கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2002.06

Page 1

ஜேகனகரட்ணா
சிறப்பிதழ்
研

Page 2

IIIIIIIIIIIIIIIII
OYALLEPAGE
IIIII||I||I||I||I||I||I||
m Siwathasan, a ser
al LePage R.E.SVCS. Ltd. 8 Lawrence AWE. East st Hill, ON
..6) 284-4751 ..6) 804-3443

Page 3
ᎯᏂ/Ꮘ ᏳᏓᎷᏜ Ᏹ6 g"går, 2002 ஏ.ஜே. சிறப்பிதழ் தனிச்சுற்றுக்கு மட்டும் B
71
92
ஆலோசனை
என்.கே. லுகாவிங்கம்
செழியன்
சரவணன்1978
வடிவமைப்பு யாழினி
yaazhinigradiffmail.com
ஓவியம்
Cy ப்ரபாகர்
LI LI F5 GT
செந்தில் குமரன்
ஒளி அச்சு
எஸ். கருணாகரன்
அச்சகம்
ஹேமமாலா சிண்டிகேட் ಫ಼್ - ಲಿ:5 ? இத்திட்ரி
KALAM P.O. Box 735 509 St. Clair. Awe, W TOTOrto, ON MESC 1 CO CANADA kalam(3) tarmil book. COIT
சிறுகை
3 வாஸந்தி
இரா.முரு பொ. கருை
ரமணி
எஸ். சிறீதர
கவிதை
அழகுக்கே வெங்கடரப உமா மலுே இளங்கோ எஸ். செந்தி
மற்றும்
ஏ.ஜே கன் ஜெயமோக வரப்ரசாதப் சரவணன்1
142 HOE STRE|
 
 

* Fiா தா
2-B figli Stree
"Pilistrr:: v r. 1527) *Te (: {O2) &#o:! 8323
。
$ENT 56 ாாகரமூர்த்தி 10 110
65
79
|10.2
27
52
14
5
23
105
கட்டுரை
இந்திரா பார்த்தசாரதி அ. முத்துலிங்கம் எம்.ஏ. நுஃமான் 。 எம். வேதசகாய குமார் மணி வேலுப்பிள்ளை காஞ்சனா தாமோதரன் எஸ்.வி. ராஜதுரை GTIGT. GEG, LIDEGTIGSTIEGLI ஏ.எஸ். பன்னீர்செல்வம் செல்வா கனகநாயகம் நடேசன் ്.
ஹர்ஷா குணவர்த்தனா றெஜி சிரிவர்த்தன __
சுப்பிரமணியம் சிவநாயகம் சுரேஷ் கனகராஜா செழியன்
KUMARANS
T
ET, WALTHAMSTOW, E174OR, LONDON
Limited

Page 4
:ஃ
ܓܠ
محصے
செல்வம்
சமயம், இலக்கணம், விஞ்ஞானம், ஆகிய கல்வித் துறைகளில் ஓர் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தங்கள் வித்துவத்தன்மையைக் காட்டிய யாழ்ப்பாணத்தவர்கள் இருக்கிறார்கள். அதேவேளை சிறுபான்மையினராகத் தங்களை வெளியே காட்டிக் கொள்ளாத, சமூகத்துடன் ஒத்தோட மறுத்த சித்தர் பரம்பரையினரும் இருந்திருக்கிறார்கள். இந்த இரு பரம்பரையினரையும் விட, தங்கள் வாழ்வை இலக்கிய வாழ்க்கையாக்கிக் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் முன்னணியில் நிற்பவர் ஏ.ஜே. என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஏ.ஜே. கனகரட்னா.
சிறியன சிந்தியாத மனப்பக்குவத்தை உடைய அந்த மனிதர் இலக்கியத்தை வாழ்வாக்கிக் கொண்டவர். யாழ்ப்பாணத்தவருக்கே உரிய முறையான கல்வியை ஒழுங்காகக் கற்ற அவர், அதை ஒதுக்கி 'சித்தம் போக்குச் சிவன் போக்கு என வாழக் கூடிய மனப் பக்குவமும் கைவரப் பெற்றவர். ஜனநாயக, மனித நேயக் கொள்கைகளைத் தன் இரத்தத்தில் ஊறப்பெற்ற அவர், மேற்குலகப் புறத்தியான் போல வாழ்ந்தும் வருபவர். D6) இலக்கியங்களைத் துறைபோகக் கற்ற அவர், சமகாலத் தமிழ் இலக்கியங்களையும் வாசித்து மதிப்பிடுகிறவர். நூலகத்தைத் தன் தாய் வீடாக்கியவர். சிந்தனையில் உலகப் பொதுமகனான, மேற்குலக பண்பாடு, கலை,
காலம் 15வது இதழில் சுந்தர ராமசாமியின் தொலைவில் அணைந்த சுடர் என்ற கட்டுரையில் சோழன் என்ற சொல்லை சேரன் என்று பிழையாக மெய்ப்புப் பார்ப்பவர்கள் மாற்றி விட்டார்கள். ஒரு சிறிய தவறுபோல் அது தோன்றினாலும் சுராவின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு அது இடம் வைத்திருக்கலாம் என்பதற்காக அவரிடமும் வாசகர்களிடமும் காலம் மன்னிப்புக் கேட்கின்றது.
ஆசிரியர்
g
6
's
 
 
 
 
 
 
 
 

புதுயுகக் கலைஞன்
இலக்கியங்களை வாசித்துக் கற்ற, கிறிஸ்தவ 1ண்பாட்டின் பிரதிநிதியான அவர் இன்றும் ாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற விரும்பாத, வளியேறாத வேர்கொண்ட மண்ணின் மைந்தர்.
அவரை எழுதச் சொல்ல முடியாது. விரும்பினால் பேசும், எழுதும் சித்தர் மனம் கொண்டவர். அதனால் தான் அவருடைய ாழுத்துக்கள் கையடக்கமான இரண்டு நூல்கள். அவை அவரை எந்த விதத்திலும் பிரதிநிதித்துவப் படுத்தப் போதாதவை. ஆனால் அவருடைய மொழிபெயர்ப்புக்கள், உரையாடல்கள், நட்பு, பலரை இலக்கிய விமர்சகர்களாக்கி உள்ளன, ாழுத்தாளர்களாக்கி உள்ளன. அவருடைய வாழ்வே இலக்கியம், கலை. வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் இடைவெளியே அற்ற வாழ்க்கையை வாழ்கிறவர் கலைஞர். அந்த இலக்கிய ஆத்மாவைக் கொண்டாடுவதில் 'காலம் பெருமைப் படுகிறது. அவரைப் பற்றிய கட்டுரைகளைக் 'காலம் பெற்று வெளியிடுவதில் காலம் கெளரவம் பெறுகின்றது.
கனடாவில் வெளிவந்த 'தாயகம் ஈஞ்சிகையில் மு. நித்தியானந்தன், இனிமேலும் ான் யாழ்ப்பாணம் போவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்குமானால் அப்போது ஏ.ஜே.யைப் பார்க்கலாம் என்பது முக்கியமாக இருக்கும் ான்று அர்த்தப்பட எழுதியிருந்தார்’. வாழும்போதே கற்றவர்களின் மதிப்பினைப்
பெற்று நிற்பவராக - ஒரு legend ஆக -
மாறிவிட்டவர் ஏ.ஜே. அம்மனிதரைச் சிறப்பிப்பதற்காக, இச்சிறப்பிதழை வெளியிடப் பலரிடமும் கட்டுரைகளைப் பெற்று உதவியும் ஊக்கமும் தந்தவர், சளைக்காத இலக்கிய உழைப்பாளி பத்மநாப ஐயர். அவருக்குக் காலம் ன் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றது.
Ο
உங்கள் இதழிலும் எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆங்கில வெளியீடுகளில் எழுத்துப் பிழைகள் அரிது. தமிழில் மலிவு மூலத்தில் இல்லாத எழுத்துப் பிழைகள் அச்சில் இடம்
பெறுவது விந்தையே.
மணிவேல்

Page 5
றெஜி சிரிலர்த்தன
ஏ.ஜே.யுடனான (நானும் அவன் அப்படித்தான் அழைக்கப் பழகி விட்டே எனது தொடர்பும், மிக சந்தோசகரமா ஆரம்பகால யாழ்ப்பாணப் பல்கலைக்கழ காலத்தில் தான் ஆரம்பித்தது. முத தலைவராக இருந்த பேராசிரியர் க. கைலாசட காலம் அது. இன்றைய வித்தியாசமா பரம்பரைக்கு ஏறக்குறைய நம்ப முடியாத என்னவென்றால், அக்காலத்தில் தமிழர்க மட்டுமல்ல, சிங்கள முஸ்லீம் மாணவர்களு ஆசிரியர்களும் இலங்கையின் l பாகங்களிலிருந்தும் அங்கு போய் வாழ்ந்தது தொழில் பார்த்ததும் ஆகும். அத்துட அவர்கள் கலாச்சார, சமூக நடவடிக்கைகளி /Nபல்கலைக்கழக வளாகத்திலும், வெளியிலு க ஈடுபட்டார்கள். மகிழ்ச்சியும் அமைதிய நிறைந்த அந்த நாட்கள், 1977ஆம் ஆண்டு இ (6 வன்முறைகள் ஆரம்பித்தவுடன் வருந்தத்த:
முறையில் முடிவடைந்தன.
GOJ பேராசிரியர் கைலாசபதியி >'அழைப்பின்பேரில் காலத்துக்குக் காலம் நா யாழ்ப்பாணம் சென்று, ஒவ்வொரு நாளும், ஒ வாரம், பல மணிநேரம் கற்பித்தேன். அந்: காலத்தில் பல்கலைக்கழகம் துரைத்தன குறைந்த ஒரு சூழலிலேயே இயங்கி வந்த நாங்கள் இறுக்கமான பாடவிதானத்தா கட்டுப்படவில்லை. அதிகமான காலம் ரஷிய கவிதைகளை மொழிபெயர்ப்பில் கற்பித்தே அதேயளவு துரைத்தனமற்ற சூழலில் ஆங்கில் துறை மாணவர்கள் மட்டுமல்ல, ஆர்வமுள் பிறரும், பிற துறை ஆசிரியர்களும், அ! வகுப்புகளுக்குச் சமூகமளித்தார்கள். அதற் ஒழுங்காகச் சமூகளித்தவர்களில் ஏ.ஜே.ய ஒருவர். அந்த வகுப்புக்கள் ஒரு வ விரிவுரைகள் அல்ல. கலந்துரையாட நேரங்களில் அவர்கள் உற்சாகமாக பங்குபற்றுவார்கள்.
க ல ந் து  ைர ய ர ட ல் க ό சிற்றுண்டிச்சாலைகளில் தேநீர் அருந்து வேளைகளுக்குக் கூட பலவேளை தொடரு

ஆழவேரூன்றிய உலகக் குடிமகன்
அக்காலத்தில் தான் ஏ.ஜே.யின் அறிவுத்திறத்தின் குணத்தை நான் முதன்முதல் அறிந்தேன். அவரின் விரிந்த இலக்கிய ஆர்வங்கள், அவற்றின் சுறுசுறுப்பான, ஆனால் கோட்பாட்டுகளை வற்புறுத்தாத சமூக உட்பொருள் கொண்ட தன்மைகள், சுயாதீனம், தனித்தன்மையுடன் முடிவுகள் எடுப்பது போன்றவற்றை அறிந்தேன்.
அலெக்சான்டர் ப்பொளக்கின் கவிதைகள் பற்றிப் பல வகுப்புக்கள் நடந்ததாக எனக்கு நினைவுண்டு. ப்பொளக் ஒரு குறியீட்டுக் கவிஞர். 1917இல் ஒக்ரோபர் புரட்சி அனுதாபி. அவரின் முக்கிய கவிதையான பன்னிருவர் என்பது, புரட்சிக்குச் சில மாதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்டது. அந்தக் கவிதையின் முடிவில், பெற்றோகிறாட் வீதிகளில், ஒரு பனிக்கால இரவொன்றில், செம்படை வீரர்களுக்கு முன்னால், ஒரு நபர் ஒரு செங்கொடியைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அவரின் உருவம், சுழன்றடிக்கும் உறைபனியில், மங்கலாகத் தான் தெரிகிறது. அவர் யாரென்று அடையாளம் காண அவர்களால் முடியவில்லை. ஆனால் கவிதை அதன் கடைசி வரியில் கண்டு பிடிக்கின்றது: "அவர்கள் முன்னால் போகிறார். யேசுநாதர்” வைதிக தேவாலயங்களிலிருந்து புறம்பாக, நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடைய, தீவிர கிறிஸ்தவத்தின் பேரார்வத்தை, 1917ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியில் இனங்காணும் முயற்சியே ப்பொளக்கின் அக்கவிதை. ஆனால், அக்கவிதையின் கடைசி வரியை நாங்கள் அடைந்தபோது, செம்படையினரின் முன்னால் நடந்து சென்றது, யேசுநாதர் போன்ற அந்த உருவமாக ப்பொளக் அர்த்தப்படுத்தி இருந்தாலும், அதைவிட, முன்சென்றவர் செம்படையினரிலும் பார்க்க மேலும் தீவிரமான தரிசனமுள்ளவர் என்று ப்பொளக் அர்த்தப்படுத்தி இருக்கலாம் என்று ஏ.ஜே. சொன்னார். இந்தச் சாத்தியப்பாடு என் மனதுக்கு அதற்கு முன்னர் தட்டுப்படவே

Page 6
ஏ.ஜே. கனகரட்னா
இல்லை. ஆனால் آلاتی/للئے பொரு எண்  ைம யு ள்ள தா கவும் , பயனுள்ளதாகவும் இருந்தது அக்கவிதையின் புரிதலுக்கு ஒருவருக்குப் புதிய காட்சிகளை அளித்தது. ப்பொளக்கின் கவிதையைப் பற்றி ஏ.ஜே. ஒரு கட்டுரை எழுதியிருப்பதாக நான் அண்மையில் கேள்விப்பட்டேன். அந்தப் பெரிய ரஷ்யக் கவிஞனில் அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறேன் என்பதில் நான் சந்தோசப்படுகிறேன்.
1977இல் யாழ்ப்பாணத்துக்கு நான் ஒழுங்காகப் போய் வருவது நின்றது. ஆனால் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் இடைக்கிடை அங்கு நான் போய் வந்தேன். படிப்பிப்பதற்காக அல்ல. இனத்துவ முரண்களில் ஈடுபட்ட சமூகக் குழுக்களின் அங்கத்துவனாகச் சென்றேன். ஒவ்வொரு முறை நான் அங்கு சென்றபோதும், வழக்கமாக ஏ.ஜே என்னைக் காண வந்தார் எங்கள் நண்பரின் வீட்டில் நாங்கள் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்துவோம். அவரும், இன்னும் இரண்டொருவரும் என்னுடைய சில டு எழுத்துக்களை இடைக்கிடை தமிழில் ரை மொழிபெயர்த்தார்கள். அதன் விளைவாக, என் எழுத்துக்கள் சிங்களத்திலும் பார்க்க >= தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. பலமுறை, ஏ.ஜே என் நூல்களைப் புறவயமாகவும், நேர்மையாகவும் மதிப்பிட்டுள்ளார். அப்படியாகத் துல்லியமான திறனாய்வாளர் ஒருவரின் எதிர்வினைகள் என் நூல்களுக்குக் கிடைப்பது எனக்குத் திருப்தி அளிக்கிறது. 証凸凸山 நீரோட்டப் பத்திரிகைகள் உண்மைகளைத்
திரித்தும், கட்டுக்கதைகளை உருவாக்கித் தந்தும்
காலம் சஞ்சிகை
வாழும்
புத்தகக் க
காலம்
 
 

சிறப்பிதழ் 泷 கொண்டிருந்த வேளையில், தென்னிலங்கையில் வாழும் எனக்கும், அதேபோல மற்ற சுயாதீன GET diggia, Slaig, h Saturday Review - ாப்பத்திரிகையின் உற்பத்தியிலும் எழுத்திலும் ஜேக்கு முக்கியமான பங்கிருந்தது - தான் ாழ்ப்பாணத்தவர்கள் என்ன னைக்கிறார்கள், அங்கு என்ன நடக்கின்றன ன்பவை பற்றிய உண்மைகளை அறிவதற்கு ரேயொரு ஊடகமாக இருந்தது.
முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பானத்தில், 1)க்குறைவுடன் வாழ்வது மட்டுமல்லாமல், னக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய டியாமல் கட்டுப்படுத்தப்படுவதாலும், காழும்புக்குக் குடிபெயர்ந்து வரச் சொல்லி, த்தகால இருண்ட ஆண்டுகளில் ஒருமுறை, ஜேக்கு என்னுடைய நண்பர் ஒருவர் மூலம்
சால்வி அனுப்பினேன். கொழும்பில் ^
றெ
பனுள்ள, திருப்திகரமான வேலையொன்றை
வருக்குக் கிடைக்கச் செய்யலாம் என்று நான் ஜி
ம்பினேன். அதற்கு அவர் தான் அங்கு
சேற்றில் அழுந்திய தடி' மாதிரி ருப்பதாகவும், தன்னைக் கொழும்பில்
றுநடுவு செய்ய தனக்கு விருப்பம் இல்லை ெ
ன்றும் பதிலளித்திருந்தார். உலகக் டிமகனுக்குரிய கலாச்சாரமும், சர்வதேசப் ரக்ஞையுமுடைய புத்திஜீவியான ஏ.ஜே. ாழ்ப்பான மண்ணிலும், அதன் வாழ்விலும்,
னுபவத்திலும், மொழியிலும், ஆழவேரூன்றி ران
ள்ளார் என்பதை அதிலிருந்து நான் ணர்ந்து கொண்டேன். யாழ்ப்பானத்தை, தனுடைய பெரும் சோதனை காலத்தில் 'ட்டு வருவதை ஒரு துரோகச் செயல் என்று வர் கருதி இருக்கலாம்.
Ο
ஆதரவில் தமிழ்
ண்காட்சி
TORONTO
SSSS SSS SSS SSS SSSLSSSSSSLS SS SSSSS

Page 7
ஹர்ஷா குணவர்த்தனா கொழும்பு
நியூயோர்க்கில், செப்ரெம்பர் 11இ பயங்கரமும் பேரச்சமும் நிறைந்த நிகழ்ச்சிக நிகழ்ந்து சில கிழமைகளே கடந்திருக்கின்ற அவற்றைத் தொடர்ந்து தீய சகுனங்க எங்களைச் சூழ்ந்துள்ளன. இதன் மத்தியி தினமுமுள்ள மின்சார வெட்டு, தொலைவி கேட்கும் யுத்த மேளங்களின் அதிர்வுகள் ஐக்கிய அமெரிக்காவின் 68) 35 356) GT பிடிப்பதற்கு ஒருவரை ஒருவர் முத்திக் கொண் பாய்தல், சிஎன்என், பிபிசி ஆகியவை 24 மணி நேரச் செய்திச் சுழற்சியில் கருத்துரையாளர்க ANகக்கித் தள்ளும் மிகைப்பட்ட பேரகராதி து பதங்கள் - நாகரீகத்தின் இடுக்கண், இறு போராட்டக்களம், புதிய ஏற்பாட்டின் இறு ஏடு, சைபர் அடித்தளம், அமெரிக் (6 சீற்றத்திற்கான காரணம், உடனிகழ்ச் ரை இழப்புகள், எல்லையற்ற நீதி, மேதகு கழு சிலுவைப்போர், கற்காலம். அதனால், ஏ.ே "பற்றி அவசரக் குறிப்பாக, இதை எழு வேண்டியுள்ளது. ஆனால், இதை எழுதுவது அமைதியான ஒரு கால நினைவு துயரங்களைத் தருகின்ற அதேவேளை ஒருவகையில் புத்துணர்ச்சி தருவதாகவு இருக்கிறது.
நான் ஏஜேயை முதன் முதலி சந்தித்தது 70 ஆண்டுக் கடைசிகளில், புதிதா நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழ. யாழ்ப்பாண வளாகத்தில் தான். (யாழ்ப்பான வளாகம் என்று அப்போது அது அறிமுகமா இருந்தது). உண்மையில், எங்களில் சில முன்னோடிகளுக்கு ஏற்படும் வெற்றிக்களிப்பி வெறி உணர்வில் இருந்தோம். எழுச்சி மிச் அறிவார்ந்த சூழல் கிடைத்ததற்கு, அத மதிநுட்பமுள்ள முதல் தலைவரா பேராசிரியர் க.கைலாசபதி தன் “கைப்பட பலரைத் தெரிவு செய்தது, ஒரு முக்கி காரணம். அங்கே நாடெங்கிலும் இருந்து வந் தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்களு ஆசிரியர்களும் கலந்திருந்தனர். சிங்க
N

:
ல்,
di
另,
இடருறும் எங்கள் தேசத்துக்கு எப்பொழுதுவரும் சமாதானம்
மொழித் துறையின் தலைவராக, கூரறிவுள்ள றொட்கியவாதியான, சுச்சரித கம் லத் இருந்தார். அவருடன் திரைப்பட படப்பிடிப்பாளர் தர்மசேன பதிராஜ, கவிஞர்கள் ஜினதாஸ் தனன் சூரிய, தேல் பண்டடார, சுனில் ஆரியரட்ன (பாடற்கவிஞர்) இருந்தனர். தமிழ்த்துறை, தலைவராக சண்முகதாஸ் (மொழி அறிஞர்), நுஃமான் (கவிஞர்), சித்ரலேகா மெளனகுரு, கார்த்திகேசு சிவத்தம்பி, ஆகியோரைக் கொண்டு பெருமைப்பட்டது. நித்தியானந்தன் (பொருளியல்), தயபால் திரணகம (புவியியல்), சிவனேசச்செல்வன் (நூலகம்), கிருஷ்ணராஜா (மெய்யியல்), கைலாசநாதக் குருக்கள் (இந்து நாகரீகம்), சாந்தினி சந்தானம், கனகநாயகம், நிர்மலா ராஜசிங்கம், நிகால் பெர்னாண்டோ ஆகியோரும் இருந்தனர். அத்துடன் ஏஜேயும்.
ஆங்கில இலக்கியம், ஏ.ஜேயின் தனிப்பெரும் துறை. எங்கள் சகாக்களுடன் நாங்கள் நடத்திய * Sg5 TT fyrr T U L D IT GOT கலந்துரையாடல்களும் விவாதங்களும் பல. அவை திணைக்களங்களிலும், அவற்றையும் கடந்து, மூத்த ஆசிரியர்களின் பொதுவறைக்கும் கூடப் பொதுவாகப் போய் இருக்கிறது. தலைப்புக்கள் ஸ்ரைய்னர், மிமேசிஸ், பிளேக், லெனட் வுல்ஃப்பின் தினக்குறிப்புத் தொடக்கம், மாணவர்களின் கோரிக்கைகள் அல்லது பல்கலைக் கழக கொடுப்பனவுக் குழுவின் சூறையாடல் ஊடாக, கல்விசார் சுதந்திரம் வரை கோரும். ஏ.ஜே இலக்கியத்தின் மேல் கொண்ட காதலும், அறிவும் உயிர்ப்புள்ள தனித்தன்மை உடையவை. அவர் வாழ்வின் ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்ற, பேராதனை ஆங்கிலத் துறையினரின், மரபுக் கோட்பாட்டுச் சிற்றறைகளாலும் தொழுவங்களாலும், நிச்சயமாக அவரின் காதலும் அறிவும் கட்டுண்டிராதவை. ஏ.ஜே. பொதுப் படையாகவே இலக்கியத்தைக் காதலித்தார்.
றெஜி சிறிவர்த்தனா இரண்டு கிழமைக்கு

Page 8
ஏ.ஜே. கனகரட்னா
ஒருதரம், யாழ்தேவியில் வந்து ஆற்றிய விரிவுரைகளால், ரஷிய இலக்கியத்தின் - எவ்டுஷெங்கோ, ப்ளொக், எசெனின் - சீர்த்திகளையும் பேரார்வத்துடன் ? நுகரும் தன்னிகரற்ற சந்தர்ப்பங்களும்,
புழுக்கமான பல பிற்பகல்களில் எங்களுக்குக் இ கிடைத்தன. இ 席
(Կ
சோக முகபாவத் தோற்றம் அவருக்கு இருந்தபோதிலும், ஏ.ஜே. உயிரோட்டமுள்ள ஹாஸ்ய உணர்வுள்ளவர் கல்விக் கழகங்களில் கால் மிதிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த ஒண்டிப் பிழைப்போர், இலக்கியப் போலிகள், பகட்டுப் போலிகள், சுயமுன்னேற்றவாதிகள், சுத்த முட்டாள்கள் போன்றவர்கள் அனைவருமே அவரின் நுண்ணாய்வுக்கோ நகைப்புக்கோ தப்ப முடியாது. முட்டாள்களைச் சந்தோசமாக அவரால் பொறுத்துக் கொள் முடியாது. சிலநேரங்களில் அவருடைய நம்பிக்கையற்ற தனத்தின் வாள் குத்து, பாரதூரமானதாக இருந்தாலும் மற்றவரைப் புண்படுத்தாதவர். ஏ.ஜே. ஒருக்காலுமே எவரிலுமே வன்மம் சாதிக்காதவர், கோட்பாடுகளை எக்காலமுமே போதிக்காதவர். ஆனால் கோட்பாடுகளுடன் ட் வாழ்ந்தவர் வாழ்க்கையின் ஆரம்பத்தில், கத்தோலிக்க திருக்கோவிலின் அதிகார நலங்களாக இருந்தாலும் சரி, பத்திரிகை Ꭶl] ] முதலாளிகளின் நியாயமற்ற கோரிக்கைகளாக 

Page 9
கப்பிரமணியம் சிலநாயகம்
லண்டன்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒ மனிதனைப் பற்றி ஒருவரை எழுதச் சொல்லி கேட்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமல் அப்படி ஒருவரைக் கேட்கிறதே எழுதப்பட
போபவருக்கு ஒரு விசேஷ இருக்கிறதென்பதையே காட்டுகிறது எளிமையான, தன்முனைப்பற்
மென்மையாகப் பேசும், முட்டக் குடிக்கு ஆனால், ரிஷி போன்ற, நீண்டகால பிரம்மச்சரியான, நீண்ட தாடியுடைய ஒருவரி மனப்படம் எனக்கு அவரைப் பற்றி இருக்கிற க் அது 18 வருடப் பழைய நினைவு. அப்படியா ட் அந்த மனிதரில் என்ன விசேசம் இருக்கிறது
حدخص
(6 (ஏ.ஜே. யின் தாடி யாழ்ப்பாணத்தி ர்ெ பழக்கமானதொரு காட்சி. பின்லாடனுடை ஆபநீண்ட தாடி உலகப் படத்தில் காண
கிடைத்தற்கு முந்தியதொன்று அது)
தன் முதல் எழுத்துக்களா பெயர்பெற்ற ஏ.ஜே. கனகரட்னா என் அம்மனிதர், ஜனவரி 1982 தொடக்கம் யூன 1983 வரை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த Sat day Review என்ற பத்திரிக்கையில், சாகசங்க நிறைந்த முதற்கட்டத்தில், என்னுடன் வேை பார்த்தவர், என் பத்திரிகை வாழ்க்ை "உருண்டோடும் கல்” போன்றது. 30 வருட கொழும்பில் பத்திரிகை வாழ்க்கை, எ தகுதிக்கு (!) ஐந்து இராஜினாமா, சிலோ டெயிலி நியுஸ், சிலோன் டெயிலி மிற ஜெவோல்ரர் தொம்சன்ஸ், இலங்கை ரூறிள் ப்போட், கொழும்பு பிளான் பியுரொ என் ஐந்தின் பின், கடைசியில் யாழ்ப்பாணத்திற்கு சற்றடே றிவியுவின் ஸ்தாபன ஆசிரியரா யாழ்ப்பாண நூலகம் எரிந்த பிறகு ஒ ° கோபக்கார மனிதராகப் போய்ச் சேர்ந்தே நாட்டில் கொந்தளிப்பான நிலைமை இரு

மாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன்
காலமது. என் பத்திரிகை வாழ்விலும் கொந்தளிப்பான கால ஆரம்பம் அது. ஆசிரியக் கருத்துச் சொல்லுதலில் பத்திரிகை ஆபத்தாகவே வாழ்ந்தது. ஜயவர்த்தன அரசின் வரவேற்பற்ற கவனம் எங்களில் என்றுமே இருந்தது. இறுதியில், கொழும்பு அதிகாரம் எங்களில் கடைப்பிடித்த பொறுமையை இழந்து, பத்திரிகையைத் தடை செய்தது. ஆசிரிய அலுவலகத்தை மூடியது. என்னைக் கைதுசெய்ய அலைந்தது.
போர்க்குணத் தன்மையுடன் எம் பத்திரிகைத்துவம் இருந்தபோதும் தென்னிலங்கையில் நாங்கள் Ꮏ 1 ᎶᏂ) ᎶᏡ Ꭰ நண்பர்களாகப் பெற்றோம். ஏனெனில் சற்றடே றிவுயு மட்டுந்தான் ஒரு சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு எதிர்ப்புக் குரலாக இருந்தது. நான் பத்திரிகையில் விவாதங்களை ஊக்குவித்தபோது, ஏ.ஜே. மென்மையான விஷயங்களை உள் கொணர்ந்தார். அவர் பணித்துறையைச் சேர்ந்தவராக இருந்தபடியால், யாழ்ப்பாணக் காட்சிகளைக் கூட்டிக் குறைக்காமல், அவர்களுடைய அனுபவங்களை ஆழமாக அனுபவித்து எழுதினார். 1982க்கு முன்பு அவரைச் சந்திக்கும் நல்லதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 1983க்குப் பிறகு இந்த 18 வருடங்களிலும் அது கிட்டவில்லை. ஆகவே, அந்தக் குறுகிய காலத் தொடர்பு அவரைப் பற்றிய அறிவுடன் எழுத எனக்குத் தகுதியைத் தந்திருக்கிறதா? அது எனக்கு நிச்சயமில்லை. ஆனால் சளைக்காத, புலம்பெயர் எழுத்துக்களின் இலக்கிய 'மருத்துவிச்சியான பத்மநாப ஐயர் அப்படி நினைக்கிறார். அவர் நினைக்கிறது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

Page 10
ஏ.ஜே. கனகரட்னா
ஏ.ஜே.யின் நிரந்தர இருப்பிடமாக உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து நான் பிடுங்கப்பட்டு 18 வருடங்களாகப் போனபின்னும், இன்னும் அவர் எனது உ6 பிரக்ஞையில் இருந்து கொண்டுதான் ஆ இருக்கிறார். அது விசித்திரமானதாக ே இருந்தபோதிலும், சற்றடே றிவுயு தொடர்புகள் ப; நின்று பல நீண்ட வருடங்கள் சென்ற பின், ை அந்த மனிதரைப்பற்றி நான் அதிகம் அறிந்து ெ கொண்டேன். கூடுதலாக நினைத்துக் மு. கொண்டேன். அதற்குத் திரும்பவும் பத்மநாப சந் ஐயருக்குத் தான் நன்றியுடையவனாக இ இருக்கிறேன். ஏனெனில் அவர் தான் Third Eye சற் பிரதியொன்றை எனக்கு அனுப்பியவர். உத் அவ்வெளியீடு செங்கலடியிலுள்ள, கிழக்குப் சந் பல்கலைக்கழகத்திலிருந்து வரும் ஆங்கில இதழ். மு அவ்விதழ் ஆங்கிலத்திலுள்ள சிருஷ்டி ம6 எழுத்துக்களுக்கும் கோட்பாட்டு கூ விவாதங்களுக்கும் களம் அமைத்துக் பத் 7^கொடுக்கிறது. அந்தக் குறிப்பிட்ட இதழில் செ ஏஜேயின் எழுத்துக்கள் பலவும் வெளியாகியும் அ ட் இருந்தன. இந்த இதழை வாசித்தபோது ை அவரின் ஆங்கில இலக்கியத்துடனான சிெ தொடர்புபற்றி எனக்குப் புதியதொரு தரிசனம் ஏா *LA என் யாழ்ப்பாண பத்திரிகை சுெ > நாட்களில் அது எனக்கு முற்றுமுழுதாகக் உ6
அறியக் கிடைக்காததொன்று. வி
ଗର୍ଧ
அவருடைய பேராதனை நாட்களின் 1 - 1ፊጛ பின் ஏரிக்கரைப் பத்திரிகைத் துறைக்குத் م அ! தடம்மாறி வந்தார். ஏரிக்கரை பத்திரிகை ,
வலதுசாரிப் பிற்போக்கின் கோட்டை மார்க்ஸிஸ்க் கருத்துக்கள் உள்ள றெஜி இ சிறிவர்த்தன, கைலாசபதி, ஏ.ஜே. இ போன்றவர்களுக்கு அப்பத்திரிகைகளில் ஏன்
கவர்ச்சி வந்தது என்பது என்னைக்
குழப்பியதொரு விஷயம். எதிரானவை ஒன்றை f? ஒன்று கவரும் என்பதாலா? அல்லது, வழ பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துறைக்கும் கவ ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா? உற் எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி எதி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களைப் நுை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று தா | போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் பர கவித்துவ உணர்திறனைச் சுலபமாக அடைந்து அ விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் இ
 

fp ů ó 5 )
ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண ண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் பாய் விட்டது. அதற்குக் காரணம் ந்திரிகைத்துறையில் எனக்கிருந்த பத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜாய்சின் யு லிசஸ் நாவலை வாசிக்க பற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. லக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மிக ]வு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் ழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு Eதரைப்பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் – TS) என்றாலும், சட்டரீதியாக *திரிகைத்துறையை அவர் விவாகம் ய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை வருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வத்திருக்கிறார் என்றும், என்னால் Fால்லாமல் இருக்க முடியவில்லை! ரிக்கரையில் இருந்த காலத்தைப்பற்றிச் Fால் கையில், (அது சிலவேளை ண்மையில்லாமல் இருக்கலாம்) வரணப்பகுதி எழுத்தாளராக இருந்து வரணப்பகுதிக்கு அவரை ஆசிரியராகப் வி உயர்வு செய்தபோது அதை எதிர்த்து ந்த வேலையை உதறித்தள்ளினார் என்று றவர்கள் சொல்வதை நான் கேள்விப் டிருக்கிறேன். அந்தக் கதை கட்டுக்கதையாக நந்தாலும், அதை நான் நம்பத் தயாராக ருக்கிறேன்.
பேராதனை ஆங்கிலத்துறை இலக்கியத் னாய்வை ஒரு வழிபாட்டுத்துறையாகவே பெட்டு வந்தது. பல்கலைக்கழகம், ஞர்களையும் நாவலாசிரியர்களையும் பத்தியாக்கும் இடம் என்று ஒருவரும் ர்பார்ப்பதில்லை தான். ஏ.ஜே. நுண்மாண் ழைபுல இலக்கியத் திறனாய்வாளன். அதில் ன் அவருடைய பலம் இருக்கிறது. பழைய ம்பரையினராகிய எங்கள் பலரைப்போல, வரும் ஆங்கில மொழியில் பாதுகாப்பாக நந்தார். ஆனால் "சிங்களம் மட்டும்" சட்டம்

Page 11
ஏ.ஜே. கனகரட்னா
அவருக்கு உணர்ச்சிபூர்வமான சவாலாக வந்தது. தாய் மொழியில் அவர் புதிதாகக் காதல் கொண்டார். விரைவாக இரண்டு இலக்கியங்கள்
இ 69) - G tL Ավ
வியாக்கியானப்படுத்துபவராகவும் பால கட்டுபவராகவும் அவர் மாறினார். சிருஷ் எழுத்து உண்மையில் வேறொரு விஷய யாழ்ப்பாணம் புலமையாளர்களையு பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனா யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையி உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது வித்தியாசமான விழுமிய அமைப்பை கொண்டவன். அது அவனுக் சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையு எளிதாகக் கொடுக்க விடாது. முக்கியமா ஆங்கிலத்தில். அதற்கும் இரண் விதிவிலக்குகள் இருக்கின்றன. கவிஞரும் வெளியீட்டாளருமாகிய தம்பிமுத்து ஒருவ கொஞ்சம் குறைவாக மற்றவர், சிறுகை 7^ஆசிரியர் அழகு சுப்பிரமணியம். அவர்க இருவரும் பிரித்தானிய மண்ணிற்குச் சென் ட் தாங்கள் -9/60) L– l l வேண்டியை
(6
ரை
சிவாஸ் றேடி في
சகல இலங்கை இந்திய உணவு எம்மிடம் ெ
3852 Finch Ave, E SCOroc
(416) 32
 

சிறப்பிதழ்
அடைந்தார்கள்.
(அழகு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தது பிழையானதொரு விஷயம். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். சிலோன் டெயிலி மிறரில் அவரைப் பற்றியும், அவர் எழுத்துக்களைப் பற்றியும் ஒரு பத்தி எழுதினேன். கொஞ்சக் காலத்துக்குப் பின் அவர் வாழும் தகுதி உணர்வுகளைத் தொலைத்து விட்டு, இறுதியில் சுய இரக்கத்தில் உழன்று, அவல உருவமாகி விட்டார்)
1983இல் யாழ்ப்பாணத்தை விட்டு நான் ஒடத் தள்ளப்பட்டேன். அந்த யாழ்ப்பாணம், இந்தப் பதினெட்டு ஆண்டுகளும் பிரளய மாற்றங்கள் பலவற்றைக் கண்டது. ஒரு காலத்தில் உறுதியான ஓர் இடமாக இருந்த அது, இன்று நிரந்தரமற்ற, துயரத் தன்மையைத் தன் முகத்தில் அப்பி வைத்திருக்கின்றது. என் மனக்கண்ணில் ஒரு தன்னந் தனிய, தாடியுள்ள உருவம் ஒன்று, அங்கு எதுவுமே நடக்காத மாதிரிப் போகிறதென்றால் அது, ஏ.ஜே.
கனகரட்னா தான்!
O
2.
ங் கோ.லிமிடெட் Nš
வகைகளும், சரக்கு வகைகளும் மலிவாக பற்றுக்கொள்ளலாம்
...
ast (Kennedy & Finch) brough, ON
2 - 2739 经

Page 12
O எம்.ற. gy)ძმ 006രി
ஏஜேயோடு எனக்குள்ள உறவு சுமார் 40 ஆண்டுகாலம் நீடித்த உறவு. 1960களின் முற்பகுதியில் இந்த உறவு ஏற்பட்டது. அது என் எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பகாலம். அப்போது ஏஜே திருக்கோவிலில் ஒர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நீலாவணன், 6T6iu. பொன்னுத்துரை ஆகியோருடன் கல்முனையில் ஏஜே யை இடைக்கிடை நான் சந்தித்திருக்கிறேன். சற்றுக் குள்ளமான, ரோஜாப்பூ நிறத்தில் சிவலையாக இளம் ஏஜே இன்னும் என் மனதுள் இருக்கிறார்.
1967இல் யாழ்ப்பாணப் பல்கலைக் /Nகழகத்தில் நான் ஒரு விரிவுரையாளனாகச் க சேர்ந்த காலத்திலிருந்து ஏஜேயுடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
துரதிர்ஷ்டமாக 1990இல் நான் G யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற
நேரும்வரை அன்றாடச் சந்திப்பாக அது x) தொடர்ந்தது. கடந்த பத்தாண்டு காலமாக யுத்தம் எங்களைத் தூரப்படுத்தியிருந்தாலும் எப்போதாவது ஒரு நாலுவரிக் கடிதம், அல்லது ஒரு தொலைபேசி உரையாடல் என்பவற்றுக்கு
என்னுடன் இருக்கும் உணர்வு தொடர்கிறது. என்னைச் சூழ்ந்த வளிமண்டலம் போல, பிரக்ஞையற்ற சுவாசம்போல ஏஜே எப்போதும் என்னுள் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
ஏஜேயை ஒரு எழுத்தாளன், விமர்சகன் என்ற பதக்கத்தை மட்டும் சூட்டிக்கெளரவிக்க முனைவது அவருக்குத் தகுந்த மரியாதையாகாது என்றே நினைக்கிறேன். கடந்த அரைநூற்றாண்டு காலத்துள் அவர் எழுதியது கைப்பிடி அளவுதான். அவர் சொந்தமாக எழுதியது, மொழிபெயர்த்தது எல்லாவற்றையும் ஒரு தொகுதியாக வெளியிட்டால் ஆயிரம் பக்கங்களைத் தாண்டாது. அப்படிப் பார்த்தால் வருடத்துக்கு இருபது பக்கங்களுக்குமேல்
O
மேலாக மானசீகமாக ஏஜே எப்போதும்
6
ந6

னக்குள் இருக்கும் I.6&。
வர் எழுதவில்லை. ஓர் எழுத்தாளன் த்தனை பக்கங்கள் எழுதினான் என்பது ஒரு பாருட்டல்ல. அவன் என்ன எழுதினான்; த்தகைய பாதிப்பை ஏற்படுத்தினான் ன்பவைதான் முக்கியமானவை. அந்த கையில் ஏஜே ஒரு முக்கியமான எழுத்தாளர். மர்சகர் என்பது சர்ச்சைக்கு அப்பாற் ட்டதுதான். என்றாலும், ஏஜே அதற்கும் மலானவர் என்பதுதான் என்னுடைய கருத்து. வர் ஒரு பொது நிறுவனமாகச் செயற்பட்டுக் காண்டிருக்கும் தனிமனிதர். வள்ளுவரின் ருவகத்தைப் பயன்படுத்திச் சொல்வதாயின் ர் நிறைந்த ஊருணியாக இருப்பவர் அவர். வருடைய அறிவும் உழைப்பும் ஒர் ாருணிபோல் எப்போதும் பிறருக்குப் யன்பட்டுக் கொண்டிருப்பது அவரது ண்பர்கள் யாவரும் அறிந்ததே.
எழுத்தாளர்கள் - இலக்கிய வாதிகளைத் ாண்டி, பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பராசிரியர்கள் வரை; பத்திரிக்கையாளர் தல் சமூகசேவை நிறுவனங்கள் வரை டதுசாரி அரசியல் கட்சிகள் முதல் விடுதலை யக்கங்கள் வரை அவரிடமிருந்து பயன் பற்றிருக்கின்றனர் அல்லது அவரைப் பன்படுத்தி இருக்கின்றனர். ஒரு தகவல் றிதல், அபிப்பிராயம் கேட்டல் ஒரு கருத்தை றுதிப்படுத்திக் கொள்ளுதல், ஒரு கடிதம் ழுதுதல் அல்லது திருத்துதல், ஒரு ட்டுரையைச் சரிபார்த்தல், ஓர் அறிக்கை பாரித்தல், ஆவணங்களை மொழிபெயர்த்தல் ன இந்த உதவிகள் பலதரப்பட்டவை. ஏஜே ன் பெயரில் எழுதியவை சொற்பமாக ருக்கலாம். அதுபற்றிய மனக்குறை அவரது ண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. ஆனால், வர் உரிமை கோராத, அவர் கைப்பட்ட ழத்துகள் பல ஆயிரம் பக்கங்கள் இருக்கும் ன்றே நினைக்கிறேன். அது ஏஜே க்கு ட்டும்தான் தெரியும். பிறருக்குச் செய்த தவியை ஏஜே ஒரு போதும் மற்றவருக்குச் சான்னதில்லை. மற்றவருக்கு

Page 13
ஏ.ஜே. கனகரட்னா
உதவுவதையிட்டு அவர் சலிப்படைந்ததும் இல்லை. அவர் இவற்றையெல்லாம் பிரதி உபகாரம் கருதிச் செய்ததும் இல்லை. எல்லாமே சிரமதானம்தான். அவ்வகையில், ஏஜே ஒ( முழுநேரத் தொண்டனாக செயற்பட்டிருக்கிறார் என்றே சொல் வேண்டும்.
ஆங்கில மொழி-இலக்கிய பரிச்சய குறைந்த என்போன்றவர்களுக்கு ஏே தொடர்ந்தும் ஒரு ஜன்னலா இருந்திருக்கிறார். உலக இலக்கியத்தின் பெரு பகுதியை நாம் அவர் 2D6. T9, பார்த்திருக்கிறோம். ஏஜே யைச் சூ இருந்தவர்களுள் ஏஜே அளவு வாசித்தவர்கள் யாரும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். வெறுங்கையுடன் நான் ஏஜேயைப் பார்த்த சந்தர்ப்பங்கள் இல்லை எப்போதும் அவர் கையில் சில புத்தகங்கள்
/Nஇருக்கும். அவரது சொந்த நூலகத்தி
க ஏராளமான புத்தகங்கள் இருந்தன. பொது நூலகம், பல்கலைக்கழக நூலகம் என்பவற்ை
(6
அவரளவு பயன்படுத்திய பிறிதொருவை அடையாளம் காண்பது சிரமம். ஏே
விர எல்லோருக்குமாக வாசித்தார் என்ே


Page 14
ஏ.ஜே. கனகரட்னா
முன்ற்யில் ஒப்புதல் பெறவில்லை என்றே நினைக்கிறேன்.
ஏஜே மிகச் சிறந்த பத்திரிகையாளராக இனங்காணப்பட Golgioi Lugii. Daily News, Co-operator, Saturday Revies, gaO)4 ஆகியவற்றில் அவர் ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அரசியல் கொந்தளிப்பு மிக்க காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த வார இதழில் அவர் பணியாற்றிய காலம் அவருக்கு மனநிறைவளித்தது என்று நினைக்கிறேன். அரசியல் ஒடுக்கு முறை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு எதிராக மிக வெளிப்படையாகப் பேசிய பத்திரிகை அது. அதன் ஆசிரியராக இருந்த காமினி நவரத்தின ஒரு சிங்களவர். தென்னிலங்கையில் அரசியல் செல்வாக்கு மிக்க பிரபலமான ஒரு முற்போக்குப் பத்திரிகையாளர். அவருடன் /Nபணியாற்றிய காலத்தை ஏஜே திருப்தியுடன் க நினைவு கூர்வார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முக்கியமான எல்லாப் பத்திரிகைகளுடனும் ஏஜேக்கு நெருங்கிய (6 தொடர்பு இருந்தது. ஒரு வகையில் சில சி" பத்திரிகைகளின் பதவிசாரா ஆசிரியர் குழு உறுப்பினராகச் செயற்பட்டார் என்று கூடக்/ ܔܠ கூறலாம். எல்லோருக்கும் ஏஜே ஏதோ ஒருவகையில் தேவைப்பட்டார். அவர் சில்லரைத் தனமான தனிப்பட்ட மோதல், முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர். அவ்வகையில் அவர் ஒர் ஞானி அதனால்தான் எல்லாரும் அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் யாருக்கும் எந்தவகையிலும் ஏஜே குறைந்தவரல்ல. ஆங்கில மொழி - இலக்கியத் துறையில் அவரது அறிவு பரந்தது, ஆழமானது. அவரும் ஒரு ஆங்கிலப் பேராசிரியராக இருந்திருக்க வேண்டியவர்தான். ஆயினும், பல்கலைக்கழக நிறுவன அமைப்பு - அதன் விதிமுறைகள் அவரை ஒரு விரிவுரையாளராகத்தானும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. நிறுவன அமைப்பு அறிவாற்றலை மட்டும் பார்ப்பதில்லை. அதற்குச் சான்றிதழும்
9
 

சிறப்பிதழ் "
வேண்டும். ஏஜேயிடம் அந்தச் சான்றிதழ் இல்லை. இதனால் அடிப்படை ஆங்கிலம் பயிற்றும் ஒரு போதனாசிரியராகவே (Instructor) அவர் 1ாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சரமுடிந்தது. ஆயினும், ஆங்கில இலக்கிய பிரிவுரையாளர்கள் தங்கள் ஐயங்களைத் ர்ப்பதற்கும் ஆலோசனைக்கும் ஏஜேயையே ாடிச் செல்வர்.
இந்த வகையில், ஏஜே யை றெஜி றிவர்த்தனவுடன் ஒப்பிடலாம் என்று னைக்கிறேன். இருவரும் பிரம்மசாரிகள் ன்பதற்கு மேலாக பல்கலைக்கழக ஆங்கிலத் துறைகளால் உள்வாங்கப்படாத ஆங்கில இலக்கிய மேதைகள். ஏஜேக்கு றெஜியின் மீது புவ்வளவு ஈடுபாடும் மதிப்பும் உண்டு. றஜியின் சில கட்டுரைகளை அவர் தமிழில் மாழி பெயர்த்தும் இருக்கிறார். செங்கவலர் லைவர் ஏசுநாதர் என்ற கட்டுரை கூட
ற ஜியின் ஓர் உரையைத் தழுவி,
ழுதப்பட்டதுதான். இத்தகவல் அதைத் லைப்பாகக் கொண்ட தனது புத்தகத்தில் சர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது
l
புவருக்கு மிகுந்த சங்கடத்தை மர ற்படுத்தியிருப்பதை அண்மையில் , தாலைபேசியில் அவருடன்
ரையாடியபோது அறிந்தேன். அந்நூலுக்கு ஸ்.வி.ஆர் எழுதிய முன்னுரையில் க்கட்டுரைபற்றித் தெரிவித்துள்ள ாராட்டுகள் உண்மையில் தனக்கு உரியவை 1ல்ல என்றும் அக்கட்டுரையின் மூலம் பற்றிய னது குறிப்பைப் பதிப்பாளர் நூலில் சேர்க்கத் வறியதாலேயே இத் தவறு நிகழ்ந்தது என்றும் வர் உண்மையான மன உறுத்தலுடன் றினார். ஏஜே தனக்கு உண்மையாக இருக்க யலும் சான்றோர் என்பதற்கு இது ஒரு தாரணம் மட்டும்தான்.
ஏஜேயின் இலக்கியப் பங்களிப்பு
ற்றியும் நான் சிறிது சொல்லவேண்டும்.
0களில் இலங்கை இலக்கியத்தில் மார்க்சியப் "ர்வையை வலியுறுத்தியவர்களில் ஏஜேயும் க்கியமானவர். முற்போக்கு இலக்கியத்தின் தரவாளராக அவர் தொடர்ந்தும் Fயற்பட்டு வருகிறார். ஈழத்து முற்போக்கு லக்கியம் அதன் ஆரம்ப காலத்தில் அழகியல்
S SL S SS S S LS SLS SLS S S SLL S SLLL LS S S S S SL S LS S S0S S SL S SL S S 0L
سح

Page 15
d
L
(6
ஏ.ஜே. கனகரட்னா
ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் அதை அரவணைத்து நிற்க வேண்டிய தேவையும் கட்டுப்பாடும் தங்களுக்கு இருந்ததாக அவர் என்னிடம் கூறியிருக்கிறா என்றாலும், இலக்கியத்தைப் பொறுத்தவன விமர்சனக் கொமிசார் பார்வைக்கு புறம்பானவராகவே அெ செயற்பட்டிருக்கிறார். நெகிழ்ச்சியற் கறாரான ஒற்றைப்பார்வை உடையவரல் ஏஜே. மார்க்சிய விமர்சனத்தில் காணப்பட் வெவ்வேறு சிந்தனைப் போக்குகளை அவ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறா மார்க்சிய சார்பற்ற சிந்தனைப் போக்குகளையு அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறா அதேவேளை வலதுசாரிக் கருத்துகளை அவ தொடர்ந்தும் விமர்சித்து வந்திருக்கிறா மார்க்சியமும் இலக்கியமும், "மத்து "செங்காவலர் தலைவர் எசுநாதர்” ஆகி அவரது கட்டுரைத் தொகுதிகள் இதற்கு
^சான்று.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மொ பெயர்ப்புகளாகவும், தழுவல்களாகவு தமிழுக்கு நிறையப் புதுச் சிந்தனைகை
ரே அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஏ.ே xபூ/அவ்வகையில் அண்மைக்காலத்தில் தமி
இலக்கிய உலகுக்கு வெளியில் இருந் வெளிச்சத்தைக் கொண்டு வந்தவர்களி ஏஜேக்கு முக்கிய இடம் உண்டு. அதேவேை பி ன் ந வீ ன த் து வ வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லாமல் தன்னைத் த ற் க |ா த் து க் கொண்டவராகவும், இந்த அதி நவீன மோஸ்தர்களை நிதானமாக விமர்சனத்துக்கு உட்படுத்துபவராகவும் அவர் நம்முடன் இருக்கிறார் என்பது நமக்கு ஆறுதலும் தெம்பும் தருகிறது.
பிறருக்கு உதவிை
போதும்
சொன்ன
சலிப்படை
ஏஜேயை ஒரு சிற மொழிபெயர்ப்பாளராகவும் நோக்க வேண்டு தமிழுக்கு வளமான நீண்டகா
மொழிபெயர்ப்பு மரபு உண்டு. மிகச் சிற மொழிபெயர்ப்பாளர்கள் பலர் நம் மத்திய
 
 
 
 
 
 
 
 

சிறப்பிதழ்
வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள். இவர்களால் தமிழ் வளமும் புதிய வலுவும் பெற்றிருக்கிறது. அதேவேளை பொறுப்பற்ற, திறனற்ற மொழி பெயர்ப்பாளருக்கும் நம் மத்தியில் குறைச்சல் இல்லை. ஏஜேக்கு மொழிபெயர்ப்பு ஒரு தொழிலல்ல. அது ஜீவனோபாயத்துக்குரியதல்ல. அது அவரது சமூகக் கடப்பாட்டின் ஒரு பகுதி. அதனால், தேர்ந்து, தேவை என்று தான் கருதுபவற்றை மட்டுமே அவர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்புச் செம்மையில் அவர் எப்போதும் அக்கறை உள்ளவர். மொழி பெயர்ப்பாளர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கத் தகுதி உள்ளவர். ஆங்கிலத்தின் ஊடாக ஆக்க இலக்கியங்களை அவர் தமிழுக்குக் கொண்டுவந்தது மிகக் குறைவு. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அவர் மொழி பெயர்த்த கவிதைகள், சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவானவை எனினும் முக்கியமானவை. இத்துறையில் அவர் தீவிரமாக ஈடுபடவில்லை என்ற மனக்குறை எமெக்கெல்லாம் உண்டு. எனினும், அண்மைக் காலத்தில் இதில் அவர் அதிக அக்கறை செலுத்திவருகிறார் என்பது நமக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
r.
T
r
t
s
ஏஜேயைப் பற்றி எவ்வளவும் பேசலாம், எழுதலாம். அறிவுத் துறையைப் பொறுத்தவரை வள்ளுவன் சொல்வது போல அவர் ஒரு பேரறிவாளன். அவரது அறிவுச் செல்வம் நீர் நிறைந்த ஊருணிபோல் அவரைச் சூழ உள்ள உலகுக்குச் சொந்தமானது. ஒரு மனிதன் என்றவகையில் அவர் உன்னதமானவர். நெஞ்சுக்கு இதமானவர். நல்லவர்களைப் பற்றிக் கிராமத்து மக்கள் சொல்வார்கள். அவர் மிதித்த இடத்தில் புல்லும்
:
செய்த ஏஜே ஒரு மற்றவருக்குச் தில்லை ந்ததும் இல்லை.
தி சாகாது என்று. ஏஜே நடந்த இடத்தில் ம் புதிதாகப் புல்முளைக்கும். பூப்பூத்துக் ல குலுங்கும் என்று சொல்லத் தோன்றுகின்றது தி எனக்கு.
ல் O
13

Page 16
நடேசன்
எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர் அவர் எவரொருவரையும் முன்னேற்றுவதற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் தனது பணத்தைச் செலவழித்தும் ஆர்வத்தோடும் மனித நேயத்தோடும் செய்பவர். அவர்களின் முன்னேற்றம் கண்டு அவர்களை மதிப்பவர்களும் மகிழ்பவர்.
தனது வயிற்றுப்பசி பற்றி அக்கறை கொள்ளாதவர். ஆனால் அறிவுப்பசிக்குத் தீனி போட்டு அடங்காதவர். அவரின் அறிவுப்பசியை மணிமேகலை காவியத்தமிழில் யானைத்தீ என்று சொல்வதே மிகப் Lபொருத்தம். எந்நேரமும் உயர்ந்த நூல் ஆழியில் ஆழ்ந்து சுழியோடி அரிய முத்துக்களை எடுத்துக்கொண்டேயிருப்பார்.
ஆழ்ந்து அகன்ற தளம்பாத அறிவு நிறைவோடு பற்றற்ற ஞான வாழ்க்கை வாழ்பவர். அவர்தான் ‘ஏ.ஜே. என்று Yமதிப்போடும் அன்போடும், கலை இலக்கிய உலகில் கொண்டாடப்படும் அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா. இது எல்லோரும் அறிந்த விடயம்தான்.
கம்பர் இராமனைச் சிறியன சிந்தியாதான் என்று ஏத்தும் அழகிய வரியின் ஆழ்ந்த நயத்தினை ஏ.ஜே. என்ற பெருமகனில் நான் கண்டேன். நான் என்றுமே நயந்து அவருடன் பழகி வருபவன். அதை எனது ஒரு பேறாகவும் நினைப்பவன்.
அவரின் இனிய உள்ளம் அவைகளை விட கரைகாணாப் பெரும் சமுத்திரமாக விரிந்து கிடக்கிறது. புலவு என்றால் அறிவு. அது வெறும் நூலறிவல்ல. உள்ளத்தால் உயர்ந்து மெய்யறிவு பெற்ற ஒரு நிலை. அந்த உன்னத மனச் செம்மையிலே நின்று 6 ஆற்றலோடு பாடியவனே புலவன் என்று
அர்த்தத்தோடு சுட்டப்படுகிறான்.
i
:

சிறியன சிந்தியாதான்
நூலறிவும் மனச்செம்மையும் பெற்ற ா.ஜே. நூலறி புலவனாக நிமிர்ந்துநின்று இரும்பைக் கவரும் காந்தம்போல் எம்மை ர்க்கின்றார்.
இவை சொல் அலங்காரமோ, பார்த்தை ஜாலமோ அல்லது வெறும் -ணர்ச்சியின் வெளிப்பாடோ அல்ல. அவரைப் பற்றி இப்படித்தான் என்னால் எழுத இயலும்.
1966ஆம் ஆண்டு தொடக்கம் பத்து பருடங்களுக்கு மேலாக அவருக்குப் பக்கத்து மேசையில் இருந்து அவரோடு பத்திரிக்கையில் 1ணிபுரிந்தலில் அவரிடமிருந்து அரிய பிடயங்களை என் இதயம் உள்வாங்கியுள்ளது. அந்த இதயமே இங்கு பேசுகிறது.
கூட்டுறவு நிறுவனமாகிய வடபகுதி }க்கிய மேற்பார்வைச் சபை மாதம் இரு மறையாக வெளியிட்டு வந்த Cooperator "ன்னும் ஆங்கிலப் பத்திரிகையின் இணைப்பான கூட்டுறவுத் தமிழ் இதழுக்கு பாறுப்பாக 1965ஆம் ஆண்டு தொடக்கம் ான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அப்பத்திரிகைக்குப் பத்திராதிபர் ழுவொன்று இருந்தது. பல்கலைக்கழக மன்னாள் பேராசிரியர் குநேசையா அதன் லைவர் ஹன்டி பேரின்பநாயகம், ஏ.ஈதம்பர், 1.சீனிவாசகம், வ.ஐ.மே. சபைத் தலைவர் இ. }ராசரத்தினம், செயலாளர் சு. கந்தையா, ர்வாகக் காரியதரிசி பொ. செல்வரத்தினம் ஆகியோர் அக்குழுவில் அங்கம் வகித்தனர். க. ரமோதயன் பத்திராபதிச் செயலாளராகச் சயலாற்றினார்.
பரமோதயன் பரியோவான் கல்லூரியில் சிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த டியால் அவருடன் முழுநேரமும் னியாற்றுவதற்கு ஒருவரை அமர்த்த வண்டும் என்று பத்திரா பதிக்குழு செய்த

Page 17
ஏ.ஜே. கனகரட்னா
தீர்மானத்திற்கமைய அப்பதவிக்காக விளம்பரம் செய்யப்பட்டது.
வந்துகுவிந்த விண்ணப்பங்களை ? ஒழுங்குபடுத்திய எமது அலுவல எழுதுவினைஞர் பிரகாசராசா புனிதவள பத்திரிசியார் கல்லூரியில் படித்தவ எ.ஜே.யின் விண்ணப்பத்தை அவற்று பார்த்துவிட்டு, தனது காலத்தில் அங்கு உய வகுப்பில் கல்வி பயின்றுகொண்டிருந்த ஏே கல்வியில் ஈட்டிய சாதனைகளையும், அவர ஆங்கில மேதாவிலாசத்தையும் நிர்வாச காரியதரிசிக்கு எடுத்து விளக்கினார்.
ஏ.ஜே.யின் சுட்டிப்பான கெட்டி தனத்தில் லோங் அடிகள் அவர்மீது அன் வைத்திருந்தார். சில சந்தர்ப்பங்களில் லோ அடிகளோடு அவர் நிமிர்ந்து நின், துணிவோடு நியாயத்திற்காக வாதாடுவா அதற்கான ஆங்கிலச் செல்வம் அவரிட
^இருந்தது. உண்மையைக் கடைசிவை கி விட்டுக்கொடுக்கமாட்டார். அதற்கா ட் எவரையும் எதிர்க்கத் தயங்கமாட்டார். தன கொள்கைக்குப் பிடிக்கவில்லையென்றா தனது பதவியையும் நலத்தையும் ஒ ୩] பொருட்டாக மதிக்கமாட்டார், உத * எறிந்துவிடுவார். அவர் கம்யூனி போக்குடையவர். அவரின் போக்கு இங் சிலருக்குப் பிடிக்குமோ தெரியாது என்றார்
இச் செய்திகளை க் கேட்ட நிர்வாகக் காரியதரிசி பொ. செல்வரத்தினத்திற்கு ஏ.ஜே.யைப் பிடித்துக் கொண்டது. “கம்யூனிஸ்ட் கொள்கை கூடாதென்று ய ரா ர் செ (ா ன் ன து . உண்மையான கம்யூனசக் கொள்கையோடு வாழ்பவன் கடவுளுக்குக் கிட்ட நிற்கின்றான்' ବT ବର୍ତTy]] சொன்னார். இந்த வசனம் இப்போதும் எ செவிகளில் ஒலிக்கிறது.
செல்வரத்தினம் பின்பு ஒய்வு பெற் () في இறக்கும்வரை ஏ.ஜே.மீது மிகுந்த மதிப் அன்பும் வைத்திருந்தவர் ஏ.ஜேயும் அவர்
 
 

9,
沉
节,
i
கு
ாமனைச் சிறியன ான் என்று ஏத்தும்
0 கதைக்கவேண்டும் என்று வரியின் g455 எனது மனம் முன்பின் OT ஏ.ஜே. எனற யோசியாமல் உந்த, O O ஒடிக்சென்று மேலே ரில் கண்டேன். மாடிக்குப் போவதற்குப் படிகளில் ஏறிக்
சிறப்பிதழ்
மனப்பக்குவத்தையும் அலுவகத்தை அவர் நடத்திய முறையையும் இப்போதும் மனம் நெகிழ்ந்து கூறுவதுண்டு.
ஏ.ஜெ.யின் பத்திரிக்கை அனுபவம், எழுத்தாற்றல் என்பவற்றால் இலக்கிய உலகில் அவருக்கு இருந்த மதிப்பு, அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஒரளவே தெரிந்திருந்தது. அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை. இலக்கியச் சிறப்புமிக்க அவர் எம்மோடு பணியாற்றவேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன்.
நேர்முகப்பரீட்சைக்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 6T Digil அலுவலகம் அக் காலத்தில் பறங்கித் தெரு என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட பகுதியில் பிரதான வீதியை மூன்றாம் குறுக்குத் தெரு ஊடறுத்துச்செல்லும் கிழக்குப்புற வளவோடு சேர்ந்த கட்டடத்தில் இருந்தது. ܢ
நேர்முகப்பரீட்சை தினத்தன்று எமது அலுவலகத்திற்கு எதிரேயுள்ள கூட்டுறவு G3_ அச்சகத்தில் நான் பத்திரிகையின் Proof திருத்திக்கொண்டிருந்தேன். அச்சக வாசலிலே : நின்ற முகாமையாளர் நல்லையா "அவர்தான் محصے கனகரத்னா, இன்ரர்வியூவுக்குப் போகிறார்” என்றார். நான் எழுந்து எட்டிப்பார்த்தேன்.
கருந்தாடிவிட்ட சிவந்த மேனியுடைய அழகான உருவம் கைகளை
of @ நடைபோட்டு வந்துகொண்டிருந்தது.
அ வ ரு ட ன்
கொண்டிருந்த ஏ.ஜே.யிடம், "நீங்கள் இன்ரர்வியூவிற்கு வந்தீர்களா” என்று கேட்டேன். அவர் திரும்பி “ஒமோம், ஏன்” என்று கேட்டார். "இன்ரர்வியூ தொடங்கப் 5 போகிறது” என்றேன். அவர் விரைந்து மேலே சென்றார்.

Page 18
صبر
ஏ.ஜே. கனகரட்னா
நேர்முகப்பரீட்சை முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். சிறிது நேரத்தில் கவிஞர் சத்தியசீலன் என்னைச் சந்திக்க வந்தார். ஏ.ஜே. நேர்முகப்பரீட்சைக்கு அங்கு வந்தமை பற்றி அவரிடம் கூறினேன். தான் அவரிடம் ஆங்கிலம் படித்ததாகச் சொல்லி அவரின் திறமைகளில் நான் அறியாத பல பகுதிகளை அவர் எடுத்து விளக்கினார். செகராச சேகரன் என்ற பெயரில் அவர் திறமான கட்டுரைகளைத் தமிழில் எழுதிவருகிறார் தெரியுமா என்று கேட்டார். அவரின் ஆங்கில எழுத்துப்பற்றியே நான் கேள்விப்பட்டிருந்த படியால் தமிழில் எழுதுகிறாரா என்றேன். அருமையான தமிழில், அருமையான கட்டுரைகள் எழுதுகிறார். அவர் இங்கு வேலைக்குவர நீங்கள் கொடுத்துவைக்க வேண்டும். அவர் வந்தால் உமக்கு நல்லது. வாரும் பக்கத்தில் மூன்றாம் குறுக்குத் தெருவிலே தான் அவர்
No G. உமக்கு அவரை அறிமுகம்
க் செய்யவேண்டும் என்று என்னை ஏ.ஜே.யின் ட் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். ஏ.ஜே. தனது டு வீட்டு விறாந்தையில் கதிரையில் இரு 6) கால்களையும் தூக்கி மடக்கி பத்மாசனத்தில்
இருந்தபடி பெரியதொரு புத்தகத்தை மடியில்
(வைத்து வாசித்துக் கொண்டிருந்தார்.
சத்தியசீலன் என்னை அவருக்கு அறிமுகம் செய்தார். அவர் கருந்தாடிக்குள் குமின் சிரிப்புச்சிரித்தார். அந்தச் சிரிப்பு அவரின் ஒளிபொருந்திய கண்களின் வழியே வழிவது போல் இருந்தது. இருபக்கங்களின் நெற்றிக்கங்குகளும் மேலுக்கு ஏறிய அவரது பரந்த மணிநுதல், எடுப்பான மூக்கு, சிவந்த
மேனி, பொலிந்திருந்த அவர், புத்தகத்தை
மூடிவிட்டு "என்ன தம்பி, எனக்கு அந்த வேலை
கிடைக்குமா” என்று வெள்ளையாகக் கேட்டார்.
அப்போது எனக்கு வயது முப்பத்தொன்று. இப்போது நான்
பேரப்பிள்ளையையும் கண்டு வயது 66 ஆகிவிட்டது. இப்போதும் தம்பி என்று கனிவோடுதான் அழைக்கிறார். இராமன் குகனிடம், "என் தம்பி லட்சுமணன் உனக்குத்
 

சிறப்பிதழ்
தம்பி” என்று கூறி சகோதர உறவு கொண்டாடிய பேரன்பினை குகன், "தோழமை என்றவர் சொல்லிய சால்லொரு சொல்லன்றோ" என்று னைத்து வாயூறிய நிலையிலேயே நான் ப்போது உள்ளேன்.
ஏ.ஜே. அவ்வாறு கேட்ட கேள்விக்கு நீங்கள் வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று பதிலளித்தேன். ண்டநாட்களாக நெருங்கிப்பழகிய தாழமையோடு, நகைச்சுவையோடு அவர் பசினார்.
சாதாரணமாக கொஞ்சம் படித்தவுடன் அல்லது பத்திரிகையில் எழுதியவுடன் நாவசியமான ஒரு பாரத்தையும் தலையில் மக்கத்தொடங்கும் பெரும்பாலான ார்க்கத்தினரைச் சந்தித்த நான் ஒரு
துமையான இனிய மனிதரைக் கண்டு)
வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
N
ஏ.ஜே. பத்திராதிபச் செயலாளராகத் ே
தரிவு செய்யப்பட்டார். அவரின் ருகையுடன் பத்திரிகையின் அமைப்பு (Layout)
g5! LDfTibplb Coluibpg5! Local Scene - As I see it ன் "Görp g5GOGvuupišugsgjöĝ66io Surveyed by Jey 6 TGörpN1
'பயரில் சமூகத்தில் நடைபெற்றுவரும் புரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து விமர்சனக் ண்ணோட்டத்தில் கிண்டலும் கேலியுமாக றிது சிறிதான பல விடயங்களைச் சுவைபட ழுதிவந்தார்.
"இதை யார் எழுதுகிறார்” என்று |ந்நாட்களில் ‘ஈழநாடு' நாளிதழில் ழிப்போக்கன் என்ற பெயரில் அருமையான த்தி எழுத்து எழுதிவந்த வி.என்.பி. ஒருமுறை ன்னிடம் விசாரித்துப் பாராட்டினார்.
ஏ.ஜே. தமிழ்ப் பகுதியான கூட்டுறவு ணைப்பில் என்னையும் பத்தி எழுத்து ழுதும்படி சொன்னார். நீட்டோலை' என்ற குதியில் கபிலர் என்ற புனைப்பெயரில் ழுதலாம் என்று கூறினேன். பெரும்பாலும் ழுதுவதற்குரிய விடயங்களை அவரே தர்ந்தெடுத்து, அவை பற்றி விளக்கிக்

Page 19
سر
ஏ.ஜே. கனகரட்னா
குறிப்புகளையும் தருவார். அப்படி எழுதப்பட்ட விடயங்கள் சிலவற்றை தினபதி பத்திரிகை மறுபிரசுரம் செய்திருக்கிறது.
~
ஆங்கிலத்தில் அனைத்துலகக் கூட்டுற சம்மேளனத்தின் வெளியீடுகளான கூட்டுற சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்! வெளியாகும் கட்டுரைகள், செய்தி முதலியன ஏ.ஜேயால் தமிழ் மொழிபெயர்க்கப்பட்டு கூட்டு இணைப்பில் வெளிவந்தன.
அவரது மொழிபெயர்க்கும் ஆற்
வியக்கத்தக்கது. ଗT ବ୩T୩ ଗ0T ଗt (y) சொல்லிவிட்டு ஆங்கிலப் பிரதிை பார்த்தவாறு அதைத் தமிழ்
வாசித்துக்கொண்டு போவதுபோல் வேகப மொழிபெயர்ப்பார். அந்த வேகத்திலு
அவரது தமிழ் நடை நறுக்காக அமையும்.
அந்தக் காலகட்டத்தில் 6 TE ட் பத்திரிகையின் நெருக்கடியான பணிகளே.
ପୌ)]
(மகத்தானது, மறக்கமுடியாதது!
ஜீவா ஆரம்பித்த மல்லிகை பின்னணியிலிருந்து Proof பார்ப்பது தொடச் அவர் அளித்த பங்களிப்பு முழுமையான
காந்திரமான பல மொழிபெயர்ப் கட்டுரைகளை அவர் அதில்
எழுதியுள்ளார். தர்மு சிவராமு இந்தியச் சஞ்சிகையொன்றில் எழுதிய 'கோனல்கள்’ என்ற கட்டுரைக்கு எல்லாம் தெரிந்தவர் என்ற கட்டுரையை மல்லிகையில் எழுதி உச்சந்தலை அடிகொடுத்தவர்.
ஒ ரு க ர ல த் தி ல் அரசாங்கம் திரைப்படம் குறித்து நியம ஆணைக்குழுவொன்று இலங்கை திரைப்படக் கூட்டுத்தாப நிறுவப்படவேண்டும் என்று தகவு செய்திருந்தது. ஆனால் ஆட்சிக்குவ
 
 

Dது ாடு, க்கு *கம்
TSI,
ւյժ:
5,
வண்டும் என்ற "பு ஏ.ஜே.யின் நாடு கலந்த பண்பு
த்த 96)
னம்
ரை ந்த
விடயத்தையும்
சிறப்பிதழ்
அரசுகள் அவ்விடயத்தை இரும்புத்திரை போட்டு ஒன்றும் தெரியாதவைபோல் நடந்துகொண்டன.
அந்த ஆணைக்குழு செய்த தகவுரைகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட வெளியீடு ஒன்றினை எங்கோ ஒரு நூல்நிலையத்தில் அலுமாரியில் புத்தகங்களுக்கு அடியிலிருந்து எடுத்து தூசிதட்டி அவர் வாசித்துப்பார்த்தார். அம்பலத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டிய உவப்பான செய்திகள் என்று மகிழ்ந்தார். அவற்றை மொழிபெயர்த்து மல்லிகையில் தொடர்கட்டுரையாக எழுதினார். திரைப்படங்களை இறக்குமதிசெய்யும் ஏகபோக உரிமை அன்று சினிமாஸ் லிமிடெட், சிலோன் தியேட்டர்ஸ், சிலோன் என்டர்டெயின்மென்ற் ஆகிய பெரும் முதலாளிகளது அமைப்புகளின் கைகளிலேயே இருந்தது. அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு வர்த்தக மோசடிகள்,
உள்ளூர்த் தமிழ்ப்பட வளர்ச்சியை/
N
மட்டந்தட்டும் என்றெல்லாம் அந்த மும்மூர்த்திகள் செய்து கொண்டிருந்த இ
அந்தரங்கத் திருவிளையாடல்கள்
அம்மொழிபெயர்ப்பின் மூலம் ஏ.ஜேயால் சீ
அம்பலத்திற்குக் கொண்டுவரப்பட்டன. 6
ஆட்சிக்குவரும் அரசுகளுக்கு ஏற்ற)
‘தீனி போட்டு தமக்கு வாய்ப்பான கைங்கரியங்களை அந்த மும்மூர்த்திகள் அன்று இயற்றிக்கொண்டிருந்தார்கள். எனினும் 1977ஆம் ஆண்டிலே பூணூரீமாவோ பண்டாரநாயக்கா வின் ஆட்சியில் திரைப்படக் கூட்டுத்தாபனம் நிறுவப் பட்டதோடு அவர்களின் திருவிளையாடல்களுக்கு முடிவுகட்டப்பட்டது.
சரியாகச்
இ ல ங்  ைக யி ல் கூட்டுறவுத்துறையிலே வடபகுதி என்றுமே முன்னோடியாக செழுமையோடு திகழ்ந்துவந்த வரலாற்றைப் பலர் அறிவார்கள். கூட்டுறவுச்
محصے
சங்கங்களையும் கூட்டுறவாளர்களையும் இணைக்கும் தாய்ச்சங்கமாக யாழ்ப்பாணத்தில் வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை

Page 20
ஏ.ஜே. கனகரட்னா
திகழ்ந்தது.
கூட்டுறவுத் திணைக்களமோ அல்லது வேறு கூட்டுறவு ? நிறுவனங்களோ கூட்டுறவு சம்பந்தமான பத்திரிகையையோ, சஞ்சிகையையோ தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வெளியிட முன்பு 1945ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கியதீபம் என்ற தமிழச் சஞ்சிகையை வ.ஐ.மே.சபை மாதம்
இருமுறை வெளியிட்டுவந்தது. பின்பு மாதம் ஒரு வெளியீடாக மாற்றப்பட்டது.
1962ஆம் ஆண்டு தொடக்கம் சற்குணம் என்பவரை ஆசிரியராகக்கொண்டு Cooperator ஆங்கிலப் பத்திரிகையை வாரஇதழாக அச்சபை வெளியிட்டு வந்தது. 1964ஆம் ஆண்டில் அப்பத்திரிகை வெளியிடப்படவில்லை. 1965ஆம் ஆண்டில் பத்திரிகையைப் புதிய மாற்றங்களோடு மாதம் இருமுறையாக வெளியிடும் ^தீர்மானத்துடன்தான் முன்பு குறிப்பிட்ட கி அறிஞர்கள் அடங்கிய பத்திராதிபர்குழு ட் அமைக்கப்பட்டது.
G ஐக்கிய தீபம், Cooperator அதன் ர்ே இணைப்பான கூட்டுறவு ஆகியன கூட்டுறவு அப வளர்ச்சியைப் பிரதான நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு அவை பெரும் பங்களிப்புச் செய்துள்ளன என்பதை இங்கு குறிப்பிடாது விடமுடியாது. ஆண்டுதோறும் அனைத்துலக கூட்டுறவுத் தினத்தையொட்டி சிறுகதை, நாடகப்போட்டிகளை வ.ஐ.மே.சபை நடத்தி பரிசளித்துவந்தது.
ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் Cooperator gg, fai) Browser's Diary 6T657 p தலையங்கத்தின்கீழ் பத்தி எழுத்தாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆழமான கட்டுரைகளை 6TCup56 figs/Tii. 976) libDigit Freedom of the Press என்ற கட்டுரை பல இதழ்களில் தொடராக வெளிவந்தது. பல அறிஞர்களாலும் அக்கட்டுரை பாராட்டப்பட்டது. அவர் இறந்தபின் வட்டுக் கோட்டை சீலன் கதிர்காமரை தலைவராகக்கொண்ட ஹன்டி பேரின்பநாயகம் நினைவுநூல் வெளியீட்டுக் குழு Cooperatorஇல் வெளிவந்த ஹன்டியின்
R
ld
tiv
ெ சி
L f){
 

சிறப்பிதழ்
கட்டுரைகளைத் தொகுத்து Reminicence of Handy Perinbanayagam 61 girp DITGSao)6OT வெளியிட்டது.
கு. நேசையா, இப்பத்திரிகையில் எழுதிய ? பரும்பாலான கட்டுரைகளையும் வேறு 'Gao) Ts6061Tulb Gaffiggil Education & Human ghts in Sri Lanka Gol Gifu, Gait GIT Tii. 5. ரமோதயன் எழுதிய கட்டுரைகள் Perspectes on Education 6T GöIp நூலாக வளிவந்துள்ளது. பத்திரிகையின் இத்தகு றப்பிற்கு ஏ.ஜேயின் உழைப்பு அளப்பரியது. த்திராதிபச் செயலாளர் என்ற மேட்டிமை ாட்டி அவர் தனக்குக் கீழே பணிபுரிவோரை |ச்சுறத்தவில்லை, நெருக்கி வேலை ாங்கவுமில்லை. எழுதுவது, Proof பார்ப்பது |ச்சகத்திற்குப் போவது என்பதோடுமட்டும் வர் தனது பணியை நிறுத்திவிடவில்லை.
சந்தாதாரர்க்குப் பத்திரிகையை 1னுப்புவதற்கு வேறு ஊழியர்கள் ^ ருந்தார்கள். அப்பணி செம்மையாக ந் டைபெற வேண்டும் என்ற தனது ே னநிறைவுக்காக பேனா பிடிக்கும் ஏ.ஜே.யின் ககள் பசையை எடுத்து பத்திரிகையை மடித்து
ட்டின. 6
محصےحN அலுவலகம் விடுமுறைக்காகப் ட்டப்பட்டிருக்கும். ஆனால் சில
வளைகளில் அச்சகம் திறந்திருக்கும். ஏ.ஜே. ச்சகத்தில் வேலை செய்வார். அவரை பப்படிச் செய் என்று ஒருவரும் னிப்பதில்லை. நாங்கள் ஒய்வெடுத்தால் த்திரிகை வெளிவருமா என்பார்.
வ.ஐ.மே.சபை நீகல் தியேட்டருக்கு ருகாமையில் வீரசிங்கம் மண்டபத்தில் றுவி, அதனோடு அலுவலகத்தையும் மைத்து அங்கு 'குடிபெயர்ந்த பின்பு ரீலங்கா தேசிய கூட்டுறவுச்சபையாக மாற்றம் பற்றது. பத்திரிகையை மறுநாள் தபாலில் Fர்ப்பதற்காக விலாசமிட்டு ஒட்டும் படலம் ங்கு சில வேளைகளில் இரவு ந்துமணிவரைகூட நடைபெற்றது.
விலாசமிட்டு முத்திரையிடப்பட்ட ந்திரிகைச் சுருள்களைப் பெரிய கட்டாகக்

Page 21
ஏ.ஜே. கனகரட்னா
கட்டி அலுவலக வேலையாள் ஒருவரே வழக்கமாகத் தபாற் கநதாரில் கொண்டுபோய்ச் சேர்ப்பார். ஒருநாள் பிற்பகல் பத்திரிகையை தபாலில் சேர்ப்பதற்கான பணியை ஏ.ஜே. எம்முட செய்துகொண்டிருந்தார். அந்த வேலையா தான் அவசரமாக வீட்டிற்குப் போவதாகவு பத்திரிகைச் சுருள்களை வீரசிங்கம் மண்ட வேலையாள் தபாலில் சேர்ப்பதற்கு தா அவருடன் பேசி ஒழுங்கு செய்துவிட்டதாகவு கூறிவிட்டுப் போய்விட்டார். எமது ப6 முடிந்தது. தபாற்கந்தோருக்குப் பத்திரிை கட்டை எடுத்துச் செல்ல அந்த வேளையா வரவில்லை. எமது அலுவலகத்தில் பணிபுரிய எல்லோரும் அலுவலகம் பூட்டும் நேரத்திற்கு போய்விட்டார்கள். இன்னும் ஏறத்தாழ
நிமிடங்களுக்குள் தபாற் கந்தோரில் அவற்ை சேர்க்க வேண்டும். அதன்பின் அங் ஏற்கமாட்டார்கள். அவற்றை மறுநா
/Nதபாலில் சேர்க்கவும் முடியாது. ஏனெனி அன்றைய நாள் திகதியுடன் இயந்திரப் பெr (Stamping Machine) eup a (6 முத்திரையிடப்பட்டது.
ரை
ஏ.ஜே. அலுவலகத்தின் முதலா
Lமாடியில் நின்றபடி எட்டிப்பார்த்து வீரசிங்
மண்டபத்தில் வேலை செய்யும் அ வேலையாள் மேலே அழைத்து விடயத்ை சொன்னார். அவர் தனக்கு அவசரம வேலை இருப்பதாக மறுப்புத் தெரிவிக்கும் விதத்தில் கதைத்தார். ஏ.ஜே.யின் நெற்றிக்கன் திறந்தது. உ ரு த் தி ர மூர் த் தி யா க மாறிவிட்டார். அவரின் வார்த்தைகள் இடிமுழக்கம் மின்னல்கள் என்று அதிர்ந்தன. அந்த ஊழித்த மூலி*"ரவி  ேவ க த் து ட ன் \இருக்கிறார் பத்திகைக்கட்டைத் தூக்கித்
தனது தோளில் வைத்தார். நான் "சைக்கில கொண்டுபோகிறேன்” என்று தடுத்தே இல்லை நானும் வருகிறேன் என்று கர்ஜித்த சைக்கிளில் பத்திரிகைக்கட்டை வைத்து ஏ. பிடித்துவர அப்படியே சைக்கின
போரும் u
குமுறும் வெடிக்கும் பின்னணிய
அ வ ற் று
 
 
 
 
 
 
 

r Lb
ър ந்த தச்
யங்கரவாதங்களும்
6
/ 6)
லே பெரும்பாலும் க் கெ ல் ல ம் மாக மதவாதிகளே
சிறப்பிதழ்
உருட்டிச்சென்று தபாற்கந்தோரில் சேர்த்தோம்.
"எசமான்போல் கட்டளை இடு.
தோட்டிபோல் சேவை செய்", இது வீரத்துறவி ? விவேகானந்தரின் அருள்மொழி. ஏ.ஜேயிடம இந்த மாண்பு இருந்தது. கொள்கை நேர்மை பிறழாமையில் மனச்சாட்சி இடும் கட்டளையின்படி அவர் கண்டிப்பான எஜமான். சேவையில் அவர் தன்னை தோட்டியாக்கிக்கொள்வார். "ஒரு சுருட்டை அழகாகச் சுற்றத் தெரிந்தவனுக்குப் பெரிய தவம் செய்யும் தகுதி ஒரு காலத்தில் கைகூடும்" என்பது வீரத்துறவியின் மணிவார்த்தைதான். “சிறு விடயத்தையும் அழகாக, சரியாகச் செய்யவேண்டும்” என்ற முனைப்பு ஏ.ஜேயின் உதிரத்தோடு கலந்த பண்பு.
ஓர் உன்னத கலைஞனிடம் கலையை அழகாக வெளிப்படுத்தும் பக்குவம் (Perfection) இருக்கிறது. அந்தப் பக்குவம் இறைவனைக் ^ காணவிழையும் ஞானிக்கு முதற்படியாகும். எனவேதான் "நுண்கலைகளில் ஈடுபடும் Lே கலைஞர்கள், அவர்களை அறியாமலே இறைவனுக்கு மிக அண்மையில் நிற்கிறார்கள்" O என்று பகவான் பூg ராமகிருஷ்ண பரமஹம்சர் ெ அருளியிருக்கிறார். சேவையில் தன்னைத்* தோட்டியாக்கிக் கொண்டு கர்மயோகம் செய்யும் ஏ.ஜே. மனிதநேயம் கொண்ட ஏ.ஜே. சிறுமை கண்டு இவ்வாறு பொங்கிய பல காட்சிகளை நான் கண்டவன்.
ரிமலைகளாக ந்திரா திபர்
O பத தராத பா குழுக நாடுகளில் கூ ட் ட ங் க ளி ல் சி ல வே  ைள க ளி ல் நேசையாவோடு தனது நேர்மையின் கோட்டிலே நின்று இவர் கர்ஜித்திருக்கிறார். இவை அறிவுபூர்வமானவையாக நிதானத்தின் வழியில், Լյ6ծTւկ தவறாதவையாகவே இருந்தன. கூட்டம் முடிந்தபின் ஏ.ஜே. அவரோடு வழமைபோல் சாதாரணமாகவே பேசுவார். அவரும் அவ்வாறே நடந்து கொள்வார்.

