கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1998 (12)

Page 1
2
 
 

1998
. (
== -___--

Page 2
சிந்தையில் தெளிவு வே LEluso, Leo 556 36 s.
(46.467-4957.
 

య ...:

Page 3
, a - 2
காலம் 12
1998
ஆசிரியர் செல்வம்
ஆலோசகர்
N.K. மகாலிங்கம்
வெளியிடுபவர் குமார் மூர்த்தி
அச்சுப்பதிப்பு தேசிகன்
விளம்பரங்கள் ராஜூ
gR, Pathmanaba Iyer 27-B High Street 1Plaistov
fondon TE13 0241D det: 020.8472 8323
Kalam P.O. Box 7305 509 St. Clair Ave.W Toronto, On M6C 1CO
அவலங்கள் ெ
இந்துக் கடல் நீங்கும் ( எங்கோ மலர் பூக்கும் ே என் மண்ணில் கல்பூக் காற்றடித்து நீர் துமிக்கு என் வானம் தீ வளர்க்கு வற்றாத கடல் மட்டும் என் தீவின் உடல் தழு5 விட்டுவிட்டுச் செரும் வேப்ப மரங்கூடக் கள் என்றாலும் செந்நெருப்பிற் போட்ட சிவந்திருக்கும் நெடுந்த
கல உழுத மண உழுத கடல், புழுதி, பனைவ கருக்கு, கடைவாசல் எ
உப்புக் கரிப்பில் உழை
செக்கலுக்குப் பாய் பே சிரிந்திருக்கும் என் மக் இன்னும் ஏழுகடல் தா எங்களது நிந்தம், எரு, ஊமல், எட்டில் ஒருபர் திமிராய் வளர்ந்த பனை திருக்கெடுக்கா வாழ்க் வல்லதெல்லாம் விட்டு வன்னியிலே காணிக்க ஐம்பதுகள் ஈற்றில் அடி வைத்தார் என் மச் வற்றாத நீர் அமுதம் வ வாழை நெடுந் தோப்ன நீருடைய ஊரவரும் ெ தம்மிடத்துச் சாயல்கை வந்த மண்ணை உரமf வன்னி மக்கள் என வரி காடு, மலை தேசங்கள் சமுத்திரங்கள் கடந்து அத்தாய் மண்ணின் அவலங்கள் விட்டொத அரபுச் செங்கடலை, ை மொஸ்கோவைத் தாண் எங்களது பூர்வீகம், இ சொந்தங்கள், சுவர்க்க பிள்ளைகளே! காதலிளங் கன்னியராய் உலகை வலம் வருகின் வாழ்வை என்றும் புதி
19

பிட்டொதுங்கி.
என்னுடைய சந்ததிக்கு வேளையெல்லாம்
கும்!
கும் நேரமெல்லாம்
கும்!
ე
வடிக்கும்
நிலமாயச் தீவு.
டலிக் ால்லாம் உழுது }ப்பினது தாலாட்டில் ாடச்
கள்.
ண்டி
மாடு வகுத் தறை
கைமுறை
ாய்
கள்
ாய்க்கால் வடியோடி யை வந்து வந்த முட்டுகின்ற நடுந்தீவு மக்களொடு ளை தம்மோடு சுமந்தெடுத்து ாக்கி
ழ்ந்தார்
வந்து இன்று
துங்கி
மயத் தரைக்கடலை
DIE9.
ாங்கால மனச் சுகங்கள் ங்கள் அந்தத் தொடுவானில்
பக் காளையராய் ாற எங்களது ஆசைகளே! தாய்
998

Page 4
2 முத்தமிடத் தேடுகின்ற புதுயுகமே! ஊரான ஊரிழந்து ஊரிருந்து நாடிழந்து தேசத்தெருவெங்கும் தமிழரெனத் திரிகின்ற எங்களது பாடுகளை என்றும் நினைத்திருங்கள் ஓடுவதே எங்களது உயிர்வாழ்வாய் ஆகியதன் உண்மைதனை நினைத்திருங்கள்! காசுக்காய் இளமை கருகியதைப் பாருங்கள் மூச்சடக்கிப் பெட்டிக்குள் பொதியாகப் போகையிலே மூச்சடங்கி வீதியிலே முடிந்ததுண்டு நம் வாழ்வு போலந்தை ஜெர்மனியை பிரிக்கின்ற நதியிறங்கி ஆசைக்கணவோடு அக்கரைக்குப் போகையிலே நீரிழுக்க அவலக்குரல் கேளாக் கரையோரம் நிறைந்த பிணச் சடலங்கள் இந்துக் கடல் நீங்கும் என்னுடைய சந்ததியே உன்னோடு போமோ ஓடி உயிர்பிழைத்தல்
- ந. சுசீந்திரன்
LSLLLL LL LLLLLLLL uuuLLLLLLGLLLLL LLLLLL S
கலா என்ற பெண் கோணேஸ்வரிகள் என்ற கவிதையை சரிநிகர் பத்திரிகையில் எழுதினார். அது பற்றிய விவாதம் சரிநிகரில் பல வாரங்கள் சூடாக நடைபெற்றன. அந்தச் சூட்டின் பிரதிபலிப்பாகவும் சரிநிகர் வாசகர்கள் கணிசமான அளவு கனடாவில் இருப்பதாலும் அதன் ஆசிரியரில் ஒருவரான சேரன் இங்கு இருப்பதாலும் அக்கவிதை பற்றிய ஒரு கலந்துரையாடல் ஸ்காபரோவில் ஜனவரியில் நடை பெற்றது. அக்கலந்துரையாடலில் சில பெண் கவிஞர்களும் பங்குபற்றினர். அதில் ஆணாக நான் இருந்தேன்.
முதலில் கோணேஸ்வரிகள் என்ற கவிதையை ஒரு பெண்ணே எழுதினார் என்பதை ஐயந்திரிபுற நிரூபித்தார் சொற்களை பேச்சிலும், எழுத்திலும், உரையாடலிலும், ரீவியிலும் கேட்வர்களுக்கு அச் சொற்கள் சுரணை அற்றவை. அதில் உள்ள அம் மணங்கள் அதிர்ச்சி ஊட்டாதவை.
அதையும் கடந்து போன போது எனக்கு உடன்பாடற்ற கருத்து ஒன்றை உணர்ந்தேன். இன்றைய ஆய்வாளர் கள் அனைவருமே எதுவுமே Politically Correct ஆகச் சொல்லப்பட வேண்டும் என்ற பிடிவாதமான கொள்கை உடையவர்களாகப் புலப்பட்டார்கள். அப்படியான ஒரு கவிதையை எழுதாவிட்டால் அது கவிதையே இல்லாமல் போய் விடுகிறது என்பது அவர்களின் வாதம்.
1.
 

I, A - 12
ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில், கோபத்தில், உணர்ச்சி வசப்பட்டு 'நல்ல தெரிந்தெடுத்த நாலு வார்த்தை களில்' (Choice Words) ஒருவருக்குப் புரியும்படி சொன்னால் அது கவிதையாகி விடாதா என்ற எண்ணம் உடையவன் நான். எந்த நேரமும் சீரியஸாகத் தான் கவிதை எழுத வேண்டுமா? In a lighter vein இல் கவிதை எழுதக் கூடாதா.
அதுவே அக்கவிதை பற்றிய என் கணிப்பு. அனைத்தையுமே சீரியஸாக எடுத்துக் பிச்சுப் புடுங்க" நான் பண்டிதன் அல்ல. இன்னொரு மட்டத்தில் இருந்து அனுபவிக்கக் கூடியதே அக்கவிதை என்பது என் கணிப்பு.
இலங்கையில் இருந்து வருகை தந்த பேராசிரியர் ஒருவர். மற்றவர் இங்கு கலாநிதிப் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருப்பவர். எதிர்காலத்தில் பேராசிரி யராக வருவதற்கு உழைத்துக் கொண்டிருப்பவர். ஈழத்தில் இருந்து வந்த பேராசிரியர் தமிழ்ப் பண் பாட்டு விழாவுக்கு சிறப்பாக அழைக்கப்பட்டிருந் தவர். ஒரு நாள் காரில் ஓரிடத்தில் இருந்து இன்னோரு இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் இருவருக்குமிடையே நடந்தது ஒர் உரையாடல்.
இரண்டாம்வர் : இவ்விழாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முதலாமவர் : அகடமிக்குள் அல்லாதவர்கள் பெயர் பெறுவதற்காகக் கூட்டிய விழா.
இரண்டாமவர்: ????
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவர் அகடமிக் தகைமைகள் இல்லாத சாதாரண பேர்வழி. ஆனால் கவிஞர். அகடமிக்குள் அதுவும் இடதுசாரிகள் தங்கள் அகடமி தகைமைகளை இவ்வளவு தூரம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று நினைத்த போது வயிற்றைக் குமட்டியது அவருக்கு. இப்படிப்
பட்ட அகடமிக்குகள் 'பெயர்’ எடுப்பதே இப்படிப்
198
பட்ட விழா அமைப்பாளர்களால் தானே. அல்லா விட்டால் அவர்கள் எங்காவது ஒர் மூலையில் ஒரு வகுப்பறையில் வெறுமனே கிடக்கும் கதிரைகளுக்கு மாத்திரம் ஒதிக் கொண்டிருப்பார்கள். இல்லையா?

Page 5
, a - 12
விக்டர் காஸரஸ் லாரா (1915) ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர்,
56
போன்ற பொறுப்புகளில் இருந்து பின்னர் ஹோண்டுராஸின் து
புகழ்பெற்ற சிறுகதையாசிரியர் விக்டர் லாரா.
சிதிலமடைந்த அந்த அறையின் மூலைகளில் இருளையும் வேதனையையும் கவித்தது இரவு. அறையினுள் காற்று அளந்து அனுப்பியதைப்போல மிகக் குறைவான அளவில்தான் நுழைந்தது. சூரிய வெளிச்சம் மிக அதிகமாக இருக்கும் பட்டப் பகலில் கூட இந்த அறைக்கு மட்டும் முழுமையான வெளிச்சம் வருவதே இல்லை. வெளியே, சத்தம் வந்துவிடப் போகிறதே என்று பயப்படுவது போல் மிக மெதுவாக நீரை ஊற்றிக் கொண்டிருந்தது ஒரு குழாய், அந்தக் குடியிருப்பிலுள்ள அத்தனை பேரின் தாகத்தையும் தணிக்க வேண்டிய ஒரே குழாய். ஒரு குழந்தை ரொட்டிக்காக பலமாக அழுதுகொண்டிருந்தது. "வாயை மூடு, தேவடியாள் சிறுக்கி. இங்கே யாரும் இன்னும் சாப்பிடவில்லை".
வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் குழந்தை யின் அம்மா அசிங்கமாகத் திட்டினாள்.
சிதிலமடைந்த அறையினுள் இருந்த பெண், மிச்ச மிருந்த சிறு வெளிச்சமும் மங்குவதைக் கவனித்தாள். மின்சாரமில்லாத வீடு. விளக்கில் இருந்த எண்ணை யும் அநேகமாகத் தீர்ந்துவிட்டது. தன் உடம்பில் ஒரு துளியேனும் சக்தியோசூடோ இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. முன்னொரு காலத்தில் சிலையைப் போல் அற்புதமாகவும் உறுதியாகவும் இருந்தவள் தான். இப்போது சதை வற்றிப்போன அவளுடைய இடுப்பை வாட்டும் குளிர் தாக்கியது. சோகத்தில் பின்னிக்கிடந்த அவளின் இதயம் மெளனமான பிரார்த்தனையுடன் அந்த உணர்ச்சியினால் துடித்தது.
பகல் மெதுவாக முடிவடைந்து கொண்டிருந்தது. தெருவில் நடப்பவர்களின் காலடிச்சத்தம் கேட்டது. நேரத்தைப் போக்குவதற்காக அவர்கள் மலிவான பொழுதுபோக்கைத் தேடிப்போனார்கள். சக்தியையும் பணத்தையும் உறிஞ்சும் மதுபானக் கடைகள், புழுத்துப் போன சதையை விற்கும் விபச்சார விடுதிகள். இந்தச் சூழலில் உள்ள மக்களுக்குக் கிடைக்கக் கூடிய பொழுது போக்குகள் எல்லாமே சந்தோஷத்தைக் கொடுக்குமோ இல்லையோ - காலப்போக்கில் நிச்சயமாக தளர்ச்சி, வியாதி, வேதனை, அனாதரவான நிலை, மரணம் இவற்றையெல்லாம் தரத்தவறுவதே இல்லை.
· «S***x*www.9x8">ix.
19
 

லூரிப் பேராசிரியர், அஞ்சல் துறையின் தலைமை அதிகாரி
亚莎
ராக வெனிசூலா நாட்டில் பணியாற்றினார். அந்த நாட்டின்
பறவைகள் சந்தோஷக் கூச்சலிடும் அந்த மாலை நேரத்தில், தான் செத்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மரண தேவதை தன்னை மெதுவாக அணைத்து இரக்கமேயில்லாமல் மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், தாள முடியாத குளிர் தன் எலும்புகளை நாசம் செய்து, மண்டையில் 'டமார் டமார் என்று பைத்தியம் பிடிப்பது போல அடிப்பதையும் உணர்ந்தாள்.
முற்றிலும் கைவிடப்பட்ட நிலை. ஒரு ஆறுதல் வார்த்தையோ, ஒரு துளி அன்போ, ஒரு கிளாஸ் பாலோ கொண்டு தருவாரில்லை. குளிர்ஜ"ரத்துடன் அவளேதான் எழுந்து வெளியே போய் சோளரொட்டி வாங்கிவர வேண்டும். தொட்டுக்கொள்ள எதுவும் வாங்க வசதி இல்லாததால், வெறுமனேதான் அதை சாப்பிட வேண்டும். வெளியே போகும்போது, பிச்சையெடுத்து காசுகாசாகச் சேர்க்கும்போது, அவள் தாங்க முடியாத அவமானத்தை அனுபவிப்பாள்.
தான் எதனால் இப்படிக் கைவிடப்பட்டோம் என்பதைக்கூட அவளால் விளங்கிக் கொள்ள முடிய வில்லை. எப்போதும் அவள் தன்னைச் சேர்ந்த மனிதர்களுக்கு நல்ல வளாகவே நடந்து வந்திருக் கிறாள். எப்போதும் கருணையோடும் தாராள மனத் தோடும் இருந்திருக்கிறாள். அக்கம்பக்கத்தில் இருப் பவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக் கிறாள். தனக்கென்று ஒரு குழந்தை இல்லாததாலோ என்னவோ, குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டி யிருக்கிறாள். ஒரு வேளை ஒரேயடியாக இளைத்துப் போய் மஞ்சளாக இருப்பது காரணமாக இருக்கலாம். இருமலைக் கேட்டு காசநோய் இருப்பதாகக்கூட நினைக்கலாம். மலேரியாதான் தன்னைக் கொல்கிறது என்று அவளுக்குத் தெரியும். ஆனால் மற்றவர்களின் நினைப்பை எப்படி மாற்ற முடியும்? தனது கொடுந் துக்கங்களும், பயனில்லாத அலைச்சல்களும், இந்தத் தாறுமாறான தெருக்களின் மேல் பதிந்த தன் பாதங் களின் ரத்தக் கசிவுகளும் நின்று போகக்கூடிய அந்தக் கடைசிக் காலம்வரை அவள் துன்பப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
வினோதமான நிழல் உருவங்கள் கூரையின் மேல் ஆட ஆரம்பித்தன. தலை முன்னைக் காட்டிலும் கடுமை யாக வலிக்க ஆரம்பித்தது. நினைவு மங்கி, மறக்கப்
பட்ட கடந்த காலத்தில் சென்று நிலைத்தது. ஆனால்

Page 6
அந்தப் பழைய நினைவுகளே அவளுக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்து, வாழ்வின் மிக மகிழ்ச்சியான கணங்களின் மீது ஒளியையும் பாய்ச்சியது. பைன் மரங்களின் புத்துயிர் மணத்தை நிரப்பிவைத் திருக்கும் கிராமத்தில் கழிந்த தன்னுடைய குழந்தைப் பருவத்து நாட்களை அவள் மறுபடியும் வாழ்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பாடும் பறவைகளின் வினோதமான பாடல். குதியாட்டம் போடும் கன்றுக்குட்டிகளின் மனம். சடசடவென்று ஒசை யிட்டு ஓடும் ஓடைகள். பனியில் நனைந்த வயல் களின் பசுமை. ஆத்மார்த்தமான பிரார்த்தனைப் பாடல்கள் நிரம்பிய கிராம வாழ்க்கையின் தூய்மை.
தூய்மையும் பசுமையும் கிராமச்சூழலில் தன்திண்மை யான மார்புகள் வளர்வதையும், வாங்கஸ்ஸின் காவியத்தைப் போன்ற கிராமிய இளமையுடன் தன் உடல் காதல் உணர்வினால் துள்ளுவதையும் நினைத் துப் பார்த்தாள். அதன் பிறகு, தொலைதூரத்திலிருந்து கனவு காணும்போது மகிழ்ச்சியையும் வளமான எதிர்காலத்தையும் அள்ளி வழங்குவதாகத் தோன்றும் கடற்கரைப் பகுதிக்குப் போக வேண்டுமென்று ஏங்கினாள்.
கற்பனைகள் கபடமற்று அவளின் எண்ணத்தில் வண்ணமயமான தோற்றங்களை உண்டாக்கின. உள்ளுணர்வு அவளின் கருத்த உறுதியான சதையை எரியச் செய்தது. மிதவெப்பப் பிரதேசத்தின் தன்மைக்கு மாறான ஒரு நெருப்பு அது; உடை என்ற கட்டுப்பாட்டை மீறியும் பிரமிப்பூட்டிய சவாலை வெளிச்சத்தில் பார்த்துக் கொள்வதில் அவள் மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கினாள். வருடும் மெல்லிய காற்றில் கூரிய கூம்புகளைப் போன்ற அவளின் மார்புகள் மெல்லிய ஜாக்கெட்டை மீறி விடும்.
பிறகுதான் தன்னுள்ளிருந்த நெருப்பைப் பற்றவைத்த மனிதனை, புதிய உலகங்களை வெல்லும் கனவுடன் சாகஸங்களின் பக்கம் தன்னைத் திசைதிருப்பிய மனிதனை அவள் சந்தித்தாள். கடற்கரை நகருக்குச் செல்ல அழைத்த அவனது அழைப்பை சொர்க்கத்துக் கான அழைப்பாக உணர்ந்தாள். பலம், நல்ல உடல் அமைப்பு, ஆரோக்கியமான மனநிலை ஆகியவற்றுக் காக அவனை அவள் விருப்பினாள். அவளுக்குத் தேவையானவற்றை அவன் வழங்கினான். காதல், வடக்குக் கடற்கரை நகர வாழ்க்கை. "வாழை மரங்கள் பிரமாதமாக வளரும் இடம் அது. அதிக சம்பளம். விரைவில் கொஞ்சம் பணம் சேர்த்துவிடலாம். நீயும் உன்னால் முடிந்ததைச் செய்து உதவினால் கஷ்ட மில்லாமல் போகும்". "வேறொருத்தி உன்னை மயக்கி, நீ என்னைத் துரத்தி விட்டால்?" "முடியாது கண்ணே.
19

I, I A - 2
நான்உன்னைமட்டுமேகாதலிக்கிறேன். நாம்எப்போதுமே சேர்ந்துதான் இருப்போம். நாம் ரயிலிலும் காரிலும் ஏறிப்போகலாம். சினிமாவுக்கும் திருவிழாக்களுக்கும் போகலாம்."
"ரயில் அழகாயிருக்குமா?"
"பெரிய கருப்புப் புழுக்களைப்போல தலையில் புகைவிட்டுக் கொண்டே போகும் பாரேன். ஏகப்பட்ட கூட்டத்தை ஏற்றிக்கொண்டு ஊர்விட்டு ஊர்போகும். ஒருத்தன் ஒவ்வொரு முறையும் ஊர் வந்ததும் அந்தந்த ஊரின் பெயரைச் சொல்லிக் கத்துவான். அற்புதமாக இருக்கும்! நீயும் பார்க்கலாம்.'
தன் மூதாதையர்களின் ஊரைவிட்டுச் சென்றுவிட வேண்டுமென்று அவள் ஏங்கினாள். காதலிக்கவும் வெளி உலகைப் பார்க்கவும் விரும்பினாள். தான் இருக்கும் ஊர் விடியல் இல்லாத இரவைப் போல சோம்பிக்கிடப்பதாக நினைத்தாள். கூரான கூழாங்கற் களும் பாறைகளும் படிந்த அந்தச் சின்னஞ்சிறு முகத்துவாரத்தில் சாய்ந்தபடியே தன் அழகுக்கு இந்த ஊரில் எந்த மதிப்பும் இல்லை என்று நினைத்துக் கொண்டாள். கிராமிய வாசனையைத்தன் உடம்பில் நிரப்பிய, இளம் பிராயத்தைக் கழித்த அந்த கிராமத்தை விட்டு, நகரத்துக்குச் சென்றுவிட வேண்டுமென்று தோன்றிவிட்டது அவளுக்கு. துணையுடன் புறப்பட்டு விட்டாள். வழியில் பல மலைகள், பலஆக்ரோஷமான ஆறுகள். சகிக்க முடியாத மந்தமான இந்த நாட்களில், சிறு பொறிகள் தெறித்தாற்போல அவ்வப்போது சில்வண்டுகள் பாடிய மெல்லிய ராகத்தைத் தவிர வேறு ஒசைகள் இல்லை. கடுமையான வெயில் சுட்டுப் பொசுக்கிய பள்ளத்தாக்குகளில் அவர்கள் நடந்தார்கள். அவள் காதலன்தான் எப்பேர்ப்பட்ட மனிதன் பயண நாட்களின் இரவுகளில் நட்சத்திரங்களின் கீழ் உறங்கும் போது, அவளது எல்லா எதிர்பார்ப்புகளையும், கனவு களையும், ஆசைகளையும் அவன் பூர்த்தி செய்தான். வயல்களில் இரவுகவியத் தொடங்கிய போதும், இரவு களில் கருமை மண்டியபோதும், உதயத்தின் முதல் கீற்று தூரத்துக் கிழக்கு மேகத்தில் சிவப்பைத் தடவிய போதும் என எந்த நேரமும் உடலில் தீயாகப் பரவிய பரபரப்பும், தன் காதலனின் வெல்லமுடியாத வீரமும் தைரியமும் - எல்லாம் சேர்ந்து உடல் முழுவதும் எதிர் பார்ப்பும் கர்வமுமான அதிர்வுகளால் துடிப்பதை அவள் உணர்ந்தாள்.
கடைசியாக, லிமாவை அடைந்து வேலைக்கான தேடலைத் தொடங்கினார்கள். புத்திசாலித்தனமும்
நகைச்சுவைப் பேச்சுமாக இருந்த தெமித்ரியோவுக்கு,

Page 7
ஃபோர்மேன்கள் நேரக் காப்பாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் நட்பைப்பெறுவது சுலபமாகவே இருந்தது. ஆனால் அவனது கெட்ட பழக்கங்களின் காரணமாக எப்போதும் தீயவழிகளுக்கு முக்கியத்து வம் கொடுப்பவனாகத்தான் அவன் இருந்தான். பழக் கம்பெனியின் வசமிருந்த எல்லா வாழைத் தோட்டங் களிலும் அவன் களையெடுப்பவனாக, மரம் வெட்டு பவனாக, பழம் சேகரிப்பவனாக, தலைமுதல் கால்வரை பச்சைப் போர்வை போர்த்தினாற்போன்ற தோற்றத்துடன்பூச்சி மருந்து தெளிப்பவனாக, இப்படி எத்தனையோ வேலைகளை செய்தான். வேலை நேரம் எப்போதுமே விடிந்தது முதல் பொழுது சாயும்வரை தான். உஷ்ணம் தாளாமல் வாழையிலை கள் சுருண்டு போகும் அளவிற்கு தகிக்கும் அனலில் தான் எப் போதும் அவன் வேலை செய்தான். வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும்போது கிழித்துப் போட்ட நாராக, பேசக்கூட தெம்பில்லாமல் போய், சுதந்திர மான காட்டுமிருகத்தைப் போன்றிருந்ததன் உடம்பை களைப்பு அணு அணுவாகத்தின்று கொண்டிருப்பதை உணருவான்.
அடுத்தடுத்து வந்த மலேரியாவினால் கெட்டுப்போன உடல் நலத்தை, விஸ்கி குடித்து குணப்படுத்த முயன்றான். அதனால் ஒரு பயனும் இருக்கவில்லை. வியாதியும் தீரவில்லை. வேலைக்குப் போகாமலிருந் தாலோ, அது பட்டினிச்சாவுக்குத்தான் வழி.
அப்போது அவன் ஒரு சிறிய ஒப்பந்த அடிப்படையி லான வேலையைச் செய்து கொண்டிருந்தான். அவள் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தாள். ஒருநாள் இரவில் ஆண்கள் எல்லோரும் ஆற்றுக்கு அயைாக மணல் மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். உலுவா ஆறு ஆக்ரோஷமாகப் பெருகிக் கொண்டிருந்தது. வெள்ளம் அணைக்கு மேல் பெருகிவர, நிமிடத்திற்கு நிமிடம் தீவிரமடைந்த புயலால் பெருக்கெடுத்த வெள்ளம், தெமித்ரோவை அடித்துக் கொண்டு போய்விட்டது.
அவள் தனிமையில் நோயாளியாக விடப்பட்டாள். அவளுக்கும் மலேரியாதான். தோட்டத்தைவிட்டு வெளியேறி தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் துறைமுகத்தை அடைந்தாள். வேலைதேடி அங்குமிங் கும் அலைந்துவிட்டு, கடைசியில் ஏதோ ஒரு இடத்தில் இன்று நினைத்தாலும் வெட்கத்தில் தலைகுனியச் செய்யும் அந்தக் கேடுகெட்ட வேலையைச் செய்யத் தொடங்கினாள். வெவ்வேறு வடிவமும் அளவுமுள்ள ஆயிரக் கணக்கான ஆண்கள் அவள் உடம்பில் விளையாடினார்கள்.
19

98
தீராத நோயுடனும், என்றென்றும் அகலாத கசப்பான மனதுடனும் அவள் அந்த விபச்சார விடுதியை விட்டு வெளியேறி ஒரு வழியாக பெத்ரோ சூலாவுக்கு வந்து சேர்ந்தாள். மலேரியா அவளை விடுவதாக இல்லை. நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகரித்து வாட்ட, உலகத்தால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டாள் அவள். பொழுது சாய்ந்ததும், நிழல்கள் பயந்தவை போல சுழன்று சுழன்று மேற்கூரையில் ஏற்படுத்திய விசித்திரமான உருவங்களைப் பார்த்தபடி அந்த சிதிலமான கட்டிலில் படுத்தே கிடந்தாள்.
ஒரு காலத்தில் அன்பைப் பொழிந்த அவள் கண்கள் இப்போது வற்றிய கிணறுகளாக, வெறும் துயரத்தை மட்டுமே தேக்கி நிற்கின்றன. மெலிந்த கைகள் மென்மையான வருடலையும் பரவசமூட்டும் உஷ்ணத்தையும் இழந்து கிடந்தன. அபரிமிதமாக இருந்த முலைகள் இப்போது கிழிந்த ரவிக்கையின் கீழ் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போயின. துன்பப்புயல் அவளை உருக்குலைத்து விட்டது. இனி மிச்சமிருப்பது சிலிர்க்கவைக்கும் சாவின் நிச்சயம் மட்டுமே.
வெளியே குழந்தைகள் அளவிடமுடியாத சந்தோஷத் துடன் விளையாடிக்கொண்டிருந்தன. தொன்மையும் புதுமையுமான 'காதல்’ என்ற விஷயத்தை ஒரு இளம் ஜோடி பேசிக்கொண்டிருந்தது. சூழலின் அமைதியை கர்ணகடூரமான ஹாரன் ஒலியால் கிழித்தது ஒரு கார். தொலைவில் ரயிலின் ஒசை. வேறு வழியில்லாமல் வாழ்க்கையும்.
- தமிழில் : அமர்ந்த்தா
நெருக்கமும் தூரமும்
உன் மெளனத்தில் புதைந்துள்ள வண்ணங்களை தரிசிக்க முடிகிறபோது நெருக்கத்தை உணர்கிறேன்
உன் வார்த்தைகள் வெளிப்படுத்தும்
GF666) நுகர முடியாத போது தூரத்தை உணர்கிறேன்
. - கள்ளழகர்

Page 8
/ ه ۶۶%/ب/، /ک، ۶ % کرک ها.
1247 le smere ー。
 
 
 

cambomough O N

Page 9
, a - 2
EGOIUL Gallai. Gall ஆசிரியர் வரிசையில்
மார்க்றெற்லோற்ன்ஸ்
கனடிய எழுதிய எழுத்தாளர் வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளர் இவர். மார்க்றெற் அற்வுட் சர்வ தேசப் புகழ் படைத்த கனடிய எழுத்தாளர். இவர் கனடியப் புகழ் பெற்றவர். கனடாவின் உயர்ந்த பரிசான "புனைக்கதைக்கான கவர்னர் ஜெனரல் பரிசு’ பெற்றவர். அதுவும் அவரின் புகழ் பெற்ற "Diveners' என்ற நாவலுக்காகவே கிடைத்தது. அவரின் மற்றப் Lysip Gupp pirauai. "The Stone Angel"
"கடவுளர்கள் தேவையான நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மூதாதையருடனான தொடர்பு எங்களுக்குத் தேவை இருக்கிறது. நாங்கள் யார்? நாங்கள் எப்படிப் பட்டவர்கள்? நாங்கள் எப்படி ஆக வேண்டும்? எப்படிப்பட்ட சமூகத்தை நாம்உருவாக்க வேண்டும் என்பவற்றைத் தீர்மானிப்பதற்கு அவை ஒரளவாவது தேவை. புனைகதை எங்களை அவர்களு டன் தொடர்புறுத்துகிறது. ஒருவருக்கொருவர் செய்யும் மனிதத்தன்மையற்ற செயலுக்காக வருந்து கிறது. கோபப்படுகிறது. சிலவேளை வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றில் எங்களுக்கிருக்கும் நம்பிக் கையை வெளிப்படுத்துகிறது. எங்கள் பிள்ளைகளை கெளரவிக்கிறது. அவர்களில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
கனடா என்ற புதிய நாட்டிற்கு எவை எவை தேவை என்பதை உணர்ந்து கூறுகிறார் மார்க்றெற் லோற்ன்ஸ் மேலே. அத்துடன் புனைகதை ஆசிரியரின் பணிஎன்ன என்பதையும் கூறுகிறார்.
மார்க்றெற் லோற்ன்ஸ் வின்னிபெக்கில் உள்ள நிபாவா என்ற பிறெயறிஸRல் உள்ள சிறு நகரில் 1926, யூலை 26 இல் பிறந்தவர். தந்தையார் ஸ்கொற்றிஷ் கனடியன். தயார் ஐரிஷ் கனடியன். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்தவர். இளவயதான ஆறு அல்லது ஏழு வயதி லேயே எழுதத் தொடங்கி பன்னிரெண்டு வயதில் அவரின் கவிதைகள், சிறுகதைகள் பத்திரிகையில் வெளிவர ஆரம்பித்தன. ஆபிரிக்காவில் சோமாலியா வில் வாழ்ந்தபோது அந்நாட்டு கவிதைகள், கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தொகுத்தார். அதை அந்நாட்டு அரசு வெளியிட்டது. இது 1954ல். இந்த அனுவத்துடன் பல கதைகள், நாவல்கள் எழுத ஆரம்பித்தார். அங்கு தான் அவர் ஓர் எழுத்தாளராக
1.
 

முதிர்ந்தார். அதன் பின்னர், அப்போது 'கோல்ட் கோஸ்ற்’ என்று அழைக்கபட்ட கானா நாட்டில் 19521957 வரை வாழ்ந்தார். இங்கு தான் அவருடைய "த ஸ்ரோன் ஏன்ஜேல்ஸ்' என்ற நாவலின் முதல் பிரதியை எழுதினார். இதன் பின்னரே இவரின் மனவாக்க தொடர் என்ற கதைகள் ஆரம்பித்தன. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல. ஆனால் புனையப்பட்ட மனவாக்க நகரத்தைப் பின்னணியாகக் கொண்டவையே அவை. அந்நகரம் அவர் பிறந்த இடமானநீபாவைக்குக் கொடுக்கப்பட்ட புனைகதைப் பெயர்.
'அனைவருக்கும் தெரிந்தும் அனால் சொல்லாத அல்லது வெளிப்படுத்த முடியாத' ஒன்றையே தான் எழுதுவதாகக் கூறிக் கொள்பவர் மார்க்றெற். ஸ்கொட் டிஷ்காரர் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதவர் கள் என்பது பொதுக் கருத்து. அவர்களின் குணாம்சங் களை நன்றாகத் தெரிந்த மார்க்றெற் அவர்களின் துயரங்கள், எண்ணங்கள்,கொந்தளிப்புகள், முரண்கள், மகிழ்ச்சி ஆகியவற்றை நுணுக்கமாக சித்தரிப்பார்.
குடும்பம் தான் அவர் எழுத்துகளின் மைய அலகு.
1983 av "Canada and Nuclear Arms Race" 6 TGötp நூலுக்கு அவர் எழுதிய முகவுரை பிரசித்தி பெற்றது. "நாம் சும்மா பார்த்துக் கொண்டிருந்து இதற்கு வாய்ப்பளிப்பது கூடாது. எங்கள் வாழ்க்கைக்கும்,
உலகத்திற்கும் பொறுப்பானவர்களாக இருக்க
998
வேண்டும். எங்கள் அரசு எங்களுக்கு செவிசாய்க்கவும், செயல்படவும் செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக பேசாவிட்டால், எங்கள் நாட்டிற் காக, நாம் வாழும் இப்பூவுலகத்திற்காக பேசா விட்டால், கடவுளே எது எங்களை அசைக்கப் போகிறது?"
தனிய எழுத்து மட்டும்தான்தம் கடமை என்று எழுதிக் கொண்டிருக்கும் எம் எழுத்தாளருக்கு மேற்கத்தைய நயூட்டு எழுத்தாளர்களின் பொதுப் பிரச்சினைகள் பற்றிய உணர்வும் பங்களிப்பும் ஒரு தார்மீக வேண்டுகோள்.
த. வரப்பிரசாதம்

Page 10
Gorilir GTi
நண்பர்களுக்கும் - வாடி
லங்கா எம்போற்பம் தற்போது இரண்டாம் மாடியிலுள்ள ப தொடர்ந்து இயங்குகிறது என
எமது இதமான சேவை மேலும் விஸ்தரீக் மட்டற்ற மகிழ்ச்ச்
உங்கள் திருப்தியே எமது வெற்றி உங்கள்
எமது சே
VisiqGuuT (Pal, Nitsc, Secam) īpģ5 LvTribo
வீடியோவில் புதிய, பழைய தமிழ்த் தீரைட்
மலிவு விலையில் இறக்குமதி செய்யப்பட் உடைகள், பட்டு வேட்டிகள், சிறுவருக்க
கவர்ச்சியான வீட்டு அலங்காரப் பொருட் சாரான்கள், எவர்சீல்வர் பொருட்கள்.
உடனுக்குடன் வெளியாகும் ஓடியோ, வி
வியப்படையும் விலையில் தரமான பொரு
அத்தோடு உலகில் அனைத்துப் பாகங்க
லங்கா எம்
3852 Finch AVenue E Scarborugh, On
Tel: (416)

IBLIruh
டிக்கையாளர்களுக்கும்
இருக்கும் அதே கட்டிடத்தீன் συίΠαίθεσίτ ΖΌ4-2O5 αμιν ாபதை அறியத் தருகிறோம்.
கப்படவுள்ளது என்பதை தெரிவிப்பதில் deGo LóGmbri7.
ஆதரவை தொடர்ந்தும் வேண்டுகிறோம்.
வையில்
ம் செய்தல்
படங்களும், ரெவிநாடகங்களும்
ட USA உருப்புகள், பிளவுஸ்கள், இந்திய TGUT DI GUpLJEGT.
கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டுச்
டியோகசட்டுக்கள்.
Lesir.
ருக்கும் பணம் அனுப்புதல்.
போறியம் ast, Unit #204-205, tario MT 3T9 321 3743
8

Page 11
றெஜி சிறிவர்த்தனா கொழும்பில் இயங்கும் இன ஆய்வு Studies) ஆசிரியராக தற்போது பணியுரியும் இவர் ஒரு பத்தி
ஏற்கனவே பணியாற்றியவர், இலங்கையின் தலைசி
க்க
றர்
மொழிகளிலிருந்து பல கவிதைகளையும், நாடகங்களையும்
ஆங்கிலத்தில் இரு நாடகத் தொகுதிகளையும் வெளியிட்ட
கொண்டிருக்கிறார். இங்கு பிரசுரமாகும் 'மாயா' என்ற சிறுகதை இவர் ஆசிரி
uy
"Nethra”(Vol.1,No.31997) என்ற பருவ இதழில் வெளிவந்த
"மாயா'வை ஒரு தொலைக்காட்சி நாடகமாக உருவாக்கும்
றெஜிசிறிவர்தனா மனித உரிமை நடவடிக்கைகளிலும் தீவிர
(தலைகீழாக்கப்பட்ட ஒரு பழைய கதை)
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தனா தமிழில் ; இ. கிருஷ்ணகுமார்
இரவுக் காற்று முழுமையாக அசைவற்றிருந்தது அந்தக்கானகத்தில் தான் மூட்டிய நெருப்பின் முன் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த நாரதருக்கு அங்கு மரக்கிளைகள் கிறீச்சிடவோ, இலைகள் படபடக் கவோ ஒரு மூச்சுக் காற்றுக் கூட இல்லாதிருந்தது தெரிந்தது. இரவுக் குளிரிலிருந்தும், பூச்சிகளிட மிருந்தும் அவரைக் காப்பதற்காக அந்த நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. கொடிய காட்டு விலங்குகளை தூர வைத்திருக்க அந்த நெருப்பு உதவக் கூடும். ஆனால் நாரதருக்கு அவற்றில் எல்லாம், பயம் இல்லை. ஒரு துறவியின் அக அமைதியும், சாந்தியும் காட்டு விலங்குகளைக் கூட வசீகரித்து அமைதியாக்கி விடும் என்று நம்பினார்.
தீயின் நாக்குகள் அவர் கண்முன் ஆடின. எரிந்து கொண்டிருக்கும் சுள்ளிகளும், சருகுகளும் படபட என ஒலி எழுப்பின. புகை மூட்டம் எழுந்து அலைந்து அவர்கண்களுக்கு வேதனையூட்டின. அவர்கண்களை மூடினார். அப்போது தான் ஒரு காலடிச் சத்தம் அவருக்குக் கேட்டது. விலங்கொன்றின் காலோசையா? கண்களை மீண்டும் திறந்தார். கருமையான நிலவில்லாத அந்த இரவில், மரங்களின் கரிய நிழலுருவின் பின்ன ணியில் அவரால் எதையுமே கண்டு கொள்ளச் சிரம மாக இருந்தது. ஆனால்., ஆம். ஏதோ ஒன்றின் அல்லது யாரோஒருவரின் அசைவு தெரிகிறது. அடுத்த கனம் மரங்களுக்கிடையில் இருந்து ஒரு உருவம் வெளி யேறி, நாரதர் தான் வசிப்பதற்காக துப்பரவாக்கி
19
 
