கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2001.11

Page 1

ANN KNNNNNNNNNNNNNNNNN
Nuwun

Page 2
வாங்கவும்
வி
Lam Sv
ROYAL
(416) 2
Sales Rep

விற்கவும் lடு
rathasan
84-4751.
resentative

Page 3
காலம் 15
நவம்பர், 2001 குமார்மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ் தனிச்சுற்றுக்கு மட்டும்
ஆசிரியர் செல்வம்
ஆலோசனை என்.கே.மகாலிங்கம்
செழியன்
தயாரிப்பு செந்தூரம் 86. சாமிபிள்ளை தெரு, சூளை, சென்னை - 600112
அட்டையில் குமார்மூர்த்தி
Kalam P.O. Box 7305 509 St. Clair Ave. W Toronto, ON M6C 1CO,
Canada. www.tamilbook.com tbook Gyesic.com
gr, Pathmanaba Iyer 27-189High Street (Plaistouv London E13 021D
fleto O2O 8472 8323
&#wb & 5
 
 

கட்டுரைகள்
3 o ஈழத்தமிழ்ச் சிறுகதைகள் - எம்.வேதசகாயகுமார் 73 e நகலாக்கம் (Cloning) - வே.வெங்கடரமணன் 86 o நானும் என் எழுத்தும் -சுந்தர ராமசாமி 91 9 பெண்கள் துணியவேண்டும் -குமார் மூர்த்தி
81o மாவோவழித் தோன்றிய டெங்சியா வோபிங் மணிவேலுப்பிள்ளை
51 o ஜீன் ஜெனேயின் பேட்டி - என்.கே.மகாலிங்கம்
சிறுகதைகள்
36 o காஞ்சனா தாமோதரன் 47 ஜெயமோகன் 240 அ.முத்துலிங்கம் 680 பாவண்ணன்
கவிதைகள்
சிந்தாமணி கொட்லெகரெ டி.பி.ராஜீவன்
திருமாவளவன் செழியன்
சுமதி ரூபன் அழகுக்கோன்
தான்யா
சக்கரவர்த்தி
፴/114/
ഖu2001

Page 4
தலையங்கம்
மூர்த்தியின் மரணம் என் நட்பின் ஒரு முற்றுப்பு
1988ஆம் ஆண்டு. மொன்றியல். கடுமையா நான் 'பார்வை' என்ற சஞ்சிகையை நடத்திக் கெ அபிப்பிராயத்தைச் சொல்ல வீடு தேடி வந்திருந் என்று எக்காலமுமே அது பிரியாமல் இறுதிவை நினைவுகள்.
கொடுமையாக வெயில் தகித்த ஆடி மாசம் கொடுத்த அவர் உடலை எரித்து விடைபெற்ே அந்நினைவுகளின் தொடர்ச்சியில் ஒரு புள்ளிதா காணிக்கையாவது ஒர் முரணணி.
அவர் பிரிந்தது ஒரு கனவு. நினைவாக, பி நிற்கிறார். சென்னைக்குச் சென்றவர் மீண்டும் வ( போக மறுக்கிறது. அவரின் உயர்ந்து நடக்கும்நை அடிக்கடி எதிரொலித்த வண்ணம் இருக்கின்றன.
தமிழர் விடுதலை சம்பந்தமான கருத்துக்க பற்றியே கட்டுரைகள் எழுதினார். அவற்றை வா "அதில் எனக்கு ஆர்வம் இல்லை" என்றார். ஆ கிடைத்தது. அப்படிப்பட்ட ஒன்று கோகோலின் ஒருநாள் திடீரென்று 'முகம் தேடும் மனிதன்' சி மகிழ்ச்சியும். குறைவாகவே எழுதினாலும் நல் என்பதில் எனக்கும் சந்தோஷம்.
மொன்றியலில் இருந்து ரொரொன்ரோ வந்த சேர்ந்து ஆரம்பித்தோம். மற்ற இருவரும் பல் தொடர்ந்தோம். பத்து ஆண்டுகள் ஒன்றாக இ6ை
'காலம்" ஒழுங்காக வந்தாலும் கனடாத் தட நாங்களிருவரும் நம்பியதால் ஆண்டுதோறும் 'வ வேறு சில நண்பர்களும் உதவினர். அத்துடன் ரொரொன்ரோவுக்கு அழைத்தது போன்ற செயல்
துணிவும், நேர்மையும், நட்பும், எளிமையும் துன்பங்களுக்கு உரிதல்ல. கொஞ்சம் கைகொடு அசையாத நம்பிக்கை கொண்டவர். பிணியும் நிரந்தரமானவை என்ற கனவில் மிதந்தவர். அெ ஈடுபட்ட பின் இலக்கியம் வாழ்வை உய்விக்கும்,
பேச்சிலும், செயலிலும் தன்னம்பிக்கையுடன் என்று சிரித்துக்கொண்டே கூறும் அவரை, நோய் மாசக்கணக்கில் வைத்தியசாலைக்கு அலை ஆட்டியபோதும் கடவுளைக்கூடகை எடுத்துகும் நம்பிக்கை இழக்கச்செய்யவில்லை. மாறாக, இறு என்றே நம்பினார். தோற்றது அவரல்ல. அவரை
அவரை நினைவுகூருகிறது இவ்விதழ். அெ விரைவில் வெளிவர முயற்சிகள் நடக்கின்றன. செயல்களே.
காலம் 8 நவ

ள்ளியல்ல.
னகுளிர்நாள் ஒன்றில் குமார் மூர்த்திஎன் வீடு தேடிவந்தார். அப்போது ாண்டிருந்தேன். அதை எங்கோ பார்த்த அவர் என்னைச் சந்தித்து தன் தார். அன்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. காலை, மாலை, இரவு, பகல் ர நிலைத்திருந்தது. இனி மேலும் என் நெஞ்சில் நீங்காதிருக்கும் அவர்
பெயர் தெரியா மரங்கள் சூழ்ந்த மண்டபத்தில் அவருக்குத் துன்பம் றோம். ஆனால், அவர் நினைவுகளிலிருந்து விடை பெறவில்லை. ன் 'காலம். அவருக்காக, அவர் சேர்ந்து உழைத்த 'காலம்' அவருக்குக்
ரமையாக, கனவாக அடிக்கடி என்னுடன் உறவாடுகிறார். கூடவே ருவார் என்ற எண்ணம் என்னிடம் இருந்து கொண்டு என்னை விட்டுப் ட, பேச்சு,நடத்திய விவாதங்கள், மெளனங்கள் அனைத்துமே என்னுள்
ளூடன் ஆரம்பித்தது அவர் விவாதம். பார்வை' சஞ்சிகைக்கு அது சித்த நான்'ஏன் சிறுகதைகள் எழுதக்கூடாது?' என்ற என் கேள்விக்கு அந்நேரம் தமிழில் தரமான நூல்கள் வாசிக்க அவருக்குச் சந்தர்ப்பம் 'ஓவர்கோற்'. தமிழ் மொழிபெயர்ப்பு. அதன் பாதிப்போ என்னவோ றுகதையுடன் என் முன்நின்றார். அதை வாசித்த எனக்கு ஆச்சரியமும் ல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அதற்கு நான் காரணம் ஆனேன்
பின் 'காலம்' சஞ்சிகையை அவர், நான், இன்னும் இரண்டு நண்பர்கள் வேறு காரணங்களால் இயங்காமல் போனபோதும் நாமிருவரும் னந்து ஓர் வழிநடந்திருக்கிறோம்.
மிழ்ச் சூழலில் அதிக விழிப்புணர்ச்சியை அது ஏற்படுத்தாது என்று ாழும் தமிழர், புத்தகக் கண்காட்சி'யை நடத்த விரும்பினோம். அதற்கு நாடகங்கள், கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், எழுத்தாளர்களை கள் அனைத்திலுமே அவரின் உழைப்பும், பங்கும் நிறைய இருந்தது.
திடமான கருத்தும், மனிதநேயமும் கொண்ட மூர்த்தி, இந்த உலகு த்தால் இன்பத்துக்குரிய ஒன்றாக அதை மாற்றிவிடலாம் என்பதில் , வறுமையும், வெறுப்பும், தற்செயல்கள். அன்பும் மகிழ்ச்சியும் பருடைய கதைகளில் நம்பிக்கை இருந்தது. வாசிப்பிலும் எழுத்திலும் மானிடமேன்மையை உருவாக்கும் என உறுதியாக நம்பினார். வாழ்ந்தவர். உடலில் அறுவைச் சிகிச்சையால் வெட்டாத இடமில்லை கள், மன உழைச்சல்கள் நாள்தோறும், சிலவேளை வாரக் கணக்கில், கழித்து வைத்திருந்த போதும், பலவித இன்னல்கள் அவரை பிடாத மனவுறுதிகொண்டவர். எந்த நோயுமே அவரை வாழ்க்கையில் திவரையும் நோய்களை வென்று திரும்பவும் புதிய மனிதனாக முடியும் வெல்ல முடியாத விதி. ருடைய அனைத்து சிறுகதைகளையும் கொண்ட தொகுப்பொன்று இவை என்றும் அவரை எம் நினைவில் வைத்திருக்கச் செய்யும் சிறு
செல்வம்
bui 2001

Page 5
s
கட்டுரை
ஓர் இந்தியத்தமி
ஈழத்தமிழ்ச்சி
ஈழத் தமிழ் இலக்கியம் குறித்தான இந்தியத் தமிழ் வாசகனின் அறிவு எப்போதுமே மெச்சத் தகுந்ததாக இருந்ததில்லை. அதே சமயம் இந்தியத் தமிழ்ப் படைப்பிலக்கியம் குறித்தான புரிதலில் ஈழத் தமிழ் வாசகன் என்றுமே பின் தங்கியதுமில்லை. தமிழ்ப் படைப்பியக்கத்திற்கு ஈழத்தமிழன் தொடர்ந்து புரவலனாக இருந்து வந்துள்ளதையும் மறுக்க இயலாது. என்றாலும் இந்த இடைவெளி இன்னமும் தொடரத்தான் செய்கிறது. ஒருவகையில் இந்தியத் தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமான ஈழத் தமிழ் விமர்சகர்களையும் இதற்குக் காரணமாகச் சுட்ட வேண்டும். கைலாசபதி யானாலும், சிவத்தம்பியானாலும் ஈழத்தமிழ்ப் படைப் பாளிகளை முன்வைத்து விவாதங்களை, விசாரணைகளை என்றுமே இந்தியத் தமிழ் வாசகர்கள் முன்னிலையில் நிகழ்த்தியதில்லை. இந்தியத் தமிழ்ப் படைப்புகளை முன்வைத்தே தங்கள் கருத்தாக்கங்களைத் தமிழ் வாசகனின் முன்வைத்துள்ளனர். இளங்கீரன், கணேச லிங்கன் போன்றவர்களின் பெயர்களை கைலாசபதி ஆரம்ப நாட்களில் சுட்டினாலும் தொடர்ச்சியாக ஜெயகாந்தன் போன்றவர்களைத்தான் முக்கியத்துவப் படுத்தியுள்ளார். கணேசலிங்கனுக்கு நிகரான தமிழ் எழுத்துக்கள் இந்திய மண்ணிலும் அங்கீகாரம் பெறவில்லை. கணேசலிங்கன் இங்கு ஏற்கப்படாததில் வியப்பேதுமில்லை.
இந்த விமர்சகர்களுக்கு ஈழத் தமிழனிடமும் இந்தியத் தமிழனிடமும் காட்டிக் கொள்வதற்கென்று வசதியான இருமுகங்கள் எப்போதும் கைவசம் இருந்துள்ளன. ஈழத் தமிழிலக்கிய மரபைத் தீர்மானிக்கும் தளையசிங்கம், எஸ்.பொ. போன்ற படைப்பாளிகளின் பெயர்களை இவர்கள் மூலமாக இந்தியத் தமிழன் அறிந்து கொள்ளவில்லை. தளையசிங்கம் என்ற மகத்தான கலைஞனின் சிறுகதைத் தொகுப்பு அறுபதுக்களின் மத்தியில் வெளிவந்திருந்தாலும் பத்து வருடங்களுக்குப் பின்தான் இந்தியத் தமிழ் வாசகன் பார்வைக்கு அது வந்தது. அதுவும் அ.இயேசுராஜாவின் 'அலை இதழின் வாயிலாகவே. இந்த ஈழ விமர்சகர்களுக்கு இதில் பங்கேதுமில்லை. எழுபதுக்களில் 'காகங்கள் இயக்கத் தில்தான் தளையசிங்கம் எழுத்துக்கள் மீதான விவாதம் முதன் முதலாகத் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலம் 8 ந
 

ழ் வாசகனின் பார்வையில்
றுகதை
எண்பதுக்களில் ஈழத்தமிழ்ப் போராட்டம் வலுப்பெற்ற போது, ஈழத்தமிழ் இலக்கியங்களைக் குறித்த ஆர்வம் இந்தியத் தமிழனுக்கு எழுந்தது. அவற்றை அறிவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இலங்கை தேசிய இலக்கியம் என்ற Offs விலகியபோது, ஈழத்தமிழிலக்கியத்தின் சத்தான பகுதி இந்தியத் தமிழ் வாசகனை வந்தடையத் துவங்கியது. ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் ஐரோப்பிய மண்ணிலிருந்து இயங்கத் துவங்கியபோது, இத்தொடர்பு இன்னும் வலுவடைந்தது. என்றாலும் விமர்சன கவனிப்பை இன்னமும் போதுமான அளவிற்கு ஈழத்தமிழிலக்கியம் பெறாதது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
ஒரு மொழி இலக்கியம் வேறுபட்ட பண்பாட்டுச் சூழலில், இருவேறு மரபுகளாக இயங்குவது உலக அளவில் மிக அரிதானது. இவ்வகையில் ஆங்கில இலக்கியத்தின் அமெரிக்க, பிரித்தானிய மரபுகளைச் சுட்ட வேண்டும். இந்த வாய்ப்பு தமிழுக்கும் உண்டு. லண்டனில் குடியேறி ஆங்கில இலக்கிய மரபின் போக்கையே தீர்மானித்தனர் அமெரிக்க படைப்பாளி களான எலியட்டும் எஸ்ராபவுண்டும். அதுபோல் பிரித்தானிய மரபிலிருந்து பெற்றுக்கொண்டு அமெரிக்க மரபு தன்னை வளப்படுத்திக் கொண்டது. இத்தகைய பரிமாற்றம் ஈழ இந்திய மரபுகளுக்கிடையில் ஏன் நிகழவில்லை என்ற கேள்வியின் பின்னணியில்தான் இந்தியத் தமிழ் வாசகன் ஈழத் தமிழ்ப் படைப்புலகில் பயணம் செய்தாக வேண்டும்.
ஈழத்தமிழ்ச்சிறுகதை மரபு குறித்தான இந்தியத் தமிழ் வாசகனின் புரிதல், போதாமைகளையும் இடைவெளி களையும் கொண்டது. 1967க்கு முன்னரே சுமார் 40 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளதை ஒரு சிறுக தைத் தொகுப்பின் முன்னுரை சுட்டுகிறது. இந்த 40 தொகுப்புகளில் பெரும்பானவற்றைப்படித்திராத நிலையில் ஈழச் சிறுகதை மரபு குறித்தான பதிவுகளை முன்வைப்பது ஊகத்தின் அடிப்படையில்தான் அமையக்கூடும். ஈழத் தமிழ் விமர்சகர்களும் இவ்வகை யில் உதவவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். கல்கி அல்லது கலைமகளில் தங்கள் படைப்புகள் வெளியானதைப் பெருமையுடன் குறிப்பிடும் ஒரு தலைமுறைப்பட்ைப்பாளிகள் ஈழத்தில் இயங்கிய காலம் ஒன்றுமிருந்தது. தளையடிசபாரத்தினம் போன்றவர்களை
Juli 2001

Page 6
இவ்வகையில் குறிப்பிட வேண்டும். அதே சமயம் சி.சு.செல்லப்பாவின் "எழுத்து இதழில் தன் நாவல் விமர்சிக்கப்பட்டதைப் பெருமையுடன் நினைவுகூரும் எஸ்.பொ. போன்றவர்களும் இருக்கத்தான் செய்தனர்.
ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் அறுபதுக்கள் மிக முக்கியமான காலப்பகுதி. அரசியல் விழிப்புணர்வு படித்தவர்கள் மத்தியில் மார்க்சியத்தைச் செல்வாக்கு பெறச் செய்தது. 'தமிழ் மூலக் கல்வியின் பயனாகப் பல்கலைக் கழக வட்டத்தில் புதிய வாசகர்கள் தோற்றம் கொண்டனர். இவை ஈழத் தமிழ்ப் படைப்பிலக்கிய மரபைத் தீர்மானிக்கும் சக்திகளாக உருக்கொண்டன. மார்க்சியம் அறிவுஜீவிகளின் முத்திரையாக மதிக்கப் பட்டது. பல்கலைக்கழக வட்டத்தில் விமர்சனம் தழைத்தது. கைலாசபதி, சிவத்தம்பி கரங்களில் விமர்சன மொழி தோற்றம் கொண்டது. இவர்களால் அரவணைக் கப்பட்ட படைப்பாளிகள் முக்கியத்துவம் பெற்றபோது, இவர்கள் அங்கீகாரத்தைக் கோரிப்பெறும் எழுத்தாளர் களின் வரிசையும் தோற்றம் கொண்டது. எழுபதுக்களின் துவக்கத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள் கைலாசபதியின் முன்னுரையைப் பெற ஆர்வம் காட்டியிருப்பதை இக்கோணத்தில்தான் புரிந்துகொள்ள இயலும். இதற்குக் கைலாசபதி நம்பிக்கை கொண்ட அரசியல் நிலைபாட்டிற்கு ஒத்த நிலையில் படைப்பாளி நின்றாக வேண்டும். "வெறும் கருத்து நிலையில் நின்று அவன் கதை அல்லது கவிதை புனைய முற்படும்போது அவை இயந்திரிகத்தன்மை பெறுகின்றன. வறட்டி லக்கியம் ஆகின்றன" சண்முகம் சிவலிங்கம் குறிப்பிடும் விபத்து இச்சூழலில்தான் ஈழத்தமிழிலக்கத்தில் நிகழ்ந்தது.
கல்கியின் இலக்கியப் பணிக்கு நிகரானது கைலாச பதியின் இலக்கியப்பணி. தன்னைப்போலவே எழுதும் எழுத்தாளர்களின் வரிசையை கல்கியால் உருவாக்க முடிந்தது. அதுபோல் கைலாசபதியாலும் வறட்டி லக்கியத்தைப் பண்பாகக் கொண்ட எழுத்தாளர் வரிசையை ஈழத்தில் தோற்றுவிக்க முடிந்தது.
தி. ஞானசேகரனின் 'காலதரிசனம்" (1973) சிறுகதைத் தொகுப்பிற்கான கைலாசபதியின் முன்னுரையை இங்கு சுட்ட வேண்டும். ஞானசேகரனின் 'பிழைப்பு கதைத் தொடர்பான தன் பதிவுகளை இதில் முன்வைத்துள்ளார். புதுமைப்பித்தனைப் படித்த அருட்டுணர்வில் ஆசிரியர் இக்கதையினை எழுதியிருக்கக் கூடும் என்கிறார். புதுமைப்பித்தனின் எக்கதையையும் நினைவுபடுத்தும் போக்கு இக்கதையில் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நடு இரவில் கையில் அம்மாத ஊதியத்துடன் வழிநடந்து செல்லும் கீழ் மத்தியதர வர்க்கத்து ஊழியன். வழியில் எதிர்கொண்ட விபச்சாரியின் மீது சிறு சபலம். பையிலிருக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட தேவைகள் உள்ள நிலையில், குடும்பச் சுமையில் நடுங்கும் அவன் மனம் சூழலோடு இணைந்து கொள்ள
&Rib X

மறுக்கிறது. அவள் வழமையான கதைகளை முன்வைத்து அவன் அனுதாப உணர்வைத் தூண்டுகிறாள். உழைத்து வாழும்படியான அறிவுரையையும், நூறு ரூபாய்களையும் அவளிடம் இழந்து திரும்புகிறான். அந்த நாள் இரவு 'ஒரு இளம் வாலிபனை அணைத்தபடியே அவள் குடிசைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்' ஞானசேகரனின் கதை இங்கு நிறைவு பெறுகிறது. ஆனால் சிறுகதையின் வடிவ இயல்பின்படி வாசக மனதில் இங்குதான் கதை துவங்குகிறது. மத்தியதர வர்க்கத்து போலி மனிதாபிமான உணர்வு, அதில் அவன் பெறும் ஏமாற்றம் இவை கதையின் மொழிக்கு அப்பால் வாசக மனதில் விரிகிறது. இக்கதையின் மையம் விபச்சாரியின் சோக வாழ்வல்ல மாறாக மத்தியதர வர்க்கத்தின் போலி ஒழுக்க நெறியும், போலி மனிதாபிமானமும்தான். இதைத் துலக்கவே விபச்சாரி முன்னிலைப்படுத்தப்படுகிறாள். ஆனால் கைலாசபதியோ"வறுமையினால் ஒரு பெண்தன் உடலை விற்றுப் பிழைக்க முற்படும் அடிக்கருத்தை மையமாகக் கொண்ட கதை" என்கிறார். வறுமையையும் விபச்சாரத் தையும் இணைக்கும் தமிழ் மார்க்சிய விதியைச் சுமக்க மறுக்கும் ஞானசேகரனை புதுமைப்பித்தனின் வாசகனாகக் காண்கிறார் கைலாசபதி. கைலாசபதியின் அரசியல் நம்பிக்கைகளுக்கு உகந்த புனைவை எழுப்பினால் மட்டுமே ஞானசேகரன் அவரைப் பொறுத்தவரையில் உயர்விடத்தைப் பெற முடியும்.
இதே காலகட்டத்தில் செ.கதிர்காமநாதனின் ‘நான் சாகமாட்டேன் தொகுப்பிற்கான கைலாசபதியின் முன்னுரையையும் குறிப்பிட வேண்டும். அவர் தன் தர முத்திரையைச் சற்று அழுத்தமாகவே இதில் பதித்துள்ளார். இத்தொகுப்பிலடங்கிய கதைகள் அனைத்துமே சிறந்த சிறுகதைகள்தான் அவருக்கு. ஏனெனில் கதிர்காமநாதன் ‘எழுத்தை அக்கறையோடும், ஆர்வத்தோடும் கைக்கொண்டதோடமையாது, அது அக்கிரமம் அநீதி ஆகியவற்றிற்கு எதிரான ஆயுதமாகவும் அமைய வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டவர். 'ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக்குச் செல்கிறான்" கதை இலக்கண சுத்தமான மார்க்சிய வறட்டிலக்கியமாக அமைகிறது. ஏழை மாணவன் x பணக்கார வர்க்க சாய்வுகொண்ட ஆசிரியர் என்ற மார்க்சிய விதிக்கு முழுமையாகக் கீழடங்கும் கதை. தத்துவ புரிதல் படைப்பிற்கு அந்நியமானது என்பதல்ல. கோட்பாடு படைப்பாளியினுள் கரைந்துவிடும்போது, அதனை நியாயப்படுத்துவதற்கான தந்திரங்கள் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. மாறாகக் கோட்பாட்டினை ஒரு முகமூடியாக, ஒரு சுமையாகச் சுமந்து திரிபவனுக்குச் சதாகாலமும் அதனை நியாயப்படுத்தியாக வேண்டும். கைலாசபதி உருவாக்கிய படைப்புலகக் கீழ்மை இதுவே. ஆனால், இதை ஒரு மரபின் பொதுக்குணமாக ஊதி பெருக்கிவிட அவரால் முடிந்துள்ளது. செ.கதிர்காம நாதன், செ.யோகநாதன், நீர்வை பொன்னையன் போன்றவர்களின் வரிசையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவர்களுக்கு இலக்கியம் சாய்வு
வம்பர் 2001

Page 7
நாற்காலியல்ல. அதே சமயம் இலக்கியம் நெம்புகோல் ஆவதில்லை என்பதையும் இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஈழத்தமிழ்ச்சிறுகதை மரபின் உயிர்த்துடிப்பான பகுதி கைலாசபதி வட்டத்திற்கு வெளியேதான் இயங்கியுள்ளது. ஈழத் தமிழ் விமர்சகர்கள் இவர்கள்ை முழுமையாகப் புறக்கணித்துவிட்டிருந்தாலும் இவர்கள்தான் ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர் களாகத் திகழ்கிறார்கள். தளையசிங்கம், எஸ்.பொ., இயேசுராஜா போன்ற கலைஞர்களையே ஈழத் தமிழ்ச் சிறுகதை மரபைத் தீர்மானிக்கும் படைப்பாளிகளாக, இன்று இனங்காண முடிகிறது. தளையசிங்கத்தின் ‘புதுயுகம் பிறக்கிறது" தொகுப்பு ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபில் குறிப்பிடத் தகுந்தது.
இத்தொகுப்பிலடங்கிய தளையசிங்கத்தின் 'கோட்டை சிறுகதையை எடுத்துக்கொள்ள வேண்டும். அனுபவமும் அறிவும் கூடி முயங்கும் தளையசிங்கத்தின் தனித்தன்மையைச் சிறப்பாகத்துலக்கும் கதை இது. ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பாலியல் ஒழுக்க மரபு தீவிர பரிசீல னைக்குதளையசிங்கத்தால் உள்ளாக்கப்படுகிறது. சமூகக் கட்டுக்கள் மீதான அச்சஉணர்வு மனிதனைப் போலிமுகம் கொள்ளச் செய்கிறது. தனிமனித சுதந்திரமே இதில் சிக்குண்டு தவிக்கிறது - மீட்சிக்காக ஏங்குகிறது. அமைதியான ஈழத் தமிழ்ச் சமூகத்தில் அடிக் குமுறலாக எரியும் இந்த எரிமலையை தளையசிங்கம் என்ற கலைஞனால் அன்று உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. சமகால ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் ஐரோப்பிய மண்ணில் இந்த ஒழுக்க மரபிலிருந்தான இச்சமூகத்தின் சரிவைச் சுட்டுவது இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
தளையசிங்கம் தன் சிந்தனைக்கான நிரூபணத்தைச் சகல விதமான தந்திரங்களோடு மொழியில் உருவாக்கிக் காட்டுவதில் முனைப்பு கொள்ளவில்லை. வாழ்வின்சகல விசித்திரங்களோடு அந்த வாழ்வு சுயமாக இயங்கத் துவங்குகிறது. சமூகம் திணித்த 'கற்பு பண்பு கண்ணியம்’ கூடவே கொஞ்சம் சமூக சேவை அனைத்தையும் சுமந்து தீர்ப்பதாக உறுதி கொண்ட ஈழத்தமிழ் மாணவி ராஜீ. மனைவியின் அண்ணன்மகளான அவள்மீது சபலம் கொள்ளும் சமூகக் கட்டிலிருந்து சுயவிடுதலைக்காகப் போராடும் சுதந்திர உணர்வு குறித்த கனவுகளோடு வாழும் அறிவு ஜீவியான தியாகு, சோதனைகளுக்கு அவளை உள்ளாக்கி அவளுக்கும் கூடவே தனக்கும் விடுதலை பெற்றாக வேண்டுமென்ற வசதியான ப்ொய் முகம். எல்லாச் சரிவுகளிலிருந்தும் குடும்ப அமைப்பைப் பாதுகாக்கும் படியான பொறுப்பைச் சுமந்து நிற்கும் மனைவி சரோஜா. ஒரிரு நாட்கள் இவர்களுக்கிடையே நிகழும் உறவுச் சிக்கல்கள் அசாதாரண நிகழ்வுகள் ஏதுமின்றி நகரும் இயல்பான மத்தியதர வாழ்க்கை. மனிதனின் புறத்தில் இயங்கும் சமூக வாழ்வின் போலித் தனங்கள் - அவன் அகத்தில் இயங்கும் கட்டுப்பாடுகளை
காலம் & ந

உதறி எழ முனையும் சுதந்திர உணர்வுகள், தளையசிங்கம் இரண்டிலும் இணையாகப் பயணிக்கும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ஒரு வினாடி சறுக்கலில் உணர்வுகள் வசதியான போலி முகங்களைத் தேடிக் கொள்கின்றன. சிறுகதைக்கே உரித்தான செறிவான மொழி - தேவையற்ற விவரணைகள் இவ்வாழ்விலிருந்து தானாகவே கழன்று விட்டிருக்கும் செய்நேர்த்தி, ஈழச் சிறுகதை மரபு ஒரு பக்குவத்தை எட்டிவிட்டதைத் தெளிவாகவே இனங்காட்டுகிறது இக்கதை.
தளையசிங்கத்தின் சிந்தனைக்கனம் அ. யேசுராஜாவின் கதைகளில் இல்லை. ஆனால் அவருடைய 'தொலைவும் இருப்பும் தொகுப்பிலடங்கிய கதைகள் சண்முகம் சிவலிங்கம் குறிப்பிடுவதுபோல் 'அனுபவ வெண் சூட்டில் பிறந்தவை" என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. இத்தொகுப்பிலடங்கிய கதைகளின் நிகழ்வுகள் பெரும்பான்மையும் ஓர் இளைஞனைச் சுற்றித்தான் நிகழ்கின்றன. வறுமையும் வேதனைகளும் குடிகொண்ட ஈழக் கடலோரக் கிராமத்தைச்சார்ந்த இவன் கொழும்பில் அரசுப் பணியில் இருக்கின்றான். ஆனால் ஈழக் கடலில் சோழகக்காற்று எப்போதும் இவன்மீது வீசிக் கொண்டிருக்கிறது. வேதனையின் குறியீடான சோழகம் யேசுராஜாவின் கதைகளில் அபூர்வ பரிமாணம் கொண்டுள்ளது. இவன் துக்கம் குறித்தான தேடலில்தான் யேசுராஜாவின் படைப்புலகம் உயிர்கொள்கிறது.
இவனுக்கும் சக மனிதர்களுக்குமான உறவில் எப்போதும் ஒரு விரிசல் இருந்துகொண்டே இருக்கிறது. அவனைத் தொடர்ந்து உறுத்தலுக்கு உள்ளாக்கும் விரிசல், கடலோரக் கிராமத்தில் இவனுக்கென்று நண்பர்கள் யாருமில்லை. நண்பர்களுடனான சில நினைவுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. காலப்போக்கில் இந்நினைவு களின் தடயங்களும் மங்கத் துவங்குகின்றன. ". அங்கு மேசன் வேலைக்குத் தம்பி, அவன் இப்ப கடலுக்குப் போறயில..." இக்கடலோர கிராமத்தின் வறுமையை விவரிக்க யேசுராஜாவுக்கு வேறு வரிகள் வேண்டிய தில்லை. வறுமையை மிகைப்படுத்தி போலி அனுதாபத்தை வழியவிட்டு பிழைப்பு தேடும் இழிநிலை யேசுராஜாவிற்கு அவசியமுமில்லை.
'அம்மா கேட்கிறாள் இதென்ன, சும்மா நெடுக விட்டுக்குள்ளாயே. வெளியில போய், நாலு மனிசரோட கதைச்சுப் புழங்கன் சும்மா விசரன் மாதிரியே யோசிச்சப்படி.."
- அம்மாவிற்கும் என்னைப் பார்க்க எரிச்சல்போல; அவ எரிச்சல் படுகிறா. ஆரோட போய்க் கதைக்கறது."
"இவர்தான் ஒரு புதுமாதிரியான மனிசன்; அப்ப ஏன் இங்ச வந்தினி."
'ஏன் இஞ்ச வந்தனி அவனுக்குள் விஸ்வரூபம் எடுக்கும் கேள்வி.
'சூட்கேசும் நானும்; பீச் றோட் சந்திலைற்றில் சிறிது தூரம் நிழலும்."
வம்பர் 2001

Page 8
தனியனாக முற்றிலும் அந்நியனாகிவிடும் அவன் இவ்விலகல் ஏன் நிகழ்கிறது. ஒரு கலைஞனுக்கான தேடல் இது. இத்தேடல்தான் 'ஒரு இதயம் வறுமை கொள்கிறது" என்ற படைப்பாக உருக்கொண்டுள்ளது.
இக்கடலோரக் கிராமத்தில் மட்டும்தான் இவன் அந்நியன் என்பதல்ல. கொழும்பில்கூட "ஈடுபாடு கொள்ள முடியாதவர்களின் நடுவில் தனித்து போன வறட்சி உறுத்தும் வாழ்வு அவனுடையது. நீண்ட நாட்களுக்குப் பின் அவனைக் காணவரும் யாழ்ப்பாண நண்பரின் நினைவுகள், அவனுக்கும் நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள ஆசையே. மற்றொரு நண்பனைக் காணச் செல்லும் இவர்கள் ஆனால் இவனைத்தவிர்த்து விட்டுப் பேச அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. மூன்றாம் மனிதனாய் அவன் தன்னை உணரும்போது, விரிசல் முள்ளாக அவனை உறுத்தத் துவங்குகிறது. உறுத்தல் மேலோங்கும்போது சூழலே தாங்க இயலாதபடி மாறிவிடுகிறது. "தெருவில் வெள்ளைக் காரொன்று தன்னைக் கடந்து போனதை ஊன்றிப் பார்த்தான். சிறிது சிறிதாய்த் தொலைவு கொண்டு அது போவதை ஆழ்ந்த அர்த்தத்துடன், பார்த்து நிற்பவனைப்போல், அர்த்தமின்றியே பார்த்து நின்றான். யேசுராஜாவின் 'தொலைவு கதையும் இத்தேடலையே நிகழ்த்துகிறது. இதை ஒரு தனிமனிதத் துயராக மட்டுமே கருதிவிடஇயலாது. நோய்க்கூறான ஒரு சமூகத்தின், காலத்தின் வெளிப்பாடு இது. கலைஞனால் மட்டுமே இனங்காண முடிவது. தளையசிங்கத்தைப்போல யேசுராஜாவும் கோட்பாட்டு முழக்கமின்றி, வெற்று ஆரவாரமின்றிப் பதிவு செய்துள்ளார். −
எண்பதுக்கள் ஈழத்தமிழ்ப் படைப்பிலக்கிய மரபில் மிக முக்கியமான காலப்பகுதி. ஒரு மொழியின் இலக்கிய மரபு அம்மொழி பேசும் மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. தமிழ்ச் சமூகம் எக்காலத்திலும் எதிர் கொண்டிராத கொடுமைகளையும் வேதனை களையும் ஈழத் தமிழ்ச் சமூகம் இக்காலப்பகுதியில் எதிர்கொள்ளும் படி நேர்ந்தது. இம்மண்ணில் மனித வாழ்வு மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளான போது, ஈழத்தமிழ் விமர்சகர்களின் இலங்கை தேசியம், சர்வதேசியம் போன்ற பொய் முகங்கள் காணமலானது. காலத்தின் முன்வைக்க இவர்களுக்கு ஏதுமில்லை என்றானது. ஈழத்தமிழன் தன் இன அடையாளத்தை இறுகப் பற்றும்படி நேர்ந்தது. ஆயுதப் போராட்டம் அதற்கே உரித்தான குழுப் பிரிவுகளைத் தோற்றுவித்தது. குழுக்களுக்கிடையே ஆயுதமோதல்கள் வலுத்தபோது எதிர்கால நம்பிக்கைகள் இம்மண்ணில் சிதறுண்டன. ஈழத் தமிழ்ப் படைப்பிலக்கியம் காலத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்பதே காலம் இதன் முன் நிறுத்தும் மிகப்பெரிய கேள்வி.
காலம் அதன் நேர்மையானப் பதிவை இலக்கியப் படைப்பினூடாகத்தான் எதிர்கொள்கிறது. ஆனால் அப்பதிவை நிகழ்த்திய கலைஞனோ தன் படைப்பி
&RGW6 & 5

னுாடாகக் காலத்தைக் கடந்து பயணிக்கிறான். கால மாறுதல்களில் வெவ்வேறு விதமான வாசகர்களை அவன் எதிர்கொண்டாக வேண்டும். அவர்களுக்கும் தரவென்று இவன் படைப்புலகில் ஏதேனும் இருந்தாக வேண்டும். போர்ப்பரணிகள் பாடுவது கலைஞனின் பணியல்ல. ஆனால் காலச்சூழலில் போர்ப்பரணிகள் எழாமலும் இருப்பதில்லை. சமூகச் சிக்கலில் படைப்பு எடுக்கும் நிலைபாட்டினை முன்வைத்து அதனை மதிப்பிடக் கூடாது. அவ்வாறெனில் உலகின் தலைசிறந்த படைப்புகள் இன்று தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். அரசியலும் வரலாறும் எதிர்கொள்ளும் கோணத்தில் இலக்கியம் காலத்தை எதிர்கொள்வதில்லை. அது அதற்கே உரித்தான கோணத்தில் காலத்தினைப் பதிவு செய்கிறது.
காலத்தின் நேர்மையான பதிவுகளை சட்டநாதன், ரஞ்சகுமார் கதைகளில் எதிர்கொள்ள முடிகிறது. சுந்தர ராமசாமியின் படைப்புகளை இவர்கள் படைப்புலக மனிதர்கள் விவாதித்துக் கொள்கின்றனர். மெளனியின் சில வரிகளைப் படைப்பின் தலைவாசலில் வைத்து அலங்கரிக்கவும் இவர்களால் முடிந்துள்ளது. இவை இவர்கள் தேர்ந்துகொண்ட பாதையைக் கோடிட்டுக் காட்டத்தான் செய்கின்றன.
சட்டநாதன் படைப்புலகில் ஒரு சமூகம் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. பழமையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடும் சமூகம். ஆனால் நிலஉடமை, உயர்சாதி என்ற இறந்த காலத்தின் எச்சங்கள்சுமையாக இவர்கள் கழுத்தை அழுத்துகின்றன. இயல்பான வாழ்வை இழந்து தள்ளாடுகிறது இது. புறப்பார்வையில் நிகழ்வுகளை முந்நிறுத்தி இதைத்துலக்குவதில் படைப்பாளி நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக மானுட மனங்களில் இவற்றின் தடையங்களைத் தேடுகிறார். கோட்பாட்டு முழக்கமின்றி, வெற்று ஆரவாரமின்றி உணர்வுகளின் நுட்பங்களை மொழிப்படுத்துவதில் படைப்பாளியின் கவனம் படிந்துள்ளது. இதில் வெற்றிகளும் சரிவுகளும் சரிவிகிதத்தில் இவர் படைப்புலகில் இறைந்து கிடக்கின்றன.
"மாற்றம் தொகுப்பின் மூலம் 1980 இல் ஈழத் தமிழ்ச் சிறுகதை மரபில் காலடி வைத்த சட்டநாதன் ஈழத்தமிழ் வாழ்வின் மிக முக்கியமான காலப் பகுதியைத் தன் படைப்பினூடாகப் பதிவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1980 இல் வெளியான உறவுகள் படைப்பினூடாகப் பதிவு கொள்ளும் போருக்கு முந்தைய ஈழத் தமிழ்ச் சமூகம். 'கோவியப் பெட்டை"யைக் காதலித்து மணம் செய்து வாழ்பவன் உயர்சாதி நில உடைமையாளன். நில உடைமை என்பது பெயரளவுக்குத்தான். ஒரு வகையில் கடந்த காலத்தின் எச்சம். 'கோவியப் பெட்டை என்பதுகூட காலம் விட்டுச் சென்ற வெறும் அடையாளமே. தனியார் கம்பெனியில் சொற்ப
Juli 2001

Page 9
சம்பளத்திற்கு ஊழியம் செய்யும் அவன், அரசுத்துறையில் சகலவிதமான பணி பாதுகாப்புடன் வேலை செய்யும் அவள். ஒரு வகையில் அவன் அவளைத் தேர்ந்து கொண்டதுகூட இப்பாதுகாப்புக் கருதிதான். ஒரு வருட தாம்பத்திய வாழ்வில் விழுந்துவிட்ட விரிசல் எப்போது வேண்டுமானாலும் பிரிந்துவிடக் கூடும் என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியது. இத்தருணத்தில் இருவருடைய மன உணர்வுகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதுவே படைப்பின் மையம்.
படைப்பாளியான அவள் சக படைப்பாளியான அருணோடு கொள்ளும் தோழமை உணர்வே இப்பிரி வினைக்கான காரணம் என்பதல்ல. இது ஒரு முகாந்திரம் மட்டுமே. இத்திருமணத்தால் அவன் இழந்த சாதி வெள்ளாளர் பட்டம் அவ்வளவு எளிதாகத் துறக்கக் கூடியதல்ல. 'எந்த விஷயத்திலும் அவன் சொல்வதையே அவள் கேட்டு நடக்க வேண்டுமாம்", "இக்கட்டுப் பெட்டித் தனமான ஆணின் அதிகாரம் எதிலிருந்து ஊற்றெடுக்கிறது என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரையில் தாம்பத்திய வாழ்வில் இருவருமே உழைப்பதும் ஒருமித்து செயல்படுவதும் மகத்தானதுதான். அப்படித்தான் விவசாயக் கூலிகளான அவள் தாய் தந்தையர் வாழ்ந்தனர்.
அவள் தூய்மையை அவன் கேள்விக்குள்ளாக்கிய போது அவள் அழுகையுடன் அதை மறுத்திருக்கலாம். அவன் எதிர்பார்ப்பும் அதுதான். அவ்வாறெனில் மற்றொரு நிகழ்வு நோக்கி அந்த வாழ்வு முன்னகர்ந் திருக்கக் கூடும். உயர்சாதி ஆண்என்ற தன் நிலையை அவன் தக்க வைத்திருக்க முடியும். ஆனால் நிகழ்வு வேறுவிதமாக அமைந்துவிடுகிறது. 'ஓம் இன்று. அருணோடு அவன்ரைஅறையிலைதான் இருந்தனான்." அவன் பலவீனத்தை அவளால் குத்திவிட முடிகிறது. இத்தாக்குதலில் நிலைகுலைந்து சத்தம் வைத்து அழும் அவன். வழக்கமான ஒரு நாளை எதிர்பார்த்து அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து அவள் கண்டது அந்த வாழ்வு முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்தது என்பதைத்தான். தவறு எங்கே நிகழ்ந்துவிட்டிருக்கிறது. வாசக மனம் தன் சுயமான தேடலில் கண்டடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
சட்டநாதனின் 'முற்றிலும் இருவேறு தளங்களில் இயங்கும் படைப்பு. உணர்வு தளத்திலும், அவ்வுண்ர் வுகளை எழுப்பும் நிகழ்வுகளிலான தளத்திலுமாக. உணர்வுகளைச் சித்திரிப்பதில் நுட்பங்களைக் கைக் கொள்ளும் படைப்பாளி, நிகழ்வுகளைச் சித்திரிப்பதில் இதற்கு முரணாக இயங்கியுள்ளார். அவர்கள் காதலைக் குறித்த பதிவுகள் குவியலாகக் குவிந்து படைப்பினுள் வாசகப் பயணத்திற்கு இடையூறுகளாய் அமைந்து விடுகின்றன. படைப்பியக்கத்தில் படைப்பாளியின் சரிவுகளாக இவற்றைக் கொள்ள வேண்டியதாகிறது.
ஈழத்தமிழ்ச்சமூகம் எதிர்கொண்ட நெருக்கடியானஒரு காலப் பகுதியைப் பதிவு செய்யும் வாய்ப்பு சட்ட
asarßAxb X

சிந்தாமணி கொட்லெகெரெ
(கன்னடக்கவிதை)
கடவுளாகு
கடவுள் உறங்கும்போது நான் ஏன் அவரை எழுப்ப வேண்டும்? அவன் உறக்கத்துக்குள் நான் சத்தம் காட்டாமல் செல்வேன் அவன் கனவுகளைப் பார்ப்பேன் முடிந்தால் நானும் கண்மூடி உறங்குவேன்
விடிந்ததும் கடவுள் கண்விழித்தெழுவான் அப்போது நானும் கண்விழித்தெழுவேன்
அவனுடனேயே பல்துலக்கி முகம்கழுவி அவன் கிரீடம், திரிசூலம், பாம்பு, பூ அணியும்போதே நானும் ஆடை அணிந்துகொள்வேன்
நான் என் அலுவலகத்தை நோக்கியும் கடவுள் தன் அலுவலகம் நோக்கியும் நடப்போம்
என் பெயர்குடம்
என் பெயர் என்கிறாயே வரும்போது அதைச் சுமந்து வந்தாயா? அதைச் சிருஷ்டித்தது
உன் தந்தையா?
ஒரு கரண்டி நீர் எனதென்னும் தோழனே - இந்தக் கிணறு உன்னுடையது அந்த நதியும் உன்னுடையது
ஒரு குடம் போதும் என்பதே உண்மை
இப்போதைக்கு
குடத்துக்குள்ளிருக்கும் வானமே 6
நீயாக மாறுவது எப்போது?
நவம்பர் 2001

Page 10
நாதனுக்குக் கிடைத்துள்ளது. கலைஞன் மட்டுமல்ல, சமூகவியலாளனும், வரலற்றாசிரியனும் கூடக் காலத் தினைப் பதிவு செய்கின்றார்கள். இவர்கள் பதிவு புனைவு குணமற்றது. துல்லியமானது. என்றாலும் கலைஞனின் புனைவுகளிலான பதிவுகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூகவியலாளனிலும், வரலாற்றா சிரியனிலும் வேறான ஒரு கோணத்தில் கலைஞனின் பார்வை நிலை கொள்கிறது. கலைஞன் ஒரு சமூகவிய லாளனாக, வரலாற்றாசிரியனாக வேடமணிய முற்படும் போதுதான் அவன் சரிவுகள் நிகழ்கின்றன. இங்கு அவன் காலத்திற்கு துரோகமிழைக்கிறான்.
சட்டநாதனின் நகர்வு ஈழ மண்ணின் நெருக்கடியான கணங்களை மொழிப்படுத்த முயன்று இக்கணத்தின் முன் பின்னரான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. அதிகாலைப் பொழுதில், சிந்திப்பதற்கு அவகாசமின்றி சட்டென்று உயிரைத் தக்க வைத்துக் கொள்ள இடம் பெயர்ந்து ஒடியாக வேண்டிய நிர்ப்பந்தம் இக்கிராம மனிதர்களுக்கு. மனித அவலங்கள். இதில் வெளிப்படும் மனிதத்தின் கீழ்மைகள் மற்றும் மேன்மைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இம்மண்ணின் ஆன்மாவை இவ்வழிவுகளினூடாகத் தரிசிக்க முடிந்துள்ளது படைப்பாளிக்கு.
நகர்வு" கதையில் நிகழ்வுகள் அடுக்கடுக்காகத் தோன்றி வேகமாக ஓடி மறைகின்றன. தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயலாமல் அவ்வாழ்வு கூறும் இரகசியங்களுக்குச் செவிமடுக்க முயன்றுள்ளார் சட்டநாதன். தனக்குக் கிட்டாத இரகசியங்கள் தன் வாசகனுக்கு கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை படைப்பாளிக்கு.
தொலைவில் வெடித்த "ஷெல்? சத்தம்தான் அவனுக்கு விழிப்பூட்டியது. முன் திண்ணையில் அவனுக்கு முன்பாகவே விழித்திருக்கும் தாத்தா. இரண்டடி எடுத்து வைக்கக்கூட இயலாததள்ளாமை. அருகில் கோழிவிரட்ட மட்டுமே இப்போது உதவும் வெள்ளிப்பூண் போட்ட கைத்தடி. கால்களுக்கு இயக்கமில்லாவிடினும் கைகள் மட்டும் அசுரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்கும். எப்போதும் அவற்றின் உறவு வாயுடன்தான். அருகில் அவருக்கே உரித்தான சொத்துகள். இறந்துபோன மனைவியின் மங்கலான புகைப்படம். கல்யாணப்பட்டு, பாசுரங்கள் இத்தியாதி பொருட்கள் அடங்கிய மரப்பெட்டி, கிழவருக்கு கவலையற்ற வாழ்க்கைதான். மனைவியின் தந்தையான அவர்மீது குடும்பத் தலைவருக்கும் மரியாதைதான் தாய்மாமாவும் கூட என்பதால். அவ்வாழ்வு தக்கவைத்துக் கொண்டுள்ள மதிப்பீடுகளை ஒரிரு வரிகளில் படைப்பாளியால் உணர்த்திவிட முடிகிறது. படைப்பால் இக்கிழவரை இம்மதிப்பீட்டை மையமாகக் கொண்டவர் என்பதைக் குறிப்பாகச் சொல்லி விடவும் முடிந்துள்ளது.
அம்மா வயல்பக்கம். பின் கிணற்றின் கரையில் சூரிய வணக்கம். அப்பா தோட்டத்தில் திடீரென்று தலை
KR 3 Mai

தூக்கும் புகையிலைக்கணுக்களைத் தேடி. தோட்டம்தான்
அவர் வாழ்வு.
"அந்தக் கிராமத்தின் புழுதிபட்ட பெட்டையான"
வத்சலாவோடுதான் அவன் உறவு.
'தகப்பனைத்தின்னி. தாயிருந்தும் இல்லாத மாதிரி. நோயாளி. நடைபிணம். அதோடை சொத்துப் பத்தெண்டு எதுவுமில்லாத பெட்டை."
"உன்னர படிப்புக்குச் சமனாய் ஏதேனும் பார்த்தால் நல்லம். அதுதான் மதிப்பு. மரியாதை. நாலு பேர் கீழ்க்கண் கொண்டு பார்க்கிற மாதிரி நடந்து போடாதை."
படிப்படியாக இவ்வாழ்வையும், அதன் மதிப்பீடுகளையும் மொழியில் எழுப்ப முடிகிறது படைப்பாளிக்கு. தொலைவில் வெடித்த ஷெல்' அருகில் வெடிக்கத் துவங்கியபோது அவ்வாழ்வு இதுவரை சந்தித்திராத நெருக்கடியை எதிர்கொள்கிறது. இடம் பெயர்ந்தாக வேண்டும். இது மிருகங்களின் இயல்பு ணர்வு. பாதுகாப்பான இடத்தினைத் தேடியாக வேண்டும். எல்லோருக்கும் முன்னதாகப் புறப்படுபவள் அம்மா தான். தாத்தாவுக்குப் பெரிய வாளியில் தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு அவர் கைத்தடியையும் அருகில் எடுத்து வைத்தாள். அம்மா புலம்புகிறாள்தான். ஆனால் தாத்தாவின் அப்போதைய தேவை ஒரு வாளி தண்ணீரும் கைத்தடியும்தான் என்ற முடிவிற்கு அவளால் வந்துவிட முடிகிறது. மறக்காமல் அம்மா நகை, ரொக்கம், காணி ஹதிகள், சேமிப்பு வங்கி புத்தகம் அனைத்தையும் திரட்டி விடுகிறாள். தங்களுடன் கொண்டுபோக "தாத்தா ஒரு தேவையில்லைதான் - வீண் சுமையும் கூட. அவரும் புரிந்துகொண்டு தலையசைத்து விடை தந்தார். இந்த வாழ்வு, காலம் காலமாகக் கட்டி எழுப்பிய மதிப்பீடுகள் இங்கு இடிந்து நொறுங்குகின்றன.
அவனுக்கும் நினைவுதான் வத்சலா என்ன செய்து கொண்டிருப்பாளென்று. அவளைப் பார்த்துவிட்டு புறப்பட்டிருக்கலாம். சூழலின் நெருக்குதல் அவனை விரட்டினால் அவன்தான் என்ன செய்ய முடியும்.
எல்லாவற்றிற்குமான பதில்கள் அவர்கள் முன் தயாரிப்பாக இருக்கின்றன. 'உயிரை இப்படிப் பொத்தி பிடித்துக்கொண்டு ஓடுவது அவனுக்குக் கேவலமாகப் பட்டாலும் ஒடித்தான் ஆகவேண்டும்.
மாதா கோவிலில் தங்கலாம். தொலைவுகுறைவு. இந்த நெருக்கடியில் இந்த முடிவிற்குத்தான் வர முடியும். ஆனால் "வேதக்கார ஆக்கள் புகலிடமாகக் கொண்ட கோவிலில் சாதிகீதி பாராமல் தோச்சி மெழுகேலுமே? அப்பாவால் உடன்பட முடியாது. 'மனதின் அடியில் ஊறலாய் கிடப்பவை மிதப்பு கொள்வதை எவ்வாறு தவிர்க்க முடியும். இந்த நெருக்கடியிலும் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலுப்பிள்ளை, தான் வளர்த்த ஜெர்சி பசுக்களோடு பயணமாகும் செல்லத்துரை மாமா,
xui 2001

Page 11
விளைந்து பயிர் தீயில் கருகுவதைக் கண்டு பதறும் விவசாய மனம் எல்லாம் அழகான மனித நாடகங்களே. ஆனால் தங்கள் உடமைகளையே பாதுகாத்துக் கொள்ளத் துடிக்கும் சுயநலங்கள். தாத்தாமட்டும் வீட்டில் தனியாய், இக்குடும்பம் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப இயலாமல் கூடப் போகலாம்.
வத்சலா வந்தாள். நடக்க இயலாத தாயை சைக்கிளில் வைத்து உருட்டிக்கொண்டு.
“தாத்தா எங்கே?"
"அந்தக் கிழவனை போட்ட இடத்திலை போட்டிட்டு ஓடிவர உங்களுக்கு வெக்கமாயில்லை. உயிர் அப்படி என்ன வெல்லமா?"
'இல்லை மாமி உங்க பிள்ளைக்கு ஒண்டும் வராது. நீங்க கும்பிடிற தெய்வங்கள் அவரைக் காப்பாற்றும் கவலைப்படாதேங்க. செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுறதுதான் பிழை. தாத்தா பாவம். தனிச்சு - தவிச்சு போயிடுவாரெல்லா. இரண்டு பேரும் பத்திரமா வருவினம்."
அவனுக்குத் தெரியும் மீண்டும் அங்கு போவது பாதுகாப்பானதல்ல. என்றாலும் பயணமாகிறான் தாத்தாவின் உயிருக்காக.
படைப்பாளி ஈழத்து அழிவின் குவியலுக்குள் இன்னமும் அழியாது ஒளிரும் அதன் ஆன்மாவைக் கண்டு கொள்கிறார். எல்லா அழிவிலிருந்தும் மீண்டு புத்துரு எடுத்துவிடும் இந்த ஆன்மா. ஒரு கலைஞனால் மட்டுமே உணர முடிகிற உண்மை இது. இதுபோன்ற கதைகள்தான் ஈழச் சிறுகதை மரபில் சட்டநாதனுக்கான இடத்தை உறுதி செய்கின்றன.
வேறு ஒரு வகையில் சட்டநாதனின் உலகுக்கு மிக அருகே வரும் படைப்பாளியாக உமா வரதராசனைக் கூறலாம். சட்டநாதனைப் போலவே ஈழத்து வாழ்வின் பல்வேறு உள்ளோட்டங்களைத் தொட்டுச் செல்லும் வலுவான பல கதைகளை உமா வரதராசன் எழுதியிருக்கிறார். அன்னம் வெளியீடாக வெளிவந்ததன் மூலம் இவரது கதைகள் தமிழ்நாட்டிலும் பரவலாக கவனத்தை ஈர்த்தன. சட்டநாதனைப் போலன்றி இன்றும் செறிவான கதை மொழியும், இன்னும் இலக்குசுத்தமுள்ள வடிவப்பிரக்ஞையும் உடையவர் உமா வரதராஜன். தொடர்ந்து தீவிரத்துடன் இயங்குவாரெனில் மிக முக்கியமானவராக ஆகி, ஈழத்துச் சிறுகதை மரபின் முதல்தரப் படைப்பாளிகளில் ஒருவராக ஆகும் தகுதி படைத்த ஒருவராக அவரது முதல் தொகுப்பு இனம் காட்டியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உமா வரதராசன் தொடர்ந்து எழுதி வரிவடையவில்லை. கதையின் அரசியல் உள்ளடக்கம் மட்டுமே எப்போதும் கவனிக்கப்பட்டு, பேசப்படும் ஈழ விமர்சனச் சூழல் ஆழமான அழகுணர்வும், தனித்துவம் கொண்ட நடையும் உடைய இவரைச் சோர்வடையச் செய்திருக்கலாம்.
காலம் & ந

வாழ்வின், சித்தாந்தச் சட்டகங்களுக்குள் அடைபட மறுக்கும் நுட்பங்கள் குறித்த, இவரது பிரக்ஞை ஈழத்தின் மார்க்சிய விமர்சன "புல்டோசர்"களினால் நசுக்கப்பட் டிருக்கலாம்.
உமாவரதராசனின் முக்கியமானதனித்தன்மை அவரது படைப்புகளில்தான் "சிறுகதை என்பது ஒருவகையான கவிதை" என்ற நவீனப் பிரக்ஞை முதன்முதலாகத் தலைகாட்டுகிறது. அவர்தான் சிறுகதை என்பது கூறப்படாதவற்றால் கட்டப்பட்டது என்பதை முதன்முதலாக நன்குணர்ந்த ஈழத்துச் சிறுகதையாசிரியர். அவரது 'அரசனின் வருகை இந்தியாடுடே இலக்கிய மலரில் வெளியாகி மிகப் பரவலான வாசக அங்கீகாரத்தைப் பெற்றது. நேர்தளத்தில் அது ஓர்உருவகக் கதை. அரசன் இங்கு அதிகாரத்தின் குறியீடு. அவனது பிரசன்னம் உருவாக்கும் பதற்றம், தன் சூழலில் ஒவ்வொரு அணுவிலும் தானே நிரம்பியிருக்க வேண்டும் என்ற அவனது வீங்கிப்போனதன்னகங்காரம், தெரிந்தும் தெரியாததுமான உட்போக்குகளினாலான சமூகச் செயல்பாட்டை ஊடுருவிச் சிதைக்கும் அவனது மூர்க்கம் எல்லாமே இக்கதையில் குறிப்புணர்த்தப்படுகின்றன. மீள்வாசிப்புகளுக்கென்றே விடப்பட்ட அர்த்தம் நிரம்பிய மெளனங்களின் அகழிகள் நிரம்பிய கதை இது. உருவகக் கதையின் ஒவ்வொரு வரியும் தனிப்பட்ட முறையில் தனியாக உருவகமாகி விரியவும் வேண்டும். அத்தன்மை வெகு அபூர்வமாகவே சிறுகதைகளுக்குக் கைகூடும். காரணம் சிறுகதை என்பது இறுதி இலக்கை நோக்கி வேகமாக நகரும் ஒரு வடிவம். ஆகவே உருவகக் கதை என்பது பொதுவாகச் சிறுகதைக்கு அபாயகரமானது. முக்கியமான சிறுகதையாசிரியர்கள் இந்தத் தளத்தில் செயல்பட பெரும்பாலும் முயலமாட்டார்கள். தமிழில் இக்கதையுடன் சம்பந்தப்படுத்தி யோசிக்க வேண்டிய முக்கியமான கதை சுந்தர ராமசாமியின் 'கொந்தளிப்பு. ஒரு விரிந்த பார்வையில் 'அரசனின் வருகை"யின் ஆழமான மறுபக்கம் அது. 'அரசனின் ஆணவமும், அதிகார வெறியும், அதன் மூலம் உருவாகும் அழிவும் எப்படிச் சாத்தியமாகின்றன என்ற கேள்விக்கு ஒரு சமூகம் - ஒரு தனிமனித மனத்தைப் போலவே - தற்கொலையில் அழிவில் இன்பம் காணக்கூடும், நிறைவை கண்டடையக்கூடும் என்று சுட்டிக்காட்டுகிறது கொந்தளிப்பு. இவ்விருகதைகளையும் பின்னிஒரு தேர்ந்த வாசகன் சமகாலத் தமிழ் மனதின் ஒரு பெரும் சித்திரத்தையே உருவாக்கிக் கொள்ள முடியும். இக்கதையே பலவகையிலும் உமா வரதராசனின் உச்சம் எனலாம். அதை அவர் மீண்டும் தொடமுயலாது போனது துரதிர்ஷ்டமேயாகும்.
காலத்தின் நேர்மையான பதிவுகளைக் கொண்ட மற்றொரு படைப்புலகம் ரஞ்சக்குமாரினுடையது. ஆனால் சட்டநாதன் படைப்புகளோடு ஒப்பிடும்போது ரஞ்சக்குமாரின் படைப்புகள் வேறான இயல்புகளைக் கொண்டவை. ஒரு வகையில் ஈழத் தமிழ்ப் படைப்
Juli 2001

Page 12
புலகிலேயே இவருடைய படைப்புலகம் தனித்துவ மானது. இந்தியத் தமிழ்ப் படைப்புலகம் அறுபதுக்களின் பிற்பகுதியிலேயே எதார்த்தப் போக்கின்போதாமைகளை உணர்ந்து, நவீனத்துவத்தை நோக்கி முன்னகரத் தலைப்பட்டிருந்தாலும், எண்பதுக்களில் és tஈழத்தமிழ்ப் படைப்புலகம் எதார்த்தப் போக்கில் முழு நிறைவு கண்டுள்ளது. வாழ்வின் எதார்த்தத்திற்கும் கதையில் உருக் கொள்ளும் எதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளியை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் கணக்கி லெடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே எதார்த்தச் சித்திரிப்பு வாழ்வின் எதார்த்தத்தைத் துலக்குவதில் சரிவடையும்போது, எதார்த்தமற்ற சித்திரிப்பின் மூலம் வாழ்வின் எதார்த்தத்தைத் துலக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருப்பதாக உணர இயலவில்லை. இதிலிருந்து விதிவிலக்கான நிலையை ரஞ்சக்குமார் எழுத்துக்களில் மட்டுமே காணமுடிகிறது. ரஞ்சக்குமார் படைப்புலகம் முழுமையும் நவீனத்துவப் போக்கிலமைந்தது எனச் சொல்லிவிட இயலாவிடினும் கபரக் கொய்யாக்கள்', 'கோசலை போன்ற படைப்பு களில் நவீனத்துவப் போக்கினைத் தெளிவாகவே இனங்காண முடிகிறது.
எதார்த்தம் சமூக உண்மையைப் புறவயமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முனையும்போது, நவீனத்துவம் தனிமனித பிரக்ஞையினூடாகப் பதிவு செய்கிறது. படைப்பில் முன்வைக்கப்பட்ட வாழ்வின் சிக்கல்கள், அவை என்னதான் முக்கியமானவைகளாக இருப்பினும் அவை படைப்பிற்குப் புறம்பானவை. இச்சிக்கல்கள் தனிமனித மனதில் தோற்றுவிக்கும் நெருக்குதல்களே படைப்பு தொடர்பானவை. இந்நெருக்குதலை மொழியில் உணர முற்படும்போதுதான் படைப்பின் தோற்றம் நிகழ்கிறது. எதார்த்தத்தினைப் போலல்லாமல் நவீனத்துவம் வாசகப் பங்களிப்பினைக் கோரி பெறுபவை வாசகப் பங்களிப்பில்தான் அவை முழுமை அடை கின்றன. அதுபோல் வாசக மனதில் சுயமாக விரியும் பண்பும் அவற்றிற்குண்டு. இதனால்தான் வெவ்வேறு விதமான வாசிப்புகளுக்கு எப்போதும் நவீனத்துவப் படைப்பில் இடமுள்ளது.
'கபரக் கொய்யாக்கள்" ரஞ்சகுமார் குறிப்பிடுவது போல் 'முதலைக்குத் தம்பி, உடும்புக்கு அண்ணன்." அசிங்கங்களை உண்டு நீரில் வாழும் பிராணி. இதைப் படிமமாகத் தன் படைப்பு முழுவதும் விரித்துள்ளார் ரஞ்சகுமார். கதை நெடுகிலும் மீண்டும் மீண்டும் வரும் கபரக் கொய்யாக்கள். "சதையைப் பிய்த்து எடுத்து காகங்களுக்கு விருந்து கொடுக்கிற மாதிரி" வலிமையான சொடுக்கல்களுடன் அலையும் கபரக் கொய்யாக்கள்.
வாரம் ஒரு நாள் கூடும் சந்தையை முன்வைத்தே இயங்கும் அந்த மலையோரக் கிராமம். ஒரு சில வரிகளிலேயே ஒரு சித்திரமாக அதைத் தீட்டிவிட முடிந்துள்ளது படைப்பாளிக்கு. ‘ஒரு சாண் வயிற்றுக்கும் ஒரு முழத்துண்டுக்கும் ஆளாய்ப் பறக்கிற சனங்கள்
anou z

I 0
வரிசையாய் ஒலைக் கூரையின் கீழ் இயங்கும் வணிக நிறுவனங்கள் அல்லது வணிகக் குடிசைகள். பின்னணியில் சளசள சத்தத்துடன் சதாகாலமும் நீர் நிறைந்த ஆறு. ஆற்றில் கொட்டமடிக்கும் கபரக் கொய்யாக்கள். மனிதன் இவற்றிற்கு உணவல்ல. என்றாலும் மனிதர்களை அச்சமூட்டுகின்றன. "கள்ளத்தனமாக குளிக்கும் மனிதர் களுக்கருகில் வரும் கபரக் கொய்யாக்கள். அரைத் தூக்கத்தில் மனிதர்கள் எரிச்சல் மிகக் கொள்ள முன் கதவில் வாலைச் சுழற்றி சாத்தும் கபரக் கொய்யாக்கள். காலம் நேரமற்று முழு நாளும் புணர்ந்தவாறு நீரில் புரள்கின்ற 'கபரக் கொய்யாக்கள்". கபரக் கொய்யாக்கள் என்ற இப்படிமத்தைக் கதை முழுவதிலுமாகஅள்ளித் தெளித்துள்ளார் படைப்பாளி.
அம்மலையோரக் கிராமத்தில் அவள் இருப்பு கவனத்தை ஈர்க்காத ஒன்றாகவே அமைந்தது. அவ்வப்போது சுவர்களைத் துளைத்து பெருகும் நாதப்பிரம்மம் மட்டுமே அவள் இருப்பை உணர்த்தியது. கூடவே வெயில் உலரும் இளம்பெண்ணின் உள்ளாடை கள். "அவள் ஒரு மாதிரியானப் பெட்டை' என்பதற் கதிகமாக அவளைக் குறித்த அறிவும் அவளைச் சூழ்ந்தவர்களுக்குத் தேவையில்லை. அவளைக் காணவரும் விதவிதமான மனிதர்கள். கோட்டை ஒன்றைப் பிடிப்பதற்கான உத்வேகத்துடன் அவர்கள் நிகழ்த்தும் முழு இரவுக் கூட்டங்கள். அவளைச் சூழ்ந்த சனங்களுக்கும் இதில் மர்மம்தான். 'றேடியோக்கள்' கறுப்பு குரலில் கத்தத் துவங்கிய போது சந்தைகள் கலைந்து ஆறு தனியே ஏக்கத்துடன் போனது'
அவள் சார்ந்துள்ள இயக்கம் குறித்தோ, அதன் நோக்கங்கள் செயல்பாடுகள் குறித்தோ தகவல்களேதும் படைப்பில் இல்லை. அவள் சார்ந்த இயக்கத்தின் மீதல்ல அவள்மீதே தன் அக்கறை என்ற படைப்பாளியின் குரலை இங்கு கேட்க முடிகிறது. சிறுகதையின் வடிவ எல்லை குறித்த படைப்பாளியின் தெளிவை வாசகமனம் எளிதாக இதில் உணர்ந்துகொள்ளும்.
நெருக்கடி உச்சம் பெறும் கணத்தில் ஒரு பாதி திறந்த கதவினூடாக அவள் அறை படைப்பில் முதன்முதலாகச் சித்தரிப்பு கொள்கிறது. எங்கும் இறைந்து கிடக்கும் தூய்மை, சுவரில் மரப்பீடத்தில் உலகை மறந்த மோனத்தில் புத்தன், குவிந்து கிடக்கும் புத்தகங்கள். தூய்மையும் இசையும் கூடிய வாழ்வு அவளுடையது. தன் நண்பர்களை எண்ணி அவள் துக்கித்துக் கொண்டிருக்கும் போது, கபரக் கொய்யாக்கள் வாலினைச் சுழற்றி காற்றில் விசுக்கிற ஒலிகள் கேட்கத்துவங்கின. 'சப்பாத்து கால்கள் கதவை உடைத்துத் திறந்து அவள் மீதான வன்முறையைத் துவக்கின. கதை முழுமையிலும் சப்பாத்து கால்களுக் குரியவர்களின் முகங்கள் பதிவு கொள்ளவில்லை. ஆதிக்க சக்திகளின் ஏவலான வன்முறையின் முகமே அந்த வன்முறைதான் என்ற தெளிவு படைப்பாளிக்கு இருந்திருக்க வேண்டும்.
அவள் மீதான வன்முறையும் எதார்த்தச் சித்திரிப்பு
நவம்பர் 2001

Page 13
கொள்ளவில்லை. சில படிமங்கள்தான் இங்கு மலர்ந் துள்ளன. பீறிடும் வீரியத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு காளை." அதை வீழ்த்தி, புரட்டி, அதன் முகத்தின் மீதமர்ந்து வலிய கம்புகளால் விதைப்பைகளைச் சிதைத்து காயடிக்கும் மனிதர்கள். வன்முறையின் கோர வடிவை எதார்த்தச் சித்திரிப்பை விட அழுத்தமாகவே இது உணர்த்தி விடுகிறது. தட்டையாக அல்ல. அதன் எல்லாப் பரிமாணங்களுடனும் இயலாமையும் அவலமும் சேர்ந்த அவள் குரல் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது" சூரியன் சினந்து சிவப்புப் பந்தாக எழுந்தபோது முரட்டு பூட்ஸலிகள் அவள் கூந்தலைப் பற்றி இழுத்துச் சென்றன. புயலில் உருக்குலைந்த கொடிபோல் தொடையின் நடுவிலிருந்து குருதி பெய்தபடி அவள் சென்றாள். சித்திரிப்பு அறுபட்டு கபரக் கொய்யாக்கள் குறித்த படிமமாக படைப்பு மேலும் வேகம் பெறுகிறது. பத்து நூறு கோடியென பெருகி முழுநாளும் புணர்ந்தவாறு நெடு நேரம் நீரில் புரள்கின்ற கபரக் கொய்யாக்கள்.
கபரக் கொய்யாக்கள் மீதான வெறுப்பும் அருவருப்பும் நிறைந்த உணர்வு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஆதிக்கத்தின் வெளிப்பாடும் பாலியல் வன்முறையும் ஒரு புள்ளியில் ஒழுங்கிணைகின்றன. படைப்பியக்கத்தில் படைப்பாளியின் கவனம், படைப்பில் வாசக மனம் கொள்ளும் கவனம் இப்புள்ளியில்தான் நிலை கொள்கிறது.
தகவல்கள்மீதான படைப்பாளியின் சிக்கன உணர்வு, அவ்வப்போது கவிதையை எட்டுகின்றமொழி இவை யனைத்தும் ஈழப் படைப்புலகில் மிக அருகியே காண முடிவது. இவை ரஞ்சகுமார் படைப்புலகின் மீது நம்பிக்கைக் கொள்ளச்செய்கின்றன. என்றாலும் கதையின் இறுதி வரிகளில் படைப்பாளி முன் வைத்துள்ள சனங்கள் மீதான வெளிப்படையான விமர்சனம் அதுவரையிலான வடிவ உணர்விற்கு முரணாக அமைந்து விடுகிறது. என்றாலும் 'கபரக் கொய்யாக்கள் ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபில் ஒரு சிகரமாகவே திகழ்கிறது.
ரஞ்சகுமாரின் படைப்புலகில் நவீனத்துவத்தின் சாயலினைக் கொண்ட மற்றொரு படைப்பு 'கோசலை." ஈழத்தின் வேதனை மிகுந்த கணங்கள் இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புறவயமான சித்திரிப்பாக அல்ல. மாறாக தன் மூன்று குழந்தைகளுடன் உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி வாழும் ஒரு பெண்ணின் பிரக்ஞையின் ஊடாக, படைப்பு முழுமையுமே இவள் உணர்வுத் தளத்தில் எழும் அலைகளால் ஆனதுதான். தன்னிரு ஆண் குழந்தைகளையுமே இயக்கத்திற்கு விட்டுத் தரும்படி யாகிறது இவளுக்கு. இவள் புறநானூற்றுத் தாயல்ல என்பதால், வேலைக் கையில் கொடுத்து, போருக்கு அனுப்பி, மார்பில் புண்ணேற்று அவன் மாண்ட செய்திக்குக் காத்திராமல் தன் இழப்புகளை நினைத்து துக்கித்து நடைபிணமாகிறாள். -
கதை முன்வைக்கும் வாழ்க்கை நெருக்கடி அரசு
காலம் x

அல்லது இயக்கம் சார்ந்த வன்முறையின் விளைவாக உருவானதல்ல. கதை நெடுகிலும் இந்த வன்முறையின் நிழல் படிந்துமுள்ளது. இங்கு நெருக்கடி முற்றிலும் வேறான தளத்திலிருந்து எழுகிறது. ஏதோ ஒரு விதத்தில் இத்தாயால் தன்னிரு ஆண்குழந்தைகளையும் ஒன்றுபோல் கருத இயலாமல் போகிறது. சீலன், குலம் என்ற அவளுடைய இரு ஆண் மக்களும் ஒன்றாகவே வளர்ந்தார்கள். ஒன்றாகவே பள்ளிக்குச் சென்றனர். இருவரையுமே அவள் அழகு பார்த்தாள். என்றாலும் இவளை மீறித்தான் இயக்கங்களில் இருவருமே ஈடுபட்டனர். இவளைப் பிரிந்து செல்கின்றனர். சீலன் நிரந்தரமாக, குலம் அவ்வப்போது. இருவருக்காகவும் அத்தாயுள்ளம் துக்கம் கொள்கிறது. ஆனால் சீலனின் பிரிவின் நிமித்தம் அவள் கொள்ளும் துக்கம் இன்னும் அதிகமானது. குலம் இழப்புகளை எதிர்கொள்ளும் போது அவள் கொள்ளும் துக்கம் இதற்கிணையானதல்ல. இதன் காரணம் குறித்தான தேடலில்தான் கதை வாசகமனதில் இயக்கம் கொள்கிறது.
சீலன், ஒரு மோகனமான மாலைநேரம் பிறந்தவன் அம்மாவின் இடது தொடையைச் சற்றே உரசியபடி பிறந்தான். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அவன் பெரிய காரியங்களைச் சாதிக்கப் போகிறவன் என சாதகம் சொல்லியது. மென்மையும் குளிர்ச்சியும் பொருந்திய உள்ளங்கைகள். மெலிந்து நீண்டு நளினமான விரல்கள். பெண்மை நிரம்பியவன்.
குலம், கொடுமையான மத்தியான நேரம் பிறந்தவன். எடையும் அதிகம். அம்மா ராஜவலியால் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஒய சில நாளானது. குலத்தின் தலைமயிர் முரட்டுத்தனமானது. சுருண்டு சுருண்டு இருக்கும். சீலனைப் போல் 'ரோஸ் நிற விரல் நகங்கள் இவனுக்கில்லை. மேனியெங்கும் மண்ணெண்ணெய் நாற்றமும், ஒயில் நாற்றமும், வியர்வை நாற்றமும் வீசியது. குலம் அத்த நட்சத்திரத்தில் பிறந்தவன். அத்தம் அதமம்.
‘என்னவோ அம்மாவிற்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. பிறப்பே இதனைத் தீர்மானித்து விட்டதோ? V−
சீலன் அமைதி நிறைந்தவன். ஒழுங்கு, தூய்மை, இசை இவை எப்போதும் அவனோடு இணைந்தவை. தாயின் அன்பு அவனுள் ஓடிக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்த போதிலெல்லாம் கசிந்து வெளிப்படுகிறது. குலத்தின் உடல் தூய்மையற்றது. வீடு என்பது ஒய்வெடுப்பதற்கான இடம் மட்டுமே. ஒழுங்கு, தூய்மை, இசை இவற்றிற்கெல்லாம் குலத்தின் வாழ்வில் இடமில்லை. இதெல்லாம் அம்மா விரும்பாத குணங்களாகலாம். இதுதான் காரணமா?
சீலன் மூளை உழைப்பு சார்ந்தவன். குலமோ உடல் உழைப்புசார்ந்தவன். உடல் உழைப்பாளியைவிட மூளை உழைப்பாளி எப்போதும் மேலானவன்தான். இச்சமூக
வம்பர் 2001

