கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1997.05

Page 1
இளவேன
 

si) - 1997

Page 2
அறம், பொருள், இ
அடையலாம் திறம்படச் சொன்னா தேடினால் நக துறந்து நாயகியின்
குழந்தை ஒன் அறம் எனப் பொருே
960)Luj6)Tib
T (Tam) Royal Le Page | 4OO2 Sheppa Suit
Scarborou
(905) 29, (416) 80 (416) 293 19
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

爵 LDrfEELD
ன்பம் விட்டால் வீடென் ஒளவை ாள் - வீடு ரில், தேர்வீர்!
இன்பம் றேனும் இன்றி, ளை விட்டால் நகரில் வீடே
Sivathasan R.E. Services Ltd. rC AVenue East е 4O3, Igh, Ontario.
49288 Res 4 3443 Cell 92 Pager 24 Hrs

Page 3
sm Ga)tb11 இளவேனில் 1997
ஆசிரியர்
செல்வம்
இணையாசிரிய
ஆனந்தபிரசாத்
வெளியிடுபவர்
குமார் மூர்த்தி
விளம்பரங்கள்
ராஜ9
அச்சுப்பதிப்பு
தர்ஷன்
வடிவமைப்பு டிஜி கிராபிக்ஸ் அன்ட் ஸ்ருடியோஸ்
எழுத்து உருவமைப்பு ஹரன் கிராப்(F)
அட்டைப் படத்தில் “கருக்கல் வெளியும் காத்திருப்பும்"
Kalam P.O. Box 7305 5O9 St. Cloir Ave.VV Toronto, ON M6C CO
-
நோக்கமும் பெரும்பான் "மேதாவிக
இவை ே நோக்கினா ஆரம்ப க ஊன்றிச் சி பின்னர் ெ வரும் சந்ே அதற்காகத் விஞ்ஞானக்
அதே பே பொறிகளை கண்டு கெ படும் உ அவற்றுக்க *குமுதம்” போன்றதே
படிக்கவும்
spasib LJU விளைவை'
தழலையும், தான் எந்த
புலம் பெய இனிமேல் கட்டத்தில் பெருமை அ
፰. ጥa 27
Гот
Tet:
காலம் இளவேனில் 1997 !--
 

காலமும் கருத்தும்
ர கலை இலக்கிய முயற்சியில் ஈடுபடுபவர்களைப் பற்றியும், தீவிர லை இலக்கியங்களையும் பற்றியும் சில நேர்மையான விமர்சனங்கள் டைக்கிடை வைக்கப்படுகிறது. அவற்றை எதிர்கொள்வதும், வற்றுக்குப் பதில் அளிப்பதும் அவசியம். அவ்விமர்சனத்தில் னவை; சிறிய குழுக்களால் சிறிய தொகையினருக்காக சிறு களில் வெளியிடப்படும் எழுத்துக்கள். பெரும்பான்மையான ால் வாசிக்கப் பட முடியாதவை. வாசிக்க வேண்டும் என்ற இல்லாத எழுத்தாளர்களால் சிக்கலாக, தெளிவில்லாமல், மையினரைத் தொடாத விசயங்களை, மெத்தப் படித்தவர்கள், ள்' மட்டுமே வாசிப்பார்கள் என்ற கருதுகோளுடன் எழுதப்படுபவை.
மலெழுந்தவாரியாக உண்மையாக இருந்தபோதிலும் ஆழமாக ஸ் அது உண்மையல்ல என்பது புலப்படும். எந்தக் கருத்துமே ட்டத்தில் சிக்கல் நிறைந்ததாகத் தான் தோன்றும் அதைப்பற்றி ந்திக்க, சிந்திக்க “பூ இது தானா? இது சின்ன விசயமாச்சே என்று சால்லத் தோன்றும். கேத்திரகணித தேற்றத்தை நிரூபித்த பின் தாசத்தையும் தன்னையே நொந்து கொள்வதைப் போன்றதே இது. கேத்திகணிதமே உதவாது என்று சொன்னால் எமது கட்டிடங்களே கண்டு பிடிப்புக்களே உதவா என்பது போலாகி விடும்.
ாலவே, ஒரு சமூகத்தின் அறிவு சார்ந்த கலை சார்ந்த ஒளிப் இவர்களே ஆரம்பத்தில், அறிவு மூலமோ, உள்ளுணர்வு மூலமோ, ாள்கின்றனர். அத்துடன் அதற்கான களத்தில் அவை வெளியிடவும் யர் விஞ்ஞான, கணித, மருத்துவ, பொறியியல் கட்டுரைகள் ான சஞ்சிகைகளில் வெளி வரும். அவற்றை 'ரைம்” “நியுஸ் வீக்' ஆகியவற்றில் பிரசுரிக்க முடியாது. பிரசுரிக்கவும் மாட்டார்கள். அதே இதுவும். பின்னர் அவை பற்றிப் பலரும் பேசவும், சிலர் அவற்றைப் வேண்டும் என்று எண்ணி படிக்கவும் முன் வருவர். அதனால் அந்தச் ன் பெறுவதும், முன்னேறுவதும் அடுத்த கட்டம். அது ஒரு "சிற்றலை
ஈற்றில் கொண்டு வரும்.
மரபையும், உள்வட்டப் பரப்பையும், பெருக்கத்தையும் வைத்துத் ச் சமூகமும் பெருமைப் பட முடியும்,
ர்ந்த படைப்புக்கள் என அழைக்கப்படும் இன்றைய முயற்சிகள் கனடா தமிழ் இலக்கியம் என அழைக்கப்படும் ஆரம்ப கால நிற்கிறோம். அதன் வரவுக்கு 'காலம்' வழி சமைக்கிறது என்பதில் ைெடகிறது. མ་
- செல்வம்
Ethmanaba Iuer B High Street Plaistov don E13 OAD O2O 84.728.323
' ' '

Page 4

காலம் சஞ்சிகையின் ஆதரவில்
"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே! "
இ சங்ககாலம் தொடங்கி
நேற்றுவரை தமிழ்ப்புத்தகங்களின் ஒரு பகுதியின் கண்காட்சியும் விற்பனையும்
இதரமான சர்வதேச
சினிமாக்களின் ஒளிநாடா விற்பனை
இ பாரம்பரிய இசை நாடாக்களின்
விற்பனை
இ தமிழ்நாடு அறக்கட்டளையினரின் (அமெரிக்கா) தமிழ் பண்பாட்டுக் கண்காட்சி
28-06-1997
St. Colomba Church LD6TLLILD 2723 St. Clair Ave. East (St. Clair & O'Connar)
தொடர்புகளுக்கு Kalam
P.O. Box. 305 509 St. Clair Ave. W T_r=rile, (Cho MAC CO
പ് காஸ்ம் இளவேணில் 1997

Page 5
நான் ஏன் இன்னும் துாங்காமல் இருக்கிறன் எண்டு எனக்கு வியப்பா இருக்கு. ஏன் எனக்குத் தெரியாது எண்டு எனக்குத் தெரியாது” ܙ
மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டம் பற்றிய ஆய்வை தன் இலக்கியங்கள் ஊடாக வெளிக் கொணர்ந்தவர் சாமுவேல் பெக்கற். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கும், ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கும், ஒன்றிலிருந்து பிறி.ெ
தான்றுக்குமான தொடர்புகளை இவர் கருவாக்கினார். இதன் காரணமாக இவரது நாடகங்களில், நாவல்களில் கதை என்று பெரிதாக எதுவும் இருக்காது. நீண்ட உரையாடல்களாகவே அமைந்திருக்கும் 1906 ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த சாமுவேல் பெக்கற் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரான்சில் குடியேறி அங்கேயே கடைசி வரை வாழ்ந்து வந்தார். 1969 ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற 26Jg5 (yp56NYT6Ng5 BITL&sub 55/T6ør Waiting For Godot. Lig Tøífuu மொழியிலான இம்மூலத்தை பெக்கற்றே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். இந்நாடகம் ஞானம் லம்பெட் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "கருக்கல் வழியும் காத்திருப்பும்" எனத் தலைப்பிட்டு மனவெளிக் கலையாற்றுக் கழகத்தினரின் அரங்காடல் 3ல் மேடையேற்றப் பட்டது. இந்நிகழ்வு நோர்த் யோர்க் வாசிகசாலை அரங்கில் மாசி 22, 97 ல் இடம் பெற்றது.
நவீன நாடக ஈடுபாடும், தீவிர நாடகப் பிரக்ஞையும் உடையவர்களால் நடாத்தப்படும் மனவெளி கலையாற்றுக் கழகத்தினர் அரங்காடல் 1, 2, இல் விட்டு விடுதலையாகி” "மறையாத மறுபாதி" "அபகரம", "இரு துயரங்கள்", ஆகிய நாடங்கங்களை மேடையேற்றி இருந்தனர். இவற்றில் மொழிபெயர்ப்பாலும், மேடையேற்றத்தாலும், நடிப்பாலும் சிறப்பாக அமைந்தது இரு துயரங்களே" எதிர்மாறாக "மறையாத மறுபாதி” இருந்த போதிலும் அதன் இரண்டாவது மேடையேற்றம் ஓரளவு வெற்றி பெற்றது. "அபகரம்” குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டிய மேடையேற்றம் ஆகும். "விட்டு விடுதலையாகி" ஐ
- காலம் இளவேனில் 1997 ! -

நாடக விமர்சனம்
கருக்கல்வழியும் காத்திருப்பும்
Waiting For Godot Samuel Beckett
விட்டு விடலாம். அரங்காடல் 3ல் மேடையேற்றப் பட்ட கருக்கல் வழியும் காத்திருப்பும் இரு அங்கங்களாக ஏறத்தாள மூன்றரை மணித்தியாலங்கள் மேடையேறியது. இது ஒரு அபத்தவகை நாடகமாகும். இந்திரா பார்த்தசாரதியின் “ኒuá]” , நா.சுந்தரலிங்கத்தின் "அபகரம்” ஆகியன தமிழில் எழுதப்பட்ட அபத்த வகை நாடகங்களாகும். இவ்வகை நாடகங்கள் தமிழில் பெரிதாக எழுதப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். பாலேந்திராவின் நாடகங்களும், தாசீசியசின் நாடகப் பட்டறையும் ஏற்படுத்திய தாக்கம் இம்மண்ணில் நாடகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விசயமே.
கருக்கல் வழியும் காத்திருப்பும் என்ற இந்நாடகத்தில் நைனா, வெளுத்தி, என்பன தங்களுக்குள் குழம்பிய இரு முக்கிய கதா பாத்திரங்கள் இருவரும் ஒரேவித சூழ்நிலைக்கு உட்பட்டிருந்தாலும் அவ்விரு பாத்திரங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. நைனா உரத்த சிந்தனையாளன். ஒரு கலாச்சாரவாதி. பொறுப்புமிக்கவன். சுறுசுறுப்பானவன். ஆனால் அமைதி குலைந்தவன். உரையாடல்களில் உத்தரவிடுகிற தன்மை இருக்கும். வெளுத்தி எதையும் மறுக்கிற தன்மை உடையவன். மந்த குணம் கொண்டவன். சோம்பேறி, ஆனால் இயல்பானவன். இருவரும் அவர் என்பவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் காத்திருப்பினால் ஏற்படும் துன்பத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். நாடகத்தில் அவர் 62([სნ குறியீட்டுப் பாத்திரமாகும். ஆனால் கற்பனைப் பாத்திரம் அல்ல. நாடகத்தில் இறுதி வரை காத்திருந்த அவர் வரவில்லையாயினும், மேடையில் தோன்றா அப்பாத்திரத்தின் மூலம் எம்மிடையே உள்ள வெறுமையை நிரப்புகின்ற தன்மை இந்நாடகம் முழுவதும் இழையோடுகிறது இது நாடகத்தின் சிறப்பு
மாறாக, உரையாடல்கள் மூலமாக ஒரு நம்பிக்கையையும், கதவைத் தட்டும் வரை காத்திருக்காதே என்ற வாழ்வியலையும் வாழ்வில் ஒரு எதிர்பார்ப்பையும், ஒருவித ஆதங்கத்தையும் உண்டாக்கிய போதிலும் முடிவாகத் தற்கொலை செய்து கொள்ளலாம் இரு தடவைகள் என்ற தீர்மானத்துக்கு இருவரும் வருவது இந்நாடகப் பிரதியின் துயரமாகும். நாடகம் தொடங்கிய கணத்தில் இருந்து இருவரும் பயம் கலந்த ஒருவித துக்கத்தை உரையாடல்கள் மூலம் கொண்டு வருகிறார்கள். கடந்த காலத்தைப் பற்றிக் கதைப்பர். ஒருவருக்கொருவர் உதவியாக
ך 3 ח لکسا

Page 6
இருக்கிறார்கள். பொழுதை நகர்த்தி செல்ல கிடைக்கின்ற எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார்கள். உடற்பயிற்சி செய்தல், நடனமாடல். எறியப்பட்ட எலும்புத் துண்டை உண்ணுதல் போன்றன இவ்வாறான சம்பவங்களே. நைனா, வெளுத்தி ஆகியோரின் வசனங்கள் மிகச் சிறியனவாக ஆனால் நீண்ட தொ. டராக இருப்பதனால் நடிகர்கள் சிரமத்துக்குள்ளாக வேண்டி வரும் மேடையேற்றத்தின் போது சில பகுதிகள் திரும்ப நடிக்கப்பட்டது இதனாலேயே ஆகும் மேலும் இரண்டும் முரணான பாத்திரங்கள் என்பதனால் மறந்தும் கூட ஒருவரது வசனத்தை மற்றவர் பேச முடியாது. பேசினால் பாத்திரத்தின் தன்மை கெட்டு விடும் அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பிலும், நைனா, வெளுத்தியின் நீண்ட உரையாடல்கள் மூலம் ஏற்படும் ஒரு தொய்வு நிலையிலும் பார்வையாளர்கள் உள்ள போது மேடையில் இரண்டு பாத்திரங்கள் தோன்றுவர். இருக்கை, பொதி, சவுக்கு போன்றவற்றை கூனிக் குறுகிக் காவும் அடிமை லக்கி அவன் கழுத்தில் கட்டப்பட்ட மிக நீண்ட கயிறின் மறுமுனையைப் பிடித்தவாறு அவனை அதட்டிச் செல்லும் ராசா. இப்பாத்திரங்கள் மூலமாக uDTøfl-g தொடர்புகளையும், பிணைப்பின் வேறுபாடுகளையும் ஆசிரியர் காட்ட முயல்கிறார். ஏனெனில் நாடகத்தின் இரண்டாவது அங்கத்தில் ராசா குருபாகவும், இணைக்கப்பட்ட கயிறு குறுகியதாகவும் இருப்பதோடு அல்லாமல், தற்போது ராசா லக்கியை அதட்டிச் செல்லாமல் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறார்.
இந்நாடகப் பாத்திரங்களும் சளி, பார்வையாளர்களும் சரி, அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ஆயினும் அவரைக் கண்டு கொண்ட ஒரு பாத்திரம் உண்டு என்றால் அது லக்கி பாத்திரம் தான். அவனுக்கு ராசாவே எல்லாமாக இருக்கின்றார். ராசாவுக்காக அவன் எல்லாவற்றையும் சுமக்கின்றான் -எதையும் சுமக்கத் தயாராக இருக்கின்றான். ஆடுகின்றான். பாடுகின்றான். இவை தவிர பையன் என்ற பாத்திரமும் நாடகத்தில் வருகிறது. மேலும் மரம், சப்பாத்து, தொப்பி, சவுக்கு, கயிறு என்பனவும் நடிக்கின்றன. நா.சுந்தரலிங்கம் அவர்களின் குறிப்பின் படி அபத்த நாடக நடிகர்கள் பேசும் வசனங்களில் நூற்றுக்கு நூறு விதம் நம்பிக்கை உள்ளவர் போன்ற தன்மையோடு பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, பேச்சில் சிறிதளவு செயற்கைத் தன்மையும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதன் படி நோக்கின் பொதுவாக எல்லா நடிகர்களுமே ஓரளவுக்குச் சிறப்பாகச் செய்துள்ளனர். நைனா டிலிப்குமார், வெளுத்தி - சபேசன், ராசா - பாபு, லக்கி - பாலே, பையன் - கிர்த்தனன் ஆகியோர் நடித்திருந்தனர். டிலிப்குமார் மறையாத மறுபாதி நாடகத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். ஒரு நாடகத்தின் முக்கிய பாத்திரம் உயர்ந்த வாட்ட சாட்டமாக, உரத்த இனிய குரல் வளம் கொண்டவராக இருக்க வேண்டும என்ற பாமரத்தனத்தை உடைத்தெறியும் அளவுக்கு இயல்பான, இலாவகமாக நடிப்புத்தன்மை கொண்ட கலைஞர். மேலும் ஒரு சிறிய வசனமும், ஒரு மிக மிக நீண்ட வசனமும் மட்டுமே பேசி, வெறும் மெளன நடிப்பால் கவர்ந்த லக்கியின் நடிப்பும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதே. இந்த மேடையேற்றத்தில் சில குறைபாடுகள் உள்ளன. நாடக ஆரம்பத்தில் பார்வையாளர்கள் ஊடாக நைனாவும் வெளுத்தியும் ஆறுதலாக நடந்து வருவது புதுமை போல் தோன்றினாலும் அது நாடகத்துக்கு முரணாக உள்ளது. நீண்டதொரு பயணத்தில் களைப்பாறும் இடம் என்றால் சரியாக
4

இருக்கும். ஆனால் நாடகக் கதை அப்படியல்ல. அவர்கள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள். கதை மரத்தின் அடியிலிருந்தே ஆரம்பத்திருக்க வேண்டும். ஏனெனில் முதல் அங்க முடிவிலும் நாடகத்தின் இறுதியிலும் சரி போவோம் என்று சொல்வார்களே தவிர போக மாட்டார்கள் காரணம் காத்திருப்பு ஆகவே போகாதது சரியாக இருப்பதால் ஆரமப்த்தில் நடந்து வருவது பிழையானதாகும்.
வசனங்களுக்கிடையே தாராளமாக நேரம் விட்டு பேசியதாலும், சில பகுதிகள் திருப்பச் சொல்லப் பட்டதாலும் நாடகம் நீண்டு செல்லவும், அதன் காரணமாக தொய்வு ஏற்படவும் செய்தன. நடிகர்கள் வசனங்களை மனனம் செய்யாதது இதன் பிரதான காரணம் இந்நாடக வசனங்கள் அபத்த வகையில் இருப்பதாலும் சிறிய சிறிய வசனங்களாக இருப்பதாலும் மனனம் செய்வதென்பது கடினமானதே. நாடகப் பிரதியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான விழுதலையும், எழுவதற்கான முயற்சியையும் நடிகர்கள் முற்று முழுதாக கோட்டை விட்டதற்குப் போதிய பயிற்சியின்மையும் மனனப் பிரச்சனையுமே காரணங்களாக இருக்க வேண்டும். உயிர் வாழ்தல் என்பதற்கான போராட்டம் பற்றிய நல்ல வசனங்கள் அப்படியே அடிபட்டுப் போயின. சில நடிகர்கள் மேடை முழுவதையும் பாவிக்காத தன்மை, ஒளியைப் பெரிதாக உபயோகிக்காதது போன்ற குறைபாடுகள் உள்ளன. மேலும் அவருக்காக காத்திருக்கிறோம் என்று நைனா சொல்லும் போது வெளுத்தி வெறுப்புடன் சத்தமிடுவதை இன்னும் கூடிய விளைவை உணர்த்தும் படி செய்திருக்கலாம். நல்ல நாடகங்கள் தமிழில் எழுதப் படாத நிலையில் இவ்வாறான மொழி பெயர்ப்புக்கள் அவசியமானதே. அந்த வகையில் இந்நாடகத்தை மொழி பெயர்த்து, நெறியாள்கை செய்து தயாரித்தளித்த ஞானம் லம்பேட் அவர்கள் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர். கூத்துவகையில் ஈடுபாடுடைய இவர் அவ்வகை நாடகங்களிலும் ஈடுபாடு கொள்வது இன்றைய உலகத்தின் தேவையாகும். இறுதியா, இந்நாடகம் விளங்கவில்லை, இன்னும் சில காலத்தின் பின் மேடையேற்ற வேண்டிய நாடகம் என்றெல்லாம் இடைவேளையின் போதும் நாடக முடிவிலும் பலர் கதைத்ததைக் கேட்க முடிந்தது. அவர் யார் என்று தலையைப் பிய்த்துக் கொண்வர்களும் உண்டு. உண்மையில் அபத்த நாடகங்கள் நேரடியாக விசயத்தைச் சொல்ல மாட்டாது. நாடகம் சொல்லும் விசயங்களை உங்கள் நினைவுக்கு, எண்ணங்களுக்கு, அறிவுக்கு ஏற்ற விசயங்களுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆகவே முழுவதும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை. நாடக ஆசிரியரே, ஒரு பாத்திரம் கேள்வி கேட்க மற்றப் பாத்திரம் எனக்கு தெரியாது என்று பதில் அளிப்பதாக எழுதுவது அபத்த நாடகங்களில் அதிகமாகக் காணப்படும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று உண்மையிலேயே ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்றது பதிலைச் சொல்வதன் மூலம் பார்வையாளகளின் சிந்தனா சக்தியை மட்டுப் படுத்த அல்லது மழுங்கடிக்க ஆசிரியர் விரும்பாதது. மேலும், காலம் கனியும் வரை இவ்வாறான நாடகத்தை மேடையேற்றாமல் விடுவது என்பது அவர்கள்
அவருக்காகக் காத்திருந்த கதையாகிவிடும்.
ப. ரீஸ்காந்தன்
------H காலம் இளவேனில் 1997 H

Page 7
O O
ஃபியடோர் டோஸ்ரோவெஸ்கி
நாள் காலை வேலைத் தலத்திற்கு நான் வெளிக் கிட்டுகொண்டிருந்த போது அக்ரஃபேனா - என் gPU உடுப்புத் துவைப்பவள், வீட்டு
வேலை செய்பவள் என்று எல்லாமானவள் - என் அறைக்குள் நுழைந்தாள். அவள் உரையாட ஆரம்பித்ததைக் கண்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. அவள் அமைதியானவள் எளிமையான மனம் படைத்தவள். அவள் என்னுடன் இருந்த முழுதான ஆறு ஆண்டுகளிலும் தினம் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்கு மேல் என்னுடன் பேசியே இருக்க மாட்டாள் அதுவும் என் உணவு சம்பந்தமானதாய்த் தான் இருக்கும் வேறு எப்பொழுதும் அவள் பேசியதை நான் கேட்டதே இல்லை. நான் வந்தது சேர்” என்று அவள் சடுதியாக ஆரம்பித்தாள். "சும்மா
- காலம் இளவேனில் 1997 |-
- ::: یعنبیہ د:: 8:'08,

கிடக்கிற அறையை வாடகைக்குக் கொடுப்பது பற்றித்தான் பேச வந்தேன்.” * சும்மா கிடக்கிற எந்த அறை?” குசினிக்குப் பக்கத்தில் இருக்கிறது தான். அதைவிட வேற
எது?” ஏன்? வாடகைக்கு எடுப்பவர்கள் பொதுவில் ஏன் எடுப்பார்கள்?" ஆனால் அதை ஆர் எடுப்பார்கள்? ஆர் அதை எடுப்பார்கள் வாடகை கொடுத்துத் தங்குபவன் தான். ஆர் அதை எடுக்க வேணும்?
என் தாயே அதில் ஒரு கட்டில் கூடப் போடக்கூட இடம் போதாதே! அது இட நெருக்கமாய் இருக்குமே அதில் ஒருவன் எப்படி வாழ முடியும்?
ஏன் அதில் வாழ வேணும்? அவனுக்குப் படுக்க மட்டும் தான் இடம் வேனும் அவன் ஜன்னல் விளிம்பில் வாழுவான்.
அது எப்படி? எந்த ஜன்னல் விளிம்பு? அது உங்களுக்குத் தெரியாத மாதிரி கூடத்தில் இருக்கும் ஜன்னல் விளிம்பு தான். அதில் இருந்து கொண்டு தைப்பான் அல்லது வேறேதாவது செய்வான். சிலவேளை கதிரையிலும் இருக்கலாம். அவனிடம் ஒரு கதிரையும் இருக்கிறது. ஒரு மேசையும் எல்லாம்.
ஆர் அவன்? நல்ல உலக அனுபவம் நிறைந்த ஒரு மனிதன். அவனுக்கு நான் சமைத்துப் போடுவன். அவனிடம் மூன்று வெள்ளி ரூபிள் வாங்குவன். அறைக்கும் சாப்பாட்டுக்கும் சேர்த்து.” அக்ரஃபேனாவிடம் முதிய மனிதன் ஒருவன் குசினிக்குள் தங்குவதற்கு இடம் கேட்டு வெற்றி பெற்றிருக்கிறான் என்பதை நீண்ட பிரயாசைக்குப் பிறகு கடைசியாகக் கண்டு பிடித்தேன். அக்ரஃபேனாவின் தலைக்குள் ஏதாவது ஒரு விசயம் அகப்பட்டுக் கொண்டால் அது நிறைவேறியே திரவேண்டும். அன்றேல் எனக்கு அமைதி சிடைத்து விடாது என்பது எனக்குத் தெரியும் அவள் விருப்பங்களுக்கு ஏற்றது போல விசயங்கள் நிறைவேறா விட்டால் உடனடியாக ஒருவகை யோசனையில் விழுந்துவிடுவாள். பெரிய சோகத்திலும் ஆழ்ந்து விடுவாள். அந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று கிழமைகள் தொடர்ந்து இருப்பாள். அந்தக் காலத்தில் உணவு நிச்சயமாகப் பழுதாகி இருக்கும். சில உடுப்புகள் தொலைந்து போய் இருக்கும் ஒரே வார்த்தையில் சொன்னால் பல அசம்பாவிதங்கள் நடந்திருக்கும். ஒரு சில வார்த்தைகளே பேசும் அந்தப் பெண் தன் சுய சிந்தனை அடியாக ஒரு முடிவுக்கும் வர முடியாத அல்லது முடிவுக்கும் வராதவள் என்பதைப் பல காலத்துக்கு முன்னரே உணர்ந்திருந்தேன். இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் அவளுடைய பலகீனமான மூளையில் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஏதோ ஒரு எண்ணமோ அல்லது விருப்பமோ வந்து விட்டால் அதைச் செய்வதற்கு எவராவது அனுமதி கொடுக்க மறுத்து விட்டால் அது அவளின் திடசித்தத்தைக் கொல்வது போலாகி விடும். அதனால் முழுக்க முழுக்க என் மன அமைதிக்காகவே அவளுடைய இந்த வேண்டுகோளுக்கு இணங்கினேன். "அவனிடம் குறைந்த பட்சம் பாஸ்போர்ட் அல்லது தேவையான பத்திரங்களாவது இருக்கா? “ "வேறெப்படி? அவனிடம் எல்லாம் இருக்கவே இருக்கு. அவனைப் போன்ற நல்ல மனிதனிடம் இல்லாமலா? அவன் உலகத்தைக் கண்டவன். ஒரு மாசம் மூன்று ரூபிள் தருவதாக வாக்களித்திருக்கிறான்."
5 --

Page 8
மறுநாளே புதிய விருந்தாளி என் எளிய தனிக்கட்டை குவாட்டர்சுக்கு முன் தோன்றினான். அவனைக் கண்டவுடன் நான் எந்த வகையிலும் எரிச்சல் கொள்ளவில்லை. மாறாக, ஒரு வகையில் சந்தோசமே எய்தினேன். நான் மிகத் தனியனாக, சந்நியாசியைப் போலவே வாழுகிறேன். எனக்குத் தெரிந்தவர் ஏறக்குறைய எவருமே இல்லை. நான் வெளியே போவதும் குறைவு. பத்தாண்டுகளாக காட்டுச் சேவலைப் போன்ற இருப்பை ஒட்டிய எனக்குத் தனிமை இயல்பாகவே பழக்கப்பட்டு இருந்தது. ஆனால் பத்து, பதினைந்து ஆண்டுகளாகவோ அல்லது அதற்கு மேலோ அக்ரஃபேனா போன்ற ஒருவருடன் சேர்ந்து ஒதுங்கி தனிக்கட்டை வாழ்விடத்தில் கிடப்பது அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாக எதிர்பார்த்திருக்கும் ஒன்றல்ல. ஆகவே, இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு அமைதியான இடைஞ்சல் இல்லாத மனிதன் இந்த விட்டில் பிரசன்னமாய் இருப்பது உண்மையில் ஒரு வரப்பிரசாதமே.
அக்ரஃபேனா உண்மையே சொல்லி இருந்தாள். அந்த விருந்தாளி தன் வாழ்க்கையில் உலகத்தை அதிகம் பார்த்திருக்கிறான். அவன் இளைப்பாறிய இராணுவத்தான் என்பது அவனுடைய பாஸ்போர்ட்டைப் பார்க்க முன்பே கவனித்து விட்டேன். அவன் என் பார்வையில் பட்ட உடனேயே அது தெரிந்து விட்டது என்னுடன் தங்குபவன் பெயர் அஸ்ராஃபி இவானிச் இராணுவத்தவர்களில் சிறந்த வகையைச் சேர்ந்தவன் என்பது அவனைக் கண்டவுடனே நான் அறிந்த இன்னொன்று. முதலில் இருந்தே நாம் ஒருவரை ஒருவர் விரும்பினோம். எங்கள் வாழ்க்கை அமைதியாகவும் வசதியாகவும் கழிந்தது. அஸ்ராஃபி இவானிச் சிலவேளை தன் சொந்த வாழ்க்கையில் இருந்து நல்ல கதைகளைச் சொல்வான். அதுவே உயர்ந்த விசயம் என் பொதுவான உப்புச் சப்பற்ற, மனச்சோர்வைத்தரும், சலிப்பூட்டுகிற இருப்பில் அப்படிக் கதை சொல்பவன் உண்மையில் ஒரு பொக்கிசமே. ஒருமுறை என் வீட்டில் தனியாக இருந்தேன். அஸ்ராஃபியும் அக்ராஃபேனாவும் ஏதோ விசயமாக வெளியே போயிருந்தனர். சடுதியாக எவரோ ஒருவர் வீட்டில் நுழைவது கேட்டது. அது ஒரு அந்நியனாகத் தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். விறாந்தைக்குச் சென்று பார்த்தேன். உயரமற்ற ஒரு மனிதன் அந்தக் குளிரான காலநிலையிலும் குறைந்த ஆடை அணிந்து மேல் அங்கி போடாமல் நிற்பதைக் கண்டேன். "உனக்கு என்ன வேணும்?” "அரசாங்க லிகிதர் அலெக்சாண்ட்ரோவ்? அவர் இங்கு வசிக்கிறாரா?” "அப்படியான பெயருள்ளவர் இங்கு இல்லை சிறிய சகோதரனே,
இந்த உலகத்தில் களவைப் போல மிக இழிவான விசயம் வேறொன்றும் இல்லை. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்து வாங்கிய பொருளை அவர்கள் களவெடுக்கிறார்கள். எங்கள் நேரம், உழைப்பு வெறுக்கத் தக்க உயிர்கள்!
6

போய் வா” என்றேன். “வாயில் காப்போன் சொன்னான் அவர் இங்கு வசிப்பதாக." கவனமாகக் கதவண்டை போய்க் கொண்டே சொன்னான்.
போ போ, போ, சிறிய சகோதரனே போய் விடு” என்றேன்.
அடுத்த நாள் இரவுச் சாப்பாடு முடிந்தது என் கோர்ட்டின் கிழிசலை தைத்துக் கொண்டு வந்து அஸ்ராஃபி தந்தார். அதன் பிறகு விறாந்தையில் அந்நியன் ஒருவனின் காலடி திரும்பவும் கேட்டது, நான் கதவைத் திறந்தேன். முதல் நாள் வந்தவனே என் கண் முன்னாலேயே அமைதியாக வளையில் கிடந்த என் சிறிய கோர்ட்டை எடுத்து தன் கமக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு வெளியே ஓடினான். அக்ராஃபேனா இவ்வளவு நேரமும் சமையலறைக் கதவூடாக வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். கோர்ட்டைக் காப்பாற்ற அவளால் தன் இடத்திலிருந்து அசையக் கூட முடியாமல் போய் விட்டது போலத் தெரிந்தது, ஆனால் அஸ்ராஃபி இவானிச் அந்த றாளல்கலைத் துரத்திக் கொண்டு போய் வெறுங் கையுடன் மூச்சிளைக்க நெஞ்சு விம்மத் திரும்பி வந்தான். கோர்ட்டை எடுத்தவன் நிலம் பிளந்து விழுங்கிக் கொண்டது போல மறைந்து விட்டான். "உண்மையில் இது மிகக் கெட்ட விசயம். அஸ்ராஃபி இவானிச்” என்றேன். "என்னிடம் வேறு துணி இருக்கிறது. இல்லாவிட்டால் அந்தப் போக்கிரி என்னை முழுசாக நடமாடாமல் செய்திருப்பான்.”
அஸ்ராஃபானோ நடந்த சம்பவத்தால் அதிகம் தாக்கப் பட்டவன் போல் இருந்தான். அதனால் அவனைப் பார்த்த போது போன களவைப் பற்றியே மறந்து போய் விட்டேன். திரும்பவும் அவனால் தன் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. தான் செய்து கொண்டிருந்த வேலையை அடிக்கொரு தரம் கீழே போட்டு விட்டு நடந்தது எல்லாவற்றையும் திரும்பவும் நினைவு படுத்திப் பார்த்தான். தான் எங்கே நின்றான் என்றும் தன் கண்ணெதிரே இரண்டு அடிகளுக்கு பக்கத்தில் களவு போயிருக்கிறது என்றும் அவனால் எப்படி அந்தக் கள்ளனைப் பிடிக்க முடியாமல் போய் விட்டது என்றும் சொல்லிக் கொண்டான். மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தான். திரும்பவும் வீசி எறிந்து விட்டு வாசல் காப்பவனிடம் போவதையும் நடந்ததைச் சொல்வதையும் வீட்டைப் போதியளவு கவனிக்கவில்லை அதனால் தான் அப்படியான களவு நடந்தது என்று கண்டிப்பதையும் கண்டேன். அவன் திரும்ப வந்த போது அக்ரஃபேனாவை கண்டிக்க ஆரம்பித்தான். பின் தன் வேலையை ஆரம்பித்தான். நெடுநேரம் தன்னுள் தானே முணுமுணுத்தான். எல்லாம் இப்படித் தான் நடந்தது. எப்படி அவன் இங்கே நின்றான். நான் எங்கே நின்றேன். எப்படி எங்கள் கண்ணுக்கு முன்னாலேயே, இரண்டு அடி கூட இடைவெளி இல்லை, வளையில் இருந்து கோர்ட் எடுக்கப் பட்டது என்று எல்லாம் சொல்லிக் கொண்டான். ஒரே வார்த்தையில் சொன்னால் பெரிய விசயங்களை எப்படி செய்யலாம் என்று தெரிந்த அஸ்ராஃபி இவானிச், சின்ன விசயங்களுக்கு எல்லாம் அதிகம் கவலைப்பட்டான். அன்று மாலை வேறெதுவுமே பேச ஒன்றும் இல்லாததாலும் தொலைந்த கோர்ட்டை பற்றிய கதையில் அதிக நகைச்சுவை தெரிந்ததாலும் அதை எடுத்தால் சலிப்பு நீங்கும் என்ற நம்பிக்கையிலும் ஒரு கிளாஸ் ரீயை அவனிடம் நீட்டிக் கொண்டே நாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டோம், அஸ்ராஃபி இவானிச்" என்றேன். "ஓம் நாங்கள் ஏமாற்றப் பட்டு விட்போம் தொலைந்தது என்னுடையது இல்லை. இருந்தாலும் அது எனக்கு அதிக
- காலம் இளவேனில் 1997 -

Page 9
தூரிகா சுப்
இலங்கை இந்திய பலசரக்கு உணவு வ போன்றவற்றையும் பெற்று
புதிய பழைய வீடியோ திரைப் போன்றவற்றையும் பெற்
THURIKASU
3432, Sheppard ove. e Scarborou
46-37
டெயிலி
இலங்கை இந்திய பலசரக்கு உணவு வ போன்றவற்றையும் பெற்று
துரித பணம 100 பேருக்கான மண்டப ஒழுங்கு உங்கள் உணவுத் தேை
DAY
2543, PhormoKy Aw Scarborou
46-4
fax 46
- absteob SoTC366th6t) 1997 |-

uff LDTffésass)
கைகள் கணவாய் மீன், ஆட்டு இறைச்சி க் கொள்ளவும் நாடுங்கள்
படங்கள் ஒலிப்பதிவு நாடாக்கள் றுக் கொள்ள நாடுங்கள்.
PERMARKET
cust (Warden/Sheppard) gh, Ontario
21-67
நீட்ஸ்
|கைகள் கணவாய் மீன், ஆட்டு இறைச்சி றுக் கொள்ளவும் நாடுங்கள்
ாற்றுச் சேவை கள், கதிரை மேசை வாடகைக்கும் வகளுக்கும் அழையுங்கள்
NEEDS
. (Findh & Pharmacy) gh, Ontario
0-7703 490-646

Page 10
கோபத்தை உண்டாக்குகிறது. இந்த உலகத்தில் களவைப் போல மிக இழிவான விசயம் வேறொன்றும் இல்லை. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்து வாங்கிய பொருளை அவர்கள் களவெடுக்கிறார்கள் எங்கள் நேரம், உழைப்பு வெறுக்கத் தக்க உயிர்கள் அவர்களைப் பற்றிக் கதைப்பதே எனக்கு நோயைத் தருகிறது. சி அதைப் பற்றிச் சிந்திப்பதே எனக்கு கோபத்தை உண்டாக்குகிறது, உங்களால் மட்டும் எப்படி அதைப்பற்றியே கவலைப்படாத மாதிரி இருக்க முடிகிறது"உண்மையில் அஸ்ராஃபி இவானிச் கள்ளன் ஒருவனுடைய பொருட்களை களவெடுப்பபதைப் பார்ப்பதிலும் பார்க்க அவனுடைய பொருட்கள் எரிந்து போவதைப் பார்ப்பது மேலானது. அது எனக்குச் சினத்தை ஊட்டுகிறது” "ஓம் எது களவு போனாலும் அது எரிச்சலைத் தான் தரும் உண்மையில் எல்லா இடமும் கள்ளர் கள்ளர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு எதிர்பாராத நிகழ்வாக ஒருமுறை நேர்மையான ஒரு கள்ளனைக் சந்தித்தேன்." "அது எப்படி? அவன் நேர்மையான கள்ளன்? எப்படி ஒரு கள்ளன் நேர்மையானவனாக இருக்க முடியும் அஸ்ராஃபி இவானிச்?” நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர்கள். ஒரு கள்ளன் நேர்மையானவனாக இருக்க முடியாது. அப்படி ஒருவன் இருந்ததும் இல்லை. அவன் நேர்மையானவன் என்று சொல்ல மட்டுமே வந்தேன். அவன் களவெடுத்த போதும் அப்படி எனக்குத் தெரிந்தது. அவனுக்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன்.”
"அது எப்படி நடந்தது, அஸ்ராஃபி இவானிச்7
இது நடந்தது சரியாக இரண்டு வருசத்துக்கு முன்பு அந்த நேரம் ஒரு வீட்டு மேற்பார்வையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வேலைக்கு அமர்ந்திருந்த பண்ணை முதலாளி தன் பண்ணைக்குப் போவதற்கு வெளிக்கிட்டுக் கொண்டிருந்தார். அதனால் நானும் வேலையை இழந்து விடுவேன் என்பது எனக்குத் தெரிந்தது. கடவுளுக்கு மட்டுமே தெரியும் நான் எப்படி வாழப் போகிறேன் என்று அந்த நேரம் தான் ஒரு தவறணையில் நாதியற்ற ஏழை ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் பெயர் எமிலியன் முன்பு அவன் எங்கோ இராணுவத்தில் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவன் நிறைய மது அருந்துபவன் என்ற படியால் சேவையில் இருந்து அவனைக் கலைத்து விட்டார்கள். அப்படியான உதவாத ஒருவன் அவன் கிடைத்த எதையாவது உடுப்பான். அலங்கோலமான மேலங்கிக்குக் கீழ் சேர்ட்டுப் போட்டிருக்கிறானா என்பதில் கூட சிலவேளை எனக்குச் சந்தேகம் வரும் அவனுக்குக் கிடைத்தது எல்லாவற்றையும் விற்றுக் குடித்து விடுவான். ஆனால் முரடனல்ல. ஓ, இல்லவே இல்லை. அவன் இனிமையானவன். மென்
ஒரு கள்ளன் நேர்மையானவனாக இருக்க முடியாது. அப்படி ஒருவன் இருந்ததும் இல்லை. அவன் நேர்மையானவன் என்று சொல்ல மட்டுமே வந்தேன். அவன் களவெடுத்த போதும்.
8 L一

