கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2006.06

Page 1

O
இதழ் 26 யூன் 2006
ழைக் காதல் செய்யும் ார்ஜ் எல் ஹாட்

Page 2
MORTIG
Bay
M
(22.722 zera
TO 99
 

W

Page 3
கட்டுரை
ஒரு காலத்தின் உயிர்ப்புஇயற்கையும் மனிதனும் உயிர்க்கும் நாடகம் என்.கே. மகாலிங்கம்
கவிதையியலும் தமிழ்க்கவிதையும்
மு.பொ.
தமிழைக் காதல் செய்யும் ஜோர்ஜ் எல் ஹாட் கலாநிதி பார்வதி கந்தசாமி
வல்லியக்கனும் வல்லிபுரநாதரும் பொன்னம்பலம் இரகுபதி புஷ்பராஜனின் நீட்சியுறும் தாயகம் ஏ.ஜே. கனகரட்னா
காத்திருப்பது
முனைவர் எம். சஞ்சயன்
மாற்றம் மணி வேலுப்பிள்ளை
சுரா நினைவுகள் - தன் எழுத்தாலும் நட்பாலும் மனிதனாக நடந்தவர் என்.கே.எம்.
பதிவாகும் சரித்திரங்கள் வெங்கட் சாமிநாதன்
பின் காலனித்துவ இலக்கியப் போக்குகள் செல்வா கனகநாயகம்
இதழ் 26, யூன் 2006
21
2
SE
)
卓3
57
1.
72
 

சிறுகதை
திசை அணங்கு
திலகபாமா
இரவின் விடியல்
சுமதி ரூபன்
நேர்காணல்
ஷ்யாம் செல்வதுரை நேர்காணல்
முத்துலிங்கம் மண்புழுவிலிருந்து மனிதனாகி வந்தேன் டொமினிக் ஜீவா
கவிதைகள்
ിഖT கணேசமூர்த்தி வை. சாரங்கன்
நாவாந்துறை டானியல் ஜீவா
மதிப்புரை
எளிதில் ஜீரணமாகும் வாழ்க்கை
FT55. Tsir 1978
:பாமர் ரா 27-B High Street TIIistւյքլ: LiFIsari EIF (2:17) Tof: ():L) 8: F: :+33
15
4:
37
37
『

Page 4
ஆசிரியரிட
கனேடிய இலக்கியத் தோட்டம் 2005 க்கான இயல் ரொறொன்ரோப் பல்கலைக்கழக வளாகத்தில் அளிக மகிழ்ச்சியையும் நிறைவையும் தரப் போகும் நிகழ்வு. ஐரே தொண்டு அளப்பரியது. எம் தமிழ் மொழியின் சிறப் மக்கள் அனைவரும் அறிய அவர்கள் ஆற்றிய சேன குறைந்த தல்ல. அவர்களின் ஆய்வுகள், மொழிபெ உயர்த்தியது மட்டுமல்லாமல் தமிழ் அறிஞர்கள் ப6 ஆய்வுகள் செய்யவும் வழிவகுத்தன.
ஜி.யு.போப், கால்டுவெல், பெஸ்கி, கமில் சுவெ6 வரிசையில் ஜோர்ஜ் ஹாட்டும் இடம் பெறுபவர். அவரி ஒப்பியல் அறிவும். ஆளுமையும் குறிப்பிட்டுக் கூறச் சொல்லும் குறிப்புக்களைப் பிறநாட்டுப் புலமையாளர்க் அவரின் குறிப்புக்களும் முடிவுகளும், உணர்ச்சிவசத்தில் அலட்டல் களல்ல. குறிப்பாக, தமிழ், சமஸ்கிருதம், நூல்களைக் கற்றறிந்து அவற்றைப் பற்றி அவர் கண்ட பவை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு அவர் செய்த மெ
தமிழைச் செம்மொழியாக இந்திய அரசு செய்த பல்கலைக் கழகங்களில் தமிழை ஆய்வு செய்வதற் வளருகின்றது. அவர் மாணவர்கள் அவர் பணி ே தமிழை அடுத்தடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல் பணி தொடரவும், அவர் நீடு வாழவும், இயல் வி வாழ்த்துகிறது.
எமது அன்புக்குரிய சுந்தர ராமசாமி காலமான இது. அவரின் மேன்மைகள் பற்றி கடந்த பல மாத அவர்பற்றிய எமது நினைவுகள் என்றும் பசுமையான மாதம் அழைத்து எம்முடன் ஒரு கிழமை வைத்தி( கழக வளாகத்தில் பேசிய பேச்சிலும் தனிப்பட்ட ரிதியி உறுதியான, தெளிவான பார்வை, மதிப்பீடுகளை அ அவரின் ஆளுமையும் எம்மை வெகுவாக ஈர்த்தது. கேள்வி கேட்டவர்களே அவருடன் கதைக்க வேண் நேர்மையையும், ஆளுமையையும் அறிந்தே, அவர், கிடைத்தபோது, அப்போது அவரைக் கண்டவர்க அவர்களின் குடும்பங்களிலும் குழந்தைகளிலும் மறக்க முடியாதது. பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் இருக்கிறார்கள். ஆனால், சுந்தர ராமசாமி எழுத்தா உண்மையான மனிதாபிமானி ஆனதால் அவரிடம் மனிதர்கள் ஆகிய அனைவருமே அவரை நேசித்த அவர் மேல் வைத்த நேசத்தின் எதிர்மறை வெளிப்பா மதிக்கத் தெரிந்த உயர்ந்த மனிதன். நம் தமிழ் எ போன்று அவருடன் பழகியவர்கள் இழந்தது, அன் மனித ஆத்மாவை.
| 16, HAMPSTEADCOUR I MARKAM, ONT L3R 3S7
 

மிருந்து
விருது பரிசை ஜோர்ஜ் ஹாட்டுக்கு இம்மாதம் கவிருக்கிறது. அது தமிழ் மக்களாகிய எங்களுக்கு ாப்பியர்களும் அமெரிக்கரும் தமிழ் மொழிக்காற்றிய பை தாம் உணர்ந்தது மட்டுமின்றி, அனைத்துலக வ எந்தத் தமிழ் அறிஞன் ஆற்றிய சேவைக்கும் பர்ப்புக்கள் தமிழை மேலும் சில தளங்களுக்கு 0ரும் தோன்றவும், விஞ்ஞானாறிதியாக ஆழ்ந்த
Lபில் போன்ற பிற நாட்டுத் தமிழ் அறிஞர்கள் ன் பன்மொழித் திறனும், அவற்றில் அவருக்கிருக்கும் கூடியவை. தமிழின் இடத்தைக் குறித்து அவர் 5ளும் ஆய்வாளர்களும் கவனத்தில் எடுக்கிறார்கள். உளறித் தள்ளும் அரசியல்வாதிகள், கவிஞர்களின் தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளிலுள்ள உடைந்த முடிவுகள் தமிழுக்குப் பெருமை சேர்ப் ாழிபெயர்ப்புக்கள் தமிழை உலகறியச் செய்பவை.
தற்கு அவரின் பங்களிப்பு குறிப்பிடக் கூடியது. காக அவர் ஆற்றும் பணியால் தமிழ் மேலும் மேலும் தொடர்கின்றது. அப்படிப்பட்ட பணி லும். தமிழ் வாழும். தமிழ் வளரும். அன்னாரின் ருது அவர் கிடைத்தமைக்கும் காலம் அவரை
பிறகு வெளிவரும் முதலாவது காலம் இதழ் ங்களாகப் பலரும் எழுதிவிட்டார்கள். இருந்தும் னவை. அவரைக் கனடாவிற்கு 1993 செப்டம்பர் நந்தோம். அவர் ரொறொன்ரோப் பல்கலைக் ல் உரையாடியும் இலக்கியம் பற்றி அவருக்கிருந்த அறிந்தோம். அவரின் எழுத்துக்கள் மட்டுமல்ல ஆரம்பத்தில் அவரை காரணமற்று, எதிர்த்துக் டும் என்ற விருப்பத்தைக் காட்டியது அவரின் அதன் பிறகு கனடா வந்தது இயல் விருது ளும் நேசித்தவர்களும் பலர். நண்பர்களிலும் அவர் காட்டிய விசேச அக்கறையும் அன்பும் 1. பலருக்கு பல ஆயிரக்கணக்கான வாசகர்களும் ளர் என்பதற்கு மேலாக நல்ல மனம் கொண்ட வாசகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், சக தனர். சிலருடைய எதிர்ப்பும் வெறுப்பும்கூட, டே சுரா, மனிதன் என்ற முறையில் எவரையுமே ழுத்துலகம் இழந்தது நல்ல கலைஞனை, எம் புடன் கட்டியணைக்கும் ஒரு உண்மையான
செல்வம் அருளானந்தம்
முன் அட்டை புகைப்படம் : ரூபன் இதழ் தயாரிப்பு: செல்வி அட்டை வடிவமைப்பு : சந்தோஷ்
Designed Uyirmmai Image & Impression
29 Subramanian Street Abiramapuram, Chennai - 600 018
. . . . . Chennai - 79

Page 5
ஒரு காலத் இயற்கையு
உயிர்க்கு
என்.கே. ப
இயகரனின் ஒரு காலத்தின் :
போர்க்வுட் தியேட்டரில் யூன் மா;
பட்டது. எனக்கு 3ந் திகதி சனி ரொறொன்ரோவில் அருமையாகே மேடையேறும். அந்நாடகங்கை என்பதிலேயே அவற்றின் தரமும் த உள்ளது. இதுவரை ஜயகரனின் ந தில்லை. நாடகத்தில் அவருக்கென்' அதற்கு முக்கியமான காரணங்கள் நாடகப் பிரதிபாக்கம் செய்பவர். மானது, தனித்துவமானது அவர் பற்றி, நோக்கம் பற்றி ஆழமாகவும் .ெ பற்றிய சுய விசாரம் அவருக்கே
நான் பார்த்த அவரின் முன்னை இன்றும் குறிப்பிடக்கூடிய உள்ள இன்னொன்று வெளி அவற்றில் அவ நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.
 
 

தின் உயிர்ப்பு ம் மனிதனும் ம் நாடகம்
மகாலிங்கம்
உயிர்ப்பு நாடகம் ரொறொன்ரோ,
தம் 3, 4ந் திகதிகளில் மேடையேற்றப் க்கிழமையே பார்க்கக் கிடைத்தது. வ நல்ல தரமான தமிழ் நாடகங்கள் ள யார் நெறிப்படுத்துகிறார்கள் ங்கியிருப்பது இதுவரை உண்மையாகி Tடகங்கள் அதிகம் சோடை போன றொரு ஒரு தனி இடம் இங்கிருக்கிறது. சில உள்ளன அவர் சொந்தமாக அவரின் நாடக மொழி கலைத்துவ வாழ்வின் இயல்பு பற்றி, அர்த்தம் சாந்தமாகவும் சிந்திக்கிறார். வாழ்வைப்
சொந்தமானது.
ாய நாடகங்களில் சிறப்பானதாகவும் வை "எல்லாப் பக்கமும் வாசல்,
பருடைய ஆற்றலும் திறனும் விசாரமும்
墅。 * 육

Page 6
ஒரு காலத்தின் உயிர்ப்பு என்ற நாடகம் இப்பொழுது மேடையுள்ளது. நாடகம் ஆரம்பமாகி, திரை திறக்கப்படுவதற்கு முன், ஏதோவொன்றை வெட்டுவது போன்ற சத்தம் மேடைக்குள்ளிருந்து கேட்கின்றது. திரை விலக மேடையின் இடதுபுற அடி மூலையில் ஒரு கூடாரம் அதற்கு முன் னால், மேடைக்கு முன்புறம், விறகுகள் வெட்டிக்கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். தாடி, மீசை, தலை எல்லாம் நரைத்தவர். கோட், சூட், சப்பாத்து அணிந்தவர். அவர் விறகை ஒவ்வொரு தடியாக வெட்டி, அதை எடுத்துக்கொண்டு போய் அடுப்பில் போடுவதும் வருவதுமாக இருக்கிறார். அவருடைய வலது கை முதுமையால் நடுங் கிக்கொண்டிருக்கிறது. (இடது கை நடுங் காததற்குக் காரணம் இருக்கக்கூடும். கீல் வாதமாக இருக்கலாம் நாடக மேடையில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், நடிகர் களின் ஒவ்வொரு அசைவும் நாடகத்திற்குச் சம்பந்தமானது என்பது நாடக எடுகோள்) அடுப்பு, குளிர் காய, சூட்டிற்காக ஏற்றப் பட்டதாக இருக்க வேண்டும். சமைப்பதற் காக அல்ல, மேடையின் நடுவில் இருப்பதற் காக நிமிர்த்தி வைக்கப்பட்ட மூன்று மரக் குத்தி இருக்கைகள் முதியவர் மரக் குத்தி களை வெட்டுவதும் அடுப்பில் போடுவதும், சில வேளை நின்று பறவைகள் சப்திப்பதை காது கொடுப்பது கேட்பதுமாக இருக் கிறார். இவ்விடம், குளிரான மேற்கு நாட்டு மலைப்புற வனமாக இருக்கலாம் என்று
இடம் வைத்திருக் கிறார் இயக்குநர்
அப்போது ஒர் இளை இதன் வலது புறமாக வரு கிறான். அவனைப் பார்க் கையில் ஏதோ அவசர மாக வருபவன் போல வும் எதையோ செய்வ தற்குத் துடிப்பவன் போல ம்ெ கானப்படுகிறான். அப்பொழுது கிழவர் ஆறுதலிUTக அவனைக் கவ னித்துவிட்டு, "நீங்களும் பறவைகளைப் பார்க்கவT வந்தனிங்கோ " என்று கேட்கிறார். இளைஞனுக்கு முதியவரின் குறுக்கீடு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. அந்தக் கேள்வி அங்கு வருகிறவர்கள் இயற் கையை காண வருகிறவர் கள் என்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு அளிக் கிறது. அதுவே நாடகத் திற்கான திறவுகோலா
 

கவும் அமைகிறது. முதியவருக்கும் இளைஞ னுக்கும் பின்னர் நடக்கும் உரையாடல் மூலமும், சொல்லாமல் விட்டவை மூலமும் அவர்களின் வாழ்வை, நோக்கத்தை, வாழ்க் கைப் பின்னணியை, அந்நிலத்தை, அவர் களின் கதையை நாம் புரிந்துகொள்கிறோம். அவ் வம்சங்கள் படிப்படியாக வளர்க்கப் படுகின்றன. கதை வெளிப்படையாகச் சொல்லப்படாமல், குறைந்த உரையாடல் கள் மூலம் நகர்த்தப்படுகிறது. அது அந் நாடகத்தின் வெற்றி.
அக்கிழவரின் பெயர் மிஸ்டர் ராயப்பர். அவர் வனவிலங்கு அதிகாரியாக இருந்த வர் இயற்கையை ரசிப்பவர் இயற்கைபு டன் வாழ்வதற்காக அவ்விடத்தை தேர்ந் தெடுத்து அங்கு வசிக்கிறார். ஆகக் குளி ரான காலத்தில் மட்டும் அங்கு கூடும் பறவைகளைப் போல வேறிடத்திற்குப் போய் இருந்துவிட்டு வருவார். குளிர் காலத்தில் பிற கண்டங்களுக்குத் திரும்பிச் சென்று திரும்பி வரும் பறவைகளைப் பற்றிய அறிவு பல ஆய்வாளர்களையும் அவ்விடத்திற்கு வரச் செய்திருக்கிறது. மிஸ்டர் ராயப்பரின் பட்டறிவை அவர்கள் பயன்படுத்துவார்கள். சில ஆய்வாளர்கள் அவருக்கு தம் முன்னுரையில் நன்றியும் தெரிவிப்பார்கள். ஒருவர் தன் ஆய்வு நூலை அவருக்கு சமர்ப்பணமும் செய்துள்ளார். ராயப் பரும் திருமணமான வர்தான். ஆனால் அவரும் அவர் மனைவியும் ஏதோ காரணத்தால் இரண்டு வருடங்களில் விவாக ரத்து வாங்கிவிட்டார்கள்.
புதிதாக வந்த இளை ஞன் ஆய்வுக்காக அங்கு வரவில்லை. அவன் வந்த காரணமே அவ்விடத்திற் குப் பொருத்தமில்லாதது. அவன் அவ்விடத்தைத் தேர்ந்ததெடுத்ததே அந்த LI III) jL உச்சியிலிருந்து ஏரிக்குள் விழுந்து தற் கொலை செய்வதற்கு. அம்மலையும் التي كان التي சார்ந்த வனமும் அதன் முன்னுள்ள வாவியும் அவனுக்கு சரியான இட மாகவே பட்டது. ஆனால், அவ்விடம் உண்மையில் இயற்கையைத் தரிசிப்ப வர்களும் இயற்கையுடன் ஒன்றி இருப்பவர்களுக்கு மானது. நிலத்தின் பய னுங் கூட மனிதர்களின் எண் ண ங்களுக்கேற்ப வேறுபடலாம். கலை

Page 7
ஞனுக்கு அழகாகவும் வாழ்க்கையில் விரக்தியுற்றவனுக்கு வெறுமையாகவும் அது தென்படுகிறது. வாழ்வில், ஏதோதோ கார னங்களுக்காக, விரக்தியுடன் தற்கொலை செய்ய வந்த இளைஞனை, இயற்கையை விரும்பும், வாழ்வில் நம்பிக்கையுடைய முதியவர் தன் வாழ்வின் கண்ட அர்த்தங் கள் மூலம், வாழ்வின் மூலம், புத்திமதிகள் சொல்வதன் மூலம் அல்ல, அவ்விளை ஞனைச் சிந்திக்க வைக்க முயல்கிறார். ஆனால், அவ்விளைஞனோ அவர் ஆமோ திக்கும் வாழ்வை, அவரை எள்ளி நகை பாடுகிறான். சிந்திக்க மறுக்கும் இளம் வட்டம். தனக்கு எல்லாம் தெரியும் என்ற இளவட்ட மமதை. தன் அனுபவம் தான் உயர்ந்தது என்ற இறுமாப்பு வாழ்க்கையை மறுப்பதில் அர்த்தம் காணாத அர்த்தம் கண்டுவிட்டதாக எண்ணும் இறுகிய மூடிய மனது, அவனுக்கு.
முதியவர் தேநீர் குடிக்கச் சொல்கிறார். மறுக்கிறான். பறவைகளின் இ ைசபை, வாழ்க்கையை அவனுக்கு எடுத்துச் சொல் கிறார். இயற்கையை எப்படி ரசிப்பது என்கிறார். பெண்களுடான அவரின் தொடர்பும் இயல்பான, வன்முறையற்ற, இயற்கைக்கு மாறனாதொன்றல்ல, ஒழுக் கம் ஒழுக்கமின்மை சார்ந்ததல்ல என்பதை மிக எளிமையாக, வாழ்வின் மீதான ஆமோ தித்தலாக அவனுக்குச் சொல்கிறார். அவை அனைத்தும் அவ்விளைஞனின் வாழ்வின் அவநம்பிக்கையை மாற்றுவதாக இல்லை, அவனுக்குத் தேவை அம்மலைக்கு முன்னா லுள்ள ஏரியின் ஆழம், நீளம், அகலம் என்ப தும் அம்மலையிலிருந்து அதற்குள் விழுந் தால் எப்படிச் சாகலாம் என்பதுமே, முதிய
 
 

வருக்கு இவ்விளைஞனைப் பற்றி ஒர் எதிர் மறையான எண்ணம் மனதில் விழுந்து விட்டது. இவ்விளைஞன் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிழையாகப் புரிந்துகொண்ட வன் என்று. அவ்வெண்ணம் கடைசி வரை தொடர்கிறது. அது சரியா பிழையா? என்பது வேறு விசயம் வாழ்க்கையை நேர் மறையாக பார்க்கும் முதியவர் அவநம் பிக்கை உள்ள இளைஞனின் செயல்களால் தாக்கப்பட்டு அவன் திருந்தி, வாழ்க் கையை ஆமோதிக்கும்போதுகூட, அவனு டைய மாற்றத்தை ஏற்கத் தயங்குகிறார். அது எப்படி என்பதைச் சிறிது நேரத்தில் பார்ப்போம்.
முதியவருக்கும் இளைஞனுக்கும் உரை பாடல் நடந்துகொண்டிருக்கும், ஒர் இளம் பெண் மலையேறி வருகிறாள். அவள் மானிடவியல் படிக்கும் பல்கலைக் கழக
மாணவி. அவளும் ஆய்வில் ஈடுபடுபவள். அங்கு வருபவர்கள் அனைவருமே ஏதோ வொரு ஆய்வு நோக்கத்துடனேயே அங்கு
வருகிறதாக அவன் எண்ணுகின்றாள். களைத்து விழுந்து வரும் அவள் மூலம், திரு ராயப்பரைப் பற்றி இன்னும் சில செய்தி கள் பார்வையாளர்களுக்குக் கிடைக்கின் றன. ராயப்பர் பற்றி ஆய்வுலகத்தினர் எத்தகைய மதிப்பு வைத்திருக்கின்றனர். அவர்கள் சிலர் தங்கள் நூல்களில் அவ ருக்கு இடமளிக்கின்றனர். சிலர் அவரின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். சிலர் நன்றியே சொல்லாதது மட்டுமல்ல, தங்கள் கண்டுபிடிப்புகளாகவே சிலவற்றை எழுதி யும் வைக்கின்றனர். அதைப் பற்றி எல்லாம் ராயப்பருக்கு அக்கறை இல்லை, ராயப்பர் அவற்றை எல்லாம் கடந்த அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத, இயற்கையைத்
5.
SS

Page 8
துய்க்கும் துறவி. எளிமையாக வாழும் அமெரிக்கச் சிந்தனையாளனாகிய ஹென்றி தோரோ போன்ற ஒருவர்.
அம்மாணவியின் வருகை இளைஞனின் வாண்ட வக்கிரமான சிந்தனையை மாற்று கிறது. அவனிடம் பெளதீக, இரசாயன மாற் நம் ஏற்படுகிறது. இதுவரை ராயப்பரின் உரை பாடலாலும் வாழ்முறைகளாலும் ஒரளவு குழம்பிப் போய், தான் வந்த நோக்கமான தற்கொலை இப்பொழுது, வாழ்க்கையை ஆமோதிக்கும் ஒரு பெண்ணைக் கண்ட வுடன் முற்றாக மாற ஆரம்பிக்கின்றது. இந்த மாற்றத்தை ராபப்பர் நம்பவில்லை என்பது வேறு விசயம். இது வரை இருந்த இளை ஞன் வேறு. இப்பொ ழுது அப்பெண் இயற் கையையும் பறவை களின் இனிய கீதங் களையும் அவனுக் குக் காட்டுகிறாள். இளைஞனில் மாற் நம் படிப்படியாக ஏற் பட்டு, விழுந்து சாவ தற்கு ஏற்ற இடமான அங்கிருந்த ஏரியே அவர்களை அணைக் கும், ஏற்றுக் கொள் ளூம் உயிராக மாற் நரம் பெறுகிறது. அதில் நிந்த வெளிக்கிடுகி நார்கள் இரு வரும், கைகோர்த்துக்கொண்டு. ராயப்பர் அந்த மாற்றத்தை நம்பவில்லை.
அம்மாணவி வந்தபோது முதியவரிடம், தன் பேராசிரியை கொடுத்த கடிதத்தைக் கொடுத்திருந்தாள் அதை இப்பொழுது வாசிக்க ஆரம்பிக்கிறார், ராயப்பர். அப் பேராசிரியை ராயப்பரை இனிமேல் சந்திக்க முடியாது. தன் முதுமைப் பின்ரி காரனாக என்று எழுதியிருந்தாள். அப்பேராசிரியை ராயப்பரின் அன்புக்குரியவள் காதலி என்று கூட எடுக்கலாம். அது அவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. ராயப்பரும் உணர்ச்சியுள்ள மனிதன் மனித உறவுகளும் பறவைகளின் இயற்கையின் உறவு போலத் தேவையானதே. எல்லா உறவுகளும் புனிதமா னதே. உறவுகள் இல்லையாகிப் போகும் போது வெறுமை, கவலை அடைவது தானே மனித மனம் அதுவும் இயல்பே இயற்கையே என்பதை ஜயகரன், நாடகம் என்ற தனக்குத் தெரிந்த ஊடகம் ஊடாகத் திறமையாகப் பதிவு செய்துள்ளார். இதில்
இது ஒன்றரை மணி நேர முழு நீள நாட கம். மூன்றே மூன்று நடிகர்கள் ஒரு வாழ்வை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சோடை
 

போகாமல், குரல் தொய்வடையாமல், நாடக உடல் மொழி கைவர, நெறியாளரின் கருத்தையும் நாடகத்தின் உயிரையும் திறம் பட வெளிக் காட்டுவதில் வெற்றி பெற, நடித் துள்ளார். நல்ல பல நாடகங்களில் நடித்த, பண் பட்ட நடிகர் திலீப் குமார். அவரும் நாடகமும் ஒன்றில் மற்றது இணைந்து நாடகம் உயிர் பெற்ற வளர்ந்திருக்கின்றது. இளைஞனாக நடித்த தர்ஷன் சிவகுருநாதன் பதட்டமடைந்த அவசரமான பொறுமை பற்ற முதிர்ச்சியற்ற ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். = al m -
மேடை அனுபவக் குறைவால் ஆரம்பத் தில் ஏற்பட்ட குரல் தளதளப்பும், கரடு முரடும் போகப் போக அமைதியாகி விட்டன் . இளம் பெண்ணாக வந்த சத்யா தில்லை நாதன் இயல்பாக ந டி த் து ஸ் விள 7 ர் . இளமையும் கவர்ச்சி பும் இடத்திற்கேற்ற
Fն է ä1), முக | | | | gl | tl : 1 մ մ" களும் நாடகத்திற்கு உயிரூட்டியுள்ளன.
ஐ ய க ர னி ன் பிரதி, நெறியாள்கை யுடன் இணைந்ததே அவரின் நாடகம், பிரதியை ஆக்கும் போதே நெறிப்படுத்துவதை மனதில் கொண்டுதான் படைத்திருக்கிறார். திலீப்குமாரின் நடிப்பும் அனுபவமும் பிரதிக்கு அமைந்து போனவை. பன்னிரண்டு நாடகங்களை மேடையேற்றிய ஜயகரன் அனுபவம் மிக்கவரே. அவரின் உழைப்பு இரண்டு அளிக்கைகளுடன் நிற்காமல் இன் ஒனும் பல அளிக்கைகள் வேண்டும். அதற்கு இங்கு வசதிகள் குறைவு. இரண்டொரு அளிக்கைகளுக்காக எத்தனையோ மாதங் களாக பழகி, மேடையேற்றிவிட்டு, அதைக் கைவிடுவது இங்குள்ள எம் தமிழ் நாடகக் காரர்களுக்கு ஏற்படும் உழைப்பு விரயமும், அவலமும், சோகமும். நாளை நாடகப் பட் டறை இயக்குநராக இருந்து, எத்தனையோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் இந்நாடகத்தை மேடையேற்றிய ஜயகரனையும், அவரைச் Fார்ந்தவர்களையும் T LE 33T | I T T பாழ்த்துகிறேன்.
"ஒரு காலத்தின் உயிர்ப்பு ஜயகரனின் வெற்றிப் படைப்பும் முயற்சியும். அவரின் உள்ளார்ந்த ஆற்றலின் குறிப்பிடக் கூடிய வெளிப்பாடும் அது.
O புகைப்படங்கள் : ரூபன்

Page 9
கவிதையியலும்
D. r.
LLL L S LSL SS S S S L S L L L S S S S S S S S S S S S S S Y S S S LSSS
இன்று கவிதையின் பரப்பு நாம் கற்பனை பன் இன்னும் பலர் உணர்ந்ததாய் இல்லை. இப்டே கவிதையையும் புதுக்கவிதைக்கென ஒதுக்கப்பட்ட பிடியாய் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த வந்து அவர்கள் மூஞ்சியில் ஓங்கி அறையும் போ: வாய் ஒறு வாய் ஆகியும் போக அவர்கள் அவல போவதில்லை. இவர்களுக்காக தரிசனம் மிக்க க முடியாது அவ்வாறே கவிதை' என்று நாம் அை மாதவிடாய் வந்த முற்காலப் பெண்களாய் காத்தி
 

தமிழ்க்கவிதையும்
LITT.
L L L L L L L L LLS
L L L L L L L L L L L L L L L L L L
ண்ணிப் பார்த்திருக்காத அளவுக்கு மாறி வருவதை பாதும் என்றைக்கோ செத்துப் போய்விட்ட மரபுக் விதிமுறைகளையும் அதன் மரபுகளையும் உடும்புப்
மாற்றம் புரியப் போவதில்லை. இந்த மாற்றங்கள் து. மூக்குடைந்து கோணலாகியும் சொண்டு பிளந்து க்குரல் எழுப்புவதைத் தவிர வேறெதையும் செய்யப்
லைஞர்கள் காலத்தை விரயம் செய்துகொண்டிருக்க }ழக்கும் ஒன்றும் நீங்கள் கரிக்கோடிட்ட குச்சுக்குள்
ருக்கப் போவதுமில்லை.

Page 10
தான் கவிதை பற்றி எனது ‘விசாரம்' நூலில் பின்வரும் கருத்துப்படக் கூறியுள்ளேன். கவிதை என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டுக் கனவாக அவனோடு மிதந்தது. அவன் மனக்குகைகளில் மிதந்த இக்கனவு, அவன் மலைக் குகைகளில் வாழ்ந்தபோது ஊமை ஒவியங்களாக குகைச்சுவர்களில் கண்சிமிட் டிற்று. அவன் பேச்சு மொழியை மிழற்றத் தொடங்கிய போது இக்கனவு வாய்மொழிக் கவிதைகளாய் (பாடல்களாய்) அவன் வாயிலிருந்து தத்தித்தத்தி ஒசையில் மிதந்தது. பின்னர் அவன் எழுத்தை அறிந்து எழுதத் தொடங்கியபோது அவன் கனவு யாப்பமை வற்ற ஆதிப் புதுக்கவிதைகளாய் அல்லது ஆதிப் “பொதுக்கவிதை"களாய் சிறகடித்தது. இதன் பின்னர் இக்கவிதைகளின் உயிர்ப் பறிந்து இலக்கணம் போடப் பட்டு அவற்றுக்கு யாப்பமைதியுடைய செய்யுள் வரம்புகள் என்ற அதிகாரம் போடப்பட்டபோது, கனவாக மிதந்த கவிதையின் சுதந்திரச் சிறகுகள் கொய்யப்பட்டு மண்ணோடு பிணிக்கப்பட்டது. அது இப்போ ஆண்டானுக்கு உட்பட்டுச் சேவகம் செய்யத் தொடங்கிற்று”
இந்தக் கட்டுப்பட்ட நிலையிலிருந்து மீண்டும் கவிதை விடுதலை பெறவேண்டும். மரபுக் கவிதை மட்டுந்தான் செய்யுள் விதிக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை. அதை உடைப்பதாக நினைத்துக் கொள்ளும் புதுக்கவிதையும் அது வகுத்துக்கொண் டிருக்கும் புது விதிகளுள் பரிதாபகரமாகச் சிறைப் பட்டிருப்பது இன்று புதுக்கவிதை எழுதும் பலருக்குப் புரிவதில்லை. இந்தப் புரிதலே கவிதைக்கு நேர்ந்துள்ள சிறையை உடைத்தெறியும் ஆயுதமாகும். இந்த உடைப்பே கவிதையை ஆதிப்பொதுக்கவிதையாக, அதேநேரத்தில் இன்றைய விஞ்ஞான, தத்துவார்த்த, ஆத்மார்த்த ஊட்டாட்டம் பெற்றவோர் பெருஞ் சக்தியாக, புதுப்பரிணாம பரிமாணங்களைத் தோற்று விக்கும் சூறையாக மேலெழச் செய்யும். இதன் எழுச்சி இன்று கட்டிக் காக்கப்பட்டுக்கொண்டுவரும் ஏனைய இலக்கிய உருவங்களையும் தாமாகவே புதுவித உருவங்களுக்கும் தளமாற்றங்களுக்கும் இட்டுச் செல்லும்.
ஆனால் இவற்றைப் புரிந்து கொள்வதற்கு நாம் மேலெழுந்தவாரியாகவாவது நமது தமிழ்க் கவிதை வரலாற்றைப் பார்க்கவேண்டும். இந்தப்பார்வையே தமிழ்க் கவிதையியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இன்றுள்ள நிலையையும் அறிய உதவும். கவிதையில் ஏற்படும் புதுமாற்றம் என்பது என்ன ? அது ஏன் ஏற்பட வேண்டும் ? எதனால் இவை உந்தப்படு கின்றன? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண் டும். நான் ஆதிப்பொதுக்கவிதை என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டது, எந்த விதிகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத காலத்தில் மனிதன் தனக்குத் தெரிந்த மொழியில் தனது சுயவிச்சாப்போக்கில், தனது மனதில் கனவாக மிதந்தவற்றுக்கு, அத்தகைய உணர்வு களுக்கு கவிதை உருவங்கொடுத்த நிலையைத்தான். ஆதிப் பொதுவுடைமை நிலவுகையில் எவ்வாறு மனிதன் எவருக்கும் கட்டுப்படாத நிலையில் தான் விரும்பியவாறு தான் நினைத்ததைச் செய்து ஆனந்த {: வாழ்ந்தானோ அவ்வாறே அவனது கவிதை
வெளிப்பாடும் இருந்தது. ஆனால் காலஞ் செல்லச் செல்ல புறவுலக மாற்றங்கள் எவ்வாறு கட்டுப்பாடு களை அவனுக்கு ஏற்படுத்திற்றோ அவ்வாறே அவனது
Č

மொழிகையாள்கையிலும் வளர்ச்சி என்ற பேரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கவிதைக்கான யாப்பு விதிகளின் வரவு அவன் சுதந்திர இயக்கத்துக்கு வரம்புகள் இட்டன. ஆயினும் இந்தப் புது இலக்கண இலக்கியங்களே அன்றைய தமிழ்க் கல்வியாக இருந்தது. இது வளர்ச்சியாகவும் நாகரிகமாகவும் அன்றும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில் ஒவ்வொரு தனி மனிதனும் கலைஞனும் தன் சுயத்தை இழப்பதற்கும் இவையே காரணமாய் இருந்தன என்பதை அவன் உணரவில்லை. (ஒவ்வொரு விதியும் - அது நல்ல தாயினும் கெட்டதாயினும் மனிதன் மேல் அதிகா ரத்தையே செலுத்துகிறது” என்று ஃபுகோ சொன்னார். இதையே ஒரு பொருள் பற்றிய மனிதனின் ஒவ்வொரு வார்த்தையும் அதன் சுயத்தை இழக்கவைத்து விடு கிறது என்று இந்தியர்கள் எப்பவோ எதிர்மறையாகச் சொல்லியுள்ளனர். நாம் ஒன்றின் மேல் ஏற்றும் வார்த்தைகளே அதன் சுயத்தை மறைக்குமானால் அதனோடு கூட வரும் விதிகள் இன்னும் மோசமாக அதைப் பாதிப்படைய வைக்கலாம் என்பது வெளிப் படை}
சுதந்திரமாக இயங்கிய கவிதைகள் யாப்பு விதி களுக்குட்பட்டன. நம் சங்க காலக்கவிதைகளே அப்படிப்பட்டவைதான். அவை அனேகமாக ஆசிரியப்பா வகையைச் சார்ந்தவையாய் இருந்தன. வெண்பா வகைபின்னர் வந்தன. குறள் வெண்பா, கலிவெண்பா கட்டளைக் கலிப்பா, விருத்தம் என்று விதிகள் விரிந்தன. மனித அனுபவ உணர்வின் விரிவுகளை, ஒரே வகை விதிக்குள் உள்ளடக்க முடியாமல் போகவே பலவிதிகள் போடப்பட்டன. வெண்பா வென்று ஒரு கவிதை எழுதப்படும் போது சில வேளைகளில் அது சீர் தளைகளுக்குள் அடக்கப் பட முடியாமல் போகும் பட்சத்தில் அத்தகைய சொல்லை உள்ளிட்ட வெண்பாவை ‘சவலை என்ற பேரிட்டு அதையும் உள்ளடக்கினர். (உயர்சாதிச் சைவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் வணங்கிய "பெத்தப்பாவை’ ‘வயிரவர்' 'பேச்சியம்மன்' என்று பேரிட்டு அரைவிருப்பத்தோடு உள்ளடக்கியது போன்றதே இச்சவலை விவகாரமும்) இன்னும் ஒப்பாரி, தாலாட்டு, என்று வேறு வகையான இசை விதிகளின் தாக்கங்கள் வேறு. இவை இன்னம் இலகு படுத்தப்பட்ட நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, கும்மி, பள்ளு, என்று பல்வகை குச்சொழுங்கைகளாகக் கால்விட்டன. யாப்பு விதிகளின் நூலான 'காரிகைக் குள் அடங்காதவை இவை. இவ்வாறு கவிதை, யாப்பு விதிகள் என்னும் வேலியிட்டு நெறிப்படுத்தப் பட்டபோது அதற்குரிய ரசனை, அழகு, கலை ஒழுங்கு என்பவை பயிலப்பட்டன. அதன் மூலம் பண்பாடு, நாகரிகம் என்பவை ஒம்பப்பட்டன. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் கலையழகை ரசிப்பதற்கு விதிகள் போட்டவன் அறியாமல் போனது இதுதான்: கலை உணர்வு எல்லையற்று விரியும் என்பதையும் அதை ரசிக்க அவன் மனமும் எல்லையற்று விரியும் என்பதையுமே. இதை மறந்ததன் விளைவே, அவன் போட்ட யாப்புவிதிகள். இந்நிலை பில் பார்க்கும்போது மனிதன் தனக்குத்தானே விலங்கு பூட்டிக்கொண்டான் எனலாம். இதை விளக்குவது அவசியமாகும். இன்று எல்லாத் தொழில் களும் அறிவுசார் விஷயங்களும் தனித்து நிற்க

Page 11
முடியாதவயாகி ஒன்றோடொன்று உளடாட்டம் பெற்று இயங்குபவையாக உள்ளன. கலை இவற்றுள் விசேடமானது. இது எல்லாத் துறைகளோடும் - அறிவுத்துறை உட்பட- சம்பந்தப்பட்டுள்ள போதும் இது ஏனைய துறைகள் போலல்லாது மனிதனின் இருப்புப் பற்றி பேசுவது மனித இருப்பின் ஆதி அந்தம் வரை செல்ல கலை அறிவே, கலை உணர்வே ஒரே ஒரு சாதனம். சகல அறிவுத்துறைகளுக்கும் ஒழுங்குகளும் விதிகளும் ஏற்புடையதாயினும் கலைக்கு, அதன் இயக்கத்துக்கு இந்த ஒழுங்குகள் தடையாகவே முடியும், நான் ஏற்கனவே கூறியதற் கொப்ப ஒன்றின் அழகை உண்மையில் ரசிக்க வேண்டுமானால் நாம் மெளனமாக அதை உள் வாங்கி ரசிப்பதே சிறப்பானது. மாறாக அந்தப்
மரபுக் கவிதைமட்டுந்தான் ெ அதை உடைப்பதாக நி3 வகுத்துக்கொண்டிருக்கும் புது இன்று புதுக்கவிதை எழுதுப்
பொருள் பற்றி நாம் வார்த்தைகளைப் பரப்பி ரசிக்க முற்படும்போது நாம் அதன் அழகில் குறுக்கிட்டு, எம் வார்த்தைகள் மூலம் அதன் அழகைக் குறைத்து விடுகிறோம். எம் வார்த்தைகள் மூலம் எம் குணத்தை அதில் ஏற்றி அதன் சுய-அழகை இருப்பை கெடுத்து விடுகிறோம். இதனால்தான் எல்லாவற்றினது அழகை யும் உள்வாங்குவதென்பது மெளனத்தின் மூலமே சாத்தியமாகிறது. மெளனமே சகலதின் சுயத்தின் வரை செல்லக்கூடிய மொழியாகும்.
வானத்தில் பட்டமேற்றும் பருந்து விட்டுவிட்டு இன்னிசைக்கும் குயில், மெளனித்து மெல்லலையால் மொழிபேசும் வாவி என்று எம்முன் விரியும் ஒவ்வொரு காட்சியும் ஏற்படுத்தும் கலைத்துவ உணர்வை கவிதையில் எவனும் பூரணமாக வெளிப்படுத்திவிட முடியாது. அது எப்பொழுதும் சொற்பதங் கடந்ததாகவே நிற்கிறது. இந்நிலையில் கவிதையில் ஈடுபடுங் கவிஞன், மொழிக்குள் அகப்படாது விரிந்து விரிந்த தப்பித்துச் செல்லும் கலை உணர்வை மொழிக்குள் கொண்டுவர பல யுக்திகளைக் கையாள்கிறான். மரபு வழிவந்த பழைய யாப்போசை உத்திகள் பன்னூற்றாண்டு காலமாக பாவிக்கப்பட்டு பாவிக்கப்பட்டு செல்லாக்காசாகி விட்டதால் முதலில் இவை அவனால் ஒதுக்கப்பட வேண்டியவை ஆகின்றன. அதனால்தான் இன்றைய தமிழ்க் கவிஞன் ஒருவன், பின்வருமாறு பாடுகிறான்.
"தற்போதைக்கு, உன்னைச் சூழ்ந்து alsall, 35. உழிஞ்சொற் படைத்தினத்தை தகர்த்தெறி ஓசை அவி பாசைரின் பின் உதுங்கு பே777ணிச் சொற்கண் புகுத்து புகுத்து புரட்சிக்க'
 

இதில் இருந்து புலப்படுவது என்னவெனில், சொற்பதங்கடந்து விரியும் கவிதை உணர்வில் ஓர் அற்பமாவது நம் கவிதைக்குள் அகப்பட வேண்டு மானால் சுரத்துக் கெட்ட பழஞ்சொற்கையாளு கையை, அதன் வழிவரும் மரபை தூக்கியெறிய வேண்டும் என்பதே நம்மை விட்டு நழுவி நழுவி ஒடும் கவித்துவ உணர்வுகளை மொழியில் வீழ்த்த வேண்டுமாயின் புதிய போராளிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்படுத்தலானது நமது கவிதையியலிலும் பெருமாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ஆசிரியப்பா, வெண்பா, கலிவெண்பா, விருத்தம் என்று ஓடி வந்த செய்யுள் மரபை இது தூக்கி எறிவதோடு அதன் பின்னர் அதற்கெதிராக எழுந்த புதுக்கவிதையையும் அது அதற்கென ஸ்தாபக
ய்யுள் விதிக்குள் கட்டுப்பட்டுக் கிடக்க வில்லை. 의회 விதிகளுள் பரிதாபகரமாகச் சிறைப்பட்டி ப்பது
பலருக்குப் புரிவதில்லை.
மனத்துக்கொள்ளும் புதுக்கவிதையும்
மாக்கிவிட்ட புதுக்கவிதை மரபையும் தூக்கியெறிய வேண்டியதாக இருக்கிறது.
ஆகவே இன்றைய கவிஞர்கள் மரபு வழிவந்து, புதுக்கவிதை வழிவந்து ஸ்தாபனமாகிவிட்ட கவிதை யியலின் தேக்கத்தை உடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், இவை கவிதை என்ற பேரில் ஏற்கனவே எழுதப்பட்டு எழுதப்பட்டு வந்த பழஞ்சொற்களையும் தம் சக்தியை இழந்த அதன் வழிவந்த வசன அமைப்புகளையுமே திருப்பித் தர முயல்கின்றன. இதனால், கவிதையில் புதிய சொல்லாக்கங்கள், புதிய வசன அமைப்பு, விவரணை முறைகள் தேவைப்படுகின்றன. இதோ புதிய சொல் லாக்கங்களுக்குரியதாக கீழே வரும் கவிதையைக் ՀեITL- || -31) TLD
"கோடை எங்கள் நிலத்திலே நீண்டது நீண்டு நீண்டு தகிக்கையில் திடீரென
ம7ளி வந்து இதமாய் மழைத்தது கா'த்திருந்த புற்கள், மரங்களும் காப்வு நீங்கி துணிர்த்தே இணைத்தின கல்லுப்பத்றிய கிவிட்டி/ம் சிறு சிறு /ல்லுப் பற்றின, பூக்கண்கின் மின்னித்து ஒwந்துபோன் தெஞ்சின் ஓர் ஆழத்தில் ஒற்றை தரம்/ உயிர்ப்பினை யாழ்த்து வரண்டு கும்பி வாழ்க்கை/ம் ஆயிரம் ஆர்த்தங்கண்டு விழிகள் இதழ்த்தன" இங்கே கவிஞர் மிக வித்தியாசமாக மழை" என்ற சொல்லிலிருந்து மழைத்தது'இலை' என்ற சொல் லிலிருந்து இலைத்தன'யாழ்' என்ற சொல்லிலிருந்து "யாழ்த்தது, இதழ்' என்ற சொல்லிலிருந்து இதழ்த்தன என்ற புதிய வினைச் சொற்களை ஆக்கி கவிதைக்கு உரம் ஏற்றுகிறார். ஆனால் இக்கவிதையின் பலவீனம்

Page 12
g
CNմ
என்னவெனில் பழையபாணி சந்த அமைப்பில் கவிதையைப் பயின்று வரவிட்டதே. அதையும் மீறியிருப்பின் கவிதை உச்சமாய் எழுந்திருக்கும். ஆயினும் இதுபோன்ற கவிதைகள் ஓர் வகை முன்னோடிகளே.
இன்று புதுக்கவிதை என்றால் வண்ணத்துபூச்சி களையும் மின்மினிப்பூச்சிகளையும் நட்சத்திரங்களை யும் நிலவையும் (முன்னர் தமிழ் நாட்டில் "வானம் பாடிகள் இரத்தப் புஷ்பங்களையும் செம்பறவைகளை யும் வாரி இறைத்ததுபோல) அள்ளி இறைப்பதுதான் என்ற நிலை பரவலாகியிருப்பது மிகவும் பரிதாபத்துக் குரியது. அண்மையில் வீரகேசரி பத்திரிகையின் இலக்கியப்பகுதியில் சிறந்த கவிதையென எண்ணிப் பிரசுரிக்கப்பட்ட கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
"உனது பெயருக்கு வண்ணத்துப் பூச்சியென்றெ7ரு அர்த்தமிருப்டது எவ்வளவு பெ7ருத்தம் இல்ல7விட்ட7ல் என் கூந்தலிலும் தே7ள்களிலும் உதடுகளிலம் அமர்ந்து பறந்துதிரிய உன்ன7ல் முடிந்திருக்கும7, என்ன?” இப்படி வண்ணத்துப்பூச்சிகளையும் மின்மினிப்பூச்சி களையும் கவிதையாக்கி அழகு பார்த்தகாலம் ஒன்றிருந்தது. தொண்ணுாறுகளுக்குச் சற்றுமுன் ஆரோக்கியமாக ஆரம்பித்த இப்போக்கு பின்னர் ஒரு விதியாகவே மாறி தமிழ்க்கவிதையைச் சீரழித்தது. வண்ணத்துப்பூச்சி, மின்மினிப் பூச்சி என்பவற்றோடு நட்சத்திரங்களும் நிலாவும் சூரியனும் சேர்ந்து கொண்டன. இப்போக்குக்கு ஆரம்பத்தில் அதிகம் துணை போனவர் சோலைக்கிளி, அதற்குக் காரணம் இருந்தது. அவர் ஒவ்வொரு அஃறிணைப் பொருளை யும் ஒருவகைச் செய்தியை வெளிப்படுத்தும் நோக்கில் உருவகப்படுத்தினார். தமது சமூகத்தின் எதிரிகளாக வரித்துக்கொண்டவர்களை விமர்சிக்க அவர் தம் உருவங்களைப் பயன்படுத்தினார். அந்த வகையில் அவர் கவிதையியலில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத் தினார். ஸ்ரலின் கால ரஷ்யாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வெண்டுமென்றே தம் இளமைக்கால அனுபவங்களை விபரித்து, அக்காலத்தில் தாம் அனுபவித்த சுதந்திரம் பற்றி மறைமுகமாகப் பேசிய தன் மூலம் ஸ்ரலின் ஆட்சிக்கு எதிராக இயங்கினர். அவ்வாறே சோலைக்கிளியின் உருவகங்கள் சிலவும் அமைந்தன. ஆனால் எங்கே அது பிழைத்ததென்றால் இந்த உருவகமே தொடர்ந்து கவிதையாகவும் புரட்சி யாகவும் கொள்ளப்பட்டபோதுதான் அது ஒதுக்கப்பட வேண்டியதாயிற்று . அதுமட்டுமல்லாமல் இந்தப் பாணியை வெறுமனே ஏனையவர்களும் - முஸ்லிம் கவிஞர்கள் - பின்பற்றத் தொடங்கியபோது அதுதன் சீரழிவின் உச்சத்தைக் தொட்டது. சுரத்துக்கெட்ட வெற்றுப் பழஞ்சொற்பட்டாளமாக நட்சத்திரங்களும் மின்மினிப்பூச்சிகளும் நிலவுகளும் கவிதையாக வந்த
8|குவிந்தன். அதன் விட்ட குறை தொட்ட குறையாகவே
நோன் மேலே காட்டிய 'உனது பெயருக்கு
í
வண்ணத்துப்பூச்சியென்று ஆரம்பிக்கும் கவிதையும் நிற்கிறது. இந்தவகைப் போக்குக்கு எச்சரிக்கை யளாகவே 1985 ல் எழுதப்பட்ட ஒரு கவிஞரின் 'அம்புலிமாமா' என்ற நெடுங்கவிதை இப்படித்தான்
O ஆரம்பிக்கிறது.

"உன்னுடைய பெயர் என்ன?” என்றேன் ந7ன் “என்னுடைய பெயர7? சந்திரவதன?”
என்ற7ள் அவள் "சந்திரவதனிய7.?”ந7ன் இழுத்தேன் "ஏன் கூட/7த7” அவள் இல்லை, அமெரிக்கரும் ரஷ்யரும் பே7ட்டி
பே7ட்டுக்கொண்டு க7ல்பதிக்கும் இடம7 உன்னுடைய மென்முகம்? இன்னும7இந்தப் பெயர்களும் கற்பனைகளும்” இதன் நோக்கம், எம்முடைய பழையபாணிக் கற்பனைகளிலிருந்து எம்மை விடுவித்து, அண்ட வெளிபற்றிய எமது பார்வைப் பரப்பை விரித்து நாம் எடுத்தாளும் விஷயங்களுக்கு புதிய பரிமாணம் ஏற்றி கவிதையியலின் தேக்கத்தை உடைத்து விரிப் பதே. இதை இன்று எத்தனை கவிஞர்கள் உணர்ந்தி ருக்கிறார்கள்? அப்படி இல்லை என்பது உண்மை. இதோ அண்மையில் வெளிவந்த கவிதை பின்வரு மாறு அமைகிறது.
இள7ம் ப7சிப்பச்சை சலவைக் கற்கள் இழைத்த உன் அரண்மனையின் உள்நுழைந்தேன் அதன் அரசன் ந7ன் என்பதை அறியாத ஒரு ந7ளில் ம7யலே7கக் காற்றுக்கு பறந்த7டும் ச7ள7ரங்களின் திரைச் சீலைகளுக்கு
(67.6/67Ga / G///7/742 aiGa/76%i குரே7ட்டன்கள் குலுங்குகின்றன. , .”
இவ்வாறு இக்கவிதையின் தொடர் போகிறது. இதை எழுதியவரை உருட்டியெடுக்கும் காதல் மயக்கம் அவர் கையாளும் சொற்களில் வந்து விழவில்லை. பெரிய எடுப்பில் தொடரும் இக் கவிதையில் கவித்து வம் இழையாத வெற்றுக் கற்பனாவாதச் சொற்களே ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இதன் இறுதிவரிகளான “மழை எனக்குள் பெய்கிறது - எனக்கு உள்” என்பதில்தான் சிறிது கவித்துவம் இழைகிறதென்றால் அதுவும் ஏற்கனவே யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்த்த பெண் கவிஞர்களின் தொகுப்பு நூல் தலைப்பாக வந்திருக் கிறது - "எனக்குள் பெய்யும் மழை.
இதோ இன்னொரு காதல் கவிதையைப் படியுங் கள் இதன் கவிதைவரிகள் முன்னதன் வெற்றுத் தன்மையை வெளிக் காட்ட உதவும்.
"அன்பே, எனதன்டே/
முன்னே, ஆளுயர யன்னலில் பணிபடியக் கசிந்தெ7ழுகும் இந்நிலவின் காலிப்பை எ7ன்ன வென்று நீயுணரல் கூடுமங்கு? என்டே/7ல் உனக்குமது கனன்று தீ மெ/7/ங்கே7ள மென்ற ஆயிடுமே7? அன்றி சினந்து கொடுஞ்செ7ல்ல7ல் ஒறுக்க உனை உன் சுற்றமும் என்ன7ல் இந்நேரம் அழுது நீ கரைதல் கூடுமே77 அழுது நீ கரைய, வீணே இலைகளுக்கு நெzப்பிட்டு நில7 வழிந்து வீண7மே7”

Page 13
மேற்குலகில் கவிதையில் நா ஆண்டுகளுக்கு முன்னரே கவிதையில் சலிப்பு ஏற்பட்டு
நோக்கி மேற்குலகக் கவிஞ
இக்கவிதை முன்னதன் பெரும் எடுப்பெதுவும் இன்றி இயல்பாக வந்து விழும் வார்த்தைகளைப் பெய்து, “வீணே இலைகளுக்கு நெய்யிட்டு நிலா வழிந்து வீணாமோ” என்று ஈற்றில் தன் கவித்துவ முத்தி ரையை இட்டுச் செல்கிறது. இதோ புலம் பெயர் நாட்டிலிருந்து ஒரு இளங்கவிஞர், காதல் பற்றி கற்பனைச் சொற்களை அடுக்காது ஆழமான கருத் தைக் கவிதையாக்குகிறார். எடுத்துக் கொண்ட கருத்து நிமிர்வுக்கேற்ப அதன் ஒசையும் நிமிர்கிறது.
"62//742 (20/733/0/7Z7 4/7356) (273/767Go2//7/6 உன்னையும் 67ன்னையும் உரசி நெருப்பெடுத்து குலக்க/7/ப்புக் கெ/7ள்கை, எ7/ப்டே/7ம் 62//7 42 6yA0/7faÄa9540/74zy d55/7az56iÜ (ô?a95/76íyG6a2//7ZZö . . . °
/ിരf(്ഞU/ികബീബ)
ச7யும் குரியனுக்கு 62/1pZ/6ü Z/zj/z7 627/o/76/7G///7zó விதைய7கிப் டே/7ன நம் 62Ý7/7%ð7 ø6i6Nv60229 3/7 Z. z.g. அம7வ/7சை இரவுகளை அகற்று/வெ/7ம். 62/74 6z0/7óź3/0/747 3/736ü (237676%)//7zó...”
இவைதான் 90 களுக்குப் பின் எழுதத் தொடங்கிய கவிஞர்களின் கவிதைப் போக்கு. அனைத்தும் மரபுக் கவிதைக்கு எதிராக எழுந்த புதுக்கவிதையின் மரபை' விட்டு நீங்கதவை. மரபுக் கவிதைக்கு எதிராக 60 களில் தொடங்கிய புதுக்கவிதையின் போக்கு இன்னும் அதே தடத்தில்தான், எந்தவித மாற்றங் களுமின்றி ஓடிவந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டவே இவற்றை இங்கே குறிப்பிட வேண்டி யுள்ளது.
அப்படியானால் 60 களில் தொடங்கிய புதுக் கவிதை மரபிலிருந்து வித்தியாசமான, கவிதையியலில் மாற்றம் ஏற்படுத்திய கவிஞர்கள் தமிழ் நாட்டிலும் சரி ஈழத்திலும் சரி இருந்திக்கிறார்களா ? தமிழ் நாட்டில் கா.ந.சு (மயன்) வேணு கோபாலன், எஸ். வைத்தீஸ்வரன், சிமணி, பிச்சமூர்த்தி என்போ ரால் வளர்ந்து வந்த புதுக்கவிதை மரபுக்குள் தர்மு சிவராம் படிமவியலைப் புகுத்தி தனது தனித் தன்மையைப் பேணினார். பிச்சமூர்த்தி புதுக்கவிதை மரபுக்குள் விசாரத்தைப் புகுத்தியதுதான் அவரது தனித்தன்மை. ஆனால் அவரது கவிதை கவித்துவ எடுத்துச் சொல் முறையால் வளப்படுத்தப்பட வில்லை. சுகுமாரிடம் தத்துவார்த்தப் பார்வையோடு கவிதை இழைவதைக் காணலாம். பின்னர் வந்த ஞானக்கூத்தன, மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும்
 

Quid 6Tgguh GuršEö (Novel in Poetry) பதினைந்து ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்ல, புது மீண்டும் மரபுவழிவரும் சந்த (metre) கவிதையை ர்கள் திரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இடையில் நின்று அதற்குள் அங்கத்தைப் புகுத்தி தனது தனித்தன்மையைப் பேணிக் கொண்டார். ஆனால் அதில் பெரும் மேதாவித்தனம் இருப்ப தில்லை. பசுவய்யா எளிமையான சொற்கையாளுகை மூலம் சிந்தனையைத் தூண்டி கவிதையை மிதக்க விட்டார். ஏனைய தமிழ் நாட்டிலுள்ள இன்றைய கவிஞர்களின் கவிதைகள் பாரிய வித்தியாசங்களைக் காட்டுபவையாய் இல்லை. கால அடைவில் அவை தத்தம் தனித்தன்மையைக்கண்டடையலாம்.
ஈழத்துக் கவிஞர்களுள் மஹாகவி, நீலாவணன், முருகையன், தான்தோன்றி ஆகியோர் மரபுவழிவந்த செய்யுள் கவிஞர்கள். இவர்களுள் நீலாவணன் பல்வகை சந்தநிலைப்பட்ட செய்யுட்களைக் கொண்டு ஆத்மார்த்தப் பண்பைப் பேணியவர், மஹாகவி யதார்த்த - பேச்சு நடைப் பண்பைப் பேணியவர், முருகையன் அறிவியல் நுட்பமும் கச்சிதமும் தன் கவிதை மொழியில் பேணியவர். தான்தோன்றி அங்கதமொழிக்கையாள்கையை தனதாக்கிக் கொண்டவர். இவர்களுக்குப் பின்வந்த மு.பொ, எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், சு. வில்வரத்தினம், சேரன், வாஐ.ச. ஜெயபாலன் ஆகியோரும் புதுக்கவிதையில் தமக்குரிய தனித் தன்மையைக் பேணியவர்கள் எனலாம். எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் மாக்சியக் கொள்கை யாளர்கள். கவிதையில் மஹாகவியில் அதிக ஈடுபாடு காட்டினாலும், தம் கவிதைகளில் நீலாவணனின் ஆத்மார்த்த பண்புக்கே முதன்மை அளிக்க முனைந்த னர். சிவசேகரம் தீவிர வைதீக மார்க்சீயவாதியாக இருப்பதால் அப்பார்வையே அவர் கவிதைகளில் முனைப்புறுவதைக்காணலாம். இன்னும் எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம் ஆகியோ ரது கவிதைகள் மரபுக் கவிதையிலிருந்து பூரணமாக விடுபடாத தன்மையுடையவை என்பதும் முக்கியம். சேரன், வஐ.ச.ஜெயபாலன் ஆகிய இருவரது கவிதை களும் தமக்குள் அதிக தனித்தன்மையைப் பேணாத ஒரே வகைத்தன்மையுடையவை என்பதால் மாறாட் டங்களுக்கு வாய்ப்புண்டு. சு. வில்வரத்தினம் தனது கவிதைகளில் சங்கப்பாடல்கள், தேவார திருவாசகங் கள், தொன்மம் ஆகியவற்றை மறைமுகமாகச் சுட்டு தல் (alude) மூலம் தனது தனித்தன்மையைப் பேணு வதைக் காணலாம். மேலே கூறப்பட்ட இவை அனைத்தும் புதுக்கவிதை மரபுக்குள் நிகழ்ந்த சிறுசிறு மாற்று வடிவங்களே அன்றி, இதுகாலவரை ஓடி வந்த புதுக்கவிதை என்னும் மரபை உடைத்து, புதிய தளத்தில் இயங்கமுனைந்ததின் மூலம் கவிதை யியலில் மாற்றம் ஏற்படுத்த வழிவகுத்தவையல்ல.
அப்படியான புதிய பாய்ச்சல்கள் ஏற்பட்டிருக்

Page 14
கின்றனவா ? இது முக்கியமான கேள்வி.
இத்தகைய வித்தியாசமான, மரபு சார்ந்த புதுக் கவிதையை மீறிய ஆக்கங்களுக்கு உதாரணமாக, தமிழ்நாட்டுக் கவிஞர்களான பிரேம்-ரமேஷ் இரட்டையரின் "20 கவிதைகளும் 2000 ஆண்டுகளும் என்ற கவிதைத்தொகுப்பை நான் ஏற்கனவே எனது ‘விசாரம் நூலில் குறிப்பிட்டுள்ளேன். ஈழத்திலும் இத்தகைய மீறலுக்குரிய கவிஞர்கள் சிலரை குறிப் பிடத்தான் வேண்டும். முதலாவதாக வருபவர் தா. இராம லிங்கம். இவர் புதுக்கவிதையில் பேணப்பட்ட மரபை உடைத்து, யாழ்ப்பாணத்து மக்களின் புழக்கத்திலிருக்கும் சொற்களை வித்தி யாசமான முறையில் பாவித்து கவிதை எழுதினார். இவரது இத்தகைய ஆக்கங்களுக்கு உதாரணமாக இவரது ‘காணிக்கை - புதுமெய்க் கவிதைகள்' தொகுப்பு நிற்கிறது. இதற்க்கடுத்ததாகக் குறிப்பிடப்பட வேண்டியவர், சோலைக்கிளி; அஃறிணைப் பொருட் களை பல்வகையில் உருவகப்படுத்தி, அதற்கென கையாண்ட மொழியாள்கை கவிதையியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதென்பது சுட்டப்பட வேண்டும். அவர் அவையே கவிதையெனத் தரித்து நின்றதே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இன்றுவரை அதை மீறி அவர் வேறு தளத்துக்குச் செல்வில்லை. அடுத்த 'மண்பட்டினங்கள்’ ‘ஓ! யாழ்ப்பாணமே 'வன்னி மான்மியம்’ ஆகிய தொகுப்புகளை வெளி யிட்ட நிலாந்தன் குறிப்பிடப்பட வேண்டியவர். மண்பட்டினம் கவிதையாகவும் வரலாறாகவும் போர்ப்பரணியாகவும் பல தளங்களைத் தொட்டுச் செல்வதால் அது ஒரு தனித்துவமான கவிதை நூல். அடுத்து மு.பொ.எழுதிய 'அகவெளிச் சமிக்ஞை கள்’ (1970-80) ‘விடுதலையும் புதிய எல்லைகளும்’ (80-90) ஆகியவற்றில் அடங்கிய கவிதைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். அவையும் இன்றுள்ள புதுக் கவிதை மரபை மீறியவையே. இவை பற்றி பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்டபோது கவித்துவ வசனங்கள் என்றார். சண்முகம் சிவலிங்கம் இவற்றை “அப்பட்ட மான வசனங்கள்” (naked prose) என்றார். தமிழ்நாட்டு ஜனரஞ்சக சஞ்சிகை குமுதத்தில் ஒருவர் “வாழ்க் கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு” என்று கேட்ட கேள்விக்கு அரசு பின்வரும் கவிதையையே உதாரணம் காட்டினார்.
ஒவ்வெ/7ரு ந7ளும் கடைசி ஒரு கவிதைய7வது
2.45%/ ?/ V///7///725 கவிதையை உzயிர்ப் டபிப்ட்/தென்பது நினது வ/7ழ்க்கையை உயிர்டபிப்பத7கும். உ4யிருள்ள வாழ்க்கை, நீந7ள77ந்தம் 4/7யும்
சடங்குகள7ன் இயந்திரச் செயற்பாட்டில் உயிரற்று வீழ்கிறது சடங்கு வாழ்க்கையை அகற்றி கருத்திற்கு
இடங்கெ/டு கருத்தின் விழிப்பு/ - வாழ்க்கைமயின் தீபம் ,
சம//பிச்ஞைச் சுடர் சமுகம7க ஒடும் ஆற்றுநீர், ப7றைக் குறுக்கிட்டில் ட2றப்பிக்கும் விழிப்ட்வின் கே7ஷம் நின் வாழ்க்கையில் ஒலிக்குக
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்துக் கருத்து
فشلال الأليلاه ஒரு கவிதை, நித்திய விடுதலை."
i

இக்கவிதைதான் nakedprose என விமர்சிக்கப்பட்ட அகவெளிச்சமிக்கையில் வரும் 'கலை ஆட்சி கவிதை யின் ஒரு பகுதி. இது புதுக்கவிதைக்கென ஒதுக்கப் பட்ட மரபிலிருந்து விடுபட முடியாதவர்களின் விமர்சனம். இதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இச்சந்தர்ப்பத்தில் 90களுக்குப் பின் வந்த இளங்கவிஞர்கள் மத்தியிலிருந்த வித்தியாசமான பரிசோதனைகள் வந்துள்ளனவா என்று கேட்பதும் பொருத்தமானதே. அத்தகையவற்றில் ஒன்றாக அண்மையில் ஆழிப்பேரலைகள் (சுனாமி) ஏற்படுத்திய அழிவை அடிப்படையாக வைத்து கவிஞர் றஷமியால் எழுதப்பட்ட 'ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு குறிப்பிடப்பட வேண்டும். வித்தியாசமாக, பல்வகை மனத்தளங்கள் பற்றிப்பேசுவதோடு கடலைப் பேசவிடும் அலையின் பாடல் பின்வருமாறு துறவி போல் கூறிச் செல்வது நமக்குள் பன்முக உணர்வு களைச் கிளறிச் செல்கிறது.
“எனக்கு குழந்தைகள் வேண்ட7ம் (6)//6oó7567 Giovaoá7/.-/7/ó ஆண்களும் வேண்ட/7ம் உங்களது விடு வ/7சல் வேண்ட7ம் என்னில் அன்னிவந்த செல்வங்கன் வேண்ட7ம் ந7ன் புதிய என் எல்லைகளுக்குச் செல்கிறேன் எனது வ/7சலில் விசி எறிந்திருக்கிறேன் உங்களை பொறுக்கிக் கெ/7ள்ளுங்கள்”
மிகமிகச் சாதாரண சொற்களைக் கொண்டு சொல்லப்படும் சூழலின் பின்னணியால் கவிதை உருவாக்கப்படுவதற்கு மேற் காணும் வரிகள் உதாரணம். கவிதை பற்றிய எமது பார்வையை இன்னும் விரிக்க இன்னொரு கவிஞர் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். இவர் றவுமிக்கும் முந்தி தனது தரப்பட்ட அவகாசம்' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்ட கவிஞர், ஜபார். இவர் புதுக்கவிதை வரம்புக்குள் நின்றே எழுதியபோதும் நுணுக்கமான சொற்தேர்வுகளைக் கையாள்பவர். எங்கே இவரது தரப்பட்ட அவகாசத்திலுள்ள கவிதை கள் மீறலுக்குரியவையாய் நிற்கின்றன வென்றால் அதிலுள்ள எந்தக் கவிதையும் தலைப்பிடப்படாமல் இருப்பதினாலேயே. தலைப்பிடப்படாமல் இருப்பது புதுமையல்ல அப்படித் தலைப்பிடப்படாதப்படியால், அதிலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக் கொன்று ஏதோ விதத்தில் தொடர்புபட்டதாய், கவிஞர் விபரித்துச் செல்லும் பொதுப்பின்னணியின் குறுங்காவியமாகப் பரிணமிக்கிறது. இது ஒரு வித்தி யாசமான பண்பையும் தனித்துவத்தையும் தரப்பட்ட அவகாசத்திற்கு கொடுக்கிறது. அந்த விதத்தில் அது முக்கியமானது.
இங்கே நான் காவியம் பற்றிக் குறிப்பிட்டதும் காரணத்தோடுதான். செய்யுள் மரபில் ஐம்பெரும் காப்பியங்களைக் கண்டது பழந்தமிழ். அந்த மரபு வழிவந்த கவிதையியலின் உச்ச வளர்ச்சியாக கம்ப ராமாயணம் நிற்கிறது. இதற்கு இணையானவையாக இல்லாவிடினும் பின்னர் வந்த நளவெண்பா, வில்லிபுத்தூராரின் மகாபாரதம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவையே. இவற்றுக்குப் பின் வந்தவை யெல்லாம் ஸ்தலபுராணங்களாகக் குவிந்தனவே யொழிய ஆக்க இலக்கியங்களாக அமையவில்லை.