Page 14
மதிப்பீடுதான் அம்மாவிடம் எதிரொலிக்கின்றதா?
சீலன் அன்பை வெளிப்படுத்தத் தெரிந்தவன். அம்மாவின்மீது, தங்கையின்மீது, நாய்க்குட்டியின்மீது வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவன் அன்பு வெளிப்படுகிறது. குலத்தின் அடிமனதில் ஒடும் அன்பின் ரேகைகளைப் பின்தொடர அவன் செயல்பாடுகள் இடம்தருவதில்லை. இயக்கத்திற்காக கரத்தை இழக்கிறான். பின்னும் உழைக்கிறான். ஒலைப்பாயில் விழுந்து உறக்கம் கொள்வதின் முன் எப்போதும் அம்மா கைகளில் வீட்டுச் செலவிற்கான பணத்தைத் தவறாது திணிக்கின்றான். சீலனைவிட அந்த வீட்டிற்கு அவன் இன்றியமையாதவன். ஆனால் "பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்துவிடுமே இது கூடப் புரியாத முரட்டுப் பிறவி அம்மாவின் இந்த உணர்தல்தான் காரணமா? தாய்க்கு எது மகிழ்வூட்டும் என்பதை குலம் ஒருபோதும் உணர்ந்ததில்லை.
சீலன் பெண்மை நிரம்பியவன். குலம் ஆண்மையின் வடிவம். அப்பாவைக் குறித்த பதிவுகள் கதையில் ஏதுமில்லை. அம்மா குலத்தின் வடிவில் அப்பாவைக் காண்கிறாளா? தன் சிந்தனைகளை நிலைநாட்ட கூர்மையான வாதங்களைப் படைப்பாளி முன்வைக்க வில்லை. அந்த வாழ்வு குறித்து தானறிந்த தகவல்களை முன்வைத்துவிட்டு ஒதுங்கி விடுகிறார். வாசகர்கள்மீது நம்பிக்கை கொள்கிறார். வேறுபட்ட வாசிப்புகளுக்கும் இசைவு தருகிறார்.
இக்கதையிலும் ரஞ்சகுமார் எதார்த்தச் சித்திரிப்பில் நிறைவு கொள்ளவில்லை. கனவுகள் குறித்த சித்திரங்கள், படிமங்கள், குறியீடுகள் என நவீனத்துவம் தந்த வசதிகளை முறையாகவே பயன்படுத்திக் கொள்கிறார். சிறுகதையின் வடிவ உணர்வு கூட ரஞ்சகுமாருக்கு இருந்துள்ளது என்பது நம்பிக்கை தருவது.
கதைக்கு அவர் தரும் முடிவு குறிப்பிடத்தக்கது. சாத்திரிமார்களின் சொற்கள் அம்மாவின் உணர்வலை களில் மிதக்கின்றன. சீலன் புனர்பூச நட்சத்திரம். ராமனின் நட்சத்திரம். அதர்மர்களுடன் அவன் போராடியாக வேண்டும். தென்னிலங்கையை வெற்றி கொள்வான். சாபவிமோசனமளிப்பான். பேதங்களை எல்லாம் கடந்தவன். அவன்மீது அன்பு கொண்டவர்கள் பிரிவுத்துயரை அனுபவித்தாக வேண்டும். குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் ராஜதுரோகங்களில் ஈடுபட்டு கண்டங்களை எதிர்கொள்வான். மறியல் வீட்டிற்குப் போவான். கதையின் முடிவு சார்ந்த இவ்வரிகள் ஈழத் தமிழ் வாசகனுக்கு முற்றிலும் புதிய பரிமாணத்திற்கான திறவுகோலாக அமையக் கூடும்.
ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபில் "கோசலை மிக முக்கியமான படைப்பு. தளையசிங்கம் மரபின் தொடர்ச்சியை இனங்காட்டுவது சமகாலத்தில் உமா வரதராஜன், பொன்னம்பலம் கதைகளிலும் இம்மரபின் தொடர்ச்சினை இனங்காண முடியும்.
காலம் 8 நவ

சந்திப்பு
மூன்றாம் முறையாக அவன் சொன்ன போது ஆக்ரோவும் வந்தது
முதல் முறை சிரித்து பின்னர் மெளனமாகி இப்போது எரிகிறது
ஒரு உடைவை எதிர்பார்த்து சிரிப்போடு அவன் தொடர
உருப்பொருட்களாய் அந்த ஆண்களை நான் பார்க்கிறேன்
தெற்றிப்பல்லு, வெளுத்ததாடி குச்சிக்கால்கள், வழுக்கைத் தலை பருத்த வயிறு, அகன்ற மார்பகம்
இறுகிய முகத்துடன் புறுபுறுக்கும் பெண்கள் இனி-பெண்கள் சந்திப்பு சாத்தியப்படலாம்
ஒவ்வொருத்தனாய் நிர்வாணமாக்கி சோதித்து - அலட்சியம் செய்கிறது என் மனது.
பெண்கள் சந்திப்பில்
என் பிரவேசம்
நிச்சயம் இருக்காது
சுமதிரூபன்
buli 2001

Page 15
எண்பதுக்களின் பிற்பகுதியிலும் தொண்ணுாறுகளிலும் ஈழத்தில் போர்ச்சூழல் வலுவடைந்தபோது இந்தியத் தமிழ் வாசகனுக்கும் ஈழத்தமிழ்ப் படைப்புல்கிற்குமான இடைவெளி இன்னும் மிகுந்தது. உலகின் எந்த மனித இனமும் இன்றுவரை கொண்டிராத இன்னல்களை ஈழத் தமிழினம் எதிர்கொள்ளும் படியானது. உயிரைத் தக்கவைத்துக் கொள்ள புலம்பெயர்ந்து நில, கால, கலாச்சாரச் சூழலில் தமக்கு முற்றிலும் அன்னியமான ஐரோப்பிய நாடுகளில் சிதறி வாழும்படியானது. இந்நிலையிலும் தங்கள் கலை இலக்கிய கலாச்சாரத்தின் உயிர்ப்பை மடியும்படியாக விட்டுவிடவில்லை என்பது மிகுந்த நம்பிக்கை ஊட்டுவது. ஈழத் தமிழிலக்கிய மரபு குண்டுவெடிப்பு சத்தங்களுக்கிடையில் ஈழ மண்ணிலும், பனிமூடிய ஐரோப்பிய மண்ணிலும் தொடர்ந்துள்ளது.
வெளியீட்டு ஊடகங்களின் போதாமை, வசதிகளற்ற வாழ்க்கைச் சூழல் இவற்றிற்கிடையிலும் கூட ஈழ மணணில் சிறுகதை மரபு சில புதிய முகங்களை எதிர்கொண்டுள்ளது. முல்லைக்கோணேஸ், திசேரா போன்றவர்களை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
திசேராவின் 'நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்" எதார்த்தப் போக்கிலமைந்த கதை. படைப்பில் துலங்கும் எதார்த்தம் வாழ்வின் எதார்த்தத்தை எந்த அளவிற்கு உணர்த்துகிறது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது இக்கதை. "கடையின் கண்ணாடியில் சதைத் துண்டொன்று சப்பென்று ஒட்டி கீழே வடிந்து விழுத்தது" நாளிதழ் பக்கமொன்றில் இவ்வரி இடம் பெற்றிருக்கக் கூடுமானால் ஒருவித பயங்கர உணர்வை அது தோற்றுவிக்கக் கூடும். ஆனால் இலக்கியப் படைப்பில் முற்றிலும் வேறான உணர்வையே இது எழுப்பும். உலகமெங்கும் வன்முறையின் கோர வடிவங்களைக் கண்டு பெரும்பாலான படைப்பாளிகள் நகைத்திருக்கின்றார்கள். இவர்களின் நகையே வன்முறையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
படைப்பின் முக்கியத்துவம் அது முன்வைத்துள்ள சமூகச் சிக்கல் அல்லது அரசியல் நிகழ்வின் முக்கியத்துவத்தைச் சார்ந்ததல்ல. படைப்பாளி மனதில் அது தோற்றுவிக்கும் நெருக்கடி, அந்த நெருக்குதலில் இருந்து மனித மதிப்பீடுகள் நோக்கிய படைப்பாளியின் முன்நகர்வு இவை மட்டுமே படைப்புத் தொடர்பானது. ரஞ்சகுமாரின்கதைகள் இந்நோக்கில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழத்தின் துக்கமிகுந்த நாட்களின் கலைவடிவங்களாக இவற்றைத்தான் சுட்ட இயலும். "போகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும் கதையும் ஈழ மீண்ணில் மனித அவலத்தைத்தான் முன்வைத்துள்ளது. குண்டு வெடிப்பு, தொடர்ந்து நிகழும் வன்முறை இவை தோற்றுவித்த மனித மரணங்கள், இதில் வெளிப்படும் வாழ்வின் அவலம் இவைதான் எதார்த்தச் சித்திரிப்பாக உருப் பெருகின்றது.
Bab 8

படைப்பியக்கம் முன்முடிவுகளைக் கொண்டு அதனடிப்படையில் இயங்குவதில்லை. படைப்பாளி உணரும் போதே உணர்த்தியுமிருக்கிறான். உணர்தலும் உணர்த்தலும் ஒரே கணத்தில் நிகழ்வதுதான். ஆனால் படைப்பாளி சார்ந்துள்ள கட்சி, குழு வரையறுத்த சிந்தனைகளுக்கிசைவான வாழ்வை எழுத்தில் கட்டி எழுப்பும் எழுத்தாளனின் இயக்கம் இத்தகையதல்ல. இங்கு சிந்தனைகள்ை (தன் சிந்தனை என உரிமை கோர இவனுக்கேதுமில்லை) வாசக மனம் ஏற்கும்படி செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இவனுக்குள்ளது. இதில் அவன் வெற்றிகாண பொருத்தமான வியூகங்களை அமைத்து திட்டமிட்டுச் செயல்பட்டாக வேண்டும். இவ்கையாளும் தந்திரங்களே எழுத்தில் இவன் கொண்டுள்ள நோக்கங்களைப் பறைசாற்றவும் கூடும். திசேராவின் கதையை இக்கோணத்தில்தான் எதிர்கொண்டாக வேண்டும்.
"தெரிந்த முன் வழியால் செல்லவும் பயத்தில் வாயைத் திறந்து முழி பிதுங்க நின்ற நிலை பின்னர் நினைக்கும் போது எனக்குச் சிரிப்பு வந்தது.' நிகழ்வை 'தன்' தொடர்பானதாகக் கதையில் விரிக்கும் கதை சொல்லி இவ்வரியில் காலம் தொடர்பான குறிப்பொன்றை நுட்பமாக விட்டுச் சென்றுள்ளான். குறிப்பிட்ட நிகழ்வு நடந்த காலத்திற்கும், கதையாக அவன் சொல்லும் காலத்திற்குமிடையே குறிப்பிட்ட கால இடைவெளி அமைந்துள்ளது. இக்கால இடைவெளியில் நிகழ்வு அவனுடைய சுயமதிப்பீட்டிற்கு உள்ளாக்கவும் பட்டுள்ளது. அன்று அவன் கொண்ட பதட்டம், பின்னால் அவனுக்கே நகைப்பிற்கிடமானதாகத் தோன்றியுள்ளது. இதுபோல் நிகழ்வின் அனைத்து கூறுகளும் சுய மதிப்பீட்டிற்கு உள்ளக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு மதிப்பீட்டிற்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வுகளே கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கதை முழுமையும் இவனுடைய பதிவுகளே.
எதார்த்தம் எப்போதும் வாழ்வின் தர்க்க ரீதியான ஒழுங்கமைவை வலியுறுத்துகிறது. ஆனால், இந்த ஒழுங்கமைவு புற உலகுடனான ஒப்பிடலில் அல்ல, படைப்பாளி முன்வைத்த புனைவுலகின் நியதிகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
கதை சொல்லி விரிக்கும் நிகழ்வுகளின் பெரும் பகுதியும் ஒலிவடிவில் அவனை வந்தடைந்து ஊகமாக அவன் மனக்கண்ணில் காட்சி வடிவில் விரிந்தவைதான். குண்டு வெடிப்பின் போது சாப்பாட்டுக் கடையினுள் மேஜையின் முன்னால் இருக்கின்றான். குண்டு வெடிப்பை அது எழுப்பிய ஒலியிலிருந்தும், கடையினுள் அது தோற்றுவித்த அதிர்வுகளிலிருந்துதான் உணர்கிறான். "சாப்பாட்டுக் கடையின் அலமாரி திறவுபட்டு உழுந்த வடையொன்று கீழே விழுந்தது. மேசை மீது தண்ணி நிரப்பி வைக்கப்பட்டிருந்த தம்ளம் நீரைச் சிந்தியது" என நுட்பமான சூழல் சார்ந்த அவதானிப்புகளை முன்வைக்க முடிவதும் இதனால்தான். கடையில் வேலை செய்ய
வம்பர் 2001

Page 16
I
பையன் அவனைக் கூப்பிட்டுக் கெண்டே வீதியைக் கடக்க முயல வெடிச் சத்தத்தில் அவன் கீழே விழுவதையும் அவனால் காண முடிகிறது. “வெளியே முன் கதவால் போனால் நானும் செத்துதான் விழ வேண்டும்' என்ற உணர்வும் அப்போது அவனுக் கிருந்தது. இப்போது கடையிலிருப்பது அவனும் கடையின் முதலாளி அம்மாவுமே. அவள் காதுகளைப் பொத்திக் கொண்டு கீழே குந்த அவன் குப்புறப்படுத்து தவழ்ந்து கொண்டு கடையின்உட்பக்கம் செல்கிறான். ஆக குண்டு வெடிப்பிற்குப் பின் கடையின் முன் வாசலை அவன் கடக்கவில்லை என்றாகிறது.
கடை சோதனையிடப்படுவது, கடை முதலாளிப் பெண் இனந்தெரியாத மொழியில் விசாரணை செய்யப்படுவது, உயிரைக்காத்துக்கொள்ள அவள் கெஞ்ச கெஞ்ச இழுத்துச் செல்லப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுவது அனைத்துமே விறகுகளுக்கிடையில் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டு ஒளிந்திருக்கும் அவனை ஒலி வடிவில் வந்தடைந்து மனதில் காட்சியாக விரிந்தவையே. வெடிச் சத்தங்களும் மனித அவலக்குரல்களும் ஓய்ந்து வெகு நேரத்திற்குப் பின்தான் அவன் மறைவிடத்திலிருந்து வெளிப்படு கிறான். பின்வாசல் வழியாகத் தப்ப முயன்று அதில் தோல்வியுற்று முன்வாசல் வழி வெளியேறுகிறான். சுடப்பட்டு கிடக்கும் முதலாளிப் பெண்ணின் உடலை இப்போது அவன் கண்கள் பதிவு செய்யவில்லை. இல்லையெனில் பதிவு செய்யும் மனநிலையில் அவன் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது அது அப்புறப்படுத்தப் பட்டிருக்கலாம். வேட்டையாடப்பட்ட மிருகமொன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இறுதிவரை முயன்று அதில் தோல்வி கண்டு மரணத்தின் வாயிலில் தானாகச் சென்று விழுவதைப் போல் அவனும் முன்னெட்டு எடுத்து வைத்து குண்டடிபட்டு வீழ்கின்றான். உணர்வு திரும்பும்போது 'சேலைன்” பாட்டிலை அவன் கண்கள் பதிவு செய்கின்றன.
"அந்த உடல்கள் கிடக்கும் நிலை பார்க்கக் கூடியதாக இல்லை. ஏதோ ஒரு அங்கம் குறைவு பட்டவையாகவே கிடந்தன. வீதியெல்லாம் ரெத்தம். காலில் குருதியை ஒட்டிக் கொள்ளாமல் மறுபக்கம் போக முடியாதளவு பரவிக் கிடந்தது. ஒரு காலில் எலும்புடன் சதையும் போக தோல் மட்டும் கோதுபோல் கிடந்தது. இது யாருடைய காலென்று தெரியவில்லை."
குண்டு வெடிப்பின் போது மனித உடல்கள் சிதறிக் கிடப்பதை மிக நெருக்கமாக அவன் கண்கள் எப்போது பதிவு செய்தன. இக்கண்கள் சிதறிக் கிடக்கும் உடல்கள் ஒவ்வொன்றையும் மிக நெருக்கத்தில் தனித்தனியாகப் பதிவு செய்துள்ளன. குண்டு சத்தம் கேட்கும் போதும், அதைத் தொடர்ந்து வெடிச் சத்தங்கள் கேட்கத் துவங்கிய
காலம் 8 நவ

போதும் அவன் சாப்பாட்டுக் கடைக்குள்ளாகவே முடங்கிவிட்டபோது இது எவ்வாறு சாத்தியமாயிற்று. வாழ்வின் தர்க்க ரீதியான ஒழுங்கமைவு இங்கு சிதைவடைகிறது. கதைச் சொல்லலில் நேர்ந்த சிறு பிழையாக இதனைப் புறக்கணித்துவிட இயலாது. படைப்பாளி தன் நோக்கமொன்றை நிறைவேற்ற செய்த தந்திரமாகவே கொள்ள வேண்டியதாகிறது.
குரல் வடிவில் அவனை வந்தடைந்து காட்சியாக விரிந்த நிகழ்வுகள், ஒளிந்திருக்கும் அவனை அவர்கள் காணக்கூடுமானால் அவனுக்கு நேர இருக்கின்ற கொடுமைகள் குறித்த பயம், குண்டடிபட்டு இறந்து கிடந்த அவன் தந்தையின் நினைவுகள் இவை அனைத்துமே ஆதிக்க சக்திகளின் வேட்டை நாய்களின்சுய வடிவை இனங்காட்டுபவை. உலகமெங்குமான வேட்டை நாய்களின் வடிவம் இதுதான். இதற்கு மாறான ஒரு சித்திரிப்பை எழுத்தில் உருவாக்கி அதற்கு வாசக ஏற்பைப் பெற்றுவிட இயலாது. இச்சித்திரிப்பு மட்டுமே கதையின் முழுமையாக அமையக் கூடுமானால் இவ்வேட்டை நாய்களின் மீதான வெறுப்புணர்வே வாசக மனதில் வீழ்படிவமாகப் படியக் கூடும். ஆனால் திசேராவின் நோக்கம் இதுவல்ல என்பதையே கதையின் முற்பகுதி துலக்குகின்றது.
"சில அதிரடி உடைகளையும் சாதாரண சட்டை ஒன்றையும் கொன்றிருக்கிறது" கதையின் முற்பகுதியில் இடம்பெறும் இச்சித்திரிப்பில் படைப்பாளி சில அதிரடிப்படை வீரர்கள் என்னாது அதிரடி உடைகள் எனக் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும். இவர்களும் மரணமடைகிறார்கள்தான் என்றாலும் எப்போதும் அனுதாப உணர்வு இவர்கள் மேல் படிவதில்லை. இங்கு உடைகள் அதிகாரத்தின் குறியீடாகிறது. முன் முடிவுகளுடன் அணுகுவதால்தான் இவர்களை மனிதர்களாகக் காண்பதில்லை. படைப் பாளிகள் இவர்களையும் மனிதர்களாகக் காண வேண்டும் என்கிறார். கதையின் முற்பகுதியில் சிதறிக் கிடக்கும் மனித உடல்கள் குறித்தான சித்திரம் அவர் சிந்தனைக்கு நிரூபணமாகிறது. அவர்களும் குருதியும் சதையும் கொண்ட மனிதர்களே என்பதை மிகைப் படுத்திக் காட்டவே இது தொடர்பான சித்திரங்கள் கவனமாக எழுத்தில் வரையப்பட்டுள்ளன.
அதிரடிப் படை வீரர்களை வேட்டை நாய்களாக அல்ல, மனிதர்களாக அல்ல, புனிதர்களாகக் கருதவும் படைப்பாளிக்குப் படைப்புச் சுதந்திரம் உள்ளது. இவ்வாறு கருதுவதானால் படைப்பின் கலைத்தரம் எள்ளளவேனும் குறையப் போவதில்லை. ஆனால் அச்சட்டைகளுக்குள் இருந்து இயங்கும் மனிதனை அவன் செயல்களிலிருந்து உணர்ந்தாகவேண்டும். உணர்த்தியாக வேண்டும். உணரும் போதே உணர்த்தியுமிடுகிறான்.
ui 2001

Page 17
ஆனால் இத்தகைய சித்திரிப்பு ஈழத்தமிழ் வாசக ஏற்பைப் பெறப் போவதில்லை. இதற்குப் பொருத்தமான வியூகம் படைப்பில் அமைந்தாக வேண்டும்.
சிதறிக் கிடக்கும் அதிரடிப்படையினரின் உடல்களும் மனித அவலமே. அதுபோல் இதனைத் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட மனித உயிகளும் மனித அவலத்தின் வெளிப்பாடே. ஆக இத்தனை அவலங்களுக்கும் காரணமான குண்டு, அதை இயக்கியவர்கள் மட்டுமே மனிதத்திற்கெதிரானவர்கள். கதையின் அரசியல் இது.
விறகுக்கட்டைகளின் மறைவில் ஒளிந்திருக்கும் அவனை மரண பயத்திலும் பசி வேட்டையாடுகிறது. குழந்தைப் பருவம் முதல் அது அவனை வேட்டையாடிய நினைவுகள் அவனுள் எழுகின்றன. உணர்வு திரும்பும் போதும் முதன்முதலில் அதுதான் நினைவிற்கு வருகிறது. ஆக பசி ஒன்றுதான் முதன்மையான மானிடச் சிக்கல். அவனுடைய விடுதலை இதிலிருந்துதான். பொருள் சார்ந்த சிக்கலே அனைத்தையும் தீர்மானிக்கின்றது என்ற வறட்டு மார்க்சியப் புரிதலின் புதிய வடிவம் இது. சிந்தனைகளுக்கிசைவான நிரூபண வாழ்வு. படைப்பாளி யின் நோக்கம் இதுவே. ஒருவகையில் கைலாசபதி மரபின் தொடர்ச்சி. நீர்வைப் பொன்னையனில் இருந்து திசேரா வேறுபடுவது கதைச் சொல்லின் நுட்பங்களில் மட்டுமே.
சென்ற நூற்றாண்டின் இறுதி இருபது வருடங்களிலும் ஈழத்தமிழ் இலக்கிய மரபின் மற்றொரு பரிமாணமாகப் புலம் பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் சிதறி வாழும் ஈழத் தமிழரின் இலக்கிய முயற்சிகளைக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். முற்றிலும் அன்னிய கலாச்சாரச் சூழலில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்குத் தங்கள் கலாச்சார வேரின் உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள, தாய் மண்ணுடனான உறவை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள தகுந்த ஊடகமாக அமைவது சமயவழிபாடும், கலை படைப்பிலக்கிய முயற்சிகளுமே. ஐரோப்பிய மண்ணில்கூட "படிக்கும் அறை ஈசான மூலையில் புத்தக அலமாரியின் மேல் இவர்களுடைய தெய்வங்களும் இவர்களுடன் குடியேறியுள்ளனர். (ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரங்கள் - கருணாகர மூர்த்தி) "பொன் ஜொலியும், இடொல் பில்லியும் அதிர்ந்து பிளிறிய சவுண்ட் சிஸ்டத்தில் மகாராஜபுரம் சந்தானமும் ரி.என்.பாலசுப்ரமணியமும், முசிறி சுப்ரமணிய ஐயரும், பம்பாய் சகோதரிகளும், பர்வீன் சுல்தானாவும். நேரங்கெட்ட நேரத்தில் இவர்களுக்காக கச்சேரி செய்வார்கள். (கிழக்கு நோக்கிய சில மேகங்கள் - கருணாகரமூர்த்தி) ஈழத் தமிழர்களின் படைப்பிலக்கிய முயற்சிகளையும் இவ்வரிசையில்தான் இனங்காண வேண்டும். உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து அவ்வப்போது தோன்றி மறையும் தமிழ்ச்சிற்றிதழ்களும் இதனையே உணர்த்துகின்றன.
இந்தியத் தமிழ் வாசகர்களின் கவனிப்பை ஏதோ ஒரு
காலம் 8 நவ

வகையில் இப்புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளின் படைப்புகள் ஈர்த்துள்ளன. இவற்றுள் பெரும் பகுதியும் இந்திய மண்ணிலிருந்து வெளியிடப் பெற்றவை என்பதை மட்டுமே இதன் காரணமாகச் சுட்ட இயலாது. இவர்கள் படைப்புகளினாலேயே தமிழ் இலக்கியம் உலகளாவிய பாங்கைப் படிப்படியாகப் பெற்றுவருகிறது என்பதைத்தான் இதன் முதன்மையான காரணமாகச் சுட்ட வேண்டும். தமிழ்ப் படைப்புலகின் அனுபவ வட்டம் மிகச் சிறியது. எப்போதுமே தமிழ் மண்ணிற்குள்ளாகத் தன்னைச் சுருக்கிக் கொள்வது. அபூர்வமாகச் சில படைப்பாளிகளின் படைப்புலகம்தான் வேற்று மொழி பேசப்படும் இந்திய மண்ணளவிற்குத் தன்னை விரித்துள்ளது. ப.சிங்காரத்தின் படைப்புலகம் மட்டுமே இதில் விதிவிலக்கானது. இது தன் சிறகை அகல விரித்துள்ளது என்பது நில அடிப்படையை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்ட கணிப்பு அல்ல. ஆனால் இப்புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளின் கரங்களிலோ தமிழ் அனுபவ உலகம் தன் எல்லையை உலகளாவ விரித்துக் கொண்டுள்ளது. முத்துலிங்கம், கருணாகர மூர்த்தி படைப்புலகில் தமிழ்வாசகன் பரந்த உலகின் முன் நிறுத்தப்படுகிறான்.
மற்றொரு வகையில் இவர்கள் படைப்பு முயற்சிகள் மானுட வரலாற்றில் தாங்க இயலாத கொடுமைகளுக்கு உள்ளான ஓர் இனத்தின் உயிர் மூச்சு. இக்கதைகள் தன் இருப்பை வரலாற்றிற்கு உணர்த்தும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட ஆவணங்கள். இந்தியத் தமிழ் வாசகனின் உணர்வு ரீதியான ஈடுபாட்டை இது (இத்தகைய ஈடுபாடு ஆரோக்கியமான படைப்பியக் கத்திற்கு ஊறு செய்வது, என்றாலும் கூட) தூண்டுகிறது.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ப் படைப்பாளி களின் படைப்புகள் மீதான ஆர்வத்திற்கு காரணமாகக் கற்பிக்கப்படும் வணிக நோக்கையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 'பொதுவாக தமிழகத்தில் ஈழத்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை, புலம் பெயர்ந்தவர்களை வெறும் பணம் கொடுக்கல் வாங்கல்களுக்காகவும், சந்தை வாய்ப்புகளுக்காகவும் தூக்கி பிடிக்கும் மனோநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. "இத்தகைய குற்றச்சாட்டுகளை உண்மைக்குப் புறம்பானவை என முழுமையாக ஒதுக்கிவிட இயலாது. சந்தை வாய்ப்பு உருவாகும் போதெல்லாம் வணிகர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பது இயல்பானதே. தமிழில் புத்தகப் பதிப்பு நேர்மையற்ற வணிக இயக்கமாகவே இருந்து வந்துள்ளது. இருந்தும் வருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை. கிழக்கிந்தியத் தீவுகளில் தமிழ்க் குடியேற்றம் நிகழ்ந்தபோதும் தமிழ்ப்பதிப்பகத்தார் அங்கு உருவான சந்தை வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டதையும் இங்கு நினைவில் கொண்டாக வேண்டும். வணிகன் இதழாசிரியனாக, இலக்கிய ஆர்வலனாக, விமர்சகனாக மறு அவதாரம் எடுப்பதையும் தவிர்ப்பதற்கில்லை.
lui 2001

Page 18
என்றாலும் முத்துலிங்கம், எஸ்.பொ. போன்ற படைப்பாளிகள் அவர்களுக்குத் தகுதியான விமர்சன அங்கீகாரத்தைத் தமிழ் மண்ணில் பெற்றுவிட் டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்நிலையில் மிகையான அங்கீகாரம் என்பது மறுப்பதற்கிடமான ஒன்றாகவே உள்ளது. தமிழ்ப் படைப்பியக்கமும் அதன் ஒரு பகுதியான படைப்பியக்க பதிப்பு முயற்சிகளும் இந்த வணிக நோக்கிற் கெதிரானதாகவே இருந்து வந்துள்ளது. இருந்தும் வருகிறது.
இவர்கள் படைப்புக்கள் மீதான தனி அடையாளமாக இன்று முன்வைக்கப்படும் புகலிட இலக்கியம் என்றும் சொற்றொடரைக் குறித்தும் சிந்தித்தாக வேண்டும். ஒரு விமர்சனக் கலைச் சொல்லாக இதனை விரிக்கும் முன், இதற்கான தேவை இவர்கள் படைப்புலகிலிருந்து எழுகின்றதா என்ற கேள்வியையும் எதிர்கொண்டாக வேண்டும். எஸ்.பொ., முத்துலிங்கம், கருணாகர மூர்த்தி படைப்புலகங்கள் எதிர்மறையான பதிலையே முன்வைத்துள்ளன. ஓரளவு சாதகமான பதில்களை சக்கரவர்த்தி, கலாமோகன் படைப்புலகங்களில் இருந்துதான் பெற முடிகிறது. என்றாலும் இவர்கள் படைப்புலகில் சில அடிப்படை கேள்விகள் எழும்புகின்றன. இதற்கான பதில்கள் மிகுந்த பொருட் படுத்துதலுக்கு இப்படைப்புலகங்கள் அருகதை கொண்டவைதானா என்ற சந்தேகத்தைக் கூடவே தோற்றுவிக்கின்றன.
எஸ்.பொ., முத்துலிங்கம் போன்ற படைப்பாளிகள் தங்கள் புகலிட வாழ்வைத் துவங்கு முன்பே ஈழப் படைப்புலகில் தங்கள் ஆளுமைகளைப் பதிவு செய்தவர்கள் இவர்கள் படைப்புலக வாழ்வு புகலிடச் சூழலிலும் தொடர்ந்துள்ளது. புதிய சூழலில் வாழ்வனுபவங்களில் நிகழ்ந்த மாறுதல்களை இவர்கள் படைப்புலகில் இனங்காண முடிந்தாலும், புகலிட இலக்கியங்கள் என முற்றிலும் வேறான பண்புகளைக் கொண்ட எழுத்துக்களை இப்புதிய சூழல் தோற்றுவித்திராததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கருணாகரமூர்த்தி, சக்கிரவர்த்தி, கலாமோகன் போன்ற படைப்பாளிகளே புகலிடச் சூழலில் படைப்புலக பயணத்தைத் துவங்கியவர்கள். இவர்கள் படைப்புலகம் ஈழத் தமிழ்ப் படைப்புலகின் பொதுத் தன்மைகளிலிருந்து எவ்வகையில் வேறுபட்டுள்ளது என்பதுஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
ஈழ மண்ணில் இவர்கள் கால்கள் நிலை கொள்ளவில்லைதான். என்றாலும் இவர்களுக்குள்ளாக ஈழமண் நிலைபெற்றுள்ளதையும் மறுக்க இயலாது. இவர்கள் படைப்புலகில் கலாச்சார நெருக்குதலை உணர முடிந்தாலும், பெரும் கலாச்சார இழப்பு ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்றுதான் கூறவேண்டும். அதுபோல் மதிப்பீட்டுத் தொகுதியில் காலத்திற்கிசைவான மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் தலைகீழ் மாற்றங்களுக்கிடமில்லை என்பதையும் குறிப்பிட்டாக
காலம் 2

16
வேண்டும். உடலுழைப்பைக் கெளரவமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. பெறும் ஊதியம் மட்டுமே உழைப்பின் மதிப்பைத் தீர்மானிக்கின்றது. உழைப்பு சாதியையோ, சாதி உழைப்பையோ நினைவு படுத்தவில்லை. இங்கு மதிப்பீடு மாறுதல் அடைந்துள்ளது.
ஒழுக்கவியல் மரபிற்கெதிரான கலகங்கள் சக்கிரவர்த்தி, கலாமோகன் படைப்புலகங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவர்கள் படைப்புலகில் ஈழத்து ஆண்களால் வேறு இனப் பெண்களோடு சுலபமாக உடலுறவு கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வுரிமை ஈழப் பெண்களுக்குத் தரப்படவில்லை. ஒருவகையில் ஒழுக்கவியல் மரபின் மறுவார்ப்பு இது. ஐரோப்பிய மண்ணிலும் ஈழத் தமிழ் வாழ்வுதான் தொடர்ச்சி பெறுகிறது. அதுபோல் இப்படைப்புலகமும் ஈழத் தமிழ்ப் படைப்புலகின் தொடர்ச்சிதான். ஆனால் சமகால ஈழத்தமிழ்ப் படைப்புலகின் சத்தான பகுதியாக இதனைத்தான் கொள்ள வேண்டும்.
புகலிடச் சூழலிலிருந்து இயங்கும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளுள் எஸ்.பொ. குறிப்பிடத் தகுந்தவர். இந்தியத் தமிழ் வாசகருக்கு நன்கு அறிமுகமான படைப்பாளியும் கூட. இவருடைய நாவலான 'தீ எழுத்து இதழில் விவாதத்திற்குள்ளாகி தமிழ்ப் படைப்புச் சூழலின் கவனத்தை அன்று கவர்ந்தது. அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடரும் எஸ்.பொ.வின் படைப்புலக வாழ்வு புகலிடச் சூழலிலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தளையசிங்கத்தின் சமகாலத்தவரான எஸ்.பொ. அவரைப் போலவே ஈழத்து வறட்டிலக்கியப் போக்கிற்கு எதிரான எழுத்துலக கலகங்களில் முன் நின்றவர். இதன் காரணமாக ஈழத்து விமர்சகர்களின் புறக்கணிப்பையும் எதிர்கொண்டவர். இவர்படைப்புலகின் பெரும்பகுதியும் வட்டாரத் தன்மை கொண்டவை. ஈழத்து வாழ்வை அதற்கே உரித்தான உயிர்த் துடிப்போடு சித்திரிக்க முயன்றவை. இவர் பயன்படுத்தும் வட்டார மொழி வாசகரை அதுவும் குறிப்பாக இந்தியத் தமிழ் வாசகரை மிகுந்த சிரமங்களுக்குள்ளாக்கக் கூடும். என்றாலும் வாழ்வின் மேல் பொருக்குகளை எழுத்தில் பிரதிசெய்வதில் திருப்தி காண்பவரல்லர் அவர். அவ்வாழ்வின் ஆழங்களை நோக்கி அவர் பார்வை படைப்புக்களில் ஊடுருவிச் சென்றுள்ளது. மானுடத்தின் பொதுமைகளை அதன் ஆழத்தில் எதிர்கொள்கிறது. முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரப் பின்னணி கொண்டஅவர் மனிதர்களுடனான வாசக உறவு எளிதில் சாத்தியமாவது இதனால்தான். மேலான இலக்கியப் படைப்புகளுக்கே உரித்தான தனிக்குணமிது.
தளையசிங்கத்தைப் போலவே எஸ்.பொ.வும் சிந்தனைக் கனம் கொண்ட படைப்பாளிதான். பிராய்டின் உளவியல் சிந்தனையின் ஆழமான பாதிப்பை இவர்
நவம்பர் 2001

Page 19
படைப்புலகம் நெடுகிலும் இனங்காணமுடியும். ஆனால் சமகால மார்க்சியப் படைப்பாளிகளைப் போல் அவர் நம்பிக்கை கொண்ட சிந்தனைக்கான நிரூபண வாழ்வை பிசிறற்ற வடிவில் எழுத்தில் சமைக்க என்றுமே அவர் முயன்றதில்லை. மாறாக அவர் தேடலில் அவரோடு இணைந்து கொள்கிறது. இயல்பாக மலர்கிறது. இதனால்தான் சிந்தனை ஒரு சுமையாக அவரை அழுத்தவில்லை.
எஸ்.பொ. வடிவ உணர்வுகொண்ட ஒரு படைப்பாளியும் கூட. ஈழத்து படைப்புலகில் மிக அருகில் காணப்படும் இக்குணம் அவர் படைப்புலக வாழ்வு நெடுகிலும் தொடர்ந்துள்ளது என்பதற்கான சான்றுகளாகவே அவர்கதைகள் திகழ்கின்றன. எஸ்.பொ. ஈழ மண்ணின்மீது தணியாத மோகம் கொண்டவர். ஆனால் சிறுகதையின் வடிவ இயல்பிற்கெதிரான நீண்ட வர்ணனைகள் ஒருபோதும் அவர் கதைகளில் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. ஓரிரு வரிகளிலேயே உயிர்த் துடிப்போடு எழுத்தில் அதனைச் சித்திரித்துவிட அவரால் முடிந்துள்ளது.
எஸ்.பொ. மானிட அறத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர். எழுத்தில் விலக்கப்பட்டதாக வாழ்வு சார்ந்த எதனையும் அவர் கருதவில்லை. ஈழத்து ஒழுக்கவியல் மரபு முன்வைத்த தடைகள் அனைத்தையும் சிதறடிக்க அவர் படைப்புகளால் முடிந்துள்ளது. அதே சமயம் வாழ்வின் சரிவின்போது வெளிப்படும் மனிதக் கீழ்மைகள் மீது அவர் கொள்ளும் தார்மீகக் கோபம் அவரை முறையாகவே இனங்காட்டி விடுகிறது. இருப்பினும் இந்த அறச் சார்பு மேலோட்டமான போதனைகளாக ஒருபோதும் அவர் எழுத்தில் வெளிப்பட்டதில்லை.
புகலிடச் சூழலில் அவர் படைத்த கதைகளின் தொகுப்பாக அமைகிறது "ஆண்மை. வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் மூன்றாவது தொகுப்பு இது. புகலிடச் சூழலிலிருந்து இயங்கும் படைப்பாளி வாழ்வனுபவத்திலும், படைப்புச் சூழலிலும் தனியான சில சிக்கல்களை எதிர்கொண்டாக வேண்டும். ஐரோப்பிய மொழிகளில் நிலைகொள்ளும் நவீன இலக்கியப் போக்குகளுடனான நேரடித் தொடர்பை அவன் தவிர்க்க இயலாது. அவன் படைப்பியக்கத்தில் இது தனதான பாதிப்பினைச் செலுத்தக் கூடும். செலுத்தவும் வேண்டும். தாய்மொழிமரபின் முன்நகர்தலில் இது ஆரோக்கியமான பாதிப்பினைச் செலுத்தக் கூடும். இந்நோக்கில்தான் எஸ்.பொ.வின் "ஆண்மை தொகுப்பிலடங்கிய சிறுகதைகளை எதிர்கொண்டாக வேண்டும்.
இத்தொகுப்பிலடங்கிய கதைகள் தங்களுடையதான தலைப்பினை இழந்து நிற்கின்றன. இல்லையெனில் "ஆண்மை’ என்னும் பொதுத் தலைப்பினை இவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு கதையும் முன்வைக்கும் நிகழ்வுகள் வேறானவை. ஈழத்து வாழ்வின்
காலம் 2

வெவ்வேறு தோற்றங்களைப் பிரதிபலிப்பவை. கள்ளுக்கடை மோதல்கள், இரயில் பயணங்களில் வெளிப்படும் மானுடக் கீழ்மைகள், போர்ச் சூழலின்போது வெளிப்படும் மானுட மேன்மைகள் அல்லது கீழ்மைகள் என வெவ்வேறானவை. என்றாலும் இந்த வெவ்வேறு தோற்றங்களினூடாகவும் வாழ்வின் பொதுமையை இனங்காண முடிகிறது படைப்பாளிக்கு. ஆண்மை என்ற இப்பொதுக்குணம் வாழ்வின் மேல்மட்ட வேறுபாடுகளை நொறுக்கி விடுகிறது. இக்கதைகளும் ஆழத்தில் தனி அடையாளங்களைத் துறந்து பொதுமையில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கின்றன.
சிறுகதை மிகக் கட்டுக்கோப்பான இலக்கிய வடிவம். சிறுசிறு மீறல்களைக் கூட இது அனுமதிப்பதில்லை. படைப்பாளியின் மனமோ கட்டுக்கோப்பிற்கெதிரான கலகங்களைச் சதாகாலமும் தோற்றுவிப்பது. இக்கட்டுக் கோப்பு தோற்றுவிக்கும் தடைகளை உடைத்தெறிந்து சிறுகதையைப் பரந்த வெளிக்கு இழுத்துவரமுடிந்தள்ளது படைப்பாளியால். இதன் விளைவாக கதைகளற்ற கதை வடிவமொன்றை உருவாக்கிட முடிகிறது. இதனால்தான் ஆண்மை தொகுப்பிலடங்கிய கதைகள் அனைத்தும் மரபான சிறுகதை வடிவை இழந்து நிற்கின்றன. சிறுகதையின் வடிவ இயல்பான ஒருமை உணர்வு மட்டுமே இவற்றையும் சிறுகதை என உறுதி செய்கிறது.
ஆண்மை தொகுப்பிலுள்ள ஐந்தாவது ஆண்மை கதையை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற வேண்டும். தொடர்பற்ற இரு பகுதிகளாக இக்கதை அமைந்துள்ளது. முதற்பகுதியில் 1972ஜனவரி 21ஆம் தேதி நிகழ்ந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. இவற்றுள் சில கவனத்தை ஈர்ப்பவை. பல பொருளற்ற நிகழ்வுகள். இறுதி நிகழ்வாக எஸ்.பொன்னுத்துரையின் தந்தை Վեն)/(Մ0ծ சண்முகனாரின் மறைவுச் செய்தி இடம் பெற்றுள்ளது.
கதையின் இரண்டாவது பகுதியில் 6(U கள்ளுக்கடையின் ஒரு மாலைநேர நிகழ்வுகள் அடுக்கப் படுகின்றன. வீட்டின் ஒரு பகுதியே கடையாக அமைவதால் இடைஇடையே ஊடாடும் கடை உரிமையாளரின் இல்லற நிகழ்வுகள். நுகர்வோர் களுடனான அவருடைய உறவு அல்லது உறவில் ஏற்படும் பிசிறுகள். கூடவே வெளிப்படும் நாட்டு நடப்புகள். தனிந்பர் விமர்சனங்கள். இடை இடையே அவர் எதிர்கொண்ட வாழ்வின் சாதனைகளும் துலக்கம் பெறகின்றன. சென்னையில் கல்விபயிலும் மகன். அவன் பெறும் கல்வி அவனை மேன்மைப்படுத்த வேண்டுமென்ற அவருடைய எதிர்பார்ப்பு. அவர் விருப்பத்திற்கெதிரான இளைய தலைமுறையின் பழக்கங்கள். அதன்மீது அவர் கொள்ளும் சகிப்புத் தன்மை. கடை உரிமையாளரான அப்புச்சியின்.ஆளுமை துலக்கம் பெறுகிறது. "வேதச் சோறு தின்னவிட அப்புச்சியின் அப்பா விரும்பாததின் காரணமாகத்
வம்பர் 2001

Page 20
தடைபட்டுப் போன கல்வி, தன் குழந்தைகளாவது அதனை அடைந்தாக வேண்டுமென்ற வெறி, "அதுகளின்ரை படிப்டைவிட ரெண்டு போத்தல் அருக்கானியக் கள்ளு விக்கிறது பெரிய இதெ' இங்கு அவர் மனம் விஸ்வரூபம் கொள்கிறது.
தேரங்கெட்ட நேரத்தில் எழும்ப மறுக்கும் பாலையாவை வெளியேற்ற முனையும் அப்புச்சியின் முயற்சிகளினூடே மெல்லத் தலைதூக்கும் சாதி உணர்வு வன்முறைக்கு வழிவகுத்துவிடுகிறது. ஆனால் கணநேரத்தில் அவர் மனம் சுதாரித்து விடுகிறது. அவர் துணைக்குக் கையில் கம்புடன் வரும் மகனை அவர் எதிர் கொள்கிறார். "இதென்ன தம்பீ? கையிலை பொல்லு? உதுதான் மெட்றாஸ் படிப்போ? ஆத்தாப் போக்கிலிதான் பொல்லுத் தூக்குவான். எறிஞ்சு போட்டு உள்ளுக் குப்போ. வன்முறைமீதான அப்புச்சியின் மதிப்பீடு இது. அடிப்பட்டவனை அவனிடத்தில் கவனமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அவருடையது. அடிப்பட்டவன் எதிர்கொண்ட சொந்த வாழ்வின் இழப்புகள் மீது அவர் கொள்ளும் அனுதாபம். இரவில் மெல்ல மெல்ல மலரும் மனைவியுடனான தாம்பத்திய
செழியன் பாளம் வெடித்து
நாய்க்குடை காளா வேர் கொள்
கிளை நுனியில் கடல் நெல்லிக்காய் நீலம் தெறித்த வெளி தொலைகின்ற கரல் நீ காற்று மறிக்க எப்படி இருக்கிறாய் அலை எழுந்து விழும் துடுப்பால் தள்ளி நகரநடுவில் மழை gGofawUTud/ தரித்த படகு தனிமையில்
காற்றுவரத் திறந்து வேர்கொள் (UGiG07G)
கடந்து அறைக்குள் மழை கடிதம
வாசனை பிடிக்கத் 0ഞ്ഞg பூனைக்கு உடைப்பெடுத்து வாசலால் தப்பிஒட Gutu Gü
மேசையில் உயிரே GesoromTað திரிந்த கவிதைகை நாற்று விழுந்து கொன்று உருண்டை மணிகள் வெய்யிலில் நடந்து
மறைந்தது மகிழமரம் புதர் ஈரம் இல்லை மழை தாண்டி புதைமணல்

வாழ்வு. அவர் செயல்மீதான அவளுடைய விமர்சனம். தோழமையுடனான ஏற்பு. 'காமக்காரருக்குப் பணிஞ்சு சால்வை எடுக்க விரும்பாமல் சால்வையையே போடாமல் விட்டனான்' அப்புச்சியின் ஆண்மை இங்கு உயர்ந்து நிற்கின்றது.
"பொலிரு இஞ்ச வா. உமக்கப் படிக்கட்டில் சாக்கு விரிச்சல்லே இருக்குது. நீர்தான் இந்த வீட்டுக்குப் பெரிய காவலா" அப்புச்சியின் படுக்கையும் வெளியில்தான். நாயுடனான உரையாடலில் உயிர்கொள்ளும் அப்புச்சியின் சுயவிமர்சனம்.
ஒரு நாள் மாலைப்பொழுது கள்ளுக்கடை வாழ்வில் எவ்வளவோ நிகழ்வுகள். பொருள் நிறைந்தவை கூடவே பொருளற்றவை. தந்தையின் மரணம் எஸ்.பொன்னுத் துரைக்கு மிகுந்த பொருளுடையதாகலாம். மற்றொரு வருக்கு இது பொருளற்றதாகலாம். இங்கு கதையின் இரு பகுதிகளும் இணைப்பு பெற்றுகதை புதிய பரிமாணத்தை நோக்கி முன்னகர்கிறது. வாழ்வின் ஜீவன் பொருளுள் ளவை பொருளற்றவை அனைத்தினூடாகவும் ததும்பி வழிகின்றது. இந்த ஜீவனைக் குறித்தானதுதான் எஸ்.பொ.வின் படைப்புலகத் தேடல்.
ஊர்
6.advocal) மரங்கள் எதுவுமற்ற நெடும்பாதை உலர்ந்த உதடு
பாதிவழிகடக்கையில்
? தணிவிழாத்திப் பிஞ்சுபோல்
.ყoიrdu%7GoზIQბ ܝ
ஏங்குகின்ற கண்கள்
உதறிவிட்டு
வைத்த சைக்கிளை ஏறி மிதிக்க
εραιά.
வந்த
உடைந்து போன மனம்,
தெரியும்
n08
mé
f
க்கு
Juli 2001

Page 21
19
வெளியீட்டுப் பாங்கில் இக்கதையின் வடிவப் புதுமை படைப்பாளியின் இலக்கிய அறிவின் வெளிப்பாடல்ல. மாறாக மண்ணைவிட்டு நீங்கி பரந்த உலகை எதிர்கொள்ளும் ஒரு மானிட இதயத்தின் கனிவின் வெளிப்பாடு.
எஸ்.பொ.வைப் போலவே புகலிடச் சூழலிலிருந்து படைப்புலக வாழ்வைத் தொடரும் மற்றொரு ஈழத் தமிழ்ப் படைப்பாளிமுத்துலிங்கம். எஸ்.பொ. அளவிற்கு இல்லையென்றாலும் முத்துலிங்கத்திடமும் ஈழ மண் குறித்தான அசை போடுதல் இல்லாமல் இல்லை. ஒரு வகையில் முத்துலிங்கத்தின் படைப்புலகம் இந்தியத் தமிழ் வாசகனை ஈர்க்கின்றது. முத்துலிங்கம் படைப்புலகப் பொது குணம் 'ஏமாற்றும் எளிமை இதனூடாக வாழ்வின் ஆழங்களை நோக்கிய விரைந்த பயணம். இதற்கிணையான படைப்புலகமொன்றை இந்தியத் தமிழ்ச் சிறுகதை மரபில் காண இயலாததை இந்த ஈர்ப்பின் காரணமாகச் சுட்ட வேண்டும். அசோகமித்திரனோடு ஒரளவு ஒப்பிட இயலும். இருவருமே வாசகனின் உணர்தல் திறனின் அதீத நம்பிக்கை கொண்டவர்கள். விளக்க நெறியை முற்றிலுமாகப் புறக்கணித்து குறிப்புணர்த்தலில் கவனம் செலுத்துபவர்கள். ஆனால் அசோகமித்திரனின் படைப்புலகம் நகர வாழ்வில் மத்தியதர வாழ்வு தொடர்பானது. இதன் புறத்தோற்றமே இது உணர்த்தப் போகும் வாழ்வின் சிக்கலான தோற்றத்தை முன்வைப்பது. ஆனால் முத்துலிங்கத்தின் படைப்பு லகமோ ஈழத்தின் தெருவிலிருந்து ஐரோப்பிய நெடுஞ்சாலை வரை விரிந்தது. படைப்பின் எளிய புறத்தோற்றம் அது உணர்த்தும் வாழ்வின் ஆழங்களுக்கு
முரணாக அமைவது. m
முத்துலிங்கம் என்ற மனிதனின் புகலிடத் தேடல் முத்துலிங்கம் என்ற படைப்பாளியின் அனுபவ உலகின் எல்லையைப் பெருமளவு விரித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய அனுபவங்களைத் தாய்மொழிப் படைப்பினூடாக வாசக மனம் பெற முடிந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் ஓர் எல்லை வரை இதைச் சாத்தியமாக்கக் கூடும்தான். ஆனால் மூல மொழிப் படைப்புடனான ஒப்பிடலில் இதன் எல்லை மிகக் குறுகலானது.
முத்துலிங்கத்தின் 'ஒட்டகம்" கதையினை உலகளாவிய அனுபவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வேண்டும். அந்த சோமாலியப் பெண் தன் காதலனை மணக்க வாய்ப்பிருந்தும் தானாக ஒரு கிழவனுக்கு மூன்றாம்தாரமாக வாழ்க்கைப்பட சம்மதித்துவிடுகிறாள். கிழவனின் ஊரில் கொட்ட கொட்ட ஊற்றெடுக்கும் தண்ணீர் இதன் காரணமாக அமைந்துவிடுகிறது. தண்ணிருக்காக காதலைத் துறப்பது தமிழ் அனுபவ உலகில் வியப்பூட்டுவதுதான். ஒருவகையில் உடன்பாடு காண இயலாததுகூட. ஆனால் அந்த வாழ்வினூடாக
காலம் 2 நவம்

இயங்கும் வாசகப் பயணம் இந்த வியப்பைச் சிதைத்து விடுகிறது.அந்த வாழ்வின் துக்கத்தை உணர்த்தி விடுகிறது.
சதாகாலமும் "சாட்", இலையில் போதை பெறும் ஆண்கள். பத்துக் குட்டிகளுக்குப் பின் ஒட்டகங்களுக்குக் கூட ஒய்வு உண்டு. ஆனால் சோமாலியப் பெண்களுக்கு இதுகூட அனுமதிக்கப்படவில்லை. மைமூணின் அம்மா இருபது வருடங்களில் பதினோரு குழந்தைகளை ஈன்றவள். மைமூன் தண்ணிருக்காக தினமும் பதினாறு மைல் நடந்தாக வேண்டும். அதுவும் இனிய அதிகாலைப் பொழுதில். அவள் தந்தை நூருவிற்கும் கழுதைகள் இருந்தன. வேறு சிலரைப் போல் தண்ணீர் கொண்டுவர அவற்றைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவரைப் பொறத்தவரையில் அது கழுதைகளின் பணி அல்ல. பெண்களுடையது. கிராமத்திற்கு தண்ணீர் வசதியைவிட மசூதி அவருக்கு இன்றியமையாதது.
மைமூன் தண்ணீருக்குச் செல்லும் வழியில் தினமும் இரு அனுபவங்களைத் தவறாது எதிர்கொண்டாக வேண்டும். ஒன்று அவளைப் பயமுறுத்துவது, குர்ரா மரத்தினடியில் கிடக்கும் இரு எலும்புக் கூடுகள். அம்மா மற்றும் அவர் குழந்தையினுடையது. கோடையின் வறட்சியில் நீருக்காக அலைந்தது திரிந்து தாகத்துடன் பிணமானவர்கள். யார் முதலில் இறந்திருக்கக் கூடும். மைமூன் கற்பனை செய்து கொள்வாள். மற்றொரு அனுபவம் அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது. ஒட்டகம் மேய்க்கும் அவள் காதலனுடனான சந்திப்பு. அவளுக்காக மந்தையைவிட்டு ஒடி அவனை அலைக்கழிக்கும் அந்த ஒட்டகக் குட்டியின் கால்களைக்கூட அவள் அவிழ்த்துவிடக் கூடும். இருப்பின் அந்த முடிவை எடுத்து விடுகிறாள். சாட் இலையைத் தின்று விரைவில் இறந்து போகும் வாய்ப்புள்ள அவனுக்கு இரு குழந்தைகளைப் பெறுவதோடு தப்பிவிடவும் வாய்ப்புள்ளது. அந்த அதிகாலைப்பொழுதுதுயில் இனிஅவளுக்கக் கிடைக்கக் கூடும்.
தண்ணீர் சோமாலியப் பெண்ணின் வாழ்வின் துக்கங்கள் குறித்த குறியீடு. பெண்மையின் வேதனை மிகுந்த வாழ்வு உலகளாவியது. இப்போது தமிழ் வாசக மனதிற்கு இந்த வேதனையை உணர்ந்து கொள்ள முடியும். முத்துலிங்கம் என்ற படைப்பாளியின் படைப்புலகினூடாக பயணிக்கும் வாசக மனம் இதனைப் பெற்றுக் கொள்ள இயலும்.
எஸ்.பொ.வின் படைப்புக்களில் காணமுடிகிற வடிவப் புதுமைகளை முத்துலிங்கம் படைப்புக்களில் காண முடிவதில்லை. நாட்டுப்புறக் கதைச் சொல்லியின் புராதனமான கதை சொல்லும் முறையையே மெருகூட்டிப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சில வேளைகளில் வேகமாக சில வேளைகளில் மெதுவாக ஏற்ற இறக்கங்களுடன் கதை விரிவடைகிறது.
Li200

Page 22
விளக்கங்கள் கழன்று குறிப்புணர்த்தல்கள் துலக்கம் பெறுகின்றன. இக்குறிப்புணர்த்தல்களைப் பிடிவாதமாக எதிர்கொள்ள மறுக்கும் வாசக மனதிற்குக் கூடப் பெற்றுக்கொள்ளும் படியாக, அதனடிப்படையில் மகிழும்படியாக ஏதேனும் இருக்கத்தான் செய்கிறது. அவர் படைப்புலகம் பெறும் வாசக ஈர்ப்பிற்கு மற்றொரு காரணமிது.
"பூமாதேவி கதையை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிட வேண்டும். புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்கின்ற அல்லது எதிர்கொள்ள அஞ்சுகின்ற மதிப்பீடுகளின் சரிவையே இக்கதை அனுபவத்தளமாகக் கொள்கிறது. இம்மதிப்பீடுகளின் சரிவையே சக்கரவர்த்தி, கலாமோகன் படைப்புலகங்களில் மிகுந்த ஆரவாரங் களோடு எதிர்கொள்ள முடிகிறது. ஆனால் முத்துலிங்கம் படைப்புலகில் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி அதன் இயல்பான தளத்தில் எதிர்கொள்ள முடிகிறது.
இக்கதையும் புராதன கதைச்சொல்லியின் மொழியில்தான் உயிர்பெறுகிறது. கதையின் காட்சி வடிவை விட ஒலிவடிவம்தான் அழுத்தமாக வாசக மனதில் பதிகிறது. இருண்மை முத்துலிங்கம் அறவே இல்லாததையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
கண்டிப்பு நிறைந்த தந்தையின் மேலாண்மையின் கீழ் அடங்கி ஒடுங்கி வாழ்ந்த கதைச்சொல்லியின் இளமைக்கால நினைவுகளோடு படைப்பு துவக்கம் கொள்கிறது. ஆனால் அமெரிக்க மண்ணில் தந்தையாக வாழும் அவரை ‘சமயலறை கேத்தில் கூட விசிலடித்துக் கூப்பிடுகிறது" தன் பாய் பிரண்டின் பிறந்த நாளை நினைவில் வைத்திரா தந்தையுடன் சண்டையிட்ட மகளைத் திருப்தி செய்ய தேநீர் தயாரிக்கும் தந்தை. மகளுக்குத் துணையாக நானூறு மைல்களுக்கப்பால் வாழும் பாய்பிரண்டின் ஊருக்குப் பயணமாகும் தந்தை.
அமெரிக்காவில் சாதாரணப் பணியாளாக குடிபுகுந்த போது அமெரிக்க கலாச்சாரத்தைவிட தன் கலாச்சாரம் உயர்வானது என்று எண்ணியிராவிடினும் அதற்குக் கீழானதல்ல என்றுதான் எண்ணியிருந்தார். அமெரிக்க வாழ்வின் குறியீடான பாபிடோலுடன் மகள் வளர்ந்தாலும்கூட தன் கலாச்சாரம் குறித்த உணர்வோடு தான் வளர்ந்தாள், வளர்க்கப்பட்டாள்.
அதிவேக இரயிலின் ஒலத்தை அவன் வீட்டிற்குள்ளாக நுழையச் செய்யும் ஜன்னல்தான் அவன் இசையையும் வீட்டிற்குள்ளாக அழைத்தது. அவன் உணவகத்தின் முன் இசையை வழங்கி பொருள் பெறகிறான்தான். ஆனால் அவன் இசை அதற்கானதல்ல. ஆளற்ற இரயில் நிலையத்தில் யாருக்காகப் பாடுகிறான். எதற்காகப் பாடுகிறான்.
உழைக்க மறுக்கும் சோம்பேறி, சமூகநல உதவியில் போதையில் உழல்பவன் என்றெல்லாம் அவனைக்
As

20
குறித்த மதிப்பீடு இவள் மனதில் உருவாகியதுதான். ஆனால் அவன் இசை தலைகீழ் மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. பசியெடுத்தால் இசைப்பானோ இல்லை யெனில் வயிறு நிரம்பிய குஷியில் இசைப்பானோ என்றெல்லாம் அவளை ஏங்கும்படி செய்துவிடுகிறது.
கோடையில் பசுமை காட்டிவிட்டு மாரியில் பணியில் மறைந்துபோகும் சிறு செடியைப் போல் இவள் மனதில் அக்கலைஞன் குறித்தான நினைவுகள் வேர் கொள்கின்றன. வசந்தத்தில் பூத்துக்குலுங்கும் ஏர்லெ மரங்களைப் போல் அவன் நினைவும் இவள் மனதில் பூத்துக் குலுங்குகின்றன. புகலிட அலைக்கழிப்பு நிறைந்த வாழ்வில் இந்த மானுட உறவு சாத்தியமாகி விடுகிறது. வாழ்வின் இப்பு:திரைக் குறித்த தேடலாக கருணகர மூர்த்தியின் படைப்புலக பயணம் தொடர்ந்துள்ளது.
தளையசிங்கம் மரபின் தொடர்ச்சியை கருணாகர மூர்த்தியின் படைப்புலகில் இனங்காண முடிவதுபோல் கைலாசபதி மரபின் தொடர்ச்சியினை சக்கரவர்த்தி, கலாமோகன் படைப்புலகங்களில் இனங்காணமுடிகிறது. மார்க்சியப் பார்வையின் செல்வாக்கினை இவ்விரு படைப்பாளிகளிடமும் காண இயலாததையும் குறிப்பிட்டாக வேண்டும். இயந்திரத்துடன் கொள்ளும் ஒட்டுதல்கூட அதன் வெளிப்பாடே.
அதிகாரியான மகள் இப்போது அமெரிக்கக் குடிமகள். அவள் செலுத்தும் காரின் வேகம் அவளுக்குள்ளாக இயங்கும் புதிய மதிப்பீடுகளின் வெளிப்படுதல்கள். பூமாதேவியின் இருப்பிடம் வந்தபோது அவர் கத்தினார் அங்கைபார் பூமாதேவி. மகள் கேட்டாள் என்னப்பா பூமாதேவி. அவளுக்குள்ளாக வாழ்ந்த மதிப்பீடு எங்கேயோ தவறி விழுந்து விட்டதை அந்த தந்தை மனம் உணர்ந்து கொள்கிறது. இனி அலமாரி பூட்டை எதற்குத் திறந்தோம் என அறியாது மீண்டும் பூட்டும் செல்லாச்சி கிழவியைப்போல், இருபது ரூபாய் கடன் திரும்பக் கிடைக்காததை நாற்பது வருடங்களாக மறக்காத செல்லாச்சி கிழவியைப்போல் தன் மதிப்பீடுகளைத் தனக்குள்ளாக அடக்கிக் கொள்வார்.
பரபரப்பான வாழ்க்கை நிகழ்வுகள் ஏதுமின்றி, புலம் பெயர்ந்த ஈழத் தமிழரின் வாழ்க்கை நெருக்கடியை அனுபவமாக எதிர்கொள்ள முடிகிறது. மேலோட்டமான எளிமைக்குப் பின்னால் தலையைக்கிறங்க வைக்கும் ஆழம் முத்துலிங்கம் படைப்புலகின் தனித்தன்மை.
எஸ்.பொ., முத்துலிங்கம் போலல்லாமல் புகலிடச் சூழலிலேயே தங்கள் படைப்புலக வாழ்வைத் துவக்கியவர்களாக கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தி, கலாமோகன் போன்ற படைப்பாளிகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஆனால் ஈழத்துச் சிறுகதை மரபின் வேறுபட்ட இரு போக்குகளின் தொடர்ச்சியினையே இவர்கள் படைப்புலகிலும் இனங்காண முடிகிறது. தேடல் குணத்தை இயல்பாகக் கொண்ட தளையசிங்கம்
Abui 2001

Page 23
உங்களுடைய அடுத்தர்வு
A+/NETWORK + MCSE 2000 MCSD UNIX LINUX
AND MANY OTHE
Microsoft
நாம் வழிகாட்
2: A CanM
NJA C O M P U T E R E D U
l919 LOWrence Awe Eost, Suite 30 Web:WWW.Connet.net e.
els 416 ZSS-o499 F
காலம் 2 நவம்
 
 
 
 

funcgsi gCOBLAQ
CCNA/CCNP PROGRAMMING OFFICE APPLICATIONS LOTUS DOMINO CNA/CNE
R COURSES....
Authorised
PROMETRIC
டுகிறோம்
et TECHNOLOGY INC.
( A T O N A N D T R A N N G
5, Scorborough, ON MR2Y6 moil: info@connet.net
x: 416) 7SS-0699
xuñ 2001

Page 24
மரபின் தொடர்ச்சியை கருணாகரமூர்த்தியிடம் இனங் காண முடிகிறது. "எந்தப் படைப்புமே அது எவ்வளவுதான் சிறந்த இலக்கியமாக இருந்த போதிலும் அது சமூகத்தை முற்றிலுமாக மாற்றி ஓர் இலட்சிய சமூகத்தைச்சமைத்துவிடுவதில்லை. சாத்தியமெனில் நம் காவியங்களும், காப்பியங்களும் அதை எப்போதோ செய்திருக்க வேண்டும். Leo Tolstoyஇன் படைப்புகளின் பின்னால் உலகின் எல்லாப் படைக்கலங்களிலுள்ளும் சமாதான மல்லிகையும் சந்தோஷ ரோஜாவும் பூத்திருக்க வேண்டும். ' ஈழத் தமிழ்ப் படைப்புலகின் இளம் படைப்பாளியின் இந்தத் தெளிவு, வெளிப்படையான கைலாசபதி மரபின்மீதான மறுதலிப்பு வியப்பூட்டுவது. நமயிக்கை தருவது. இதே உணர்வையே அறுபதுக்களின் துவக்கத்தில் இந்தியத் தமிழ்ப் படைப்பாளியான ஜி.நாகராஜனும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கருணாகர மூர்த்தியின் படைப்புலகின் பெரும் பகுதியும் புகலிடச் சூழலின் வாழ்வனுபவங்களையே அனுபவத்தளமாகக் கொண்டுள்ளன. இதனோடு ஒப்பிடும்போது ஈழ மண் குறித்தான அசைபோடல் சிறுபான்மையாகவே அமைந்துள்ளது. 'கிழக்கு நோக்கிய சில மேகங்கள்', 'தரையில் ஒரு நட்சத்திரம்', 'கலைஞன்” போன்ற கதைகளை இவர் படைப்புலக சாதனைகளாகக் குறிப்பிட வேண்டும். இக்கதைகள் அனைத்துமே புகலிட வாழ்வனுபவங்களைஅனுபவத்தளமாகக் கொண்டவை.
'கலைஞன்”, 'தரையில் ஒரு நட்சத்திரம் இரு கதைகளுமே இசைக் கலைஞர்கள் வாழ்க்கை தொடர்பானவை. இவ்விரு கதைகளிலுமே வேறுபட்ட ஒரு கலாச்சாரப் பின்னணியில் வாழ்பவர்களைத் தம்முள் உறவு கொள்ளத் தூண்டுகிறது. 'கலைஞன் கதையில் கைவிடப்பட்ட ஜெர்மானிய இரயில் நிலையமொன்றில் சில காலம் வாழ்ந்து தடயமின்றி மறையும் பெயர் தெரியாத ஸாக்ஸபோன் கலைஞன். அவன் எழுப்பும் இசை மட்டுமே அவனை அடையாளப்படுத்துவது. அவன் இயக்கத்தை வீட்டில் இருந்தபடியேஊன்றி கவனிக்கும் புலம்பெயர்ந்த தமிழன். பிரச்சார நோக்கம்கூட இல்லையென்றுதான் கூற வேண்டும். என்றாலும் கைலாசபதி மரபின் தொடர்ச்சியாகவே இவர்களைக் கருத முடிகிறது. முன் முடிவுகளைக் கொண்டு அதற்கிசைவான வாழ்வை எழுத்தில் உருவாக்கும் முனைப்பை இவ்விரு படைப்பாளிகளின் படைப்புலகிலும் இனங்காண முடிவதையே இதன் காரணமாகச் சுட்டவேண்டும்.
சக்கரவர்த்தியின் "யுத்தத்தின் இரண்டாம் பாகம், தொகுப்பிலடங்கிய "எண்ட அல்லாஹ் கதையினை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும். படைப்பு முன் வைக்கும் வாழ்க்கைச்சிக்கலின் முக்கியத்துவம் அல்லது அதன் மீதான படைப்பாளியின் நிலைபாடு இவை கதையின் கலைத் தரத்தை
asroAxb X

22
எப்போதுமே தீர்மானிப்பதில்லை. இக்கதையும் பெரும்பான்மையான சமகால ஈழத்தமிழ்ச் சிறுகதை களைப்போல் ஈழமண்ணின் அவலம் நிறைந்த வாழ்வின் கணங்களை எழுத்தில் சித்திரிக்கின்றது. இயக்கங்களின் வன்முறைக்குப் பலியான ஓர் இளைஞனின் சோக முடிவுதான் கதையில் சித்திரிப்பு கொள்கிறது. ஆனால் இதற்கான காரணம் குறித்த தேடலாக அல்ல, அது குறித்த படைப்பாளியின் சிந்தனைக்கான நிரூபணமாகவே கதை எழுத்தில்உருக் கொண்டுள்ளது.
வெங்காய மொத்த வியாபாரியான ஹாஜியார், வெங்காய விவசாயியான கணபதி இருவருமே மார்க்சியர்களின் முதலாளி - தொழிலாளி படிமமாகவே கதையில் உருப் பெறுகிறார்கள். முதலாளி கொடியவன். தொழிலாளி அனுதாபத்திற்குரியவன். தொழிலாளி நீதியின் பக்கம் முதலாளி அநீதியின் மொத்த வடிவம். இங்கு ஹாஜியார் தொழிலாளியாகவும், கணபதி முதலாளியாகவும் உயிர் பெறுகின்றனர். ஹாஜியார் நேர்மையானவியாபாரி. அவரும் சில்லறை ஏமாற்றங்கள் செய்தவர்தான். என்றாலும் மெக்காவிற்குப் போய் வந்தபின் அவரைப் பொறுத்தவரையில் 'ஒழைக்கிறது தாண்டா ஒப்ப்ாய் ஒடம்புல ஒட்டும்’ என்ற கொள்கை தான். ஹாஜியார் மெக்காவிற்குப் போய்வந்து பத்து வருடமாகின்றது. ஆக பத்துவருட தூய்மையான வாழ்வு அவருடையது. மெக்காவிற்குச் செல்ல வைத்திருந்த பணத்தை ஏழைப் பெண்ணின் திருமணத்திற்குத் தானம் செய்து விட்டதனால் சென்ற வருடம் அவர் மெக்கா பயணம் தடைபட்டு போனது. ஆக ஹாஜியாரால் தவறொன்றையும் செய்ய இயலாது.
ஹாஜியார் இரக்கக் குணம் கொண்டவர் என்பது மட்டுமல்ல சமய வெறுப்புணர்வு கொண்டவருமல்லர். பிள்ளையாரைப் பார்த்து மண்டையில் போடவும் அவரால் முடியும்.இங்கு தொழிலாளியின் படிமம் முழுமை பெறுகிறது.
விவசாயி கணபதிக்கு பணம் மட்டுமே குறி. போர்ச் சூழலில் கூட ஹாஜியார் தவறாது கொடுத்தனுப்பிய பணத்தின் போதாமை அவனைக் கோபம் கொள்ளச் செய்கிறது. தடித்த வார்த்தைகளை அள்ளிக் கொட்டு கிறான். அவனைப் பொறுத்தவரையில் பணம்தான் மானிட உறவைத் தீர்மானிக்கின்றது. ஆக பணத்திற்காக எதையும் செய்யும் முதலாளி அவன்.
ஹாஜியாரின் மகன் முஸ்தபா அரசியலறியாகுழந்தை. தந்தை அழைத்தபோது பந்து விளையாட்டுத் திடலி லிருந்துதான் வருகிறான். தன் இன அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன்.
இப்போது கதை உச்சம் பெறுகிறது இயக்கத்தார் முஸ்தபாவை உளவாளியாகச் சந்தேகிக்கின்றனர். முஸ்தபா தேவையின்றித் தாக்கப்படுகிறான். சாட்சிக்கு கணபதியைச் சுட்டுகிறான்.
BaJibui 2001

Page 25
"எண்ட கடவுளே எனக்கு காசிதர ஒரவனும் வரல்லப்பா. இப்படித்தான் கனக்க சி.ஐ.டி. மாரு ஊருக்கள்ள திரியிறானுவள் முந்தா நாளோ கூட தேத்தாத் தீவில ரெண்டு சி.ஐ.டி.ய பொடியனுவள் புடிச்சவுனுகளா."
கணபதியின் மறுப்பு இயக்கத்தினரின் மீதான பயத்தினால் கூட அமையலாம். இதற்கான வாய்ப்பும் அந்த வாழ்வில் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் பிசிறற்ற நிரூபண வாழ்வுதான் படைப்பாளிக்குக் குறி.
"பீதி படர்ந்த கணபதியின் மனைவி கணபதியை மந்தமாய்ப் பார்த்தாள். கணபதி புன்னகைத்துக் கொண்டே பாயில் சரிந்தான்."
வேட்டுச் சத்தம் முஸ்தபாவின் முடிவை உணர்த்தி விடுகிறது.
"ஆயிரத்து ஐநூறு ரூபாய் கையோடகம்மாரிசு" இங்கு கொடுமைக்கார முதலாளி படிமம் முழுமை பெற்று விடுகிறது. எப்போதுமே தொழிலாளி அனுதாபத்திற் குரியவன்.
சக்கரவர்த்தியின் இக்கதை கைலாசபதி மரபின் விதிமுறைகளுக்கு முழுமையாகப் பொருந்திப் போகின்றது. படைப்பில் உருக்கொள்ள விதிமுறை களுக்கிசைவான வாழ்வையே கைலாசபதி மரபின் அடையாளமாக இனங்காண வேண்டும்.
கலாமோகனின் படைப்புலகம் பின்நவீனத்துவ சாயலினைக் கொண்டது. ஒரு வகையில் இந்தியத் தமிழ்ப் படைப்புலக மரபின் பின்நவீனத்துவ படைப்புகளை நினைவூட்டுவது. இந்தியத் தமிழ்ப் பின்நவீனத்துவ மரபின் பலவீனங்களையே கலாமோகனின் படைப்பு லகமும் இனங்காட்டுகின்றது.
ஈழத்தமிழ் ஒழுக்கவியல் மரபின் மீது கலாமோகனின் படைப்புலகம் நிகழ்த்தும் கலகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஈழத்தமிழ் ஆண்களோடு உலகின் வெவ்வேறு இனப்பெண்கள் உடலுறவு கொள்ள இச்சை கொள்கின்றனர். தயக்கமின்றி இவர்களால் உடன்படவும் முடிகிறது. ஒழுக்கவியல் மரபின் தகர்வை, கலாச்சார இழப்பை இவை உறுதி செய்கின்றன. ஆனால் இச்சுதந்திரம் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இவர் படைப்புலகில் மறுக்கப்படுகிறது. இவர்களும் ஒழுக்க நெறி பிறழலாம். ஆனால் ஈழத்தமிழ் ஆண்களோடுதான். இந்த இரட்டை நிலைபாடு இவர்கள் படைப்புலக நேர்மையைக் குறித்த ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன. கலாமோனின் 'கணி" கதை மட்டுமே இந்தியத் தமிழ் வாசகப் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. சமயம் சார்ந்த வாழ்வின் மீதான தீவிர கேலியாக இக்கதை அமைந்துள்ளத. ஆனால் இச்சமயம் கிறிஸ்த்தவமாக அமைவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
முற்றிலும் எதிர் எதிரான பண்புகளைக் கொண்ட ஒரு
காலம் 8

