கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை (தொனமூர் அறிக்கை)

Page 1


Page 2

யாப்பினை ஆய்ந்த சிறப்பாணக் குழுவின் அறிக்கை
(தொனமூர் அறிக்கை)
மொழிபெயர்ப்பு
இ. இரத்தினம்
1961
இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது
அரசகருமமொழி வெளியீட்டுக்கிளைப் பிரசுரம்

Page 3

இலங்கை யாப்புப்பற்றிச் சிறப்பாண அளிக்கும் அறிக்கை
றெப்பாணக் குழுவினர்:-
(1) செம்மைசால் மாண்புடைதொனமூர் எள் P.C.K.P. (தலைவர்).
(2) செம்மைசால் மாண்புடை சேர்மதியூநாதன் P.C. (Ire), G.C.M.G.
(3) Gisử QsúS)? LuLuqa)ř K.B.E., M.P.
(4) 56o/T. f. 3)Ungă geogi M.C., M.P.
韩 திரு. பி. ஏ. கிளற்றர்பக்கு M.C., குடியேற்றநாட்டலு வலகம் (செயலாளர்).
திரு. டபிள்யு. சி. பாட்டில், இறைசேரி (அலுவல்முறை அறிவிப்பாளர்).
O Trer, LS 22574-1,026 (3760)

Page 4

முன்னுரை
தொனமூர் ஆணைக்குழு எனப் பலராலும் குறிக்கப்படும் சிறப்பாணைக் குழுவின் இலங்கை அரசியல் யாப்புப் பற்றிய ஆங்கில அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும் இந்நூல். இலங்கை அரசியல் யாப்பின் லாச்சியை ஆராய்வார்க்கு இஃது ஒர் அரிய துணை நூலாகும். இவ் வரிக்கையின் முதல் தமிழுருவம் இஃதே.
நந்ததேவ விசயசேகரா, அtசகரும மொழித் திணைக்களம், பதில் ஆணையாளர்.
(வெளியீட்டுப் பகுதி) 421, புல்லர் வீதி, கொழும்பு 7.
22.9.61.

Page 5

உள்ளுறை
அதிகாரம் 1-முன்னுரை .. d 8
I-விரிவுரையும் வரலாறும் «O 4O a
I-இப்பொழுதுள்ள யாப்பு இயங்கியவாறு 8
IV-Lng Su aluatirilasth * * * 够
V-வாக்குரிமையும் பிரதிநிதித்துவமும் s
WI-கண்டியர் உரிமை f w
WI-உள்ளுராட்சி * * 8 d.
WI-குடியியற் சேவையும் பொதுச் சேவையும்
TX-ஒழிபியல் & 8
X-எடுத்துரைப்பின் சுருக்கம் 8 * *
X--நன்றிகூறல் A 8 p.
பின்னிணைப்பு I-பயனவிவரம் . .
I-சான்றுகள் வரிசை ●。s -
I-அரசாங்கத் திணைக்கள வரிசை..
IV-குடித்தொகைப் புள்ளி விவரம், வருவாயும் செலவும் கப்பலோட்டல், ஏற்றுமதி இறக்கு மதி, கல்வியும் பயிர்ச் செய்கையும் * *
W-1815 ஆம் ஆண்டு மாச்சு 2 ஆம் நாள் கண்டியர் சமவாயம் 1818 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் அரசாங்கம் பிரகடனம் . .
W-நிதித் திணைக்களத்தின் கடமைகள் A
WI-பிரியாவிடை முடங்கல் 8
படங்கள்--
இலங்கைப்படம் (முற்பக்கம்)
சில இனங்களைக் காட்டும் படம்
குடிசனச் செறிவு காட்டும் படம்
பக்கம்
25
42
12
14
48
11
199
208
216
221
222
230
23.
243
258
260

Page 6
அரும்பதவகராதி
அடுமிறலகம்
அரசாங்கசபை
உட்கசங்கம்
எவுநர்
சட்டசப்ை 8 8
FLOG u Tu ulio
செயலகம் . .
தெரிப்புரை
தொல்படை » நிலவழிமுறையான நிறைவேற்றுசபை
முகவர்
முதல்வர்
வரித்தல் ,
ifTGFs fif
வேத்தியற்கட்டளை A s
Admiralty
State Council
Excise Čommanders
Legislative Council
Convention
Secretariat
Suggestion Permanent Army
Territoria
. . Executive Council
Agent (Government)
Chairman
Pass (resolution) Speaker
Royal Instruction

குடியேற்ற நாடுகளின் அரசுச் செயலாளராகவுள்ள செமண்டூல்: மாண்புடை எல். சி. எம். எசு. அமரி, எம்.பி., அவர்களுக்கு ” ية ، في
அதிகாரம் 1 முன்னுரை 1927, ஒகசு 6 ஆம் நாள், கீழ்க்காணும் பணியினை மேற்கொள்ளுமாறு எங்களைச் சிறப்பாணைக் குழுவொன்றக அமைத்தீர்கள்.
இலங்கைக்குச் சென்று, அங்குள்ள யாப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பதையும், அதுபற்றி ஆட்சிமுறையில் எழுந்த இடர்களைப் பற்றியும் அறிவிப்பதும், முன்னிலைக்குக் கொண்டுவரப்படும் யாப்பைப் புதுக்கி யமைக்கும் முன்னிடுகளை ஆய்வதும், இப்பொழுதுள்ள கழகத்துப் பணிக் கைகளுள் எவற்றைத் திருத்தியமைத்தல் வேண்டும் என்பதை அறி விப்பதும், அப்பணி. எங்களுடைய வேலைக்குத் துணையளிப்பான் வேண்டி, இலங்கையின் யாப்பு வளர்ச்சியோடிணைந்த, வெளியானவையும் மறைவானவையுமான் அறிக்கைகள்பற்றிய பல படிகள் எங்கட்கு அளிக்கப்பட்டன; நாங்கள் இந்நாட்டை விட்டு வெளிப்படு முன்னர், அண்மை ஆண்டுகளில் பாராளு மன்றத்திற்கு அளிக்கப்பட்ட அரசுப் பத்திரங்கள் பலவற்றைப் படித்தறியக் கூடியவராயிருந்தோம்.
நாங்கள் 1927, ஒற்றேபர் 27 ஆம் நாள் இங்கிலந்தை விட்டு வெளியேறி, நவம்பர் 13 ஆம் நாள் இலங்கையை அடைந்தோம். நாங்கள் அங்கே 1928, யனவரி 18 ஆம் நாள் வரை தங்கியிருந்தோம். மீண்டும் பெப்பிரவரி 4 இல் இலண்டன் வந்து சேர்ந்தோம். நாங்கள் அங்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தைப்பற்றிய விவரங்களை இவ்வறிக்கையில் இணைப்பொன்ற யமைந்த நாட்குறிப்பில் கொடுத்துள்ளோம்.
இலங்கையில், நாங்கள் நிற்கும்பொழுது சாட்சி எடுப்பதற்காக முப்பத்து நான்கு இடங்களில் கூடினேம். இவற்றுள் பெரும்பாலான கூட்டங்கள் கொழும்பில் நடைபெற்றன. சான்று அளிப்போரின் வாய்ப்பிற்காகக் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி ஆகிய இடங்களிலும் கூட்டங்கள் நடைபெற்றன. இன்னும், பணிக்கடன் அற்ற முறையில் இலங்கையின் பல பாகங்களுக்கும் நாம் சென்றேம். சென்றதனல், அந்நாட்டுக் கிராமங்கள், நகரங்களில் வசித்த பல்லினத்தாருடைய தொழில்கள், நோக்கங்கள் ஆகியவை பற்றிப் பொதுவான ஒரு கருத்தைக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தோம். இன்னும், தென்னை, இரப்பர், தேயிலைத் தோட்டங்கள், நெல் வயல்கள் ஆகியவற்றேடு இணைந்த வாழ்வினைப்பற்றியும், வடக்கு, தென்கிழக்கு ஆகிய இடங்களிலிருந்த வறண்ட மாவட்டங்களிலுள்ள நிலைமை

Page 7
2
பற்றியும், நடுவணிருந்த செழுமையான பள்ளத்தாக்குக்கள், வளம் பெற்ற மலைகள் மேற்கிலும் தெற்கிலும் இருந்த செழுமை பெற்ற தென்னை நிறைந்த நாட்டுப் பகுதிகள் ஆகியவற்றின் நிலைமைபற்றியும் அறியக் கூடியவராக இருந்தோம். எங்களுக்கு நேரம் கிடைத்தபொழுதெல்லாம் புகழ்பெற்ற கோயில்கள், சரித்திரப் புகழ்பெற்ற சிதைவுகள், பாடசாலைகள், கல்லூரிகள், வைத்தியசாலைகள், மருத்தகங்கள், உத்தியோக நிலையங்கள், நீர்பாய்ச்சும் தேக்கங்கள், வேலைக் களரிகள், தொழிற்சாலைகள் ஆகிய யாவற்றையும் சென்று பார்த்தோம். தனியார் முறையிலும் அரசினர் முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தொழில்கள் யாவும் எங்களுக்குக் காட்டப் பட்டன. அவற்றின் நோக்கங்கள், நிலைகள்பற்றியும் எமக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. சென்ற இடமெங்கும் தனிப்பட்டோர் என்ற முறையில் நமக்கு நல்ல விருந்தோம்பல் கிடைத்தது. பல்வகைப்பட்ட நாட்டு மக்களுட னும் நெருங்கிய உறவுகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிட்டியது.
நாங்கள் 141 சான்றுகளையும் பிரதிநிதிக் குழுக்களையும் உசாவினேம். இவர்கள் தங்கள் சார்பாகவும் அரசியற் குழுக்கள், சமயக் குழுக்கள், வணிகக் குழுக்கள் ஆகியவை சார்பாகவும் எமக்கு முன் தோன்றினர். இவர்களின் வரிசையொன்றை இவ்வறிக்கையின் இரண்டாம் பின்னிணைப் பிற் கொடுத்துள்ளோம். நாங்கள் அழைத்தவர்களுட் சிலர், சான்றளிக்க இயலாதவர்களாயிருந்தனர். சிலர், நாங்கள் அவர்களைக் கேட்கக்கூடிய Ꮺ5fᎢᎶᏓ) நேரத்திற்குப்பின் விண்ணப்பித்துக் கொண்டனர். சான்றுகளுள் பெரும்பாலோர் தங்க்ள் நோக்குக்களை எழுத்துமூலம் எமக்கு அறிவித் தனர். நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் நேரே வந்து சான்று சொல்ல விருப்பம் இல்லாதவர்கள், இயல்பில்லாதவர்கள் ஆன பல தனிப்பட்டவர்களிடமிருந்தும் எங்களுடைய உசாப்பொருள்பற்றிய பல குறிப்புக்கள் நமக்கு வந்து சேர்ந்தன. f
எங்களுடைய கூட்டங்களுள் பலவற்றை நாங்கள் வெளியாகவே நடத்தி னேம். ஆனல், சான்றுகள் கேட்டுக்கொண்டதின் பேரிலும் பொது நலனுக்கு அஃது உகந்ததென நாம் கருதிய நேரத்திலும் இம்முறையைக் கைக்கொளாது விட்டோம். பொது அமர்வில் நடந்த நடவடிக்கைகளைச் சொல் லுக்குச்சொல் கொண்ட அறிக்கைகளாக்கி, இவ்வறிக்கைகளோடிணைந்த தொகுதிகளாய் உங்களுக்கு அளிக்கவும், எங்களுக்கு மிக இசைவுடன் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், கூற்றுக்கள் ஆகியவற்றின் தொகுதி யொன்றினை அளிக்கவும் எங்களுக்கு ஒரு விருப்பம் இருந்தது. ஆனல், இவற்றை அச்சிடுவதினல் வரும் பெருஞ் செலவால் இம்முறையை நாங்கள் எடுத்துக்கொள்ள இயலாததுபற்றி வருந்துகின்ருேம். ஆயினும், இப் பொருள்கள்பற்றிய படிகளை உங்களுக்கு அனுப்புகிறேம் ; இவைபற்றிய முழுப் பதிவுகளும் இலண்டனிலும் இலங்கையிலும், பொதுமக்கள் விரும்பி வேண்டியவாறு அறிந்துகொள்வதற்கு வாய்ப்புடையனவாக இருத்தல் வேண்டுமென்னும் எடுத்துரையுடன் அவற்றை அனுப்புகிறேம்.

3
போற்றுவோம் என்னும் உறுதிக்கியைய, அவற்றை வெளியிற் காட்டாது, குடியேற்ற அலுவலின் மறை எட்டகத்தில் அவற்றை வைத்திருத்தல் வேண்டுமெனவும், இதனல் எடுத்துரைக்கின்றேம்.
ಕ್ಲಿ: மறை அமர்வுகளில் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களை நாம்
இந்நாட்டுக்கு நாம் வந்ததன் பின்னர், எங்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் சான்றுத் தொகுதிகள் யாவையும் கவனத்துடன் நுணுகி ஆராய்ந் தோம். இன்னும், இலண்டனிலுள்ள இலங்கைச் சங்கத்திலிருந்து வந்த சான்றுகளையும் கேட்டோம். எனவே, இப்பொழுது நாம் அளிக்கும் அறிக் கையும் அது கொண்டுள்ள எடுத்துரைப்புகளும் இலங்கையிலுள்ள நிலை மையை, பலவகையிலும், கண்ணுேட்டத்துடன் நெடுநாளாக, மிக நுணுகி ஆராய்ந்ததின் பயன்களாகும் ; அவை தங்கள் மாட்சிமை தங்கிய அரசாங்கத்தின் கவனத்திற்கு மிக உவந்தவையாயிருக்கும் என நம்பு கின்றேம்.

Page 8
அதிகாரம் II விரிவுரையும் வரலாறும் நிலை, பரப்பு, காலநிலை
இலங்கைத் தீவகம் நடுக்கோட்டுக்குச் சிறிது வடக்கே, இந்தியாவில்ருந்து தென்கிழக்கே உள்ளது. இஃது இந்தியாவிலிருந்து 40 மைல் அளவு அகலங்கொண்ட ஆழமில்லாப் பாக்குத்தொடுவாய் என்னும் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவு பேரிக்காய் வடிவினைக் கொண்டது. வடக்கி லிருந்து தெற்கே இதன் மிக நீளமான தூரம் 270 மைல். கிழக்கிலிருந்து மேற்கே இதன் மிக அகன்ற தூரம் 140 மைல். இதன் பர்ப்பு 25,332 சதுர மைல். இவ்வாறக இலங்கை, தசமேனியா அளவோ ஒல் லந்தும் பெல்சியமும் சேர்ந்த அளவோ பெரியது. இங்கிலந்து இலங்கையை விட இருமடங்கு பெரியது. இந்தியா 60 மடங்கு பெரியது.
இல்ங்கையிலிருந்து 400 மைல் மேற்கே 17 சிறிய தீவுக்கூட்டங்களைக் கொண்ட மாலைத்தீவுத் தொகுதி இலங்கைக்குக் கீழமைந்த நாடாக உள்ளது. இத்தீவிலுள்ள மக்கள், இனத்தில் ஆரியர் ; சமயத்தில் இசிலா மியர் ; 72,000 மக்கள் இங்குள்ளனர். இவர்கள் முயற்சியில் வணிகரும் கடலோடிகளுமாவர். இவர்களை ஆள்பவன் ஒரு சுலுதான். இவன் ஆண்டு தோறும் இலங்கைக்தத் திறை கொடுப்பான். இத்தீவகம் பல்வேறுபட்ட காலநிலைகளையுடையது; இவை மழைவீழ்ச்சி, உயரம் ஆகியவற்றலாகும். இந்நாட்டுக்கு மழை, ஒற்ருேபர் தொடங்கி மாச்சு வரையுள்ள வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றினல் ஆகுவதாகும். எப்பிரிலிலிருந்து செற்றெம்பர் வரையுள்ள தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றினல் மழையுண்டு. எனவே, வடமேற்கிலும் தென்கிழக்கிலும் இரு வறண்ட வலயங்கள் உள. இங்கு சராசரி மழைவீழ்ச்சி ஒராண்டுக்கு 50 அங்குலத்திற்குக் குறைவாக இருக்கும். இவற்றேடிணைந்த வறண்ட இடத்தில் இரு பெரும் ஆனல் உலர் வலயங்கள் உள. இங்கு மழைவீழ்ச்சி 50 அங்குலத்திலிருந்து 75 அங்குலம் வரை இருக்கும். நடுவிலும் மேற்கிலும் இன்னும் மூன்று ஈரவலயங்களுள. மிக நடுவண் உள்ள வலயத்தில் மழைவீழ்ச்சி குறைந்தது 200 அங்குல மாகும். நாட்டில் மிக வெப்பமான மாதங்கள் பெப்பிரவரியிலிருந்து மே வரைக்கும் உள்ளவை. மிகக் குளிர்ந்தவை திசெம்பரும் சனவரியு மாகும். ஆயினும், வெப்பநிலையின் வேறுபாடு மிகச் சிறு அளவினதே. எனவே, மிகத் தெளிவான பருவங்கள் கிடையா. சமமான கடல் சார்ந்த மாவட்டங்கள் கீழ்நாடு எனப்படும். இங்கு சராசரி வெப்பநிலை 79°ப. இலிருந்து 82°ப. வரை இருக்கும். உள்நாட்டு மலைசார் மாவட்டங்களில் (மலைநாடு) இஃது 58° இலிருந்து 75° வரை இருக்கும்.
4.

வரலாறு
கிழித்துவிற்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகத்தொலைவான காலத்தில் இலங்கை அரசின் சரித்திரம் பழங்கதையிலிருந்து வரலற்று அடிப்படையில் அமைகின்ற காலந்தொட்டு, கி. பி. 19 ஆம் நூற்ருண்டின் இரண்டாம் பத்தளவில் கண்டி மன்னன் அரியணையி லிருந்து அகற்றப்படும் வரை, கிரேக்கர், உரோமர் தாங்கள் கேள்விப்பட்டி அளவி தப்பிரபானை என்றழைக்கப்படுவதும், அந்நாட்டிடை முத லாவது புகுந்த ஐரோப்பியரான போத்துக்கேயரால் சீலோ என்றழைக்கப் படுவதும், இப்பொழுது சிலோன் என்றழைக்கப்படுவதுமான நாடு தனி முடியாட்சியாக இயங்கி வந்தது. அரசனின் பிரதிநிதிகள்-இவர்களுள் சிலவேளைகளில் சிலர் இனத்தவராயிருப்பர்-அவன்பொருட்டு மாயா, உறுகுணை என்னும் இடங்களில் ஆண்டனர். அரசாங்கத்தின் பல்வேறு கிளைகளைக் கண்காணிக்க அரசனுக்கு அமைச்சர்கள் இருந்தனர். நீதி பரிபாலிக்கவும் வரி சேர்க்கவும் அலுவலர் இருந்தனர். இலங்கைக்குப் பெளத்தம் கொண்டுவரப்பட்டதும், அதைப்பற்றிய எழுத்துமுறையிலமைந்த வரலாறு தொடங்குகின்றது. பெளத்தம் இந்நாட்டின் வரலாற்றைப் பெரிதும் ஊக்கியுள்ளது. இந்நாட்டு மன்னர்களுள் பலர், அவர்களே ஊக்கிய குருமார்களாலேயே தங்கள் செயல்களில் பெரும்பாலானவற்றை ஆற்றினர். இச்சமயம், அனுராதபுரம் என்னும் அரச நகரத்தின் அண்மையில், பெரும் தாகபைகளையும் பெரும் துறவோர்கங்களையும் புத்தர் பெருமானின் புகழ்பொருட்டெழுப்பத் தூண்டியதல்லாமலும், அண்மையிலுள்ள நாட் டின் பல பகுதிகளிலும் நீர்ப்பாய்ச்சும் பொதுவேலைகளையும் எழுப்பத் தூண் டியது. இந்நீர்ப்பாய்ச்சல் வேல்ைகள் இத்தீவகம் மிகவும் வேண்டியிருந்த வேளாண்மைக்குப் பெரும் நற்பயனையளித்தன. இதன் பயனலேயே கிறித்து ஊழியின் ஆரம்ப நூற்றண்டுகளிலும் இந்நாடு பெரும் மக்கள் வளத்தை உடையதாயிருந்தது. உழவு, நீர்ப்பாய்ச்சல் ஆகிய பொருள்கள் பற்றி மக்கள் பெரும்பாலும் கிராமத் தொகுதிகளாகத் தங்களை அமைத்துக் கொண்டனர். இன்னும், அவை பொருட்டல்லாமலும் பரம்பரைச் சொத் துரிமை பொருட்டும் , அவர்கள் அவ்வாறு அமைத்துக் கொண்டனர். இன்னும், வரிகள்பற்றிய பிரச்சினைகள் பொருட்டும் அரசாங்க அலுவல ருடன் சேர்ந்து தங்களை அமைத்துக் கொண்டனர். வரிகள் கொள்வதிலும் கிராமப் பகுதிகளில் மேலாண்மை கொள்வதிலும் பெரும்பாலான காலங் களில் அரசனுடைய இடத்தைக் கோயில்கள் கொண்டன. சில காலங்களில் கிராமங்களிலிருந்து வரும் வரி, அரசனுக்குப் பெரும் சேவையாற்றிய வர்களுக்கும் கொடுக்க்ப்பட்டது. இவ்வாருகக் கிராமக் குடியரசுகள் அமைத்து அவற்றின் ஆட்சியில் தாம் வயலில் உழைத்த உழைப்பின் பயனை அனுபவிப்பதில் நல்ல சுகமும் பாதுகாப்பும் கொண்ட மக்கள், நாட்டை ஆண்ட மேலாண்மை கொண்ட அரசாங்கத்தின் உரிமைபற்றிய. வாழையடி வாழையாக வரும் சூழ்ச்சிகள், போட்டிகள்:ஆகியவற்றினல்

Page 9
6
சிறிதும் பாதிக்கப்படாதிருந்தனர். இச் சூழ்ச்சிகளும் போட்டிகளும், நீாங் கள் இப்போது அறியுமளவில், வரலாற்றில் பெரிய அளவில் நடந்தன வெனத் தோன்றுகிறது. மன்னர்களைப் பொல்லா முறையில் கொல்டிலும் அரியணை நீக்கலும் இச் சூழ்ச்சிகளில் சேர்ந்தவையே.
பொது நலனுக்கு இன்னும் மிக இடையூறக அமைந்தவை, தென் னிந்தியாவிலிருந்து வந்த படையெழுச்சிகளாகும். நூற்றண்டுகளாகப் பன் முறையும் இவை தொடர்ந்து நடந்தனவாதலின், இவற்றல் பயிர்சிசெய்கை தடைப்பட்டு வற்கடங்கள் தோன்றின. மற்றை நாடுகளில் நடந்ததுபோலவே, இலங்கையிலும், பொதுவாக வளமைக் காலமும் வற்கடக் காலமும் மாறிமாறி நேரலுற்றன. கி.மு. முதலாம் நூற்றண்டும் கி.பி. 2 ஆம், 5 ஆம், 9 ஆம், 12 ஆம் நூற்றண்டுகளும் வளமையான காலங்களாகும். எனினும், 9 ஆம் நூறு அளவில் மலபாரிலிருந்து வந்த ஒரு படை யெழுச்சி தலைநகரைப் பொலனறுவைக்கு மாறச் செய்துவிட்டது. முதலாம் பராக்கிரமபாகுவின் ஆட்சியை (1153-1186) புகழ்பெற்ற ஓர் ஆட்சியென மக்கள் இன்றும் கருதுகின்றனர். அக்காலத்தில் நாட்டு மக்கள் ஒற்றுமை யாக்கப்பட்டு அதன் அரசாங்கமும் புதுக்கி அமைக்கப்பட்டது. மூன்று அமைச்சர்கள் அரசருக்கு உதவினர் ; மாநிலங்களை 12 ஆள்பதிகள் ஆண் டனர். சிறு மாவட்டங்கள்மீது 84 அலுவலர் ஆட்சி செலுத்தினர். இவர் களையும் பணிப்பற்றில்லாத வேறு உறுப்பினரையும் கொண்ட பெரிய ஒரு கழகம் பொலனறுவையிலிருந்து ஆட்சிப்பணி கொண்டதென நாம் அறிகின்றேம். எனினும், அதன் அதிகாரங்களைப்பற்றி நாம் ஒன்றும் அறிந்திலோம். இவ்வரசன் இறந்தபின் வந்த காலம் இலக்கிய வளப்பம் கொண்டிருந்ததாயினும், சீரிழிவைக் கொண்டிருந்தது. 30 ஆண்டுகளுக் குள், மலபாரிகள் தீவினை மீண்டும் வெற்றிகொண்டு அதை ஆள்வதற்குத் தங்கள் மன்னன் ஒருவனையும் அழைத்தனர். பின்னர் ஒருபொழுதும், வடக்கிலும் கிழக்கிலுமிருந்து அவர்கள் அகற்றப்படவில்லை. அவர்கள் ஆள் புலத்திற்கு யாழ்ப்பாணம் தலைநகராகியது. ஆனல், அவர்பாற்கொண்ட பயத்தின் காரணமாகச் சிங்கள மன்னர்களின் தலைநகர் அடுத்தடுத்து கம்பளை, கோட்டை, சீதாவகை, கண்டி என மாறி மாறி ஒவ்வோரிடமாகச் சென்றது. மலபாரிகளின் படையெழுச்சிகளால் விளைந்த பொல்லாக் கேடு, இந்நாட்டில், குளத்து நீர்ப்பாய்ச்சலை நோக்கி வாழ்ந்த கிராம மக்களின் பொதுவாழ்வில் ஏற்பட்ட குழப்பமாகும். இதனல், இவர்கள் நெடுங்காலம் பேணி வைத்திருந்த தேக்கங்களை அழியவிட்டு, வேறிடம் செல்லவேண்டி நேர்ந்தது ; மலேரியாவைப் பரப்பும் நுளம்புகளும் பயிரிடா, நீர் தேங்கிய பகுதிகளில் குடியேறின. இந்நுளம்புகளின் பரவலால் ஒரு காலத்தில் தீவின் வளமை மிகு பகுதிகளாயிருந்த இடமெல்லாம் இப்பொழுது மக்களற்ற இடங்களாக விளங்குகின்றன. இலங்கையின் இழிவுக்கு மலபாரிகள் மட்டுமே காரணர் அல்லர். “ உள்நாட்டுக் குழப்பங்கள், சமயப் பிரிவுகள்,

போலவே முடியுடை மன்னர்களின் செல்வாக்கினைக் குறைத்து அரசின் வலிமையைக் குறைவாக்க உதவின. ’ 1
இவ்வாறு இளைத்த இந்நாட்டிற்கு, கி. பி. 1505 இல் கீழை நாட்டு డి தனியுரிமையைப் பெறுவதற்குப் போத்துக்கேயர் வந்தனர். அதன் பின், தொடர்ந்த 130 ஆண்டுக் காலங்களிலும் எத்தனையோ இடையூறு களுக்கூடிாக, அவர்கள், தீவின் கடல்சார் மாநிலங்களில் தங்கள் அதிகா ரத்தைப் பரப்புவதில் வெற்றிகண்டனர். இம் முயற்சியில், இலங்கையில் மேலாண்மைக்குப் போட்டியிட்ட கோட்டை அரசர், சீதாவகை அரசர் ஆகியோரின் உள்நாட்டுக் கலகமும், உரிமைகொள்வோருள் ஒருவனன கோட்டை மன்னன் தருமபாலன், போத்துக்கேய அரசனுக்கு 1597 இல் தன்னுடைய இறைமையையும் ஆள்புலங்களையும் உறுதியாக அளித்ததும், அவர்களுக்கு உதவின. இவ்வாறு கொடைபெற்ற மன்னன் சுபெயினின் இரண்டாம் பிலிப்பே. இதனல், அவனின் பதிலரையன் இலங்கையின் சட்டங்களுக்கிணங்கி ஆள இசைந்தனன். 1619 இல் போத்துக்கேயர் யாழ்ப் பாணத்தை அங்கு ஆண்ட மலபாரிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டனர். ஆயினும், பலகாலும் கண்டியர் ஆள்புலத்து இடங்கொள போத்துக்கேயர் முயன்றும் வெற்றிபெறவில்லை. இவ்வாறு அவர்கள் செய்த பல முயற்சி யொன்றில் படுதோல்வியுற்ற பின்னர், 1633 இல் கோவாவில் கண்டி மன்னனுடன் செய்த ஒரு பொருத்தத்துக்கு இயைய, தீவில் மற்றை ஆள்புலங்களில் தாம் கொண்ட மேலாண்மையைக் கண்டி மன்னன் இசைவுகொளச் செய்த அளவில், போத்துக்கேயர் நன்மை பெற்றன ரென்றே சொல்லல் வேண்டும். ஆயினும், 1635 இலிருந்து தொடங்கிய அவர்களுடைய ஆட்சியின் கடைசி 20 ஆண்டுகளும், அவர்களின் சீரிழிவுக் காலமாகும். அந்நாட்களில் இந்து சமுத்திரத்தில் ஒல்லாந்தர் தோன்றினர். இவர்கள் அந்நாட்களில், கீழ்நாடுகளின் (Low Countries) சுதந்திரத் திற்காகச் சுபெயினுடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்து பல சிறு வெற்றிகளின் பின்னர் இடச்சுக்காரர் 1656 இல் கொழும்பைக் கைப் பற்றினர். இஃது இலங்கையில் போத்துக்கேயர் ஆட்சிக்குச் சாமணியாக இருந்தது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் சரணடைந்தபின் போத்துக்கேயர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது.
சூழ்ச்சிகள், படுகொலைகள், பிறநாட்டுப் படையெழுச்சிகளைப்
இவ்வாட்சி, அது நீடித்திருந்த காலம் முழுவதும் கோவாவிலிருந்த பதிலரையனுக்குக் கீழ்ப்படிவாயமைந்த தலைஞன் நாயகம் ஒருவனல் நடாத்தப்பட்டு வந்தது. ஒரு நீதிவானும் ஒரு வாரி அலுவலரும் இவ னுக்குத் துணை புரிந்தனர். இவன் ஆட்சிக்குக் கீழிருந்த நாடு நாலு மாநிலங்களாக (திசவாணிகளாக)ப் பிரிக்கப்பட்டிருந்தது. இவை கோட்டையி
இலங்கை சேர் இயேமிக எமேசன் தெனன், தொகுதி 1, பக்கம் 353.

Page 10
8
லிருந்து தொடங்கி வகுக்கப்பட்டிருந்தன. இம்மாநிலங்கள் கோர்ளை களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கோரளைகள் மேலும் பட்டுக்களாகப் பிரிக் கப்பட்டிருந்தன. இப்பட்டுக்கள் ஒவ்வொன்றும் பல கிராமங்களைக் கொண் டிருந்தன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் எற்புடை அலுவலர் ஆட்சி யின்பொருட்டு அமர்த்தப்பட்டனர். அரச கிராமங்களும் அரசனின் விருப்புக் குரிய காலந்தொட்டு, அல்லது வெற்றி கொண்டோரின் வாழ்நாள் முழுவதும் துய்ப்பதன் பொருட்டுக் கொடுக்கப்பட்ட கிராமங்களும் இவ் வலுவலர் கண்காணிப்பிலிருந்தன. இத்தகைய கிராமங்கள் போத்துக் கேயருக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தன. எல்லா நில புலன்களும் சேவையாட்சியின் கீழ்க் கொள்ளப்பட்டிருந்தன. இச் சேவை பெரும்பாலும் படைச்சேவையாக இருந்தது. கறுவா, பாக்கு, மிளகு, இரத்தினம், யானை ஆகியவற்றின்மீது அரசருக்கிருந்த தனி உரிமை களால் வாரி பெறப்பட்டது. முத்துக் குளிப்பும் பூதல் வரியும் வாரிக்கு உதவின. மாநிலத்து ஆள்பதிகள் நீதி வழங்கினர்; இவர்களுக்குக் குடிக்குழுவாட்சியும் படையாட்சியும் இருந்தன. பூதல் வரியைச் சேர்ப்ப தற்கும் சாதிபற்றிய வழக்குகளைத் தீர்ப்பதற்கும் குற்ற வழக்கு, குடிக்குழு வழக்கு ஆகியவற்றிற்கு முடிவு காண்பதற்கும் பருவ மன்றுகள் நடத்தப் பட்டன. கொழும்பை நகர்க்குழுவொன்று பரிபாலித்து வந்தது. யாழ்ப் பாணம் மட்டும் புறம்பான ஒர் ஆட்சியிலிருந்தது ; எனினும், தலைமைத் தளபதிக்குக் கீழே இருந்தது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய வையே முக்கிய கீோட்டைகளாம். போத்துக்கேயப் படையினருள் மணம் முடித்தோர் அவசரகால வேளையிலேயே சேவைக்கு அழைக்கப்பட்டனர். மணம் முடியாதோர் பெரும்பாலும் நாட்டிலேயே வாழ்ந்தனர் போல் தோன்றுகிறது. உண்ணுட்டுப் படையினர்-இவரை இலசுகரின் என்பர்மாகாணத்து அதிகாரிகளாயிருந்த சிங்களத் தமிழ் அலுவலரின் கீழ்க் கடமையாற்றினர். எங்களுக்குக் கிடைத்த விவரங்களிலிருந்து ஆட்சி, கொடுங் கோன்மையுடையதாயும் சீரிழிவு நிறைந்ததாயும் உள்ளதுபோல் தோன்று கிறது. உண்ணுட்டு ஆட்சிமுறை அவா ஒன்றினலேயே உந்தப்பட்டு, வழமை என்னும் நல்லூக்கு ஒன்றின் கட்டுப்பாடின்றி நடைபெற்று வந்தது. மாநிலங்களிலிருந்த அலுவலர், முன்னர் தாம் அரசனுக்குக் கொண்டிருந்த பயமொன்றுமின்றிக் கட்டுக்கடங்கா வழியில் தம் ஆணை யைச் செலுத்தி வந்தனர். கடல்சார் மாநிலங்களில் போத்துக்கேயர் ஆட்சி புகுந்ததற்குச் சான்றக இலங்கை மக்கள் பலர் போத்துக்கேயப் பெயர் களை இன்றும் தாங்கியுள்ளனர். இன்னும், நிலையாகவுள்ள 3,70,000 மக்கட்டொகையையுடைய உரோமன் கத்தோலிக்கக் குடிமக்களும் இதற்குச் சான்றவர். இவர்கள் தாம் மேற்கொண்ட மதத்தை நம்பிக்கையுடனும் துணிவுடனும் போற்றிக் காத்த குலத்தினரின் வழித்தோன்றல்கள். இவர் கள் 16 ஆம் நூற்றண்டுக் காலத்திலும் 17 ஆம் நூற்றண்டின் முற் பகுதியிலும் மதம் மாற்றப்பட்டவர். ' , ' , '

9
கோழும்பைப் போத்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய காலந்தொடங்கி அதை மீண்டும் பிரிட்டிசாருக்குக் கையளித்த காலம் வரை இலங்கையில் இடச்சுக்காரர் ஆட்சி 140 ஆண்டுகள் நிலைத்தது. நீண்ட காலத்திற்கு முன்னிருந்தோரின் ஆள்புலத்தில் ஒரு பகுதியே இவர் கையிலிருந்தது. இவ்வாள்புலம், கண்டி அரசர்களின் மீதூரும் இயல்பிற்கும் இடச்சு ஆள்பதிகளின் மீதுரும் இயல்பிற்கும் இயைய வேறுபட்டு வந்தது. இடச்சு ஆள்பதிகளின் இயல்போ, ஒல்லந்திலிருந்த கிழக்கிந்தியக் குழும்பினர் தம் வணிகப் பண்பிற்கியைய, மற்றவர்களுடன் இயைந்தொழுகும் குணப்பண் பிற்கேற்றவாறு நடக்க வேண்டுமென்னும் இயல்பினல் கட்டுப்படுத்தப் பட்டு வந்தது. 1688 தொடங்கி 1766 வரை இவர் கொண்டிருந்த ஆள்புலம், இப்போதுள்ள மேல் மாகாணம், தென் மாகாணம், வட மாகாணம் ஆகியவற்றையே கொண்டிருந்தது. கண்டியோடு நடந்த போர் பெரும்பாலும் வணிகத்தினலேயே கொண்டு நடத்தப்பட்டது. இடச் சுக்காரர் தாம் கட்டுப்படுத்தி நடத்திய கொழும்பு, காலி, யாழ்ப்பாணத் துறைமுகங்களைக் கண்டி நாட்டார்க்கு மூடி அவர் நாட்டிற்குத் துன்பம் விளைவிக்கக் கூடியவராக இருந்தனர். கண்டி மன்னர்க்கு அவர்கள் குடிமக்களினல் அல்லல்கள் நேர்ந்தன. குழும்பின் ஆட்சியிலிருந்த சிங் கள மாநிலங்களில் பல படையெழுச்சிகள் நேர்ந்தன ; இவை பெரும் பாலும் அவர்கள் வேளாண்மையையிட்டு நேர்ந்தன. இவ்வாறக, இரு சாரார்க்கும் இடர் நேரவும் அவர்கள் போராட்டங்களின் வன்மையும் சோர் லுற்றது. எனவே, 1788 இல் அமைதி ஏற்பட்டபொழுது, கண்டியர் பஞ்சத்தால் பட்டினி கொள்ளும் தறுவாயிலிருந்தனர். இவ்வமைதி உடன் படிக்கையினல் இடச்சுக்காரர் கடல்சார் மாநிலம் யாவிற்கும் உடைமை யாளராயினர். இவ்வமைதி உடன்படிக்கைக்குப் பலமுறையும் இடர் நேரும் போலிருந்தாலும், அடுத்த முப்பது ஆண்டுக்காலத்திற்கு இவ்வுடன் படிக்கை ஒருபொழுதும் மீறப்படவில்லை. இக்காலத்தில் இடச்சுக்காரர் ஆட்சி யையும் வேளாண்மையையும் செப்பனிட முயன்றனர். அவர்கள் குழும் பின் வறண்டுகொண்டிருந்த நிதி நிலைமைக்கு எற்றவாறும், குழும்பின் அலுவலரின் இயல்பிற்கு எட்டிய அளவிலுமே இம்முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் முடிவு, ஒல்லாந்து நாடு பிரெஞ்சுக் குடியரசுடன் இணைந்ததுடன் நேர்ந்தது. பெரிய பிரித்தன், பிரெஞ்சுக் குடியரசுடன் அக்காலத்தில் போர்கொண்டிருந்தது. இந்நேரத்தில் இடச்சுக்காரர் இக்காலத்திலிருந்த அரசியல் சூழ்நிலைகட்கேற்ப அரைமனதுடன் பிரிட்டிசாருக்கெதிராக எதிர்ப் போர் புரிந்தனர் ; புரிந்தும், இறுதியில் கடல் கடந்திருந்த தம் ஆள் புலன்களைப் பிரிட்டிசாரிடம் ஒப்படைக்கவேண்டி நேர்ந்தது. இத்துடன் அவர் கள் ஆட்சியும் முடிவுற்றது.
இடச்சுக் கிழக்கிந்தியக் குழும்பினரின் கீழ், இலங்கை அரசாங்கம், ர் ஆள்பதி, ஒர் தீவின் இயக்குநர் நாயகம், ஒர் அரசியல் குழு ஆகியோ டம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் நிதி அலுவலகத் தலைவர்,

Page 11
10
படை அலுவலகத் தலைவர், நீதி அலுவலகத் தலைவர், வணிக அலுவலகத் தலைவர் ஆகியோருட்பட ஒன்பது அலுவலர் இருந்தனர். ஆள்புலன்கள், கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகியவையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணமும் காலியும் ஏவுநராட்சியிலிருந்தன. ஏவுநர்க்குத் துணையாகக் கழகங்கள் இருந்தன. கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்துறை, காலி ஆகியவற்றிலிருந்த திசாவைகள் இக்காலத்திலுள்ள அரசாங்க முகவர்களின் இடத்தைக் கொண்டிருந்தனர். மூன்று தலைமையகங்களி லிருந்தும் தொலைவிலுள்ள மாவட்டங்களின் மையங்களிலிருந்த ஆறு ஒப்பசுபுகளும் இப்பொழுதுள்ள துணை அரசாங்க முகவர்களை நிகர்த்தனர். இவர்கள் யாவரும் இடச்சுக்காரராயிருந்தனர். போத்துக்கேயர் ஆட்சிமுறை யில் கோரளை ஆட்சி இலங்கையின் பிரதான தலைமைக்காரரின் தலைமையி லிருந்தது. பட்டுக்களின் ஆட்சி பெரும் தலைமைக்காரனில் தங்கியிருந்தது. சிறு பகுதிகளின் ஆட்சி கிராமத் தலைமைக்காரனில் தங்கியிருந்தது. இம்முறையை இடச்சுக்காரரும் பின்பற்றி நடாத்தினர். எனினும், இவர் கள் பிரதான தலைமைக்காரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்கள் அலுவல் பார்க்கும் காலம் வரைக்கும் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலப் பரப்புக்களைக் குறைக்கவும் முயன்றனர். காணிகளில் பெரும்பகுதி மானியமுறையினல் கொள்ளப்பட்டிருந்தது. ஒருசில காலத்திற்கு படையமைப்பின் பொருட்டுக் கோரளைகளில் குடிக்குழுச் சேவைக்கு ஒத்ததான ஒரு படையமைப்பும் தொடர்ந்து நடந்து வந்தது. பிற்காலத்தில் இது சிக்கனத்தின் பொருட்டு நீக்கப்பட்டது. ஐரோப்பா விலிருந்து வந்த கூலிப் படையினரும் யாவாவிலிருந்து வந்த மலாய்க் காரரும் தொல்படைச் சேவையில் இருந்தனர். போத்துக்கேயர் காலத்தி லிருந்த வாரிவாய்களே இவர்களுக்கும் இருந்தன. வாரிக் கட்டுப்பாட் டதிகாரியின் தலைமையில் ஒரு பொதுமன்று நீதியைப் பரிபாலித்தது. இதற்கு முழுக்குற்றவியற் சட்ட அதிகாரமும் குடியியல் வழக்குச் சட்ட அதிகாரமும் இருந்தன. கொழும்பில் ஒரு நீதிமன்றும் சிறுவழக்கு மன்றும் இருந்தன. எவுநரின் கீழ்ப் பல தலைமை மன்றுகள் இருந்தன. காலியிலும் யாழ்ப்பாணத்திலும் நில மன்றுகள் இருந்தன. இவையெல் லாம் நீதி செலுத்தின. இவற்றிலிருந்தும் மாநிலங்களிலுள்ள சிறு மன்றுகளிலிருந்தும் கொழும்பிலுள்ள முக்கிய மன்றுக்கு மேல்முறை யீடுகள் வந்தன. இடச்சுக்காரர், இலங்கையில் அழகிய கோட்டைகளையும் வேறு சில கட்டிடங்களையும் விட்டுச் சென்றுளர். மேல் மாநிலத்தில் நன்முறையிலமைந்த கால்வாய்களையும் விட்டுச் சென்றுளர். உரோமன் இடச்சுச் சட்ட விதிகள் இவர்கள் விட்டுச்சென்ற செல்வங்களாகும். குணத்திற்கும் கல்விக்கும் புகழ்பெற்ற பேகர் குடிமக்களும் இவர்கள் இலங்கைக்களித்த செல்வங்களே.

11
இவ்வாருகப் பிரிட்டிசார் ஆட்சிக்கு வந்த கடல்சார் மாநிலங்கள் சென்னை அரசிருக்கையோடு இணைக்கப்பட்டு, படைத்துறை ஆள்பதி மூலமாகக் கிழக் கிந்தியக் கம்பனியினரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தன. இப்படைத்துறை ஆள்பதிக்குத் துணையாக ஒரு பதியாள்வானும் வாரிக் கண்காணியும் ஐரோப்பிய வரி சேர்க்குநரும் சென்னைச் சிற்றலுவலரும் இருந்தனர். வாரி சேர்ப்பதில் பிற்கூறிய இரக்கமற்ற அவாவுடைய அன்னியரை முன் யோசனையின்றிப் பயன்படுத்தியதும் நிலச்சேவையாட்சியினிடத்திற்கு உற் பத்திப் பொருள் மூலமாக வரி விதிக்க முயன்றதும் 1797 இல் பொல்லாக் கலகமொன்றை ஏற்படுத்தின. இஃது அரையாண்டு தொடர்ந்து நடந்தது. இதல்ை நீதி நிருவாகத்திலும் ஆட்சி நிருவாகத்திலும் பல மாற்றங்கள் எற்பட்டன. 1802, சனவரி முதலாம் நாள் எமியன்சு உடன்படிக்கையின் படி, இலங்கையில் பிரிட்டிசார் கொண்ட மேலாண்மை உறுதியாக்கப் பட்டதும், தீவிலுள்ள குடியிருப்புக்கள் யாவும் முடிக்குரிய ஒரு குடி யேற்ற நாடாகின. இதைப் பரிபாலனம் செய்வதற்குத் தலைமை நீதி பதி, எவுநர் தலைவன், தலைமைச் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு கழகமும் புதிய ஒரு குடிக்குழுச் சேவையும் அமைக்கப்பட்டன. மாவட்டங் களில் வரி சேர்க்குநர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகக் கடமையாற்றினர். அவ்வாண்டிலேயே மீண்டும் நிறுவப்பட்ட சேவையாட்சி நீக்கப்பட்டது. அத னிடத்தில் உற்பத்திப் பொருளின் ஒரு பகுதி வரியாக விதிக்கப்பட்டது. ஆயினும், தனிப்பட்ட முறையில் அமைந்த சேவை இப்பொழுதும் கடமை யாக இருந்தது ; ஆனல், இதற்குப் பணம் கொடுக்கப்பட்டது. இக்காலத் தில் வாரி பெரும்பாலும் முத்துக்குளிப்பு, கறுவா, சாராயம் ஆகியவற்றிற் கொண்ட தனியுரிமை, பாக்கு, உப்பு, புகையிலை ஆகியவற்றின் மீது விதித்த வரி, சோனகரின் தனிப்பட்ட உழைப்பிற்குப் பதிலாக அமைந்த வரி ஆகியவற்றினின்றும் பெறப்பட்டது. குடிக்குழுவாட்சி நன்முறையில் போற்றி வளர்க்கப்பட்டது. ஆயினும், கண்டியில் அப்பொழுது மன்னன யிருந்த மலபார் மன்னனன சிறீ விக்கிரம இராசசிங்கனேடு கொண்டிருந்த தவறன, நன்முறையிலமையா உறவொன்று நாட்டிலே போரொன்றை விளைத்தது. இதனல் 1803 இல் பிரிட்டிசார் படைக்குப் பொல்லாத் தீங்கு நேர்ந்தது. இவற்றினல் கடல்சார் மாநிலங்கள்மீது படையெழுச்சி யொன்று நேர்ந்தது. இவற்றின் பயனகக் கொழும்புக்கும் இடர் நேரும் போல இருந்தது. ஆண்டின் இறுதிக் காலத்தில் இந்நிலைமை ஒருவாறு சீர்திருந்தியது. இதன்பின்னர் தோல்வியும் வெற்றியும் மாறிமாறி நேர லுற்றன. இதன்பின்னர், 1805 ஆம் ஆண்டு முற்பருவத்தில் பகைமை ஒருவாறு நின்றது. இது பெரும்பாலும் கண்டியர் சோர்வடைந்ததன லேயே என்க. அடுத்துவந்த ஆண்டுகளில் கண்டி மன்னன் தன் அரசாட்சியில் எழுந்துள்ள குழப்பங்களால் பெரும் இடர்ப்பட்டிருந்தான். இந்நேரத்திலேயே அவன் செய்த மிகைச் செய்கைகளினல் அவனுக்கும் அவன் தலையோர்க்குமிருந்த நட்பும் ஒழிந்தது. 1815 இல்

Page 12
2
பிரிட்டிசுக்குடிமக்கள் மீது மன்னன் காட்டிய கொடுமையை நீக்கவும், மக்கள் அரசன்மேற் கொண்ட பகையினல் இடர் நிறைந்ததாயும் குழப் பம் நிறைந்ததாயும் இருந்த உண்ணுட்டு நிலைமையைச் சீர்ப்படுத்தவும் பிரிட்டிசார் உண்ணுட்டுக்குப் படை யெடுத்துச் சென்றனர். இப் படையெழுச்சியின்போது இத் தலையோர்கள் மன்னனைக் கைவிட்டனர். 1815, மாச்சு 2 இல் பிரிட்டிசு ஆள்பதிக்கும் கண்டித் தலையோர்க்கும் நடந்த ஒரு சமவாயத்தின்படி அரசன் அரியணையினின்றும் நீக்கப்பட்டு அவன் குலமுறையினரும் அரியணை உரிமையினின்றும் நீக்கப்பட்டனர்; கண்டி ஆள்புல ஆட்சியும் பிரித்தானிய மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும், தலையோர்க்கிருந்த உரிமைகளும் பேறுகளும் அதிகாரங்களும் தொடர்ந்திருக்குமென்றும், எல்லா வகுப்பு மக்களுக்கும் அவரிடை வழங்கி வந்த சட்டங்கள் பழக்கவழக்கங்கள் நிறுவனங்கள் ஆகியவற்றிற் கியைந்த குடியுரிமைகள், பாதுகாப்புக்கள், உடைமை, உடல் ஆகியவற்றிற் குரிய காப்புக்கள் எல்லாம் போற்றப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது. பெளத்த மதத்திற்குரிய குருமார் போற்றப்படுவர் என்பதும், கோயில்கள், கிரியைகள் ஆகியவை பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டுமென்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இப்பொருத்தத்தின் விதிகளை எற்றுக்கொண்ட பின்னரும், தங்களுடைய செல்வாக்குக் குறைந்துகொண்டு வருவதைக் கண்ணுற்ற தலையோர் புதிய அரசிலும் மனவெறுப்புக் கொண்டனர். 1817, செற்றெம்பர் திங்களில் கீழமைவு இல்லா "ஒரு நிகழ்ச்சி முதன்முதலாகத் தோன்றியது. அரியணைக்கு உரிமைகோரும் ஒரு போலியன் தோன்றினன். ஆறு மாதம் கழிவதற்கு முன்னரே சில மாவட்டங்கள் மட்டும் தங்கள் கீழ்ப்படி வைக்கொண்டு ஒழுகின.? எறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் னரே இக்கலகம் அடக்கப்பட்டது. பிரிட்டிசார் பக்கத்தில் பல இழப்புக்கள் நேர்ந்தபின்னரும் சொல்லொணக் கொடுமையுடன் கண்டியர் நடாத்தப் பட்ட பின்னருமே இவ்வலுவல் நிறைவேறியது. இக்கலகத்தை அடக்கிய பின்னர், கண்டியில் ஆணையாளர் பீடமொன்று நிறுவப்பட்டு அதற்குரிய தலைவர் ஒருவரும் அமர்த்தப்பட்டார் ; அதன்பின்னர் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுநலத்துக்குரிய கட்டிடங்களை நிறுவுவதற்குக் கட்டாயக் கூலியைப் பயன்படுத்தும் வழக்கத்தை மட்டுப்படுத்தியது, ஆட்சேவைக்குப் பதிலாகப் பண்படுத்தப்படும் காணியில் ஒரு வரியை விதித்தது, நீதிபரி பாலனத்தை உண்ணுட்டுத் தலைமைக்காரரிடமிருந்து எடுத்து ஐரோப்பிய குடிச்சேவையினரிடம் ஒப்படைத்தது, வாரி வழங்கும் சேவையில் தலை மைக்காரரை நியமித்தலை ஆள்பதிக்கு ஒதுக்கியது, தலையோர்க்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை விதிப்பு முறையால் எடுப்பதைத் தடுத்து சம்பள
பின்னிணைப்பு w. இலங்கையின் வரலாறு, உவில்லியம் நைட்டன், பக்கம் 329.