Page 15
இந்தநிலையே பாரதியின் முறுக்கிய மீசையும் தலையில் வரித்த தலைபாகையும் கவிதையில் நிமிரும் மட்டும் நீடித்திருந்தன. அதாவது பாரதி வருகையோடு கவிதையியலில் மாற்றம் நிகழ்கிறது. மரபுக் கவிதையில் ஆரம்பித்த பாரதி, அதன் சகல பாவகைகளையும் கையாண்டதோடு நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, பள்ளு, என்று மக்களோடு தெருவில் இறங்கி கவிதை யியலை நீட்டியவர். இன்னும் அவற்றில் மட்டும் தரிக்காது, அவற்றிற்கும் விடை கூறியவாறே புதுக் கவிதைக்குப் பாய்ந்தவர். இவர் போன்று கவிதையை வித்தியாசமான தளங்களுக்கு இழுந்து, கவிதையியலை வளப்படுத்தியவர் இவரது சமகாலத்தில் எவரு மில்லையெனலாம். இவரது பெருங்காவியங்களாக ‘பாஞ்சாலி சபதம்’ ‘குயில்பாட்டு’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். குயில்பாட்டு மரபு வழி கவிதையில் அமைந்தபோதும் அதன் கருப்பொருளின் தனித் தன்மை அதன் வடிவத்தையும் வித்தியாசப்படுத்து கிறது. இவருக்குப் பின்வந்த பாரதிதாசன் பாண்டியன்
நமது அகத்தில் சதாபுரண்ெ ஓர் அற்ப அளவினதாவது வேண்டுமாயின் வீரியம் ெ புதியவை கையாளப்பட வே
பரிசு, முதல் முத்தம் என்று பல காவியங்களை மரபு வழிநின்று எழுதியுள்ளார். வழமையான திராவிட உணர்வு, ஆரியமாயை எதிர்ப்பு சமூகச் சீர்திருத்தம் என்பவற்றை மையப்பொருளாக வைத்து செய்யுள் மரபில் எழுதப்பட்டவையே. தற்புதுமை இவற்றில் அதிகமில்லை. இவருக்கப் பின் வந்த புதுக்கவிதையாளர்களுள் ந. பிச்சமூர்த்தி எழுதிய 'வழித்துணை' சிமணி எழுதிய நரகம்’ தர்மு. சிவ ராமுவின் E=MC ஆகியவை குறிப்பிடப்பட வேண் டிய நெடுங்கவிதைகள் ஆகும். முன்னவை இரண்டை யும் பற்றி சி.சு.செல்லப்பா குறிப்பிடுகையில் அவை கவிதையுலகில் மைல்கல்' என்கிறார். அது வெறும் உயர்வு நவிற்சி என்றே எனக்குப்படுகிறது. தர்மு சிவராமுவின் E=MC காவியதன்மைக்குரிய விரிவு இல்லாவிட்டாலும் தனக்கெனத் தனித்தன்மையைச் கொண்டதாகக் கொள்ளலாம்.
ஈழத்தில் இத்தகைய காவிய முயற்சிகளாக வஐச ஜெயபாலனின் 'ஈழத்து மண்ணும் எமது முகங்களும் மு.பொ.வின் துயரி’யும் நிற்கின்றன எனலாம் இரண்டும் விடுதலை பற்றிப் பேசுவன. முன்னது கற்பனையில் அமைந்த கதை புதுக்கவிதையில் தரட் படுகிறது. பின்னது கண்ணகியின் புதிய வார்ப்பாய் விடுதலை அவதாரமாய் எழுவது, புதுக்கவிதையும் அதன் மீறலுமான புதுவடிவில் தரப்படுகிறது.
"ம7லை இரட்டு விதிமவில் விழ7க்காணும் ஜனத்திரன7zப் அவள் டபிரவகித்துக் கொண்டிருக்கும் டெ/து அவளை நான் தேடுகிறேன் , , ,
 
 
 

எறும்/நிரையின் மெளனச் சந்தடி ஊர்வலத்தில் அவள் தன் இர7ட்சத சுவடுகள் பதிய நடக்கும்
23627/6 தியேட்டரை விட்டுக் குபுகுபு/வென வெளியேறிக்
கெ/7ண்டிருக்கம் மக்கள் கூட்டத்தின் கூட்டு மெ7த்த அன7தைத்
தனத்தில் அவள் அவள் தியேட்டரை விட்டு எங்கே பே7கிற7ள்? 4/77/76i 60362?y z Żz// 'A –/767/? ம7ணிடம் கைவிட்ட கண்ணகி” என்று ஆரம்பிக்கும் துயரி' குறுங்காவியம்
"மெல்லிய இருட்டில் அவள் மே7கன ஈர்ப்பென் ஆண்மையை எடுத்து ந7ண் ஏற்றிற்ற7? ஆமபிரம் கெ/7ற்றவை, உணர்வினில் கலித்த க7மனை உரும7ற்றி வேல்கள் தரித்தன. அப்போது அவள் நீல/7ம்பரியென என்முன்
67ழுந்த77ள்
டழும் சொற்பதங்கடந்த கவிதை உணர்வுகளில்
பிறர் உணர்வுகளில் பற்றிக்கொள்ளச் செய்ய கட்டுப்போன பழஞ்சொற் கூட்டத்தைத் தகர்த்த ண்டும்.
சிந்து வெளிந7கரிகச் சிவனின் நிமிர்வு" என்று இடையில் வேகங் கொண்டு.
"அவன் என் க/தலி/7?
இல்லை, இம்மண்ணுக்கு மீள்வரவு செய்யுங் கண்ணகிய7? ந7ன் கொடுத்த மே7திரம் என்முன் சிலம்ப74ப் விழுந்து
தெறித்துச் சுழல்கிறது. அறம் டபிழைத்தே7ர்க்கு கூற்றாகும் இயற்கை உற்ப7தம் அவன்?
டே/கும் வழியெங்கும் பரவிக் கிடந்து அவள் கால்களை இடறிய, கட/7லங்களைக்
கே7த்தணிந்தனள், அல்லற்//ட்டு அழுகையுங் கடந்த எல்லையில் நின்ற அகதிகள் ஜூனித்த அறங்கூற்றெனும் ஆயுதம் தரித்தனள் அனைவர்க்குள்ளும் அதை உயிர்டபித்து ஊழியப் 4/4/ல7ய் எங்கும் எழுந்தனள், , ,” என்று உக்கிரங்கொண்டு இறுதி நிலைநோக்கிச் செல்கிறது.
i
இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் སྤྱི་ Cd O o
அண்மையில் "தீராநதி” நேர்காணலில் ஜெயமோகன் தான் கண்ணகி பற்றி நாவல் ஒன்று எழுத முற்பட்ட தாகவும், பின்னர் பலகாரணங்கள் கருதி, அதை மாற்றி "கொற்றவை' என்ற பேரில் கவிதை வடிவில் காப்பியமாக எழுதுவதாகவும் கூறியுள்ளார். எது எப்படியானதாயிருந்தாலும் அவரின் முயற்சிக்கு

Page 16
முன்னரே ஈழத்துக்கவிஞர் மு.பொ.வின் துயரி கண்ணகியின் மீவார்ப்பாகவும் குறுங்காப்பிய முன் னோடியாகவும் நிற்கிறது என்பது மட்டும் உண்மை. இது 1985ல் எழுதப்பட்டு 2003ல் வெளியிடப்பட்டது. (பார்க்கவும், சூத்திரர் வருகை. இதன் ஒரு பிரதி ஜெயமோகனுக்கும் அனுப்பப்பட்டது)
மேற்குலகில் கவிதையில் நாவல் எழுதும் போக்கு (NovelinPoetry) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்ல, புதுக்கவிதை யில் சலிப்பு ஏற்பட்டு மீண்டும் மரபுவழிவரும் சந்த (metre) கவிதையை நோக்கி மேற்குலகக் கவிஞர்கள் திரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த மரபை விட்டுப்போவது, பின்னர் அதைநோக்கித் திரும்புவதும் சீரான கருத்தியல் தெளிவின்மையா லேயே நிகழ்கிறது. புதுக்கவிதையில் சலிப்பென்றால், அந்தச் சலிப்பு மீண்டும் திரும்பிப் போவதாக அமையாமல் அதிலிருந்து இன்னொரு பாய்ச்சல் நிகழ்த்தப்பட வேண்டியதாக அமையவேண்டும். இதற்கு 'ஏன் புதிய பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்?' என்ற கேள்விக்கான கருத்தியல் தெளிவே அதைச் சாத்தியமாக்கும்.
இந்தக் கருத்தியல் தெளிவின்மையே புதுக்கவிதைக் கென ஒதுக்கப்பட்ட ‘மரபை மீறி எழுதும் புது முயற்சிகள் யாவும் வசனங்கள், வசனகவிதைகள் என்று ஒதுக்கப்படும் போக்கை நான் ஏற்கனவே காட்டினேன். இந்தத் தவறையே அண்மையில் ‘புதுக்கவிதை வரலாறு' 'கொங்குதேர் வாழ்க்கை - 2 ஆகிய நூல்களை எழுதிய தமிழ் நாட்டுக்கவிஞர் ராஜமார்த்தாண்டனும் செய்துள்ளார். இந்தத்தவறு, தரிசனம் மிக்க கவிஞர்களால் ஏற்படுத்தப்படும் ! கவிதையியலின் வளர்ச்சி பற்றிய அறியாமையின் விளைவே - இதனால் தான் பாரதியாரின் ! புதுமுயற்சிகள் இற்றைவரை "வசனகவிதைகள்' எனக் கூறப்பட்டு வருகின்றன.
தே வகா எழுதி "கதாக
(மஹாபாரதத்தின்
இது ஒரு கால
இந்திய உபகண்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாசி
முடிவுறாமல் தொடருகின்ற பெருங்கதையாடல் இலக்கியச்
குள்ளாக்கி ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் படைத்தி ஆதி - இடை - நவீனம் அனைத்தையும் உள்வாங்கி தன்
வெளி
cist
16, ஹம்ஸ்ரெ ஒன்ராரியோ
14
 

பாரதியின் தரிசனம் அவர் பின்வந்த எவரிடமும் சரியாக வேரூன்றவில்லை. இன்றுள்ள நம் இளங் கவிஞர்கள் பலருக்கு மரபுக்கவிதையின் ஆழம் பற்றியோ அதை உடைத்தெழும் புதுவடிவங்களின் அவசியம் பற்றியோ எதுவும் தெரியாது. அதனால் இவர்களிடமிருந்து கவிதையியலின் மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இவ்வித்தில் இவர்களுக்கு பிரஞ்சுக் கவிஞன் றிம்போ (Rimbaud) பற்றிக் கூறி முடிப்பதுதான் பொருத்தமானது. ஏழு வயதில் கவிதை எழுதத் தொடங்கி 19 வயதில் தன் கவிதை வாழ்க்கையை முடித்து 37 வயதில் இறந்து போன றிம்போ, ஆரம்பத்தில் மரபுக் கவிதை எழுதி பின்னர் மரபை உடைத்து கட்டில்லாக் கவிதைக்குப் பாய்ந்து வசனத்தையே கவிதையாக்கி னார். “கருத்தில் புதுமை செய்யும் போது அதற்கேற்ப வடிவத்தில் புதுமை செய்ய வேண்டும்” என்பது அவரது கருத்து.
ஆகவே கவிதையில் புரட்சி ஏற்படுத்தி கவிதை யியலை வளர்த்துக்காட்ட வேண்டுமாயின் நான் ஆரம்பத்தில் கூறியதை நினைவுபடுத்திக் கொள்ளுதல் நல்லது. அதாவது நமது அகத்தில் சதாபுரண்டெழும் சொற்பதங்கடந்த கவிதை உணர்வுகளில் ஒர் அற்ப அளவினதாவது பிறர் உணர்வுகளில் பற்றிக்கொள்ளச் செய்ய வேண்டுமாயின் வீரியம் கெட்டுப்போன பழஞ்சொற் கூட்டத்தைத் தகர்த்த புதியவை கையாளப்பட வேண்டும். அத்தகைய புதியவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் சிந்தனை - உணர்வுத்தளங் களுக்கேற்ப கவியுடல் தரித்து செயற்பட விடுதல் தரிசனம் மிக்க கலைஞனின் ஆற்றலில் அடக்கம். இது ஒரு வகை மொழிப் புரட்சியாகவும் தொழிற் படலாம். இவற்றைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமக்குத் தெரியாவற்றைச் சந்திக்கும்போது 'வெற்று வசனங்கள்’ என்றும் ‘வசன கவிதைகள்’ என்றும் சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
ந்தன்
lu
T6)Lñ"
மறு வாசிப்பு)
வெளியீடு
க்கப்பட்டு வரும் தொல் இதிகாசமான மஹாபாரதம் கனதியுடன் அப் பெருங்கதையாடலை மறு வாசிப்புக் ருக்கும் தேவகாந்தன், இறுக்கமான மொழிநடையில்
புனைவை நிகழ்த்தியிருக்கின்றார் இப் பிரதியில்,
டு
Y65
(siri, iss

Page 17
தோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட அந்தச் சிலை நாயக்கர் மகாலின் நடுக்கூடத்திற்கு அலங்காரமாய் இன்று வீற்றிருக்கிறது. கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை மட்டும் ஏந்தியபடி, சுற்றிக் காண்பிக்கும் கைடுகளுக்கு சொல்லப்பட வேண்டிய சுவையான தகவலாய் தரப்பட்டிருந்தது.
"எந்த திசையிருந்து பார்த்தாலும் சிரிக்குமுங்க" சொல்லிவிட்டு தாண்டிப் போக அதோடவே நின்று போகிறது மனது.
இடிபாடுகளுக்கிடை இருந்த அந்த மகால் இன்று புதுப்பொலிவு அடைந்திருப்பது கேள்விப்பட்டு நண்பர்களோடு அதை மீண்டும் கண்டுவரத் திட்ட மிட்டிருந்தேன். இதுவரை தனித் தனியாக என்னுடன் பொழுதுகளை கழித்த நண்பர்கள் இருவரையும் ஒரு சேரக் கண்டு மகிழப் போகும் நினைப்பு தித்தித் துக்கொண்டிருக்க, சொல்ல முடியா மகிழ்வில் இருக்க, இடம் வந்து சேர்ந்த பின்தான் உணர்ந்தேன் இதுவரை தான் நினைத்திருந்த சூழல் தாண்டி ஒரு அசா தாரண சூழல் அங்கு உருவாகியிருப்பதை நண்பர் களாய் உணரப் பட்டவர்கள் ஆண்களாய் எனக்குள் உருவேறத் துவங்கினர். எங்கு நிகழ்ந்த சாபமிது. அகலிகை கல்லாக சாபமிட்ட கௌதமனாய், இவர் கள் நண்பர்களாக இருந்ததை விட்டு ஆண்களாக மாற சாபமிட்டது யார்? கேள்விகள் குடைய அன்னியப்பட்ட சூழலில் உடன் நடந்தேன். அவர்கள் எல்லாம் அறிந்தவர்களாகவும் நான் நிறையக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியவளாகவும் இருப்பதாகப் பட்டது எனது தாழ்வு மனப்பான்மையா? அவர்களது ஆதிக்க மனோபாவம் அப்படியாக நான் உணரும் படி நடக்கச் செய்ததா? உண்மைதானா? தனக்குத் தெரியாத விசயங்கள் பேசப்படுவதால்தான் நான் உள் புக முடியாத நிலை வந்ததா? உண்மையில் எனக்கான உலகமும் அவர்களுக்கான உலகமும் வேறாக இருப்பதுதான் நிதர்சனமான உண்மை எனவும் அதை உணர்ந்துகொண்டு மாற்று உலகங் களை அதற்கான புரிதல்களோடு பார்க்கத் தவறி விடுகிறோமோ? கேள்விகள் எனை குறுக்கு விசா ரணைக்கூண்டில் நிறுத்த அலுப்பு தொற்றிக் கொண் டது. இவ்வளவு சிந்தனைக்கிடையில்தான் "திசை அணங்கு" எனக்குள் புகுந்தாள் காட்சிகளாக என்னோடு பேசினாள்.
நீ மட்டுமல்லடி காலம் காலமாய்த் தொடரும் சாபக் கேடிது, சொல்லி விட்டு அந்த வீட்டுக்குள் புகுந்தாள் அவள்,
 

அந்த வீடுள்ளிருந்து வெளி வரும் ஒலி அது சிற்பக் கூடமா? அல்லது வாத்திய கருவிகள் தாளம் தவறாது இசைக்கும் இசைக்கூடமா ? என்று தீர்மானிக்க முடியாதபடிக்கு இனிமையான இசையை காலை நேரப்பொழுதின் மேல் போர்த்திக்கொண்டி ருந்தது. பனிக்கு இதமாக கதகதப்புக் கொண்ட அன்பான அணைப்புக்குள் உறங்கக் கேட்கும் சுகமாய் சிந்தனைகளின் மேல், கனவுகளின் மேல் கவியத் துவங்கியது. கூடத்தின் வாசலில் இடப்பட்டிருந்த செம்மண் கோலத்தின் மேல் கருங்கள் துகள்கள் இரைந்து கிடக்க சப்தங்கள் நமையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன. அங்கே நீலாம்பரன் கைகள் கருங் கல்லில் கவிதை எழுதிக்கொண்டிருந்தது. தேர்ந்த கலைஞனின் லாவகம், கற்றுத் தேர்ந்ததை விட அவனுக்குள் பிரவாகமெடுத்த கலையின் வடிவம் நம் முன்னே காணக் கிடைத்தது. அறையெங்கும் இந்திரன் சிவன் பார்வதி, ரதி மன்மதன், விஷ்ணு துர்க்கை நடனப் பெண்மணிகள் என கலை சிந்திக்
= ما تسعة تF

Page 18
கிடந்தது. கிழக்குப் பார்த்திருந்த சன்னலில் இருந்து கதிரவன் ஒளியை உள்ளே அனுப்பி அறையை நிரப்பியதாய் பெருமை பேசிக் கொள்ள நினைத்து சிலைகளின் காலடியில் வீழ்ந்த நிழலின் இருள் கண்டு பெருமை பேச முடியாது பயணப் படத் துவங்கினான்.
எங்கோ தூரத்து கோவிலில் இருந்து கசிந்த நாதஸ்வர இசைக்கு நடனமாடத் துடித்திட்ட பாதி நிறைவடைந்திருந்த அந்த நடனப் பெண்ணின் சிலை. உளியும் கலை நெஞ்சுமாக இருந்தவனை நடையின் ஜதிச் சப்தமும் மணங்கமழும் வாசமும் திசை திருப்பியது. அவள் மீது காற்று மோதியதற்கான அறிகுறிகள் கூட இல்லாதிருந்தும் அவள் மீதிருந்த எல்லாமே அசைந்து மெல்லிய இனிய இசையை எழுப்பிக் கொண்டிருந்தது. அவளது பார்வை விழிகள் சடாரெனெ நிமிர அதுவும் ஓசை எழுப்பியதோ ? ஏதோ உள்ளம் எதிரொலிக்கும் ஒசை கேட்பது போல் இருக்கின்றதே அது பிரமையா? நின்றிருந்தாள் பாகீரதி மெல்லிய புன்முறுவல் சிந்திவிட்டு மீண்டும் கல்லோடு பேசத் தலைப்பட்டான். தான் நேசிக்கின்ற வாசம் சுவாசமாய் அங்கு வீசத்துவங்க உற்சாகம் பற்றிக்கொண்டது.
பாகீரதி அவன் நின்று கொண்டு சிலை வடித்துக் கொண்டிருந்த அதே கோணத்தில் தானும் நின்றபடி ரசிக்கத் துவங்கினாள்.
முடிவடையாமல் நீளப் போன முந்தின இரவு
நினைவுக்கு வந்தது. ஏன் இரவு நீண்டது? எத்
தனையோ வேலைகளின் அலுப்பு அழுத்திய போதும்
தூங்கிப்போன வெளிச்சங்களோடு தூங்கப் போகாது
விழித்துக் கிடந்த இருளின் விழிப்போடு அவள்
மனதும் விழித்துக் கிடந்தது. சந்தோசமா? வலியா?
எதன் பேரால் உறங்க முடியாது தவித்தது மனது. உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த தர்க்கங்கள் எனக்கு மட்டும்தானா? அந்த உணர்வைக் கிளப்பிய வனுக்குள்ளும் நிகழ்ந்திருக்குமா? சாத்தியமில்லை என்றுதான் தோன்றியது.
வானமெங்கும் வெள்ளிகள் சிதறிக் கிடக்க ஒரே ஒரு வெள்ளி மட்டும் மின்னித் தெரிந்தது காரணம் அருகாமையா இல்லை அது உள் வாங்கிய ஒளியை வெளித் தள்ளிய வேகமா ?
நீலாம்பரன், நான் சண்டையிடுவதாய் சொல்லிப் போகிறாய் எவ்வளவுதான் நீ செய்கின்ற காண்பிக் கின்ற விடயங்களுக்கு பின்னால் இருக்கின்ற இருப்ப தாய் சொல்லப் படுகின்ற காரணங்களும் சூழலும் நிஜமென்றிருந்த போதும் அந்த நிஜங்கள் என்னுள் நிகழ்த்திய நிகழ்வும் அதன் வலியும் கூட நிஜம் தானே என்று எப்போதாவது உணருவாயா ? நீயும் ஒரு நாள் என் போல் அன்பிற்காய் நீ காரண காரியங்கள் சொல்லித் தவிர்த்துவிட்ட உன் அரு |காமைக்கு நான் சண்டையிட்டது போலவே நீயும் போடணும் அப்போ தான் நான் பட்ட வலியின் ဒို့ရွီးနှီး உனக்கும் புரியும். மீண்டும் இரவுக்குள்
இரவின் நினைவுக்குள் நினைவால் நனைந்து பற்றி யெரிந்த உணர்வுகள் மீண்டும் மூழ்கிப் போவதை 16உளியின் ஒளி தட்டி எழுப்பிற்று.

"உன் கோரிக்கை புரியவில்லை” எனும் ஒற்றை பதிலில் நிராகரிக்குமுன் உணர்ந்துகொள் நான் வைப்பது கோரிக்கையல்ல பரஸ்பரம் உருவாகிப் போகுமென்ற நினைப்பில் எனக்குள் எழும்பிய எதிர்பார்ப்புகளின் கனத்தை சொல்ல வருகின்றேன். புரிகின்ற தருணத்தில் என்னோடு சேர்ந்து சுமக்கத் துணை வருவாயெனும் நினைப்பில். ஆனால் நீயோ பாரம் தாங்காது தாங்க முடியாதென்பதை ஒப்புக் கொள்ள தைரியமில்லாது தவிர்த்துப் போகின்றாய் ஏமாற்றங்களின் ஒப்பாரி அல்ல. ஏமாற்றங்கள் தோற்று வித்த போராட்டங்களின் அலைகளின் மோதல், அரிப்பைத் தாங்க முடியாது கரையை சுருட்டிக் கொண்டு ஒட நினைக்கின்றாய் சாத்தியமில்லை என்று அறியாது.
எனக்குள் போராட்டம் உன்னால் உன் இயல்பென நீ தீர்மானித்திருந்த உன் செய்கைகளால் நிகழ்த்தப் பட்டது உள்ளிருந்து வந்து எனை உபசரிக்கும் உன் மனைவியின் முன் அன்பைப் பொத்தி வைக்கின்றாய். மனைவியிடம் "உன் மேல் உள்ள அன்புதானடி பெரிது” என்று உணர்த்திவிட பிரயத்தனம் செய்கின் றாய். இந்த ஒப்பீடு எதற்கு? நான் பெண் என்பதாலா? அப்போ கலைஞனாய் வாழத் தலைப்பட்ட நிகழின் யதார்த்தங்கள் மீறி சிந்திக்க தலைப்பட்ட நமக்குள் தடை நிகழ்த்தியது எது? பால் சார்ந்த வேறுபாடா? காலம் காலமாய் உன்னை நம்பியிருக்க வேண்டு மென்று தீர்மானித்து வைத்திருக்கும் பெண்ணை பத்திரப்படுத்தும் முயற்சியா உடல்களின் எண்ணங் களை தூர எறிந்துவிட எனக்கு முடிகிறது.
ஒப்பீடுகள் இல்லாமலே அவரவர்க்கான முக்கியத் துவத்தை உணர்த்துவது எளிதான ஒன்றாக அப்பவும் கூட அது ஏன் எளிதானதென்று யோசிக்கின்றேன். கிணற்றுநீர் கரை தாண்டி போய்விட முடியாது என காலம் காலமாய் உருவாக்கப்பட்ட நம்பிக்கை களின் மறு பிம்பம் ஆண்களுக்குள்ளும், பெண்களுக் குள் அது இல்லாமலிருப்பதும் காரணமாக இருக்கலாம்
ஆற்று நீராய் நீ மழைக் காலங்களில் கரை மீறுதல் சாத்தியமும் சாதாரணமுமென உணர்த்தப் பட்டு ஒதுங்கிக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்ட பெண்ணாய்? இங்கு மனைவிகள். செக்கு மாடாய் உன்னால் பழக்கப்படுத்தப் பெண் நீ ஊர் போக தீர்மானிக்கின்றபோது சுட்டு விரல் நீட்டுகின்றாய் அவளை நகர முடியாது பதியன் போட்டதன் எதிர் விளைவு அது என்று உணராது. -
அதே நேரம் பதியனுக்குள் சிக்காத எனையும், உனை விட வேகமாய் தாண்டிப் பயணிக்க துணிந்த பெண்ணையும் அவள் வேகமும் அது இன்னதென்றே உணர முடியாது போனவனாய் நீ இருக்க அது சரி எப்போது கடக்கப் போகின்றாய் எதிர் வினை இல்லாது?
நினைவுகளை இடை மறித்தான் நீலாம்பரன் “என்ன பேச்சையே காணோம்?” தலை திருப்பாமலே சிரித்துக்கொண்டாள் பாகீரதி நானா பேசவில்லை நீ இருக்கும்போதும் இல்லா மல் போனபோதும் எல்லா நேரமும் பேசியபடியே தானிருக்க உன் காதுகள்தான் கேட்கக்கூடிய உணர்வு களையும் புரியக்கூடிய நிலைதனையும் தொலைத்து

Page 19
விட்டிருக்கின்றது
ஏதும் சப்தம் வராமலிருக் கவே திரும்பினான். நீலாம்பரன் உளி ஓய்வுக்குப் போகத் தலைப்
--gil,
பாகீரதி ஏதோ நினைவுக்குள் கட்டுப்பட்டிருப்பது புரிந்தது. அவளது கால்கள் தானாகவே தாளமிட்டுக்கொண்டிருந்தன. அவளையும் மீறி அவள் கண் வழி வழிந்துகொண்டிருந்த தீட்சண்யம் அறை முழுவதும் ஒரு சில்லிடலை நிரவ விட்டுக் கொண்டிருக்க அவள் சூடி யிருந்த பூக்கள் தாங்களே ஒலி எழுப்புவதாய் தோற்றம் தந்து அவள் மன ரசிப்புக்கேற்றவாறு ܟܝܠܐ ஆடிய தலைக்கு இசைவாக - ஆடிக்கொண்டிருந்தன. மெல்லத் 1ܬܘܬ݂ܐ-ܟ݂ திரும்பி தான் வடிவமைத்திருந்த சிலையை நோக்கினான். அதில் பாகீரதியில் சாயல் இருப்பதாகத் தோன்ற மனதுக்குள் அவள் ஆழ வேரூன்றியிருந்ததும், பார்ப்பவரின் சிந்தனை இந்த நட்பின் ஆழம் நூலிலையில் நடக்கும் இலாவகம் புரியுமா என்பதைவிட அப்படியான நடத்தலை யாரும் தட்டி வீழ்த்திவிடக்கூடாதே எனும் பயமும் கூடவே எழுந்தது.
பாகீரதி அப்படியான கவலை கொண்டிருந்தானா தெரியாது. அவள் இளங்கன்றாய் தயக்கங்களின்றி துள்ளித் திரிந்தாள் மிக இயல்பாக நட்பை நிகழ்த்தி விடுவாள். பேராச்சர்யம் பற்றிக்கொள்ளும் எப்படி எல்லாவற்றையும் இயல்பாக நிகழ்த்திவிட முடிகிறது என நம்மால் முடியவில்லை எனும் தாழ்வு மனப் பான்மையும் தொற்றிக்கொள்ள அதை மறைத்துக் கொள்ளும் முயற்சிகள் எனக்குள் தொடர்கின்றன. கூடவே சந்தேகமும். இந்த இயல்பு இன்றைக்கான இயல்பு வாழ்வில் சாத்தியமில்லை அவள் நிகழ்த்தி னாளா அல்லது யதேச்சையாக நிகழ்ந்ததா வென நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. வழமையான பெண்ணில்லையெனும் ஆச்சர்யம் மட்டும் அவளைச் சுற்றி ஒளியாய் வீசிக்கொண்டிருந்தது. சில நேரம் கண்கூசும் ஒளியில் இறுக விழி மூடிக்கொள்வேன். இருள் சூழும். இருளுக்கு வெளியில் ஒளி இருப்பதாய் உறுதியாய் தெரிந்தபோதும் ஒளியின் வலிமை விழி இமை திறக்க விடாததாகவே இருந்திருந்தது.
ஒளியை காணத் தவறியவனாகவும் , இருளுக்குள் மூழ்கி இருப்பவனாகவும் குற்றஞ்சாட்டிப் போவாள் என்ன செய்ய என் விழி தாங்க முடியா ஒளியை பழக தைரியம் எங்கிருந்து பெறுவது, மெல்லத் துழாவும் கைகள் விழிகளுக்குத் துணையாய் வந்த போதும் கூசுதல் குறையவில்லையே. அவளுக்கு சமமான ஒளியாய் இயல்பாய் நிகழ்த்துதல் எனக்கும் கை வரும் காலங்களில் கூசுதல் காணாமல் போகச் கூடும், அதை தந்து போவது அவளது நேசமாய் மட்டுமே இருக்க முடியும். அல்லது அவளது நேசம் போல தந்துவிடத் தயாராகியிருக்கிற நேசமாய் நானும் இருந்திருக்க வேண்டும்.
மனசு தானாகவே பேசிக்கொண்டே போனது
 

அது அவளுக்கு கேட்டு விடக் கூடுமோ அல்லது அவள் தன் மனதை படித்துவிடக் கூடுமோ தயக்கத்தில் அப்போதைக்கு அங்கிருந்து நகன்றேன்
நீலாம் பரன் இடைவரை நிறுத்திவிட்டுப் போயிருந்த நாட்டியப் பெண் சிலை மெல்ல மெல்ல அவளது உணர்வுகளையும் வாசிக்கத் தலைப்பட்டது. பாகீரதியின் சாயலில் தான் இருப்பதை உணர்ந்திருந்த எனக்கு என்னை நானே ஆடியில் பார்த்துக் கொள்வதைப் போல் தோன்றி யது. இன்னும் ஏன் இடைக்கு கீழ் பகுதி நிறைவு பெறாமல் இருக்கின்றது அது நிறைவு பெற்றிருந்தால் இப்பொழுது பாகீரதியின் உள்ளத்திற்குள் யாரும் அறியாது நடன மிட்டுக்கொண்டிருக்கின்ற அந்த உருவமாய் நான் பலர் பார்க்க ஆடியிருக்கக்கூடும். அவளுக்குள் இருந்த சமூகத் தயக்கங்கள் எனக்குள்ளும் வந்திருக்குமோ? இதுவரை இல்லை என்றுதான் தோன்றியது பாகீரதி யின் கலை உணர்வு வாழ்வோடு சம்பந்தப்பட்டது. இப்பவும் அவளது கவி ஒன்றை நீலம்பரனுடன் பகிர்ந்துகொள்ளவே ஆவலாய் வந்திருந்தாள். தூக்கிக் கொண்டுவந்த கவிதையை ஏனோ பொத்தி வைத்து விட்டாள். இது அடிக்கடி நேர்வதுதான். மொட்ட விழ்வது என்பது அவ்வளவு எளிதான விசயமாக என்றுமே அவளுள் இருந்ததில்லை ஏன் அப்படி நேர்கின்றது? நேர்ந்தது? கேள்விகள் அவளுள் இருந்து கொண்டே இருப்பதை என்னால் கேட்க முடிகின்றது. அப்படி ஒன்று நிகழ எத்தனித்து நிகழாது எப்பொழுதும் போய் விடும் போது மெல்ல அவள் தன்னை உள்ளிழுத்துக்கொண்டு கடினமான ஒட்டுப் பகுதியை காண்பித்துப் போகிறாளே அதன் வலி அடுத்தவர் காணக் கிடைத்ததா? அவள் சொல்லி விடாத வார்த்தைகளுக்கு அடிமையாகிப் போகிறாள் அன்பை அன்பாக மட்டுமே பார்க்க நேர்வது நமக்குள் இருக்கின்றதா? அவளுக்குள் கேள்வி. நீரை நீராக எத்தனை பேர் பார்த்திருக்கக்கூடும். அருவியாக நதியாக கடலாக இப்படியாகவே போகின்றதே பார்வை கள் அலை வந்து மோதியபோதும் காற்று வந்து மோதியபோதும் சிற்பியின் கை உளி மோதிட பெண்ணாய் உருவெடுத்தது எப்படி? கல்லை கல் லாய் காணாது பெண்ணாய் பார்க்க முடிந்த எவர்க் கும்கூட பெண்ணுக்குள் இறுகிப்போன கல் ஒன்று இருப்பதை அதை கல்லாய் மாற்றிய நாம் நிதர்சன மாய் முன் நின்ற போதும் உணர முடிவதே இல்லை.
马一
::
பாகீரதி ஒவ்வொரு கணமும் அவனை ஈர்த்தாள். வியக்க வைத்தாள் என்பதற்கு கூடத்தில் நின்றிருந்த நானே சாட்சியாக இருந்தபோதும் அதை உணர்ந்து பேச ஒரு போதும் தலைப்பட்டதில்லை நீலாம்பரன்.
மனிதர்கள் எனும் நிலை தாண்டி கலைஞர்களாய்

Page 20
கலந்துவிட்ட போதும் தன்னிடமிருந்த கலையை தனக்குள்ளிருந்த கலைஞனை மதிக்கத் தெரியாத நீலாம்பரன் மேல் எரிச்சல் வந்தது.
நீலாம்பரன் தன்னை திருத்திக்கொண்டு வந்து சேர அவன் நண்பன் யுவன் வந்து சேர்ந்தான்.
அவர்களது ஆனந்த அளவளாவலில் பாகீரதி இருந்ததை மறந்து போனார்கள். அவர்கள் மறந்து போனது பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. முன்பொரு நாள் முதன்முறையாக யுவனை சந்திக்க அறிமுகப் படுத்துகையில், "சமையல் இவளுக்கு கை வந்த கலை' என்று சொல்ல இதற்கு அறிமுகமே தேவையில்லையே. ஒரு கலைஞனாக அறிமுகப் படுத்த ஏன் தோன்றவில்லை ? எனும் அவளது கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. பாகீரதிக்கு. வெளியேறக் கிளம்பியவளை,
"இரேன் பாகீரதி பேசுவோம்” என்று நிறுத்த, இப்பொழுதாவது நினைப்பு வந்ததே என்றபடி மீண்டும் அமர்ந்தாள் பாகீரதி, தொடர்ந்த பேச்சு களில் பாகீரதியை மீண்டும் தொலைத்தார்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பை தொலைத்து அவர்களே நினைத்தாலும் தொலைக்க முடியா தூரத்திற்கு பயணமாகியிருந்தாள் பாகீரதி வண்ணங் கள் கண்களுக்குள் வந்து கவிதை சொல்லிப் போயின. சிவப்பிற்குள் நுழைந்து நீலமாகி வெளுத்து மஞ்சளாகி மூழ்கியபோது முத்தெடுத்த வார்த்தைகளோடு வெளி வந்திருந்தாள் கண்களுக்குள்ளே பச்சையும் நீலமுமாய் மரமும் வானும், மரங்களுக்கிடை நுழைந்து வானுக் குப் போயிருந்தாள். நிலவுக் கவிதை ஒன்று கையி லெடுத்து வந்திருந்தாள். இது சுயம்பு கவிதை. இதில் செதுக்குதல் பற்றி நீலாம்பரன் பேசக்கூடும். வண்ணம் தீட்டுதல் பற்றி யுவன் கதைக்கக்கூடும் அதெல்லாம் தாண்டி சுயம்புவாகவே இருந்துவிட தீர்மானித்து விட்ட பொழுதில் எல்லா கட்டுகளும் அறுந்து விழ பால் வெளியில் வீழ்ந்துகொண்டிருந்தாள். முடிவு தெரியும் வரை அடி விழப் போவதில்லை. வீழ்ந்துகொண்டிருந்ததை மிதத்தலாய், நீந்துதலாய் முயற்சி செய்ய சுயச் சார்பு தனக்கு பரிசாய் தந்து போன தனிமையை சுவைக்கத் துவங்கினாள். வெயிலை வெயிலாகச் சுவைக்கவும் கசப்பை கசப்பாக சுவைக்கவும் பழகியிருந்தாள்
இதுவரை நிழலாய் இருந்த அவள் உறவு சுவைத்துக் கொண்டிருந்த நீலாம்பரனுக்கும் யுவனுக்கும் வெயி லின் சுட்டெரித்தலை தான் சுவைக்கப் பழகியதை பழக்கிவிட மனம் கங்கணம் கட்டியது
தெறித்து விழுந்த கல்துகள்களின் வரவேற்புடன் உள்ளே வந்தாள் பாகீரதி, அவள் கங்கணம் கட்டிய அன்று இடைவரை உருவாகியிருந்த சிலை ஒன்று முழுவதுமாய் பிறந்திருந்தது அவளது மனம் போலவே இன்று சிலையாக இருக்கின்ற நாட்டியப் பெண் 3|கல்லாக வெறும் கல்லாக இருந்த அந்த நாளொன்று நினைவுக்கு வந்தது. இவள் கவிதை வாசிக்க கல்லை கலையாக்கும் எண்ண ஓட்டத்தில் சிக்குண்டு குழம் ဒို့နှီ தீர்மானத்திற்கு வர முடியாது இருந்த நீலாம்பரன், அதிலிருந்து தப்பி வெளிவர எடுத்த பிரயத்தனத்தில் அவளின் கவிதையோடு மூழ்கிப் 18போனான்.

துக்கங்களின் பின்னணியில் சிரித்தபடி இருப்பதை ஒத்துக்கொள்ளும் உனக்கு நேர்மைகளின் பின்னணியில் சீற்றம் கொள்வதை நிராகரித்துவிட உத்தரவிடுகின்றாய் காத்திருப்பு அழுகை ஏமாற்றம் எல்லாம் மறைத்து எத்திசையிருந்து பார்ப்பினும் சிரித்தபடி இருக்க கல்லிலிருந்து செதுக்கி எடுத்த திசையணங்கல்ல நான் போகத்தை தந்து உனக்கு சக்தியாக இருப்பதை விட எனக்கு நானே சக்தியாவது எப்படி தேடி நிறுவியபடி
ஒரு கையில் ஏடும் அதை வாசிக்கும் கவனமும் தாங்கியபடி இருந்த பாகீரதி வலது கையை தரையில் ஊன்றியிருக்க நீலாம்பரன் கவிதையை கவனத்தோடு கேட்டபடி அவன் ஊன்றிய கை விரல்களோடு அளைந்துகொண்டிருந்தான். கவிதையின் இறுதி வரிகளின் இருந்த வலிமை, தன்னை விட்டுத் தாண் டிப் போய்விடுமோ என மனதில் கேள்வி எழும்ப எல்லா விரல்களையும் சேர்த்து அழுத்திப் பிடித்தான். கைச் சதையில் இருந்த காதல் உறுத்த மெல்ல இழுத்து அணைத்தான். ஆறுதலை உணர்த்த எழுந்த அணைப்பு மெல்ல உடலின் தேவையை விசிறி விட சந்தர்ப்பங்கள் இடமளித்த பொழுதொன்றில் பகிர்தல் நடந்து முடிந்திருந்தது.
மீறி இயல்புக்கு வரும் போதும் உடல் தந்திருந்த சுகம் நினைவில் நில்லாது அவள் தனது கவிதையிலும் அவன் கை உளி பற்றவும் போய்விட கல்லை கலையாக்கும் மனோநிலைக்கு வந்திருந்தான்.
வெளியே போயிருந்த நீலாம்பரன் மனைவி உள்வரவும் பாகீரதியின் குழந்தை அவளைத் தேடி வரவும் எல்லாம் மீள் இயல்புக்கு வந்திருந்தது.
பாகீரதியின் சிந்தனை அதை தொடர்ந்து விசா ரணை செய்துகொண்டிருந்தது. விசாரணை செய்து கொண்டிருந்தபோதும் குற்றவுணர்ச்சி மனதுக்குள் இல்லாதிருந்ததை உணர்ந்திருந்தாள் காரணம் என்ன வாக இருக்குமென்று?
அன்று நிகழ்ந்த உடலின் பகிர்வுக்கு பின் அதன் பின் போதை கொண்டு ஒடத் தலைப்படும் மனோ நிலையோ மீண்டும் அதற்கான திட்டமிடுதலும் தனக்கு மட்டுமல்லாது நீலாம்பரணிடமும் இல்லா திருப்பதுவே குற்றவுணர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
இன்று அந்தக் கல் ஏறக்குறைய என் சாயலில் உருவாகியிருந்தது இந்த இடைவெளியில் தனக்குள் தன் மன உணர்வுகளில் நிகழ்ந்திருந்த மாறுபாடுகளை கவணிக்கவும் உணரவும் தலைப்பட்டாள்.
நீலாம்பரனின் கலைத் தேர்ச்சியும், பாகீரதியின் கவித் தேர்ச்சியும் ஒரே திறத்தில் இருப்பினும் நீலாம் பரனுக்கோ ஊர் மெச்சும் ஒன்றாய் இருக்க சந்திப்பு களும் சந்தர்ப்பங்களும் சாத்தியமாகியிருக்க எல்லாக் கலைஞர்களுடனும் அவனுக்கு நீண்ட கலைத் தொடர்பு இருந்தது. இந்த உடல் பகிர்வு நேர்ந்து

Page 21
விட்ட பின் அவனுள் அவனது பேச்சில் இருந்த மாற்றம் உள்ளே தைக்கத் துவங்கியது. ஏனைய பெண் கலைஞர்களைப் பற்றிய பேச்சும் பெரும் ஆட்களூடான தொடர்பின் பெருமிதம் பற்றியுமே அவன் பேச்சு இருக்க, யோசனை வந்தது?
இதுவரை இல்லாது ஏன் என் முன்னே தன்னை பெரியவனாய் சித்தரித்துக்கொள்ளப் பார்க்கிறான்? தான் ஒன்றும் அப்படி சிறியவனாய் அவனை நினைக்கவுமில்லாதபோது, பெண்களைப் பற்றிய பேச்சு, வரும்போது, அவன் முகத்தையே பார்த்தபடி இருப்பாள். அவன் பார்வை தவிர்க்கப் பார்ப்பான், அவளுக்குள் பொறாமை எழ வேண்டும் என்று நினைக்கின்றானா? எழு கின்ற பொறாமையில் தன் இடம் பறி போய்விடுமோ பயத்தில் அவனை விட்டு நீங்காதிருப்பேன் என்று நினைக்கிறானா? இவ்வளவு தானா? இவ்வளவுதானா? கேள்வியில் இப்பொழுது தான் மிகச் சிறியவனாய் கண்ணில் தெரிந்தான்.
அவன் ஏனைய பெண் கலைஞர்களைப் பற்றி பேசப் பேச உள்ளுக்குள் எல்லாப் பெண்களுக்குள் ளும் போல எனக்குள்ளும் பொறாமை வளர்கிறதா? இல்லை என்றபோதும் ஏதோ நெருடுகிறதே அது தான் பொறாமையா? ಪil & GL! ĥ## (Lu L Do To Y; இல்லை. சந்தர்பத்தில் நான் பயன்படுத்தப்பட்டு விட்டேனோ? இந்த கேள்வி எழுந்துவிட பயன்படுத்தப் பட்டு விட்டதாய் ஏன் தோன்றுகிறது?
நாங்கள் கொண்டிருந்தது நட்பா?
இது நட்பா? நட்பில் சந்தேகங்களும் உடை மயாக்குதல்களும் சாத்தியமா?
இதே குழப்பங்களும் கேள்விகளும் நீலம்பரனுக்குள் ளும் இருக்குமா ? இருக்கப் போவதில்லை என்று தோன்றியது எனது நட்பின் எல்லை சமீப காலமாக வெகு இயல்பாகவே நீலாம்பரனால் காலம் காலமாக சமூகம் மட்டுப்படுத்துவதை போலவே, இதையெல் லாம் கடந்து வந்து விட்டதாய் சொல்லிக்கொண்டிருக் கின்ற கலைஞனாலும் நிகழ்த்தப்படுவதை உனர்ந்தி ருந்தான். யுவனுடன் பேசும் ஒவ்வொரு தருணங் களையும் அவனும் உடன் இருக்கக்கூடிய தருணங் களாக வடிவமைத்துக்கொள்வதாகத் தோன்றியது புவனுடன் நான் தனியாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங் கள் நிகழாது பார்த்துக்கொண்டான்.
அப்படி அவன் நிகழ்த்துவதாலேயே தனக்குள்ளாக வும் ஒரு ஒப்பீடு அவன்? வேறு பெண்களோடு பழகுவதையும் கோர்த்துப் பார்க்க புறப்பட்டதையும் கண்டுகொண்டாள். இன்னும் கூட ஒரு யோசனை
 

சமீப காலமாக தன்னைப் பற்றி உயர்வாக அவள் நினைத்துக்கொள்ளவேன்றோ அல்லது அவள் அவனுக்குள் அடங்கியவனாக இருக்க வேண்டு மென்றோ பெரும் பிரயத்தனங்கள் நிகழ்த்திக் கொண்டிருந்தான், கலைஞர்கள் சபையில் அவளுக் கான இடத்தை அவள் ஆக்கிரமித்துக் கொள்ளும் வேகம் அதிர்ச்சி தர அவள் சபைக்கு வராமல் இருக்க முயற்சி எடுத்துக்கொள்வது புரிந்தது.
என் அன்பின் ஆக்கிரமிப்பை நேசிப்பவர்களுக்கு அதை தாராளமாய்த் தரலாம் அதைப் போட்டியாக நினைப்பவர்களிடமிருந்து களத்திருந்தே வெளியேறி போட்டியையே அவள் முறித்துப் போட நீலாம் F杏一千a பரனோ என் விலகலை
'இவள் இணைந்து நிற் கத் தெரியாதவள்’ என்று நிறுவி என் விலகலை தோல் வியாய் உரத்துச் சொல்லிப் பார்க்கின்றான். தனது நெருக்கங்களை பும் கொல்லைப்புற உற வாய் மாற்றிக்கொண்டு வர வர அவன் பார்த்திட முடியா பணித்துளியாய் மாறிப் போனேன்
ஒட்டப் பந்தயங்கள் துவங்குகின்றன. இருவரது துவக்கக் கோடுகளும் ஒரே இடத்திலிருந்து துவங்குவ தாய் பிரதாபம் பேசும் நீ, எனது ஆரம்பக் கோட்டைத் தொடவே நான் இருந்து கொண்டிருக்கிற பள்ளத்தி னுள் இருந்து வெளிவர இன்னொரு பயணம் மேற் கொள்ள வேண்டியிருப் பதை அறியாமல் நீ பள்ளம் தாண்டி நான் வந்த போதும் நீ இறுதி எல்லையை தொட்டுவிட்டு வெற்றியாகச் சாதிக்கிறாய். எனைப் போல் கிடந்தி ருந்தால் பள்ளத்தினுள்லேயே புழுத்துப் போயிருப் பாய் என்றறியாது.
நான் கத்தி வீசுவதாய் சொல்லியே எப்போதும் கவச குண்டலங்களோடு வந்துபோகும் என் நண்பனே ஒரு முறை ஒரே ஒரு முறையாவது பூக்களோடு வந்து பாரேன் கழுவிக் கவுத்தி வைத்தாலும் காலியாகாத அட்சய பாத்திரமாய் சந்தோசங்களை உனக்கும் தந்து நானும் பசியாறிப் போகலாம்.
உடலை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கப் பழகிய என் பலம் எந்தத் தருணத்தில் பலகீனமாக உருவெடுக்கத் துவங்கியது. விட மாட்டேன். என் E பலம் பலகீனமாக மாறுதல் சரியல்ல. முறுக்கேறுதல் அவசியம்.
இந்த நினைப்பில் நீலாம்பரனிடமிருந்து மெல்ல தூர இருக்கத் தலைப்பட்டாள். இந்த விலகுதல் அவனிடம் மட்டுமல்லாது. அவளது உடனிருப்பை பெருமையாய் கருதுபவர்கள் எல்லாரிடமும்
நிகழ்ந்தது.
鹃

Page 22
Cd Co C СNј
சிரிப்பு வந்தது.
தன்னை தன் உடனிருப்பை பெருமையாய் நினைக்க வேண்டும் யாவரும் என்று தனக்கென தகுதிகளை வளர்க்கத் துவங்கி, வளர்ந்துவிட்டதாய் கருதத் தொடங்கிய தருணத்தில், அவள் எண்ணியது கை வந்தபோது, அவள் கைக்கு சேராத வளையாக அந்த உறவுகளை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருப்பதை என்னவென்று சொல்ல ?
யுவனின் நண்பனொருவன் சொல்லிப் போனான் எல்லாக் கலைஞர்களிடமும் பழகுவது போல பழக இயலவில்லை என்று. உங்களைச் சுற்றி ஒரு வேலி இருக்கிறது. கதவுக்கு அப்பால் நின்று பதிலளிக்கிறீர் கள். அவன் சொல்ல உடனிருந்த நீலம்பரணை ஒற்றைச் சிரிப்பில் மேலும் கீழுமாக அலட்சியப் பார்வை நான் பார்க்க நீலாம்பரன் அதன் வெப்பம் தாங்காது சுருண்டான்.
பாகீரதிக்குள் இப்பொழுதெல்லாம் நீலாம்பரனோ யுவனோ யாருடனும் பழகுதல் பற்றி கேள்வியும் இல்லை சந்தேகமும் இல்லை. பழகி வந்த அனுபவங் கள் கரையேறி ஈரம் சொட்ட சொட்டத் தடம் பதித்து போயே போய்விட்டன. இன்று அவள் இறுகியபடி பாறையாக உணர்வுகளுக்கு ஆட்படாம லேயே பழகிக்கொண்டிருந்தாள். இணைந்து கலை ரசித்த காலங்கள் தூரப் போய் நிற்கின்றன. வெளிப்படையான சிரிப்புகளை , கலத்தலை தூக்கி உறியில் இட்டு வைக்கிறாள் கவிதைகளின் குறியீடு களுக்குள் விதைத்து வைக்கின்றாள். ஈரமொன்று படும்போது முளை விடலாம் அவை. அதை வாசிக்க மிகச் சரியான நட்பொன்று வாய்க்கும் வரையென்று. நெஞ்சுக்குள் நம்பிக்கை இருக்கின்றது விரல் பற்றி தரவாய் அழுத்தும் போதும் குளிரைத் தந்து நடு நடுங்கச் செய்யாது. கதகதப்புத் தந்து போகும் நட்பொன்று தான் நேசிக்கின்ற விழியாய் வந்து சேருமென்று. தானும் தானும் சேர்ந்திருக்க தனிமை தொலைக்கப் பழகியிருந்தாள் சேர்ந்திருந்த காலங்கள் நினைவில் உறுத்த கரை உடைய தனிமை கடல் நீர் நீலாம்பரனுக்குள் புகுந்து மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
நீலாம்பரனுக்கு புதியதொரு கல் வாய்த்திருக்கின்றது. பாகீரதியின் சாயலில் இருந்திருந்த நாட்டியப் பெண்ணிடம் பாகீரதியின் தொலைந்த புன்னகை அதிலும் இல்லாது போயிருக்கக் கண்டான். மனம் தற்போதெல்லாம் ஏங்கத் துவங்கியிருந்தது. நாட்டியப் பெண்ணாவதற்கு முன்பிருந்த சிரிப்பொன்றை மறுபடி காண்பேனா என்று அனிச்சை செயலாய் அவன் கை தானாகவே செதுக்கத் துவங்க அந்த சிலை இறுதியில் எத்திசையிருந்து பார்க்கினும் சிரித்து வைக்கும் திசையணங்காக உருமாறியிருந்தது.
தொலைத்துவிட்ட சிரிப்பை சிலையில் வடித்து வைக்க பாகீரதி சந்திக்க நேர்ந்த தருணத்தில் சொல் லிப் போகின்றாள் “நீ நினைக்கின்ற திசையிருந்
·倭 தெல்லாம் சிரிக்க அந்த அகல்லிகையாலேயே முடியும்.
20அணங்கின் சிரிப்பு சிரித்தே கொல்லும் வரலாறுகளை
9
உயிரிருந்தால் அதுவும் உம்மை பார்த்து சிரிக்காது' சாம்ராஜ்யங்கள் தீர்ந்து போன பின்னும் தீராத திக்க மனோபாவங்கள் இருக்கின்ற வரை திசை