போக்குகளிலான ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபை இனங்காண முடிகிறது. தளையசிங்கம் மரபு, கைலாசபதி மரபு என்ற பெயர் சூட்டுதல் இவற்றை வேறுபடுத்தி இனங்காணும் பொருட்டே. இவை முன் வைக்கும் பொதுப் பண்புகளே மரபைத் தீர்மானிக்கின்றன. தளைய சிங்கத்தை முன்னோடியாகக் கொண்டது கைலாசபதியின் வழிகாட்டுதலைக் கொண்டது என்ற பொருள் கொள்ளலுக்கு இங்கு இடமில்லை.
தளையசிங்கத்தின் மரபு வாழ்வின் புதிரை அங்கீகரித்துக் கொள்கின்றது. படைப்பிற்காக இதனைச் சிறுமைப்படுத்தாது வாழ்வின் உண்மைகள் குறித்தான தேடலுக்கு முக்கியத்துவமளிக்கின்றது. இத்தேடல் குணமே படைப்பின் கலைத் தன்மைக்கு ஆதாரமா கின்றது. படைப்பியக்கமாக இதனைத்தான் கொள்ள வேண்டும். vO
கைலாசபதி மரபை மார்க்சிய கோட்பாட்டின் விளை பொருளாகக் கொள்ள வேண்டுமென்பதில்லை. கோட்பாட்டின்மீது முழுமையான விசுவாசத்தை முன்வைத்தல், வழிபடல், அதற்கிசைவான வாழ்வை முன்முடிவுகளோடு எழுத்தில் உருவாக்குதல், இதன் மூலம் தன்னையும் வாசகனையும் ஏமாற்றிக் கொள்ளுதல் இவையே இதன் பொதுக்குணங்கள். ஒருவகையில் இது சமயம் தொடர்பானது. ஈழத்து சைவ மரபிலிருந்து கைலாசபதி பெற்றுக் கொண்டது. சிவனுக்குப் பதிலாக மார்க்ஸை வழிபட நேர்ந்தது. முன் முடிவு கொண்ட இயக்கத்தில் தீர்மானிக்கப்பட்ட இலக்கை எழுத்துலகத் தந்திரங்களை முன்வைத்து எட்டிவிட முயல்வது படைப்பியக்கத்திற்கெதிரானது.
ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபின் சாதனைகள் தளையசிங்கம் மரபினைச் சார்ந்த படைப்பாளிகளினால் தான் தீர்மானிக்கப்படுகிறது.
தொடர்ந்து வந்த அழகியல் நோக்கற்ற விமர்சனம் தோற்றுவித்த தவறான விளைவுகளை ஈழத் தமிழ்ச் சிறுகதை பரப்பு முழுவதிலும் உணர முடிகிறது. முத்துலிங்கம் போன்ற மேன்மையான படைப்பாளிகளின் படைப்புலகில் கூட வடிவச் சிதைவுகள் குவிந்து கிடக்கின்றன. செழுமையான வடிவங்களில்கூடச் சிறு சறுக்கல்கள் இல்லாமலில்லை. இந்தியத்தமிழ்ச்சிறுகதை மரபின் செழுமையும் செறிவும் கொண்ட மொழி ஈழத்தமிழ்ச்சிறுகதை மரபிற்கு இன்னமும் தூரத்தில்தான் உள்ளது. இதனை எட்டிவிட இன்னமும் காலம் கனிய வேண்டும்.
ஈழத்தமிழ்ச் சிறுகதை மரபின் எதிர்காலம் புலம்பெயர்ந்த படைப்பாளிகளைச் சார்ந்தது. தமிழ் இலக்கிய மரபையே உலகளாவிய நிலைக்கு இவர்கள் உயர்த்தக்கூடும் என்று நம்பிக்கை கொள்வதில் தவறேதுமில்லை.
O
bui 2001

Page 26
சிறுகதை 24
மாசுமொசுவெ6 வெள்ளைமுடி
அந்த வெள்ளைச் சுவரில் கறுப்பு அம்புக்குறிகள் நிறைய இருந்தன. அந்த அம்புக்குறிகளைத் தீட்டியவன் அதிலேயே லயித்திருந்தவனாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகவே வரைந்திருந்தான். அவற்றைப் பார்த்தபடி அவள் நடந்தாள். இப்படியே பக்கவாட்டாக காட்டிக்கொண்டு வந்த அம்புக்குறி திடீரென்று ஓர் இடத்தில் வளைந்து நேர்க்குத்தாக மேலுக்குப் போனது. இவள் முகட்டைப் பார்த்தாள். அங்கே ஒரு வார்டோ, போவதற்கு வசதியோ இருக்கவில்லை. பின்பு வளைவில் திரும்ப வேண்டும் என்ற கரிசனையில் அந்த அம்புக்குறிக்காரன் இதைக் கீறியிருக்க வேண்டும் என்று ஊகித்து அப்படியே திரும்பினாள்.
அந்த மரப்படிக்கட்டுகள் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. இவள் அதில் தொற்றி கால் வைத்து மொட்டாக்கை ஒரு கையால் பற்றி மறுகையால் அஹமத்தைப் பிடித்துக் கொண்டு போனாள். அப்படியும் அவை பக்கவாட்டில் ஆடின. அப்பொழுதெல்லாம் அவளுடைய இரண்டு கண்களும் வலைப் பின்னல்களுக்குப் பின்னால் வண்டுகளைப்போலச் சுழன்றன.
டொக்டருடைய அறை சுத்தமாக இருந்தது. வெள்ளைக் கல் பதிக்கப்பட்ட தரை திருப்பித் திருப்பி அழுத்தித்துடைக்கப்பட்டுதூசி இல்லாமல் மினுங்கியது. திரைச்சீலைகள் வெள்ளையாகத் துவைக்கப்பட்டுத் தொங்கின. பாத்திமா அவ்வளவு வெண்மையையும், சுத்தத்தையும் தாங்க முடியாதவளாக அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். இன்னும் அங்கே அவளுக்கு முன்பாக ஏழு, எட்டு பெண்கள் காத்திருந்தார்கள்.
அஹமத் அசெளகரியமாக நாற்காலியில் தொங்கி உட்கார்ந்து கால்களை ஆட்டியபடி சுவரிலே இருந்த படங்களைப் பார்த்தான். அதன் கீழே இருந்த வாசகங்கள் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் படத்தில் இருந்த புழுக்கள் பயங்கரமாக இருந்தன. அவை ஊசிபோல மெலிந்தும், நீண்டும் கொழுக்கிபோல வளைந்தும் காணப்பட்டன. அவை எல்லாம் வயிற்றிலே வசிக்கும்புழுக்கள் என்பது அவனுக்குத் தெரியாது. அது தெரிந்திருந்தால் இன்னும் கூடிய ஆச்சரியத்தைச் செலவழித்திருப்பான். e
அந்தப்படத்திற்கு எதிர்த்திசையில்அப்கானிஸ்தானின் சர்வாதிகாரி நஜாபுல்லாவின் விறைப்பான படம் ஒன்று
காலம் 8 நவ
 
 

ன்று சடைவைத்த
ஆடுகள்
மாட்டியிருந்தது. ரஸ்ய துருப்புகள் விரட்டியடிக்கப்பட்டு ஐந்து வருடங்களாகிவிட்டன. ஒரு செப்டம்பர் மாதத்து அதிகாலையில் ஒருவருக்கும் தெரியாமல் இந்த நஜாபுல்லாவை தலிபான்கள் தூக்கிலே தொங்க விடுவார்கள். அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. பாமியான் பிரதேசத்தின் உலகப் புகழ் பெற்ற, 2000 ஆண்டுகள் வயதாகிய, உலகிலேயே உயரமான நின்ற கோலத்து புத்தர் சிலைகள் பீரங்கிகளால் அழிக்கப்படும். அதற்கு இன்னும் சரியாக ஏழு ஆண்டுகள் இருந்தன. இது ஒன்றும் தெரிந்திருக்க முடியாதவனாக அஹமத் அந்தப் படத்தினால் கவரப்பட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் டொக்டர் வெளிநாட்டுக்காரி. வெள்ளைத் தோலுடன் யெளவனமாக இருந்தாள். கூந்தலை மடித்து தலையிலே சொருகியிருந்தாள். அவள் முகத்தின் இரண்டு பாதிகளிலும் அவளுடைய அழகை எவ்விதத்திலும் குறைக்காதவாறு சிறிய செம்பருக்கள் நிறைத்திருந்தன. சிவப்புக் கூந்தல் தேனீக் கூட்டம்போல பின்னால் பறக்க ரோட்டில் அவள் ஸ்கூட்டர் ஒட்டிப் போகும்போது அடிக்கடி பார்த்திருக்கிறார்கள்.
அவள்முதலில் அஹமத்துடன்தான் பேசினாள். அவன் என்ன படிக்கிறான் என்று கேட்டாள். அவன் கூச்சத்துடன் ரகஸ்யம் பேசுவதுபோல பதில் சொன்னான். கண்களைத் தாழ்த்தி வெட்கமாகச் சிரித்தான். அவள் குரல் இனிமையானது. ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலிகளின் ஊராய்வுக்கும், பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லுவைத்த கட்டிலின் கரகர ஒசைக்கும் நடுவில் அது பொருத்தமில்லாமல் ஒலித்தது.
இவ்வளவு நேரமும் பாத்திமாவுடைய கறுப்பு அங்கிக்குள் ஒருவித சலனமும் காட்டாமல் ஒளிந்திருந்த ஒரு வயதுகூட நிறையாத மகவை வெளியே எடுத்து டொக்டரிடம் காட்டினாள். காற்றையும் வெளிச்சத்தையும் கண்டு அந்தக் குழந்தை அதிருப்தியாக முனகியது. ஓர் அணிலின் வாயைப்போலச் சிவந்த வாயைத் திறந்து கொட்டாவி விட்டது.
இந்த டொக்டரை பாத்திமாவுக்குப் பிடித்துக் கொண்டது. தன் கணவரை இவளிடம் காட்ட வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டாள். அதற்கு கணவர் இடம் கொடுப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் அவள் தீர்மானமாக இருந்தாள்.
buli 2001

Page 27
அவர் ஒரு நல்ல கணவராகத்தான் ஆரம்பித்தார். ஆற்றின் ஓட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரு மாவுமில்லில் அவருக்கு வேலை. ஒழுங்காக வேலைக்குப் போய் வந்தார். முதலில் அஹமத் பிறந்தான். ஒரு வருடம் கழித்து ஹனிபா. அதற்கும் பிறகு மற்றவர்கள். இப்படி எட்டு வருடங்கள் ஓடிவிட்டன.
மாலையானால் அவர் வேலையில் இருந்து திரும்பும் வேளையை குழந்தைகள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவள் சமையலில் மூழ்கி இருப்பாள். குழந்தைகள் பாடத் தொடங்குவார்கள்.
மழை பெய்கிறது
பாபா வருகிறார்
ஆடு கட்டிலின் கீழே
ஆடே ஆடே ஓடு, ஒடு
பாபா வாருங்கள்.
பாபா வரும்போது அவருடைய முகமும், மயிரும் வெள்ளை நிறமாகக் காட்சியளிக்கும். பிள்ளைகள் இருவரும் பயந்ததுபோலக் கூச்சலிடுவார்கள். அவரும் கோமாளியாகி சில நிமிடங்கள் விளையாடுவார். கழுத்து நரம்புகள் புடைக்க அஹமத்தை ஒரு கையால் தூக்கி ஆகாயத்தில் எறிவார். போட்டியாக ஹனிபாவும் கத்துவான். அவனையும் தூக்கி எறிவார். இவள் துப்பட்டாவை வாயில் அடைத்து பார்த்தபடி இருப்பாள். அந்த மகிழ்ச்சியான காலம் இப்போது வெகு தூரத்தில் இருந்தது.
ஆஸ்பத்திரியிலிருந்து திரும்ப வரும்போது அவர்கள் பர்வினைச் சந்தித்தார்கள். அவர் ஆறு ஆடுகளை ஒட்டிக்கொண்டு போனாள் அதிலே இரண்டு குட்டிகள் வெள்ளையாகச் சடைத்துப்போய் இருந்தன. "என்ன அழகான குட்டிகள்" என்றான் அஹமத். ஏதோ களியாட்டு விழா'வுக்கு அவற்றை மட்டும் கூட்டிப் போவதாக ரகஸ்யமாகச் சொன்னதுபோல அவனைத்துள்ளித்துள்ளி போயின. சாதாரணமாக நடந்து கடக்கும் தூரத்தையும் பாய்ந்து கடந்தன. நீண்ட கால்கள், முகத்துக்குப் பொருத்தாத பெரிய கண்கள், வெள்ளை வெனேரென்று மொசுமொசுவென்று சடை வைத்து மென்மயிர். "பாத்திமாவுக்கு கண்களை எடுக்க முடியவில்லை.
சிறு வயதில் அவளிடம் அப்படி ஒர் ஆட்டுக்குட்டி இருந்தது. அவள் போகும் இடம் எல்லாம் அதுவும் வந்தது. இரவு நேரத்தில் அவள் குடிசையில் அவளுடனேயே படுத்தது. அந்தச் சருமத்தின் மென்மைஅவளுக்கு இப்போதும் ஞாபகத்தில் வந்தது.
பர்வீன் ஒரு குடும்பம் கிடைத்துவிட்டதுபோல மிகுந்த 5
சந்தோஷத்தோடு இருந்தாள். ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் அவளுக்கு இலவசமாக அந்த ஆடுகளைக் கொடுத்திருந்தது. அவளைப் பார்த்தபோது பாத்திமாவுக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட வந்தது.
'அஹமத் நச்சரித்துக்கொண்டே இருந்தான்." இலவசமான ஆடுகளை உடனேயே போய் எடுத்து ே
Α.Ε. 2 E

வரவேண்டும் என்றான். அவனுக்கு அந்த வெள்ளை ஆட்டுக்குட்டிகள் பிடித்துக்கொண்டன. பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம். ஏதோ மாயத்தால் அவை வந்திருக்கும் என்றுபோல குடிசையின் உள்ளேயும் வெளியேயும் தேடினான். பிறகு முகத்தைத் தொங்கப் போட்டான்.
அப்படியான சந்தர்ப்பங்களில் பாத்திமா ஒரு தந்திரம் செய்வாள். தோட்டத்தில் சிவப்பு வத்தகப்பழம் இருக்கும். அவற்றைப் பிறைச்சந்திர வடிவத்தில் வெட்டி வைத்துக் கொடுப்பாள். எல்லாப் பற்களும் சிவக்க அவன் சாப்பிடுவான். அப்போது அவனுக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போகும். அடுத்த நாள் மாலைவரை மறதி மூடிவிடும்.
அன்று பாத்திமா சீக்கிரம் வந்திராவிட்டால் அந்தக் காட்சியைக் கண்டிருக்க முடியாது.ஒரு பெரிய விலங்கு வழிதவறி புகுந்ததுபோல சமையல் பகுதியில் அவர் தவழ்ந்து கொண்டிருந்தார். இரவும் பகலும் தொப்பிகள் பின்னி அவள் சேகரித்த சிறு காசுகள் அடைத்த நிடோ டின்னை அவர் கூர்மையாகப் பார்த்தார். பிறகு ஒரு கள்ளனைப்போல மெதுவாகத் தனது இடது கையை அதற்குள் விட்டுத் துழாவினார். திடீரென்று அவளைக் கண்டதும் திகைத்துப் போய் ஒரு வார்த்தை பேசாமல் பாம்பு நழுவதுபோல் முழங்காலில் நடந்து போனார். அப்பொழுது அவருடைய சருமம் அவளுடைய நீண்ட துப்பட்டாவில் தொட்டது அவளுக்கு அருவருப்பாய் இருந்தது.
போதைப் பழக்கம் மிஞ்சிவிட்டது அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது. நல்ல மாதிரி சமயங்களில் தனியாக இருந்தபோது அவரிடம் கெஞ்சிப் பார்த்தாள். ஒரு குழந்தையைப்போல் அவர் அழுதார். வாக்குக் கொடுத்தார். ஆனால் அடுத்த நாள் காலை அவருக்கு எல்லாம் மறந்து போனது.
வரவர அவர் வேலைக்குப் போவதே அரிதாகிக் கொண்டு வந்தது. தனிமையை விரும்பினார். வெறித்த பார்வையோடு வெகு நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்தார். ஒரு நாள் இரவு எல்லாம் மிகவும் மோசமாகிவிட்டது. அவர் இருமிக்கொண்டே இருந்தார்.
|- ܒ ܒ ܒ

Page 28
2
நிறுத்த முடியாத இருமல். இவள் எழும்பி அவர் நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள். அவர் ஏதோ சொல்ல விரும்பி வாயைத் திறந்தார். மூச்சுக் காற்றுகளுடன் இருமல் வெளியே வந்தது.
அப்பொழுதுதான் கவனித்தாள். அவருடைய மார்புக்கூடு தசைகளைக் குத்திக்கொண்டு வெளியே தெரிந்தது. கைகள் எல்லாம் மெலிந்துபோய் இருந்தன. உடை தொளதொளவென்று தொங்கியது.
அவள் கணமும் தாமதிக்காமல் மொட்டாக்கை எடுத்து தலையை மூடிக்கொண்டாள். ஒருவித சைகை உத்தரவுமின்றி அஹமத் லாந்தரைத் தூக்கினான். தூக்கிவிட்டு தன் செய்கையை மெச்ச வேண்டும் என்ற பாவனையில் அவளைப் பார்த்தான். பிறகு ஒரு வார்த்தை பேசாமல் அந்த இருட்டிலே இருவரும் கிளம்பிப் போய் அந்தப் பெண் டொக்டரை அழைத்து வந்தார்கள்.
ஊசி போட்டுவிட்டு, “போதைப் பழக்கம் முற்றிவிட்டது. உடனேயே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நாளைக்கே இவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டி வாருங்கள்" என்றாள்.
ஆனால் மறுநாள் பாத்திமா எவ்வளவு கெஞ்சியும் அவர் மறத்துவிட்டார்.
பாத்திமா தைரியமான பெண். தன் வறுமையை அவள் ரகஸ்யமாக அனுபவிக்கவே விரும்பினாள். என்றாலும் இறுதியில் ஒரு நாள் அஹமத் கொடுத்த துணிச்சலில் அவள் சம்மதிக்க வேண்டியிருந்தது. அந்தத் தொண்டு நிறுவனத்திற்குள் அஹமத்தைப் பிடித்தபடி அவள் மெதுவாக உள்ளே நுழைந்தாள். அவளுடைய நல்ல காலம் அங்கே இருந்தது ஒரு பெண் அதிகாரிதான்.
'என்ன வேண்டும்?" என்றாள். 'அம்மா, நான் ஆடுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்காக வந்திருக்கிறேன். என்பிள்ளைகள் பட்டினி கிடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை.
ஆனால் அந்தப் பெண் சொன்ன பதிலில் இவள் கண்கள் விரிந்தன. பிறகு கலங்கின. இவளால் நம்ப முடியவில்லை.
'அம்மா, இந்த நிறுவனம் உங்களைப் போன்ற பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான். இதில் உதவி பெற கூச்சமே தேவையில்லை. நாங்கள் ஆறு ஆடுகளை தருவோம். அவை உங்களுக்கே உங்களுக்குத்தான். நீங்கள் பணம் ஒன்றும் கட்டத் தேவையில்லை. அந்த ஆடுகளை பராமரித்து அதில் வரும் வருவாயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அவை பெருகும்போது இரண்டே இரண்டு குட்டிகளை நீங்கள் நிறுவனத்துக்குத் திருப்பித் தர வேண்டும். உங்களைப் போல வசதி குறைந்த இன்னொரு பெண்ணுக்கு அவை கொடுக்கப்படும்."
அவள் நல்லவளாகத் தெரிந்தாள். ஒரு தடித்த கறுப்பு நாளேடு போலிருக்கும் ஒன்றைப் பிரித்து வைத்து அவளுடைய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய
காலம் 8 நவ

ஆரம்பித்தாள்.
"பேர் என்ன??
"சொன்னாள்?
தகப்பன் பெயர்?
'சொன்னாள்?
'கணவன் பெயர்?"
"சொன்னாள்?
"முகவரி??
"சொன்னாள்?
'கணவர் எப்போது இறந்தார்?"
"இறந்தாரா? அம்மா, என் கணவர் இறக்கவில்லை. நோயாளியாக இருக்கிறார். வேலை இல்லை. வைத்தியச் செலவுக்குப் பணம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம்."
அந்த பெண் அதிகாரியின் முகம் கறுத்தது. 'அம்மா,
தவறான இடத்துக்கு வந்துவிட்டீர்கள். இது விதவைகள்
மையம். பெரும்பாலும் போரிலே கணவனை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. இதோ பெயர்ப்பலகையைப் பாருங்கள். மன்னிக்க வேண்டும்."
இப்பொழுது பாத்திமா மன்றாடத் தொடங்கினாள். அஹமத் தன் தாய் கெஞ்சுவதை இதற்குமுன் பார்த்ததில்லை. அவனுக்குக் கூச்சமாக இருந்தது. நாளேட்டை மூடிவிட்டு அந்தப் பெண் பெரிய அதிகாரியைப் பார்த்தற்காக உள்ளே போனாள்.
பாத்திமாவுக்கு நடுக்கம் பிடித்தது. சுவரைப் பார்த்தாள். அதிலே ஒரு படத்தில் சிறுமி ஒருத்தி ஆட்டுக்குட்டி ஒன்றை 45 பாகை கோணத்தில் சரிந்து நின்று இழுத்து வருகிறாள். பின்னாலே சூரிய உதயம் தெரிகிறது. அதன் கீழே இப்படி எழுதியிருந்தது.
ஒவ்வொரு நாளும்
சூரியன் உதிக்கும்போது
நம்பிக்கையும் உதிக்கிறது.
அவளுடைய சூரியன் அஸ்தமனத்தை முடிப்பதற்காக போனவன் இன்னும் வெளியே வரவில்லை.
பெண் அதிகாரி நிலத்தைப் பார்த்தபடி திரும்பி வந்தாள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. வீணாக அவள் அமைதியைக் கெடுத்துவிட்டதுபோல பாத்திமாவுக்குக் குற்றமாக இருந்தது. பாத்திமா 'மன்னியுங்கள்’ என்றாள். பிறகு கதவைத் திறந்து வெள்ளைச் சூரிய வெளிச்சத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
சாம்பல் மழை துளியாகப் போட்டது. கால் பெருவிரலை நிலத்துக்கு எதிர்ப்பக்கமாக வளைத்தபடி அஹமத் நடந்தான். பர்வீனின் ஆடுகளை மறுபடியும் கண்டார்கள். அவை இப்போது பொன்னிறமாக மாறிவிட்டன. அதிலே ஒரு குட்டி நீளமான கால்களுடன் இருந்தது. தன்னுடைய உயரத்தை விடவும் கூடுதலாகத்
lui 2001

Page 29
துள்ளிப் பாய்ந்தது. தான் ஜாவித்திருப்பதன் ஒரே காரணத்துக்காக அது அவ்வளவு சந்தோஷித்தது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
பாத்திமா வேகமாகத் தொப்பிகளைப் பின்னிக் கொண்டிருந்தாள். அவற்றை அவள் அன்றே முடிக்க வேண்டும். காசு கிடைத்தால் ரொட்டியும், பாலக் கீரையும், சிறிது சீனியும் வாங்கலாம். அஹமத் நீண்ட நாட்களாகக் கேட்ட எண்பது பக்க கொப்பிக்கும் வாய்ப்பிருந்தது.
ஒரு செட்டை விரித்த நிழல் முதலில் வந்தது. பிறகு வேறு நிழல்களும் சேர்ந்தன. செத்துப்போன கழுதையை அவை ஒவ்வொன்றாகக் கொத்தத் தொடங்கின. அந்தக் கொத்தல்கள் கண்ணில் இருந்து ஆரம்பித்தன. இன்னும் சில கழுகுகள் மரத்தில் இருந்து பார்த்தன. பக்கத்தில் ஒருத்தன் உருளைக்கிழங்குகளைக் குவித்து வைத்து விற்றான். மற்றவன் வரிக்குதிரைப் பைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். பலர் கால்பட்டு வயதேறுவதற்காக 'புக்காரா' கம்பளங்கள் அங்கங்கே ரோட்டிலே விரிக்கப்பட்டிருந்தன.
சில இலையான்கள் பஸ்ஸால் வந்து இறங்கின; இன்னும் சில ஏறின. அதில் இருந்த ஒருவர் உதட்டை நாக்கினால் சுழற்றி நக்கிக்கொண்டே அவளுடைய ஆறு தொப்பிகளையும் வாங்கிவிட்டார். இது அபூர்வமானது. அந்தக் காசில் அவள் உப்புக்கண்டம் போட்ட இறைச்சியை வாங்கினாள். அந்த இறைச்சி எந்த விலங்குக்குச் சொந்தமானது என்று அவளுக்கு நிச்சயமாகவில்லை. ஒட்டகமாயிருக்கலாம்; எருமையாகவும் இருக்கலாம். அல்லாவின் கருணையினால் ஆடாகவும் இருக்கக்கூடும்.
நோட்டுப் புத்தகத்தை அஹமத் ஆசையாகத் தடவிப் பார்த்தான். அதை மறுபடியும் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக் கொண்டு வந்தான். ஓர் இடத்தில் ஒற்றை இரண்டு பக்கமும் ஒட்டிக் கொண்டு கிடந்தது. பாத்திமா பல் ஒடிந்த சீப்பினால் அதை லாவகமாகப் பிரித்துக் கொடுத்தாள். அந்தச் சிறு செய்கையில் அஹமத்தின் கண்கள் வெயிலைப்போல பிரகாசித்தன. பல் தெரிய அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் இதற்கு முன்பு அப்படிச் சிரித்தது கிடையாது.
குழந்தைகள் தூங்கிவிட்டார்கள். தட்டிலே உப்புக்கண்டத்தை வைத்தபடி வெகுநேரம் தகப்பனுக்காக படிகள் இல்லாத வாசலில் குந்தியபடி காத்திருந்தான் அஹமத், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழுத்துக்குள் தலையை இடுக்கிக்கொண்டு வெளியே போனவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. பிறகு அவனே சாப்பிட்டான்.
நடு நெஞ்சில், எழுதினால் ஊறி மறுபக்கத்திற்கு போகாத வழுவழுப்பான ஒற்றைகள் கொண்ட, தடித்த அட்டை எண்பது பக்க கொப்பியைத் திறந்து வைத்து, பறித்துக்கொண்டு போய்விடும் என்பதுபோல பிடித்துக் கொண்டு தூங்கினான். பாத்திமா குழந்தைக்கு பாலைக்
காலம் 2

27
கொடுத்து படுக்க வைத்தாள். பிறகு லாந்தரை அணைக்காமல், முன்மயிர் மூக்கிலே இரு பக்கமும் விழுந்து கிடக்க, கைகளால் தோளைப் பற்றிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள். அவளுடைய உலகத்து உடமைகள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அவளைச் சுற்றிக் கிடந்தன.
ஏதோசத்தம் கேட்டபோதுஅவளுக்கு முழிப்பு வந்தது. 'வராக், வராக்" என்று அவள் கணவரிடம் இருந்து மூச்சு வந்து கொண்டிருந்தது. சதுரமான தோள்கள் தொங்கிவிட்டன. உடம்பு சதை எல்லாம் வற்றி ஓர் எலும்புக்கூடாக மாறி அந்தக் கயிற்றுக் கட்டிலில் கவனிப்பாரின்றிதொங்கியது. அவருடையதலை மட்டும் சற்று நிமிர்ந்து மண் சுவற்றில் சாய்ந்திருந்தது.
அந்தக் கண்கள் அவளையே உற்றுப் பார்த்தன. திடீரென்று அப்படியே சுழன்று எழும்பின. முழி பிதுங்கி வெள்ளையாகத் தெரிய ஆரம்பித்தது. வாய்நூதனமான ஓர் ஒலியை எழுப்பியது. பச்சைத் திரவம் நூலாக கடவாயில் இருந்து வடிந்தது. மெல்லியசந்திர ஒளிபாதிக் கீற்றுகளாக அவர் உடம்பில் விழுந்து வரித்தன்மையை உண்டு பண்ணின. அந்த இடத்தில் வியாபித்ததுர்நெடி அவளைப் பயத்தில் ஆழ்த்தியது.
அவசரமாக அஹமத்தை எழுப்பினாள். அவன் முகத்தில் நித்திரை கலக்கம் போகவில்லை. ஆனாலும் லாந்தரைக் கையில் தூக்கிக்கொண்டு டொக்டரிடம் போவதற்குத் தயாராக நின்றான். பாத்திமாவின் முகத்தில் மாறுதல் தென்பட்டது. அஹமத்தின் கைகளை இறுக்கிப் பற்றியபடி எட்டத்தில் நின்றாள். அசையாத கண்களுடன் கணவனையே குறிவைத்துப் பார்த்தாள். அவருடைய கண்கள் இவளைவிட்டு நகரவில்லை. அந்தக் கண்களில் என்றுமில்லாத குரோதம் தெரிந்தது.
女女★
அந்தக் குடில் பொதுவானதாக இருந்தது. பிளாஸ்டிக் விரிப்புகளால் வேயப்பட்ட கூரை காற்றிலே படபடவென்று அடித்தது. கண் மடல்கள் நித்திரையில் துடிக்க அஹமத் மடிந்து படுத்திருந்தான். பாத்திமாவுக்கு தூக்கம் வரவில்லை. மூச்சுக் காற்றும், முனகலும், இலைகளின் அசைவும் இன்னும் இயற்கையின் சத்தங்களும் அவளுக்கு ஆறுதலைத் தந்தன.
ஆறு ஆடுகளில் இரண்டு குட்டிகள் மிக வெள்ளையாக இருந்தன. முற்றா மயிர் கொண்ட சிறிய ஆடுகள். அவள் விரும்பிய வெண்மை. பசுமையான ஆட்டின் சருமம் அவள் உடலைத் தொட்டது. ஆட்டின் சிறிய கால்கள் கவனிக்கப்படாத அவள் மார்புகளில் மெல்ல உதைத்தன. வலி தெரியாமல் சீண்டின. மெத்து மெத்தென்று உரசின.
உலகம் தவறிதூரம் கடந்தது. அவள் தேகமே அதற்குள் மயங்கி உறக்க நிலையை அடைந்தது. ஸ்பரிசித்து கண்ணை மூடியது.
அது அப்படியே ஆயிற்று.
நவம்பர் 2001

Page 30
நான் முதல் தடவையாக டொரண்டோவுக்கு (கனடா) போனது 1993 இல், அப்போது அங்கு பல நண்பர்களைச் சந்தித்தேன். அதில் ஒருவர் குமார்மூர்த்தி. இன்று அவர் இல்லை. மரணம் இந்த ஆண்டு அவரைத் தழுவிக் கொண்டு விட்டது. அவருக்கு வயது 45.
டொரண்டோவில் நான் இருந்த நாட்களில் மகாலிங்கம், செல்வம், சேரன் போன்ற நண்பர்களுடன் குமார் மூர்த்தியையும் அன்றாடம் சந்தித்து வந்தேன்.
மூர்த்தியை முதலில் பார்த்தபோது என மனதை ஈர்க்கும்படி அவரிடம் எதுவும் இல்லையோ என்று தோன்றிற்று. அவரது நடையில் தென்பட்ட சிறு வித்தியாசம் ஒன்றுதான் என் கவனத்தில் நின்றது. மனதில் விரைவில் பதிந்து, விரைவில் உதிர்ந்து போகிறவர்கள் பலர். சிலர்சாவகாசமாகப் பதிந்துநிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுபவர்கள். மூர்த்தி இரண்டாவது
665.
அவர், தனக்குப் பேச எதுவும் இல்லை என்பது போலவும் பிறர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதுதான் முக்கியம் என்பது போலவும் இருந்தார். பிறர் பேசுவதை ஊன்றிக் கவனிக்கும் குணம் படைப்பாளிகளிடம் எவ்வளவு அபூர்வமானது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
மூர்த்தி அலட்டிக் கொள்ளாதவராகத் தென்பட்டாலும் அங்கு என் நண்பர்கள் அவரை எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி ஏதோ ஒரு பங்கு ஆற்றி வருகிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதைக்கண்டுபிடிக்க என் மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. என்னை வெளியே அழைத்துச் செல்வது பற்றியோ அல்லது வேறு விஷயங்கள் பற்றியோ நண்பர்கள் விவாதிக்கும் போதெல்லாம் கடைசியாகக் குறைவான வார்த்தைகளில் அவர் கூறும் சொற்களைச் சார்ந்துதான் முடிவுகள் உருவாயின. நாங்கள் எங்கு செல்லவேண்டும் என்பது பற்றியும், எவ்வாறு அதை அமைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்பது பற்றியும் அவர் மனதிலிருந்த சித்திரங்கள் தெளிவானவை. வசதியாக நமக்குக் காரியங்கள் நடக்கும்போது, பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், மற்றொருவர் அவை பற்றித் தெளிவாகச் சிந்தித்ததின் விளைவுதான் அது என்று உணர நாம் மறந்து போய் விடுகிறோம். இவ்வியல்பு நமக்கு
காலம் 8 நவம்ப
 

இல்லாதிருந்திருந்தால் மூர்த்தி பெற்றிருந்த படிமம் மேலும் சற்றுப் பிரகாசமாக இருந்திருக்கக் கூடும்.
நயாக்ரா அருவிக்குப் போன அன்றுதான் தனியாக அவருடன் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழீழம் அமைந்துவிட்டால் பின் இங்கே இருப்பீர்களா அல்லது பிறந்த மண்ணுக்குத் திரும்பி விடுவீர்களா?" என்று நான் கேட்டேன். 'தமிழீழம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சொந்த மண்ணுக்குப் போக வேண்டியதுதான். ஊரை மறந்து வாழ முடியவில்லை" என்றார். 'ஏன்?" என்று விசாரித்தேன். ஊரிலேயே தங்குவதில் பெற்றிருந்த பல வசதிகளைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம். ஆனால், சிறு வயதிலிருந்தே தன் மனதில் படிந்துவிட்ட காட்சி ரூபங்களைப் பற்றிச் சொன்னார். தெருக்கள், தென்னை மரங்கள், தன் சூழலிலிருந்த வீடுகளின் தோற்றங்கள் என்று பல. உடனடியாகத் திரும்பத் தடையாக தனக்குச் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும் அவற்றை அவிழ்க்க இப்போது பிரயாசப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவரது உடல்நலக் குறைவு பற்றி அப்போது அவரோ நண்பர்களோ எதுவும் சொன்ன நினைவு எனக்கில்லை. 'காலம் இதழில் அவர் எழுதியிருந்த கதைகள் மீதும் நான் போதிய கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவை சிறப்பானவை என்று நண்பர் சி.மோகன் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது.
மூர்த்தி என்னை ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வேறு இலக்கிய நண்பர்களும் உடன் வந்திருந்தார்கள். அவரது மனைவியையும் குழந்தைகளையும் மாமனாரையும் அன்று பார்த்தேன். மாமனாரின் உடற்பாங்கும் முகமும் என் மனதில் பதிந்தன. வயதில் முதியவர்களுக்கு ஒரு மண்ணிலிருந்து நன் வேர்களைப் பிடுங்கிக் கொண்டு அந்தச் சூழலுக்கே அன்னியமான மற்றொரு மண்ணில் தன்னை ஊன்றிக் கொள்வது எவ்வளவு சங்கடமான காரியம் என்று யோசித்தேன். என்னைப் போன்றவர்களால் அவர்களது அசெளகரியங்களையே அறிய முடியும் என்றும் உள்ளார்ந்த துக்கத்தை உணர முடியாது என்றும் தோன்றிற்று.
அதன் பின் சில வருடங்கள் எனக்கும் மூர்த்திக்குமான
2001

Page 31
தொலைபேசித் தொடர்புகள் மனநிறைவைத் தரக் கூடியவைகளாகவே இருந்தன. ஒவ்வொரு முறை நான் கலிஃபோர்னியாவுக்குப் போகும் போதும் என்னுடன் அவர் பேசுவார். ஒவ்வொரு முறையும் முதலில் விசாரிக்கத் தோன்றுவது அவரது மாமனாரைப் பற்றித்தான் என்றாலும் மனைவி குழந்தைகளைப் பற்றியே முதலில் விசாரிப்பேன். பல சந்தர்ப்பங்களில் அவருடைய மனைவியுடனும் தொலைபேசியில் பேசியிருக்கிறேன். பின்னகர்ந்த சில வருடங்களில் அவர் மனைவியின் முகம் என் நினைவில் கலங்கிப் போயிருந்தாலும் - இப்போது நிஜமாகவே அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறேன் - குழந்தைகளின் முகங்களும் மனைவியின் குரலும் சிறிதும் வெளிறாமல் அன்றுபோல் இன்றும் இருக்கின்றன. குழந்தைகளின் முகங்கள் நேற்றையவை.
அதன்பின் எனக்கும்மூர்த்திக்குமான தொலைபேசித் தொடர்பு சிறிது தேய்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒருமுறை செல்வம் பேசும்போது மூர்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் சிகிச்சையை முன்னிட்டு அவர் தமிழ்நாடு வர இருப்பதாகவும் சொன்னார். அவர் தமிழ்நாடு வந்தால் என்னை போனில் தொடர்பு கொள்ளும்படி சொன்னேன். இரண்டு மூன்று முறை தமிழ்நாடு வர நேர்ந்திருந்தும் அவரால் நாகர்கோவிலுக்கு வர முடியாமல் போயிற்று. அவரது நோயின் உக்கிரத்தை அறிந்திருந்த என்னால் அவரது மெளனத்தைப் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.
இம்முறை நான் கலிஃபோர்னியாவுக்குச் சென்றிருந்த போது நான் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு நேரத்தில் அவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மீண்டும் தமிழகத்திற்கு சிகிச்சையை முன்னிட்டு வரப் போவதாகவும் இம்முறை நாகர்கோவிலுக்கு வராமல் திரும்புவதில்லை என்றும் சொன்னார். ஆனால், உடல்நிலை மேலும் மோசமாகி விட்டிருந்த செய்தி சென்னையிலிருந்து வந்தது. அவரது வருகையை எதிர்பார்ப்பதை மறந்து அவர் சிறிதேனும் உடல்நலம் பெறுவதைப் பற்றி மட்டுமே யோசிக்கும்படி ஆகிவிட்டிருந்தது.
நானும் அவரும் சந்தித்துக் கொண்டதும் அவரை நான் புரிந்து கொண்டதும் என்னை அவர் புரிந்து கொண்டதும் முக்கியமான விஷயம்தான். நடுவில் எங்கள் உறவு சற்றுத் தொய்ந்திருந்தது எந்த விதத்திலும் முக்கியமானது அல்ல. அவர் இருந்திருந்தால், அவர் மனதிலோ என் மனதிலோ கோபமோ அல்லது வருத்தமோ இல்லாத நிலையில், சந்திப்புகள் மூலம் நாங்கள்தொய்ந்து போயிருந்த உறவை நெருக்கிக் கொள்ள முடிந்திருக்கும்.
இடைவெளிக்குப் பின் தொலைபேசியில் கலிஃபோர்னியாவில் அவர் என்னுடன் பேசியது இறுதி விடைபெற்றுக் கொள்ளத்தான் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

29
எஸ்.பொ.
சென்னையில் சில நூல்களின் வடிவமைப்பிலே என் சிந்தனை குவிந்து கிடந்ததால், கால அவகாசமும் குறுகி இறுக்கியதால் அவசரமென்கிற ஆய்க்கினையும்.
"மூர்த்தி நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். சற்றே வீரியஸ்' என்று இளந்தலைமுறைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் பேசிக் கொள்கிறார்கள் சந்திப்பு இடமாக என் கண்முன்னர் 'மித்ர' பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் காட்டிய அக்கறையினால்
| Altituli 2001

Page 32
30
சென்னையில் வாழும் மூர்த்தி என்கிற யாரோ ஒரு எழுத்தாளர் என விளங்கிக் கொள்கிறேன்.
பின்னர் மூர்த்தியின் மரணம். காரியங்கள் முடிந்த பிறகு கனடாவில் வாழும் குமார்மூர்த்தி என விளக்கப்படுகிறது.
அந்த மூர்த்தி மரணத்தறுவாயில் இவ்வளவு கிட்டவா வாழ்ந்தார்? ஆனால், பிரிவுபசாரப் பதிவினையாவது செய்ய முடியாத எட்டத்தில் நின்றுவிட்டே னெயென்பது.?
புகலிட எழுத்தாளர்கள், கலைஞர்கள் மத்தியிலே நிலவும் கடுமையான போட்டிகள் சலிப்புத் தருகின்றன. பழைய பாணியின் புதுவகைத் திறமைகளின் இருட்டடிப்பும் இயலாமையின் அட்டகாசங்களும்.
திறமை என்றாவது அங்கீகரிக்கப்படும் என்று நம்பி வாழ்பவர்கள் தோற்றுப்போய் விடுகிறார்கள். விளம்பரங்களின் இராக்கிதத்திலே தர நிர்ணயம் சோரம் போய்விடுகின்றது. மூர்த்தியின் எழுத்தூழியமும் தோற்று விடுமா?
தன்னை முன்னிலைப்படுத்தாத உண்மையின் ஆராதனை பாவமான காரியமா?
எது எவ்வாறாயிருப்பினும் மூர்த்தி கலை - இலக்கிய ஊழியனாய் வாழ்ந்தார் என்கிற புதினம் - ஆவணமும்.
இது மரபார்ந்த பிலாக்கணங்களுக்கும், குடங்குடமான நீலிக் கண்ணிருக்கும் மேலானது.
ஆயினும், நாவல்கள் எழுதும் வியாபாரிகள் மலிந்து வரும் தமிழ் இலக்கியத்தில் கொஞ்சமாகவேனும் புதிது படைக்க முனைந்த மூர்த்தியின் சிறுகதைகள் எதிர்காலத்தில் வாசிப்புக்கும் சுவைப்புக்கும் கிட்டுமா?
கட்டுமாறு செய்யும் பணியிலே அந்தலையில் நின்று வடம் இழுக்கும் பக்தனாய் நானும் இணைந்து கொள்கிறேன். தலைமை வடம் பிடிக்கும் அதிகாரத்தினை தமிழ்க் கனேடியர் வசம் விடுதலை முறைமை.
மூர்த்தியின் பங்களிப்பும் இணைந்ததுதான் புலப்பெயர்ந்தோர் இலக்கியம் என்பதை அவர் சாவு நினைப்படுத்திக் கொண்டு என் நெஞ்சை உறுத்துகிறது.
வாழ்க்கை என்பது சாவை நோக்கிய பயணமே. அது நிச்சயமானது; சமஸ்தமானது. எல்லோரும் அறிந்த வாஸ்தவம். W
இருப்பினும் சாவுமனச்சலனங்களின் ஊற்றாயும் சோக உணர்வுகளின் தோற்றுவாயாகவும் அமைவது எதனால்...?
கிட்டவும் தூரவும் என்கிற அளவுக்கணியங்கள் வாழ்க்கையையும் சாவையும் குறுக்கறுத்து நிற்கின்றனவா?
கிட்டவும் தூரவும் என்கிற எண்ணப் பாறாங்கல் மூர்த்தியின் மரணம் என நெஞ்சிலே வைத்துள்ளது.
காலம் 8 நவம்

குமார்மூர்த்தி கண்டடைந்த மனித முகம்
யமுனா ராஜேந்திரன்
அகால மரணமுற்ற ஈழத்துச் சிறுகதையாசிரியரும் கனடிய இலக்கியச் சஞ்சிகையான காலத்தின் தொகுப்பாசிரியருமான குமார்மூர்த்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக லண்டன் இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் சார்பாக 28.08.2001 செவ்வாய் மாலை ஆறுமணிக்கு மனோர் பார்க் தமிழ்த் தகவல் நடுவத்தில் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அஞ்சலிக் கூட்டத்திற்கு அஞ்சல் பத்திரிகையின் ஆசிரியர் மகாலிங்கசிவம் தலைமையேற்றார். மு.நித்தியானந்தன், ந.சுசீந்திரன், மு.புஷ்பராஜன், யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் அஞ்சலியுரையாற்றினர். சிறுகதையாசிரியர் சந்திரா ரவீந்திரன் குமார்மூர்த்தியின் 'மஞ்சள் குருவி சிறுகதையையும், சுசீந்திரன் "ஹனிபாவும் இரண்டு எருதுகள் சிறுகதையையும், மு.நித்தியானந்தன் "கனடாத் தமிழரும் கனவுகளும் கட்டுரையையும் வாசித்தனர். இ. பத்மநாப ஐயர் வந்திருந்து என்.கே. மகாலிங்கம், அ.முத்துலிங்கம், செழியன், சேரன், பாவண்ணன் போன்றவர்களின் அஞ்சலிச் செயதிகளைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் வாசித்தார். கூட்டத்தில் குமார்மூர்த்தியின் சகோதரியாரும் அவரது மாமியும் கலந்து கொண்டனர். குமார்மூர்த்தியின் மாமி கூட்டத்தின் உச்ச நிகழ்ச்சியாக உருக்கமானதொரு உரையாற்றினார். சுசீந்திரன் குமார்மூர்த்தியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, அவரது பாட்டனாரிடமிருந்து தீவக மக்களின் கலைநயமிக்க பண்பாட்டிலிருந்து குமார்மூர்த்தியின் கதைமொழியின் செழுமையின் ஊற்று தொடங்குவதாகச் சொன்னார். குமார்மூர்த்தியின் கதைகள் பெரும்பாலும் குறியீடொன்றினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக மு.புஷ்பராஜன் குறிப்பிட்டார். பெரும் வரலாற்று நிகழ்வுகளை குமார்மூர்த்தி அற்புதமான படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார் மு.நித்தியானந்தன் குறிப்பிட்டார். தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை இளம் வயதிலேயே பலி கொடுக்கும் சமூகம், அவர்கள் பற்றிக் கவலைப்படாத சமூகம் என்று குறிப்பிட்டார் யமுனா ராஜேந்திரன். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டம் மிகவும் துயரகரமான நிகழ்ச்சியைக் குறித்ததாக இருந்ததால் மனிதர்களின் மனம் நெகிழ்ந்து போன அனுபவம் அங்கு நிரம்பியிருந்தது என்பதைக் கூட்டத்தில் இடம் பெற்ற அமைதியும் விடைபெறலும் ஞாபகமூட்டின. குமார்மூர்த்தியின் படைப்புவாழ்வு எமக்குப் பெருமித மளிப்பதாக இருக்கிறது என அவரது மாமி கண்ணிர்மல்கக் குறிப்பிட்டார். கூட்டம் முடிந்து அவரது சகோதரியிடம் விடைபெற்ற வேளை அவர் கைபிடித்து வாஞ்சையுடன் விடைகொடுத்த போது கண்ணிர் விழியோரத்தில் வந்து நின்றது. M
இலக்கியம் வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. கவிதை சித்திரவதையின் துயருக்குக் காட்சியாக இருக்கிறது. மரணம் மனித சோகங்களுக்கும் உன்னதங்களுக்கும் சாட்சியாக இருக்கிறது. மரணம்
i2001

Page 33
சிலவேளை மனித உன்னதத்துக்கான இலக்கிய சாட்சியங் களையும் விட்டுச் செல்கிறது. குமார்மூர்த்தியிடம் மரணத்தையும் மனிதனையும் இலக்கியத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. மரணத்தின் மனித முகம் பற்றி அவர் சதா சிந்தித்துக் கொண்டிருந்தவர். அவரது படைப்புகள் போலவே அவர் ஆர்ப்பாட்டமானவரோ பரந்த இலக்கியச்சூழலில் அதிகம் அறியப்பட்டவரோஇல்லை. அதிரடி அபிப்பிராயங்களே இலக்கியக் கவனம் பெறகிற இன்றைய சூழலில் படைப்பிலும் வாழ்விலும் அமைதியாக வாழ்ந்த இந்த மனிதர் அவ்வளவாகக் கவனம் பெறாது போனது எமது தமிழ்ச்சூழலின் துயரம். தமிழ் இலக்கியப் பரப்பில் சாவு பற்றி ஆதாரமாகச் சிந்தித்த தமிழக எழுத்தாளர் சம்பத் அவர்களை இவரோடு வைத்துப் பார்க்கலாம்.
தமிழ்ச் சமூகத்தில் சரியாகப் புள்ளி விவரங்கள் பதியப்பட்டிருந்தால் 6) u gDI 60) LD நிலையில் மரணமுற்றவர்கள், கையறுநிலையில் மரணமற்றவர்கள், கவனிக்கப் பெறாது மரணமுற்ற குழந்தைகளை அடுத்து இளம் வயதில் சமூகத்தால் கவனிக்கப் பெறாது மரணமுற்றவர்கள் தமிழர் எழுத்தாளர்களாகத்தான் இருப்பார்கள். பாரதி, புதுமைப்பித்தன், தளையசிங்கம் என அவ்வரிசையில் நாற்பத்தியைந்து வயதில் மரணமுறிருக்கிறார் ஈழத்துச் சிறுகதையாசிரியர் குமார் மூர்த்தி. சில ஆண்டுகளுக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற ஸரமாகோ தமது எழுபதாவது வயதில் அந்தப் பரிசைப் பெற்றிருந்தார். படைப்பு உச்சங்களைப் பல மேற்கத்தியப் படைப்பாளிகள் தமது முதிய வயதில்தான் தந்திருக்கிறார்கள். எமது தமிழ்ச் சூழலின் துயரம் வாழ்வின் இறுதியில் தத்துவமயமான கேள்விகளோடு தேடிச் செல்ல வேண்டிய அனுபவங்களை எமது எழுத்தாளர்கள் நடைமுறையில் இளம் வயதிலேயே எதிர் கொண்டுவிடுகிறார்கள். தமிழ்ச் சமூகம் எழுத்தாளன் பற்றிக் கவலைப்படாத சமூகம் என்கிற அவப்பெயரில் இருந்து இனித் தப்புதல் சாத்தியமேயில்லை.
குமார் மூர்த்தி மரணத்தின் இடையில் வாழ்ந்தவர். அவரது எழுத்துக்களும் மரணத்தினிடையில்தான் வாழ்கின்றன. அவரது அக்கறைக்குரிய இந்த மரணம் சாஸ்வதமாக நிரந்தரமான கேள்விகளை எழுப்பும் மரணம். மின்கம்பத்தில் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மனிதனின் மரணம். ரஜனிதிரணகாம தனது குழந்தைகளைப் போலவே போராளிச் சிறுவர்களையும் நேசித்து அவர்கள் கையிலேயே சுடப்பட்டு வீசப்பட்ட மரணம். இருபத்தி நாலு மணி நேரத்தில் ஊர்விட்டு வீடுவிட்டு துரத்தப்பட்ட மனிதருக்கு நேர்ந்த நிர்க்கதியான ஆன்மாவின் மரணம். மஞ்சள் குருவியின் மரணம். குமார் மூர்த்தியின் சிறுகதைத் தொகுப்பான 'முகம் தேடும் மனிதன்' இல் இவ்வாறான அர்த்தமற்ற மரணங்கள் எழுப்புகிற துயரங்கள்தான் பதியப்பட்டிருக்கின்றன. "ஹனிபாவும் இரண்டு எருதுகளும் கதை எழுப்பும் மாபெரும் துயர் எம்மை அந்த வரலாற்றுக் காரணங்களைத் தேடிச் சென்று அதன் பின்னிருக்கும் நிழல்களைக் காறியுமிழவும் செய்யக் கூடுமாயினும், குமார்மூர்த்திக்கு அதிலெல்லாம் அக்கறை
Naib 8 5

இருப்பதாகத் தெரியவில்லை. வரலாறு மனிதர் மீது சுமத்துகிற மனிதத் துயரும் பிற ஜீவிகளின் துயரும்தான் - அது எருதின் துயராயினும் குருவியின் துயராயினும் சிறுவனின் துயராயினும் அந்தகத் தாயின் துயராயினும் - அவருக்கு அக்கறைக்கு உரியதாக இருக்கிறது. மரணத்துக்கான இரங்கல் பாடல்கள் போல அவரது சிறுகதைகள் இருக்கின்றன.
சில வேளை இவரது கதைகளுக்குச் சான்றாக வரலாற்றைத் தேடிச் செல்லத் தேவையில்லை. இருக்கிற இருப்பில் பிசாசுகள் பற்றி உடனடியாகவே இவர்கதைகள் உணர்த்தி விடுகின்றன. "ஹனிபாவும் இரண்டு எருதுகளும்’-இறுதி அத்தியாயம் - முகம் தேடும் மனிதன் கதைகளைப் புரிந்து கொள்வதற்கு இங்கு கண்கள் திறவுபட்டு செவிகள் அடைபடாதிருத்தலே போதும். மொழி பிரதேசம் போன்றவை கடந்த இனப் போராட்ட யுகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய இக்கதைகள் இவ்வகையில் பிரபஞ்சத் தன்மை பெற்ற உயிரின் தீனமான கதறலை முன்வைக்கும் கதைகளாகின்றன. சில மரணம் பற்றியது எனில் இன்னும் சில கதைகள் பிரிவு பற்றியது, ஏமாற்றம் பற்றியது, சுமத்தப்படும் துயர்கள் பற்றியது, மனிதனது ஏதும் செய்ய இயலாத ஆற்றாமை பற்றியது, அழிவுகள் நடந்து முடிந்த கிராமத்தின் தெருக்களில் நடந்து மரணவீட்டுச் சடங்குகளில் பார்வையாளனாய் மெளனமாக அமர்ந்திருந்து விட்டு வீடு வந்து மரணத்துக்குக் காத்திருக்கும் மனிதனின் மனநிலை இவரது கதைகளைச் சேரப்படித்துப் பார்க்கிற போது ஏற்படுகிறது. அர்த்தமற்ற மரணங்கள் குறித்த அடிமனத்தின் அர்த்தமுள்ள கேள்விகளை இவரது கதைகள் எழுப்புகின்றன.
குமார்மூர்த்தி நிறைய எழுதியவரில்லை. தொண்ணுற்று ஐந்தில் வெளியான அவரது தொகுப்பான முகம் தேடும் மனிதன் கூட அன்றைய அச்சு நேர்த்தியின் சாத்தியங்கள் அத்தனையையும் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. எனது ஈழத் தமிழ் இலக்கிய நண்பர்களின்பால் எப்போதுமே எனக்குத் தீராத குறையொன்று உண்டு. படைப்பிலக்கியம் சம்பந்தமான பதிவுகளும் சிறுகதை நாவல்கள் குறித்த அவர்களது விமர்சன எழுத்துக்களும் மிகவும் குறைவு. ஈழத்தின் சிறுபத்திரிகைகளில் கூட குமார்மூர்த்தியின் கதைகள் பெற்றிருக்க வேண்டிய கவனம் பெறவில்லை என்பதைக் கவலையுடன் சொல்ல வேண்டியிருக்கிறது. மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களான முஸ்லீம் மக்களின் யாழ்ப்பாண வெளியேற்றம், மனித உரிமையாளர் ரஜனிதிரணகாமாவின் படுகொலை, மின்கம்பக் கொலைகள், துரோகியெனும் பெயரிலான அப்பாவி மனிதர் கொலைகள் போன்றவை குறித்த இலக்கிய சாட்சியமாக, படைப்புச்சாதனைகளாக இவரது கதைகள் இருக்கின்றன. அர்த்தமற்ற மரணம் பற்றிச் சதா கேள்வியெழுப்பிக் கொண்டிருந்த குமார்மூர்த்தியின் கதைகளை அவரது மரணத்தை முன்வைத்துப் பேச நேர்ந்திருப்பது தவிர்க்கவியலாமல் நெஞ்சுக்குள் துக்கத்தை எழுப்புகிறது. குமார்மூர்த்தி அவர் தேடிக் கொணடிருந்த மனித முகத்தின் அடையாளத்துக்கான
வம்பர் 2001

Page 34
3
தடங்களைக் கொஞ்சமான சமிக்ஞைகளை நமக்கு முன் விட்டுச் சென்றிருக்கிறார். அந்த எதிர்கால மனித முகம் குறித்து அவருக்குச் சில அனுமானங்களும் இருந்திருக்கின்றன என்கிற புரிதலை அவரது கதைகள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. இன்னும் அத்தகைய மனிதன் மரணமான மனித அடையாளம் கொண்ட முகத்தை அவர் தடத்தில் தொடர்ந்து தேடிச் செல்வதன் மூலம் கண்டு கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அவனை இழந்தபோது அன்று எரிக்கிற வெயில்
அனல் சொரியும் வானும் புள்ளிறகுகள் பொசுங்கும் நெடியுமாய் கொடும் நாள் முடக்கப்பட்டிருந்தது காற்று
கடல்
ஒரு துளியுமின்றி வற்றிவிட்டதென்கிறார்கள்
அன்றுதான் அவனை இழந்தோம்
எங்களிடையே ஆதிகாலப் பெரு விலங்கொன்றின் தடம் போல ஏப்பம் விட்டுப் படுத்திருக்கிறது
மரணம்
அச்சமும் ரணமும் கவிந்த முகங்களுடன் கையிழந்தவர்களாய்
கண்கள் வழிய குரல்விம்மிக் கரைகிறோம்
நம்பிக்கை இழந்தபோது துயரங்களை விதியை வைதோம் ஒரு கடைக்கண் வீச்சை எறிந்து விட்டு அசைய மறுத்துக் கிடக்கிறது
மரணம்
அவனின் பிசிறற்ற குரலில் ஒருதுண்டு என் செவியின் ஒரத்தில் ரீங்காரிக்கிறது
மரணவிலங்கின் எக்காளத்தினின்றும் அதைப்பிடுங்கி பொத்திப் பாதுகாக்க அவாவுகிறது LD607th
நீண்ட இலையுதிர்காலத்தின் பின் எழுமோர் புதுவேனில் நாளில் அதை குருவிகளிடம் கொடுப்பேன்
அவைகள் இசைக்கட்டும் அவன் குரலில் x ஒரு புதிய பாடலை திருமாவளவன்
காலம் 3 த

எழுதப்படாத எம் கதைகளின் துயரம்
பா.அஜயகரன்
வவுனியா பெரியதம்பனை கிராமிய குடியேற்றத் திட்டத்தில் குடியேறிய ஆரம்ப நெடுந்தீவு மக்களாய் மூர்த்தியின் பேரரும் எனது பேரரும் அடங்குவர். அதன் தொடர்ச்சியாக பெரியதம்பனையில் நான் வாழ்ந்த காலங்களில் இவரை மூர்த்தி அண்ணையாக அறிந்திருந்தேன். மிகவும் நேர்த்தியாக உடையணிந்து, சனசமூக நிலைய வேலைகள், பெரியதம்பனை பிள்ளையார் ஆலய வேலைகள் எனத் திரியும் சர்ந்தப்பத்தில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அதன் பிற்பாடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புற்றிருந்த காலங்களில் விடுதலைப் போராளியாக, அரசியல் பிரச்சாரப் பொறுப்பாளராக பிரகாஸ் அல்லது வி.பீ. என்ற மனிதராக அறிந்திருந்தேன். பின்னர் கனடாவுக்கு புலம் பெயர்ந்த பிற்பாடு அவரது முதலாவது இலக்கிய முயற்சியான தமிழர் நேர்மை இதழுக்கூடாகவும், அவரது சிறுகதைகள், கட்டுரைகளுக்கூடாக குமார்மூர்த்தியாகவும் அறிந்திருந்தேன். புலம்பெயர்வு வாழ்வியல் நெருக்கடிக்குள் எம்மை இழக்காத மனிதத்துவத்திற்காய் உழைக்க இணைந்த நல்ல நண்பனாய் இறுதி வரையும் இருந்த இந்த மனிதரின் இழப்பு கனதியை நெஞ்சுக்குள் செருகிவிட்டதாகவும், இன்னொரு கணத்தில் அவர் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார் வந்து விடுவார் என்ற ஏற்காத பிரமையாயும் தொடர்கிறது.
இவரைப் பற்றி நான் எழுத முற்படும்போது எனக்குள்ளே பல சங்கடங்கள் தோன்றுகின்றன. சில வேளை இவர் குறித்தான எனது அனுபவங்களின் வெளிப்பாட்டுக்கான காலம் இன்னும் போதாமையாக இருக்கலாம். ஆயினும் சில சந்தர்ப்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். வன்னிப் பிராந்தியத்தின் பிரச்சாரப் பணிக்காக தோழர் சந்ததியாரினால் அனுப்பி வைக்கப்பட்ட முதல் குழுவில் இவரும் இருந்தார். இந்தப் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலத்தில், எமது கிராமத்திற்குப் பொருட்களை வாங்குவதற்கு வரும் லொறியை இலங்கை இராணுவம் எடுத்துக் கொண்டு சாதாரண உடையில் கிராமத்துக்குள் நுழைந்தது. இதை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அவ்வேளை நண்பர்மூர்த்தி, சில பிரச்சாரகையெழுத்துப் பிரதிகளுடன் வீதியால் வரும் போது இராணுவத்தால் பிடிக்கப்பட்டார். இதே சந்தர்ப்பத்தில் இவரது சகோதரரும் வீதியால் வரும் போது பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்டு லொறிக்குள் ஏற்றப்பட்டதும் துப்பாக்கிகளும், இன்னும் பல இராணுவத்தினரும் உள்ளிருப்பதை மூர்த்தி அவதானித்து தப்புவதற்கு எத்தனித்திருக்கிறார். ஆனால் அது அவரால் முடியவில்லை. அதன் போது பலமாகத் தாக்கப்பட்டு லொறிக்குள் கிடத்தப்பட்டு அவர்மீது இராணுவத்தினர்
uம்பர் 2001

Page 35
அமர்ந்து கொண்டனராம். இதன் பின்னர் வவுனியா ஈரற்பெரியகுளம் முகாமில் வைக்கப்பட்டு பலத்த சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கிறார். கால்களும், கைகளும் கட்டப்பட்டு குதி, வயிறு போன்ற இடங்களில் பலமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். (இதுவும் இவரது நோய்க்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது) அதிர்ஷ்டவசமாக இவரது சேட்டுப் பையிலிருந்த கையெழுத்துப் பிரதிகளை அவர்கள் காணவில்லை. தானும் தம்பியும் காவலில் இருந்த வேறு சிலரும் சேர்ந்து அப்பிரதிகளைச் சப்பி விழுங்கியதாகச் சொன்னார். அவர் ஒரு வாரங்களுக்கு மேல் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவர் குறித்தான எந்தவொரு துப்பும் அவர்களுக்குக் கிடைக்காததினால் மயிர் மழிக்கப்பட்டு பல உடல் காயங்களுடன் விடுவிக்கப்பட்டார். ஆயினும் எந்தவித சோர்வும் இல்லாமல் தனது பணியைத் தொடர்ந்தார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் மன்னார் மதவாச்சி வீதியில் ஆண்டியாபுளியங்குளத்திற்கு அண்மையாக இவரும் இன்னொரு தோழரும் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது தம்மைக் கடந்து ஒரு மினி பஸ் போவதை அவதானித்திருக்கிறார்கள். அதில் போனவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் போல் தொப்பி அணிந்து சென்றதினால் அவர்கள் இராணுவத்தினராய்ப் இருப்பார்கள் என்ற சந்தேகம் இவர்களுக்கு ஏற்படவில்லை. இவர்களைக் கடந்த சில நிமிடங்களில் பஸ் நிறுத்தப்பட துப்பாக்கிகளுடன் பாய்ந்த இராணுவத்தினர் மிகுந்த தாக்குதலை இவர்கள்மீது தொடுத்திருக்கிறார்கள். இருவரும் அடர்ந்த காட்டுக்குள் இறங்கி ஓடியிருக்கிறார்கள். தாம் ஓடியதிக்காய் அவர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடாத்தியதாக அவர் சொன்னார். இறுதியாக இவர்களை ஆண்டியாபுளியங்குளத்தில் கண்ட நண்பர்கள் சிலர் இவர்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் பற்றி கூறி இவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். இது எமக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் ஓடிய பகுதியென நண்பர்கள் சொல்லும் பகுதிக்கூடாக அவர்களைத் தேடிச் செல்லும் ஒழுங்குகளைச் செய்துகொண்டு அவ்விடத்திற்குச் சென்றோம். அங்கே அவர்கள் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த செய்தி எமக்காய் காத்திருந்தது. காட்டுக்குள்ளால் 3 மைல்கள் ஒடி இருவரும் ஒரு கிராமத்தை அடைந்திருந்தார்கள். பிரச்சாரப் பிரிவைச் சேர்ந்த தோழர்கள் அக்காலங்களில் ஆயுதங்களைக் காவுவதில்லை.
செட்டிகுளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள தமிழ் எல்லைக் கிராமங்கள் மற்றும் செட்டிகுளம் கிராம சேவையாளர் பகுதியில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள 10,000 இற்கும் மேற்பட்ட மக்களை 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இராணுவம் வற்புறுத்தியது. இவ்வெளியேற்றமானது எமது அண்மைக்கால வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு.
காலம் 8 ந

அனைத்து மக்களும் மனோரீதியாக பயங்கரத் தாக்கத்தில் இருந்தார்கள். இவர்களைச் சந்தித்து இவர்களுக்கு ஆதரவாய் இருந்து உதவுவது என்பது பாரிய சவாலாய் இருந்தது. இதன் போது மூர்த்தி அவர்கள் மக்கள் மத்தியில் சிறந்த பணியைச் செய்தார். இவருடன் நானும் இன்னும் சில நண்பர்களும் கதைத்துக் கொண்டு நிற்கும் போது மிகவும் பதிவாக வந்த இராணுவ ஹெலிகொப்டரின் தோன்றலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஹெலிகொப்டருக்குள்ளால்துப்பாக்கிதுருத்திக் கொண்டு எமது தலைகளில் தட்டுவதுபோல் இருந்தது. ஹெலி சற்றுக் கடந்து பின்பு திக்குத்திக்காய் ஒடுவது என முடிவு செய்தோம். நானும் மூர்த்தியும் ஓடியதிக்காய் ஹெலியும் வந்து கொண்டிருந்தது. அவர்கள் எம் மீதே குறி வைக்கிறார்கள் என நாம் எண்ணத் தொடங்கினோம். வேலியொன்று குறுக்கே வந்தது. நான் முதலில் பாய்ந்தேன். மூர்த்தியைப் பார்த்தேன். அவர் பாயும் போது கால் சறுக்கியிருக்க வேண்டும். கம்பியில் வயிறு குத்தி கிழித்து கம்பியை அகற்ற முடியாத அந்தரத்தில் நின்றார். இவரின் அந்தரத்தைப் பார்த்த இராணுவத்திற்கு கூடத் தோன்றவில்லை போலும். இவ்வாறு பல சந்தர்ப்பங்கள். வீ. பியுடன் போனால் ஆமியைக் க்ாட்டுவார் என நண்பர்கள் பகிடுவிடும் அளவுக்கு இராணுவத்தை சந்திப்பவர். இடர்பாடுகள் மிகுந்த வன்னி மண்ணில் கிராமங்கள் தோறும் சென்று தனது கருமத்தை ஆற்றியவர். அதனால் இவர் மீது நன்மதிப்பு வன்னி மக்கள் மத்தியில் இருந்தது.
மக்கள் ஜனநாயகத்தின் மீது வழுவான நம்பிக்கை இருந்தது. அதன் காரணமாய் உள்முரண்பாடுகளைத் தயக்கமின்றி விமர்சித்தவர். சமகால அரசியல் நம்பிக்கைகள், நம்பிக்கையீனங்களால் அலைக் கழிக்கப்பட்ட அவர், இறுதியில் கனடாவுக்கு புலம்பெயரும் நிலையேற்பட்டது. புலம்பெயர்ந்த பின்பும் மெளனம் கொள்ளாது, மனித உரிமைக்காய் உழைத்தவர். தமிழர் வகைதுறைவள நிலையத்தை இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கி அதன் நிர்வாக உறுப்பினராய் இறுதி வரையிருந்தவர். சோர்வடையும் போதெல்லாம் ஒரு உந்து சக்தியாய் எம்மிடையே நடமாடியவர். தனது இறுதிக் காலத்தில் உருவாக்கிய நடப்பு செய்தி இதழ் இதற்கு நல்ல உதாரணமாகும். இவர்இலங்கையில் சமாதானம் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தவர். அதன் காரணமாய் நண்பர்களால் ‘சமாதான மூர்த்தி' எனவும் அழைக்கப்பட்டவர்.
எம்மீது ஏற்கனவே இடப்பட்ட நிர்ணயங்களுக்குள் வாழ்ந்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்திலிருந்து விலகி தன்மீது நிர்ணயிக்கப்பட்ட இந்தச் சட்டங்களை கேள்விக்குள்ளாக்கும் ஒரு மனிதன் என்பதானால்தான் இவர் ஒரு படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்த முடுந்தது. கண்டங்கள் தாண்டி திரவியம் தேடும்
Atui 2001

Page 36
சமூகத்தில் மனிதத்தைத் தேட முனைந்ததினால்தான் இப்படைப்பாளி பிறக்கிறான். பல்வேறுபட்ட கருத்துக்களின் விவாதங்களை ஏற்படுத்தவும், மாற்றுக் கருத்துக்களுக்கான தளத்தை ஏற்படுத்தவும் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வந்தவர். இவையெல்லாம் எம் மத்தியில் சாதாரண விடயங்கள் அல்ல. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பண்பியலை, அதன் உள்ளீடான அரசியலையும் விமர்சித்துக் கொண்டு ஒரு படைப்பாளி எழும்போது அவன் சந்திப்பது மனிதர்களின் மாபெரும் அவலங்களை. வாழ்நாளின் இறுதிக் கணம் வரை இவற்றுக்கு முகங்கொடுத்த படைப்பாளி இவர். தனியொரு படைப்பாளி மட்டுமல்ல ᎧᏬ செயற்பாட்டாளர். அதனால்தான் இவரை செயற்பாட்டு படைப்பிலக்கியவாதியென நான் குறிப்பிட
முனைகிறேன்.
இனிவரும் குறிப்பு அவரது இறுதி அஞ்சலியில் வாசித்தது.
வாழ்வு நெடியது. ஆனால் மனிதர்கள் குறுகியவர்கள். வாழ்வு என்பது என்ன என்பதை மனிதர்கள் இன்னும் அறியவில்லை. அதை அவர்கள் ஒருபோதும் அறியப் போவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவர் வருவதற்கு முன்னேயே போடப்பட்ட சட்டத்துக்குள் உள்ளிருந்து விட்டுப் போய் விடுகிறார்கள். ஆனால் 6F)@qv) G3g mT வாழ்வைச் சட்டத்துக்குள்ளால் பார்க்க மறுக்கிறார்கள் அல்லது அதை அவர்கள் அவ்வாறே ஏற்க மறுக்கிறார்கள். அதை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவ்வாறு கேள்விக்குள்ளாக்கும் மனிதர் இவ்வுலகின் படைப்பாளியாக விரிகிறார். படைப்பாளியின் வாழ்வு என்பது கொடியதுதான் அவரைச் சூழ்ந்த எல்லாமே அவருக்குச் சிக்கலாகி விடுகிறது. அவரது வாழ்வின் ஒவ்வொரு கணமும் போராட்டம்தான். அவை ஒவ்வொரு வரலாறுதான். அதை குமார் மூர்த்தி அறிந்திருந்தார். அதனால்தான் வாழ்வின் ஒவ்வொரு இழையையும் ஓர் சிலந்தி போலிருந்து அவரால் பின்ன முடிந்தத. அது அவரால்தான் முடிந்தது. அவர்களுக்குத்தான் வாழ்வு புரிந்தது. தன்னைச் சூழ்ந்த இடர்களை எதிர்க்கவல்ல ஆன்மபலத்தை எப்போதும் ஒரு படைப்பாளி கொண்டிருக்கிறார். அதனால் அவனைச் சூழ்ந்த இடர்களைப் படைப்பாய் பூரணப்படுத்த முடிகிறது. இடர்களை, துயரங்களை, இழப்புகளைப் படைப்பாக்க முடிகிறது. காலத்தைக் கதையாக்க முடிகிறது. வரலாற்றைப் பதிவாக்க முடிகிறது.
வாழ்நாளில் பல்வேறு அனுபவங்களுக்கூடாக திரிந்தவர் மூர்த்தி. பல்வேறு கனவுகளுடன் வாழ்ந்தவர் மூர்த்தி.
அவர் எழுதியவை வாழ்வாய்த் தொடரும். எமது நினைவை அலைக்கழிக்கவல்லது அவரது பிரிவு. அதனிலும் மேலாக, அவரினால் எழுதப்படாத கதைகளின் சோகங்களாய் எமது வாழ்வு.
காலம் & த

மலைகளின் உயரங்களில் செழியன் மலைகளின் உயரங்களுக்கு செல்லவேண்டியிருக்கின்றது நண்பர்களைத்தேடி
அவர்களை
இழக்கின்றபோது
மலைகளையே
சுமக்க வேண்டியிருக்கின்றது
ஆழமான வடுவாகப் பதிந்து போய் அவ்வப்போது
வந்து தொல்லை தருகின்றன. அருவருப்பான
நினைவுகளாக இருக்கின்றன. நண்பர்கள் என்று சொல்லப்
பட்டவர்களால் தோண்டப்பட்ட பள்ளங்கள். குமார்
மூர்த்தி போன்ற மனிதர்களை நண்பர்களாக அடைகின்ற
போது இந்தப் பள்ளங்கள் நிரவப்படுகின்றன. புற்களின்
மீது பெய்கின்ற மழையில் நனைகின்ற சுகம் இந்த
நட்புக்கு இருக்கின்றது. இத்தகைய நட்புகளைத் தேடி
உயரங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது.
சுகமான நட்பினைத் தர குமார் மூர்த்தியிடம் இருக்கின்ற சிறப்பு என்ன? கேள்வி கிளர்ந்து முளைக்கின்றது.
மக்களை நேசிக்கின்ற சுயநலமற்ற மூர்த்தியின் அரசியல் பின்னணி காரணமாக இருக்குமோ? நினைக்கத் தோன்றுகின்றது. மக்களின் விழுமியங்களின் மீது துப்பிச் சென்று கழிவுநீரில் கலந்து முன்னை நாள்களின் பட்டியலை முன்னால் நீட்டுகின்ற போது இந்த நினைவு நீளமுடியாமல் முறிந்து போகின்றது.
இலக்கியத்தில் தடம் பதித்து சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்ற தகுதிக்காக உழைத்த இலக்கியப் பின்னணி காரணமாக இருக்குமோ? தலை நீட்டிப் பார்க்கின்றது இப்படி ஒரு பொறி. இலக்கியத்தில் நஞ்சு கலந்து வாழ்க்கைக்கு நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த முகங்களை நோக்கி கை காட்டுகின்ற போது அணைந்து போகின்றது இந்தப் பொறி.
மனிதர்களை மனிதன் ஆழத்திலிருந்து நேசிக்கின்ற கனிவான உள்ளங்கள் அரசியலிலும், இலக்கியத்திலும் தோய்ந்து அலைகின்ற வழிகளில் இந்தச் சுகத்தையும் இறைத்துப் போகின்றனவா?
இதுதான் நிஜமாக இருக்கும்போல் தெரிகின்றது? கேட்டே தெரிந்து கொண்டுவிடலாம் என்றால் இறந்து விட்டான் என்கிறார்கள். துக்கமாக இருக்கின்றது. துயர் வழிகின்றது. இனி சந்திக்க மாட்டோம் என்றும் தெரிகின்றது. ஆனால் அவன் இறந்து விட்டான் என்பதை மட்டும் நம்ப மனம் மறுக்கின்றது.
குமார் மூர்த்திக்கு உறுதியான எண்ணங்களோடு
buli 2001