13
முறையாகக் கொடுக்குமாறு அமைத்தது ஆகியவை இந்நடவடிக்கைகள். தலையோர், இயல்பாகவே, இம்மாற்றங்களால் மன அமைவு கொள்ள வில்லையென்பது தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நேர்ந்த சில சிறு (குழப்பங்களால் தெளிவாயது. நாடு முழுவதும் நன்முறையில் அமைந்த தெருக்களை அமைக்கும் ஒரு முறைமையினல், எதிர்காலத்தில் தோன்றும் பல குழப்பங்களிலிருந்து வரும் இடர் ஒருவாறு குறைக்கப்பட்டது. இதற் கிடையில், கண்டி நாட்டைப் பிரிட்டிசார் கைப்பற்றிக் கொண்டதும் கடற் கரை மாநிலங்கள் வளர்ச்சியடைந்ததும் 1802 இலிருந்த யாப்பு முறை யைச் சீர்படுத்த வேண்டியிருந்ததற்கு முக்கிய காரணங்களாய் அமைந்தன. எனவே, பல ஆண்டுகளாக விசாரணைக் குழுவொன்று இதை ஆராய்ந்தது ; பின், 1833, செற்றெம்பர் 28 ஆம் நாள் இந்த யாப்புச் சீர்திருத்தம் கழகத்துப் பணிக்கையொன்றினல் நிறுவப்பட்டது. கடல்சார் புலங்களின் ஆட்சியை நடத்திவந்த பழைய கழகத்தின் இடத்தையும் கண்டியர் பகுதியை ஆட்சிநடத்தி வந்த குழுவினர் பீடத்தின் இடத்தையும் சட்ட சபையும் நிறைவேற்று சபையும் இடங்கொண்டன. நிறைவேற்று சபையில் 5 மூத்த அலுவலர்களும் மற்றையதில் 10 அலுவலர்களும் உறுப்பின ராயமைந்திருந்தனர். இரு பகுதிகளின் ஆட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. தீவு 5 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. மேல்மாகாணம், வடமாகாணம், கீழ்மாகாணம், தென்மாகாணம், மத்தியமாகாணம் என்பவையே அவை. ஒவ்வொரு மாகாணமும் ஒர் அரசாங்க முகவரின் கீழிருந்தது. இவ்வாறு இரு பகுதிகளையும் ஒருங்கு சேர்த்ததும் முன் கண்டித் திசாவை களின் கீழிருந்த ஆள்புலங்களைப் பிரதம தலைமைக்காரன் பகுதிகளாகப் பிரித்ததும் கண்டித் தலையோர்க்கு உவப்பாயிருக்கவில்லை. எனவே, அர சினர், இவர்களின் மன வெறுப்பினல் யாதாயினும் கலகம் தோன்றும் என்ற எண்ணம் கொண்டு அதற்கேற்ற வழிவகைகளை முன்னெச்சரிக் கையாக எடுத்துக்கொள்ளல் வேண்டுமெனக் கருதினர். ஆயினும், 1824 இன் பின் நடந்த 10 ஆண்டுக்காலம் மக்களுக்கு மகிழ்வும் வளமையும் தந்த காலமெனக் கருதப்பட்டது. 1833 இல் இப்புதிய யாப்புடன் நீதி யாவணம் ஒன்றும் நிறுவப்பட்டது. இதனல், முதல் குற்றவியற் சட்ட வதிகாரமும் குற்றவியல் குடியியல் முறைகளில் மேன்முறையீட்டுச் சட்ட வதிகாரமும் ஓர் உச்சிமன்றுக்கு அளிக்கப்பட்டன. இன்னும், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அங்குள குற்றவியல் குடியியல் வழக்குக்களை விளங்குவதற்கு மாவட்ட மன்றுகளும் நிறுவப்பட்டன. இம்மாவட்ட மன்று களின் வேலைகளைச் சிறிது குறைப்பதன் பொருட்டு 1844 இல் பொலிசு மன்றுகளும் 1845இல் முறையீட்டு மன்றுகளும் நிறுவப்பட்டன. இம்மன்று கள் சிறு குடியுரிமைக் குற்றவழக்குக்களை ஆய்ந்து மாவட்ட மன்றுகளின் வேலையைக் குறைப்பதன்பொருட்டு எற்படுத்தப்பட்டன.

Page 13
14
1834 இல் குடிமக்களின் எண்ணிக்கை 1,167,000. இஃதொரு சதுர மைலுக்கு 45. நாட்டு வருவாய் 377,952 பவுண். சுங்கத்தால் வந்த வருவாயும் இதனுள் அடங்கும். இக்காலச் செலவு 334,000 பவுண். எற்றுமதியின் பெறுமானம் 145,000 பவுண். இறக்குமதி 372,000 பவுண். 153,510 தொன் நிறைகொண்ட கப்பல்கள் நாட்டை வந் தடைந்து இறக்குமதி செய்தன. 1,105 பாடசாலைகளில் 13,891 மாண வர்கள் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து வந்த காலத்தில் கோப்பிச் செய்கை மிக வேகமாக முன்னேறியது. அதனல் அதைத் தாங்குவதற்காக முதற்பணம் நாட்டுள் விரைவாக வந்துசேர்ந்தது. எனினும், உள்நாட்டு மக்களின் சமூக நிலை இழிவாக இருந்தது. மக்கள் மதுபானங்களை அருந்தி, மிதமிஞ்சிய முறை யில் வழக்குக்களில் ஈடுபட்டனர். சாராயத்தில் அரசினர் கொண்டிருந்த தனியுரிமை, மக்கள் குடிப்பதை நன்முறையில் தடுப்பதற்கு உதவக் கூடியதாயிருக்கவில்லை. சிறு மாவட்ட மன்றுகள் அமைந்த முறையே வழக்கு நடத்துவதில் ஆர்வம் கொண்ட மக்களின் இச்சையைத் தூண்டித் தம்மை வாழவைக்கும் நியாயவாதிகளுக்கு நல்ல வாய்ப்பை அளித்தது. எனவே, வழக்காடலும் தொடர்ந்து நடந்தது. இவையாவும் உள்நாட்டில் அகப்பட்ட பணத்தின் துணைகொண்டு வளர்ந்தன. இப்பொல்லா வழக் குக்களை நிறுத்துவதற்கு அரசாங்கமும் தலையோரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. நாட்டு மக்களுடன் அலுவலர் அதிகம் தொடர்பு கொண்டிராததாலேயே அரசாங்கத்தின் முயற்சி தோல்வி யுற்றது. ஆதியில் தலையோர்களின் அதிகாரம் மிகவும் வன்மையுடைய தாயிருந்தது; எனவே, அவ்வதிகாரத்தைக் குறைக்கவேண்டுமென்ற அர சினர் பூட்கையினல், இத்தலையோர்களின் அதிகாரம் பின்னர் ஒரு வழி யிலும் செல்லக்கூடியதாயிருக்கவில்லை ; இதனலும் இது நேர்ந்தது. இங்கு குறிக்கப்பட்ட தீயவழக்கங்கள் கண்டியர் மாநிலங்களிலேயே பொல் லாப் பயனையளித்தன. ஏனெனில், அங்கு குறைவான கல்வியே கிடைத் தது. மக்களும் அயல்நாட்டு நாகரிகத்தோடு அதிகம் தொடர்பில்லாதவர் களாயிருந்தனர். உலகத்தோடு ஒட்டிய சோனகரோடும் மேல்நாட்டுப் பகுதி களுக்கு வந்த கீழ் நாட்டுச் சிங்களவரோடும் ஒப்பிட்டு நோக்கும்பொழுது, இப்பகுதி மக்கள் குறைவான வாய்ப்புடையவராயிருந்தனரென்றே சொல் லல் வேண்டும். எனவே, கண்டியரிடையிருந்த மனவெறுப்பு மிக விரை வாக வளர்ந்தோங்கியது. 1845 இல் வடமேற்கு மாகாணத்தை அமைத்த தும் இது குறையவில்லை. இம்மாகாணம் கண்டிய எழு கோரளைகளுடன் கீழ்நாட்டு மாவட்டங்களான சிலாபம், புத்தளம் ஆகியவற்றையும் இணைத் தது. 1848, யூலை 6 இல் கண்டியில் குழுமிய நாலாயிரம் மக்கள் கூட்ட மொன்று அரசாங்கத்திற்கு ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தது. இவ் விண்ணப்பத்தில் சில சட்டங்களைத் திருத்துமாறு மக்கள் கேட்டிருந்தனர்.

15
அவ்வாண்டில் மாத்தளை, குருநாகல் மாவட்டங்களில் கலகமொன்று கிளம்பியது. ஆயினும், இஃது உயிரிழப்பு ஒன்றுமின்றி அடக்கப்பட்டது. பிரிட்டிசுப் பாராளுமன்ற விசாரணையொன்று தொடர்ந்து நடந்தது. ஆள்பதி தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்டார். கண்டியர் நிலைமையைச் சீர்திருத்துவதன் பொருட்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 1853 இல் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பெளத்த சமயத்தோடு சார்ந்த அலுவல்களை ஆட்சி செய்வதில் அரசாங்கம் தன்னை விலக்கிக்கொண்டது. ஆயினும், மக்கள் இதை நன்கு பாராட்டியவர்போல் தோன்றவில்லை. கலகத்தை அடக்கியபின் 1818 இல் வெளியிடப்பட்ட அறிக்கை 1815 இல் நடந்த சமவாயத்தில் காணப்பட்ட கடப்பாட்டை எலவே தளர்த்திவிட்டது. இக் கடப்பாட்டினை இங்கிலந்திலிருந்த சமயப் பற்றுடைய மக்கள் பொருத்த மானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை. 1859 இல் நடந்த மணச்சட்டத் தில் எற்படுத்திய ஒரு திருத்தம் கண்டியர்க்கு மிக மகிழ்ச்சியை அளித் தது. இத்திருத்தம் அவர்கள் அரசாங்கத்திற்கு அளித்த ஒரு விண்ணப் பத்திற்கியைய எற்படுத்தப்பட்டதாகும். தீவினை, மாகாணங்களாகப் பிரிப் பதிலும் அவர்களுடைய நலனுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப் பட்டன. கண்டியர் ஆள்புலத்து வட பகுதியை நன்முறையில் ஆட்சி செய்வதன் பொருட்டு வடமத்திய மாகாணம் 1873 இல் நிறுவப்பட்டது. மத்திய மாகாணத்திலிருந்து 1886 இல் ஊவா மாகாணம் நிறுவப் பட்டது. 1889 இல் சபரகமுவா மாகாணம் நிறுவப்பட்டது. இம்மாகாணம் முன் அப்பெயர்கொண்டு விளங்கிய ஒரு கண்டி திசாவணியையும் மூன்று கோரளைகள், நான்கு கோரளைகள் எனப் பெயர் கொண்டு விளங்கிய மாவட்டங்களின் சில பகுதிகளையும் கொண்டு விளங்கியது. இவை மேல் மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை. இது நாட்டின் ஒன்பதா வது மாகாணமாகியது. பொதுவாக இக்காலத்தில் இந்நாட்டில் பொரு tளாதார வளம் சிறந்தோங்கியது. தோட்டத் தொழிலாலாய செல்வத்தை விட வேறு வகையிலும் பொருள் வளர்ச்சி நாட்டிலிருந்தது. கல்விச் சேவையும் உடனலச் சேவையும் மிக விரிவடைந்து வளர்ந்தன. பொது வேலைகள் அகன்றியங்கின. போக்குவரத்துச் சாதனங்களிலும் நீர்ப் பாய்ச்சல் வேலைகளிலும் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. 1890 இன் பின் ஏற்பட்ட தேயிலைத் தோட்ட வளர்ச்சியினல் அரசினர்க்கு எராளமான வருவாய் வந்தது. இதனல் இச்சேவைகளுக்கு ஏற்ற செல்வம் கிடைத் திதி.
1834 இலிருந்து 20 ஆம் நூற்றண்டு முதற் பத்து வரை யாப்புமுறை மாற்றமொன்றும் நடக்கவில்லை. 1837 இல் 10 அலுவலர் கொண்ட சட்டசபைக்கு இரண்டு அலுவல் பற்றற்ற உறுப்பினர் சேர்க்கப்பட்டனர். 1845 இல் இவர்களின் தொகை 6 ஆக உயர்த்தப்பட்டது. இவர்கள் யாவரும் நியமன முறையிலேயே பதவி வகித்தனர்.

Page 14
16
யாப்பில் ஒரு மாற்றத்தைப் பெறுவதற்கும், நிதியைக் கழகம் கட்( படுத்துவதற்கும், அக்காலத்துப் பிரச்சினையான குடியேற்றநாடு எவ்வித தில் படைத்துறை முறையில் சேவை செய்யலாம் என்பதை ஆராய்வத கும், பலவித இனத்தவர்களுடைய சங்கங்களின் பிரதிநிதிகளோடு இ வுறுப்பினர்களும் சேர்ந்து 1859 ஆம் ஆண்டில் ஒரு முயற்சி செய்தன அப்பொழுது, இது கைகூடவில்லை. ஆயினும், 1865 இல் பிரிட்டிசா டைய மாநகர சங்கங்களைப் போன்றனவாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட அ கத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, மாநகர சங்கங்கள் கொழு பிலும் கண்டியிலும் நிறுவப்பட்டன. சில காலத்தின் பின்னர் கா யிலும் ஒன்று நிறுவப்பட்டது. சில ஆண்டுகளின் பின் கிராமப் ப் சாயத்து முறையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக் பட்டன. இதற்கு முன்னரே உழவு முறை, நீர்ப்பாய்ச்சல் முறை ஆகி வற்றில் இச்சங்கங்கள் செய்யும் அரும் பணியைப்பற்றி ஆட்சியாளரு அறிந்திருந்தனர். இந்நடவடிக்கை சுய ஆட்சி வழியில் மிக முக்கி மான ஒரு கட்டமாகும். இம்முறையும் பழைய வழக்கங்களுக்கு இயைந் ஒன்ருயிருந்தது. கிராமச் சங்கங்களும் கிராமமுறை மன்றுகளும் 18 ஆம் ஆண்டு 26 ஆம் எண் சட்டத்தால் நிறுவப்பட்டன. பின்னர் தொடர்ந்த உள்நாட்டு ஆட்சி வளர்ச்சிபற்றி இவ்வறிக்கையின் எழ அதிகாரத்தில் ஆராயப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தைப்பற்றி நா கூறும்பொழுது, 1889 இல் சட்டசபையில் உள்ள உத்தியோகப் பற்றற் வரின் எண்ணிக்கை எட்டிற்கு உயர்த்தப்பட்டது. இது கண்டிச் சிங்க வருக்கு ஓர் இருக்கையும் சோனகருக்கு (அராபியர் வழித்தோன்ற்ல்கள் ஓர் இருக்கையும் ஆகச் செய்யப்பட்டது. முன்னிருந்த ஆறு இருக்கைகளு பின்வருமாறு வகுக்கப்பட்டன :-
(1) கீழ்நாட்டுச் சிங்களவர் (2) தமிழர் (3) பறங்கியர் (4) தோ முதலாளிகள் (5) வணிகர் (6) பொதுவான ஐரோப்பி சமுதாயம்
ஆறு முதன்மையான அலுவலரும் ஆள்பதியுடன் சேர்ந்து நிை வேற்றுசபையை அமைத்தனர். இவர்களுடன் சேர்ந்த மற்றை மூன்று அ வல் பார்ப்போரும் சட்டசபை உறுப்பினரின் எண்ணிக்கையைப் பதினேழ கினர். இக்குழுவினர் ஆள்பதியின் தலைமையில் கூடினர். முன்னர் அ வற்ற காலத்திற்காக நியமிக்கப்படும் வழக்கு இவர்களுடைய உறுப் காலத்தை ஐந்து ஆண்டுகளாக வரையறுப்பதால் மாற்றப்பட்டது.

Lift
றை
Teš
புக்
17
1910 வரை யாப்பினில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆயினும்
இடைவந்த இருபது ஆண்டுகள் முழுவதும் யாதாயினும் சீர்திருத்தம்
வேண்டுமென்ற ஓர் எண்ணம் மக்களிடை வளர்ந்து வந்தது. இச் சீர்திருத்தமும் சிறப்பாகச் சட்டசபையில் செய்யப்படவேண்டுமென்று கரு தப்பட்டது. இவ்வெண்ணம் இத்தீவிலுள்ள இலங்கையரிடம் மட்டும் இருந் திருக்கவில்லை. இச்சீர்திருத்தம் பின்னர் இனமுறையில் அமைந்த பிரதி நிதித்துவ முறையை நீக்க வேண்டுமென்றும் நியமனத்தின் இடத்தில் தேர்வு விதியைப் புகுத்தவேண்டுமென்றும் உருவாகியது. 1909 இல், இந்நாட்டிலுள்ள பல மக்கள் இவ்வாறன வழியில் சீர்திருத்தங்கள் வேண்டுமென்று விண்ணப்பித்து, விண்ணப்பங்களை அரசச் செயலாள ரிடம் அனுப்பி வைத்தனர். இவர் சபையை விரிவாக்கலாமென்றும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரதிநிதியாக வரும் உறுப்பினர்கள் ஐரோப் பியர் வழிமுறையில் கல்வி கற்றவராயிருத்தல் வேண்டுமென்றும், அவரை நியமன முறையில் தேர்ந்தெடுக்காது தேர்வுமுறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் முடிவு செய்தார். 1910, நவம்பர் 24 ஆம் தேதி கொண்ட வேத்தியற் கட்டளைகளுக்கிணங்க சபையின் யாப்பானது 11 அலுவலரையும் 10 அலுவல் பற்றற்ற உறுப்பினரையும் கொள்ளுமாறு திருத்தியமைக்கப்பட்டது. பின்னர்க் கூறியவருள் நால்வர் தெரிவுசெய் யப்பட்டனர். இவர்கள் முறையே நகர்ப்புற ஐரோப்பியர், நாட்டுப்புற ஐரோப்பியர், இலங்கையர், பேகர் ஆகிய சமுதாயங்களின் பிரதிநிதிக ளாவர். எஞ்சிய ஆறு அலுவல் பற்றற்ற உறுப்பினரும் இன்னும் ஆள்பதியாலேயே நியமிக்கப்பட்டனர். இவர்களுள் ஒரு கண்டிச் சிங்கள வர், ஒரு முகம்மதியர், இரண்டு கீழ்நாட்டுச் சிங்களவர், இரண்டு தமிழர் ஆகியோர் இருந்தனர். பதவி வழி பிரதானகுடியியல் மருத்துவ அலுவலர், தென் மாகாணத்து அரசாங்க முகவர் ஆகியோரும் அலுவலர் பகுதியில் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சபையானது முதன்முறையாக 1912, சனவரி 16 இல் கூடியது. ஒராண்டின் பின்னர், அச்சபையானது இலங்கையின் நல்லாட்சி யின் வளர்ச்சிக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நன்கு ஒத்தி பங்கும் ஒரு கருவியென ஆள்பதி கூறினர். இவ்வாறு இச்சபை மீள அமைக்கப்பட்டபொழுது இலங்கையின் மக்கட்டொகை 4,110,367 ஆக, இருந்தது. இஃதொரு சதுரமைலுக்கு எறக்குறைய 162 ஆகும். இது 440,000 இந்தியக் கூலிகளைக் கொண்டிருந்தது. நாட்டின் வாரி 43,741,738 உரூபாயாக இருந்தது. செலவு 36,467,708 உரூபாயாக இருந்தது. 14,769,208 தொன் நிறைக் கப்பல் நாட்டையடைந்து அகன்றது. இறக்குமதிகளின் விலை 164,405,788 உரூபாயாக இருந்தது. எற்றுமதி 182,028,968 உரூபாயாக இருந்தது. அரசினர் பாடசாலைகளிலும் உதவி பெற்ற பாடசாலைகளிலும் 325,282 மாஞ்றக்கர் பயின்றனர். உதவி நன்கொடையில்லாத பள்ளிகளில் 34,375 மாணக்கர்கள் பயின்றனர். இத்தொகைகளே முதலாவது சட்டசபை கூடிய ஆண்டு 1834 இற்குக் கொடுத்த தொகைகளுடன் ஒப்பிட்டு ஆராய்க.

Page 15
8
1917 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் சீர்திருத்தக் கழகம், இலங்கை நாட்டின மாசபை ஆகியவற்றல் அரசச் செயலாளருக்குச் சமர்ப் பிக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தில், யாப்பிலே மீண்டும் சீர்திருத்தம் செய்வதற்கு மேற்கூறிய வளர்ச்சி ஒரு காரணமாக எடுத்து வலியுறுத்தட் பட்டது. இதில் பெரும்பாலும் தரை வாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகப் பற்றற்ற பெரும்பான்மையைச் சட்டசபை கொண்டிருக்க வேண்டு மென்று கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னர், இலங்கை நாட்டின மாசபை-இது பெரும்பாலும் கீழ்நாட்டுச் சிங்களவர்களின் பிரதி நிதித்துவம் கொண்டிருந்தது-பிற்கூறப்படும் முக்கிய சீர்திருத்தங்களை, வேண்டி நின்றது. “ ஏறக்குறைய 50 உறுப்பினர்களைக் கொண்ட விரிந்த ஒரு சட்டசபை ; இவருள் 4/5 பங்கினர் தரைவாரியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் ; விரிந்த ஆண்மக்கள் வாக்குரிமை ; வரையறுத்த பெண் மக்கள் வாக்குரிமை ; எஞ்சிய 1/5 பங்கும் சிறப்பாகச் சிறுபான்மையின ரின் பிரதிநிதிகளாயமைந்த உத்தியோகப் பற்றற்றவரும் உத்தியோகத் தரும். இரண்டாவதாக, தெரிவு செய்யப்படும் ஒரு சட்டசபை வாசகர். மூன்ருவதாக, வரவுசெலவுத் திட்டத்தின் முழு அதிகாரம் ; இரட்டை யாட்சி முறையின்மை. நான்காவதாக, நிறைவேற்று சபை குறைந்தது அரைப்பங்கு இலங்கையரைக் கொண்டிருத்தல் வேண்டும் ; இவர்கள் சட்டசபை அங்கத்தினர்களிலிருந்து எடுக்கப்படல் வேண்டும். ஐந்தாவ தாக, ஆள்பதிக்கு ஆங்கிலப் பாராளுமன்றப் பயிற்சி இருத்தல் வேண்டும். ஆருவதாக, உள்நாட்டு ஆட்சிமுறையில் மக்கள் பூரண அதிகாரம் பெற் றிருத்தல் வேண்டும் ’
1920 ஆம் ஆண்டு யூனில், அரசுச் செயலாளர் எலவே சீர்திருத்தம் பற்றிவிண்ணப்பித்த இலங்கையிலுள்ள பலவித கருத்துடையோரையும் குடியேற்ற நாட்டலுவலகத்திற் கண்டு உரையாடினர். இவர்களுட் சிலர் கண்டியர் சங்கம், இலங்கை நாட்டின மாசபை, இலங்கை ஐரோப்பியர் சங்கம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள். இவர்களின் நோக்கங்களை நன்கு ஆராய்ந்ததின் பயனக, 1920 ஆம் ஆண்டு ஒகசு 13 இல், 14 அலுவல் பற்றுடைய உறுப்பினரையும் 23 அலுவல் பற்றற்ற உறுப்பின ரையும் கொண்டு, ஆள்பதியின் தலைமையில் இயங்கும் ஒரு சட்டசபையை அமைக்கும் கழகத்துப் பணிக்கையொன்று நிறைவேற்றப்பட்டது. அலுவல் பற்றற்ற உறுப்பினருள் 11 பேர் நிலவழி முறையால் தேர்ந்தெடுக்கப் படுவர். எண்மர், ஐரோப்பியர் (2), பறங்கியர் (1), வணிகச்சங்கம் (1), கீழ்நாட்டு விளைபொருள் சங்கம் (1), கண்டியர் (2), இந்தியர் (1) ஆகியோ ரின் பிரதிநிதிகளாக விளங்க நியமிக்கப்படுவர். முகம்மதியர் சமுதாயத்
அரசச் செயலாளருக்கு இலங்கை நாட்டின மாசபையின் தலைவர் அனுப்பிய 1919, திசெம்பர் 16 ஆம் நாள் தேதி கொண்ட தந்தி.

9
திரகுப் பிரதிநிதித்துவம் வகிக்க ஒருவரும், ஆள்பதியின் எண்ணத்தின் பல் வேறு வழியில் தகுந்தமுறையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சில பற்றுக்களுக்குப் பிரதிநிதிகளாக விளங்குவதற்கு வேறு மூவரும் அவரால் நியமிக்கப்படுவர். முக்கியமான யாதாயினும் ஒர் அலுவலில் ரர்படும் இடரினைத் தடுப்பதற்காக, ஆள்பதி பொது நலத்தின் பொருட்டு குறித்த ஒரு நடவடிக்கையை எடுத்தல் மிக அத்தியாவசியம் என்று 1றுதியுரைக்கலாம் என்றும், அத்தகைய வகையிலே, அலுவல் பற்றுடை உறுப்பினரின் வாக்குக்களால் அந்நடவடிக்கை எற்றுக்கொள்ளப்படும் என் றும் ஓர் ஏற்பாடும் செய்யப்பட்டது. இலங்கையின் சமாதானத்தைப் பேணும் வி!மியில் யாதுமொரு நடவடிக்கை இடையூருய் விளங்குமெனின், அதுபற்றிய சபையின் நடவடிக்கைகளை நிறுத்தவும் நாடாள்வாருக்கு அதிகாரம் கொடுக் கப்பட்டது. மேற்கூறிய பணிக்கைக்கு இயைய அமைக்கப்பட்ட சட்டசபை 1921, யூன் 7 இல் முதன் முதல் கூடவும், ஆள்பதிக்கு அளிக்கப்பட்ட வேத்தியற் கட்டளைக்கியைய மூன்று அலுவல் பற்றற்ற உறுப்பினர் சட்ட நிறைவேற்று சபைக்கு நியமிக்கப்பட்டனர். இப்புது யாப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டிலே, மேலே 1834, 1910 ஆகிய ஆண்டுகளுக்குக் கொடுத்த புள்ளிவிவரங்களுக்கு ஒத்த புள்ளிவிவரம் வருமாறு :-
சனத்தொகை - to .. 4,504,549, ஒரு சதுர மைலுக்கு 178 ; இஃது 5 4. இலட்சத்திற்குக்குறைவான கூலிகளைக் கொண்டி ருந்தது. einfl O to as . உரூபாய் 70,819,061 செலவு o .. உரூபாய் 91,767,691 நாடடைந்து சென்ற கப்பல் நிறை 0 .. 13,328,799 தொன் இறக்குமதிப் பெறுமானம் . . 4 . உரூபாய் 260,897,161 எற்றுமதிப் பெறுமானம் . . to . உரூபாய் 258,600,413 அரசினர் பாடசாலை, உதவி நன்கொடைப் பாடசாலை ஆகி
வற்றிலுள்ள மாணுக்கர் ... 383,108 உதவி நன்கொடையில்லாப் பாடசாலை மாணுக்கர் ... 21,322
கழகத்துப் பணிக்கையானது இலங்கைக்கு அனுப்பப்பட முன்னரே அத னுடைய எற்பாடுகளுக்கு எதிர்க் கருத்துக்கள் அறிவிக்கப்பட்டன. இன் {ம்ை, “ சட்டசபையில் உண்மையான பலத்த பெரும்பான்மை, விரிவான வாக்குரிமை, நிறைவேற்று சபையிலுள்ள அரைப்பகுதி உறுப்பினர் சட்ட சபையில் நிலவழிமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலிரு ந்து தெரிவுசெய்யப்படுதல், அமைச்சுப் பதம் ஆகியவையும், பாராளு மன்றப் பயிற்சியுள்ள ஆள்பதி, தெரிவு செய்யப்படும் வாசகர் ஆகி யோரும்’ வேண்டுமென்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவ்வேண்டு
டீ. பி. செயத்திலகாலிற்கு 1920, ஒகசு 9 ஆம் நாள் இலங்கை நாட்டின் மாசபைக்குழு அனுப்பிய தந்தி.

Page 16
2O
கோள்களை அனுப்பியது நாட்டின் மாசபையாகும். இப்பணிக்கை பிறப் பித்தலுக்குக் காரணமாக இருந்தோரும் இக்கிளர்ச்சியை அமைத்து நடத்தி னேருமான கீழ்நாட்டுச் சிங்களவர்க்கு, இச்சபை பிரதிநிதியாயிருந்தது. பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தல், முறையாக நடத்தப்பட்டு, சபை 1921, யூன் 7 இல் கூடியது. அவ்வாண்டு திசெம்பர் மாதத்தில் நாட்டின் மாசபையின் தலைவர் திரு (இப்பொழுது சேர்) இயேமிசு பீரிசு அவர்களால் பணிக்கைக்கு வேண்டிய சீர்திருத்தங்களை எடுத்துக்கூறும் ஒரு தீர்மானம் சட்டசபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அவை சட்டசபை 45 உறுப்பினரைக் கொண்டிருத்தல் வேண்டுமென்றும் இவர்களுள் அறுவர் அலுவலரா யிருத்தல் வேண்டுமென்றும் 28 பேர் நிலவழி முறையால் தேர்ந் தெடுக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்றும் கூறின. இன்னும், வகுப்பு முறைப் பிரதிநிதித்துவமும் சிறுபான்மையினருக்குரிய பிரதிநிதித்துவமும் சிறு மாற்றங்களுடன் முன்னர் இருந்ததைப்போல் இருத்தல் வேண்டும் ; சட்டசபை தேர்ந்தெடுத்த வாசகரே அதற்குத் தலைமை வகிக்க வேண்டும்; உடைமை, வருமானத் தகுதிகளைக் குறைத்து வாக்குரிமை விரிந்ததொன் ருய் அமைக்கப்படல் வேண்டும் ; நிலவழியான தொகுதிமுறை இருக்கை களை மீண்டும் திருப்பி அறுதியிட வேண்டும் ; நிறைவேற்று சபையில் மூன்று அலுவல் உறுப்பினர் இருத்தல் வேண்டும் ; இவர்களுடன் சட்ட சபை உறுப்பினருள் தெரிந்தெடுக்கப்பட்டவரும் அமைச்சுப் பதம் உடைய வருமான மூன்று அமைச்சர்கள் சேர்ந்திருத்தல் வேண்டும் ; சட்டசபை களின் ஆலோசனைகளேத் தடுக்கும் ஆள்பதியின் அதிகாரம் நீக்கப்படல் வேண்டும்; இன்னும் வேண்டிய சில சிறு மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும் ; இவ்வாறு அத்தீர்மானம் கேட்டுக்கொண்டது. இவ்வெடுத் துரைகளை அரசுச் செயலாளர் நன்கு ஆராய்ந்தார். இத்துடன் 1922, பெப்பிரவரி 21 ஆம் நாள் தேதி கொண்டதும் சட்டசபையில் உறுப்பின ராயிருந்த ஐரோப்பியர், பறங்கியர், தமிழர், முகம்மதியர், இந்தியர் ஆகிய உறுப்பினர் சேர்ந்தளித்ததுமான ஒரு விண்ணப்பமும் அவரால் ஆராயப் பட்டது. இந்த விண்ணப்பம் 45 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டு மென்றும் இவருள் 19 பேர் நிலவழிமுறையில் தெரிவுசெய்யப்பட்டவரா யும் 11 பேர் இனமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவராயும் 15 பேர் நியமிக்கப்பட்டவராயும் இருத்தல் வேண்டுமென்றும் எடுத்துக் கூறியது. இன்னும், 1922, மாச்சு மாதத்தில் இலங்கை நாட்டின மாசபையால் சட்டசபை எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று எடுத்துரைக் கும் ஒரு திட்டமும் இத்துடன் சேர்த்து ஆராயப்பட்டது. இன்னும், நில வழி முறையிலமைந்த வாக்குத் தொகுதிகளை எவ்வாறு பிரித்துப் பிரதி நிதித்துவ இருக்கைகளாக அமைத்துக்கொள்ளலாம் என்று ஆராய்வதற் காக ஆள்பதியால் அமைக்கப்பட்ட சட்டசபைக் குழுவொன்றின் நடவடிக் கைகளும் ஆராயப்பட்டன. இந் நடவடிக்கையின் அறிக்கை 1922, யூலையில் முடிவுற்றதொன்றகும். 1923 இல் வேறு பிற சிறுபான்மைச் சமுதாயத்தவ ரின் பிரதிநிதித்துவம்பற்றியும் அரசுச் செயலாளருக்குப் பல விண்ணப்பங்கள்

ái
சமர்ப்பிக்கப்பட்டன. இச் சமுதாயத்தவருள் கொழும்புத் தமிழரும் குறிப் ரிடப்பட்டனர். ஆயினும், அவ்வாண்டு திசெம்பர் 19 ஆம் நாள் வரை முகஞ்சார் மாட்சிமை தங்கிய மன்னரால் 1923 ஆம் ஆண்டு இலங்கைச் சடீடசபைப் பணிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதற்கு 1924, மாச்சு 21 அம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தக் கழகத்துப் பணிக்கை பொன்றினல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்பொழுதிருந்த சட்ட சபை 1924, ஒகசு 29 ஆம் நாள் கலைக்கப்பட்டது. திருத்தியமைக்கப் பட்ட சபை ஒற்றேபர் 15 ஆம் நாள் முறைமையில் அமைக்கப்பட்டது.
1923 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டசபைக் கழகத்துப் பணிக்கைக்குரிய (:க்கிய எற்பாடுகள் வருமாறு : சபை 12 அலுவல் பற்றுடையோரையும் 37 அலுவல் பற்றற்ற உறுப்பினரையும் கொண்டிருக்கும். அலுவல் உறுப்பினர்கள், பதவி வழி வந்த உறுப்பினராவர். அவராவார், உயர் படை அலுவலர், குடியேற்ற நாட்டுச் செயலாளர், சட்டத்துறை நாயகம், வாரி கட்டுப்பாட்டாளர், பொருளாளர் ஆகியோரும் ஆள்பதியால் நியமிக் கப்படும் வேறு 7 அலுவலருமாவர். ஆள்பதியால் நியமிக்கப்பட்ட மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 உறுப்பினரும் அலுவல் பற்றற்றவராவர். 34 உள் 23 நிலவழி முறையிலமைந்த வாக்குத் தொகுதி உறுப்பினர். நகர்ப்புற :ரோப்பியர், நாட்டுப்புற ஐரோப்பியர், வணிக ஐரோப்பியர் ஆகியோ ()க்கு மூன்று. பறங்கியருக்கு இரண்டு. இந்தியருக்கு இரண்டு. முகம்மதி யருக்கு மூன்று. மேல்மாகாண இலங்கைத் தமிழர்க்கு ஒன்று என மற்றையோர் அமைந்தனர். நிலவழி முறையில் அமைந்த 23 தொகுதி களும் ஒவ்வொரு மாகாணத்திற்குமாக பின்வரும் முறையில் பிரிக்கப் பட்டிருந்தன மேற்கு 5, தெற்கு 3, வடக்கு 5, கிழக்கு 2, மத்திய 2, வடமேற்கு 2, வடமத்திய 1, ஊவா 1, சப்பிரகமுவா 2. தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர் 25 ஆண்டுகளுக்கு மேலான அகவை உடையவராய், ரிட்டிசுப் பிரசைகளாய், ஆங்கில மொழியில் பேச எழுதவாசிக்கத் தெரிந்தவராய், 1,500 உரூபாய்க்குக் குறையாத வருமானம், இன்றேல் 5,000 உரூபாய்க்குக் குறையாப் பெறுமானமுடைய அசையாத சொத்து உடையவராய், இன்றேல் நகர்ப்புறத்தில் 500 உரூபாய் ஆண்டுப் பெறு மானத்திற்குக் குறையாத ஒர் இல்லத்தில் வசிப்பவராய், இன்றேல் வேறு பிற இடத்தில் 400 உரூபாய் ஆண்டுப் பெறுமானத்திற்குக் குறையாத இல்லத் தில் வசிப்பவராய் இருத்தல் வேண்டும். வாக்காளர் 21 வயதில் குறை யாதவராய், பிரிட்டிசுப் பிரசைகளாய், ஆண்களாய், ஆங்கிலமோ சிங்களமோ தமிழோ எழுத, வாசிக்கத் தெரிந்தவராய், ஆண்டுக்கு 600 உரூபா யிற்குக் குறையாத வருமானம் உடையவராய், இன்றேல் 1,500 உரூபாய்க்குக் குறையாத அசையாத சொத்து உடையவராய், இன்றேல் நகர்ப்புறத்தில் 400 உரூபாய் ஆண்டுப் பெறுமானமுடைய வீட்டில் வசிப்ப வராய், இன்றேல் வேறு பிற இடத்தில் 200 உரூபாய் ஆண்டுப் பெறுமானத் திற்குறையாத வீட்டில் வசிப்பவராய் இருத்தல் வேண்டும். தேர்வுகளைப்

Page 17
22
பற்றிய நடைமுறை ஒழுங்குகள் மிக விவரமாக அப்பணிக்கையில் எடுத் தோதப்பட்டுள்ளன. இத்தீவிலே நல்லரசாங்கத்திற்கும் ஒழுங்கு அமை திக்கும் வேண்டிய சட்டங்களை ஆள்பதி சட்டசபையின் இசைவுடனும் அறிவுரையுடனும் இயற்றலாம். இவை ஆள்பதியின் இசைவுபெற்றவுடன் செயலாற்றும் தகுதியுடையனவாயிருத்தல் வேண்டும். இன்றேல் மாட் சிமை தங்கிய மன்னர் இசைவுக்கென ஒதுக்கிவைக்கப்படின், கழகத்துப் பணிக்கையாலோ, அவருடைய முக்கிய அரசுச் செயலாளர்கள் ஒருவரூ டாகவோ அவரின் இசைவு பெற்றவுடன் இவை செயல் பெறக்கூடும். யாதுமொரு வரியை விதிக்கும், அல்லது பொது வாரியில் யாதுமொரு பகுதியைச் செலவழிக்கும் அல்லது கூட்டும் சட்டமோ, வாக்கெடுப்போ, தீர்மானமோ ஆள்பதி முற்கூறினன்றி ஒரு பொழுதும் சட்டசபையில் நிறை. வேற்றப்படாது. ஆள்பதியே சட்டசபையின் தலைவராவர். அவர் சட்ட சபைக்கு வரலாம், அல்லது தலைமை வகிக்கலாம். அவர் வராத வேளை களில் உப தலைவர் தலைமை வகிக்கலாம். இவ்வுப தலைவரைச் சட்டசபை தேர்ந்தெடுக்கும். அச்சட்டசபை கலையும்வரை அவர் பதவி வகிப்பார். யாதுமொரு முறியை, தீர்மானத்தை, அல்லது வாக்கெடுப்பை அது நாட்டின் பொதுநலத்திற்கு மிக இன்றியமையாதது என ஆள்பதி கருதி னல் அவர் அவ்வாறு மிக இன்றியமையாததென உறுதி கூறலாம். அவ்வகைகளில் உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினர்கள், நியமிக்கப்பட்ட அலுவல் பற்றுள்ள உறுப்பினர்கள் ஆகியவர்களுடைய வாக்குக்களே கண க்கு எடுத்துக்கொள்ளப்படும். இத்தகைய வகையொன்றில் அரசுச் செய லாளருக்கு அதைப்பற்றிய அறிக்கை அளித்தல் வேண்டும். எந்த வேளை களிலும் சட்டசபையை ஒத்திவைக்கவோ, கலைக்கவோ ஆள்பதியால் முடியும். எலவே, இவ்வாறு இது கலைக்கப்படாவிடின், இதற்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் முதன்முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வந்தடைந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் அச்சபை கலைக்கப்படல் வேண்டும். 1923 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டசபைக் கழ கத்துப்பணிக்கையைப் பிரயோகித்தல், விளக்கம் செய்தல், அஃது எந் நோக்குடையதென ஆய்தல் ஆகியவைபற்றி எழும் பிரச்சினைகளிலும் அப்பணிக்கையின் கீழ் ஆக்கப்பட்ட விதிகளைப்பற்றிய பிரச்சினைகளிலும் நிறைவேற்று சபையில் அமர்ந்த ஆள்பதியின் தீர்ப்பே முடிவானது.
நிறைவேற்று சபையானது ஆள்பதிக்கு அனுப்பப்பட்ட வேத்தியற் கட் டளைகளுக்கு இயைய அமைக்கப்பட்டது. இது குடியேற்றநாட்டுச் செய லாளர், சட்டத்துறைநாயகம், மேல்மாகாண அரசாங்க முகவர் ஆகிய அலு வற்பற்றுடை உறுப்பினரையும் அரசச் செயலாளரிடமிருந்து பெற்ற கட்டளைகளுக்கியையக் காலத்துக்குக் காலம் ஆள்பதி நியமிக்கும் வேறு உறுப்பினரையும் கொண்டிருக்கும். இப்பொழுது, அங்கு வேறு ஆறு உறுப்பினர் உளர் , அவர்களுள் இருவர் அலுவல் பற்றுள்ளோர் ; மற் றையோர் அற்றவர். ஆள்பதி பதத்தை அமைப்பதுபற்றி எழுந்த உரிமை

23
யோலைக்கும், ஆள்பதிக்கு அளிக்கப்பட்டவேத்தியற் கட்டளைகளுக்கும் இயைய, காணி நிலம் அளிப்பதிலும், நீதிவான்களையும் வேறு மற்றை அலு வைைர நியமிப்பதிலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி களுக்கு மன்னிப்பு அளிப்பதிலும், தண்டனைக் குறைப்பு அளிப்பதிலும், சிறைத்தண்டனை குற்றத் தண்டனை ஆகியவற்றைக் குறைப்பதிலும், குறி த்த ஒரு தகுதியுள்ள பொது அலுவலர்களைத் தண்டிப்பதிலும், அவர்களை ளே?லயிலிருந்து நிற்பாட்டுவதிலும், நிறைவேற்று சபையை, ஆள்பதி, மிக்க அவசரமான, வகை, முக்கியம் குறைந்த வகை, ஆகியவை அல்லா எல்லா வகைகளிலும் கலந்தாலோசித்தல் வேண்டும். இளைப்பாறற் சம் பளக் குறிப்புக்களுக்கு இயைய நிறைவேற்று சபையானது இளைப்பாறற் சம்பளம், கொடைப்பணம் ஆகியவற்றை அளிப்பது, நீக்குவது, அல்லது மீண்டும் கொடுப்பது ஆகிய வேலைகளையும் சட்டசபைக் கழகத்துப் பணிக்கை களுக்கியையத் தேர்வுபற்றிய அலுவல்களையும் கொண்டுள்ளது. உண் மையில், செயன்முறையில், சட்டசபையில் யாதாயினும் ஒரு முறியைக் கொண்டுவரும்பொழுதும், 1920 ஆம் ஆண்டு திசெம்பர் 17 ஆம் தேதி தொண்ட குடியியற்சேவை குறிப்புக்களில் மாற்றங்கள் செய்வதற்கு முன் லும், அல்லது 1908 ஆம் ஆண்டு திசெம்பர் 9 ஆம் தேதி கொண்ட இளைப் பாறற் சம்பளக் குறிப்புக்களில் திருத்தம் செய்வதற்கு முன்னும், எல்லா அரசாங்க அலுவலர்கள்பற்றிய நடவடிக்ககைளையும் ஒழுங்குபடுத்துகின்ற பொதுப் பிரமாணங்கள், நிதிப் பிரமாணங்கள் ஆகியவற்றிலே சிறப் பான மாற்றங்கள் செய்வதற்கு முன்னும், இதைக் கலந்தாலோசித்தல் வேண்டும். கழிந்த 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 200 கட்டளைச் சட்டங்களுள், நிறைவேற்று சபையமைந்த ஆள்பதி, செயற்படுவதற்கு வரும் கட்டளைச் சட்டங்களுக்குத் தேதிகள் குறித்துள்ளார்; விதிகள் வகுத்துள்ளார்; கட்டவேண்டிய பணங்கள், முறைப்பணங்கள் ஆகியவற் றிற்கு வீதங்கள் குறித்துள்ளார். பலவிதமான தறுவாய்களிலும் போதிய கட்டளைகள் பிறப்பித்துள்ளார். சென்ற 5 ஆண்டுகளிலும், முன்னர் இரு ந்ததைவிட மிகக் குறைவான சந்தர்ப்பங்களிலேயே நிறைவேற்று சபை கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையின் பின்னிணைப்பு III இல் பல அரசாங்க அலுவலகங் களின் வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஏறக்குறைய நாற்பது இருக் கும். திணைக்களங்களின் தலைவர்களுக்கு ஆள்பதியின் கட்டளைகள் குடி யேற்றநாட்டுச் செயலாளர் மூலம் அளிக்கப்படுகின்றன. இச்செயலாளரே பொதுச் சேவைகள் யாவற்றிற்கும் தலைமையானவர். சிறப்பாகக் குடி யியற் சேவைக்கு இவர் தலைமையானவர். இவர் வழக்கமாகக் குடி யேற்றநாட்டுச் சேவையல்லாத புறம்பான ஒரு சேவையிலிருந்தே அமர்த் தப்படுவார். குடியேற்றச் செயலாளர், வாரிக் கட்டுப்பாட்டாளர், பொரு ளாளர் இச்சேவைகளின் மேல் அலுவலாளராவர். வாரிக் கட்டுப்பாட்டா ளரே பொதுவாகக் குடியேற்றநாட்டிலுள்ள குடியியற் சேவையின் உயர்
3-ஜே. என். பி 22574 (3/60).