 

Irgot figuG5d 5g Gugo 556T (International Centreforethnic ரிக்கையாளராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், ந்த இலக்கிய வாதிகளில் ஒருவரான இவர் ஐரோப்பிய மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
. இவர் தற்பொழுது தனது இரண்டாவது நாவலை ஆக்கிக்
ாக பணிபுரியும் ICESநிறுவனத்தின் காலாண்டு வெளியீடான 5g.
நடவடிக்கைகளும் தற்பொழுது நடைபெறுகின்றன. ஈடுபாடுடையவர். (ஆர்)
இருந்த அந்தச் சிறிய வெட்ட வெளிக்கு வந்தது. மங்கலான தணலின் வெளிச்சம் அதன் மேல் பரவும் போது அது ஒரு மனித உருவம் தான் என நாரதரால் இனம் காண முடிந்தது.
"யார் அது’ நாரதர் வினவினார்.
"ஒரு வழிப்போக்கன்’ மிக மென்மையான குரலில் பதில்வந்தது.
"ஆச்சரியமாக இருக்கிறதே. எந்த ஒரு வழிப் போக்கனும் இந்த வழியில் இந்தக் காட்டிற்குக்கூட வருவதில்லையே."
'நீ ஒரு கொள்ளைக்காரானக இருந்தால் நான் உனக்குத் கூறுவது இதுதான். என்னிடம் உலக வாழ்விற்குரிய
உடமைகளோ, வெள்ளியோ, பொன்னோ எதுவுமில்லை’.
"நான் ஒரு கொள்ளைக்காரனல்ல. நான் ஒரு வழிதவறிய பயணி’
வெளிச்சம் முழுமையாக தன் மீது படும்படி அந்த உருவம் முன்னோக்கி வந்தபோது அது ஒரு வயதான மனிதர் என்பது தெரிந்தது. முதுமையினால் அவருடைய முதுகு பாதி கூன் விழுந்திருந்தது. அழுக்கடைந்த கிழிந்த ஆடைகளை அணிந்த படி கையில் சிறிய மூட்டை ஒன்றைச் சுமந்தபடி நிற்கும் அந்த மனிதரை இப்போது தெளிவாக நாரதரால் பார்க்க முடிந்தது.
அந்த முதியவர் பிரயத்தனத்துடன் மெல்லத் தரையை நோக்கிக்குனிந்து நெருப்பின் மறுபுறத்தில் அமர்ந்தார். "மேலும் இந்தக்காட்டில் நீர் என்ன செய்கிறீர்’ தணிந்த குரலில் மீண்டும் கேட்டார்.
'உலக வாழ்வின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன்’

Page 12
ح۔۔۔۔۔۔۔۔۔۔۔۔یے
"அதில் நீர் வெற்றியடைந்தீரா?' முதியவர் சுருங்கிய முகப் புன்னகையுடன் கேட்டார். "இன்னும் இல்லை, எம்மை வாழ்வுடன் இணைத் திருப்பது மாயையின் சக்தி பொய்தோற்றத்தின் சக்தி என்பது எனக்குத் தெரிகிறது. எனது குருமாரும் இதைத்தான் போதித்தார்கள். புனித நூல்களும் இதைத் தான் கூறுகின்றன. ஆனால், கடலை ஒரு போதும் பார்க்காமல் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதையும் விபரிக்கப்பட்டதையும் மட்டும் தெரிந்த ஒருவனைப் போலவே இந்த உண்மையை நான் உணர்கிறேன். மாயையின் இந்த மிகப் பெரிய சக்தி இரகசியம் என்ன? அந்த மர்மம் தான் என்னை வாட்டுகிறது.'
பற்களே இல்லாத தனது பொக்கை வாயைத் திறந்து முதியவர் சிரித்தார்.
'நீர் அஷ்டசாலி "முதியவர்' கூறினார். "எங்களில் சிலர் மாயைத் தோற்றமே இல்லாத பொருட்களால் வருத்தமடைகிறோம்.'
'அதன் அர்த்தம் என்ன??? "இப்போது என்னைப் போல, நான் மிக நீண்டதுரம் நடந்து வந்ததால் களைத்துச் சோர்ந்து, மயங்கி, எல்லாவற்றிற்கும் மேலாக தாகத்தில் நாவரண்டு போயிருக்கிறேன். எனக்கு ஒரு குவளை நீர் கிடைக் காது போனால் நான் சில வேளைகளில் இறந்து விடுவேன்'. "என்னிடம் தண்ணீர் இல்லை’ நாரதர் கூறினார்." "சில மணித்துளிகளுக்கு முன்தான் கடைசி சொட்டு நீரையும் குடித்து முடித்துவிட்டேன். மிகுதி இரவை நீர் இல்லாமல் கழிப்பது என்று மனதுக்குள் தீர்மானித்துவிட்டேன். "ஆனால் கவலைப்பட வேண்டாம். பக்கத்தில் உள்ள அருவிக்குப் போய் நீர் கொண்டு வந்து உமக்குத் தருவேன்.'
நாரதர் ஏழுந்தார் நெருப்பிலிடுவதற்காக தான் சேகரித்திருந்த சுள்ளிகளை இணைத்து ஒரு தீவட்டி செய்து நெருப்புச் சுவாலையில் பிடித்துக் கொழுத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
நாரதர் வழக்கமாகதான்நீர் மொண்டு வரும் அருவியை நோக்கி காட்டினூடாகச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலமான காற்று வீசி அவருடைய தீவட்டியை சடுதியாக அணைத்து விட்டது. ஆச்சரியமாக இருக்கிறதே காற்றே இல்லாத இப்படி ஒரு இரவில் இது எப்படி என்று யோசித்தார்.

, at 12
98
அவருடைய வெளிச்சம் அணைந்ததால் அவர் காரிரு ளில் விடுபட்டார். வானம் மந்தாரமாயிருந்தது. நட்சத்திரங்களின் ஒளி கூட கனத்த மேகத்தை ஊடுருவி வர முடியாதிருந்தது. இருந்தாலும் அருவி இருக்கும் இடத்தை நோக்கி தனது புலனுணர்வின் வழிகாட் டலில் செல்ல முடியும் என அவர் நினைத்தார். இருளிலும் கூட அவருக்கு எந்த வித பயமும் ஏற்பட வில்லை. தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளைகளி னுாடாக இருட்டில் தட்டித் தடவியபடி கஷ்டப்பட்டு தைரியத்துடன் சென்றுகொண்டிருந்தார். ஒரு முறை அடிமரம் ஒன்றுடன் மோதிக் கொண்டார். அதன் பின் ஒரு கையை முன்னே நீட்டிப் பிடித்தவாறு சென்றார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் ஒரு பெரிய மரவேரில் கால் தடுக்கி தொப்பென்று நிலத்தில் விழுந்தார். தனது குவளையையும் தவற விட்டுவிட்டார். ஒருவாறு கைகளால் நிலத்தைத் தடவி குவளையை திரும்ப எடுக்க அவரால் முடிந்தது ஆனால் விழுந்ததனால் அது உடைந்திருக்கக் கூடும் எனக் கருதினார். அவரால் என்ன செய்ய முடியும்? மீண்டும் சென்று வேறொரு குவளையும், தீவட்டியும் எடுத்து நீரரு வியை நோக்கிச் செல்ல எத்தனிக்க அவரால் நிச்சயமாக முடியும். ஆனால் தனது மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது ஒன்றை இப்போது அவர் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று, உண்மை என்னவென்றால் அவர் வழி தவறிவிட்டார். நீரருவிக்கான வழியைக் கண்டு பிடிக்கச் சிரமப்படுவது போலவே தனது இருப் பிடத்திற்கு மீண்டும் செல்லும் வழியைக் கண்டுபிடிப் பதும் சிரமமாய் இருந்தது. தனது காலடிகள் போன போக்கில் மட்டுமே அவரால் போகவும் பார்க்கவும் முடிந்தது. முன்பு போல இருளில் தட்டித்தடவியபடி மேலும் பத்து நிமிடங்கள் வரை நடந்து கொண்டிருக் கும் பொழுது எதிர்பாராத விதமாக அந்தக் காட்டின் ஒரு எல்லைக்குத் தான் வந்துவிட்டதைப் போல அவருக்குத் தோன்றிற்று. ஒரு திறந்த வெளியை அவர் வந்தடையும் வரை மரங்கள் அடர்த்தியற்று இருந்தமையும் தெரிந்தது, அத்துடன் தொலைவில் மனிதக் குடியிருப்பொன்றி லிருந்து வரும் மங்கலான வெளிச்சத்தை அவரால் காண முடிந்தது. நாரதர் அந்தத்திசையை நோக்கி நடந்தார். மரங்கள் இப்போது சிறிய பற்றைகளுக்கு இடம் விட்டிருந்தன. அவர் கிராமத்தை அடையும் போது வீடுகளில் மங்கிய வெளிச்சம் தெரிந்தது. அவை குடியானவர்களின் வீடுகள் போலத் தெரிந்தன. தனது பாதையில் முதலில் தெரிந்த ஒரு மண் குடிசையை நோக்கி மேலே நடந்து சென்றார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒரு

Page 13
, in in 12 சிறிய ஜன்னலினூடாக வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் தனது குவளையைப் பார்த்தார். உண்மையில் அது உடைந்திருந்தது. பயனில்லை. அதை விட்டெறிந்தார் கதவைத் தட்டினார்.
அச்சமடைந்த தொனியில் ஒரு பெண்ணின் குரல் உள்ளிருந்து கேட்டது.
“யார் அது’? "நான் காட்டில் வாழும் ஒரு துறவி. தண்ணீர் தேடி வந்திருக்கிறேன்’ நாரதர் பதில் கூறினார். ஜன்னலினூடாக எட்டிப்பார்க்கும் அப்பெண்ணின் தலை தெரிந்தது. தான் நன்றாக அவளுக்குத் தெரியும் படி அந்தத் திசையை நோக்கி சில அடிகள் நடந்து சென்றார். அது அவளுக்கு நம்பிக்கையைத் தரும் என நம்பினார். அவள் கையில் விளக்கு வைத்திருந்தாள். விளக்கை உயர்த்திப் பிடிக்கும் பொழுது அவளது முகத்தை நன்றாகப் பார்க்க அவரால் முடிந்தது. நேர்த்தியான அழகுடைய அந்த முகத்தை ஆவலுடன் பார்த்தார். ஆனால் அதே நேரம் தான் கண்ட காட்சியை எண்ணிப் பலமாக ஒரு முறை மூச்சை உள்ளிளுத்தபடி பின்வாங்கினாள். பின்பு அவள் சொன்னாள்.
" எப்படி ஐயா உங்களுக்கு நான் நீர் 5Japւգպմ ?"
"ஏன் முடியாது?"
"நாங்களோ தாழ்ந்தவர்களிலும் மிகத் தாழ்ந்தவர்கள் மிருகங்களின் தோலை உரித்துப் பதனிடும் தொழிலைச் செய்து வாழ்க்கை நடத்துகிறது எனது குடும்பம். என்னால் எப்படி உங்களுக்குத் தண்ணீர் தரமுடியும்?"
"ஏன் முடியாது?’ நாரதர் மீண்டும் கேட்டார்.
'உங்களுக்கு அது தீட்டை ஏற்படுத்தும் ஐயா" நாரதர் புன்முறுவல் செய்தார்.
'உலகத்தில் வாழும் சாதாரணங்கள் நினைக்கும் தூய்மை துடக்கு என்ற வேறுபாடுகள் உலகத்தைத் துறந்த எனக்குக் கிடையாது. தயவு செய்து எனக்கு நீர் கொண்டுவா’
அவள் அவரைச் சந்தேகத்துடன் உற்றுப்பார்த்தாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் கதவடிக்கு. வந்து கதவைத் திறந்து விட்டாள். நாரதர் குடிசைக்குள் நுழைந்தார். அவள் உள்ளே சென்று சிறிய மண்குவளை ஒன்றில் நீர் கொண்டு வந்தாள். தரையில் சம்மணமிட்டு அங்கு உட்கார்ந்திருந்த நாரதர் முன் அதை வைத்தாள். இப்போது அவரால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் இளமையாக இருந்தாள். சிறுபிள்ளைத்தனம் இன்னும் மாற

வில்லை. வயது பதினெட்டிருக்கலாம் என ஊகித்தார். முகத்தில் கண்ட அழகிற்கு பொருத்தமாக உயர்ந்த மெல்லிய உடல் அவளுக்கு அமைந்திருந்தது. ஒரு முழுமை அழகை அது தருவதை நாரதர் உணர்ந்தார். 'இந்த வீட்டில் நீதனியாகவா இருக்கிறாய் ?’ அவர் கேட்டார்.
“எனது பெற்றோர் பக்கத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்றிருக்கின்றனர். ஏனென்றால் அங்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை இருந்தது. இப்போது எந்த நேரமும் அவர்கள் திரும்பி விடுவார்கள்."
“இங்கே தனியாக இருப்பதற்கு நீ பயப்பட வில்லையா?*
அந்தப் பெண் பதில் கூறத் தயங்கினாள். ஆனால் அது பற்றிப் பேசும் போது ஒரு வகைக் கர்வம் அவளில் இருந்தது.
"நான் பயப்படுகிறேன் ஐயா. ஆனால் இது அடிக்கடி நடக்கிறதே. அத்துடன் இது தவிர்க்க முடியாதது. மேலும், பல வேலைகள் இந்த வீட்டில் செய்யக் கிடக்கிறது. வேலையில் மூழ்கும்போது என்னுடைய பயத்தை மறந்துவிடுவேன்.' :
"உனது பெற்றோருக்கு நீ மட்டும் தானா பிள்ளை?’
"ஆம், ஐயா, எனக்கு ஒரு அக்கா இருந்தாள். அவள் மிக இளமையிலே காய்ச்சல் வந்து இறந்து போனாள்.'
"உன்னுடைய பெயர் என்ன?’ நாரதர் கேட்டார்.
"மாயாவதி'
"அழகான பெயர்" "ஆனால் நீங்கள் உங்களுடைய நீரைப் பருக வில்லையே' அவருக்கு முன் இருந்த குவளையைக் காட்டியபடி மாயாவதி கூறினாள். முதல் தடவையாக இப்போதுதான் காண்பது போல அவர் குவளையைப் பார்த்தார்.
"நான் தண்ணீர் கேட்டேனா?
மறந்து விட்டேன். ஆனால் இது இங்கிருப்பதால் பருகுவேன்’
எதற்காக அவர் வந்தாரோ அவற்றையெல்லாம் உண்மையாகவே மறந்து விட்டார். முதியவரைச் சந்தித்ததையும், தன்னை வருத்திக்கொண்டிருக்கும் மாயையின் வலிமை பற்றிய பிரச்சனையையும் கூட மறந்து விட்டார். கரும்பலகையில் எழுதிய எழுத்துக்கள் ஈரத்துணியால் துடைக்கப்பட்டது போல அவர் மனதில் இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன. அமைதியைான அன்பு நிரம்பிய மாயாவதி
998

Page 14
Zரின் முகத்திைவும், வசீகரிக்கும் தன்னமயுள்ள அவளது நீண்ட உடலையும், இனிய குரலையும் தவிர வேறெது வும் அவர் மனதில் இருக்கவில்லை. குவளையை உயர்த்தி உதட்டிற்படாது அண்ணாந்து நீரை வார்த்தார். தொண்டையினுடாக இறங்கிய நீர் குளிர்சியையும் ஆறுதலையும் தந்தது. மாயாவதியின் தாயும் தந்தையும் அந்த இரவு வீடு திரும்பிய பொழுது, தன்னைத் தீட்டுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் நாரதரைப் பற்றியே அவர்களும் கவலையடைந்தார்கள். இது சம்பந்தமில்லாதது எனவும், தான் ஒரு துறவியாக வாழ்க்கையைத் தழுவிய போது உலகின் சகல சமூக வேறுபாடுகளையும்கூட தான்துறந்து விட்டதாகவும் அவர்அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அந்தப் பெற்றோர் சற்று மரியாதையான முறையில் ஆனால் நட்புடன் பழகினர். அதேநேரம் நாரதர் அங்கிருப்பதால் தடுமாற்றம் அடைந்தனர். ஆனால் அன்றிரவு தான் அங்கு தங்குவதற்கான அனு மதியை அவர்கேட்டபொழுதுஅவர்மீதிருந்த மரியாதை யால் அவர் கோரிக்கையை மறுத்துரைக்க முடிய வில்லை. மேலும் அந்த இரவு நேரத்தில் அவர் திரும் பவும் காட்டினுடாக தன் இருப்பிடத்திற்குச் ச்ெல்ல இயலுமா என்பதையும் அவர்களால் நிச் 'பிக்ரமுடிய வில்லை. அவர்களுடைய எளிய உ600rவை அவரும், பகிர்ந்து கொண்டார். அவருக்கு வசதியான படுக்கையை அளிக்க முடியவில்லையே என அவர்கள் கவலைப் பட்டார்கள். காட்டில் குகைகளின் தரையில் படுத்துறங் கிப் பழகிய தனக்கு இவையெல்லாம் முக்கியமான வையல்ல என அவர் கூறினார். அவர்களுடைய பாயொன்றில் அவர் சரிந்து படுத்தார். அன்று மாலை நடந்த சம்பவங்கள் சிறுசிறு காட்சித் துண்டுகளாக அவரது நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. ஞாபகத் திற்கு வரும் கனவுத் துண்டுகள் போல அவை இருந்தன. உடைந்த குவளையைப் பார்த்தபடி குடிசையின் ஜன்னலுக்கு வெளியே காத்திருந்ததை ஞாபகப்படுத்திப் பார்த்தார். தவிர, அன்று மாலை ஒரு முதியவரைச் சந்தித்ததை, பற்களே இல்லாத வாயை அகலத் திறந்தபடி அம்முதியவர் சிரித்ததை நினைவிற் குக் கொண்டுவர முடிந்தது. அவரை எங்கு சந்தித்தார் என்பதும் தெரியாமலிருந்தது. ஆனால் இப்பொழுது அம்முதியவரின் முகம் மாயாவதியின் முகமாக மாறி அவருடைய மூடிய இமைகளுக்கு முன்பாக மிதந்து கொண்டிருந்தது. குடிசையின் மறுபுறத்தில் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை அவர் சுய உணர்வுடன் அறிந்து கொண்ட போதும்கூட இருண்ட தூக்கத்தில் அவள்முகத்தைக் கனவுக்காட்டில் தொடர்ந்துதுரத்திச் செல்வதாக அமைந்த கனவுப் பின்னல்கள் அவருக்குத் தோன்றின.
199

தூக்கத்தின்போது ஏறிகனவே மனது ஒரு முடிவுக்கு வந்திருப்பதை உணர்ந்தபடி நாரதர் காலையில் கண்விழித்தார். அவர் எழுந்திருந்தபோது மாயாவதி யின் தந்தையார் வீட்டின் பின்புற முற்றத்தில் அமர்ந்த படி குச்சியொன்றினால் பல்துலக்கிக் கொண்டிருந்தார். நாரதர் எழுந்து அவருக்கு அருகில் சென்று உட்கார்ந்து கொண்டார்.
'உங்களிடம் வேறொன்றையும் நான் கேட்க விரும்புகிறேன். நேற்றிரவு கூறியதுபோல, நான் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபடுவதற்கான அறிவைத்தேடிக் காட்டில் வாழ்ந்து கொண்டிருப் பவன். ஆனால் அந்த ஞானத்திற்கு ஆயத்தமான நிலையில் நான் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரிந்தது மிகச் சொற்பமே."
தந்தையார் மிக அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந் தார். 'எனக்கு வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும்? ஒரு செல்வந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்து; அந்த வசதிகளால் களைப்படைந்து, எல்லாவற்றையும் விட்டு காடு சென்று கடுமையான துறவு வாழ்க்கை யைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தேன். ஆனால் இவை இரண்டும் பெருவாரியான சாதாரண மக்களைப் பொறுத்தவரை வித்தியாசமானவை. தாங்களே தேர்ந் தெடுக்காத சகிக்கமுடியாத கொடுமைகளையும், வேதனைகளையும் கட்டாயத்துடன் சகித்துக்கொண்டு வாழ வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்."
நாரதரை உற்று நோக்கியபடி தந்தையார்காத்திருந்தார்.
'எனக்கு முற்றிலும் அந்நியமான இந்த மற்ற வாழ்க்கையைப் பற்றி அறிய நான் விரும்புகிறேன். உங்களுடனும் உங்கள் குழந்தைகளுடனும் உங்கள் வீட்டிலேயே உங்களைப் போல வாழ்ந்து உங்களுடன் சேர்ந்து வேலை செய்து உங்களுக்கு நேரும் துக்க மானாலும், சந்தோஷமானாலும் அதை அனுபவித்து வரஎனக்கு அனுமதியளியுங்கள். உங்களைத் தயவாகக் கேட்கிறேன்."
இப்பொழுது தந்தையார் கூறினார். "நீங்கள் எங்களு டன் சேர்ந்து எங்களுடைய வேலை செய்யப் போவ தாகக் கூறினீர்கள். அது என்ன வேலை தெரியுமா?"
"நீங்கள் மிருகங்களின் தோலை உரித்துப் பதனிடும் வேலை செய்து வாழ்க்கை நடத்துவதாக மாயாவதி கூறினாள். நானும் அதைக் கற்று உங்கள் வேலையில் பங்கு கொள்ள விரும்புகிறேன்."
தந்தையார் திகைத்தார்.

Page 15
"உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும். அது மிகவும் அசுத்தமான வெறுக்கத்தக்க வேலை. இதோ பாருங்கள். ’கையை நீட்டிக் காண்பித்தார்.
'எனது நகக்கண்ணுக்குள் இருக்கும் அழுக்கும், கறையும் இதோ. எனது உடல் முழுவதும் நான் வேலை செய்யும் பொருளே நாறுகிறது. ஒரு நாளில் பல தடவைகள் குளித்தால்கூட இந்த நாற்றத்தைக் கழுவி அகற்ற முடியவில்லை. மிக மென்மையாக வளர்க்கப்பட்ட உங்களால் எப்படி இந்த மாதிரி வேலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்?"
'காட்டில் வாழ்ந்து பழகிவிட்டது போல் எந்த வேலைக்கும் என்னைப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியும்.'
'காடு சுத்தமானது. மிருகங்களின் தோலை ஊறவைக்கும் அழுக்கான நாற்றமடிக்கும் குழிகளைப் போல் அல்லவே அவை."
நாரதர் எவ்வளவுதான் காரணங்களைக் கூறி முயற்சித்த போதும் தன்னுடன் இணைந்து வேலை செய்வதற்கு தந்தையார் சம்மதிக்கவில்லை. ஆனால் அவர் தங்கு வதை வரவேற்றார். ஒரு சோம்பேறியாக அவர்கள் வீட்டிலிருந்தபடி அவர்களுடைய உணவை உண்டு கொண்டிருப்பதற்கு நாரதர் மறுத்துவிட்டார். கடைசி யாக அவர்கள் ஒரு சமரசத்திற்கு வந்தனர். அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு துண்டு நிலம் குடிசையை ஒட்டினாற்போல் இருந்தது. நாரதர் விரும்பினால் அதில் அவர் விவசாயம் செய்யலாம் என்பதே அது.
இந்தச் சம்மதத்திற்குப் பிறகு நாரதர் சந்தோஷ மாயிருந்தார். ஆனால் தான் முழு உண்மையுடன் செயல்படுகிறாரா என்பதில் அவருக்கு ஐயம் இருந்தது. ஏழைகளுடன் வாழ்ந்து அவர்களைப்பற்றி அறியும் விருப்பம் அவருக்கு இருந்தது. அது ஒரு புனைவல்ல. ஆனால் அந்தக் குடும்பத்துடன் இணைந்து கொள்ள அதுமட்டும்தான் ஒரு வலுவான காரணமா? அல்லது உண்மையில் மாயாவதியின் அழகும் இனிமையும் ஏற்படுத்திய வசீகரம்தானா இந்த முடிவை எடுக்க வைத்தது? இந்த முடிவுக்கே தந்தையாரும் வந்து விட்டாரா? ×
தான் ஒரு செல்வந்தக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதை எந்த முன்யோசனையும் இல்லாமல், கூறியதால்தான் தந்தையார் இதற்குச் சம்மதித்தாரோ? அப்படியானால் தான் பணம் கொண்டு வருவேன் என்ற எதிர்பார்ப்புகள் எழாதபடி நேரத்துடன் தந்தைக்குப் புலப்படுத்திவிட வேண்டும் என எண்ணி னார். தனது குடும்பத்துடனான தொடர்புகளை அவர்

98 --- I -
அறுத்துவிட்டிருந்ததோடு எந்த வேளையிலும் அதைப் புதுப்பிக்கும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. எனவே நாரதர் அந்தக் குடிசையில் இருந்து கொண்டு அந்தக் குடும்பதிற்குச் சொந்தமான நிலத்துண்டில் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். நாரதருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் தந்தையாரின் ஆலோ சனைப்படி, விவசாயத்தில் அறிவும், அனுபவமும் உள்ள அயலவரொருவரிடம் அறிவுரையும், வழி காட்டலும் பெற்றுக் கொண்டார். நாரதர்தானியங்கள் பயிரிட விரும்பினார். ஆனால் அயலவரோசிரித்தபடி, ஒட முயல்வதற்கு முன் நடக்கப் பழக வேண்டும் எனக் கூறினார்.
"தானியங்கள் பயிரிடுமுன் நீர் பல விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மழைக்காலம் எது, கோடைகாலம் எது என்று தெரிய வேண்டும். விதைப் புக்குச் சிறந்த காலம் எது, அறுவடைக் காலம் எது என்பது தெரிய வேண்டும். ஏன் சுலபமான ஒன்றுடன் ஆரம்பிக்கக் கூடாது? கொடிவகைகள் பயிரிடலாமே. அவைகளுக்கு அதிக கவனிப்பு தேவையில்லை. இதன் மூலம் பயிர்கள் வளர்ந்து வருவதைக் கவனிக்கும் பழக்கம் உமக்கு ஏற்பட்டுவிடும்.'
நாரதர் விதைகளை ஊன்றிவிட்டு அது முளைவிட்டு வளர்வதை ஒவ்வொரு நாளும் அவதானித்தபடி இருந்தார். ஒரு விவசாயி என்ற வகையில் அவருக்கு வேலை செய்வதற்கு அதிக வேலை அப்போது இருக்கவில்லை. எனவே அநேகமான நேரம் மாயா வதி வீட்டு வேலைகள் செய்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அல்லது அவர் ஒய்வாக இருக்கும் பொழுது அவளுடன் உரையாடுவார். தனது முன்னைய வாழ்க்கையைப் பற்றி அவளுக்குக் கூறினார். தனது குடும்பத்தவரின் செல்வப் பகட்டு, செல்வத்தை உழைப்பின் மூலம் உருவாக்கிய விவசாயிகளை அவர்கள் கொடுமைப்படுத்திய விதம், அவர்களுடைய பிராமணிய மதத்துடன் இணைந்த நல்லொழுக்கம் பற்றிய பாசாங்குகள், இவைகளினால் தனது குடும்பத்திலிருந்து தான் தனிமைப் பட்டுப் போனது ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் கூறினார். மாயாவதி தனது அகன்ற விழிகளால் அவரை நன்றாகக் கவனித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் அவர் ஏதாவது கேள்வி கேட்டாலே ஒழிய மற்றும்படி அவள் மிக அரிதாகவே பேசினாள்.
நாரதருக்கு அவள் மீதிருந்த வசீகரம் கூடியது. அதேபோல் அவளது அன்பான குண இயல்பு அவள் மீது திடமான நம்பிக்கையை உருவாக்கியது. அதாவது, காயமடைந்த அணில் ஒன்றை அவள்

Page 16
கவனித்த விதம், தனது அயலவரொருவருடைய குழந்தை சுகவீனமுற்ற பொழுது அவள் பதற்ற மடைந்த தன்மை, அவளது குடும்பத்திலும் பார்க்க அருகாமையானவர்களிடம் அவள் காட்டிய பெருந் தன்மை போன்றவையே நற்குண இயல்புகள். தனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் அடிக்கடி யோசிப்பார். ஆனால் சில வேளைகளில், தனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அவளைப் பற்றி அறிந்து கொண்டுவிட்டாரா என்ற ஐயமும் அவருக்கு இருக்கவே செய்தது. அப்படியான வேளைகளில் மாயைபற்றி அவருக்கு ஏற்கனவே இருந்த கற்பிதங்கள் திரும்ப வந்து தொந்தரவு செய்தன. மாயாவதி என்ற பெண்ணைப் பற்றிய படிமம் அவளது அழகினால் விழிப்படைந்த தனது ஆசையின் உருக்கமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். முடிவாக, வாழ்வதினூடாகவே இத்தகைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவளிடம் சென்று இது பற்றிக் கேட்டார்.
'நீ ஏற்றுக் கொண்டால் என் வாழ்வை உன் வாழ்வுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்."
அவள் மிகுந்த சந்தோஷத்துடன் புன்னகைத்தாள்.
"நீங்கள் நீண்டகாலத்திற்கு முன்பே இதைக் கேட்டிருக் கலாம். நான் அப்போதே சம்மதித்திருப்பேன். நிச்சயமாக என்னுடைய பெற்றோரிடம் நான் இதைக் கேட்க வேண்டும். அவர்களுக்கும் உங்களைப் பிடிக்கும்.'
திருமணச் சடங்குகள் எதுவும் அங்கு நடைபெற வில்லை. மறுநாள் இரவு அவர் உறங்கும், குடிசையின் மறுபுறத்திற்கு மாயாவதி தனது பாயுடன் வந்து அவருடன் உறங்கியபோது, பெற்றோர்கள் சம்மதித்து விட்டார்கள் என்பதை நாரதர் அறிந்து கொண்டார். இது எவ்வளவு எளிமை! எவ்வளவு உண்மை! என நாரதர் எண்ணிக்கொண்டார். அதேவேளை தனது அண்ணனின் திருமணம் பற்றித் தனக்குள் எழுந்த பேதங்களை எண்ணிப் பார்த்தார். பணத்திற்கும், நிலத்திற்குமாக நீண்ட நேரம் பேசப்பட்ட பேரம், அவமதிப்பதுபோல அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பக்தி பூர்வமான சமயச் சடங்குகள் என்பன ஞாபகத்திற்கு வந்தன. நாரதரும் மாயாவதியும் கணவன் மனைவியாகி விடுவார்கள் என்று ஏனைய கிராம மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்பார்த் திருந்தார்கள். ஒருவருடத்திற்குப் பின்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
1998

மாயாவதியையும் அடைந்து, ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பும்கூட ஏன் தான் பூரண சந்தோஷம் அடையவில்லை என அடிக்கடி இரவில் விழித் தெழுந்து தனக்குத் தானே அவர் கேட்டுக்கொள்வார். தனக்கும் மாயாவதிக்கும் இடையில் இன்னமும் சிறிய இடைவெளி இருப்பதாக நாரதர் உணர்ந்தார். மாயாவதி அவரை ஒரு உயர்வான மனிதராகவே கருதினாள். ஏணைய கிராமத்துப் பெண்கள் தனது கணவன்மாரை கோபத்துடனும் அன்புடனும் பேசுவதுபோல் இவள் ஒருபோதும் செய்வதில்லை.
அது ஒரு மழைக்காலம், கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. விட்டிற்கு வெளியே போய் எந்த வேலையையும் செய்ய முடியாதிருந்தது. இடைவிடாத இருட்டும், சொட்டிக்கொண்டிருக்கும் வானமும், இடி முழக்கமும் நாரதரை எரிச்சலடையச் செய்துகொண்டிருந்தன. அவர்களது உறவு தொடங் கிய ஆரம்ப நாட்களில் அழைத்தது போன்று யோசனை எதுவுமின்றி மாயாவதி 'ஐயா’’ என விழித்தபோது நாரதருக்கு திடீரென கடும்கோபமே வந்துவிட்டது.
"நானென்ன ஒரு நிலப்பிரபுவா? அல்லது கிராமத் தலைவனா? எது உன்னை ஐயா என அழைக்க வைத்தது?"
மாயாவதி தலைவணங்கி 'மன்னிக்க வேண்டும்" என்று கூறினாள். "நான் தவறு செய்து விட்டேன். அது எனது பழைய பழக்கம்.'
கோபம் தணியும் வரை நாரதர் பொறுத்திருந்தார். அதன் பின் மிக அமைதியாக மீண்டும் கூறினார்.
'ஆனால் இது ஒரு வெறும் தவறு அல்ல" அவர் தொடர்ந்தார்.
"இன்னமும் என்னை உன்னிலும் பார்க்க மேலானவனாய் நடத்துகிறாய். சமனானவனாக அல்ல. இதனால் தான் இவ்வாறு நடக்கிறது."
'நீங்கள் எனது கணவராக இருக்கும் போது எவ்வாறு நான் உங்களுக்குச் சமமானவளாக இருக்க முடியும்?" அமைதியாக ஆனால் தன்னம்பிக்கையுடன் கூறினாள். "ஒருபெண் தனது கணவனுக்கு மரியாதை செலுத்தவும் கீழ்ப்படியவும் வேண்டும்தானே?"
"அது நீண்ட காலத்திற்கு முன்பே நான் உதறிவிட்டு வந்த உலகத்தின் பொய்த் தோற்றங்களில் ஒன்று." 'அனால் உங்களைப்போல் புத்திக் கூர்மையுள்ள வளோ, படித்தவளோ அல்ல" மாயாவதி பிடிவாத மாயிருந்தாள்.