Page 37
நகைச்சுவை உணர்வும் அதிகம் உண்டு. வாழ்க்கையின் இளமையான ஒரு காலத்தை விடுதலைப் போருக்காக கரைத்த அனுபவத்தை நினைந்து அழுபவர்கள் இருக்கின் றார்கள். வேதனைப்படுபவர்கள் இருக்கிறார்கள். கறைபடிந்த நாட்களென சொல்வாரும் உண்டு. கடமையைத் தவறாமல் செய்தோம் என்ற போராட்ட வாழ்வின் நினைவுகளைப் பெருமையுடன் இவன் நினைவு கொள்வான்.
அவன் நினைவு கொண்ட ஒரு சம்பவம் சுவாரசியமாக இருக்கும். தோழர்களோடு ஒரு கிராமத்திற்கு குமார் மூர்த்தி சென்ற போது அந்த வீட்டில் பெரும் வரவேற்பு. தோழர்கள் வந்திருக்கிறார்கள். தோழர்கள் வந்திருக்கிறார் என்று அந்தவிடு உற்சாககக் கரைபுரண்டது. மத்தியான சாப்பாடு திடீரென ஏற்பாடாயிற்று. செங்கிரீடமும் ராஜகம்பீரமுமாய் முற்றத்தில் நின்று ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த கிழட்டு சேவலை அந்த வீட்டுச் சிறுவர்கள் கலைத்துக்கொண்டு திரிந்தார்கள். அந்த வீட்டு பேடுகளுக்கு மட்டுமல்லாமல் அக்கம் பக்கம் என அந்த ஏரியாவுக்கே மன்மத பாணம் விட்டுக் கொண்டிருந்த சேவலை தோழர்களுக்காகத் தியாகம் செய்ய அக்குடும்பத்தினர் முடிவு செய்தனர். அடுத்தவீட்டு வளவுக்குள் வைத்து பிடிபட்ட சேவலை உற்சாகமாக சிறுவர்கள் கொண்டுவர சற்றைக்கெல்லாம் இறைச்சிக் குழம்பு மணம் காற்றில் கமகமத்தது.
சாப்பிடக் குந்த தலை வாழைஇலை போட்டு கை குத்தரிசிச் சோறு, மரவள்ளிக் கிழங்குக் கறி, கத்தரிக்காய் பால்க்கறி, வாழைக்காய் பொரியல், தயிர், இரசம் என்று எல்லாம் வகையாக வந்தது. அந்தக் கோழிக்கறி மட்டும் வரவேயில்லை. பசிக்களைப்பில் மூக்கு முட்ட மூர்த்தி சாப்பிட்டு முடிக்கும் வரை கோழிக்கறி மட்டும் தென்படவேயில்லை. சரி வீட்டுக்காரர் தங்களுக்கென அதை தனியாக சமைத்திருக்கின்றனர் என்பது குமார் மூர்த்திக்கு புரிந்து போயிற்று. பெரியதொரு ஏப்பத்துடன் குமார் மூர்த்தி இலையை தூக்கிக்கொண்டு எழும்ப பதைபதைத்துப் போய் வீட்டுக்காரர் கேட்டார் "என்ன தோழர் எழும்பீட்டியல்?' 'இனிக்காணும் வயிறு நிறைஞ்சுட்டுது" - மூர்த்தி. "என்ன தோழர் இனித்தானே குழம்பு வருகுது" வீட்டுக்காரர் சொல்ல குழம்புச் சட்டியும் வந்து இறங்கியது. குமார்மூர்த்திக்கு வெறுத்துப் போயிற்று. அந்தக் கிராமத்தின் பாரம்பரியமான பழக்கம் கடைசியாகக் குழம்புக் கறியோடு சாப்பிடுவது. அது தெரியாமல் போய்விட்டது.
அதற்குப்பிறகு எத்தனையோ கோழிகளை விதம்விதமாக சாப்பிட்டாலும் தவறிப்போன அந்தக் கோழியை நினைத்து குமார்மூர்த்தி வருத்தப்பட்டுக் கொண்டேதான் இருந்தார். உங்களால் புரிந்து கொள்ள முடியுமோ என்னவோ? இந்தத் துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் இப்படி ஒரு ஐஸ்கிரீமை இளமையில் தவறவிட்ட சோகமான அனுபவம் எனக்கு இருக்கின்றது. O
காலம் 8 ந

ரொரொன்ரோவில் நடந்த இறுதி அஞ்சலியில் வாசிக்கப்பட்ட கவிதை
காரணத்துடனோ காரணமற்றோ தவிர்க்க முடியாதபடி திடீர்திடீரென தலைகாட்டும் மரணம்
நேற்று. உன்னையும் கவ்விற்று என்றபோது ஒரு கணம் அதிர்ந்து போனேன்நான்.
தொடர்கதையெனத் துயர் பல நீவினும் உடல் வதைபட நோயினில் விழினும் திடமுடன், முறுவலே பூக்கும் மனபலம் கொண்ட எனதரும் தோழ, மூர்த்தி
கூற்றுவனிடம்
தோற்று நீபோனதேன்?
நம்ப மறுக்கிறது நெஞ்சு
நறுக்கென்று தைத்து மறுபடி மறுபடி அசையிடும் படிக்கு இரண்டு. மிஞ்சிப் போனால் மூன்றே தாள்களில் சுருக்கமாய் நீயெழுதும் அருமையான சிறுகதைகள் போலவே "உனது கதை"யும் சுருங்கிப் போனது சோகம் நிறைந்தது.
தொலைபேசியில் உன்னைக் கூப்பிட்டழைக்கும் நேரமெல்லாம் "கூட்டத்துக்கு அவர் போட்டார்"- என்றே கூறுவர், உன் விட்டார்.
காலமும் தேடலும் படைப்பும் நாடும் நடப்பும் நட்பும் என்று வாழ்வதே பிறர்க்கென ஆனவர் என்றும் சாவதே இல்லை.
இறவாது எம்முள் வாழும் உனது செய்தியை, மரணம் எவ்வாறும் எழுதிச் செல்லட்டும் இனிய நண்ப, இன்னும் நீஎம்முடன்
புராந்தகன்

Page 38
QA
2
டோக்கியோவை விட்டுப் புறப்பட்டுப் பத்து மணி நேரத்துக்கு மேலாகியிருக்கும். ஷின்கான்சென் என்னும் புல்லெட் ரயில் ஹாகியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. வெளியே இருள். சன்னல் கண்ணாடியில் அவள் பிம்பம் களைத்துத் தெரிந்தது. கண்டங்களின் நேர வேறுபாடுகளால், தன் இயல்பான கடிகார முட்கள் முன்னும் பின்னுமாய்க் குழம்பிப் போன மனித உடலின் களைப்பு.
அன்றுதான் அந்த ஃபிரெஞ்சு கம்பெனியை வாங்கும் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு யு.எஸ். திரும்பியிருந்தாள். பிரெஸிடெண்ட் அனுப்பிய பெரிய மலர் அலங்காரக் கூடை மேசை மேல் காத்திருந்தது. ஒரு சிறு வாழ்த்து அட்டையும்: "ரஞ்சனி, இதை நீ படிக்கும்போது நான் ரிஜெண்டினாவில் இருப்பேன். நீ ஜப்பானுக்குப் போகிறாய். உன் சக வைஸ்-பிரெசிடெண்டுகள் உனக்காக அங்கே காத்திருக்கிறார்கள். விவரங்களை நம் உதவியாளர்களிடம் கேட்டுக் கொள். ஃப்ரெஞ்சு வெற்றிக்கு வாழ்த்துக்கள்!"வெற்றி. நெப்போலியனையா வீழ்த்திவிட்டாள் அவள். இனம் புரியாத சலிப்பு குமிழித்தது. மீண்டும் மூட்டை கட்டுதல். மகளுக்கும் அவருக்கும் அவசர முத்தங்கள். திரும்ப ஓடி வந்து அவருக்கு மீண்டுமொரு முத்தம். இருவரின் முகத்திலும் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்க்காததுபோல் நடித்துப் பழக்கமாகியிருந்தது. அவள் ஏமாற்றத்தை மறைத்தும்தான்.
ஏன் ஜப்பான், அதிலும் ஏன் ஹாகி என்றெல்லாம் தெரியவில்லை. மேல்மட்ட நிர்வாகத்தினருள் ஆரோக்கியமான குழு மனப்பான்மை தேவைதான். சரி. உலகத்தின் மறுமுனையிலுள்ள ஒரு கிராமத்தில், நவீன வசதிகள் இல்லாமல், சக வைஸ்-பிரெசிடெண்டுகளுடன் குழுவாகச் சில நாட்கள் சேர்ந்து கழிப்பதால், தொழில்முறை உறவுகள் வலுவாகுமென்று யார் நம்புவது. எல்லாம் இந்த நவீன மேனேஜ்மெண்ட் குருக்களின் அரைவேக்காட்டு உபதேசம் - ஒரு மணி நேரத்துக்கு சில ஆயிரம் டாலர்கள் வாங்கிக் கொண்டு உபதேசிக்கும் குருக்கள். இவர்கள் சொல்லைக் கேட்டால் வேலை உருப்படாது. பங்குதாரர் பணமும் எல்லார் நேரமும்தான் விரயம். இது இந்த பிரெசிடெண்ட்டு களுக்கு ஏனோ புரிவதில்லை.
ஆரஞ்சுத் தோட்டங்கள் சூழ்ந்த ஹாகியை அடையும்
காலம் 8 ந
 

போது இரவாகியிருந்தது. அசைந்து உரசும் பல கண்ணாடிச் சுவர்கள் போல் கொட்டும் மழை. குறுகிய தெருக்களும் நெருக்கிக் கட்டிய ஒட்டுக்கூரை வீடுகளும் மங்கலான வடிவங்களாய்த் தெரிந்தன.
தங்குமிடம். சிவப்பு கிமோனோ அணிந்த கிமுரா - சான் அவளை வரவேற்றாள். வாசலில் அவள் செருப்புகளைக் கழற்றி, அங்கு சீராக அடுக்கப்பட்ட காலணி வரிசையில் சேர்க்கையில், தாமிரபரணிக் கரையில் ஒட்டு வீட்டில் இருப்பது போன்ற பிரமை. காலணி வரிசைகள். வாசல் வழியே சாய்ந்தடிக்கும் சாரல். ஒரு கணம்தான். தாமிரபரணி மறைந்தது. மங்கிய விளக்குகள் பொருத்தப்பட்ட நீண்ட தாழ்வாரத்தில் கிமுரா-சானைத் தொடர்ந்தாள். கிமுரா-சானின் மென்மையான கிமோனோ விசிறல் நடையில் மரத்தரை மெல்ல முனகியது. மேலே மழை உரத்துச் சடசடத்தது. அவள் அறையில் மண்ணெண்ணெய்க் கணப்பின் வெதுவெதுப்பு. ஒரே ஒரு தாழ்ந்த மேசை. அதன்மேல் ஒரு தேயிலை டின்னும் வெந்நீரும்.
பெட்டியை ஒரமாய் வைத்துவிட்டு நிமிர்ந்தாள். "ஒஃபுரோ?" என்றாள் கிமுரா-சான். தலையசைத்தாள். மீண்டும் அவளைத் தொடர்ந்தாள். கீழ்த்தளத்தில் ஆவி பறக்கும் குளியல் தொட்டிகள். மென்மையாக உடலைப் பிடித்து நீவி விடும் மசாஜ். வாசனைத் தேநீர். பயணத்தின் களைப்பு மாயமாய்க் கரைந்து போனது.
பிரயாணங்களுக்கே உரித்தான அந்த வேரற்ற சுதந்திரமும், புது அனுபவத்தை எதிர்கொள்ளும் உற்சாகமும் மெல்ல முளைவிடத் தொடங்கின.
அறைக்குத் திரும்பியதும் கிமோனோவும் செருப்பில்லாத பாதங்களுமாய் டட்டாமிப் பாய்களின் மேல் நடப்பது சுகமாய்த் தெரிந்தது. உடலிலும் ஒரு விடுதலை உணர்வு. கைகளைப் பரத்திச் சுழன்றாள், கரக ஆட்டக்காரிபோல். டட்டாமிப் பாய்கள் காலடியில் சொரசொரத்தன. பத்தமடை பட்டுப்பாய் ஞாபகம் வந்தது. உலகமயமாதலில் பத்தமடை பட்டுப் பாய்களுக்கும் அவற்றை நெய்பவர்களுக்கும் உள்ள இடம் என்ன. சுழல்வது தானாகவே நின்றது.
உடலை மெல்ல ஃப்யூட்டான் மெத்தை மேல் சரித்தாள். வெளியே நிற்கும் மரம், அறையின் காகிதச்சுவர்
Juli 2001

Page 39
மேல் கறுத்த நிழலோவியமாய்ப் படர்ந்திருந்தது. குளிர்காற்றில் அறையில் மரச்சட்டங்கள் நடுங்கியபோது, மரத்தின் சுவர்ச் சித்திரமும் வளைந்து நெளிந்தது. ஹாகி கிராமத்தின் வரலாறு பற்றிய புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அறையின் இதமும் குளியலின் வெதுவெதுப்பும் சேர்ந்து இமையை அழுத்தின. பழைய நூற்றாண்டுகளைக் கனவில் காண தூங்கிப் போனாள்.
"ரஞ்சி, வேகமாய்ப் போகாதே" ஸ்டீவ் கத்துவது கேட்டதும் இன்னும் கொஞ்சம் வேகமாய் சைக்கிளை மிதித்தாள் அவள். ஆற்றுப் பாலத்தை ஒரு நொடியில் கடந்தாள். கடலிலிருந்து உருண்டு வந்த அதிகாலைப் பனிப்புகை சூரிய ஒளியில் கரைந்திருந்தது. குளிர்காற்று சுறுசுறுப்பாய் உணர வைத்தது. வளைந்து செல்லும் மலைப்பாதையில் வண்டி மெல்ல ஏற ஆரம்பித்தது. அடங்கிக் கிடந்த காசாயமாஎரிமலை. உட்கார வசதியான இடத்தில் நிறுத்தினாள்.
"இந்தப்போட்டியிலும் நீதான் ஜெயித்தாய்." குறும்புச் சிரிப்புடன் சைக்கிளைத் தள்ளியவாறே ஸ்வீவ் வந்து சேர்ந்து கொண்டான். அவனுக்குப் பின்னால் கம்பெனியில் சேர்ந்தவள், அவனுக்கு ஆறு மாதங்கள் முன்னாலேயே வைஸ்-பிரெசிடெண்ட்ஆனதை இவனும் மறக்கப் போவதில்லை. அவளையும் மறக்கவிடப் போவதில்லைபோல. எல்லாமே ஒரு போட்டி
இப்படிக் குறிக்கோள் இல்லாமல் சும்மா அலைவது சோம்பேறித்தனம் என்று முணுமுணுத்தவாறு வந்தான் லன். கம்பெனி செலவில் ஒசி விமுறை. அனுபவி - இது மெல். விடுமுறைக்கு இந்தக்குக்கிராமம்தான் கிடைத்ததா என்றான் ஏரன். லேப்டாப் கிடையாது. ஃபேக்ஸும் தொலைபேசி அழைப்புகளும் கிடையாது. கம்பெனியின் சதித்திட்டம். லன் இன்னும் கொஞ்சம் கோபப்பட்டான்.
இரண்டு பக்கமும் மலைகள். மறுபக்கம், தீவுகளும் மீனவப்படகுகளும் புள்ளி போடும் கடல், நடுவே வளையும் ஆற்றங்கரையில் கிராமம். கீழே அமைதியாய்த் தெரிந்த காகியின் ஒட்டுக்கூரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பினாள். ‘ல், நமக்கு என்றைக்காவது இப்படி உட்கார்ந்து Gus நேரமிருந்திருக்கிறதா? நிதானமாய்ச் சிந்திக்க நேரமிருக்கிறதா? ஒடிக் கொண்டேயிருக்கிறோம். எதற்காக??? ــــــــی۔
"ரஞ்சி, நம் மாதிரி உள்ளவர்கள் சிந்திக்க மட்டுமில்லை, செயல்படவும் திறமை உள்ளவர்கள். சும்மாச் சும்மா உட்கார்ந்து பேசக் கூடாது. அதற்குத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே. உன் உழைப்பும் என் உழைப்பும்தானே அவர்களுக்கும் சேர்ந்துச் சோறு போடுகிறது. நாம் கம்பெனி நேரத்தையும் பங்குதாரர் பணத்தையும் இங்கு விரயம் செய்து கொண்டிருக்கிறோம்."
அவள் சொல்வது அவனுக்குப் புரியப் போவதில்லை. யு.எஸ்.ஸில், சில நாட்களுக்கு முன், தானுமே அப்படி
sawis 3 5

வெளியே நிற்கும் மரம், அறையின்
காகிதச் சுவர் மேல் கறுத்த
நிழலோவியமாய்ப் படர்ந்திருந்தது.
குளிர்காற்றில் அறையில் மரச் சட்டங்கள் நடுங்கியபோது, மரத்தின்
சுவர்ச்சித்திரமும் வளைந்து
நெளிந்தது.
நினைத்தது நினைவுக்கு வந்தது. மெளனமாயிருந்தாள். தூரத்துக்கடலில் கருமையாய்ப்படர்ந்த மேகநிழல்களில், அலைவரிசைகள் கூடுதலான வெள்ளியாய்த் தெரிந்தன. ஒரு படகு பாய்மரம் விரித்திருந்தது. அவள் தலைமுடியை இங்கே சிலுப்பிக் கொண்டிருக்கும் காற்று, உப்பி ஊதிய பாய்மர வடிவில் கடற்பரப்பில் விளையாடிக் கொண்டிருந்தது.
"ரஞ்சி, கனவு கண்டதுபோதும்.ஒரு விளையாட்டு விளையாடலாமா? நம் கம்பெனியின் இன்னொரு கால விரயப் பயிற்சியில் எனக்குஅறிமுகமான விளையாட்டு."
ஐந்து பேரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள். ஸ்டீவ் @@ கூழாங்கல்லைக் கண்டுபிடித்து வைத்திருந்தான். கூழாங்கல் வட்டத்தில் கைமாறிக் கொண்டேயிருக்கும். யார் கையில் கூழாங்கல் இருக்கிறதோ அவர்கள் பேச வேண்டும். ---
பேச்சு வழக்கம் போல் கம்பெனியைச் சுற்றியே வளர்ந்தது. ஃப்ரெஞ்சு கம்பெனியை வாங்கியது. அதன்தலைமைகள் மாறுமா, இங்கிருந்து யார் அதற்குப் பொறுப்பாக நியமனமாவார்கள். அந்தப் போட்டி கம்பெனி அடித்துக் கொண்டிருக்கும் பப்ளிசிட்டி பல்டிகள் மிகவும் மலிவானவை. மூன்றாந்தரமானவை. ஜனாதிபதியின் தேர்தல் நிதிக்கு இன்னொரு போட்டி கம்பெனி கொடுத்த பெரும் தொகை ஆபாசமாகத் தெரிகிறது. நல்லவேளை, அவர்கள் கம்பெனி அந்த அளவுக்குக் கொடுக்கவில்லை. எதிலும் ஒரு நேர்மையும் அளவும் வேண்டாமா.
அதுசரி, அந்த இன்னொரு நாட்டுச் சந்தை ஏன் விரிவாகாமலேயே நிற்கிறது. அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாயிற்று. பிறகும் ஏன் வேலை முடியவில்லை. அந்தப் பிரிவின் கம்பெனி நிர்வாகிக்குத் திறமை போதாது போலும். பங்குச்சந்தை சரியும் வேகத்தைப் பர்ர்த்தால் இருக்கும் உற்பத்தி அளவையே விற்க முடியுமோ
வம்பர்2001

Page 40
என்னமோ. இன்னொரு உற்பத்திச்சாலை கட்டத் துவங்கியிருக்கக் கூடாது. கீழே போன பொருளாதார நிலை எப்படியும் மேலே வந்துதானே ஆக வேண்டும். தொழிற்சாலை கட்டி (Մ)ւգ պւն நேரத்தில் பொருளாதாரமும் மேலே வந்திருக்க கூடும். போனவருடத்திய மொத்த உலக விற்பனை நாற்பது பில்லியன் டாலர். உலமயமாதல் என்பது எவ்வளவு இனிமையானது. ஆனால், இந்த வருடம் விற்பனையில் அடி விழும். எல்லார் தனிப்பட்ட போனஸிலும் கூட.
பேச்சு தொடர்ந்தது. நீருக்குள் ஒலியாய்க் குரல்கள் மங்கிக் கேட்டன அவளுக்கு. இந்த விளையாட்டில் அவளுக்கு ஏதோ நெருடியது. பழக்கப்பட்ட நெருடல். இது நல்லதென்று தோன்றினாலும், ஏதோ சரியில்லாததுபோல். மற்ற நால்வருக்கும் இந்தக் கல் தேவைப்படுகிறது. அவளுமேகூட இப்போது அந்தக் கல்லை அங்கீகரிப்பாள், மற்றவர்கள் பேசும்போது கவனிப்பாள், அவள் முறை வரும்போது பேசுவாள். நியதிப்படி. யார் படைத்த நியதிகள் இவை. சிறுவயதில் பார்த்த சிட்டுக்குருவிகள் ஞாபகத்துக்கு வந்தன. காற்றோடு சேர்ந்து ஜன்னல் கம்பிகளூடே பறந்து வீட்டுக்குள் நுழைந்து கீச்சிடும் சிட்டுக்குருவிகள். தேங்கிய மழைநீர்க் குட்டையில் கூட்டமாய்க் குளித்துச் சிறகு சிலிர்க்கும் சிட்டுக் குருவிகள். அவை ஒரே நேரத்தில் பேசுபவை. பேசிக் கொண்டே இன்னும் பல காரியங்கள் செய்யக் கூடியவை. எல்லாரும் ஒரே நேரத்தில் பேசிப் பல காரியங்கள் செய்தாலும், அனைத்துப் பேச்சையும் காரியங்களையும் மனதில் பதித்து, வகைப்படுத்தி, புரிந்து, பகிர்ந்து கொள்ளும் திறமை உள்ளவை. உடைத்துக் குறுக்காமல், பூரணத்தை அப்படியே வாழும் உரிமையுள்ளவை. அந்த உரிமையை எந்தக் கல்லிடமும் விட்டுக் கொடுக்காதவை.
பேச்சு நின்றது.
அவள் முறை. அவள் கைக்குள் கல் திணிக்கப்பட்டது. பலர் கைக்குள்ளும் அடங்கி வந்ததால், தன் இயல்பான குளிர்ச்சியை இழந்து கதகதவென்றிருந்தது.
அவள் சிறிது நேரம் பேசாமலிருந்தாள்.
'இது நான் உருவாக்கிய விளையாட்டு அல்ல. இதன் விதிகள் எனக்கு அந்நியமானவை. ஏதோவொரு விதத்தில் ஆட்டத்துக்கு நான் தேவைப்படுகிறேன். இதுவரை, இந்த ஆட்டம் எனக்கும் தேவையாய்த் தெரிந்தது. நானே ஒரு விளையாட்டு உருவாக்கிப் பார்த்தால் என்ன. இப்படித் துண்டு துண்டாக, நேர்க்கோடாக இல்லாமல், முழுமையாக மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு விளையாட்டு."
லனும் மெல்லும் ஏரனும் உரக்கச்சிரித்தார்கள். "என்ன ரஞ்சி, ஒரு புது விளையாட்டைக் கண்டுபிடித்து, உலக விளையாட்டுச் சந்தையையும் உலுக்கப் போகிறாயா?" என்றான் மெல்.
saxò 3

ஸ்டீவ் அவளை உற்றுப் பார்த்த பார்வையில் பல கேள்விகள் தெரிந்தன.
அவள் அந்தக் கல்லை முதுகுப் பையில் பத்திரப் படுத்திக் கொண்டாள். விளையாட்டு முடிந்து போயிற்று.
அந்த ஒற்றையடிப் பாதை வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்தது. ஏதோவொரு காலத்தில், திட்டமிட்டுச் செதுக்கப்பட்ட தோட்டம் அது. பல நூற்றாண்டுகளுக்குப் பின் காடு போல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. அவள் மட்டும் தனியாகப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தாள்.
குழுவினர் புறப்பட்டுப் போயாயிற்று. அவள் அடுத்த நாள் கிளம்புவதாய் ஏற்பாடு. முந்தைய சாயங்காலம் ஸ்டீவுடன் கடற்கரையில் நடக்கையில் பாஷோவின் ஹைக்கூ ஒன்றைச் சொன்னான். கவிதையும் ஸ்டீவுமா - அவளால் நம்ப முடியவில்லை. 'நிறுவனத்தின் ஒரு முக்கிய அங்கமாக, அவன் கடமைகளின் ஒரு தொகுப்பாகவே நான் பார்த்திருக்கிறேன். தனிமனித னாகப் பார்க்கவோ நினைக்கவோ இல்லை. நிறுவனச் சட்டகத்துள் அப்படிப் பார்ப்பது அர்த்தமற்றதும் கூட."
பணியினால் வெண்மையாக உறைந்த கடற்கரையில், தம் நீண்ட கால்களின் பாதி வரை நீரில் மறையுமாறு அலையும் ஜப்பானிய நாரைகளைப் பற்றி அழகாக வியந்தது பாஷோவின் ஹைக்கூ, வெண்ணிற உடலும், கறுத்த கால்களும், சிவப்புக் கொண்டையும் உள்ள இந்த நாரைகள் ஜப்பானியக் கலாச்சாரத்தில் முக்கியமானவை. உண்மையான மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் இந்த நாரை ஒரு குறியீடு. எண்ணிக்கை குறைந்து விட்டதால், இப்போது அதிகமாகப் பார்க்க முடிவதில்லை. கவிதை வரிகளைச் சொல்லும்போது ஸ்டீவ் நடப்பதை நிறுத்தினான். சூரியன் இருவரின் நிழல்களையும் நீட்டிச் சரித்தது. கடற்புறாக்கள் உறுமிக் கொண்டு அங்குமிங்குமாய் அலைந்தன. அலையடங்கிய கடல் காலடியில் அமைதியாய்க் கிடந்தது.
அடுத்து அவன் சொன்னதுமே அவளை ஆச்சரியப் படுத்தியது. "நமது கம்பெனியின் ஒரு நூற்றாண்டு கால வெள்ளை ஆணாதிக்கச் சூழலில், பெண்களுக்கும் பிற இனத்தினருக்கும் இருந்த க்ளாஸ் ஸிலிங்கை உடைத்த முதல் ஆள் நீ. அந்த வகையில், உன் கீழுள்ள பலருக்கு நீ ஒரு முன்மாதிரி. உன் கேள்விகள் என்னவாக இருந்தாலும், அவை உனக்கு முக்கியமானவை என்று தெரியும். தீர யோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வருவாய் என்று நம்புகிறேன். கம்பெனிக்குள் எனக்குப் போட்டியாக நான் மதிப்பது உன்னை மட்டும்தான். என்றாவது உன் நியதிப்படி ஆடும் விளையாட்டைக் கண்டுபிடித்தால் என்னிடம் சொல். நானும் உன்னோடு சேர்ந்து கொள்வேன்." அவனது அழுத்தமான கைகுலுக்கலில் திறந்த தோழமை இருந்தது. "ரஞ்சி, நாம் எல்லாருமே அந்த நாரையைத்தான் ஏதாவது ஒரு வடிவத்தில் தேடுகிறோம். என்ன தேடுகிறோம் என்பதையே பல
Juli 2001

Page 41
நேரங்களில் மறந்து விடுகிறோம். மீண்டும் நினைவுக்கு வரும்போது அதிர்ச்சி அடைகிறோம்" என்று விடைபெற்றதில் ஒரு புரிதல் தெரிந்தது.
நேற்ற நடந்தது கூட ஏற்கனவே பல வருடத் தொலைவுக்கு அப்பால் போயிருந்ததாய் உணர்ந்தாள்.
காட்டுப்பாதை நீண்டு கொண்டிருந்தாலும், அவளுக்கு அயர்ச்சி தெரியவில்லை. காட்டின் குளிர்ந்த அரையிருள் பாதுகாப்பாய்த் தெரிந்தது. கருவறைப் பாதுகாப்பு. நடக்க நடக்க ஏதோ தெளிவாகிக் கொண்டிருந்தது. ஒளிரும் பச்சைப்பாசி எல்லாவற்றின் மீதும் கம்பளமாய்ப் படர்ந்து, பாறையையும் மண்ணையும் மரத்தையும் இணைத்து, கூரான முனைகளை மென்மையாக்கி இருந்தது. முதலில் ஒரே பச்சைப் போர்வையாகத் தெரிந்த காடு, கூர்ந்து கவனிக்கும் போது விதவிதமான பச்சைகளாய்ப் பிரிந்து காட்டியது. ஒவ்வோரிடத்திலும் நின்று பார்க்கும்போதும், அந்தச் சிறு இடத்தின் அர்த்தமாகவே முழுக்காடும் தெரிந்த்து. இப்போது அவள் ஒரு சிறு மூங்கில் காட்டினுள் நின்றாள். நடுவே ஒரு பாசி படர்ந்து பெரிய பாறை. மலையிலிருந்து வீழும் நீர்வீழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகக் கவனமாகக் குவிக்கப்பட்ட சிறிய பெரிய பாறைகள் - நீர் இல்லாமல்.’ அதற்கு நேர்கீழே, கரடுமுரடான நீள்சதுரக் கற்கள் பாவிய சிறுகுளம் - நீருடன். நீரில் நலுங்காமல் நீந்தும் தங்க மீன்களுடன்.
அவள் ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டாள்.
வாழு
தமிழில்ந
வட அமெரிக்காவில் நல்ல தமிழ்ப்
காலச்சுவடு மூன்றாவது மனிதன் சொல் புதிது
நிழல்
சதங்கை
ଗa
&Rs 3

காட்டின் குளிர்ந்த அரையிருள்
பாதுகாப்பாய்த் தெரிந்தது.
கருவறைப் பாதுகாப்பு. தடக்க
நடக்க ஏதோ தெளிவாசிக்
கொண்டிருந்தது.
சுற்றிலும் நிசப்தம். சப்தங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில் வல்லமையுள்ள அவள், நிசப்தத்தின் நுட்ப ஸ்வரங்களை இப்படி என்றுமே கேட்டதில்லை. அழுது பழக்கப்படாத கண்களில் நீர் பெருகி மெளனமாய் வழிந்தது. அழுதுமுடித்ததும் மனம் நிர்மலமாகியிருந்தது. இனி வரப்போகும் குழப்பங்களும் கேள்விகளும் கூடத் தெளிவாய்த் தெரிந்தன. நேரமும் அர்த்தமற்றுப் போனது. சுற்றிலும் இருள் கவிந்தது.
வெகு நேரம் கழித்து அவள் பார்வையை நிமிர்த்தியபோது, ஒன்றை வெண்சிறகை அகல விரித்தபடி, ஒற்றைக் காலில் நிற்கும் அந்த ஐந்தடி நாரை கண்ணுக்குத் தெரிந்தது. O
ம் தமிழ்
வீன புத்தகங்கள்
புத்தகங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
ல்வம் அருளானந்தம்
P.O. Box 7305 509 St. Clair Ave. W Toronto, ON M6C 1 CO, Canada. (416) 202-6414
நவம்பர் 2001

Page 42
- 40 1994இல் நடைபெற்ற குமார் மூர்த்தியின் முகம் தேடும் மனிதன்' வெளியீட்டு விழாவில்
ஆற்றிய உரைகள்
சேரன்
குமார் மூர்த்தியின் சிறுகதைத் தொகுதிக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று அமைந்து விட்டிருக்கிறது; முகம் தேடும் மனிதன். சிறுகதைத் தொகுதி பற்றி உரையாற்ற உங்கள் முன் நின்று கொண்டிருக்கிற போது, இம்மண்டபத்தின் இரண்டு பெரிய விளக்கு வெளிச்சங்கள் என்னை நோக்கி இருக்கின்றன. இந்த வெளிச்சத்தில் உங்களுடைய முகங்கள் எனக்குத் தெரியவில்லை.
'முகம் என்பது அடிப்படையிலேயே அடையாளத்தைக் குறிக்கிற ஒரு உருவகமாகவே அமைந்து வந்துள்ளது. நமது இலக்கியங்களிலும் பலமுறைகள், பல தளங்களில், 'முகம் பயன்படுத்தி வந்துள்ளது. 'முகமில்லாத மனிதர்கள்', 'எனக்கு முகம் இல்லை", "இனியும் ஒரு முகம்", "முகாமுகம்', 'பொய் முகங்கள்', 'போலி முகங்கள்" என்பதாக முகத்துக்கு 6TT TOMT DfTGOT விரிவுகளும் விளக்கங்களும் இலக்கியத்துக்கூடாக எமக்குக் கிடைக்கின்றன.
ஈழத்தில் தமிழ் மக்களுடைய விடுதலைப் போர், அவர்களுடைய முகங்களை அழிக்க இலங்கை அரசு எடுத்த ஒடுக்க முறையின் விளைவாகவே எழுந்தது. தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு தளத்தில் எமது முகங்களைப் பேணுவதாகவும் இன்னொரு தளத்தில் எமது முகங்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் எழுந்த போராட்டம்தான். மூர்த்தியின் சிறுகதைத் தொகுதியின் தலைப்புச் சொல்வதுபோல எங்கள் முகங்களை நாங்கள் தேட வேண்டிய ஒரு சூழல் ஏன் எழுந்துள்ளது என்ற கேள்வியையும் நாங்கள் இப்போது கேட்க வேண்டியுள்ளது. இது ஒரு ஆழமான கேள்வி. எமக்கு மிகவும் தேவைப்படுகிற ஒரு கேள்வி.
மூர்த்தியின் சிறுகதைகளும் இக்கேள்வியை இலக்கியத்திற்கே உரிய தனித்துவத்துடன் எழுப்பு கின்றன.
ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் படைப்பாளியின் விருப்பின்படியோ அன்றிப்படைப்பாளியின் விருப்புக்கு அப்பாற்பட்டோ குறித்த ஒரு காலத்தின் பதிவுகளாக இருக்கிறது. இந்த இலக்கியப் படைப்புக்களில் சொல்லப்பட்ட விடயங்களை விடச் சொல்லாத சேதிகளுக்கும் மெளனங்களுக்கும் இடையே நிறையப் பொருளும் முரண்பாடுகளும் பொதிந்தும் புதைந்தும் இருப்பதை ஒரு சீரிய விமர்சனம் இனங்கண்டு கொள்கிறது. இலக்கியப் படைப்பைச் சுவைப்பதும் நயப்பதும் அவசியமானவைதான். எனினும் இலக்கியப்
காலம் 8 நவம்

படைப்புகளை அவற்றுடைய சமூக, அரசியல், வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறபோது எமக்குக் கிடைக்கக் கூடிய நல்லொலிகளையும் முரணொலிகளையும் விமர்சனம் இனங்கண்டு கொள்கிறது. இத்தகையதொரு இனங்காணலின்போது இலக்கியப் படைப்புக்களின் பேசாப் பொருள்களும் வெளித் தெரியா முகங்களும் வெளிப்படக் கூடும்.
குமார் மூர்த்தியின் 'முகம் தேடும் மனிதன்' எனும் சிறுகதைத் தொகுதி எதிர்ப்பு இலக்கியம் என்று நாம் கூறக் கூடிய ஒரு இலக்கியப் போக்கின் சிறப்பானதொரு குறியீடு என்று நான் கருதுகிறேன். எதிர்ப்பு இலக்கியம் என்று நாம் பேசுகிறபோது அது குறிக்கும் 'எதிர்ப்பு எது என்பது நமக்கு முன் கேள்வியாக எழுகிறது. நமக்கு முன்னால் எப்போதும் ஏதாவதொரு அதிகார அமைப்பும் ஆட்சி அமைப்பும் கருங்கல் சுவர் மாதிரி இருந்து வருகிறது. இந்த அதிகார அமைப்புக்களுக்கும் ஆட்சி அமைப்புக்களுக்கும் கருத்தியல் வலுக்கொடுத்தும் அவற்றின் செயல்பாடுகளை நியாயப்படுத்தியும் இலக்கியங்கள் எழுவதை நாம் காண்கிறோம். பல கால கட்டங்களில் இத்தகையதொரு போக்கே ஆட்சிபெற்ற போக்காக இருந்தமையும் நாள் வரலாற்றில் பார்க்க முடிகிறது. குமார் மூர்த்தியின் 'முகம் தேடும் மனிதன்' யாழ்ப்பாணத்தில் வெளிவந்திருக்க முடியுமானால் அது ஒரு சோர்வுவாத இலக்கியமாக போராட்டத்தைக் 'கொச்சைபடுத்துவதாக அல்லது "போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதாக பலரால் கருதப்பட்டிருக்கும். பலரும் சொல்லக்கூடிய பலரும் பல்வேறு காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் அப்பால் மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச் செயல்பாடுகளும் - அவை எத்துணை சிறந்ததாயினும் - இருக்க முடியும். கலைஞர்களும் கவிஞர்களும் இத்தகைய சிறுபான்மை மாற்றுக் கருத்துக்களின் விளைநிலமாகவும் விளை பொருளாகவும் இருக்க முடியும். அவர்கள் "தேசத்தின் மனச்சாட்சியாக இயங்க முடியும்.
இதுவரையில் ஈழத்து இலக்கியத்தில் பெரிதும் பேசப்படாத பல பொருள்களைக் குமார்மூர்த்தி சிறப்புறப் பேசுகிறார். அந்த வகையில் எதிர்ப்பு இலக்கியத்தின் மூலக்கூறுகளுள் ஒன்றை குமார்மூர்த்தியின் சிறுகதைகள் கொண்டுள்ளன. எதிர்ப்பு இலக்கியத்தின் ஏனைய மூலக்கூறுகள் என்ன என்று நீங்கள் கேட்கக் கூடும். மேலும், மூன்றை நாம் சேர்த்துக் கொள்ளலாம்; இருப்பின் இழப்பு, இழப்பின் இருப்பு, எதிர்ப்பின் உயிர்ப்பு என்பவைதான் அவை.
இந்த மூன்று முக்கியமான கூறுகளும் குமார் மூர்த்தியின் சிறுகதைகளில் எவ்வாறு சிறப்புறத் துலங்குகின்றன என்று பார்ப்பது பொருத்தமானது. அவருடைய "குண்டு வெடிப்பு என்னும் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி எழுதுகிறார் மூர்த்தி: 'மனித உயிர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடுகின்ற ஒவ்வொரு கணமும் ஒரு வரலாறுதான். ஆனால் ஏதோ ஒருவிதத்தில் மனித உயிர்களை வலிந்து
ui 2001

Page 43
அழிப்பதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் சக்திகளின் எண்ணிக்கை, பெருகிக் கொண்டே இருக்கிறது. காரணங்கள் மாறுபடலாம். சூழ்நிலைகள் மாறுபடலாம். ஆனால் இரையாகும் மனித உயிர்கள் எல்லாமே ஒன்றுதான்."
இதில் முக்கியமான அம்சம் என நான் கருதுவது எதனை என்றால் அது முதலாவது வசனத்தில் எமக்குக் கிடைக்கிற சேதிதான்; மனித உயிர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடும் ஒவ்வொரு கணமும் ஒரு வரலாறுதான்.
போராட்டமும் வீரமும் தியாகமும் போராளிகளிடமும் இயக்கத்திடமும் முன்னோடிக் கட்சியிடமும் வீரமும் தியாகமும் கிடக்கிறது என்று நாம் நம்புவதும், எம்மை நம்ப வைப்பதும் ஒரு முகம் என்றால், இவை அனைத்தும் பொது மக்களிடமும் புதைந்து கிடக்கின்றன என்பதை நாம் இனங்காணுவதும் சுட்டிக் காட்டுவதும் அதை உயர்ந்த இலக்கியப் படைப்பு ஆக்குவதும் இன்னொரு முகம். அது எதிர்ப்பு முகம். இத்தகையதொரு தளத்தில் நாம் எதிர்ப்பு இலக்கியத்தை இனங்காண முடியும்.
இரண்டாவது உதாரணம் மூர்த்தியின் முகம் தேடும் மனிதன் கதையிலிருந்து எமக்குக் கிடைக்கிறது: "சகபாடிகள் மத்தியில் எந்தக் கருத்து வலுக்கிறதோஅந்தக் கருத்துக்கு முரணாக ஒருபோதும் நிற்க மாட்டார். அதற்காக நாம் அவரைக் குற்றம் சொல்லுவது முறையாகாது. வலுத்தவன் கருத்துக்கு இசைந்து போவது என்பது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே வளர்ந்து வந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே."
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால இலக்கியப் பாரம்பரியம் எமக்கு உள்ளது என்று சொல்லிக் கொள்ள நாம் தயங்குவதில்லை. சங்க இலக்கியங்கள் மன்னராட்சியையும் வீரத்தையும் காதலையும் போற்றுகின்றன. அவ்விலக்கியங்களின் அகத்திலும் புறத்திலுமிருந்து தனித்தொரு குரல் ஒலிப்பதை நாம் கேட்கிறோம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று ஒலித்த அந்தக் குரல் கணியன் பூங்குன்றனுடையது. அந்தக் குரலுக்கு இணக்கமான ஒரு குரலாகவே குமார் மூர்த்தியின் குரலையும் இந்தச் சிறுகதைத் தொகுதியில் நாங்கள் கேட்கிறோம்.
போரும் புலம்பெயர்வும் இலக்கியமும்
செ.ராஜேந்திரன்
குமார்மூர்த்தியின் சிறுகதைத் தொகுதியின் சமூகவியல் பின்னணியை உங்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நூலின் பின்புலம் பற்றிய ஆழமான புரிதல் ஒன்று çaplul Gavint D.
தமிழ் வாசகர்கள் என்ற முறையில் ஈழத்து இலக்கியத்துக்குப் பரவலாக ஒரு மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்து வருவதை நீங்கள் உணர்ந்து வருவீர்கள். உதாரணமாக இந்தியா டுடே இப்போது வெளியிட்டுள்ள
GKRob 8 !

இலக்கிய ஆண்டுமலரில் (1994-95) சுந்தரமூர்த்தி என்பவர் ஈழத்து இலக்கியத்தை அறிமுகம் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஈழத்து இலக்கியத்தை மிகவும் உன்னதமான நிலையில் அவர் வைக்கிறார். இருபத்தோராம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஈழத்து இலக்கியம் விளங்கும் என்ற கருத்தையும் அவர் தெரிவிக்கிறார். எஸ்.பொ.வும் இந்திரா பார்த்தசாரதியும் தொகுத்து வெளியிட்டுள்ள 'பனியும் பனையும்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு இந்தியா டுடே, சுபமங்களா, கணையாழி ஆகிய பத்திரிகைகளில் விமர்சனக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இவையனைத்திலும் ஈழத்து எழுத்துக்கள் பற்றியும் புலம்பெயர்ந்த எழுத்துக்கள் பற்றியும் பல நல்ல கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
ஈழத்து இலக்கியத்தில் ஏற்பட்டு வருகிற இத்தகைய ஆரோக்கியமான மாற்றங்களுக்குக் காரணம் இருக்கிறது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கு இல்லாத வகையில் ஈழத்து எழுத்தாளர்களுக்குப் புதிய அனுபவங்கள் கிடைத்து வருகின்றன. ஈழத்துச் சமூக அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. போரும் புலம்பெயர்வும் நவீனத் தமிழுக்குப் புதிய அனுபவங் களையும் புதிய களங்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளன. புலம்பெயர் இலக்கியம், போராட்ட கால இலக்கியம் ஆகிய இரண்டு கூறுகளும் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சியின் முக்கியக் கூறுகளாக அமைகின்றன. எதிர்காலத்தில் தமிழிலக்கிய வளர்ச்சிப் போக்கை நிர்ணயிப்பதாக அவை அமையக்கூடும்.
இன்றைய மேலைத்தேய இலக்கிய வளர்ச்சி, முதலாம் இரண்டாம் உலகப் போர்களின் பின்னான ஒரு விளைவுதான் என்று ஆய்வாளர்கள் பலர் கருதுகிறார்கள். நவீன இலக்கிய மறுமலர்ச்சி 1890இல் துவங்கியிருந்தாலும் நவீன இலக்கியத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகள் முதலாவது உலகப் போருக்குப் பின்பாக வெளிப்படுவதை நாங்கள் பார்க்கலாம். அவ்வகையில் தமிழ் இலக்கியச் சூழலிலும் மேலும் நவீனத்துவத்தைக் கொண்டு வருவதில் ஈழத்து இலக்கியங்களின் பங்கு முக்கியமானது என்பது மேலும் தெளிவாகிறது. இந்தப் பின்னணியில் குமார் மூர்த்தியின் "முகம் தேடும் மனிதன்" ஒரு மைல் கல்லாக அமைகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.
பணியும் பனையும் தொகுதிக்கு சுஜாதா எழுதிய முன்னுரையில் எந்த எந்தக் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த தமிழகத் தமிழர்களுடைய எழுத்துக்களை விட வேறுபட்டதாகவும், சிறப்பாகவும் இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுகிறார். அதனை நாங்கள் கவனத்தில் எடுக்கலாம். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தாங்களாக விரும்பி ஒரு நல்ல எதிர்காலத்தைத் தேடி அல்லது உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை நாடிச் சென்றவர்கள். அவர்களுடைய எழுத்துக்கள் வெறுமனே கழிவிரக்கத்துடன் (nostalgia) நின்று விடுகின்றன. ஈழத்தின் புலம்பெயர் எழுத்துக்கள் கழிவிரக்கத்துக்கு அப்பாலும் பல விடயங்களைப் பரிசீலனை செய்கின்றன.
ahui 2001

Page 44
முகம் தேடும் மனிதன் சிறுகதைத் தொகுதியில் பதினொரு கதைகள் உள்ளன. இவற்றுள் எட்டு போர்க்காலம் மற்றும் போர்ச்சூழலின் பின்னணியில் உருவானவை. மூன்று கதைகள் புலம்பெயர்ந்த நாட்டின் - கனடாவின் - அனுபவங்களைப் பின்னணியாகக் கொண்டவை. பொதுவாக புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களில் இந்த இரண்டு அம்சங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. போரும் புலம்பெயர்வும் எனும் இரண்டும் 6 அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஏனைய இன மக்களுடைய எழுத்துக்களிலும் காணக் கிடைக்கின்ற ஒன்றுதான். போர்க்கால இலக்கியங்களின் சில அடிப்படை இயல்புகளை குமார்மூர்த்தியின் சிறுகதைகளும் கொண்டுள்ளன.
இலட்சியத்துக்கும் நடைமுறை யதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பற்றிப் பேசுவது இந்த இயல்புகளில் ஒன்று என்று நான் கருதுகிறேன். போராட்டத்தின் நடைமுறை அனுபவங்களில் அது தான் வரித்துக் கொண்ட இலட்சியங்களில் இருந்து வழுவிப் போவதை எழுத்தாளர் காண்கிறார். இதனால் ஒரு குழப்ப நிலை தோன்றுகிறது. மேலை நாட்டின் போர்க்கால இலக்கியங்களிலும் இத்தகையதொரு நிலை நாம் காணக் கிடைக்கிறது. இதன் இரண்டக நிலை (duality or double standard) முக்கியமானதொரு இலக்கியப் பொருளாகும்.
போர்க்காலத்தில் மேலோங்கி இருக்கக்கூடிய நாட்டுப் பற்று, தேசியம் போன்ற கற்பிதங்கள் போரின் பின்பாகவும் போர்விளைவிக்கிற இரண்டக நிலையாலும் உடைந்து போகின்றன. இத்தகைய LGV) பிரமைகளிலிருந்து ஒருவர்மெல்ல மெல்ல விடுபடுவதை நாங்கள் பார்க்க முடியும். இத்தகையதொரு விடுபடலைத்தான் குமார் மூர்த்தியின் சிறுகதைகள் நன்கு பிரதிபலிக்கின்றன. முகம் தேடும் மனிதன் என்ற சிறுகதை இதற்கு ஒரு சிறப்பான உதாரணம் என்று நான் கூறுகிறேன்.
இலட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான இடைவெளி பற்றி அவருடைய இன்னொரு கதை பேசுகிறது. எவ்வாறு போராட்டம் சொந்த மக்களையே ஆட்டிப்படைக்கிற ஒரு சக்தியாக உருமாறலாம் என்பதை அவருடைய கதைகள் சித்திரிக்கின்றன. மூர்த்தியின் ஒரு கதாபாத்திரம் கேட்கிறது: "எங்களை நாங்களே ஒடுக்கிக் காண்டு எவ்வாறு சுதந்திரம் பற்றி எம்மால் பேச முடியும்?"
மூர்த்தியின் சிறுகதைகளில் இன்னுமொரு சிறப்பான அம்சம் அவர் பயன்படுத்துகிற நடையும் மொழியும். போர்க் காலத்திலும் போருக்கு முன்பும் மொழி எவ்வாறு அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை நாங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். பிரச்சாரமும் கருத்தியல் திணிப்பும் தான் பிரதானமாக இருந்தன. ஆனால் யதார்த்தத்தில் போரை அனுபவிக்கிற போதுதான் மக்களும் சரி, போரில் பங்குபெறுபவர்களும் சரி, அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். இதுவரை காலமும் தாம் பயன்படுத்திய மொழிநடை போலித்தனமானது என்று
STRAxò 3 g

உணர்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்களோ இத்தகைய மொழியையும் மொழிநடையையும் பயன்படுத்தியே மனிதத் தன்மையைக் கட்டி எழுப்புகிறார்கள். மூர்த்தி செய்வதும் இதுதான். இதுதான் அவருடைய சிறப்பு.
அடக்குமுறைக்கு எதிரான கோபம் ப. சிறிஸ்கந்தன்
இலக்கியம் என்பது காலம் காலமாக இருந்து வந்துள்ள போதிலும், சில சகாப்தங்களுக்கு முன் தோன்றிய சிறு சஞ்சிகைகள் எழுச்சிதான் இலக்கியம் என்ற கருத்தாக்கம் வலுப்பெறுவதற்குக் காரணமாக இருந்தது. தமிழகத்தில் மணிக்கொடி, சரஸ்வதி, எழுத்து, கசடதபற போன்றனவும் ஈழத்தைப் பொறுத்தவரை இந்தப் பணியை அலை, புதுசு, தீர்த்தங்கரை, மல்லிகை போன்ற சஞ்சிகைகளும் செய்தன. புலம்பெயர்ந்த மண்ணில் நான்காவது பரிமாணம் இதனைச் செய்தது. 'காலம் செய்து வருகிறது. உளவியல், சமூகவியல், பொருளியல், அரசியல், வரலாறு என்பன மிகவும் காத்திரமாக இச்சிறுசஞ்சிகைகள் மூலம் வெளிக்கொணரப்பட்டன.
இந்த வகையில் குமார்மூர்த்தியின் பதினொரு கதைகள் 'முகம் தேடும் மனிதன்' என்ற சிறுகதைத் தொகுதியாக காலத்தின் நான்காவது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியை விமர்சிப்பதில் எனக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் எடுத்துக் கொள்ளப்பட்ட கருக்கள், சொல்லப்பட்ட விடயங்கள் சிலவற்றோடு எனக்கு உடன்பாடு கிடையாது. என் கருத்தை இவை பிரதிபலிக்கவில்லை என்பதால் ஒரேயடியாகப் பிழைகளை மட்டும் சொல்லுகின்ற நியமவாத விமர்சனமாக இது அமைந்து விடுமோ என்ற பயமும், இந்தப் படைப்பில் உள்ள சிறப்புக்களை என்னால் உணர முடியாது போய் விட்டதோ என்ற சந்தேகமும் என்னுள் இருக்கின்றன. ஆயினும் எனக்குட்பட்ட நியாயமான விமர்சனத்தை இங்கு முன் வைக்கிறேன். 'முகம் தேடும் மனிதன்" என்ற இந்தத் தொகுதியில் போராட்டம், மரண தண்டனை, முஸ்லீம்கள் வெளியேற்றம், புலம்பெயர்ந்த வாழ்வு போன்ற விஷயங்கள் கதைக்கப்பட்டுள்ளன.
இவரது கதைகளிலுள்ள சிறப்பான அம்சங்கள் என்னவென்றால் கதை சொல்லப்படுகின்ற விதம், எழுத்தோட்டம், நடை அல்லது எழுதுகிற பாணி, இலகுவான சொற்களால் இயல்பாக எழுதப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் மிகவும் லாவகமாகவும் கதை சொல்லப்படுகிறது. இவர் ஒன்றை விபரித்து எழுதுகிற போது அதனை அனுபவித்தே எழுதுகிறார்என்பதே என்று எண்ணத் தோன்றுகிறது. உதாரணம்: நான்குவருடங்களின் பின் யாழ்ப்பாணத்தில் நின்ற உணர்வை இவ்வாறு விபரிக்கிறார். 'நான் அவர்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனேன். ஒவ்வோர் முகத்திலும் ஒரு இறுக்கம். பரபரக்க எதையோ தேடும் கண்கள். கை நழுவிப் போய் விட்ட ஒன்றை மறுபடியும் பெற்றுவிட வேண்டும் என்பது மாதிரியான தவிப்பு. வீசிய காற்றில்
Juli 2001

Page 45
கந்தக நெடி அளவுக்கதிகமாக இருப்பது தெரிகிறது. யாழ்ப்பாணத்திற்கு இதுதான்நிரந்தமானது என்பதாக முடிவுசெய்து விட்டதைப் போல."
இந்த வகையான போராட்ட இலக்கியத்தைச் சிறப்பாகப் படைத்தவர்களின் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் பிரபல எழுத்தாளர்கள் திலீப்குமார், கோணங்கி ஆகியோர். இவர்களின் பாதிப்புகுமார் மூர்த்தி அவர்களின் எழுத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். பொதுவாக அவர்களது எழுத்தில் அடக்குமுறைக்கு எதிரான கோபம் ஒரு வேகத்தோடு பிரவாகிக்கும். முகம் தேடும் மனிதனில் மகன் இயக்கத்துக்குப் போய்விட்டதை அறிந்து சிவப்பிரகாசத்தின் உணர்வுகளைப் பாருங்கள். "அவர் வீதிகளில் சூனியம்கள்விக் கொண்டுள்ளதாக உணர்வார். தன்னைப் பழிவாங்குவதற்காகத்தான் வீதியோரங்களில் முகங்கள் வீசியெறியப் பட்டிருப்பதாகத் துடித்துப் போவார். மரணத்தின் வேதனையை வாங்கிக் கொண்ட அந்த முகங்களோடு தன்னுடைய முகத்தைப் பொருத்திப் பார்ப்பார். அது பரந்து விரிந்து சூரபத்மனாகி - ஐயோ என்று அலறுவார். சத்தம் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொள்ளும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் மகனின் முகமும் திடீரன ஞாபகத்திற்கு வரும். பின் அதுவம் விகாரமாகி, கோரமாகி.." அந்தக் கதையை இவ்வாறு முடிக்கிறார். இந்த வரிகளே போதும் இவரது எழுத்தின் தன்மையை உணர்வதற்கு. 'கூக்குரல்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் இரத்த விலாறாக அடிக்கப்பட்ட மகனது உடல் முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அதில் மரணத்தின் வேதனை கோடுகளாக வழிந்திருந்தது. மறுபடியும் மறுபடியும் காரணமில்லாமல் மின்கம்ப மனிதனின் முகமும் அழிய மறுத்தது. வலுக்கட்டாயமாக மகனின் உண்மையான முகத்தைப் பார்ப்பதற்கு மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்."
இதுதான் எழுத்து. இப்படித்தான் எழுத வேண்டும். இவை சிந்திக்க வைக்கின்றன. எழுத்து மனிதனைச் சிந்திக்க வைக்க வேண்டும். அது அடக்குமுறைக்கு எதிரான இலக்கியமாக இருந்தாலென்ன விடுதலை இலக்கியமாக இருந்தாலென்ன ஒரு படைப்பு மனிதனைச் சிந்திக்க வைப்பின் அதுதான் நித்திய இலக்கியமாக இருக்கும். அதை விடுத்து இவை எல்லாவற்றையும் ஊடறுத்துப் போய் மின்கம்ப மனிதனையும் போராளியையும் ஒப்பிடலாமா பெரிய இடைவெளி இல்லையா என்றெல்லாம் கேட்க முடியாது. அவிை சிவப்பிரகாசத்தின் உணர்வலைகள். அவ்வளவுதான். ஆக ஒரு இலக்கியத்தின் இடைவெளியை ஒரு இலக்கியம் தான் நிரப்ப முடியும். அதுதான் நியாயமானது என நாம் நம்புகிறேன்.
மேலும் இவரின் நயமான எழுத்துக்கு ஒரு உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம். "சிகப்பு மையால் கோணல்மாணலாக எழுதி மின்கம்பத்தில் தொங்க விடப்பட்ட அட்டை, காரணத்தைச் சொல்லிவிட்டுக் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது."
"பஞ்சுப் பெட்டியில் வைத்துப் பூட்டினால் என்ன?
காலம் 8 நவ

புளுதியில் வீசியெறிந்தால் என்ன? இதயத்துடிப்பு நிற்பது இறுதியானது."
இவர் தனது கதைகளில் குறியீட்டு முறையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக ஹனிபாவும் இரண்டு எருதுகளும் என்ற கதையில் வரும் வெள்ளையன் என்ற எருதைச் சொல்லலாம். அதாவது மிருகம் துன்பப்படுவதையே,சகிக்க முடியாத அதன்மீது பரிவு காட்டுகிற ஹனிபாவை மிருகத்தைவிடக் கேவலமாக வெளியேற்றினார் என்ற அர்த்தத்தில் குறியீட்டுச் சமிக்ஞையாக எருது வருகிறது. இதேபோல் முகம் தேடும் மனிதனின் வரும் மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட பூனையும் மற்றும் மஞ்சள் குருவியும் குறியீட்டுக் காரணிகளாக இருக்கின்றன.
முகம் தேடும் மனிதனிலுள்ள கதைகளை எதிர் அரசியல் புலத்தில் உள்ளவர்களால் பிரயாசையுடன் வாசிக்க முடியாது. ஆதலால் எத்தனை வாசகர்களால் இது வாசிக்கப்படும் என்று அளவெடுத்து எழுதும் எழுத்தாளர் வரிசையில் நின்றும் இவர் வேறுபடுகிறார். மாறாக, வாசிக்கும் வாசகர்களை நம்பும்படியாக எழுதுகிற ஆற்றல் இவரிடம் இருக்கிறது. முகம் தேடும் மனிதனில் ஒரு குறிப்பு இருக்கிறது. 'வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவன் எந்தக் குழுவில் இருந்தான் என்பதைப் பற்றி எவ்வளவோ நினைவுபடுத்தியும் என் நினைவுகள் வர மறுக்கிறது" என்ற குறிப்பு இதை விளக்கும்.
இத்தொகுதியிலுள்ள "இறுதி அத்தியாயம்" என்ற கதையில் ஒரு பெண் மருத்துவப் பட்டதாரி ஆசிரியர், சமூகம் குழம்பிப் போயுள்ளது. சரி எது தவறு எது என்று விளக்க ஒரு புத்தகம் எழுதுகிறார். ஓரிரவு பல்கலைக்கழத்தால் வரும் வழியில் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்று வருகிறது. இந்தச் சம்பவம் பொதுவில் அனைவரும் அறிந்த ஒன்று. வாசித்து முடித்த போது 'அட இந்தக் கதை" என்ற எண்ணம் வந்து கதை சப்பென்று ஆகிவிடுகிறது. அதாவது ஒரு படைப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்பதை வாசகன் அறிந்து விடுவானாகில்அந்தப் படைப்பு ஒரு போதும் வெற்றிபெற முடியாது. விளக்கமாகச் சொன்னால் படைப்பு என்பது முன்னரே தீர்மானிக்கப்படுகிற விஷயம்தான். ஆனால் வாசகனுக்கு அந்த எண்ணம் வராமல் படைப்பு எழுதப்பட வேண்டும். அல்லது உண்மைச் சம்பவம் என்ற குறிப்பிட்டு எழுதப்பட வேண்டும்.
மேலும் இத்தொகுதியிலுள்ள புலம்பெயர்ந்த கதைகளை ஏன் எழுதினார் என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. உடைபடும் சுவர் என்ற கதையில் கணவன் தன் மனைவிமீது சந்தேகம் ஏற்பட்டுப்பிரிந்து போகிறான். இடையில் ஒருவர் வந்து கோழிக்கறி சமைத்து இருவரையும் சேர்த்து வைக்கிறார். உண்மையில்தான் எடுத்துக்கொண்ட கருப்பொருளை இவரால் நியாயப் படுத்த முடியாமல் தவிப்பது தெரிகிறது. இந்த நீாட்டில் இவ்வளவு கோழிக்கறியைச் சாப்பிட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பதுதான் எனக்குப்
bui 2001

Page 46
பிரச்சினையாக இருக்கிறது.
இந்நூலின் பதிப்புரையில் காலத்தின் பதிப்பாளர் "அவர் படைப்புகள் ஒரு காலத்தின் வரலாறன்றி வேறில்லை" என்று குறிப்பிடுகிறார். ஆனால் ஒரு படைப்பு காலம் கடந்தும் வாழ வேண்டின் அந்தப் படைப்பின் காலம் மிகவும் அவசியம். பொதுவாகவே இலக்கியத்தில் காலம் பற்றி ஒரு குழப்பம் இருக்கிறது. அதாவது இலக்கியக் காலம் என்பது இலக்கியம் எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பதா அல்லது இலக்கியம் சொல்லுகிற காலத்தைக் குறிப்பதா என்று. ஆனால் முகம் தேடும் மனிதனில் சிறுகதைகள் எழுதப்பட்ட காலமும் குறிப்பிடப்படவில்லை. கதைகளும் காலத்தைச் சொல்லவில்லை. ●@ கதையில் மட்டும்
நூல் வெளியீட்டு விழாவின்நிை
ஈழப் போராட்டம் ஆரம்பித்த பிற்பாடு தரமான இ விடயமாகும். இந்த இலக்கியங்களில் பெரும்பாலானவ என்பதையும் நாம் மறுக்க முடியாதுள்ளது. அகநி6ை இலக்கியங்களாக அமைவதை ஈழத்திலும் சரி, புலம்ெ காண்கிறோம். ஆரோக்கியமான சமூகக் கட்டுமானத்திற் வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
மனிதர்கள் சகல உரிமைகளுடன் வாழ வேண்டு விடயங்களைப் புறக்கணித்து மட்டுமல்லாமல் அப்புறக் நமது சமூகத்துக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. இவ்வா படைப்புக்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதற்க யதார்த்தத்தை நான் நிராகரிக்கிறேன் என்பது பொருள செலுத்த வேண்டும். அவை இலக்கியமாக்கப்பட வேண்
என்னுடைய நூலை விமர்சனம் செய்த கவிஞர் கந் நண்பர்களுக்கு என் நன்றிகள். இந்த நூலைச் சிற சேர்ப்பித்திருக்கும் செல்வம் அவர்களுக்கும் வாசக நண்
கிரிஷ்கர்
"நாக D6
STRxió 3

தொலைகாட்சியில் "பெர்லின் சுவர் உடைபடுவதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்’ என்ற குறிப்பு வருகிறது.
இறுதியாக, சமகாலத்தில் அல்லது முற்பட்டு இருந்த தமிழ் மக்கள்மீதான வன்முறைகள், தமிழர்களின் இடப்பெயர்வு, பொது மக்களின் அர்ப்பணிப்புக்கள், தியாக மரணங்கள் என்பவற்றைத் தவிர்த்து இத்தொகுதியிலுள்ள கதைகள் ஒரு பக்கச் சார்பான சமூக, அரசியல் கருத்துக்களையும் கருக்களையும் மட்டுமே கொண்டிருப்பதால் ஒரு சார்புநிலை இலக்கியமாகவே இதனைக் கொள்ள முடியும். அதாவது எமது போராட்ட அரசியல் பின்னணி தெரியாதவர்களுக்கு மலையைக் கல்லி எலியைப் பிடித்த செய்தியை மட்டுமே இந்த
இலக்கியம் சொல்லும்.
மவாக குமார்மூர்த்திஆற்றிய உரை:
இலக்கியங்கள் பரவலாக உருவானமை மகிழ்ச்சிக்குரிய ாவ புறநிலை வெளிப்பாடுகளாகவே அமைந்து விட்டன U சார்ந்தவை, தனிமனித அவலங்களைப் பற்றியவை. பயர்ந்த எழுத்துக்களிலும் சரி, நாம் மிகவும் அரிதாகவே குஅகநிலை விடயங்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்த
}ம் என்பதற்காகவே போராடப் புறப்பட்ட நாம், பல கணிப்பையும் நியாயப்படுத்தவும் செய்கிறோம். இதுவும் று புறக்கணிக்கப்பட்ட பல விடயங்கள்தான் என்னுடைய ாக எம்மீது திணிக்கப்பட்டுள்ள இப்போரின் புறநிலை ால்ல. அகநிலை விடயங்களிலும் நாம் ஆழ்ந்த கவனம் டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.
தசாமி, ப.சீறிஸ்கந்தன், செ.ராஜேந்திரன், சேரன் ஆகிய ந்த முறையில் வெளிக்கொண்டு வந்து உங்களிடம் பர்களுக்கும் என்னுடைய நன்றி.
6υτΠις 6υτ
O V 9 KOT -600
இயக்கம் “ஞானம் லம்பேட்” 2002 சித்திரை 28. மாலை யோக் வூட் தியேட்டர். ரொரொன்ரோ
buli 2001

Page 47
கவிதை டி. தமிழாக்கம்: ஜி.ப்
(நாற்பத்திமூன்று வயத மாவட்டத்திலுள்ள கோ கிராமத்தைச் சேர்ந்தa பல்கலைக்கழகத்தில் மக்கள் ே வாசல் (1991), அரசியல் தந்
கவிதைத் தொ
O iC) p f
LOUCHü souUjung 90, G4MLAND
l
அக்ரகாரத்தின் வெங்கட்ர கோடிகளின் ஈஸ்வரன் மாமேதை சுப்பாமணி அய் ஒரே மகன்.
கண்ணுக்கெட்டிய தூரம் க தென்னந்தோப்புகள் கடைகண்ணிகள் அப்பால், நாடோடிகள் கூடாரமடிக்கும் புறம்போ! மாலைநேரம் காக்கைகள் அ புன்னை மரங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு வாரிசு.
நாம் கிழித்துக் கடக்கும் நதி அக்கரைத் தண்டவாளம் காத்திருக்கும் ரயில் சென்றடையும் நகரம் வசிக்கும் வீடு படுத்துறங்கும்கட்டில் மேல்கட்டிய கொசுவல்ல கொசுவலையின் சல்லடை எல்லாம் சொந்தம் அவனு அவனுக்குச் சொந்தம் இல் இல்லை நமக்குத் தெரியாத மொழி விலைபேசி வீதியோரக் கடைக்காரர்கள் நீல ஒளோர் மாம்பழத்தின் வெள்ளைப் புழுகூட.
RNR 8
 

f is பி.ராஜீவன் ாலசுப்ர்மணியன்
ான டி.பி.ராஜீவன் கேரள ழிக்கோடு அருகே பாலேரி ார். இவர் கோழிக்கோடு தாடர்பு அதிகாரியாக உள்ளார். நிரம் (2000) ஆகியவை இவ்ரது குப்புகளாகும்.)
அல்ல: மனநோயாளியான ஒரு திருடன்
லணி
யரின்
ானும் வயலுகள்
க்கு நிலங்கள் அடங்குகிற
க் கண்கள் க்கு; லாதது
பில்
ா கட்டிவிடும்
நவம்பர்2001

Page 48
4
2
கடுகும் மிளகாயும் தாளித்து சூரியன் பூமியை வறுத்தெடுத்த ஒரு உச்சிப்பொழுது.
உருக்கிய நெய்யும் பருப்பும் சேர்த்து உண்டு முடித்து தேக்குப் பலகை கொண்டு கட்டிய மச்சில் கருவீட்டிமரத்தின் வைரமெடுத்துக் கடைந்த ஆடும் கட்டிலில் சாய்ந்து தியாகராஜாக்கள்
பலகாலம் இசைகொண்டு செதுக்கி வைத்த கீர்த்தனங்கள் கண்டு பணிப்பெண் பாருக்குட்டியின் ஆதிதாளத்தில்
சுயமைதுனம் செய்து
வெளிப்போந்தான்;
ஆர்ய வேம்பின் நிழலுகள் பாலக்காட்டு காற்றில் திராவிடச் சந்தம் அமைக்கும் வழிகளில் நடந்து நதியும் தண்டவாளமும் கடலும் கடந்து
பறந்து மறைந்தான்.
காலம் 8 நல
 

3
வாணியங்குளம் சந்தை நாளில் ஒற்றைக்கை முதலியார்
டீ கடையின் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே இருக்கும் பக்கோடா போல
இரும்புக் கம்பிகள் சிமெண்டில் அமுக்கியெடுத்து சுட்டு வைத்த
நகரங்களில்
சுற்றித் திரிந்தான்;
சிகரெட் பிடிக்கவும் சிவப்பு மதுஅருந்தவும் மாட்டுக்கறி புசிக்கவும் நடனம் செய்யவும் பழகிப்போனான்
ஆங்கிலம் பேசவும்
காரோட்டவும் கற்றான் விரல்நுனியில் உலகைக் கொணரவும் டோக்கியோவிலும் பெர்லினிலும் நியூயார்க்கிலும் ஒரே சமயத்தில்
தோன்றவும் முடிந்தது.
இப்போது
அடிக்கடி ஊருக்கு வருகிறான் மூடிய வீடுகள் மோதித் திறக்காமல் பூட்டும் உடைக்காமல் உள்ளே பிரவேசிக்கிறான் நமக்கு மிகவும் பிடித்த ஒவ்வொன்றாய் கவர்ந்தெடுக்கிறான் அக்ரகாரத்தின் அணையாத சுடுகாட்டில் அவற்றை எரித்து ரசிக்கிறான்.
Juli 2001

Page 49
சிறுகதை 4
சிலந்திவலையி
குழல் விளக்கொளியில் அதிரும் சிலந்தி வலையின் நடுவே ஒரு வட்டம். அதில் மிக ஆழமான ஒரு வெற்றிடம். விரல்விட்டால் ஆளை உள்ளே இழுத்து வெறுமையின் பெருவெளியில் வீசிவிடும் அது. அங்கிருந்து நூல்பாதைகளை நீட்டி பிணைத்து நிதானமாகப் பின்னி விரித்தெடுத்துக் கொண்டிருந்தது சிலந்தி. என் கையிலிருந்த புத்தகத்தை அதை நோக்கி வீச எத்தனித்தேன். கணிப்பொறியில் விழுந்துவிடும் என்று தோன்றவே சலிப்புடன் பெருமூச்செறிந்து புத்தகத்தைப் பிரித்தேன். படித்த புத்தகம்தான்.
நினைத்திருக்காத ஒரு கணத்தில் புத்தகங்களின் எழுத்துக்கள் சிறகுகளை உதிர்த்துவிட்டு புழுவாகி வரிசை கெட்டு நகர்ந்திது/ மோதி நெளியத் தொடங்கிவிடும் கண் பிரச்சினை ஒன்று சமீபகாலமாக தொந்தரவு செய்கிறது. நாற்பதை நெருங்குவதனால் வெள்ளெழுத்தாக இருக்கலாம் என்றார் வேதசகாயகுமார். அவர் ஒரு லெளகீக மேதை. கண் தன் மாறும்தன்மையை எப்படி இழக்கிறது என்று விளக்கினார். மூக்குக்கண்ணாடி இரண்டாகப் பிளவுபடுகிறது. அருகே உள்ளவையும் தூரத்தில் இருப்பவையும் வேறுவேறு உலகங்களில் புழுங்கத் தொடங்குகின்றன. இருபது வருடம் கழிந்தால் பிரச்சினை இல்லை. மாறாதவற்றை மட்டும் பார்ப்பதாக கண் மாறிவிடும்.
தூக்கமில்லாத இரவின் வீண் மூளையோட்டங்களை வெல்வது எளிதல்ல. நிராயுதபாணியாகும் தோறும் நமது வீரம் வளரும் வினோத களம் இது. ஆனால் ஆயுதங்களை விட முடிவதில்லை எளிதில், ஒட்டிப்பிறந்த கலசங்களை சதை பிய்த்து, உதிரம் வழிய, பிடுங்கி வீச வேண்டும் அதற்கு.
புழுத்த மாமிசத்துண்டுபோல புத்தகப் பரப்பு. ஏதாவது ஒரு சொல்லைக் கூர்ந்து கவனித்தால் இந்த விழிப் பிரச்சினையைத் தீர்த்துவிடமுடியும் எனக் கற்றிருக்கிறேன். அந்தச் சொல் ஊசி நூல் போல பிற சொற்களை ஊடுருவிக் கோர்த்து வரிசைப் படுத்திவிடும். வரிசை என்பது உயிர்களின் அகத்தில் உருவாகும். ஒரு பாதை; உடல்களினால் தூலமாக்கப்படுவது வரிசைகள் எனக்குக் கசப்பு தருகின்றன. ஒரு வரிசையின் இறுதியில் இணைந்து கொள்ளும்போது மிக முக்கியமான ஒன்றை இழந்து விடுகிறேன் என்று படுகிறது. வரிசையில் பொறுமையாக நிற்பவர்கள் கொல்லப்படத்தக்கவர்கள் என வெறி கிளம்புகிறது. வெட்ட வெளியில் சாகும்வரை
&Rib 8 gi
 

நிறுத்திக் கொல்ல வேண்டும்!
இந்தக் காற்று எத்தனை வழி நிச்சயத்துடன், எத்தனை தயக்கமின்மையுடன் வழிந்து செல்கிறது! பழகிய கையின் பின்னலூசி போல மரங்களும் சுவர்களும் இணைந்த இந்த இருண்ட சன்னல்காட்சி காற்றால் கோர்க்கப்பட்டிருக்கிறது. LDgDI அறையில் அருண்மொழியின் குறட்டையொலி, அஜிதனின் டான்சில்ஸ் அதிரல், பாப்பாவின் சீரான மூச்சு, படித்துறையில் நீர் அலைப்பது போல சன்னல் திரைச்சீலையின் அசைவொலி, குழாய் சொட்டும் ஒலி எல்லாம் இணைந்து என் அகமெனச் சமைவது இக்காற்றினூடாக, 9.g. எறியிறங்கி உலாவவில்லையென்றால் இந்த வீடு சிதறி ஒவ்வொரு அறையும் காற்றில் பிரிந்து மிதக்கத் தொடங்கிவிடும்.
மரங்களடர்ந்த தோட்டத்தின் நடுவேயிருந்தது என் பாலியவிடு. அங்கு காற்றுலாவிய பாதைகள் அன்று என் கண்ணில் பட்டதில்லை. இன்று, இவ்விரவின் குளிர்ந்த தனிமையில், மண்ணும் கல்லும் மரமும் உதிர்ந்தழிந்தபிறகு வானில் எஞ்சும் அந்த வீட்டின் தெற்கு அறைக்கதவின் இடைவெளியை உடல்நுழைத்துத் திறந்து உட்புகுந்து காற்று மெல்ல நடக்கிறது. சுவர்களைத் தடவியும், கதவுகளை உந்திப் பார்த்தும், அலைகிறது. தூசிப்படலத்தில் மீண்டும் மீண்டும் தன் அலைவடிவத்தை அழித்தழித்தெழுதி வைக்கிறது. நூலாம்படைகளை வாஞ்சைமிக்க விரல்களால் கோதிவிடுகிறது.
இந்தக் காற்று!
எத்தனை வழி நிச்சயத்துடன்,
எத்தனை தயக்கமின்மையுடன்
வழிந்து செல்கிறது!
பழகிய கையின் பின்னலூசிபோல!
மரங்களும் சுவர்களும் இணைந்த
இந்த இருண்ட சன்னல்காட்சி காற்றால்
கோர்க்கப்பட்டிருக்கிறது