Page 22
s
(6
G)
ー பிரதிநிதிகள் ஆணைக்குழு முன் சமூகமளித்து
ஏ.ஜே. கனகரட்னா
ஏ.ஜே.யின் சேவை பத்திரிகைப் பணிகளோடு அமையவில்லை. தலைவர், காரியதரிசி, நிர்வாகக் காரியதரிசி ஆகியோர் அவரின்
உதவியை நாடினர். உத்தியோகபூர்வமான மி முக்கியமான கடிதங்களைத் தயாரிக்கும் பன சிலவேளைகளில் அவரிடம் ஒப்படைக்கப்படு கையால் எழுதி அதைப்பார்த்து தட்டச்சி அடிக்கும் வழக்கம் அவரிடம் இல்லை விடயங்களை அவரிடம் கேட்டறிந்துவிட்( கடிதத்தலைப்புத்தாளை தட்டச்சில் போட்( நேர்த்தியான கடிதங்களை வடித்தெடுப்பார்.
1969ஆம் ஆண்டு இலங்கைக் கூட்டுற6 இயக்கத்தினை மறுசீரமைப்பதற்காக கனடாவைச் சேர்ந்த கலாநிதி ஏ.எட் லெயிட்லோ என்ற அறிஞரின் தலைமையில் ஒர் ஆணைக்குழுவை அப்போது கூட்டுற6 இயக்கம்பற்றிய விசாரணைக்கான அமர்வுகளை வீரசிங்கம் மண்டபத்தி நடத்தவிருந்தது.
கூட்டுறவு இயக்கத்தினை எவ்வாறு மறுசீரமைக்கவேண்டும் என் ஆலோசனைகளை வடபகுதியிலுள்ள சங்கங்களின் தாய்ச்சங்கமான வஐமேசபையின்
வழங்கவேண்டும்.
அதற்காக சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் பக்கம் பக்கமா தமிழில் இருந்தன. அவற்றை ஆய்ந்து தெரிந்தெடுத்து மொழிபெயர்க்கு பொறுப்பை நெறியாளர் சபை ஏ.ஜே.யிட கொடுத்தது. அத்துடன் ஆங்கிலத்தி இருந்தவற்றைச் சீர் செய்து அமைக்கும் பண
அவரிடமும், பரமோதயனிடமுட ஒப்படைக்கப்பட்டன. இருவரும் தமது பணியை நிறைவேற்றிக்கொடுத்தனர்
நெறியாளர் சபை ஏ.ஜே.யையும் சேர்த்து மீண்டும் சில கருத்துக்களை மாற்றியுட சேர்த்தும் திருத்தங்கள் செய்தது.
அத்திருத்தங்களுடன் அந்: ஆலோசனைகளை மெருகூட்டி, தெளிவா ஒழுங்குபடுத்தி தட்டச்சு செய்யவேண்டும்
 

f
b.
i)
ռ!
சிறப்பிதழ்
அப்பிரதிகளை யாழ்ப்பாணத்திற்கு இரு தினங்களில் வரவுள்ள ஆணைக்குழுவிற்கு விசாரணை
அமர்விற்கு முன்னர்
படித்தறிவதற்காகக் கொடுக்க வேண்டும். அன்று பிற்பகல் அலுவலகத்தைப் பூட்டாது திறப்பை பொலிஸ் நிலையத்தில் கொடுக்கும்படி அலுவலக வேலையாளிடம் ஏ.ஜே. சொன்னார். இரவு எட்டரை மணியளவில் அவர் அலுவலகத்தில் தனியாக இருந்து தட்டச்சில் கர்மயோகம் செய்யத் தொடங்கினார். மூன்று மணிக்குமேல் அந்த யோகத்தில் பூரண தரிசனம் கண்டு கீழே இரவுக்காவலாளியிடம் அலுவலகத்தைக் கவனிக்கும்படி கூறி இல்லம் சென்று அமைதியாகத் தூக்கத்தில் ஆழ்ந்தார். மறுநாள் அவர் அலுவலகம் வரவில்லை.
அன்று காலை இரவுக்காவலாளிமூலம்
விடயத்தை அறிந்துகொண்டு அலுவலகம் வந்த حصصبر\
நிர்வாகக் காரியதரிசி செல்வரத்தினம் தட்டச்சுப்பிரதிகளைப் பார்த்துவிட்டுப் பூரித்துப் போனார். எத்தகைய வெட்டுக்கொத்துமின்றி அழகாக நாற்பது பக்கங்கள் வரை ஐந்து பிரதிகள் வைத்து தட்டச்சு செய்யப்பட்டிருந்தன. கருத்துமாற்றங்களுக்கேற்ப வசனங்களையும் செப்பனிட்டே அவர் அப்பணியினைச் செய்திருந்தார். He is our asset 67667 spy சொல்லிமகிழ்ந்தார் செல்வரத்தினம்.
ஏ.ஜேயிடம் இப்படி இரவிரவாகச் செய் என்று எவரும் பணிக்கவில்லை. அவரும் இப்படிச் செய்யப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லவுமில்லை. எதையும் அழகாகச் செய்யும் மனப்பக்குவமும் சேவை எண்ணமும் ஆர்வமும் அவரைச் செய்வித்தன. இவ் வண்ணம் அவரது மனவண்ணம் செயல் வண்ணமாக அலுவலக எல்லாப் பணிகளிலும் ஒளிவண்ணம் வீசியது!
யாழ்ப்பாணம் வந்த ஆணைக்குழுவிடம் அப்பிரதிகள் கையளிக்கப்பட்டன. அவற்றைப் படித்து ஆராய்ந்த விசாரணைக்குழுவின் தலைவர் விசாரணை ஆரம்பத்தின்போது "கருத்துத் தெளிவோடு ஒழுங்காக மிக அழகாக
S S S S S S S S S L S S SSS SSYSSS SS S S S S S S C SAS AeS C C C C S
محصےحN

Page 23
ஏ.ஜே. கனகரட்னா
இந்த ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்றார்.
ஏ.ஜேயின் ஆற்றல், உள்ளத்தின் ? உயர்வு முதலிய சிறப்புகளால் அவர் எமது அலுவலகத்தின் ஒரு செல்லப்பிள்ளையாக தலைவர், காரியதரிசி, நிர்வாகக் காரியதரிசி, நெறியாளர்கள் dF doh, ஊழியர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டார். தலைவர் கொழும்பிலிருந்து வந்து வாடி வீட்டில் தங்கியிருந்தபடி ஏ.ஜேயை அழைத்து முக்கிய எழுத்து வேலைகளை நட்புரிமையோடு அவரைக் கொண்டு செய்வார்.
ஏ.ஜேயும் நானும் இருக்கும் கண்ணாடி அடைப்புப்பகுதி எந்நேரமும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சந்திக்கும் பட்டிமன்றமாகப் பரிமளிக்கும் . அதற்கு அலுவலகம் என்று கட்டுப்பாடு எவரும் போடுவதில்லை.
பத்திரிகைப் பகுதி என்று எமக்கு பூரண /Rதந்திரம் அங்கு இருந்தது. தனிப்பட்ட கி அலுவல்கள் சம்பந்தமாக ஆங்கிலத்தில் ட் கடிதங்கள் எழுத, விண்ணப்பங்கள் நிரப்ப என்று ஏ.ஜே.யின் உதவி நாடி பலர் அங்கு வருவார்கள். நீகல் குளத்துக்கு அருகேயிருந்த ப்ெட்டிக்கட்ையில் அவர்களுக்கு தேனீரும் N(வாங்கிக் கொடுத்து அங்கு வைத்தே எழுத்துப் பணியைச் செய்து அவர் அவர்களை அனுப்பி வைப்பார்.
ஏ.ஜே. யாழ் பல் கலைக் கழகத்திற்கு ஆங்கில போதனாசிரியராகச் சென்றபின் எனது வலதுகை ப ல மி ழ ந் த து போலாகிவிட்டது. ஆனால்
அவர் தானாகவே என்னை
தர்மு சிவராமு இ ஒன்றில் எழுதி என்ற கட்டுை தெரிந்தவர்' என மல்லிகையில் எ அடிகொடுத்தவர்
அலுவலக வேலை முடிந்தபின் வீரசிங்கம் மண்டபத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, பல்கலைக் கழகத்திலிருந்து வந்த களைப்போடு பத்திரிகைக்குத் தேவையான ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து உதவி 9 வந்தார்.
ēSTSo
 
 
 
 
 
 

சிறப்பிதழ்
அவர், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் அழகாக மொழிபெயர்த்து ஒரு காலத்தில் Observer 61st Till 15t'il, Times of Ceylon, Illustrated Weekly of India g67u 6JG),56fici G6)J6ífio)JJáj செய்தவர் என்ற புகழ்பூத்த இலக்கிய வரலாற்றுப் பதிவொன்றும் இருக்கிறது.
1961ஆம் ஆண்டில் அம்மொழிபெயர்ப்புகள் Observer இல் தொடராக வெளிவருவதற்கு ஏ.ஜே. செய்த தொண்டின் மகத்துவம்பற்றி எஸ்.பொ. மத்து முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "ஈழத்தின் தேசியக் கலைவளத்திற்கு தமிழ்க் கலைஞர்களுடைய பங்களிப்பும் சிறப்புவாய்ந்தது என்பதை நிறுவுவதைப் போல, தமிழ்க் கதைகள் சிலவற்றை ஆங்கிலப்படுத்தி அத்தொடரில் புகுத்தித் தமிழ்
க்கதைஞரை மகிமைப்படுத்தியவரும்
O ー、イト கனகரத்தினாவே. இதனால் சிங்கள இலக்கிய சுவைஞர்கள் மத்தியில் தமிழ்க் கதைஞர்களுடைய கெளரவம் (3L
நிலைநாட்டப்பட்டது என்பதுமட்டுமல்ல, ழ தமிழின் கெளரவமே நிலைநிறுத்தப் படுவதாயிற்று" 6.
へ丁イ
ஒருமுறை யாழ்ப்பாணத்தில் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு கட்டடத்தில் தி ரு ம  ைல யி லி ரு ந் து வருகைதந்த ந. பா லே சு வ ரி யுடனான எழுத்தாளர் சந்திப்பு இடம் பெற்றது. அந்நிகழ்வில்
ந்தியச் சஞ்சிகை ப "கோணல்கள்' ாக்கு, "எல்லாம்
இரசிகமணி óGö了ó ாற கட்டுரையை செந்திநாதன் பாலேசுவரிக்கு
செய்யும்போது, அவரின் மொ ழி பெயர் ப் புக் கலைபற்றி இப்படிக்
கூறினார்:
"ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். என்னுடய 'சிவந்தமண்" 9 கதை நான் தமிழில் எழுதியதைவிட அவரின்

Page 24
ܓܡܬܐ2
ஏ.ஜே. கனகரட்னா ஆங்கில மொழிபெயர்ப்பில் மிக
நன்றாக இருக்கிறதென்று ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் எனக்குச்
சொல்லியிருக்கிறர்கள். இந்தக் கதைக்கு
நான் 'சிவந்தமண்" என்றுதான் பெயர் கொடுத்தேன். கனகரத்னா "சாம்பல்' (The Ash) என்று தலைப்பிட்டுள்ளார். உண்மையில் அதுதான் மிகவும் பொருத்தமான தலைப்பு. கதையின் விசயமே அதுதான். அவரின்
திறமை பற்றிச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்"
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு,
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு என்று அவரது இருவகை மொழிபெயர்ப்பு வித்தகம் விசாலமானது, அருமைப்பாடானது. செங்காவலர் தலைவர் யேசுநாதர், மத்து ஆகிய அவரது நூல்களில் அந்த வித்தகச் செழுமையை நாம் அனுபவிக்கலாம்.
ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த பதினொரு ஆங்கில நூல்களை மூலத்தின்
- சுவை கெடாது தமிழில் சுருக்கிய ஏ.ஜேயின்
(6
மொழிவல்லமையை "மத்து நூல் என்றும்
ரைபேசிக்கொண்டேயிருக்கும்.
Sഭീ
அண்மையில் வெளியான சாத்தானின் n their Own Worlds 6Tairp 5p13,6055 G5ITG55-565 ஏ.ஜே. சுருக்கமான, அர்த்தச்செறிவான முன்னுரை எழுதியிருந்தார். அப்படி எழுதுவது அவருக்கு கைவந்த கலை. சாந்தன் தான் எழுதிய தமிழ்க்கதைகளைத் தானே மொழிபெயர்த்து அத்தொகுதியில் வெளியிட்டிருந்தார். அந்தக் கதைகளின் மொழிபெயர்ப்பு குறித்து Transcreative என்று ஏ.ஜே. குறிப்பிட்டுள்ளார். அவை வெறும்  ெம |ா ழி பெ ய ர் ப் ப ல் ல , மொழிபெயர்ப்போடான படைப்பாக்கம். ஏ.ஜேயும் தமிழ்ச் சிறுகதைகளை Transcreative ஆகவே செய்தார். எனவேதான் அவரது அந்தப் பணி இலக்கியமாகக் கமழ்கின்றது.
ஏ.ஜே. அவிழ்ந்த அன்பினராக எம்முன் நிற்கிறார். மனித மனம் இயல்பாகவே எத்தனையோ தீய எண்ணங்களால் இறுக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கட்டுக்குள்
 

சிறப்பிதழ்
அவிழ்ந்த நிலையினை அருணகிரிநாதர் "அவிழ்ந்த அன்பு” என்கிறார். அந்த உன்னத இனிய அன்பினை அடையவே மதங்கள் O வழிகாட்டுகின்றன.
மதங்களைப் பின்பற்றும் 'பக்தர்களே இன்று உலகில் பெரும்பான்மையினர். ஆனால் போர் அபாயங்கள், பயங்கரவாதங்கள், பசி, பிணி என்று உலகம் கோரதாண்டவங்களால் தவிக்கின்றது. தகர்கின்றது. போரும் பயங்கரவாதங்களும் குமுறும் எரிமலைகளாக வெடிக்கும் பல நாடுகளில் பின்னணியிலே பெரும்பாலும் அவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக மதவாதிகளே இருக்கிறார்கள். அவர்களது மனங்கள் அவிழ்படவில்லை. அதனால் அமிழ்தத்தை ஊட்டவேண்டிய அன்பின் மதங்கள் திசைமாற்றப்பட்டு, திரிபுபடுத்தப்பட்டு அபினை ஊட்டியது போன்ற வெறிநிலையிலே இரத்தம் குடிக்கும்,< ‘தொண்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதை வைத்தே கார்ல் மார்க்ஸ் C தீர்க்கதரிசனத்தோடு மதம் மனிதனுக்கு அபின்போன்றது' என்று அளந்து அர்த்தச் சி செருக்கோடு சொன்னார். ன்
இந்த 'மத' உலகில் அவிழ்ந்தT அன்பினரான ஏ.ஜே.யின் ஆழ்ந்த மனதில் இறைநம்பிக்கை சுடர் வீசுவது எனக்குத் தெரிகிறது. எல்லா மதங்களின் தத்துவங்களையும் ஆடம்பரமின்றி அமைதியாக மனத்திற்குள் மதித்து, மனித நேயத்தில் அவற்றின் பொருளைக் கண்டு போற்றும் நூலறி புலவன் அவர்,
ஏ.ஜேயின் திறமறிந்த, இலக்கிய நலமறிந்த அவரது நண்பர்களான இ.பத்மநாப ஐயர், மு.புஷ்பராஜன், மு. நித்தியானந்தன், எஸ். பொ. முதலியோர் வெளிநாடுகளில் இருந்தாலும் அவர்மீதுள்ள அன்பின் பெருக்கால், மதிப்பால் அவருக்கு ஊக்கமளித்து இலக்கியப்பணியில் அவரை ஈடுபடவைக்கும் அரும்பணிகண்டு பேருவகை அடைகிறேன்.
O

Page 25
f சுரேஷ் கனகராஜா
பலராலும் நன்கு புரிந்து கொள்ளப்படாத இலக்கிய மரபொன்று எம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. இத்தகைய எழுத்துக்களை அறிவுப் பரம்பல்' (Knowledge dissemination) இலக்கியம் என்று அழைக்கலாம். பல ஆய்வுத் துறைகளில் ஆங்கிலத்தில் அல்லது பிறமொழிகளில் வெளிவரும் நூல்கள், கட்டுரைகள் பற்றிய தகவல்களையும், அவற்றில் இடம்பெறும் வாதங்களையும், பொது வாசகர்களுக்காகத் தமிழில் தரும் எழுத்துக்கள் இம்மரபில் அடங்கும். சினிமாப் படங்கள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கண்காட்சிகள் போன்ற துறைகளில் வேறு மொழிகளில் இடம்பெறும் Lவெளியீடுகள் பற்றிய கட்டுரைகளும் இதில்
s அடங்கும். இந்த மரபு மொழி பெயர்ப்பிலிருந்து வேறுபட்டது. L மொழிபெயர்ப்பாளன் மூல நூலை
டு இயன்றளவு ஒட்டியே மொழிபெயர்க்க ரை வேண்டும். ஆனால் 'அறிவுப் பரம்பும் கட்டுரைகளில் எழுத்தாளன் மூலத்தை வாசித்து நன்கு கிரகித்து விட்டு, ஒரளவு தனித்துவத்தோடும், விமர்சனக் கண்ணோட்டத்தோடும், அந்த அறிவைத் தன் சொந்த வார்த்தைகளில் எமக்குத் தருகிறார். அதேநேரம் இத்தகைய எழுத்துக்கள் அறிவு உருவாக்க' (knowledge Construction) எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. அறிவுருவாக்கலில் எழுத்தாளர் தம் சொந்தச் சிந்தனைகளையும் ஆய்வுக் கண்டு பிடிப்புக்களையும் புதிதாக வெளியிடுகின்றார். ஆக்க இலக்கியப் படைப்புக்களும், எழுத்தாளனின் சொந்த சிந்தனைகளையும் கண்ணோட்டத்தையும் தருவதால் இவையும் சில சமுதாயங்களில் அறிவுருவாக்க எழுத்து மரபில் அடக்கப்படுகின்றன. ஆனால், அறிவுப் பரம்பல் எழுத்துக்களில் பிறருடைய படைப்புக்களைப் பற்றியே எழுத்தாளர்கள் பேசுகின்றனர்.
அறிவுப் பரம்பல் எழுத்துக்கள் வேறு சமுதாயங்களிலிருந்து வந்தாலும் எம்

அறிவை மக்கள் மயப்படுத்தல்
சமுதாயத்தில் இவற்றின் இடம் சற்று வித்தியாசமானது. உதாரணமாக, மேற்கத்தைய சமுதாயத்தின் புத்திஜீவிகள் அறிவுருவாக்க கட்டுரைகளையே பெருமளவு எழுதுகின்றனர். இத்தகைய எழுத்துக்களே அவர்களுக்கு மதிப்பைத் தேடிக் கொடுக்கின்றன. ஒர் ஆய்வாளனின் கணிப்பின்படி, ஒரு மேற்கத்தைய புத்திஜீவியின் எழுத்துக்களில் ஐந்து சதவீதமானவை மட்டுமே பொதுமக்களுக்குத் தன் சொந்த ஆய்வை அல்லது தன் துறையின் புதிய சிந்தனைகளைச் சஞ்சிகைகளில் அல்லது பத்திரிகைகளில் வெளியிடும் முயற்சிகளாக அமைகின்றன. பொதுவாக, இத்தகைய பணியை மேற்கில் பத்திரிகையாளரிடம் விட்டுவிடுகின்றனர். மாறாக, தமிழ்ப் புத்திஜீவிகள் பிரசுரிக்கும் எழுத்துக்களில் கணிசமான அளவு அறிவுப் பரம்பல் முயற்சிகளே என்பதை நாம் நன்கு அறிவோம். (சிலவேளைகளில், எம் சொந்த சிந்தனைகள் என்ற போர்வையில் நாம் பிரசுரிக்கும் சில கட்டுரைகள் கூட, நாம் அறியாமலே வேறு நூல்களிலிருந்து நாம் பொறுக்கியவையாகி விடுவதுண்டு. மூல நூல்களை அடையாளங் காட்டும் மரபு எம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றாததால், எல்லாவற்றையும் எம் சொந்த முயற்சிகளாக வாசகர்களுக்கு முன்வைக்கக் கூடியதாக இருக்கிறது) தமிழ்ப் புத்திஜீவிகளும் கல்விமான்களும் அறிவுப் பரம்பல் எழுத்துக்களைப் பெரியளவில் பிரசுரிப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. 1. ஆங்கில மொழிப் பாண்டித்தியம் படிப்படியாக எம்மவர்கள் மத்தியில் அருகிப் போக, வெளிநாடுகளில் இடம்பெறும் புதிய ஆய்வு நடவடிக்கை களையும் கண்டுபிடிப்புக்களையும் தமிழ் வாசகர்களுக்கு அளிப்பது இன்றியமையாத அறிவு சார்ந்த பணியாக இருக்கிறது. 2. இப்பணியைச் செய்யக்கூடிய ஆங்கில அறிவு சில புத்திஜீவிகளிடம் மட்டுமே இருக்கிறது. 3. சிறப்பான துறைகளில் இடம்பெறும் புதிய அறிவைப் புரிந்து கொள்ளக்கூடிய

Page 26
ஏ.ஜே. கனகரட்னா
பாண்டித்தியம் சிலரிடம் மட்டுமே இருக்கின்றது. 4. பல்துறைசார்ந்த முறையில் (interdisciplinary) அதிகமாக இடம்பெறும் முன்னணி முயற்சிகள், பழைய பாணியில் தம் துறைசார்ந்த ஆய்வில் மட்டும் நின்றுகொள்ளும் அறிவாளிகளால் கூடப் புரிந்து கொள்ள முடியாது போகிறது. உண்மையில், ஆங்கில அறிவுள்ள ஒரு புத்திஜீவி என்ற தகைமை கூட இப்பணியைச் செய்வதற்குப் போதாது. குறைந்தபட்சம் இருமொழிகளிலும் (சொந்த மொழியிலும், வேற்று மொழியிலும்) சரளமுள்ளவராக இருப்பதோடு, பல்துறைக் கண்ணோட்டமுள்ள புத்திஜீவிகளே இப்பணியைச் செய்யவும் (ԼՔւգ-Այւb.
'மத்து', 'செங்காவலர் தலைவர் யேசுநாதர்' என்ற இரு நூல்களிலும் இடம்பெறும் கட்டுரைகளை வாசித்தபோது, ஏ.ஜே. கனகரட்ணா எப்படியான திறமையுடன் அறிவுப்பரம்பல் இலக்கியப் பணியை ஆற்றியிருக்கிறார் என்று நான் வியந்தேன். இன்று பல நாடுகளிலும் வாழும் முன்னணி ட ஆய்வாளர்கள், ஆங்கிலத்திலேயே தம் (6 கண்டுபிடிப்புக்களைப் பிரசுரிக்க, சுயமொழிப் 6) பாண்டித்தியம் மட்டும் உள்ள அறிவாளிகள் (எந்த நாட்டிலிருந்தாலும் சரி) தம் அறிவுசார் > முயற்சிகளைத் திறம்படச் செய்ய முடியாது. இந்த வகையில் பார்க்கும்போது, ஏ.ஜே. இந்நூல்களில் ஆற்றும் பணி தமிழ்ப் புத்திஜீவிகளுக்குக் கூட இன்றியமையாதது. மேலும், புலமைசார் வட்டங்களுக்கு வெளியே சாதாரண மக்கள் கூட ஆங்கிலத்தில் வெளிவரும் சர்வதேச அறிவுக் களஞ்சியத்தை ஏ.ஜேயின் பணியால் புதினப் பத்திரிகைகளில் அல்லது சஞ்சிகைகளில் வாசித்துப் பயன்படக் கூடியதாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும்போது இவ்வெழுத்து மரபைக் குறித்து ஒரு புதிய மதிப்பு என் மனதில் பிறந்தது. ஏ.ஜே. ஆக்க இலக்கியத்தில் அல்லது சொந்த ஆய்வு முயற்சிகளில் கைவைக்காமல் தன் திறமைகளை வீண் போக்குகிறாரே என்று கவலைப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஏ.ஜே. செய்யாதவற்றைப் பற்றிக் குறைகூறாமல், அவர் சாதித்த காரியத்தை மெச்சுவது இனியாவது அவசியம். அவருடைய அறிவுப் பரம்பல் எழுத்துக்களை நாம் கணக்கெடுக்காமல் இருப்பதற்குக்
2
ܓܡܬܐ
 

சிறப்பிதழ்
காரணம், மேற்குலகில் இடம்பெறுவது போன்று நாம் அறிவுருவாக்க எழுத்து மரபுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைத் தான் காட்டுகிறது. ஆனால் ஆங்கில மொழிப் பாண்டித்தியமும் சர்வதேச இலக்கிய அறிவுசார் கண்ணோட்டமும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் எம் சமுதாயத்திலாவது அறிவுப் பரம்பல் பணியை நாம் வித்தியாசமான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த அறிவுப் பரம்பல் இலக்கிய மரபு மேலும் வளர வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஏ.ஜே.யைப் போன்று பன்மொழிப் பாண்டித்தியமும் பல்துறை ஆர்வமும் உள்ளவர்கள் எம் சமுதாயத்தில் இன்னும் தேவை. எனினும், இப்பணியைத் திறம்படச் சாதிக்க இவ்வடிப்படைத் தகைமைகளோடு(> நின்றுவிட முடியாது. ஏ.ஜே. கையாண்ட சில சிறப்பான யுக்திகளை, அவர் கட்டுரைகளில் GJ அடையாளங் காண்பது இப்பணியை வளர்க்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த 6. எதிர்பார்ப்போடு பின்வரும் கி அவதானிப்புகளை முன்வைக்கிறேன். 6.
ஒரு புதிய சிந்தனையை அல்லது நூலைத் தக்க பின்னணி அறிவில்லாது விளங்கிக் கொள்ள முடியாது. ஆங்கிலம் ர நன்றாகத் தெரிந்திருந்தாலும் கூடச் சில ஆய்வாளரின் கட்டுரைகளை வாசிக்கும்போது) அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் எமக்குத் தேவையான அடிப்படை அறிவு எம்மிடம் இல்லாததே ஆகும். ஆனால், ஏ.ஜே. ஒரு சிந்தனையை அல்லது நூலை விபரிக்கும்போது, தன் பரந்த வாசிப்பின் பயனாக, அச்சிந்தனையின் சரித்திரப் பின்னணி, அதைச் சார்ந்த எடுகோள்கள், ஆய்வாளனைப் பற்றிய சொந்த விபரங்கள் போன்றவற்றைத் தருவதால் நாம் பொருளைச் சற்று இலகுவாக விளங்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, செங்காவலர் தலைவர் யேசுநாதர்' நூலில், புளொக்கின் 'பன்னிருவர்' கவிதையை விமர்சிப்பதற்கு முன், புளொக்கின் வாழ்க்கை, அவருடைய பெற்றோரின் சிந்தனைப் போக்கு, அவருடைய சமூக அந்தஸ்து, அவரைப் பற்றிய ° சமகால முக்கியஸ்தர்களான நூனசாஸ்கி,

Page 27
60J
لہ
ஏ.ஜே. கனகரட்னா
லெனின் போன்றோர் கொண்டிருந்த மதிப்பீடு என்பன தரப்படுவதால், இக்கவிதையின் அர்த்தத்தை நாம் ஆழமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அப்படியே, "பானையும் சட்டியும் கட்டுரையில் லெயிங்கின் புரட்சிகரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் முன் அவருடைய கல்வி, தொழில் வரலாறு, தென்னிலங்கை விகாரையில் தியான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, சஞ்சிகைகளுக்கு அவர் கொடுத்த பேட்டி, ஏனைய பிரசுரங்களின் விபரம் என்பன தரப்படுவதால் அவருடைய சிந்தனையை நாம் தக்க முறையில் விளங்க முடிகிறது.
மேலும். ஏ.ஜே. தமிழ் மொழியில் சரளமாக எழுதக் கூடியது மட்டுமல்லாமல், தமிழ் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் கொண்டிருந்த நாட்டம், அந்நிய சிந்தனைகளை எம் உலகப் பார்வைக்கு எட்டக்கூடிய முறையில் எழுதக் கூடிய சாத்தியத்தையும் அவருக்குக் கொடுக்கிறது. புளொக்கின் கவிதையைப் பற்றிப் பேசும் முன்னர், அவருக்கு ஒப்பாகப் பாரதியார் ரஷியப் புரட்சி பற்றிப் பயன்படுத்திய ஆன்மிக ரீதியான உவமானத்துடன் ஏ.ஜே. தொடங்குகிறார். லெயிங்கின் உளவியலை அறிமுகப்படுத்தும் முன் கட்டுரை எழுதப்படும் நாட்களில்
>(திரையிடப்பட்ட 'குடும்ப வாழ்க்கை' என்ற
படத்தின் கதையைச் சுருக்கமாகக் கூறி, அதிலுள்ள கருத்துக்களை லெயிங்கின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு அலசுகிறார். கடினமான சிந்தனைகளை எம் பண்பாட்டோடு தொடர்புபடுத்தி எழுதுவது எம் கிரகிப்பிற்கு உதவியாக அமைகிறது.
இதைவிட, அதிகமான எல்லாக் கட்டுரைகளிலும் தான் எழுதத் தெரிவு செய்த விடயத்தை எம் சமுதாயத்தில் இடம்பெறும் முக்கிய விவாதங்களின் அல்லது கரிசனைகளின் கண்ணோட்டத்திலேயே ஏஜே. பேசுகிறார். வெளிநாட்டில் இடம்பெறும் சமகால ஆய்வுகளை அல்லது சிந்தனைகளைப் பயன்படுத்தி 6T Lib சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதே இந்த அணுகுமுறையின் குறிக்கோள். எனவே, அமெரிக்க இலக்கியத்தை பிரித்தானிய இலக்கியத்திலிருந்து வேறாகப் பிரித்து ஒரு தனி மரபை வளர்க்க எடுத்த முயற்சிகளைப்
 

சிறப்பிதழ்
பற்றிய ராவின் நூலை விபரிக்கும் முன்னதாக எம் எழுத்தாளரின் மத்தியில் தென்னிந்திய இலக்கியத்திலிருந்து பிரிந்த மரபு வளர முடியுமா என்ற உள்ளூர் விவாதத்தை ஞாபகப்படுத்துகின்றார். மேலும், ஆங்கில மொழி 16ஆம் நூற்றாண்டளவில் கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து பிரிந்த ஒரு தனித்துவமான மொழியாக வளருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றிய ஜோர்சின் நூலை விபரிக்கும் முன்னர் எம்மவர்கள் மத்தியில் தமிழைப் போதனா மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வளர்க்கலாமா என இடம்பெற்ற விவாதங்களை ஞாபகமூட்டுகிறார். இத்தகைய ஒர் ஆரம்ப பத்தியின் பின்னர் ஏ.ஜே. சொல்லாமலேயே நாம் மிகுதிக் கட்டுரையை எம் சொந்த பிரச்சினைகளின் கண்ணோட்டத்திலே 2k வாசித்துக் கொள்கிறோம். எனினும், சி இந்நூல்களின் கோணத்திலிருந்து எம் GJ விவாதங்களில் தான் வகுத்துக் கொள்ளும் " நிலைபாட்டையும் எமக்குப் பயனுள்ள ெ படிப்பினைகளையும் கட்டுரை இறுதியில் ஏ.ஜே. தெரிவிக்கத் தவறுவதில்லை.
மேலும் எந்தக் கொள்கையையோ ” நூலையோ படைப்பையோ பற்றி கி எழுதினாலும், ஏ.ஜே. அதை ஒர் அகன்ற J கோணத்தில் வைத்துப் பார்த்து, அதன் முக்கியத்துவத்தையும் தாத்பரியத்தையும் ? கவனமாக ஆராய்வார். புளொக்கின்)" 'பன்னிருவர்’ கவிதையில் யேசுநாதர் செங்காவலர் தலைவராக இடம்பெறுவதைக் குறித்து ரஷ்யாவில் ஆன்மிகவாதிகளும் இடதுசாரிகளும் எழுப்பிய விமர்சனத்தை ஏ.ஜே. வாசகர்களுக்குத் தருகிறார். இதன் அடிப்படையில் புளொக்கின் தரிசனத்தை நியாயப்படுத்த மூன்றாவது ஒர் கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். அடுத்து, இலக்கியத் திருட்டு' என்ற கொள்கையைப் பற்றி எழுதும்போது, அது ஏன் நிலமானியச் சமுதாயத்திற்கு முன்னர் மேற்கில் இடம் பெறவில்லை, இன்றும் ஏன் கீழைத்தேச நாடுகளில் முக்கிய இடம் பெறுவதில்லை என்ற கேள்விகளை எழுப்பி ஒரு பரந்த பார்வையை எம்மில் வளர்க்கிறார். இறுதியில், ! டான் ஜேக்கப்ஸனின் சிறுகதையைச் சொல்லி, இலக்கியத் திருட்டைப்பற்றிப் புதிய

Page 28
ஏ.ஜே. கனகரட்னா
கேள்விகளை எழுப்புகிறார். இப்படியாக, ஒரு படைப்பையோ கருத்தையோ பல கோணங்களிலிருந்து பார்க்கக் கூடியதாக இருப்பது தமிழ் வாசகர்களுக்கக் கிடைத்த பெரும் பாக்கியமே. ஏ.ஜேயின் பரந்த அறிவின் பயனாகவே எமக்கு இந்த ஆசீர்வாதம் கிட்டுகிறது.
கடைசியாக, எல்லாக் கட்டுரைகளிலும் ஏ.ஜேயின் சமூகம் சார்ந்த வர்க்க ரீதியான ஒரு விமர்சனக் கண்ணோட்டம் தெளிவாக இடம்பெறுகிறது. அவர் எழுத எடுத்துக் கொண்ட விடயத்தைச் சமூக, அரசியற் போக்குகளின் பின்னணியில் ஆழமாக விமர்சிக்கிறார். உதாரணமாக, "பானையும் சட்டியும் கட்டுரையில் ரஷியாவில் மாறுபட்ட கருத்துள்ளவர்களைப் பைத்தியக்காரர் என்று கூறி தண்டிப்பதற்காக உளவியல் பயன்படுத்தப் படுகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை விமர்சிக்கிறார். பல உதாரணங்களுக்கூடாக டஜனநாயக ரீதியான மேற்குலகிலும் அதன்
விழுமியங்களுக்கு எதிரானவர்கள் صبر பைத்தியகாரர்கள் என கணிக்கப்படும் ட் உண்மையை அம்பலப்படுத்துகிறார். 'தொட்டப்பன்' என்ற LIL-5 605
விபரிக்கும்போது, இந்த மஃபியாக் குழுவினரின் ஈவிரக்கமற்ற கொலைகளைப் பற்றி ஒரு NT (கண்டனமும் இடம்பெறாதது பற்றி கேள்வி எழுப்புகிறார். இறுதியில், இந்தப் படம் ஹொலிவுட்டுக்கே ஏற்ற பாணியில் பணமுள்ளவர்களின் பலத்தை மிகைப்படுத்தி, வன்முறை மலிவுபடுத்தும் ஒர் ஜனரஞ்சகப் படைப்பாகவே அமைகிறது என நாம் முடிவு செய்கிறோம். அப்படியே இலக்கியத் திருட்டு தனியுடைமை வாதத்தால் உந்தப்பட்ட ஒரு நடைமுறை என்று ஏ.ஜே. வைக்கும் வர்க்க ரீதியான கண்ணோட்டம் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றது.
இந்த வகையில், எந்தவொரு வெளிநாட்டு ஆங்கிலப் படைப்பையும் தன் தனித்துவமான பார்வையும், விமர்சனமும், பரந்த கண்ணோட்டமும், எம் சமூகப் பிரச்சினைகளுக்குரிய தொடர்பும் இல்லாமல் எமக்கு அவர் தருவதில்லை. எமக்கு அறிமுகப்படுத்தும் படைப்பில் எவற்றைப் பேசத் தெரிவு செய்கிறார், எந்தக் கோணத்திலிருந்து பார்க்கிறார், எத்தகைய
 

சிறப்பிதழ்
கண்ணோட்டத்தை எம்மில் வளர்க்கிறார் என்று நாம் சிந்திக்கும்போது, ஏ.ஜே.யின் எழுத்துக்களில் ஒவ்வொரு
வசனத்திலும் அவருடைய சொந்த முத்திரை இருக்கிறது என்பதை நாம் உணரலாம். இத்தகைய கட்டுரைகள் எம் சிந்தனையையும் அறிவையும் வளர்ப்பதோடு, எம் சொந்த இலக்கிய, பண்பாட்டு வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை எமக்கே உரிய பாணியில் தீர்க்கவும் வழிவகுக்கின்றன. எனவே, ஏ.ஜே. இவ்வெழுத்து வடிவத்தைக் கையாண்ட விதத்தில் இரு பெரிய உண்மைகள் இருக்கின்றன. 1. மேற்கத்தைய படைப்புகள், அந்நிய கருத்துக்களை எம்மேல் திணிக்கும் கலாச்சார காலனித்துவத்தை ஏ.ஜே.
முறியடிக்கிறார். அப்படைப்புக்களை எமக்கேயுரிய பாணியில், விமர்சனக் * கண்ணோட்டத்தோடு, எம்முடைய
தேவைகளுக்கு ஏற்ற முறையில் கிரகிக்கச்
செய்வதால் இது கைகூடுகிறது. மேற்கத்தைய J அறிவாலும் கலைகளாலும் பண்பாடுகள் ெ அடிமைப் படுத்தப்படுகின்றன என்ற பயம் நிலவும் இந்த நாட்களில் ஏ.ஜே. கையாண்ட
யுக்தி முற்போக்கானது. 2. அறிவுருவாக்க ெ எழுத்துக்கும் 'அறிவுப் பரம்பல் பூ இலக்கியத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு
ஏ.ஜே.யின் எழுத்துக்களில் சுருங்குகின்றது. J ஏ.ஜே. வெளிநாட்டு அறிவுருவாக்கப் படைப்புகளை எமக்கு அறிமுகப்N/ படுத்தினாலும், அவற்றைத் தன் சொந்த அறிவாலும் விமர்சனக் கண்ணோட்டத்தாலும் இடையீடு செய்து, எம் சமூகத்தைக் குறித்த புதிய ஆய்வையும் கேள்விகளையும் அறிவையும் தன் கட்டுரைகளில் வளர்க்கிறார். அதாவது, ஏ.ஜேயின் அறிவுப் பரம்பல் கட்டுரைகள் புதிய அறிவை உருவாக்குகின்றன. இதனால் தான் அடுத்த வருடம் வெளிவரும் (Geopolitics of Academic Writing and Knowledge Production (University of Pittsburg Press) என்ற என் நூலை ஏஜெக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அறிவாக்கத்தில் மேற்குலகிற்கும் மூன்றாம் g?-Gれ)ó நாடுகளுக்குமிடையே நிலவும் ஏற்றத் தாழ்வை இந்நூலில் ஆய்வு செய்யும்போது, ஏ.ஜே. இப்பிரச்சினையை எதிர்கொள்ள எடுத்த முயற்சிகளை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. O

Page 29
றாள். பன்னீர்செல்லம்
வாழ்க்கை தான் சகலதும் என்று, மக்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் வாசிக்கிறது தான் சகலதும் என்கிறேன்” அதை நான் சொன்னேனா? இல்லை. அதைச் சொன்னது, பியர்சல்ஸ்மித். ஆனால் அதை நான் சொன்னதாகச் சிலவேளை நான் மாறாட்டம் செய்திருக்கிறேன். இங்கே, "நான்' என்பது நானில்லை. அது றொபெட்சன் டேவிஸ் என்பவர். அது ஏ.ஜே. கனகரட்னாவாகவும் உண்மையில் இருக்கலாம். d#5 60T Lql uLu எழுத்தாளரான றொபெட்சன் டேவிஸுக்கும் ஏ.ஜே.க்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. டேவிஸின் கட்டுரைகளின் தொகுப்பிற்குப் பெயர் The Merry heart (களியாட்ட இதயம்) அதுவே ஏ.ஜே.யின் தொகுப்புக்கும் வைக்கக் sin quLu 560)Gou'ul. G366mólaốT “Literature and Moral டு purpose" என்ற கட்டுரையை உரத்து GOJ வாசியுங்கள். உங்கள் குரலுக்குப் பதிலாக ஏ.ஜே.யின் குரலை அவ்விடத்தில் வைத்துப் (பாருங்கள். அப்பொழுது சரியாக, அது ஏ.ஜே. உங்களுடன் பேசுவது போல இருக்கும். அது அபாயகரமான ஒரு பயணம். இலக்கியம் எவ்வளவு தூரம் ஒழுக்கக் கேள்விகளை எழுப்பி அதை ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? தனக்குத் தான் நேர்மையாக, அவற்றிற்கான தீர்வை அளிப்பதில் அதற்குரிய
பங்கு என்ன? இந்தக் கேள்விகள், இறைமையியலாளர்கள், சர்வாதிகாரிகள் ஆகியோர்களை மட்டுமல்ல,
நூ ல |ா சி ரி ய ர் க  ைள யு ம் கோட்பாட்டாளர்களையும் கூட இவற்றில் ஈடுபடுத்தி வந்துள்ளன. ஆனால் ஏ.ஜே. டேவிஸ் போன்ற கலைஞர்களால் மட்டும் தான் இந்த இருப்பியல் தட்டைச் சுழற்றி, ஒளிகொடுக்கும் மண்ணிறத்தைக் காண முடியும்.
ஏ.ஜே.யை முதன்முதலில் நான் பார்த்தது 1988இல் தான். அதுதான் இலங்கைக்கு நான் செய்த முதல் பயணம். யாழ்ப்பாணத்தில்,

நாகரீகப்பண்பு,
கூரறிவு, உயர்ந்த நோக்கம்
பத்திரிக்கையாளன் என்ற என் தொழிலும், இலக்கிய ஆர்வலர் என்பதும் ஒன்றை ஒன்று மோதின. இறந்த உடல்களை எண்ணி எழுதுவதை நான் வெறுத்தேன். தீவுத் தமிழர்களின் சிருஷ்டி எழுத்தில் என் கவனத்தைச் செலுத்தினால், பத்திரிகைத் தொழிலையும் என்னால் மேலும் நம்பத்தக்கதாகச் செய்ய இயலும் என்பதை இயல்பூக்கத்தால் அறிந்து கொண்டேன். துப்பாக்கி நிழலின் கீழ் வாழ்வது, புதிய தணிக்கை வடிவங்களைக் கொண்டு வரும். அதாவது மெளனம் அல்லது பூதா காரப்படுத்தல் என்ற வடிவங்கள் அதிர்ஷ்டவசமாக, ஏ.ஜே.இரண்டுக்குமே பலியாகவில்லை. நான் சந்திக்க விரும்பிய ஆளுமைகளுள் ஒன்று அவர். நான் யாழ்ப்பாணத்துக்குப் போவதற்கு ஒரு கிழமைக்கு முன், கொழும்பில் இருந்து நான் அனுப்பிய முதல் செய்திக்கு காமினி நவரத்ன ஆசிரியத்துவம் செய்த கடைசிப் பிரதியான Saturday Review சஞ்சிகையில் இருந்தே அதிக குறிப்புக்களை எடுத்திருந்தேன். ஓர் ஆளுமையைப் பற்றி எழுதுகையில், அவரின் புலனுணர்வு உலகத்தைச் சேர்ந்த பல ஆளுமைகளையும் சேர்த்து எழுத வேண்டி வரும், காமினி நவரத்ன தான் யாழ்ப்பாணத்தில் கடைசியாக இருந்த படைத்துறையைச் சாராத சிங்களவர். காமினியின் வாழ்க்கையில், பத்திரிகையாளனாக கழிந்த மிகச் சிறந்த ஆண்டுகள், அவர் யாழ்ப்பாணத்தில் இருந்த 1983க்கும் 1987க்கும் இடையேயுள்ள ஆண்டுகள் தான். அதாவது, தென்னிலங்கையில் தமிழ் எதிர்ப்புக் கலகங்கள் ஏற்பட்ட ஆண்டிலிருந்து, இந்திய சமாதானப்படை யாழ்ப்பானத்திற்கு வந்து சேர்ந்த ஆண்டுவரை. அங்கே காமினியின் வலது கையாகத் தொழிற்பட்டவர் ஏ.ஜே.கனகரட்னா. இருவருக்குமிடையே பொதுவான குணாம்சங்கள் பல உள்ளன. மெலிந்த உருவம். தொடர்ந்து சிகரெட்

Page 30
ஏ.ஜே. கனகரட்னா
குடித்தல், நல்லாக மது அருந்தல், பயமற்ற தன்மை ஆகியன. மதுவருந்தும் தோழமையுடன், அவர்கள் இருவரும் கிளர்ச்சியற்ற இலங்கைப் பத்திரிகைத்துறைக்கு, மென்னயத்தையும், தென்றல் காற்றையும் கொணர்ந்தனர். தன் சகாவைப்பற்றி காமினி வெகுவாகப் புகழ்வார். ஏறக்குறைய வழுவற்ற ஒரு பத்திரிகையைக் கொண்டு வருவதற்கு ஏ.ஜே. மிக முக்கிய பாத்திரம் வகித்தார் என்று காமினி எனக்குச் சொன்னார். அத்துடன், துணை ஆசிரியத்துவத்தைச் செய்வதற்கு, அவருடன் ஒப்பிடக்கூடிய குணங்களுள்ளவர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள் என்றும் சொன்னார். தலைப்புக்கள், உப தலைப்புக்கள் ஆசியவற்றைப் போடுவதில், ஏ.ஜே. எத்துணை திறமையானவர் என்பது பற்றி கொழும்பு புறக்கோட்டைக்கு அருகாமையில் உள்ள சந்தொன்றில், மென்டிஸ் சாராயம் அருந்திக் கொண்டு, காமினி எனக்குச் சொன்னார். /N"அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஒரு க பேராசிரியராக இருக்க வேண்டியவர். ஆசிரியராக அல்ல, அவர் என் உதவியாளாக அல்ல, எனது மேலதிகாரியாக இருந்திருக்க (6 வேண்டியவர். எனது நீண்ட காலப் ர்ெ டட்ச்திரிகைத்துறை அனுபவத்தில், ஏ.ஜே.யைப் 

Page 31
s
(6
இர
ஏ.ஜே. கனகரட்னா
தந்திரம்' ஒற்றுமை அதனுடன் முடிவடைகிறது. ஒரு மட்டத்தில். ஜோய்ஸ் நிகழ்காலத்தில் இருந்து தன்னை விலக்கி வைக்கிறார். அடக்குபவர்களுக்கும் grfl, விடுதலையாளர்களுக்கும் சரி, ஜோய்ஸின் அனுதாபம் கிடைக்கவில்லை என்பதை, அவரின் எழுத்துக்கள் எங்கும் காணலாம். ஜோய்ஸின் குரல் தான் அவரின் பிரதம பாத்திரமான ஸ்ரீபனின் பிரகடனத்தில் தப்பாமல் கேட்பது : எங்களைத் துயரத்துக்குள்ளாக்கும் அந்தப் பெரிய வார்த்தைகளுக்கு நான் பயப்படுகிறேன்,” ஆனால் ஏ.ஜே. அந்தப் பெரிய வார்த்தைகள் எதுக்குமே பயமற்றவர். பெரிய வார்த்தைகளின் காட்டுக்குள், அவர் பயமின்றி நடந்து செல்பவர். அந்தச் செயலில் ஈடுபட்டு, யாழ்ப்பாணத்தவர்களுக்காக அருள் பெற்ற அவ்வார்த்தைகளை வசப்படுத்தியும் உள்ளார். மொழிபெயர்ப்பாளராகவும் விமர்சகராகவும்
/Nஅவர் ஆற்றிய பங்கினால், சிரமமான
கருத்துக்களைப் பெற்று கொள்ள எவராவது விரும்பினால், குறைந்த முயற்சியுடன் அதைப் பெற்றுக் கொள்ளலாம். அது அவரின் வசப்படுத்தலுக்கு எடுத்துக்காட்டு.
அந்த வருடம் எனக்கு ஞாபகமில்லை.
Yஆனால் அந்த உரையாடல் எனக்கு ஞாபகம்
இருக்கிறது. அது 1989ஒ 1990ஒ இருக்கலாம். அங்கு வருகை தரும் பத்திரிகையாளர்கள்,
பல்கலைக்கழகக் கல்வியாளர்களையும்
புத்திஜீவிகளையும் அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். 6T 637 ச -ே க |ா த ர பத் தி ரி  ைகயா ள ர் க ள் சித்திரவதைகள் அல்லது குறைந்தது உடலில் அடிபட்டதையோ கேட்க விரும்புகிறார்கள். அந்த இரு கூறான உலகப்பார்வைக்குச் சான்றுகள் கிடைக்காவிட்டால், அவர்கள் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் திரும்பிப் போகிறார்கள், என்று ஏ.ஜே. சொன்னார். அன்று அவர் சொன்னதை நான் சுருக்கமாகச் சொல்கிறேன் ஏனெனில் என்னிடம் உள்ள குறிப்பில் முக்கிய கருத்துக்கள் மட்டும் தான் இருக்கின்றன
கைலாசபதி
ஆகியவர்க
1666 இலக்கிய
 
 
 
 
 
 

சிறப்பிதழ்
நாங்கள் துப்பாக்கிகளின் நிழல்களில் வாழ்ந்தபோதிலும், தினமும் வாழும் எம் வாழ்க்கையில் தினத்தனம்தான் உள்ளது,. எங்கள் நகரத்திலும் குடாநாட்டிலும் சாதாரண சனங்கள் தான் வாழுகின்றார்கள். அவர்களிடம் இருப்பதும் சாதாரண மனித குணங்கள் தான். அதிகமான மக்கள் சாட்சிகளாக வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். முரண்பாடுகள் நிறைந்த, வாழ்க்கை தெரிவிக்கும் அமைதியைக் குலைக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கொரு தாயகம் தேவை என்று தேடினோம். அது முடிவில் மக்களுக்கு வீடு கூட இல்லாமலாக்கி விட்டது. அது தான் சோக விதி. சித்திரவதையும் கொலைகளிலும் பார்க்கத் துன்பந்தருவது அது."
OUTLOOK சஞ்சிகையில் 1995இல்/N எனக்குக் கிடைத்த முதல் வேலை I யாழ்ப்பாணத்தில் தான். சஞ்சிகையின் ஆரம்ப ன் இதழுக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேகமான பேட்டியொன்றை எடுப்பது னி தான் என் வேலை. முதலாவது இதழ் ஒக்ரோபர் முதல் கிழமை வரும். அதற்குத் தயாராக, அதற்கு முன்னரே இந்தியாவுக்கு GF வந்து விடலாம் என்று தான் நான் நம்பினேன். ல் ஆனால் இலங்கையில், என் பயணம் ஒரு
குறிப்பிட்ட இடத்திலிருந்து, போக வேண்டிய 6) மற்ற இடம் நேரான பயணமாக ம் அமையவில்லை. அது வளைந்து வளைந்துY
(ର ல் 6) வேண்டியதொன்றாயிற்று. பல அடுக்குகள் உடைய ஆ ட் சி க ஞ ம் , அதிகாரங்களும் கொண்ட, இடங்களுக்கூடாகச் செல்ல வேண்டியதொன்றாயிற்று.
சி, சிவத்தம்பி ளிலும் ஏ.ஜே.
பில் பெரிய
ஆளுமை 1995, செப்ரெம்பர் 26 வரை, இலங்கை இராணுவத்திடமிருந்து உத்தியோக ரீதியான அனுமதிக் கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் என் பயணத்தை நான் தனித்தும் செய்ய வேண்டியதாகவும் போய்விட்டது. இலங்கை இரண்டு நாடுகளாகப் பிளவு பட்டிருந்தது. ஒன்று இலங்கை இராணுவத்தின் ? கட்டுப்பாட்டிலும், மற்றது தமிழீழப் புலிகளின்

Page 32
ஆணையிலும் இருந்தது.
ஏ.ஜே. கனகரட்னா
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது ஏறக்குறைய சாத்தியமற்ற விசயம். அக்காலத்தில் யாழ்ப்பாணம் புலிகளின் கோட்டை. அங்கு செல்வது பத்திரிகையாளருக்கு மிகவும் கஸ்ரமான விசயம். ஏனெனில் இலங்கை அரசு அவர்களை யாழ்ப்பாணம் செல்ல வேண்டாமென்று தடை செய்திருந்தது. செப்ரெம்பர் 28இல், நான் என் பயணத்தை வவனியா செல்லும் தள்ளாடும் புகையிரத்தில் ஆரம்பித்தேன். வவனியா தான் சட்டப்படியான, உளவியல்ரீதியான, நாட்டைப்பிரிக்கும் எல்லை. நான் தமிழனாக இருந்தமையால், தாண்டிக்குளத் தடைப் புள்ளிவரை, அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லும் கூட்டத்துடன், நானும் கரைந்து போகக் கூடியதாக இருந்தது. இலங்கைப் படையினரால் விரைவாகச் சோதிக்கப்பட்ட பின், கடைசி தடைப்புள்ளிக்குச் செல்வதற்கு பஸ் ஏநினேன். அதன்பின், ஒர் இரும்புப்
/Nபாலமொன்றில் 'இதன் பின்னர் உங்கள்
க சொந்தப் பாதுகாப்பில் செல்லுகின்றீர்கள்”
என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பின் வந்த,
(6
புலிகளின் பிரதேச ஆரம்பம்வரை, ஒருவருக்கும் சொந்தமில்லாத நிலத்தூடாக கடினமான
ர்ெ சைக்கிள் பிரயாணம். கடந்த ஒரு தசாப்தமாக,
ஆ/இலங்கை எல்லைகள் அசைந்து
கொண்டிருந்தன. இன்று, அகதிகளின் குடிசைகள் அத்தீவின் குறுக்காக, ஒரு புதிய புறவெல்லையை உண்டாக்கி இருக்கின்றன. புவியியல் ரீதியாக, புதிய எல்லை சாதாரணமான ஒரு வி ல் வ டி வ ம |ா க பெரும் இ கிழக்கிலிருந்து மேற்குவரை, O O. நீளுகின்றது - மேலே வடக்கே ஆழந்த کے உள்நாடு வரைக்கும் தெற்கே இல் கடற்கரை வரையும் செல்கின்றது. இலங்கை 6I(կ&Սuւ அர சாங் க ங் களு க் கும்
தமிழீழப் புலிகளுக்கும் நடந்த 18 வருட யுத்தம் இந்த எல்லையை சிருட்டித்துள்ளது. இந்த எல்லைக்குள் இரகசியமாக பயம், கூட்டுறவு, சகவாழ்வு இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
O இலங்கைப் படையினர். புலிகள்,
கிராமத்தவர்கள், யுத்தத்தில் ஈடுபட்ட மற்றுமுள்ளவர்கள் ஆகியோருக்கிடையில்
 
 
 
 
 

சிறப்பிதழ்
சிலவேளைகளில் நலக்குறைவான போர்நிறுத்தமும் உண்டு. இதைத்தான் ஏ.ஜே. பல அடுக்குகள் கொண்ட, ஆனால் எளிமையான உரைநடையில் படம் பிடித்துக் காட்டுகிறார். அது இரு எதிரெதிர் நிலையைத் தவிர்த்தது.
இந்தப் பூமியில் தான், படுகொலைகளைப் பற்றிய பயங்கர நினைவுகள், இரத்தத்துக்கு இரத்தம் என்ற தர்க்கத்தை நீடித்திருக்கச் செய்து வேரூன்ற வைத்துள்ளது. திடுமெனத் தோன்றும் எல்லைகளில் "ஒருவருக்கும் சொந்தமில்லாத நிலம்” அடங்கியுள்ளது. அதனால் பொதுக் கருத்துக்கு இடமுள்ள வெளியும் அதில் அடங்கியுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு நெருக்கமானவனும், அதே வேளையில் அந்நியனுமாகிய இந்தியத் தமிழனாகிய நான் இந்த ஒருவருக்கும் சொந்தமில்லாத/N இடத்திலிருந்து ஐம்பது வருட நெருக்கடியை எழுத உட்கார்ந்திருந்தேன். அப்போது என் ன் மனதில் தட்டுப்பட்ட முதல் பெயர் ஏ.ஜேயினுடையது. இந்தப் பயணத்தைப் பற்றி னி அவர் எப்படி எழுதியிருப்பார் என்பதை Í என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏ.ஜே.யைப் பற்றி அங்கே இருந்த رco0 رlf பையன்கள் கேள்விப் பட்டிருக்கவில்லை. ற் அவர்கள், சுற்றிவளைக்கப்பட்ட உலகத்தவர்களின் மனநிலையில், ஒன்றும் தெரியாது இருந்தார்கள். இந்த மனிதர் ம் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு, வளர்ந்தN/
பொருளாதாரச் சூழலில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துப்
இலக்கியம்
அனுபவங்கள் புலம் பெயர்ந்த வர்கள் 8 பலரிலும் பார்க்க, உலக கலை TL6) இலக்கியம், கருத்துக்கள்
ஆ கி ய வ ற் று ட ன் தொடர்புற்று இருக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்ல முயற்சித்தேன். யாழ்ப்பாணத்துப்
- Արկաng]
புலப்பெயர்வு பொஸ் ரனிலிருந்து பிறிஸ்போண்வரை மொத்தமாகப் பரந்திருந்தது. ஏதோவகையில் புலம்பெயர்ந்தவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப்
பணியாற்றும், மெலிந்த, உயரத்தில் குறைந்த இவரிலும் பார்க்க, உலக அறிவில்

Page 33
ஏ.ஜே. கனகரட்னா
குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். கைலாசபதி, சிவத்தம்பி ஆகியவர்களிலும் பார்க்க ஏ.ஜே. பலவகையில் பெரிய இலக்கிய ஆளுமை என்று அவர்களுக்குச் சொல்ல நான் முயற்சித்தேன். இலக்கியக் குணாம்சங்களைப் பத்திரிகைத் துறைக்குக் கொண்டு வந்தவர் ஏ.ஜே. என்றும், உலக இலக்கிய எழுத்துக்களை மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கச் செய்தவரும், ஏ.ஜே. என்றும் அவர்களுக்குச் சொன்னேன். என்னுடைய அவதானிப்புகள், கற்பனையும் புனைகருட்டும் என்று பையன்கள் அவற்றை ஒதுக்காதது, அவர்களுடைய தனிச்சிறப்பான அம்சம்.
நான் யாழ்ப்பாணத்தை ஒக்ரோபர் 2ஆம் திகதி அடைந்தேன். காந்தி ஜயந்தி தினத்தில், துப்பாக்கித் தூக்கிக் கொண்டு திரிந்த கொரில்லாக்கள் என்னைச் சூழ்ந்திருந்தது ஒரு முரணாக எனக்குத் தோன்றியது. நான் யாழ்ப்பாணத்தில் நின்ற ஒரு வாரமும் பல்கலைக்கழகத்தினர், கவிஞர்கள், போராளிகள், பொது மக்கள் என்ற பலரும் அந்தப் போரை இதிகாச மகாபாரதப் போர் G என்றே வருணித்தனர். “நாங்கள் தான் சிறுபான்மையினராகிய பாண்டவர்கள். 6OJ கெளரவர்கள் ெ 曾 o யி
ரவTகள பருமபானமையlனரான N: சிங்களவர்கள். இறுதியில் சிறுபான்மையினர் வெல்வார்கள்" இதுதான் அவர்களுடைய பொதுவான பல்லவி.
ஆனால், ஏ.ஜே.யை என்னால் சந்திக்க முடியவில்லை. ஏ.ஜே. நோய்வாய்ப்பட்டிருந்து குணமாகி வருகிறார், அவர் மிகவும் வலுவற்று இருக்கிறார் என்று சொன்னார். கவிஞர் யேசுராசா, ஞானம் ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒரே ஆளாக நான் இருந்துகொண்டு, மகாபாரதத்தை ஏ.ஜே.யின் வியாக்கியானத்தை நினைவுப் படுத்திக் கொண்டேன். “பாண்டவர்களைப் போல, நாங்களும் யுத்தத்தில் வெல்லலாம். பாண்டவர்களைப் போல இறுதியில் இறந்தவர்களின் உடல்களும், முறிந்த பனைகளும், எரிந்த நிலங்களும்தான் எங்களுக்கு ஆளக்கிடைக்கும்” என்றார், 1993இல் ஆறு வருடங்கள் கழிந்து நான் திரும்பிப் ° போனபோது, இன்னும் யுத்தம் தொடர்ந்து தன்னழிவைச் செய்து கொண்டிருந்தது.
 

சிறப்பிதழ்
ஏ.ஜேயின் தரிசனத்துக்கு மெளனமான சான்றாகும். இந்தத்தரிசனம் தான் ஏ.ஜே.க்கு நவநாகரீகப் பண்பையும் கூரறிவையும் கொடுத்தது. மாயா யதார்த்தத்தில் குறைகாணும் தைரியத்தையும் கொடுத்தது. கஷ்டமான சூழலிலும் தன் எழுத்தைத் தொடர சக்தியையும் கொடுத்தது. ஆனால் ஏ.ஜே க்கு என் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றுண்டு. அவர் தனிய இதிகாசங்களை வியாக்கியானப்படுத்தும் ஒருவராக மட்டும் நின்றுவிடக் கூடாது. இதிகாசத்தைப் படைக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும், ஆட்டிக் குலுக்கும் அனுபவங்களை நேரில் பார்த்த, மிகுந்த உணர்திறனுடைய சாட்சி அவர் செக் எழுத்தாளரான இவான் சிளிமா ஒருமுறை சொன்னார்: "ஆழ்ந்த அனுபவங்கள் பெரும் எழுத்தாளனாக ஒருவனை ஆக்காது. ஆனால் حلر பெரும் இலக்கியம் ஆழ்ந்த அனுபவங்கள் இல்லாமல் எழுதப்பட முடியாது என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. ே மனசாட்சியுள்ள வியாக்கியானக்காரரிலிருந்து ஓரி தன் கால வரலாற்றுப் பதிவாளராக மாற
வேண்டிய காலம் ஏஜேக்கு வந்துள்ளது. எனது சிறிய இவ்வெழுத்து நீண்டதொன்றை எழுத ரெ அவரைத் தூண்டுமாயின் நான்
யாழ்ப்பாணத்து மக்களுக்குச் செய்ய வேண்டிய ẩ) கடன்களைச் செய்தவனாகி விடுவேன். ெ ஏனெனில், யாழ்ப்பாணத்தவர்களின் போராட்டம் தான் எனது தொழிலின் மையப் பரப்பாக ஒரளவு இருந்தது.
பின் குறிப்பு : நான் மெதுவாக எழுதுபவன். என்னை எழுதச் சொல்லி பணிக்கிறவர்கள் நிச்சயமாக பிறரைத் துன்பப்படுத்தி இன்பமடைபவர்கள். பத்மநாப ஐயர் அப்படிப்பட்டவர். அவர் தன் நண்பர்களைத் துன்பப்படுத்தி இன்பமடைபவர். காலக்கெடுவுக்குள் எழுதி முடிக்காதவர்களை அவர் ஏன் எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்? சிலவேளை, அவர் தன் படிப்பினைகளை, ஹொலிவுட்டைப் பற்றி ஆய்வுசெய்த Slavoi Zizek 6TQg Su Enjoy your Symptom 6T6ip IIG565 bibg கற்றிருப்பாரோ தெரியவில்லை. ஒரு கடிதம் அது போக வேண்டிய இடத்திற்கு எப்பொழுதும் போய்ச் சேரும் என்பது சிசிகென் கண்டுபிடிப்பு. அது போன்று தான் பணிக்கப்பட்ட எழுத்து தன் கதவடிக்கு இறுதியில் வந்தடையும் என்பது ஐயரின் நம்பிக்கையும் போலும். V, O

Page 34
حصصبر
செல்லா கனகநாயகம்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஏ.ஜே.கனகரட்னாவை என் சக ஆசிரியராகவும் நண்பராகவும், புலமையாளராகவும், தி ற |ா ன ரா ப் வ |ா ள ர |ா க வு ம் மொழிபெயர்ப்பாளராகவும் எனக்குத் தெரியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆரம்ப கால ஆண்டுகளில் ஒரு முக்கியமான ஒரு கல்வி நிறுவனமாகத் தன் பிம்பத்தை வரையறுத்துக் கொண்டிருக்கையில், பல்கலைக்கழக ஆசிரியர்களாக, அந்நிகழ்விடத்தில், ஏ.ஜே உட்பட, பலர் இருந்தோம். தங்களுக்கென்று தனியோரிடத்தை வகுத்துக் கொள்ளக்கூடிய புலமைக்கும் பெறுமானங்களுக்கும் எடுத்துக் காட்டாக, ஒரு பல்கலைக்கழகம் போற்றி
வளர்க்கக்கூடிய புலமையாளர்கள் பலர் அங்கு ட தேவைப்பட்ட காலமது. ஏஜேயுடன் அவரைப்
G
போன்ற பலர் அந்தக் குழுவில் உயர்ந்து
60J நின்றார்கள். இன்று, இருபது ஆண்டுகள்
مسی
வெளிநாட்டில், பல்கலைக்கழக வாழ்வை முற்றுமுழுதாக அர்ப்பணித்த 6 புலமையாளர்களுடன் வாழ்ந்த பிறகு, புலமையாளர்களுக்குரிய காணற்கரிய அம்சங்களின் பங்களிப்பை ஏ.ஜே கொணர்ந்தவர் என்பதை நான் உணர்கிறேன் ஏ.ஜே. போன்ற ஆளுமை உள்ள ஒருவரின் இருப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்தது ஒரு கெளரவமாகும்.
தளியாளுமை என்ற முறையில் ஏ.ஜே
தன்னலமற்றவர். பல்கலைக்கழக ஏணியில் ஏற
வேண்டும் என்ற எந்தவித ஆசையும் அற்றவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். தன்னிகரில்லாதவர். பொருளாசை அற்றவர். ஆகையால் அவர் சொல்பவை முழுச் சார்பின்றி அமைந்திருக்கும். அத்துடன் அவர் தேவைகள் சொற்பமாகையால், அவர் சொன்னவையும் செய்தவையும் பூரணமான பெருந்தன்மையுள்ளவை. தவிர்க்க முடியாத, படிநிலை கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பில், அவர் தனித்து நிற்கக் கூடியவர். தனக்குச்

ஒரு திறனாய்வாளனின் உருவப்படம்
சரியென்பதை எக்காரணம் கொண்டும், இம்மியளவும் விட்டுக் கொடுக்காத தன்மையும், அவர் நிலைநாட்டிய வாய்மைத் தரங்களும் அவரைச் சந்தித்த அனைவருடைய மதிப்பையும் பெற வைத்தன. எனக்கு அவருடன் ஏற்பட்ட ஊடாடல்கள், இலக்கியம் சம்பந்தமான ஆலோசனைகள், அவருடைய அனுபவச் செல்வத்திலிருந்து நான் பெற்றவை அனைத்துமே, எனக்கு எப்போதும் மகிழ்ச்சியானவை. அவருடைய ஆளுமையை ஒரு வரியில் சொல்வதானால், எந்தச் சிறுமைகளுமற்றவர் அவர் என்று சொல்ல முடியும். அற்ப குணம், காழ்ப்புணர்ச்சி, மனம் நோகச் செய்யும் குணம் ஆகியவைகள் அவர் இயல்பில் இல்லை. முரணணி, நகைச்சுவை ஆகிய உணர்வுகள் உள்ளவர். அதேவேளை நேர்மையையும் கைவிடாதவர். தன் தனியாளுமைளினால் சுய வாழ்வையும், புலமையாளனின் வாழ்வையும், அப்படி இணைக்கிறோம் என்ற உணர்வில்லாமலே இணைத்தவர். அது நிறைவேற்றச் சிரமமான ஒரு விசயம். பிறவற்றை கைவிட்டு, கற்றலை மட்டும் தன் தொழிலாகக் கொண்ட ஒரு புலமையாளன், குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் பயன்விளைப்பவனாக மாறிவிடுகிறான். அத்துடன் அவன் சுய மையப்பட்டவனாகவும், சுயதிருப்தி அடைபவனாகவும் மாறிவிடுகிறான். கல்விசார் ஆக்கக் கூறுகளை அலட்சியப் படுத்தி, சமூக வாழ்வில் ஈடுபடும் இரண்டாவது வகைப் புலமையாளன், அவனிடம் இருந்து எதிர்பார்க்கும் கல்விப் பங்களிப்பில் இருந்து தவறி விடுகிறான். ஏ.ஜே. இரண்டையும் கவனித்து ஒன்றிலிருந்து மற்றதற்குச் சுயப் பிரக்ஞையின்றி அசைந்து கொண்டிருந்தவர்.
அவர் பங்களிப்பின் ஓர் அம்சமாகிய விமர்சனத்தைப் பார்ப்பதே, இங்கே என் நோக்கம். அந்த அம்சம் என்னை ஈர்த்தது. அது ஆக்க வளமுடையது. அவர் புலமைத் துவத்துக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி நான்

Page 35
ஏ.ஜே. கனகரட்னா
சிந்திக்க, சிந்திக்க அவரின் சாதனை பற்றிய என் எண்ணத்துணிபு தெளிவடைந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில உயர்ந்த புலமையாளரிடம் அவர் பெற்ற பயிற்சிநெறி அதற்குரிய காரணத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆங்கில திணைக்களம் அதன் குணரீதியான தரத்திற்காக, சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு காலத்தில், ஆங்கில சிறப்புப் பட்டப் படிப்பை அவர் முடித்தார். அவருக்குக் கற்பித்த, அவருடன் கற்ற, பல பல்கலைக்கழக மாணவர்கள், பின்னாளில் பல களங்களில் முக்கிய பங்களிப்புக்கள் செய்தவர்கள். பத்திரிகையாளராக அவர் கடமையாற்றிய காலமாகவும், அல்லது தமிழ் இலக்கிய
நிகழ்களத்தில் அவர் நிகழ்த்திய ஊடாடல்களாகவும் அச்சாதனைக்குக் காரணம் இருக்கலாம். கடந்த பல
தசாப்தங்களாக எழுதிவரும் முன்னணித் தமிழ் எழுத்தாளர்களில் அவருக்குத் தெரியாதவர் /Nஎவருமில்லை. இவை அனைத்தும் அவருக்கு க அகன்றதோர் அனுபவத்தையும், உணர்திறனில் சுவைநுட்பங்களையும் கொடுத்துள்ளன. (6 அவை அவர் எழுத்தில் வெளிப்பட்டுள்ளன.
GOJ ஓர் அந்நியன் ஏஜேயில் ஒர் அடிப்படை
முரணைக் காண்பான்: சதா இலக்கியத்தை Yவாசிக்கும் ஒருவர் இலக்கியத்தை எக்காலமுமே கற்பித்ததில்லை. இலக்கியத்தில் கலைக்களஞ்சிய வாசிப்பு இயல்புள்ள அவர் இலக்கியத்தைக் கற்பிக்க அழைத்த போதெல்லாம், அவ்வழைப்புக்களைப் பணிவுடன் மறுத்திருக்கிறார். திரும்பிப் பார்க்கையில், அத்தீர்மானம் முன்னொருகால் தோன்றியது போல் அத்தனை புதிரானதன்று. இங்கே நான் விமர்சகராக, அவர் பங்களிப்பின் முனைப்பான அம்சங்களின் ஒன்று இருக்கிறது. அதாவது, இலக்கியத்தில் முழு மனதுடன் தன்னை அர்ப்பணிப்பது. பின்னர் அதைக் கற்பிப்பதில் இருந்து தன்னைத் தூரப்படுத்திக் கொள்வது. தம் வேலைகளை ச்சட்டகப் படுத்தும் உரையாடலின் கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து, தன்னை விலக்கிக் கொள்வது. இலக்கியத்தைக் கற்பிக்கும் நாங்களே, தவிர்க்க முடியாதவகையில், எங்களைச் சில செல்வழிகளில் இடங்குறிக்க வேண்டி இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். விமர்சனச் செயல் குறித்து எங்கள் நிலைபாடு
 

சிறப்பிதழ்
என்ன என்பதை மாணாக்கர்களுக்கு விளக்க வேண்டிய தேவை | எமக்குள்ளது. இப்போதுள்ள வைதிகங்களும் (orthodoxes) விதிமுறைக் (canonicity) கருத்தியல்களும் எம் வாசிப்பைப் பதனப்படுத்தியுள்ளன. நாம் பிறருக்குச் FtfegfLDLD mr uiu வளரவேண்டும் என்ற முன்முடிவுடன் பலவேளைகளில் இருக்கிறோம். மற்ற விமர்சகர்கள் எவற்றை நாம் வாசிக்க, கற்பிக்க, அலச வேண்டும், என்று சொன்னதும் அதை நிறைவெற்ற வேண்டும் என்ற தார்மீகக் கடப்பாட்டுக்கும் நாம் உட்படுகிறோம். அப்படியான அணுகு முறையில் பயன்கள் உள்ளன. குறிப்பாக, ஓர் ஒழுங்கை நிர்மாணிப்பது, உரையாடலின் உருவரைகளைப் பேணுதல் ஆகியவை. ஆனால் அதேவேளை அதில் எல்லைக் -9 பாடுகளும் உள்ளன. அதாவது, முக்கியமான
பல கண்டுபிடிப்புக்களுக்குரிய கதவுகளைத் ல்
திறப்பதை அது மூடியும் விடுகின்றது. 6.
ஏ.ஜே.யைப் பொறுத்தவரையில், இப்படியானவற்றுடன் ஒத்துப்போக
வேண்டிய தேவை அவருக்கு ஒருபோதும் ெ இருக்கவில்லை. அதனால் அவரின் வாசிப்புப்
பரப்பு எப்போதுமே எல்லைகளைத்
தாண்டியவை. புனைவு, கவிதை, நாடகம், நி உரைநடை, விமர்சனம், சுருக்கமாக எவை எவை
அவரை ஆட்கொண்டனவோ, எவற்றின்
குணம் அவருடைய தரத்திற்கு ஏற்றனவோ, கி அவற்றை, அவை ஆங்கிலத்தில் எழுதப் b பட்டவையாக இருந்தாலும் சரி*/ மொழிபெயர்ப்பில் இருந்தாலும் சரி வாசித்தார். ரஷிய நாவல்களில், ஃபிரெஞ்சுக் கவிஞர்களின் கவிதைகளில், பெற்றோல்ற் பிறெக்ட் போன்ற ஜேர்மன் ஆசிரியர்களின் நாடகங்களில், அவர் தன்னைமறந்து ஆழ்ந்திருந்ததை, அங்கில பீடத்தில் நான் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதிய இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசித்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகத் தேவையான ஆங்கில மொழியைக் கறபித்த நேரத்தைத் தவிர்த்த நேரங்களில் திணைக்களத்தில் இருந்து அவரின் இலக்கிய உலகில் முழுவதாக ஆழ்ந்திருப்பார். உண்மையில் அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துக்களில் ஆய்வுக்காகத் தீவிரமாக ஈடுபட்டு, அவரின் பிரசுரிக்காத மூலப்படிகளை
LSL SSSL S SLSL SLL SSLLSS SSL SSL SS S0LS SS LSL SLSL S SS S SSL SSL SS SLS S SL SS SLSS SS SS SSL SSL SS SS

Page 36
ம்மதிப்பீடுகள்,
ஏ.ஜே. கனகரட்னா
நான் தேடிக் கொண்டிருக்கையில் அவை எங்கு கிடைக்கும் என்று எனக்குக் காட்டியவர் அவரே. அழகு சுப்பிரமணியத்தைப் பற்றி பிறகு நான்
எழுத்தாளர்கள் அவருக்குப் பரிச்சய மானவர்களே. பல நன்னூற்கூற்றுத் திரட்டுடன் (eclecticism) கூடிய அவரின் மிகுந்த கூருணர்வும், விமர்சன மனமும் அவரை ஒரு திறமையான
விமர்சகனாக உருவாக்கியது.
அவர் எழுதிய நூற்களின் பட்டியலைத்
தொகுக்கும் ஒரு திட்டத்தை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
அவ்வேலை சிரமமானது. ஏனெனில், குறிப்பாக
சில சஞ்சிகைகளில் பிரசுரிக்க முயற்சிப்பது
அவரை எக்காலமுமே கவரவில்லை. சரியான
வாசகர் இருக்கும் என்று அவர் நினைத்த
சஞ்சிகைகளில் மட்டுந்தான் அவர் தன் கட்டுரைகளைப் LiTajirfismi. (Third Eye) at airp
சஞ்சிகை அவருக்கு ஒரு சிறப்பிதழ் போட்டது. அதில் அவருடைய பல கட்டுரைகள், நூல் மொழிபெயர்ப்புக்கள்
G ஆகியவற்றை வெளியிட்டு ஒர் அருமையான Gj
*
வேலையைச் செய்துள்ளது. ஒரு திறனாய்வாளனாக, ஒரு குறிப்பிட்ட எந்தப்
Y பள்ளியையும் சார்ந்தவரல்ல, அவர். இலங்கையில் திறனாய்வு, அது ஆங்கில மாகட்டும் அல்லது தமிழாகட்டும், ஒர் இனங்காணக்கூடிய பள்ளியையே பின்பற்றும் - தன்மைத்தது. அதில் மார்க்ஸ்பீய அணுகுமுறை
பிரபல்யமானதொன்று. ஆனால், திறனாய்வு
அணுகுமுறையை, பிரதியையே தீர்மானிக்க விட்டுவிடுகிறார் ஏ.ஜே. உதாரணமாக,
GT. 6F6, IT GOT fög5 Gof? (When Memory Dies) 6r 6&T p
நாவலின் மதிப்பீட்டில், வரலாற்று அணுகுமுறைளை அதிகம் எடுத்துக்
கொள்கிறார் ஏ.ஜே. நாவலைப் பற்றிய தீர்ப்பு.
இந்த அணுகுமுறையிலேயே ஓரளவு தங்கியுள்ளது. ஷியாம் செல்லத்துரையின் (Funny Boy) பற்றிய அவரின் மதிப்பீடு, வேறொரு, மிக வித்தியாசமான பார்வையில் (perspective) உள்ளது. வரலாற்று / சமூகவியல் வாசிப்பு அதில் காணப்பட்டாலும், எஃவ்-ஆர்லீவிஸ்
என்ற விமர்சகருடன் தொடர்புபடுத்தப்படும் ஒருவகை அணுகுமுறையை, அந்நாவல் வேண்டியுள்ளது. சிலவேளை அவ்வணுகு
எழுதியது ஏ.ஜே.யின் இடையீட்டின் நேரடி: விளைவே. இலங்கை - இந்தியத் தமிழ்
 

சிறப்பிதழ் ஐ
முறை அகன்றளவு அமைப்பியல்வாதம்
அல்லது புதிய வரலாற்றியல்வாதப் (New Historicist) பண்பும் கொண்டுள்ளது.
விமர்சன அணுகுமுறையைப் பிரதியையே தீர்மானிக்க விட்டுவிடுவதால், ! மதிப்பீட்டு அம்சத்தைக் கட்டாயமாகக் கைவிடாமல், ஏ.ஜே.ஆல் பிரதிகளை விரித்துரைக்க முடிகிறது. சாமர்த்தியமான வழிகளில், ஏ.ஜே. ஒரு விமர்சகராக, வாசகருக்கான தரங்களை நிர்ணயித்து விடுவார். விமர்சகர்களின் திறனாய்வுக் கடும்பதங்களால் (jargons) பிரதிகள் விழுங்கப்பட்ட, இக்காலத்தில் ஏ.ஜே.யின் அணுகுமுறை நுண்ணறிவுத் திறமுடையவை. ஆர்வத்தைத் தூண்டுபவை. மிகத் திறமையான விமர்சகர்கள் வெற்றிகரமாகச் செய்வதையே* ஏஜேயின் விமர்சனம் செய்கிறது. அதாவது, ரெ வாசகர்களைத் திரும்பவும் பிரதிக்கு அழைத்துச் t செல்கிறது. ஏ.ஜே. தன் திறனாய்வுக் கட்டுரைகள் அனைத்திலும் விளக்குவது, Iெ மொழிக்கும் அனுபவத்துக்கும் உள்ள தொடர்பே இலக்கியம் என்பதையே. இலக்கியம் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ெ அளவை நாம் பொருட்படுத்தாமல் அதைப் பார்த்தோமானால், இலக்கியம் என்பது இலக்கியத்தைப் பற்றியதே. உலகத்தைப் நிர் பற்றியது இலக்கியம், இலக்கியத்தைப் பற்றியது இலக்கியம் போன்ற, இலக்கியத்தின் விசித்திரமான சிக்கல்களை ஏஜே எப்போதுமே கி அறிந்தவர். அவருடைய திறனாய்வு வாசகர்கள் b எதை, எப்படி வாசிக்க வேண்டும் என்பதைப்x/ புகட்டும் வழியாகவே இருந்தது. தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்காமல் போய் விட்டிருக்கக் கூடிய, மொத்த ஆங்கில எழுத்துக்களையுமே ஏ.ஜே. தன் முயற்சியால் கிடைக்கச் செய்தார் என்பதை மறுக்க இயலாது.
இலங்கைத் தமிழ் எழுத்துக்கு, கணிசமான நீண்ட இலக்கிய வரலாறு இருக்கிறது என்று அது பெருமைப்படலாம். ஐந்து தசாப்தங்களுக்கு மேல் சிறந்த எழுத்தாளர்களை - கவிஞர்கள், சிறுகதை ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள் : ஆகியோர்களை - அது அளித்துள்ளது. எங்களுடைய குறுகிய எல்லைக்குள் நாம்

Page 37
நிற்கையில், பிற மொழிகளில் எழுதும் மற்ற எழுத்தாளர்களுடன் எங்கள் தகைமையை நாம் அளவிட முடியாமல் போகும் ஆபத்து எப்போதும் எமக்கு இருக்கிறது. அதனால் தான், குறிப்பாக ஏ.ஜே. போன்ற திறனாய்வாளர்களின் சேவை எமக்குத் தேவை. பிற ஒழுக்கங்களில், பிற இலக்கியங்களில் உள்ள ஆழ்ந்த அறிவை, ஏ.ஜே. போன்றோரே எங்கள் எழுத்துக்களுக்குக் கொண்டு வருகிறார்கள். ஏ.ஜே.பின் எழுத்துக்கள் எப்போதுமே தன்னடக்கம் உடையவை. அவர் தன் அறிவு விசாலத்தை ஒருபோதுமே ஆர்ப்பரித்தவரும் அல்லர். ஆனால், ஒருவகைப் புலமையால் தான் அவரின் எழுத்தில் தன்னடக்கமும் (modestry), சொல்லோட்டமும் (Fuency) ஏற்படடுள்ளன என்பது எப்போதுமே சந்தேகமற்றது. வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உரிய
விமர்சனத் தரத்தை
நிர்ணயிக்கும்
இந்த சைக் இன்னொரு நமக்கான ( தபால்காரர் 6n90ርሀጢc ሀጠ`ሑ°4 பள்ளிக்கூட இன்னொரு
செய்தி செ சைக்கிளுக் இரண்டு ச செய்திகளற முக்கியத்து5 சைக்கிளுக் செய்திகளை
துடித்தபடி
செய்தியறி திருப்புமு6ை வளைந்து எல்லா வீட் அவர்களுக் அவரவர்களு
 

வழிவகைகளை, ஏ.ஜே. தொடர்ந்து செய்வார் என்பது என் நம்பிக்கை.
பல்லாண்டுகளுக்கு முன் றொபற் ஃப்றொஸ்ற் என்ற அமெரிக்க கவிஞர் "போகாத தெரு’ என்றதொரு தனிச் சிறப்பான கவிதை எழுதினார். அந்தக் கவிதையில் தெருக்கள் பற்றி அவர் பேசுகிறார். அதில் பலர் பலமுறை நடந்த பாதையில் செல்லும் கவர்ச்சிபற்றிப் பேசுகிறார். ஒரு பயணம் செல்கையில் தெரு இரண்டாகப் பிரிகிறது. நிச்சயமற்ற தன்மைகள், சவால்கள் பல இருந்தபோதும், குறைவாகவே பழக்கமுள்ள பாதையில் செல்லத் தீர்மானிக்கிறார், கவிஞர். குறிப்பாக அதையே ஏஜேயும் செய்தார். கடந்த நாலு தசாப்தங்களாகத் தான் செய்த பணிகளை அவர் திரும்பிப் பார்த்தால் தனிச் சிறப்பான, LDTgpy Lu TTL-sT6ØT @@ விசயத்தைதான் செய்துள்ளார் என்று அவரால் உணர முடியும்.
O
486)6O Gus Gu
சைக்கிள் இருந்தால் செய்தி விரைவில் வந்தடைந்திருக்குமோ, களிடம்
ளிடம்
Ü (96160061.66?t lü)
சைக்கிள் இருக்கிறது.
ால்வதற்கென்றே தயாரிக்கப்பட்ட த எல்லா சைக்கிள்களைப் போலவே க்கரங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். ]ற சைக்கிளில் வருகிறவர்கள் பம் இழக்கும் தங்களின்
கென ாச் சேகரிக்கின்றனர் நகர்தோறும்.
நாடோடி வரும்
ந்த சைக்கிள் ன ஒன்றில் செய்தியைக் கூவியபடி திரும்புவதை டிலிருந்தும் எல்லோரும் காண்கின்றனர். கான செய்தியில்லையென்ற போதிலும் நக்கான செய்தியென்ற பாவனையுடன்.