Page 18
24
அலுவலர். வாரி அலுவல்களில் பொதுவாக மேற்பார்வையதிகாரம் உள் ளவர். பொருளாளர் பொதுப் பணங்கள் யாவற்றிற்கும் பொறுப்பு வகித்துக் குடியேற்றநாட்டின் கணக்காளர் நாயகமாக விளங்குவார். குடி யியற் சேவையில் 150 அலுவலர் உளர். ஐரோப்பியர் குலவழி, அல்லது இலங்கையர் குலவழி அல்லது ஐரோப்பியரும் இலங்கையரும் கலந்த குலவழி வந்தவருமாய், இயற்கையாகப் பிரிட்டிசுப் பிரசைகளாய்ப் பிற ந்தவருமாய் உள்ள யாவரும் எடுக்கக்கூடிய, போட்டி முறையிலமை ந்த, தேர்வுகளின் வழியாக அரசச் செயலாளரால் இவ்வலுவலர் எடுக்கப் படுவர். இச்சேவையிலிருந்தே குடியேற்றநாட்டிற்குரிய நீதி வேலையின் ஒரு பகுதிக்கும், பொதுவாட்சி வேலைக்கும் உரிய அலுவலாளர் எடுக்கப் படுகின்றனர். இஃது ஐந்து வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் வகுப்பு ஒன்றிலே அரசாங்க முகவர்களும் பொறிமுறையல்லா அலுவல கங்களின் அதிகாரிகளும் உளர். வகுப்பு இரண்டு, வகுப்பு மூன்று ஆகியவற்றில் துணை அரசாங்க முகவர்களும் மாவட்ட நீதிபதிகளும் மாநகர சங்கப் பொலிசு நீதிபதிகளும் செயலகத் தலைமை உதவியாளர் களும் வாரிசுங்க உட்சங்க அலுவலகங்களின் தலைமை உதவியாளர்க ளும் அடங்குவர். இச்சேவையினருடன் பொறிமுறை அலுவலகங்களில் அமர்ந்த பல முக்கிய அலுவலரும் உளர். இவர்களுடன் குடியியற் சேவையினரும் மற்றும் கீழ்நிலை அரசாங்க அலுவலரும் சேர்ந்து இலங் கையின் பொதுச் சேவையினராவர்.
நீதிபரிபாலனம் பொதுவாக உச்சமன்றுக்கே உரியதாகும். இதில் பிரதான நீதிபதியுடன் ஐந்து துணை நீதிபதிகள் உளர். இவர்களுக்கு முதன் மேன்முறையீட்டுச் சட்ட அதிகாரமும் அடுமிறலகச் சட்ட அதிகார மும் உண்டு. மாவட்ட மன்றுகளுக்கு எல்லையற்ற குடியியல் சட்ட வதிகாரமும் வரையறுக்கப்பட்ட குற்றவியல் சட்டவதிகாரமும் உண்டு. முறையீட்டு மன்றுகளுக்குச் சிறுகுடியியல் வழக்குக்களில் நீதிபரிபாலனம் செய்ய உரிமையுண்டு. பொலிசு மன்றுகளுக்குச் சிறு குற்றங்களை உசாவ உரிமையுண்டு. இவ்வறிக்கையில் உள்ளூராட்சியை ஆராயும் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிராம முறைமன்றுகளுக்கும் நீதிபரிபாலன உரிமை உண்டு.
இவ்வறிக்கையின் பின்னிணைப்பு IV இல் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கட் டொகை, வாரி, செலவு, கப்பல் போக்குவரத்து, எற்றுமதி, இறக்குமதி, கல்வி ஆகியவைபற்றியுள்ள புள்ளி விவரங்களில் நாம் மேற்கூறிய அர சாங்க முறையிலமைந்த குடியேற்றநாட்டின், இப்பொழுதுள்ள நிலை பொது வாகக் குறிக்கப்பட்டுள்ளது.

அதிகாரம் II இப்பொழுதுள்ள யாப்பு இயங்கியவாறு
இப்பொழுதுள்ள யாப்பினைப்பற்றி எடுத்துரைத்துள்ளோம். இஃது எவ் வளவில் தொழிற்படுகின்றதென்பதையும் இதனல் எற்பட்ட ஆட்சியி லுள்ள இடர்ப்பாடுகளையும் ஆய்வது இப்பொழுது எம் காரியமாகும். இலங்கையின் அரசியல் வளர்ச்சியிலே ஒரு மாறுநிலைக்குரிய தேவைகளுக் கேற்றவாறு இவ்யாப்பு அமைக்கப்பட்டதென்பதையும் அது முழுமையில் முற்றுற்று அமைந்த ஓர் அமைப்பாக ஆக்கப்படவில்லையென்பதையும் நாம் அறிந்துள்ளோம். எனவே, மாறுநிலைமைகளுக்கு ஏற்றவாறு அது செம்மைப்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் அஃதிவ்வாறு செம்மைப் படுத்துவதற்கேற்றவாறு உருவாக்கப்பட்டதென்பதையும் நாம் இங்கு கூறல் வேண்டும். ஆகவே, நம் விமரிசம் கழகத்துப்பணிக்கைகளை ஆக்கியவர்கள் மீதோ அதை ஆட்சிப்படுத்தக் கடமைகொண்டவர்கள்மீதோ செய லொழிந்தபின் கூறும் விமரிசங்களாக எடுக்கப்படக்கூடாதென நம்புகின் றேம். ஆயினும், பின்னர் பரிசோதனைக்காலத்தில் எழுந்த குறை பாடுகளை அனுபவமுறையில் கண்டறிந்தது சுட்டிக்காட்டுவதற்காக எழுந்த முயற்சியின் விளைவே இவ்விமரிசங்கள் எனக் கொள்ளல் வேண்டும்.
F'LIJFSONU
இலங்கை யாப்பில் மிகச் சிறப்பான இயல்பு யாதெனில், பொறுப் பிலிருந்து அதிகாரத்தைப் பிரித்ததாகும். பொது அலுவலை நடாத்து வதற்குப் பொறுப்பில்லாதவராயமைந்த அலுவல் பற்றற்ற உறுப்பினர் சட்டசபையில் மிகப்பெரும்பான்மை கொண்டிருந்தனர். பொறுப்புவாய்ந் வராயுள்ள அலுவல் பற்றுள்ள உறுப்பினரோ எப்பொழுதும் மாறச் சிறுபான்மையினராயிருந்தனர். அலுவல் பற்றுள்ள உறுப்பினரோ சபைக்குக் கீழ்ப்படிவு கொண்டிராதவர் ; இவர்களை ஆள்பதி அன்றி வேறு பிறர் அகற்றல் முடியாது. இவர்களிலேயே நிறைவேற்று அதிகாரம் யாவும் தங்கியிருந்தது. சட்டசபை அதிகாரத்தை அலுவல் பற்றற்ற உறுப்பினர் கொண்டிருந்தாலும் அவர்கள் தாமே பதம் வகிக்கும் வாய்ப்பு இல்லாதவராயிருந்தனர். இவ்வாருக, வாக்குக்கள் எடுக்கப் படும்பொழுது சட்டசபையில் வாக்குக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்புள் ளவர்கள் தங்களுடைய தீர்மானங்களுக்குரிய பொறுப்புக்களை எற்றுக் கொள்ளும் வாய்ப்பளிக்கப்பட்டவரல்லர். ஆனல், பொறுப்பு எற்றுக் கொள்ள வேண்டியவராயிருந்தவர்களோ வாக்குக்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாயிருக்கவில்லை.
25

Page 19
26
பாராளுமன்ற முறை அரசாங்கத்திலே, பொதுவழக்கு யாதெனில், நிறைவேற்று கடமையை ஆற்றக்கூடிய கூறு சட்டசபையிலே ஒரு பெரும்பான்மையை வகிக்கக்கூடியதாயிருத்தல் வேண்டும் என்பது. அவ்வாறு வகிக்க முடியாவிடின் அது தன்னுடைய எதிரிகளுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுவிடல் வேண்டும். எனவே, உலகெங்கும் எற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்றச் செயன்முறை நியமங்களைக்கொண்டு நாம் ஆராய்ந்து பார்க்கின்றபொழுது, இலங்கையில் காணப்பட்ட யாப் பானது ஒரு பொருந்தாவியல்பினதென்க. ஆயினும், உலகத்திலுள்ள பிரதிநிதித்துவ நிறுவனங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்ட ஒரு முடி வான உருவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கண்டத்திலும் அவற்றின் நிலைமைகள் மாறு படுகின்றன என்பதையும், ஒவ்வொரு நாடும் பாராளுமன்ற முறையில் தத்தம் இயல்புகளுக்கு எற்றமுறையில் சிறப்பானவையும் தனிப்பட் டவையுமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்பதையும், இக்கால யாப்பு வளர்ச்சியின் வரலாறனது பொதுவில் எற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற செயன்முறையைப் பொருளாதார சமூக வளர்ச்சிக்குரிய உண்மைத் தேவைகளுக்கு எற்றவாறு செம்மைப்படுத்தும் இடையரு முயற்சிகளின் தொடர்பே என்பதையும், நாம் மனத்தில் கொள்ளல் வேண்டும். ஒரு யாப்பு முறையைப்பற்றி நாம் விமரிசம் செய்கின்றபொழுது அஃது எத்தகைய சிறப்பியல்பு கொண்ட சூழ்நிலையில் உள்ளதென் பதைச் சிந்தியாது, ச விவாதத்திற்குரிய அரசியல் கோள்களைக் கொண்டு மட்டும் விமரிசம் செய்தலாகாது. இலங்கையின் அரசியல் நிலையை நாம் தொடர்ந்து நோக்குவோமானல், மக்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுள் கட்சிமுறை இருக்கவில்லையென்பதை நாம் காணலாம். இது பொறுப்புவாய்ந்த பாராளுமன்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஓர் இடையூருக இருந்தாலும், சட்டசபையில் சிறுபான்மையாயமைந்த அரசாங்கக் கட்சிக்குள்ள தயக்கத்தைக் குறைக்கக்கூடிய ஒரு பண்பாக விளங்கியதென்பதைக் காணலாம். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் சட்டசபையில் அதிகாரம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு எவ்வாறு அமைந்துள்ளதென்பதை ஆராய்வதில் பொறுத்த பலாபலன்கள் தங்கி யிருந்தன. உண்மையில் இது பொறுப்புவாய்ந்த ஒரு நிறைவேற்று குழுவி னின்றும் அதிகார மிகையினைப் பொறுப்பில்லா ஒரு சட்டசபைக்கு அது மாற்றிவிட்டது என்பது உண்மையே ஆயினும் இஃது இடரில்லா ஒரு பரிசோதனையாயிருக்க முடியாது. மறுபுறமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் எல்லையோ அவர்களை உண்மையில் அரசாங்கத்தில் ஒத்த பங்குடையவராக்கியது. அவர்களுடைய உண்மையான ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கம் ஆதரவற்றதாயிருக்கும் என்பது உண்மை. ஆயினும், அலுவல் பற்றுள்ள உறுப்பினர்களைப் போலவே நாட்டின் நல்லரசாங்கத்தை வளர்ப்பதில் அவர்களும் மிக வும் கவற்சியுடையவர்களாயிருந்தனர் என்பதும், ஒத்துழைப்பதற்குத்

27.
தயங்கமாட்டார்கள் என்பதும் வெளிப்படை. ஆகவே, இம்முறையானது அலுவல் பற்றற்ற உறுப்பினர்களைப் பொது அலுவல்களின் சிக்கலான பிரச்சினைகளிலும் ஆட்சிக்கலையிலும் தேற வைப்பதற்கு ஒரு சாதனமாக அமைந்தது. இன்னும், அடுத்துவரும் காலங்களில் நாட்டின் ஆட்சிக்குரிய முழுப் பொறுப்பையும் மேற்கொள்ளக்கூடிய ஒரு பயிற்சியையும் அஃத ளிப்பதாயுமிருந்தது. இதற்கிடையில் இவ்யாப்பினல் மிக நெருங்கியதும் உள்ளார்ந்ததுமான ஒரு தொடர்பு உண்டாக்கப்பட்டது. இஃது அலுவல் பற்றுள்ளவர், இல்லாதவர் யாவரையும் ஒருவரின்றி ஒருவர் தனித்தியங்கக் கூடாத அதிகாரத்தை நீக்கிய தன்மையில் அமைந்து எல்லோரிடை யும் நல்லெண்ணத்தையும் துணைக்கோளையும் விளைப்பதற்கேற்றதாயும் அமைந்தது.
எனவே, எவ்விதமான தறுவாய்களிலும் இவ்யாப்பானது நன்முறை யில் இயங்கியிருக்க முடியாது என்று சொல்வது மிகைக் கூற்றகும். எதிர்பார்த்தவை யாவும் நிறைவேறியிருந்தால் அதன் விளைவுகள் உண் மையில் ஆச்சரியமானவையாயிருந்திருக்கும். எனினும், பிறிதொரு காரணியுமிருந்தது; இதற்குப் போதிய கவனம் அளிக்கப்படவில்லை ; இஃது இப்பொழுதிருந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பாரதூரமான விளை வொன்றை அளிக்கக்கூடியதாகவும் இருந்தது. கூட்டுடைமை முறை யிலேயே இலகுவில் செயலாற்றப்படக்கூடியதாயிருந்த இவ்யாப்பானது தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை ஒர் இருதலைக்கோளில் அகப்படுத் திவிட்டது. கூட்டுடைமைத் தத்துவத்தை அவர்கள் எற்றுக்கொள் வரானல் தங்களுடைய அலுவல்களைத் தாமே நடத்தும் உரிமையை அவர்கள் கைவிடுபவராவர் அல்லரோ ? கூட்டுடைமையை ஏற்பதற்கு அவர்கள் மறுத்திருப்பரானல் அவர்களை மிகவும் கவர்ந்த ஆட்சிக்கலை, அனுபவம், கல்வி ஆகியவற்றை இழந்தவராவர் அல்லரோ ? அதனல் மேன்மைதங்கிய மன்னர் அரசாங்கம், அவர் பொறுப்புணர்ச்சியிலும் மென்னேக்கிலும் காட்டிய நம்பிக்கையையும் இழந்தவராவர் அல்லரோ ? பல்லாண்டுகளாக இவர்கள் தங்கள் அகத்தில் தம்மைத் தலைவராக் கும் சீர்திருத்தங்களை வேண்டிநின்றனர். இவ்வாருன ஒரு பலமான நெருக்குதலை நீடித்து நடத்துவதற்கு அவர்கள் இயற்கையாகவே பொது மக்களின் துணையை வேண்டிநின்றனர். மறுத்துரைத்த பின்னும் பொறுப்பில் ஒருசிறு பகுதியை அவர்கள் ஏற்றுக்கொள்வரானல் பொதுமக் களிடை அவர்கள் நிலையை அது தாழ்வுபடுத்தி விடுமன்றே ? இன்னும், அரசாங்கத்தின் குறைபாடுகளிலேயே தங்கிநின்று தம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குரிய உரிமையையும் அது அவர்களிடமிருந்து நீக்கிவிடுமன்றே ?
மேற்கூறிய வ்ழிகளில் அன்றியும் வேறு ஒருவகையிலும், இந்த யாப்பானது அலுவல் பற்றுள்ள உறுப்பினர்க்கும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்க்கும் உள்ள வேறுபாட்டினை எடுத்து அழுத்தமாகக் கூறியது.

Page 20
28
ஆள்பதி நிறைவேற்று சபைக்கு இன்னும் அலுவல் பற்றற்ற மூன்று உறுப்பினரை நியமிக்கக் கூடிய அதிகாரம் கொண்டிருந்தார். அவர்களைச் சட்டசபையிலிருந்துதான் கட்டாயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. ஆனல், அவர்கள் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில் அவர்கள் தம் உறுப்புடைமையினின்றும் விலகிச் சட்டசபையில் நியமிக்கப்பட்ட அலுவல் பற்றற்ற உறுப்பினரென அமர்தல் வேண்டும். இவ்வாறக, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்க்கும் நிறைவேற்று சபைக்கும் இடையிருந்த தொடர்புகள் யாவும் காரணமின்றித் துண்டிக்கப்பட்டன. ஆள்பதியால் நிறைவேற்று சபைக்கு நியமிக்கப் பட்ட உறுப்பினர் உடனே மற்றவர்களினின்றும் புறம்பானவர்கள்போல் தோன்றினர். கரவு கொள்ளப்படவேண்டிய மக்களாயும் மற்றையவர்க்கு அவர்கள் விளங்கினர். மேலும், உயர்ந்த பெருமையைப் பெறவேண்டிய அவர்கள் ஆள்பதியின் படைப்புக்கள் என மற்றவரின் நம்பிக்கையை இழந்தவர்களுமாகி விடுகின்றனர். இன்னும், தங்கள் வாக்காளர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து அவர்களுடைய சேமத்தைக் கண்காணியாது விட்டவர்களுமாகி விடுகின்றனர். அலுவல்முறை ஆலோசனையாளரோடு சேர்ந்த ஆள்பதிக்கும் சட்டசபைக்குமிடையே ஒரு தொடர்பை அமைக்கும் அவர்களுடைய பணியானது இதனல் மிகவும் இயலாததொன்றகியது.
இவ்வாறன சூழ்நிலைகளில் சட்டசபையிலுள்ள அலுவல் பற்றுடையவர்க் கும் அல்லாதவர்க்கும் பிணக்கு ஏற்படுவது இன்றியமையாததே செயன்முறை அரசியலில் கூட்டுட்ைமை நிலைமையை ஏற்றுக்கொள்வது மறைந்துபோயது. இதனுல் அலுவல் பற்றற்றவர் மெள்ளமெள்ளமாகத் தம்மை நிலையான ஒர் எதிர்க்கட்சியெனக் கருதத் தொடங்கினர். இஃதிவ்வாறு வளர்ந்துவரும் நிலை தெளிவானவுடன், இந்த யாப்பு முறையானது அரசாங்கத்தை மிகவும் இடரான நிலையில் விட்டுவிடும் என்பது புலப்பட்டது. கட்சிமுறை இல்லாத நிலையானது, அலுவல் பற்றுடையோர் சிறுபான்மையாயுள்ள சபையில், அதை நடத்துவதில் அரசாங்கத்திற்கு உதவியாயிருக்கும் என ஒரு நம்பிக்கையிருந்தது. ஆனல், செயன்முறையில் இஃது இதற்கு முரணுன ஒரு செயலை விளைவித்தது. ஏனெனில், அலுவல் பற்றற்ற உறுப்பினர்கள் இரண்டு, அல்லது அதற்கு மேலான கட்சிகளாகப்பிரிந்து ஒவ்வொரு கட்சியும் வரையறுத்த நல்ல குறிக்கோள்களைக் கொண்டிருந்தால் இயற்கையாகவே அவர்கள் தம்முள் ஒருவருக்கு ஒருவர் மாருக வாக்களித்திருப்பர். அதனல் பெரும் பாலான பிரச்சினைகளில் அரசாங்கம் ஆதரவைப் பெற்றிருத்தல் கூடும். இஃ தெவ்வாருயினும் ஆகுக ; அத்தகைய ஒரு நிலை இருந்திருந்தால், அர சாங்கம் தன்னிலையை நன்கு ஆலோசித்து, சட்டசபையில் உள்ள பல்வேறு பகுதியினருக்கும் தான் எடுத்துக்கொண்ட பூட்கையானது ஏற்றுக்கொள்ளக் கூடிய்தாய் அமையுமோ, இல்லையோ என எண்ணித் தன் நிலையைச் செம்

29
மைப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கும். ஆனல், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரோ தனிக்கோளுடையவராய் விளங்கினமையாலும், கட்சிச் சார்பு ஆர்வினல் கட்டுப்பாடில்லாதவராயிருந்ததாலும், வேண்டிய கணத்துக்கு எற்றவாறு தம் எண்ணப்படி வாக்களிக்கக் கூடிய சுதந்திரம் உள்ளவராயி ருந்தனர். எனவே, அவர்களுடைய உள்ளப்பாங்கினை ஏலவே கணித்தல் இய லாததாயிற்று. அவர்களுக்குள் ஒருமைப்பாடு இல்லாவிடினும், தாங்கள் தங்களைச் செவ்வனே ஆண்டுகொள்வர் என்னும் எண்ணம் பொதுவாக அமைந்திருந்தது. இவ்வாறக, நிலையின்மை, உறுதியின்மை ஆகியவை சேர்ந்த ஒரு சூழலிலே, அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளையெல்லாம் அரசியல் முறையில் பெரியவாக்கி, அதனுடைய இடர்ப்பாடுகளை இன்னும் இடர்ப்பாடுடையவாக்கும் மாரு இயல்பொன்றே நிலையாயிருந்தது.
என்றேனும் அலுவற் கடமை பூண்டுகொள்ள வேண்டிய ஒர் ஆகூழ் இல்லாமையால், தங்களுடைய தாக்குரைகளைச் செயற்படுத்தித், தாங் கள் எடுத்துரைத்த நடவடிக்கைகளைச் செயன்முறையில் அமைக்க வேண்டிய ஓர் இடர்ப்பாடு அவர்களுக்கு இல்லாதிருந்தது. எனவே, பாராளுமன்ற முறை அரசாங்கம் நிலவுகின்ற நாடுகளிலே, எதிர்க்கட் சிகளுக்கு என்றும் முறைமையிலமைந்த தடக்கு ஒன்று அவர்களைக் கட்டுப்படுத்தாமலிருந்தது. தங்கள் வாக்குத் தொகுதிகளுக்கு அவர்கள் கொண்டிருந்த கடப்பாடு ஒன்றினைத்தவிர, மற்றையலுவல்களிலெல்லாம் அவர்கள் கட்டில்லா முகவர்கள் போலவே விளங்கினர். அவர்கள் வாக்குத் தொகுதிகளிலுமோ பெரும்பான்மையான மக்கள் வாக்குரிமை இல்லா திருந்தனர். அவர்களோ தங்களுடைய சிறு செயல்களினலே நாட்டின் நல்வாழ்வை மாற்றக்கூடியவர்களா யிருந்தனரெனினும், தங்களுடைய செயல்களுக்கு வகை கூறுமாறு கேட்கப்படின் மிகவும் வாய்ப்புடைய ஒரு சாட்டை என்றும் ஆயத்தமாக வைத்திருந்தனர். எனவே, அரசாங்க உறுப்பினர்கள்மீது தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் இடை விடாது பொறுப்பில்லா முறையில் தாக்குதல்களை நடத்துவதே அவர்கள் பூட்கையின் தனிப்பட்ட ஓர் இயல்பாக விளங்கியதில் ஒரு வியப்புமில்லை.
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலே அரசாங்கம் பல்வேறுபட்ட வழி முறைகளைக் கையாளவேண்டியிருந்தது. அரசாங்கமானது தான் முடிவு செய்த முன்மொழிகளை உறுதியுடன் கடைப்பிடித்து, அவற்றை விலக்கி விடும் பொறுப்பைச் சட்டசபை மேல் சுமத்தி, பகைமையான பெரும் பான்மைக்கு முன்னே தன்னுடைய கொள்கையைத் தளரவிடாது நின்று, ஒரளவுக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் ; அல்லது பெறக்கூடிய மிகச்சிறந்த ஒர் இணக்கத்தைப் பெறுவதற்காக, எதிர்ப்புண் டான வழி தன் கொள்கையைச் சிறிது தளர்த்தி விடலாம். அரசாங்கம் பிற்கூறிய வழியைக் கடைப்பிடித்தது. முற்கூறிய வகையால் யாப்புமுறை வளர்ச்சிக்கு மிகவும் இடர்தரும் தொடர்ச்சியான பல நெருக்கடிகள்

Page 21
30
தோன்றும் என அஃது உணர்ந்திருக்கலாம். எனவே, இயற்கையாகவே யாப்பின் ஆரம்ப நிலையிலேயே நெருக்கடிகள் தோன்றுவதை அது விரும்பவில்லை. எனவே, இணக்கமான பூட்கையை மேற்கொள்வதற்காக, அரசியல் பற்றற்ற உறுப்பினர்க்கு, தங்கள் எண்ணங்களின் நேர்மையையும் தங்கள் நோக்கங்களின் பகுத்தறிவுடைமையையும் உறுதிப்படுத்தி, நாருப் பகைமையான நிலையிலிருந்து அவர்களைத் தன்னிடம் ஈர்த்து, மற்பேறும் உண்மைக் கூட்டுழைப்பும் இயலக்கூடியதான தோழமை நிறைந்த ஒரு சுமுகத்தை உண்டாக்குவதற்கு அது விரும்பியது. பிற்கூறிய இலக்கு ஓரளவில் எய்தப்பெற்றது. ஆயினும், அலுவல் பற்றற்ற உறுப்பினர் முன்னர் இருந்ததிலும் இப்பொழுது அரசினரில் அதிகம் நம்பிக்கையற்றவராயில்லாவிடினும், பகைமையான தாக் குரைகாரர்களாக விளங்கும் நிலையிலிருந்து சிறிதும் விலகியவர்களாகத் தோன்றவில்லை. அதற்கு மாறக, இப்பொழுது அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை நன்கு உணர்ந்தவர்களாகித் தங்களுடைய முயற்சிகளை இன்னும் பலப்படுத்திக்கொண்டனர். ஆட்சிக் கருவியைத் தங்கள் கையிலே வைத்து ஆட்டுவதற்கு, தங்களுடைய தாக்குதல்களை அவர்கள் நீடித்து வைத்திருக்க வேண்டியதே.
இத்தகைய வளர்ச்சிகள் தவிர்க்க முடியாதனவாயிருப்பினும் அரசாங் கத்தினதோ, அல்லது அலுவல் பற்றற்ற உறுப்பினர்களினதோ நன் மைக்கு ஏற்றனவாய் அமையவில்லை. அலுவல் பற்றற்ற உறுப்பினரோ சட்டமாக்கும் முயற்சிக்கப்பாலும் ஈடுபட ஊக்குக் கொண்டவராகி, அர சாங்கத்தை நிறைவேற்றலுவல்களிலும் ஆட்சியலுவல்களிலும் இடர் விளைவிக்கக் கூடியவராய் நடந்து கொண்டனர். அரசாங்கத்தின் பூட் கையோ அதிகாரத்தை உண்மையில் விட்டுக்கொடுத்த அளவுக்குச் சென்ற தெனலாம். சட்டசபையிலிருந்த அரசாங்கப் பிரதிநிதிகளும் தங்கள் மதிப்பை இழக்கவேண்டியவர்களாகினர். அரசாங்கத்தை ஆதரித்தவர்களும் தங்களுடைய துணைக்கு அதை எதிர்பார்த்து நின்றவர்களும் ஒத்த நிலையில் இடருற்றிருந்தனர். இதனல் பொதுச் சேவையினர் ஆர்வம் மிகக் குன்றியது. இதைப் பற்றிய விடயங்களை இவ்வறிக்கையின் பிற்பகுதியில் செவ்விதாக ஆராய்வாம். ஆனல், இந்த யாப்பு வளர்ந்த முறையிலே, அஃது அலுவல் பற்றற்றவர்களையும் பற்றுள்ளவர்களையும், ஒரேமுறையில், நாட்டின் ஆர்வத்திற்கேற்ற நல்ல விளைவுகளைப் பெறுவதற்கு உழையாமல் தடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை யென்பதை, இங்கு குறிப்பிட்டால் போதுமானதாகும்.
நிதிக்குழு
இவ்வாருக இவ் யாப்புக்கு அளிக்கப்பட்ட பிறழ்ச்சியை சட்டசபை யின் நிதிக்குழுவின் நடவடிக்கைகளிலிருந்து செவ்விதில் அறிந்துகொள்
ளலாம். இக்குழுவானது வழக்கமான குடியேற்றநாட்டு மாதிரியிலேயே

31
அமைந்திருந்தது. இங்கு குடியேற்றநாட்டுச் செயலாளர் தலைமையில் சபையின் அலுவல் பற்றற்ற எல்லா உறுப்பினரும் இருந்தனர். அங்கிருந்த மற்றை அலுவல் பற்றுள்ள உறுப்பினர் வாரிக் கட்டுப்பாட்டா ளரும் குடியேற்றநாட்டுப் பொருளாளருமாவர். அதனுடைய ஆலோசனைகள் யாவும் மறைவில் நடைபெற்றன. அந்நடவடிக்கைகள் பொதுமக்களுடைய பார்வைக்கு வரா. இவ்வாறக, இதனுடைய அமைப்பும் நடவடிக்கையும், 12 இலிருந்து 3 இற்குக் குறைந்த அலுவல் பற்றுடையோருடன் சட்டசபை மறைமுகத்தில் கூடியிருந்ததை ஒத்திருந்தது என்க. இத்தகைய குழுவானது குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை உள்ள குடியேற்ற நாடுகளுக்கு, அவை அரசியல் வளர்ச்சியில் நன்கு வளர்ந் தனவாக, வளராதனவாக எற்றதாக அமைந்திருத்தல் கூடும் ; ஆயி ணும், அஃது இலங்கையிலுள்ள நிலைமைக்கு ஏற்றதன்று. அதை இப் பொழுதுள்ள யாப்பில் போற்றி வைத்திருந்தது மிகவும் பிழையான தாகியது. இஃது அரசாங்கத்தின் இக்கட்டான நிலைக்குப் பெரிதும் காரண மாயிருந்தது.
இக்குழுவினுடைய முக்கிய அலுவல் ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, அவ்வப்போது தேவைப்படும் குறைநிரப்பு மதிப்பீடு ஆகிய வற்றை ஆய்தல், நிதி உத்தேசங்களோடு சம்பந்தப்பட்ட வேறு நடவடிக்கை கள் அல்லது திட்டங்கள் ஆகியவற்றை ஆய்தல் என்பனவாம். ஆண்டு மதிப்பீடுகளை முடிவாக்குவதற்கு ஆளப்படும் சாதாரண முறை வருமாறு : ஒவ்வொரு திணைக்கள மதிப்பீட்டினையும் எடுத்து, அதனுடன் சம்பந்தப் பட்ட திணைக்களத் தலைவரை அழைத்து, இக்குழு அந்த மதிப்பீடுகளோடு சம்பந்தப்பட்ட கேள்விகளை வினவி ஆராயும் ; அதற்குரிய விளக்கத்தையும் அறிவுரைகளையும் பெறும். சட்டசபையிலுள்ள அலுவல் பற்றற்ற பகுதி யினரைப் பெருப்பிக்குமுன் இக்குழுவானது ஒழுங்காகவும் நன்ருகவும் செயலாற்றியது. அது திணைக்களத் தலைவர்களுடன் கொண்டிருந்த தொடர்பு நன்முகமுடையதாயும் ஒருவர்க்கொருவர் உதவி அளிப்பதாயு மிருந்தது. அலுவல்களும் பண்பாடுடன் நட்புமுறையில் நடைபெற்று வந்தன. ஆயினும், இப்பொழுது இருக்கின்ற யாப்பு நிலையிலோ இவ் வுறவுகள் நீடிக்கவில்லை. திணைக்களத் தலைவர்கள் பகைபூண்ட சான்று களாகக் கருதப்பட்டனர் ; குறுக்கு விசாரணைக்குரிய விவாதக் காலம் முழுவதையும் அவருக்கெதிராகப் பயன்படுத்தல் ஒரு பழக்கமாகிவிட்டது. அரசாங்கம் கொண்டிருந்த கண்ணுேட்டமுடைய பூட்கையோ, தலைவரிட மிருந்து நற்பாதுகாப்பை இவ்வலுவலர் பெறுவதற்கு எதிராக அமைந் திருந்தது. இன்னும், இக்குழுவினர்க்கு அளித்த செல்வாக்குமோ அவர் களை இன்னும் இடர்ப்பாடான நிலையில் கொண்டுவந்து விட்டது. கேள்வி களுமோ வேண்டிய அலுவலோடு சம்பந்தப்படுபவையாய் எப்பொழுதும் இருப்பதில்லை. இக்குழுவின் கேள்விகளுமோ வேண்டியவாறு ஆட்சியோடு சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளையும் தழுவியனவாயிருந்தன. ஒரு

Page 22
32
விதமான நல்லறிவுமில்லா இடையருக் கண்டனங்களில் அகப்பட்ட அவ்வலு வலரோ, சில வேளைகளில் சொந்த முறையிலும் பழியுரைகளைப் பெற்றனர் ; பெரும்பாலும் மிகவும் பண்பாடற்ற முறையில் நடத்தப்பட்டனர். அவர் களுக்கு வேண்டிய காப்பு அவர்களுக்கு இல்லாதிருந்தது. எனவே, அவ்வலுவலர், தங்களை இவர்கள் நடாத்திய முறை மிகவும் தாழ்மையும் துன்பமும் தரக்கூடியதாயிருந்ததைக் கண்ணுற்றனர். மிகவும் சினமூட்டக் கூடியதான இச் சூழ்நிலையில், வியக்கத்தக்க பொறுமை கொண்டு அவர் கள் விளங்கியதை எல்லோரும் ஒத்துக்கொள்வர். ஆயினும், இவ்வழியி லமைந்த இந் நற்பேறற்ற விளைவுகள் அவர்களுக்கு மட்டும் உரியனவாய் இருக்கவில்லை. அவ்வலுவலர்கள் இருந்த சேவையில் உள்ளவர்களும் காட்டிய மனப்பான்மையுமோ இதற்கேற்றதாய், மிகவும் தீவிரமான தாயும் பொல்லாததாயும் இருந்தது. இதை இவ்வறிக்கையில் பின்னர் நாம் எடுத்துக் கூறுவோம்.
இவ்யாப்பின் தனிப்பட்ட ஒரு பண்பினல், இந்நிதிக் குழுவினுடைய நடவடிக்கை வழிமுறைகள் அதனுடைய ஆக்கிரமிப்புக்கு வழிகோலும் ஒரு பண்பைக் கொண்டிருந்தன. அதனுடைய முக்கியமான மூன்று பண்பு களாவன, அதன் மறைவான நடவடிக்கைகள், செலவுகளில் முழு அதி காரம், அதனுடைய முடிபை நிறைவேற்றுவதற்கு ஒருவிதமான பொறுப்பு மில்லாத தன்மை ஆகியவையாம். அதைக் கட்டுப்படுத்தக்கூடிய தடை ஆள்பதியிலும் அவருடைய நிறைவேற்று சபையிலும் தங்கியிருந்தது ; அவர் சட்டசபைக்குக் கீழ்ப்படிவானவராய் அமைந்திருக்கவில்லை.
ஒர் அலுவலை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விருப்பமில்லாத ஒர் அரசாங்கம் ஓரளவு நியாயமான வழிதுறையொன்றைக் கண்டுபிடித் திருக்கலாம். இணக்கத்திற்குரிய குறித்த ஒரு பூட்கையைக் கைக்கொள்ள எண்ணிய அரசாங்கத்திற்கு அக்குழுவினைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் இல்லாமலிருந்தது. நிறைவேற்று சபையானது ஒரு தீர்மானத்தை முடிவு செய்ய, அதை நிறைவேற்றி வைக்கின்ற பொறுப்பை நிதிக்குழு மறுக்கும் ஒரு நிலைமை உண்டாவதை அரசாங்கம் எவ்வழியிலேனும் விரும்பவில்லை. இணக்கமுறைகளால் யாப்பின் வழி வேலைசெய்து அதனல் பெறப்படும் பலன்களைக் கண்டறிய முனைந்தவர்களுக்கு, இவ்வாருகத் தொடர்ந்துவரும் முரண்பாடுகளும், ஈற்றில் அவை உண்டாக்கக்கூடிய ஒரு நெருக்கடியும் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாய் இருக்கவில்லை. நிறைவேற்று சபையி னுடைய முடிவுகளுக்கு மாறக நிதிக்குழுவின் முடிவுகள் அமையாமல் இருப்பதற்கு ஒரு வழியே இருந்தது. அதாவது, நிறைவேற்றுசபையில் யாதாயினும் ஒரு தீர்ப்பை முடிவு செய்வதற்குமுன் அரசாங்கம் நிதிக் குழுவுடன் ஆராய்ந்து, எடுத்துக்கொண்ட காரியம் குழுவினுடைய இசை வினைப் பெறுமா என்பதைத் தெரிந்துகொள்வதே. இவ்வழியைக் கடைப்பிடித்தல் தேவையென அரசாங்கம் தீர்மானித்தது. இவ்வாருக, தன்னுடைய அலுவல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஆட்சி விவரங்களில்

33
தலையிடுவதற்கு நிதிக்குழுவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டதுமல்லாமல், உண்மை மில் அவ்வாறு செய்வதற்கு அதற்கு ஊக்கமும் அரசாங்கத்தால் அளிக்கப் பட்டதெனலாம். இதனல் நேர்ந்த தவிர்க்கமுடியா விளைவு யாதெனில், நிறைவேற்று சபையிலிருந்து முக்கிய அலுவல்கள் யாவும் நிதிக்குழு விற்குக் கொண்டுவரப்பட்டதேயாகும். இவ்வாருக, நிதிக்குழுவானது அதி காரத்திலும் பெருமையிலும் எவ்வளவுக்குக் குறைந்ததோ, அவ்வள வுக்குக் குழு பலம்பெற்றதெனலாம்.
ஆள்பதியின் நிலை
இவ்வாருன வளர்ச்சிகள் ஆள்பதியை ஓர் இக்கட்டான நிலைமைக்கு இட்டுச்சென்றன. அரசுச் செயலாளருக்கும் அதனல் பாராளுமன்றத்திற்கும் நாட்டின் செவ்விய ஆட்சிக்குப் பொறுப்பாளராயிருந்துவந்தவர் ஆள்பதி ; ஆனல், அவரே மிக முக்கியமான சட்டநிறுவு அலுவல்களைத் தவிர்ந்த மற்றை அலுவல்களில், தம் பூட்கையை நிறுவும் அதிகாரமற்றவரா யிருந்தார். இப்பாதுகாப்பு தனித்து நிற்கின்றபொழுது மிகச் சிறியதொன் ருகும். சில அலுவல்களையே, அவற்றைப் பொறுத்த அளவில், நியாய மான முறையில் மிக முக்கியமானவை எனக் கூறலாம். ஆயினும், இவ் வகையிலமையாத, பல்வேறு பிரச்சினைகளைப்பற்றிய, நன்முறையிலில்லாத தீர்ப்புக்களின் முடிவுகள் எல்லாம் சேர்ந்து, மிக முக்கியமான ஒரு பிரச்சினையில் எடுத்துக்கொள்ளப்படும் பிழையான முடிவுக்கு ஒத்ததான, பெரும் தீங்கைச் சமூகத்திற்கு விளைவிக்கக் கூடியதாயிருக்கும். உறுதிப் படுத்தும் ஆள்பதியின் அதிகாரம் இலங்கையில் ஒருபொழுதும் பயன் படுத்தப்படவில்லை. நாங்கள் அறிந்தவரையில், ஒருமுறையே அது பயன் படுத்தப்படுமென அச்சுறுத்தப்பட்டது. ஆயினும், யாப்புமுறையில் அவர் தலையீடு அனுமதிக்கப்பட்டதொன்ருயின், அவர் தலையீட்டினல் நாட்டுக்கு மிக நன்மை தரக்கூடிய செவ்விகள் பல தோன்றியிருந்தன வென்பதில் நமக்கு ஐயமில்லை. புதிய எந்த யாப்பிலும் அவருடைய கண்காணிக்கும் அதிகாரங்கள் பலமாக்கப்பட்டும் தெளிவாக வரையறுக்கப்பட்டும் இருத்தல் வேண்டும்.
இவ்வாறன ஓர் இடர்ப்பாடுள்ள நிலையில் ஆள்பதி இருந்தபடியால், நிறைவேற்று சபையை உயிரில்லாததாக்கும் பொறுப்பற்ற ஒரு குழுவிற்குத் தம் அதிகாரத்தை மாற்றுவதற்கு அவர் இணங்க வேண்டுமெனக் கட்டாயப் படுத்தப்பட்டார் ; இந் நிறைவேற்று சபையோ கொள்கையளவில் அவர் தலைமையிலமைந்த ஒர் உயர் நிறைவேற்று அதிகாரமாக விளங்கியது. இன்னும், சட்டசபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளாது அவரைத் தடுத்த தனலும், அவர் தம்முடைய பதவியை ஆற்றும் கடமைகளிலும் கட்டுப் படுத்தப்பட்டார். முறைமையில், சட்டசபைக்குத் தலைமை வகிப்பவராக இருந்தும் வேண்டிய நேரத்தில் சபைக்குத் தலைமை வகித்து, அதில்

Page 23
34
வேண்டியது உரைக்கக்கூடிய சுதந்திரமிருந்தும், மரபு முறையிலும் சிறப் பான சந்தர்ப்பங்களிலுமே, அவர் அவ்வாறு செய்தல் வேண்டுமெனவும், பொதுவாகத் துணைத்தலைவரே தலைமை வகிக்க வேண்டுமெனவும் விதி வகுக்கப்பட்டிருந்தது. இவ்வாறகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு நெருங்கிய தொடர்பு கொள்வதற்குரிய வாய்ப்பு அவருக்கு இல்லாம லிருந்தது; இப்பிரதிநிதிகளின் நல்லெண்ணத்திலேயே அரசாங்கம் தங்கி யிருந்ததென்பதை நாம் இங்கு கூறல் வேண்டும். இவ்வாறு வாய்ப் பில்லாத தன்மையால், சபையினுடைய நடவடிக்கைகள்பற்றிய தகவல் களையும் அறிவுரைகளையும் அவர் பிறர் மூலமே பெறவேண்டியிருந்தது.
அவருடைய நிலையைப் பின்வரும் முறையில் விளக்கலாம். ஒரு பிரதம மந்திரி சபையிலுள்ள சிறுபான்மையுடன் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த வேண்டியிருக்கின்றது ; அவருக்குச் சபையுள் நுழைவதற்கு வாய்ப் பளிக்கப்படவில்லை. ஆனல், அவர் கட்டளைகளைப் பெறக்கூடிய ஓர் உதவி யாளர் உண்டு. அவர் மூலமாகவே பிரதம மந்திரி வேலை செய்யவேண்டி யிருக்கிறது. அத்தகைய ஒரு பிரதம மந்திரியின் நிலைமையையே ஆள் பதியின் நிலைமையும் ஒத்திருந்தது. ஆள்பதியின் உதவியாளர் குடியேற்ற நாட்டுச் செயலாளராகும். இவர் சபையின் தலைவராயும் நிதிக்குழுவின் தலைவராயும் விளங்கினர். விமரிச மனப்பான்மையுள்ள ஒரு சபை நடுவே, அரசாங்கத்தைக் கொண்டு நடத்தும் பொறுப்பும் தம்முடைய ஆற்றலை நன்கறிந்த ஒர் எதிர்க்கட்சியைச் சமாதானப்படுத்தும் முறைகளைக் கண்டு பிடிக்கும் பொறுப்பும் இவருக்கு உரியவாயின. எப்பொழுதும் எதிரான பெரும்பான்மை முன்னிற்கும் என்ற தன்மையில், உடனுக்குடன் முடி வுகள் செய்யவேண்டியது இன்றியமையாதிருந்தது. விவாதம் நடக்கின்ற பொழுது எல்லா விவரங்களையும்பற்றி ஆள்பதியிடமிருந்து குறிப்புரைகளைப் பெறுவதற்கு இவருக்கு நேரமில்லாதிருந்தது. அடிப்படைக் கொள்கைகள் பற்றிய பிரச்சினைகளிலும், சிலவேளைகளில், இவர்தம் சொந்தப் பொறுப் பிலே அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டியுமிருந்தது. இதனல், இவ ருக்குப் பரந்த ஒரு துணிவுப் பொறுப்பை ஆள்பதி அளிக்கவேண்டி யிருந்தது ; இதனல், பொதுவாக இவருக்குக் கிடைக்கக்கூடிய அதிகாரத் திலும் மிகவும் விரிந்த ஒர் அதிகாரத்தை இவர் இப்பொழுது வகிக்கின்றர். தம்முடைய குடியேற்றநாட்டுச் செயலாளரில் எவ்வாறு அவர் நம்பிக்கை வைத்திருந்தாலும், இவ்வாறன நிலைமை ஆள்பதிக்கு என்றும் இடை யருக் கவலையைத் தருவதாக இருக்கும். சிலவேளைகளில் மக்கள் ஆளு மைகளின் பிணக்குக்களினல் இந்நம்பிக்கை இல்லாதிருந்தாலும், அல்லது இழக்கப்பட்டாலும், ஆள்பதிக்கு நாட்டை ஆள்வது பொல்லாத ஒரு கன வேதனையாயிருக்கும். ஆயினும், இப்பொழுதுள்ள நிலைமையை நாம் பார்க்கின்றபொழுது, எந்நாட்டினுடைய அரசாங்கத்திற்குத் தாம் பொறுப் பாளர்களாக இருந்தார்களோ, அந்நாட்டில் அண்மையில் மிக உயர்ந்த பதவிகள் வகித்த இவ்வலுவலர்களின் பொன்னன ஒத்துழைப்பும், அந்

35
நாட்டு ம்க்களின் அரசியல் வளர்ச்சிக்கு அவர்கொண்ட பெருவிருப்புமே, இடரும் அபாயமும் நிறைந்த இலங்கையின் யாப்பு வரலாற்றின் ஒ பகுதிக்காலத்தை நன்முறையில் நடத்தின.
சட்டசம்ை நடவடிக்கைகளில் ஆள்பதி பங்கெடுத்ததைத் தடுத்தமை, அரசியல் பிணக்குக்கள் நிறைந்த ஒரு சூழிலினின்றும் அவரை நீக்கி, மாட்சிமை தங்கிய அரசரின் பிரதிநிதிக்குகந்த, ஒரு யாப்பு நிலை முறையில் அவரை வைத்ததென்னும் ஒரு தன்மையில் இறுதியாக ஒரு நன்மையைத் தந்தது என்று சொல்லலாம். யாப்பு முறை ஏற்பாடுகள் யாவும், பொது வாக, இவ்வாறு உயர்ந்த ஒரு தனிநிலைக்கொத்ததாயிருப்பின் இந் நோக்கையே நாமும் கொண்டிருப்போம். ஆயினும், உண்மையாதெ ரில், இத்தீவின் அரசாங்கத்திற்கு ஆள்பதி தனிப்பொறுப்புடையவர். நிறைவேற்று ஆணை அவர் ஒருவரிலேயே தங்கியிருந்தது. இவ்வாருக, அவர்மேல் வைத்திருந்த இம்மாபெரும் பொறுப்பானது, பொறுப்பில்லா விடினும் அதிகாரம் பெற்ற சபையினின்றும் விலக்கியிருந்த தனிநிலை யோடு ஒவ்வாததாயிருந்தது. அவருடைய பொறுப்பானது வரையறுக்கப் பட்ட சிறப்பான சில அலுவல்களுக்கே உரியனவாயிருந்தாலும், அல்லது அவரிடமிருந்து நீக்கப்பட்டாலுமே, அவரை இவ்வாறு ஒதுக்கிவைத்த நிலை நியாயமானதெனலாம். இவ்வாறக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய இணக்கத்தின் விளைவானது, ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள நாடாள்வாருக்குரிய இடர்களையே கொடுத்தனவல்லாமல், நன்மைகளைக் கொடுத்தனவல்ல. எல்லாம் வல்ல நிறைவேற்று ஆணையாளராக இல்லா மலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்குப் பொறுப்புடைய பெய ரளவில் அமைந்த ஆட்சித் தலைவரல்லாமலும், தம்முடைய எண்ணத்தைச் செயற்றிறன் உடையதாக ஆக்கக்கூடிய சாதனமொன்றுமின்றி, முழுப் பொறுப்பும் எடுக்குமாறு அவர் நெருக்கப்பட்டார். அவ்வாறிருந்தும் அர சியல் பிணக்குரைகளுக்கு அப்பால் அவர் வைக்கப்பட்டாரல்லர் , அரசாங் கத்திற்கு அவர் பொறுப்புடையவராக இருக்கின்ற ஒரு தன்மையே, எழும்பும் எல்லாத் தருக்கப் பிரச்சினைகளுக்கும் அவரை ஆளாக்கி விடு கின்றது. இவ்வாருன ஒருமைப்பாடு இல்லாத தன்மையை நீக்குவதற்கு ாங்களுடைய முன்னிடுகளை இவ்வறிக்கையின் பிற்பகுதியில் எடுத்துரைப் போம். இங்கு, இப்பொழுது ஆள்பதி அனுபவிக்கின்ற இடர்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரூவதே எம் நோக்கமாகும்.
நிறைவேற்று சபை -
நிறைவேற்று சபையும் இக்குறைகள் கொண்ட நிலையிலிருந்தது. ஒ கால் செயலிலும் பொது மதிப்பிலும் மிக உயர்வான நிலையிலிருந்த இச்சபை, சட்டசபையின் நிதிக்குழுவினும் சிறப்புக் குன்றியதொன்றக இப் பொழுது விளங்கியதென்பதை முன்னர்க் கூறியுள்ளோம். இதனுடைய அதிகாரம், மதிப்பு ஆகியவை குன்றுவதற்கு மூன்று காரணங்கள் இருந்