பண்புள்ளவன். அனைவருக்கும் மிக இரக்கமும் கருணையும் காட்டும் ஒருவன். ஒருவரிடமும் எதுவுமே இரந்து கேட்க மாட்டான். அதுவும் இல்லாமல் அவன் உயர்ந்த மனச்சாட்சி உள்ளவன். அந்த ஏழை மதுவுக்காக செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனைப் பார்த்த உடனேயே தெரிய வரும் உடனே நீங்கள் நிச்சயமாக வாங்கிக் கொடுப்பீர்கள். நாங்கள் இருவரும் நண்பர்களானோம். அதாவது, அவன் சின்னஞ் சிறு நாய் மாதிரி என்னுடன் ஒட்டிக் கொண்டான். நான் இந்தப் பக்கத்தால் போனால் அந்தப் பக்கத்தால் அவனும் தொடர்ந்து வருவான். இது எல்லாம் எங்கள் முதலாவது சந்திப்பிலேயே நடந்து விட்டது.
உண்மையில் அன்றிரவு என்னுடன் தங்கினான். அவனுடைய பாஸ்போர்ட் ஒழுங்கானது. அவனும் நல்லவன் போலத் தெரிந்தான். அப்படியே இரண்டாவது இரவும் நடந்தது. மூன்றாவது இரவும் அவன் வீட்டை விட்டுப் போகவில்லை. நாள் முழுதும் விறாந்தையில் இருந்த ஜன்னல் விளிம்பில் இருந்தான். உண்மையில் அன்றிரவும் அங்கேயே தங்கினான். எப்படி அவன் தன்னைத் தானே அங்கு வலுக் கட்டாயமாக இருத்திக் கொண்டான் என்று சிந்தித்தேன். அவனுக்கு சாப்பாடும் மதுவும் தங்குமிடமும் கொடுக்க வேணும். அந்த ஏழைக்குத் தேவைப்பட்டதெல்லாம் உறிஞ்ச ஒரு மனிதன். இதைப் போலவே என்னுடன் ஒட்டிக் கொண்டது போலவே முன்பும் அவன் ஒருவனுடன் ஒட்டிக் கொண்டிருந்தான் என்று பின்பு அறிந்தேன். அவர்களும் ஒன்றாகக் குடித்தார்கள். ஆனால் மற்றவன் ஏதோ ஆழ்ந்த கவலையால் கெதியில் இறந்து விட்டான். நான் சிந்தித்தேன். சிந்தித்தேன். இவனை என்ன செய்வது? கலைத்து விடுவதா? அதை என் மனச்சாட்சி ஏற்றுக் கொள்ளது. அவனுக்காக மிகப் பச்சாதாபப் பட்டேன். துணை அற்ற, இரக்கத்துக்குரிய உயிர். பரிதாபம் ஊமை. எவரிடமும் எதையுமே கேட்காத ஒன்று. அவன் செய்வதெல்லாம் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் தான். நன்றி உள்ள சிறிய நாய் போல. அப்படித் தான் ஒருவனை மது பழுதாக்கி விடுகிறது. எப்படி அவனை அனுப்புவது என்று எனக்குள் சிந்தித்துக் கொண்டேன். இந்த இடத்தை விட்டுப் போய் விடு, எமிலியன். இங்கே உனக்கு வேலை இல்லை. நீ பிழையான ஆளிடம் வந்திருக்கிறாய். நான் சாப்பிடுவதற்கே என்னிடம் ஒன்றும் இல்லாமல் போகப் போகின்றது. உனக்கும் எப்படி என்னால் சாப்பாடு போட முடியும் என்று நீ எதிர்பார்க்கலாம்? இதை எல்லாம் எனது மனதிற்குள் சொன்ன பிறகு அவன் என்ன செய்வான் என்று கற்பனை செய்ய முயற்சித்தேன். இவற்றைச் சொன்ன பின் ஒரு வார்த்தை கூட புரியாமல் எப்படி அவன் என்னை நெடுநேரம் உற்றுப் பார்ப்பான் என்பதை மனக்கண்ணில் கண்டேன். கடைசியில் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அவன் புரிந்து கொள்வான். அதன் பின் ஜன்னல் இருக்கையில் இருந்து எழும்பி சிகப்புச் சதுரங்கள் போட்ட ஓட்டைகள் நிறைந்த தன் சிறிய பொதியைத் தூக்குவான். அது இப்போது என் கண் முன்னால் தெரிகிறது
அந்தப் பொதியில் என்ன தான் இருக்கிறது என்று கடவுளுக்குத் தான் தெரியும் . அதை அவன் போகும் இடங்களுக்கெல்லாம் கொண்டு திரிவான். ஓரளவு நாகரிகமாகத் தெரியும் படி எப்படி தன் கிழிந்த உடுப்பை ஒரு தரம் சிறிது துடைத்துச் சரிப்படுத்திக் கொள்வான் - அவன் நுண்ணிய உணர்வுகள் கொண்ட மனிதன்! பின் எப்படிக் கதவைத் திறந்து கண்களில் கண்ணி வர
- | காலம் இளவேனில் 1997

Page 11
வெளியே போவான் என்
கற்பனை சுழன்றது. சரி ஒரு மனிதனை அப்படியே ஒரே அடியாக அழிந்து போக விட்டு விடுவதா? நான் மனமார வருந்தினேன். நான் மட்டும் எப்படி? அவனிலும் பார்க்க உயர்ந்த நிலையிலா இருக்கிறேன்? ஆனால் அதேவேளை நான் நினைத்தேன். "சரி, எமிலியன் என் செலவில் நீ கனகாலம் இங்கு விருந்தாளியாக இருக்க முடியாது. கெதியில் நானே இந்த இடத்தை விட்டுப் போக இருக்கிறேன். அதன் பிறகு நீ என்னைக் காணமாட்டாய். தன் வீட்டுச் சாமான்களுடன் பண்ணை முதலாளி தன் தோட்டத்துக்குப் போய்விட்டார். போகுமுன் என் வேலை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தலைநகருக்குத் தான்திரும்பும் போது அங்கு என்னை அழைத்து வேலை தருவதாகவும் சொல்லிப் போனார். " என்றேன். என் பண்ணை முதலாளி நல்ல மனிதர். ஆனால் அவர் அந்த ஆண்டே இறந்து போனார்.
என் பண்ணை முதலாளியையும் மனைவியையும் கொஞ்சத் தூரம் கூட்டிச் சென்று விட்ட பின்பு நான் சேமித்து வைத்திருந்த கொஞ்சக் காசையும் என் சாமான்களையும் எடுத்துக் கொண்டு எனக்குத் தெரிந்த ஒரு கிழவியுடன் வசிக்கப் போய் விட்டேன். அவள் தான் வாழ்ந்து வந்த ஒரு அறை மூலையில் வாடகைக்கு எனக்கு இடம் தந்தாள். அவள் பணக்காரக் குடும்பம் ஒன்றில் தாதியாக முன்பு வேலை பார்த்தவள். இப்போது அவளின் முதிர்ந்த வயதில் அவளுக்கு பென்சன் கொடுத்து விட்டார்கள் எமிலியன் உனக்கு விடுதலை கூறுகிறேன். என் அருமையானவனே! நீ என்னை இனிமேல் காண மாட்டாய் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
"என்ன நினைக்கிறீர்கள், சேர். அன்று மாலை எனக்குத் தெரிந்து ஒருவரை நான் சந்தித்து விட்டு வந்த போது ஆரைப் பார்த்தேன் தெரியுமா? வேறெவரையும் அல்ல. எமிலியனைத் தான். அவன் என் பெட்டியில் அமைதியாக குந்திக் கொண்டிருந்தான். அவனுடைய சிகப்புச் சதுரப் பொதி பக்கத்தில் இருந்தது. என் வரவை எதிர்பார்த்து கசங்கிய துணியால் தன்னைச் சுற்றிக் கொண்டு காத்திருந்தான். அவன் மிகத் தனிமைப்பட்டுப் போய் இருக்க வேண்டும். ஏனென்றால் முதியவளிடம் பிரார்த்தனைப் புத்தகம் ஒன்றை கடனாக வாங்கி தலை கீழாகப் பிடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக அவன் என்னைக் கண்டு பிடித்து விட்டான் என் கைகள் சோர்ந்து போய் பக்க வாட்டில் விழுந்து விட்டன. சரி. நான் நினைத்தேன்.
வேறொன்றும் செய்வதற்கில்லை. நான் ஆரம்பத்திலேயே அவனை ஏன் கலைத்து விடவில்லை? அவனை நான் கேட்டது இது மட்டுமே. "எமிலியன், உன் பாஸ்போர்டை உன்னுடன் வைத்திருக்கிறாயா?" அதன் பிறகு நடந்த விசயங்களை என் மனதில் அசை போட்டுப் பார்த்தேன். சரி. சதா அலைந்து கொண்டிருப்பவன் என் வழியில் இடைஞ்சலாக இருப்பானா? அதைப்பற்றி முன்பு பல தடவை சிந்தித்திருக்கிறேன். அப்படி இருக்க மாட்டான் என்று முடிவெடுத்தேன். அதை விட அவன் அதிகம் எனக்குச் செலவேற்பட வைப்பதும் இல்லை. அவனுக்கு உணவு கொடுக்க வேணும் உண்மை, அது அத்தனை அதிகம் இல்லை. காலையில் கொஞ்சப் பாண். அது கொஞ்சம் ருசியாக இருக்க கொஞ்ச வெங்காயமோ என்னமோ. மத்தியானச் சாப்பாட்டுக்கு திரும்பவும் கொஞ்சப் பானும் வெங்காயமும்
- காலம் இளவேனில் 1997 |-

பின்னேரமும் திரும்பவும் பானும் வெங்காயமும் கொஞ்ச க்வாஸ் மது எங்களுக்குக் கிடைத்தால் கொஞ்ச முட்டைக் கோஸ் சூப்பு அவை போதும் எங்கள் இருவருக்கும் தொண்டை வரை நிரப்ப. நான் சாப்பிடுவது கொஞ்சம் எமிலியன் ஒரு குடிகாரன். அவன் சாப்பிடுவதோ மிகக் கொஞ்சம். அவனுக்குத் தேவைப் படுவதெல்லாம் வொட்கா மட்டுமே. அவன் தன் குடிப்பழக்கத்தால் என்னை பாழாக்கி விடுவான். அதேவேளை என்னை ஒரு விநோதமான உணர்ச்சி ஆட்படுத்துவது போலவும் உணர்ந்தேன். எமிலியன் போய் விட்டால் என் வாழ்க்கை பாரமாகி விடும் போலத் தெரிந்தது. அதனால் அவனின் தந்தையைப் போல் இருப்பதற்கு அப்போதே தீர்மானித்தேன். அவனைத் திருத்தி அவனைத் தன் காலிலேயே நிற்க வைப்பதன் மூலம் அழிவிலிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்தேன். படிப்படியாக குடியை மறக்க வைக்க நினைத்தேன். சற்றுப் பொறு, எமிலியன் என்னுடன் இரு. எங்கும் போகாமல் இரு என் கட்டளைக்கு அடிபணி என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவனுக்கு ஒரு தொழில் பழக்க ஆரம்பிக்க வேணும் உடனடியாக அல்ல. இப்போ கொஞ்சம் அனுபவிக்கட்டும். இடைவேளையில் அவனுக்கு எது இலகுவாகக் கைவரும் எதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறது என்று கண்டு பிடிப்பேன். ஏனென்றால் சேர், ஒரு மனிதன் ஒரு வேலையைச் ஒழுங்காகச் செய்வதற்கு அவனால் முடிய வேணும் அத்துடன் அவனுக்கு உண்மையான ஆர்வமும் தேவை. இரகசியமாக அவனை உற்று நோக்க ஆரம்பித்தேன். எமிலியன் இலகுவாக மசியத்தக்க ஆய்வுப் பொருளல்ல. முதலில் அன்பு வார்த்தைகளால் அவனை வளைக்கப் பார்த்தேன். இப்படி அப்படிக் கதைப்பேன். "எமிலியன் நீ உன்னில் கூடிய கவனம் எடுக்க வேணும். உன்னைக் கொஞ்சம் திருத்த வேணும் குடியை விடு உன்னைப் பார். நீ ஒரே கந்தல். உன்னுடைய உடுப்பு வேறெதையும் விட பன்னாடை போல இருக்கிறது. அது சரி இல்லை. நீ உன்னை உணர்ந்து கொள்ளக் காலம் வந்து விட்டது, நீ குடித்தது போதும் என்று உனக்குத் தெரியும்” அவன் நான் சொன்னவற்றைக் கேட்டான். என் எமிலியன் தலையைக் குனிந்து கொண்டு கேட்டான். அந்த ஏழை அந்த நிலைக்கு ஏற்கெனவே வந்து விட்டான். மது நாக்கைத் தாக்கி விட்டது, அவனால் எந்தவிதமான அர்த்தமுள்ள நல்லறிவுள்ள வார்த்தையையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. பூசனிக்காயைப் பற்றிக் கதையுங்கள். அவரையைப் பற்றிக் கதைப்பான். நான் பேசுவதை நீண்ட நேரம் கேட்டுக் கொண்டே இருந்தான். பின் ஆழமான பெருமூச்சொன்று விட்டான்.
“எதற்காகப் பெருமூச்சு விடுகிறாய், எமிலியன்?" "ஓ, ஒன்றும் இல்லை, அஸ்ராஃபி இவானிச், கவலைப் படாதிர்கள் நான் இன்று பார்த்ததை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருத்தியின் பழக்கூடையை இன்னொருத்தி தற்செயலாக விழுத்தி விட்டாள். அதற்காக இரண்டு பெண்கள் சண்டை பிடிப்பதைப் பார்த்தேன். *
"சரி. அதற்கென்ன? " "பழங்கள் விழுந்த கூடைக்காரி மற்றவளின் கையில் இருந்த கூடைப் பழத்தையும் விழுத்தியது மட்டும் அல்லாமல் விழுந்த பழங்களையும் ஏறி உழக்கினாள். " "சரி. எமிலியன். அதற்கென்ன?” "அச். எனக்குள்ளே அதை நினைத்துக் கொண்டேன். "எமிலியன், சாபப்பட்ட இந்தக் குடியினால் உன் ஏழை அறிவையும் இழந்து விட்டாய். "
భ
g

Page 12
பண்ணை முதலாளி ஒருவன் காசுத் தாள் ஒன்றை கொரகோவாத் தெருவில் தொலைத்து விட்டான். இல்லை அது சடோவோ தெருவோ என்னமோ? ஒரு விவசாயி அது விழுவதைக் கண்டு என் அதிரம் என்றான். அதே வேளை இன்னொருவன் இடைம. றித்து இல்லை, அது என் அதிரம் நான் தான் அதை முதலில் பார்த்தேன் என்றான்.
*சரி. எமிலியன்.” "அந்த இரண்டு விவசாயிகளும் சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள் அதில் உச்ச கட்டம் என்னவென்றால் அந்த நேரம் ஒரு பொலிஸ்காரன் வந்து அந்தத் தாளைப் புறக்கி எடுத்து பண்ணை முதலாளியிடம் கொடுத்தது மட்டுமல்லாமல் இரண்டு விவசாயிகளையும் குழப்பம் செய்ததற்காக கைது செய்யப் போவதாகவும் வெருட்டினான். " "சரி அதற்கென்ன? அதில் என்ன வியப்பு அல்லது அறிவுறுத்தல் இருக்கிறது, எமிலியன்." "ஒன்றும் இல்லை. ஆனால் மக்கள் சிரித்தார்கள். அஸ்ராஃபி இவானிச்.” "அச். எமிலியன். அதில் மக்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது? ஒரு செப்புக் காசுக்காக அழிக்க முடியாத உன் ஆன்மாவையே விற்றுப் போட்டாய். ஆனால் உனக்குத் தெரியுமா நான் என்ன சொல்வேன் என்று எமிலியன்?”
"என்ன அஸ்ராஃபி இவானிச்?” நீ ஏதாவது வேலை எடு, உண்மை நீ கட்டாயம் எடுக்க வேண்டும். நான் நுாறாவது முறையாக உனக்குச் சொல்கிறேன். நீ உன்னில் இரக்கம் கொள்ள வேண்டும்."
நான் என்ன செய்ய அஸ்ராஃபி இவானிச்? எங்கே ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியாது, என்னை எவருமே வேலைக்கு எடுக்க மாட்டார்கள், அஸ்ராஃபி இவானிச் "
அதற்காகத் தான் உன்னைச் சேவையில் இருந்து கலைத்து விட்டார்கள் எல்லாம் உன் குடியினால் தான். "
இன்று பரிசாரகன் விளாசைக் அலுவலுகத்துள் கூப்பிட்டார்கள்” என்றான் எமிலியன்.
"அவனை ஏன் கூப்பிட்டார்கள்?" "ஏன் என்று எனக்குத் தெரியாது. அவனைத் தேவைப் பட்டது. அதனால் தான் அவனைக் கூப்பிட்டிருக்க வேணும் என்று நினைக்கிறேன்.” நாங்கள் இருவரும் பேசி எதுவித பலனும் இல்லை எமிலியன் என்று நான் எனக்குள் நினைத்தேன். நாங்கள் செய்த பாவத்திற்கு எங்களுக்குக் கடவுள் தண்டனை தருகிறார்.
"அப்படியான மனிதனுடன் ஒருவர் என்ன செய்யமுடியும், சேர்” அவன் ஒரு சூழ்ச்சிக்காரன், கரவுடன் பழகினான். நான் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான் கேட்டுக் கொண்டே இருந்தான். கடைசியில் அவன் களைத்துப் போனது போலப் பட்டது. எனக்கும் கோபம் வருகிறது என்று அவன் கவனித்தவுடன் தன் மேலங்கியை எடுத்துக் கொண்டு நழுவி விட்டான். அது தான் அவனைக் கண்டது கடைசியாக இருக்கும். அன்று பகல் முழுதும் வரமாட்டான். பின்னேரம் தான் வருவான். பிரபு மாதிரிக் குடித்திருப்பான். யார் அவனுக்கு மது வாங்கிக் கொடுத்தார்கள் எங்கிருந்து அதற்குப் பணம் கிடைத்தது? கடவுளுக்குத் தான் வெளிச்சம். ஆனால் என்னிடம் இருந்து மட்டும் பணம் எடுக்கவில்லை. அது நிச்சயம் "சரி. எமிலியன். நீ குடியை விடவேணும் கேட்கிறதா? அடுத்த முறை நீ குடித்துப் போட்டு இங்கே வந்தால் படிக்கட்டுகளில்
一[10]

தான் படுக்க வேணும். உன்னை உள்ளுக்கு விட மாட்டேன்!
அதன் பிறகு இரண்டு நாள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பான் மூன்றாம் நாள் திரும்பவும் மெல்லமாக நழுவி விடுவான். நானும் அவன் வரும் வரை காத்துக் கொண்டே இருப்பேன். அவன் வர மாட்டான். ஒரு மாதிரி பயந்து விடுவேன் என்பதை நான் ஒத்துக் கொள்ளத் தான் வேணும் அதைவிட அவனுக்காக நான் மிகமிக வருந்தவும் செய்தேன். அந்த ஏழைப் பிசாசுக்கு நான் என்ன செய்தேன்? என்று நினைத்தேன். நான் அவனைப் பயப்படுத்திப் போட்டேன் போலும் அவன் இப்போது எங்கே போயிருப்பான்? இரக்கத்துக்குரிய உயிர் பெரிய கடவுளே! அவன் இறந்தும் போகலாம்! இரவு வந்து போயிற்று. அவன் வரவில்லை. அடுத்த நாள் காலை கூடத்துக்குப் போனபோது அங்கே கடைசிப் படியில் தலையை வைத்துக் கொண்டு குளிரால் விறைத்துக் கட்டையாய்ப் போனது போல் படுத்திருந்தான். "உனக்கு என்ன நடந்தது, எமிலியன்? ஆண்டவன் உன்னைக் காப்பாற்றட்டும் ஏன் இங்கே கிடக்கிறாய்?" "உங்களுக்குத் தெரியும் அஸ்ராஃபி இவானிச் அன்று என்னில் கோபித்து விட்டீர்கள். நானும் உங்களுக்கு கோபத்தை மூட்டி விட்டேன். என்னைக் கூடத்தில் படுக்க வைப்பதாய்ச் சொன்னிர்கள். அதனால் நான் உள்ளே வரத் துணியவில்லை. இங்கே படுத்து விட்டேன். " "எமிலியன் தேவை இல்லாமல் படிக்கட்டுக்களை கவனிப்பதை விட்டு வேறு தொழில் பார்ப்பது நல்லது.” கோபத்தாலும் இரக்கத்தாலும் நிரப்பப்பட்டுச் சொன்னேன்.
வேறு என்ன தொழில், அஸ்ராஃபி இவானிச்?” நீ ஒரு பாவப்பட்ட உயிர் " இங்கே கோபம் தீயைப் போல என்னுள் பற்றிக் கொண்டது. நீ தையல் கலையைக் கற்க முயற்சிக்கலாம். நீ போட்டிருக்கும் உடுப்பபைப்பார். அதில் ஓட்டைகள் நிரம்பிக் காணப்படுவது மட்டுமல்ல. அதனால் படிக்கட்டுகளையும் கூட்டுகிறாய் ஒரு ஊசியாலாவது அந்தக் கிழிசலைத் தைக்கலாம் தானே! தைத்தால் ஒரு கொஞ்சம் நாகரிகமாய் இருக்குமே. அச்! நீ ஒரு கேவலமான குடிகாரன் அதைவிட வேறொன்றும் இல்லை " சரி. சேர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவன் ஊசியை எடுத்தான் - நான் சொன்னது பகிடியாகவே - ஆனால் உண்மையில் அவன் பயந்து போய் ஊசியை எடுத்தான். தான் உடுத்திருந்த உடுப்பைக் கீழே போட்டு விட்டு ஊசியில் நூலைக் கோர்க்க ஆரம்பித்தான். என்ன நடக்கும் என்பது எனக்கு இலகுவாகப் புரிந்தது, அவன் கண்களில் நீர் நிரம்பி கண்கள் சிவந்தன. கைள் நடுங்கின. நூலைத் தள்ளித் தள்ளிப் பார்த்தான். அது துவாரத்தால் போவதாய் இல்லை. நுாலை எச்சிலால் நனைத்தான். விரல்களுக்கு இடையில் வைத்து உருட்டினான். கூர்மையாய் ஆக்கினான். ஆனால் அது போகவே இல்லை. போக அதை எறிந்து விட்டு என்னைப் பார்த்தான்.
"சளி எமிலியன். நீ எனக்கு நல்ல பாடம் படிப்பித்தாய். யாராவது இதைப் பார்த்திருந்தால் நான் அவமானத்தால் செத்திருப்பேன்! நான் இதைச் சொன்னது பகிடியாகத் தான். என்னில் உனக்குக் கோபம் தைக்கிறதை விடு பாவத்திலிருந்து ஆண்டவன் உன்னைக் காப்பாற்றட்டும்! நீ ஒன்றும் செய்ய வேண்டாம். ஆனால் குழப்படி செய்வதை விடு படிக்கட்டில் துங்கி என்னை அவமானத்துக்குள்ளாக்கி விடாதே! நான் என்ன செய்ய, அஸ்ராஃபி இவானிச் என்னை எனக்குத் தெரியும்
- -- காலம் இளவேனில் 1997

Page 13
இடியப்பம் சம்பல் சொதி என்றதும் அனைவரின
இலங்கை - இந்திய
ZA\ Sתל
TAKE OU
1179 Victorica park ove. (Victorio pc
(1
- காலம் இளவேனில் 1997 |-
 
 
 

தும் இதயத்துடன் இணைந்துவிட்ட உணவகம்.
உணவு வகைகள்.
TTas
ReStaurant
CATERNG
rk M St. Clair), Scarborough, On
| 6.) 7252–O5 T O
11

Page 14
: &
2
: 8
s
8.
Ꮡ2
8 :
s
※
&
泌*
=ఉ4
ii. os
*
நான் சதா குடிவெறியில் தான் இருப்பேன். எதற்கும் உதவாதவன். என்னைப் பாதுகாத்து, அபயமளிக்கும் புரவலர் நீங்கள். உங்களைத் தேவை இல்லாமல் கோபத்துக்குள்ளாக்குகிறேன். " சடுதியாக அவனுடைய நீலம் பெயர்ந்த உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. சவரம் எடுக்காத, வெளிறிய கன்னங்களால் கண்ணித் துளிகள் உருள ஆரம்பித்தன. ஒன்று, இரண்டு என்று. பின் வெள்ளம் போல பாயத் தொடங்கியது என் எமிலியன். சொர்க்கத்தில் இருக்கும் பிதாவே என் இதயத்தை யாரோ கத்தியால் வெட்டியது போல் உணர்ந்தேன். அச்! உன்னைத் தான். கூருணர்வுள்ள மனிதனே! ஏன். நான் நினைக்கவே இல்லையே! அப்படி யாரால் நினைத்திருக்க முடியும்? இல்லை. எமிலியன். உன்னை ஒரே அடியாகக் கைவிட்டு விட வேண்டியது தான். நீ விரும்பிய மாதிரியே நட
சரி சேர். என்னால் சொல்ல வேறு எது இருக்கிறது முழு விசயமுமே முக்கியமற்றது. குறிப்பிடத்தக்கதல்ல. அதைப் பற்றிச்
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்லி வார்த்தைகளை வீணடிப்பதில் உண்மையில் எந்தவித பயனும் இல்லை. உதாரணமாக, நீங்கள் சேர் அதற்காக இரண்டு துட்டுக் கூடக் கொடுக்க மாட்டீர்கள். ஆனால் அந்த விசயம் ஒருபோதுமே நடந்திருக்கா விட்டால் அதற்காக நான் எவ்வளவும் கொடுத்திருப்பேன். என்னிடம் ஒரு களிசான் இருந்தது. நீல நிறம் சதுரமானது, அருமையான முதல் தரமான சாமான் ஒரு பணக்காரக் காணிச் சொந்தக்காரன் ஏதோ வியாபாரமாக அங்கே வந்த போது என்னிடம் அதைச் சொல்லிச் செய்வித்தான். அது அவனுக்கு இறுக்கமாய் இருக்கிறதென்று சொல்லி வாங்க மறுத்து என்னிடமே விட்டு விட்டான். அந்தத் துணி முதல் தரமானது. பழைய துணிச் சந்தையில் அதைக் கொடுத்தால் ஐந்து ரூபிள் வாங்கலாம். இல்லை என்றால் சென்ற் பீற்றர்ஸ்பேர்க் கனவானுக்கு ஒரு நல்ல சோடி இறுக்கமான காற்சட்டைக்கு வெட்டிக் கொடுத்து விட்டு மிச்சத் துணியில் எனக்கும் ஒரு பனியன் தைத்திருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு ஏழை மனிதனுக்கு எல்லாமே பிரயோசனப்படும். அந்த நேரம் எமிலியன் மிக முட்டுப்பட்டுப் போய் இருந்தான். குடிப்பதைக் கூட விட்டிருப்பதைப் பார்த்தேன். முதல் நாள் பின் இரண்டாவது நாள். மூன்றாவது நாள். சோகத்துடனும் மனம் சோர்ந்தும் போயிருந்தான். சரி. இந்த ஏழை மனிதனிடம் தேவையான சில்லறை இல்லை. அல்லது சரியான வழியில் போக அல்லது நல்ல அறிவு சொல்வதைக் கேட்க வெளிக்கிட்டு விட்டான் என்று நினைத்தேன். நல்லது நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்வதானால், முக்கியமான விடுதலை நாள் அப்போது வந்தது. நான் மாலை நேர வழிபாட்டுக்குக் கோயிலுக்குப் போய் விட்டேன். திரும்பி வந்தபோது எமிலியன் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தான். பிரபு போல் நன்றாகக் குடித்து விட்டு, ஒ இது தானா நீ செய்கிறாய் என்று நினைத்துக் கொண்டு ஏதோ தேவைக்காக என் றங்குப் பெட்டியில் ஏதோ எடுக்கப் போனேன். களிசானை அங்கு காணவ. பில்லை. இங்கே அங்கே எல்லா இடமும் கிளறினேன். போய் விட்டது. எல்லா இடமும் நல்லாகத் தேடி அது தொலைந்தே விட்டதென்று சரியாக அறிந்த பிறகு என்னுள் ஏதோ ஒன்று போவதை உணர்ந்தேன் அந்த முதியவளைத் தேடிச் சென்றேன். எமிலியனைப் பற்றி நான் எப்படியோ நினைக்கவே இல்லை. அவன் நிறைவெறியில் இருக்கிறான் என்ற ஆதாரம் இருந்தும் கூட இல்லை.” முதியவள் சொன்னாள். "கனவானே! நல்ல ஆண்டவன் உன்னைக் காப்பாற்றட்டும் களிசான் எனக்கேன்? நான் அதை உடுக்க முடியுமா? என்னிடம் இருந்தும் அன்றொரு நாள் ஒரு பாவாடை காணாமல் போய் விட்டது, அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. " “சரி எவராவது இங்கே வந்தார்களா? * "ஒருவரும் வரவில்லை. நாள் முழுதும் இங்கே தான் இருந்தேன். உன் இந்தச் சிநேகிதன் தான் சற்று நேரம் வெளியே போய் வந்தான். அவன் இந்தா இங்கே இருக்கிறான். அவனை நீ ஏன் கேட்கக் கூடாது? "எமிலியன் றங்குப் பெட்டியில் இருந்து எதற்காகவாவது களிசானை எடுத்தாயா? உனக்கு ஞாபகம் இருக்கா அது அந்தக்
-l காலம் இளவேனில் 1997 H

Page 15
காணிச் சொந்தக்காரனுக்குத் தைத்தது? "
இல்லை. அதை நான் எடுக்கவே இல்லை, அஸ்ராஃபி இவானிச்” அதற்கு என்ன நடந்திருக்கலாம்? திரும்பவும் தேடத் தொடங்கினேன். ஆனால் அதால் ஏதும் பலன் ஏற்படவில்லை. ஜன்னல் இருக்கையில் இருந்து எமிலியன் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னிலையில் திறந்த றங்கின் முன் முழங்காலில் இருந்தேன். அப்போது பக்கவாட்டில் சடுதியாக அவனைப் பார்த்தேன். அச், இதயத்தின் நடுவில் கடும் குட்டை உணர்வதாகவும் என் முகம் மிகச் சோகமாகவும் இருப்பதாகவும் உணர்ந்தேன். சடுதியாக என் கண்கள் எமிலியனின் கண்களைச் சந்தித்தன.
இல்லை. அஸ்ராஃபி இவானிச், நீங்கள் சிலவேளை நினைக்கலாம் - நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும் - ஆனால் அதை நான் எடுக்கவே இல்லை. " "அது எங்கே போய் விட்டது எமிலியன்?" இல்லை. அதை நான் காணவே இல்லை. நல்லது. அப்படி என்றால் அது தானே நடந்து போய்த் தொலைந்து விட்டதா எமிலியன;? " "சிலவேளை இருக்கலாம். அஸ்ராஃபி இவானிச்.” அதன் பின் அவனுடன் ஒரு வார்த்தையைச் கூட விரயமாக்கவில்லை. முழங்காலில் இருந்து எழும்பி றங்கைப் பூட்டினேன். விளக்கைக் கொளுத்தி வேலை செய்வதற்குக் குந்தினேன். கீழ் மாடியில் வசித்த ஓர் அரச லிகிதருக்கு பனியன் ஒன்றைத் திருப்பித் தைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதேவேளை கலவரப்பட்டிருந்தேன். என் ஆடை அலுமாரி அப்படியே எரிந்து சாம்பலாகிப் போயிருந்தால் கூட அதை இலேசாகத் தாங்கி இருப்பேன் என்று நினைத்தேன். நான் கடுமையான கோபத்தில் இருக்கிறேன் என்று எமிலியன் உணர்ந்தது போலத் தெரிந்தது. ஒரு மனிதன் குற்றவாளியாக இருக்கும் போது அப்படித் தான் சேர். வரப் போகிற புயலை ஏற்கெனவே பறவை உணர்ந்து விடுவது போல. பிரச்சினை அணுகிறது என்று அவன் எப்போதுமே ஏற்கெனவே உணர்ந்து விடுவான்.
“அஸ்ராஃபி இவானிச், உங்களுக்குத் தெரியுமா?” அவன் சடுதியாக ஆரம்பித்தான். இன்று அந்தத் தோட்டி வண்டிக்காரனின் விதவையை மணந்தான். அவனை நான் ஒரு மாதிரிப் பார்த்தேன். ஆனால் அவனை மிகுந்த கோபத்துடன் பார்ப்பதாக அவன் புரிந்து கொண்டது போல இருந்தது. தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து கட்டில் அடிக்குப் போய் அதைத் துருவிப் பார்க்க வெளிக்கிட்டான். அது எங்கே போயிருக்கும் மாயமாய் மறைந்து போச்சே, பேய் கொண்டு போன மாதிரி” என்று சொல்லிக் கொண்டே துருவித் துருவித் தேடினான். என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்துக் கொண்டு காத்திருந்தேன். என் எமிலியன் கட்டில் அடிக்குத் தவழ்ந்து போவதைப் பார்த்தேன். அதன் மேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கே பார். கட்டில் அடிக்கு ஏன் தவழ்கிறாய்? " நான் களிசானைத் தேடிக் கொண்டிருக்கிறேன், அஸ்ராஃபி இவானிச்” என்று கட்டிலின் கீழ் இருந்து சொன்னான். "ஏதோமாதிரி அது இங்கே சிலவேளை போய் இருக்கலாம். * "சாதாரணமான என்னைப் போன்ற எளிய மனிதனுக்காக ஏன் உங்கள் முழந்தாளை அகத்தமாக்குகிறீர்கள் சேர்” (சேர் என்று என் கோபத்தில்
- eam Goub gesi TCB6n 6ofesio 1997 |-
y

அவனைப் பெரிய மனிதானாக
விளிப்பதற்காக) என்றேன். "ஆனால் அஸ்ராஃபி இவானிச் - பிழையாக எதையும் நினைக்கவில்லை - சிலவேளை இங்கே பார்த்தால் கிடைக்கலாம் என்பதற்காகத் தான். ' "ம்ம். ஒரு நிமிசம் நான் சொல்வதைக் கேள் எமிலியன். "என்ன அஸ்ராஃபி இவானிச், " நீ என்னிடம் படு போக்கிரியைப் போல் களவெடுக்க வில்லையா? நான் போட்ட உப்புக்கும் உணவுக்கும்.” - அவன் கட்டிலுக்குக் கீழ் தவழ்ந்து போவதைக் கண்டு. அது அங்கே இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தும் என்னையே இழந்த கடும் கோபத்தில் கூறினேன்.
இல்லை. அஸ்ராஃபி இவானிச்” கனநேரம் கட்டில் அடியில் கிடந்தான். சடுதியாக தவழ்ந்து வெளியே வந்து என் முன் நின்றான். - இப்போதும் அவனை எண்முன் பார்ப்பதுபோல் உணர்கிறேன் - பாவத்தைப் பார்ப்பது போன்ற கொடுமையான காட்சியாகவே இருந்தது அது இல்லை." நடுங்கிய குரலில் சொன்னான். அவன் உடம்பு முழுவதும் நடுங்கி ஆடிக்கொண்டிருந்தது. நெஞ்சை ஒரு விரலால் சுட்டிக் காட்டினான். அதைக் கண்டு பயந்து விட்டேன். என்னால் ஜன்னல் இருக்கையில் இருந்து எழும்ப முடியவில்லை. "உங்கள் களிசானை எடுக்கவில்லை, அஸ்ராஃபி இவானிச், "சரி எமிலியன் என் மடத்தனத்தால் பிழையாகக் குற்றம் சாட்டி இருந்தால் என்னை மன்னித்துக் கொள். களிசான் அது என்னவாகப் போனாலும் போகட்டும். அது இல்லாமலும் நாங்கள் வாழலாம். எங்களுக்குக் கைகள் இருக்கின்றன. கடவுளுக்கு நன்றி. நாங்கள் களவெடுக்கத் தேவை இல்லை. நாங்கள் இன்னொரு ஏழையை உறிஞ்சி வாழத் தேவை இல்லை. நாங்கள் வாழுவதற்கு உழைப்போம் " நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்றான் எமிலியன் சிலநேரம் நின்று விட்டு பின் இருந்தான். அன்று பின்னேரம் பூராவும் அசையாமல் அப்படியே இருந்தான். நான் நித்திரை கொள்ளப் போகும் போதும் அதே இடத்தில் அப்படியே இருந்து கொண்டிருந்தான். காலையில் நான் எழுந்த போது வெறும் நிலத்தில் தான் போட்டிருந்த உடுப்பாலேயே போர்த்திக் கொண்டு நித்திரை கொள்வதைக் கண்டேன். அவமானத்தை அவன் பலமாக உணர்ந்ததால் கட்டிலில் போய்ப் படுப்பதற்குக் கூட அவனிடம் இதயம் இருக்கவில்லை.
சரி சேர் அந்த நாளிலிருந்து அந்த மனிதனில் எனக்குக் கடும் வெறுப்பு வளர்ந்தது. அதாவது முதல் சில நாட்கள் அவனை நான் வெறுத்தேன். உதாரணமாக, என் சொந்த மகனே என்னிடம் களவெடுத்து விட்டதாகவும் எனக்குக் கடும் குற்றம் செய்து விட்டதாகவும் உணர்ந்தேன். அச். எமிலியன். எமிலியன். எமிலியனே இரண்டு கிழமை இரவும் பகலும் குடித்தான் காலையில் இருந்து இரவு வரை மிருகம் போலக் குடித்தான். அந்த இரண்டு கிழமைகளுமே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. முழு நேரமுமே ஆழமாகப் போயிருந்த துயரத்தால் மூழ்கிப் போயிருந்தான் இப்படியாகத் தன்னை அழித்துக் கொள்ள முயற்சிக்கிறானோ என்று நினைத்தேன். இறுதியாக அவன் குடியைக் கைவிட்டான். அவனிடம் குடிப்பதற்கு வழி இல்லை என்று நினைத்தேன். ஒவ்வொரு கோபெக்கையும் குடித்து விட்டான். திரும்பவும் அவனின் ஜன்னல் இருக்கையைப் பிடித்துக் கொண்டான். ஒரு சொல்லுமே பேசாமல் மூன்று முழு நாட்கள்
13

Page 16
அந்த இடத்திலேயே அவன் இருந்தது எனக்கு ஞாபகம். சடுதியாக அவன் அழுவதைக் கண்டேன் அங்கிருந்தே அழுதான் என்ன அழுகை மழை போல கண்களில் இருந்து சொட்டுச் சொட்டாக விழுந்தன. அவை விழுவது அவனுக்குத் தெரியாதது போல அதைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருந்தது சேர். வளர்ந்த மனிதன் ஒருவன் அழுவது இன்னும் வருத்தமாக இருந்தது. வயது முதிர்ந்த எமிலியனைப் போன்ற ஒருவன் துயரத்தால் சோகமுள்ள இதயத்துடன் அழுவது
"எமிலியன் உனக்கு என்ன வருத்தம்?" அவன் ஏதோ சொல்ல வெளிக்கிட்டு நடுங்கினான். அந்த நிகழ்ச்சி நடந்த நாளிலிருந்து அன்று தான் அவனுடன் நான் கதைத்தேன். "ஒன்றும் இல்லை, அஸ்ராஃபி இவானிச்.” "கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும், எமிலியன். எதைப் பற்றியும் கவலைப் படாதே. போனவை எல்லாம் போனதாக இருக்கட்டும். அவற்றை இதயத்துக்குள் எடுக்காதே. " அவனுக்காக நான் மிகவும் வருத்தப் பட்டேன். “ஏதோ ஒரு வேலை செய்ய வேணும் அது தான் அஸ்ராஃபி இவானிச், "
“எப்படிப் பட்ட வேலை, எமிலியன்?” "ஓ ஏதாவது சிலவேளை முன்பைப் போல ஏதாவது ஒருவகை இராணுவ சேவையில் சேரலாம். ஏற்கெனவே என் பழைய முதலாளி என்னைக் கேட்டார். அது எனக்குச் சரி வராது. மேலும் உங்களை உபயோகிப்பது சரியில்லை. அது சரியில்லை, அஸ்ராஃபி இவானிச் நான் சிலவேளை ஏதாவது வேலை எடுப்பேன். பின் எல்லாவற்றுக்கும் உங்களுக்குப் பணம் கொடுப்பேன். உணவு எல்லாவற்றுக்கும். " "அப்படிச் செய்யாதே. எமிலியன் சரி நீ ஒரு பாவத்தைச் செய்து விட்டாய் என்று வைத்துக் கொள்வோம். அது முடிந்து விட்டது, பிசாசு எல்லாவற்றையும் எடுக்கட்டும். அது போகட்டும் பழையபடி நாங்கள் வாழுவோம். ஒன்றுமே நடக்காதது போல " “அஸ்ராஃபி இவானிச் நீங்கள் அதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது போலத் தெரிகிறது. ஆனால் நான் உங்கள் களிசானை எடுக்கவில்லை. "
நீ விரும்பிய மாதிரிச் செய், எமிலியன்." இல்லை, அஸ்ராஃபி இவானிச் " இனிமேலும் உங்களுடன் வாழ முடியாதென்று தெளிவாகத் தெரிகிறது என்னை மன்னிக்க வேண்டும், அஸ்ராஃபி இவானிச், "கடவுள் உன்னுடன் இருக்கட்டும் எமிலியன் உன்னை யார் புண்படுத்துவது அல்லது போகச் சொல்லிச் சொன்னது? நானா அதைச் செய்வது?”
இல்லை. ஆனால் உங்கள் விருந்தோம்பலை இன்னும் நான் பிழையாக உபயோகிப்பது எனக்குப் பண்பில்லை. நான் போய் விடுவதே நல்லது " உண்மையில் இருந்த இடத்தில் இருந்து அவன் எழும்புவதையும் சிழிந்த துணியை அணிவதையும் பார்த்தேன். அவன் உண்மையிலேயே புண்பட்டு விட்டான். அவ்விடத்தை விட்டுப் போக வேண்டும் என்பது அவன் தலைக்குள் புகுந்து விட்டது. "ஆனால் எங்கே போகிறாய் எமிலியன்? நினைத்துப் பார். நீ என்ன? எங்கே போவாய்? “
14
8