Page 38
ܓܡܬܐ2
L
(6
எல்.வி. ராஜதுரை
கலாச்சார கமிசார்களின் ரசனை களுக்கும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் அவர்களது 'கறாரான அரசியல் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல், அதேவேளை, மார்க்சிய தரிசனத்திலிருந்து சிறிதும் வழுவாமல் தமிழ் மொழிக் களத்தில் பண்பாட்டுச் செயல் பாடுகளை ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக நிகழ்த்திக்கொண்டிருக்கும் மனிதர்;
கட்சி சார்ந்த அல்லது கலை இலக்கியம் சார்ந்த எந்தவொரு வட்டத்திற்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், அல்லது அந்த வட்டத்தையே தனது செல்வாக்கையும் புகழையும் பரப்பிக்கொள்ளும் ஊடகமாக ஆக்கிக்
ரை கொள்ளாமல் - எந்தவொரு அதிகார
பூர்வமான அங்கீகாரத்தையும் நாடிச் செல்லாமல், யாரையும் மகிழ்விப்பதற் கென்றோ அல்லது மட்டந்தட்டித் துன்புறுத்துவதற்கென்றோ தனது மேதமையைப் பயன்படுத்தாமல், இறுமாப்போ, மமதையோ இன்றி "விரிந்த பரந்த இந்த உலகத்தின் எண்ணற்ற அறிவுக் கனிகளில் திரட்ட முடிந்த அளவிற்குத் திரட்டி வைத்திருக்கிறேன். உங்கள் கை கொள்ளு மளவிற்கோ அல்லது இன்னும் கூடுதலாகவோ அள்ளிச் செல்லுங்கள்” எனத் தன் வாயிற் கதவுகளை அகலத் திறந்து வைத்திருப்பவர்;
கத்தோலிக்கக் குடும்பப்பின்னணியில்
பிறந்து, ஆங்கிலத்திலும் இலத்தீனிலும் ஆழ்ந்த '
புலமை பெற்று - கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வியும் அதனோடு சேர்ந்து இலக்கிய இரசனையையும் புகட்டியவர். அதைவிட அதிக எண்ணிக்கையிலான வாசகர்களுக்கும் இரசிகர் களுக்கும் கலை இலக்கியப் படைப்புகளின்

தான் வாழ நேரிட்ட மண்ணை விட்டு நகர மறுக்கும் பிடிவாதத் துறவி
நுண்மாண் நுழைபுலங்களை விதந்தோதியவர்;
நேர்மை, வாய்மை, தன்னடக்கம், எளிமை ஆகிய நற்பண்புகளின் இலக்கணம். கட்டைப் பிரமச்சாரி. இருபதாண்டுகளுக்கு மேலாகப் போர்க்களமாய், கொலைக்களமாய்த் திகழும் யாழ்ப்பாணத்திலிருந்து வரலாறு அவரது நேசத்துக்குரியவர்கள் பெரும்பாலானோரைப் பறித்துச் சென்றுவிட்டது. அந்த இலக்கிய ஞானியின் இருப்பிற்கான ஒரே ஊட்டமான புத்தகங்கள் கூட அவருக்குப் போய்ச் சேர்வதில்லை. அவர் விரும்பியிருந்தால் ஐரோப்பாவிற்கோ, வட அமெரிக்காவிற்கோ, அவுஸ்திரேலியாவிற்கோ அல்லது இந்தியாவிற்கோ புலம்பெயர்ந்து சென்று வாழ்க்கையின் வசதிகளை அனுபவித்து இருக்கலாம். ஆனால் அவரோ, விவிலியப் பாத்திரம் ரூத்தைப் போல "நான் உம்மை விட்டுப் போகும்படி இன்னும் என்னைத் தூண்டவேண்டாம். நீர் எங்கு போனாலும் நானும் வருவேன். நீர் எங்கு தங்குவீரோ அங்கு நானும் தங்குவேன், உங்கள் இனமே என் இனம். உங்கள் கடவுளே எனக்கும் கடவுள். நீர் எந்தப் பூமியில் இறந்து புதைக்கப்படுவீரோ அதே பூமியில் நானும் இறந்து புதைக்கப்படுவேன். சாவு ஒன்றே உம்மையும் என்னையும் பிரிக்கும்” எனத் தான் வாழ நேரிட்ட மண்ணை விட்டு நகர மறுக்கும் பிடிவாதத் துறவி.
அவர்தான் ஏ.ஜே. கனகரட்னா. ஏஜேயின் ஆக்கங்களின் எண்ணிக்கை, அவரது விரிந்த படிப்பு ஞானம், விசாலமான அக்கறைகள், ஆழமான கிரகிப்பு ஆகியவற்றுக்கு நியாயம் செய்யாத அளவிற்கு - ஒப்பீட்டு நோக்கில் - மிகச் சிறியது. எழுதிக் குவித்துத் தன்னை நிலைநாட்டிக் கொள்வதை விடப் பயிற்றுவிப்பதும் பகிர்ந்துகொள்வதுமே

Page 39
ஏ.ஜே. கனகரட்னா
ஒரு நல்லாசிரியனின் மேலான கடமை என்பதுதான் ஏ.ஜே.யின் மார்க்கம். அவரது மாணவர்களின், இலக்கிய நண்பர்களின், வாசகர்களின் அன்புக்
? கட்டளைகளின், வற்புறுத்தல்களின் விளைவாக
அவரிடமிருந்து 'கறக்கப்பட்ட ஆக்கங்கள் தான் அதிகம்.
இலங்கைத் தமிழ் மார்க்சிய இலக்கிய விமர்சகர்களான கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான், சிவசேகரம் அளவிற்கு தமிழ்நாட்டில் நன்கு அறிமுகமானவரல்லர் ஏ.ஜே. அவர் ஆங்கிலத்திலிருந்த தமிழில் பெயர்த்த கட்டுரைகளின் தொகுப்பன 'மார்க்சிமும் இலக்கியமும் - சில போக்குகள்' (அலை வெளியீடு, யாழ்ப்பாணம்) தமிழக மார்க்சியச் சிந்தனையாளர்களிடையே அறிமுகம் பெற்றது. அவருடைய கட்டுரைகளின் தொகுப்பான 'மத்துவைக் கண்டோரும் படித்தோரும் இங்கு மிகச் சிலரே. மார்க்சியமும் இலக்கியமும் -
Lசில போக்குகள்' நூலைத் தமிழக
வைத்த நண்பர் இ. பத்மநாப ஐயர், 1980களின்
எழுத்தாளரிடையேயும் அறிமுகம் செய்து
ட இறுதியில் லண்டனுக்கு புலம்பெயர்வதற்கு C முன்னர், 'மத்துவின் இரண்டாம் பதிப்பைத்
0
ܔܠ
தமிழகத்தில் அச்சிட்டு வெளிக்கொணரப் பெரிதும் முயன்று தோல்வியடைந்தார். அந்த (நற்பேற்றினை நம் காலத்தின் மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியும் இலக்கிய விமர்சகருமான எஸ்பொ.தட்டிச் சென்றிருக்கிறார்.
G
பொருளாதார ம் , சுற்றுச்சூழல், உளவியல், ஆங்கில மொழி வரலாறு, சோசலிச சமுதாயத்தின் ஊனங்கள், அமெரிக்க இலக்கியம், திரைப்படக் கலை, மருந்துகள், பிராணவியல் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களைக் கடைந்து அவற்றின் சாரத்தை எளிதில் உண்டு செரிக்கத்தக்க பசும் வெண்ணெயாகத் தந்துள்ளார் ஏ.ஜே. ஏறத்தாழ 20-25 ஆண்டுகளுக்கு முன் பெரும் விவாதங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் தூண்டிவிட்ட
ஏ.ஜே.
அந்நூல்கள் குறித்து தனது மதிப்பீடுகளையும் வழங்கியுள்ளார். கற்றுத் தெளிந்ததைத் தன் மாணாக்கர்களில் கடைகோடியில்
k
U6)6660
இரு க் கு யாழ்ப்பாணம் க ல |ா ச்
 
 
 
 
 

சிறப்பிதழ்
இருப்பவர்களுக்குக்கூடப் புரிய வைத்தல் என்ற நெறியுடன் இயங்கும் இலட்சியப் பிடிப்புடைய
ஆசிரியனாகத் தொழிற்படுகின்றார்
ஏ.ஜே.
அவர் 'பொழிப்புரை'யும் மதிப்பீடும் நல்கிய அந்த நூல்களின் உள்ளிடுகள் பெரும்பாலும் கால வழக்கொழிந்துவிட்டன என ஒருவர் வழக்காடலாம். ஆனால் மத்துவின் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயைப் போல, அந்த நூல்களிலுள்ள சில தகவல்களும் ஏ.ஜே.யின் மதிப்பீடுகளும் இன்னும் தம் பயன்பாட்டினை இழக்கவில்லை என்பதை அக்கட்டுரைகளைக் கூர்ந்து படிப்போர் உணர்வது திண்ணம்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்கப் பொருளாதார அறிஞர் கால்பி ரெய்த்தின் நூல்களிலுள்ள கருத்துக்களைக் காண்போர்
இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் 2
N
பிரச்சாரம் செய்யப்படும் "சுதந்திரமான சந்தைப் J
பொருளாதாரம்' என்ற நவ-தாராளவாத பொருளாதாரக் கருத்து எவ்வளவு போலித்தனமானது, பொய்யானது, அடிப்படையற்றது என்பதை விளக்கிக் கொள்ள மார்க்சியத்திடம் கூடச் செல்ல வேண்டாம். அதற்கு ஒரு பூர்ஷ்வா) பொருளாதாரவாதியான கால்பிரெய்த்தே போதும் என்பதை உணர்வர்.
சூழலியல், கானுயிர்ப் பாதுகாப்பு போன்றன உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் சமூக, (οι ιμ π (5 Gπ π. Φ π υ. போ ரா ட் டங்க ளி ன் மு த ன்  ைம ச்  ெசா ல் லா ட ல் க ளி ல் இடம் பெற்று ஸ் ள ன இரசாயனப் பொருள்கள், பூச்சிகொல்லிகள் முதலியன இயற்கைக்கும் உயிர்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தும் அழிவு குறித்த விவாதங்களில் 2O ஆண்டுகளுக்கு முன்பே அக்கறை செலுத்திய
ான்றவர்கள்
й ć u п ф எப்படி ஒரு
6)
ஏ.ஜே. ரெய்சல் கார்சன் என்ற பெண்மணியின்
Silent Spring என்ற (பல பதிப்புகளை) நூலின் சாரத்தை ஆறு பாகங்களில் பிழிந்து

Page 40
ஏ.ஜே. கனகரட்னா
தந்திருக்கிறார். Silent Spring என்பதை
'மெளன வசந்தம்' என்றோ அமைதியான இளவேனில்' என்றோ மொழிபெயர்க்காமல் - ஒலிக்காத
9 இளவேனில்' என்று தமிழாக்கம் செய்தமையே, தான் படிப்பனவற்றின் உட்பொருளை மிக எளிதாகச் சிறைப்பிடித்துவிடும் ஏ.ஜே. யின் புலமைக்குச் சான்று பகரும்.
உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டின் தந்தையாகக் கருதப்படும் பிராய்ட் பற்றிய மிகச் செறிவான, எளிமையான அறிமுகத்தை பிராய்டைத் தலைகீழாக நிறுத்திக் காட்டும் இயன் சுட்டி (anSut) என்பவரின் நூல் வழியாக வழங்குகிறார். கூடவே, அவர் மார்க்சிய அறிஞர் கிறிஸ்தோபர் காட்டவெல் பிராய்டிசம் மீது எழுப்பிய விமர்சனக் கூற்றுகளையும் நமக்கு 'போனஸா’கத் தருகிறார்.
། 'மத்து தொகுப்பில், தமிழகச் சூழலுக்கு இன்று மிகவும் பொருத்தப்பாடுடையதாக لصر நான் கருதும் கட்டுரை 'ஆங்கிலம் ட் வெற்றிவாகை சூடிய வரலாறு' தமிழ்ப் பயிற்சி மொழியாவதற்கும் ஆட்சி மொழியாவதற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆங்கில மோகிகளும் N/அல்லது 'தமிழால் முடியுமா?’ என்று வாய்பிளக்கும் சந்தேகப் பிராணிகளும் இக்கட்டுரையைக் கட்டாயம் வாசித்தல் நலம். ஒலி, இலக்கணச் சீர்திருத்தங்கள், பிற மொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியன குறித்த விவாதங்களினூடாக ஆங்கில மொழி ஏற்றம் பெற்றது குறித்த வரலாறு 'தமிழ்ப் டற்றாளர்களுக்கும் சில உண்மைகளை உணர்த்தும்.
'மருந்துகள் - வைத்தியர்கள் - நோய்கள்', 'பிரித்தானிய யாப்பு', 'அமெரிக்காவில் இலக்கியம்', 'திரைப்படம்: கோட்பாட்டுக் கொத்து', 'ஆயிரமுக வீரன்', 'அரசு முகியன ஏ.ஜே.யின் பன்முக அக்கரைகளுக்கான எடுத்துக்காட்டுகள். திரைப்பட விமர்சனம்' இன்று புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. எனினும், திரைப்படக் கலையின் அடிப்படைத் தொழில்நுட்ப, அழகியல் இலக்கணங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவோர் ஏ.ஜேயின் கட்டுரையிலிருந்து ஆதாயம் பெறுவர்
 

சிறப்பிதழ்
என்பதில் ஐயமில்லை. தான் படித்த நூல் அல்லது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருள் எவ்வளவு கடுமையானதாயும், தனது ஆசிரியத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் f விலகியதாகவும் இருப்பினும் அவற்றை ஆழ்ந்து கற்று, உள்வாங்கி, செரித்து, சாதாரண மாணாக்கருக்குப் புரியும் வகையில் எளிதாகவும், அழகாகவும் - தமிழிலேயே சுயமாக சிந்தித்து எழுதப்பட்டது போல - எடுத்துரைக்கும் ஆற்றலில் ஏ.ஜே.யை விஞ்சியவர்கள் மிகச் சிலரே.
எனவே, வெண்ணெய் உண்ண விரும்புவோர் 'மத்துவைக் கட்டாயம் தேடிப் பிடிக்கவேண்டும்.
1977 முதல் 2000 வரை ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலத்தில் ஏ.ஜே. எழுதிய கட்டுரைகள், மொழியாக்கங்கள் ஆகியவற்றில் தன்னால் திரட்டப்படமுடிந்த 28 ஆக்கங்களை எஸ்.பொ. செங்காவலர் தலைவர் யேசுநாதர் ^ என்ற தலைப்பில் வெளிட உதவியுள்ளார். ர 'மத்து’ கட்டுரைகளைப் பார்க்க, இவை ஒவ்வொன்றும் அளவிற் சிறியவை. சுருங்கக் கூறி விளங்கவைத்தல்' என்ற ஏ.ஜே.யின் பாணியிலமைந்தவை. 6OJ محسح
இத் தொகுப்பின் தலைப்புக் கட்டுரை செங்காவலர் தலைவர் யேசுநாதர், இரஷ்யக் கவிஞர் அலெக்ஸாண்டர் ப்ளாக்கின் பன்னிருவர் என்ற கவிதையின் இரசானுபவம் 1989ஆம் ஆண்டு வெளிவந்த எனது ரஷ்யப் புரட்சி: இலக்கியச் சாட்சியத்தின் முதல் அத்தியாயமும் கூட ப்ளாக்கிலிருந்தே தொடங்குகிறது. அந்த அத்தியாயத்தில் ஏ.ஜே. தமிழாக்கம் செய்திருந்த 'மார்க்சியமும் இலக்கியமும் - சில போக்குகளிலிருந்த சில கருத்துக்களை மேற்கோளாகக் காட்டியு மிருந்தேன். எனினும், அதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக் பற்றி ஏ.ஜே. இப்படி ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருப்பது அவ்வேளை எனக்குத் தெரியாமற்போயிற்று. தெரிந்திருப்பின், ப்ளாக் பற்றிய எனது புரிதலும் இரசனையும் வளம் பெற்றிருக்கும்.
கருத்தியல், அழகியல் ஆகிய இரண்டும் நேரிணையான தண்டவாளங்கள் மீது தனது

Page 41
ஏ.ஜே. கனகரட்னா
விமாசனப் புகையிரதத்தை நேர்த்தியாக ஒட்டிச் செல்கிறார் ஏ.ஜே.
இளம் எழுத்தாளர்களின் ஓ ஆக்கங்களைப் பொறுத்தமட்டிலும் அல்ல, புகழ்பெற்ற மனிதர்களின் ஆக்கங்களைப் பொறுத்தமட்டிலும் கூட ஏ.ஜே. சவுக்கைச் சுழற்றுவதைத் தவிர்க்கும் அதே வேளை, அவ்வாக்கங்களின் அடிப்படைக் குறைபாடுகளை முரண் நகையோடு வெளிப்படுத்துவதில் வித்தகராகத் திகழ்கிறார். g)607(plb 6 fascupub' (Race and Class) 6Taip புகழ்பெற்ற இடது சாரி ஏட்டின் ஆசிரியர் ஏ. சிவானந்தன் பிறப்பால் இலங்கைத் தமிழர். இப்போது பிரிட்டிஷ் குடிமகன். இங்கிலாந்தில் நிகழும் இன, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான களப்போராளி. தத்துவார்த்தக் கட்டுரைகள் எழுதிவந்த அவர், தனது அறுபது வயதில் ஆங்கிலத்தில் ஒரு பெரிய நாவலை எழுதினார். இலங்கையின் மூன்று தலைமுறையினரின் வரலாற்றைப் பகைப்புலமாக் கொண்ட அந்த நாவல் - Whe Memory dies -ஆங்கிலம் பேசும் உலகில் - ட குறிப்பாக இடதுசாரி விமர்சகர்களால் - டு பெரிதும் பாராட்டப்பட்டது. மூன்று நாவலில், கதையை தன்மையிலும் படர்க்கையிலுமாக J e o p
மாறி மாறி நகர்த்துகிறார், ஏ. சிவானந்தன். محسح
ܓܡܬܐ2
“இலட்சியத் தாகத்தோடு எழுதப்பட்ட இவ்வரசியல் நாவல் சுயசரிதையாகவோ சுய ஒப்புக்கொள்ளல் நாவலாகவோ வாசிக்கப்படுவதற்குப் பதிலாக, தரவும் புனைவும் ஆகிய இரு வகையும் கலந்த ஒரு புதுக்கலை மெய்த்தரவாக (Faction) வாசிக்கப்பட வேண்டும்” என்ற பீடிகையுடன் தன் திறனாய்வைத் தொடங்கும் ஏ.ஜே. மூன்றாம் பகுதிதான் நாவலின் மிகப் பலவீனமான பகுதி என்பதையும் அதற்கு நாவலாசிரியரின் கற்பனாவாத சர்வதேசியமே காரணம் என்பதையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறார்.
ஆங்கிலத்தில் ஏ.ஜே. எழுதிய இக் கட்டுரையின் தமிழாக்கம் தான் இங்குள்ளது. இந்தியப் பெண் எழுத்தாளர் ரோஹிணி ஹென்ஸ்மனின் முதலாவது நாவல் குறித்த 6 ஏ.ஜே.யின் விமர்சனக் கட்டுரையும் தமிழாக்கமே. உலக முதலாளியச் சுரண்டல்,
 

சிறப்பிதழ்
உலக வர்த்தக நிறுவனம், பெண்ணியம் (upga5u Golgs[TLituita; Economic and Political Weekly Gun 657 p. 5 Tj55. J LDIT GUT ஏடுகளில் சிந்தனைத் தெளிவோடு எழுதிவரும் இப் பெண்மணி ஒரு நாவலையும் படைத்துள்ளார் என்பதை இக்கட்டுரை வழியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன்.
படைப்பிலக்கியம் பற்றிய தனது விமர்சனக் கட்டுரைகளினூடாக கருத்தியல், அழகியல் மதிப்பீடுகளுக்கு இலக்கணம் வகுக்கும் ஏ.ஜே. தங்கள் படைப்பியக்கம் குறித்து வால்டர் டிராமெயர், மாப்பஸான், காஃப்கா, ரைனர் மாரியா ரில்கே, ராபர்ட் ராஸ்ட் ரேவென்ஸ்கி ஆகியோர் கூறுவதை அவற்றின் உயிர்க்களைச் சொட்டச் சொட்ட தமிழில் தருகிறார். துர்கனெவின் படைப்பியக்கம் : குறித்து ஆர்தர் கீஸ்லர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமும் ஒரு சுவையான அனுபவம்.
இலக்கியத் திருட்டு குறித்த கட்டுரை புதுமைப் பித்தனைப் பற்றி தமிழகத்தில் நீண்டகாலமாக எழுதப்பட்டுவரும் வாதப் பிரதிவாதங்களுக்கு முடிவுகட்ட உதவக்கூடும்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தர் சர் ஐவர் ஜென்னிங்ஸ், இலங்கை ஒரு கலாச்சாரப் பாலைவனம் என்றொருமுறை கூறியதை அடியொற்றி, யாழ்ப்பாணம் ஒரு கலாச்சாரப் பாலைவனம் என்று கூறிச் சொல்லம்புகளுக்கு இலக்காகத் தான் விரும்பவில்லை என ஏ.ஜே. ஒரு கட்டுரையில் கூறுகிறார். ஏ.ஜே. போன்றவர்கள் இருக்கும்போது யாழ்ப்பாணம் எப்படி ஒரு கலாச்சாரப் பாலைவனமாகும்?
ய ா ழ் ப் ப ா ண த் தி ற் கு ம் எங்களுக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஏ.ஜே. இன்னும் : உயிரோடிருக்கிறார் என்பதே மகிழ்ச்சிக்குரியது. அவரது எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கள் கண்களுக்குத் தென்படுவது ஒரு நற்பேறு. மூளைத் திசுக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் உயிர்க் காற்றாய் ஏ.ஜேயின் கட்டுரைத் தொகுப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. எனினும், மிக வேகமாக மறைந்துவரும் ஓர் உயிர்ராசியைச் சேர்ந்தவர் ஏ.ஜே.
'9655éis' 15/28 - 02 - 2002

Page 42
தி.ஜே. கனகரட்னா
சிவானந்தனின் நாவல் இலக்கிய விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது. ஆங்கில மூலத்தில் எழுதப்பட்ட இக் கட்டுரையைத் தமிழாக்கியவர் மு.பொன்னம்பலம்.
இந்நாவல் ஆசிரியரின் பின்னணி பற்றி அறியாதவர்களை, இந்நாவலின் தலைப்பு, விற்பனையை நோக்காகக் கொண்ட, உள்முக ஆய்வும் தனிப்பட்ட சொந்த நினைவுகளைச் சுவைப்படுத்துவதில் மையங்கொண்டதுமான ஒரு நாவல் என ஏமாற்றலாம். ஆனால், 1N'g)67(plb Qiffdiscupub (Race and Class) 6Tairp சஞ்சிகையின் ஆசிரியரும்', மக்கள் செயற்பாட்டாளருமான ஒருவருக்குப் பொருந்துவது போலவே சிவானந்தன் ஒரு G நாவலை எழுதியுள்ளார். அதில் மையங் கொள்ளும் நினைவுகள் பொதுமக்கள் * உலகோடு விசேஷமாக அரசியல் உலகோடு
தொடர்பு கொண்டதாய் நிற்கிறது.
இலட்சியத் தாகத்தோடு எழுதப்பட்ட இவ்வரசியல் நாவல் சுயசரிதையாகவோ சுய ஒப்புக்கொள்ளல் நாவலாகவோ வாசிக்கப் படுவதற்குப் பதிலாக தரவும் புனைவும் ஆகிய இருவகையும் கலந்த ஒரு புதுக்கலை "மெய்த்தரவாக" (Faction) வாசிக்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்கத் தமிழர்கள் பெரும்பாலும் வலதுசாரி - பழமைபேண்வாதிகள் என்று நினைக்கும் எங்களுக்கும் நாவலின் முதலாவது பகுதி (Book One : Forgotton Morning) sco grfa 607 வெளிக்காட்டலாகவே நிற்கிறது. யாழ்ப்பாணத்து தமிழ் அரசாங்க உத்தியோகத்தன் இடது சாரியாக இருந்து 9 காலத்தை சிவானந்தன் நினைவு கூருவதை நன்றாகவே செய்துள்ளார். இலங்கை

இலங்கையின் மூன்று பரம்பரைகளின் கதை
சுதந்திரம் பெறும் தறுவாயில் (அதிகளவு யாழ்ப்பாணத்து தமிழரை உறுப்பினராகக் கொண்டிருந்த) G.LS.K. வேலை நிறுத்தத்தை மேற்கொண்ட போது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கந்தசாமி என்பவர் பலியானார். எவ்வாறாயினும் இந்நிகழ்ச்சியானது போகிற போக்கில் கூறப்படுகிறதே ஒழிய நாவலில் பெரிதாகப் பிரஸ்தாபிக்கப்படவில்லை.
இரண்டாவது பரம்பரையைச் சேர்ந்த ராஜன் என்பவர் தனக்கேற்படும் கணநேரத் துயரத்தை உணர்வு மேலிட மீட்டுப் பார்ப்பதோடு நாவல் தொடங்குகிறது.
“என்னுடைய நினைவு எப்போதும் போல், மழையோடுதான் ஆரம்பிக்கும். ஒரு காலத்தில் அஞ்சலகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த பழைய காலனித்துவக் கட்டிடத்தின் பெருஞ்சுவருக்கெதிராய் சிறு பையனாய் குறுகிக் கிடந்த காலம். பருவகால மழையின் கெடுதல் என்னைப் பயமுறுத்தியது. கூடவே துயருறவும் செய்தது. சிறுபிராய தன்த்துள்ளும் தனிமையுள்ளும் அது என்னை எடுத்து வீசியது. எனக்குள் வளர்ந்துவரும் விஷயங்கள் பற்றி என்னுள் எழுந்த முதலாவது துயருணர்வு, சப்பாத்து இல்லை என்பதற்காக சஞ்ஜியைப் பாடசாலைக்குப்போக முடியாமல் செய்த ஓர் உலகு பற்றியது. நான் இடி மின்னலை, எவ்வித பயமும் இல்லாமல் வரவேற்றேன். காரணம், அது என்னைத் தாக்கிச் சாகடித்தால் 6 TGÖTSDJ 600 Lulu சப்பாத்துக்களை சஞ்ஜி பெற்று கொள்ளுவாள். நானும் மேலும் துயருறாமல் இருப்பேன். நான் தெரியவந்த பிற பருவ காலங்கள், வசந்தம், இலையுதிர், மாரி. கூடவே சப்பாத்துக்கள் நிறையக் கிடைக்கும் மற்ற நாடுகள். அன்றைய மழை நாளின் போதும்

Page 43
ஏ.ஜே. கனகரட்னா
அதன் பின்னர் வந்த ol) மழைக்காலங்களின் போதும் எனக்குள் நிரம்பி வழிந்தது. என்வாழ்வின் பெரும் பகுதியை அந்நிய உலகில் வாழ்வோனாய் தனிமைப் படுத்திய விஷயங்கள் யாவையும் என்னை என் நாட்டோடு தொடர்புபடுத்தி அதன் கதையைச் சொல்ல வைத்தன."
தன்மையில் பேசப்படும் நாவலாக அமைந்த இக்கதை, படிப்படியாக பாகம் ஒன்றில் பெரும்பகுதி ராஜனின் அப்பா சகாதேவனின் பார்வையூடாக நகர்த்தப் படுவதால் படர்க்கையில் கதை சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. தலைமை ஆசிரியரின் ஆலோசனைக்கிணங்க, சகாதேவனின் அப்பா பாண்டியன் (இக்கால நூற்றாண்டின் திருப்பத்தில் வாழும் அசல் யாழ்ப்பாணக் குடியானவனுக்கு ஒரு விதத்தில்
Lபொருந்தாத பெயர்) தன்னுடைய மகன்
சகாதேவனை கொழும்பிலுள்ள புனித
பெனடிக் கல்லூரிக்குப் படிக்க அனுப்புகிறார். சண்டிலிப்பாயில் உள்ள விளைச்சலைத் தராத
டு நிலத்தோடு வெற்றியெதுவும் பெறாது
60J
محسح
O
போராடும் அசல் யாழ்ப்பாணத்து விவசாயியான பாண்டியன் முதலில் தன் மகன் தன்னோடு நிலத்தில் கைகொடுக்காது போவதை விரும்பாவிட்டாலும் இறுதியாக அதற்கு அனுமதியளிக்கிறார். அதனால் சகாதேவன் கொழும்புக்குச் சென்று புனித பெனடிக் கல்லூரியில் சேர்கிறான். எஸ்.எஸ்.சி
சோதனையில் சித்தியடைந்த பின்னர்
(பாடசாலை சமய, பொது அறிவு போட்டிகளில் பரிசு பெற்றும், படிப்பில் திறமையாக செய்தும்) அவனுக்கு பாடசாலையை விட்டு விலக வேண்டியது ஏற்படுகிறது. காரணம் அவனது மாமனோ தகப்பனோ அவனுக்கு மேலும் உதவும் நிலையில் இல்லை. இரண்டு வருடங்களாக சகாதேவன், அப்பா செய்து வந்த தோட்டத்தை வருவாய்தரக் கூடியதாக ஒரளவு வெற்றிதரக் கூடிய விதத்தில் செய்துவந்தான். ஆனால், இரண்டாவது வருட முடிவில் அவனது மைத்துனர் மார் 5 ԼD5] சகோதரிகளுக்குக் கல்யாணம் செய்து
 

சிறப்பிதழ்
கொடுக்க வேண்டியிருந்ததால் தோட்டத்தை விற்க விரும்பினார்கள். சமூகம் மாறி விட்டது. இம்மாற்றம், நிலத்தைவிட பணத்தையே சீதனத்துக்குரிய கவர்ச்சிப் பொருளாக்கியிருந்தது. 19 வயதில் சகாதேவன், கொழும்பில் தபால் சேவை, தந்தி திணைக்களத்தில் எழுதுவிளைஞன் வேலை யொன்றைப் பார்ப்பதற்காக கொழும்பு செல்கிறான். அசல் யாழ்ப்பாணத்து அரசாங்க உத்தியோகத்தன் மாதிரி கடுமையாக வேலை செய்கிறான். அரசாங்க சோதனைகளில் சித்தியெய்துகிறான். இடைக்கிடை பியர் குடிப்பதில் ஈடுபட்டாலும் (பின்னர் சாராயம் குடிக்கிற அளவுக்கு முன்னேறுகிறான்) கடமை தவறாது வீட்டுக்கு காசு அனுப்பி வைக்கிறான். ஒரு சிங்கள நண்பன் மூலம் ஏ.ஈ. குணசிங்க தலைமை தாங்கிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தோடு தொடர்பு ஏற்படுத்திக்( கொள்கிறான். நாவலின் முதலாவது பாகம். ட்றாம் பஸ் வேலை நிறுத்தம், தொழிலாளி ெ ஒருவர் சுடப்பட்டு இறந்த கையோடு முடிவை எய்தியதாக குணசிங்க அறிவித்ததோடு முடிவுக்கு வருகிறது. இது குணசிங்க ர தீவிரவாதியாக இருந்தது சமரசவாதியா மாறியமையைச் சுட்டி நிற்கிறது.
N
கட்
6. g).JatistLTagustailb (Book Two: My Roots, NNo Rain) தன்மையில் ராஜனின் கதையைச் சொல்கிறது. இந்தவித விரிவான திருப்பம் அறிவார்ந்த விமர்சகரான றெஜி சிறிவர் g5Got T Go 6)u (Nethra, Vol. No. 4 July-Sep, 1997) ஆரம்பத்தில் இக்கதையை இரண்டு பரம்பரைகளுக்குரியதாகவே எழுத ஆசிரியர் தீர்மானித்திருக்கலாம் என்றும், அப்படி எழுதுவது ஆசிரியரின் அனுபவங்களுக்கு நெருக்கமுடையதாக இருந்திருக்கலாம் என்றும் எண்ண வைத்துள்ளது. அவருடைய இந்த எண்ணம் உண்மைக்குரியதென்றே நான் எண்ணுகிறேன். மூன்றாவது பரம்பரைக்கு நாவலை விரிவுபடுத்தியது ஆசிரியர் சமகால நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தவேண்டும் என்ற ஆவலின் நிமித்தமாய் ஏற்பட்டு இருக்கலாம். இதுவே நாவலின் மிகப் பலவீனமான பகுதியென்பதை நாங்கள் umTriu'uG|Lumtub. རྫ྾་་་་་་་་་་་་་་་་་

Page 44
ஏ.ஜே. கனகரட்னா
ராஜன் கொழும்பு புனித பெனடிக் கல்லூரியிலும், கொழும்பு ஜோசப் கல்லூரியிலும் தான் பெற்ற அனுபவங்களை விபரிக்கிறான். இவ்விபரிப்பில் முன்னதின் கட்டுப்பெட்டிப் போக்கையும் பின்னதின் தாராளமான சூழலையும் வேறுபடுத்துகிறான். அவனுடைய தாய்வழி பேரனால் தாய்வழி வரும் சண்டைக்காரப் பேத்தி, தாய் மாமன் குணம் ஆகியோர் பற்றிய சித்தரிப்புகள் நன்றாகவே நம்பகத்தன்மை வாய்ந்தவையாய் வந்துள்ளன. லோர்ன் முனசிங்காவுடன் அவனுக்கேற்பட்ட காதல் விவகாரம் முடிவில் மிகப் பாதிப்புக்குரியதாக இருந்தாலும் நன்றாகவே கையாளப்பட்டுள்ளது. அவன் இலங்கை பல்கலைக் கழகத்திற்குள் நுழைகிறான். அப்பொழுதுதான் அது பல்கலைக்கழக கல்லூரி நிலையிலிருந்து இலங்கை பல்கலைக்கழகம் என மாற்றம் பெற்றிருந்தது. /Rபல்கலைக்கழகத்தில் லால் என்பவரைத் தவிர வேறு யாரோடும் (லால் ஒரு மருத்துவ மாணவன்) அவன் நீடித்த நட்பை
வைத்திருக்கவில்லை. லாலின் உதவியோடு G அவன் இடதுசாரி அரசியலுக்குள் * இழுக்கப்படுகிறான். அத்தோடு இறுதியாக 

Page 45
ந.ஜே. கனகரட்ணா
நோயில் இருத்தல், மு.பொன்னம்பலம், 290 பக்கங்கள், குமரன் பதிப்பகம், சென்னை.
மு. பொன்னம்பலம் அவர்களின் இப்படைப்பின் நோக்கம், மிகப்பெரியதான வீச்சைக் கொண்டிருக்கவே விழைகிறது. 1984ஆம் ஆண்டு மயிலிட்டி காச நோய் மருத்துவ மனையில் தாம் சிகிச்சை பெற்றதும், பிறகு 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் வெடித்த அந்த உக்கிரமான சூழலில், தம் நரம்பு மண்டலம் பல்வேறு முனைகளில் பாதிக்கப் பட்டது தொடர்பாக யாழ் பொது மருத்துவ மனையில் தாம் சிகிச்சை பெற்று வந்ததும், 2>தம்முடைய இந்தப் படைப்புக்கு உந்துதலாக, அடிநாதமாக இருந்தன என்று, மு. பொ, தம் முன்னுரையில், வெளிப்படையாகவே அறிவிக்கிறார். மேலும், கருவறையில் இருந்து வெளிவர முயலும் ஒரு தேசத்தின் பிரசவப் போராட்டத்தை, தம் படைப்பு குறிக்கிறது ளுஎன்றும் அவர் முன்னுரையில் கூறுகிறார்.
இந்த நாவலைப் பல முறை வாசித்த பிறகும் என்னுள் தொடரும் கேள்வி யாது? ஆசிரியர், தமதான நோய் என்ற அவஸ்தையை - அந்த அனுபவத்தை - இந்தத் தேசத்தின் கொந்தளிப்பான சோகத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறாரா என்பதே என் கேள்வி. அதற்குப் பதில், ஆசிரியர் அதில் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே.
ஒருபுறம் தம் நோய், மறுபுறம் தேசம் பிறக்கும் அவஸ்தை - ஆக இந்த இரு களங்களுக்கும் இடையில் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதை, ஆசிரியர், தம் கற்பனையை ஒரளவு நீட்டி, சுட்டிக்காட்டுகிறார்; அதில் வெற்றியும் காண்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளலாம். குறிப்பாக, நாவலின் இரண்டாம் பகுதியில், தேசத்தின் வரலாறு சோகத்தில் அமிழ்ந்து 6 விடுவதைச் சுட்டும் பொதுவான உவமையாக, உடலை வாட்டும் நோய் அமைவதைக் காணலாம்.

ஒப்புமைகளும் உருவகங்களும்
ஆசிரியரைப் பொறுத்தவரை, மலரத் துடிக்கும் இந்தத் தேசத்தைப் பீடித்திருக்கும் நோயின் இயல்புதான் 6T 65T 6372 சுதந்திரமின்மைதான் அந்த இயல்பு என்கிறாரா அவர்? இந்த நோயின் இயல்பை வேறு பலர், பிறிதொன்றாகக் கணிக்கக்கூடும் என்பது முக்கியம். தவிரவும், நாவலை ஒரு மொத்த உருவகமாகப் படைக்கும் நோக்கத்தை அவர் கொண்டிருந்த போதும், அவர் காட்டும் இந்த ஒப்புமைகள், ஒன்றுக்கொன்று இணையாக மட்டுமே செல்கின்றன. அவை ஓர் உருவமாக இணைந்து கலந்திருந்தால் மட்டுமே ஆசிரியரின் நோக்கம் நிறைவேறியிருக்கும் என்று கூறலாம்.
உருவக அடிப்படையில் அமைந்து வெற்றி பெறும் நாவலுக்கு எடுத்துக்காட்டாக, ஆல்பெர் காம்யுவின் கொள்ளை நோய் (The Plague) நாவலைக் கூறலாம். ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் சிக்கிய பிரெஞ்சு தேசத்தின் நிலையை விவரிப்பதில், அந்த ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான தேவையை வலியுறுத்துவதில், காம்யுவின் நாவல் வெற்றி காண்கிறது. காரணம், அந்த நாவல், எதார்த்த விவரணைக்கும் தான் குறிக்க விரும்பும் பொருளுக்குமிடையில், இடைவிடாத ஓர் ஊடாட்டத்தைக் கைக்கொள்வதே என்பார் கிறிஸ்டோபர் பட்டலர்.
வெவ்வேறான இரு பொருட்களை ஒப்புமை செய்வது, உவமை. இந்த இரண்டையும் இணைத்து ஒன்றாக்குவது, உருவகம்; அதன் மூலம், படைப்பை, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மட்டங்களில் வாசிக்க முற்படுகிறது உருவகம். உண்மையில் உருவகம் என்பது, இலக்கிய உத்தி மட்டுமல்ல; மதத்தை ஆதாரமாகக் கொண்டு எழுந்தது; மிகப்பண்டைய காலத்தியது. எனவே, உருவகத்தை, ஒரு வெளிப்பாட்டு முறையாக, பொருட்களைக் கண்டுணரும் வழிமுறையாக, அத்தகைய வாழ்க்கை முறையாக, மனிதகுலத்தின் பொதுப் படை அம்சமாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக,

Page 46
ஏ.ஜே. கனகரட்னா
தொன்மங்கள் பொதுவாக உருவக
அடிப்படை கொண்டவையே; உலகார்ந்த பொதுப்படை உண்மைகளை, உந்துசக்திகளை
விளக்குவதே அவற்றின் முயற்சி எனலாம் (காண்க - இலக்கியப் பதங்கள், கோட்பாடுகள் பற்றிய பெங்குவின் அகராதி, ஜே. ஏ. கட்டன் அவர்களின் புதிய பதிப்பு).
நோயில் இருத்தல் நாவலின் முதல் பகுதி, மயிலிட்டி காச நோய் மருத்துவ மனையைப் பின்புலமாகக் கொண்டு 178 பக்கங்கள் வரை நீள்கிறது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் பற்றிய கறாரான குறுஞ்சித்திரங்களை எழுதுவதாகவும், தத்துவார்த்தப் பிரச்னைகளை எழுப்புவதாகவும், இப்பகுதி மாறி மாறிச் செல்கிறது. சில வாசகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக இது அமையலாம். ஆனால் இப்படி உணரும் வாசகர்கள் ஒன்றை நினைவில் இருத்தினால்
翰 ܓܡܗ2
புற நலம் - அதாவது, படைப்பை நாம் வாசிக்கும்
அதே நேரத்தில் படைப்பும் நம்மை வாசிக்கிறது; வாசகர்கள் மற்றும் மனிதர்கள்
என்ற இரு மட்டங்களிலும் நம்முடைய
பு குறைபாடுகளையும், நமக்குப் புலப்படாமல்
Yவெளிக்காட்டுகிறது என்பதை இவர்கள்
போகும் விஷயங்களையும் படைப்பு
கவனிக்க வேண்டும்.
நாவலின் முதல் பகுதி, இரண்டாம் பகுதியைக் காட்டிலும் நிதானமாகச் செல்கிறது. மேலும் நாவலை முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் பாத்திரத்தின் உடல்நலமும், முதல் பகுதியில், இரண்டாம் பகுதி அளவு, மோசமடைந்து விட்டிருக்கவில்லை. எனவே அவர், முதல் பகுதியில், ஆத்மார்த்தப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளில் அதிகம் மும்முரம் காட்டமுடிகிறது.
ஆத்மார்த்தப் பிரச்சினைகள் என்று வரும்போது, மேற்கத்திய சிந்தனாமுறையை மூடத்தனம் என்று கருதும் ஒருவித ஆன்மிக மாயாவாதம் பக்கம் சாரும் நிலையை ஆசிரியர் மேற்கொள்கிறார். அவருடைய இந்த நிலைபாட்டுடன் என்னால் முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை என்றாலும்கூட, அவருடைய சிந்தனையானது அவர் வளர்ந்த முறை, குறிப்பாக அவருடைய அன்னையார்
LS S LSLS S 0LS S 00 LLS LLLLL S LS L S SSLS S LLS SLS SLS SLS S SLSLS SLSLS S LLS SLLS SL S0SS S 0LS S L SSSSLS S SL
 

சிறப்பிதழ்
அவர்மீது செலுத்திய தாக்கம் ஆகியவற்றின்பாற்பட்டது என்று நான் * புரிந்துகொள்கிறேன். மேலும், ஆன்மிக அனுபவத்தை ஒரேயடியாக நிராகரிக்க நான் தயாரில்லை. பல்வித ஆன்மிக அனுபவங்கள் என்ற வில்லியம் ஜேம்ஸின் நூலை வாசித்த யார்தான் அப்படி நிராகரிப்பார்கள்! ஆயினும், அறிவார்ந்த சிந்தனாமுறைகளின் தாக்கம் பெற்று, கடவுள் இருப்பு குறித்து சந்தேகம் கொள்ளும் மனிதனாகவே நான் நீடிக்கிறேன்.
O
ஆசிரியரைப் பொறுத்தவரை, தம் தத்துவார்த்த அளவுகோல்களை, அகநோக்கு - புறநோக்கு என்பதாக வரையறுத்துக் கொள்கிறார்; இவற்றை இரு துருவங்களாக, ஒன்றையொன்று தவிர்த்துச் செயல்படு வனவாக, ஆக்குகிறார் எனலாம். உண்மையில், இவை, ஒன்றுக்கொன்று மாற்றாக, இயங்கியல் ரீதியில் செயல்படுவன. ஆசிரியரோ,/> புறநோக்கு என்பதை ஒரு துருவமாக்கி, அதை பூ வெறுக்கிறார்; அகநோக்கை இன்னொரு துருவமாகப் புகழ்கிறார். மார்க்ஸ் சிந்தனைகள், மார்க்சியம் ஆகியவையும் இங்கே புறநோக்குகளாக மட்டுமே வரையறை பெறுகின்றன. மதம் மக்களுக்கான போதை J மருந்து' என்ற மார்க்ஸின் வாசகம், ட் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அதற்கு அடுத்த 6. வாசகமாக, மார்க்ஸ் இதயமற்ற உலகின் இதயம், மதம் என்று எழுதியிருப்பதைப் பலரும்Y மறந்துவிடுகிறார்கள்! இந்த நாவலின் ஆசிரியரும் இதை மறந்திருப்பது விந்தையே! மனித குலத்தை ரட்சிக்க வந்தவர்களின் வரிசையில் கடைசியில் வருபவர் மார்க்ஸ் என்று ஆர் ஹெச் டானி குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடுவதில், மார்க்ஸ் எழுப்பும் முழக்கங்கள், பழைய ஏற்பாடு நூலில் காணப்படும் ரட்சக வாசகங்களை ஒத்துள்ளன என்றும் அங்ங்னம் யூத இன ரட்சக மரபில் மார்க்ஸையும் நிச்சயம் இனங்காணமுடியும் என்றும் வேறு பலரும் கூறுகிறார்கள்.
ஆம், மார்க்ஸ் நாத்திகவாதத்தைப் பிரக்ஞாபூர்வமாக ஏற்றுப் பேசினார்தான். அவர் காலத்திய நிறுவன மயமான மதம், சமத்துவமற்ற ஒரு சமுதாய அமைப்புக்கு முட்டுக்கொடுத்து வந்தது, அந்த அமைப்பு கடவுளால், மேலுலகால் விதிக்கப்பட்டது

Page 47
ஏ.ஜே. கனகரட்னா
என்று நியாயப்படுத்த முற்பட்டது என்கிற மறுக்க முடியாத வரலாற்று உண்மையே, அதற்குக் காரணம். ஆனால் பிற்கால நிகழ்வுகள், குறிப்பாக,
விடுதலை இறையியலின் எழுச்சி போன்ற
நிகழ்வுகள், மார்க்சியத்துக்கும் கிறித்துவத்துக்கும் ஒருவித இணக்கப்பாடு, நெருக்கம் சாத்தியம் என்பதைக் காட்டுகின்றன. (ஆனால் அந்த நல்லுறவுச் சாத்தியத்தை வத்திக்கான் மத நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்பது வேறு விஷயம்)
பொதுவான தத்துவார்த்தப் பிரச்சினைகளைத் தாண்டி, ஆசிரியர், ஆல்டஸ் ஹக்ஸ்லியின் உணர்வின் கதவுகள் நூல் குறித்தும் தொட்டுச்செல்கிறார். அந்நூலில் விவரிக்கப்படும் போதைமருந்து உட்கொள்வது குறித்த அனுபவம் மனத்தை எவ்வளவோ அலைக்கழித்து, எங்கோ இட்டுச் செல்வதாக இருக்கலாம் என்றபோதும், அதை ஆசிரியர் செய்வதுபோல மாயாவாதிகளின் அனுபூதி -
Oالصر
அனுபவத்துடன் ஒப்பிடமுடியும் என்பது எனக்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது! ஆனால், சார்த்தர் கூட போதைமருந்தை உட்கொண்டு பரிசோதனை செய்து பார்த்தார். அந்த அனுபவத்தால் அருவருப்படைந்தார் ர என்பது எனக்குப் புதிய செய்திதான்.
محصے
தவிர, நாவலில் ஆசிரியர், ஒல்லாந்தர்
காலத்தில் சங்கிலி மன்னன் ஆண்டான் என்றும், கிறித்துவ மதத்துக்கு மாறிய ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அவன் கொன்றான் என்றும் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது, போர்த்துக்கீசியர் காலத்தில் ஆட்சி புரிந்து, மன்னார் பகுதியில் தியாகிகளான அந்தக் கிறித்தவர்களைக் கொன்ற சங்கிலி மன்னனாக இருக்கலாம்.
வரலாறு என்று வரும்போது இன்னுமொரு விஷயம் - இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனிக்கு எதிரான திருப்பம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? ஸ்டாலின்கிராட் நகரை ரஷ்ய மக்கள் காக்க முற்பட்டபோது, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்வதாகக் கூறிய உதவி வராமல்போனது; அப்போதும் ரஷ்ய மக்கள்
| வீரத்துடன் போரிட்டார்கள், அதுதான்
ஜெர்மனியின் தோல்விக்கான முக்கிய திருப்பம் என்று ஸ்டாலின் கிராட் போர் நூலில்
 

சிறப்பிதழ்
அலெக்ஸாண்டர் வெர்த் செய்துள்ள விவரிப்பை வாசித்த பிறகு எனக்குத் தெரியவந்தது. இத்தனைக்கும் அலெக்ஸாண்டர் வெர்த் லண்டன் டைம்ஸ் இதழின் அயல்நாட்டு நிருபர், மாஸ்கோ நகரில் வசித்தவர்; போல்ஷெவிக் அனுதாபி ஒன்றும் அல்லர்.
ஆனால், இத்தகைய சாதாரண விளக்கங்களால் நோயில் இருத்தல்' நாவலின் ஆசிரியர் திருப்தி அடைவதில்லைபோலும்! "ஹொரேவியோ, உன் தத்துவம் காணும் கனவை விடவும், பிரார்த்தனையே அதிகம் சாதிக்கும்” என்ற வாசகத்தை நம்புபவர் அவர். எனவே, தம் நாவலின் 17ஆம் பக்கத்தில், ஒரு விஷயத்தை வெளியிடுகிறார்: அதாவது, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் தாம்
நுழைய ஹிட்லர் நாள் குறித்து விட்டிருந்தார்; ”
அதற்கு இரண்டு தினங்கள் முன்பாக
ஹிட்லரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன்,7N
யோகி அரவிந்தர் "உளவியல் குண்டுமழை” ஒன்றைப் பொழிந்ததால் ஹிட்லரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது, இல்லை யென்றால் ஹிட்லரின் காலடியில் பிரிட்டன் வீழ்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆசிரியர்! இதை அவர் முழுமையாக நம்புகிறார். நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிக் கூறவில்லை என்று தெரிகிறது.
s
6.
s
J
ஹிட்லர் அதிகார வெறியர்; அதிகார*/
வெறியும், எதிரிகள் பற்றிய அச்சமும் தலைக்கேறிய நிலையில், ஜெர்மானியத் தளபதிகளைவிடவும் தம்முடைய சோதிடர்களையே அவர் நம்பிப் பின்பற்ற முற்பட்டார் என்று வரலாற்றுப் பார்வைகள் கூறுகின்றன. ஹிட்லர் இப்படிச் சோதிடர்களின் வழிநடத்தலில் செல்வதை அறிந்திருந்த நேச நாடுகளும், களத்தில் அவருடைய காய் - நகர்த்தல்கள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்காகவே, சோதிடர்களின் சிந்தனாமையம் ஒன்றையும் நிறுவியிருந்தார்கள்! எது எப்படியாயினும், இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்கள் சோதிடர்களே ஒழிய படையினர் அல்லர் என்பது, வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.
மேலும், ரஷ்யாமீது ஆக்கிரமிப்பு நடத்த வேண்டாம் என்று தம்முடைய தளபதிகள் கூறிய ஆலோசனையைப் புறந்தள்ளிய

Page 48
ஹிட்லர், ஆக்கிரமிப்பு நடத்தலாம் என்று சோதிடர்கள் கூறியதை ஏற்றார். இந்த முடிபு, உலகை வெல்லவேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கு எமனாக அமைந்துவிட்டது. குளிர்காலத்தின் தாக்கமும், ரஷ்ய மக்களின், மற்றும் செம்படையின் வீரமும் ஒன்றுசேர்ந்து, அவருடைய தீய திட்டங்களைச் சுக்குநூறாக்கி விட்டன. இதுபற்றிய பல்வேறு விளக்கங்கள் குறித்து நான் இங்கு அதிகம் கூற விரும்பவில்லை. காரணம், எந்த விளக்கமும், அதைத் தர முற்படுபவரின் சார்புநிலையை ஒட்டியே இறுதியில் அமையும். தவிர, வரலாற்று உண்மைகள்' என்று கருதப்படுபவை, வழக்கமாகத் தாம் சார்ந்துள்ள சித்தாந்தங்களை வெளிக்காட்டுவதில்லை. 'உண்மை' என்று வழங்கப்படுவதும் கூட, நிஜத்தில், தான் சார்ந்துள்ள சித்தாந்தத்தை ஒட்டியே தீர்மானிக்கப்படும்.
'நோயில் இருத்தல் முதல் பகுதி, நாவலை முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் பாத்திரம், வெளியே வெறித்துப் பார்ப்பதாகத் துவங்குகிறது. நாவலின் இரண்டாம் பகுதியோ - யாழ் மருத்துவமனை, பதினெட்டாம் வார்ட்
2ஆர்ஜி கல்வி நி RG Education
கணித, விஞ்ஞானப் பாடங்கள் ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் Basic Programming seitsfil uavG
பியானோ, வயலின், மிருதங்கம், கர்நாடக
கராத்தே, பரதநாட்டியம்
(416) 609 - 9508
WWW.rgeducation.com
గ్రీN

அநத வார்டில், சுவரை ஒட்டிய படுக்கையில் அவன் படுத்திருந்தான் என்று, சட்டென்று, வர்ணிப்பாகச் சுழன்று தொடங்குகிறது. ஒருபுறம் நரம்புமண்டலம் பல்வேறு முனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளியின் நிலைமை, மறுபுறம் ஷெல்லடித்துக் கொண்டு களத்தில் முன்னேறி வரும் இந்திய அமைதிகாக்கும் படை என்று மாறிமாறிச் செல்லும் விறுவிறுப்பான வர்ணிப்பு. அந்த உக்கிரமான சூழலைச் சுட்டும் வர்ணிப்பு. இது எப்படி முடிகிறது? ஒருபுறம், உயிர் பிழைக்க, பஸ் வாகனம் மற்றும் படகில் தப்பிச் செல்லும் மக்கள் - அவர்களில் ஆசிரியரும் ஒருவர்; மறுபுறம், அவர்களைத் துரத்தித் தொடர்ந்து குண்டுவீச முற்படும் இந்திய அமைதிகாக்கும் படையின் ஹெலிகாப்டர், அந்த மக்களுக்கு வாழ்வா, 96. என்ற துரத்தல், போராட்டமாக நாவலின் இரண்டாம் பகுதி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. நான் இங்கு எனதாக முன்வைத்த குழப்பங்களையும் மீறி, தீவிரத்தன்மை கொண்டு இயங்கும் இந்த இலக்கியப்படைப்புக்கு ஏற்ற, மிக பரபரப்பான முடிவே, இது. O
|லையம்
Centers
பித கொம்பியூட்டர் கல்விநெறிகள்
சங்கீதம்
S SLAVAR ETNIM
3852 Finch Ave. E, Suite 401 Scarborough, ON M1T 3T9 rgedu Oglobalserve.net

Page 49
தி.ஜே. கனகரத்தினா
ܓܗܗ2
(6
Gy
“தேசிய இலக்கியம்” என்ற யுத்த அழுகுரல் நம் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டுரையில், அதனைப் பற்றி, என் சிந்தனைகள் சிலவற்றைச் சமர்ப்பிப்பதே, என்னுடைய நோக்கமாகும்.
ச்சொற்றொடர், தேசத்தினால்
ஒரு
உருவாக்கப்பட்ட இலக்கியப்படைப்பு
உருவமனைத்தையும் குறிக்குமென ஒர் அகராதி இலக்கணஞ் சொல்லலாம். அத்தகைய அர்த்தச் சூத்திரம், பொருள் விளக்கத்தைப்
பொறுத்த அளவில் சரியாகவும் இருக்கலாம்.
ஆனால், ஒவ்வொரு நாட்டு இலக்கியத்தின் தனித்தன்மைகளைக் கூர்ந்து ஆய்ந்து இலக்கணம் சொல்லப் புறப்படும் இலக்கியக் குணமாய்வோனுக்கு இப்பதவுரை திருப்திதர மாட்டாது. குணமாய்வோன் அமெரிக்க இலக்கியத்திலுள்ள "அமெரிக்கத்தனம்" என்றோ, இந்திய இலக்கியத்திலுள்ள இந்தியத் தன்மை' என்றோ பேசும் பொழுது, வேற்று நாட்டு இலக்கியங்களுடன் ஒப்புநோக்கிப்
N(பார்த்துக் கிரகித்துக் கொள்ளும் தனித்துவ
வேறுபாட்டுத் தன்மைகளை வைத்தே, தேசிய இலக்கியம் என்பதற்கு அர்த்தம் பாய்ச்ச
உத்தேசித்திருக்கிறேன். ஆங்கில நாட்டின்
தற்கால இலக்கியக் குணமாய்வோரான எவ்.ஆர். லீவிஸ், ஆங்கில இலக்கியத்தின் விழுமிய பாரம்பரியத்தினை வேறுபடுத்தித் தனித்துவமாகக் காட்டும் தனி இயல்புகளை வகுத்துக் காட்டும் முயற்சியில், ஆங்கில
நாவலிலக்கியத்தின் சிறப்பியல்புகள்,
"அனுபவத்திற்கான பிரதான திராணி, வாழ்க்கைக்கு முன்பாக வைத்துள்ள ஒருவகை
ஆசாரத்தெளிவு, நெருக்கமான நன்னெறிக்குறி”
ஆகியனவெனச் சொல்லுகிறார். சிறந்த ஆங்கில நாவலாசிரியர்களை, பிரெஞ்சு எழுத்தாளர் ஃவுலபேருடன் ஒப்பு நோக்குகையில், ஃவுலபேர் குஷ்டரோகிகளை நோக்குவதைப் போன்று வாழ்க்கையைத் தொலைவிலிருந்து நோக்குகிறார்; ஆனால், சிறந்த ஆங்கில நாவலாசிரியர்கள் (ஜேன்
அஸ்ரின், ஜோர்ஜ் எலியட், கொன்ராட், டிஎச்.
47

தேசிய இலக்கியம் சில சிந்தனைகள்
லோறன்ஸ், ஆகியோர்) ஃவுலபேரைப் போல்
வாழ்க்கையை வெறுப்புடனோ, அலுப்புடனோ, நிந்திப்புடனோ நோக்கவில்லை, என்கிறார். தேசிய இலக்கியத்தின் மனோபாவனை,
சாதாரணமாகப் பல்வேறு நாடுகளின் இலக்கியங்களை மட்டுமே குறிக்காது, ஒரு நாட்டின் இலக்கியத்திற்கு விசேடமாக அமைந்துள்ள தனித்தன்மைகள் மனோ உணர்வின் பிரகாரம், பிரகாரணங்கள், பாணி முதலியவற்றையும் குறிக்கும். சுருக்கமாக, ஒவ்வொரு நாட்டின் இலக்கிய வளர்ச்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திய பாரம்பரியங்கள், வழக்கச் சிறப்பியல்புகள் ஆகியவற்றையும் குறிக்கும். இலக்கியம் அவாந்திரத்திலிருந்து தோன்றுவது கிடையாது; அது காலத்திலும் இடத்திலும் வேரூன்றித் தழைக்கிறது. எனவே, அது ஒரு தேசியத் தனித்துவத்தை, தேசிய சுபாவத்தை, தேசிய வல்லபத்தைப் பிரதிபலிக்கத் தான் செய்யும். இதன் வழியே, ஒரு தேசிய இலக்கியம், வேற்று நாட்டு இலக்கியங்களுடன் தன்னை வேறுபடுத்தும். சில விசேட தனித்தன்மைகளைப் பெற்றுத்தானிருக்கும். வாழ்க்கைத் தனித்துவ அம்சங்கள், மரபுகள், உருவம் முதலியன, இந்திய இலக்கியத்தை அமெரிக்க இலக்கியத்திலிருந்து வேறு படுத்துகின்றன. வாசகரெல்லோரும் இருநாட்டு இலக்கியங்களினதும் முழு 'உணர்வும் முற்றிலும் வேறுபட்டிருப்பதை ஒப்புக் கொள்வார்கள். இது சுப்பிரமாண்ய பிரமேயமானதினால், இதனை மேற்கொண்டும் விளக்க வேண்டிய வியர்த்தத்தில் நான் ஈடுபடவில்லை. இருப்பினும், தேசிய இலக்கியத்தைப் பற்றிக் குணமாய்வோனுடைய மனோபாவனை' அகராதி அர்த்தத்திலும் பார்க்க ஆழமானது என்பதை மட்டும் சொல்லிவைக்கப் பிரியப்படுகிறேன்.
தேசிய இலக்கியத்திற்குத் தாகம் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்,

Page 50
ஏ.ஜே. கனகரட்னா
அமெரிக்க நாட்டின் ஒப்பைக் குறிப்பிடுவது சுவாரஸ்யமுள்ளதாகவும், விளக்கமுள்ளதாகவும் அமையும். இந்த
ஒப்பை அதிகம் இழுத்து f விரிவாக்கக்கூடாது என்பது வாஸ்தவம். அமெரிக்கர்கள் சுதந்திரத்திற்காக
இங்கிலாந்துடன் யுத்தம் செய்தனர். அத்தகைய சுதந்திரத்திற்காக நாம் தென்னிந்தியாவின் மீது போர்ப்பிரகடனம் செய்யவில்லை. நாமும் தமிழ்நாடு ராஜ்யத்தாரும் ஒரே மொழியினைப் பேசுவதைப் போன்றே அமெரிக்கரும் ஆங்கிலேயரும் ஒரே மொழியைப் பேசுகிறார்கள். 1818ஆம் ஆண்டில் எடின்பரோ மதிப்புரையில் ஸிட்னிஸிமித் எழுதும் பொழுது, “ஏன் அமெரிக்கர்கள் புத்தகம் எழுதவேண்டும். ஆறுவாரப் பயணத்தில் நமது மொழி, நமது உணர்வு, நமது விஞ்ஞானம், நமது வல்லபம் முதலியவற்றைச் சிப்பங்களிலும்,
பீப்பாய்களிலும், அவர்களுக்கு அனுப்பிவைக்கும் பொழுது?" என்று கேட்டார். வரலாறு அவருக்குப் 0ܪܶgomrm6ܦܼܠܐ2
க பதிலளித்துவிட்டது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பின்னர், தாங்கள் தனியொரு
"பூரணம்" என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்ட (6 பின்னர், அமெரிக்க எழுத்தாளர், ஆங்கில ரே இலக்கியத்தின் செல்வாக்கு இருந்தாலும், ஆபதனித்துவமுள்ள அமெரிக்க இலக்கியம் படைக்க வேண்டுமென்று விரும்பினார்கள். வேறொரு தேசத்தோற்றங்களும், வேறுபிரகரணங்களும் இவர்களுடைய பூர்வபோதகமாக இருந்தாலும், அவர்கள் வேறொரு சமுதாய அமைப்பில் வாழ்ந்ததினாலும், அவர்களுடைய படைப்புகள் தனித்தன்மையுள்ளனவாகத் தான் திகழ்ந்தன. தனி இயல்புகளுடன் கூடிய அமெரிக்க இலக்கியத்தைத் தோற்றுவிப்பதில் அமெரிக்கர் அடைந்துள்ள வெற்றியினால், இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே மொழியினால் பிரிக்கப்பட்ட இரு நாடுகள் என்ற ஷாவின் அங்கதக்கூற்று, இலக்கிய அரங்கத்தைப் பொறுத்த அளவில் வெகுவாகப் பொருந்திவிட்டது. இன்றைய ஆங்கில இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள பல அதிசயங்கள் அமெரிக்காவிற்றான் நடந்தேறின. யுத்தத்திற்குப் பிற்பட்ட தலைமுறையில், ஆங்கில இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள், எலியட் (இவர் தற்போது
 

சிறப்பிதழ்
பிரிட்டனில் பதிவுப் பிரஜையாகியுள்ளார்) ஹெமிங்வே, ஃவொல்க்நேர் ஆகிய அமெரிக்கர்தாம். இந்த நூற்றாண்டில், அமெரிக்க
எழுத்தாளருக்கும் கவிஞருக்கும் ஈடுசோடானவர்களை இங்கிலாந்து உருவாக்கவில்லை. இன்று ஸிட்னி
ஸிமித்தினுடைய அவமதிப்பான நிந்தனைக் கேள்வியைத் திருப்பிப்புரட்டி, "ஏன் பிரிட்டிஷ்காரர் புத்தகங்கள் எழுத வேண்டும்? என்று கேட்கலாம்.
தென்னிந்திய ஸிட்னி ஸிமித் எவனும், "ஏன் இலங்கைத் தமிழர் எழுதவேண்டும், சில மணிநேரப் பயணம், நமது மொழி, நமது
உணர்வு நமது இலக்கியம், நமது வல்லபம்
முதலியவற்றை அவர்களுக்குக் கொண்டு போகும்பொழுது?, என்று வெளிப்படையாகத் துணிந்து கேட்கவில்லை. இருப்பினும், அத்தகைய ஒரு போஷக மனோபாவம்
O
ܓܡܬܐ2
நிலவிவருவதுதான் "இந்தியா தாய் நாடு, ஈழம் கி சேய் நாடு, என்று எழுதப்பட்டுள்ள
கோஷத்தின் உட்தாற்பரியம். ஸிட்னி
ஸிமித்தினுடைய வெளிப்படையான நிந்தனை. கி
இந்த வெறுக்கத்தக்க இருட்டடிப்பு மனோபாவத்திலும் பார்க்க வரவேற்கத்தக்கது. தாங்கள் பெரியவர்களென்ற தமிழகப் போஷக
J
மனோபாவம் இறுதியில், இன்றாகிலும் து ஈழத்தில் ஒரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளதுU,
இன்று, நாம் நமது எழுத்தாளனின் படைப்புகள், நமது அநுபவங்கள், நமது பகைப்புலங்கள், நமது மரபுத் தொடர்கள், நமது பேச்சுத்தமிழ், நமது சமூக அமைப்பு ஆகியவற்றை எதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வண்ணம் s 9/60) LDu I வேண்டுமென வற்புறுத்துகிறோம். இத்தேசிய இலக்கிய ஆக்கத்தேவை பல காரணங்களின் பால் எழுந்துள்ளது. நாம் சுதந்திரமடைந்ததும், தேசிய உணர்ச்சி வளர்ந்ததும் அக்காரணங்களுள் இரண்டாக இருக்கலாம். அரசியல் மாற்றம் இலக்கிய மறுமலர்ச்சியை, அல்லது இலக்கியப் "புரட்சி"யைத் தோற்றுவிக்கக் காரணமாகவும், தூண்டுதலாகவும் அமைந்தது. அரசியல் சமூகக் காரணங்களை விடுத்து, விசேடமான இலக்கியக் காரணங்களும் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் lb LD5l சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் தென்னிந்தியப்

Page 51
ஏ.ஜே. கனகரட்னா
போட்டியினால் கர்ப்பச்சிதைவாயின. (இன்றைக்கு நிலை பிரமாதமாக முன்னேறாவிட்டாலும் dira. L - ?, சீரடைந்துள்ளது) இதனால், நமது எழுத்தாளர் தென்னிந்தியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கவேண்டுமென்ற மனோபாவத்தில் எழுதவேண்டியிருந்தது. தென்னகப் பத்திரிகைகளில் பிரசுரிப்பது கவர்ச்சிகரமாக்கப்பட்டது. இந்தியப் பத்திரிகைகளில் இடம்பெற, நமது எழுத்தாளர் சில செயற்கையான நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இந்தியப் பகைப்புலங்கள், பேச்சுமரபு, அல்லது இந்தியத்தன்மை கொடுத்து எழுத வேண்டியிருந்தது. சுய கெளரவமுள்ள எந்த எழுத்தாளனும் இதனை நீண்ட காலத்துக்குச் சகிக்க மாட்டான். இது தவிர்க்க இயலாத,
இயல்பான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. எதிர்த்துருவ ஸ்தானத்திற்கு விவகாரம் இடம்
/Nபெயர்ந்துவிட்டது. தேசிய இலக்கிய கோஷம் க ஈழத்தில் பெற்ற உக்கிரம், கல்விப் பத்திரிகையைக் கூட "ஈழத்து வாழ்க்கை
அழகுகளையும், மண் வாசனை கொண்ட G பிராந்தியச் சூழல்களையும் பிரதிபலிக்கும்' ர்ெ கதைகளுக்குப் பரிசுகளும் பாராட்டுதல்களும் ஆறு கொடுக்கத் தூண்டிற்று. இந்த எழுச்சிக்கு இன்னொரு காரணமும் உண்டு. வாசகர், கதைகளில் அதிகமாக எதார்த்தச் சூழலை எதிர்பார்க்க விழைந்தனர். ஆனால் இவையெல்லாவற்றிற்கும் அச்சாணியான காரணம், தமிழ் கூறும் நல்லுலகம்' என்பதன் ஒர் அங்கமாக நாம் இருந்தாலும், நமக்கென்ற விசேட தனிக்குணங்களுள்ள தனித்துவமான ஒரு தேசிய இனம் நாம் என்ற இயல்பான விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டதுதான். தமிழ்நாடு தாய்நாடு, ஈழம் சேய்நாடு' என்ற பூஜாரி மந்திரத்தைக் கிளிப்பிள்ளையாகச் சொல்பவர்கள், சேயால் எப்பொழுதுமே தாயின் முந்தானை முடிச்சில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது என்ற உண்மையை உணரவேண்டும். பக்குவஞானம் வளர, தான் இன்னமும் தன் கொப்பூழ்கொடி மூலம் தாயின் உணவினைப் பங்கிட்டு வாழமுடியாது என்ற 'பிரக்ஞையின்பால், தன் சொந்த இலட்சிய அபிலாஷைகளுக்கேற்ப ஒரு தனித்துவச் சுதந்திர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
 

சிறப்பிதழ்
முனைய வேண்டும். ஆகையினால், தேசிய இலக்கியம் தேவை என்ற எழுகுரல், நமது தனித்துவ இலக்கியப் பாரம்பரியத்தினைக் கட்டிவளர்க்க வேண்டுமென்ற வேட்கை, மிக இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமான ஒன்றாகும். இது நமது பக்குவ வளர்ச்சியைக் குறிக்கும் நல்ல அறிகுறி. நாம் தென்னிந்திய இலக்கியச் செல்வாக்கினை வேர்கல்லி எறிய விழைகிறோம் என்று அர்த்தமில்லை. தமிழக இலக்கியச் செல்வாக்கினை அனுபவித்துக் கொண்டே, நாம் நமது அநுபவங்களிலும், மண்ணிலும் வேர்விடும் தனித்துவம் பெற்ற இலக்கியத்தினைப் படைக்கும் பிரயத்தனத்தில்
ஈடுபட்டிருக்கிறோம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய சகல பிராந்திய அநுபவங்களுடைய
நானாவிதங்களையும் வேறுபாடுகளையும் நமது
சிருஷ்டிகள் பிரதிபலிக்க நமது எழுத்தாளர்,< பார்த்துக்கொள்ள வேண்டும். s
நாம் தேசிய இலக்கியத்தை வெற்றியாக அமைத்து விட்டோம் என்பதை நம்மால்
தீர்க்கமாகச் சொல்ல முடியாது. நாம் கி இன்னமும், எவ்வளவோ முன்னேற J வேண்டியிருக்கிறது; அதனை , இப்பொழுதுதான் கட்டிக் L கொண்டிருக்கிறோம். ஊருக்குரிய 6 வர்ணனைகள் சிலவற்றை (கதைக்குU
இசைவானதா இல்லையா என்பதைக் கூடக் கவனியாது) சொருகி, பிராந்தியப் பேச்சு வழக்கை உபயோகித்து, இடத்திற்கு உரித்தான இனப்பிரச்சினைகளைப் போன்றே பிரகரணங் (Themes)களைச் சேர்த்தால், தேசிய இலக்கியம் தோன்றிவிடுமெனச் சிலர் பிசகாகக் கருதியிருக்கின்றனர். சந்தேகமின்றி இவை தேவையான அம்சங்களாக இருப்பினும் எழுத்தாளருடைய கடமை இன்னும் அடிப்படையானது. அவன் (எழுத்தாளன்) ஊருக்குரிய நிலங்களை மட்டுமல்ல, அந்தச் சூழலில் வாழும் மனிதனைச் சித்தரிக்கிறான். பிராந்திய பகைப்புலத்தையும், பேச்சு இயலையும் பிரதிபலிக்கும் அதேசமயம், மனித இயலை நுணுகி ஆராய வேண்டும்.
இலக்கியம், எல்லாக் கலைகளையும் போலவே, சர்வ தேசியமானது என்று ? சொல்லப்படுகிறது. அப்படியாயின், தேசிய

Page 52
اس صبر
இலக்கிய கோஷத்தை, சர்வதேசியப் பாங்குடன் எப்படி இணைக்க முடியும்? நவீன அமெரிக்கக் கவிஞரான றொபட் ஃவுறஸ்ட என்பவர், கலையின் வேர் பிரதேச மண்வாக்கில் ஊன்றினாலும், அதன் மரமும் கிளைகளும் சர்வதேசியமானவை என்றார். (உண்மையில் ஃவுறஸ்டே இதனைத் திருஸ்டாந்த மாகவும் விளக்குகிறார். எப்பொழுதும் இவரைப் போன்ற ஒரு பிராந்தியக் கவிஞன், இவ்வளவு சர்வதேசியக் கவிஞனாக இருந்ததில்லை.) இலக்கியம், தவிர்க்கமுடியாமல், காலத்திலும் இடத்திலும், அது எதிரொலிக்கும் சமூகத்திலும், வேரூன்றியுள்ளது. ஆனால் இலக்கியம் மனிதத்துவத்தைத் தொடுவதினாலும், மனிதத்துவம் காலம் காலமாக எல்லா நாடுகளிலும் அடிப்படையில் ஒரேமாதிரியாக இருப்பதினாலும், காலம் இடம் ஆகிய எல்லைகளைக் கடந்து, சர்வதேசிய அந்தஸ்தினை அடைகிறது. இதற்கு பூரண எடுத்துக் காட்டாக ஸேக்ஸ்பியரே
Nவிளங்குகிறார். அவருடைய நாடகங்கள்
எலிஸபெத்தின் இங்கிலாந்தில் வேரூன்றியிருக்கின்றன. அவருடைய
(6
நாடகங்களை, அவர் வாழ்ந்து அறுவடை செய்த சமூக அமைப்பிற்குப் புறமாக,
ர்ெ மனோ உணர்வு கொள்ள இயலாது x) போனாலும், அவை மனிதருடைய
**
இயல்புகளை, ஆழமாகவும் அகலமாகவும்
நம்
மழலை அழிபட சிறுமிப் திறந்ே மரச் ெ ஆடுகுத் கட்டிக் மரணச் நம் கு! அழிவல் அணுகி சிறு ெ
 

திறமையுடனும் ஊடுருவி நோக்கி இன்றைக்கும் பொருந்தக்கூடியனவாக இசைப்பதினால், அவற்றினுடைய சர்வதேசியத் தன்மைக்குக் குந்தகம் விளையவில்லை. நமக்குப் பழக்கமான ஒர் உதாரணத்திற்கு வருவோம். புதுமைபித்தனுடைய 'மகாமசானம், என்ற சிறு கதை இதற்கு ஏற்றது. இரைச்சலும் வேகமும் மலிந்த சென்னை பட்டணந்தான் கதையின் பகைப்புலம். வீதியோரத்தில் நிறைந்து வழியும் கூட்டம். சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரன் சாகக்கிடக்கிறான். அவனை எவரும் அநுதாயத்துடன் நோக்கவில்லை. இன்னொரு பிச்சைக்காரனும் ஒரு சிறுமியுந்தான், அவனைக் கவனிக்கும் ஜீவன்கள். கதை, அசலான இந்திய பூமியில் வேரூன்றி எழுந்தாலும், அது சர்வதேசியத்தைத் தொடும் ஒரு பிரகரணத்தை - மற்றொரு மானிடனின் துன்பத்தைப் பற்றி மனிதர் கொண்டிருக்கும் அசிரத்தையை உள்ளடக்கி, சகல நாடுகளுக்கும் பொருந்தும் தன்மையுடன் அமைந்துள்ளது. தனித்துவமும், அதே சமயம் பொதுநோக்கும்; தேசிய வலிமையும், அதே சமயம் சர்வதேசியக் கண்ணோட்டமும் கொண்ட ஒரு கதைக்கு 'மகாமசானம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எவ்வளவுதான் முரண்பாடாக ஒலிப்பினும் கூட, அசலான தேசிய இலக்கியத்திற்கு ஒரு சர்வதேசிய சுருதி இசைந்திருக்கும்.
மரகதம், செப்டம்பர் 1961.
O
பதிந்த ஒலிநாடாக்கள் வேயில்லை.
பிராயத்தின் கூடாரங்கள் தயிருக்கின்றன.
சப்புகளில் வேகிற சாதம். திரையில் என் முதுகைக்
கொண்டிருக்கும் நீ. சுவடுகளை அனுமதிக்காது pந்தைமையின் வெளி. ல உன் இறப்பில் நேர்ந்தது -
விடக் கூடியதான தாலைவும், பிரிவும்.