Page 24
36
யும் அவ்வதிகாரத்தை வெளிக்காட்டிய வழிமுறைகளும். இரண்டாவது: சட்டசபையில் அலுவல் பற்றற்ற பெரும்பான்மை மிகுந்திருக்க, நிறை வேற்று சபையில் அலுவல் பற்றுள்ள உறுப்பினர் பெரும்பான்மை மிகுந் திருந்தது. மூன்றவது நிறைவேற்று சபையின் அலுவல் பற்றற்ற உறுப்பினர் சட்டசபையினின்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதில்லை ; அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில் உள்ள தம் இருக்கைப் பதங்களினின்று நீங்கி, அலுவல் பற்றற்ற நியமன உறுப்பினராக, அவர்கள் இருக்கைகள் கொள்ள வேண்டு மென்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இச்செயன்முறையானது அவர்களுடைய அதிகாரத்தைக் குன்றவைத்ததன்றியும், அவர்களுடைய பிரதிநிதித்துவப் பண்பின்மீதும் நம்பிக்கைக் குறைவையும் கொண்டு வந்தது. இப்பொழுது கூறிய இந்த வேறுபாட்டினலே கிளர்ந்தெழுந்த அவப்பேறன விளைவு களைப்பற்றி நாம் முன்னர்க் கூறியுள்ளோம். இவ்வகையில், இப்பூட்கையில் ஒரு மாற்றம் முன்னேடியாக அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும், சில வகைகளில் அது செயன்முறையில் கொண்டுவரப்பட்டுள்ளதென்பதையும் பற்றி நாங்கள் அறிந்து மகிழ்கிறேம். ஆயினும், இப்பொழுதுள்ள நிலை யில், குறிக்கத்தக்க நல்விளைவினைக் கொண்டுவரக்கூடாத அளவில், அது காலந்தாழ்த்திவரும் என்று நமக்கு ஒரு பயமும் உண்டு. மற்றை இடர் களோ, யாப்பின் அமைப்பு முறையிலே பூரணமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தாலோழிய, தீர்க்க முடியாதவையாம்.
தன. முதலாவது தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் | வளர்ச்சி
அலுவல் பற்றற்ற உறுப்பினர்களைப் பயிற்றல்
சட்டசபை நிதிக்குழுவினர், ஆட்சி அலுவல்களைப்பற்றி உரையாடுவதை ஊக்கியும் பொறுத்தும் அரசாங்கம் வந்ததற்குக் காரணம், அலுவல் பற்றற்ற உறுப்பினர்களைப் பொது அலுவல்களின் சிக்கல்களை அறியவும் செயன்முறைப் பிரச்சினைகளில் கவனம் கொள்ளவும் செய்வதற்காகவே யாம். எனவே, இவ்வழியினலே ஆராய்ச்சியில்லாத, அதனல் ஒன்றுக்கும் உதவாத கண்டனங்களின் இடத்தை நல்லறிவுடையனவும் குறித்தவொரு பொருளுக்குத் திட்டமாயமைந்தனவுமான கண்டனங்கள் இடம் கொள்ளு மென எதிர்பார்க்கப்பட்டது. இவ்வழியிலே பெரிய பேறு கிடைத்ததென அரசர்ங்கம் கருதுகின்றது. அலுவல் பற்றற்ற உறுப்பினர்கள், அரசாங்க அலுவலகங்களின் வழி முறைகளேப்பற்றியும் ஆட்சி முறைகளைப்பற்றியும் கொண்ட பொது அறிவு, பொது அலுவல்களைக் கொண்டு நடத்துவதற்கு உதவியாயமைந்துள்ளது என அரசாங்கம் கருதுகின்றது. இஃதொருவேளை உண்மையாயிருக்கலாம். ஆயினும், அலுவல் பற்றற்ற உறுப்பினர்கட் கெல்லாம் கொடுக்கப்பட்ட பயிற்சியானது, அவருக்கு நேர் முறையி லமைந்த தொழில் எல்லைக்குப் புறம்பான, ஆட்சிமுறை விவரங்களிலே

பயிற்சியளித்ததாகும், இது பாராளுமன்ற அரசாங்கத்திற்குரிய, பொது: நியமத்தோடு முரண்படுகின்றதும் தேவையற்றதுமான நெறியில் சென்று, பொது நியம ஆட்சிமுறைமையோடு பிணக்குக் கொண்டதாய் அமைந்தது. இலங்கை ஐம்பது இலட்சம் குடிமக்களைக்கொண்ட ஒருசிறு சமுதாயம். இதன் பயிர்ச்செய்ன்கப் பரப்போ சுருங்கியது. எனவே, சபை உறுப்பினரின் சட்ட நிறுவு பூட்கை விவாதம் சபையினரின் மனத்தில் அலுவல் நிறைவேற்று பூட்கையிலும் மிகக்குறைந்த தானத்தைக் கொண்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். இலங்கையிலுள்ள ஒவ்வொருவரும் மற்றவரை அறிந்திருந் தனர். ஒவ்வோர் அரசாங்க அலுவலரும் பொதுமக்களின் மதிப்பில் முக்கிய இடம் வகித்தார். அலுவலாற்றும்பொழுதும் ஆற்றதபொழுதும் அவர் அவ்வுயர் நிலையில் அமைந்திருந்தனர். எனவே, அலுவல் பற்றற்ற உறுப்பினரின் நண்பர், தொகுதியாளர் தமக்குச் செயன்முறையில் பலன் தரக்கூடிய ஆட்சி அலுவல்களில் பதறியமனம், பதவுயர்ச்சி ஆகியவற்றிற்கு அவர்களின் துணையை என்றும் நாடி நின்றனர். இவை நாங்கள் மிக விரைவில் அறிந்த விடயங்களாகும். இலங்கை மக்கள் விண்ணப்பங்களில் பெரிதும் உவப்புக் கொண்டிருந்தனர். பெரிய பிரித்தனில் இவ்விடயங்கள் அமைச்சர்களோடு கொள்ளும் கடிதப் போக்குவரத்துக்களோடு தீர்க்கப்படக் கூடியவையாயிருக்கும். ஆனல், இலங்கையிலுள்ள சூழ்நிலையிலே அவற் நின் சிறப்பு நிதிக்குழுவின் கூட்டங்களில் எடுத்து மிக மொழியக்கூடிய வாய்ப்புடையனவா யிருந்தனவென்றும், அரசாங்கத்திற்கு எதிராகச் சொல்லக்கூடியவற்றிற்கு நல்ல உதவியாயமைந்தனவென்றும் நாம் இங்கு கூறல் வேண்டும். இத்தகைய அலுவல்கள் யாவும், அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலே, அலுவல் பற்றற்ற உறுப்பினர் யாவரையும், பொதுவாக, அவர்களின் பொறுப்புக்குள் அகப்படாத ஆட்சி அலுவல் விபரங்களில் கவனமெடுக்கத் தூண்டின், அரசாங்கத்தால் ஒருமுறை தூண் டப்பெற்றதும், இத்தகைய அலுவல்களை அவர்கள் மிகவும் ஊக்கத்துடன் தொடர்ந்து நடத்தியதில் வியப்பொன்றுமில்லை. அவர்களுடைய பயிற்சி ைேயப்பற்றி என்ன கொள்கைகள் இருப்பினும், இனி வருகின்ற யாப்பு முறை எவ்விதத்தில் அமையவேண்டும் என்பதைப்பற்றி ஆராயுமிடத்து, இப்பண்பு நன்கு பரிசீலனை செய்யப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
அலுவல் பற்றற்ற உறுப்பினர்களை, பொதுப் பிரச்சினைகளை ஆள்வதில் பயிற்சி பெறுவதற்குக் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு வழி அவர்களைப் பலவித குழுக்களிலும் சேவை செய்ய வைத்தலாகும். அவர்களுடைய சேவைக்குப் பயன்படக்கூடியதாக இதற்கு முன்னரே சில அறிவுரைக் குழுக்கள் இருந் தன. புகைவண்டிச் சபை, பொதுவேலை அறிவுரைச் சபை, உள்ளூராட்சிச் சபை போன்றவை அவை. ஆயினும், சிறப்பான சில ஆய்வுகளை நடத்து வதற்காக, ஒருபொழுதைய வேளைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதித்துவ ஆணைக் குழுக்கள் சபையின் தெரிகுழுக்கள் ஆகியவற்றிலேயே அரசாங்கம் தன் நம்பிக்கையை வைத்திருந்தது. ஓர் இடர்ப்பாடான நிலையைத் தவிர்ப்

Page 25
38
பதற்கும், நெருக்கடியான ஒரு பிரச்சினையைத் தள்ளிப் போடுவதற்கும், ஒரு குழுவை நியமிப்பதே வாய்ப்பானதும் மனத்திற்குகந்ததுமான வழி யாகும் என்பதை யாவரும் அறிந்துகொள்ளலாம். எனவே இலங்கை அரசாங்கம் இத்தகைய அவசர கைக்கோள்களை மிகவும் உவந்து வரவேற் றது இயற்கையேயாகும். ஆயினுய, இவ்விதத்தில், ஒருதலை மனப்பான் மையை நெடுகப் பயன்படுத்தி வந்த வழியில், சட்டசபை தன் வரம்பைக் கடந்துவிட்டதென்றே சொல்லலாம். கடந்த நவம்பர் திங்களில் சட்டசபை உறுப்பினரைக் கொண்ட 55 இற்குக் குறையா நிமித்த தெரி குழுக்கள் ஆணைக் குழுக்கள் இருந்தனவென்று அறிந்தோம். ஒவ்வொரு குழுவும் 10 இலிருந்து 15 உறுப்பினர் வரை கொண்டதாயிருந்தது. ஆயினும், சட்டசபையின் மொத்த எண்ணிக்கையோ 49 ஆக இருந்தது. இதிலிருந்து நிலைமையின் சீர்கேட்டை நன்கு அறிந்துகொள்ளலாம். உண்மையில், சபையின் ஒவ்வோர் உறுப்பினரும் அவரவர்க்குரிய பாராளுமன்றக் கட மையை ஆற்றுவதைத் தவிர இரண்டு, மூன்று குழுக்களிலன்றி, பத்துப் பன்னிரண்டு குழுக்களிலும் சேவை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு கிழமையில் இரண்டு நாட்களில் சபை கூடுவதால் குழுக்களின் கூட்டத்திற்கு நான்கு நாட்களே எஞ்சியிருந்தன. ஒருவரின் முழு நேரமும் குழுவின் வேலைக்கே செலவழிக்கப்படினும், பல குழுக்கள் ஒரு முறையில் செயலாற்றுவதற்கு ஒழுங்குபடுத்துவதென்பது மெய்ம்மையில் நடக்கக் கூடியதொன்றன்று. சபையின் ஒவ்வோர் உறுப்பினரதும் பலதிறப்பட்ட கவற்சிகள், வேலைகள் ஆகியவற்றை நாம் நோக்கும்பொழுது அவர்கள் மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது புலப்படும். இதன் இன்றியமையா விளைவு பொது அலுவல்கள் தடைப் பட்டதும் வேலை நடவாமல் இருந்ததுமேயாம். இதனல் அடையப்பட்ட நன்மைக்கு மேலே ஒருவிதத்திலும் ஈடில்லாத சீர்கேடே கிடைத்தது. சில குழுக்களில் நிறையெண் எல்லையே கிடையாமலிருந்தது. சில குழுக்கள் ஒரு வித அறிக்கையும் வெளியிடாது பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. சில குழுக்கள் சில இடையிடை அறிக்கைகளை வெளியிடுவதுடன் அமைவு பெற்றன. அரசாங்கத்தின் இயங்குமுறை தளர்வுற்று அதன் முறையான செயல்களும் பாழாகின. இக்குழுக்களுள் ஒன்றேனும் நல்ல செயலைச் செய்யவில்லையென்று நாங்கள் புலப்படுத்துவதாக இருத்தலாகாது. அதற்கு மாருக, பல, உண்மையில், அற்புதமான பணியை ஆற்றியுள்ளன. பல வேளைகளில் இவர்களிடை நடந்த நோக்குக்கள், தகவல்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்கள் அலுவலர்க்கும் அலுவல் பற்றற்றவர்க்கும் ஒருங்கே பயனுடையனவாயிருந்தன. ஒரு நியாய வரம்பான எல்லைக்குள் இம்முறையானது அடங்கியிருந்திருந்தால் நாங்கள் அதைப் புகழ்வதன்றி வேறென்றும் அதைப்பற்றிச் சொல்வதற்கில்லை. ஆனல், இம்முறையான தோ குறித்த எல்லைகளுக் கப்பால் கொண்டு செல்லப்பட்டது. அதனல் திறனுடைய வேலை மறைந்துவிட்டது. அம்மட்டுமா ? அஃது அரசாங்

வேலையை நாள் முறை வேலைகளோடு கட்டுப்படுத்தி, அரசாங்கம் முழுமன துடன் கண்காணிக்க வேண்டிய வேலைகளையும் தாமதப்படுத்தி, யாண்டும் மலை வையும் தடங்கலையும் உண்டாக்கும் போக்கிலன்றே இப்பொழுது உள்ளது!
1.{ருக்கம்
அரசாங்கத்திற்கு மிகப்பெரிய இடர்ப்பாட்டைத் தருகின்ற இப்போதைய யாப்பு உவந்ததன்று எனக் காட்டுவதில் நாங்கள் ஒரளவு வெற்றி கண்டுள்ளோம் என நம்புகின்றேம். அலுவல் பற்றற்ற உறுப்பினர் நிறைவேற்று பொறுப்பினை எற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு உதவாமல், அஃது, அரசாங்கத்தைச் செயலற்ற ஒரு நிலைக்கு உள்ளாக்கி விடுகின்றது. அது கொண்டுவந்த இயல்புகளும் அதைப் பின்பற்றிக் கையாண்ட முறைகளும் ஒருங்கே நாட்டின் நலனுக்கு இடரளிப்பனவாயுள்ளன. மிகவும் அனுகூலமான சந்தர்ப்பங்களிலன்றி அதை வெற்றிகரமாக ஆட்சிப்படுத்த முடியா அளவிற்கு அதனுடைய குறைபாடுகள் உள; அவை இல்லாவிடத்து அஃது ஒரு பெரிய தோல்வியாகவே முடிந்தது.
இந்நிலைமைக்கு யார்மேலாயினும் பொறுப்பைச் சாட்டுவது எங்கள் கடமையன்று ; நோக்கமுமன்று. அலுவல் பற்றற்ற உறுப்பினர்கள் இப்பொழுது கடைப்பிடித்த வழியை விட்டு, வேறு வழியை அவர்கள் மேற் கொண்டிருப்பின், அஃது ஆச்சரியமாயிருந்திருக்கும் என்ற எங்களுடைய எண்ணத்தையும் இங்கு கூறவேண்டியது அவசியமாகும். அவர்கள் இருந்த நிலைமையில், அவர்கள் நிலையான ஓர் எதிர்க்கட்சியாக அமைய வேண்டியது இன்றியமையாததாக இருந்தது. அவர்களைப் பொறுத்த வரையில், அவர்களுடைய சிறப்பியல்புகளாவன, அவர்கள் காட்டிய ஆர்வமும் கூர்மையுமாகும். அத்துடன், அரசாங்கத்தைப்பற்றிய இயங்கு முறைகள் யாவையும் எவ்விதத்தாலும் அறிந்து, ஒர் உண்மை அறிவைப் பெறும் அவர்களுடைய துணிவும் அச்சிறப்பியல்புகளுள் ஒன்ருகும். அவர்கள் மிக விரிந்த முறையில் காட்டிய முயற்சியும் கடைப்பிடியும் புகழ்ச்சிக்குரியனவாகும். அவர்களுடைய உழைப்பின் விளைவு நற்பலனை அளிக்கவில்லை என்பது அவர்களுக்குரிய நற்பெயரைக் குறைப் பதாக இருத்தலாகாது. பொறுப்பரசாங்க முறையொன்றை வளர்ப் பதற்கு அவர்கள் கொண்ட ஆர்வத்திலே, நன்னேக்கினைக் கடைப் பிடிக்க அவர்கள் தவறினர் ; நல்லனுபவம் பெற்றேர் உவவா, குறைபாடுடைய வழிமுறைகளை அவர்கள் சில வேளைகளில் கடைப் பிடித்தனர்; எனினும், பொதுப் பணிக்குரிய எவ்வித வேலைகளையும் மேற்கொள்வதற்கு அவர் காட்டிய ஆர்வமும், அப்பணிகளை நிறைவேற்று வான்வேண்டி தியாகங்களை மேற்கொண்ட துணிவும் மேற்கூறிய குறைபாடுகளுக்கு ஈடாக விளங்கின. அலுவல் பற்றற்ற உறுப்பினர் யாவரோடும் அலுவல் பணிமுறையிலும் தனிப்பட்ட முறையிலும் சந்தித்து உரையாடக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. எங்கள்

Page 26
40
முன் அவர்கள் பலர் சான்றளித்தனர். எறக்குறைய எல்லோரும் தங்கள் நோக்குக்களைப்பற்றி எழுத்து முறையில் விண்ணப்பஞ் செய்தனர். சட்டசபை, அச்சுலகு, தங்கள் வாக்குத் தொகுதிகள் ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எல்லாம் நாங்கள் மிகக் கவற்சியுடன் கவனித்துள்ளோம். அவர்களின் பொதுவான ஆற்றலும் 3D 605 அலுவல்கள்பற்றி அவர்கள் கொண்டுள்ள கூர்மையான அறிவும் எங்களைப் பெரிதும் கவர்ந்தன. எனவே, இலங்கை நாட்டின் எக் கற்றறி வாளரானேர்க்கு பிரதிநிதிகளாயும் எடுத்துக்காட்டாயும் இவர் அமைந் தனரோ அவர் நாட்டின் அரசியல் வளர்ச்சியைப் பெறுவதற்கேற்ற சிறந்த பாத்திரங்களாய் அமைவர் எனக்கூறுவதில் எங்களுக்கு ஒருவிதமான தயக்கமும் இல்லை ; இப்பொழுதுள்ள யாப்பு எவ்வித குறுகிய எல்லைகளுக் குள்ளாயினும் அவர்களுக்கு அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த பங்கினை அளித்திருக்குமேல், அவர்கள் எவ்வாறு உயர் பதவிகளில் நடந்து கொள்கின்றர்கள் என்பதை நாங்கள் காய்தல் உவத்தலில்லாச் செம்மையுடன் ஆய்ந்து, அவர்கள் அரச அலுவல்களை எவ்வாறு கையாளுகிறர்கள் என்பதை அறியக்கூடியவர்களாயிருந்திருப்போம். இத்தகைய வாய்ப்பானது அலுவல் பற்றற்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படவில்லையென்பதே இவ்யாப்பிலுள்ள ஒரு முக்கிய குறைபாடாகும். இன்னும், அம்மக்களின் அரசியற் கல்வியின் நிறைவுக்கு, இத்தீவின் அரசாங்கத்தில் போதிய பொறுப்பு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது இன்றியமையாத தெலுபதே எங்கள் கருத்தாகும்.
குடியேற்றநாட்டுச் செயலகம்
ஆட்சிமுறை அமைப்பிலுள்ள குறைபாடுகளினல் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை இங்கு குறிப்பிடாதுவிடின் இப்பொழுதுள்ள யாப்புமுறையை நடாத்தும் முழுக் கதையையும் சொல்லியதாகாது. அரசியல் முறையிலே, இலங்கை யானது பழைய முடிக்குரிய குடியேற்றநாட்டு அரசாங்கம் என்ற குறுகிய வரம்புகளைக் கடந்து பன்னளாகிவிட்டதென்பதை முன்னரே குறித்துள் ளோம். ஆயினும், அதற்கேற்ற வழியிலே அரசாட்சி முறையில் ஒத்த செம்மைப்பாடு ஒன்றும் நடைபெறவில்லை. என்றும் இருப்பது போலவே, அரசாங்கத்தின் நிறைவேற்று அலுவல் யாவும் ஒருமையப்பட்டு, குடியேற்றநாட்டுச் செயலாளர் பொறுப்பிலேயே இருக்கின்றன ; இவரே ஆள்பதிக்கும் அரசாங்க அலுவலகங்களுக்கும் இடையே தொடர்பு அளிப்பவராயிருக்கின்றர். எல்லா அரசாங்க அலுவலகங்களின் பொது மேற்பார்வைக்கும், அவர்களுடைய வேலைகளை இணைப்பதற்கும், அவர் களின் முன்மொழிகளை ஏற்கவோ, தள்ளவோ ஆள்பதிக்கு அறிவுரை பகர்வதற்கும், அவர்கள் எற்றுக்கொண்ட பூட்கையை சட்டசபையில் எடுத்து நிலைநாட்டுவதற்கும் இவர் ஆள்பதிக்குப் பொறுப்பாயிருந்தார். எனவே, ஆள்பதியின் உச்ச அதிகாரத்திற்கே அமைவுபட்டவராய், இவர்

41
அரசாங்கத்தின் 40 அலுவலகங்களுக்குப் பொறுப்பு வாய்ந்த ஓர் அமைச்சரின் நிலைமையை வகிக்கின்றர் எனலாம். எவ்வளவுதான் இவரும் இவருடைய பணியாளரும் பயிற்சியுடையோராகவும் நன்கு உழைப் பவராகவும் இருப்பினும், இப்பணியானது நன்முறையில் நடத்தப்படக் கூடியதொன்றன்றென்பது எளிதில் புலப்படும். அரசாங்கத்தின் முன் வேற்றப் பணிகள் யாவும் அரசாங்க அலுவல்களின் அளவில் ஒர் இடையருத வளர்ச்சியைக் கொண்டு வந்தன ; இன்னும், சட்டநிறை வேற்று அலுவலிலன்றி, வேறு பிற அலுவல்களிலும், சட்டசபை காட்டிவந்த கவற்சி, செவ்விகளிலும் கடிதத் தொடர்புகளிலும் எற்பட்ட அளவிறந்த உயர்ச்சியிலிருந்து அறியக்கிடக்கின்றது; இச்செவ்விகளும் கடிதத்தொடர்புகளும் சிறப்பாக அலுவல் பற்றற்ற உறுப்பினர்களுடன் கடந்தனவாகும். சட்டசபையில் அரசினரின் பேச்சாளர்களாகவும் நிதிக்குழுவின் தலைவராகவும் குடியேற்றநாட்டுச் செயலாளர் மேற்கொண்ட பணியோ மிகவும் பெரியதாயிருந்தது. இவருக்குரிய பொதுவாட்சி அலு வலையும் இத்துடன் சேர்த்தால், சுமை தாங்க முடியாததொன்ருயிருக் கும். இங்கு நாம் இன்னும் ஒரு பொருளையும் சிந்தித்தல் வேண்டும். வழக்கமாக, குடியேற்றநாட்டுச் செயலாளர் பதம் இலங்கைக் குடிக்குழுச் சேவையிலிருந்தும் புறம்பான இடத்திலிருந்தெடுத்து நிரப்பப்படுவதொன் ருகும். १ १
ஆகவே, இப்பதவியை வகிப்போருக்கிருந்த பாரம் இலங்கை நிலைமை களை அறியாத அவருடைய இயல்பினலே இரட்டிப்பாகிவிடுகின்றது. இம்முறைமை அது பயந்தரக்கூடிய கால எல்லையையும் கடந்துவிட்டது. இப்பொழுது இது காலதாமதத்திற்கும் செயல்திறக் குறைவிற்கும் நிலைக் களமாயிருக்கின்றது. இதனல் திணைக்களத் தலைவர்களுக்கு இஃது இட ரைத்தருகின்றது. இவ்விடயத்தில் நல்ல செயன்முறைகளைப் புகுத்தல் இன்றியமையாததாகும். இப்பொருள்பற்றி அடுத்த அதிகாரத்தில் நாம் விவரமாகச் சொல்வதற்கு இருக்கின்ருேம். இவ்வதிகாரம் யாப்புமுறைச் சீர்திருத்தம்பற்றி நாங்கள் எடுத்துரைக்கப் போகின்றவற்றை விரிக்கும்.

Page 27
அதிகாரம் IV மத்திய அரசாங்கம்
முன்னுரை
இப்பொழுதுள்ள யாப்பிலுள்ள குறைகளைப்பற்றி நாங்கள் இதுவரை கூறியிருந்தோம். இதனுடைய குறைபாடுகள் எல்லாம், முக்கியமாக இவ் யாப்பினை இறுதியாகச் சீர்திருத்தியமைத்தபொழுது, சட்டசபை அங்கத் தினர்களுக்கு வேண்டிய பொறுப்புரிமை அளியாமல் சட்டசபைக்கு மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொடுத்ததனல் எற்பட்டனவாகும். இதனல், எற்பட்ட ஒப்பின்மையை இரு வழிகளால் தீர்த்துவிடலாம். முதலாவதாக, குடியேற்றநாட்டு அரசாங்கம் என்று முன்னர் அறியக்கிடந்த பழைய வழிக்குத் திருப்புவதாலாகும். இதனைச் சட்டசபையிலுள்ள அலுவல் பற்றற்ற உறுப்பினருடைய பெரும்பான்மையை நீக்கியும், அதன் வழியாக அவர்கள் நிதி அலுவலில் கொண்டிருந்த அதிகாரத்தை நீக்கியும் சட்டசபையின் அமைப்பினை மாற்றுவதனல் செய்யலாம். பொறுப் புணர்ந்தவர்களிடமிருந்து இத்தகைய வழி வேண்டுமென்ற குறிப்பு வர வில்லை. அதிகாரத்தை மீண்டும் திருப்பியெடுத்துக்கொள்வதால் ஆகும் இடர்ப்பாட்டை விட, இலங்கை மக்கள் உண்மையாகவே தங்களுடைய அலுவல்களை நடத்துவதில் திறமையற்றவர்களென்றல் ஒழிய, இத்தகைய நடவடிக்கையை எடுத்தல் நீதிக்கும் அரசாண்மைக்கும் உவந்ததன்ருகி விடுமன்றே ! இப்பொழுது இருக்கின்ற நிலைமையிலும் நல்வாய்ப்பு அளிக்கும் ஒரு சூழலில், தங்களுடைய அலுவல்களைச் செவ்வனே நடத் தக்கூடிய திறன் அவர்களிடம் இல்லையெனில்தான் இவ்வழி மேற் கொள்ளப்படக் கூடிய தொன்றகும்.
இவ்வொப்பின்மை நிலையைத் திருத்துவதற்குரிய மற்றை வழி, பின் னுக்குப் போவதன்றி முன்னுக்குப் போகும் வழியாகும். அதாவது, பொறுப்பையும் அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்குவதாகும். இவ் வழியையே பிரித்தானிய மக்கள் பெரும்பாலும் விரும்புவர். நாங் களும் அதையே எடுத்துரைக்க விரும்புகின்றேம். எனவே, இப்பொழுது நாங்கள் புரியவேண்டிய காரியம் நியாயமான அளவுக்கு எத்துணைப் பொறுப்பை இவர்களுக்கு அளிக்க வேண்டுமென்பதும், எவ்வித வழி களில் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இப்பொறுப்பை அளிக்கலாம் என்பது மாகும். எங்கள் ஆய்வினல் ஒருமுகமாகப் பெற்ற முடிவுகளை நாம் கூறுமுன், இலங்கையில் நாம் தங்கியிருக்கும்பொழுது பல்லோரும் எங் களுக்கு எடுத்துரைத்த குறிப்புரைகளை இங்கு எடுத்துக்கூறி, அவற்றை நாம் என் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்ற காரணங்களைக் கொடுக்க விரும்புகின்ருேம்.
42

43
எடுத்துரைக்கும் திட்டங்கள்
முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங்கம்
பலர் எங்கள் முன் சான்றளித்தார்கள். இலங்கையைப்பற்றிய யாப்பு முறை முன்னேற்றமே இப்பொழுது வேண்டியது என்று இவர்கள் கூறினர்கள். இஃது ஆணிலத் தகுதியை உடையதாக அற்றது ஆக , முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங்கமே வேண்டுமென்பது இவர்கள் கூற்று. இவர்களுள் முக்கியமானவர்கள் இலங்கை நாட்டின மாசபைப் பிரதிநிகள். ஆயினும், இலங்கை அரசியலார் இதுவரை திணைக்களப் பொறுப்புவாய்ந்த அமைச்சர்களாயிருந்து தொழில் நிறைவேற்றும் ஆற்றலைக் காட்டக்கூடிய வாய்ப்புப் பெருதவர்களாயிருந்தனர்; ஆதலின், இலங்கையின் இறுதி யான அரசியல் முடிவை, நல்லமுறையிற் பெறுவதற்குப் பூரண பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திலும், சிறிது குறைவான நிலைமையே உவந்த தென்பதைப் பலர் ஒப்புக்கொண்டனர். இலங்கை மக்கள் இன்னும் உயர்ந்த ஒற்றுமையையும் ஒத்துழைக்கும் குணத்தையும் காட்டியிருப்பரேல், பூரண சுதந்திர அரசாங்கத்தை இவர்கள் பெறுவதற்கு இடையூறயிருந்த ஒரு தடை நீக்கப்பட்டிருக்கும். மக்கட்டொகையோ ஓரின இயல்புடையதா யிருக்கவில்லை. அத்தொகுதியிலமைந்த பல்வேறு கூற்றினரும் ஒருவரை யொருவர் நம்பாது ஐயங் கொண்டிருந்தனர். இலங்கையில் தேசாபிமானம் என்பது எவ்வளவு நாட்டின இயல்புடையதாயிருந்ததோ, அவ்வளவு சாதியின இயல்புடையதாயுமிருந்தது. சில வேளைகளில் நாட்டின் நலன் ஒரு பகுதி மக்களினத்தின் நலனேடு இயைந்ததெனக் கருதப்பட்டது. இந்நோக்குடனே இலங்கைக்கு முழுப் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் வேண்டுமென்ற உரிமையை நாம் ஆராய்ந்து பார்ப்பின், இவ்வாறு கூறும் பிரதிநிதிகள் இந்நாட்டு மக்களில் பெரும் வகுப்பினராயிருப்பதை நாம் காணலாம். இவர்களோ வெளிக்கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கப்பட்டவரா யிருந்தால், எப்பொழுதும் தங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் மீது தங்களுடைய எண்ணங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கக்கூடியவராவர். ஆனல், சிறுபான்மைச் சமூகத்தினர் என்பார்களோ, வேறு வழிகளில் ஒற்றுமையில்லாதவர்களாயிருப்பினும் மேற்கூறிய முன்மொழிகளுக்கு எதிர்ப்புக் காட்டுவதில் ஒற்றுமை நலம் உடையவராயிருந்தனர். முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தைப் பெறுவதற்கு இன்றியமையாத முக்கிய முதல் நிலையாவது, அப்படிப்பட்ட கொடையினை ஒரு பகுதியினர்க்கன்றி எல்லா மக்களுக்கும் பொதுவாக உவந்ததாக்கும் பொதுசன அபிப்பிராயம் ஒன்றை வளர்த்தலேயாம். இத்தகைய வளர்ச்சி புதியவொரு யாப்பு முறையில் புதிதாக அமைக்கப்பட்ட சபையிலே, பெரும் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் யாவரும், தாமே தியாகம் செய்தேனும், வேறுபட்ட நலன்களை இசைவாக்கி நீதியான முறையில் நடந்துகொள்ளக் கூடியவர் கள் என்ற நம்பிக்கையை மற்றையோரிடை உண்டாக்கக் கூடியவராயிருந் தாலே, நடைபெறக் கூடியதாகும்.

Page 28
'44
திருத்தமான புள்ளிவிவரத் தகவல்களைப் பெற்று அவற்றை எங்கும் பரப்புவது, அரசாங்கத்தைப்பற்றி நல்லமுறையில் அறிவதற்கேற்ற வாய்ப் புக்களை அளித்துள்ளது. இப்பொழுதுள்ள புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறியக்கிடப்பது என்னவெனில், பொதுவான முறையிலமைந்த உறுதி மொழிகளாலும் எளிதான மறுப்புரைகளாலும் அரசாங்கம் தனக் கெதிரானவர்களைக் திருத்திப்படுத்த முடியாதென்பதேயாம். இப்பத்தி ரங்களோ உண்மையை எடுத்துக் கூறும் இயல்புடையனவாக அமைந்துள் ளன. இத்தகைய பத்திரங்கள் இல்லாதவிடத்து அவை மக்கள் பார்வைக் குக் கொடுக்கப்படுமென்ற உறுதிமொழி மக்களுக்கு அளிக்கப்படல் வேண்டும். எனவே, புதிதாக அமைக்கப்படும் சபையானது, புள்ளிவிவர வியலாருடைய பத்திரங்களில் ஆண்டுதோறும் தன் வேலையின் பலன்களைக் காட்டும் என்பதையும், இத்தகைய பத்திரங்கள் என்ன உண்மைகளைக் கூறுகின்றனவோ, அவற்றை எற்றுக்கொள்ள வேண்டுமென்பதையும் உணர்ந்தவாறே தன் கடமைகளைச் செய்யவேண்டும்.
இன்னும் ஒரு முக்கியமான விடயம் யாதெனில், வாக்குத் தொகுதியின் பருமனுகும். இஃது இப்பொழுது 200,000 எண்ணிக்கை கொண்டது. அதாவது, சனத்தொகையில் 4 சதவீதத்தையுடையது. எங்களுடைய அறிக்கையில் உள்ள எடுத்துரைகளை மேற்கொண்டால், இதனல் வரும் விளைவுகள் விரைவில் நீங்கிவிடும். இத்தகைய சிறு பருமனுடைய வாக்குத் தொகுதியினர்க்குப் பொறுப்புவாய்ந்த அரசாங்க அதிகாரத்தைக் கொடுத் தல், அதிகாரத்தில் உள்ளவர் மற்றை மக்களுடைய நலன்களைத்தாம் பாது காப்பர் என்னும் வாக்குறுதியின்றி, சில்லோராட்சிகையில் முழுவதிகாரத் தையும் விடுவதற்கொப்பாகும். மேன்மைதங்கிய அரசரின் அரசாங்கம் இலங் கையிலுள்ள செல்வர், கற்றறிவுள்ளோர் ஆகியோர்க்கு மட்டும் அரசாங்க மன்றி, அது மக்கள் தொகையில் பெரும்பாலோராயமைந்த நாட்டவர், கூலிகள், எளியவர் யாவருக்கும் பாதுகாப்பாயுள்ளதென்பதை நாங்கள் இங்கு எடுத்துக் கூற வேண்டியதில்லை. பிற்கூறிய வழை மக்களின் நலன் யாவற்றையும் முன்கூறிய வகுப்பினரின் கட்டில்லாத அதிகாரத்தில் விட்டு விடுவது நம்பிக்கைப் பொறுப்பற்ற முறையாகும். ஆயினும், வாக்குரி மையை விரிவடைய ஒத்துக்கொள்ளாது, முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங் கத்திற்கு உரிமைகொண்டாடியவர்கள், மேற்கூறிய விடயத்தின் இயல்பினை நன்கறிந்தவர்களாகத் தோன்றவில்லை.
இவ்வாதத்திற்கு எதிருரைக்க முயன்ற பலரும், அலுவல் நிறைவேற்று அனுபவத்தின் முக்கியத்தைக் குறைத்துக்கூற விரும்புவோரும், பிரிட்டிசு அரசியல் வரலாற்றிலிருந்து ஒப்புமையான பகுதிகளை எடுத்துக்கூற விரும்பி னர். ஆயினும், இவை எடுத்துக்கொண்ட பொருளுக்கு இயைவுடையன வல்ல. 1832 இல் சில்லோராட்சியின் நலனுக்காக வரித்துக்கொண்ட சீர் திருத்த முறியையும், 1924 இலே தொழிற்கட்சி அரசாங்கம் முன் அமைச்சுமுறை அனுபவம் இல்லாமல் ஆட்சி எற்றுக்கொண்டதையும்

45
* முற்காட்டாகக் கூறுவோருக்கு நல்ல பதில் கூறலாம். எள்கிரேயின் துணை
வரும் இராமிசே மகதனல் ஆகியவரின் துணைவரும் பொது அலுவல்களில்
நல்ல பயிற்சி பெற்றவர்களாயிருந்தனர். நீதிபரிபாலனத்திலும் வணிகக் களங்களிலும் உள்ளாட்சிக் கழகத்திலும் தொழிற்சங்கக் கழகத்திலும் முறையே அவர்கள் அனுபவம் பெற்றவர்களாயிருந்தனர். இலங்கை மக்கள் பொது அலுவல்கள்பற்றிய அறிவினைத் தேடுவதற்கு நன்கு ஆர்வம் உள்ளவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனல், அவர்கள் முழுவதும் புதிதாகவே தொடங்க வேண்டியவர்களா யிருக்கின்றர்கள். இதுவரை இத் தீவின் வணிக வாழ்விலும் நிதியியல்பற்றிய வாழ்விலும் அவர்கள் கொண்ட அனுபவம் அவர்களுடைய அறிவுக்குப் போதியதாக அமைய
தீவின் பாதுகாப்பு, அங்குள்ள மக்களின் காப்பு ஆகியவை உட்பட்ட பேரரசுத் தொடர்பு சம்பந்தமான பிரச்சினைகளில் இங்கு நாம் ஒன்றும் கூற விரும்பவில்லை. ஏனெனில், இலங்கையில் உள்நாட்டுத் தேவைக்கு உவந்த அரசாங்கத்தின் இயல்பைப்பற்றி ஆராய்வதற்கு அவை இன்றி யமையாக் கேள்விகள் அல்ல. ஆயினும், இங்கு நாம் எடுத்துக்காட்டிய பல குறிப்புக்கள் யாவும், இப்பொழுது இருக்கின்ற நிலையிலே முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங்க நிலையை இத்தீவிற்கு அளிப்பது இயலாத தொன்றகும் என்பதை எங்களுக்கு அறிவுறுத்துகின்றன.
இம்முடிவானது சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டுமன்றிச் சிங்கள மக் களில் பெரும்பாலோருக்கும் எற்றதொன்றயிருக்கும் என்பதே எங்கள் நம்பிக்கை. ஆனல், முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங்கத்திலும் எவ்வள விற் குறைந்த அளவான ஆட்சியை நாம் அளித்தல் வேண்டும்? இலங்கை யிலுள்ள பல பொறுப்புவாய்ந்த மக்களும், எங்கள்முன் சான்றளித்த பல்வேறு நிறுவனங்களில் பேச்சாளர்களும் பிளவுபட்ட பொறுப்பியல்பு டைய ஆட்சி முறையும் இரட்டையாட்சியியல்புடைய ஆட்சிமுறையும் அழிந்து விடும் என்று எங்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினர்கள். இதற்கு மாருக பல முக்கிய சான்றுகள், வரவுசெலவுத் திட்டத்தைத் தனித்து வைத்து நிதிமேல் சட்டசபை கொண்டுள்ள அதிகாரத்தைக் குறைக்கும் ஒரு முறை கூடாதென்று கூறினர்களேயாயினும், அலுவல்பற்றுடையவரும் பற் றில்லாதவருல் சேர்ந்து பொறுப்பு வகிக்கும் ஒரு முறையே செயன்முறை யில் கடைப்பிடிக்கக் கூடியதொன்று எனக் கூறினர்கள். உயர் பதங் களிலோ சிறு பதங்களிலோ அமர்ந்து, முக்கிய அரசாங்கத் திணைக் களத்தில் ஆட்சிபுரிந்து கடமை பார்த்து, அனுபவம் இல்லாத ஒரு மக்கள் குழுவிற்கு, கட்டுப்பாடில்லாத அதிகாரம் அளிப்பதால் வரும் இடர்களை இவர்கள் முன்னறிந்திருந்தார்கள். இவ்விதமான வேறுபட்ட இரு நோக்குக்களும், நாட்டிலே மிகவும் பொறுப்புவாய்ந்த மக்களால் நன் முறையில் பலமாக எங்கள் முன்னர் எடுத்துரைக்கப்பட்டன.