Page 17
li, il u t- 12 "நான் எப்படி உங்களுக்குச் சமமானவளாய் இருக்க முடியும்?" 'படித்தவளா? இல்லை, ஆனால் புத்திக்கூர்மை? கயிற்றை இழுக்கும்போது அது கழன்று வராதபடி ஒரு முடிச்சுப் போடத் தெரியாத ஒரு மூடனாக எப்படி நான் இருக்கிறேன் என்பதை நேற்று நீ எனக்குக் காட்ட வில்லையா?*
"ஆனால் அது புத்திக் கூர்மையல்லவே " "அப்படியென்றால் அது என்ன?"
'அந்தவகையான வேலைகளை நான் வழமையாகச் செய்து வருவதால் அது மிகச்சாதாரணமாக முடிந்தது' "ஆம். வயிற்றில் நோய் கண்ட குழந்தைக்கு வேண்டிய சரியான மூலிகையை சாதாரணமாகக் கண்டு பிடிக்க முடிகிறது. அல்லது காகம் கரையும் முறையி லிருந்து வரப்போகும் புயல் பற்றி சொல்ல முடிகிறது. அல்லது பக்கத்து வீட்டுப் பெண்ணின் கண்களைப் பார்த்தே அவள்பொய் சொல்லுகிறாள் என உன்னால் கூற முடிகிறது." மாயாவதிக்கு மிகுந்த வேடிக்கையாய் இருந்தது. "ஆம். அதற்கு என்ன?’
"ஆனால் என்னால் இவை எல்லாவற்றையும் செய்ய முடியாதே எனவே நான் புத்தி கூர்மையற்றவன். முட்டாளும் தானே'
'ஆனால் எனக்குத் தெரியாத பல முக்கியமான விடயங்கள் உங்களுக்குத் தெரியுமே. எனவே நான் உங்களை மதிக்கவும், கீழ்ப்படியவும் வேண்டும் தானே'.
"அது அப்படி என்றால் நான் என்ன செய்யச் சொல்கிறேனோ அதற்கு நீ இப்பொழுதே கீழ்ப்படிய வேண்டும்." - "சரி, உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?"
'அதாவது என்னை உனக்குச் சமமானவனாக நடத்த வேண்டும்."
ஒரு கணம் திகைத்த படி அவரை உற்றுப்பார்த்தாள். பின்பு உடல் குலுங்கச் சிரித்தாள். ஆனால் அந்த நேரம் முகத்தில் பயப் பீதி தெரிய தாயும் தந்தையும் உள்ளே ஓடி வந்துகொண்டிருந்தனர். 'பிள்ளைகளே! ஆறு அணைக்கட்டை உடைத்து விட்டது. பெரிய வெள்ளப்பெருக்கு வரப்போவதாகப் பேசிக்கொள்கிறார்கள். குழந்தையைத் தூக்குங்கள். கொஞ்சம் உணவு எடுங்கள். விரையுங்கள். நாங்கள் தப்பியோட வேண்டும். ஒன்றுக்கும் நேரமில்லை."
19

எல்லாவற்றையும் அவசரமவசரமாகப் பேசி முடித்துக் கொண்டு குடிசையை விட்டு ஓடினார்கள். ஏனைய மக்களும் வீட்டைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். சில மைல்களுக்கு அப்பால் வடக்குப் பக்கமாக உள்ள மேட்டுநிலத்தை நோக்கி எல்லோரும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அரைவாசித் தூரத்தைக் கடக்குமுன்னரே வெள்ளம் அவர்களைச் சூழ்ந்துவிட்டது. பெருகிய வெள்ளம் இரக்க மில்லாமல் தன் பாதையில் வந்தவர்களைத் தன் போக்கில் அள்ளிச் சென்றுகொண்டிருந்தது. மாயாவதி யையும் குழந்தையையும் காப்பாற்றும் நம்பிக்கை யுடன் நாரதர் வீரத்துடன் போராடினார். ஆனால் நீரோட்டம் அவரை அப்பால் அடித்துச் சென்றது. அவரது தலை பாறை ஒன்றுடன் மோத அவர் நினைவிழந்தார்.
நாரதருக்கு நினைவு திரும்பியது. வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அவர் ஒரு தட்டையான பாறை மீது கிடந்தார். எழுந்து சுற்றிலும் பார்த்தார். அவரின் பார்வைக்குத் தெரிந்ததெல்லாம் முடிவில் லாத வெள்ளக்காடே. அவரது மனைவியையோ, குழந்தையையோ பற்றி ஒரு தடயமும் இல்லை. நிலை குலைந்து பாறையில் வீழ்ந்து கண்ணிர் விட்டு மனம் புண்பட அழுது கொண்டிருந்தார்.
அப்போது தாழ்ந்த தொனியில் குரலொன்று கேட்டது. அது முன்பிருந்தே அவருக்குப் பரிச்சயமான ஒருவருடைய குரலாயுமிருந்தது.
"குழந்தாய்! இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்? அரை மணித்தியாலத்திற்கு முன்பு எனக்கு உறுதி அளித்தபடி நீர் கொண்டு வருவாய் என இங்கு நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த முதியவரின் கண்களை உற்று நோக்கினார். அணைந்து கொண்டிருக்கும் நெருப்புத் தணலில் எதிர்ப்புறத்திலிருந்து முதியவர் நாரதரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வெள்ளம் இருக்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்த காட்டின் வெட்டை
வெளிப்பகுதிதான் அங்கிருந்தது. நாரதர் மீண்டும் முதியவரைப் பார்த்தார். திகைத்தார். முதியவர் எழுந்து நின்றார். அவரது கூனல் முதுகு நிமிர்ந்து விட்டது. முதுமையைக் காட்டிய முகச் சுருக்கங்கள் மறைந்து விட்டன. இப்பொழுது அவர் நாரதருக்கு மேலாக பிரமாண்டமாக உயர்ந்து தனது விஸ்வரூபத்தினால் அடையாளம் காட்டினார்.
'விஷ்ணு' என்றபடி மூச்சை இழுந்தார். “பிரபுவே" நாரதர் சாஷ்டாங்கமாக விழுந்தார். இறைவனின் உதட்டில் ஒரு அமைதியான நமட்டுச் சிரிப்பு மலர்ந்தது.
98

Page 18
'இப்பொழுது புரிந்து கொண்டாயா மாயையின் வலிமையை???
அது ஒரு காலை நேரம். காட்டின் வெட்டவெளியில் நீறாகிப் போன நெருப்பின் முன்னால் உற்சாகமிழந்த நிலையில் நாரதர் அமர்ந்திருந்தார். நாரதர் இந்த மனநிலையில் இருக்கும் போது விஷ்ணு மீண்டும் அவர் முன் தன் சுய உருவத்துடன் அந்த வெட்ட வெளியில் தோன்றினார்.
"உனக்கு என்ன பிழை நடந்தது’ கடவுள் கேட்டார். குற்றம் சுமத்தும் பார்வையுடன் அவரை நோக்கினார் நாரதர். 'ஏன் அந்தச் சூழ்ச்சியை என்மீது திணித்து விளையாடினிர்கள்’.
"ஆனால் நீ விரும்பியதைத்தானே நான் செய்தேன். நீ மாயையின் வலிமையை அறிய விரும்பினாய். நான் ஒரு நேரடிப் பாடம் மூலம் அதை உனக்கு வெளிப் படுத்தினேன்.”
"ஆம். இதை மிக நன்றாக மட்டுமே வெளிப் படுத்தினீர்கள்."
"நீ என்ன அர்த்தம் கொள்கிறாய். மேலும் உனக்கு
இப்போது என்ன வேண்டும்?" 'எனக்கு மாயாவதி வேண்டும்."
பாதி அலட்சியமும் பாதி அனுதாபமும் கலந்து புன்னகைத்தார்.
"ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லையே. மாயையின் வலிமையை உனக்குக் காட்டுவதற்காக மட்டுமே அவளை நான் படைத்தேன்."
"அவள் ஒரு மாயை மட்டும்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளை நான் கண்ட அந்த இரவிலிருந்து அவள் தண்ணிரில் மறைந்து போன அந்தக் கணம்வரை இதிலும் பார்க்க எனக்கு உண்மை யாக அவளால் இருந்திருக்க முடியாது. அவளுடன் ஒரு வருடம் வாழ்ந்தேன். அவளுடன் காதல் செய்தேன். அவளுக்கு ஒரு குழந்தை கிடைத்தது. இவையெல் லாம் ஒரு மாயை என்று உங்களால் எப்படிக் கூற முடியும்.' நாரதரின் மடமைத்தனத்தால் பொறுமையிழந்து வெறுப்புடன் தோள்களை உயர்த்தினார்.
"நாரதா கவனி! நீ ஒரு பெண்ணுடன் காதல் செய்ததாக ஒருபோதும் கனவு கண்டதில்லையா?*
"ஆம். கண்டிருக்கிறேன். அதற்கு என்ன இப்போது?’
'கனவு காணும்போது இரத்தமும் சதையும் கொண்ட எல்லாம் உண்மைப் பெண்களைப்போலஅப்பெண்ணும்
199

இருந்ததில்லையா? இருந்தாலும் நீ விழித்தெழுந்த பின்பு நீ தழுவிக் கொண்டிருந்த சூடான உடம்பு உன்னுடைய தலையணை மட்டும்தான் என்பது தெரியவரும். அநேகமாக தூக்கக் கலக்கம் மாறாது இருக்கும் போது சில கணங்களுக்கு அவள் பாதி உண்மையாகத் தெரிவாள். ஆனால் பகல் வரும் பொழுது கனவு முழுமையாகக் கலைந்து விடுகிறது. அப்படித்தானே?"
'அதற்காக"
'நல்லது மாயாவதியின் விடயமும் அப்படித்தான். உறக்கத்தில் வரும் ஒரு வித்தியாசமான வகைக் கனவாக இருந்த போதும் நீ கண்டது கனவுதான் என்று சற்று எண்ணிப்பார். ஆனால் அந்தக் கனவுகளில் பொய்த் தோற்றமாக ஒரு பெண்ணைப்போல் வந்தவளே மாயாவதி. மேலும், நீ ஒரு வருடமாக அவளைக் காதலித்ததாகக் கூறுகிறாய். நான் இவ்வளவு நேரமும் இந்த நெருப்புக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அரை மணித்தியாலம் மட்டுமே சென்றிருந்தது. மனிதர்களின் நேரக் கணக்குப்படி அது கிட்டத்தட்ட அரைமணித்தியாலமே. கடவுள்களாகிய எமக்கு நிச்சயமாக அது அர்த்தமில்லாததே."
"ஏன்??
"நித்தியத்தில் நாம் வாழ்வதால் எமக்கு நேரம் கழிவ தில்லை. ஆனால் நீ இன்னும் அதைப் புரிந்து கொள்ள ஆயத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன்."
"நித்தியத் தன்மையுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஏன் என்னைப் போன்று இறக்கும் தன்மை யுடையவர்களுடன் தந்திர விளையாட்டுக்களில்
ஈடுபடுகிறீர்கள்?"
'உன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றத் தான் அதாவது மாயையின் வலிமையை உனக்கு உணர்த்தத்தான் நான் விழைந்தேன். மேலும், மாயாவதி மீது நீ காதல் கொண்டதற்காக என்மீது குற்றம் சுமத்தாதே. நீ கனவில் ஒரு பெண்ணுடன் காதல் செய்யும் பொழுது அப்பெண்ணை தோற்று வித்தது உனது மறைந்த அல்லது முற்றாக மறைக்கப் படாத ஆசைகளேதான். அதே போலத்தான் இன்ன மும் அடக்கியாளப்படாத உன் ஆசைகளின் படிமமே மாயாவதி."
"நான் இன்னமும் அப்படியேதான் இருக்கிறேன் எனக்கு அவள் வேண்டும்'. நாரதர் பிடிவாதமாக கூறினார். "நீகுழந்தையாகி வருகிறாய். நான் மீண்டும் மீண்டும் கூறவில்லையா அவள் ஒரு பொய்த் தோற்றம் என்று?
B

Page 19
, a - 2
மண்ணுலகப் பொருட்களைப் பற்றிப்புனித நூல்களும் அதைத்தானே கூறுகிறது. அதாவது அவையெல்லாம் ஒரு பொய்தோற்றம் என்று' S.
"அதற்காக?"
"அப்படியென்றால் என்னைச் சந்தோஷமாக வைத் திருக்கும் அந்த பொய்த் தோற்றத்தை நான் ஏன் வைத்திருக்கக் கூடாது?"
விஷ்ணு குழம்பிப்போய் நாரதரைப் பார்த்தார்.
"உங்களது வேலையை நீங்கள் மிக நன்றாகச் செய்தீர் கள் என்று நான் கூறினேனே பிரபு. அவள் அழகாக இருந்தாள் என்பதற்காக மட்டும் நான் அவளை விரும்பவில்லை. அவள் சாந்தமானவளாகவும், இரக்கமுற்றவளாகவும் இருந்தாள். வாழ்க்கை பற்றிய அவளது புரிந்துணர்வு துறவிகள் காட்டும் எல்லா ஞானத்திலும் பார்க்க மேலாக இருந்தது. மாயாவதியை எனக்குத் திரும்பித்தாருங்கள், பிரபு”
சந்தேகம் இன்னும் மாறாத நிலையில் மீண்டும் விஷ்ணு நாரதரைப் பார்த்தார். "சென்ற தடவை உங்களுடனான சந்திப்பை எனது ஞாபத்திலிருந்து அகற்றியிருந்தீர்கள். இப்பொழுதும் அதையே மீண்டும் செய்யுங்கள் பிரபு. மாயாவதி இறந்த விடயத்தை என்னிலிருந்து மறக்கச் செய்யுங் கள். அவள் ஒரு பொய்தோற்றம் என்பதையும் என்னிலிருந்து மறக்கச் செய்துவிடுங்கள். நான் முன்பு செய்தது போலவே அவளை விரும்பவும், அவளுடன் வாழவும் விட்டுவிடுங்கள்'. m
விஷ்ணு சில கணங்கள் அமைதியாகச் சிந்தனை செய்தார்.
"மிக நல்லது. நான் மாயாவதிக்கு உயிரளிக்கிறேன். அவளிடம் செல். அதே கிராமத்தில் அதே குடிசையில் அவள் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்” விஷ்ணு கடைசியில் கூறினார்.
நாரதர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
"மிக்க நன்றி பிரபுவே".
இரவிலும் பார்க்க பகலில் காட்டைக் கடந்து செல்வது நாரதருக்கு சுலபமாகவும் விரைவாகவும் இருந்தது. காட்டின் மறு முனைக்குச் சென்று, சிறிது தூரத்தில் இருந்த கிராமத்தைக் கண்டபொழுது நாரதருக்கு ஞாபகமாயிருந்த பலவிடயங்கள் மனதிலிருந்து மறைந்து போயிருந்தன. சில காலம் கிராமத்தை விட்டுப்பிரிந்து எங்கோஇருந்ததாக அவர்நினைத்தார். தவிர, மிருகத் தோல்களை விற்பதற்கான நிலைமை களை அறிந்து வர பிரயாணம் செய்து வந்ததாக
 
 

நம்பினார். எப்படியாயினும் தனக்குக் கிடைத்த சில அனுபவங்கள் அல்லது எண்ணங்கள் பற்றித் தெளிவு குறைவாக இருந்ததையும் உணர்ந்தார். அவர் எவ்வளவு காலம் பிரிந்திருந்தார்? அதை அவரால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. நீண்டபயணக் களைப்பின்காரணமாகத்தான் இப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் " என தனக்குத் தானே நினைத்துக் கொண்டார். 'அல்லது சிலவேளை இந்த வகையினால் ஏற்பட்டதே' அவர் குடிசைக்குள் நுழைந்த பொழுது தந்தையார் அவரைக் கட்டியணைத்து வரவேற்றார்.
'மகனே! உன்னைத் திரும்பவும் காண எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு காலம் சென்றுவிட்டது."
"மிக நீண்ட காலமாகிவிட்டதா?’ நாரதர் கேட்டார்.
"ஏன் உனக்கு ஞாபகம் இல்லையா? வசந்தகால மழைக்கு முன் புறப்பட்டுச் சென்றாய். இப்போது கோடைகாலமாகிப் போய்விட்டது. நல்ல மழை பெய்தது சனங்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும்."
"இதைத் தவிர ஒரு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டதாக ஒரு மங்கலான ஞாபகம் வருகிறதே’ நாரதர் கூறினார். “வெள்ளப் பெருக்கா? என்ன கூறுகிறாய். நான் சிறுவானக இருந்ததிலிருந்து இந்தப் பகுதியில்
வெள்ளைப் பெருக்கு எதுவும் ஏற்பட்டதில்லையே."
I998
"நான் கனவு தான் கண்டிருக்கிறேன்’ நாரதர் கூறினார் சமையற்கட்டிலிருந்து வந்த மாயாவதியின் தாயாரும் கூட நாரதரைக் கட்டியணைத்துக் கொண்டார்.
'மாயாவதி எங்கே?' சுற்றும் முற்றும் பார்த்தபடி நாரதர் கேட்டார்.
"அவள் இருக்கிறாள்' பதற்றம் நிறைந்த குரலில் தாயார் கூறினார்.
மாயாவதி தோன்றினாள். முந்தானையால் தலையை மூடியிருந்தாள். அத்துடன் தனது முகத்தின் ஒரு பகுதியை மறைப்பதற்காக முந்தானையை இழுத்துப் பிடித்திருந்தாள்.
"மாயவதி"நாரதர்கத்தினார். "பிரிந்திருந்த இவ்வளவு காலமும் எவ்வளவு ஆசையுடன் உனக்காகக் காத்திருந்தேன்.
அவர் அவளை உற்றுப் பார்த்தார். ஆனால் ஒன்றும்
கூறவில்லை.
"ஏன் உன் முகத்தை மூடியிருக்கிறாய்?"

Page 20
18 நான் ஒவ்வொரு இரவும் கனவு கண்ட முகமல்லவா அது. அந்தக் கனவிலும் பார்க்க அழகாக இருக்கும் அந்த முகத்தைப் பார்க்க விடு". மாயாவதி நிலத்தில் அமர்ந்தாள், ஆனால் எதுவுமே இன்னும் பேசவில்லை.
'ஏன் அங்கிருக்கிறாய்? இங்கே வா மாயாவதி. உன்னைத் தொட உன் கரத்தைப் பற்ற என்னை விடு'
'நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது" மாயாவதி கவலையுடன் கூறினாள்.
"ஏன் முடியாது?’
அங்கு நிலவிய நீண்ட அமைதியை தாயார்கலைத்தார். "அவளுக்குத் தொழுநோய்'
“இது எப்போது ஏற்பட்டது. "நாரதர் கேட்டார்.
"நீங்கள் பிரிந்து சென்று சுமார் ஒரு மாதத்தின் பின் முதல் அறிகுறிகள் தோன்றின." மாயாவதி கூறினாள்.
"நான் மற்றவர்களைத் தொட்டாலோ அல்லது அவர்கள் என்னைத் தொட்டாலோ நான் அவர்களுக்கு நோயைப் பரப்பிவிடுவேன் என்று கிராமத்து வைத்தி யர் கூறினார். நான் இப்போது குழந்தைக்குக் கூட உணவு ஊட்டுவதோ, கழுவுவதோ, உடை அணிவிப் பதோ இல்லை. தாயாரே எல்லாவற்றையும் செய் கிறாள். ஆகையால் நான் உங்களைத் தொடக்கூடாது".
'இல்லை நாரதர் கத்தினார்.
அவர் அவளை நோக்கிச் சென்றார். அவள் அவரிட மிருந்து பாய்ந்து பின்வாங்கிச்சென்றுவிட்டாள் நாரதர் கதியற்று நின்றபடி 'உனது முகத்தையாவது எனக்குக் காட்டு’ என மனமிளகக் கேட்டார்.
"வேண்டாம் அது விவகாரமாகவும் அவலட்சணமாக வும் இருக்கிறது. உங்களை வெறுப்படையச் செய்யும். என் மீது அருவருப்புக் கொள்வீர்கள். என்னை வெறுப்பீர்கள்."
'உன்னுடைய முகத்தை எனக்குக் காட்டு* நாரதர் மீண்டும் கேட்டார்.
அவள் மெதுவாக பயத்துடன் முந்தானையை தனது முகத்திலிருந்து நீக்கினார். ܚ
'நீ இன்னமும் எனக்கு அழகானவளே மாயாவதி." நாரதர் கூறினார் ‘உன்னைக் காதலிப்பதை நான் ஒரு போதும் நிறுத்தமாட்டேன். நான் விரும்பும் உலகத்தில் எல்லாமே நீதான்."
199

அவள் மெதுவாக நிலத்தில் சரிந்தாள். தனது முகத்தை மறைத்தபடி வெடித்துச் சிதறி அழுது கொண்டிருந்தாள். நாரதர் இரண்டு நாட்கள் வீட்டில் தங்கினார். ஆனால் மாயாவதி அவரருகே வராது குடிசைக்குப் பின்னால் இருந்த சமையற்கட்டில் இரவில் படுத்துறங்கினாள். இந்த நிலமை நாரதருக்குத் தாங்கமுடியாத வேதனை யைத் தந்தது. இரண்டு நாட்கள் முடிந்தபின்பு அவளது நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்து தேடிப் புறப்பட்டுச் செல்வது எனத் தீர்மானித்தார். அப்படியே செய்தார்.
நாரதர் கிராமம் கிராமமாகவும், நகரம் நகரமாகவும் மருந்து தேடியலைந்தார். பலதடவைகள் வதந்திகளை நம்பிச் சென்று பின் விசாரித்துப் பார்த்து ஏமாற்ற மடைந்தார். இவையெல்லாவற்றிற்கும் பிறகு, அருகில் உள்ள நகரமொன்றில் வைத்தியர் ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். இம்முறை அவர் கேள்விப்பட்ட கதைகளில் உண்மை இருந்தது போல தோன்றியது அந்த வைத்தியரின் வீட்டுக்கான வழியை அறிந்து அங்கு சென்று அவரது அறையில் அவரைக் கணடாா. நாரதரின் கதையைக் கவனத்துடன் கேட்டார் அந்த முதிய வைத்தியர். 'இந்த நிலையில் இன்னும் அதிகமாக எனது மனைவியை நான் காதலிக்கிறேன். ' என்று கூறி முடித்தார். "அவளுடைய புண்களைக் கழுவிச் சுத்தமாக்க சித்த மாயிருக்கிறேன். எனக்கு அதனால் வியாதி தொற்றி இறக்கக்கூட சித்தமாயிருக்கிறேன். ஆனால் அவளோ வெட்கப்பட்டு, தன்னைத்தானே அலட்சியப்படுத்திக் கொள்வதோடு என்னைப் பற்றியும் பயப்படுகிறாள். உங்களால் அவளைக் குணப்படுத்த முடியுமா வைத்தியரே???
வைத்தியர் தனது மேசையிலிருந்த மண் விளக்கில் ஏதோ ஒரு எண்ணெயை ஊற்றினார். பின் அதன் திரியைப் பற்றவைத்து அதன் மீது மந்திரத்தை சொல்லத் தொடங்கினார். பிறகு நாரதரிடம் திரும்பி வந்தார்.
"இந்த விளக்கு எரிந்து முடிகிற நேரத்தில் உனது மனைவி குணமாகிவிடுவாள். அவளிடம் திரும்பிப்போ’ என்று கூறினார். நாரதர் அவருக்கு ஆழ்ந்த நன்றியைச் செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.
இரண்டு நாள் பயணத்திற்குப் பின்பு குடிசையை நெருங்கிக் கொண்டிருந்த நாரதரைச் சந்திப்பதற்காகத்

Page 21
தாயாரும், தந்தையும் வெளியே ஒடி வந்தார்கள். ஆனாலும் அவரை வாழ்த்தியபோது அவர்களது முகங்கள் சோர்வடைந்து காணப்பட்டன. ‘'நீ மிகவும் களைப்படைந்து போயிருக்கிறாய் என் மகனே" தந்தையார் கூறினார்.
'ஆம் நேற்றிலிருந்து இருபது மைல்கள் நடந்து விட்டேன். அது ஒன்றும் முக்கியமானதல்ல. மாயாவதி எங்கே??? - 「
தந்தையும் தாயும் அமைதியாயிருந்தனர்.
"எங்கே அவள்?' அவளுடைய நோய் இன்னும் குணமாகவில்லையா?*
இப்போதும்கூட பெற்றோர் அமைதியாக இருந்தனர். "எங்கே அவள்?? துர்க்குறி காட்டும் அவர்களது முகத்தைப் பார்த்தபடி கத்தினார்.
"சாகவில்லை. என்று நினைக்கிறேன்."
"சாகவில்லை' தந்தை சொன்னார். 'ஆனால் செத்திருக்கலாம் என ஆசைப்படுகிறேன்."
'நீங்கள் அப்படிக் கூறக்கூடாது' அமைதியாக கடிந்து கொள்ளும் தொனியில் தாய் கூறினாள்.
“என்ன நடந்தது?’ நாரதர் கேட்டார்.
"நீ புறப்பட்டுச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு.? தாய் விளக்கமளித்துக் கொண்டிருந்தாள்.
"திடீரென தொழுநோய் மறைந்துவிட்டது. வைத்தியர் களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ஒருவகை அதிசயமாகத்தான் இருந்தது. அவள் சந்தோஷமாக இருந்தாள். நீங்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வேளை பக்கத்துக் கிராமத்து இளைஞன் ஒருவன் எங்கள் அயலவர் வீட்டிற்குக் குடிவந்தான்." மேலும் நடந்தவற்றைச் சொல்லுவதற்குத் தாய் தயங்குவது போல் தெரிந்தது.
"ஆம்" நாரதர்அவசரப்படுத்தினார். "என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. ' தாய் தொடர்ந்து கூறினாள். 'ஆனால் அவள் அவன் மீது காதல் கொண்டாள். அவளுக்கு வசியமருந்து கொடுத்ததுபோலோ அல்லது மந்திரம் போட்டது போலோ அது இருந்தது. அப்படியான விஷயங்கள் இருப்பது உனக்குத் தெரியும்தானே'
“அதற்குப்பிறகு?"
“அவள் அவனுடன் இங்கு வாழ விரும்பினாள். ஆனால் தகப்பன் அதற்கு அனுமதிக்கவேயில்லை. அதனால் அவள் அவனுடன் போய்விட்டாள்.'

998
"அப்படியானால் குழந்தை?’ நாரதர் கேட்டார்.
“அவள் குழந்தையை விட விரும்பவில்லை. அவர்கள் குழந்தையையும் கூட்டிச் சென்றனர். s
"அவளுக்குத் தொழுநோய் குணமாகாமல் இருந்திருந் தால் நல்லதாய் இருந்திருக்கும். தந்தை கசப்புடன் கூறினார். "அவள் விகாரமாகவும், அழுக்காகவும் இருந்திருந்தால் ஒழுக்கம் கெட்டவளாகியிருக்க மாட்டாள்.'
'நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது', நாரதர் பதில் கூறினார். ఫె
'இது அவளுடைய தவறு அல்ல. நான் அவளை அதிகமாக விரும்பினாலும் கூட எங்களுக்கிடையில் இன்னமும் ஒரு அந்நியத்தன்மை இருந்தது. ஒரு வேளை அந்த மனிதனுடன் அவளுக்கு அது சுலபமாக இருந்திருக்கலாம்." ،ں:> \; தான் கொண்டு வந்த ஆடைப் பொதியைத் தூக்கிக் கொண்டார் நாரதர்.
"அவர்கள் எங்கு போயிருக்கலாம் என்று தெரியுமா என பக்கத்து வீட்டாரைக் கேட்டுப்பார்க்கிறேன்." , 'மூர்க்கத்தனமாக எதையும் செய்துவிடமாட்டாய் தானே எனது மகனே? கவலைப் பட்டுக்கொண்டே தாய் கேட்டாள். "நீ அவளைக் கண்டால் அவனுடன் சண்டை பிடிக்கவோ, அல்லது அவளைக் கொல்லவோ மாட்டாய் தானே. என் மகனே?"
"அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் தாயாரே' நாரதர் கூறினார். "நான் அவளை நிச்சயம் கண்டால் என்னுடன் மீண்டும் திரும்பிவர அவளை இணங்க வைக்க முயல்வேன். முடியாது போனால் அவளுக்கு எந்தவித தீங்கும் செய்யமாட்டேன். அப்படிச் செய் வதிலும் பார்க்க நான் இறந்துவிடுவேன் தாயாரே."
'எல்லா இடங்களுக்கும் நடந்து நீ நன்றாகக் களைத்துப் போய்விட்டாய் மகனே'தாயார் கூறினார்.
"சிறிது நேரமாவது ஒய்வெடுத்துவிட்டுச் சாப்பிடு."
‘'வேண்டாம், நன்றி தாயே, நான் உடனடியாது, போயே ஆகவேண்டும்." கிராமத்தை விட்டுப் பிரிந்து செல்லும் தெருவால் சென்று கொண்டிருந்தார் நாரதர். ஆனால் அதிக தூரம் அவர் செல்லவில்லை. தெருவின் திருப்பத்தை அடைந்ததும் ஆலமரம் ஒன்று அவர் கண்ணுக்குத் தென்பட்டது. அம்மரத்தின் கீழ் ஒரு உருவம் நிற்பதைக் கண்டார். அதற்கு அருகாமையில் சென்ற பொழுது அதை அடையாளம் கண்டு கொண்டார். அது விஷ்ணுவேதான். அடையாளம் கண்டதும், பொங்கி வரும் கடலலைபோல நாரதருக்கு சகலதும் புரிந்தது. . . ." Y
... set

Page 22
Uے "இதைச் செய்ததுதாங்களே என்று இப்போது எனக்குப் புரிகிறது. ’’ மரத்தடிக்கு வந்த நாரதர் கூறினார். 'ஆனால் ஏன்? முதலில் அவளைக் கொன்றீர்கள். பிறகு அவளுடைய அழகை அழித்தீர்கள். அதன் பின் அவளைச் சோரம் போகச் செய்தீர்கள். ஏன் இவற்றையெல்லாம் செய்தீர்கள். நான் மிகச் சாதாரண மகிழ்ச்சியைப் பெறவேண்டிய பொழுதெல்லாம் ஏன் எனக்கு கேடுக்கு மேல் கேடு விளைவித்தீர்கள்?"
"நாரதா கவனி"கடவுள்கூறினார். "உனக்குத் தெரியும் நான் மாயாவதியைப் படைத்தது உன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றவும், மாயையின் வலிமையை நீ புரிந்து கொள்ள உதவவுமே.”*
gel D
"ஆனால் அவளைப் படைத்ததன் மூலமும், அவளை நீ காதல் செய்ய விட்டதன் மூலமும் நீ காதலித்தது வெறும் பொய்த்தோற்றமே தவிர வேறொன்று மில்லை என்பதைக் காட்ட நான் அவளைக் கொல்ல வேண்டியிருந்தது. ஆனால் நீயோ அதன் பிறகு மாயை வலையில் ஆழமாகச் சிக்கிவிட்டாய். நீ மீண்டும் அவளை வேண்டினாய்" "மேலும் தாங்கள் எனக்குத் திரும்பத் தந்தீர்கள். ஏன் அத்துடன் இதை விட்டிருக்கக்கூடாது?’ “ஏனென்றால் மாயையிலிருந்து நீ விடுபட வேண்டு மென மேலும் நான் முயன்று பார்த்தேன். அவளது அழகை அழிக்க அவளுக்கு தொழுநோயைக் கொடுத் தேன். உனது காதலை அது கொன்றுவிடும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்தேன். ஆனால் நீயோ அவளது புற அழகையல்ல அக அழகைத்தான் விரும்பி னாய் என எனக்கு நிரூபித்துவிட்டாய். எனவே மீண்டும் ஒருமுறை நான்முயற்சி செய்ய வேண்டியிருந் தது. இம்முறை அவளை ஒரு சோரம்போனவளாக்கி அவள் மூலமாக உன் காதலை அழிக்க முயன்றேன். ஆனால் நான் தோற்றுவிட்டேன்." 'இப்பொழுது மேலும் என்னுடன் என்ன செய்ய விரும்புகிறீர்கள்??? "நான் விட்டுவிட்டேன். நான் விட்டுவிட்டதற்குக் காரணம் நீ எந்தவகை மனிதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது."
"நான் என்ன வகை???
"உண்மை அன்புடையான்." "அதனுடைய அர்த்தம் தான் என்ன?" விஷ்ணுவின் குரல் ஒரு ஆசிரியருடைய தொனியில் ஒலித்தது. மண்ணுலகப் பொருள் ஒன்றை முழுமை யாகவும் முடிவில்லாமலும் விரும்பும் பலவகை
199

, , in 12 மனிதர்கள் இருக்கிறார்கள். அளவு கடந்து அதை நாடுகிறார்கள். நியாயத்திற்கு எதிராக எத்தகைய தியாகத்தைச் செய்தாவது அதை அடைந்து விடுகிறார் கள். அந்த வழியில் சில மனிதர்கள் செல்வத்தை விரும்புகிறார்கள். சிலர் அதிகாரத்தை விரும்புகிறார் கள். ஆனால் இன்னொரு மனித உயிரில் அன்பு செலுத்தும் ஒருவகை மனிதரும் இருக்கிறார்கள். அது ஆணாகவும் இருக்கலாம் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம். அவர்கள் எல்லா விதமான தடைகளை யும், ஏமாற்றங்களையும், துன்பங்களையும் அதன் காரணமாகப் பெற்றும் தொடர்ந்தும் அன்பு செலுத்து கிறார்கள். நீ அந்தவகை மனிதன் தான்' "அப்படியென்றால் பிரபு' நாரதர் மறுத்துரைக்கத் தொடங்கினார். 'உலக பந்தங்களிலிருந்து விடுபடுவதே எனக்கு வேண்டும் என முதலில் நம்பியிருந்தேனே' "அது எனது கற்பிதம், ஆனால் அதனுடைய அர்த்தம் பெரும்பாலான மக்கள் உலகத்துடன் விட்டுக் கொடுத் தலும், ஒத்துப்போதலிலும் திருப்திப்படுவது போன்று நீயும் திருப்தி அடைவது அல்ல என்பதே அது. நீ உண்மையில் தேடிக் கொண்டிருந்தது என்ன வென்றால் பரிபூரண பக்தியுடன் நீ சரணடைய விரும்பிய ஏதோ ஒன்றைத்தான். அதாவது முழுமை யாக நேசிக்கப்படவேண்டிய ஒன்றுதான் எனக்குத் தேவைப்பட்டது. ஆனால் மாயாவதியைக் காணும் வரையில் நீஅப்படி ஒன்றையும் காணவில்லை. "மேலும் இனி என்னுடன் என்ன செய்யப் போகிறீர்கள் பிரபு? திகிலுடன் கேட்டார் நாரதர். “ஒன்றும் செய்யமாட்டேன் பயப்படாதே. உன்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க என்னிடம் எதுவும் இல்லை. மாயாவதியின் காதலன் அவளை விட்டுச் சென்று விட்டான், குழந்தையுடன் அவள் வீடு திரும்பியுள்ளாள் நீ வருவாய் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறாள். நீ விரும்பிய எளிமை யான சாதாரணமான மகிழ்ச்சியை இனி நான் குழப்ப மாட்டேன்." "இதையும் கேள்’ கடவுள் மீண்டும் உதட்டில் ஒரு நமட்டுப் புன்னகை சுழிக்க தொடர்ந்தார் "வாழ்க்கைச் சக்கரத்துடன் பிணைக்கப்பட்டிருப் பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக் கும் எளிய, சாதாரணமான மகிழ்ச்சியின்மை காத்திருக்கிறது." "அதற்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் அந்தச்சக்கரத்திலிருந்து விடுதலையை நான் இப்போது வேண்டவில்லை, மனித வாழ்வின் இன்பங்களிலும், துன்பங்களிலும் திருப்தி கொள்ளவும், வாழ்க்கையை
தொடர்ச்சி 44-ம் பக்கம்

Page 23
ஓவியர் ம
மஜீட் அலாம் (1967) ஈரான் நாட்டில் கேர்மன் என்ற கிராஃபிக்ஸ் கற்றவர். நுண்கலையில் முதுமாணிப் பட்
ஈரான், இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் கண்காட்சி பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறார். இரண்டு ஆ6 ACM Designers என்ற சிறியதொரு கொம்பனி வைத்தி கஃபேயில் தன் நாலாவது தனிப்பட்ட கண்காட்சியை மட்டுமே வரையப்படுபவை" என்று தன் ஒவியங்கள்
 

bஜட் அலாம்
இடத்தைச் சேர்ந்தவர். ரெஃரான் பல்கலைக் கழகத்தில் டம் எடுத்திருக்கிறார். கள் வைத்திருக்கிறார். 1996 லிருந்து ஈரானின் புகழ்பெற்ற ண்டுகளுக்கு முன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். கனடாவில் ருக்கிறார். வருகிற மாதம் ரொறொன்ரோவில் எக்ஸ்பிறஸ் வைத்திருக்கிறார். "என் ஒவியங்கள் உலக சுதந்திரத்திற்காக பற்றி Humanity என்ற சஞ்சிகையில் கூறி இருக்கிறார்.
-செல்வம்
1998

Page 24
22
乡
1998
| 器
s-aer • • • •■ ■
 
 
 
 
 
 
 
 
 

み ジー 骇 21 22

Page 25
I CDGla CDGO8 gi
| (Ein Tisch ist ein Tisch)
ஜெர்மன் மூல பேற்றர் பிக்ஃ (Peter Bich
மூலமொழியில் தமிழில்: ந. சுசீ
'உண்மையில் திருமதி புளும் அந்தப் பால்க்காரனோடுத இவரது பிரபல்யமான கதை.
"..எழுத்தாலும் கவிதையாலும் அரசியல் பிரச்சனைகள் எழுத்துக்களை நான் விரும்பி எழுதுகின்றேன். எழுத் பிரச்சனையானவன். வாசகர்களோ இன்னும் பிரச்சனை போக நேர்கிறது." என்று தன் எழுத்தைப் பற்றிக்கூறுகிற
சர்வதேச புகழ்பெற்ற குழந்தைக்கான கதைகள் பல இவரு s695Sciro (Dichter erzaelen Kindern, G. Middelhauve
நான் ஒருவயோதிபனைப் பற்றிச்சொல்லப் போகிறேன் படவும் கூடசோம்பற்படும் தூங்கிப்போன முகங்கொண்
அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான ஆளுமில்லை.
சாம்பல் நிறத் தொப்பி, சாம்பல் நிறப் பேண்ட், சாம்பல் நிற கோட், நல்ல குளிர்காலமென்றால் நீள சாம்பல்நிற மேலங்கியை அணிந்து கொள்வான். உலர்ந்து சுருக்கம் விழுந்து போன அவனது மெல்லிய கழுத்தில் அவன் அணியும் வெள்ளை சேட்டின் காலர் அவனுக்குப் பெரிதாக இருக்கும். அந்த வீட்டின் மேல் மாடியில் அவனுக்கு ஓர் அறை இருக்கிறது. ஒருவேளை அவன் திருமணம் முடித்தவனாவும் இருந்திருக்கலாம். அவனுக்கு குழந்தைகளும் இருந் திருக்கலாம். அவன் வேறோரு நகரத்தில் வாழ்ந்தும் இருக்கக்கூடும். அவனும் நிச்சயம் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்திருப்பான். ஆனால் அந்தக் காலம் குழந்தைகளும் பெரியவர்களைப் போலவே உடுத்திய காலம். அந்தக் காலத்துப் பாட்டிகளின் போட்டே ஆல்பத்தில் அந்த மாதிரிக்குழந்தைகளைக் காணலாம்.
ബ
 
 
 

Guppi Glší..Qgao (Peter Bichsel, 19 půl : 1935, லூசேர்ன்) பிரபலம் வாய்ந்த நவீன சுவிஸ் எழுத்தாளர். ஜெர்மன் மொழியில் எழுதுபவர். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் போன்ற வற்றை வளம்படுத்தியவர். மந்தித்து அந்நிய
- : Lbט செல் மாகிக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் l) அன்றாட வாழ்க்கையைத் துல்லியமாகத் தன் Se கதைகளில் கொண்டு வருபவர். தேக்கமடையும் இருந்து இன்றைய சமூக யதார்த்தம் இவரின் கவித்துவ ந்திரன் நடையில் சோகமாய்ச் சொல்லப்படுகிறது.
நான் உறவுகொள்ள விரும்புகிறாள் - அதிகமாகப் பேசப்படும்
ளை அணுகுபவன் நான். பத்திரிகைகளின் கலாச்சாரப்பக்க பத்தி தாளன் என்பவன் இன்றைய சமூகத்திற்கும் அதிகாரத்திற்கும் பானவர்கள். வாசிப்பதால் மனிதன் அதிகாரத்துடன் இணங்கிப் )ார்இவர்.
டையவை. இக்கதை 'குழந்தைகளுக்குக் கவிஞர்கள் சொல்லும் ,Kon, 1966) என்ற ஜெர்மன் நூலில் இருந்து எடுக்கப்படுகிறது.
. இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் ாட ஒருவயோதிபனைப் பற்றி. kr
அவனது அறை இரண்டு நாற்காலிகள், ஒரு மேசை, ஒரு
: தரை விரிப்பு, ஒரு கட்டில், ஒரு அலுமாரி, சிறிய மேசை மீது ஒரு கடிகாரம். அதன் அருகில் பழைய
பத்திரிகைகளும் ஒரு போட்டோவும் ஆல்பமும். சுவரில் ஒரு கண்ணாடியும் ஒரு படமும் தொங்குகின்றன. -
r அந்த வயோதிபன் காலையிலும் மாலையிலும் ஒரு நடைவெளியில் போய்விட்டு வருவான். தன் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஒருசில வார்த்தைகள் பேசுவான். r மாலையில் தன் மேசைமுன் சென்று உட்காந்திருப் பான். இதில் ஒரு போதும் மாற்றமே இருந்ததில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட இப்படித்தான். அவன் மேசைக்கருகில் உட்கார்ந்திருக்கும் போது கடிகாரத் தின் சத்தம் கேட்கும். எப்போதும் அந்தச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அன்று அது வழமைக்கு மாறாக வேறொரு தினமாக ) இருந்தது. குளிருமில்லாத வெப்பமுமில்லாத ஒரு f மிதமான நாள். இளஞ்சூரியன், பறவைகளின் கீச்சுக் r குரல், மகிழ்ச்சி ததும்பும் மனிதர்கள், ஒடியாடித்திரி யும் சிறுவர்கள், அந்த நாளின் உன்னதம் என்ன
1998