"போவது தான் சிறந்தது அஸ்ராஃபி இவானிச் போவதைத் தடுக்க முயற்சிக்காதீர்கள். " அவன் திரும்பவும் அழ வெளிக்கிட்டான். "என்னை விடுங்கள் அஸ்ராஃபி இவானிச், நீங்கள் முன்பிருந்த ஆளில்லை இப்போது “ "ஏன் இல்லை? நான் முன்பு இருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறேன். மடத்தனமாக, குழந்தையைப் போல நீ தன்னந்தனியாக அழிந்து விடுவாய் எமிலியன், "
இல்லை அஸ்ராஃபி இவானிச் இப்போது நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகும்போது றங்குப் பெட்டியைப் பூட்டிப் போட்டுப் போகின்றீர்கள். அஸ்ராஃபி இவானிச் அதைப் பார்த்து அழுவேன். இல்லை. நீங்கள் என்னைப் போக விடுவதே நல்லது நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் ஏதாவது விதத்தில் நான் உங்களைப் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.”
சரி சேர் அவன் போய் விட்டான். ஒரு நாள் காத்திருந்து விட்டு ஓ பின்னேரம் மட்டில் திரும்பி வருவான் என்று நினைத்தேன். ஒரு நாள் போனது. இரண்டு நாள் போனது அவன் வரவில்லை. மூன்றாம் நாளும் வரவில்லை. நான் பயந்து விட்டேன். என் இதயத்தைக் கடுமையான சோகம் கவ்வியது, சாப்பிடுவதையும் குடிப்பதையும் விட்டு விட்டேன். இரவு பூராவும் கண்களை மூடாமல் படுத்திருந்தேன். அந்த மனிதன் என்னை முழுவதாக ஆட்கொண்டு விட்டான். நாலாம் நாள் அவனைத் தேடிப் புறப்பட்டேன். அயலில் உள்ள தவறணைகள், போதைப் பொருள் விற்பனை செய்யும் இடங்கள் அனைத்திலும் தேடினேன். அவனை யாராவது கண்டார்களா என்று கேட்டேன். இல்லை. எமிலியன் பூரணமாக மறைந்து விட்டான் சிலவேளை அவன் தன் இழிந்த இருப்பை அழித்துக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். சிலவேளை குடிவெறியில் எங்கோ ஒரு வேலிக்கு அடியில் நாயைப் போல அழிந்து போய் இருக்கலாம் களைத்துப் போய், அவநம்பிக்கையுடன் அரை உயிருடன் வீடு திரும்பினேன். அடுத்த நாளும் அவனைத் தேடிப் போகத் திர்மானித்தேன். மடத்தனமான ஆதரவில்லாத அந்த மனிதனை வெளியே விட்டதற்காக என்னையே நான் திட்டிக் கொண்டேன். ஐந்தாம் நாள் அதிகாலை அது ஒரு விடுதலை நாள் - கதவு கிரீச்சிடும் சத்தம் கேட்டது. யாரைப் பார்த்தேன்? எமிலியனைத் தான்! ஆனால் என்ன நிலையில் அவனுடைய முகம் நீலம் பேர்ந்து தலைமயிர் நிறைய சேற்றுடன் வீதியில் படுத்திருந்தவன் போல மெலிந்து சலாகை போல ஒட்டிப் போய். தன் கிழிந்த உடையை கழற்றி விட்டு என் றங்குப் பெட்டியில் இருந்து என்னைப் பார்க்க
ஆரம்பித்தான்.
சேர் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதேவேளை என் இதய இழைகளைப் பிடுங்குவதிலும் பார்க்கக் கூடுதலான சோகத்தையும் உணர்ந்தேன். அதைப் போல ஒன்று எனக்கு நடந்திருந்தால் கெதியில் ஒரு நாயைப் போல இறந்திருப்பேனே ஒழிய திரும்பி வந்திருக்கவே மாட்டேன் என்று உணர்ந்தேன் சேர். ஆனால் எமிலியன் திரும்பி வந்தான். இயற்கையாகவே ஒரு மனிதனை அந்த நிலையில் பார்ப்பது கரம். நான் அவனை எல்லா வழியிலும் ஆறுதல் கூறித் தேற்ற ஆரம்பித்தேன். "சரி. எமிலியன் நீ திரும்பி வந்தது எனக்கு மிகுந்த சந்தோசம். நீ இவ்வளவு கெதியில் திரும்பி வந்திருக்கா விட்டால் என்னை இங்கு கண்டிருக்க மாட்டாய். உன்னைத் தேடிப் போவதற்கு இருந்தேன்.
-- காலம் இளவேனில் 1997

Page 17
ஏதாவது சாப்பிட்டாயா?” "சாப்பிட்டு விட்டேன், அஸ்ராஃபி இவானிச், நான் நம்பவில்லை. சரி. இந்தா இங்கே முட்டைக் கோசு சூப். கொஞ்ச இறைச்சியும் அதற்குள் கிடக்கிறது. சாதாரண வகை-ை யச் சேர்ந்ததல்ல. இங்கே கொஞ்சப் பானும் கொஞ்ச வெங்காயமும் சாப்பிடு அது உனக்கு நல்லது " நான் அவனுக்குப் பரிமாறினேன். அவன் கடந்த மூன்று நாளாகப் பட்டினியாகக் கிடந்திருக்கிறான் என்பது விளங்கிற்று. அத்தனை பசி அவனிடம் தெரிந்தது. ஆகவே பசி தான் அவனை என்னிடம் விரட்டி வந்திருக்கிறது. அந்த ஏழையைப் பார்த்த போது நான் ஆழமாகப் பாதிக்கப் பட்டு விட்டேன். பக்கத்தில் உள்ள மதுக் கடைக்குப் போய் வரத் தீர்மானித்தேன். அவனை ஒரளவு உயிர்ப்பிப்பதற்கும் அவனுடன் சமாதானம் ஆகுவதற்கும் கொஞ்ச வொட்கா வாங்கி வர நினைத்தேன். அது போதும், அந்த ஏழைக்கு எதிராக எனக்கொன்றும் இல்லை. வொட்காவைக் கொண்டு வந்து அவனுக்குச் சொன்னேன்; @isGas Lumi எமிலியன், நாங்கள் இருவரும் எங்கள் தேக நலனுக்கும் விடுதலை நாளைக் கெளரவிக்கவும் இதை அருந்துவோம்! வா! வந்து குடி இது உனக்கு நல்லது " அவன் தன் கையை அவாவுடன் நீட்டினான். பின் கொண்டு வந்த கையை நிறுத்தி விட்டான். சற்று நேரத்தின் பின் கிளாசை உயர்த்தி மதுவைச் சட்டைக் கைகளில் ஊற்றிக் கொண்டே வாய் வரை கொண்டு போனான். கடைசியாக அதை வாய்க்குக் கொண்டு போய் விட்டு உடனே மேசையில் வைத்தான். "ஏன் எமிலியன் நீ குடிக்கவில்லை? " இல்லை. நான் குடிக்க மாட்டேன். அஸ்ராஃபி இவானிச் நீ இதைக் குடிக்க மாட்டாய்?" நான, அஸ்ராஃபி இவானிச் நான் நினைக்கிறேன். இனிமேல் நான் குடிக்க மாட்டேன். " "ஒரே அடியாக இனிமேல் குடிக்க மாட்டாயா? அல்லது இன்று மட்டும் தானா எமிலியன்?” அவன் பதில் சொல்லவில்லை. சற்று நேரத்திற்குப் பின் அவன் தன் கையில் தலையைச் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். "உனக்குச் சுகமில்லையா எமிலியன்? “ "ஓம் சரியாகச் சுகமில்லை. அஸ்ராஃபி இவானிச் அவனைப் படுக்கைக்குப் போகச் செய்தேன். அவன் உண்மையில் ஒரு நோயாளியைப் போலத் தான் காணப்பட்டான். அவன் உடம்பு சூடாகக் கொதித்தது. குளிர் காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தான். அன்று நாள் முழுதும் அவனுக்குப் பக்கத்தில் குந்திக் கொண்டிருந்தேன். மாலையாக அவன் நிலைமை மோசமாகியது, க்வாஸ் மது, பட்டர், கொஞ்ச வெங்காயம் போட்டு உணவு தயாரித்தேன். அதற்குள் கொஞ்ச பாண் பருக்கைகளும் துாவினேன். "போ. போய்க் கொஞ்சம் சாப்பிடு. சிலவேளை கொஞ்சம் தேறலாம். " அவன் தலையை ஆட்டினான். இல்லை. அஸ்ராஃபி இவானிச் இன்றிரவு நான் ஒன்றுமே சாப்பிடப் போவதில்லை. " அவனுக்காகக் கொஞ்சத் தேநீர் தயாரித்தேன். வாடகைக்கு அறை எடுத்திருந்த அந்த ஏழை மணிக்கு இவனுக்காக அதிகம் கரைச்சல் கொடுத்திருந்தேன். ஆனால் அவனோ ஒரு கொஞ்சத் தேனிர் கூடக் குடிப்பதாக இல்லை. சரி. இது ஒரு சங்கடமான நிலைமை என்று எனக்குள் நினைத்தேன். மூன்றாம் நாள் காலை டொக்ரரைப் பார்க்கப் போனேன். டொக்ரர் கொஸ்ராபிராவோவ் எனக்குத் தெரிந்தவர். பழைய இடத்தில் வசித்தபோது எனக்கு வைத்தியமும் பார்த்தவர். பொக்ரர் வந்தார். அவனைப்
- காலம் இளவேனில் 1997 |-
A.

பரிசோதித்தார். "என்னைக் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவன் ஏற்கெனவே நெடுந்துாரம் போய் விட்டான். இருந்தாலும் நான் கொடுக்கும் இந்தத் துாளைக் கொடு” என்று சொல்லி விட்டுப் போனார். டொக்ரர் கடமைக்காகச் சொன்னது என்று புரிந்து கொண்ட படியால் அவனுக்கு அந்தத் துாளை நான் கொடுக்கவில்லை. ஐந்தாம் நாளும் வந்தது. அவன் எனக்கு முன்னால் செத்துக் கொண்டிருந்தான். சேர் என் மடியில் செய்து கொண்டிருந்த வேலை கிடக்க ஜன்னல் இருக்கையில் குந்தி இருந்தேன். முதியவள் அடுப்புக் கரியைக் கிளறிக் கொண்டிருந்தாள். நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தோம். அவன் என் சொந்த மகனாகவும் அவனை நான் இழப்பது போலவும் என் இதயம் இந்த ஏழை உயிருக்காக உடைந்து நொருங்கிக் கொண்டிருந்தது, எமிலியன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும் காலையில் இருந்தே ஏதோ எனக்குச் சொல்ல எத்தனிக்கிறான் என்பதும் அதைச் சொல்ல அவனுக்குத் துணிவு போதவில்லை என்பதையும் நான் அவதானித்தேன். கடைசியில் நான் அவனைப் பார்த்தேன். அவன் தன் கண்களை என்னிலிருந்து அகற்றவில்லை என்பதைக் கண்டேன். ஆனால் அவன் கண்கள் என் கண்களைச் சந்தித்த போது அவன் தன் கண்களை கீழே தாழ்த்தினான். “அஸ்ராஃபி இவானிச்! "
"என்ன எமிலியன்? “ "என்னுடைய உடுப்பைப் பழைய துணிச் சந்தைக்கு எடுத்துக் கொண்டு போனால் எவ்வளவு பணம் கொடுப்பார்கள் அஸ்ராஃபி இவானிச்? “ "எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அதற்கு ஒரு மூன்று ரூபிளாவது கொடுப்பார்கள் எமிலியன். " எளிய மனதுள்ள அந்த உயிரின் ஆறுதலுக்காக மட்டுமே அதைச் சொன்னேன். அதைப் போன்ற தாழ்வான கந்தலை விற்க நினைத்தாலே யதார்த்தத்தில் என் முகத்தின் முன்னிலையிலேயே சிரித்திருப்பார்கள்.
அதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே தருவார்கள் என்று நினைத்தேன் அஸ்ராஃபி இவானிச் அது துணியால் செய்யப் பட்டது, அதற்கு எப்படி மூன்று ரூபிளுக்கு மேல் கொடுக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம்? “
நல்லது எமிலியன் உனக்கு அதை விற்க விருப்பம் இருந்தால் முதலில் கூடுதலாகக் கேட்கலாம். " எமிலியன் ஒரு கணம் இருந்து விட்டு திரும்பவும் என்னை அழைத்தான்.
“அஸ்ராஃபி இவானிச்7
“என்ன எமிலியன்? * நான் இல்லாமல் போன பிறகு நீங்கள் அதை விற்கலாம். அதில் என்னைப் புதைக்கத் தேவை இல்லை. அது இல்லாமலே என்னால் இருக்க முடியும் அது கொஞ்சம் பெறுமதி உள்ளது. அது உங்களுக்கு உதவலாம். "
இவ்விடத்தில் என் இதயம் வலியால் முறுக்கப் பட்டது போல் உணர்ந்தேன். என்னால் அதை வெளிப்படுத்தவே முடியாது சேர். சா அணுகும் போது வருகிற சோகம் அந்த மனிதனில் ஏற்கெனவே வந்து விட்டதைப் பார்த்தேன். திரும்பவும் சில நேரம் நாம் அமைதியானோம். இப்படியாக ஒரு மணி நேரம் போய் விட்டது. அவனைப் பார்த்த போது அவன் இன்னும் என்னை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என் கண்களைச்
15

Page 18
சந்தித்த உடனே தன் கண்களைக் கீழே தாழ்த்தினான். "உனக்குக் கொஞ்சம் குளிர் தண்ணிர் வேணுமா?’ அவனை நான் கேட்டேன். "எனக்குக் கொஞ்சம் தாருங்கள் கடவுள் உங்களுக்குக் திருப்பித் தருவார் அஸ்ராஃபி இவானிச்.” "உனக்கு வேறு ஏதாவது தேவையா எமிலியன்? *
இல்லை. அஸ்ராஃபி இவானிச் எனக்கு வேறொன்றும் தேவை இல்லை. ஆனால் .”
“என்ன? “
"உங்களுக்கு அது தெரியும் .” "உனக்குத் என்ன தேவை எமிலியன்?” "அந்தக் களிசான். உங்களுக்குத் தெரியும் - அதை நான் தான் எடுத்தேன் அஸ்ராஃபி இவானிச் "
நல்லது பெரிய கடவுள் உன்னை மன்னிப்பார் என் எமிலியன். நீ அதிரமற்ற பிறவி அமைதியாய்ப் போய் வா!"
946)IDub முயலும்
ஆறு வயதில் அவையினர் வியக்க மேடையில் ஏறி நீ முழக்கினாய்
பத்து வயதுக்குள் தங்கம் வெள்ளியென பதக்கங்கள் என்ன? பரிசுகள் என்ன?
பதினெட்டும் ஆக முதல் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் நாலுக்கும் நீ ஏ நான் “ஒலு’க்கும் "எஃt;" எடுத்தேன்.
முயலென நீ ஓடிய அப்போதெல்லாம் - எனக்கு ஆமை வேகம்
"இளமானி”முடித்து
'முதுமானி” Ligdisas வெளிநாடு வந்த நீ கண்டதென்ன? இறுதியில் அகதியாய் தஞ்சம்
முப்பத்தியெட்டு வயதாகி
16

என் முகத்தை ஒரு கணம் மறுபக்கம் திருப்ப வேண்டியதாயிற்று. ஏனென்றால் அந்த ஏழைக்காக துயர் என் மூச்சை அடைத்தது. என் கண்களிலிருந்து கண்ணி சரமாரியாகப் பாய்ந்தது. “அஸ்ராஃபி இவானிச்?* நான் உற்றுப் பார்த்தேன். இன்னும் அவன் ஏதோ சொல்ல விரும்புவதும் எழுந்திருக்க முயற்சிப்பதும் தெரிந்தது. அவன் இதழ்கள் அசைந்தன. அவன் சிவந்து போய் என்னைப் பார்த்தான். சடுதியாக அவன் வெளிறி வெளிறிப் போவதைப் பார்த்தேன். ஒரு கணத்தில் தலை பின் சரிய விழுந்தான். ஒரு முறை மூச்சு எடுத்தான். அத்துடன் அவன் தன் ஆத்மாவைக் ஆண்டவனிடம் அடைக்கலம் கொடுத்து விட்டான்.
மொழிபெயர்ப்பு: எம். கே. மகாலிங்கம்
ஓரண்டு முடியும் நரைக்கின்ற இப்போது கேள் நண்ப,
என்னைப் போல் காப்புறுதி இன்றிக் காரோடத் துணிவுண்டோ?
அவனவன் போல் ஆளையாள் சுத்தி அரசுக்குப் பொய் சொல்லி வாழத்தான் தெரிகிறதோ?
கைக்காசு பெற்றோ, இல்லையொரு கள்ள நம்பரிலோ எக்கால மேனும் ஏதும் உழைத்தாயோ?
சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றாங்கு கற்பித்து இப்போது , சொர்க்கத்தில் இருக்கும் உன் சட்டம்பி அப்பனுக்கும் சொல்லு இதையெல்லாம்.
சரி தானே.
வட்டிக்காக வாங்க நான் போக வேணும் வரட்டேவேறை யென்ன?
ཡམས་ཁམས་མང་ལ་ཁམས་མང་ལ་ཁ་ཡ་མ་མཁཡཚང་མ་ང་ལ་མཁས་པ་─| காலம் இளவேனில் 1997

Page 19
உரைக்கல்லில் உரைத்தவை
அ. அருட்செல்வம்
கடலும் கரையும்
(சிறுகதைத் தொகுதி) படைப்பாளி: மு. பொன்னம்பலம்
கவிஞராக, விமர்சகர்கராக, இதழாசிரியராக அறியப்பட்ட மு.பொ. சிறுகதை ஆசிரியராகவும் தன்னை அறிமுகம் செய்துள்ளார் இச்சிறுகதைத் தொகுதியுடன் அத்துடன் மு. தளையசிங்கத்துடன் தன் சிந்தனை, தத்துவம், செயல் ஆகியவற்றைக் கூட இணைத்துக் கொண்ட இவர் முத.வின் அதே சிந்தனைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் மட்டுமல்ல அவரின் வாரிசு என்றும் பரவலாகவும் அறியப்பட்டவர். முத.வின் விமர்சனப் பாங்கு இவருடன் ஒட்டிக் கொண்டதிலும் பார்க்க அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தால் மூர்க்கத்தனமாக பாதுகாக்கப் போய் விமர்சனத்திலும் பார்க்க தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுகிறார் என்ற குற்றத்துக்கு ஆளாகியவர். இவர் தனக்குப் பிடித்தவரை உயர்த்திப் பிடிக்காதவரை ஒரே அடியாக தரையில் தூக்கி அடிக்கும் கலையில் கைதேர்ந்தவர் குளிப்பாட்டிய தொட்டித் தண்ணிருடன் குழந்தையையும் கூடத் துார வீசி விடுபவர் - என்பதை அண்மையில் வெளிவந்த சோலைக்கிளி பற்றிய சரிநிகர் கட்டுரை காட்டிக் கொடுக்கிறது. அத்துடன் இவருக்கும் சிவத்தம்பிக்கும் படிமங்களால் நிரப்பிக் கதை எழுதி விடும் ஜெயமோகனையும் பிடித்திருக்கிறது. ளவசயபெந டிநன. கநடடழறள. விநோதமான கூட்டாளிகள். மாக்சிஸ்டுக்கும், ஆத்மீகவாதிக்கும் படிமவியல்வாதியைப் பிடிக்கிறது. அது ஒரு ЦBib.
- காலம் இளவேனில் 1997 |-

நல்ல கவிஞர் என்பதை அவரின் அது கவிதைத் தொகுதி உறுதி செய்தது. அதன் பின் வந்த விலங்கை விட்டெழும் மனிதர் கவிதை ஒரு விழுக்காடு, விடுதலையும் புதிய எல்லைகளும், யதார்த்தமும் ஆத்மார்த்தமும் முத சிந்தனைக் கட்டுரைகளின் நீட்சி, அதே வகையில் கடலும் கரையும் சிறுகதைத் தொகுதியில் உள்ள பல சிறுகதைகள்.
அவருடைய சிறுகதைகள் பலவும் புதுயுகம் பிறக்கிறது சிறுகதைத் தொகுதியின் பல சிறுகதைகளுக்கும் - மு. த.வின் - ஒற்றுமை இருக்கின்றன. இருவரின் சிந்தனைப் போக்கைப் பொறுத்தவரையில் அவை ஒற்றுமை ஆனவை. மு.பொ.வின் மூடு பனி, அரை நாள் பொழுது, என்ற இரு சிறுகதைகளும் இருப்பியல் வாதக் கதைகள். நன்றாகவே அனுபவரீதியாகவே எழுதப்பட்ட கதைகள். அதனால் அவை இரண்டும் கலாரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் நல்லதாக அமைந்து விடுகின்றன. இருப்பியல்வாதத்திலிருந்து ஆத்மார்த்தத் தளத்திற்கு தன்னை உயர்த்திக் கொண்ட கதையாக தவம் கதையைக் கூறலாம். அதிலும் முத.வின் கதைகளுக்கும் உள்ளிட்டு ரீதியில் பல ஒற்றுமைகளைக் காணலாம். குறிப்பாக,
"வெளி” என்ற கதைக்கும் இதற்கும். இந்த மூன்று கதைகளிலும் தான் இவருடைய சிறுகதை உருவமும் உள்ளடக்கமும் மெய்யாகவே வழி நடந்துள்ளன. பயம் கக்கும் விஷம்" ஒரு விசேசமான கதை. அதை உருவக்கதையாகவே - இத் தொகுதியில் உள்ள கதைகளில் பல உருவகக் கதைகளே. வேட்டை அடுத்தது. அதிலும் ஒரு மிருகம் வருகிறது எழுதி உள்ளார். அதன் குறியீடு பாம்பு அதில் தொனிப்பவை பல பொருட்கள் விப்பாம்புகளை அழித்து விடுவதில் பிழை இல்லை என்பதும் ஒரு கருத்து பாம்புக்கு விம் இருப்பது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே. மனித இனம் ஒருவரை ஒருவர் பிடித்துச் உண்ணும் (predator) பிறப்பாகி அவற்றைக் கொன்று எறிவது விலங்கினத்தின் வாழ்வுரிமையை தன் சுயநலத்துக்காக மாற்றி விடுகிறது. அது நியாயமானது என்பது மாதிரி அந்தக் கதையின் பாடம் , அந்தக் கதையின் படிப்பினை (Moral) என்ன? படிப்பினை அல்லது நியாயம் வியாக்கியானம் கற்பிப்பது ஒவ்வொரு கதையிலும் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் உருவகக் கதைகளில் அது எதிர்பார்க்கப் படுகிறது.
ஒரு மோரல் பஞ்ச தந்திரக் கதைகளில் ஓடுவது மாதிரி, யேசு நாதர் சொல்லும் குட்டிக் கதைகளில் ஊடுருவி இருப்பது மாதிரி இருக்கும். வாழ்வை உந்நதமாக்குவது மோரல் எழுத்துக்களின் அடிநாதமாக இருந்தால் இக் கதையின் அர்த்தத்தை அறிய அதற்கும் அப்பால் போக வேண்டியது அவசியமாகிறது. வன்முறையை நியாயப் படுத்துவதாக அதில் ஒரு கருத்துத் தொனிப்பது மேல் மனதின் தோலை கூரிய முள்ளால் கிறிக் கொண்டிருக்கிறது.
இக்கதை டி.எச். லோரன்சின் Serpent ஐ சட்டென நினைவுக்குக் கொண்டு வந்தது. கடவுளின் முகத்தையும் பேயின் முகத்தையும் காட்டும் பாம்பு ஆதிச் சக்தி பேய்ச் சக்தியின் அவதாரம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே வரும் நடுவர். இருட் சக்தி ஆக்க சக்தி அழிவுச் சக்தி லிங்கத்தின் புதிர். லோரன்சின் உருவகம் இயற்கையுடன சம்பந்தப்பட்டது. அதன்
சக்திகளுடன் தொடர்புடையது.
17

Page 20
நல்ல கவிஞர் சிலர் நல்ல சிறுகதை ஆசிரியராகவும் வெளிக் காட்டி உள்ளனர். தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இப்படிப் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. பாரதியார் சிறுகதை எழுதி உள்ளார். புதுமைப் பித்தன் கவிதை எழுதி உள்ளார்.
வன்முறைகளின் மத்தியில் வாழும் எமக்கு ஆயுதமே கடவுளாகும் நிலையில் இருந்து மாற வேண்டும் குருஷேத்திர யுத்தத்தில் போர் ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கலாம். அங்கே அடிப்படை தர்மம் இருந்தது. இப்போது நடைபெறும் போரில் அடிப்படையில் எந்தத் தர்மம இருக்கிறது? மனிதனை மறந்து ஒருவரை ஒருவர் பிடித்துத் தின்னுவதில் என்ன தர்மத்தைக் காண முடியும்? மு.பொ.வும் அந்த அடிப்படையை மறந்து வன்முறை வெள்ளத்தில் அடிபட்டுப் போய விடுகிறாரா? பயம் கக்கும் விம் கதையாக இந்த வியாக்கியானத்தில் கம்பிரமாக நிமிர்ந்து நிற்பதற்கு சத்தியத்தின் துணை அதற்கு இருக்கிறதா?
அந்த வியாக்கியானத்தை விடவும் இந்து சமய மரபில் பதஞ்சலி முனிவரால் தொகுக்கப் பட்ட யோக குத்திரத்தில் வரும் குண்டலினியில் வரும் பாம்பு, சிக்மன்ட் ஃப்ரொய்டின் பாம்பு குறியீடு - கரமைதுனத்தின் - லிபிடோ போன்றவற்றையும் இந்தக் கதைக்கு சாத்தியமாகுமா பொருந்தி வருமா என்றும் பார்க்கலாம். ஆனால் அவை வேண்டும் என்றே வலிந்து பொருத்தும் குற்றத்துக்குள்ளாக்கும் வியாக்கியானங்களாகி விடும்.
ஏறக்குறைய எல்லாக் கதைகளையுமே வேதாந்தமாக விரித்துரைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் போலும், இக்கதைகளை வாசித்த போது எளிய சாதாரண பாத்திரங்களைக கொண்ட நல்ல சிறுகதைகளைப் வாசிக்க மனம் விளைகிறது. இவருடைய கதைகளில் கதைகள உள்ளவை எவை என்று தேடிக் கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.
கணவன் என்ற கதை விசித்திரமான ஒரு பெண்ணின் கதை. மு.பொ.வின் இலட்சியப் பெண். அதனால் அதில் நம்பகத்தன்மை பாதிக்கப் படுகிறது.
கடைசிக் கதையான இருப்பின் அடையாளம் எது? அடையா. ளத்தின் இருப்பு எது? ஒரு கட்டுரைத் தலைப்பு நல்ல, வித்தியாசமான கதையை ஒரு தலைப்புக் கொடுத்து கெடுத்து விடுவது சாத்தியம் என்பது இந்தத் தலைப்பால் தெரிகிறது. ஈழத்துச் சிறுகதைகள் மறுதலையாக எழுதப் படுவதே உண்மை. அதாவது, நல்ல தலைப்புக் கொடுத்து விட்டு கட்டுரையாக கதை எழுதுவார்கள். அல்லது கட்டுரைக்கு நல்ல தலைப்புக் கொடுப்பது தான் வழக்கம் எதிர்ப் புறமாக, கட்டுரைத தலைப்புக் கொடுத்து விட்டு நல்ல கதை எழுதி உள்ளார் மு.பொ. வேறு சிலரைப்

போல தலைப்புக்களால் தன் மேதாவித் தனத்தை பறை சாற்ற வெளிக்கிட்டாரோ தெரியவில்லை. இந்தத் தொகுதியின் சில தலைப்புக்கள் அச்சந்தேகத்திற்கு இடம் கொடுக்கின்றன. *யுகங்களை விழுங்கிய கணங்கள்" "பயம் கக்கும் விஷம்" இப்படியான தலைப்புக்கள். எளிய, அழகான தலைப்புக்கள் கொடுக்கக் கூடிய கவிதா ஆற்றலுள்ள மு.பொ. இத் தலைப்புக்களினால் ஈர்க்கப் பட்டதேனோ? இருப்பினும் இக்கதை கோகொலின் " ஒவர் கோற்" ஹென்றி யேம்ஸ் இன், புதுமைப் பித்தனின் ஆவிக் கதைகள் போன்ற ரகக் கதை தமிழில் புதிய உள்ளடக்கம் மேற்கில் இப்படிப் பட்ட ஆவிக் கதைகளை சீரியஸ் எழுத்தாளர்களும் எழுதி இருக்கிறார்கள் ஏன் அகிலனும் அப்படி ஒரு சிறிய நாவல் எழுதி இருக்கிறாரே?
*யுகங்களை விழுங்கிய கணங்கள்” அருமையான அனுபவக் கதை. நன்றாகவே எழுதப் பட்டுள்ளது.
ւյալb, ці5) என்ற உணர்ச்சியை உண்மையாகவே அனுபவித்ததால் எழுதப்பட்ட கதை. இருந்தாலும் ஒரு இடத்தில் தொய்வு ஏற்பட்டு, கதையை இறுதியில் நீட்டி விட்டது போல் ஒரு எண்ணம் கூடவே சில சொற்கள் "சப்பாத்தி” “சில கிழடுகள் G Taip6D6 - politically correct வார்த்தைகள் அல்ல. இவருடைய இன்னுமொரு கதையான கடலும் கரையும் இலும் கணவன் மனைவியை அறைந்து விட்டு பற்றற்று வாழ முயற்சிக்கிறானாம். ஆணாதிக்க அதிகாரமும அதற்கான நியாயப் படுத்தலும் அச்சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது. வேட்டை போன்ற கதைகளில் பயம், பீதி என்ற உணர்ச்சி ஒருவகை தத்துவமாகவே உருவகிக்கப் பட்ட கதைகள் இக்காலத்தில் அவ்வகையான உணர்ச்சிகள் ஆழமாக அலசப்பட வேண்டிய விசயங்கள்.
நல்ல கவிஞர் சிலர் நல்ல சிறுகதை ஆசிரியராகவும் வெளிக் காட்டி உள்ளனர். தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இப்படிப் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை பாரதியார் சிறுகதை எழுதி உள்ளார், புதுமைப் பித்தன் கவிதை எழுதி உள்ளார். அப்படிப் பலர் உதாரணம். சங்க காலத்துத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள் (lyrical p088) இக்காலத்தில் வாழ்ந்தால் சிறுகதைகள் எழுதி இருப்பார்கள் பின் வந்த காவியம் செய்தோர் இக்காலத்தில் நாவல் எழுதி இருப்பர். இந்தக் கருத்தைப் பலரும் ஏற்றுக் கொள்வர் செய்யுள் போய் உரைநடை இலக்கிய ஊடகமாய் வந்த பின் உரைநடை உருவம் படைப்பாளியின் தேவைக்கும் படைப்பின் இயல்பான வரம்புக்குள்ளும் அடங்கி விடும். அது சிறுகதை என்ற உருவமாகவும் சரி நாவல் என்ற உருவமாகவும் சரி எந்த உருவமாகவும் சரி அமையலாம்.
வேர்ட்ஸ்வேர்த், கெதே, வோல்ற் விற்மான், டி.எச். லோறன்ஸ் போன்றவர்கள் ஒரு பாத்திரத்தையே அல்லது கருத்தையே இறக்கும் வரை திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வார்கள். ஆழ்ந்து சிந்திக்கும் போது தனித்துவமான எந்த ஒரு சிந்தனையாளனும் அதைத் தான் செய்து கொண்டிருப்பான். தன் அடிப்படைச் சிந்தனைக்கு விரிவும் விளக்கமும் தேடிக் கொண்டிருப்பான். மு.பொ.வும் இக்கதைகளின் மூலம் அதையே செய்து கொண்டிருக்கிறார்.
- காலம் இளவேனில் 1997

Page 21
காத்திருப்பு
- ஜீவமுரளி
சியாவோ பிங் இறப்புக்குப் முன் கோ சி ெL மின் இறப்புக்குப் பின் மாவோ சே துங் இறந்த பொழுது என்னுடைய அப்பா அழுது விட்டார். அதன் பின் அவர் அம்மா, என் அம்மாச்சி இறந்த பொழுது வாய் விட்டு அழுதார். என் சிறு பிராயத்தில் நான் சொல்வதைக் கேளடா மடையா என்று என்னை அடிக்கடி கண்டிப்பார். ஒருநாள் அவருடன் சண்டை இட்டுக் கொண்டு வீட்டை விட்டுத் தேசங்கள் பலதாண்டி இங்கு ஒடி வந்து விட்டேன். அன்று அப்பாவும் அம்மாவும் தேசமும் அமைதி இழந்தனர். அவர்கள் வாழ்வில் சேர்த்துக் கட்டிய இனியகனவுகளை எல்லாம் கள்வர்கள் கொண்டு போக கதறி அழுதார்களம் என் பெற்றோரின் கோழிக் குஞ்சை மட்டும் அல்ல அவர்களின் ஆசைகளையும் பருந்து காவிச் சென்று விட்டது. அப்பா அம்மாவை ஒருநாளும் அடித்ததில்லை. வீட்டுத் தோட்டத்தில் கத்தரிச் செடிகளைப் பிடுங்கி தலைகீழாய் நடும் என் கெட்டிக்காரக் குழப்படியாலும் வீட்டைத் தலைகீழாக்கும என் சகோதரர்களாலும் அம்மா அடிக்கடி அழுவாள். இன்னும் அவள் கோயிலுக்குப் போகவிரும்பிய போதெல்லாம் அழுதாள். திருமணத்தின் பின் அம்மா கோயிலுக்குச் செல்வதை அப்பா அனுமதிக்கவில்லை. கல்லைக் கும்பிட ஏன் கோயிலுக்குப் போக வேண்டும் என்று சொல்கிற அப்பா இந்த விடயத்தில் என்றுமே அம்மாவை விளங்கிக் கொண்டதே இல்லை.
எங்கள் வீட்டு வரவேற்பறை வாசலில் வேட்டையாடப் பட்ட இரண்டு மான்களின் கொம்புகள், மரத்தில் செதுக்கப்பட்ட இரண்டு பொய் மான் தலைகளில் பொருத்தப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தன. சுவர்களைச் சுற்றிப் பெரிய ஃப்றேம்பள் போடப்பட்ட 605 குறுந்தாடிக்காரரின் LJLgpub ፴® பெருந்தாடிக்காரரின் படமும் ஒரு தடித்த மீசைக்காரரின படமும் குட்டிக் கண்களைத் தன் முகத்தில் ஒட்டி வைத்துக் கொண்ட இன்னொரு மனிதரின் படமும் கூடவே தொங்கிக் கொண்டிருந்தன. அந்த நால்வரும் அம்மாவைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுத்த அப்பாவின் கடவுள்கள் என்று அம்மா சொல்லிக் கொள்வாள். நான்கு கடவுளர்களை வைத்துக் கொண்டு ஒரு கடவுளையேனும் அம்மாவைக் கும்பிட அனுமதிக்காத அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்து பதினான்கு வருடங்களாகிவிட்டன. என் நினைவு, மனம், உடல், உணவு, தூக்கம் எல்லாம் ஒரு சீரற்று இயங்கின. நான் அமைதியும் விடுதலையும் பெற வேண்டி இறந்து போனதும் அமைதி இழந்த ஒரு தேசத்தில் இருந்து என்னை யாரோ
- காலம் இளவேனில் 1997 - -

அழைக்கின்றனர். எனக்காகப் பிரார்த்திக்கின்றனர். நான் சொல்வதைக்கேளடா என்கின்ற அப்பாவின் குரலும், நீ என்னிடம் வந்து விடு மகனே என்கின்ற அம்மாவின் முகமும் நினைவுக்குக் கொண்டு வர முடியாமல் மனமும், உடலும் களைத்துப் போய் விட்டன. இளமையாக இருந்த அப்பாவிற்கு முதுமை வந்து விட்ட செய்தியை கிழவர் டெங் கொண்டு வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் என்னுடன் சிறை இருந்த என் வாஞ்சைக்குரிய கிழவர் டெங் கூட எனக்காக இன்னும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். கம்போடியாவில் இருந்து பொல் பொற்றால் துளக்கி அடிக்கப்பட்ட அல்லது என்னைப் போல வீட்டை விட்டு ஓடி வந்த கிழவர் டெங் கம்போடியாவில் உள்ள எந்த ஒரு குடிமகனின் அனுமதியும் பெறாமல் வீடு புகுந்த ஃப்றெஞ்சுக்காரர்களின் நாட்டிலுள்ள பரிஸ் நகரில் அவர்களின் அனுமதி பெற்றே இருபத்தைந்து ஆண்டுகளின் முன் அகதியாக அடைக்கலம் புகுந்தவர். குழி விழுந்த கண்களும், தளர்வடைந்த கால்களிலும் கைகளிலும் இளமையில் முறுக்கேறிய தசைகளின் வடுக்களும், தோல்களின் வெளியே நீட்டிக் கொண்டிருந்த நரம்புகளும் அவரின் கதைகளைச் சொல்லின் பரிஸ் மாநகரின் சாப்பாட்டுக் கடைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் தன் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு தனிமையும் வெறுமையும் மிஞ்ச, கையில் பணமும் இன்றி தொலைத்தவைகளைத் தேடி ரயில் ஏறி இருக்கிறார் கிழவர் டெங் ரயில் மூலம் கம்போடியாவிற்குப் போகலாம் என்று நினைத்தாரோ என்னவோ கடைசியில் வசதி கிடைத்தால் ஆபிரிக்கர்களையும் மங்கோலியர்களையும் ஆசியர்களையும் ஒன்றாகப் போட்டெரிப்பதற்கு பெரிய எரிகிடங்கு ஒன்றை வெட்ட விருப்பம் கொண்டுள்ள பொலிஸ் உடை தரித்த நாசிகளால் ஜேர்மன். ஃப்றெஞ் எல்லையில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
நாங்கள் சிறையிருந்த ஒடுங்கிய அறையில், இரட்டை அடுக்கு கட்டில் போடப்பட்டிருந்தது. கட்டிலின் மேற்பகுதியில் அவர் படுத்திருப்பார். கட்டிலில் படுத்தபடியே ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்திருக்கின்றது. சுத்தமான புகையிலைக்கு எங்கே போவது? அதற்குப் பதிலாக நான் புகைக்கும் ராபாக் துகள்களில் இருந்து எடுத்துக் கொடுப்புக்குள் போட்டு உறிஞ்சிக் கொண்டிருப்பார். கண்களை மூடிய படியே தான் அவர் பெரும்பாலும் இருந்தார். அவர் எந்தக்காலத்தை மீட்டுக் கொண்டிருந்தார்? என்னைப் போல இறந்த காலத்தைத் தானா? தன் நேசத்துக்குரியவளோடு கம்போடிய வயல் வெளிகளில்
19

Page 22
C
சுற்றித் திரிந்த தன் குழந்தைகளின் மொழிகளையா? நண்பர்களின் கராத்தேயும் குங் ஃபூவும் விளையாடி சாகசங்கள் செய்து மகிழ்ந்து இருந்ததையா? கிழவர் டெங்கை நிகழ் காலத்திற்கு அழைத்தேன். அவர் வர மறுத்தார். அவருக்குக் மனைவி குழந்தைகள் இருந்தார்களா என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொல்லவில்லை. தெரியவில்லை என்று மட்டும் கண்களை விழித்தபடி சொன்னார். அவர் முகத்தில் வெறுமையைத் தவிர காலங்களின் பிரதிபலிப்பைக் காண முடியவில்லை. கண்களை
20
 

