கள் தேசிய வெறியர்களால் தாக்கப்பட்டனர். ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த எந்தவொரு தொழிற்சங்கமும் எமது தோழர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. இப்படியானவொரு கிலிசுகெட்ட மேதின ஊர்வலத்திற்கு நீங்கள் வால்பிடித்துப்போய், வளங்கெட்டுப்போய் கோசம் போடுவதனால் போடுங்கள். நாங்கள் அதற்குத் தயாரில்லை.
எனவே, கருங்காலிகளினதும், குட்டிமுதலாளித்துவ தட்டுக்களினதும் கட்டுப்பாட்டில் நடக்கும் ஊர்வலத்தில் கலந்துகொள்வதை விட மேதினமன்று பேசாமல் பறையாமல் அறையிலிருந்து மக்கள் திலகத்தின் ‘உழைக்கும் கரங்களை இன்னொருமுறை வீடியோவில் போட்டுப்பார்த்து இன்புறுவதே சாலச்சிறந்தது என்பது எனது தாழ்மையான கருதது.
தலித்தியம் பற்றி மேடையில் வாய்கிழிய பேசிவிட்டு கூட்டம் முடிந்ததும் வந்து ஹிஹிநான் தலித்தில்லை என கூறி வருபவர்கள் எனக்கூறி விழுந்தபாட்டுக்கு குறி சுடுகிறீர்கள்.
அன்பே பாரதி! இன்றைய சூழலில் தலித் அரசியலுக்கே முதன்மை கொடுத்து
63- தை -2001
அம்மா -18

Page 34
சாதியவிடுதலை சாத்தியமில்லாமல் வேறெந்த விடுதலையும் சாத்தியமற்றது எனக்கருதி அவ் அரசியலின் உறுதியான ஆதரவாளராய் இருக்கும் தலித் அல்லாத ஒருவரை நோக்கி நீ என்ன ஜாதி என்று கேள்வி எழுப்பப்படுகையில் அவர் நாணிக்கோணி மிகவும் குற்றஉணர்வுணர்வுடன் நான் தலித்தில்லை' என்று கூறுவதில் என்ன பெரிய தலித் விரோதத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்?
அடுத்தது நதியின் மரணம் : இந்தப்பிரதியை திரையிடும் நிகழ்வில் இவர்கள் தலைமை வகிப்பது யார்? என்று சண்டைபோட்டார்கள் என்றொரு கூழ்முட்டையை எம்மீது குறிவைத்து வீசுகிறீர்கள். இது பச்சையான பொய். தலித்தியப்போராளிகள் மீது சேறடிக்க இட்டுக் கட்டப்பட்ட சின்னத்தனமான பொய். நதியின் மரணத்தை இலக்கியச்சந்திப்பில் திரையிடுவது பற்றி எமக்குள் விவாதம் நடந்தது. சில நண்பர்கள் இலக்கியச் சந்திப்பு திரையிடலுக்கு ஏற்ற தளமல்ல என்ற கருத்தை வைத்தார்கள். எனினும் விவாதத்தின் முடிவில் இலக்கியச்சந்திப்பின் முக்கியத்துவத்தையும் சனநாயகப்பண்பையும் கருதி அங்கே திரையிட முடிவுசெய்து திரையுமிட்டோம். அன்பே பாரதி! இதில் எங்கே வந்தது தலைமைச் சண்டை? ஏன் உங்களுக்கு இந்தப் பொய்வேலை?எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அவதுறை மேற்கொண்டீர்கள்? பகிரங்க கடிதம் எழுதிய மாதிரியே பகிரங்க வருத்தம் தெரிவிப்பது உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது.