Page 29
46
சட்டசபையைச் சாராத நியமிக்கப்பட்ட ஒரு நிருவாகம்
ஓரளவுக்கு முன்னேறு முறையிலமைந்த, ஒரு சட்டசபையை நிறுவு வதற்கு ஏற்ற முன்னுரைகள் பல நமக்கு இத்தருணத்தில் எடுத்துச் சொல்லப்பட்டன. இவ்வாறன பேச்சுக்களில் முதல் வகையானது குடி யேற்றநாட்டு அரசாங்கத்தை நீடிப்பதாக இருந்தது. ஆனல், இதற்கு ஓரளவு பொறுப்பு இருந்தது. சட்டசபையிலுள்ள சில அலுவல் பற்றற்ற உறுப்பினர்களை ஆள்பதி நிறைவேற்று சபைக்கு நியமித்து, அவர்களைத் திணைக்களங்களுக்குப் பொறுப்பாளராக்கல் வேண்டும். சட்டசபை உறுப் பினர்கள் அவர்களைக் கண்டிக்கக் கூடியவர்களாயிருந்தாலும், அவர்கள் மேன்மைதங்கிய ஆள்பதிக்கே பொறுப்புள்ளவர்களாயிருப்பார்கள். இவ் வளவே அப்பொறுப்புடைமை. நிறைவேற்று சபையில் இவ்வலுவல் பற்றற்ற உறுப்பினர்களோடு அலுவல் பற்றுள்ள உறுப்பினர்களும் சேர்ந்து கொள்வார்கள். நல்ல அனுபவம் பெற்ற ஐரோப்பியரும் இலங்கையரும் இம்முறையை எங்களுக்கு எடுத்து ஒதினர். இதில் ஒரு சிறப்பான வாய்ப்பு இருந்தது. அஃதென்னவென்றல், நிறைவேற்று சபையில் உள்ள உறுப் பினர் யாவரும் தாங்கள் கொண்ட பதவாட்சியளவிலே ஒற்றுமைப்படுபவர்க ளாயிருந்தார்கள் என்பதாகும். இஃது இலங்கை மந்திரிகளை நல்லதிகார நிலையில் வைத்திருக்கும். அப்பதங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு மற்றவர்களுடன் கலந்தாலோசிக்கக்கூடிய நல்ல வாய்ப்பினையும் அதிகாரத்தையும் அந்நிலை அளிக்கும். அதனல், சுமுகமான முறையிலே நடந்து கொள்வதற்கு, உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடியவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு இவ் வாறு அளிக்கப்படும் அதிகாரம் இப்பொழுதுள்ள முறையில் அமைந்த நிறைவேற்று கழக உறுப்பினர்களுக்குள்ள அதிகாரத்திலும் கூடியதாக இருக்கும். இவ்வாறு மிக உயர்ந்த பதங்களுக்கும் அதிகாரங்களுக்கும் இவர்கள் உயர்த்தப்படக்கூடுமென்ற ஒரு தகைமை அலுவல் பற்றற்றவர்க ளுடைய நோக்கிலே அவர்களையும் அறியாமல் ஒரு மாற்றத்தினை விளைவிக் கும். ஏனெனில், ஒரு நியாயமற்ற முறையிலே அவர்கள் இடர் விளைப் பார்களென்ருல், அவர்கள் பதம்பெறும் வாய்ப்பிற்கு அஃது இடராய் அமைந்துவிடும். இன்னும், புதிய ஒரு திட்டத்திலே ஒரு கவர்ச்சியு மிருந்தது. இத்திட்டமானது இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட மோலிமிண்டோ சிர்திருத்தத்தை ஓரளவில் ஒத்ததாயிருந்தது. இதனல், திணைக்கள ஆட்சிக்குப் பொறுப்பாகவுள்ள மந்திரிகள் தம் நிலையினல் அவற்றின் ஆட்சியைப் பற்றி அறியக்கூடியவராய் இருந்தனர். இஃது ஆள்வாரின் காப்புறுதி கொண்ட கட்டுப்பாட்டில், இலங்கைப் பரிபாலனத்தை ஒரு புது முறையில் அமைப்பதற்கும் ஒருவழியைக் கோலவுங்கூடும். இஃது உண்மையில் ஒர் இலகுவான காரியமன்று. ஆயினும், நாங்கள் இங்கு ஒன்று கவனிக்கவேண்டியுள்ளது. நிதிக் கட்டுப்பாட்டில் இறுதி அதி காரத்தைக் கொண்டிருந்த ஒரு சட்டசபையுடன் சேர்ந்து தங்கள் காரியத்தை

4.
நடத்த வேண்டிய இலங்கை மந்திரிகளைப்போல மோலிமிண்டோ மந்திரி கள் இருக்கவில்லை. இடபடிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திலே ஆள்பதியின் அதி காரம் எதுவிதத்தில் ஒரு பாதுகாப்பாயிருக்கும் என்பது கேள்விக்குரியது. ஏனெனில், ஆள்பதியால் நியமிக்கப்பட்டு அவருக்குப் பொறுப்பாயுள்ள அமைச்சருக்கும் சட்டசபையால் நியமிக்கப்பட்டுச் சட்டசபைக்குப் பொறுப்பா யுள்ள அமைச்சருக்கும் உண்மையில் வித்தியாசம் இருக்காது. நிதியின் ஆட்சியானது சட்டசபையின் கையில் இருக்கும் வரையில், கொள்கை யளவிலே, சட்டசபையானது தனக்கு உவந்த அமைச்சருடன் ஆள்பதியை ஒத்தியங்கச் செய்யும். இஃதிவ்வாறு நடக்காவிடின், சபையானது இப் பொழுதுள்ள அரசாங்கத்திற்கு எவ்வளவு தொல்லைகளைக் கொடுக்கின்றதோ, அவ்வளவு தொல்லைகளை வேண்டிய அமைச்சர்க்குக் கொடுக்க முடியும். இதனல், இப்பொழுது நேர்ந்துள்ள ஆட்சித் திறமின்மையும் ஆர்வமின்மை யுமே எற்படும். இப்பொழுதுள்ள உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவரையில், எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளிலும் மிகக் கடுமை யான நடவடிக்கைகளை, இந்நியமன அமைச்சர்களைப்பற்றி எடுத்துக்கொள்ள முடியுமென்பது, இவர்களை “இராணிமாளிகையின் கூலிக்காரர்” என்றும், “இலங்கைமீது பிரித்தானியர் கொண்டிருக்கின்ற அவநம்பிக்கைக்குரிய எடுத் துக் காட்டுக்கள் ” என்றும் இழிவுரை கூறும் விதத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இங்கு, நாம் மொலிமிண்டோ ஆட்சி ஒரு சிறிது காலந் தான் நீடித்தது என்பதைக் குறித்துக் கொள்ளல் வேண்டும். இலங்கை யில் புதிய யாப்புமுறை ஆட்சியொன்றை நாம் நிறுவிய உடனே, இயற்கை யான வழக்கம் தலையெடுத்துப் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் வேண்டு மென்ற கூக்குரல் உடனே எழும்.
இன்னும், இம்முறையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எடுத்துரைத் தவர்கள், பேச்சளவில் என்னதான் இம்முறைக்கு எதிராகச் சொல்லப்பட்டா லும், செய்முறையளவிலே இத்திட்டமானது இந்தியாவின் மைய ஆட்சி யாப்பு முறையில் செவ்வனே நடைபெற்று வருகின்றதெனக் கூறினர். இலங்கைக்கும் இந்தியாவிற்குமுள்ள நிலைமை தோற்ற அளவில் ஒப்புடைய தாக இருந்தாலும் உண்மையில் அவ்வாறில்லை. பதிலரையரின் மந்திரி கள் (நிறைவேற்று சபையினர்) இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந் தெடுக்கப்படுவர். அவர்கள் பெரும்பாலும் சட்ட நிறுவு கழகத்தின் உறுப் பினர்களாக முன் சட்ட சபையுடன் யாதுமொரு தொடர்பும் கொண்டில்லாத வராக இருப்பர். ஆனல், இலங்கையிலோ, சென்ற 30 ஆண்டுகளாகச் சட்டசபையின் உறுப்பினர்களாக இருந்தவர்களாகவோ அண்மையில் நடந்த சீர்திருத்தத்திற்கு முந்திய பிணக்குக்களில் மிகப் பிரபலமாய்ப் பங் கெடுத்தவராகவோ, அல்லது அச்சபையின் உறுப்பினர்களுடன் இணக்கத் தாலோ, அல்லது கொள்கையளவிலோ நெருங்கிய சம்பந்தம் உடையவ ராகவோ இருக்கின்ற ஒரு சிறு குழுவினரிலிருந்தே மந்திரிகளைத் தேர்ந்

Page 30
48یز
தெடுக்க வேண்டுமென்பது வெளிப்படையான ஓர் உண்மையாகும். மற்றை இடங்களில் உள்ளவாறு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பருமனு லாய வேறுபாடு, ஒப்புமை வாதத்தால் பெறப்படும் எல்லா முடிவுகளுக்கும் மாறுபாடாயமைந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
கலப்புடைய ஒரு நிருவாகம்
இன்னெரு முன்னிடு, அலுவல் பற்றுள்ளவர், அலுவல் பற்றில்லார் ஆகிய இரு சாராரையும் கொண்ட ஒரு நிறைவேற்றுசபை அமைப் பதைக் கொண்டதாக இருந்தது ; அலுவல் பற்றற்ற உறுப்பினர் யாவரும் சட்ட சபையால் தேர்ந்தெடுக்கப்படலாம் ; அல்லது ஒரு பகுதியினர் தேர்ந் தெடுக்கப்படலாம். ஆனல், இவர்கள் சட்டசபைக்குப் பொறுப்புள்ளவகர் ளாயிருப்பர். நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பெற்றதும் எது விதத்தி லும் மட்டுப்படுத்தாத அதிகாரத்தையுடையதுமான, ஒரு சட்டசபையை ஆள்வது எவ்வளவு கடினமானதென்பதைப் பின்வரும் காரணத்தால் அறியலாம். குறித்த சில மந்திரிகள் பொறுப்புள்ளவராயிருக்க, மற்றை யோர் அற்றவராயிருக்கும் முறைகொண்ட ஒரு சட்டசபையில். செவ்விய அலுவல் எவ்வாறு அமையும் ? இந்திய மாநில ஆட்சியிலே இம்முறை செய்முறையில் இயங்கக் கூடியதொன்றக இருந்தது, ஏனெனில் நிதியாட் சியின் இறுதிப் பொறுப்பானது உத்தியோகக் குழுவின் அதிகாரத்திலேயே இருந்தது. ஒதுக்கி வைக்கப்பட்ட அலுவல்களில் அதற்கு முழுப் பொறுப்பு மிருந்தது ; பிறர்க்கு ஒப்படைத்த அலுவல்களில் எவ்வளவிற் பணம் ஒதுக்கப்படவேண்டுமென்று அதுவே தீர்மானித்தது. இலங்கையிலே, நம்ப முடியாத முறையில் சட்டசபை இலங்கையராட்சியில் அமைந்த திணைக்களங்களுக்குப் பணமொதுக்கி, ஐரோப்பியராட்சியிலமைந்த திணைக் களங்களுக்குப் பணம் ஒதுக்காது விடக்கூடிய ஒரு நிலைமையை நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறன நிலையிலும் ஐரோப்பியர் அமைச்சர்கள் பதவியைத் துறக்க முடியாத ஒருநிலை இருந்தே தீரும். அலுவலர்களோடு சேர்ந்து தாம் யாத்த ஒரு பூட்கைக்குத் தாம் ஆதரவளிக்கின்றபொழுது நிருவாகத்து அலுவல் பற்றற்ற உறுப்பினர்களைச் சட்டசபை கண்டிப்பதை யும் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க நேரும். இவ்வாருக நடைபெற்று ஓர் அரசியல் புரட்சி ஆயது என்று வைத்துக் கொள்வோம்; அப்பொழுது, அலுவல் பற்றுடையோருடைய எண்ணங்களுக்கு ஆதரவளித்த தம் சக பாடிகளைத் தாக்கி வெளியேற்றிய உறுப்பினர்களே, தம்முடன் மந்திரிக ளாகப் பின்னர் கடமையாற்றும் நிலைமையையும் அவர்கள் காணலாம்.
இந்நோக்கங்களை விட, மிகமுக்கியமான ஓர் எதிர்ப்பும் இதற்குண்டு. இவை ஒருவேளை கற்பனை மிகுந்தவையாயிருக்கலாம். இன்னும், இலங்கை யிலே நியாயமற்ற முறையிலமைந்த ஒரு யாப்பு கடைப்பிடிக்கப்பட்டு வந்ததென்பதையும் இது கவனியாததாயிருக்கலாம். சட்டசபையில் நடக் கின்ற ஒரு வாக்குவாதத்தை ஒருவர் போய்ப் பார்த்தால் ஐரோப்பிய அலுவலர் அங்கிருக்கின்றதால் எற்படும் இடர்ப்பாடான நிலைமையை உடனே

49
உணரலாம். அரசாங்கப் பக்கத்திலே அவர்கள் ஒரு வரிசையில் இருப்பது, அரசியலிலே உண்மையாக உள்ள இயற்கையான பிரச்சினைகளை மறைத்து எப்பொழுதும் மற்றையோரின் குறிதவறச் சில தாக்குதல்களுக்கு அவரை ஆளாக்கிவிடுகின்றது. சட்டசபைக் கூட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும், வாக்குவாத நேரங்களிலும் கேள்வி நேரங்களிலும் களரிகளிலும், அவர் களுடைய மேற்கூறிய நிலை அரசியல் போக்கில் இயற்கையான நடவடிக்கை களைக் குழப்புவதாக உள்ளது. அவர்கள் சமுகமளிப்பது வாக்குவாதங் களுக்கு எவ்விதமான போக்கைத் தருவதாயினும் அரசியல் பற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அத்தியாவசியம் என்று சொல்லாதவர் ஒருவருமில்லை. ஆயினும், அவர்கள் எண்ணிக்கையைக் குறைப் பதால் யாதாயினும் பலனுண்டா என்பது ஐயத்திற்குரியது. எண்ணிக்கையில் அவர்கள் எவ்வளவு குறைகிருர்களோ அவ்வளவில் தாக்குதல்கள் வலிமை யுடையனவாயிருக்கும். ஒருவேளை இலங்கை அரசியல் வாழ்விலே, இலங்கைச் சட்டசபையாளர்க்கும் ஐரோப்பிய அலுவலர்க்கும் பிணக்கு இன்றியமையாததாயிருக்கலாம். ஆனல், அதனை நீக்கவேண்டுமாயின், இலங்கையர்களுக்கு அதிகாரம் கொடுத்ததால் பிறரன்றி அவர்களே பொறுப்பாளர்களாயிருக்க வேண்டுமென்று எடுத்துரைத்தலைவிட வேறு வழி கிடையாது. எனவே, சில வரையறைகளை வைத்துக்கொண்டு, அவர்களின் அலுவல்களைப்பற்றிய அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்து விடல் வேண்டும். இந்த வரையறைகள், அவர்களுடன் உறையும் சிறு பான்மையினரின் பாதுகாப்பையும், இலங்கையை ஒரு முக்கிய கூருகக் கொண்ட பேரரசின் பாதுகாப்பையும் பேணக்கூடிய விதத்தில் அமைந்திருத் தல் வேண்டும். பணத்தைப்பற்றிய அதிகாரம் சட்டசபைக்குக் கொடுக்கப் பட்டதாதலின், இதையன்றி வேறு எவ்விதமான உளப்பாங்கையும் கொள் ளல் முடியாது.
யாப்புமுறைக் கொள்கையோடு இயைந்த நியாயங்களை விட, வேறு நியாயங்களும், இலங்கையின் சட்டசபையிலிருந்து பொறுக்கியெடுத்த சில உறுப்பினர்களுக்கு மந்திரிப்பதம் கொடுப்பது அறிவின்பாற்பட்டதோ என்ற சந்தேகத்தைத் தரக்கூடும். அலுவலகங்களில் தலைவர்களாயிருந்த ஐரோப் பியர்மீது அலுவல் பற்றற்ற சட்டசபையினர் தங்கள் எண்ணங்களை வலி யுறுத்தினுரென்பதற்கு நல்ல சான்று எங்கட்குக் கிடைத்துள்ளது. இவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினை எப்பொழுதும் ஒர் அற்பமானதாகவே இருக்கும்; *சிலவேளைகளில் அஃது இனம் பற்றியதாயும் ஆட்கள் பற்றியதாயுமிருக்கும். ஆயினும், அவை சேவையினரிடமிருந்த ஊக்கத்தைப் பெரிதும் குறைத்து விட்டன. அ லுவலகங்களின் மரபை நன்கு அறிந்த ஐரோப்பியர்களின் அறிவுரைகளைப் பெற்றிருந்த குடியேற்றநாட்டுச் செயலாளரே, இவ்வாருன தலையீடுகளைத் தாங்கமுடியாது தவித்தனரெனின், அனுபவம் இன்றிப்

Page 31
50
புதிதாக மந்திரியாகக் கடமைபார்க்க வேண்டி வரும் எந்த இலங்கையர்க்
கும், தாம் இதுகாறும் பழகிவந்த ஓர் அரசியற் சூழலிலிருந்து தப்பித்
தம் திணைக்கள அலுவலர் பொருட்டு எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல்
இருக்குமோ ? இருப்பது ஐயமே. இஃது ஒரு சந்தர்ப்பத்திலேயே இயலக்
கூடியதொன்றகும். சட்டசபை அங்கத்தவர்களிடையே வளரக்கூடிய ஆட்சி
முறைபற்றிய பிரச்சினைகள், வழிமுறைகள் ஆகியவற்றை நன்கு அறிந்த
அறிவொன்றினலேயே இத்தகைய தலையீட்டினைக் குறைக்கலாம். நாட்
டிலே மருத்துவத்துறை, விவசாயத்துறை, சமூகசேவைத்துறை ஆகிய
வற்றில் ஈடுபட்டிருக்கும் பல நிறுவனங்களை நாம் சென்று பார்த்திருக்
கிருேம். இவற்றைச் சட்டசபை அலுவல் பற்றற்ற உறுப்பினர்கள் பன்முறை
யும் பாதகமான முறையில் கண்டித்திருக்கின்றனர். ஆயினும், இந்நிறு
வனங்களிலுள்ள, வந்து பார்ப்போருக்குரிய பதிவுப் புத்தகங்களில், அவர்
கள் நிறுவனங்களை வந்து ஆய்ந்து பார்த்ததற்கு எற்ற, யாதாயினும் ஓர்
அடையாளத்தையும் நாம் காணவில்லை. இதை மேலும் நாங்கள்
உசாவிப் பார்த்தபொழுது, அவர்களிடம் அத்தகைய வழக்கம் இருந்ததாக
வும் தெரியவில்லை. ஒரு சட்டசபை அங்கத்தினர்க்குப் பல அலுவல்கள்
இருக்கும். நேர்முகமாக ஒரு நிறுவனத்திற்குச் சென்று பாராமலே
குறைந்த அறிவுடன் ஓர் அலுவலைத் தாம் எடுத்துக் கூறவில்லை என்று
உறுதி செய்யக்கூடிய வேறு வாய்ப்புக்கள் அவர்களுக்குள. அவர்கள் வேறு
விதங்களில் அந்நிறுவனங்களைப்பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள
லாம். ஆயினும், எவ்விதமான அமைச்சு முறையிலமைந்த அரசாங்கத்
திற்கும், அமைச்சோடமையா உறுப்பினர், அலுவலகங்கள் மேற்கொண்
டுள்ள முயற்சிகளை அறிந்து, உண்மைச்செய்தி பெறுவதற்கு வாய்ப்பு
அளிக்காமல் இருப்பது, அவ்வளவு ஒரு நல்ல பண்பு அன்று. இன்னும்,
இவ்வமைச்சு முறை, அரசாங்கம் இப்பொழுதுள்ள யாப்பு முறையிலிருந்து
சிறிது முன்னேறி, இவ்வலுவலகங்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்களில்
அத்தகைய பொறுப்பினை எடுத்துக்கொள்வதற்கு, அவற்றேடு மிக்க
தொடர்பு பெற்றவர்களை ஊக்கும் இயல்புடையதென, நாம் இங்கு சொல்
லல் வேண்டும். இதை நாம் வேறெரு முறையில் சொல்வோமானுல் சட்டசபை அங்கத்தினர்கள் அறிவில்லாக் கண்டனங்களையும் குறிப்புக்களையும்
குறைத்துக்கொள்வதற்கு ஏற்ற அமைப்புக்கள் ஒர் அமைச்சு முறையில்
இல்லை என்றே நாம் சொல்லல் வேண்டும். இதனற்போலும், தீவின்
அரசாங்கத்தோடு இலங்கையரைப் பெருமளவு தொடர்புபடுத்திக்கொள்ள
வேண்டுமென்ற கொள்கைக்கு இணங்கியவர்களும், இலங்கை அமைச்சர் களை, அலுவலகங்களின் அமைச்சர் தலைவர்களாக நியமித்தால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அது பெரும் அநீதியை விளைவித்ததாகும் எனச் சொல்கின்றனர்.

5.
ஆணைக்குழு அமைச்சுக்கள்
இத்தகைய எண்ணங்களாலேயே பிரபலமான மூனறு சட்டசபை அங்கத் தினர் வெவ்வேறு அரசியல் நோக்குக்கள் கொண்டவராயிருந்தும் ஆக்கப் படவேண்டிய அமைச்சுக்கள் ஆணைக்குழுவோடு இயைவுபட்டனவாய் அமைக் கப்படவேண்டுமென்று கூறினர்கள். அதாவது, ஒவ்வோர் அமைச்சரும் சட்டசபையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு, மூன்று தோழர்களிட மிருந்து உதவிபெற வேண்டுமென்பதாகும். இவ்வெண்ணத்தை நன்கு கவனித்தல் அவசியமாகும். ஆய்வின் பொருட்டு இவ்வமைச்சுக்கள் எண் ணிக்கையில் ஐந்து என எடுத்துக்கொள்வோம். இவ்வேற்பாட்டின்படி இவற்றில் 15, அல்லது 20 பேர் சேரவேண்டியிருக்கும். இக்குழுக்கள் விரிவுடையனவாயிருந்தால் சில வேளைகளில் இவ்வெண்ணிக்கை கூடல் வேண்டும். இவர்கள் சேர்ந்து ஓர் அரசாங்கக் கூட்டாக அமைதல் கூடும். இவர்கள் வேறு மற்றைச் சபையிலுள அலுவலர்களுடன் சேர்ந்து சட்டசபை ஏற்பாடுகளை ஊக்கும் இயல்பினராயும் அமைவர் ; அமைந்து ஆட்சிமுறை அலுவல்களை சட்டசபை அங்கத்தினர்களுக்கு எடுத்து வெளியாக்குபவர்க ளாயும் ஆகிவிடுவர். இஃதன்றியும், இத்தகைய கூட்டானது அமைச்சர்கள் யாதுமொரு காரணத்தினல் மறைந்தபின் நல்லமைச்சரைத் தரக் கூடிய ஒர் அனுபவத்தானமாகவும் விளங்கும். இன்னும், இதில் அங்கம் வகிப்பவர்களுக்கு நற்பேருே ஊதியமோ கிடைக்குமெனில் இக் கூட்டில் சேர்வது அவ்வுறுப்பினர் தம் நற்சேவைக்கு மக்கள் மதிப்பைப் பெற் றதையொக்கும். இன்னும் மேலாக, துணையாக நின்று நீதி செலுத் திய தோழர்களின் பாதுகாப்பினுலும் ஆதரவினலும், அமைச்சரானவர், சட்டசபையில் ஏற்படுகின்ற கண்டனங்கட்கு நிலைநிற்கக்கூடிய வல்லாண்மை உடையவராயும் விளங்குவர். இன்னும், குறித்த ஒரு சாதி, இனம், மதம் ஆகியவற்றின் நலத்தைப்பற்றி எடுத்துரைக்கும் ஒரு குரலானது தொல்லை தரக்கூடிய வகையில் அமைந்திருந்தால், இவ்வமைச்சரானவர் இலகுவில் பொறுப்பை வேறிடத்தில் சுமத்தக்கூடியவராயுமிருப்பர்.
ஆயினும், இக்கருத்துக்கள் முதன் முறையாக நல்ல கவர்ச்சிகரமான வையாக இருந்தாலும் அவற்றை நாம் எங்கள் அனுபவத்தைக் கொண்டு ஆய்ந்த அளவிலே, அவை சட்டசபைகளின் உண்மைச் செயன் முறைகளோடு இயைபுடையனவுமல்ல எனக் கருதுகிறேம் ; இன்னும், சிறப்பாகச் சட்ட சபைகள், தொழிலாற்று நிறுவனங்களுடன் கொண்ட தொடர்புடனும் அவை இயைபுடையனவல்ல. இக்குழுக்களிலிருந்து, முதன் முதலாக வெளிக் கிளம்பிய ஒரு பூட்கையானது, எல்லாக் குழுக்களின் உறுப்பினர் களினதும் ஆதரவைப் பெறுமாயின், அஃது அவர்களிடையே ஒருபொழு தும் நிகழ முடியாத ஒற்றுமையை நாம் எதிர்பார்த்ததையொக்கும். எல்லோ ரும் சேர்ந்து இணைந்த ஒரு முறையிலே, இந்த 20 உறுப்பினரும் மற்றை அலுவல் பற்றுடைய உறுப்பினருடன் சேர்ந்து, தாம் எடுத்துக்கொண்ட நடவடிக்கையை உரையாடித் தீர்த்து வகுத்துக்கொள்ள நாடியிருந்தாலன்றி

Page 32
52
ஒருபொழுதும் நடக்கமுடியாத ஒர் ஒற்றுமையை ஒருவர் எதிர்பார்ப்பதாக முடியும். பிரித்தானியப் பாராளுமன்றம், மற்றை ஆணிலப் பாராளுமன்றம் ஆகியவற்றில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப்பற்றி உரையாடுவதற்கு இத் தகைய கூட்டங்கள் நடைபெறுவதுண்டு. ஆனல், குறித்த சில முக்கிய விதிகளுக்கியைய, ஒருங்கே பிணிக்கப்பட்ட ஓரியல்புடைய குழுவினர், சட்ட சபையிலுள்ள மற்றைக் குழுவினருடைய விதிகளிலிருந்து மாறுபட்ட கொள்கைகளுடன், தங்கள் கூட்டத்தை இங்கே நடாத்துகின்றனர் என்பதை நாம் மனத்தில் கொள்ளல் வேண்டும். இத்தகைய ஒரு பிணிக்கும் தளையில்லா விட்டால், மேலோதப்பட்ட குழுக்கள் இப்பொழுதுள்ள நிதிக்குழுவை நிகர்க்கும். எனவே, இப்பொழுதுள்ள நிதிக்குழுவுக்கு மாருகக் கூறப்படும் நியாயங்களெல்லாம் இதற்கும் பொருந்துவனவாகிவிடும். ஏனெனில், அத னுடைய நடவடிக்கைகளும் புறம்பானவையாக நடக்கும் ; அங்கு அமைச்சு சாரா அலுவல் பற்றற்ற உறுப்பினரே மிகுதியாக இருப்பர் என்க. இஃது 20 அல்லது 25 உறுப்பினர் கொண்ட மந்திரக் குழு ஒன்றினை நிகர்க்கும். இதன் பருமன் இத்தகைய குழுக்களுக்கு அமைந்த பருமனிலும் உயர்ந்த தாயிருக்கும். சட்டசபையிலே ஓர் அரசாங்கக் கூட்டொன்றை அமைப்பதற்கு, உரையாடல்களிலிருந்து எழும் நடவடிக்கையானது பெரும்பாலும் ஒரு மனதான ஆதரவுடன் எழுந்ததாயிருத்தல் வேண்டும்.
இரண்டாவதாக, குறித்த ஒரு நடவடிக்கையின் பொருட்டு, ஓர் அலுவ லகத்தைப் பரிபாலிக்கின்ற ஒரு குடியியற் சேவையினருடைய, அல்லது பொது உத்தியோகத்தினருடைய நோக்கிலிருந்தும், நாம் இக்குழுக்களை அவதானித்தல் வேண்டும். மேலாட்சிப் பீடத்து நோக்கிலிருந்து நாம் நோக்குகின்றபொழுது, நாலுபேர் சேர்ந்த ஒரு குழுவிலிருக்கின்ற அதிகார மானது தனியோர் அமைச்சரில் இருக்கின்ற அதிகாரத்தையே ஒக்கும் என்று சிலர் வாதாடலாம். சகாயம் பெறும் ஓர் இயல்பிலே, மேற்கூறிய வகை மற்றையதினும் வாய்ப்புடையதென்று முன்னரே நாம் கூறி யுள்ளோம் ; ஆனல், நிலையான உத்தியோகத்தர் ஒருவர் சட்ட சபையில் தாமெடுக்கும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கச் செய்யவேண்டுமென்று நினைக் கின்றபொழுது, நாலுபேர் சேர்ந்த குழு உவப்பில்லாததாய் இருப்பதை நாம் காணலாம். அலுவலக அளவின் ஆராய்ச்சியோடமையாது மேலா யமையும் ஆராய்ச்சிகளின் பயன், எடுத்துக்கொண்ட நடவடிக்கையை ஆரா யும் குழு, இறுதியாக எந்த ஆராய்ச்சிக் குழுவிற்காக அந்தக் குறித்த நடவடிக்கையை ஆராய்கின்றதோ, அதற்கு ஒர் உட்கரு போல இயங்கலிலே தங்கியுள்ளது. இங்கிலந்திலும், மக்கள் சபைக் குழுக்கள், வெவ்வேறு பகுதியினர்க்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் இயல்புடையனவாக இருத்தல் வேண்டுமென்பது ஒரு கட்டாயமான வழக்காகும். ஆனல், இத்தத்துவத்தை மிகுந்த பொறிநுட்ப இயல்புபற்றிய அலுவல்களிலே புறக்கணிக்கலாம். அத்தருணங்களில் துறைபோகிய வல்லுநர்களின் தீர்ப்புக்களை இக்குழுக்கள் பெறுவதுண்டு. ஆகவே, மிகுதியான வகைகளில் நாலுபேர் சேர்ந்த குழு பிரதிநிதித்துவத்தில் குறைபாடுடையதாயமையும்.

5S
இக்குழுக்களிலே கடமை பார்க்கும் அலுவல் பற்றற்ற சட்டசபையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதால் சிறிது நலமுண்டு எனச் சிலர் வாதிக் கின்றனர். ஏனெனில், சட்டசபையிலுள்ள முழுப்பெயரையும் பயன்படுத் தாமல் விட்டால் எதிர்க்கட்சி வளர்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கு மென்பர் அவர். இலங்கையில், மரபுமுறையில் அமைந்த பாராளுமன்ற அரசாங்கம் வளருமோ என்பதுபற்றிய எம் ஆய்வுகளில் நாம் இதுபற்றிய குறிப்புக்களைத் தருவோம். இத்தகைய ஒருமுறை இங்கு வளரக்கூடு மாயினும், இக்குழுக்களில் சேவை செய்வதற்காகச் சட்டசபையிலிருந்து பிரபலமான உறுப்பினர்களை நாம் தெரிந்தெடுத்துவிட்டால், அங்கு மிகப் பலம் குறைந்த ஆட்சித்திறன் குறைந்த ஒர் எதிர்க்கட்சியே யுண்டாகக் கூடும். அதனல், அக்கட்சி வேறேர் அரசாங்கத்தை அமைப்பதற்கேற்ற ஆற்றல் இல்லாததாயும் போய்விடக்கூடும்.
ஒரு மேற்சபை
இலங்கையரும் ஐரோப்பியரும் உட்பட்டசிலர், புதிய யாப்பு முறையில் இருகூடச் சட்டசபையை எற்படுத்த வேண்டுமென்று எடுத்துரைத்தார்கள். இது மேற்கூறிய குறிப்புரைகளிலிருந்து நேரே பெறக்கூடியதன்றயினும் அவற்றேடு சார்புடையதாகும். கெடுமதியால் வரும் சட்டங்களையும் அவசரமாக நிலைநாட்டப்படும் சட்டங்களையும் தடுப்பதற்கு ஆள்பதியின் அதிகாரத்திலே தனிநம்பிக்கை வைத்திருப்பது புத்தியன்றென சில இலங்கையர்கள் சாட்சி கூறினர்கள். குறித்த ஒரு வரையறை காலத் திற்கே அதிகாரம் பார்க்க வேண்டுமென்று நியமிக்கப்பட்ட ஆள்பதி நாட்டைப்பற்றிய நல்லறிவு கொண்டிருக்கவும் மாட்டார்; தம்முடைய அதிகாரங்களைத் தாமே உபயோகிப்பதற்கு எற்ற உறுதியும் தன்னம்பிக் கையும் கொண்டிருக்கவும் மாட்டார். இன்னும், இப்பொழுதுள்ள யாப்பு முறையிலே, சட்டசபையில் உள்ள அலுவல்பற்றற்ற உறுப்பினர்களின் விருப்பு வெறுப்புக்களை நல்லுறுதியுடன் தடுப்பதற்கேற்ற தைரியமோ நம்பிக்கையோ அரசாங்கம் பெற்றிருக்கவில்லை ; திட்டமாக அறியப்பட்ட நாட்டின் நோக்குக்களுக்கு மாறக இச் சட்டசபை நடந்துகொண்ட நேரங்களிலும், அரசினரால் அவர்கள் போக்கைத் தடைசெய்ய முடியாமல் இருந்தது. இன்னும், இரண்டாவது கூடம் ஒன்றை அமைப்பது சட்டவாக் கத்திற்கு நன்முறையிலாய ஒரு தடுப்பினை உண்டாக்கும் , அரசாங்கத் திற்கு நல்ல ஊக்கினை அளிக்கும். ஒரு கூடத்தின் நம்பிக்கையிலும் நல்லெண்ணத்திலும் மட்டும் தங்கியிருக்காமல், நல்ல துணிவுடனும் உறுதியிான முடிவுடனும் அரசாங்கத்தைச் செயலாற்றவும் இஃது ஊக்கும். இன்னும், ஆள்பதி தலையிடும் சந்தர்ப்பங்களையும் மிகக் குறைத்துவிடும். இவ்வாறெல்லாம் எங்கட்குக் கூறப்பட்டது.

Page 33
இரண்டாம் கூடத்து உறுப்பினர்களை நியமிக்காது தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் சிலர் கூறினர்கள். ஆயினும், எத்தகைய தேர்வுத் தொகுதிகள் அமையவேண்டுமென்பதில் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. இன்னும், மேற்சபையானது ஒடுங்கிய ஒரு வாக்குத் தொகுதியில் எற்படுத்தப்பட்டதாய், கீழ்ச்சபையின் ஒரு படிவமாக இருக்கக்கூடா தென்பதை யாவரும் ஒத்துக்கொண்டனர். எனவே, மேற்சபையினுடைய அமைப்பானது தொழிற்படு முறையிலோ, தொழில் முறையிலோ அல்லது சமுதாய முறையிலோ அமைந்திருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டது. முந்திய அடிப்படையை எற்றுக்கொண்டால் சட்டமன்ற மானது மக்களின் எல்லா வகுப்பினர்களுக்கும் ஏற்ற ஒரு பிரதிநிதித்துவ மன்றமாக அமைதல் கூடும். பிந்திய முறை கீழ்ச்சபையைத் தனிப்பட்ட நிலவழி முறையிலமைந்த ஒரு சபையாக்கி, சிறுபான்மைச் சமுதாயத் தினர்க்கு நாட்டின் சட்டசபைகளில் ஒரு நிரந்தரமான இடத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இலங்கையின் நிலைமையை நாங்கள் நன்கு ஆராய்ந்தபின், சமுதாய முறையிலமைந்த பிரதிநிதித்துவ மானது, இந்நாட்டின் அரசமைப்பில் ஒரு பொல்லாத புழுப்போன்ற தென்றும், அது மக்களின் சிறந்த ஆற்றலை மிகமிக அரித்து விடுகின் தென்றும், மக்களிடையே சுயநலம், நம்பிக்கையீனம், பகைமை ஆகிய யாவற்றையும் வளர்த்து அரசியல் சார்புடைய மனவெழுச்சியை வளரவிடாது நஞ்சூட்டிவிடுகின்றதென்றும், மக்களிடையே ஒரு கூட்டுச்சமுதாய ஆர்வத்தையோ, நாட்டின உணர்ச்சியையோ வளரவிடாது திறம்படத் தடுத்துவிடுகின்றதென்றும், நாங்கள் எவ்வித தயக்கமுமின்றி ஒரு முடிவுக்கு வந்தோம். எனவே, மக்களைப் பிளவுபடுத்தும் இயல்போடு யாப்பு முறையின் சிறந்தவோர் இயல்பாக சமுதாயவழி முறையானது யாப்பில் அமைந்துவிட்டாலோ, இந்த நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரை யும் ஒருமையுறவிலும், தாங்கள் குடிமக்களாக அமைந்த நாட்டிற்குத் தாங்கள் கொண்ட பொதுக் கடமையை அறியும் உணர்விலும், பிணிக்கும் ஒரு விதமான கட்டுக்கோப்புமில்லாமல் போய்விடும். இதை நாங்கள் அடுத்த அதிகாரத்தில் குறித்துள்ளோம். கீழ்ச்சபையில் இம்முறையை நீக்கிவிட்டு மேற்சபையில் அதைப் பேணுவதில் என்ன பயனே நாம் அறியோம் !
தொழிற்படு முறையிலோ, தொழில் முறையிலோ தேர்ந்தெடுக்கும் முறை வகுப்புவாத முறையிலும் பாதகத்திற் குறைவாக இருக்கும். ஆயி னும், மக்களிடையே உள்ள இயற்கையில் அமையாத பல பிளவுகளை நிரந்தரப் படுத்திவிடக்கூடும். இன்னும், வெவ்வேறு வகுப்பினரையும் தனிப்பட்ட பற்றுக்களில் வேரூன்றியிருக்கச் செய்து ஒற்றுமையாக்கும் இயல்புகளைத் தடைசெய்துவிடும். இந்த ஒற்றுமையாக்கும் இயல்புகளை ஒவ்வோர் அரசறிஞரும் போற்றிவைப்பதற்குக் கடமைப்பட்டவராவர். எவ்விதமாகத் தான் இந்தப் பிரச்சினையை நாம் ஆராய்ந்தாலும், இரண்டாம்

55
கூடமொன்றை நாம் எவ்வளவுதான் குறைந்த அதிகாரத்தோடு அமைத்தா லும், கீழ்ச் சபைக்குள்ள அதிகாரத்திலும் குறைவான அதிகாரத்தை அது கொண்டிருந்தாலும், அச்சபை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி களுக்குப் பொறுப்பளித்தலை பெருமளவில் இல்லாமற் செய்துவிடுமென்க. அரசியல் அதிகாரத்தை மாற்றும்பொழுது, அதை நன்முறையில் செயலற்றதாக்குவதற்கு வேண்டிய வழிவகைகளையும் ஆராய்ந்துகொண்டு, அதை மாற்றுதல் வேண்டுமென்று எடுத்துரைப்பது எவ்வளவு முரண் Lu TGĐ fo அறிவீனமுமாகும் ? எனினும், நிலவழி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்முடைய நாட்டவர்கள் ஒருங்குகூடி எடுத்துரைக்கும் உறுதிமொழிகளை, வணிகத்துறைக்கும் தொழிற்றுறைக்கும் பிரதிநிதிகளாக வந்த சிலர், தாங்கள் வேண்டியவாறு தடுத்துவிடுவதற்குரிய நிரந்தரமான உரிமையை அளிப்பது பொருந்தாத செய்கையாகும்.
நாங்கள் கூறிய விமரிசங்களே மேற்சபை வேண்டாம் என்பதற்குப் போதியனவாயுள்ளன. இவ்விமரிசங்களேவிட, இலங்கைக்கு ஒரு மேற் சபை வேண்டுமென்று எடுத்துரைக்கும் வாதங்கள் நிதிவழியாலும் இயற்கை முறையாலும் பொருந்துவனவல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு, மக்கட்டொகையும் சிறியது. இங்கு கற்றறிந்தவர் முக்கியம் வாய்ந்தவ ராயினும் சிலரேயுண்டு. இதுவரை வாக்குரிமை இரண்டு இலட்சம் மக்களுக்கே கிட்டியுள்ளது. இவர்கள் சனத்தொகையில் 4 சதவீதத் தினரே. நாட்டு மக்களிலுள்ள படித்த சமுதாயத்தினருக்குள்ளே உள்ளவர்களுக்கு அவர்கள் நேரத்தையும் ஆற்றலையும் கவர்ந்த பல அலுவல்கள் உண்டு. எனவே, அவர்களிற் சிலர் கீழ்ச்சட்டசபைக்குப் போகவேண்டிய வழிவகைகளைத் தடைசெய்யாமல் மேற்சபைக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அரியதொரு செயலாகும். நாங்கள் இவ்வறிக்கையில் பின்னேரிடத்தில், இன்னுமொரு நல்ல காரணத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கூறியுள்ளோம். சட்டசபையில் இப்பொழுதுள்ள எண்ணிக்கை 49 ஆகும் ; இஃது 68 ஆக உயர்த்தப்பட வேண்டும். எனவே, நாம் முன்கூறிய நியாயம் இன்னும் பலமாகின்றது. ஆகவே, இப்பொழுதுள்ள சட்டசபைக்கு உறுப்பினராக வந்திருப்பவரோடு ஒத்த தகுதியுள்ள உறுப்பினரைத் தெரிந்தெடுக்கும் ஒரு வாய்ப்பினை மட்டுப்படுத்தக்கூடிய எவ்வித நடவடிக்கையையும் நாங்கள் மிகவும் உறுதியுடன் எதிர்க்க வேண்டியதாகின்றது. ஏனெனில், இச்சட்ட சபைக்கு வருகிற உறுப்பினர்களின் தகுதி, தன்மை ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளாமல் மேற்சபையொன்றை நிறுவுதல் இயலாததாகும் என்க. எனவே, இவ்வாறு ஒரு சபையை ஏற்படுத்தல் இந்நாட்டுக்கு யாப்பு முறையிலமைந்த ஒரு போகப் பொருளாகும். இதை நாடு தாங்காது.
!-ஜே. என். பி. 22574 (3/60)

Page 34
'56
மேற்சபை எப்பொழுதும் முரண்பாட்டிற்குரிய ஒரு வித்தாகும். எனவே, அதை வேண்டுமென்று எடுத்துக் கூறுவோர் அதற்கு அளிக்கப்பட வேண்டிய அதிகாரத்தை நன்முறையில் பரிசீலனை செய்யவேண்டும். எனவே, வரிவிதிப்பு, நிதி ஆகியவற்றேடு இயைந்த நடவடிக்கைகளை அச்சபை தொடக்கி, திருத்தி, ஒதுக்கக்கூடிய அதிகாரங்களை அச்சபைக்குக் கொடுத்தல் செயன்முறையில் இயலாததொன்றகும். எனவே, பொதுப் பூட்கைகளை ஆராய்தல், நிதி நடவடிக்கைகளைத் தவிர்ந்த மற்ற நடவடிக்கை களைப் பொதுவாக ஆராய்தல், தீர்மானித்தல், திருத்தல், எற்றுக் கொள்ளல், ஒதுக்கல் ஆகிய அலுவல்கள் அளவிலேயே அதனுடைய வினை அடங்கியிருக்கும். ஆயினும், இப்பொழுது இலங்கையில் நிலவிவருகிற ஒரு தனிநிலையான சூழலிலே இவ்வதிகாரங்கள் வகுப்புவாரி முறை யிலமைந்த நலன்களே அமைவுபடுத்தவோ, அல்லது அவசரச் சட்டங்களைத் தடுக்கவோ போதியனவாயிருக்குமா என்பது ஐயத்திற்குரியது. ஏனெனில், பொதுவாக சிறுபான்மைச் சமூகத்தினரின் பயம், நிதி முறையில் பாரபட்சம், ஒரம் என்பவற்றைப்பற்றியதாகவே உள்ளது. இன்னும், அவசரச் சட்டம் என்பதைப்பற்றிக் குறை கூறுவோர்கள் பெரும்பாலும் வரி நிதிச் சட்டங்களை மனத்தில் கொண்டே அவ்வாறு சொல் கின்றர்கள். எல்லா வகையிலும் இதுவரை எவ்வாறு ஆள்பதி, அர சுச் செயலாளர் ஆகியோரின் அதிகாரம் பாதுகாப்பாயிருந்ததோ, அவ்வாறேயிருக்கும். ஆகவே, மேற்சபையானது செய்யக் கூடியது யாதெனில், ஒரு பலவீனமான, ஆனல், உறுதியான ஒரு மறுப்பைத் தெரிவித்துக் கொள்வதேயாகும். எனவே, நிதி அலுவல்களில் ஒரு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் பங்கினை மேற்சபைக்குக் கொடுக்கவேண்டு மென்ற ஒரு கேள்வி எழும். அல்லது நாட்டில் அரசியல் வளர்ச்சிக்கு இச்சபை ஓர் இடராக இருக்கின்றதென்னும் எண்ணம் உண்டாகக்கூடும். எனவே, இதை நிறுவுவதால் உடனே மக்களிடையே பலவித வேற்றுமைகள் உண்டாகக்கூடும்.
அடிப்படைக் கருத்துக்கள்
கட்சிமுறை இல்லாமை
இணங்கு மனப்பான்மை காணப்படினும் எங்களுக்குச் சமர்ப்பிக்கப் பட்ட அரசியல் முறைகளுள் ஒன்றும் வேலை செய்யாது என்று நாம் சொல்லல் இயலாது. ஆயினும், ஒவ்வொரு முறையிலும் அதற்குரிய சில இயல்பான இடர்ப்பாடு உள என்பதை நாம் எடுத்துக் கூறியுள் ளோம். அவை யாவும் மரபு வழி வந்த பாராளுமன்ற முறை அர சாட்சிக்குச் செல்கின்ற வழியிலே உள்ள வளர்ச்சிக்கேற்ற இடர்ப்பாடு களை ஒரளவுக்குக் கொண்டனவாயுள்ளன. ஆகவே, இங்கு சில அடிப்

5.
படைக் கருத்துக்களை நாங்கள் எடுத்துக் கூற விரும்புகின்றேம். இவற்றி னுடைய முக்கியத்துவத்தை எங்கள் முன் சான்று சொன்னேருள் பலர் அறியவில்லைப்போல் தோன்றுகின்றது. : . . . . .
பாராளுமன்ற முறை அரசாங்கக் கட்சிகளின் கூட்டு முயற்சிகளிலேயீே தங்கியுள்ளது. இக்கூட்டு முயற்சியானது தனிப்பட்டோர் முயற்சியிலும் வேறன இயல்புடையதாகும். இக்கட்சியின் அங்கத்தினர்கள் ஒரு பொதுப் பூட்கையில் ஒருமனம் கொண்டவராய்த் தம் கட்சியின் நோக்கிற்கேற்ப ஒருங்கு தொழில் ஆற்றுபவர்களாய், ஒருவர்க்கொருவர் பற்றுறுதி கொண் L— 6 10 тиШ, தம் கட்சியின் முடிவுகளுக்கும் பற்றுறுதி கொண்டவராய், முக்கிய பிரச்சினைகளில் பாராளுமன்றத்திலே ஒர் ஐக்கிய முன்னணி யொன்றைப் பேணுபவராயிருத்தல் வேண்டும். இக்கட்சிகளின் வலுச் சமனே அரசாங்கத்திற்கு ஒரு நிலைபேற்றைக் கொடுத்து அடிக்கடி நிகழும் அரசாங்க மாற்றங்களைத் தடைசெய்யக்கூடும். இக் கட்சிமுறை அரசியலே வாக்காளர்களுக்கு அரசியல் அறிவளிக்கக்கூடியதாகும். இக்கட்சி முறையே சூழ்ச்சிகள், மறைமுகமான பேரங்கள், மறைமுக ஒப்பந்தங்கள் ஆகிய வற்றை மிகவும் குறைக்கக்கூடியது. இப்பண்புகள் தனிப்பட்டவர்களோ, சிறு சிறு கட்சிகளோ நிறைந்த ஒரு பாராளுமன்றத்திலே அதன் ஒவ் வொரு முடிபுக்கு முன்னரும் முக்கியமாக ஏற்படக்கூடிய நிகழ்ச்சிக ளாகிவிடும்.
இப்பொழுது, இலங்கைச் சட்டசபையிலே கட்சிகளுக்கிடையில் ஒரு வலுச் சமனை உண்டாக்குவதற்கேற்றதாக அரசியல் நிலைமை வளரவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி பெரும்பாலும் தம்முடைய இனத் திற்கோ, சமுதாயத்திற்கோ நலம் செய்பவர் என்று அடிக்கடி தம்மைத் தாமே கருதிக்கொள்ளக்கூடும். குடியாட்சி அரசாங்கமும் மனித இயல் பும் அவை தம் சுய இயல்பைக் கொண்டிருக்கும் வரைக்கும் இது நடக்கக் கூடியதொன்றகும். இவ்வாறு இப்பிரதிநிதி செய்கின்றபொழுது, அத் தகைய மனப்பான்மை கொண்ட ஒர் அலுவல் பற்றற்ற பிறிதோர். உறுப்பினரைப் போலவே தாமும் சமுதாயக் குழுவிலோ, ஒரு சாதிக் குழு. விலோ சேர்ந்திருப்பதைக் காணலாம். சிலவேளைகளில் இத்தகைய கூட்டங் களே உருவாக்கிய காரணங்கள் திடீரென எளிதில் செயற்படாமல் இருக்கவும் கூடும். அப்பொழுது, இத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியானவர் மீண்டும் தம்முடைய சக உறுப்பினர்களிலிருந்தும் புறம்பான ஒருவராகத் தம்மைக் காணுவார்; அல்லது அரசாங்கத்தைத் தாக்குகின்ற ஒரே நோக்கத்தில் அவர் களோடு தொடர்பு கொண்டவராய்த் தம்மை அவர் காண்பார். சட்டசபையின் நடவடிக்கைகளை ஆழ்ந்து கவனிக்கும் ஒருவர் பிரிட்டிசுப் பாராளுமன்ற அரசாங்க முறைகளெனப் பொதுவாக மக்கள் கருதுகின்ற முறையிலே, பொருளாதார முறை, யாப்பு முறை, அரசியல் முறை ஆகியவற்றுள் யாதாயினும் ஒரு முறையாலேனும் உறுப்பினர்களிடையே ஒரு பிரிவு ஏற்பட்டிருக்கின்றதோ என்பதைக் காண்பது இயலாததொன்றயிருக்கும்,

Page 35
58
பொதுவாக அறியக்கிடக்கும் பிரிட்டிசுப் பாராளுமன்ற முறையென்று நாம் இங்கு வரையறுப்பது ஏனெனில், அதைப்பற்றி நன்கு அறிந்த வர்களிடையும் பெரிய பிரித்தனிலே பாராளுமன்ற ஆட்சிமுறை எவ் வாறு எதிர்காலத்தில் நடைபெறும் என்ற ஒர் ஐயமுண்டு ஆதலின். உதாரணமாக, இரு கட்சி முறையிலிருந்து மூன்று கட்சி முறைக்கு இந்த அரசாங்க முறை மாறியது அரசாங்க முறையைச் செயற்பட நடத்துவதில் ஓர் இடரைக் கொண்டுவந்துவிட்டது; இம்முறை முந்திய முறைக்கு இயைந்ததாக வளர்ந்து வந்ததாகும். பல பிரிவுகள் இருப்பதாலும் திட்டமான கட்சிப் பிரிவுகள் இல்லாமையாலும் பழைய முறையிலமைந்த பிரிட்டிசுப் பாராளு மன்ற அரசாங்க முறையைக் கடைப்பிடிப்பது மிக்க இடரைத் தரும்.
அலுவல் பற்றற்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்புக் கொடுக்காமல் இருந் ததால், இலங்கையிலே அரசாங்கக் கட்சிகள் இல்லாமல் போயின என்று சிலர் சொல்கின்றர்கள். எனவே, பொறுப்பு அளித்தால் உடனே கட்சி முறை ஏற்படுமென்றும் அவர்கள் சொல்கின்றர்கள். இந்த நியாயத் தில் ஒரளவு வன்மையுண்டு. இலங்கையிலே கட்சிகள் உண்டாகின் அவை தம்முடைய தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றிற்கு, நாட்டினப் பூட்கை யிலே அமைந்த பல்வேறு பொருளாதார அரசியல் வேறுபாடுகளையே ஆதாரமாகக் கொள்ளுமென்றும், சாதியினப் பிரிவுகளைப் பொருளாகக் கொள்ளா என்றும் கருதுவதற்கேற்ற அறிகுறிகள் சிலவே உண்டு. ஆனல், இதற்கு மாறன நிலைமையோ உண்டு. எனெனில், வகுப்பு முறைப் பிரதிநிதித்துவம், இன வேறுபாடுகளைப் பலப்படுத்திவிட்டது. சாதி வேறுபாடுகளோ இன்னும் தீவிரமானவை ; ஆண்டு பல கழிந்தும் அவற் றில் உள்ள கவர்ச்சி தளர்ந்து விடவில்லை. இத்தகைய பிளவுகளும் பிரிவுகளுமே இனிமேல் வரும் கட்சி முறைகளுக்கு அடிப்படையாயமையும் என்ற ஒரு பயம் எங்களிடம் உண்டு. எனவே, இன முறையிலோ, சாதி முறையிலோ இக்கட்சிகளை அமைத்தல் இந்நாட்டின் பெருநல னுக்குப் பெரும் இடையூறை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே, இப்பொழுது அண்மையில் ஒரு கட்சிமுறை உண்டாகும் என நம்புவதற்கு இடமில்லை. கட்சிமுறை அமைந்தால் தவிர்க்க முடியாத வகையில் அதனல் சாதியும் இனமும் போற்றப்படுமென்பதற்குக் காரணங் கள் பல உண்டு. எனவே, பழைய மரபுமுறையிலேயே அமைந்த பாராளு மன்ற அரசாங்கம், திறம்படச் செயற்படுவதற்கு இடையூறயிருக்கும் என்பதற்கு பல நியாயங்களுண்டு. கட்சி முறையில்லாத இயல்பு இப் பாராளுமன்ற முறையை வெற்றிகரமாக நடத்துவதற்கு இடையூறக இருக் கும் சாதியின முறையிலமைந்த கட்சிகளோ, அவ்வாறு இலங்கையில் தோள்லுகின்றபொழுது இந்நாட்டின் சமூக அமைப்பில் சொல்ல வொண்ணு இடரை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