மூடிக் கொண்டு காணும் தெளிவற்றதும் கண்முன் கொண்டு வர முடியாதுமான இறந்த காலம் மட்டுமே அவருக்குச் சொந்தமானது நிகழ் காலம் கள்வர்களினதும் அரசியற் சூதாட்டக்காரர்களினதும் கைகளில் இருக்கின்றது. திக்கற்றதும் வெளிச்சமற்றதுமான எதிர்காலத்தை இந்தப் பனிக் குளில் ஒரு வென்னிர்க் குளியல் போடுதலிலாவது கண்டு கொள்ள முனைவேன். அன்று சனிக்கிழமை, கைதிகள் எல்லோரும் வென்னிர்க் குளியலில் திக்கற்றதும் வெளிச்சமற்றதுமான தங்களின் எதிர்காலத்தைக் காண விளையும் நாள் கிழவர் டெங் கைதான பின் ஒருநாளும் குளிப்பதற்கு வரவில்லை. அவர் கட்டிலை விட்டு இறங்கி அடிக்கடி ரொயிலெற்றுக்கு போவதும் வருவதுமாக முகத்தினை உடலை ஈரச் சால்வை ஒன்றினால் துடைத்துக் கொண்டும் இருப்பார். குளிக்க வாருங்களேன் என்று வற்புறுத்திக் கேட்டேன். கம்போடியாவிற்குச் சென்று குளித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார். இறந்த காலத்தில் இருந்து வரமறுக்கும் இறந்த காலத்தில் வாழ்வதையே அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் என் பெற்றோருக்கும் முதுமை வந்து விட்டது என்ற செய்தியைக் கொண்டு வந்திருக்கும் அவரை நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் வரும்படி அழைத்தது எவ்வளவு பெரிய தவறு ஏன் என்று எனக்குப் புரியாமல் போய் விட்டது. அம்மா இப்பொழுதெல்லாம் அடிக்கடி கோயிலுக்குப் போய் எனக்காக அர்ச்சனைகள் செய்கிறாளாம். அப்பாவின் கண் பார்வை மங்கிக் கொண்டு போகின்றதாம். இப்பொழுதாவது அம்மா கோயிலுக்குப் போவதை கண்டு கொள்ளாமல் இருப்பது அவர் அம்மாவை விளங்கிக் கொண்டு விட்டார் என்று சந்தோசப் பட வைக்கின்றது. வீட்டு வரவேற்பறை வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் நான்கு கடவுள்களில் பெரிய மீசைக்காரனின் படத்தைத் தூக்கி வீசி விட்டு தாடிக்கார கடவுளர்களையும் சிறிய கண்களைக் கொண்ட கண்களைக் கொண்ட கடவுளையும் எனக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறாராம் பதிலாக கவர்களில் எனது படங்கள் தொங்க விடப்பட்டுள்ளனவாம். ஓர் அர்த்தத்தில் பார்த்துக்கொள்ளவும் பேசிக் கொள்ளவும் தொட்டுக் கொள்ளவும் முடியாத கடவுளைப் போல் என் படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. அமைதி இழந்ததும் இறந்து போனதுமான ஒரு தேசத்தில் வீட்டுத் தோட்டம் போட்டுக் கொண்டு அப்பா அமைதபியாக உள்ளார். அம்மா கோயிலுக்குப் போய் வருகிறாள். கிழவர் எனக்காக இன்னும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். என் நினைவு, மனம், துளக்கம், உணவு, உடல், வேலை காலங்களைக் கடந்தும், தாண்டியும் காலங்களுக்கு அப்பாலும் ஒரு சீரற்றதாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
- காலம் இளவேனில் 1997

Page 23
dafui
சினிமாவுக்குப் போன சித்தாளு” என்று
ஜெயகாந்தன் ஒரு நாவல் எழுதி இருந்தார். அதில்
சினிமாவினால் ஏற்படும் சீரழிவுகள், குடும்பச்
சிதைவுகள், வக்கிரங்கள் முதலியன எடுத்துக் காட்டப்பட்டன. அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலுமே பொதுவாகக் காணக் கூடிய ஒன்று என்று நினைத்திருந்தேன். இங்கு வந்த பின் சீனப் படங்கள் சில பார்த்தபோதும் இதே நிலை காணப்பட்டதை உணர்ந்தேன். ஹொலிவுட் படங்கள் மட்டும் இவற்றை விட வித்தியாசமானவையாகத் தெரியவில்.ை அதைப் பார்ப்பவரின் கலாச்சாரம் வித்தியாசப் பட்ட, படுகிற படியால் அவை சிலவேளை வித்தியாசமாகத் தெரிகிறது. அவ்வளவே. இருந்தும் இது பொது விதியாக எங்கும் காணப்படுகிறது. ரிவியின் வருகையால் சினிமா மோகம் ஒரு காலத்தில் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் மற்ற எந்த நாட்டையும் போலக் குறைந்து விடும் சாத்தியங்கள் வரலாம். அழிவிலும் நல்ல விசயங்கள் சில நடப்பது போல. மேல் வரும் கட்டுரையை வாசிக்கும் போது சினிமா மோகம் வேறு, சினிமாக் காதல் வேறு என்ற பாகுபாடு தெரிய வரும். சினிமாக் காதல் - காதல் என்ற புனிதமான, பவித்திரமான உண்மையான அர்த்தத்தில் - இங்கு சொல்லப் படுகிறது. அதையே கட்டுரை ஆசிரியர் சினிமாஃபீலியா (உெைநஅயிாநடயை) என்கிறார். அது நம் நாடுகளில் காணப்படும் சினிமா மோகம் அல்லது சினிமாப் பைத்தியத்தில் இருந்தும் முற்று முழுதாக வேறானது. இக்கட்டுரை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என்பவை பற்றியும் அதன் சில அடிப்படைகளையும் எடுத்துக் கூறுகின்றது. “கார்டியன்” பத்திரிகையில் வந்த இக்கட்டுரையை ஓரளவு சுருக்கி தமிழாக்கித் தருகின்றோம். கட்டுரை ஆசிரியர்: சூசன் சொன்ராக்)
மனித உயிரும் பிறந்து, வாழ்ந்து, தவிர்க்க முடியாது இறப்பது போல சினிமாவும் 100 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்து, கடந்த ஒரு தசாப்தமாக இறந்து கொண்டிருக்கிறது. இனிமேல் நாம் ரசிக்கக் கூடிய புதிய படங்கள் வரா என்பதல்ல அதன் அர்த்தம். அது புற நடையாக இருக்காது. சாதாரண படங்கள், பொழுது போக்குக்காகத் தயாரிக்கப் பட்ட வணிகப் படங்கள் வியப்புக்குரிய முறையில் மதி நுட்பமற்ற படங்களாகவே தொடர்ந்து வெளிவரும் ஏற்கெனவே பெரும்பான்மையான படங்கள் இலக்கு வைத்த பார்வையாளர்களை அடைய முடியாமல் அந்தோ என்று தோல்வி அடைந்துள்ளன. இப்போது மாபெரும் படத்தின் நோக்கம்
- காலம் இளவேனில் 1997 ! -

- இனி
முன்னெப்போதையும் விட அந்த வகையில் ஒரே ஒரு தனித்த படமாக இருப்பதே. ஆனால் வணிகப் படம் தன் கொள்கையாக முன்னைய வெற்றியை அடையலாம் என்ற நம்பிக்கையில் வேறொன்றிலிருந்து கடன் வாங்கிய படக் கலவைக் கலையாகத் தேங்கி விட்டது. மிகப் பெருந் தொகையான பார்வையாளரை அடையலாம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு படமும் பழைய படத்தின் மீள் உருவமாகவே தயாரிக்கப் படுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் கலை என்று முன்பு கொண்டாடப்பட்ட சினிமா இந்த நூற்றாண்டின் முடிவு அண்மிக்கு முன்பே உளுத்துப் போன கலையாகிக் கொண்டிருக்கிறது. சினிமாக் காதல், அதாவது சினிமா மக்களில் ஏற்படுத்திய அந்தப் பெரும் காதல் குறைகிறது. ஒவ்வொரு கலையுமே அதற்கான வெறியர்களை உருவாக்கும். சினிமா உருவாக்கியவர்கள் மிக விசேசமானவர்கள். மற்றக் கலைகளைப் போலல்லாது சினிமா விசேசமான கலை என்ற எண்ணத்தின் அடியாக அது வந்தது. அடிப்படையில் நவீனமானது. பலரும் பார்த்து ரசிக்கக் கூடியது. கவித்துவமானது புதிரானது. புலன் இன்பம் சார்ந்தது. ஒழுக்கப் படிப்பினை உள்ளது. அப்படியாக அனைத்தும் ஒரே நேரத்தில் உள்ளது. சினிமா சமயத்தைப் போல. அதற்கும் திருத்தொண்டர்கள் இருந்தார்கள். அது சிலுவை யுத்தம் போல, உலக நோக்குடையது. கவிதையை, ஒபராவை, நடனத்தை நேசிப்பவர்கள் அவை மட்டுந் தான் இருக்கின்றன என்று யோசிக்க மாட்டார்கள். ஆனால் சினிமாவை நேசிப்பவர்கள் அதைத் தவிர்ந்த வேறொன்றுமே இல்லை என்று யோசிப்பர். சினிமாப் படங்கள் அனைத்தையும் அடக்கியவை. அது கலை நூலும் வாழ்க்கை நூலும் ஆகும். நுாறு ஆண்டுகளுக்கு முன் படம் தயாரிக்க ஆரம்பித்த போது இரண்டு விசயங்கள் ஆரம்பித்தன. அதன் ஆரம்ப ஆண்டான 1895 ல் இரண்டு வகைப் படங்கள் உருவாக்கப் பட்டன. இருவகைப் பட்டதாக சினிமா இருந்தது. முதலாவது: மேடை ஏற்றப்படாத யதார்த்த வாழ்க்கையை உருவாக்குவது. இதை லுமியே (Lumiere) சகோதரர்கள் ஆரம்பித்தனர். இரண்டாவது: சினிமா 69C05 கண்டு பிடிப்பாக செயற்கையானதாக, LDT60)ulu IIT85, கற்பனையானதாக உருவாகியது. அதை மெலியே (Melies) செய்தார். ஆனால் ᏯᎥ60Ꭷ6Ꮒl எதிர் எதிரானதல்ல. முதல் பார்வையாளருக்கு லுமியே சகோதரர்களின் A Train Af Cata Station சாதாரண எளிய காட்சியை கமெரா மகத்தான காட்சியாக மாற்றிக் காட்டியது. அது ஓர் சுவாரியமான அனுபவம். அந்த வியப்புடன் சினிமா ஆரம்பமாகியது. யதார்த்தத்தை மாயாயாலத்தால்
21

Page 24
அண்மையில் பார்த்த வியப்பு சினிமா வியப்பை நீடிப்பதற்கான முயற்சி மீளக் கண்டு பிடிப்பதற்கான முயற்சி நூறு ஆண்டுகளுக்கு முன் புகை வண்டி புகையிரத நிலையத்துக்குள் நுழைந்த அந்தக் கணத்திலேயே அனைத்தும் ஆரம்பித்தன. பார்ப்போர் அனைத்தையும் தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டனர். புகைவண்டி அவர்களை நோக்கி வருவதைக் கண்டதும் தங்களைக் காப்பாற்ற உண்மையாகவே குனிந்து கொண்டனர். பரபரத்துக் கத்தினர். ரெலிவிசன் வந்து சினிமாத் தியேட்டர்களைக் காலி செய்யும் வரை கிழமை தோறும் சென்று படம் பார்த்து எப்படி நடப்பது, எப்படி சிகறெற் பிடிப்பது, கொஞ்சுவது எப்படி, சண்டை பிடிப்பது எப்படி, கவலைப் படுவது எப்படி, சோகமாக இருப்பது எப்படி என்றெல்லாம் கற்றோம். அல்லது கற்க முயற்சித்தோம். படங்கள் வசீகரமாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான துப்புக்கள் தந்தன. உதாரணமாக, மழை பெய்யா விட்டாலும் றெயின் கோற் போட்டால் அழகாக இருக்கும் என்பது போன்றவை. படத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற போது பெரும் அனுபவத்தில் சிறு பகுதியை வீட்டுக்குக் கொண்டு சென்றோம். பட அனுபவத்தின் உள் நோக்கமும் அதுவே. படத் திரைக் காட்சியில் அப்படியே சரணாகதி அடைவதும் அதனால் கடத்திச் செல்லப்படுவதுமே அதன் மிகப் பெரும் அனுபவம் படிமங்களின் பெளதிக பிரசன்னத்தால் கடத்திச் செல்லப்படுவது அதன் முதல் நிபந்தனை. அதற்குப் படம் பார்க்கப் போக வேண்டியது அவசியம்.
ரிவியில் மகத்தான படத்தைப் பார்த்தால் கூட அந்தப் படத்தைப் பார்த்தது போல இருக்காது. படத் திரைக்கு ஒரே அளவு தான் என்றில்லை. அதனால் வீட்டில் உள்ள திரைகள் இருக்கை அறை, படுக்கை அறைச் சுவர் அளவு கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் படுக்கை அறையில் அல்லது இருக்கை அறையில் இருந்து தனியாக அல்லது குடும்பத்துடன் படம் பார்க்கிறீர்கள். அங்கே கடத்திச் செல்லப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. தியேட்டர்களில் இருக்கும் அந்தச் சாத்தியம் இங்கே இல்லை. அந்நியர்களுடன் இருட்டில் இருந்து பார்க்கும் போது ஏற்படும் அந்த அனுபவம்.
படிமங்களும் பல அளவுகளில் பல தளங்களில் தியேட்டரில் தோன்றுகின்றன. ஆனால் வீட்டுத் திரையில் உள்ளங் கை அளவில் இருந்து சுவர் அளவு வரை, டிஸ்கோ திரைகளில்,விளையாட்டிடங்களிலுள்ள மாபெரும் திரைகளில் அப்படிப் பட்ட இடங்களில் எல்லாம் அசையும் படிமங்கள் தெரிய ஆரம்பித்து விட்ட படியால் ஒரு காலத்தில் மக்களிடம் சினிமா ஒரு சீரியஸான கலை அல்லது சினிமா ஒரு பிரபல்யமான பொழுதுபோக்குச் சாதனம் என்று இருந்த எண்ணம் படிப்படியாகக் குறைந்து விட்டது. ஆரம்ப ஆண்டுகளில் சினிமா கலை என்றோ சினிமா பொழுது போக்கு என்றோ அடிப்படையில் வித்தியாசம் இருக்கவில்லை. பேசாத படக்காலத்தில் படங்கள் அனைத்தும், மாபெரும் படங்களாக இருந்தாலும் gif, வாய்ப்பாடு ரீதியான கமெடிகள் அல்லது உணர்ச்சிவசப்படுத்தும் Melodrama ILOTS
22

இருந்தாலும் சரி பின் வந்தவற்றுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த கலை மட்டத்திலேயே இருந்தன. ஒலி புகுத்தப் பட்டவுடன் படிமங்கள் தம் கவிதையையும் ஒளியையும் இழந்து விட்டன. வணிகத்தரங்கள் இறுக்கமாகின. ஹொலிவுட் அமைப்பு ஏறத்தாழ 25 வருடங்கள் (1930-55) பட உருவாக்கத்தை மேலாதிக்கம் செய்தது. மிகத் தனித்துவமான இயக்குநர்களான எரிக் வொன் எல்றொஹெய்ம், ஓர்சம் வெல்ஸ், போன்றவர்கள் இந்த அமைப்பால் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் ஐரோப்பாவில் கலை அஞ்ஞாதவாசம் செய்தனர். அங்கும் இங்குள்ள அமைப்புப் போல ஆனால் குறைந்த செலவுத்திட்டங்கள் குணத்தரத்தில் தோல்வி அடையும் அமைப்புக்களே இருந்தன. இந்தக் காலத்தில்ஃபிரான்சில் மட்டுந்தான் மிகச் சிறந்த படங்கள் பலவற்றைத் தயாரித்தார்கள். பின் 1950 களின் மத்தியில் முன்னணிக் கருத்துக்கள் திரும்பவும் பற்றிக் கொண்டன. சினிமா ஒரு கைவினை என்ற கொள்கை இரண்டாம் உலக யுத்தத்தின் பிற்பட்ட காலத்தில இத்தாலிய படங்களில் முன்னெடுக்கப் பட்டது. உயர்ந்த, சீரியஸ்ான தனித்துவமானசெறிவுணர்ச்சியான பல படங்கள், புதிய நடிகர்களுடன், signs தொகையினருடன்தயாரிக்கப்பட்டுதிரைப்பட விழாக்களுக்குச் சென்றன. திரைப்பட விழாக்களும் பெருகின. திரைப்படவிருதுகள், மாலைகளுடன் உலகத் திரைகளில் வலம் வந்தன. இப் பொற்காலம் 20 வருடங்கள் நின்று பிடித்தது. சினிமாவின் நூறாண்டு வரலாற்றில் இந்தக் குறிப்பிட்ட கணத்தில் தான் படம் பார்க்கப் போவதும் படங்களைப் பற்றிப் பேசுவதும் சிந்திப்பதும் பல்கலைக் கழக மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் உணர்ச்சிகரமான ஒரு விசயமாகியது. நடிகர்களில் மோகம் கொள்வது மட்டுமன்றி சினிமாவிலேயே காதல் கொண்டனர். சினிமாக் காதல் ஃபிரான்சில் 1950 களில் தெரிய ஆரம்பித்தது. புத்துணர்வூட்டிய படச் சஞ்சிகையான Cahiers du Cinema அதன் களமாகியது. அதைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் முழுவதுமே பல சஞ்சிகைகள் வந்தன. 1960 - 70 ஆரம்பங்களில் படம் பார்ப்பவர்களின் காலம் உச்ச கட்டத்தை அடைந்தது. முழு நேர சினிமாக் காதலன் பெரிய திரையின் மிக அருகாமையில் இடம் பிடிக்க முயற்சித்தான் பெற்றோலுக்கியின் பாத்திரம் ஒன்று உநகழசந வாந சுநஎழடரவழைஎென்ற படத்தில் "றொ.ெ சல்லினி இல்லாமல் அவனால் வாழ முடியாது” என்று சொல்கிறது. அது உண்மையிலும் உண்மை, சினிமாக் காதலரின் ரசனை கலைப் படத்தையும் பிரபல்யப் படத்தையும் இணைத்துக்கொண்டது. ஐரோப்பிய சினிமாக் காதலர் பட இயக்குநரின் சில படங்களில் காதல் கொண்டிருந்தனர். அது போலவே ஹொலிவுட் இயக்குநர் சிலரின் படங்களிலும் ஏற்பட்டது. அக்கணம் தான் ஹொலிவுட் ஸ்ருடியோ அமைப்பும் உடைபட வெளிக்கிட்ட 5ணம். படமடருவாக்கம் பரிசோதனை செய்யும் உரிமையை நீண்டும் வென்றெடுத்தனர் போலிருந்தது. பழைய ஹொலிவுட் வகைப்படங்களைப் பொறுத்த வரை சினிமாக் காதலர் உணர்ச்சிச் செறிவுள்ளவர்களாக அல்லது மிகை உணர்ச்சி உள்ளவர்களாக இருக்க முடிந்தது. புதியவர்கள் லர் சினிமாவுக்கு வந்தனர். அதில் சினிமாச் சஞ்சிகையின் ட விமர்சகர்களும் அடங்குவர். அவர்களுள் உயர்ந்து
— காலம் இளவேனில் 1997 -

Page 25
நிற்பவர் ஜோன் லுக் கொடாட். எழுத்தாளர்களில் சிலர் திறமை வாய்ந்த படம் உருவாக்குபவர்களாகவும் உருவானார்கள். ஜேர்மனியைச் சேர்ந்த குளுகே, இத்தாலி யைச் சேர்ந்த பியர் பாலோ பாசொலினி இவர்களில் முக்கியமானவர்கள் 15 வருடங்கள் ஒவ்வொரு மாசமும் புதிய பெரும் படைப்பு உருவானது. அது தொடரும் என்று கற்பனை செய்தோம். அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்று இப்போது எங்களுக்குத் தெரிகிறது.
எப்போதுமே சினிமா என்ற கலைக்கும் சினிம என்ற தொழிலுக்கும் முரண்பாடு இருந்தது. அது போலவே சினிமா என்ற பரிசோதனைக்கும் ஒரே மாதிரி தன்மைக்கும் முரண்பாடு இப்போது அந்தத் தராசு சினிமா ஒரு தொழில் என்பதன் பக்கம் சாய்ந்து விட்டது. 1970 இல் இருந்த பெரும் சினிமா முழுவதாகவே இல்லாமல் போய் விட்டது ஏற்கெனவே, 1970 களில் ஹொலிவுட் படங்கள் வெற்றிகரமான புதிய ஐரோப்பிய படங்களிலும் ஒரம் நின்ற சுதந்திரமான அமெரிக்கன் படங்களிலும் இருந்த கதை உரைத்தலில் உள்ள புதுமையைத் தழுவியும் அற்பமான
- காலம் இளவேயில் 1997 | -
 

தாக்கியும் படம் தயாரித்து விட்டன. அடுத்து வந்தது பெருங்கேடு விளைவித்த தயாரிப்புச் செலவு 1980 களில் அது உலகம் முழுவதும் படங்களைத் தயாரிப்பதிலும் விநியோகிப்பதிலும் பலவந்தப் படுத்தும் தொழிற் தரத்தைத் திணித்தது உண்மையில் அது உலகளாவியது. அதன் விளைவை கடந்த தசாப்தத்தின் பெரும் இயக்குநர்களை சோக விதிக்குள் தள்ளியது தான் தோன்றியான ஹன்ஸ் யேகன் சைபர்பேக் போன்ற இயக்குநர்களின் இடம் என்னவாகியது? அவர் படம் இயக்குவதையே நிறுத்தி விட்டார். பெரும் கொடாட் இப்போது வீடியோவில் படங்களின் வரலாறு பற்றிப் படம் எடுக்கிறார். அப்படிப் பல உதாரணங்கள் ஆருடம் சொல்லிய மாதிரி சினி மாவில் ஏற்பட்ட காதல் தேய்ந்தது மக்கள் இன்னும் சினிமாவுக்குப் போவதற்கு விரும்புகிறார்கள் இன்னும் சினிமாவைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் சிறப்பான படங்கள் வரும் என்று இன்னும் எதிர்பார்க்கிறார்கள் சில வியக்கத் தக்க படங்கள் இன்னும் வரத் தான் செய்கின்றன. மைக் லே இன் யேமநன ஜியான்னி அமெலியோ வின் டுயஅநசனஉய ஃப்ரெட் கெலெமென் இன் குயவந. ஆனால் படங்களில் உள்ள தனித்துவமான காதல் இல்லாமல் போய் விட்டது. குறைந்தது இளைஞர்களிடம் அந்தக் காதல் படங்களில் உள்ள தனிக் காதல் மட்டும் அல்ல. அது படங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட ரசனை. பார்ப்பதும் திரும்பத் திரும்பப் பார்ப்பதுமான பெரும் பசி இல்லாமல் போய் விட்டது.
சினிமாக் காதலும் தாக்குதலுக்குள்ளானது. விசித்திர குணமுடையது என்றும் பழசாகிப் போனது என்றும் போலிப் பகட்டானது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால் சினிமாக் காதலர் படங்கள் தனித்துவமானவை, மாயா ஜால அனுபவங்கள் நிறைந்தவை என்று நினைத்தனர் என்று கருதப் பட்டது. சினிமாக் காதலர் கொடாட்டின் மசநயவாடநளள ஐ மூலப்படம் மாதிரி ஹொலிவுட் திரும்பவும் எடுக்க முடியாது என்றனர்.
சினிமாக் காதல் உயர் பெருந்தொழில் பட யுகத்தில் எந்த பங்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் சினிமாக் காதல் அதன் பல் நலக் கட்டுச் செறிவுணர்ச்சியும் படங்கள் கவித்துவப் பொருள் என்ற கருத்தியலும் அவர்களிடம் இருந்தன. அத்துடன் படத் தொழிலுக்கு அப்பால் உள்ளவர்களை அவர்களால் படம் எடுக்கும் படி தூண்ட முடியாது என்பதும் உண்மை.
சினிமாக் காதல் இறந்து விட்டது என்றால் சினிமாவும் செத்து விட்டது. சினிமா திரும்பவும் உயிர் பெற்றெழ வேண்டுமானால் புதிதாகத் திரும்பவும் சினிமாக் காதலின் பிறப்பால் தான் முடியும்,
தமிழில்: சித்ரபாணு

Page 26
முதியோரும் சமூகநல உதவியும்
இக்கட்டுரையில் அடங்கிய அறிவுரைகளை சட்ட அறிவுரைகளாக ஏற்க வேண்டாம் சட்ட ஆலோசனைகளுக்கு அவற்றை வழங்கும் காரியாலயங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்) உங்கள் உற்றார் உறவினரை ஸ்பொன்சர் பண்ணி கனடாவுக்கு வரவழைத்திருந்தால் நீங்கள் 10 வருடங்களுக்கு அவர்களைப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளிர்கள். இந்தப் பொறுப்பைப் பெரும்பாலோர் நிறைவேற்றுகிறார்கள். சிலவேளைகளில் வருமானம் அல்லது சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக பராமரிக்க முடியாமல் போகிறது. மிகச் சிலர் தமது கடமையைச் செய்யக் காரணமில்லாமல் மறுக்கிறார்கள். பெற்றோரை ஸ்பொன்சர் பண்ணிவிட்டு அவர்களைப் பராமரிக்கக் காரணமின்றி மறுக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை இங்கே ஆராய்வோம் ஸ்பொன்சரில் வந்தவர்கள் வேலை கிடைத்துச் சுயமாக இயங்கினால் ஸ்பொன்சர் செய்தவருக்கு எவ்வித பொறுப்பும் ஏற்படாது. ஆனால், பெற்றோருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சுயமாக இயங்கும் சந்தர்ப்பம் கிடைப்பது முதுமை காரணமாக அரிது. ஆதலால், சமூக நல உதவியைப் பெறுவது தவிர வேறு வழி இல்லை, சமூக நல உதவியைப் பெறுவதில் அவர்களுக்குப் பல தடைகள் ஏற்படுகின்றன.
ஸ்பொன்சர் பண்ணுவோர் தாம் பொறுப்பேற்றோரை பராமரிப்பதற்காக மத்திய அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை முறித்தால் ஸ்ரென்சரில் வருவோரை அரசாங்கம் சட்டப்படி திருப்பி அனுப்ப முடியும். ஆனால் அரசாங்கம் அப்படிச் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை தற்போது கொண்டு வரப்பட்ட சமூக நலனுதவிச் சட்ட மாற்றங்களுக்குக் கீழ் ஸ்பொன்சர் பண்ணப்பட்டோர் உதவி பெற வேண்டுமானால் கீழ் வரும் காரணங்களை ஒப்புவிக்க வேண்டும்: 1) ஸ்பொன்சர் பண்ணியவரிடம் இருந்து உதவி பெற இயன்றளவு எத்தனித்தோம். 2) ஸ்பொன்சர் பண்ணியவர் பராமரிக்கத் திட்டவட்டமாக மறுக்கிறார். அல்லது 3) எப்பொன்சர் பண்ணியவருக்கும் பண்ணப்பட்டோருக்கும் இடையிலான தொடர்புகள் வன்செயல் காரணமாக முறிக்கப் பட்டு விட்டன.
ஸ்பொன்சளில் வந்த முதியோர் இந்தக் காரணங்களை ஒப்பிப்பதில் பெரும் கஷ்ரத்துக்குஉள்ளாகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் எங்களுடைய சமூக, கலாச்சார மரபு முறைகளாகும் தமது உறவினர், நண்பர் மத்தியில் தம் மதிப்பை இழப்போம் என்ற எண்ணத்துடன் ஸ்பொன்சர் பண்ணியோர் தாம் பராமரிக்க மாட்டோம் என்று எழுத்தில் கொடுக்கவோ அல்லது சமூக நல காரியாலயத்துக்கு அறிவித்தல் கொடுக்கவோ தயங்குகிறார்கள். அப்படி எழுதிக் கொடுத்தால் பின்பு ஒருவரையும் ஸ்பொன்சர் பண்ண முடியாது என்பதும் அவர்களுடைய தயக்கத்துக்குக் காரணமாகும். உதவியும் வழங்காமல், உதவியும் செய்ய மாட்டோம் என்றும் காட்டாமல் இருப்பதால் சில முதியோர் பெரும் கரத்துக்குள்ளாகிறார்கள் அவர்களுக்குச் சமூக நலனுதவி வழங்கச் சட்டம் இடங் கொடுக்காது.
சில முதியோர் வன்முறைகளுக்கு இலக்காகிறார்கள் எங்கள் சமூக வழக்கத்தில் பெற்றோருக்கு வன்செயல் செய்வதை
24

மிகக் கேவலமான செயலாகக் கருதுகின்றோம் பிள்ளைகள் செய்யும் வன்முறைகளை வெளியோர் அறிவதை கேவலம் என்றும் பெற்றோர் நினைக்கிறார்கள். அதனால் வன்செயல்களின் உண்மையான நிலை வெளியே தெரிய வருவதில்லை. அடிப்பது, உதைப்பது மாத்திரம் வன்செயல்கள் அல்ல, மனதைப் பெரிதும் புண்படுத்துவதும் துன்புறுத்துவதும் வன்செயல்களே. பெற்றோருடைய சொத்துக்களைப் பறிப்பது, அவர்களுடைய அவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தடுப்பது என்பனவும் வன்செயல்களே. சுருக்கமாக, முதியோர் உடலையோ, உள்ளத்தையோ தாக்கும் எச்செயலும் வன்செயலாக அமையும். தாம் வன்முறைக்கு இலக்காகும் போது பொலிசுக்கு அறிவித்து தமது பிள்ளைகளைக் கற்றவாளியாகக் காட்ட பெற்றோர் விரும்புவதில்லை. எல்லாவித இன்னல்களையும் பொறுத்து, ஒறுத்து இறப்பில் நிம்மதியைப் பெற எதிர்பார்க்கும் முதியோர் ஒரு சிலரல்ல. அப்படிக் கஷ்ரப்படுவோருக்கு ஒரு அறிவுரை: தமது பிள்ளைகளைக் குற்றவியல் சட்டத்துக்குள்ளாக்க விரும்பாதோர் தமது கவுரங்களைக் குடும்ப வைத்தியரிடம் கூறலாம். தேவை ஏற்படின் குடும்ப வைத்தியர் மன நல வைத்திய நிபுணரிடம் ஆலோசனைக்கு அனுப்பலாம். இந்த விடயம் பற்றி எவருக்கும் தெரிய வராது. பொலிசுக்கு அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் வைத்தியர் அறிவிக்க மாட்டார். ஒருவரின் உயிருக்கு ஆபத்து என்று தெரியும் போது மாத்திரம் உங்கள் வேண்டுகோளையும் மீறி பொலிகக்கு அறிவிக்கும் கடமை வைத்தியருக்கு ஏற்படும்.
வைத்தியரையும் மன நல வைத்திய நிபுணரையும் ஈடுபடுத்துவதால் சமூக நலனுதவி பெறும் வசதி ஏற்படுகிறது. சமூக நலனுதவிக் காரியாலயம் உங்கள் அனுமதியுடன் வைத்திய ஏடுகளில் உள்ள முறையீட்டுச் சாரம்சத்தைப் பெறலாம். அல்லது சமூக நலனுதவி தர மறுத்து மேன்முறையீடு செய்யும் போது அவற்றைச் சாட்சியங்களாக ஒப்படைத்து சமூக நலனுதவி பெற முடியும் இந்த வைத்திய ஏட்டுச் செய்திகள் மிக அந்தரங்கமானவை. ஒருவருக்கும் தெரிய வராது. எங்கள் சமூகத்தினர் பல மேன்முறையீடுகளை சமூக நலனுதவி மீள்பார்வை குழுமத்துக்கு மேன்முறையீட்டு விளக்கத்தின் போது எடுத்துரைக்கலாம். வன்முறைக்குள்ளானோர் தமது இன்னல்களை விளக்கத்தின் போது சொல்லத் தயங்குகிறார்கள். சிலர் ஒன்றும் பேசாமல் அழத் தொடங்கி விடுகிறார்கள் சட்டப்படி வன்முறை ஒப்புவிக்கப் பட்டாலொழிய சமூக நலனுதவி வழங்க முடியாது. மேன்முறையீட்டை விசாரிப்பதற்கு நிலைமை விளங்கினாலும் சாட்சியங்கள் இல்லாமல் சரியான தீர்ப்பைக் கொடுக்க முடியாது. இப்படியான கட்டத்தில் கஷ்ர நிலை திர வழியில்லை, இறப்பில் நிம்மதி பெறுவது தான் ஒரே வழி எங்களுள் பெரும்பாலோர் தமது பெற்றோரை பராமரிக்கிறார்கள் என்பது எமக்குப் பெருமை தரக்கூடிய ஒரு செய்தி. சிலர் மாத்திரமே தமது கடமையில் இருந்தும் தவறுகிறார்கள். இவர்களுட் சிலர் வன்செயலில் ஈடுபடுகிறார்கள். துன்புறுவோருக்கு நிவாரணம் பெற வழிவகுப்பது எங்கள் எல்லோருடைய சமூகக் கடமையாகும் நான் Roach Schwartz & Associates 5ITUsiggs) (36.606) 05ulogs/Lor ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் முதுநலவியல் 'Gerontology) ஆராய்ச்சிப் படிப்பிலும் ஈடுபட்டு உள்ளேன். முதியோர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு என்னுடன் (416) 657 1465 தொடர்பு கொள்ளலாம்.
வே. பாலசுப்ரமணியம்.
-H காலம் இளவேனில் 1997 H

Page 27
கிறிஷாந்த
ரீபாக்கிய தத்தவும்
3G) (560)Lul கவிதைகளும்
 

லைப்பில் உள்ள வரிகள் கிறிஸாந்த பாக்கியதத்தாவின்
ஆங்கிலக் கவிதையொன்றின் பகுதிகள் இலங்கையில் தி பிறந்து, தன்னுடைய வாலிபப் பருவத்தில் கனடாவுக்குப்
புலம் பெயர்ந்து கலகக் குரலாக வாழ்ந்து வருபவர் கிறிஸாந்த சிறி பாக்கியதத்தா. ஆங்கிலத்தில் இவரது மூன்று கவிதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன.
I. Dorlestic Bliss 2. The only minority is the Bourgeoisie 3. 52nd State of Amnesia
galls sail Rivers Haye Sources; Trees Have Roots sigui நூலையும் நாவலாசிரியர் டியோன் பிராண்ட் உடன் இணைந்து வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் ரொரொண்ரோவில் வாழும் கறுப்பு, சுதேசிய, சீன மற்றும் தென்னாசிய மக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் இனவாதம் பற்றி அம்மக்கள் பலருடனான நேர்முகங்களின் தொகுப்பாகும் எழுபதுகளின் ஆரம்பத்தில் பல்கலைக் கழக வாழ்வைத் தூக்கி எறிந்து விட்டு தீவிர இடதுசாரிப் புலவனாகப் புறப்பட்டவர் கிறிஸாந்த அன்றிலிருந்து இன்றுவரை முழுநேர எழுத்தாளராகவும் கவியாகவும் வாழ்ந்து வருகிறார். அங்கதம், கேலி, கிண்டல் என்பன இவருடைய பல கவிதைகளுக்குச் சுவையும் வளமும் ஊட்டுபவை. 1993 இல் வெளியான அவருடைய 52ISale fArtsi எனும் தொகுதி கனடாவில் அரசியல் கலைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடிய அரசியல், இலங்கை அரசியல், சர்வதேச அரசியல் என்பவற்றை மிகுந்த நாசுக்காகவும் அந்த நேரம் பலமாகவும் தாக்குகின்றன இவருடைய கவிதைகள் "கடந்த காலத்தை மறந்த 52 வது மாநில அரசு" என்று கிறிஸாந்த குறிப்பிடுவது கனடாவைத் தான் அமெரிக்காவில் 51 அரசுகள் உண்டு அமெரிக்கா குப்பை கொட்டும் இடம் 52வது மாநி. லம் கனடா என்பது அவருடைய கருத்து கவிதைகளின் எல்லாவகையான பொதுமைப்பாடுகளையும் இவரது கவிதைகள் உடைத்து விடுகின்றன. அன்றாட நிகழ்வுகள், வானொலிச் சேதிகள், சாதாரண மனிதர்களின் நாளாந்தப் போராட்டங்கள், இனவாதத்தின் நிறவாதத்தின் பல்வேறு முகங்கள் போன்றவற்றை கிறிஸாந்த கவிதையாக்குகிறபோது அவை பல சந்தர்ப்பங்களில்
எதிர்க் கவிதைகளாகவே அமைந்து விடுகின்றன. சொற்களின் இசைவு, பொருத்தம், சொல் விளையாட்டு என்பன கிறிஸாந்தவின் கவிதைகளின் முக்கிய அம்சம் பல சந்தர்ப்பங்களில் சொற்களின் மேல் விளையாடுவதன் மூலமாகவே நளினமாக அரசியல் விமர்சனங்களை எழுப்பி விடுகிறார். உதாரணத்துக்கு சுரங்கங்களின் வேலை செய்யும் கறுப்புத் தொழிலாளர்கள் பற்றிய ஒரு கவிதை நறுக்கு
Black men meer in the deep - us the most danger-us mines in the world darkest africa indeed!
25

Page 28
gig, Danger / danger-us, deepest /deep-us 676idip GF(16) விளையாட்டுக்களும் ஆழம் (deep) கறுப்பு சுரங்கம், எம்மை (us) என்கிற கருத்துக் குறிப்புக்களும் மிகவும் இணக்கமாக அரசியலையும், சொல் விளையாடலையும் இணைக்கின்றன. இன்னுமொரு கவிதை நறுக்கைப் பார்க்கலாம்:
rock and roll telephone:
yez baby.... it's you and me
listening devices need wires bell telephone and mother AT&T need copper chilegets pinochet
RCMP என்கிற கனடிய உளவுத்துறை மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதையும் மிகப் பெரிய தொலைபேசி நிறுவனங்களான Bel, AT & T என்பன தமது உற்பத்தித் தேவைகளுக்காகச் சிலி நாட்டின் செப்பு வளங்களைச் சுரண்ட வேண்டி இருந்தமைக்காக கொடுங்கோலன் பினோச்சேயை CIA உதவியுடன் ஆட்சியில் அமர்த்திப் பாதுகாத்து வந்தமை பற்றி இக்கவிதையில் சாடுகிறார். கிறிஸாந்தவின் கவிதைகளில் மிகப் பெரும்பான்மையானவை இத்தகைய எறிகணைக் கவிதைகள் தான். சாதாரணமான சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கக் கூடிய பல்தேசிய நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்கள், மேற்கு நாடுகளின் நலன்களைப் பேண ரகசியமாகத் தொழிற்படும் உளவு நிறுவனங்கள் என்பவற்றை எல்லாம் தனது சிரிய தகவல் தேடல் மூலம் துல்லியமாக இனங்கண்டு சமகாலக் கவிதைகளுக்குள் இழுத்து விடுகிறார். புலம் பெயர்ந்து வெள்ளையரின் மேலாதிக்கத்தின் கீழ் வாழும் நமது கறுப்புச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அனுபவிக்கும் பிரச்சினைகளே கிறிஸாந்தவின் கவிதை மூலம் "கறுப்பு என்பதே இழிவானது” என்ற பரவலாக நமது சமூகங்களில் விரவியிருக்கும் சுய வெறுப்பை எதிர்க்கிற கிறிஸாந்த ராவணன் கறுப்பு” (Rayana Back) என்கிற புனைபெயரில் ரொறொன்ரோவில் Bourgeorse Blues, Bourgeorse NeWS 6igib Lil J60LDTGT 6JTGIT65 நிகழ்ச்சியையும் நடத்தி வந்திருக்கிறார். கனடாவின் பல பாகங்களிலும் தனது கவிதைகளை வாசித்து வருகிற கிறிஸாந்த, ரொறொன்ரோவில் நிகழ்கிற கறுப்பின மக்கள், தொழிலாளர்கள் மற்றும் சுதேசிய மக்களின் எல்லாப் போராட்டங்களிலும் முன்னணியில் நிற்பதோடு அந்தப் போராட்டத் தளங்களிலும் களங்களிலும் தனது எதிர்ப்புக் கவிதைகளை அரங்கேற்றுகிறார். அவருடைய முதலாவது நாவல் விரைவில் வெளிவர உள்ளது.
"படைப்பாற்றல் இல்லாத சமூகம் அம்ம ஐரோப்பாவில் தமிழ் சிறுகை தொடர்
S. Manoh
(Esc. El
210, Ave. 8 in
931.50 Blanc Me
26