SSGSGyyyyyyyyyySSSGGGSySyyyGSDDDS000LLSLeSeSeSSS
உரத்துச் சொல்லியது போக நெஞ்சம் உள்ளுக்குள் பேசிக் கலைய மெல்லக் கலைந்தது பாகீரதியின் உருவம் ரத்தமும் சதையுமாயிருந்த பாகிரதியின் உருவம் என் கண் முன்னே கருங்கல் சிலையாக நாற்றாண்டுகள் போன பின்னும் இன்னமும் ஆண் களாய் மாறி விடும் நண்பர்கள், பெண்களாய் எனை உணரப் பண்ணும் சூழல்கள் எல்லாம் தூற எறிந்து, திசையணங்குகளை உடைத்து அஸ்திவாரமாக்கி புதிய கோட்டை ஒன்றை நிர்மாணிக்கிறேன்.
எனக்குள் இப்போது ஆயிரம் கோடி பாகீரதிகள். பாருக்கும் கல் சிக்காத காலமொன்றை வடி வமைக்கும் சிற்பிகளாய்.
O
நூரத்தில் வரலாற்று அதிசயங்களாய் ஏதேதோ வற்றைக் கண்டுகொண்டிருக்க, வரலாற்று உண்மை களாய் படித்து சேகரித்திருந்த தகவல்களை கைடு துப்பிக்கொண்டிருக்க நேரில் நிஜத்தில் கண் முன் எால் கண்டுவிட முடியாத குருடர்களாய் அவர்கள் இருக்க என்ன செய்ய காது வழி பார்க்கப் பழகியவர் களுக்குக்கிடையில் கண் வழி யோசிப்பதை சொன்னாலும், புரியாத செய்கையையாகத்தான்? போகும் என்று அவள் நினைத்து அவர்கள் தொலைத்துவிட்டிருந்ததை நிஜமாக்கி வெளியேற மறுநாள் “ஏன் காணாமல் போனிங்க, காரணம் புரியலையே” என்று நண்பர்? கேட்க நேற்று நான் தினைத்ததை இன்று சொல்கின்றான், வெறுப்பில் சிரிப்பு வர அவளும் திசையணங்காகியிருந்தாள்.
O
ஒவியங்கள் : பா. குணசேகரன்

Page 23
தமிழைக் காதல் asi
கவர்நிதி யா)
LL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S SL
தமிழ் அறியாத குடும்பத்தில் பிறந்து, தமிழ் மேற்கு நாட்டவரான பேராசிரியர் ஜோர் பெற்றிருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பீடம் நிறுவி அதன் தலைவராக துறைகளுக்கும் தலைமை வகிக்கின்றார். ட ஜோர்ஜ் ஹாட், தமிழ்தான் அவர் அறிந்த ே வடிவங்களில் கொண்டிருக்கின்றதாகக் கூறு இலக்கியங்களை அணு அணுவாக ரசிப்பர் பருகாது, உலகம் பருகுவதற்காகப் பழந் தமி
செய்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்
ஜோர்ஜ் ஹாட்
ஜோர்ஜ் ஹாட் அமெரிக்கத் தலைநகர இவரது தந்தையார் இரண்டாம் உலகப் பின்னர் சட்டத்தரணியாகவும், நீதிபதியாக ஜோர்ஜ் ஹாட்டுடன் தான் இருந்தார். ட ரஷ்ய மொழிகளைக் கற்றார். ஹாவாட் துறைகளில் பட்டப் படிப்பை மேற்கொன் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு சமஸ்கிருதம் ட
சமஸ்கிருதத்துக்கு மாற்றிக்கொண்டார்.
■ ■ ■■.■ *睡 圍.軒丁輯 ■■-■ ■ ■ ■二壘 ■ ■ ■-■ ■-■」暫,■ **獸
 

பயும் ஜோர்ஜ் எல் ஹாட்
ர்வதி கந்தசாமி
LL S S S S L S S S S S S S S S S S S L S L S L S S S S S S S S S L
நூல்களைக் கற்று, தமிழை உலகறிய வைக்கும் ஜ் ஹாட் தமிழர் நினைவுகளில் நீங்காத இடம் கலிபோர்னியா-பேக்லி பல்கலைக்கழகத்தில் ப் பணியாற்றும் ஜோர்ஜ் ஹாட் தெற்காசியத் பதினெட்டு மொழிகளில் புலமைத்துவம் பெற்ற மொழிகளில் பழமைக் கருவூலங்களைச் செவ்விய கிறார். தமிழைத் துறைபோகக் கற்று, பழந்தமிழ் வராக இவர், இன்பத் தேனைத் தான் மாத்திரம் ஒழ் இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்ப்புச்
T.
ட்டின் இளமைக் காலம்
ான வாஷிங்ரன் டி.சி.யில் 1942 இல் பிறந்தார். போரில் அமெரிக்கப் படையில் பணியாற்றி,
வும் பணியாற்றியவர். இறக்கும்வரையும் தாயார் ாடசாலையில் கல்வி பயிலும்போதே லத்தீன், பல்கலைக் கழகத்தில் உயிரியல், வேதியியல் ண்டார். அறையில் ஒன்றாக வாழ்ந்த நண்பரின்
படித்தார். தனது பட்டப் படிப்புத் துறையையே
•••••••••••••••• * * * * * * * * * * * * * * *
座

Page 24
ஹாவாட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டப்படிப்பில் ஈடுபட்ட அதே நேரத்தில் பேராசிரியர் டானியல் இங்கால்ஸிடம் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண் டார். திராவிடவியல் பற்றிய அறிவார்வத்தைத் தூண்டிய இங்கால்ஸ் காளிதாஸனின் காவியங்களில் திராவிடப் பண்பாட்டு ஆளுமை பற்றிய ஆய்வைச் செய்ய வழி காட்டினார். இதனால் தமிழ் படிக்கும் ஆர்வம் ஜோர்ஜ் ஹாட்டிற்கு எழுந்தது. தமிழ் மொழி ஹாவாட்டில் பயிற்றப்படாததால் தமிழ் அறிஞர் ஏ.கே.இராமனுஜன் பேராசிரியராக இருந்த விஸ்கொன்சின் பல்கலைக் கழகத்தில் 1965 கோடை காலத்தில் தமிழ் படிக்கச் சென்றார். அங்கேதான் அவரது மனைவியான கெளசல்யாவையும் முதன் முதலில் சந்தித்தார். கெளசல்யா ஏ.கே. இராமனுஜ னின் மாணவி. இருவரும் பழந் தமிழ் பயின்று பழந்தமிழ் மரபில் காதலுற்று திருமணம் செய்து கொண்டனர்.
ஜோர்ஜ் ஹாட்டிற்குப் பன்மொழி கற்கும் திறமை நன்றாகவே இருந்தது. லத்தீன், ரஷ்யன், ஜேர்மன், பிரெஞ்ச், கிரேக்கம், தமிழ். சமஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் உட்பட 18 மொழிகளில் புலமைத்துவம் பெற்றார். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என முரசறைந்த பாரதி கூட நான்கு மொழிகளில் தான் புலமை பெற்றிருந்தார். ஆனால் ஜோர்ஜ் ஹாட் 18 மொழிகளில் பெற்ற புலமைத்துவம் தமிழின் செவ்விய இலக்கியத்தின் சிறப்பை அந்தப் பதினேழு மொழிகளுடனும் ஒப்பிட்டு உணர வைத்துள்ளது, அவரைத் தமிழ் பரப்ப வைக்கும் தூதுவராக மாற்றி யுள்ளது.
தமிழ் மொழிக் கல்வி
ஹாவாட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த காலத்தில் தமிழ் பற்றிய தேடலை ஏற்படுத்திக் கொண்டார். காளிதாஸனின் கவிதைகளில் திரா விடப் பண்பாட்டுத் தாக்கம் பற்றிய ஆய்வுக்குத் தமிழியல் ஆர்வம் அவசியமானதாயிற்று. விஸ்கொன் சின் பல்கலைக்கழகம் கோடை காலத்தில் தமிழைக் கற்பித்த காரணத்தால் அங்கே சென்று இராமனுஜ னிடம் தமிழைக் கற்றார். தமிழ் மொழியைக் கற்ற ஜோர்ஜ் ஹாட்டிற்கு தமிழ் மரபு, பண்பாடு, இலக் கியக் கருவூலங்கள் பற்றிய அறிவார்வத்தைத் தூண்டி னார், இராமனுஜன்.
இதனால் தமிழ்ப் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கு வதற்கு ஜோர்ஜ் ஹாட்டிற்கு கெளசல்யாவின் அனு சரணையும் உந்து சக்தியாக இருந்தது. இருவரும் தமிழகம் சென்றனர். ஜோர்ஜ் ஹாட் தமிழை அள மீறிக் காதலிக்கும் இராம சுப்பிரமணியனிடம் தமிழை ஒரு வருட காலம் பயின்றார். பழந் தமிழ்ப் பாடல்களுக்கு இராம சுப்பிரமணியன் உயிர் கொடுக் கும் விதத்தைப் பற்றி ஜோர்ஜ் ஹாட் சுவாரஸ்யமான கூறுவார். ஆங்கிலமே தெரியாத இராம
M
 

சுப்பிரமணியனிடம் தமிழ் கற்றமை, பழந் தமிழ் நூல்களில் ஜோர்ஜ் ஹாட்டிற்கு ஆழ்ந்த புலமையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
தமிழ் மொழி ஆய்வு ஜோர்ஜ் ஹாட்டினுடைய தமிழியல் ஆய்வுகளை இருவகைகளாகக் காணலாம்.
1. தமிழ் இலக்கிய ஆய்வு 2. மொழி பெயர்ப்பு
தமிழிலக்கிய ஆய்வு
தமிழில் உள்ள செவ்விலக்கியங்களைப் புலமைத்துவம் பெறக் கற்று ஆராய்ச்சி செய்துள்ளார். பழந் தமிழ், வாய் மொழி இலக்கிய மரபு ஊற்றெடுத்து, காளி தாஸன் புனைந்த இலக்கியங்களில் சுவறியிருப்பதை அறிந்து கொண்டார். பழந்தமிழ் இலக்கியங்களான பதிற்றுப் பத்து, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு. அகநானூறு போன்றவற்றின் பகுதிகளைச் சென்னை யில் இராம சுப்பிரமணியனிடம் படித்தபோது மொழிபெயர்ப்புக்களைச் செய்தார். ஆரியப் படைப் புக்கள் தென்னகத்து நாட்டார் வழக்காறுகளையும் மரபுகளையும் உள்வாங்கிக் கொண்டதை தான் அப்பொழுது காண்பதாகக் கூறுவார். வித்துவான் கே.வி. சேஷாத்திரியிடம் சமஸ்கிருதத்தைப் பயின்ற ஜோர்ஜ் ஹாட் தமிழிலக்கியத்துடன் சமஸ்கிருத இலக்கியத்தை ஒப்பீட்டாய்வு செய்வதற்குரிய சிறப்புத் தகைமைகள் பெற்றார். தமிழைச் செவ்விலக்கியம் கொண்ட சிறப்பு மொழியாகப் பிரகடனம் செய்வதற் குப் பகீரதப் பிரயத்தனம் செய்தார். இவரது பழந்தமிழ் இலக்கிய ஆர்வம் பல ஆய்வாளரை தமிழிலக்கியப் பரப்பில் நுழைந்து சென்று ஆழ்ந்த ஆய்வினைச் செய்ய வழிகாட்ட வைத்தது.
மொழிபெயர்ப்பு
பழந்தமிழில் தன்னிறைவான சொல்லாட்சி மூலம் செய்யப்பட்ட அறக் கருத்துக்களை அழகாக உலகுக்கு எடுத்துக் கூறும் அரிய படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து தமிழ் விழுமியங்களை உலகம் போற்ற வைத்த ஏ.கே.இராமனுஜனின் முயற்சி களால் கவரப்பட்டார். பண்பாட்டுக் கூறுகளை துணுக்கமாக நோக்கும் கவிஞரான இராமனுஜன் ஜோர்ஜ் ஹாட்டிற்கு மொழிபெயர்ப்பு முன்னோடி பாக இருந்தார். முதன் முதலில் இந்திய செவ்விலக் கியம் ஒன்றினை ஆங்கிலத்தில் கொடுத்த முன்னோடி இராமனுஜன். அவரது குறுந்தொகை - InteriorLand cape of the Tamil Land- 6T667 pp 576i 265& Splili பெற்றது. ஜோர்ஜ் ஹாட், இராமனுஜனை விட தன் மொழிபெயர்ப்பில் தமிழின் சொன்மையும் பொருண்மையும் சிதையாது பார்க்க வேண்டும் ான்பதில் அதிக கவனம் காட்டுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறு 5ானூறு அரசர் வாழ்வுகளைச் சித்தரித்தாலும் சமூகத் நின் அடிமட்ட மக்களான பரணர், கிணையர்,

Page 25
விறலியர் போன்றவர்களின் வாழ்க்கையையும் கூறுகின்றன. கிராமங்களில் மக்கள் வாழ்ந்த முறையைத் தத்ரூபமாக சித்தரிக் கும் பழந்தமிழ் இலக்கிய விழுமி பங்களை உலகறியச் செய்ய ஜோர்ஜ் ஹாட் எடுத்த முயற்சி மகத்தானது. பேராசிரியர் ஹாட் Lilgir For Hundred Songs of War & Fred Wisdo/F1 GT3ūTIO LAZ), [[5|Tigg)/JJJJ மொழிபெயர்ப்பு ஏகேஇராமனு ஜன் மொழிபெயர்ப்புப் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமி
ஜோர்ஜ் ஹாட் பதிற்றுப்பத்து பெரும் ஏ
நூல் மொழிபெயர்ப்பைத் தற் GILIsráðsfulsi இாதிசது: நாங்கள் பொருள்
றாா, அவா தனது LTE Tெ
களையும் பழந்தமிழ் நூல் மொழி இலங்கைத் 岛屿
பெயர்ப்பில் ஈடுபடத் துTண்டி ஏலம் விட்டு வருகிறார். தருவதாகச் ெ அவர் ஈழத் தமி
மிழியல் ஆய்
தமிழியல் ஆய்வு ஒருவித ஆர்
(கலிபோர்னியா பல்கலைக் கழகம்
பேர்க்லி) யென்பதைக் 岳
விட்டார். பு கலிபோர்னியப் பல்கலைக் கழகம் சன்பிரான்சிஸ்கோ குடா வில் அமைந்துள்ளது. முன்னை விட தற்போது தமிழர்களின் வீணடிக்க வேண் எண்ணிக்கை பெருகியுள்ளது. தமிழ் மொழியை விரும்பிக் கற்கும் மாணவர்களின் தொகையும் அடையாளம் நிறுவும் நடவடிக்கைகளில் ஒன்றாக நடைபெறுகிறது. தமிழியல் ஆய்வுப் பரப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் தமிழ் மாணவர்களும் முன்வருகின்றனர். தற்பொழுது எட்டு மாணவர்கள் தமிழியல் ஆய்வில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். அவர்கள் மடலேறுதல், ஆண்டாள், கோலம், உலா போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். மொழிபெயர்ப்பும் செய்துள்ளனர். பண்டைய தமிழிலக்கியத்தில் காட்டப்படும் வாழ்வி பல் முறைகளில் காதல் கொண்ட ஜோர்ஜ் ஹாட், ஆய்வுகளைப் பழந்தமிழ் இலக்கியங்களில் செய்வது டன் மாணவர்களும் தொடருவதற்கான வாய்ப்புக் களை உருவாக்கி வருகிறார். அவர் முன்னின்று உருவாக்கிய தமிழ் அறக் கட்டளைப் பீடம் தமிழாய் வுக்கான தளத்தை உருவாக்கியுள்ளது. இலக்கியம்சார் ஆய்வு, சமயம், அரசியல், கலை, வரலாறு, சங்க இலக்கிய ஆய்வுகள் போன்றவை ஜோர்ஜ் ஹாட் தலைமையில் இப்பொழுது நடைபெறுகின்றன.
பொதுவான
இந்தத் திட்ட
தமிழ் அறக் கட்டளைப் பீட இருக்கை
வட அமெரிக்காவிலுள்ள பல்கலைக் கழகங்களில்
தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு ஜோர்ஜ் ஹாட் ஆர்வமாகவும் வேகமாகவும் உழைத்தார். கலிபோர்
 
 

ழர்களிடம் எனக்குப் மாற்றமுண்டு.
தமிழ்த் துறைக்கு
சேர்த்தபோது ஓர் மிழர் தன் காரை பணம் திரட்டித் சான்னார். பிறகு ழெர்களுக்கு இதில்
வமும் இல்லை
னிய பல்கலைக் கழகம் -பேர்க் லியில் தமிழ் நிலைப்பதற்காக ஜோர்ஜ் ஹாட் பெருமளவில் பாடு பட்டார், பேக்லியில் தமிழ்ப் பீடம் நிறுவுவதற்கு ஜோர்ஜ் ஹாட் 2500 டொலர் களைச் சேர்க்க வேண்டிதா யிற்று பேர்க்லியில் தமிழ் கற்பிக் கும் அ ஃTதி மனைவி கெளசல்யா ஹாட்டும் இம் முயற்சியில் உறுதுணையாக இருந்தார். வருடா வருடம் தமிழ் விழா நடாத்தி சன் பிரான்சிஸ்கோ குடாப் பகுதித் தமிழர்களை ஒன்றிணைத்தார். சன் பிரான்சிஸ்கோவில் நான் வாழ்ந்த காலத்தில் அவர்களது தமிழ் விழாவில் பங்குகொள் ளும் வாய்ப்பைப் பெற்றேன். இந்த மாணவர்களது தமிழ் விழா, தமிழ் உணர்வை ஏற்படுத் தவும் தமிழ் அடையாளத்தை
நிறுவவும் எடுத்த நன் முயற்சி எனலாம். அந்தப் பெருமை கெள சல்யாவைச் சாரும்.
நண்டு பின்வாங்கி அவர்களுடைய கேள்வி எதற்காக த்தில் பணத்தை னடும் என்பதுதான்.
அறக் கட்டளைப் பீட இருக் கையை உருவாக்க ஜோர்ஜ் ஹாட் வட அமெரிக்காவில் தமிழர் வாழ்ந்த நகரங்களுக் கெல்லாம் சென்றார்.
அ. முத்துலிங்கம் காலச்சுவடு ' இதழுக்காக செய்த நேர்காணலின்போது தமிழ்ப் பீடம் அமைக்கப் பணம் சேர்க்க ஜோர்ஜ் ஹாட் எடுத்த முயற்சிகளில் ஒன்று கனடிய ஈழத் தமிழர்களிடமுமாகும் எனக் கூறியுள்ளார். அதுபற்றிக் கவலையுடன் ஜோர்ஜ் ஹாட் இலக்கியத் தோட்டத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான எழுத்தாளர் முத்துலிங்கத்திடம் கூறிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களிடம் எனக்குப் பெரும் ஏமாற்றமுண்டு, பெர்க்கிலியில் தமிழ்த் துறைக்கு நாங்கள் பொருள் சேர்த்தபோது ஓர் இலங்கைத் தமிழர் தன் காரை ஏலம்விட்டு பனம் திரட்டித் தருவதாகச் சொன்னார். பிறகு அவர் ஈழத் தமிழர்களுக்கு இதில் ஒருவித ஆர்வமும் இல்லை பென்பதைக் கண்டு பின் வாங்கிவிட்டார். அவர்களுடைய பொதுவான கேள்வி எதற்காக இந்தத் திட்டத்தில் பணத்தை வீணடிக்க வேண்டும் என்பதுதான்.
பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். அவர்கள் கோயில்களிலும் இன்னும் கலை, கலாச்சாரத் துறைகளிலும் ஆர்வம் காட்டி நல்வாழ்க்கை
l

Page 26
நடத்துகிறார்கள். ஆனால், தமிழ்ப் புலமைக்கு என்று பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. Azetic கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஸ்பானியர்கள் எழுத்தறிவு உள்ள எல்லோரையும் கொன்று போட்டதுடன் அஸ் டெக் கலாச்சாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. கனடா தமிழர்கள் தங்கள் மொழிக்கு ஆதரவு தரத் தவறினால் தமிழர்களின் கலாச்சாரம் கனடாவில் அழிந்துவிடும். தமிழைக் கனடியக் கலாச்சாரத்துக்குள் போதிய மரியாதையும் கனதியும் கொடுத்து நுழைக்க வேண்டும். அப் பொழுதுதான் அழிவிலிருந்து தப்பலாம். பலர் தங்கள் நாட்டுக்குத் தாங்கள் திரும்பக்கூடும் என்று நினைக்கலாம். அவர்கள் போக மாட் டார்கள். நிச்சயம் அவர்களுடைய பிள்ளைகளும் திரும்பப் போவதில்லை. கனடியப் பல்கலைக் கழகத்தில் தமிழை ஸ்தாபிக்கத் தவறுவதால் அவர்களுடைய பிள்ளைகளைக் கலாச்சார அநாதைகள் ஆக்குகிறார்கள். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்காக அவர்கள் எவ்வளவு போராடியிருக்கிறார்கள். ஆனால், தமிழின் நிலையை முன்னேற்ற என்ன செய்திருக்கிறார்கள்? படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்.’
காலச்சுவடு, இதழ் 70, அக்டோபர் 2005
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழர்கள் கனடிய பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பீடம் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற் படுவார்களா? முந்நூறாயிரத்திற்கு மேலாகத் தமிழர் வாழும் ரொறன்ரோப் பெரும் பகுதியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு பெரும் பல்கலைக் கழகங்களில் கல்வி பயில்கின்றனர். தமிழை இந்த வருடம் கோடை காலப் பாடமாகவும் தமிழியல் ஆய்வு இன்னொரு பாடமாகவும் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவற்றைத் தக்க வைப்பதற்கும் முதுநிலை ஆய்வு களைத் தமிழ்த் துறைகளில் ஏற்படுத்துவற்கும் தேவை யான முயற்சிகள் எடுப்பதற்குத் தமிழ் மக்கள் முடிந்த அளவு நிதி திரட்டி ஒத்தாசை தருவார்களா? ஜோர்ஜ் ஹாட் போல பல தமிழர்களின் முயற்சி எங்கள் சந்ததியினரின் பண்பாடு பேணுவதற்கான முன் னெடுப்புக்கு மிகவும் அவசியமானது. மொழியின்றி இருக்கும்போது இன அழிவும் சிதைவும் காலப் போக்கில் ஏற்பட்டுவிடும்.
'ஈழத் தமிழர் ஏராளமாக இருக்கும் டொரண்டோ வில் ஏன் தமிழ்த்துறை தொடங்கவில்லை என்பது எனக்கு வியப்பளிக்கிறது, தலைக்கு 5 டொலர்
கொடுத்தால் கூட பெரும் பணம் சேரும். இங்கிருக்
2
கும் தமிழர் தம்மை இம்மண்ணோடு சேர்த்துப் பார்ப்பதில்லை. ஒருநாள் ஊர் திரும்பி விடுவோம்

என்றுதான் நம்புகிறார்கள். அது நடவாது. பெரும்பாலோர் (குறிப்பாக இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர்) இங்குதான் இருக்கப் போகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் இம்மண்ணில் தம் சந்ததியினருக்காவது தமிழ்க் கல்விக்கான வசதி களை நிறுவி ஆதரிக்க வேண்டும். அந்தக் குழந்தைகள் கல்லூரிக்குப் போனால் முழுக்க முழுக்க ஐரோப்பி யரைப் பற்றித்தான் படிப்பார்கள். தன் மொழிப் பாரம்பரியத்தை எப்படித் தெரிந்து கொள்வார்கள்?
எனத் தென்றல் சஞ்சிகையில் அதன் ஆசிரியர் மணி மணிவண்ணன் நேர்காணல் செய்தபோது ஜோர்ஜ் ஹாட் கூறியதைப் பற்றி நாம் தீவிரமாகச் சிந்திப்போம்.
தமிழ் செம்மொழித் தகுதிபெற வழிவகுத்தமை
தமிழ் மொழி பண்படுத்தப்பட்ட திராவிட மொழி களில் ஒன்று என்பதைப் 19 ஆம் நூற்றாண்டில் கால்டவெல் நிறுவினார். கமில் சுவெலபில், பிரான்சுவா குறோஸ், அலெக்சாண்டர் துபியான்ஸ்கி, ளான் லூக் செவியார் போன்றோர் தமிழ் மொழி பற்றிய செய்திகளை வெளியுலகத்திற்குக் காட்டி யுள்ளனர்.
'பழந்தமிழ் என்பது பெரும் சொத்து. ஒரு எழுத்தாளர் உண்மையில் பழைய இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்திருப்பாரேகில் அவரால் நவீன தமிழ் இலக்கியத் துறையில் முன்னேற்ற முடியாத ஒரு மூலை கூடக் காண முடியாது. இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் செலவிடும் அதேயளவு நேரத்தைப் பழந்தமிழ் இலக்கியங்களில் செலவிடுவார்களாயின் அவர்களுடைய எழுத்தாற்றல் பன்மடங்கு உயரும் என்பது என் அபிப்பிராயம். என அ.முத்துலிங்கத்துடனான காலச்சுவட்டிற்கான நேர்காணலில் ஜோர்ஜ் ஹாட் குறிப்பிடுவதைத் தமிழ் எழுத்தாளர்கள் ஒருமுறையாவது தங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஹாட் செய்த மொழிபெயர்ப்புக்களால் தமிழ் இலக்கியப் புதையல் பற்றிய விபரங்களை உலகம் அறிந்து கொள்ள வழிசெய்யப்பட்டது. பேராசிரியர் 60556) Taylugu Sait Tamil Heroic Poetry, gustudgig60fait Interior Landscaped lb LDiplb -976) (D60) tLI GLDFTs) பெயர்ப்புக்கள், ஹாட்டும் ஹங் ஹெய்பெற்ஸ்; என்பவரும் இணைந்து செய்து கொண்ட புறநானூறு GLDITfGuuit Just 60T Four Hundred Songs of War and Wisdom உம் அவரது பிற மொழிபெயர்ப்புக்களும் தமிழ் மொழியின் பண்டைய இலக்கியச் செழுமையை உலகறியச் செய்தன. பல தமிழ், சமஸ்கிருத நூல்களை இயற்றிய ஹாட்டின் அரிய முயற்சிகளால் தமிழ் பற்றிய நல்ல எண்ணம் உலக இலக்கியவாதிகளின் சிந்தனையில் ஊற்றெடுக்கத் தொடங்கியது.
தமிழ் மொழி செவ்விய மொழியாகக் கொள்ளப் பட வேண்டும் என்பதில் ஹாட் போன்ற பல்வேறு அறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் மக்கள், எடுத்த

Page 27
முயற்சிகளால் இந்திய அரசு அதற்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கியது என்றால் மிகையாகாது. மறைமலை யின் வேண்டுகோளின்படி, 2002 சித்திரை 11 ஆம் திகதி தமிழ் செவ்விய மொழியாகக் கொள்ளப் பட வேண்டும் எனப் பல காரணங் களை முன்வைத்து ஹாட் கடிதம் ஒன்றை எழுதினார். தமிழ், உல கிலுள்ள பெரும் இலக்கியங்கள், மரபுகள் கொண்ட மொழிகளில் ஒன்று என்பதை நான் பக்கம் சாராது நடுநிலையில் நின்று ஆணித்தரமாக அறைகூவுகின்றேன். என அக்கடிதத் தில் குறிப்பிட்டார்.
ஹறிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் இ ஆகிய மொழிகளில் உள்ள பழம் "ی பெரும் இலக்கியங்களைக் கற்றுத் தமிழ் T। தேறிய ஜோர்ஜ் ஹாட், அவற்றைப் ஆங்கிலத்தி
பழந்தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டுச் தமிழ் மொழி செவ்வியது என்பதற்கான ஆதாரங்களைத் பழந்தமிழ் தேடிக்கொண்டார். செலவிடு
தமிழ் மிகவும் பழமை வாய்ந்தது அவர்களுடை என்பதை தொல்காப்பிய இலக் கணம், கி.மு. 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் ஆகிய என்பது என் வற்றின் உதவி கொண்டு நிறுவுகிறார். சங்கப் பாடல்கள், பத்துப் பாட்டு ஆகியவை காளிதாஸனுக்கு 200 ஆண்டுகள் முற்பட்டவை எனவும் அவை தமிழ்ப் பாரம்பரிய மரபைக் கொண்டவை எனவும் கூறுகிறார். அவரது கருத்துப்படி பிற இந்தியப் பழம் பெரும் இலக்கியங்கள் சமஸ்கிருத பாரம்பரியத் திலிருந்து வந்தவை. தமிழ் தனக்கே தனித்துவமான இலக்கிய, இலக்கண, கவிதை யாப்புப் பாரம்பரி யத்தைக் கொண்டது. பரந்த புலமைத்துவ பாரம்பரி யத்தைக் கொண்டது. திருக்குறள் மனித வாழ்வியலுள் புகுந்து அனைத்து அறக் கோட்பாடுகளையும் தரு கின்றது. தற்கால இந்தியப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழ் என்ற பெரும் ஆறு பெரும் மலையில் ஊற்றெ டுத்துப் பிரவாகித்திருப்பதை மறுக்க முடியாது எனவும் திராவிட மொழியியலாளர் கருத்திற் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும் எனவும் கூறுகிறார். மேலே கூறிய காரணங்களால் தமிழ் இந்தியாவின் செவ்விய மொழிகளில் பெருமை வாய்ந்தது என நிறுவினார்.
இந்த நிறுவுதலை ஜோர்ஜ் ஹாட் செய்வதற்கு அவர் வகித்த தமிழ்ப் பேராசிரியர் பதவியும் தமிழியல் தலைமையும் வழிவகுத்தன. புரட்டாதி 18, 2004 இல் இந்திய அரசு செம்மொழியாகத் தமிழை அங்கீகரித்தது.
அதேயள6
LusäTLDLIË
 
 
 
 

அபிப்பிராயம்.
ஜோர்ஜ் ஹாட் பெற்ற விருதுகள்,
அவரின் வெளியீடுகள்
ஜோர்ஜ் ஹாட் விருதுகள் பெற்றார் என்று கூறுவதிலும் பார்க்க தமிழ் மொழிக்கு விருதுகள் கிடைக் கின்றன என்பதே பொருத்தமானது. ஏ.கே.இராமனுஜன் விருது ஜோர்ஜ் ஹாட் அவரது இணை எழுத் தாளர் ஹங் ஹை பெற்ஸ் ஆகிய இருவருக்கும் கிடைத்தது. Ass South Asia Council (SAC) Ramanujan Book Prizeஐ இந்த இருவருக்கும், Four Hundread Sorings of War tard Wisdon என்ற புறநானூறு மொழிபெயர்ப் புக்கு கிடைத்தது. Poets frhe Tamil Athologies'தமிழ்த் தொகை நூல்
Т60рш களின் கவிஞர்கள்' என்ற நூல் ழத்தாளர்கள் 1980 இல் அமெரிக்காவின் சிறந்த ல் செலவிடும் மொழிபெயர்ப்பு நூல் பரிசுக்கு
பரிந்துரைக்கப்பட்டது. கணினியில் பு நேரத்தைப் தமிழ் எழுத்துரு செய்தவர்களில் இலக்கியங்களில் ஹாட் முன்னோடி 1985 இல் வார்களாயின் ஆப்பிள் நிறுவனம் இந்திய எழுத்
துருக்களைக் கணினியில் வடிக்க L FICPSS (TsDDFV இவருக்கு நிதி உதவி வழங்கியது. |கு உயரும் 1995 இல் தமிழ்ப்பீட நிறுவன விழா வில் ஜோர்ஜ் ஹாட் தொடக்கி வைத்த கணினித் தமிழ் முயற்சிகள் அடுத்த ஆண்டில் சிங்கப்பூரில் சிறப் பாக நடந்தேறிய உலகத் தமிழ் கணினி மகாநாட்டுக்கான வித்து என மணிவண்ணன் குமுதம் தீராததி நேர்காணலில் மார்ச் 2006 இல் குறிப்பிடுகிறார்.
ஜோர்ஜ் ஹாட்டினுடைய மாணவனும் தற் போதைய இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரு மான ஸ்ருவேட் பிளாக்பேண் வில்லுப்பாட்டு பற்றி ஆராய்ச்சி செய்து முதல் ஆண்டிலேயே ஏ.கே.இராமனுஜன் விருது பெற்றது ஹாட்டிற்குப் பெருமை தருவதாகும்.
ஹாட் தமிழ். சுமஸ்கிருத நூல்கள் பலவற்றை stop 5 is sitat Tit. The Fores of the Ramayana of Kariban என்ற ஆரண்ய காண்ட மொழிபெயர்ப்பை 1988 gai Gay Gifull Lir, The Poems of Ancient Tartilagyi நூலை 1975 இல் வெளியிட்டார். தற்பொழுது பதிற்றுப்பத்து என்ற நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றார்.
கெளசல்யாவுடன் இணைந்தும் தமிழ்ப் பாட TGi T, GIGIT STIFIsiTGITT ra. A Rapid Sari skrir Method என்ற நூலையும் எழுதியுள்ளார். பன்மொழிப் புலமையும், மொழியியல் அறிவும் இலக்கியப் புலமை யும் ஒன்று சேர்ந்ததனால் வளமான புலமையை
些
f C
உலகம் அறிய வைக்கும் திறன்
2
25

Page 28
கிடைத்தது. அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பேறு எனக் கூறலாம். தமிழை அழியாது பாதுகாக்க ஜோர்ஜ் ஹாட் வழிவகுத்த வழிகளை எல்லா நாடுகளிலும் பல்கலைக்கழக மட்டத்தில் எடுத்துச் செல்ல, வழிவகுக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அணிதிரள வேண்டும். தமிழ் எங்கள் மொழி. அது எங்கள் மூச்சு, அது எங்கள் அடையாளம். மொழிக்கு எங்கள் உரிமைக் குரல்களை உயர்த்தி எழுச்சிபெறச் செய்வோம்!
தமிழை மேற்கில் பரவச் செய்தல்
மேற்கு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இந்திய மொழிகளில் சமஸ்கிருதம் பிரதான இடத்தை வகித்துக்கொண்டிருக்கின்றது. இன்று இந்திய அரசியல் உறவை பலப்படுத்தும் நோக்கில் ஹறிந்தி மொழியும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் மொழி, அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றது. விஸ்கொன்சின், சிக்காக்கோ, பேக்லி பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பிக்கத் தொடங்கியது காலத் தால் முந்தியது. பின்னர் மிச்சிக்கன், யேல், கொலம் பியா, பென்சில்வேனியா, ரெக்ஸாஸ் எனப் பல பல்கலைக்கழகங்களிலும் தமிழ் கற்பிக்கப் படுகின்றது. ஜோர்ஜ் ஹாட்டின் முயற்சியே தமிழ் பல பல்கலைக் கழகங்களிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்தது 35 T3 T813"TLD.
கனடாவில் 300,00ற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள குழந்தைகள் தமிழ் கற்பதற்குப் பல்கலைக்கழகங்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியவை. தமிழியல் ஆய்வுப் புலமையும் தமிழ் கற்பித்தலும் பல்கலைக்கழகங்களில் உருவாக்க வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண் டவர் ஜோர்ஜ் ஹாட் பேக்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடத்தை உருவாக்கிய பெருமை ஜோர்ஜ் ஹாட்டையும் கெளசல்யாவையும் சாரும். இவர்கள் முயற்சி புலம்பெயர் நாட்டுத் தமிழருக்கு உந்து சக்தியாக இருக்கும். மெல்லத் தமிழ் இனிச் சாகாது ஓங்க வைக்கும் முயற்சியை ஜோர்ஜ் ஹாட் போல புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளில் மேற்கொள்ள வேண்டும்.
புலமையும் ஈடுபாடும்
ஹாட் உலகப் புகழ்பெற்ற ஹாவாட் பல்கலைக்கழகத் தில் ஆய்வு செய்து முனைவர் வரையிலான பட்டங் களை எல்லாம் பெற்று பன்மொழிகளில் பாண்டித் தியம் பெற்றவர். பல நாட்டுப் பழம்பெரும் இலக்கி யங்களைக் கற்பதில் அதிக ஈடுபாடுடையவர், அரசர் களையும், தலைவர்களையும் புகழ்பாடியமை பற்றிய இலக்கியப் பார்வையை சாதாரண மக்கள் வாழ்வி பலில் திருப்பியவர். தமிழ் அறிஞர்களான இராமனு ஜன், சேஷாத்திரி, இராம சுப்பிரமணியன், கைலாச பதி, சிவத்தம்பி, ஐராவதம் மகாதேவன், கமில் சுவெலபில், அல்பேட் லோட் பரி போன்றவர்களின்
3.
ܒ
 
 
 

உறவுகளும் ஜோர்ஜ் ஹாட்டின் சிந்தனைக்கு உணர்வூட்டின.
சுமஸ்கிருதத்தில் இருந்த புலமையால் ஹாட் தமிழ் மொழியின் விழுமியத்தை ஒப்பீடு செய்து தமிழின் இளமைத் திறனை அறிந்து அப்புதையலுள் மூழ்கித் தன்னை மறந்து தமிழையே நேசிக்கின்றார். ஜோர்ஜ் ஹாட் அமெரிக்கா முழுவதும் தமிழ்க் கல்வியும், தமிழியல் ஆய்வுகளும் நடைபெறுவதற்குக் காரணமாக இருக்கின்றார். அவர் தமிழில் மாத்திரம் புலமையைக் கொண்டவரல்லர். அவரது புலமை பரந்தது. இந்தியப் பண்பாடு, இந்திய இலக்கியங்கள், இந்திய சமயங்கள், சமஸ்கிருத மொழி, காளிதாஸர் முதலான சமஸ்கிருத இலக்கியங்களும் அவரது புலமைக்குள் அடங்குபவை.
மக்கள் சாதாரணமாக நினைப்பதைவிட சங்க இலக்கியம் மகத்தானது. புறநானூறு சொல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் முழுவதும் கழித்து விடலாம். அப்பொழுதும் புதிய புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
'கம்பனுடைய பேராற்றலைப் பாருங்கள். அவன் படைத்த எல்லாப் பாத்திரங்களுமே ரசிக்கத் தக்கவை. வால்மீகி, துளசிதாளரையெல்லாம் படித்தால் ராவணனைப் பிடிக்காது. ஆனால், கம்பன் யாரைப் பற்றிப் பேசினாலும் சுவையாகச் செய்வான். அவனுடைய பார்வை நகர்ந்து கொண்டே இருக்கும். (மணிவண்ணன், தென்றல் மார்ச் 2002) ஜோர்ஜ் ஹாட்டின் புலமை அகிலம் போற்றுவது. தமிழ், சமஸ்கிருதம், பிரெஞ் என 18 மொழிகளில் புலமைத்துவம் பெற்றவர். தமிழ் - சமஸ்கிருத ஒப்பீட் டாய்வுகளைச் செய்தவர். The Prs TArter TamilTheir Millieu arrald their Sari skriz Ceau urteropularts (, 1975); The LLLTTGCL LTLLL TTT TLTTTLLLLLLL LlLLLGLLGEEGEEE S0000S தமிழ்ப் புலமை மரபைத் தனித்துவமானதாக உலகுக் தக் காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளாகும்.
ஹாட் திறமையான ஆசிரியர் அ, ஆ தெரியாதவர் ளைப் பழந்தமிழ் இலக்கியப் புதையலில் மூழ்கி ஆய்வு செய்ய வைத்து உலகம் போற்றும் தமிழியல் ஆய்வாளர்களாக உருவாக்கியவர். பத்துக்கு மேற்பட்ட முனைவர்களை பேக்லி தமிழியல் ஆய்வுத்துறை உருவாக்கி இருப்பது ஜோர்ஜ் ஹாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கெளசல்யா மூலம் இந்த மாணவர்கள் பெற்ற மொழிபெயர்ப்புப் பயிற்சி தமிழியல் ஆய்வுக்கு பழிகோலியது.
ஹாட் ஒரு தலைசிறந்த நிர்வாகி. தமிழ்ப் பேரா ரியரான பிறநாட்டவர் ஒருவர் பத்துக்கும் மேற்பட்ட ாணவர்களை முனைவர்களாக உருவாக்குவது ஒரு ாபெரும் முயற்சி. தானாகவே, சிலிக்கன் பள்ளத் ாக்கு முதல் நியூயோர்க், கனடாவரை சென்று மிழ்ப்பீடம் அமைக்கப் பணம் சேர்த்துக்கொண் -ார். 1996 இல் அதனை வெற்றிகரமாக அமைத்து விழா எடுத்தார். வருடா வருடம் சன்பிரான்சிஸ்கோ டாப் பகுதி தமிழர்களை அழைத்து தமிழ் விழாவை களசல்யா தலைமையில் செய்து கொள்வார்.

Page 29
தமிழ் மாணவர்களும் வேற்றின மாணவர்களும் தமிழின் ஆழத் தைக் காண வைத்து தமிழர் பெருமையை உலகறிய வைத்துக் கொண்டிருக்கிறார்.
தென், தென்கிழக்காசிய துறை களுக்குட்பட்ட நான்கு துறை களை நிர்வகிக்கும் தலைமை அவரைத் தலைசிறந்த நிர்வாகி யாக்கியுள்ளது.
தேமதுரத் தமிழோசை உலகனைத்தும் பரவும் வகை | தேடிய பாரதியின் கனவு நன ஈழத் தமிழர் ஏர வாக ஜோர்ஜ் ஹாட்டும் டொரண்டோவில் கௌசல்யாவும் என்ற இணையர் தொடங்கவில்லை கள் உருவாகியிருக்கின்றார்கள்.
வியப்பளிக்கிற
கனடிய இலக்கியத் தோட்டம் டொலர் கொடுத்
வழங்கும் இயல்விருது
ஆண்டு தோறும் கோடை காலத் தில் கனடிய இலக்கியத் தோட் தமிழர் தம்மை டம் வழங்கும் "இயல் விருது' சேர்த்துப் பார்ப்பு முதன்முதலில் 2001 இல் ஊர் திரும்பி வி அண்மையில் காலம் சென்ற சுந்தர ராமசாமிக்குக் கொடுக்கிப் பட்டது. பின்னர் முறையே கே. கனேசு, வெங்கட் சாமி நாதன், பத்மநாப ஐயர் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டுக்கான இயல் விருதைக் கலிபோனியாப் பல்கலைக் கழக பேர்க்லி வளாகத்தின் தெற்காசியத் துறைக்கும் தமிழ்ப் பீடத்திற்கும் தலைவரும் தமிழ் பேராசிரியருமான ஜோர்ஜ் எல் ஹாட்டுக்கு வழங்கப்பட இருப்பதாக விருதுக் குழுவினர் முடிவு எடுத்துள்ளனர் என்பதை ரொறன்ரோப் பல்கலைக் கழக தெற்காசியத்துறைத் தலைவர் பேராசிரியர் செல்வா கனகநாயகம் மூலம் அறிந்துகொண்டேன்.
பனம் சேரும்
நம்புகிறார்கள்.
தரமான புலமையெனில் அதை வணக்கம் செய்தல் வேண்டும். ஜோர்ஜ் ஹாட்டிற்கு இந்தப் புலமை விருது கிடைப்பது ரொறன்ரோத் தமிழருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும்.
வட அமெரிக்காவிலே ஒரு தமிழ்ப் பீடம் அமைக்க அங்கே வாழ்ந்த தமிழர்களால் முடியவில்லை, ஆனால், தமிழிலே பெருங்காதல் கொண்ட ஜோர்ஜ் ஹாட்டினால் அதனைச் செய்ய முடிந்ததை நாம் எல்லோரும் இரு கரங்கப்பி வரவேற்க வேண்டும்.
ஹாட் தமிழ்க் கடல் பரப்பிலே நீந்துபவர். தமிழ் அவர் உயிர், அவர் மூச்சு. இவர் மதம் மாற்ற வந்து தமிழ் படித்துப் புலமை பெற்ற வரிசையைச் சேர்ந்தவரல்ல. தமிழின் பழம் பெருமைகளையும், இலக்கிய ஆழத்தையும் அறிந்து தமிழில் அளவுமீறிய காதல் கொண்டவர். தமிழ் மகள் கெளசல்யாவை மணந்து அவர்கள் இருவரும் இணைந்து தமிழைச்
 
 
 
 
 
 

சித்திரத் தேரில் ஏற்றி வட அமெரிக்காவில் வலம் வருகிறார் கள், மதுரம் மிக்க தமிழின் சிறப்பை வட அமெரிக்கப் பல் கலைக்கழகங்களை நடனர வைக் கின்றார் ஹாட் பழந்தமிழ்ப் புதையல்களை மொழிபெயர்த்து உலகம் நுகர்ந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவம் படைத்த தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்யும் செந்நெறியா ளர். தமிழை வளர்க்க அரும் பெரும் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் ஹாட்டை ஏன் தமிழ்த்துறை இயல் விருது கொடுத்துக் கெளர என்பது எனக்கு விப்பது எங்கள் இளம் சந்ததி து, தலைக்கு 5 பினர் தமிழ் பற்றிப் பெருமை கொள்ளவும், தங்கள் அடையா தால் கூட பெரும் எாம் பற்றி இறுமாப்பு எய்தவும் }. இங்கிருக்கும் தங்கள் பண்பாட்டுத் தேடுதலில் இம்மண்னோடு தங்களை அர்ப்பணிக்கவும், மொழி கற்க முனையவும் பதில்லை. ஒருநாள் அவசியமானது. டுவோம் என்றுதான் தகுந்த நேரத்தில் இவ்வியல் அது நடவாது. விருது வழங்கப்படுவது மிகவும் வரவேற்கத் தக்கது. ரொறன் ரோப் பல்கலைக் கழகத்தில் இவ்விருது தமிழ்ச் சமூகத்தின் நிறுவனமான இலக்கியத் தோட்டத்தினால் வழங் கப்படுவது பொருத்தமானது, இவ்வருடந்தான் முதன் முதலில் கனடாவில் தமிழ், பல்கலைக்கழகத்தில் விசேட பாடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அந்தக் கைங்கரியத்தை ரொறன்ரோ பல்கலைக்கழகம் அஸ்வின் பாலமோகனின் சமூக முன்னெடுப்புப் பணி மூலம் இதற்கான 40,000 டொலர்கள் சேர்க்கப் பட்டுள்ளது. இப்பாடங்களை அரங்கேற்றுவதற்கு தெற்காசிய மையத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் செல்வா கனகநாயகம் இருந்தமையும் வாய்ப்பாக இருந்தது. பேராசிரியர் சந்திரகாந்தன், வின்சர் பல்கலைக் கழகப் பேராசிரியர் சேரன் இந்தத் திட்டக் குழுவில் இருந்தனர். மாணவர்களும் இக்குழுவில் இருந்தனர்.
தமிழியல் ஆய்வு மகாநாடும் இவ்வருடம் ரொறன் ரோவில் நடைபெற்றமையும் ஜோர்ஜ் ஹாட்டிற்கு வழங்கும் விருதின் பெருமையையும் தமிழின் பெருமை பையும் பறை சாற்றும், தக்க சந்தர்ப்பத்தில் தமிழ் மொழிக்குச் சிறப்புத் தொண்டாற்றிய ஜோர்ஜ் ஹாட்டுக்கு விருதுவிழா எடுப்பதை கனடாத் தமிழர் கள் கொண்டாட வேண்டும். உலகத் தமிழ் மக்கள் பெருமை கொள்ள வேண்டும். இதனைச் செய்ய அடிகோலிய இலக்கியத் தோட்ட அமைப்பாளர் களுக்குத் தமிழ் மக்கள் சார்பாக நன்றி.
ாளமாக இருக்கும்

Page 30
வல்லியக்கனும்
mTõrb
நான் பிறந்த காலத்திலிருந்து, சொந்த ஊராகிய காரைநகரில் வசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்ட வில்லை. 1980 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த பின்னர்தான் சிலகாலம், காரைநகரில் இருந்து வந்து போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான், 1981 இல், மண் அள்ளுபவர்கள் கொடுத்த தகவலால் காரைநகர், களபூமியில் பெருங்கற் பண்பாட்டுத் தடையங்களைக் கண்டறியும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து, இந்தப் பழமையான பண்பாட்டின் எச்சசொச்சங்கள் எவையாவது காரைநகரின் நாட்டார் மரபில் தேங்கி இருக்கின்றனவா என்று அறியும் ஆவலும் ஏற்பட்டது. இந்தக் காலத்தில், எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் பறையகண்டியில் வாழும் வள்ளுவகுல மக்கள் என் கருத்தைக் கவர்ந்தனர். பறை என்ற இசைக்கலைக்கு அப்பால் மருத்துவம், சோதிடம், நெசவு என அவர்கள் பல துறை விற்பன்னர்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவர்கள் எனக்குப் பல விடயங்களைச் சொல்லித் தந்தார்கள். பழமை நிறைந்த அவர்களது மறைபொருள் மொழி வழக்கைக் கற்றுக் கொண்டேன். அவர்களது குலதெய்வம் வல்லியக்கன் என்று சொன்னார்கள். அந்தப் பெயரை அப்பொழுதுதான் நான் முதன்முதல் கேள்விப்பட் டேன். எனக்கு அது விளங்கவில்லை. அவர்களுக்கும் விளக்கத் தெரியவில்லை. வல்லியக்கனுக்கு கோயில் இருக்கிறதா என்று கேட்டேன். சங்கானையில், சந்தைக்கு வடக்கே, உள்ளுக்குள் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது என்றார்கள். யார் பூசை செய்வது என்ற கேள்விக்கு, வள்ளுவக் குருக்கள் ஒருவர் நெல்லியடியில் இருந்து வந்து போவார் என்றார்கள்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், நாட்டாரியலை எனக்கு ஊட்டி விட்டவர் சண்முகசுந்தரம் மாஸ்டர். அவரி டம் போய்க் கேட்டேன்; யார் இந்த வல்லியக்கன் என்று. வல்லிக்கன் என்பது வல் + இயக்கன்; வலிமை வாய்ந்த இயக்கன் என்று பொருள். இது பழமையான யக்ஷ வழிபாட்டிலிருந்து வந்தது. நெல்லியடியிலும் முன்னர் வல்லியக்கனுக்குக் கோயில் இருந்தது. அதை, கிருஷ்ணன் கோயிலாக மாற்றிவிட்டார்கள் என்று ெேசான்னார் சண்முகசுந்தரம் மாஸ்டர். நாட்டார்
மரபுக் கோயில்கள் பிராமணிய மயப்பட்டு, அடை
யாளம் இழந்து போவதைவிட்டு ஆழ்ந்த கவலை கொண்டிருந்தவர் அவர். தமிழ்மரபுக் கண்ணகி, ராஜராஜேஸ்வரி ஆவதைப் பற்றி அந்தக் காலத்தி
 
 
 

ဎွိဋ္ဌိ
ဒွိမ္ဗိဒ္ဒိဋ္ဌိဋ္ဌိ
வல்லிபுரநாதரும்
Iம் இரதுபதி
லேயே பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தவர். ஈழத்து நாட்டாரியலின் முன்னோடியான பேரா சிரியர் கணபதிப்பிள்ளையின் முதன் மாணாக்கர் களுள் ஒருவர்.
1983 இல், இலங்கையில் இந்துமதம் தொடர்பாக ஒரு மலர் வெளியிட வேண்டுமென மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலை அதிபர், பண்டிதர் அப்புத்துரை முற்பட்டார். ஒரு கட்டுரை கேட்டார். யாழ்ப்பாணத்துத் தொல்லியில் ஆய்வுப் பணியில் நாட்டார் சமயத்தை இணைத்து, பண்பாட்டுத் தொன்மங்களின் மாற்றங்களையும் தேக்கங்களையும் சுட்டிக்காட்டி, கோவும் மடைப்பறையும் என்று ஒரு சிறு கட்டுரை எழுதினேன். நாட்டார் சமய மரபுகள் தொடர்ந்தும் இருக்கத்தான் வேண்டுமா? அவை சைவ சித்தாந்த மயப்படுவதில் என்ன தவறு, என்று, பண்டிதர் அப்புத்துரை நீண்டநேரம் விவாதித் தார். அவர் பரந்த உள்ளம் படைத்தவர். அக் கட்டுரையைப் பிரசுரித்தார். அது பலரைக் கவர்ந்த தால் பின்னர் பலதடவை மீளப் பிரசுரிக்கப்பட்டது. வல்லியக்கன் பற்றிய தகவலையும் எனது கலாநிதிப் பட்ட ஆய்வுநூலில் பதிந்து வைத்தேன். இருப்பினும், சங்கானை வல்லியக்கனை அப்பொழுது எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.
இருபதாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், கடந்த வருடம், நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு திரும்பவும் வந்தபொழுது, கோண்டா விலில் எனது அயல வரும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை விரிவுரையாளருமாகிய திரு. ஜெய்சங்கர் எனக்கு ஒரு செய்தி சொன்னார். கோண்டாவிலில் முன்பு இருந்த வல்லியக்கன் கோயில் இப்பொழுது வல்லிபுரநாதர் என்று பிராமணிய மயப்பட்ட பெருமாள் கோயிலாக, பிரபலப்பட்டுவிட்டதாகச் சொன்னார். ஜெய்சங்கர், மட்டக்களப்பில் நாட்டார் கலைகளை அதன் உண்மையான சொந்தக்காரர்களி டம் உயிர்ப்பிக்கும் பணியில் புதிய உத்திகளைக் கையாண்டு உழைப்பவர். வல்லியக்கன், வல்லிபுர நாதாகி உருவமிழந்து போனது அவர் உள்ளத்தைத் தொட்டதில் வியப்பில்லை.
இந்த விடயங்களை எல்லாம் யாழ் பல்கலைக்கழக நுண்கலை விரிவுரையாளர் திரு. அகிலனுடன் பகிர்ந்துகொண்ட பொழுது, இதை எழுத வேண்டும்; எல்லோரும் படிக்கக் கூடியமாதிரி எழுத வேண்டும், என்று தூண்டினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் புலரி பத்திரிகை ஆசிரியர் திரு. குகபரன் ஆண்டு மலருக்குக் கட்டுரை

Page 31
தேடிக் கொண்டு வந்தார். சங்கானை வல்லியக்கனைச் காட்டினால் கட்டுரை தருவதாகச் சொன்னேன் நான் சொன்ன குறிப்பை வைத்துக்கொண்டு சங்கா னைச் சந்தையடியெல்லாம் தேடியும் குகபரனுக்கு வல்லியக்கன் கிடைக்கவில்லை.
கோண்டாவிலில் கேட்டால் தெரியலாம் என்று நானும் குகபரனும் வல்லிபுரநாதர் கோயிலுக்குச் போனோம். அங்கு நாம் கண்டதும் கேட்டதும் வியப்பூட்டுபவை. கோயிலோடு சேர்ந்த ஒரு சிலரைத் தவிர வேறெவருக்கும் முன்னர் இது வல்லியக்கன் கோயிலாக இருந்தது தெரியாது. இப்பொழுது, இது ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில் மூலவர் பெருமாள், வசந்தமண்டபம், உற்சவ விக்கிரகங்களாகச் செப்புத்திருமேனிகள், பன்னிரு ஆழ்வார்கள், தேர் தேர் முட்டி என்று எல்லாம் அமையப் பெற்றிருந்தன. நாங்கள் போனது சனிக்கிழமை ஆதலால், பெருமாளுக்கு உகந்த நாளென்று, கணிசமான கூட்டம்.
கோயில் நிர்வாகம் வள்ளுவ குலத்தவர். ஆனால் பூசை பிராம னர். வள்ளுவர், கருவறைக்கு உள்ளே போவது கிடையாது. முன்பு மூலவராக இருந்த வல்லியக்கன் செப்பமற்ற ஒரு கல்வடிவில் இருந்த தாகச் சொன்னார்கள். அது இப் பொழுது எங்கே என்று ஒருவருக் கும் சரியாகத் தெரியவில்லை. கருவறைப் பீடத்தின் உள்ளே வைத்துக் கட்டிவிட்டதாக ஒருவர் சொன்னார். முன்பு பூசை செய்தவர் கள் வள்ளுவர்கள் என்று சொன் னார்கள், அவர்கள் எல்லோரும் இப்பொழுது இறந்து விட்டார்கள் என்றும் அறிந்தோம். அவர்கள் மரபில் வந்த வயதான ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் பழைய விவரங்கள் அறியலாம் என்றும் அழைத்துச் சென்றார்கள். இவர் திரு. சின்னப்பன் இராசரத்தினம். தமிழறிஞர். இவர் கூறிய தகவல்களும் கருத்துக்களும் இங்கு தொகுக்கட் பட்டுள்ளன.
வல்லியக்கன் கோயில் இந்த இடத்தில் தொன்று தொட்டு இருந்து வந்ததல்ல. மூன்று தலைமுறைக்கு முன்னர் அச்செழு என்ற ஊரில் இருந்து வல்லியக்கன் கல்லை ஒருவர் இங்கு கொண்டுவந்தார். குலட் புலப்பெயர்வுடன் இது நிகழ்ந்திருக்கக்கூடும். கோயில் சிறு கொட்டகையாக இருந்தது. வல்லியக்கனுக்குத் துணைக் கோயில்களாக முடிமன்னருக்கும் அம்ப ணுக்கும் கொட்டகைகள் இருந்தன. திரிசூலங்களும் நடப்பட்டிருந்தன. பூசை செய்பவர் வாய்க்கட்டி பூசை செய்திருக்கிறார். 1970 வரை கோயிலில் பை அடிக்கப்பட்டிருக்கிறது. வைகாசி விசாகப் பொங்கள் கும்பபூசை எனப்படும் நவராத்திரி, திருவெம்பாவை முதலியன முக்கிய திருவிழாக்களாகவும், சைவ பஞ்சபுராணம் பாடும் மரபும் இருந்திருக்கின்றன
1976 இல், கோயில் பிரித்துக்கட்டிய பொழுது பெயரை மாற்றுவது என்று தீர்மானம் ஆயிற்று அதுவரை, ஊரின் அந்தப் பகுதி, தபால் முகவரி
 

உட்பட, வல்லியக்கன் கோயிலடி என்றே அடை யாளம் காணப்பட்டது. வல்லியக்கன் என்ற பெயர், வள்ளுவ குலத்தவருக்குரிய அடையாளமாக இனங் காணப்பட்டதை விரும்பாத மனப்பான்மை, பெயரை மாற்றக் காரணமானது.
மாற்றவிரும்பியவர்கள் அப்பொழுது இருந்த வேதாகம பண்டிதரும் சமஸ்கிருத அறிஞருமாகிய சித்தாராம சாஸ்திரிகளிடம் ஆலோசனை கேட்டனர். அவர், வல்லியக்கன் என்ற பெயர், யாழ்ப்பாணத்தில் பிரபலமான பெருமாள் கோயிலாகிய வல்லிபுரக் கோயிலுடன் ஒத்துப் போவதால், இதை வல்லிபுர நாதர் என்று கொள்வதே பொருத்தமானது என்று ஆலோசனை வழங்கினார். கோண்டாவிலில் இருந்த ஸ்தபதி சோமசுந்தரம், வள்ளுவர்களுக்கு ஆகம
வல்லியக்கன் கோயில், சண்டி
岳、
முறையில் கோயில் அமைக்க இசைந்து, கட்டிக் கொடுத்தார். திருநெல்வேலி, சீவரத் தினம், தேர் அமைத்தார். 1981 இல், ஆகமமுறைப்படி பிராமன ரால் குடமுழுக்குச் செய்யப்பட்டது. கொடியேறித் திருவிழா நடைபெறத் தொடங்கியது. பறையடிப்பது நின்று, நட்டுவ மேளம் வந்தது. அப்போது பிரபலமாக இருந்த நாதஸ்வர வித்துவான் என். கே. பத்மநாதன், இந்தக் கோயிலுக்கு வந்து வாசிக்கத் தயங்கினாலும் பின்னர் ஒத்துக்கொண்டார்.
வேதமந்திரங்களுடன் திருவாய்மொழி படிப்பதும் மார்கழியில் திருப்பாவையும் வைகுண்ட ஏகாதசியும் வழக்கமாகின. வடமராட்சியில் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில், பொன்னாலை வரதராசப் பெரு மாள் கோயில், நகரில் உள்ள சேணியதெருப் பெரு மாள் கோயில் மரபுகள் யாவும் பின்பற்றப்படுவதுடன் அவற்றுடன் போட்டியிடும் போக்கில் அங்கு இல் லாத புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இன்று தோன்றியுள்ளது. தசாவதார ஐம்பொன் படிமங்கள் செய்து வைக்க வேண்டும் என்று இப் பொழுது முயற்சி நடக்கிறது. வள்ளுவர் அல்லாத வர்கள் பலர் பக்தி சிரத்தையுடன் இங்கு வந்து வழிபடுவதையும் கானக்கூடியதாக உள்ளது.
29

Page 32
d C CN
சங்கானையிலோ அல்லது வேறெங்காவதோ வல்லியக்கனுக்கு இப்பொழுதும் கோயிலோ வழி பாடோ இருப்பது பற்றி திரு. இராசரத்தினத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், சங்கானையிலாவது வல்லியக்கன் எஞ்சி இருக்கிறாரா என்பதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்குத் தலைக் கேறிவிட்டது.
முதலில், சங்கானையில் வள்ளுவர்கள் வாழும் பகுதியைத் தெரிந்துகொண்டு அங்கு சென்று தேடலாம் என்று குகபரனிடம் கூறினேன். அந்தப் பகுதியில் விசாரித்த பொழுது, பழையவர்கள் எல்லாம் போய் விட்டார்கள். இப்பொழுது யாருக்கும் இவற்றைப் பற்றித் தெரியாது என்ற பதில்தான் கிடைத்தது. கோயில் என்றால் தெருக்கரையில் இருந்த பாலவைரவர் கோயிலைக் காட்டினார்கள். இந்தக் கோயிலில் முன்பு பலி நடைபெற்றதாம். இராசதுரை அமைச்சாரக இருந்த பொழுது நிறுத்தப் பட்டதாம். கோயில் உடைமையாளர்கள் மதம் மாறிச் சென்றபின்னர், அண்மையில், பல சிக்கல் களுக்குப் பின், கோயில் பொதுச் சொத்தானது. கோயிலுக்கு எதிரில் கடை வைத்திருந்தவர் அறிமுகப் படுத்திவிட்ட நல்லையா என்பவர் இந்தத் தகவல் களைக் கூறினார். பாலவைரவர் வல்லியருக்கனாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது.
வள்ளுவர்கள் வழிபடும் வேறேதாவது கோயில் இருக்கிறதா என்று கேட்டேன். வல்லியப்பர் என்று சற்று உள்ளுக்குள், ஒரு வளவுக்குள், ஒரு கோயில் பாழடைந்து போய் இருக்கிறது. அதற்கு விளக்கு வைக்கவும் ஆளில்லை, என்றார் நல்லையா. அட, அதைத்தானே தேடிக்கொண்டு வந்திருக்கிறோம் என்றேன்; இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கேள்விப்பட்ட சங்கானை வல்லியக்கனை கடைசியாக கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில்,
கோயிலுக்கு பக்கத்து வளவில் இருக்கும் திரு. பொன்னன் சின்னத்தம்பி மேற்கொண்டு விவரஞ் சொல்லிக் கோயிலைக் காட்டினார். கோயில், காடு மண்டிப்போய், ஒரு வளவுக்குள் இருந்தது. கருவறை யும், முகமண்டபமும் கொண்ட, சிறிய, ஒடு வேய்ந்த கட்டிடம். பாழடைந்து, ஒடுகள் விழுந்து, ஒட்டடை பிடித்து இருந்தது. செவ்வக வடிவில், நிலைக்குத்தாக நடப்பட்டிருந்த, வெள்ளைச் சுண்ணாம்புக் கல்தான் வல்லியக்கன். பக்கத்தில் ஒரு சூலமும் இருந்தது. கற்பூரத் தட்டு, விளக்கு முதலியவை பாசிபிடித்துக் கிடந்தன. நெடுங்காலமாக உள்ளே ஒருவரும் போகவில்லை என்று தெரிந்தது. நெல்லியடியில் இருந்து வருவதாகச் சொல்லப்பட்ட வள்ளுவக் குருக்கள் பற்றிக் கேட்டேன். அப்படி யாரும் இப்பொழுது வருவதில்லை என்று தெரிந்தது. வளவு உடைமையாளர்களும் பக்கத்திலேயே இருந்தார்கள். இளந்தலைமுறையினர். தாங்கள் மதம் மாறிவிட்ட தால் தங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் குடும்பத்து வழிவந்த ஒருவரும் எதிர் வளவொன்றில் இருக்கிறார்.
அேவர் தனது வளவுக்குள் ஒரு வல்லியக்கன் கோயில்
வைத்திருக்கிறார் என்றும், இதனால் தகராறாகி புது வல்லியக்கன் தூக்கி எறியப்பட்டு, திரும்பவும் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும்
ஓஅறிந்தோம். அந்தக் கோயிலையும் பார்த்தோம்.