Page 26
வென்றால், இவைகளெல்லாம் அந்த வயோதிபனின் கண்களுக்குத் திடீரெனத் தெரிய ஆரம்பித்தது தான். அவன் சிரித்தான்.
எல்லாமே மாறப்போகின்றது போலும் என்று அவன் நினைத்தான்.
தன் சட்டையின் காலரைத் திறந்து விட்டான். தொப்பியைக் கைகளில் எடுத்தான். நடையில் துரிதம், முழங்காலின் ஒயிலான அசைவு, மகிழ்ச்சியான நடை.
இப்போது அவன் தன் வழமையான தெருவில் நடந்தான். பாதையில் கண்ட குழந்தைகளுக்குத் தலை யசைத்தான். தன் வீட்டின் முன்னால் போய் நின்றான். வீட்டின் படிகளில் ஏறினான். தன் சாவியை எடுத்து சாவிக் கொத்தின் ஒசையில் சந்தோஷப்பட்டவாறு தன் அறையைத் திறந்தான்.
ஆனால் அறையில் யாவும் அப்படியே இருந்தன. ஒரு
மேசை, இரண்டு நாற்காலிகள், ஒரு கட்டில்
எப்போதும் போலவே அந்தக் கடிகாரத்தின் சத்தம் மீண்டும். அவன் சந்தோஷம் யாவும் கணப்பொழுதி லேயே கரைந்து போய்விட்டது. உண்மையில், இங்கு எந்த மாற்றத்தையுமே காணோமே.
அவனுக்குக் கெட்ட கோபம் வந்தது. கண்ணாடியில் அவன் தன் முகம் சிவந்ததை, கண்கள் சுருங்கியதைக் கவனித்தான். தன் முஷ்டிகளை மடக்கியவாறே உயர்த்தி மேசையின் மீது ஓங்கிக்குத்தினான். மீண்டும் ஒரு முறை குத்தினான். பின்னர் மேசையில் தாளமிட்ட வாறு அவன் மீண்டும் மீண்டும் உரத்துக் கத்தினான். “மாற்றம் தேவை, மாற்றம் தேவை’. இப்போது அந்தக்கடிகாரத்தின் சத்தம் கேட்கவில்லை. அவன் கைகள் வலிக்க ஆரம்பித்தது. அவன் குரல் அடைத்துப் போனதுபோல்
கடிகாரத்தின் சத்தம் மீண்டும் கேட்கிறது. எதிலுமே மாற்றமில்லை.
"எப்போதும் இதே மேசை’.
'இதே நாற்காலி, இதே கட்டில், இதே படம்,
மேசைக்கு மேசை என்றான். படத்திற்குப் படம் என்றான். கட்டிலுக்குக்கட்டில் நாற்காலிக்கு நாற்காலி ஏன்தான் இப்படி இருக்க வேண்டும்?' பிரான்சு தேசத்தவர்கள் கட்டிலுக்கு "லி' மேசைக்கு "ராப்ல" நாற்காலிக்கு 'சாஸ்" படத்திற்கு "ரப்லோ" என்கிறார் கள். ஆனாலும் அவர்களுக்கு அது விளங்கிவிடுகிறது தானே? சீன தேசத்தவர்களும் எனக்குப் புரியாத தமது மொழியால் ஒருவரை ஒருவர் விளங்கிக் கொள்கிறார்கள்தானே?
1998

"ஏன் கட்டில் படம் எனப்படுவதில்லை.’ இவ்வாறு நினைத்தவாறே சிரித்தான். சத்தமிட்டுச் சிரித்தான். பக்கத்து வீட்டுக்காரர் நடுச்சுவரில் தட்டி "சத்தமாயிருக் கிறது" என்று சொல்லும்வரை சிரித்தான்.
'இதோ மாற்றம் நடைபெறப்போகிறது' என்று உரத்துக் குரலெழுப்பினான். அக்கணத்திலிருந்து அவன் கட்டிலுக்கு "படம்' என்று புதுப் பெயர் வைத்தான்.
இதற்கு இசைவாக "நான்களைததுவாட்ட்ேன், நான் படத்தில் படுக்கப்போகிறேன்’ என்றான். அதிகாலை களில் அடிக்கடி அதிக நேரம் தன் படத்தில் படுத்திருந்த வாறே நாற்காலிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து, பின்னர் நாற்காலிக்கு “கடிகாரம்" என்று சொல்லிக் கொண்டான்.
அவன் தன் படம் விட்டெழுந்து ஆடைகளை அணிந்த பின் கடிகாரத்தில் போய் உட்கார்ந்தான். கைகளை மேசைமீது வைத்தான். ஆனால் மேசை இப்போது மேசையென அழைக்கப்படமாட்டாது. இப்போது அது தரைவிரிப்பாகும். காலை அவன் தன் படம் விட்டெழுந்து ஆடை அணிந்து தரைவிரிப்பின் அருகில் இருந்த கடிகாரத்தில் போய் உட்கார்ந்து, எதற்கு எப்படி
எப்படிப் புதுப்பெயர் வைப்பது எனறு சிந்திக்கலானான்.
கட்டிலுக்கு Lulub
மேசைக்கு தரைவிரிப்பு
நாற்காலிக்கு கடிகாரம்
பத்திரிகைக்கு கட்டில்
கண்ணாடிக்கு நாற்காலி
கடிகாரத்திற்கு போட்டோ ஆல்பம்
r- N படைப்பாற்றல் இல்லாத சமூகம் எழுச்சி கொள்ள முடியாது அம்மா ஐரோப்பாவில் தமிழ் சிறுகதைக்கான ஒரு சஞ்சிகை தொடர்பு: S. Manoharan (Esc. E13)
210, Ave. 8 mai 1945 93150 Blanc Mesnil, Frnace

Page 27
, a - 12
சிங்கள நாடக உலகில் சிறந்த இயக்குனரும், பல தேசிய விருது பெற்ற திரைப்படங்களை இயக்கியவரும், பல தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியவருமான
பராக்கிரம ஈரியல்லயுடன் ஒரு சந்திப்பு 9 இரு திரைப்படங்களையும் பல மேடைநாடக
களையும் நீங்கள் படைத்துள்ளதாக அறிகிறோம் ஆனால் ஒரு திரைப்படத்தை மட்டுமே பார்க்கு வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. இத்திரைப்படத்தில் மூலமாக உங்களை விளங்கிக் கொண்டோம் நீங்கள் சிங்களகலை இலக்கியத்துறைக்கு எவ்வாறு இழுத்துவரப்பட்டீர்கள் என்பதை சிறிது விளக்கமாகக் கூறமுடியுமா?
நான் எனது பள்ளிப் பருவத்தில் கலை பற் அறிந்திருக்கவில்லை. சப்பிரகமுவ நடனக்கை தொடர்பாக எனது தந்தைக்கு ஈடுபாடு இருந்தது எனது தந்தை சப்பிரகவ கலையின் மே பாட்டுக்காக உழைத்தவர். அவருக்கு ஒரு நாடக குழுகூட இருந்தது. நான் மிகச் சிறுவயதா இருக்கும்போதே எனது தாயார் காலமடைந்தா உறவினார்களால் நான் வளர்க்கப்பட்டேன் தந்தையுடன் வளரவில்லை. இதனால் என தந்தையின் கலைப்பணிகளில் எனக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. எனது இவ் ஆர்வ வம்ச ரீதியானதோ, அது எனக்குத் தெரியாது பாடசாலைக் காலத்தில் பாடசாலையின் கை நிகழ்ச்சிகளில் பாடல், நாடகம் போன்றவற்றி ஓரளவில் பங்குபற்றியுள்ளேன். 1969-70ல் க.பொ.த (உயர்தரம்) வகுப்பை நான் பப்பிலியா சுனேத்திரா தேவி பிரிவினையில் படித்து கொண்டிருந்த போது, கலை இலக்கிய தொடர்பாக ஆர்வம் காட்டிய சில ஆசிரியர்களி உறவு எனக்கு ஏற்பட்டது. உதாரணத்திற் கூறுவதாயின் வணக்கத்திற்குரிய கோங்கஸ் தெனி ஆனந்த, இவர் ஒரு பெளத்த மதகுரு, நல்ல கவிஞ இத்தகையோருடனான உறவே எனக்கு கவிதை நாவல் போன்ற இலக்கியத் துறையில் ஆர்வத்ை ஏற்படுத்தியது. இக்காலகட்டத்தில் கூடுதலா வாசிக்கவும் தொடங்கினேன். இதன் பின்ன அரசாங்க மொழித் திணைக்களத்தில் சுருக்கெழு தாளனாகப் பயிற்சியை முடித்துக்கொண்ட எனக்கு 1971ம் ஆண்டு திருகோணமலை கடற்படைத்த சிவில் பிரிவில் சுருக்கெழுத்தாளனாக நியமன கிடைத்தது. இக்காலகட்டத்தில் நான் முத முதலாக புகைப்படக்கலை தொடர்பாக படிக்க தொடங்கினேன். திருகோணமலை அழகா பிரதேசம், சைக்கிளில் எல்லா இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுப்பேன். இக்கா
سلسل خذ

த்
5.
1998
நேர்க IGJOISO
கட்டத்தில் போதிய அளவு நேர அவகாசம் இருந்த தால் கூடுதலாக வாசிக்கவும் தொடங்கினேன். கொழும்புக்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் புத்தகக்கடைகளுக்குச் சென்று நூல்களை வாங்கிச் செல்வேன். இக்காலத்தில் கொழும்புக்கு வருவது கூட நாடகங்கள் திரைப்படங்களைப் பார்ப்பதற் காகவே. அரச திரைப்டடக் கூட்டுத்தாபனம் சர்வதேசத் திரைப்பட விழாக்களை இக்காலத்தி லேயே ஒழுங்கு செய்தது. இத்திரைப்பட விழாக் களைப் பார்க்கக் கூடியவாறே எனது கொழும்புப் பயணத்தையும் அமைத்துக் கொள்வேன். திருகோணமலைக்குப் பின்னர் வவுனியா நீதி மன்றத்திற்கு சுருக்கெழுத்தாளனாக எனக்கு இட மாற்றம் கிடைத்தது. நான் வவுனியாவில் இருக்கும் போது மூன்று வாரகாலம் விடுமுறை பெற்று கொழும்புக்குச் சென்று கலைப்படங்கள் தொடர் பாகப் படித்தேன். இங்குதான் சினிமா தொடர்பான ஆரம்ப அறிவைப் பெற்றுக் கொண்டேன். 1973ல்
கொழும்பு சிறுகைத்தொழிற் திணைக்களத்திற்கு
இடமாற்றம் கிடைத்தது. நான் கொழும்புக்கு வந்தவுடன் லயனல் வென்ட் தியேட்டரில் இருந்த அரங்க கலைமன்றத்தில் பிரவேசம் பெற்றதோடு திரு. லால் ஜாகொட என்பவரிடம் புகைப்படக் கலை தொடர்பாகவும் பயிலத் தெர்டங்கினேன். நான் கொழும்புக்கு வந்ததால் நாடகங்கள் சினிமாக்களைப் பார்க்கவும், கூடுதலாக நூல்களாக வாசிக்கவும் இதன் மூலம் அறிவை வளர்க்கவும் வாய்ப்புக் கிட்டியது. அத்தோடு அரங்க கலை மன்றத்தில் இருந்த எனது இரு ஆசிரியர்களை தம்ம ஜாகொட, காமினி ஹத்தேட்டுவேகம ஆகி யோரிடம் நாடகக் கலை பற்றியும் படித்தேன். 'காமினி ஹத்தொட்டுவேகம" வுடன் இணைந்து 1974ம் ஆண்டு தொடக்கம் வீதி நாடகங்களை நடாத்தினோம். 1976ம் ஆண்டு எனது முதலாவது நாடகமான "செக்குவ' நாடகத்தை தயாரித்து மேடையேற்றினேன். அவ்வருட தேசிய நாடக விழாவில் சிறந்த நாடகத்திற்கான விருது இந்நாடகத்திற்கே கிடைத்தது. அதன் பின்னர்Albert Camu 65 air The Just Assassins 67 girl 1605 'வினிஷ்ச்சய’ என்னும் மொழிபெயர்ப்பு நாடகமாக மேடையேற்றினேன்.
1980-81-ல் எனது முதலாவது குறுந்திரைப்படமான "பலமுவனியாஹாஅந்திமயா'(The First&The Last)

Page 28
26
தயாரிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நாடகப் பிரிவில் தயாரிப்பாளராக நியமனம் கிடைத்தது. இக்காலத்தில் Brechet இன் கலிலியோ நாடகமும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு மேடை யேற்றப்பட்டது. தொடர் ரெலி நாடகங்களான "லாஹிரு தவசக்", "யசோ ராவய'வும் குறு ரெலி நாடகங்களான "கட இம', 'சசர சயுரன்’ உம் தயாரிக்கப்பட்டன. பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிந்த ரெலி நாடகங்களாக இவை இருந்ததோடு அனைத்து ரெலி நாடகங்களுக்கும் விருதுகளும் கிடைத்தன.
1986-ல் எனது முதலாவது திரைப்படமான "சிறிமதுர' தயாரிக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தான் "அயோமா' வைத் தயாரித்தேன். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு படைப்புகள் வெளிவந்தன. உதாரணத்திற்கு கூறுவதாயின் ஜப்பானுக்குச் சென்று "கவுக்கி", "நோ' எனப் படும் மரபு ரீதியான நடனத்தை படித்ததோடு அவ்விரு நடனங்கள் பற்றியும் இரு விவரண வீடியோக்களையும் தயாரித்தேன்.
உங்களது படைப்புகளின் தெரிவு என்ன? அதாவது என்ன காரணத்தைக் கொண்டு படைப்புகளைத் தெரிவு செய்கிறீர்கள்? உதாரணத்திற்குக் கூறுவதா யின்; உங்களுடைய ஒரு படைப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. அதில் வாழ்க்கை பற்றிய மிகச் சோகத்தை, பெண்ணின் சோகத்தைப் பற்றி மட்டும் அல்ல, வாழ்க்கை பற்றிய மிகச் சோகத்தைத்தான் காட்டுகிறீர்கள். சில படைப்பாளிகள் இன்னொரு பக்கத்தையும் காட்டுவதற்கு அதாவது வாழ்க்கை பற்றிய நம்பிக்கையைக் காட்டுவார்கள். உங்களு டைய படைப்பு அப்படி அல்ல. அந்தப் பெண் தனது கதையை ஒரு கொட்டிலில் இருந்து கூறுவதிலேயே படத்தை முடிக்கிறீர்கள். அந்தப் பெண்ணுக்கு எந்த நம்பிக்கையுமே இல்லை. இதிலிருந்து தான் நான் இக்கேள்வியைக் கேட்கிறேன். ஒரு நாடகத்திற்கு அல்லது ஒரு சினிமாவிற்கு நீங்கள் ஒன்றை தெரிவு செய்யும் போது அதற்கான காரணம் என்ன? "அயோமா'வை, அல்லது உங்களது முதலாவது திரைப்பட மான "சிறிமதுர' வை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன?
O நான் ஒரு குறுந்திரைப்படம் உட்பட மூன்று திரைப்படங்களைத் தயாரித்துள்ளேன். அக்குறுந் திரைப்படம் மட்டும்தான் அதன் கரு உட்பட எல்லாமே எனது என்று கூறக்கூடியது. அதன்
1998

I, In, 2.
பின்னர் சினிமாத் திரைப்படம் ஒன்றை, கதையின் கரு, திரைக்கதை எல்லாம் என்னுடையதாகப் படைக்க முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. "சிறிமதுரா" திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். என்னால் எழுதப்பட்ட கதை திரைக்கதையுடன் தயாரிப்பாளர் ஒருவரை நாடிச் சென்றேன். அவர் 'சைமன் நவகத்தேகம்’ (ஒரு பிரபல்ய சிங்கள எழுத்தாளர்) எழுதிய கதை ஒன்று உள்ளது. அதைத் தயாரிப்போமா என கேட்டு "சிறிமதுர' கதையை என்னிடம் தந்தார். அதைக் கொண்டு சென்று வாசிக்கும்போது அநேகக் குறைபாடுகள் கண்டேன். ஆனாலும் திரைப்படம் ஒன்று தயாரிக்க வேண்டுமென்ற ஆவலாலும் அதைச் சரியாகப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தாலும் அக்கதையைத் திரும்பத் திரும்ப வாசித்து, அடிப்படை மாற்றம் எதையும் செய்யாமல் கதையை மீண்டும் எழுதினேன். இவ்வாறுதான் "சிறிமதுர' தயாரிக்கப்பட்டது. அதே தயாரிப்பாளரை இன்னும் ஒரு கதையுடன் திரும்பவும் அணுகினேன். அவர் இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் பலரது நாவல்களை என்னிடம் தந்து அவற்றை வாசிக்குமாறும் அவைகளில் ஒன்றைத் தெரிவு செய்து தயாரிப் போம் என்றும் கூறினார். இச்சந்தர்ப்பத்திலும் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்னும் ஆவலால் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். இவ்வாறு தயாரிக்கப் பட்டதுதான் "அயோமா' இதற்கான காரணம் அவ்வாறான பெண்களைப் பற்றிய கதைகளை நாம் தினமும் எமது சமுதாயத்தில் கேள்விப்படுகிறோம். பத்திரிகைகளில் படிக்கிறோம். இத்திரைப் படத்தைப் பார்த்த சிலர், இந்தத் திரைப்படத்தில் எந்தவித போராட்ட குணாம்சத்தையுமே காட்ட வில்லை. இதுதான் எனது தலைவிதி என அப்பெண் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறாள். இலங்கைச் சமுதாயம் இவ்வாறான ஒன்றல்ல. முதலாவது பெண் பிரதமர் பதவியேற்றதும் இலங்கையில்தான். அன்னையர் முன்னணி போன்ற மாதர் அமைப்புகள் இங்கு செயல்பட்டன என்றவாறான விமர்சனங்கள் வந்தன. இலங்கை யில் முதலாவது பெண் பிரதமர் பதவியேற்கும் முன்னரேயே குமேனி போன்ற தலைவர்கள் இந் நாட்டில் இருந்திருக்கின்றனர். பொலனருவ யில் லீலாவதி, மற்றும் அருளா போன்ற ஆட்சித்தலைவி கள் எமது நாட்டில் இருந்தனர். பூரீமாவோ பண்டார நாயக பதவி ஏற்றது எமது நாட்டில் வேரூன்றியுள்ள பிரபுத்துவ சிந்தனைகள் காரணமாகவே ஆகும்.
жаннан

Page 29
li, I at - 12
எஸ். டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக கொல்லப் பட்ட பின்னர் ஏற்பட்ட அனுதாபம் காரணமாக என்றும் கூறலாம். ஆனால் இலங்கையில் பெண் களின் பொதுவான நிலமை, இலங்கை இந்தியா உட்பட அநேக ஆசிய நாடுகளில் பெண்கள் பெரும் பாலும் சகலவிதமான சுரண்டலுக்கும் உள்ளாகி றார்கள். இலங்கைக்கு வெளிநாட்டுச் செலா வணியைப் பெற்றுத் தருகின்ற பிரதான பண்டமாக இன்று பெண்களே உள்ளனர். இதுவே மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இதுதவிர இவர்களில் பெரும்பாலோருக்கு வழி தவறி அந்தரிக்க நேரிடுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிப்பதற்காக இலங்கையின் பிரதான உடுதுணித் தொழிற்சாலையில் தொழில் புரியும் பெண்கள்தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. தூரப் பிரதேசங்களிலிருந்து வேலைக்காக இந்தத் தொழிற்சாலைக்கு வந்துள்ள இளம் பெண்களில் 75%ற்கும் மேற்பட்டோ துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை அந்த ஆய்வு மூலம் அறிய முடிந்தது அக்கிராமங்களில் உள்ள வர்த்தகர் போன்ற பெரும் புள்ளிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இவர்கள் துஷ்பி யோகம் செய்த நபர்கள் மூலமாக தொழிலைட் பெற்றுள்ளார்கள். இந்நிலைமையிலிருந்து விடுபடு வது தெரியக்கூடியதாகவில்லை. இந்நிலையை பற்றிய தெளிவோ அல்லது இந்நிலையிலிருந்து விடுபடுவதற்குப் போராடக்கூடிய அரசியல் ரீதியான, சமுதாயரீதியான ஸ்தாபனமோ இல்லை இருக்கின்ற என்.ஜி.ஓ. பெண்கள் அமைப்புகள் கொழும்புடன் மட்டுப்படுவதோடு மேற்கத்தியட பாணியில் செயல்படுவதால்தூரத்துக் கிராமங்களில் உள்ள அயோமா போன்ற பெண்களை இவ்வமைப்புகளால் அண்மிக்கவும் முடியாது. இது தொடர்பாக வேலை செய்யக்கூடிய தெளிவ ஆற்றல்கூட இவர்களுக்குக் கிடையாது. இது வேறாக ஸ்தாபனப்பட்டுச் செய்ய வேண்டிய வேலையாகும். இது பற்றி எனக்கிருந்த அறிவு கமையவே "அயோமா" கதையைத் திரை படத்திற்காகத் தேர்ந்தெடுத்தேன். பெண் விடு தலைக்காகச் செய்யப்படும் வேலைகள் தொடர்பா எனக்கு எவ்வித அனுபவமும் இல்லை. இதற்கு காரணம் இலங்கையில் அவ்வாறான வேலை எதுவும் நடைபெறுவதும் இல்லை. இவ்வாறான பெண்கள் எமது சமுதாயத்தில் வாழ்கின்றார்கள் என்பதையே "அயோமா' மூலம் சித்தரித்து காட்டியுள்ளேன். திரைப்படத்தின் இறுதியில் நான் இன்னும் வாழ்கிறேன்." என அயோமா கூறிய
wasan

Ꮧ
1998
பின்னர் "அயோமா'வின் உருவப்படத்தை திரை யில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்ததற்குக் காரணம் பார்வைாளர்கள் மனதில் அதை வலியுறுத்து வதற்கே ஆகும்.
உங்களது இந்தத் திரைப்படம் மூலமாக சமூக பிரக்ஞை உள்ள திரைப்படங்களையே நீங்கள் படைப்பதாக உணர முடிகிறது. தென்னிந்திய வணிக சினிமாவின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் இவ்வாறான சமூக பிரக்ஞை உள்ள திரைப்படங்கள் வியாபாரரீதியாகத்தாக்குப்பிடிக்குமா? நிதிரீதியாக கை சுடுபடாமல் தொடர்ந்து இவ்வாறான சமூகப் படங்களை எடுக்கும் சூழ்நிலை நிலவுகிறதா? சிங்கள இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான திரைப்படங்கள் தொடர்பாக வரவேற்பு உள்ளதா?
இலங்கை நிலமை பெரும்பாலும் வேறுபட்டது. உதாரணத்திற்குக் கூறுவதாயின் மேன்மைத்தர திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துக் காண்பிப்பதற் காக பிரிதொரு சுற்று உண்டு. எனது "சிறிமதுர' திரைப்படம் இச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு பிரான்சு நாட்டின் NANTES சர்வதேச திரைப்பட விழாவில் இறுதி வட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 படங்களில் ஒன்றாகும். அத்தோடு "சரசவி** திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனருக்கான விருதுகளோடு 8 விருதுகளைப் பெற்ற படமாகும். இத்திரைப்படம் 100 நாட்களைத் தாண்டிக் காண்பிக்கப்பட்டதோடு நல்ல இலாபத்தையும் சம்பாதித்தது. இன்னும் கூறுவதானால் 1977க்கு முற்பட்ட காலத்தில் தரமான வணிகத் திரைப்படங்கள் இலங்கையில் தயாரிக்கப் பட்டன. தென்னிந்தியாவில் பாலுமகேந்திரா, மணிரத்தினம் போன்றவர்களால் தயாரிக்கப்படு கின்ற வணிகத் திரைப்படங்களின் தரத்தில் தயாரிக் கப்பட்டன. 1977ன் பின்னர் இந்நிலைமை மாறியது. வணிகத் திரைப்படங்கள் சீர்கேடடையும் போது அநேகப் பார்வையாளர்கள் இம்மேன்மைத்தர திரைப்படங்களை நோக்கியே செல்லத் தொடங்கி னர். கூடுதலான வசூலைப் பெற்றதும் இம் மேன்மைத்தர திரைப்படங்களே ஆகும். இன்னும் ஒரு உதாரணம் கூறுவதாயின் நல்ல தரமான இந்தியத் திரைப்படமான பிறவி இலங்கையின் பல நகரங்களில் காண்பிக்கப்பட்டது. இத்திரைப்படம் காண்பிக்கப்பட்ட சகல மண்டபங்களும் பார்வை யாளர்களால் நிரம்பி இருந்தது. நுழைவுச் சீட்டு இன்றி பார்வையாளர்கள் திரும்பிச் சென்ற சம்பவங்கள் கூட உண்டு. சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு இந்தியத்திரைப்படங்கள்சத்தியஜித்ரே
யின் திரைப்படங்கள் காண்பிக்கப்படும் போதும்

Page 30
நிலமை இவ்வாறேயாகும். விருதுகள் பெற்ற ஏனைய நாட்டுத் திரைப்படங்கள், உதாரணத்திற்கு ஈரான் நாட்டுத் திரைப்படங்களைக் கூறலாம். இவைகள் காண்பிக்கப்படும்போதும் நுழைவுச் சீட்டுக்கள் பெறுவதும் கூட கஷ்டமானதாக இருக்கும். உயர்தரமான, நிர்மாண ரீதியான திரைப் படங்களுக்கு இலங்சையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. சமூகப் பிரச்சனைகளை சித்தரித்துக் காட்டுகின்ற, உதாரணத்திற்குக் கூறுவதாயின் "அயோமா', தர்மசிறி பண்டாரநாயகவின் பவதுக்க', 'பவகர்ம மற்றும் 'சுத்திலாகே கத்தாவ" போன்ற திரைப்படங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இப்பொழுது இருப்பது வேறு பிரச்சனை யாகும். கொழும்பில் நிலவுகின்ற பாதுகாப்பு அற்ற தன்மையாகும். இதுதான் பார்வையாளர்கள் தொடர்பான உண்மையான நிலமை.
அடுத்ததாக சிங்கள நாடகங்கள் தொடர்பாக சிறிது கூற முடியுமா? எவ்வாறான நாடகங்களை நீங்கள் தயாரித்திருக்கிறீர்கள்? சிங்கள நாடகங்கள் தொடர் பாக உங்கள் பங்களிப்பு என்ன?
இலங்கையில் நாடகக்கலை சுதந்திரமான ஒருகலை யாகத்தான், அதாவது சினிமாவை விட சுதந்திர மானகலையாகவே வளர்ந்து வந்தது. தணிக்கைகள் மிகவும் குறைவாகும். தணிக்கைச் சபை மிகவும் மோசமாகச் செயல்பட்ட காலத்தில் கூட, அனு பவம் மிக்க மற்றும் இளம் தலைமுறை நாடகக் கலைஞர்கள் ஏதோ ஒரு இடைவெளியில் நுழைந்து மேடைநாடகங்களை வீதி நாடகங்களாகவாவது தயாரித்தனர். சினிமாவைப் போன்று அரங்கக் கட்டுப்பாட்டுச் சபையின் தடைகளுக்கு இவை உட்படவில்லை. ஆதலால் இலங்கையில் நாடகக் கலை 1956ன்பின் நன்றாக வளர்ந்தது. இக்கால கட்டத்தில் தான் நாடகக் கலையின் முன்னோடியான கலாநிதி சரச்சந்திர, மிகவும் உயர்ந்த நாடகங்களான அவரது "மனமே", சிங்கபாகு உட்பட பல நாடகங்களைத் தயாரித்தார். அவ் அலையினால், அதாவது அவர் ஏற்றிவைத்த விளக்கின் ஒளியில் அனேக நாடகக் கலைஞர்கள் முன்னுக்கு வந்தனர். உதாரணத்திற்கு தயானந்த குணவர்த்தன, சுகதபால சில்வா, சந்திரசேன தசநாயக, தம்ம ஜாகொட, ஹென்றி ஜயசேன போன்ற நாடகப் படைப்பாளிகளைக் கூறலாம். 1970ன் ஆரம்பம்வரை அழகுடன் தொடர்புடைய நாடகங்களே படைக்கப்பட்டன. 1970தசாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து இளைஞர் அலை நாடகத் துறையில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியதோடு நாடகத்துறையில் மட்டுமின்றி கவிதை நாவல்கள் போன்றவற்றிலும் அரசியல், சமூகப் பிரச்சனை
1998

Errome களை சித்தரிக்கும் படைப்புகள் கூடுதலாக வெளிவரத் தொடங்கின. கேமசிறி லியனகே என்னும் நாடகப் படைப்பாளியே இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். அவரது ‘சுது அந்தாகே நாடகத்தின் பின்னர் தான் அரசியல் நாடகங்கள் படைக்கப்பட்டன. அதன் பின்னர் 1977 ஆகும்போது வருடமொன்றிற்கு 200 தொடக்கம் 300 வரையான நாடகங்கள் படைக்கப்படும் அளவிற்கு நாடகக்கலையில் மலர்ச்சி ஏற்பட்டது. இவ் இளம் படைப்பாளிகளே இதில் முன்னணி வகித்தனர். சிங்களம், தமிழ் இரண்டுக்கும் இது பொருத்தமானது. 1976ம் ஆண்டின் அரசாங்க நாடக விழாப்போட்டியில் சிங்கள நாடகங்கள் மேடையேற்றப்படும் போது ஏழு அல்லது எட்டு தமிழ்நாடகங்களும் மேடை ஏற்றப்பட்டன. 1977ம் ஆண்டிற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையே அனைத்துக் கலைகளின் வளர்ச்சிக்கும் குறிப்பாக திரைப்பட நாடகக் கலை வளர்ச்சிக்கும் தடையாக அமைந்தது. அதற்குப் பின்னர் ரூபவாஹினி ஆரம்பிக்கப் பட்டது. இதன் ஆரம்பத்துடன் நாடகக் கலையி லும், திரைப்படக் கலையிலும் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. திரைப்படக் கலையின் பின்னோக் கிய பயணம் இதிலிருந்துதான் ஆரம்பமாகியது என எண்ணுகிறேன். இதுவரை காலமும்தூரப்பிரதேசங் களுக்குச் சென்று நாடகங்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் இவ்வீழ்ச்சியுடன் பயணமும் மட்டுப் பட்டது. இதுவரை காலமும் மண்டப வாசலில் நுழைவுச்சீட்டு விற்பனை செய்து நாடகங்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் பார்வையாளர் களுக்கு சுமையாக இருக்கவில்லை. பொருளாதார வீழ்ச்சியுடன் நுழைவுச் சீட்டுக்காக பணம் செலவு செய்வது கஷ்டமாகியது. நுழைவுச்சீட்டுக் கட்டணம் அதிகரித்ததும் இதற்குக் காரணமாகும். ஆகக் குறைந்த நுழைவுக் கட்டணம் ரூபாய் 25 ஆகவும் ஆகக்கூடிய நுழைவுக் கட்டணம் ரூபாய்100 ஆகவும் உயர்ந்துள்ளது. 1980 தசாப்தத்தின் ஆரம் பத்துடன் இப்பொருளாதார சுமை காரணமாக பார்வையாளருக்கு முன்னரைப் போல் நாடகங் களைப் பார்க்க முடியாது போயிற்று. இதனால் நாடகக் கலைக்கு அண்மிக்க இருந்த பார்வையாளர் களுக்கு இருந்த மட்டுப்படுத்தல்கள் மேலும் இறுகிக்கொண்டன, இடைவெளியும் விரிவடைந் தது. சில நாடகங்கள் வணிக சுயரூபத்துடன் ஒத்துழைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டன. திரைப்படத்தின் வளர்ச்சியுடன் நாடகக்கலை திடீரென ஒருவித நெருக்கடிக்கு முகம் கொடுத்தது அநேக நாடுகளில் இடம் பெற்ற ஒன்றுதான். ஆனால் காலப்போக்கில் திரைப்படம், நாடகம் ஆகிய இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணம்

Page 31
செய்யத் தொடங்கின. இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடகங்களிலும் இதைத்தான் காணக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறு தான் டெலிவிஷன் பிரவேசித்து பாரிய மட்டத்தில் சன சமூகத்திற்கு தாகத்தை ஏற்படுத்தும் போது திரைப் படக்கலையும், நாடகக்கலையும் ஒருவித நெருக்கடிக்கு முகம் கொடுத்து பின்னர் தமக்கே உரியதான பாதையில் பயணத்தைத் தேர்ந் தெடுக்கின்றன. இது எல்லா நாடுகளுக்கும் பொருத்தமானது. கனடா போன்ற நாட்டை எடுத்துப் பார்த்தாலும் தனக்கே உரித்தான சட்ட திட்டங்கள் பிரமானங்கள் வர்த்தக சுயரூபம் ஆகியவற்றுடன் ஒரு ஊடகமாகப் பயணம் செய்கின்றது. அவ்வவ் அரசாங்கங்களும் இவ் வாறான சந்தர்ப்பங்களில் நிலவிய கலைகளைப் பாதுகாப்பதற்காக அதன் இருப்புக்காகப் பல் வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தாயும் காணக்கூடியதாய் உள்ளது. இலங்கையில் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை. 1960ல் இருந்து சினிமாவும் நாடகமும் வேறாகவே நிலவி வந்தன. இந்த கலைகளைப் பேணுவதற்காக, பாதுகாப்பதற்காக எந்தவிதக் கொள்கை ரீதியான திட்டங்களும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. கலைஞர்கள், விசேடமாக நாடகக் கலையை எடுத்துக் கொண்டால், தமது அர்ப்பணிப்புகள் மூலமாகவே இதனைப் பேணிப் பாதுகாத்தார்கள் தாம் தனிப்பட்ட முறையில் பணத்தைத் திரட்டி அல்லது நண்பர்களது உதவியுடன் நாடகக் கலையின் இருப்புக்காகத் தம்மை அர்ப்பணித்தே நாடகங்களைப் படைத்தனர். இலங்கையில் நாடகம், திரைப்படம் தொடர்பாக கற்பதற்கு ஒரு கல்லூரி இருக்கவில்லை. இப்பொழுது யாழ்ட பாணப் பல்கலைக் கழகத்தில் மட்டும் நாடக கலையைப் பட்டப் படிப்புக்காகப் படிக்க முடியும் க.பொ.த. (உயர்தரம்) வகுப்புக்களில் நாடக கலை, அரங்கக்கலை என ஒருபாடமாக உள்ளது அதற்கு மேல் படிப்பதற்கு எதுவுமே இல்லை ஆகக் குறைந்தது நூலகம் ஒன்று கூட இல்லை வெளிநாடுகளில் இடம்பெறும் மாற்றங்களை விருத்திகளை அவர்களது பரிசோதனைகளை அறிவதற்கு, பயிலுவதற்கு இலங்கையில் எவ்வி வசதியும் இல்லை. நாடகக்கலை படைப்பதற் நிதி ரீதியான வசதிகளும் வழங்கப்படுவதில்லை இத்துறைகள் தொடர்பாக இவ்வாறான பல பிர சனைகள் இருக்கின்றன. இக்குறைபாடுகள் நிலவு போது நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடையு போது கலைகள் வீழ்ச்சி பெறுவதும் தானாகே இடம் பெறுகிறது. இவற்றைப் பாதுகாப்பதற்கா எவ்வித வேலைத் திட்டமும் இல்லை.