இன்னொரு பொய்யைப்பாருங்கள்! அந்த வீடியோ கசற்றை ஏனைய பகுதிகளில் போட்டுக் காட்டக் கேட்டதற்கு நாங்கள் படப்பிரதியை தரமறுத்தோம் என்று எழுதுகிறீர்கள். எம்மிடமிருந்த பிரதியை இரவோடிரவாக பிரதி பண்ணி அழகலிங்கம், நா. கண்ணன், சுசீந்திரன் ஆகியோருக்கு திரையிட கொடுத்தோம். ܫ அன்பே பாரதி வாய் புளித்ததோ காய்புளித்ததோ என்று எப்படி நீங்கள் வதந்திகளை வளர்த்துக்கொண்டே போகிறீர்கள். எம்மை எதிர்கொள்ள உங்களுக்கு வேறுநேர்மையான வழிகளே தெரியாதா? அன்பே பாரதி, புகலிடத்தில் சாதி வேறுபாடு இலங்கையைவிட அதிகம் என்று கூறமுடியாது’ எனச்சொல்லியிருந்தீர்கள். இது ஒரு எழுந்தமானமான வாய்ச்சொல் மட்டுமே என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?நீங்கள் மறுப்பதானால் அதற்கான எடுகோள்கள் எவை?
இருபது வருடங்களாய் அய்ரோப்பாவில் சீவிக்கும் உங்களின் புலம்பெயர் சாதியம் குறித்த அறிதலுக்கும் அய்ரோப்பாவையே கண்ணால் பார்த்திராத தோழர் டொமினிக் ஜீவாவின் அறிதலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கீழே கவனியுங்கள். இந்த வித்தியாசம் வெறும் வித்தியாசமா? இல்லை சாதியக்கொடுரம் குறித்து ஒரு வெள்ளாளனின் அசட்டையான அக்கறையற்ற அறிதலுக்கும் ஒரு தலித் போராளியின் அச்சொட்டான அறிதலுக்கும் உள்ள வித்தியாசமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
இந்த மண்ணின் பரம்பரைப் புத்தி இங்கு மட்டுமல்ல கடல்கடந்து தேசம் கடந்து போய் வேரோடியுள்ள புலம் பெயர்ந்தவர்களிடையே கூடத்தனது நச்சுவேர்களை பரப்பிவருகிறது என்பதுதான் இன்றைய சர்வதேசச் சேரகம்/சர்வதேசக் கொடுமை! சர்வதேச அக்கிரமம்
கீழ் பிளாட்டில் இருப்பவர்கள் ஊரில் என்ன சரத7 என மேல் பிள7ாட்டில் வசிப்பவர்கள் தூண்டித்துரண்டி விசாரிப்பார்களாம். பக்கத்து விட்டில் வசிப்பவர்களுக்கு தங்கள்
gefiðLDAT -13 தை -2001

ஒறிஜினல் சாதி தெரிந்துவிடக்கூடாது என நினைத்துப் பயந்து பயந்து ஒடுங்குவார்கள் இந்தப் பக்கத்துவிட்டார். அவர்களோ? அவர்கள் அந்தப்பகுதி ந7ங்கள் போக்கு வரத்தெல்லாம் அவர்களே7. வைச்சுக்கொள்ளுறதில்லை/67னப் பெருமைப்பட ஜம்பமாகத் தமது உயர்குலத்துத் தூய்மையை பிரகடனப்படுத்துவ/7ர்கள77ம், இன்னொருசார7ர். ஊரில அவையளின்ர விட்டுக்கெல்ல7ம் போய்நாம செம்புத்தண்ணிதுரக்குறதில்ல!-இதுவேறோரு
&(42, புலம்பெயர்ந்து அதனால் தங்களது இருப்பை இலக்கியத்தின் முலம் வெளிப்படுத்த நினைக்கும் எழுத்த7எ7ர்களையும் இந்த உயர்குல வருணாச்சிரமத் தர்மப் பிரச்சனை விட்டுவைக்கவில்லை. ட்ரம்ம குலத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டனுக்குப் போயும் அகதி அந்தஸ்தில் தன்னை ஒருவராகப் பதிந்து கொண்டிருந்த போதிலும் கூட அய்யர் என்ற வாலை ஒட்டிய வண்ணமே பவனி வந்துகொண்டிருக்கிற7ர் என ஒரு இலக்கிய