இதுவும் அதைப்போல மயோசீன் வெள்ளைக் கல்லாலான வல்லியக்கன். சிறு கட்டிடம், வாய்கட்டி, விளக்கு வைப்பதும் அவ்வப்போது பொங்கலும் ஒழுங்காக நடைபெறுகின்றன. அந்த வீட்டில் உள்ளோ ருக்கு வல்லியக்கன் குறித்து எந்த விளக்கமும் இல்லை. மரபு ஒன்றின் தொடர்ச்சியாக மட்டுமே வழிபாடு நடக்கிறது. வல்லியக்கன் என்ற சொல், பொருளற்றுத் தோன்றியதால், வல்லியப்பர் ஆக்கிவிட்டார்கள்.
பொன்னன் சின்னத்தம்பி வயதானவர். காரை நகரில் நான் முன்பு சந்தித்தவர்களைத் தெரிந்திருந்தது. அவர் தந்த தகவலின்படி சண்டிலிப்பாயிலும் ஒரு வல்லியக்கன் கோயில் இருப்பதாக அறிந்தோம். வீரபத்திரர் கோயிலடி என்றால் காட்டுவார்கள் என்றார். வல்லியப்பன் யாத்திரை தொடர்ந்தது. சண்டிலிப்பாய் வீரபத்திரர் கோயில் அண்மையில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. கோயில் அறங்காவலருக் கும் அயலில் இருந்தவர்களுக்கும் வல்லியக்கன் என்ற பெயர் புதுமையாக இருந்தது. திரும்பவும் வள்ளுவர் வாழும் பகுதியைக் கண்டுபிடிப்பது என்ற பழைய உத்தியைக் கையாண்டோம். குகபரனுக்கு ஒரு சந்தேகம், வள்ளுவர் என்று நான் கேட்டது வீரபத்திரர் கோயிலாருக்கு விளங்கியதா என்று. விளக்கி, பறையர் என்று சொன்னபின்தான், அந்தப்பகுதிக்குள் ஒரிரு கோயில்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரியவில்லை, என்ற பதில் கிடைத்தது.
வள்ளுவ பகுதிக்குள் பேச்சி அம்மன் கோயில் துலக்கமாக இருந்தது. பேச்சி அம்மன், பேத்தி அம்மன், என்ற இரண்டு பதங்களுமே பயன்படுத்தப்பட்டன. யார் இந்த அம்மன் என்பதை இங்கு விளக்க வேண் டும். பண்டைத்தமிழரின் தாய்க் கடவுளான கொற்ற வையே பேச்சி.
பேர்+ஆய்ச்சி - பேராய்ச்சி - பேய்ச்சி - பேச்சி பேர்+ஆத்தை - பேராத்தை - பேத்தி ஆய், ஞாய், யாய் என்பவை தாய் என்பதன் மறு சொற்கள். சங்க இலக்கியங்களில் பயின்று வருபவை. ஆச்சி, ஆத்தை, இரண்டுமே தாயைக் குறிக்க யாழ்ப்பாணத்தில் இன்றும் வழங்கும் சொற் கள். பெருந்தாய் என்பதே பேச்சியும் பேத்தியும். நிறுவன ரீதியான சமயங்கள் எதுவும் வரமுன்னரே, ஆதி நம்பிக்கைகளுள் ஒன்றாக, உலகெங்கும் தோன்றிய வழிபாடு, தாய்க்கடவுள் வழிபாடு. கொற் றவை கொற்ற+அவ்வை - அரசாழுந்தாய், காடுகிழாள் காட்டை ஆள்பவள், காட்டுக்கு உரிமை கொண்ட வள்) என்றெல்லாம் பழந்தமிழ் நாகரிகத்தில் போற்றிப் புகழப்பட்ட பதமும் கருத்தும் இன்று பேயாகி, பழந்தமிழ் மரபை இன்றும் பேணும் வள்ளுவரும் வெட்கப்படும் சொல்லாகிவிட்டது. சண்டிலிப்பாய்ப் பேச்சி அம்மன் கோயில், இன்று, இந்துவிவகார அமைச்சின் உபயத்தால் ராஜராஜேஸ்வரி என்ற பெயர்ப்பலகையுடனும் பிராமண பூசையுடனும் இருக்கிறது.
பேச்சி அம்மன் கோயிலடியில் விசாரித்த பொழுது வல்லியக்கன் கோயிலைக் காட்டினார்கள். இது, தனியார் கோயிலாக, வளவுக்குள் இருப்பதால் மாற் றங்கள் தீண்டவில்லை. பரந்து வளர்ந்த ஆலமரத்தின் அடியில், வல்லியக்கன். அதே வெள்ளைச் சுண்ணக் கல். மரத்தின் வேர்கள் கல்லின் பெரும் பாகத்தை முடிவிட்டன. சங்கானையில் பார்த்தது போல

Page 33
கருவறையும் முகமண்டபமும் கொண்ட ஒட்டுக் கட்டிடம். ஒரு விந்தையான சமய இணைப்பையும் இங்கு கண்டோம். கருவறை வசாலில் இருபுறமும் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் இரு கூடுகள். பிள்ளையார் படமாகவும் முருகன் வேலாகவும் இருந்தனர். ஒரு வகையில் வல்லியக்கனை சிவனாக்கி விட்ட கருத்துத் தெரிந்தது. ஆனால், முகமண்டப முகப்பில், கிருஷ்ணர் சிலை.
வளவின் உடைமையாளர் தருமு என்று அழைக் கப்படும் சண்முகலிங்கம் என்றும் அவரும் குடும்பத்தி னரும் தற்பொழுது அந்த வீட்டில் வசிக்காமல் உடுவிலில் முன்பு மல்வம் என்று அழைக்கப்பட்டு இப்பொழுது சத்திய புரமாகிவிட்ட இடத்தில் வசிப்ப தாகவும் சொன்னார்கள். கோயிலில் விளக்கு வைப்ப தற்காக அவரோ குடும்பத் தினரோ தினமும் வருவ தாகவும் அறிந்தோம். வீட்டில் இப்பொழுது இருப்ப வர்கள் மதம் மாறியவர்கள். இருந்தாலும், தாங்களும் விளக்கு வைப்பதாகச் சொன்னார்கள்.
திரு. சண்முகலிங்கத்தை உடுவிலில் சென்று சந்தித்தோம். அவர் மனைவிக்கு, கலை வரும் வழக்கம் உண்டு என்று தெரிந்தது. வல்லியக்கன் கோயிலில் முன்பு நாவல் மரம் இருந்ததென்றும் அதை மூடியே ஆலமரம் வளர்ந்ததாகவும் அவர் மனைவி தெரிவித் தார். வல்லியக்கனுக்கு தாங்கள் வாய்கட்டி பூசை செய்வதாகவும், ஆலமரத்தில் பல நாகபாம்புகள் குடிகொண்டுவிட்டதால் தாங்கள் அங்கு குடியிருப் பதைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் சொன்னார் கள். கோயில் முகப்பில் இருக்கும் கிருஷ்ணர் சிலை பல ஆண்டுகளுக்கு முன்பே, அவர்களுக்கு முந்திய தலைமுறையிலேயே, வைக்கப்பட்டுவிட்டதையும் அறிந்தோம். 1950களில் நெல்லியடி வல்லியக்கன் கிருஷ்னர் ஆகிய பொழுது இது நடந்திருக்கலாம். ஆலமரத்தை வெட்டிக் கோயிலைத் திருத்த வேண்டும் என்பது இக்குடும்பத்தினரின் கோரிக்கை. திரு. சண்முகலிங்கத்தின் மனைவி ஆனைக் கோட்டையில் உள்ளதொரு வல்லியக்கன் பற்றி எங்களுக்கு அறியத் தந்தார். மானிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக ஆனைக்கோட்டை செல்லும் வழியில், வாசிகசாலை ஒன்றின் அருகில், கந்தையா சின்னத்தம்பி என்பவரது வளவில் இது இருப்பதாக அறிந்தோம்.
ஆனைக்கோட்டை வல்லியக்கன், பெயர் மாற்றப் படவில்லை. மூலவராகிய கல்லும் மாற்றப்பட வில்லை. ஆனால், வீட்டோடு கோயில் கட்டி, கருவறை வாசல் இருபுறமும் சங்கு சக்கரச் சின்னங்கள் அமைத்து, வைஷ்ணவ மயப்படுத்தப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. பெரிய ஆலமரம் முன்னர் இருந்தது. இப்பொழுது இல்லை. வாய்கட்டி, வள்ளுவரே பூசை செய்கின்றனர். முன்பு, பறையும் அடிக்கப்பட்டது. இப்பொழுது பூசை செய்பவர்களில் ஒருவர், திரு. கதிரேசு விஜய சுகுமார்.
இந்த வீட்டில் வித்தியாசமான கருத்துடைய ஒருவரை நாம் சந்தித்தோம். இவர், திரு. க. இராச நாயகம் ஆணைக்கோட்டை வல்லியக்கன் கோயில் உரிமை உண்மையில் இவருக்கு வரவேண்டியது. மதம் மாறித் துறந்துவிட்டார். மார்க்சிய சிந்தனை களின் சாயையும் தெரிந்தது. தற்பொழுது மிருதங் கத்துடன் மேற்கத்தைய தோற்கருவி வாத்தியங்கள்

LIFE
வல்லியக்கன் கோயில், ஆனைக்கோட்டை
தயாரிக்கிறார். அரியாலையில் வசிக்கிறார்.
வல்லியக்கன் என்ற சொல்லின் பொருள் இவருக் குத் தெரிந்திருந்தது. இலங்கையில் இயக்கர், நாகர் என்று இருந்த ஆதிக்குடிகளில், வல் இயக்கன் என்று ஒருவர், வள்ளுவகுலத்தின் மூதாதை என்றும், மூதா தையர் வழிபாட்டால் வல்லியக்கன் என்ற கடவுள் வழிபாடு வந்ததென்றும் இவர் கருதுகிறார். வல்லியக் கன் வல்லிபுர நாதரானது இவருக்கு உடன்பாடில்லை. வல்லியக்கன் வழிபாட்டிற்கும் நாம் பறையர் என்று சொல்வதற்கும் தயங்கவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை என்பது, இவர் கருத்து. யாழ்ப் பாணத்தில் பறை தயாரிப்பதற்கு நெல்லியடியல் இருந்த ஒரே ஒரு கலைஞரும் இறந்தபின் இப்பொழுது யாரும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆணைக்கோட்டையில் கேட்ட விவரங்களால் இயக்கச்சியிலும் மாசியப்பிட்டியிலும் வல்லியக்கன் கோயில்கள் இருந்ததை அறிந்தோம். தற்பொழுதும் உள்ளனவா என்று அவர்களுக்குச் சொல்வத் தெரிய வில்லை. ஆனால், வேலணை - சரவணை, 2ம் வட்டா ரத்தில், சின்னமடு தேவாலயம் அருகில் வல்லியக்கன் கோயில் இப்பொழுது அதே பெயருடனும் அடை யாளங்களுடனும் இருப்பதாக விஜய சுகுமார் சொன்னார், நாங்கள் இன்னும் அதைப் பார்க்க வில்லை.
வல்லியக்கன், இயக்க வழிபாட்டிலிருந்து வந்ததென் பதை முன்னர் பார்த்தோம் இயக்க வழிபாடு என் றால் என்ன ? இயற்கையின் சக்தியே இயக்கன். மானிடவியலாளர்கள், இந்தக் கடவுட்கருத்தை, Animism என்று அழைப்பர்.
மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract linking) தோன்றிய காலத்தில் இருந்தே மானுடத்தை ஆட்டிப் படைத்த கேள்வி, இறப்பு, என்றால் என்ன என்பது இதற்கு விடைகாணும் முயற்சியின் வெளிப்பாடே, இறந்தோரைச் சடங்குகளுடன் புதைத்த மரபு சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நியாண் டர்தால் மனிதனின் காலத்தில் இருந்து இந்த மரபு தொடர்கிறது. இறப்பு, வாழ்வின் பாகமா? அல்லது வாழ்பு, இறப்பின் பாகமா? கண்டவர் விண்டிலர்,
விண்டவர் கண்டிலர் என்ற விடயமல்லவா இது. அடுத்த பெரிய கேள்வி, பிறப்பென்றால் என்ன என்பது. பிறப்பைத் தரும் தாயின் வடிவத்தில்

Page 34
32
விடையைக் காணும் முயற்சியில், தயாக்கடவுளர்கள் வந்தனர். 35,000 வருடங்களுக்கு முன்பிருந்தே தாய்க் கடவுள் வழிபாட்டை உலகெங்கும் காண்கிறோம். இதற்கு அடுத்து, இயற்கை கேள்விப் பொருளானது. மனதைப் பிரமிக்கவைத்த எல்லா இயற்கைக்கும் உள்ளிட்டமான இயக்குசக்தி, வழிபாட்டுப் பொருளு மானது. ஆறு, கடல், மலை, மரம், இடி, மின்னல், நிலம், பயிர் அனைத்தும் கடவுளர் வடிவங்களாயின. இவையே, இயக்கர்களும் இயக்கியங்களும். (வட மொழியில் இயக்ஷ - யக்ஷி)
இப்படியான மூல வினாக்களே மனிதப் பண் பாட்டில் சமயங்களின் தோற்றத்திற்கும் மாற்றங் களிற்கும் அடிப்படையாகின. காலத்திற்கு காலம் உருவான கற்பிதங்களின் அடிப்படையில், எத்தனை சமயங்கள் வந்தாலும், மூல வினாக்கள் விடைகாணப் படாததாலேயே சமயங்கள் தொடர்ந்தும் இருக் கின்றன; இருக்கும்.
இந்து சமயத்தின் மூலங்களும் மேற்சொன்ன வினாக்கள்தாம். மூதாதையர் சடங்குகளும் தாய்க் கடவுளர் வழிபாடும் நம்மிடையே இருப்பது எல்லோ ருக்கும் தெரியும். இன்றைய இந்துக் கடவுளர் யாவரும் இயக்கன் - இயக்கி வடிவங்களில் இருந்தே வளர்ந்தவர்கள் என்பதை, இந்தியக் கலைவரலாறு படித்தவர்கள், உணருவர். மானுட வடிவிலான, ஆரம்பகால உருவச் சிலைகளான, குடிமல்லம் சிவனும் மத்தியப்பிரதேச வேதிசாவின் முருகனும் இயக்கர்களாகவே காட்டப்பட்டுள்ளனர். பூரீயையும் லக்ஷ்மியையும் இன்னும் எண்ணிறந்த இயக்க, இயக்கிகளையும் ஆரம்பகால பெளத்த - சமணக் கலையிலும் காணலாம். ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவம் முன்னிலைப்படுத்தப்பட்ட பொழுது, அது, இயக்கர்களின் தலைவனாக அல்லது இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரா னார். பூதம் என்பது இயக்கனின் இன்னொரு பெயர். சக்தி என்ற பொருளுடையது. (இயற்கையின் சக்தியைப் பற்றிய கல்வியைப் பூதவியல் அல்லது பெளதிகம் என்கிறோம். இப்பொழுது, இயற்பியல் என்ற சொல்லைத் தமிழ்நாட்டில் பயன்படுத்துகிறார் கள்) பூத வணக்கம் பழந்தமிழ் மரபிலிருந்ததைச் சங்க இலக்கியங்களால் அறியலாம். இன்றும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த துளு மக்களிடையே பூதவணக்கம் பிரபலமானது. வல்லியக்கனை விஷ்ணு வாக்கிவிடலாம் என்ற சீத்தாராம சாஸ்திரியார் கருத்திலும் ஒரு நியாயம் உண்டு. ஏனெனில் விஷ்ணுவும் இயக்க வடிவிலிருந்து வளர்ந்தவரே.
இயக்கன், இயக்கி வழிபாடு தமிழ்மரபல் தொடர்ந்து சென்றமைக்கு இலக்கியச் சான்றுகளும் நாட்டாரியல் சான்றுகளும் நிறையவே உண்டு. இயக்கிக்கு ஆயர்குல முதுமகள் பொங்கலிட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது:
அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள்
சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை - 115-118
இயக்கி, ஆயர்களின் வணக்கத்துக்கு உரியவளாக வும், நகருக்கு வெளியே கோயில் கொண்டவளாகவும்

5ாட்டப்படுவதில் இருந்து, சிலப்பதிகார காலத்தி லேயே இயக்க வழிபாடு நாட்டார் மரபுக்கு உரிய நாகிவிட்டதை ஊகிக்கலாம். தமிழ் மரபில் இயக்க வழிபாட்டின் எச்ச சொச்சங்களை இன்றும் தென் பாண்டி நாட்டார் பெயர்களில் காணலாம். இசக்கி, இசக்கிமுத்து, ஜக்கம்மா, இசக்கியம்மா, பேராச்சி போன்ற பெயர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி நாட்டார் மரபில் பரவலானவை. கன்னட மரபில், ஆதிகர்நாடக மக்களிடையே, இது சாக்கம்மா என வழங்குகிறது. கன்னட - தெலுங்கு நாட்டார் மரபுக் குரிய எல்லம்மா இருள்வடிவானவள்; எல் - இருட்டு; தமிழில் ராக்கம்மா) இயக்கி வழிபாட்டின் இன்னொரு வடிவம.
இந்து சமயம் என்று, இன்று நாம் சொல்லிக் கொள்ளும் சமயத்தைப் புரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் உண்டு. இந்தப் பெயரே வெளியில் இருந்து கொடுக்கப்பட்டது. Orientalism எனப்படும் மேலை நாட்டவரின் கீழைத்தேயவாதத்தால் உருவானது. பாழ்ப்பாணத்தில் இந்தச் சொல் உபயோகத்திற்கு வந்து சுமார் நூறு வருடங்கள்தான் ஆகின்றன. இந்து சாதனமும் (1888) இந்துக் கல்லூரியும் (1890) ஆரம்பகால உதாரணங்கள்.
ஒருமைத்தன்மையான சமய சிந்தனைக்குப் Monotheism) பழக்கப்பட்ட மேற்கத்தையார், அதே கண்களோடு தென்னாசிய சமய ஒட்டத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்து, அதற்கு ஒற்றைத்தன்மையான ஒரு பொதுச் சொல் கொடுக்க முனைந்தபோது வசதியாக அகப்பட்டது, ஆதிசங்கருடைய வைதிகம் - அவைதிகம் என்ற பிரிப்பு.
வேதத்தை முன்னிறுத்தி, அதற்கூடாகப் பிராம னியத்தை முன்னிறுத்திய சமய சிந்தனையே இந்து சமயத்தின் மூலம் என்ற கருத்தை, மேற்கத்தைய கீழைத்தேய வாதிகள் சொல்லப்போக, அவர்கள் கண்களுக்கூடாக எம்மை நாம் பார்ப்பதுதான் நாக ரிகம் என்று நினைத்த எமது தேசிய வாதிகளும் சேர்ந்து செய்த கற்பிதம் தான் இந்துசமயம் என்ற இன்றைய கருத்து. வேதத்தையும் வேதியரையும் எமது பக்தி இலக்கியங்கள் முன்னிறுத்தவில்லையா என்று கேட்போருக்கான பதில் அந்தப் பக்தி இலக்கி பங்களிலேயே இருக்கிறது. சந்தேகம் இருப்போர் மாணிக்கவாசகருடைய போற்றித் திருவகலை ஒரு தடவை படிக்கவும்.
ஏறத்தாழ 200 ஆண்டு கால வரலாறு உடைய இந்த கீழைத்தேயவாத - தேசியவாத, இந்துசமய ஒட்டத்தின் விளைவாக, சைவ - வைஷ்ணவச் சண்டை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், தென்னாசியாவில், சமய நம்பிக்கைகளின் மிகப் பழமையான வடிவங்களைத் தமக்குள் தேக்கிவைத்துக் கொண்டிருக்கும் தலித்துக்கள், ஆதிவாசிகள் போன்றோர், தங்கள் சமய அடையாளங்களை இழந்தனர். தாங்கள் இந்துக்களா என்ற கேள்வியும் எழுந்தது. இந்துக்கள் என்று நினைப்போரும் தமது மூலங்களை அடையாளம் காணவில்லை.
மூலவடிவமும் அதிலிருந்து முகிழ்த்த வடிவமும் ஒன்றையொன்று புரிந்துகொள்ள முடியாமற் போனது. அழகான மகள், வயதான தாயைப் பார்த்து, இந்த அழகற்ற கிழவி எப்படி எனக்குத் தாயாவாள் என்று கேட்டகதை. பெரிய துயரம் என்ன வென்றால்,

Page 35
தாய்க்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, இவள் எனது மகளாக இருக்க முடியாதுதான் என்று நினைக் கத் தொடங்கியது.
இந்தநிலை, கிறிஸ்துவ மதமாற்றத்திற்கான தார்மீக நியாயங்களுள் ஒன்றாகியது. ஏனெனில் பிராமணி பத்திற்கு மாற்றுவதும் மதமாற்றம்தானே.
நம்பிக்கைகளின் இணைப்பு என்பது தென்னாசி யாவில் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம். புத்தரும் தசாவதாரங்களுள் ஒன்றானார். ஒரிசாவின் புரி ஜகந்நாதரில், சைவம், வைஷ்ணவம், சாக்தம், பெளத்தம், சமணம், ஆதிவாசிகளின் சமயம் எல்லாம் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயினும், மேலாதிக்கம் பிராமணியம் என்பதை மறுப்பதற் கில்லை.
பிராமணியத்தைப் பின்றுபற்றுவதன் மூலம் மேல் நிலைக்கு வரலாம் என்ற தென்னாசிய சமய - சமூகப் போக்கை, சமஸ்கிருதமயமாக்கம் என்ற கருதுகோளுக்கு ஊடாக வெளிப்படுத்தினார், MN பூரி நிவாஸ் என்ற சமூகவியலாளர். தென்னாசியாவின் சாதி, படிமுறை, சமூக அசைவு ஆகியவற்றை அமைப் fullusiv psTroy TFs (Structural Analysis) ஆராய்ந்த டுமோ என்ற பிரெஞ்சு சமூகவியலாளர், தூய்மை - தூய்மை இன்மை என்பதே சாதிப்படிமுறையைத் தீர்மானிக்கிறது என்று, Homohierarchicus என்ற தனது நூலில் கூறுகிறார். தூய்மை என்று நினைப்பவற்றைப் பின்பற்றுவதன் மூலம் படி முறையில் ஏறலாம் என்பது அவர் கருத்து. பிராமணியமும் சைவ உணவும் தென்னாசிய மரபில் தூய்மையானவை என்று நம்பப்படுபவை. ஆனால், பிராமணியமே சைவ உணவைத் தழுவித் தூய்மை பெற்றது. சமண சமயத்தால்தான் என்றும் பலர் சுட்டிக்காட்டி உள் ளார்கள். திருவள்ளுவர் சொன்ன புறத்தூய்மை - அகத்தூய்மை பற்றிய குறளும் அப்பர் பாடிய ஆவுரித் துத்தின்போர் பற்றிய தேவாரமும் எந்தக் காலத்தி லாவது எமது சமூகத்தின் ஆழ்மனச் சிந்தனைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தனவா என்று தெரியவில்லை.
சமஸ்கிருத மயமாக்கம் என்ற கருத்திற்கான விமர்சனங்களுள் ஒன்று, அது, ஒரு தலைப்பட்சமாசி இருன்ன முடியாது என்பது. சமஸ்கிருதமயமாக்கம் என்ற இயங்குவிசை இருக்கும் பொழுது அதற்குச் சமனானதும் எதிரானதுமான மற்றொரு விசையும் இருக்க வேண்டும். அப்படியானால், அதை பிராகிருத மயமாக்கம் என்று அழைக்கலாமா? இந்திய மத்திய அரசின் மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்கு நர் தேவி பிரசன்ன பட்டநாயக், இந்தக் கேள்வியை எழுப்பினார்.
இந்தக் கருத்துக்களும் விவாதங்களும் வருவதற்குட் பல காலத்திற்கு முன்பாகவே புதுமைப்பித்தன் என்ற மேதை, தமிழ்ச் சிறுகதைக்கு ஊடாக, இவற்றைச் கொண்டுவந்து காட்டிவிட்டார். புதுமைப்பித்தன் பல சிறுகதைகள் இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் விடயத்தோடு தொடர்பானவை. சமஸ்கிருதமய மாக்கம் - பிராகிருத மயமாக்கம் பற்றி விளங்கிச் கொள்ள விரும்புபவர்கள், பாரதியின் சந்திரிகையின் கதையின் தொடர்ச்சியாக புதுமைப்பித்தன் எழுதிய கோபாலையங்காரின் மனைவி என்ற கதையைப் படிக்க வேண்டும்.

Animisா தொடர்பாக ஆபிரிக்காவில் இருந்து புதிய சிந்தனையொன்று எழுந்திருக்கிறது. நீண்டகாலமாக இஸ்லாமிய மயமாக்கம், கிறிஸ்துவ மயமாக்கம் ஆகியவற்றை எதிர்கொண்ட ஆபிரிக்க மக்கள் இன்று, Animism தமது சமயம் என்றும் அதைச் சொல்ல தாங்கள் வெட்கப்படவில்லை, பெருமைப்படுகிறோம் என்றும் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.
கடவுள் ஒருவர். அவர் எங்கும் நிறைந்தவர் என்று ஒருமைத்தன்மைச் சமயங்கள் சொன்னால், "எல்லாம் கடவுட் தன்மை கொண்டவை' என்ற Animism, ஒரன் மாற்றுப் பார்வையாக முடியாது. என்று கேட்கப்படுகிறது. உண்மை ஒன்றாக இருக்க வேண்டியதில்லை, பலவாகவும் இருக்கலாம் என்ற பின்நவீனத்துவ மேற்குலகச் சிந்தனையும் இதற்கு உடந்தையாக ஓடுகிறது. .
இந்தியாவிலும் இந்த எதிர் ஓட்டத்திற்கு ஒரு வரலாறு உண்டு. பிராமணிய இந்துசமயம் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பெளத்தர்களாவிடுங்கள் என்று தலித்துக்களுக்குச் சொன்னார், அம்பேத்கார். இந்தியாவில் பல கிராமங்களின் நுழைவாயிலில் இன்று இரண்டு சிலைகளைக் காணலாம். ஒன்று மகாயான புத்தர் மற்றது அம்பேத்கார். இவை
வல்லிபுரநாதர் கோயில், கோண்டாவில்
வெறுங் குறியீடுகள். சமய அநுட்டானத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
தற்பொழுது பல இந்திய ஆதிவாசிகள், சனத் தொகைக் கணக்கெடுப்பின் பொழுது இந்துக்கள் என்று குறிப்பிடாமல் தமது ஆதிவாசி அடையா ளத்தைச் சமயப் பெயராகக் குறிப்பிடுகிறார்கள். கர்நாடகாவில் வீர சைவர்களும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பலர் செய் கிறார்கள். ஏனெனில், வீரசைவம், பிராமணியத்தை நிராகரித்த சமயப்பிரிவு சமய மரபுகள் தொடர்பான இத்தகைய விழிப்புணர்வு அண்மையில் தமிழ்நாட்டி லும் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசு நாட்டார் சமய நம்பிக்கைகள் தொடர்பாக கொண்டுவந்த சில தடைச்சட்டங்களின் எதிரொலி நாம் அறிந்தது.
தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரை தமிழகம் அண்ணாந்து பார்க்கும்படி இலக்கியம் படைத்த பெருமை ஈழத்திற்கு உண்டு. தலித் சமய உரிமை தொடர்பாக நீண்ட போராட்டம் நடத்திய பாரம் பரியமும் உண்டு. ஆயினும், இன்றைய தமிழகம்
3.

Page 36
34பஞ்சபுராணம் பாடி, வல்லியக்கனைச் சைவமய
தலித் பண்பாட்டு அடையாளத்தைப் பெருமைக்கு உரியதாக உறுதிப்படுத்தும் பொழுது, இங்கு பண் பாட்டு அடையாளத்திற்கு உரிய குறியீடுகள் ஒழிக்கப் பட்டு, பிராமணிய மயப்பட்டுள்ளன. பறை உடைக்கப் பட்டிருக்கிறது. அதன் இசையும் கலைஞர்களும் அருகிவிட்டன. அந்த இசைக் கருவியைச் செய்வதற் கும் இன்று ஆளில்லை என்று அறிகிறோம். தமிழ் நாட்டிற்கும் யாழ்ப்பாணத்திற்கும இடையே இந்த வேறுபாட்டுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்க வேண்டும்.
மாற்றுப்பண்பாடு, மாற்றுச் சிந்தனை என்பன வாழ்வின் விழுமியங்களாக முன்வைக்கப்படும் காலத் தில் வாழ்கிறோம். ஒருமைத்தன்மையால் மனிதகுல அநுபவங்களின் தொன்றுதொட்ட பதிவுகள் அழிந்து விடக் கூடாது. மாறாக, சிந்தனைகளின் பன்மைத் தன்மையால் செழிப்படைய வேண்டும் என்பது பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் (Cultural Pluralism) சாரம்.
வல்லியக்கன் வழிபாட்டு மரபை அவதானிப் போருக்கு, சில மாற்றுச் சிந்தனைகள் புலப்படும். மந்திரத்திற்கு வலிமை உண்டு என்று, மந்திரம் சொல்லி வழிபடுவது ஒரு கருத்து என்றால், வல்லியக் கன் என்ற இயற்கையின் சக்தியை, மெளனம் காத்து, வாய்கட்டி வழிபடுவது மாற்றுக் கருத்து.
கடவுள் இருக்கும் "ஸ்தலம் முக்கியமானது; ஆகமம் எனப்படும் விதிமுறைப்படி கோயில் கட்டுவது முக்கியமானது; பக்தர்கள் யாத்திரை செய்து தேடிப் போக வேண்டும், என்பது ஒரு கருத்து என்றால், இடம் முக்கியம் இல்லை; கோயிலும் முக்கியம் இல்லை; யாத்தரையும் முக்கியம் இல்லை; கடவுளை உங்களோடு சேர்த்துக் கூட்டிக் கொண்டு போகலாம் என்பது, மாற்றுக் கருத்து.
வள்ளுவ குலமக்கள் எங்கெங்கெல்லாம் புலம் பெயர்கிறார்களோ அங்கங்கெல்லாம் வல்லியக்கன் எடுத்துச் செல்லப்படுவார். இலங்கையின் வேடர்களுக் கும் இம்மாதிரியான கடவுட் கருத்து இருந்தது. இலங்கை வேடர்களின் கடவுளரும் ‘யக்கு’ என்று அழைக்கப்படும் இயக்கர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்தமிழகத்திலிருந்து கிராமங் கிராமமாகப் புலம் பெயர்ந்தவர்கள் தமது குலதெய்வங்களையும் தலைமேல் சுமந்து எடுத்து வந்தார்கள் என்று அறிகிறோம்.
3.
இங்கு நாம் பதிவு செய்யும் விடயங்களுக்குப் பின் னால் பல ஒட்டங்கள் இருப்பதை, படிப்பவர்கள் உணருவர். திரு. இராசரத்தினம் ஒரு நியாயம் சொன்னார். முன்பு வல்லியக்கன் வழிபாடும் வல்லியக் கன் கோயிலடி என்று இடத்தையும், மக்களையும் குறித்த சொற்றொடரும் தாழ்த்தப்பட்டவையாய் இருந்தன. யார் யாரெல்லாம் அவற்றைத் தாழ்த்தி னார்களோ அவர்களே வழிபாட்டில் பங்கெடுத்து, கோயிலுக்கு வருவதாகிய மாற்றம் இன்று நடந்திருக் கிறது. இது, வல்லியக்கன் வல்லிபுர நாதரானதாலேயே ஏற்பட்டது என்பது அவர் கருத்து.
இதிலே மற்றொரு ஒட்டமும் உண்டு. முன்னர்
s
6.

ாக்கும் முயற்சி இருந்தது. ஆனால் ஏன் வல்லியக்கன் வனாக மாறாமல் விஷ்ணுவானார்? பெரும் ான்மை, சைவ சித்தாந்த மரபில் இருக்கும்பொழுது, மய உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை, யாழ்ப் ாணத்து வழக்கில் மிக அரிதாக இருந்த வைஷ்ண பத்திற்கு வல்லியக்கனை மாற்றியதில் அம்பேத்கார் ந்தனையின் சாயல் இருக்கக் கூடும்.
அடுத்த ஒட்டம், யாழ்ப்பாணத்தில் பரவலாக டைபெற்று வரும் சமஸ்கிருத மயமாக்கம். எனது படமொழி ஆசிரியர் சீத்தாராம சாஸ்திரிகள் அதைப் பிரதிபலித்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதமாற்ற ஒட்டத்தில் பலர் வல்லி 1க்கனை அடியோடு கைவட்டு, பாழடைந்து போக பிட்டுவிட்டார்கள்.
திரு. இராசநாயகம் ஒட்டங்களை விளங்கியவர். உடையாளம் பெருமைக்குரியது, அதைப் பேண வண்டும், என்று நினைக்கிறார். ஆனால், உரிமையை இழுந்துவிட்டார்.
இவர்கள் எல்லோருக்கும் அப்பால், சங்கானையில், சீட்டு வளவுக்குள் வைத்திருக்கும் வல்லியக்கனுக்கு ாள்தோறும் விளக்கு வைக்கும் பெண்மணி, ‘என்ன ாமி என்று தெரியாது. ஆனால் நாங்கள் கும்பிடு றோம். இது என்ன சாமி? உங்களுக்குத் தெரியுமோ ான்று பார்க்கவந்த எங்களைக் கேட்டது, உள்ளத்தை நருடுகிறது.
எதையும் சரியென்றோ பிழையென்றோ சொல்வ ற்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. நம்பிக் கைகளின் ஒட்டங்கள் விளங்கிக் கொள்ளும் முயற்சி வில் எழுதப்பட்டது. எனக்கும் ஒரு ஒட்டம் - ரலாற்று மாணவனது ஓட்டம்.
பின்ணைப்பு 01 கோவும். மடைப்பறையும்
(யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள் பெருங்கற் ண்பாட்டிற்குரியவர்கள் கி.மு. 500 அளவில் இப் ண்பாடு இங்கு பரவியிருக்கலாம். இக்காலகட்டத்தி லயே திரிசூல வடிவக் குறியீடு இங்கு வழக்கி ருந்திருக்கிறது. இக்குறிமயிட்டிற்குரிய ஒலிவடிங்களி லான்று 'கோ' எனப் படிக்கப்படக்கூடியது. இவை |ண்மைக்கால ஆய்வுகள் அறியத்தரும் சில கவல்கள்)
அது ஒரு மணல் திடர். பரவைக்கடலும் பனங் ாடும், தரவை நிலங்களும், அடங்கிய மணல் திடர், ங்குதான் இரண்டரை ஆயிரமாண்டுகளுக்கு முன் பருங்கல்லோனுடைய குடிவந்து இறங்கியது. தனது ரும்புக் கத்தியினால் பற்றைகளை வெட்டி, பயிர் லம் காண அவன் முயன்றான். பனை ஒலையில் டைந்த பெட்டிகளைத் தலையில் அணிந்து வனது பெண்டுகள் பரவைக் கடலில் மீன் பிடித் rர்கள். தரவை நிலப்புல்வெளியில் சிறார்கள் Fம்மறி மேய்த்தார்கள். மணல் தரையில் குடைந்த ாவினிலே நன்னீர் சுரந்தது. மாரிமழையில் பெருகி ந்த வெள்ளம் வில்லாய் வளைந்த பள்ளங்களில் ங்கிநின்றது. பெருங்கல்லோனது குடிபெருகி வாழ சதி கிடைத்தது.
ாழ்க்கை ஆற்றுக் கரையோரம் பெருங்கல்லோன்

Page 37
வைத்த சூளையில் மட்கலங்கள் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்தன. சூளையின் புகையால் அந்த மட்கலங் களின் உட்புறம் கறுப்பாக இருந்தது. கூரிய ஆணி பால் பெருங்கல்லோன் அவற்றில் எதையோ கீறி னான். மூன்று கவருடைய ஒரு தண்டின் வடிவம் - அது ஒரு திரிசூலம் தனக்குப் படியளக்கின்ற 'கோ' வினை அவன் உள் நினைந்து உரிகியமைக்குச் சாட்சி அது காலங்காலமாக அவன் உணர்வில் துளிர்த்து வளர்ந்து செல்லும் கடவுட் கருத்திற்கு எங்கேயோ தொலைதூரத்தில், சிந்துநதிக் கரையில், பலநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மூதாதைகள் காலத்தில் இருந்து அவன் கொடுத்துவரும் குறியீடு அது.
பெருங்கல்லோன் வழித்தோன்றல்கள் மணல் திடலில் பரவி வாழ்ந்தனர். 'கோ' வும் பரவினார். வில் எனப்படும் குளங்குட்டைகளின் கரையில்; மரத்தின் கீழ்; வயற் கரையில், வளவு மூலையில்; பார்த்த இடமெல்லாம் 'கோ' வீற்றிருந்தார். அவர்களது கடவுட் கருத்தின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் 'கோ' என்ற திரிசூலம் பொதுவான குறியீடாகத் திகழ்ந்தது. பெரியதம்பிரான், நாகதம்பிரான், பூதவ ராபர், காத்தவராயர், அண்ணமார், கூட்டத்தார், சேவுகர், காளி, நீலி, வாலை, பேச்சி, கொத்தி, கண்ணகி - எல்லோரும் "கோ" வடிவில்தான்.
பிரபஞ்சமளாவிய மர்மம் முடிவில்லாமல் வளர்ந்து செல்லும் என அவர்களது உள்ளுணர்வு கூறியதாலோ என்னவோ, 'கோ' விற்கு இல்லங்கள் எழுப்பி அந்தக் கோயில்களில் மர்மத்தைத் துலக்க அல்லது அமைதிகாண அவர்கள் முயன்றார்கள்.
தொலைவிலிருந்து மடைப்பறையின் அதிர்வு. பனங் காடும் வயல்வெளியும் கேட்கக் காலங்காலமாக அதிர்கிறது. மடை, குளிர்த்தி, பொங்கல், நீர்ச்சோறு, திருவிழா, மரணம் - வாழ்விலும் இறப்பிலும் - வழி பாட்டிலும் வழியனுப்புதலிலும் - பிரபஞ்ச இரகசியத் தின் திகிலனை இதயத்தில் அதிர்ந்து காட்டிப் பறை ஒலிக்கும் பாணியே அலாதியானது.
மணல் திடலில் காலப்பறையின் தாளம் புதிது புதிதாய்ப் பல தடவை மாறிய பின்னரும்கூட, 'கோ'வும் மடைப்பறையும் தப்பிப் பிழைத்தன.
நாவலந்தீபகத்தில் மட்டுமன்றி, சுற்றியுள்ள தீவு. தீபகங்கள் எல்லாம் தர்ம அலை எழுப்பிய ததா கதரைக் கூட மணல் திடலின் மடைப்பறை ஒசையில் ஐயன்" ஆக்கி 'கோ' விற்குள் அடக்கி விட்டார்கள். நானூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளியம்பலத் தம்பிரான்கள் புதுமைப் பித்தனிடமிருந்து இரவல் இங்கு கடை வைத்திருந்த காலத்தில் 'கோ' விற்குரிய குறியீட்டை இன்னும் கொஞ்சம் இலகுவாக மாற்றித் தருவோம் என்று அவர்கள் கூறியதைக் கேட்டுப் பெருங்கல்லோன் வழி வந்தோர் சிலர் குறியீட்டை மாற்றிக் கொண்டார்கள். அப்படியிருந்தும் கோவும் மடைப்பறையும் தப்பிப் பிழைத்தன.
முப்புரி நூலோர் அந்தக் காலத்திலிருந்தே தந்திர மான சமரசம் 'கோ' விற்கு வாசல் மூலையில் ஒரு இடமும் கொடுத்து; ஏன் வாசல் மூலையில் இடம் என்பதற்குப் புராணத்தில் கதையும் எழுதி,

வாசலுக்கு வெளியே நின்று பறையையும் அடிக்கப் பண்ணி விட்டார்கள். மூல வடிவத்தை முதிர்ந்த வடிவம் சாதிப் பிரஷ்டம் செய்தது. இருந்தாலும் மூலவடிவம் தப்பிப்பிழைத்தது.
இது இருபதாம் நூற்றாண்டின் கடைக்கூறு. பனல் திடலின் மயோசின் அடித்தளமே ஆட்டங்காணும்படி யான சிக்கல்களும் மாற்றங்களும் அரசமரம் இருக்கும் இடமெல்லாம் தர்மபோதனை என எங்கோ குரல் கேட்பதால், இங்கு கோட்டிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதில் கரை கடந்த உற்சாகம். பெருங் கல்லோன் வழிவந்தோர் சிலருக்கு திடீர்ப் பண வரவையும், அந்தஸ்து உயர்ந்ததையும் வெளிப்படுத்து வது எப்படி என்று பிரச்சனை விளைவு. எங்கோ ஒரு மரத்தடியில் 'கோ' ஒருநாள் பிடுங்கப்படுவார். பாலஸ்தாபனத்திற்காக கும்பாபிஷேகத்தின் பின்னர் மூலவரின் பெயர் ஞானவைரவர் அல்லது ராஜ ராஜேஸ்வரி, குறைந்தபட்சம் துர்க்கை. கோயிலின் மதில்முலையில் முன்னாள் மூலவர் 'கோ' வெய்யில் காய்ந்து கொண்டிருப்பார்,
மடைப்பறையெல்லாம் இப்பொழுது அதிகம் ஒலிப்ப தில்லை. ஞானவைரவர் கோயிலில் அல்லது ராஜ ராஜேஸ்வரி கோயிலில் கொடியேறித் திருவிழா நடந்தால் நட்டுவ மேளம் தான் நடக்கும்.
கடும் வெய்யில், நீண்டு செல்லும் அந்தத் தார்ப் பாதையில் மூன்று வள்ளுவ முதுமக்கள் அவர்களது முதுகில் சுமையாய்ப் பறை கனக்க, வளைந்து, தளர்ந்து, தரை நோக்கி நடந்து செல்கின்றனர். அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாம் அந்தஸ்து டன் உழைக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தத் தொழிலை விட்டுவிடும்படி நச்சரிக்கவும் தொடங்கி விட்டார்கள். மணல் திடலின் நுண்கலை வித்துவான் கள், ரசிகரிகாமணிகள், விமர்சகர்களுக்கு அப்பால் - பறைக்காக - அம் முதுமக்கள் பறையடிக்கிறார்கள் இவர்களுக்குப்பின் இந்த மணல் திடலில் பறை அதிராது.
கொழும்பில் சர்வதேச மகாநாடு, கண்டியில் உலகப் புகழ்பெற்ற பெரஹரா - இலங்கையின் உன்னத மங்கல வாத்தியமாகப் பறை ஒலிக்கிறது.
மனஸ் திடலில், வரணி என்ற ஊரில், வீதியின் நடுவே, வள்ளுவ முதுமக்கள் தங்கள் பறைகளை உடைத்து, "இனி இந்த இழி தொழில் செய்யோம்'
35

Page 38
எனச் சப்தம் செய்கிறார்கள்,
"ஆலயங்களிளெல்லாம் வேதியர்களின் கைமணி யோசை கேட்க வேண்டும். அது தான் எங்கள் பண்பாட்டு மறுமலர்ச்சி மணல்திடலில் இருந்து யாரோ ஒரு தருமகர்த்தா.
(1983 ஆம் ஆண்டு மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலை மலரில் வெளியானது,
மயான உருத்திரன்
எல்லையற்று விரிந்து செல்லும் பிரபஞ்சம். அதில் எங்கோ ஒரு நுணுக்குக் கோளத்தில் எண்ணிறந்த கோடி அணு உயிர்த்துகள்கள். கற்பகோடி ஆண்டுகள் கழிந்தன. அணு உயிரித்துகள்களில் இருந்து 'அவன் கூர்ப்படைந்தானாம். அவனுக்குள்ளே மனம் வளர்ந்த தாம். அவன் வளர்ந்ததால் மனம் வளர்ந்ததோ அல்லது மனம் வளர்ந்ததால் 'அவன்'ஆனானோ? மனம் கிடைத்ததால் தானே மனிதன். எண்ணிறந்த கோடி ஜீவராசிகளுக்கிடையே அவனுக்கு மாத்திரம் கிடைத்ததெப்படி? ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆஸ்தி கத்திற்கும் நாஸ்திகத்திற்கு அகப்படாத புதிரல்லவா
அவனுக்கு விழிப்புக் கண்டது. தன்னை நோக்கி னான். புறத்தை நோக்கினான். தனக்குள்ளே துருவி நோக்கினான். பிரபஞ்சத்தை வியாபித்து விரிந்து நோக்கினான். ஆதியேது? அந்தமேது? ஆதியோ நினைவிலில்லை. அந்தமோ உருத்து நின்றது - மரணம், அழிவு, வெறுமை, அதற்கு பின்!. புநரபி மரணம் புநரபி ஜனனம் ..?
மரணம் பூதாகரமாக அவன் மனதை ஆக்கிர மித்தது. குமுறும் எரிமலையில், எரியும் பெருங் காட்டில், அழிவின் விஸ்வரூபத்தை அவர் தரிசித் தான் அழிவில் பிறந்தவன்- அக்கினியில் பிறந்தவன் - அவன் மனத்தின் அந்தத்தில் பிறந்தவன் - அவனே மயான உருத்திரன்,
"அவன் வளர்ந்தது போல, மனம் வளர்ந்தது போல, அவனும் புறமும் முட்டி மோதி நாகரிகம் வளர்ந்தது போல, உருத்திரனும் வளர்ந்தான், காடு டைய சுடலைப் பொடி, பூசிய உள்ளங்கவர் கள்வனா ஆனான். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனா ாைன். செங்கையில் மான் ஏந்தி, சிறுபறையும் ஏந்தி, அங்கையில் அனவேந்தி, அருளுங்கரமுங் காட்டி, நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ்துரக்க, தோம் தோம் என்று சுந்தர நடனமும் செய்தான். முப்பாழுங்
36a, ந்து அப்பாலே பாழ் வெளியில் ஊழிக்கூத்தும்
ہ=
ந
 
 

ஆடினான்.
காலங் காலமாகக் கண்ட காட்சியின் கருவை யெல்லாம் கவிதையாக்கி கல்லிலும் செம்பிலும் படித்தான் ஒரு கலைஞன், பாலவலர்கள் பெருகினர். பக்தகோடிகளும் பெருகினர். ஆலயங்கள் பெருகினர். அந்தணாளர் களும் பெருகினர்.
உருத்திரன் உயிரற்றுப் போனான். பிறகு . வெள்ளைத்தோல் நாகரிகத்திற்கு விளங்கவைப்பதற் நாகக் கலாயோகிகள் வந்தனர். வெள்ளைத் தோலர் 5ளுக்கே சொல்லப்படத்தக்கதென்றால் அதில் 'விஷ் பம்' இருக்கத்தான் வேண்டுமென்று கறுப்புத் தோலர் ஈளுக்கும் பட்டது. என்றாலும் வெள்ளைத் தோல் பாஷையில் படித்தால்தான் சரியாக விளங்கும் ான்பதால் அப்படிப் படித்துப் பலர் குட்டிக் கலா யோகிகளானார்கள். எப்படியோ. கல்லிலும் செம்பி லும் எப்போதோ கருகிப் போய்விட்ட உருத்திரன். வெள்ளைத்தோல் நாகரிகத்தில் களவாடிக் காட்சி அறையில் வைக்கப்படும் பொருளானான்.
பிறகு . தந்தக் கோபுரங்களிலிருந்து கலாநிதிகள், பேரா சீரியர்கள், எனப்படும் அபூர்வப் பிரகிருதிகள் பந்தனர். இவர் "வடகரைத்தெய்வம்' என்றனர். பிராமணத் தெய்வம் என்றனர். எங்களுடையவன் அல்ல பிறத்தியான் என்றனர். 'ஆரியச் சிலையை டடை' என்றது ஒரு குரல். ஐயோ . ஐயோ . இப்படியெல்லாம் அபூர்வ ஆராய்ச்சிகள் செய்தாலும் ாங்களும் "பொட்டு வைப்பவர்கள். பழைய பக்த கோடிகளின் பரம்பரை ஆராய்ச்சிவேறு அபிமானம் வேறு என்றும் சொன்னார்கள். தந்தக் கோபுரங்களில் டைபெறும் யாகங்களில் கலந்து கொண்டு அவிர் ாகம் பெறும் தேவர் குழாத்தினர் அற்புதமான ஆராய்ச்சியென்று ஆர்ப்பரித்தனர்.
யாழ்ப்பாணத்தில், ஒரு சிற்றுாரில் ஒரு சுடுகாடு. ரவைக் கடலின் பின்னணியில் ஒருபுறம் வயல்வெளி, ஆறுபுறம் பொட்டல் வெளி, ஓவென்று வீசுங்காற்றில் னையோலைகளின் ஒலம், வெள்ளிக்கிழமை அந்தி பட்டு கருக்கல் தொடங்கிவிட்டது. சுடலையில் அப்பொழுதுதான் எரிந்து தணிந்ததொரு சிதை, ஒரு கிழவரும் கிழவியும் வந்தார்கள். நடுச்சுடலைக்கு டந்து சென்றார்கள். அருவமும் உருவமும் அற்றுத் தெரியும் கடலையின் பொட்டல் வெளியில் கிழவி ஒரு எண்ணெய் விளக்கை ஏற்றிவைத்துக் கர்பூரமும் கொழுத்தினாள். கிழவர் தேங்காயை உடைத்தார். இருவரும் விழுந்து கும்பிட்டனர்.
'உது என்ன சாமி ஆச்சி’ 'தம்பி உவர் மயான உருத்திரன் கண்டியோ' rம்பெருமான், அவருக்கு இங்குத்தான் இருப்பிடம். இங்கு வந்தால் தான் ராசா நாங்கள் அவரைத் தரிசிக்கலாம்.'
ஒருகணம் மனம் வியப்பால் அதிர்ந்தது. ஆதி மணி ன் கண்ட அந்தக் காட்சியை - இயற்கையின் திகிலி தும் அழிவிலும் வெறுமையிலும் பாழிலும் அவன் பற்ற அந்த அதியற்புத மனஉணர்வினை - அவர் ளும் கண்டார்களோ?. வெறுங் கிரியைதானோ?. ான்தான் கற்பனை செய்து கஷ்டப்படுகிறேனே ? . 1984 ஆம் ஆண்டு ஈழநாடு வாரமலரில் வெளியானது. நன்றி புலரி

Page 39
என் குரல் ஒலிக்காது
ஈழ விடுதலை பற்றிய ஆய்வுரை ஒன்றை செவிமடுத்த போது
தப்பும் தவறுமாய் ஒலிக்கும் குரல்களோடு இனியும்
அவர்கள் முயலுக்கு மூன்று கால் என்கிறார்கள் இவர்களோ நான்காவது
ETF) GL)
நறுக்கியது அவர்கள்தானென்று அடம் பிடிக்கிறார்கள் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டோடு இனியும் . . .
என் குரல் அடைத்தி கரகரப்பாக இருந்தபோதும் . . .
இனி தப்பும் தவறுமான குரல்களோடு . . .
சாதி மொழி
அந்த வெள்ளை "பறையன்' என்னை "பாக்கி" என்கிறான்
முன முடிவு
இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துகொண்டபோது . . .
முன் முடிவின் அபத்தம் பற்றி அழகாய்ப் பேசிய "அறிவுசீவி தம்பி வீட்டில் என்னடா பிரச்சினை?"
கூட்டம் முடிந்ததும் வினா தொடுத்தார் என் தாடி பற்றிய தன் அக்கறையைக் காட்டிக்கொள்ள
சிவா கணேசமூர்த்

அவனும் அதுவும்
நிசப்தமான இரவின் பெருவெளியைக் கிழித்துக் கொண்டு ஒரு ஒலம் தெருமுனை நாயின் ஊனை, சுடலைக்குருவியின் சூனியப்பாடல்,
ஒரு உயிரின் கீற்று அறுந்து போயிருக்க வேண்டும். பரமபிதாக்கள் எல்லோரும் ஆசிர்வதிப்பீர்களாக !
இருளைக் கிழித்துப் போர்த்துக் கொண்டு தூங்க முயன்றும் முடியாமல் - நான். இமைகளுக்கிடையில் கற்களாக அவன்.
செத்திருக்கத்தான் வேண்டும்.
சரசரவென்று ஒரு சத்தம், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், தொடர்ந்து ஒரு அலறல், அநேகமாக அவன் செத்திருக்கத்தான் வேண்டும்.
சூரியன் வருவதற்கு முன்னான காலை, தேருமுனையில் அவன். ரத்தமும், சதையும், நினமும், எலும்புமாய். !
நாடியை மண்ணில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தது தெருமுனை நாய். அவன் 'அது'வாகி இருந்தான்.
பார்த்து விட்டு வேகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். "நேரம் மாறிவிட்டதால் அரை மணிநேரம் முன்னதாக வேலைக்கு வரச் சொல்லியிருந்தார்கள் . . .
(). சாரங்கன்

Page 40
புஷ்பராஜனின் நீட்சி
T.E.B. tsart
(LD. புஷ்பராஜனின் முதலாவது கவிதைத் தொகுப்பாகிய இச் சிறிய நூல் மனம் கொள் ளத்தக்க அறுவடை என்பதே எனது அபிப் பிராயம்.
ஏழு பக்கங்கள் கொண்ட மு.பொன்னம் பலத்தின் உள்ளார்ந்த நோக்குவழி வரும் அறி முகம், பெரும்பாலும் சொல்லப்படவேன்டிய யாவற்றையும் சுருக்கமாகச் சொல்லியுள்ளது. இவ்விடத்தில் "அப்பாவும் அம்மாவும்” என்ற கவிதையின் அரசியல் பரிமாணத்தை எனக்கு உணர்த்தியமைக்காக நிச்சயமாய் எனது நன்றி யினை அவருக்குக் கூறியாக வேண்டும். முதல் தடவையான அவசர வாசிப்பின்போது அதன் பரிமாணத்தை உணரத் தவறிவிட்டேன். இக்கவிதை சுதந்தரத்திற்குப் பின்னரான இலங் கைப் பாராளுமன்ற அரசியலின் உணர்வற்ற, அருவருக்கத்தக்க முகத்தைச் சுட்டி நிற்கின்றது. இக்கவிதையின் சில வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவை அக்கவிதையின் முழுச் சுவையையும் வெளிப்படுத்த முடியா மல் போய்விடும். இருப்பினும் இதன் மொழி பெயர்ப்பானது "மூன்றாவது கண்” (THIRDEYE) இதழில் வெளியாகும்.
பொன்னம்பலம் கவிதைகனை நான்காக வகைப்படுத்துகின்றார். இவ்வகைப்படுத்தல் சரி யானதாகவே எனக்குப் படுகின்றது. எனினும் புஷ்பராஜனது கவிதைகள் சென்ற கால நினைவுகளை மீட்டுபவையாகவும், மீள்நம்பிக் கையுடனும் உலா வருவதனை நான் கவனத் தில் கொள்ள விரும்புகிறேன். புஷ்பராஜன் இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் உணர்வுரீதியாக அவர் தன் நேசத்துக்குரிய குருநகரிலேயே வாழ் வதை நான் அவதானிக்க முடிகின்றது.
புஷ்பராஜன் இத் தொகுப்பின் நுழைவாயி லில் பப்லோ நெருடாவின் கவிதை வரிகளை மேற்கோளிடுகின்றார்.
"எங்கு சென்றாலும் என் தேசத்தைச் சுமந்து செல்கிறேன் நீட்சியுறும் என் தாயகத்தின் சாரம் அனைத்தும் என்னுள் உயிர்ப்புடன்."
38இத்தொகுப்பின் தலைப்பினைக் கொண்
*%;
 
 
 

ಜ್ಞಜ್ಜಿಳ್ಗ
உணர்வால் குருநகரிலும்
புறும் தாயகம்
UTGITT
மைந்த "மீண்டும் வரும் நாட்கள்” என்ற விதையை வைத்து, இவரது கவிதைகள் தாய் "ட்டைப் பிரிந்த துயரின் வெளிப்பாடு என்ற ார்வையைக் கொடுக்க நான் விரும்பவில்லை. ந்நூலிலுள்ள நீண்டதும் மிகுந்த ஈடுபாட்டை ற்படுத்துவதுமான மீண்டும் வரும் நாட்கள்; பசுவின் சிலுவைப் பாடுகளையும் மரணத்தை ம் உயிர்த்தெழுதலையும்போல் கடந்த இரு து வருடங்களுக்கு மேலாக உள்நாட்டுப் பாரினால் எமது மக்கள் அனுபவித்துவரும் காடுந்துயரையும் அத் துயரிலிருந்து மீள்வதற் ான போராட்டங்களையும் நினைவிற்குக் காண்டு வருகின்றது. இதில் குறிப்பிட்டுச் சால்லக்கூடிய விடயம் யாதெனில் இவை வறுமனே துன்பப்படும் மக்களின் கெஞ்ச ாகவோ அவலத்தைப் பறைசாற்றும் தொனி லோ அமையாமல் மகிழ்ச்சியில், நம்பிக்கை ரும் வெற்றிக் களிப்பில் நிறைவடைகின்றது. வை மனப்பயிற்சியில் தோன்றிய கவிதைகள் ல்ல, மாறாக குருநகர் மக்களில் ஆழமாக வரூன்றிய கத்தோலிக்க மதநம்பிக்கையி ருந்து உருவானவை. இருப்பினும் வேறுசில பிதைகள் ‘விசாரணைகளும் சித்திரவதை ரும்' என்ற கருப்பொருளை அடிப்படை "கக் கொண்டு இனவாத அரசின் திட்ட ட்ட செயற்பாடுகளால் எமது மக்கள் அனு பித்துவரும் சித்திரவதைகளைப் பாடுபொரு ாகக் கொண்டுள்ள போதிலும் மீண்டும் நம் நாட்களின் வீரியத்துடன் ஒப்பிட முடி தவையாகவே நிற்கின்றன என்பதே எனது Eப்பாகும். இத்தொகுப்பு குருநகரின் ஒரு காலைப் }ர்வைக் காட்சிப்படுத்தும் கவிதையுடன் விரி ாறது. அனேக கவிஞர்கள் கடந்துசென்ற லத்தின் இன்பதுன்பங்களைக் கவிதைகளில் 1ளிப்படுத்தி வருகின்றவேளை புஷ்பராஜன் ற்கு மாறுபட்டு குருநகரினை புனைவின்றி நெருங்கிய பார்வையில் வாசகர்களுக்குப் மாற்றுகின்றார். இதே தெளிவான யதார்த் பார்வை "வாடைக்காற்று” என்ற கவிதை ) மீண்டும் காணப்படுகின்றது. மீன்பிடித் தொழிலில் பெருந் தொழில்களுக் சிறு தொழில்களுக்கும் இடையிலான