29 9 தமிழ் நாடகங்களை எடுத்துப் பார்த்தால்; குறிப் பிட்ட சில இயக்குனர்கள்; பாலுமகேந்திரா, தாசியஸ் போன்ற படைப்பாளிகள் கொழும்பில் நாடகங்களை மேடைஏற்றும்போது அவற்றைப் பார்ப்பதற்கென ஒரு பார்வையாளர் கூட்டத்தை உருவாக்கி இருந்தனர். அவ்வாறான ஒரு பார்வை யாளர் கூட்டத்தை தீவிர (சிங்கள) நாடகப் படைப் பாளிகள் உருவாக்கியுள்ளார்களா?
O உதாரணத்திற்குக் கூறுவதாயின் எனது அனைத்து நாடகங்களும் பிரதான நகரங்கள் அனைத்திலும் மேடையேற்றப்பட்டு என்னால் 1976-ல் தயாரிக்கப் பட்டு விருது பெற்ற நாடகம், மீண்டும் இவ் வருடம் என்னால் தயாரிக்கப்பட்டது. இந்நாடகம், 1976-ல் ஆண்டைப் போன்றே நாட்டின் சகல நகரங்களிலும் இப்பொழுது மேடையேற்றப்பட்டு வருகிறது. நான் எனது சகோதரர். கலைஞர் H.A. பெரேராவுடன் இணைந்து தயாரித்த "LittíC5un Gst' 65ait '66pigs' (an Accidental Death of An Anarchist) நாடகம் 200க்கும் மேற்பட்டதடவை மேடையேற்றப்பட்டதோடு இன்னும் தொடர்ந்து f காண்பிக்கப்பட்டு வருகிறது. ஹென்றி ஜயசேன் வின் "ஹ"னு வட்டயே காதவ (Chalk Circle) 30 வருடகாலமாக 1000க்கும் (ஆயிரம்) மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டன. டொக்டரின் (கலாநிதி சரச்சந்திர) "மனமே", "சிங்கபாகு" நாடகங் களை எடுத்துப் பார்த்தாலும் நிலமை இதுதான் 'யார் இந்த நாடகத்தை தயாரித்தது என்பதில் பார்வை யாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்தான். இந்தப் படைப்பாளியின் நாடகமாக இருந்தால் அது நல்லதாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். படைப்பாளிகளைப் போன்றே நடிகர், நடிகையர் திறமையானவர்களா தமக்கு பிடித்தமானவர்களா என்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். அவ்வாறே கதையிலும் கவனம் செலுத்துகின்றனர். உதாரணத் துக்கு கூறுவதாயின் நிஹால் சில்வாவின் 'சாஜன் நல்ல தம்பி’ என்னும் நாடகம். இந்நாடகம் மேடையேறும் போது நிஹால் சில்வா பெயர் பெற்ற நடிகனாக இருக்கவில்லை. ஆனால் இந் நாடகத்தில் இருந்த ஹாஷ்யதன்மை காரணமாக ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்நாடகம் ஜனரஞ்சகமடைந்தது, இன்று நிஹால் சில்வா காலமடைந்து விட்டார், வேறொருவர் இப்பாத் திரத்தைச் செய்கின்றார். முன்னரைப் போன்றே இந்நாடகம் மேடையேற்றப்பட்டு வருகிறது.
0 உங்களது பதிலில் இருந்து சிங்கள ரசிகர்கள் கலைப் பிரக்ஞை கூடியவர்கள் என்று தெரிகிறது. படைப் பாளி என்ற வகையில் அல்ல பார்வையாளன் என்ற
1998

Page 32
30
ரீதியில் இக்கேள்வியைக் கேட்கிறேன், உங்களுக்கு அல்லது சிங்கள இரசிகர்களுக்கு தமிழ் நாடகங் களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறதா? ஏனெனில் இலங்கையில் தமிழ் சினிமா என்று ஒன்று வளரவில்லை. ஒரு ஐந்தாறு படங்கள்தான் வெளிவந்திருக்கும். ஆனால் நாடகம் தொடர்பாக நீண்ட கால வரலாறு, பாரம்பரியம் உண்டு. இரண்டுபக்கத்திலும் இருக்கிறது. வித்தியானந்தனின் மரபு ரீதியான நாடகங்கள், பாலேந்திராதாசியஸின் தற்கால நாடகங்கள். நீங்கள் இந்நாடகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் இது எவ்வாறன அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது? பார்க்காவிடில் பதில் அவசியம் இல்லை.
1976-ன் தேசிய நாடகவிழாவில் மூன்று நாடகங் களைப் பார்த்திருக்கிறேன். கடந்த 10, 15 வருட காலமாக ஒரு தசாப்தமாக தென் இலங்கை மக்களும் வட இலங்கை மக்களும் ஒரு யுத்த நெருக்கடிக்குள் இருக்கிறார்கள். அரசாங்கமே மக்கள் மீது இவ்யுத்தத்தைத் திணிக்கும் நிலையும் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிரான கருத்து கலை ரீதியாக தென் இலங்கையில் நிலவுகின்றதா? சாதாரண மக்களிடமிருந்து கலை ரீதியாக ஏதாவது தென்படும் அறிகுறி இருக்கின்றதா? அல்லது இப் போக்கோடு ஓடுகிறார்களா? அல்லது இதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஏதாவது கலைப் படைப்பு, நாடகம் வெளிவந்துள்ளதா?
ஏற்றுக் கொள்ளப்பட்ட கலை வடிவங்களான திரைப்படம், நாடகங்களில் அவ்வாறன ஒன்றைக் காணமுடியவில்லை. 1978 காலத்தில் காமினி பொன்சேக 'சருங்கல” என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார். அதன் பின்னர் ‘கொட்டி வல்கய என்னும் திரைப்படத்தையும் தயாரித்தார். முதலா வது திரைப்படம் மனித சுபாவம் தொடர்பான தாகவே இருந்தது. யுத்தம் தொடர்பானதாக இருக்க வில்லை. அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட ‘கொட்டிவல்கய', நொமியன மிளிஸ்ஸ", என்பவையும் மேலெழுந்தவாரியானதே தவிர ஆழமானதாக இருக்கவில்லை. நாடகக் கலையை எடுத்துப் பார்த்தாலும் இடதுசாரிப் போக்குடைய நாடகங்களிலும் இப்பிரச்சனை பற்றி சித்தரித்துக் காட்டப்படுகின்ற நாடகம் இல்லையென்றே கூறலாம். வீதி நாடகங்கள் ஓரளவு தயாரிக்கப் பட்டுள்ளன. வீதி நாடகங்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றால் சிறுசிறு கூட்டத்தினருக்குத்தான் காட்டப்படுகின்றது. பாரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாது. ஏற்றுக் கொள்ளப்பட்ட கலைகளைப் போன்று கூடுதலான சனத்தையும் கவரமாட்டாது.
1998

யுத்தம் தொடர்பாக சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, மனிதம் தொடர்பாக ஏதோ ஒரு அளவுக்குப் பணி ஆற்றியுள்ளது என்று கூறுவதா யின் நாடக்கலையில் அது வீதி நாடகமாகத்தான் இருக்கும். இதற்குக் காரணங்களும் உண்டு. இப் பிரச்சனை தொடர்பாக படைப்பொன்றைத் தயாரிக்க வெளிக்கிடும் சகல சந்தர்பங்களிலும் ஒன்றுடன் தொடர்புபடுத்தி இனங்காட்டப் படுகின்ற நிலமை காணப்பட்டது. உதாரணத் திற்குக் கூறுவதாயின் நான் ரூபாவஹினியில் இருந்த காலத்தில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டவுடன் யாழ்ப்பாணம் சென்று ரெலி நாடகம் ஒன்றைத் தயாரிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் யாழ்ப்பாணம் சென்றவுடன் ரூபவாஹினியில் இருந்த சிலர் நான் புலியுடன் தொடர்புடையவன் என்னும் கதையை கட்டி விட்டார்கள். இது பற்றிக் கேள்விப்பட்டவர்களும் என்னிடம் ஏன் இவ்வேலையைச் செய்கிறாய் என்னும் கேள்வியையே கேட்டனர். இப்பிரச்சனை தொடர்பாகப் படைக்க வெளிக்கிட்ட அனைத்து கலைஞர்களும் இந்நிலமைக்கு முகங்கொடுத்தனர். இப்பொழுது இச்சூழ்நிலையில் மாற்றம் ஏற் பட்டுள்ளது. அரசாங்க மட்டத்திலும் பொதுவாக சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் மட்டத்திலும் இவ்யுத்தத்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சில அரசியல் லாப நோக்கம் கொண்ட இனவாதக் குழுவினர் மட்டுமே இச்சூழ்நிலையைத் தொடர்ந்து தக்கவைக்க எண்ணுகின்றனர். இவ்வருடத்தில் இன்னும் சாதகமான சூழ்நிலை தான் நிலவுகிறது. இது அரசாங்க மட்டத்திலும் கலைஞர் மட்டத்திலும் காணப்படுகிறது. உதாரணத்துக்குக் கூறுவதாயின் இப்பிரச்சனை தொடர்பாக ரூபவாஹினியில் ரெலி நாடகங்கள் சில தயாரிக்கப்பட்டுள்ளன. காமினி பொன்சேகா கடந்த அரசாங்கத்திலும் சரி இவ் அரசாங்கத்திலும் சரி முக்கிய நபராக இருந்த காரணத்தினாலேயே அவர் இத் திரைப்படங்களைத் தயாரிக்கக்கூடியதாக இருந்தது. நான் மேர்ச் அமைப்பில் (இனங்களுக்கிடையே நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு) இருந்த காலத்தில் 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர்; தமிழர்களுக்கு கொழும்பில் இருக்க முடியாத சூழ்நிலை. திரும்பி வந்தவர்களும் பீதியுடனேயே வாழ்ந்தனர். இச்சூழல் தொடர்பான ரெலி நாடகம் ஒன்று தயாரிக்குமாறு என்னைக் கேட்டனர். கொழும்பில் வாழும் தமிழ்க் குடும்பம் ஒன்று தொடர்பானது. திரும்பக் கூடிய குடும்பம் ஒன்று தனது கடந்த கால

Page 33
in 12
நினைவுகளுடன் ஒரு இரவை பீதியுடன் கழிப் பதையே நான் ரெலி நாடகமாகத் தயாரித்தேன். நான் ரூபவாஹினியில் இருந்த காலத்திலேயே இதைச் செய்தேன். இக்கால கட்டத்தில் சி.ஐ.டி பொலிசார் என்னைப் பின் தொடர்ந்தனர் என்பதை நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து அறிந்துகொண்டேன். இவ்ரெலி நாடகத்தின் கசெட் நாடாக்களை தொழிற் சங்க காரியாலயம் ஒன்றில் வைத்து, திடீரென வெளிநாடு செல்ல நேரிட்டது. துரதிஷ்டவசமாக அக் கசெட் நாடாக்களில் ஒன்று எவராலோ கையாடப்பட்டு விட்டது.
இவ்யுத்தம் அனைவரையும் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. ஒரு கலைஞன் என்ற ரீதியில் இதைப் பதிவுசெய்வதற்கு, சில வேளை இவ்யுத்தம் நாளைக்கு முடிவடையலாம், இம்மனித அவலங்களை பதிவு செய்வதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா?
நான் படைப்பாளி என்ற மட்டத்திலேயே கதைக் கிறேன். படைப்பாளி நிலவும் சமுதாயத்திலிருந்து அல்லது நாட்டிலிருந்து விடுபட முடியாது. அத்துடன் கருத்துத் தெரிவிப்பதும் நிலவும் யதார்த் தத்திற்கு ஏற்பவேயாகும். இது ஒரு கட்சிக்கு அல்லது சிங்கள மக்களுக்கு மட்டும் உரித்தான பிரச்சனை அல்ல. அவ்வாறே தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான பிரச்சனையும் அல்ல. ஒரு நாட்டில் வாழ்ந்த, தமது சுகதுக்கங்களைப் பகிர்ந்து வாழ்ந்து வந்த ஜன சமூகத்தில் பிழையான அரசியலால் உருவாக்கப்பட்ட பிரச்சனையாகத் தான் நான் இதைக் காண்கிறேன். இப்பிழையான அரசியலை அகற்றுவதாயின் இருபகுதி மக்களை யும் பற்றிய உண்மையான சுபாவத்தை தெளிவு
ரொறொன்ரோவின் **காலச்சுவடு??
anf Lib
யூன் 20, சனிக்கிழமை மாலை மல்வெண் நூலக முன்றலின் பசுந்தரையில், மரநிழலில் காலச்சுவடு சஞ்சிகை பற்றிய கூட்டம் இடம் பெற்றது. அதை ஒழுங்கு செய்த "காலம்’ ஆசிரியர் செல்வத்தின் தலைமையில் என்.கே. மகாலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் "காலச்சுவடு ' சஞ்சிகை பற்றி தயாரித்து வந்து பேசினார். ஆர்வமும் இலக்கிய அக்கறை யும் உள்ள இருபது பேர் கலந்து கொண்ட அக்கூட்டத்திற்கு 600 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மொன்றியலில் இருந்து இருவர் பிரத்தியேகமாக வந்தது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. மணிக்கொடி, எழுந்து ஆகியவற்றின் பரம்பரையில் காலச்சுவடு வெளி வந்து மேலும் ஆழ, அகலித்து தன்னை இனம் கண்டு கொள்கிறது என்பது நிருபணம் ஆகிறது. 是

998
படுத்த வேண்டும். இது அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும். கலைஞர்களுக்கு மட்டுமல்ல அமைப்புக்களுக்கும் உரிய பிரச்சனையாகும். இப்பொழுதாவது இதைச் செய்ய வேண்டும். எவ்வாறு செய்வது என்பதே கேள்வி. விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்யுத்தம் நடை பெற வேண்டியதில்லை. 1986ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் நான் யாழ்ப்பாணம் சென்றேன். யுத்தத்தின் மூலம் எவருமே வெற்றிகாண முடியாது என்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். வடமராட்சி போன்ற பிரதேசத்துக்குச் செல்லும்போது வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந் தது. அப்பகுதி மக்கள் ஏன் எங்களை கடலில் இருந்தும் ஆகாயத்திலிருந்தும் தரையாலும் தாக்குகிறார்கள். நாம் செய்த தவறுதான் என்ன எனக் கேட்டனர். அவ்வாறே மனித நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் இராணுவத்தினர் காவல் புரிவதையும் காணமுடிந்தது. இவ்வாறு எவ்வளவு காலத்திற்குத்தான் நிர்வாகம் செய்ய முடியும். தெற்கிலும் கிராமங்களின் நிலைமை இவ்வாறு தான். சுற்றுப்புறச் சூழல் அழிகின்றது. இது. தனியாக உரையாடப்பட வேண்டிய அளவிற்கு பாரதூரமான பிரச்சனையாகியுள்ளது. இது சிங்கள தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை அல்ல. தவறான அரசியலால் உருவாக்கப்பட்ட பிரச்சனை. இதன் தீர்வுக்கு எல்லோருமே செயலாற்ற வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
தமிழாக்கம் : செ. லோகநாதன்
இக்கோடையில்.
போகும் வழி நெடுக
மதில்களில் மினுங்கும்
கண்ணாடிச் சில்லுகள்
கிழியும் தசை வேண்டி
வேட்கையுடன் அழைக்கின்றன
பார்க்கப் பார்க்க
கைகளில் துளிர்த்துவரும்
உதிரத் துளிகள்
உறைய முடியாமல்
ஆவியாகின்றன
இக்கோட்டையில்
-ேமனுஷ்ய புத்திரன்

Page 34
தொலைந்து போன ஆட்டுக்
அ. முத்துலிங்கத்தின் "அக்கா’ சிறுகதைத் தொகுதியை 60 களில் வாசித்தேன். அப்போது இலங்கையில் வெளிவந்த நல்ல சிறுகதைகளில் அவருடையவையும் முன்னணியில் நின்றன. புரட்சிகரக் கதைகள் எதையும் எழுதாமல் நல்ல கதைகள் அத்தொகுதியில் வெளி வந்தன. அது அக்காலச் சிறப்பு நிகழ்வு. கொக்குவில் கிராமத்தையும் அங்கு நடமாடிய மாந்தர்களையும் உயிர்ப்புடன் நடமாட விட்டவர் முத்துலிங்கம். அச் சிறுகதைத் தொகுதியுடன் எழுத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு தன்னை யாழ்ப்பாணத்தானுக்கே உரிய தொழில், பதவி, உழைப்பு, உத்தியோகம் என்ற கைங்கரியங்களில் மூழ்கி தன்னைத் தொலைத்து விட்டவர், இன்று திரும்பவும் தன்னைக் கண்டு பிடித்திருக்கிறார் திகடசக்கரம் என்ற சிறுகதைத் தொகுதி மூலம்.
"திகடசக்கரம்’ சிறுகதைத் தொகுதியை வாசித்த போது அவரின் யாழ்ப்பாண மொழியில் நான் சில இடங்களில் மெய்மறந்திருக்கிறேன். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த யாழ்ப்பாணத்து மொழியும் சொற்களும் நடப்புக்களும், மரபுகளும் சில சிறுகதைகளில் நடமாடி வருவதை என்னால் மறக்க முடியவில்லை. எஸ். பொன்னுத்துரையின் நனவிடை தோய்தலில் எப்படி யாழ்ப்பாண நகரத்தையும் அதன் அக்கால மொழியையும் ரசித்தோமோ அதே போல யாழ்ப்பாண கிராமத்தையும் அதன் வழக்கங்களையும் சொல்லாட்சியையும் இதில் தரிசிக்கிறோம். இம் மொழி படித்தவர்களின் எழுத்து நடை அல்ல. சாதாரண மக்க்ளிடம் புழங்கி வரும் சொற்கள். வழக் கங்கள் அவையே இக்கதைகளில் என்னை ஈடுபட வைத்த முதற் காரணம். கதை இரண்டாம் காரணம்.
அவரின் கதைகளை சிறுகதைகளின் உருவத்துடன் வந்திருக்கின்றனவா இல்லையா என்ற பண்டிதத்தனத் துடன் பார்க்காமல் அவற்றை உண்மையான உரை நடைச் சித்திரங்களாக எடுத்துப் பார்த்துச் சுவைக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். மறக்க முடியாத சித்திரங்கள். சுந்தரின் சவாரித்தம்பர் போல முத்துலிங்கத்தின் உரைநடைச்சித்திரங்கள் நம் மனதில் நிற்பவை. பார்வதி, செல்லரம்மான், வையன்னா கானா, ஆகிய கதைகள் மறக்க முடியாத யாழ்ப்பாணக் கிராமம். திரும்பவும் 30,40 வருசத்துக்கு முன்னுள்ள யாழ்ப்பாணத்துக்குள் நுழைப்பது, அதன் ஒழுங்கை
199

I, a n
குட்டி மீண்டும் கத்துகிறது
களுக்கூடாகச் சென்று வந்த அனுபவம் திரும்பவும் வந்தது. ஏக்கம் நிறைந்த பின்னோக்கிப் பார்க்கும் gшлLb (Nostalgia)
எடுத்துக் கொண்ட விசயத்தைத் தெளிவாக விளங்க வைப்பதற்கு பல கதைகளை உதாரணங்களுடன் எடுத்துச் சொல்வதாக இருந்த போதிலும் அவை சிறுகதை உருவத்தை கோட்டை விட்டு பிரசங்கப் பாணியில் இழுத்துக் கொண்டு போவதைப் போல இருந்தாலும் வாசிப்பதில் அலுப்பைத் தரவில்லை.
திகடசக்கரம் சிறுகதைக்கே உரிய உருவத்துடன் வந்திருந்த போதிலும் மற்றக் கதைகளில் இருந்த நகைச்சுவை உணர்விலும் பார்க்க யாழ்ப்பாணத் தானுக்கே உரிய மேதாவித்தனத்துக்கு - தான் கெட்டிக் காரன் என்று புழுகுவதற்கு - ஆசிரியர் வக்காலத்து வாங்குவது போல எனக்குத் தெரிகிறது. கந்தபுராணத் தையும் கச்சியப்பரையும் காட்டி, யாழ்ப்பாணத்தானும் தான் செய்வதில் தானே பெருமைப்பட்டுக் கொண்டு தன் முதுகைக் தானே தட்டிக் கொள்ளும் ஒரு தற் பெருமைச்சாதி. அதையே முத்துலிங்கமும் செய்திருப் பதாகவே எனக்குப் படுகிறது.
வையன்னா கானா கதையில் ரசனைகளையும் காட்டி யார் யார் எப்படி எப்படி அனுபவித்தார்கள் என்பதை கூறிக் கொண்டே போகிறார்ஆசிரியர். அவை எடுத்துக் காட்டுக் கதைகள் போல. இறுதியில் காம ரசத்தை ஏன் எடுத்துச் சொல்லாமல் விட்டு விட்டார் என்று என் வம்பு மனம் கேட்டுக் கொண்டது. அதுவும் யாழ்ப் பாணத்தானுக்கே உரிய கிடுகு வேலிக்குள், படலைக் குள், வீட்டுக்குள் ரசிப்பதற்காக, அனுபவிப்பதற்காக விடப்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டேன். அல்லது அதை யாழ்ப்பாணத்தான் அனுபவிப் பதில்லையோ என்று கேட்கத் தோன்றுகின்றது.
2
திகட சக்கரம் சிறுகதைத் தொகுதி கிடைத்த பின் முத்துலிங்கத்தின் 'வம்சவிருத்தி’ சிறுகதைத் தொகுதி கிடைத்தது. மித்ர வெளியீடு. எஸ்.பொ.வின் முன்னிட்டு டனும் மாலனின் முன்னுரையுடனும் வந்துள்ள பதினொரு புதிய கதைகளைக் கொண்டிருக்கிறது.
அ. முத்துலிங்கத்தின் பாணிக் கதைகள் முழுவதும் காணப்படுகிறது. அதாவது அவரின் எளிய, ஆனால் செழிப்பான யாழ்ப்பாண நடை, நகைச்சுவை, புரிய

Page 35
வைப்பதற்காக கதைக்குள் கதைகளை இராமாயண உபகதைகள் போலச் சொல்லும் திறன் ஆகியவை அவரின் பாணி. - ነ ,ጳ፧
அத்துடன், அவரின் கதைகள் புதிய பரிமாணம் ஒன்றையும் தமிழ்ச் சிறுகதைக்கும் இலக்கியத்திற்கும் கொடுத்திருக்கிறது. அதாவது, அவரின் சர்வதேச அனுபவம் அதைப் புகலிட அனுபவம் என்று சொல்ல மாட்டேன். அகதியாகச் சென்றவர்கள் எழுதும் கதைகள் அதற்குள் அடங்கிவிடுகிறதாலும் அவர்களின் கதைகளில் சோகங்களும் பிரலாபங்களும் அதிக இடத்தைப் பிடித்துவிடுகின்றன. ஆனால் முத்து லிங்கத்தின் கதைகள் அப்படிப்பட்டவையும் அல்ல. அவற்றைவிட வேறான பல்நாட்டுக் கலாச்சாரங் களுடன் தொழில் பார்ப்பதற்காக அவற்றுள் வாழ்ந்து பெற்ற அனுபவம். ஒரு சில காலமே படிப்பதற்காக அல்லது தொழில் பார்ப்பதற்காக வாழ்ந்து மேலோட்டமாக அறிந்த அனுபவத்திலும் பார்க்க இன்னும் ஆழ்ந்த இலக்கியவாதியின் அனுபவம், கலைஞரின் கண்ணோட்டத்துடன் அனுபவித்து யாழ்ப்பாணத்துக் கண்ணுடனும், மொழியுடனும் எழுதி ஒரு புதுப் பரிமாணத்துடன் சிறுகதை இலக்கியத்திற்கு சிறப்பைக் கொடுத்திருக்கிறார். இன்னும் ஒன்றும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக் கிறது. அதாவது, பழைய இலக்கியத்துடனான பயிற்சி மட்டுமல்லாது புதிய விஞ்ஞான அறிவுடைய Lugigi Gop-gigsa, JITitigl (MultiDisciplinary KnOWildege) அதனடியாக உலகத்தையும் வாழ்க்கையையும் பார்ப்பது ஃபீனிக்ஸ் பறவை, ஞானம், முழுவிலக்கு, முடிச்சு போன்ற கதைகள் நவீன அறிவியல் விஷயங்களையும் கதைக்குள் நுழைத்துவிடும் கதைகள். அக்கா தொகுதியில் கொக்குவில் கிராமத்திற்குள் நின்ற அன்றைய தமிழன்முத்துலிங்கம் இன்றைய ஈழத் தமிழன் போல் உலகம் பூராவும் உலா வந்து-விரும்பியோ விரும்பாமலோ- புதிய அனுபவங் களைச் சிறுகதையில் காட்டி நிற்கிறார். இனிவரும் தமிழ் இலக்கியத்தின் அனுபவங்கள் விசாலித்துப் போவதை இவர் எழுத்துக்கள் தொட்டுக்காட்டு கின்றன. ஆட்டுக்குட்டி தொலைந்து விட்டது என்று நினைத்திருந்தோம். திரும்பவும் அது மே. மே. கத்தி தன் இருப்பைக் காட்டும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. அது முத்துலிங்கம், அவரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.
-அழகுக்கோன்
 

காற்றில் கலந்த பேரோசை
3
சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பு ஒர் சிறுகுறிப்பு
சுந்தர ராமசாமி இதுவரை எழுதிய கட்டுரைகள், முன்னுரை கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்ட நூலே காற்றில் கலந்த பேரோசை, ஜீவாவைப் பற்றி எழுதிய கட்டுரையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகவும் போடப்பட்டுள்ளது. அக்கட்டுரைகளுக்கான விமர்சனமாக இச் சிறுகுறிப்பு
அமையாது.
தன்னை அறிந்து கொள்ளும் தேடல் முயற்சியே எழுத்து. குறிப்பாகக் கட்டுரைகள், அப்போது புதிய வெளிச்சங்கள் புதிய திசைகளிலிருந்தும் வந்து சேரும் உண்மை சுரா இயற்கை யான கலைஞன். இயல்பாக, உரத்துச் சிந்தித்திருக்கிறார். தன் எண்ணங்களுக்கு நாணயக் கயிறு பூட்டாமல், அலைய விட்டு கூர்மையாக சிந்தித்திருக்கிறார் என்பது அவருடைய கட்டுரை களிலிருந்து புலனாகும் செய்தி. அதனால் அவருக்கு என்று ஒர் கருத்துலகம் உருவாகியிருக்கிறது. அது முற்போக்கான சிந்தனாவாதிகளின் கருத்துலகத்திற்கு எவ்வகையிலும் முரண்படாத ஒன்று. ஆனால் அதே வேளை தனித்துவமானது. நீண்டகாலச்சிந்தனையின் அடியாக தனக்கென ஒரு பாணியை எழுத்திலும் கொண்டுவந்திருக்கிறார். அவ்வெழுத்து சில வேளை மூடு மந்திரம் போலவும் இருக்கிறது என்பது சில வாசகரின் நியாயமான எண்ணம். ஆனால் அது சிலவேளை வாசகனுக்கு எரிச்சலைக் கொடுக்கும் என்பதும் உண்மை. தன் சிந்தனா உலகிற்கு எங்களைக் கூட்டிச் செல்வதற்குப் பதிலாக எங்களை இடைவெளியில் அந்தோ என்று விட்டுச் சென்று விடுகின்றாரே என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுகிறது. இது அவருடைய பிற்காலச் சிறுகதைகளில் தூக்கலாகத் தெரியும் பண்பு. ஆனால், அவரின் எழுத்துடன் நீண்ட காலம் பரிச்சய முள்ள, நுண்ணிய கூர்மையுள்ள ஈடுபாடுள்ள ஒரு வாசகனுக்கு அவரின் சிந்தனா உலகம் ஆச்சரியமான, அழகிய அக உலகை உடையது என்பது புரியும். அவரின் எழுத்துக்கள் ஆத்மார்த்தமானவை. சத்தியத்தைத் தேடி உண்மையாக அலசிச் சிந்தித்தவை. சமூக விமர்சனங்கள் உண்மையான மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டவை. நீண்ட காலம் வாசித்தும், சிந்தித்தும் தன்னையே திருத்தியும் புதுப்பித்தும் முடிவுக்கு வந்தவை. அவை உண்மையின் வாசலை கண்ணகியைப் போல் காற்சிலம்புடன் நின்று காவலாளியிடம் அரசனைப் பார்க்க வேண்டுமென்று தலைவிரிகோலமாக நிற்பவை. சத்தியத்தை நிரூபிக்கும் வரை தலைமயிரை முடிக்கப் போவதில்லை என்று ஒற்றைக் காலில் நிற்பவை. அதற்காகவேனும் அவருடைய பக்கத்தையும் கேட்க வேண்டும். சிலவேளை அவர் சொல்லும் பாங்கில் ஓர் ஒழுங்கில்லை என்று தோன்றலாம். அவர் ஒரு கலைஞன். காலரீதியாக கலைஞனுக்குரிய வகையில் எழுந்தமானமாக, உயிர்ப்புடன், இதய சுத்தியுடன் பிறந்த மேனியுடன் பலவற்றையும் சொல்கிறார். அவற்றை அப்படியே வாசித்துப் பயனடைவது, சுவைப்பது நல்லதோர் அனுபவம்.
-மணிவாசகன்
998

Page 36
34
SUNIFILoOVVE
FINE FU
Bedroom - Living RC All other House
நம்ப முடியாத மிகக் குறைந்த விலைகளில்
ஒரு முறை வாருங்கள் உ6
West end (905) 660 4.425 3280Steeles Ave. W., Unit #2, (Jane & Steeles)
199
 

R8B3 (90D,9ID
RNITURE
om - Dining Sets & hold Furniture
ஸ்ாறைதானா பாருங்கள்
East End (416) 609 8556 3024 Kennedy Road (Kennedy & Finch)
s

Page 37
, in in 12
மனித உரிமைகளில் ஆழ்ந்த அக்க R.D. Gauti Grupgu
பெண் * நீ என்னைக் காதலிக்கிறாயா?
ஆண் : ஆம். நான் உன்னைக் காதலிக்கிறேன். பெண் எல்லோரையும் விட?
ஆண் : ஆம், எல்லோரையும் விட
பெண் : இந்த முழு உலகத்தையும் விட?
ஆண் : இந்த முழு உலகத்தையும் விட.
பெண் ; நீ என்னை விரும்புகிறாயா?
ஆண் : ஆம், நான் உன்னை விரும்புகிறேன்.
பெண் : என் அருகில் இருக்க விரும்புகிறாயா?
ஆண் : ஆம், உன் அருகில் இருக்க நான்
விரும்புகிறேன்.
பெண் : என்னைப் பார்க்க நீவிரும்புகிறாயா?
ஆண் : ஆம், உன்னைப் பார்க்க நான்
விரும்புகிறிேன்.
பெண் : நான் மடத்தனமானவள் என்று நீ"
நினைக்கிறாயா?
ஆண் : இல்லை, நீ மடத்தனமானவள் என்று
நான் நினைக்கவில்லை.
பெண் : நான் கவர்ச்சியாக இருக்கிறேன் என்று நீ
நினைக்கிறாயா?
ஆண் : ஆம், நீகவர்ச்சியாக இருக்கிறாய் என்று
நான் நினைக்கிறேன்.
பெண் : நான் உனக்குச்சலிக்கிறேனா?
ஆண் : இல்லை, நீ எனக்குச் சலிக்கவில்லை.
பெண் : என் புருவங்கள் உனக்குப்
பிடித்திருக்கின்றனவா?
ஆண் : ஆம், உன் புருவங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.
பெண் : மிகவும்?
1
9
 
 
 
 

றை கொண்ட உளவியல் மருத்துவர் ܀
Do You Love Me? ... . . . . .
ந்து ஓர் உரையாடல்
தமிழில்: கோபிகிருஷ்ணன்.
ஆண்
பெண்
ஆண்
பெண்
ஆண்
பெண்
ஆண்
பெண்
ஆண்
பெண்
ஆண்
பெண் :
ஆண்
பெண் :
ஆண்
பெண்
ஆண்
பெண்
ஆண்
பெண்
மிகவும். བླ་
எது உனக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது?
ஒன்றை மட்டும் சொன்னேனானால் இன்றொன்று பொறாமைப்படும்.
நீ சொல்லியே ஆக வேண்டும்.
அவை இரண்டும் அழகாக இருக்கின்றன.
சத்தியமாக?
சத்தியமாக.
எனக்கு அழகான இமை முடிகள் உள்ளனவா?
ஆம், அழகான இமை முடிகள்.
அவ்வளவுதானா?
அவை அழகாக இருக்கின்றன.
என்னை முகர்ந்து பார்க்க நீ விரும்புகிறாயா?
ஆம், உன்னை முகர்ந்து பார்க்க நான் விரும்புகிறேன்.
என் வாசனைத் திரவியம் உனக்குப் பிடித்திருக்கிறதா?
ஆம், உன் வாசனைத் திரவியம் எனக்குப்
பிடித்திருக்கிறது.
எனக்கு நல்ல சுவை இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா?
ஆம், உனக்கு நல்ல சுவை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நான் திறமைசாலி என்று நீ நினைக்கிறாயா?
ஆம், நீதிறமைசாலி என்று நான் நினைக்கிறேன்.
நான் சோம்பேறி என்று நீ நினைக்க வில்லை?
98

Page 38
ஆண் : இல்லை, நீ சோம்பேறி என்று நான்
நினைக்கவில்லை.
பெண் : என்னைத் தொட நீ விரும்புகிறாயா?
ஆண் * ஆம்,உன்னைத்தொடநான்விரும்புகிறேன்.
பெண் : நான் வேடிக்கையாளவள் என்று நீ
நினைக்கிறாயா?
ஆண் : மிகவும் அழகான விதத்தில் மட்டும்.
பெண் : என்னைப் பார்த்து நீ சிரிக்கிறாயா?
ஆண் : இல்லை, உன்னைப் பார்த்து நான் சிரிக்க
வில்லை.
பெண் : உண்மையிலேயே நீ என்னைக்
காதலிக்கிறாயா?
ஆண் ஆம், உண்மையிலேயே நான் உன்னைக்
காதலிக்கிறேன்.
SGODL 16:55,
ஒரு மனிதனின் நா
ஆசிரியர் கனேடியன் நியூட
ரொறெ
556
காத்திரமான படைப்புகளைத் தன்னகத்தே ( 

Page 39
, in - 12
 

37

Page 40
NERATOR FINANGA
BRO
3. We represent oldest, leading, well
managed mutual and stock insurance Co
D3èWe Shop around, the BEST for our clien
needs, affordability, and choice.
We arrange all type Insurance
13 எம்மால் சகலவித காப்புறுதிகளும் உலகில் கி காப்புறுதி ஸ்தாபனங்களில், நியாயமான வின் உத்தரவாதத்துடன், உங்கள் விருப்பத்திற்கல உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக் வண்ணம், ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
3 ஆயுள் காப்புறுதிக்கு விசேட ஆலோனைகள்
உண்டு.
Life Insurance All kinds sguisit still gig Commercial, siggest Auto
வாகனம்
Disability வலது குறைந்தோர் HOľThe வீடு
Trawel பிரயானம்
Industrial தொழிற்சாலை Mortgage அட்மானம் Education கல்வித்திட்டம் Mutual Funds முதலீட்டுத்திட்டம் Segregated Funds நிதிசேமிப்புத்திட்டம் Health சுகாதாரம்"
RRSP ஓய்வூதியத் திட்டம் nWestments மூலதனம்
Thirteen Continuous Years in கனடாவில் 18 வருட காப்புறுதி அனுபவமுள்ளத உங்களுக்கு உண்டு. சகல காப்புறுதி !
19
 
 
 
 

high
INSUDRANGÉ SVG
KERS
Tmplanies.
S
சிறந்த
லயில்,
LDI A. Weluppillai
(Insurance Broker) காப்புறுதி ஆலோசகர்
சர்வதேச காப்புறுதி நிதிச் சேவை
Call Or Write - VEL அழையுங்கள் - வேல்
2190 Warden AWe. Suit # 203 (Warden & Sheppard) Scarborough, Ont.
M1T 1 V6 Tel: (416) 499-9596 Fax: (416) 499-9382
Canadian Insurance Industry மிழரின் ஸ்தாபனம். எப்போதும் சிறந்த சேவைகள் விளக்கங்களும் தமிழில் வழங்கப்படும்.
98

Page 41
Q N7. ቧሯb‛
தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்; மரத்தில் தொங்கும் பிணத்தை கீழே வீழ்த்தி - தோளில் சுமந்துகொண்டு முன்னேறினான். இதனைப் பார்த்த வேதாளம் எள்ளிநகையாடியது. அதனைசட்டைசெய்யாது முன்னேறினான்; விக்கிரமாதித்தன். வேதாளம் எக்காளமாய் சிரித்தது.
"நில். விக்கிரமாதித்தா நில்!??
விக்கிரமாதித்தன் காதில் வாங்கிக்கொண்டதாய் இல்லை.
"இப்படி எத்தனை காலத்துக்குத்தான் பிணத்தைக் காதல்கொள்வாய்? உயிருள்ளவற்றில் உனக்கு அக்கறையில்லையா? பிணத்துக்கும் எனக்கும்தான் சம்பந்தம்."
வேதாளத்தின் பேச்சில் ஏதோ நெருடிற்று. விக்கிர மாதித்தன் நிதானித்து தலையை மாத்திரம் லேசாய் திருப்பி; பின் பார்த்தான். வேதாளம்; ஒய்யாரமாய் முருங்கை மரத்தில் - வளைந்த கிளை ஒன்றில் சாய்ந் திருந்தது. அதன் வால் நீளமாய்த் தரையைத் தொட்டிருந்தது.
"விக்கிரமாதித்தா...! உனக்கோர் பெண்ணின் கதையொன்று சொல்லப் போகிறேன். அவள் வாழ்வில் ஏற்பட்ட வாழ்வியல் துயரச் சிக்கலின் முடிச்சை; நீதான் அவிழ்க்க வேண்டும். அல்லாது போனால் உன்தலை சுக்குநூறாக வெடித்துச்சிதறும்."
வேதாளம் சொல்ல விக்கிரமாதித்தன் முகத்தில் சலனங்கள் ஏதுமின்றி நிதானமாய் இருந்தது. ஆயினும் லேசாய் மனதில் சலிப்புத் தட்டிற்று. இத்தனை காலமாய் எத்தனை கதை கேட்டாயிற்று. கேட்டு
பதிலும் சொல்லியாயிற்று.
விக்கிரமாதித்தனை மீண்டும் ஏமாற்றி; பிணத்தைப் பறித்துக் கொள்ளலாம் என்று வேதாளத்துக்குப் புரிந்துவிட்டது போலும். கொடுப்புக்குள் புன்னகைத் துக் கொண்டு கதை சொல்லத் தொடங்கிற்று.
19

98
"யாழ்ப்பாணம்; யாழ்ப்பாணம் என்றோர் குபேரப் பட்டணம். வளம் கொழிக்காது போனாலும் செல்வம் கொழிக்கும் செல்வந்த நகரம். அங்கு குமரவேல் என்கின்ற ஏழை உபாத்தியாயருக்கு அமுதா என்கின்ற ஆரணங்கு மகள். அழகில் சிறந்தவள். அறிவிலும் தான். முப்பதைத்தாண்டி முதிர் கன்னியென்றும் அவளோர் பழமுதிர்ச்சோலை."
வேதாளத்துக்கு விக்கல் வந்துவிட்டது போலும். கதையை நிறுத்திவிட்டு உச்சாணிக் கொம்பில் போய் உட்கார்ந்து கொண்டது. விக்கிரமாதித்தன்சுவாரஸ்யம் ஆகிவிட்டவன் போன்று மீதிக்கதை கேட்க மரத்தை அண்ணார்ந்து பார்த்தான். வேதாளம் வேறெங்கோ வெறித்தது. கும்மிருட்டு என்றபோதிலும் வேதாளம் வெள்ளை நிறம் என்பதால் விக்கிரமாதிதனுக்கு அது தெரிந்தது.
லேசாய்க் கோபம் வந்தது அவனுக்கு.
"ஏய் வேதாளமே கீழ்க்கிளைக்கு வா. வந்து மீதிக்கதை சொல். என் கருமங்களை நிறைவேற்றி விட்டு அந்தப்புரம் செல்ல வேண்டும். சேடிகள் எல்லாம் என்னைக்காணாது திண்டாடப் போகின்றார்கள்."
வேதாளம் கீழ் இறங்கி வந்தது. "அங்கே பார் விக்கிரமாதித்தா'
அது காட்டிய திசையில் சிதை எரிந்து கொண்டிருந்தது. எதுவும் புரியாது வெறுமையாய் வேதாளத்தை பார்த்தான் விக்கிரமாதித்தன். "சிதையொளியில் பார் விக்கிரமாதித்தா. காஞ்சின மரத்தடியில்."
பார்த்தான். ஆமாம்! யாரோ அங்கு முக்காடு போட்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. அதிர்ந்த விக்கிரமாதித்தன் பிணத்தைக் கீழே போட்டுவிட்டு உறைவாளை. வேகமாய் உருவினான்.
"வேண்டாம் விக்கிரமாதித்தா. வாளை உறையுள் போடு. அவள்தான் அமுதா. ' வேதாளம் சொல்ல வாளை உறையுள்செருகிவிட்டு அவளருகே நெருங்கிச் சென்றான்.