அவருடைய கனடிய, சீன மற்றும் இலங்கை அனுபவங்களின் வெளிப்பாடான 52nd State of Amnesia கவிதைத் தொகுதியிலிருந்து கீழ் வரும் கவிதை தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது:
35ILLub, Dia 1990
எமது நினைவுகள் இந்தச் சுவர்களுக்கு வண்ணம் திட்டவில்லை தண்டவாளக் கரைகளைக் கழுவி எறிகின்றன புருவங்கள் காயங்கள் ஏற்படுத்தவில்லை இன்னும் நம் நிழல்கள் இருளுறும் ஒவ்வொரு சூரியனும் இதயத்தை அழுத்துகிறது,
ஏன்?
பார்க்கப் பழகப் புணரப் பயின்றுள்ளோம் நாளை ஒரு நகரம்
இன்று ஒரு ஹோட்டல்
நகர்கிறோம் ஒருவரை ஒருவர் மறுபடி ஒருமுறை சந்திப்போமா அறியோம் எம்மைப் பற்றிய சிலவற்றை வெறுப்பதற்கும் தெரிந்து கொண்டோம்
எனினும், இவையோ உனது காதலைப் பற்றி நான் அறிந்து கொண்டதற்கு அருகிலும் நெருங்கா
மோகத்தின் காயம் ஆறிற்று. எமது சிந்தனைகளும் தேவைகளுமோ ஏற்படுத்தின இன்னொன்றை.
கல்பொழுதை எதிர்த்துச் சூரியன் மறுத்துப் பித்துப் பிடித்து ஓடாதே பனிக்கட்டியின் நேர்கோடுகள் என்னைச் சிறைப்படுத்த முடியாது
குளிர்காலம் அங்கே திருந்தாது அது எமது தேசம் அல்ல.
எழுச்சி கொள்ளமுடியாது"
)T தக்கான ஒரு சஞ்சிகை
rվ:
22
L3)
hai 1945 Snil, France
- | காலம் இளவேனில் 1997 H

Page 29
யூனிவேர்ச
சகலருக்குமான ஆடை வகைகள், அன்பளிட்
Tax and F.
UNIWERS
2925, Pho
46-49
Scarborough, Ontari
%, →ᎠᎴᎩᏕ %,必eる。!ሓSDጠ!ogu *"vae之oo,
●るsię o,ひッ&9 冷る。� ��ș*%9 �&cog '/s.シシ� osoao%。|-o, !ssus� ふ o, � 3 o,
· *, 3. 穏 % 滩 } \gąMotDaļg。osoas,增 2os),sae ��„o“oự, sẽ �So-sz&议 %go&_“别 o%32)4. 3 ,&*气必 &»多o.o ጓ& Qタマ sae% oo,
காலம் இளவேனில் 1997
-

ஸ் ரெக்ஸ்ற்
புப் பொருட்கள், ஒடியோ, வீடியோ, சீடிக்கள்
ax Service
SAL TEXT
(Fif Pharmacy) 2-7973
முறிசிவா
(416)5314867

Page 30
vi . lietoj Jucyty jwisclo
1991, qølsnog)o Rog)đầurto pono)
1ọ9@@@@@jų919 pou@9fngioạ9019 sựong)siðilsoņioso-aso s@đùırı9ņuogo 199ųopolo ĝ@@ qīIGĒĻ99,9ņ19 sự9@@@isai dodolosh slogsg)ọoloto
(goog)Ģsisto 19ú9ời sẽ sự9@@@@@@@9-a @@@@ılmųoto
Tsunny@9
& lk.9U@rupo19 Noyoloj qİmpo ĝ@@ çoğu,T-a 19-a og og sisiais soggiaodolo@0 ĝđkoodig) hırıntop
109@ĝiųų9? į9ægileosporto posisiso ogs@@@@ash Loog)gilo qosmų,9190 19ų9@to
 

færneto, quaequor? qirmaenwooș șixượwɔ {{Ús@ @ąjįmu@g) sựangleto) 'q'aos??, ?@@
1ų9ų9/?shoppesso șNon @@@ qiaos qìgÍ goqjaloo-a q9ĝuo 199-1@sm-a oặgiún @g|19 AĪigoaelo)
@đif@ mươi gặąī£; £19
sự9@
gogo@ zī£X®] ©& qismų/19 @souosto smallo) poļ9șigiloos? :ųomųo@ sąȚnulomys@ @@
ự91, ĝiĝ@@ @8 mu@ĝis lo qosnías? Ģơiqoporto0 @@@ ma9a9@ Tigaeg)o polo gặgimu@g) quń)ươyogÍ qisma Golgoơ0
*~--~~~~--~aak?? moraa ta

Page 31
qigas-, qig)osg Qoço-T-s q'ooviloquo-igi um&
Ģmako-a qoyism-3- 19ợąff)19 ự9godsoustoso ?@@@ ‘@0,7
ọ9%ğđift? sisto|
qoỹaof) ĝqi qoỹigo)ơi ļolno:Hırise çdoqoftoo m-igoročito
ọ9çouwodi Qolsmų9f99 útklog).Tomạiş4):19 firmųo sąlymro įoogiún
დ9დ9"lg·poloog)sīgħba flodeos@ơi son potizuo spoġġh
qoỹđùng sự șĝq, qismų si qīāīgi Isự9Ứ
qoç,9ærı çođĩ) qionglo Qosmitolo@ası sı@splodoloj 0,9
qoç,9ærī Ļeņi qi@@-ở đidoqi
į9æņdolog) újspígono sąjio ọoĝệlonoaoaouri į99@qi qos@olgo?rnánd6) qitologoff qidītırı moisso geçoitos) q@pų,9€ Qogiriųo șHIT-a įgyısıyoff șitogoļmsø 19t17:39 șłųın
-@ɑ9-asgọdo-a qđùng qigoso goạissoo qosmsfilolo qisi @đỉg gọđỉg qi@wę qilioso qľnýyri qitodos
IỆaŭgurig) ogħdo-a quíņ9 angođỉrī
 

muustīgi Ļms@gols
golofoto
ọ9umuodof) a9d9f) £āņtifs) qosmos)?ọoumgorff 01@o@ formoņI-IIae qosmos)?ọourtologi sjøoff s@ajgtidí) gogųølgoso6) isto sus? quoooooooĝųno mði? somspsg-IIae qoụpoipoo
goɖoɖoŋurto mði)? qių9ų9190 , !sự9æsođì)ư19 qi@ro @ựelgi ogiųTio qi@@rı9qofnųoogsposai Ø6 firmygı sıspis? gostoĥo ĝonsoøęsto sựm-w logos@ østoffflosso qioso s@đùirilo) qisĒđượfi q(0)6)no doođại saolo iso-o ọomstolo qi@ığımdı)s@ungsito soro ọ919ự9ợi· qoftog)-sooqff)19 gosto? igolo· - - ọorm-log q onth&agung, spoj-llae șasæson qif)%9ĝasoo qosmo
(@usą tos@
~ —* . –* * · ***

Page 32
கனடிய இலக்கிய ஆசிரியர் வரிசையில்
(தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் அறியப் பட்ட கனடிய இலக்கியாசிரியர்கள் சிலரை இப்பகுதியில் அறிமுகப் படுத்துவது எமது நோக்கம். உதாரணமாக, லூசி மொன்ற்கொமறி, றொ. பெட்சன் டேவிஸ், மாகறெற் அற்வுட், திமொதி ஃபின்லி, மார்கறெற் லோரன்ஸ், ஃபாளி மொவற், மொடெகி ரிச்லர், மைக்கல் ஒண்டாச்சி, றோகின்ரன் மிஸ்ரி போன்றோரும் இன்னும் பலரும். இவர்களை விட உலகறிந்த எழுத்தாளர்களான நோத்பிறப் ஃப்றை, மார்சல் மக்லுாகன் போன்றோரும் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்ப்போம்)
ஸ்ரீஃபன் லீக்கொக்
ஸ்காபரோவில் ஒரு பாடசாலையின் பெயர் ஸ்ரீஃபன் லீக்கொக் கொலிஜியேற். பேச்மவுன்ற் ஃப்ெபேட் சந்திக்கு அருகாமையில் உள்ளது. தமிழ் பிள்ளைகளும் அப்பாடசாலையில் படிக்கிறார்கள் அப் பாடசாலைக்கு ஒரு இலக்கிய ஆசிரியரின் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. அது எமக்கு வியப்பாக இருக்கலாம். ஏனெனில் நாம் எம் பின் விட்டு வந்த நாட்டில் மாளி காலத்தில் முளைத்து யார் யாரையோ உறிஞ்சியும் ஏமாற்றியும் விட்டு மறைந்து போகும் காளான்கள் போன்ற அரசியல்வாதிகள் பெயரில் பல பாடசாலைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நிலையான கல்வியையும் அறிவையையும் கலையையும் வளர்த்தவர்களின் பெயரில் பாடசாலைகளைப் பார்க்காத எங்களுக்கு அது வியப்பாகத் தான் இருக்கும்.
ஸ்ரீஃபன் லிக்கொக் அவர் வாழ்ந்த காலத்தில் உலகப் புகழ் பெற்ற நகைச் சுவை எழுத்தாளர். கநா.சுப்ரமணியம் கூட தன் கட்டுரை ஒன்றில் இவரை வாசித்ததாகக் கூறுகிறார். கனடாவில் வாழும் நாம் அவரை அறியாமல் இருப்பதும் அவருடைய ஒரு சில நூல்களையாவது வாசிக்காமல் இருப்பதும் அறிவுடையோர் செய்யும் மகா பாவங்களில் ஒன்று என்பதால் இச்சிறு அறிமுகம் இங்கிலாந்தில் 1869 டிசம்பர் 30ல் பிறந்த இவர் தன் பெற்றோருடன் கனடாவிற்கு 1876 ல் குடியேறினார். எட்டு ஆண்டுகள் மேல்குடி மக்களின் பிள்ளைகள் படிக்கும் Upper Canada Collegiate 6) diss)of siliigi. Laioti Guptaiguusis) உள்ள புகழ் பெற்ற மக்ஹில் பல்கலைக் கழகத்தில் 1903 ல் இருந்து 1936 வரை பொருளியல், அரசியல் விஞ்ஞானம் படிப்பித்தார். அக்காலத்தில் பல விசயங்களைப் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். அவருடைய "அரசியல் விஞ்ஞான மூலகங்கள்" "பொறுப்புள்ள அரசாங்கம்” என்ற நூல்கள்
30

அவருக்கு வேண்டிய பணத்தைக் கொண்டு வந்தன. ஆனால் அவர் நகைச்சுவை எழுத்தாளராகவே என்றும் கணிக்கப் பட்டார்.
96.156DLu Sunshine Sketches Of A Little Town (1912) star பிரபல்யமான உலகப் புகழ் பெற்ற நூல். அந்நூலின் மரிப்போசா என்ற சின்னஞ் சிறிய நகரம் பலரின் அன்பையும் கவனத்தையும் பரம்பரை பரம்பரையாக வாசகர்களுக்குக் கொடுத்திருக்கிறது. அந்த நூல் காதலின் நலன்களுக்கும் அன்பின் நலன்களுக்கும் நடக்கும் மோதலையும், அந்நகரத்தின் நிறுவனப் பட்ட சமயத்தின் தோல்வியையும் காட்டுவதாக ஸ்ரீல் என்ற திறனாய்வாளர் கருதுகிறார்.
9ipinaDa) sul Literary Lapses (1910)> Nonsense Novels 1911) ஆகியவற்றில் தான் அவருடைய புகழ் தங்கியுள்ளது என்று சொல்வர் வேறு திறனாய்வாளர். அங்கதச் சுவையுள்ள 30 நூல்கள் எழுதியுள்ளார். சமூக பலவீனங்கள், மனித நடத்தைக. ளின் தோற்றத்துக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள சமம் இன்மை ஆகியவை அவருடைய நகைச்சுவை விசயங்கள் வசை சொல்லல் (Sarcasm) அவரிடம் இல்லை. உயிர்ப்புள்ள நகைச்சுவை சந்தர்ப்பங்களைத் தெரிவு செய்து பெருவிருப்புடன் சொல்வார். நகைச்சுவை அடிப்படையில் மக்களைச் சாந்தப் படுத்துகிறது” என்ற கொள்கை உடையவர். கூடவே, ர்அழரச: ஐவள வுரநழசநைள யனெ வுநஉாைெகரநள என்ற நூலைக் கூட எழுதியுள்ளார்.
லிக்கொக் தன் எழுத்தில் கனேடியனாக, மரபில் அமெரிக்கனாக, பிறப்பில் ஆங்கிலேயனாக அல்லது இந்நாட்டவர்களின் கூட்டுக் கலவையாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதனால் அவரை உலகப் பொது ஒத்துணர்வுடையவர் (Cosmopolian) என்றும் சிலர் சொல்வர். நகைச்சுவையாளர், மனிதாபிமானி, பொருளியலாளர், கல்விமான், பேராசிரியர் லீக்கொக் 1944 ம் ஆண்டு மார்ச் 28 ல் இறந்தார். இப்போதும் அவர் பற்றிய மீளாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
த. வரப்பிரசாதம்
─| alsTeb is C666) 1997

Page 33
ஆங்கிலத்தில் ஈழத் தமிழ் இலக்கியம்
மிழ் ஈழம் லிற்றேச்சர்” என்ற தொகுப்பு ஒன்று டிசம்பர்
1996 ல் ஆங்கிலத்தில் லண்டனில் வெளியாகி உள்ளது. த இலக்கிய ஆர்வலரும் "தமிழ் அகதி" சஞ்சிகை
ஆசிரியருமான மு.நேமிநாதன் அதன் ஆசிரியர். தொகுப்பாசிரியரும் அவர் என்றே நினைக்க வேண்டி உள்ளது.
அதில் முதல் தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புக்கள் தொடக்கம் மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புக்கள் வரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அ.செ.முருகானந்தம், வ.அ.இராசரெத்தனம், எஸ்.பொன்னுத்துரை, முதளையசிங்கம், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிறுகதைகள், மு.பொன்னம்பலம், மு.புபராசன், அயேசுராசா, கஸ்தூரி, வண்ணச்சிறகு, துஷ்யந்தன், ஆகியோரின் கவிதைகள், கிட்டு, கைலாசநாதன், கிருஷ்ணராஜா, மார்க், கொன்ஸ்ராண்ரைன் ஆகியோரின் ஓவியங்கள். என்.கே.மகாலிங்கத்தின் ஆங்கிலக் கவிதைகள், பி.சிங்கார வேலுவின் கிழக்கு மாகாண நாட்டுக் கூத்தும் நாடகங்களும் பற்றிய ஆங்கிலக் கட்டுரை, அடேல் ஆன் இன் "விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்” என்ற நூலின் விமர்சனம், "போர் முனையில் இருந்து ஒரு கடிதம்" ஓர் கடிதம், நாம் வன்முறையை நேசிப்பவர்களல்ல” என்ற இலங்கை நீதி மன்றத்தில் தங்கத்துரை ஆற்றிய இறுதி உரை, சிறி லங்காவில் அரசியல் கைதிகளை நடத்தும் முறை ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மகாலிங்கம், சிங்காரவேலு, அலன் கூப்பர் ஆகியோரின் படைப்புக்கள் தவிர்ந்த ஏனையவை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு இந்தத் தொகுப்பிற்காக மொழிபெயர்க்கப்
பட்டவை.
ஆங்கிலத்தில் இருந்து பலவும் வேறு சில மொழிகளில் இருந்து சிலவும் தமிழுக்கு மொழி பெயர்க்கப் பட்டுள்ளமை நாம் அறிந்ததே. ஆனால் தமிழில் இருந்து சில கதைகள் ஆங்கிலத்தில் இந்திய மொழிக் கதைகளின் சில தொகுப்புக்களில் இடம் பெற்றிருக்கின்றன. அசோகமித்திரனின் தண்ணி’ நாவல் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. சுந்தர ராமிசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புக்கள்” பெங்குவின் வெளியீடு போடுவதாக அறிந்துள்ளோம். இவை அனைத்தும் உதிரிகள் அதுவும் இந்திய வாசகர்களை மனதில் கொண்டு செய்யப் பட்டவை. ஒரு தொகுப்பாக வந்தவை என்றுஎதுவும் சொல்வதற்கில்லை. அந்த வெற்றிடத்தை இந்தத் தொகுப்பு ஓரளவு நிறைவேற்றுகிறது.
இதில் நல்ல கவிஞர்கள், படைப்பாளிகள் விடுபட்டிருக்கிறார்கள் ஆனால் நோக்கம்சிறந்தது. பயனுடையது. நடைமுறைப் பிரச்சினைகள், மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாமை,தெரிவு பற்றிய தொகுப்பாசிரியரின் மதிப்பீடு ஆகியவற்றால் ஒரு தொகுப்பின் விசயங்கள்அமையும் கூடவே, இத் தொகுப்பு ஒரு ஆரம்பமே
- காலம் இளவேனில் 1997 ! -

ஒழிய இதைத் தொடர்ந்து பல வரும் என்றும் தொகுப்பாசிரியர் சொன்னார்.
ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரே. ஆர்.கே.நாராயன், கமலா மார்க்கண்டேயர், ஏ.கே. ராமானுஜம், பார்த்தசாரதி, அழகு சுப்ரமணியம், போன்றவர்கள் அதிலும் அழகு சுப்ரமணியம் தான் எமக்குத் தெரிந்தவரை ஈழத்தவர் மட்டுமல்ல ஈழத் தமிழ் பண்பாட்டை, பின்புலத்தைத் தன் கதைகளுக்குக் கருவாகக் கொண்டவர். கவிஞர் தம்பிமுத்துவின் கவிதைக்கு ஆங்கிலச் சூழலும் கருவும் ஆதாரம்
Ꭷ 6ᎣᏇᏜ மொழிகளில் பிரதேச மொழி இலக்கியம் அறிமுகமாகுவதற்கு உலக மொழி பேசும் ஒருவர் தேவைப் படுகிறது. கவிஞர் யேற்ஸ்பின் அறிமுகம் இல்லை என்றால் ரவிந்திரநாத் தாகூர் மேற்கில் அறியப் பட்டிருப்பாரா, நோபல் பரிசு அவருக்குக் கிடைத்திருக்குமா என்ற கேள்விகள் இன்றும் கேட்கப்படுபவை. உலக மொழிகளில் எமது இலக்கியம் மொழி பெயர்க்கப் படுவது அவசியம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மூலம் இது சாத்தியமாவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்தத் தொகுப்பைக் கையில் எடுத்துத் தட்டிப் பார்த்த போது சைனிஸ் லிற்றேச்சர் சஞ்சிகையை எடுத்தது போன்ற நினைவு வந்தது. வெளித் தோற்றமும் உள் அமைப்பும் கவிதைகள், கதைகளுடன் ஓவியங்கள் இருந்ததும் அதற்குரிய தோற்றத்தைக் கொடுத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.
இலக்கு மொழியில் மூல மொழியில் சாத்தியமான உயிர்ப்பைக் கொண்டு வர முடியாது என்பது பலரின் அபிப்பிராயம் அதைத் திறம்படக் கொண்டு வர இதில் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. எஸ்.பொ.வின் அணி” அருமையாக வந்திருக்கிறது. முத.வின் "தொழுகை" வரவில்லை. தொழுகை வராததற்குக் காரணம் திருவெம்பாவைப் பாடல்களை அடியொற்றி கதை நகர்வதால் பாடலைச் சிறந்த முறையில் இலக்கு மொழிக்கு ஆக்குவது சிரமமாக இருந்திருக்கலாம்
இது சாத்தியமாவதற்கு ஈழத்து இலக்கியத்தில் அக்கறைப்படுவோர் புலம் பெயர்ந்து வாழ்வது ஒரு காரணம் என நினைக்கிறேன். வேற்று மொழியினரும் நவீன தமிழ் இலக்கியத்தை அறிவதற்கு இது ஒரு சிறந்த வழி என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வேற்று மொழி பேசுபவர்களும் இனத்தவர்களும் அழைக்கபட்டு சமூகம் தந்திருந்தனர். தமிழ் இனம் ஈழத்தில் அழிக்கப்படும் போதும் தமிழ்ப் பண்பாடு உலக அரங்கில் வாழ்வதற்காக, எங்கோ ஒரு மூலையில் அறிமுகம் ஆகிக் கொண்டிருந்தது. உயிர்த் துடிப்புள்ளவர்களின் முயற்சியால் ஓர் பண்பாடு இயங்கிக் கொண்டிருந்தது. தமிழ்ப் பண்பாடு "உலகம் எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் விதிக்கு அடிபணிந்திருக்கிறார் நேமிநாதன்.
முருகு
- 31

Page 34
Jackman Ant
Barristers and Solicitors in Asso
I, FRANCI
BARISTOR AN REFUGEE JUDICIAL
PDRCA H 8 CAPP|
JAB AP GROUPSPO PROFESS
AN ALLIMMIGRA
DOWNTOWN OFFICE 196, ADALAIDESTREET WEST SUTE NO 200 PHONE (416) 599-7070 EX:204 FAX: (416) 599-2861
32
 

Associates
ciation for the practice of law.
S XAVIER
) SOLICITOR CLAIM RIWEES PPEAL
ICATION EALS NCERSHIP IONAL
D TION CASES
SCARBROUGH OFFICE 2401, EGLINTONAVE. EAST SUITE 210 SCARBROUGH, ON PHONE: (416) 288-8701 FAX: (416) 288-8633

Page 35
CHINESE CANADAN
SINGAPORE SPI
OUR SP
SINGAPORE FR LINGUINI 8, SHRIMPS CL ROTI MIXED (VEGETABLE, MEAT
CANTONESE CHOW
FRIED
HOT 8R. SOU
HONES BURG
&
FAMILY D.
2551, PHARI SCARBORO
(416) 49
FREE HOME
- காலம் இளவேனில் 1997 |-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FOODS | F00 DS
ECIAL: F00 DS
CIA
ED NOODLES AMS & DICED TOMATO EGG ONION & HOT PEPPER) MAIN OR 10 MAEN
RICE
JR SOUP
GER 8, FRIES
INNERS
MACY AVE. UGH, ON 7-398
E DI LIVERY

Page 36

. ஒவியம்: கருணா ஓவியர் மாற்குவின் LDIT600T6
l
-l காலம் இளவேனில் 1997

Page 37
9
"உலகம் சுருங்கி.
இன்ரர்நெற்
-5(560TT
66 ன் ஜப்பானிலுள்ள எனது நண்பருடன் "செஸ் ந Π விளையாடி விட்டு இப்பொழுது தான் வந்தேன்”
நான் இப்பொழுது மலேசிய வானொலியை கனடாவிலிருந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்”
"இந்தியாவிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு தபால் அனுப்பினேன். அதற்கு அவர்கள் அனுப்பிய பதில் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது."
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றி இலங்கையிலுள்ள ஒருவரும், ஜப்பானிலுள்ள ஒருவரும் என்னுடன் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்"
இவையெல்லாம் 21ம் நூற்றாண்டின் விஞ்ஞான யுகத்தைப் பற்றிய ஒரு கதையில் இடம்பெறுபவை என எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை. இவையெல்லாம் இப்போது உங்கள்கையின் முன்பே வந்து விட்டன. "இன்ரர் நெற்” பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்ரர் நெற்றில் இதுவெல்லாம் சர்வசாதாரணம்.
Canon நிறுவனம் புதிதாக அறிமுகப் படுத்தியுள்ள கமராவைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து தபாலில் அந்த Camaraவிற்கான Catalog ஐ பெறுவதற்கு உங்களுக்கு 2,3 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களாவது செல்லும். இன்ரர்நெற் மூலம் உடனடியாக வர்ணப்படங்கள் அடங்கிய Catalog ஒன்று உங்களுக்குக் கிடைத்துவிடும். உங்களிடம் Colour Printer ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் காகிதப் பிரிதியாகவே அந்த Catalogஐ நிமிட நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். புதிய வகை HondaAccord கார் பற்றித் தகவல்கள் தேவை. அது எங்கே எந்த வகையான Morgage Plane இல் கிடைக்கிறது என்ற தகவல்கள் தேவை என்று வைத்துக் கொள்வோம். இது கூட இன்ரர்நெற் மூலம் சாத்தியம்.
இதைவிட முக்கியமாக கொழும்பிலிருந்து வெளிவரும் Daily News பத்திரிகையை இங்கிருந்தபடியே நீங்கள் வாசிக்கலாம். இலங்கை நேரப்படி ஏறக்குறைய அதிகாலை 2.3 மணியளவில் அன்றய Daily News பத்திரிகையை நீங்கள் இங்கிருந்தபடியே வாசிக்கும்போது அங்கு அது அச்சில் வெளிவந்திருக்காது.
- காலம் இளவேனில் 1997 ! -

அந்தப்பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பாக நீங்கள் பதில் கடிதம் ஒனறை அனுப்ப விரும்புகிறீர்கள். அது கூட கணனியூடாகவே நீங்கள் செய்து கொள்ளாம். என்வலப் தேடவேண்டிய தேவையோ முத்திரை வாங்கும் செலவோ இனிக்கிடையாது.
இரவு வெளியே பனி கொட்டிக்கொண்டிருக்கிறது. Boring நீங்கள் உங்கள் கணனியூடாக, இன்ரர்நெற் முலம் உலகின் ஏதாவது முலையிலுள்ள யாருடனாவது கத்ைதுக் கொள்ளலாம். புதிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். அற்புதமாக இருக்கிறதா? இப்போது இன்ரர்நெற் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள்.
ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னர் Rand என்ற அமெரிக்க நிறுவனம் இன்ரர்நெற் பற்றி சிந்தித்தது. இன்ரர்நெற் என்பது பல கணனிகளுக்கிடையேயான வலையாக்கம் எனக்கொள்ளலாம். 1969 இல் முதலாவது Network ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் இந்த வலையாக்கமானது Textஐ அடிப்படையாகக. கொண்டதாகவும் விஞ்ஞானிகளால் மட்டுமே விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது. ஆணைத்தொடர்களின் கடினமான தன்மை பாரிய இடர்ப்பாடாக இருந்தது. இந்த முதலாவது வலையாக்கம் "Arpanet” என அழைக்கப்பட்டது. ஏறக்குறைய 90களில் இன்ரர்நெற் ஆனது சாதாரண மனிதர்களின் பாவனைக்கு ஏற்றவகையில் அமைந்தது.
"இன்ரர்நெற்” இல் முக்கியமான அம்சங்கள் சில "ஈ-மெயில்" "யூஸ்நெற்” www” ஆகியவை. நீங்கள் இன்ரர்நெற் தொடர்பு ஒன்றைப்பெறும்போது உங்களுக்கு E-mail adress ஒன்றும்(பொதுவாக) தரப்படும். இந்த முகவரி விளங்கிக் கொள்ளமுடியாத வகையில் அமைந்திருக்கலாம். உதாரணமாக arunaடுtemas.com. இப்போது உங்களுக்கு வேண்டிய கடிதம் ஒன்றைக் கணனியில் எழுதுங்கள். கடிதம் சேரவேண்டியவரின் Email முகவரியை பெற்றுக்கொள்ளுங்கள். (அவரிடம் இன்ரர் நெற் இருக்கவேண்டும்) கடிதத்தில் முகவரியை அதற்குரிய இடத்தில் எழுதிப்பின் Send என்ற பட்டனை Click செய்யங்கள். ஆயிற்று. இப்போது உங்கள் நண்பர் கணனியை பாவித்த வண்ணம் இருப்பரேயானால் அவருக்கு கடிதம் கிடைத்திருக்கும். சில செக்கன்களில் எல்லாம் முடிந்து விட்டது. அவர் கணனியைப் பாவிக்காது இருந்தால்; அவருடைய தபால் பெட்டியில் (Electronic mal box) அது போடப்பட்டிருக்கும். அவர் மீண்டும் கணனியைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது தபால் ஒன்று வந்திருப்பதாக அறிவுறுத்தப்படுவார்.
தொலைநகலும் (Fa) இதைத்தானே செய்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 50 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை அல்லது ஒரு ஆவணத்தை தொலைநகலில் அனுப்பப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முதலில் வர்ணத்தில் உள்ள ஒரு படத்தை நீங்கள் அனுப்பமுடியாது. 50 பக்கங்கள் தொலைநகலில் அனுப்ப ஏராளமான நேரம் எடுக்கும். நீங்கள் அனுப்புமிடம் தூரநாடு ஒன்று என்று வைத்துக்கொண்டால் நீங்கள் ஏராளமான தொலைபேசிக் கட்டணத்தை செலுத்த வேண்டி நேரலாம். எழுத்துக்கள் துல்லியமாக இருக்காது. ஒருவகை Filmy paperஇல் தொலைநகல் அங்கு கிடைக்கும். அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொண்டபின் அதில் உங்களால்
35

Page 38
திருத்தங்கள் செய்ய முடியாது.
E-mail இல் இதுவெல்லாம் சாத்தியம். 50 பக்கங்களை நீங்கள் தயார் செய்துமுடித்ததும் அடுத்தகணமே அனுப்பிவிடலாம். சர்வதேச தொலைபேசிக் கட்டணங்கள் கிடையாது. எந்த செலவுமில்லை. (இன்ரர்நெற்றிற்கான மாதாந்த கட்டணம் தவிர) இங்கிலாந்திலுள்ள உங்கள் உறவினருக்கு தினசரி தபால் அனுப்பலாம். இனி செலவு கிடையாது. உங்களிடம் ஒரு Laser Printer இருப்பின் துல்லியமாக அதை நீங்கள் பிரதியும் எடுக்கலாம். தேவையாயின் நீங்கள் அதில் திருத்தமும் செய்யலாம்.
JGjpgTas WWW(World Wide Wep) e gjitjatupTas fias6i இன்ரர்நெற் தொடர்பு ஒன்றைப் பெறும்போது "Netscape" அல்லது அதையொத்த ஒரு மென்பொருளும் (Softwere) உங்களுக்குக் கிடைக்கும். உலகில் அநேகமான அரசுகள், நிறுவனங்கள், அமைப்புகள் என்பன தமக்கென ஒரு பகுதியை (Website) இங்கு வைத்துள்ளன. இவற்றிற்கு தனித்தனியே முகவரிகள் (Internet Address) உண்டு. உதாரணமாக இலங்கைச் செய்திகளைப்பெறுவதற்கான இன்ரர்நெற் முகவரி http://www.lankaweb.com. 3Gung fil46ii GipsițGun(56flă சரியாக முகவரிப்படுத்தும்போது இந்தத் தொடர்பு உங்களுக்குக் கிடைக்கும்.
சரி. உங்களுக்கு இந்த முகவரி தெரியாது என வைத்துக்கொள்வோம். இப்போ என்ன செய்வது உங்களுக்கு தேவையான முகவரிகளைக் கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டிகள் (Seearch engins) 2-6ff677607. 2-57goTuDITas Yahoo, Webcrawler, Lycos என்பவை. http://www.yahoo.com என்ற முகவரியூடாக இந்த வழிகாட்டியை நீங்கள் அடையலாம். பின்னர் உங்களுக்குத் தேவையான நிறுவனத்தின் பெயரை அல்லது அதுதொடர்பான சில சொற்களை நீங்கள் கொடுக்கும்போது அந்தச் சொல் தொடர்பான சகல முகவரிகளையும் இந்த வழிகாட்டி தரும். உதாரணமாக "Newspaper" என்ற சொல்லைக் கொடுக்கும்போது இன்ரர்நெற்றில் உள்ள சகல பத்திரிகைகளையும் அவை எந்த நாடுகளிலிருந்து வெளிவருகின்றன என்ற விபரத்துடன் இந்த வழிகாட்டி தரும். பின்னர் ஏதாவது ஒரு பத்திரிகையை நீங்கள் தெரிவு செய்யும்போது நீங்கள் அந்தப் பத்திரிகையை வாசிக்கலாம்.
"Usenwt" இங்கு ஏராளமான தலையங்கங்களில் தொகுப்புக்கள் உண்டு. நீங்கள் தெரிவு செய்யும் ஒரு தலையங்கத்திற்கூடாக ஒரு குழுவிற்கு சென்று உங்கள் விடயங்களைப் பதிவுசெய்யலாம். அல்லது பதிவுசெய்யப்பட்ட விடயங்களை வாசிக்கலாம். இந்தப் பகுதியிலும் ஏராளமான தகவல்களை நீங்கள் அறிந்த கொள்ளலாம்.
இன்னோர் அற்புதம் "Chaing". இந்தப் பகுதியில் நீங்கள் உலகின் பல பகுதியிலுமுள்ள மக்களுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பினைப் பெறுகிறீர்கள். இங்கு வயது வாரியாக, நாடுவாரியாக, இன்னும் பல வகைகளில் அறைகளுண்டு. இந்தவகை கணனியியல் அறைகளுக்கு செல்லும் போது அந்த அறைகளில் ஏற்கனவே உள்ளவர்களுடன் நீங்கள் நேரடியாக உரையாடலாம். எப்படி
(36
β

6Pyu T06)gs, "Hello! How are you?" Tsip Type Liairgjib Gungs, ரனைய சகலருக்கும் (அந்த அறையில் உள்ளோர்) தமது கணனித் திரையில் அந்தத் தகவல் கிடைக்கும். நீங்கள் கைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர் என்று வைத்துக் கொண்டால் Chaing மூலம் புகைப்பட நிபுணர்களிடம் நேரிடையாகவே பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏராளமான தொலைபேசிக் கட்டணத்தைச் சேமிக்கலாம். மிகுந்த சுவாரசியமான பகுதி பலர் இப்பொழுது இந்தப்பகுதியில் தான் தங்கள் வாழ்க்கைத் துணையையே அமைத்துக் கொள்கிறார்களாம்.
ரி இனி எப்படி இந்த இன்ரர் நெற்” தொடர்பை பெற்றக் கொள்ளலாம். நிச்சயமாக உங்களுக்கு ஒரு கணனி தேவை. அநேகமான வகைக் கணனிகள் இன்ரர் நெற் தொடர்பிற்கு இயங்க வல்லவை. ஒரு 14400 bps அல்லது அதைவிட வலுவான fodem ஒன்றும் தேவை. இவையெல்லாம் உங்களிடம் இருப்பின் iங்கள் இன்ரர் நெற் தொடர்பை சாதாரண தொலைபேசி இணைப்பினூடு பெற்றுக் கொள்ளலாம். இன்ரர் நெற் தொடர்பைத் தரும் பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதற்கான கட்டணம் மாதத்திற்கு $900 இலிருந்து $4000 வரை இருக்கலாம். இணைப்புக் கிடைத்தவுடன் நீங்கள் தயார். இந்த ாற்றாண்டில் தகவல் பரிவர்த்தனையில் ஏற்பட்ட பாரிய அதிசயத்தை நீங்களும் பாவித்துப் பாருங்களேன்.
லருக்கு ஒரு சந்தேகம். இன்ரர் நெற் மூலம் உங்கள் 5ணனிக்கு வைரஸ் தொற்றுமா? (அதுசரி! அது என்ன வைரஸ் ான்று கேட்டு விடாதீர்கள். கணனியில் வைரஸ் என்ற மென்பொருள் மிகப்பிரபலம். இது தொற்றினால் உங்கள் 5ணனிக்கு சளி, தடிமன் ஏற்படும். சில சமயங்களில் பைத்தியமே டிக்கலாம்.) நிச்சயமாக இல்லை. வைரஸ் தொற்றாது. நீங்கள் தாவது ஒரு கோப்பை ( File) Download செய்யும்போது ாத்தியமுண்டு சாதாரணமாக நீங்கள் உபயோகிக்கும்போது இன்ரர்நெற் மூலம் வைரஸ் தொற்று ஏற்படாது.
வெளிநாடு ஒன்றிற்கு E-mail அனுப்பும்போது அல்லது www பினூடாக தொடர்பு கொள்ளும்போது சர்வதேச தொலைபேசிக் ட்டணங்கள் ஏதும் கிடையாது. வேறு யாராவது உங்கள் ணனியில் உள்ள தகவல்களை பார்க்க முடியுமா? முடியாது. டங்களுக்கு வந்துள்ள தபாலையும் யாரும் பார்க்க முடியாது.
ஆக பொத்தத்தில் உலகம் மிகவும் சுருங்கி விட்டது. சிலகண நரத்தில் உங்களுக்குத் தேவையான தகவல்கள் யாவற்றையும் பற்றக் கொள்ளலாம். சில வானொலிகள் கூட இன்ரர் நெற் pலம் ஒலிபரப்புச் செய்கின்றன. தமிழில் மலேசிய வானொலி iனது ஒலிபரப்பை இன்ரர்நெற் மூலமும் செய்கிறது. தெளிவான லியில் நீங்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். ைெரப்படங்களிலுள்ள சில முக்கிய காட்சிகளையும் பார்க்க pடியும். (உங்கள் VCR இல் பார்ப்பது போல) விரைவில் இன்ரர்நெற் மூலம் திரைப்படங்களையும் பார்க்க முடியும். இன்னும் பல இன்ரர்நெற்றில் விரைவில் வரவுள்ளன். வாரசியமான இந்த இன்ரர் நெற்றில் நீங்களும் இணைந்து காள்ளலாமே.
இக்கட்டுரை "ரோஜா" இதழிலும் பிரசுரமானது
- - ast 6b ge. C3666) 1997 -

Page 39
கருக்கல் வழியும் காத்திருப்பும்
சில குறிப்புக்கள்
-ஞானம் லம்பேட்
ந்நாடகம் சாமுவேல் பெக்கற் என்பவரால் 1948 - 1949
65 En Attendant Godot 6767, Gjejdi.si
எழுதப்பட்டு 1953 இல் றோஜர் பிலின் என்பவரால்
றியாள்கை செய்து பரிசில் முதன் முதல் மேடையேற்றப் பட்டது. பின்னர் அவராலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தணி பேஜ் என்பரால் நெறியாளப்பட்டு 1964 இல் லண்டனில் Waing for Godot என மேடையேற்றப்பட்டது. விளாடிமர் (நைனா), எஸ்ராகன் (வெலுத்தி) என்ற இருவர் ஒரு பாதை ஒரத்தில் ஒருவரைக் காண்பதற்காக நிற்கிறார்கள். வழியில் போசா (ராசா) என்பவரையும் லக்கி என்ற அவரது வேலையாளையும் கண்டு கதைக்கின்றனர். முதலாவது காட்சியின் முடிவில் ஒரு சிறு பையன் வந்து, அவர்” இன்று வரமாட்டார். நாளைக்கு வருவார்” என்கிறான். இரண்டாவது காட்சியும் இவ்வாறே நடைபெறுகின்றது. ஆனால் "அவர்” காத்திருப்பவர் வரவே இல்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்தும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்
நாடக ஆசிரியர் தான் சொல்ல வந்த செய்தியை, நாடகம் இடக்கும் நாடமாகப் பாதையைத் தெரிவு செய்து அதன் மூலமாகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். பாதை நடந்து செல்லும் சின்னமாக, நம்பிக்கையுள்ள எதிர்காலமாக, பலர் நடந்து கூடும் இடமாகும்.
இதிலுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்த போதிலும், இடையிடையே தத்தமது சுயத்தை இழந்து, எதையும் குறித்து நிற்காத குரலில் பேசுகின்றன. வெலுத்தி உள்ளுணர்வுள்ள, எதையும் உருவகப் படுத்தும், ஒளிவு மறைவில்லாத ஆனால் அதிகம் பேசாத, எதையும் எதிர்பாராத, ஆனால் குறை கூறும், கடுங் கோபம் கொள்ளும் குணமுடையவர்.
நைனா அறிவும், விவேகமும் உள்ள நகைச்சுவை - சகிப்புத்தன்மையையும், இலகுவில் உணர்ச்சிவசப்படும்
- காலம் இளவேனில் 1997 ! -