Page 41
\வேறுபாட்டை நுட்பமாகப் பதிவு செய்கின்றது. இங்கே கவிஞர் வள்ளத்தின் மூலம் சிறிய தொழில் செய்யும் ஒருவர் வாடைக்காற்றை ஆவலோடு எதிர்பாத்திருப்பதைக் காட்டுகின் றார். சோழகக் காற்றுக் காலத்தில் பெரிய படகுகளே தொழில் செய்து மீன்களைப் பிடித்துச் செல்லக்கூடியனவையாக இருக்கும்.
இத்தொகுப்பிலுள்ள “அம்மாவின் மரணம்” "அம்மாவின் முகங்கள்” ஆகிய இரண்டும் துயரம் தருபவை. புஷ்பராஜன் தனது அம்மா வைப் பற்றி நெஞ்சைக் கிளர்த்தும் ஒரு சிறு கதையை எழுதியிருக்கின்றார். அதன் ஆங்கில மொழியாக்கம் முன்னைய "மூன்றாவது கண்” இதழில் வெளியாகியிருந்தது.
இதில் வரும் "மீறல்"கவிதை பொன்னம் பலத்தின் வகைப்படுத்தலுக்குள் பொருந்தி யமையவில்லை. இக்கவிதையில் காணப்படும் மனக்கிளர்ச்சி ஏனைய கவிதைகளில் காணப் படும் உணர்வுகளுக்கு ஒத்திசைவாகவே உள்ளன. இது அநேகமாகப் புனைவியல் படிமம் சார்ந்தது.
இவை வெறுமனே துன்பப்படும் மக்க
பறைசாற்றும் தொனியிலோ அமைய
வெற்றிக் களிப்பில்
“வீதிக்காய் நெரித்து விரித்த கற்களிடையே
சிறு
புல்லொன்று பூத்திருக்கு.”
இக்கவிதையானது மகாகவியின் கவிதை யொன்றை நினைவூட்டுவதாய், பொருந்தாத> இடங்களில் வாழ்வு துளிர்விடும் செய்தியை அதாவது மிகவும் அந்நியமான பிரதேசத்திலுள்ள வாழ்வின் உணர்வைப் பிரதிபலிக்கின்றது. இதனால் புஷ்பராஜனது கவிதை வேறொருவர் எழுத்திலிருந்து உருவானவை என்ற கருத்தைக் கூறவில்லை. மாறாக அனைத்து இலக்கியக்காரரி லும் காணப்படும் உள்ளார்ந்த பொதுத்தன்மை யைச் சுட்டிக்காட்டவே சொல்கிறேன்.
இவ்விடத்தில் கவிஞர் பிரித்தானியக் காட்சி எதனிலும் மனம்கொள்ளவில்லையோ என ஒரு வாசகன் ஆதங்கப்பட இடமு ன்டு. ஒருபுறம் சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு அந்நியமான சூழலில் ஒரு கூண்டுக்குள் தனது சொந்தங்களை இழந்து, வாழ அடைபட்டிருக்கும் ஒருவருக்கு - கூட்டமாக கலகலப்பான மக்க ளோடு குருநகரில் வாழ்ந்த ஒருவருக்குலண்டன் வாழ்க்கை நரகமாகவே இருந்திருக்கும் என்பதை அறிவேன். "தேம்ஸ் நதியே” கவிதையில்
 

இவரது அடுத்த பக்கத்தைக் காணக்கூடியதாக உள்ளது. மனிதனால் மாசுபடுத்தப்படாத இயற்கை பற்றிய கோட்பாட்டை இக்கவிதை ஒட்டத்தில் காணலாம். இக் கோட்பாடு பற்றி விபரிப்பது அதிக பக்கங்களை எடுக்கும் என்பதால் விட்டுவிடுகிறேன்.
கவிஞர் இன்று நவீனபாணி என்று சொல்லிக் கொண்டு கவிதைகளை குறுக்கே தறித்து ஒன்றின் கீழ் ஒன்று அடுக்கி எழுதுவதற்கு எதிரானவர். பிரித்தானியாவில் இத்தகைய எதிர்ப் போக்குகள் ஆரம்பித்துவிட்டன. மீண்டும் யாப்பிற்குச் செல்லுதல் புதுப்போக்காக மாறுகிறது. புஷ்ப ராஜன் தனது கவிதைகளின் ஒத்திசைவிலும் வரிகளின் பிரிப்பிலும் விசேட கவனம் செலுத்து கிறார். உதாரணத்திற்கு “மீறல்" கவிதையில் வரும் "சிறு” என்ற சொல் தனித்து நின்று வாழ்க் கையின் அர்த்தத்தைக் கரடுமுரடான தன்மைக் குள்ளும் அழுத்திச் செல்கிறது.
இன்னும் ஒருபடி மேலே செல்ல இடமின்மை யால் இதை நிறைவு செய்கிறேன். இக்கவிதைத்
களின் கெஞ்சலாகவோ அவலத்தைப்
ாமல் மகிழ்ச்சியில், நம்பிக்கை தரும்
நிறைவடைகின்றது.
தொகுப்பு வாசகர்களுக்கு பெரும் பயன் விளைவிப்பவையாக இருக்கும் என்ற எண் ணத்தை வாசகர்கள் மத்தியில் நான் ஏற்படுத்தி யிருப்பின் (ஒரு சிலருக்காவது) அதற்காக மிகவும் திருப்தியடைவேன்.
g6)(15.6J.G. 356T 35 UT "GOT IT “THIRD EYE”
என்ற ஆங்கில இதழுக்கு எழுதிய மதிப்புரையின் தமிழாக்கம்.
ஏ.ஜே.பற்றி
"கட்சி சார்ந்த அல்லது கலை-இலக்கியம் சார்ந்து எந்தவொரு வட்டத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், அல்லது அந்த வட்டத்தையே தனது செல்வாக்கையும் புகழையும் பரப்பிக்கொள்ளும் ஊடகமாக ஆக்கிக்கொள்ளாமல்எந்தவொரு அதிகாரபூர்வமான அங்கீகாரத்தையும் நாடிச்செல்லாமல் யாரையும் மகிழ்விப்பதற்கென்றோ அல்லது மட்டம்தட்டித் துன்புறுத்துவதற்கென்றோ தனது மேதமையைப் பயன்படுத்தாமல், இறுமாப்போ, மமதையோ இன்றி" இருப்பவர் என எஸ்.வி இராஜதுரையால் குறிப்பிடப்படும் ஏ.ஜே. ஈழத்தின் தேசிய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறந்த மார்க்சிய ஆய்வறிவாளர். வரட்டு மார்க்சியவாதத்திற்கு மாறானவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அரிதாக எழுதிவருபவர்.
39

Page 42
காத்தி
முனைவர் எ
sufijó
SSSS SLSSS SS SS SS SS SS SS SS SS SSSSS SSSSS S SSS S SSS SSL S S SSS S SSS S SSS S SS SS SS
பிபிசியின் படப்பிடிப்பு குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தியா வைப் பற்றி ஆச்சரியப்பட விசயம் இருந்தது. எனக்கு அது மதுரையில் கிடைத்தது. பிபிசி டீம் மதுரை வீதிகளில் படப்பிடிப்பை நடத்தியபோது சனக் கூட்டம் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்டது. இந்தியாவில் எங்கே போனாலும் இது தவிர்க்கமுடியாத அம்சம். காமிராக்காரரையும், இயக்குனரையும் நெருக்குப் படாமல் காப்பாற்றுவதில் சில மதுரை வீரர்கள் எங்களுக்கு மும்முரமாக உதவினர்.
நாங்கள் எடுத்தது விவரணப் படம், எங்கள் குழுவில் இரண்டு இளம் பிரிட்டிஷ் பெண்கள் இருந்தார்கள். இருவருக்கும் நீண்ட பொன் முடி பலர் அவர்களை நடிகைகள் என்று நினைத்து மொய்த்தார்கள். உண்மையில் அவர்கள் படப்பிடிப்பு உதவியாளர்கள்தான்.
படப்பிடிப்பு மும்முரமாக நடந்தபோது ஒரு நடுத்தர வயதானவர் எங்கோ வேகமாக சைக்கிளை மிதித்து போய்க்கொண்டிருந்தார். சைக்கிள் ஹாண் டில் பாரில் ஒரு பை தொங்கியது. ஏதோ அவசரமான ஐ வேலைக்குப் போனவர் கூட்டத்தைக் கண்டதும் 3|சடேரென்று பிரேக் பிடித்து, சைக்கிளை தொப்பென்று * தரையிலே போட்டுவிட்டு சனக்கூட்டத்துக்குள் ஒடி வந்தார். வட்டத்துக்குள் நுழைந்தவர் அனுமதிக்கப் பட்ட ஆகக்குறைந்த தூரத்தில் நின்று படப்பிடிப்பை பார்த்தார். படப்பிடிப்பு ஒர் இரண்டு மணிநேரம் அங்கே நடந்தது. இந்த மனிதர் அசையவேயில்லை.
 
 

ருப்பது
ம், சஞ்சயள்
Imma
படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததும் இவர் போய் சைக்கிளை நிமிர்த்தி எடுத்தார். ஏறி உட்கார்ந்து ஒன்றுமே நடக்காததுபோல வந்தமாதிரியே மிதித்துக் கொண்டு புறப்பட்டார்.
ஏதோ முக்கியமான வேலையாகப் போன ஒருத்தர் எப்படி அந்த வேலையை ஒதுக்கிவிட்டு இரண்டு மணித்தியாலம் காத்திருந்தார்? இவர் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு மருந்து வாங்க போயிருக்கலாம். அல்லது சொந்த மகளின் திருமண விசயமாக அலைந்திருக்கலாம். அல்லது சம்பளம் தரும் முதலாளி கொடுத்த ஒரு வேலையை நிறைவேற்ற விரைந்திருக்கலாம். ஒருவித தயக்கமும் இன்றி தான் செய்யவேண்டிய முக்கியமான வேலையை ஒத்தி வைத்துவிட்டு படப்பிடிப்பைப் பார்த்தார். இந்த இரண்டு மணித்தியாலக் காத்திருப்பு அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.
இந்தியா முழுக்க காத்திருப்பது ஒரு சடங்கு போலவே நடந்தது. ஆரம்பத்தில் எரிச்சல்பட்ட நாங்கள் போகப்போக எங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டோம். ஐஸ்வர்யராய் இன்னும் ரெடியாக வில்லை. அவருடைய உதவியாளர் எங்களை காத்தி நக்கச் சொன்னார், நாங்கள் போனபோது அவர் ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். ஒப்பனைப் பெண் ஒவ்வொரு இரண்டு நிமிடமும் அவருடைய ஒப்பனையைச் சரிபார்த்தார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.
ஐஸ்வர்யராயிடம் சகல வசதிகளும் பொருந்திய

Page 43
ஒரு வாகனம் இருந்தது. அடிக்கடி அதற்குள்ே போய் ஒளிந்துகொண்டார். அந்த வாகனம் ஒ குட்டி வீடு போல என்றே சொல்லலாம். அங்ே இளைப்பாறலாம்; படுக்கலாம்; ஒப்பனை ச பார்க்கலாம். பாத்ரூம் சமாச்சாரங்களை முடித்து கொள்ளலாம். படப்பிடிப்பு இடைவேளைகளி அவர் ஒய்வெடுப்பது அங்கேதான்.
நாங்கள் காத்திருந்தோம். எங்கள் குழுவில் தலைவர் பட்டி ஸ்மித் கோபப்பட்டு நான் கண் தில்லை. அவருடைய மூச்சுக் காற்று வேகமா வந்தது. ஒரு கட்டத்தில் அந்த ஓசை பஸ் பிரே போடும்போது எழும் உறிஞ்சும் சத்தம்போல பெரிசா கேட்டது. அவருடைய கோபத்தைப் பொருட்படு தாமல், அரை மணி நேரம் மட்டுமே என் எங்களிடம் அறிவித்த விளம்பரப் படம் இழுத்து கொண்டே போனது. நாலு பக்கத்திலும் இருந் பாய்ந்த ஒளி வெள்ளத்தில் ஐஸ்வர்யராய் நடித் போது ஒரு இடத்தில் சிரித்தார். அப்போது அவரை சுற்றியிருந்த வெளிச்சம் கொஞ்சம் மங்கியது அப்போதுதான் நான் நினைத்தேன் இவர் உண்ை யிலேயே ஓர் அழகான பெண்தான் என்று.
விளம்பரப் படப்பிடிப்பு முடிந்ததும் ஐஸ்வர் ராய் போய் உடையை மாற்றி, மேக்கப்பை கலைத் பிபிசியின் நேர்காணலுக்குத் தயாரானார். வானத்தி இருந்து அப்போதுதான் இறங்கி வந்த ஒரு தேவன யுடன் பழகுவது போலத்தான் எல்லோரும் அவன ஒருவித பக்தியுடன் அணுகினார்கள். வயது முதிர்ந் வர்கள்கூட மூன்றடி தள்ளி நின்று சற்று வளைந் முதுகுடன் அவரிடம் பேசினார்கள்.
వ్యA
 

t
எனக்கு ஐஸ்வர்யராய் பற்றி தெரிந்ததெல்லாம் மிகவும் குறைவு. அவர் 1994ல் உலக அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியும். அவர் நடித்த ஒரு படத்தையாவது நான் பார்த்ததில்லை. அவர் அதிகச் சம்பளம் வாங்கும் ஒரு சிறந்த நடிகை என்றும், இந்தியாவில் அப்போது அவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள்.
அவருடைய முந்தைய காதலன் சல்மான் கான். ஐஸ்வர்யராய் நடித்த தேவித7ல் படம் கான் திரைப் பட விழாவின் விசேட காட்சிக்கு தெரிவாகியிருந்தது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை உலகத்தின் முக்கிய மான முதல் நூறு பேர்கள் பட்டியலில் அவருடைய பேரையும் சேர்த்திருந்தது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இரண்டு தங்க முடிப் பெண்களில் ஒருவருடைய வேலை ஆராய்ச்சி செய்வது அவர்தான் இந்த விபரங்களை சேகரித்து, இரண்டு பக்கங்களில் குறிப்புகள் தயாரித்து, என்னிடம் தந்திருந்தார். அவற்றை வைத்துக்கொண்டு என் நேர்காணலை நான் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். பிபிசி அதை படம் பிடிக்கும்.
என்னை "டொக்ரர் சஞ்சயன்' என்று ஐஸ்வர்ய ராயிடம் அறிமுகப்படுத்தினார்கள். ஒரு இலையான் கூட புகமுடியாத அளவுக்கு உதடுகளை குவித்து ஒ, டொக்ரர் என்று முழுக்கையையும் வளைக்காமல் நீட்டினார். நீண்ட விரல்கள் அத்தனையும் என் கைக்குள் அடங்கின. அவை குளிர்ச்சியாகவும் இருந் தன. அவருடைய நேர் வரிசைப் பற்கள் ஆறாயிரம் வாட் வெளிச்சத்தில் என் கண்ணைக் கூசவைத்தது.

Page 44
ஒரு சுழல் கதிரையில் ஐஸ் வர் யராய் காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந் திருந்தார். கைப்பிடி இல்லாத ஒரு சனத்தில் அவருக்கு முன் னால் உட்கார்ந்த நான் அதே கணம் நெளியத் தொடங்கினேன். பல ஆண்கள் அப்படி நெளிந்து அவர் பழக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய அசெளகரியம் திருப்தியைக்கூட கொடுத்தி ருக்கலாம். பெருந்தன்மையாக என்னை சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்கு அவர் முயன்றுகொண்டிருந்தார்.
ஆனால் என்னிடம் ஒரு காரணம் இருந்தது. ஒரு மாத காலமாக பிபிசியின் விவரணப் படக் குழுவுடன் நான் இந்தியா வின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். டில்லி, கொல்கத்தா, மும்பாய், மதுரை, மைசூர், அஸ்ஸாம், முதுமலை என்று ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லை. கொல்கத்தாவில் பாம்பு பிடிகாரர்களையும், முதுமலையில் யானை பிடிப்ப வர்களையும், மதுரையில் மாட்டுச் சண்டைக்காரர் களையும், அஸ்ஸாமில் காண்டாமிருகத்தின் காப்பா ளர்களையும், மைசூரில் ஒரு நாள் முழுவதும் உழைத்து ஊதுபத்தி செய்து ஒரு டொலர் சம்பாதிக் கும் இளம் விதவையையும் நான் சந்தித்திருந்தேன். நாற்பத்தியாறாயிரம் பேர் வேலை பார்க்கும் இன் ஃபோசிஸ் கம்பனியின் அதிபர் நந்தன் நிலெகானியின் செவ்வியையும் பிபிசிக்காக பதிவு செய்திருந்தேன். இதுவே கடைசி நேர்காணல். இது முடிந்ததும் நான் வாஷிங்டனுக்குப் பயணமாகிவிடுவேன்.
முந்திய நாள்தான் இந்தியாவில் எங்கள் கடைசி இரவு என்றபடியால் நாங்கள் ஒரு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தோம். இந்தியாவில் பயணம் செய்த முப்பது நாட்களும் இரண்டு முக்கியமான விதிகளை நான் கடைப்பிடித்து வந்தேன். 1) காரமான உணவைத் தவிர்ப்பது. 2) கையிலே எப்போதும் இரண்டு நல்ல தண்ணிர் போத்தல்களை வைத்திருப்பது.
அந்தக் கடைசி இரவு இந்த தற்காப்பு வியூகத்தை சிறிது தளர்த்தி விட்டேன். காரமான உணவு வகை களை வெள்ளைக்காரர்கள் சர்வ சாதாரணமாக வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டிருந்தார்கள். இந்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வயிற்றை எப்படியோ பழக்கிவிட்டார்கள். அவர்கள் முன்னால் நான் குறைந்தவன் இல்லை என்பதை காட்டிவிடவேண்டும் என்ற ஆவேசத்தில் என் விதிகளை மீறியிருந்தேன். அதன் பின் விளைவுதான் என் உடம்பின் பின்பாகம் ஒத்துழைக்க மறுத்தது. அதிகாலை மூன்று மணி யிலிருந்து பாத்ரூமுடனான என் உறவு அதிகரித்தது. இதைப் பற்றி நான் யாருக்கும் மூச்சுவிடவில்லை. ஒரு 45 நிமிடங்கள் என் வயிறு அமைதி காத்தால் போதுமானது, ஐஸ்வர்யராயுடனான என் நேர் 2காணலை வெற்றிகரமாக முடித்துக்கொள்ளலாம்
i
நி  ീ
(Lք
ar
 

என்று நினைத்தேன்.
ஐஸ்வர்யராய் இப்போது தயாராகியிருந்தார். முடியை கை யினால் அளைவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார். நான் என் கையிலிருந்த குறிப்பு களை தள்ளி வைத்துவிட்டு என் மனதில் அந்த நிமிடம் தோன்றிய ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுவே முதல் கேள்வி.
நீங்களும், நானும் இப்போது சேர்ந்து வெளியே போனால் என்ன நடக்கும் "
ஐஸ்வர்யராய் மடிந்து சிரித் தார். பதின்பருவத்து பெண்ணின் சிரிப்புபோல அது கலீரென்று அடிவயிற்றில் இருந்து எழும்பி அறையை நிறைத்தது. அடிக்கடி அவருடைய தலைமுடி முன்னே முதுெம் அவர் அதை சிலுப்பி பின்னே எறிவதுமாக மிடத்துக்கு மூன்று தடவை இது நடந்தது. முடியை ன்னே தள்ளுவது மட்டுமே தெரிந்தது. முடி எப்படி ன்னுக்கு வருகிறது என்பதை அந்த 45 நிமிடத்தில் ன்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'ஏன், "ங்கள் சேர்ந்து போய்ப் பார்க்கலாமே. நான் தயார் ன்று சொல்லியபடி ஐஸ்வர்யராய் எழுந்து நின்றார். இந்த நிமிடம் என் வயிறு, அதற்கு விதிக்கப்பட்ட ல்லையை அடைந்துவிட்டது. நான் நேர்காணல் தாடங்குவதற்கு முன்பாக, படம் பிடிக்கும் இடத் லிருந்து ஆகக்கிட்டவான பாத்ரூம் எங்கே இருக்கிறது, ங்வளவு தூரம் என்பதையெல்லாம் என் கவனத்தில் பத்தியிருந்தேன். எனக்கிருந்த கணக்கறிவையும், ன்னுடைய அதிகபட்ச வேகத்தையும் மனதில் ருத்தி எத்தனை செக்கண்டுகளில் அந்த தூரத்தை டக்கலாம் என்பதையும் கணித்து வைத்திருந்தேன். "மன்னியுங்கள்' என்றுவிட்டு பாத்ரூம் இருந்த சையில் ஒட்டம் எடுத்தேன்.
மிகக் குறைந்த வசதிகள் கொண்ட பாத்ரூம் து. நேர்காணலை பாதியிலே விட்டுவிட்டு வரும் நவருக்காக அது நிச்சயம் கட்டப்பட்டிருக்கவில்லை. ன் எதிர்பார்த்ததற்கு மேலாக நேரம் எடுத்துக் ாண்டது. சேர்ட்டை அவசரமாக கால்சட்டைக்கு ளே தள்ளி பழைய நிலைக்கு என்னை மாற்றிக் 5ாண்டு திரும்பினேன். இன்னும் 43 நிமிடங்கள் பிறு தாக்குப் பிடித்தால் போதுமானது வெளியே தேபோது என் வயிற்றினிடமிருந்து அந்த உத்திர ாதம் கிடைத்தது போலவே எனக்குப் பட்டது. ஒப்பனைப் பெண் குனிந்து ஐஸ்வர்யராயின் துகளில் தன் வாயைக் குவித்து ஏதோ சொன்னார். ளக்குகள் மீண்டும் எரிந்தன. காமிராக்காரர் மிராவுக்கு பின்னால் நின்றார். இயக்குனர் கடந்த து நிமிடங்களாக தன் இடத்தைவிட்டு அசைய ல்லை. சுற்றிவரச் சேர்ந்த கும்பல் அப்படியே ாறது. இன்னும் பல மணித்தியாலங்களை அங்கே ப்பதற்கு அது சித்தமாயிருந்தது. நான் காமிராவை ாக்கி நடந்தேன்.
உலக அழகி எனக்காகக் காத்திருந்தார். O

Page 45
D
D. H.
"ஒரு சமூகத்தின் ஆக்கத் துறையினருக்கு கலை இல்க்கிய, சமூகவியல் துறைகளைச் சேர்ந்த புத்தி மான்களுக்கு) அதே சமூகத்தில் எழக்கூடிய ஒரு நிலவரம் முட்டுக்கட்டையாய் அமைவதுண்டு. அந்த முட்டுக்கட்டையைத் தனித்தனியே எதிர் கொள்ளும் வல்லமை அவர்களுக்கு வாய்ப்பதரிது. ஆதலால் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த நிை வரத்தை எதிர்கொள்ளத் தலைப்படுவார்கள்
(2) ஒரு சமூகத்தின் ஆக்கத் துறையினர் ஒருங் கிணைந்து, அதே சமூகத்தில் எழக்கூடிய ஒரு நில வரத்தை எதிர்கொள்ளத் தலைப்படுந்தோறும் ஒரு கிளர்ச்சியோ புரட்சியோ நிகழும். அத்தகைய கிளர்ச் சியோ புரட்சியோ ஒரளவு வெற்றி ஈட்டும். கிளர்ச் சிக்கு வித்திட்ட தரப்புகளின் கோரிக்கைகளுள் அல்லது நலன்களுள் ஒருசில ஓரளவுக்கேனும் நிறைவேறும்.
(3) அதேவேளை மேற்கொண்டு போராடுவதில் நயமில்லை என்னும் கட்டமும் எழும். அப்பொழுது அவர்கள் தமது போராட்டத்தை நிறுத்துவார்கள் அல்லது உறுதி குன்றிய நிலையில் போராடுவார்கள் அன்று ஒருங்கிணைந்த தரப்பினர் இன்று உருச் குலையத் தொடங்குவார்கள். எனினும் வேட்கையும் வைராக்கியமும் மிகுந்தவர்கள், குறிப்பாக யாருடைய குறிக்கோள் இன்னும் நிறைவேறாது வெகுதொலை வில் தெரிகின்றதோ அவர்கள் தொடர்ந்து போராடு வார்கள். அவர்களைப் பொறுத்தவரை இடைநடுவில் நிறுத்துவது பச்சைத் துரோகம்.
') தெவிட்டிய தரப்பினர் அல்லது வேட்சை குன்றிய தரப்பினர் அல்லது புதிய நிலவரம் பழைய நிலவரத்தை விட மோசமாகலாம் என்று அஞ்சும் தரப்பினர் பின்னடிக்க முற்படுவார்கள். அவ்வாறு பின்னடிக்க முற்படுவோர் இரு புறங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாதுவார்கள், தம்மைக் கைவிட்டவர்கள் என்றும், கைவிட்ட ஆதரவாளர்கள் என்றும், கைவிட்ட துரோகிகள் என்றும் அவர் களை ஒருபுறம் சாடுவார்கள் பழமை பேணிகள். அற்பர்கள் என்றும் திசை மாறிகள் என்றும், பக்கம் மாறிய துரோ கிகள் என்றும் அவர்களை மறுபுறம் சாடுவார்கள் படுதீவிரவாதிகள்,
முற்றிலும் தீய நிலைவரம் ஒன்றை ஒழித்து சுதந்திரம், நீதி, நியாயம், உரிமை
 
 

மிகுந்த, குழும - சமூக - வர்க்க - இன - தேசிய - பொருளாதார சமத்துவம் மிகுந்த ஒரு நிலவரத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் அவர்களுள் அடங்கி யிருப்பார்கள். எண்ணத் தூய்மையுடனும் தியாக சிந்தையுடனும் நடப்பு நிலவரத்தை வன்முறை கொண்டு ஒழித்துக் கட்டுவதற்குத் தமது இன்னுயிரை ஈந்த தீவிரவாதிகளை அவர்கள் மெச்சுவார்கள்.
s
இ அதேவேளை, சமூக இயக்கங்கள் இரு துருவங் கனாக நிலைகொள்வதைத் தவிர்த்து, மிதமான போக்கினைக் கடைப்பிடித்து, சமூகத்தில் ஏற்பட்ட குழப்பத்திலிருந்து கடைத்தேறுவதற்குப் பாடுபட வேண்டும் என்று அவர்கள் வாதாடுவார்கள். மிகவும் கொடிய வழிமுறை கொண்டு சமூக நீதி காணும் குறிக்கோள், நேரெதிர்மாறான நிலைவரத்துக்கு இட்டுச் செல்லலாம், விடுதலையின் பெயரால் சுதந்திரம் ஒடுக்கப்படலாம், சமத்துவத்தின் பெயரால் தன்னலம் பேணப்படலாம், நீதியின் பெயரால் அநீதி இழைக்கப்படலாம், மனிதாபிமானத்தின்
பெயரால் மனித உரிமைகள் மீறப்படலாம் என்றெல் லாம் அவர்கள் வாதாடுவார்கள். பயங்கர அல்லது படுதீவிர வழிமுறைகளினால் விளையும் இழப்புகளை ஈடுசெய்ய முடியாது போகலாம் என்று அவர்கள் அஞ்சுவார்கள். வரவு, செலவை விஞ்சலாம் என்று பதறுவார்கள். தீவிரவாதிகளின் வெறித்தனத்தையும் மிருகத்தனத்தையும் கண்டு கலங்குவார்கள், சமூகம் அறிந்த ஒரேயொரு பண்பாட்டை தீவிரவாதிகள் வெறுத்தொதுக்குவதையும், அடையமுடியாத கன அலகு கைகூடும் என்ற நம்பிக்கையில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் செயற்படுவதையும் கண்டு
அவர்கள் பீதியடைவார்கள்.
") வெம்போர் நிகழ்கையில் பகைத் தரப்புகள் இரண்டிடமும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை வெறும் பலவீனமாகவும் ஒப்பனையாகவும் சந்தர்ப்பவாதமாகவும் பேடித்தனமாக வுமே தென்படும் இடைநடுவில் செயற் படும் இவர்களுக்கு நன்றி செலுத்து வோரைக் காண்பதரிது. இடைநடுவில் பாடுபடும் இவர்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. இடைநடுவில் மாட்டுப் படும் இவர்களுக்கு எந்நேரத்திலும் ஆபத்து விளையலாம்."
(Isaiah Berlin, Romanes Lecture,
Oxford, 1970).

Page 46
இலங்கையில் இளந் தலைமுறை கிளர்ந்தெழுந்தறுவாயில் இசையா பேழின் (1909-1997) மனுக்குலம் முழு வதையும் கருத்தில் கொண்டு பொதுப்படையாக ஆற்றிய உரையின் பொழிப்பையே மேலே காண்கிறோம். எனினும் குறிப்பாக இலங்கையைக் கருத்தில் கொண்டே அவர் அவ்வாறு உரையாற்றினாரோ என்று எண்ணத் தோன்றும் வண்ணம் அவருடைய கூற்றுகள் அமைந்துள்ளன.
முதலாவது பந்தியில் அவர் குறிப் பிடும் நிலை வரம்: இலங்கை ஆட்சி யாளரின் பேரினவாதம். இரண்டா வது பந்தியில் அவர் விளம்பும் கிளர்ச்சி: ஈழப் போராட்டம், அதே பந்தியில் அவர் குறிப்பிடும் ஓரளவு வெற்றி இலங்கை - இந்திய ஒப்பந்தம். மூன்றாவது பந்தியில் அவர் முன்வைக்கும் உருக்
குலைவு: தமிழ் ஈழ இயக்கப் பிளவுகள். நான்காவது பி பந்தியில் அவர் எடுத்துரைக்கும் பிரசாரப் போர். * Tr
இயக்கங்களின் குற்றச்சாட்டுகள், பதில் - குற்றச் சாட்டுகள். எஞ்சிய பந்திகள் அனைத்தும் அற்புதன் - சிவராம், குமார் பொன்னம்பலம், ஜோசெப் பரராச மி சிங்கம், ஐ.நடேசன்ஸ் போன்ற தன்னாட்சி உரிமை உ மறவர்களையும் றிச்சாட் டி. சொய்சா, ரஜனி திரனகமை போன்ற மனித உரிமை மறவர்களையும் நினைவூட்டுகின்றன.
உரிமைப் போராட்டம் என்பது, அதன் உள்ளடக் கத்தைப் பொறுத்தவரை, மனித உரிமைப் போராட் டம் என்றும் தன்னாட்சி உரிமைப் போராட்டம் என்றும் கிளைவிடும். இலங்கை உட்பட ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் ஒப்ப மிட்டுள்ள மனித உரிமைப் பிரகடனத்தின்படி:
..
இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து, மற்றும் பிற கருத்து, தாயகம், அல்லது தாய்ச் சமூகம், உடைமை, பிறப்பு, மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு" உலக மனித உரிமைப் பிரகடனம், ஐ.நா. பொது அவை, 1948/120). இதற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை, உலகம் முழுவதும் இயங்கும் மனித 12. உரிமை அமைப்புகள் இதனைக் குறித்து சலிக்கச் 3,
.
சலிக்க விளக்கமளித்து வருகின்றன.
வோல்டயர் (194-1778) முதல் வுட்றோ வில்சன் , 1856-1924) ஈறாக ஜோசெப் ஸ்டாலின் (1879
1953) வரை தன்னாட்சி உரிமையைப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரையறுத்துள்ளார்கள். ஓர் ? ஆட்சியாளர் என்ற வகையிலும், சோவியத் நாட்டில் 18, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டியவர் என்ற வகையிலும், மனித உரிமைகளை மீறிய ஆட்சியாளர் களுள் ஒருவர் என்ற வகையிலும் ஸ்டாலின் முன் வைத்த வரையறை இங்கு முக்கியம் பெறுகிறது: 21
"ஒரு மொழி, ஒர் ஆள்புலம், மூலவளம், உளப் பாங்கு, பண்பாடு, உறுதிப்பாடு கொண்டு மலர்ந்த ஒ: வரலாறு படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் உ; ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு ஒ( தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங் 11 44களுடன் கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழும் கா
 

உரிமையும் அதற்கு உண்டு. அத்துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்கு உண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக் கொன்று சரிநிகரானவை. தேசிய இனங் களுக்குப் பரந்த அளவில் தன்னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும் ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு திமிது ஆள்புல எல்லைகளை வரை யறுக்க வேண்டும்"
(J.W.Stalin, Marxism & National Question, Prosveshcheniye, Moscow, 3-5, March-May 1913),
மேலே உள்ள இரண்டு, மூன்று பந்திகளிலும் ழிந்தெடுத்த கூறுகள் அனைத்தும் கீழே உள்ள |ட்டவனையில் மூன்று தலைப்புகளின் கீழ் பகுத்துக் Tட்டப்பட்டுள்ளன:
விரித மனித
ரிமை தன்னாட்சி தன்னாட்சி
உரிமைகள் உரிமை
ஆள்
பால்
நிறம் கருத்து
தாயகம் சமூகம் மதம் மொழி பிறப்பு சமத்துவம்
இனம் ஆள்புலம் மூலவளம் உளப்பாங்கு Lu 5:37 L/T உறுதிப்பாடு
வரலாறு தன்னாட்சி இறைமை பிரிவினை
மனித உரிமைகளும் தன்னாட்சி உரிமையும் ன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்னும் ண்மை மேற்படி அட்டவணையில் துலங்குகிறது. நவரின் தோயக ? சமூக, 8 மத, 9 மொழி, I, பிறப்பு, சமத்துவ உரிமைகள் ஏற்கப்படுந்தோறும் அல்லது ாக்கப்படுந்தோறும் அவர் சார்ந்த சமூகத்தின்

Page 47
உரிமைகளும் ஏற்கப்படுகின்றன அல்லது காக்கப் படுகின்றன. ஒரு சமூகத்தின் உரிமைகள் ஏற்கப் படுந்தோறும் அல்லது காக்கப்படுந்தோறும் அச் சமூகத்தவர் ஒவ்வொருவரின் உரிமைகளும் ஏற்கப் படுகின்றன அல்லது காக்கப்படுகின்றன. ஒருவரின் உரிமைகள் மறுக்கப்படுந்தோறும் அல்லது மீறப்படுந்தோறும் அவர் சார்ந்த சமூகத்தின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன அல்லது மீறப்படுகின்றன. ஒரு சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுந்தோறும் அல்லது மீறப்படுந்தோறும் அச்சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன அல்லது மீறப்படுகின்றன.
அந்த வகையிலேயே சிறுபான்மையோரைப் பாதிக்கும் சட்டம் எதனையும் இலங்கைப் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என்னும் ஏற்பாடு இலங்கையின் முதலாவது அரசியல் யாப்பில் புகுத்தப்பட்டிருந்தது (சோல்பரி பிரபு, இலங்கை அரசியல் யாப்பு மன்றக் கட்டளை, 19r, பிரவு 29), இந்த ஏற்பாட்டுக்கும், ஐ.நா.மனித உரிமைகள்பட்டயத்துக்கும் மாறாகவே இலங்கையில் தமிழ் பேசும் மக்களுள் இலட்சம் பேரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன (1947 தமிழ் பேசும் மக்களின் ஆள்புலங்களில் சிங்கள மக்களின் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன (1948க்கு முற்பட்ட காலத்திலிந்து, தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்பட்டது (1955). சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளித்த 28ம் பிரிவு நீக்கப்பட்டது (1972) பெளத்தம் அரச மதமாக்கப்பட்டது (1972) தரப் படுத்தல் புகுத்தப்பட்டது (1972) இவ்வாறு, மனித உரிமைகளையும் தன்னாட்சி உரிமைகளையும் மீறியே தமிழ் பேசும் மக்களின் ஆட்பலம், ஆள்புலம் மூலவளம், வேலைவாய்ப்பு, கல்வி கேள்விகள் என்பவற்றுக்கு ஆப்பு வைக்கப்பட்டது. இவை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மட்டுமல்ல, அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக இழைக்கப்பட்ட அநீதிகளாகும்.
தனியாளின் உரிமைகளையும் குழுமங்களின் உரிமைகளையும் ஒப்புக்கொண்ட இலங்கையின் ஆட்சியாளர் அவற்றை அடுத்தடுத்து மீறுந்தோறும் அதே உரிமைகளை ஒப்புக்கொண்ட வல்லரசுகள் ஐ.நா., பொதுநலவாயம், அணிசேரா நாடுகள் அனைத்தும் அவர்களுக்குப் போட்டி போட்டு பொருளுதவி, படையுதவி, சானக்கிய உதவி புரிந்து வந்துள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளின் உடந்தையுடன் தமிழ் பேசும் மக்களின் ஆட்பலமும் ஆள்புலமும் மூலவளங்களும் வீடு வளவுகளும் கோயில் குளங்களும், பள்ளிக்கூடங்களும் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், வன்புணர்ச்சியுடன் கூடிய படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
எனினும் முழு உலகமும் முண்டு கொடுத்த இலட்சக்கணக்கான துறைபோன படையினருக்கு ஆயிரக்கணக்கான "செருப்பணிந்த சிறுவர்கள்" வகை சொல்லக் கூடியவர்கள் என்னும் உண்மை திரும்பத் திரும்ப நிலைநாட்டப்பட்டது. "விடுதலைப் புலிகள் ஈற்றில் தோற்கடிக்கப்படுவார்கள், அவர்கள் இன்றியே இனப் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்ற எண்ணத்தை அரசாங்கம் இறுதியில் கைவிட்ட

பின்னரே சமாதான நடைமுறை கருத்துTன்றி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது" (Jehan Perera, LLLL LLGLGSLLLaaLS 00L0L0L00a00S SLLtO STTeeOTTTOtaT விட உளவை ராக்கியம் மும்மடங்கு வலியது" நெப்போலியன்). அந்த வகையில் தமிழ் பேசும் மக்களின் படைபலமே போர்நிறுத்தத்தை நிலை
நாட்டியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் படைபலம் மங்குமாயின், சமாதான நடைமுறை ஆட்டம் கண்டு, மீண்டும் போர் மூண்டே தீரும். இதற்குப் பின்வரும் அதிகாரபூர்வமான கூற்றே சான்று பகர்கிறது: "தரைப் படையோ கடற் படையோ வான் வல்லமையோ அற்ற ஒரு மக்கள் இயக்கமாக விடுதலைப் புலிகள்
மாறும் வரை இலங்கைப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண முடியாது என்பது வெளிப்படை" அமைச்சர் கதிர்காமர், Lankal Academici, 2(X)5oC]{W29). அந்த நப்பாசைக்கு ஏற்கெனவே வியக்கத்தக்க விதத்தில் மறுத்தான் கொடுக்கப்பட்டுள்ளது: "பீரங்கிகளின் முழக்கத்துக்கே நீங்கள் செவி சாய்ப்பவர்கள் " கலாநிதி சுப்பிரமணிய சுவாமி, Asian Tribune, 2005/067. Though this be madness, yet there is method in't Shakespcarc. Hamlet, 2:2:225).
1935ல் பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சர் Pierre Lava (1883-1945) ஸ்டாலினை அணுகி, "சோவியத் நாட்டின் மதக் கொள்கையில் நீங்கள் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்தால், எங்கள் பிரெஞ்சு அரசுக்குப் பாப்பாண்டவரின் ஆதரவு கிடைக்கும் அல்லவா!" என்று மிகவும் விநயமாக எடுத்துரைத் தார். அதற்குச் சுடச்சுடப் பதில் வினா தொடுத்தார் ஸ்டாலின் "பாப்பாண்டவர் அவரிடம் எத்தனை படையணிகள் இருக்கின்றன" ஸ்டாலின் தொடுத்த பதில் வினாவில் தொக்கி நிற்கும் உண்மையை படைபலத்தின் முக்கியத்துவத்தை) தமிழ் பேசும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை "சமாதானத்தை விடவும் சமாதானப் படிமுறை
மிகவும் முக்கியமானது" (முன்னாள் இஸ்ரேலிய 45

Page 48
gsar T. SLI 5. Ezer Weizman, 1993-2000). 2,5Gal தற்போதைய போர்நிறுத்தத்தை எவருமே குறைத்து மதிப்பிடக் கூடாது.
அத்தகைய போர்நிறுத்தம் ஆட்டம் காணும் இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆள் புலத்து நடப்பு நிலைவரத்தை ஒரு தடவை முற்று முழுதாக மீள்நோக்க வேண்டும். தமது ஆள்புலத்தைப் பொறுத்தவரை "மாற்றம்" பொருள்படும் விதத்தை அவர்கள் தீர ஆராய்ந்து தெளிய வேண்டும். இங்கு தற்பொழுது புலப்படும் மாற்றம் தன்னாட்சி உரிமையை எவ்வளவு தூரம் அணுகியுள்ளது அல்லது அதனை விட்டு எவ்வளவு தூரம் விலகியுள்ளது என்பதை அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதேவேளை அத்தகைய மாற்றம் மனித உரிமைகளை எவ்வளவு தூரம் பேணுபவையாக அமைந்துள்ளது அல்லது மீறுபவையாக அமைந்துள்ளது என்பதையும் அவர்கள் மீள்நோக்க வேண்டும்.
மாற்றத்தை மீள்நோக்குவதற்கு இருக்கவே இருக்கிறது ஓர் உரைகல், அதுவே திம்புப் பிரகடனம் (1985/07/13). தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம், ஈழ மாணவர் புரட்சிகர இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட்ட ஈழ தேசிய மக்களாட்சி விடுதலை முன்னணி வெளியிட்ட பிரகடனம்:
1. தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம்
2. வடக்கு -கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் 3ே
3. தமிழ் பேசும் மக்களுக்குத் தன்னாட்சி உரிமை
உண்டு 핑
4. தமிழ் பேசும் மக்கள் எவர்க்கும் குடியுரிமையும்
அடிப்படை உரிமையும் உண்டு
தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் தக் மேற்படி 4 கோரிக்கைகளையும் உள்ளடக்கிய திம்புப் நி: பிரகடனம் எட்டிய உச்சத்தை வேறெந்தப் பிரகடன ப மும் இதுவரை எட்டியதுமில்லை, இனிமேல் எட்டப் ச போவதுமில்லை. அதற்கு முன்னரோ பின்னரோ ஆ தமிழ் பேசும் மக்கள் அத்துணை ஒருமைப்பாட்டை வ நாடியதுமில்லை, எய்தியதுமில்லை. ஆகவே திம்புப் ே பிரகடனத்தை உரைகல்லாகக் கொண்டு எமது உ தாயகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மட்டுக் கட்டுவதே புத்திசாலித்தனம்.
எந்த ஒரு விடயத்தையும் மட்டுக்கட்டும் விதம் ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் வேறுபடல் திண்ணம். அப்புறம் மாற்றத்தை மட்டுக்கட்டத் தலைப்படுவோரைக் குழப்பியடிக்கும் அருள்வாக்குகளுக்கும் பொன் மொழிகளுக்கும் பஞ்சமே இல்லை. எடுத்துக்காட்டாக, "நாடு உனக்கு
தி:
s
1
என்ன செய்யப்போகிறது என்று கேட்காதே! நீ பு g|நாட்டுக்கு என்ன செய்யப்போகிறாய் என்று கேள்!" ெ 3|ஜோன் எவ். கெனடி. ஆளை விடுத்து அரசுக்கு அ * முதன்மை அளிக்கும் இக்கூற்றினை இடித்துரைக்காத ெ {&!
கூறலாம். விதிவிலக்காக ஒரேயொரு ஆட்சியாளரே இதனைத் திட்டவட்டமான முறையில் மறுத்துரைத்
ဒို့ရွီးနှီး எவருமே இல்லை என்று அடித்துக் 6துள்ளர் "ஆட்சியாளரே மக்களுக்குப் பணியாற்ற
 

பண்டியோர், மக்கள், ஆட்சியாளருக்குப் பணியாற்ற பண்டியோர் அல்லர்" (செக் குடியரசின் முன்னாள் GTTFL 5 Vaclav Havel. 1989-2003.)
ஆட்சியாளர்களின் ஏகமனதான கூற்றையும் ஹவெல் அவர்களின் நேரெதிரான கூற்றையும் வனிசுவேலா ஜனாதிபதி ஹியூகோ சவேஸ் வியக்கத் க்க விதத்தில் இயைபுபடுத்தியுள்ளார். "யேசு நாதரின் லைப்பாடு பணத்தை விடுத்து மக்களை முதன்மைப் டுத்துவது. முதலாளித்துவ விழுமியங்களை விடுத்து முதாய விழுமியங்களை முதன்மைப் படுத்துவது. தலால் யேசு நாதரின் நிலைப்பாடு சமூகவுடைமை ாதமே (socialism) என்பதில் ஐயமில்லை" (The oble & Mail. Toronto. 2005/08/24) s75 gis7 at: 337 - geo/ if (Lu அண்மை!
அவ்வாறே தன்னாட்சி உரிமை மறவர்களும் னித உரிமை மறவர்களும் தத்தம் நிலைப்பாடுகளை யைபுபடுத்தி, ஒருவரை ஒருவர் மேவி, மக்களின் னரி நலன்களையும் பொது நலன்களையும் ஒருசேர ன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழி ருப்பதாகத் தெரியவில்லை. தத்தம் இலக்கினை நாக்கித் தாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் ர் இலக்கே என்பதை இரு திறத்தவர்களும் ரிந்துகொள்ளத் தெண்டிக்க வேண்டும். ஒரு நுகம் காண்ட இரு காளைகளாய் சமூக நெருக்கடிக்கு வர்கள் முகம் கொடுக்க வேண்டும். அடம்பன் காடியாய்த் திரண்ட மிடுக்குடன் எத்தனை ஆழிப் பரலைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

Page 49
உன் உயிர்க் கூட்டுக்குள் . . .
உன் பார்வை தொட்டு விழி விரித்த கணப் பொறியில் எனக்குள் விழுந்து வேர் கொண்டது . . . உன் உயிர் வாசம்
என் காதலின் காலம் திறந்தே கிடந்தது நீ வருவதற்கு முதல். . .
உன்னைக் காணும் வரையில் என் காதல் உணர்வுக்குள்ளிருந்த கனத்தை உணராமலேயிருந்தேன்.
எனக்குள் நீயிறங்கிய யுத்தம் பற்றி
முதல் நாளே முழுவதும் மறைக்காமல் உனக்குள் நிரப்பி விட்டேன்.
உன் நேசிப்பால் கசங்கி உடைந்து இயங்காமல் இருந்த இதயத்திற்கு
புது உனாவும புது ஒளியும் . . .
நீ மூச்சு விட்டாலும் முடிஞ்சுவைக்கச் சொல்லுது என் மனசு . . .
என் உடலின் ஒவ்வொரு அசைவிலும் நிதான் . . . உன்வரவின் மீது நிதம் நம்பிக்கை விதைத்து காத்திருப்பேன்
உன் உதட்டின் ஈரம் உதடு வழி கசிந்த கவிதைகள் உருண்ட முகத்தில் ஊதக் கலரில் ஒட்டுப் பொட்டு. . . இன்னும் பிற . .
நினைக்க நினைக்க; விழியிரண்டின் மடல்கள் விரும்பியே மூடுகின்றன.

வெண் பஞ்சு மேகத்திற்குள் நின்ற நிலவு
எட்டிப்பார்த்து புன்னைகைத்தது போல் எனக்குள்
நீ சொன்ன வார்த்தைகள்.
நெய்தல் நிலத்தில் நிகழ்ந்த கொடும் துயரம் தொலைந்ததுபோல் என் சோகமேல்லாம் உன் ஆறுதல் வார்த்தையால், .
உன் நினைவுகளை சேகரித்தே; உரமாகிப் போனது என் உடலுக்குள் உன் உயிர்
எல்லாவற்றையும் நினைந்தும் நெகிழ்ந்தும் வாழ் நதியில் நனைகிறேன் . . .
உயிர் தரிக்கும் உன் கருவறைக்குள் ஒரு கலகக்காரியையோ அல்லது ஒரு கலகக்காரனையோ உண்டுபண்ணு நித்தம் மொழியுணர்வூட்டு உன் உயிர்க் கூட்டுக்குள் ஒளித்து வைத்திருக்கும்
என்னைப் போல் , , ,
i
நாவாந்துறை டானியல் ஜீவா47

Page 50
இரண்டாவது சிற
ஷ்யாம் செல்வதுை
அ. முத்துலி
சினமன் F; "Trit săTSňu (Cinnamon Gardens ) STIGT) FOI ஒரு நாவல் 1999 ல் அமெரிக்காவிலும், லண்டனிலும் இ ஒரே நேரத்தில் வெளியானது. அதை எழுதியவர் ஒ பெயர் ஷ்யாம் செல்வதுரை. இலங்கைத் தமிழர், இவர் பெயரில்தான் தமிழ் இருக்கிறது, ஆனால் இவருக்கு தமிழ் பேசவோ அல்லது பேசியதைப் புரியவோ இயலாது.
இந்தப் புத்தகம் வெளியான சில நாட்களிலேயே நான் அதை வாங்கிப் படித்தேன். சமீபத்தில் சி. ரொறொன்ரோவில் ஒரு கூட்டத்தில் அவர் பேச சு வந்தபோது மறக்காமல் அவருடைய புத்தகத்தையும் ெ எடுத்துப் போயிருந்தேன். சுட்டம் முடிந்தபோது அ அவர் ஒடிசலாக, பக்கவாட்டில் ஆடியபடியே வந்தார். தர என்னுடைய புத்தகத்தில் கையொப்பமிட்டுக் ஷ் கொடுத்து, ஒரு நேர்காணல் தருவதற்கும் சம்மதித் அ தTர்.
இவருடைய சினமன் கார்டன்ஸ் புத்தகத்தில் ஒரு சிறப்பு உள்ளது. இதில் உள்ள 2 அத்தியாயங் களும் 2 திருக்குறள்களுடன் ஆரம்பமாகின்றன. தமிழ் பேச, எழுதத் தெரியாத ஒருத்தர் தன் ஆங்கில நூலில் இப்படி குறள்களை அறிமுகம் செய்தது எனக்கு வியப்பை அளித்தது. அந்தப் புத்தகத்தை படித்த பிறகு எனக்கு தெரிந்த இருவர் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேடி வாங்கிப் படித் தார்கள். அந்தக் குறள்கள் அந்தந்த அத்தியாயத்துக்கு மிகவும் பொருத்தமாகவே அமைந்திருந்தன. அதிலே எனக்குப் பிடித்த குறள்:
காமக் கடும்புனல் உய்க்குமே நானொடு நல்லாண்மை என்னும் புனை
காமம் வரும்போது வெட்கம், வைராக்கியம் எல்லாம் பறந்துவிடும் என்பது அந்த முழுநூலுக்குமே பொருத்தமாக இருக்கிறது. அது மாத்திரமல்ல அவர் முதலில் எழுதிய Fயry Bay என்ற நாவல்கூட அதைத் தான் சொல்கிறது.
ஷ்யாம் செல்வதுரை கொழும்பில் பிறந்தவர். இனக்கலவரத்தின்போது பெற்றோருடன் இலங் கையைவிட்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அப் 8 போது அவருக்கு வயது 19. கடந்த 2 வருடங்களாக கனடாவில் வசிக்கும் இவர், போர்க் பல்கலைக் சி கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். FIHy Bry என்ற நாவல் இவருடைய 29வது வயதிலே வெளிவந்த போது ஆங்கில இலக்கியத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. WHSmith Canada விருதையும், அமெரிக் 48காவின் லாம்டா விருதையும் பெற்றது. இதில் முக்கிய
 
 
 

ரந்த புத்தகம்
ர நேர்காணல்
இங்கம்
ானது, இலங்கை இனப்பிரச்சினை பின்னணியில் ரண்டு பதின் பருவத்து பையன்களின் காதலை ளிவு மறைவின்றி சொன்னது. இலக்கிய உலகில் ப்படி வெளிப்படையாகச் சொல்லியது இதுவே தல் தடவை என்று நினைக்கிறேன். ஒஸ்கார் வல்டுடைய காதல் நடுத்தர வயது மனிதனுக்கும், ளம் வாலிபனுக்குமிடையில் ஏற்பட்டது. அவர் fred Douglas என்னும் தன்னுடைய காதலனுக்குச் றையில் இருந்து எழுதிய 5000 வார்த்தை கடிதம் ட ஓர் இலக்கியம்தான்) FIFAytyஐ தொடர்ந்து வளியான சினமன் கார்டன்ஸ்சும் வெற்றிபெற்றது. தன் பின்பு இரண்டு புத்தகங்கள் வெளியாகின. ப்போது ஒரு நாவல் எழுதுவதில் ஈடுபட்டிருக்கும் பாம், ரொறொன்ரோவில் தன் ஆண் நண்பர் |ண்ட்ரூ சாம்பியனுடன் வாழ்க்கை நடத்துகிறார்.
னமன் கார்டன்ஸ் நாவலில் ஒவ்வொரு அத்தி
ாயத்தையும் ஒரு திருக்குறளுடன் ஆரம்பிக் நீர்களே, அது எப்படி?