Page 42
நெருங்கியவன் வர, அவள் எழுந்து நின்றாள். சிதை யொளியில் அவள் உருவம் தெரியஅதிர்ந்து போனான் விக்கிரமாதித்தன்.
'ஏய் வேதாளமே... ' அதிவேகமாய் அவளில் ஆத்திரம்.
ஒளியும் காற்றும் கலந்த வேகத்தில் - முருங்கை மரம் விட்டு கரைந்து நகர்ந்த வேதாளம்; காஞ்சின மரக்கிளையில் குந்திற்று.
அவள் மிகப் பயந்தவளாய் மரத்தை ஒட்டி ஒதுங்கி நின்றாள்.
"ஏய் வேதாளமே நீ என்னைச் சீண்டிப் பார்க்கிறாயா? இப்பெண்ணென்ன பூலோகவாசியா? பின்னிச் சடைந்த கூந்தலும் ஒய்யாரமாய் நிமிர்ந்த முலையும், புதிரான ஆடையும் வாடையும் கொண்ட இப் பெண்ணென்ன பூலோகவாசியா? என்னை ஏமாற்றி பிணத்தைப் பறிக்க சதி செய்கின்றர்ய்." சொல்லிக் கொண்டே நகர்ந்த விக்கிரமாதித்தன் பிணத்தைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு நகரத் தொடங்கினான்.
"நில் விக்கிரமாதித்தா!"
நிற்கவில்லை.
"இத்தனைகாலமாய் நீ என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா? நீ நினைப்பது தவறு விக்கிர மாதித்தா. அவள் ஒன்றும் வேற்றுக்கிரக தேவதையோ என்னால் உருவாக்கப்பட்ட மாயப்பிசாசோ கிடை யாது. தசையும் உணர்ச்சியும் கொண்ட இவ்லோகத்துப் பெண்தான். ஆனால்; இக்காலத்தைச் சேர்ந்தவள் அல்ல."
வேதாளம் சொல்ல விக்கிரமாதித்தன் நடப்பதை
நிறுத்தினான். 'அமுதா இரண்டாயிரம் ஆண்டு
காலத்துக்குப் பிற்பட்டவள். ஆயிரத்தித் தொள்ளா யிரத்தி தொண்ணுற்றி எட்டாம் ஆண்டைச்சேர்ந்தவள்.
உன்னையவள் சந்தித்திருக்கின்றாள். நீ மிகவும் சிக்க லான பிரச்சனைகளின் முடிச்சை இலகுவாய் அவிழ்த்து
விடுவதால் - தன் வாழ்வில் நிகழ்ந்த சிக்கல்களுக்கு
விடைதேடி காலப்பயணம் செய்து இங்கு
வந்திருக்கின்றாள்."
வேதாளத்தின் குரலில் கசிவு தென்பட்டது. விக்கிர மாதித்தனுக்கு கவலையாய் போனது; இத்தனைகாலம் பழகிய வேதாளத்தைத்தப்பாக நினைத்துவிட்டோமே என்று! பிணத்தைக் கீழே போட்டுவிட்டு அப் பெண்ணின் அருகே போனான்.
199

சிதையொளியில் மீண்டும் அவள் தோற்றம் பார்த்தான்.
சொக்கிப் போனான். கன்னத்தில் கைவைத்து அதிசயித்துக் கொண்டான்.
என்னே அழகு. என்னே உடல். எத்தனைநாழியானாலும் பார்க்கச்சலிக்காத தோற்றம்.
வேதாளத்தின் திசைபார்த்து கைகாட்டி "அது சொல்வது உண்மைதானா’ என்பது போன்றதொரு பார்வை பார்த்தான் விக்கிரமாதித்தன். சிறுசிறு அசைவாய் அவள் மேலும் கீழுமாய் தலையசைத்தாள்.
விக்கிரமாதித்தன் நம்பித்தான் போனான்.
"சொல் பெண்ணே. சொல். உன் கதை சொல். உன் வாழ்வுக்கோர் வழி சொல்கிறேன். ' உருகினான் விக்கிரமாதித்தன்.
“எங்கட அப்பாவுக்கு நான்தான் மூத்தபிள்ள. எனக் கிப்ப முப்பத்திஆறு வயது." அமுதாவுக்குள் ஏதோ சங்கடம். தயங்கினாள்.
"ஏன் தயக்கம் சொல் அமுதா."
N
"நால்திசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேந்தி பூப்புனைகன்னிப் புனிதனோடு என்றென்னை காப்பு நான் கட்டக்கனாக் கண்டேன் தோழி நான். இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றவொன் தம்மை உடையவன் நாரண் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக்கனாக் கண்டேன் தோழி நான்."
உள்ளூர சிரிப்பெழுந்தது. ஆண்டாளுக்கு ஹிஸ்டீரியா. பின்னென்ன கண்ணுக்குத் தெரியாத ஏதோ அமானுஷ்ய சமாச்சாரத்தை நினைத்து கனவு காண் பதும்- கிருஷ்ணன் தாலிகட்ட வருவான் என்பதுவும் சமயங்களில் முலைகளைக்கூட தடவி விடுவானாமே
சுத்த பேத்தலான விசயம்.
சிலசமயம் கிருஷ்ணன் பற்றிய கனவு வடிகாலாகக்கூட
இருக்கலாம். அந்த நூற்றாண்டில் கூட முதிர்கன்னிகள்
இருந்திருக்கலாம். ஆண் துணை எதுவும் கிடைக்காத
போதில் நாரணன் நம்பி நீயாவது என் இச்சையைத்
தீர்க்காயோ என்று ஏங்கியிருக்கலாம். யார் கண்டா?
ஆண்டாள் கூட அக்காலத்தில் மாப்பிள்ளை கிடைக்காது வெந்து தணியாது இருந்திருக்கலாம்.
அபத்த சமுதாயம்.
mamamaasal

Page 43
, , n 12 "சும்மா ரூமுக்குள்ளேயே அடஞ்சி கிடக்கிறியள். எங்காவது போக வேணும் எண்டால் சொல்லுங்கோ. கூட்டிப் போறன்’ என்று குலசிங்கம் கேட்க பட்டென வாயில வந்தது பூரீரங்கம்தான். ஆட்டோ பிடித்து கூட்டிப் போனான். m
"இந்தா, இந்த இடத்தில வச்சித்தான் கிருஷ்ணன் ஆண்டாளுக்கு தாலி கட்டினான் தெரியுமோ??
பிராமண வழிகாட்டி விவரித்தார்.
"ஆண்டாளுக்கு நடக்கக்கூட தெம்பு இல்ல. பட்டர் தோள்ள வச்சி வில்லிபுரத்தில இருந்து தூக்கிண்டு வந்தார். கிருஷ்ணன் சொல்லிட்டான். இந்த லக்கினத் தில. இந்த நாழிகையில. இந்த நட்சத்திரத்தில உனக்கும் எனக்கும் கல்யாணம்னு. எத்தின வருச காத்திருப்பு. ஆண்டாளுக்குப் பொறுக்க முடியல."
இதுக்கு மேல் பொறுத்துக்க என்னால் முடியவில்லை. விறுவிறுவென நடந்து பிரகாரத்துக்கு வெளியே வந்து விட்டேன். .
அந்த ஆளுக்குக்காசைக் கொடுத்துவிட்டு வந்து: "சாமி கும்பிடலையா?" என்றான் குலசிங்கம்.
"ரூமிற்குப் போவம்'
"வேற எங்கேயும் போக வேணும் எண்டால் சொல்லுங்கோ."
“வேற எங்கேயும் எண்டால்?"
எனக்கு எரிச்சல் வந்தது.
"இங்க முக்கொம்பு எண்டு ஒரு லவ்வர்ஸ் பார்க் இருக்கு." கொடுப்புக்குள் புன்னகைத்துக் கொண் டான். புன்னகைத்துக் கொண்டே கோபுரத்தை அண்ணார்ந்து பார்த்தான். எனக்கு இன்னும் எரிச்சல் வந்தது.
"அங்க நாங்கள் எதுக்கு.? இல்லை. நான் ரூமுக்கு போகவேணும். தலை வலிக்குது. வயிறு வேற வலிக்குது."
நான் சொல்ல - எதுவும் பேசாது ஆட்டோ கூட்டி வந்தான். குலசிங்கத்தின் போக்கு ஒரு வாரமாய் அவ்வளவு நல்லதாய் இல்லை. காவேரி பாலத்தை கடந்து ஆட்டோ குலுங்க - தோளில் சரிந்து முழங்கை யால் மார்பில் உரசினாள். எதார்த்தமானதா அல்லது தூண்டிலா என்று புரியவில்லை.
'தம்பி இண்டைக்கும் காலையில் போன் பண்ணின வன். எப்ப பிளைட் என்டு கேட்டு’

998 t
எதிர் திசையில் கடகடந்த வாகனங்கள் விரைந்தன. நான் வெளியே பார்த்துச் சொன்னேன். மலை மீது உச்சிப்பிள்ளையார் கோவில் புளுதிக்கப்பால் தெரிந்தது.
"போகலாம்’ என்ன அவசரம்?"
சுரத்தில்லாத பதில் - நான் லேசாய் நொருங்கிப் போனேன்.
"ஆறுமாசம் ஆகுது’திருச்சிக்கு வந்து இந்த புளுதியும் வெக்கையும் எனக்கு ஒத்து வருகிதில்லை."
லொஜ்ஜிக்கு வரும் வரைக்கும் குலசிங்கம் எதுவும் பேசவில்லை’அறைக்கு வந்ததும் கட்டில் விளிம்பில் வசதியில்லாமல் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்தான்.
சும்மா சொல்லக்கூடாது இருபத்தி எட்டு வயதுற்குரிய லட்சணங்களுடன்தான் இருக்கிறான். தம்பி ஏற்பாடு பண்ணின ஏஜென்சி அவனுடன் ஒன்றாக இருந்த வனாம், கிட்டத்தட்ட அவனோட வயதுதான் இவனுக் கும். கனடா போக திருச்சி வந்து ஆறுமாசம் ஆயிற்று. குலசிங்கம் கனடாவுக்கு என்னை கொண்டு செல் வதற்கோ அல்லது அனுப்பி விடுவதற்கான எந்த வித ஆயத்தமும் செய்பவராய் தெரியவில்லை.
ஆத்திரம் வரும் - சண்டைபோட வேண்டும் என்று தோன்றும், ஆயினும் முடியவில்லை. இவன் முகம் பார்க்க சே என்று தோன்றும்.
"இண்டைக்கு அவரும் கதைச்சவர்'.
லேசாய்வெட்கம் வந்தது.
என்னை அவன் வெறுமையாய் பார்த்தான்.
"மெட்ராசால போக ஏலாது. கல்கத்தா இல்லாட்டி காட்மாண்டுதான்.
ஏர்போர்ட் - செட்பண்ண வேணும்."
"செட் பண்ண வேண்டியதுதானே.”
"செட் பண்ணத் தைரியம் இல்லாம இருக்கு’
நாக்கைக் கடித்துக் கொண்டான். இவன் பேச்சு தடம் தப்பியிருந்தது.
என் இமைகளைச் சுருக்கிக் கொண்டேன்.
"விளங்கயில்லையா?*
"என்னோட பொண்சாதியோட பாஸ்போட்டில்தான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகப்போறன்."

Page 44
நகம்கடித்தான்.
"பொண்சாதி என்டு கூட்டிப்போறது எண்டால்”
இடதுகால் பெருவிரல் நகத்தை வலது குதிக்காலால் மிதித்து முக்கினான்.
"ஒரு நாளாவது என்னோட நீங்கள்"
முடிக்காது கடித்த நகத்தைத் துப்பினான்.
படுக்கைக்கு அழைக்கின்றான்.
இது தைரியமா- பேடித்தனமா என்று புரியவில்லை.
இவன் அழைப்பு விடக்கூடும் என்று முன்னமே எனக்குப் புரிந்ததோ என்னமோ - எனக்கு அதிர்ச்சியாயும் இல்லை. அவன் மீது ஆத்திரமும் வரவில்லை. நம்பப்பட்டவன் நாய் போன்று சகலத்திலும் வாய்வைக்க முற்படுகின்றான் என்கிற போதுதான் சற்று வேதனையாயிற்று.
நான் இன்னொருத்தரைக் கல்யாணம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டவள். பாவம் அந்த மனுஷன். ஏற்கனவே பொண்டாட்டியையும் பிள்ளையையும் குண்டுக்கு பலிகொடுத்தவர். ஐந்து வருடத்திற்கு முன் கொழும்பு வங்கியில் வெடித்த லொறிக் குண்டு அந்தப் பொம்பளைக்கும் பிள்ளைக்கும் எமனாகிப் போனது. உலகத்தில் எங்கு வாழ்ந்தால் என்ன குண்டு வெடித்தது அதுவும் இலங்கையில் சாகவேண்டும் என்று விதி போலும்.
இதில் வேடிக்கையான வேதனை - ஒருத்தியோட சாவில் எனக்கு வாழ்வு கிடைக்கிறது என்பதுதான். அவருக்கு எவ்வளவு பெரிய மனசு, ஏற்கனவே கல்யாணம் முடித்தவராக இருந்தால் என்ன? பதின்மூன்று வயதுகூடியவராக இருந்தால் என்ன? என் கதையெல்லாம் தெரிந்தும் என்னைக் கல்யாணம் முடிக்க சம்மதித்தாரே அவருக்கு எவ்வளவு பெரிய
D69.
நமது சமுதாயத்தில் மாப்பிள்ளை என்பது என்ன சும்மாவா? அது எவ்வளவு பெரிய விஷயம்? ஆண்பிள்ளை எனில் ஆணவமான விஷயம்தான். வத்தலோ தொத்தலோ மாப்பிள்ளை எனில் பிரமாண்டம் தான்.
முன்னெல்லாம் சின்னத்தம்பி மாமா என்னை மடியில் தூக்கி வைச்சுக்கொண்டு 'அந்தோ வாரன் ராசகுமாரன் குதிரையிலே எங்கட அமுதாவையா ராசகுமாரன் கல்யாணம் முடிக்கப் போறான்." என்று மாமா மேகமூட்டத்தைக் காட்டி அது போடும் கோலங்
sæ S
1998
 

, III a. – 1 2
களைக் காட்டிச்சொல்லும் போதெல்லாம் நம்பித்தான் போனேன். இராசகுமாரன்தான் என்னைக் கவர்ந்து செல்லப்போகிறான் என்று அந்த மேகம் போட்ட கோலத்திற்கும் மாமாவின் ஆசைக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை.
பாவம் மாமா, இராசகுமாரர்களுக்குப் பதிலாய் இரண்டு சொத்தைகளை அல்லவா பெத்துப் போட்டி ருந்தார். மாமாவிற்குப் பிரியம் இல்லை. அப்பா விற்கோ வழியில்லை. எனக்கு எது என்று இருக்கிறது? மாப்பிள்ளை என்று எதைக் காட்டினாலும் சரி வானத் தில் இராசகுமாரனைக் காட்டிய மாமாவால் தரையில் ஒரு சேவகனைக் கூடக் காட்ட முடியவில்லை.
"எப்படிக் குமரவேல் லூசன்களை கட்டிக் கொடுக் கிறது? 28வயது நாலு வயது குறைய எண்டாலும் பரவாயில்லை. இப்பவும் பாயில மூத்திரம் பேயறாங்க. நேற்று ஆரோ கல்லால எறிஞ்சு போட்டானுங்களாம் என்று ரெண்டு பேரும் அழுதுப்டு வறாங்க. பெடியன்கள் குண்டு கட்டி இவன்களை கொழும்புக்கு அனுப்பினாக் கூட மண்ணுக்குப்புண்ணியமாப் போகும்.”
மாமா எங்கே? வெறித்துச் சொல்லும் போதெல்லாம் அப்பாவின் இயலாமை நசிந்துகொள்ளும். நான் மறுபடி கனவுகளில் லயித்துப்போவேன். ஆண்டா ளுக்கு ஒரு கிருஷ்ணன் என்றால் எனக்கு ஒரு சிவன் இல்லாமலா?
கனவு சோக்கான விஷயம்.
ஊரில் உள்ள ஆண்களை எல்லாம். எவளும் சண்டைக்கு வரப்போவதில்லை.
இருந்தும் - தேவி சண்டைபோட்டாளா? அல்லது அதுக்கு நிகராய் வேறு ஏதேனும் அஸ்த்திரம் பயன் படுத்தினாளா என்றுதான் புரியவில்லை. தேவிக்கும் என் வயதுதான். பத்தாவது படிக்கும் போது ஓடிப் போனாள். அப்புறம் குழந்தை புருஷன் என்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தபோது பெரிய மனுஷி போலத்தான் இருந்தாள். எனக்கு ரொம்பவும் ஆச்சரியம். என் வயதுக்காரியால் கூட பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியும் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்கின்ற போது தேவிக்கு முடிந்திருந்தது எப்படி என்று தான் புரியவில்லை. எனக்கு புத்திசாலித்தனம் போதவில்லை.
தேவி என்பால்ய சிநேகிதிதான். அந்த சிநேகிதம்தான் அவள் பிள்ளை என்னுடன் ஒட்டிக் கொண்டதற்குக் காரணமோ என்னவோ? வினோதன் சிரிக்கும்போதும் அழும்போதும் - ஏன், அவன் என் முகத்தில் சூச்சா

Page 45
, in 12 அடிக்கும் போதுகூட தேவியைக் காட்டிலும் நான்தான் சிலிர்த்துக் கொள்வேன். தூங்கும் நேரத்தைத் தவிர ஏறக்குறைய அவன் என்னுடன்தான் பன்னிரண்டு வயதுவரை கால்களை, கால்விரல்களை,தலைமயிரை தடவித்தடவி அதன் வளர்ச்சி பார்த்து புளகாங்கிதம் படும்போது கூட எனக்கு ஒரு மகன் இப்படி வேண்டும் என்று ஏன் நான் ஆசைப்படவில்லை என்று புரிய வில்லை. என் மகன் என்று நம்பிப்போனேனோ என்னவோ.
பள்ளிக்கூடம் விட்டு ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுவான். அன்று வரவில்லை. மாலையாயிற்று அவன் வரவில்லை. எதிர்வீடு தானே எட்டிப்
பார்த்தேன். நடமாட்டம் தெரிந்தது. பத்து வருடமாய் என்னிடம்தானே வளர்கிறான். இப்படி ஒருநாள்கூட நடந்ததில்லையே ஆறுமணியானால் ஊரடங்கு சட்டம் வந்துவிடுமே அதற்குப் பிறகு நாளைக் காலைதான் பார்க்க முடியும். பதட்டமாக இருந்தது. இனியும் என்னால் பொறுக்க முடியவில்லை.
தேவி வீட்டிற்குப் போனேன்.
என்னை அவள் அசாதாரணமாய் பார்த்தாள். ஜந் தொன்றைப் பார்க்கின்ற தொனி, புரியாது கூசினேன்.
"ஏன் இண்டைக்கு வினோதன் வீட்டை வரல்லை? ஏதும் சுகமில்லையா?*
வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். வாசலை மறைத்து தேவி நின்றிருந்தாள். அவள் பின்னே வினோதன் ஒர விழியால் என்னைப் பார்த்து மறுகி நின்றான்.
'வாடா கண்ணா" என்றேன் கை நீட்டி. அவன் தேவியின் முதுகைப் பார்த்தான்.
தேவி அவனை வைத்து கதவை மூடிவிட்டு படியிறங்கி வெளியே வந்தாள்.
"அமுதா அவன் சின்னப்பிள்ளை இல்ல?
தேவி பீடிகையாக இழுக்க நான் மெளனமாக நின்றிருந்தேன்.
'பார்க்கிறவயள் ஒரு மாதிரி பேசினம். அவன் வளர்ந்திட்டான்தானே. புத்தி தெரிகிற வயது தானே. நீ மடியில் தூக்கிவைச்சுக்கிறதும், கொஞ்சுற தும், கட்டிப்பிடிக்கிறதும் - இதால அவன்ர மனம் வக்கிரமடைஞ்சிடும். உன்ர அற்ப சுகத்துக்கு அவன வச்சுத் தேய்க்கிறது அவ்வளவு நல்லம் இல்ல அமுதா. நீ பேசாம கிழவனோ கட்டையையோ பார்த்துக் கட்டுறதுதான் நல்லது. சின்னப்பிள்ளையை வைச்சு தேய்க்கிறதுல அப்படி என்ன சுகம்?"

மலத்தை மிதித்ததைப் போன்ற அருவருப்பு.
சே. ஏன் இப்படி என் சமூகம் உள்ளது? கல்யாணம் முடிக்காத பெண் எல்லாம் ஆண் சுகத்திற்காய் ஏங்கிக் கிடக்கின்றார்களா? பன்னிரண்டு வயது சிறுவனை - காலாகாலத்தில் கல்யாணம் ஆகியிருந்தால் என் மகனை ஒத்தவனிடம் நான் என்ன காமத்தை அனுபவித்துவிட முடியும்? மடியில் தூக்கிவைத்துக் கொள்வதன் மூலம்தான் என்ன காமத்தை தீர்த்துக் கொள்ள முடியுமா?
இந்த தேவிக்காகவேனும் ஒரு கல்யாணம் முடிக்க வேணும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே நானும் ஒடியிருக்கலாம். புத்திசாலித்தனம் போதவில்லை. திரிகோணமலையில் இருந்து வந்து - எங்கள் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேசன் அண்ணனுக்கு என் மீது சரியான விருப்பம். அந்த விருப்பம்தான் காதல் என்று அந்த வயதிற்குப் புரிபடவில்லை. புரிந்திருந்தால் அப்போதே அவருடன் ஒடிப்போய் பதின்மூன்று வயது பிள்ளைக்கு அம்மாவாக இருக்கலாம்.
நேசன் அண்ணன் ஒருநாள் கணக்குப் பாடம் சொல்லித் தரும்போது முதுகை தடவித்தடவிச்சொல்லித்தந்தார். கொஞ்சநேரம் செல்ல - 'அமுதா உம்மை நான் கல்யாணம் முடிக்கட்டே... ? உம் மேல எனக்குச் சரியான விருப்பம்." என்று சொல்லிக் கொண்டே முதுகிலிருந்த கையை எடுத்து என் மார்பு மீது வைக்க நான் பயந்து அதிர்ந்தேன். அந்தக் கணமே அப்பா நேசன் அண்ணனின் முதுகில் கைவைத்தார். மிக மோசமாகப் போட்டு அடித்தார். ஏனென்று அப்போது புரியவில்லை. அடி வாங்கிக்கொண்டே அப்பாவிடம் ஏதோ சொல்ல வந்தார். நேசன் அண்ணனை அப்பா கேட்பதாய் இல்லை. தொடர்ந்து அப்பா போட்டு அவரை மிதிக்க அவர் ஊருக்குப் போய்விட்டார். அப்போதே அவர் பின்னே நானும் ஓடிப் போயிருக் கலாம். போகவில்லை. போகத் தெரியவில்லை. புதிசாலியாய் இருந்திருந்தால் பருவ வயதில் பிள்ளை இருந்திருக்கும்.
ஒரு பெண்ணிற்கு ஆண் அவசியம் தேவை. உடம்பு, மனசு இரண்டுக்கும் இல்லாது போனாலும் தேவிகளுக்காகவேனும் - அவர்கள் பேச்சிலிருந்து விடுபடவேனும் அவசியம் திருமணம் தேவை. அம்மா இருந்தாலாவது சொல்லிப் பார்க்கலாம். அப்பாவிடம் போய் எப்படி..?
எனக்கு முப்பத்திநான்கு வயதாயிற்றே. கல்யாணம் கட்டிவை என்று அப்பாவிடம் போய் எப்படிக் கேட்க
1998 T S SSEEqS SLSLLLLaaSEAA qLLSAqqSSSS SSSLSSLSL

Page 46
  

Page 47
எனக்கு வலியிலும் சிரிப்பு வந்தது. எத்தனை தமிழச்சிக்கு விலாசம் கொடுத்தவனோ..? போக்கிரிப்பயல்.
கால்கள் நடுங்கியது. தொடைகளுக்கு இடையில் புண்ணாய் எரிந்தது மெதுமெதுவாய் நடந்து வெளியே வந்தேன். நாய்கள் கூட குரைக்கக் காணோம். ஊரெங்கும் இருட்டிக்கிடந்தது. அப்பாவைக் காணோம். என்ன ஆயிற்று அவருக்கு? இதயம் தொண்டைவரை வந்து போனது. மல்லிகைப் பந்த லின் கீழ் கருப்பாய் எதுவோ தெரிய உற்றுப்பார்த்தேன் அது அப்பா. அப்பா இறந்திருந்தார். கொலையாகி அப்பா இறந்து போனார்.
இனி எனக்கு யார் இருக்கிறார்கள்? மாமாவும் இரண்டு கிறுக்கு மகன்களையும் தவிர. -
"அமுதா நீங்கள் எங்களோடையே எங்களொட வீட்டுக்கு வாங்கோ’ மாமாவின் லூசுப்பிள்ளை வாயில் இருந்து விரலை எடுக்காமல் சொன்னது மாமா அடித்து விரட்டினார் அவனை.
ஊர் கூடி துக்கம் விசாரித்தது. துக்கத்தை விசாரிக்க வந்தவர்களைக் காட்டிலும் என்னை விசாரிக்க வந்தவர் களே அதிகம். என்னையே உற்று உற்றுப்பார்த்தார்கள். வித விதமாய் வக்கனையாய் விசாரித்தார்கள். அப்பா இறந்த துக்கத்தைக் காட்டிலும் - நான் அனாதையான துக்கத்தைக் காட்டிலும் - கற்பழிக்கப்பட்டதுக்கத்தைக் காட்டிலும் இன்னும் ஏதோ ஒரு இனம் புரியா துக்கம் என்னை அமுக்கியது. இவர்களின் பார்வையின் பாரம் தாங்காது அழுகை குமுறியது.
தேவி வந்தாள் நான் எதுவும் பேசவில்லை. அவள் மகன் வரவில்லை. அவன் வர இவள் விரும்பியிருக்க மாட்டாள். தூரத்தில் இருந்தே என்னை விநோதமாகப் பார்த்தாள். நேற்று அப்படி பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியிருக்குமோ என்னவோ அவளுக்கு. நெருங்கி வந்தாள்
"சொறி அமுதா...??
நான் மெளனித்திருக்க - விலகிப் போனாள்
ஆணின் 'பரிசம் என்ன சுகம் கொடுக்கும் என்று நான் ஒரு விபத்தில் புரிந்து கொண்டேன் தேவி என்று அவளிடம் சொல்ல வேண்டும் போல் தோன்றியது. தோன்றிய நேரம் தூரத்தில் தேவி சென்றிருந்தாள்.
துக்கம் முடிந்து - உறவுச் சனம் அடங்கிய மூன்றாம் இரவுப் பொழுதில் இயக்கத்துக் குழந்தைகள்

1998
வந்திருந்தார்கள். துவக்கை தோளில் கொழுவிக் கொண்டு தங்களுக்குள் குசுகுசுத்துக்கொண்டும் - வயதில் கூடிய ஒருத்தரை மாஸ்டர் மாஸ்டர் என்றும் பேசிக் கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு நெருங்கிவந்தார்கள் மாஸ்டர் என்பவர் எட்டத் தில் நின்றிருந்தார். அவரை எங்கேயோ பார்த்ததாய் ஞாபகம்.
"அக்கா. எங்களோட நீங்க வந்திடுங்கோ." சிறுவர்கள் அழைத்தார்கள்
‘'எதுக்கு"
புரியாது போன்று கேட்டேன்.
"இந்த நாய்களை நாம கொல்ல வேணாமா? இன்னும் எத்தின பேரை இந்த வெறி நாய்கள் கற்பழிக்கப் போறாங்களோ.. அதுக்கு முதல் நாம இந்த நாய்களை கொல்ல வேணும் அக்கா. உங்களுக்கு நடந்தது இன்னொரு அக்காவுக்கு நடக்கக்கூடாது அக்கா நீங்கள் வந்தால்தான் உங்கள பார்த்து கணக்க அக்காக்கள் போராட வருவினம்’
நியாயம் கலந்த ஆவேசம் அவர்கள் வார்த்தையில். அவர்கள் எவ்வளவோ கேட்டும் நான் மறுத்து விட்டேன். வேண்டா வெறுப்பாய் சலிப்புடன் வீட்டை விட்டு வெளியேறிப்போனார்கள். அந்த மாஸ்டர் என்பரின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. -
இவர்கள் வந்து போய் மூன்றாம் நாளில் ஒரு அதிசயம் நடந்தது. கனவில் கூட நினைத்துப் பார்த்திராத விசயம். ஐந்து வருடங்களுக்கு முன் இயக்கத்துக்கு ஓடிப்போன தம்பி-இயக்கமும் இயக்கமும் போட்ட சண்டையில் செத்துப் போய்விட்டதாக நினைத்து அவனுக்கு திவசம் கூட பண்ணினோம். ஏறக்குறைய அவனை மறந்து விட்ட நிலையில் அவனிடம் இருந்து ஒரு கடிதம் . அதுவும் கனாடாவில் இருந்து நம்ப முடியவில்லை. ஆயினும் உண்மை. யார் யார் தாலியை அறுத்துப்போனானோ தெரியவில்லை. அது முக்கியமில்லை. எனக்கொரு நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்கு துணையிருக்கிறது என்கிற ஓர் ஆறுதல்.
தோளில் கையொன்று அமுக்க அதிர்ந்தேன் குலசிங்கம் எனக்கு நெருக்கமாய் உரசிக் கொண்டு அமர்ந்தான். அவன் ஆசைக்கு நான் எப்படியும் சம்மதிப்பேன் என்று முழு நம்பிக்கை போலும். ஏஜென்சிக்காரன் அல்லவா! எத்தனை பெண்களைப் பார்த்திருப்பான்.

Page 48
கொஞ்சம் விலகி அமர்ந்தேன். அவன்தரை பார்த்தான். இவன் ஆசைக்கு உடன்படாவிட்டால் - கனடா என்பது கனவாகிக்கூடப் போகும்.
ஏற்கனவே சேதாரம் ஆனவள் தானே. இன்னொரு தரம் சோரம் போனால் மூழ்கியா போய்விடும்? கெடுக்கப்பட்டதற்கும் கெட்டுப்போவதற்கும் வித்தி யாசம் இருக்கிறதல்லவா? மனதறிந்து யாரோஒருவனு டன் படுக்கையை பகிர்வது அவ்வளவு சாதாரண விசயமா? காதலிப்பவனா? ஸ்நேகிதனா? கல்யாணம் கட்டப் போகிறவனா? பாதகமில்லை இவன் யார்?
இவனுக்கும் இந்த சிப்பாய்க்கும் என்ன வித்தியாசம் அஸ்திரங்கள் வேறு வேறாயினும் குறி ஒன்றுதான்! அவனிடம் அதிகாரம் இருந்ததால் பலாத்காரம் பண்ண முடிந்தது. இவனிடம் அது இல்லை. பிடி இருக்கிறது. இவனால் மட்டுமே என் எதிர்காலம் முடிவெடுக் கப்படும் என்கின்ற பிடி. புரியவில்லை. இது எந்த ஊர் நியாயம்?
குலசிங்கம் திரும்பவம் அருகே அமர்ந்தான் நான் விலத்தவில்லை என்தோள்மீதுதலை வைத்து பிடரியை முகர்ந்தான். கூசியது. நுணி நாக்கால் காது மடல் தொட்டான். கிறக்கம் வந்தது. இடதுகையால் இடுப்பு வளைத்தான். மயங்கிப்போ என்று உடம்பு சொன்னது. மனசு மூன்றாம் நபரானது. நான் கிறங்கி அவனுள் சொக்கிச் சரிந்தேன்.
எப்போது இருட்டியது என்று புரியவில்லை. உடம்பு அசதி, நீண்ட நேரம் குலசிங்கத்தின் நெஞ்சில் முகம் புதைத்துத் தூங்கியிருக்கின்றேன். குலசிங்கத்தின் முகம் வியர்ந்திருப்பது இருட்டிலும் தெரிந்தது. அவிழ்ந்து கிடந்த என் ஆடையால் அவன் முகம் துடைத்து விட்டேன். விழித்துக் கொண்டு அவசரமாய் எழுந்தான் அவன் முகம் பார்த்தேன். தலை குனிந்து நெடு நேரம் தரை பார்த்திருந்தான்.
"என்னை நீங்கள் பிழையாநினைக்கிறியளே’குனிந்த தலை நிமிர வில்லை. அப்பாவியாய் கேட்டான்.
‘'எதுக்கு’ நானும் அப்பாவியாய் கேட்டேன்.
"உங்கள தான்."
"இதில என்ன இருக்கு நானும் தானே." ப்றாகுக்கை மாட்டிக் கொண்டேன் "உங்களிட்டை ஒரு விசயம் சொல்ல வேணும் போல இருக்கு."
"சொல்லுங்கோ’
"உங்களை நான் கல்யாணம் முடிக்கட்டே?”
:
1998
 

܆ ܀rܒܸ܊- ܖܳ--ܪ݀3:؟
O I, TA - 2
அவன் பட்டென கேட்க - நான் அதிர்ந்தேன்.
அது எப்படி? என்னைகல்யாணம் முடிக்க வேற ஆள் இருக்கு. அது மட்டுமில்லாம நீங்க ஏற்கனவே கல்யாணம் முடிச்சு ரெண்டு பிள்ளை வேற இருக்கு. இப்ப நடந்தது ஒரு விபத்து. விருப்பம் இல்லாத மாதிரி இருந்தாலும் - நானும் சம்மதிச்சித்தான் நடந்த விசயம்.
தேவை எண்டால் இன்னும் நாலு நாள் சம்மதிக் கிறேன். கல்யாணம் கத்திரிக்காய் என்ற பேச்செல் லாம் வேணாம்' நான் சொல்ல மெளனமாய் இருந் 5ான். கண்கள் லேசாய் அவனுக்குக் கலங்கியது. தொண்டையைத் தடவினான். மங்கிய வெளிச்சத்தில் அவன் அழகாய் இருந்தான்.
"அது ஒண்டும் எனக்கு தெரியாது. நீங்க எனக்கு வேணும்’
அவனுக்கு தொண்டை கட்டிக் கொண்டது.
'நீங்க என்னை விட ஐந்து வயது குறஞ்ச ஆள் குலசிங்கம். வயதுக்கு மூத்த பொம்ளைங்களோட தொடர்ந்து செக்ஸ் வச்சிருக்கிறது பிழை எண்டு உங்களுக்குத் தெரியாதே."
அது ஒண்டும் எனக்குத் தெரியாது நீங்க எனக்கு வேணும்' ஏக்கமாய் இருந்தான் சிறுதுளிர் கண்ணீர் அவன் கண்களில் தெரிந்தது. பாவமாய் இருந்தான்.
நான் அவனில் பாவப்பட்டேன்.
‘எப்படிச் சாத்தியமாகும் குலசிங்கம்??? லேசாய் Fலனப்பட்டேன்.
'நீங்க ஓம் என்று சொல்லுங்கோ மத்ததை நான் பார்த்துக் கொள்றன். ' அவன் சொல்ல என் மனம் முழுதாய் சலனத்தில் மூழ்கியது.
ஊவென்ற பேரிரைச்சலுடன் காற்றடித்தது. சுடலைச் Fாம்பல் எங்கும் பறக்க விக்கிரமாதித்தனின் குதிரை நனைத்தது. அமுதா பயந்து ஒடுங்கினாள். வேதாளம் காற்றில் கலைந்து பின் உருவம் கொண்டது. விக்கிர மாதித்தன் மட்டும் அசைவற்று நின்றிருந்தான்.
தூக்கம் கலைந்த இரண்டு பிசாசுகள் மூலையில் நின்ற மரம் ஒன்றில் இருந்து கூய் போட்டு விட்டு எங்கோ பறந்து போயின.
விக்கிரமாதித்தன் வேதாளத்தை அண்ணார்ந்து பார்த் நான் பின் அதே வேகத்தில் அமுதாவைப் பார்த்தான். இக்கதையில் அப்படி சிக்கல் எதுவும்இருப்பதாய்

Page 49
தெரியவில்லையே பெண்ணே. நீதான் அந்த குல சிங்கத்தை மணம்முடிக்க சம்மதித்து விட்டாயே அப்புறமென்ன..? இரண்டாம் தரமாய் இருப்பதில் நிறைய இன்பங்கள் உள்ளது தெரியுமா? அவர்களுக் குத்தான் காதல் மனைவி, ஆசைநாயகி என்றெல்லாம் பேர் உண்டு. முன்னவளைக்காட்டிலும் பின்னவளில் தான் ஒருத்தருக்குக் காதலும் காமமும் மேலிடும். நீ அவனுடனேயே வாழலாம்.' விக்கிரமாதித்தன் சொன்னான்.
அமுதா வேதாளத்தைப் பார்த்தாள். அது விக்கிரமாதித் தனை சோகமாய்ப் பார்த்தது. "அவள் உனக்கு முழுக் கதையையும் சொல்லவில்லை விக்கிரமாதித்தா" வேதாளத்தின் குரலில் பிசிறு தட்டியது.
காஞ்சினம் பழம் ஒன்று கீழ் விழ-அமுதா பயந்து விக்கிரமாதித்தனை உரசி நின்றாள்.
நெருங்கி நின்ற அமுதாவை அப்படியா என்பது போல் ஓர் ஒரப்பார்வை பார்த்தான் விக்கிரமாதித்தன்.
'அவன் என்னை கல்யாணம் முடிக்கிறான் எண்டு சொல்லி ஏமாத்திப்போட்டான். 'நான் ஏஜென்சிக் காரன். கனடாவில ஆறுமாதம், இந்தியாவில் ஆறு மாதம் இருக்கிறன். இந்தியாவில் இருக்கிற ஆறு மாதமும் உன்னோடு இருக்கிறேன். கனடாவுக்குப் போனா அவளுடன் இருக்கிறேன் எண்டு சொல்லிப் போட்டுப் போனவன் போனவன்தான் ஒரு வருசமா எந்த தொடர்பும் இல்லை. எங்க இருக்கான் என்ன செய்யிறான் எண்டு ஒண்டும் தெரியாது. கடசியா இப்ப என்னோட தம்பியும் என்னை வெறுத்திட்டான். கல்யாணம் முடிக்கிறதா இருந்தவரும் இந்த விசயம் தெரிஞ்சு ஏலா எண்டு சொல்லிப் போட்டாரு. எனக்கு என்ன செய்வது எண்டு ஒண்டும் விளங்கவில்லை."
அமுதா அழுதாள்.
விக்கிரமாதித்தனுக்குப் பாவமாய் போனது.
கிட்டத்தில் ஏதோ சரசரப்புக் கேட்க விக்கிரமாதித்தன் இலுப்பை மரத்தை உற்று நோக்கினான். மரத்தின் பின்னே மூன்று பிசாசுகள் ஒட்டுக்கேட்டுக் கொண்டு நிற்பது கண்டு அவனுக்குக் கோபம் வ்ந்தது. உறைவாளை உருவினான். பிசாசுகள் பயந்தன. வால் இழுபட எங்கோ ஒடி மறைந்தன.
வேதளாம் கன்னத்தில் கைவைத்து அதே கிளையில் சோகமாய் சாய்ந்திருந்தது.
"சரி பெண்ணே, அந்த பாதகன் போட்டும். உன்னை மானபங்கம் செய்த சிப்பாய் உன்னைக் கல்யாணம்

998
செய்வதாய் சொல்லிச் சென்றான் என்றாயே.. அவனிடம் செல்லலாம் அல்லவா?"
விக்கிரமாதித்தனுக்கு எப்படி ஞாபகம் வந்ததோ தெரியவில்லை. அவள் முகம் பிரகாசம் ஆனது.
அமுதா வேதனையாய் சிரித்தாள்.
"போனன் . அவனக்கூட தேடிப் போனன். பாவி. இடுப்புக்கு கீழே அவனுக்கு ஒண்டும் இல்லை. கண்ணி வெடியில் மாட்டி ரெண்டு காலும் இல்லாம இருக்கான். கால் இல்லாட்டியெண்டாலும் பரவாயில்லை. அவன் கூட ஏற்கனவே கல்யாணம் முடிச்சவன். அவனோட பொஞ்சாதியும் அம்மாவும் தலையில அடிச்சி அடிச்சி அழுகிறார்கள். நான் என்ன
செய்ய... ???
அமுதாவால் அழுகையை அடக்க முடியவில்லை. விக்கிரமாதித்தனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை. அவனுக்கு கூட பலமாய் தலை சுற்றியது.
"சொல் விக்கிரமாதித்தா சொல். இப்பெண்ணின் வாழ்வுக்கோர் வழிசொல். சொல்லிவிட்டு உன் விருப்பபப்படி நீ பிணத்தை கொண்டு செல்லலாம்."
வேதாளம் சொல்லியது.
விக்கிரமாதித்தனுக்கு எதுவும் புரியவில்லை. மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.
'இன்னும் சில கணப்பொழுதுகள்தான் விக்கிர மாதித்தா. நீவிடை பகிராது போனால் - உன் தலை. சுக்கு நூறாக . ஞாபகம் இருக்கட்டும்.'
விக்கிரமாதித்தன் மண்டைக்குள் ஜிவ்வென்று எதுவோ ஏறிற்று. இன்றுடன் நம்கதை முடியப்போகிறதா? அப்படியென்றால்; என் சாம்ராஜியத்தை யார் ஆள்வது? என் அந்தப்புரத்தில் உள்ள முப்பத்தி ஏழு தேசத்துப் பெண்களையும் என் போகங்களையும் யார் சுவைப்பது?
பேய்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. ஏன் என்று தெரியவில்லை அர்த்தசாமம் முடியப்போகிறது என்பதாலோ என்னவோ. 'இன்னும் சில கணப்பொழுதுகள் தான் விக்கிர மாதித்தா. அப்புறம் உன் தலை வெடித்துச் சிதறிவிடும்." 癸囊馨。
வேதாளம் உறுமியது.
விக்கிரமாதித்தனுக்கு வியர்ந்தது.