Page 50
உயர் நிரம்பிய பழைய ஒட்டுவீடு. அப்பா மிருகங்களை விரும்புபவர். பூனைகள், கோழிகள், அணில்கள், எலிகள், பாம்புகள் எல்லாம் நிரம்பிய வீடு. எதையும் அடித்து விரட்ட அப்பா விரும்பமாட்டார் "அது பாட்டுக்கு போகட்டும்டா" என்பார். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய பாடு உண்டென்றும் அதில் பிறர் ஊடுருவக் கூடாது என்றும் நம்பினார். காலையில் வெளவால்கள் திரும்பி வரும் ஒலி மச்சின் இருளில் தபதபக்கும். மத்தியானம் மிகச்சரியாக மூன்று முப்பத்தெட்டுக்கு சோம்பல் நெளியும் தடித்த சாரைப்பாம்பு மச்சுப்பிடி இடுக்கின் பொந்திலிருந்து கிளம்பி தோட்டத்துக்குப் போகும். மரநாய்கள் போன வழியில் சாறு உறிஞ்சப்பட்ட பழுக்காய்பாக்குகளும் பிற கொட்டைகளும் காணப்படும். வீடு முழுக்க எலிகளின் பாதைகள் பின்னி விரிந்திருந்தன.
சிலசமயம் பேர் தெரியாத ஒரு உயிரை அதன் பாதையை நாம் வெட்ட நேர்ந்தால் காணலாம். அதுவும் கூடவே இருக்கிறது என்ற உணர்வு அப்போதுதான் ஏற்படும். மச்சில் கடப்பாரை தேடும்போது பூனைக்கும் பெருச்சாளிக்கும் இடைப்பட்ட ஒரு பிராணியைப் பார்த்தேன். புளிப்பானை இடுக்கில் கண் பளபளக்க, குற்றம் சாட்டும் மூக்குடன் என்னைப் பார்த்தது. "அப்புலண்ணா இது என்ன?" என்றேன். 'இது பழ உண்ண? மரநாயில் ஒரு இனம்" என்றார். தூங்குமிடமும் கழிப்பிடமும் அதற்கு ஒன்றுதான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடப்பாரையால் குத்தினேன். சட்டென்று பின்வாங்கி கழுக்கோலில் தொற்றி, நீர்த்துளி கம்பியில் நகர்வதுபோல, தலைகீழாகவே ஒடி மறைந்தது.
வராண்டாக்களும், திட்டிவாசல்களும், ஊடு வழிகளும், ஒட்டுத்திண்ணைகளும் உள்ள பழங்கால வீடு. ஒவ்வொருவரின் இடமும் வழியும் உறுதிப்பட்டு விட்டிருந்தன. வடக்கு அறையில் அண்ணாவுக்கு நள்ளிரவில் தெலுங்கு டப்பிங் சண்டைப்படம் பார்த்து திரும்பி வரவும், பின் இரவில் இறங்கிப்போய் பீடி பிடிக்கவும் தனி வாசல் உண்டு. பிரசவத்துக்கு வசதிகள் உள்ள என் அறையில் இனிய அரையிருட்டு - கவிதைக்கும் கரபோகத்துக்கும் வாகாக. அம்மாவும் தங்கையும் அடுக்களை, அதையொட்டி அறைகளில், புறந் திண்ணையில் கன்னங்கருங்கல்க் குளுமையுள்ளதரையில் போடும்போதே நிரந்தரமாக வரையப்பட்ட பரமபதக் களம். அருகே அருமையாக மழிக்கப்பட்ட கொட்டாங்குச்சிக் குடுக்கையில் வெண் சோழிகள். கைபட்டு கைபட்டு மனித உடலின் வழவழப்பும் உயிர்ச்சூடும் ஏறியவை.
ஏணிகளும் பாம்புகளிலுமாக சோழிகள் பாட்டிமார்களின் கண்கள்போல அரைப்பார்வையின் சோகத்துடன் நகர்கையில் பாம்பில் சறுக்கி இறங்கிய அம்புழா குடுக்கையைக் கண்ணிருடன் தட்டிவிட்டபடி "நாகதோஷம் தீரணும்னா மூணு ஜென்மம் வேணுமாம். என் தலையெழுத்து!" என்றாள். கண்களும் மூக்கும் சிவந்து பழுத்திருந்தன. "அதுதான் நாம ஆயில்யம்
KER & Ba

கொடை கொடுக்கிறோமா அம்மா?" என்று கேட்டேன். 'எந்திரிச்சு போடா சனியனே' என்று என் முதுகில் பளிரென அறைந்தாள். "நீங்க ஆடுங்க அக்கா...' என்றாள் ஆசாரிச்சு அம்மு. "நீஆடு’ என்று அம்மா தங்கையிடம் குடுக்கையைத் தந்துவிட்டு தள்ளிப்போய், அவள் முதுகு பட்டு தேய்ந்த மரத்தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். பின்முற்றத்து LDfTL DJ நிழலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
ஆயில்ய பூஜை அப்பாவின் பிறந்தநாளில், அப்பா ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் சரியான ராகு காலத்தி பிறந்தவர் என்பதனால் அவர் பிறந்தது முதல் தவறாது நடத்தப்படும் பூஜை அது. நாகக் களம் வரைந்து புள்ளுவனும் புள்ளுவத்தியும் நாகபூதத்தின் பாட்டு பாடுவார்கள். நாக உடலின் நெளிவுப் பின்னல்களினூடாக தலையிலிருந்து வாலையும் வாலில் இருந்துதலையையும் போய் அடைய பார்வையாலேயே முனைவோம். ஒருபோதும் அது சாத்தியமானதில்லை. நாக பூதத்தானின் செக்கச்சிவந்த கண்களில் ஒரு சிரிப்பு எப்போதுமிருக்கும். கரியாலும் துணி நீலத்தாலும் போடப்படும் களநாகப் படத்தில் கண்களுக்கு செந்தவிட்டைப் பழம் பறித்து வைப்பான் புள்ளுவன். தோட்டத்துப் புதர் நெரிவின் ஊடாக பின்பு கண்சிரிக்கும் கரு நாகங்களை மீண்டும் மீண்டும் நான் காண்பேன்.
ஒரு முறைகூட அப்பா கொல்லைப் பக்கம் வந்ததில்லை. சமையலறையில் கருநாகம் வந்த போது கூட தொழுவருகே நின்றபடி உத்தரவுகள் மட்டும் தான் அளித்தார். அவரது அறை கிழக்கு மூலையில். அருகே வரவேற்பறை, பக்கவாட்டில் பத்தாய அறை. கைவிரித்து மல்லாந்த பெரிய, தேக்காலான சாய்வு நாற்காலியில் அணில்முதுகு போல கோடுள்ள தூளித்துணி. அருகே விரிந்த கோளாம்பி. பித்தளைத் தாம்பாளத்தில் தாம்பூல வகையறாக்கள். அப்பா நடமாடும் இடம் ஒரு போதும் மாறுவதில்லை. ஆகவே அவர் இல்லாதபோது கூட அந்த இடங்கள் அவருடையவையாகவே இருக்கும். அவர் ஆபீஸ் போகும் பாதை அவர் திரும்பிவரும் வரை மூச்சடக்கி நீண்டு கிடக்கும்.
மிருகங்களிடம் பிரியத்துடன் இருப்பவர்கள் அனைவருமே குரூரமானவர்கள் என்று அம்மா சொன்னாள். வாழைப்பூ நறுக்கிய கரங்களில் சாதாரணமான தசை இறுக்கம் கண்டு அவள் கண்களைப் பார்த்தேன். சன்னல் மூடி ஒரு அசைவு உள்ளே போய் மறைந்ததைக் கண்டேன். தன் பாதையில் எந்த தயக்கமும் இன்றிஅப்பாநடந்து போனார். ஆண்களுக்கு ஒரு போதும் தவறு நடக்காது என்று காற்றில் ஒரு நம்பிக்கை விசியிருந்த காலம். அம்மாவுக்கு எப்போதுமே கோபம், வருத்தம், கலகம். கன்னிமூலையில் கிணறுதோண்ட தீர்மானித்த போதுதான் மிகப் பெரிய சண்டை, வாஸ்து சாஸ்திரியான பெரியப்பாதான் இடம் பார்த்தார். அடி நீரோட்டம் பார்க்கும் பரவன் தாமு இடம் பார்த்தால் நல்லது என்று அம்மா சொன்னாள். "சோதிடத்தால் தலையெழுத்து தெரியும், தண்ணிப்போக்கு தெரியுமா?" என்றாள். சமையலறை அண்டாவில் தோசைத் திருப்பி கணிரென
Juli 2001

Page 51
விழுந்தது. 'அதிபிரசங்கம் செய்கிற நாய்களை மண்டையை அடித்து பிளக்கணும்" என்று சொன்னபடி அப்பா பாக்கை தோல் சீவினார்.
"தண்ணி விஷயமா நீ பயப்படவே வேண்டியதில்லை குழந்தை' என்றார் பெரியப்பா. 'மண்ணுக்கடியில் தண்ணிக்குன்னு தனிப்பாதைகள் உண்டு. மரங்களைப் பாத்து அதை படிக்கலாம்' மனதின் வழிகள் கைகளில் ரேகைகள் ஆவது போல நீரின் ஊடு வழிகள் மரக்கிளைகளின் திசைகளாகின்றன. மரங்கள் கைமுத்திரை காட்டும் நடன சிற்பங்கள் அல்லவா? பண்டிதனால் நல்ல கதகளியைப் பார்ப்பது போல அவற்றைப் பார்த்து அறிய முடியும். மரங்களின் கிளை மொழிக்கு இலக்கணம் உண்டு. தொனியும் உண்டு. மரங்களின் வேர்கள் மாட்டு வியாபாரிகளின் விரல்கள் துண்டுக்கு அடியில் தொட்டுப் பேசுவது போல மண்ணுக்குள் உரையாடுகின்றன. மண்ணுக்கு அடியில் அறியாத அர்த்தங்கள் அடர்ந்து செறிந்திருக்கின்றன. மரங்களை வாசிக்கத் தெரிந்தவனுக்கு பூமி ஒரு புண்ணிய கிரந்தம். நீரின் ஒளியின் உயிரின் ரகசியங்கள் அதில் எழுதப்பட்டிருக்கின்றன, பெரியப்பா வெற்றிலைக் குழம்பை வேப்பமரத்தடியில் எட்டி உமிழ்ந்தார்.
இருபதடி தோண்டியும் ஊற்றுப் பறியவில்லை. "அவளுக்கு கரிநாக்கு; வேற என்ன? மூதேவி" அப்பா சொன்னார் "நான் அப்பவே சொன்னேன்." என்று அம்மா ஆரம்பிப்பதற்குள் அப்பா கையில் பனைமட்டையுடன் பாய்ந்தோடி வந்தார். அவர் சமையலறைக்குள் புகுவார் என்று அம்மா எதிர்பார்க்கவேயில்லை. மண்டையில் ஓங்கி அடித்தபடி "சாகு சனியனே' என்றார் அப்பா. அம்மா அலறியபடி அண்டாமேல் விழ, பாத்திரங்கள் பயங்கர ஒலியுடன் சரிந்தன. அப்பாபைத்தியம் போலதுள்ள பெரியப்பாவும் அப்புக்குட்டனும் LJffusög வந்து அவரைப் பிடித்தடக்கினார்கள். 'கையில ஒரு கொத்து வேப்பிலை ஒடிச்சு குருங்க சேலாட்டு இருக்கும்" என்று வைக்கோர் போர்அருகே நின்ற முத்தப்பன் சொன்னபோது நாகராஜன் வேறு பக்கம் பார்த்துச் சிரித்தான்.
"நல்ல அடியா?" என்றாள்.அருண்மொழி. "பின்னே? பச்சைப் பனைமடடையால் அடிப்பட்டால் உனக்குத் தெரியும்" என்றேன். "நீ அடிபட்டிருக்கியா?" என்றாள். "ஒவ்வொரு மாசமும் பிராக்ரஸ் ரிப்போர்ட் வாரப்ப ஒரு அடிமேளம் இல்லாம இருக்காது" என்றேன். அருண்மொழி சிரித்தபடி, "அதான் உன் பிள்ளையும் உன்னைக்கொண்டு பிறந்திருக்கு" என்றாள். அஜிதன் பந்தை விட்டுவிட்டு ஓடிவந்து "என்னப்பா?" என்றான். "ஒண்ணுமில்லடா போடா" என்றேன். "என்னப்பா?" "அப்பா சின்ன வயசில நிறைய மார்க் எடுப்பார்டா, அதைச் சொன்னேன்' அருண்மொழி சொன்னாள். "அப்பாவா?’ என்று அஜிதன் சந்தேகத்துடன் கேட்டான். "ஆமாடா. எல்லாத்துக்கும் நூத்துக்குநூறு." "போம்மாநீ அப்பாவை கிண்டல் பண்றே." “நெஜம்டா. உங்கப்பா ரொம்ப நல்லா படிப்பார் தெரியுமா? அதுக்குத்தான் உங்க தாத்தா ஒவ்வொரு மாசமும் "மடல்’ குடுப்பாராம்."
காலம் 8

"போம்மா" என்றபடி அஜிதன் ஒட அருண்மொழி உரக்கச் சிரித்தாள். நான் "நீ பெரிய படிப்பு படிச்சு இப்ப என்ன ஆச்சு?' என்றேன். அவள் உள்ளே போய் ஸ்டவ்வை அணைத்து சாதத்தை வடித்துவிட்டு வந்து "அப்புறம் என்ன ஆச்சு?" என்றாள். அம்மா அதற்குப்பிறகு ஒரு மாதம் அப்படியே குளிர்ந்து இறுகிவிட்டாள். வீடே இருண்டு கிடந்தது. சமையல் முழுக்க தங்கைதான். அவளுக்குச் சாதமும் ரசமும் தவிர வேறு எதவுமே தெரியாது. அண்ணா இரவு வந்து அதிகாலையில் திரும்பிவிடுவான். நான்சாண்டில்யனைத் திரும்பத்திரும்ப படித்தேன்.
அந்தக் கிணற்றில் நீர் கண்ட பிறகுதான் மறுவேலை என்று அப்பா இறங்கிவிட்டார். எதற்குப் பிடிவாதம் என்று கேட்ட அப்புக்குட்டனிடம் அப்பா தன் மார்பில் கையால் அறைந்து, "தண்ணி இல்லாட்டா எடுத்துட்டுபோய் கட்டைல ஏத்துடா, ஈரமில்லாத நெஞ்சுன்னா நின்னு எரியும். எடுத்திட்டுப் போடா!" என்று கத்தினார். மீண்டும் பத்தடி தோண்டியபோது கரும்பாறை தெரிந்தது. மண்ணின் இருண்ட ஆழத்தில் அந்தப் பாறையிலிருந்து குளிர் மேலேறி வந்தது. அப்பா கொல்லங்கோட்டுக்குப் போய் கரிமருந்துக்காரர்களைக் கூட்டி வந்தார். பெரியப்பாகூட "வேண்டாம்டாவிட்டுடு. மனுஷனோட புத்தியை அப்பப்ப இப்பிடி பகவான் ஒரு அடி அடிக்கிறதுண்டுடா" என்றார். அப்பாவுக்கு எவர் குரலும் ஏறவில்லை.
அப்பா முகமே சரியில்லை என்றார்கள். பூரீ இறங்கி, அக்கா ஏறியது போல. தனியாக இருக்கையில் முஷ்டி சுருட்டி பல்லைக்கடித்தார். சுவரைப்பார்த்துப் பெறுமூச்சு விட்டார். ஆள்முகம் தெரியவில்லை. கூப்பிட்டால் மூன்றாம் விளிதான் கேட்கிறது. முதலிரண்டு குரல்களையும் காற்றுக்கு அப்பால் மறைந்துள்ள எவரோ எடுத்துக் கொள்கிறார்கள். மலையன் காணியை வரவழைத்து பலியிட்டு பூசைசெய்து கேட்டோம். அப்பா உறைமாடசாமியின் சஞ்சார பாதையில் குறுக்கே சென்றுவிட்டார் என்றான். சாணி மெழுகப்பட்ட தரையில் தலையறுபட்ட கோழி விரல்களை நீட்டி மடக்கி ஏதோ எண்ணிக் கணக்கிட்டுத் தவிக்க, ஒளியின்றி காவித் துணிக்கிழிசல் போல துடித்த தீப்பந்தச் சுடர்களுக்கு நடுவே களம் வரைந்து பற்பல கட்டங்களையும் பாதைகளையும் குறித்தான். பூசணிப்பூ ஏந்திய சாணி
"மண்ணுக்கடியில் தண்ணிக்குன்னு
தனிப்பாதைகள் உண்டு.
மரங்களைப் பாத்து அதை படிக்கலாம்'
மனதின் வழிகள் கைகளில் ரேகைகள்
ஆவது போல நீரின் ஊடு வழிகள்
மரக்கிளைகளின் திசைகளாகின்றன.

Page 52
50
உருண்டையாக எங்கள் வீடு. கிழக்கே கரிய கூழாங்கல்லாக உக்கிர மகாதேவர் தெற்கே ஆற்றங்கரையில் நாகபூதனும், மலைவாதைகளும். மேற்கே முடிப்புரை நீலி. வடக்கே முத்தாலம்மனும் சுடலையும் பரிவாரங்களும். வடமேற்கே உறைமாடனும் புலைமாடனும் அத்தனை பேரும் நதியிறங்கி நீராட வேண்டும். மலையேறி காடாள வேண்டும். சுடுகாட்டில் சிதை காய வேண்டும். தங்கள் மாறாத பாதைகளில் காலமின்மையில் அவர்கள் நடந்தபடியே இருந்தார்கள். அவர்கள் பாதையில் மனிதர்கள் இல்லை. ஆனால் மனிதர்களின் பாதையில் அவர்கள் உண்டு. குறுக்கே புகும் மனிதர்களில் அவர்கள் சக்திகள் பாய அவர்கள் சிரித்து, அழுது, பித்தெடுத்து, வெறிமூத்து, மந்தித்து வரைகளத்தில் ஆடுகிறார்கள். மலர் சருகாகி, மலம் பொன்னாகி பூமியின் ரகசியங்கள் அவர்களை அலைக்கழிக்கின்றன.
அப்பா இரவில் படுக்கும் கட்டில் உறைமாடனின் சூட்சும வழியில் உள்ளது என்றான் மலையன். அவரது மார்பில் ஏறி இறங்கி மாடன் மறுபக்கம் போகிறான். உக்கிரமூர்த்தி அப்புக்குட்டன் ஏணி வைத்து ஏறி ஒடு பிரித்து போட்டான். அப்பாவிடம் அதையே காரணமாகச் சொல்லி கட்டிலை இடம் மாற்றினோம். அப்பாவுக்கு எதுவுமே பொருட்டாக இருக்கவில்லை. ஆழத்துப்பாறைமீது மோதிக் கொண்டிருந்தது அவரது மனம். திடீரென்று ஒருநாள் கரும்பாறை இடுக்கிலிருந்து ஊற்று கொப்பளித்தெழுந்தது. கரையில் நின்று அப்பா கூத்தாடினார். கண்ணீர் விட்டு அழுதார். தண்ணீரை வாளியால் மொண்டு தலைவழியே விட்டுக் கொண்டு "விசாலம்! விசாலம்!" என்று கூவியபடி ஈரவேட்டி சொட்ட சமையலறைக்குள் புகுந்தார். அம்மா வாய் பொத்தி சிரித்தாள்.
அருண்மொழியை எழுப்ப வேண்டும் போலிருந்தது. இனிச் சற்றும் இத்தனிமையைத் தாள முடியாது. படுக்கையறையில் விடிவிளக்கு ஒளியில் அவள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து நின்றேன். தூங்கும்போது மனிதர்கள் எல்லாப் பாதைகளையும் சுருட்டி உள்ளிழுத்துக் கொண்டு மூடிய கோட்டைகள் போல ஆகிவிடுகிறார்கள். தூங்கும் அருண்மொழி என் மனைவி அல்ல போலும். ஏன் குழந்தைகளுக்குத் தாய் இல்லை போலும். டாய்லட் சென்றுவிட்டு மீண்டும் ஒருமுறை தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தேன். வெளியே இறங்கி தெருவில் நடக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இந்தத் தெருவில், இந்த நகரில், இந்தப் பூமிப்பகுதியில் இப்போது அத்தனை பேரும் தூக்கத்தினால் மூடப்பட்டவர்களாக, அணுக முடியாதவர்களாக இருக்கிறார்கள். எவரிடமும் எனக்கு உறவில்லை. நானிருக்கும் உலகிலிருந்து அங்கு போக வாசல் திறப்பே இல்லை.
பூமியின் மறுபக்கம் இப்போது ஒளியுடன் இருக்கிறது. அங்கு என் போன்ற மனிதர்கள் இருக்கக்கூடும். கணிப்பொறியை இயக்கினேன். ஒரு ரகசிய சுரங்கப்பாதைக் கதவு போல அது திறந்து கொண்டது. இசைத்தட்டைப் பொருத்தினேன் நீர் வழிவது போல
காலம் 8 நவ

எல்லாப் பள்ளங்களையும் நிரப்பியபடி இசை வழிந்தது. நீரின் பாதைகளை அது தேர்வு செய்ய முடியாது என்பது எத்தனை துரதிர்ஷ்டவசமானது. இணையத்தில் தொடர்பு கொண்டேன். வானை நிரப்பும் அப்பிரம்மாண்டமான வலையின் முடிவில்லாத பாதைப்பின்னல்களினூடாக அங்கே மறுபக்கம், காஞ்சனா தாமோதரன், அ.முத்துலிங்கம், கோகுலகண்ணன். சொற்கள் மட்டும்தான் அங்கு போகின்றன. மீதி எல்லாமே இங்கு தங்கிவிடுகின்றன.
திரும்பவும் எழுந்து படுக்கையறைக்கு வந்தேன். அரை வெளிச்சத்தில் தீவிரமான உடலியக்கங்களின் பாவனையில் சைதன்யாவும் அஜிதனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சிறுவீடு தனித்தனி பாதைகளுக்கு இடமில்லாதது. எல்லாப் பாதைகளையும் நூல்கண்டுபோல தன்மீது சுற்றிக்கொண்டது. தூக்கத்தில் அஜிதன் கீழ்ப்பக்கமாக நகர்வான். சுவரின் முடடிய பிறகு பக்கவாட்டில் நகர்ந்து பீரோமுனையை அடைந்து அங்கேயே சுருண்டு கொள்வான். எப்படி எத்தனை தலையணை முண்டு வைத்தாலும் சைதன்யா காலையில் மேஜைக்கு அடியில்தான் கிடப்பாள். அஜிதன் அருகே படுத்துக் கொண்டேன். அவன் என்னை மோதி காலை தூக்கி என் மீது போட்டான். எச்சிலை உறிஞ்சியபடி 'துரத்தக் கூடாது மிஸ்" என்றான். இரவில் அவனருகே படுப்பதில் பிரச்சினை உண்டு. தூக்கத்தில் மூத்திரம் போகாமல் ஓர் இரவுகூட அவன் விழித்தெழுவதில்லை. என் தூக்கத்தின் தனித்த பாதையில் இளம் சூடான நீர் ஒடும் சிற்றோடையில் கால் நனைய இறங்குகையில் சிரிக்கும் சிறு விழிகளும், சற்றே அமுங்கிய மூக்குமாக நான் நன்கறிந்த என் தேவன் தோற்றம் தருகிறான். என் இறுதி மூச்சுக்கு அப்பால் நின்று சிரிக்கப் போகிறவன் அவன் என்று அறிவேன்.
தேவர்கள் உலவும் , ஒலிகளுக்கும் செவிகூர்ந்து தூக்கமின்றி கிடந்த அந்த நாட்களின் நினைவு கனத்தது. தென்னை ஒலைபோல சிறகடிக்கும் தேவதைகள். பனித்துளி போலச் சொட்டும் காலடிகள். இலையோசை போலச்சீறும் மூச்சுகள். நட்சத்திரங்களைப் புள்ளிகளாக்கி தேவி பகவதி இரவில் ஒரு பிரம்மாண்டமான கோலத்தை வாளில் வரைவதாக பாட்டி சொன்னாள். நடசத்திரங்கள் ஒட்டியிருந்து நடுங்கும் அந்தக் கோலத்தின் கோடுகள் மீது நான் தூங்காது படுத்திருந்த எங்கள் பழையவீடு ஒடை நீரில் சருகு போல ஒழுகிச் செல்வதை உணர்ந்தேன். அன்று, கிணற்றில் நீர்கண்டதற்கு முந்தைய நாள் இரவில், கண் இல்லையென்றாகும் இரவில், பிரமையோ என அம்மாவின் காலடியோசை அப்பாவின் அறையிலிருந்து திரும்புவதைக் கேட்டேன்சிலந்தி இரவில் துங்குவதேயில்லை. இரவில் அதன் பாதைகள் பெருகிப் பெருகிச் செல்கின்றன. ஆகவே தான் காதல் நிரம்பிய இனிய இரவொன்றின்மீதியில்தூக்கத்தில் "நான் போறேன் நான் போயிடறேன்" என்று இவள் புலம்பியபோது அதிராமல் இருண்டவெளியைப் பார்த்தபடி திறந்த கண்களுடன் மார்மீது கையணைத்துப் படுத்திருக்க முடிந்தது. நேர் எதிர்திசைநோக்கித் திரும்பி வேறு ஒரு பாதையில் வெகுதூரம் செல்ல முடிந்தது.
O
Ji 2001

Page 53
கட்டுரை 5
ஜின் ஜெனே: வாழ்க்கையும் படைப்புகளும்
ஜீன் ஜெனே (1910 - 1986) வழக்கத்துக்கு மாறான திறமையுள்ள எழுத்தாளர். ஐந்து நாவல்கள், Prisoner of Love என்ற நினைவுக் குறிப்புக்கள், பல நாடகக் கவிதைகள், பல ஓரங்க நாடகங்கள், Maids உட்பட, மூன்று முழு நீள நாடகங்கள், பல சினிமாப் பிரதிகள், பல கட்டுரைகள் - அதில் அவர் அல்பேட்டோ கியாகொமெற்றி என்ற சிற்பியைப் பற்றி எழுதிய கட்டுரையும் ஒன்று. சிற்பிகளைப் பற்றி பலரும் எழுதிய கட்டுரைகளில் மிகச் சிறந்தது அது என்று குறிப்பிட்டுள்ளார்பிக்காசோ. 1968க்குப்பின் பல அரசியல் கட்டுரைகள், வியாசங்கள், பேச்சுக்கள் எழுதினார். ASong of Love என்ற காமத்தைத் தூண்டும் இருபது நிமிடச் சினிமா ஒன்றை எடுத்தார். அது கறுப்பு வெள்ளையில் அமைந்த படம். ஒரு குற்றவாளிப் பையனைப் பற்றி றேடியோவிற்கான பேச்சொன்றை எழுதினார். அதை அரசு ஒலிபரப்பத் தடைவிதித்தது. ஒரு ballet க்கு கதை எழுதினார். அதன் பெயர் அடெமி மிறர். அதில் இரண்டு மாலுமிகள் yFIT என்றவன் வரும் வரை நடனமாடுகிறார்கள். ஒருவர் மற்றவரின் பிம்பம்.
இப்படிப் பல நூல்கள் எழுதியிருந்தம் அவர் நாவலாசிரியர், நாடகாசிரியர் என்று மட்டுமே அறியப்படுகிறார். அவரின் பல நூல்கள் பிரசுரமாகாமல் உள்ளன. அல்லது தடித்த அட்டைகளில் மட்டும் பிரசுரமானதால் பொது வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.
மரபு ரீதியான கல்வியைப் பன்னிரண்டு வயது வரையே பெற்றிருந்தாலும் அவர் வகுப்பில் முதலாவது மாணவன். தொடர்ந்து வாசித்து வந்தவர். 12 வயது வரை தன் வளர்ப்புப் பெற்றோருடன் வளர்ந்தவர். உடல் உழைப்பை வெறுத்தவர். மாடுகளை மேய்ப்பதை விட வேறெந்த உடல் உழைப்பையும் செய்யாதவர்.
பதினாறு வயதில் சில சிறு களவுகளுக்காக கொடும் சீர்திருத்தப் பள்ளிக்குச் சிறை சென்றவர். அங்கு புத்தகக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. அது வேலையாட்கள், வயற் கூலிகள், படையினர்ஆகியவற்றையே தயாரித்தது. நாவல்கள், கணிதங்கள் படித்தால் அவர்களின் தரத்திற்கு மேற்பட்ட எண்ணங்களுக்கு ஆட்பட்டு விடுவர் என்ற பயம். இப்படி இருந்தும் அவர் மறுமலர்ச்சிக் கவிஞர் றொன்சட் என்பவரைக் கண்டுபிடித்து வாசித்து இலக்கியத்தின் சக்தியை அறிந்தார்.
காலம் 8 ந
 
 

பத்தொன்பதாவது வயதில் தன் சீர்திருத்த சிறை வாழ்க்கையைக் குறைப்பதற்காகப் படையில் சேர்ந்தார். அங்குதான் டோஸ்ரோவெஸ்கியை வாசித்தார். அவருடைய விருப்பமான எழுத்தாளர் அவர். அவரைப் போலவே இவரும் தூய்மையான தீமை, சமயம், அரசு ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்.
இருபதாவது வயதுகளில் ஐரோப்பா (புழுவதும் பரதேசியாக அலைந்தார். ஸ்பெயின், இத்தாலி, கிழக்கு ஐரோப்பா, ஒல்லாந்து, பெல்ஜியம் என்றும், மொரொக்கோ, டமாஸ்கஸ் ஆகிய இடங்களுக்கும் படை வீரராகச் சென்றார். அக்காலத்தில் அவர் பிரெஞ்சு எழுத்தாளரான அன்ட்ரே Nத்தைச் சந்தித்தார். குழப்பங்களும் சுய உணர்வுகளும் நிறைந்த நீண்ட கடிதம் ஒன்றை அவருக்கு எழுதினார். முடிவில் வழக்கம்போல பணம் கேட்டு முடித்திருந்தார்.
egyoni 67(p3) u The Thief's Journal 67 cip 5Tougólci தன்னை ஒரு கள்ளன், ஆண் பரத்தையன், பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இலக்கிய அபிலாசைகளுடன் பல நூல்களையும் வாசித்து வந்திருக்கிறார். பிரெஞ்சு மொழியும் இலக்கியமும் பகுதி நேரமாகக் கற்பித்தும் வந்திருக்கிறார். அவர் கற்பித்த பெண்ணுக்கு தன் காதலைத் தெரிவித்து ஆறு கடிதங்கள் எழுதியுள்ளார். அப்பெண் மணமானவள். நன்னடத்தை உள்ளவள். அக்கடிதங்களில் றிம்போட், Nத், றாச்சில் போன்றவர்களைப் பற்றி எல்லாம் எழுதியுள்ளார். பெண்களுடன் எக்காலத்துமே உடலுறவு கொள்ளாத இவர் பணத்துக்காக அவரை விரும்பியது போல அக்கடிதம் எழுதியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
அவர் றிம்போட்டின் எழுத்துக்களில் 1ங்கியவர். றிம்பொட்டைப் போலவே தானும் எழுத்தாளனாக வரக் கனவுகள் கண்டவர். றிம்போட்டைப் போலவே படையில் சேர்ந்தவர். அவர் வேளயின் என்ற கவிஞரை பயமுறுத்திப் பணம் பெற்ற மாதிரி இவரும் கொக்ரே என்பவரைப் பயமுறுத்திப் பணம் பெற்றார். அவரைப் போலவே இவரும் பத்தொன்பதாவது வயதுக்குப் பிறகு கவிதை எழுதுவதை விட்டு நாவல் எழுதுவதில் தீவிரமாக உழைத்தார். ஜெனே வணங்கிய இன்னொரு கவிஞன் மாலாம். துறவி போல் வாழ்ந்தவரும் அரூபக்
கவிஞருமான மாலாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர்.
Kui 2001

Page 54
ஜெனேற்றைக் கண்டுபிடித்தவர் கொக்றே. அவரை இவரின் Lady of the Flowers என்ற நாவலை பிரசுரித்தார். அப்போதே ஜெனே பல கவிதைகள், நாடகங்கள் எழுதி முடித்து விட்டார்.
அவரின் புகழ்பெற்ற இரண்டு நாவல்களானLady of the Flowers, Miracle of the Rose 5ual pappy Guit G5 எழுதிவிட்டார். அப்போது அவரை பரிசில் பலர் சந்தித்திருக்கவில்லை. ஆனால் புகழ் கிடைத்துவிட்டது. அது 1943இல், அப்போ பல சில்லறைக் களவுகளுக்காக அடிக்கடி சிறை சென்று வந்தார். 1943இல் நெடுங்காலச் சிறைத் தண்டனை கிடைக்கும் தறுவாயில் இருந்த போது கொக்றே இவருக்காக நீதிபதியிடம் மன்றாடினார். மூன்று மாசசிறைத்தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார். அப்போது கொக்றே இவரை நவீன யுகத்தில் வாழும் தலைசிறந்த எழுத்தாளன் என்றும் ஜெனேயை றிம்பொட்டுடன் ஒப்புமைப் படுத்திப் பேசி றிம்போட்டை சிறையில் இட மாட்டார்கள் என்று சொல்லியும் இவரைப் புகழ்ந்தார்.
1942 - 1947 ஜெனே தன் சிருஷ்டியின் உச்சத்தில் இருந்த காலம். இந்தக் காலத்தில்தான் அவர் தன் நீண்ட seúlsingumeð The Fishermen of SuQuetg? 67(pgeIni. gsög pirauais GTITaT Our Lady of the Flowers, Miracle of the Rose, Querele, The Thiefs Journal eg8uaup60puy lib egyauficit நாடகங்கள் பலவற்றையும் அதில் Deathwatch, The Maids அடங்கும்.
இந்தக் காலத்தில் அவர் சிறையில் அல்லது சிறைச் சாலைக்கு எந்நேரமும் போகலாம் என்ற நிலையில் இருந்தார். தனது முதலிரண்டு நாவல்களையும் மற்ற கைதிகளுடன் இரைச்சலான சிறை அறையில் இருந்தே எழுதினார். (இது தொடர்பாக பேட்டியை வாசிக்கவும்) அவர் இக்காலத்தில் பயங்கரமான வயிற்றுப் பசியுடன் இருந்தார். அவர் தன் பிரசுரகர்த்தாவுக்கு உணவுப் பார்சல் அனுப்பும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பார். தான் பிரெஞ்சு இலக்கியத்துக்கு தனித்துவமான, தலை சிறந்த இலக்கியத்தை அளிப்பதாகவும் குறைந்தது அதற்காக உயிர் வாழ்வதற்கு உணவாவது தருவது அவசியம் எனவும் கடிதங்களில் கேட்டார்.
உண்மையில் அவர் தன் சாதனைகளைப் பூதாகாரப் படுத்தி எழுதவில்லை. அவரின் நடை எதிர்பாராத உருவகங்கள் நிறைந்தது. வலிமையான கவித்துவ உணர்திறன் உள்ளது. அவரின் படைப்புக்களை வாசித்த உண்மைக் கலைஞர்கள் அவரின் மேதைமையை சட்டெனக் கண்டுபிடித்தனர். சிமோன் த போவியருக்கும் சாத்தருக்கும் ஜெனே மூலம் எதிர்காலத்தில் நாவல் இலக்கியம் வாழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சாத்தர் தன் மதிப்பீடுகளில் ஜெனேயைக் குறிப்பிட்டார். முக்கியமான இலக்கியப் பரிசில் கிடைக்கச் செய்தார். செயின்ற் ஜெனே என்ற முழு நீளக் கட்டுரைநூல் ஒன்றை எழுதினார். அதில் ஜெனேயை "இருப்பியல் உளவியல் பகுப்பாய்வு" செய்தார். அவரின் நூலுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பின் Glas என்ற நூலில் இன்னுமொரு மெய்யியலாளரான ஜாக்குவிஸ் டெரிடா முழு அளவு
asrAxb X8 !

அலசல் செய்தார்.
ஜெனேயைப் பலருக்குப்பிடித்த காரணங்களில் ஒன்று அவரின் உரைநடை. அது தனித்துவமானது. அடர்த்தியானது. மார்சல் பிறவுஸ்ற்றின் நடையைப் போல ஒவ்வொரு வரியும் புத்திக் கூர்மையானது. பிறவுஸ்ற்றை வாசித்ததால் தான் ரான் எழுத ஆரம்பித்தேன் என்று அவர் தன் பேட்டி ஒன்றில் ஒருவருக்குக் கூறியுள்ளார். அவருடைய சமூக அல்லது ஒழுக்க பகைப்புலன்கள் மற்றவர்கள் எவரிடமும் காண முடியாததொன்று. மெய்யியல் மனத்துள்ளவர். சம்பவங்கள் பற்றிய புதிய அர்த்தங்களைக் கொடுப்பதிலும் திறமையுள்ளவர். என் பாத்திரங்கள் எனது சிறந்த கற்பனைத் திறனால் கண்டுபிடிக்கப் பட்டவை என்று அவர் நிலைநாட்டுவார். தன் பாத்திரங்களைப் படைப்பதும் கண்டுபிடிப்பதும் தன் கரமைதுன உணர்ச்சியினால்தூண்டப் பெற்றதே என்பார். அவர் தான் ஒரு பொறுப்பற்ற கடவுள் என்றும் உயிர்ப்புள்ள பாத்திரங்களைப் படைப்பது மாத்திரம் அல்ல அவற்றை அந்தோ என்று பாதி வழியில் தொம்மென்று போட்டுவிட்டு நடையைக் கட்டும் ஒருவர் என்றும் கூறுவார்.
அவர் இரண்டு மூன்று குறுநாவல்களை ஒரேநேரத்தில் எழுதிக் கொண்டு இருப்பார். பின் மூன்றையும் சேர்த்து airpit disuyub 6.5Gouni. Our Lady of the Flowers 6Taip நாவலில் மூன்று வெவ்வேறான சரடுகள் இழையோடுவதைக் காணலாம்.
அவர் வாசகர்களுடன் பிரச்சினைக்குரியவராகவே இருப்பார். அவர் மத்தியதர வர்க்க, கெளரவபன, ஈரினப் புணர்ச்சி ஆண் வாசகர்களுக்காக எழுதுவதாகச் சொல்வார். ஆனால் அவர்களை அவர் மாறி மாறி வசப்படுத்தவும், பயப்படுத்தவும், அணைக்கவும், பயமுறுத்தவும், தன்பால் கவரவும், தள்ளவும் செய்வார். இந்த உறவுதான் அவரின் நாவல்களில் காணப்படும் அம்சம் - சதாமாறுவதும், அசெளகரியமானதுமான உறவு.
அவருடைய நாவல்கள் தன் சுய வாழ்வு சம்பந்தப் பட்டதென்று அவர் கூறியபோதும் 966). மெய்ம்மைகளைப் பொறுத்தவரை சுதந்திரமாகத் திரிக்கப்பட்டும் உள்ளன. இருந்தும் அவருடைய வாழ்வின் முக்கியமான கட்டங்களை அவ்வெழுத்துக்கள் சித்திரிக்கின்றன.
அவர்தன் கடைசி நாவலானThe Thiefs Journal முடிந்த போது அவரின் சுயவாழ்வு பற்றிய விசயங்கள் எழுதி முடிந்து விட்டன. கள்ளனாக, வேசியனாக, பரதேசியாக, இருந்த காலம் போய் பரிசில் புகழ்பெற்ற கலைஞனாக பெயர் பெற்று உயர்ந்தும் விட்டார்.
அவருடைய The Maids என்ற நாடகம் 1947 ஏப்ரல் 19இல் பரிசில் மேடையேற்றப்பட்டது. இருந்தும் அது ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனதில் கருத்தரித்திருந்தது பலமுறை திரும்பத் திரும்ப திருத்தி எழுதப்பட்டது. அது அவரின் ஓரினப்புணர்ச்சி பொருளிலிருந்து விலகிச் சென்று அடக்குமுறை பற்றி
bui 2001

Page 55
எழுதப் பெற்றது என்று அவர் தன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த நாடகத்தில் குடும்பத்தில் வேலை செய்யும் வேலைக்காரிகளின் அவமானம் எடுத்தாளப் பட்டுள்ளது. The Balconyஇல் வேசிகளின் துன்பங்ளும் பகட்டாரவாரங்களும், The Blacksஇல் ஆப்பிரிக்கக் கறுப்பர்களின் எரிந்து கொண்டிருந்த சீற்றமும், The Arabsஇல் அரபியர்களின் சீற்றமும் காட்டப்பட்டுள்ளன.
1948 முதல் 1955 வரை ஒன்றும் எழுதாமலே இருந்தார். இந்தக் காலத்தில்தான் சாத்தரின் புனித ஜெனே என்ற கட்டுரை நூல் வந்தது. அதுவே அதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அக்காலத்தில் அவர் தற்கொலை செய்யும் மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்தார். ஆனால் சாத்தரின்நூல் 1952இல் வெளிவந்தது. அதாவது குறைந்தது அப்போது எழுதாமல் விட்டு நாலு வருசம் ஆகிவிட்டது. அவரின் சிருஷ்டித்தனம் வரண்டு விட்டமை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அதற்கும் மேலாக அவருக்குக் கிடைத்த ஜனாதிபதி மன்னிப்பு அவரின் மனநிலைக்கு ஒத்துவரவில்லை. இவரின் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை காத்திருந்தது. அதை நீக்கச் சொல்லி சாத்தரும் கொக்றேவும் வார்த்த பெட்டிசனில் பரிசில் இருந்த உயர்ந்த கலைஞர்கள் பலர் - அதில் பிக்காசோ முதல் போல் குளோடல் ஈறாக கையொப்பம் இட்டு பிரான்சின் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்தனர். இது நடந்தது 1948 யூலை மாசம். ஓராண்டின் பின் 1949 ஒகஸ்ற் 12இல் அந்த மன்னிப்புக் கிடைத்தது. இதன் பின் அவர் தன்னைச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவன் என்று கூறமுடியாமல் போய்விட்டது. அவரின் பேனாவின் சக்தியால் அவர் எதிர்த்த, அவரை அவமானப்படுத்திய அதே அமைப்பை வென்ற அம்மாயம் நடந்தது. அவருக்கு அவ்வெற்றியே அவரின் சிருஷ்டி வீழ்ச்சிக்கும், சுயமன அழுத்தத்துக்கும் காரணமானது போலும்.
இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு ஜெனேயின் இரண்டு கண்டுபிடிப்புக்கள் காரணமாயின. ஒன்று, அல்பேட்டே ஜியாகொமெற்றி என்ற சிற்பியை 1955இல் சந்தித்து இருவரும் இணை பிரியாத் தோழர்களானது. ஜெனே அவரைப் பற்றி ஓர் அருமையான கட்டுரை எழுதினார். ஜியோகொமெற்றி எந்த அகங்காரமுமற்ற ஒரு மனிதர். அவர் தன் வேலையைக் கடுத்தவமாக இயற்றியவர். அதே வேளை மனிதத்தை நேசித்தவர். அவர் ஜெனேக்கு எப்படி ஒருவர் முதிர்ச்சி அடைவது என்ற தத்துவத்தைக் காட்டிக் கொடுத்தார் - பண்புடன் இல்லாவிட்டாலும் நேர்மையுடனும் வேகத்துடனும் இருக்க. இரண்டாவது, ஒருமுறை றெயினில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மறைஞான அனுபவம் கிட்டியது. றெயினில் அவர்முன்னால் ஒரு வெறுக்கத்தக்க ஒரு சின்னஞ் சிறிய மனிதன் குந்தி இருந்தான். அவனுக்கும் இவருக்கும் இடையே அவரவர்ஆன்மாவின் பரிமாற்றம் நடைபெற்றதாக பிரத்தியட்சமாக உணர்ந்தார் ஜெனே. அவரும் மற்றவரைப் போன்ற ஒருவர்தான், தான் மற்றவர்களைவிட வேறானவர் அல்லர் என்பதை உணர்ந்து கொண்டார் ஜெனே. இந்த உணர்வுதான் அவரை நாடக அரங்குக்கு அழைத்துச் சென்றது. நாடக அரங்கம்
காலம் 8 நவ

ஒரு சமூகம் சார்ந்த ஒரு கலை. எவனும் சமூகத்தில் ஒரு அங்கம் என்பதை உணர்த்துவது அது. அதில் உரையாடல்கள், செயல்கள் அனைத்தும் அரங்கத்தில் உள்ளவர்களை மனதில் கொண்டு இயக்கப்படுவது. அத்துடன் எந்த விமர்சனத்தையும் வெளிப்படையாக வைக்காதது. ஆனால் அது உள்ளோடி இருக்கும். அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஜெனே. இந்த அனுபூதி நிலையும், அதனால் ஏற்பட்ட மாற்றமும் அவரை மீட்டெடுத்தது.
கியாகொமெற்றியைச் சந்தித்த அதே ஆண்டு - 1955 - தான் அப்துல்லாவையும் சந்தித்தார். அப்துல்லா ஒரு சேர்கஸ் விளையாட்டுக்காரன். அவனை உயரத்தில் கயிற்றில் நடப்பவனாக ஆக்கினார் ஜெனே. அவனே இவரின் காதலனாகவும் இருந்தான். கயிற்றில் நடப்பவனும் எழுத்தாளனும் ஒரே மாதிரி துணிந்தவர்கள் என்றும் ஆபத்துக்குப் பயந்தவர்கள் என்றும் ஜெனே கருதினார்.
அவர் தன் காதலர்களை ஆபத்தின் நுனிக்கே தள்ளுவார். அப்துல்லா இரண்டு முறை விழுந்தான். அதனால் மன அழுத்தத்திற்கும் செயலின்மைக்கும் ஆளாகினான். பின் 1964இல் தற்கொலை செய்து கொண்டான். இந்தக் காலம்தான் ஜெனேயின் இரண்டாவது நீண்ட மெளனத்தின் ஆரம்பம். அப்துல்லாவின் தற்கொலையினால் மனம் வருந்திய ஜெனே இனிமேல் பேனையைத் தொடுவதில்லை எனச் சபதம் செய்தார். முரண் அணியாக இநதக் காலத்தில்தான் அவரின் நாடகங்கள் பரிசிலம் சர்வதேசங்களிலும் கொடி கட்டிப் பறந்தன. The Screens என்ற நாடகம் பரிசில் 1966 முதலாவதாக மேடையேறி போது - அல்ஜீரிய யுத்தம், பிரெஞ்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் நடைபெற்றது. அல்ஜீரியர் தங்கள் சுதந்திரத்துக்காகப் போராடி வெற்றி பெற்றார்கள். பிரான்ஸ் தங்கள் கொலனியை இழந்து சில காலமே ஆகியிருந்தது - அல்ஜீரிய யுத்தத்தில் பங்கு பற்றி தோல்வியுற்றும் உயிர்களை இழந்தும் வந்திருந்த படையினர் நாடக அரங்கில் ஏறி மறித்தும், புகைக் குண்டுகள் வீசியும் குழப்பினர். ஆனால் அந்நாடகம் தொடர்ந்த நடந்தது.
ஜெனேயின் அரங்க எழுத்துக்கள் கலையைப் பொறுத்தளவில் புரட்சிகரமானவை. அவர் தான் Theatre of Ritual - சடங்கு அரங்குக்கு முன்னோடி. 1960களில் இந்த நாடகப் பாணி அமெரிக்காவில் கலை வட்டங்களில் Guatul Los Tairgi. The Maidsolub The Balcony-gait ஆரம்ப காட்சிகளும் The Blacks-இன் முழு நாடகமுமே ஒரு செயல், அதாவது கொலை ஒன்றைச் செய்வதற்காக முழு அளவில் நடத்தப்பட்ட சடங்குத் தயாரிப்பே. அது போலவே The Deathwatchஉம். ஆனால் அவை புரட்சிகரமானது என்றோ படிப்படியாக வளர்க்கப்பட்ட தென்றோ பிரகடனப்படுத்தப் படுவதில்லை. அதனால் தான் இந்நாடகங்கள் தன்னை அவற்றில் ஈடுபடுத்தவில்லை என்று சாத்தர் அவற்றை வெறுத்தார். ஆனால் அந்நாடகங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் நோக்கங்களுக்காக அரங்கேற்றினார் ஜெனே. The Blacks youd ridids TaSai GudeoLGugu Gung lui 2001

Page 56
1060களில் சிவில் உரிமைப் போராட்ட காலம் கறுப்பர்களின் சீற்றத்தை வெளிக்காட்டவில்லை என்பதையே காட்டிற்று.
அவர் நாடகங்களில் பிடிப்புக் கொண்டது போல சினிமாவிலும் ஈடுபாடு காட்டினார். ஆனால் அதில் அத்தனை வெற்றி பெறவில்லை. 1950இல் இருபது நிமிட கறுப்பு வெளுப்பு மெளனப் படம் எடுத்தார். அதன் பெயர் A Song of love. தொழில் சார் தொழில் நுட்பவியலாளர்களையும் அமெச்சூர் நடிகர்களையும் அதில் பயன்படுத்தினார். சிறை வாழ்வு பற்றிய கவித்துவ அழகுள்ளது இது. அது ஓரினப்புணர்ச்சியுள்ள காமத்தை உள்ளடக்கியது. அதில் நினைவில் நிற்கும் ஒரு பிம்பம்: அருகருகே அறையில் இரு சிறைக் கைதிகள். அவர்களைத் தடுக்கும் அவ்வறைச் சுவரின் துவாரம் ஒன்றினூடாக ஒரு காம்பை விட்டு சிகரெட் புகையை ஊதுகிறார்கள்.
கடைசி பதினாறு வருடங்களும் - 1970-1986-திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல, இவர் 1970களின் ஆரம்பத்தில் Black Panthers க்கு ஆகவும் பலஸ்தினியர்களுக்காகவும் தன் எழுத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். ஐக்கிய அமெரிக்கா முழுவதும் பிளாக் பந்தேர்சின் கொள்கைகளின் பேச்சாளனாகப் பயணம் செய்தார். ஜோடனியர்களின் கூடாரங்களில் பலஸ்தீனியர்களுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். அவர்களின் கொள்கைகளுக்காக எழுதிய சில பிரகடனங்கள், பேட்டிகள் தவிர்ந்து வேறு ஒன்றையும் அவர் எழுதவில்லை. அவர் உலகம் முழுவதும் பயணம் செய்தார். 1979இல் அவருக்கு தொண்டையில் புற்று நோய் உள்ளது என்பதை அறிந்தார். தன் வாழ்க்கைக் காலம் குறுகிக் கொண்டு வருவதை உணர்ந்தார். நேரம் "புனிதமானது அந்நேரத்தை வீணாக்கக் கூடாது என்பது அவர் கொள்கை.
இறுதியாக அவர் 1982இல் பெய்ருட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற போது ட்டில்லா, சப்ரா என்ற இரு கூடாரங்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனிய குடிமக்கள் தாறுமாறாக மிருகத் தனமாகப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டார். அவர் தான் முதன் முதலில் அப்படுகொலையைக் கண்ட முதல் ஐரோப்பியர். தன் இலக்கிய மெளனத்தைக் கைவிட்டு ஃபோ ஹவர்ஸ் அற் ட்டில்லா என்ற கட்டுரையை எழுதினார். அந்தக் காட்சி அவரை உலுக்கியதால் அதுபற்றி 1983இல் ஒரு நூலை எழுத ஆரம்பித்தார்.
ஜின் ஜெனேயு இது மடெலீன் கொபெய்ல் என்ற கனேடிய பத்திரிகையா நண்பரான சிமோன் த போவியரின் உதவியால் சந்தித்தார் ெ க்காக இந்தப் பேட்டியை எடுத்தார். அந்தச் சஞ்சிகை எவ்வா பகுதியைத்தனக்குத்தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டா இப்பேட்டியின் சுருக்கமே அச்சஞ்சிகையில் பிரசுரமானது, அப்படியே எடுக்கப்பட்டது. இதுவே சுருக்கப்படாத ஆங்கி என்ற அமெரிக்க சிறை எழுத்தாளன் பற்றியும் குறிப்புக்கள்

அதுவே Prisoner of Love என்ற நூல். அவர் இறப்பதற்கு முதல் இரவு - 1968 ஏப்ரில் 14 அந்நூலின் கடைசி படியையும் பார்த்து முடித்திருந்தார். அவர் இறந்து ஒரு மாசத்தின் பின் அந்நூல் வெளிவந்தது.
இந்த நாவலும் தன்மை ஒருமையில் எழுதுப்பட்டது. தன் அனுபவம், அவர் பார்த்தவைகள் அதில் உள்ளன. சினிமாப் படக்கோர்வை போல அது தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் கையாளப்பட்டுள்ள உரைநடை அவருடைய மற்றநூல்களைப் போன்றதல்ல. வாசகர்களை நோக்கி நேரடியாக, நேர்மையாக எழுதப்பட்டது. அவர்தான் ஒரு புறத்தியான் என்று கூறிக் கொண்டாலும் மற்றவற்றில் உள்ளது போல இல்லாமல் சாதாரண மானிடப் பெறுமதிகளை துணிவு, நாணயம் போன்றவை - பற்றியே எழுதினார். வாசகர்களை நேரடியாக நம்ப வைக்கும் எண்ணத்துடன் இதை எழுதினார். பழைய அதிரடித் தாக்குதல் பாணி நடையை விட்டு உரைநடைப் பாணியில் திரும்பவும் கூறல் முறையில் எழுதினார்.
இந்த நாவல் பலஸ்தினியரிடமும் பிளாக் பந்தேர்சிடமும் இருந்த அவரின் உண்மையான பற்றைக் காட்டகிறது. அவற்றின் நோக்கங்கள் இரண்டுமே ஐரோப்பியர்களைப் பொறுத்தளவில் ஆபத்தானதும் நகைப்புக்கிடமானதும் ஆகும். அவை இரண்டுமே தோல்வியானவை.
ஜெனே இறந்த போது அவரை மொரொக்கோவில் உள்ள லாறாச்சி என்ற இடத்தில் புதைத்தார்கள். அவருடைய கடைசிக் காதலான மொகமெட் எல் கத்ராணி என்பவரின் வீட்டிற்கு அண்மையில். அவர் முஸ்லீம் அல்லாதபடியால் அவர் ஒரு கைவிடப்பட்ட சவச்சாலையில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அது கடலுக்கு மேலுள்ள ஒரு மலைமேட்டிலும் சிறைச்சாலை ஒன்றிற்கும் வேசி வீடொன்றுக்கும் மிகஅருகாமையிலும் தெய்வாதீனமாக ஆனால் பொருத்தமாகவே அமைந்து விட்டது. அவரின் பெயர் பொறித்த தலைக்கல்லை எவரோ களவெடுத்துவிட்டதால் அவருடைய நெருங்கிய காதலனில் ஒருவனாகிய ஜக்கி மக்லியா - அவனுடைய கையெழுத்தும் ஜெனேயின் கையெழுத்தும் பார்ப்பதற்கு ஒரே எழுத்துப்போல இருக்கும் - அதைத் திருப்பி எழுதி வைத்தான். அதைப் பார்க்கும்போது ஜெனேயே தன் கையால் தன் புதைகுழியில் எழுதியது போல உள்ளது.
டன் ஒரு பேட்டி ளருக்கு அளித்த பேட்டி, ஜெனேயை அவர்கள் இருவர்களதும் காபெய்ல், அமெரிக்க ஆண்களுக்கான சஞ்சிகையான Playboy ாவு தொகை பணம் அவருக்குக் கொடுக்கின்றதோ அதில் ஒரு ர் ஜெனே. இந்தப் பேட்டி பரிசில் 1964ஜனவரி இடம்பெற்றது. இந்தப் பேட்டி கொபெய்ல்சின் தட்டச்சுப் பிரதியில் இருந்து லப் பிரதி. இதில் அப்போது பிரபல்யமான கரில் செஸ்மான் பருகின்றன.
auiui 2001

Page 57
1964 ஜனவரியில் ஜெனே அமைதியான மனநிலையில் இருந்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. அண்மையில் தான் அவரின் முக்கிய நாடகங்களானThe Blacks, The Balcony, The Screens அவர் எழுதி முடித்திருந்தார். அத்துடன் அப்துல்லா என்பவருடன் நீண்டகாலமாக உணர்ச்சிமிக்க காதலில் ஈடுபட்டிருந்தார். அப்துல்லா ஒரு கழைக்கூத்தாடிக் கலைஞன். இப்போது அவனை விட்டு ஜக்கி மக்லியா என்ற வேகக் கரோட்டியுடன் தொடர்பு வைத்தார்.
இந்தப் பேட்டி நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின் இவரால் கைவிடப்பட்ட அப்துல்லா தற்கொலை செய்து கொண்டார். அதனால் மனமுடைந்த ஜெனே பல ஆண்டுகள் இலக்கியத்தையே கைவிட்டு விட்டார். அது அவருடைய இருண்ட, தற்கொலைக் காலம். அதிலிருந்து 1970 வரை மீளவில்லை. அதன்பிறகு அவர் Black Panthers, பலஸ்தீனிய அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டார்.
மடலீன் கொபெய்ல்: ஜீன் ஜெனே இன்று நீங்கள் புகழ்பெற்ற எழுத்தாளர். உங்கள் எழுத்துக்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உங்கள் The Blacks என்ற நாடகம் நியூ யோர்க்கில் கடந்த மூன்று வருடங்களாக நடை பெறுகின்றது. The Balcony நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் Lua Fidgoss606Tai Sati Sugirangi. Our Lady of the Flowers என்ற உங்கள் நூலுக்கான ஆங்கில அமெரிக்க விமர்சன எதிர்வினைகள் மிகச் சிறப்பானவை. உங்கள் இறுதிப் படைப்பு வெளிவருமுன் உங்களைப் பற்றி பிரான்சின் புகழ்வாய்ந்த ஜீன் போல் சாத்தர் அறுநூறு பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். இருப்பினும் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த ஒரு சொற்றொடர்: நீங்கள் ஒரு "கள்ளன், துரோகி, கோழை, ஒரினப்புணர்ச்சியாளன்' என்பதே. அது ஒரு விளம்பரச் சலசலப்பொலி போலவே உள்ளது. இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
ஜீன் ஜெனே: ஆழமான செயல்நோக்கங்களைக் கண்டுபிடித்து அவற்றை உபயோகிப்பதில் எதுவித பிழையும் இல்லை. அதை விளம்பரம் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விளம்பர வாசகத்தை விளம்பர ஏற்பாடாக நான் செய்திருந்தேனாகில் நான் சிலவேளை அதில் வெற்றி பெற்றிருப்பேன்.
என் நூல்கள் வந்த நேரத்தில் - அதாவது இருபது வருடங்களுக்கு முன் - நீர் சொன்ன அத்தனையையும் அழுத்தி இருப்பேன். அதில் சந்தேகம் இல்லை. அவற்றிற்காக காரணங்கள் எப்போதுமே தூய்மையானவை அல்ல. அதாவது, எப்பொழுதுமே அவை கவித்துவ ஒழுங்குக்கான காரணங்களால் தூண்டப்பட்டவை அல்ல. பிரபல்யம் அச்சட்டகத்துள் வந்து சேர்ந்துவிட்டது. அதைப் பூரணமாக உணராமல் நான் சுய விளம்பரம் செய்து கொண்டிருந்தேன். இருந்த போதிலும் இந்த வியாபாரத்தில் நான் இலகுவான கருவிகளைத் தெரிவு செய்யவில்லை. அவை என்னை ஆபத்துக்களிலும் மாட்டிவிட்டன. என்னை நான் ஓரினப்புணர்ச்சியாளன், கள்ளன், துரோகி, கோழை என்று என்னையே நான் வெளிப்படையாக அழைத்தது
Saxò

55
நான் உண்மையைத்தான் எழுதினேன்
என்று சொல்லவில்லை.
ஆனால்
நேர்மையாக எழுதினேன்.
பேரார்வத்துடனும் சீற்றத்துடனும்
என்னையே காட்டிக் கொடுத்தது. அது என்னை நித்திரை கொள்ள முடியாத, சமூகத்தால் இலகுவாக ஜீரணிக்க முடியாத படைப்புக்களைப் படைக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு என்னைத் தள்ளியது. சுருக்கமாக, ஊடகக் கிளர்ச்சிகளை வெளிப்படையாகவே ஏற்படுத்துவதற்குச் சொன்னதால் நான் நேரடியாகவே என்னை சமூகம் உடனடியாக அடைய முடியாத ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டேன்.
கொபெய்ல்: நீங்கள் ஏன் ஒரு கள்ளனாக, துரோகியாக ஓரினப்புணர்ச்சியாளனாக இருக்கத் தீர்மானித்தீர்கள்?
ஜெனே: நான் தீர்மானிக்கவில்லை. நான் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. ஆனால் சில மெய்ம்மைகள் உள்ளன. நான்களவெடுக்க ஆரம்பித்தேன் ஏனெனில் எனக்குப் பசித்தது. பின்பு அந்தச் செயலை நியாயப்படுத்த வேண்டி வந்தது. அச்செயலுடன் நான் சமாதானம் செய்ய வேண்டி வந்தது. ஓரினப்புணர்ச்சி பற்றி எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. ஒருவருக்கு அது எப்படித் தெரியும்? ஒரு மனிதன் எந்தெந்த நிலைகளில் கிடந்து ஏன் புணர வேண்டும் என்ற காரணம் எங்களுக்குத் தெரியுமா? என் கண்ணின் நிறத்தைப்போல எனக்கு இரண்டு கால்கள் உள்ளன போல எனக்கு ஓரினப்புணர்ச்சி சுமத்தப்பட்டுள்ளது. சிறு பையனாக இருந்த போதே மற்றப் பையன்கள் என்னில் கவர்ச்சி கொண்டது பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும். எனக்குப் பெண்களில் கவர்ச்சி ஏற்படவில்லை. இந்தக் கவர்ச்சி பற்றிய பிரக்ஞை எனக்கு ஏற்பட்ட பின்னரே நான் "தீர்மானித்தேன்' சுதந்திரமாக "தெரிவு" செய்தேன். சாத்தரின் சொல் அர்த்தத்தில். வேறு வார்த்தைகளில் சொன்னால் அல்லது எளிமையாகச் சொன்னால் அதற்கு நான் பழக்கப்பட வேண்டி ஏற்பட்டது. சமூகம் அங்கீகரிக்கவில்லை என்றாலும்.
கொபெய்ல்: கடைசியாக எப்போது சிறைச்சாலையை
விட்டு வெளியே வந்தீர்கள்?
ஜெனே: நான் நினைக்கிறேன் அது 1945 இல். கொபெய்ல்: உங்கள் வாழ்க்கையில் எத்தனை
வருடங்கள் அங்கு கழித்தீர்கள்?
நவம்பர் 2001

Page 58
அந்தராக்ஸ் (உயிராயுதம்)
நெடிதுயர்ந்த தத்துவங்கள் காலாவதியாகும் அந்திக்காலத்தின் பொழுதில் அவர்கள் தோன்றினர் அவர்கள் நீள அங்கியும் சுருள் முடியும் கொண்டிருந்தனர் யூதர்களைப் போல
கருங்கடலும் அன்று கறுத்துக் கிடந்திருத்தல் வேண்டும் பெருவாவியில் எழும் அலை நகரத் தெருவரையிலும் நுரைதள்ளியது
சவரம் துறந்த அவர்கள் தாடையில் திட்டுத்திட்டாய் பூத்துக்கிடந்தது நரை, அவர்கள் அழுதனர்
செவ்விந்தியர்களுக்கான தேசம் இன்னும் கிட்டாத காலத்தில் அவர்கள் தம் - பிற தேச குடியுரிமை பெற மறுப்பதின் நியாயம் பற்றிக் கதைத்தனர்
உடைவுண்டு போன
சமதர்ம சமூகத்தின் 'கடைநிடைத் தொண்டர்கள்தாம் என்பதில் அவர்கள் உறுதியாய் இருந்தனர். பின் பின்நவீனத்தின்
முதல் உறுப்பினரும் தாமே, அந்தக் கர்வத்திலும் அவர்கள் கெட்டி
மெத்தை இருக்கை தவிர்த்து தரையிலமர்ந்து கஞ்சா இழுத்தனர் இடைக்கிடை - இல்லை காலம் முழுவதும் நாங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் எனும் வட்டம் விட்டு வெளிவரத் தெரியாத 'அது' வாகவும் இருந்தனர்.
56
விளிம்புநிலை பற்றியும்
அதன் ஸ்திர தன்மையின் நேர்த்தி பற்றியும் சமயங்க படுக்கை அறையில் அழு அணிவதும் கூட கலகம்"
அவர்கள் மொழியில் மறுதலிப்பின் மொத்த அ நானாக இருந்தேன் நெடுஞ்சாலையில் நான் ெ நேர்வழிப் பயணம் என்ப அவர்களின் அதிருப்தி சிக்கல்கள் நிறைந்த சனசந்தடியும் சந்தைகளும் குறுக்குச் சாலைகளே நாம் சார்ந்தவர்களின் பா அவசியம் என்பதை என்ன
நான் பியர்குடித்தேன் என்னை அவர்கள் நிராகரி இன்னும் என்அடிப்படையையும் ஆ ஏனென்று சொல்லாது ஆபரணத்தையும் நிராகரித் ஆனாலும் அவர்கள் அணிகலனும் ஆடையும்
ஈரக் கூந்தலில் உடையாத ஒற்றை ரோசாப்பூவுக்குள் அடங்கிவிடுகிறது என் உ ஒரு அடைபனிக் காலத்தி கோடையின் விளிம்பு நா6 குஞ்சு பொரிக்கும் என் கவி என் உலகம் தனி
அவர்களை நான்மறந்து ெ ஆயினும் ஏனோ நண்பனின் வருகைக்கு பி காணாமல் போகும் புத்தக இப்போதென் மனம்
ஜெனே: மொத்தமாக, இருந்ததையும் சேர்த்தால் ஏழு வருடம் மட்டில் வரும்.
சீர்திருத்தப் பள்ளியில்
கொபெய்ல்: சிறையிலா உங்கள் படைப்புக்கள் உருவாகின? நேரு சொன்னார்: தன் வாழ்க்கையில் சிறையில் இருந்த காலம் தான் சிந்திப்பதற்குச் சிறந்த
காலமாக இருந்தது என்று.
ஜெனே : அப்படியானால் அவர் அங்கு திரும்பிப்
போகட்டும்.
கொபெய்ல்: இன்றும் நீங்கள் களவெடுக்கிறீர்களா?
கலம் 2 நவம்
 

களில் க்குக் காலணி என்றனர்
டையாளம்
செல்வது
து | NA
ர I ہے
Seri и sysYJV \! e
தையாக இருத்தல் TȘgs I द्वे s
ரில் திணித்தனர் ( SS,
கூட உள்ள
த்தனர்
அடையாளத்தையும்
ந்தனர்
அணிந்திருந்தனர்.
ஒரு துளிக்குள்ளும் ளும
லகம் ல் அடைகாத்து ரில்
பிதை,
நடுநாளாயிற்று
ன்
ம் போல WW
5.
ஜெனே: நீர் மிஸ்?
கொபெயல்:.
ஜெனே: நீர் களவெடுப்பதில்லையா? நீர் களவே எடுக்கவில்லையா?
கொபெய்ல்:.
ஜெனே: நிச்சயமாக, நான் முன்பு களவெடுத்த மாதிரி இப்போது எடுப்பதில்லை. இப்போது நான் என் புத்தகங்களுக்கு றோயல்ரியாக பெரும் பணம் - குறைந்தது என்னைப் பொறுத்த அளவில் அது பெரும் பணம் -
ui 2001

Page 59
57
வாங்குகிறேன். இந்தப் பணம் நிச்சயமாக என் முதல் களவுகளினால் விளைந்தவை தானே. நான் என்ன கருதுகிறேன் என்றால் இந்தச்சமூகத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் நேர்மையற்றவனாகவே இருக்கிறேன். அப்படித்தான் இந்தச் சமூகம் என்னைப் பற்றி நம்பிக் கொண்டிருக்கிறது.
கொபெய்ல்: உங்கள் முப்பதாவது வயது வரை நீங்கள் ஐரோப்பா முழுவதும் சிறைச்சாலை சிறைச்சாலையாக குந்தித் திரிந்தீர்கள். இதை நீங்கள் உங்கள் Thiers Journal இல் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் உங்களை நல்ல கள்ளன் என்று எண்ணுகிறீர்களா?
ஜெனே: "நல்ல கள்ளன்'. இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒரு சேரக் கேட்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நல்ல கள்ளன். திறமையான கள்ளனா என்று நீர் கேட்க நினைத்திருக்கலாம். நான் அலங்கோலமான கள்ளன் அல்ல. ஆனால் அந்தச் செய்கையில் போலித்தனத்தின் ஒரு பகுதியை எடுத்துவிடும் தன்மை ஒன்றுள்ளது. (என்னால் தெளிவாக சிந்திக்க முடியாமல் இருக்கிறது. ஒலிநாடா என்னைத் தொந்தரவு செய்கிறது. பதிவு நாடாவையும் அது ஒடுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. அதனால் நான் அடக்கமாக நடக்க வேணும் என்று அவசியமாகிறது. உம்முடன் அல்ல. ஏனென்றால் உம்முடன் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து தப்பிவிடலாம். ஆனால் என் குறுக்கீடின்றி 5ITLfT அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்றது) ஆதலால், களவெடுக்கையில் ஒருவன் தன்னை ஒளிக்க வேண்டிய கடமையுள்ளது. நீ ஒளித்தால் ஒரு பகுதியை நீ பாசாங்கு செய்கிறாய். உன்னால் அதற்குப் பொறுப்பேற்க முடியாது. நீதிபதிகளுக்கு முன் பிழையை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது. நீதிபதிக்கு முன் எல்லாவற்றையும் மறுத்துவிடவேண்டும். ஒளிப்பதால் மறுத்துவிட வேண்டும். ஒன்றை மறைக்கும்பொழுது நீ ஒன்றைச் செய்யும் போது அது அலங்கோலமாகிவிடுகிறது. அதாவது, அப்போது உன்தனியியல்புகள் அனைத்தையும் உபயோகப்படுத்துவதில்லை. அவற்றுள் சில அந்தச் செயலைச் செய்ததையே மறுத்துவிடுகிறதுக்கு அவசியமாக மாற்றப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை களவெடுக்கும் செயல் வெளியே தெரியவருவதாலும் வீண் தற்பெருமை, தற்செருக்கு அல்லது நேர்மை ஆகியவற்றால் 'பிரசுரிப்பது", எனக்கு அதிக கவலைகளை உண்டாக்கும். ஒவ்வொரு கள்ளனிலும் ஒரு பகுதி கேள்வி கேட்கும் ஹம்லெற் இருப்பான். தன்னைப்பற்றி, தன் செயல்கள் பற்றி. அதுவும் பகிரங்கமாக தன்னைக் கேள்வி கேட்கிறான். அப்படி தன் களவை அலங்கோலமாகச் செய்கிறான்.
கொபெய்ல்: இந்த அலங்கோலத்தைப் பற்றிய உணர்வு மூளையினால் பிரச்சினையைப் பார்த்ததால் வந்தது அல்லவா? பத்திரிகைகள் பெரிய கள்ளர்களைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கெளரவமான குற்றங்களைப் பற்றியே சொல்கிறார்கள். உதாரணமாக, மாபெரும் றெயின் களவு ஸ்கொட்லண்ட் யாட்
காலம் 3 நவம்

பொலிசையே பரபரப்புக்குள்ளாக்கியது. அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு பல மில்லியன் டொலர்கள் கிடைத்தன.
ஜெனே: பல மில்லியன்கள்? பொலிஸ்காரர்கள் தான் அனைத்தையும் நிறுவுகிறார்கள். எனக்கு நிச்சயமாகச் சொல்ல முடியும் அவர்கள் ஒன்றில் பொலிஸ்காரர்கள் அல்லது ஒய்வு பெற்ற கப்ரின்கள் அல்லது வேலையில் இருப்பவர்கள் அல்ல்து அரச சேவையில் இருப்பவர்கள். ஆனால் உண்மையான கள்ளன்தான்கள்ளன் என்று ஒத்துக் கொள்பவன் அல்லது தனியாக களவெடுப்பவன் நிச்சயம் தோல்வி அடைவான்.
கொபெய்ல்: உங்கள் நாவல்களில் வரும் ஓரினப்புணர்ச்சியாளர்களுக்கு எதிரான பாத்திரங்களையா அல்லது தேவாலயத்தில் இருக்கும் உண்டியலைக் களவெடுக்கும் பரிதாபத்துக்குரிய குற்றங்களைப் புரியும் இரக்கத்திற்குரிய பாத்திரங்களையா சொல்கிறீர்கள்? சினிமாப் படங்களும் பத்திரிகை ஊடகங்களும் இப்படியான குற்றவாளிகளைப் பற்றிக் கதைப்பதில்லை.
ஜெனே: நான் அமெரிக்காவுக்குச் சென்றதே இல்லை. சினிமாப் படங்களில் பார்த்ததைக் கொண்டு சொல்கிறேன்:தங்களைதற்காத்துக் கொள்வதற்கு, தங்கள் அப்படியே வைத்திருப்பதற்கு தீமையை உருவகப்படுத்தும் கொள்ளையரை அமெரிக்கர் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இயற்கையாக அந்தக் கொள்ளையர்கற்பனையாகவே இருக்க வேண்டிய நிலை. அமெரிக்கா அப்படி கற்பனையான கொள்ளையரை உருவாக்குவதால் அது தன்னைத் தீமையுடன் அடையாளப்படுத்த முடியாது போகின்றது. ஒரு பக்கத்தில் நன்மையான அமெரிக்கா. அரசியல் அமைப்புள்ள அமெரிக்கா. பிரான்ஸ், மேற்கு, கிழக்கு ஆகிய அனைத்து இடங்களிலும் தெரிந்த அமெரிக்கா. மறு பக்கத்தில் தீமை. கலப்பற்ற கொள்ளையர். பொதுவாக இத்தாலியர். இல்லாத கொள்ளையரை சிலவேளை தொழிற்சங்கத் தலைவர்கள் புறநடையாகலாம் அமெரிக்கா உருவாக்கியது. எனக்குத் தெரிந்த வரை அமெரிக்க நாகரிகம் எழுச்சியற்றது. ஒரு நாட்டை அதன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். சினிமாப் படங்களிலும், புத்தகங்களிலும் நாம் அறிவது என்னவென்றால் அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். அவர்களை நாம் சந்திப்பதற்கே விரும்பமாட்டோம். அவர்கள் சலிப்பைத் தருகிறார்கள். இருந்தும் அவர்களில் சிலர் சிறந்தவர்களாகவும் உணர்ச்சியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
கொபெய்ல்: சாத்தர் சொல்கிறார் நீங்கள் இறுதி எல்லைவரை தீயவனாக வாழ தீர்மானித்தவர் என்று. அதன் கருத்தென்ன?
ஜெனே:சமூக சக்திகளால் நல்லவை என்ற குறீயீடாகக் குறிக்கும் மாசுபடுத்தப்படாத தீயவற்றை வாழ்ந்து காட்டுதலையே அவர் அப்படிக் குறிப்பிட்டார். நான் இறக்கும் வரை தீயவற்றையே வாழ்ந்து காட்டுவேன் என்று கருதவில்லை. ஆனால் நான் எதிலாவது
2001