Page 51
தமிழ் நூல்களில் திருக்குறள் மிகவும் பழமையானது. இது ஒரு வாழ்வியல் நூல் மாத்திரமல்லாமல் ஒரு நீதி நூலும் கூட. தியில் தொடங்கி இன்றைய காலம் வரைக்கும் நிற்கும் உண்மைகளைக் கொண்ட உயரிய நூல்.
நாவலை இப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு George Eliot S. SIL — Li Middlefriedrich புத்தகத்தைப் படித்தபோதுதான் கிடைத்தது. அவரும் இப்படித்தான் பலவித மேற்கோள்களை புத்தகத் தின் ஆரம்பத்தில் தருவார். அதையே நானும்செய்தேன். திருக் குறளை ஆங்கிலம் படிப்பவர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதும் என் நோக்கம்.
ஒரு நாள் நான் சிறுவனாய் இரு பக்கத்திலிருந்து கண் எடுக்காமல் பா இன்னமும் நீங்கவில்லை. அம்மா இடையில் சொருகியது, ஒரு சுற்று வி கடித்துக்கொண்டு இடது கை விரல்க
மடித்து, மடித்து வயிற்றிலே சொருகியது தோளின் மேல் எறிந்தது,
எப்படி பொருத்தமான குறளை தெரிவு செய் முடிந்தது திருக்குறள் முழுவதையும் படித்தி
s Tr ?
திருக்குறள் முழுவதையும் நான் படித்திருந்தேன் அது ஒரு நல்ல ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கிற: ஆகவே பொருத்தமான குறளை தேர்வு செய்வ பிரச்சினையாகவே இல்லை. அது மாத்திரமல் திருக்குறள் பலவிதமான அதிகாரங்களை உள்ளட கியது. உலகத்து வாழ்வு நெறியில் எந்த ஒ பிரச்சினையும் அங்கே அலசப்பட்டிருக்கும். நா உபயோகித்தது பெங்குவின் இந்தியாவின் பதிப்ை அது எளிமையாகவும், தற்கால நடைமுறைக் பொருத்தமானதாகவும் இருந்தது. நான் உண்மையி இதைச் செய்ய முடிந்ததில் சந்தோசப்படுகிறே3
இலங்கை பின்னணியில் இரண்டு நாவல்க எழுதிவிட்டீர்கள். நீங்கள் கனடாவுக்கு கு பெயர்ந்து 21 வருடங்களாகிவிட்டன. கனட அகதி வாழ்க்கையை எழுதவேண்டும் என். நினைக்கவில்லையா ?
இதைப்பற்றி நான் சிந்தித்திருக்கிறேன். கனடாவி வாழ்பவர்கள் இந்த அனுபவங்களை ஏற்கனே நிறைய எழுதிவிட்டார்கள் என்றே சொல்வேன் ஆகவே நான் எழுதும்போது அவர்கள் தொடா ஒரு அம்சத்தைத் தொட்டு எழுதவேண்டும். அன இன்னொரு தளத்துக்கு உயர்த்தவேண்டும். ஒ
 

குடும்பம் அகதிகளாக வந்து இங்கேவாழ்க்கையை ஆரம்பிப்பது அல்ல. வித்தியாசமாக இருக்க வேண்டும். அதுவாக உதிக்கும் வரை காத்திருப்பேன்.
படைப்பதற்கு பதிப்பாளர் களிடம் முன்பணம் பெறுவது இலக்கியத்தின் தரத்தை குறைக் காதா ?
முன்பணம் பெறும்போது nonfiction என்றால், அது சரி. புனைவு இலக்கியம் படைக்கும்போது முன் பணம் வாங்கியிருந்தால் அது தொல்லைப்படுத்தும். அவர்கள் கொடுத்த முடிவு தேதிக்குள் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே நீங்கள் சமரசம் செய்து கொள்ள நேரிடலாம். தரம்
ந்தபோது அம்மா சாரி உடுக்கும்போது ர்த்தேன். இந்தக் காட்சி என் மனதைவிட்டு சாரியை உதறிப் பிரித்தது, ஒரு நுனியை பந்து பல்லினால் சேலையின் தொங்கலைக் களினால் லாவகமாக சுருக்கை உண்டாக்கி து, கையிலே மீதமாயிருந்த சேலையை இடது
எல்லாமே மறக்க முடியாதது.
மோசமாவதற்கு வாய்ப்பு உண்டு. உயர்ந்த இலக் கியங்களை இம்மாதிரி படைக்க இயலாது என்பதே என் கருத்து. இது எனக்கு மட்டும்தான் பொருந்தும், சில எழுத்தாளர்களால் இப்படியான அழுத்தம் இருந்தால்தான் நல்ல படைப்புத் தரமுடியும். உதா ரணம் DD%Leysky, தன்னுடைய முழு எதிர்காலத்தை பும் பணயம் வைத்த நிலையில் அவர் எழுதிக் குவித்தார். அவை உலகத்தின் சிறந்த இலக்கியமாகவும் அமைந்தன.
ull
முன்பணம் வாங்குவதற்கு நான் தயக்கம் காட்டுவேன். புனைவு மனதிலே வலுவாக உருவான பிறகு வாங்கலாம் என்று நினைக்கிறேன். சில பதிப்பாளர்கள் இரண்டு புத்தகத்துக்கு சேர்த்து ஒரு ஒப்பந்தம் தயார் பண்ணுவார்கள். ஒரு புத்த கத்துக்கே தயக்கம் காட்டும்போது இரண்டு புத்த சுத்துக்கு கையெழுத்து வைப்பது சாத்தியமில்லை. அடுத்த புத்தகம் எப்படி வரும் என்பது பாருக்குத் தெரியும்.
வி Norman Maler தன்மையில் சொல்வதில் உள்ள வி சிரமம் பற்றிக் கூறியிருக்காரே?
தன்மையில் சொல்லும்போது வாசகருடன் in (2sor(3u ஒரு அன்னியோன்யம் கிடைத்துவிடுகிறது.
இது அனுகூலம் அதே சமயம் எல்லாக் கதை 49

Page 52
50கொண்டார்களா p
மாந்தர்களையும், சம்பவங்களையும் உங்கள் பார்வை யிலேயே சொல்லிக்கொண்டு வரவேண்டும். ஒரு கட்டத்துக்குமேல் போர் அடித்தாலும் அடிக்கும்.
தன்மை எழுத்து நீங்கள் சுயசரிதைபோல எழுதும் போது பொருந்தும். ஆனால் ஒரு நாவலை கதை சொல்லியாக நீங்கள் நகர்த்தும்போது அந்தக் கதைசொல்லிப் பாத்திரம் பெரும் வீரசூரனாக இருந்து, நீங்கள் வாழ்க்கையில் ஒரு பயந்தாங் கொள்ளியாக இருந்தால் அந்தப் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க உங்களிடம் அபரிமிதமான கற்பனை தேவை. அதைத்தான் Norman Maler சொன்னார் என்று நினைக்கிறேன். அதில் உண்மை இருக்கிறது.
எப்படி Funny Boy எழுதும் எண்ணம் உங்களுக்கு வந்தது ?
நான் முதலில் எழுதியது Funny Boyல் வரும் முதல் அத்தியாயத்தைத்தான். அதை ஒரு சிறுகதை போல எழுத்துப்பயிற்சிக்காக எழுதினேன். அதற்கு பிறகு வந்தவைகளும் சிறுகதை வடிவத்திலேயே இருந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்க்கும் போது நாவல் உருவம் கிடைக்கும். ஒரு jgsaw puzzle போல என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணம் எனக்கு அலிஸ் மன்றோவின் The Lives of Girls and Women நாவலைப் படித்தபோதுதான் கிடைத்தது. அந்தப் புத்தகம் சிறுகதைகளினால் ஆன ஒரு நாவல்.
ஒரு நாள் நான் சிறுவனாய் இருந்தபோது அம்மா சாரி உடுக்கும்போது பக்கத்திலிருந்து கண் எடுக்காமல் பார்த்தேன். இந்தக் காட்சி என் மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. அம்மா சாரியை உதறிப் பிரித்தது, ஒரு நுனியை இடையில் சொருகியது, ஒரு சுற்று வந்து பல்லினால் சேலையின் தொங்கலைக் கடித்துக்கொண்டு இடது கை விரல்களினால் லாவக மாக சுருக்கை உண்டாக்கி மடித்து, மடித்து வயிற்றிலே சொருகியது, கையிலே மீதமாயிருந்த சேலையை இடது தோளின் மேல் எறிந்தது, எல்லாமே மறக்க (pig-ti liftggl.
அந்த ஒரு படிமத்தில் இருந்து பிறந்ததுதான் கதை. மீதி எல்லாம் கட்டியது.
நீங்கள் ஏன் சிறுகதைகள் எழுதுவதில்லை?
நினைப்பதுண்டு, செய்ய முடிவதில்லை. ஒரு நாவல் அல்லது project முடிந்தவுடன் இன்னொரு வேலை வந்துவிடுகிறது. இடைவெளியே கிடைப்ப தில்லை. நாவல் எழுதும்போது இடையில் நிறுத்தி சிறுகதை எழுதினால் கவனம் குறைந்துபோகும். எனக்கு தெரிந்த சிலர் ஒரு நாவல் எழுதி முடித்து அடுத்த நாவல் தொடங்குவதற்கு முன்புகிடைக்கும் இடைவெளியில் சிறுகதை எழுதுவார்கள். எனக்கு அப்படி சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஒன்று மாறி ஒன்று வந்துகொண்டே இருக்கிறது.
இது தவிர என்னுடைய மொழி நாவல் மொழி. என் புனைவு நீண்ட வடிவத்தையே நாடுகிறது. சிறுகதை உருவம் திரும்பவும் பிடிக்குள் வர சிறிது காலம் எடுக்கும் என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு gay என்பதை எப்பொழுது பெற்றோ ருக்கு சொன்னீர்கள் ? அவர்கள் ஏற்றுக்
:

கனடா வந்த பிறகுதான். இலங்கை என்றால் 1ங்கு வேறுமாதிரி இருந்திருக்கும். என் பெற்றோர்கள் டித்தவர்கள். என் அம்மா ஒரு மருத்துவர். அதுவும் னடா வந்தபிறகு இந்த விசயங்களில் நல்ல அறிவு பற்றிருந்தார்கள். என்னுடைய நிலமையை ஒரு ந்தமான மாலை நேரம் சொன்னபோது அவர்கள் டைந்து போனது உண்மை. னால் விரைவில் திலிருந்து மீண்டு எனக்கு பலமாக நின்றார்கள். ான் அவர்களுக்கு நன்றியுடன்இருக்கிறேன். ங்கள் சிறுவயதில் என்ன படித்தீர்கள்? உங்கள் ires b u T fi ?
நான் வளர்ந்த காலத்தில் இலங்கையில் தொலைக் ாட்சி கிடையாது. என்னுடைய பொழுதுபோக்கு ாசிப்புதான். வழக்கமாக சிறுவர்கள் படிக்கும் incy Drew, Hardy Boys, Enid Blyton GLITGipp L555/5/56061T ன்றுவிடாமல் முதலில் முடித்தேன். அதற்கு பிறகு பரியவர்களுக்கான புத்தகங்களில் என் நாட்டம் ரும்பியது. ஒருவித வழிகாட்டல்களும் இல்லை. கயில் கிடைக்கும் எல்லாவற்றையும் படித்தேன். ருதானையில் ஒரு பழைய புத்தகக்கடை இருக்கும். ங்குதான் வழக்கமாக புத்தக வேட்டைக்கு பாவேன். பெற்றோர்கள் எதிர்ப்பு கூறவே ாட்டார்கள். நான் புத்தகங்களை கட்டுக்கட்டாக Tங்கிக் கொண்டு வந்து படித்து முடிப்பேன். அந்த 356f6vg5sT6óT Tolstoy, T.S.Elliot, Dickens G3LunT6örp ர்கள் எனக்கு பரிச்சயமானார்கள். அதே சமயம் on Uris, Sidney Sheldon Gustairportray56061Tuub Lugdidigs வறவில்லை. ஒருவித பாகுபாடும் என்னிடம் டையாது.
ழுத்தாளராகும் எண்ணம் அப்போதே ருந்ததா ?
எனக்கு எழுத்தாளராகும் எண்ணமே இல்லை. ன் யோர்க் பல்கலைக்கழகத்தில் படித்தபோது யேட்டர் இயக்குநராக அல்லது தியேட்டர் நாடகப் ரதி எழுத்தாளராக வரவே பிரியப்பட்டேன்.
பல்கலைக் கழக படிப்பு முடிந்த பின்பு ஒரு குதி நேர வேலையில் சேர்ந்தேன். அப்போது தன்முதலாக அனிட்டா தேசாய் எழுதிய இரண்டு g555/56061T Luuq.g5G-56öT. 666), Fire on the Mountain 55ggi Clear Light of Day, go06), 676i. 6) inpó60560u டியோடு மாற்றிவிட்டன. இப்பொழுது திரும்பவும் னைத்துப் பார்க்கும்போது நம்ப முடியவில்லை. கனவே இருந்த பகுதி நேர வேலையையும் துறந்து ட்டு முழுநேர எழுத்தாளனாவது என்ற திடீர் டிவை எடுத்தேன். அப்படி முடிவெடுத்தபோது சிறுகதையைக்கூட நான் எழுதியதில்லை. ஒன்றும் சுரமானதும்கிடையாது. பொழுது எழுத்தாளராக மாறினீர்கள்?
அனிட்டா தேசாயை படித்தபோது அதுதான் ானுடைய உலகம் என்று புரிந்தது. யாரோ எனக்கு ரியாமல் என்னுடைய உள்ளத்துக்குள் புகுந்து pதியதுபோன்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. ண்டு சகோதரிகளின் ழமான நேசத்தை சொல்லும் தகத்தில் என்னைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. என் மீதி வாழ்க்கையை அந்தக் கணம் தீர்மா ந்தது. உடனேயே எழுதத் தொடங்கினேன். பிறகு

Page 53
நான் திரும்பிப் பார்க்கவில்லை.
என்ன எழுதினீர்கள் ?
முதலில் ஒரு நாவல் எழுதி னேன். அது இன்னும் இருக்கிறது. அது சரியாக வராததால் பிரசுர மாகவில்லை; பிரசுரத்துக்கு கொடுக்கவும் மாட்டேன். ஒரு பயிற்சி என்று வைத்துக்கொள் வோம். அதன் பிறகுதான் Fry aேy எழுதினேன். அது நல்ல வர வேற்பை பெற்றது. நான் எதிர் பார்க்காமல் பல பரிசுகளையும் பெற்றது. எனக்கேச்சரியம்தான்.
சினமன் கார்டன்ஸ் நாவலில் எடிட்டரின் கைவரிசை சற்று
எழுத்து என்பதை நான்தேர்வு தேர்ந்தெடுத்திருக்கிறது. அதன் பாதையி உங்களை அது அற்புதமான ஒ
அதிகமானதுபோல தெரிகிறதே ?
சினமன் கார்டன்ஸ் நாவலில் மெள்ள மெள்ளத் தான் கதை விரியும், அது தவிர இரண்டு கதைகளை பக்கத்து பக்கத்தில் நடத்திப் போகவேண்டும். எடிட்டர் எனக்கு பூரண சுதந்திரத்தைக் கொடுத் திருந்தார். அவ்வப்போது நல்ல யோசனைகள் 'நீ மனதுக்குள்ளே வைத்திருக்கும் கதையை அப்படியே வெளியே கொண்டுவருவது என்னுடைய வேலை' என்று சொல்வார். ஆனால் அவர் அத்துமீறி நாவலுக்குள் நுழையவில்லை.
சொல்வார்.
தெற்காசிய படைப்பாளிகளின் தொகுப்பை கொண்டு வந்ததற்கு என்ன காரணம் ?
தெற்காசிய புலம் பெயர்ந்தோரின் படைப்புகள் அநேகம் இருக்கின்றன. நூற்றுக் கணக்கான கதைகளைப் படித்து அவற்றில் 25 சிறுகதைகளை தேர்வு செய்து ஒரு தொகுப்பாக கொண்டு வந்தது தான் என்னுடைய வேலை.எல்லாக் கதைகளும் காலனிய ட்சிக்கு பிற்பாடு பிறந்தவைதான். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பதிவாகவும், தெற்காசிய இலக்கிய நிலையின் பிரதிபலிப்பாகவும் அந்தப் புத்தகம் விளங்கும்.
உங்கள் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக் கின்றனவா ?
அவை ஏழு மொழிகளில் ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன. சிங்களத்தில் கூட சுகதப் பால டிசில்வா என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். எனக்கு சிங்களம் வாசிக்க தெரியும் என்பதால் அதனைப் படித்து பார்க்கக்கூடியதாக இருந்தது. தமிழில் ஒருவரும் இன்னும் மொழிபெயர்க்க
 

முன் வரவில்லை. யாராவது செய்ய வந்தால் என்னுடைய சம்மதம் இருக்கிறது. இதிலே பெரும்
---- கெடுபிடிகள் ஒன்றுமில்லை.
. ¬11 மொழிபெயர்க்கும்போது ஒன்று
மட்டும் முக்கியம், அரசியல் விசயங் கள் நான் எழுதியது போலவே திரிக்காமல் சித்தரிக்கப்பட வேண்டும். அடுத்ததாக, ஒரு பால் சேர்க்கை காட்சிகள் வரும் இடங்
செய்யாமல் அப்படியே மொழி பெயர்ப்பது முக்கியம்.
கனடாவில் இலக்கிய விருதுக் குழுக்கள் இயங்கு கின்றன. இவற்றின் செயல்பாடு
வு செய்யவில்லை. அது என்னைத்
ல் உங்களை அர்பணிப்பதுதான்ஒரே வழி.
ரு பயணத்தில் இட்டுச் செல்லும்.
கள் திருப்திகரமாக இருக்கின்றனவா ?
உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. நான் பல அமைப்புகளில் நடுவராகப் பணி புரிந்திருக்கிறேன். உண்மையில் இரண்டாவது புத்தகத்துக்குதான் முதல் பரிசு கிடைக்கிறது. இது என் அனுபவம். எல்லாத் தேர்வுக்குழுவிலும் ஒருவர் இருப்பார். இவர் பின்னால் ஒரு சக்தி இயங்கும். இவருடைய முடிவுதான் அநேகமாக குழுவினரின்முடிவாகவும் இருக்கும். சில சமயம் சமரசங்கள் செய்யவேண்டி வரும். அனைத்து பரிசுக் குழுக்களும் இப்படித்தான் செயல் படும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நீங்கள் சமீபத்தில் படித்து ரசித்த நூல்கள்?
சமீபத்தில் படித்ததில் எனக்குப் பிடித்தது Jhumpa Liார் எழுதி வெளியான WWesake என்ற நாவல், கடந்த ஐந்து வருடங்களில் வெளிவந்த சிறந்த நாவல் களில் அது ஒன்று என்று நான் நம்புகிறேன். என்னை அப்படியே மயக்கிவிட்டது.
அடுத்ததாகப் படித்தது Amitav Ghosh எழுதிய The Glass Palace, 5.0, 000 lig 55, it astry isgs. இதைப் படித்தபோது எனக்கு பெரும் சோர்வு ஏற்பட்டது. இது நான் எழுதியிருக்கவேண்டிய நாவல் என்றே என் மனதுக்கு தோன்றியது.
நான் பலமுறை படித்திருக்கிறேன். இன்று உலகத்தில் எழுதும் எழுத்தாளர்களில் இவர் முன்னணியில் 품 இருக்கிறார். அடுத்து அலிஸ் மன்றோ. இவருடைய
மார்கிரட் அட்வூட் எழுதிய Cat's Eye င္ကိုး
Lives fiேrls Trd Women நாவலின் அமைப்பில்தான் நான் FIy Boy எழுதினேன்.
கனடா எழுத்தாளர்களைச் சந்திப்பதில் சிரம 5

Page 54
மிருக்கிறது. அவர்கள் தங்களைப் பூட்டி வைத்துக் கொள்கிறார்களே ? N
நீங்கள் சொல்வது பிரபலமான எழுத்தாளர்களை, எழுதுபவர்கள் எல்லாம் முழுநேர எழுத்தாளர்கள் ! அல்ல, கனடாவில் 90 வீதம் எழுத்தாளர்கள் முழுநேர : எழுத்தாளர்களாக உழைக்கவில்லை. அவர்கள் வருமானத்திற்கு வேறு ஒரு வேலை பார்த்துக் ே கொண்டு எழுதுகிறார்கள். சிலர் பேராசிரியர்கள்; ஆ சிலர் ஆசிரியர்கள்; சிலர் பதிப்பகங்களில் வேலை செய்பவர்கள், இப்படி ஏதாவது வேலையில் இருப்பார் மு கள். அவர்கள் வாழ்வது ஒரு துறவி வாழ்க்கைக்குச் பு சமம் எழுதுவதற்கு அது தேவை. கவே அவர்களுக்கு வாசகர் களைச் சந்திக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை. நீங்கள் சொல்வது போல தங்களைப் பூட்டி வைத்துக்கொள்ளவில்லை.
நீங்கள் எழுத்தைத் தேர்வு செய்ததையிட்டு எப்போதா வது வருத்தப்பட்டதுண்டா?
எனக்கு ஒருவித மனவருத்த மும் இல்லை. இறுதியில் யோசித் துப் பார்க்கும்போது எழுத்து என்பதை நான்தேர்வு செய்ய வில்லை. அது என்னைத் தேர்ந் தெடுத்திருக்கிறது. அதன் பாதை யில் உங்களை அர்பணிப்பது தான் ஒரே வழி. உங்களை அது அற்புதமான ஒரு பயணத்தில் இட்டுச் செல்லும்,
TL தமிழர்களுக்கு உங்களிடமிருந்து ஏதாவது செய்தி உண்டா ?
செய்தி என்பது பெரிய வார்த்தை கனடா பலவித கலாச்சாரங்களை அணைக்கும், ஊக்குவிக்கும் நாடு. இந்த நாட்டிற்கு நீங்கள் கொடுக்க வேண்டும்; இங்கேயிருந்து பெறவேண்டும். ந
கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான இயற்கை அழகு இங்கே கொட்டிக் கிடக்கிறது.இது இலவசமானது. இதை நிறைய تا அனுபவிக்க வேண்டும்.
凸严
இதை எழுதி முடித்த பிறகு ஒன்று புரிந்தது. ஷ்யாமின் எழுத்தை ஆரம்பித்து வைத்தது. வாழ்க்கையில் " திருப்பு முனையாக அமைந்தது, அவருக்கு உந்து " சக்தி கொடுத்தது எல்லாமே பெண் எழுத்தாளர் கள்தான். அதன் காரணத்தைக் கேட்டிருக்கலாம். G கேட்கவில்லை.
|- தன்னுடைய சினமன் கார்டன்ஸ் புத்தகத்தை
LLLLLL LLLLLL LTTTTTTT TT LTLLLLLLLLL TTTTTT (3 5 அடிப்படையில் வடிவமைத்ததாகவும், அவரிடம் இருந்தே அதை எழுதுவதற்கான அகத்துTண்டுதல் தனக்குக் கிடைத்ததாகவும் ஷ்யாம் கூறியிருக்கிறார். " ஆனால் George Eliot ஒரு ஆண் எழுத்தாளர் இல்லை. リ
தமிழில் பல ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் 52பெயரில் எழுதுவதுபோல இவர் ஆண் பெயரில்
 

كي ாழுதினார். இவருடைய உண்மையான பெயர்
Mary Ann Evans.
Jumpha Lahiri sT (Lg5 Li Narriesake 5Tsus3) su |கழ்கிறார். அலிஸ் மன்றோவையும், மார்கிரட் அட்ஆட்டையும் பிடிக்கும்.
ஆனால் இவர்கள் எல்லோரையும் விட அனிட்டா தேசாய் இவருடைய வாழ்க்கையில் முக்கியமானவர். அனிட்டாவின் இரண்டு புத்தகங்களைப் படித்த பிறகுதான் இவர் எழுத்தாளராவது என்ற தன் முடிவை எடுக்கிறார். அவ்வளவு தூரத்துக்கு அந்தப் |த்தகங்கள் அவரை ட்கொள்ளுகின்றன. அனிட்
Photograph hy Jerry Ballery
டாவைச் சந்தித்தபோது அவரேதனது மானசீகமான நரு என்பதையும் வீழ்யாம் அவரிடம் சொல்லி விருக்கிறார்.
அனிட்டா தேசாய் எழுதிய Cody என்ற ாவல்தான் திரைப்படமாக்கப் பட்டு இந்தியாவின் ஜனாதிபதி விருதை 1994 ல் பெற்றது. இதில் சசி பூரும், ஷாபனா அஸ்மியும் நடித்திருந்தது நாபகத்துக்கு வருகிறது.
2000ம் ஆண்டில் நான் அனிட்டா தேசாயை ந்தித்தேன். அவர் எழுதிய DTD: புத்தகத்தில் கையெழுத்திட்டு தந்தார். ஐந்து வருடங்கள் ஆற வைத்த பிறகு இப்பொழுதுதான் படிக்க வெளியே rடுத்திருக்கிறேன்.
ஷ் பாமின் நூல்கள் என்னை ஈர்க்கின்றன. மாழியை கையாளும் லாவகமும், அவருடைய புரிய அவதானிப்பும் ஒவ்வொருமுறை படிக்கும் பாதும் என்னை பிரமிக்க வைக்கின்றன. அவர் தருவை மிஞ்சிய சீடர்.
அனிட்டாவின் எழுத்து எனக்கு சாதாரண ாகவே படுகிறது. அவருடைய புத்தகத்தில் 40 க்கம் படித்துவிட்டேன். இன்னும் 7 பக்கம் மிச்சம். அதற்கிடையில் ஏதாவது சாதனை செய்து என்னைப் பாய்யனாக்குவார் என்றே நம்புகிறேன்.

Page 55
படிப்பும் படைப்பும்
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கைலாசபதி சிவத்தம்பி போன்றோருடைய செல்வாக்கு மில்வி:ை யில் இருந்ததாக விமர்சனங்கள் எம்மீது வைக்கப்படுக துண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அதாவது நாங்கள் பேராசிரியர்கள் பல்கலைக் கழகக்காரர்கள் என்பதற்காக அவர்களை அணுகவில்லை. அவர்களின் தனித்திறமை, அவர்களது பார்வை, முற்போக்கு இலக்கியத்தில் அவர்கள் வைத்திருக்கின்ற கண் ணோட்டம் என்பவற்றுக்காகத்தான் நாங்கள் அவ கள் மாணவர்களாக இருந்த காலத்தில் இணைந்து வேலை செய்தோம். காலப்போக்கில் அவர்கள் பல்கலைக் கழகத்திற்குப் போனார்கள். நாங்கள் வெளியே இருந்து இயங்கினோம். ஆனால் கைலாசபதி, சிவத்தம்பி தான் முற்போக்கு எழுத்துக்களை அங்கீ கரித்து ஆதரிக்க வேண்டும் என்ற நிலை வந்ததற்குப் பிறகு கல்விப்பீடம் குறிப்பாகச் சொல்லப் போனால் பல்கலைக் கழகம் தாங்களும் எங்களை அங்கீகரிக்க வேணும் என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது. நாங்கள் இந்த விடயத் தில் தெளிவாக இருந்தனாங்கள். படிப்பு வேறு, படைப்பு வேறு உலக வரலாற்றில் எந்தப் பெரிய கொம்பான கொம்பனான கல்விமான்களும், பெரிய படைப்பாளியாக இருந்த தில்லை. இது பிரான்சிலையும் சரி. அமெரிக்காவிலையும் சரி, சோவியத் திலையும் சரி எங்கேயும் இதே நிலைதான். ஆனா இங்கை கைலாசபதி, சிவத்தம்பியின்ரை ஆளுகைக் உட்பட்டு வரவர எங்கடை உட்போராட்டங்களின் விஷயங்கள் வெளியில தெரியாதால அவர்களு முக்கியத்துவம் பெற்று வரவர இலங்கையில ஒ புதிய நிலைமை உருவாகத் தொடங்கியது. இப்ப யான ஆக்களின்ரை அங்கீகாரம் கிடைத்தால்தான் ஈழத்து இலக்கியம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கொள் முடியும் என்ற எண்ணம் எழுத்தாளர்களிடைே வளரத் தொடங்கியது. இதை முழுக்க முழுக் மூர்க்கமாக நானும் டானியலும் எதிர்த்த நாங்க3 காரணம் நாங்கள் படைப்பாளிகள், இரண்டாவ அவர்களுக்கு இருந்த அளவு செல்வாக்கு எமக்கு தமிழ் நாட்டிலை இருந்தது. ஜெயகாந்தனோ ர நாதனோ விஜயபாஸ்கரனோ எல்லோருடனு எமக்கும் தொடர்பிருந்தது. கிட்டத்தட்ட அவர்களுக்
 
 

மனிதனாய் வந்தேன்
Ili gal
இருந்த தமிழ் நாட்டுச் செல்வாக்குக்கு சமனாக
படைப்பாளிகள் மத்தியிலிருந்து அவர்களுக்கு மாற்றீடாக சொல்லக்கூடிய அளவு செல்வாக்கு * எமக்கும் இருந்தது. இந்தக் கட்டத்தில் தான் மல்லிகை தோற்றம் பெறுகிறது. இது மில்லிகை நான் முன்கூறியது போல எல்லாவித இலக்கியப் போக்குகளையும் அரவணைத்துப் போவதற்கான தனிப்பலத்தை என்னிடம் ஏற்படுத்தியிருந்தது.
இலக்கிய இயக்கம்
பல போராட்டங்களை நாங்கள் நடாத்தியிருக்கிறோம். ஒரு இலக்கிய இயக்கத்தை இந்தத் தேசத்திலை கட்டியெழுப்ப வேணும் என்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலை நடாத்தப்பட்ட சாகித்திய விழாவிலை முட்டை அடிச்ச விஷயத்தைப் பற்றி இப்பவும் பேசப்படுகிறது. முட்டை அடிச்சவங்கள் முட்டையடிச்சவங்கள் என்று சொல்லுகிறார்கள். முட்டை அடிக்கிறது என்ற திட்டம் உண்மை யில திட்டம் போட்டு நடந்த ஒன்றல்ல ஆனால் இந்த நிகழ்வுக்குரிய ஒரு நிலைமை அங்கு உருவாகியிருந் தமையை மறுக்க முடியாது. சரி பிழைகளுக்கு அப்பால் முட்டை எறியுமளவான மனோநிலையை உணர்வு நிலையை, உயர்சாதிப் பண்டிதர்கள் உருவாக்கியிருந்தார்கள். இழிசார் இலக்கியத்தால் தமிழ் குட்டிச்சுவராகிறது என்று அவர்கள் பேசினார்கள். சாதி ஒடுக்குமுறையின் பல உச்சமான
கொடுமைகளை அனுபவிச்ச எங்கடை சமூகத்தின் கு ஒரு எதிர்ப்புணர்வுதான் அது கண்ட கண்ட சாதியர் " எல்லாம் எழுத வந்துட்டுதுகள் எண்டு சொல்லாமல் ம சொல்லி வந்தார்கள். இந்த அயோக்கியத்தனங்களுக்கு ரு முன்னால் முட்டை எறிந்த சம்பவம் ஒண்டும் பெரிய சம்பவம் அல்ல. எங்கடை பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதை அவர்கள் தீர்மானித்தார்கள்.
கந்தசாமி என்று வைக்கச் சொன்னால் கந்தன் t என்று எழுதினார்கள். எங்களது பிள்ளையன்
படிக்கிறததென் டால், ஏன் படிப்பிக்கிறாய் தொழிலைப் பழக்கு உனக்கு உதவியாய் இருக்கும் எண்டு பெரிய அக்கறையாக ஆலோசனை சொல்
வார்கள். அவர்களுக்கு முடி சிரைக்க ஒரு பரம் பரையையே வைத்திருப்பதற்காகச் செயற்பட்டார்கள். இப்படி எத்தனையோ முட்டையடி என்பது ஒரு 53

Page 56
54வாங்கவும் புத்தகங்களை வாங்கவும் எண்டு ஒரு
குறியீடு மட்டுமே. அது இன்று மட்டும் எங்கடை
எதிரிகளாலை சொல்லப்படுகிறது எண்டால் அதிலே ஒரு கூர்மையான உண்மை இருந்திருக்குது என்பது காரணம். இப்படி எத்தனையோ சொல்லலாம். எனக்கு சாகித்திய அக்கடமி பரிசு கிடைக்கேக்க நாவிதனுக்குப் பரிசு கிடைத்திருக்கு என்று நையாண்டி செய்யவில்லையா? ஒரு யாழ்ப்பாணத்து பண்டிதச்சட்டம்பி உண்மையில் இந்தப் போராட் டங்களினூடாக தேசத்தின் இலக்கிய இயக்கம் நன்கு பலமாக வளர்ந்து வந்தது. நாங்கள் சாதியின் பேராலை நடந்த கொடுமைகளை கேள்விக்குள்ளாக் கியபோதுதான் எமது எழுத்துக்கள் இழிசன இலக்கி யம் என்று பழிக்கப்பட்டன. அவர்கள் செய்தவைக ளை யாரும் கேள்வி கேட்கவில்லை. சுந்தரலிங்கம் - பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு பெரிய கல்வி மான். அமைச்சரவையிலை எவ்வளவு ஒரு முக்கிய மான ஆள் கழிசடைமாதிரி ரவுடிமாதிரி போய் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு மாவிட்டபுரத்திலை ஆலயப் பிரவேசப் போராட்டத்தில எதிர்த்து நிக்கேல்லையா? இதையேன் கேட்கவில்லை. முட்டை அடி பற்றி மட்டும் இண்டைக்கும் பேசுகிறார்கள். உண்மையில் தென்னிந்திய பிராமணன் செய்ததை விட யாழ்ப்பாணத்து வெள்ளாளன் செய்த அநியா யம் மிகப்பெரியது. அந்தக் கொடுமைகளை எதிர்த்து எங்களுக்குள்ளே எரியிற நெருப்புதான் மல்லிகையை நாற்பது ஆண்டுகளாக நிலைக்க வைச்சிருக்கு. உண்மையில் எங்களிடம் எந்தக் கெட்டித்தனமும் இருக்கவில்லை. சாதிய ஒடுக்குமுறை எங்களை கெட்டித்தனமாக்கியிருக்கிறது. ஒரு இலக்கிய இயக்கம் வளரக் காரணமாக இருந்திருக்கிறது. அறுவடை செய்கிறோம்
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். யாழ்ப் பாணத்திமிர். யாழ்ப்பாணத்தான் பெரிய படிப்பாளி அவனுக்குத்தான் இலக்கியம், தெரியும் இலக்கணம் தெரியும், என்ற திமிர் எப்படி யாழ்ப்பாணத்துக்குள்ள எங்கட சமூகத்தை ஒடுக்கி வைத்தானோ அப்படித் தான் மட்டக்களப்பானை, திருகோணமலையானை, மலையகத்தானை எல்லாம் ஒதுக்கி வைக்கிற போக்கு அங்கு இருந்தது. அண்டைக்கு அப்படி ஒதுக்கி ஒதுக்கி வைத்ததின்ரை வெளிப்பாடுதான் இண் டைக்கு நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக் கிறோம். ஆனால் இந்த அனுபவத்திலிருந்து நாங்கள் படிச்சிட்டம் என்னவென்டால் நாங்கள் யாழ்ப் பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் எண்டது. நாங்கள் வெளியேறினோம். மட்டக்களப்பு, மலையகம், திருகோணமலை முஸ்லீம் என்ற பாகுபாடின்றி எல்லாப் பிரதேசங்களின் இலக்கியத்தையும் நாம் உள்வாங்கி ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்து கிறோம்.
அட்டைப் படம்
தமிழ் நாட்டிலை பெருமளவுக்கு அறியப்பட்ட ஈழத்துச் சஞ்சிகை என்றால் அது நிச்சயமாக மல்லிகை தான். உலக நாடுகளிலைகூட ஈழத்தமிழர் வாழுகிற எல்லா நாடுகளிலும் மல்லிகையின் பரம்பல் கணிச மான அளவிற்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழு கிற ஈழத்தவர்கள் எங்களை வந்து சந்தித்து மல்லிகை
لس>
C
ந

அரை நாளையாவது ஒதுக்குகிறார்கள். இது யாழ்ப் 1ாணத்திலை நான் யுத்தகால நெருக்கடிக்குள்ளை இருந்துகொண்டே பத்திரிகையை கொண்டு வந்த ான்ரை உழைப்பை கெளரவிச்சு செய்கிற ஒரு தவி என்று நான் கருதுகிறன், ஏனென்டால் இப்ப பாவது பெரிய யுத்த நெருக்கடியிக்கையிருந்தும் த்திரிகையை நடத்துகிறேனே எண்ட அபிமானம் iான் இப்போது எனக்கு ஆதரவாக இந்த வழியில் டைக்கிறது எண்டு சொல்ல வேண்டும். மற்றது ட்டத்தட்ட 180ற்கு மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர் ளின் அட்டைப்படங்களைப் போட்டிருக்கிறன். இந்த அட்டைப்படங்களை நான் போட்டது மட்டு }ல்ல. அவற்றை நான் புத்தகமாகவும் போட்டிருக் றேன். ஏனென்டால் எனக்குத் தெரியுது. இப்ப இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத்தான் தெரியும். ரு இதழின் ஆகக் கூடிய காலம் அடுத்த இதழ் பரும்வரைதான் அதுக்கு மேலையும் அது இருக்கிற தன்டால் ஆரும் சேகரிச்சு வைச்சிருந்தால்தான். ஆனால் இதுக்கு மேலேயும் இருக்க வேணுமென்டால் இந்த அட்டைப்படங்கள் சஞ்சிகையோடை போயிடக் sடாது ஒரு மாதத்திலேயே அதன் உயிர் போய்விடக் கூடாது. அட்டைப்படங்களை நான் போடத்தொடங் யதின்ரை நோக்கமே இது ஒரு மாதத்திற்கு மேலாக ம் நிலைக்க வேண்டும் என்பதுதான். நான் தேடித் தடித் தொகுத்து அட்டைப்படங்களின் கட்டுரை ளை தொகுத்து மூன்று தொகுதிகள் வெளிவந்து பிட்டன. அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகை மகங்கள், அட்டைப்படங்கள் என்று. இது இப்ப விளங்காது எனக்குத் தெரியும். நான் கண்ணைமூடி -15 வருடங்களுக்குப் பிறகு யாராவது ஒரு பல் லைக்கழக மாணவன் ஆய்வு செய்யும் போது ான் செய்த வேலையின்ர பெறுமதி விளங்கும். ான் அறியக் கூடியதாக மல்லிகை பற்றி மல்லிகை தைகள், கவிதைகள் பற்றியெல்லாம் எத்தனையோ ல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்திருக்கிறார் ள். இவர்களிடையே வேறு பத்திரிகைகள் பற்றி 'சய்திருந்தாலும் கூட மல்லிகை அளவுக்கு அதிக ாக செய்யப்படவில்லை.
ல்லாம் மல்லிகையே
ல்லிகைதான் என்னுடைய எல்லாம். நான் மன்னால சொன்னது போல நான் ஒரு நல்ல ணவனாகவோ, தந்தையாகவோ இருக்கவில்லை. னது மாமா மகளைத்தான் எனக்கு மணம் பேசி ந்தார்கள். நான் அப்பவே சொன்னனான். எனது னைவிக்கு என்னை முடிக்காதை எண்டு. நீ னதிலை வைச்சிருக்கிற அத்தனை கனவையும் ான் நாசமாக்குவன். உன்னைப் படத்துக்குக் கூட்டிக் காண்டு போகவோ, ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் காண்டு போகவோ நான் வரமாட்டன் எண்டு ான் அப்பவே சொன்னனான். சத்தியமாய் சொல்லி ன் இராப் 12 மணிக்குத்தான் வருவன். சிலவேளை ராமலும் விடுவன். நீ விளக்கைக் கொழுத்தி வைச்சு ட்டு காவல் இருக்க வேண்டி வரும். மற்றது ன்ர சினேகிதங்களெல்லாம் என்னைப் போலவே க்கறுந்ததுகள். ஒருதரும் உருப்படியாய் இருக்கமாட்ட துங்கள். ஆனால் ஒண்டு நான் சொல்லுறன், ான் மனிதனாக இருப்பன். துன்புறுத்தமாட்டன், டிக்கமாட்டன், பெண்மையை கேவலப்படுத்த

Page 57
மாட்டன், ஒரு நல்ல மனிதனாக இருப்பன், இதையெல்லாம் சொல்லுகிறன் ஏனென்றால் என்னை முடிக்காதை எண்டு சொல்லத்தான் எண்டு எல்லாம் சொன்னனான். அம்மாவுக்கும் சொன்ன னான். உன்ர அண்ணனுக்காக அவன்னர மகளை நாசமாக்கப் போறாய் எண்டு சொன்னனான். உன்ரை சொந்த மருமோனை ஏன் இப்படி நாசமாக்கிறாய் மற்ற சகோதரங்களுக்கு முடிச்சுக்குடன் எண்டும் சொன்னனான். ஏனென்டால் எனக்குத் தெரியும் நான் ஒரு நல்ல கணவனாகவோ அப்பனாகவோ இருக்க மாட்டேன் என்று. அப்பவே நல்லாத் தெரியும் அண்டைக்கு இருந்த இலக்கியத் திமிர் என்னை அப்படிச் சொல்ல வைத்தது. ஏனென்டால் எந்த ஆதரவும் இல்லாமல் தட்டிக் கொடுக்க யாரும் இல்லாமல் வளர்ந்தனாங்கள் என்னுடைய படைப்புத் திமிரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் எளிமையாக இருச் கிறது. இயல்பாக இருச் கிறது வேறை என்ரை
ஐரோப்பிய கொடுக்கும் ஆ
நாட்டுப் படை
STFIF
படைப் புத் தி மி ை யாருக்காகவும் எந்த கொம்பாதி கொம்ட் னுக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் ஏனென்றால் அன்றைக்கு யாரும் கொடுக்காத விலையை நான் கொடுத்து வந்தனான். நீ குடும்பட பின்னணியால், வந்திருப்பாய்; நீ கல்வியால் வந்திருட பாய் நீ சாதியால் வந்திருப்பாய் நீ பெரும்பான்மை பால் வந்திருப்பாய். ஆனால் நான் ஒண்டுமில்லை பிறந்திருக்கிறன். எதுவுமில்லாமல் மேலே வந்தவன் இதுதான் என்னை அப்படிப் பேசவைத்தது. இண்டை வரைக்கும் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது
நான் பாருங்கோ இவை என்னத்தைச் சொன்ன லும் ஐரோப்பாவிலை அங்கை இருந்துதான் தகவல் இஞ்சை வந்தது. பிரான்ஸிலை இருந்துதான், ரஷ்ய விலை அமெரிக்காவிலை, ஜப்பானிலை இருந்துதான் தகவல்கள் இங்கை வந்து பள்ளிக்கூடங்களினை பாடப்புத்தகங்களாக வந்தது. என்னுடைய பி காலத்திலை நான் ஐரோப்பாவிலேயே பேசப்படுவேன் ஐரோப்பிய பாடப்புத்தகங்களிலை ஐரோப்பிய மாணவர்களுக்கு நான் பாடப்புத்தகமாக இருப்பேன் ஏனென்டால் செய்திருக்கிறம் செய்து காட்டியிரு கிறம்,
எனது முதலாவது சிறுகதை 'எல்லாம் இரவல் என்ற பெயரில் வந்தது என்று நினைக்கிறன் - செ. தனலில் அதை நான் என்ர தொகுப்பிலை இப்படி சில கதைகளைச் சேர்க்கவில்லை. ஆனா இப் போசிக்கைக்க நான் மடத்தனம் செய்திட்டேனே
 

என்று யோசிக்கிறன். என்ரை வளர்ச்சியைப் பார்க் கிறதுக்கு வசதியா ஆவணமாக அதுகளும் வந்திருக்க லாம். என்ரை அந்தக் கதைகளை நான் சேமித்து வைக்கவில்லை. இப்ப தேடி எடுக்கலாமா எண்டு தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்கு பிறகு கணக செந்திநாதன் எல்லாத்தையும் ஆவணப்படுத்தி வை எண்டு சொன்னதுக்குப் பிறகு தான் நான் ஒழுங்காகச் சேர்க்கத் தொடங்கினனான். அதுக்குள்ளை விடு பட்டவை விடுபட்டே போயிட்டுது. இந்த சேகரிப்பி லையும் சில யாழ்ப்பாணப் பிரச்சினைக்குள் விடு பட்டுப் போயிட்டுது.
கூட்டு இயக்கம் நாங்கள் எப்பவுமே கூட்டாகத்தான் இயங்கினோம். எங்களுக்கிடையில் எப்போதுமே உரையாடல் இருந்தது. இந்த உரையாடல் எல்லாத்தைப் பற்றியதாக அம் இருந்தது. இதுகளுடையேதான் நான் என்னை வளர்த்துக்கொண்டேன். இது நான் புகழடைய வேண்டும் என்ற தனிமனித ஆவல் எங்களிடையே
தமிழ் வாசகர்கள் இந்தியப் படைப்புகட்கு யூதரவையும் இலக்கிய அந்தஸ்தையும் எங்கள் ப்புகளுக்கு கொடுக்க பஞ்சிப்படுகினம், அது ன காரணம் எண்டு தெரியவில்லை.
இல்லாமல் செய்திருந்தது. எனக்கு இரண்டு மூன்று நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தன. ஒன்று அழகு சுப்பிரமணியத்தின் தொடர்பு அவர் ஒரு சர்வதேச
எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில ஆம் குறுக்குத்தெரு த வில இருந்த பிரிமியர் கபே என்ற ஹொட்டலிலை தான் நாங்கள் சந்திப்போம். மீ மணி முதல் 9-10 மணிவரை அங்கை இருந்து நாங்கள் பேசுவோம். அங்கைதான் ஏஜே கனகரத்தினாவையும் சந்தித்தேன். கிட்டத்தட்ட ஒரு 5 வருடத் தொடர்பு எனக்கு அழகு சுப்பிரமணியத்துடன் இருந்தது. மாதத்தில் - குறைந்தது 4-5 தடவையாவது சந்திப்பம், அவர் தனது ஐரோப்பியத் தொடர்புகள், எழுத்துக்கள், சமூகப்பயிற்சிகள் பற்றி எம்முடன் உரையாடுவார். ஏ.ஜே. கனகரத்தினா மிக உயர்ந்த ஆங்கிலப் புலமை கொண்ட ஒருவர். எம்மிடமிருந்த ஆங்கிலத் தகமை இன்மையை ஏ.ஜே. கனகரத்தினா அவர்களது உறவு காரணமாக ஓரளவுக்கு ஈடு செய்யக் கூடியதாக இருந்தது எனலாம். இது நான் திட்டமிட்டு அவர் மூலமாகத் தேடிக்கொண்ட ஒன்று என்று சொல்ல வேண்டும். எந்தக் கதையை எழுதினாலும் அவருக்கு ஒரு தடவை படித்துக் காட்டி அவரது ஆலோசனை களையும் கேட்டு திருத்திக் கொள்கிறதை நான் செய்துள்ளேன். அவற்றை ஒத்துழைப்பு எனக்கு கிடைத்தளவுக்கு வேற எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். தண்ணீரும் கண்ணிரும் தொகுப்பை நான் தொகுக் கும்போது ஏஜே கனகரட்னாவின் ஆலோசனையோடு தான் அதனை நான் தொகுத்தேன். அதில் ஒரு

Page 58
கதையை வாசிச்சுக் காட்டி அதுக்கு அழகு சுப்பிர மணியம் சொன்ன அபிப்பிராயத்தை அடிப்படை யாகக் கொண்டு - கரும்பலகை என்ற கதை என்று நினைக்கிறேன் - அதன் முடிவை மாற்றி எழுதினேன். இப்படி யாழ்ப்பாணத்தில எனக்கு இலக்கியக்காரர் களின் உறவு மிகவும் பயனள்ளதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராக இருந்தபடியால் எனக்கு வேகமாக இயங்கும் வாய்ப்பு இருந்தது. அப்பெல்லாம் முற் போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்கள் மத்திய கல்லூரியில் தான் நடக்கும். அதிபர் எங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் சுதந்திரமாக நாம் இயங்கி னோம். கூட்ட அறிவிப்பு நோட்டீசை அடித்துப் போட்டுத்தான் அதிபரிடம் அனுமதி கேட்கப் போவோம். அவ்வாறு சுதந்திரமாக இயங்கினோம்.
ஐரோப்பிய வாசகர்கள் பற்றி
இண்டைக்கு ஐரோப்பாவில் உள்ள காலம் வாசகர் களும் ஈழத்து வாசகர்கள் தான் அவையளுக்கு மல்லிகை புதுசல்ல. அடுத்த தலைமுறை இன்னும் வரவில்லை. அந்தத் தலைமுறை வரும்போது அது புதிய தேடல், சிந்தனைகளுடன் வரும். இப்ப உள்ள வாசகர்கள் இங்கிருந்து போனவர்கள்தான். ஆனால் ஒண்டைச் சொல்ல வேணும். ஐரோப்பிய தமிழ் வாசகர்கள் இந்தியப் படைப்புகட்கு கொடுக்கும் ஆதரவையும் இலக்கிய அந்தஸ்தையும் எங்கள் நாட்டுப் படைப்புகளுக்கு கொடுக்க பஞ்சிப்படுகினம். அது என்ன காரணம் எண்டு தெரியவில்லை. அதுக்கு காரணம் அவர்களது விளம்பரமோ என்னவோ, ஆனால் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை. எனக்குத் தெரியவில்லை. இது ஈழத்தவர்களுக்கு தற்காலிகமாக திருப்தியாக அல்லது லாபமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது சுலபமாக நல்லது என்று நான் நினைக்கேல்லை.
தலித் இலக்கியம்
தலித் இலக்கியத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒண்டு தலித்துக்கள் தாங்கள் தங்களது பிரச்சினையை எழுதிய முறை. பச்சையாகச் சொன்னால் நானும் டானியலும் இலங்கையில் கையாண்ட முறை. மற்றை யது தலித் அல்லாதவர்களால் எழுதப்படுவது. தலித் இலக்கியம் தலித்துக்களால்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் அல்ல. எங்களை உருவாக்கினதுகூட தலித்துக்கள் அல்ல. எங்களிடம் சிந்தனையை தந்ததும், பின்னணியாக நின்றதும் தலித் அல்லாதவர்களே. பச்சையாகச் சொல்லப் போனால் இலங்கையிலிருக்கிற மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த இடதுசாரிகள்தான் எம்மை இப்படிச் சிந்திக் கக் கற்றுக் கொடுத்தார்கள்.
தலித் இலக்கியம் தலித் இலக்கியம் என்று ஒரு 8 காலகட்டம் வரைக்கும்தான் சொல்ல முடியும். 있 அதற்கு மேலை சொல்ல எதுவும் இருக்க முடியாது. தலித் இலக்கிய போராட்ட அம்சங்கள் இருக்கலாம். வெறும் தலித் இலக்கியத்தாலை மாத்திரம் தலித் ဒို့ခွါးနှီ႕ பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஏனெண்டால் இண்டைக்கு சமூகம் ஒவிரிந்துகொண்டு வருகிறது. கல்விக்களம் விரிவடை

கிறது. அரசியல் போராட்டம் விரிவடைகிறது. அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவும் தலித்துக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், m
இந்திய தலித் இயக்கத்திற்கும் இங்கத்தைய நிலைக் கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கை தலித்துக்கள் மிகப் பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள். முழுத் தமிழ் நாட்டிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தை விட்டால் மற்றைய பிரதேசங்களில் தலித் பிரச்சினை அவ்வளவாகக் கூர்மையடைந்து இருக்கவில்லை. ஆனால் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இது மிக மோசமாக உள்ளது. ஆக தமிழ் நாட்டான் தலித்தியத்தை அணுகுவதற்கும் நாங்கள் அணுகு வதற்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு.
தவிரவும் இப்பதான் தலித்திலக்கியம் எண்ட ஒண்டு வந்து கொண்டிருக்கின்றது. ஏன் இது கல்கி காலத்தில் வரவில்லையா? அகிலன் காலத்தில் வரவில்லையா? ரகுநாதன் காலத்தில் வரவில்லையா? அப்போது அந்த மக்களின் குரல்கள் வெளிவர முடியாத அளவுக்கு அவர்கள் மண்புழுக்களாக இருந்தார்கள். இப்போது அது வெளிவருகிறது. தலித் இலக்கியத்தில் இரண்டு அம்சங்களைப் பார்க்கலாம். ஒண்று ஆரோக்கியமான அம்சம் அதாவது விடுதலை. மற்றது "நாங்கள் விடுதலை". முதல் விடுதலை மானிட குலத்தோடு சேர்ந்தது நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற சிந்தனை. மற்றையது நாம் மட்டும் விடுதலை பெற்றால் போதும் என்கிற விடுதலை. இரண்டாவது போக்கின் காரணமாகத் தான் இன்றைய தலித்தியக்கத்தின் போக்கு மோசமாகி விடுகிறது. இலங்கையில் அந்த உணர்வு இல்லை. இந்தியாவில் அது வெறும் தலித் விடுதலை பற்றியே பேசுகிறது. முழு இந்தியாவுக்குமான தலித்துக்கள் பற்றிப் பேசுகிறது. எனவே அது முழு இந்திய விடு தலைக்கான போராட்டத்துடன் இணைந்து நடக்க வேண்டும்; அனைத்து நேச சக்தியையும் இணைத்து நடக்க வேண்டும். ஈழத்தில் உள்ளது ஒரு பிரதேசம் சார்ந்த ஒடுக்கு முறையே. இலங்கை அரசில் சாதிய ஒடுக்குமுறை அம்சம் பெரிய ஒன்றாக இல்லை. ஆனால் இந்திய அரசில் அது அடிப்படையாக உள்ளது. அங்குள்ள தலித்துக்கள் இந்தியாவின் விடுதலையையும் சேர்த்து யோசிக்க வேண்டும். அப்பதான் அது வெற்றிபெறும் அல்லது தலித்துக்கள் தனிமைப்பட்டுப் போவார்கள்.
இப்போது தலித்துகட்கு இடையேயும் இரண்டு விதமான போக்கும் தமிழ்நாட்டில் வெளிப்படுகிறது. இப்ப நான் சொன்ன அடிப்படையில் வைத்துக் கொண்டு இது வருகிறது. அங்குள்ள தலித்துக்கள் பற்றிய கருத்தை அங்குள்ள மக்களின் நிலைமையை அடிப்படையாக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். இங்கிருந்துகொண்டு தீர்மானிக்க முடியாது. ஏனென்டால் அவர்கள் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். அந்த ஒடுக்குமுறையின் குரலாக தலித்திலக்கியம் வரும் வருகிறது.
நாம் அவர்களது முடிவுகள் தொடர்பாக இங்கத் தைய நிலமையின் அடிப்படையில் கருத்து சொல்வது, அவர்களுடைய போராட்டத்துக்கு நியாயம் சேர்க்கிறதாக இருக்கும் எண்டு நான் நம்பவில்லை.

Page 59
சுரா நினைவுகள்-தன் LDGoflj60III
சிரா பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் ஒருவித சோகம் என்னை இருள் போலச் சூழ்ந்துவிடும். துயரம் என் ஆத்மாவுடன் கூட அலைவது போன்ற ஒரு எண்ணம் என் அன்புக்குரியவர்கள் இறந்தபோது மட்டுமல்லாமல், அவர்களைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் என்னைச் சூழ்ந்து என் மனது மிக ஆழமாகப் புண்பட துன்புறுத்தும் இரகசியமான தொரு உணர்ச்சி,
சுந்தர ராமசாமியை ஜெயகாந்தனுக்குப் பிறகுதான் வாசித்தேன். அவரே இங்கு எங்களுடன் உரையாடிய போது சொன்னது: "பல வாசகர்கள் ஜெயகாந்தன் மூலம்தான் என்னை வந்தடைந்தார்கள். அது உண்மை. அறுபதுகளின் ஆரம்பத்தில் இரத்தின புரியில் உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந் தேன். நானும் ஜோன் வில்சன் என்றொரு மாண வனும் வாசகர்கள். கண்டதை எல்லாம் வாசித்துச் கொண்டிருந்தோம். கல்கி, அகிலன், அதன் பிறகு மு.வ. காண்டேகர். அவர்களையும் முடித்துவிட்டு நிமிர்ந்தபோது தான் ஜெயகாந்தன் என்ற ஆளுமை எங்களை ஈர்த்தார். ஆனந்த விகடனில் அவருடைய முத்திரைக் கதைகளைத் தேடிச் சென்று வாசித்தோம் அன்று அக்கதைகள் எங்களுக்கு புதிய, புதிய உலகங் களை காட்டின. மு.வ.வின் சந்திரன் போன்ற இலட்சிய பாத்திரங்களாக மாறிக்கொண்டிருந்த நான், ஜெயகாந்தனின் விவாதம் செய்து வெற்றி படையும் புதுமைப் பாத்திரங்கள் உள்ளன என்பதை அறிந்தேன். w7ருக்காக அழுதான், பிரண்யம் பாரிசுக்குப் பே7, ஆக்கிணிப் பிரவேசம் போன்றவை எனக்குப் பிடித்தன. அதன் பிறகே, புதுமைப்பித்தன் கதைகள் எங்களுக்கு வகுப்பில் வாசிக்கக் கிடைத்தன து." கதைகண், க7ைம்ப7ண் சிரித்திரம் போன் றவை கிடைத்தன. பார்த்தசாரதியின் தீபம் கிடைத் தது. அதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன் றோருடைய கட்டுரைகள் கிடைத்தன. இரத்தின புரியில் தமிழ் நூலகம் இல்லை. அறுபதுகள் மத்தியில் பல்கலைக்கழகம் வந்தபோதுதான் சு.ரா.வின் பிரசாதம் தொகுதி கிடைத்தது. அன்று, அவரின் அங்கதச் சுவையிலும் மனிதாபிமானத்திலும் மனதைப் பறி கொடுத்தேன். இன்றுவரை அவர் எழுதிய கதைகள், நாவல்கள், கட்டுரைகள். கவிதைகள் அத்தனையையும் வாசித்திருக்கிறேன் என்பதில் எனக்குச் சிலவேளை பெருமைகூட இருக்கின்றது ஒரு எழுத்தாளரை எனக்குப் பிடித்துவிட்டதென்றால் அவரின் அத்தனை படைப்புக்களையும் ஒன்று விடாமல் வாசிப்பது எனது பழக்கம். அவரின்
 
 

எழுத்தாலும் நட்பாலும் க நடந்தவர்
எழுத்துக்கள் எனக்கு அவரில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியிருந்தது.
1993 இல் நண்பர்கள் குமார் மூர்த்தியும், செல்வ மும், நானும் சுரா அமெரிக்காவில் வந்திருக்கிறார் என்பதை பத்மநாப ஐயர் மூலம் அறிந்தோம். அவரைத் தொலைபேசியில் அழைத்து இங்கே வரும் படி அழைத்தோம். எங்களை அவருக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. வாசகர்கள் என்று அறிவித் தோம். சரி வரச் சம்மதம், விசா எடுப்பதற்குக் கடிதம் ஒன்றை அனுப்புங்கள் என்றார். காலம் சஞ்சிகை சார்பாக கடிதம் அனுப்பினோம். விசாக் கிடைத்தபோது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அடுத்தது, யாருடன் தங்க வைப்பது என்ற பிரச்சினை. எங்கள் வீடு சிறிய வீடுதான். ஆனால், மனம் பெரியது. அக்காலத்தில் நண்பர்களின் வீடுகள் வசதியற்றவை. என்னுடைய மகனின் அறையை ஒதுக்கிக் கொடுத் தேன். அறை சிறியது. அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. புத்தகங்கள் நிறையவே அவ்வறையில்
r
T

Page 60
58
58
இருந்ததும் காரணமாக இருக்கலாம். ஒரு கிழமை தங்கினார். ஒருநாள் ரொறொன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் பத்திரிகைகளில் அறிவித்துக் கூட்டம் வைத்தோம். கூட்டத்தில் பேசுவதற்காக எழுத ஏதாவது தாள், பேனை வேண்டுமா ? என்று கேட்டேன். எழுதிப் பேசாவிட்டால் என் சிந்தனை சிதறிப் போய்விடும் என்ற ரகம், நான். அவரை அறிமுகப்படுத்திப் பேசும் பொறுப்பு என்னுடையது. மூர்த்தி தலைவர். கூட்டத்திற்கு வந்தோரில் ஒரு சிலரைத் தவிர, அவரை வாசித்தவர்கள் மிகக் குறைவு. இந்திய இராணுவத்தின் அடாவடித்தனம், ஈழப் போராட்டம், அதைவிட, எழுத்தாளர் டானியல், பிறகு மு. தளையசிங்கத்தைப் பற்றிய விவாதம். இவையே வந்திருந்தவர்களின் அதிகபட்ச இலக்கிய அறிவு. சுரா எதுவித குறிப்புக்களும் இல்லாது பத்து நிமிட அன்றைய இலக்கிய நிலை பற்றிப் பேசினார். பின்னர், கேள்வி பதில் நேரம். ஆரம்பமே டானியலின் நாவல்களின் இடம் பற்றிய தாக அவரிடம் கேட்கப்பட்டது. டானியலின் நாவல்கள் நாவல்களாகத் தேறவில்லை என்று அவர் சொன்னதுடன், விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. நீங்கள் டானியலின் எத்தனை நாவல்களை வாசித் திருக்கிறீர்கள் என்ற இடக்கு மடக்கான கேள்விகள். பெரிதாகப் பேசப்பட்ட பஞ்சமர் நாவலைத் தான் வாசித்ததாகவும் அது நாவலாகத் தேறவில்லை என்றும் தன் பக்க நியாயங்களைக் கூறினார். விவாதத்தில் பங்குபற்றியவர்களின் சத்தமும் கைதட்டல்களும் அதிகரித்தன. டானியலின் எல்லாப் படைப்புக்களையும் வாசிக்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாது என்றும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அவரை நெருக்கடிக் குள்ளாக்கினார்கள் வாதித்தோர். அப்போதும் சுரா தன் மதிப்பீட்டை மாற்றவுமில்லை. சமாளிக்கவும் இல்லை. அது சுராவின் சுதந்திர மனதையும் நேர்மை யையும் உறுதியையும் எமக்குத் துல்லியமாகக் காட்டிய நிகழ்வு. அவரின் அந்நிலைப்பாட்டால் எங்கள் மதிப் பீட்டில் மேலும் உயர்ந்தார். அடுத்தது, இந்திய இராணுவத்தை சுரா தான் ஈழத்திற்கு அனுப்பி அங்கு அட்டூழியங்களைச் செய்வித்தார் என்பது போன்ற கேள்விகள். அதில் ஒருவர் அவரை உங்களுடைய மகளுக்கு இப்படி நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூடக் கேட்டார். முதளைய சிங்கத்தின் சர்வோதயத்தை ஆரியரத்தினவின் சர்வோதயத்துடன் குழப்பி மு.தளையசிங்கத்துக்கு மாசு கற்பிக்க வெளிக்கிட்டனர் சிலர். மு.தளைய சிங்கத்துடன் சர்வோதய இயக்கத்திலும் சாதிப் போராட்டங்களிலும் இணைந்து வேலை செய்தவன் என்ற முறையில் அதற்கு விளக்கம் அளித்தேன். இப்படி அவரின் மதிப்பை உணராதவர்கள் மத்தியில் அவரைப் பேச வைத்ததற்காக நாம் பின்னர் வருத்தப் பட்டோம். ஈழத்தவர் எதையும் அரசியலாக்கப் பழக்கப்பட்டவர்கள். அவர்கள் நிலை அப்படி. அக்கூட்டத்தில் அவருடைய எழுத்துக்கள் பற்றியோ தமிழ் இலக்கியம் பற்றியோ உரையாடாமல், அதை ஈழத்து அரசியல் மேடையாக்கியதையிட்டு சில நண்பர்கள் பின்னர் வருத்தம் அடைந்ததாகக் கேள்விப்பட்டேன். அதன் பிறகு அப்படிப்பட்ட கூட்டங்களை நாம் கூட்டவில்லை. தனிப்பட்டவர்கள் அவரை அழைத்து உரையாடினர். ஒவியர்கள்,
(s
se

விஞர்கள், எழுத்தாளர்கள். பத்திரிகையாளர்கள் அதில் அடக்கம். .
சுரா இயற்கையை நன்றாக ரசிப்பவர் என்பதை அவரை நாங்கள் கூட்டிச் சென்ற இடங்களில் அறிந்தோம். நயகரா நீர்வீழ்ச்சியை அவர் பலமுறை கிரும்பத் திரும்பச் சென்று நின்று நின்று பார்த்தது பட்டுமில்லாமல் இன்னொரு முறை திரும்பி வந்து ார்ப்போம் என்று சொல்லிவிட்டே எங்களுடன் பிரிந்து வந்தார்.
ரோறொன்ரோ டவுன்ரவுணில் இருக்கும் உலகப் பெரும் நூல் விற்பனை நிலையத்திற்குக் கூட்டிச் சென்றேன். அங்கு அவர் வாங்கியது ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ். புதிய பதிப்பு. சுராவுடன் தைத்தபோது அவர் நல்ல வாசகர் என்பது தெரிய பந்தது. தமிழ், ஆங்கில, மலையாள மொழிகளில் பந்த தேவையான நூல்களை நுட்பமாக வாசித்து அறிந்திருந்தார். உலக இலக்கியங்களில் நல்ல ரிச்சயம் இருந்தது. காநசு பரம்பரையில் வந்தவர். அவர் மொழிபெயர்த்த செம்மீன் நாவலை அறுபது ளில் வாசித்திருந்தேன். அதைக் கடலோரத் தமிழ் ாவல் போலவே அன்று உணர்ந்திருக்கிறேன். நயகரர் ர்வீழ்ச்சிக்குப் போய்க்கொண்டிருக்கும்போது ஐந்து )ாஜிக் கொம்யுனிஸ்டுகளின் கட்டுரை நூலை - சர்ந்து எழுதிய த கொட் தற் ஃபெயில்ட் என்ற ாலை- நான் குறிப்பிட்ட பொழுது அந்த ஐவரையும் நறிப்பிட்டார். அவர்களைப் பற்றியும் சொன்னார். என்னுடன் தங்கிய ஒரு கிழமையிலும் லுவருடைய எளிமையான நடைமுறைகளை அவ ானித்தேன். எந்த ஆடம்பரமுமற்ற மற்றவர்களைப் ரிந்துகொள்ள முயலும் நல்ல மனமுள்ளவர். ற்றவர்களைப் புண்படுத்தவோ நோகடிக்கவோ பிரும்பாதவர். நட்பு அவருக்கு மிக முக்கியம். ண்பர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய மனைவி, 5ழந்தைகள் கூட அவருடைய நட்பு வட்டத்துக்குள் பந்தவர்கள். நண்பர்களுக்குக் கடிதம் எழுதும்போது அவர்களுடைய மனைவி, குழந்தைகளின் சுகங்களைக் கட்காமல் விட மாட்டார். இந்தியா வரும்போது ாகர்கோயிலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்து 1ார். கடைசியாக, மூர்த்தி உடல்நலம் இல்லாமல் சன்னையில் நின்ற பொழுது நாகர்கோயிலுக்கு ரச் சொல்லி பலமுறை சொல்லியிருக்கிறார். மூர்த்தி ன் சுகயினம் காரணமாக அங்கு கடைசிவரை பாகவில்லை. மூர்த்திக்கும் சுராவுக்கும் அது மிகக் 6) GO)6).
ஒரு கிழமைக்குப் பிறகு சுரா ரொறொன்ரோவை பிட்டு லண்டன் பயணமானார். திரும்பி அமெரிக்கா பாகும்போது விமான நிலையத்திற்குச் சென்று புவரைக் கண்டோம்.
திரும்பி அமெரிக்கா வந்து இரண்டாவது மகள் ங்குவோடு டிற்றொயிற்றில் நின்றபோது திரும்பவும் ானும், செல்வமும், செல்வா கனகநாயகமும் சென்று ார்த்தோம். அப்போது கமலா அம்மாவையும், ங்குவையும் அவர் கணவர் ராமையும் சந்தித்தோம். புங்கு அவரைப் பார்ப்பதற்கு சிறிதரனும் மனைவியும் ாந்திருந்தார்கள். நாங்கள் போனபோது மதியம் 'ரும்பி விட்டது. எங்களுக்காக மதிய உணவு ாப்பிடாமல் காத்திருந்தார்கள். நாங்கள் போனதும் ாப்பிட்டுவிட்டு மாலையே திரும்பி விட்டோம்.