நண்பர் சமீபத்தில் எனக்குச் சொல்லி வருத்தப்பட்டார். புலம்பெயர்ந்து அகதிநிலை ஏற்பட்ட போதிலும் கூட ப்ரம்ம, வடித்ரிய, வைசிய, குத்ர, பஞ்சம என்ற வர்ணாசிரமப் படிநிலை அப்ரோப்பாவில் இன்று கைக்கொள்ளப்படுகின்றது, நம்மவர்களால் எத்தனை பெரிய கொடுமை இது! இப்படியே விட்டால் அங்குள்ள வெள்ளைக்காரனையே சாதி பிரித்து விடுவார்கள் (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் பக். //2)
புகலிட்த்தில் சாதிவேறுபாடு குறைவு என்ற உங்கள் வாதத்திற்கு சப்போட்டாக ஒரு இளைஞனைக் கூட்டிவந்து அவன் சாதி சாதி என்கிறார்களே! அப்படி என்றால் என்ன? அது adidae, Nike, போலவா? என்றுகேட்டான், என்கிறீர்கள். சாதி என்றால் என்னவென கற்பனையே பண்ணமுடியாதவர்கள் புகலிட இளம் சந்ததியினர் எனஅறிந்ததாகவும் சொல்கிறீர்கள். உங்களின் அறிதல் முறையே மிகவும் அப்பாவித்தனமாக இருக்கிறது. சாதியை ஏன் கற்பனை பண்ணவேண்டும்? அதுதான் நிசத்தில் புகலிடத்தில் இரத்தமும் சதையுமாக ஆடுகிறதே. முலைக்கு முலை இந்துக்கோவில்களும், ஒலிபரப்பாகும் புலம்பெயர் சைவவானொலிகளும், ஆதிக்க சாதியினரின் இலக்கியப் பிரதிகளும், வெளியீட்டு நிறுவனங்களும், வீரகேசரி, தினக்குரல் மணவிளம்பரங்களில் அகதி இந்து ! கிறிஸ்தவ வெள்ளாளப் பயல்கள் போடும் ஆட்டமும் இந்த இளைஞனுக்கு சாதியத்தை அறிமுகப்படுத்தாமலா விடப்போகின்றன?
அடுத்ததாக இலங்கையில் நடந்தது சாதி ஒழிப்பு போராட்டம், ஆனால் இந்தியாவில் நடந்தது, நடப்பது சாதி சமத்துவப்போராட்டம் என்றொரு கருத்தை முன்வைக்கிறீர்கள்.
அது பாருங்கள் பாரதி, இழி குலத்தவர்களேனும் எம்மடியார்களாகில் தொழுமின், கொடுமின், கொள்மின், ரின்மீன்' என்றும் குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கடவுள் முன் சகல சாதியும் சமமே என்றும் பாடிய ஆழ்வார்கள், குலத்தொழிலை கற்றுக்கொள்ளுங்கள் குலத்தொழிலில் இழிவு இல்லை என குலக் கல்விமுறையை கொண்டு வந்து பெரியாரிடம் ஏச்சு வாங்கின ஆச்சாரி ஆகியோர் செய்ததுதான் சாதி சமத்துவத் திட்டம்.
ஆனால், ஜோதிராவ் பூலே, அம்பேத்கார், அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் போன்றவர்களும் அவர்களின் இயக்கத்தினரும் இன்றைய தலித் போராளிகளும் சாதி ஒழிப்பை குறியாக வைத்து இயங்கி வந்தனர், வருகின்றனர். அம்பேத்கார், பெரியார் பிரதிகளிலே அவர்கள் குறி சாதி ஒழிப்பே என்பது தெட்டத் தெளிவாக விளக்கப்படுகின்றது. நிலைமை இப்படியிருக்க இந்தியாவில் நடந்தது சாதி ஒழிப்புக்கான போராட்டம் அல்ல என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்?
அம்மா -13

Page 35
உங்கள் கடிதததில் நீங்கள் சுட்டியவாறு எக்ஸில் சஞ்சிகையினர் நீதிமன்றத்திற்கு செல்வதாக அறிவித்திருந்தததை நீங்கள் கண்டித்திருந்தீர்கள். இந்த விடயத்தில் மட்டுமே நான் உங்களோடு உடன்படுகிறேன்.