Page 50
அமுதா பயந்தாள். வேதனையில் நொந்தாள். நம்மால் வீணாக ஒரு உயிர் போகப் போகிறதே. அதுவும் தலை வெடித்துச் சிதறப் போகிறதே. வேதாளத்தின் சாபத்தை எப்படியும் நிறுத்தியாக வேண்டுமே.
விக்கிரமாதித்தன் யோசித்தான்.
கணப்பொழுதில் பொறி தட்டியது.
வேதாளத்திடம் கெஞ்சிக் கேட்டு; விக்கிரமாதித்தனின் சாபத்தை தடுக்க அமுதா காஞ்சின மரத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.
எல்லாமே என் மனப் iš6Gvib : GIDI ABAM தமிழில் : இ. கிரு
சரிந்து கொண்டிருக்கும் என் கூடாகிய அந்தச் சிறிய பிளாஸ்டிக் குடிலுக்குள் முன்னால் தனிமைத் துயரினின்றும் விடுபட மிக நீண்டு விரிந்து தாரத்திற்கு பயணித்தேன் எல்லாம் என் மனப்பயணத்தில் தான். தொடர்பற்றுப் போய்விட்ட எங்கள் கடந்த காலத்திற்குச் திரும்பச் சென்றேன் உங்கள் வீடு, அதன் சுற்றுப்புறம், எங்கள் பாட்டி, எங்கள் பூட்டன்மார் பற்றிய அவளுடைய கதைகள் வல்லமை மிக்க அந்த வீரர்களின் பரம்பரைச் சுவட்டின் வழியாக சகிப்பற்ற தன்மையையும், கர்வத்தையும் பெற்றுக் கொண்ட நான் மிக நீண்டு விரிந்த தூரத்திற்கு பயணித்தேன் எல்லாம் என் மனப் பயணத்தில்தான் எதிர்காலத்திற்குள்ளும் மிக நீண்ட தூரம் போய்விட்டேன், கனவுகளும் உயர்வான நம்பிக்கைகளும் சூழ மாற்றமே இல்லாத இந்தக் காலத்தின் பாதையும், முடிவே இல்லாது என் குதிகளில் வாழும் அடியும் எங்கே என்னை ஒரு நாள் இட்டுச் செல்லப்போகிறது, அங்கு என்ன இருக்கும் என்பதை அறிய மிக நீண்ட விரிந்த தூரத்திற்கு பயணித்தேன்
1998 مه ۰ مسیر

விக்கிரமாதித்தன்; அருகே நின்ற அமுதாவை இறுக்க அணைத்தான். அமுதா அதிர்ந்தாள் அவளை தூக்கி தோளில் கிடத்தி குதிரையில் ஏறினான், விக்கிர மாதித்தன்.
அமுதா என்ன நடக்கிறது என்பதை ஊகிக்கும் முன்னே; குதிரை அந்தப்புரம் நோக்கி வேகம் எடுத்தது.
புளுதி மண்டலம் கிளம்பியது.
பிணத்தை தூக்கிக் கொண்டு வேதாளம் மீண்டும்.
பயணத்தில் தான் [EGA (ETHIOPIA)
ஷ்ணகுமார்.
எல்லாமே என் மனப் பயணத்தில்தான் − a இந்தக் குழப்பத்தின் முடிவில் என் ஆன்மா எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக கால முடிவிலிக்குள்ளும் கூட நீண்டு விரிந்த தாரத்திற்கும் பயணித்து விட்டேன் எல்லாம் என் மனப் பயணத்தில்தான் இது துயரமானது
பிரதேச எண்ணத்தில் செல்வாக்குற்றவர்களாலும், அரசியல்வாதிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் இந்த ஒரு நாளைப் பற்றிச்
சிந்திப்பதே துயரம்
தஞ்சம் புகுதல் என்பதற்கு ஒரு இடமுமேயில்லை என்று கூறும் அந்த ஒரு நாள் வரும்பொழது ஒரு பிரயாணமுமே இனி இல்லை என்ற சித்தனை ஒருவனுக்கு சுயமாகவே எழுகின்ற பொழுது, எனது நல்ல பயணத்தை பொலிசாலோ, எல்லையாளோ, பிரஜாவுரிமையாளோ, வறுமையானோ, அரசியலாளோ, மதக்கொள்கையானோ, தடுக்க முடியாது, நான் மிக நீண்டு விரிந்த தூரத்திற்குப் பயணித்தேன். எல்லாம் என் மனப்பயணத்தில்தான்.
Source; "All in mythhought Refugees No. 105, III, 1996. P.10

Page 51
, - 12 O
தலைப்பில்லா கவிதை
வெடி எத்திசை வருமென்று யாரும் அறியார் போஸ்ட்மார்ட்டம் ரிப்போட் பொய் சொல்லாது 3 அங்குல ஆழத்தில் குண்டு பாய்ந்திருந்தால் என்ன துப்பாக்கி என்றுரைக்கும்; துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் எனவுரைக்கும், இறந்தவன் எழுந்துவந்து அநியாயம் என்றாலும் ஒமென்று சொல்ல சனமிங்கு இல்லை. இருப்பவரோ - ஒமும் இன்றுதான் இல்லையும் ஒன்றுதான் இருப்பதும் ஒன்றுதான் இறப்பதும் ஒன்றுதான் என்பதாய் அடுத்த கொலைக்காகக் காத்திருக்கிறார்.
★女★
பேயலையும் புளியடியை நள்ளிரவின் பின் ஓர் கணத்த நாளில் கடந்தபோது நான் இறக்கவில்லை பாக்குத் தொடுகடலை பலமுறை கடந்தபோதும் நான் இறக்கவில்லை ஆனையிறவில் இல்லை அனுராதபுரத்தில் இல்லை அந்நிய தேசத்தில் ஓர் ஆற்றைக் கடந்த போது இல்லை இருந்தும் இறந்த நாள் எப்போது Air Lankasusbøøj. Airlndia aj88 பயணிகள் வந்தனர்
Air France bid psy எனது கைகள் கட்டுப்பட்டு வாயில் பிளாஸ்திரி ஒட்டப்படும் நேரத்தில் - அப் போழ்தில்
大大大
அந்தரரியப் பூக்கள் யாருக்காக வருகின்றன அடுக்கு ரோஜாக்கள் யாருக்காக வருகின்றன அடுக்குச் செவ்வந்திகள் யாருக்காக வருகின்றன அகதிகள் வரும்போது பொலிஸ் அலுவலகம் ஆறுதல் சொல்லி அவற்றை அழித்து வரவேற்க!
- Jings
mam
 

孪姿
1998
களைத்துப் போனவன்
ஸ்ரைலாக கையொத்தி எப்படி நான் கொட்டாவி விடுவேன் வேலைக்கு களைப்புடன் போய் களைப்புடன் திரும்பி என்னையும் அனைவரையும் களைப்புடன் பார்க்கிறேன் களைப்பு என்னை இயக்குகிறது. என்னையறியாமல் வருகிறது கொட்டாவி அன்பான வெள்ளைக் காரியே முகங்ச்சுழிக்காதே! நடைப்பிணம் உன்முன்னால் இருக்கிறது. வேர்வை நாத்தமும் சாவீட்டின் நெருப்பெரியும் வடக்கயிற்றின் மணமும் எனக்கு விதிக்கப்பட்டவை.
- as 65
女女大
ஆன முதல்
"உள்ள காட்டு வெய்யிலெல்லாம் குடிச்சு வருது பிள்ளை' - என்று அம்மா அரற்றுவது கேட்கிறது இன்னும் வெய்யில் காந்தும் போது என்ன செய்யலாம் நொங்கு வெட்டலாம் கள்ள இளனி புடுங்கும் போது வீட்டுக்காரி வந்தால் நிதானமாக சாரத்தை உரிஞ்சு - 鬱 இளனி கட்டிறக்கலாம்
முயலடிக்கப் போகலாம்
யாருக்குப் பயம்? வெய்யில் உனக்கு அலர்ஜி என்று மருத்துவர் சொல்கிறார் - மகரந்தமாம் பாறாங்கல்லினடியில் ஒளித்துவாழும்
தவளையாய் ஆனதென்வாழ்வு
-சுகன்

Page 52
5O
அன்புடன் காலம் ஆசிரியருக்கு
காலம் 11 இதழ் படித்தேன். இதழ் மிகவும் தரமாக இருந்தது. அந்த இதழில் பேராசிரியர் கா.சி. குறிப்பிடும் 'தமிழத் தேசீயம்' பற்றி என் மனதுக்குப் பட்ட சில கருத்துக்களைஇங்கு குறிப்பிடவிரும்புகிறேன். இது யாரையும் குறிப்பாகச் சுட்டும் தாக்குதல் அல்ல. யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் தமிழ்த் தேசீயம் அதிதீவிரம் கொண்டிருந்தது என்ற கேள்வி பற்றியதே இது. தமிழ்த் தேசீயம் என்பது எங்களிலிருந்து அந்நியப் பட்ட ஒரு பொருளா? வேறு ஒரு நாட்டில் நிகழ்ந்ததா? தமிழ்ச்சமூகம் முஸ்லிம்கள் வெளியேற்றத்தை எவ்வாறு எதிர்கொண்டது? நான் அறிந்த வரையில் யாழ்ப்பாணத்தில் கல்விமான்கள், இலக்கியவாதிகள் பொதுவுடமைவாதிகள், சமயத்தலைவர்கள் தொடக் கம் . மகா ஜனங்கள்வரை முஸ்லீம்கள் துரத்தப் பட்டதை நியாயப்படுத்தும் காரணங்களை ஆராய்ந்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். 'முஸ்லீம்கள் வெளியேற்றப்படாவிட்டால் இரத்தக் களரி ஏற்பட் டிருக்கும்’ "மிகப்பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந் தார்கள்’ என்று சாதாரண சனங்கள் முதல் கற்றறிந்த பெரியோர்கள் வரை கூறினார்கள். சிலர் முஸ்லீம் பெண்களை கற்பழிக்காமல் ஊரைவிட்டு மட்டும் துரத்திய 'தமிழ் ஒழுக்கத்தைப்’ போற்றினார்கள். ஒரு சில சாதாரண மக்கள் மட்டுமே சோகத்துடன் செய்வதறியாது கைகளைக் கூட அசைக்கப்பயந்து கண்களால், கண்ணிரால் விடையளித்தார்கள். முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு அன்று யாழ்ப் பாணத்தை ஆட்சி செய்தவர்களை மட்டும் குறை கூற முடியாது. பிரதான பங்கு தமிழ்ச்சமூகத்தையே சாரும். 'தமிழ்த் தேசியம்' முற்போக்கு குணங்களை
HC
19ம் பக்கத் தொடர்ச்சி. அதன் குறைகளுடன் பலவீனத்துடன் அணைத்துக் கொள்ளவும் மாயாவதி எனக்குக் கற்றுத் தந்திருக்கிறாள்' "ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் உண்மை யில் எதைத் தேடுகிறார்களோ அதை அவர்கள் அடைந்தே தீருவார்கள். எனவே உனது வழியில் செல் நாரதா, நீ அதில் மனத் திருப்தி அடைவாய்." "நிச்சயம் செய்வேன் பிரபு. எனக்கு அதில் பயமெது வும் கிடையாது."
199

எப்போதோ, இழக்கத் தொடங்கிவிட்டது. அது பாஸிஸத்திற்குத் தலை வணங்கத் தொடங்கி நீண்ட நாட்களாகிவிட்டன. முதலில் தலைவணங்கியவர்கள் கல்விமான்களே. (ஒரு சிலர் விலக்கு). ஜெர்மனியில் பிரபல கல்விமான்களாகிய கார்ல் ஜ"ங், மாட்டின் ஹைடேகர் போன்றோர்நாஸிஸத்திற்குதலைவணங்க வில்லையா? அதுபோல்தான். சாதாரணதமிழ்ச்சனங் களும் மிக இயல்பாக பாஸிஸத்திற்கு தலைவங்கி னார்கள். வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இழிவான செயலை "தமிழ்த் தேசீயம்' இன்றுவரை மனந்திறந்து சொன்னதில்லை. தமிழ் சமூகம் எங்கிருந்தாலும் (யாழ்ப்பாணமோ, கொழும்போ, வெளிநாடுகளோ) தனது சகலவிதமான அழுக்கு களையும் மறைக்க பயன்படுத்தும் சிறப்பான சொல்லே 'தமிழ்த் தேசீயம்' என்ற வார்த்தைப் பிரயோகம். 'தமிழ் தேசியத்திற்கு' பலவிதமான அர்த்தங்களை கால, தேச, வர்த்தமானங்களுக்கொப்ப இவர்கள் வழங்கிவருவதே உண்மை. முஸ்லீம்களை வெளியேற்றியது 'தமிழ்த் தேசீயம்’ ஒப்பேற்றி வைத்த ஒரு பெரிய நிகழ்ச்சி. பெறுமனே துரதிஷ்ட மாக நடந்த சம்பவமா அது? இல்லை ஒருக்காலும் இல்லை.
ஹிட்லருக்காக இன்றைய ஜெர்மனி தன்லகுனிவது போல, ஏகாதிபத்திய ஜப்பானுக்காக இன்றைய ஜப்பான் தலைகுனிவதுபோல "தமிழ்த் தேசீயம்' முஸ்லீம்களுக்காக நேர்மையுடன் தலை குனிய வேண்டும்.
அது சரி இப்போதும் கூட முஸ்லீம்கள் தொடர்பாக என்ன பெரிய முன்னேற்றம் வந்துவிட்டது. எல்லாமே உதட்டளவில்தான். சிங்களப் பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல இந்த அழுக்கடைந்த "தமிழ்த் தேசீயம்'
välit "r
பார்த்தசாரதி- = چي
அவர் கடைசி முறையாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
கிடைக்கப் பெற்றோம் இருள் வெளி
Sugan 1 Rue Honne De BaiZaC
95140 Gargen Les Gonesse FRANCE

Page 53
| h Lư ủ - 12 . .
கவிதைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து மொழிெ அபாரமானது. சேகுவாராவின் அசாத்திய அழகு படமாக வழங்கிய ரசனை பாராட்டுக் குரியது. தாமரைச் செல்வி பதிப்பகம் திருநாவுக்கரசுவ
யுகப் புரட்சி என்று பாரதி குறிப்பிட்ட ரஷ்யப் புரட்சி புதிய உலகை உருவாக்கியது. புதிய மனிதனை உருவாக்கியது. ஏகாதிபத்தியத்தின் ஆணிவே அசையத் தொடங்கி உலக யுத்தங்கள் மூண்டன கோடிக்கணக்கான மக்களை பலி கொண்டன பொதுவுடைமைத் தத்துவம் வேர்பிடித்து சோவியத் யூனியன் பெரும் சக்தியாக உருவாகியது. தொடர்ந்து வந்த சீனக் கலாச்சாரப் புரட்சி மற்றொரு மாபெருப் தாக்கத்தை உண்டு பண்ணியது. "சோஷலிஸ்ட் ப்ளாக்" என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு மாபெரும் சக்தியாக இடதுசாரி இயக்கங்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து அணிதிரண்டன. ஏகாதி பத்தியம் பெரும் பின்னடைவுகளை சந்தித்த காலப இதுதான். காலனிகள் பல விடுவிக்கப்பட்டன ஆனால் இவை பெயரளவில் சுதந்திரம் பெற்றனவே தவிர, உண்மையில் சீரழிந்த பொருளாதாரத்தோடுப மறைமுகமான ஏகாதிபத்தியத் தாக்குதல்களோடுப அல்லாடிக்கொண்டே, ஜனநாயக அமைப்பின் அத்தனை ஓட்டைகளுடனும் தம்மை நிலைநிறுத்தி கொள்ள அரும்பாடு பட்டன. காலனிய மனோபாவ திலிருந்து விடுபடவும் முடியாமல், அதில் தொடர்ந்து எதிர்நீச்சல் போடும் வீரியமான கொள்கைகளுட இல்லாமல் சவலைக் குழந்தைகளாக இவை உழன்று கொண்டிருந்தன. ஏகாதிபத்தியங்களுக்குப் பதிலா இப்போது அந்தந்த நாடுகளின் அதிகார-ஆளுட வர்க்கங்கள் நாட்டையும் மக்களையும் சுரண்டின.
இந்தகால கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு முழு மூச்சாக லத்தீன் அமெரிக்காவின் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாட்டிலும் எழுந்தது. லத்தீன் அமெரிக்க வைப் பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதலே ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து விடுபட போராட்டங்களை மேற்கொண்ட நாடுகளில் அவற்றின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு போராட்டங்கள் முறியடிக்கப்பட்டு வந்தன. 1959ல் ஏகாதிபத்தியம் மிக மோசமானதொரு பின்னடைவை சந்திக்கிறது. 10லட்சம் மக்கள் தொகையை மட்டுடே கொண்ட க்யூபப் புரட்சியின் வெற்றி வரலாற்றில் தன இடம் பிடிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து துளியூண்டு க்யூபா பெற்ற வெற்றி மீண்டு மொருமுறை உலகில் சோசலிச அலையை எழுப்புகிறது

பயர்த்துத் தந்திருக்கும் யமுனா ராஜேந்திரனின் ஈடுபாடு டன் கூடிய புகைப்படத்தைக் கண்டெடுத்து அட்டைப் நேர்த்தியான நூலாக அமைத்து வெளியிட்டிருக்கும் புக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
b
s
1998
-விசாலாட்சி
க்யூபப் புரட்சியின் வெற்றியை ஜீரணிக்க முடியாத ஏகாதிபத்தியம் தனது தீ நாக்குகளை எல்லாப்புறமும் விரிக்கிறது. சோசலிச நாடாக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்ட க்யூபா, தனது மண்ணில் இருந்த அமெரிக்க நிறுவனங்களை நாட்டுடமையாக்கிய கணம்தொட்டு, சந்திக்க நேர்ந்த இக்கட்டுகள் எத்தனை பொருளாதாரத்தடை, வர்த்தகத்தடை, இராணுவத்தில் ஊடுருவல், எதிர்ப்புரட்சித் தூண்டுதல்கள், ஆயுத நெருக்கடி, ப்ளேயா ஜிரான் படையெடுப்பு க்யூப கடற்பரப்பில் ஊடுருவல், விதவிதமாக தினந்தினம் காஸ்ட்ரோவைக் கொலை செய்வதற்காக மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் அத்தனையையும் மீறி க்யூபா புரட்சியைக் கட்டிக்காத்துக் கொண்டதோடு, சர்வதேச அளவில் கல்வி, மருத்துவம், விளையாட்டு ஆகிய துறைகளில் உலகில் முதலிடத்தைப் பிடித் துள்ளது. இன்றளவும் உலகத் துக்கே போலிசாகச் செயல்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் கனவில் கூட காணமுடியாத சாதனை இது.
க்யூபப் புரட்சியின் வெற்றி மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் புரட்சியை துரிதப்படுத்துகிறது. தொடர்ந்து சிலி, அர்ஜெண்டைனா, பெரு, உருகுவே, நிகரகுவா, ஆகிய நாடுகளில் புரட்சிகர போராட்டங் கள் வெடிக்கின்றன. க்யூபப் புரட்சி கொடுத்த கசப்பு மாத்திரை ஏகாதிபத்தியத்திற்கு நல்ல படிப்பினையாகி விட்டிருந்ததால், அங்கு செய்த தவறை வேறெங்கும் செய்ய அது தயாராக இல்லை. சிலியில் சால்வெடார் அலண்டே, ஜனாதிபதி மாளிகையை சி.ஐ.ஏ வெடி வைத்துத் தகர்க்கப்பட்டபின் சரணடையாததால்
கொலை செய்யப்படுகிறார். பெரு, அர்ஜெண்டினா,
எல்சால்வெடார், உருகுவே இங்கெல்லாம் ஆயிரக் கணக்கானவர்கள் ‘காணாமல் போகின்றனர். அதாவது கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குட் பட்டு, பின்பு இருந்த இடம் தெரியாமல் கூட்டங் கூட்டமாக அழிக்கப்படுகின்றனர். வெற்றி பெற்ற நிகராகுவா புரட்சியைத் திட்டமிட்டு காண்ட்ராக்களை போஷித்து நிர்மூலமாக்கியது அமெரிக்க ஏகாதி பத்தியம். (காண்ட்ராக்களின் பராமரிப்புச் செலவின் அளவு குறித்து அமெரிக்காவின் எல்லா அட்டூழியங் களுக்கும் துணை போகும் இஸ்ரேல் ஐ.நா. சபையில் எதிர்ப்பு தெரிவித்ததால், இதை நிறுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.) பிறகு வியத்நாம். அந்த

Page 54
மக்களின் நினைத்துப் பார்க்க முடியாத வீரத்தின் முன் அமெரிக்கா வெட்கி ஓட நேர்ந்தது. க்யூபப் புரட்சியை வழிநடத்தி வெற்றி பெறச் செய்து அரசாங்கத்தில் உயர்ந்த பதவியும் வகித்தபின் அனைத்தையும் துறந்து அமெரிக்காவின் ஏனைய நாடுகளின் விடுதலையை நோக்கமாகக் கொண்ட கண்டம் தழுவிய புரட்சியைக் கட்டுவதற்காகப் புறப்படுகிறார் சேகுவேரா. 1967 அக்டோபர் 9ம் தேதி பொலிவிய மலைப் பிரதேசத்தில் சேகுவேரா சி.ஐ.ஏ. வினால் படுகொலை செய்யப்படுகிறார். உலகெங்கிலுமுள்ள போராட்ட நிலைபாடு கொண்ட அனைத்து இன மக்களுக்கும் போராட்டத்தின் குறியீடாக, கொடியாக, பலமாக மாறிப்போனார் சேகுவேரா. மூன்றாம் உலக நாடுகள் அனைத்துக் குமான விடுதலைக்கான புரட்சியின் நட்சத்திரம் அவர்தான். எல்சால்வடாரில் பிறந்து ரோக் பில்டன், லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய சோசலிஸ்ட் நாடுகளில் திரிந்து, இறுதியில் தனது சொந்த நாட்டிலேயே அவரால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் புரட்சிகர இராணுவத்தாலேயே தலைமறைவு வாழ்க்கையின் போது சி.ஐ.ஏ. கே.ஜி.பி. ஏஜென்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். அவரது உடல் என்ன ஆனது என்கிற விவரம் இன்றளவும் புதிராகவே இருக்கிறது. சிலியில் பிறந்த ஆரியில் டோப்மேன், 1973ம் ஆண்டு சால்வடார் அலாண்டே சி.ஐ.ஏ.வின் சதிக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட பின்பு நாட்டைவிட்டு வெளியேறினார். பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொதுப்பிரச்சனையாக ‘காணாமல் போதலும்" (சித்திரவதை செய்து கொல்லப்படுவது) சித்திர வதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் தொடர் வேதனைகளும் பழிவாங்கும் உணர்வுகளும் கொண்டிருப்பதையும், லத்தீன் அமெரிக்க இலக்கி யமே அரசியல் வன்முறையின் விரிவுகளைப் பற்றிய விவரணைகளாக இருப்பதையும்தான் டோப்மேனின் எழுத்துக்கள் பதிவு செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சிறிது காலத்தைக் கழித்த இவர்தற்போது ஹாலந்தில் அகதியாக வாழ்ந்து வருகிறார். லத்தீன் அமெரிக்க மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள உக்கிரமான வன்முறையுடன் கூடிய வாழ்வை பிரதிநிதித்துவப்படுத்தும் இம் மூன்று கவிஞர்களின் கவிதைகள்தான் கடைசி உயிலும். என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.” உலகெங்கிலும் அறுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி எழுபதுகளிலும் எண்பதுகளின் முற்பகுதி
1998

வரையிலும் நீடித்த சோசலிசத்தின் வீச்சு, மெல்ல முனை மழுங்கி கலகலத்துப் போகத்தொடங்கியது. பெர்லின் சுவர் இடிப்பு, சோவியத் யூனியனின் வீழ்ச்சி இவ்விரண்டும் உலக அரங்கில் காட்சிகளை மாற்றின. அதுவரையிலும் புதிய உலகத்தின் சிற்பி மார்க்ஸ் என்றும், பொதுவுடைமைத் தத்துவமே மனித குலத்தின் மேம்பட்ட வாழ்விற்கு உத்தரவாதம் அளிக் கும் தத்துவம் என்றும் பேசியவர்கள், மார்க்ஸியம் தோற்றுவிட்டது, பொதுவுடைமைத் தத்துவம் காலாவதியாகிவிட்டது என்று பேசத் தொடங்கினார் கள். ஒரு குழுவினர் விரக்தி மனப்பான்மையில் மார்க்ஸியம் இனி செல்லுபடியாகாது என்று அதற்கு ஒப்பாரி பாடிக்கொண்டிருக்க, வேறொரு குழுவினர் மார்க்ஸியத்தின் குறைபாடுகளை அலசி ஆராயப் புறப்பட்டனர். மற்றொரு குழுவினர் ஜனநாயகத்தின் நன்மைகளை'தூக்கிப்பிடிக்க முயல, நான்காவது குழு "சும்மா இரு, செயலற என்ற நிலையை எடுத்தது. இவையெல்லாம் நீங்கலாக மற்றொரு குழுவினரும் உண்டு- இவர்கள் மார்க்ஸின் வீழ்ச்சியில் மனம் நொந்துபோய் இன்று ருத்ராட்சமும் கையுமாக போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியச் செயல்பாடுகளின் மூலமாக தமது இருப்பை உணரச் செய்து கொண்டிருப்பவர்களோ', யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத எழுத்தால் வெள்ளைத்தாள்களைக் கறுப்பாக்கிக் கொண்டிருக் கிறார்கள். புத்தியைக் காசுபண்ணும் சாமர்த்தியமுள்ள அறிவுஜீவிகள் 'அரசுசாரா நிறுவனங்கள்’ என்ற நிழலில் ஒதுங்கி சீர்திருத்த நடவடிக்கைகளில் தங்கள் அறிவை முதலீடாக்குகின்றனர்.
இவர்கள் அரிய ஆராய்ச்சிகள் பல செய்து வழ வழப்பான வண்ணத் தாள்களில் வெளியிடும் ஆய்வறிக்கைகள் ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவ நோக்கங்களுக்குத்தீனியாகின்றன. போர்களால் மனித குலத்தை அடிமைப்படுத்தி வந்த ஏகாதிபத்தியம் தற்போது தாராளச் சந்தை என்ற நூதன ஆயுதத்தின் மூலம் போராட்டத் தன்மையை இழந்துவிட்ட மக்களை நுகர்பொருள் கலாச்சாரத்தில் தள்ளி வெற்றி கொள்கிறது.
இந்தச் சூழலில்தான் கடைசி உயிலும் கடைசி வாக்கு மூலமும் வெளியாகியுள்ளது. (மேலே குறிப்பிட்ட சேகுவேரா, ஆரியல் டோப்மேன், ரோக் டால்பின் ஆகிய மூன்று புரட்சிகர கவிகளின் படைப்புகளின் தொகுப்பாக)
நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளை தனித்தனி யாகக் குறிப்பிட்டுச்சொல்வது என்பது ஒரு நியாயமற்ற சம்பிரதாயமான செயலாகவே இருக்கும். ஒவ்வொரு கவிதையும் ஆக்கப்பட்ட கணத்தின் உக்கிரமும்,

Page 55
கவியின் நிலையும், கவிதையின் உள்ளடக்கத்தை வெளிக்கொணர வேண்டிய நிர்ப்பந்தமும் வெவ் வேறானவை, உண்மையானவை. எனவே ஒவ் வொன்றும் ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு என்ற நிலையில் முக்கியத்துவம் வாயந்தவை.
புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கு சாதனமாக சீரழிந்துபோய், அதிலும் அறிவுக்கு வேலை தராமல்
தாமரைச் செல்விபதி
சிறுகதைகள் l. தாவரங்களுடன் உரையாடல் - எஸ். இராமகி 2. உயிர் தண்ணீர் - கண்மணி குணசேகரன் 3, காடன் மலை - மா. அரங்கநாதன் 4. தெலுங்கானா சொல்லும் கதைகள் - (மொ) சார் 5. உதிர் இலைக் காலம் - கண்ணன் நாவல் 6. நிழல்களுடன் உரையாடல் - மார்த்தாத்ராபா 7. கடைசி உயிலும், கடைசி வாக்கு மூலமும் - ய( (டால்டன், சே, முதலியோரின் கவிதைகள் (டெ 8. செல்வி சிவரமணி கவிதைகள் 9. சனங்களின் கதை - த. பழமலப் 10. ஆறாவது பூதம் - ஆசு V . 11. நிழலாட்டம் - (திருத்தணிக் கல்லூரி மாணவர்க 12. நகரத்திலிருந்து ஒரு குரல் - கல்யாண ராமன் 13. சந்திப்பின் கடைசி நொடியில் - மா. காளிதாஸ் 14. அதிர்காற்று - பா. ஜெயப்பிரகாசம் நுண்கலைகள் 15. மக்களுக்கான சினிமா - (தொகுப்பு) - ப. திரு 16. ஆப்ரிக்க சினிமா - யமுனா ராஜேந்திரன் 17. அரசியல் சினிமா - பதினாறு இயக்குனர்கள் - * 18. எரியும் வண்ணங்கள் - ஒவியர் புகழேந்தி ஒவிய
படைப்புலகம் 19. ஜோர்ஜ் லூயி போர்ஹ - எஸ்.இராமகிருஷ்ண நாட்குறிப்பு 20. பொலிவியா நாட் குறிப்பு - சே குவேரா - (பெ மருத்துவம் 21. ஹோமியோபதி ஆலோசனைகள் - கோச்சடை மெய்யியல்
2. இயங்கியல் பொருள்முதலியல் - பேரா. வேலு
தொடர் தாமரைச்செ 31/48இராணி அண்ணா நகர், (
1

வாசகனின் கவனத்தைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பிடித்து வைக்கும் நுனிப்புல் சமாச்சாரங்கள் மட்டுமே. அச்சு வடிவம் பெறும் இந்நாளில், மிக அழகான அட்டைப்படமும் அமைப்பும் கனமான விஷயமும் உள்ளடக்கிய கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் சமூகப்பார்வை முற்றிலுமாக செத்துவிடவில்லை என்பதை உறுதி செய்கிறது.
ப்பகத்தின் வெளியீடுகள்
ருஷ்ணன் ரூ. 35/- ლნ. , 35 /- 莒救 ரூ. 35/- ந்தாதத் ரூ. 20/-
* தமிழாக்கம் : அமரந்த்தா ரூ. 50/- முனா ரஜேந்திரன் dit) ரூ. 30/- ரூ. 15/- ரூ. 30/- ரூ. 20/- 5ள் தொகுப்பு) ரூ. 20/- ரூ. 30/- elj. 20/- ლIს. 20/-
நாவுகரசு ரூ. 50/- ரூ. 30/- யமுனா ராஜேந்திரன் ரூ. 75/- பர்கள் ep. 75/-
ரூ. 30/-
Dா) அமரந்தா elp. 60/-
- (மொ) ரூ. 25/-
லுச்சாமி e5. 10/-
புகளுக்கு
ல்வி பதிப்பகம், கே.கே.நகர், சென்னை - 600 078.
998 - -- - - - - -