Page 61
அவரைச் சந்தித்த பொழுதெல்லாம் எமக்கு அவரிலிருந்த அன்பும், அவர் எங்களில் காட்டிய அக்கறையும், பரிவும் அன்பும் என்றும் மறக்க முடி பTத்து.
திரும்ப அவரைச் சந்தித்தது, இயல் விருதுக்காக அவரும் கமலா அம்மா வும், பின்னர் தங்குவும் ராமுவும் இங்கே வந்தபோதுதான். மூன்றே மூன்று நாட்கள்தான் தங்கியிருந்தார் கள், ஹோட்டலில், ஒவ்வொரு நாளும் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடைசி நாளன்று திரு. முத்துலிங்கம் வீட்டில் விருந்து. பல நண்பர்கள் வந்திருந்தார்கள். மனம் திறந்து மிகச் சந்தோசமாக கதைத்தார். அதில் ஒன்று, அன்று தான் தன் கையால் உணவு போட்டுச் சாப்பிடுவதாகவும், இதுவரை கமலா அம்மா அல்லது பிறர் போட்டுச் சாப்பிட்டதாகவும் சொன்னார். பெண்ணியக்காரர் எழுதுங்கள், என்று அங்கிருந்த பெண்ணியக்காரர் ஒருவரிடம் பகடியாகச் சொன் னார். இன் னொன்று, சினிமாக் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதையையும் இனிமேல் எழுதப் போகும் கவிதையைக் கூடச் சொல்வார் என்றார். நகைச்சுவை மிக்க உரையாடலில் கைதேர்ந்தவர், அவர் சிலவேளை மற்றவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பார். எதையும் பேசாமல், எதிர்வினை செய்யாமல், அவரிடமிருந்தது, ஆழம், நகைச்சுவை, அறிவு, தீர்க்கமான மதிப்பீடுகள், முடிவுகள், ஜனநாயகப் பண்பு, நட்பு மற்றவர்களைப் புண்படுத்தாத தன்மை. அவை அத்தனையுமே அவர் வளர்த்தெடுத்த பண்புகளா ? அல்லது அவரின் இயல்பான பண்புகளா? அப்படி வளர்த்தெடுக்கக் கூடியவை தாமா, அவை சுரா என்றொரு மனிதனு டன் பழகும்போது மற்றவர்க்கும் அம் மக்கட் பண்பு தொற்றிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட் டால் அவருடைய அரிய பெரிய குணங்கள் பல வற்றை நாம் காணும் எழுத்தாளர்கள் பலரிடம் கான் முடி Tது.
கடைசியாக நான் அவரைச் சந்தித்தது. நாகர் கோவிலில், கொழும்பிற்கு மனைவியுடன் 2001 ஆம் ஆண்டு போனபோது, மூன்று நாட்கள், இந்தியா போய் வரவேண்டும் என்று எண்ணினோம். விவேகா நந்தர் அமெரிக்கா போகுமுன்பு கடைசியாக தியானம் செய்த பாறையில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அதேவேளை, நாகர்கோவிலில் சுராவைச் சந்திப்பது, அங்கு ஜெய மோகன் இருப்பதால் அவரையும் சந்திப்பது என்று முடிவு செய்தேன். திருவனந்தபுர ஹோட்டலில் விடுதி. அங்கிருந்து சுராவையும் ஜெயமோகனையும் தொலைபேசியில் அழைத்தேன். வாருங்கள் என்றார் கள், பஸ்ஸில் நாகர்கோவிலில் சென்று இறங்கினோம். ஒரு ரக்ஸியைப் பிடித்து சுரா வீட்டு விலாசத்தைக் கொடுத்தபோது ரக்ஸிக் காரருக்கு அது நன்றாகத் தெரியவில்லை. வீட்டடிக்குப் போனபோது தான் சாரதி சொன்னார். நீங்கள் சுதர்ஸன் கடை ஐயா என்று சொல்லி யிருக்கலாமே. தங்கமான மனிதர் என்றார். உண்மையில் சுதர்ஸன் கடை என்ற பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், அந்தச் சாரதியின் குரலில் இருந்த கனிவு சுராவிடம் அவர்களுக்கிருந்த
 

அன்பையும் பாசத்தையுமே எனக்குக் காட்டியது.
சுரா மிக எளிமையாக வேட்டி, கட்டை பனியனில் நின்றார். கமலா அம்மா, கண்ணன் அப்போது கொழும்பில், கண்ணன் மனைவி, குழந்தைகள், எம்.எஸ். மனுஷ்ய புத்திரன், கவிஞர் மகாதேவன், நெய்தல் கிருஷ்ணன் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. நெய்தல் கிருஷ்ண னைத் தவிர்ந்த மற்றவர்களுடன் கதைக்கச் சந்தர்ப்பம் கிட்டவில்லை. மனுஷ்ய புத்திரன் சென்னைக்குப் போகும் அவசரத்தில் இருந்தார். சாப் பாட்டு மேசையில் மனுஷ்ய புத்திரன் அமைதியாக எதுவும் பேசாமல் இருந்தார். பிரயான டிக்கெற்றில் ஏதோ பிரச்சினை என்று கண்ணனின் மனைவி பின்பு சொல்லிக்கொண்டிருந்தது எனக்குக் கேட்டது. லஞ்சம் கொடுத்தால் டிக்கற் கிடைத்திருக்கும். அதற்கு மனுஷ்ய புத்திரன் மறுத்துவிட்டதாகக் கதை. வளர்முக நாடுகளின் சாபக்கேடும், ஒரு சில தனி மனிதர்களின் எதிர்ப்பும். எதிர்ப்பு எவ்வளவு காலம் நீடிக்கும். அதை விழுங்கிவிடும் பெரும் சுனாமி பேரலை லஞ்சம். எம்.எஸ். நான் கேள்விப்பட்டது போலவே மிக மிக அமைதியானவர். அங்கிருப்பதோ நிற்பதோ தெரியாத காற்றுப் போல, வீட்டின் முன்னா லுள்ள ஒரு அறை அவர்களது அலுவலகம் போலும் அதற்குள் போப் எம்.எஸ். அவ்வாண்டு கீ7விச்சிதிை வெளியிடும் நூற்பட்டியலை எழுதி எனக்குத் தந்தார். மகாதேவன் தனது கவிதைத் தொகுதியை எனக்கு அன்பளிப்புச் செய்தார். அந்த வீட்டில் எத்தனை எழுத்தாளர்கள் வந்திருந்து போனார்கள் என்ற நினைத்தபோது அதற்கோர் பிரமாண்டமும், சடை பப்ப வள்ளலின் அடையா நெடுங்கதவாகவும் அது காட்சியளித்தது. சடையப்ப வள்ளலின் பெரிய வீடும் அடையா நெடுங்கதவுகளும் திறந்தே கிடந்தன. விறாந்தையில் நின்றால் கூடம், வலது பக்க உணவு மேசை, இடது பக்கம் இன்னொரு பெரிய இடம், அதன் பக்கத்தால் அறைகளுக்குப் போகும் விறாந்தை எனது சுபாவத்தில், எடுத்த உடனே, வீடுகளுக்குள் போய்ப் பார்க்கும் பழக்கம் இல்லை. எனது மனை விக்கு கமலா அம்மா வீட்டை ஒரளவு காட்டியிருக் கின்றார். வீட்டைச் சுற்றி காணி, மரங்கள் இருக் கின்றன என்பது என் ஊகம். வீட்டிற்கு முன்புறம், மரங்கள். அதற்கு முன் நின்று, வெளிக்கிடும்போது படம் எடுத்துக்கொண்டோம். வீட்டு விறாந்தையை பார்த்தபோது ஜி.நாகராஜன் இந்த இடத்தில் தான் சிலவேளை படுத்திருக்கலாம். இந்த இடத்தில் தான் கண்ணனுக்கு கதை விட்டிருக்கலாம் என்று யோசித் தேன். சுந்தர விலாஸ் என்ற பெயர் குறித்த சுவரின் பக்கத்தில் சுராவைத் தேடி வந்த, அவரை எழுப்பா மல், நாகராஜன் படுத்திருக்கலாம்.
அந்தப் பெரிய வீடு, எத்தனை எழுத்தாளர்களின் கால்களின் தூசியைத் துடைத்திருக்கும். அதில் ஈழத்த வர்களும் சிலர் எழுத்தாளர்கள் என்றவுடன் அவர் களில் அதிகமானோர் கிறுக்குகள். அவர்களின் கிறுக்குத்தனத்திற்கு ஒரு குடும்பம், அதன் அங்கத்த வர்கள் பொறுமை காத்திருந்திருந்திருக்கிறார்கள்.
ான பணிகர்ை ரி பங்Tே அது கரா என்ற மனிதனுக்காக தனி மனித சுதந்திரம்,

Page 62
ced
ed ČNJ
குடும்பம் வேறு, இலட்சியம் வேறு என்றிருக் கும் மேல் நாட்டில் வாழும் எங்களுக்கு அத்தன்மையைப் புரிந்து கொள்வது மிக மிகக் கஷ்டம். அது இந்தியப் பண்பு. அதிலும் மிக மிக வித்தியாசமான பண்புள்ள வர் சுரா, அந்த அதிசயமான மனிதர் போன பிறகு அந்த வீடு நவீனமயப்படுத்தப்பட்டு விடும், அது இயல்பு. கூட்டுக் குடித்தனத் தின் பண்பு குறைந்து விடுவதும் இயல்பே. அதுவும் எழுத்தாளர் களை அணைப்பது, அதுவும் கிறுக்குகளை அணைப்பது தேவையற்றது. சுரா என்பவர் நூறாயிரத்தில் ஒருவர்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே ஜெயமோக னும், வேதசகாயகுமாரும் என்னைத் தேடி வந்து விட்டார்கள். ஒரு மணி நேரம் மட்டில் அவர்களுடன் இருந்து சுராவும் நானும் கதைத்தோம். அப்பொழுதே விவேகாநந்தர் மடத்திற்குச் செல்வதாகவும் அடுத்த நாள் அங்கிருந்தே திரும்பி திருவனந்தபுரம் செல்வ தாகவும் சொன்னேன். தன்னுடன் நின்று போகக் போவதாக நம்பியிருந்த சுராவுக்கு அது ஆச்சரியமாக இருந்ததுடன் கவலை யாகவும் இருந்ததுபோலவும் எனக்குப் பட்டது. வேதசகாயகுமாரின் காரில் நான், என் மனைவி, ஜெயமோகன், எம்.எஸ், ஆகியோர் கன்னியாகுமரிக்குச் சென்றோம். கன்னியாகுமரி கடற்கரையில் நல்ல காற்று வீசியது. திருவள்ளுவர் சிலைக்கு அருகில் நின்று இரண்டு மணி நேரம் கதைத்திருப்போம். அங்கும் எம்.எஸ். சாட்சியே. எவ்வளவோ அனுபவம் நிறைந்த, ஆழ் கடலைப் போன்ற ஒரு மனிதர் இத்தனை எளிமையாக இருப்பதைச் சந்திப்பது மிக அபூர்வம். பின்னர் கடையில் சாப்பிட்டு விட்டு, விவேகாநந்தர் மடத்தில் அறை எடுத்தோம். காலையில் சூரியோதயம், விவேகாநந்தர் பாறையில் தியானம், கன்னியாகுமரிக் கோவில் தரிசனம், முக்கடல் கூடுமிடக் காட்சி, காந்தி மடம், போன்றவை, விவேகாநந்தர் மட அருங்காட்சியகம். ஒரு பகல் போதவில்லை. இந்திய ஞான ஊற்றுக்கள் எங்கெங்கெல்லாம் கரை புரண்டு ஒடுகின்றன. தியானம் அற்புதமாக அமைந்தது. முக்கடலின் சங்கமிப்பு முனையில் நின்று பார்த்த போது எனது சிறிய தீவு என் மனக்கண்ணில் தெரிந்தது. காலைச் சூரியோதயம் என் சின்னஞ்சிறிய தீவின் கடற்கரையில், எங்கள் வீட்டின் கோடிப்புறம் ஓர் இருநூறு யார் நடந்து சென்று காணும் அதே காட்சி. என் இள வயதுகளில் ஆயிரக்கணக்கான முறை தரிசித்த காட்சி மீண்டும் மீண்டும் என் மனத்திரையில், பழைய நினைவுகளை மீட்டன.
எனது நாட்டை விட்டுச் சென்றதால் மீள முடியாத
இழப்புக்களில் அதுவும் ஒன்று.
அடுத்த நாள் மதியம் ஜெயமோகன், வேதசகாய குமார் எங்களைக் கூட்டிச் சென்று பல இடங்களைக் காட்டினார்கள். பழைய ராசாக்களின் உடைந்த கட்டிடங்கள், கடற்கரைகள். ஜெயமோகன் வீட்டில் மதிய உணவு. அவரின் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள மலையும் மலை சார்ந்த பனி மூட்டங்களும் இரத்தின புரி கால நினைவுகளை மீட்டன. அவரின் மாடியில்
கிடுகால் வேய்ந்த தாழ் வாரத்தில் ஒரே உரையாடல்.
மாலை பஸ் ஏறி திரும்பவும் திருவனந்தபுரம். பத்மநாபர் கோயில் தரிசனம். அடுத்த நாள் கொழும்பு
சுராவைக் கடைசியாகக் கண்டது அதுவே.
ஓஅமெரிக்காவில் சுகவீனமாக இருக்கிறார் என்று
:
s
<二
lu

கேள்விப்பட்ட போது அது சாதாரணமானது என்றே ாடுத்துக்கொண்டேன். அவர் இறந்து போவார் ான்ற எண்ணம் எனக்கு உறைக்கவே இல்லை. சுகவீனம் மிகக் கடுமையாகி வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர்கூட, என் மனம் அவர் இறப்பார் ான்பதை நினைக்கத் தயாராக இல்லை. பிழைத்து விடுவார் என்றே நம்பியது. காரணம், அவர் உண்ணும் உணவில் கவனம் உடம்பைப் பேணுவதில் கவனம். நேர்ய ஆரோக்கிய நிமிர்ந்த உடம்பு. ஒவ்வொரு 3ாளும் நடப்பவர். எதிலும் மனதிலும் சரி, உடலிலும் Fரி, சமநிலையைப் பேணுபவர். தைலாவின் மின்னஞ்சல்கள் அத்தனை நம்பிக்கையைக் கொடுக்க வில்லை. அவர் இறந்ததைக் கேள்விப்பட்டவுடன் ான் நம்பிக்கைகள் என்னைக் கைவிட்டது மட்டு மின்றி, நான் ஏன் அப்படி நம்ப மறுத்தேன் என்ற கேள்வியே எனக்கு ஏற்பட்டது. அவர் சாகமாட்டார், அவர் படைத்த இலக்கியமும், கட்டுரைகளும் நினைவு 5ளும் அழிய மாட்டாதவை என்பதாலா ?
அவரளவு, தமிழ் இலக்கிய உலகில் அனைவருக்கும் மனிதனாக, நண்பனாக, ஆசானாக, விருந்தோம்புபவ "ாக, மக்களில் அக்கறையுள்ளவராக, குடும்ப நண்ப "ாக, மானிடத்தை நேசித்தவராக நடமாடியவர் ஒருவர் இல்லை என்றே சொல்வேன். இளமையி பிருந்து இறக்கும்வரை உண்மையான, உயர்ந்த, இலட்சிய மனிதனாக வாழ்ந்து இறந்தவர் அவர். இலட்சியங்களை உடைய இலட்சிய மனிதர்கள் அருகி வரும் காலமிது.
சுரா இன்றும் என்னுடன் கம்பீரமான உண்மை மனிதனாக என்னுடன் உரையாடிக் கொண்டிருக் θpπfr. O
DR. LANGO I ASSOCIAE
on Oce
பல் மருத்துவ நிலையம்
பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
sruogi Caesaros
Dr. M. LANGO 0LLLS0S SS LLLLLS LLLLLLS LLLLLSSLeeeLLLLL LLLLOMLM LLLLLLLLLL sắara asi kaPBSA
Dr. MEHRAIN MOUGAN အိ& D.D.S. Dip Perio, Gun Speais uapga angi Agai
Er. SABABA"HY RAVENDİRAN BS, M.S. FOSRCSErg, Geresa Proctitione Mory Oa
ás fašisarkaš
Dr. A. A.):FAR D.C.S., M., F.R.C.C. Postic Surgeon ఏడవడి မိမိဖါး••
Or... ANAK LANGO 8.03. குடும்ப பல் வைத்தியர்
or ANY A
w88.8 * : இத்**
SAKROSji MASA 383 first; Aws3 £asì, ijril 26,333 3čš kriš,
§čaftxxokagin, (* %;&&3&&&ණුෂ් (''M' 4ts astock esca

Page 63
தொடரும் உரையாடல்
பதிவாகும்
(nafia
நான் அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெறுவதற்கு இரண்டாண்டுகளே இருந்தபோது, ஓய்வு பெற்றபின் காலம் எப்படிக் கழியப்போகிறது என்ற கவலைகள் என்னை வருத்தத் தொடங்கின. தில்லியில் அதி: நாட்கள் அதன் பின் இருக்க முடியாது. பொறுப்புகள் நிறைய. கிடைக்கும் ஓய்வூதியம் வரவிருக்கும் செலவு களுக்குப் போதாது. வாழ்க்கை வசதிகளைத் தேடி கொள்வதில் சாமர்த்தியமும் இருந்ததில்லை. மனமுட சென்றதில்லை. நாற்பது வருடங்களாக ஏதோ உலகில் மிதந்துகொண்டிருந்தது போக அது வெகு சீக்கிரட ஒரு முடிவை நோக்கி விரைந்துகொண்டிருந்த சமய தில் தான் ஓர் இரவு விரையும் கார் ஒன்று மோதி கால் எழும்பு முறிந்து 15-16 மாதங்கள் படுக்கையில் ப்ளாஸ்டரில் கட்டுண்ட காலுடன் தள்ளப்பட்டிரு தேன். வயதாகிவிட்டதால், முறிந்த எலும்பு திரும் சேர மறுத்தது. சேமித்து வைத்திருந்த விடுமுறையுட பணமும் கரைந்து போக, படுக்கையிலிருந்து விடுபட்டு வேலையிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்று முன்னம் இருந்த கவலைகள் இன்னுட தீவிரமாக வருத்தத் தொடங்கின. இப்போதிருந்தே படுக்கையிலிருந்தே எழுதி ஒரு இடத்தை தில்ல ஆங்கில பத்திரிகைகளில் ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நடமாடித் திரிந்த காலத்தைவிட, கட்டுண்ட கால்களுடன் படுக்கை யிலிருந்து கொண்டு நிறைய எழுதத் தொடங்கினேன் என்பது ஒரு விடம்பனம். மனித மனம் எப்போது எப்படியெல்லாம் வினையாற்றும் என்பதே ஒரு புதிர்தான்.
அது இலங்கைத் தமிழர் போராட்டம் தீவிர மடைந்துகொண்டிருந்த காலம். அப்போது "கோவிந்தன்' என்ற புனைபெயரில் ஒருவர் எழுதிய ஒரு புது உலகம் புத்தகம் கிடைத்தது. ஏதோ ஒரு பெயர் சொல்லப்படாத விடுதலை இயக்கத்தில் தீவிரமாக இருந்த ஒரு போராளி அந்த இயக்கத்தின் கொடூர கெடுபிடிகளுக்கும் இரட்டை வாழ்வுக்குப் ஈடு கொடுக்கமுடியாமல், தப்பித்து சென்னைக்கு வந்தவர், தன் அனுபவங்களை எழுதுகிறார். தான் எப்போதும் கொல்லப்படலாம் என்று அப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியவர் இப்போது இல்லை என்ற செய்தியும் அப்புத்தகத்தில் சொல்லப்பட்டி ருந்தது. அப்போது அதற்கு சில வருடங்கள் முன் படித்திருந்த இரண்டு புத்தகங்கள், மு.தளைய சிங்கத்தின் ஒரு தனி வீடு (1962-ல் எழுதப்பட்டு 1984-ல் பிரசுரமானது), அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வடது வந்து விட்டது (1973) இரண்டும் நினைவுக்கு வந்தன. இம்மூன்றும் ஈழத்தமிழர் போராட்டத்தின் வளர்ச்சியில் காணும் மூன்று கட்டங்களைக் குறிப்பதாகத் எனக்குத் தோன்றியது
 
 

சரித்திரங்கள்
TIDpTir
தளைய சிங்கத்தின் நாவல், 1948 (டட்லி சேனனாயக கொண்டு வந்த குடியேறிய தமிழர்களுக்கு குடி உரிமை மறுப்பு) 1956 (பண்டார நாயகவின் சிங்கள பெளத்த மேலாண்மை) போன்ற அரசியல் மாற்றங் கள் தமிழர் இனி தம் உரிமைகளை, அடையாளங் களை இழந்து ஒன்று சேர்ந்து வாழமுடியாது, தனித்துத் தான் வாழவேண்டும் என்ற ஒரு கருத்து, அரசியல் இயக்கமாக வடிவம் கொள்ளாத காலத்தே முளை விடத் தொடங்கிவிட்டதை மு. தளையசிங்கம் தன் நாவலிலும், அது தனி மனித வாழ்வின் பிரச்சினை யாக வெளிப்படத் தொடங்கி விட்டதை, அருள் சுப்பிரமணியத்தின் நாவலும், அது நாடு தழுவிய போராட்டமாக வளர்ந்து விட்டதை, நாவல் என்று சொல்லப்படாத, கோவிந்தன்-ன் சுயசரிதத்திலும் வெளிப்பாடு பெற்றுள்ளது தெரிந்தது. ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் திருப்பங்களிலும், ஒரு மனித உரிமைப் போராட்டம், அவ்வப்போதே படைப்பு களாக பதிவு பெற்றுள்ளதைக் காண எனக்கு ஆச்சரிய மாக இருந்தது. தமிழ் நாட்டில் சுதந்திரப் போராட்டம் ஒரு தீவிர இயக்கமாக இந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே ஒரு தீவிர இயக்கமாக வளரத் தொடங்கியாயிற்று. வ.வே.சு ஐயரும் பாரதியும் புதுச்சேரி வந்ததும், வாஞ்சிநாதன் துப்பாக்கி பயிற்சி பெற்றதும், கலெக்டர் ஆஷ் சுடப்பட்டதும், வவு.சி. சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டது, அந்த ஆரம்ப பத்து வருடங்களில் தொடங்கியாயிற்று. இந்த நூறு வருடங்களில் தமிழில் அந்த போராட்டம் பற்றி சொல்ல ஏதும் அதிகம் இல்லை. பாரதியைத் தவிர, சி.சு.செல்லப்பாவின் சிறுகதைகள் (சத்யாக்கிரகி), பின் கடைசிக்காலத்தில் இறப்பதற்கு முன் எழுதிய மூன்று பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் நாவல், இவ்விரண்டைத்தவிர. 1949-ல் தான் கல்கி அலை ஓசை எழுதத் தொடங்குகிறார். அந்தக் காவிய காதல் கதையையும் சேர்த்துக்கொள்வதாக இருந் தால். ஆக, ஒரு நாட்டின் சுதந்திர போராட்டம், சுமார் அரை நூற்றாண்டு காலம் நீண்ட ஒரு மகத்தான சரித்திரம் அந்நாட்டின் இலக்கியத்தில் சரிவர பதிவு பெறாமலேயே போய்விட்டதென்றால், அந்த நாட்டின் ஆத்மா ஏதோ வகையில் களங்கப் பட்டதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ஈழத்தமிழர் தம் சரித்திரத்தை அதன் ரணம் தோய்ந்த அத்தியாயங்களை காயம் ஆறுவதற்கும் சாலைகளில் சிந்தித் தோய்ந்த இரத்தம் காய்வதற்கும் முன்னா லேயே தம் எழுத்துக்களில் பதிந்து விடுகிறார்களே. ஈழத் தமிழரை, தமிழகத் தமிழரிடமிருந்து வேறுபடுத்து வது எது? இடையில் அலைமோதும் பாக் ஜலசந்தி ஏன் இத்தகைய குணமாற்றத்தை விளைவிக்க வேண் டும்? இம்மூன்று புத்தகங்கள் பற்றியும் அவை பிரதி
s
s

Page 64
பலிக்கும் சரித்திர திருப்பங்களைப் பற்றியும் எழுதி னேன். ஜூன் 1988-ல், படுக்கையில் மல்லாந்து படுத்தவாறே எழுதிய கையெழுத்துப் பிரதியை பத்திரிகையின் உதவி ஆசிரியர் வீடு வந்து வாங்கிச் செல்வார். தில்லியின் எந்த ஆங்கிலப் பத்திரிகையும் வேறு யாருக்கும் இப்படிச் செய்தார்களா தெரியாது. உதவி ஆசிரியர் என் எழுத்தை விரும்பிய நண்பர். அவர் எனக்குக் காட்டிய சலுகை என்றே நினைக் கிறேன்.
அடுத்ததாக என்னைக் கவர்ந்தவர் கேடானியல். மார்க்ஸிஸ்ட் முதலில் என் கைவசப்பட்டது, நண்பர் பிரகாஷ் பிரசுரித்த பஞ்சமர் என்னும் நாவல். அவரது கடைசி நாவல். அவரது மார்க்ளிய கடமை களை செவ்வனே ஆற்றியிருப்பார். கிராமத்து தலித் விவசாய்க் கூலிகள் போர்க்கொடி தூக்குவார்கள். அது பெருந்தீயாக சுற்று வட்டாரம் முழுதும் பரவும். புரட்சிக் கனவுகள்தான். அதுதான் அவரது கடைசி நாவலும். ஆனால், அவரது முந்தைய எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தன. கானல், அடிமைகள், கோவிந்தன் எல்லாமே. இவற்றில் எல்லாம் அவர் தம் வாழ்க்கை அனுபவங்களை மாத்திரமே சொல்லியிருப்பார். கம்யூனிஸ்ட் புரட்சி என்றெல்லாம் கதைகள் அளந் திருக்கமாட்டார். இவையெல்லாம் மிக உண்மையும், நேர்மையுமான தலித் வாழ்க்கைப் பதிவுகள். ஆனால் அங்கு ஈழத்தில் அப்போது இலங்கையில் நாட்டாமை புரிந்த கொமிஸார்கள் இருவருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன். அவர்களது ஆசிகள் டொமினிக் ஜீவாவோடு நின்று விட்டன என்று தோன்றுகிறது. டொமினிக் ஜீவாவும் தன் நன்றியறிதலைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் விஷயம் என்னவென்றால், அப்போது தமிழ் நாட்டில் பூமணியைத் தவிர தலித் வாழ்க்கை நிதர்ஸனக் காட்சியாக இருந்த போதிலும் வேறு யாரும் கண்டு கொள்ளவில்லை. சாதி ஒழிப்பு பற்றி நிறைய அரசியல் மேடைப்பேச்சுக்கள் பலக்கக் கேட்கும். அவர்கள் ஒழிக்க எண்ணியது பிராமண ஜாதியை மாத்திரமே. மற்ற ஜாதிகள் இன்று வரை மிகுந்த ஆக்கிரோஷத்து டன் காப்பாற்றப்பட்டு சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகின்றன. ஒரே ஒரு உதாரணம். கீழவெண்மணி கிராமத்தில் தலித் விவசாயக் கூலி குடும்பங்கள் குடிசைக்குள் வைத்து கொளுத்தப்பட்டனர். இக் கொடூரத்திற்கு எதிராக அதன் சாதீய தளத்தில் அன்றைய தி.மு.அரசும் வாய்திறக்கவில்லை. அதற்கு இது சட்ட ஒழுங்கு பிரச்சினையாகத் தான் தெரிந்தது. அல்லது அவ்வாறு அது கட்டுப்படுத்தப்பட்டது. பெரியார் ஈ.வே.ராவும் வாய் திறக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்டு விசாரணையில் மீண்டுவந்த கோபால கிருஷ்ண நாயுடு மிகப் புகழ் பெற்றவர் என்று தோன்றுகிறது. கலாமோகனின் எழுத்தில் இது பேசப்படுகிறது போகிறவாக்கில், ஒரு கிண்டல் விவரமாக, இது போன்று எண்ணற்ற உதாரணங் 3 களைத் தரலாம். திரும்பவும் நான் குறிப்பிட விரும்பு வது, எழுத்தும் சிந்தனையும் வாழ்வுண்மைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைத் தான். ஆக, எனக்குத் தோன்றுகிறது, டேனியல்தான் தலித் எழுத்துக்கே தமிழில் முன்னோடியோ என்று. இப்
རྩི་
2

பாது தமிழில் வரும் தலித் எழுத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. உண்மையும், சுயவிமர் Fனமும், உயிர்த் துடிப்பும் கொண்டவை. ஆனால் அன்று டேனியல் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவர் பற்றியும் எழுதினேன். இது ஆகஸ்ட் 1988-ல். இப்போது ஷோபா சக்தியின் தேசத்துரே7கி சிறுகதைத் தொகுப்பும் ம் நாவலா, ஆவணமா, அல்லது புனைவாக்கப்பட்ட சுயசரிதமா, முன்னிற்கும் போது இவை பற்றிய சிந்தனைகளின் முன் அத்தியா பமாக மேற்சொன்னவை நினைவில் மோதின. ஷோபா சக்தி அதிகம் படித்தவரில்லை, ஏதோ பெயர் சொல்லப்படாத இயக்கத்தில் இருந்தவர், படித்தது என்னவோ இயக்கம் தழுவிய அரசியல் -ார்பான புத்தகங்கள், தன் 36-37 வருட வாழ்வில் 5 வருடங்களாக அகதி வாழ்வு, இதில் 10 வருடங் 5ளாக பாரிஸில், இடையில் எங்கெங்கோ புகலிடம் தேடி அலைந்தது என்று அவர் தன்னைப் பற்றிச் சொல்லப் படித்தேன். இத்தகைய நிலையில்லாத, ம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர் ாழுதும் எழுத்தைப் பார்க்க வியப்பாகத்தான் இருக் கிறது. நல்ல கிரகிப்பு சக்தியும், படைப்புத் திறனும் பாய்க்கப் பெற்றவர் என்று தோன்றுகிறது. இத்தகைய பாழ்க்கைதான் அவரைப் புடம் போட்டதோ ான்னவோ. தேசத்துரோகி தொகுப்பில் அலையாடப் பட்ட வாழ்க்கையின் சில பதிவுகள் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. எலிவேட்டை என்ற கதையில் கொழும்பிலிருந்து சற்றுத் தள்ளி கடற்கரை ஓரம் டை வைத்துள்ள தமிழன், அந்த இடத்தில் இருக்கும் சிங்கள அதிகாரிகளோடு சமரசம் செய்து கொண்டு பாழ்பவன். அவனுக்கு வழக்கமாகப் பலியாகும் ரு பெண். ராணுவத்திலிருந்து தப்பியோடிவந்து லைமறைவாக இருக்கும் தன் மகனுக்கு ஒரு இரவு அடைக்கலம் கொடுக்க அவன் விலையாக எடுத்துக் கொள்வது, அவளுடைய 12 வயதுப் பெண். மற்ற பர்க்கு மறுத்ததை இப்போது இவனுக்கு மறுக்கமுடி பாத கொடுமையை எண்ணி அவள் அறைக்கு வெளியே உட்கார்ந்து அழுதுதான் இரவைக் கழிக்க வேண்டும். தேசத்து7ே7கி ஒரு சிக்கலான கேள்வியை முன் வைக்கிறது. கடற்கரை ஒரு கிராமத்தை ராணு பம் வளைத்துக் கொள்கிறது. நான்கு இளைஞர்கள் ]ரத்தில் நிர்வாணமாக கட்டப்பட்டிருக்கிறார்கள். )ணலில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம். ாணுவம் பிடிபட்ட இருபது பேரையும் விரட்டி பிரட்டி ஒடச் சொல்கிறார்கள். புதைக்கப்பட்ட ண்ணிகள் கால் பட்டதும் வெடித்து மடிகிறார்கள். அந்த இடத்தில் ராணுவத்திற்கு கட்டளை இடும் ரு தொப்பிக்காரர் தெரிந்த முகமாக இருந்தும் பார் என்று அப்போது பிடிபடவில்லை. பின்னர் 1ளிச்சென நினைவுக்கு வருகிறது. அது ரணில் விக்கிரமசிங்க என்று. இந்த யார் என்ற புதிர் நமக்கு அதிர்ச்சி தரவேண்டுமானால், அது பின்னர் சமரச பேச்சு வார்த்தைகள் நடத்திய இலங்கைப் பிரதமர் ான்ற கதைக்கு வெளியேயான விவரம் நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும். அது ஒரு கதை. அந்த 0ர்மத் தொப்பிக்காரர் வராமலேயே தேசத்துரே7கி. ]ன அதிர்ச்சி தரும் ஒன்று தான். தேவதை சொன்ன

Page 65
கதையில் தான் மணக்கவிருக்கும் பெண்ணுக்காக பாங்காக் ஹோட்டலில் காத்திருந்து அவள் வராமல் போகவே, அந்த இரவு தாசி ஒருத்தியோடு கழிகிறது. அந்தப் பெண் வியத்நாமில் ஒரு கிழவனுக்கு விற்கப் பட்டு ஓடி வந்து பாங்காக்கில் தன் உடலை விற்றுப் பிழைப்பவள் என்று தெரிகிறது. இப்படியாக எத்த னையோ ரக வேதனை அனுபவங்கள். சிங்கள ராணுவத்திடம் கைதாகி சிறையில் அடைக்கப்பட் டால், வெறும் எண்களாக சிறுத்து அடையாளமற்றுப் போகும் அவலம், யார் புலி, யார் எந்த இயக்கம் என்ற பயம், பாரிஸில் விஸாவும் நாஷனாலிட்டியும் பெற அடிக்கும் கூத்துகள், அதற்கு நிறைய கற்பனை யான சித்திரவதைப்பட்ட, உயிர் இழக்கும் அபாயம் கொண்ட தகவல்கள், சில நம்பிக்கை உத்திரவாதம் தரும் ஸ்டாக் அபாயங்கள், சித்திர வதைகள், சில அரிய கற்பனைகள், இவற்றைக் கண்டு சிரிப்பதா, சோகிப்பதா தெரியவில்லை. ஷோபா சக்தி அந்த அவஸ்தையை முகம் சிரிக்காது கிண்டல் செய்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஷோபா சக்தி இந்த அவதிகளுக்கெல்லாம் இடையிலும் சிரித்தும் சிரிப்பூட்டியும் வாழும் குணம் சிறப்பானது. சூக்குமம் என்று ஒரு கதை. அது விஸா பெற அவர் கைக் கொள்ளும் ஜகஜ்ஜாலங்கள், விஸா மனு எழுதிக் கொடுத்தே பிழைப்பு நடத்தும் கற்பனை மேதைகள், ஒரு பெரிய மேதையிடம் சென்று எத்தைனையோ ஆயிரம் ஃப்ராங்க் செலவில் 22 பக்கங்கள் அவர் எழுதிய மனு நிராகரிக்கப்படவே மனம் நொந்து ஜெர்மனிக்குப் போக நிச்சயித்து பின்னர் ஏதோ நினைப்பில் திரும்பி வந்து ஒருவரை அணுக அவர் இரண்டு பக்கங்களில் ஏதோ கிறுக்க அது பலித்து விஸா கிடைத்துவிடுகிறது. அதற்குப் பதிலாக அவர் கேட்டது ஒரு போத்தல் ரம். மைசூர் ராஜா கதை இலங்கையில் இருந்த பொருட் கட்டுப்பாட்டில் மைசூர் பருப்பு வேட்டை பற்றி மிக தமாஷாக எழுதுகிறார்.
ம், நேசகுமார் என்னும் இளைஞனின் இலங்கை சிறை வாழ்க்கையை பதிவு செய்கிறது. கடந்த சில வருடங்களாகத் தான் எழுதத் தொடங்கியதாகச் சொல்லும் ஷோபாசக்தி, எழுதுவதெல்லாம் சிறை வாழ்க்கையில் பார்த்த அனுபவித்த கொடுமைகளை யும் புகலிடம் வாழ்க்கை பற்றியுமாகவே இருப்பது தவிர்க்கமுடியாதது. வேறு எதைப் பற்றி எழுதுவது? எழுத வேறு என்ன அனுபவம் இருக்கிறது? எழுது கிறாரே, தன் அனுபவங்களைப் பதிவு செய்கிறாரே அதுவே வாழும் அவதியில் பெரிய விஷயம் தான். புகலிடம் பெயர்ந்து ஒருவாறாக நிலைபெற்று எழுதுகிறவுர்கள், ஐரொப்பாவில் எந்த நாட்டிலுமோ, அல்லது கனடாவிலோ, வேறு எங்குமோ அவர்கள் அங்கு நிலை பெற்றது கென்யாவிலும், நைஜீரியா விலும், தாய்லாந்திலும் அலையாடப்பட்டு கடைசி யாகத்தான் அங்கு சேர்ந்திருக்கிறார்கள். நிலை - பற்ற இடத்திலும் கவிஞரோ, நாடகத்துறையினரோ அல்லது வேறு என்னவாக இருந்தாலும் வாழும் நிர்ப்பந்தம் சுமத்துவது காவல் வேலையாக, அல்லது, எங்கோ ஒரு ரெஸ்டாரெண்டில் பீங்கான் கழுவுவதாக இருக்கலாம் அல்லது ஒரு வேளை செய்தித்தாள்

வினியோகித்து விட்டு இரவு எங்கோ லேத்தில் வேலை செய்வதாக இருக்கலாம். இரவோ பகலோ அல்லது இருபோதுமோ, இவ்வளவுக்கிடையில் தான் எழுத்தும், கவிதையும், நாடகமும், அனேகர் இன்னும் சூக்குமம் கதையின் கட்டத்திலேயே இருக்கக் கூடும். அல்லது குருவணக்கம் கட்டத்தில் இருக்கக் கூடும். இக்கட்டத்தின் எதிர்பார்ப்பு வேதனையை, சுய எள்ளலுடன் ஒரு கவிஞர்,
விண்ணப்பம் ஏற்கப்பட்டு அகதியென்று விடை தேவை என்று எழுதுகிறார். இக்கவிஞர் வேறு ஒரு இடத்தில் 'அகதி என்ற தமிழ்ச் சொல்லிற்கு அர்த்தம் தேவை என்றோ என்னவோ விண்ணப்பம் வைக்கிறார். இது பற்றியெல்லாம் நிறைய கிண்டலுடன், கலா மோகன் நிறைய எழுதியிருக்கிறார். இவ்வளவு அவஸ் தைகளுக்கு இடையிலும் சிரிக்கத் தோன்றுகிறதே. சிரித்துத்தான் அதை மீறி வாழ முடியும் போலும். ஆனால் ம் ஷோபா சக்தி விவரிக்கும் அனுபவங் களுக்கிடையில் சிரிப்பது கிடக்கட்டும் அமைதியாக இருப்பது கூட மிகக் கஷ்டம். தச்சாவ், சிறை முகாம் கள், சைபீரியவுக்கு நாடு கடத்தப்படுவது, ரஷ்ய குலாக் பற்றியெல்லாம் படித்திருக்கிறோம். இப்போது அதிகம் பேசப்படுவது அபுகரெய்ப், குவாண்ட னாமொ சிறைக் கூடங்கள். முகம் மூடப்பட்டு நிர்வாணமாக நிற்கும் ஈராக் கைதியின் மீது ஏவப்படும் நாயைப் பிடித்துக்கொண்டு சிரித்து நிற்கும் அமெரிக்க பெண் ராணுவ அதிகாரி முதுகு எலும்பு சில்லிட்டுப் போகும். அது ஜனநாயகத்துக்கு மதம் மாற்ற நடக்கும் சடங்குகள் என்று சொல்லப்படுகிறது. எந்த இலங்கை அரசுக்கும் அஹிம்சா மார்க்கம் போதிக்கும் பிக்குகள் வழிகாட்டலில் பேணப்படும் பெளத்தம் இலங்கை யிலும் அபுகரைய்புகளையும் குவாண்டனாமோக் களையும் உருவாக்கியுள்ளது. வெலிகட, பனகொட என்றெல்லாம் பெயர்கள்தான் மாறுகின்றனவே தவிர குணத்தில் குறைவற்றவை. இதில் முதலாம் உலகம், மூன்றாம் உலகம் என்ற தர வேறுபாடுகள் கிடையாது போலும். கொல்கொதா குன்று காலத் திலிருந்து இன்றைய குவாண்டானாமோ வரை மனிதனின் அதிகாரமும் மதமும் ஒன்றினைந்தால் நடப்பது ஒன்றாகவே தான் இருக்கிறது. கடலையும் கோவிலையும் தவிர வேறொன்றுமறிய பக்கத்துவீடு செபமாலை அப்பு அமைதிக்கு தடங்கலாகி மூன்று நாட்களுக்குப் பின் தான் உடல் கிடைக்ததாம் அம்மாவின் கடிதம் தலைமாட்டில் என்று ஒரு கவிதை சொல்கிறது. அப்புக்கள் ஈழத்தில் எங்கிருந்தாலும் சரி, அல்லது இயக்கத்திலோ, கொழும்பு தெருக்களிலோ அல்ல்து அம்பாரையிலோ எங்கிருந்தாலும் அப்புக்கள் இப்படித்தான் சாகி றார்கள். அவர்களிடம் ஈக்கள் பிடித்து நிரப்ப போத்தல்கள் கொடுக்கப்படாமலேயே.
63

Page 66
நேசகுமார் அப்படி ஒன்றும் கையில் கலாஷ்ணி கோவை வைத்துக்கொண்டு பழிவாங்கும் வெறி பிடித்து அலையும் போராளி அல்ல. சாதாரண இளம் வாலிபன், எல்லோருக்கும் உணர்ச்சி வசப்படும் கணங்கள் உண்டு. போலீசும் ராணுவமும் செய்யும் கொடுமைகள் உணர்ச்சி வசப்படச் செய்யும்தான். அந்த சமயத்தில் நாம் யோசிப்பதில்லை. அந்த மாதிரிதான் நேசகுமார் உணர்ச்சிவசப்பட்ட கணங் களில் செய்த காரியங்களுக்குத்தான், குண்டுவீசியது, போலீஸ் அதிகாரியைத் தாக்கியது இப்படி அவன் சிறையில் சித்திரவதையைத் தாங்க மாட்டான். தான் தரும் பதில்கள் காட்டிக்கொடுப்பதாகும் என்று நினைத்துப் பார்க்க நேரம் இல்லை அவனுக்கு வேறு எப்படியும் செய்திருக்கவும் முடியாது. தொடர்ந்து சிறைவாசம், விசாரணைகள், சிறை மாற்றங்கள். விசா ரணைகள், காட்டிக் கொடுத்தபின்னும் தன்னுடன் பழம் சினேகத்துடன் சிறையில் பழகும் பக்கிரி, அவரது மனத்திடம் எத்தகைய சித்திர வதைக்கும் வாய்திறக்காத மனிதர். தன் மார்க்ஸிஸ் கொள்கை களில் காட்டும் தீவிர விச்வாசம். ஃபாதர் என்றே தன்னை விளித்து அன்பு பாராட்டிய நண்பன் கலைச் செல்வனின் தந்தை. கடைசியில் நேசகுமாரால் காட்டிக்கொடுக்கப்பட்டு ராணுவம் அழைத்துச் செல்லும்போது, ஃபாதர், எத்தனை தரம் எங்கள் வீட்டில் உணவு அருந்தியிருப்பீர்கள்? என்று கேட்டுக் கொண்டே செல்கிறார். கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடக்கும் கைதியிடம் ஒரு போத் தல் தரப்படுகிறது, "இது நிறைய ஈக்களைப் பிடித்து நிரப்பினால் உனக்கு விடுதலை" என்று சொல்லப்படு கிறது. என்ன குற்றம், என்ன தண்டனை நேசகுமாரின் போலிசிடம் பிடிபட்டதும் அவன் நிர்வாணமாக்கப் பட்டு அவன் ஊரிலேயே ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறான். இது உடலைக் காயப்படுத்தாத சித்திரவதை, தப்பிவிடுகிறான் நேசகுமார் பக்கிரி யோடு, நடுவில் பஸ் நிறுத்தப்படுகிறது. ஒரு பொடியன் துவக்கோடு உள்ளே நுழைந்து நேரே நேசகுமாரிடம் வருகிறான். எங்கிருந்து வருகிறீர் என்று கேட்டு விட்டு இறங்கி விடுகிறான். தப்பித்தோம் என்று நினைத்த நேசகுமாருக்கு சில நிமிடங்களில் பஸ் அடுத்து நிறுத்தப்படும்போது, இப்போது வந்த பொடி யன்கள் நேரே இவர்களை நோக்கித்தான் வந்து இருவரையும் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஒருவன் வேவு பார்த்து செய்தி சொல்ல. இன்னொரு வன் கைது செய்ய. என்ன பிரமாதமான தகவல் பரிமாற்றம்! எந்த இயக்கம் என்று எங்கும் சொல்லப் படுவதில்லை. எந்த இயக்கமானாலும் சரி, எந்த அதிகாரமானாலும் சரி, ராணுவமோ, போலீஸோ, உடைதான் வேறுபடுகிறது. சந்தேகப்பட்டால் சித்திர வதைதான். கட்டுண்ட பெண் தாகத்தில் தவிக்கும் போது அவள் முகத்தில் சிறுநீர் பாய்ச்சப்படுகிறது.
போலத் தப்பிக் கொணர்ந்து தரப்படும் வேலை,
ဒို့ဗ်ာ தீடீரென பட்டி ஆடுகளைப்
சுடப்பட்டு சிதறிக்கிடக்கும் சவங்களைத் தூக்கிவந்து
மாமாவை நீங்கள்தான் கொலை செய்தீர்கள்’ என்று சொல்லியே பக்கிரியின் வாய் கிழிக்கப்பட்டு
4.
있
·瑟
மேல் ஒன்றாக அடுக்குவது. ‘எங்கள் கிட்டு

சுட்டுக்கொல்லப்படுகிறார்.
இதையெல்லாம் கடந்து வந்து, சிறை மீறி, நாடு கடந்து அலைந்து, நடந்த கதை சொல்லமுடிகிறது. சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் இது நாவல் இல்லை. கருத்துக்களோடு உடன்பாடு என்கிறார். மற்றொருவர் இது விடுதலைப் புலிகள் சார்பு நாவல் என்கிறார். அந்த சார்பு எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. இருவரும் நண்பர்கள். அவர்கள் பார்வையைச் சொல்கிறார்கள் என்கிறார் ஷோபா சக்தி, அவர் கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களைப் பார்க்கும் போது இந்த சமனிலை எப்படி வந்தது என்று ஆச்சரியப்படத்தோன்றுகிறது எனக்கு இலக்கியம் அப்படியெல்லாம் அவரவரிடம் கையிருப்பில் உள்ள சிமிழிக்குள் அடங்கிவிடாது. மனித மனம் போல, கடவுளைப் போல அப்படி சுலபமாக தொல்காப்பிய சூத்திரத்தில் சொல்லிவிடமுடியுமா என்ன? தமிழ னின் சரித்திரத்தில் மிக முக்கியமான சில அத்தி யாயங்களை புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் எழுதி வருகின்றனர். அவற்றில் ஷோபா சக்தியின் எழுத்துக் களும் அடங்கும்.
இவ்வளவுக்கு இடையிலும் சிரிக்கமுடிகிறதே, சிரிப்பூட்ட முடிகிறதே என்று கேட்டேன் சற்று முன். வேறென்ன செய்வதாம் என்று கேட்கிறார், ஜெயந்தீசன் என்று ஒரு புதிய நாமகரணம் செய்து கொண்டுள்ள கலாமோகன். உண்மைதான். பாரிஸி லும், நோர்வேயிலும், கனடாவிலும் இருக்கும் பொடி யனுக்கு வயது வந்துவிட்டால் பெண்தேடமாட் டானா? ஜாதிப் பொருத்தம் வேறு பார்க்கவேண்டும். ஈழத் தமிழர் எதையும் விடுவதில்லை, தமிழானாலும் சரி, ஜாதியானாலும் சரி. நம்மைப் போலவா என்ன? தமிழ்நாட்டின் தமிழர், தமிழை விட்டுக் கொடுக்கத் தயார். தமிழ் படிக்கவேண்டும், தமிழ் பேசவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை, யாருக்கும். திரா விட இயக்க புரட்சி சீலர்களையும் சேர்த்துத்தான். அப்படியிருக்க ஈழத்தமிழர் புலம்பெயர்ந்துவிட்டால் சாதியை விட்டுக் கொடுத்து விடமுடியுமா? அல்லது பெண்பார்க்க என்றுதான் விமானமேறி யாழ்ப் பாணமோ புங்குடு தீவோ பறந்து செல்லமுடியுமா? விஸா வாங்கியாயிற்று, என்னென்னவோ கதை அளந்து, எத்தனையோ ஆயிரம் ஃப்ராங்க் பணத்தைக் கொட்டி. அழுது ‘நாஷனாலிட்டி'க்கு முயற்சி செய்யவேண்டும். வீடு தேட, விஸாவுக்கு அகதியாய் அங்கீகாரம் பெற இப்படி எல்லா சிக்கல்களுக்கும் மனு எழுத திறமையும் அனுபவமும் உள்ள ஏஜெண்ட் போல இதற்கும் ஏஜெண்ட் இருக்கிறார். சொன்னால் குறிப்பிட்ட சாதி, செல்வ நிலை, வரதட்சிணை எதிர்பார்ப்பு எல்லாம் பொறுத்து வகை வகையான ஆல்பம் ஆல்பமாக வைத்திருக் கிறார், காத்திருக்கும் பெண் மனுதாரர் விபரம் போட்டோ ஆல்பம் அல்லது வீடியோ சிடிக்களுடன். நம் ஏழை நாட்டில் ஜாதகக் கட்டுடன் அலைவார்கள். அங்கு முன்னேறிய ஐரொப்பா, கானடாவில் ஆல்பக் கட்டாக முன்னேறியுள்ளது. பல சிடிக்கள், ஆல்பங்கள் பார்த்து திருப்தியடையாத மாப்பிள்ளைக்கு கடைசி யில் ஒரு சிடியில் பார்த்த பெட்டை பிடித்துப் போகிறது. நல்ல வடிவான பெட்டை' என்று மகிழ்ந்து

Page 67
ஏற்பாடு செய்யச் சொல்ல இரண்டு நாள் கழித்து டெலிபோன் வருகிறது, அந்த பெட்டை'யை ஏற்பா( செய்யமுடியாது. ஏனெனில் அது ஏதோ mix-up6 தவறாக வந்துவிட்ட குஷ்பு சிடி கவலைப்பட வேண்டாம் வேறு ஆல்பம் கிடைத்ததும் கொண்( வருவாராம்.
தமயந்தி என்னும் கவிஞர் சந்தைப்படுதல் என் கவிதை எழுதியிருப்பது இது பற்றி கேலியாகவா அல்லது பயங்கர கோபத்திலா என்று தெரியாது ஒரு சில வரிகளைச் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். ஆரம்பமும், கடைசியும்:
உலகப் படத்தை விரி.
தரையால், வானத்தால்
கடலால்
எப்படியாயினும்
கனடா செல்லும்
சுலபமான வழியைக் கண்டுபிடி
விலை பேசு, விலை பேசு
சோதனை அதிகமில்லாத கடவுச்சீட்டு எந்த நாடாயிருப்பினும் விலை பேசு
கனடா மண்ணில் கால் பதித்தால் போதும். கல்யாணச் சந்தையில் அதிக விலை போய் விடுவோம்.
இன்னொரு கதையில் ஒரு பொடியன் பெட்டையின் ஆல்பம் பார்த்து தன் அங்கீகாரம் வழங்கிவிட்டான் யாழ்ப்பாண கிராமத்தில் இருக்கும் பெட்டைக்கு இங்கு பாரிஸில் அண்ணனோ அல்லது குடும் நண்பனோ வருகிறான். ஒன்றரை கொடுத்தா6 போதும் என்பதைக் கேட்டு அதை நம்பமுடியாம6 எதற்கும் இன்னொரு தடவை கேட்டு நிச்சயப்படுத்தி கொள்ளலாம் என்று வந்து கேட்கிறான். மறுபடியு ஒன்றரைதான் என்று கேட்ட தன் காதுகளை நம் முடியவில்லை. பிறகு தான் ஒன்றரை என்று சொல் னது ஃப்ராங் கணக்கில், ரூபாய் கணக்கு என்று புரிந்துகொண்டது தன் தவறல்ல என்று பாரில் வாழ் மணமக பொடியன் சொல்கிறான். இயக்கத்தில் தளபதி, போட்டைவையும், துவக்கையும் கொடுத்து போ இதான் அட்ரஸ் போய் பொட்டு வைத்துவிட்( வா’ என்று தளபதி கட்டளை இடுகிறார். போன் இடத்தில் ஒரு பொடியன் தட்டில் உணவுடன் துணியின்றி இருக்கிறான். போட்டோவில் சொல்ல பட்ட பொடியன்தான் அவன். ஆனால் இவனுக்கு பசி. தம்பியும் இயக்கத்தைச் சேர்ந்தது போன் இப்படித்தான் பசிக்கும் சாப்பிடாது, பாவம் என் அவனுக்கும் அந்தப் பெண் சாப்பாடு போடுகிறான் சாப்பிட்டுவிட்டு, 'பொட்டு வைக்காது திரும்பிய னைக் கண்ட கோபத்தில், தளபதி இரண்டு சீட களைக் கூப்பிட்டு, ‘போங்க இவனுக்கு சரியா பொட்டு வையுங்கள் ' என்று கட்டளை இடுகிறா பொட்டு வைக்கத் தவறியவன் இழுத்து

5
செல்லப்படுகிறான். இப்படியாக சுமார் இருநூறு பக்கங்கள் ஒரே கேலிக் கூத்துதான். இதில் எதுவும் யாரும் தப்புவதில்லை. புலம் பெயர்ந்தும் அவதிப்பட் டும் பாரிஸிலும் யாழ்ப்பாணத்தவராகவே வாழ்பவர் கள், எல்லா இயக்கங்களும், ஏன் பெண்ணியம் கூட, (கலாமோகன் எவ்வளவு பெரிய வீர புருஷராக இருக்கவேண்டும்!) அவர் கேலிக்குத் தப்புவதில்லை.
நிஷ்டை என்றொரு தொகுப்பு கலாமோகனது. அது கொஞ்சம் கனமானது. கேலி, தமாஷெல்லாம் கிடையாது. பாரிஸில் வாழச் சென்றவர்கள் படும் அவல வாழ்க்கை. அப்படித்தான் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் நிலை பெற வேண்டியிருக்கிறது. ரெஸ்டாரெண்டில், முதலாளிக்கு விஸ்வாசமாக கடை நிலை ஊழியனாக, பீங்கான் தட்டு கழுவுகிற வான உழைத்து நல்ல பெயர் எடுப்பவனுக்கு மற்ற வேலைகளில் இருக்கும் அல்ஜீரியர்களால் தொந்திரவு தொழிற்சங்கம், குறித்த நேர வேலை நேரம், சம்பள உயர்வு என்றெல்லாம் தொந்திரவு. வேலையும் செய்வ தில்லை. ஆனால், பீங்கான் கழுவும் புலம் பெயர்ந்த தமிழன் எவ்வளவு நேரமும் எந்த வேலையும் செய்யத் தயார். கடைசியில் ஏமாறுவது, ஏமாற்றப்படுவது, இவன்தான். மூன்று நகரங்களின் கதை யாழ்ப்பாணம், கொழும்பு என்று அல்லாடியவன், கடைசியில் பாரிஸ் போன கதையைச் சொல்கிறது. அப்பா இறந்து விட்டார் என்று செய்தி வருகிறது. செலவுக்கு பணம் அனுப்பு, தங்கையை எப்போ அழைத்துப் போகப் போகிறாய்? என்று மாமாவிடமிருந்து வரும் கேள்வி. இது அகதியாய் பீங்கான் கழுவுகிறானோ அல்லது வேறு என்ன செய்கிறானோ அவன் மீது விழும் சுமைகள். கொழும்புவிலிருந்த போது, காது குத்திய வரை, பொட்டிட்டவரை தமிழனாக அடையாளம் கண்டு தாக்கும் சிங்களவ ரெளடிகளிடமிருந்து எப்படி தப்பிப்பது என்பது அனுதினக் கவலை. இப்படியான வாழ்க்கை, எங்கோ ஒரு அந்நிய மண்ணில் காலூன் றும் வரை. இவ்வளவு களேபரங்களுக்கிடையில், 'சிங்கப்பூரில் புடவை மலிவு, 30 கில்டர் கொடுத்தால் போதும், எப்படி வேணுமானாலும் இருக்கலாம் என்று தெருவில் நிற்பவளின் விலை அறிவிப்பு, போன்ற சப்தங்கள் காற்றில் மிதக்கும். இன்று டிவியில் பாலு மகேந்திராவின் "கதா நேரம்’ என்றும் ஒரு ஒலி மிதந்தது. எனக்கு ஆச்சரியம்! அங்கெல்லாம் கடை பரப்பியிருப்பது சன் டிவி தானே. சன் டி.வி. அதிக பட்ச விளம்பரம் தரும் சமாச்சாரங்களுக்குத் தானே, அது முழுக்க முழுக்க அம்மாமி கதையாக இருந்தாலும் சரி, இடம் கொடுக்கும்? அதில் கதா நேரம்”-க்கு எங்கே இடம்?
கலா மோகன் ஃப்ரெஞ்சிலும் எழுதுபவர், அவர் எழுத்துக்கள் ஃப்ரெஞ்சிலிருந்து டேனிஷ்ஷ"க்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லப்பட்டி ருக்கிறது. 1960-ல் பிறந்து 1983-லிருந்து அகதியாக வாழும் கலாமோகனின் ஆரோக்கியமான சுய எள்ளல் என்க்கு மிகவும் பிடித்திருந்தது. நான் வாழும் மண்
சுய பிரமைகளில் சஞ்சரிப்பவர்களைக் கொண்டது;
65
t

Page 68
சிறுகதை
iజః
கிTர் வேகமாக வந்து வீட்டின் முன்னால் சடுதி யாய் நிற்க நான் ஒருமுறை முன்னால் விழுந்து பின் னால் போய் அமைதியாய் இருந்தேன். அத்தானின் ஒரு சில முனகல்களைத் தவிர எங்கும் அமைதியாய் இருந்தது. வாயில் சூப்பியை வைத்தது ஆதரவாகத் தனது தலையைச் சாய்த்து கண்களை மூடி மூடி நித்திரையில் ஆழ்ந்திருந்த அக்கா பிள்ளை, திடுக்கிட்ட காரின் நிறுத்தலால் குலைந்து, திடுக்கிட்டு ஆவென்று குரலெடுத்து அவன் அழுகை ஓயவில்லை. (
ஏன்டா கத்தி என்ர உயிரை வாங்கிறாய். அக்கா பிசிறும் குரலில் கோபத்தின் உச்சத்தில் : கத்தி விட்டு கார் சீட்டிலிருந்த அவனை இழுத்து எடுக்க முயல பிள்ளை மேலும் வீறிட்டுக் கத்தினான் ! ஏண்டி அவனைப் பேசிறாய். காரை இப்பிடி ஒட்டினா பிள்ளை பயப்பிடாமல்,
சொருகிச் சொருகி வந்த கண்களால் அக்காள் முகம் பார்க்காமல் தூரத்தே வெறித்துச் சின்னதாய் கடைவாய்குள் சிரித்தபடியே தடக்கித் தடக்கிச் சொன்ன அத்தானின் முகத்தில் ஓங்கி ஒரு அறை விடலாம் போலிருந்தது எனக்கு. அக்கா பிள்ளைத் தூக்கிய படியே பின் சீட்டிலிருந்த பைகளை எடுக்க எத்தனித்தாள்.
g
அக்கா நான் கொண்டுவாறன் நீங்கள் போங்கோ.
நான் அவசர அவசரமாக பைகைளை அள்ளிக் கொண்டு காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் போக என்னைக் கடந்து அக்கா புறுபுறுத்தபடியே படியால் ஏறி அறைக்குள் புகுந்தாள். பைகளை ஒரு ஒதுக்கப் புறமாக வைத்து விட்டு இனி என்ன என்று தெரியாது முழித்துக் கொண்டு நின்றேன். C
ஆஆஆப்ளாக் ப்ளாக் என்று அருவருக்கும் குரலில் அத்தான் சத்தி எடுப்பது கேட்டது. எட்டிப் பார்த் தேன். சுவரோரம் குந்தியிருந்து, தலையை காலுக் & கிடையில் தொங்கப்போட்டபடியே முன்னும் பின்னும் அசைந்தபடியிருந்த அத்தானின் உடலில் தெருவோர வெளிச்சம் சரிந்து தெறிக்க ஒரு கொத்தி யாத்தை போல் காட்சியளித்தார். ஆஜானபாகுவாய் காட்சியளிக்கும் எத்தனை மனித மிருகங்கள் சில நொடிகளில் தம்மை ஒரு கோமாளியாக்கி விடுகின் றார்கள். இவரும் குடிக்கிறவர்தான். அளவாக நாகரீக மாக தனது எல்லையைத் தெரிந்து கொண்டு. எனக்கு {": சங்கடத்தைத் தந்ததில்லை.
ح
புளியந்தோப்பு ஒழுங்கையால பள்ளிக்கூடம் போகேக்க அமைதியா இருக்கிற அந்தப் பாதையில 66இருந்து எழும்பிற விசித்திரமான குருவிச்சத்தங்கள்
 