59
தற்காலக் குடியாட்சி முறை சார்ந்த சில இயல்புகள்
இங்கு நாங்கள் வேறெரு புறம்பான கருத்தினையும் சொல்லல்வேண்டும். கட்சி முறையிலமைந்த அரசாங்கம் நாம் கருதுவதிலும் திறமாக நடக்கக் கூடியதாக இருப்பினும், குடியாட்சிப் பிரியர் வெறுப்புக்கொள்கின்ற சில இயல்புகளுக்கு, இலங்கையர், தாமும் அடிமையாக இருப்பதை வெறுக்க வும் கூடும். அவ்வாறு குடியாட்சி இயல்புடைய சில மக்கள் சில பண்புகளை வெறுத்துமுளர். பொதுமக்களின் எண்ணத்தை இன்னும் நல்ல முறையில் பிரதிபலிக்கக்கூடியதான வகையில் பாராளுமன்ற முறையைச் சீர்திருத்த முடியாதோ என்று காண்பதற்குப் பெரிய பிரித்தனிலுள்ள அரசியல் கட்சிகள் பல ஆராய்ச்சிகள் நடாத்தி வருகின்றன. பாராளுமன் றத்தின் ஒவ்வோர் அமர்வுக்கும் பின்னர், அமைச்சர் குழுவுக்கு மக்கள் சபை கொண்டுள்ள அடிமைத்தனம் மிகுந்து வருகிறது என்றும், எடுத்தா 1ாயப்படும் பல கேள்விகளுக்கும் சபையிலுள்ள உறுப்பினர்கள் தாம் வேண்டியவாறு வாக்களிக்கக் கூடிய உரிமையை இழந்துவருகின்றன ரென்றும் பலர் குறை கூறுகின்றனர்.
தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆளுமை அறவும், அவர் அடிமைப் படுதலும், அண்மை ஆண்டுக் காலங்களிலே உவெசுமினித்தரிலே எல்லோரும் அறியக்கூடிய நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இது பிரிட்டிசுப் பாராளுமன்றத்தில் நடக்கும் ஒன்றன்று. பாராளுமன்ற நிறுவனங் களிலோ, மற்றை ஆலோசனைக்குரிய நிறுவனங்களிலோ, உள்ள தனிப்பட்டா னெருவனை நசுக்கிவிடும் இயல்புக்குமாருக அவன் கிளர்ச்சி செய்வதை உலகமெங்கும் நாம் காணலாம். சட்டசபைகளிலே தனிப்பட்ட ஒருவனின் அதிகாரத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஆராய்ச்சிகள் மற்றை நாடுகளிலே நடந்து வருகின்றனவாயினும், இத்தகைய சூழ்நிலையைப் பெரிய பிரித்தனில் மாற்றுவதற்கேற்ற திட்டமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும், இப் பொழுது இருக்கின்ற நடவடிக்கைகளில் உவந்த மாற்றங்கள் ஏற்படுமென் பதில் நமக்கு ஐயமில்லை. இலங்கையில் உள்ள அலுவல் பற்றற்ற வர்களின் ஆற்றல், திறன் ஆகியவற்றை நாம் போற்றுகின்றேம். டியூயினும், பழமையானதென்று மற்றவர்களால் ஒதுக்கப்படும் ஒரு முறைமையின் கீழ், அவர்களை அமைக்கவேண்டுமென்று நாம் எடுத்துரைப்பது கண்மூடித்தனமாகும். ஆளுனல், அதற்கு மாறக, இப்பொழுது நடைமுறையிலிருக்கின்ற பாராளுமன்றச் செயன்முறையில் அமைந்துள்ள சில குறைபாடுகள்பற்றிய அறிவை நாம் உளங்கொண்டு, யாப்பு முறையிலமைந்த ஒரு மறுமலர்ச்சி இயக்கம் எந்த வழியில் நம்மை ஊக்குகின்றது என்பதையும் உணர்ந்து, இலங்கைக்குத் தற்காலத்திற்குகந்த வகையிற் செயற்படக்கூடியதான, குடியாட்சி முறையிலமைந்த ஒரு முறையை அளிப்பதற்கு, நாங்கள் எங்களுடைய எடுத்துரைகளைக் கூறுவோம். இவ்வெடுத்துரைகளை பாராளுமன்ற முறையிலமைந்த

Page 36
60.
நல்ல பண்புகளைத் தம்மகத்தே கொண்டனவாய், அதனேடு இயைவான குறைபாடுகளினின்றும் நீங்கினவாய் இருக்குமாறே நாங்கள் இங்கு எடுத்துச் சொல்வோம்.
ஆட்சிமுறை பற்றிய பிரச்சினைகள் r.
இன்னும், இலங்கையானது அதனுடைய வரலாற்றிலே மிகவும் ஓர் இக்கட்டான காலத்தை அடைந்துள்ளது என்று எங்களுக்குத் தோன்று கின்றது. இலங்கையின் சமூகத்திலே, மானியமுறையிலமைந்த உறவு, குடும்பத் தொடர்பு, தனிப்பட்டோரின் தருமம் ஆகியவை கொண்டுள்ள பெரும் பங்கினலேயே சமூக முறையிலும் தொழிலியல் முறையிலும் சட்டங்கள் நாட்டில் எற்படாமல் இருக்கின்றன. உலகத்தில் எங்குமுண், டான புது வளர்ச்சி இப்பொழுது இலங்கையிலும் தோன்றியுள்ளது. இதனல், இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தனிப்பட்டோரின் ஈகையும் குடும்பங்களால் செய்யப்படுகின்ற ஈகையும், ஈடு செய்யா. இன்னும், கொழும்பு, கண்டிபோன்ற நகர்களின் பிரச்சினைகளை இத்தகைய தருமங்கள் தீர்த்துவைக்கா. இலங்கையானது இன்னும் தொழிலியல் நாடாக இல்லை ; இனிமேலும் அவ்வாறு ஆகு மென்பதுமில்லை. ஆயினும், மக்களிடையே சமூகநிலை வேறுபாடுகள் உள." வறியோர் சட்டம், தொழிலாளருக்கு உதவி, தொழிற்சாலைச் சட்டம், மக்கள் சமுதாயத்தில் குறிக்கப்பட்ட சிலருக்கு நல்ல மனையளிக்கும் சட்டம், பாடுபட்டுழைக்கும் தொழில்களைக் கட்டுப்படுத்தும் சட்டம், ஆரம்ப கல்விக்கு உதவும் சட்டம் ஆகியவை போன்ற சட்டங்கள் இந் நாட்டில் இல்லாததினலேயே சமூகத்திலே பெரிய பிளவுகள் உண் டாகியுள. இத்தகைய பிரச்சினைகளைப்பற்றி இலங்கைச் சட்ட சபையில் உள்ள சில உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகிறர்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இத்தகைய சட்டங்கள் சமூகத்திலே இல்லாத தினல் ஏற்படுகின்ற இழிவை, தங்களுடைய தேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டு துடைக்கும் வாய்ப்பை இப்புதிய முறையில் உருவாகின்ற யாப்பு. இலங்கை மக்களுக்கு அளிக்கும் என்று நாங்கள் எண்ணுகின்ருேம். இன்னும், நகர மக்களுக்கு உவந்தனவான சில சட்டங்களை நாட்டுப்புற மக்களுக்கு ஆக்கும் பிழையையும், அவர்கள் செய்யவிடாமல் இது தடுக்கு மென்றும் நாம் நம்புகின்றேம், இப்பொழுது, மேற்கு ஐரோப்பாவி லுள்ள அரசறிஞருக்கு இடரை அளிக்கின்ற பல நிலைகள், இந்நாட்டிலே தோன்றவண்ணம் தடுக்கக்கூடிய ஆற்றலையும், இந்நாட்டு மக்களுக்கு இவ்யாப்புமுறை அளிக்கும் என்றும் நம்புகின்றேம். من ض" :", "
இன்னும், மிக முக்கியம் வாய்ந்த ஒரு பிரச்சினை கமத்தொழில் வளத்தைப் பெருக்குவதும் நாட்டுப்புற மக்களின் நன்மையை விருத்தி யடைய்ச் செய்வதுமாகும். கமம்பற்றிய பிரச்சினைகள் இல்லா நாடுகள்

6.
உலகில் கிடையா. இதற்கு இலங்கை விதிவிலக்கன்று. இதைப்பற்றி நாங்கள் பிறிதொரு பந்தியிற் குறிப்பிடுவோம். ஆயினும், இப்பொழுது இலங்கை யிலே ஒருதன்மையான ஆட்சிமுறை ஒப்பரவு இல்லாததை நாங்கள் கண்டுள்ளோம். இப்பொழுதிருக்கின்ற மேனிலையுற்ற மையவாட்சிக்கு, பண்டை முறையிலமைந்த மாநில ஆட்சியோ குறிப்பிடத்தக்க மாறு பாடுடையதாகும். இப்பொழுது இருக்கின்றதிலும், பொறுப்புயர்ந்த ஆட்சி முறையை மையவாட்சிக்கு அளிப்பது இந்த முரண்பாட்டினை இன்னும் உயர்த்திவிடும். எனவே, இனி எற்படப்போகிற யாப்புமுறை இவ்வலுவொப் பின்மையை நீக்கி ஒப்பினைப் பெருக்கக்கூடியதாயமைதல் வேண்டும். அதற்கு உள்ளூராட்சி முறையை வளர்த்தல் வேண்டும். இஃதொரு முதற்படியாக அமைதல் வேண்டும். பல மாநிலங்களிலே இருக்கின்ற நாட்டுப் புறத்தினரின் நோய், வறுமை ஆகியவற்றைத் தடுக்கும் நடவடிக் கைகள் எடுப்பதற்கு இவ்வுள்ளூராட்சி உதவிபுரியும். மீண்டும் மீண்டும் நாம் சொல்வதாயிருப்பினும் நாட்டுப்புற வேலையாள்களின் நலனை எப்பொழுதும் நாம் அகத்தில் வைத்திருத்தல் வேண்டுமென்று இங்கும் நாம் சொல்ல வேண்டியிருக்கின்றது. நாட்டுப்புற மகனுக்கும் கொழும்பில் காணப்படும் மேல்நாட்டு நாகரிகமுடைய கற்றறிவாளன் ஒருவனுக்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியதாகும்.
சட்டசபையின் நடவடிக்கைகளை ஒருவர் கண்ணுறுகின்றபொழுது உறுப்பினர்கள் எல்லோரும் ஆட்சியிலே மிகுந்த கவனம் செலுத்து கிருர்கள் என்பதைக் கவனியாமல் இருக்க முடியாது. அவர்கள் எப்பொழுதும் அலுவலாளர்களை மிகவும் பரந்த விரிவான துன்புறுத்துகின்ற ஆய்வுகளுக்குள் அகப்படுத்தியுள்ளார்கள். சிலவேளை களில் பல அரசாங்க ஊழியர்களுடைய உணர்ச்சி, தன்மானம் ஆகியவற்றை உளங்கொள்ளாது இந்த ஆய்வினை நடத்தியிருக்கின்றர்கள் என்பது எவருக்கும் புலப்படும். இத்தகைய இயல்பு இம்மக்களுக்கு ஓரளவிற்கு இயைந்தது என்றுதான் நாம் சொல்லவேண்டும். ஏனெனில், இதுவரையில் இந்நாட்டிலிருந்த ஆட்சியெல்லைபற்றிய கருக்கோள்களோடு நோக்குகின்றபொழுது, மிகச் சிறிய ஒரு நாட்டிலே சட்டவாக்கலிலும் ஆட்சித் துறையே அரசியலார்க்குப் பெரியதோர் அலுவல்போல் தோன்றி யிருக்கும். பெரும்பாலும் இஃது இவ்வகையிலேயே வருங்காலத்திலும் இருக்கும் என்பதே எம்முடைய முடிபு. இந்நாட்டிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் உரிமைகளுக்குமிடையேயுள்ள போட்டி, பெரிய பிரித்தனில் ஒருபொழுதும் காணப்பெரு முக்கிய ஆட்சிப்பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டது. ஒவ்வொரு முன்னேற்றத்திலும், பாடசாலைகளுக்குக் கொடுக்கும் உதவிநன்கொடையிலும், ஆராய்ச்சிவேலைகளுக்குக் கொடுக் கும் நன்கொடைப் பணங்களிலும் இவ்விடரை நாம் காணலாம். இறக்குமதி செய்யப்பட்ட பல தொகை வேலையாட்கள், இலங்கை

Page 37
62
முழுவதிலும் காணிகளை ஒழுங்கு செய்யாமை, நாட்டுப்புறக் கமக்காரர் தம்முடைய நெற்செய்கையோடு சேனை, மற்றும் சிறு தானியங்களைப் பயிர்செய்தல், இவைபோன்ற பிரச்சினைகள், எவ்வாறு நாள்முறை ஆட்சிப்பிரச்சினைகள் உண்டாகின்றன என்பதைக் காட்டுகின்றன. இவற்றை ஓர் அரசியலான் கவனிக்காமல் விட்டால் அவன் உண்மையை அறிந்தவனகான். இஃதிவ்வாறிருப்பின், தவிர்க்க முடியாது செய்ய வேண்டியதைக் கடமையாகக்கொள்வது அறிவுடைத்தன்றே ! ஆகவே, சட்டசபையை அறிவுடனும் புத்திக்கூர்மையுடனும் அரசாங்கத்தின் ஆட்சி யலுவல்களில் பங்குகொள்ளச் செய்வது அறிவுடைமையாகும்.
எனவே, புதிய ஒரு யாப்பு முறையை நாம் அமைக்கின்றபொழுது, நாம் உள்ளத்தில் கொள்ளவேண்டிய காரணிகள் பல. அவையாவன : முழுப்பொறுப்புவாய்ந்த அரசாங்கமொன்றை நாட்டுக்கு அளிப்பது அறிவன்று என்பதைக் காட்டும் பல சூழ்நிலைகள் உளவாயினும், ஒரளவு போதிய பொறுப்பினை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அளிப்பதற் குரிய நேரம் வந்துவிட்டது என்பது முதலாவது. கட்சிச் சமவலு இந்நாட்டில் இல்லாதிருக்கின்ற இந்நேரத்தில், இப்பொழுது பிரித்தனிலிருக்கின்ற பாராளுமன்றமுறை அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒர் ஆட்சிமுறை, இலங்கையின் நிலைக்கு உவந்ததன்று என்பதொன்று. இலங்கைக்குள்ள பிரச்சினைகளினுடைய சிறப்பியல்பு, அதன் சுருங்கிய பரப்பு, அதனுடைய அலுவல் பற்றற்ற உறுப்பினர்களுக்கு இப்பொழுதுள்ள யாப்பு நிலையளித்த பயிற்சி ஆகியவற்றை நோக்குகின்றபொழுது இப்பொழுதுள்ள சட்டசபையானது, அரசாங்கத்தின் நிருவாக அலுவல் முறைகளை ஆழ்ந்து ஆயக் கூடாதென்று விதிவிலக்குச் செய்வது, இயலாததொன்றன்றியும் அறிவுடைமையற்றதுமாகுமென்பதொன்று. இத்தகைய எண்ணங்களுடன் அலுவல் பற்றற்ற உறுப்பினர் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையீனம், அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாய் இருப்பவர்களே நெருக்கும் முறை ஆகியவையும் நாம் மனத்தில் கொள்ளக்கூடிய விடயங்களாம். அவர்கள் இவ்வாறு நெருக்கும் முறை கட்சி முறை இல்லாத ஒரு சட்டசபையிலே, தனிப்பட்ட அமைச்சர்களின் நிலைமையை மிகவும் இடர்ப்படுத்திவிடும். இத்தகைய காரணிகளை நாம் மனத்திற் கொள்கின்றபொழுது, இலங்கையில் காண்கின்ற சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றதாய், அமைவு படுத்தப்படாத, பிரிட்டிசு மாதிரி அரசியல் செய்கை முறைகளை நாங்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எங்களுடைய நோக்கமன்று. ஆனல், இங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்றதான ஒரு முறையை அமைப்பதே எங்களுடைய நோக்கமாகும். இத்தகைய முறை நாட்டுக்குப் புறம்பான ஒரு தத்துவத்தைப் போற்றுவதாய் இருக்காது, இலங்கை மக்களுக்குரிய சிறப்புப்பண்பினை மலரச் செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும். இன்னும், பல மேனடுகளில் நடந்தவாறு சீர்படுத்தக்கூடிய நிலைமை

63
மாறி மிகவும் சிக்கலாகிவிட முன்னரே நாட்டின் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை மன உறுதியுடன் தீர்க்கக்கூடியதான ஒரு முறையைக் கொண்டுவரல் வேண்டும்.
எடுத்துரைக்கும் திட்டம்
மாட்சிமை தங்கிய அரசருக்கு நாம் எடுத்துரைக்க விரும்புகின்ற திட்டம் பின்வரும் நோக்குக்களுடன் அமைக்கப்பட்டதே. இத்திட்டமானது, சீர்திருத்தப்பட்ட சட்டசபையொன்று ஆட்சி அலுவல், சட்டநிறுவல் அலுவல் யாவையும் கையாளும் உரிமையை, ஒத்துக்கொள்கின்றது. இஃது ஒவ்வோர் அலுவல் பற்றற்ற உறுப்பினர்க்கும் பொறுப்பை அளிக்கின்றது. எக்கல்வி இல்லாமல் அமைச்சு முறை சீரழிந்து "போகுமோ, அக்கல்வி முறையை அளிக்கின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்க்கு எழு அமைச்சர் பதவியை அளிக்கின்றது. இதனல் போதுமான அளவில் தங்கள் அலுவல்களைத் தாங்களே நடாத்துவதற்குரிய பொறுப்பை அளிக்கின்றது. நிலையான நிறைவேற்று குழுக்களோடு அவர்கள் சேர்ந்து வேலைசெய்யும் சந்தர்ப்பத்தையும் அளிக்கின்றது ; இதனல் கட்சி இல்லாமையால் வருகிற சில குறைகளையும் நீக்கிவிடு கின்றது.அரசியல் கொள்கைகளை கல்வி முறையால் ஆராய்கின்ற ஒரு நிலையிலிருந்து, நாளுக்கு நாள் நாட்டில் எழும் ஆட்சி முறை அலுவல்களை எவ்வாறு செயல் முறையில் கையாளவேண்டுமென்னும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்கின்றது. இத்திட்டமானது பொறுப் புடன் அதிகாரத்தைக் கொடுத்து, ஆட்சிமுறை அறிவுடனே அரசியல் வளர்ச்சி ஒருங்கு வளர உறுதியளிக்கின்றது. இம்முறை இலங்கை மக்களுக்குக் கட்டில்லா நிறுவனங்களையும் நேர்ப் பொறுப்பையும் கொடுக்கின்றது.
பொதுவாகக் கூறுமிடத்து, இம்முறையானது அரசாங்க சபை எனப்படும் ஒரு பிரதிநிதித்துவக் கூடத்தை அமைக்கும் ஒரு யாப்பினைக் கொண்டுள்ளது. இச்சபையானது இரட்டை அலுவலைக் கொண்டிருக்கும். அதனல், இரட்டை அமைப்பையும் கொண்டிருக்கும். அவை, சட்டவாக் கலுவல், நிறைவேற்றலுவலாம். எனவே, அது முதற் கூறிய காரணத்திற்காகச் சட்டவாக்கமர்வுக்குக் கூடி, பிற்கூறிய அலுவலுக் காக நிறைவேற்றமர்வுக்கெனக் கூடும். குடியேற்ற நாட்டுச் செயலாளரின் மேற்பார்வையில் மையப்படுத்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்கள், பத்துப் பகுதிகள்ாகப் பிரிக்கப்படும். அவற்றுள் மூன்று குடியேற்ற நாட்டுச் செயலாளர் (பிரதம செயலாளர்), சட்டத்துறை நாயகம், பொருளாளர் ஆகியோர் அதிகாரத்தில் இருக்கும். அம்மூவரும் வருங்காலத்தில் அரசலுவலர் எனப்படுவர். அவர்களுக்கு அமைச்சர் நிலை உண்டு. ஆனல், அவர்களுடைய அலுவல் முக்கியமாய் அறிவுரையளிப்பனவாய் அமையும் ஓரளவிலேயே நிறைவேற்றியல்புடைனவாயிருக்கும். மற்றை எழு தொகுதித்

Page 38
66
தன்னம்பிக்கையை யாவருக்கும் அளிக்கக்கூடியதுமாகும் என்றும் கருதினர்கள். எனவே, இப்பொழுது நாங்கள் எல்லோரும் சுலபமாக அறிவதற்காக, எங்களால் இயன்ற அளவு சுருக்கமாக, இத்திட்டத்தை எடுத்துக் கூறுகின்றேம். ஆனல், இதனுடைய முக்கிய எற்பாடுகளைப் பின்னர் விவரமாக ஆராய்வோம்.
புதிய யாப்பின் பருவரைவு
1. சட்டசபையின் அமைப்பு மாற்றப்படும். இதற்குரிய காரணத்தை அடுத்த அதிகாரத்திற் காணலாம். சபையில் நிலவழி வாக்குத் தொகுதி களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 உறுப்பினர் இருப்பர். அவர்களுடன் மூன்று அலுவல் பற்றுள்ள உறுப்பினர் (பிரதம செயலாளர், சட்டத்துறை நாயகம், பொருளாளர்) இருப்பர். இன்னும், பன்னிரண்டிற்கு மேற்படாத ஆள்பதியால் நியமிக்கப்பட்ட சில உறுப்பினரும் இருப்பர். சட்டசபையை இன்னும் பிரதிநிதித்துவம் உடையதாக்குதல் இன்றியமையாததென ஆள்பதி எண்ணினலே இத்தகைய நியமனம் நடைபெறவேண்டும். இந்த மூன்று அலுவல் பற்றுள்ள உறுப்பினர்களைத் தவிர, சட்டசபையிலே அலுவல் பற்றுள்ள உறுப்பினர்கள் வேறுயாரும் இருக்க வேண்டியதில்லை. இச்சபை வருங்காலத்தில் அரசாங்க சபை எனப்படும்.
2. அரசாங்க சபை சட்டவாக்கத்துடன் ஆட்சியைப்பற்றிய அலுவல் களையும் மேற்கொள்ளும். இரட்டை அலுவலை இது கொள்வதால் அதற்கு இரண்டு அவையங்கள் இருத்தல் வேண்டும். ஆட்சி அலுவல்கள் பற்றித் தீர்ப்பதற்கு அது நிறைவேற்று அமர்வில் கூடும்; சட்டவாக்க அலுவல்களைத் தீர்ப்பதற்குச் சட்டவாக்கு அமர்வில் கூடும்.
அரசாங்க சபையின் நிறைவேற்று நடைமுறை
நிறைவேற்று குழுக்கள் அமைத்தல்
3. புதிய அரசாங்கசபை கூடவும், உறுப்பினர்கள் தங்கள் எல்லோரை யும் எழு நிலையான குழுக்களாகப் பிரித்துக் கொள்வர். இது மறை வான குடவோலை முறையால் நடைபெறல் வேண்டும். எலவே, உறுப் பினர் தாம் எந்தக் குழுக்களிற் சேவை செய்வதற்கு விரும்புகின்றர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்வதற்கேற்ற வாய்ப்பு அளிக்கப்படல் வேண் டும். இவ்வாருக, உறுப்பினர்களைப் பிரித்துக்கொண்டபின் ஒவ்வொரு குழுவும் குடவோலை முறையால் ஒரு முதல்வரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இம்முதல்வர் ஆள்பதியால் பதவியில் நியமிக்கப்படுவர். பொது வாக, இம்முதல்வரை நியமிக்கின்றபொழுது ஆள்பதி அவருக்களிக் கப்பட்ட எடுத்துரைகளைப் பின்பற்றுவர். ஆனல், குறித்த எடுத்துரையை யும் ஏற்காமல் விடவோ, அல்லது மீண்டும் அதைக் குழுவின் ஆலோ சனைக்கனுப்பவோ செய்யும் உரிமை ஆள்பதிக்குண்டு.

67
4. இவ்வேழு நிலையான குழுக்களும் கீழ்க்கண்ட பொருள்களை முறையே கயாளும் :-
அ) உண்ணுட்டலுவல் ) கமத்தொழில் (இ) உள்ளூராட்சி (ஈ) உடனலம் (உ) கல்வி (ஊ) பொதுவேலை (எ) போக்குவரத்துத் தொடர்பு
முதல்வரின் நிலைமை
5. ஒவ்வொரு குழுவின் முதல்வரும் அக்குழுவினுடைய கண்காணிப் பின் கீழமைந்துள்ள அரசாங்கத் திணைக்களங்களுக்குப் பொறுப்பாக வுள்ள ஒரு மந்திரியின் தகுதியையும் நிலையையுங்கொண்டும் விளங்குவர். இவ்வேழுவிதமான பகுதிகளிலும் அடங்கிய அரசாங்க அலுவல்களின் வகுப்பு முறையைப் பதின்மூன்றம் பந்தியிற் காணலாம்.
6. ஒவ்வொரு குழுவின் முதல்வரும் 1,800 பவுண், அல்லது 27,000 உரூபாய் ஆண்டுச் சம்பளமாகப் பெறுவர். இக்குழுவில் அங்கத்தினரா யிருப்பவர்கள் சபையின் அங்கத்தினராயிருந்து பெறும் ஊதியத்தைத் தவிர வேறென்றும் மிகுதியாகப் பெருர்,
குழுக்களின் கடமைகள்
7. ஒவ்வொரு குழுவும் அதன் அதிகாரத்தின் கீழமைந்த திணைக் களங்களைப் பொதுவாக மேற்பார்க்கும் ஒவ்வொரு குழுவும் அலுவல் நிறை வேற்றுமுகத்தாற் ருெழிற்படும். அவை பெரும்பான்மை வாக்குகளா லேயே இயங்கும். அவற்றின் முடிவுகள் ஒரு பதிவு நூலில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு கூட்டமும் முடிவான பின்னர் நிறைவேற்று அமர்வில் அமைந்துள்ள சபைக்குச் சமர்ப்பிக்கப்படும். அறிக்கைகள், சபை எற்றுக்கொண்டபின் ஆள்பதிக்கு முறைப்படி உறுதிப்படுத்துவதற் காகச் சமர்ப்பிக்கப்படும். பின்னர், நாங்கள் விளக்கியுள்ளவாறு எந்த அலுவல்களுக்குக் குழுக்களின் ஆணை அவசியம் என்றும் எந்நடவடிக் கைகள் ஆள்பதி இசைவு சபை இசைவைப் பெறவேண்டும், எவை பெற வேண்டியதில்லை என்றும் பொதுப் பணிக்கைகள் கூறும். பிந்தியவகை யில் அந்த அலுவல் எவ்வளவு முக்கியத்துவத்தில் குறைந்ததாயினும்,

Page 39
64
திணைக்களங்களும் சட்டசபை உறுப்பினர்கள் பொறுப்பிலிருக்கும். புதிய சபை தொடங்குகின்றபொழுது உறுப்பினர்கள் எழு நிறைவேற்று குழுக்களாகத் தம்மைப் பிரித்துக்கொள்வர். ஒவ்வொரு தொகுதிக்கு ஒவ்வொரு குழு இருக்கும். ஒவ்வொரு குழுவும் ஆள்பதியின் நியமனத் திற்காகத் தங்கள் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும். இம்முதல்வர்கள் அமைச்சர் நிலையைக்கொண்டிருப்பர். இவர்கள் அவர்களின் பொறுப்பில் விடப்பட்ட திணைக்களங்களின் அலுவல்களுக்குத் தனிப்பட்ட முறையிற் பொறுப்பாயிருப்பர். இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டான முறையில் எல்லா நிதி நடவடிக்கைகளுக்கும் மேற்கூறிய அலுவல்களோடு பொறுப் புள்ளவர்களாக இருப்பர். அரசாங்கத்தின் நிறைவேற்று அலுவல்கள் யாவும் இக்குழுக்களால் நடாத்தப்படும். அவற்றை இவர்கள் நிறைவேற்று அமர்வுகளில் அமைந்த சபைக்கு உறுதியிசைவு பெறுவதற்காக அறிவிப்பர். இவ்வாறகவே எந்த நிறைவேற்று குழுவின் முதல்வரும் சட்டசபையிலே தாம் ஆக்கியமைத்த சட்டவாக்கு நடவடிக்கைகளைக் கொண்டுவரலாம்.
சபையின் நிறைவேற்று சட்டவாக்கு அலுவல்கள் யாவும் ஆள்பதியின்
இசைவைப் பெறவேண்டும். தெளிவாக வரையறுக்கப்பட்ட சில முக்கிய விதிகளுக்கு முரணுயமைந்த நடவடிக்கைகளை ஏற்கவோ, அறுக்கவோ கூடிய அதிகாரம் வேந்துக் கட்டளைகளால் இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இஃதில்லாவிடின், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உண்ணுட்டு அலுவல்கள் யாவிலும் முழுவதிகாரம் பெற்றவர்களாகிவிடுவர்.
இவ்வாருக, நிலையான நிறைவேற்று குழுக்கள் முறையை நாங்கள் எடுத்துக் கூறுகின்றபொழுது, இத்தகைய முறைகள் எங்கட்கு ஒருவகையில் எடுத்துக் கூறப்பட்டன என்பதை நாம் மறுக்கவில்லை. இத்தகைய ஒர் ஒழுங்கை நமக்கு அறிமுகப்படுத்தியவர்களுள் சேர் சேமிசு பீரிசு என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஆனல், இத்தகைய முறைகள் மிகவும் இடரான நிலையிலிருந்தவைபோல எங்களுக்குத் தோன்றின. ஏனெனில், அவை பாராளுமன்ற முறையுடன் நிலையான குழுக்களின் பயனை நன் முறையில் இணைக்கக்கூடியனவாயமையவில்லை. இந்தக் குழுக்களில் ஐந்து உறுப்பினர்களுக்கு மேல் இருத்தலாகாது. இந்த உறுப்பினர் சட்டசபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயிருத்தல் வேண்டும். குழுவின் முதல்வர் ஆள்பதியால் நியமிக்கப்படல் வேண்டும். உறுப்பினர்கள் ஒரு குழுவுக்குமேலான குழுக்களில் அங்கம் வகிக்க முடியாமலிருப்பரெனினும், இம்முறையானது சில உறுப்பினரைக் குழுக்களில் அங்கம் வகிக்காமற் செய்துவிடும். இதனல் பலருக்கு அவ்வாறு சேவை செய்யும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இன்னும், ஒவ்வொரு குழுவின் முதல்வரும் நிறைவேற்று சபையின் உறுப்பினராயிருத்தல் வேண்டுமென்றும் அங்கு குழுவினட்சிக்கு மாற்றப்படாத திணைக்களங்களின் அலுவலர் அவருடன் சேர்ந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. நிறைவேற்று கழகம் ஒரு மந்திரம்போல் அலுவல் செய்யும் அதில் அலுவல் பற்றற்ற

65
றுப்பினரும் அலுவல் பற்றுள்ள உறுப்பினரும். எண்ணிக்கையில் இப்பாயிருப்பர். ஆள்பதிக்கு, வாக்கு சமமானவிடத்து முடிவாகத் தீர்மானிக்கும் வாக்குண்டு. இம்முறையானது பிளவுபட்ட பொறுப்பு மனப்பான்மையையும் முழுத் தீமைகளையும் கொண்டுவருமென நாங்கள் நம்புகின்ருேம். ஏனெனில், அலுவல் பற்றுள்ள உறுப்பினர் ஆள்பதிக்குப் பொறுப்புள்ளவராயிருக்க, அலுவல் பற்றில்லாத உறுப்பினர் சபைக்குப் பொறுப்புள்ளவராக இருப்பர். இன்னும், நிறை வேற்று சபையானது கூட்டுமுறையில் பொறுப்புடையதாக இருக்கவேண்டு மெனில், முதல்வரும் தம்முடைய குழுவைத் தம் கருத்திற்கியைந்த தொன்ருய் ஆக்கக்கூடியவராயிருத்தல் வேண்டும். இதனல், அரசாங்கக் கட்டு ஒன்றை அமைப்பதாக முடியும். இத்தகைய கட்டானது நாம் முன்னர்க் கூறியவாறு நடைபெறக்கூடியதாகும். இத்தகைய கட்டானது அமைவு பெருவிடின் அரசாங்கத்திற்கு ஒரு நிலைபெறுதி கிடையாது. எனெனில், அரசாங்கத்தின் முன்னிடுகள் எந்த நேரத்திலேனும் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஒதுக்கப்படக்கூடிய நிலை ஏற்படலாம். செயலாற்றும் ஒரொழுங்கின் பொருட்டு இக்குழு எல்லாம் ஒரு நிதிக் குழுபோல் ஒன்றுசேர முனையும் ; அவ்வாருகிய நிதிக் குழுவில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யாவும், சபைக்கு அறிவிக்கப்பட முன்னர், ஆலோசனைக்குக் கொண்டுவரப் படல் கூடும். இத்தகைய வளர்ச்சி எதுவாயினும் அஃது ஆட்சியிலே ஒரு மாற்றத்தையுண்டாக்கி, அதனல் இப்பொழுதிருக்கின்ற முறையிலுள்ள குறைபாடுகள் எல்லாம் மீண்டும் தோன்றுவது இயல்பாகும்.
நாங்களோ மிகவும் வேறுபாடான ஒரு முறையைக் கடைப்பிடித் துள்ளோம். தோற்றத்திலும் உண்மையிலும் பொறுப்பினை அளிக்க வேண்டுமென்ற ஒரு நம்பிக்கையில் இப்பொழுது மிகவும் புதியனவா யமைந்தவையும் செல்வாக்கும் அதிகாரமும் உள்ளவையுமான ஆலோசனைச் சபைகள் பலவற்றுள்ளும் சிறந்ததான சருவதேசச் சபையிலே, நடைமுறையில் இருக்கின்ற ஒரு முறையை ஒரளவிற்குத் தழுவியனவாய் எங்களுடைய முன்னிடுகளை நாங்கள் ஆக்கியுள்ளோம். இங்கு உலகநாட்டு வல்லரசுகளின் பிரதிநிதிகளாயுள்ளவர்கள் நிலைக்குழு முறையில் தங்களை அமைத்துக்கொள்வது நலமென்று கருதினர்கள். இவர்களோ பலவகை நோக்குக் கொண்டவர்கள் ; பல இனங்களுக்குப் பிரதிநிதிகளாயமைந்தவர்கள். இத்தகைய நிலைக்குழுக்களே ஒவ்வொரு நாளும் தீர்த்து முடிவு செய்யவேண்டிய சிக்கல் மிகநிறைந்த ஆட்சிமுறை வேலைகளைச் செவ்வனே நடத்துவதற்கு வாய்ப்புடையவென்று இவர்கள் கருதினர்கள். இத்தகைய முறையே பலன்தரு செய்முறைக்கு இலகுவான தென்றும், தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளைப்பற்றிய திருத்தமான நல்ல அறிவினைப் பெற்று அதை மற்றையோருடனே பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புடையதென்றும் இவர்கள் கருதினர்கள்; பொதுநலத்தின் பொருட்டு திறமையாக ஒத்துழைப்பதற்கு மிக்க இன்றியமையாது வேண்டிய

Page 40
68
அதைப்பற்றிச் சட்டசபை எடுத்துக்கொண்ட முடிவிற்கு ஆள்பதி இசை அளிக்கும்வரை, குழு நடவடிக்கை மேற்கொள்ளலாகாது. 935 முக்கியமில்லாத அலுவல்களை, பின்னர் சபையின் இசைவை அவை பெற்றன எனத் தோன்றினும் அவற்றிற்குரிய நிறைவேற்றுக் குழு எற்று, அம்முடிவிற்கியைய நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு ଟft பதியோ, சபையோ முறையான இசைவு கொடுப்பர் என்ற நம்பிக்கை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். ஆள்பதி இக்குழுக்களின் செயல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பான்பொருட்டு, ஒவ் வொரு குழுவின் கூட்டங்களின் முன்னரும் பின்னரும் அக்கூட்ட நிகழ்ச்சி நிரல், கூட்ட நடவடிக்கைபற்றி எடுத்த குறிப்புக்கள் ஆகிய யாவற்றையும் கூட்டத்துச் செயலாளர் ஆள்பதிக்குச் சமர்ப்பிப்பர்.
8. இங்கு இனி நாங்கள் மிக விரிவாக எடுத்துரைக்கப்போகின்ற நட வடிக்கைகளுக்குப் பொதுவாக இணங்க, ஒவ்வொரு குழுவின் கடமை களும் பின்வருவனவற்றைக் கொண்டவையாயிருக்கும் :-
(அ) அதனுடைய ஆட்சியிலிருக்கின்ற திணைக்களங்களின் ஆண்டு வரு வாய், செலவு மதிப்பீடுகளை ஆக்குதல், - (ஆ) வேண்டிய வேண்டிய நேரங்களுக்குரிய குறைநிரப்பு மதிப்பீடு
களை ஆக்குதல், (இ) குழு முதல்வர் கூட்ட நிரல் தாளில் சேர்க்குமாறு பணித்த அரசாங்க நிறைவேற்றலுவலைப்பற்றி ஆலோசித்தல் ; தனிப்பட்ட உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட அலுவல்களை ஆலோசித்தல், (ஈ) குழுவின் அதிகாரத்தில் அமைந்த சட்டவாக்க நடவடிக்கைகளைப்
பற்றி ஆராய்தல்.
குழுக்களும் அதன் அலுவலரும்
9, ஒவ்வொரு குழுவின் முதல்வருக்கும் நிரந்தர அலுவற்செயலாளர் ஒருவர் இருப்பார்; அவர் இலங்கைக் குடியியற் சேவையில் இரண்டாம் வகுப்பு, மூன்றம் வகுப்பில் உள்ளவராய் இருக்கலாம் ; இன்றேல், அதே நில்ைகொண்ட ஒரு பொதுச் சேவை அலுவலராளராயிருக்கலாம். இவ்வ்லுவற் செயலாளர் திணைக்களத் தலைவர்களோடு ஒப்பிடும்பொழுது உயர்ந்த பதத்தில் இருப்பவராக இருத்தலாகாது. ஆனல், திணைக் கிளித் தலைவர்கள் எவ்வலுவல்கள் பொருட்டு நேர்முகமாகத் தம் குழு முதல்வருடன் தொடர்பு கொள்ள வேண்டியதில்லையெனக் கருதுகின்ற னேரோ, அவ்வலுவல்களுக்கு, திணைக்களத் தலைவர்கட்கும் குழுத் தலை வ்ேர்க்ளுக்குமிடையே அமைந்த ஓர் இணைப்பாக அவர் இருப்பார். இத் தலைவர்க்கும் அவருட்ைய அலுவற் செயலாளர்க்கும் வேண்டிய அலுவலர் அலுவலகங்களைப்பற்றிப் பின்னர் எடுத்துரைப்போம். அலுவற் செயலாளர் நிலையான நிறைவேற்று குழுவின் செயலாளராகவும் கடமையாற்றுவர்.

69.
10. பொதுவாகக் குறித்த ஒரு திணைக்கள அலுவலைப்பற்றி நிறை
ற்று குழு ஆராய்கின்றபொழுது, அத்திணைக்களத் தலைவரும் அக்
ட்டத்தில் பங்கு பற்றுவார். இவருக்கு வாக்குரிமையில்லை. ஆயினும்,
நடக்கும் ஆலோசனையில் பங்குபற்றும் உரிமையுண்டு.
குடியேற்றநாட்டுச் செயலாளர் இனிப் பிரதம செயலாளர் என ப்படுவர். அவருக்கு நேர்முகமாகவோ, அல்லது பிரதிநிதி மூல
ா எந்த நிலையான கூட்டங்களிலும் பங்குபற்ற உரிமையுண்டு; ம் உரிமையுண்டு. ஆனல், அக்கூட்டங்களில் அவர் வாக்களிக்க
12. ஆண்டு மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை ஆக்கும் செயல்கள் யாவற்றிலும் பொருளாளரை யாவரும் கலந்தாலோசித்தல் வேண்டும். இத்தகைய மதிப்பீடுகளில் பொருளாளரானவர் நிதி சம்பந்த மான முறையில் அவை எத்தகைய விளைவினைத் தரும் எனத் தம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்வதன் முன்னர், குழுக்கள் ஒருவிதமான முடி, வும் செய்யலாகாது.
குழுக்களின் கீழமைந்த திணைக்களங்கள்
13. அரசாங்கத்தின் செயல்கள் யாவும் நிறைவேற்று குழுக்களுக் கிடையே பின்வரும் முறையில் பிரிக்கப்படலாம் : •
(1) உண்ணுட்டு அலுவல் திணைக்களம் :-பொலிசு, சிறை, தீயணைக்கும் படை, சுரங்கம், தொழிற்சாலைகள், தொழிற்றுறை (இந்தியக் குடியேறிகள் உட்பட), தொழிலாளர் நட்டஈடு, காப்புறுதி, புள்ளி யியல், மற்றைத் திணைக்களங்களுக்கென ஒதுக்கப்படாத மற்ை உண்ணுட்டு அலுவல்கள். (2) கமத்தொழில் திணைக்களம் :-கமம், நீர்ப்பாய்ச்சல், காட்டுப்பொருள்
விலங்கு மருத்துவச் சேவை, மீன்பிடி தொழில். (3) உள்ளூராட்சித் திணைக்களம் :-உள்ளூராட்சி, காணிநிலம், காணி
நிருணயம், அளவை, உள்ளூராட்சிக்குரிய மது ஒழிப்பு. (4) உடனலத் திணைக்களம் :-மருத்துவ சுகாதாரச் சேவையும் ஆராய்ச்சி யும், மருத்துவக் கல்வி, வைத்தியசாலைகள், புகலிடங்கள், தரும நிறுவனங்கள், அரசாங்க ஆய்வாளர், பிணித்தடுப்பு, வீடமைப்பு. (5) கல்வித் திணைக்களம் :-ஆரம்ப, இரண்டாந்தர, தொழில் நுட்ப, பல்கலைக்கழகக் கல்வி, பல்கலைக்கழகக் கல்லூரி, அரும்பொரு ளகம், நூல் நிலையம், எழிலம்பலம், தொல்பொருளியல், அச்சகம்.