Page 53
தி.ஜே. கனகரட்னா ҫ2
சமீப காலத்தில் வெளிவந்த மெளனியின் சிறு கதைத் தொகுதியான அழியாச்சுடர் நமக்கு மெளனியின் கதைகளின் இலக்கியத் தரத்தையும் திறமையையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் அதியுன்னத வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இவ்வளவு காலமும் நாம், "எழுத்தில் பிரசுரிக்கப்பட குடை நிழல்' என்னும் கதையைத் தவிர, யாராவது இவ்வாசிரியரின் கதையைப் பற்றிக் கூறத்தான் கேட்டிருக்கின்றோம். இச் சிறுகதைத் தொகுப்பை, ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னராவது வெளியிட்டதற்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்த இடைக்காலம் நமக்கு, இக்கதைகளை அவற்றினுடைய சரியான தரத்தில் வைத்துப் பரிசீலனை செய்வதற்கு மிகவும் வாய்ப்பளித்திருக்கிறது.
ܓܡܗ2
எமது மதிப்புக்குரிய எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சகர்களுமான புதுமைப்பித்தன், ரகுநாதன், கா.நா.
G சுப்பிரமண்யம், சிசு செல்லப்பா முதலியவர்கள் ரை இந்த மெளனியினுடைய கதைகளைப் புகழ்ந்து போற்றியிருக்கின்றார்கள். ‘எழுத்து' பத்திரிகையைத் தவறாது படிக்கும் வாசகர்கள், அதிலே ஒரு மெளனி வழிபாட்டின் பிரதிபலிப்பை - மெளனியையும் ஹென்றி ஜேம்ஸையும் ஒப்பு நோக்குவதிலும், ஒருமித்தலிலும் காணலாம். ஹென்றி ஜேம்ஸின் சிக்கலான நடைக்கும் மெளனியின் அவலட்சணமான, ஒட்டமில்லாத, கட்டுக்கடங்காத 'குடைநிழலின் நடைக்கும் அதிக வேறுபாடு களுண்டு. மெளனியின் எழுத்துலக இடைக்காலச் சன்னியாசத்தினால், எழுத்துப் பரிச்சயம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. 'குடை நிழலில் எத்தனை வசனங்கள் "போலும், போலும் என்று முடிவடைகின்றன என்பதைக் கவனித்தால் இது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகும். ஜோன்ஸ் தன்னுடைய 9 மரணத்தைப் பற்றித் திடீரென நினைத்துக் கொள்வது விசித்திரமாக இருக்கிறது; அவள்
M
 

மெளனி" வழிபாடு
ஒரு தெளிவான விளக்கமுள்ள பாத்திரமல்ல. இவைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் கால் மெளனியை ஹென்றி ஜேம்ஸுடன் ஒப்பிடுவது விநோதமானது. மேற்கூறிய தகுதியுள்ள எழுத்தாளர்களுக்கும் திறமையுள்ள விமர்சகர்களுக்கும் எதிரான ஒரு கருத்தைக் கூறும்போது பயமாகத்தானிருக்கிறது. இருந்தாலும் மெளனியைப் பற்றிப் புனர்மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.
ஏறக்குறைய 25 வருடங்ளுக்கு முன்பு, முன்னொரு காலத்தில்' என்று ஆரம்பமாகும் கதைகள் எழுதுவது 'மவுசாக இருந்த நேரத்தில் சிறுகதை உருவத்தை, உணர்ந்து மெளனி" சிறுகதை எழுதினார். இது மகிழ்ச்சிக்குரியது. அவருடைய கதைகள் எல்லாவற்றிலுமே கவிதையின் உணர்ச்சியூற்று சுரந்து கிடக்கிறது. 'பிரபஞ்சகானம்' என்னும் கதையில் ஒளிரேகை' என்னும் சொற்பிரயோகம் பல கருத்தக்களை நமக்கு உணர்த்துகிறது. கதவினிடையில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒளிக்கீற்றுகளுடன் விதியின் கீற்றுக்களை ஒன்று படுத்துதல் மெச்சத்தகுந்தது. இலைகளொன்றுமில்லாமல் சூனியமாகக் -ைX காட்சியளிக்கும் பட்ட மரம் (பக்கம் L్వ 2) சுளியில் அகப்பட்டுத் திரும்பித் భఖ திரும்பி ஓடும் மனோநிலை (பக்கம் 82) ஒரு வேசியின் மனத்தை, |அரைவாசியழிந்த காற்சுவடுக்கு ஒப்பிடுதலும் (பக்கம் 113) ஆசிரியரின் திறமைக்கு எ டு த் து க் க ரா ட் ட (ா ன ゾ உதாரணங்களாகும். உவமித்து உணர்த்தும் தன்மையை மிகவும் /. நுட்பமான வார்த்தைகளால் * கச்சிதமாகக் கையாண்டு விடுகிறார். ஆனால் அதனுடைய குழம்பிய நடையினால் கதை திரும்பத் திரும்ப வாசித்தால்தான் புரிகிறது. ஆசிரியருடைய நடையில் ஒரு சுதந்திரமான தனித்துவமும், உதாரணப் பொருள்களுக்காக உருவகங்களும் ஒளி, இருட்டு, இயற்கை, சங்கீதம் முதலியன கையாளப்படுவதும் மிகவும் சிறந்த அம்சங்களாகும்.
好

Page 54
ஏ.ஜே. கனகரட்னா
பொதுவாக, நான்கு விதமாகக் கதையைக் கூறலாம். (ஆனால், இவைகளை ஒன்றோடொன்று கலந்து கூறுவதும் உண்டு)
(1) கதாசிரியனே கதையைச் சொல்லுதல் (2) ஒரு பாத்திரத்தின் மூலம் கதையைச் சொல்லுதல் (3) நிகழ்காலத்தில் வைத்து நடப்பதை அப்படியே கூறுதல் (4) கதாசிரியன் கதையைத் தானே கூறாமல் பாத்திரங்களின் மூலம் கதையைக் கூறுதல்.
மெளனி தன்னுடைய கதைகளில் இந்த நாலாவது முறையைத்தான் அனேகமாகக் கடைப்பிடிக்கின்றார். அவரை அவருடைய எந்தக் கதாபாத்திரத்துடனும் ஒன்றிப் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அந்தப் பாத்திரங்களுடைய மனத்தை ஊடுருவிப் பார்த்து அவர்களுடைய எண்ணங்களையும் அபிலாசைகளையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றார். கதைகளில் அடிக்கடி வந்துபோகும் நான்(களை) ஆசிரியர் /Nஎன்று குழப்பிக்கொள்ளக் கூடாது.
s
s இவருடைய கதைகளில் 'குடும்பத்தேர் ட் இன்னேரம் இன்னேரம்', "மிஸ்டேக்', (6 'மனக்கோலம்' ஆகிய கதைகளே சிறந்தக் கதைகள் என்று கூறலாம். இக்கதைகள் ரே அழியாச்சுடர்', 'பிரபஞ்சகானம் முதலிய 

Page 55
ஏ.ஜே. கனகரட்னா
காட்டப்படவில்லை. அவனுக்கு ஏனிந்த வெறுப்பு என்று நம்மை நாமே கேட்டுக் கொள்கின்றோம். "அவன் பிரிந்த நேரம்” “அந்த நிகழ்ச்சி"யென்று ஆசிரியர் காரணம் கூறியும் தப்பிவிட முடியவில்லை. மணவோட்ட நடையில் கதை சொல்ல முயன்று ஆசிரியரே அதில் குழம்பி நம்மையும் கலக்கிவிடுகிறார். கதையின் கதாநாயகனாகிய அவன்', 'அவளின் மறைவால் ஏன் துக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக அவன் சந்தோஷப்பட்டிருக்க வேண்டுமே. ஏனெனில் அவளின் சாவினால் சங்கீதம் பிரபஞ்சமெங்கும் வியாபித்துவிட்டதே. அவனது துயரத்துக்கும் வெறுப்புக்கும் காரணங்கள் பொருந்தவில்லை. 'அழியாச்சுடர் கூ டி ய வி த த் தி ல் பூரணத்துவமுடையதாகவில்லை. அதனுடைய நடை விறுவிறுப்பானதாகவும், உவமைகள் கவர்ச்சியுடையனவாகவும், திறமையாக உணர்த்தும் சக்தியுடையனவாகவும் இருக்கின்றன. முடிவில் நாம் அந்தக்
/Nகோயிலின் மங்கிய ஒளியிலே அங்குமிங்கும்
க பறந்து செல்லும் வெளவால்களின்
நிலையிலிருந்து தடுமாறுகின்றோம். (என்ன, ஏன், எதற்காக என்பவைகள் புரியவேயில்லை)
(6 இந்தக் கதையை கதாசிரியர் 'தன்மையில்' ரை கூறுகின்றார். அந்தக் கதையில் நான் என்பது
மனச் சந்தேகத்தின் பிரதிபலிப்பாகத்தானிருக்க வேண்டும். "எல்லாம் அவனுக்குத் தெரியும் என்ற எண்ணம்தான் எனக்கு - அவன் என்பது இருந்திருந்தால்?" - இதை நாம் ஒரு புரியாத புதிரின் பிரதிபலிப்பு என்று சொல்வதற்கில்லை; ஆனால் ஒரு மங்கலான தெளிவின்மையென்றே கூறலாம். கதை சொல்பவருடைய சினேகிதன் அவளை (?) ஒரு கோவிலில் சந்தித்துக் காதலிக்கின்றான். 'அவளைச் சந்திப்பதுபற்றி இருதடவைகள் மாத்திரம் கூறப்படுகிறது. இருதடவைகளும் அந்தக் கோவிலிலேயே அவன்' அவளைக் காண்கிறான். முதற் சந்திப்பின்போது 'அவன் உனக்காக நான் எதுவும் செய்யக் காத்திருக்கின்றேன். எதுவும் செய்யவும் முடியும் என்று கூறியபொழுது, அங்கிருந்த யாளிகளும் லிங்கமும் அவற்றைக் கேட்டுவிட்டன போன்றும், அந்த லிங்கம் உருவம் கொண்டு தனது புருவத்தைச் சுழித்தது
 
 

சிறப்பிதழ்
போலவும் அவன் உணரக் கூடியதாக
இருந்தது. யாழிகள் தமது பின் கால்களில் நின்றுகொண்டு அவனைப்
பயமுறுத்துவது போன்ற ஒரு பிரமையுண்டாயிற்று. இரண்டாவது தடவை அவைகளிலொன்று இவளை உற்றுநோக்குவது போலவும் மற்றொன்று வெகுண்டு குனிந்து பார்ப்பது போலவும் தென்பட்டன. இவைகள் ஏன் இப்படியாக நடந்து கொள்ளவேண்டும். எதையெதையோ தேவையில்லாமல் புகுத்திவிட்டு, அவைகளை மனவோட்டத்தின் ஒரு முற்றிய நிலையென்று கூறுவது தவறானதாகும். அவன் தனது வாழ்வே அஸ்தமித்துவிட்டதாகக் கருதுகிறான் - காய்ந்து கருகிய மரத்துக்கு அவனை உவமையாகக் கூறுகிறார் ஆசிரியர். அப்படியான ஒரு உருக்கமான நிகழ்ச்சியைக் கண்டு அந்த யாளிகளும் மனித சக்திக்கப்பாற்பட்ட லிங்கமும் கோபமடைவது
பொருத்த மில்லாதவைகளாகும். "நான் />
விதியின் நிழல். என்னிடம் காதலின் முழுவசீகரக் கடுமையைக் காணப்போகின்றாய் என்று கூறப்படுவது வாசிப்போரின் உணர்ச்சியைக் கூட்டுவதற்காக (மெலோடிரமடிக்) பிரயோகிக்கப்பட்டாலும்; வெற்றி பெறவில்லை. கதையமைப்பின் கட்டுக்கோப்புக்குள் நிற்காமல் மிஞ்சிவிடுகிறது. கடவுளின் கோபமும், யாளிகளின்
d
6.
d
J
L
பயமுறுத்தலும் எதற்காக, ஏன் என்று ெ
விளங்கவில்லை. காதலர்களை ஏன் பிரித்துவைக்க வேண்டும். நிச்சயமாக அந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளினால் அந்தக் காதலர்கள் பிரிக்கப்படவில்லை. இது
கதாசிரியரே ஒத்துக்கொள்கின்றார். அந்த அவனும் காற்றிலே மறைந்துவிடுகின்றான்.
. மற்றைய கதைகளை ,447 |ஆராய்வதற்கு முன்பு எலியத் டெட்ட/ என்னும் அறிஞன் சொன்னதை ஞாபகப்படுத்திக் கொள்ளல் பிரபஞ்ச கானத்துக்கும், அழியாச் சுடருக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "கலையில் மனித உணர்ச்சிகளை உணர்த்தக்கூடிய ஒரே ஒரு வழி, உவமைகளால் ஒப்பு நோக்குதலேயாம். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களால் ஒரு நிலுயை அல்லது
விளங்கவில்லை யெ ன்பதைக்
~~

Page 56
ஏ.ஜே. கனகரட்னா ஒன்றுபடுத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியுடன் ஒத்துறவாடச் செய்தல் வேண்டும். அந்த வெளியுருவங்கள், உணர்ச்சிகளை ? அல்லது உணர்ச்சியனுபங்களைத் தொட்ட மாத்திரத்தே அழிந்துவிட வேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிடப்பட்ட உணர்ச்சி பிரதிபலிக்கப்பட ஏதுவாகவிருக்கும். வெளியுருவங்கள் உணர்ச்சிகளைத் தட்டிவிட முடியாதவைகளாக இருந்தால் இது கலையின் பரிபூரணமின்மையையே காட்டுகிறது" இவ்வாறு கூறினான் எலியத்.
மெளனியினுடைய அநேக கதைகளில் ஆப்ஜக்டிவ் காரலேடிவ் (objective correlative) என்னும் தன்மை குறைந்து காணப்படுகிறது. வெளியுருவ உவமைகள் உணர்ச்சியுடன் ஒன்றாவது குறைவு. உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதற்கு, போதிய உயிர் அவைகளிடம் கிடையாது. "கொஞ்ச தூரம், "காதல்சாலை', 'எங்கிருந்தோ வந்தான் முதலிய கதைகளில் சுயமனத் திருப்தியைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் கதையிலுள்ள சம்பவங்களுடன் உவமிக்கும் ட் பொருட்கள் உணர்த்த வேண்டியவற்றைச் (6 சரியாக உணர்த்தமுடியவில்லை. உணர்ச்சிகளின் பளுவைத் தம்முள்ளடக்கிக்
கொள்ளமுடியாமல் கதைகள் தத்தளிக்கின்றன. */முதற் கதையில் அவனுக்கும் ரோஜாப் பூவுக்குமுள்ள தொடர்பை விரிவாகக்
கூறவில்லை. இத்தகைய சம்பவத்தினால் “Say Gör” ( மது வருந்துவது, சுயமனத் மெளனிய
திருப்தியின் [5lILO! விதத் தெ னி தூண்டுதலென்றே கூறவேண்டும். காரண காரியமில்லாமல் அவள் பாத்தி விசனப்படுவது மெளனியுடைய கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது. 海 விபசாரியான கிருஷ்ணவேணி ஏன்  ேக ர ப் தற்கொலை செய்ய வேண்டும். பல வீ 6 வேண்டுமென்றே நாடக உணர்ச்சி இயல்புகளைப் புகுத்தியிருக்கிறார். ஏற்படுத்து ஒரேயொருக்கால் மாத்திரம் ராஜீவி (அனேகமாக இறந்ததாகக் கருதப்படும்)யைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது கதாநாயகனுடைய ஒரு நோக்கமேயில்லாத அலைச்சலுக்கும், அவனின் も மனத் துயரத்துக்கும் காரணம் காட்டத் தவறிவிடுகிறது. காரணத்துக்கும உணர்ச்சிப் பிரதிபலிப்புக்கும் பொருத்தமில்லாத
 

சிறப்பிதழ்
முரண்பாடு முன் நிற்கிறது. இதே குற்றச்சாட்டுக்கு இத்தொகுதியின் கடைசிக் கதையும் விதிவிலக்கானதல்ல. தன் மனச் சார்புக்கு (  ெச ன் டி மெ ன் டி ரா லி டி ) இடமளிக்கப்பட்டிருக்கிறது. பத்மாவுக்கும் சங்கரனுக்குமுள்ள தொடர்பென்ன? அவர்களை ஏன் பிரித்து வைத்திருக்கிறது? பதிலில்லாத கேள்விகள் மனதைக் குடைகின்றன. கதை சொல்லும் பாணியைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறவேண்டும். கதை, தன்மையில் கூறப்படுகிறது, பத்மாவுக்கும் சங்கரனுக்குமுள்ள தொடர்பைக் கடிதங்கள் கொஞ்சம் உணர்த்துகின்றன. இறந்துபோன அந்தப் பெண்ணின் பெற்றோர்களைக் கண்டு பேசுவதினால் கதை சொல்பவர் ஏதோ கொஞ்சம் அறிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சாவதற்கு முன்னால் தனது தாயாரை வெளியே
போகும்படிகூறுகிறாள். தகப்பன் வீட்டில் *
இல்லை. தாய் மகளின் விருப்பத்துக்கிணங்க Gh
அறையைவிட்டுப் போய்விடுகிறாள். இதன் பின்புதான் பத்மாவுக்கும் சங்கரனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணை கூறப்படுகிறது. இந்தக் கதை சொல்பவருக்கு, எப்படி சங்கரனுக்கும் பத்மாவுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் தெரியவந்தது; கேட்டவர்கள் ஒருவருமில்லை. (தாய் ஒட்டுக் கேட்பதைத்
6
d
L
தவிர) ஆனால் கதை சொல்லும் பாணியானது ெ இவ்விதங் கேட்டிருக்கக்கூடிய சாத்தியத்தைU,
-Xஉணர்த்தவில்லை.
பினுடைய  ெம ள னரி யி னு  ைட ய 6 f தெளிவற்ற பாத்திரங்கள் கதையின் கட்டுக் கோப்புக்கு பலவீனத்தை ரங்க ள |ஏற்படுத்துகின்றன. இத்தன்மையை T கட்டுக் மெளனியினுடைய எலலாக s கதைகளிலும் காணலாம். கதையில் க கு முழுக்க முழுக்கப் பாத்திரத்தைச் m ä சி த் த ரி ப் ப து ா த தை அவசியமில்லையாயினும் கதைக்குத் கின்றன தேவையான அளவுக்காவது ட/காட்டியிருக்கலாம். நினைவுச்
சூழலில் சேகரனுடைய துக்கத்துக்கும், அவன் குடிப்பதற்கும தகுந்த ஆதாரம் எதுவுமில்லை. கதைகளைப் புகழவோ இகழவோ முடியாத நிலையை ஆதாரமற்ற தன்மை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் கதையின் யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
O

Page 57
வாழ்வில் வெறுப்பினாலும் காதலின் தோல்வியினாலும் கதாநாயகர்கள், உருமவமற்று காதற்பித்துக் கொண்டு, கண்மூடித் தனமாகக் குடித்துவிட்டு, சங்கீதத்தில் தமது துயரத்தை மறந்திருந்து பேய் நடனமாடுவதை மெளனியுடைய அதிகமான கதைகளில் காணலாம். இந்த அம்சத்தை மெளனியினுடைய எந்தக் கதையும் காட்டத் தவறுவதில்லை. அவருக்கு இந்த விவகாரத்தில் மிகவும் ஈடுபாடு போலும். இவைகளை ஆசிரியருடைய சொந்த அனபவத்தின் உந்தலே என்று நினைத்தால் குறைகூற முடியாது. தனது அனுபவத்துக்கோ அல்லது அனுபவங்களுக்கோ, இலக்கியத்தன்மை கொடுக்க முயன்றிருக்கிறார். ஆசிரியர் தனது அனுபவங்களை இலக்கியத்துள் புகுத்தி, அதனைச் சரிவரப் பிரதிபலிப்பதிலோ அல்லது அவ்வுணர்ச்சியினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதிலோ வெற்றிபெறவில்லை; இலக்கியத்தின் பூரணத்துவம் கிடைக்கவில்லை.
இவைகளை நோக்குமிடத்து (மெளனியைச் சிறுகதையாசிரியர் என்ற
 

மட்டில்)இவருக்குக் கிடைத்துள்ள பெருமை இவருக்குத் தேவையான அளவைவிடக் கூடியதாகவிருக்கிறது; கொடுக்கப்பட்ட தரம் குறைக்கப்பட வேண்டும். அதை நான் ஏன் எடுத்துக் கூற வந்தேனென்றால் இப்பொழுது "மெளனி வழிபாடு” என்னும் தன்மை வளர்ந்து வருவது கவனிக்கக் கூடியதொன்றாக
இருக்கிறது. மெளனி ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே தனது பாத்திரங்களைப் படைக்கிறார். புதுமைப்பித்தனுடைய
கதைகளோ எல்லாக் கோணங்களையும் தொட்டு மிகவும் பரந்து கிடப்பது மாத்திரமல்ல, பூரணத்துவமும் அடைந்திருக்கிறது.
தமிழில் உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனத்துக்கு வழிபாடுகள் நந்திகளாக குறுக்கே இருக்கின்றன. உருவ வழிபாடுகளால் நாம் துக்கப்பட வேண்டும்; அதுவும் அந்த உருவமானது தன்னையே தாங்கிக் கொள்ள முடியாத அத்திவாரமுடையதாக இருந்தால் கூறவே வேண்டியதில்லை.
சரஸ்வதி இதழ் பிப்ரவரி - மார்ச் 1961
ானும் இருட்டு க்கு அங்கு க்கப் பிடிக்கவில்லை ந்து நடந்தேன் க்கலாம் என்றால் ட்டாகி விட்டது ர்க்கவும் இல்லை ந்தாலும் க்கமாய் இருந்தது ள் அப்படிச்
f6)65 65uld list6
ற்காக படி நினைக்கக் கூடாது திற்கு விலங்கு
டப் பார்த்தேன்
ந்தும்
"ளில் ஊற்றிய
"ணிரை னும் கொஞ்சம் உயர்த்தி லயில் ஊற்றினேன் at ரியாமல் அல்ல wą

Page 58
ஒரு விதத்தில் பார்க்கப்போனால் மின்சாரம் எனக்கு தம்பிதான். ஆறு வருடம் இளமை. இன்னும் விளக்கமாகச் சொன்னால் எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வந்தபோது எனக்கு வயது ஆறு. அந்தக் காலத்தில் இருந்தே எனக்கு மின்சாரத்தில் இயங்கும் கருவிகளில் ஒரு பிரியம் இருந்தது.
என் இள வயதில் நான் பார்த்து அதிசயப்பட்ட மனிதர் பொன்னுசாமி அவர் ஒரு கணக்காய்வு (Audit) கம்பனியில் வேலை ^ப்ார்த்தார். பெரிய பெரிய லெட்ஜர் களையெல்லாம் அவருடைய மேசைமேலே ட் காலை வேளைகளில் கொண்டு வந்து போட்டு G விடுவார்கள். வலது கையில் இரண்டு விரல்களுக்கிடையில் பென்சிலைப் பிடித்துக் கொண்டு மேலிருந்து கீழாக கோடு இழுத்துக் *கோண்டே அசுர வேகத்தில் கணக்குகளைக் கூட்டி முடித்துவிடுவார். மின்சாரத்தில் இயங்கும் கூட்டல் மெசின் வந்த சில நாட்களில் அவருடைய வேலை பறிபோய்விட்டது.
நான் 16 மைல் தூரம் சைக்கிள் மிதித்துப் போய் கம்புயூட்டரைப் பார்த்தபோது அது ஒரு முழு அறையை அடைத்துக் கொண்டு கிடந்தது. மஞ்சள் உடை இளம்பெண்கள் நீள்சதுர அட்டைகளில் துளைகள் போட்டு கம்புயூட்டருக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது விஷயத்தை கிரகித்து அன்றைய அலுவல்களைச் சரியாகச் செய்து கொடுத்தது.
ஓர் ஒன்பது வருடத்திற்கு முன்புதான் முதன்முதல் மடியில் வைக்கும் கம்புயூட்டர் ஒன்று எனக்குக் கிடைத்தது. இதை நான் கையேட்டில் சொன்னபடி மடியில் வைத்து சீராட்டினேன். ஏவல்களை வேகமாகச் செய்து | கொடுத்தது. அது என்னை வளர்த்தது. என்னுடைய இணைபிரியாத தோழனாகி என் வாழ்வைச் சந்தோசமாக்கியது.
 

ஒலப் பெயல் நீக்
lälasto.
இது எப்படியோ 12000 மைல் தொலைவில் பிலிப்பைன் நாட்டில் வாழ்ந்த ஹென்றி போர்டிங்கோ என்ற ஒருவருக்குத் தெரிந்துவிட்டது. எனக்கு அவரைத் தெரியாது. அவரும் என்னை அறியார், ஆனால் அவர் என் சந்தோசத்தை எப்படியோ ஊகித்து அதை நீடிக்க விடக்கூடாது என்று உறுதி பூண்டிருந்தார்.
இந்த இடத்தில் மனித சுபாவத்தைப் படம் பிடிக்கும் நகைச்சுவை துணுக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அதைக் கூறாமல் மேலே செல்லமுடியாது.
நீதிபதி வீட்டிலே உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்தாய். சரி, போகும்போது ஏன் வீட்டுக்காரர் கன்னத்தில அறைந்தாய்?
கள்ளன் ஐயா, செல்வம் மாத்திரம் ஒருத்தனுக்குச் சந்தோசத்தைத் தருவதில்லை.
இதைத்தான் டொஸ்ரோவெஸ்கி என்ற ரஷ்யப் பேராசான் சொன்னார், ஒருவர் பாரிஸ் ஈபல் கோபுரத்தைப் பார்க்கும்போது அவருடைய உள்மனதிலே அதனுடைய அழிவு பற்றியே சிந்தனை இருக்குமாம், இன்னொருவர் கெடும் போது ஏற்படும் திருப்தி, சந்தோசம் மனிதனுக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை.
இலங்கைக் கவிஞர் மஹாகவி அவர் ஒருமுறை புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். ஒரு தப்பான இடத்தில் முற்றுப்புள்ளி விழுந்திருந்தது. அதைப் தடவிப் பார்த்தார். உண்மையில் அது ஒரு பூச்சி விரல் பட்டு இறந்துவிட்டது. மஹாகவியின் மனது பதைத்தது. ஒரு பாபமும் அறியாத பூச்சி அது என்ன கெடுதல் செய்தது. கொன்று விட்டேனே" என்று பிரலாபித்தார். அப்படிப் பிறந்ததுதான் புள்ளியளவிலோார் பூச்சி" என்ற கவிதை.

Page 59
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். முல்லைச்செடி காற்றிலே அசைந்தபோது தேரைக் கொடுத்தான் பாரி. இப்படி எல்லாம் ? படிக்கிறோம், ஆனால் உண்மையில் மனிதனின் ஆழ் மனதில் கெடுதல் செய்யும் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. அதற்குக் காரணம் தேவையில்லை. மற்றவனுடைய அழிவே மகிழ்ச்சிக்குப் போதுமானது.
இந்த உணர்வு மிருகத்துக்கோ, பறவைக்கோ, பூச்சி, புழுவுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆறறிவு படைத்த மனிதனிடம்தான் நிறைய இருக்கிறது. அக்பர் வரும் விருந்தாளிக்கு இரண்டு கோப்பைகளில் மது வைத்திருப்பாராம். ஒரு கோப்பையில் நஞ்சு கலந்திருக்கும். விருந்தாளி படும் அவஸ்தையைப் பார்ப்பதில் அவருக்கு ஒரு சுகம். கழுவில் ஏற்றிய குற்றவாளி சாவதற்கு இரண்டு மூன்று நாட்கள் வரை இழுத்துக் கொள்வதுண்டு. அந்தக் கூக்குரலைத் தினமும் Lகேட்டுக்கொண்டிருப்பதில் மனிதனுக்கு
எத்தனை பிரியம்.
இப்படித்தான் முகம் தெரியாத ஹென்றி போர்டிங்கோ எனக்கு அனுப்பிய (6 வைரஸ் வந்து என் கம்புயூட்டரில் இடம் ரை பிடித்தது. இவன் யார்? சொந்தப் பெயரா, Lபுனை பெயரா? இடதுகைக்காரனா? இவன் சருமம் குட்டி எலிபோலச் சிவப்பாக இருக்குமா? ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் உள்ளாடை அணிவானா? கொந்தல் மாங்காய் சாப்பிடுவானா? இது ஒன்றுமே தெரியாது! 600 கோடி சனங்களில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தான்? அவனுக்கு நான் மனதறிய ஒரு குற்றமும் இழைக்கவில்லை; ஒரு கேடும் நினைத்து அறியேன். நானும் என் பாடுமாக இருந்தேன். என் இருப்பு இவனை ஏன் அச்சுறுத்தியது. W
என் முகவரியைத் தேடி வந்த அவனுடைய 'ஈமெயில் இப்படி இருந்தது.
நண்பரே, நான் முத்தமிடும்போது அவள் கண்களில் இந்த உலகத்தைப் பார்க்கிறேன். அவளோ கண்களை மூடிவிடுகிறாள். அது ஏன் என்று உங்களுக்கு தெரிபுமா? | இணைப்பைத் திறந்து பாருங்கள்.
என்ன வார்த்தைகள். 6Tւն ւսւգஏமாந்துவிட்டேன். மின்னஞ்சலைத் திறந்தேன்.
ܔܠ

குளவிக்கூட்டில் கல்லெறிந்தது போலாகி விட்டது. வைரஸ் என் கணனிக்குள் புகுந்து தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு பெருகத் தொடங்கியது.
ஒன்பது வருடங்களாக நான் பாடுபட்டு ?
சேகரித்த தகவல்களை எல்லாம் ஒவ்வொன்றாக உருமாற்றியது. அரித்தது; கலைத்தது; அழித்தது; இடம் மாற்றி வைத்தது.
இன்னொரு புத்திசாலித்தனமான காரியமும் செய்தது. என்னுடைய விலாசப் புத்தகத்தில் போய் குந்தியிருந்து கொண்டு அந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு முகவரிக்கும் செய்தி அனுப்பத் தொடங்கியது. இப்படி நூற்றுக்கணக்கான நண்பர்களிடம் அந்த வைரஸ் போய் சேர்ந்தது. நாசம் செய்தது.
இவர்களில் சிலர் பதில் அனுப்பினார்கள். பத்து வருடமாக தொலைந்துபோன ஒரு நண்பரையும் நான்
கண்டு பிடித்தேன். கோபமாக ஒருவர் நீ என்ன (p
செய்ய விரும்புகிறாய். என்னை ஒரு முட்டாளாக உருமாற்றப் பார்க்கிறாயா? அதற்கு அவசியமே இல்லை' என்றார்.
O
இன்னொரு கரிசனமான நண்பருடைய பதில் லி
ஒரு மோசமான வைரஸ் உங்கள் கம்புயூட்டரை ஆக்கிரமித்திருக்கிறது. உடனேயே சுத்தம்
செய்யுங்கள். சுத்தம் செய்யுங்கள்' என்று s
இருந்தது.
தெரியவந்தபோது காலம் கடந்து போனது. கணிசமான அளவு என் கோப்புகளைத் தின்று பசியாறிவிட்டது. நான் அதைத் திறக்கும் போதெல்லாம் வான விளையாட்டு போல மின்சாரத் துளிகள் பறந்தன. என் உத்தரவு களுக்கு எதிர் மறையான செயல்கள் நடந்தேறின.
என்னிடம் பேர்பெற்ற வைரஸ் விரட்டி இருந்தது. அதைக் களத்தில் இறக்கினேன். அப்படியும் இந்த பிலிப்பைன் தேசத்து எதிரியை முறியடிக்க முடியவில்லை. என் அழிவில் அளவில்லாத வேகம் கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் நண்பர் ஒருவரின் ஞாபகம் வந்தது. எப்பொழுது அவரைக் கூப்பிட்டாலும் அவருடைய டெலிபோன் குரல்தான் தகவல் விடச் சொல்லி அறிக்கை விட்டது. காலையில் ஐந்து மணிக்குப்
இந்த வைரஸ்ஸின் தீவிரம் எனக்குத்

Page 60
f
போய்விடுவார்; திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். கம்புயூட்டர் பழுது பார்ப்பது அவர் தொழில். முன்னாளில் அவர் தகப்பனார் அங்கே மருதனாமடத்தில் மந்திரித்து குழையடித்தவர். பரம்பரைத் தொழில் எப்பவும் கை கொடுக்கும் என்பார்கள்.
எக்லின்டன் மாக்கம் சந்திப்பில் அதிகாலை சனிக்கிழமை வேளை நான் போனபோது இரு கைகளையும் விரித்து பறப்பதற்கு ஆயத்தமாக நின்றார். பிறகு தெரிந்தது இது ஒரு சைனிஸ் வகை உடல் பயிற்சி என்று. அவருடன் திரும்பியபோது நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக என்னுடைய கம்புயூட்டரின் குறைகளை விவரித்தபடியே வந்தேன். 'ம்,ம்' என்ற வசனத்திலும் பார்க்க நீண்ட ஒரு வசனத்தை அவர் பேச விரும்பவில்லை.
கூராக்கிய @@ பென்சிலை செங்கோல் போல் பிடித்துக் கொண்டு கம்புயூட்டரின் வாசல்களை ஒவ்வொன்றாக
/Rதிறந்து பார்த்து ஆராய்ந்தார். பிறகு என் தம்பி
பற்றி ஒரு கேள்வி கேட்டார். இப்படி செய்யும்போது மின்சாரத் தூள் பறக்கிறதா? என்றார்.
நான் ஒமோமோமோம்' என்றேன்.
என்ன மூளைத் திறம்! என்ன
*/புத்திமான்! அப்பொழுதுதான் எனக்கு
இவருடைய மூளையைக் காப்பதற்கு பத்தொன்பது மண்டை எலும்புகள் இரவு பகலாகப் பாடுபடுவதன் சூட்சுமம் புரிந்தது.
இது பொல்லாத வைரஸ் என்றார். அவர் தகப்பனார் பொல்லாத காட்டேரி என்று சொல்லும் போதும் அதே குரல்தான். என்னுடைய சருமத்தின் கீழே ரத்தம் பெருக்கெடுத்து நாலு பக்கமும் வேகமாகப் பாய்ந்தது. அந்த இரைச்சல் கேட்காத தூரத்தில் நின்று கொண்டு முகத்தை இயன்ற மட்டும் துக்கமாக மாற்றி வைத்து அவரைப் பார்த்தேன். இரண்டு மூச்சை இழுத்து ஒன்றாக விட்டு "g)605 quarantine பண்ணவேணும்' என்றார்.
‘ஒரு பத்து வயது பொடியனுக்கு சொல்றதுபோல விளங்கப்படுத்துங்கோ
'அடக்கலாம், ஆனால் அழிக்க முடியாது' என்றார்.
இன்னும் கொஞ்சம் கீழே வந்து நாலு வயது பையனுக்கு புரிகிறது போல

சொல்லுங்கோ’ என்றேன்.
'உங்களுக்கு சூரபத்மனுடைய கதை தெரியும்தானே. சாகா வரம் பெற்றவன். தேவர்களுக்கு தொல்லை கொடுத்தபடியே இருந்தான். அப்பொழுது முருகப் பெருமான் கோபம்கொண்டு தன் வேலாயுதத்தை
எறிந்தபோது சூரனுடைய உடல் இரண்டாகப்
பிளந்தது. ஒரு பாதி சேவலாகவும், ஒரு பாதி மயிலாகவும் மாறியது.
இது பழைய கதை" இன்னும் இருக்கு சூரன் சாகவில்லை. உருமாறினான். அவ்வளவுதான். சேவலைப் பிடித்து கொடியிலேயும், மயிலைப் பிடித்து வாகனமாகக் காலின் கீழேயும் முருகன் வைத்துக் கொண்டார். இரண்டையும் எப்பவும் கண்காணித்துக் கொண்டே இருக்கவேணும் , கொஞ்சம் அசந்தாலும் சூரன் பழைய உருவம் எடுத்துவிடுவான்.
அப்ப இந்த வைரஸ்ஸைக் கொல்ல முடியாது?
அதைத்தான் சொல்றேன். புத்தியறிஞ்ச
ܓܡܬܐ2
(p
彰
பொண்ணை மூலையில உட்கார்த்தி து
வைப்பதுபோல இந்த வைரஸை ஒரு மூலையில பிடித்து வைக்கவேணும். அடக்கலாம், கொல்ல முடியாது. கம்புயூட்டர் தன் பாட்டுக்கு வேலையைச் செய்யும், என்றார்.
யாயும் ஞாயும் யாராகியரோ என்று
தொடங்கும் சங்கப் பாடல் ஒன்று நினைவுக்குழு
வந்து நெருடுகிறது.
எனது தாயும் உனது தாயும் யாரென்று அறியோம் எனது தந்தையும் உனது தந்தையும் உறவு அற்றவர் நானும் நீயும் முன்னோ பின்னோ கண்டதில்லை பாலை மண்ணில் மழை நீர் போல உன்னுடைய வைரஸ் என் கம்புயூட்டரில் கலந்ததுவே.
ராமர் அறியாமல் ஊன்றிய அம்பில் குற்றமற்ற ஒரு தேரை செத்துப் போனது. அது விபத்து. இது என்னை நோக்கி ஏவப்பட்ட வைரஸ் அம்பு. பிலிப்பைன் நாட்டில் வாழும் முகம் தெரியாத நண்பரே! என் வந்தனங்கள்.
உமக்கு மகா திருப்தியா இருக்கும்.
வயிறு குளிர்ந்திருக்கும். ஒரு கேடும்
நினைத்தறியாத என்னை உம்முடைய வைரஸ் பீடித்துவிட்டது. இதைப் படைப்பதற்கு அல்லும் பகலும் எத்தனை மனித நாட்களை செலவழித்திருப்பீர். உம் உழைப்பு வீணாகவில்லை. வைரஸ் வலுவானது.
ഭീ
O

Page 61
இப்பொழுதும் அடிக்கடி வெளியே வந்து சிறு என்றென்றும் உமக்கு நான் அடிமையே. உம் பு படையெடுக்கட்டும். பரவட்டும்.
மு. தளையசிங்கம் ஆய்
ஊட்டியில் 04/06-05-2002 மு. தளையசிங்கம் பற்றிய விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது நடத்தும் 'குரு நித்யா ஆய்வரங்கம் சார்பில் ஏற்பாடு செய்தோம். கூட்டம் சொல் புதிதின் கூட்டங்கள் வழக்கமாக நடப்பதுபோல மிக நட்பார்ந்த விதத்தில் தீவிரமான விவாதங்களுடன் நடந்தது. நித்யா கருத்தரங்கம் தனிப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றி நடத்தும் மூன்றாவது அரங்கு இது. பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் ஆகியோரைப்பற்றி ஆய்வரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
தளையசிங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட தெளிவான காரணங்கள் உண்டு. சொல் புதிதில் ஆரம்பம் முதலே தத்துவ அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம். தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் இவ்விஷயங்கள் அதிகமாகப் பேசப்பட்டதேயில்லை. கலை இலக்கியம் ஆகியவற்றுக்கும் அறிவியல் தத்துவம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மீண்டும் மீண்டும் நித்யா பேசியிருக்கிறார். நவீன அறிவியல் இன்று தத்துவப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வதாக ஆகியுள்ள நிலையில் இத்தொடர்பை மேலும் அழுத்திக் காட்டவேண்டியுள்ளது. அறிவியல் தத்தவம் இலக்கியம் மெய்யியல் ஆகிய தளங்களைத் தொட்டுப்பேசும் ஒரே தமிழ் முன்னோடிச் சிந்தனையாளர் தளையசிங்கம் மட்டுமே. பிறரைப்போல் அவர் மேற்கத்திய சிந்தனைகளைத் தமிழுக்கு இறக்குமதி செய்ய முனைவதில்லை. அவை எதிர்கொண்ட அதே பிரச்சினைகளைத் தமிழ்ச் சூழுலில் நின்று எதிர்கொள்ள முயல்கிறார். அதில் அவர் அடைந்த வெற்றியும் தோல்வியும் முக்கியமானவை. ஆகவே அவரை ஒரு தொடக்கமாகக் கொள்வது அவசியம் என்றுபட்டது.
வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன், வினய சைதன்யா, நாஞ்சில் நாடன், தேவதேவன், எம். வேதசகாய குமார், கீதாஞ்சலி பிரியதரிசினி, சூத்ரதாரி, க.மோகனரங்கன், அன்பு வசந்தகுமார், (தாமரை) ஆறுமுகம், ஆர்.பி.ராஜநாயகம், ஜெயமோகன், எஸ்.அருண்மொழிநங்கை, ஆர்.அபிலாஷ், பூரீனிவாசன், முத்துராமன், ப.சிவக்குமார், நிர்மால்யா, எம்.யுவன், சரவணன்1978, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முதல்நாள் காலை அமர்வில் சரவணன்1978 தளையசிங்கத்தின் கதைகளைப்பற்றி கட்டுரை வாசித்தார். தளையசிங்கத்தின் கதைகளில் மன ஓட்டம் நேர்கோடாக இல்லாமல்அலைகளாக, ஒன்றையொன்று வெட்டிச்செல்லும் கோடுகளாக இருப்பது முக்கியமானது என்றார். தளையசிங்கத்தின் ரத்தம் போன்ற கதைகளைப் பற்றி விரிவான விவாதம் நடைபெற்றது. மாலை அமர்வில் க.மோகனரங்கன் தளையசிங்கத்தின் முதல்கட்ட கதைகள் மட்டுமே கலைவீச்சுடன் இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். பிற்பகுதி கதைகளில் அவை மையப்படுத்தப்பட்ட கருத்து நோக்கி செல்லுகின்றன என்றார். தளையசிங்கம் மெய்யியலையும் இலக்கியத்தையும் அறிவியலையும் ஒன்றாக இணைக்கமுயலும் சிந்தனை வீச்சு முக்கியமானதென்றாலும் அவரது பூரண இலக்கியம், பேர்மனம் குறித்த கருத்துக்கள் உட்டோப்பியா போன்ற கற்பனைகள் என்றார்.

சண்டித்தனம் காட்டி மறைந்து விடுகிறது. இனி ணி தொடரட்டும். இன்னும் பல தேசங்களுக்கும்
O
வரங்கம்
சரவணன் 1978
இரண்டாம் நாள் அமர்வில் காலையில் எம். வேத சகாயகுமார் தன் கட்டுரையை முன்வைத்து பேசினார். தளைய சிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் முற்போக்கை விட்டு விலகி நவீனத்துவ சாயலுடன் விமர்சனத்தினை முன்வைத்தாலும் அவரது தேடல் அதற்கு வெளியில்தான் இருந்தது என்றார். அதுவே அவரை மெய்யுள் வரை இட்டுச்சென்றது. மெய்யுள் ஒரு வகையில் முன்னோடியான இலக்கியவடிவம். ஆனால் கலை வெற்றி கூடியதல்ல. பாரதியின் ஞான ரதம் போல அவ்வடிவமும் பின்னோடிகளை உருவாக்க வில்லை. தளையசிங்கம் ஜெயகாந்தனை புதுமைப்பித்தனை விட மேலான கலைஞனாகக் கூறுவதைப் பற்றி விரிவான விவாதம் நடந்தது. வேதசகாய குமார் "அது தளையசிங்கத்தின் இறுதியான கருத்தல்ல. அவரைக் கவர்ந்தவை ஆரம்பகாலக் கதைகள், குறிப்பாக விழுதுகள் போன்ற ஆக்கங்கள் மட்டுமே" என்றார். இலட்சியக்கனவும், அறிவர்ந்த தன்மையும் உள்ள படைப்புகளுக்கான தளையசிங்கத்தின் தேடலே ஜெயகாந்தனின் வடிவத்தை அங்கீகரிக்க வைத்தது என்றார்.
இரண்டாம் நாள் மாலையில் ஜெயமோகன் தன் கட்டுரையை முன்வைத்துப் பேசினார். தளையசிங்கத்தின் தத்துவ நோக்கு குறித்த மெய்யுளை முன்வைத்து விவாதித்தார். தளையசிங்கம் முன்னோடி சிந்தனையாளர்களுக்கே உரிய கலைத்தன்மையும் தெளிவின்மையும் கொண்டவர். இந்தியத் தத்துவ மரபின் கருவிகளை அவர் அப்படியே பயன்படுத்தியது பெரிய இடர்களை உருவாக்கியது. அவர் ஒரு விளிம்பு நிலை தத்துவவாதி. அத்தகையோர் முன்னோடி ஊகங்களை உருவாக்குபவர்கள். அடிப்படை கேள்விகளை விவாதிப் பவர்கள். தளையசிங்கம் எல்லா அறிவுத்துறைகளுக்கும் தேவையான ஒருங்கிணைவு, நேர்எதிர்மறைகள் முட்டிக் கொள்வதனால் ஏற்படும் தத்துவார்த்த நகர்வு சாத்தியமற்றுப் போய் இப்போது உருவாகியுள்ள உறைநிலை ஆகியவற்றைக் குறித்து சிந்தித்த முன்னோடி தத்துவவாதி. அவரில் இருந்து நாம் புதிதாகச் சிந்திக்க தொடங்க முடியும் என்றார். தொடர்ந்து மெய்யியலின் இலக்கியத் தொடர்பு குறித்தும், தளைய சிங்கத்தின் வெற்றி தோல்விகள் குறித்தும் விரிவான விவாதம் நடைபெற்றது. வெங்கட் சாமிநாதன், எம். யுவன் ஆகியோர் பேசினார்கள்.
மூன்றாம் நாள் காலை அமர்வில் தேவகாந்தன் பேசினார். இலங்கை எழுத்தில் முற்போக்கு கருத்துக்கள் தேக்க நிலையை அடைந்துள்ள இன்று ஒரு வித தத்துவமின்மை எழுத்தைப் பீடித்துள்ளது, தளையசிங்கம் குறித்த விவாதம் அதை மீட்க உதவும் என்றார். பின்பு தேவதேவன் தளையசிங்கத்தின் கருத்துக்கள் உண்மையனுபவத்தைத் தத்துவமாக ஆக்க முயன்றதன் தோல்விகள் என்று தன் கருத்தைத் தெரிவித்தார். நவீன அறிவியல் மெய்யியலுக்கு எழுப்பும் சவால்களைப் பற்றி சுவாமி வினய சைதன்யா நாராயண குருகுலம் பெங்களூர்) பேசினார். மொத்தத்தில் குறைந்தபட்சம் 16 மணி நேரங்கள் தீவிரவிவாதம் நடைபெற்றது. (விரிவான குறிப்புகள் www.thinnai.com இணைய இதழில்)

Page 62
கையில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தொன்பதாவது வருட தீபாவளி மலரோடு லண்டன் கோபுர வளாகத்திற்குள் நுழைந்தபோது மதிய நேரம் கடந்திருந்தது.
சவுத்ஹாலில் ரவி வீட்டில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டது தான் காரணம். இங்கிலாந்து வந்து எத்தனையோ நாள் கழித்து தமிழில் பேசக் கிடைத்த சந்தர்ப்பம் அது. சில கோப்பைகள் வெள்ளை ஒயினும், எலும்பு இல்லாத கோழி ^இறைச்சியும், தயிர் வடையுமாக இலக்கியம், ரி சினிமா, பழைய சிநேகிதிகள் என்று எங்கெங்கோ பேச்சு நீண்டு, ரவி போன வருடம் சென்னை வந்தபோது நடைபாதையில் க வாங்கிய அந்தப் பழைய தீபாவளி மலரில் வந்து தை நின்றது. எடுத்துக் கொண்டுபோய்ப் படித்து سیج விட்டு அடுத்த முறை வரும்போது கொண்டு G அவன் புத்தகத்தை என்னிடம் கொடுத்தான்.
லேசான மிதப்பில் தெருவுக்கு நடந்து பாதாள ரயில் நிலையத்துக்கும் வந்து சேர்ந்தாகி விட்டது. ரயிலுக்காகக் காத்திருந்தபோது பக்கத்தில் கவனிக்க அழகான வெள்ளைக்காரிகள் யாரும் இல்லாமல் போகவே, பழைய தீபாவளி மலரைப் பிரித்தேன்.
அறுபது வருடம் முந்திய மின்விசிறி, பட்டணம் பொடி, கொலம்பியா ரிக்கார்டு, புதுவருட டைரி, ஜவ்வாது, வாசனைப் புகையிலை விளம்பரங்கள். பஃபுக் கை வைத்த ரவிக்கையோடு வாசலில் கோலம் போடும் இளம் பெண்களுக்கு ஒட்ட வெட்டிய கிராப்புத் தலையோடு ஆண்களுமாக ஆக்ரமித்துக் 6 கொண்ட இடம் போக தெய்வங்கள், வால்ப் ரேடியோ பெட்டி, தளை தட்டாத கவிதைகள், குதிரை வண்டி, அன்னப் பறவைகள்.
 

ண்மனைக் கதை
கன்
ன்னை
தீபாவளி மலரின் பின் அட்டையில் சினிமா விளம்பரம். தீபாவளிக்குத் தென்னிந்தியா முழுக்க வெளியாகிறது. அரண்மனையும் கோட்டை கொத்தளமுமாகப் பின்னணியில் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்க, ராஜா வேடத்தில் மிடுக்கோடு ஒரு நடிகர். மீசையில்லாமல், கிரீடத்துக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும் தலைமுடியோடு, அட்டைக் கத்தியை உருவிய tugஅலட்சியமாகச் சாய்ந்து நிற்கிறார். பக்கத்தில் கவலையோடு கதாநாயகி சின்ன உருவமாக, நூற்றுப் பதினோரு பாட்டுக்கள் என்ற அறிவிப்பு ராஜா காலடியில். அத்தனையையும் பாடி முடித்த மிடுக்கோடு அவர் சிநேகிதமாகச் சிரித்தார்.
லண்டன் பட்டணம் வந்து சேர்ந்து இப்பத்தான் வெளியே வந்திருக்கேன் என்றார் ராஜா கரகரத்த குரலில், நான் மரியாதைக்காகத் தலையசைத்தேன். ரயில் வந்து கொண்டிருந்தது. பாதாள ரயிலை ஒட்டி வந்த சர்தார்ஜி என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். இவன் தங்கை என் புதிய பழைய சிநேகிதியா என்று இவன் முகத்தை வைத்துச் சொல்ல முடியவில்லை.
கையில் பழைய தீபாவளி மலரைப் புரட்டிக் கொண்டு பாதாள ரயிலில் வரும்போது பக்கத்தில் இருந்த நடு வயது வெள்ளைக்காரி, இத்தனை பழையதாக இருக்கிறதே இது இன்னும் புழக்கத்தில் இருக்கும் மொழிதானா என்று கேட்டாள். நான் புத்தகம் மட்டும்தான் பழசு என்றேன். புத்தகத்தின் பின் அட்டையைக் காட்டி இவர் உன் சாயலில் இருக்கிறார் என்றாள் அவள் நேசமான குரலில், அம்மணி, எல்லாக் கறுப்பர்களுக்கும் ஒரே சாயல் தானே உங்களுக்கு என்று கேட்க நினைத்தேன்.

Page 63
صبر
ܓܡܐ
நான் அரச பரம்பரையில்லை. ஆனாலும் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். படத்தில் ராஜாவுக்குப் பின்னால் இருப்பது போலப் பெரிய அரண்மனை இல்லை, அதில் பாதி அளவு இருக்கும். ஆனாலென்ன, அரண்மனை, அரண்மனை தானே. நான் போனது இப்போதில்லை. ரொம்பச் சின்ன வயதில். அரண்மனைச் சேவகன் ஒட்டி வந்த சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து அங்கே போனதை வெள்ளையம்மாளிடம் சொல்லி இந்திய ராஜாக்கள் பற்றிய அவளுடைய பிம்பம் சிதைகிறதா என்று பார்க்க ஒரு திடீர் விருப்பம்.
கையை வெள்ளைத் துணியால் துடைத்துக் கொண்டு அவள் இறங்கிப் போக எழுந்தாள். பக்கத்தில் லண்டன் கோபுரம் உள்ளது. அங்கே அரசர்களும் அரசிகளும் கழுத்தறுபட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போய்ப் பார். போகும்போது நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போனார்கள்.
எனக்கும் வேறு தலைபோகிற காரியம்
舰 எதுவும் இல்லை. எல்லா அரண்மனைகளுக்கும்
பூடகமான புன்னகையும் பார்க்க வருகிறவர்கள்
பற்றிய இளக்காரமும் உண்டு. ஆனாலும்
மர்மமான அழகோடு வா வா என்று
வித எப்போதும் கூப்பிடுகிறவை அவை,
へ丁イ அப்போது வா, போய்ப் பார்க்கலாம்.
தீபாவளி மலர் அட்டையில் ராஜா
விரல்களைக் குறுக்காக நிறுத்திச் சதுரம்
செய்து பார்த்தபடி சொன்னார்.
இறங்கினேன்.
300 வருடம் முந்திய உடையணிந்த காவலாளிகள் அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு அரண்மனை வளாகத்தின் சரித்திரத்தை விஸ்தாரமாக விளக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏனோ மாடு தின்னிகள் என்று பெயர். "பீஃப் ஈட்டர்கள் எல்லோருக்கும் அபரிமிதமான நகைச்சுவை கைவசம் இருந்தது. அவர்கள் எதிரில், அடுத்த நகைச்சுவைத் துணுக்குக்குத் தயாராக நின்றிருந்த பயணிகள்
1. சிரிப்பும் புன்னகையுமாக புகைப்படக்
காமிராக்களில் அடக்கியது போக மிச்சம்
வழிந்த சரித்திரத்தை கோக்கோகோலாவோடு
அவசரமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
ஒரமாக நின்ற ஒரு மாடுதின்னிக்கு நான்

வணக்கம் சொன்னேன். அவர் கண்ணிலும் பழைய தீபாவளி மலர் தான் கண்ணில் பட்டது. எந்த வருடம் வெளியான புத்தகம் இது? அவர் கேட்டார். சொன்னேன்.
எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கும். அவர் புத்தகத்தை வாங்கி ராஜாவைப் பார்த்தார். அந்த வயதில் ராஜாக்களைப் பற்றியும் ராணிகளைப் பற்றியும் நிறையக் கேட்டிருக்கிறேன் என்றார் அவர்.
இந்த இடத்தைக் கொஞ்சம் சுற்றிக் காட்ட முடியுமா? வினயத்தோடு அவரைக் கேட்டேன்.
இப்போது எனக்கு வேலை நேரம் முடிந்து விட்டது. என்றாலும் ராஜாவோடு வந்திருக்கிறாய். முடியாது என்று மறுக்க மாட்டேன்.
அவரோடு கல் பாவிய பெரிய முற்றத்தில் நடந்த போது பின்னால் கம்பீரமான சோகத்தோடு தேவாலயமும் முன்னால் பலிபீடம் போல் ஒரு மேடையும்/N தட்டுப்பட்டது. தீபாவளி மலரின் பக்கத்தைப் மு புரட்டியபடி அங்கே கையைக் காட்டினார். விரிந்த பக்கத்தில் தொப்பை வைத்தவன் (5 பின்னால் பட்டாசு விட்டுக் கொண்டிருந்த பையன்கள் நான்கு கட்டங்களில் நீண்ட நகைச்சுவைத் துணுக்கில் சிரிக்கட் ஆரம்பித்திருந்தது ஒயவில்லை. ..»
ஐந்து வயதில் நானும் நிறைய குறும்பு செய்திருக்கிறேன் என்றார் மாடுதின் னி. அப்போது எங்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆங்கிலத்தில பேச வீட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஸ்காட்லாந்துக் காரர்களாகிய எங்களுக்கு ஒரு பாரம்பரியம் மிக்க மொழி உண்டு. நாங்கள் வாரத்தில் ஒரு நாளாவது எங்கள் பரம்பரை மொழியையே பேச வேண்டும் என்று வற்புறுத்தி வந்தாள் என் பாட்டியம்மா. இப்போது பரம்பரை மொழியிலோ வேறு எதிலுமோ என்னோடு கூடப் பேச அவளோ வேறு யாருமோ இல்லை. ஞ 1ா யி ற் று க் கிழ  ைம க ளில் :

Page 64
சொன்னதை ராஜாவிடம், இவருக்கு இரண்டு மொழி தெரியும், பாடவும் வரும் என்று மொழி பெயர்த்தேன். ராஜா மரியாதையாகக் குனிந்து வணக்கம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். பழக்கிய பிராணியைக் கையில் எடுத்துப் போகிற அலட்சியமும் கர்வமும் எனக்கு வந்ததற்கு வழக்கப்படி வெள்ளை ஒயின் தான் காரணம். தயிர் வடை இல்லை.
இந்த வெள்ளை ராட்சசனுக்கு எத்தனை பாஷை வேணுமானாலும் தெரியட்டுமே. சங்கீதத்திலும் சாம்ராட்டாகவே இருந்துட்டுப் போகட்டும். எனக்கு என்ன போச்சு? கன்னடம் பேசுகிறவனை, இந்திக்காரனை எல்லாம் கூட்டி வந்து எனக்குப் போட்டியாக ராஜா வேஷம் போட்டுப் பாட வச்சானுகள். என்ன பிரயோஜனம்? ஒரு பாட்டாவது எடுபட்டதா? இல்லை ஒரு நடிகையாவது அவனுகள் கூடப் போனாளா? ஞாயித்துக் கிழமை படப்பிடிப்பு இல்லேன்னா அந்த அல்லிராணி அத்தனை /Nபேரும் கொஞ்சிக் குலாவிக்கொண்டு ரி எங்கிட்டத்தான் வருவாளுங்க. பேச ஏது நேரம்? கோகில வாணி மாத்திரம் உச்சத்தில் கூஊஊ என்று குயில் போலக் கூவுவா. ஒரு க் தடவை பட்டை உரிக்கும் வெய்யில் நேரத்தில் தை அவள் படுக்கையில் கூவ, வெளியே பங்கா N イ இழுத்துட்டு இருந்தவனும் எனனைப பாாககக காத்துக்கிட்டிருந்த ராவன்னா மானாவும் அலறி அடிச்சு படுக்கை அறை வாசலுக்கே வந்துட்டாங்கன்னாப் பார்த்துக்க, ராஜா கண்ணைச் சிமிட்டினார்.
இவர் உன்னிடம் ஏதோ பேசுகிறார் போல் தெரிகிறது. அந்த மொழி தெரிந்தால் நானும் பேசுவேன். அரசர்களோடு பேச எனக்கு இஷ்டம் என்றார் மாடுதின்னி. அவர் பகலில் கூடவும் குயில்களைப் பற்றிச் N சொல்லிக் கொண்டிருக்கிறார் _ என்றேன்.
இறகுகள் குறைக்கப்பட்ட") அண்டங் காக்கை ஒன்று வழியை விட்டுத் தத்திப் போனது.
குயில்கள் இங்கே இல்லை. விக்டோரியாவில் ரயில் ஏறி கேட் விக் 6 போனால் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் இசைப் பள்ளிக்கூடம் உண்டு. வயலின் மட்டும் தான் சொல்லித்தருவார்கள். பாரம்பரிய இசை,
 
 
 

அங்கே மரங்களில் ஏகப்பட்ட குயில்கள் இரையும். நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டு நான்.
மாடுதின்னி பாதியில் நிறுத்தியபோது, கொலம்பியா ரிக்கார்டு பாடுவதற்கு முன் சுழல்கிற வெறுமையின் சத்தம்.
சுற்றிலும் மரமும் செடியுமாகப் பச்சை விரித்த பகுதிக்கு நடுவே இருந்த முற்றத்தில் பெரும் மேகமாகப் பணி படிந்து பார்வையை மறைத்தது. பனிக்கு நடுவே வெள்ளை உடுத்தி ஒர் அரசி மெல்ல நடந்து போனாள்.
அவள் அனிபொலின் மகாராணி. கொல்வதற்காகக் கூட்டிப் போகிறார்கள். தகவல் அறிவிக்கும் உற்சாகத்தோடு மாடுதின்னி சொன்னார்.
வெய்யிலே இல்லாமல் எப்படிப் படம் பிடிப்பாங்க இதை? சங்கீதம் இல்லாமல் ஒரு சாவா? ராஜா விசாரித்தார்.
இது படம் பிடிக்க இல்லை என்றேன். حصصبر
பூனைக் கண் மட்டும் இல்லாம இருந்தா (p இவளோடு நான் நடிப்பேன். தினசரி குளிப்பாளா? ராஜா கேட்டதை டு மாடுதின்னிக்கு மொழிபெயர்த்தபோது பூ இவளைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றேன்.
N பூத்தாற்போல் தலையை வெட்டி ஒரே محصے
வினாடியில் வலிக்காமல் கொல்ல பிரான்ஸ் நாட்டில் இருந்து கூட்டி வந்த ஆள் பின்னால் போகிறான் பார். அவன் கூட அதே தான் நினைத்தானோ என்னமோ? மாடு தின்னி ரகசியமாகப் பேசியது கொலைகாரன் காதில் விழுந்திருக்கும். எங்களை முறைத்தபடி
நடந்தான் அவன்.
8 நான் கையில் பிடித்திருந்த பத்திரிகையை ஒரு நோக்க மில்லாமல் புரட்ட, விடிஞ்சா தீபாவளி. எதிராத்துலே அடுத்தாத்திலே எல்லாம் மாப்பிள்ளைகள் குதிரை வண்டியிலே வந்து இறங்கியாச்சு. இவளுக்கு எப்போத்தான் ஒரு வழி பிறக்குமோ என்று மூக்குத்தி மின்ன சாம்பல் நிறத்தில் ஒரு மாமி அங்கலாய்த்தாள். பட்சணம் செய்ய எண்ணெய் காயும் வாடையும், தண்ணிர் தெளித்துக் கோலம் போட்ட வாசல் மண்

Page 65
வாடையும் கவியக் குதிரைச் சாணத்தைத் தவிர்த்து அணிபொலின் மகாராணி மூக்கை உறிஞ்சிக் கொண்டு பலி பீடத்தை நோக்கி நடந்தாள்.
கொலையாளி கையில் வைத்திருந்த கட்டாரியைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே டேக்கில் ஒகே ஆயிடுமா என்று ராஜா கேட்டார். AT பக்கத்துக் கோபுரத்தின் S குறுகலான மாடிப் படிகளில் { இறங்கி வந்த g)IJ GðsTG) C2 வெள்ளைக்காரச் சிறுவர்கள்துத்
விழிகளில் மிரட்சியோடு பார்த்தபடி நின்றனர். அவர்களும் பாரம்பரியமான அரச 26). அணிந்திருந்தார்கள்.
மாடுதின்னி அவர்கள் தலையை வாஞ்சையோடு தடவினார். இவர்கள்
அணிபொலினுக்கு அப்புறம் பல வருடம் கழித்து அவர்கள் சிற்றப்பனான அரசனால் இங்கே அடைக்கப்பட்டார்கள். இந்தப் பையன் ܓܡܐ தூங்கும் போது தலையணையால் மூச்சுத் திணற வைத்துக் கொன்று போட்டார்கள். மற்றவனை இதேபோல் வாளால் வெட்டினார்கள். தை அவர் ராஜா இடுப்பில் செருகியிருந்த Yஅட்டைக் கத்தியைக் காட்டினார்.
صبر
சாப்பிட்டீங்களா குழந்தைகளே? மாடுதின்னி கேட்டார். அவர்கள் உற்சாக மில்லாமல் தலையசைத்தார்கள். எனக்கும் இவர்கள் வயதில் ஒரு மகள் உண்டு. கேட்விக் பக்கத்தில இசைப் பள்ளியில் வயலின் படித்துக் கொண்டிருந்தாள். சொல்லும்போது அவர் கண்கள் நிறைந்தன.
அன்னிபொலின் அரசியின் கழுத்தில் வாளால் கொலையாளி ஒரு முறை மெல்லத் தடவினான். அவள் சிலிர்த்துக் கொண்டது நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நன்றாகத் தெரிந்தது. பக்கத்தில் கிராமபோன் பெட்டியில் ரதியே நினை நினைத்தே என்று கருப்பு நிறத்தில் கொலம்பியா ரிக்கார்டு சுழன்று கொண்டிருந்தது. புதுத் துணியைப் பிரித்த வாடை
ஒரு வருடம் தொடர்ந்து படம் ஒடும்னு எதிர்பார்த்தோம். இந்தப் பாட்டுக்கு அப்புறம் என்னைக் கொலைக் களத்துக்கு இழுத்துப்
 

போவானுங்க, ஹீரோயின் கோவில்லே அழுதபடிக்குப் பாடுவா. என் கழுத்தில் கத்தி பூமாலையா விழும். தீனநாதா மணாளனைக் காப்பாய். ராஜா பெண்குரலில் பாட முயற்சி செய்தார்.
அன்னிபொலின் தலை தரையில்
r. உருண்டது. அது இசைத்தட்டு மேல விழ, தழதழத்த குரலில் தீனநாதா மணாளனைக் * காப்பாய் நின்றது. என்
தரையில் விழுந்தது. அதன் _ பக்கங்கள் பனிக்காற்றில் விரிய, ஆர்ட் பேப்பரில் வார்னிஷ் மங்கிய ஓவியமாக சகுந்தலை தாமரை இலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
வாருங்கள். அரசர்களையும் பிரபுக் களையும் கைதிகளாக அடைத்து வைத்திருந்த அறைகளைக் காட்டுகிறேன்.
மாடுதின்னி நடையை எட்டிப்,< போட்டார். (p
இங்கே எங்கியோ நம்ம பக்கத்துக் (5 கோஹினூர் வைரத்தைப் பாதுகாப்பா வச்சிருக்காங்கன்னு கேட்டிருக்கேன். கி ராவன்னா மானா அந்தக் காலத்திலேயே ன் லண்டன் போய்ட்டு வந்தவர். அவர் தான் சொன்னாரு நாலு படம் பண்ணியிருக்கேன் அவருக்கே. கொம்பு வாத்தியமும் முரசு சத்தமுமா அவர் கம்பேனி பேனர் காட்டினாலே கொட்டகையிலே கைதட்டல் பறக்கும். கோகிலவாணியை மட்டும் விட்டு வச்சிருந்தார்னா அவரோட அஞ்சாவது படத்திலும் நடிச்சிருப்பேன். கன்னடக்காரன் வந்து நடிக்கறேன்று பேர் பண்ணி, பணத்தைக் கரைச்சு, பாதி படம் எடுக்கறபோதே ராவன்னா மானா ஹர்ட் அட்டாக்கிலே அவுட்டு. போவுது. வைரம் எங்கேன்னு கேளுப்பா. ராஜா அவசரப்பட்டார்.
இப்போது அதைப் பார்க்க முடியாது. காட்சிசாலையை மூடி இருப்பார்கள் என்றார் மாடுதின்னி எல்லாம் உங்கள் நாட்டில் இருந்து பிடுங்கி வந்ததுதான். அவர் சிரித்தார். வைரம் வந்த பிறகு ஆண் அரசர்கள் அல்லல் பட்டார்கள். பெண் அரசிகள் வளமாக வாழ்ந்தார்கள். அவர் சொல்லும்போது பின்னால் சிரிப்புச் சத்தம். அன்னிபொலின்
مسیح

Page 66
அரசியும் ஆர்ட் பேப்ப்ரீ சகுந்தலையும் தான். நான் தீபாவளி மலரைத் திரும்ப எடுத்துக் கொண்டு வந்தேன். தண்ணிரைப் பீய்ச்சி அடித்து பலிபீடத்தையும் தரையையும் கழுவிக் கொண்டிருந்த சீருடை தரித்த ஊழியர்கள் என்னை அப்பால் போகச் சொன்னார்கள்.
ராஜாக்கள் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியானதில்லை. நான் மாடுதின்னியிடம் சொன்னபோது அவர் இல்லையென்று தலையாட்டினார். பத்து வருட மண வாழ்க்கைக்குப் பிறகு என் மனைவி என்னை விவாகரத்து செய்து விட்டுப் போனாள். பண்டிகைக்காகப் பரிசுகளோடு என் மகள் படிக்கும் இசைப் பள்ளியில் நாள் முழுக்கக் காத்திருந்தேன். யாரோ வந்து சொன்னார்கள், அவளை அவள் அம்மா முந்தின தினமே கூட்டிப் போய்விட்டதாக. ராஜாக்களுக்கு இந்த இழப்பெல்லாம் உண்டா? இருந்தால் சுகமான இருப்பு. இல்லை, இப்படித் தலை வெட்டுப் பட்டுப் போவது. அவ்வளவுதான்.
ܓܡܚ2
ராஜா மீசையில்லாத மேலுதடை
நீவிக்கொண்டு சிரித்தார். மாடுதின்னி ரொம்ப
நாளாகத் தனிக்கட்டை என்று அவருக்கு நான் GS சொன்னதே காரணம்.
உங்கள் அரசர் வாழ்க்கையில் محسیح சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் அறியாதவரா என்றார் மாடு தின்னி புன்னகைத்தபடி -.
தங்க பஸ்பம் சாப்பிடச் சொல்லு, எல்லாக் கட்டையும் தேடி வரும். நாலு கார் பங்களா. சோழவந்தான் பக்கம் தோட்டம். தினசரி மட்டன், பிரியாணி, சிக்கன். எப்பவும் இளமையா இருக்கத் தங்க பஸ்பம். ரிக்கார்டில் தீனநாதா மணாளனைக் காப்பாய் X பாடினாளே அவ நிறுத்தச் 0 சொல்லி மன்னாடுவா. ஸ்பெஷல் ) யுனானி லேகியம்னா சும்மாவாா? ஆனா ஒண்ணு. அவ 4 கோகிலவாணி மாதிரி உச்சத்திலே கூவ மாட்டா. சிரிக்க ஆரம்பிச்சுடுவா. கெட்ட வார்த்தை ஏகமாச் சொல்லுவா. தீனநாதா. தாங்காதுடா இனிமேலே. மணாளனை. ό மயிராளனை. அந்தக் காத்தாடியைப் போடுடா கபோதி. சவ்வாது வாசனை மூச்சை முட்டுது
 

வாடா வந்து காப்பாய். டீப்பாய் சக்குபாய்.
சகுந்தலாபாய் எல்லோரையும்.
ராஜாவுக்கு இப்போது பெண்குரல்
பூரணமாக வந்திருந்தது. அட்டைக் கத்தியை
இறுக்கமாக உறையில் செருகிக் கொண்டார்.
வளைந்து வளைந்து ஏறிப் போகும் மாடிப் படிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கவியும் இருள். யாரோ வயலின் வாசித்துக் கொண்டிருக்கும் சத்தம்.
இந்தப் படிகளில் நான் ஏறியிருக்கிறேன். மதில் சுவரில் சைக்கிளைச் சரித்து வைத்துவிட்டு அரண்மனைச் சேவகன் என்னை உள்ளே கூட்டிக் கொண்டு போனபோது முன் மண்டபத்தில் வெட்டிவேர்த் தட்டிகளின் வாசம் அடித்த நினைவு. பங்கா இழுப்பவர்கள் அங்கே இருந்தார்களா என்று சரியாக ஞாபகம் இல்லை.
இது போல் படிகள் கடந்து ஒரு அரண்மனைக்குள் போயிருக்கிறேன். நான்
சொன்னபோது மாடு தின்னி சிரித்தார்./N
ராஜாவும் சேர்ந்து சிரித்தார். தீபாவளி மலர் மு பின் அட்டையில் அவருக்குப் பக்கத்தில் சிறிய (b
வடிவத்தில விசனத்தோடு நின்றவள் போதும்
விடுங்க என்றாள்.
கருப்பு வெள்ளையில் நீ பார்த்தது ன்
அட்டையும் மரமும் வைத்துக் கட்டியN அரண்மனை. சொக்கலிங்க ஆசாரி வகையறாக்கள் ஸ்டூடியோவில் செட் போட்டுச் செய்தது. என் பங்களாவுக்கு வந்திருக்கிறாயா நீ? வாசலில் கூர்க்கா உன்னை உள்ளேயே விட மாட்டான்.
ராஜா பெருமையோடு சொன்னார்.
ins . ஆமாம். சொந்த சினிமா எடுத்து நஷ்டப்பட்டு தி.ே அதெல்லாம் ஜப்தியாகி, நீங்கள்
N2)பிடித்து, பிச்சைக்காரன் போல்
* படித்திருக்கிறேனே என்றேன். ராஜா அப்புறம் ஒன்றும் பேசவில்லை.
இது நீ போன அரண்மனை இல்லை. சிறை. போய்ப் பார். மாடுதின்னி சொன்னார். என் கையில் இருந்த தீபாவளி மலரை வாங்கி
محصے
வைத்துக் கொண்டார். ராஜாவின் கண்களில்
துக்கமும் விரோதமும் அநாதைத்தனமும்

Page 67
மாறிமாறித் தெரிந்தது.
படியேறினேன். அரச பரம்பரைச் (ଗ), சிறுவர்களும் பழைய மொழியில் பேசியபடி .ெ கூடவே வந்தார்கள். மாடுதின்னி அதே மொழியில் ஏதோ சொல்ல அவர்கள் மு பின்னால் திரும்பிப் பார்த்துத் தொப்பியைக் உ கழற்றி வணங்கினார்கள். த
கையில் பழுப்புக் கவரோடு நான் இ வருவதை எதிர்பார்த்து அரண்மனைக்காரர் ° நின்றார். வாயிலிருந்த வாசனைப் ? புகையிலையைப் பக்கத்தில் வைத்திருந்த படிக்கத்தில் துப்பினார். வக்கீலய்யா பிள்யைா ெ என்றார். G)
அவரிடம் கவரை நீட்டியபோது என் “ கையில் பட்டாசு வாசம். அழுக்கான எட்டு முழ வேட்டியும் நரைத்த மீசையும் நல்ல ே உயரமுமாக அவர் பாதி இருட்டில் கை நீட்டிக் இ கவரை வாங்கிக் கெண்டார். LfD {
கவரைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே சி'
நூறு ரூபாய் நோட்டு.
வெங்கடரமணன்
மாலை கோ மறக்காமல்
அரளி இல்ல கனிந்த வா காலையில்
கழிவறை ே முத்திய தே திரும்பும் ஒ தோசைக்குச் அய்யருக்குச் ஐந்தாய்த் த மீதி தரமாட் உண்டியலுக் போனமுறை cpcpebust
செருப்பை பிரித்து விட
 

அப்பா கொடுத்து விட்டு வரச் சான்னார். நான் சொன்னபோது வெளியே காம்பு வாத்தியம் ஒலிக்கும் சத்தம்.
இந்த வளாகத்தில் பார்வை நேரம் டிந்து விட்டது. போய்வா. நாங்களும் றங்கப் போக வேண்டும். உறுத்தாத லையணைகள் கிடைத்தால் நன்றாக ருக்கும். அரச குடும்பச் சிறுவர்கள் கயசைத்தபடி மேல் தளத்துக்குத் தளர்வாக டந்தார்கள்.
ரொம்ப நன்றி தம்பி அப்பா கிட்டே சால்லு, அடுத்த மாதம் திருப்பிக் காடுத்திடறேன். அரண்மனைக்காரர் ன்னிடம் சொன்னார்.
வெளியே வந்தபோது மாடுதின்னி பாய்விட்டிருந்தார். மேல் அட்டை ல்லாமல் புல் வெளியில் கிடந்த தீபாவளி லரை எடுத்துக் கொண்டு திரும்பி டந்தபோது ஜப்பானிய டுரிஸ்டுகளின் டைசிக் கூட்டம் மோஷி மோஷி என்று மாபைல் தொலைபேசிகளில் பேசியபடி ன்னை அவசரமாகக் கடந்து போனது.
O
வில் போக வேண்டும்; அர்ச்சனை செய்ய.
ாத கதம்பம் வேண்டும்; ழைப்பழம் வேண்டும்; இரண்டு நாளாய்க் பாகவில்லை. ங்காய் நல்லது; ற்றைமூடி * சட்டினியாகும்.
சில்லறை தேவை ட்டில் போட்டால் C-რrá. குத் தேவையில்லை;
சில்லரையின்றி போட்டான் உதவாக்கரை. மறக்காமல் வேண்டும்.

Page 68
محصبر
L (6
ஆளை ஆளைப் பார்க்கிறார், ஆட்டத்தைப் பார்த்திடாமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்,
என்பது ஒரு திரைப்படப் பாடலின் தொடக்கம். ஒரு பெண் தனது ஆட்டத்தைக் கண்டுகளிக்க வந்திருக்கும் ஆடவரின் மனநிலையை உணர்த்திப் பாடும் பாடல் அது.
அந்தப் பாடலின் பொருள் எவ்வாறாயினும், ஆட்டத்தைப் பாராது ஆளைப் பார்க்க வேண்டிய தேவை சில சமயங்களில் சில தரப்பினருக்கு ஏற்படுவது நியாயமே. நாட்டிலுள்ள மக்களுள் எத்தனை
GOJ பேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள்
کس ح
என்பதைப் புள்ளிவிபரத் திணைக்களம் அறிந்து வைத்திருக்கிறது. மக்களை ஆண்கள், பெண்கள் என்றோ வைத்தியர்களை ஆண் வைத்தியர்கள், பெண் வைத்தியர்கள் என்றோ பகுத்துக் காட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. திட்டம் தீட்டும் துறையினருக்குத் திட்டவட்டமான பால்வேறுபாட்டுத் தரவுகள் தேவைப்படும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.
வேற்று மொழியினரின் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு நாங்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் வேற்று மொழிகளில் அமைந்த பேர்வழிகளைப் பற்றித் தமிழில் எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க நேர்வதுண்டு. எங்கள் பெயர்களை வைத்துப் பால்வேறுபாட்டை அறிவதற்கு அவர்கள் சிரமப்படுவதுண்டு. ஆதலால் தமிழ்ப்
பேர்வழிகளைப் பற்றி வேற்று மொழிகளில்
எழுதுவோர், அவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைத் தெரிவிக்க
 

ஈழியின் முன் னும் பெண்ணும்
ასტ.:
வேலுப்பிள்ளை
நேர்வதுண்டு.
ஏன்? தாய்மொழியிலும் இது நேர்வதுண்டு. ஆண், பெண் இருபாலாரும் தயா, சுபா, மணி, இராசு, ரத்தினம் . என்று பெயர்சூடுவதால் விளையும் விபரீதம் அது. அத்தகைய பெயர்களை மட்டும் வைத்து அவர்கள் ஆண்களா பெண்களா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. எனினும் அவர்களுடன் உறவாடுவோருக்கு அவர்கள் ஆண்களா, பெண்களா என்பது தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்கள் ஒரு வசனத்தில் இடம்பெறுமாயின், அந்த வசனத்தில் பால்படு விகுதிகளையோ, அதில் பேசப்படும் உடலுறுப்புகளையோ, அணிமணிகளையோ கொண்டு எவருமே அவர்களை இனம்காணலாம். பின்வரும் வசனங்கள் அத்தகையவை :
இராசு பாடினால், மணியின் தாலி தாவணிக்குள் மறைந்தது. இரத்தினம் இன்னும் சவரம்
செய்யவில்லை.
அவற்றை விதிவிலக்குகளாகக் கொள்ளலாம். மற்றபடி பொதுவாகப்
பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம்.
இளங்கீரன் ஒர் எழுத்தாளர். பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர்.
பொதுவாகப் பெயர்களைக் கொண்டே பால்-வேறுபாட்டை அறியலாம் என்ற உண்மை சொல்லளவில் ஏற்கப்படுவது அதிகம். செயலளவில் பின்பற்றப்படுவது குறைவு. பின்வரும் வசனங்களைக் கவனிக்கவும்:

Page 69
இளங்கீரன் ஒர் எழுத்தாளன். இளங்கீரன் ஒர் எழுத்தாளர். பாலேஸ்வரி ஓர் எழுத்தாளர். இளங்கீரன் ஒர் ஆண் எழுத்தாளர். பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்.
1ஆவது வசனத்தில் அன் விகுதி பால் காட்டியுள்ளது. அது நியாயமே. ஏனைய வசனங்களில் பால் படு சமத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால் 2ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளர் 1ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளனையும் 3ஆவது வசனத்தில் உள்ள எழுத்தாளரையும், 4ஆவது வசனத்தில் உள்ள ஆண் எழுத்தாளரையும் செயலிழக்கச் செய்வதுண்டு. 4ஆவது வசனம் கண்ணில் படுவதோ காதில் விழுவதோ அரிது. 5ஆவது வசனம் அடிக்கடி இடம்பெறுகிறது அதாவது:
2. இளங்கீரன் ஒர் எழுத்தாளர். 5. பாலேஸ்வரி ஒரு பெண் எழுத்தாளர்!
ܓܒܬܐ2
ஆனால் அர் விகுதியின் இடத்துக்கு - அன் விகுதி உயர்த்தப்பட்டமை (-அன் ட விகுதியின் இடத்துக்கு -அர் விகுதி தாழ்த்தப்பட்டமை) 2ஆவது வசனத்தில் ரை தெரிகிறது. பெண் - ஒட்டுச்சொல் - அர் விகுதிக்கு முண்டு கொடுப்பது 5ஆவது >T(வசனத்தில் தெரிகிறது.
பெண்-ஒட்டுச்சொற்கள் பெரிதும் இறக்குமதிச் சரக்காகவே எங்களை வந்தடைகின்றன. இன்று தமிழில் வழங்கும் பெண்-ஒட்டுச்சொற்களுள் பெரும்பாலானவை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் புகுந்தவை. ஆங்கிலத்தில் பெண்குலத்தைச் சமாளிக்கும் சொல்லாட்சிக்கு ஒட்டுச் Woman சொல்லாய் நின்று முண்டு கொடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் Woman ஒட்டுச் சொல்லாய் நின்று பெண்களுக்கு முண்டு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அது ஒரு பால்படு சமாளிப்பாகும். ஆங்கிலத்தில் இடம்பெறும் பால்பாடு சமாளிப்பை இறக்குமதி செய்யவேண்டிய (மொழிபெயர்க்க வேண்டிய) தேவை தமிழுக்க இல்லை. பெண்மைக்கு முற்றிலும் நெகிழ்ந்து கொடுக்கும் தமிழுக்கு அத்தகைய நிர்பந்தம் அறவே கிடையாது. தேவைப்படாத இறக்குமதியாக (குருட்டு மொழிபெயர்ப்பாக) புகுத்தப்படும்

பால்படு சமாளிப்பு தமிழைப் பாழ்படுத்தி வருகிறது. ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது.
எடுத்துக்காட்டாக spokeswoman என்பது டி பெண் குலத்தைச் சமாளிப்பதற்காக ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சொல்லாட்சி. ஆங்கிலத்தில் இடம்பெறும் அந்தப் பால் படு சமாளிப்பை ஈ அடித்த பிரதிக்காரரைப் போன்று (பெண் பேச்சாளர் என்ற உருவத்தில்) தமிழுக்குள் புகுத்துவதைவிட மோசமான முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. எனினும் Spokeswoman பேசும் பெண் ஆகாமால், பெண் பேச்சாளர் ஆகியவை மாபெரும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை!
பேச்சாளர் என்றால் ஒரு கூட்டத்தில் உரையாற்றுபவர் (speaker) அல்லது நாவலர் AR (orator) GT Gð7 Apy G) JIT (Gir. Spokesperson SCg5 D பேச்சாளரோ நாவலரோ அல்லர். அவர் ஒரு ணி தரப்பின் சார்பாக மொழிபவர். ஆதலால்தான் 1958இல் வெளிவந்த இலங்கை அரசு வே சொல்தொகுதி ஒன்று அவரை மொழிவாளர் என்று குறிப்பிட்டுள்ளது. மொழிபவர் 9,6007 iTuSg)/lb (spokesman), Gil 1676007 Tuigilb (spokswoman) Godft pat GT ti (spokesperson) பொருந்தும். அது தமிழ் இலக்கணத்துக்கும் மரபுக்கும் அமைந்த செப்பமான, நுட்பமான சொல்லாட்சி. மொழியும் பொருளும் இறு அறிந்தவர்களுக்கு S9gl எத்துணைU, நேர்த்தியான சொல்லாட்சி என்பது புரியும். அத்தகைய அரிய தமிழ்ச் சொற்கள் மங்குவதும் ஈ அடிப்புச் சொற்கள் ஒங்குவதும் தமிழ்மொழி வரலாற்றில் இடம்பெறும் விந்தை ஆகும்.
கீழ்வரும் சோடியைக் கருத்தில் கொள்ளவும்:
1. அப்பா வந்தார், அண்ணா போனார்.
2. அம்மா வந்தாள், அக்கா போனாள்.
H 63 G க  ைத யி ༡ (சிறுகதையில்,இ
ஆ ண க ள
உ ய ர் த் த ப் படுவதையும்,

Page 70
பெண்கள் தாழ்த்தப்படுவதையும் மேற்படி கூற்றுகள் இரண்டும் ஒட்டு மொத்தமாகப் புலப்படுத்துகின்றன.
அப்பா வந்தார், அண்ணா போனார் என்றுதான் எல்லோரும் சொல்லுகிறோம்.
ஆகவே அப்பா வந்தார், அண்ணா போனார்
என்று நமது கதாசிரியர்கள் எழுதுவது மெத்தச் சரியே. அப்புறம், அம்மா வந்தா, அக்கா போனா என்றுதானே எல்லோரும் சொல்லுகிறோம். ஆகவே அம்மா வந்தா,
அக்கா போனா என்றல்லவா அவர்கள் எழுத
வேண்டும்? அம்மா வந்தாள், அக்கா போனாள்
என்ற பேச்சுக்கே இடமில்லையே! எப்படி
எழுத்துக்கு இடம் வந்தது? ஆண்களின்
கையெழுத்து பெண்களின் தலையெழுத்
தாகுமா? ஆகாது.
ஆகவே அப்பா வந்தார், அண்ணா
போனார் என்று எழுதும் அதே கையினால்,
அம்மா வந்தார், அக்கா போனார் என்றும்
^எழுத வேண்டும். அல்லது அம்மா வந்தாள்,
கி அக்கா போனாள் என்று எழுதும் அதே கையினால், அப்பா வந்தான், அண்ணா
(6
போனான் என்றும் எழுத வேண்டும். அப்பா வந்தான், அண்ணா போனான் என்று
S60) U r did. LIT என்றால், அம்மா வந்தாள்,
முதி தி தத 

Page 71
(படைப்பாளி - வாசகர் - விமர்சகர் கணையாழி, ஜனவரி 2002, ப. 59-61)
2-அன், -ஆன் ஆகிய ஆண்பால் விகுதிகளுக்கு எதிராக மாத்திரமே அள், ஆள் "ஆட்டி, ஆத்தி, இ, -ஐ . முதலிய பெண்பால்
விகுதிகளைக் கையாள வேண்டும்.
ஆசிரியன் ஆசிரியை (56tar U6ir நண்பி இளைஞன் இளைஞ
3.-அர், ஆர். -கள் விகுதிகளுக்கு எதிராக (அதாவது அவற்றைக் கலப்பற்ற ஆண்பால் விகுதிகளாகக் கொண்டு, அவற்றுக்கு எதிராக பெண் பால் விகுதிகளைக் கையாளக் கூடாது (ஆசிரியர், நண்பர், இளைஞர் போன்ற சொற்களைக் கலப்பற்ற ஆண்பாற் சொற்களாகவோ ஆசிரியை, நண்பி இளைஞ போன்ற சொற்களை முறையே அவற்றின் பெண்பாற் சொற்களாகவோ எடுத்தாளச்
.)17து سنة5حلر
4-அர், ஆர், -கள் விகுதிகளின் இடத்தை
ட் அன், ஆன் விகுதிகள் அபகரிக்க அனுமதிக்கச்
(6
கூடாது. பொதுவாக ஆண்கள் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் பெண்களும்
60) வகிக்கிறார்கள். ஆகவே என்னுடைய அக்கா
*, ஒர் ஆசிரியை என்று குறிப்பிடத்
தேவையில்லை. என்னுடைய அக்கா ஒர்
ஆசிரியர் என்றே குறிப்பிடலாம். குறிப்பிட
வேண்டும்.
5.எழுத்தாளர் பாலேஸ்வரி. அவ்வளவ தான். பெண் எழுத்தாளர் பாலேஸ்வரி என்பது அநாவசியம், முட்டாள்தனம், கூறியது கூறல் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் ஒழியட் பெண் போராளி, பெண் எழுத்தாளர், பெண் வைத்தியர், பெண் வழக்குரைஞர் . போன்ற பெண்-ஒட்டுச் சொற்களைப் பெண்கள் கையாளக் சி.டTது. அத்தகைய சொல்லாட்சியை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. எந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு அந்த வகையில் இந்த விதிக்கும் ஒரு விலக்குண்டு. எங்கேயாவது பெண் ஒட்டுக் சொல்லாய் அமைந்தே தீரவேண்டிய கட்டப் எழக்கூடும். எடுத்துக்காடடாக ஈழ வரலாற்றில் உண்ணா நோன்பிருந்து மாண்ட முதற் பெண் தியாகி அன்னை பூபதி அவர்களே எனலாம் எந்த விதிக்கும் ஒருவிலக்குண்டு என்பது

விதைத்தவன் தினை அறுப்பான், வினை
வலியுறுத்தப்பட வேண்டும்.
6.பழமொழிகளைப் பொறுத்தவரை எவருக்கும் ஆக்கவுரிமை கிடையாது. ஆதலால் ஆணாதிக்கம் தொனிக்கும் பழமொழிகளை இருபாலார்க்கும் பொதுவானவையாக மீட்டியுரைக்கலாம். எடுத்துக்காட்டாக தினை
விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை தினை விதைத்தவர் தினை அறுப்ப(ா)ர் வினை விதைத்தவர் வினை அறுப்ப(ா)ர் என்று மீட்டியுரைக்கலாம்.
7.பிற இலக்கியங்களைப் போலவே தமிழ் ணி இலக்கியத்தையும் ஆணாதிக்கம் பீடித்துள்ளது. எனினும் இலக்கியத்தில் நாம் வே இலகுவில் கைவைக்க முடியாது. இயற்றியவர் S) அதற்கு உடன்படப் போவதில்லை. இயற்றியவர் உயிருடன் இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆக்கவுரிமை பெற்றவர் களையெடுக்கத் துணிபவர்மீது . வழக்கு வைத்தல் திண்ணம். வள்ளுவரே மறுபடி தோன்றி, 6)
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் Nمحصے மீக்கூறும் மன்னன் நிலம் (386)
என்ற தமது குறளை அதன் பொருளில் எதுவித மாற்றமுமின்றி, V
காட்சிக்கு எளியர் கடுஞ்சொல்லர் அல்லரேல் மீக்கூறும் மன்னர் நிலம்.
என்று மீட்டியுரைத்தால், யாரோ ஒரு கிழட்டு நெசவாளன் தன்னை வள்ளுவர் என்று முரசுகொட்டி ஆள்மாறாட்டம் செய்வதாகக் குற்றம் சாட்டி வழக்கு வைப்பதற்குத் தயாராய் இருக்கிறது பூம்புகார் பதிப்பகம்!
8.கண்ணில் படும், காதில் விழும் எந்த வசனத்திலும் ஆணாதிக்கம் தென்பட்டால், அதனை இருபாலார்க்கும் பொதுவானதாக மீட்டியுரைத்து, அதனைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக்காட்டலாம்.