Page 56
THE GOD OF SMALL THINGS
- அருந்ததிராய் இந்திய ஆங்கில நாவல்.
இந்திய ஆங்கில நாவல்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் வந்தவை. இரண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் வந்தவை. முதலாவது வகையில் முல்க் ராஜ் ஆனந்த், ஆர்.கே. நாராயண், ராஜாராம், குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பிரபல்யமானவர்கள். அவர்கள் எழுதிய நாவல்கள் மரபு ரீதியானவை. ராஜாராமுடயவை இந்தியத் தத்துவம் சார்ந்தவை. முல்க் ராஜ் ஆனந்த்துடையவை இடதுசாரித் தன்மை கொண்டவை. ஆர்.கே.நாராயனுடையவை லால்குடியை வைத்து பின்னப்பட்ட சித்திரங்கள். குஷ்வந்த் சிங்கின் இந்தியப் பிரிவினையை வைத்து எழுதப்பட்ட நாவல் சிறந்தது. அவர்களின் எழுத்துநடை கூட மரபு ரீதியான ஆங்கில எழுத்தே. இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்களில் செத்சென், சல்மான்ருஷ்டி, மிஸ்ட்ரி, அருந்ததிராய் அடங்குகிறார்கள். இவர்கள் இந்திய எழுத்தாளர்களா? அல்லது அவர்கள் வாழும் அமெரிக்காவா? இங்கிலாந்தா? கனடாவா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழக் கூடியவை. ஆனால் அவர்கள் இந்தியப் பின்னணியை வைத்து எழுதுகின்ற படியாலும் அவர்கள் பிறப்பால் இந்தியர்கள் என்ற படியாலும் அவர்களை இந்தியர்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம். (எ பேசேஜ் டு இந்தியா எழுதிய இ.எம். பாஸ்டரை இந்திய எழுத்தாளர் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அப்படியே கிப்ளிங்கும்) இரண்டாம் பிரிவினர் அவர்கள் வாழ்கின்ற சூழலுக்கேற்ப சமகால ஆங்கிலக் கல்வியாால் அறிவு பெற்றவர்கள் என்றமையால் அவர்களின் எழுத்திலும் அத்தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நடை புதிய அமெரிக்க ஆங்கில நடையை ஒத்திருக்கின்றது என்பது தெளிவு. ஆனால் இந்திய மொழிகளில் எழுதும் நாவல் ஆசிரியர் களிலும் பார்க்க சிறந்தவர்கள் என்று சல்மான் ருஷ்டி கூறுவது விவாதத்திற்குரிய விஷயம். உண்மையில் பிரதேச மொழிகளில் எழுதும் சிறந்த இந்திய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றனவா? மொழிபெயர்க்கப்படுபவையும் சிறப்பாக மொழியாக்கம் பெறுகின்றனவா? என்ற கேள்விகள் உள்ளன. ஆகவே, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்ட பரிசு பெற்ற நூல்களை அல்லது வேறுசில நூல்களை வைத்து எது சிறந்தது என்ற விவாதத்தில் ஈடுபடுவது குருடர்கள் யானையைப் பார்த்ததிற்கு ஒப்பாகும். The God of Small Things 6Taip logsLisleity(5iisg. ராய் என்ற பெண் நாவலாசிரியை ஒரு இந்திய நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். அது கடந்த ஆண்டு இங்கிலாந்தின் புக்கர் பரிசையும் தட்டிக் கொண்டுள்ளது. அருந்ததியின் முதல் நாவல் அது. கேரளத்தின் சிரியன் சிறிஸ்தவ சமூகத்தை அடிபடை யாக வைத்து அழகாக
199

, in in 12 எழுதப்பட்ட நாவல், சிரியன் சிறிஸ்தவர்கள் மேல் சாதி, மேல் தட்டு வர்க்கமாக இருந்துள்ளது என்பதும் அது கேரளத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்களால் தேய்ந்து சென்றுள்ளது என்பதும் இந்நாவலால் அறியப்படும் செய்தி. இந்நாவல் மேற்கில் ஆங்கில நாடுகளில் - எனக்குத் தெரிந்த கனடாவில் Best Seller List ல் முதல் இடத்தைப் பெற்று சிறந்த நாவல். கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் என்ற அறிமுகங்களுடன் வந்துள்ளது.
ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளான ராகேல், எஸ்தப்பன் என்ற இருவருடைய கதை தான் இந்நாவல். அவர்களின் வஞ்சனை அற்ற தன்மை, விளையாட்டுக்கள், தனிமை, அன்புள்ளதாய் அம்மு (அவர்களுடன் பகலில் அன்புடன் விளையாடும் வேலுதாவோடு இரவில் அவள் வைத்திருக்கும் தொடர்பு) - இவை கதைகளின் அடிநாதம். குடிகாரத்தகப்பன், மம்மாச்சி, மாமன்சாக்கோ, பேபி கொச் சம்மா, சொஃபி மொல், அவர்களுடைய தாய் மாகரெற் கொச்சம்மா (சாக்கோவின் விவாகரத்துப் பெற்ற மனவிை), மாக்சியத் தலைவர், இவர்கள் நாவலில் வந்து போகிறவர்கள். பின்னணியில் உள்ளவர்கள். 60,70களின் கேரள அரசியல் பின்னணியில் கதை பின்னப் பட்டிருக்கிறது. அது இந்நாவலுக்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது. இரு குழந்தைகளின் உலகம் தான் இக்கதையின் மையம், கதை வளர, குழந்தைகளின் வஞ்சனையற்ற தன்மையில் (innocence) பாதிக்கப் படுகிறது. அதிலும் பார்க்க அவர்களுடைய தாய் அம்முவின் கதை பரிதாபத்துக்குரியதாக மாற்றம் அடைகிறது. அதுவே கதையையும் தொடரச் செய்கிறது.
நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன் எனது இளம் பிள்ளைகள் வாசிக்கக் கூடிய நாவலாகத்தான் அதன் உள்ளடக்கம் தெரிந்தது. அதன் ஆங்கில நடை ஜேம்ஸ் Gagnitigair The Potrait of an Artist as a Young Man இன் நடையையும் குழந்தைகள் மனதையும் தொட்டுக் காட்டுவது போல் இருந்ததால் அப்படி நினைத்தேன். நாவலின் நடுவே போய்க்கொண்டிருக்கையில் டி.எச். லோரன்சின் உள்ளடக்கம் அல்லது எஸ்.பொவின் சடங்கு, தீ போன்றவையாகவே உருமாற்றம் பெற்றது. இறுதி அத்தியாயம் மேற்கத்தியவர்களின் வக்கிரத் தேவகைளுக்காக பாலுறவை அப்பட்டமாக காட்டி நாவல் விற்பனைக்காக வேண்டுமென்றே புகுத்தப்பட்டதாகவே உணர்ந்தேன். இறுதியில் நாவல் டானியனிலின் கதைக்கரு போல் அமைந்து விட்டது. நல்ல நடையில் அழகான உருவகங்கள், உவமைகள் மூலம் எடுத்துச் சொல்லப் படுகின்றமையால் கலாரீதியாக வெற்றி பெறுகின்றது. முரண் அணி, நகைச்சுவை, பல இடங்களில் அழகாக சுவைக்கக்கூடியதாக உள்ளது. குழந்தைகள் உலகம் நம்பகத் தன்மையாய் அப்பட்டமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆயினும், கடைசி அத்தியாயத்தை நீக்கி இருந்தால் அந்நாவல் முழுமையாக விரசமில்லாமல் நிமிர்ந்து நிற்கக் ծռԼգ-Ա5l.
- என்கே.எம்.

Page 57
* கவிதை பற்றிய
காதலர்களின்
sо 6oодJu III 656) 9(b шgogђ
அவள்:
நரறு நாளாயிற்று காதல் தகிப்பையும் மோகச் சுகிப்பையும் உன் கவிதையில் கண்டு எழுதேன் எனக்கொரு கவிதை என நான் கேட்பதை விரும்பாய் உன் கவிதையுள் சிறைப்பட்டுக் கோலமிழப்பதை
நானும் விரும்பேன்
எனினும், உனது கவிதையைப் பற்றிக் கேட்கலாம் அல்லவா? இபபோது, உனது கவிதையின் இயல்பு என்ன? இலக்கு என்ன?
VVVVV
 
 

998
அவன்: எனது கவிதை சிக்கலற்றது ஆழமான உணர்ச்சிச் சுழிப்புகளில் அது தன்னுடைய ஆழத்தை இழக்கவில்லை அதற்குப் பல அர்த்தங்கள் கிடையாது நான் எல்லா நேரங்களிலும் அதனை எழுதி விடலாம். அது தயக்கமற்றது, துணிவில் உரம் பெறுவது பாட பேதமற்றது - - அதனைப் பக்கம் பக்கமாகவும் எழுதி விடத் தேவையில்லை மலைக்கும் கடலுக்கும் அது உறவற்றது. காற்றைப் புணராதது நீ கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் சில சிக்கலானவை; சில நகைப்புக் கிடமானவை சில ஒருவருக்குமே புரியாதவை சில பொறாமையால் விளைவன சில என் இருப்பையே குலைப்பன சில உன் சித்தம் குலைந்த அர்த்தம் நிறைந்தவை அது தரும் மறுமொழி: இல்லை என்பதும் மெல்லிய முறுவலும் என்றாலும், அதன் ஆயிரக் கணக்கான வார்த்தைகளையும் எண்ணற்ற படிமங்களையும் அளவற்ற சந்தத்தையும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் பொழிப்பையும் நான் உனக்கு தர முடியும் : உன் நேசத்தில் உருகும் என் நெஞ்சு.
-சேரன்

Page 58
YARL FAN.
* சடைநாகம், பூச்சரங்கள் * ஆண்டாள் மாலைகள்
* கொண்டை மாலைகள்
* கைச் செண்டுகள் 米 கிறிஸ்தவ திருமணத்திற்கான
பூஅலங்காரங்கள் X மரணச் சடங்குகளிற்கான
மலர் வளையங்கள்
W E A R E S P E C || ALI ZE D | N
FREE DELIVERY TO FUNER
All in 8 மண்டப ஒ இ ஐயர்' ஒ பலூன் அல இ முத்து மன ஒ விருந்துபச்ச ஒ மணப்பெண்
శ,
" 3OD.J. D. 745, 5.4. C., 7
& Tool Equipmen
9 Helium 9 Ballo 2776 Kennedy Road, Scarborough On...,
(South of Finch We
 
 
 

Boutonniere Flower Baskets &
Bridal Bouquet & Arch Decorations & Church Decorations & Fresh Cutflowers Carnations & Roses < Sympathy arrangment &
syMPATHy ARRANG MENT
ALHOME OR CEMETERY
One ஒழுங்குகள் சேவை »äémgä66r னவறைகள் ார சேவைகள்
அலங்காரம்
/.292-8351, 291-1906, fax: 291-1907
TRENTAL
ts €ğ9 Party Supplies
ɔns & Games etc. M1P 3J2, Tel 291-1906, Fax: 291-1907 st Side of Plaza)

Page 59
SCt சு.ரா சில குறிப்புகள் ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் முன்பு ஜே.ஜே: சில குறிப்புகள் படித்ததுண்டா என்ற கேள்விக்கு இல்லை" என்ற என் பதிலைக் கண்டு, ஏதோ வாழ்வில் பாதியை நான் இழந்து விட்டதான அனுதாபப் பார்வைகளுக்கு ஆளாகி நின்றதுண்டு. இதைவிட, இலக்கிய மட்டங்களுக்குள் அவ்வாறான தகைமையின்றி எவ்வாறு நான் இலக்கியம் பற்றி கருத்துக் கூற முடியும் என்ற தொனியும் பல இடங் களில் இருந்தது. மெலிதான சேலைக்குள் இளமையின் துடிப்புகள் தெரிய, கூர்நுனி மூக்கும் மெல்லிய முகமும் (அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் புத்தி ஜீவித்தனம் கதையில் வந்தால் கூடவே கண்ணாடியும்!) கொண்ட மெலிதான நாயகிகளின் படங்களுடன் ஜனரஞ்சக வார இதழ்களிலோ, ராணிமுத்து தொடரிலோ வரும் 'ஸ்டார் வால்யூ" எழுத்தாளர்களின் கதைகளை தெரிந்திருக்கக் கூடிய என் போன்ற ஒரு சாதாரண வாசகனுக்கு ஜே.ஜே: சில குறிப்புகள் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லைத் தான். சுந்தர. ராமசாமி என்ற பெயர் கூட புத்திஜீவி (மிகைப் படுத்தலாயின், இலக்கியப் பிரக்ஞை கொண்ட) மட்டங்களிற்கான ஒரு பெயராக இருந்ததே அன்றி, நாளது வரைதமிழகத்து வாரஇதழ்களில் அடிபடுகின்ற பெயராக இருந்ததில்லை. இவரது படைப்புகளைப் படித்ததை விட, படைப்புகள் பற்றி எழுதப்பட்டவை களைப் படித்ததுதான் அதிகம். இங்கே வந்த போது கூட கே. டானியலின் இலக்கியத் தரம் பற்றிய அவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டிருந்தன. சுந்தர. ராமசாமி பற்றிய பாராட்டுரைகளும் விமர்சனங்களும் ஒரு வகையில் படைப்புகள் சார்ந்ததாய் இல்லாமல், அபிப்பிராயம் சார்ந்ததாகவே இருந்தன. அவரது பாதாரவிந்தங்களின் பெருமைகளைப் பறைசாற்றும் புகழ்மாலைகளும், ஜே.ஜே: சில குறிப்புகளில் காணப்படும் கம்யூனிஸத் திற்கு எதிரான விமர்சனக் கருத்துக்களாக அவரை நிராகரிக்கும் போக்கும் என அவலை நினைத்து உரலை இடிக்கும் நிலையைத் தான்காணக்கூடியதாக இருந்தது. கே. டானியலின் நாவல்கள் இலக்கியத்தரத்தை எட்டவில்லை என்றதான கருத்து இங்கே பலத்த கண்டனத்துக்குள்ளானது. ஆளுக்காள் வரிந்து கட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கி, தங்கள் கருத்தை நிலைப்படுத்த நின்றதைத்தான் காணக்கூடியதாக இருந்ததேயன்றி நிதானமாக மறுபக்கத்துக் கருத்தை கேட்டு, தங்கள் தரப்பு வாதத்தை நியாயப்படுத்த முயன்றதைக் காணமுடியவில்லை.

998
கே. டானியலின் நாவல்கள் பற்றிய முழுமையான அறிந்துகொள்ளல் இல்லாமல் அவரது நாவல்கள் இலக்கியத் தரத்தை எட்டவில்லை என்றது நியாயப் படுத்த முடியாத ஒன்று தான். இருந்தாலும் அதற்கான ஒரு பின்னணி, சுந்தரராமசாமிக்கான நியாயப்படுத்தல் அல்ல, உள்ளதாகவே எனக்குப்படுகிறது. எங்கள் ஈழத் தமிழ் இலக்கிய உலகின் போக்கே அந்தப் பின்னணி எங்கள் ஈழத்து இலக்கிய உலகம் தரமுள்ள படைப்பு களை படைப்பதை விட, தங்கள் படைப்புகள் பற்றியும் தாம் சார்ந்த கொள்கைகள் பற்றியும் பறை சாற்றுவதிலேயே அதிகம் காலத்தை செலவிட்டிருக் கிறது. ஒரே (செங்) கொடிக்கு கீழ் ஒன்றுபட்டு, அதன் கொள்கைக்கான பிரசார ஊடகமாக தங்கள் படைப்பு களைக் கொண்டவர்கள்தான் அதிகம். பல எழுத்தாளர் கள் எங்கள் மண்ணின் கதையை, எங்கள் மக்களின் வாழ்க்கை முறையை அவர்களின் பேச்சு வழக்கு மொழியிலேயே சித்தரித்திருக்கிறார்கள். இருந்தாலும் எங்கள் மண்ணுக்கு ஒவ்வாத பல விடயங்களை, பிரச்சார நோக்கம் ஒன்றே மனதில் கொண்டு இலக்கிய மாகப் படைத்தது தான் அதிகமாய் இருந்தது. தளையசிங்கத்தின் கருத்துப்படி ஆலைகள் இல்லாத யாழ்ப்பாணத்தில் ஆலைகள் பற்றி கதை எழுதியது போன்றது. மறுபுறத்தில், இவற்றை நிராகரித்தும் கிண்டல் செய்தும், எங்கள் மண்ணைப் பிரதிபலிப்பதை விட, மேல்நாட்டு இலக்கியங்களில் அக்கறை கொண்டும் இன்னொரு குழு. இந்தக் குழுவுக்கு உள்ளூர் எழுத்தாளர்களைவிட, கொங்கோக்காட்டின் நாட்டார் பாடல் பற்றி ஹங்கேரிய எழுத்தாளர் எழுதிய இலக்கியம் அத்துபடி. இந்த இரண்டு குழுவிற்குமான ஆஸ்தான விமர்சகர்கள் தங்கள் தரப்பு இலக்கியங்களை அங்கீகரித்தும் மற்ற தரப்பு இலக்கியங்களை தரத்தை புறக்கணித்து நிராகரித்தும் இருட்டடிப்புச் செய்தும் கோஷ்டி மோதல்களை வளர்த்திருக்கிறார்கள். இந்த இருதரப்பினரும் தமிழகத்தில் உள்ள இலக்கிய கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு. தங்கள் தரப்பு இலக்கியங்களை மட்டும் அங்கே அறிமுகப்படுத்த. அங்குள்ளவர்களும் தங்களுக்குக் காட்டப்பட்ட யானையின் பகுதியை மட்டும் யானை என்று நினைக்க.
அதன் பிரதிபலிப்புத்தான் இந்த கே. டானியல் பற்றிய
சுந்தர ராமசாமியின் அபிப்பிராயம் என்றே படுகிறது.
எனவே சுந்தரராமசாமியின்கருத்துக்கள் கே. டானியலின்
நாவல்களால் எழுந்ததாக இல்லாமல் டானியல் பற்றிக்
கூறப்பட்ட கருத்துக்களால் எழுந்ததாக இருக்கலாம்.
女女女

Page 60
ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முதன் முதலாக படித்த போது, மனதில் ஏற்பட்ட பரவச நிலைக்கும் அப்பால் தோன்றியது ஒன்றே ஒன்று தான். எங்கள் புகலிட இலக்கிய உலகு பற்றி எழுத வேண்டிய கட்டாயம். இலக்கியப் போலிகளின் பம்மாத்துக்கள் தமிழக இலக்கியத்திற்கு மட்டும் உரியதன்று. அது உலகளாவியதொன்று. புகழும் பெருமையும் தேட விரும்பும் தனிமனித இயல்புகள் தரமான இலக்கியம் படைக்கும் ஆர்வத்தை விட்டு மேலோங்கும் போது போலித்தனம் அங்கே தலைதூக்குவது தவிர்க்க முடியாததாகிறது. நடைமுறை சாராத வெறும் தத்துவார்த்த தழுவல் போக்கும், வாழ்வுக்கு மாறுபட்டு சமூகத்திற்கு போதிக்கும் போலித்தனமும், எந்தத் துரும்பையும் பற்றிக்கொண்டு புகழ் தேடும் ஆர்வமும் அதிகாரம் மீதான பயம் காரணமாக நினைத்ததை சொல்லதுணிச்சலற்று பதுங்கிப் போகும் நழுவல் போக்கும் உலகளாவியவை தான்.
தமிழ் நாவல் இலக்கியத்தில் முற்றிலும் புதிதான உத்தியுடன், புதுக்கவிதை தழுவிய நடையோடு எழுதப்பட்ட நாவல் அது. சாதாரண பேச்சுவழக்கிற் குரிய உரையாடல்களை விட, புதுக் கவிதைக்குரிய தன்மைகளை இந்த நாவலின் பேச்சு வழக்கு அதிகமாகக் கொண்டிருந்தது அந்த நாவல். ஆனாலும் செயற்கைத்தனங்கள் எதுவும் தென்படாமல் சரளமான போக்கில் செல்லும் இந்த உரையாடல் உத்திக்கு ஏதாவது மூலங்கள் பாதிப்பாக உண்டா என்ற சந்தேகம் நிறையவே இருந்தது. 'எனக்குத் தெரிந்து அவ்வாறான மூலம் இல்லை. வித்தியாசமான ஒரு அமைப்பில் எழுத வேண்டும் என்ற நாவல் எழுத வேண்டும் என்ற தாகம் மனதில் இருந்தது. நாவல் எழுதும் வரையில் அது வித்தியாசமாக அமையப் போகிறது என்பது எனக்குத் தெரியாது. சாதாரணமாகத்தான் அதை எழுத ஆரம்பித்தேன். ஆனால் என் மனதுக்குள்ளே காலம் காலமாக இருந்த தோட்டமானது அந்த மாதிரியான பரிணாமத்தை உருவாக்கியிருக்கிறது. நேரடியாகச் சொல்லக் கூடிய மாதிரி எந்தப் பாதிப்பும் கிடையாது?
女女★
இலக்கிய உலகில் எதிலுமே சமரசம் செய்யாத ஒரு தூய்மைவாத எழுத்தாளனுக்கும் பொய்மையான 'இஸங்களுடன் போலி வேடங்களுடன் திரியும் பொய்மை இலக்கியவாதிகளுக்குமான உறவைச் சித்தரிப்பது தான் அந்த நாவல். எங்கள் புகலிட இலக்கிய உலகிலும் இதைப் போன்ற உறவுகள் நிறையவே உள்ளன.
சுந்தர. ராமசாமியின் பேச்சில் எப்போதுமே தனித்துத் தெரிவது தன்னம்பிக்கை. தன் படைப்புகள் பற்றியும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியுமான
199

அபாரமான நம்பிக்கை. இதனால் தான் பேசும் போது கூட நிதானமாக அவசரப்படாமல் சற்று சிந்தித்துப் பேசும் இயல்பு வருகிறது. பேச்சிலும் அந்தப் பெருமிதம் தலைதூக்குகிறது. ஆனால் நிதானமான கருத்துப் பரிமாற்றங்களின் போது உண்மைகளை நேரடியாகவே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நிறையவே காணப்படுகிறது. (கே. டேனியல் பற்றிய சர்ச்சைகள் கருத்துப் பரிமாற்றம் என்ற நிலையை மீறியது ஒரு துர்ப்பாக்கிய நிலைதான்) அவரிடம் தெரியும் தன்னம்பிக்கையே அவர்தன்னைத் தான் ஜே.ஜேயாக சித்தரிக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. 'பாலு என்ற பாத்திரம் என்னைப் பிரதிபலிக்ககூடிய பாத்திரம் தான். ஜே.ஜே கூட என்னைப் பிரதிபலிக்கக்கூடிய பாத்திரம் தான். ஆனால் ஒன்று. எந்தக் கதாபாத்திரத்தையும் நிஜவாழ் வில் இருந்து புகைப்படம் போன்று அப்படியே எழுத முடியாது. ஒரு மாறுபட்ட நிலையில் (Transform) தான் படைக்க முடியும். அது இயற்கையான நிகழ்ச்சி. எனவே நான் இருக்கிறேன் என்பதை விட நான் மாறப் பட்ட நிலையில் இருக்கிறேன் என்று தான் சொல்ல முடியும். என்னையும் அந்தக் கதாபாத்திரங்களையும் பக்கத்தில் வைத்து ஒப்பிட முடியாது. ஆனால் நான் ட்ரான்ஸ்போர்ம் ஆகியிருக்கிறேன் என்பது முக்கியமானது.
女女女 இந்த மாற்றப்பட்ட நிலையில் தான் பல தமிழக எழுத்தாளர்கள் ஜே.ஜேயில் உலாவுகிறார்கள். விடியல் வரும், செங்கொடி பறக்கும் என தன் எதிரிகளின் நிலைப்பாட்டிற்கமையவே தன் நிலைப்பாட்டை அமைத்துக் கொண்டிருக்கும் முல்லைக்கல் முதல் கொண்டு ஜே.ஜே என்பதை எழுத்துச் சீர்திருத்தப்படி சே.சேஎன்றுதான் போடுவேன் என்று அடம் பிடிக்கும் இதழாசிரியன் வரை இலக்கிய உலகின் யதார்த்த மனிதர்கள் ட்ரான்ஸ்போர்ம் நிலையில் படம் பிடிக்கப் பட்டிருக்கிறார்கள். இதனால் இலக்கிய உலகின் கண் இதன் மீது விழுந்ததில் ஆச்சரியம் இல்லை. தமிழகத்து இலக்கிய வாதி ஒருவனுக்கும் தன்னைப் பிரதிபலிக்கும் ஒரு பாத்திரம் அதனுள் இருந்திருக்கும். ஜே.ஜேக்குள் உள்ள தன்னை அடையாளம் தேடுவதற்காக அந்த இலக்கியவாதிகள் புதைபொருளாராய்ச்சியில் ஈடு பட்டிருக்கக்கூடும். ஆனால் சாதாரண வாசகனுக்கு. வணிகப் பத்திரிகைகளில் எழுதப்பட்டவற்றைவாசித்துப்பழக்கப்பட்டவாசகனுக்கு? Stephen Hawkins 67(ggu The brief history of time அமெரிக்காவில் அதிக அளவில் விற்ற புத்தகம்.
-

Page 61
, it in 12 ஆனால் பெரும்பான்மை வாசகர்கள் அதை வாசித்து முடிக்கவில்லை. இதைப் போல ஜே.ஜேயும் அதிக அளவில் விற்பனையான புத்தகம். ஆனால் வாசகர்கள் ஆசிரியர் சொல்ல விரும்பிய கருத்தை கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா என்ற சந்தேகம் உண்டு. 'வாசகர்களில் ஒரு பகுதியினருக்கு போய் சேர்ந்திருக் கிறது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர்களில் பொதுவாக பலருக்கு அந்த நாவலுடன் சுமுகுமான உறவு ஏற்படவில்லை. கணிசமான அளவு வாசகர்கள் நான் எதிர்பார்த்தது போலவே அதைப் படித்தார்கள். எழுத்தாளர்கள் அதைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள், விமர்சனங்கள் உவப்பானதாக இல்லை. அனேக விமர்சனங்கள் எதிர்மறையானவை. ஒரு நாவலுக்கு அதிகப்படியான விமர்சனம் வந்தது என்றால் அது ஜே.ஜேக்குத்தான். தமிழக வணிக எழுத்தாளர்களின் விற்பனைக்கும் இந்த நாவலின் விற்பனைக்கும் சம்பந்தமே கிடையாது. ஆழுமான நாவல்கள் தமிழகத்தில் எந்தளவுக்கு விற்பனையாகுமோ அதைவிட அதிகப்படியான அளவுக்கும் வேகமாக இது விற்பனையானது. நிறையப்பேர் விரும்பிப் படித் தார்கள். தமிழ் இலக்கியத்தில் அது பேசப்பட்டது"
★★★
ஜே.ஜேயின் சரளமான புதுக்கவிதை போன்ற நடை பல இடங்களில் வாசகன் புதிய விடயங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது புரிந்து கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கிறது. ஆசிரியர் நேரடியாக சொல்ல விருந்த கருத்துக்கும் அப்பால் உள்ளார்ந்த கருத்துப் பண்பு ஒன்றுண்டு. அதையேசு.ரா. சொல்கிறார். 'ஒரு தடவை மட்டும் வாசித்தால் போதாது, ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது அது புதுப்புது அர்த்தங் களைதருவது போல் அமைந்துள்ளது. இதைத்தமிழில் பன்முகத்தன்மை என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படைப்பை அணுகும் போது அது வெவ் வேறு அர்த்தங்களைத் தருகிறது. அதன்மூலம் உங்கள் அனுபவம் செழுமைப்படுகிறது."
·女女大
'ஜே.ஜேயில் பலவிதமான குறைகள் என்னை அறியாமலே இருந்திருக்கலாம். ஆனால் படிப்பவர் களுக்கு குறையில்லாமல் எழுதுபவர்களுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதும் தெரியும். நம்மைத் தாண்டி சில குறைகள் இருப்பதும் தெரியும்"
இதில் குறிப்பாக மனதில் உறுத்திக்கொண்டிருந்தது ஜே.ஜேயின் மனைவி அரசியலில் ஈடுபட்டு பிரபலம் பெறுவது. இது திடீரென்று அங்கு சொல்லப்பட்டி ருந்தது. 'திடீரென்று தான் அது சொல்லப்படுகிறது.

998 ዶ
முதலிருந்தே காலப்போக்கில் தொடர்ச்சியாக சொல் லக்கூடிய விடயம் நாவலில் கிடையாது. நாவல் பல பகுதிகளைத்தான் கூறுகிறது. எல்லாமே சொல்லப் பட்டதான பிரமிப்பை அது உண்டு பண்ணினாலும் சில பகுதிகள்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஜே.ஜே இறந்த பின் பல வருடங்களுக்குப் பின்பு தான் அவர் அரசியலில் ஈடுபடுகிறார். நாவலில் காலத் தொடர் போடு கதையைச் சொல்லும் மரபு அனுசரிக்கப்பட வில்லை. ஆனால் எந்த சமூகத்தை சொல்கிறேனோ அங்கே அது சாதாரண நிகழ்ச்சி. பிரபலமான ஒருவரின் மனைவி அவர் இறந்த பின்னாலே அரசியலில் புகுந்து அவரது பெயரைப் பயன்படுத்தி சமூக சேவையில் ஈடுபடுவது தமிழிலும் கேரளத்திலும் வழமையான ஒன்றுதான் அது உண்மை தான், ஆனால் ஜே.ஜே வணிக ரீதியாக பிரபலமான எழுத்தாளருமல்ல, அந்த நிலையில் அவரது பெயரை வைத்து அவர் மனைவி வெற்றி பெறுவது என்பது நம்பக்கூடியதா?
தமிழ் சமூகத்திற்கும் மலையாள சமூகத்திற்கும் வித்தியாசம் உண்டு. தமிழ் சமூகத்தில் எந்த அளவுக்கு மக்கள் அறியாதவர்களோ அந்த அளவுக்கு அங்குள்ள மக்கள் தீவிரமாக அறியாதவர்கள் அல்ல. மொத்த சமூகத்திற்கும் தீவிரமானவர்களைத் தெரியும். சி.ஜே. தாமஸ் என்கிற உண்மையான நாடக எழுத்தாளரின் மாதிரியாகத்தான் ஜோசப் ஜேம்ஸின் கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறேன். அவர் பத்துப் பதினைந்து ஆண்டுகள் தான் எழுதியிருக்கிறார். ஆனால் அங்குள்ள எல்லாருக்குமே அவருடைய பெயர் தெரியும். அவர் தீவிரமான சிந்தனையாளர் என்பது தெரியும். ஒருசிலர்தான் அவருடைய புத்தகங் களைப் படித்திருப்பார்கள். பிரபல பத்திரிகைகள் எல்லாம் அவருடைய கட்டுரைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன. மொத்த சமூகத்தில் சிந்தனைகள் பால், மொழிசம்பந்தப்பட்டு, வாழ்க்கை சம்பந்தப்பட்டு எந்தப் பகுதி அக்கறை கொண்டிருக் கிறதோ அந்தப் பகுதிக்கு அவரை முழுமையாகத் தெரியும்.
★ ★★
அதைப்போன்றது தான் ஓமனக்குட்டியும். ஓமனக் குட்டி ஜே.ஜே மீது காதல் கொண்ட ஒரு அப்பாவிப் பெண். இவனது கவிதை பற்றிய அறிவைக்கண்டுதான் எழுதிய கவிதைகளை ஆர்வத்தோடு கொண்டுபோய்க் காட்டி, அவளது கவிதைகளின் தரம் பற்றி இகழப் பட்டவள். சமரசம் செய்யாத, ஒரு தூய்மைவாதி தன் இலக்கியத்தின் பேரால், ஒரு ஆர்வம் கொண்ட அப்பாவிப் பெண்ணின் மனதைப் புண்படுத்தியது

Page 62
محصے
பற்றி மனதுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தது. இதற்குக் காரணமாக, எனது துணைவியாகவும் இருக்கலாம். சு. ராவிடம் அவரை அறிமுகப்படுத்தும் போது 'என்னுடைய ஓமனக்குட்டி' என்று தான் அறிமுகப்படுத்தினேன். இலக்கியம் பற்றி மிகுந்த பிரக்ஞை உள்ள ஒரு தூய்ம்ை வாதி ஒரு அப்பாவிப் பெண்ணின் இதயத்தை புண் படுத்தியது எந்த வகையில் நியாயம் என்பதைக் கேட்டு வைத்தேன்.
தரமில்லாத தன் கவிதைகளை ஜே.ஜே மூலமாக் அங்கீகாரம் பெறுவதன் மூலம் அவற்றுக்கான அங்கீ காரத்தையும் அவள் தேடுகிறாள். . ஆனால் அவன் உடன்பட மறுக்கிறான். அதனால் தான் அவன் அவை தரமில்லாதன என்று நேரடியாகக் கூறிவிடுகிறான்."
女女★ ஒரு எழுத்தாளன் எவ்வாறான இயல்புடையவன் என்பது அவன்தன் மனைவியை எப்படி நடத்துகிறான் என்பதிலிருந்து கண்டுகொள்ள முடியும். அதை நான் அந்த நாவலில் குறிப்பிட்டிருக்கிறேன். எந்த எழுத்தாளனைச் சந்தித்தாலும் அவன் எவ்வாறு தன் மனைவியை நடத்துகிறான் என்பதை நான் அவதானிப்பதுண்டு?
இதனால் தானோ என்னவோ, மனைவியை கோயிலில் கொண்டுபோய் தாமதமாக பேட்டிக்குச் சென்ற என்னையும் பொறுமையாக வரவேற்றாரோஎன்னவோ? என்னுடைய முக்கிய நோக்கம் தமிழ்ச் சமூகம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குவதுதான். அதை நான் ஜே.ஜேயில் சரிவரச் செய்திருக்கிறேன்.
இது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்றாகவே எனக்குப்பட்டது. ஜே.ஜே உண்மையில் இலக்கிய உலகம், கருத்தியல் சார்ந்த விமர்சனமாகக் கருதப் படலாம். அதை தமிழ் வாழ்க்கை முறை சார்ந்ததாக எப்படிக் கருத முடியும்? சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் மட்டத்தில் ஏற்படுகின்ற சிந்தனைப் போக்கை நியாயமான முறையில் பிரதிபலிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒரு சாதாரண மனிதனின் சிந்தனை அவ்வளவு தூரம் ஆழ்ந்ததாக இருக்க முடியாது. ஜே.ஜேயின் கதைப் பொருளும் சாதாரண மனிதனின் வாழ்வுமுறை பற்றியதுமல்லை. எனவே இது சமூகம் பற்றிய விமர்சனம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. புளியமரத்தின் கதையைக் குறிப்பிட்டால் அது சமூக விமர்சனம். இலக்கிய வாதிகள் மட்டத்தில் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவ தால், தங்களை அந்தக் கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவகிக்க முடியும். ஆனால் சாதாரண வாசகனுக்கு
ஜே.ஜேயின் கதாபாத்திரங்களில் யாரிலுமே தன்னைத்
199

, Tsar - 12 தேடிக் கண்டுபிடிக்க முடியாது. சாதாரண வாசகனுக்கு இலக்கியத்திற்கு அப்பால், அதன் ஆக்குதலும் அதை ஆக்குவோனும் பற்றிய குளறுபடிகள் பற்றி சிந்தனை இருக்காது. எனவே இது தமிழ் கருத்தியல், இலக்கிய உலகு பற்றி விமர்சனம் என்று மட்டும் தான் கருத முடியும். எந்த விதத்திலும் அது தமிழ்சமூகம் பற்றிய ஆழ்ந்த விமர்சனம் அல்ல. அதை நேரில் எடுத்துக் கூறிய போது எந்தவித பதில் (விதண்டா) விவாதமும் இன்றி அவர் ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்திற்குரியது. கருத்தை கூறி விட்டோமே என்பதற்காக 'மூணு கால் கதை சொல் கின்ற இலக்கியப் பெருந்தகைகள் மத்தியில் இது வித்தி யாசமான ஒன்று. டானியல் பற்றிய கருத்தும் இவ்வாறே எடுத்துச் சொல்லப்பட்டிருந்தால் அவர் பகிரங்கமாகவே அதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்.
★大 ★
புளியமரத்தின் கதை ஒரு மரத்தைச் சூழ, ஒரு சமூகம் பற்றிய விமர்சனமாக சொல்லும் நாவல். ஆனால் ஜே.ஜே சில குறிப்புகள் இலக்கிய உலகம் பற்றிய விமர்சனம் தான். அது பற்றிய விமர்சனம் எதுவாக இருந்தாலும் தமிழில்
வெளிவந்த விரல்விட்டு எண்ணக்கூடிய தரமான நாவல்களில் ஒன்று என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்று.
திறப்பும் திறையும்
இரவு வானத்தைத் திறக்கிறது இருள் அடைந்த அண்டைவெளிகளில் ஊடுருவிச் செல்லும் விழிகளில் சுழல்கின்றன நட்சத்திரங்கள் கைகளுக்கு அருகாமையில் அந்தரங்கத்தில் சிமிட்டிச் சிமிட்டி நகர்கிறது
fairlfsaf
விடியல் விரிக்கிறது நீலத்திரை மேலும் * சூரிய ஒளியில்
வேறு ஒளி மிளிர்வதில்லை.
- கள்ளழகர்

Page 63
கோடை கால சுற்று
* நாயக
அ6 மரீன்
அ& வொன
அ& மொன்
(ԼԲ (15Ց։ கியூெ
养 மிட்ல
அ8 பிறிஸ்
96 வசாக
மற்றும் நீங்கள் வரும்பும் சுற்றுல
ஒழுங்குக தனியாகவோ குழுக்களாக
Club Easy Way 9, siggigi Gulb 9
(416) 757-0397
(416) 7
ங்கள் விரும்பிய நேரத்தில் எங்கள் - வரு நரதத
வாகனத்துடன்
 
 

றுலாப் பயணங்கள்
ரா நீர்வீழ்ச்சி
லான்ட்
ண்டர்லான்ட்
ாறியல் மலைக்கோவில்,
ன் கோவில், பக்தேவாலயம்
ான்ட் தேவாலயம்
)பேர்க் கோவில்
ா கடற்கரை
ாப் பிரதேசங்களுக்குமான பிரயாண ளும் உண்டு. வோ தொடர்பு கொள்ளலாம்.
ள்ளவர்களுக்கு விஷேட கழிவு உண்டு.
(416) 757-0674 57-2859
ா ஸ்தாபனத்தில் வேலை செய்வதற்கு சாரதிகள் தேவை.

Page 64
A. D. W. A N C E D COMPUT
2. A Can N NUSA
JYUnlimited Lab time /Instructor-led class /Exam Preparation class /Easy TCC Access & Parking
Job Placement Assistance and HRDC GOWernme)
For course outline and de Office hours: Monday-Friday 9:00
99 wrence Ave. East Suit 305 Scarborous.
 
 

SettE TECHNELES IN
E R EDUCATION A. N. D. T. R. M. N | N. G
VVINDOVVS NT Supporting Win95, Networking Essentials, NTAdministration, NT COre Technology, NTEnterprise, TCP/IP, MS Exchange Server, MS SQL Server Administration, MS SQL Server |mplementation
NOWe| CINA/CNE
Administration, Advanced Ad Tinistrati On Stallati OT & COrifi, TCP/IP Transport, Networking Technology, Service & Support, Design & Implementation
A+ Certification PC Technician, DOS, Windows 95, WildOWS 3.11
Lotus Notes Administration I, Administration II, Development
Programming Wis Lula | Basic | & || C. C++, ACCESS, HTML, JAWA SCript
Application MS Word, MS Excel, MS Power Point, ACCPC
nt grants are available for those Who Oualify
tails, call the Office - 8:OO Weekend 9:00– 6:OO
LLLLLS SS SSSKS S ST0aaSS S SL0SLSS