Page 41
70
(8) பொது வேலைத் திணைக்களம் :-பொது வேலைகள், மின்னியல்
வேலைகள்.
(7) பொதுப் போக்குவரத்துத் திணைக்களம் :-இருப்புப் பாதை, அஞ்ச
லும் தந்தியும், துறையும் துறைமுகமும்.
சில சாட்சிகள் எங்கள் முன்னர் பொலிசினை நேரடியாகப் பிரதம செயலாளர் அதிகாரத்தில் வைக்கவேண்டுமெனக் கூறினர்கள்.
மிகவும் குறைவான ஒரு பாதுகாப்புப் படைச் சேவையைக் கொண்டுள்ள ஒரு நாட்டிலே பொலிசுப் படை சிறப்பு வாய்ந்த ஒரு நிலையில் இருக் கின்றது. மற்றைச் சேவைகளோடு ஒப்பிடும்பொழுது இது புறம்பான ஒரியல்புடையதாயிருக்கின்றது. நாட்டிலுள்ள பொது மக்களும் அரசிய லாரும் நாட்டிலே சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளார்கள் என நாம் நம்புகின்றேம். அவ் வாறிருக்க, இப்பொலிசுச் சேவையினர் திறம்படத் தங்கள் சேவையைச் செய்வதற்கு இடையூறக இவர்கள் தங்களுடைய சொந்த நலனையோ, அல்லது தங்களுடைய குறிக்கப்பட்ட சேவை நலனையோ பெரிதாகக் கருதி அதற்கு இடையூறு செய்வார்கள் என நாங்கள் நம்பவில்லை. அந்த நம்பிக்கையினலே பொலிசுச் சேவையானது ஒதுக்கப்பட்ட ஒரு பாதுகாப் புச் சேவையாக இருக்கவேண்டுமென எடுத்துரைக்க நாங்கள் விரும்ப வில்லை. முன்னர் நாம் கூறியவாறு, அச்சேவையானது உண்ணுட்டலு வல்களுக்குரிய நிறைவேற்று குழுவினதும் அதற்குரிய அமைச்சரினதும் ஆதிக்கத்தில் வரவேண்டுமென எடுத்துரைக்கின்றேம்.
அரசலுவலர்களின் திணைக்களங்கள்
14. மேற்கூறிய திணைக்களங்களைவிட, குடியேற்றநாட்டுச் செயலாளர் (பிரதம செயலாளர்), பொருளாளர், சட்டத்துறை நாயகம் ஆகியவர்கள் ஆதிக்கத்தில் மூன்று திணைக்களங்கள் இருக்கும். அவற்றின் செயல் கள் வருமாறு :-
(8) பிரதம செயலாளர் திணைக்களம் வெளிநாட்டு அலுவல் மாலை தீவு பாதுகாப்பு, விழைவோர் பட்டாளம் உட்பட சட்டங்கள் வரைதல் பொதுச் சேவையாட்சி ஒழுங்கு, நியமனம், பதமாற்றம் கணக்குப் பரிசோதனை

7
(9) பொருளாளர் திணைக்களம் பொதுவாக நிதி அலுவல்கள், (பின்னிணைப்பு VI இனைப் பார்க்க).
(2) நிருவாக அலுவல்கள், நியதிச் சட்டத்திற்கியைந்தவையும் மற்றவை
− யும் ; சகல வாரிகளையும் சேர்த்தல், பாதுகாத்தல், பங்கிடுதல் ; சுங்கம், உள்நாட்டுத் தீர்வை, உப்பு ஆகியவற்றிலிருந்து வருபவை யும் இதில் அடங்கும். ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, அரச நிதிகளை முதலீடு செய்தல், பொதுக் கடனைப் பரிபாலித்தல், உள்ளூர் அதிகாரங்களுக்குக் கடன் கொடுத்தல் ஆகியவை.
(ஆ) திணைக்களங்களை நிதிமுறையில் மேற்பார்வை பார்த்தல் ; ஒப்பந் தங்கள், களஞ்சியம், பொதுச்சேவையின் நிதிப்பிரமாணங்கள், தாபனங்களின் அமைப்பு, விடுமுறை ஒழுங்குகள், சம்பளங்கள், இளைப்பாறற் சம்பளங்கள், படிச்செலவுகள் ஆகியவையும் அடங்கும்.
(இ) நிதியியற் பூட்கைபற்றி அறிவுரை, வரிவிதிப்பு, கடன் எடுப்பு,
நாணய மாற்றம், நாணயம் ஆகியவை உட்பட.
(10) சட்டத்துறை நாயகத்தின் திணைக்களம் பொது நீதிபரிபாலனம் நீதிபற்றிய அலுவல்களில் அரசாங்கத்திற்கு அறிவுரை கூறல், நீதிப்பத்திரங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஆக்குதல், தேர்தல்களை நடத்துதல்.
குடியேற்றநாட்டுக் கணக்குப் பரிசோதகரின் திணைக்களம் பிரதம செய லாளர் ஆதிக்கத்திலிருக்கும். ஆயினும், தம்முடைய திணைக்கள அலுவல்கள்பற்றிய வியளங்களில் தணிக்கையாளர் அரசாங்க சபைக்குப் பொறுப்பாக இருப்பர்.
15. இம்மூன்று அலுவலரும் அரசலுவலர் என அறியப்படுவர். இவர்களுடைய திணைக்களங்கள் பேரரசுபற்றிய முக்கியத்துவம் உடையவா யிருக்கும் ; அல்லது, அரசாங்க சபையின் முடிபுகளை நடத்தும் இயல் புடையவாயிருக்கும். எவ் கையிலும் இவற்றேடு நிறைவேற்று குழுக் கள் இணைந்திரா. இவர்கள் அமைச்சர் நிலையிலிருந்தாலும் உண்மை யில் இவர்கள் முறையே அரசியல், நிதியியல், சட்டவியற்றுறைகளில் அர சாங்கத்திற்கும் அரசாங்க சபைக்கும் அறிவுரைஞர்களாகக் கடமையாற்று வார்களேயன்றி, நிலையான குழுக்கள் ஏழு முதல்வர்களும் செய்கின்ற நிறைவேற்று கடமைபோன்ற கடமையாற்றுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

Page 42
72
16. இவ்வாருகத் திணைக்களங்களின் பொறுப்பை வகிக்கப் பத் அமைச்சர்கள் இருப்பார்கள். இவற்றுள் எழு பேரை அரசாங்க சபை தன்னுடைய உறுப்பினர்களிலிருந்து தெரிவுசெய்து கொள்ளும். சிய மூவரும் மூன்று அரசலுவலர்களாக இருப்பர். இவர்கள் தங்க்ள் அலுவல் பற்று முறையில் அரசாங்க சபை உறுப்பினராக இருப்பர்.
அமைச்சர் சபை
17. நிறைவேற்று சபையை நீக்கி ஒர் அமைச்சர் சபையை நிறுவல் வேண்டும். இச்சபையில், நிலையான குழுக்களின் எழு முதல்வரும் மூன்று அரசலுவலரும் இருப்பர். பிரதம செயலாளரே அலுவல் பற்றற்ற முறை யில் அமைந்த முதல்வராக, அரசாங்க சபையின் தலைவர், துணைமுதல் வராக இருப்பர். இத்தலைவரைப்பற்றிப் பின்னர் இவ்வதிகாரத்தில் நாம் குறிப்பிடுவோம். இதனுடைய செயலாளர் இல்ங்கை குடியியற் சேவை யின் இரண்டாம் வகுப்பிற்குக் குறையாத வகுப்பினராயிருத்தல் வேண்டும்.
18. இச்சபையானது ஒரு பாலனக் குழுவினுடைய தகுதியைக் கொண் டிருக்கும். இஃது அரசாங்க சபையினுடைய நிறைவேற்று அமர்வு, சட்டவாக்கு அமர்வு ஆகியவற்றுக்குரிய சகல அலுவல்களும் எவ்வாறு நடைபெறவேண்டுமென்பதை முடிவாக்கும். இஃதொரு நிலையான குழு விற்கு மேம்பட்ட பல குழுக்களோடு இயைந்த அலுவல்களை எவ்வாறு வாய்ப்புடைய முறையில் அமைக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும். இந்த நடைமுறை ஒழுங்குகளேயன்றியும் அரசாங்கத்துடைய முக்கியமான வேலையான ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை ஆக்குதல் இதன் வேலையாகும். இவ் வேலைகள் யாவற்றிற்கும் இஃது ஒன்று சேர்ந்த முறையில் பொறுப்பானதா யிருக்கும். மற்றை அலுவல்களில் அமைச்சர்களுக்குரிய தனிப்பட்ட பொறுப்பும் பிரதிநிதித்துவ முறையிலமைந்த பொறுப்பும் பேணப்படும். இச்சபையானது தங்களுள், அரசலுவலர் அல்லாதார் ஒருவரை அரசாங்க சபையின் தலைவராகத் தெரிந்தெடுக்கும். இவ்வாறு தெரிந்தெடுத்த உறுப்பினர் இச்சபையின் துணைமுதல்வராக இருப்பர்.
19. நிறைவேற்று குழுக்களின் ஒவ்வொரு முதல்வரும் அரசலுவலர் ஒவ்வொருவரும் ஒவ்வோராண்டும் அவ்வாண்டு மாச்சு மாதத்திற்கு முன் னர், பொருளாளர் மூலமாக, தங்களுடைய நிறைவேற்று குழுக்கள் இசை வளித்த அந்தநிதியாண்டுக்குரிய மதிப்பீடுகளை அமைச்சர் சபைக்குச் சமர்ப் பித்தல் வேண்டும். பின்னர், பொருளாளரின் துணைகொண்டு ஒவ்வொரு நிறைவேற்று குழுவிற்குமுரிய உச்சவரம்புச் செலவினைத் தீர்மானிப்பதும் மதிப்பீடுகளை ஆராய்ந்து திருப்பி அமைப்பதும் வரி விதிப்புபற்றிய முன் மொழிவுகளுடன் அவற்றை இணைத்து அரசாங்க சபைக்கு அளிக்கப்படவேண் டிய ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ப்பதும் அச்சபையின் கடமை
 
 

73
யாகும். குறிக்கப்பட்ட ஒரு காலவெல்லைக்குள் யாதுமொரு நிறைவேற்று పసిపీ தன்னுடைய மதிப்பீட்டினை அளிக்கத் தவறின், பொரு ளாளர் அத்தவறினை ஆள்பதிக்கு அறிவித்தல் வேண்டும். ஆள்பதி யான்வர் அமைச்சர் சபையிலிருந்தும் குறித்த பொருளுக்குரிய திணைக் களத் தலைவர்களிடமிருந்தும் துணைபெற்று “உறுதிபெற்ற மதிப்பீடு” என அறியப்படும் ஒரு முறையில் ஆண்டு மதிப்பீட்டினை ஆக்கிக் கொள்வர். இவ்வாறு உறுதிபெற்ற மதிப்பீடு ஆள்பதியின் இறுதியான இசைவைப் பெற முன்னர் சாதாரணமான முறைவழியில் அரசாங்க சபைக்குச் சமர்ப் பிக்கப்படும்.
20. எலவே வாக்களித்த ஒதுக்கப்பட்ட பணச்செலவினைக் கொண்டிராத ஒரு முன்மொழிவை-அஃதொரு நிறைவேற்று குழுவின் முன்மொழி வாக இருக்கலாம். அல்லது ஒரு முறியாக இருக்கலாம். அல்லது ஒரு தீர்மானமாக இருக்கலாம்-அதனேடு சேர்ந்த முழு நிதியியற் சார்புகள் * யாவையும்பற்றி அமைச்சர் சபை பொருளாளர் துணையுடன் ஆயத்தப் படுத்தி அளித்த ஓர் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டசபை ஆலோசிக்கக் கூடாதென யாப்பில் ஓர் எற்பாடிருத்தல் வேண்டும்.
21. ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு அவற்றேடியைந்த முக்கியமான நிதியியல் நடவடிக்கை, ஒரு நம்பிக்கை 'யில்லாத் தீர்மானம் ஆகியவற்றுள் யாதாயினும் ஒன்றிலேனும் மந்திரி சபையினர் தோற்றல் ஒரு பொதுத் தேர்வு நடைபெறல் வேண்டும். ஆயினும், வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, முக்கிய நிதியியல் நடவடிக்கை ஆகியவற்றை முழுவதுமோ, அல்லது அவற்றுள் குறிக்கப்பட்ட சில விடயங்களையோ அமைச்சர் சபை மேலும் ஆராயவேண்டுமென்று திருப்பி அனுப்புவதற்கு அரசாங்க சபைக்கு உரிமையுண்டு. இஃது அவசரமாக நடவடிக்கை எடுக்கும் ஒரு பண்பினை மிகக் குற்ைப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒரு பாதுகாப்பு முறை யாகும். ஆயினும், இந்நடவடிக்கையைப் பயனில் முறையில் பயன் படுத்தாதிருத்தற்பொருட்டு அவ்வழியை ஒரு முறையே மேற்கொள்ள லாம் என்று குறித்தல் வேண்டும். அமைச்சர் சபை அந்த முறைய்ை நன்கு திருப்பி ஆராய்ந்தபின் தன் முடிவாகக்கொண்ட கருத்தினை அரசாங்க சபைக்கு எடுத்துக் கூறல் வேண்டும். கூறி, அதனல் வரும் தீர்ப்பினல் நிலைபெறலாம், அல்லது விழலாம். இத்தகைய அவசர p5Lவடிக்கைகளால் எற்படக்கூடிய நிலைபேற்றின்மையைத் தவிர்த்தால் அர yFITI55 சபையினுடைய சாதாரணமான நான்கு ஆண்டு காலத்திற்கு இச்சபை நிலைபெறும் ; ஆயினும், சபை இடைக்காலத்தில் தனிப்பட்ட அமைச்சர்ா?ள மாற்றிக்கொள்ளல் கூடும்.

Page 43
74
22. தனிப்பட்ட உறுப்பினர் ஒரு புது வரியை உயர்த்த அல்லது விதிக்க ஒரு பிரேரணையையோ, பொருள்களை அளிக்க ஒரு பிரேரணையைய்ோ, பொது வாரியிலிருந்து பணச்செலவை ஆக்கக்கூடிய ஒரு பிரேரணையையோ கொண்டுவரலாகாது என்று யாப்பில் விதித்தல் வேண்டும். இத்தகைய் ஓர் உரிமை நிறைவேற்று குழுக்களின் முதல்வர்க்கும் அரசலுவலாளர்க்குமே வரையறுக்கப்படல் வேண்டும். இவர்கள் முதன் முதலாக இத்தகைய பிரேரணைகளுக்கு அமைச்சர் சபையின் மன இசைவைப் பெறவேண்டும்.
நிறைவேற்று அமர்வில் சபை
23. நிறைவேற்று அமர்விலுள்ள சபையினுடைய கடமைகள், நிருவாக அலுவல்களை ஆராய்ந்த குழுக்களினுடைய அறிக்கைகளை எற்றுக்கொள் ளாது தள்ளல், அல்லது குறிப்புக்களுடன் மீண்டும் அவற்றைத் தொடக்கிய குழுக்களுக்குத் திருப்பியனுப்புதல் ஆகியவையாம். பந்தி 7 இல் விளக்கிய வாறு இவ்வறிக்கைகள் நிறைவேற்று குழுக்களின் முடிவுகளைப் பதிவு செய்திருக்கும். அவை புது வேலைகள், புதுச் சேவைகள், ஒப்பந்தங்கள், பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடைகள், ஆண்டு மதிப்பீட்டில் எற்றுக்கொள் ளப்பட்ட பூட்கையை நிறைவேற்றும் பிரச்சினைகள் பற்றியவையாயிருக்கும். ஒவ்வொரு நிறைவேற்று குழுவிற்கும் அதன் முதல்வரோ, அவர் இல்லாத விடத்து அந்தக் குழுவின் முதிய உறுப்பினரோ தொடர்பாளராகக் கடமை யாற்றுவர்.
24. சபையானது நிறைவேற்று அமர்வில கூடியிருக்கின்றபொழுது, குறித்த ஒரு குழுவில் உறுப்பினராய் இல்லாதிருப்பவர் யாரேனும் அக் குழுவின் அலுவலோடு தொடர்புடைய ஒரு முன்மொழிவைப்பற்றி அறிக்கை கொடுக்கலாம். அப்பொழுது, அம் முன்மொழிவுபற்றி அங்கு உரையாடல் நிகழ்த்தாது அதை அக்குழுவினுடைய ஆராய்விற்கு அனுப்பலாம். அவ் வாறு சம்பந்தப்பட்ட அவ்வுறுப்பினர் அவருடைய முன்மொழிவை ஆராய் கின்ற அக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். அங்கு அப்பொருள் பற்றி மட்டும் பேசுவதற்கு அவர்க்கு உரிமையளிக்கப்படும்.
நிறைவேற்று குழுக்கள்-இடமாற்றங்களும் ஆளின்மையும்
25. முதல் தேர்வின் பின் நிறைவேற்று குழுக்களில் எற்படும் ஆளின்மை, இடமாற்றம் ஆகியவற்றை அரசாங்க சபைக்கு முன்னறி வத்தல் கொடுத்துப் பின்னர் தீர்மானங்கள் கொண்டுவந்து முடிவுசெய்து கொள்ளலாம்.

75
நடவடிக்கைகட்கு ஆள்பதி இசைவுறுதியளித்தல்
26. ஒவ்வோர் அறிக்கைபற்றியும் அரசாங்க சபை கொண்ட முடிவு களைப் பதிவு செய்தல் சபை அலுவலர் கடமையாகும். நாள் நடவடிக்கை களின் பின்னர், ஒவ்வொரு நாளும் சட்டசபை ஏற்றுக்கொண்ட அறிக்கை களை உறுதிப்படுத்துவதற்காக ஆள்பதிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அரசாங்க சபை முழுவதும் எற்றுக்கொள்ளாத அறிக்கை பற்றியவிடத்து, அரசாங்க சபை ஏற்றுக்கொண்ட விடயங்களை மட்டுமே உறுதிக்கு அனுப்ப லாம். அரசாங்க சபை ஏற்றுக்கொண்ட, ஆளுல் ஆள்பதி உறுதிப்படுத்தா விடயங்களில் ஒரு நடவடிக்கையும் எடுத்தலாகாது. ஆள்பதியின் உறுதிப் படுத்தல் அரசாங்க சபையின் வாசகருக்கு ஒரு செய்திமூலம் அறிவிக்கப் படும் (பந்தி 42 ஐப் பார்க்க).
27. அரசாங்க சபை எற்றுக்கொண்டு தமக்குச் சமர்ப்பித்த அறிக்கை கள்பற்றிய விடயங்களில், ஆள்பதி, பொதுவாக அரசாங்க சபையின் எடுத் துரைகளுக்கு இயைய நடந்துகொள்வார். ஆயினும், அவற்றை எற்றுக் கொள்ளாது வீட்டக்கூடிய தனியுரிமையதிகராரம் அவருக்குண்டு. தமக்கு அளிக்கப்பட்ட வேந்துக் கட்டளைகளுக்கு அரசாங்க சபையின் எடுத்துரைகள் முழுமாருக இருக்கின்றன என அவர் கருதினலன்றி, பொதுவாக அவர் இந்த வீட்டல் உரிமையைப் பயன்படுத்த மாட்டார். குறித்த சில விடயங் களை அரசாங்க சபை மீண்டும் ஆய்வதற்கெனத் திருப்பியனுப்பக்கூடிய உரிம்ை அவருக்குண்டு. அரசாங்க சபையின் நிறைவேற்று நடவடிக்கை களையும் அரசாங்க சபையின் முடிவுகளுக்கு இசையாத இடத்துத் தாம் செய்த செயல்கள்பற்றிய நடவடிக்கைகளையும் ஆள்பதி காலத்துக்குக் காலம் அரசுச் செயலாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். ஆள்பதியின் முடிவு களை இவ்வரசுச் செயலாளர் ஆராய்வார்.
அரசாங்க சபையில் சட்டவாக்கு நடைமுறை முறிகளைத் தொடக்கி வைத்தல்
28. பாராளுமன்ற வரைவாளர் நிறைவேற்று குழுக்களின் முதல் வர்களுக்கும் அரசலுவலாளருக்கும் கடைமை கொண்டவராயிருத்தல் வேண் டும் ; இவர் தலைமைச் செயலாளர் திணைக்களத்தில் கடமை ஆற்றல் வேண்டும். நிறைவேற்று குழுவொன்றினல் ஆராயப்பட்ட ஒரு விடயம் அக்குழுவினுடைய கருத்தின்படி ஒரு முறியாக்கப்படல் வேண்டு மென்ற நிலைக்கு வருமேயானல், அந்நிறைவேற்று கழகத்தின் முதல் வர் வரையப்படவேண்டிய முக்கிய குறிப்புக்களடங்கிய ஒரு விண்ணப் பத்தை ஆக்குதல் வேண்டும். அந்நிறைவேற்று குழுவானது வேண்டிய சட்ட் அறிவுரைகளைப் பெற்ற பின்னர் இம்முடிவுக்கு வருதல் வேண்டும். அவ்வாறக்கப்பட்ட இவ்விண்ணப்பமானது பாராளுமன்ற வரைவாளருக்கு அனுப்பப்படல் வேண்டும். இவர் அரசாங்க சபையில் சமர்ப்பித்தற் பொருட்டு ஒரு முறியை ஆக்கிக்கொள்வார். இந்நேரத்தில் குறிப்பிட்ட

Page 44
இம்முதல்வர் சட்டசபையிலுள்ள மற்றைய முதல்வர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முறியின் உட்பொருளையும் அதைத் தான் சமர்ப்பிக்கப் போவதைப்பற்றியும் அறிவித்தல் வேண்டும். இவ்வாருக்கப்படும் முறி யானது மற்றைத் திணைக்களங்களினுடைய செய்கைகளோடும் பூட்கைகளோ டும் முரண்படுவதாயும் அவற்றைப் பாதிப்பதாயும் இருந்தால், அத்திணைக் களங்களைப் பரிபாலிக்கும் முதல்வரோடும் நிறைவேற்று குழுக்களோடும் குறிப்பிட்ட இம்முதல்வர் அப்பொருள்பற்றிக் கலந்தாலோசிப்பர். எனவே இதன்பின்னர், இவர் அமைச்சர் சபைக்கு ஒரு மனத்துடன் முன் செய்யப் பட்ட முடிவுகளை எடுத்துரைக்கக் கூடியவராயிருப்பர். நிறைவேற்று குழுக் களும் அவற்றின் முதல்வர்களும் தங்கள் திணைக்களங்களோடு சம்பந்தப் பட்ட சட்டவாக்குக்களில் மனவேறுபாடு கொள்வரெனில், அமைச்சர் சபை இத்தகைய வேறுபாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏற்ற கூட்டுக் குழுக்களே, அல்லது அவை போன்ற வேறு சாதனங்களை அமைத்துதவல் வேண்டும். மேலும், முறியானது இந்நிலையிலிருக்கின்ற பொழுது, முறியோடு சம்பந்தப்பட்ட நிறைவேற்று குழுவின் முதல்வர் மற்றை முதல்வர்களுடன் கலந்து, முன்னர் எடுத்தாய்ந்த திணைக்களங் களையன்றி வேறு திணைக்களங்கள் இதனல் பாதிக்கப்படவில்லையோவென ஆய்ந்து துணிந்தபின்னர், அவர்களுடன் அரசாங்க சபையினுடைய நட வடிக்கை நிகழ்ச்சி ஒழுங்குகளில் இந்த முறி எம்முறைமையில் அமைய \வேண்டுமென்பதுபற்றி ஒர் ஒழுங்கிற்கு வருவர். இதன்பின்னர், காலப் போக்கில் இம்முறியானது அரசாங்க சபையில் முதல்வரால் சமர்ப்பிக்கப் படும். இவர் இல்லாத விடத்தில் நிறைவேற்று குழுவின் ஒரு முதிய உறுப்பினர் அதைச் சமர்ப்பிப்பர். அதன்பின்னர், அது நிலையான கட்டளை *களுக்கியைந்த முறையில் ஆராய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஒரு முறியைத் துவக்கிவைப்பவர் ஒர் அரசலுவலாளரெனின், மேற்கூறிய ஒழுங்கினை இவரும் கடைப்பிடித்தல் வேண்டும்.
தனிப்பட்ட உறுப்பாளர் பேறுகள்
29. இதுவரை நாம் எடுத்துக் காட்டியவாறு, அரசாங்க சபையின் சட்ட நிறைவேற்று அமர்வில் வரும் முக்கிய அலுவல்கள் யாவும் அமைச்சர் சபை, நிறைவேற்று குழுக்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றி வருவனவே uth. நிறைவேற்று குழக்களில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்கு வேண்டிய முன்மொழிவுகளைக் கொண்டுவரலாம். இவை குழுவால் எற்றுகoகாளளப்பட்டால இறுதயில அரசாங்க சபைகருச சமர்ப்பிக்கப்படும். ஆனல், இப்பேற்றினைவிட, வாக்கெடுப்பினலோ, அல்லது வேறு வழியினலோ தனிப்பட்ட உறுப்பினர் ஒருவர் அரசாங்க சபையில் ஒரு தீர்மானத்தையோ, முறியையோ கொண்டு வருவதற்கேற்ற ஒரு வாய்ப் பினையளிக்கக்கூடிய எற்பாடொன்றினையும் நிலையான கட்டளைகள் கொண்

77.
டிருத்தல் நல்லது. இவ்வாறு தனிப்பட்ட உறுப்பினர் ஒரு முறியைக் கொண்டுவந்தால், அதைப்பற்றி உரையாடல் ஒன்றும் நிகழ்த்தாது அதற் கென உரிய நிறைவேற்று குழுவிற்கு அதை அனுப்புதல் வேண்டும். அதைப்பற்றி அக்குழு அறிக்கை சமர்ப்பித்தபின், அதைப்பற்றிய மற்றை நடவடிக்கைகள் எல்லாம் மற்றை அலுவல்களோடு تکے|Hgl கொண்டுள்ள தொடர்பினைப் பொறுத்தவையாம். மற்றை அலுவல்களைப் போலவே அதன் நிலையையும் அமைச்சர் சபை முடிவு செய்யும்.
நிலையான குழுக்கள் (சட்டவாக்க முறை)
30. அரசாங்க சபையின் ஒவ்வொரு பருவக்கூட்ட ஆரம்பத்திலும் வாச கர் அரசாங்க சபையை “A”,“B’ எனப்படும் இரண்டு நிரந்தரமான நிலையான குழுக்களாகப் பிரிப்பர். இவை சட்டவாக்கு நடவடிக்கைகளை அவற்றின் குழு ஆராய்ச்சி நிலையில் ஆய்வதற்காக அமைக்கப்படும். இவற்றிற்கு முறையே குழுக்களின் முதல்வரும் பதில் முதல்வரும் தலைமை வகிப்பர். நிறைவேற்று குழுக்களைச் சேர்த்து இந்தக் குழுக்களை ஆக்கலாம். இவை இரண்டு சட்டவாக்கு குழுக்களாகப் பின்வருமாறு அமையலாம் :
நிலையான (35(Աք “A உண்ணுட்டலுவல் கமத்தொழில் உள்ளூராட்சி கல்வி
இவற்றின் நிறைவேற்று குழுவினர்
நிலையான குழு “B ” உடனலம்
பொதுவேலை இவற்றின் நிறைவேற்று குழுவினர் போக்குவரத்து
இரண்டாவது வாசிப்புப்பற்றிய நண்டமுறை
31. ஒரு முறியை இரண்டாவது முறையாக வாசித்ததன்பின் நடை பெற வேண்டிய குழுநிலைக்கு வேறெரு மாற்றமாக, முழுச்சபையும் சேர்ந்த ஒரு குழுவையோ, சபையின் ஒரு நிமித்த தெரிகுழுவையோ இப்பொழு துள்ள சட்டசபையின் விதிகளும் கட்டளைகளும் விதிக்கின்றன. இவ்விதி களும் கட்டளைகளும் திருத்தியமைக்கப்படல் வேண்டும். கீழ்க் குறிக்கப்படும் மூன்று முறைகளும் எதிர்காலத்தில் பயன்படக் கூடியனவாயிருத்தல் வேண்டும்.
(1) ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை ஆய்வதற்கு அமைச்சர் சபை இந்த நடவடிக்கையின் படி செயலாற்ற வேண்டுமென்று கருதும் சில சிறப்பு நடவடிக்கை களுக்கும், முழுச்சபையினையும் கொண்ட ஒரு குழு.

Page 45
8
(2) மிக விரிவான, சிக்கலான தொழினுட்ப நடவடிக்கைகளை ஆராய் வதற்கு, 4 அல்லது 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தெரிகுழு; இஃது அமைச்சர் சபையின் ஒரு பிரத்தியேகப் பிரேரணையினல் எற்படுத்தப்படல் வேண்டும்.
(3) முன் கூறிய பந்தியில் எடுத்துரைக்கப்பட்ட நிலையான “A”, “ B ”
குழுக்களிலொன்று.
32. எனவே, இயற்கையான நடைமுறை யாதெனில், இரண்டாவது வாசிப்பின் பின்னர், முறிகளை நிலையான, நிரந்தரக் குழுக்கள் இரண்டிற் கும் அல்லது ஒன்றிற்கு ஆராய்விற்காக அனுப்பி வைத்தலாகும். முன்னர்க் கூறியவாறு நிறைவேற்று குழுக்களைச் சேர்த்து இக்குழுக்கள் அமைக்கப்பட்டால் பலவிதமான அனுபவங்களையும் ஒன்று சேர்த்தலும் எற்ற முறிகளை அவையவைக்கென ஒதுக்குதலும் இயலக்கூடியதொன்ற கும். முறிக்கு அதிகாரம் கொண்டுள்ள அமைச்சரோ, உறுப்பினரோ அந்த நிலையான குழுவின் உறுப்பினரல்லராயின், இந்த முறியை ஆரா யும் கால அளவுக்கு மட்டும் அந்தக் குழுவோடு அவர் சேர்ந்திருத்தல் வேண்டும்.
33. ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்கின்ற வேளைகளில், முன்னர் நாம் கூறியவாறு, அரசாங்க சபையானது ஒதுக்கீட்டு முறியை, அல்லது குறைநிரப்பு ஒதுக்கீட்டு முறியை, அல்லது அதன் வழிவந்த யாதாயினும் நிதி நடவடிக்கையை இரண்டாவது முறையாக வாசிப்பதற்கீடாக மீண்டும் ஆராயுமாறு அமைச்சர் சபைக்கு அனுப்பலாம். இவ்வாறு திருப்பியனுப்புதல் ஒரு முறையே செய்யக்கூடிய தொன்றகும். இவ்வலுவலை அரசாங்க சபைக்கு எடுத்துக் கூறல் வேண் டும். அதன் முடிவினல் சபை நிலைபெறலாம் அல்லது விழலாம். இம் முறியானது, இரண்டாவது முறை வாசிக்கப்பட்ட பின்னர், அது முழுச் சபையும் கொண்ட குழுவிற்கு அனுப்பப்படும். அந்நிலையில் ஒவ்வொரு திணைக்களத்துக்குமுரிய மதிப்பீடுகள் ஆராயப்படும். “ வழங்கல் ’ பற்றி ஆராய்வதற்குரிய நாட்களைச் சபை விதித்தல் வேண்டும். இதைச் சபைப் பணிக்கையில் விதித்தல் வேண்டும். திணைக்களங்களின் பல்வேறு மதிப்பீடுகளையும் என்ன முறையில் ஆராய வேண்டுமென்று சபையின் உறுப்பினர்கள் முடிவு செய்வதற்கேற்ற ஓர் உபாயம் வகுக்க வேண்டும். இம்முடிவினை அவர்கள் வாக்கெடுப்பால் செய்துகொள்ளலாம்.
அறிக்கை நிலையிற் செய்துகொள்ளவேண்டிய நடைமுறை
34. தன்னிடம் அனுப்பப்பட்ட முறியை ஒரு குழு ஆய்ந்து அரசாங்க சபைக்கு அதைப்பற்றி அறிக்கை கொடுத்தபின், குழு செய்த திருத்தங் களையே ஆராய்வதற்குச் சபைக்கு அதிகாரமுண்டு. இவற்றை வேறு

79
திருத்தங்களுடனே, திருத்தம் இல்லாமலோ சபை ஏற்றுக்கொள்ளும், அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விடும். ஆயினும், குழுவினுடைய திருத் தங்களாலாகிச் சபை எற்றுக்கொண்ட திருத்தங்களையன்றி வேறு புதிய திருத்தங்களை ஆராய்வதற்குச் சபைக்கு அதிகாரமில்லை.
35. ஆதலால், நிலையான குழுக்கள் " A ’ உம் "B" உம் பூரண பிரதிநிதித்துவம் உடையனவாயிருக்கச் செய்தல் அவசியம். எனவே, அறிக்கை நிலையிலே நடக்கக்கூடிய நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வ தால் எற்படக்கூடிய அநீதிகளை நீக்குதற்கு ஒரு வழியைக் கடைப்பிடிக்க லாம். இதற்காக குறித்த ஒரு நிலையான குழுவிற்குக் குறித்த ஒரு முறியில் மிகவும் கவற்சி கொண்டவராயும் வேறு எவ்விதத்திலும் அக்குழுவிற் சேர்ந்து ஆராய்வதற்கு வாய்ப்பில்லாதவருமான சிலரைக் குறிக்கப்பட்ட அளவில், தற்காலிகமாகச் சேர்ந்துழைப்பதற்குச் சிறப்பானவோர் எற்பாட்டைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
மூன்றவது வாசிப்புப்பற்றிய நடைமுறை
36. திருத்தியமைக்கும் கூடமொன்று இல்லாததினலே குறித்த அறிக்கை கொடுத்த பின்னர் சொல்லளவிலும் வரைவளவிலுமாய திருத் தங்களை மூன்றவது முறை வாசிக்கின்றபொழுது செய்யக்கூடிய வாய்ப்பு இருத்தல் வேண்டும். மூன்றவது முறையாக ஒரு முறியை வாசித்து நிறைவேற்றிய பின்னர் அந்த முறியை வழக்கமான முறையில் ஆள்பதி இசைவிற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அவர் அவ்வாறு இசைவளித்தா ரென்ற செய்தி சபைக்கு வருமுன்னர் அஃதொரு சட்டமாகாது.
37. சபை ஏற்றுக்கொண்ட நடவடிக்கைகளை ஆள்பதி ஆராய்கின்ற பொழுது அவருக்குக் கட்டுபாடில்லாத வீட்டல் உரிமையுண்டு. இந் நடவடிக்கைகள் அவருக்களிக்கப்பட்ட வேந்துக் கட்டகளுக்கு முரண் பட்டனவாய் இருக்கின்றன என்று அவர் கருதினலொழிய சாதாரணமாக அவர் இந்த உரிமையைப் பயன்படுத்தார். மாட்சிமைதங்கிய அரசருடைய இணக்கத்தைப் பெறும்வரை, இசைவு கொடுக்காமல் இருக்கவும் அவருக்கு உரிமையுண்டு ; சபைக்குத் திருத்தங்களைத் தெரிவிக்கவும் உரிமையுண்டு; குறித்த ஒரு கட்டளைச் சட்டமானது சபையினுடைய மூன்றிலிரண்டு பெரும் பான்மை வாக்கினல் எற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று வற்புறுத்து வதற்கும் உரிமையுண்டு ; அல்லது ஆறு மாதத்திற்கு மேற்படாத ஒரு காலத் தவணைக்கு அச்சட்டமானது செயற்படாமல் இருக்கவேண்டுமென்று ஒரு நிபந்தனையை விதிப்பதற்கும் உரிமையுண்டு.

Page 46
80
38. சபையில் விதிக்கப்பட்ட எல்லாக் கட்டளைச் சட்டங்களும் மாட்சிமை தங்கிய மன்னருடைய இணக்கத்திற்குத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படல் வேண் டும். அவற்றை எற்றுக்கொள்ளாதிருப்பதற்கு மன்னருக்கு முழு அதிகாரம் உண்டு. தாம் விரும்பியவாறு கழகத்துப் பணிக்கையாற் சட்டம் நிறுவ வும் அவருக்கு உரிமையுண்டு. ஆள்பதி யாதுமொரு நடவடிக்கையை யேனும் ஏற்றுக்கொள்ளாது விலக்குகின்றபொழுதோ, அதன் செயற்பாட்டி னைத் தடைப்படுத்துகின்றபொழுதோ தம்முடைய செயலைப்பற்றிய முழு விவரத்தையும் அரசுச் செயலாளருக்கு அறிவித்தல் வேண்டும். அவர் ஆள்பதியினுடைய முடிவினை ஏற்றுக்கொள்ளவோ, மாற்றிவிடவோ செய்யுமாறு மாட்சிமைதங்கிய மன்னருக்கு அறிவுரை கொடுக்கும் பொறுப்பை உடையவராயிருப்பார்.
39. மேற்கூறிய பந்திகளில் நாங்கள் எடுத்து விரித்த ஒழுங்குகளுக்கு எற்ப சபையினுடைய நிலையான கட்டளைகளில் செய்யவேண்டிய மாற்றங் களைப் பந்தி 41 இல் நாம் எடுத்துக்கூறும் குழு செய்யலாம். வருங்காலத்தில் சபையானது தன்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு தன்னுடைய நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கேற்ற அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண் டும். ஆனல், உறுப்பினருள் மூன்றிலிரண்டு பகுதி பெரும் பான்மை யால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் திருத்தங்கள் செய்யலாகாது.
சபையின் பொதுவான நடைமுறை அமர்வின் ஆரம்பம்
40. சபையின் ஒவ்வோர் அமர்வும் ஆள்பதியின் பேச்சொன்றுடன் தொடங்கல் வேண்டும். அத்தருணத்திற்கேற்ற சடங்குகளுடனேயே அது நடைபெற வேண்டும்.
சடங்கு
41. பாராளுமன்ற நடவடிக்கைகளிலே நிலையான ஊக்கினைச் சடங்கு கள் அளிப்பனவாதலின், சபையின் முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஆள்பதி சபையின் நிலைமை, உயர்ந்த அதிகாரம் ஆகியவற்றிற் குவந்தவெனக் கருதப்பட்ட சடங்கு முறையிலமைந்த ஒப்புக்கள், ஒழுங்குகள் ஆகியவற்றை வகுத்து நிலைநாட்டுவதன் பொருட்டு நிலையான கட்டளைகளே ஆராய்வதற்கு ஒருசிறு குழுவினை நியமித்தல் வேண்டும்.
தலைமை வகிக்கும் அலுவலர்
42. புதிய ஒரு சபை கூடியதும் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் களிடையே ஒரு வாசகர், ஒரு முதல்வர், குழுவின் பதின்முதல்வர் ஆகியோ ரைத் தெரிந்தெடுத்தல் வேண்டும். இவர்களுட் பிற்கூறிய ஒவ்வொருவரும் பதில் வாசகராகக் கடமையாற்றத் தகுதி வாய்ந்தவர்களாவர். வாசகர் பதவிக்

8.
குரிய நிர்வாகக் கடமைகள் யாவையும் கொண்டு நடத்துவதற்குப் பொறுப்புள்ள வாசகரின் சம்பளமானது ஒர் அமைச்சருடைய சம்பளத்தை, ஒத்ததாயிருக்கும். முதல்வர், குழுக்களின் பதின்முதல்வர் ஆகியோரின் சம்பளம் ஆண்டுக்கு 1,000 பவுணுகவோ, 15,000 உரூபாயாகவோ இருக்கலாம்.
சபையின் அலுவலர்
43. கூடத்தின் கட்டடம், அதனுடைய பொதுப் பரிபாலனம் ஆகிய வற்றிற்கு வாசகர் பொறுப்பாளராக இருப்பார். அவருக்குத் துணையாக. எழுதுநரும் பல உதவியாளர்களும் கடமையாற்றுவர். இவர்கள் சபையின் அலுவலர் என அழைக்கப்படுவர். இவர்கள் குடியியற் சேவையிலிருந்தோ, எழுதுநர் சேவையிலிருந்தோ எடுக்கப்பட்டவராயிருக்கலாம் ; அல்லது இதற்கென நேரே வாசகரால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயிருக்கலாம். அவர் களுடைய சம்பளங்கள் வாசகரால் கொடுக்கப்படும். இம்முறை விரும் பத்தக்கதெனின், வாசகர் செய்துகொள்ளலாம்.
அலுவலதிகாரம்
44. அலுவல்களைக் கட்டுப்படுத்தலும் அவற்றை ஒழுங்கு படுத்தலும் நாம் முன்னர் எடுத்துக்கூறியவாறு அமைச்சர் சபையின் நடவடிக்கை. களுள் அடங்கும். இவ்வாறக, இவர்கள் முறிகளை நிகழ்ச்சி நிரலின் முதல் வரிசையிலே அமைத்து சபைகளினுடைய சட்டநிறுவு அமர்வொன்றி னைக் கூட்டவும் முடியும் ; அல்லது நிறைவேற்று குழுக்களிலிருந்து வரும், அறிக்கைகளை ஆராய்வதற்கு முதன்மையளித்து சபையின் நிறைவேற்று அமர்வினைக் கூட்டவுங் கூடும். இத்தகைய அறிக்கைகள்பற்றியவிடத்து, ஒரு சுழற்சி முறையில் சிற்சில நாட்களில் குறித்த சில திணைக்கள அலுவல் களுக்கு முதன்மையளித்து ஆராய்வது வாய்ப்புடையதாகும் ; (ஆங்கில) மக்கள் சபையில் கேள்விகள் பற்றியவிடத்துக் கைக்கொள்ளுவதை இஃதொக்கும்.
45. முக்கிய அலுவல்களை ஆராய்வதற்கெனச் சபையின் நேரத்தை எடுத்துக் கொள்வதற்கு அமைச்சர் சபைக்கு அதிகாரமுண்டு. இப்படிப்பட்ட செய்கை ஒரு விதமான திருத்தமோ, அல்லது விவாதமோ இன்றி முடிவு செய்யப்படல் வேண்டும். மக்கள் சபையின் நிலையான கட்டளை எண் 10 இல் உள்ளவாறுபோல, திணைக்களத்திற்குரிய முதன்மையைக் கவனியாது: முக்கியமான பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். குழுக்களின் முதல்வர் சமர்ப்பிக்கும் முறிகள் நாளுக்குரிய கட்டளைகளுள்"

Page 47
82
முதன்மைபெற்று மற்றை முறிகளிலும் முதன்மை பெறும்.
அமைச்சர் குழு நியமித்தவாறே இம்முதன்மையாகும். ஒவ்வொரு நாளும்
கேள்விகளுக்கெனக் குறித்த ஒரு வரையறுத்த காலமே ஒதுக்கப்படல்
வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை கேள்வி என்று குறித்து ஓர்
எண்ணிக்கைக்கு மேற்படாத கேள்விகளையே உறுப்பினர் கேட்டல் வேண்டும். நிலையான கட்டளையைக் கொண்டு கேட்கப்படும் கேள்விகளின் நீளத்தை
ஒழுங்கு படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். கேள்விகளைத்
தணிக்கை செய்வதற்குமேற்ற கருவி அமைத்தல் வேண்டும். இவ்வதி
காரம் வாசகரில் இருத்தல் வேண்டும்.
புதிய யாப்புக்கு அடிப்படையாக இப்பொழுது நாம் கூறிய முறையே இருத்தல் வேண்டுமென நாம் எடுத்துரைக்கின்றேம். நாங்கள் இங்கு அவற்றை விரிவான நியாயங்களின்றிக் கூறியுள்ளோம். அவற்றை இலகு வில் முழுமையும் நோக்கலாம் ; அப்பொழுது, நாம் எடுத்தோதும் மாற்றங்களுக்குரிய காரணங்களை ஆராய்வதால் எற்படும் கவனக்குறைவு கள் எற்படா. அப்போது அவற்றை முழு உருவில் நோக்குவதற் கேற்ற வாய்ப்பு ஏற்படும். ஆயினும், இப்பொழுது நாம் அவற்றின் சில பண்புகளை முறையே விரித்துரைக்க விரும்புகின்றேம். ஏனெனில், ஒவ்வோர் எற்பாட்டுக்கும் உள்ள உட்பொருள்களைப்பற்றியாதுமோர் ஐயமும் ஏற்படாமல் இருப்பதன் பொருட்டு இதைச் செய்கிருேம்.
புதிய யாப்பின் விரிவு
அலுவலாளர்களை நியமித்தலும் பதவியேற்றம் அளித்தலும்
அரசாங்க சபையின் அமைப்பையும் அதனுடைய இரட்டைத் தொழிலை யும்பற்றிப் போதிய அளவில் விளக்கியுள்ளோமென நாம் நம்புகின் ருேம். பல்வேறு நிறைவேற்று குழுக்கள் கடமைகளைப்பற்றியும் நாம் எடுத்துரைக்க வேண்டியதில்லை. ஆயினும் ஒரு பொது முறையில் இந்தக் குழுக்களானவை தங்களுடைய ஆணையின் கீழமைந்துள்ள திணைக்களத்திலே நியமனங்களைச் செய்வதற்கு எவ்வாறு பொறுப்புள்ளன என்பதைப்பற்றி இங்கு சுட்டுதல் நல்லதென நினைக்கின்றேம். இப்பொருள் பற்றி குடியியற் சேவை, பொதுச் சேவை ஆகியவைபற்றிக் கூறும் அதிகாரத்தில் நாம் விரிவாக ஆராய்ந்துள்ளோம். இப்பொழுதிருக்கின்ற ஒழுங்கு முறையிலே ஒரு திணைக்கள அதிபர் தம்முடைய அதிகாரத்தின் பேராலேயே ஓராண்டுக்கு 1,200 உரூபாய், அல்லது 80 பவுணுக்கு மேற்படாத இளைப்பாறற் சம்பளமில்லா அலுவலரை நியமிக்க அதிகாரம் கொண்டவரா யிருக்கின்றர். இவ்வரிசையிலே அடங்காத நியமனங்களும் பதவியேற்றங்

83
களும் நேராக ஆள்பதியாற் செய்யப்படுவன. ஆனல், இவற்றுள் ஆண்டுக்கு 4,500 உரூபாய், அல்லது 300 பவுணுக்கு மேற்படும் நியமனங்களின் சிலவகைகளிலும் ஆண்டுக்கு 6,750 உரூபாய் அல்லது 450 பவுணுக்கு மேற் படும் நியமனங்கள் எல்லாவற்றிலும் அரசுச்செயலாளரின் இசைவைப் பெறல் வேண்டும். இவ்வொழுங்கைக் கீழ்வரும் மாற்றங்களுக்கியைய தொடர்ந்து நடத்தல் வேண்டுமென்பது எங்களுடைய எண்ணம். ஒரு நிறைவேற்று குழு வின் ஆட்சிக்குள்ளான ஒரு வகுப்பைச் சார்ந்த ஒரு நியமனமாயின், அந்தப் பதவியை நிரப்புவதற்குத் திறமை வாய்ந்த ஒருவரை ஆள்பதிக்கு எடுத் துக் கூறுவதற்குரிய பொறுப்பு குழுவிற்கிருக்க வேண்டும். மற்றை நிய மனங்கள் யாவிலும் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு ஒரு பொதுச் சேவை யாணைக்குழுவில் இருத்தல் வேண்டும். இவ்வாணைக்குழுவின் செயல்களைப்பற்றிப் பின்னர் நாம் எடுத்துக் கூறுவோம். முன்கூறிய வகைமிலே நிறைவேற்று குழுவின் எடுத்துரைகள் ஆள்பதிக்குப் பொதுச் சேவையாணைக் குழு மூலமாக எடுத்துக் கூறப்படல் வேண்டும். பின்கூறிய வகையிலே நிறைவேற்று குழுவின் முதல்வருக்கு, பொதுச் சேவையா ணைக் குழுவிற்கு எவ்வாறு குழு எடுத்துரைக்கின்றதோ, அவ்வாறு செய்தி அனுப்புவதற்கு உரிமையுண்டு. இவ்வகையிலே ஆள்பதிக்குரிய முழு அதி காரததையும் எதுவிதத்திலேனும் மாற்றுவதற்கு நாம் நினைக்கின்றே மென்று கருதலாகாது. சிலவேளைகளில் அவருக்கு எடுத்துரைத்த அறி வுரைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டனவாயிருக்குமாதலால், பொது நலத் தின் பொருட்டு ஆள்பதி தாம் விரும்பியவாறு செய்வதற்குரிய சுதந் திரத்தையுடையவராமிருத்தல் வேண்டும். நாங்கள் இப்பொழுது இங்கு எடுத்துக் கூறுகின்ற நடவடிக்கையானது அவருடைய தீர்மானத்தைக் கட்டுப்படுத்துவதற்கண்று ; கோணல் இல்லாத ஒரு முடிவை அவர் செய்து கொள்வதற்கென்க. அன்றியும், இம்முறையானது பொதுச்சேவையிலுள்ள எல்லா வகுப்பையும் எல்லாத் தரத்தையுஞ் சேர்ந்த அலுவலாளர்களை யும் அரசியல் தலையீட்டினின்று காப்பதற்கும் நிறைவேற்று குழுவின் உறுப்பினர்களிலே இனிமேல் தாம் வகிக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பை உணரச்செய்வதற்கும் உதவியாயிருக்கும்.
திணைக்களத் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே பொறுப்பினைப்
பகிர்ந்து கொள்ளல்
இப்பொழுது, நாம் நிறைவேற்று குழுக்களின் முதல்வர்களுடைய நிலை மையை ஊக்குகின்ற சில விடயங்களைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேம். முதலாவதாக, ஒரு பக்கத்தில் முதல்வரும் நிறைவேற்று குழுவும் மற் 4றைப் பக்கத்தில் அவர்களின் அதிகாரத்திலமைந்த திணைக்களத்தின் தலைவர்களும் அமைந்திருக்கின்ற நிலையிலே அவர்களுக்கிடையே பொறுப் பினை எவ்வாறு பகிர்ந்துகொள்வதென்பது முதலாவது பிரச்சினையா

Page 48
84
கும். ஒரு திணைக்களத்தலைவர் தம்முடைய வழக்கமுறைக் கடமைகளை ஆற்றுகின்ற ஒழுங்கிலே அவரே தலைமையானவராயிருக்க வேண்டுமென்று நாம் எடுத்துரைக்கின்ருேம். ஆயினும், நிறைவேற்று குழுவின் முதல்வருக்கும் உறுப்பினர்களுக்குமுள்ள முழுவதிகாரமும் எதுவிதத் திலும் குறைதல் ஆகாது. மற்றை வகைகளில் இவர்கள் அதிகாரம் சபையினுடைய முழுவதிகாரத்திற்கும், இறுதியில் ஆள்பதியின் அதிகாரத் திற்கும் கீழ்ப்படிந்ததாயிருத்தல் வேண்டும். சில திணைக்களங்களிலே இவ்வாறு இப்பொறுப்பினைப் பகிர்ந்து கொள்ளல் மற்றைத் திணைக் களங்களிலும் பார்க்க இடர் குறைந்ததாயிருக்கும். உதாரணமாக, கல்வித் திணைக்கள நடவடிக்கைகள் எல்லாம் விரிவாயமைந்த ஒரு நடைமுறைக் கோவைக்கிணங்க நடைபெறுவனவாம். இக்கோவையைப் பரிபாலிக்கும் நடவடிக்கைகள்பற்றிய குழுக் கட்டுப்பாட்டையும் அத்திணைக்களத் தலைவர் கையில்விட்டு, அக்கோவையிலிருந்து விலகும் எல்லா வகைகளையும், அந்தக் கோவை பொருந்தாத, அல்லது ஐயமாக இருக்கின்ற எல்லா வகைகளை யும் குழுவினுடைய அதிகாரத்திற்கு விடல் வேண்டுமென்ற ஒரு முறையை அமைத்துக்கொள்ளல் இந்தப் பொறுப்பினைப் பகிர்ந்து கொள்வதற்கு இலகுவான முறையாகும். இம்முறைமையானது, வாய்ப்பான ஒரு செயற் படு முறையை அளிக்குமேயெனில், இதை மற்றைத் திணைக்களங்களும் பயன்படுத்தலாம். விரிவான எற்பாடுகளைத் திணைக்களங்கள் தாமே செய்து கொள்ளலாம் ; ஆனல், எல்லாவற்றின் ஆட்சிக்கும் பொதுவான சில பொது வரையறைகள் ஆக்கப்பட்டு அரசாங்கத்தின் பொது விதிகள் என்ற கோவையில் சேர்க்கப்படல் வேண்டும். அவை நிறைவேற்று குழுக் களில் கடமை பார்க்கும் அலுவலாளர்க்கு ஒரு வழி காட்டியாயமையும். பந்தி 7 இல் நாம் எடுத்துக் கூறியவாங்கு, இவ்வரைவிலக்கணங்கள், ! குழுவின் அதிகாரத்தைப் பெறவேண்டிய நடவடிக்கைகளையன்றியும், அர சாங்க சபையினதும் இறுதியாக ஆள்பதியினதும் அனுமதியினைப் பெறவேண்டிய நடவடிக்கைகளுக்கும் பொருந்துவனவாயிருத்தல் வேண் டும். இம்மாதிரியான செய்தொழில் முறைகளுக்குரிய விரிவான எற் பாடுகளை நாம் இங்கு எடுத்துக்கூற விரும்புகின்றேம் என்பதிலிருந்தே அத்தகைய நடைமுறை ஒழுங்குகட்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றேம் என்பது புலப்படும். எல்லாத் திணைக்களங்களும் செயன் முறைகளும் ஒத்த ஒரு முறையிலிருக்கும் என நாம் கருதவில்லை. ஆனல், அவற்றிற்குரிய தனிப்பட்ட தேவைகளுக்கியைந்தவாறு அவற்றை அமைத்துக்கொளல் வேண்டும். இன்னும், அவற்றை நெகிழ்வில்லாத ஒரு சட்டதிட்டத்திற்குள் அமைப்பதும் ஒழுங்கிற்கும் திறனுக்கும் தடை யாயமைந்துவிடும் ; அதுபோலவே, அரசாங்கத்தினுடைய பொது நலனைக் கருதாது தங்களுக்குரிய விதிகளைத் தாமே அமைத்துக்கொள்ளும் பூரண கட்டுப்பாடின்மையும் கேட்டைத் தந்துவிடும். ஆகவே, இலங்கையிலுள்ள பல்வேறு திணைக்களங்களின் செயன்முறைகளையும் நன்கு அனுபவ முறையில் அறிந்தவர்களே இந்த வேலையை மேற்கொள்ளல் வேண்

85
டும். எனவே, அரசாங்கத்தை இந்தக் கேள்வியில் சிந்தையைச் செலுத்து மாறு நாம் கேட்டுக்கொள்கின்றேம். ஏனெனில், புதிய யாப்புமுறையில் அமைந்த அரசாங்க யாப்பு இயங்குவதற்கு முன்னர் எந்தெந்த விதிகள் வேண்டியனவோ, உவந்தவையோ அவற்றை நன்கு ஆலோசித்து, வரையறுத்து எற்றுக்கொள்ளல் இன்றியமையாததாம்.
ஆட்சிமுறைக் கீழ்ப்பரவலுக்கு ஆயத்தஞ் செய்தல்
என்ன வகையில் இம்முறையானது மாறவேண்டுமென்பதுபற்றிய முடி விற்கு முன்னராகவே, அம்முறை மாற்றத்திற்கு ஏற்ற வேறு ஆயத்தங் களும் செய்யப்படல் வேண்டும். இப்பொழுது மிகவும் இன்றியமையாது தேவைப்படுவது செயலகத்திலமைந்த ஆட்சிக் கட்டுப்பாட்டை எங்கும் பர வச் செய்தலாம் ; எந்தப் பொதுவித யாப்பு முறையிலும் இஃதொரு முக்கியமான பண்பாக அமைதல் வேண்டும். இதை மிக்க கவனத்துடன் ஆயத்தம் செய்து ஒருவிதமான காலத் தாழ்வும் இன்றி விரிவுபடுத்தி அமைத்துக் கொள்ளல் வேண்டும். அரசாங்கத் திணைக்களங்களைத் தொகுத் தல், நிறைவேற்று குழுக்களின் முதல்வர்க்குச் செயலலுவலரமைத்துக் கொடுத்தல், திணைக்கள இடம் அமைத்துக் கொடுத்தல், இன்னும் மிக விரிந்த முறையிலே பொறுப்பு முறையை மாற்றுகின்றபொழுது எழு கின்ற பல சிறு பிரச்சினைகள் ஆகிய யாவற்றையும் மிக்க விழிப்புடன் ஆராய்தல் வேண்டும். புதிய முறைக்கு மாற்றுகின்ற அமைப்பையும் அதற்குரிய வழிவகைகளையும் அம்முறை மாறுகின்றதற்கு முன்னதாகவே எற்ற தருணத்தில் முடித்துக் கொள்ளல் வேண்டும். இப்பொழுது இருக் கின்ற செயலகத்திலிருந்து செயற்பாட்டினைப் பன்முகப்படுத்துவதற்கேற்ற ஒரு நிறைமுறைமையொன்றை ஆயத்தம் செய்தலில் காலந் தாழ்த்த லாகாது. இவ்வாறு செய்கின்றபொழுது சபையும் அதன் உறுப்பினர் களும் பொதுச்சேவை அலுவலாளரும் இந்த விவரங்களை நன்கு அறியச் செய்தல் வேண்டும். இப்பொழுது நாட்டிலுள்ள நிலைமையை நாங்கள் நன்கு ஆராய்ந்தபின் யாப்புமுறைச் சீர்திருத்தத்தையும் ஆட்சிமுறைக் கீழ்ப்பர்வலையும் ஒருங்கே எற்படுத்துவது நல்லதென நாங்கள் எடுத்துரைக்க விரும்புகின்ருேம். ஒருவிதமான அவதானமுமில்லாத முறையில் திடீரென இந்நடவடிக்கைகளை எடுத்தால் பொதுவாக இடர்கள் நேரல் &7, GBL). நல்ல பழக்கமில்லாச் சூழ்நிலைகளிலும் இடர்தரும் வகையில் அமைந்த முன்பின் அறியாச் சூழ்நிலைகளிலும் கடமையாற்ற வேண்டிய செயலாளலுவலரையே கொண்ட, நல்ல தேர்ச்சியில்லாத அமைச்சர்கள் வசம் பொதுச் சேவையை ஒப்படைப்பதாலும் இடர்கள் ஏற்படும். எனவே, புதிய அமைச்சர்களும் நிறைவேற்று குழுக்களும் வெற்றி பெறுவதற் கேற்ற வகை யாவையும் வகுக்க வேண்டும். எனவே, அமைச்சுக்களை வெறும் தாளிலே மட்டும் இருக்கவிட்டு வரும் காலத்திலே புதிய அமைச்சர் களே அவற்றை ஆக்க வைத்தலாகாது. எலவே படைத்து இயங்கிக்கொண் டிருக்கின்ற அமைச்சுக்களே அவர்கள் பெறுமாறு வழி வகுக்கவேண்டும்.