தன்மையும் உடையவர். நாடகத்தின் சம்பவ வெளிப்பாடு, வளர்ச்சி, திடீர் திருப்பங்கள், முரண்பாடுகள், உச்சஸ்தானம் (உடஅையஒ) என்பன மிகக் கவனமாகவும், நேர்த்தியாகவும் கையாளப் பட்டுள்ளன. -
நாடகம் விறுவிறுப்புக் குன்றிக் காணப்பட்ட போதிலும், ஏற்றத் தாழ்வுகள் நேர் கோட்டில் இல்லாது சுழல் முறையானது.
இந்நாடகம் ஏதோ ஒன்று நடக்க உள்ளது என்ற உணர்வை பார்வையாளரிடம் ஏற்படுத்தி, பின்னர் "ஒன்றுமே நடக்கவில்லை " என்றாகி நாங்கள் அவருக்காகக் காத்திருப்பம் " என்பதைக் கூறிக் கூறிக் ஈற்றில் "ஒன்றுமே நடக்கவில்லை” என்றாகிறது மேலோட்டமாக,
"ஒருவரும் வரவுமில்லை. போகவும் இல்லை. ஒண்டும் நடக்கவும் இல்லை." ஆனால் உண்மை அதுவன்று ராசாவும், லக்கியும் வருகிறார்கள். ராசா வரும்போதெல்லாம் "ம்," "ம்" என்ற குறியீட்டுச் சொல்லோடு வருகிறார். இந்த "ம்" முன்னெடுத்துச் செல், வேகமாக முன்னேறு என்பதைக் குறித்து நிற்கிறது. "ஒன்றும் நடக்கவில்லை” என நைனாவும் வெலுத்தியும் கூறும் போதெல்லாம் அவர்களின் எண்ணத்தில் அந்த அவர்” காத்திருப்பவர்” நிலைத்திருக்கிறார். இருவரும் அந்த "காத்திருப்பவரைக் காணாவிட்டாலும் "காத்திருப்பை"க் கைவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள். எம் வாழ்விலும் "காத்திருத்தல்" கைவிட முடியாததாக, முக்கியமானதாக உள்ளது.
இந்நாடகம் ஏனைய நாடக உத்தி முறைகளிலிலுருந்தும் முற்றிலும் மாறுபட்டது. நடிப்பு இங்கு வசனங்களோடு பிணைந்துள்ள அமைதி (Pause) யினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பார்வையாளர்கள் மிகமிக உன்னிப்பாக இந்நாடகத்தோடு ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் பார்வையாளர்களும் இந்நாடகத்தோடு இணைய வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துகிறார் நாடக ஆசிரியர்
இங்கு பாவிக்கப்பட்ட வசனங்கள் யாவும் பொதுமையான மூலகங்களினால் ஆக்கப்பட்டு, தேவைக்கேற்றபடி மிகச் சிக்கனமாகப் பாவிக்கப்பட்டுள்ளன. வசனங்களுக்கிடையில் கடைப்பிடிக்கப்படும் அமைதி, பேசப்பட்ட தொடர்பற்ற வசனங்களின் தனித்தன்மையை வெளிக்கொணர்வதோடு, ஒருவித கவித்துவத்தையும் ஏற்படுத்துகிறது.
அமைதி" அல்லது "இடைவெளி” (pause) எமது வாழ்வின் பகுதியில் ஒன்று என்பதால் எம்மன உணர்வுகளின் நிச்சயமற்ற தன்மையை வெற்றி கொள்ள மிக முக்கியமான உத்தி என்பதால் அது இங்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம்
இங்கு சில வசனங்கள் திரும்பத் திரும்பப் பேசப்பட்ட போதிலும் அவை ஒவ்வொன்றும் பேசப்பட்ட முறைகள், வசன ஏற்றத் தாழ்வு, வசனங்களுக்கு இடையிலுள்ள இடைவெளிகள், வசன அழுத்த வேறுபாடுகள் என்பன ஒரு வசனத்திற்கு வேறுபட்ட கருத்துக்களைக் கொடுக்கின்றன. உதாரணமாக
வெலுத்தி (எஸ்ராகன்) நீ எண்னத்தை எதிர்பார்க்கிறாய்?
37

Page 40
எப்போதும் கடைசி நேரம் வரை இருப்பாய்,
நைனா (விளாடிமார்). கடைசி நேரம் வரை (அமைதி) க.டை.சி. நேரம். வரை.(அமைதி). நம்பிக்கை இழத்தல் நோயைக் கூட்டும்” என்கிற சாதாரண வாக்கியம் உருமாற்றம் அடைந்து ஒரு புதிய உயர்ப்பைக் கொடுக்கிறது.
சில வசனங்கள் அர்த்தமற்றது போலக் காணப்பட்ட போதிலும் ஆழமாகச் சிந்திக்கையில் மறைந்து கிடக்கும் பாரிய கருத்துக்கள் தெளிவாகின்றன.
நைனா அவைகள் சிறகுகளைப் போல குரல் எழுப்புகினம் வெலுத்தி: இலைகளைப் போல நைனா; சாம்பலைப் போல வெலுத்தி இலைகளைப் போல
சிறகுகள் பாரமற்றவையெனினும் வானில் பறவையினங்கள் வாழத் துணை செய்வன. இலைகள் உயிர்ப்பையும், நெறிப்படுத்தலையும், சாம்பல் எதுவும் சாவோடு முடிவதில்லை என்பதையும் காட்டுகின்றன.
மனித வாழ்வின் உயிர்த்தன்மை, நம்பிக்கை என்பவற்றை, முதலாவது காட்சியின் இறுதியில் துரியன் மறைவதோடு முடிக்காமல் நிலவு வருவதோடு நிறுத்தியும், இரண்டாவது காட்சியின் தொடக்கத்தில் இலைகள் எதுவுமின்றி பட்ட மரம் போல் இருந்ததைச் சில இலைகளோடு காட்டுவது மிக நுணுக்கமான உத்தியாகும்
சாமுவேல் பெக்கற்றின் எல்லா நாடகங்களிலும் கதா பாத்திரங்கள் தாங்களே கதைப்பது போலவும், மற்றைய கதாபாத்திரங்களுடன் கதைப்பது போலவும், பார்வையாளருடன் கதைப்பது போலவும் காணப்படும்.
இந்நாடகத்தின் வசன அமைப்புக்கள் முன்னேற்பாடு எதுவுமின்றி, நுணுக்கமான ஒழுங்கமைப்போடு ஆக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
வெலுத்தி ஆகையினால் தான் நாங்கள் ஒண்டும் யோசிக்கிறதில்லை.
நைனா நல்ல சாட்டு வைச்சிருக்கிறம் வெலுத்தி ஆகையினாத்தான் எங்களுக்கு ஒண்டும் காதில ஏறுகிறதில்லை நைனா எங்களுக்கு. எங்களின்ர காரணங்கள் இருக்கு வெலுத்தி செத்துப் போன குரல்கள் நைனா அவைகள் இறகைப் போல குரல் எழுப்பினம் வெலுத்தி இலைகளைப் போல
நைனா மணலைப் போல
(அமைதி)
வெலுத்தி, இலைகளைப் போல நைனா அவைகள் எல்லாம் ஒரே நேரத்தில குரல் எழுப்புகினம் (அமைதி) வெலுத்தி ஒவ்வொருவரும் தங்களுக்காகக் கதைக்கினம் நைனா வாய்க்குள்ள புறுபுறுக்கினம்
வெலுத்தி சல சலக்கினம்
66
38

நன: அவைகள் என்ன சொல்லுகினம் * R வலுத்தி. தங்களின்ர சொந்த வாழ்க்கையைப் பற்றிக் தைக்கினம் நனா அவையள் வாழ்ந்த வாழ்க்கை அவையஞக்குப் ாதாதாம் வலுத்தி அவையள் அதைப்பற்றி கதைக்க வேணும்
மற்கூறப்பட்ட சம்பாஷணை கவிதை வடிவில் தங்களின் கடந்த லத்திலிருந்து மீளுவதான சம்பாஷணையாக உள்ளது. இங்கு நனா (விளாடிமர்) நடந்த சம்பவத்தை அறிய முயலும் வளையில், தங்கள் அனுபவங்களை அறிவதை எதிர்க்கிறார். வலுத்தி (எஸ்ராகன்) தன்னைக் கடந்த காலத்திலிருந்து டுவிக்க "செத்த குரல்கள்” போல வரும் கடந்த கால னைவுகளிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்.
ாதுவான நாடகங்களில் நாடக மாந்தர்களின் ணவியல்புகளைப் பாத்திரங்களைக் கொண்டு வளிப்படுத்துவதோடு, கதாபாத்திரங்களின் படிப்படியான ரையாடல் மூலம் கடந்த கால அனுபவங்களைக் கூறி தமது றவின் காலத்தைக் கூறுவர். ஆனால் பெக்கற் இந்நாடகத்தில் ஓப்படியான உரையாடல் மூலம் வெளிப்படுத்தாது திடீரென " ம்பது வருடம் இருக்கும் எனச் சொல்லி பார்வையாளரின் .ணர்வுகளைக் கிள்ளி விடுகிறார்.
னித வாழ்வின் அவலத்தை எடுத்துரைக்க ஏற்படுத்திய லக்கி ன்ற பாத்திரம் திரும்பத் திரும்பப் பேசி குழப்பியடிக்கப்பட்ட பச்சை ஆய்வு செய்த அன்சலம் அர்கின்ஸ் என்பார் "மானிட க்கறையிலிருந்து விலகிய கடவுளின் முக்கியமற்ற மனித ருப்பின் செய்தி, மனித இருப்பின் முக்கியமற்ற கல்லாகிய லகின் செய்தி " என்கிறார். மேலும், இவ்வசனங்கள் யாவும் கச் செழுமையான, அறிவார்ந்த இழைகளால் பின்னப்பட்ட க்கியமான யோசனைகளை மனோவேதனையால் மீண்டும் ணுமுணுக்கும் வாக்கியத் தொடர்”
ap
காத்திரமான படைப்புகளைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும்
காலச்சுவடு சஞ்சிகை இப்போது கனடாவில் கிடைக்கிறது.
தொடர்புகளுக்கு செல்வம் Kalam P.O. Box 73O5 5O9 St. Clair Ave. W Toronto, ON M6C CO
- assTeoub gentC8666t) 1997 -

Page 41
Compleat A
மலிவான தரமான ந திருத்த வேலைகளுக்கு
6ύΠΕ 536
SK BALESOR
எம்மால் தமிழ், ஆங்கிலத்தில் எ( G1 பைலுநர் பத்திரத்தை விை
குறுகிய காலத்தில் ப Lontesoot6) uj sesit dasslu60 Jg5 mJLř> 6 TLřol
S. K. LutC86
J9626) j6D 95 Lř> (“
GSD6Ödes Moliño (41
- காலம் இளவேனில் 1997 ! --
 

uto Repairs
rs Sales
ம்பகத் தன்மையான தொடர்பு கொள்ளுங்கள்
கம்
3892
VING SCHOOL
ழதப்பட்ட கைநூலைப்படிப்பதால் ரைவில் பெற்றுக்கொள்ளலாம்.
ல நூற்றுக்கணக்கான L—jibg5 6oC8JU 6íhoğ95mLu6OTLfb. ólu Lbs2-6öoTCS.
o6.h) (O.S.L.)
416) 265-1297 6). 265-392O

Page 42
ல் நாட்டு எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கைச் மே சரிதம் அவர்கள் எழுத்துக்களிலும் பார்க்க
EեE]]եl/LITETEիցll, வாசிக்கும் ஆர்வத்தைத் தாண்டுபவை. தமிழ் எழுத்தாளர்களில் அப்படிப் பட்ட ஓர் உணர்ச்சியை எங்களுக்கு எழுப்புபவர்கள் குறேவு. குறைவானவர்களிலும் குறிப்பிடத் தக்கவர்கள் ஜி. நாகராசன், புதுமைப்பித்தன். அத்துடன், தருமு சிவராமுவையும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு அவர்களின் வறுமை ஒரு காரணம் மட்டுமே. அதைவிட என்னைப் பொறுத்தவரையில் அவர்களுடைய விசித்திரத் தன்மை கொண்ட (Ericily) விசித்திர வாழ்க்கை நடத்தைகள் முக்கியமாகப் படுகின்றன. எமக்குத் தெரிந்த ஒழுக்க முறைகள், நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட தளத்தில், தடத்தில் அவர்கள் நடந்திருக்கிறார்கள் அது மேற்கத்தைய எழுத்தாளர்களில் பொதுவாகப் பார்க்கக் கூடிய பண்பு, ஆனால் எங்களுக்குப் புதிசு மட்டுமல்ல. புதிய நherer) இயல் நிகழ்ச்சி அதனால் அவர்களில் ஒருவகைப் பைத்தியக்கரத் தன்மையை எம்மைப் போன்றவர்கள் - மரபுரீதியான வாழ்க்கை நடத்துபவர்கள் அதிலிருந்து விலகி ஓட முடியாமல் தவிப்பவர்கள், அந்தச் சக்கரத்தில் பிணைக்கப் பட்டு இழுத்துச் செல்லப்படுபவர்கள் (எrek firiy}- பைத்தியக்காரக் கீற்றைக் காண்கிறோம். யார் பைத்தியக்காரர் என்பது ஒரு சார்பு நிலையான கருத்து (relie Creep) எனக்குப் பைத்தியக்காரத்தனமாய்த் தெரிவது இன்னொருவருக்கு சர்வ சாதாரணமானதாய்த் தெரியும் என்னைச் சிரிக்கத் தூண்டுபவை இன்னொருவருக்கு அனுதாபத்தைத் தூண்டலாம் மேலும் ஒருவருக்கு அழுகையைக் கொண்டு வரலாம்
40 SS
 

தருமு சிவராமின் கலை
முகமும் மனிதமுகங்களும்
என். கே. மகாலிங்கம்
திருமு சிவராமுவைப் பற்றிப் பேச வரும் போதெல்லாம் இப்படிப் பட்ட எண்ணங்கள் ஒருவருக்கு நிச்சயம் வரும். ஆகவே அவரைப் பற்றிய என் அபிப்பிராயம் முடிந்த முடிவான நிருபிக்கப் பட்ட ஓபிப்பிராயமாக இருக்க முடியாது. அதைச் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். பலர் மறுதலிக்கலாம். இந்தப் பிடிகையுடன் இதை ஆரம்பிக்கிறேன்.
நான் தருமு சிவராமுவை f ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் எழுத்து" பத்திரிகையில் அவரது கவிதைகள் மூலம் அறிந்திருக்கிறேன். பின்னர் அவர் பற்றி முத எழுதிய விமர்சனங்கள், சிவராமு எனப் பொ. வின் "தீ" நாவல் பற்றிய ாழுதிய விமர்சனங்கள், சிவராமு மெளனியின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை ஏ.ஜே. எழுதிய "மென்னி வழிபாடு" போன்றவற்றால் அறிந்திருந்தேன். அதனால் 1972ல் பூரணி சஞ்சிகை ஆரம்பித்த பொழுது பலரிடமும் விஷய தானம் கேட்டு எழுதியபோது இவருக்கும் எழுதினேன். அவரிடம் இருந்து வந்த பதில் வித்தியாசமானது அவரைப் பற்றி ஏற்கெனவே நான் கேள்விப் பட்டிருந்த படியாலும், மேற்கத்தைய இலக்கியக்கரரின் வாழ்க்கைச் சரிதங்கள் சிலவற்றை வாசித்திருந்ததாலும் எனக்கும் அப்படிப் பட்டவர்களில் ஒருவித அக்கறையும் ஈடுபாடும் மதிப்பும் இருந்தபடியாலும் அது அப்போதும் சரி இப்போதும் சரி அத்தனை விசித்திரமாகப் படவில்லை. " நான் இப்போது தமிழில் எழுவதை நிறுத்தி விட்டேன். இனிமேல் ஆங்கிலத்தில் தான் எழுதப் போகிறேன். அத்துடன் பூரணி என்ற பெயரின் ஆங்கில 1ழுத்துக்களை இப்படி வையுங்கள் " என்ற கருத்துப்பட எழுதி இருந்தார். அவர் திருக்கோணமலையில் இருந்து அதை 1ழுதினாரோ அல்லது தமிழ் நாட்டிலிருந்து எழுதினாரோ என்பது
காப்பம் நிளேவேனில் 1997

Page 43
எனக்கு ஞாபகமில்லை. ஆனால் பின்னர் அவர் என்னுடன் தமிழ் நாட்டில் இருந்து கடிதத் தொடர்பு கொண்டுள்ளார். "அஃ” சிறு சஞ்சிகை வெளியீடான அவருடைய "கண்ணாடியுள்ளிருந்து “ என்ற கவிதை நூலை எனக்கு அனுப்பி இருந்தார். அத்துடன் நட்சித்திரவாளி " என்ற நாடகம் - அது பாலம் " சஞ்சிகையில் வந்திருக்க வேணும் - அதுவும் எனக்குக் கிடைத்தது. பின்னர் பூரணி கடைசி இதழ் மு. த. வுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது பற்றிய தன் எண்ணங்களையும் எழுதி இருந்தார். அது 1973 இறுதியில், அதன் பிறகு பூரணியும் நின்று போய் விட்டது. அவருடனும் தொடர்பு அறுந்து விட்டது. ஆனால் அவருடைய கட்டுரைகள், நூல்கள் கிடைத்த போதெல்லாம் வாசித்திருக்கிறேன்.
பல பெயர்களைக் காலத்துக்குக் காலம் தனக்கே தரித்துக் கொண்ட தருமலிங்கம் சிவராமலிங்கம் என்று இயற்பெயர் கொண்ட இவர் பல புனை பெயர்களைத் தரித்து, அப்பெயர்களில் ஒழித்துக் கொள்வதற்காக, மாறுவேடம் கொள்வதற்காக அவற்றைத் தரித்துக் கொள்ளவில்லை. அவருடைய விளங்கிக் கொள்ள முடியாத எண்கணித சாஸ்திர நம்பிக்கையே அப்பெயர்களில் நடமாட அவரை உந்தி உள்ளியுள்ளது. எண் கணித சாஸ்திரம் தாந்திரிக சமய நம்பிக்கை அளவு ஒரு மிஸ்ரிக்கல் சமயமாகவே அவருக்கு இருந்திருக்கின்றது. அவர் தரித்த பெயர்கள் பல தரும, சிவராமு, சிவராமு, தருமு அரூப் சிவராம், பிரேமிள், பிருமிள் தர்மோத் ஜீவராமு இப்படி அநேகம் சிவராமு என்ற பெயரையே எழுத்துக்கள் பலவற்றையும் கூட்டியும் குறைத்தும் கொண்டது தான் அதிகம் கவிதைகைைள அதிகமாக பிரேமிள், பிருமிள் என்றே எழுதி இருக்கிறார். இவர் திருகோணமலையில் 22.04.1939 ல் பிறந்தார். இறந்தது 6.1.1997 ல் தமிழ் நாட்டிலுள்ள கரடிக்குடி என்ற சிறிய கிராமத்தில் சில எழுத்தாள நண்பர்கள், கிராமத்தவர்கள், புண்ணியவான்கள் அவருக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லிதயத்துடன் உதவியுள்ளனர். முடக்குவாதத்தால் இரண்டு நாட்களாக தன்னறையில் விழுந்து கிடந்த அவரை அகஸ்த்மாத்தமாக ஒருவர் கண்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மருத்துவமனையில் ஓரளவு சுகமாகி வருகையில் புற்றுநோய் என்று கண்டு பிடிக்கப்பட்டது. முற்றிய நிலைக்கு அந்நோய் போய் விட்டபடியால் சிகிச்சை செய்ய முடியாத நிலை 6 மாசங்கள் வரை மருத்துவமனையில் இருந்து இறந்திருக்கிறார். நல்லிதயம் கொண்ட இலங்கை இந்திய நண்பர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள். இது அவருடைய கடைசி நாட்கள். அது பற்றி "காலச்சுவட்டில்” வெளி ரங்கராஜன், பாவண்ணன் கட்டுரை எழுதி உள்ளர்கள். இவர்கள் இருவரும் கடைசி நாட்களில் சிவராமுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்
இவர் திருகோணமலை இராமகிருஷ்ண மிசன் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே கதை, கவிதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். திருகோணமலையில் இருந்து வெளியான "யாழ்” என்னும் சிற்றிதழில் வீணை வேந்தன் என்ற புனைபெயரில் கட்டுரைகள் கவிதைகள் எழுதி உள்ளர். இந்தச் செய்திகளை வைஜெயமுருகன் என்பவர் சரிநிகரில் எழுதி உள்ளார். அதே சரிநிகரில் மு.பொன்னம்பலமும் ஒரு சிறு கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார். மு.பொ. இவருக்கும் முதளை. யசிங்கத்துக்கும் இருந்திருந்த தொடர்பையும் இவருடைய உளவ. பியல் பிரச்சினைகளையும் ஓரளவு தொட்டுள்ளார்.
 

தமிழில் முழு நேர எழுத்தாளர்களைக் காணுவது அருமை. வணிகப் பத்திரிகைகளில் காசுக்காக எழுதுபவர்கள், பத்திரிகை எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியராக, உதவி ஆசிரியராக இருந்தவர்கள், பணத்துக்காக எழுதுபவர்கள், வேறு தொழில் பார்த்துக் கொண்டு எழுதுபவர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அது பாரதியார், புதுமைப் பித்தனிலிருந்து வல்லிக்கண்ணன், மாலன், சுஜாதா வரை உண்மை, மேல் நாட்டில் என்றால் எழுத்தாளர்களுக்கு அவர்கள் படைப்புக்களுக்குப் பணம் கொடுக்கப் படும். பெரிய எழுத்தாளர்களுக்கு மில்லியன் கணக்காகக் கூடப் பணம் கிடைக்கும். அதை அவர்கள் ஒரு தொழிலாகக் கொள்வதற்கு பணம் ஊக்கமும் உற்சாகமும் தரும் திறமையாளரையும் அந்தத் தொழிலுக்குக் கொண்டு வரும் தமிழில் அந்த நிலை இல்லை. அதுவும் சீரியஸ் எழுத்தாளர்கள், சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள், நூல்களாக வெளியிடுபவர்கள் ஏறக்குறைய அனைவருமே தங்கள் "ஆத்ம திருப்தி” க்காக தங்கள் செலவிலேயே வெளியிடுவார்கள். வேறு ஒரு தொழிலைச் செய்து கொண்டு எழுத்தையும் தங்கள் வாழ்க்கையில் ஒரு பொழுது போக்குப் போல மாலையில் அல்லது இரவில் எழுதுபவர்கள் ஏறக்குறைய அனைவருமே. அது புதுமைப் பித்தனாக இருந்தாலும் சரி கந்தர ராமசாமியாக இருந்தாலும் சரி. அது பிழை என்று நான் சொல்லவில்லை. அப்படியான ஒரு துழல் தான் எமது என்றே சொல்கிறேன். எழுத்தாளனே உருப்படியாக வரமாட்டாதவர்களின் தொழில் என்று தாய் தந்தை தொடக்கம் மனைவி மக்கள் வரை நடைமுறையில் அறிந்த விசயம் அதனால் அவர்களின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் வெறுப்புக்கும் இடையில் எழுதிக் கொண்டிருப்பவன் தமிழ் எழுத்தாளன் எழுத்தாளர்களின் பிள்ளைகளே எழுத்தாளர்களாக வரக் கூச்சப்படும் வெறுக்கும் ஒரு தொழில் எழுத்துத் தொழில், தாடி வளர்த்துக் கொண்டு, காவி உடுத்துக் கொண்டு, சாமியாராகப் போனால் எமது சமூகம் அங்கீகரிக்கும். அது தொழில் என்ற வகைப் பிரிவுள் அடங்கி விடும். ஜே. கே. சொன்னமாதிரி பிச்சை எடுத்தல் இந்தியாவில் சமூக அங்கீகாரம் பெற்ற தொழில். அது அவ்வளவு இழிவான விசயம் அல்ல. புத்தசமய, ஜைன சமயத் துறவிகள் பிட்சா பாத்திரம் ஏந்தித் தான் தங்கள் துறவு வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும் என்பதே சமய நியதி. ஆனால் எழுத்தாளன. ாகப் போனால் அந்தச் சமூகம் அங்கீகரிக்காது இறந்த பிறகு வேண்டுமானால் சாமியராக்கிக் கோயில் கட்டும். சாமியாராகப் போனாலும் எங்காவது புண்ணியவான்கள் சாப்பாடு போடுவார்கள் எழுத்தாளனாகப் போனால் எம்மவர்கள் எவருமே சாப்பாடு போட மாட்டார்கள். எங்களைப் போன்ற சில எழுத்தாள நண்பர்களைத் தவிர, இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் முழு நேர எழுத்தாளனாக ஆரம்பத்தில் இருந்தே தன்னை உருவாக்கிக் கொண்டவர் தருமு சிவராமு எந்தக் கவுர்ரத்திலுமே எழுத்தாளனாக மட்டும் வாழத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர். ஒவியம் சிற்பம் போன்ற பிற கலைகளில் இவர் சிலவேளைகளில் ஈடுபட்ட பொழுதும் (P. நேர எழுத்தாளனாகவே கடைசி வரை வாழ்ந்துள்ளார். அது அவருக்கே உரிய தனித்தன்மை
ஈழத்துத் தமிழர் ஆங்கில ஏகாதிபத்திய காலத்திலேயே கல்வி கற்பதற்காக இந்தியா என்றும் இங்கிலாந்து என்றும் சென்றுள்ளார்கள். போனவர்கள் அரங்கே தொழிலுக்காகவும் வேறு
41

Page 44
சிலர் அவரைச் சிலாகித்துக் கதைக்கலாம். பலர் அவரை வெறுக்கலாம். ஆனால் அவரின் கவிதைகளும் சில எழுத்துக்களும் நிச்சயம் வாழவே செய்யும். "எனக்குத் தொழில் கவிதை” என்று சொன்ன பாரதி கூட வேறு "தொழில்" பார்த்திருக்கிறான். ஆனால் தருமு சிவராம் உண்மையாகவே சாகும்வரை எழுத்தே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். அது வெற்றுப் புகழ்ச்சி அல்ல.
காரணங்களுக்காகவும் தங்கியும் இருந்திருக்கின்றனர். சிவை. தாமோதரம்பிள்ளை தென்னாட்டில் தங்கி விட்ட தமிழ் அறிஞர். கவிஞர் தம்பிமுத்து இங்கிலாந்தில் தங்கி விட்ட ஆங்கிலக் கவிஞரும் "பொயற்றி” சஞ்சிகை ஆசிரியரும் காலத்துக் காலம் வெளி நாடு சென்று திரும்பிய பல எழுத்தாளர்கள் இருந்திருச்கிறார்கள் அழகு சுப்பிரமணியம் அதில் ஒருவர். சிவபாதசுந்தரம் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வாழ்பவர். 1983 ம் ஆண்டிற்குப் பின்னர் தான் அகதிகளாகப் பலர் வெளிக்கிட்ட போது அதில் சில எழுத்தாளர்களும் அள்ளுப் பட்டுப் போனார்கள். அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே பொதுவாகச் சென்றவர்கள். ஆனால் தருமு சிவராமுவைப் பொறுத்தவரையில் நடந்தது வேறு தன்னையே அவர் இலங்கை எழுத்துச் சூழலில் இருந்து விலக்கி Self ele என்று சொல்வார்களே சுயமாக தன்னையே நாடு கடத்தல் செய்திருக்கிறார். அவர் ஆத்மீக ஈடுபாட்டால் சென்றிருக்கிறார் என்று சிலர் சொல்லலாம். ஆனால் அவர் இலக்கிய அகதியாகவே தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறார். இலங்கையில் இருந்த முற்போக்கு இலக்கிய அடக்குமுறைச் சூழல், பண்டித இலக்கிய வரட்சி, அவருக்குப் பிடித்த கலைஞர்கள் தமிழ் நாட்டில் இருந்தமை, தன் இலக்கிய நோக்குக்கும் வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கக் கொடுக்கக் கூடிய தமிழ் நாட்டுச் சூழல், அவர்களுடைய அங்கீகாரம் போன்றவற்றைத் தேடி அவர் அங்கு போயிருக்கிறார் என்பதே என் கருத்து. அதாவது அவர் ஒரு இலக்கிய அகதியாக 1972 இலேயே இந்தியா சென்றார். அதுவும் எம் மனே பாவங்களுக்கும் பாரம்பரிய சிந்தனைக்கும் புதிய ஒரு சங்கதி ஐரோப்பாவில் அது பழைய சங்கதி. ஜேம்ஸ் ஜொய்ஸ், டி.எச். லோரன்ஸ், ஏர்சா பவுண்ட், ரி.எஸ்.எலியற் போன்ற பலர் பிரான்சிற்குப் போய் தங்கள் இலக்கிய விடுதலையையும், அரச பியல் விடுதலையையும், சிலர் பாலியல் விடுதலையையும் நாடி உள்ளனர். ஹோ சி மின்னையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம். தருமு சிவராமுவுக்கும் முன்னும் பின்னும் தல யாத்திரை செய்வதவர்கள் இருக்கிறார்கள். செ.யோகநாதன், செ.கணேசலிங்கன், டானியல் போன்றவர்களை 1983 இன் பின் எங்களைப் போல் அரசியல் அகதிகள் என்றே சொல்வேன்.
விரும்பியோ விரும்பாமலோ, வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள எமது மனவிசாலம், மனப் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ
- 42

ஒரு விசயத்தை ஏற்றுக் கொள்வது நமக்கு நல்லது நேர்மையாக எம்மை நாம் சுய விசாரிபபுக்கு உள்ளாக்கினால் ஒன்று வெளிப்படை. நமது எழுத்தை தமிழகத்துச் சஞ்சிகையினர் வெளியிட வேண்டும் என்று நினைத்து அதற்காக எழுதியவர்கள், எழுதுபவர்கள் பலர். அது கலைமகள், கல்கி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற பிரபல பத்திரிகைகளில் எழுதியவர்களான சிவைத்திலிங்கம், இலங்கையர் கோன், நவம், செ.கணேசலிங்கம் போன்றவர்களாக இருந்தாலும் சரி, சரஸ்வதி, எழுத்து, தாமரை, சுபமங்கள, காலச்சுவடு போன்றவற்றில் எழுதிய க.கைலாசபதி, சிவத்தம்பி, தருமு சிவராமு, தளையசிங்கம், முருகையன், மு.பொன்னம்பலம், சி.சிவசேகரம், செங்கை ஆழியான், செ.யோகநாதன் போன்றவர்களாக இருந்தாலும் சரி அந்த நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதற்காகவே சிலர் தங்கள் எழுத்து, நடை, சொற்கள், கருக்கள், களம் போன்றவற்றைக் கூட மாற்றி எழுதி உள்ளார்கள் என்பது உண்மை பல சிரிப்புக்கிடமானவை என்பது எங்களைப் போன்ற வாசகர்களுக்குத் தான் தெரியும். பட்டவர்த்தனமான, அண்மைக்கால உதாரணங்கள் செங்கை ஆழியான், செ.யோகநாதன் போன்றவர்களின் கதைகளும் கருக்களும் பல தரமான எழுத்தாளர்களுக்கும் தரமற்ற எழுத்தாளர்களுக்கும் சரி தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள் "சங்கப் பலகை". அதில் கோபப் படுவதற்கோ சொல்லுவதற்கோ வெட்கப்பட ஒன்றும் இல்லை. சிலவேளை காரணமில்லாமலே எம்மை அது கடலாம் காயம் ஏற்படுத்தலாம், என்ன செய்வது? தருமு சிவராமுவுக்கும் ஆரம்பத்தில் அது ஆரோக்கியமான தளத்தில் இருந்திருக்கிறது. அதனால் அவர் அங்கு சென்றிருக்கிறார். "எழுத்து" சஞ்சிகை அவரின் திறமைக்கு தாராளமாக இடம் கொடுத்திருக்கிறது. அதை விட அவர் 'மெளனி கதை" க்கு முன்னுரை எழுதிக் கொடுக்கும் அளவுக்கு அவரைத் தமிழ் நாட்டு Elie எழுத்தாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். " குருஷேத்திரம் " சிறுகதைத் தொகுதியில் அவர் சிறுகதை பிரசுரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் தமிழ் நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் யார் யார் என்றும் தருமு சிவராமு தன் இயல்ான உள்ளுணர்வாலும் திறனாலும் கண்டு பிடித்திருக்கிறார். அவர்களுக்கும் இவருக்கும் மானசீகமான இலக்கிய, அறிவார்த்த உணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் மெளனி, க.நா.சு. சி.சு.செல்லப்பா, வெ.சாமிநாதன், கந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களின் தொடர்பும் நட்பும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்கள், பிணக்குகள், வெட்டித் தறித்தல், மோதுதல் போன்றவற்றிலும் பார்க்க அங்கீகாரம் " அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது. மனப் பிரச்சினைகள் வருவதற்கோ, செல்லப்பா சொன்ன மாதிரி "ஈகோ கண்ணை மறைப்பதற்கோ” தருமுவே சொல்வது மாதிரி "அரகன்ஸ் " க்கே இடமிருக்கவில்லை. இடமிருந்தாலும் அவை அங்கீகாரத்துக்காகப் பொறுக்கப் பட்டு, புறத்தே ஒதுக்கப் பட்டுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை: தருமுவிடம் மிக அபாரமான சிருஷ்டிச் சக்தி இருந்திருக்கின்றது அதை தமிழகத்திலுள்ள உயர்ந்த படைப்பாளிகள் கண்டு கொண்டுள்ளர்கள் முக்கியமாக அவருடைய கவிதைகள் கவி-ை தச் சிருஷ்டியில் "எழுத்து” வில் எழுதிய அத்தனை கவிஞர்களிலும் சிறப்பான கவிதைகளை பலவற்றை எழுதி உள்ளர். படிமக் கவிதைகள் எழுதுவதில் அன்றல்ல இன்று கூட அப்படியான ஒருவரைக் காணுவது அருமை. இந்த இடத்தில் இன்னொன்றையும் அவதானிப்பது என் கருத்தை உறுதிப்
---- காலம் இளவேனில் 1997

Page 45
படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களில் உயர்ந்த அறிஞர்களை விரும்பியோ விரும்பாமலோ, தவிர்க்க முடியாமலோ என்னவோ "எலிற் “ தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தாத்தா சாமிநாதய்யர் ஆறுமுக நாவலரின் தமிழ்த் தொண்டைக் கேள்விப் பட்டு அவரைக் காணாதது பெரும் துரதிஷ்ரம் என்று சொல்கிறார். நாவலருக்கு நாவலர்” என்று பட்டம் கொடுத்தவர்களே அவர்கள் தான். அதன் பின் யாழ் நூல் எழுதிய சுவாமி விபுலாநந்தர் தமிழ் அறிஞர்களால் இந்தியாவில் கெளரவிக்கப் பட்டிருக்கிறார். கலாநிதி க.கைலாசதியை இந்தியப் பல்கலைக் கழகங்களும் அறிஞர்களும் விமர்சகர் என்று அவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று புதுக் கவிதை என்று வரும் போது தருமுவையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவருடைய சிறுகதைக்களுக்காக, நாடகத்துக்காக, விமர்சனத்துக்காக ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட மனமொப்பாமல் கூட கவிதைக்காக அவரை ஏற்றுக கொண்டிருக்கிறார்கள்.அப்படிச் செய்யாமல் விட்டால் நேர்மையினம் என்பதற்காகவேனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
தருமு சிவராமுவின் கோடரி என்ற சிறுகதை ஈழத்து சிங்கள் தமிழ் பிரச்சினையை வைத்து எழுதிய அருமையான கதை. திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அருகாமையில் நின்ற அரச மரத்தை வெட்டியதைப் பார்த்த அவருக்கு எழுந்த சிந்தனையின் கதை. ஈழத்தில் அப்படியான எழுத்து நடையுடன் சிந்தனையுடன் நவீன உரைநடையில் எழுதியவர்கள் மிக அருமை.
அவர் எழுதிய நட்சத்திரவாளி" என்ற நாடகம் நவீன நாடகம் எதற்கும் ஈடுகொடுக்கக் கூடிய கற்பனை வளமும் சிந்தனையும் உள்ள நாடகம் என்பது உங்களுக்குத் தெரியும் உலக நாடகங்கள் தரத்தில் உள்ள தரமான ஒரு நாடகம் அதைப் பாலேந்திரா பல முறை மேடையேற்றி உள்ளார்.
இவற்றை விட இவர் பல விசயங்களைப் பற்றி எழுதி உள்ளர். ரீ லங்காவின் தேசியத் தற்கொலை என்ற நூல் 1984 டிசம்பரில் இலங்கை தமிழ் சிங்கள் வரலாறு இன்றைய தேசியப் பிரச்சினைக்கு எப்படி வழி வகுத்துள்ளது என்பதை சுவரஸ்யமாக நல்ல உரைநடையில் புதிய சில தகவல்களுடனுடனும், மரபுரீதியான வரலாற்றாசிரியர்களை விட சில வித்தியாசமான கோணங்களில், ஊகங்களுடன் எழுதி உள்ளர் வாசிக்க நல்லாய் உள்ளது.
லங்காபுரி ராஜா என்ற நூலில் லங்காபுரி ராஜா என்ற யானையை வைத்து தற்போதைய தமிழ்ப்போராட்டத்தை எழுதி உள்ளர். லங்காபுரி ராஜா என்ற தொகுதியில் சுந்தர ராமசாமியின் குடும்ப வரலாறு பற்றிய கதை. தருமுவுடன் நண்பர்களாய் இருந்து பிணக்குப் பட்டுக் கொண்டால் பிணக்குப் பட்டவரின் சுயசரித்திரம் - அது உண்மையோ பொய்யோ கற்பனையோ இல்லையோ . சந்திக்கு இழுத்து விடுவது தருமுவின் பழிக்குப் பழி இரத்தத்துக்கு இரத்தம் என்ற மாதிரி அதற்கும் மேல் பட்ட எழுத்து ஆயுதம் அதற்கு காலத்துக்குக் காலம் சிறுபத்திரிகை ஆசிரியர்கள் அவருக்குக் கை கொடுப்பார்கள். அத்துடன் சிறு கையளவு நூலாகவும் வெளியிட்டு மான பங்கப் படுத்தி விடுவதில் அவருக்கு நிகர் அவரே குழாயடிச் சண்டையிலும்
- காலம் இளவேனில் 1997 -

பார்க்க மிக மோசமாகவும் ஒரு விமர்சனப் பரம்பரையில் முன்னணியில் நின்றவர் தருமு சிவராம். அவருடன் பிணக்குப் பட்டுக் கொண்டால் தொலைந்தது போ என்றாகி விடும் அதனால் தான் சுந்தர ராமசாமி போன்றோர் "மெளனம் " சாதித்தனர். ஆனால் கடைசியாக அப்படியாக பாம்பின் காலை அறியாது தருமு சிவராமுவுக்கு " ஈகோ அவன் கண்ணை மறைச்சுப் போட்டுது " என்று சொல்லி விட்டார் சி.செ.செல்லப்பா. வந்தது வினை. அதற்காக எழுதி வெளியிட்டது தான் தருமு சிவராமுவின் "விமர்சன மீட்சி " என்ற நீண்ட கட்டுரை நூல். சி.செ.க்கு விமர்சனம் செய்யத் தெரியாது. விமர்சன நூல்கள் எதையுமே படித்தவரல்ல. அவருடைய எழுத்து பத்திரிகையில் சிவராமு என்பவர் எழுதாமல் விட்டிருந்தால் அதில் விசயமே இல்லை. எழுத்து வுக்கு ஒரு பரம்பரையே இல்லை. பாரதியார் பரம்பரைக்கு வாரிசு பாரதிதாசன் ஊடாக ஈவேரா மூலம் கருணாநிதியும் எம்ஜிஆரும் என்பன போன்ற புத்திசாலித்தனமான அரசியல் வரலாற்றுக் கண்டு பிடிப்பு அப்படிப் பல. உண்மைத் தகவல்களாக பல இருந்தாலும் புத்திசாலித்தானமான ஆராயச்சியாக இருந்தாலும் தருமுவை அக்கட்டுரை சி.செ சுபமங்களவுக்குச் சொல்லிய "அவனுக்கு ஈகோ கண்ணை மறைச்சுடுச்சு” என்பதையே நிருபிக்கிறது. தருமு சொல்லிய அரகன்ஸ் கூட எழுத்தாளனுக்குரிய கர்வத்திலும் மிக உக்ரம் நிறைந்தது. மூர்க்கமானது வக்ரம் கூடியது தருமு சிவராம் போன்றவர்கள் - எளப்.பொ. இன்னுமொரு உதாரணம் எங்களுக்கு உணர்த்தும் சோகமான படிப்பினையும் பாடமும் என்னவென்றால் திறமை, மேதமை இருந்த போதும் அவர்களின் சிருஷ்டிச் சக்தியையும் திறனையும் உணர்ச்சி ரீதியான வளர்ச்சியின்மையும் எக்சென்றிசிற்றியும் அவர்களின் சிருஷ்டிக்குத் தடையாக வளர்ச்சிக்குக் குந்தகம் விளைத்துள்ளன. இவரை நினைக்கையில் முசோலினிக்காக இத்தாலிய றேடியோவில் பிரச்சாரம் செய்த எர்சா பவுண்ட் - அவரும் படிமக் கவிஞர் என்பது உங்களுக்குத் தெரியும் - உடன் ஞாபத்துக்கு வருபவர். அவரை விட, 'தளம் எப்போக் சரோஸ்திரா" எழுதிய மேதை நிற்சே இறுதியில் பைத்தியமாகப் போனவர் அவரும் என் மனதில் தட்டுப்படுகிறார். விமர்சகரும் கவிஞருமான லாசெல்ஸ் அபெர்குரொம்பியின் விமர்சனத்தைப் பொறுக்க முடியாத எஸ்ரா பவுண்ட் அவரை வாள்ச் சண்டைக்கு {due) வரும் படி அழைத்தாராம் அவர் அதற்கு மறுத்து இருவருடைய இன்னும் விற்காத புத்தகப் பிரதிகளால் வேண்டுமானால் அடிபட வருகிறேன் (உண்மையில் பவுண்ட்
தருமு சிவராமுவின் கோடரி என்ற சிறுகதை ஈழத்து சிங்கள தமிழ் பிரச்சினையை வைத்து எழுதிய அருமையான கதை, திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அருகாமையில் நின்ற அரச மரத்தை வெட்டியதைப் பார்த்த அவருக்கு எழுந்த சிந்தனையின் கதை, ஈழத்தில் அப்படியான எழுத்து நடையுடன் சிந்தனையுடன் நவீன உரைநடையில் எழுதியவர்கள் மிக அருமை.