Page 72
எடுத்துக்காட்டாகத் தமிழர் தகவல், தமிழர் மத்தியில் என்பவை போலத் தமிழன் வழிகாட்டி என்பதைத் தமிழர் வழிகாட்டி என்று மீட்டியுரைக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுட்டிக் காட்டலாம். எங்களைத் தமிழா! தமிழா! என்று விழித்து எழுதுவதை விடுத்து, தமிழரே! தமிழரே! என்று விழித்து எழுதும்படி நமது புத்திமான்களுக்கும் புத்திபுகட்டலாம்.
t
தமிழில்தான் ஆணாதிக்கம் நிலைத்துள்ளது, ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் அது களையப்பபட்டுவிட்டது. ஏனையவை ஆணாதிக்கத்தைக் களைய வல்லவை, தமிழ் களையவல்லதல்ல என்று கருத்திச் சிலர் தெம்புகுன்றக்கூடும். இவை வெறும் தப்புக் கணக்குகள். தமிழ் மொழியில் காணப்படும் ஆணாதிக்கத்தைக் காட்டிலும் கிரேக்க, ஆங்கில, அரபு. மொழிகளில் காணப்படும் ஆணாதிக்கம் பன்மடங்கு அதிகம். )அந்த மொழிகளிலிருந்து ஆணாதிக்கத்தைக் களைவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மொழிகளில் காணப்படும் L ஆணாதிக்கத்தை அர், ஆர், -கள் விகுதிகளைக் கொண்டே பெருமளவு களையலாம். தமிழன் OJ நெகிழ்வைப் பெண்கள் முற்றுமுழுதாகப்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆணாதிக்கம் சமூகத்திலிருந்து மொழியினுள் கசிந்து, மொழியிலிருந்து சமூகத்துக்கு மீள்வது. அந்த வகையில் ஆணாதிக்கம் ஒரு சமூகக் கொடுமை மட்டுமல்ல, அது ஒரு மொழிக் கொடுமையும்கூட. சட்டத்தின் முன் மட்டுமல்ல, மொழியின் முன்னும் யாவரும் சமன் என்பதைப் பெண்கள் நிலைநாட்ட வேண்டும். அதனைச் சொல்லிலும் செயலிலும் அவர்கள் யாவரும் சமன் என்பதைப் பெண்கள் நிலைநாட்ட வேண்டும். நமது ஆக்கங்களில் அதனை ஊட்ட வேண்டும். நமக்கேன் வம்பு என்று பெண்கள் வாளாவிருக்கக்கூடாது.
ஒரோயொரு கேள்வி இக்கட்டுரையைச் சரிவரப் பூர்த்தி செய்ய விடாது எமது அடிமனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது: 5 தொழிலாளன், எழுத்தாளன், பேச்சாளன் போன்று - ஆளன் விகுதி கொண்ட ஆண்பாற் சொற்களின் பெண்பாற் சொற்கள் யாவை?

தொழிலாளி, தொழிலாளர் இரண்டும் இரு பாலாரையும் கருதும். தொழிலாளினி எனலாமா? அவை பெண்பாலாரைக் குறிக்கும் என்றால், அவை ஏன் வழக்கில் இல்லை? தொழிலாளினி, எழுத்தாளினி, பேச்சாளினி . என்று ஏற்கெனவே தாம் பாவித்ததுண்டு என்று தெரிவிக்கும் எழுத்தாளர் திரு. அ.
முத்துலிங்கம் அவர்கள், அப்படிப் பாவித்தால்
என்ன என்றும் வினவுகிறார். தொழிலாளன் அல்லது தொழிலாட்டி என்பதைவிடத் தொழிலாளினி ஒசைநயம் மிகுந்தது. ஆனால் அதனை உச்சரிப்பது சற்றுச் சிரமம். எனினும் திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் பாவனையும் வினாவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.
பின்குறிப்பு : இக்கட்டுரையைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாத எரிச்சலிலிருந்து விடுபடும் நப்பாசையுடன், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா, என்ற தலைப்பினைக் கொண்ட பட்டிமன்றப் பதிவு நாடாவை ஒடவிட்டுப் பார்த்ததோம். தலைவரே ஒரு பெயர்போன தமிழ் ஆசிரியர். ஆசிரியர்களும் கவிஞர்களுமே பட்டிமன்றத்தில் பங்குபற்றுகிறார்கள். அவர்களுள் ஒரு கவிஞரை பெரும் புலவர் என்று தலைவர் வேறு அறிமுகப்படுத்தியும் வைக்கிறார். அப்புறம் பெரும் புலவர் எழுந்து தமிழர்களே! தமிழச்சிகளே! என்று அவையோரைத் விழித்து உரையாற்றத் தொடங்குகிறார். அது கேட்டுப் புளகாங்கிதமடையும் தலைவர், கவிஞரை இடைநிறுத்திப் பாராட்டி,
O
ܓܡܗ2
வே
Sl
அவரைப் பின்பற்றும்படி அனைவரையும் வேண்டிக்ெெ
கொள்ளுகிறார்!
எமக்கென்னவோ சாணேற முழும் சறுக்கிய உணர்வே ஏற்பட்டது. தமிழருள் தாய்க் குலம் அடங்கவில்லையாம் ஆதலால் பெரிய மனது பண்ணி எங்கள் தாய்க் குலத்தைத் தமிழச்சிகள் என்று குறிப்பிடுகிறார்களாம்! அடுத்த பட்டிமன்றத்தில் ஆசிரியர்களும் கவிஞர்களும் அவ்வையார் ஒரு புலவச்சி, ஜெயலலிதா தமிழக முதலமைச்சி என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் போலும் தமிழன் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டத்தை எட்டிவிட்டான் என்பதற்குத் தமிழச்சியே சான்று. தாய்மொழியை மேம்படுத்துவதாக நினைத்து அதனைக் கேவலப்படுத்தும் தமிழர்கள் யார் பெற்ற பிள்ளைகள்? பிறந்தவன் ஓரினம், பெற்றவள் வேறினமா? வெட்கம் இல்லையா உங்களைத் தமிழர்கள் என்றும் கவிஞர்கள் என்றும் பறைசாற்றுவதற்கு?
O
محصےسےجN

Page 73
Ol
d
தை
ܔܠ
அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தினுாடு யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டின் முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷ மென்று சொல்லமுடியாது. கெருவிலிருந்து நோக்கையில் வீட்டை மறைத்துக்கொண்டு நிற்கப் போதுமானது. சின்னத்தம்பிப்புலவர்
*வீட்டுவாசலில் நின்றிருந்த
பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை வீசு புகழ் நல்லுர்ரான் வில்லவரா யன்கணக வாசலிடைக் கொன்றை மரம் . .
மாதிரிக்கு யாருக்கும் எமது வீட்டை
விடுவதற்கும் உதவியாய் நின்றது அம்மரம்.
அனேகமாக காடுகளை வெட்டும் போது ஒரு காணியின் வீதிப்பக்க எல்லையிலோ, இரண்டு காணிகளுக்கிடையில் அமையக்கூடிய எல்லை நிரையிலோ வரும் மரங்களைத் தறிக்காது விட்டுவைப்பது வழக்கம்.
அந்தக் காணி காடாக இருந்தபோது அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிய நல்ல மனிதர்களுக்கு என்னதான் தோன்றியதோ வீட்டுக்குத் தெற்காக நின்ற அந்த மரத்தையும் வளவின் வடகிழக்கு மூலையில் ஒரு கொண்டல் மரத்தையும் விட்டு வைத்தார்கள். கொண்டலின் கிளை பூராவும் தங்கமஞ்சளாகப் பூத்துத் தொங்குகையில் ஒரு அழகுதான். கொண்டல் வண்ணன் என்று சிவனை அழைத்ததுவும் ரம்யமானதொரு கற்பனைதான். நன்கு முற்றிய கொண்டல் பழத்தை உடைத்தால் உள்ளே
அடையாளங்காட்டிக் குறிப்புச்சொல்லி
 

த்தி
ருணாகரமூர்த்தி
பெர்லின்
சொக்கிளேற்றுகள் போலும் சிறிய சிறிய வில்லைகள் அடுக்கில் காணப்படும். அதன் தித்திப்போ விபரிக்கமுடியாது. ஆனாலும் சாப்பிடமுடியாது. அன்னமுன்னா பழம் மாதிரித் திகட்டி வயிற்றைப்புரட்டும் ஒரு வகை இனிப்பு.
இந்த ஆத்திமரத்தின் பூ மெல்லிய றோசாவை விரும்பிய கத்தரி நிறத்திலிருக்கும். பெரிய அழகென்று கொண்டாடமுடியாது. அவரைக்காயைப் போல் மெலிதாக, புளியங்காய்போல் வளைந்து நுனியில் விரியும் சிறிய ஒலிப்பெருக்கியைக் கொண்டு தலைகீழாகத் தொங்கும்.
அவரைக்காயைப் போலவே சற்று வைரமாக இருக்கும் அதன் காயைப் பிடுங்கி வெற்றிலை போல் வாயிலிட்டுச் சப்பிக் குதப்பிவிட்டுத் துப்புவோம். ஆத்தியின் இலையை ஆடுமாடுகளும் விரும்பித் தின்னுகின்றன, இந்த மரம் வேறு தொன் கணக்கில் காய்த்துத் தள்ளுகிறதே, இதன் காயிலிருந்து முழு மனித குலத்துக்கும் பயன்படவல்லமாதிரி ஒரு உணவை ஏன் தயாரிக்கமுடியாதென்று அப்போதே எனக்குள்ளிருந்த விஞ்ஞானிக்கு சிந்தனைகள் முகைத்ததுண்டு.
ஆத்தி மரத்தின் புறப்பட்டை தடிமனான தக்கையைக் கொண்டிருக்கும். அத்துடன் அக்கோறை மரம் வாகாக திட்டுகளையும் மொக்குகளையும் தன்னுடலெங்கும் கொண்டிருந்ததால் 13 வயதுச் சிறுவனாக இருந்த நான் அதில் அடிக்கடி ஏறி இறங்குவேன். அம்மரத்தின் கிளைவேர்கள் ஆலமரத்தைப் போல் தரைக்கு வெளியாகவே ஆரம்பித்து நாலு திசையிலும் நீண்டுசென்று தரையுள் புகுந்தன.

Page 74
அன்றும் மாலையில் அவ் வேர்களினிடுக்கில் சிறு ஒடக் கவிவைப்போலும் உட்கவிந்திருக்கும் சார்மனையில் ஒரு சாக்கை விரித்துப் படுத்துக்கொண்டு வானத்தைப்பார்க்கிறேன். உலகத்திலுள்ள நிறங்களையெல்லாம், கரைத்து யாரோ அங்கே ஊற்றிவிட்டதைப் போலிருக்கிறது.
அதன் கீழாக சில வெண்முகில்கள் ஒன்றையொன்று துரத்தியபடி சென்று கொண்டிருக்கின்றன. லேசாக வீசிக் கொண்டிருக்கும் காற்று குளிரைக் கொண்டிருக்கிறது. வவுனிக்குளத்திலிருந்தோ பாலியாற்றிலிருந்தோ கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும், கூழைக் கடாக்களும் மன்னார்க் கடலை நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றன.
“மரத்துக்க பாம்பைப்பூச்சியிருந்தாலும் எழும்பி வீட்டுக்குள்ள வா” என்று அம்மா
/>சொல்லிக்கொண்டிருந்தார்.
எங்கள் வீட்டுக்கு வருபவர்கள்
g அனைவருமே "இந்த ஆத்திகோறைமரம்
الصيد
பாருங்கோ. பாம்பைப் பூச்சியைக் குடிவரும், தறித்துவிடுங்கோ" என்று தவறாது அறிவுரை சொன்னார்கள்.
அம்மரம் முற்றத்தில் ஏராளமாய் சருகுகளையும் உலர்ந்த காய்களையும் கொட்டிப் பெருக்குவதற்குச் சிரமம் பண்ணியதேயல்லாமல் அதன் ஆயுளில் எமக்கு வேறொரு நட்டணையும் பண்ணி யாமறியோம்.
நான் ஊருக்குப் போயிருந்த ஒரு நாளிரவு அம்மா வைத்துக்கொண்டு படுத்திருந்த தலையணைக்குக் கீழே ஏதோவொன்று நழுக்கு பிழுக்கென்று நழுவிச்சாம். எழுந்து விளக்கை ஏற்றிப்பார்த்தால் கருநாகமொன்று 'எஸ்ஸாக வளைந்து படுத்திருக்குதாம். அம்மா தும்புக்கட்டையை எடுத்து அடிக்க ஓங்கவும் அது தன் ஒட்டமட்டிக் நிக்கோனை எடுத்துப் படமெடுக்குதாம்.
அம்மாவின் மனத்திலுரறிய ஏராளம் ஜீவோபகாரத்துடன் உள்ள மெயின், உப, கடவுளர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தோன்றி பாம்பை அடிப்பதினின்றும் தடுத்தாட்

கொண்டுவிட்டனர். அந்தப் பயங்கரமான அனுபவத்தின் பின்னர் ஒரு நாள் 'அம்மாவும் ஆத்தியைத் தறிக்கத்தான் வேணும்' என்றார்.
அப்பாவுக்கு லோகாயத விஷயங்களில் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் எதுவும் கிடையாது. அவர் பெரும்பான்மையரின் கருத்தை எதிர்த்து மல்லுக்கட்டவெல்லாம் போகமாட்டார்.
ஆத்தியைத் தறிப்பது என்று முடிவெடுத்தான பின்னரும் யாரும் அதை நிறைவெற்றுவதில் தீவிரம் காட்டாதிருக்கவே நான் ஒரு நாள் எங்கள் கோடாரியை எடுத்து வேருள்ள பக்கமாகப் போட்டுப்பார்த்தேன்.
அக்கோடாரியும் கள்ளி, மொந்தன், பெருங்கதலி இனங்களைத் தறிக்க மட்டுமே தயாரிக்கப்பட்ட வகைபோலும் அதன் வெட்டு ^ வாதாரை சுருண்டு திரும்பி என்னைப் கி பரிதாபமாகப் பார்த்தது. மரம் தறித்தல் (5 அப்போதைய பதின் மூன்று வயதுப் பையனுக்கான வேலையாகவும் படவில்லை. ெ அப்போதைக்கு விட்டுவிட்டேன்.
அது 1963ஆம் ஆண்டு, ஒரு சித்திரை மாதம், காலபோக அறுவடைக்குப் பின்னால் யோகபுரத்தில் எல்லோர் வீடுகளுள்ளும் நெல்லுச்சாக்குகள் நிறைந்திருந்த நேரம். சித்திரை சிறுமாரி என்றே சொல்வார்கள். இது மாறாக ஒருவாரமாகத் தொடர்ந்து வன்னிப் பிரதேசமெங்கும் அடைமழையாகப்
:
பெய்துகொண்டிருந்தது.
அப்போது அது எட்டுப் பத்து வருஷங்களுக்குள்ளான குடியேற்றத்
திட்டந்தான். இன்று போலவே அன்றும் எங்கும் தார் போடப்படாத பாதைகள். மழை பெய்தால் டிராக்டரைத் தவிர வேறெந்த வாகனம்தானும் அப்பாதைகளில் செல்ல முடியாது. குறைந்த பட்ஷம் ஒரு டிராக்டர் வைத்துக்கொள்ள வசதி உள்ளவர்கள் மட்டும் வெளியில் வந்து நடமாடித்திரிய ஏனையவர்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு போத்தல் மண்ணெய் வாங்குவதானாற்கூட மூன்று மைல் தொலைவிலுள்ள மல்லாவிக்கோ அன்றேல் 7 மைல் தொலைவிலுள்ள வவுனிக் குளக்கட்டுக்குப் போனாலே சாத்தியம்.
கஞ்சியோ பொங்கலோ ஆக்கிச் சாப்பிட்டு

Page 75
விட்டு பொழுது சாயவும் ஏதோ ஊரடங்கு அமுலில் இருப்பதைப்போலும் மக்கள் படுத்துக்கொண்டார்கள். O சூரியன் தொலைவில் காட்டுக்குள் பதுங்கிடவும் வானத்தின் வர்ணங்கள் மெல்ல மெல்ல விடைபெறத்தொடங்கின.
அது வானிலை அவதானிப்புகளோ, அவற்றை மக்களிடம் எடுத்துச்சென்று எச்சரிக்கவல்ல ஊடகங்களோ வளர்ச்சி அடையாதிருந்த நேரம்.
அப்பாவிடம் ஒரு சுருட்டுக்குப் புகையிலை வாங்க வந்த அயலிலுள்ள சின்னத்தம்பிக்கிழவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: 'திக்குகள் நல்லாய்க் காணன் . ம்ம், கெட்ட ஊதற்காற்றொன்று தெல்லுமாறிமாறி வீசுது . புயலொன்று இறங்கலாங்காண்"
அக்குடியேற்றக்கிராமத்தில் யாருக்கும் *காய்ச்சல், குணங்கல் என்று வந்தால் பார்வை பார்த்து, "விடுவிடு சங்கரி . இறுஇறு சங்கரி . பொறுபொறு சங்கரி . கடுகடு சங்கரி . நறுநறு சங்கரி” என்று விபூதி மந்திரிச்சுக் கொடுப்பது க் கிழவன்தான்.
தை கிழவன் வீட்டுக்குப் போய் ஒரு கால் .மணியாகியிராது ܐܓܠ
நாலைந்து மழைத்துளிகள் என் முகத்தில் குளிர்ந்தன.
"அட மழை வருகுது உள்ள வா " என்ஆறு அம்மா மீண்டும் கூவினார். தென்மேற்கில் மின்னித் தெரிய மழை மெல்ல மெல்ல இறங்கத் தொடங்கியது. சற்றைக்கெல்லாம் பலமான காற்றும் வீசத்தொடங்கியது. மழை மெல்ல வலுக்கத் தொடங்கியதும் காற்றும் ஆர்ப்பரித்துப் பலமாக வீசத்தொடங்கியது.
கொலனி குடியேற்ற வாசிகளுக்கு ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் இலவசமாகக் கட்டித்தந்த இரண்டு அறைகளும் முன்பின்னாக ஆளோடியாக ஒடுங்கிய இரண்டு விறாந்தைகளையுங் கொண்ட சிறுவீடுகள் அவை அனேகமானோர் வீட்டின் முன்னுக்கும் பின்னுக்கும் அமைந்த விறாந்தைகளில் சாய்வுட் பத்திகள் இறக்கியிருந்தார்கள். உள் அறைகளில் ஒன்றுக்கு மட்டுமே நிலத்திற்கு சீமெந்து

இடப்பட்டுள்ளதால் அனேகமானோருக்கு அதுவே படுக்கை அறை. காற்று வேகம்பிடிக்க ஜன்னல்கள் படபடவென அடிக்கத் தொடங்கின. திறாங்குகள் உடைந்து போயிருந்த ஜன்னல்களை அவை திறந்து திறந்து அடிக்காதபடிக்கு இழைக்கயிற்றால் வரிந்து கட்டினோம்.
முதலில் காற்று கிழக்கு மேற்காக வீசியது. எமது வீட்டின் கிழக்குப் பக்கமாக ஆடுகள் கட்டவும் விறகு சேமித்து வைத்திருக்கவும் போட்டிருந்த ஒத்தாப்பின் கூரை கம்புகளுடன் பிடுங்குப்பட்டு வீசப்பட அங்கே கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து அலறிக்கொண்டு மேற்கு விறாந்தைக்கு வந்து சேர்ந்தன. அம்மா விறாந்தையிலிருந்த மேசை ஒன்றைச் சரித்துப் போட்டு எரிப்பதற்காக வைத்திருந்த இரண்டு புறவெட்டுப்( பலகைகளையும் மேசையுடன் சேர்த்து ஒரு மாதிரி அண்டைகட்டி ஆடுகளை அதற்குள் (b. நிற்பதற்கு வசதி பண்ணிவிட்டார். 6
N
ஒரு கணம் காற்று வேகம் குறைவது போலிருந்தது. அடுத்து பத்து நிமிஷத்தில் நான் சும்மா என்பதுபோல் காற்று மீண்டும் ஆர்முடுகித்தன் திசையையும் மாற்றி இப்போது தென்மேற்கிலிருந்து 4 அசுரத்தனமாக வீசியது. அச் சிறுவீடுகள் தனியார் ஒப்பந்தக்காரர்களால் பாலியாற்றுக் குறுமணல் "நிறைவீதத்தில் கலந்து அரிந்தகொங்கிறீட் கற்களால் கட்டப்பட்டவை.
அணை ஒன்றைத் திறந்துவிட்டதைப்)
போல வானம் பிரிந்து சாய்கோணத்தில் சாந்து பூசப்படாத அச்சுவர்களில் கொட்டவும் கேட்பானேன், மழைநீர் சுவரூடாக தங்குதடையின்றி நுழைந்து வீட்டுக்குள் பெருகியது.
போதிய கோணிசாக்குகள் இல்லாததால் கடந்தபோக அறுவடையின் நெல்லு ஐம்பது புசல் வரையில் சீமெந்துத்தரை அறையில் தரையில் கொட்டப்பட்டிருந்தது. சுவர் ஊறி உள்ளே வந்த நீரால் நெல்லு நணைவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா துக்கம் தாளாது அழவேதொடங்கிவிட்டார்.
அதற்குள் முன் வீட்டு மணி ஆறு பிள்ளைகளுடன் என்னதான் செய்தாளோ அவள் புருஷனும் யாழ்ப்பாணம்

Page 76
ܓܡܚ2
போய்விட்டார், பக்கத்து வீட்டு நல்லையர் குடும்பம் என்ன செய்ததுகளோ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார். இரண்டு வீடுகளும் ஒரு நூற்றைம்பது மீட்டர் தள்ளியே இருந்தன. காற்று வீசிய வேகத்தில் வெளியே கால் வைத்தால் உருட்டிச் செல்லப்பட்டுவிடும் அபாயம். அவர்களைப் போய்ப் பார்க்கவும் முடியவில்லை.
அதற்குள் அப்பாவும் பூநகரிக்கோ முறிகண்டிக்கோ கரி சுடப்போயிருந்தார். மன்னார்க்கடலிலிருந்து பிரளயக்கூவலுடன் வீசிய சூறாவளியில் ஆத்தி மரம் தலையைச் சுற்றி அருள்வந்தது போல் ஆடியது. அதன் சுழற்சி வேகத்தில் நுனிமரம் சுழன்று சுழன்றுத் தரையை அடித்தது. சற்றைக்குள் ஆத்தி வேருடன் பிடுங்கப்பட்டு காற்றிலே ஒரு துரும்பைப்போலும் பறப்பதைப் பார்ப்போம் என்றிருந்தது. மரம் வீட்டில் வேறு மோதித் தொலைத்தால் என்ன விபரீதம் நடக்குமோ வென்று பயமாகவுமிருந்தது.
அத்தனை அமளிதுமஸ்ரீக்குள்ளும் அம்மா குசினிக்குள் புகுந்து சோற்றுப்
g பானையையும், கறிச்சட்டிகளையும் மற்ற கி அறைக்குள் தூக்கிவந்து காரமான தை-சரதக்கறிகள், தயிருடன் கொஞ்சம் சோறு
ܓܠ
குழைத்து எனக்கு கையில் தந்தாரென்பது ஞாபகம். எல்லோரது அம்மாக்களைப் போலவும் எனது அம்மாவும் ஆரதக் கறிவகைகள் சமைப்பதில் மிகவும் கெட்டிக்காரி சாப்பாடான பின் சூடாக தேனீர் குடித்தால் இன்னும் தெம்பாக இருக்கும்போலிருந்தது. அடுப்புக்கால்கள் உட்பட குசினி நனைந்து தெப்பலாயிருந்தது.
நான் நனையாத நெல்லை அறையின் மற்றப்பக்கத்திற்கு மண்வெட்டியால் வாரிவிட்டு அதன்மேல் பாயைப்போட்டுப் படுக்க முயற்சித்தேன்.
அம்மா டிரங்குப்பெட்டியைத் திறந்து தோய்த்து உலர்ந்த தனது நூல் சேலைகள் இரண்டை எடுத்துத் தந்து நல்லாய் போர். என்றார்.
காற்று மீண்டுமொருமுறை தன் திசையை மாற்றவும் தெற்கு விறாந்தையின்
ஒடுகள் எடுத்து வீசப்பட்டுத் தரையில் விழுந்து படபடவென நொருங்கும் சப்தம் கேட்டது.

ஜலப் பிரளயம் வந்துவிட்டதாக எண்ணிய அம்மா
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி னோக்க
தாக்கத்த தாக்கத் தடையறத் தாக்க
என்று கந்தசஷ்டி கவசத்தைப்
பாடலானார். வடக்கின் குடியேற்றக் கிராமங்களிலெல்லாம் மணிக்கூடுகள் அவ்வளவுக்குப் புழக்கத்திலிருக்கவில்லை. நேரம் தெரியவில்லை. 'அம்மா இரண்டு மணியிருக்கும்' என்றார்.
பளிரென்று ஒரு பெரு மின்னல் தெறித்து வானந்தான் பற்றி எரிந்ததோ உலகமே பளிர்சிவப்பாகியிருக்க நீண்ட நேரத்துக்கு இடி இடித்து எதிரொலித்தது. சற்றுநேரம் எத்திசையில் நோக்கிலும் கண்களில் சிவப்பேAN தெரிந்தது.
காற்று ஒருவித தாளகதியுடன் தன் (b
வேகத்தை ஏற்றியிறக்கிக்கொண்டு ஒ. ஒ. வென்று வீசவும் ஆத்திமரம் தன் சேத்தைவி வீசிப் பேயாடுவதுபோல் சுழன்றாடுவதைப்
பார்க்க படுபயங்கரமாக இருந்தது. மீண்டும் ஒருதரம் வான வாவி தலைகீழாகப் புரண்டு J கொட்டவும் பெருவெள்ளம் வீட்டினுள் மூ இதோ நுழைகிறேன் நுழைகிறேன் என்றது. i
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல்போலவே தெரிந்ததில் பாக்குக்கடல்தான் தி மன்னாரை மேவியிங்கு வந்துவிட்டதோ தி
محصے^
என்றிருந்தது. இந்த அவலம் வன்னியில் யோகபுரத்துக்கு மட்டுமேயானதா இல்லை முழு உலகத்துக்குமாவென்றுந் தெரியவில்லை. இனி வீட்டின் சுவர்கள் சரிந்துவிடக் காற்றில் அடிபட்டுவிடுவோமோ? கெடுதியும் அவலமும் விளைவிக்கவென்றே அவதாரம் எடுத்த ஒரு அசுரனைப் போலவும், ஊழிக் காற்றாக வந்து சுழன்றாடிக்கொண்டிருக்கும் புயல் மேலும் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று தெரியாததால் நான் உள்ளூரப் பயத்தால் உறைந்துபோயிருந்தேன். அனேகமாக அப்பா இனி எங்களைப் பார்க்க | மாட்டார், எனது அடுத்த பிறந்த நாள் இனி வரவேவராது என்று நம்பினேனாயினும் வெகு இயல்பாக இருப்பது போலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு புயலை அனுபவிப்பது வாழ்வில் இதுதான் முதன்முறை.

Page 77
۔ جعلجسیم
ܓܡܗ2
Ol
காணிநிலம் இல்லாத எளிய மக்களுக்கே குடியேற்றக்காணிகளைப் பங்கீடு செய்வதில் முதலிடம் கொடுப்பார்கள். அப்படிக் கிடைத்த காணியில் குடும்பமாகக் குடியேறியிருந்து விவசாயம் செய்யாவிட்டால் அக்காணியின் பெர்மிட்டை ரத்துசெய்துவிடுவோம் எனக் காணிக்காரியாலய அதிகாரிகள் பயமுறுத்தவும், யாழ்ப்பாணக்கல்லூரி ஒன்றில் ஒழுங்காகவே படித்துக் கொண்டிருந்த என்னை கல்லூரி அதிபர் எவ்வளவோ தடுத்தும் கேளாது அப்பா விடுத்துக்கொண்டுவந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க கதிரை மேசை வசதிகள் கூட இல்லாத யோகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.
அங்கு வந்த ஆரம்பத்தில் அப்பா செய்வித்துத்தந்த நாலுசில்லு வண்டியைத் தரதரவென இழுத்துக்கொண்டு திரிவதில் ஏதோ ஃபெறாறி ஸ்பைடரில் உல்லாசிப்பது போலும் எனது புலன்கள் அனைத்தும் ஒன்றிச் சுகித்திருந்தன. பின் அவ்வன்னிப்பிரதேசத்தில் அடிக்கடி மிகமலிவாகக் கிடைக்கக்கூடிய மான், மரை, பன்றியிறைச்சிகளில் என் கவனம் திருப்பப்பட்டிருந்ததில் எனது கல்வியின் இழப்பு அவ்வளவாகத் தோற்றவில்லை.
த்ெ பின்னர் அப்படித்தான் படிப்புத் தொலைந்து
N/போனாலும் ஒரு டிராக்டரை வாங்கி வைத்துக்
கொண்டு அங்கேயே பிழைத்துவிடலாமென்று பாமரத்தனமாக என்னை நானே சமாதானம் பண்ணிக்கொண்டேன்.
வாரவிடுமுறைகளை ஊரில் அனுபவிக்க வேண்டி வெள்ளிக்கிழமை மதியமே யாழ்ப்பாணத்துக்கு է 16iԽ ஏறிவிடும் ஆசிரியர்களின் கைப்பையையோ, பொதியையோ மல்லாவிச்சந்திக்குச் சுமக்க நேர்கையில் பல தடவைகள் அப்பாவின் தொலைநோக்கில்லாத செயலுக்காக மனம் வருந்தியதுண்டு.
தவணைவிடுமுறைகளின் போது ஊர் செல்லும்போதெல்லாம் பாட்டி அடுத்த ஆண்டு அவனை இங்கே கொண்டு சேர்த்து விடுங்கோ நான் பார்த்துக்கொள்றன்' என்பார். எனக்கும் கண்களில் முட்டிக்கொண்டு வந்துவிடும்.
நாளைய நமது இருத்தல் பற்றித் தெரியாத போது வவுனிக்குளம் வர நேர்ந்தமை

எனக்குள் மீண்டும் இப்போது அழுகையைக் கொண்டு வந்தது.
இருந்த அத்தனை சேலைகளால் போர்த்தியபோதும் ஊசிக்குளிரால் உடம்பு வெடவெடத்தது. நான் படுத்திருந்த பாயில் உட்கார்ந்திருந்த அம்மா அதுவரை ஊறாதிருந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும் ஊடு சுவரின் மீது ஒரு சாக்கினால் போர்த்துக்கொண்டு ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார். அவர் வாயில் இன்னும் கந்தசஷ்டிகவசம். இவ்வளவு துன்பம் செய்கிற கடவுளை எதற்குத்தான் பாடுகிறாரோ' என்றிருக்கிறது எனக்கு. இவ்வளவு பயங்கரத்துள்ளும் தூக்கம் வேறு வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறது. எப்போதுதான் அயர்ந்தேனோ, கண்விழித்தபோது காற்றும் மழையும் சற்றுக் குறைந்திருந்தன. அம்மா இனி ( புயல் ஒய்ந்துவிடும்' என்றார். மேலும் ஒரு மணி Gh நேரத்தில் காற்றின் வேகம் தணிந்தது ஆனாலும் (b தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது.
நிலம் வெளுத்த பின்னாலும் மழை பெய்துகொண்டிருந்ததால் அயலவர்கள் என்ன செய்கிறார்கள் என்று போய்ப்பார்க்க முடியவில்லை. ஒருவாறாக ஏழு மணிவரையில் மழை ஒய்ந்தது. சூரியனும் வெளியில் வந்து ep ஊரைப்பார்க்கத் தயங்கிக் கொண்டிருந்தது.
N
சின்னத்தம்பிக்கிழவன் கையில் அவரது கைப்பிடியில் எலிசபெத் மகாராணி எடின்பறோ கோமகன் இணையின் படம் போட்ட, நாற்பதாம் ஆண்டில் கறுப்பாயிருந்த*/ குடையுடன் வந்தார்.
‘என்னுடைய குடிலையும் நாம்பனுகளையும் காணேல்லை' என்றவர் இராசையாவின் பட்டறைக்கொட்டில் கூரைத் தகரங்கள் கிழிக்கப்பட்டுப் பணியாரக்குள கலிங்கில அங்கங்கே விசிறப்பட்டுக்கிடக்காம்' என்றார்.
வெள்ளம் வடிய சனங்கள் மெல்ல மெல்ல சகதிக்குள்ளால் வெளியில் நடமாடத் தொடங்கினர். அனகமானோரின் வீடுகளின் கூரை ஒடுகள் முக்காற்பங்கும் காற்றில் பறந்துவிட்டிருந்தது.
ஊர் குருசேஷ்த்திரமாகி பெருமரங்கள் எல்லாமே சாய்ந்திருந்தன. பிடுங்கப்பட்டவை முறிக்கப்பட்டவை ஏதோவொரு ஒழுங்கில் ஒன்று கூட்டப்பட்டு ஆங்காங்கு குவிக்கப்

Page 78
الصر
பட்டிருந்தன. முருங்கைகள் வாழைகளின் கதைகள் சொல்ல வேண்டியதில்லை.
ஊர் முழுவதற்கும் பயன் தந்து கொண்டிருந்த இராசையா ஆசாரியார் வீட்டு ஜம்புநாவலும், கறிவேம்பும் சாய்ந்திருந்ததைக் கண்டு அவர் தாயார் தலையிலடித்துக் கொண்டு அழுதார். அவர்களிடம் திருத்த வேலைக்கு வந்திருந்த மாட்டுவண்டிகள் அடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டுபோய் முள்ளுக்கம்பிவேலிக்கு அப்பால் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன.
எங்குதான் வீசப்பட்டுதோ வளவுக்குள் நின்ற கொண்டல் மரத்தை அங்குரத்துடன் காணவில்லை. வாழைகள் குட்டியும் (565) 6Ù պւDո Ց முறுக்கித் திருகப்பட்டு நார்களாக்கப்பட்டிருந்தன.
கூரைகளோ, பத்திகளோ இறக்கப் படாது தனித்து நின்ற வீடுகள் பலவும் கூரை ஒடுகளை முற்றாகவே இழந்திருந்தன.
எமக்கு தெற்கு விறாந்தையில் இரண்டு
சி நிரை (இருபத்தைந்து முப்பது) ஒடுகளைத் தவிர 基廖 ஆத்திமரம் ஒதுக்கமாய் நின்றிருந்த வடக்குப் பக்கத்து ஓடுகள் அப்பிடியே இருந்தது
யோகபுரத்தில் எல்லாருக்கும் படு ஆச்சர்யம்.
‘வங்காள விரிகுடாவில் திடீரென
(ஏற்பட்ட பவனமண்டல அழுத்த மாற்றத்தால்
கிளம்பிய புயலே இப்படி வடமேற்காகச் சுழன்று குமரிமாவட்டத்திலும், வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்
95nTT GOOTLDfTub”.
இ ப் பு ய லி ன் பே ா து இராமேஸ்வரத்தையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் பாம்பன்பாலம் தகர்ந்துபோனது. இலங்கை - கிழக்கு மாகாணக் கடற்கரை யோரத்தில் குடிசை போட்டு வாழ்ந்த பல மீனவக் குடும்பங்கள் உட்பட அங்கே பத்தாயிரம் பேர்கள் வீட்டையும் கூரையையும் இழந்தார்கள்.
வவுனிக்குளப் பிரதேச குடியேற்றத் திட்டத்தின் பிதாமகரான அப்போதைய அரசாங்க அதிபர் ஆழ்வார்ப்பிள்ளை நேரில் வந்து சேதங்களைப் பார்வையிட்டார். அவருடன் கூடவந்த அலுவலர்கள் பட்டாளம் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து எல்லா

கொலனி யூனிட்டுகளுக்கும் சென்று ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஏற்பட்ட நஷ்டங்களைக் கணக்கெடுத்தார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் முதல் நிவாரணமாகப் பல லொறிகளில் ஒடுகளும், மூலை ஒடுகளை வைத்துக்கட்ட சீமெந்தும், கோதுமைமா மூடைகளும் வந்திறங்கின.
மாங்குளம் துணுக்காய் கிறவல் வீதியைத் தவிர்த்து யோகபுரம், ஒட்டன்குளம், கொத்தம்பியாகுளம், துணுக்காய் எப்பகுதியுள்ளுமே லொறிகள் போக முடியாதாகையால் யோகபுரம் முதலாம் யூனிட் பல நோக்க கூட்டுறவுச் சங்க வளவினுள்ளும், இண்டாம் யூனிட் நெற்சங்க வளவிலும், மூன்றாம் யூனிட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு மைதானத்திலும்,< அவை இறக்கப்பட்டு கொலனிவாசிகளுக்கு d விநியோகிக்கப்பட மக்கள் மாட்டு வண்டிகளிலும், தலைச்சுமையாகவும் அவற்றை எடுத்துச் சென்றார்கள்.
எமக்கும் நாற்பது ஒடுகள் தந்திருந்தார்கள், அவற்றையொரு சாக்கில் போட்டுக்கட்டி சைக்கிளில் இரண்டு நடைகளில் சகதியில் தாண்டிமிதந்து எடுத்து வந்திருந்தேன். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இவ்வுடனடி நிவாரணம் ஒரளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
இவ்வேளை பாலியாற்றங்கரைக்கு மேற்காகவுள்ள பாண்டியன்குளத்தில் காடு\பூ/ வெட்டுவதற்கு வந்த (அப்பாவுக்குத் தெரிந்த) ஒப்பந்தக்காரர் ஒருவர் ւ: Այ6ն அனர்த்தங்களுடன் சற்று ஓய்வு வேண்டிப்போலும் தன் பட்டாலியனுடன் காடுவெட்டும் நீண்டபிடியுடனான கத்திகள், பளபளவென மின்னும் கோடாரிகளெனப் பல ஆயுதங்களை எங்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கேயோ போயிருந்தார். அவற்றுள் பளிரென்று வாதாரை மின்னிக்கொண்டிருந்த கூரிய கோடாரியைப் பார்த்ததும் மீண்டும் எனக்குள்ளான சைத்தான் 'உயிர் பெற்றுக் கைகளைப் பரபரக்க வைக்கவும் கோடாரியில் ஒன்றை எடுத்துச்சென்று ஆத்தியில் இடுப்பில் போட்டேன். பச்சை வெட்டுச்சிராய்கள் 'விடியுக் ஷயுக்' என்று பறக்கப் பறக்க கோடாரி சதக் 5 'சதக்கென்று இறங்குகிறது. ஒரு சுற்று

Page 79
இறங்கியதும் மேற்பட்டையை அடுத்துள்ள உட்பகுதியிலிருந்து பாலும் உதிரமும் கலந்தது போல் திரவம் வடியவும் மனதை ஏதோ பண்ணுகிறது.
மீசை கறுக்காதா, கிருதா நெடுக்காதா என்ற ஏக்கங்கள் படிந்திருந்த பருவத்தில் மரத்தைத் தனியாக வெட்டுவது தென்பது ஒருவித பெரியஆள்த்தனமாகவே படுகிறது. தொடங்கிய காரியத்தை இடைநிறுத்துவதா? தொடர்ந்து வெட்டினேன். பச்சையும் உயிருமாயிருந்த ஆத்தி காற்றில் 'ஓ' வென்று இரைந்துகொண்டு பாட்டில் சாய்கிறது.
பாட்டத்தில் சாய்ந்த ஆத்தியைப் பார்க்கவும் நெஞ்சில் கழிவிரக்கம் பிறக்கிறது. அதன் இருப்பின் கம்பீரம் இல்லையென்றாகி அவ்விடத்தில் பாழ்வெளி! மனது ஒப்புகின்றதில்லை, பிசைபடுகின்றது. ஜடமோ உயிரோ ஒன்றின் வீழ்ச்சியைப் பார்க்க நேர்வது அவலம். கொஞ்சம் அவசரப்பட்டு
/Rவிட்டேனோ .? நெஞ்சில் ஒருவகை அவசமும்,
அந்தகாரம் நிறைகிறது.
உட்பாவாடை அணியாமல் சேலை கட்டுவதற்கோ, பாடி இல்லாமல் ரவிக்கை போடுவதற்காகவோ அம்மாவால் தனியாக ஒரங்கட்டப்பட்டு அடிக்கடி அர்ச்சிக்கப்படும் ,
N/அயல்வீட்டுத் திலகம்மாமி மரம் சாய்ந்ததும்
இதற்காகவே காத்திருந்தவர்போல விரைந்து வந்து தன் ஆடுகளுக்காக இலைகளை ஒடித்துச் சாக்குகளில் அடைந்தார்.
வயலுக்குப் போய் வரம்புகளை வெட்டி வெள்ளத்தைக் கடத்திவிட்டு வந்த சின்னத் தம்பிக்கிழவன் மட்டும் ஆத்தி சாய்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு "சின்னப்பொடியா” என்றார்.
“என்னப்பா?”
"என்னொரு மடைவேலை செய்து போட்டாய் காண். திடீரெண்டு என்ன வந்ததுணக்கு?”
“இல்லையப்பா அது புயல்ப்போது சுழன்றாடின ஆட்டத்துக்கு முறிஞ்சிருந்துதே யென்றால் வீட்டையொரு பக்கம் பெயர்த்துக் கொண்டு போயிருக்கும் .?”
"ஆனால் அது அப்பிடி
ஒன்றுஞ்செய்யேல்லையே gaff.

வீரை யென்றால் கிழிஞ்சிருக்கும். முதிரையென்றால் முறிஞ்சிருக்கும். பாலையென்றால் சரிஞ்சிருக்கும். இந்த ஆத்தி நார்மரமாயும் கோறையாய் இருந்ததாலுந்தான் இந்தப்புயலிலே அப்பிடிக் கசங்கியும் பிழைச்சு நிண்டது காண்.”
ஆமோ ?”
"ஆத்தியின்ரை ஒதுக்கிலதான் உன்ரை வீட்டு ஒடுகள் தப்பினது காண் ."
பண்ணியது முழுமுட்டாள்த்தனந்தான். சின்னத்தம்பிக்கிழவன் 'காண் காண் காண்” எனவும் எனக்குள் துக்கம் அதிகரித்தது.
'அவள் நினைவுகள் என்னால் ஒதுக்கிவிட முடியாதபடி என்னுள் தோன்றித்தோன்றித் துன்பம் செய்கின்றனவே. என்றோ ஒருநாள் நான் அறியாமல் செய்துவிட்ட ஒரு பாவத்தைப்போல - என்று டு ஒரு உருதுக் கவிதையின் வரிகள் வரும். (நன்றி.ணு அப்துல் ரகுமான்) Gh
حصر
பச்சைமரத்தின் அருமை புரிந்த நாள்முதலாய் என் நினைவில் தொடர்ந்தும் J படர்ந்தும் வரும் அந்த ஆத்திமரத்தின் பவிசு மூ இப்போதும் என்னை வருத்தாத நாளேயில்லை. ர்
மூடாப்பு மந்தாரம் குறைந்து சற்றே த் வெய்யில் மினுங்கவும் மக்கள் தம்மிடம் நனையாதிருந்த தானியங்களுடன், கிழங்குT) போன்றவற்றைப் பண்டமாற்றுச்செய்து உணவுப்பிரச்சனையைச் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.
புயல் அடித்து ஓய்ந்து ஒரு வாரம் ஆகியிராது.
'நட்டாங்கண்டல், வவுனிக்குளம்,
மூன்றுமுறிப்பு, பன்றிவிரிச்சான், இரணைக்குளம், பனங்காமம், ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை,
பகுதிகளில் இன்றைக்கு மீண்டும் லேசாய் புயலடிக்கப்போகுதாம்’ என்ற செய்தி விதானையார் வீட்டு டிரான்சிஸ்டர் றேடியோவிலிருந்து வவுனிக்குளப்பகுதி 6 முழுவதும் பரவியது. -

Page 80
முன்னரைப் போல பல பயங்கரமாய் இருக்காதெனும் . மன்னார், கள்ளியடி, வெள்ளாங்குளம் மீனவர்களைக் கடலுக்குப் போகவேண்டாமென்று எச்சரிக்கப் பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.
சுட்ட கரியை லொறி வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு எமக்கு என்னாச்சோ ஏதாச்சோவென்ற பரிதவிப்போடு அப்பாவும் வந்துசேர்ந்திருந்தார். ஊரில் யாருமே ஒடுகளை அதற்குள் வேய்ந்திருக்கவில்லை. எமக்கு இரண்டு நிரை ஒடுகள்தானே கொண்டுவந்தவுடனேயே அப்பா எடுத்து ஒவ்வொன்றாக மேலே தரத்தர நான் வேய்ந்து முடித்துவிட்டேன்.
மக்கள் பத்திகளையும் ஒத்தாப்புகளையும் சரிசெய்து தாம் சேகரித்த சொற்ப விறகுகளையும், தானியங்களையும், மழையிலிருந்து காப்பதில் மும்முரமாக இருந்தார்கள்
மாலையானதும் மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நடுவானத்திலிருந்து தரையைத்தொட வெளிர்நீலத்தில் இறங்கிய க நீண்ட மின்னற்கொடிகள் செவ்வூதாவாகி செஞ்சிவப்பாகிப் பொறித்ததில்
பர்வதமொன்று பிளந்து உருண்டதுபோலும்
(அண்டம் உலுக்கப்பட்டு அதன் அதிர்வுகள் வியாபித்து வாழ்ந்தன. மழை மெல்ல மெல்ல வலுத்து நடுநசியில் உக்கிரமாகியது. சூறாவளியும் தன்னை மக்கள் சீக்கிரத்தில் மறந்து விடுதலாகா தென்று பின்னிரவில் மீண்டும் கோதாவுக்கு வந்திறங்கித் தன் வீரப்பிரதாபங்கள் அனைத்தையும் காட்டிச் சுழன்று சுழன்று சமராடியது.
வடக்குத் தெற்காக வீசிக்கெ ண்டிருந்த சூறாவளி ஒருதரம் உச்சிவிட்டு தெற்கு வடக்காகச் சுழன்று பாட்டத்தில் கிடந்த ஆத்தியை உருட்டி வளவின் மூலையில் எங்கோகொண்டுபோய் ஒதுக்க, எங்கள் வீட்டு ஒடுகள் முழுவதும் காற்றுடன் அப்பளமாய் எழுந்து பறக்குந்தட்டுக்களாய் பறந்து முற்றத்தில் கலிங் கலிங்கென விழுந்து நொறுங்கிக்கொண்டிருக்க, வானச்சமுத்திரம் தலைகீழாகப் புரண்டு வீட்டினுள் நேராகப் பிரவகித்தது.

நாங்கள் இறுதியாக எங்கள் ஊருக்குச் சென்றபோது பனைகள் நிமிர்ந்து நின்றன தென்னைகள் ஒலைகளை நீட்டியும் வளைத்தும் என்னைத் தொட்டுத் தடவின உறவினர் ஊரவர் அனைவரும் கொஞ்சிக் குலவினர்
என் உறவினர்
முற்றத்தில் நின்ற வேப்பமரத்தின் கீழிருந்து காற்றையும் கூழையும் கலந்து கதைத்தனர்
நானும் என் மனைவியும் குழந்தைகளும் ஊரை விட்டு பஸ் ஏறும்போது “தம்பி குழந்தைகளை இங்கே அடிக்கடி கூட்டி வா! ஊரையும் எங்களையும் மறந்துபோவார்கள்" விழிகளால் அன்பால் கொஞ்சி வழி அனுப்பினர் குழந்தைகள் ஊரை உறவை மறந்து விட்டனர் மொழி ஆங்கிலச் சமுத்திரத்தில் அமிழ்ந்து விட்டது. உறவுகள் பல்லினச்சேர்க்கையில் கலந்து விட்டன
Gy
U
அன்று கூட்டிவரச்சொன்ன உறவுகள் இன்று உயிருடன் இல்லை புற்றும் நாகதாளியும் நெருஞ்சிமுள்ளும் வளைத்துக் கொண்டன
를
GE || ** ***
என்றோ ஒருநாள்
影 அகழ்வாய்வுக்காக
எம்மக்கள் அங்கு செல்லலாம்
匣 ஊரின் வேரை மறந்து விடாது
s கிண்டி எடுக்கும்போது
U என் உறவுகளின்
kma எலும்பும் தட்டுப்படலாம்
S சிலவேளை கால நிர்ணயம்
செய்வது கஸ்ரமாகவும் போகலாம்.
அழகுக்கோன்

Page 81
حضير
h
4980 கோடி டாலர் மதிப்புள்ள சொத்து. 3120 கோடி டாலர் கடன், நியூயார்க் நீதிமன்றத்தில் வங்குரோத மனுத் தாக்கல் bankruptcy filing. யு.எஸ். நீதித்துறை விசாரணை. யுஎஸ். செக்யூரிட்டீஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்" விசாரனை, யு.எஸ். தொழில்துறை விசாரணை, வாஷிங்டன் சக்தி-வர்த்தகக் குழுவின் விசாரணை வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் பொருளியல் கணக்கர் நிறுவனங்களின் குளறுபடிகள், சில பல வழக்குகள். சுமார் நாலாயிரம் கடைநிலை, இடைநிலை, மேல்நிலை ஊழியர்களின்
L வேலையிழப்பு, யுஎஸ்எயிலிருந்து இந்தியா வரை
(6
விர
سمبے‘‘
பரந்து நீளும் கேள்விகள், மேல்மட்ட நிர்வாகத்தினரின் ஆழ்மெளனம். ஐம்பது மாடித் தலைமையகத்தின் ஒவ்வொரு தளத்திலும் காவல்துறையினர் .
என்ரான்" வணிகப் பெருநிறுவன வங்குரோத வழக்கின் துவக்கக் காட்சிதான் இது 'டிசெம்பர் 2, 2007). யு.எஸ். வர்த்தகச் சரித்திரத்திலேயே மிகப் பெரியதும், சட்டபூர்வச் சிக்கல்கள் மிக்கதுமான வழக்கு
முன்கதைச் சுருக்கம் !
1985-இல் நிறுவப்பட்ட என்ரான், முதலில் ஒரு பழைய தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தது: எரிவாயுவைக் (natural gas) குழாய்ப்பாதை வழியே நகர்த்துவதன் மூலம் தன் வருவாயில் 85 விழுக்காட்டை ஈட்டியது. நாளடைவில், புதிய சந்தைகளை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது - கச்சா எண்ணெய், மின் சக்தி போன்ற "சக்திச்சந்தை'யில் கொள்முதல் செய்வோரை இணைப்பதற்குப் புதுமையான வழிகளைத் தோற்றுவித்தது. வேகமாக வளர்ந்தது.
 

னக்கு வழக்கு
ஈனா தாமோதரன்
இன்றும் கூட 30,000 மைல் நீளமான எரிவாயுக் குழாய்ப்பாதை என்ரானுக்குச் சொந்தமானதுதான். மேலதிகமாக, காகிதம், சக்தி, அலைவரிசைவெளி உள்ளிட்ட எண்ணுறு பழைய/நவீனப் பொருட்களுக்கான விற்பனையாளரையும் வாங்குவோரையும் இணைப்பதன் மூலம் இந்த வருடத்திய வருவாயில் 80 விழுக்காட்டை என்ரான் ஈட்டியது. எந்தப் பொருளைச் சுற்றியும் ஒரு பேரச்சந்தை உருவாக்குவது என்ரானின் தனித்துவம் என்றாகியிருந்தது. அதிகணிப்பொறி (supercomputers) போன்ற நவீனத் தொழில் நுட்பங்கள் உலகளாவிய சந்தைத்தொடர்புகளைச் சாத்தியமாக்கின. இரண்டே வருடங்களில் பங்கு மதிப்பு மூன்று மடங்காகியது. (ஆகஸ்ட் 2000 பங்கு மதிப்பு = 90 டாலர்)
கதை முடிச்சு :
கடந்த மூன்று வருடங்களில், அயல்நாட்டுப் பேரங்களில் 500 கோடி டாலர் முதலீட்டு நஷ்டம் அடைந்தது என்ரான். அதே at Louiggi, 5.gif pitif (fiber optic cable) sulfGu தகவல் அனுப்பும் புதுச் சந்தையைத் திறக்கும் திட்டத்துக்காக 700 கோடி டாலர் கடன் வாங்கியது. என்ரானின் பொருளியல் அறிக்கைகளில் இந்தக் கடன் அழுத்தக் கூடாது என்றெண்ணிய என்ரான் நிறுவனத் தலைவர்கள் சில தனிப்பட்ட சிறு நிறுவனங்களை உருவாக்கி, கடனை அவற்றின் கணக்கில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சிறு நிறுவனங்கள் என்ரானுடன் எந்தத் தடையும் இல்லாமல் கொடுக்கல் - வாங்கல் செய்யும் - ஒரு நிறுவனம் தன்னுடனேயே கொடுக்கல் - வாங்கல் நிகழ்த்துவதற்கு இணையானது இது. ஆனால், இந்த 79 நடப்புகளை யாரும் கூர்ந்து கவனித்ததாகத்

Page 82
தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்
வரை.
கதை விரிவு :
ரஷ்யக் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின் ஏற்பட்ட உலகளாவிய விமானப் போக்குவரத்துக் குறைவு உள்ளிட்ட பல உலக நடப்புகளால், கச்சா எண்ணெய் முதலான 'சக்திச் சந்தை விலைவாசி விழுந்து கொண்டிருந்தது. முதலீட்டு நிலவரம், சிறு நிறுவனங்களுக்கும் தமக்கும் உள்ள உறவு உட்படப் பல கேள்விகளுக்கும் என்ரான் நிர்வாகம், சரியான பதில் கொடுக்கவில்லை. என்ரானின் பொருளாதார நிலை பற்றிக் குழப்பமும் சந்தேகமும் நிலவியது. முதலீட்டாளர்கள் என்ரான் பங்குகளை விலக்க ஆரம்பித்தார்கள். "L6 חוbbTL" -" மதிப்பீட்டாளர்கள் அவற்றின் மதிப்பைக் குறைத்தார்கள். கடன்காரர்கள் உடனடியாக Aலட்சக்கணக்கான டாலர்களைத் திருப்பும் படி கேட்டார்கள். விற்பனை-வாங்குதல் சந்தைக்காரர்கள் பயத்தினால் தள்ளிப் போனார்கள். என்ரான் பங்கு மதிப்பு 99
விழுக்காடு குறைந்தது.
O வேகமாக விழுந்து கொண்டிருக்கும் Yஎன்ரானை அதன் போட்டியாளரான டைனஜியுடன் இணைக்கும் முயற்சி கதையின் அடுத்த கட்டம். விற்பனை ஒப்பந்தப்படி, டைனஜி 150 கோடி டாலரை என்ரனுக்குக் கொடுத்தது - எக்காரணத்தினாலும் விற்பனை தடைபட்டுப் போனால் எரிவாயுக் குழாய்ப்பாதை டைனஜிக்குச் சொந்தம் என்ற நிபந்தனையுடன். என்ரானின் கைவசம் அது சொன்னபடி 300 கோடி டாலர் இல்லை, 120 கோடி டாலர்தான் மொத்த இருப்பு; 09 கோடி டாலர் கடன் உடனடியாகத் திருப்பப்பட வேண்டிய நெருக்கடி, சந்தையில் என்ரான் நிறுவன மதிப்பீட்டுக் குறைப்பு - இவை அனைத்தையும் சென்ற மாதமே அறிய நேர்ந்த டைனT, என்ரானை வாங்க மறுத்தது. விற்பனை ஒப்பந்தப்படி, எரிவாயுக் குழாய்ப்பாதை தனக்குத்தான் சொந்தம் என்று இப்போது வழக்குப் போட்டிருக்கிறது.
என்ரானின் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் குழப்பத்தில்
G
ლ
C
(

இருக்கிறார்கள். என்ரானின் பங்கு வாங்கிய ஜப்பானியர்களுக்குப் பலத்த நஷ்டம். இந்தியாவின் தபோல் மின்சக்தி ஆலையின் 65 விழுக்காடு என்ரானுக்குச் சொந்தமானது. அதை என்ரனால் விற்க முடியுமா அல்லது வங்குரோத நீதிமன்றத்தின் அனுமதி தேவையா ான்ற கேள்விக்குப் பதில் இனிமேல்தான் தெரியும். கடந்த ஆறு மாதமாக மூடிக் கிடக்கும் இந்த ஆலையின் மிச்சமிருந்த 200 ஊழியர்களில் பலரும் வேலையை விட்டு அனுப்பப் படுகிறார்கள். சம்பளம் கொடுக்கப் பணமில்லை என்று யு.எஸ். ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
என்ரானின் 21,000 ஊழியர்களின் 10 கோடி டாலர் ஓய்வூதியத் திட்டத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. காரணம் * حلمصر ான்ரானின் விதிமுறைப்படி ஓய்வூதியத் தொகையின் பெரும் பகுதி என்ரான் பங்குகளிலேயே முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஞ் 1,000 ஊழியர்கள் ஒரு மாதச் சம்பளத்துக்கும் குறைந்த ஊதவித்தொகையுடன் வேலையை விட்டு அனுப்பப் படுகிறார்கள். அதே ெ Fமயத்தில், 29 என்ரான் உயர்மட்ட அதிகாரிகள் 100 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளைக் கடந்த மூன்று வருடங்களில்மோ விற்று லாபம் அடைந்தது தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் நெருக்கடி நிலைமையையும் அதன் எதிர்கால விளைவையும் அறிந்த J உயர்மட்ட அதிகாரிகள், இவ்வாறு பங்குகளை ற் விற்பது சட்ட விரோதமான “உள்வட்டப்பூ பேரம்” என்று கருதப்படும். இந்த 29 அதிகாரிகள் மேலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜே.பி. மார்கன், சிட்டிகார்ப் ஆகிய இரண்டு நிதி நிறுவனங்களுக்கும் என்ரான் திருப்ப வேண்டிய கடன் தொகை மொத்தம் 00 கோடி டாலர்கள். வங்குரோத திமன்றத்தின் மேற்பார்வையில், என்ரானை ஒழுங்குபடுத்த இவ்விரண்டு நிறுவனங்களும் மேலதிகக் கடன் கொடுக்கப் போவதாய்த்
தெரிகிறது.
கள்விகள் :
சில மோசமான முதலீட்டு முடிகளால் 6 ாற்பட்ட பெருத்த நஷ்டம், வேகமான பளர்ச்சிக்கு ஆசைப்பட்டு வாங்கிய கடன்,

Page 83
ܓܡܚ2
Gh
60)
ܐܢܔܠ
உலகப் பொருளாதாரச் சரிவு/மந்தம், ஆகியன அனைத்தும் ஒரே நேரத்தில் கூடி நிகழ்ந்ததாலேயே என்ரான் வீழ்ந்தது. சரிவு
ஏற்பட ஆரம்பித்தவுடனேயே முதலீட்டாளர்கள், சந்தையாளர்களிடம் வெளிப்படையாகப் பேசி, அவர்கள்
நம்பிக்கையைப் பெற முடிந்திருந்தால், இந்தப் பெரும் வீழ்ச்சியை ஒரளவேனும்
மட்டுப்படுத்தியிருக்க முடியும்.
கதை இன்னும் முடியவில்லை. உறுதியான ஆதாரங்களுடன் விசாரணைகள் நடக்கும் போது இன்னும் பல விபரங்கள் வெளிவரும். ஆனாலும், பல சங்கடமான கேள்விகள் இப்போதே எழுகின்றன. தொடர்ந்து எழப் போகின்றன.
வணிக நிறுவனங்களின்றும் தனிப்பட்டு, நேர்மையுடன் கணக்குகளைச் சரிபார்க்க வேண்டியது தனியார் கணக்கர் நிறுவனங்களின் கடமை. ஆனால் என்ரானின் கடனையும், தானே ஆரம்பித்த சிறு நிறுவனங்களுடன் கொடுக்கல்-வாங்கல் வைத்திருந்ததையும் கணக்கர் நிறுவனமான ஆர்தர் ஆண்டர்ஸன் ‘காணாமல் இருந்தது எப்படி என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. என்ரானின் தலைமையகத்தில் ஒரு தளம்
ஆர்தர் ஆண்டர்ஸன் ஊழியர்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருப்பது; கணக்கைச் சரி பார்ப்பதற்கும் ஆலோசனைகள்
வழங்குவதற்குமாக, வருடாந்திரம் 54 கோடி டாலரை என்ரான் ஆர்தர் ஆண்டர்ஸனுக்குக் கொடுத்திருப்பது; இவற்றைப் பார்க்கும் போது, பேர்பெற்ற ஆண்டர்சன் நிறுவனமும் தீவிர விசாரணைக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. கணக்கர் நிறுவனத்துக்கும் வணிக நிறுவனத்துக்கும் இடையே போதுமான தொலைவு இல்லையெனில், எதிர்பார்க்கும் நேர்மையும் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி விடுகின்றன. •
அரசாங்கத்தின் "செக்யூரிட்டீஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷ'னிடம் ஒவ்வொரு காலாண்டும் அனைத்து நிறுவனங்களும் தம் வரவு-செலவுக் கணக்கைச் சமர்ப்பிப்பது விதிமுறை. கணக்குப் புத்தகம் கதைப் புத்தகமாக மாறும் பட்சத்தில், அதை உடனேயே கண்டுபிடித்து நடவடிக்கை

எடுப்பதற்காக ஒரு பிரத்தியேகக் குழுவை இந்தக் கமிஷன் நிறுவுதல் நலமோ என்ற கேள்வியும் எழுகிறது.
என்ரானின் 21,000 ஊழியர்களின் டி ஓய்வூதியத் திட்டமும் பெரும்பாலும் என்ரான் பங்குகளிலேயே மறுமுதலீடு செய்யப்பட்டதால், இந்த ஊழியர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது. பங்குச் சந்தையில் விளையாடுவோர் அனைவரும் அறிந்த அடிப்படை உண்மை, அனைத்துச் சேமிப்பையும் ஒரே நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது என்பதே (diversified investment portfolio). guig.5uggll L முதலீடு மட்டும் இதற்கு விதி விலக்கா? ஏன்? ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிர்வகிப்பதில் ஒரு நிறுவனத்துக்கு எந்த)L அளவுக்கு அதிகாரம் தரப்பட வேண்டும்? தம் வாழ்க்கைச் சேமிப்பை இழந்து நிற்கும் கி இவர்களுக்காக அரசாங்கம் ஏதும் செய்ய ஞ் முடியுமா? முக்கியமான கேள்விகள்.
முக்கியமான முதலீடு ஆய்வுறு நிறுவனங்கள், நம்பகமான வர்த்தக இதழ்கள் அனைத்தும் என்ரான் பற்றிக் காதல் தா கவிதைகளையே தொடர்ந்து எழுதிமோ வந்திருக்கின்றன. வர்த்தகம், பொருளியல் துறைகளைப் பற்றிய இவர்களது புரிதலைக் குறை சொல்ல முடியாது. என்ரானின் பங்கு ர மதிப்பு, அதற்கு அடிப்படையாகும் சொத்து டி மதிப்பு, புதுக்கடனைச் சேர்க்காத ‘சுத்தக் 6 கணக்கு ஆகியவற்றைப் பார்க்கையில், இவர்களுக்கு என்ரானின் மேலிருந்த மயக்கம் நியாயமானதே. ஆனால், என்ரானின் பொருளாதார நிலைமை பற்றிக் குழப்பம் நிலவிய வேளையில், கேள்விகளுக்கு நேரடியான பதில் சொல்லாமல், “எங்களுக்குத் தெரியாததா?’ என்ற ரீதியிலான வணிக நிறுவன அகங்கார பதிலை மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டதுதான் முதலீட்டு ஆய்வு நிறுவனங்களின் தொழில்முறை நேர்மைக்கும், வர்த்தக இதழியல் நெறிக்கும் ஒவ்வாததாய்த் தெரிகிறது. எல்லாரும், எப்போதும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாய் இருத்தல் இயலாததுதான் போலும்.
سیح
ஒரு முதலாளியப் பொருளாதார அமைப்பில், வணிகப்பெருநிறுவனங்கள்

Page 84
கடைபிடிக்க வேண்டிய எண்ணற்ற சட்டங்க மனிதச் சுயநலமும், பேராசையும், ஆதிக்கமுறை இவை உதவுகின்றன. இச்சட்டங்களும் விதிமு ஆரோக்கியமான போட்டி மூலம் விரியக் சு அதிகம் இல்லாத செயல்பாட்டுச் சுதந்திரமுட இந்த அடிப்படை நம்பிக்கை வீணாகும் போது மாற்றங்களும் அத்தியாவசியமாகின்றன. வண நிறுவனங்களும் தம் வாழ்வுக்கு வசதி சேர்க்க மனிதரின் பாதுகாப்புக்கான தேவை இது.
பல நிறமாய் புள்ளிகளுட6 வெளிர் தே கருந்தோலுக் அரசாங்கக்
சமையலறை சந்தடி நிறை துாநாறறம
பென்சிலால்
அசோக வை அலைச்சல்
சத்துணவில் சாம்பாருடன் சனத்தொகை கருவேல மர கரும்பட்டை இல்லையென் இருப்பைக் சடுதியில் நீ சந்திப்பிழைல் இயந்திரங்க எல்லாமே இ
இவர்களுடன்
 

ர், நியதிகள், விதிமுறைகள் உள்ளன. இயல்பான யும் வணிகச் சூழலில் மிதமிஞ்சிப் போகாமலிருக்க றைகளும் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், கூடிய deregulated சூழலும், அரசாங்கத் தலையீடு ம், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. து, அரசாங்கத் தலையீடும், regulation போன்ற பிற ரிக நிறுவனங்களும், அரசாங்கங்களும், பிற சமூக 5 ஏற்பட்டவை என்று நம்பியிருக்கும் சாமானிய
O
, U6 6.6060Usity; ன், புள்ளியின்றி, ாலுக்கடியின் பச்சைக் குருதியுடன் ‘கடியில் நிறந்தெரியாக் குருதியுடன். குடியிருப்பின் யில் கொழுத்துத் திரிவது ஒருவகை; ]ந்த திரையரங்கின் கழிவறையில்
குறிக்கப்பட்ட எண்ணிலுரர்வது ஒருவகை; ாங்களின் சீதைகளுக்கு காட்டுவது ஒருவகை;
விழுந்துவைத்து
வெளிவந்து 5 குறைப்பது ஒருவகை;
யிலொன்றாய் ர் றெண்ணி, உள்ளது உரைக்க காட்டாது திரும்ப உரைக்கும், யெழுதுவதில் யைச் சத்தமின்றிச் சரிசெய்யும். ரூடன் பேசக் கற்றுக்கொள்
யந்திரங்கள்தான் என்றானபின்
பேச்செதற்கு.

Page 85
பாலைவனம் போல் வெளேர் என்ற வெறுமையுடன் காட்சி அளித்த அந்தப் பரந்த வெளியில் ஒரு உருவம் திடுதிப்பென்று தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது, பச்சை நிற உடுப்பும் தலையைச் சுற்றி கழுத்தில் இறங்கித் தொங்கும் முக்கோணத்துண்டும் தெரிந்தன. அதைவிட முக்கியமாக, தோளில் தொங்கிய கலஷ்னிகாவ் கண்ணில் பட்டதும் அவனுக்கு லேசாக பயமேற்பட்டது. அடுத்த நொடியில் அதன் முனை அவனை நோக்கித் திரும்பலாம். யார், என்ன, என்று விசாரிக்காமலே குண்டு பொயலாம். அவன் கடந்த ஒரு மாதமாக 胡 இப்படிப்பட்ட தருணங்களில் வழக்கமாகச் செய்வதை இப்பவும் செய்தான். கையில் பிடித்திருந்த காமிராவைக் கழுத்தில் தொங்கவிட்டு இரு கைகளையும் உயரத்தூக்கி தி தான் நிராயுதபாணி என்று தெரிவித்தான். N/கலஷ்னிகாவைத் தூக்கிய கை சிறிது அசையாமல் நின்றது தயங்கியது போல அல்லது அவனை எடைபோட எத்தனிப்பது போல.
ஆனந்தனை ஏதோ ஒன்று தாக்கியது. அந்த உருவத்தின், உடல் அசைவின் த்வனி வித்தியாசமானதாகத் தாக்கிற்று. அவன் தன்னையறியாமல் அந்த உருவத்தை நோக்கி நடந்தான். எந்த வகையான பைத்தியக் காரத்தனம் தன்னை உந்தி நடத்துகிறது என்று வியந்தவனாய். பத்தடி இடைவெளி நெருக்கத்தில் பார்த்தபோது அவனுக்குத் திடுக்கிட்டது. கடவுளே, எதிரில் நிற்பது ஒரு சிறுமியா? கிட்டத்தட்ட அவனுடைய மகள் பத்மாஸினியின் வயது இருக்கலாம் நிச்சயமாக பதிமூன்று அல்லது பதினான்கு அதற்கு மேல் இருக்காது - ஒ, இல்லை இது பெண் இல்லை. பெண் சாயலாய் மீசை முளைக்காத சிறுவன். தாலிபானைச் சேர்ந்த உடுப்பல்லவா இது? தவிர எதிரியின் முகாமில் பெண்களுக்கு இடமேது?
 

தெலை
'ஹல்லோ" என்றான் அவன் தன் பயத்தை மறைத்தபடி சினேகிதமாக, நான், பத்திரிக்கையாளன்' என்றான் ஆங்கிலத்தில், இந்தியப் பத்திரிகையாளன் என்று சொன்னால் ஆபத்து. சிறுவனுக்கு அவன் பேசியது தெரியவில்லை என்பது அசைவில்லாமல் தீர்க்கமாகப் பார்த்த அவன் கண்களில் தெரிந்தது. துப்பாக்கியை நீட்டிய கை மடங்கவில்லை என்பது அவனுக்குக் கவலையளித்தது. அடி வயிற்றைக் கலக்கும் கடுமை அந்தக் கண்களில் நிழலாடியது. அந்த ரோஜா நிறக் கன்னங்களில் விரல் பதித்தால் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று தோன்றிற்று. இந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் தீவிரத்துக்குப் பின்னால் இருக்கும் சோகம் அல்லது கோபம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பத்திரிகையாள னான அவனுக்குக் கற்பனை செய்வது கடினமில்லை. பால்யம் ஆரம்பமாவதற்கு முன்பே மூப்படைந்துவிடும் சாபம் கொண்ட மண் இது. இங்கு கனவுகள் கிடையாது. பிறவியிலேயே மரித்துப் போகும் கனவுகளைக் கண்டால் என்ன காணா விட்டால் தான் என்ன? ஜெகத்தைச் சுட்டுத்தள்ளும் வெறியைக் கர்ப்பத்திலிருந்து சுமக்கும் பிஞ்சுகள், அவனுக்குச் சம்பந்தமில்லாமல் பத்மாஸினியின் நினைவு வந்தது.
அவன் சட்டென்று நிமிர்ந்தான். அந்தச் சிறுவன் கடுமையாக ஏதோ வார்த்தையைச் சொல்லி துப்பாக்கி முனையை அவன் நெஞ்சுக்கு நேராகப் பிடித்து நட' என்பது போல சைகை காட்டினான். குரல் இன்னும் உடையாமல் பெண் குரல் போல இருந்தது. ஆனந்தன் கலவரத்துடன் நோ, நோ" என்று விளக்க ஆரம்பித்தபோது சிறுவன் துப்பாக்கியினாலேயே அவன் மண்டையில் ஒரு அடி கொடுத்து நட என்று மறுபடி ஜாடை காட்டி அவன் எதிர்பாராமல் லாகவமாக

Page 86
அவனது இரு கைகளுக்கும் ஒரு வளையத்தைப் பூட்டினான்.
அவன் நெருக்கித்தள்ள ஆனந்தன் மெளனமாக முன்னால் நடந்தான்.
விவரமறியாத சிறுவர்களிடம் துப்பாக்கியைக் கொடுப்பது எப்படிப்பட்ட கயமைத்தனம் என்று அவனுக்குச் சுரீரென்று கோபம் வந்தது. தன் வயதில் - பாதி கூட இல்லாத இந்தச் சிறுவனின் பிணைக் கைதிபோல நடக்க நேர்ந்த அபத்தத்தைப் பற்றின பரிதவிப்புடன் அவன் நடந்தான். இவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து மனத்தில் வெறியேற்றுபவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும் என்று அவன் நினைத்துக் கொண்டான். இது பச்சை மண். இஷ்டத்திற்குப் பிசையலாம், உருட்டலாம். எதைத் தூவினாலும் பசைபோல் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. தூவியது
اص
^தூவியவனின் எண்ணத்தை விட அதிக வீர்யம்
ரி கொண்டு விசுவரூபமெடுக்கும். தவிர இந்தப்
பச்சை மண் அவனுக்குக் கவசம். அவனைக் காப்பாற்ற பலிகடா ஆவது தனது கெளரவம் என்று கண்மூடித்தனமாக சம்மதிக்கும் இளசு.
திெ முக்கால் முகத்தை மறைத்தபடி கடுமை
ܔܠ
, குறையாத பார்வையுடன் துப்பாக்கி முனையை அவன் மீது உரசியபடி நடக்கும் அந்தச் சிறுவனைப் பார்க்கும் போது அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. இவன் வாழ்க்கையில் எந்தக் கொடுமையை அனுபவித்திருந்தாலும், அவன் சுமக்கும் இந்தச் சுமை அதிகக் கொடுமையானது என்று அவனுக்குத் தோன்றிற்று. அது ஒரு கொடுமை என்று உணரக் கூட இயலாத பலிகடா.
அவன் தன்னை எங்கே அழைத்துப் போகிறான் என்று ஆனந்தனுக்குத் தெரியவில்லை. ஒரு செடியோ, கொடியோ, மரமோ நிழலோ இல்லாத பொட்டல் காட்டில், அவன் கணப்போதில் வெறி பிடித்து தன்னைச் சுட்டு வீழ்த்தலாம் என்ற கவலையுடன் நடப்பது அதிக சோர்வைத் தந்தது. நீர் கிடைக்குமா T
என்று அவன் சைகையால்
கேட்டான். துப்பாக்கி முனையால் (1
அந்தச் சிறுவன் மீண்டும் அவன் : தலைமேல் அடித்தான். இந்தத் *ை
 
 
 
 
 

துப்பாக்கி மட்டும் அவனிடம் இல்லாமலிருந்தால் கைக்குட்டை போல அவனை மடித்து கால் சராயில் திணித்திருக்கலாம் என்று ஆனந்தன் நினைத்தான். கண் சொடுக்கும் நேரத்தில் கையில் இரும்பு வளையத்தை வேறு ம 1ா ட் டி யி ரு க் கி ற ர ன் .
பேச்சுக்குக்கூட அவன் இடம்
தரமாட்டான் என்று புரிந்தது. ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பையனுக்கு பத்மாசினிபோல 13 வயதுக்குள் தான் இருக்கும். அரைமணி நேரத்துக்குமேல்
பத்மாஸினிக்கு மெளனம் காக்க முடியாது.
சளசள பேச்சை நிறுத்த முடியாது. கிண்கிணிச் சிரிப்பை அடக்க முடியாது. இவன் என்றாவது சிரித்திருப்பானா என்று அவனுக்கு யோசனையாக இருந்தது. ó5@s 牙 குண்டலத்தோடு பிறந்த கர்ணனைப் போல, கலஷ்னிகோவ்வைப் பிடித்தப்படியே இவன்
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டிருப்பானோ/N
என்று தோன்றிற்று. இவனைப் பெற்றவள் ெ உயிரோடு இருக்கிறாளோ இல்லையோ, செத்திருப்பாள். அதனால்தான் இந்தக்
கண்களில் அத்தனை கடுமை. அவனுடன் அவன் சம்பாஷிக்கக் கூடிய ஆங்கிலமோ
இந்தியோ தமிழோ தெரியாதது பெரிய சோகம்,
ஆனந்தனுக்குத் தன் பேச்சு சாதுர்யத்தில் மிக்க நம்பிக்கை. பிரபல பத்திரிக்கை ஒன்றின் முதன்மை ரிப்போர்ட்டரான அவன் செய்தி சேகரிக்க யுத்த களத்திற்கு வருவது இது முதல் முறையல்ல. இக்கட்டில் மாட்டிக் கொள்வதும் புதிதல்ல. இந்திய-பாகிஸ்தான் எல்லைப் போரின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பத்துநாட்கள் யார் கண்ணிலும் சிக்காமல் செய்தி சேகரித்தது அசகாய சூரத்தனம் என்று அலுவலகத்தில் இன்னமும் சொல்வார்கள். அங்கு பாகிஸ்தான் எல்லைக் காவல் படையினரிடம் சிக்கிக் கொண்டபோது பேச்சு வன்மையே கைகொடுத்தது. இரவு காவலாளிகள், மது அருந்திய சுமுகமான சூழலில் அவன் பஞ்சாபி பாட்டு பாடிக் காண்பிக்க இரண்டு மணி நேரப் போதில் அவர்கள் அவன் பகை
* நாட்டைச் சேர்ந்தவன் என்பதை மறந்து போனார்கள். இந்திய
சினிமாக்களைப் பற்றி ரசனையுடன்

Page 87
பேசினார்கள். அமிர்தஸரஸ்ஸில் இருக்கும் தன் பாட்டி செய்யும் மாங்காய் ஊறுகாயைத் தன்னால் ' மறக்க இயலாது என்றான் ஒருத்தன். مت என்னுடைய தந்தைக்கு 90 வயது. &ல. லக்னோ சுப்பாரியை ஒரு முறை மீண்டும்
சாப்பிட்ட பிறகுதான் தனக்கு மரணம் வரும்
என்று சொல்கிறார் என்றான் இன்னொருத்தன். நடுவில் ஒரு சுவர் எழுப்பி அந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் இந்தப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விரோதிகள் என்று சொல்லிவிட்டால் நம்மால் ஏற்றுக் கொண்டு விடமுடியுமா? என்றான் அமிர்தஸரஸில் வசிக்கும் மூதாட்டியின் பேரன். கடைசியில் என்னை விட்டுவிடுங்கள் என்று அவன் அவர்களைக் கெஞ்ச வேண்டியிருக்கவில்லை. அவன் கண் அயர்ந்த சமயம் கைவிலங்குகள் அகற்றப்பட்டிருந்தன. கருமை பிரியாத அதிகாலை நேரத்தில் அவன் எழுந்து வெளியேறியபோது காவலர்கள்
/Nதூங்குவது போல நடந்ததாக இப்பவும்
சி அவனுக்குத் தோன்றியது.
யாழ்ப்பாணத்தில் தமிழ்
கைகொடுத்தது. அலுவலகத்தில் வேறு
யாருக்கும் தமிழ் தெரியாது என்பதால் செய்தி
வித் ே இலங்கைக்கு யாரை அனுப்புவது
N
(என்பதைப் பற்றின குழப்பமே இல்லாமல்
போயிற்று. ஆனால் சராசரி தமிழனைப் போல் இல்லாமல் நிறத்தில் வட இந்தியனைப் போல் இருந்ததால் வன்னிக் காடுகளில் ஒரு இளம் போராளியிடம் மாட்டிக் கொண்டான். மீசை முளைக்காத பேராளி. பாலகன், பெண்ணைப் போல வழுவழு கன்னம். ஆனால் அந்தக் கண்களில் இருந்த கனல் அடிவயிற்றைக் கலக்கியது. கிட்டத்தட்ட இந்தச் சிறுவனைப் போல் அவன் வாயைத் திறக்கவே விடவில்லை கையில் இருந்த ஏகே47 அவன் வாயைத் திறக்க யத்தனிக்கும் போதெல்லாம்
முதுகைக் குத்திற்று. மண்டையில்
அடித்தது. உலகமே எந்தன் எதிரி
என்பதுபோல். சக மானுடரிடம்
நான் நம்பிக்கையிழந்து கன
காலம் ஆயிற்று என்பதுபோல. ஆனால் ஆனந்தன் 8. நம்பிக்கையிழக்காமல் ஏ.கே.47 விலாவைக் குத்திய நிலையில் தமிழில் பேசிக்கொண்டே
 
 
 

இருந்தான். 'என்னை நீ பிடித்து வைத்தால் என் தலைவனுக்கு நஷ்டம். நான் உன் சோகத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?” சிறுவனிடம் இளகினதற்கான அறிகுறி தெரியாதது அவனது கவலையை அதிகரித்தது. அந்த பாலகனிடம் உயிர்பிச்சைக் கேட்க நேர்ந்ததை நினைத்து வெட்கம் எற்பட்டது. "பையா, நான் எந்த அரசியலையும் பேசப் போவதில்லை. என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். குழந்தை பிறக்கும் சமயம் இது என்னைப் போகவிடு' அந்தச் சிறுவனின் கண்கள் இறுக்கத்துடனேயே பார்த்தன.
அவன் தன்னையறியாமல் பரிதவிப்பில் உளறினான். பிறக்கிற குழந்தைக்கு நீ சொல்ற பெயரை வைக்கிறேன். 'சிறுவனின் அதரங்களில் கீறலைப் போல ஒரு இளக்கம் தெரிந்தது. பேசவே பேசாமல் உயர்த்திப் பிடித்திருந்த ஏ.கே.47ஐ கீழிறக்கி 'போ' N என்பதுபோல சைகைக் காட்டியபோது அவனால் நம்பமுடியவில்லை.
நன்றி என்று புன்னகைத்து, ‘என்ன பெயர் வைக்கட்டும்? என்றான்.
சிறுவன் புன்னகைக்காமல், 'பெண் என்றால் 'பத்மாஸினி” என்றான். محسیح
"யாரது, பத்மாஸினி?”
சிறுவன் சரேலென்று திரும்பி நடந்தான், சொல்ல விருப்பமில்லாதவன் போல, "எண்ட அம்மா’ என்று காற்று சொன்னது போல் இருந்தது.
இந்தச் சிறுவனிடம் பேசி எதையும் சாதிக்க முடியாது. மொழி வெறியைவிட மத வெறி உக்ரமானது என்று நினைக்கையில் சிரிப்பு வந்தது. கையில் துப்பாக்கி இருக்கும் போது கொலை வெறி ஒன்றுதான் சிந்தனையை ஆக்ரமிப்பது. அவனுக்கு அப்கானிய மொழி சுத்தமாகத் தெரியவில்லை. ஜன நடமாட்டம் உள்ள இடத்தில் யாராவது
அவனைப் புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் இது 6 பொட்டல் காடு. மேடும்
பள்ளமும், மலைச் சரிவுகளும்

Page 88
கொண்ட பொட்டல், பல நூற்றாண்டு சோக
சரித்திரத்தின் கண்ணிர் காய்ந்த பொட்டல். சோகத்திற்கு விடிவு இப்போதைக்கு இல்லை என்பது போல தீவிரவாதிகளைப் பதுக்கி வைக்கும் குகைகள். எத்தனை அமெரிக்க விமானம் மேலே பறந்தாலும், எதிரிக்குக் காட்டிக் கொடுக்காது. இந்தச் சிறுவன் மூப்பெய்தும் வரை கலஷ்னிகாவையும் கண்களில் வெறுப்பையும் சுமப்பான் என்று அவனுக்கு விசனம் ஏற்பட்டது.
திடீரென்று அந்தச் சிறுவன் உஷாரானான். செவிகளைக் கூர்மையாக்கிக் கவனிப்பவன் போல நின்றான். பலநூறு விமானங்கள் சேர்ந்து பறந்து வரும் ஒசை. ஆனந்தன் திடுக்கிட்டான். தாலிபான் படையா? அல்லது அமெரிக்க விமானங்களா? சிறுவன் அவனைக் கீழே தள்ளி தானும் மேட்டுச் சரிவில் படுத்துக் கொண்டான். ஆனந்தன் அண்ணாந்து பார்க்க யத்தணிக்கையில் அவன் கோபத்துடன் ஏதோ சொன்னான். முட்டாள் என்று சொல்கிறான் என்று , ஆனந்தன் நினைத்துக் கொண்டான். : சிறுவனுடைய அதட்டலை மீறி அவன் பார்த்தான். ஆச்சரியமாக t་ இருந்தது. வரிசையாக ஒன்றன்பின் ? P5, மெரிக்கப் போர் ஒனறாக அ Ժ5 ժ5 Lif * விமானங்கள். அவை செல்லும் திசையைப் பார்த்தான். காபூலை நோக்கிச் செல்கின்றன. வடக்குக் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறியா இது? தாலிபான் தோற்றதா? அவனால் நம்பமுடியவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான தருணத்தில் இந்த அடம்பிடிக்கும் முரட்டுப் பையனிடம் ஒரு பொட்டல் காட்டில் இருக்க நேர்ந்ததே என்று அவனுக்கு ஆத்திரம் வந்தது. இங்கிருந்து காபூல் எத்தனை தொலைவு என்று அவனுக்கு திட்டவட்டமாகத் தெரியவில்லை. நன்றாக இருட்ட ஆரம்பித்து விடடது. தாலிபான் தோற்றது என்றால் இந்தச் சிறுவன் என்ன செய்வான்? பயத்தில் தன்னைச் சுட்டுத் தள்ளலாம் என்று அவனுக்குக் கவலையேற் பட்டது. சிறுவன் சரேலென்று எழுந்து அவன் தோளைத் தட்டி ஒடு' என்பதுபோல சைகை காட்டி ஒட ஆரம்பித்தான். அவன் விட்டால் திசை காட்டக் கூடியவர்கள் யாரும் இல்லை என்கிற பிரக்ஞையில் அவனைப் பின் தொடர்ந்து ஆனந்தன் ஒட ஆரம்பித்தான்.
حاصر
:ád
e
tGG
 
 

சிறுத்தைப் புலி போலப் பாய்ந்து ஒடும் சிறுவனின் வேகத்தைக் கண்டு அவன் மலைத்தான். அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நின்றபோதெல்லாம் அவன் தனது பாஷையில் அவனை அதட்டி துரிதப் படுத்தினான். ஒரு மணி நேரம் ஓடியபிறகு தொலைவில் விளக்கு வெளிச்சமும் பல விதமான சப்தங்களும் கேட்டன. காபூலை நெருங்கிவிட்டது அவனுக்குப் புரிந்தது. அவன் பரபரப்புடன் அதிக வேகத்துடன் நடந்தான். அந்தச் சிறுவனின் முகம் இருட்டில் சரியாகத் தெரியாவிட்டாலும், உடல் அசைவில் இறுக்கம் அதிகரித்திருப்பதாகத் தோன்றிற்று. நெடுஞ்சாலையை அவர்கள் அடைந்ததும் சிறுவன் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல் நின்றான். சரேலென்று தனது மேலங்கியைக் கழற்றி உள்பக்கத்தை வெளிப்பக்கமாக மாற்றி அணிந்தான். வடக்குக் கூட்டணியின் உடுப்பை போல அது மாறிற்று. ஆனந்தன் வேகமாக முன்னேறியபோது சிறுவன் அவனைத் தடுத்து
நிறுத்தினான். ஆனந்தனுக்கு/N திடீரென்று பொறுமை நழுவிப் ெ போயிற்று. ஆங்கிலத்தில்
படபடத்தான்.
இதப்பார், நான் ஒரு பத்திரிக்கையாளன். அங்கே ான்னவோ நடந்து கொண்டிருக்கிறது. நான்>/ போயாகணும் - எழுதணும் - என் தலைமை அலுவலகத்துக்கு செய்தி அனுப்பணும். ான்னை விடு' - சிறுவனின் முகம் கடுமையானது. ஆப்கானில் ஏதோ பொரிந்துத் தள்ளினான். மறுபடி துப்பாக்கி முனையை அவன் மீது திருப்பியபோது ஆனந்தன் அடங்கிப் போனான். 'காபூலிலேயே 5ங்கியிராம ல் யாத்திரை கிளம்பியது மடத்தனம்' என்று சபித்துக் கொண்டான். ஒரு வாகனம் வரும் ஒசை கேட்டது. சிறுவன் பிறைத்து நின்றான். ஒன்றல்ல, மூன்றோ ான்கோ, வடக்குக் கூட்டணி ராணுவ வீரர்கள் ாங்கிய வாகனங்கள். பெருத்த ஆரவாரத்துடன் சென்றன. நான்காவதாக பந்ததை அவன் தடுத்து நிறுத்தினான். இதற்குத்தான் அவன் தன்னைப் போக பிடவில்லை என்று ஆனந்தன் புரிந்து கொண்டான். சிறுவன் ஏதோ சொல்ல p ன்னால் ஏறிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டது. ஆனந்தன் நன்றியுடன் ஏறி

Page 89
அமர்ந்தான். அவன் ஆங்கிலத்தில் அவர்களுடன் பேசிப் பார்த்தான். யாரும் பதில் : சொல்லவில்லை. ஆனால் தங்களுக்குள் சளசளத்துக் கொண்டார்கள். குரலில் உற்சாகம் தொனித்தது. கூடவே எச்சரிக்கையும் கலந்திருந்தது. தாலிபான் ஒட்டமெடுத்திருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். ஆனால் நம்பமுடியவில்லை. இத்தனை சுலபமாக அந்தப் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியுமா? அவர்கள் ஓடினாலும் பயங்கர வாதத்தை ஒடுக்க முடியுமா? நகர எல்லைக்குள் வண்டி நுழைந்ததும் ஆச்சரியம் காத்திருந்தது. பாட்டோசைக் கேட்டது. தாலிபான் ஒடிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி இருக்க முடியும்? அவன் தன்னை மறந்து பக்கத்தில் அமர்ந்திருந்த அந்தச் சிறுவனிடம் மகிழ்ச்சியுடன் "மியூசிக், கானா! என்று அந்த இசை காதில் விழுகிறதா என்பது போல சைகை காட்டினான். சிறுவனின் முக தசைகள் இன்னும் இறுகிப் போயிருந்தன. /Nகண்களின் கடுமை குறைந்து
ரி பளபளத்தன. ஓ, இவன் '
தாலிபானைச் சேர்ந்தவன். இந்த g உண்மை வண்டி ஒட்டுபவனுக்குத்
s தெரிந்தால் கூட ஆபத்து. இப்போது ' தை நகரத்தில் நடக்கும் களியாட்டத்தில் 4-- அ)இவனை யாரேனும் அடயாளம் கண்டால் கொன்று நாற்சந்தியில் நிறுத்துவார்கள். இது தெரிந்தும் இந்தப் பிள்ளை ஏன் இந்த வாகனத்தில் ஏறினான் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.
வாகனம் முன்னேற முன்னேற நடுத்தெருவில் மக்கள் ஆடிப்பாடிக் கொண்டு நிற்பது தொலைவிலேயே தெரிந்தது. சட்டென்று தன் விலங்குகளைச் சிறுவன் அவிழ்ப்பதை ஆனந்தன் உணர்ந்தான். அப்போதுதான் வாகன ஒட்டி விலங்குகளைப் பாத்திருக்க வேண்டும். அவனைப் பார்த்து அரைகுறை ஆங்கிலத்தில் 'அது யார் போட்டது?’ என்றான். அவன் பதில் சொல்வதற்குள், ஒடும் வாகனத்தின் கதவைத் திறந்து சிறுவன் பாய்ந்து ஒட ஆரம்பித்தான். வாகனஓட்டி சட்டென்று உஷா ரானவன் போல் கைத்துப்பாக்கியெடுத்து சுட ஆரம்பிக்கையில் ஆனந்தன் அலறினான்.
"நோ நோ டோன்ட் ஷஜூட்'
 
 
 

'ஏன் தடுக்கிறாய்? அவன் ஒரு 5ாலிபான்! என்னை ஏமாற்றினவன்'
"இருக்கலாம், அவன் குழந்தையும் கூட" முட்டாள். குழந்தையோ கிழவனோ. அவன் ஆபத்தின் அடையாளம்'
"ஆனால் அவன் என்னைக் கொல்லவில்லை"
G) IT di 6SI ஒட்டி அலுப்புடன் துப்பாக்கியை இறக்கினான். பேச்சு தந்த இடைவெளியில் சிறுவன் தப்பிவிட்டான். வாகன ஒட்டி ஆனந்தனைப் பார்த்து, முட்டாள்!" என்றான். ஆனந்தனுக்கு அர்த்தமில்லாமல் கண்ணில் நீர் நிறைந்தது. பெண் பிறந்தால் பத்மாஸினி என்று பெயர் வைக்கச் சொன்ன சிறுவனின் ஞாபகம் வந்தது.
"வண்டியை நிறுத்துங்கள், நான் இங்கே
இறங்கிக் கொள்கிறேன்” என்றான், வண்டி நின்றதும் அவன் குதித்து தெருவில்
இறங்கினான். கடந்த ஒரு மாத ( காலத்தில் சங்கீதத்தின் ஒலியே
செவிகளில் விழுந்ததில்லை. தோலிபான் ஆட்சியாளர்களின் கட்டளை அது என்று அவனுக்குத் தெரியும். பெண்களும் முகம் தெரிய தி வெளியில் வந்து அவன் பார்த்ததில்லை.