Page 60
அடைக்கலம் புக நேர்ந்தால், எங்காவது அடைக்கலம் புக வேண்டி ஏற்பட்டால், தீமையில் தான் மற்ற இடங்களில் அல்ல, நிச்சயமாக நல்லவற்றில் அல்ல, வாழ்வேன்.
கொபெய்ல்: இருப்பினும் நீங்கள் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக இருப்பதால், நல்லது என்று சமூகம் கருதும் பக்கத்தில் வாழலாம் தானே. சமூக நிகழ்ச்சிகள் எதற்காவது போவதுண்டா?
ஜெனே: இல்லவே இல்லை. சமூகம் ஒரு பிழையும் விடுவதில்லை. நான் எந்த சமூக நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை என்று முதலில் எடுத்துக் கொள்வோம். அதில் எந்தப் பெரிய உள்ளார்ந்த நலனும் இல்லை. என்னை ஒருவரும் அழைப்பதும் இல்லை. ஏனெனில் நான் அவர்களில் ஒருவன் இல்லை என்பதை வெகுவிரைவிலேயே அவர்கள் அறிந்து கொண்டு விடுவார்கள்.
கொபெய்ல்: நீங்கள் தாழ்வுக்குட்படுத்தப்படும் குற்றவாளியுடன் கூட்டுணர்வுப் படுகிறீர்களா?
ஜெனே: இல்லவே இல்லை. கூட்டுணர்வு இல்லவே இல்லை. ஏனெனில், கடவுளால், அப்படி ஒன்றிருந்தால், கூட்டுணர்வு ஒழுக்கத்தின் ஆரம்பமாகிவிடும். அதனடியாக நல்லது என்பது திரும்பவும் வந்துவிடும். உதாரணமாக, இரண்டு, மூன்று குற்றவாளிகளுக் கிடையில் பற்றுறுதி வந்து விட்டால் அதுவே ஒழுக்க மரபுக்குரிய ஆரம்பமாகிவிடும். அதன் பயனாக நல்லது என்பது ஆரம்பமாகிவிடும்.
கொபெய்ல்: ஒஸ்வல்ட் போன்ற குற்றத்தை நீங்கள் வாசிக்கும்போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?
பழகிய முகங்களின் வீழ்ச்சியில் ஓர் குரல் பெயர் இன்றிவந்து போகும்
நேற்றுக்களில் என் பிரியத்துக்கு உரியவர்கள் மற்றும் ஆகர்சிக்கப்பட்டவர்களின் முகத்தைக் கிழிக்கும்
இன்று பயத்தில் வரும் வலியில் உணர்கிறேன் உன்னையும் நாளை கருணை இன்றி உடைக்கலாம்
தெரியாத பாதைகளில் தள்ளாடும் போது கேட்காமலே சொல்லக் கூடும் உனது வீழ்ச்சி
எத்தனை பேரை மறக்க முடியும்
தான்யா
asr6Rxib XK

ஜெனே: ஆ. அதைத்தான் நான் கருதினால் நான் அதனுடன் கூட்டுணர்வு அடைவேன். ஜனாதிபதி கென்னடியிடம் அப்படி ஒரு வெறுப்பும் எனக்கில்லை. அவர் என்னைக் கவரவே இல்லை. மிகவும் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட சமூகத்தால் பழிப்புக்குள்ளாகி யுள்ளது தீமை, அச்சமூகத்தை எதிர்க்கத் தீர்மானித்த ஒஸ்வல்ட் என்ற அந்தத்தனியனுடன் எனக்கு கூட்டுணர்வு உண்டு. அவனுடைய பக்கம்தான்தானும், சமூகத்தினைத் தனியாக நின்று எதிர்க்கும் பெரும் கலைஞனுடன் நான் எப்படி அனுதாபம் கொள்வேனோ அப்படித்தான் இவனுடனும் நிற்பேன். எவ்வளவுதான் நான்தனியன்கள் பக்கம் தார்மீகமாக நின்றாலும் அவர்கள் எப்போதுமே தனியன்களாகத் தான் நிற்கிறார்கள். ஒஸ்வல்டுடன் எவ்வளவுதான் நான் நின்றபோதும் அவன் தனியாகவே தன் குற்றத்தைச் செய்தான். றெம்பிறான்ற் தன் சித்திரத்தைத் தீட்டுகையில் தான் எவ்வளவு தான் அவனுக்காக இரக்கம் கொண்டாலும் அவன் தனியாகத்தான் இருந்தான்.
கொபெய்ல்: உங்களுக்கு இன்னும் பழைய சிறைச்சாலைத் தோழர்களுடன் தொடர்புண்டா?
ஜெனே: இல்லவே இல்லை. இந்த நிலையை எண்ணிப்பாருங்கள். எனக்கு உலகெங்கிலும் இருந்து றோயல்ரி வருமானம் கிடைக்கிறது. நீர் Playboy சஞ்சிகையில் இருந்து பேட்டி எடுப்பதற்கு வந்திருக்கிறீர். ஆனால் அவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். எப்படியான தொடர்பு அவர்களுடன் கொள்ளுவது? அவர்களைப் பொறுத்தவரை நான் அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன். அவ்வளவுதான்.
கொபெய்ல்: அது ஒரு துரோகமா?
ஜெனே: நான் நிச்சயம் ஏதோ துரோகம் செய்துவிட்டேன். வேறு ஒரு மதிப்புமிக்க ஒன்றுக்காக அதைச் செய்ய வேண்டி இருந்தது. களவு ஒப்பிணையற்ற ஒரு செயல். அதற்கும் துரோகம் செய்ய வேண்டி ஏற்பட்டது. ஏனெனில் உலகப் பொதுமையான கவிதையின் நன்மைக்காக. அதைச் செய்ய வேண்டி இருந்தது. கவிஞனாக நான் வர விரும்பியபடியால் கள்ளனாக இருந்த நான் களவுக்கே துரோகம் செய்ய வேண்டி வந்தது. "நேர்வழியில் போவதும்" என்னை மகிழ்ச்சிக்குரியவனாக்கிவிடவில்லை.
கொபெய்ல்: குற்றவாளிகளுக்குத் துரோகம் செய்தீர்கள். இருந்தும் நேர்மையானவர்களே உங்களை வெறுத்தொதுக்கிறார்கள். நீங்கள் பொது வெறுப்பிகழ்வில் வாழ விருப்பமா?
ஜெனே: அது என்னை மகிழ்ச்சியற்றவனாக்கி விடவில்லை. ஆனால் அது உடல் உளப்பாங்கிற்குரிய விசயம். அது தற்செருக்கானது. அதுவல்ல என்
ஆளுமையின் சிறந்த அம்சம். நான் வெறுப்பிகழ்வில்
வாழ விரும்புகிறேன். எப்படி லூசிபர் ஆண்டவனின் கெட்ட அருளிலேயே இருக்க விரும்புவாரோ அதுபோல. இது செருக்கு. சிறிய அளவில் மூடத்தனம். இதில் நான் நிறுத்திவிடக்கூடாது. இது வெகுளித்தனமானதும்
Juli 2001

Page 61
கற்பனாவாத மனோபாவமும் உடையதாகும்.
கொபெய்ல்: அப்படியானால் குற்றவாளிகள் உங்களில் என்ன விளைவுகளை ஏற்படுத்தி உள்ளார்கள்?
ஜெனே: நீதிபதிகள் எவற்றை எனக்குக் கொடுத்தார்கள் என்று கேள். நீதிபதியாக வருவதற்கு சட்டக் கல்வி பெற வேண்டும். பரந்த மனப்பான்மையுள்ள பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதான வளரிளமைக் காலத்தில் ஆரம்பிக்க வேண்டும். மற்ற மனிதர்களுக்குத் தீர்ப்பளித்து தங்கள் வருமானத்தைப் பெற்று வாழ வேண்டிய நிலையில்தாங்கள் இருக்கின்றனர்என்று இந்த உலகத்தில் உள்ள சிலருக்குத் தெரியும். அதனால் தங்களுக்கு எந்த அபாயமும் வராதென்றும் தெரியும். இதுதான் குற்றவாளிகள் எனக்குத் தந்தது: நீதிபதிகளின் ஒழுக்கம் பற்றி என்னைச் சிந்திக்கச் செய்தார்கள். இதில் நம்பிக்கை வைக்க வேண்டாம். துரதிர்ஷ்டவசமாக எந்தக் குற்றவாளியிலும் ஒரு நீதிபதி இருக்கிறார். நீதிபதியில் குற்றவாளி இல்லாமல் இருக்கலாம்.
கொபெய்ல்: அனைத்து ஒழுக்கவியலையும் இல்லாமல் செய்வதல்லவா உங்கள் நோக்கம்?
ஜெனே: பாறையாகிப்போன, வளர்ச்சியைத் தடை செய்யும், வாழ்க்கையைத் தடை செய்யும் எல்லா மரபார்ந்த ஒழுக்கங்களையும் எறிந்து விடுவதையே நான் மிகவும் விரும்புவேன். ஒரு கலைஞன் பூரணமாக எதையும் அழிப்பவன் அல்ல. மனதுக்கொத்த ஒரு வசனத்தைப் படைக்க விரும்புவது ஒருவகை ஒழுக்கவியலை கோரி நிற்கிறது. அதாவது ஆசிரியனுக்கும் சாத்தியப்பாடான ஒரு வாசகனுக்கும் உள்ள தொடர்டபை வேண்டுகிறது. வாசிப்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். எவனும் சும்மா எழுதுவதில்லை. அழகியல் மெய்யியலில் எப்பொழுதும் ஒழுக்கவியல் இருந்து கொண்டே இருக்கும். என்னைப் பற்றிய உமது கருத்து நான் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய என் படைப்புக்களை வாசித்ததனால் ஏற்பட்டது என்று உணர்கிறேன். என்னைப்பற்றிய ஓர் அருவருக்கத்தக்க அல்லது ஈர்ப்பேற்படுத்தும் அல்லது அனுமதிக்கக்கூடிய ஒரு பிம்பத்தைத் தருவதற்காக உனக்கிதைச் சொல்லவில்லை. நான் கடுமையாக உழைக்கிறேன்.
கொபெய்ல்: கலைஞனராக உங்கள் ஒழுக்க கருத்துக்களுக்குப் பின்னர் வருவோம். விசேடமாக The Maids, The Blacks ஆகியவற்றின் ஆசிரியர்என்ற முறையில் மரபார்ந்த ஒழுக்கவியலுக்கு எதிரான உங்கள் கருத்துக்களுக்குத் திரும்பவும் வருவோம். உங்கள் சொந்த வாழ்க்கையில் உதாரணமாக போதை மருந்துகள் எடுத்துள்ளீர்களா?
ஜெனே: போதை மருந்துக்கு அடிமையானவர்களில் எனக்கு உடல்ரீதியாக உண்மையாகவே பேரச்சம் உள்ளது. போதை மருந்து எடுப்பது பிரக்ஞையை மறுப்பதாகும். போதை மருந்து முட்டைப் புழு நிலைக்கு ஒருவரை உள்ளாக்குகிறது. மற்ற இலைகளுக்கிடையில் ஒரு இலையாக நான் ஆகிறேன். மற்றவர்களுக்கிடையில் நான்

என் நூல்களால் எவராவது பாலியல் ரீதியாக
தூண்டுதல் பெற்றால் என் நூல்கள் நன்றாக எழுதப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
制
அத்துடன் கவித்துவ ஆழ்உணர்ச்சிகள்
மிகச் சக்திவாய்ந்தனவாக இருந்த
எந்த வாசகனும் பாலுணர்ச்சியால்
தூண்டப்பெறாதவனாக இருக்கவேண்டும்.
முட்டைப்புழுவாகி விடுவேன். ஒரு தனி மனிதனாக இருக்கமாட்டேன்.
கொபெய்ல்: எப்பொழுதாவது நீங்கள் அதை எடுத்துள்ளீர்களா?
ஜெனே: ஆம். அதனுள் உள்ளார்ந்து இருக்கும் சரணடையும் மகிழ்ச்சியற்ற நிலையைத் தவிர்ந்த வேறெந்த விளைவுகளையும் அது எதையும் என்னில் ஏற்படத்தி விடவில்லை.
கொபெய்ல்: நீங்கள் குடிப்பதில்லை என ஆட்கள் சொல்கிறார்கள். ஏன்?
ஜெனே; ஏனெனில் நான் அமெரிக்க எழுத்தாளன் இல்லை. அன்றொரு நாள் மாலை சார்த்தர், சிமோன் த போவியர்ஆகியோருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் இரட்டைவிஸ்கி அருந்திக்கொண்டிருந்தார்கள். போவியர் சொன்னார்: நாங்கள் குடியில் ஒவ்வொரு இரவும் நெகிழ்ந்து கொண்டிருக்கிறோம். நீர் ஏற்கெனவே பூரணமாக நெகிழ்ந்து விட்டீர். அதனால் அதில் உங்களுக்கு எந்தவித ஆர்வமும் ஏற்படப்போவதில்லை என்று. சிறிய சிறிய குடிபோதை நினைவிழைப்பு என்னை அதிகம் பாதிப்பதில்லை. நான் பலகாலம் நீண்ட பிரக்ஞையற்ற நிலையில் வாழ்ந்து வந்திருக்கிறேன்.
கொபெய்ல்: குறைந்தது நீங்கள் சாப்பிடுவீர்கள்?
ஜெனே: நான் இங்கிலாந்தில் இருந்த வந்தவுடன் சாப்பிட விரும்புவேன். என்னை இரண்டு விசயங்கள் பிரான்சுடன் இணைத்துள்ளன. ஒன்று, மொழி, மற்றது, உணவு.
Gassmr@luuüdöv: Our Lady of the Flowers 67 Gär p priuscit நாவலைச் சிலர் ஒரு தலைசிறந்த படைப்பு என்கின்றனர். சிறைச்சாலை அறையில் நடந்த நீண்ட சுயமைதுனக் கவித்துவக் கதைசொல்லல் அது. "மலத்தை படைக்கும் கலையாகப் படைத்து மக்களை விழுங்கப் பண்ணுவது" கவிதை என்று நீங்கள் நிறுவ முற்பட்ட காலம். உங்கள் வாசகர்களை எந்த விபரிப்புக்கும் இடம்விடாமல் நீங்களே அதைச் செய்துவீட்டீர்கள். காமம்சார்ந்த அத்தனை சொற்களையும் நீங்களே உபயோகித் துள்ளீர்கள். சமயச் சடங்குகள் இறுதியில் கலவியில்
Axui 2001

Page 62
6t பூர்த்தியுறுவதாகக் கூட கொண்டு சென்றுள்ளீர்கள். உங்களுக்கு தணிக்கையாளரிடமிருந்து பிரச்சினை எப்பொழுதாவது வந்ததுண்டா?
ஜெனே: "ஆபாசம்" என்றழைக்கப்படும் ஒன்றுக்காக தணிக்கை செய்வது பிரான்சில் கிடையாது. The Screens என்ற என் மிக அண்மித்த நாடகம் ஜேர்மனியிலும் பின்னர் அமெரிக்காவில் மேடையேறியது - பிரான்சில் அல்லாமல் - ஏனெனில் பிரெஞ்சுக்காரர் அல்ஜீரிய யுத்தம் பற்றிய பிரச்சினை அதில் இருக்கிறது என்று நினைத்தது அதில் இல் டலை என்பதற்காகவே. அந்த யுத்தம் இன்னும் அவர்களுக்கு அதிக நோவைத் தருகிறது. பொலிஸ் என்னைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் ஜீன் ஜெனேயை அவர்கள் நிச்சயம் பாதுகாக்கப் போவதில்லை. 'ஆபாசம்' என்று சொல்லப்படும் வார்த்தைகளைப் பொறுத்தளவில் நான் சொல்லக்கூடியது அவை இருந்து கொண்டிருக்கின்றன. அவை இருந்து கொண்டிருந்தால் அவை உபயோகிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவை கண்டுபிடிக்கப் பட்டிருக்கக் கூடாது. நான் இல்லாவிட்டால் அவ்வார்த்தைகள் அரைகுறைவாழ்க்கை உடையவையே. உயர்ந்த கலைஞனின் பங்கு என்னவெனில் எந்த வார்த்தைக்கும் அதன்மதிப்பை உயர்த்துவது. நான் இன்று அப்படி வரைவிலக்கணம் கூறாத ஆனால் அன்று கவிதை பற்றிச் சொல்லும் ஒரு வரைவிலக்கணத்தை எனக்கு இப்போது ஞாபகம் ஊட்டிவிட்டாய். இந்த உலகத்தைக் கொஞ்சமாவது, அதிகம் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது, புரிந்து கொள்ள விரும்பினால் ஒன்றை நீங்கள் விட்டுத் தொலைத்துவிட வேண்டும். அதாவது வெறுப்பை. சமூகத்தில் இன்னும் கொஞ்சம் வெறுப்பு என்னிடம் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சம் தான். காலகதியில் அதுவும் இல்லாமல் போய்விடும் என்று நம்புகிறேன். முடிவில் நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் அதைப்பற்றி எழுதும் போது வெறுப்பின் பிடியில் தான் இருந்தேன். மொழியின் உதவியுடன் இழிந்தவைகள் போலுள்ளவற்றை உயர்பண்புள்ளவைகளாக ஆக்குவதே கவிதையின் தொழில்களில் ஒன்று. இன்று பிரச்சினை வித்தியாசமானது. ஒருவரும் எதிரியாக என்னில் இப்போது ஆர்வத்தை ஊட்டுவதில்லை. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் என் எதிரிகள். இப்போது அவர்கள் என் எதிரியாகவும் இல்லை நண்பனாகவும் இல்லை. நான் அவர்க்ளைப்போல அந்தக் காலச் சட்ட்கத்துக்குள் தான் நானும்இருக்கிறேன். எனது பிரச்சினை அவர்களை எதிர்ப்பதில்லை. மாறாக, அவர்களும் நானும் பிடிபட்டுள்ளதில் இருந்து விடுதலை பெற ஏதாவது முயற்சி செய்ய வேண்டும். இப்போது, என் நூல்களால் எவராவது பாலியல் ரீதியாக தூண்டுதல் பெற்றால் என்நூல்கள் நன்றாக எழுதப்படவில்லை என்று தான் நினைக்கிறேன். அத்துடன் கவித்துவ ஆழ் உணர்ச்சிகள் மிகச் சக்திவாய்ந்தனவாக இருந்த எந்த வாசகனும் பாலுணர்ச்சியால் தூண்டப்பெறாதவனாக இருக்கவேண்டும். இழிகாம இலக்கிய (pornographic) நூல்களாக இருந்தால் அதையும் நான் ஏற்க மறுக்கப்

போவதில்லை. ஆனால், நான் மேன்மையுடையவன் இல்லை என்பதையே அது காட்டும்.
கொபெய்ல்: நீங்கள் நாபொக்கோவ், டி.எச்.லோறன்ஸ் ஆகியவர்களுடைய நூல்களை வாசித்திருக்கிறீர்களா?
ஜெனே: அந்நூலாசிரியர்களின் நூல்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
கொபெய்ல்: ஹென்றி மில்லரின் நூல்களில் ஆர்வம் இருக்கின்றதா? அவை "ஆபாசம்' என்று அமெரிக்காவில் நீண்டகாலம் தடைசெய்யப்பட்டிருந்தன.
ஜெனே: எனக்கு மில்லரைப் பற்றி அதிகம் தெரியாது. அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவை எனக்கு அதிகம் ஆர்வம் ஊட்டவில்லை. அவர் அதில் அதிகம் கதைக்கிறார். நிற்பாட்டாமல் கதைத்துக் கொண்டே இருக்கும் ஒரு மனிதர் அவர்.
கொபெய்ல்: உங்கள் அபிப்பிராயத்தில் அவரை ஏன் அவ்வளவு காலம் அமெரிக்காவில் தடை செய்திருந்தார்கள்,
ஜெனே: என்னால் அமெரிக்கத் தணிக்கையாளனின் தலைக்குள் அதைப் புகுந்து பார்க்க முடியாது.
கொபெய்ல்: உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் எழுதி அமெரிக்காவில் மொழி பெயர்த்து வெளியான Our Lady of the Flowers propavl upg5 disast Gun LDIT? finisGir அதை சிறையில் இருந்தபோது எழுதினிர்கள்?
ஜெனே: ஆம். அதைச் சிறையில் இருந்து எழுதியதில் எனக்கொரு சந்தோசத்தையும் கொடுத்தது அது. எனது கனவு அதை ஒரு பிரசுரிப்பாளரிடம் கொடுத்து, அதில் நானும் வணிகப் பங்காளியாகி சாதாரண பேப்பரில் இருநூறு முந்நூறு பிரதிகளைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட பிரசுரமாகவே வெளியிடவே விரும்பி இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியப்படவில்லை. மாறாக, அது ஐயுறவற்ற வகையில் ஒரு மெய்யான பிரசுரிப்பாளரிடம் சென்று அவர் அதைப் பிரசுரித்து ஓரினப்புணர்ச்சியாளர்களுக்கும் எழுத்தாளர்களும் விற்பனை செய்யப்பட்டது. பின்னவர்களுக்குத்தான் அது சேர வேண்டியது. அவர்களுக்குத்தான் அது என்னதென்றும் புரியும். அதுவே அங்கும் நடந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அஃது கத்தோலிக்க வங்கியாளருக்கும் பொலிஸ்கார ருக்கும், சிறைச்சாலைப் பாதுகாவலர்களுக்கும் அவர்கள் போன்றோரின் கையில் கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்பி இருப்பேன்.
கொபெய்ல்: சிறையில் எதில் அதை எழுதினிர்கள்?
ஜெனே: நூறு இருநூறு காகித உறைகள் செய்யச் சொல்லிக் காகிதம் தருவார்கள். அந்தப் பேப்பரில் தான் Out Lady of the Flowers gair-ulbugias 67(p5Gavoir. gigs இரண்டாவது உலக மகா யுத்தத்தின் ஆரம்பம். நான் சிறையைவிட்டு வெளியில் என்றுமே செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் உண்மையைத்தான் எழுதினேன் என்று சொல்லவில்லை. ஆனால்
ui 2001

Page 63
நேர்மையாக எழுதினேன். பேரார்வத்துடனும் சீற்றத்துடனும் எழுதினேன். அந்நூல் எப்போதுமே வாசிக்கப்பட போவதில்லை என்று நம்பியதால் குறைந்தளவு அடக்கப்பட்ட சீற்றத்துடன் தான் எழுதினேன். ஒருநாள்சாந் என்ற அந்தச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான் சிறை அறைக்குத் திரும்பி வந்தபோது அந்த கையெழுத்துப் பிரதியைக் காணவில்லை. நான் அந்தச் சிறைப் பணிப்பாளரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டேன். எனக்குப் பாணும் தண்ணீரும் தான் மூன்று நாட்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அம்மூன்று நாட்களும் சிறை அறைக்குள் தான் இருக்கப்பட வேண்டும் என்று தண்டிக்கப்பட்டேன். அவர்கள் தந்த பேப்பர் தலைசிறந்த நூல்கள் எழுதப் பயன்படுத்தப்படுபவை அல்ல என்பதே காரணம். களவுக்குப் பணிப்பாளர் தந்த தண்டனையால் நான் அவமானமாக உணர்ந்தேன். சில குறிப்புக்கொப்பிகளை வரவழைப்பதற்கு கடையில் ஒழுங்கு செய்தேன். படுக்கை விரிப்புக்குள் மறைந்து. கிடந்து நான் முன்பு எழுதியவற்றைச் சொல் சொல்லாக ஞாபகப்படுத்தி அவற்றை எழுதினேன். நான் அதில் வெற்றியும் அடைந்துள்ளேன் என்று தான் நம்புகிறேன்.
கொபெய்ல்: அது நீண்டதா? ஜெனே: ஏறக்குறைய ஐம்பது பக்கங்கள்.
கொபெய்ல்: உங்கள் அந்தப்பணிகாலைல் செஸ்மான் செய்தது போன்றதொன்றா?
ஜெனே: இல்லவே இல்லை. செஸ்மான் எப்பொழுதுமே தனக்கெதிரான தாக்குதல்களை எதிர்த்து நின்றார். சமூகத்திலிருந்து தான் ஒதுக்கப்பட்ட செயல்களை ஏற்றுக்கொள்ள அவர் எப்பொழுதுமே மறுத்து வந்தார். தன்னல நோக்கினால் அவர் இன்றியமையாதவற்றை மறுத்தார். அவர் எனக்கு எந்தவித ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. செஸ்மானின் வழக்கை தங்கள் மனச்சாட்சியின் குறைகளைக் களைய, உபயோகிக்கும் அமெரிக்க மக்கள் எனக்கு ஆச்சரியமூட்டுவதே இல்லை. அதுதான் அவர்களின் தரம். பெருமையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒர் உணர்ச்சிக் குறிப்பை அவர் மறுதலித்தார். அவருக்கு அமெரிக்கச் சட்டங்கள் நன்றாகத் தெரியும் என்றதால் அவர் மரண தண்டனையைக் கடத்திக் கொண்டே வந்தார். அதனால் மேலும் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தார். அது ஒரு வெற்றிதான். ஆனால் அது இலக்கிய வெற்றி அல்ல.
கொபெய்ல்: நீங்கள் தனிமையைக் கலைப்பதற்காக எழுத்தைக் கைக் கொண்டீர்களா?
ஜெனே: இல்லை. ஏனெனில் நான் எழுதியவையே மேலும் என்னைத் தனிமைப்படுத்தின. நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் என்று எனக்குத் தெரியாது. அடிப்படைக் காரணங்கள் என்னவென்றே எனக்குத் தெரியாது. சிலவேளை இதாக இருக்கலாம்: அமெரிக்காவில் இருந்த ஒரு ஜேர்மன் நண்பருக்கு நான் எழுதிய ஒரு தபாலட்டை

தான் எனக்கு எழுத்தின் சக்தியை முதலில் காட்டித் தந்தது என்று நினைக்கிறேன். அவளுக்கு என்ன எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அந்தத் தபாலட்டையின் எழுத வேண்டிய அப்பக்கம் வெள்ளையாகவும் மணற்பாங்காகவும் இருந்தது. ஓரளவு உறைபனியைப்போல. சிறையில் இல்லாத உறைபனியையும் கிறிஸ்மசையும் என்னுள் எழுப்பியது அந்த மேற்பரப்பு. அத்னால் பழைய விசயங்கள் எதையும் எழுதாமல் தபாலட்டையின் குணத்தைப் பற்றி எழுதினேன். அதுதான் என்னை எழுதத் தூண்டிய விசைவில், அது நிச்சயமாக என் செயல் நோக்கம் அல்ல. ஆனால் அதுதான் என் முதல் சுதந்திரத்தை அனுபவிக்கச் செய்தது.
கொபெய்ல்: எப்படி நீங்கள் பிரசுரித்தீர்கள்?
ஜெனே: Paris Match என்ற பத்திரிகைக்கு இப்பொழுது நிருபராக இருக்கும் ஒரு சட்டத் தரணியான கிலோம் ஹமரொ என்பவர் என் கவிதைகளில் ஒன்றான The Man Condemned to Death air Gasni Gung.jpg5 pig's வைத்தார். அவர் அதைத் தன் செலவில் பிரசுரித்தார்.
கொபெய்ல்: அப்படித்தானா நீங்கள் பிரெஞ்சு இலக்கியத்தில் இடம் பிடித்தீர்கள்?
ஜெனே: நான் பிரெஞ்சு இலக்கியத்தின் ஒரு பகுதியாக வர ஒரு போதுமே முயற்சிக்கவில்லை.
கொபெய்ல்: உங்களை ஒரு "முன் மரபுச் சோதனைப் பொருளாக" (Case History) பரிசீலிக்கச் சிலர் விரும்புவர். நீங்கள் உங்கள் நூல்களில் புனிதம் என்ற வார்த்தை தான் பிரெஞ்சில் உள்ளவற்றிலே மிக அழகானது என்கிறீர்கள். அதனுடன் நிரந்தர இணையானதாக குற்றவாளிகளையும் கருதுகிறீர்கள். ஆனால் இந்தப் புனிதம் என்ற வார்த்தையை உங்கள் எதிரிகள் நீங்கள் உபயோகிப்பதற்கான உரிமையை உங்களுக்கு மறுக்கிறார்கள்.
ஜெனே: என்னை இழிவுபடுத்துவோர் வெறுப்பதிர்ச்சியுறாமல் நான் உபயோகிக்கும் ஒரு சொல்லைத்தானும் அல்லது அரைப்புள்ளியைத்தானும் பார்க்க மாட்டார்கள். மொறியக் என்பவர் ஒரு கட்டுரையில் கேட்டிருந்தார் நான் எழுதுவதையே நிறுத்துவிட வேண்டமென்று. கிறிஸ்தவர்களும், குறிப்பாக என்னை இழிவுபடுத்துவோரும் புனிதம் என்ற வார்த்தைக்கு உரிமையாளர்கள். அவர்கள் நான் அந்த வார்த்தையை உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை.
ஜெனே: அது உமக்கு என்ன அர்த்தத்தைத் தருகின்றது? கொபெய்ல்: ஆத்மீகத் துறையில் பூரணத்துவத்தைத் தேடுதலே.
ஜெனே: என்னை இழிவுபடுத்துவோர் புனித கமூ என்று சொல்வதை ஆட்சேபிக்கவில்லை. ஏன் புனித ஜெனே என்பதற்கு ஆட்சேபிக்கிறார்கள். பாருங்கள், நான்
குழந்தையாக இருந்தபோது ஒரு ஜனாதிபதியாக, ஜெனரலாக, அல்லது வேறொருவராக வருவதை
Auhuli 2001

Page 64
YOUR FRIENDY INEGHBOR
Motor Vehicle Accident injuries O Sports injuries
Work Place injuries Post-Cast Fraction Back, Neck and Shoulder Poin
We Offer O Chiropractic Adjustments O Massage Therapy
Accident Rehabilitation Full Gym Focilities Soft Tissue (Muscle) Theropy
வாகன விபத்துக்கள், வேலைத்தல விபத்துக்களால் ஏற்படும் முறிவு, தசைநார் ஈவு, முள்ளந்தண்டு விலகல், கழுத்து தோள்மூட்டுவலி சகலத்துக்கும் திறமை வாய்ந்த வைத்திய நிபுணரின் சேவையைப் பெற நாடுங்கள்.
ஈழம் நீகாப் கிள (416) 269-37
(வாகனவிபத்துக்கள் சம்பந்தமான இலவச ஆலோசனை
Extended Hours & Saturdays 19:00 an - 8:00 p. Free Parking, Minutes away from Kennedy Sub
2555 Eglinton Avenue East, Unit #7
காலம் 8 நவ
 
 

N: / NION
O ChirOpractic
ο MaSSεξΘTherapy oAccidentirehab)
$ள் தமிழிலும் வழங்கப்படும்)
m way (Midland & Eglinton)
محے
Scarborough, Ontario, M1R 51
bபர் 2001

Page 65
என்னால் கற்பனை செய்யக்கூடக் கஸ்ரமாகவிருந்தது - என்பகற்கனவுகளைப் பெருப்பித்துக் காட்டினால் ஒழிய, நான் ஒரு சோரப்பிள்ளை. அதனால் எனக்குச் சமூக ஒழுங்கமைவில் எந்தவித உரிமையும் இல்லை. நான் முதன்மையானதொரு விதியை விரும்பியிருந்தால் அது எனக்குக் கிடைத்திருக்குமா? நான் அதிக சுதந்திரத்தை. சாத்தியப்பாடுகளை, கொடைகளைக் கேட்டிருந்தால் கிடைத்திருக்குமா? எனக்கு எழுத்தாளனாவிருக்கும் கொடை, உண்மையில் அப்படி ஒன்று என்னிடம் இருந்தால், அது எனக்குக் கிடைத்திருக்குமா? எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய ஒன்றே ஒன்று புனிதனாக விரும்புவது மட்டும் தான். வேறொன்றுமல்ல. அதாவது, மனிதனாக இருப்பதை மறுப்பது.
கொபெய்ல்: புனிதனுக்கும் குற்றவாளிக்கும் என்ன உறவைப் பார்க்கிறீர்கள்?
ஜெனே: தனிமை. மிக உயர்ந்த புனிதர்கள் குற்றவாளிகள் போன்றவர்கள் என்பதை நீர் உணரவில்லையா? அவர்களை நெருங்கி நின்று நன்றாக உற்றுப்பார்த்தால் அது உமக்குத் தெரியும். புனிதம் மக்களைப் பயப்படுத்தும். சமூகத்துக்கும் புனிதருக்கும் வெளிப்படையான எந்த இணக்கமும் இல்லை.
கொபெய்ல்: உங்களுடன் கதைத்தபோதும் உங்களுடைய நூல்களை வாசித்தபோதும் எனக்கு ஒரு சிறிய ஆச்சரியம் ஏற்பட்டது. உங்களைப் போன்ற தாய் தந்தையர் யார் என்று அறியாத, கண்டெடுக்கப்பட்ட பிள்ளையான ஒரு மனிதர். அவர் எப்படி தூய உள்ளுணர்வால் எழுதாத ஒரு எழுத்தாளராக இல்லாமல் இருப்பது விசித்திரமானது. நீங்கள் எழுத்துக்களை உருவாக்குகிறீர்கள் என்று வாதிடுகிறீர்கள். உங்களுக்கும் அமெரிக்க எழுத்தாளர்களான ஃபோக்னர், ஹெமிங்வே போன்றோருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அறிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது.
ஜெனே: நான் ஒரு தேசியவாதி இல்லை என்று நான் நினைக்கிறேன். என் இளமைக் காலத்தில் இருந்தே பிரெஞ்சுக் கலாச்சாரத்தால் சூழப்பட்டிருக்கவில்லையா என்று நான் என்னையே கேட்கிறேன். நான் பதினைந்து வயதாக இருக்கும் போது பிரான்ஸ் முழுவதும், சிலவேளை ஐரோப்பாமுழுவதுமே, இந்தக் கலாச்சாரமே பரவி இருந்தது. பிரெஞ்சு மக்களாகிய எங்களுக்குத் தெரியும், நாங்கள் தான் உலகத்தின் எசமான்கள் என்று. ஜட உலகத்துக்கு மட்டுமல்ல, கலாச்சாரத்துக்கும் தான்.
கொபெய்ல்: முழுக் கலாச்சாரத்தாலும் பெற்றோர் யாரெனத் தெரியாத ஒரு சிறுவனைக்கூட ஏற்றுக்கொள்ள (Մ)ւգսյւDո?
ஜெனே: அதிலிருந்து தப்புவது கஸ்ரம். பல காலம் இருந்த ஒரு கலாச்சாரத்தின் பழம்தான் சிலவேளை என் நூல்களும். அக்கலாச்சாரத்தினால் நன்மையடைந்தவன் அல்ல பாதிக்கப்பட்டவனே நான்.
கொபெய்ல்: பாதிக்கப்பட்ட ஒருவன்?
காலம் 8 நவ

ஜெனே: வலிமையான உணர்ச்சிகளும் புதிய உள்ளுணர்வுகளும் மெளனமாக்கப்பட்டன. ஏனெனில் அவை வெட்டி வீழ்த்தும், நலமெடுக்கும் கலாச்சார வெளிப்பாட்டுச் சாதனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருந்தன. என் உடல் உளத்தன்மை களுடன் அமெரிக்காவில் பிறந்திருந்தேனென்றால் நான் மிக மென்மையாக, உணர்ச்சியுள்ள கவிஞனாக இருந்திருப்பேன். ஆனால் நான் ஒரு விவாதக்கலைஞன். எந்தக் கலாச்சாரமுமே முழுமையானதல்ல. பூரணமானதல்ல என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். அமெரிக்க எழுத்தாளர்களைப் போல ஐரோப்பிய எழுத்தாளர்களும் தேவைகளுக்குப் தக்கவையாக ஓரளவுக்குத் தெளிவாக ஒரு வெளிப்பாட்டுக் கருவியைத் தெரிவு செய்கிறார்கள். ஐரோப்பாகலாச்சாரத் தோற்றத்தைக் கோருகிறது. அமெரிக்கா நெஞ்சார்ந்து, இயல்பூக்கமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. இரண்டிலும் நாங்கள் பொய் சொல்கிறோம். உணரும் உண்மையை வேறு வகையாக வெளிப்படுத்த முடியாமல் பொய் சொல்கிறோம். பொதுவாகச் சொன்னால் அமெரிக்கா தனக்கு ஒரு முரட்டுத்தனமான, உள்ளுணர்வை கொடுத்திருக்கிறது. அதே போல ஐரோப்பா பண்புள்ளதும் நியாயமானதுமான ஒன்றைக் கொடுத்திருக்கிறது.
கொபெய்ல்: உங்கள் அபிப்பிராயத்தில் ஜீன் போல் சாத்தர் ஏன் அறுநூறு பக்கக் கட்டுரை ஒன்றை உங்களைப் பற்றி எழுதி அதை உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்?
ஜெனே: சாத்தர் மனித சுதந்திரத்தை முன்னூகிக்கிறார். எத் தனிமனிதனுக்கும் தன்விதியை தானே நிர்ணயித்துக் கொள்ளும் அனைத்துக் கருவிகளும் அவனிடம் உண்டு என்று அவர் நம்புகிறார். அவருடைய சுதந்திரம் பற்றிய ஒரு கோட்பாட்டுக்கு நான் தான் ஓர் உதாரணம். ஒரு
மனிதன் சரணாகதி அடையாமல் தனக்கு வரவேண்டியதைக் கேட்டான். அத்துடன் அதன் விளைவுகளை அதற்கான எல்லைகளுக்கே
தள்ளுவதற்கும் தீர்மானித்தான். என்னில் அவனைக் கண்டார் சாத்தர்.
கொபெய்ல்: சாத்தரை நண்பனாகவும் எழுத்தாளனாகவும் என்ன நினைக்கிறீர்கள்?
ஜெனே: சாத்தர் திரும்பவும் திரும்பவும் ஒரே விசயத்தைச் சொல்கிறார். அவரிடம் சில முக்கியமான கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை அவர் பல உருவங்களில் பயன்படுத்துகிறார். நான் அவரை வாசிக்கையில் என் மனம் அவருடையதிலும் பார்க்க வேகமாகச் செல்கிறது. அவருடைய மிக அண்மைக்கால நூலானThe Words எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பூர்சுவாத்தன்மையில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை அது காட்டுகிறது. ஒவ்வொருவரும் கண்ணியமான வேசையாக இருக்கும் உலகத்தில், தான் ஒரளவு வேசை என்பது தெரிந்த, ஆனால் கண்ணியமானவர் அல்ல என்று புரிந்து கொண்ட ஒருவரைச்சந்திப்பது மிகச்சந்தோசமான விசயம். சாத்தர் வேடிக்கையானவர்,
ui 2001

Page 66
மகிழ்ச்சியூட்டுகிறவர். அவர் அனைத்தையும் புரிந்து கொண்டவர். அதனால் அவரை விரும்புகிறேன். மற்றவரை மதிப்பிடாமல் புன்னகையுடன் அனைத்தையும் புரிந்து கொண்டவரான ஒருவருடன் எதிர் எதிராக அமர்ந்து பேசுவது மகிழ்ச்சியான ஒரு விசயமே. நான் செய்யும் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அவற்றுடன் இணக்கம் காணாதபோதும் அவர்அதை அனுபவிக்கிறார். அவர்மிகு உணர்திறன் உள்ளவர். மிக மென்உணர்ச்சியுள்ளவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஒரு சில தரம் நாணியதைக் கண்டேன். நானும் சாத்தர் மிகவும் விரும்பதற்குரியவர்.
கொபெய்ல்: உங்களுக்கு அர்ப்பணித்த அவரின்நூலை வாசித்தபோது நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?
ஜெனே: ஒருவகை அருவருப்பை அடைந்தேன். நான் என்னை நிர்வாணமாகப் பார்த்தேன். வேறொருவரால் நான் நிர்வாணமாக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன். என் நூல்கள் அனைத்திலும் நான் என்னையே நிர்வாணமாக்குபவன் தான். அதே வேளை என்னை நான் வார்த்தைகளால், தெரிவுகளால், மனப்பாங்குகளால், மாயாஜாலங்களால் மறைத்து விடுவேன். என்னை நான் அதிகம் ஊறுபடுத்தாமல் கவனமாக இருப்பேன். சாத்தரோ என்னை எந்த இரக்கமும் இல்லாமல் நிர்வாணமாக்கிவிட்டார். என்னை அவர் நிகழ்காலத்தில் எழுதி இருக்கிறார். சாத்தர் என்னிடம் அந்நூலின் எழுத்துப் பிரதியைக் கையளித்தார். அதைப் பார்த்தபோது அந்த நூலை எரித்து விட வேண்டும் என்பது தான் என் முதலாவது உந்துதல் வேகமாக இருந்தது. இறுதியில் அதை அவர் பிரசுரிக்க இடமளித்தேன். ஏனெனில் நான் ஏற்படுத்துபவற்றுக்குப் பொறுப்புள்ளவனாக இருக்கக் கட்டாயமாக்கப்பட்டேன். ஆனால், அதிலிருந்து நான் மீள்வதற்குப் பலகாலமாகியது. தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு அநேகமாக முடியாமற் போனது. நாவல்களை யாந்திரிகமாக தொடர்ந்து எழுதி இருக்க முடியும். தன்னியல்பான எழுத்தால் இழிநிலைப் பால் நாவல்களை எழுத முயற்சித்திருக்க முடியும். சாத்தரின் நூல் என்னுள் ஒரு கூனியத்தைப் படைத்தது. அது எனக்குள் ஒருவகை உளவியல் ரீதியான இழிவைப்படுமோசமாக்கியது. இந்த இழிநிலைதான் என்னை நாடகங்கள் எழுதத் தூண்டியது.
கொபெய்ல்: எவ்வளவு காலம் இந்தச் சூனியத்தில் கட்டுண்டு கிடந்தீர்கள்?
ஜெனே: இந்த இழிந்த நிலையில் ஓர் ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். அறிவிழிந்த இந்நிலை வாழ்வில் அதிகமாக அடியோடி உள்ளது: கதவைத் திறப்பதும் சிகரட் பற்றுவதும். அப்படிப்பட்ட மனிதனின் வாழ்வில் ஒரு சில கணங்களே ஒளியானவை. எஞ்சியவை மந்தமான நிழல்தான்.
கொபெய்ல்: உங்கள்ாhe Maids என்ற நாடகம் 1947இல் திகதி இடப்பட்டுள்ளது. ஆனால் சாத்தரின்நூல் 1982வரை பிரசுரமாகவில்லையே? W
&Ró 8

4.
ஜெனே: அது உண்மை. சாத்தரின் நூல் புதியதொன்றையும் வெளியிடவில்லை. அது மேலும் அதை வெளித்தள்ளியது மட்டும்தான்.
கொபெய்ல்: உங்களின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில். The Blacks என்ற நாடகம் அமெரிக்காவில் ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஓடி இருக்கிறது. அந்தச்சாதனையைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்?
ஜெனே: அது எனக்குள் இன்னும் சரியாக ஜீரணமாகவில்லை. எனக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது. நான் கற்பனை செய்வது மாதிரி ஐக்கிய அமெரிக்கா இல்லைபோலும். அங்கு அனைத்தும் நடக்கலாம். மனிதாபமானத் தோற்றப்பாடு கூட.
கொபெய்ல்: நீங்கள் எழுதிய நான்கு நாடகங்களில் மூன்று நாடகங்கள் எங்களுக்குத் தெரியும் -The Maids, The Blacks, The Balcony. gigs sit Lassids Gir Sdisariat 6961. உதாரணமாக, The Maids என்ற நாடகத்தில் முதலாளிகளுக்கு எதிரான வேலைக்காரிகளின் பக்கமா அல்லது The Blacks என்ற நாடகத்தில் கறுப்பர்களின் பக்கமா அல்லது வெள்ளையர்களின் பக்கமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அல்லது மாறாக. அங்கு ஒரு மனஅமைதியின்மை இருக்கிறது.
ஜெனே; எனக்கு அது பற்றிக் கவலை இல்லை. நான்
நாடகம் எழுத வேண்டும். நாடகீய அரங்க ஆழ்
உணர்ச்சியை உறுதிபெற வைக்க வேண்டும் என்பதே நான் வேண்டுவது. என் நாடகங்கள் கறுப்பர்களுக்கு உதவினால் அது பற்றி எனக்குக் கவலையில்லை. உண்மையில் அப்படி இருப்பதாக நான் நம்பவில்லை. காலனித்துவத்துக்கெதிரான நேரடியான செயற்பாடு என் நாடகத்தை விட அவர்களுக்கு உதவும் என நான்
நினைக்கிறேன். அதேபோல நாடகத்தைவிட
வேலைக்காரிகளின் தொழிற்சங்கம் அவர்களுக்கு அதிகம் உதவுகின்றது என்று நான் நினைக்கிறேன். கறுப்பர்களோ அல்லது மற்ற அந்நியப்படுத்தப்பட்டவர்களோ வெளிப்படுத்த முடியாத ஆழ்ந்த ஒன்றுக்காக நான் குரல் கொடுக்க முயற்சிக்கிறேன். வேலைக்காரிகள் அப்படிப் பேசவில்லை என்று ஒரு விமர்சகர் சொன்னார். அது அப்படித்தான் பேசுகிறது. தனிமையில் நள்ளிரவில், எனக்கு மட்டும். கறுப்பர்கள் அப்படிப் பேசவில்லை என்று எனக்கு நீர் சொல்லி இருந்தால் நீர் உம்முடைய காதுகளை அவர்கள் நெஞ்சில் வைத்துக் கேட்டால் அது உமக்குக் கேட்கும் என்று சொல்லி இருப்பேன். வடிவமைக்கப்படாத ஒன்றைக் கேட்பது எப்படி என்பதை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும்.
கொபெய்ல்: உங்கள் நாடகங்கள் சிறப்புரிமைகள் இல்லாதவர்களைப் பற்றியது?
ஜெனே: எனக்கெதிரான நாடகங்களை எழுதியதாக அவை இருக்கச்சாத்தியமாகலாம். நான் வெள்ளையனாக, முதலாளியாக, The Screens இல் பிரான்சாக இருக்கச் சாத்தியமாகலாம். இவற்றின் அம்சங்களிலுள்ள
QJisui 2001

Page 67
இழிநிலையைக் காண முயற்சிக்கையில் அப்படி நடந்திருக்கலாம். நான் களவெடுக்கிறேனா என்று என்னைக் கேட்டீர். அது அத்தனை முக்கியமானதாக எனக்குப் படவில்லை. நான் தனிப்பட்ட ஒருத்தனிடமிருந்து களவெடுக்கவில்லை, சமூக அந்தஸ்திலுள்ளவனிடமிருந்தே களவெடுத்தேன். அந்தஸ்து பற்றி நான் ஒருபோதுமே சட்டை செய்பவனில்லை.
கொபெய்ல்: உங்கள் நூலை வாசிப்பது ஒர் இரவு வேசிகள் விடுதியில் தங்குவது போன்றிருக்கும் என்கிறார் சாத்தர். உங்களுக்குப் பல வாசகர் இருக்கிறார்கள். நீங்கள் புகழ்வாய்ந்தவர். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறீர்கள்?
ஜெனே: அது உமக்குத் தேவையில்லை.
கொபெய்ல்: அடிக்கடி பேட்டி கொடுப்பீர்களா?
ஜெனே: இல்லவே இல்லை. இருக்கிறதா என்றே தெரியாத ஒரு சஞ்சிகைக்குப் பேட்டி கொடுத்ததற்கு சிமோன் த போவியர் தான் என்னை அதிகப்படி சொல்லி இணங்க வைத்தார். மதுச்சாலையில் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கொடுக்கும் சிறிய பேட்டியைத் தவிர இது தான் என் முதலாவது பேட்டி, உதாரணமாக, அமெரிக்காவில் என் நாடகங்களைப் பிரபல்யப்படுத்த நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. எந்தப் பிரச்சாரமும் இன்றி என் நூல்கள் தம்மைத்தாமே தற்காத்துக் கொள்ளும் என்று பந்தயம் பிடித்திருந்தேன். அவை சக்திவாய்ந்ததாக இருந்தால் வெற்றிபெறும். இல்லாவிட்டால் அவை அவ்வளவும் தான்.
கொபெய்ல்: நீங்கள் வெற்றி அடைந்துவிட்டீர்கள். ஓர் ஆளுமை உடையவர்களாகி விட்டீர்கள்.
ஜெனே: நான் ஓர்ஆளுமை உடையவன் என்றால் நான் ஒரு விசித்திரமானவன். 'ஆளுமைகள்" (அந்த வார்த்தை எனக்குப் புன்சிரிப்பை வரவழைக்கின்றது) எங்கும் இட்டுச் செல்லும். நான் அமெரிக்காவுக்குப் போவதற்கு விசாஇருந்தது. அதுநாலு வருடமாக என்னிடம் இருந்தது. ஏதோ தவறுதலாக எனக்கு கொன்சல் தந்திருக்க வேணும் என்று நான் நினைக்கிறேன். நான் யாரென்று அவர்கள் அறிந்தபோது அதை உபயோகிப்பதைத் தடுத்து விட்டார்கள்.
கொபெய்ல்: அது உங்கள் குற்றப் பதிவேட்டின் 66 ITU 600 L D T95 G u IT அல்லது நீங்கள் ஓர் ஓரினப்புணர்ச்சியாளன் என்பதாலா? நாங்கள் அந்தப் பொருள் பற்றிக் கதைக்கலாமா?
ஜெனே: ஓரினப்புணர்ச்சி பற்றி பூரணமாகக் கதைக்க எனக்கு விருப்பம்தான். அந்தப் பொருள் பற்றிக் கதைப்பது எனக்குப் பெரும் சந்தோசத்தைக் கொடுக்கும். இந்நாட்களில் போலிக் கலைஞர்கள் வட்டங்களில் ஓரினப்புணர்ச்சி நன்றாகவே வரவேற்கப்படுகிறது. ஆனால் பூர்சுவா சமூகத்தில் இன்னும் அது கண்டிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அதற்கு
anais 3 sa

நான் என்னை நிர்வாணமாகப் பார்த்தேன்.
வேறொருவரால் நான்
நிர்வாணமாக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன்.
என் நூல்கள் அனைத்திலும் நான் என்னையே
நிர்வாணமாக்குபவன்தான்.
நான் கடன்பட்டிருக்கிறேன். அது ஒரு சாபக்கேடாக நீர் பார்ப்பதாக இருந்தால் அது உமது பிரச்சினை. என்னைப் பொறுத்தவரை அது ஒரு வரம்.
கொபெய்ல்: அது உங்களுக்கு எதை அளித்தது?
ஜெனே: அதுதான் எழுத்து வழியில் என்னைவிட்டது. மக்களைப் புரிய வைத்தது. அது ஒன்று தான் அப்படிச் செய்தது என்று நான் சொல்லவில்லை. ஆனால் நான் அல்ஜீரியர்களுடன் உடலுறவு கொண்டிராவிட்டால் அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்னணிக்கு - அது ஒரு அல்ஜீரிய தேசியக் கட்சி. அல்ஜீரிய நாட்டுச் சுதந்திரத்துக்காக போராடியது - சார்பாக இருந்திருக்க மாட்டேன். எப்படித் தான் இருந்தாலும் அவர்களுக்குத் தான் நான் ஆதரவு கொடுத்திருப்பேன். ஆனால் ஓரினப்புணர்ச்சி தான் என்னை அல்ஜீரியர்களும் மற்றவர்களைப் போன்ற மனிதர்கள் என்பதை எனக்குப் புரிய வைத்திருக்கலாம்.
கொபெய்ல்: நீங்கள் பெண்களில் எக்காலத்துமே ஆர்வம் காட்டவில்லையா?
ஜெனே: நாலு பெண்கள் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியவர்கள்: தூய கன்னி, ஜோஅன் ஒஃவ் ஆக், மேரி அன்ரனொயிற், மடம் கியூரி.
கொபெய்ல்: உங்கள் வாழ்க்கையில் இப்பொழுது ஓரினப்புணர்ச்சி என்ன பங்கை ஆற்றுகிறது?
ஜெனே: அதன் போதனைப் பங்களிப்பை முதலில் கூறுகிறேன். ஐயத்துக்கிடமில்லாமல், என் கவனிப்புக்குள்ளிருந்த எல்லா இளம் வாலிபர்களுடனும் நான் உடலுறவு கொண்டிருக்கிறேன். ஆனால் உடலுறவு மட்டும் தான் என் முழுக் குவிமையமும் அவர்களுடன் இருந்திருக்கிறது என்பதில்லை. நான் வாழ்ந்து அனுபவித்த துணிச்சல் செயல்களையும் அவர்களுடன் Samtj சிருட்டிக்க முயற்சித்திருக்கிறேன். சோரப்பிள்ளைத்தனம், தேசத்துரோகம், சமூகத்தினை மறுத்தல், இறுதியாக பிற வழிகளால் சமூகத்தை வந்தடைதல் ஆகியவை அதன் சைகைகளாக இருந்தன. இந்த மனப்பாங்கு எனக்கு மட்டும் அது தன்னேரில்லாததொன்றா? சட்டத்துக்குப் புறம்பானதாக
iuli 2001

Page 68
ஓரினப்புணர்ச்சியாளர்களை வைத்திருப்பதால் ஓரினப்புணர்ச்சி சமூகப் பெறுமதிகளைப் பற்றிய கேள்விகளை நான் கேட்க வேண்டியவனாக இருக்கிறேன். இளம் வாலிபன் ஒருவனைப் பற்றிகவலை எனக்கு தீர்மானமானால் நான் அதை அற்பமான வழிகளில் செய்ய முடியாது. சாதாரண சமூகத்தில் உள்ளோடி இருக்கும் முரண்பாடுகளைப்-அறிவு, இதயம் இரண்டும் - பற்றி அவர்களுக்குப் போதிப்பேன். இப்பொழுது ஜக் மக்லியா என்ற இளம் சாரதியை என் சிறகுக்குள் எடுத்திருக்கிறேன். அவரைப் பற்றி இது தான் சொல்லலாம்; அவர் கார்களைக் களவெடுப்பதில் தன் வாழ்வை ஆரம்பித்தார். பின் எதையாவது களவெடுப்பது என்ற நிலைக்கு வீழ்ந்தார். அவர் தன் வாழ்க்கையை வேகக் காரோட்டியாக அர்ப்பணிக்க வேண்டும் என்று நான் மிக வேகமாகப் புரிந்து கொண்டேன். அவருக்கு கார்கள் வாங்கிக் கொடுத்தேன். இப்பொழுது அவருக்கு இருபத்தொரு வயது. இப்போது அவர் வேகக்காரோட்டி. அவர் களவெடுப்பதை இப்போது நிறுத்தி விட்டார். இப்பொழுது அவர் தன் பொறுப்பைக் கைவிட்டவர் அல்ல. அளவு, கைவிடுதல், நான் ஆகியவை அவர் வேகக் காரோட்டியாக வந்ததிற்கும் சமூகத்திற்குத் திரும்புதற்கும் பொறுப்பு. தன் சாதனைகளாலும், தன் திறமைகளைத் தானே கண்டுபிடித்ததாலும் அவர் திரும்பவும் சமூகத்துடன் இணைந்து கொண்டார்.
கொபெய்ல்: அவர் வேகமாகக் காரோட்டும் போது நீங்களும் அவருடன் போவீர்களா?
ஜெனே: இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகள் அனைத்துக்கும் அவருடன் சென்றேன். நான்தான் அவரின் நேரம்கணிப்போன்.
கொபெய்ல்: வேகக்காரோட்டத்தில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?
ஜெனே: ஆரம்பத்தில் அது முட்டாள்தனம் என்றுதான் எனக்குப்பட்டது. இப்பொழுது அது சீரியஸானதும் மிக அழகானதுமாக எனக்குத் தோன்றுகிறது. நன்றாக ஒடப்படும் வேகக்காரோட்டத்தில் நாடகீயமும், அழகியலும் இருக்கின்றன. ஒஸ்வால்ட்டைப் போல காரோட்டியும் தனியன். அவன் முதலாவதாக வரும் போது அழகாக இருக்கும். அதிக கூருணர்வு போன்ற பண்புகள் ஒரு காரோட்டிக்குத் தேவை. மக்லிடியா மிகக் கெட்டிக்காரகாரோட்டி, விலங்கியல்புள்ளகாரோட்டிகள் சாவிலே முடிவர். மக்லியா இப்போது பிரபல்யமடைந்து வருகிறார். அவர் விரைவில் புகழ் அடைந்து விடுவார்.
கொபெய்ல்: அவர் உங்களுக்கு அதிகம் வேண்டியவரா? நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்களா?
ஜெனே: நான் அவரைக் காதலிக்கிறேனா? அவரின் பெருமுயற்சியை நேசிக்கிறேன். அவர் செய்வதை, நான் அவருக்காகச் செய்ததை நேசிக்கிறேன்.
கொபெய்ல்: அவரில் அன்பு காட்டுவதில் நீங்கள் பெரும் நேரத்தைச் செலவழிக்கிறீர்களா?
காலம் 8 நவ

ஜெனே: ஒருவரில் அன்பு காட்டினால் அதை நீங்கள் சீரியஸாகக் காட்ட வேண்டும். கடந்த வார இறுதியில் நாங்கள் சாட்டரில் இருந்து பரிசிற்கு காரில் வந்து கொண்டிருந்தபோது நான் காரில் புகைக்கவில்லை. ஏனெனில் அவர் சராசரி மணிக்கு நூற்றெழுபது கிலோ மீட்டர் வேகத்தில் மிக விறைப்பாக ஒட்டி வந்தார்.
கொபெய்ல்: இது ஒரு பெண்ணியல்பான ஒருவருக்குச் சரணடைதல் அல்லவா?
ஜெனே: ஓரினப்புணர்ச்சியில் காணப்படும் பெண்ணியல்பு ஒரு வாலிபனை வளைத்து விடுகிறது. அது சிலவேளை அவனிடம் மேலுமுள்ள நல்லதைக் கூட வெளிக்கொணர இடம் அளிக்கிறது. வத்திக்கானைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். அதில் பல காடினல்களைக் காட்டினார்கள். அதில் இரண்டு மூன்று பேர் பாலற்றவர்களும் குறிப்பிடக் கூடியவர்களும் அல்லர். பெண்களைப் போன்றிருந்தவர்கள் மந்தமானவர்களாகவும் பேராசை பிடித்தவர்கள் போலும் இருந்தார்கள். காடினல் லினாட் மட்டும் ஓரினப்புணர்ச்சி வாடை வீசஇருந்தார். அவரைப் பார்த்தால் நல்லவராகவும் விவேகமானவராகவும் போல இருந்தார்.
கொபெய்ல்: நவீன மனிதன் தன் வீரியத்தை இழந்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. இந்தப் போக்கை ஓரினப்புணர்ச்சி ஊக்கப்படுத்தவில்லையா?
ஜெனே; வீரிய நெருக்கடி ஒன்று அப்படி இருந்தாலும் அது பற்றி நான் மிக்க கவலை அடையப் போவதில்லை. வீரியம் எப்பொழுதுமே ஒரு விளையாட்டுத்தான். அமெரிக்க நடிகர்கள் வீரியத்தில் விளையாடுகிறார்கள். கமூ வீரிய மனப்பாங்கு தான் எப்பொழுதும் கொண்டிருக்கிறார். எனக்கு வீரியம் என்பது ஒரு வினைத்திறன். அது பெண் பிள்ளைகளையும் கன்னிமை கழிக்க வைப்பதல்ல. மாறாக அதைப் பாதுகாப்பது. ஐயத்துக்கிடமில்லாமல், நான் அதுபற்றித் தீர்ப்புச் சொல்லத் தகுந்த ஆளில்லை. வழக்கமான இன்பியலை மறுத்து, கவசத்தைத் துறந்தாயிற்று. மனிதன் கூருணர்வை வெளிக் காட்டுகிறான். அப்படி இல்லாவிடில் அது வெளிச்சத்திற்கு வந்திருக்காது. நவீனப் பெண்ணின் விடுதலை, பழமைகளைப் புறந்தள்ளும் மனப்பாங்கை ஆண்களுக்கு அளித்திடச்சாத்தியமாகிறது. அது குறைவாக அடங்கிப்போகும் பெண்களுக்கும் இடமளிக்கிறது. நீர் ஜக்கி மக்லியாவைப் பார்த்திருக்கிறாய்; அவன் அப்படி ஒன்றும் பெண்ணியல்பானவன் அல்லவே. அப்படி இருந்தும் அவன் தனது மென்னுணர்ச்சியால் என்னைக் கவர்கிறான். அவனுக்கு நான் முதல் காரைக் கொடுத்தபோது அவன் என்ன உணர்ந்தான் என்று அவனைக் கேட்டேன். என்னிலும் பார்க்க அது அழகானது என்பதால் ஓரளவு வெட்கப்பட்டேன் என்று எனக்குக் கூறினான்.
கொபெய்ல்: எவ்வளவு காலம் மக்லியாவை உங்களுக்குத் தெரியும்?
Juli 2001

Page 69
ஜெனே: ஆக இளமையில் இருந்தே அவனைத் தெரியும். ஒவ்வொரு இளம் ஆணுடனும் தொடர்பு வைக்கையில் அவர்களுடைய உடல் உளப் பாங்குகள், குணாதிசயம், ரசனைகள் போன்றவற்றைக் கண்டுபிடிக்கவும் அவற்றைக் கணக்கில் எடுக்கவும் வேண்டி இருந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு சிருட்டிகர செயல்போல அது தோற்றும். நீதிபதி ஒவ்வொரு வாழ்க்கையும் எடுக்கையில் அவர் சிருட்டிகரமானவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன். அதுபோல அவருடைய வாழ்வில் நான்கோ ஐந்தோ வழக்குக்கு மேல் அவர் நீதிபதியாகக் கடமையாற்றக் கூடாது. ஏனெனில் அவர் ஒவ்வொரு முறையும் சிருட்டிகரமானவராக இருக்க வேண்டும்.
கொபெய்ல்: மக்லியா வேகக்காரோட்டப் போட்டியில் பங்குபற்றும் போதும் நீங்கள் வெறுக்கிற அதே சமூகம் தானே பிரான்சில் அவருக்குக் கைதட்டும்?
ஜெனே: அது எனக்குத் தெரியும், அங்கு தேசியம் மேன்மையடைகிறது. மக்லியாவைக் காப்பாற்றுவது என்னவெனில் அவர் தன் வாழ்வைப் பணயம் வைக்கிறார். அவரின் படிமத்தை நியாயப்படுத்த முடியும். ஏனெனில் ஒவ்வொரு முறை வேகக் காரோட்டத்தில் பங்குபற்றும் போதும் அவர் சாவை எதிர்நோக்குகிறார். அவர் ஓட்டத்தில் பங்குபற்றும் போது மனநிறைவமைதி அடைந்துவிடும் விளையாட்டில் அகப்பட்டுவிட்டால் அவர் வாழ்வுக்கு, திறமைக்கு ஆபத்து விளைந்துவிடும். எப்படி நான் குற்றவாளி என்றோ எழுத்தாளன் என்றோ அகம்பாவ மனப்பாங்கு கொண்டால் எனக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ அப்படி அவனுக்கும் அகம்பாவ மனப்பாங்கு ஆபத்தை விளைத்துவிடும்.
கொபெய்ல்: மக்லியாவுடன் காரோட்டப் போட்டிக்கு போகாத வேளைகளில் என்ன செய்வீர்கள்?
ஜெனே; மற்ற வேளைகளில் மற்றவர்களைப் போல அரை மூடத்தனத்தில் இருப்பேன். இடைக்கிடை என் நாடகங்களை எழுதுவேன். ஒவ்வொரு நாளும் அல்ல. அலைகளைப் போல், திடீர்ப் பாய்ச்சல்களில் பியர் போலேயுடன் ஒர் ஒபரா சிலவேளை எழுதலாம். அவர் இந்த வருடம் அல்பன் பேர்க்கின்றுழணணநஉம என்ற ஒபராவை பரிஸ் ஒபராவில் வழங்கினார்.
கொபெய்ல்: எழுத்து உங்களுக்கு ஒரு தேவையா?
ஜெனே:ஆம். ஏனெனில் எனக்குக் கிடைத்த காலத்தை பொறுப்புடன் கழிக்கவேண்டும் என்று உணர்கிறேன். அதனைப் பயனுள்ளதாக்க வேண்டும். அந்த ஒன்று தான் எழுத்து. மற்றவர்களின் கண்களில், அல்லது என் கண்களில் கூட நான் பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும் என்பதல்ல. சிலவேளை கடவுளின் கண்களில் அப்படி இருக்க வேண்டும்.
அவரைப் பற்றி என்னால் அதிகம் கதைக்க முடியாது. ஏனெனில் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தது கொஞ்சமே.
snoub Ž 5

67
கொபெய்ல்: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
ஜெனே: கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். புராண வினாவிடைகளில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. மிக மதிப்புள்ள விசயங்களைப் போலுள்ளவற்றை அங்கீகரித்து நான் ஏன் என் வாழ்க்கைக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். எதுவும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. தெரிந்த எதற்கும் என்னைக் கட்டுப்படுத்தவில்லை. அப்படி என்றால் செய்ய வேணும் என்று நான் ஏன் வலிமையாக உணர்கிறேன்? முன்பு, இந்தக் கேள்விக்கு எழுத்துச் செயலால் தீர்வு கண்டுவிட்டேன். என் இளம்பருவக் கலகம், நான் பதினான்கு வயதாக இருந்தபோது செய்த கலகம், நம்பிக்கைக்கு எதிரான கலகம் அல்ல. என் சமூகத்திற்கு எதிரான அவமானப்பட்ட ஒருவனான எனது கலகம் அது. எனது ஆழமான நம்பிக்கையை அது தொடவில்லை.
கொபெய்ல்: நிரந்தர வாழ்வு. உங்களுக்கு அதில் நம்பிக்கை உள்ளதா?
ஜெனே: அது இறைமையியலாளருக்குரிய கேள்வி. நீர் இரண்டாவது வத்திக்கானின் ஒரு அங்கத்துவளா? இந்தக்
கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லை.
கொபெய்ல்: சிறையில் இருந்து இன்னொரு சிறைக்குச் செல்லாமல், ஒரு ஹோட்டல் அறையில் இருந்து இன்னொரு ஹோட்டல் அறைக்கு அலையும் ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையில் என்ன அர்த்தத்தைக் காண்கிறீர்கள்? நீங்கள் பணக்காரர். இருந்தும் உங்களிடம் சொத்துக்கள் எனஒன்றும் இல்லை. உங்களிடம் இருப்பது ஏழு புத்தகங்கள், ஒரு எலாம் மணிக்கூடு, ஒரு தோல் ஜக்கெற், மூன்று சேட்டுக்கள், ஒரு சூற், ஒரு சூற்கேஸ், அவை மட்டும் தான் உங்களிடம் உள்ளவையா?
ஜெனே:ஆம். அவற்றுக்கு மேல் எனக்கு எதற்கு?
கொபெய்ல்; வறுமையில் உங்களுக்கு ஏன் இத்தனை திருப்தி?
ஜெனே: (சிரித்துக்கொண்டே) அதுதான் தேவதூதர்களின் நற்பண்பு. பாரும். நான் எதையும் பொருட்படுத்துவதில்லை. நான் லண்டனுக்குப் போகும்போது என் முகவர் றிற்ஸ் ஹோட்டலில் அறை ஒன்றை எனக்கு ஒழுங்கு செய்வார். பொருட்களையும் ஆடம்பரப் பொருட்களையும் வைத்து என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? நான் எழுதுகிறேன். அவ்வளவுந்தான்.
கொபெய்ல்: உங்கள் வாழ்வை எந்தத் திசை நோக்கி செலுத்திகிறீர்கள்?
ஜெனே. மறந்தொழியும் திசை நோக்கிச் செல்கிறேன். ஓர் ஊர் சுற்றி அனுபவிப்பது போல, எமது செயல்கள் தெளிவற்றதும் திகைப்பும் நிறைந்தன. இந்த மந்த நிலைக்கு அப்பால் பிரக்ஞைரீதியாக முயற்சி எடுத்துப் போவது மிக அருமை. நான் எழுத்தினால் அதைச் செய்யப் பார்க்கிறேன். O
bui 2001

Page 70
68
வெகுநேரம் சாளரத்தின் வழியாகத் தெரிந்த நீல வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வாசவதத்தை ஒரு கணம் திரும்பி அருகில் மஞ்சத்தில் உறங்கும் உதயணனைப் பார்த்தாள். உறவாடிய களைப்பில் துயிலில் ஆழ்ந்திருந்தான் அவன். நிலா வெளிச்சத்தில் அவன் கட்டிலில் கிடந்த தோற்றம் துண்டாக்கிக்கிடத்தப்பட்ட ஒரு மரத்தைப் போலிருந்தது. வெப்பமாக உணர்ந்தாள். காற்று போதுமானதாக இல்லை. கலைந்த மார்க்கச்சைச் சரிப்படுத்தியபடி மஞ்சத்திலிருந்து எழுந்தாள். அவள் நிழல் பக்கத்துச் சுவரில் மிக நீண்ட ஒரு மரம் போலத் தெரிந்தது. சத்தமில்லாமல் அறையைவிட்டு வெளியே வந்தாள்.
வாசலில் உட்கார்ந்திருந்த காவல் தோழிகள் அவசரமாக எழுந்து நின்றார்கள். "அரசி, தங்களுக்கு.? என்று இழுத்தார்கள். "ஒன்றும் தேவையில்லை. தூக்கம் வரவில்லை. எழுந்தேன்' என்றபடி பின்புறத் தோட்டத் துக்கு நடந்தாள். வேகவேகமாகப் பந்தங்களோடு பின்தொடர வந்தவர்களையும் "வேண்டாம் பகல் போல நிலா பொழிகிறது. பயம் இல்லை" என்று பதில் சொல்லி நிறுத்தினாள். தோழிகள் ஒன்றும் புரியாமல் அதே இடத்தில் தயங்கி நின்று விட்டார்கள்.
தோட்டத்தைக் கடந்து குளத்தங்கரைக்கு வந்தாள் வாசவதத்தை. மிகப்பெரிய தட்டுபோல நிலவொளியில் குளம் மின்னியது. கரையோரத்து மரங்களிலிருந்து காற்றின் வேகத்தில் இலையும் பூவும் உதிரும் போதெல்லாம் அலைகள் நெளிந்தன. பவழமல்லிகை யின் வாசமும் தாழம்பூவின் வாசமும் காற்றில் கலந்து வந்தன. கரையையொட்டிய வேப்பமரத்திலிருந்து வந்த பழமணம் அடர்த்தியாக இருந்தது. குளத்தைத் தொடர்ந்து தோப்பும் தோப்புக்கு மறுபுறம் கோட்டையும் நீலத்திரையில் தீட்டப்பட்ட ஒரு சித்திரம்போலத் தெரிந்தது. கோட்டை மதில்மிது சீரான இடைவெளியில் எரியும் தீப்பந்தங்கள் புள்ளிகளாகத் தெரிந்தன.
அவள் ஒரு வேப்பமரத்தடியில் உட்கார்ந்தாள். மஞ்சத்தில் மல்லாந்து உறங்கும் உதயணனின் சித்திரம் மனதிலெழுந்ததும் ஒருவிதக் கசப்பு படர்வதை உணர்ந்தாள். தன் மனஅமைதி கரைந்து ஒருவித எரிச்சலும் இயலாமையும் படர்ந்ததில் வருத்தமுற்றாள். இது மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும் எங்காவது ஒரு பெண்ணிடம் மயங்கி விழுந்து கிடப்பதும் அரச காரியங்களைக் கூட மறந்து திரிவதும் பிறகு ஏதோ
araw, 8 sa
 

#8sggisisisisi#########g35sbiĝ5:51:52, ligiaj literiiiiiiiiiiii
ஞாபகம் வந்ததைப்போல ஓடி வருவதும் செல்லப் பிராணியைப் போல குழைந்து குழைந்து உபசரிப்புகளால் பிரியத்தை வெளிப்படுத்துவதும் மனம் குளிர்ந்த நேரத்தில் அவளையும் அரசியாக்கிக் கொள்ள ஒப்புதலைப் பொறுவதும் அவனுக்கு ஒரு வாடிக்கையான விளையாட்டுப் போல ஆகிவிட்டது. கச்சிதமாக ஆடப்படுகிற ஒரு விளையாட்டுப்போல அவனுக்கு அந்த கலை கைவந்துவிட்டது. கூச்சம் என்பது அவன் மனத்தில் சுத்தமாக இல்லை. அவனை மன்னிப்பதும் அரவணைத்துக் கொள்வதும் தவறான விஷயங்களாக மாறிவிட்டன. ஒன்றையடுத்து ஒன்றாக எல்லாமே கோணலாகிவிட்டது. சிக்கல் தீர்க்கப்படுவதற்குப் பதிலாகக் கூடுதலாகிவிட்டது. பழசையெல்லாம் தொலைத்து புதுப்பிறவி, புது வாழ்வு என்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் அது சுலபமாக இல்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் போல குடும்பத்தில் ஒரு காலும் குலவும் பெண்களைத் தேடுவதில் ஒரு காலுமாக ஊன்றிக் கொண்டிருப்பவனை வைத்துக்கொண்டு எதையும் மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகப் புரிந்து விட்டது.
ஸாங்கிருத்யாயனி என்கிற சந்தியாசப் பெண்ணுடன் அவன்சுற்றிக்கொண்டிருப்பதாகக் காலையில்தான் செய்தி கிடைத்தது. ஆறுமாதமாகத் தொடர்கிற கள்ள உறவு. காதுக்கு முதலில் செய்தியை எட்டவைத்துவிட்டு பிறகு நேரில் வந்து ஆழம் பார்ப்பது அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது. சந்நியாசிப் பெண்ணையும் அவனையும் அவள் மனம் ஒரு கணம் பொருத்திப் பார்த்தது. "ஸாங்கிருத்யாயனிலாங்கிருத்யாயனி" என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தாள். மனசின் அடியிலிருந்து ஒரு சின்ன வெறுப்பு குபிரென்று பொங்கிவந்தது. திடீரென்று உடைந்து அழுதுவிடுவோமோ என்று தோன்றியது. உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கினாள். இதயம் வேகவேகமாகத் துடித்து அடங்கியது. அவள் கட்டுப்பாட்டை மீறிக் கண்களில் ஒரு துளி கண்ணீர் பொங்கித் திரண்டது. நீலத் திரையில் தோன்றிய வானின் சித்திரம் மங்கியது. ஒரு கணம் கண்களை மூடித் திறக்க, கண்ணிர்த் துளி கன்னத்தில் உருண்டு வழிந்தது. "லாங்கிருத்யாயனி" என்று அவள் வாய் முணுமுணுத்தது. 'ஆணை மயக்கும் கைகாரிக்குச் சந்நியாசினிக் கோலம் எதற்கு?" என்று கேட்டுக் கொண்டாள்.
மாலையில் எப்படியெல்லாம் குழைந்தபடி வந்தான்.
Ui 2001