வயத்தக் கலக்க, சூரிய ஒளியின் கீற்றில் மர அசைவு பேய் நிழலாய் நடனமாட நான் சின்ன நடையைக் கெதியாக்கி பின் ஒட்டமாக்க முயல . . .
என்னடி பயமா இருக்கே . கேட்டபடியே என்ர கையைத் தன்னுடையதோடு பிணச்சுக் கொண்டு எனக்குப் பகிடிக் கதைகள் சொல்லி புளியந் தோப்பைக் கடக்க வைப்பாள் பயமின்றி ஸ்ரோபெறி மணக்கிற ரோசா நிற லண்டன் ரேசரை முகுந்தன் எடுத்து வைச்சுக்கொண்டு தர மறுக்க அவன்ர கையை முறுக்கி, சுவரோரம் சரித்து, தலைமயிர் பிடித்திழுத்து
என்ர தங்கச்சியோட சேட்டை விட்டா நான் ரீச்சரிட்டச் சொல்ல மாட்டன், ரோட்டில வைச்சு அடிப்பன் . . .
எண்டு அவனை எச்சில் விழுங்க வைச்சிருக்கிறாள் அக்கா, ஏக்கத்தோட நான் பொன்நிறப் பட்டு நூலோடும் அவளின்ர சிவப்புப் பாவாடையைப் 3595חJ-
இந்த இதை நீ போடு நான் வேற போடுறன். இடுப்பை உருட்டி எனக்கு அளவாக்கி பின் குத்தி விட்டிருக்கிறாள் என்ர அக்கா, அக்கா என் கதாநாயகி அவள் எது சொன்னாலும் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். கலியர்ணம் கட்டி அக்கா கனடா போகேக்க ாதாவது திடீரெண்டு நடந்து அவள் ஊரோட இருப்பாள் எண்டு கடைசி வரை கனவு கண்டன். ாயாப்போட்டில
நல்லாப் படிக்க வேணும் என்ன ...? அவள் என்னைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சீட்டுப் பாகேக்கதான் முதல் முதலா எனக்கு உறைச்சுது. அதுக்குப் பிறகு நான் வாய் பிளந்து அழுதுததைப் 1ாத்து அப்பாவும் அம்மாவும் அடக்கேலாமல் ரித்தார்கள்.
நான் கலியாணம் கட்டி லண்டன் வந்து போனில அக்காவோட அடிக்கடி கதைச்சு இப்ப பல வருஷத் க்குப் பிறகுதான் நேரில பாக்கிறன். தலைக்கு டை அடிக்கத் தொடங்கியிருந்தாள். கண்ணுக்குக் கீழ கரு ளையம். வீடு, கார் எண்டு வசதியா இருக்கிறாள். புத்தான் வீட்டு வேலைகள் செய்கிறார். அக்காவோட புன்பா இருக்கிறார். அக்கா நல்லாத்தான் இருக்கிறா. னக்கு முதல்ல சந்தோஷமா இருந்தது. நான் விடுமுறைக்கு வந்து நிக்கிறதால எனக்கு இடங்கள் ாட்ட எண்டு அக்கா ரெண்டு கிழமை வேலைக்கு 'வு போட்டிருந்தாள். தானும் வந்தால் துணையா ருக்குமெண்டு அத்தானும் லீவு போடப்போவதாச்

Page 69
சொல்ல அக்கா ஒரே பிடியா வேண்டாம் எண்( மறுத்து அத்தானை வேலைக்கு அனுப்பினது எனக்கு சங்கடமாக இருந்தது.
அத்தானும் வரட்டுமன். நான் சொல்ல
வேண்டாம்.
ஒற்றைச் சொல்லில் அக்கா சொன்ன போது அவள் கண்களின் உள்ளே எதுவோ மறைந்து ஒளிந்திருப்பது தெரிந்தது.
அக்கா பிள்ளையைப் படுக்கப் போட்டுக் கீழ் வந்தாள். அழுத்திருக்கிறாள் போல முகம் வீங்கி யிருந்தது. அந்த வீக்கத்திலும் அவள் முகம் அழகா: இருந்தது. காதுபக்கத்தில வெளிவர முயலுற வெள்ளை மயிர்கள், மூக்கு நுனியில இருக்கிற சின்னப் பரு சிரிக்கேக்க துருத்திக்கொண்டிருக்கிற தெத்திப்பல்லு சின்ன நாடி, சின்ன மூக்கு, பெரிய கண்கள், நல்ல உயரம், உடம்புதான் கொஞ்சம் சதை போட்டிருந்தது அக்கா உண்மையிலேயே நல்ல வடிவு. நான் யாை யாவது வடிவு எண்டு குறிப்பிட வேணுமெண்ட என்ர அக்கா மாதிரி இருப்பாள் எண்டு சொல்லுவன் அந்தளவுக்கு அக்கா என் வாழ்க்கையில பாதிப்பை தந்த ஒருத்தி. நான் அக்கா மாதிரி இருக்க வேணும் வாழ வேணும் இதுதான் என் கனவாக இருந்தது.
அக்கா கதவைத் திறந்து எட்டிப்பாத்தாள். குளி காற்று அவசரமா உள்ளே வந்து முகத்தில மோதியதுட உடல் ஒருமுறை சிலிர்த்துக்கொண்டது. நான் கைகளைக் குறுக்காகக் கட்டி எங்கே போவது என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன்.
குளிருது ஸ்னோ கொட்டும் போல இருக்கு உங் நிண்டு என்ன செய்யிறியள்.
NÖDT
.m---ത്തക്ഷm.
گا۔
Ol
 

கதவைப் பூட்டியும் பூட்டாமலும் பிடித்துக் கொண்டு கத்தினாள் அக்கா. குரலில் வேதனை அவமானம் வெறுப்பு இரக்கம் என்று எல்லாமே கலந்திருந்தன.
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான். அத்தான் பெண் குரலெடுத்துப் பாடியபடியே தள்ளாடி அசைந்து உள்ள வந்தார்.
போங்கோ நாறுது உடம்பெல்லாம். மேல போய் ஒருக்கா குளியுங்கோ. ஜக்கெட்டெல்லாம் சத்தி.
அக்கா முடிக்க முதலே ஆ வெண்டு குனிந்து காப்பெட்டில் நாய்க் கக்கல் போல சத்தியெடுத்தார். நான் தடுமாறி என்ன செய்யிறதெண்டு தெரியாமல் நிக்க
நீ ஏன் இதில நிண்டு வேடிக்கை பாக்கிறாய் பே போய்ப் படு.
என்னைப் பாத்துக் கத்தினாள். நெஞ்சில எதுவோ தாக்க நான் பேசாமல் என்ர அறைக்குள் போனேன். அவளை ஏன் பேசிறா பாவம் லண்டனில இருந்து வந்திருக்கிறாள். இடமெல்லாம் கூட்டிக்கொண்டு போய்க் காட்ட வேணும் .
நீங்கள் காட்டினது போதும் . . . என்ர மானம் போகுது. இவள் ஏன் இப்ப இஞ்ச வந்து என்னோட நிக்கிறாள்.
அக்கா கத்தியபடியே அத்தானை வோஷரூமுக் குள்ள இழுத்துக்கொண்டு போய் குளிக்க வைப்பது தெரிந்தது. உன்னைப் பாத்து எவ்வளவு நாளாச்சு. உடம்பு போட்டிருக்கிறியே. எனக்குத் தலை கூட நரைக்குது. ராம் எப்பிடி இருப்பார். புடத்தில பாத்தது தான். ஒருக்கா கனடா வாவன். என்ர பிள்ளையின்ர
(
(
67

Page 70
சேட்டையையாவது வந்து ஒருக்காப் பாத்திட்டுப் போவன். வாடி கதைக்கிறதுக்க நிறைய விஷயங்கள் இருக்கு. பழைய ஞாபகங்கள் எவ்வளவு தேங்கி யிருக்குத் தெரியுமே. என் கண்கள் கலங்கி கரையில வடிய நான் நித்திரையாகிப் போனேன்.
விடிஞ்சும் என்னால் எழம்ப முடியவில்லை. * வெறுமனே முகட்டைப் பாத்து அக்காவுடனான * எனது பழைய நினைவுகளைப் புரட்டிக் கொண்டு சும்மா கிடந்தன். கீரிமலையில் அலைகளின் மோத லால் வழுவழுப்பாகி மின்னும் சின்னக் கற்களைக் ச கொக்கான் விளையாட எண்டு அக்காவும் நானும் ஒடியோடு பொறுக்கி, அவளின் பேணிக்குள் அடங்கிக் ( கிடக்கும் கற்களின் அழகைக் கண்டு மெளனித்திருந்த என்னிடம், இந்தா எண்டு சின்னச் சின்ன வழுக்கும் G கற்களை என் பேணிக்குள் போட்டு என்னைச் சிரிக்க G வைத்தவள்.
அக்கா அக்கா எண்டு கிணற்றடி மூலையில் நிண்டு கத்திய போது அக்கா அலுவலா இருக்கிறா ஏன் கத்திறா எண்டு அம்மா கேக்க ஒண்டுமில்லை எண்டு அவளை போக விட்டு இன்னும் கொஞ்ச நேரம் குந்தியிருந்து பிறகு திரும்பவும் அக்கா அக்கா எண்டு கூப்பிட அப்பா வந்து இப்ப ஏன் கத்திறா எண்டு கேட்கத் திரும்பவும் மெளனமாக அக்காவின் வரவிற்காய்க் காத்திருந்து. அக்கா வெளியில் வர ஒடிப்போய் அவளைக் கட்டிப்பிடித்து அழுததும் என் 6 முகத்தைத் தூக்கி கண்களைப் பாத்து விஷயத்தைப் புரிந்து கொண்டு கட்டிப்பிடிச்சுக் கொஞ்சி எனக்கான எல்லாத்தையும் புரிய வைச்சவள் அவள்.
இப்ப ஏன் இஞ்ச வந்து என்னோட நிக்கிறாள்...? அக்காவின் குரல் எதிரொலித்தது.
அக்கா வந்து கதவைத் திறந்தாள். இடுப்பில இருந்த பிள்ளை என்னைப் பாத்துக் கை நீட்டிச் சிரிச்சான். நான் அக்காவின் முகத்தைத் தவிர்ந்துச் சிரித்தபடியே எழும்பி இருந்தன்.
என்ன இன்னும் எழும்பேலையே. வாவன் நான் பாண் போடுறன் சாப்பிடுவம். அக்கா ஒண்டும் நடக்காதது போல் என்னைக் கூப்பிட்டு விட்டுப் போனாள். அத்தானின் சத்தத்தைக் காணவில்லை. நித்திரை போல, நினைச்சபடியே குளித்து உடுப்பு மாத்தி கீழிறிழ போனேன்.
பாணும், முட்டையும், ரீயும் எனக்காக வைச்சிருந்தாள். நான் மென்று மென்று சாப்பிட்ட படியே அத்தான் எழும்பி வந்தால் திரும்பவும் சண்டை பிடிப்பார்களோ எண்ட பயத் தில இருந்தன். ரெலிபோண் அடிச்சிது. அக்கா எடுத்து சிரிச்சு சிரிச்சுக் கதைத்தாள்.
வரேக்க பாலும் மீனும்
வாங்கிக்கொண்டு வாங்கோ இவளுக்கு என்ர மீன் கறி இயெண்டா நல்லாப் பிடிக்கும்.
 

பிறகு பிள்ளையின்ர காதில ரிசீவரை வைச்சு
இந்தா அப்பாக்கு ஹலோ சொல்லு. பிள்ளை ரிசீவரை இழுத்து நக்கினான்.
அண்ணா கிட்ட வரேக்க கள்ளு மணக்குது அம்மா அழுதுகொண்டு அக்காக்குச் சொல்ல, அண்ணா சாப்பிட வந்து இருந்தபோது
இந்த வீட்டில ஒரு குடிகாறரும் இல்லை. உனக்கு சொந்தங்கள விட குடிதான் முக்கியமெண்டா இஞ்ச Fாப்பிட வராதை
அக்கா சொல்ல அண்ணா தலையக் குனிஞ்சு கொண்டு இருந்தான்.
ஏதோ வயசுப் பெடியன் தெரியாமல் பெடிய ளோட சேந்து கொஞ்சம் குடிச்சிட்டான் அதுக்குப் போய் சாப்பிடுற நேரத்தில
அப்பா தயங்கித் தயங்கி. அப்பா நீங்கள் சும்மா இருங்கோ இப்பிடித் தொடங்கித்தான் பெரியம்மான்ர வாழ்கை பாழாப் போனது. உவனை ஒருத்தி கட்டிச் சீரளியிறதை நான் பாக்க விரும்பேலை. இது படிக்கிற வயது. தான் உழைச்சுச் சம்பாதிச்சிட்டுக் குடிக்கட்டும் உங்கட காசில இல்லை.
அண்ணான்ர கண்ணில இருந்து கண்ணிர் வடிஞ்சு நிலத்தில விழுந்துது.
நான் சத்தியமா இனிக் குடிக்கமாட்டன் அக்கா. அக்கான்ர தலையில கைவைச்சான் அண்ணா. கைய எடுத்து விட்டு அண்ணாக்கு சாப்பாடு போட்டாள் அக்கா. எல்லாரும் மெளனமாச் Fாப்பிட்டம். வீடு நிசப்தமாக இருந்தது. இந்த உறுதி முடிவெடுக்கும் திறன் எல்லோரையும் கட்டிப்போடும் பாங்கு எனக்கு எப்போதாவது வருமா?
அக்கா தொலைந்து போய்விட்டிருந்தாள். சாயலில், மாற்றமில்லை. இருந்தும் புது மனுசியாய் என்னுள் பரிணமித்தாள். கவர்ச்சியற்ற ஒரு புதுமனுசி. தன்னைத் தொலைத்து சிரிக்க முயலும் வெறும் சதைப் பிண்ட மாய். வெறியோடு ஆடி வரும் பெரியப்பாவை இழுத்து கிணற்றடியில் இருத்தித் தலை யில் குட்டி சீயக்காய் தேய்த்து தலைக்கு ஊத்தி தோச்சதுவா யால் தலை துடைத்து சாப்பாடு போட்டுச் சாப்பிட வைத்து பின்னர் அவர் அணைப்பில் தன்னைக் கொடுத்துப் பிள்ளை கள் பெற்று பெரியம்மாவின் சாடையில் அக்கா என்னிடம் தோற்றுப் போனாள்.
அக்கா சினேகிதியின் பிள் ளைக்கு பேர்த்டே பார்ட்டி. கனடா பேர்த்டே பார்ட்டி யையும் ஒருக்காப் பாரன் எண்டு என்னையும் வரச் சொன் னாள் அக்கா. மறுக்க முடிய வில்லை. இன்னும் ரெண்டு ஒருநாள்தானே. எனக்குள் சொல் லிக்கொண்டன், குருத்துப்

Page 71
பச்சைச் சீலைக்கு கறுப்பில சின்ன போர்டர், சின்னச் சங்கிலி, டிக்கர் பொட்டு, அடர்த்தியாய் கண்ணுக்கு ஐடெக்ஸ், っ மெல்லியதாய் லிப்டிக் எந்த உடுப்பிலையும் அக்கா வடிவுதான். எனக்கு சீலை வேண் டாம் எண்டு சல்வார் போட்டுக் கொண் ހަހި டன். அத்தான் கண்ணாடிக்கு முன்னால நிண்டு தலைக்கு ஜெல் போட்டு இழுத்துக் கொண்டு நிண்டார்.
இவருக்கு இப்பவும் சின்னப் பெடியன் سمي எண்ட நினைப்பு.
அக்கா என்னைப் பாத்துச் சொன்னாள். ஆகனக்கப் பெட்டைகள் வருவாளவை ༄།། சைட் அடிக்க வேணும்.
அத்தான் சொல்ல நான் சிரித்தபடியே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு ரீவிக்கு முன்னால் இருந்தன்.
கொஞ்சமாக் குடியுங்கோ. ஒரு மூண்டு கிளா ஸோடை நிப்பாட்டீட வேணும் சரியே. அவளும் வாறாள் இப்பிடி நீங்கள் பொது இடத்தில நடந்தால் அவள் என்ன நினைப்பாள்.
சரி, நான் குடிக்கேலை . . சரியே.
நான் குடிக்க வேண்டாம் எண்டு சொல்லேலை. குடிச்சுப் போட்டுத் தேவையில்லாமல் கதைச்சு ஆக்க ளோட சண்டைக்குப் போறியள். சத்தி எடுக்கிறியள். எவ்வளவு கேவலமா இருக்குத் தெரியுமே ..
அதுதான் நான் குடிக்கேலை எண்டு சொல்லு
உப்பிடி எத்தின தரம் சொல்லிப் போட்டியள். எல்லாப் பாட்டியிலையும் உப்பிடித்தானே நடக் கிறியள். எப்ப நான் நிம்மதியா ஒரு பார்ட்டிக்குப் போய் வந்திருக்கிறன் .
நான் குடிக்கேலை எண்டு சொன்னா ஏன் தொடந்தும் கதைச்சுக்கொண்டு நிக்கிறீர்.
நான் உங்களக் குடிக்க வேண்டாம் எண்டு. வாரும் நேரம் போகுது. அத்தான் முன்னால நடக்க கண்களில பதட்டத் தோட அக்கா என்னட்டைப் பிள்ளைய வாங்கிக் கொண்டு வா போவம் எண்டாள்.
நான் மனசில்லாமல் அக்காவுக்காய் எழும்பிப் போனன். இது நான் வந்த பிறகு போற மூண்டாவது பார்ட்டி முதல் ரெண்டிலையும் இதே போல அக்கா கேட்டு அத்தான் குடிக்க மாட்டன் எண்டு சத்தியம் பண்ணி பிறகு தலை முட்டக் குடிச்சு அங்கை நிண் டாக்கள வம்புக்கிழுத்து சண்டை பிடிச்சு சத்தி எடுத்து அக்கா சாப்பிடாமல் பிள்ளை கத்தக் கத்த கார் சீட்டில் பொருத்தி வேகமாகக் கார் ஒட்டி வீட்டை
எப்பிடிக் கனடா பிடிச்சிருகே ...? அத்தான் கேட்டார். நான் சும்மா தலையாட்டிச் சிரிச்சன். என் கால்கள் நிலத்தில பதிய மறுத்தது எப்படா லண்டன் போவன் எண்டிருந்தது. கனடா வந்து இறங்கியபோது லண்டன் ஞாபகங்கள் தொல்லை தர ஏன் வந்தன் எண்டிருந்தது. இப்ப போகும் நாள் கிட்ட கனடாவில என்ன செய்யிறன்

எண்ட ஏக்கம் திரும்ப வந்து இண்டைக்கே போயிட மாட்டனா எண்டிருக்கு. ராம் அவனின் பார்வை . ஏக்கமாய். சின்னி விரலைத் தொட்டிழுத்து அழுத்தி கழுத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொஞ்சி கவன மாப் போட்டு வாரும் என்ன? எண்ட போது கண்ணில் தெரிந்த அந்தக் கலக்கம் . என் கால்வரை துவழச்செய்தது. பத்து வருஷமாச்சு அக்காவை நான் பாத்து ஒருநாள் தற்செயலாச் சொல்லப் போக இந்த வருஷம் கட்டாயம் போய் அக்காவை பிள்ளையப் பாத்திட்டு வாரும் எண்டு நாண்டு கொண்டு நிண்டு அனுப்பி வைச்சது அவர்தான். அவற்றை குடும்பம் எல்லாம் லண்டனில இருக்கிறதால குடும்ப ஏக்கம் அவருக்கில்லை. எனக்கு நல்லாவே இருந்தது எண்டு நான் நினைச்சது இப்ப பிழை போல பட்டுது. என்ர குடும்பம் அவர்தான். அக்காவோட ஒட்ட முடி யேலை . . . வெறுமனே அக்கா தங்கச்சியெண்ட உறவோட இருவருமே எட்டி நிண்டது வேடிக்கையாய்
ஆ. . . கா. கா ... எண்டு போய் வார வாகனங் களைப் பாத்துப் பாத்து பிள்ளை சொல்லிக்கொண்டி ருந்தான். அத்தான் நிதானமாகக் கரை ஒட்டினார்.
நாளைக்கு சொப்பிங் போவம் என்ன? அக்கா என்னைப் பாத்துச் சொன்னாள். நான் தலையசைச்சன். கார் பார்ட்டி ஹாலுக்கு முன்னால் நின்றது. என் கால்கள் நிலத்தில் பதிய மறுத்து நடந்தன. குளிர் கொஞ்சம் கடுமையாக இருப்பதுபோல்ப் பட்டது. முகத்தில் மோதிய குளிர் காற்றால் மூச்சத் திணறி மூக்கைக் குவித்து முகத்தைச் சுளித்துச் சிரித்தான் என் கையிலிருந்த பிள்ளை.
காது அதிரும்படி தமிழ்ப்பாட்டுக் கதற வண்ண வண்ணமாய் பெண்கள், குழந்தைகள். ஆண்கள், மேசையில் மனைவி குழந்தைகளுடன் இருப்பது தமது மிடுக்கிற்கு ஏற்காதெண்டோ என்னவோ வழமை போல் மூலையில் பார்ப் பக்கமாய் கையில் ஒரு கிளாசுடன் கதைத்தபடியே . . . அக்கா அத்தானின் கையைப் பிடித்துத் தன் பக்கத்தில் இழுத்து இருத்தி வைத்தாள். அத்தான் சிரித்தபடியே.
நீயும் இப்பிடித்தானோ மனுசனை சீலை நுனியில கட்டி வைச்சிருக்கிறியே?
நான் சிரிக்காமல் பார்வையைத் தவிர்த்து
鲁
N Cd
i

Page 72
Ko 용
வேறெங்கோ ஒட விட்டன். கால்கள் தரையை மிதிக்க மறுத்தன. வேகமாக எல்லாமே நடந்து முடிந்து சுபமாக வீடு போய் சேருவோமாக. நான் பிரார்த்தித்துக் கொண்டன், பலகாரங்கள் மேசைக்கு வர அத் தான் விசிலடித்தபடியே சாப் பிடத் தொடங்கினார். அக்கா அங்குமிங்கும் பாத்து தனக்குத் தெரிந்த பொம்பிளைகளைக் கண்டு எழும்பிப் போய் சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக்கொண்டு நிண் டாள். கண்கள் அடிக்கடி திரும்பி அத்தானை நோட்ட மிட்டபடியே இருந்தன.
பலகாரத்தைக் கொறித்த படி பிள்ளைக்கு விளையாட் டுக் காட்டினேன். என்னை அறியாத ஒரு பதட்டம் நெஞ்சுக்குள். இதுவெல்லாம் தேவைதானா? அக்கா பதட்டம் குறைந்து சகஜமாகிப் போனது போல் பட்டது. அத்தான் பலகாரத்தைச் சாப்பிட்டபடியே பக்கத்து மேசையிலிருந்த வயது போனவருடன் இலங்கை அரசியல் கதைத்துக் கொண்டிருந்தார். எனக்கு நிம்மதியாய் இருந்தது.
இது என்ர தங்கச்சி லண்டனில இருந்து வந்திருக் கிறாள்.
அக்கா யார் யாருக்கோவெல்லாம் என்னை அறிமுகப்படுத்தினாள். நான் தலையாட்டிச் சிரித்து வைத்தேன். ராம் என் பக்கத்தில் இல்லாதது என்னவோ போலிந்தது.
அத்தான் பொம்பிளைகளின்ர தோற்றத்தைப் பார்த்துப் பார்த்து எனக்குக் கொமெண்ட் சொன்ன படியிருந்தார். அத்தான் அழகாக இருந்தார். அவரின் உடைத் தெரிவும் எனக்குப் பிடித்திருந்தது. என்னுடன் நாகரீகமாக நகைச்சுவையாகப் பழகத் தெரிந்திருந்தது. படித்திருந்தார். நல்ல வேலையில் இருக்கிறார். அக்காவை என்ர குஞ்சு என்ர குஞ்சு எண்டு கூப்பிடும் போது எனக்குள் சந்தோஷங்கள் பரவியிருக்கின்றன. ஆனால் நான் வெறுத்திருக்கிறேன். ஆத்தானை என் மனதுக்குள் கடைசி எல்லை வரை வெறுத்திருக்கின் றேன். அக்காவைப் பதட்டப்பட வைத்து, அழ வைத்து, அவமானப்படுத்தும் அத்தானை என்னால் மன்னிக்க முடியாமல் இருந்தது.
அத்தானின் தொடரும் பகிடிகளுக்குச் சிரிச்சு சிரித்து நிலத்தில காலை பதிக்க முயன்றேன். பதட்டங் கள் குறைந்து இயல்பாக இருக்க முனைந்தேன்." ப்ேபி பேர்த்டே பாடி கேக் வெட்டினார்கள். அக்கா அங்கு மிங்கும் நடந்து திரிந்து கதைத்துக் கொண்டு நின்றாள். வோஷ் ரூம் போக அத்தான் எழும்பிப் போனார். அக்கா பின்னால் போய் அவருடனே திரும்பி வந்தாள். அத்தான் ஜூஸ் வாங்கிக் குடித்தார். அக்கா நிம்மதியாய் சிரித்தாள். யாரோ அத்தான்ர கையைக் குலக்கி சுகம் விசாரித்தார்கள். சாப்பாடு ரெடி எண் டது ஒரு குரல். ஆத்தான் இன்னுமொரு ஜூஸ் குடித் தார். அக்கா பிள்ளைக்குச் சாப்பாடு தீத்தினாள். எல்லா இடமும் சிரிப்பும் கும்மாளமும் சந்தோஷமும் சாப்பாடும் . . . திடீரெண்டு . . .
நீயாரடா அதைக் கேக்க . . . நான் சொன்னாச்
 

சொன்னதுதான் நான் சொன் னாச் சரியாத்தான் இருக்கும்.
அத்தான் யாரையோ பிடிச் சுத் தள்ளுவது தெரிஞ்சுது . . . அக்கா பதறி ஓடினா . . . சிரிப்பு கும்மாளம் எல்லாம் அடங் கீட்டுது.
ஆளுக்கு நல்ல வெறி வெளி யில கூட்டிக் கொண்டு போங்கோ ...
யாரோ சொன்னது கேட்டது.
டேய் யாரடா என்னை வெளியில போகச் சொல்லுறது.
அத்தான் கத்தினார். ஆ. . வெண்டு சத்தியெடுத்தார். சனங் களெல்லாம் முகஞ்சுளிச்சு விலகிக் கொண்டீச்சுது கள் . யாரோ ஒருத்தர் அத்தான்ர கையப் பிடிச்சுத் தர தர எண்டு இழுத்துக்கொண்டு வெளியில போனார் அக்கா பின்னால ஓடினா. நானும் பிள்ளை யோட பின்னால ஒடினன்.
ஏறுங்கோ காருக்க அக்கா அத்தான்ர தலையில குட்டுறது தெரிஞ்சிது. நான் விலகி நிண்டன். அத்தான்ர கையைப் பிடிச்சு காருக்குள்ள தள்ளினா அக்கா எடீயே என்ர விடடீ . . . அத்தான் கத்தினார். குளிர் காற்று முகத்தில அறைய பிள்ளை வீல் எண்டு கத்தினான். அவனை இழுத்துக் கார் சீட்டில இருத்திவிட்டுக் காரை ஸ்டார் செய்தாள் அக்கா. நான் பேசாமல் காருக்குள் ஏறினேன். முகம் சாய்க்க ராமின் தோள் எனக்குத் தேவையாய் இருந்தது. மனதுக்குள் வெறுமை பரவ கண்களை வெளியே விட்டேன். வெறிச்சோடும் ரோட்டில் சில கார்கள் வேகமாகப் போய்க்கொண்டி ருந்தன. எல்லோருக்கும் ஏதோவொரு அவசரம். உயிரைக் காப்பாற்ற, காதலியைச் சந்திக்க, வேலை முடிந்த அலுப்போடு வீடு விரையும் சடுதியில், கொலை வெறியில், இன்னும் எதற்காகவோ எதற் காகவோ எல்லாம். நான் போர்வைக்குள் ராமின் அணைப்பில் சூட்டில் கண்கள் மூடி கடுகதியற்ற ஒரு இரவின் சூழலுக்காய் எங்கினேன். கார் வந்து வீட்டின் முன்னால் நிண்டது.
நான் எயார்ப்போட் போவதுக்கு தயாராகிக் கொண்டிருந்தன். அக்கா யாரோடையோ ரெலி போனில கதைச்சுக்கொண்டிருந்தாள்.
பாவமடி அவள் புருஷன் சரியாப் போட்டு அடிக் கிறவனாம், சொல்லி அழுவாள். ஏன்தான் ஒண்டா இருக்கிறாளோ தெரியாது.
அக்கா யாருக்காகவோ இரங்கித் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தாள் . . . நான் அக்காவை வினோதமாகப் பார்த்தேன். கதைச்சு முடிய என்ரை தலையத் தடவி
அடுத்த முறை வரேக்க கட்டாயம் ராமையும் கூட்டிக்கொண்டு வா என்ன . . . சமருக்க வந்தா யெண்டா இன்னும் நல்லா இருக்கும் எண்டாள்.
நான் தலையாட்டினேன்.
ஒவியங்கள் : பா. குணசேகரன்

Page 73
T. Jega
Barrister, Solicitor &
2620 Eglin Suit Scarb( ON M
Tel. (416) 266-6154/
 
 
 
 
 
 
 
 

theesan
: Notary Public (ont)
Fax: (416) 266-4677

Page 74
பின் காலனித்துவ e
அண்மைக் காலத்தில் பின் காலனித்துவ இலக்கி யத்தில், பின் காலனித்துவ திறனாய்வில் இந்தத் துறை சார்ந்த அணுகுமுறைகளில் ஏற்பட்ட சில சிக்கல்களில், சில கேள்விகளில் உருவான கட்டுரை இது. குறுகிய ஒரு எல்லைப்பாட்டிற்குள் இந்தக் கேள்விகளுக்கு பதில் காணும் முயற்சியை மேற் கொண்டபோது அந்தத் துறையை மீறி பல்வேறு துறைகளுக்குள் செல்வது தவிர்க்க முடியாத நிலைமை யாக மாறியது. முக்கியமாக தமிழ் இலக்கியத்திற் குள்ளும், இலக்கிய வரலாற்றுக்குள்ளும், மொழி பெயர்ப்புக் கோட்பாட்டிற்குள்ளும் இந்தக் கேள்வி களுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாக எனக்குத் தென்பட்டது. இவை யாவவற்றையும் முடிச்சுப் போட்டு சில மேலோட்டமான கருத்துக்களை exploratory ideas- முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். துறைகளை மீறி துறை மயக்கங்களை வரவேற்று, ஒப்பியல்ரீதியில் ஆராய்ச்சியை மேற் கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய முயற் சிக்கு இடமுண்டு என்ற நம்பிக்கையில் உருவான கட்டுரை இது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக பின் காலனித்துவம் என்னும் கோட்பாடு எங்கள் மத்தியில் அறிமுகமாகி பயன்படுத்தப்பட்ட பொழுதிலும் கடந்த 25 ஆண்டு களாக இலக்கியம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் காலம் சென்ற எட்வேட் செயித் எழுதிய Orientalism இத்தகைய அணுகுமுறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. The Orient is a construct என்ற கொள்கையை - கிழக்கித்தையம் ஒரு கட்டுருவாக்கம் - அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இதற்குப் பின்னர் வந்த அறிஞர் பலர் செயித்தின் நோக்கில் அவருடைய conceptual model கருத்தமைவு மாதிரியில் - உள்ள குறைகளை எடுத்துக் காட்டினார்கள். செயித் கூறிய யாவும் ஏற்கக்கூடிய கருத்துக்களா இல்லையா என்பது புறம்பான விஷயம். எங்களைப் பொறுத்தவரையில் அவர் எழுதிய நூல் ஒரு மைல் கல். அதைத் தொடர்ந்து வெவ்வேறு வகையில் இந்தத் துறையின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள் காயத்ரி அஜாஸ் அஹமட், ஹிமி பாவா போன்ற
Co
இவர்கள். இவர்கள் புதிய பல கோணங்களில் இந்த
பிேன் காலனித்துவ அநுபவத்தைப் பார்த்தார்கள். அண்மையில் றொபெட் யங் எழுதிய Post Colonialism: An Historical Introduction 900 பக்கங்களில் பின் காலனித் துவத்தின் பலதரப்பட்ட கோணங்களை வாசகர்
ஜகளுக்கு எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
 

லக்கியப் போக்குகள்
OUTRITURb
பின் காலனித்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட எங்களுடைய தலைமுறை இதன் பல வீனங்களை முற்றாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்து சினுவா ஆச்சிபெ, வோலெ சொயின்கா போன்ற எழுத்தாளர்களும் கரிபியன் நாடுகளிலிருந்து டெரெக் வோல்கொற், காமு ப்றெத் வெயிற் போன்ற கவிஞர்களும் ப்றான்ஸ் ஃபனன் போன்ற சிந்தனையாளரும் பின் நவீனத்துவக் கோட் பாட்டை ஐரோப்பாவின் பிடியிலிருந்து அதன் கருத்து நிலையிலிருந்து விடுதலை காண்பதற்கு ஒரு கருவியாக அதைப் பயன்படுத்தினார்கள். அடை யாளத்திற்கு ஒரு முக்கிய அம்சம் அது. அதாவது, Resistance became a salient aspect of post colonial theory. பின் காலனித்துவத்தில் எதிர்ப்பு ஒரு முனைப்பான sg|LbéFLDIT6ug). Resistance, Recuperation, Decolonization எதிர்ப்பு, இழப்பிலிருந்து மீளல், காலனித்துவத் திலிருந்து மீளல். இவை யாவும் இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான முன்னீடுபாடுகளாக - preoccupation - s gy60) LDB35607.
இந்தத் துறையின் வளர்ச்சி, அதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் யாவுமே முக்கியமானவை. குறிப்பிட்டுச் சொல்வதானால் பின் காலனித்துவமும் பின் நவீனத்துவமும் சமாந்தரமாகச் செல்கின்றனவா அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகின்ற னவா என்று பலர் கேள்விகள் எழுப்பியுள்ளனர். சல்மான் ருஷ்டி, ஜே.எம்.குட்சிய போன்ற நாவலாசிரி யர்கள் தங்கள் படைப்புக்களின் மூலம் இந்த இரண் டிற்கும் பொதுவான indeterminacy, ambivalence அளவுறு தியற்ற, இரட்டை நிலை - போன்ற நிலைப்பாடுகளை திறனாய்வாளர்கள் மத்தியில் செயல்பட வைத்தனர்.
தென்னாசியாவின் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் இத்தகைய அணுகுமுறை அதாவது, எதிர்ப்பை மையமாகக் கொண்ட கோட்பாடு, முற்றிலும் பொருத்தமானதல்ல என்பது ஓரளவு தெளிவாகப் புலப்படுகின்றது. ஐரோப்பிய செல்வாக்கு எத்தகைய தாக்கத்தை தென்னாசியாவில் ஏற்படுத்தி யது என்பதை இன்னும் நாம் முழுமையாக ஆராய வில்லை. ஆனால், நிச்சயமாக எதிர்ப்பும் இழப்பி லிருந்து மீளலும் என்ற எதிரீடு மாதிரி - binary model - எங்களுக்குப் பொருத்தமானதல்ல. எங்க ளுடைய இலக்கியங்களில் இந்த எதிர்ப்பு ஊடுருவிச் சென்றதிற்கு ஆதாரமில்லை. ஒருவகையில் பார்க்கும் போது எங்களுடைய அடையாளத்திற்குப் பின்னணி யாக அறிவார்ந்த ஆதாரமாக - intellectual basisஐரோப்பிய செல்வாக்கைக் குறுகிய ஒரு வரையறைக் குள் அடக்குவது பொருத்தமானதல்ல.

Page 75
ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர் ருஷ்டி யும் எலிஸபெத் வெஸ்ரும் இணைந்து வெளியிட்ட இலக்கியத் தொகுப்பின் முன்னுரையில் ருள் டி கடந்த 50 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முக்கியமான இலக்கியம் ஆங்கில மொழியில்தான் உருவாகியது என்று குறிப்பிட்டார். ஆழமறியாமல் காலை விட்ட ருஷ்டியை எதிர்த்து கிண்டல் பண்ணியவர்கள் பலர். ருஷ்டியின் கருத்துப் பலவீனத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில் பயனில்லை. அவ்வளவு கலைத்திறனும் ஆற்றலும் கொண்ட ஒரு நாவலா சிரியர் ஏன் அப்படிக் கூற வேண்டி ஏற்பட்டது என்பது ஒரு முக்கியமான அம்சம். புலம்பெயர்ந்த கண்ணோட்டத்திலும், ஆங் கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட அந்த வகுப்பைச்
சார்ந்தவர்களுக்கும் - the English - educated and middleclass - சார்ந்தவர்களுக்கு - இந்தக் கருத்து இயல்பாக ஏற்பட்டிருக்கலாம். அதாவது, அவர்களுடைய உலக நோக் N
Gsi - World view - 2,515ialif, ஐரோப்பிய செல்வாக்கு ஆகியவை எத்தகைய தாக் கத்தை உருவாக்கியது என்று ஆராயும் ருஷ்டி போன்றவர் களுக்கு எதிர்ப்பு ஒரு முக்கிய மான விடயம். அவருடைய உலக நோக்கில் இருந்து உரு வாகும் அழகியலில் எதிர்ப்பு ஒரு முக்கிய அம்சமாகக் கொண்ட ஒரு இலக்கியத் AN TA திற்கு முக்கிய இடமுண்டு. இலக்கியத்தை ஒரு மொத்த Robert. சட்டகத்திற்குள் - 10talizing fr:Itwork-க்குள் வைத்துப் பார்ப்பதின் குறைபாடுகளை ஒருவகையில் ருஷ்டியையும் அவருடைய திறானாய் வாளர்களும் நிருபித்துள் எஇரர்.
பின் காலனித்துவத்தோடு ஏற்பட்ட அறிவு urg i j 7 – intellectual advancement - gr. 33ulIT 337gl. பழமையில் உளறியிருந்த, நம்பிக்கை வைத்திருந்த, ஆங்கிலத் துறைகளெல்லாம் புதிய கோணங்களில் மைய நீரோட்ட இலக்கியத்தைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Stephen Greenhaul போன்றவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியால் ஆங்கிலத் துறைகளின் அடித்தனமாக இருந்த மறுமலர்ச்சி கல்வி புதிய வழிகளில் வளரத் தொடங்கியது. போல் கில்றோய் எழுதிய The Black Atlantic ஒரு முக்கிய பங்களிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இவ்வாறு பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்திய பின் காலனித்துவம் தென்னாசிய இலக்கியத்தில் எத்தகைய உணர்ச்சியைக் கொண்டுவந்தது, எப்படி எங்களுடைய அறிவார்ந்த பிரக்ஞையை மாற்றியது என்பது தெளிவாக ஆராயப்படவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் எங்களுடைய கருத்துப் பிரக்ஞை - conceptual consciousness, தென்னாசிய இலக்
 

கியத்தின் அறிதலியல் - epistemology - என்ன, அதன் மெய்ப்பொருள் மூலவாய்வியல் - Ontology - என்ன என்பது பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆர்கேநாராயன் எங்கள் யாவருக்கும் தெரிந்த ஒரு நாவலசிரியர் மேற்கத்தைய நாட்டு அறிஞர் அவருடைய உலகப் பொதுமை பான-பniversal - அம்சங்களைப் பாராட்டி அவருக்கு ஒரு முக்கிய இடத்தைக் கொடுத்தனர். இதற்கு மாறாக காயத்ரி ஸ்பிவக் அவரை வடமொழி மரபில் நோக்கி அவருடைய இந்திய அம்சங்களை வலியுறுத் தினார். ஆனால் கவனமாக நோக்கும்போது நாராயன் ஒரு தமிழ் நாட்டு தென்னிந் திய நாவலாசிரியர். தமிழ் நாட்டின் நிலவளம், அதற் குரிய நடத்தை வடிவங்கள் - behaviour patterns - -gly 5657 பின்னணியில் உள்ள வெளி சார் உருவரை - spatial configuration- 350 SU ILI TSILI அவருடைய ஆக்க இலக்கி பத்தின் ஆழமான அம்சங் கள். இத்தகைய முரண்பாடு களுக்கு, கேள்விகளுக்குப் பதில் காணும் முயற்சி தமிழ் இலக்கியத்தை உள்ளடக் கியது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்கு மொழி பெயர்ப்புக்கள் அவசியம் என்று கூறுவதற்கில்லை. மொழிபெயர்ப்பை ஒரு காலனித்துவப்படுத்தும் ANTRO TITI ON உணர்ச்சிக் குறிப்பு -
colonising gesture- a T3) a C, Motin: கூறக் கூடிய நிலைமை உண்டு. ஆனால் மொழி பெயர்ப்பை முன்வைப்பது ஆங்கிலத்தை முன்வைப்ப தற்கு - Privileg-ே பண்ணுவ தற்கு அல்ல. மொழிபெயர்ப் புக்கள் எழுப்பும் வினாக்கள் பல. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மொழிபெயர்ப்பின் தனித்துவம் எங்களுக்கு ஒரு பக்கபலமாக அமைகின்றது. இலக் TTT TTT TTT TTTTT TT TLLLLLLLLS LLLLCLLLLaLLLLL S முறிவுகள், தொடர்ச்சியின்மை போன்றவற்றை அல்லாமல் மொழிபெயர்ப்பு ஒருமைப்பாடுகளையும் தொடர்புகளையும் வலியுறுத்துகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல சந்தர்ப்பங் களில் தொல்காப்பியத்தில் சில அம்சங்களையும் சங்க இலக்கியத்தின் சில அம்சங்களைப் பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பியிடம் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. இதன் விளைவாக நெடுநல்வாடையை மொழிபெயர்க்க வேண்டும் என்ற விருப்பமும் ஏற்பட்டது.
நெடுநல்வாடை ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒருமுறையல்ல, இரண்டு அல்லது மூன்று முறை மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அந்த நிலைமையில் மீண்டும் ஒரு மொழிபெயர்ப்பு தேவையா என்பது ஒரு கேள்வி.
F

Page 76
பொருளுரைகளாலும் அம்முரண்பாடுகள் பொழுது வெளிப்படையாகியும் அர்த்தமுள்ளன கியும் விட்டன. மரபென்ற ரீதியிலும் வாழ்க்ை பிரதிபலிப்பாகவும் அமைகின்றதைக் காணக் தாக இருக்கின்றது. வழக்கங்களை வைத்திரு அதேவேளை அவ்வழக்காறுகள் இந்த சுட்டிகளு இணைக்கப்பட்டும் உள்ளன. Conventions a seen as being linked with the referents while retainir conventionality. ஒருமைப்பாடு எவ்வளவு மு மானதோ அதேபோன்று அந்தக் கட்டமைப்பி அடங்கும் முரண்பாடும் ஆழமான கருத் தெரிவிக்கின்றது.
இதற்கு ஒரு உதாரணம்; ஆங்கில இல வரலாற்றிலே வேட்ஸ்வேத்துடன் ஆரம்பிக்கு புதிய சகாப்தம். அவர் Lyrical Balladsற்கு எ முன்னுரையில் தெளிவாகின்றது. எளிமை சொற்பிரயோகம், யாவரும் விளங்கிக்கொன யாப்பு, சாதாரண மனிதனின் வாழ்க்கை - ( யாவும் முன்னுரையிலும் அவர் எழுதிய க களிலும் காணலாம். அவருடைய வார்த்ை diplo) giT607(Tai) 9,951 the language of men.9/Gigi GiBL அவரோடு இந்த முயற்சியில் பங்குபற்றிய கோல் The Rime of the Ancient Mariner 9/G35 Gg5/Tg5ü எழுதுகின்றார். அதில் வரும் பாத்திரங்கள் நிச் கள் யாவுமே இயற்கைக்கு அப்பால் - Supernatu இயற்கை மீறிய - uncanny -ஆக இருப்பதைக் லாம். இத்தகைய ஒரு கவிதைக்கு கோல் பக்க ஒரத்தில் எழுதிய உரை, இன்னுமொரு உை அமைகின்றது. நாங்கள் மேலெழுந்த வாா romanticism- கற்பனாவாதம் - என்று எதையெல் மனதில் கொள்கிறோமோ அதற்கு மாறாக ( ரிட்ஜ் எழுதிச் செல்கின்றார். ஒருவகையில் பார் போது இயற்கையைப் பற்றி கதைப்பதானால் இய
Supercare Pharmacy
3228 Eglinton Ave. Ea Scarborough ON M1J 2H Te : 416298 3784
Fax : 416 298 3052
Contact: F

இப்
DG) IT கயின்
கூடிய iக்கும் ருடன் re thus g their க்கிய ற்குள் தைத்
}க்கிய ம் ஒரு ழுதிய
T657 ாளும் இவை விதை தயில் ாத்தில் ரிட்ஜ் பிற்கு கழ்ச்சி (alஆக
ჭნIT6ზზT ரிட்ஜ் TuusT35 ரியாக Uலாம் கோல் fக்கும் பற்கை
கடந்ததையும் கதைத்தேயாக வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது.
இதே உணர்ச்சி தமிழ் இலக்கியத்தின் பல கால கட்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மொழிபெயர்ப்பை நாம் கோட்பாடாக்கும் போது இவை யாவற்றையும் மனத்தில் கொள்ள வேண்டும். பின் காலனித்துவ கோட்பாடு ஒருவகையான உண் மையை வலியுறுத்துகின்றது. மொழிபெயர்ப்பு வேறொரு மரபை அறிமுகப்படுத்தி புதிய கருத்துக் களை முன்வைக்கின்றது. இரண்டிற்கும் இடையில் ஒரு நெருங்கிய உறவு உள்ளது.
பின் காலனித்துவம் ஆங்கிலத்தை ஐரோப்பாவை ஒரு லென்ஸாக, கருத்தமைவு சட்டகமாக முன் வைக்கின்றது. பல உண்மைகளை எடுத்துக் கூறுகின்ற அதேவேளையில் வேறுபல அம்சங்களை பரிமாணங் களை மறைக்கின்றது. மொழிபெயர்ப்பு மூலமாக நாம் தாய்மொழி இலக்கியங்களை, இலக்கிய வரலாறு களை, வரலாற்றெழுதியலாக வேறு கோணங் களிலிருந்து பார்க்கின்றோம். வெளியைப் பற்றி காலத்தைப் பற்றி, நிலத்தைப்பற்றி, நிலக்காட்சிகளைப் பற்றி மீண்டும் சிந்திக்கின்றோம். புத்தாங்களுடன் சேர்த்து மரபைப் பற்றி தொல்குடிசார்ந்ததைப் பற்றி autochthonous - நோக்கி எண்ணத்தைத் திருப்பு கின்றோம். இவ்வாறு எண்ணக்கருத்துக்களை உருவாக்கும்போது பின் காலனித்துவத்திற்கும், மொழிபெயர்ப்பிற்கும், இலக்கியத்தின் வரலாற்றிற்கும் கருத்துநிலை நோக்குகளுக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கின்றது தெளிவாகின்றது, பின் காலனித்துவம், தாய்மொழி, இலக்கிய வரலாறு, திறனாய்வுப் பயிற்சி, எண்ணக்கரு மாதிரிகள் ஆகிய யாவும் ஒன்றோடொன்று வெட்டுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
RAM, Pharmacist
PharmaCrace Drug Mart
3850 Finch Ave. East
Scarborough ON M1T 3J6 Te : 416.267 9900
Fax : 416 267 1800
75

Page 77
மதிப்பீட்டு விமர்சனம்
எளிதில் வீரணமாகு
TaJõ
நாள்தோறும் தன் மனத்தில் புதிய புதிய ஜன்னல்களைத் இ திறந்தபடியே இருக்கிறார் அ.முத்துலிங்கம். வாழ்க்கையில் g
அவருக்கு எதிர்ப்படும் நிகழ்வுகளை அல்லது நிகழ்வு இழிவு களுக்கு முன் அவரே எதிர்ப்பட்டும், அவற்றை ஆழமாகப் ழவு
புரிந்துகொண்டு, தமது வயதையொத்த ஆத்மார்த்தமான is 6). நண்ப்ரிடம் பகிர்ந்துகொள்ளும் தொனியில் கட்டுரைகளாக 'சி மாற்றியுள்ளார். ‘அங்கே இப்ப என்ன நேரம்? என்ற இந்த நூலில், அவர் எழுதி, வெவ்வேறு இதழ்களில் பிரசுரமான- 59. பிரசுரமாகாத கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும், நீண்ட தம குறிப்புகளும் எட்டு தலைப்புகளின் கீழ், நாற்பத்தியெட்டு கொண் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தனணு
தேவை
இக்கட்டுரைத் தொகுப்பிற்கு இதுவரை நான்கு பேர், நான்கு எங்கவ விதக் கோணங்களில், வெவ்வேறு இதழ்களில் மதிப்புரை 鷺 எழுதியுள்ளனர். முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் பிடித்த இ 'ತ್ಯ விஷயங்களாக மாலனுக்கு நகைச்சுவையும், பி.ஏ.கிருஷ்ண 55
னுக்குச் சம்பவங்களின் தேர்வும், சுகுமாருக்கு அனுபவத் (LP: தகவல்களும், பழனிவேளுக்கு மொழிநுட்பமும் உள்ளன. போலே
மனிதன் தான் வசிக்கும் இடம், தான் சார்ந்த சமூகச்சூழல், L அவை கற்பிக்கும் மதிப்பீடுகள், அவற்றிற்கு இயைந்தும் - " மீறியும் அவன் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் ரசனை சிங்க
மற்றும் அனைத்தின் மீதான நுண்பார்வை முதலியவைகளே அவனை ஒரு முழுமனிதனாக மாற்றுகின்றன என்பதனை இக் ଦୃଢ଼୯ கட்டுரைகளைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகின்றது. படித்த அவ்வகையில் இத்தொகுப்பின் வழியாக, அ.முத்துலிங்கம் ஒரு தொகுத் சிறந்த ரசிகராக, கறாரான சமூகவிமர்சகராக, அனைத்திற்கும் மற்றும் மேலாக ஒரு முழு மனிதராகக் காட்சி தருகிறார். நிகழ்வு கற்பனையை நம்பி, நடந்து பயணிக்கும் படைப்பாளர்கள் ' மத்தியில், உண்மையை நம்பி, சிறகடித்துப் பறக்கும் எழுத்துக் ே கலைஞர் அ.முத்துலிங்கம். இவரது சிறுகதைகளில் 75 சதவிகி நீ" தம் கற்பனையும், 25சதவிகிதம் உண்மையும், மற்ற படைப்பு நிலநடு வகைகளில் 25சதவிகிதம் கற்பனையும், 75சதவிகிதம் உண் பற்றி ந
மையும் கலந்திருக்கும். இந்த நூலைப் பொருத்தவரை முத்து ಕ್ಲಿ: லிங்கத்தின் எழுத்துக்கள் நம்பகத்தன்மையோடு மிளிர்கின்றன. லு
கட்டுரைகளின் கட்டுமானம் வாசகரை ஈர்க்கின்றது. ஒரு దాడి பத்திக்கும் அடுத்தப் பத்திக்குமான தொடர்பு வலிந்து ஏற்படுத் ಇಷ್ರ தப்பட்டிருப்பினும், அதில் பொதிந்துள்ள நகைப்பு, வாசிப்புக் க்கொ குச் சுவைகூட்டுகிறது. பக்கம் 335 இல் Any key என்ற ಪ್ಲೆ:
சொல்லை முதன்மைப்படுத்தி நகைச்சுவையுடன் ஒரு செய்தி யைக்கூறி, அடுத்த பத்தியை Anyway என்ற சொல் லால் இப் தொடங்குவார். நாம் அதே நகைச்சுவையை இச் சொல் லுக்கும் சொல்6 பொருத்திப்பார்த்து யோசிக்கலாம். இதைப்போல, வாச நோக்க கர்களும் பங்கெடுக்க வேண்டியதன் தேவையை இந்த நூல் அனை
பல இடங்களில் வலியுறுத்துகின்றது. இவருக
வாழ்வின் யதார்த்தமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசிவரும் ಕ್ಲಿ: போதே, தனக்கேயுரிய நகைப்புடைய தருக்கத்தின் வழியாக காராத முன்நகர்ந்து, மனித வாழ்வுகுறித்த ஒட்டுமொத்த தத்துவத்தைத் ' தொட்டு மீள்கின்றார். அந்த வகையில், பணக்காரர்கள் என்ற சி கட்டுரை குறிப்பிடத்தக்கது. ဓဖစီး
முத்துலிங்கத்தின் மற்றொரு சிறப்பு, வரிக்கு வரி அது நாடுகள் உவமையானாலும், வர்ணனையானாலும், வெறும் உரைநடை- எதிர்செ உரையாடலானாலும் அதில் நகைச்சுவை சுழித்தோடியபடியே வாழ்ந்: இருக்கும். சில இடங்களில் அது பூமிக்குள் ஓடும் நதிபோல ‘வாழ்கி மறைந்திருக்கும். கூர்மையாக வாசிப்பவர்கள் அந்த நதியிலும் இந் நீராடலாம். 'தூர நாட்டில் இருந்து தகரக்குழாய் வழியாகக் கதைப் அஞ்சன் பதுபோல அவர் குரல்வளம் இருக்கும்' (பக்கம்:298). “Maabu நிலை Stork என்று சொல்லப்படும் ஒருவித நாரைகளைப் பார்ப்பது தேவை என்று முடிவு செய்தோம். ஆண் நாரைகளுக்குக் கழுத்திலே லிருந்து இரண்டு அடி நீளமான ஒரு பை தொங்கும். இவை பெண் எளிதில் நாரைகளைக் கவர இந்தப் பைகளைக் காற்றினாலே ஊதி ஊதி உப்பவைத்து மயக்கப் பார்க்கும். எங்களுக்குச் சமீபத்தில் நின்ற (அங்க இந்த நாரை அந்த வேலையில் மும்மரமாக ஈடுபட்டது. அது *சிேசி
வசீகரிக்க முயற்சித்த அதிருபசுந்தரி ஆழ்ந்த நித்திரையில் சாலை, 76இருந்தது. அங்கேயும் இதே கதைதான்" (பக்கம்.146). ரூ.180.
 

纖
21 O. O. ம வாழககை
PE
பரது எழுத்துக்களில் வெளிப்படும் நகைச்சுவையை வர் தொ.பரமசிவன், ‘கசப்பும் வெறுப்பும் அற்ற நகைச் என்கிறார். முத்துலிங்கத்தின் நகைச்சுவை எவரையும் டுத்துவதில்லை; எவர்மீதும் கசப்பையும், வெறுப்பை ாரி இரைப்பதில்லை. எவ்வித அரசியல் நோக்கமும், b இல்லாத, மனிதநேயமிக்க, மிக யதார்த்தமான, எளிய, நையாண்டியையே அவர் தமது எழுத்துக்களின் முது பாகக் கொண்டுள்ளார். து சொந்த அனுபவங்களை அப்படியே எழுத்தில் டுவரும் முத்துலிங்கம், எல்லாக் கட்டுரைகளிலும் டைய பலவீனங்களைச் சொல்லிச் செல்கிறார். அதற்குத் யான மனத்திடமும், மதிநுட்பமும் அவருக்குள்ளன. fயிலும் அவர் தன்னை மிகைப்படுத்தவில்லை. இது எழுத்து நேர்மைக்குச் ஒரு மறைமுகச்சான்று. இதனை நூலுக்குரிய கூடுதல் சிறப்பு என்றும் கூறலாம். ததுலிங்கத்தின் சில கட்டுரைகள் சிறுகதைகளைப் வ உள்ளன. இவை, அவருடைய எழுத்தின் பலமாக லவீனமாகவும் மாறி மாறித் தோற்றம் தந்து வாசகர் மயங்கச் செய்கின்றன. இத்தொகுப்பில், 'அனுபவக்கதை ான்ற தலைப்பில் உள்ள ஐந்து கட்டுரைகளையும், தைகள்' என்றே கூறலாம்.
கருத்தைச் சொல்ல அதற்குப் பக்கத்துணையாகத் தாம் - சந்தித்த - சிந்தித்த அனைத்துத் தகவல்களை யும் துக் கோர்த்துத் தருவது முத்துலிங்கத்தின் பாணி. மேலை கீழை இலக்கியம், புராணங்கள், இதிகாசங்கள், சமகால கள் என அனைத்தும் கட்டுரையின் இடம்-பொருள்ளுக்குத் தக்கபடி கலந்துவருகின்றன. அவை ஒருபோதும் களுக்குச் சலிப்பைத் தருவதில்லை என்பதே அவற்றின் றப்பு. குத்துச் சண்டை, குதிரை ரேஸ் மற்றும் கார் ரேஸ், க்கோடு, வெள்ளைநிற காண்டாமிருகம் போன்றவைகள் ாம் அறிந்திருந்தாலும், அவைகளைப்பற்றிய நுட்பமான களைப் போகிறபோக்கில் முத்துலிங்கம் சொல்லிச் ம்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. த நூலைப் படிப்பவர்கள் கையில் ஒரு பென்சிலை க்கொள்வது நல்லது. பக்கம்தோறும் உள்ள அரிய தகவல் ம், சிந்தனையைத் துன்ண்டத்தக்க வரிகளையும் குறித் ள்ளவும், அங்காங்கே உள்ள சந்திபபிழைகளை நீக்கிக் வும் - சேர்த்துக்கொள்ளவும் அந்த பென்சில் உதவும். படி ஒரு தொகுப்பைக் (கட்டுரைத் தொகுப்பு என்று 0 வேண்டாமே!) கொண்டுவரும் முத்துலிங்கத்தின் த்திற்குப் பின்னணியாகத் "தாம் தமிழில் எழுதியவை த்தும் (சிறுகதைகள் தவிர்த்து. முன்பே (2003இல்) டைய சிறுகதைகளைத் தமிழினி பதிப்பகம் மிகத் வெளியிட்டுள்ளது) செம்பதிப்புக்கான அவசியத்தைக் வகையில் அமையும் ஒரு புத்தகமாக வரவேண்டும்" கத்தான் இருந்திருக்கவேண்டும். அந்த நோக்கம் இந்த
வழியாக நிறைவேறியுள்ளது.
விதத்தில் இந்த நூலில் உள்ள கட்டுரைகளை று காலவரிசைப்படுத்தினால், புலம்பெயர்ந்து பல்வேறு லும் சிக்கலான வாழ்க்கையை அறிவுத்துணையோடு ாண்டு சீர்மிகு இடத்தை அடைந்து நிறைவாழ்வு வரும் அ.முத்துலிங்கம் என்ற ஒரு மனிதரின் கைச் சரிதத்திரட்டு கிடைக்கக்கூடும். த நூல், சமையல் அறையில் பயன்படுத்தப்படும் றப் பெட்டியைப் போன்றது. வாசகர்கள், தத்தமது மன மற்றும் வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப, எவை யோ- எவ்வளவு தேவையோ அவற்றை இந்த நூலி பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு வாழ்க்கை ஜீரணமாகும். இப்ப என்ன நேரம்? கட்டுரைத் தொகுப்பு, ஆசிரியர் : துலிங்கம், வெளியீடு: தமிழினி பதிப்பகம், 67, பீட்டர்ஸ்
ராயப்பேட்டை, சென்னை-14, பக்கங்கள்343, விலை

Page 78
We are in the
*熊 atisfact o Tables o Chi Linen P o Helium Ballo
1600 Brimle Scarboroug
wwwagincou
Complete Line of
 

business 18 years
All
t W MIS
O l Yw’r r
缸 I
airs Fine China
arty Supplies"
y Road Unit #1 h, ON.M1 P3H1N -291-1919 B-291-1337
岬,們 rtpartyrentals.com
Party Rental Supplies

Page 79
Best Place
W
Lihat H T
॥ " 2%יה الشيوع.
I
|
H
தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட ரொறொன்ரோ நகரில் Finch & Middlefields-Egils). GTA Squaregs LDul
இச்சுற்றாடல் இலங்கை - இந்தியா - சீனா - பாகிஸ்தான் மக்களை அதிகமாகக் கொண்டுள்ளது.
GTA Sqபாe-24 மணிநேர பஸ் சேவை, பெருந்தெருக்க வசதிகளைக்கொண்ட சிறப்பான இடத்தில் அமைய உள்:
உங்கள் வியாபாரக்கன6ை
GTA St
HomeLife GTA R
1711 McCowan Rd. Si 145 Traders Blvd # 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSN-75 - 4 OSO
W W M M
|WAN W W. W I M M IM
击
சிறந்த இடமாகக் கருதப்படும் ப்பெற உள்ளது.
பங்களாதேஷ் போன்ற பன்னாட்டு
ள், வைத்திய சாலைகள் போன்ற பல ாது.
வ நனவாக்கிக் கொள்ள
UCI re
tealty Inc."
Jite #206, Toronto 28, Mississauga
905.72.2666