Page 90
ஆனந்தன் விறு விறுவென்று சிறுவன் இருந்த திசையை நோக்கி நடந்தான். சிறுவன் இரண்டு மூன்று தெருக்கள் கடந்து ஒரு சந்துக்குள் நுழைந்தான். வீடுகளில் கொல்லைப்புறச் சந்து - சிறுவன் பூனைபோல இருளில் லாவகமாக நகர்ந்து செல்வது வியப்பாக இருந்தது. இப்படிப் பலமுறை நடந்து அவனுக்குப் பழக்கமாகியிருக்கும் என்று தோன்றிற்று. சிறுவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஒரு வீட்டின் பின் கதவை மெல்ல தட்டினான். அவன் பல முறை தட்டியும் கதவு திறக்காதது ஆனந்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது. சிறுவன் சோர்ந்த வனைப் போல தெருப்பக்கம் திரும்பி கதவின் மேல் சாய்ந்து அமர்கையில் கண்சொடுக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது. எதிர்த்த மதில் மேல் துப்பாக்கியுடன் நின்றிருந்த ஒருவன் அவனை நோக்கிக் குறிபார்க்க, சரமாரியாகப் பாய்ந்த குண்டுகளின் தாக்குதலில் சிறுவன் படியில் சாய்ந்தான்.
ஆனந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் 朝 விழிகள் பிதுங்கின. சற்று முன் வரை று தன்னுடன் தோரணையுடன் பயணித்த சிறுவன் உயிரற்று வீழ்ந்ததைக் கண்டு மனசு அதிர்ந்து குலுங்கிற்று. கண்களிலிருந்து நீர் வழிந்தது - காரணம் புரியாமல், கட்டுப்படுத்த >(இயலாமல்,
சத்தமே இல்லாமல் கதவு திறந்தது. நடுத்தர வயது இருக்கக்கூடிய பெண் உருவம் - அங்கு நின்றது. வாயிற்படியில் இருக்கும் உருவத்தைப் பார்த்து. அவனுக்குப் பதைத்தது.
பெற்றவளாக இருக்கும் - ‘ஓ’ என்று கூக்குரலிட்டு அதிர்ச்சி மேலிட அழப் போகிறாள் - சிறுவனைச் சுட்டவன்
காத்திருக்கிறான். மூச்சு நின்று விடும்போல் இருந்தது. அவள் சுற்று முற்றும் பார்த்தாள். எதிர் மதிலைப் பார்த்தாள். துப்பாக்கி பிடித்தவன் இடிமுழக்கம் போல ஏதோ கேட்டான்.
'உன் மகனா?
கேட்ட வேகத்திலிருந்து கேள்வியைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அவள் மீண்டும் குனிந்து பார்த்தாள். பிறகு நிமிர்ந்து இல்லை’ என்பதாகத் தலையசைத்தாள்.

‘சாக்கடையில் தூக்கிப் போடு என்று சைகை காட்டிவிட்டு துப்பாக்கி வீரன் நகர்ந்து மறைந்தான். அந்தப் பெண் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.
ஆனந்தன் பிரமை பிடித்தவன்போல் நின்றான். அனாதையாகப் படிக்கட்டில் - கிடக்கும் அந்தச் சிறுவனை எடுத்து அணைக்க வேண்டும் போல இருந்தது. எதற்காக இங்கு வந்து மரணத்தைத் தழுவிக் கொண்டான் அவன்? யாரைப் பார்க்க வந்தான்? சிறுவன் இருக்கும் இடத்துக்குச் சென்றால் தன்னையும் தாலிபான் ஆளாக யாராவது நினைக்கக்கூடும். அவன் யோசனையுடன் நிற்கையில் , கதவு மீண்டும் திறந்தது. வெளியே வந்த அந்தப் பெண் மின்னல் வேகத்தில் சடலத்தை உள்ளே எடுத்துச் சென்றாள். கதவு சாத்திக் கொண்டது.
அவன் சுய நினைவு வந்தவனாய் கிளம்பினான். அந்தப் பெண்ணின் பெயர் பத்மாஸினியாக இருக்கலாம் என்று/> தோன்றிற்று, அல்லது பாத்திமா எந்தப் பெயர் ெ
ஆனாலும் ஒன்றுதான். GD
காபூல் சந்தைச் சவுக்கத்துக்கு O வந்தபோது நகரம் விடுதலைக் கொண்டாட்டத்தில் இருந்தது.
سO
( YAAZHIN N
FPRINT N1 EDIA
யாழினி
பதிப்பகம்
SARAVANAN 1978 Plot No. 15, Kamalaram Nagar, Bambha Nagar, Thiruppalai Post, Madurai- 625 014,
india l
91 - 452 - 683801 yaazhiniGDredifmail.com ܢܠ

Page 91
: (41
T
ܬܬܕܕܕܵܪܢܣܛܪܬܐܬ
彎 6)294-1949萱
B(11
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

or all Occasions,
tering & *

Page 92
'உங்கள் வயது என்ன? என்று ஒரு நண்பர் சமீபத்தில் கேட்டார். 77 என்றேன். ரூடால்ஃப் எஃப்ரன்பர்க் படித்திருக்கிறீர்களா?" என்றார். இல்லை' என்றேன். மனிதன் வயதை எப்படிக் கனக்கிட வேண்டுமென்று அவர் சொல்லியிருக்கின்றாராம். அதன்படி, பயன் படுத்தக்கூடிய ஆற்றல் அவனிடம் எந்த அளவுக்கு எஞ்சியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மனிதன் வயது சொல்லப்பட வேண்டும். அதாவது, என்னிடம் ^இன்னும் நான்கு வருஷங்கள் செயல்படுத்த க் முடிந்த ஆற்றல் இருக்கிறது என்றால் என் வயது 4 ஒருவன் எத்தனை ஆண்டுகளாய் இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதைக் காட்டிலும் அவன் ஆற்றலின் எல்லையை ஆஸ்திவாரமாகக் கொண்டு ஒருவன் வயதைச் சொல்ல வேண்டுமென்கிறார் எஃப்ரன்பர்க், ஆற்றல் அனைத்தும் பயன்பட்டுப்போன நிலையில்தான் மரணம் சம்பவிக்கின்றது. உளவியல் பேரறிஞர் யுங் அவர்களுடைய கருத்தும் இதுதான். ஆகவே, வயது என்பதற்கு அதனளவில் பரிபூரணமான அர்த்தம் எதுவுமில்லை. நாம் வரையறுத்துக் கொள்கின்ற ஏற்பாடு தான் வயது"
நாளென ஒன்றுபோற் காக்கு உயிரும் வாள துணர்வார்ப் பெறின் - 3.34
என்கிறார் வள்ளுவர்.
"காலமென்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளாற் கூறப்பட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறப்படா மையின் நாளென வொன்று போலொன்றும், அது தன்னை 'வாளென்று உணர மாட்டாதார் நமக்குப் பொழுதுபோகா நின்றதென்று இன்புறுமாறு நாளாய் மயக்கவிற் காட்டி யென்றும், இடைவிடாதீர்த்தலான் 'வாளின்
இந்திரா ப
 

வயது என்ன?
ார்த்தசாரதி
வாய தென்றும், அஃதீர்க்கின்றன மயை உணர்வார் அரியராகவின் "உணர்வார் பெறின்" என்றும் கூறினார்." என்பது பரிமேலழகரின் அற்புதமான உரை.
கண்ணுக்குப் புலப்படாத அருவமாய் இருக்கிறதுஒரு வாள். அது தன்னை எப்படிக் காட்டிக் கொள்கிறது? ஒருநாள், இரண்டுநாள், மூன்று நாள், வாரம், மாதம், வருஷம் என்று கூட்டிக் கொண்டே செல்கின்றது. இந்த வாளின் வயது உயிர், ஒவ்வொரு நாளாய், வாரமாய், ஒவ்வொரு மாதமாய், ஒவ்வொரு வருஷமாய், அறுபடுகின்றது உயிர். இது நாமாக வகுத்துக் கொண்டிருக்கின்ற ஓர் ஏற்பாடேயன்றிக் காலத்துக்கு அதனளவில் பரிபூரண (absolute) அர்த்தம் ஏதுமில்லை. சூர்யோதயம், அஸ்தமனம் என்று திசைகள் பற்றிய இடத்துடன் (space) தொடர்புபடுத்தித் தான் காலத்துக்கு (Time) அர்த்தத்தைத் தர முடிகின்றது. காலம்-வெளி (space-time) என்பதைத் தான் நான்காவது பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்,
ஆகவே, இந்தக் கால மயக்குகள் உருவாக்கித் தருகின்ற ஏற்பாட்டுக்குள், இதைத்தான் "வாழ்க்கை என்கிறோம்) அர்த்தம் காண்பதுதான் நம் ஆற்றலின் எல்லை. உணர்வார் அரியராகவின் என்கிறார் பரிமேலழகர் இருத்தவியல்வாதிகளுடைய கோட்பாட்டின்படி, பிறப்பு எதேச்சை, பிறப்புஇறப்பு என்ற கால அட்டவணைக்குள் வாழ்க்கையின் மதிப்பீடுகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 'என் திட்டத்தில் மரணத்தினின்று தப்பிப்பதும் ஒரு முக்கிய செயல்பாடு என்கிறார் சாத்ரே மரணத்தையும் பூகோள வரையறைகளையும் கடந்து, வரலாற்றில் வாழ்வது வாழ்க்கை என்ற ஒளியின் நிழல், மரணத்தைப் பற்றிய பிரக்ஞை. இந்தப்

Page 93
772 - .Tபிழைத்தவ்ேல் ஏந்தல் இனிதுصبر
பிரக்ஞையைத் தான் வள்ளுவர், "உணர்வார் என்கிறார். இந்த "உணர்வு இருந்தால்தான் ஒவ்வொருவரும் அவரவர் ஆற்றலின் எல்லையை நோக்கிப் பயணிக்க முடியும்.
நெருந லளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்தில் வுலகு - 336
தனிப்பட்ட மனிதர்கள் இறந்து கொண்டேயிருப்பது இயல்பு. ஆனால் மானுடம் தொடர்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் ஆற்றலின் எல்லையில் தான், மானுடம் வெல்கிறது. இராமன் வென்றான் என்று கம்பன் சொல்லவில்லை. 'மானுடம் வென்றதம்மா’ என்று தான் சொல்கிறான்.
மரணம், சரீரத்தைப் பற்றிய சம்பவம். ஆனால் 'மனிதனுடைய முயற்சி, அவன் எட்டும் உயரத்தைத் தாண்டியதாக இருக்க வேண்டும். இல்லாவிடில், சொர்க்கம் என்ற கோட்பாடு எதற்காக? என்கிறார் ராபட் ப்ரெளனிங்.
கான முயலெய்த அம்பினில் யானை
காட்டில் ஒரு முயலை வேட்டையாடிக் கொல்வதைக் காட்டிலும் பரந்து கிடக்கும்
டு வெளியில் நிற்கும் ஒரு யானை மீது ரை வேலெறிந்து அம்முயற்சியில்
محصےحN
தோல்வியடைவது சிறந்ததாகும் என்கிறது குறள்.
ஒவ்வொரு மனிதனுடைய அடிமணம்,
பரந்த வெளியாய், பயன்படுத்தப்பட வேண்டிய
எல்லை நிலமாய், காத்திருக்கின்றது. இந்தப் பயணத்தைத்தான் inward Odyssey என்கிறார் கீர்க்ககாட்
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனய துயர்வு
நீர்ப் பூக்களின் தாளினது நீளங்கள், அவை நிற்கும் நீரின் ஆழத்தளவினதாகும். அதுபோல் மக்களுடைய முயற்சியைப் பொறுத்தது அவர்களுடைய உயர்ச்சி.
உள்ளம்' என்றால் ‘உள்ளே இருப்பதாகிய மனம்' என்று ஒரு பொருள். 'முயற்சி என்பது இன்னொரு பொருள். முயற்சி உள்நோக்கி அமைய வேண்டிய காரணம் பற்றித்தான் இரு பொருள்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.

தமிழ்த் தத்துவத்தில் மரணம் பற்றிய பிரக்ஞைதான் தொடக்கநிலை. இதற்குள் இன்ன நாம் செய்ய வேண்டுமென்று, வாழ்க்கைக் கோட்பாட்டை நாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழில் 'கூற்று என்றால் மரணதேவன், 'கூற்று' என்றால் 'கூறுபடுத்தல்' என்றளவில் 'பிரித்தல்' என்றும் சொல்லலாம். தொல்காப்பிய உரையாசிரியர் (நச்சினார்க்கினியார் என்று நினைக்கிறேன்) 'காலம்' கூற்று' என்பன ஒரு பொருளுலின என்கிறார். எப்பொழுது காலம்' என்ற கருத்தை நாம் மனத்தில் கொள்கின்றோமோ, அப்பொழுது எதுவும் ஒர் எல்லைக்குட்பட்ட தென்ற சிந்தனையையும் நாம் உள்வாங்கிக் 2.x கொண்டாக வேண்டும். "மரணதேவனை'க் குறிக்க 'அறம்' என்ற சொல்லும் தமிழில் இருக்கிறது. அறம்' என்றால் பெருமையை என்றென்றும் நிலை நிறுத்தும் நன்னடத்தை என்ற பொருளும் உண்டு. மரணப்
9. is தி பிரக்ஞையைப் புரிந்து கொண்ட நிலையில், JT
Í
b
வாழ்க்கையில், நாம், மரணத்தைக் கடந்த தம் புகழை நிலைநிறுத்த வேண்டும்.
‘வாழ்க்கையில் நாம் எதை நம் இலக்கியமாகக் கொண்டு பயணிக்கின் றோமோ, எல்லையில் அதுவாகவே ஆகிவிடுவது தான், ஆகி விடுவதற்கான, முயற்சிதான் மனிதத்தை அர்த்தப் படுத்துகின்றது. என்கிறார் ஹஸ்ரல். "The ad- ர்
vent of being rests in the Destiny of Being'.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் سیح நிற்க அதற்குத் தக. 9 ـ
கூர்மையான அறிவை மட்டும் மனிதனின் இலக்கியக் கோட்பாடாக வள்ளுவர் கருதவில்லை.
அரம் போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பில்லா தவர். - 997
என்கிறார் குறளுக்குத் தக நிற்பது பரிமேலழகர் உரை. அரம்', 'மரம்' ஆகிய இரண்டும் உவமைகள். அரம், தான் மடியாமல் தன்னையுற்ற பொருள்களை மடிவிக்கின்றது. அதுபோல் அறிவு, அறியாமையைக் கொல்கின்றதேயன்றி, அது அழிவுறுவதில்லை. ஆகவே, அரம்' அறிவுக்கு உவமையாயிற்று. 'மரம்', உயிருள்ளதாயினும் (ஜெகதீஸ் சந்திர

Page 94
போஸ் சொல்வதற்கு முன்பே பரிமேலழகர் ( அதற்கில்லை. அது ஒரறிவு உயிர். இந்த 'விே மக்கட் பண்பில்லாத காரணத்தால், கூர்மைய தான் சொல்ல வேண்டும்.
மரணத்தை முற்றுப் புள்ளியாகக் கொள் மக்கள் அனைவருமே மானுடத்தின் தொடர்ச் இயலாத சம்பவங்கள் தாம். இரண்டு நிறுத் நேர்க்கோடு, என்பது போல், மானுடத்தின் த்ெ பாவித்துக் கொண்டால் தான் வாழ்க்கைக்கு அ 'மறுபிறவி என்பது ஒர் உளவியல் தேவை. அ
ܓܡܚ2
Ch
மழை ஒழுங்காக இல்லாத இந்த மாரி நெல்விளைச்சலைப் பற்றி அதிகாரிகளுடன் று பேசிக்கொண்டிருக்கும் வேளையில்
பூபதியாரிடம் இந்தச் செய்தியைப் போய்ச்
சொல்லலாமா, சொல்வதனால் யார்
G5. சொல்வது என்று, அடைப்பக்காரரும்
ܔܠ
"அந்தப்புரத்தாதியும் ஆளையாள் பார்த்துக்
கொண்டனர். நெல் விவகாரம் முடிந்தபின்னர் சொல்லலாமென்றால், ஏதோவோர் அம்மன் ஆலயத்துக்கு(ம்) மழை வேண்டி வந்த விளைச்சலையும் படையல் போடும் எண்ணத் தோடு, ஆலயமணியக்ாரரும் அவரைச் சேர்ந்த சுற்றமும் அடுத்ததாகக் காவல் நிற்கின்றன. அதற்குப் பிறகு, பஞ்சப்பாட்டும் புஞ்சைப் பாட்டுமாய் கொஞ்சநஞ்சமில்லாத புலவர்களும் புளுகர்களும். இப்படியே போனால், பூபதியார் மதியப்போசனத்துக்கு வெளிநடக்கும்போதுதான் சொல்லமுடியும். சாப்பிடும்போது, சங்கதி - நல்லதோ கெட்டதோ - சொல்கின்றது அவருக்கு அவ்வளவு பிடித்ததல்ல. வதக்கலும் வறுவலும் காரமும் உப்பும் கசப்பும் இனிப்பும் எதுவென்றாலும் சாப்பிடும்போது நாக்குத் தான் சுவைக்கவேண்டுமேயொழிய, காதும் சிந்தனைப் பொறிக்கான நரம்பு மண்டலமுமில்லை என்பது அவர் நீதி. நாளெல்லாம் இத்தனை ஆட்டமும்
 

சொல்லி விட்டார்) விசேஷ அறிவு (பகுத்தறிவு) சஷ அறிவின் பயன் என்ன? மக்கட் பண்பு. இந்த ான அறிவு இருந்தாலும் ஒருவனை மரம் என்று
ளவில்லை என்பது தான் நம் தத்துவத்தின் வெற்றி. சிக்குத் தேவையான, அதனுடன் பிரித்துக் காண தப் புள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த தூரம், நாடர்ச்சியை மரணம் கடந்த ஒரு நேர்க்கோடாய், Iர்த்தத்தை உருவாக்கிக் கொள்வது சாத்தியமாகும். |ற்புதமான கற்பனை.
O
2E GE
rup6ਹof
ஆர்ப்பாட்டமும் சாப்பாட்டுக்கும் புலவர் பெ ரு  ைம க் குளி ப் பா ட் டலுக் கும் இரவுச்சங்கதிக்கும்தான்; இதிலே எதுவும் சிதையும் வண்ணம் இடையிலே செருகக் கூடாது என்பது பூபதியாரின் துணைவாதம், கொற்றவன் நீதிக்குப் பங்கமேதும் இருப்பதில்லை. சாப்பாடு முடிய, அந்தப்புரத்திலே ஏதாவதொரு துணைவி மஞ்சத்தில் மதியத்தூக்கம்.
அந்த நேரத்தில், தலையிலே இரும்புப்பூண் உலக்கையாற் கொண்டு போய் இடித்துச் சொன்னாலும், பூபதியாருக்குச் சித்தம், உலகம் பற்றிச் சிலிர்க்காது என்ற விடயம் அடைப்பக்காரருக்கும் அந்தப்புரத் தாதிக்கும் அப்பின இருளிலே சொட்டிய ஒளித்துளி போல. பிறகு மாலையில் எழுந்தால், பட்டத்தரசியுடன், ஊருக்குள்ளே ஓர் உலா, ஏதாவது ஒர் ஆலயத்துக்குப் போய் முதற்களஞ்சியைப் பெற்றுக்கொள்ளுகை, திரும்பிவரும்போது, வீதியிலும் வீடுகளிலும் புதிதாக ஏதேனும் இளம்பெண்களின் நடமாட்டம் உண்டோ என்றொரு கண்காவல் (பூனை பூட்டிக்கூடப் போரடித்துச் சோறுடைக்கமுடியாத நஞ்சைப் பூமியில் மாடங்கள் சிதைந்து மண்டப முற்றங்கள்
மட்டுமே மிகுந்திருந்த சிறுநாடு

Page 95
பூபதியாருடையது என்பதை இந்த உலாவின்போது, கூட உலாவினால், நாமும் கண்டு கொள்ளலாம்). இரவுப் போசனம் போனபிறகு பூபதியார் எதைத் திறப்பார் எதைமூடுவார் என்பதை எவரும் அறியமுடியாமல் அந்தப்புரத்துக் கதவுகள் மூடினால், மீளத்திறக்க மறுநாட்காலை சூரியன் உச்சிக்கு வர ஒரிரு மணிநேரங்களாகும்.
நாடாள்வாரின் வீட்டுவிவகார விபரம் இதுவாகி இருக்கும்போது, இந்தச் செய்தியை இந்தக்கணத்துக்குப்பிறகும் ஆறப்போடுவது என்பது, நாளைக்கு இதே கணத்தை, உள்ளத்திலே கனத்துடன் காத்திருப்பதாகத்தான் முடியும் என்று அடைப்பக்காரருக்கும் அந்தப்புரத்தாதிக்கும் இவற்றையெல்லாம் இங்கே நான் சொல்லமுன்னரே தெரிந்தே இருந்தது. தவிர, இஃது ஆறப்போடும் விடயமும் அல்ல; அடுத்தநாள் ஆகுமுன்னர் காரியம்
Lஇதற்குமேலும் கையைவிட்டுப் போகவும்கூடும்;
பூபதி யாருக்கும் மூன்றாம் ஆளுடாகத் தெரியந்தால், தம்மிருவர் தலைகளும்
இப்போதிருக்கும் இடத்திலேயே பிற்பாடும் க இருக்கக்கூடும் என்பதும் குறித்துச் 6) சொல்லமுடியாத விடயம் என்பதும்
ܔܠ
محصے
அவர்களுக்குப் புரிந்திருந்தது. ஆக இப்போது யார் போய்ச் சொல்கின்றது என்பதுதான் அடுத்த கேள்வி. ஆண்டுக்கொரு மாரிகூடத் துாறாத மழையையும் அவித்தபோதும் அரைச்சாலும் நிறைக்கா அரைக்காணி விளைச்சல் நெல்லையும் பற்றி பூபதியாருக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் வில்லங்கம் பிடித்த ஆண் அதிகாரிகளின் இரைச்சலிடையே, அந்தப்புரத்துதாதியின் பூனைநடைகூட எழுப்பக்கூடும் அமைதியினை அடைப்பக்காரராலும் மறுக்கமுடியவில்லை. அந்தப்புரத்து அந்தரங்க விடயம் தவிர்த்து வேறேது விடயத்துக்குமாக தாதி
நெல் விளைச்சலிடையே வர நிர்ப்பந்தம்
இருக்கமுடியாதென்பதால், அவ்விடத்தே
அவளது சாதாரண சில கணத்துப்பிரசன்னமே எத்தகைய வதந்திகளை நாட்டுக்குக் கிளப்பலாம் என்பதும்
அந்தக்கிளப்பலின் சூடு, இருக்கும் சிக்கலையே இன்னும் சூரியனை நோக்கிச் சிறக்கடிக்க வைக்கலாம் என்பதையும் அறிந்ததால், அடைப்பக்காரர் தன் சிகைச்சிண்டையே

சொக்கட்டான் சோகியாய் முன்போட்டார்.
அடைப்பக்காரரைக் கண்ட பூபதியார், பக்கத்திற் கிடந்த பதிக்கத்துள் எச்சிற்சாற்றைத் துப்பிவிட்டு, வலக்கைச் 0 சுட்டுவிரற்புறப்பகுதியால் ஈரமீசையை நிதானமாகத் துடைத்தபின்னர், இன்னொரு தாம்பூல மடிப்புக்குக் கையை நீட்டினார். சாட்டுக்குப் பவ்வியமாய் பக்குவமாய் வெற்றிலையைக் கொடுத்த அடைப்பகாரர்,
பூபதியாரின் காதுக்குள் சுருக்கமாக விடயத்தைச் சொன்னபோதும் பின்னும், ஏதோ தானேதான் நிகழ்ந்த
துர்ச் சம்பவத்திற்குப் பொறுப்பு என்ற வியாக்கியானமாக, தனது பின்னந்தலையை சொறிந்து கொண்டார்.
வாயிற்குட் தாம்பூலத்தை அடைந்த பூபதியார், மென்ற சுவை மேலேறமுன்னர், விக்கித்துப்போய் நின்றார். நிற்கமாட்டாரா பின்னே? ஒரு பட்டத்துராணியும் இ ரு ப த் து மூ ன் று அடுத்தமட்டத்துப்பஞ்சணை மேனிகளும் ர் என்று கணக்கு வைத்துக்கொண்டு 'இராஜமார்த்தாண்ட', இராஜகம்பீர' என்பவைபோல, இவற்றினையும் தன் கீர்த்திவிலாசமிடுகின்றவையாக எண்ணிணி வாழ்கின்றவருக்கு, தன் அந்தப்புரத்தின் リー இளையசேர்த்தியை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்கின்ற செய்தி, கவலையைத் தந்தது. "நாடென்னென்ன என்னைப் பற்றிப் பேசுமோ?” அந்த நிலையிலும், பூபதியாருக்கு, அவளின் முகத்தினை மனத்துள்ளே எழுப்பிக் காணமுடியவில்லை. ஐம்பத்துமூன்று வயதிலே ஒவ்வொரு நாள் உலாவிலும் புதுப்புதுப்படிமங்கள் உள்ளத்திலே படலம் போட்டுக் கொள்கின்றவருக்கு இதுவெல்லாம் ஞாபகம் நிற்பதில்லை. அவரிடம் படிக்காசும் பொதி ச் சோறும் பெற்று ப் போகும் புலவர்ச்சில்லறைகள் என்னத்தையெல்லாம் தம்மெண்ணங்களாகப் புழுக்கிவைத்து புழுகிச் ଓର ଏF m। ଗାଁ) ଗଞ୍ଜୀ யிருந்தாலும் கூ "எவளாயிருக்கும்:
ܓܒܬܐ
|-
یک به G ) بر i و

Page 96
யாகவோ இருக்கக்கூடுமோ? சமையற்கட்டிலே இரசத்துக்கு உவர்ப்பு-துவர்ப்புட பார்க்கின்றதிலே நாக்கு இரசனைமிக்கவளை
யெல்லாம் நான் காமரசம் சொட்டச்சொட்ட
胡
தை
ܐܘܚܢܔܠ
மூக்கையும் முந்தானைச் செருகலையும் மட்டுப முறைத்துப்பார்த்துக் கொண்டுவந்து போட்டால், இப்படித்தான் ஆகும். ஆனாலும் அவள் பள்ளியறையிலேயே நல்லமடைப்பள்ளி நடத்தும் சிங்காரி” என பூபதி நெல்லுவர்த்தகப் வர்த்தமானம் மறந்து நினைவிலே தொலைந்தவளுக்கு ஒரு முகம் கொடுக் அ  ைல ந் து கெ (ா ண் டி ரு ந் த ரா ர் அடைப்பக்காரருக்கு, பூபதியாரின் சங்கடப் புரியாததில்லை. அவரின் அந்தப்பு பட்டியலையும் இந்தப்புரபட்டியலையுட எந்தக்காலத்திலும் அமைத்து வருகின்றவருக்கும் இந்தத் தர்மசங்கடட அகப்படாத விடயமில்லை, பூபதியாரின் தந்தைக்கும் கடைசிக் காலத்திலே போசன பூஷண-பத்தினிப்பட்டியல் போட்டவ1
/Nஅவரில்லையா? இலேகியம்தின்றே செத்
அப்ப பூபதிக்கும், புத்திரபூபதி ஞாபகசக்தி எத்தனையோ மேல் என்று அடைப்பக்காரரின் எழுபத்தியிரண்டாம் பருவத்தை எட்டிய மூளை எடுத்துச் சொன்னது.
தானியச் சர்ச்சையை இரண்டு நாட்களுக்கு ஒத்திப்போடுவதினால்மட்டும் ஏற்கனவே வயிறு வற்றிச் செத்து கொண்டிருக்கும் மக்களின் உண்டிச்சுருக்கட் பெரிதும் பாதிக்கப்படாது என்று பூபதியூடாச
ஆலோசனை சபைக்குச் சொல்லி
கலைத்தபின்னர், பூபதியைத் தனியே இருத்தி
எவளென்று அங்கவடையாளங்கள் சொல்லித்
தெளிவு படுத்தினார். இறுதியாக ஒன்றை மாதத்துக்கு முன்னர் பூபதியார் மேற்: டி நங்கை பூரீவள்ளியின் அறைக்கு ஏகியது உட்பட எல்லாமே அடைப்பக்காரர்தான் ஞாபகட படுத்த வேண்டியதாயிற்று. பதினெட்டாப் பருவம் முட்டுக்காயாக முற்றும் தருணப பூபதியின் ஒரு மந்தாரமாலை உலாப்போதிலே
గరంగం : 8.
 

T
ν
காய்கறி வியாபாரம் போல் கன்னிகாதானம் இடம்-பொருள்-ஏவலுக்குப் பண்டமாற்றுப் பண்ணிக் கொண்டு வந்தவர் அடப்பக்காரர். பூபதிக்கு அவளின் அந்தரங்க அடையாளங்கள் வேறு கிழட்டு அந்தப்புரத்தாதியை விட்டுச் சொல்விக்கவேண்டியதாறிற்று. ஊராளும் கோமானுக்கு ஏகப்பட்ட வேலையுண்டு . இப்படியான சில்லறை விடயமெல்லாம் ஞாபகத்திலே வைத்துக்கொண்டிருந்தால் பொழுதும் பொருந்துநினைவும் கட்டுப்படியாக முடியாதன்றோ?
O
அரசருக்கு உணர்ச்சி பொங்கிவழியவில்லை. பொருள் வருதலும் போதலும் இயற்கையின் இயல்பே' என்கின்றமாதிர் இருந்தார். அடைப்பக் காரருக்கு மேற்படி 'வாழ்தலும் இலமே . சாதலும் சுகமே என்ற உளப் போக்கின் காரணத்தினால், பூபதியாரிலே மிகுந்த மரியாதையுண்டு. இவரின் அப்பனாக இருந்தால், பக்கத்தூரோடு வேலைச்)L சண்டைக்குப் போன அரைக்குருட்டுச் சேனையை வரவழைத்து ஊரிலே உள்ள பெண்களுக்குள்ளேயெல்லாம் ஒழிந்துபோன அந்தப்புரத்து மங்கை இருக்கின்றாளா இல்லையா என்று உரித்தே பார்த்துவிடுவார்; ணி சேனை இதற்காகவே எவளாவது அந்தப்புரத்தாள் மடைப்பள்ளிச் சமையற் காரனுடனோ வாயிற் காப்போனுடனோ ஒடிப்போகமாட்டாளா என்று காத்திருக்கும் என்றுகூட ஊருக்குள்ளே ஒரு பேச்சு இருந்தது. இந்தப்பூமானுக்கோ கோபம் வரவில்லை; கவலை மட்டுமே மிகுந்து மிதந்து வந்தது . “என்ன குறையை என்னிற் கண்டு காணாமற்போனாள்? பூபதியாரே கிணற்றிலே விழுந்தோ அல்லது புருஷசுகத்துக்கும் அப்பால் புத்திரவரம் கேட்டு சொப்பனத்திலே கண்டவொரு மூளிவிமானக் கோவிலுக்குத் தனியே தல யாத்திரை மேற்கொண்டோ காணாமற் போனாள் என்ற தொனியிலே சாதாரணமாகக் காணாமற் போனாள் என்று சொல்கின்றபோது, ஒரு பத்துப்பன்னிரண்டு நோஞ்சான் குதிரைகள் கொள்ளுத்தின்னும் இலாயக்கொட்டகையிலே ஒரு குதிரைக் காரனும் இரண்டு நாட்களாகப் பணிக்கு வரவில்லை என்பதைச் சொல்ல 5 உண்மையிலேயே அடைப்பக்காரருக்கு மனம்
வரவில்லை. பூபதியாரின் மேலே அவருக்கு ஒரு
محصے~N

Page 97
மகன் பாசமோ அல்லது தன்னொரு மகள் வயிற்றுப்பேத்தியையும் அந்தப்புரத்துக்கு அள்ளிக்கொடுத்ததால் ஒரு மருமகன் பாசமோ . என்ன இழவோ ஏதோவொரு நெகிழ்ச்சிப் பிணைவுண்டு. ஆனாலும் சொல்லாமல் இருக்கமுடியாது; சொன்னார்.
பூபதிக்கு ஊரென்ன தன் உடல்வலி(மை) பற்றியெண்ணும் என்ற உளவலி மேலோங்கியது. காளிங்கராயருலாவிலே, "இவனிடம் தமக்கொரு வாரிசைப் பெற்றுக் கொள்ளமாட்டோமா என்றெண்ணிய ஏக்கத்திலேயே, செத்துப் போன பெண்கள் எத்தனை இவ்வூருள்" என்றபடிக்கு எழுதப்பட்ட ஆண்மைக்கு இவளின் குதிரையோட்டம் எத்துணை இழுக்குத் தரும் என்று கவலைப்பட்டார். ஆ1ஆ! குதிரை . அப்போது பூgவள்ளி யாரென ஞாபகத்துக்கு வந்தது . மதர்த்த குதிரைதான் குதிரைக் காரனுடனோடும் . ஏதோவொரு கோவிலிலே Lசதிராடிய தாயைப் பெற்றுக்கொள்ள 胡 உள்ளூர்ச்சிற்றரசின் ஒட்டுவீடு இடம்
கொடாததால், நாற்றுக்குவிட்ட நெல்லுப் போல, கரு முளைத்துச் சதைப்பற்றிப் பிடித்துப் க பிறக்கமுதலே சொல்லி வைத்துப் பிறந்து தை வளர்ந்து பருவம் முற்றிய போதிலே, பழைய 'கடனைத் திரும்பபெற்றதுபோல் அழைத்து bg குதிரை . திமிர்க்குதிரை . முதல்நாள்ן76uדי இவரைக் கண்டவுடன், "என்னை அணைத்துக் கொள்ளப்போகும் இவர் மகன் இளவரசன் இனித்தான் வரப்போகின்றான்” என்ற எண்ணத்திலே, மாமன் பூபதி என்றழைத்தவளுக்கு விடயத்தைச் சொல்லி 'வழிக்குக் கொண்டு வந்து இவர் கொஞ்ச எடுத்துக் கொடுக்கத் தேவைப்பட்டது. அந்தப்புரத்துக்குக் கொஞ்சநஞ்ச நாட்களல்ல. குதிரை பின்னால், தாயைப் போலவே மெத்தையிலும் மாடத்திலும் மொத்து மொத்தென்றாலும் மிருதுவாகத்தானே குதித்துக்கிடந்தாள்! என்ன குறை வைத்தேன். இவளோட . சண்டைக்கோழி தங்கம்மைகூட இவரின் பெயரைச் சொல்லி, போன வாரம்தான் ஒரு பெண்பிள்ளைப் பெற்றுப் போட்டாள் . இவளுக்கென்ன கேடு வந்தது. எவனோடோ குதிரைச் சவாரி செய்ய 5 பூபதிக்கு இப்போது, ஆத்திரம் துளிர்த்தது . என்ன பெண்ணிவள். ஏதேனும் தேவையென்றால், சொல்லாமலா புரியும்.

பூரீவள்ளியுையம் தேட - செய்தி வெளிவிடாத
நெல் விளைச்சல் குறைகின்றதென்றால், நெடுநாள் மழையில்லை. வரட்சியிலே பூமி பாளம் பிளந்து பயிர் முளைக்க உயிரில்லாமல் தினம் தினம் செத்துப் போகின்றதென்று சொன்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. f பாராளும் பூபதியிடம் தேவையை எடுத்துச் சொல்லாமல், எவனோ குதிரைக்குக் கொள்ளுப்போட்டு தன் வயிற்றுக்குப் புல் போட்டுக்கொள்ளும் குதிரைக்காரனுடன் . எனக்குப் பிறந்த பெண்ணாக மட்டும்
இருந்தால், ஒன்றில் ஒழுங்காக வளர்த்திருப்பேன். அவ்வாறு வளர்ந்திராமல் இப்படி மதம் பிடித்தலைந்தால்,
வெட்டிப்புதைத். பூபதி பல்லை நெருமிக் கொண்டு உலாவத்தொடங்கினார். 'பராக்
பராக்! இராஜ இராஜ இராஜ மார்த்தா."
அடைப்பக்காரர், குதிரைக்காரனையும்
தேர்ந்தெடுத்த - கையாட்கள் ஒரைந்து பேரை நாலாதிசையும் அனுப்பாமல், அவளின் அம்மா ܓܒܬܐ ஊருக்கும் அவனின் அப்பா ஊருக்கும் அனுப்பி விட்டு, வந்து பூபதியின் திட்டைத் தான் தின்று, J பூபதியாரை மதியப் போசனத்தினைத் தின்னச் செய்தார். பாயாசத்துள் உப்பு மிதந்ததாக ஒருத்தியும் பாகற்காயிலே சீனி மிகுந்ததாக ஓரி இன்னொருத்தியும் மடைப்பள்ளி வருமானம் இழந்து தத்தம் வீடு போனார்கள். ஒவ்வொருY அந்தப்புரத்து நாயகியும் பூபதியார் அன்றிரவுக்குத் தம்மறைக்கு வந்துவிடக் கூடாதே என்ற நேர்த்தியை அவளவள் ஊர் அம்மனுக்குக் கொடைக்கடனாக விட்டுவைத்துவிட்டும் ஒரு விதக்குரூரத் திருப்தியிலே உலாவினாள். அவரும்கூட எவளின் அறைக்கும் தன் திருமுகமும் பெருமேனியும் காட்டும் உள்ளத்தோடு இருக்கவில்லை. சயனமஞ்சம் என்று - புழுகுமூட்டைப்பூச்சிப்பாய்துளங்கிய புலவரால், மெய்யும் தன் மெய் வீங்க, துக்கலாகச் - சொல்லப்பட்ட எட்டுத்தலையணை, இரட்டை இலவம் பஞ்சுமெத்தைத் தேக்குக்கட்டிலிலே தன் 2- . . /
இர ண் டா யி ர &

Page 98
நாட்டுச் சரித்திரமும் சொன்ன ஒவ்வொரு நாயகனும்போல, தூங்கமுடியாமல் தொந்தியையும் பிருஷ்டத்தையும் மாற்றி மாற்றி மெத்தைக்குக் குத்துச்சண்டை கற்றுக் f கொடுத்துக் கொண்டிருந்தார் .
. “என்ன பெண் என்ன பெண்! . ” பூபதியாருக்கு, தன் முன்னைய தெய்வக்குற்றம் - பெண்குற்றம், இவளின் வடிவிலே தனக்கு ஏதேனும் மறைப்பு விலக்கிக் காட்டி உட்பொருள் சொல்லப்பார்க்கின்றதோ என்று தோன்றியபோது, வாயிற்காவலர் நடுவிரவு முறை மாறியது தெரியவில்லை. பூபதியார் பெண்களையோ குழந்தைகளையோ அவரின் பாட்டன் முப்பாட்டன்போல, பெண்நிமித்தம் பொருள்நிமித்தம் நிலம் நிமித்தம் கொன்றவர் அல்ல; கொல்லக்கூடாது என்ற எண்ணம்  ெக |ா ண் ட வ ர் கூ ட வு ம் த ரா ன் , அதன் காரணமாகத்தான், அவரின் நாடு சுருங்கியும் வீடு பெருக்கியும் இருப்பதாக படகிழட்டுக்கிளிஜோசியர்கள் தொடக்கம் தேசசஞ்சார கஞ்சாமுனிகள் வரை அடித்துச் சொல்லி அவரவருக்கு ஆள்
A) நாவாளுமைக்குத்தக்கபடி பெற்றுப் க போயிருக்கின்றார்கள். வள்ளி இல்லாது தைபோனது, பெரிதாய்ப் பழகாத உயிருள்ள பெண்ணென்ற அளவிலே தனக்கு >T(இழப்பென்றே உணர்வினுரடாகத் தோன்றவில்லை என்று சொல்லிக்கொண்டார்; ஆனாலும், நல்ல ஆரோக்கியமான இளமைதிமிறும் சவாரிக்குதிரையை லாயத்திலே இருந்து ஏதும் இலாபமின்றி இழப்பது அவ்வளவு உள்ளத்துக்குச் சுகமாக விடயமில்லையே! சும்மாவா காளிங்கராயருலாவிலே பூரீவள்ளியின் பின்புறத்தினையும் முன்தனத்தினையும் அவரின் செல்ல வலிமைக்கும் மகேந்திர கிரிக்கும் ஒப்பிட்டு சபையிலே - ஒர் ஏழெட்டிருக்குமோ . பின்புறத்துக்கு இரண்டு அவரின் அஸ்வதனம் பற்றி இரண்டு . மகேந்தி . பத்துப்பன்னிரண்டே இருக்கும் . R & ,Lח נ L– 6ט
********Mwv
பூரீவள்ளி நாணி
 

புதைக்கவும் மீதி நாயகிகள் கோணிச் சிவக்கவும் சொல்லப்பட்டது!!! என்ன இழப்பு!!! அஸ்வமேதயாகம் என்று ஒன்று செய்தாலும்கூட பலி கொடுக்காக்கூடாத பளபகட்டுப்பரிகளுமுண்டு. அவற்றின் அழகும் இளமையும் சிலிப்பும் துள்ளலும் . அப்பப்பா! அவை எவரும் சிதைக்காத வண்ணம் தாமாய்க் கிழடுபற்றி அழகுண்டு அழிவுண்டு போகும் வரைக்கும் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் கோயிற்றேவடியாள்கள் போல . பூரீ வள்ளியின் தாய் நலங்கம்மை போலவல்ல .
. அறைவாயில் மெல்லத்தட்டுண்டது . அடைப்பக்காரர். குதிரைக்காரன் அப்பன் வீட்டுக்கருகாமையிலே ஒரு சத்திரத்து மூலையிலே பதுங்கியவரைப் பிடித்து வந்திருக்கிறன்றார்கள். அவளினை இருட்டோடிருட்டாக இழுத்துவரமட்டும் மூன்று அந்தப்புரத் தாதிகளை இரவோடிரவாகக் கொண்டுபோய், ஆண்கைபடாமற் கொண்டு வந்து وlorof76لہر اٹ அறையிலே பலத்த காவலுடன் வைத்திருப்பதாகச் சொன்னவர், குதிரைக் J காரனைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. சோதிடர்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி மட்டும்தான் சொல்லியிருக்கின்றார்கள். வீடு ணி பெருகுதலுக்குப் பெண்களும் குழந்தைகளும் காரணவான்களாலும், நாடு சுருங்கலுக்கு உடல்வலிபொங்கு அடங்கா முரட்டுக் குதிரைகள் குறைந்து கொண்டுபோவதும் காரணமாகும் என்று பூபதிக்குத் தெரியும். ஆனாலும், அமர்க்குதிரைகளின் மதம் இரண்டு வகையானவை; "நான்” “பெண்” பெண்மோகம் பிடித்த குதிரைகள் எத்துணை பலமுடைந் தெனிலும், போருக்காகா, இலாயத்துக்கும் காட்டுக்கும்கூடவே .
அந்த அர்த்தசாமத்தையடுத்த வேளையிலே அவளைத் தான் போய்க் காண்பது தனக்கு இழுக்கு என்பதிலும்விட அடைப்பக்காரரே பின்னிருந்து அரைக்கொடுப்புக்கட் சிரிக்கக்கூடும் என்று புரிந்து கொண்ட பூபதி, புளிக்கள்ளிலே போதையேற்றிக்கொண்டு போய்த்துங்கினார். வாலைப்புரவிகள் அறுக்கமுடியாத கயிறுகளும் போரிலே புறமுதுகுகாட்டி O ஒடுகின்றவனை ஏற்றிய குற்றத்துக்காக ஈட்டி
பாய்ந்திறக்கும் சூரக்குதிரைகளும்

Page 99
கொட்டிலிலே போட்ட கொள்ளைத் தின்று விட்டு தின்ற கடனுக்கு, திரியாத நூலிலே நெய்யாத நேர்த்திப்பட்டுடுத்த திகம்பரராஜாவைத் தாங்கிக் கொண்டு ஊருலாவரும் போருக்குதவா மேனிமினுங்கு அழகஸ்வங்களும் அவரின் கனவிலே ஊரின் எ ல்  ைல ப் ப ா ட்  ைட க ளி லு ம் சத்திர முடுக்குகளிலும் அந்தப்புரத்து வாயிற்கதவுகளுக்குப் பின்னும் ஒடியும் குதித்தும் குழப்பிக்கொண்டிருந்தன.
காலையெழுந்த பூபதிக்கு, ஊரெல்லாம் அந்தப்புரத்துத்தாதிகள் பரப்பிய புதினத்தை அடைப்பக்காரர் சொல்லியே ஆகவேண்டியதாகப் போய்விட்டது; அல்லாதுவிடின், கோமானின் கூற்றுகளும் காற்குதிநடையும் கூட குட்டையைக் குழப்பிவிடும் என்று பயந்தார். பூபதி, பூgவள்ளியைத் தன் சமூகத்துக்கு சயனவறைக்கே அழைத்து வரச் சொன்னார். அந்தப்புரத்தாதிகளினால், ‘அழைத்து 胡 வரப்பட்டவள் பூபதியினதும் அடைப்பக்காரர் 'பிரசன்னத்துக்கும் முன்னால் மட்டும் குதிரைக்காரனைப் பற்றி முதலிலே பேசினாள்;
அதன் பின்னர், பூமான்கள் தை இழிசெயலாளிகளுடன் பேச்சுநிகழ்த்துவது வழக்கமில்லையாதலால், பூபதியின்
Yஆணையின்பேரிலே அடைப் பக்காரர், முரட்டுக்குதிரைகள் போரிலே மட்டும் இறப்பதில்லை என்பதையும் இலாயத்திலே உள்ள மீதிப் பவனிக்குதிரைகளின் உளச்சம நிலையைக் குழப்பும் பட்சத்திலே திருத்தமுடியாத காமச்சூடுகனல் வாலைப் புரவிகளுக்கும்கூட அந்தவிதி மாற்றமுடியாதது என்பதைச் சொன்னார். நாடு சுருங்கினாலும் வீடு பெருகுதலிலே என்றைக்கும் நம்பிக்கை கொண்ட பேருள்ளத்தவர் பூபதி என்பதையும் சொல்ல அடைப்பக்காரர் மறக்கவில்லை. அதையடுத்து, குதிரைகளும்கூட அகாலவீடு பேற்றிலே விருப்பற்றவையாதலால், காத்திருந்தாயினும் வீட்டிற்பெறுதலிலே தான் நம்பிக்கை கொள்ளவிரும்புவதாக பூரீவள்ளி கவலைக்கேவலுக்குள்ளும் ஆத்திரத்துள்ளும் கூட ஆற்றாமை அவதிப்பட்டு வெளிவரச் சொன்னாள். ஒடியகுதிரைகளைக் கட்டிக் 6 காத்துக்கொண்டிருந்து நம்பி உலாச்சவாரி போகமுடியாதென்று Աւյ5) வெற்றி நாற்றப்பிசிறடித்த குரலிலே அடைப்பக்

வேண்டுகோளின்" ஊடாக அடைப்பக்காரர்
காரரிடம் அதட்டிச் சொன்னார். வாலைக் குதிரையிறச்சியை எவரும் உண்ண வோ அதிலெவரும் சவாரி செய்யவோ முடியாத நிலையிலே குதிரையை ஏதோ வோர் ஆலயத்துச் சுவாமி பவனிக்குத் தத்தம் செய்தார் பூபதியார் என்ற பட்டயம் தனக்குப் பிடிக்கவும் பெருமை சேர்க்கவும் கூடும் என்றார். ஆனாலும் குதிரையின் உளவிருப்பறிந்தே பூபதி தெய்வத்துக்குத் தத்தம் செய்தார் என்றும் கீர்த்திகள் பாடப்படவேண்டும் என்ற கருத்தும் தனக்கு இருப்பதை, தன் "தாழ்மையான
அவளிடம் சொன்னார்.
குதிரைக்கும் உயிர்ப்பற்றுண்டு. குதிரைகளின் சவாரி வேண்டிய கோவிற்றெய்வங்களும் உண்டு.
தெய்வங்களிடம் தேவை வேண்டிப்போடும் கோமான்களும் உண்டு. விக்கிரகச் சிலையிடம் நைவேத்தியம் வைத்துச் சொல்லமுடியாதை
ஆண்டவனின் பரியிடம் பரிந்துரைக்கும்படி) அர்ப்பணித்துச் சொல்லி அதன் ஏதோ
குறியை எமக்கான திருப்தியின் வெளிப் J பாடாய்க் கருதிக் கொண்டு போவதெம்
வழக்கம்.
பூரீ வள்ளியின் பின்புறப் பவனியைப் னி
பாடிய புலவர்கள் பின்வந்த காலத்திலே* அவளிடம் தெய்வீகம் தோன்ற பூபதியின் பெருந்தன்மையே காரணம் என்று பாடி, கூடவே வேறொரு அந்தப்புரத்துப் புரவீகவல்லியின் முன்புறத்து நாகப்படத்தின் தடத்தைப் பற்றி அவள் முன்னிலையிலேயே பலர் மூச்சு விடப்பாடி, பூபதியிடம் ஒற்றைக்குலை வாழைக்காயுடன் பத்துப்படி அரிசி வாங்கிப் போனார்கள். குறவள்ளி தெய்வமான கதை தெரிந்தவர்கள் பூரீ வள்ளியை மட்டும் விட்டுவைக்கவில்லை. பூபதிகூட, அவளிடம் சில சமயங்களிலே ஆண்டின் முதல் நெல்விதைப்பு அடுத்தடுத்த தன் புதுச்சேர்த்திகளின் மாதவிலக்கின் பி ன் ன ர ன
தன் கூடலுக்கான
97 95 ft 6) எ ன் ப ன ப ற்
محصے
தெய்வக் கூற்று عG 5 L" (6) L'E

Page 100
வாய்மொழிச்சரிதம் சொல்லும்; பூரீவள்ளி அம்மானையும் கூத்துவள்ளியும், அவளின் சிறப்புகளை - அவள் இறப்பின் பிற்காலத்தோர் சிலையெழுப்பிக் கும்பிட முன்னாலேயே - அரசவுலாத்துலாக்களுக்குச் சமபாரம் உலாவவிட்டுப் போயின. பூபதியின் சிலைகூட எல்லை வள்ளியம்மாவின் சிதிலடைந்த கோவிலைப் பார்த்து, உறையிட்ட வாள் தொங்கும் கச்சத்துடன், ஒருகால் மண்டியிட தலைதாழ்த்தி வணங்க மழைக்கும் வெயிலுக்கும் மண்டியிடாமல் நிற்கின்றது. பூபதிக்கெதிரானவர்கள், குதிரைக்காரனுக்கு ஒரு கூத்தும் இரண்டு கோயில்களும் கட்டிக்கொண்டார்கள்; இன்றைக்கும் வருடத்துக்கு இரண்டு முறை குதிரைக்காரன் வள்ளியம்மையிடம் வரும் திருவிழாவும் அதன்காரணமாக வருடத்துக்கு நாலுமுறை பூபதி - குதிரைக்காரன் சாதிச் சண்டையிலே குதிரைக்காரன்பக்கம் நாலு குதிரைகளும் பூபதி பக்கம் இரண்டு குதிரைகளும் விழுவது /Nவழக்கமாகிப் போனது. அடைப்பக்காரரைப் சி பற்றியும் அந்தப்புரத்தாதிகள் பற்றியும்
எவருமே பாடவுமில்லை. குதிரைக்காரன் Ol பற்றிய இரண்டு திரைப்படங்களிலும் பூபதி பற்றிய ஒரு திரைப்படத்திலும் வள்ளியம்மை தை பற்றிய எல்லாத்திரைப்படங்களிலும் . சில அ) சமயங்களிலே மேற்படித் தொழிலாளர்களை விதூஷகனாகக் காட்டிவிட்டதாகவும் காட்டாமல் விட்டதாகவும் பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் புரட்சிக்குரல் எழுப்பியதுண்டு. பெண்நிலைவாதிகள், குதிரைக்காரனின் குடுமியையும் பூபதியின் குடுமியையும் பிடித்துக்கொண்டு வள்ளியம்மையை இருந்த குட் டி த்தே வ ைத நி ைலக் கும் மேலே கொண்டுபோய் முழுத்தெய்வமாக்கி பூரீவள்ளிதேவி என்று "உயர்நிலை அங்கீகாரம்' கொடுத்துவைத்தனர். பழம்பண்டிதர்கள், 'அம்மானையும் உலாவையும் கிளறிக் கிளறி, எல்லாப்புளுகும் எம்புழுகே; ஆதலினால், உன்னதத்திலே உள்ளது அகல் அல்குல் வர்ணிப்பும் அரசனுலாவும் சந்தத்தில் யானைத்
Z A. Gr Gr Ա)] 6ճ) լ՝ டு *
'அடுத்த மூச்சிலே,
புதுப்புலவர்கள் خكi

Page 101
- பிடித்தது பிடிக்கவில்லையெனக் கருத்தாடி எல்லோரிடமும் கட்சி பால், தயிர், சாதி பேதமின்றி நீதி வாங்கிக் கொட்டிக் கொண்டேன். மொத்தத்திலே எவரும் புளிப்பையும் இனிப்பையும் மாங்காயிலே மட்டும் பார்க்கவிரும்புகின்றார்கள். கசப்பு மருந்தினைக்கூட, இனிப்பைப்போட்டு சுற்றி இனிப்பாகவே கசப்புத் தெரியுமுன்னர் விழுங்கிவிட எண்ணும் உலகத்தின் ஒரங்கம் நான் . இன்றைய இருப்பிலே ஒன்றையாவது கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கின் . ”
- கேதீஸ்வரன் எழுதிக்கொள்வதை
இங்கே நிறுத்த வேண்டியதாகிப் போய்விட்டது; சிவாந்தினி கூப்பிட்டாள். கொஞ்சம் சினமேறியது. என்ன இவள்! எண்ணவோட்டத்தைக் குழப்புகின்றாள்"
“என்ன?”
“சாப்பிட்டுப்போயிருந்து மிச்சத்தை
/>எழுதுங்ககோவன்."
A
“எத்தினை முறை சொல்லியிருக்கின்றன்.
எழுதுற நேரத்திலை குழப்பாதை எண்டு. ஒருக்கால், விட்டால் திரும்பி அந்த ‘மூட்டுக்கு
தெ
ܔܠ
வர்றது கஷ்டமெண்டு உனக்குத் தெரியாதே. நீ கொஞ்சம் இருந்து படிக்கேக்கை குழப்பினால், எப்படியிருக்கும்?”
அவள் "சரி சரி சரி" என்று கைகளை - சரணாகதி அடைகின்றவள் போல - ஒரு கைக்கரண்டியுடன் தூக்கிக்கொண்டு சிரித்துக் கொண்டு பின் சாய்ந்தபடி, பயப்படும் பாவனை காட்டினாள்.
அவன், "நீ என்ன ‘மூட்டை இண்டைக்குக் கெடுத்துக் போட்டாய்” என்றபடி, எழுதியதை அப்படியே விட்டபடி எழுப்பிப்போனாள்.
சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையிலே இருவருக்குமிடையே நின்று பார்த்துக் கொண்டிருந்த நான் (கொஞ்சம் ஆத்திரத்துடனும் வேதனையுடனும்) உள்ளே புகுந்தேன்.
“கேதீஸ்வரன், நீங்கள் செய்வது சரியில்லை; உங்கள் மனைவி உங்கள்மீதுள்ள அக்கறையினாலேதானே உங்களினைச் சாப்பிட வரும்படி சொல்கின்றார்; நீங்கள்

இவ்வாறு எரிந்து விழக்கூடாது; இரண்டோ மூன்றோ நூற்றாண்டுகளுக்கு முன்னாலே இன்னொரு நாட்டிலே இறந்துபோன ஒரு கற்பனைப் பெண்ணிற்கு, கதையிலே நியாயம் கேட்பது முக்கியமா அல்லது மெய்யான உங்கள் மனைவியற்கு அவரின் அன்பினையும் அக்கறையினையும் மதித்து, ஒரு கதைக்கான உளநிலையைக் கொஞ்ச நேரம் விட்டுக்கொடுத்து, சாப்பிடப்போகின்றது முக்கியமா?
நீங்களும்தான் சிவாந்தினி, உங்கள் கணவர் மிகவும் ஆர்வத்துடன் எழுதுகின்ற போது அது புரிந்தும் சிறிது பொறுத்திருக்காமல், உடனே சாப்பாட்டு விவகாரத்தினை முடித்துவிட்டு பிறகு மிகுதி விரும்பியதைச் செய்யுங்கள் என்று கேட்பது முறையில்லையா? அவர் ஒரு பெண்ணுக்கான நீதியைப் பேசும் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பதைக் கூட அறியாமல். சே! கணவரின் உளநிலையை மனைவியும் மனைவியின் உளநிலையினைக் கணவனும் புரியாமல் இதுவென்ன வாழ்க்கை? அதிலென்ன வெற்றி?!"
சலித்துக்கொட்டினேன். அவியலும் பொரியலுமாக.
O
ܓܒܬܐ2
J
னி
محسیح
எதிர்பாராத கூற்றுக்களும் வினாக்கொத்துமாக வர, திகைத்துப் போய் நின்றார்கள், ஒருமித்துக் கேட்டார்கள்;
"நீர் யார்? உமக்கென்ன எங்கள் இருவரின் தனிமையிடையே ஒளிந்திருந்து ஒட்டுக்கேட்டு நீதி சொல்லும் வேலை?”
இதை நான் உங்களுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும்; இந்தக்கேள்விகளை நானும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. "நானா?” கடவுளே! நீ இல்லை என்பது உண்மை தானோ!! நான்தான் உங்களைப் படைத்து உங்கள் சுதந்திர விருப்பிலே நடமாட விட் டி ருக்கும் எழுத்தாள ன் இ.
, , , , i.e.
பொம்  ைம க ள் NAS

Page 102
حقصبر
நடமாட உரித்தில்லையா? இஃதென்ன கற்பனைத்தேசம்! இதில் வேறு ச ட் ட தி ட் ட ங் க ஞ ம் வாழ்நெறிக்கோவைகளுமா? பயிர்வைத்தவன் விளைச்சலெடுக்காமல், நிறை பயிரே தன்னைத்தான் நெல்லறுவடை பண்ணிக் கொள்ளுமோ?
அவர்கள் கொஞ்சம் திகைப்பு கலைந்து, படைத்தவன் என்ற பெயரிலே என்னோடு சமரசத்துக்கு வந்தபோதும், அவர்களின் அந்தரங்கப்பேச்சிடையே புகுந்த ஆத்திரம் இன்னமும் அவர்களிடம் இருந்தது போலவே தெரிந்தது.
"நாங்கள் சுயவிருப்பிலே செயற்பட உங்களால் விடப்பட்டவர்கள் என்றால், பிறகு எங்கள் நியாயக்கோவைகளையும் வரைந்து கொள்ள எங்களுக்கு உரிமையில்லையா?. சரி அதைத்தான் விடு. ஒரு சிறகு முளைத்த குருவிக்கு முட்டைபோட்ட அம்மாக்குருவி அதைச் செய் இதைச் செய்யென்று கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதாகாதா?
ஆயிரம் எண்ணங்கள்தான் மலரட்டுமே, ஐயா"
தை
- கொஞ்சம் நக்கலாகக் கேதீஸ்வரன் கேட்டான். இரண்டு நூற்றாண்டுக் கதாநாயகியை வைத்து இறந்தக்காலத்துக்கதை
Nபு/எழுதிக்கொண்டிருக்கிறவன் புதுமை பற்றிச்
சொல்லிக் கேட்கிறான். இந்தக் கேள்விக்காகவே இவனை முப்பத்தைந்து வயது நாயகனாகப் படைக்காமல் ஒர் எழுபது வயது நடக்கவும் (Lp qtl1 TLD 6i தள்ளாடும் அறளை பெயர் கிழட்டுச்சென்மமாக நான் உளறவும் உருளவும் விட்டிருக்கவேண்டும்.
என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஒர் எழுத்தாளன், தனது எண்ணவோட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடாதென்றாலும் திசையை வகுத்துத்திருப்பிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் போகாதவிடத்துக்குப் போய்ச்சேரும். அல்லது வெள்ளம் வற்றப் போகாமலே மண்ணுள் ஊறி
※
Jவற்றிப்போம் நீர்.
}/* Zisマリ يجة Z #リ。
_CS-C.C} بیبرس AS 竣ー ܝܘܗ ܝ
உங் க ஞ க் கு
 
 
 
 
 
 
 

உரிமை உண்டு. ஆனால், உங்களை நான் உங்கள் விருப்பிலே ஒடவிட்டதே, உங்களின் உட்போக்குகளை மூன்றாம் ஆளாய் இங்கே உங்களுக்குத் தெரியாமல் நின்று அறிந்து எழுதிக்கொள்ளவே. நான் சொல்லிக்கொண்டு நின்று கொண்டிருந்தால், நீங்கள் வெறும் என் கைவிரலாடு பொம்மைகள்தான். உங்களுக் கென்று ஏதும் சுயம் இல்லை. எனது விருப்பே உங்கள் ஆட்டமும் பாட்டமும்”
சிவாந்தினி கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் (அடுத்தமுறை இவளைக் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு தூக்கும்படி சரளமான பேச்சுக்காரியாகப் படைக்க வேண்டும் நான்). “என்னத்தினை எங்களிடம் படைத்து வளர்த்துவிட்டதற்குக் கைமாறாக எதிர்பார்க்கின்றீர்கள்?" ("கைமாறாக” என்பதற்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள் என்பதாக எனக்குத் தோன்றியது)
அவசர அவசரமாக மறுத்தேன். “பதிலுபகாரமாக எதையும் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை' - தொடர்ந்தேன், "ஆனால் உங்களின் தனித்துவமான, நீங்கள் நீங்களேயான வளர்ச்சியிலே கணவன்மனைவியாக உங்கள் உளப்பாங்கு
ஒருவரையிட்டு மற்றவருக்கு என்ன.../
இருக்கின்றது என்பதினை அறிந்துகொள்ளும் படைப்பாளியின் மூக்குநுழைப்பு எனது" - வசன
இறுதியிலே கொஞ்சம் யாசிக்கும்
குற்றவுணர்வுடனே பேசினேன் போல எனக்கே தோன்றியது. -
அவன் இன்னமும் இலேசாக - நெகிழ்ந்து பேசத் தொடங்கினான். (இன்னொருவன்
இறங்கிப்போய் யாசிக்கும் தொனியிலே பேசத் தொடங்கு கையிலே , மற்றவனுக்கு
பரிதாபமும் கூடவே கொஞ்சம் கம்பீரமும்
ஏற்பட்டுவிடுகின்றன என்பதை என் இனிவரும் ஏதாவதொரு கதையிலே குறித்துக்கொள்ள
வேண்டும் என்று அப்போது எண்ணிக் கொண்டேன்).
"நீங்கள். ”
".யசோரஞ்சன்"
'யசோரஞ்சன், உங்களை நோகும்வண்ணம் ஏதும் சொல்லியிருந்தால்,
ܓܡܬܐ2
J LO
னி

Page 103
ܓܡܝ2
朝
தை
எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்.” (அவளுக்காகவும் அவனே பேசுகின்றான். திரும்பிப்பார்த்தேன். அவள் அப்படித்தான் என்று தலையாட்டுகின்றாள். இன்னொருத்தி. என் கதாநாயகிக்கான பண்பில்லை . அவன் தான் எழுதுவதை அவள் குழப்பிவிட்டாள் என்று சற்று கொஞ்ச நேரத்துக்கு முன்னர்தான் அவளின் நல்நோக்கத்தையும் எண்ணாமல் ஆத்திரம் கொள்கின்றான். இவள் இப்போது அவன் சொல்கின்றதெல்லாவற்றுக்கும் தலையாட்டுகின்றாள். சரியான பைத்தியக்காரி)
அவள் தொடர்ந்தாள் . (நான் எண்ணியதைப் புரிந்துகொண்டிருப்பாளோ?) எவருக்கும் திடீரென ஒரு முன்பின்னறியாத புதியவர் தனிமையின்போது குதித்து, இடக்குமடக்கான குறுக்குக்கேள்விகள்
கேட்டால், ஆத்திரம் வராதா? அதுதான்.
(இவளையா பெரிதாகப் பேசமாட்டாதவ ளாகப் படைத்துவிட்டோம் என்று கவலைப்பட்டடேன்!. குழந்தைகள் எப்படித்தான் தாய்தந்தையர் எண்ண முடியாதபடி உளப்பக்குவமும் முதிர்ச்சியும் பெற்று வளர்ந்துவிடுகின்றார்கள்!!). "மற்றபடி, நீங்கள் சொன்ன கூற்றுக்களோ, கேட்ட கேள்விகளோ எதுவும் எங்களை எதுவும் புண்படுத்தவில்லை. தனக்கென சில கருத்துக்கள் கொண்ட மூன்றாவது மனிதனாக இருந்து மற்றவர்களின் வெளிநடத்தைகளையும் கூற்றுக்களையும் பார்க்கின்ற எவருக்கும் - உங்களைப் போன்ற தாய்தந்தை தரத்திலே இருக்கும் எவருக்கும்கூட - இப்படித்தான் தோன்றக்கூடும், செயல்கள் எங்களின் தென்றாலும், கண்கள் உங்களதல்லவா? நானும் இவனும் மனிதர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணத்திலும் எண்ணங்கள் அவரவர் போக்கிலேயே உள்ளுக்குள் இயங்கு உலகத்துள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று படைக்கின்ற உங்களுக்கு நான் சொல்லித் தெரியத் தேவையில்லை.” (இப்போது, அவன் "அப்படியேதான்’ என்று தலையாட்டிக்
கொண்டிருந்தான். இவனை எப்படிப்
படைத்திருக்கவேண்டும் என்று இந்த நேரத்திலே எனக்கேதும் தோன்றவில்லை. எப்படிப்படைத்தாற்றான் என்ன. வளர்ந்து கொண்டுபோகும் நேரத்திலே நான் விரும்பிய

விதத்திலேயே சமைந்து வந்து என் குரலாகவா பேசிக் கொண்டிருக்க போகின்றான் ??. என்னையும் மீறி எனக்குப் பேச்சுக் க ற் று த் த ந் துக் கொ ன் டி ரு க் கி ற நி  ைல யி டேல ய ல் ல வ |ா போய்க்கொண்டிருக்கின்றான்!)
". அதனால், நான் அவளினை இந்த நிமிடத்திலே திட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதற்காக, இங்கு நானே அவளுக்கு மேலதிகாரி என்றோ, அவள் எனது சமையற்காரியென்றோ அர்த்தமல்ல. நான் ஒரு தற்பாற்புணர்ச்சி விரும்பினனாக இருந்து, அவளின் இடத்திலே ஒர் ஆடவன் இருந்திருந்தாலும் அதேபோலவே திட்டியிருப்பேன். சில சமயங்களிலே இவள் வாசிக்கும்போது, நான் குடிநீர்க்குழாயிலே எதேச்சையாக நீரைக் "கொழகொழ’க்கத் திறந்து விட்டுக் கொண்டிருந்து அவளிடம் வாங்கிக்கட்டியதை நீங்கள் பார்த்திருக்க
வில்லை என்று எண்ணுகின்றேன். ܓܒܬܐ
"இதற்காக, அவன் சமையலிலே எனக்கு ர்
பங்காக சமைத்துக்கொண்டிருக்கும் மனநிலை
உள்ளவன் என்றும் கூட நீங்கள் மி
எண்ணிவிடக்கூடாது. அவன் சமைத்துச் சாப்பிட்டால், நான்கு நாட்களுக்கு வைத்திய
அவன் சமையல் என்பது முழுக்க முழுக்க என் வேலை என்று எண்ணிவிட்டான் என்று கதை எழுதுகின்றதில்லை. அவனிலே எனக்குப் பிடித்த விடயங்களும் உண்டு பிடியாத விடயங்களும் உண்டு. ஆனால், அதற்காக அவனின் எல்லா நடவடிக்கைகளையுமே, அவன் நான் பெண் என்ற காரணத்தினாலேதான் அப்படிச் செய்கின்றான் என்று நானோ நீங்களோ பார்த்துக்கொண்டிருந்தால், அவன் கதையைப் போல நூற்றாண்டுப்பழமையைக் கிண்டிச் சுரண்டித் துரு சேர்த்து, நிகழ்வுருக்களுக்குக்குத் தனக்குப்பிடித்த உயிர் கொடுப்பதோடேயே
s
6T 6i) 6) ni L b நி ன் று வி டு ம் R2 இன்றை க்கு த்ரூ து ரு வு ம்// து ன் பமும் தான் கூ டு ம் புதுப்பார்வையும்
ணிை
சாலைதான். இதையே சாக்கிட்டு, நீங்கள்`

Page 104
போனதிலிருந்து கற்றுக்கொண்டு, புதியது தழைக்கப் பதிபோடவும் ஆகி வராது."
இதற்கு மேலே ஏதேனும் கேட்பதா அல்லது சொல்வதா என்று சொல்லமுடியாத
அளவுக்கு நான் கூனிக்குறுகியும் குழம்பியும்
போயிருந்தேன். அப்பன்சாமியும் சுவாமிநாதனும் என்று ஒன்றே இரட்டைவேடத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்ததாகத் தெரிந்தது.
அப்பனுக்கோ இன்னமும் புரிந்தும் புரியாமலும்.
எம் முகம்பார்த்த மெளனத்தின்போது, அவள் அவன் எழுதிக்கொண்டிருந்த கதையை வாசிக்கத்தொடங்கினாள். அவன் கொஞ்சம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு "தேநீர் குடிக்கின்றீர்களா?” என்று கேட்டபடி தேநீர் தயாரிக்க எழுந்தான்.
"இல்லை இலலை; எனக்கு வெளியே வானம் இருட்டியது போலே தெரிகின்றது; நேரமாகிவிட்டது; நான் வீட்டுக்குப்போயே
செவ்விலக்கிய3ங்
...)
என். கே. மகாலிங்கம்
'எந்தக் கதைகளுமே சூனியத்திலிருந்து பிறக்க முடியாது. புதிய கதைகள் பழைய கதைகளிலிருந்து பிறக்கின்றன. புதிய கவலைகள் தான் அவற்றைப் புதியவை ஆக்குகின்றன என்கிறார் சல்மான் ருஷ்டி கலையம்சங்களுடன், கவித்துவமாகத் திரும்பச் சொல்லுதலால் ԼO Ա)] சிருஷ்டி செய்யப்படுவதால் - புதிய சிருஷ்டிகள் செவ்விலக்கிய தகுதியைப் பெற்றுக் கொள்ளுகின்றன. மறு ஆக்கம் செய்வது சிலவேளை பிரக்ஞையற்றே நடைபெறலாம். சிலவேளை பிரக்ஞையுடனேயே செய்யப்படுகிறது.
இந்திய இதிகாசங்கள், புராணங்கள் பல தமிழிலும் மறு சிருஷ்டிகளாக்கப்பட்டுள்ளன.