Page 71
'வாசவதத்தை. வாசவதத்தை." என்று குளிரக் குளிரக் கூப்பிட்டபடி அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிட்டான். அத்தனை தோழிகளுக்கும் நடுவில் அவன் வேகவேகமாக வந்து தோளைத் தொட்டு அனைத்தபோது ஒரு கணம் கூச்சத்தில் சுருங்கிப் போனாள். உடனே அவள் கைகளை வேகமாக உதறினாள். அதைச் சிறிதும் கவனிக்காதவன் போல, "ஏன் வாசவதத்தை, இப்படி மெலிந்து போய்விட்டாய்?" என்று ஆசை வார்த்தைகளைக் கொட்டினான். மறுபக்கம் திரும்பி, "என்ன தோழிகளோ நீங்கள்? அரசியின் உடல் இப்படி ஆகும்வரை என்னதான் செய்திகொண்டிருப்பீர்களோ? அவருக்கு வேளாவேளைக்கு உணவு கொடுப்பதைவிட அப்படி என்ன பெரிய வேலையோ உங்களுக்கு?" என்று தோழிப் பெண்களிடம் செல்லமாகச்சலித்தான் = அவர்கள் அவசரமாக ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக நாணம் படர வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆறு மாதத்துக்குப் பிறகு வருகிற = வனுக்கு எதுதான் ஒழுங்காகத் தெரியும் என்று எரிச்சலாக வந்தது. அப்போது அவன் அடுக்கிக் கட்டப் போகும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேட்கக் கூடாது என்று முடிவெ டுத்தாள். சிரித்துக்கொண்டே அவள் தோளில் முகம் புதைத்துக் கன்னத்தில் முகம் புதைக்கக் குனிந்தபோது, 'விரிசிதை எப்படி இருக்கிறாள்? சுகம்தானே?" என்று கேட்டாள். உதயணன் முகம் ஒருகணம் அதிர்ச்சியைக் காட்டியது. தொடர்ந்து 'அவளைப் பார்ப்பதுண்டா? ஒரு வேளை இங்கே வருவதைபோல அங்கேவும் ஆறுமாதத்துக்கு ஒருமுறை ''' என்று குத்தினாள். சமாளித்துச் சிரித்தபடி ஏதேதோ சொல்லிப் பேச்சின் திசையை மாற்றி, மீண்டும் தோளில் முகம் பதித்து உள்ளங்கையை எடுத்துத் தன் கன்னத்தோடு ஒட்டிக் கொண்டான். மறுகணமே அக்கையைத் தடவி முத்தமிட்டான். அவள் மீண்டும் 'பத்மாவதி எப்படி இருக்கிறாள்?
அவள் உண்டாகியிருப்பதாகக் கேள்விப்பட்டேனே, உண்மையா?" என்றாள் அமைதியாக அவள் உள்ளூர
உடைந்துபோய் ஒருகணம் தன்னைத் தானே திரட்டிக் கொள்வது தெரிந்தது. முகத்தில் படிந்த வேர்வையைத் துடைத்தபடி தடுமாறினான் அவன்
"என்ன வாசவத்தத்தை, என்மீது கோபமா?" என்றபடி மடிமீது விழுந்துவிட்டான். இது மூன்றாவது முறை என்று அவள் மனம் சுட்டிக் காட்டிபடி இருந்தது. ஒவ்வொரு
 
 
 
 

முறையும் சொல்லிவைத்த மாதிரி இப்படித்தான் தொடங்கி இதேவிதமாக முடிந்திருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் வேகவேகமாக இரண்டு கேள்விகள் கேட்டுவிட்டு பிறகு வாடி வதங்கிக் கீழே விழுகிறவனை ஏன் வாரி எடுத்துக் கொள்கிறோம் என்று ஆச்சரியம் கொண்டாள். பழைய நாட்களைப் போல இந்த முறை அனுமதித்துவிடக் கூடாது என்கிற பிடிவாதம் ஊறி இருந்தது நெஞ்சில் ஒரு பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறவள்போல எச்சரிக்கை எச்சரிக்கை என்று மனம் பதறியபடி இருந்தது. அதே நேரத்தில் தன் மனம் கொள்ளும் பதற்றத்தை நினைத்து வேடிக்கையாகவும் இருந்தது. உண்மை

Page 72
தைரியமும் மனப்பக்குவமும்தனக்கு இருக்கிறதாஎன்பது அவள் மனத்தில் இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே ஊசலாடியது. அதற்கு அவள் மனம் ஒருபோதும் தெளிவாக விடையை யோசித்து வைக்கவில்லை. ஒரு தெள்ளத் தெளிவாக விடை கைவசம் இல்லாத நிலையில் போலிக் கோபத்தைப் பல்வேறு சொற்களால் புனைந்து வெளிப்படுத்துவது பலமடங்காகப் பெருகியது. காலம் முழுக்க அவனை கட்டிவைக்க முடியாத இயலாமையே இந்தப் போலிக் கோபத்துக்குக் காரணம் என்று தோன்றியது. தன் அடிமனத்தில் புதைந்திருப்பது அந்த எண்ணம்தானோ என்று ஒருமுறைக் கேட்டுக் கொண்டாள்.
உட்கார்ந்த இடத்திலிருந்து நகர்ந்து குளத்தை நெருங்கினாள் வாசவதத்தை. கால்களைக் குளத்தில் நனைத்தாள். கால்தண்டையில் நிலவொளிபட்டு மின்னியது. தண்ணின் குளுமை அவளுக்கு உடனடியாக ஒரு சுதந்திரத்தை வழங்கியது. தன் மனம் அதன் எல்லா எண்ணங்களிலிருந்தும் விலகி நிற்பதை உணர்ந்தாள். ஏதாவது புதுசாக யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொலைவில் கோட்டை மீது அசையும் ஒளிப்புள்ளிகளைப் பார்த்தாள். மிகப் பெரிய கோட்டை. கண்ணுக்குப் புலப்பட்ட ஒருபக்கத்தைத் தவிர்த்து மற்ற மூன்று பக்கங்களிலும் அடர்ந்த காடு மறைத்துக் கொண்டிருந்தது. வத்ஸ் தேசத்தைப் பற்றிய கற்பனை அவளுக்குச் சந்தோஷம் தந்தது. சொந்த உஜ்ஜயணி தேசத்தைவிட வத்ஸ் தேசம் பல விதங்களில் அவளுக்கு ஆனந்தத்தையும் கிளர்ச்சியையும் வழங்கிய இடம் என்று நினைத்தாள். உஜ்ஜயனி தேசத்திலிருந்து நளகிரி யானை மீது ஏறி உதயணனோடு நாடு கடந்து வந்த நாட்கள் தந்த ஆனந்தமும் பரவசமும் அவள் அடிமனத்தில் இன்னும் மெருகு குலையாமலேயே இருப்பதாகத் தோன்றியது. ஆனால் உதயணன் அதே பழைய ஆசையுடனும் நெருக்கத்துடனும் இல்லை என்கிற எண்ணம் எழுந்ததும் எல்லாம் வடிந்துவிட்டது. அவன் காதல் ஒரு பெரிய நெருப்புக் குண்டம்போல சதா எரிந்தபடி இருக்கிறது. வாசவதத்தை என்னும் ஒரு பெண்ணின் நெருக்கம் என்னும் குளுமையால் அந்த நெருப்பை அணைக்க முடியவில்லை. பத்மாவதி, விரிசிதை என்று மேலும் மேலும் பெண்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த எண்ணம் எழுந்ததும் அவள் மனம் உற்சாகத்தை இழந்து வெறுமையுற்றது. தொலைவில் ஒளிப்புள்ளிகள் சட்டென ஒரு கோணத்தில் ஒரு சந்நியாசினிப் பெண்ணின் கழுத்தில் புரளும் மணிமாலையை ஞாபகப்படுத்தியது சந்நியாசினிப் பெண்ணின் பிம்பம் மனசில் எழுந்ததுமே ஸாங்கிருத்யாயனியின் தோற்றமும் கூடவே கசப்புடன் மிதந்தது. சி என்று தண்ணீர்ப் பரப்பை ஓங்கி அடித்தாள். அலைகள் அங்குமிங்குமாகச் சிதறின. அவள் பிம்பம் நொறுங்கித்துண்டுதுண்டாக ஏறுமாறாகச்சிதைந்தது.தன் பிம்புத்தைத் தானே சிதைப்பது ஒருவித சுயவதைத் திருப்தியைத் தந்தது. பிம்பம் மீண்டும் கூடிவரும் கணம்வரைக் காத்திருந்து மறுபடியும் எரிச்சலுடன் வேகமாக நீர்ப்பரப்பை அடித்தாள்.
Sub z

சில கணங்களுக்குப் பிறகு அவள் செய்கை சிறுபிள்ளை விளையாட்டுப் போலத் தோன்றியது. இந்த முறை அவள் தவறை அனுமதிக்கவே கூடாது. காலம் காலமாக இந்தத் தவறுகளுக்கெல்லாம் சேர்த்துவைத்து வருந்துகிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும். இனி ஒருமுறை வேறொரு பெண்ணை அவன் நாடிச் செல்ல அனுமதிக்கவே கூடாது. அப்படித்தான் அவள் நினைத்திருந்தாள். எனினும் வாசவதத்தை வாசவதத்தை என்கிற அவனுடைய கொஞ்சும் குரலும் குழைவும் ஒவ்வொரு முறையும் அவளைத் தடுமாற வைத்துவிடுகிறது. சில கணங்களுக்குப் பிறகுதான் உண்மையிலேயே வாசவதத்தை என அழைத்தபடி உதயணன் தன்னருகில் நிற்பது தெரிந்தது. குளத்திலிருந்து படக்கென்று கால்களை எடுத்தபடி "என்ன?" என்றாள். "தனியாக என்ன செய்கிறாய் வாசவதத்தை?' என்று கேட்டான் அவன் அக்கறை தொனிக்கும் குரலில், அவள் மனம் சட்டென்று கோபமுடன் "உட்காரக் கூட உரிமை இல்லையா எனக்கு?" என்று சூடாகக் கேட்கவேண்டும் என்று ஒரு கணம் எண்ணியது. உடனே தனக்குள் பொறுமையைக் கற்பித்தபடி "ஒன்றுமில்லை. தூக்கம் வரவில்லை" என்றாள். "திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது மஞ்சத்தில் நீ இல்லையென்றதும் பதறிப் போனேன். தேடிக்கொண்டு வெளியே வந்தபோதுதான் காவல் பெண்கள் நீ பின்பக்கத் தோட்டத்தின் திசையில் சென்றதாகச் சொன்னார்கள். உடனே ஓடி வந்தேன். உன்னை நேரில் பார்த்த பிறகுதான் மனம் நிம்மதியுற்றது' என்றான் உதயணன். அருகில் அமர்ந்து அவன் கால்களை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான். ஈரம் மின்னும் அவள் கால்களைத் தடவித் தந்தான். கால் தண்டைகளை ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டு ஒசையெழுப்பிரசித்தான்.
"இந்த இருளில் இந்தக் கீதம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா?" அவன் அவள் கால் தண்டைகளை மறுபடியும் அசைத்து ஓசையுண்டாக்கினான்.
"உங்கள் கோஷவதி வீணையின் நாதத்தை விடவா?" வாசவதத்தை கிண்டலுடன் கேட்டாள்.
"கோஷவதி வீணையில் இசை யானையைத்தான் மயக்கும். உன் தண்டையொலி மனத்தை மயக்குகிறது. இயற்கையையே மயக்குகிறது." அவன் கிறங்கிப்போய் சொன்னான். குனிந்து அவள் பாதத்தில் முத்தமிட்டான். ஈரம் படர்ந்த குதிரைமுகத்தசையில் நாவால் தடவினான். பிறகு மெல்லப் பற்களால் கடித்தான்.
"அப்படியென்றால் அடுத்தமுறை யானையைப் பிடிக்கச் செல்லும்போது தண்டைகளையே எடுத்துச் செல்லுங்கள்" அவள் இன்னும் கிண்டல் மாறாதவளாகச் சொன்னாள்:
"அது சரி, இதில் இருப்பவை என்ன பரல்கள்?"
"ஏன்? மாணிக்கம். உஜ்ஜயினி மாணிக்கம்."
அவள் மெல்ல மெல்ல தனக்குள் பொங்கும் கிண்டல் உணர்வையும் கோபத்தையும் தணித்துக் கொள்ள முயற்சி
Rui 2001

Page 73
கால்களைக் குளத்தில் நனைத்தாள்.
கால்தண்டையில் நிலவொளிபட்டு மின்னியது.
தண்ணின் குளுமை அவளுக்கு
உடனடியாக ஒரு சுதந்திரத்தை வழங்கியது.
தன் மனம் அதன் எல்லா எண்ணங்களிலிருந்தும்
விலகி நிற்பதை உணர்ந்தாள்.
செய்தாள். தன் விருப்பத்தை மீறி தன் மனதில் மூளும் இந்த முயற்சியை அறிந்து எரிச்சல் கொள்ளவும் செய்தாள்.
அவன் அவளை மடியில் சாய்த்துக் கொண்டான். கடந்த ஆறுமாதமாக அவனைக் கேட்கவேண்டும் என்று எவ்வளவோ கேள்விகளை யோசித்து வைத்திருந்தாள். எல்லாமே அந்தச் சூழலுக்குப் பொருத்தமற்றுத் தோன்றின. ஏதாவது ஒரு வார்த்தை நாக்கின் விளம்புவரை வந்து பிறகு எச்சிலோடு எச்சிலாகக் கரைந்துவிடும். மனசின் இந்த ஆட்டத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை எனத் தோன்றியது. இது மூன்றாவது முறை. மூன்று பெண்கள் அவன் வாழ்வில் பங்கு கொள்ள வந்துவிட்டார்கள். இவர்களையெல்லாம் ஏன் சகித்துக் கொள்ளவேண்டும் என்று சலிப்புத் தோன்றியது. பட்டத்து அரசி என்கிற ஸ்தானத்துக்குக் குந்தகம் நேர்ந்துவிடுமோ எனத் தன் மனம் அஞ்சுகிறதோ என்று பதற்றத்துடன் எண்ணினாள்.
"எப்படி இருக்கிறாள் உங்கள் ஸந்நியாசினி ராணி? அவள் பொறுமையாகத் தொடங்கினாள்.
'அவளுக்கு உன்மீது மிகுந்த மரியாதை உண்டு வாசவதத்தை. நீ என்றால் அவளுக்குத் தெய்வம் போல." "அப்படியென்றால் தெய்வம் அவளுக்கு என்னவாக வேண்டுமாம்???
"உனக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிடுகிறேன் வாசவதத்தை." அவன் குரல் சற்றே பிசிறடித்தது.
"என் விருப்பத்தையறிந்தா அவளோடு பழகத் தொடங்கினீர்கள்? என் சம்மதத்தைக் கேட்டா அவளோடு ஆறு மாதமாக ரகசியமாக வாழ்ந்தீர்கள்?"
கட்டுப்பாட்டை மீறி சீற்றம் தனக்குள் பொங்குவதை அறிந்தாள் வாசவதத்தை. சட்டெனத் தன் பார்வையை நிலத்தை நோக்கித் திருப்பினாள். சில கணங்களுக்குப் பிறகு குளத்தின் பக்கம் திருப்பினாள். ஊன்றிய கைகளை எடுத்தபோது அருகில் உதிர்ந்து கிடந்த சில வேப்பம்பழங்கள்உருண்டு குளத்துக்குள்சரிந்தன. அவை மேலே மிதக்கக்கூடும் என்றும் அலைகள் நெளிந்து நெளிந்துபின்பு அவற்றைக் கரைஒதுக்கக் கூடும் என்றும் நினைத்தாள். அதற்கு மாறாக, அவை குளத்தின் மேற்பரப்பில் ஒரே ஒருகணம் தென்பட்டு பிறகு மூழ்கின.
கலம் 8 நவ
 

"நான் ஏன் இந்த உறவைத் தவிர்க்கச் சொல்கிறேன் தெரியுமா?"
மனம் சற்றே அமைதியுற்றநிலைக்குத்திரும்பிய பிறகு கேட்டாள் அவள். அவன் பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
அவள் அடுக்கடுக்காக எல்லாவற்றையும் சொல்லிவிட நினைத்தாள். பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அவன் முன் கொட்டுவதற்கென்று யோசித்து வைத்த சொற்களஞ்சியத்தைத் திறந்து காட்ட முனைந்தாள். திடுமென அவன் மெளனம் அவளுக்குத் தயக்கத்தைக் கொடுத்தது. உடனே அவள் மனம் கூம்பியது. அந்தரங்கமான உணர்வோடு தன் எண்ணங்களின் ஆழத்துக்கு அவனால் ஒருபோதும் வரமுடியாது என்று தோன்றியது. தடுமாற்றத்துடன் உதட்டைக் கடித்தாள். அதே நேரத்தில் பறவையொன்றின் விசித்திரமான சப்தமொன்று கேட்டது. சட்டென்று பேச்சை மாற்றும்பொருட்டு "என்ன அது பறவையின் சத்தம் இந்த நேரத்தில்?’ என்று கேட்டாள். உதயணன் பறவையின் சப்தம் வந்த திசையில் ஒருகணம் பார்த்தான்.
'காலம் தாழ்ந்து கூட்டுக்குத் திரும்பிய பறவை அது வாசவதத்தை. இருட்டில் தன் கூடு எந்தப் புறத்தில் இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுகிறது பாவம். தன் கூடு என்று எண்ணி வேறொரு கூட்டை நெருங்கிச்செல்ல, அக்கூட்டிலிருக்கும் பறவைகள் விரட்டுகிறது போலும். இளைப்பாற இடம் இன்றி அலைபாய்கிறது."
தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனவன் சட்டென நிறுத்தினான். ஒருகணம் திகைப்புற்றுவாசவதத்தையைப் பார்த்தான். அவள் தீர்க்கமாக அவனையே பார்த்தபடி இருந்தாள். ஒருவர் மன ஓட்டத்தை ஒருவர் புரிந்துகொண்டதைப் போலத் தடுமாறினார்கள். சற்றே மிரண்டவன்போல நிலைகுலைந்தான் உதயணன்.
படபடவென்று சிறகுகளை அடித்தபடி வெளவால்கள் மேலே பறந்தன. கோட்டையில் மணியடிக்கும் ஓசை கேட்டது. தொடர்ந்து ஒரு திசையிலிருந்து தொடங்கி மறுதிசையின் கோடி வரைக்கும் அந்த ஓசை தொடர்ந்தது. காவல் வீரர்கள் சமிக்ஞை மணியடித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்தான் உதயணன். உடனே நேரக் கணக்கும் புரிந்தது.
"கண்விழித்தால் உடம்பு கெடாதா வாசவதத்தை?" என்று கேட்டான் உதயணன்.
"எந்த இரவு தூங்கினேன், இந்த இரவில் கண்விழித்தால் புதுசாக உடல் கெட?"
அவன் மெதுவாகத் தலையை அசைத்தான். பிறகு மெல்லிய குரலில், "உன் தந்தை அனுப்பிய இயந்திர யானையை உனக்கு நினைவிருக்கிறதா வாசவதத்தை?" என்று கேட்டான். அவன் அவளிடமே பலமுறை சொல்லிய கதைதான். ஒவ்வொரு முறையும் புதுசாகச் சொல்கிற மாதிரி சொல்வது விந்தையாக இருந்தது. ஒருவேளை, ஒவ்வொரு பெண்ணிடமும் இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பானோ என்று தோன்றியதும் அவள்
lui 2001

Page 74
7
இதயத் துடிப்பு அதிகரித்தது. எந்தப் பெண்ணிடம் சொன்னோம், அல்லது சொல்லவில்லை என்கிற நினைவுகூட இல்லாமல் இப்படித் தடுமாறுகிறானே என்று எண்ணிக் குறுகுறுப்படைந்தாள்.
"அப்போது அது இயந்திர யானை என்று எனக்குத் தெரியாது வாசவதத்தை. உயிர் யானை என்று நம்பிப் பின்னாலேயே வீணையை மீட்டியபடி சென்றேன். நாதத்தில் மயங்கியதைப் போல அசைந்து அசைந்து அது பின்னால் நகர்ந்தபடி இருந்தது. காட்டின் அடர்ந்த பகுதி வரைக்கும் அது இழுத்துக்கொண்டு போனது. யானையின் தோற்றக் கவர்ச்சி என்னைக் கட்டியிழுத்தது. அதன் நிறம். அதன் மத்தகம். அதன் வாகு. என் மனம் காந்தத்துக்குக் கட்டுப்பட்ட இரும்புத் துண்டுபோல இழுபட்டுப் போனது. புதர்களுக்கு நடுவில் சட்டென யானையின் வயிற்றுக் கதவுகளைத் தள்ளித் திறந்துகொண்டு ஆட்கள் பாய்ந்து வந்து என்னைச் சிறைப்படுத்திவிட்டார்கள்."
வெகு ரசனையுடன் சொல்லிமுடித்தான் அவன். அந்த இயந்திர யானையின் பின்னால் அவன் இன்னும் ஒடிக்கொண்டிருக்கும் சித்திரம் அவள் மனத்தில் எழுந்தது. அவன் கைகள் அவள் கூந்தலைச் சரிசெய்தபடி இருந்தது.
நீலவானம் அழகாக விரிந்திருந்தது. எதையும் சொல்லமுடியாத மெளனத்துடன் நிலா ஊர்ந்து செல்வது போலிருந்தது. காற்று குளுமையாக வீசியது. உடைக்கமுடியாத தன் மெளனத்தை அவன் முன் உடைத்துக் கொட்டிவிடலாமா என்று நினைத்தாள். உடனே நெஞ்சு உலர்ந்தது போலிருந்தது. அவன் மடியிலிருந்து எழுந்து அவனைத் தழுவிக் கொண்டாள். சில கணங்களுக்குப் பிறகு விலகி உட்கார்ந்தாள். அவள் கண்கள் தளும்பியிருந்தன.
"என்ன வாசவதத்தை?"
அவள் மெளனம் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் மெளனமாக அவன் கண்களை எதிர்கொண்டாள். காற்றில் அவள் தலைமுடி பறந்தலைந்தது. குளுமையான காற்றடித்துக் கொண்டிருந்த நிலையிலும் தன் மார்புக்குள் வெப்பம் பரவுவதை உணர்ந்தாள். வயிற்றில் இனம்புரியாத கொதிப்பையறிந்தாள். அவனால் தன்னைப் புரிந்துகொள்ளவே முடியாது என்கிற எண்ணம் மேலும் மேலும் அவளுக்கு உறுதிப்பட்டுக் கொண்டே இருந்தது.
காற்றின் வேகத்தில் அடித்துவரப்பட்ட சருகுகள் குளத்தில் விழுந்தன. ஒரே நேரத்தில் பல இடங்களில் குமிழிகள் எழுந்து வளையம் வளையமாக அலைகள் பரவின. அவள் குளத்தையே வேதனையுடன் பார்த்தாள்.
"GSunsantuon?”
மறுபடியும் பேச்சைத் தொடங்கினான் உதயணன். அவள் "வேண்டாம்" என்று முதலில் மறுத்தாள். பிறகு எழுந்தபடி, "சரி" என்றாள். “ரொம்பவும் குளிர்காற்று அடிக்கிறது" என்று பொதுவாகச் சொன்னான்.
"ஏன் ஒரு மாதிரி வருத்தமாக இருக்கிறாய்
SKA 8

வாசவதத்தை?"உதயணன் தயக்கத்துடன் கேட்டான். 'இல்லையே, நன்றாகத்தானே இருக்கிறேன்."
அவன் வரவழைத்துக்கொண்ட சிரிப்போடு சொன்னாள்.
"நான் வரும்போது இருந்ததைப்போல இப்போது இல்லை நீ." முனகலாகச் சொன்னான் அவன். கைத்தாங்கலாக அவளைத் தோளில் அணைத்துக் கொண்டான். இருவரும் அறையை நோக்கி நடந்தார்கள்.
தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டிவிடச் சரியான தருணம் என்று தோன்றியது. எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தேடினாள். அதற்குள் நெஞ்சில் வெப்பம் ஏறியது. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது போலத் தோன்றியது. அந்தக் குளிரிலும் அவள் உடல் வியர்ப்பது உதயணனுக்கு வியப்பாக இருந்தது.
"வாசவதத்தை, என்ன செய்கிறது உனக்கு? உண்மையைச் சொல்." அவள் முகவாயை நிமிர்த்திக் கேட்டான். அவள் சிரமத்துடன் தன்னைத் திரட்டிக்கொண்டு "அரசே' என்றாள்.
"என்ன வாசவதத்தை, எதுவாக இருந்தாலும் தைரியமாகச் சொல்."
அதற்குள் வாசல் வந்தது. காவல் பெண்கள் மரியாதையுடன் வணங்கிப் பாதையில் வெளிச்சம் படும்படி எண்ணைப் பந்தங்களைப் பிடித்தார்கள்.
இருவரும் அறைக்குள் சென்றார்கள். கூடவே வந்த தாதி தீபத்தை ஏற்றப் போனாள். "வேணாமடி, இப்படியே இருக்கட்டும்' என்றாள் வாசவதத்தை. திரும்பித் திரும்பி பார்த்தபடி தாதி வெளியே சென்றாள்.
மஞ்சத்தில் சாய்ந்ததும் ஒருக்களித்துப் படுத்தாள் வாசவதத்தை. அவளை மார்போடு அணைத்தபடி படுத்துக் கொள்ள முயன்றான் உதயணன். சில கணங்களுக்கு அவள் தலைமுடியை வருடிக்கொண்டி ருந்துவிட்டுப் பிறகு கழுத்தை வளைத்து முன் நெற்றியில் முத்தம் பதித்தான்.
"வாசவதத்தை, என்னமோ சொல்ல வந்தாயே, என்ன அது?"
"ஒன்றுமில்லை."
மீண்டும் பல கணங்கள் கழிந்தன. உதயணன் தயங்கி, "ஸாங்கிருத்யாயனியை அவள் ஊருக்கே அனுப்பிவிடட் டுமா வாசவதத்தை?" என்று தயக்கத்துடன் கேட்டான்.
ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது வாசவதத்தை யிடமிருந்து. பிறகு, "இருக்கும் ராணிகளோடு மற்றொருத்தியாக இருந்துவிட்டுப் போகட்டுமே. விடுங்கள் அரசே' என்றாள். கண்மூடிய நிலையிலேயே நிமிராமல் நிதானமாகச் சொன்னாள் வாசவதத்தை.
அவள் நிமிர்ந்து ஒருவேளை தன்னைப் பார்க்கக்கூடும் என்று பல கணங்களாக எதிர்பார்த்தபடி காத்திருந்தான் உதயணன். O
Quibuli 2001

Page 75
கட்டுரை
கலாக்கம்
'நீங்கள் அறிவாலும் உடல் திறமையாலும் அவர்களுடைய சமூகத்தைவிடத் தாழ்ந்தவர். உங்களுடைய தாழ்வு உணர்ச்சி அளவிட முடியாதது. நீங்கள் அவர்களைப் போலப் பொன்னிற கோதுமை நிறமானவர் இல்லை. உங்கள் மேனி அவர்களைப் போலப் பளபளப்பாக இல்லை. அவர்களுடன் விளையாட்டில் நீங்கள் போட்டியிட முடியாது. அவர்கள் பணக்காரர்கள்; நீங்கள் அதிகம் உழைக்கிறீர்கள், ஆனால் அவர்களைப் போல உங்களால் பணம் ஈட்ட முடிவதில்லை. அவர்களுக்கு மருத்துவச் செலவே கிடையாது; நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருத்துவத்தில் செலவழிக்கிறீர்கள். அவர்கள் அதிக நாட்கள் வாழப் போகின்றவர்கள் உங்களது அற்பாயுசு. எந்த வகையிலம் அவர்களைவிட உங்களால் சிறப்பாக இருக்க முடிவதில்லை. காரணம் அந்த இனத்தின் பிறப்பு. நீங்கள் அவர்களைவிடப் பிறப்பால் தாழ்ந்தவர்.
என்ன செய்யலாம்? 'ஒருவரை வெல்ல முடியவில்லை என்றால் அவர்களுடன் இணைந்துவிடு' இது காலம் கற்றுக் கொடுத்த பாடம். ஒரே வழி அவர்கள் இனத்திலிருந்து ஒரு பெண்ணை நீங்கள் மணப்பதுதான். அதிர்ஷ்டவசமாக உங்கள் காதலிஅவர்களைச் சேர்ந்தவள். அவள் உங்களுக்குக் கிடைத்து ஒரு வரம் என்றுதான் கூற வேண்டும். உங்கள் இனத்தின்மீது பிறப்பைக் காரணம் காட்டி ஆதிக்கம் செலுத்தும் அவர்களிலும் இன்னும் மனிதத் தன்மை எஞ்சியிருக்கிறது என்பதற்கு அவள்தான் அடையாளம். ஆனால் உங்களால் இந்தத் திருமணம் சாத்தியம் என்று கருத முடிகிறதா? இது நடக்கப் போவதில்லை; நீங்கள் இருவரும் மரண மேடை ஏறித்தான் ஆகவேண்டும். அந்தக் கொடியவர்களால் கல்லால் அடிக்கப்படுவீர்கள். சமநீதி என்பதெல்லாம் பழங்கதை நிகழ்காலத்தை நீங்கள் உணர்வது நல்லது. உங்கள் இனத்தில் ஒருத்தியை மணந்துகொண்டு அவர்களுக்கு அடிமைகளாகக் காலந்தள்ள வேண்டியது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது."
மேலுள்ள வாக்கியங்களைப் படிக்கையில் உங்களால் நம்ப முடியவில்லையா? பிறப்பால் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்பவை எல்லாம் ஒழிக்கப்பட்டு பல வருடங்களாகியும் இப்படிச் சொல்பவர்கள் இருக்கிறார்களா? இதெல்லாம் பழங்கதை என்று சிரிக்கிறீர்களா? இல்லை இவையெல்லாம் பழங்கதைகள் அல்ல; இவை வருங்காலத்தை வார்த்தைகளில்
as 3
 

73
அவற்றை ஆய்வகத்தில் ஒரு
வருணிக்கும் உண்மை. பிறப்பால் எல்லாரும் சமம் என்பது இந்த நூற்றாண்டுடன் முடிகின்றது. பிறப்பு ஒருவனை உயர்ந்தவனாதாழ்ந்தவனாஎனத் தீர்மானிக்கும் நாள் தொலைவில் இல்லை. காரணம் பிறந்த விதம் - நீங்கள் இயற்கையாகப்பிறந்தவர் - அவர்கள் உயிர் தொழில் நுட்பச் சாதனைகளால் நகலாக்கம் செய்து உருவாக்கப்பட்டவர்கள். இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் நீங்கள் கடவுளால் படைக்கப்பட்ட தாழ்ந்த இனம் - அவர்கள் உங்களைப் போன்ற மனிதர்களால் 'உருவாக்கப்பட்ட உயர்ந்த இனம். அந்த 'உருவாக்கத்தின் பெயர்தான் நகலாக்கம் (Cloning).
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்
1997 ஆம் வருடம், பெப்ருவரி மாதம்
ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகருக்கருகில் உள்ள ஒரு ஆய்வுச் சாலையில் டாலி (Dolly) என்னும் ஆடு பிறந்தது. அது மற்ற ஆடுகளைக் காட்டிலும் வித்தியாசமானது பி ற ப் ப ா ல் வித்தியாசமானது. egil நீங்கள் கடவுளால் வழக்கமான கிடா - கிடேரி
இனச் சேர்க்கையில் படைக்கப்பட்டதாழ்ந்த க ரு த் த ரி த் து ப் பிறக்கவில்லை; அது உயிர்  ெத ரா பூழி ல் நு ட் ப வ ல் லு ந ர் க ள |ா ல்
இனம் - அவர்கள்
உங்களைப் போன்ற
(b i otechno og st s) மனிதர்களால் ஆ ய் வ க த் தி ல் நகலாக்கப்பட்டது அதன் 'உருவாக்கப்பட்ட பிறப்பின் இரகசியம் இதுதான்; முதலில் உயர்ந்த இனம். அந்த
நகலாக்கப்பட வேண்டிய ஆட்டின் பால் சுரக்கும் 'உருவாக்கத்தின் பையின் (udder) உட்சுவரிலிருந்து திசுக்கள் பெயர்தான் நகலாக்கம்
சுரண்டி எடுக்கப்பட்டன.
(Cloning).
நவம்பர் 2001

Page 76
74
கண்ணாடிக் குழித்தட்டில்(petridish) வளர்த்தார்கள். அதே நேரத்தில் இன்னொருகிடேரியின் 26 நாள் சூல் கொள்ளாத கருமுட்டையினைத் (unfertilized egg) தனிப்படுத்தினார்கள்; அந்த முட்டையில் அதன் மரபுச் செய்திகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் எனும் வாழைப்பழ படிவம் கொண்ட மூலக்கூறுகளை நீக்கினார்கள். (இது முட்டையை உற்பத்தி செய்ததாயின் மரபுக்கூறுகள் உருவாகவிருக்கும் குட்டிக்குச் செல்லாமல் தடுக்கும் செயல்). குழித்தட்டிலிருந்து நகலாக்கப்பட வேண்டிய செல்களுள் ஒன்றினை எடுத்து (அதன் மரபுச் செய்திகளைக் கொண்ட குரோமோசோம்கள் உட்பட) முட்டையினுள் ஒரு நுண்ணோக்கியின் உதவியால் உட்செலுத்தினார்கள். பின்னர் அந்த முட்டையை எடுத்து வேறொரு கிடேரியின் கருப்பையில் வளர்த்தார்கள். அதன் பிறகு 'இயற்கையான முறையில் பிரசவம் நடந்தது. பிறந்த குட்டி அதனைச் ‘சுமந்த தாய்க்குச் சம்பந்தம் கிடையாது, முட்டையை அளித்த 'கருத் தாய்க்கும் சம்பந்தம் இல்லை. ஆமாம் நீங்கள் எதிர்பார்த்தது சரிதான் - அந்தக் குட்டி பால்பைச் சுவர் செல்லைத்தந்த கிடேரியின் முற்றான நகல். இயற்கை கருத்தரிப்பில் பிறக்கும் குழந்தை அம்மா - அப்பா இருவரின் மரபுக் கூறுகளிலும் சம அளவு பங்கு பெற்றுப் புதிதான உயிரியாக வருவது. ஆனால் டாலி தோல் செல்களைத் தந்த முதல் ஆட்டின் மரபு நகல். அப்படியே 'முதல் ஆட்டை' (அது டாலிக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை) உரித்து வைத்திருந்தது. அது முதல் ஆட்டின் மரபு முற்றாகத் தழைக்க வந்த வாரிசு.
இப்படிச் சில வாக்கியங்களுக்குள் அடங்கி விடுவதாக நகலாக்கம் அப்படிச்சாதாரணமான விஷயமில்லை. இந்த இரண்டு மூன்று படிகளைக் கடப்பதற்குள் பல முறை வ்ழுக்கி விழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். உதாரணமாக, முட்டையைத் தரும் கிடேரியிடமிருந்து அதனை எந்த நேரத்திலும் எடுத்துவிட இயலாது; அதன் மரபுசுமக்கும் மூலக்கூறான டி.என்.ஏ. சுயபெருக்கும் (selfreplication) செய்யும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். பிறகு அதன் குரோமோசோம்களை நீக்கிய உடன் அதனை திரவ நைட்ரஜனில் இட்டு அதன் உயிர்வேதி நடவடிக்கைகளை உறைய வைக்க வேண்டும். அதேபோல் மரபுச் செல்களை அளிக்கும் ஆட்டின் பால்ப்பைச் சுவர் செல்களைக் கண்ணாடிக்குப்பியில் இட்டு வளர்க்கையில் அதிலிருந்து வீரியமிக்க செல்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். அத்தகைய செல்கள் மரபுப் பெருக்கம் நன்கு நடைபெற அதன் செய்தியாளர் ஆர்.என்.ஏ.க்கள் (Messenger RNA) இரட்டிக்கும் நேரத்தைத் துல்லியமாக அறிய வேண்டும். பின்னர், உறைந்திருக்கும் மரபு நீங்கிய முட்டையைச் சிறு மின் அதிர்வுகள் மூலம் எழுப்ப வேண்டும். இப்படிப் பற்பல நடைமுறைச் சிக்கல்கள். உங்களுக்கு முக்கியமாகத் தெரிய வேண்டியது இரண்டு உண்மைகள் 1. இந்த நகலாக்கம் ஒரு இலகுவான காரியமில்லை 2. ஆனால், இன்றைய மூலக்கூறு உயிரியலாளர்கள் (molecular biologists) இதனை நன்கு தேர்ந்துவிட்டார்கள்.
காலம் 8 நவம்

ஆடு - மனிதன் - அழகி
டாலி பிறப்பதற்கு முன்னால் அவள் வருகை ஒருவழியாக எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால் டாலிக்கு முன்னாலே அந்த ஆய்வகத்தில் மேகன் - மொராங் (Megan - Morang) எனும் இரட்டையர் பிறந்து ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரு கிடா - கிடேரியின் இயற்கைப் புணர்ச்சியில் கருத்தரிக்கப்பட்டு வந்தவர்கள் அல்லர். இவர்கள் ஒரு 90 நாள்கருவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, அதன் மரபுக் கூறுகள் உள்ளடங்கிய செல்களை ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் பெருக்கம் செய்யப்பட்டு, பின்னர் தனித்தனியாக இரண்டு இரவல் snailsafair (surrogate mothers) d5(5'68) 156sai) வளர்க்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டவர்கள். இரண்டு தாய்கள் மரபில் அச்சாக ஒன்றான இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்தது அதுதான் முதல்முறை. ஆனால் அவர்களிலும் டாலி தொழில்நுட்பத்தால் மேம்பட்டவள். டாலியின் மரபுச் சமாச்சாரங்கள் ஒரு கருவிலிருந்தோ விந்திலிருந்தோ வந்தவை அல்ல. அவை சாதாரணமான ஒரு தோல் செல்லில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டுத் திறமையான ஒரு கருவினுள் புகுத்தி வளர்க்கப்பட்டவை.
இதில் என்ன சிறப்பு? ஒரே வரியில் சொல்லப் போனால் இயற்கை இனப்பெருக்கத்திற்கென விதிக்கப்பட்ட விந்துகள் செல்களோ, கருமுட்டையோ அளிக்காமல் சாதாரண ஒரு தோலில் மரபுக் கூறுகள் சுரண்டி எடுக்கப்பட்டதுதான். முதன்முறையாக ஒரு பாலூட்டியின் மரபு ஆய்வகத்தில் நிச்சயிக்கப்பட்டது. இன்னும் உங்களுக்கு அதிர்ச்சியில்லையென்றால் அடுத்த பத்திக்குச் செல்லவும்.
சப்பை மூக்கும், குள்ளமுமான ஒரு சீனப் பெண்ணின் கருமுட்டையைக் காலி செய்து அதில் மரப்பட்டை போன்ற நிறத்தைக் கொண்ட, பருத்த நாசியுடைய ஒரு தமிழனின் உள்ளங்கையில் சுரண்டியெடுத்த சில அழுக்குக் கட்டிகளை நிரப்பி அதனை ஆறரையடியும் கூர்மூக்கும், வெளிர்தோலும் கொண்ட ஒரு ஜெர்மானிய பெண்ணின் கருப்பையில் வளர்த்துப் பிறப்பிக்கப்படும் குழந்தை - ஒரு பச்சைத் தமிழனாக இருக்க முடியும். இதுதான் நடந்து முடிந்ததன் நிச்சயமான அடுத்த கட்டம். ஒரு மருத்துவமனை வேலைக்காரனுடன் கைகுலுக்கி அதுபற்றி மறந்துபோன உலக அழகி ஐஸ்வர்யா ராயின் குழந்தை அடுத்த வருடம் ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றில் அமெரிக்காவில் பிறப்பிக்கப்படல் (நகலாக்கப்படல்) இப்பொழுது அறிவியல் பூர்வமான சாத்தியம்.
டாலியின் குழந்தைகள்
இப்படியாக 'முறைதவறிப்பிறந்த டாலி இன்று என்ன செய்து கொண்டிருக்கிறாள்? டாலிவிரைவாக மூப்பெய்தி விட்டாள். இயற்கையாகப் பிறந்த பிற ஆட்டுக் குட்டிகளைப் போலில்லாமல் டாலிக்கு விரைவிலேயே கிழடுதட்டிவிட்டது. இது நகலெடுத்துத்தங்களின் மரபை
ui 2001

Page 77
àíliíéation
MultiTrack Audio Recording Cossette / DAT to CD Mastering Music Arrangements Remix, Rap, Hip Hop, Reggae Carnatic Music Pre-Recordings CD Manufacturing Broadcasting Guality Commercials Video Post Productions Sound System Live Music Bands
Musi
C &
jimi III ILinfim fii i CD &SODGóĝi LTC5 · GaioflutL 6GJO
šGil Grišgelö) foi
SIDUALIQ) LaFÜLLIT
SMG
கனவுகளை இடைமறித்
For more
416 26
2637 Eglinton Ave. East. Scar
Email: infoGsankathy.com Web: www.sankal
 
 
 
 
 
 

Logo Business Card Flyers Brochures Posters News Paper Ads Book Covers CD Covers Photo Retouch Movie Slides
Resume
Graphics
idgar Sangiri iDuLd SOFWDio
Gib Gido oil fit DFW
Gigtewidiau SoDeri Brifion:GwyLdi CD ம் என்ற நீண்ட நாள் ஆசையா?
தமைக்கு மன்னிக்க.
Information
57 7285
borough, ON MlK2S2 Canada. hy.com Tel: 416 2677285 Fox: 416 267 2891
நவம்பர்2001

Page 78
7
என்று இளமையான உடலில் காத்துவிடலாம் என்று கனவு காண்பவர்களுக்கு ஒரு பெரிய வருத்தம். தன்னுடைய மரபுச் செல்களை அளித்த ஆட்டின் மூப்பிற்கு டாலியும் விரைவிலேயே வந்துவிட்டாள். எனவே, மூலத்தைவிட நகல் அதிக நாட்கள் வாழும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்கு டாலி நான்கு குழந்தைகளின் தாய். இவற்றில் சில இயற்கையான கிடாவின் சேர்க்கையுடன் கருத்தரிக்கப்பட்டவை. சில செயற்கையான முறையில் பிறந்தவை. மற்றவை எப்படியோ. இவ்வுலகில் உதிக்கும் உயிரினங்களின் அடிப்படைக் கடமையான மரபு காத்தலை வாரிசு பெறுவதன் டாலி மூலம் நடத்திக் காட்டிவிட்டாள்.
குறைந்தபட்சம் குழந்தைகளைப் பெற்றேடுத்ததன் மூலம் டாலி நகலாக்கத்தின் உடனடி பயனை உறுதி செய்திருக்கிறாள். அது இறைச்சிக்காக நகலெடுப்பது. நகலாக்கப்பட்ட குட்டிகள் விரைவாக வளர்ந்து முப்படைவதால் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியைத் தரக்கூடிய ஆடு, மாடுகளை வளர்ப்பது வர்த்தக ரீதியாக இலாபகரமானது. இதன் மூலம் உணவுப் பற்றாக்குறை இருக்கும் நாடுகளில் பல பலன்கள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
கொஞ்சம் பொறுங்கள்! அப்படிக் கிடைக்கும் இறைச்சியையும் கோழி முட்டையையும் சாப்பிட நீங்கள் தயாரா? பெரும்பாலானவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. சிலருக்குத் தங்கள் மதங்களின் அடிப்படையில் இயற்கை தவறி கிடைக்கும் எதிலும் உடன்பாடு இல்லை. இன்னும் சிலருக்கு விரைவில் மூப்படைந்து பெருத்த மாமிசத்தை உண்பதன் மூலம் தாமும் விரைவில் கிழவர்கள் ஆகிவிடுவோம் என்ற பயம். இவர்களின் பயத்திற்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் இவர்கள் பயம் முற்றாகத் தேவையற்றது என்றும் அறிவியல்பூர்வமாக நிருபணம் ஆக்கப்படவில்லை.
நகல் மருத்துவம்
எத்தனை நாட்களுக்குத்தான் இறைவனின் புத்தகத்தைப் பார்த்துத் பார்த்து எழுதுவது? சுயமாக எழுதிப் பார்த்தால் என்ன என்று θου அறிவியலாளர்களுக்கு ஆசை வந்துவிட்டது. மனிதனின் சிறப்புகளை இவைதானே - தனித்துவம், சிந்தித்தல் மூலம் அறிதலை முன்னகர்த்திச் செல்லுதல். அந்த ஆர்வத்தின் விளைவாக நகலெடுக்கும் முறையில் சில மாறுதல்கள் நிகழ்த்திப் பார்க்கப்பட்டுள்ளன.
பழுதுபட்ட சிறுநீகரத்தை உடைய ஒருவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துதல் இப்பொழுது சர்வசாதாரணமான நிகழ்ச்சி. நமக்கு இயற்கையில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று 60 - 70 சதவீதம் பணியாற்றினாலே நமக்குப் போதுமானது. எனவே இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட்ட ஒருவருக்கும் (பெரம்பாலும் உறவினர்) நம்முடையதில் ஒன்றைத் தானமாகத் தந்து உதவ முடிகின்றது. ஆனால், இதயம்?
காலம் 8 ந

மருத்துவர்கள் இதற்கு வழி கண்டுபிடிக்கப் பெரும் முயற்சி செய்து வருகின்றார்கள். சுலபமான ஒரு வழி, மனித இதயத்தைப் போல அமைப்பிலும் செயற் பாட்டிலும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் ஒரு விலங்கின் இதயத்தைப் பொருத்துதல். இதில் உள்ள முக்கிய நடைமுறைச் சிக்கல், தடுப்பு எதிர்வினை (immunization incompatibility) Gun (D55 Lu (5 afari Sair இதயத்தில் இருக்கும் சில புரதங்கள் (proteins) மனித உடலில் எதிர்வினையை உண்டாக்குகின்றன. மனித உடல் அதனையும் ஒரு வியாதிக் கிருமிபோல் கருதுகின்றது, அதன் மூலம் அந்தப் புரதங்களுக்குப் பாதகப் புரதங்கள் (anti-proteins) உற்பத்திச் செய்து மாற்று இதயத்தைச் செயலிழக்கச்செய்துவிடுகின்றது. இது மனித உடலின் இயற்கையான தற்காப்பு நடவடிக்கை, இதை நிறுத்துவது இன்றைய மருத்துவத்திற்கு உள்ளஒரு பெரிய
FossD.
சிறு குழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் மற்றும் அம்மைக்கானத் தடுப்பு ஊசி போடுவதை (immunization) அறிந்திருப்பீர்கள். இந்த முறையில் பாதிக்கவிருக்கும் வியாதிக் கிருமிகளைச் சிறுவயதில் ஒரு கட்டுப்பாடான அளவிற்கு ஊசி மூலம் உட்செலுத்துவார்கள். அதற்குக் குழந்தையின் உடலில் எதிர்வினை உண்டாகிப் பொதுவில் அவ்வியாதியை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் வருங்காலத்தில் அவ்வியாதியின் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதே முறையை உயிர்த் தொழில்நுட்ப அறிவியலாளர்கள் சோதித்துப் பார்க்கிறார்கள். நகலெடுக்கும் முறையில் கண்ணாடிக் குப்பியில் வளர்க்கப்படும்விலங்குச் செல்களுக்கு ஒரு கட்டுப்பாடான அளவு மனித உடலின் எதிர்வினை விஷத்தைச் செலுத்துகின்றார்கள். அதனுடைய வீரியத்தில் பாதிக்கப்பட்டு பல செல்கள் இறந்து விடுகின்றன. ஆனால் பிழைக்கும் சில செல்கள் தடுப்பு சக்தி பெற்று வளருகின்றன. அவற்றைத் தெரிந்தெடுத்து நகலாக்கத்தில் பயன்படுத்தினால் அதன் மூலம் வளரும் விலங்கும் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இதயமும் மனித உடலில் மாற்றாக இடுவதற்குத் தயாராக வருகின்றன.
இது மாற்று உறுப்புகளைப் பொருத்துவதில் மட்டும்தான் பயன்படும் என்று இல்லை. பல வியாதிகளுக்கு எதிரான சோதனைகளை நடத்திப் பார்ப்பதற்கு ஆய்வக மாதிரிகளாகவும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இன்று மருந்துகள் இல்லாத பல வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதில் மருத்துவர்களிடையே இரண்டு கருத்துகள் இல்லை.
என்னைப்போல் ஒருவன்
ஆட்டிற்குப் பிறகு வேறு பல உயிரினங்களும் இதே முறையிலும் இன்னும் சில தொழில்நுட்பம் மேம்பட்ட முறையிலும் நகல் எடுக்கப்பட்டுவிட்டன. பரிணாம அடுக்கில் மனிதனுக்குக் கீழே இருக்கும் குரங்குகள் வரை வந்து விட்டார்கள். அடுத்த கட்டம் ஒரு மனிதன் நகலெடுக்கப்பட வேண்டியதுதான். இவ்வாறு தங்களை
lui 2001

Page 79
நகலாக்கிக் கொள்வதில் பலருக்கு ஆவல். உதாரணமாக ஆணழகன் ஒருவனின் மனைவிக்கு அவனை எப்பொழுதும் தன்னிடமே தக்கவைத்துக் கொள்ள ஒருநகல். உலகப் பேரழகியை நகலெடுத்தால் பல வணிக நிறுவனங்கள் குறைந்த செலவில் விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். நகலெடுக்கப்பட்ட ஹிட்லர் அவனைப் போலே ஒரு கொடுங்கோலனாக இருப்பானா என்பதற்கு இன்றைக்கு விடை தெரியாவிட்டாலும், நகல் ஹிட்லர் நல்லவன்தான் என்று எதிர்பார்க்க வழிகள் இருக்கின்றன. ஒரு மனிதனின் ஆளுமையும் அவனது குணாதிசயங்களும் முற்றிலுமாக அவனது மரபால் தீர்மானிக்கப்படுவதில்லை. அவன் வளர்க்கப்பட்ட விதமும் அவனது சமூகமுமே அவனது ஆளுமையைச் செதுக்குகின்றன. அவனது மூக்கின் நீளம் குரோமோசோம்கள்தீர்மானிக்கப்படுகின்றது. மனிதனின் புற உடலமைப்பும் நோய் எதிர்ப்பு போன்ற அகச் செயற்பாடுகளும்தான் மரபுக் கூறுகளால் தீர்மானிக்கப் படுகின்றன. அவனுடைய ஆளுமையும் குணங்களும் பெரிதும் அவனுடைய வளர்ப்புச் சூழலால் தீர்மானிக்கப் படுகின்றது. மரபுக் கூறுகளால் ஹிட்லரின் கொடுங்கோல் குணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால் அவனுக்குத் தங்களில் சரி பாதி மரபை அளித்த தாயும் தந்தையும் அவனில் குறைந்தபட்சம் பாதியளவாவது கெட்டவர்களாக இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக, ஒரு வம்சத்தில் பிறப்பவர்கள் அனைவரும் நல்லவர் களாகவோ கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. அப்படியிருந்திருந்தால் நல்லவர்கள் ஒழிக்கப்பட்டு இப்பொழுது மனித குலத்தில் கெட்டவர்கள்தான் மிஞ்சி இருப்பார்கள். எனவே மரபுவழி நகலாக்கத்தில் குணங்களைச் சேகரிப்பதில் பயனில்லை.
கூர்மூக்கும், வெளிர்தோலும் மாத்திரம்தான்மரபினால் நிச்சயிக்கப்படுகின்றன என்றில்லை. சில வியாதிகள் மரபுவழியாக சந்ததிதோறும் தொடர்ந்து வருவன என்று இன்றைய மருத்துவம் சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்துள்ளது. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் இத்தகைய குறைபாடுகள் பெருக வாய்ப்பு அதிகம். மரபு வழிக் குறைவுடன் பிறக்கவிருக்கும் குழந்தையைக் கருத்தரிக்கும் முன் மரபுச் செல்களைத் தனித்துப் பிரித்து அவற்றினிடையே குறைபாடுகளைத் தாங்கி வளரும் செல்களை வெட்டியெடுத்து, ஆரோக்கியமான பிற மனிதர்களின் செல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியை உள்ளிட முடியும். இதன் மூலம் மரபு வழியாகத் தொடரும் குறைகளைத் தடுத்து நிறுத்த இயலும். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், பிறக்கும் குழந்தை மாத்திரமல்லாது அதனிடமிருந்து தொடரும் சந்ததியும் குறைகளின்றி தழைக்கும். ஏனென்றால், அடிப்படையிலேயே நோய்க்கான மரபுக்கூறுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுவிட்டன.
தண்டுச் செல்கள்
இவையெல்லாற்றையும்விட, மரபு ரீதியான வியாதிகளைக் குணப்படுத்த நேரடியான வழிமுறை
கலம் 8

ஒன்று உள்ளது. அதன் அடிப்படை தண்டுச் செல்கள்(stem cells) எனப்படும் கருப்பெருக்கத்தின் துவக்க காலச் செல்கள். இத்தகைய செல்கள் விரைவாக பெருக்கம் செய்வன. இன்றைய உயர்த் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் முக்கியமான ஒன்று தண்டுச்செல்களைப் பற்றிக் கண்டறிவது. ஏனெனில் தண்டுச் செல்கள் ஒரு விலங்கின் உடலில் இருக்கும் எந்த வகையான திசுக்களாகவும், உறுப்புகளாகவும் உருமாற வல்லன. தண்டுச் செல்களைக் கொண்டு உங்கள் உடலில் பழுதுபட்ட ஒரு உறுப்பினைத் திரும்ப நிர்மானித்துக் கொள்ளலாம். ஆராய்ச்சியாளர்களின் திட்டப்படி ஒவ்வொரு நோயாளியின் உடலில் இருந்தும் தண்டுச் செல்களைப் பிரித்தெடுத்து ஆய்வகத்தில் நகலாக்கத்தின் மூலம் நோயாளின் உடலுக்கு நகலினை உருவாக்க முடியும்.
இத்தகைய ஆராய்ச்சிகளில் நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தண்டுச் செல்களை மனிதக் கருமுட்டையின் (மரபு நீக்கம் செய்யப்பட்டது) டாலி பிறந்ததைப் போன்ற முறையில் உட்செலுத்தி வளர விடுவார்கள். பின்னர் இவற்றின் பெருக்கத்தின் துவக்க காலச் செல்களிலிருந்து வருங்காலத்தில் நோயாளியின் பழுதுபட்ட பாகமாக மாறவிருக்கும் (உதாரணமாக இதயம்) செல்களை 'கருவிலிருந்து அடையாளம் கண்டு எடுத்து கண்ணாடிக் குப்பியில் வளர்ப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்தபின் அந்தச் செல்கள் நோயாளியின் இதயத்தைப் போல் ஒத்ததாக அமையும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நோன்யக் குணப்படுத்த இயலும். இந்த முறையில் குணம் கிட்டத்தட்ட 95 சதவீதம் உறுதியானது. ஏனெனில் இது நோயாளியின் உடலின்
ஒரு பாகத்தைப் போன்றது. உலக அழகி மனிதனின் உடலில் வீ ரி ய மி கு ந் த ஐஸ்வர்யா ராயின் தண்டுச் செல்களைக் கண்டறிவதில் இப்பொழுது குழந்தை அடுத்த ஆராய்ச்சியாளர்களிடையே வருடம் ஒரு ஆப்பிரிக்கத்
பலத்த போட்டி. வெகு சமீபத்திய ஆய்வுகளில் தாயின் வயிற்றில் உடலின் le பகுதிகளிலிருந்தும் தண்டுச் அமெரிக்காவில் செல்கள் பிரித்தறியப்பட்டு வருகின்றது. உதாரணமாக நகலாக்கப்படல் கனடா நாட்டின் மெக்கில் பல்கலையில் சமீபத்தில் இப்பொழுது அறிவியல்
தோல்களின் அடியின் A
பூர்வமான சாத்தியம்.
வம்பர் 2001

Page 80
7
இருக்கும் அடியடுக்குச் செல்கள் தண்டுச் செல்களைத் தரவல்லன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் நடைமுறைச் சிக்கல்கள் பெரிதும் அடையாளங் காணப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. வேறொரு பக்கம், சமய மற்றும் சமூக நெறிமுறைகள் ரீதியிலான பலத்த எதிர்ப்பு இருக்கிறது. சென்ற பத்தியில் நாம் சிறப்பித்துச் சொன்ன சொல் 'கருவிலிருந்து'. இதற்கு என்ன அர்த்தம்? உங்கள் உடலுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை நீங்கள் ஒரு கருவினை அழித்து உருவாக்கிக் கொள்கிறீர்கள். அது மனிதக் கரு உருவான அந்த நொடியிலிருந்தே அதற்கு உயிர் உண்டு என்றும், ஒர் உயிரினை அழிக்க மனிதனுக்கு ஒருக்காலும் எந்தவிதமான உரிமையும் இல்லை எனக் கருதும் சமயவாதிகளுக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்று. இதற்கு பல உயிர்தொழில்நுட்பவியலார் வேறுவிதமாகப் பதிலளிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கருவான மனித முட்டை ஆன்மா இல்லாத ஒரு வளரும் செல்களின் தொகுப்பே. அதற்கான ஆன்மா, கருத்தரிப்பின் பின் பல மாதங்கள் கழித்துத்தான் உண்டாகிறது. இந்த வகையில் இத்தகைய செல்கள், மனித உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவ ஆராய்ச்சியிலும், மருத்துவப் பயன்களுக்கும் கையாளுவதில் எந்தவிதமான தார்மீகக் கடமை தவறல்களும் இல்லை. இதுவே, டாலியன் சிருஷ்டி கர்த்தாவான இயனா வில்மட்டின் சித்தாந்தம். ஆனால், கட்டுப்பாடுமிக்க கத்தோலிக்கர்களும், இன்னும் சில மதப்பிரிவினரும் இதற்கு உடன்படல் என்பது முற்றிலும் நடக்காத காரியம்.
அப்படி ஆராய்ச்சியிலும் மருத்துவத்திலும் தண்டுச் செல்களையும், மனித நகல்களின் துவக்க காலக் கருக்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லும் பேராசிரியர் வில்மட்கூட மனிதனை முற்றாக நகலெடுப்பது என்பது தன்னுடைய சிந்தனைக்கு ஏற்புடையது அன்று என்று கூறுகின்றார்.இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் மனித நகல் கரு, நாட்பட வளர்ந்துவிட்டால் அதனை அழிக்க வேண்டுமா அல்லது ஒரு உயிரை அழிக்கக் கூடாது எனும் சித்தாந்தப்படி ஒரு மனித நகலை உருவாக்கிவிடவேண்டுமாஇது ஒரு பெரிய தலைவலியைத் தரக்கூடிய கேள்வி. லாபத்திலும், வெறித்தனமான அறிவியல் ஆர்வத்திலும் ஊறிப்போன ஒரு உயிர்தொழில்நுட்ப விற்பன்னர் ஒரு நகலை உருவாக்கவிடக் கூடிய சாத்தியம் அவசியம் இருக்கிறது. மனித நகல் வேண்டுமா எனும் கேள்விக்கு விடை தெரியாத நிலையில், தண்டுச் செல்களின் ஆராய்ச்சியையும், நகலாக்கச் சோதனைகளையும் சற்றுக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமே! நகலாக்கம் - சில உண்மைகள் )ே நக்லாக்கம் நாம் நினைப்பது போல் இயற்கைக்கு
முற்றிலுமாக முரணானது இல்லை; பல சிறிய உயிரினங்கள் நகலாக்கம் மூலமாகவே
காலம் & நல

இனப்பெருக்கம் செய்கின்றன. உதாரணம் - சிலவகை இறால்கள்.
9ே இரட்டையர்களும் முற்றிலுமாக ஒருவருக்கொருவர் நகல் என்று சொல்ல (ւpւգ սյոՖ]. பெண்ணின் கருமுட்டை
உற்பத்தியாகும் சமயத்தில் அது இரண்டாகப் பிளவுபட்டு இரு வேறு விந்தின் அணுக்களால் கருத்தரிக்கப்படுவன நகல்களாக ஒருக்காலும் இருக்க முடியாது. ஆனால், கருத்தரித்த ஒரு முட்டை இரண்டாகப் பிளந்து வளர்ச்சியடையும் பொழுது அவை நகல்களாக அமையச் சாத்தியங்கள் உண்டு. அந்த வகையிலும் அவை முற்றாக ஒத்து இருத்தல் இல்லை. 9ே நகல்களைப் பண்ணை முறையில் "பயிரிட்டு" மனித உடலுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளைக் கட்ட முடியுமா? - ஆம், அதற்கானத் தொழில்நுட்பம் நம்மிடையே கிட்டத்தட்ட முதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. எனினும் மனித நகலாக்கத்தில் சில சமூக மற்றும் சமய முறையிலான நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என நம்பப்படுவதால், இன்னும் சில காலத்திற்குள் உங்கள் இதயம் பழுதுபட்டால் மனித உடலில் பொருந்தாமைக்குத் தடுப்பு சக்தி அளிக்கப்பட்ட பன்றியின் இதயம்தான் உங்களுக்குப் பொருத்தப்படும் என நான் நம்பலாம். 9ே அத்தியாவசியமான உறுப்புகளை மாத்திரமே (முழு உடலும் இல்லாமல்) வளர்க்க முடியுமா? - கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் இதற்கானத் தொழில்நுட்பம் இன்னும் நமக்குத் துவக்க நிலையிலேயே உள்ளது. 9ே நகல்களை அதி பராக்கிரம வீரர்களாகவும், தற்கொலைப் படையினராகவும் வளர்க்க முடியுமா? - பெரும்பாலும் ஆமாம். இது மனித நகலாக்கத்தின் மீது சுமத்தப்படும் அடிப்படை நெறிமுறை ரீதியிலான குற்றச்சாட்டு. இதில் பெருமளவுக்கு உண்மை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மரபுக் கட்டுப்பாடு என்பது ஒரு குருட்டாம்போக்கு ஆராய்ச்சிதான். வீரனாக வளரும் உங்கள் நகலுடைய முழங்கால் எலும்பு நொறுங்கக் கூடியதாக இருந்துவிடக் கூடும். இதற்கான காரணம் மனிதனின் ஒவ்வொரு குணாதிசியங்களும் ஒரு தனிப்பட்ட மரபணுவினாலோ மரபணுத் தொகுப்பினாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக, உயரத்தைத் தீர்மானிக்கும் அதே அணு வரிசைத் தொகுப்பின் ஒரு பகுதி நகைச்சுவை உணர்வையும் தீர்மானிக்க வல்லதாக இருக்கக் கூடும். இது மிகவும் சிக்கலான முடிச்சு. இதை அழிப்பது என்பது உயிர்தொழில்நுட்ப நல்லுவர்களுக்கு இன்னும் pyrop
but 2001

Page 81
நூற்றாண்டுக்குள் கைவரக் கூடிய காரியமாகத் தெரியவில்லை. 9ே நகலாக்கத்தின் மூலம் முற்றாக ஒழியவிருக்கும் விலங்கினங்களைப் பிரதி எடுத்துக் கொள்ள இயலுமா? தற்சமயம் இது ஒரு கடினமான காரியமாகத்தான் இருக்கிறது. ஒரு டாலியை வளர்க்க 276 முறை சோதனை செய்ய வேண்டியிருந்தது. ஆனாலும் இது ஒரு முக்கியமான தேவைதான். இதன் மூலம் உயிர்பன்முகத்தை (biodiversity) நிலைகொள்ளச் செய்ய முடியுமென்றால் இதனை முயன்று பார்ப்பது அவசியமாகத்தான் படுகிறது. இதற்கு ஒழியவிருக்கும் உயிரினத்தில் அதிக அளவு பெண்கள் இருப்பது அவசியம். ஆனாலும சில சோதனைகளில் தொடர்புள்ள பிற உயிரிகளின் பெண்கள் வெற்றிகரமாகப் பயன்பட்டிருக் கின்றன. இந்தியா, மலேசியா, இந்தோசீனா பிரதேசங்களில் அருகிவரும் கவுர் இனமாட்டை, அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஐயோவா பசுவின் துணைகொண்டு நகலெடுத்து இருக்கிறார்கள். இப்படிப் பிறந்த நோவா எனும் கவுர் மாடு நல்ல முறையில் வளர்ந்தது ஒரு அதிசயம். 9ே இறுதியாக, ஆண்களின் துணையின்றி பெண்களல் நலாக்கத்தின் மூலம் இனப்பெருக்கம் செய்ய இயலுமா? அதிர்ச்சி தரக்கூடிய இந்தக் கேள்விக்கு விடை - ஆமாம்! பெண்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சாதாரண செல்களின் மரபுக்கூறை இன்னொரு பெண்ணின் கருமுட்டையில் செலுத்தி அதை வேறொரு பெண்ணின் கருவறையில் வளர்த்துப் பிறப்பிப்பது - சாத்தியமான செயல்தான். நகலாக்கம் - நெறிமுறைக்கு அறிவியல்
தர்மங்களும் நாம் முன்னரே இந்தக் கட்டுரையில் பலமுறை நகலாக்கத்தில் ஏற்படக்கூடிய தார்மீக முறை தவறல்களையும், சமய, சமூக ரீதியிலான தர்மம் பிழத்தல்களையும் பார்த்தோம். இவற்றின் சில அதிர்ச்சி தரக்கூடிய தொகுப்புகளைப் பட்டியலிடுவோம். 1. எந்த ஒரு விலங்கின் ஏதாவது ஒரு செல்லில் இருந்தும் மரபுக் கூறுகள் பிரிக்கப்பட்டு வேறொரு விலங்கில் நகலெடுக்கப்படும் சாத்தியம் உள்ளது. அதாவது நாம் சொன்னதுபோல் உலக அழகியோ, கால்பந்து வீரரோ, ஒருவருடன் கைகுலுக்கினால் அவருடைய நகல் ஆய்வகத்தில் வடிக்கப்படக் கூடும். புகழ்மிக்க ஒவ்வொருவரும் தங்களைக் காப்புரிமைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் நேரலாம். 2. எந்த ஒரு விலங்கின் மரபுக் கூறுகளையும்
IsINb

79
வேறொரு விலங்கின் மரபுக் கூறுகளுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தி, அழகு போன்றவை கொண்ட ஒரு சந்ததியை வடித்தெடுக்க முடியும். உதாரணமாக, சென்ற ஆண்டு மனிதனுக்குக் காயம்பட்டால் இரத்தத்தை உறைய வைக்கும் மரபுக் கூறுகளைப் பிரித்தெடுத்து ஒரு ஆட்டில் செலுத்தி, நகலெடுத்தார்கள். பாலி என்ற பெயரிடப்பட்ட இந்த ஆட்டுக்குட்டி ஒரு வகையில் மனிதனின் மரபுக் கூறுகளை உள்ளடக்கியது. இதன் உச்சகட்ட அபாயம், இரு வேறு உயிரினங்கள் கொண்டு பிறக்கும் ஒரு குட்டி முற்றிலுமாக வேறு விலங்காக மாறிவிடக்கூடும். இது இறைவனால் படைக்கப்பட்டதோ, பரிணாம வளர்ச்சியால் உருவானதோ அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரினம். இது சூழலியலில எந்தப் பங்கை ஆற்றக்கூடும் என யாருக்கும் தெரியாது.
3. மனிதனுக்குச் சேவையாற்ற வேண்டும், மனிதனின் நோய்களை எந்த வகையிலாவது குணப்படுத்த வேண்டும். எனும் தன்னலம் கருதாத மருத்துவ ஆராய்ச்சியிலும் நகல்களையும், தண்டுச் செல்களையும் பயன்படுத்துவதில் பலத்த அபாயம் உள்ளது. நோய்கள் குணமாகும் அதே வேளையில் அந்த மரபுக் கூறுகளில் ஒரு பகுதி மனிதனின் வேறு கு ண த்  ைத யே T நகலெடுக்கப்பட்ட
gy Go) LD ü 68) u G. u. a
முற்றாக மாற்றிவிடக் ஹிட்லர் அவனைப்
கூடும்.
4. அ வ் வ |ா ற ர ன போலே ஒரு
ஆ ரா ய் ச் சி க ளி ல், பயன்படும் கருக்கள் கொடுங்கோலனாக நாட்கள் கடந்து வளர்ந்து இருப்பானா
போனால் உயிரையும், உடலையும் கொண்ட 8 'மனிதனை கொலை எனபதறகு செய்யதார்மீக ரீதியிலான இன்றைக்கு விடை தகுதி நமக்கு உண்டா?
வளர்ந்த கரு, ஒரு தனி தெரியாவிட்டாலும், உயிர், எந்த விதத்திலும்
அழிக்கப்படக் கூடாது நகல் ஹிட்லர்
எனும் சிலரின் A. 姊 崇 கொள்கைப்படி ஒரு நலலவனதான மனித நகலை உருவாக 8 விடலாமா? என்று எதிர்பார்க்க
5. என்னதான் இருந்தாலும் வழிகள்
மரபுச் சோதனைகள்
இன்னும் 'குருட்டாம் இருக்கின்றன.
Aniui 2001

Page 82
8
போக்கு" முயற்சிகள்தான். மரபியல் ஆராய்ச்சியின் எதிரிகளின் அடையாளச் சின்னம் ஆய்வகத்தில் உருவான 'பெல்ஸ்ட்வில் பன்றி (Bestivle Pig) எனும் நகல். மனித வளர்ச்சி ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்ய அமெரிக்க வேளாண் துறையின் ஆராய்ச்சிக் கூடத்தில் இந்தப் பன்றி வடிக்கப்பட்டது. துத்தநாகம் உள்ளடங்கிய உணவை அளித்த பின்னரே, விளைவாக வளர வேண்டும் என்று கணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பன்றி எல்லோருடைய கணிப்புகளையும் மீறி அதற்கு முன்னரே இராட்சத வளர்ச்சியைப் பெறத் தொடங்கியது; விரைவில் முழி பிதுங்கி, உடல் பருத்து அசிங்கமாக மாறிவிட்ட இந்தப் பன்றி இன்று உலகளாவிய உயிர்தொழில்நுட்ப எதிர்ப்பாளர்களின் அடையாளச் சின்னம். இத்தகைய விலங்கு ஆராய்ச்சிகளில் அவற்றை வெட்டி அழிப்பது என்பது சர்வசாதாரணம், ஆனால் இதுபோல் முழிபிதுங்கி ஒரு மனித நகல் உருவானால் அதையும் ஆராய்ச்சிக்குப் பலியிடுவார்களா? நகலாக்கம் மூலம் இனப்பெருக்கத்திற்கு ஆண்களே தேவையில்லை. பெண் ஒருத்தியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களில் மரபணுக்களை வடித் தெடுத்து, இன்னொரு பெண்ணின் கருமுட்டையில் செலுத்தி, குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஆண்களில் ஆர்வம் இல்லாத ஓரினச்சேர்க்கை விருப்பம் கொண்ட பெண்களால் (lesbians) குழந்தை பெற்றுத் தாயாக இயலும். ஆனால் ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்களுக்கு (gays) குழந்தை தேவையென்றால் ஏதாவது ஒரு பெண்ணின் உதவி கட்டாயம் தேவை. அவளது கருமுட்டைக்குள் தான் வாரிசை வளர்த்தெடுக்கவியலும். ஆனால், இந்த முறையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. கலவிமூலம் ஆண் - பெண் இணைந்து உருவாகும் குழந்தையின் மரபுக் கூறுகளும் புறவடிவும் சேர்க்கையின்கலப்பினால் தாய் - தந்தை இருவரிலிருந்தும் மாறுபட்டு ஒரு தனித்த குழந்தையாக உருவாகும். நகலாக்கம் மூலம் பெண்கள் பெறும் குழந்தை, இருவரில் ஒருவரின் மரபு நகலாகத்தான் இருக்கும்; அதற்கென்று மரபுக் கூறுகளில் தனித்தன்மை கிடையாது. . ஆனால், இவை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் அபாயம் விளைவிக்கக் கூடிய ஒரு சாத்தியம் உண்டு. அது மரபு மருத்துவ முறைகளால் தங்கள் இனத்தை, நோயற்ற, ஆற்றல் மிக்க இனமாக மாற்றிக் கொண்ட ஒரு மனித இனம், உதாரணமாக, அமெரிக்கர்களில் சிலர், அவர்களுக்குள்ளே அதன் பயன்களை
காலம் 8 ந

இரகசியமாக ஆக்கி, மனிதனில் மரபு மேம்பட்ட ஒரு குழுவை உருவாக்க இயலும், இத்தகைய - குழு, தங்களின் உடலமைப்பு மற்றும் பிற அமைப்பு உயர்வினால் மற்ற இனங்களை எளிதில் அடிமைப்படுத்திவிட இயலும். அவர்கள் பிற இனங்களுடன் புணர்ச்சியைத் தவிர்த்து, உயர்ந்த சாதியாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவியலும். நாம் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கண்ட பிறப்பால் உயர்வு தாழ்வு எனும் இழிநிலையை மனிதகுலம் அடையவியலும். அது மானுடத்தில் பல மாறுதல்களை உருவாக்கக் கூடும். இவை எல்லாவற்றுக்கும் எதிர்ப்புகள் இருக்கும். மரபு மருத்துவத்திற்கும், தண்டுச் செல் ஆராய்ச்சி மற்றும் நகலாக்கத்திற்கு இப்பொழுது இருக்கும் எதிர்ப்புகள் மெதுவாகக் குறையக் கூடும். இதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். சோதனைக் குழாய்க் குழந்தைகள் முதலில் தோன்றிய பொழுது அவற்றைப் பலரும் வெறுத்தார்கள், அது இயற்கைக்கு முரணானது எனக் கூச்சலிட்டார்கள். ஆனால், இன்றைய நிலை என்ன? இந்தியா போன்ற மூன்றாவது உலக நாடுகளிலும் கூட இது இப்பொழுது சர்வசாதாரணமாக ஆகிவிட்டிருக்கிறது. செயற்கைக் கருத்தரிப்பும், சோதனைக் குழாயும், மாறுத் தாய் சுமந்து பெற்கும் குழந்தைகளும் இருகரம் நீட்டி வரவேற்கப்படுகின்றன. இவை,
இனப்பெருக்கக் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு இறைவன்தந்த வரப்பிரசாதகமாகக் கருதப்படுகின்றன. இவற்றை வியாபார நோக்கோடு செய்யும் மருத்துவர்கள்கூடத் தெய்வங்களாகப்
போற்றப்படுகிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை. எத்தகைய அறிவியல் வளர்ச்சியையும் மனிதன் காலப்போக்கில் எடுத்தாட் கொண்டு விடுகின்றான். அவ்வாறு நகலாக்கத்திற்கு, இன்று இருக்கும் உணர்ச்சிபூர்வமான எதிர்ப்பு மெதுவான ஆதரவாக மாறக் கூடும். அப்பொழுது நாம் பட்டியலிட்ட எச்சரிக்கைகள் நடைமுறை பிரச்சினைகளாக உருமாறும். புதிய பிரச்சினைகள் தோன்றக் கூடும். இதற்கெல்லாம் விடை நாம் பலமுறை கேட்டு அலுத்துப் போனதுதான் - 'காலம்தான் பதில் சொல்ல வேண்டும்." O
References:
Special Report on Cloning and Stem Cells - Links to lots of articles on Cloning Cloning of Medicine-lan Wilmut, Scientific American, Dec. 1998 isolation of multipotent adult stem cells from the dermis of mammalian skin, J.G Toma, M. Akhavan, K.J.L. Fernandes, F. Barnabe-Heider, A.Sadikot, D.R.Kaplan FD Miller, Nature cel BiologyVol.3.p-778 (2001)
lui 2001