கடந்த காலங்களில் அதிகாரம், மையங்கள் இவற்றிற்கெதிராக மிக உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்து மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்து போராடி வந்த எக்ஸில் ஆசிரியர் குழு வெள்ளை முதலாளிய நீதிமன்றத்தை அணுகப்போவதாக கூறுவது மிகவும் வருந்தத்தக்கது. எக்ஸில் ஆசிரியர் குழு தங்களின் இந்த முடிவை கட்டாயமாக மாற்றிக்கொண்டாக வேண்டும்.
மேலும், காலச்சுவட்டிற்கும் பல வணிக நிறுவனங்களிற்கும் உள்ள தொடர்புபற்றி நியாயமான கேள்வியை அ. மார்க்ஸ் எழுப்பினாலும் அ. மார்க்ஸ் குமுதம் தொடர்புபற்றியோ அல்லது அ.மார்க்ஸ் கோழிப்பண்ணை தொடர்புபற்றியோ கேள்வி எழுப்புவதில்லையே! அது ஏன்? என்றொரு சித்தாந்தக்கேள்வியையும் கேட்டிருந்தீர்கள்.
இந்த இடத்தில் காலச்சுவட்டிற்கும் வணிக நிறுவனங்களிற்கும் உள்ள தொடர்பு குறித்து எழும் கேள்வி நியாயமானதே என்று ஏற்றுக்கொள்ளும் உங்கள் நேர்மைத் திறத்திற்காக உங்களை நான் கொண்டாடுகிறேன்.
ஆனால், குமுதம் குறித்து அ.மார்க்ஸ் எக்ஸில் இதழின் நேர்காணலில் ஒரு அரைப்பக்கத்திற்கு தெளிவுபடுத்தியபின்பும் அதுபற்றி மார்க்ஸ் கேள்வி எழுப்பவில்லையே என நீங்கள் அறம்பாடுவது ஏன் எனத் தெரியாமல் திண்டாடுகிறேன். நிறப்பிரிகையின் பக்கங்களில் வாங்கிச் சாப்பிடுவீர்கள் வேல்சாமி மார்க் முட்டைகள் என்று விளம்பரம் வருவதில்லையே, நிறப்பிரிகை கூட்டுவிவாத அரங்குகளின் பின்னணியில் முட்டைக்கடை விளம்பரத்தட்டி கட்டப்படுவதில்லையே! கோழிச்சின்னம் பொறித்த நினைவுச்சின்னங்கள் கட்டுரையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லையே! எனவே அ. மார்க்ஸ் கோழிப்பண்ணை தொடர்பு குறித்து நீங்கள் எழுப்பிய கேள்வியின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்தவேண்டி உங்களிடம் மன்றாடுகிறேன்.
அன்பே பாரதி ! 'உங்களின் பிராமண எதிர்ப்பிலும் ஒரு பாசிசத் தன்மை உள்ளது என அ. மார்க்சை பாசிஸ்டாக இனம் காணும் நீங்கள் இதை எப்படி நிறுவப்போகிறீர்கள் என அறியவும் ஆவலாயுள்ளேன். நீயும் ஒரு பாசிஸ்ட்என ஒரு ஒற்றை வரியை உதிர்ப்பது வலுசிம்பிள் அ. மார்க்சிடம் எப்படி பாசிசத்தன்மை உள்ளது என நீங்கள் விளக்கியே ஆகவேண்டும். இப்படித்தானா முன்பும் தமிழ்த்தேசியம் பாசிசம் என்று ஒற்றை வரியில் சாபம் விட்டு ஒப்பேற்றினிர்களா? என்பதையும் அறிய அவா.
நீங்கள் பார்ப்பன என்ற சொல்லாடலை விடுத்து பிராமண’ எனும் சொல்லாடலை உங்கள் கடித இலக்கியத்தில் பிரயோகிப்பதற்கான காரணம் என்ன?
இறுதியாக, நீங்கள் எப்படித்தான் இங்குள்ளவர்களை தாஜா பண்ணி எழுதினாலும் இம்முறை அவர்கள் உங்களை அய்ரோப்பாவுக்கு அழைப்பதாக இல்லை என்று மார்க்சை கேலிபேசி வக்கிரமாய் கொக்கரித்திருந்தீர்கள்.