Page 46
ஃபென்சிங்கில் நல்ல கெட்டிக்காராம். அத்துடன் சவாலுக்கு அழைக்குப் பட்டவருக்கு ஆயுதத்தைத் தெரிவு செய்வதற்குச் சுதந்திரம் இருந்ததாம். அந்த உரிமையை அபெர்குறொம்பி உபயோகித்துள்ளார்) என்று பதிலளித்தாராம்
தருமு சிவராமுவின் கவிதை, நாடகம், சிறுகதைகள், விமர்சனங்கள் கடிதங்கள் எல்லாமே பிரசுர நோக்கம் கொண்டு எழுதப்பட்டவையே. அதனால் தான் அவரே மற்றவரைச் சண்டைக்கு இழுக்கும் போது நான் எழுதிறேன். நீ முடியுமெண்பா எழுது இரண்டு பேருமே எழுதி யாரிடம் உண்மை இருக்கிறது எண்டு பார்ப்பம் என்ற ரீதியில் எழுதியவர். அப்படியே எழுதியும் இருக்கிறார். (உதாரணம் விமர்சன மீட்சிகள், அவர் எழுதிய பல கட்டுரைகள் ) அவரே தந்த தகவலின் படி அவரைப் பற்றி கால சுப்ரமணியம் பிஎச்டிக்கு ஒரு ஆய்வுக் கட்டுரை தீசிஸ் எழுதுகிறாராம். அவை அனைத்தும் அவரைக் கண்டு பிடிக்க, இலக்கிய வரலாற்றில் அவருக்கு உண்மையான இடத்தைக் கொடுக்க உதவும்.
சிலர் அவரைச் சிலாகித்துக் கதைக்கலாம் பலர் அவரை வெறுக்கலாம். ஆனால் அவரின் கவிதைகளும் சில எழுத்துக்களும் நிச்சயம் வாழவே செய்யும், "எனக்குத் தொழில் கவிதை” என்று சொன்ன பாரதி கூட வேறு தொழில்" பார்த்திருக்கிறான். ஆனால் தருமு சிவராம் உண்மையாகவே சாகும்வரை எழுத்தே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். அது வெற்றுப் புகழ்ச்சி அல்ல.
இறுதியாக டிலான் தோமஸ் இன் கவிதை வரிகளுடன் இதை
s
R
மகாலிங்கமும் திரு. சேரனும் உரையாற்றினார்கள்.
நவீன தமிழ் இலக்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படு ரொரொன்ரொவில் வகை துறை வள நிலையத்தின் (க கலந்துரையாடலும் 11.05.97 இல் நடைபெற்றது. இதில்
பார்வதி கந்தசாமி, சிவம், செல்வம், ரகு, ராஜேந்திரன், செல்வராஜா, மகேஸ்வரராஜா, குமார் மூர்த்தி போன்ற அவரின் படைப்புகள் பற்றி விமர்சனங்களும், ஆய்வுகளு
GULQGUGDLDÜų
பரிணாமத்தில் நுழைகிறது
அத்தியாவசியமாகிறது”
“கணனியின் வருகையால் இதழ்
நிபுணத்துவமான பிரயோகம் இத்
44

(டித்துக் கொள்கிறேன். அவருக்கும் இவருக்கும் ஒரு பொருத்தம் ன்னவென்றால் டிலான் தோமசும் அயர்லாந்திலிருந்து 2ண்டனுக்கு எழுத்தைத் தன் தொழிலாகக் கொள்வதற்காக பர்னாட் ஷா போல லண்டனுக்குப் போகிறேன் என்று ந்தைக்குச் சொல்லிவிட்டு வந்தவர். ஷாவும் அயர்லாந்துக்காரர் ன்பது உங்களுக்குத் தெரியும், டிலானின் தந்தை ாப்படுக்கையில் இருந்தபோது எழுதிய கவிதையாக இது இருந்த போதிலும் அதில் காணும் உக்ரம் சொற்கள், வீராப்பு னக்குப் பிடித்தது. அக் கவிதையின் இரு வரிகளின் தமிழாக்கம்
ந்த நல்லிரவுள் இலேசாகப் போய் விடாதே ரணிக்கும் ஒளிக்கெதிராய்
று சிறு சிறிக் கொண்டே இரு
0 not go gentle into that good night age, rage against the dying of the light
பூப்படியாகச் சிறிக் கொண்டு வாழ்ந்து மரணித்தவர் தருமு வராமு,
த்திய தருமு சிவராமுவின் மறைவை ஒட்டி லை கல்வி வட்டம்) சார்பில் இரங்கல் கூட்டமும்
சிறப்புப்பேச்சாளர்களாக திரு என். கே.
சண்முகலிங்கம், திருமாவளவன், கிரிதரன், நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தம், குறைநிறைகளும் விவாதிக்கப்பட்டன.
வடிவமைப்பு புதிய
ந்துறைக்கு
cdigi Graphics & Studios 1 O, Gateway Blvd Suite 113 Don Mills, ON (416) 467-4952
- - - - - H_ காலம் இளவேனில் 1997 H

Page 47
SUITS
UACKETS TROU USERS DRESSES
GRAND (
SPE
4403 K|NGl
284
HO
Monday - Friday Saterday 8:00 a Expert repairs and alterations a
KINGSTON
ANTOY B
உங்கள் சகல பலசர
1472 QUEEN ST. WEST
Toronto, On
Tel:(416)
Tel/Fox: 41
ーl &ms)b SSITC86hlailst) 1997 ! -

SKIFTS SWEATERS COATS SK SUS
PENING BAS
STON ROAD)
8784
URS
:7:30 to 7:30 p.m. nn to 6: OO p.m. are available at these premises.
ROTHERS
க்குத் தேவைகளுக்கும்
(QUEEN/LANSDOWNE) N. M6K 1 M4
588-O733
6) 516-3903
45

Page 48
JMFNATalloR
CAL : TEL: (416) FAX: 941 6)
46
 
 
 

VED
OUR OLD ADDRESS BiRKDALE PLAZA 1235E LESMERE PRO SCARBOROUGH, ONTARIO M1 P2X8 (INSIDE WARITY STORE)
NEW ADDRESS
LUELLA PLAZA 272 MARKHAM RD
RBOROUGH, ONTARIO
M1J 3C5 ARKHAM / EGLINTON)
S 8. TETIES
RAJ 7SO-3634. 75O-O 98
- } காலம் இளவேனில் 1997
H

Page 49
தமிழர்களின் ( இருப்புக்குச் சவால் : வரும்போது அதைத் தமிழுடன் : இணைப்பது : தமிழனின் வழமை
-பேராசிரியர் சிவத்தம்பி பதில
பேராசிரியர் சிவத்தம்பி கனடாவுக்கு வந்திருந்த போது காலம் குழுவினர் எடுத்த பேட்டி நி6ை
 

D ள்வி: தமிழ் மொழிக்கு நெருக்கடி நேரும் போதெல்லாம் ) ඊ5දී தன்னைக் காப்பாற்ற தமிழ் என்ற கருத்து
நிலையில் தன் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு த்துக்குக் காலம் அது தன்னைக் காப்பாற்றி வந்துள்ளது என்று வீர்கள். அது எந்த வாழும் மொழிக்கும் சமயத்திற்கும் பொதுவாக க் கலாச்சாரக் கூறுகளுக்கும் உரிய அம்சம் அல்லவா? ரணமாக, இலங்கையில் மட்டுமே வாழும் சிங்கள மொழிக்கு றும் கூடுதலாக அது பொருந்தும் அல்லவா? தென்னிந்திய படை புக்கள், தமிழுக்கு இருந்த இலக்கிய செல்வம், தமிழுக்கு அரச த்தில் இருந்த சிறப்பிடம், ஐரோப்பியர் வருகையால் ஏற்பட்ட ளவுகள், குறிப்பாக ஆங்கில ஆதிக்கம் இவற்றிலிருந்து அது தன் ழியைக் காப்பாற்றி உள்ளது. இது உயிர்ப்புடைய மொழிக்கும் த்துக்கும் கலாச்சாரத்துக்கும் உரிய வாழுவதற்கான உள்ளுணர்வு iya Instic) அல்லவா? அது அதன் ஜீனியஸ் அல்லவா? ரணமாக, இந்தியாவில் இந்து சமயம், புத்த சமயத்தின் ரத்திலிருந்தும் இஸ்லாம் சமயத்தின் நெருக்கடியில் இருந்தும் னைக் காப்பாற்றி வந்துள்ளது. இப்படி இருக்கையில் தற்போதைய கட்டத்தில் தமிழுக்குரிய தனிச் சிறப்பாக மட்டும் அதை எடுத்துச் கித்துப் பேசுவது தமிழ்த் தேசியத்துக்கு ஒரு உத்வேகத்தைக் நிக்கும் முயற்சி அல்லவா? அது Revivaliள இன் ஓர் அம்சம்
லவா?
; நான் சொல்லுவன நீங்கள் கேட்பவற்றுக்கான பதிற்குறிகளாக ர01888)ஆக அமையுமே தவிர வினா-விடை என்ற வகையில் துக்கு ஒன்று என்ற முறையில் அமையாது இந்தக் கேள்வியைப் றத்தவரையில் தமிழுக்கே உரிய தமிழ் மொழி பற்றிய உணர்வு படுவது தமிழுக்கே உரிய சிறப்பான அம்சம் என்று சொல்லி விட பாது அதற்கு ஒரு நல்ல உதாரணம் எடுத்துக் கொண்டால் ஞ்சு மொழியைச் சொல்லலாம். எல்லாக் காலங்களிலும் இந்த ழியைத் தனித்துவத்தின் குறியீடாகப் பேணுகிற ஒரு மரபு உண்டு. நக் கருத்திலே தான் நான் சொல்கிறேன். அவ்வாறு தங்களுடைய த்துவத்தை, மொழியை, மொழிக் குறியீடு பற்றிப் பேணுகிற மையை நிச்சயமாகத் தமிழ் நாட்டிலும் காணலாம். அதை நான் கித்துச் சொல்லவில்லை. அதனைப் பெருமை என்றும் ல்லவில்லை. ஆனால் இந்தப் பண்பு காணப் படுகிறது என்பது ர்மை. இந்தப் பண்பு காணப்படுகிறதன் காரணமாக அது எந்தெந்தக் ங்களில் நெருக்கடிகள் வருகின்றனவோ அந்தக் காலங்களில் னை அறியாமல் இந்தப் பண்பு மேலோங்கி நின்றிருக்கின்றது. இது
முக்கியமான விசயம். தமிழ் மொழிக்கு எந்தெந்தக் காலங்களில் லது தமிழைப் பேசுகின்றவர்களின் இருப்புக்குச் சவால் கின்றதோ அந்தச் சவாலை மொழியுடன் இணைத்துப் பார்க்கின்ற மை ஒன்று காணப் படுகின்றது. இது தமிழ் மொழி இந்திய உப டத்தில் வகிக்கும் இடத்தின் அடியாக வருகின்றது. பொதுவாக தியப் பண்பாடு என்று சொல்லப் படுகின்ற ஒரு பண்பாடானது வட ழியை மூலமொழியாகக் கொண்டு இயங்குகின்ற பொழுது அது தசப் பண்பாடுகளுக்கு அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஒரு சினையை ஏற்படுத்துகின்றது.
திய அமைப்பில் நீங்கள் ஒன்றை அவதானிக்கலாம். தசத்துக்குள்ள கலாச்சாரத்துக்கும் இந்தியா முழுவதுக்கும் உள்ள ச்சாரத்துக்கும் இடையில் ஒரு ஊசலாட்டம் உண்டு சமஸ்கிருதப் பாட்டை முற்று முழுதாக உள்வாங்கி விடக் கூடாது என்ற லயில் இந்தப் பிரதேசப் பண்பாடு காணப் படுகின்றது. தமிழ் டில் மாத்திரமல்ல வங்காளத்திலும் மகாராஷ்டிரத்திலும் இது

Page 50
தமிழ் பற்றிய பிரக்ஞை தமிழ்த் தேசியவாதத்துக்கு இட்டுச் செல்ல முடியாதா? என்று நீங்கள் கேட்கிற கேள்வி ஒரு ஆழமான கேள்வி. ஏனென்றால் நீங்கள் தேசியம் என்று எதைக் கருதுகிறீர்கள்? சியோனிசம் மாதிரி எங்களுக்குத் தமிழ்த் தேசியம் இருக்கிறதா? அல்லது ஜேர்மானிய நேஷனலிசம் மாதிரி எங்களுக்குத் தமிழ்த் தேசியம் இருக்கிறதா?
படுகிறது. ஆனால் நான் சொல்ல வருகின்ற தென்ன வென்றால் தமிழில் இந்தப் பண்பு காணப் படுகின்றது. அதனை நாங்கள் அவதானிக்க வேண்டும் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் மதரீதியாக வேறுபடுகிறபோது இட ரீதியாக வேறுபடுகிற போது மொழி ரீதியான ஒருமைப் பாட்டை முன்னிறுத்துகிற ஒரு தன்மை தமிழ் இலக்கியத்தில் விசேடமாகக் காணப்படுகின்றது என்ற அவதானிப்பையே தான் சொல்ல வருகின்றேன். இந்த அவதானிப்பிலே தான் சொல்ல விரும்புவது தமிழ் மொழிக்கு நெருக்கடியான உணர்வுகள் ஏற்படுகின்ற பொழுது மொழி ஒருமைப்பாடு வற்புறுத்தப் படுகின்றது. சமண, பெளத்த கால கட்டத்திலும் அல்லது சங்க இலக்கிய கால கட்டத்திலும் அல்லது சங்க இலக்கிய கால கட்டத்திற்குள் பிற பண்பாடுகள் உள் நுழையும் போதும் அல்லது பிற்காலத்தில் விஜய நகர கால கட்டத்தில் தெலுங்குப் பண்பாடுடைய வருகை காணப்பட்ட போதும் அல்லது இலங்கையில் கிறிஸ்தவ மிஷனரிமார்களின் தாக்கம் ஏற்பட்ட போதும் தமிழை ஒரு தனிக் குறியீடாகப் பயன்படுத்துகிற ஒரு தன்மை காணப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலே தர ரீதியாக (0udiativey) நல்லதா, கெட்டதா என்று பார்க்கிற பொழுது தான் சில விசயங்களைச் சிந்திக்க வேண்டும். அதாவது தமிழ்ப் பிரக்ஞை திணிக்கப் படுகின்ற பொழுது தான் இந்த உணர்வே ஏற்படுகின்றது. அப்போது தமிழர்கள் என்கின்ற உணர்வு அல்லது தமிழ் பேசும் மக்கள் என்ற உணர்வு (தமிழ் பேசும் மக்கள் என்ற சொல் ஓரளவு சமஷ்டிக் கட்சியினால் இலங்கையில் உருவாக்கப் பட்டது என்றாலும் கூட அதற்கு ஒரு நீண்ட வரலாறு இருப்பது போல எனக்குப் படுகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் சொல்வதற்கும் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்வதற்கும் இடையில் ஒரு மொழி வழித் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்து சொல்கிறார்களோ தெரியவில்லை ஆனால் இருப்பது போலப் படுகின்றது) அப்போது அந்தப் பிரக்ஞை காரணமாக அந்த உணர்வு அரசியலில் சமூகத்தில் பண்பாட்டில் தெரிய வரும் அதன் அரசியல் ரீதியான
வடிவத்தைத் தமிழ்த் தேசியம் என்று
s சொல்கிறோம் எனறு நான
கருதுகிறேன். இதில் ஒரு பிரதான ܙܗܝܠj>
மான கேள்வி என்ன வென்றால் தேசிய வாதம் என்று பத்தொன்பதாம் لچ
நூற்றாண்டில் இரண்டாவது உலக 2ܔ"
/S யுத்தம் தொடங்கும் வரையில் இருந்த
அந்தத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இந்தத் தேசியத்தை, உணர்வை,
48

பிரக்ஞையைப் பார்க்கப் போகிறோமா? அல்லது மூன்றாவது நாடுகளின் எழுச்சியோடு இரண்டாவது உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட தளை நீக்க உணர்வோடு (Liberation) கொலொ னியலிசத்திற்குப் பின் வந்த (Post-colonialism) அரசியல் தனித்துவப் பிரக்ஞையைக் கருதுகிறோமா என்பதில் தெளிவு இருக்க வேண்டும் கொலோனியலிச அனுபவத்திற்கு உட்பட்ட நாடுகள் அல்லது உட்பட்ட மக்கள் தங்கள் தங்களுடைய விடுதலை அல்லது தளை நீக்கப் போராட்டங்களில் ஈடுபடும் போது நெசனலிசம் என்பதற்கு வேறு வகையான அர்த்தம் உண்டு அப்போது நாங்கள் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பேசிய ஜேர்மனிய தேசியம் அல்ல நாங்கள் பேசுவது. அப்படி இருக்க முடியாது. அப்படி இருக்குமாயின் அந்தத் தேசியம் என்ற கருதுகோளே மிக மோசமானது. தேசியம் எப்பொழுது ஆபத்தான விசயமாக மாறும் என்று சொன்னால் அது மற்றைய இனங்களுடைய பிரக்ஞையை அல்லது மக்களுடைய உணர்வுகளுக்குச் சவாலாக மாறும் போது தான். ஆனபடியால் இந்தத் தேசியம் என்ற சொல்லுக்கு என்ன வரைவிலக்கணம் கொடுக்கிறது என்பது மிக முக்கியமானது, நாங்கள் நசனிசலிசம் என்பதை வைத்துக் கொண்டு தான் தேசியம் என்று எடுக்கிறோம். நேஷன் என்ற சொல்லில் இருந்து தான் நஷனலிசம் என்ற சொல் வரும் என்று சொன்னால் நேஷன் என்ற கோட்பாடு சம்பந்தமாகத் தெளிவு வேண்டும். இன்றைக்கு உலகத்தில் பல நேஷன்கள் இருக்கின்றன. ஐரோப்பாவில் கட்டி வளர்க்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட நேஷன் எப்ரேற்றின் அடிப்படையாக வந்தது அது ஒரு பிரதேசத்தை ஒரு நேஷனாகக் கருதுகின்ற தன்மை, அது இங்கிலஷ், ஃபிரெஞ், ஸ்பானஷ், இது ஐரோப்பாவின் வரலாறு. இது ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் பொருந்தாது என்பதனை இந்த நேஷன் ஸ்ரேற்றின் தன்மையில் காணுகின்றோம். மூன்றாவது உலக நாடுகளில் இருந்து ஏற்பட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் இருந்து அல்லது அதனூடாக நாங்கள் கண்டு கொண்ட முக்கியமான படிப்பினை இந்த நேஷன் ஸ்ரேற் என்ற கருதுகோளை நாங்கள் கொண்டு வர முடியாது என்பதே. நஷனலிசம் என்பது நேஷன் ஸ்ரேற் அடியாக வருகின்ற கோட்பாடு என்றால் அதை மீள சிந்திக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது என விசுவாசமாக நம்புகின்றேன். ஆனபடியால் நாங்கள் வேறொரு சொல் இல்லாத படியால் நேஷனலிசம் என்பதைத் தேசியம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் தமிழ்த் தேசியம் என்று சொல்கிற பொழுது அல்லது எந்த ஒரு தேசியம் என்று சொல்கிற போதும் (உதாரணம் வங்காளி, மகாராஷ்டிரம் என்ற தேசியங்களை எடுத்துச் கொள்கிற போது) அந்த மக்கள் தங்கள் தனித்துவத்தை உணர்தல் என்ற வரையறை இருக்கின்றது. தங்கள் தனித்துவத்தைப் பேணுவதற்கான உணர்வு இருக்கின்ற வரையில் அது தேசியமாக இருக்கும். ஆனால் அந்த மக்கள் தங்களுடைய உணர்வு காரணமாக இன்னொரு மக்களுடைய மக்கள் கட்டத்தினருடைய சுதந்திரத்திற்கோ அவர்களுடைய பிரக்ஞைகட்கோ எதிராக மாறுவார்களேயானால் அது முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம். அதற்கு நாங்கள் தேசியம் என்ற அடிப்படையில் வக்காலத்து வாங்க முடியாது என்று நான் கருதுகிறேன். சரி தமிழ் பற்றிய பிரக்ஞை தமிழ்த் தேசியவாதத்துக்கு இட்டுச் செல்ல முடியாதா? என்று நீங்கள் கேட்கிற கேள்வி ஒரு ஆழமான கேள்வி. ஏனென்றால் நீங்கள் தேசியம் என்று எதைக் கருதுகிறீர்கள்? சியோனிசம் மாதிரி
- காலம் இளவேனில் 1997 H

Page 51
எங்களுக்குத் தமிழ்த் தேசியம் இருக்கிறதா? அல்லது ஜேர்மானிய நேஷனலிசம் மாதிரி எங்களுக்குத் தமிழ்த் தேசியம் இருக்கிறதா? அப்படியான தேசியம் இருந்தால் அது பிழை. அதேவேளை தமிழ் மக்கள் தங்களுடைய இனத் தனித்துவத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்ற பிரக்ஞையின் அரசியல் வெளிப்பாட்டை நாங்கள் எவ்வாறு விவரிப்பது? அதற்கு என்ன சொல்லைப் பயன்படுத்தலாம்? என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது. திருப்பிச் சொல்கிறேன்: தமிழ் மக்கள் தாங்கள் யார் என்று சொல்லப்படுகின்ற பிரக்ஞையின் அரசியல் வெளிப்பாட்டுக்கு என்ன பெயர் கொடுக்கப் போகின்றோம். அது நஷனலிசம் என்றால் தேசியம் என்று சொல்லலாம். மொழி பெயர்ப்பு என்ற படியால் அந்த நஷனலிசம் நான் நினைக்கவில்லை யாருக்கும் எதிரானதென்று எப்போது பிரச்சினை வரும் என்றால் இன்னொரு தேசியத்தை இன்னொரு மக்கள் குரலின் பிரக்ஞைக் எதிராகச் செயல்படக் கூடாது.
கேள்வி நீங்கள் சொல்வதன் அடிப்படையில் அல்லது வரைமுறையில் நோக்கும் போது எங்களுடைய தமிழ்த் தேசியம் என்பது அதை மிறிச் சென்று விட்டது என்று தான் தோன்றுகின்றது. ஏனென்றால் இன்னொரு மக்கள் குழுமத்தின் இருப்புக்குச் சவாலாக எங்களுடைய தேசியம் தோற்றம் பெற்று விட்டிருக்கின்றது. உதாரணமாக முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தைக் கூறுகின்றேன்.
நல்லது முஸ்லிம் மக்களின் விசயம் சம்பந்தமாக நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் அது பற்றிய ஒரு மீள் சிந்திப்பு நடைபெறுவது எல்லோருக்கும் தெரியும் அது ஒரு துரதிஷரமாக நடந்த சம்பவம், முஸ்லிம் மக்களின் எதிர்காலமும் தமிழ் மக்களோடு இணைந்த எதிர்காலம் தான் என்கின்ற விசயம் இப்பொழுது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
கேள்வி: ஆரம்பத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் காலகட்டத்தில் தமிழ் தேசியம் அதிதீவிரம் கொண்டிருந்தது என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் தானே.
பதில் அதனைச் சரி என்று நான் என்றும் சொன்னதில்லை. ஆனால் நாம் இப்பொழுது பேசும் தமிழ்த் தேசியம் என்ற உணர்வு சரியான முறையில் செயற்படுகின்ற காரணத்தால் தான் இன்னும் முஸ்லிம்களை விலத்த முடியாமல் இருக்கின்றது என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது முஸ்லிம் மக்களுக்குச் செய்யப் பட்டது பிழை என்பதை எடுத்துக் கூறுகிற அளவுக்கும் அதை ஏற்றுக் கொள்கிற அளவுக்கும் தமிழ்த் தேசியம் சுயவிமர்சனம் செய்துள்ளது. நீங்கள் பார்க்க வேண்டும் சிலவேளைகளில் காலகட்டத்தின் தேவை பற்றிய அல்லது அரசியல் தேவை பற்றி தான் பேச விரும்பவில்லை. ஆனால், அதை ஒரு நிரந்தர கொள்கையாக்க முடியாமல் இருக்கின்றது. நிரந்தரமான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் இருக்கின்றது. இன்று நாம் அது தவறு, துரதஷரவசமானது என்று சொல்கிறோமல்லவா அதுவே தமிழ்த் தேசியம் என்று சொல்கின்ற உணர்வின் உண்மையான தன்மையைக் காட்டுகின்றது. அது இன்னும் தன்னுடைய அளவை மீறக் கூடியதல்ல. அளவை மீறினால் பிழை அதை நான் ஒத்துக் கொள்கிறேன். அந்த அளவை மீறுகிற பொழுது அதற்குப் பெயர் தேசியம் அல்ல. அதற்கு
- காலம் இளவேனில் 1997 H --------

ஆங்கிலத்தில் இன்னொரு பெயர் இருக்கின்றது. ரேசிசம். நான் நம்பவில்லை இன்றைய தமிழ்த் தேசியப் போராட்டங்கள் பற்றிய இந்த வாத விவாதங்களில் எவராவது தமிழ் றேசிசம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறதாக இல்லை. அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். தற்செயலாகத் தானும் ஒரு தமிழ் றேசிசம் வரும் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இந்த தமிழ்ப் பிரக்ஞைக்கு அதனுடைய அரசியல் வடிவத்திற்கு நீங்கள் என்ன பெயர் கொடுக்கப் போகிறீர்கள்? அதற்கு வேறு சொல் கண்டு பிடித்திருந்தால் சரி. ஆனால் இந்த ஒரு உணர்வு ஒன்று வந்திருக்கின்றது. அதைத் தான் நான் சொல்ல வருகிறேன். அது இல்லை என்று சொல்ல முடியாது தமிழ் இலக்கிய வரலாற்றில் நாம் காணுகிற ஒரு அம்சம் என்கிற அந்தக் கருத்தைத் தான் நான் சொல்ல வருகிறேன். அது ஒவ்வொரு மொழிக்கும் இருக்கிறது. சிங்களத்துக்கும் உண்டு. பிரெஞ்சுக்கும் உண்டு. ஆங்கில மேலாதிக்கம் 16ம் நூற்றாண்டுக்குப் பின் படிப்படியாக வருகின்ற காலங்களில் எல்லாம் ஐரொப்பாவினுடைய முக்கிய பண்பாட்டுக்கு ஊறுவராத வகையில் 56ig's DLu தனித்துவத்தைப் பேணுவதற்கு மொழித் தனித்துவமே விசேட அடிப்படை. அம்சமாகக் கொண்டது. அப்போது ஒரு நாட்டில் மாத்திரமல்ல ஒரு மொழியில் மாத்திரமல்ல அந்த மொழிக்கு அந்தப் பண்பு இருப்பதன் காரணமாக அது இனவாதமாகப் போவதில்லை. தன்னுடைய தனித்துவம் பற்றிய பிரச்ஞை இல்லாவிடில் அது தன்னைப் பேணிக் கொள்ள முடியாமல் போய் விடும் பேணிக் கொள்கிற அந்த இயல்பூக்க உணர்வை நீங்கள் என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? அது ஒரு நியாயபூர்வமான கேள்வி அந்தப் பேணிக் கொள்கிற (Interes) ஆர்வம் இருக்கக் கூடாதா? அது சிலவேளைகளில் மிகையாகப் போய்விடும் ஆபத்தும் உண்டு. அதனால் அது ஒரு மிகைப்பட்ட நடவடிக்கைகள் சாத்தியப்பாடுகள் ஏற்படலாம் என்பதற்காக இந்த இன்ரறெஸ்ற்றே வேண்டாம் என்று சொன்னால் பல பிரச்சினைகள் வரும் பண்பாடு என்றால் என்ன? பண்பாடுடைய தளம் என்றால் என்ன? என்ற பிரச்சினைகள் வரும். ஆனபடியால் தான் நான் நினைக்கிறேன் தங்களுடைய தனித்துவத்தைப் பேணுகின்ற சமூக அரசியல் பிரக்ஞையின் ஒரு வெளிப்பாடு தான் இது. ஆனால் இது இனவாதமாக மாறக் கூடாது. மாறினால் அடிப்படை இலட்சியமே இல்லாமல் போய் விடும். அந்த வகையில் நிச்சயமாக தமிழ் பிரக்ஞை என்கிற சொல் தேவைப்படுகிறது. தமிழ்ப் பிரக்ஞை என்னும் இந்த நிலைப்பாட்டை நாங்கள் என்ன பெயர் சொல்வது? அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியம் என்று
கேள்வி: ஆரம்பத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் காலகட்டத்தில் தமிழ் தேசியம் அதிதீவிரம் கொண்டிருந்தது என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் தானே.
4g

Page 52
சொல்வதா? அல்லது வேறு ஏதாவது என்று சொல்வதா? என்பதைத் திர்மானித்துக் கொள்ள வேண்டும் பொதுவாக தமிழ்த் தேசியம் என்று சொல்கிறோமே தவிர அதற்கு வேறு வகையாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. தேசியம் என்ற சொல் ஏதோ சில வரலாற்றுச் சூழல்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் விளைவாக இந்த அரசியல் பிரச்ஞையை வேறு என்ன வென்று சொல்லப் போகின்றீர்கள்? என்பது என்னுடைய கேள்வி. ஆனபடியால் இப்படிச் சொல்வது தமிழ்த் தேசியத்துக்கு இடம் கொடுக்கும். ஆனால் தமிழ் இனவாதத்திற்கு இடம் கொடுக்காது. மற்றது இது றிவைவலிசத்திற்கு இடம் கொடுக்குமா? என்ற கேள்வி மீட்பு இயக்கம் என்று சொல்கிற பொழுது எப்பொழுதும் பழைமையைப் பேணுகின்ற அம்சம் தான் றிவைவலிசத்தின் ஒரு அம்சம் நான் நம்புகிறேன் இந்த மாதிரியான றிவைவலிசம் அல்ல இது நவீன காலத்தில் நவீன தேவைகளுடன் ஒட்டிய நவீன சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தொடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றதற்கான இயல்பான ஒன்று இது நான் பார்ப்பது இரண்டு காரியம் ஒரே நேரத்தில் நடக்கிறது. ஒரே நேரத்தில் உலகம் ஒரு கிராமமாகிறது, அதே நேரத்தில் ஒவ்வெர்ரு மக்களும் தங்கள் தங்களுடைய இனத்துவ அடையாளம் பற்றிய இனக்குழுமத் தனித்துவம் பற்றிய பிரக்ஞை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டுக்குள்ளும் ஒரு இணைப்பு வேண்டும். இது வேண்டும் என்பதற்காக அதை ஒதுக்குவதுமல்ல. அது வேண்டும் என்பதற்காக இதை ஒதுக்குவதும் இல்லை. இது இரண்டையும் நாங்கள் சமன்நிலைப் படுத்த வேண்டும். இந்த உலகத்தினுடைய எதிர்காலம் நான் நம்புகிறேன். 21ம் நூற்றாண்டினுடைய அரசியல் வெற்றி இதில் தான் தங்கப் போகிறது. குளொபல் விலேஜுக்கும் -உலகக் கிராமம். இதுஅடையாளத்துக்கும் என்ன மாதிரியான ஒரு இணைப்பு ஏற்படப் போகின்றது? இந்த இணைப்பிலே தான் இந்த வெற்றி தங்கி இருக்கின்றது. எப்போதும் றிவைவலிசம் ஒரு பழமைபேண் தன்மை கொண்டது. கல் தோன்றி மண் தோன்றாத என்ற வாதத்திற்கு நாங்கள் எவருமே ஒத்துப் போக முடியாது. இன்றைய அரசியல் கோஷம் இன்றைய மக்களின் இன்றைய விமோசனத்திற்காக என்பது தான் ஆனபடியால் தேசியம் பற்றிய நீங்கள் கேட்பதற்கும் நான் பதில் கொடுப்பதற்கும் இடையில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அடிப்படை பிரச்சினை தேசியம் பற்றி நீங்கள் என்ள கருதுகின்றிர்கள் என்று சொல்லவில்லை. தமது மொழி நிலைப்பட்ட தனித்துவத்தை உணர்த்துகின்ற அரசியல், சமூக நெருக்கடிகளினிடையே தமிழ் மக்கள் ஒரு குறிப்பிட்ட பிரக்ஞைக்கு ஆளாகின்றார்கள். அவர்களை அச்சறுத்தும் நெருக்கடி அரச அதிகாரம், பலம் என்பவற்றினைப் பின்புலமாகக் கொண்டிருப்பதால் இந்த மேலிருந்து திணிக்கப் படுகின்ற) பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவம் தானாகவே ஏற்படுகின்றது. ஆனால் இந்தப் பிரக்ஞை தனது எல்லை பற்றிய வரைறைகளை
ടൂ~് உணர்ந்திருத்தல் வேண்டும். மற்றவர்கள் நமக்கு எதனைச்
செய்கின்றார்கள் என்று நாம் لم۔
Sz C நம்முடன் உள்ளவர்களுக்குச்
s செய்யக் கூடாது. நான் சொல்லும்
S) தமிழ்ப் பிரக்ஞையில், தன்னைத்
தானே திருத்திக் கொள்ளும் சுயவிமர்சன ஆற்றல் இருக்கின்றதென்றே கருதுகிறேன்.
50

கேள்வி ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு தீவிர மாற்றங்களை அடைந்துள்ளது. குறிப்பாக சிறுகதையும் கவிதையும் நாவல் விசயத்தில் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய தொகை அளவு தான் வெளிவந்துள்ளது. நீங்களும் 40 வருடங்களாக தமிழ் இலக்கிய ஆசிரியராக இருந்து வருகிறீர்கள். குண ரீதியாக எந்தச் சிறுகதைகளை, நாவல்களை இந்தச் சிறுகதைகளை, நாவல்களை உங்கள் விரலை நீட்டி இவற்றை வாசியுங்கள் என்று தீவிரமான இலக்கிய மாணவர்களுக்கு நீங்கள் கூறுவீர்கள்?
கேள்வி கடந்த 40 வருட காலமாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை அவதானித்த பொழுது நீங்கள் சொல்லும் இந்த முயற்சி இன்னும் சரியான முறையில் செய்யப்படவில்லை. ஆனால் செய்யப்பட வேண்டிய காலம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். ஏறத்தாழ 40களில் மறுமலர்ச்சி இயக்கத்தை ஒட்டி ஒரு வளர்ச்சியும் 50களின் பிற்கூறில் அல்லது நடுக்கூறு முதல் 60களில் முற்போக்கு இலக்கியத்தை மையமாகக் கொண்டு அதற்கு எதிராகவும் சார்பாகவும் வளர்ந்த கோட்பாடுகளும் 60க்குப் பின்னர் அழகியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வந்த எழுச்சியும் 80களில் குறிப்பாக ஏற்பட்ட சமூக அனுபவ மாற்றங்களினடியாகத் தோன்றிய இலக்கிய எழுச்சியும் என காலகட்டத்தைக் குறைந்தது நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த நான்கு கட்டங்களையும் எடுத்துக் காட்டுகின்ற எழுத்துக்களே நம்முடைய தளம். ஏதோ சில காரணமாக நாம் இந்த வரலாற்றை எழுத்தாளர்களை மையமாக வைத்துக் கொண்டு பார்த்து வந்ததன் காரணமாக இன்ன இன்ன இவர்களுடைய கதைகளை வாசியுங்கள் அல்லது கவிதைகளை வாசியுங்கள் என்று பார்த்துக் கொண்டு வந்ததோமே தவிர நீங்கள் சொல்வது போல எந்தெந்த படைப்புக்கள் உதாரணமாகக் காட்டப்படத் தக்கவை என்று பார்க்கிற ஒரு மரபு இன்னும் எங்களிடையே வரவில்லை. ஒரு ஆள்நிலைப் பட்ட ஒரு வரலாறாகவே பார்க்கிறோமே ஒழிய படைப்பு நிலைப் பட்ட வரலாறாகப் பார்க்கத் தொடங்கவில்லை. இருந்தாலும் இந்த எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய படைப்புக்களுக்கும் இடையே அவர்களுடைய கருத்து நிலைகளை வெளிப்படுத்துகிற ஒரு தன்மை ஒன்று உண்டு தானே. இப்படிப் பார்க்கிற பொழுது நான் இதை முற்போக்கு பிற்போக்கு என்று பார்க்காமல் எழுத்தறிவு சமூக ஜனநாயக மயப்பட்டதனால் ஏற்பட்ட மாற்றம் என்று பார்க்கிற பொழுது 40களில் இருந்து அதனுடைய விகசிப்பைப் படிப்படியாக காண்கிறோம். மறுமலர்ச்சி எழுத்தாளர், அதனைத் தொடர்ந்து கணேசனுடைய பாரதி, அதனைத் தொடர்ந்து முற்போக்கு இயக்கம் என்று பார்க்கலாம். இந்தக் கால கட்டத்தில் பார்க்கிற பொழுது ஆரம்ப நிலைக்கு உதாரணமாக சிவைத்திலிங்கத்தைச் சொல்கிற ஒரு மரபு உண்டு
ஆனால் இதற்கு சற்று முன்னர் தோன்றிய மங்களந. ாயகி தம்பையாவினுடைய நாவலும் முக்கியமான ஒரு படைப்பு பண்பாட்டு மாற்றங்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய குடும்ப அமைப்பில் குறிப்பாகப் பெண்கள் நிலையில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்படுகிற ஒரு தன்மையும் குறிப்பிடத் தக்கது. இவற்றின் பிறகு பானியல், ஜீவா, ரகுநாதன் போன்றவர்கள். இவர்கள் எல்லாம் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம். இவர்களோடு கருத்து ரீதியாக நில்லாமல் தனியாக நின்றவரான
-l &6n 6ob SesnG86 Goffesio 1997

Page 53
கே.வி. நடராசாவையும் நான் சேர்த்துக் கொள்வேன். இவருடைய யாழ்ப்பாணத்துச் சிறுகதைகள் என்ற நூலில் கமனியா வளவு என்று ஒரு கற்பனைப் பாத்திரம் உண்டு அற்புதமான கதைகள் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முறையை அதிலுள்ள சோகத்தை, அதிலுள்ள மனித உறவுகளின் தாற்பரியத்தை மிக அற்புதமாகச் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து இதற்குச் சமாந்தரமாக பொன்னுத்துரையின் எழுத்துக்கள் முக்கியமானதென்று கூறலாம். டானியல், ஜிவா பொன்னுத்துரை போன்றவர்கள் அல்லது 40களில் இருந்து வந்த கனக செந்திநாதன் போன்றவர்களின் பின்னர் இன்னொரு பரம்பரை ஒன்று மேற்கிளம்புகின்றது. அந்தக் கால இளம் பரம்பரை இவர்கள் மிகுந்த நுண்ணுணர்வுடன் தாங்கள் வாழுகின்ற சூழலைப் படம் பிடித்துக் காட்டியவர்கள். அப்படிக் காட்டியவர்களில் முத்துலிங்கம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அதன் பிறகு இன்னொரு பரம்பரை ஒன்று தோற்றம் பெறுகிறது. அரசியல் கோஷத்தோடு தங்கள் எழுத்தைக் கொண்டு வந்த பரம்பரை போக, அடுத்த பரம்பரை ஒன்று அதை பின்பற்றியது. இன்னொன்று அதைப் பார்த்து அதிலுள்ள குறைநிறைகள் அழகியல் விடயங்களைப் பேசுகின்ற போக்கு. இதன் பின் விவாதம் நடைபெற்றது. அழகியல் வேண்டுமா? இலக்கியம் வேண்டுமா? என்று அந்தக் காலகட்டத்தில் தான் படிப்படியாக சில எழுத்தாளர்கள் முன்னுக்கு வருகிறார்க்ள். அவர்களில் சாந்தன், தெணியான் முக்கியமானவர்கள். இவர்களோடு சற்றுப் பின் சட்டநாதன் மிக முக்கிய எழுத்தாளராக காணப்படுகிறார். இந்த 50களில் ஏற்பட்ட வளர்ச்சி இலக்கிய வெளிப்பாடென்பதை யாழ்ப்பாணம் மட்டக்களப்புக்குள் மாத்திரம் உள்ளடக்கியதாகக் கொள்ளாமல் மலையகம், வன்னி, தென் மாகாணம் போன்ற பிரதேசங்களிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் பார்க்கலாம். முற்போக்கு இலக்கியத்தினுடைய அதிகமாக எடுத்துப் பேசப்படாத பங்கு இது தான் என்று நான் கருதுகிறேன். அதாவது, இலங்கையின் பல பாகங்களிலும் இருந்த எழுத்துக்களை அல்லது எழுத்தாளர்களை தங்கள் தங்கள் பிரதேசங்களைப் பற்றி எழுதுவதற்கு இது தூண்டியது என்றே சொல்ல வேண்டும் அந்தத் துாணடுதலின் வளர்ச்சியில் தான் திக்குவல்லை கமால் போன்றவர்கள் காணப்பட்டனர். இந்த மாதிரியான இலங்கை முழுவதிற்கும் பொதுவான நவீன இலக்கிய எழுத்து மரபு ஒன்று உருவாகியது. ஆனால் இவை தலைசிறந்த இலக்கியத்தைத் தோற்றுவித்து விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் முக்கியமான U6) படைப்புக்கள் தோன்றியுள்ளன. இதன் பின் 70களில் நிச்சயமான ஒரு மாற்றம் வருகின்றது, பல்கலைக் கழகப் பட்டதாரிகளான எழுத்தாளர் தலைமுறை ஒன்று. இவர்கள் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றவர்கள். யோகநாதன், செங்கை ஆழியான், செம்பியமன் செல்வன், கதிர்காமநாதன், போன்றவர்கள் வருகின்றார்கள். இந்த வளர்ச்சி நடந்து வரும் பொழுது தான் 70களில் தளையசிங்கம் விமர்சன ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறார். நிச்சயமாக எங்களுடைய விமர்சன பாரம்பபரியத்தில் அவருக்குத் தனியிடம் உண்டு. அவருடைய அபிப்பிராயப்படி மார்க்சியத்துக்கு அப்பாலான ஒரு ஆத்மார்த்த நிலை உண்டு. அது சம்பந்தமாக அவருடன் கதைத்துள்ளேன். ஆனால் அது ஒரு முக்கியமான கருத்து. அது இன்னொரு வகையான உணர்வு நிலையைக் கொண்டுள்ளது. அதை நான் ஏற்றுக் கொள்வதிலே சில சிக்கல்கள் உண்டு. ஆனால் அவர் முக்கியமான ஒருவர். அதன் பின் 80களில் வரும் புதிய தலைமுறை. இந்தப் புதிய
- காலம் இளவேனில் 1997 പ