Page 83
கட்டுரை
பூனை
பூனை எலியைப் பிடிக்கும் என்று அரிவரியில் படித்திருக்கிறோம். அந்த வாக்கியத்தில் ஒரு தத்துவம் அடங்கியிருப்பதை நாம் அப்பொழுது உணர்ந்திருக்க நியாயமில்லை. பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனைகறுப்பா வெள்ளையா என்பது முக்கியமல்ல என்ற அந்தத்தத்துவத்தை உதிர்த்தவர்: சீனப் பெருந்தலைவர் டெங் சியாவோபிங். இது ஆர் குத்தியாயினும் அரிசி ஆகட்டும் என்ற பழமொழி மூலம் ஏற்கனவே தமிழுலகம் அறிந்த தத்துவமே
புட்டி
டெங் சியாவோபிங் 1904 ஆகஸ்ட் 22ஆம் திகதி சீன தேசத்தில், சிச்சுவான் மாகாணத்தில், பைவன்கன் கிராமத்தில் பிறந்தார். டெங் சியாவோபிங் என்பது சீன மொழியில் சின்னப்புட்டி என்று பொருள்படும். 1976இல் மாஒ மறைந்த பிற்பாடு டெங் தலைமை ஏற்பதை விரும்பியவர்கள் சின்னஞ் சிறு புட்டிகளை மரங்களில் கட்டித் தொங்கவிட்டுத் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதுண்டு. அதே வேளை 1989இல் தியனன்மன் சதுக்கத்தில் (சொர்க்க வாயிலில்) மாணவர்கள் கொல்லப்பட்ட பொழுது கொதிப்படைந்தவர்கள் சின்னஞ் சிறு புட்டிகளைச் சிதறடித்துத் தமது கொதிப்பைப் புலப்படுத்தியதுமுண்டு.
குள்ளம்
மாஒ சராசரி சீனரைவிட உயரங் கூடியவர். டெங் உயரங் குறைந்தவர். (4' - 10") 1957இல் மாஸ்கோவில் வைத்துப் பிரதமர் குருசேவ் இந்தக் குள்ளரை எள்ளி நகையாடிபொழுது மாஒ குறுக்கிட்டு, இந்தக் குள்ளப் பயலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சியாங்கை சேக்கின் 10 இலட்சம் படையினரை முறியடித்த பயல். முன்னுக்கு வரக்கூடிய பயல். என்று எச்சரித்தார். டெங்கின் மண்டையைக் குறைத்து மதிப்பிட்டவர்களும் மாஒவின் கடைசி மனைவி சியாங் சிங் அம்மையார் முக்கியமானவர். தொப்பிக்கே பொருந்தாத சொத்தித் தலையர் என்று டெங்கைப் பழித்தவர் அம்மையார்
கல்வி
மாஓவைப் போலவே டெங்கும் வசதி படைத்த
பெளத்தக் குடும்பத்தில் உதித்தவர். ஆதலால் கல்வி
பயிலும் வசதி படைத்தவர். 1920இல் படித்துக் கொண்டு
காலம் 2
 

81
ாறிய டெங்சியாவோபிங்
வேலை செய்யும் திட்டத்துடன் அவர் பிரான்சுக்குப் புறப்பட்டார். பாரிசு மாநகரத்து கிறெப்சோ (Creusot) எஃகு - உருக்குத் தொழிற்சாலையிலும், றெனோல் (Renault) வாகனத் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். அவரைவிட அவருடைய கரி கோலியின் உயரம் அதிகம் என்று அவருடன் கூட வேலை செய்தவர்கள் கேலி செய்ததுண்டு. 1925இல் பாரிசில் வைத்தே சூ என்லாயும் டெங்கும் முதன்முதல் சந்தித்துக் கொண்டார்கள். சூவும் பாரிசில் படித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருந்தார். சூவின் மாடிக் கூடத்தில் டெங் சிறிது காலம் தங்கியிருந்தார். பொதுவுடைமையாளராகிய சூவின் உறவினால் டெங்கும் பொதுவுடைமையாளரானார். 1926இல் டெங் பாரிசை விட்டு மாஸ்கோ சென்று, அங்கு சிறிது காலம் பயின்று, 1927இல் சீனா திரும்பினார்.
பழக்கம்
மாஒவைப் போலவே டெங்கும் ஒரு நீச்சல் மன்னர், ஒரு புகைத்தல் பிரியர். மாஒ இடைவிட்டுப் புகைப்பவர், டெங் இடைவிடாது புகைப்பவர்-முதல் வெண்சுருட்டில் அடுத்த வெண்சுருட்டை மூட்டிப் புகைப்பவர். அத்துடன் (Bridge) சீட்டாட்டம் என்றால் சீமானுக்கு ஒரே கொண்டாட்டம். ஒரு தடவை டெங் தலைநகர் பீஜிங்கிலிருந்து 1,200 மைல் தூரத்தில் இருந்த வேளை, அங்கு தகுந்த சீட்டாடிகள் இல்லாதபடியால், தலைநகரிலிருந்து தனி விமானத்தில் தனது வாடிக்கையான கூட்டாளிகளை வரவழைத்துச் சீட்டாடியதுண்டு.
பதவி
1934ஆம், 35ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட பயணம் உட்பட மாஒவின் தலைமையில் நடந்தேறிய போராட்டங்கள் அனைத்திலும் மாஒவே மெச்சும் வண்ணம் டெங் அரும்பெருஞ் சாதனைகளை நிகழ்த்தினார். 1950இல் மாஒ இந்தக்குள்ள மாமறவனைத் தென்மேற்குச் சீனாவில் தமது பதிலாட்சியாளராய் அமர்த்தினார். 1952இல் மாஒ மறுபடியும் டெங்கைத் தலைநகருக்கு வரவழைத்து, துணைப் பிரதமராக்கி, பொருளாதார - நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தினார். அதன் பெறுபேறாக ஏற்கெனவே பொருளாதாரப் பணிகளைக் கவனித்துவந்த ஜனாதிபதி லியுசாசியுடனும், நிர்வாக அலுவல்களைக் கவனித்து வந்த பிரதமர் சூ என்லாயுடனும் இணைந்து செயற்படும் வாய்ப்பு
நவம்பர் 2001

Page 84
82
டெங்கிற்குக் கிட்டியது. 1954இல் மாஒதம் உள்ளங்கவர்ந்த குள்ளரை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பதவிக்கு உயர்த்தினார்.
கொள்கை
1965இல் ஜனாதிபதி லியு பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை முன் வைத்தார். அவை முதலாளித்துவத்துக்கு இட்டுச் செல்லும் என்று நினைத்து வெகுண்டெழுந்த மாஓ, லியுவை ஒரு முதலாளித்துவவாதி என்று சாடினார். முதலாளித்துவப் போக்கு புலப்படுவது அப்படி ஒன்றும் பயங்கரமான சங்கதி அல்ல என்று லியு பதிலடி கொடுத்தார். போதாக்குறைக்கு லியுவை ஆதரித்த டெங், பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லவா என்பதே முக்கியம், பூனை கறுப்பா வெள்ளையா என்பது முக்கியமல்ல (கொள்கையால் பயன் விளைகிறதா அல்லவா என்பதே முக்கியம், அது தனியுடைமைக் கொள்கையா பொதுவுடைமைக் கொள்கையா என்பது முக்கியமல்ல) என்று தர்க்கித்தார். அதாவது மாஒ வளர்த்த பூனை அவருக்குக் குறுக்கே ஒடித்துர்க்குறிகாட்டிவிட்டது!
புறவாழ்வு
தகர்த்தெறியுங்கள் தலைமையகத்தை என்று ஆணை இட்டுவிட்டார் மாஒ. 1966-இல் மாஓ அப்படி ஆணை இட்டது முதல் 1976இல் அவர் மாளும் வரை நிகழ்ந்த கலாசாரப் புரட்சி காலப்பகுதியில் மாஒவின் உடந்தையுடன், சியாங் சிங் அம்மையார் உள்ளடங்கிய நால்வழ் குழுவினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட செங் காவலர்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்களுள் லியுவும் டெங்கும் முக்கியமானவர்கள். மாஓவுடன் நேரடியாக மோதியபடியால் லியு சிறை செல்ல நேர்ந்தது. ஜனாதிபதி லியு சிறைக் கைதியாகவே மடிந்தார். உருத்திராட்சப் பூனையாகிய டெங் பதவி குறைக்கப்பட்டு, ஜியாங்சி மாகாணத்தில் ஒர் உழவு யந்திரத் தொழிற்சாலையில் உடல் வேலைக்கு அமர்த்தப் பட்டார். பதவி குறைப்பு அவர் மனதில் வெப்பியாரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் கலாசாரப் புரட்சிக் காலப்பகுதியில் நால்வர் குழு என்னைக் கொல்லப் பார்த்தது, தலைவர் மாஒவே என்னைக் காத்தது என்று டெங் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
மறுவாழ்வு
1972இல் பிரதமர் சூவைப் புற்றுநோய் சூழ்ந்து கொண்டது. அவருடைய அலுவலகக் கோப்புகளை நீட்டுக்கு அடுக்கினால் அவை மாபெருஞ் சீன மதிலையே விஞ்சிவிடும். ஆதலால் சூவின் பளுவைக் குறைப்பதற்கு டெங்கை மீண்டம் பீஜிங்கிற்கு வரவழைத்து, துணைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஆணை பிறப்பித்தார் மாஓ, டெங்கை மீண்டும் பதவியில் அமர்த்தும் தறுவாயில் மாஒ கூறிய வார்த்தைகள் திட்டவட்டமானவை: டெங் ஒரு திறமைசாலி. அவர் பஞ்சினுள் பொதிந்த ஊசி போன்றவர். கருத்துக்கள் மிகுந்தவர். அவர் முட்டாள்தனமாக மோதுவதில்லை. பொறுப்புணர்ச்சி
காலம் 8 நவ

மிகுந்தவர். அவருடைய கணிப்புகள் முற்று முழுதானவை. நடவடிக்கைகள் திட்பமானவை. என்று மாஓ டெங்கைப் போற்றினார். குற்றச்சாட்டு
மூப்பும் பிணியும் பையப்பைய மாஒவையும் பீடிக்கவே செய்தன. மாஓவுக்கும் வெளியுலகுக்கும் இடையே அவருடைய பெறாமகன் மாஒ யுவாங்கின், தாதி சாங் யுவெங், மெய்காவலர் காங் செங், மொழிபெயர்ப்பாளர்கள் வாங் கைறொங், நான்சி ராங் ஆகியோர் இடம்பிடித்துக் கொண்டார்கள். கலாசாரப் புரட்சிக் காலப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மூட்டிய தீயை எல்லாம் பிரதம்iர் சூ அணைத்துவிட்டார். நீங்கள் ஆக்கியவற்றை எல்லாம் அழிப்பதற்குச் சூவும் டெங்கும் திட்டம் தீட்டியுள்ளார்கள். டெங் வெல்லுக்கு வெல்லு வைத்தியசாலைக்குச் சென்று சூவிடம் உத்தரவு பெற்று வருகிறார். டெங் உங்களிடம் வந்து உத்தரவு பெறுவதில்லை. பிரச்சினைக்கு மூல காரணம் டெங். அவர் உங்களைப் பற்றியோ கலாசாரப் புரட்சியைப் பற்றியோ வாய் திறப்பதில்லை. அவர் லியுவையும் சூவையும் போற்றுகிறார். உற்பத்தி, உற்பத்தி என்று கத்தித் திரிகிறார். என்று அவர்கள் ஆள் மாறி மாஒவிடம் ஒதினார்கள்.
ւփ
1978, ஜனவரி 8ஆம் திகதி பிரதமர் சூ மறைந்தார். டெங் இரங்கலுரைநிகழ்த்தினார். சூவின் இறுதிச்சடங்கில் மாஒ கலந்து கொள்ளவுமில்லை. இரங்கல் செய்தி வெளியிடவுமில்லை. எனினும் ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமது பிரதமராகவும் சாணக்கியராகவும் திகழ்ந்த அமரர் சூவை மாஒ அடிக்கடி நினைத்துருகியதுண்டு. கிங் மிங் (சித்திரைப்) பருவத்தில், தியனன்மன் சதுக்கத்தில் அமரர் சூவை நினைவுகூர்வதற்குத் திரண்ட இலட்சக் கணக்கான பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக் கணக்கானோர் மாண்டார்கள். மாண்ட பழி டெங் மீது சுமத்தப்பட்டது. அப்பொழுது மாஒவைத் தடுத்தாட்கொள்வதற்குப் பிரதமர் சூ உயிரோடு இருக்கவில்லை. மாஒவைத் தடுத்தாட்கொள்ளும் ஆற்றல் வேறெவருக்கும் இருந்ததில்லை. மாஒ மீண்டும் பூனைக்குச் சூடு போட்டுவிட்டு, குவா குவோபெங்கைப் பதவியில் அமர்த்தினார். வழித்தோன்றல்
பிரதமர் சூதம்மை வருத்தம் பார்க்க வந்த சேனாதிபதி யி ஜியான்யிங்கிடம் டெங்கே எனது வழித்தோன்றல் என்று வலியுறுத்தியிருந்தார். 1976 செத்தம்பர் 9ஆம் திகதி மாஒ மறைந்த பிற்பாடு சூவின் ஆசையையீநிறைவேற்றி வைத்தார். 1977இல் சீனாவின் பெருந் தலைவரானார். ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்
கருத்தியல்
டெங்கின் கருத்துக்கள் சில பின்வருமாறு: மாஒவின் சாதனைகள் அசாதாணமானவை, தவறுகள்
சாதாரணமானவை
ui 2001

Page 85
மாஒ சொன்னது சரி, செய்தது பிழை. மாஒ ஒரு மனிதர், மாஒ ஒரு கடவுள் அல்லர். மார்க்சியம் ஒரு தத்துவம், மார்க்சியம் ஒரு மதம்
அல்ல. பொதுவுடைமை என்பது பொது வறுமை ஆகாது. அரசியல் ஒழிக, பொருளியல் எழுக. சொல் மங்குக, செயல் ஓங்குக. ஆற்றலுக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற கூலி. உண்மையின் உரைகல் நடைமுறை நிகழ்விலிருந்து உண்மையை அறிக. செல்வம் சிறப்புத் தரும். புதுமொழி
டெங்கின் கூற்றுக்களுள் மார்க்சின் கூற்றுக்களும் மாஒவின் கூற்றுக்களும் பொதிந்தள்ளன. எனினும் டெங் தீட்டிய மரத்தில் கூர்பார்க்கத்தவறவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் டெங்கின் பெயர்போன கூற்று: பூனை எலியைப் பிடிக்கிறதா அல்லது என்பதே முக்கியம், பூனைகறுப்பா வெள்ளையாஎன்பது முக்கியமல்ல. இதே கருத்தை வலியுறுத்துவதற்கு டெங் கையாண்ட இன்னொரு கூற்று: உண்மையின் உரைகல் நடைமுறை. உண்மையில் இது டெங் மாஒவிடமும், LDTD மார்க்சிடமும், மார்க்ஸ் பழமொழியிடமும் இரவல் Gupp gold sigs. John Simpson 65mggis The Concise Oxford Dictionary of Proverbs graSaivulg. The Proof of the pudding is in the eating (Saiugnay Gigsinuyub Lussailungssair திறம்) என்ற பழமொழி 1300ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. மார்க்ஸ் இலண்டனில் வைத்து இந்தப் பழமொழியை அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. பழமொழியில் புதுமொழி கண்டவர் மார்க்ஸ்! சந்தை
சீனா உட்பட முதலாளித்துவம் ஓங்கிய இன்றைய உலகில் அடிக்கடி அடிபடும் சொல் தொடர்கள்: சந்தைப் பொருளாதாரம், கட்டுப்பாடற்ற போட்டி, சுதந்திர வர்த்தகம். இவை யாவும் ஒத்த சொல் தொடர்கள். தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இத்தகைய சொல் தொடர்களில் எதுவித புதுமையும் இல்லை. கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா?
விமர்சனம்
குருசேவ் ஸ்டாலினைச் சாடியதிலிருந்து பாடம் கற்ற மாஒ நூறு பூக்கம் மலரட்டும், நூறு நெறிகள் பிறக்கட்டும் என்று ஆணையிட்டுக் கருத்துச் சுதந்திரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களினால் தமது தலைமை ஆட்டங் காண்பது போல் தென்படவே, மாஒ பூக்களையும் கொய்து, நெறிகளையும் நெரித்து விட்டார். அது போலவே டெங்கும் சுவரின்றிச் சித்திரம் வரைய இயலாது எனக் கண்டு, குடியாட்சி மதிலுக்கு (கருத்துச் சுதந்திரத்துக்கு) அடிகோலினார். அப்புறம் சிறிது காலம் மதில்மேல் பூனைபோல் அமர்ந்திருந்தார். ஈற்றில் மதில் மேல் விளம்பரம் ஒட்டாதீர் என்ற கட்டளை
இட்டுவிட்டார்.
&G is 3

83
அதிபதி
மாஒ ஒன்றே சூரியன் என்றே சொன்னவர். மாஒ அன்றே சொன்னதை டெங் நன்றே கேட்டவர். எனவே மாஒ ஜனாதிபதி லியுவையும் பாதுகாப்பு அமைச்சர் பெங் தீகுவாவையும் வெறும் வால் வெள்ளிகளாய் உதிரச் செய்தது போலவே, டெங்கும் கட்சிச் செயலாளர் கூயாவோபாங்கையும் பிரதமர் சாவோ சியாங்கையும் வால் வெள்ளிகளாய் உதிரச் செய்துவிட்டார்.
பலி
1989இல் தியனன்மன் சதுக்கத்தில் மாணவர்கள் குடியாட்சி உரிமைகள் நாடிக் கிளர்ந்தெழுந்தார்கள். அப்பொழுது சீனாவுக்குச் சென்றிருந்த சோவியத் ஜனாதிபதி கோபச்சேவ் அந்த மாணவர்களுடன் தொடர்பு கொண்டதற்காக டெங் அவரைக் கோபித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. கோபச்சேவ் சோவியத் பேரரசைக் குலைத்த பிற்பாடு கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை அரசுகள் நிலைகுலைந்தது கண்டு டெங் விழித்துக் கொண்டார். அப்புறம் செஞ் சீன வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள் மீது செஞ் சேனை ஏவி விடப்பட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த அறிக்கையின்படி ஏறக்குறைய 1,000 மாணவர்கள் பலியானார்கள். பூனைகண்ணை மூடிக்கொண்டு இரத்தம் குடித்தது. துரோகம்
துரோகிகளின் சேவை புரட்சிக்குத் தேவை என்றால் லெனின். துரோகிகள் இல்லை என்றால் ஒரு சில விசுவாசிகளைத் துரோகிகளாக்க வேண்டியதுதான்! லெனின் இறக்கும் வரை பாதுகாப்பு அமைச்சராகவும் செம்படைச் சிற்பியாகவும் திகழ்ந்த துரொஸ்கியை ஒரு துரோகி என்றார் ஸ்டாலின். சிறந்த பொதுவுடைமையாளராய் விளங்குவது எப்படி என்ற நூலை எழுதிய லியுவை ஒரு பொதுவுடைமைக் குரவர் என்று போற்றியவர் டெங். லியுவைத் தமது வழித்தோன்றலாகவும் ஜனாதிபதியாகவும் அமர்த்தியவர் மாஓ, அப்புறம் லியுவை ஒரு துரோகி என்று தூற்றி, சிறையில் அடைத்து, உணவோ மருந்தோ இன்றி மடிய விட்டவர் மாஓ, கூ யாபோவாங்கைக் கட்சிச் செயலாளராகவும், சாவோ சியாங்கைப் பிரதமராகவும் நியமித்தவர் டெங். அப்புறம் இருவரையும் துரோகிகள் என்று பறைசாற்றிப் பதவி நீக்கியவர் டெங். இருவரும் பூனைக்கு மணி கட்டப் போய்ப் பூனையிடம் அகப்பட்ட எலிகள்!
மிளகாய்
கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் சீனாவில் ஒரு விடுகதை பரவியிருந்தது:
ஒரு தடவை தலைவர் மாஒ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம்விரும்பி மிளகாயைத் தின்ன வைக்க முடியும்? என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்றுவிடும் என்றார் சூ, பூனையின்
Aubui 2001

Page 86
84
வாயை ஒரு குறட்டினால் பிளந்து பிடித்துக் கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும் என்றார் சூ தே. பூனை மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வேண்டும் அல்லவா? ஆகவே இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்க வில்லை. உங்கள் பதில் என்ன? என்று அவர்கள் மாஒவிடம் திருப்பிக் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின் பின்புறத்தில் உரஞ்சி விட வேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின்புறத்தை நக்கு நக்கென்று நக்கும் - உறைப்பை நக்கிப் பழகிவிடும். அப்புறம் அது மிளகாயை மனம் விரும்பித்தின்னத் தொடங்கிவிடும் என்றார் மாஓ!
στού)
கருத்தியலே பொருளியலைத் தீர்மானிக்க வேண்டும் என்ற மாஒவின் சிந்தனையையே இந்த விடுகதை உணர்த்துகின்றது. லியு, டெங் உட்படச் சீனர்கள் அனைவரும் தமது சிந்தனையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுபடி செய்வதற்காகவே மாஒ கலாசாரப் புரட்சியை மேற்கொண்டார். எனினும் 1976இல் மாஒ மாண்ட பிற்பாடு பூனை மீண்டும் எலியைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது - பொருளியலே கருத்தியலைத் தீர்மானிக்கலாயிற்று. ஏற்கெனவே உறைப்புக்குப் பழக்கப்பட்ட பூனை இப்பொழுது இடைக்கிடை மிளகாயில் ஒரு கடிகடிக்கத் தவறுவதில்லை - அதில் பூனை புதிய சுவை கண்டுவிட்டது (தியனன்மன் படுகொலை)
ւյ6ծ)
இப்பொழுது பூனை புலியாகிவிட்டது - சீனா இன்றைய உலகின் மாபெரும் பொருளாதாரப் புலியாகி விட்டது. மாஒ நாடிய மாபெரும் பாய்ச்சலை சீனப் புலி பாய்ந்துவிட்டது. மாஒவின் கனவை டெங் நனவாக்கிச் சென்றுள்ளார். பூனையைக் கொண்டு மிளகாயைப் புசிக்க வைப்பதற்குப் பதிலாக, எலியைப் புசிக்க விட்டதன் மூலமே டெங் அதனைச்சாதித்தார். எனினும் தமது கனவு நனவாகிய விதத்தை மாஒ ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதில் ஐயமில்லை. சீனாவில் மீண்டும் முதலாளித்துவம் தலைதூக்கக் கூடும் என்று மாஒ தமது வாரிசாகிய குவா குவோபெங்கிடம் தெரிவித்த ஆரூடத்தையே டெங் மெய்ப்பித்திருக்கிறார்!
சிலை
லியு சாசி போன்றவர்கள் என்னை ஒரு புத்த் விக்கிரகமாக்கிப் பூசை அறையில் பூட்டி வைக்க முற்பட்டார்கள் என்று மாஒ கர்ச்சித்ததுண்டு. எனினும் சர்வாதிகாரத்தின் தலையாய அம்சங்களுள் ஒன்று: ஆள் வழிபாடு. குருசேவ், டெங் இருவரும் ஆள் வழிபாட்டை அறவே வெறுத்தார்கள். குருசேவ் ஸ்டாலினைக் காரசாரமாகச் சாடினார். டெங் மாஓவை நாசூக்காக விமர்சித்தார். டெங் மாஒவின் படங்களைச் சிறுப்பித்தார் அல்லது அகற்றுவித்தார். தியனன்மன் சதுக்கத்தில் இன்று காணப்படும் மாஒவின் படம் அன்று பன்மடங்கு பெரியதாய் இருந்தது. மறுபுறம், தமது படங்கள்
கலம் 8 நவ

பாவிக்கப்படுவதை டெங் அனுமதிக்கவில்லை. மாஒவின் சின்னங்களுக்குத் தம்மால் நேர்ந்த கதி, தமது சின்னங்களுக்குத் தமது வழித்தோன்றல்களால் நேர்ந்து விடலாம் என்று டெங் அஞ்சியிருக்கக் கூடும். மக்கள் என்னை மாபெரும் ஆசான், மாபெரும் தலைவர், மாபெரம் சேனாதிபதி, மாபெரும் மீகாமன் என்று வர்ணிக்கிறார்கள். இவற்றுள் வெறும் ஆசான் என்ற அடைமொழிமாத்திரமே நிலைக்கும் என்று 1970இல் மாஒ (எட்கார்சினோவிடம்) தெரிவித்தார். எனினும் இன்றைய சீனாவில் தோழர் மாஒ சேதுங் என்ற பிரயோகம் மாத்திரமே நிலைத்துள்ளது.
குடும்பம்
சீனா என்ற மாபெரும் குடும்பத்தைக் கட்டியாள்வதில் ஈடுபட்ட மாஓவுக்குத் தனது சொந்தக் குடும்பத்தைக் கட்டியாள்வதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை. மாஒவின் புதல்வர்களுள் ஒருவராகிய மாஒ அன்யிங் கொறியாவில் அமெரிக்கரின் குண்டுத் தாக்குதலுக்குப் பலியான பொழுது அன்யிங்கின் உடலை என்ன செய்வது என்று கேட்டு வட கொறியர்கள் சீனாவுக்குச் சேதி அனுப்பினார்கள். அதற்கு மற்றச் சீன வீரர்களின் உடல்களுக்கு என்ன செய்கிறீர்களோ, அதையே அன்யிங்கின் உடலுக்கும் செய்யுங்கள் என்று மாஒ பதில் அனுப்பினார் - அன்யிங் வட கொறிய மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார்
டெங் குடும்பத்தவர்களின் கதை வேறு. என் தந்தை: டெங் சியாவோபிங் என்ற நூலை எழுதிய டெங் றொங் தோழர் டெங்கின் புதல்வி. பொது அரசியல் திணைக் களத்தில் பணிபுரியும் றொங் தனது பிதாவின் தலையாய மொழிவாளராக விளங்கினார். பொது அரசியல் திணைக்களமே செங்சேனையின் ஆணைப்பீடம். அதற்கும் பல்தொழினுட்பவியல் தாபனத்துக்கும் (Polytechnologies Inc.) g)6ML-Gu G)gsffL-ffL16örG). இத்தாபனத்தின் அதுபர் கீ பிங். இவரே றொங்கின் கணவர், டெங்கின் மருமகன். றொங்கும் பிங்கும் கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் நாட்டுப்புறத்துக்கு அனுப்பப்பட்ட வேளையில் ஒருவரை ஒருவர் சந்தித்து, காதலித்து, மணம் புரிந்தவர்கள். டெங் ஆட்சி ஏற்றதும் மகளும் மருமகனும் அமெரிக்கா சென்று, சீனத் தூதரகத்தில் பணியாற்றுகையில், வாசிங்டனில் வாழும் ஆயுத வியாபாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்புறம் சீனா திரும்பி ஆயுத வியாபாரத்தில் இறங்கி விட்டார்கள். டெங்கின் இன்னொரு மகள் ஓர் ஓவியர். இன்னொருவர் ஒரு பிரதி அமைச்சர். மூத்த மகன் பூ பெங் கலாசாரப் புரட்சிக் காலத்தில் செங் காவலர்களின் கொடுமை தாங்காது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யத் தலைப்பட்ட பொழுது கால் முறிந்தவர். சில்லுக் கதிரையில் நடமாடும் பூ பெங் சீன அங்கவீனர் சமாசத்தின் அதிபராக விளங்குகின்றார். அமெரிக்காவில் பயின்ற டெங்கின் கடைக் குட்டி சங்காயிலும் கொங்கொங்கிலும் ஆதனம் கொண்ட ஓர் அரச நிறுவனத்தின் அதிபர். கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் முதலாளித்துவப்
ui 2001

Page 87
பாதையில் செல்லும் இரண்டாம் இடத்தவர் என்று டெங் சாடப்பட்டமை நினைவு கூரத்தக்கது (முதலாம் இடத்தவர்: ஜனாதிபதி லியு சாசி). கணிப்பு
1973இல் டெங்கை மக்கள் விடுதலைச் சேனையின் அதிபதியாக நியமித்த வேளை, அவரிடம் (ஒரு சீனப் பேரரசருக்கு நிகழ்ந்ததை மனத்தில் வைத்து) உனக்கு நல்ல முடிவு கிட்டாது. நீ இறந்த பிறகு உனது உடம்புக்குப் போட்டு வெளுப்பார்கள் என்று மாஓ தெரிவித்தார். எனக்கு ஏன் வெளுக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கேட்டார் டெங். ஏனென்றால் நீ சில தவறுகள்
/
எனது கவிதையை உன்னால் எழுத முடியாது எனது மனத்தை நீ (%ó446lymuბ. (?(6Yflyრ6lსიruბ
பூவிதழ்கள் சிதறிக் கிடக்கின்றன о сӑт
மனமுற்றத்தில்
2
3M76o Lůý6manýců அதிர்ந்த மனம் நூறாய் நொறுங்கி ஆயிரம் ஆளுமைகளாய் ஒரு மனிதன்
3
வாசல்கள் நிறைந்த விட்டில் தாழ்வாரத்தில் போக இடமில்லாமல் மழையில் இடைக்கிடை நடுங்கிக் கொண்டு நிற்கிறது
ஒரு பசு
காலம் & ந
 

இழைத்திருக்கிறார். நீ செய்தது 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை என்றார் மாஓ, நிம்மதியுடன் டெங் (மாஒவின் கணிப்பின்படி) சிறந்த மார்க்சிச - லெனினிச வாதியாகிய ஸ்டாலின் செய்ததும் 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை அல்லவா என்று கேட்டார். மாஓவும் டெங்கும் வாய்விட்டுச் சிரித்தார்கள். தாம் புரிந்து 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை என்பது மாஒவின் சொந்தக் கணிப்பு. ஸ்டாலின்புரிந்ததும் 70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு பிழை என்பதும் மாஒவின் கணிப்பு. மாஒவின் இவ்விரு கணிப்புகளும் சரியே என்பது டெங்கின் தீர்ப்பு. தனது சாதனை 50க்கு 50 என்பது டெங்கின் தாழ்மையான கருத்து. O
ஊரெல்லாம் தேய்ந்து காடாகி
மறைந்தது
என் ஊர்
அதில் ஒன்று
கிணற்றுள் பாசிவலை cწkმIGშf?
அதற்குள்
தவளை ஒடித்திரிகின்றன ஆனந்தமாக
ஒடிந்த கனவுகளால் ஒட்டுப் போட்டுத் தைத்தது அந்த இரவு
விடிந்தபோது கனவுகளால் கண்கள் ტჩიJüc%ს CJC-ở
வரைந்திருந்தது.
Kui 2001

Page 88
கட்டுரை 8 (
னும் என் எழுத்தும்
நானும் என் எழுத்தும் என்ற வரிசையில் பேச எனக்கு சந்தர்ப்பத்தை அளித்த திருமதி.பிரசன்னா அவர்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பேச வரவேண்டும் என்று ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னாலேயே இவர் என்னை அழைத்தார். பல சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் எனக்கு வர வசதிப் படாமல் போயிற்று. 'நானும் என் எழுத்தும் என்ற பேச்சு வரிசையில் இதற்கு முன்னால் பல எழுத்தாளர்களும் பேசியிருக்கிறார்கள் என்பதை பிரசன்னா மூலம் தெரிந்த கொண்டேன். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. வெளியூரில் இருப்பதால் இது போன்ற விக்ஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகிறது. என் பேச்சுக்கு அவர்களுடைய பேச்சை முன்மாதிரியாக வைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் இதனால் இல்லாமல் போயிற்று. நான் இளைஞனாக இருந்த காலத்தில் 'நானும் என் எழுத்தும் என்ற தலைப்புத் தரப்பட்டிருந்தால் இதைவிடவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ என்னவோ. இப்போது என்னைப் பற்றியும் என் எழுத்துக்கள் பற்றியும் நானே சொல்லி அந்த ஆசை தீர்ந்துவிட்ட நிலையில்தான் இருக்கிறேன். இப்போதும் பல வாசகர்களிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டிய தேவை தமிழ்ச் சூழலில் இருப்பதை உணர்கிறேன். ஆனால் என் பேச்சு மூலம் வாசகர்கள் என்னைத் தெரிந்து கொள்வதைவிட மற்றொருவரின் பேச்சின் மூலமும் என் புத்தகங்களின் மூலமும் அவர்கள் தெரிந்து கொள்வது இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.
தமிழில் பொருட்படுத்தும்படி எழுத்தியவர்கள், சற்று சிந்திக்கும்படி எழுதியவர்கள், வாழ்க்கையின் துன்பியல் தன்மையைப் பற்றிச் சக மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முயல்கிறவர்கள் எல்லோருமே வாசகனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள்தான். வாசகன் தன் முகத்தை எப்போது பார்ப்பான் என்ற எண்ணத்தில் சதா அவன் முகத்தைத் தேடி ஏங்குகிறவர்கள்தான். பாரதி, புதுமைப் பித்தன் போன்றவர்களுக்குக் கூட அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வாசகர்கள் சார்ந்த ஏக்கம் இருக்கத்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
'நானும் என் எழுத்தும் என்ற தலைப்புடன் சில கேள்விகளும் வந்துவிடுகின்றன. சிறுவயதில் எழுத்துத்
8m 冢町
 
 

துறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன்? இலக்கியத் துறையால் எப்படிக் கவரப்பட்டேன்? ஒரு இளைஞன் செய்வதற்கு எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றன. நம் சூழல் சார்ந்து பார்த்தால் அவன் இலக்கியத் துறைக்கு வருவதற்கான காரணங்கள் எதுவும் இருக்க நியாயமே இல்லை. இந்திய மொழிகள் ஒன்றிரண்டில் நிலைமை சற்று மாறாக இருக்கலாம். தமிழில் நிச்சயமாக அப்படி இல்லை. எந்த இளைஞன் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்து இலக்கியத் துறைக்கு வந்திருக்க முடியும்? இளமையிலேயே ஒரு கனவு உருவாகி விடுகிறது. ஒரு ஆசை, வெறி, ஆவேசம் ஏற்பட்டு விடுகிறது. அந்த நேரத்தில் நாம் வேறு, கனவு வேறாக இருப்பதில்லை. வெறியிலிருந்து விலகி நின்று யோசிப்பதற்கான முகாந்திரமே இருப்பதில்லை. இது போன்ற ஒரு ஆவேசம் எனக்கு ஏற்படக் காரணங்கள் அதிகம் இல்லை. தந்தை வழியில் அப்படி ஒன்றும் கலைகளிலோ இலக்கியத்திலோ ஈடுபாடு இல்லை. அவர்கள் வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்ந்து கெட்டவர்களிடம் லெளகீகத் தளம் சார்ந்த அழுத்தம்தான் அதிகமாக இருக்கும். இழந்து போன பிரதாபங்களை மீட்டெடுக்க அவர்கள் ஒவ்வொன்றையும் பரபரப்புடன் அள்ளிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் சில நியதிகள் உருவாகி விடுகின்றன. ஒழுக்கங்கள் உருவாகி விடுகின்றன. சித்தாங்தங்கள் உருவாகி விடுகின்றன. நம் சமூகத்தில் பெரும்பாலும் இவற்றிற்கெல்லாம் மதம் சார்ந்த ஒரு அடிப்படை இருக்கும். இவ்வாறு வெற்றியின் இலக்கை அடைய அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தெளிவான வழிமுறைகளைப் பிரகடனப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். சந்தேகம் இல்லாமல் இருப்பார்கள். சந்தேகம் இல்லாதவர்கள் போல் ஆபத்தானவர்கள் யாரும் இல்லை என்பது என்னுடைய எளிய அபிப்ராயம். என் அனுபவம் சார்ந்து நான் இதைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். என் வாசிப்பு இந்த அனுபவத்தை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ நாம் விரும்புகிறோமோ விரும்ப வில்லையோ எல்லாவற்றிற்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது குடும்பம் என்ற மையம்தான். அதிகாலையில் எழுந்து படித்தால் அப்படியே மூளையில் பதிந்துவிடும் என்பார்கள். இந்த வாக்கியத்தை என் சிறுவயதில் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். அதிகாலையில்
lui 2001

Page 89
எழுந்து படிப்பது குழந்தைகளுக்குச்சிரமமாக இருக்குமே என்று ஒருவராவது ஒரு தடவை கூடச் சொன்னதாக ஞாபகம் இல்லை. தூக்கம் கண்களைச் சொக்கும் போது படித்தால் எதுவுமே மனதில் பதியாது என்றும் எவரும் சொன்னதாக ஞாபகம் இல்லை. இவ்வாறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத, தெளிவு சார்ந்த தீர்மானங்கள் குடும்பத்திலிருந்து கல்வித் துறைக்குப் போகின்றன. அரசியல் துறைக்கு வருகின்றன. தத்துவத்துக்குள் புகுந்து ஆட்டம் போடுகின்றன. குறுகிய காலத்தில் மனிதனை மாற்றி வாழ்க்கையை மாற்றி விடலாம் என்று சொல்பவர்களிடம் போகின்றன. குறுகிய காலத்தில் வாழ்க்கையை மாற்றி மனிதனையே மாற்றிவிடலாம் என்று சொல்பவர்களிடமும் போகின்றன.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே வெவ்வேறு நோக்கங்கள் சார்ந்த மோதல் மனிதன் காட்டு மிராண்டிகளாக இருந்த காலத்திலிருந்தே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை என்றுதான் நினைக்கிறேன். இந்த நூற்றாண்டில் அந்த மோதலுக்கு மொழிசார்ந்த ஒரு அழுத்தம் கிடைத்தது. இந்த மோதலை நம்நினைவுக்குக் கொண்டு வரும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள் என்று எண்ணற்றவை இருக்கின்றன. துர்கனேவ்வின் ஃபாதர்ஸ் அன் சன்ஸ் நினைவுக்கு வரும் ஒரு நாவல். பிரான்ஸ் காஃப்காதந்தைக்கு எழுதிய கடிதம் மற்றொரு ஆவணம். என்னிடம் யாராவது எனக்கும் என் தந்தைக்கும் இடையிலான மோதனைப் பற்றிச் சொல்லச் சொன்னால் நான் அவர்களிடம் பிரான்ஸ் காஃப்கா தந்தைக்கு எழுதிய கடிதத்தைப் படிக்கச் சொல்வேன். இதுதான் மிக நியாயமான பதிலாக எனக்குத் தோன்றுகிறது. காஃப்கா அந்தக் கடிதத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்த வாதங்களையும் முன் வைக்கிறார். தெளிவான, காஃப்கா தன்மை இல்லாத காஃப்காவின் நூல் அது. அம்மா சற்று வேறு மாதிரி. அவரிடமும் அதிக மனவெளி இல்லை. இருக்கும் மனவெளியை முழுமையாகத் தருவதற்கான ஆரோக்கியமும் அவருக்கு இல்லை. அப்பாவிடம் நெருங்கவே முடியாதிருந்ததால் அம்மாவிடம் இருந்த சிறிய வெளியும் விசாலமாகவே இருந்தது. முக்காலியில் உட்கார்ந்து பழகி விட்டால் கையில்லாத நாற்காலியும் சிம்மாசனம் போல்தான் இருக்கும். அம்மாவை அப்படி ஒன்றும் ஆழ்ந்த இலக்கிய ரசிகை என்று சொல்லிவிட முடியாது. வாசிப்பதில் ஆசை வைத்திருந்தவர் என்று சொல்லலாம். அவர் சில பெயர்கள் சொன்னார். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத வயதில் அந்தப் பெயர்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன. மணிக்கொடி என்று ஒரு பெயர். ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் என்ற சில பெயர்கள். பிச்சமூர்த்தியின் தாய்" என்ற கதையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லியிருக்கிறார். சம்பாக்ஷனைகளைக் கொச்சையாகச் சொல்லியிருக்கிறார். கக்குவான் இருமலில் அவதிப்படும் தன் குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்த பிராந்தியை ஒருவன் கொடுக்க
காலம் 8 ந

முயலும் போது சகபயணியான நாயுடு ஸ்திரீ, குறுக்கிட்டு, 'பிராந்தியைத் தொடாதீங்க. பிள்ளையை இப்படி என்கிட்ட கொடுங்க" என்று சொன்னதை அம்மா கொஞ்சம் ஆவேசமாகவே சொல்வார். இந்த வாக்கியமும் இந்த வாக்கியமும் சார்ந்த சித்திரமும் என்மனதில் ர்ொம்ப ஆழமாகப் பதிந்தன. பின்னால் இன்று வரையிலும் மனதில் இருந்த நாயுடு ஸ்திரீயின் சாடையில் பல பெண்களைத் தமிழ் நாட்டில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மதுரையைச் சுற்றிச் சற்று அதிகமாகவே பார்த்திருக்கிறேன். அவர்களுடைய முகங்களைப் பார்க்கும் போதுஅம்மாவுடைய கொச்சைப் பேச்சுக் குரல் காதில் கேட்கும். நாயுடு ஸ்திரீகுழந்தைக்கு முலை ஊட்டி விடுகிறாள். "அவள் நெஞ்சில் அருள் கரந்தது. ஆனால் மார்பில் பால் சுரந்ததோ என்னவோ? என்று முத்தாய்ப்பாக பிச்சமூர்த்தி கூறியிருக்கும் வாக்கியங்களையும் அம்மா சொல்வார்.
கல்கியின் 'பார்த்திபன் கனவு"கல்கி இதழில் தொடராக வந்தபோது எங்கள்குடும்பத்தில் எல்லோருமே கல்கியின் வாசகர்களாக ஆகிவிட்டிருந்தார்கள். கல்கியின் வாசகர்களாக இருப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தக் களிப்பு இருந்தது. அந்தக் களிப்பு என் மனதில் தோன்றவில்லை. தொடர்கதைப் பகுதியை அம்மாவோ அக்காவோ படிக்கும் போது எல்லோரும் உட்கார்ந்து கேட்போம். அந்த வயதில் என்னால் அந்தக் கதையைச் சரிவர வாங்கிக் கொள்ளமுடியவில்லை. மாறிமாறிவரும் கதை நிகழ்ச்சிகளையும் மர்மங்களையும் புரிந்து கொள்வதில் பிறருக்கு இருந்த திறன் எனக்கு இல்லாமல் இருப்பதை எண்ணி உள்ளூர வருத்தத்துடன் இருந்தேன். பல வருடங்களுக்குப் பின்னால் ஒருமுறை நோய் வாய்ப்பட்டு படுத்திருந்த போது என்னைப் பார்க்க வந்த உறவினர் மூலம் புதுமைப்பித்தனின் 'காஞ்சனை’ தொகுப்பு கிடைத்தது. அந்தத் தொகுப்பு என்னை வெகுவாகப் பாதித்தது. அவருடைய எதார்த்தப் பங்கு என் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
சுதந்திரம் கிடைத்த காலத்தில் வீட்டில் அடிக்கடி வ.ரா., கல்கி, ராஜாஜி, திரு.வி.க., ம.பொ.சி, ஜீவா, காமராஜர், பெரியார், அண்ணா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.சண்முகம், கவிமணி, டி.கே.சி., முத்துராமலிங்கத் தேவர், அ. சீனிவாச ராகவன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பி.பூரீ போன்றவர்களின் பெயர்கள் அடிபடத் தொடங்கின. இவர்களைப் பற்றிப் பல சுவையான சம்பவங்களை என் தாய் மாமா (அவர் பெயர் வெ.நாராயணன்) சொல்லிக் கொண்டே இருந்தார். மனதில் புதிரும் குழப்பமும் வியப்புமாக இருந்தது. இவர்கள் யாருமே எங்கள் உறவினர்கள் அல்ல. எங்கெங்கோ வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். மாமா போல், பெரியப்பா போல், சித்தப்பா போல், தாத்தா போல் எப்படி குடும்பத்துக்குள் இவர்களுக்கும் ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது? அம்மா சிறுவயதில்
Juli 2001

Page 90
சொல்லியிருந்த கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் போன்ற பெயர்களையும் மாமா பின்னால் சொன்ன புகழ் பெற்ற ஆளுமைகளின் பெயர்களையும் நான் ஒன்றாக இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதில் புதுமைப்பித்தன் மட்டும் எனக்குச் சொந்தம் ஆகிவிட்டவராகவும் மற்றவர்களிடம் எல்லாம் நான் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனாகவும் இருப்பதை உணர்ந்தேன்.
இந்த உறவை எப்படி ஏற்படுத்திக் கொள்வது? அப்போது எனக்கு வாசிப்பில் அதிக ருசி ஏற்பட்டிருக்க வில்லை. வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்த அக்கா இவர்களைப் பற்றியெல்லாம் வெகு வேகமாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவள் புத்திசாலி. எந்த அளவுக்கு அவள் புத்திசாலியோ அதைவிட அவள் புத்திசாலி என்ற எண்ணம் எனக்கு அப்போது இருந்தது. மற்றொரு சுயஞானமும் தீர்மானமாக இருந்தது. எந்த விக்ஷயத்தையும் கிரகித்துக் கொள்ள என் மூளைக்குச்சக்தி இல்லை. முக்கியமான ஆளுமைகளுடைய புகைப்படங்களையெல்லாம் திரட்டி அந்தப் புகைப்படங்களை என் அக்காவிடம் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்வேன். இந்தச் சாகசத்தை அவள் வெகுவாக அலட்சியப்படுத்தினாள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிறிய மாமா உதவிக்கு வந்து சேர்ந்தார். அவர் வீட்டோடு வந்து சேர்ந்ததால் மிக நெருக்கமான தோழமை கிடைத்தது. அவர் என்னைவிட இரண்டு வயதுதான் மூத்தவர். அவரிடம் ஊர் அக்கப்போர்கள் நிறைய இருந்தன. எங்கள் ஊர்ப் பெரிய மனிதர்களைப் பற்றியும் சினிமா நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் திரைக்குப் பின் செய்திகளை ஏகமாகச் சேர்த்துவைத்திருந்தார். அவருடைய மூளை ஒரு இரயில் எஞ்சின் போலவும் என்னுடைய மூளை ஒரு பலாப்பழ விதை போலவும் என் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. ஊர் சுற்றுவதில் அவருக்கு அசாத்தியமான நம்பிக்கை இருந்தது. நானும் அவருடன் ஊர் சுற்றத் தொடங்கினேன். எழுத்து, வாசிப்பு ஆகியவற்றைத் தாண்டி உங்களை அதிகமாகப் பாதித்த விக்ஷயம் என்ன என்று கேட்டால் ஊர்சுற்றியது என்றுதான் சொல்வேன். ஊர் சுற்றுவது என்றால் மணிக்கணக்காகச் சுற்றுவோம். வீட்டிற்குப் போக இரண்டு காரணங்கள்தான் இருந்தன. பகல் என்றால் தாங்க முடியாத பசி. இரவு என்றால் தூங்க ஒரு இடம். மற்றபடி வீட்டிற்கு வர எந்த காரணமும் இருக்கவில்லை.
பிரதானத் தெருக்களில் நடைபயிலுவதில் மாமாவுக்கு நம்பிக்கையே இருக்கவில்லை. அவர் புகுந்து புறப்பட்டவை எல்லாம் சந்து பொந்துகள். முடுக்குகள். தெருவடைச்சான் சந்துகள். பள்ளமாக அதள பாதாளம் நோக்கி வழியும் குறுக்குப் பாதைகள். வெளியுலகம் தெரியாத எனக்கு ஒவ்வொன்றும் மிகுந்த ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் தந்தது. என் முன்
காலம் & ந

தீர்மானங்கள் நொறுங்கிக் கொண்டே இருந்தன. பல தெருச் சண்டைகளைப் பார்த்தேன். அழகான பெண்கள் கெட்ட வார்த்தை சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அடி முட்டாள்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. தாடி, மீசை வைத்துக் கொள்பவர்களைப் பார்த்துக் குழந்தைகள் பயப்படும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கிதமாகப் பேசுபவர்களை நம்பலாம். பெண்கள் ஆண்களை அடிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதுபோன்ற பல எண்ணங்கள் கண்ணாடிஜாடிகள் வைத்திருக்கும் அலமாரி கவிழ்ந்தால் ஜாடிகள் எப்படி நொறுங்குமோ அப்படி மூளைக்குள் கவிழ்ந்தன. இந்த நொறுங்கல் ஏமாற்றத்தைத் தரக்கூடிய அளவுக்கு உவகையையும் தந்தது. நொறுங்க வேண்டியவை எல்லாம் நொறுங்கட்டும் என்று தோன்றிற்று.
விதம் விதமான பேச்சுக்கள் காதில் விழுந்து மனதில் படிந்தன. சந்து பொந்துக்களில் சுற்றிவிட்டுப் பிரதான வீதிக்கு வரும்போது எங்கிருக்கிறோம் என்ற திகைப்பு எனக்கு ஏற்படும். அது ஒரு பெரிய தவிப்புதான். ஒரு நிமிடத்திற்குள் விடை தெரியாவிட்டால் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று தோன்றும். அப்போது மாமாவிடம் "வேப்ப மரம் எங்கிருக்கிறது?" என்று கேட்பேன். வேப்பமரம் எங்கிருக்கிறது என்பதை மாமா சொல்லி எனக்கும் அது புரிந்துவிட்டால் உலகத்தில் எந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்துவிடும். வேப்ப மரம் இருக்குமிடம் தெரிந்தால் எனக்கு எல்லாமே தெரிந்த மாதிரித்தான். வேப்ப மரத்திற்கு இந்தப் பக்கம் மணிமேடை. அந்தப் பக்கம் பூங்கா. வேப்பமரத்தைத் தாண்டிப் போனால் எஸ்.எல்.பி. பள்ளிக்குப் போய்விடலாம். பள்ளிக்குப் பின்பக்கம் எங்கள் வீடு. மரத்தோடு பிற இடங்களுக்கு இருக்கும் உறவை வைத்துத்தான் எங்கள் ஊரையே நான் புரிந்து கொண்டேன்.
ஊரில் ஒவ்வொரு இடமும் நினைவு வரும்போது அங்கு வசிக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் நினைவு வரும். ஒரு சந்தில் ஒரு வீட்டு வாசலில் என் 15ஆவது வயதில் பார்த்த ஒரு 5 வயது பெண்குழந்தையை கிட்டத்தட்ட 50 வருடங்களாக வெவ்வேறு இடங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் குழந்தையை ஒரு ஆரம்பப் பள்ளிக்கு முன்னால் அரைப் பாவாடையுடன், எஸ்.எல்.பி. பள்ளிக்கு முன்னால் முழுப்பாவாடையுடன், சாரியில் கல்லூரிக்குப் போகும்கோலத்தில், திருமணம் முடிந்து கணவனுடன் சினிமாவுக்குப் போகும் லகரியில், கர்ப்பிணிப் பெண்ணாக, அதன் பின் பல குழந்தைகளுடன், வகிடு ஓரங்களில் நரையுடன், தொய்ந்து போன முகத்துடன், முன் பற்களை இழந்துவிட்ட கோலத்தில், நெற்றியில் வைதஷ்யம் பூசியிருந்த விபூதியுடன் என்று இன்று வரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் உலகத்தில் 50
lui 2001

Page 91
வருடங்களாக முக்கியமான ஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது. இதுபோல் எத்தனையோ பேர். நிச்சயமாகப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இருக்கிறார்கள். சில முக்கிய மரங்களும் இருக்கின்றன. இதுபோல் எவ்வளவோ அனுபவங்கள்.
அனுபவங்களை எழுதத் தொடங்கும் போது சூட்சுமங்களைத் தொட முடியவில்லை என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்படுகிறது. அனுபவம் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்துகிற உவகைக்கு முன் மொழி தோற்றுக் கொண்டே இருக்கிறது. சுழலும் மின்விசிறியைத் தொட நீளும் கை எப்படித் தயங்குமோ அப்படி மொழி அனுபவங்களின் சூட்சுமங்களைத் தொடத் தயங்கிப் பின்னகர்ந்து கொள்கிறது. இருந்தாலும் ஊர் சுற்றலின் விளைவுதான் 'ஒரு புளிய மரத்தின் கதை" என்று பாதி சரியாகவும் பாதிதவறாகவும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு அனுபவங்கள் ஒரு நிறைவைத் தருகின்றன.
2
சுய அனுபவம் சார்ந்துதான் ஒரு எழுத்தாளன் எழுத முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. சிறுவயதில் ஏற்பட்ட எண்ணம் இது. இன்று வரையிலும் விசேஷப் பாதகம் இல்லாமல் அந்த எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கல்பிகார் கோஷ் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் தீவிரமான படைப்பு இயக்கம் கொண்டவர். பிறந்த ஊர் பம்பாய். அமெரிக்காவில் டெக்ஸாஸில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அனுபவங்களை முற்றாக உதறிவிட்டு கற்பனை ச்ார்ந்துதான் நாவல்களை உருவாக்க வேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர். அவருடைய பேட்டி ஒன்றில் இதை வற்புறுத்துகிறார். இவ்வாறு அனுபவத்தைத் தாண்டி முழுக்கவும் கற்பனை சார்ந்து எழுதுவதாகச் சொல்லும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும் போது அவர்களுடைய எழுத்துக்கும் அடிப்படையாக அனுபவம் இருப்பது போல்தான் தெரிகிறது. படைப்பாளியின் குறிக்கோள் சார்ந்து அனுபவம் படைப்புக்குள் பெரும் குலைவுக்கு ஆட்பட்டுவிடுகிறது.
ஒரு பெரிய காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துக் காற்றில் விசிறி விட்டது போல் அனுபவம் சிதறடிக்கப் பட்டிருக்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம். மூளைக்குள் வேறு என்ன பதிவுகள் இருக்க முடியும்? அனுபவத்தைத் தவிர. எல்லாம் பொறிகள் வழியாகப் போன பதிவுகள் தானே? தொடர்ந்து இந்தப் பதிவுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அடுத்த கணம் நிகழப் போகும் பதிவைப் பற்றி நமக்கு இப்போது ஒன்றும் தெரியாது. இப்போது என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் பதிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் வேறு பதிவுகள்
Graub 3

ஒரு புளியமரத்தின் கதையை : இடமும் காலமும் சார்ந்த படைப்பு என்றும், !
'ஜே.ஜே. சில குறிப்புகளைக் காலமும் கருத்தும் சார்ந்த படைப்பு என்றும் :
குழந்தைகள் பெண்கள் ஆண்களைக் காலமும் மனித உறவுகளும் சார்ந்த படைப்பு
என்றும் பொதுவாகச் சொல்லலாம்
தொடங்கிவிடும். இந்தக் கூட்டத்தில் நெருப்பு மூண்டு விட்டதென்றால் எழுந்து ஒடத் தொடங்கி விடுவோம். இப்போது களேபரம் சார்ந்த பதிவுகள் உருவாகின்றன. முன் கட்டுப்பாடு எதுவுமே இல்லாத பதிவுகள் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றன. விழிப்பு நிலையில் இதுபோன்ற பதிவுகள், உறங்கும் போது கனவுகள். இவற்றின் மீதும் நமக்குப் பிடிமானம் எதுவும் இல்லை. இந்தப் பதிவுகளின் அர்த்தம் என்ன? இவற்றில் ஏதேனும் பொருள் இருக்கிறதா? இப்பதிவுகளின் சாராம்சம் என்ன? என்பதுதான் படைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படிப் பார்க்கும் போது அனுபவம் நேரடியாகப் பிரதிபலிக்கா விட்டாலும் கூட மறைமுகமாகவேனும், உருக்குலைந்த நிலையிலேனும் அல்லது உருக்குலைக்கப்பட்ட நிலையிலேனும் படைப்புக்குள் வந்தாக வேண்டும். மனிதனைக் கட்டுப்படுத்தும் விதிக்கு முற்றிலும் முரணான ஒரு விதியைப் படைப்புக்கு அடிப்படையாகக் கொள்ள முடியாது.
3
வாசிப்பின் மூலமும் நண்பர்களின் மூலமும் பல்வேறுபட்ட பாதிப்புக்களை அடைந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவற்றைப் பற்றித் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. புதுமைப்பித்தனின் பாதிப்பைத் தெளிவாக உணர முடிவது போல் மற்ற பாதிப்புக்களை உணர முடிவதில்லை. சிறிய வயதில் முற்போக்கு எழுத்தாளனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பக்கின் கிரேப்ஸ் ஆஃப் ரேத் (Grapes of wrathe) என்ற நாவல் என்னைக் கணிசமாகப் பாதித்திருக்கிறது. அந்தக் காலத்தில் அவருடைய பல நாவல்களைப் படித்தேன். சமீபத்தில் அவருடைய ஒரு புத்தகத்தைப் படிக்க முற்பட்டபோது அதில் ஈடுபாடே ஏற்படவில்லை. சிறுவயதில் படித்த பலரைப் பற்றி இன்றும் மனதில் உயர்வான எண்ணம் இருக்கிறது. மீண்டும் அவர்களைப் படித்துப் பார்த்தால் அவர்கள்மீது வைத்திருக்கும் மதிப்பை இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. எழுத்தாளர்களைக் குறை சொல்லும்
bui 2001

Page 92
9
நோக்கில் நான் இதைச் சொல்லவில்லை. காலத்தைத் தாங்கும் எழுத்தை உருவாக்குவது கடினம் என்பதால் இதைச் சொல்கிறேன். ஒரு ஆமையின் ஆயுளோடு ஒப்பிடும் போது ஒரு சிறந்த நாவல் அல்லது ஒரு சிறந்த கதையின் ஆயுள் குறைவாக இருப்பது வருத்தத்தை தருகிறது. பாரதியின் மீது எனக்கு எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறதோ அந்தளவுக்கு அவர் என்னைப் பாதிக்கவேயில்லை.
நிச்சயமாக நண்பர்கள் என்னைப் பாதித்திருக்கக் கூடும். தெரிந்தோ தெரியாமலோ ஜீவாவுடன் இருந்த நெருக்கத்தினால் வாழ்க்கையைப் பற்றிய அக்கறை வலுப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லாமை சார்ந்த கொடுமைகள் மனத்தில் முனைப்பு கொள்ளவும் ஜீவா ஒரு காரணமாக இருந்தார். புதுமைப்பித்தன் மீது இருந்த மயக்கம் 50க்களின் ஆரம்பத்தில் ரகுநாதனைப் பார்க்க ஆவலைத்தூண்டிக் கொண்டிருந்தது. அதுபோன்ற ஒரு ஆவலைத் தூண்டியவர் அந்த நாட்களில் அவர் மட்டும்தான். அவர் புதுமைப்பித்தனின் சிக்ஷயர், வாரிசு, பிரதிநிதி என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அவர் அதிகமாகப் பேசக் கூடியவர் அல்ல, பகிர்ந்து கொள்ளக் கூடியவரும் அல்ல. ஆனால் எங்களுக்குப் பொதுவாக இருந்த நண்பர்கள் வியந்து கூறும்படி அவர் என்னுடன் பேசினார். பகிர்ந்து கொண்டார். அவருடைய 'சாந்தி இதழில் நான் எழுதித் தந்த எல்லாவற்றையும் வெளி யிட்டார். அவை வெளிவந்ததைவிட சந்தோக்ஷத்துடன் அவர் அவற்றை வெளியிட்டது முக்கியமாகப்பட்டது. அவருடனும் ஜீவாவுடனுமான நெருக்கம் நெல்லையில் பல நண்பர்களைத் தேடித் தந்தது. எல்லோரும் வாசிப்பதில் அவரவர் அளவில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். அண்ணாச்சி சண்முகம்பிள்ளை, பால தண்டாயுதம், சமீபத்தில் காலமான கம்யூனிசத் தலைவர் ப.மாணிக்கம், ரகுநாதன், சிவசங்கரன், என்.டி.வானமா மலை, ஜி.நாகராஜன், முருகானந்தம், நா.வானமாமலை எல்லோருமே வாசிப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். பேசுவதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். கருத்துக்கள் சார்ந்து விவாதிப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். இந்தக் காரியங்கள் எல்லாம் நிச்சயமாக என்னைப் பாதித்திருக்க வேண்டும்.
என் 20 வயதிலிருந்து கிட்டத்தட்ட 45 வயது வரையிலும் சுமார்25 வருடங்கள் சகல விக்ஷயங்களையும் நான் கிருஷ்ணன் நம்பியுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். பேச்சு மூலம் காட்சி ரூபங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவருடன் இருக்கும் போது ப்ேசாது இருக்கும் நேரங்களில் கூட ஒரு தோழமை, தோழமையின் தென்றல் அல்லது தோழமையின் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.
மெளனி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன் போன்றோர்களது படைப்புக்களின்மீது என் கவனம் அழுத்தம் கொள்ள அவர் ஒரு காரணமாக இருந்தார்.
sh & 5

ஜானகிராமனுடைய மிகப் பெரிய ரசிகர். தான் நடத்திவரும் வியாபாரத்தில் அதிகப்பணம் ஈட்டும்போது ஜானகிராமனுக்கு ஒரு தங்க மோதிரத்தை அன்பளிப்பாகத் தரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கண்ட கனவு நிறைவேறவில்லை.
ரகுநாதன் மூலம் 'சாந்தி'யில் கிடைத்த இடத்திற்குச் சற்றும் குறையாத ஒரு இடம் விஜய பாஸ்கரன் மூலம் "சரஸ்வதி'யில் கிடைத்தது. சரஸ்வதியில் எழுதத் தொடங்கியபின் க.நா.சு., சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன் என்று பழைய தலைமுறையைச் சேர்ந்த பல எழுத்தாளர்களையும் சந்தித்தேன். க.நா.சு. நண்பராகப் பாவித்து என்னுடன் பழகியது பெரிய விஷயம். அவர் என்னுடைய பார்வையை பாதித்து இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால் வாசிப்பதில் எனக்கிருந்த ஆசை அவர் மூலம் பல மடங்கு பெருகிற்று. ஒரு புத்தகத்தைப் படித்ததும் மனதிற்குள் ஒரு கறாரான அபிப்ராயத்தை - அதை எழுதவோ அல்லது சொல்லவோ முடியாததாகக் கூட இருக்கலாம். அது வேறு விக்ஷயம் - என் மனத்தளவிலேனும் உருவாக்கிக் கொள்ள கவனம் ஏற்பட்டதென்றால் அதற்க க.நா.சுதான்முக்கிய காரணம். சென்னையில் க.நா.சு.வுடன் பழகிய காலத்தில் கு.அழகிரிசாமியும், நா.பார்த்தசாரதியும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள்.
எனக்கு இடங்கள் மீதும் காலத்தின்மீதும் மனிதர்களின் மீதும் மனித உறவுகளின் மீதும் அக்கறை உண்டு. 'ஒரு புளியமரத்தின் கதை'யை இடமும் காலமும் சார்ந்த படைப்பு என்றும், 'ஜே.ஜே. சில குறிப்பு"களைக் காலமும் கருத்தும் சார்ந்த படைப்பு என்றும், 'குழந்தைகள் பெண்கள் ஆண்"களைக் காலமும் மனித உறவுகளும் சார்ந்த படைப்பு என்றும் பொதுவாகச் சொல்லலாம்.
எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பகுதி பேச்சு, ஒரு பகுதி கேள்விகளுக்கான பதில் என்று பிரசன்னா சொல்லி இருக்கிறார். கேள்விகளுக்கான நேரத்தையும் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கேள்விகள் உருவாவதற் கான பின்னணியைத் தான் சொல்லிக் கொண்டு வந்தேன் என்று நினைக்கிறேன். நண்பர்கள் மனந்திறந்தும் வெளிப்படையாகவும் கேள்விகளைக் கேட்கலாம். சிலவற்றிற்கு நான் தெளிவாகப் பதில் சொல்ல முடியும். சிலவற்றிற்குச் சொல்ல முடியாமல் இருக்கலாம். சிலவற்றிற்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். சிலவற்றிற்கு பதில் தெரிந்த நிலையிலும் முழுக்கச் சொல்ல முடியாமல் இருக்கலாம். இயன்றவரை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
(9.7.99 அன்று சென்னையில் நண்டபெற்ற சாகித்ய அகாதமிக் கூட்டத்தில் பேசிய உரை.)
Aubui 2001

Page 93
கட்டுரை
இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள்தான் பாக்கியிருக்கின்றன. உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. பொறியியல், விஞ்ஞானம், மருத்துவம், வானியல் என்று சகல துறைகளிலும் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சகல துறைகளிலும் பெண்களின் பங்கு பாதிக்கு மேலாய்ப் பதிந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளைவிட இந்தப் பத்து ஆண்டுகள் பெண்களின் பங்களிப்புக்குக் கூடுதலான இடத்தைக் கொடுத்திருக்கின்றதென்றே கூறலாம்.
ஆனால், பாலியல் ரீதியாக பெண்களின் மேல்
1 : 1 1
சுமத்தப்படும் பாரம் தொடர்ந்து
இது முன்னேறிய மேலைத் : நாடுகளிலும் சரி பின்தங்கிய
விவாதங்கள்  ெத ர ட கொண்டுதாணிருக்கின்றது. இது பெண்களின் உடற்கூறு - உடல் அமைப்பு என்பன வேறுபாட்டால் ஏற்படும் தவிர்க்க முடியாத பிரச்சினை. இப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பது, ஆண்களும் கர்ப்பம் தரிக்கும் நிலையின் தொடக்கத்தில்தான். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும், விடுதலை வேண்டும், பெண்ணடிமை நீங்க வேண்டும் என்ற கோஷங்கள் மிகப் பரந்த அளவில் ஜனரஞ்சகமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வைக்கப்படுகின்றது. இது ஒரு சிலரின் அல்லது ஒரு சில அமைப்புகள், குழுக்களினதும் விளம்பர அல்லது வியாபாரப் பிரச்சாரமாக இருக்கின்றது. ஆக்கபூர்வமாக இருப்பது மிகக் குறைந்த அளவில்தான். ஆனால் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பெண்களுக்கான சுதந்திரம் மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிறையவே இருக்கின்றது. அரசாங்கம் பெண்களுக்கான சில விசேட சட்டங்கள் கூட இயற்றியுள்ளது. இருந்தும் பெரும்பாலான பெண்கள் அடக்குமுறை வட்டத்திற்
காலம் 3 ந
 
 
 
 
 
 
 
 

வேண்டும்
குள்ளேயே வாழ்க்கையை ஒட்டுகின்றனர். தாங்களே தங்களை அடிமைத்தளைக்குள்திணிக்கும் வகையிற்தான் பெரும்பாலான பெண்களின் செயல் காணப்படுகின்றது. இதற்கு கலாச்சாரம் என்கின்ற மருந்தை ஒத்தடமாகத் தடவிக் கொள்கின்றனர். இதில் சமூகவியல், வாழ்வியல், பிரச்சினைகள் அடங்கி இருக்கின்றதென்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் வாழ்வியலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்கு உண்டு என்பதை பெரும்பாலான பெண்கள் உணரத் தவறுகின்றனர்.
இந்நாடுகளின் பொருளாதாரதுறையில் பெரும்பாலும் LISåger ஆண்களையே
நம்பியிருப்பது ஏற்க கூடிய
காரணமாக இருந்தாலும்,
1. மிக நிக குறைந்த மனத்துணிவும்
. சிறுவயதிலிருந்தே பெண்பிள்ள்ை களைக் | ேகா  ைழ த் த ன மா க
வளர்க்கப்படுவதும்
3. உயர்கல்வியைக் கற்றும் கூட கலாச்சாரம், மதம்
என்பவற்றுக்குள் இருக்கும் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவதும்
இந்த நிலைக்குக் காரணமாக அமைகின்றன. உதாரணத்துக்கு கூறப்போனால் பல்கலைக் கழகங்களில் மாதர் சங்கங்கள் அமைத்து பெண் விடுதலை பற்றி முரசு கொட்டும் பெண்கள் பலர் சொந்த வாழ்க்கையில் அடிமைகளாகி ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட திரானியற்றவர்களாக பிரச்சினைகளுக்குள் கிடந்து உழலுகின்றனர்.
ஆக மொத்தத்தில் பெண்கள் தங்களுக்குரிய இடத்தை எடுத்து செயற்படாத வரைக்கும் இந்நிலை நீடித்துக் கொண்டே இருக்கும். போராட்டம் மூலம் விடுதலை அடைந்த சில நாடுகளில் பெண்களின் பங்கு மிக உன்னதமானதாகக் காணப்படுகின்றது. இந்த வகையில் தமிழீழத்தில் உள்ள பெண்களின் நிலையில்
பூபர் 2001

Page 94
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். ஆயுதப் போராட்டத்திலும் அரசியல் போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு காத்திரமான ஒன்றாக இருக்கின்றது. மிகவும் பழமையைப் பேணுவதும், சமயாசார சடங்குகளைக் கூறி பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்ததுமான ஒரு சமுதாயத்தில் எதிரியின் பால்ய வதையைக் கூட நிராகரித்து போராட்டத்தில் முன்னேறும் தமிழ்ப் பெண்கள் வரலாற்றுப் பெருமைக்குரியவர்கள்.
ஆனால், அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள ஒரு தூரதிஷ்டமான நிலையையும் நாம் கூறாமலிருக்க முடியாது. வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் சொந்த நாடுகளுக்குச் சென்று திருமணம் முடிக்கும் போது ஏற்படம் கிராக்கியும், சீதனச் சந்தை உச்ச நிலையில் இருப்பதையும் பார்க்கும் போது பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதைதான் என்ன விலை கொடுத்தாலும் கனடா மாப்பிள்ளையை எடுக்க வேண்டும் என்ற ஆசை எத்தனையோ பெற்றோர்களுக்கு இருக்கின்றது. அன்று லண்டன், இடையில் சவுதி, இன்று கனடா, நாளை. சமூகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் பெண்கள் அறிவிலிகளாக கழுத்தை நீட்டும் நிலை இருக்கும் வரைக்கும் இது மாறப் போவதில்லை. •
ஆணாதிக்க சமுதாயம் தன் நிலையைத் தானாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை. அதே நேரத்தில் பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்தை கையிலெடுத்துச் செயற்பட்டால் அதை முழுவதுமாக எதிர்க்கும் வலுவும் இவர்களுக்கில்லை. மீண்டும் சொல்வதானால் பெண்கள் தங்களுக்கு வேண்டிய சுதந்திரத்தைத் தாங்களே எடுத்துச் செயற்பட வேண்டும். தவிர யாரும் தருவார்கள் என
எதிர்பார்க்கக் கூடாது.
சட்டங்கள் இருபாலருக்கும் சமமாகவே பெரும்பாலான ந 1ா டு க ளி ல் இயற்றப்பட்டுள்ளது. சமுதாயம் தன் தேவையை
முன்னிட்டு வழக்காறுகளை மாற்றிக் கொள்ளலாம். அல்லது திருத்திக்
 ெக ா ள் ள ல |ா ம் . வ ழ க் க ங் களு க் கு வ ழ க் க ர று க ஞ ம் சட்டங்களும், மனித சமுதாயம் மனிதனாக வாழ்வதற்காகத்தான்' தேவைகள் ஏற்படும் போது அவைகள் விரிவடைவதில் தவறில்லை.
Vasar 67 is as ou my Quijogsfasságs Begäasiapa. availd - Salah aga, saia aailm is star. *asid Gréjosa q s mai pioa segu Guajasad a gy Kykes gooth go aw 66ás à d'avés à 847 u اطمه ننهکار
Sesíás •'s au á sé sa-u a
sos ospiAi Guai *AšA šas aasaavošga aviumas ““'“ “Att diċess a swyd gatti assikasi aou ... Lai
G4Sfbáš4SÚCumta Asi 2a.
Guaí asid Stasikes o caigu asas ásaa A تسویہ *(b sa anausul o osoa. sa u To a so Ariu à4 &l-na. Fúlá sai ou Tosães பெரும்பாவான நாடுகளில் இயற்றப்பட்டுள்ளது. JV Csua au vaiato a vediamoa a cando a mai zwi wa Abjaš cias melaraw mó. Ir ar på adlaagd todas45 a 7 basd5s به m در هراسم . فنی که نه - شاه به
வேகள் ஏற்படும் போது அவைகள் விரிவடைவது
67 das Laia Santa asam šas ma i a * ?ழி வேர்டுமாய்ச் மாறிவரும் தனி ச து திருத்திக்கொள்ளுர்ஷ் வேம் قTo به نه ما قند نقد شیوع வாச்சாரம் ஒரு விலங்கு எ gaba sa web al مساهم سلطة عم له حة الة *(él- (balas g. kaz என்கன் முன்னேறிய ہی قلت نے n بھe 5 • فانٹ“
-24
and 3

எமது உன்னதமான கலாச்சாரம் தொடர்ந்தும் வாழ வேண்டுமாயின் மாறிவரும் நவீன உலகத்திற்கேற்பவும் சூழ்நிலைக்கேற்றவாறும் திருத்திக் கொள்ளுதல் வேண்டும். இல்லையேல் கலாச்சாரம் ஒரு விலங்கு என நினைத்து அதை முற்றாக மீறும் முயற்சியில் இளைய தலைமுறையினர் ஈடுபடுவதை நிறுத்த முடியாமல் போய்விடும். அங்குதான் இந்த நிலை என்றால் முன்னேறிய நாடுகளுக்கு வந்தால் "ஆறடிக் கூந்தல் அரையடியாச்சு" என்னும் பேரம்பலத்தார் கனடா வந்துவிட்டார்என்றும், கூப்பாடு போடுகின்றார்கள் சிலர். தட்பவெப்ப நிலைகளுக்குகேற்ப மனிதன் தன்னைத் தயார் படுத்தித்தான் ஆக வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? உதாரணத்திற்கு கூறினால் கனடாநாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண் நீண்ட கூந்தலை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருக்கலாம். கூந்தலை உலர வைப்பதற்கு முடி உலர்த்தி (Hair Dryer) பாஷிப்பதால் பலருக்குத்தலைவலி ஏற்படுவதும் உண்டு. இப்படி எமது நாட்டுக்கும் குளிர்நாட்டுக்கும் உள்ள வேறுபாடுகளால் சில மாற்றங்களை அவசியம் செய்தாக வேண்டிய நிலை உள்ளது. கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காப்பதும் அதன்படி நடப்பதும் பெண்களுக்குத்தான் என நினைக்கும் தமிழ் ஆண் சமுதாயம், அங்கும் இருக்கின்றார்கள். இங்கும் இருக்கின்றார்கள். முன்னேறிய நாடுகளில் அவர்கள் இருந்தும் அவர்கள் மட்டும் முன்னேறாமல் இருப்பது விந்தைக்குரியதே. வேகமான உலக சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப எங்கள் சமுதாய வளர்ச்சியும் அமைய வேண்டும். இல்லையேல் நிச்சயமாக நாம் தூக்கி வீசப்படுவோம்.
கனடாவின் குமார்மூர்த்தி 1988இல் (பார்வை சஞ்சிகைக்கு) முதல்முதலாக எழுதிய கட்டுரை.
அர்து ais nossui assá alguu Ta o adol ou A
uo. As its also a saaelst d adad, alluso balavs ང་ است n ساله ۵ هفده ه سه در سال به ۵ رداع ۰. امطه قلمها به نیمه ه mpú ou na wa4, A, a aussuf u94Aästä 840adio Häuas
negas dibes «My Lee mas no asawnd. «As au ausgabalju ASAéas ( RAR 4 Sagãs na pRyé R ) Vs Las Ali Asaf u novaĴusnas luavo kaj A6 2ravel aas gupaas ciju eas a dio. Sju s dugo Ančoko so டும் சொன் S T Ćbású Láci o a su rasa Tái Ahwa Tip & S ar ayambé ab AS AS Tsasoa o Wiis Tas oawaii quad2a eadaab, asaw ATV Asa Aw A udi as Tstad as un čaulā atkas füapd Asiu suútu apdo oudkaseb
duolaasa asisnü aras daság s dý od WWISATIV d. ados was stub sé LLLLTLLLLSSSTTLL TLLLMLL LT S S TT A LLLLLL LLLLLL που πώ , «afls sa stado floks à assad Osbo Violagai
o Ms na abjus 4daos ás flava s. olarasuorar mawas Wusmu s Adam TaSAS fra ás góu aé-d søsflu aæá4«vð چوnهفاده فهها تعع AKa Afi a, të aq saj Auauu na sr së dy did afavjue au Mwd,
frussiod bo8éuqà
bb. Ég a guai
7“ ísú vé P9v тиф син у
Archasis
AAAAL TTT L L LES LEEL LATAT LSLLTTALLAAL
LLLLL AALLLAA LLL LLALAL TLA TAL ALALAL TL SL LLLLLLLA LLLLLLAAAAALLL
一象器一
Aubui 2001

Page 95
"שייה זו היא אואולאי, شیر x_i جنگلات
لاسنشلیشنز میں تاڑلیریبین&WWWWww
|-
2933 Kennedy Road, Scarbc () (416)। 497-122
 
 
 
 
 
 
 
 
 
 

rough, Ontario, M1VIS9 /(416).409-8916

Page 96

TIL TG.
、