அன்பே பாரதி! தமிழ்ச்சூழலில் அ. மார்த்தின் சிந்தனை, போராட்ட பங்களிப்புகளை
pitfit of -13 தை -2001

அறியாதவரல்ல நீங்கள். அ. மார்க்சின்மீது கடும் விமர்சனங்களை வைத்திருக்கும் ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள் கூட அவரின் பங்களிப்புகளை மறுப்பதில்லை.
குறிப்பாக புலம்பெயர் இலக்கிய - அரசியலில் அ. மார்க்சின் சிந்தனை செலுத்திய தாக்கங்கள் முக்கியமானவை. நிறப்பிரிகை இதழ்கள் அ. மார்க்சின் நூல்கள் எல்லாம் புகலிடத்தில் செலுத்தும் தாக்கங்கள் அளப்பரியன.
அந்தவகையில் கருத்தரங்குகள் நடத்துவதற்காக அ. மார்க்சை நாங்கள் அழைத்திருந்தோம். இனியும் அழைப்போம். அய்ரோப்பாவுக்கு வருவதற்காகத்தான் அ.மார்க்ஸ் சிலரைத் தாஜா பண்ணி எழுதுகிறார் என்று நீங்கள் எழுதியிருப்பது அ. மார்க்சின் மொத்த அறிவு உழைப்பையும் போராட்டங்களையும் கொச்சைப்படுத்துவதாகும். எமக்கும் மிகுந்த மனவேதனையை தருவதாகும்.
அவ்வாறாக நீங்கள் மார்க்சை கேலிபேசி சிரித்து எழுதியது தவறு என்பதை 27வது இலக்கியச்சந்திப்பில் சாருநிவேதிதாசுட்டிக்காட்டியபோது அது குறித்து நீங்கள் மெளனம் காத்திர்கள். பின்பு சின்னத்தனமாக உங்கள் ஆண்குறியை எங்களுக்குக் காட்டுவீர்களா என சாரு நிவேதிதாவை கேலி செய்திர்கள். இதற்கும் சிலர் பல்லைக்காட்டினார்கள்.
சுந்தரராமசாமியும், பிரசன்னா ராமசாமியும், இந்திரா பார்த்தசாரதியும், அம்பையும், மங்கையும் புகலிடத்துக்கு வந்து மீற்றிங் செய்து போகையில் மெளனமாய் கிடந்து மகிழ்ந்த மனிதர்களுக்கு இப்போது நாம் அ. மார்க்சையும், சிவகாமியையும், சாருநிவேதிதாவையும் கருத்தரங்குகளுக்காக அழைக்கும் போதுதான் வயிற்றைப்பத்தி எரியுது, குத்துது, குடையுது, உறுத்துது, முறுக்குது, நக்கல் வருகுது, நளினம் வருகுது, அவர்களுக்கு கண்டறியாத சிரிப்பும் வருகுது.
- ஷோபா சக்தி
தொடர்புகளுக்கு
ShobasakthiGhotmail.com SenannGDhotmail.com
மொழி. மொழியின் தளத்தில் மையத்தில் இருந்து அந்த மொழியின் சகல ஆற்றல்கள் வழியாகவும் இலக்கணம், இலக்கியம், சிந்தனை மரபு முதலியவற்றின் தளத்தில் தங்கள் வல்லாண்மையை - அதிகாரத்தைச் சாதித்துக்கொண்ட நிலை நிறுத்திக்கொண்ட இந்த உயர்ந்தோர் யார்?
- தி. சு. நடராஜன்
stitor -13

Page 36
பரலோக வழி
5Tசக்திச் சாம்பான்
எறந்தது நேத்து வெள்ளனங்காட்டி,
சூரியன் சிதறிக்கெடந்த கூரைத் தரைக்குள்ள மல்லாந்து கிடந்தாரு கிழிஞ்சப்பாய்மேல.
வயசாகிப் போயிருந்ததால வழக்கமானச் சாவுதான்.