குடித்துக்கொள்கின்றேன்" என்று இருவரிடமும் சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து அவசரவசரமாக விலகி வெளியே வர, மெல்லிய நக்கற்சிரிப்பொலி என் முதுகோடு ஒட்டி நகர்வதை உணர்ந்தேன்.
தட்டச்சுச் செய்த விரலாயாசமும் ஓயாத மணிநேர எண்ணவோட்டமும் ஒய விரல்நெட்டி முறித்தபடி எழுந்தேன். எழுதிக்கொண்டிருந்ததிலே தெரியவேயில்லை; நன்றாகவேதான் இருட்டிவிட்டது; கொஞ்சம் சூடாகத் தேநீர் குடித்தால் புத்துணர்ச்சி வரும் என்று சொன்னது பழகிப்போன தேநீர்ச்சிந்தை,
மனைவி, தான் வாசித்த நூல் தன் முகம்மூட நித்திரையாக இருந்தாள். அவளை எழுப்பித் தேனிர் கேட்பதா அல்லது நானே போடுவதா என்றெண்ணிக்கொண்டு கொஞ்ச நேரம் தடுமாற்றத்துடன் அறைக்குட் குறுக்கும் நெடுக்கும் உலாவிக்கொண்டிருந்துவிட்டு, பின் பேசாமல் அவளருகே போய்க் கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்த நானும்
நித்திரையாகிப் போய்விட்டேன்.
O
களும் றுசிருஷ்டிகளும்
ԼD Ա)] ஆக்கம் செய்யப்பட்டு, செவ்விலக்கியங்களாக உள்ள 6s) உதாரணங்கள் தமிழில் உள்ளன.
கம்பராமாயணம் அதன் உச்ச சிருஷ்டி. இளங்கோவின் சிலப்பதிகாரம் அடுத்தது. பாரதியின் பாஞ்சாலி சபதம் இன்னொன்று. புதுமைப்பித்தனின் அகலிகை, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் போன்ற சிறுகதைகள் உள்ளன. மறுசிருஷ்டி செய்தவற்றை விட, அதேபோன்ற கதைகளின் சாயலில் நவீன கதைகள் ஆக்கியோர் பலரும் உள்ளனர். ஜானகிராமனின் அம்மா வந்தாள்’ நாவலைப் பற்றிக் கூட அப்படிச் சொல்லலாம். ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்", எஸ். இராமகிருஷ்ணனின் 'உபபாண்டவம்' போன்றவையும் உள்ளன. இவற்றைப் போல்

Page 105
ஆங்கிலத்தில் பல உதாரணங்கள் உள்ளன. சேக்ஸ்பியரின் றோமியோ யூலியற் நாடகம். டேவிட்டும் கொலியத்துவம், ப்பூயற்றியும் ஸ்பீஸ்ரும் போன்ற புனைவுக்கதைகள் போன்றவை பல திரும்பவும் மறுவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் உள்ள சில உதாரணங்களையே காட்ட முயற்சிக்கின்றது. அவற்றை வைத்து தமிழிலுள்ள இலக்கியங்களை - நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் - நாம் ஒப்பீடு செய்ய முயற்சிப்பதும் நன்று.
இதிகாசங்கள், புராணங்கள், பைபிள் கதைகள், நாட்டார் கதைகள் போன்றவை, நாவல்கள், நாடகங்கள், ஹொலிவுட் படங்கள், தொலைக்காட்சி போன்றவற்றில் திருப்பிச் சொல்லப்பட்டுள்ளன.
ஹோமரின் இதிகாசக் கதையான ஒடெசி கவிதையில் எழுதப்பட்டுள்ளது. ^அதன் கதாநாயகன் ஒடெசியஸ். அவனுக்கு கி மறுபெயர் யுலிசஸ். அவன் ரொறாயான் ட் புத்தங்கள் முடிந்து, இதாக்காவிலுள்ள அவன் (6 வீட்டுக்கு வரும்போது பல இடையூறுகளுக்கு உள்ளாகிறான். ஒற்றைக் கண்ணனான ரே சைக்கிளப்ஸ் என்பவனை, சைரன்ஸ் என்ற */மாயக்கன்னியை, மனிதர்களைத் தின்னும் லாயிஸ்றுகோனெஸ் என்ற பூதங்கள் போன்றவற்றைச் சந்திக்கிறான். அவற்றை எல்லாம் அவன் வென்று அவனுடைய மனைவியான, கற்பில் சிறந்தவளான பெனிலோப்பைக் காண வீடு வந்து சேர்கிறான்.
இந்த இதிகாசக் கதையை நவீன நாவலாக, புத்தாக்கம் செய்திருக்கிறார் ஜேம்ஸ் ஜெய்ஸ் யுலிசஸ் என்ற தலைப்பில். இது திரும்பவும் சொல்லல் என்பதற்கு சிறந்த உதாரணம். அதுவும் அதன் அங்கதச் சுவைக்காக, 1922இல் எழுதப்பட்ட இந்நாவலில் லெபொல்ட் ப்புளும் என்ற விளம்பர விற்பனையாளன் கதாநாயகன். டப்ளின் நகரத்தில் ஒருநாள் முழுவதும் அலைந்து திரிகிறான். சைரன்ஸ் என்ற இரு பெண்கள் மதுச்சாலையில் வேலை செய்யும் மாயக்காரிகள். லாயிஸ்று கோனெஸ் என்பவர்கள் உணவகத்தில் குடித்துக் கொண்டு, உணவு தின்று கொண்டிருப்பவர்கள். சைக்கிளப்ஸ் என்பவன் டப்ளினில் உள்ள
to

பயங்கரமான முட்டாள். அன்றைய நாள் முடிவில் ப்புளும் வீடு திரும்புகிறான். அங்கு அவனுடைய மனைவி மொல்லி ப்புளும் இருக்கிறாள். அவள் அத்துணை கற்பில்
சிறந்தவள் அல்ல. O
அடுத்தது, ஆதி ஆகமம் முதற்பகுதியிலிருந்த பொற்றிப்பற்றின் கதை. எகிப்திய அலுவலரின் மனைவியான பொற்றியர், ஹீப்று ஜோசப்பில் மனத்தைக் கொடுத்து விடுகிறாள். அவன் அவளுடைய தலைமைக் காப்பாளன். அழகானவன். கற்புள்ள நன்னெறியுள்ளவன். அவளின் தூண்டுதல்களுக்கு அவன் ஆட்படவில்லை. அதனால் அவள் கோபமுற்று, அவன் தன்னை பால் வன்முறைக்கு ஆட்படுத்தினான் என்று குற்றம் சாட்டினாள். அதனால், அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்தக் கதையை ஹென்றி ஸ்பீல்டிங் 7^ தன் ஜோசப் அண்றுாஸ் என்ற நாவலில் மறுசிருஷ்டி செய்கிறார். 1742இல் எழுதப்பட்ட அந்த அங்கத நாவலில் அக் கதையைத் திருப்பிச் சொல்லும்போது, அழகுள்ள நன்னெறி தவறாத ஜோசப் அண்று ஒரு வேலைக்காரன். அவனுடைய எஜமானி லேடி ங் ப்யூபி, அவள் அவனை மயக்குவதற்கு முயற்சிக்கையில் அவன் அதற்கு எடுபடுகிறானில்லை. அதனால் கோபமுற்று, அவன் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றான். ம்
محصےN
அடுத்ததும், ஆதி ஆகம முதற்பகுதியில் எடுக்கப்பட்ட கதை. ஜோசப்பை அவனில் பொறாமை கொண்ட அவனுடைய சகோதரர்கள் கொல்வதற்காக, ஒரு கிடங்குக்குள் தள்ளி விடுகின்றனர். அவனை சில அடிமை வியாபாரிகள் காப்பாற்றி விடுகின்றனர். அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள். கடைசியில் அவன் எகிப்திய அரசில் முக்கிய அதிகாரியாகிறான். அவனுடைய சகோதரர்கள் அங்கு உணவுக்காக இரந்து கொண்டு வருகையில் அவன் அவர்களைப் பழிவாங்கிக் கொள்கிறான்.
அலெக்சாண்டர் டுமாஸ் எழுதிய The Court of Monte Cristo 6tai7p [51Talai) gayakasaog560u அடியொற்றியது. இது 1844இல் எழுதப் பெற்றது. இதில், எட்மன்ட் டான்ரேஸ் என்பவனை அநியாயமாகப் பழிசுமத்தி இருட்டறையில் எறிந்து விடுகிறார்கள். 3
D

Page 106
இருட்பறையிலிருந்து 'அவன் தப்பி, அதிர்ஷ்டத்தால், பெருஞ் செல்வம் சேர்த்து விடுகிறான். பின் எதிரிகளைப் பழி வாங்குகிறான்.
அடுத்தது, சேக்ஸ்பியரின் கிங் லியரை வைத்து எழுதப்பட்ட நாவல் பற்றியது. லியர் அரசன் தன் அரச பதவியிலிருந்து விலகி, தன் மூன்று மகள்மாருக்கும் தன் அரசைச் சமமாகப் பகிர்ந்து கொடுக்க விரும்பினார். ஆனால், லியருடைய கடைசி மகள் லியரைப் புகழ்ந்து சொல்லாததால், அவளுக்குரிய பங்கைக் கொடுக்க அவன் மறுத்துவிட்டான். ஆனால், கடைசியில் மற்ற இரு மகள்மாரும் லியருக்கு எதிராகச் செயற்பட்டு, அவனைக் கலைத்து விட்டார்கள். கடைசி மகள் அவனுக்கு உதவுகிறாள். அவன் கடைசியில் மனமுடைந்து இறக்கிறான்.
இதைப் போன்ற கதையையே எமிலி சோலா லா ரெறா என்ற நாவலில் *எழுதியுள்ளார். 1887இல் எழுதப்பட்ட பூ இந்நாவலில் ஃபோவான் என்ற கிழ விவசாயி தன் மூன்று மக்களுக்கும் நிலத்தைப் பகிர்ந்து கொடுக்கிறார். அவர்களும் விவசாயியைக் கொடுமையாக நடத்துகிறார்கள். அதிலிருந்து ரை விடுபட அவருக்கு வழி கிடைக்கவில்லை.
சின் ட்றெல்லா என்ற கதை سمسےحN எல்லாருக்கும் தெரியும். அதில்
சின்ட்றெல்லாவை அவளுடைய சிற்றன்னையும் அவள் மகள்களும் கொடுமையாக நடத்துகிறார்கள். இறுதியில், சின்ட்றெல்லாவை ஓர் இளவரசன் விரும்பி மணமுடிக்கிறான்.
ஜேன் ஒஸ்ரினின் மன்ஸ்ஃபீல்ட என்ற நாவல் 1814இல் இப்படியான ஒரு கதையையே எடுத்தாளுகிறது. இந்த நாவலில் ஃபன்னி பிறைஸ் என்பவளை, அவளை எடுத்து வளர்த்த குடும்பம் துன்பப்படுத்துகிறது. குறிப்பாக, அவளுடைய சிற்றன்னையாகிய அன்ரி நோரிஸ் என்பவள். ஃபன்னி இறுதியில் இவற்றிலிருந்து மீண்டு எட்மண்ட் என்பவனைத் திருமணம் முடிக்கிறாள்.
பிறாக்கின் கோலெம் என்ற யூத நாடொடிக் கதை ஒன்று. அதில் பிறாக்கிலுள்ள யூத றா பை தன் மந்திர சக்தியால் கோலெம் என்றபலம் வாய்ந்த ஒரு

மிருகத்தைக் களிமண்ணில் உண்டாக்கினான். கிறிஸ்தவர்களின் கொடுமைகளிலிருந்து தன் சக சமயத்தவர்களைக் காப்பாற்றுவதற்காகவே, அவன் அதை உருவாக்கினான். அந்த
மிருகத்தைக் கடைசியில் உருவாக்கியவனே ?
அழிக்க வேண்டி வந்தது. ஏனெனில், அந்த மிருகம் தன் எஜமானையே தாக்கும் தன்மை கொண்டிருந்தது.
இதைப் போன்றதே ஃப்றாங்கன்ஸ்ரைன் என்ற மேரிஷெல்லியின் நாவல் (1818). அதில் ஒரு விஞ்ஞானி கைவிடப்பட்ட மனித உடல் பகுதிகளிலிருந்து ஒரு மிருகத்தை உருவாக்கினான். அதற்கும் மிகப் பெரும் உடற்சக்தி இருந்தது. அதுவும் தன்னை உருவாக்கிய எஜமானுக்கு மரியாதை கொடுக்கும் தன்மை இல்லாதது.
சேக்ஸ்பியரின் மக்பெத்தில் அவன் ஒரு பேராசை பிடித்த கொலைகாரன். அரசைக் கைப்பற்றுவதற்காக, தன் அரசனையே கொலை
ܓܒܐܝ2
செய்கிறான். அதைப் போலவே, மற்ற நூ
எதிரிகளையும் அழிக்கிறான். கடைசியில்
அவனே தன்னுயிரை எடுத்துக் கொள்கிறான். 6b
இதைப் போன்றதே, யூஜின் ஒ நீலின் த எம்பறர் ஜோண்ஸ்' என்ற நாடகம். 1920ஆம் ஆண்டு நாடகமான இதில், கதாநாயகனான ப்றுரட்டஸ் ஜோண்ஸ் என்பவன் பலரை வன்முறையாலும் ஊழலாலும் இல்லாமல்
செய்து, ஹைற்றி என்ற இடத்துக்குப்பு
பேரரசனாக ஆகிறான். இந்த நாடகம் உண்மையில் மக்பெத்தின் இறுதிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. அதாவது, மக்பெத் மனப்பிரமைகளால் தாக்கப்பட்டுப் பலரையும் அழிக்கும் காலத்தில் ஆரம்பிக்கிறது.
ஆகமத்தில் பிரபலமான ஜொப்பைப் பற்றிய கதை இது. ஜொப் என்றவன் சடுதியாக தன் குடும்பம், ஆரோக்கியம், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விடுகிறான். அவனுடைய நல்ல குணத்தைப் பரிசோதிப்பதற்காகச் சாத்தான் கடவுளை நெருக்கியதாலே தான் அது நடந்தது.
காஃவ்காவின் விசாரணை (த ற்றயல்) என்ற நாவல் (1925) அதைப் போன்றதே. இந்த நாவலிலும் அதன் கதாநாயகன் எந்தவித குற்றமும் செய்யாதவன். இருந்தும், அவனைப்

Page 107
பயங்கரமாகச் சந்தேகிக்கிறார்கள். அதனால், இருக்கிறான். அதிகாரிகள் தெளிவான எந்தக் க தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கக் கூட
9 இறுதியாக, றோமன் கவிஞன் ஒவிட் எழுதி கதையின் மறுபதிவு. அதில் ஒரு சிற்பி தனது அதிலேயே அவன் காதல் கொண்டும் விடுகிறா சாய்த்த வீனஸ் தெய்வம் அச்சிலையை உயிருள்
பெர்னாட் ஷாவின் பிக்மாலியன் நாடக ஒரு பெண்ணுக்கு, பேராசியர் ஹென்றி ஹிக்கின் நீக்கி, திறமான ஆங்கில உச்சரிப்பைப் பழக்கி உ அப்பெண்ணையே அவர் விரும்புகிறார்.
பல கதைகளின் மூலங்களை நாம் எங்ெ அவை மறு சிருஷ்டி பெற்று, உயிருடன் வாழ் செய்தது, செய்தவரின் பிரக்ஞையில் இல்லாம இலக்கியத் திருட்டுச் செய்தவராகவோ, தழுவ கேள்விக்கு, இல்லை என்றே உறுதியாகப் பதில் எடுப்பவர்கள் அந்தத் தகுதியைப் பெறமாட்டார்ச திறன்களின்மையாலேயே அழிந்து விடுவார். மாட்டார்கள்.
(இக்கட்டுரை பிலிப் மாச்சன்ட் றொப் சேல கி விசயங்களை எடுத்தாண்டுள்ளது. அவர்களின் கட்டுை
அவை இங்கே விடுபடப்பட்டுள்ளன)
G
கவிதையின்
ܓܡܗܝ2
سح
செழியன்
“கவிதையின் இரகசியம் என்னவென்றால் - இதான் இந்தமாதிரியான இடத்திலயெல்லாம் இப்படியான இலக்கியக் கூட்டங்களை வைக்க வேணாங்கிறது" .
மெல்லியதொரு தள்ளாட்டத்துடன் மேடையில் ஒரு கவிதையுள்ளம்.
'கவிதையின் இரகசியம்
என்னவென்றால் . கார் எல்லாத்தையும் அந்தப் பக்கமா பாக் பண்ணச் சொல்லையா .”
'கவிதையின் இரகசியம் என்னவென்றால் . இன்னமும் வந்திட்டே இருக்கிறானுங்கள் ." h−
‘கவிதையுடைய இரகசியம் சி என்னவென்றால் . " −
"நிறுத்துங்கய்யா இந்தாலை"

அவன் அனைத்தையும் இழக்கும் ஆபத்தில் ாரணமுமின்றி அவனைக் கைது செய்கிறார்கள். டய நம்பிக்கையும் அவனிடம் இல்லை. ய மெற்றமோஃபொசிஸ், அது கிரேக்க புராணக் இலட்சியப் பெண்ணின் சிலையை உருவாக்கி ன். அவனுடைய பிரார்த்தனைகளுக்குச் செவி ள பெண்ணாக ஆக்கி விடுகிறது. த்தில் (1913) எலிஸா டூலிற்றில் என்ற பூ விற்கும் ஸ், அவளுடைய கொக்னி கொச்சைப் பேச்சை
டயர்குலப் பெண்ணாக ஆக்கினார். இறுதியில்,
கங்கோ தேடிக் கண்டு பிடிக்கலாம். ஆனால் கின்றன. சிலவேளை, அவற்றை மறு சிருஷ்டி ல் கூடப் போயிருக்கலாம். அவர்களை நாம் பி எழுதியவராகவோ எடுக்க முடியுமா என்ற
ல் கூற முடியும். இருந்தும், அப்படியே பிரதி ள். கள்வர்களும், போலிகளும் தங்கள் சிருஷ்டித்
கள். வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட
ம் என்பர்களின் கட்டுரையிலிருந்து அதிக அளவில் ர ஹொலிவுட் பட உதாரணங்களையும் கொடுக்கிறது.
O இரகசியம்
என்னவென்றால் .
"மேடையை விட்டு இறங்கப்பா" "நிப்பாட்டு” "போதும் சார் . வந்திடுங்க” இப்போதைக்கு இதுவே அதிகம் . "மீதியை அப்புறமாய் பாத்துக்கலாம்
ክ}
gFfurf ...
பேச்சாளர் மிக்கஅன்புடன் மேடையை விட்டு இறக்கப்படுகின்றார்.
அந்தக் கூட்டத்தில் தனியொருவனாய் கவிதையின் இரகசியத்தை அறிய ஆர்வமாக நின்று கொண்டிருந்த இளைஞருக்கு மிகுந்த ஏமாற்றம். அதற்காகச் சோர்ந்து போய்விடவில்லை. அந்த இரகசியத்தை எப்படியாவது அறிந்தே விட வேண்டும் என்ற துடிப்பான இளய வயது. அந்தப்

Page 108
பேச்சாளரைப் பின்தொடர்ந்து சென்று மறுநாள் இன்னோர் ஊரில் வைத்து அவரை மடக்கினார்.
“ohjGoorjaslb afrrrr”
“வணக்கம் ., தம்பி யாரு . புதுசா இருக்கே?
"நான் ஜெயமோகன் . நேத்தைக்கு இலக்கியக் கூட்டத்துக்கு வந்திருந்தேன் ."
"ஒ . வந்திருந்தியா? . நல்லாயிருப்பா. வாழ்த்துகிறார்.
"அதில்லை வந்து நீங்க கவிதையின் இரகசியம் என்னவென்றால் என்னு சொல்ல எவ்வளவோ முயற்சி பண்ணிங்க . முடியாமலே போயிடிச்சு . (உங்க லெவலுக்கு அந்த சபை இல்லை) எப்படியாவது அதை அறியணும் என்கிற ஒரு ஆர்வத்தில் பின்னாடியே வந்திட்டேன். சார் . அதை நான் தெரிஞ்சுக்கலாமா?”
ܓܒܐܝ2
"என்னா சொண்னை . கவிதையின் இரகசியம் என்னான்னா . அப்பிடி நான் பேசவே இல்லையேப்பா.” சப்பென்று டு போகிறது. இது ஜெயமோகனின் அனுபவம்.
GDJ #விதை பற்றிய எண்ணங்கள் மனதுக்கு
மனம் வேறுபட்டுக் கொண்டேதான் இருக்கும். N நல்ல கவிதை இப்படித்தான் என்று சொல்வதற்கு எழுதப்பட்ட விதியொன்றும் கிடையாது. கவிதை பற்றி முன் கூட்டிய
அனுமானங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இது வசதியாகப் போய்விட்டது பலருக்கு. தாங்கள்
எழுதுவதுநல்ல கவிதைதான் என்று பிடிவாதமாக நம்புகிறார்கள். இதில் ஆபத்து அவர்களின் அந்த நம்பிக்கைதான். இவர்களிடமிருந்து நல்ல கவிதை வருவதற்குத் தடையாக இருப்பதே இந்த நம்பிக்கைதான். ஆனால் கோபம் மலை மலையாய் வருகின்றது. இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் புழுங்குகின்றது.
விமர்சனங்களுக்கு மாபெரும் சக்தி - இருக்கின்றது. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு உயர்ந்த மனப்பான்மை இருக்குமாயின் அது உயரங்களுக்கு இட்டுச் செல்லும். மாறாக விமர்சனங்களை தாக்குதல்களாக

எதிர்கொள்ளும் அதைரியசாலிகளைப் படுகுழிக்கு இழுத்துச் சென்று குப்புறத் தள்ளிவிடும்.
கவிதை மட்டுமல்ல கதை, கட்டுரை, நாடகம், விமர்சனமென்று எல்லாத் தரப்புகளிலும் இது தாராளமாயும் ஏராளமாயும் விளைந்து போய்க்கிடக்கின்றது. அற்புதமாய் எழுதியிருக்கின்றாய் என்று குரல் கொடுத்து (ԼpՖl(35 சொறிகின்ற வட்டாரங்களைப் பார்க்க இனிக்கின்றது, மறுபடி மறுபடி சந்தித்து கூடிக் குலவ ஆசையாய் இருக்கின்றது.
ஒரு கவிதை உள்ளம் தெரிகின்றது, ஆழம் காணாது, இன்னும் எழுத்து உயரவேண்டியுள்ளது. கவிதையாக இல்லை - என்று சொல்கின்றவர்களைக் காண்கின்ற போதெல்லாம் கொலை வெறி வருகின்றது. இவர்களைப் பார்ப்பதுவும் பேசுவதும் மட்டுமல்ல இவர்களின் பெயர்களைச் சொல்வதுவும் அசிங்கமாக இருக்கின்றது.
பாராட்டுக்களைக் கேட்கின்ற போது முதுகில் ஏதோ குறு குறுப்பது புரியும். மெல்லமாய் தடவிப் பார்க்க இறக்கை முளைத்திருப்பது தெரியவரும். பிறகென்ன எழுதியது, இனி எழுதப் போவது எல்லாமே
حالصر
கவிதைதான். இதில் சந்தேகப்படுவதற்கென்றுப்
எதுவுமே சம்பந்தப் பட்டவருக்கு இருக்காது. பாராட்டுக்கள் அதிகமாக சிறிது தூரங்கள் மெல்லமாக எழுந்து பறக்கக் கூடியதாக இருக்கும். இன்னும் கொஞ்சம் நாட்கள் போக, நிலத்தில் கால்கள் இப்போதெல்லாம் படுவதேயில்லை. அவை நடப்பதற்காகப் படைக்கப் பட்டதாகவும் புலப்படாது. பறக்கின்றபோது சலிப்பு ஏற்பட்டால் இலேசாக ஆட்டுவதற்கு வசதியாக அவை இருக்கின்றது என்றே உணரப்படும். அதிர்ச்சிகரமாக ஒரு நாள் இறக்கைகளும் உதிர்ந்து போக . பிறகென்ன? நடைப்பிணம்தான்.
நல்ல கவிதையை எழுதுவது எப்படியென்று யாராவது சொல்லித்தர மாட்டார்களா? என்று தவித்திருக்கிறேன். ஒரு கண்டு மா, இரண்டு மூடி சீனி, முட்டை மூன்று, மறக்காமல் நாலு சொட்டு கலர் என்று கவிதைக்கு ஒரு செய்முறை இல்லாமல் போனது கவிதை செய்தபாக்கியம்.

Page 109
صبر
(6
60J
கவிதையென்பது மொழியின் அனுபவம் என்று இப்போ எனக்குச் சொல்லத் தோன்றுகின்றது. எந்தெந்த அளவு அவர் அவருக்கு மொழியோடு இருக்கின்ற தொடர்பு - கவிதையின் சிறப்பு.
ஒரு பேப்பரும் பென்சிலும் இருந்தால் யாரால் தான் கீறமுடியாது? சொல்லுங்கள். அதெல்லாம் ஒவியம் என்று சொல்லமுடியுமா? கவிதை குறித்து யாருக்காவது குழப்பம் இருந்தால் இந்த எளிய உதாரணம் போதும் என்று சொல்லலாம்.
ஆகவே கடைசியாக ஜெயமோகன் ரொறன்டோ(கனடா)வில் கூறியதை ஒருமுறை நினைவூட்டி முடித்துக்கொள்கின்றேன்.
வயலில் நெல்லு வளர்ந்து பூத்திருக்க, <Չէ Ա0] மெல்லமாய் குரலெடுத்து ஒடிக்கொண்டிருக்கும். ஆற்றம் கரைகளி லெல்லாம் கன்னிகள் குறுக்குக் கட்டுகளோடு நின்று அழகு காட்டிக் கொண்டிருப்பார்கள்.
^பெயர் தெரியாத அழகான வண்ண வண்ணப்
பறவைகள் எல்லாம் வந்து வந்து எட்டிப்பார்த்து இரசித்து விட்டுப் போகும். அப்படி ஒரு கொடுப்பனவு . அவைக்கு.
நண்பர் ஒருவர் அந்த கிராமத்திற்குச் சென்றிருந்தபோது பொழுது விழுந்து விட்டிருந்தது. இருட்டிக் கொண்டுவர வரவேற்பு அறையில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்தக் கிராமத்து குடும்பத்தவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். சற்றைக்கெல்லாம் சிறு சலசலப்பு. அந்த வீட்டுக் குடும்பத்தவர்கள் தங்களுக்குள் ஏதோ மெல்லியதாய்ப் பேசிக் கொண்டார்கள். பின்னர் நண்பரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்கு விளக்கை அணைக்கப்போவதாய்க் கூறி மறுபடியும் மன்னிப்புக் கேட்டு விளக்கை முற்றாக அணைத்து விட்டார்கள்.
ஆற்றில் குளித்துவிட்டு ஈரத்துணியைச் சுற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வருகின்ற அந்த வீட்டுக் குயில், இருக்கின்ற அந்த ஒரு வாசல் வழியாகத்தான் வீட்டுக்குள் போகமுடியும். குயிலின் அழகுப் பரிமாணங்களைப் புதிதாக வந்திருக்கும் நண்பர் பார்த்துவிட வேண்டாமே என்றுதான் இந்த ஏற்பாடு. *。

வெளிச்சமற்ற இருட்டு, மல்லிகை வாசம் பரவ, கால் கொலுசங்கள் இரண்டு மெல்லிய சத்தத்துடன் மெல்ல நடந்துபோய் மறைந்தன. அந்த இளம் பெண்ணின் முகமோ உருவமோ மட்டுமல்ல கால் பெருநகம் கூட f கண்களுக்குத் தெரியவில்லை.
எதுவுமே நடவாததுபோல் மறுபடி விளக்கு வெளிச்சம். தொடர்ந்து உரையாடல்கள். நமது நண்பரின் மனதுக்கு மட்டும் எதையோ பறிகொடுத்தது போலாகிவிட்டது. காலை புலர்வதற்கு முன் இருட்டோடு பஸ் பிடித்து கிராமத்தை விட்டு நண்பர் வந்து சேர்ந்து விட்டார். இடையில் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு எந்தச் சந்தர்ப்பமுமே நண்பருக்குக் கிடைக்க வேயில்லை. ஆனால் உலகத்திலேயே சிறந்த அழகி அந்தப் பெண்தான் என்று இ ன் று வ  ைர யி ல் புலம்பிக்கொண்டிருக்கின்றார்.
இருட்டு, மல்லிகை வாசம், கொலுசுச் a சத்தம் இவற்றோடு ஈரத்துணி சுற்றிய மேனி GF என விரிந்த நண்பரின் படிமங்கள் அவரை இழுத்துக்கொண்டு சென்று, அவளை உலகப்பேரழகியாக்கிவிட்டது.
கவிதையென்றால் இதுபோலத்தான் ன் இருக்கவேண்டும். கவிஞரின் வரிகள் சொல்கின்ற அனுபவங்கள் ஒன்றாகவும், கவிதையினுடைய படிமங்கள் ஊடாக ஒவ்வொரு வாசகனும் சென்றடையக்கூடிய பரிணாமங்களும் அனுபவங்களும் வெவ்வேறானவையாயும் இருக்கும். கவிஞனுடைய கற்பனை வாசகனை இன்னோர் கற்பனைக்குள்ளும் அனுபவத்திற்குள்ளும் தள்ளிவிடக்கூடியது.
ஒகோ! இது தானா கவிதையின் இரகசியம்?
“எனக்குள் ஒரு இது கிளர்ந்து எழுகின்றது. . என்னவென்றே வெளியில் சட்டென சொல்லிவிட முடியாத."
“புரிகின்றது. நல்ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம். அதுதானே?” . ஜெயமோகன்.
"ஹி. ஹி. ஹி. இல்லை ஜெயமோகன் O அவர்களே . அந்தக் கவிதையையே ஒரு முறை படித்துப் பார்க்கவேண்டும் என்கின்ற ஆர்வம்

Page 110
நீரும்
நானும்
ഭൂരAn
தண்ணிரில் தத்து மூன்றாம் தத்துக்கடந்தால் வாழ்வு நீரில் சுபமாம் அம்மா சொல்வாள் அடிக்கடி நீரைக்கண்டு மனது துள்ளி மழலையாகும் ஆனபோதும் பயம்மறந்து நீராடியதில்லை ஒருபோதும்
(2)
கீரிமலைக் கேணியில் பாசிவழுக்கி மூழ்கி அதிசயமான தப்பிப்பிழைத்தலின்பின் அம்மாவிடுவதில்லை தனியே நீராட
பள்ளிச்சிறையுடையும் மதியவேளையில் வெள்ளைப்புறாவாகி மண்புழுதியில் புரண்டபின்
நனைவது w
பொதுக்கிணற்றில்
துலாவில்லாத
சிதைந்த அக்கிணற்றில் அப்பாவின் அப்பா கோபத்தில் தற்கொலைத்தார்
அங்கேதான் என்வாழ்வு முடியப்போகிறதென்றும் என்றோவோர் நாள் தவறிவீழ்வேன்றும் நினைத்தபொழுதில்
ஆயுள் அதிகமென
துரத்தியது போர்

லயொழுதுகளும்
(3)
சாவின் அரக்கனிலிருந்து தப்பினேறென்ற பெருமூச்சு எல்லை கடந்த கிளாலியில் வடிந்துபோயிற்று மழை சோவெனப்பெய்த இரவில் மீண்டும் களைகட்டியது முடங்கிப்போன தொய்வு
இருளைக் கிழித்தபடி Ud -G0 uu68ord ஒற்றை எஞ்சினுடன் பதினொரு படகுகளின் சவாரி
இடிமுழக்கமா? சிங்கள இராணுவத்தின் பகைமுழக்கமா? பிரித்தறியா முடியா பேய்மழை
படகின் ஒரங்களில் இருந்தவரையும் அசட்டைசெய்து நிரம்புகிறது நீர் படகிற்குள் மரணத்திற்கு அஞ்சா வீரர்கள் ஒருபுறம் நீரைக்கிழித்து வாழ்வு சுவைக்கும் மீனவர்கள் மறுபுறம்
என்றாலும் மரணபயம் என்நெஞ்சின் ஒவ்வொரு துளையிடுக்குள்ளும் பிரார்த்தித்தேன்
கரையடைந்தால்
இவர்கள் பாதந்தழுவி நன்றிதெரிவித்தல் வேண்டுமென்று உயிர் மீண்ட சந்தோஷத்தில் கரையேற்றியவர்கள் மறந்துபோயினர் களிப்புற்று கடல்மண்ணள்ளி கைகளுக்குள் நிரப்பினேன் இனி தாய்தேசம் மீளுதல் நடவாதென்றும் சோகத்தைக் கடலினுள் கரைத்துவிட்டு
தத்து இரண்டு கடந்தாயிற்று.

Page 111
சமுத்திரமிரண்டு தாண்டி ஒன்ராரியோ ஏரிக்கரையோரம் குடியிருப்பு
வெயில் வெஞ்சினமூட்டியவோர் பகற்பொழுதில் நண்பர்களாய் இரவல்பெற்று ஆழ்கடல் தேடி மாறிமாறி வலிக்கும் கானாய் சவாரி பயணத்தின் இடைநடுவில் தோழனொருவன் கேட்டான்
எத்தனை தத்து உனக்கு முடிந்தது
சனியனே
அதை ஞாபகப்படுத்தாதே தத்தொன்று இன்னும் மீதமிருக்கு சிரிப்பொன்று தவழ்ந்தது அனைவர் முகத்திலும் கண்கள் பேசின என்னைப்புறக்கணித்தோர் பாலை
என்னவென எடைபோட்டு வேண்டாமென குரலெழுப்பமுன்னரே இளமையின் குதூகலிப்பில் குப்புறப்படுத்தது படகு. நீந்தத்தெரியாது தத்தளித்தவென்னை கரையிழுத்து வந்த நண்பன் சொன்னான் 65050 (r! நீந்தத்தெரிந்தவனுக்குத்தான் தத்து மூன்று உனக்குண்டு பலநூறு
 

γ.
உண்மைதான்
நீந்தத் தெரியாமாதிரி
எனக்கு
பயமின்றி குறிபார்த்து பரம வைரியெனக் கற்பிதங்கொண்டவனை கடவுந்தெரியாது
இல்லாவிட்டால்
கோப்பிக்கடைகளில் தொடர்மாடிக்கட்டடங்களில் நிற்பவனெல்லாம் எதிர்க்குழுவினனேயென மதம்பிடித்தலைந்து.
கொல்லாமலிருந்திருப்பேன் இந்த அப்பாவிகளை,
O
வாழும் தமிழ் )
தமிழில் நவீன புத்தகங்கள்
காலச்சுவடு மூன்றாவது மனிதன் சொல் புதித
நிழல்
சதங்கை
செல்வம் அருளானந்தம்
P.O. Box 7305 509 St, Clair Ave. W Toronto, ON M6C 1CO,
Canada.
له 64-202(416)

Page 112
தமிழிலக்கிய மரபில் தனைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ, ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனைக் கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்ட
தில்லை. தமிழ்ப் படைப்பாளிகளுள் மிகப் பெரும்பான்மை யோரும் தத்துவ நிலைபாடு கொண்டவர்களே சிந்தனையும் தத்துவ நிலைபாடும் வெவ்வேறானவை - இவையிரண்டும் தமிழில் ஒன்றாகக் கருதப்படினும் கூட இவர்கள் ஏதேனும் ஒரு தத்துவத்தின் பால், ஏதோ ஒர் அளவிற்கு நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கையின் அளவு வேறுபடக்கூடும்.
(6 அதுபோலவே தத்துவமும், இவர்கள் ரை பழமையான இந்தியத் தத்துவங்கள் முதல் Lமார்க்சியம் வரையிலான புதிய ஐரோப்பியத்
தத்துவங்கள் வரை நம்பிக்கை கொண்டவர்கள். சிலர் இதனையும் கடந்து பயணித்திருக்கக்கூடும். இன்று உலகின் மிக இளமையான தத்துவம் ஒன்றின் சாயலைக் கூட இளந்தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்தில் இனங்கண்டுவிட முடியும். தத்துவம் எதுவானாலும் அது படைப்பாளிக்கு வெளியிலமைந்தது. ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் தன் கால்களை அதன்மீது அவன் ஊன்றிக் கொள்கிறான்.
படைப்பு இனங்காட்டும் படைப்பாளியின் சிந்தனை இதிலிருந்து வேறானது. இச்சிந்தனை படைப்பாளியின் அகத்திலிருந்து ஊற்றெடுப்பது. தெளிவு இதன் இலக்கணமாக அமைய வேண்டுமென்பதில்லை. தான் அறிந்த தத்துவங்கள் மீது தவறான புரிதல்களைக் கூட அவன் கொண்டிருக்கக் கூடும். தத்துவம் பொதுமைக் குணம் கொண்டதென்றால், சிந்தனை தனித்துவமானது. அது குறிப்பிட்ட அப்படைப்பாளிக்கு மட்டுமே சொந்தமானது. வாழ்வுடனான அவன் உறவில் வேர்கொள்வது.
 

ளையே சிங்கத்தின் ចង់និយាយអំព័GG
Fastruiu ésuorittif
தேடல் சிந்தனைக் கனம் கொண்ட படைப்பாளியைக் குறித்ததென்றால், தமிழ்ப் படைப்புலகம் மிகுந்த ஏமாற்றத்தினையே தரக்கூடும்.
மு. தளையரிங்கத்திற்கு முன்னோடியாகப் பாரதியைக் குறிப்பிட வேண்டும். இருவருமே தம்மக்களின் நிகழ்கால வாழ்வின் மீது அதிருப்தியும் துக்கமும் கொண்டிருந்தவர்கள். இவர்கள் சிந்தனை உலகில் சிறகடிப்பதற்கு இவையே காரணமாக அமைந்தன. தளைய சிங்கத்தினைப் போலவே பாரதியும் இந்தியத் தத்துவங்கள் மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டிருந்தார். என்றாலும் இவர்கள் மேலை தத்துவங்களை எதிர்கொள்ள நேரிட்டபோது அஞ்சி பின் ஒதுங்கவில்லை. இந்தியத் தத்துவதில் கால்களை உறுதியாக ஊன்றிவிட்டு மார்க்சியத்தைச் சாதகமாக எதிர்கொள்ளவும் முயன்றுள்ளனர் - இதில் தளைய சிங்கம் எட்டிய எல்லையைப் பாரதி தொட்டிராவிடினும் கூட உலகளாவிய வரலாற்று நிகழ்வுகளைச் சிந்தனைக் களத்தில் கணக்கிலெடுத்துக் கொள்ள இருவராலும் முடிந்துள்ளது. இவையனைத்தும் இவ்வகையில் பாரதியின் வாரிசாக தளைய சிங்கத்தினைத் தெளிவாகவே இனங்காட்டி விடுகிறது.
இந்தியத் தமிழிலக்கிய மரபில் பாரதிக்கு இவ்வகையிலான வாரிசு என எவரையும் சுட்டிவிட முடியும் எனத் தோன்றவில்லை. சிந்தனைக் கனம் கொண்ட படைப்பாளி என்று பாரதியைக் குறித்த விமர்சனப் புரிதல் இன்றுள்ளதா என்பதே ஐயத்திற்கிடமானது. பாரதியை வலிந்து "கார்ட்டூன்" வரைய வைத்தவர்களுக்கு இவ்வகையில் அவரைப் புரிந்து கொள்ளும் படியாக அவர் தோற்றமளிக்காததில் வியப்பில்லை. அவரிடமிருந்து உரைநடையை

Page 113
மட்டுமே பெற்றக்கொள்ளத்
தீர்மானித்தவர்களுக்கு இது குறித்து
அக்கரையுமிருந்ததில்லை.
O புதுமைப்பித்தனைச் சிந்தனைக் கனம் கொண்ட படைப்பாளி எனச் சுட்டிவிட இயலாது. அதற்கான ஒழுங்கு உழைப்பு எதுவுமே அவரிடம் இருந்ததில்லை. உள்ளுணர்வின் ஒளியில் சில பாய்ச்சல்களைப் படைப்புகளில் அவரால் நிகழ்ந்த முடிந்துள்ளது. இன்றளவும் இதில் அவருக்கு நிகரான மற்றொரு படைப்பாளியைத் தமிழில் காண்பதரிது. பாரதியும் தளைய சிங்கமும் நிகழ்த்தியது இதை அல்ல. சிந்தனையை மேலெடுத்துச் செல்வதற்கான நிதானமும் உழைப்பும் இவர்களிடமிருந்துள்ளது.
தமிழ் நவீனத்துவமோ எலியட்டின் மொழியினைத் தமிழ்ப் படுத்துவதிலேயே ஓடி ஒடி இளைத்தது. ஜெயகாந்தன்
போன்றவர்களுக்கோ சிந்தனாவாதி என்ற பாவனையைக் காப்பாற்றிக் *\கொள்ளத்தான் முடிந்துள்ளது. யூ இந்தநிலையில் ஈழத்தமிழ் இலக்கிய * மரபுதான் இவ்வகையிலான பாரதியின்
(6
வாரிசினைப் பெற்றுள்ளது.
>(இடைவெளியும் அதிகம். பாரதி படைப்பாளி என்ற எல்லையை ஒருபோதும் கடக்க விரும்பியதில்லை. தளை சிங்கத்துடன் ஒப்பிடும் போது அவர் சிந்தனை உலகின் பரிமாணங்களைத் தரிசிக்க முடிகிறது. தளைய சிங்கத்தின் நிலைபாடு இதுவல்ல. ஒரு சிந்தனாவாதியாக முன்செல்லவோ அவர் விரும்பியுள்ளார். தன் பாதையைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளவும் அவரால் முடிந்துள்ளது. இதனால் தான் ஒரு படைப்பாளியாக அவர் சாதனையை அவருடைய துவக்ககால படைப்புகள் தான் உணர்த்தி நிற்கின்றன. ஒரு தனி வீடு', 'புதுயுகம் பிறக்கிறது, 'எழாண்டு இலக்கிய வளர்ச்சி போன்றவையே அவரைக் கலைஞனாக இனங்காட்டுகின்றன. ஆனால் அவர் சிந்தனையின் தீவிரத்தை ‘போர்ப்பறை", "மெய்யுள்' ஆகியவற்றில் தான் இனங்காண முடிகிறது.
ஈழத்தமிழிலக்கியம் குறித்தான விமர்சனப் புரிதலைக் கட்டமைக்க விரும்பும் இந்தியத் தமிழ்
 

வாசகன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. மொழி ஒன்றாக இருப்பினும் கூட, ஈழத்தமிழ் வாழ்வு அவனுக்கு முற்றிலும் அந்நியமானது. இந்நிலையில் ஈழத்தமிழ்ப் படைப்பின் மீதான அவன் பார்வை புறப்பர்வை என்ற நிலையில்தான் அமைய இயலும். ஈழத்தமிழ்ப் படைப்போ இந்தியத் தமிழ் வாசகனால் எட்ட இயலாத தன் நுட்பங்களை ஈழத்தமிழ்ப் வாசகனுக்குச் சுலபமாக உணர்த்தக்கூடும். இங்கு ஈழத்தமிழ் வாசனனின் பார்வை அகப்பார்வையாக அமைந்து விடுகிறது. இவ்விரு பார்வைகளுக்குமிடையிலும் வேறுபாடுகள் இருந்தே தீரும். இன்று இந்தியத் தமிழ் வாசகன் தன் சிந்தனையைத் தெளிவுபடுத்த தேர்ந்தெடுக்கும் ஈழத்தமிழ் படைப்பாளியின் படைப்புக்களின் முழுமையையுைம் தன் வாசிப்பிற்குள்ளாக்கிவிட முடியும் என்பதல்ல. இன்றையச் சூழலில் இது நடைமுறைக்குச் சாத்தியமானதுமல்ல. பத்மநாப ஐயரும், இயேசுராஜாவும், குலசிங்கமும் இப்போது கையெட்டும் தூரத்தில் தி இல்லை. அதுபோலவே ஈழத்தமிழ்ப்
படைப்பாளியின் படைப்புக்கள் வெளியான காலவரிசைக் குறித்த அறிவும் இந்தியத் தமிழ் வாசகனுக்கு பு எட்டாக்கனிதான். துல்லியமான விமர்சனப் புரிதலுக்கு இவை யெல்லாம் அன்றியமையாதன. என்றாலும் II இருப்பதைக் கொண்டு திருப்திபட்டு விட்டு இயங்குவது அவசியம். ஈழத்தமிழ்ப் படைப்புகள்x/ மீது விமர்சனப் புரிதலை முன்வைப்பது, விமர்சன
மதிப்பீட்டினை எழுப்புவது காலத்தின் தேவை சார்ந்தது. சமூக உணர்வு கொண்ட விமர்சகன் இன்று செயல்பட்டாக வேண்டும். எந்த விமர்சகனுக்கும் தன் உணர்வுகளைச் செம்மைப் படுத்திக் கொள்ள காலம் தொடர்ந்து வாய்ப் பளித்துக் கொண்டே இருக்கும். உணர்வுகளி லேற்படும் மாறுதல்களை மொழிப்படுத்துவதே விமர்சகனின் நேர்மையான இயக்கம். தளைய சிங்கம் படைப்புக்கள் மீதான தன் விமர்சனப் புரிதலைக் கட்டமைக்கவிரும்பும் இந்தியத் தமிழ் வாசகன் யாரானாலும் இது பொருந்தும்தான்.
தளையசிங்கம் படைப்புகனின் முழுமையை இந்தியத் தமிழ் வாசகன் இன்று தன் வாசிப்பிற்கு உட்படுத்திவிட இயலாது. தனிவீடு, ‘புதுயுகம் பிறக்கிறது', 'ஏழாண்டு இலக்கிய

Page 114
வளர்ச்சி, போர்ப்பறை, மெய்யுள் ஆகியனதான் இன்று வாசிப்பிற்குக் கிடைக்கின்றன. விமர்சன விக்கிரங்கள்', மூன்றாம் பக்கம்', 'முற்போக்கு இலக்கியம்’ போன்ற அவருடைய விமர்சன ஆக்கங்களும், 'கல்கிபுராணம்’, ‘யாத்திரை", 'ஒளியை நோக்கி போன்ற அவருடைய நாவல்களும், அவரே தன் கட்டுரைகளில் சுட்டிச்செல்லும் ஆரம்பகால சிறுகதைகளும் எப்போதுமே இந்தியத் தமிழ் வாசகனின் பார்வைக்குக் கிடைத்ததில்லை. தளைய சிங்கத்தின் படைப்புகளின் முழுமையை உள்ளடக்கிய பெருந்தொகுப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டாலும், சமகாலச் சூழலில் இதற்கான சாத்தியமில்லை என்றே கூறவேண்டும்.
தளையசிங்கம் என்னும் பெயர் இந்தியத் தமிழ் வாசகனுக்கு முற்றிலும் அந்நியமானதல்ல. தனையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை போன்ற ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் இந்தியத்தமிழ் வாசகர்களுக்கு ஒரளவு />அறிமுகமானவர்களே. ஆனால் இவ்வறிமுகம் இந்தியத் தமிழ் வாசகர்கள் நன்கறிந்த ஈழத்தமிழ் விமர்சகர்களான கைலாசபதி,
(6 சிவத்தம்பி போன்றவர்களின் ர்ெ விமர்சனச் செயல்பாட்டின் மூலம்
イ நிகழ்ந்தவையல்ல. சி.சு. செல்லப்பாவின் سمتیے எழுத்து இதழுடன் தளைய சிங்கத்திற்குத் தொடர்பிருந்தது. எஸ்.பொன்னுத்துரையின் தீ நாவல் தொடர்பான
N
விவாதத்தில் தளைய சிங்கத்தின் பங்களிப்புமிருந்தது. 1985 'யாத்ராவில் வெங்கட் சாமிநாதனுக்கு அவர் எழுதிய கடிதங்கள் வெளிவந்ததுள்ளன. அவருடைய மரணத்திற்குப் பின் எழுபதுக்களின் இறுதியிலும், எண்பதுக்களின் ஆரம்ப வருடங்களிலும் தளை சிங்கத்தின் எழுத்துக்கள் இந்தியத்தமிழ் வாசகர்களின் கவனிப்பிற்குள்ளாயின. 'காகங்களின்’ இலக்கியக் கூட்டத்தில் தளையசிங்கத்தின் எழுத்துக்களும் விவாதிக்கப் பெற்றன. எண்பதுக்களின் ஆரம்ப வருடங்களில் தமிழ் நவீனத்துவம் அதன் உச்ச நிலையை எட்டியபோது, தளையசிங்கத்தின் படைப்புகள் தீவிர வாசிப்பினைப் பெற்றன. தளையசிங்கத்தின்
படைப்புகளில் இயல்பாக அமைந்துள்ள நவீனத்துவத்தின் சாயல் இதன் காரணமாகலாம். அவருடைய ‘புதுயுகம் பிறக்கிறது’
1
 

தொகுப்பிலடங்கிய சிறுகதைகள் முன்வைக்கும் 'மரபு எதிர்ப்பு நவீனத்துவம் சார்ந்தது. என்றாலும் தளையசிங்கத்தை நவீனத்துவப் படைப்பாளியாக இனங்காண்பதில் இடையூறுகளிருக்கின்றன. 'ஏழாண்டு இலக்கிய p வளர்ச்சி சுட்டும் பொதுப்பின்னணிக்கு" முரணான எழுத்தியக்கம் மீதான எதிர்ப்புணர்வு நவீனத்துவத்திற்கு வெகு அருகில் அவரைக் கொண்டு வந்து விடுகிறது. எழுத்தைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகக் கீழிறக்கும் போக்கினோடு இவ்வெதிர்ப்பு நவீனத்துவத்தைப் போலவே முரண்படுகிறது. ஆனால் “பழைய ஞானிகளுக்குப் பதிலாக இன்றைய உலக சமூகத்தில் அதிகமாக இருப்பவர்கள் இந்தக் கலைஞர்களும், எழுத்தாளர்களுமே" என ஞானிகளையும் எழுத்தாளர்களையும்
நேர்க்கோட்டில் காணும் அவருடைய கருத்தாக்கம் நவீனத்துவத்துடன் முரண்பட்டுஇ
நிற்கின்றது.
இந்தியத் தமிழ்ச் சூழலில் * எண்பதுக்களில் தளையசிங்கம் சி எழுத்துக்கள் கவனிக்கப் பட்டமைக்கான மற்றொரு காரணத்தினையும் இங்கு குறிப்பிட வேண்டும். கட்சி grsrir fr
மார்க்சியர்களின் நெருக்குதலை நவீனத்துவம் எதிர்கொள்ளும்படி நேர்ந்த காலமிது. குறிப்பாக மார்க்சியப் போக்கிலிருந்து அந்நியப்பட்டு நவீனத்துவத்தைY அரவணைத்துக் கொண்ட சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் போன்றவர்களுக்கு முற்றிலும் அறிவுதளத்தில் இயங்கும் மார்க்சியர்களை எதிர்கொள்ளும்படியானது. இதற்குத் தளையசிங்கத்தின் எழுத்துக்கள் தகுந்த கேடயமாகப் பயன்பட்டன. மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு அதனையும் கடந்து பயணித்ததாக வேண்டுமென்ற அவருடைய சிந்தனை காலப்பொருத்தம் கொண்டதாக அமைந்தது.
தளையசிங்கம் குறித்தான சுந்தர ராமசாமியின் விமர்சனப் பதிவுகள் இச்சந்தர்ப்பத்தில்தான் முன்வைக்கப்பட்டன.
1982இல் கோவை இலக்கு மாநாட்டில் "தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்' கட்டுரை வடிவில் சுந்தர ராமசாமியால் முன்வைக்கப்

Page 115
اس صبر
(6
ர்ெ அதுபோல் கலை விஞ்ஞானக்
ܔܠ
イ
Nபகுதியும், 9, 6ð) 6) விஞ்ஞானக் து கணக்கெடுப்பு என்னும் கட்டுரையும் தான் முன்னுரையின் ஒரு பகுதியில்
பட்டது. “ஒரு விவாதத்திற்கான குறிப்பு” என இக்கட்டுரைக்கு அன்று மகுடமிடப் பட்டிருந்தாலும் எவ்வித விவாதங்களையும் தொடர்ந்து இது எழுப்பவில்லை. ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் குறித்த இந்தியத் தமிழ் விமர்சனப் பதிவுகள் அபூர்வமானவை என்னும் காரணத்தினால் இக்கட்டுரையை ஒதுக்கிவிட்டு முன் செல்ல இயலாது.
சுந்தர ராமசாமி தன் கட்டுரையின்
முற்பகுதியில் தளையசிங்கத்தைச் சிந்தனையாளராக இனங்காண்கிறார். பிற்பகுதியில் அவரை விமர்சகராக
எதிர்கொள்கிறார். "உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில் பெற்ற கோணல்" என தளையசிங்கத்தின் விமர்சனப் பார்வையில் ஒருவித கோணலை இனங்காண்கின்றார். இத்தகைய ஒரு முடிவிற்குச் சுந்தர ராமசாமி வருவதற்கான காரணம் போர்ப்பறை நூலுக்கு தளையசிங்கம் தந்த முன்னுரையின் ஒரு
தளையசிங்கம் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிடுகிறார்.
கணக்கெடுப்புக் கட்டுரையில்
ஞானியையும் படைப்பாளியையும் நேர்கோட்டில் காணும் தளையசிங்கம் ஞான அலையின் எழுச்சியை புதுமைப்பித்தன் படைப்புக்களில் அல்ல ஜெயகாந்தன் படைப்புக்களில்தான் இனங்காண்பதாகச் சுட்டுகிறார். புதுமைப்பித்தன் படைப்புகள் ஆத்ம வீழ்ச்சியைக் கேலிக்குள்ளாக்க மட்டுமே செய்கின்றன - ஜெயகாந்தன் படைப்புகளோ அதன் பிறப்பை உணர்த்துவதாகக் கூறுகிறார். ஜெயகாந்தனின் எல்லாப் படைப்புகளையும் முன்வைத்த விமர்சனப் பதிவு அல்ல "பிரம்மோபதேசம்', 'விழுதுகள்', 'பிரளயம்’ என்னும் மூன்ற கதைகளை மட்டுமே கணக்கில் கொண்ட விமர்சனப் பதிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'கலை - ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு கட்டுரையில் தளையசிங்கம் தனக்கென்று ஒரு விமர்சன அடிப்படையை உருவாக்கிக் கொள்கின்றார். இதனடிப்படையில் தளைய
 

சிங்கத்திற்குப் புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தன் முக்கியமான படைப்பாளி யாகப்படுகிறார். குறிப்பிட்ட ஒரு படைப்பாளியைக் குறித்த விமர்சகனின் மதிப்பீடு அவன் விமர்சன அடிப்படையைப் பொறுத்தது. தளையசிங்கத்தின் விமர்சன அடிப்படையைத் தான் எதிர்கொள்ள வேண்டும். முடிவை அல்ல. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியல் தளையசிங்கம் புதுமைப்பித்தனையே மரபின் முன்னோடிக் கலைஞனாகக் காண்கிறார் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். மெய்யுள் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் மட்டுமல்ல ஜெயகாந்தனும் அவர் மதிப்பீட்டில் உயர்விடத்தில் இல்லை.
ஆனால் சுந்தர ராமசாமி இத்தகைய முடிவிற்கு வரவில்லை. தளையசிங்கம் வடிவம் குறித்த உணர்வற்ற விமர்சகர் என்ற * நிலைப்பாட்டினை மேற்கொண்டு வேறு விடுகிறார். “படைப்பின்
உள்ளடக்கத்தை அலசி ஆராயும் முடிவுகள் சிந்தனை உலகைச் சார்ந்த சி விஷயம். இலக்கிய் விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது உள்ளடக்கத்தைப் பார்ப்பதாகுமே தவிர படைப்பைப்
பார்ப்பதாகாது. உள்ளடக்க ஆராய்ச்சியல் படைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுகி புதியவடிவம்..." எடுத்து விடுகின்றன. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறகளைப் பிரிக்க முடியாது. இம்முழுமையை மறந்து படைப்பின் உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினால் கருத்தொற்றுமை கொண்ட மற்றொரு படைப்பை முந்தைய படைப்புக்கு மேலாக வைப்பது மிகத்தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும்”. (சுந்தர ராமசாமி, தளைய சிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம், காற்றில் கலந்த பேராசை, ப-113) இங்கு தளையசிங்கத்தின் இலக்கிய அணுகுமுறையை விரிவாகவே ஆராய்ந்துள்ளார். -V
தளைசிங்கம் குறிப்பிடும் ஞான அலை' சுந்தர ராமசாமி குறிப்பிடுவதுபோல் உள்ளடக்கம்
சார்ந்ததல்ல. படைப்பில் துலங்கம் 9 படைப்பாளியிஜ்,பார்வுை தொடர்பூனது.

Page 116
உள்ளடக்கம் சமூகம் சார்ந்ததென்றால் பார்வை படைப்பாளியைச் சார்ந்தது. படைப்பின் முழுமையிலிருந்து, சுந்தர IT mTLD F nr Ló) O குறிப்பிடுவதுபோல் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுகி உருவான படைப்பின் முழுமையிலிருந்து உணரமுடிவது. உள்ளடக்கம் சார்ந்துதான் தளைசிங்கத்தின் விமர்சன இயக்கம் அமைந்திருந்தது என்பது உண்மைக்கு மாறானது. ஏழண்டு இலக்கிய வளர்ச்சியில் தளை சிங்கம் உருவக்கூறான மொழியின் செயற்கைத் தன்மையைக் கொண்டே எஸ். பொன்னுத் துரையை எதிர்கொண்டுமிருக்கிறார். போர்ப்பறை' தொகுப்பிலேயே "புதிய வார்ப்புகள் கட்டுரையில் தளைசிங்கம் "புதிய வார்ப்புகள் பெரும்பாலும் உள்ளடக்கத்தின் புதுமையை அழுத்துமளவிற்கு உருவத்தின புதுமையை அழுத்துவதாய் இல்லை” என ஜெயகாந்தன் கதைகள் குறித்தான தன் பதிவை முன்வைத்துமுள்ளார். "உள்ளடக்கத்தின் புதுமையை அழுத்துமளவிற்கு உருவத்தின் புதுமையை அழுத்துவதாய் இல்லை” என ஜெயகாந்தன் கதைகள் குறித்தான தன் பதிவை
முன்வைத்துமுள்ளார். உள்ளடக்கத்தையும் (6 உருவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது.
உள்ளடக்கம் தன்னியல்பாகவே உருவத்தையும்
எடுக்கிறது' என வடிவம் குறித்தான தன் T(பார்வையையும் தெளிவுபடுத்தியுமுள்ளார். இருப்பினும் சுந்தர ராமசாமி வடிவ உணர்வற்றவராகவே தளைய சிங்கத்தைக் காண்கின்றார். “கலை - ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு” கட்டுரையில் மெளனி கதைகள் குறித்த அவருடைய விமர்சனப் பதிவுகளை முன்வைத்துள்ளார். உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்தே தளையசிங்கம் படைப்புகளை மதிப்பிடுகிறார் என்ற சுந்தர ராமசாமியின் அவதானிப்பை உறுதிசெய்யும்படியாக இதுவும் அமையவில்லை. ஒருவகையில் சுந்தர ராமசாமி கொண்டிருந்த நவீனத்துவம் எழுத்தின் மூலம் சமூக மாற்றம் என்பதனை உறுதியாக மறுத்தது. 7 எழுத்தின் இறுதி இலக்காக அது அடையும் துல்லியத்தையே கண்டது.
தன்னிலிருந்து வெளியே எதனையும் காண விரும்பாத, மாறுதல்களை எதிர்கொள்ள மறுக்கும் வறட்டு நவீனத்துவம் வறட்டு
 

மார்க்சியத்தை Gol. -- ஆபத்தானது.
சிந்தனை உலகில் பயணித்துக் கொண்டிருந்தாலும், தளையசிங்கம் இலக்கியத்தை முன் நிறுத்தியே இயங்கியுள்ளார். இலக்கியத்தினூடாகச் சிந்தனை உலகில் கால்தடம் பதிக்கும் தளையசிங்கம் தன் பயணத்தின் முடிவில், இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்’ என்னும் இலக்கினை நோக்கி முன் நகர்ந்துள்ளார். இவ்விரண்டிற்கு மிடையில் இலக்கியம் குறித்தான அவர் பார்வையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலோட்டமாக ஒரு பார்வையில் இம்மாறுதல்கள் முரண்பாடுகளாகக் காட்சி தந்தாலும், ஆழ்ந்து நோக்கும்போது, முரண்பாடுகளல்ல என்ற முடிவிற்குத் தான் வரமுடிகிறது. அவர் பார்வையில் அவ்வப்போது நிகழும் மாறுதலுக்கான விதைகளை இறந்த/> காலத்தில் இனங்கண்டு படிமுறை வளர்ச்சி வே நிலைகளாக மாறுதல்களை ஒழுங்குபடுத்தி விடவும் முடிகிறது.
வாசக அணுகலுக்கு தளையசிங்கம் F படைப்புலகம் எளிமையானதல்ல. கி கட்டுரைகளில் தனக்கே உரித்தான ஒருவித தர்க் கஒழுங்கைக் கட்டமைத்துக் கொண்டுள்ளார். படைப்பாக்கத்தில் வாசகப்புரிதலில் மிகுந்த கு நம்பிக்கை கொண்டியங்கியவர் தளையசிங்கம். இதனால் வாசகனின் தகுந்த ஒத்துழைப்பின்றி, அவர் படைப்புக்கள் மீதான வாசிப்பு முழுமை, அடைய இயலாது. நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் இவை எதுமில்லா இலக்கிய வளர்ச்சி, போர்ப்பறை, மெய்யுள் என நூல்கள் வெளிவந்த is 6) அடிப்படையில் தளையசிங்கம் படைப்புக்களை வகைமை செய்து கொள்வது பொருத்தமானதாக அமைகிறது. இவற்றுள் "மெய்யுள்' அவருடைய இறப்பிற்குப் பின்னரே தொகுக்கப்பட்டது. என்றாலும் இ த் தெ (ா கு ப் பி ல ட ங் கி ய படைப்புக்களின் பொதுத்தன்மை கருதி தனிக்காலப் பகுதி சார்ந்ததாக வகை
செய்வதில் தவறேதுமில்லை.
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை தளையசிங்கம் என்னும் இலக்கிய ஆளமையின் துவக்கப் புள்ளியாகக் கருதிவிட இயலாது. 1954க்கும் 1965க்குமிடையே இவ்விமர்சனக்

Page 117
கட்டுரை செய்தி இதழில் தொடராக வெளிவருவதற்கு முன்னமே புதுயுகம் பிறக்கிறது தொகுப்பிலடங்கிய கதைகள் முதலான சிறுகதைகளும், ஒரு தனிவீடு முதலான நாவல்களும், வேறு சில விமர்சனக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. ஓர் இலக்கிய ஆளுமையை இனங்காண இவை போதுமானவையே என்றாலும் தளையசிங்கத்தின் ஒருகால் கட்டத்து இலக்கியப் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ள ஏழாண்டு இலக்கிய, வளர்ச்சி’யின் பங்களிப்பே
முதன்மையானது.
'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி கைலாசபதி என்ற ஈழத்தமிழ் விமர்சகரின் இலக்கிய செயல்பாடுகள் மீதான விமர்சனமே. என்றாலும் தனிமனிதனின் பலவீனங்கள் குறித்த பதிவுகளாகக் குறுகிவிடாமல், ஒரு காலகட்டத்து இலக்கியம் முழுமையின் மீதான விமர்சனமாக, ஈழத்து கலை
/Rசாதனை குறித்தான கணக்கெடுப்பாக விஸ்வரூபம் பூ கொண்டுள்ளது. இதற்கிணையான விமர்சனப் படைப்பை இந்தியத் தமிழ் விமர்சன மரபில் கூட அவ்வளவு எளிதாகச் சுட்டிவிட இயலாது. (6 கைலாசபதி க.நா.சு. குழு மீது வைத்த ர்ெ விமர்சனத்தோடு இதனை ஒப்பிடுவோமானால் x/தளையசிங்கம் எந்த அளவிற்கு நேர்மையான பரந்த மனம் கொண்ட விமர்சகராகச் செயல்பட்டுள்ளார் என்பதனை உறுதிப்படுத்த இயலும்.
இலக்கியத்திற்கும் அம்மொழி பேசும் மக்கள் வாழ்வின் பொது / பின்னணிக்குமிடையே இருந்தாக வேண்டிய உறவே ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் துலங்கும் தளையசிங்கத்தின் இலக்கியப் பர்வையின் மையமாக அமைகிறது. தளையசிங்கம் 1966ஐ ஈழ சரித்திரத்தில் ஒரு புரிய ஒட்டத்தின் ஆரம்பம்’ எனக் கணிக்கின்றார். பண்டாரநாயக்கா அரசு சிங்களத்தை ஆட்சி மொழியாக்கி, துயிலில் ஆழ்ந்திருந்த ஈழத்தமிழரை உலுக்கி எழச்செய்தது. "ஈழத்தமிழன் தன் உரிமைக்காகப் போராடத் துவங்கிய நேரத்தில் இலக்கியத்திலும் தன் தனித்தன்மையைக் காட்டத் தொடங்கினான்” இங்கு 1956க்குப்பின் தோற்றம்
கொண்ட ஈழத்தமிழ் இலக்கிய மரபின் புது எழுச்சியை வாழ்வின் பொதுப் பின்னணியுடன் தொடர்புப் படுத்திக் காண்கிறார் தளையசிங்கம்.
 

இந்திய விடுதலைப்போர் தோற்றுவித்த இலக்கிய எழுச்சியாக மணிக்கொடி மரபை இனங்காணும் தளையசிங்கம், ஈழத்தமிழ் இலக்கிய மரபின் இப்புது எழுச்சியை இதனோடு ஒப்புமைப்படுத்தவும் செய்கிறார். ஆனால் ஈழ இலக்கிய மரபில்
O
வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் ஒரு இலக்கியப் போக்கு இப்பொதுப் பின்னணிக்கு முரணாக அமைவதை இனங்காணும் தளையசிங்கம் கைலாசபதி வடிவில் வந்த 'சந்தர்ப்ப
விபத்தையே இதன் காரணமாகக் காண்கிறார். ஈழத் தமிழிலக்கிய மரபு புதுவளர்ச்சியான சூழல் தடையாக அமைந்து விடுவதையும் தளையசிங்கம் அழுத்தமாகவே சுட்டுகிறார்.
கைலாசபதியைக் • கடுமையான/> விமர்சனத்திற்குள்ளாக்கும் தளைய சிங்கம், ஈழ வே இலக்கிய மரபில் அவர் சாதனைகளைச் சற்றும் குறைவாக மதிப்பிடவுமில்லை. ஆனால் அவர் புராணமாக்கப்படுவதை மட்டுமே கடுமையான சி சொற்களில் எதிர்கொள்கிறார். நேர்மையான இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார்யாருக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டுமோ அதனை அளிக்கவும் அவர் தயங்கவில்லை. இந்த நேர்மை கைலாசபதி தோற்றுவித்த போக்கிற்கும்
என்பதே கைலாசபதியின் மீதான தளைய ர்
அவருடைய இலக்கியப் பார்வைக்கும் இல்லை
சிங்கத்தின் விமர்சனக் குற்றச்சாட்டாகY அமைகிறது. எனினும் கைலாசபதியின் சொந்த வாழ்வை விமர்சனத்திற்குள்ளாக்கும் கீழான உத்தியை தளையசிங்கம் கையாண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் விதிவிலாக்காக ஒரே ஒரு சிறுகுறிப்பு மட்டுமே அமைந்துள்ளது. "பத்திரிகைக் கொம்பனியின் பங்குதாரர்களின் உறவின் காரணமாய்” தினகரன் இதழுக்கு கைலாசபதி ஆசிரியரானார் என்பதே அது. ஆனால் கநாசுவின் சொந்தவாழ்வைப் பயன்படுத்தி கைலாசபதி அவர்மீது சுமத்தியுள்ள அவதூறுகளோடு ஒப்பிடும்போது இது பொருட்படுத்தலுக்கு அருகதை அற்றதே.
'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் கைலாசபதியை எதிர்காள்வதினால் தளைய ό சிங்கத்தை மார்க்சிய எதிர்ப்பாளராக இனங்கான

Page 118
வேண்டுமென்பதில்லை. . தன்னையும் தன் போன்றவர்களையும் இடதுசாரி சிந்தனையாளர்கள் என்றே குறிப்பிடவும் செய்துள்ளார். தமிழர்களின் இறுதித் தீர்வு மார்க்சியர் சுட்டும் சமூகப் புரட்சியில்தான் அமைய இயலும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையுள்ளது. என்றாலும் தமிழர்களின் நம்பிககையை அதி பெறமுடியாமல் போனதிற்கான காரணங்களையும் அவர் ஆராயாமலில்லை. "கொம்யூனிஸ்ட் கட்சிக்குத் தமிழர்களின் நிலையைவிட மொஸ்கவ்வின் நிலைதான் பிரதானம், தூதுவராலயம் ஒன்றை அது ஒர் இனத்தின் உரிமைகளின் செலவில் கூடப்பெறத் தயாராயிருந்தது". கைலாசபதியை மார்க்சியர் என்ற காரணத்தினால் அவர் எதிர்க்கவுமில்லை. இன்னும் சொல்லப்போனால்
தளைய சிங்கம் அவரை மார்க்சியராக இனங்காணவுமில்லை. “சிவில் சேவையில் சேர்ந்திருந்தாலோ அல்லது
ஆரம்பத்திலேயே சர்வகலாசாலை விரிவுரையாளராக வந்திருந்தாலோ இன்றைய இலக்கிய வட்டாரத்தில
கேள்விப்பட்டிருக்கக் சிஉட LDT L' GLITib” என்றுதான் கைலாசபதியை மதிப்பிடவும்
செய்துள்ளார். கைலாசபதியுடன் / இணைந்து செயல்பட்ட சிவத்தம்பியையும், ஏ.ஜே.கனகரத்னாவையும் கூட - 'துரைத்தன அறிவாளி வர்க்க பிரதிநிதிகளாகத்தான்' தளையசிங்கம் மதிப்பிடுகிறார். காவலூர் ராசதுரை, சில்லையூர் செல்வராசன் போன்றவர்களும் சந்தர்ப்ப விபத்தால் உள்ளே புகுந்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார். ஆக வாழ்வின் பொதுப் பின்னணி தோற்றுவித்த எழுச்சியின் அடிப்படையிலான இயக்கம் இவர்களுடையதல்ல.
தளை சிங்கத்தைப் பொறுத்தவரையில் இலக்கியச செயல்பாடு என்பது படைப்பு சார்ந்தது. கைலாசபதி எப்போதுமே எழுத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவரல்ல. தன்னை உயர்த்திப் படிக்கும் ஒரு குழுவைத் தோற்றுவித்து, <°g) சிதைவடையாமல் பாதுகாத்தது மட்டுமே அவருடைய இலக்கியச் செயல்பாடு. தலைவன் - தொண்டன் என்ற உறவு நிலை இலக்சியம் சர்ந்ததல்ல. அது அரசியல்
116
 

தொடர்பானது. இதன் இலக்கு அதிகாரமே. இதனால்தான் அறிவாற்றலில் தன்னைவிட மேலான ஏ.ஜேகனகரத்னாவை வெளியேற்றும்படி கைலாசத்திற்கு நேர்ந்தது. தன்னை உயர்த்துபவர்களுக்குப் பிரசுர வசதியைச் சாதகமாக்கி, தன் நிலையை உறுதிசெய்து கொண்டார். 1956க்கு முன்னமே முற்போக்க இலக்கிய மரபில் செயல்பட்டு, அதன் எதிர்கால நம்பிக்கையுமாகத் திகழ்ந்த எஸ். பொன்னுத்துரை அதனை உதறிவிட்டு வெளியேறும்படி நிர்பந்திக்க கைலாசபதிக்கு அவருடைய படைப்பாற்றலே காரணமாக அமைந்தது என்பதனையும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தளையசிங்கம் நிறுவுகிறார். "கைலாசபதியை விட கெட்டிக்காரர்களான கனகரத்னா, பொன்னுத்துரை போன்றவர்கள் மெதுவாக கட்சியிலிருந்து அதே ராஜ தந்திர முறையில் 2ܓܡܬܚ அகற்றப்பட்ட பின் அதன் வளர்ச்சிக்கு வே
உத்திரவாதம் கிடைத்து விட்டது. கடைசியில் ககைலாசபதி என்ற பெயர் தி கைலாசபதியின் பெருநிழலுக்கு மட்டும் உரித்தாகிவிட்டது." இங்க தான்
கைலாசபதி வளர்ச்சியைத் தடுக்கும் பேய் நிழலாக உருவெடுக்கிறார்.
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் சி நு ப ா ன்  ைம யி ன ர (ா ன
செயல்பாட்டையும் இலக்கியத்திற்கும் வாழ்வின் i பொதுப் பின்னணிக்குமான உறவு நிலையில் தான்..."
தாழ்த்தப்பட்டவர்களின் இலக்கியசங்
எதிர்கொள்கிறார். கைலாசபதியின் வருகைக்கு முன் ஈழத்தமிழ்ச் சூழலில் முற்போக்கு இலக்கிய மரபில் இயங்கிய படைப்பாளிகளுள் மிகப் பெரும்பான்மையோரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்தவர்களே என்னும் உண்மையை முன்வைத்து தளையசிங்கம் தன் பார்வையை விரிக்கின்றார். வாழ்வின் பொதுப்பின்னணியிலிருந்து அதற்கான நியாயமான காரணங்களையும் சுட்டுகிறார். சாதியை முன்நிறுத்தி இலக்கியத்தினை அணுகும் இப்போக்கு, சாதியை மறுக்கும் வெளிப்பார்வைக்கேனும்) சமகாலச் சூழலில் ரற்கத்தக்கது தானா என்ற ஐயம் எழக்கூடும். ஆனால் தளையசிங்கம் சாதியைக் குறிப்பது
பொதுப்பின்னணியிலிருந்து வேறான அவர்கள் வாழ்நிலையைச் சுட்டவே, "தாழ்த்தப்பட்ட சமூகநிலை ஆத்திரத்தையும், வெறுப்பையும்

Page 119
صبر
ட பிரதிபலித்தே தீரும் என்ற (6 உண்மையையும் தளையசிங்கம்
Lஇழக்கும் படியாகிறது”. ஆனால்
J புறக்கணிக்கவில்லை. அது
தூண்டி அதிகாரத்தை நாடச் செய்வது இயற்கை, அந்த அதிகாரத்தேடல் இல்லாவிடல் அதற்குப் பதிலாக நசிந்த குணமும், நக்கல் கலந்த பேச்சும், தருணத்துக்கு ஏற்ற மாதிரிச் சமாளித்துக் கொள்ளும் தந்திரமும் தாழ்நத்தப்பட்ட சமூகத்தின் ஆயுதங்களாக இருக்கம்”. தளையசிங்கத்தின் இச்சிந்தனை எளிதில் புறக்கணித்து விடமுடியாதது. இச்சிறு வட்டத்தினைச் சார்ந்த எஸ்.பொன்னுத் துரையிடம் இயல்பாகக் குடி கொண்டிருந்த அதிகார விருப்பம் ஒருவகையில் படைப்புத் திறனை முன்னெடுத்துச் செல்வது. மற்றொரு கோணத்தில் படைப்புச் சக்திக்கே எதிரானது. எஸ். பொன்னுச்சாமியின் இலக்கியச் செயல்பாட்டில் இரண்டையுமே தளைய சிங்கத்தால் எதிர்கொள்ள முடிகிறது. "ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெளிக்காட்ட இலக்கியம் பயன்படுத்தப்படும் போது, இலக்கியம் இலக்கியப் பண்பை
வாழ்க்கைச் சூழல் எதுவாக இருப்பினும் அது கலையில்
இலக்கியத்தின் கலைத்தன்மைக்கு 7 எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்பதே அவருடைய எதிர்பார்ப்பு.
எஸ். பொன்னுத்துரையின் படைப்புத் திறனில் மிகுந்த நம்பிக்கை வைக்கும் தளையசிங்கம் கைலாசபதியின் முற்போக்கையும், அதற்கெதிரான பொன்னுத்துரையின் நற்போக்கினையும் ஒருபோலவே காண்கிறார். இரண்டுமே நேர்மையான இலக்கியச்
செயல்பாடுகளுக்கு எதிரானவை. அதிகாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குபவை. அதிகாரத்தையும்
பிராபல்யத்தையும் கட்சிக்குள்ளாகவே அடக்க முயல்வது, அதற்கான எந்தவிதமான குறுக்கு வழிகளையும் ஏற்கத் தயாராக இருப்பது, சுய வழிபாடு நடத்திக் கொண்டு படைப்பின் மீதான விமர்சன எதிர்கொள்ளலை மறுப்பது என்பனவற்றையே இரண்டிற்குமான செயல்பாடாக தளையசிங்கம் இனங் காண்கின்றார். இவற்றுள் எதுவுமே இலக்கியம் தொடர்பானவையல்ல. எனவேதான் முற்போக்கு,
 

நற்போக்கு இவற்றிற்கிடையிலான மோதலை அதிகாரம் பிராபல்யம் தொடர்பானது என்ற முடிவிற்கு வருகிறார். பழமைவாதிகளுடன் கைலாசபதியை எதிர்க்க பொன்னுத்துரை கூட்டு சேர்வது சூழலின் அவலத்தை இன்னும் அதிகரிப்பதாக தளையசிங்கம் மதிப்பிடுகின்றார். தளையசிங்கமும் கைலாசபதியுடனும் முற்போக்குடனும் முரண்படுகிறார்தான். ஆனால் இவை இரண்டுமல்லாத மூன்றாவது கோணத்தினையே தேர்வு செய்கிறார். இது கலைஞனின் கோணம்.
முற்போக்கினையும் நற்போக்கினையும் சமமாகக் கருதினாலும் கைலாசபதியையும், எஸ், பொன்னுத்துரையையும் சமமானவர்களாக தளையசிங்கம் ஒருபோதும் கருதவில்லை. எஸ். பொன்னுத்துரையைச் சிருஷ்டித்திறன் கொண்ட
உண்மையான எழுத்தாளனாக மதிக்கும் * தளைய சிங்கம் அவரை வே மு ற் பே ா க் கி லி ரு ந் து வெளியேற்றியவர்களை மலட்டு வாத்திமாராகத்தான் காண்கிறார். சி அவரைப் பொறுத்தவரையில் பொன்னுத்துரை புதிய பரம்பரைக்குரிய Major எழுத்தாளர். "உலக இலக்கியத் தரத்தைத் தொடுவதற்கு ஒடிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன்" இவையனைத்தும் பொன்னுத்துரை மீதான வெற்று புகழ் மொழிகள் அல்ல. பொன்னுத்துரை படைப்பாளுமையின் பலம்..." பலவீனம் குறித்தான நீண்ட அலசலுக்குப் பின்வரும் முடிவுகளே.
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் ஒரு ஆரோக்கியமான இலக்கிய மரபின் தொடர்ச்சியை பாரதி புதுமைப்பித்தனிலிருந்து தொடர்வதாக தளைய சிங்கத்தால் குறிப்பிட முடிந்துள்ளது. பாரதி புதுமைப்பித்தன் என்ற இணைப்பு இந்தியத் தமிழ்ச் சூழலில் எழுபதுக்களில்தான் முன்வைக்கப்பட்டது. தளையசிங்கத்தின் கலைப்பார்வையில் அறுபதுக்களின் முற்பகுதியிலேயே இது விரிந்துள்ளது. * -
‘வாழ்வின் பொதுப் பின்னணிக்கிசைவான
இலக்கியம்’ என்னும் தளைய சிங்கத்தின் இப்பார்வையை இன்னும் அழுத்தமாகத் துலக்குவனவாகவே அவருடைய

Page 120
இக்காலகட்டத்து இலக்கியப் படைப்புகளும் அமைந்துள்ளன. 'ஒரு தனிவீடு' நாவலும் தொழுகை, கோட்டை, இரத்தம் போன்றச் சிறுகதைகளும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனதில் உருப்பெறும் குமறல்களை நுட்பமாக உணர்த்தி விடுகின்றன. பிரச்சாரகனின் ஒலமிடும் குரலோசையில் அல்ல. SR (5 கலைஞனின் மொழியில் உருக்கொள்ளும் அனுபவப்பதிவுகளாக.
தொழுகை கதையில் 14, 12 வயதான இரு பெண் குழந்தைகளின் தாயான செல்லம்மாள், கணவன் மார்கழி விரதமிருந்து கோவிலுக்குச் சென்றிருக்கும் அதிகாலைப் பொழுதில், பனையேறி முத்துவுடன் உடல் புணர்ச்சி கொள்கிறாள். கதையில் சித்தரிப்பு கொள்ளும் ஒரே நிகழ்வு இந்த புணர்ச்சிதான். பின்னணியில் அவ்வப்போது கோவிலிலிருந்து வந்து விழும் பாவைப்பாடல்கள், அதுவும் அவள் கணவரான ஆறுமுகம் மாஸ்டர் குரலில் - எல்லா
/>நிகழ்வுகளுக்கும் ஆன்மிகப் பரிமாணம் ஒன்றினை
ஏற்றியபடி
L - வாசகன் மனதில் செல்லம்மாள் மீது எவ்விதமான இழிவான உணர்வோ, அதன் காரணமான வெறுப்புணர்வோ எழாததைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒழுக்க உணர்வு >r॰ಣ್ಣ: வேலிக்கப்பால் வாசக மனதை நகர்த்திவிடப் படைப்பாளிக்கு முடிந்துள்ளதையே இதன் காரணமாகச் சுட்டவேண்டும். புணர்ச்சியின் முடிவில் முத்துவிற்குக் கூட அவள்மீது இழிவான எண்ணம் எதுவுமில்லாததை இங்கு குறிப்பிட வேண்டும். செல்லம்மாள் தங்கத்தால் செய்த அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றமாகவே காட்சி தருகிறாள். அவன் உடலும் புல்லரிக்கிறது. காதில் விழும் பாவைப்பாடலுக்கிசைவாக அவன் வாயும் எதையோ முணுமுணுத்தது. உடல் புணர்ச்சிக்குப் பின் ஆண் மனம் கொள்ளும் உணர்வல்ல இது. எதையோ முத்து நிறைவாகப் பெற்றுக் கொண்டதின் அடையாளம்.
செல்லம்மாளை எது தூண்டி விடுகிறது. முத்துவை அவள் சந்தித்ததே பத்து நாட்களுக்கு முன்தான். அதுவரை அவளிடம் இத்தகைய எண்ணம் எதுவும் இருந்ததில்லை.
 