தலைமுறையின் உணர்வு மிக
முக்கியமானது. இது ஒரு முற்றிலும்
வேறுபட்ட சமுக, அரசியல் ) حصاصم அனுபவம். இது ஆரம்பத்தில் கவி-ை MNSதயில் தான் வரும். ஏனெனில் ○イ கவிதை உணர்ச்சியின்பாற் பட்டது. அந்தக் கவிதை வடிவம் வரும்போது ○
அதில் இரண்டு வகையானவர்கள் உண்டு ஏற்கெனவே இருந்தவர்கள் ※ முருகையன் போன்றவர்கள் மற்றது
இந்த அனுபவங்களுடைய
சிசுக்களாகத் தோன்றியவர்கள். இதில் ஜெயபாலன் ஏற்கெனவே எழுதிக் கொண்டிருந்தவர். புதிய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கினார். ஆனால் சேரன் முற்றிலும் புதிய அனுபவங்களுடனான ஒரு புதிய வரவு. யமன், இரண்டாவது சூரிய உதயம் போன்றவைகள் நல்ல கவிதைகள் என்று கூறலாம்.
கேள்வி. சேரனுக்கு இப்போது ஒரு வீழ்ச்சியா?
பதில் சேரனில் நிச்சயமாக இப்போது ஒரு மாற்றம் இருக்கிறது. முந்தி இருந்த சேரனின் அனுபவத்தை விட இப்போதுள்ள சேரனின் அனுபவம் அகன்றுள்ளது. அதன் காரணமாக அவருடைய எடுத்துரைப்பு முறைமையில் வித்தியாசம் இருக்கின்றது, ஆனால் கவிஞர்களின் அனுபவ வேறுபாடுகள் அவர்களது படிமங்கள், மொழி ஆட்சி முதலியனவற்றில் உடனே தெரியும் என்னுடைய அபிப்பிராயம் அந்த முதலாவது மாற்றம் மிக முக்கியமானது. 80களில் வருவது புதிய அனுபவம் சார்ந்தது. அனுபவம் ஆழமாக பிரதிபலிக்கும் போது தொழிற்படும் போது வரும் இலக்கியங்கள் உந்நதமானவையாக இருக்கும். 80களில் கவிதைக்குப் பின் படிப்படியாக புனைகதை வருகின்றது. புனைகதைக்கு வருகிற பொழுது முதலாவதாக என்னுடைய அபிப்பிராயம் கலாபூர்வமாக, பிரக்ஞை பூர்வமாக வெளியிடுவதில் உமா வரதராசன் குறிப்பிடக் கூடியவர். அதற்குப் பின் பலர் வருகிறார்கள். 80களில் திருமலை, யாழ்ப்பாணம் மையப்பட்டிருந்தன. போராட்டத்தின் காரணமாக அல்ல. போராட்டம் ஏற்படுத்திய சிதைவும் சீர்குலைவும் மற்ற இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் கூடுதலாக உள்ளது. ஆனால் 80கனின் பின்சுற்றிலும் 90களிலும் அந்தச் சிதைவும் சீர்குலைவும் மற்ற இடங்களிலும் பார்க்க மட்டக்களப்பில் அதிகமானது. அதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை சேரனுடைய அடுத்த வளர்ச்சியாக நான் காண்பது சோலைக்கிளியியை அதன் பின்னர் திருக்கோவில் கவியுகன், உமா வரதராசன். அவ்விலக்கியச் சூOலை நாங்கள் ஒரு செழுமையான ஒரு இலக்கியச் சூழல் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் 90களில் இன்னொரு மாற்றம் ஏற்படுகின்றது. அங்கு இருக்கிற பிரதேச நிலைமைகள் காரணமாக கவிதை வேறு வடிவமாக பாட்டு வடிவமாக நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற காரணத்திற்காக தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஒரு இலக்கிய வடிவம் பெறுகின்றன. அந்த விடயத்தில் புதுவை இரத்தினதுரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர். கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கலாம் என்னுடைய அபிப்பிராயம் யாழ்ப்பாணத்து வாழ்வை அநுபவங்களை ரொம்ப உணர்ச்சி பூர்வமான
51

Page 54
பிம்பங்களாக படிமங்களாக காட்டுகின்ற ஒரு மொழி நடை புதுவையிடம் உண்டு. சிலர் இதை வெறும் பாட்டுத் தானே என்று கூறினாலும் நான் நிச்சயமாக அதைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. இந்த வளர்ச்சி இந்த இடத்தில் தான் வரும் என்று என்றில்லை. நிச்சயமாக அது நாங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்தும் வரலாம். உதாரணம்: ரஞ்சகுமாரின் படைப்புக்களைப் பார்க்கும் போது இந்த அனுபவம் மிக உன்னதமாக வெளிக் கொணரப் பட்டிருக்கின்றது என்று தான் சொல்லுவேன்.
அடுத்து நாவலை எடுத்துக் கொள்ளுவோம். எங்களுக்கு நாவலில் கதை சொல்லுவது தான் பிரதானமானது. இளங்கீரன், கணேசலிங்கம், போன்றவர்கள் சில விடயங்களை எடுத்துச் சொல்கிறவர்களாகத் தான் பார்க்க முடியும். இதற்குள் பொன்னுத்துரையும் வருகிறார். பொன்னுத்துரை (Sylist) படி மிக முக்கியமானவர் வசிகரமானதும் மனித உறவுகளின் மிகைத் தன்மைகளை எடுத்துக் கூறுவதில் முக்கியமானவர். இந்த மனித உறவுகளின் ஓட்டத்தோடு காணப்படுகின்ற சமூக வித்தியாசத்தை அவர்களுக்கு வயசு விட்டது என்ற அருள் சுப்பிரமணியத்தின் நாவல் காட்டுகின்றது. அதன் பின் அவர் ஏதும் எழுதவில்லை என்பது வேறு விடயம். ஆனால் அந்த நாவல் அருமையானது. அடுத்து நந்தி முக்கியமானவர். பானியலுடைய சிறுகதைகள் எல்லாமே அவருடைய நாவல்களுக்கான பசளையாக அமைந்தன. உண்மையில் டானியலின் நாவல்கள் பல அவரின் சிறுகதைகளின் தொகுப்பு என்று தான் சொல்லுவேன். ஆனால் டானியல் அந்த வாழ்க்கையை அதற்குள்ளேயே நின்று கண்டவர். தலைசிறந்த நாவல்களாக இல்லாதிருக்கலாம். ஆனால் கானல் ஒரு அற்புதமான நாவல். என்னுடைய அபிப்பிராயம் கானலில் ஒரு கொம்யுனிசம் பேசும் டானியலைப் பார்க்க முடியாதிருக்கலாம். ஆனால் தீண்டாமை ஒழிப்பில் சம்பந்தப்பட்ட ஒரு மனிதாபிமான டானியலை அதில் பார்க்கலாம். நான் சொல்லுவேன் அது டானியலின் மிகச் சிறந்த படைப்பு இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லுவதென்றால் சண்டை வரும் பரவாயில்லை. இதுவரை வந்த ஈழத்து நாவல்களில் கானல் மிக முக்கியமானது. பஞ்சமரை நான் முக்கியத்துவப் படுத்தவில்லை. அது நீண்ட கதை, அதை நான் ஒரு சமூக ஆவணமாகத் தான் கொள்கிறேன். நாவலாகக் கொள்ளவில்லை. இதோடு நந்தியினுடைய நம்பிக்கை ஒரு நல்ல நாவல், நாங்கள் மேல் நாட்டுப் பிரசுர பாணியில் தொழிற்படுவோமாகில் அதாவது படைப்புக்களை இன்னொருவரிடம் கொடுத்து சரி பார்த்து எடிற் பண்ணுகிற முறை இருக்குமாய் இருந்தால் எங்களிடமும் தரமான படைப்புக்கள் வெளி வந்திருக்கும் எங்களிடம் உள்ள குறைபாடு என்னவெனில் அவரவர் படைப்புக்களை அவர்களே பிரசுரிப்பது தான். அப்போது எடிற்றிங் சம்பந்தமான பதிப்புச் சம்பந்தமான செம்மைப்படுத்துவது
క~) சம்பந்தமான ஆலோசனைகள் கிடையாது. இது ஒரு பெரும்
குறைபாடு. செங்கை ஆழியான் ل
நிறைய எழுதி இருக்கிறார். நிறையத் 2ܓܠ
f தகவல்கள் இருக்கின்றன.
S * வாசிக்கலாம். இவர்கள் எல்லோருமே
கதை சொல்பவர்கள். வெளியே நின்று கதையைச் சொல்கிறார்கள்.
அந்தப் படைப்புக்குள் நிற்பவர்கள்
52

இல்லை. அண்மைக்காலச் சிறுகதை வளர்ச்சியினுடைய பிரதான அம்சம் என்ன வென்றால் எழுத்தாளன் என்பவன் தான் சித்திரிக்கிற சம்பவத்திற்கு புறத்தே நின்று கொண்டு அதனைப் பிடித்துக் காட்டுகிற ஒரு போட்டோகிராபராக இல்லாமல் அதற்குள்ளே நின்று அந்தப் பாதிப்புக்களின் பெறுபேறாக வருபவன். அந்தப் பாதிப்பை அணுஅனுவாக அனுபவிக்கிறவன. ாக வருபவன். இந்த நிலையில் எங்களுடைய கதை கூறுகிற மரபில் ஒரு வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. சிறுகதைகளில் உண்டு. இன்னும் நாவலில் இல்லை. உண்மையில் நாவலுக்குக் கதை முக்கியம் இல்லை. அதற்கு முக்கியம் எடுக்கப்படும் வாழ்க்கைப் பிரச்சினை தான். இவைகளுக்குள் நாங்கள் இந்தக் காலத்தைப் பிரதிபலிக்கிற தனிப்படைப்புக்கள் எவை என்று இனங் காட்டவில்லை. துரதிஷ்டவசமாகவோ அதிஷ்டவசமாகவோ ஒரு விமர்சன பாரம்பரியத்தில் எந்தெந்தக் கருத்து நிலை முக்கியமானது என்பதனையும் அந்தக் கருத்து நிலையின் அடிப்படையில் எழுதுகிறவர்கள் யார் யார் என்பதன் காரணமாகவும் நாங்கள் எழுத்தாளர்களுக்குக் கொடுத்தளவு பரிசீலனை ஆக்கங்களுக்குக் கொடுக்கவில்லை.
கேள்வி: ஈழத்தில் கவிஞர்களாக சிறுகதை ஆசிரியர்களாக எழுத ஆரம்பித்தவர்களில் முக்கியவானவர்கள் இன்று விமர்சகர்களாகவும் படிப்பாளிகளாகவும் மாறி விட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சிறப்பான உதாரணங்களாக நுஃமான், சேரன் ஆகியோரைக் குறிப்பிடல் வேண்டும். இது சமூகவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டிய விடயம். இதற்கான காரணங்கள் எவையெனக் கருதுகிறீர்கள்?
பதில்: நான் நம்புகிறேன் எங்களுடைய விமர்சனத்தில் அடுத்த கட்டமாக இது தான் வரவேண்டும். உண்மையில் இது சில எதிர்பாராத மாறுதல்களைக் கொண்டு வரும் பேசப்படாதவர்கள் வரலாம். பிரபலமாகப் பேசப்படுபவர்கள் சிலர் வராமல் போகலாம். காலமும் படைப்பும் என்பதில் அந்தப் பிரச்சினை இருக்கிறது. அதே நேரத்தில் வளர்ச்சிப் போக்கைப் பார்க்கிற போது சில முக்கியமானமானவை தேவைப் படாமலும் போகலாம். அடுத்தது, முருகையன், ஜெயபாலன் இவர்களையும் முக்கிய விமர்சகர்களாகக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த விதிக்கு அகப்படாத ஒருவர் என்றால் மஹாகவி தான். இதைப் பொதுவிதியாகச் சொல்வதில்லை. இருந்தாலும் பொதுவாக எழுத்தாளர்கள் எவருமே விமர்சகர் தான். ஆனால் கவிஞர்களிடையே ஒரு முக்கியத்துவம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு தரிசனம் உண்டு அந்தத் தரிசனம் அவர்களை ஒரு விமர்கராகவும் மாற்றும் நுஃமானுக்கு அது தான் நடந்தது. அந்தப் பின்புலத்துடன் ஒரு தரிசனப் பின்புலம் வருமேயானால் அது ஒரு நல்ல உன்னதமான நிலையாகும். அது தான் எலியற்றுக்கு நடந்தது. ஒரு கால கட்டத்தில் முக்கியமான கவிஞன் மிக முக்கியமான விமர்சகன். இந்தக் கவிஞர்களிடையேயும் இரண்டு வகை உண்டு.
1. வெறுமனே உணர்ச்சிப் படிமங்களாகப் பார்ப்பது 2. வெறுமனே புலமைப் (Intelectual) படிமங்களாகப் பார்ப்பது
அதாவது இவர்களது கவிதை ஆக்கத்தின் உந்துதலாக ஒரு புலமைத்துவ நோக்கு ஒன்று ஜீவ கருதியாக அமையும் இத்தகையவர்கள் விமர்சகர்களாகத் தொழிற்படுவர். மஹாகவி, சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள்
പ as sub இளவேனில் 1997 -

Page 55
பெரிய விமர்களாக மாறவில்லை. ஆனால் இதை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முடியாது. சிலருக்கு ஒரு விசேச விமர்சனப் பின்புலம் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் நல்ல கவிஞர்களாகவும் பிரசாசிக்கிறார்கள் அதில் ஒரு சிக்கலும் உண்டு. அதாவது இவர்களுடைய கவித்துவம் இவர்களுடைய விமர்சனத்தினால் எந்தளவு பாதிக்கப் படுகிறது. இதன் காரணமாக இவர்களுடைய எழுத்துக்களில் இரண்டு மட்டங்கள் உண்டு. ஒரு மட்டத்தில் நின்று கவிஞனாகப் பார்ப்பது மற்ற மட்டத்தில் நின்று விமர்சகனாகப் பார்ப்பது. இது இரண்டும் ஒன்றுக் கொன்று ஆதாரமானது. ஆனால் அந்தக் கவிஞனாகத் தொழிற்படுகிற அவன் விமர்சகனாகத் தொழிற்படுவதில்லை. இருந்தாலும் கூட கவிஞர்கள் எப்பொழுதும் தரிசனம் காரணமாக ஆக்க உணர்வு பற்றிய ஒரு தெளிவு இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன். மற்றது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய கைவினை பற்றிய ஒரு உணர்வு வேண்டும் தானே. இது கவிஞர்களுக்கு மாத்திரம் அல்ல தன்னுடைய ஆக்கம் பற்றி கைவினை பற்றி சிரத்தை எந்த எழுத்தாளனுக்குண்டோ அவன் நிச்சயம் ஒரு விமர்சகனாக இருப்பான். அப்படி இல்லாமல் வருவதை அப்படியே அப்படியே எழுதிவிட்டு போகிறவர்கள் p—60ії6). அப்படியானவர்களுக்குக் கூட மதிப்பீடு சம்பந்தமான சில வரையறைகளும் இருக்கும். சோமசெற் மோம் பெரிய விமாசகர் அல்ல. ஆனால் அவருடைய நான் விரும்பும் உலக நாவலாசிரியர்கள்” அருமையான விமர்சன நூல். அது ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை விமர்சிப்பது அந்த மாதிரியான பாரம்பரியம் எங்களுக்கு இல்லை. ஆனபடியால் சேரனைப் பொறுத்தவரையில் அது தான் காரணம் என நம்புகிறேன். மஹாகவி போன்றவர்கள் இதில் வரவில்லை.
கேள்வி சிட்டியும் சிவபாதசுந்தரமும் பல பக்கங்களை எஸ்.பொ.வுக்கும் முதளையசிங்கத்துக்கும் தங்கள் "சிறுகதை இலக்கிய வரலாறு” நூலில் கொடுத்திருக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, விமர்சனம், கட்டுரை என்று எழுதி வரும் எஸ்.பொ வுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் நீங்கள் கொடுக்கும் இடம் எது?
துரதஷ்டவசமாக எஸ்.பொ.பற்றிய வாத விவாதங்கள் எழுந்த காலத்தில் சம்பந்தப்பட்டவன் என்ற காரணத்தால் அல்லது எஸ்.பொ. எதிர்த்த அல்லது எஸ்.பொ. வை எதிர்த்த ஒரு இலக்கியக் குழுவைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் இது சம்பந்தமாக நான் சொல்லுவது சிலவேளைகளில் எரிந்த கட்சி ளியாத கட்சி கதையாக இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் என்றைக்கும் அன்றைக்குமே நான் எஸ்.பொ வை மொழியைக் கையாளக் கூடிய திறமையுள்ளவர் என்று கூறி வருகிறேன். இன்னொன்று எஸ்.பொ வின் கதைகளை வாசித்து அதன் பின் புலங்களைப் பார்க்கிற பொழுது அக்காலத்தில் தோன்றின மற்றைக் கதைகளில் இருந்து அக்கதைகள் அடிப்படையில் கிஞ்சித்தும் வேறுபட வில்லை. ஆனால் பொன்னுத்துரைக்குள்ள மிகப் பிரதானமான பிரச்சினை என்னவென்றால் அவரின் கருத்தியல் Ideology என்ன? சமூக மாற்றம் போன்றவை பற்றி எஸ்.பொ வின் பாத்திரங்களின் கருத்து நிலை என்ன? அதனால் தான் பொன்னுத்துரை எவ்வளவு சிறந்த எழுத்தாளனாக இருந்த போதிலும் சிறந்த படைப்பாற்றலுள்ளவராக இருந்த போதிலும் நின்று நிலைக்கக் கூடிய படைப்பைத் தோற்றுவிக்க முடியாமல் போனதற்குக் காரணம் கருத்தியல் நிலைப்பாடு இல்லாமல்
- alsTeob SerC366th6) 1997 - -

எழுத்தாளன் நிலைத்து நிற்பதற்கு அவனுடைய மனிதாபிமானக் கருத்துக்கள் தான். அந்தக் கருத்து நிலையை ஒட்டி நின்று பார்க்கிற போது அந்த மதிப்பீட்டின் படி '. பொன்னுத்துரையின் படைப்பு என்ன சொல்கின்றன? பொன்னுத்துரை காட்டும் மனிதன் யார்? *
ge
போனதே ஆகும். இது சண்டைகளுக்கு அப்பால் நின்று விசுவாசமாகச் சொல்லுவது இலக்கியம் சம்பந்தமாகப் பார்க்கிற போது இலக்கியத்திற்கும் கருத்து நிலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே எழுத்தாளன் நிலைத்து நிற்பதற்கு அவனுடைய மனிதாபிமானக் கருத்துக்கள் தான். அந்தக் கருத்து நிலையை ஒட்டி நின்று பார்க்கிற போது அந்த மதிப்பீட்டின் படி பொன்னுத்துரையின் படைப்பு என்ன சொல்கின்றன? பொன்னுத்துரை காட்டும் மனிதன் யார்?
கேள்வி: பொன்னுத்துரை காட்டிய உலகத்தில் அன்றைய யாழ்ப்பாணத்தின் அவலங்கள் உள்ளன.
பதில் ரஞ்சகுமாரின் கதைகளுக்கூடாக வரும் மனித அவலம் மனித சோகம், மனித சீரழிவு மாதிரியான ஒரு சோக உணர்வு அல்லது பெறுமான பிரச்சினை பொன்னுத்துரையின் படைப்புக்களில் கிடைக்கின்றதா? பால் உணர்வைத் தவிர்த்து. அருமையான கதைகள் நான் இல்லை என்று சொல்லவில்லை. ஐடியொலிச்கலி மார்க்சிகக் கண்ணோட்டத்தில் சொல்லவில்லை. அதைத் தவிர்த்தும் பார்த்தால் சட்டநாதன், ரஞ்சகுமார், கே.வி. நடராசன் போன்றவர்களைச் சொல்லலாம். அதை விட நான் தனிப்பட்ட கோபதாபத்தாலும் சொல்லவில்லை. அந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பது மட்டும் காணாது. அந்த வாழ்க்கைப் பிரதிபலிப்பதின் ஊடாக மனித உறவுகள் பற்றிய உண்மைகளைச் சொல்வது தான் தேர். நல்ல அற்புதமான சிறுகதை, ஆனால் பொன்னுத்துரையின் ஆக்கங்கள் முழுவதையும் எடுத்துப் பார்க்கும் போது புதுமைப்பித்தனுடைய பாத்திரங்கள், கு.பராவின் பெண்கள் பாத்திரங்கள் என்கிற மாதிரி பொன்னுத்துரையின் எந்தப் பாத்திரத்தைச் சொல்வீர்கள்? பொன்னுத்துரையின் சுயத்தை மனிதனுடைய எந்த இயல்பு பற்றியதாக அமைந்துள்ளது? நான் மார்க்சிசம் பேசவில்லை. நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்றும் இல்லை. இது திறந்த விவாதம் நான் தாக்கியும் பேசவில்லை. சடங்கு ஒரு நல்ல நாவல். ஆனால் அதற்கு மேல் அது எங்களுக்குத் தருகிற தெளிவு என்ன? பாணி, கதை சொல்கிற முறைமை எல்லாம் சரி. ஆனால் இலக்கியம் என்றால் அதற்கு அப்பாலும் ஒன்று இருக்கிறது.
கேள்வி: அப்படியானால் மோகமுள்ளில் நாங்கள் என்ன
காண்கிறோம்?
பதில் மோகமுள்ளில் நாங்கள் காணுகிற தென்னவென்றால் அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் உள்ள உறவு. அந்த உறவில் காணப்படுகின்ற கதையை வாசித்து முடித்த பிறகு
తశతి
53

Page 56
வாழ்க்கையைப் பார்க்கும் முறை.
அது மோக முள்ளுக்கு மாத்திரம்
அல்ல ரோஸ்ரோவெஸ்கி ܙܘܝܠj> .போன்றோரிடமும் உள்ளது الحصص
Q N வாழ்க்கை சித்திரிக்கப் படுவது மட்டுமல்ல. வாழ்க்கையைப் பார்க்கப்
(S படவும் வேண்டும். அதைக் கொண்டு
தான் நான் சொல்கிறேன். பானியலில்
காணப்படும் குறைபாடு
எல்லாவற்றையும் சம்பவங்களாகப்
பார்ப்பது. அதுக்குள்ளால் ஒரு முழுமையான ஒன்றும் மேலே வரவில்லை. ஆனால் காணலே வருகிறது. பொன்னுத்துரையின் "வி" யை அப்போதே நான் நல்லதென்று விமர்சித்தேன். ஆனால் மனித நிலைகள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சமூக தரிசனம் அதில் காணப்படவில்லை. எனக்கு சமூக தரிசனம் தான் முக்கியமாகப் படுகின்றது. அது நேரடியாக வரலாம். அல்லது மறைமுகமாக வரலாம். மார்க்ஸ் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஒரு கொம்யுனிஸ்ற் எழுதினால் தான் சோசலிசம் வரும் என்று. கொம்யுனிஸ்ற் அல்லாத எழுத்தாளருக்குள்ளால் அது வரலாம். வந்திருக்கிறது. அதால் தான் சொல்கிறேன். தமிழில் நாவல்கள் வரவில்லை என்று புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புக்கள் தமிழில் நல்ல நாவல்கள். ஆனால் உலக நாவல்களுடன் சேர்த்து வாசிக்கும் போது இது காவியங்கள் மாதிரி அல்ல. இது உலகப் பொதுவான இலக்கியம் அல்ல. ஸ்பெயினில் யாராவது ஒரு நாவல் எழுதி இருக்கலாம். அந்த நாவலும் இந்த நாவலும் நாவல் என்ற வகையில் ஒன்றாக நிற்க வேண்டும் மோகமுள் நல்ல நாவல். ஆனால் தலை சிறந்த நாவல் என்று சொல்ல முடியாது. மோகமுள் நாவலுக்கான தொடக்கமே ஒழிய நாவல் அல்ல. மோகமுள் தமிழில் நல்ல நாவல்கள் வரப் போவதற்கான ஒரு ஆரம்பம் என்று சொல்லலாம். சிறுகதைகளில் ஏற்பட்டிருக்கிற வாழிப்பான வளர்ச்சி நாவலில் இல்லை.
கேள்வி: பொதுவாக தமிழ் இலக்கியம் என்று பேகம் போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தியத் தமிழிலக்கியமே பேசப்படுகின்றது. ஈழத்தமிழ் இலக்கியமோ மலேசிய சிங்கப்பூர் இலக்கியமோ அதிக அளவில் பேசப்படுவதில்லை. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் கேள்வி எனக்கு நன்றாகப் பிடித்துள்ளது. அதாவது ஒரு சுவாரஷ்யமான கேள்வி, ஒன்று என்னவென்றால் ஈழத்தில் வெளிவருகின்ற இலக்கியங்களை தமிழ் மொழியில் தருகின்ற போது இலக்கியங்களோடு இணைத்துப் பார்த்துப் பேசுகின்ற வாய்ப்பு அல்லது அமைப்பு முறை இல்லை. அப்போது இலங்கையில் எழுதப்படுவதெல்லாம் இலங்கையிலேயே நின்று
 

விடுகின்றன. அங்கு எழுதப்படுவது அங்கே நின்று விடுகின்றன. எங்கள் எழுத்தாளர்கள் சென்னையில் பதிப்பித்தாலும் கூட அது பொதுவான வாசகர்களுக்குப் போவதாகத் தெரியவில்லை. தமிழிலக்கியம் முழுவதையும் பொறுத்தவரையில் தமிழ் நாடு மையம் இவை எல்லாம் பிரதேச இலக்கியங்கள். அதற்கு மேலாக முழுத் தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு என்பதை எடுத்துக் காட்டுவதற்கான எழுத்துக்கள் குறைவு. அதற்கான அதைச் சேர்த்து பார்ப்பதற்கான அமைப்புக்கள் இல்லை. ஒரே சஞ்கிகையில் எல்லாவற்றையும் போட்டுப் பார்க்கின்ற, ஒரே விமர்சகரே எல்லாவற்றையும் பார்க்கிற அந்த மாதிரியான அமைப்புக்கள் குறைவு. இதன் காரணமாக பல அறியாமைகள் தென்படுகின்றன. நாங்களும் இலங்கையை வைத்துக் கொண்டு தான் எங்களுடைய வரலாற்றைச் சொல்கிறோம். தமிழ் நாட்டில் என்ன நடக்கிறதென்று பார்ப்பதில்லை. நான் இவ்வளவும் சொல்லும் போதும் ஜெயமோகன், தமிழ்ச் செல்வன், கோணங்கி பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தான் இன்று தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையே மாற்றியவர்கள் மற்றது இன்னொரு பிரதானமானது என்னவென்றால் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் உலகப் பொது மொழிகளில் எழுதுகிறவர்கள் ரொம்பக் குறைவு உண்மையில் சிங்கள இலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் இருக்கும் அளவை விட இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றி இல்லை. இந்திய தமிழ் இலக்கியம் பற்றியும் மிகக் குறைவு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி வருகிற தெல்லாம் ஆங்கில எழுத்துக்களுடள் ஒப்பிட்டுப் பேசுகிற ஒரு விமர்சன பாரம்பரியத்தை அல்லது அறிமுகத்தைச் செய்ய வேண்டும் தமிழன் ஆங்கிலத்தில் எழுதுவதையும் கவனிக்க வேண்டும். உதாரணம் வழியாம் செல்லத்துரை. மற்றது எங்களுடைய அனுபவங்களை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களும் எங்களிடம் இல்லை. அதனால் இந்திய தமிழ் இலக்கியம் தான் பெரும்பாலும் பேசப்படும். இப்படிப் பார்க்கும்போது தான் 60களின் பின் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சியினுடைய ஒரு பெரிய பெறுபேறு என்னவென்றால் இந்தியத் தமிழ் இலக்கியத்திற்கும் ஈழத்தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டது. அது வெங்கட் சாமிநாதனாக இருக்கலாம். அல்லது தோதாத்திரியாக இருக்கலாம். கைலாசபதி பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதியது அல்லது கேசவனுடைய பார்வையாக இருக்கலாம். எங்களுடைய எழுத்துக்கள் எங்களுடைய சிந்தனைகள் அவர்களிடம் முக்கியப்பட்டது. இப்போது இன்னும் கூடியுள்ளது. சுபமங்கள போன்ற பத்திரிகைகளின் பணிகளைச் சொல்லலாம். இதன் காரணமாக காத்திரமான எழுத்தாளர்கள் மத்தியில் இந்தப் பார்வை விசாலமடைந்துள்ளது. அதைவிட இப்போது ஒரு சந்தை தோன்றி உள்ளது. உலகம் பூராகப் பரவியுள்ள ஈழத்தமிழர்களால் ஏற்படும் சந்தை. இந்தச் சந்தையை ஈழத்தமிழர்களால் ஏற்படுத்த முடியாது. எனவே இதைத் தமிழக எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். முன்னைய பதிலுக்கு வருவோமானால் இதற்கான அகநிலைத் தயாரிப்புக்கள் இன்னும் நடைபெறவில்லை. மற்றது இவற்றைச் சொல்வதற்கான ஆட்கள் எழுத்தாளர்கள் குறைவு. இதன் காரணமாக ஒரு அழுத்தம் தமிழ் நாட்டில் இல்லை. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் இந்திய இலக்கியத்தின் ஒரு வெளிப்பாடாகவே தமிழ் நாட்டு இலக்கியத்தைத் தமிழ் நாட்டுக்காரர்கள் பார்க்கிறார்கள்.
- காலம் இளவேனில் 1997 -

Page 57
உண்மையில் இந்திய இலக்கியத்தின் தமிழ் வெளிப்பாடு என்று தான் தலித் இலக்கியத்தைச் சொல்லுவேன். தலித், பாரதி, கம்பராமாயணம், என்றெல்லாம் ஒரு அனைத்திந்திய பண்பாட்டின் தமிழ் வெளிப்பாடு தான். அப்போது தமிழ் இலக்கியம் என்பது எந்த அளவிற்கு இந்திய இலக்கியமாக இருக்கிறது என்பது ஒரு கேள்வி எங்களுக்கு அப்படி அல்ல. எங்களுக்கு முற்று முழுதாக எங்களுடைய அனுபவங்கள் உண்டு. இந்த அனுபவத்தும் வேறுபாடு உண்டு.
கேள்வி ஈழம் சாராத இலக்கிய வெளிப்பாடுகள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அவ்வவ் நாட்டு பின்புலங்களில் வெளி வருகின்றன. இவ்வகையான இலக்கிய முயற்சிகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: இதிலும் இரண்டு வகைப்பட்ட நிலைகளைக் காணலாம். ஒன்று புலம் பெயர்ந்த பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தாங்கள் இருந்த நாட்டுப் பிரச்சினைகளை அங்கு மீள் உருவாக்கம் செய்து கொள்ளல். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. படிப்படியாகத் தான் இந்த நாட்டுடன் இணைகிறதும் இணைகிறதிலுள்ள பிரச்சினைகளும் வரும். அதன் பிறகு தான் இந்த நாட்டுப் பிரச்சினை வரும் இரண்டு. இந்த நாட்டவராக இருந்து கொண்டு தமிழைப் பார்ப்பது இப்படிப் Jinišgub போது எங்களுடைய தலைமுறையில் இந்த முதலாவது தான் அதிக சாத்தியம் இந்த முதலாவதும் குறையத் தொடங்கி விட்டது. இங்கு வந்த பொழுது இங்குள்ள இலக்கிய உலகோடு இணையக் கூடிய அல்லது பயிற்சியோடு பரிச்சத்தோடு நாங்கள் வரவில்லை. அது எங்களுக்குள்ள மிகப் பெரிய குறைபாடு. அதற்காக நாம் ஒதுங்கி வாழும் தன்மைதான் காணப்படுகின்றது. அதனால் நாம் அங்குள்ளவற்றைத் தான் எழுதுகின்றோம். அல்லது இங்கேயும் எங்களைப் பற்றித் தான் எழுதுகின்றோம். அடுத்த தலைமுறைதான் இவை இரண்டையும் சேர்க்கப் போகின்றது. ஒரு வி.எஸ் நாய்ப்போல் மாதிரியான எழுத்தாளன் எங்களுக்குள் இப்போது வராது. வரச் சாத்தியமுண்டு. அது வரைக்கும் தமிழைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதற்குள்ளாலும் சில தாக்கங்களை நான் அவதானிக்கிறேன். அதாவது தொழில் நுட்ப பெளதிக வளர்ச்சி காணப்படுகின்றது. கவிதையில் காணப்படும் வளர்ச்சி. ஆனால் ஒரு நாவல் ஆசிரியன் இன்னும் தோன்றவில்லை,
கேள்வி: இப்போது இங்கு படைக்கப்படும் படைப்புக்கள் தமிழ் இலக்கியத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப் படுமா?
பதில் நிச்சயமாக வரும். இது ஒதுக்கப்பட முடியாதது,
உனது விசயத்தைச் சொல்ல உன் மொழி இல்லையோ அவனிடம் மொழி இருக்காது. த எல்லோரும் தன் மொழிை
- ers 601 b GN6TC86). Jeasleið 1997 |-

பலவகையில் ஒன்று தமிழ் அனுபவத்தினுடைய விஸ்தரிப்பு இதை எவரும் குறைத்து மதிப்பிட (1e முடியாது. இந்த மாதிரியான ஆற்றல் பூ சாத்தியப்பாடு சரியான முறையில்
عصا பேணப்படுமேயானால் இது தான் கடைசியில் தமிழுக்கு சர்வதேசியப் ○ படுத்தவதற்கான உந்துதலைக் w கொடுக்கின்றது. இதுகால வரையில் ※ எங்களுக்குக் கிடைக்காத ஒரு பரிமாணம் அதாவது இலக்கணத்தில் திரிசொல், திசைச்சொல் வட சொல் என உண்டு. வடசொல்லில் இருந்து தான் கூடிய சொற்கள் வந்தன. திசைச் சொல் இரண்டு வகை. ஒன்று: தமிழ் நாட்டில் உள்ள பேச்சு வழக்குச் சொல். மற்றது. தமிழ் நாட்டுடன் சம்பந்தப்பட்ட நாடுகளின் சொல். இப்போது இங்கே சொல்லப்படும் அனுபவங்கள் எங்களுடைய கிராமத்து அனுபவங்களை விட வித்தியாசமாகப் புதிய அனுபவங்களாக இருக்கும். தமிழும் புதிய சொற்களை உள்வாங்கும். புதிய மரபுத் தொடர்களை வரும். ۔۔۔۔
கேள்வி. வேறு மொழியில் இருந்து வரும் புதிய சொற்களை உள்வாங்குவது சரியா? அல்லது தமிழில் அவற்றை மொழி பெயர்ப்பது சரியா? அப்படியான முயற்சிகள் சில நடைபெறுகின்றன. இது எந்த அளவுக்குச் சரியானது?
பதில் இதில் உண்மை என்னவென்றால் தமிழ் மொழியினுடைய சாத்தியப்பாடுகளை நாங்கள் இழக்கக் கூடாது. ஆனபடியால் இங்கே கடன் வாங்குதல் இருக்கக் கூடாது. ஆனால் இன்னொரு உண்மை என்னவென்றால் ஒரு தொழில் நுட்பம் அந்த மொழி பண்பாட்டில் இல்லை என்றால் அந்த மொழிப் பண்பாடு அந்தத் தொழில் நுட்பத்தை அந்தத் தொழில் நுட்பம் கொண்டு வரும் மொழியில் இருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும் சடங்குகளை நாங்கள் இப்போதும் சமஸ்கிருதத்தில் தானே செய்கிறோம். நாங்கள் எல்லாவற்றிற்கும் மொழி பெயர்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனபடியால் எங்கள் மொழியினுடைய ஆற்றலை சமாந்தரமாக வளர்க்க வேண்டும் அல்லாவிடில் கடன் வாங்க வேண்டும்.
ைெயக் கண்டுபிடி. யாரிடம் சொல்ல விசயம் மிழில் சிறப்பான சாதனைகளைச் செய்தவர்கள் யைக் கண்டுபிடித்தவர்களே.
- சுந்தர ராமசாமி

Page 58
Yar||
Inno
為
பாரதத்தில் ஒ கனடாவில் ஒ
A.
உங்கள் சகல விதமான 6ை பூஅலங்காரங்களுக்கு
For Rents: Arches. Tables, Chairs, Line Bumers, Vi
(416) 2 (416)2
Fax: (416)
56
 

Fancy
Vations-----
燃
(5 பிருந்தாவன் (5 Yarl Fancy
燃
வபவங்களுக்கும் தேவையான தம் எம்மை நாடுங்கள்
n, Chafing dishes, Coffee Urns, Propane ine Glasses
92-835 9-1906
291-1907
- abreutib gest3666) 1997

Page 59
திருமணம், பூமணவறை பதிவுத் நிகழ்ச்சிகளுக்கும் மண்டபம், முத
ஆகிய அனைத்தையும் ஒரே சோதிட ஆலோசனை விளக்கத் பூக்கள், பூமணவறை, பூமாலைக கைச்செண்டுகளுக்கும் மற்றும் ப தேவையான சகலபொருட்களையும் பெற்றுக்ெ
இந்து மதகுரு பஞ்சாடசர
(905) 2 (416) 2
 
 
 

ORIST
திருமணம் போன்ற மங்களகரமான த்துமணவறை, மண்டப அலங்காரம், இடத்தில் பெற்றுக் கொள்ளவும். த்திற்கும் நீங்கள் நாட வேண்டியது. ள், சடைநாகம், கொண்டைமாலை, லவிதமான மலர் அலங்காரத்திற்குத் ) எம்மிடம் மிகக் குறைந்த விலையில்
SIT6f 6ft 6pmb.
சோதிடர் சிவபூரீ ரக்குருக்கள்
38-6067 58-5999

Page 60
តិ
* அவசரமாய் மிக அவசரமா வாங்கவேண்டும் போவதற்
* வைத்தியசாலை செல்லவே
வாகனம் இல்லையா? * மன அமைதியை தேடி கே நேரமிருந்தும் கூட்டி சென்று * குடும்பமாகவோ தனியாகே சென்றுவர வேண்டுமா? * மொன்றியால் பஸ்சேவை * கடவுச்சீட்டு விசா, போன்ற நோக்கி பயணங்கள் உடன செய்து தர வேண்டுமா?
7 (75
 
 

ITINGING DIT GISELE
ய் ஒரு பொருள் கு வாகனம் இல்லையா?
பண்டும் போய்வர
ாயில் செல்ல
வரஉதவியில்லையா
வா மொன்றியால்
வற்றிற்காக ஒட்டாவா ரிருந்து இலகுவாய்
° °”
2.
Digi Graphics & Studios (116) 457-4952