பொஞ்சாதிக் கிழவியும் பிள்ளைக் கொமருகளும் நெனைச்சிநெனைச்சி அழுதாவ நீர்ப்பொங்க.
ஊர்வெளுக்கும் வண்ணமுத்து கண்ணிர்ச்சலவையோட கிட்டக்க வந்துநின்னாரு.
எப்பேர்க் கொத்த மனுசரு சப்புன்னுப்போயிட்டாரே.
அடிக்கடி எசக்கியோட சாராயக்கடை அளக்கும் சங்கிலிச் சுப்பன்.
தருமங்க. சாவுக்கொரு சாக்காலமில்லியே
மாசத்துக்கு ஒரு தடக்க பறத்தெருவ
மொட்டையடிக்கும் சடையாண்டிநாவிதரு.
சடைஞ்சி ஒருவார்த்தச் சொல்லுவாராமனுசரு அடைங்சிப் போயிட்டாரே'
மக்க மனுசருங்க அசலுரு உள்ளுருன்னுத் தொலப்பாக்காம வந்துதவிய பக்கமாய்நின்னு ஒப்பாரிச் சிந்தினாவ.
பேரம் பேத்தி எடுத்துப் பெருமிசமா வாழ்ந்தவரு பரலோவத்திலப் பவிசா இருக்கட்டும்
O
பாவப்பட்ட சனங்கயெல்லாம் மால போட்டுதுவ
6L6)
கொள்ளிக்கலயம்துக்கிநின்னப் புள்ளங்க கழுத்தைச்சுத்தி முப்புரிபோட்டுச்சுது முப்பு ஒண்டு.
பறப்பசங்களப் பிராமணங்களாக்கிது
g)3
அவிய பரலோகம்போவுதவரைக்கும்
-அபிமானி
-9Lbidir -13
தை -2001


Page 37
தொழிலாளியாகிய நான்
சஒரன்
அந்தச் சிவரச்சாலையைச் சர்வகலாசாலையாக நினைத்தேன். செயலில் இறங்கினேன். அந்தச் சலூனுக்குள்ளேயே இலக்கியத்தரமான மல்லிகை என்ற மாசிகையை வெளியிட்டு வைத்தேன். அதன் ஆசிரியராகவும் பிரகடனப்படுத்திக்கொணர்டேன்.
ஆலய உள்நுழைவுப்போராட்டம், தேனீர்க்கடைப்பிரவேசம், மனிதஉரிமைகளை வெண்றெடுக்கும் நேரடி நடவடிக்கைகள் நடைபெற்றுமுடிந்த காலகட்டப்பின்னணிச்சூழ்நிலையில் மள்விகை மாசிகை ஒரு சவரக்கடைக்குள் அதுவும் ஒரு சிகை அலங்கரிப்புத்தொழிலாளியை ஆசிரியராக முகப்பில் பெயர்பதித்துக்கொண்டு வெளிவந்துள்ளதென்றால் அந்தச்செயல் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடொன்றில் நடந்த அதிசயச் சம்பவமல்ல,
 

(3)
தலித் என்ற சொள் மிகமிக வலிமைவாய்ந்தது. ஆழமானது. அகலமானது அர்த்த புடிைவாய்க்கப்பெற்றது. இந்தச்சொல் ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட பஞ்சப்பட்டதாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொப்லரசு - இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக - இது புழக்கத்தில் வந்துவிட்டது.
இந்த தவித் என்ற சொல்லின் விரிவும், வீரியமும் மராட்டியத்திலும், கன்னடத்திலும், ஆந்திரத்திலும், பரவலாக தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உண்ர்ப்பட்டு வந்துள்ளது. இதன் உள்ளடக்கக் கருத்துப்பவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது.
அந்தச்சொல்லின் வலிமை என்னையும் ஆட்கொண்ட காரணத்திலாலேயே நாள் எனது சுயசரிதையை நூலாக எழுதி வெளியிடமுன் வந்தேன்
-நாங்களும் மனுசங்கடா.
தலித் இயக்கம் சுற்றுத்தந்த மூலமந்திரம் இது.
- டொமினிக்ஜீவா சுயசரிதையிலிருந்து.