வைரவர் கலை அவ்வப்போது வருவதுண்டு. அவருடனான பதினாறு வருட வாழ்க்கை ஒரு போலிதான். காலையில் எழுந்து குளிப்பது, படத்துக்கு பூசை செய்து கும்பிடுவது, அவர் பள்ளிக்கூடம் போகுமுன் சைவ சாப்பாடு ஆக்குவது, பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு விடுவது .” சடங்காகிப் போன இவ்வாழ்வில் சலனங்களுக்கும் இடமில்லைதான். முத்துவைச் சந்திப்பது வரை இவ்வாழ்வில், அவரிடம் குறைகளிருப்பதாக அவளுக்குப் பட்டதுமில்லை. முத்துவுடனான இந்த உறவில் முதல் பாலியல் முனைப்பு அவளுடையதே என்னும்போது ஏன் என்ற கேள்வியின் பரிமாணம் இனினும் கூடுகிறது. ஈழத்தமிழ்ச் சமூகம் கட்டிக்காத்த ஒழுக்கமரபு, சமூக ஏற்றத்தாழ்வு எல்லாம் ஒரு கணத்தில் இற்று நொறுங்கி மண்மேடாக மாறுகின்றன.
“தெறிச்சிருவ இளிக்கிறியே பேய் மாதிரி2
அமத்தியிற்று?”
"பனையில் ஏர்ற பழக்கம் போகாது விடு விளக்க வைக்க"
"விடு மூதேசி விளக்க வைக்க"
முத்துவைத் திட்டுவது செல்லம்மாளிற்குச் சுவைத்தது. அப்படித் திட்டும்போது செல்லம்மாளிற்கு தலையில் "கிறுக்கம்' ஏற்பட்டு விடுகிறது. இப்போது அவள் மனம் ஆறுமுகம் மாஸ்டரோடு அவனை ஒப்பிடுகிறது. அவள் அவரோடு பேச முடிவதில்லை. அவரிடம் நல் குணங்கள் மட்டுமே. மிகமிக நல்லலவர், மிகமிக கடவுள் பக்தி. இப்போது இவை தான் அவரிடம் அவள் காணும் குறை. "முத்துவில் அவளுக்கு ஏற்படும் இப்படியான ஒரு பைத்திய வேகத்தோடு வரும் வெறிகலந்த ஆசை மட்டும் அவர்மேல் அவளுக்க ஏற்படுவதில்லை" அவருக்கு முன் அவளுடைய நிலை இரந்து வாழும் பிச்சைக்காரியின் நிலைதான். கொடுத்து வாங்கும் சமத்துவ வியாபாரம் இருப்பதில்லை. ஒருநாளும் இப்படி விளக்கு எரிந்ததில்லை.
தாம்பத்திய வாழ்வில் கூட மனித
இயல்பையே மறைக்குமளவிற்கு மேல்பூச்சா? அவளுக்குள்ளாகத் துயின்று கொண்டிருந்த மனிதம் பெற்ற விழிப்பின் புறத்தோற்றம்தான் இது. இப்புறத்தோற்றத்தை விட காலம் காலமாய்த்
O
ܔܠ
リ

Page 121
துயின்று கொண்டிருந்த மனிதத்தின் எழுச்சி முக்கியமானது.
"அவரில எனக்கு உயிர் ஆனா உன்னிலதான் p எனக்கு ஆசை"
நான் மாட்டம் அவரட்டன்போ"
பேரம் பேசும் முத்து. பனையேறி
முத்து. தன் முக்கியத்துவத்தை இப்போதுதான் அவனால் உணர்த்த
முடியும். மகத்தான எழுச்சியின் முன் முத்து மனிதனாக நிற்கின்றான். 7 தன்னை உணரும் நிலை இது.
வாசக மனதில் செல்லம்மாள் வடிவில் இப்போது ஈழச் சமூகமே விகசித்து நிற்கின்றது. காலம் காலமாய் மேல்பூச்சு வாழ்வில் தன் உணர்வுகளை இழந்த சமூகம் வாழ்வையே வெறும் சடங்காக பாவித்த சமூகம். சிறுபுறத்தாக்குதலில் அது தன் பலவீனங்களைக் ^களைந்து எழத்துடிக்கிறது. அது தன்னை கி உணர்கின்றது. இங்கு வாழ்வின் பொதுப்
ட் பின்னணிக்கும் இலக்கியத்திற்குமான உறவை (6 உணர்ந்து கொள்ள முடிசிறது. GO) ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி எழுதப்பட்ட காலகட்டத்தில் தளையசிங்கம் முழுமையாக ஒரு கலைஞனாகவே இயங்கியுள்ளார். அவர் வகுத்துக் கொண்ட வாழ்வின் பொதுப்பின்னணிக்கு இசைவான இலக்கியம் என்னும் விமர்சன அடிப்படை, வாழ்வின் பொதுப்பின்னணிக்கும் கலைஞனுக்குமான உறவு குறித்தக் கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது. இதற்கான தேடல் தளையசிங்கத்தை அடுத்த காலகட்டத்தினை நோக்கி முன்நகத்தியுள்ளது. தளையசிங்கத்தின் வாழ்வின் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான குருவுடனான அவருடைய சந்திப்பு 1966இல் நிகழ்ந்தது. இதுமுதல் தளையசிங்கம் சிந்தனை மீதான குருவின் பாதிப்பினை அவருடைய படைப்புலக வாழ்வு நெடுகிலும் உணரமுடிகிறது. "எழுத்தாளராக இருப்பதற்கு எல்லாவற்றையும் துறந்து விடத் தயாராய் இருந்ததுண்டு. உண்மையான விரக்தி எனக்கு வருமென்றால் அது இலக்கியத்தைத் துறந்தால்தான் வரும் என நான் நினைக்கின்றேன். ஆனால் இலக்கியம் என்னில் வளர்த்த துறவு இலக்கியத்தையே துறக்கு மளவுக்கும் வந்துவிடும் என்பதை இப்பொழுது
S SS SS SS SS SS SSL S S S S S S S S LS SSS S SSL S SL S SSLSS S0 S SL S S LLL ه كم - - - -
 

தான் உணர்கிறேன்”. இதன்பொருள் தளைய சிங்கம் இலக்கியத்தைத் துறந்துவிட்டார் என்பதல்ல. மனிதகுல மேன்மையின் பொருட்டு இலக்கியத்தை விட மேலான ஒன்றைத்தேட இலக்கியத்தையும் துறக்கலாம் என்பதே. "எழுத்தை மட்டும் பெரிதாக நினைத்துக் கொண்டு பிறதுறைகளிலிருந்தும் பிற வேளைகளிலிருந்தும் விடுபட்டிருப்து எனக்குப் பிடிக்காத ஒன்றாக மாறிவருகிறது” எனத் தன்னுள் நிகழும் மாற்றத்தினை அவர் பதிவும் செய்துள்ளார். மாற்றுத் துறையாக தத்துவம் குறித்தான தேடல் அவருள் முனைப்பு கொண்டுள்ளது. என்றாலும்
ஒரு கலைஞனின் சிந்தனையாகவே அது இப்போதும் பரிமளிக்கிறது.
படைப்புச் சூழல் குறித்த, படைப்பாளிகள் AR குறித்த விமர்சனமாக ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி வே அமையும்போது, இலக்கியத்தின் 6) өр அடிப்படைகள் குறித்த விவாதங்களாக போர்ப்பறை இலக்கியக் கட்டுரைகள் சி அமைகின்றன. ஒரு வகையில் தளையசிங்கம் ஈழத்தமிழ்ப் படைப்புச் சூழலிலிருந்தே விடுபட்டும் நிற்கிறார். இலக்கிய அடிப்படைகள் குறித்த தெளிவிற்காக அவர் முன் வைக்கும் படைப்பாளிகள் கூடப் பெரும்பாலும் இந்தியத்
சாதனையாளர்கள். இலக்கியம் மொழி, நாடு,
தமிழ்ப் படைப்பாளிகளே. அல்லது உலகச்
இனம் கடந்து மனித பொதுமையுடன்..." நிலைகொள்கிறது என்ற உணர்வு அவருக்கு இருந்திருக்கலாம். கைலாசபதியைக் கூடப் பெரும்பாலும் அவர் பொருட்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். இலக்கியத்தை உலக அளவிற்கு எடுத்துச் செல்லும்போது, கைலாசபதி கண்ணில் படாத அளவிற்குச் சிறுத்து போயிருக்க வேண்டும்.
கலைக்கும் தத்துவத்திற்குமிடையிலான தொடர்பினைக் குறித்த தேடலைச் சமூக வளர்ச்சியில் கலைஞனுக்கான பங்கிலிருந்து துவங்குகிறார். கலைப்படைப்புக்கள் சமூகத்தின் பொதுச் சொத்துக்கள். சுயமனதின் குறுகிய எல்லையைக் கடந்து சென்றவை. அவை பொதுச்
சொத்துக்களாக மாறுவதனால் சமூகத்தின் பொது முன்னேற்றத்தைக் குறிப்பனவாகவும், துரிதப் படுத்துவனவாகவும் அமைகின்றன. 66)

Page 122
حلہ
G GOJ
へ千イ
சமூகத்தின் பொதுச் சொத்து என்பது ஏற்கத்தக்கதான தர்க்கமே. ஆனால் அவை பொதுச்சொத்துக்களாக மாறுவதினால் பொது முன்னேற்றத்தைக் குறிக்கின்றன, துரிதப்ப டுத்துகின்றன என தர்க்கத்தின் அடுத்த நிலையைக் கட்டமைத்துக் கொள்கிறார். தர்க்கத்தின் முதல்நிலையோடு உடன்படுபவர்கள் அதன் இரண்டாவது நிலையையும் ஏற்றுக்கொண்டாக வேண்டுமென எதிர்பார்க்கின்றார்.
இத்தர்க்கத்தின் அடிப்படையில் சமூகத்தின் பொது முன்னேற்றத்தில் கலைஞனின் பங்களிப்பினை ஏற்பதாக இருந்தால், கலைஞனின் முழுத்தொண்டுக்கும் வழிவகுக்கும் பார்வையையும் அதனை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்தினையும் தோற்றுவித்தாக வேண்டும். இதற்குக் கலையின் நோக்கம், சமூகச் சூழலின் போக்கு இவற்றினைக் குறித்த அறிவையும் பெற்றாக வேண்டும்.
சத்தியத்தைப் பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு, அறிவின் உதவி மூலம் வியா க் கி யான ப் படுத் தப்படும் போதுதான் கலைஞனுக்குப் பார்வை விரிவு ஏற்படுகிறது. இன்று நடைமுறையிலுள்ள ஒரே தத்துவம் , மார்க்சியமே. எனவே கலைஞன் மார்க்சியவாதியாக இருந்தாக வேண்டும். இல்லையெனில் அதனை வெல்லும் வேறு தத்துவத்தைத் தேடிக் கண்டுபிடிப்பவனாக
இருக்க வேண்டும்.
தமிழ்ச் சூழலில் மார்க்சியத் தத்துவத்தை ஏற்பவர்களை விட ஏற்க மறுப்பவர்களே திறமையான படைப்பாளிகளாக விளங்கும் நிதர்சன உண்மையையும் தளையசிங்கம் கணக்கில் கொள்கிறார். புதுமைப்பித்தன், ம்ெளனி, கநா.சு. போன்றவர்கள் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்ற தர்க்கத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார்.
எல்லாத் தத்துவங்களும் தத்துவங்களைக் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் காலம் சார்ந்த வெளிக்காட்டளே. காலத்திற்கேற்ப அதனைப் பயன்படுத்துபவர்கள் கூட அதனையும் மீறி சத்தியத்தில் தன்னை நிலைநிறுத்தியாக வேண்டும். இங்குக் கலைஞனுக்குத் தத்துவம்
LTL SS SS SS SSL SS LL LLL S LS SSLS S L S S SSS S SSS S LSS L S S S S S S S S SLS S S0SS LSS LSS S SS SS SSL S L
 

இன்றியமையாததாகிறது.
கலைஞன் ஒரு தத்துவத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டுமா? தத்துவ எல்லைக்குள் தங்களை அடைத்துக் கொள்வது கலைஞர்களைக் டி கொன்று விடுவதாகாதா? என்ற கேள்வியையும் தளையசிங்கம் எதிர்கொள்கிறார். படைப்பாளி களுக்கென்று இயல்பான பார்வைக் கோணம் அமைந்திருப்பதைச் சுட்டும் தளையசிங்கம், அப்பார்வைக் கோணம் ஆழமான தத்துவப் பார்வையாகவும், தர்சன வீச்சாகவும் இருக்கும் போதுதான் ஆழமான கலைப்படைப்புக்கள் பிறக்கின்றன என்கிறார். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும், அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்குமிடையிலான தரவித்தியாசத்தை முன்னிலைப்படுத்தி இதை நிறுவிவிடவும்
செய்கிறார். இதே அடிப்படையில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையுமAR ஒப்பிடும்போது ஜெயகாந்தன் வே
முதன்மை பெறுவதும் தவிர்க்க இயலாததாகிறது. தளையசிங்கம் பயன்படுத்தும் தர்க்கமே அவரை சி இம்முடிவிற்கு இட்டுச் செல்கிறது. து தத்துவ தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் ஏன் கலைஞர்களாக பரிமளிக்கவில்லை என்ற கேள்வியைத் கு
D
தளையசிங்கம் எழுப்பவில்லை.
போர்ப்பறையில் தளையசிங்கம் விவாதிக்கும் இரண்டாவது இலக்கிய அடிப்படை リ காலத்திற்கேற்ற வடிவம். ༄།
சிறுகதையின் செல்வாக்கு குறைந்து நாவலின் செல்வாக்கு வளர்வதற்கு சமூக மாற்றமே காரணம் 66 Lpח fiéj$hu இல்கAயக் கோட்பாடான GE Tafassmu எதார்த்தம் முன்வைக்கிறது. கைலாசபதி இதனை ஒரு சூத்திரமாகத் தொடர்ந்து முன்வைப்பதாகத் தனையசிங்கம் குறிப்பிடுகிறார். (போர்ப்பறையில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே கைலாசபதி என்னும் பெயர் சுட்டப்படுகிறது.) ஆனால் நாவலில் சிறுகதை என்னும் வடிவங்கள் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து துவங்கிய சிந்தனை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்பட்டவை. இவையே முதலாளித்துவ பொதுவுடைமை அமைப்பிலும் தொடர்ந்துள்ளது. இதிலிருந்து சமூக மாற்றங்கள் இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே மாறுதல்களைத் தோற்றுவிக்கின்றன.

Page 123
உருவத்தில் அல்ல என்ற முடிவிற்குத் தளையசிங்கம் வருகிறார். இதன் மாற்றுத்தரப்பாக சிந்தனை மாற்றமே உருவ மாற்றத்தினைப் பிரதிபலிக்கும் என்ற தர்க்கநிலையைக் கட்டமைத்துக் கொள்கிறார். தர்க்கத்தின் இரண்டாவது நிலையாக புதிய சிந்தனை மாற்றத்தை கலை-இலக்கிய-தத்துவ துறைகளில் முதலில் இனங்காண முடியும் என்ற முடிவினை மேற்கொள்கிறார்.
புதுயுகத்திற்கான சிந்தனை மாற்றத்தினை இந்தியத் தத்துவங்களை முன்வைத்து தளையசிங்கம் தேடலை நிகழ்த்துகிறார். அரவிந்தரின் தரிசனம்' இங்கு அவருக்குக் கைகொடுக்கிறது. பேரறிவு அறிவுக்குள் இறங்கி தன்னை வெளிக்காட்டும் நிலை. இலக்கியங்களில் தான் முதலில் உணரமுடியும். அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களை இது கொண்டிருக்கும். அறிவுவாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புக்கள் /Rஉள்ளுணர்வு செறிந்த கற்பனைக் யூ காவியங்களாய் இருந்தன. அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் புலன் உணர்வும் அறிவும் செறிந்த
(6 எதார்த்த படைப்புகளாய் அமைந்தன. ர்ெ வரப்போகும் புதுயுகத்தில் பிரபஞ்ச x/உணர்வும் எதார்த்த உணர்வும் இணைந்திருக்கும். தளையசிங்கம் இதனைப் பிரபஞ்ச எதார்த்தம் என்கிறார்.
பிரபஞ்ச எதார்த்தத்தையே தளையசிங்கத்தின் இலக்கியக் கோட்பாடாகக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஒரு காலகட்டத்தில் அவருள் இது செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆனால் இச்சிந்தனையே அடுத்த காலகட்டத்திற்குள் அவரை முன்நகர்த்தியு முள்ளது. இலக்கியத்தையே மறுக்கும் நிலை அது.
கலை, கண்டுபிடிப்பு - ஒத்துழைப்பு - ஒத்தோடல் விவாதிக்கப்படும் மூன்றாவது அடிப்படை விவாதிக்கப்பட்ட இம்மூன்று அடிப்படைகளிலும் இம்மூன்றாவது அடிப்படையே முக்கியமானது. இலக்கியப் படைப்புகளை முன்நிறுத்தி விவாதிக்கின்றார் இங்கு.
மேல்மனம், அடிமனம், பிரபஞ்ச மனம், அனைத்தையும் தாண்டிய பேரானந்தநிலை என மனித மனதை நான்கு நிலைகள் கொண்தாகத்
 

21
தளையசிங்கம் கட்டமைத்துக் கொள்கிறார். தளையசிங்கம் இதனை விஞ்ஞான ரீதியான கோட்பாட்டுத் தளம் என்கிறார். மேற்கத்திய விஞ்ஞானம் மனம் அடுக்குகளிலானது என்று மட்டுமே கூறுகிறது. அடுக்குகளின் எண்ணிக்கையில், குணங்களில் விஞ்ஞாளிகளுக்கிடையே கருத்து வேறுபாடும் உண்டு.
தளையசிங்கத்தைப் பொறுத்தவரையில் சமயத்திற்கு அடுத்தபடியாகக் கலையே அகத்தின் ஆழம் வரை செல்லும் தொழிலாகவும், தொழுகையாகவும் அமைகிறது.
கலை எழுப்பும் ப்ரவச நிலையே அதன்குறி. கனவும் பரவசநிலையை எழுப்பலாம். ஆனால் நிரந்தர பரவசம் அல்ல. எந்த அளவிற்கு நிரந்தர அடித்தள பரவச நிலையோடு தொடர்புடையதாக அமைகிறதோ அந்த அளவிற்குப் படைப்பு தரம்
வாய்ந்ததாக அமைகிறது.
கலைதரும் பரவசம் அடித்தளத்தினை அடைந்து மீண்டும் மேல்தளம் நோக்கித் திருப்பப்படும் போது to 6) மனிதனைச் செயல்படத்தூண்டும். இதுவே கலையின் உன்னத நிலை. தளையசிங்கம் முன்வைக்கும் இந்த இலக்கியச் செயல்பாட்டினை விளக்கிக் கொள்ள அவர் சுட்டும் இலக்கியத்தின் மூன்று அடிப்படை
நிலைகளைக் குறித்து அறிந்திருத்தல் அவசியம். N/
கண்டுபிடிப்பு என்பது சத்தியத்தின் மாற்றங்கடந்த நிலையைக் கண்டுபிடிப்பது. மேலும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும்போது மாற்றங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதையும் கண்டுபிடிப்பது.
ஒத்துழைப்பு என்பது சமூக-பொருளாதாரஅரசியல்-கலாச்சாரத் துறைகளில் தர்ம வளர்ச்சிக்கு உதவுவது.
ஒத்தோட மறுப்பது என்பது சமூக அமைப்பு தர்ம வளர்ச்சிக்கு உதவாது பிற்போக்கு கொண்டதாய் இருக்கும்போது படைப்பாளி அதனோடு ஒத்தோட மறுப்பது. புதுமைப்பித்தன், மெளனி, சித்தர் பாடல்களில் இம்மூன்றாவது நிலையைக் காண்கிறார். தளையசிங்கம் இதன் பொருட்டே இவர்களை அங்கீகரிக்கின்றார்.

Page 124
தளையசிங்கம் முன்வைத்துள்ளவை அனைத்தும் ஏற்கனவே தனித்தனியாக இலக்கியத்துடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டவைகள்தான். தளையசிங்கம் செய்வதெல்லாம் பொருளைப் புதிதாய் வரையறுத்து, ஒரு ஒழுங்கில் இவை அனைத்தையும் இணைப்பதுவே.
இம்மூன்று நிலைகளையும் படைப் பியக்கத்தில் உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதல்ல. புதுமைப்பித்தன், மெளனி போன்றவர்கள் உள்ளுணர்வின் உந்துதலுக்கு உருவம் கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர். உள்ளுணர்வின் இந்த உந்துதலாகவே காண்கிறார். அவரைப் பொறுத்த வரையில் கலைஞனல்ல அதுவே கலைஞனிடம் உந்திக் கொண்டு நின்று செயல்படுகிறது. ஆனால் இது அறிவுரீதியாக விளக்கப்பட வேண்டும். விளக்கப்படும்போதே நாகரீக வளர்ச்சி ஏற்படுகின்றது. இங்கு விமர்சனத்தின் தேவை எழுகிறது.
சிந்தனை தந்த இப்புதிய ஒளியில் ܓܡܬܐ2 க் தளையசிங்கம் சில இந்தியத் தமிழ்க் ட் கலைஞர்களை எதிர்கொள்கிறார்.
G மெளனியின் கதைகள் கண்டுபிடிப்பின் ஒரு 6O)J பக்கத்தினையே எட்ட முயல்கிறது. அறிவிற்குள் 2யங்காத உந்தலாகவும் தேடலாகவுமே நிற்கின்றன. சத்தியத்தின் தர்சனத்தை நோக்கிய உந்துதல்கள். இந்த உந்துதலைக் காட்டுவதற்கே மெளனி தன் கலைத்திறமையைக் கட்டுப்படுத்தியுள்ளார். வாசகன் அடையும் இனங்காண இயலாத தேடலின் அருட்டுணர்வு இதன் விளைவே. கூடவே ஒத்தோட மறுத்தலையும் எதிர்கொள்கிறான். மெளனியின் விமர்சகரான தருமு சிவராமு இந்த அ ரு ட் டு ன ர்  ைவ யே கலைக்கோட்பாடாக மாற்றுவதாக தளையசிங்கம் சுட்டுறார். இங்கு விமர்சனம் அறிவு ரீதியாகச் செயல்படவில்லை என மதிப்பிடும்
தளையசிங்கம் மெளனியின் கதைகளுக்குரிய ஆழத்தை 7 உணர்ந்தவராகக் கருதும் தளைய சிங்கம் அவரும் விமர்சன ரீதியாக
விளக்குபவராய் இல்லை என்கிறார்.
விஞ்ஞான யுகத்தின் அறிவுக் கூர்மை ஏறிய எழுத்து நடையையும், சமூகத்தை அவதானிக்கும் 1
 

போக்கையும், கதைகளை உருவாக்கும் திறனையும் புதுமைப்பித்தனிடம் காணும் தளையசிங்கம் ஜெயகாந்தனில்தான் காலத்திற்கேற்ற பார்வைப் பிரிவைக் காண்கின்றார். ஜெயகாந்தன் கதைகள் அடித்தள பரவசம் இல்லாவிட்டாலும் மேல்மன O எல்லைக்குள் தெளிவை ஏற்படுத்துவதாகக் கருதுகிறார். சமூகத்தை எவ்வாறு வளர்க்க வேண்டுமென்ற என்ற திசை காட்டும் போக்கும் அதற்கான தத்துவ ஆமோதிப்பும் ஜெயகாந்தனோடு ஒப்பிடும்போது புதுமைப்பித்தனிடம் இல்லாததை 6رe (B5 குறையாகவே மதிப்பிடுகிறார். மெளனியின் முழுக்கதையையும் ஜெயகாந்தனின் விழுதுக்கள் பின்னணியில் வைத்து பார்த்தால் மெளனியின் போதாமைகளை விளக்கிக் கொள்ள முடியும் என்றும் தளைய சிங்கம் தன் சிந்தனைகளை
முன்வைக்கின்றார். இந்தியத் தமிழ் விமர்சகர்கள் தளையசிங்கத்தின் மேல் கொண்ட கோபத்திற்கு C6) இதுவே உண்மையான காரணம். ஆனால் தளையசிங்கத்தைப் போல் இதை வெளிப் படையாகக் கூறும் நேர்மை அவர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. சுய பாதுகாப்பு குறித்த அவர்கள் உணர்வு இதை அனுமதிப்பதுமில்லை. ஆனால் தளைய சிங்கத்தின் பதிவுகள் அவராக வகுத்துக் கொண்ட சிந்தனை அடிப்படையைச் சார்ந்தது.
இச்சிந்தனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்பதில்லை. முரண்படவும் முடியும்.
வேண்டும்.
ܔܠ
தளைய சிங்கத்தின் இலக்கியப் பார்வை பெற்ற புதிய பரிமாணங்களையே அவருடைய இக்காலகட்டத்துப் படைப்புகளும் பிரதிபலிக்கின்றன. ஆழ்ந்த தத்துவத் தேடலுக்கு முன் தூக்கம் தரும் படைப்புகள் படைப்பின் கலைத் தன்மையையே குலைத்து விடுமளவிற்குத் தேடல் அவருள் தீவிரம் கொண்டுள்ளது.
புனை கதை வடிவங்களை மட்டுமல்லாது கவிதை வடிவையும் தளையசிங்கம் இக்கால கட்டத்தில்
கையாண்டுள்ளார். செவ்வியல் இலக்கியங்களைப் புதுப்பார்வைக்கு உட்படுத்தும்போக்கு புதுப்பரிமாணமாக அவர் படைப்புலகை அடைந்துள்ளது. கவிதையிலும் ?
புனைகதையிலும் அவர் இராமாயண உலகில்

Page 125
வெகுதூரம் பயணம் செய்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
'உள்ளும் வெளியும் அகல்யை தொன்மம் மீதான தளையசிங்கத்தின் புதிய வாசிப்பினை முன் வைத்துள்ளது. ஒரு வகையில் இது பு து  ைம ப் பி த் த னி ன் சாபவிமோசனத்தின் மீதான வாசிப்பும் én. L.-. புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் உலகியலின் முன் ஆன்மிகத்தின் வீழ்ச்சியை உணர்த்துகிறதென்றால் உள்ளும் வெளியும் ஆன்மிகத்தின் வெற்றியை) நிறுவுகிறது. புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தில் அகல்யை மீண்டும் கல்லானாள். இங்கு கல்லாக மாறுவது கெளதமனே. அகல்யைத் தன்னைக் கல்லாக்கிய
கெளதமரை கல்லாகவும் எல்லாவுமாக மாற்றிவிட்டுத் தானும் கனியாக இருந்தாள். கெளதமன் உண்மையைத் தனக்குள்
உணர்ந்தபோது மாயை. அகன்றுவிடுகிறது.
ஆன்மிகமும் வென்று விடுகிறது.
தளையசிங்கம் படைப்பில் தத்துவ
முடிச்சுகளுடாக நீண்ட பயணம்
மேற்கொள்கிறார் - வாசகமனம் பின் தொடர இயலாது இரைத்து மூச்சு வாங்குமளவிற்கு ’ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' محصے காலகட்டத்து படைப்புகளோடு ஒப்பிடும்போது தளையசிங்கம் என்ற கலைஞனை முன்னவைதான் இனங்காட்டுகின்றன.
மூன்றாவது காலகட்டமான "மெய்யுள் தளையசிங்கத்தை ஒரு சிந்தனையாளராகவே இனங்காட்டுகிறது. சிந்தனையாளரான தளைய சிங்கத்தின் சிந்தனையில் அவ்வப்போது இலக்கியம் தொடர்பான விஷயங்களும் இடம் பெறுகின்றன என்ற அளவிற்கே இலக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. சிந்தனை மாற்றத்திற்கேற்றதான வடிவம், கலைதரும் பரவசம் என்னும் விதைகள் தளையசிங்கத்தை அடுத்த படி டநிலை வளர்ச்சிக்கு உந்தியுள்ளன. "கலை இலக்கியமும் இனிச் சாகிற காலம் முழுவாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் பெரும் பரவசத்
தொழிலாகவும் வளரும்போது போலியான ஒரு
கலை இலக்கியம் என்ற தனிப்பிரிவு எதற்கு?”
தளையசிங்கத்தின் மனசாட்சியின் குரலான
12
 

நல்லசிவம் எழுப்பும் கேள்வி இது. இதையே கலை இலக்கியம் குறித்தான தளையசிங்கத்தின் இறுதி நிலையாகக் கொள்ளவேண்டும்.
பூரண இலக்கியம்' என்னும் புதிய இலக்கு நோக்கி அவர் சிந்தனை நகர்கிறது. மொழியில் போர்ப்பறை கட்டமைத்த தர்க்கங்கள் கழன்று விடுபட்டுள்ளன. கேள்விகளை முன்வைத்து தேடல் நீட்சி பெறுகிறது. இலக்கியம் எதற்கு என்ற கேள்வியோடு தேடல் துவங்குகிறது. "தரமான இலக்கியங்களும் கலையும் தான் உண்மையான நிரந்தர மன அமைதிக்கும் O6 ஒய்விற்கும்
பரவசத்திற்கும் வழி வகுக்கும்" இங்கு பொழுது போக்கு என்பது குறித்த கேள்வி இயல்பாக எழுகிறது. பொழுதுபோக்கு என்ற தேவை மனோதத்துவம் உறுதி செய்தபடி மனிதன் 2>
இன்னும் நோயாளியாக இருப்பதையே சுட்டுகிறது. பூரணத்தை மனிதன் அடையும் போது நோய் அகன்றுவிடும். இதற்கான மருந்து இலக்கியம்தான். காலம் காலமாக இலக்கியம் இந்திய மரபில் சமயத்தோடு வளர்க்கப்பட்டது இதனால்தான் என்கிறார் தளையசிங்கம்.
'கலை கலைக்காக', 'கலை கட்சிக்காக” என்பனவற்றையெல்லாம் முதலாளித்துவ சமூக அமைப்பின் நோய்களாகக் காணும்
தளையசிங்கம் இவற்றையும் நிராகரிக்கிறார்.
リ
"இன்றைய இலக்கியம் விஞ்ஞானமாகவும்U அரசியல் பொருளாதாரக் கோட்பாடாகவும் சுதந்திரமாகவும் உண்மையான கலையாகவும் அமையும். ஆனால் அது தன் தனித்தன்மையை இழக்காது" தளைய சிங்கத்தின் தேடல் இலக்கை எட்டிவிடுகிறது. மெய்யுள் என்னும் புதிய வடிவமாக உருவெடுக்கிறது.
போர்ப்பறையில் ஈழத்துப் படைப்புச் சூழலை முழுவதுமாகப் புறக்கணித்த தளையசிங்கம் மீண்டும் சூழலுக்குள் வருகிறார். ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தான் கண்ட முடிவுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகிறார்.
ஈழத்தமிழிலக்கிய ԼDՄ ւլ அவரைப் பொறுத்த வரையில் 1956க்கும் 72க்குமிடையே சில சாதனைகளையும நிகழ்த்தியுள்ளன.
கைலாசபதியின் சில கட்டுரைகளும் இவற்றுள் அடங்கும். பல முற்போக்கு மரபினைச் சார்ந்த படைப்பாளிகளின் சாதனைகள்.

Page 126
எஸ்.பொன்னுத்துரை இப்போது உலகத்தரத்தை { எஸ்போ-வை மேள்தள ஆசார மரபு கையாளாக மதிப்பீட்டு மாற்றம் அவருடைய தத்துவ சாயல் போக்கில்லாதவர்களை விடத் தத்துவப் போக்கு மேலானவர்கள். ஈழத்து ஆசார மரபுடனான எ
தளையசிங்கத்தின் மெய்யுளான கலைஞனின் கொள்கிறது. கதையாக, கட்டுரையாக, செய்தித் து ஒன்றாக பரந்து செல்கிறது. ஒரு வகையில் பாரதி வடிவம் மரபில் வழித்தோன்றல்களைத் தோற்றுள்
முழுமையான பார்வையில் தளையசிங்கத்தி சமூகத்தின் உட்குமுறலை அவரால் மட்டுமே அ துரத்தலின் விளைவே இந்த நீண்ட பயணம். ட அவரிடம் இனங்காண முடிகிறது. இடையில் கொள்வதில் தீவிரம் கொள்கிறது. இறுதியில் மு கொள்கிறது. மேற்கு தந்த வடிவங்களைக் கூட
தளையசிங்கம் தமிழ்ச் சூழலால் மறுக்க இம்மறுப்பிற்கான நியாயமான காரணங்கள் ஏ, விமர்சன மதிப்பீட்டில் கீழிறங்கக் கூடும். என்ற பெரிது. ஈழத்துப் படைப்புச் சூழலில் ஒரு தளையசிங்கத்தின் துவக்ககால புனைகதைகள் இ
கொள்ளும்.
அவன் ஒரு பொழுது கழிவதற்கு முன் வெய்யிலும் வியர்வையும்.
ஒரு பொழுதென்றால் அரைப்பிறப்பு
மாதிரி, அரை வாழ்க்கை மாதிரி, அரை இறப்பு மாதிரி.
ஊர் வெய்யில் வெக்கையிலும் குண்டுகள் விழுந்து, நிலம் குழி பாய்ந்து, சனங்கள் அல்லோலகல்லப்பட்டு உயிரையும் உயிர் நாடிகளையும் அவனிவனிடமெல்லாம் விழுந்து மாய்ந்து நிலை நிறுத்தித்தலையை நிமிர்த்தமுன்னர் - ஒரு பொழுது கழிந்தே போய்விட்டது.
இப்போது குளிர் இந்த ஆற்றங்கரை,
 

ாட்ட முயலும் கலைஞனல்ல. எழுத்தாற்றல் உள்ள பயன்படுத்திவிட்டது. எஸ். போ குறித்தான இந்த இன்மையின் காரணமாக அமையலாம். தத்துவ
க் கொண்டவர்கள் தளையசிங்கத்திற்கு இப்போது ஆ.
ஸ்.பொ. கூட்டுறவு மற்றொரு காரணமாகலாம்.
ா தாகம் ஈழத்துப் படைப்புச் சூழலையே தளமாகக் ணுக்காக, கவிதையாக இவை அனைத்தும் அல்லாத பின் ஞான ரதத்திற்கு ஒப்பாகக் கூறவேண்டும். புதிய விக்காத வரையில் தெருவடைச்சான் சந்துகளே.
ன் நீண்ட பயணம் வியப்பூட்டுகிறது. ஈழத்தமிழ்ச் ன்று கேட்க முடிந்துள்ளது. ஒரு வகையில் அதன் யணத்தின் துவக்கத்தில் மேற்கத்திய மனதைத்தான் அது கீழை தேய தத்துவங்களை அரவணைத்துக் ழுமையான கீழ்த்திசை மனமாகத் தன்னை மாற்றிக் உதறிவிட முற்படுகிறது.
ப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு கலைஞன். துமில்லை. அவருடைய பிற்காலப் படைப்புகள் ாலும் இலக்கிய உலகில் அவர் சாதனைகள் மிகப் மரபைத் தோற்றுவித்த பெருமை அவருடையது.
ன்றும் நாளையும் அப்பெருமையைத் தக்கவைத்துக்
Ο
៦G 5@៦
சிறீதரன்
அவள் இடையில் பட்டாம் பூச்சிகளின் வண்ண இறக்கைகள் தோரண தாரணம். புழுவாகியிருந்ததில் இருந்து பறக்கத் தொடங்கும் வரையிலான நடுவிலிருக்கும் பூரண முயற்சியில் பொழுது கழிந்து போகிறது. போய் விட்டது.
பட்டாம் பூச்சிகள் புதுக் காட்டில், புது மலர்களில் இறங்கியாயிற்று.
அவன் பட்டாம் பூச்சியா?
அவ்வளவு மென்மை உங்களுக்கு இருப்பதாக யார் சொன்னார்கள்?
அவள் குறுகிய காலத்தில் நடந்து போன Lurf GOOT TLD மாற்றத்தைச் சொல்ல

Page 127
முயற்சிக்கிறயத்தனத்தில் வெறுமே எழுகிற ஒப்புவமை,
அவன் உண்மைகள் யாவுமே ஒப்புவமைகள்தான். ஒப்புவமை சொல்லும் போது சரியாகச் சொல்ல வேண்டும்.
பட்டாம் பூச்சிகள் மட்டுமில்லை. குரங்குகள், தேவாங்குகள், யானைகள், காண்டா மிருகங்கள், புலிகள், கழுதைப்புலிகள்,
சிங்கங்கள், குதிரைகள், கழுதைகள், எல்லாம்தான் வந்து புதுக்காட்டில் இறங்கியிருக்கின்றன.
அவள் மனிதனுக்கு யாரையாவது கேவலப் படுத்தத் தோன்றும் போதெல்லாம் எழுகின்றன மிருகப் பெயர்கள். சித்திரம் வரைய வைத்திருக்கிற வண்ணக் குப்பிகள் மாதிரி. மிருகங்கள் நல்ல வண்ணங்களில்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது.
அவன் சில வேளைகளில் பலஸ்தீனியன்,
2<சோமாலியன், ருவாண்டன், தமிழன், குர்த்
மற்றும் தென் அமெரிக்கன்! 胡 DI)! 占
கையில் ஒரு கண்ணாடியுடன் மேலே இருந்து பார்த்தால் யார் யாரென்று தெரியவில்லை. இந்த விவரணைக்கெல்லாம்
திெ கண்ணாடி எதற்கு?
ܔܠ
محصے
இது இந்த ஆற்றின் நீரோட்டத்தை நதி மூலத்திலிருந்து விவரிக்கிற மாதிரியான விவரணை இல்லை. ஆற்றின் கரையில் இருந்து கொண்டு ஆற்றின் ஒட்டத்துக்கு லம்பமான ஒரு கற்பனைக் குறுக்குக் கோட்டைத்தாண்டும் நீரோட்ட விவரணை. நீர்த்துளிகள் எந்தத் திசையில் எவ்வளவு வேகத்துடன் ஒடுகின்றன என்கிற விவரணை.
அவள் குறுக்குக் கோட்டை எங்கே கீறுவது?
அவன் இங்கேயும் கீறலாம் அங்கேயும் கீறலாம். இப்போது இங்கே கீறினால் இந்த நேரத்தில் இங்கே நடப்பதுதான் தெரியும். இப்போது அங்கே கீறினால் இந்த நேரத்தில் அங்கே நடப்பதுதான் தெரியும். இங்கேயும் அங்கேயும் வெவ்வேறு நீர்த்துளிகள். இந்த இடம் அந்த இடமில்லை. இங்கே இப்போதிருப்பது நேரக்கோட்டில் முன்னர் அங்கே இருந்தது.

அவள் நேரத்துக்குக் கோடு கீறலாமா? ஆறு எப்படி ஒடுகிறது?
அவன் ஒரு நீர்த்துளி முன்னாலிருக்கிற நீர்த்துளியை, அது மெதுவாகப் போகப் பார்த்ததென்றால், பின்னால் இருந்து தள்ளுகிறது. முன்னால் போவதை ஆற்று மணல் தடுத்திருக்கலாம். பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. எல்லாம் சரிவினால் ஏற்படும் தோற்றப்பாடுதான். சரிவான பாதையும் புவியீர்ப்பும் சேர்ந்தால் நீர்த்துளியின் வாழ்க்கை ஒட்டந்தான். தறிகெட்ட ஒட்டம்.
அவள் தள்ளுகிறதென்ன? தள்ளப் படுகிறது என்ன? பொழுது கழிந்து விடுகிறது.
அவன் புவியீர்ப்பில் சேர்ந்து விழுவது ஊஞ்சலாடுவதைப் போல், நீர்த்துளிகள் ஒன்றாகவும் போகின்றன. தெறித்துப் பிரிந்தும் போகின்றன.
حصص அவள் சிறுதுளி பெரு வெள்ளமாய்ச்
சேர்வது தனித்தனியாகவா அல்லது மனமார ஒன்று சேர்ந்தா?
அவன் எல்லாரும் ஆதிகாலம் தொட்டு தி அடிபட்டுக் கொண்டததுதான். J
நேரக்கோடு மனக்கோடு. நேரக் கோடு ன் போடும் வித்தை தெரிந்து விட்டால் பின்னென்ன? 'வடகோடியங்குயர்ந்தென்னே சாய்ந்தாலென்னே வான் பிறைக்குத் தென்கோடு தான்.
محصےN
பின்னால் போகும் நீர்த்துளி, ஒட்டப்பாதையென்று ஒன்றிருந்தால் நேரக் கோட்டிலும் பிந்தியதுதான். ~&
அதுதான் விதி!
நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி விடுகிறேன். நேரக் கோட்டைப் பிடித்துக் கொள். பிடித்தாயென்றால் முன்னாலும் தெரியும் பின்னாலும் தெரியும்.
ர் நேரச் ೫ · ಆಳ್ವ هn( MP
J, JoJo
உடலியல், மறு பாதி இ வி வு ல  ைக க் கொள்ளும் சகல பெளதீகமும்தான். ;:

Page 128
அவன் உடலியல் என்று சும்மா விட்டுவிட்டால் அதுவும் பெளதீகமாய்ப் போய்விடும். 'விடமுண்டும் சாகாமலிருக்கிற நிலை உன்கையிலேயே இருக்கிறது.
அவள் இல்லை! இல்லை! உயிர் இருக்கிறதா இல்லையா?
அவன் உயிர் இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்குப் பாதியாவது நேரக் கோடு போடத்தெரியும்.
அவள் கிடங்குகளில் ஒன்றாயிருந்தோமே. உயிர் தப்பினோமே. நேரக் கோடு போடத்தெரிந்ததா?
நேரக் கோடெது? குறுக்குக் கோடெது? அவன் ஆற்றின் கரையோரமாக நடந்து வரும் போது பொழுதும் கழியும், ஆங்காங்கே குறுக்குக் கோடும் போட்டுக் கொள்ளலாம்.
அவள் அதை விடு. ஒரு பொழுதிற்கு Lமுனனா. 2 朝 அவன் குறுக்குக் கோடுகள் பற்றி உன்னிடம் ஒரு நாள் சொல்லத்தான்
போகிறேன்.
அவள் கூட இருக்கும் பிக்கல் as பிடுங்குகளுக்கும் சொல்லிப்பார்ப்போமா?
ܐܔܠ
அவன் சரி தாளத்தைப் போடு!
நேரக்கோடு தெரிய வரும்.
அவள் ஒரு ஆவர்த்தனமாவது முடிந்தால்தானே போடலாம்.
அவன் வக்கிர நடையில் உனக்கு ஆவர்த்தன முடிவு தெரியவில்லை. நன்றாகக் கவனி.
அவள் மணிக்கூட்டின் கைகள போலச் சுற்றின படியே இருந்தால் முடிவென்ன? இறுதியென்ன?
அவன் தாளம் தொடரும் .
 ெவ ளி டே ய
உண்மையான உலகம்.
இருள். கசப்பு. வெறுப்பு.
 
 
 
 

* நீ வந்து அமைந்ததற்கும் இருபொழுதிற்கு முன்னால் நடந்தது காரணமாகுமா?
அப்போதுதான் இருள் கவிந்தது. கையிலிருந்த வாழ்க்கைக் கடிவாளம் தொலைந்தும் போனது. தொலைந்து போனதும் தெரியாத ஒரு பருவம்.
அதற்குப் பிறகு எங்கோ முடியுமாக அமைந்து போன ஒரு சூழல்.
அவள் என்ன பிலாக்கணம்? நடக்க வேண்டியதெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது?
அவன் எல்லாம் நடக்கிறதுதான். ஆனால் மற்றவர்கள் என்னைவிட சந்தோஷமாக இல்லையா?
அவள் இல்லை இல்லை . எல்லாருக்கும் வாழ்க்கைக் கடிவாளம் ஒரு நேரக்கோட்டின் ஒரு புள்ளியில் தொலைவதுதான்.
அவன் அந்த இருளுக்குள் போக LDITLʻ GBl L6öT.
உன்னிடம் சொல்லமுடியாத மன அறை உள்ளே இருக்கிறது.
அது பலவித வண்ணங்களும், நல்ல வாசனைகளும், மதுர இசையும், நல்ல அழகானப் பெண்களும், அறிவு பூர்வமான விவாதங்களும், கடவுள் வந்தும் போயும் கொண்டிருக்கிற உலகம். எல்லாச் சுகமான விஷயங்களும் அங்கே உண்டு. வக்கிரம் இல்லை. நடை பேதங்கள் குறுகிய காலச்சக்கரத்துள் அமைந்து போன லயமான உலகம். ஒளியோ ஒளி
அவள் பார்த்தாயா? எனக்கே சொல்ல மாட்டேன் என்கிறாய். சந்தோஷமாக இருந்தால் சரி. எனக்கு எல்லாம் தெரியும். தொலைந்து போ!
அவன் குறுக்குக் கோட்டில் நீர்த் துளிகளும் நடப்பதைப்பார்.
அவள் நீர்த்துளிகள் கற்பனா சக்தி இல்லாதவை.
அவன் ஆ! அங்கேதான் நிறுத்திக்கொள் என்கிறேன். உன் பிலாக்கணமும் தேவையில்லாதது.
S S S S S S C S Y S 0 S S0LSS SLSS SLSS S L0LS S LL S L0LS S L S 0 S S0L S S SLS S SL S S L S LS S SL SS SLS S S S LSS S S
ܓܡܧܗ2
胡
pi
J ன்
ഇി

Page 129
அளவில்லாத சந்தோஷம் அடைய முடியும். ஆனால் நேரக் கோட்டில் பின்னால் போகாதே. குறுக்குக் கோட்டை ஆதியில் கீறாதே. சந்தோஷம் என்னோடேயே முடிந்துவிடும். அது உண்மையாகிவிடாது. எதுவும் உண்மையாவதற்கு இரண்டு பேராவது வேண்டும். இருள் பாதியில் உள்ள தொடர்புகள் இந்த சந்தோஷத்தை அடைய விடா,
அதற்குத்தான் சொல்கிறேன். நேரக் கோட்டைப் பிடித்துக்கொள். நேரக் கோட்டைப் பிடிப்பது பின்னால் போவதற்கல்ல. குறுக்குக் கோடு கீறுவது நேரக் கோட்டின் முன் பாதியிலல்ல.
அவள் என்னதான் நடந்தது? சொல்லித் தொலையேன்.
அவன் நேரக்கோட்டில் பின்னால் போய் ஆற்றங்கரையில் ஒரு குறுக்கக்கோடு போட வேண்டும். அதற்கு சக்தி நிறைய வேண்டும். Tசிறு வயதில் எல்லாமே பெரிதா அல்லது வீடு உண்மையாகவே பெரிதா. ஞாபகமில்லை.
Ol ஒரு சமையல்காரன். அதற்கு மேல் க என்னத்தைச் சொல்ல?
தை இப்போது கனடா, அதற்கு முன் */கொழும்பு.
அதற்கு முன் யாழ்ப்பாணம்.
தையிலிருந்து வைகாசி வரை வெளியில் காற்று வீசாது. மின் விசிறியும் மாமர நிழலும் ஒரளவில் உதவி. யுத்தம் வந்ததன் பின்னர் ஒன்றும் ஞாபகமில்லை.
சமையல்காரனை மறக்க முடியாது.
அவள் அதை எத்தனை தரம் சொல்வாய்? அங்கே யுத்தத்தில் அவதிப்பட்ட பெண்களை விடவா உனக்கு ஏதாவது நடந்தது? தற்குறித்தனம் கொள்ளாதே!
அவன் நினைவுகள் போகவில்லை யென்றால் நான் என்ன சொல்ல முடியும்? அங்கே இருந்த வெய்யிலும் வெக்கையும் வியர்வையும் .
இப்போது குளிர் வீட்டில் என்ன குளிர்? 5 வெளியில் தான். வீட்டில் தர்க்கச் சூடும் பிள்ளைகளை அடக்கும் யுத்தச் சூடும் தனி.

தற்குறித்தனம் எனக்கு வந்து அமைந்து போனது அந்த பலாத்காரத்தினால்தான். சமையல்காரனை விட இன்னொருத்தன் இருந்தான். சமையல்காரன் தான் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறான். வீட்டில் ஒருத்தரும் இல்லாத நேரத்தில் நடந்த பலாத்காரம். அந்த
விபரம் எல்லாம் கேட்காதே. வயது பதின்மூன்றா பதிநாலா? ஞாபகமில்லை. அந்தச் சமையல்காரனுக்குக் காதல்
விவகாரங்களும் இருந்தன. காதல் கடிதம் எழுதுவது, சமிக்ஞைகள் செய்வது, பெண்களைத் துரத்துவது இதெல்லாம் வேறு நடந்தது. நாய்களுக்கு முறுக்கேறுவதில்லையா? அது மாதிரி.
தற்குறித்தனம் இதனால் மட்டும் வருமா? அன்றிலிருந்து எனக்கு நடந்த மாற்றங்கள் இன்றுதான் புரிந்த மாதிரி இருக்கிறது. தாளம் பிசகி விட்டது.
அவள் உன்னுடைய தோல்விகளை, யெல்லாம் வெகு சுலபமாக தருக்கப்படுத்திக் கொள்கிறாய். நீ ஒரு கையாலாகாத மனிதன். தாளத்தில் நடைமாற்றம் தெரியவில்லையா உனக்கு?
அவன் உனக்கு எத்தனை தரம் விளங்கப்படுத்துவது? நான் அப்படி ஆக்கப் பட்டிருக்கிறேன். என்னை விளங்கிக்கொள்ள 6 நீ தெண்டிப்பதில்லை. என் மன அறைக்கு நான்Y ஒடுவது அதனால்தான். தாளம் முற்றாகவே தவறிப் போனால் இப்படி ஒடத்தான் வேண்டும் .
அவள் நீ அங்கு ஓடுவது தெரியும். ஆனால் நான் - இந்தப் பூமியில் காலை ஆழவே ஊன்றியிருக்கிறேன். உனக்கு வேலைக்குப் போய் வந்து சம்பளத்தை என்னிடம் கொடுப்பதைத்தவிர என்ன தெரியும்? இந்தக் குடும்பம் ஒடுவது என்னால், ஆற்று ஒட்டம் என் கவலை. இந்தக் குடும்பம் ஒடுவதைப்பற்றி நான் வெறுமே கவலைப்படுவதில்லை. ஆற்றின்
ஓட்டத்தை இயக்கும்
MP
ஈர்ப்புச் சக்தி மாதிரி நான். நான்
(e é
 ேந ர க் கே ரா டு போடுவதில்லை. நான் ஆற்றின் கரையில் நின்று பார்க்கும்: 器、智

Page 130
மனிதனும் இல்லை. வெட்டிப் பேச்சு எனக்குத் தேவையில்லை.
அவன் ஏன் திரும்பவும் உலகுச்
சாக்கடையில் காலை வைக்கிறாய்? திரும்பி
இங்கே வா. இது ஒரு மாயக் கம்பளம். எங்கும் போகலாம். ஈர்ப்புச் சச்தியால் நடக்கும் எல்லாவற்றையும் பார்க்கலாம்.
அவள் இதுதான் உன் பிரச்சனை. மாயக்கம்பளத்தில் போவது உனக்கு நடந்ததற்கு முன்னரே உனக்கிருந்த பழக்கம். திரும்பியும் சொல்கிறேன். நீ ஒரு கையாலாகாத மனிதன்.
அவன் நீ தனியே இருந்துகொள். நான் போகிறேன்.
அவள் உன்னால் போகமுடியாது. உனக்கு அதற்குச் சக்தியில்லை.
அவன் சக்தி இல்லை என்று சொல்லாதே. எல்லாம் மன விளையாட்டு
اس صبر
Nஎன்று தெரிந்தபின் நான் போவதால் வரும்
ரி விளைவுகளின் வெறுமையை உணர்ந்து
அதைச் செயல்படுத்த முனைவதில்லை.
அவ்வளவுதான். எனக்குச் சக்தில்லையென்று க் சொல்கிற உனக்கு ஒரு பெண்ணின் மென்மை தை கிடையாது என்று சொல்லட்டுமா?
ܔܠ
அவள் எனக்கு மென்மை இருந்தால் என் محصے வாழ்வில் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாய்.
அவன் என்ன தூரம் வந்திருக்கிறேன்? என்ன வாழ்வு?
கண்ணாடியும், தூர தரிசனமும், விண்ணையும், மண்ணின் துகள்களையும் பார்க்கக் கூடிய சக்தி நசிவினால் வந்தவை தான். சக்தியும் சக்தியின்மையும் உன் பிரமை. உன் பெண்மைத் தனத்தின் பிரகடனம். இந்த வாழ்க்கையின் இருத்தலே அசைக்க முடியாத நிலை. மற்றவையெல்லாம் வெறும் சக்கைதான்.
அவள் grffl.
வீ ட் டி ற் கு ப்  ேப ா வே r ம் ,
ரசா ப் பி டா ம ல் AN g) (5 t u t u T ?
பிள்  ைள க ளு டன்
 
 
 
 

அவன் உன்னை எங்கு முதலில் பார்த்தேன்? எப்படி கல்யாணம் நடந்தது? இதெல்லாம் உனக்கு ஞாபகமிருக்கிறதா?
அவள் அதுவா முக்கியம்? எப்படி என்னை அடக்கப் பார்த்தாய்? எப்படி என் வாழ்க்கை நசிந்து போனது? எனக்கு ஒரு விடிவுமில்லை. அதுதான் முக்கியம்.
அவன் இதற்குத்தான் சொல்கிறேன் என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன் இருந்த உன் நிலையை யோசித்துக்கொள் என்று.
அவள் உன் சவுகரியம் போல வாழ்க்கையின் விபரங்களுக்குள்ளும் தத்துவப் போர்வைகளுக்குள்ளும் போய் வந்து கொண்டிருக்கிறாய்.
அவன் நீ முற்றாகவே உன் சுயத்தில் மூழ்கியிருக்கிறாய். ஏன் நீ உன் வாழ்வில் என்னால் அமைந்து போன மேன்மைகளை எல்லாம் சிறுமைப்படுத்தி நான் கொடுமைப் படுத்துகிற மாதிரி சொல்லிக் கொண்டேயிருக்கிறது மன நோய் இல்லையா? தத்துவப் போர்வைகளுக்குள் என்னால் போக முடியுமானதென்பதால்தான் இந்த வாழ்க்கை ஒடுகிறது.
அவள் இந்த வாழ்க்கை ஒடுவது என் நிதர்சனப் போக்கினால்தான். உன் ெ தத்துவத்தினால் என்று சொல்லாதே! ~ശീ
அவன் என் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னேனே உன் வாழ்க்கையைப் பற்றி எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?
அவள் உனக்குக் கேட்கிற தைரியம் வந்த அன்று சொல்கிறேன்.
அவன் இப்போது கேட்கவில்லையா? நீ சொல்லமாட்டாய். எனக்குக் கேட்க தைரியம் இல்லையென்று சொல்கிறாயே உனக்கு உண்மை பேசத் தெரியுமா?
நீ எல்லாரையும் ஆட்டிவைக்கப் பார்க்கிறாய்.
அவள் உனக்குக்கற்பனை கூடிவிட்டது.
எனக்கு உன்னுடனான வாழ்விற்கு முன்னர் கதையொன்றும் இருந்ததில்லை.
அவன் இந்தக்கதையை நான் நம்பத் தயாரில்லை. ஆனால் இப்போது இந்த
0 S L S S0 SL S LS S L0 S SLLLSS S 0S 0 S S SS L S S L L S L L L L S S S L L 0 S LS LL SSL

Page 131
வாழ்க்கையில் நீ என்னுடன் இருப்பதைப் பற்றிக் கவலைப் படுவதுதான் தருக்க பூர்வமானது.
அவள் உன் சந்தேகங்களெல்லாம் உன் கையாலாகாத்தனத்தின் பிரகடனங்கள்.
அவன் அப்படியிருந்தால் எனக்குக் கோபம் வந்திருக்கும். இப்போதான வாழ்க்கை ஒட்டம் மட்டுமே உண்மையானது. இந்த ஆற்றைப் பார். இந்தக் கோட்டிலிருந்து நூறு அடி எதிரோட்டமாகவும் நூறு கீழோட்ட மாகவும்தான் உன்னால் பார்த்துக் கொள்ள முடியும். இந்தக் குறுக்குக்கோட்டில் ஒடும் ஒட்டம்தான் நிதர்சனம். இதற்கு மேலான உண்மைகளைப் பற்றிச் சொல்வதெல்லாம் வெறும் கதைகள்தான். நீ என்னோடு வாழ்கிற வாழ்க்கைதான் நிதர்சனம். எவனோ.
அவள் அங்கேயே உன் வாயைப் பொத்திக்கொள். வெறெவனும் என் வாழ்வில் குறுக்கிட்டதில்லை. -
حصصبر
அவன் இதால்தான் எனக்கு நடந்ததைப் பற்றி உணர்வுச் சிலிப்பொன்றும்
உனக்கில்லாமல் இருக்கிறதோ தெரியவில்லை.
தை \/
நீ என் மனைவியென்று உன்னிடம் சொல்லி ஆறுதல்படவும் முடியாமல் இருக்கிறது.
அவள் இவ்வளவு பேசுகிறாயே, என் தூய்மையையெல்லாம் என்னை மாதிரியான வரிடம் பறி கொடுத்துவிட்டேன் என்று எப்போதாவது புலம்பியிருக்கிறேனா? தூய்மை பெண்களுக்கு மட்டும்தானா? அந்த மாதிரி ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று பயந்துதான் என் முன் வாழ்க்கையை ஆராயப் பார்க்கிறாய். நீ ஒரு களங்கப்பட்டவன் என்று சொல்லியிருக்கிறேனா? என் மனக் கோட்டில் இருந்து அந்தச் சம்பவத்தைக் களைந்துவிடு. நீ எனக்குச் சொல்கிறாயே இந்த ஆற்று ஓட்டத்தை இந்தப் புள்ளியிலிருந்துதான் பார்க்க முடியும் என்று. அதை நீயும் செய்யேன்.
அவன் மனத்தில் ஒரு வடு. அதற்கு மருந்து உன் அன்பில்தான் இருக்கிறது. நீ அதைக் கொடுக்க மறுக்கிறாய்.
அவள் மனப் புண்களுக்கெல்லாம் மருந்தை வெளியே தேடாதே! புண்படக் கூடிய மனமுள்ள ஆண்களுடன் பெண்கள் வாழ (Մ)ւգ-աո Ցl.

அவன் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று வேறு சொல்லிக் கொள்கிறாயே.
அவள் உன்னைத தூண்டவும் உன் பலகீனத்தினால் என் வாழ்க்கையில் வரும் நசிவை எதிர் கொள்ளத் தேவையான சக்தியைச் சேகரித்துக் கொள்ளவும்தான்.
அவன் நான் பலகீனமானவன் என்று நீ சொல்வது என் மனத்தில்தான் இருக்கிறது. என் மனப்பலத்தினால்தான் இவ்வளவு தூரம் வாழ்க்கையில் ஓடி வந்திருக்கிறோம். மனத்தைப் புண்படுத்தக்கூடிய பெண்களுடன் ஆண்கள் வாழ முடியாது. அது பலகீனமில்லை. உன்னை உதாசீனம் செய்தபடி வாழ்க்கையை நடத்தும் மனப்பாங்கு எனக்கில்லை. அது என் கலாச்சாரம். அதைப் பலகீனம் என்று சொல்லாதே.
அவள் என்னை உதாசீனம் செய்தபடி நீ நடந்துகொள்வது கூடத் தெரியாமல் 7^ இருக்கிறாய் நீ.
அவன் உனக்குத் தற்குறித்தனம் றி இல்லையா?
அவள் தற்குறித்தனம் அமைவதற்கு J வாழ்க்கையில் ஏதாவது நசுக்கல் நடந்திருக்க வேண்டும் என்றால் அது உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதுதான். என்னை முற்றாகY நீ அழித்துவிட்டாய்.
அவன் என்னட்ை பலகீனமானவன் என்று சொல்கிறாயே என்னதான் நீ என்னை ஆட்டிப்படைத்தாலும் tổ என்னை அழித்துவிட்டதாக நான் ஒரு பொழுதும் சொன்னதில்லை.
அவள் முட்டாளே! நான் உன்னை அழித்து விடவில்லை.
அவன் அடிமுட்டாளே! நானும் உன்னை அழித்துவிடவில்லை.
- ள் .6 991ے அப்படியென்றால் C) f அது கவலையாக W − ،حس { இருக்கிறதா? pu
அவன் நீ சும்மா திட்டாதே.

Page 132
حلر
அவள் நீ சும்மா திட்டாதே. . அவன் இப்படியே விவாதம் செய்தால் எப்படி? வா வீட்டிற்குப் போவோம்.
அவள் உனக்குத் துணிவு வந்துவிட்டதா? அவன் சக்தி. சக்தியென்றோது.
போகலாம் வா.
அவள் ம்ம் . ம்ம்ம் . எங்கேயிருந்து எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறாய்! தாள நடையை மாற்றிவிட்டாய். ஆவர்த்தனத்தை (ԼՔԼգ-.
அவன் நீ பட்டாம் பூச்சியாய் ஆரம்பித்துப் புழுவாய் மாறப்பார்க்கிறாய்.
அவள் ịổ குறுக்குக்கோட்டைப் போட்டபடி ஆற்றின் அழகை விட்டுவிட்டாய். தாளத்தையும் முடிக்கக் கஷ்டப்படுகிறாய்.
அவன் என்ன செய்யலாம்?
அவள் பேசாதே! வா போகலாம். என்ன
செய்தாலும் எது எப்படிப் போனாலும் எதுவும்
O Gh
தை
سمصےجN
முடிந்து போகாது. ஆறு நின்றா போய்விட்டது?
அவன் முடிவாக என்னதான் சொல்லப் போகிறாய்?
அவள் நான்தான் முடிவு சொல்ல வேண்டுமா? ஏன் நீ சொல்லேன்?
அவன் இந்த உலகத்தை ஒரு கணம் மறந்து விட்டு கண்ணை மூடிக்கொண்டபடி உன் மனத்தில் நான் இருக்கும் இடத்தைச் சொல் பார்க்கலாம்.
அவள் கண்ணை மூடிக் கொண்டால் என்ன திறந்திருந்தால் என்ன என் மனத்தில் நீ இருக்கும் இடம் நல்லதுதான். என் மனம் முழுவதும் நல்ல இடந்தான்.
அவன் அப்படியானால் ஏன் என்னைச் சபித்தபடி இருக்கிறாய்?
அவள் என்னைச் சபிக்காதே என்றுதான். அவன் உன் மனத்தில் என் மேல் அன்பு இல்லை.
அவள் உன் மனத்தில்தான் ஈரம் இருக்கிறதாகத் தெரியவில்லை. உனக்கிருக்கும் அன்பு எதுவும் என் குடும்பத்தில்
1

இருக்கிறதாகத் தெரியவில்லை. :
அவன் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
அவள் சந்தோஷமாக இருக்கப் பாரேன்.
அவன் அதற்குத்தான் உன் உதவி வேண்டும். நான் மட்டும் சந்தோஷமாக இருந்தால் அதைப்பற்றியும் குறை சொல்வாய்.
அவள் இதுதான் உன் முன்னால் வைக்கப்படுகிற விடுகதை. என் உதவி எதுவும் இல்லாமல் எனக்கு சந்தோஷம் வரப்பண்ணுவாயா?
அவன் பார்த்தாயா? இதைத்தான் சொல்கிறேன். எனக்கு உதவும் யோசனை உனக்கில்லை.
அவள் இங்கே இந்த ஆற்று ஒட்டத்தைப் பார். நீர்த்துளிகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டா ஒன்றாக ஒடுகின்றன?
அவன் ஆவர்த்தனத்தை நீ முடி.
அவள் நான் தான் முதலில் உன்னை முடிக்கச் சொன்னேன். தொடங்கினாய் முடி.
அவன் முடிப்பதற்கு மாயக்கம்பளத்தில் ஏறி மனத்தின் சுகமான இடங்களுக்கெல்லாம் போய் வர வேண்டும். ஆனால் நீ ஏற மறுக்கிறாய். அது ஒன்றுதான் வழி.
அவள் ஏறி எங்கே முதலில் போவது?
அவன் இந்த ஆற்றங்கரை யெல்லாம் தாண்டி, மனக்குறுக்கல்கள் எதுவுமில்லாத இடமாக, யாரும் எதுவும் எங்களைக் கேட்காதபடியான சூழலுக்குப் போவோம்.
அவள் ஏன் அவ்வளவு தூரம்? உனக்கு நடந்தையெல்லாம் மறந்து நான் வைத்திருக்கும் அன்பைப் பாரேன்.
அவன் என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? ஓ! காதலோ காதல் .
அவள் மிகவும் உணர்ச்சியடையாதே! வா போகலாம். இந்த ஆறு எங்கோ கடலில் சேரத்தான் போகிறது.
அவன் வா ஒரு பொழுது போயே
விட்டது.
O
ܓܡܗ2
f
محصے~N

Page 133
ஜெயமோகன்
கொரில்லா, ஷோபா சக்தி, நாவல். விலை150 அடையாளம் வெளியீடு 1208, இரண்டாம் தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், 2ே1310, இந்தியா)
என் இளமைப்பருவ நினைவு இது. அப்போ நெருக்கடி நிலை அமுலில் இருந்தது. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் என் தூரத்து உறவினருமான ஒருவர் பெயரெதற்கு கட்சியின் நெருக்கடிநிலை எதிர்ப்புத் ). لسہ Nதுண்டுப்பிரசுரங்களை வினியோகித்தபடி கிராமத்தில் நடைபயணம் வந்தார். அவர் மீது * வாரண்ட இருந்தது. காவல் நிலையம் L பனிரண்டு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது. பு எங்கள் கிராமத்தில் அவர் அடிக்கடி, 6) J எதிர்பாராமல், வந்து போவதுண்டு, அவர் * பின்னால் நாங்கள் ஏழெட்டு அரை டிராயர் பையன்கள் மட்டும் கீச்சுக்குரலில் உற்சாகமாக கோஷம் போட்டபடிச் சென்றோம். தோழரைக் கண்டதுமே பெரியவர்கள் ஓடி ஒளிந்தனர்.
கூட்டம் வவிய ஏலாவை அடைந்த போது ஊரிலே பெரிய கேடிகளில் ஒருவனான பல்வி நாணு எதிரே வந்தான். கையில் சிவப்பு மலர்மாலை உரக்க ஆவேச கோஷம் போட்டபடி அவன் நெருங்கிய போது தோழர் தத்தளிக்க ஆரம்பித்தார். அவனது உணர்ச்சிவேகம் உண்மையானதுபோலத்தான் இருந்தது, ஆனால் நாணு விசித்திரமான கோமாளித்தனம் உள்ளவன். குறிப்பாக பெண்களைப் பார்க்கும்போது மாலையை வாங்கிக் கொள்ள தோழர் தயங்கினார். காரணம் அது அரளிமாலை, பலியாடுகளுக்கு மட்டும்தான் அதை எங்களூரில் போடுவார்கள் ஆனால் வேறு வழியில்லை, மாலையுடன் தோழர் பலியாடு போலத்தான் பரிதாபமாக
இருந்தார்.
 

சித்தளிப்புகள்
இன்று வரை என்னால் பல்வியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனது கண்கள் நினைவுக்கு வரும்போது அவ்வுணர்வுகள் நேர்மையானவை என்று தோன்றுகிறது. அடக்குமுறைக்கு எல்லா வகையிலும் எதிரானவன்தான் அவன். அதன் கொடுமையை அவன் ஆழமாக அறிந்திருக்கக்கூடும். அதே சமயம் முற்றிலும் சமூகப் புறநிலையாளனாகிய அவனால் ஒழுக்கவாதியான தோழரையும் ஏற்க முடிந்திருக்காது. அல்லது எதைச் செய்தாலும் அவனது இயல்பான கோணல் அதில் கலந்து கோமாளித்தனமாக ஆகியிருக்கலாம்.
சமூகப் புறநிலையாளனை மையமாகக் கொண்ட தமிழ் எழுத்துக்களில் இத்தகைய புரிந்துகொள்ள முடியாத குணச்சித்திரத்தன்மை மிகக் குறைவாகவே காணக்கிடைக்கிறது. பெரிதும் பேசப்பட்ட ஜி. நாகராஜனின் கந்தனில் எல்லாப் பக்கங்களும் தெளிவாக இருக்கின்றன. அல்லது இமையத்தின் ஆறுமுகம் போல வடித்தெடுத்த சோகப்பிழம்புகள், சமீபகாலமாக சாரு நிவேதிதா போன்ற நகரத்து அம்பிகள் வெறும் ஆர்வக்கோளாறு காரனமாகப் புறநிலையாளர்களை உருவாக்கி வருகிறார்கள் ஷோபா சக்தியின் எழுத்துக்கள் என்னைக் கவந்தது இல்லை. ஆனால் இந்நாவல் அதில் உள்ள புறநிலை மனிதர்களின் இயல்பு நுட்பமான புரியமுடியாமையுடன் உருவாகி வந்திருப்பது காரணமாக முக்கியமானதாகப் பட்டது.
சமீப கால எழுத்துக்களில் மிகக் குறைவான ஆக்கங்களே உண்மையான வாசிப்புச் சுவையை அளிப்பவை ஷோபா
இதழ் 16

Page 134
ܓܡܬܐ2
சக்தியின் கொரில்லா அவற்றில் ஒன்று. என் சொந்த அனுபவத்தைத் தீவிரமாக நினைவில் கிளர்த்திய நிகழ்வு ஒன்று இந்நாவலில் வருகிறது. கொரில்லா தன் மகனை விடுவிக்க இயக்கத்துக்கு ஒரு லட்சம் செக் எழுதித் தரும் இடம். கொரில்லா ஏசுதாசனின் சித்தரிப்பு நெடுகிலும் இதற்கிணையான நுட்பம் உள்ளது. சிதறுண்ட வடிவத்துக்கு இந்நாவலில் கலை
ரீதியாக இன்றியமையாத தேவை ஏதுமில்லையென்றாலும் அது வாசிப்பு சுவையைக் கூட்டுவதனால் அது
அவசியமென்றே படுகிறது.
*G)g; ni ff? Gaib ap IT' அகதியாக அங்கீகரிக்கப்பட்ட மன்றாடும் யா.அந்தோனிதாசனின் விரிவான
விண்ணப்பத்துடன் தொடங்குகிறது. மிகக் கொடுமையான நிகழ்வுகள் சமத்காரமான முறையீடுக் கோரிக்கைகளாக மாறும்போது ஏற்படும் அபத்தம் இந்நாவலின் தனித்தன்மை என்ன என்று சுட்டிவிடுகிறது. பின்பு இதன்
அபத்தமே விரிகிறது. தருக்க ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்போது அந்த அபத்தம்
மேலும் வலுப்படுகிறது. வன்முறையையும்
துயரங்களையும் சொல்ல முற்படும் போது ர்ெ பைத்தியக்காரத்தனமான சிரிப்பாக
>T(மாறிவிடுகிறது.
இந்நாவலில் தமிழின் முககியமான இலக்கியவாதி ஒருவரை அடையாளம் காட்டும் பகுதிகள் என்று பல இடங்களைச்
சுட்டமுடியும். காட்டாற்ற ஏசுதாசன் இன்ஸ்பெக்டர் ஏசதாசனால் கைது செய்யப்படும்போது குறைந்தபட்ச
கற்புநெறியின் அடிப்படையில் செனோவா ஜீப்பை வழிமறிப்பது முதல் உதாரணம். குமாரசாமி எம்.பி. வண்டிப் போட்டியில் வென்ற சீவல்கார குஞ்சனுக்கு மாலை போடக்கூடாது என்று அவனது வண்டிமாட்டுக்குப் போடும் இடம் இன்னொன்று. மனித குணங்களின் நுட்பமான அபூர்வமான வெளிப்பாடுகளையே இலக்கியப்படைப்பின் முக்கியமான கூறாகக் கொள்ள முடியும். ஒரு படைப்பைச் சுவையான வாசிப்பனுபவமாக மாற்றுவது இதுவே. இதை அவதானிப்பு (observation) என்று பழைய முறை விமரிசனம் குறிப்பிடும். நவீன விமரிசகர்கள்

15j6öot 955ffl'uld (Micro narration) 6r66TLITffisait. சமீபகாலத்தைய தமிழ் நாவல்களில் ஆர்வமூட்டும் வடிவப் புதுமைகளும், தத்துவார்த்தத் தேடல்களும் உள்ளன என்ற போதிலும் வாழ்க்கை மீதான அவதானிப்பின் விளைவான நுட்பங்கள் இல்லை. விதிவிலக்காக யூமா. வாசுகியின் 'ரத்த உறவைக் கூறலாம்.
அவதானிப்பு ஒருபோதும் பிரக்ஞைப் பூர்வமாகச் செய்யக்கூடியதோ பதிவு பெறுவதோ அல்ல. எழுத்தாளனுக்குள் அதற்கான அகப்பொறி ஒன்று எப்போதுமே விழித்திருக்கிறது. எப்படியோ உருமாற்றி தொகுத்தபடியே இருக்கிறது. அவன் எதைக் கூறும்போதும் அவனை அறியாமலேயே அந்த நுட்பங்கள் வெளிப்பட்டு அப்படைப்பை உள்விரிவுகள் கொண்டதாக ஆக்குகின்றன. அரசியல் மற்றும் அழகியல் கோட்பாடுகளை ஒட்டி எழுதுபவர்களும் வாசிப்பவர்களும்,< அவற்றை உணர்வதில்லையாயினும் 54ುಖ வாசகனை எப்போதும் அவை சென்றடை கின்றன. நல்ல வாசகன் என்பவன் தன் II பிரக்ஞைக்குச் சமானமாகவே **n ஆழ்மனத்தாலும் படைப்புகளை வாசிப்பவன். இந்த நுண் சித்தரிப்புகள் பல சமயம் கி அப்படைப்பாளி உருவாக்கும் மொத்த ன் சித்தரிப்புக்கு நேர் எதிரானதாகக் கூட இருக்கரு முடியும்.
محصے
உதாரணமாக ஷோபா சக்தி தன்னை ஒரு புறநிலையாளனாக, அவநம்பிக்கை யாளனாகவே மொத்தத்தில் வெளிப் படுத்துகிறார். அதே சமயம் நுண் சித்தரிப்புகளில் வாழ்க்கை மீது தணியாத விருப்பு கொண்ட, சிறுவனுக்கு நிகரான அவதானிப்பு கொண்ட, ஒரு மனம் வெளிப்பட்டபடியே இருக்கிறது. "வென்று வந்தார் வேலணைப் புலவர். வெட்கி தலைகுனிவாரா ஜே.ஆர். கிழவர்?" போன்ற வரிகளை ஒடும் காருக்குப் பின்னால் ஒடி, துண்டுப்பிரசுரம் சேகரிக்கும் பையன் ஒருவன் ஷோபா சக்தியின் உள்ளே இருந்து சேகரித்தபடியே இருந்திருக்கிறான்.
உண்மைத் தகவல்களும் கற்பனைத்
தகவல்களும் அடிக்குறிப்புகளாகவும் கதைகளாகவும் செய்திகளின் பாணியிலும்,

Page 135
நினைவுக்கூரல் பாணியிலும் தரப்பட்டிருக்கும் இந்நாவல் வரலாறு என்ற விசித்திரமான, குரூரமான அபத்தமான, நுரைபோல உடைந்தழிந்தபடியே இருக்கும் 'கதை குறித்து f நம்மிடம் சொன்னபடியே இருக்கிறது. சிறி சபாரத்தினமும் கொல்லப்படுகிறார், ஜெனோவா ராஜேஸ்வரியும் தோழர் வேலனைப் புலவரும், ரெஜினா ஜெயசீலியும் எல்லாம் கொல்லப்படுகிறார்கள். மரணம் மீது விபரீதமோகம் கொண்ட ஒரு முட்டாள் எழுதிய கதைபோல கொலைகள், தற்கொலைகள், சித்திரவதைகள் வந்தபடியே இருக்கின்றன. இதன் வழியாக நாவல் உருவாக்கும் வரலாற்றின் சித்திரமே இந்நாவலின் செய்தி எனக்கு
நடை, உதிரிச் சித்தரிப்புகளின் கூட்டமாக உள்ள கட்டமைப்பு, அங்கதம் நிரம்பிய வரலாற்றுத் தரிசனம் ஆகியவற்றில் இந்நாவலுக்குச் சமானமாகச்: Lசொல்ல தமிழிலக்கியத்தில் ఫ్రెGTవ్లో நூல்தான் உள்ளது. ப. சிங்காரத்தின் இ தி புயலிலே ஒரு தோணி வெட்டப்பட்ட தலைகளுக்கு முடி சீவி விடும் ஜப்பானிய சிப்பாய், விபச்சார விடுதித் தமிழாய்வு மற்றும் இ ரை தீர்க்கதரிசி"யின் மதுக்கடைப் பிரசங்கம் முதலியவை உருவாக்கும் அதே இக்கட்டான அங்கதத்தை இந்நாவலின் சித்தரிப்புகளும்: உருவாக்குகின்றன. ப. சிங்காரத்திடம் மரபிலக்கியத்தில் ஆழமான பயிற்சியும் ஷோபா சக்தியை விடச் சற்று முற்றிய கசப்பும் உள்ளமை அவரது நாவலை இதைவிட மேலும் ஆழமான தளங்களுக்கு நகரச் செய்துள்ளது. ஷோபா சக்தியிடம் அங்கதம் கூர்மை கொண்டிருப்பினும், ப. சிங்காரத்தின் நாவலில் மதுக்கடை பிரசங்கத்தில் உள்ள மெருகு சற்றுக் குறைவுதான் அத்துடன் எதிர்மறையான ஒரு தரிசனப்பண்பும் ப. சிங்காரத்திடம் உண்டு. ப. சிங்காரத்துக்கு ஏறத்தாழ 35 гтsi; நூற்றாண்டுக்குப் பிறகு கிடைத்த ஒரே தொடர்ச்சி, அதேயளவு உக்கிரமான முரண்நகை கொண்டது இந்நாவல்.
கொரில்லா அப்பாவிற்கு "அரசியல் கற்பிக்க விரும்பும் ரொக்கிராஜ் துரோகியாகி அடிபட்டு, அக்தியாகி, தானும் ஒரு
 
 

ஐரோப்பியக் கெரில்லா ஆகத் தொடங்கும் தருணத்தில் இந்நாவல் முடிகிறது என்று சொல்லலாம். லொக்கா செய்யும் கொலை ஒரு ஊடுகதை, மனித இருப்பின் வகுக்கமுடியாத தன்மையைச் சொல்வது நம்பிக்கைகளுக்கும், கருத்தியல்களுக்கும் அப்பால் மனிதனின் ஆழத்தில் உறைந்துள்ளது பரிணாமம் கொள்ளாத கொரில்லா தானோ என்ற எண்ணத்தை உருவாக்குவது,
கொரில்லா மிக முக்கியமான ஒரு நாவல், என் நோக்கில் குறை என எதையேனும் சொல்லவேண்டுமென்றால் இதன் அங்கதப்பார்வை சற்று நேரடியாக அல்லது அப்பட்டமாக இருப்பதைக் குறிப்பிடலாம். அத்துடன் செய்தியறிக்கையை ஒட்டிச் செல்லும் ஒரே வகையான நடையையும் குறிப்பிடலாம். நாம் வரலாற்றைச்  ெச ப் தி ய ர க வே அறிகிறோமென்பதால் இந்நடை, ""* நாவலை ஆக்குவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது என்பது உண்மையே. ஆனால் வரலாறு II ெே ம 1 மி ய ைல க ள ல்g
உருவாக்கப்படுகிறது (பலவகையான
வரலாறு அபத்தம் ஆனால் உச்சகட்ட நெகிழ்வுகள், உணர்ச்சி உத்வேகங்கள், பெரும் கனவுகள் ஆகியவற்றால் சமன் செய்யப்பட்டதும் கூட அப்படி சமன் செய்யப்பட்டிருக்கையில் அதன் அபத்தம் மேலும் முதிர்ந்து மெளனமான முரண்நகையாக மாறிவிடும். அதைச் சித்தரித்துக் காட்டும் நாவல் ஒரு நவீனச் செவ்விலக்கியமாகவும் ஆகிவிடும். அதற்கு மேலும் விரிவான மொழிக்கலவையின் கட்டுமானமும் தேவைப்படும். வடிவச்சிதைவு வெறும் உத்திதான். ஆகவே அடிப்படையில் கொரில்லா ஒரு நவீன (Avant-garde) வகை நாவல் மட்டுமே. ஆனால், முக்கியமான மீண்டும் மீண்டும் கவனத்துடன் படிக்கவேண்டிய இலக்கிய ஆக்கம்.
o

Page 136
08585 O Budd.
வரப்பிரசாதம்
(மகாராஜாவின் ரயில் வண்டி - அ. முத்துலிங்கம் - சிறுகதைத் தொகுப்பு - விலை 7500 - காலச்சுவடு பதிப்பகம் - இந்தியா)
இச்சிறுகதைத் தொகுப்பு அ. முத்துலிங்கத்தின் ஐந்தாவது. அவரின் இரண்டாவது வருகைக்குப் பின் (1995) நான்காவது முதலாவது சிறுகதைத் தொகுதி 'அக்கா 1964இல் வந்துள்ளது. 'அக்கா’ தொகுதியிலுள்ள கதைகள் அத்தனையும் யாழ்ப்பாணத்து கிராமத்தின் பின்னணியைக் கொண்டவை. அதன் பின் அவருடைய முப்பது வருட வாழ்வியல் அனுபவத்தின் /Nசேமிப்பு திடீரென ஊற்றெடுத்து எழுதப்பட்டவை தான் இரண்டாவது வருகையின் பின் எழுதப்பட்ட கதைகளின் ப் நாலு தொகுப்புக்களும். இவற்றிலுள்ள கதைகளில் பல நாடுகளில் அவர் வாழ்ந்த +னுபவம் உள்வாங்கப்பட்டு, அவை 2 அருமையாக எழுதப்பட்டுள்ளன.
பிரயாணக் கட்டுரைகளில் உள்ள பல அம்சங்கள் கலாரீதியாக தமிழுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையால் அவற்றின் மூலம் பூகோள, பல் கலாச்சார அறிவு எம்மை வந்து அடைகின்றது. எம் ஆச்சரிய உணர்ச்சித் தூண்டப் பெற்று கதைகளில் ஆர்வம் ஏற்பட்டு அவற்றை மேலும் மேலும் வாசிக்கத் தூண்டப் பெறுகிறோம். அந்த அம்சம் தான் புலம் பெயர்ந்த கதை, கட்டுரைகளை வாசிக்கத் தூண்டுவதற்கும் ஓர் இயல்பான காரணம்.
முத்துலிங்கத்தின் கதைகளை வாசிக்கும் ஆவலைத் தூண்டுவதற்கு சிறப்பானதொரு காரணம் அவரின் விசேஷமான நகைச்சுவை உணர்வு. அது இயல்பான கலைஞனுக்குரிய அம்சம். நடந்தாய் வாழி காவேரி, 'கலைக் கடலும் கருங்கடலும் பிரயாணக் கட்டுரை நூல்களில் வார்த்தைகளினால் இலக்கியார்த்தமாக அவ்விடங்களைப் படம் பிடித்தவர் ஜானகிராமன். அதுபோல

55 ε555 Θί6ός வண்டி
முத்துலிங்கமும் தன் பல கதைகளில் தான் வாழ்ந்த, பார்த்த இடங்களையும், பழகிய மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் கண்டு, அனுபவித்துச் சொல்கிறார். இம்முறையில் அவரின் வெளிநாட்டு வாழ்க்கை அனுபவம் எம் தமிழ்க் கலாச்சாரத்துக்குக் கூடிய பயன்பாட்டைத் தந்துள்ளது.
வெளிநாட்டுக் கதைகளை விட, மனக் கிடங்கின் ஆழத்தில் சேர்ந்திருந்த தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து எழுதிய சில கதைகளில் மனித மனங்களின் ஆசைகள், பாசங்கள், உணர்வுகள், உளவியல்புகள், நம்பிக்கைகள், விருப்பங்கள், ஏழ்மைகள், ஆகியவை மிகத் திறமையாக எழுதப்பட்டுள்ளன. உதாரணம், அம்மாவின் பாவாடை, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், மகாராஜாவின் ரயில் வண்டி இந்தக் கதைகளை, மனித உளவியல்புகளை மனித நேயத்தோடு பார்த்து, பாத்திரங்களின் உணர்ச்சிகளை மதித்து, உணர்ந்து எழுதியுள்ளார். இந்த மூன்று கதைகளுமே அவருடைய கதைகளில் மிக உயர்ந்தவை என்பது என் கருத்து. தில்லை அம்பலத்துப் பிள்ளையார் கோவில் என்ற சிறுகதையில் வரும் சின்னவன் - தம்பி - என்ற குழந்தையில் எங்களுக்குக் கூடிய அனுதாபம் வருகிறது. பெரியவனின் வில்லனுக்குரிய உளவியல்பு மிகத் திறமாக இறுதிவரை வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது. அக்கதையில் வரும் பாத்திரங்கள் அத்தனையுமே மிக யதார்த்தமானவை, இயல்பானவை. அன்றைய யாழ்ப்பாணக் கிராமத்தின் சூழல், மக்களின் கலாச்சாரம் ஆகியவை அழகாகவும் விபரமாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளன. அம்மாவின் பாவாடை என்ற கதையில் அம்மாவின் உண்மையான அன்பை வைத்து முத்துலிங்கம் எழுதியுள்ளார்.

Page 137
இவருடைய அதிகமான கதைகள் : அறிவிப்பாளனுக்குரிய குரலில் கதை சொல்லுகிற மதிப்புக்குரிய, உணர்ச்சியுள்ளவனிடமிருந்து அவ பத்திரிகையாளன் என்ற இடத்திற்கு அவரைக் எழுத்தாளர்கள் பலரிடம் காணப்படுவது சேகரிப்பவர்களுக்கும் உரிய பண்பு. அது இ அனுதாபத்தைக் காட்டாமல், தூர நின்று பாத்தி
அவரிடமுள்ள சிறப்பான பண்பு, நவீன உத்திகளை வெற்றிகரமாகத் தன் கதைகளிலும் நகைச்சுவை உணர்வும் பல உத்திகளும் சேர்ந் வைத்துள்ளன.
எவை எப்படி இருப்பினும் முத்துலிங் ஆர்வத்தைத் தூண்டுபவை. இறுதிவரை புத்த கதைகளையும் வாசித்து விட வேண்டும் என்ற அந்த வகையில், முத்துலிங்கம் அத்தனை ஈழத் இந்தியச் சிறுகதையாசிரியர்களையும் தோற்கடி உத்திகள், செய்திகள் காரணங்களாக இருக்கலா
அந்: 35 துப்
6T6
G5 காட்
அழகுக்கோன்
3.

தன்மையில் எழுதப்பட்டுள்ளன. செய்தி )ார். அது சிறுகதையாசிரியன் என்ற மரபார்ந்த, வரை மாற்றி புவியியல் அறிவியலாளன் அல்லது கொண்டு வந்து விடுகிறது. நவீன அமெரிக்க இப்பண்பு. ஆய்வாளர்களுக்கும் செய்தி வருக்கும் உள்ளது போலும். பாத்திரங்களில் திரங்களைப் படைக்கும் பண்பு.
ாச் சிறுகதைகளில் காணப்படும் பண்புகளை, புகுத்தி எழுதும் செய்நேர்த்தி. அவருடைய து அவருடைய சிறுகதைகளுக்கு மெருகேற்றி
கத்தின் கதைகள் அத்தனையுமே வாசிக்கும் கத்தை வைக்காமல், ஒரே மூச்சில் அத்தனை ஆர்வத்தை வாசகனுக்குக் கொடுப்பவை அவை. துச் சிறுகதை ஆசிரியர்களை மட்டுமல்லாமல், த்து விட்டார். இதற்கு நகைச்சுவை உணர்வு,
D. Ο
ால்லக்கூடாத அந்தச் சொல் க்கடி என் வாயில் வருகிறது சில் வரண்டபோதெல்லாம்
Pத்
பித் தொலைக்கிறேன்
ப்வ நிந்தனை ண்டவற்றைத் தினமும் சந்தித்த க்கு றெந்தச் சொல்லும்
மூளையின்
பிப்பு வங்கியில்
லை போலும்
அண்ணத்தில் ஒட்டியிருக்கும் த வார்த்தையைக் காறித் பாதிருக்க
இருண்ட மனதிற்கு சிறு விளக்கு தேவை ட்டுங்களேன்.

Page 138
d
Ջ
()
காலம்
திருமாலின் நிறம் ச திருமுருகன் நிறம் ( அழகான அமபாளு அரக்குக் கலரில் பு ஆயில் பெயிண்ட் சிவனின் தலையில் சிங்காரமாய் மினுக் சில்லரைக் கைங்க/ நாரதர் காலில் செ நான்முகன் தலைசு நம்புங்கள் பணஉத சில்லரைச் சேடிப்ெ சேலைக்கு வண்ண செவ்வண்ண உதட் செய்வித்தவர் - பி. மூலையில் கிடந்து முலையுடைந்த சின் வேலைப்பாட்டுடன் காலையில் பணம் மந்திரி வருகைக்குச் மதகு திறந்து மடை ஏழாவது நூற்றாண் எல்லாப் பெயரைய பாடல் பெற்ற இந் பக்திப் பெருக்கெடு கும்பாபிஷேகம் கொண்டாட்டம்தா
வெங்கடரமணன்
136
 
 
 
 

5ருமை;
வெண்மை;
க்கு
أر(626سن உபயம் - அய்யாசாமி
நீரூற்று ந்க ஸ்பாட்லைட்டு ர்யம் - சிங்காரவேலர் ருப்பு;
ற்றி நெருப்பு வி - நடராசன் அவர்கள் )பண்ணின்
ப்பூச்சு;
டுச் சாயம் ரசிடெண்ட் அய்யா
முழுங்கி
லெக்கும்
பூச்சு
தந்தார் சேட்டு
- 4606), போல் தண்ணீர் எடின் ஏதோவொரு கல்வெட்டின்மேல் பும் பெயிண்டில் எழுதி தப் பட்டிக்காட்டில் க்க
ன் போங்கள்.
இதழ் 16

Page 139
தமிழிசை பற்றிய விரிவான கட்டுை
நாட்டார் நிகழ்க  ை
கன்னட இலக்கிய உலகில் பைர
வியல் எப்படி உண்மையை அறிகிறது
ாழிக்கான மரபணு அடிப்படைகள்
ல் சாகன் மேற்கோள்கள்
சைதன்ய யதியின் வாழ்க்கைக் குறிப்
* all բաdhldhu, 93, 5th Cross St., Saratha Nagar, Parwathi puram, Nager Coil-3, Tam illnadu,
NA. LLL aLLLLLLLLSLLLLS LLLLLLLLLLLLLSLLHLLLL
 
 

புகள்
Pot No. 15, Kamalaram Nagar. Bambha Nagar, Thiruppalai Post
Madurai - 625 014. NDA. 9-452-683801 y aazhini (@re diffmail.com

Page 140
- عمليار மேற் رنگ نولزنترنتھJUUU
LÓly AMIDST قسم
13th Edition
DĎčlô NA
இடித்தி
2O
www.taria
LLLLLL L LLLLL LLLLLLLL00LLLL0LLLS LLLL LLLLLL
"WE MADEHSTORY
 
 
 

The initiative has clearly been a great success ... ... I am sure it well deserves its title of
award winning business directory.
。
நிதி அமைச்சர்
GEF
உடின் கூடி