Page 49
86
நிறைவேற்று குழுக்களுடன் அமைச்சர்கள் கொண்ட தொடர்பு
இவ்வாரம்ப குறிப்புக்களைக் கூறிய பின்னர் இப்பொழுது நாம் ஓர் அமைச்சர், (1) தம்முடைய குழுவுடன் கொண்டுள்ள தொடர்பு, (2) அரசாங்க சபையுடன் கொண்டுள்ள தொடர்பு, (3) தம் துணை அமைச்சர் களுடன் கொண்டுள்ள தொடர்பு ஆகியவற்றை நன்கு ஆராய்வாம். எலவே நாம் கூறியிருந்தோம், நிறைவேற்று குழுவின் தீர்மானத்திற் கிடப்பட்ட அலுவல் பெரும்பான்மை வாக்கினல் முடிவாக்கப்படுமென்று. இதனல், சில வேளைகளில் ஒர் அமைச்சர் தம்முடைய குழுவிலே சிறு பான்மையினராயிருத்தல் கூடும். இதனல், அரசாங்க சபைக்குத் தம் முடைய குழுவின் அறிக்கையை அவர் சமர்ப்பிக்கின்றபொழுது தாம் இசைவுபெருத சிறப்பான முன்மொழிவுகளையோ, அல்லது பொதுவான ஒரு நடவடிக்கையையோ எடுத்து விளம்பவேண்டி நேரும். இத்தகைய அமையங்கள் பல அடிக்கடி தோன்றினலும், இம்முறையைக் கடைப் பிடித்தொழுகுவது இடர்ப்பாட்டைத் தருமென நாங்கள் நினைக்கவில்லை. இத்தகைய பிரச்சினைகள் பெரும்பாலும் கொள்கையோடு சார்பில்லா தனவாய், குழுவினரின் கருத்து முடிபுகள் வேறுபடுவதால் தோன்று வனவாய் இருத்தல் கூடும். இன்னும், குழுவின் முதல்வர் தம்முடைய குழுவிற்குக் கடப்பாடு தவறதவராய், அரசாங்க சபையில் தம்முடைய அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றபொழுது தாம் எடுத்துக்கொண்ட தீர்மானத் திற்கு மாறகக் குழுவானது பெரும்பான்மை வாக்கினல் வேறெரு தீர் மானத்தை எடுத்துக்கொண்ட தென்பதையும் எடுத்துக் கூறலாம். இத் தகைய வேறுபாடுகள் இக்குழு முறைகளைப் பின்பற்றுகின்ற சருவதேச சங்கம் போன்ற பொதுச் சபைகளில் ஏற்படுதல் வழக்கமாகும். இத னல் குழுவின் முதல்வருடைய பெருமைக்கு இது பங்கம் விளைக்காது. இல்லையேல் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பொருளிலும் முதல்வர், குழுவின் பெரும்பான்மை வாக்கைத் தமக்கியைந்ததாக ஆக்கிக் கொள் ளல் வேண்டும். இல்லையேல் அவர் பதவியில் நின்றும் விலகிக்கொள் ளல் வேண்டும். இதனல், முதல்வரின் தனிநாயகம் ஏற்படல் கூடும் ; அல்லது மிகவும் அல்லலை எற்படுத்தக்கூடிய தொடர்பான பதவித் துறவுகள் இவ்விருவகையிலும் எற்படும். அமைச்சரோடு நிறைவேற்று குழுவொன் றினை இணைத்தும் பயனில்லாமற் போய்விடும். ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரிடையும் தாம் பொறுப்பில் பங்கெடுத்துக் கொள்கின்றர் என் னும் ஒரு மனப்பான்மையோடியைந்த மனப்பூர்வமான உரையாடலும் அளவளாவலும் இருத்தல், நிறைவேற்று குழு முறையின் பெரும் பயனைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாகும். இத்தகைய பூரணமான கட்டுப்பாடில்லாத ஒர் உரையாடல் நடக்கவேண்டுமெனின், கருத்துவேறு பாடுகள் உண்டாகின்ற நேரங்களிலெல்லாம் பதவித் துறவுகள் ஏற்படு மென்ற ஒரு பேச்சு எழக்கூடாது. இதல்ை குழுவில் என்னதான் நடந் தாலும் முதல்வர் பதவி வகிக்கவேண்டுமென்பதன்று. ஆனல், அதற்கு

87
மாருக எப்பொழுதும் குழுவினுடைய பெரும்பான்மைக் கருத்துக்கு முரண்பாடான கருத்தை அவர் கொண்டிருந்தால், அல்லது பொறுத்த ஒரு பிரச்சினையிலே கருத்து மாறுபாடுடையவராயிருந்தால், இத்தகைய மன வேறுபாடுகளினல் அவர்களுக்கிடையே உள்ள ஒரு முகத் தொடர்பு நீடிக்காதென அவர் நினைத்தால், அவர் தம்முடைய பதவியைத் துறக்க லாம். இவ்விடத்திலே குழுவிற்குப் புதிய ஒரு முதல்வரை நியமிக்கலாம். அவரை ஆள்பதி நியமிப்பார். இத்தகைய சந்தர்ப்பங்களிலே இப்பழைய முதல்வர், அவர் அவ்வாறு விரும்பினல், வேறு யாதுமொரு குழுவில் அமர்வதற்கேற்றவாறு குழுக்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஆயி னும், முதன் முதலாக நியமிக்கப்பட்ட குழுக்களைக் காலப்போக்கில் பொது வாக மாற்றியமைக்க வேண்டுமாயினும், முதல்வர்களை அடிக்கடி மாற்றி யமைக்கும் சந்தர்ப்பங்கள் எற்படுமென நாங்கள் எண்ணவில்லை. மீளாலோசனைக்கனுப்பும் அதிகாரம்
தனக்கு முழுவதும் மனத்திற்கொவ்வாத ஒரு நிறைவேற்று குழுவி னுடைய நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் தன் விருப்பிற்குதவாத பொருள்களை குழுவிற்கு மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பு வதற்கும் நிறைவேற்றமர்விலுள்ள அரசாங்க சபைக்குப் பூரண அதி காரம் இருத்தல் வேண்டும். இன்னும், இந்த அதிகாரத்தை அவ்வாறு மேற்கொள்வதால் முதல்வர் பதவித் துறவினை மேற்கொண்டு விடுவார் என்ற பயமில்லாதிருத்தல் வேண்டும். இந்த விதியானது மிகவும் முக் கியமானதென நாங்கள் கருதுகின்ருேம். அரசாங்க சபையின் எல்லா உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பைப் பெறவேண்டுமென்பதே இக்குழு முறைமையின் உண்மை நோக்கமாகும். இவ்வாறு மீண்டும் அனுப்பப் படும் முறைமையானது அந்த ஒத்துழைப்பைப் பெற்று, அவசர முடிவு களையும் மனவேறுபாடுகளையும் மிகவும் குறைத்துக் கொள்வதற்காகவே என்று கொள்ளல் வேண்டும். அரசாங்க சபையின் நிறைவேற்று கருவி நன்முறையில் செயற்படுவதற்குச் செயல் முறையிலே இந்த முறைமை யைக் கைக்கொள்ளல் அத்தியாவசியம் என நாம் கருதுகின்றேம். எனவே, இங்கு இவ்விதியினை எங்களுடைய எடுத்துரைப்புக்களில் சிறப் புடையதென எடுத்துக்கூற விரும்புகின்றேம். எந்தக் குழுவிற்கு இந் நடவடிக்கை மீண்டும் ஆலோசனைக்காக அனுப்பப்படுகின்றதோ, அந்தக் குழுவிற்கு, இஃதொரு கண்டிப்பாக அமைந்ததென எடுத்துக் கொள்ள லாகாது. ஆனல், இவ்வலுவலில் ஒரு முடிவிற்கு வரவேண்டிய சபை யினர்க்கு அதைப்பற்றிய முழு விவரமும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் ; அரசாங்க சபையின் ஒவ்வோர் உறுப்பினருடைய எண்ணங்களும் அவற்றிற்குத் தகுதியான பெறுதியைக் கொளல் வேண்டும் ; மிகக் கவனமான ஆழ்ந்த பரிசீலனையொன்றும் இல்லாமல் ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என்பன பேர்ன்ற காரணங்களுக்காகவே இந்நடவடிக்கைகள் மீள் ஆலோசனைக்கு அனுப்பப்படுகின்றன எனக் கொள்ளல் வேண்டும். 5-ஜே என். பி 22574 (3/60)

Page 50
88
சட்டவாக்கு நடவடிக்கைகளிலே சில புறநடைகளைத் தவிர்ந்த மற்றைய வற்றிற்கெல்லாம் இந்த விதியைக் கையாள்வது நல்லதென நாம் கருத வில்லை. ஏனெனில், முன்னர் நாம் எடுத்துக் கூறியவாறு அமைந்த அரசாங்க சபையின் சட்டவாக்கு கருவி இவ்வேற்பாடு இல்லாமலே ஒரு நடவடிக்கையை மனங்கொள்வதற்கும் உரையாடுவதற்கும் எல்லாப் பொருள்களையும் திருத்துவதற்கும் ஒவ்வோர் உறுப்பினர்க்கும் வாய்ப்பளிக் கின்றது ; மேலும், முறிகள் அரசாங்க சபையில் வந்து உருவாகின்ற பொழுது, ஒவ்வொரு முறியினதும் தத்துவம், அதனுடைய விரிவான செயன்முறைகள் ஆகியவைபற்றி உறுப்பினர்கள் எடுத்துக் கூறக்கூடிய சந்தர்ப்பங்களையும் அது கொண்டுள்ளது. இங்கு நாம் எடுத்துச் சொன்ன புறநடைகள் யாவெனின், ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறை நிரப்பு மதிப்பீடு ஆகியவையும் அவற்றிலிருந்து ஏற்படும் பிற நிதியியல் நடவடிக்கைகளுமாம். இவை யாவற்றிற்கும் அமைச்சர் சபையே ஒன்று சேர்ந்த முறையில் பொறுப்பாகும் ; அவை ஏற்கப்படாவிடின் ஒரு பொதுத் தேர்தல் நடைபெறல் வேண்டும். எனவே, தனக்கு மிகவும் எதிர்மாருன விமரிசங்கள் ஏற்படின் அமைச்சர் சபை தன்னுடைய நிலை மையை நன்கு ஆராய்ந்து கொள்ளல் வேண்டும்; அவ்வாறகவே, அர சாங்க சபைக்கும் அதனுடைய மாறுபட்ட முடிவினல் ஏற்படக்கூடிய விளைவுகளை நன்குணரும் நல்வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். எனவே, வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, அவற்றல் எற்படும் நிதியியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையும், அல்லது அவற்றின் சில பகுதிகளை அமைச்சர் சபை மீண்டும் ஆராய்வதற்காகத் திருப்பி அனுப்பக்கூடிய உரிமை அரசாங்க சபைக்கு இருத்தல் வேண்டு மென நாம் எடுத்துக் கூறுகின்றேம். ஆயினும், இவ்வகைகளிலே அர சாங்க சபைக்கு ஒரு முறைக்கு மிஞ்சி அவற்றைத் திருப்பியனுப்பும் உரிமை இருத்தலாகாது. அமைச்சர் சபையினர் எடுத்துரைக்கப்பட்ட கருத் துரைகளுக்கிணங்கத் தங்களுடைய முன்மொழிவுகளை நன்கு ஆராய்ந்த பின் இறுதியான ஒரு முடிவிற்கு வரல் வேண்டும் ; வந்து, அம்முடிவினை அரசாங்க சபைக்குக் கூறல் வேண்டும். பின்னர் எற்படும் விளைவிற் கேற்ப அச்சபையினர் வாழலாம், இன்றேல் விழலாம்.
ஆலோசனைக்கு மீள அனுப்புதல் வேண்டுமென்ற எம் முன்மொழியை நிறைவேற்றலுவல்களுக்கு வரையறுத்துக் கொள்ளல் வேண்டுமென்ற எம்கூற்றிற்கு ஒரு விதிவிலக்குண்டு ; அஃது ஆள்பதியின் அதிகாரத் தோடியைந்தது. சட்டவாக்கு நடவடிக்கைகளையும் நிறைவேற்றலுவல்களை யும் அரசாங்க சபைக்கு ஆலோசனைக்காக மீள அனுப்புதற்கு ஆள்பதிக்குச் சுதந்திரம் இருத்தல் வேண்டும் ; இதற்குரிய காரணங்களை நாம் பின்னர்க் கூறுவோம். எங்கள் முன்னிடுகளில் மூன்று வகையான மீள அனுப்பல் கள் உள. முதலாவதாக, நிறைவேற்றமர்விலுள்ள சபை நிறைவேற்று நடவடிக்கைகளை அவற்றைத் தொடக்கிய நிறைவேற்று குழுக்கட்கு மீள

89
அனுப்புதற்குச் சுதந்திரமுடையதாயிருத்தல் வேண்டும். இரண்டாவதாக, சட்டவாக்கு அமர்வில் உள்ள சபை ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப் பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, அவற்றேடியைந்த நிதி நடவடிக்கைகள் ஆகியவற்றை அமைச்சர் சபைக்கு அனுப்பச் சுதந்திரமுடையதாயிருத்தல் வேண்டும். மூன்றவதாக, சட்டவாக்கு, நிறைவேற்று நடவடிக்கைகள் இரண்டையும் அரசாங்க சபைக்கு அனுப்புவதற்கு ஆள்பதிக்குச் சுதந் திரமிருத்தல் வேண்டும்.
அரசாங்க சபைக்கும் அமைச்சருக்குமுள்ள தொடர்பு
ஒரு நிறைவேற்று குழுவின் முதல்வரோ, உறுப்பினரோ தங்கள் எடுத் துரைப்புக்களை அரசாங்க சபை ஏற்றுக்கொள்ளாவிடத்து, இடர்ப்பட வேண் டியதில்லையென்பதை மேற்கூறிய காரணங்களால் அறிந்துகொள்ளலாம். எங்கள் முன்னிடுகளுக்கியைய முன்னர் நாம் விதந்து கூறிய விடங்களிலன்றி, மற்றை அலுவல்களில், அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்குப் பூண்டுள்ள பொறுப்பு தனிப்பட்ட முறையிலிருக்குமன்றி, கூட்டு முறையிலிருக்காது. இத்தத்துவம் மிக முக்கியமானதென்பது எம் கருத்து. தெளிந்த வரை யறையுடைய கட்சிமுறையிலமையாத ஒரு சபையில் அமைச்சர்கள் எல்லா அலுவல்களிலும் கூட்டு முறையில் பொறுப்பு பூண்டு நடப்பது நிலையின் மையையும் குழப்பத்தையும் கொண்டு வரும். இவ்வொழுங்கு இவ்வா றில்லாவிட்டால், ஒவ்வொரு தனிப்பட்ட அமைச்சரினதும் முன்னிட்டை ஏற்பதும் விலக்குவதும் அரசாங்கத்தில் கொண்டுள்ள நம்பிக்கை, நம்பிக் கையின்மையோடு இயைந்தன எனக் கருதப்படும். இதனல், ஓர் அமைச்சர் தம் முன்னிட்டை வெற்றியாகக் கொண்டுவர முடியாமற் போயின் பதவி துறக்கவேண்டி நேரிடும். அவருடன் அவர் தோழரும் துறக்கவேண்டி நேரிடும். இதனல், அரசாங்கத்தில் பல மாற்றங்கள் எற்படும். சில வேளை களில் ஒன்றன்பின் ஒன்றன மிக்க செலவு நிறைந்த தேர்தல்கள் நடை பெறுதலும் கூடும். இத்தகைய ஒழுங்கு பிரிட்டிசு முறையில் அமைந்த பாராளுமன்ற முறையோடியைந்த வழக்கு, மரபாறு ஆகிய யாவையும் கொண்டிருக்கும். கட்சி முறையில்லாத இலங்கையிலே, இத்தகைய முறை இப்பொழுதுள்ள நிலைமைக்கேற்றதன்று என முன்னரே நாம் கூறி யுள்ளோம். அமைச்சர்களைச் சபை நீக்கலாம் ஆனல், அரசலுவலர்களை நீக்க முடியாதென்னும் உண்மையால் பல இடர்கள் தோன்றல் கூடும்; பதவி நீட்சிக்குரிய பாதுகாப்பின்மையும் உட்பகையும் அரசாங்கத்தை விரை வில் வலியற்றதாக்கிவிடும். நாங்கள் கூறும் ஒழுங்குமுறையோ நாட்டில் அரசாங்கத்தைச் சபையினரின் ஒத்துழைப்பால் நடைபெறச் செய்யும் தகைத்து. தூய பாராளுமன்ற முறையில் இயல்பாயுள்ள இடர்ப்பாடுகளைக் களைவதற்கேற்ற வழியில் ஆக்கப்பட்டது. இவ்வாருக, நாங்கள் விரித்துள்ள முறைமையில் அமைச்சர் குழுவினர் நேரே சபைக்கு முன்னிடுகளைச் சமர்ப் பிக்க மாட்டார்கள் ; ஆனல், ஒரு நிறைவேற்று குழுவிலிருந்தே அவை

Page 51
90
பொதுவாகத் தோன்றும். அம்முன்னிட்டைச் சபைக்கு விரித்துரைக்கும் பொறுப்பு வழக்கமாக அக்குழுவின் முதல்வரது பொறுப்பாயிருக்கும். எனவே, இம்முறைமையில் அமைச்சர் குழு சபைக்குப் பொறுப்பாயுள்ளது என்ற கேள்வி எழுவதற்கில்லை. சபை அலுவலைத் தவிர இவ்வொழுங்கு முறைக்குப் புறனடையாயுள்ளன ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, அவற்றேடியைந்த நிதி நடவடிக்கைகள் ஆகியவை u JITLh). இவை யாவிற்கும் அமைச்சர் கூட்டு முறையில் பொறுப் பானவர் என்று நாம் மொழிந்துள்ளோம். ஆட்சியின் எல்லாச் செயல் களும் பொது மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய இயல்புடைய ஒரு நிலையான நிதிப் பூட்கையிலே தங்கியிருப்பதாலேயே நாம் இவ்விதியைக் கடைப் பிடித்தோம். எனவே, இப்பூட்கையினை வகுப்பதில் குழுக்களின் முதல் வர்களது ஒத்துழைப்பைப் பெறல் இன்றியமையாதது. ஆனல், வரவு செலவுத்திட்டத்தில் தோன்றியவாறுள்ள இப்பூட்கையை சபை ஏற்றுக் கொண்டபின், அப்பூட்கையை விரித்துச் செயற்படுத்தவும் தங்கள் திணைக் களங்களை ஆட்சிப்படுத்தவும் அமைச்சர்கள் என் தனித்தனியே பொறுப் புடையவராய் நடந்து கொள்ளலாகாது ? இவ்விடத்தில் ஒரு குறிப்பைக் கூறுவது நல்லது. ஆண்டு வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, மற்றை நிதி நடவடிக்கை ஆகியவற்றை உருவாக்குவதில் சிறப்பியல்புகள் அடங்கியிருக்கும் ; அவற்றை ஆக்குவதில் அரசலுவலர்கள் ஆட்சியாளர் என்னும் தகைமையிலல்லாது சிறப்புடை அறிவுரைஞர் களாகவே கடமையாற்றுவர் எனக் கருதல் வேண்டும். அவ்வாறு கருதில் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றை அரசாங்க சபை உறுப்பினரும் பதவிகொண்டுள்ள தகைமை வேறுபாட்டிற்குரிய எதிர்ப்பு குறைவுடைய தாகத் தோன்றும். சாதாரணமான, பாராளுமன்ற முறை ஆட்சியில் இம் முரண்பாட்டினல் எற்படும் இடர்களும் இங்கு தோன்ற இத்தகைய அலுவல்களுக்கெல்லாம் அமைச்சர்கள் கூட்டு முறையில் பொறுப்பாளி களாயிருக்க வேண்டுமென்று நாம் முன்னர்க் கூறிய கூற்று எப்பொழுதும் ஓர் அரசாங்கத்திற்குத் தோற்கடிக்கப்படக்கூடிய ஒரு நிலையை அளிப்பதும் நாடு பொதுத் தேர்தலை எப்பொழுதும் எதிர்பார்த்திருக்கக்கூடிய நிலையை உண்டாக்குவதுமான ஒரு முறையை நாம் முன்னர் கடிந்து ஒதுக்கியதற்கு, முரணுக அமையாது. எனெனில், முன்னர் நாம் கூறியவாறே வரவு செலவுத்திட்டம், மதிப்பீடு ஆகியவற்றிற்கு அடிப்படையாக உள்ள பூட்கையானது மிக்க இன்றியமையாத சிறப்புடையதாகும். ஆகவே, இப்பூட்கையை நிறைவேற்ற அமைச்சர்கள் தவறின், அவர்கள் சட்டசபையின் நம்பிக்கையை ஒருபொழுதும் பெறமாட்டார்கள் என்பது தெளிவாகும். அதனல், பொதுத் தேர்தலுக்கு நியாயமான நல்ல ஒரு காரணம் உண்டாகும். வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றிற்கும் அவற்றேடு தொடர்ந்த நிதி நடவடிக்கைகளுக் கும் அளிக்கப்படும் சிறப்பும் அவற்றை எற்காது விட்டால் பொதுத் தேர்தல்

9.
ஒன்று நடைபெறும் என்ற அறிவும் பொதுவாகக் காப்பின்மை, நிலை யாமை ஆகியவைபற்றிய பயங்கள் யாவினின்றும் நீங்கிய ஒரு சபையிலே எதிர்க்கட்சியில் அமைந்தோர் யாவருக்கும் அந்த நடவடிக்கைகளைப்பற்றிய பொறுப்புணர்ச்சியொன்றை ஏற்படுத்தும். ஆனல், பாராளுமன்ற முறை யில், அடிக்கடி அமைச்சர்களை மாற்றிக் கொள்ளும் இயல்புக்கும் அரசாங் கம் தோல்வியுறும் என்ற தன்மையால் வரும் தினசரிக் கிளர்ச்சிகளுக்கும் பழகிய ஒரு சபைக்குப் பொதுத் தேர்தலானது நடைபெறும் என்று தினசரி சொல்கின்ற சொல் நல்லதொரு பயனைத் தரமாட்டாது. ஆகவே, எங்களுடைய முன்னிடுகள், வரவுசெலவுத்திட்டம், மதிப்பீடு, குறை நிரப்பு மதிப்பீடு, அதைத் தொடர்ந்த நிதி நடவடிக்கைகள், அலுவல்களை நடத்தும் முறை ஆகியவற்றில் கூட்டு முறைப் பொறுப்பையும் மற்றைய வற்றில் தனிப் பொறுப்பையும் கொண்டிருக்கும். இன்னும், ஒர் அமைச் சரினுடைய சேவையை இழந்தவிடத்தும் அரசாங்க சபையினதோ, குழு வினதோ நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழந்தவிடத்தும் அமைச்சர் குழு பதவி துறக்க வேண்டியதில்லை ; ஆனல், அது திருப்பியமைக்கப்பட வேண்டுமென்றே எங்கள் முன்னிடு எடுத்துக் கூறுகின்றது.
அமைச்சர் சபை : அரசலுவலர் நிலைமையும் சபையின் தலைவரும்
எலவே, அமைச்சர் சபைக்கு ஒதுக்கவேண்டிய செய்திகளின் எல்லைகளைப் பற்றிக் குறித்துள்ளோம். புதிய யாப்பிற்கிணங்க அரசு நடைபெறுகின்ற பொழுது அனுபவத்தினல் இவ்வதிகார எல்லையை விரிவாக்க வேண்டு மென்று தோன்றினல் அவ்வாறு செய்யலாம். இச்சபையானது உண் மையில் செயலளவில் நிதி, அலுவல் ஆகியவற்றிற்குப் பொறுப்பு வாய்ந்த தாயிருக்கும். இன்னும், இது சகல நிறைவேற்று குழுக்களின் முதல்வர் களையும் அரசலுவலர்களையும் கொண்டதாயிருக்கும். அதனல், ஒரு பரந்த நோக்கையுங் கொள்ளக் கூடியதாயுமிருக்கும். அஃது அறிவுரை கூறி எச்சரிக்கை பண்ணக்கூடியதாகவுமிருக்கும். ஆனல், அஃது அரசாங்க சபை யின் முடிவான தீர்ப்பினைத் தானே எடுத்துக்கொள்ளக்கூடிய உரிமை யுடையதன்று. இக்குழுவிற்குத் தலைவராக இருப்பவர் பிரதம செயலா ளர் , இஃது இத்தீவில் இவர் கொண்ட தலைமைப் பதவியினலாகுமென்க. இவர் அரசின் மூத்த அலுவலராவர். ஆள்பதிக்கே இவர் அடுத்தவர். ஆள்பதி இல்லாதபோதும் அவருக்கு இயல்பில்லாதபோதும் இவர் அரசாங் கத்தை ஆளவேண்டியவராவர். எனவே, இயற்கையாகவே இவர் மூத்த அமைச்சர் பதவியைப் பெறுவர். ஆயினும், இவர் எவ்விதத்திலும் ஒரு பிரதம அமைச்சராகார். அமைச்சர் குழுவிற்கு இவர் முதல்வராயினும் இவருடைய கடமை, மற்றை அரசலுவலர்கள் போலவே, நிறைவேற்று கடமையிலும் கூடியதாக அறிவுரை கூறும் இயல்பினதாகவே இருக்கும். இவருக்குத் துணையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களான நிறைவேற்று குழுக்களின் முதல்வர்கள் மீதே, இவ்வலுவலர் திணைக்களத்திற்குப் புறம்

Page 52
92
பான மற்றை அலுவல்களைப்பற்றிய முடிவுகளின் பொறுப்புத் தங்கி யிருக்கும் ; இதைச் செவ்வனே வலியுறுத்துவதற்காக அமைச்சர் சபையின் கூட்டங்களில் இவ்வரசலுவலர்கள் வாக்களிப்பதற்கு உரிமையில்லாதவராக இருப்பர் என்று நாம் கூறுகின்றேம். இப்புது யாப்பின் முறைமையை ஆய்கின்றபொழுது எப்பொழுதும் நாங்கள் இத்தீவில் அலுவல்களை நடத்து கின்ற பொறுப்பின் பெரும்பகுதி இலங்கையர்கள்பால் அமையவேண்டு மென்னும் ஒரு நோக்கத்துடனேயே கடமையாற்றியுள்ளோம். ஆயினும், இம்முறை கட்டாயமாக முழுப்பொறுப்பு வாய்ந்த ஒர் அரசாங்கத்திலும் சிறிது குறைந்த படிக்கு எவ்வளவிற்குப் பொருந்துமோ, அவ்வளவிற்கு இயைந்ததாகவே இருக்கும். இவர்களோ இத்தகைப் பொறுப்பாட்சிக்கு உண் மையில் உரியரே. ஆயினும், இம்முறைமையானது உண்மையான பயனுடன் செயற்பட வேண்டுமாயின், இவ்வரசாங்கத்தைப் பொதுச்செயலாளரும் அவர் அலுவல் தோழர்களும் எவ்விதத்திலும் நடத்த மாட்டார்கள் என்பதையும் அதற்கு மாருக இப்பொறுப்பு இலங்கையர்பாலே செல்லும் என்பதையும் இவ்வரசாங்க சபையும் பொது மக்களும் நன்கு உணர்ந்து மதிக்கவேண்டும். இவ்வரசலுவலர்கள் அரசாங்க சபையும் அமைச்சர் சபையும் செய்கின்ற ஆலோசனைகளில் சமுகமளிப்பதன் நோக்கம் யாதெனில், எந்தப் புதிய அரசாங்கமும் ஒதுக்கிவிட முடியா நல்ல அனுபவ அறிவுரைகளை அவர்கள் அளிப்பதற்கேயாமென்க. இவ்வரசலுவலர்கள் அமைச்சர்களுக்குரிய கடமை யுடன், அவர்கள் பொறுப்பில் இருக்கவேண்டுமென்று நாம் கூறிய, சிறப்பான திணைக்களங்களை ஆட்சி பண்ணுவர் என்பது உண்மையே ; ஆயினும், இக்கருத்தில் அவர்கள் நிறைவேற்றலுவலர்களாகவே இருப்பர். ஆனல், அவர்கள் இத் திணைக்களங்களை இலங்கைத் தோழர்களினுடைய அலுவல்களைத் துணைசெய்யுமுகமாகவே இயக்குவர் அன்றி, இடர் செய்யு முகமாக இயக்கார் என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். இலங்கைத் தோழர்களின் பூட்கைக்கு இவர்கள் செயல்கள் எப்பொழுதும் துணைபுரி வனவாயிருக்கும். இவ்வரசலுவலர்கள் யாவரும் நிறைவேற்றலுவலர்க ளாகவன்றி, அறிவுரை கூறுபவர்களாகவே கடமையாற்ற வேண்டு மென்பதற்காகத் தலைமைச் செயலாளர் அமைச்சர் சபைக்கு முதன்மை வகிப்பினும் அரசாங்க சபைக்குத் தலைவர் ஆகார் என நாம் எடுத்துரைக்க விரும்புகின்றேம். எவ்வாறு அவ்வமைச்சர் சபையிலே தம்முடைய அமைச்சுத் தோழர்களுக்குத் தம்முடைய சிறந்த ஆட்சி அனுபவ அறி வுரைகளை எடுத்துக்கூறி, இறுதி முடிவுகளின் பொறுப்பினை அவர்களிடம் விடுவது அவர் கடமையோ, அவ்வாறே அரசாங்க சபையிலும் இடர்களை யும் கேடுகளையும் சுட்டிக் காட்டி அறிவுரை கூறுவதன்றி, ஆராய்விற்கு எடுத்துக்கொண்ட முன்னிடுகள்பற்றிய பொறுப்பினை அவர் தாமே கொள்ள லாகாது. இம்முன்னிடுகள்பற்றிய விளக்கங்களை அரசாங்க சபையில் எடுத் துரைக்கும் பொதுவான பொறுப்பு சம்பந்தப்பட்ட நிறைவேற்று குழுக் களின் அங்கத்தினருக்கோ, முதல்வருக்கோ உரியதாகும். வரவுசெலவுத் திட்டம், அமைச்சர்கள் யாவரும் கூட்டு முறையில் பொறுப்பாக இருக்கின்ற

93
அலுவல்கள் ஆகியவற்றில் அரசாங்கத்தின் சார்பாக அரசாங்க சபைத் தலை வரே முக்கிய பேச்சாளராக இருப்பார். இவ்வரசாங்கசபைத் தலைவரை அமைச்சுத் தோழர்களே தேர்ந்தெடுப்பர். அவர் அமைச்சர் சபையின் துணை முதல்வராகக் கடமையாற்றுவார். இயல்பாக அவர் அரசாங்க சபை யின் ஆயுளளவும் பதவி வகிப்பார். ஆயினும், அமைச்சர் சபையினர் இக்கடமையைத் தங்களுள் வேறெருவருக்கு மாற்ற முடியும். முந்திய வர் ஒரு நிறைவேற்று குழுவின் முதல்வராகத் தொடர்ந்து கடமை யாற்ற விட்டும் இதைச் செய்யலாம். இச்சபைத் தலைவர் அமைச்சர் குழுவின் தலைவரான தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசித்துத் தம்முடைய கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவார்; தலைமைச் செயலாளருடன் இவர் கூடிய தொடர்பு கொண்டிருப்பார். ஆயினும், அமைச்சர் சபையின் முடிபு களை அரசாங்க சபைக்கு எடுத்து விளக்குவது இவருடைய முழுப் பொறுப் பாகும். இன்னும், சபை அலுவல்களின் ஒழுங்கினை அறிவிப்பதும் முழு அரசாங்கத்தையும்பற்றிய கேள்விகளுக்கு விடையளிப்பதும் அமைச்சர்கள் கூட்டுமுறையில் கொண்டுவந்த முன்னிடுகளை எதிர்த்துப் பேசுவோர்க்கு மறுவாதம் கூறுவதில் முக்கிய பங்கு கொள்வதும் இவருடைய கடமை யாம். உண்மையில், இவர் அரசாங்கத்தின் பாராளுமன்றப் பேச்சாளராவர். அமைச்சர் சபையின் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் இல்லாதவிடத் தும் அவரிடத்தில் பிறரொருவர் செயலாற்ற வேண்டுமென்று ஆள்பதி விதிக்காதவிடத்தும் துணைமுதல்வர் என்ற முறையில் இவர் தலைமை வகிப்பர். பொதுவிடங்களில் இந்த அரசாங்க சபைக்காகப் பேசவேண்டிய பொறுப்பும் அரசாங்க சபைத் தலைவருக்கு உரியதாகும்.
எங்களுடைய இந்த முன்னிடுகளிலே தலைமைச் செயலாளரானவர் அர சாங்கத்துக்குத் தாமே ஒரு தலைவராக அமையாது ஓர் அறிவுரையாளராக வும் நண்பராகவும் இருக்கின்ற நிலைமையைப்பற்றியே நாங்கள் அழுத்திக் கூறியுள்ளோம். ஆயினும், அவருடைய திணைக்களததைப்பற்றிய வரை யில் அவர் மற்றை அமைச்சர்களை ஒத்த நிலையையே வகிப்பர். ஆயினும், ஒரு வகையில் ஒரு விதிவிலக்குண்டு. அது யாதெனில், அவர் தம்முடைய ஆட்சியைப்பற்றி அரசாங்க சபைக்கு வகை கூறவேண்டியதன்றியும், ஆள் பதிக்கும் வகை கூறவேண்டும்; எனெனில், அவர் ஆள்பதிக்குக் கடமை பூண்டவரென்க. இதுவரை இத்தலைமைச் செயலாளருடைய செயல்களைப்பற்றி நாங்கள் கூறியவற்றல் அவருடைய பணி ஒரு முழு மாற்றத்தை அடையும் என்பதை அறியலாம். இப்பொழுதுள்ள செயலகம் மறைந்து, அதனி டத்தில் பத்துச் செயலகங்கள் தோன்றும். இச்செயலகங்கள் வெவ்வேறு அமைச்சுக்களுக்குரினவாயிருக்கும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகட்குப் பொறுப்பினை மாற்றுவதால் இவ்வரசாங்கத்தின் திணைக்களங்கள் எல்லாவற்றின்மீதும் தலைமைச் செயலாளர் கொண்டிருந்த தனிப் பெரும் அதிகாரம் யாவும் அவரை விட்டு அகல, பொது அரசாங்க அலுவல்களில் ஒரு சிறு பகுதியை நடாத்துகின்ற பொறுப்பே அவரில்

Page 53
94
எஞ்சி நிற்கும். அவர் பதவி நிலையில் ஆள்பதிக்கு இரண்டாவதாக இருந் தாலும், அவர் இல்லாவிடத்து அரசாட்சியை நடத்தவேண்டியவர் அவரே யாயினும், இதுவரை ஆள்பதிக்கு அறிவுரையாளராக அவர் செய்துவந்த கடமைகள் யாவும் வருங்காலத்தில் அவருடைய அமைச்சுத் தோழர்களால் பங்குபற்றி நடாத்தப்படும். இவ்வமைச்சர்கள் யாவருக்கும் தனித்தனி யாகவும் கூட்டு முறையிலும் இவர் முக்கிய அறிவுரையாளராகவும் துணை வராகவும் கடமையாற்றுவார். ஆனல், ஆள்பதிக்கோ எல்லா அமைச் சரும் அறிவுரை கூறுவதிலும் துணையளிப்பதிலும் ஒத்த அளவில் பொறுப் புடையவராக இருப்பர். தலைமைச் செயலாளரானவர் தமது அறிவுரை கூறும் கடமையைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டுமானல், தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முக்கிய பிரச்சினைகளின் தத்துவங்களை அன்றி, அவைபற்றிய சகல விவரங்களையும் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். இதற்காகவே, நிறைவேற்று குழுக்களின் கூட்டங்களுக்கு அவர் நேர்முகமாகவோ, அல்லது ஒரு பிரதிநிதி முகமாகவோ பங்குபற்றும் உரிமை கொண்டிருத் தல் வேண்டுமெனக் கூறியுள்ளோம். எனவே, இதனுல் எந்தப் பிரச்சினை யிலும் அது தோன்றிய காலந்தொட்டு நடந்த உரையாடல்களிலெல்லாம் அவர் பங்குபற்றித் தொடர்பு கொண்டிருப்பர். இதனல், அப்பிரச்சினைகளின் விளைவுகளை அவர் நன்கு அறிந்தவராய் இருப்பர். பொதுச்சேவை ஆணைக் குழுவைச் செவ்வனே தொழிற்படச் செய்ய அவர் பொறுப்பாயிருப்பதும் தாபனங்கள், சேவையாளர் ஆகியோர்பற்றிய அலுவல்களுக்குப் பொறுப்பு வாய்ந்தவராக அவர் இருப்பதும் ஆட்சித்துறையில் சகல கிளைகள்பற்றி யும் அவர் நன்கு அறிவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கும். எனவே, தலைமைச் செயலாளரின் இத்தகைய கடமைகளுக்கியைய, இனிமேல் அவர் இந்நாட்டிலோ, அல்லது அரசுச் செயலாளருடனே ஆள்பதிக்காக முடங்கல் தொடர்பு வைத்திருக்கும் பொறுப்பை அவரிடமிருந்து எடுத்துவிடல் வேண்டும். இனிமேல் ஆள்பதியிலிருந்து அரசுச் செயலாளருக்குச் செல் லும் முடங்கல்கள் ஆள்பதியின் சொந்தச் செயலாளரின் அலுவலகத்தி லேயே பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவான முடங்கல்கள், அந்தரங்கமான முடங்கல்கள் ஆகியவற்றுள் எவை அமைச்சர்களுக்கு அறிவிப்பதற்குரியன என ஆள்பதி கருதுகின்றரோ, அவற்றைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும் ; அதனுடன் அதை அமைச்சர் சபைக்கு அனுப்புதல் வேண்டுமென்ற ஒரு குறிப்பும் அனுப்புதல் வேண்டும். அமைச்சர் சபையின் ஒரு கூட்டத்தில் இம்முடங்கலை வாசித்தபின் அம்முடங்கற் பொருளுக்குரிய அமைச்சர்களிடமோ, அல்லது அமைச்ச ரிடமோ அது கொடுக்கப்படும். அவ்வமைச்சர் அதற்குரிய பதிலுக்கு எற்ற செய்திகளைச் சேகரிப்பதற்குப் பொறுப்பாளர். சேகரித்த இச்செய்தி அமைச்சர் சபையின் முதல்வர் என்ற முறையில் தலைமைச் செயலாளர் எழுதிய ஒரு குறிப்புரையுடன் ஆள்பதிக்குச் சமர்ப்பிக்கப்படும். அரசுச் செயலாளருடன் நடந்துகொண்டிருக்கின்ற முடங்கல்களின் பொதுப் போக்கைப்பற்றி எல்லா அமைச்சர்களும் அறிந்திருப்பது முக்கியமென நாம்

95.
கருதுகின்றேம். இம்முடங்கல்களின் பொருள்கள் அவர்களின் திணைக்களத் தோடு சம்பந்தப்பட்டவையாக இருப்பவையாகுக, அல்லாதவையாகுக, அவற் றை அறிந்திருத்தல் வேண்டும். எனவே, மிக்க விரைவாக ஒர் அலுவலை முடிக்க வேண்டுமென்ற ஓர் அமையத்திலன்றி, மற்றை எல்லா வகை களிலும் ஒரேயொரு திணைக்களமே சம்பந்தப்பட்டிருந்தாலும், முடங்கல் தொடர்பு யாவும் அமைச்சர் சபைக்கூடாகவே நடாத்தப்படல் வேண்டும்.
பொருளாளர்
புது யாப்புக்கிணங்க பொருளாளர் ஒரு முழு அமைச்சராக விளங்குவர். இப்பொழுது அவருடைய பதவிக்கு உள்ள இயல்பின்மைகள் அவருக்கு வருங்காலத்தில் இரா. அவர் அரசாங்கத்திற்குப் பொதுவாக ஒரு நிதி அறிவுரையாளராக இருப்பினும் இப்பொழுதுள்ள சட்டத்திற்கியைய அவரு டைய பொறுப்பில் விடுபடாத அலுவல்கள்பற்றி அவருடன் கலந்தா லோசிப்பதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லை. ஆயினும், செயலளவில் நிதி யியற் சிறப்புப்பெற்ற பல பிரச்சினைகளிலும் அவருடைய அறிவுரையை மற்றையோர் நாடினும் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும் என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இப்போது இல்லை. எத்தனையோ தறுவாய்களில் ஓர் அலுவல்பற்றி ஒரு முடிவு செய்த பின்னரே அவைபற்றி அவர் அறிய வந்திருக்கின்றர் என்றும் நாம் அறிகின்றேம். நிறைவேற்று குழுவின் ஒர் உறுப்பினர் என்ற அவருடைய நிலையிலே, முக்கியமான பிரச்சினை களிலெல்லாம் அப்பிரச்சினைபற்றிய நிதி விடயங்களை முழுவதும் ஆலோ சிக்காது ஒரு முடிவுக்கு வரலாகாது என்பதை அவர் உறுதியாக்க முடி யும். ஆனல், மற்றைப் பிரச்சினைகளில் செயலகத்தில் உள்ள அவ்வவ் வலுவலர்களின் விருப்பிற்கியையவே அவர் அறிவுரை கொடுக்கக்கூடிய தகுதியைப் பெறுகின்றர். இம்முறைமை ஓர் ஒழுங்கற்ற முறையென நாம் கருதுகின்றேம். இப்போதுள்ள முறைமையில் இஃதொரு மிகவும் பிழையானதொன்றென நாம் கருதுகின்றேம். எனவே, ஆண்டு வரவு செலவுத்திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை உருவாக்கு வதில் பொருளாளரின் அறிவுரையைக் கேட்பது எல்லா நிறைவேற்று குழுக்களுக்கும் இன்றியமையாத கடமையென எடுத்துரைத்துள்ளோம். இன்னும், இவ்விடயங்களில் அவற்றேடியைந்த நிதி அலுவல்களைப்பற்றிய கருத்தினைப் பொருளாளர் அவர்களுக்கு எடுத்துரைக்குமுன் அவர்கள் ஒரு முடிவுக்கு வரலாகாதென்றும் கூறுகிறேம். ஒரு நிறைவேற்று குழுவானது தன்னுடைய மதிப்பீடுகளைச்செய்து முடித்தபின் அவற்றை அமைச்சர் சபைக்கு அனுப்புதல் வேண்டும். அமைச்சர் சபை அதை நன்கு ஆராய்ந்து தவறெனில் திருத்தியமைத்து ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இணைத் துக் கொள்ளும். உண்மையில், ஒரு முழு வரவுசெலவுத்திட்டத்தை உருவாக்கி அமைச்சர் சபைக்குச் சமர்ப்பிக்கும் கடமை செயலாளர் திணைக்

Page 54
96
களத்திலேயே மேற்கொள்ளப்படும். எனவே, இங்கும் தம்முடைய கருத் தினைத் தெரிவிப்பதற்குப் பொருளாளருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கின்றது. அமைச்சர் சபை இத்திட்டத்தை வரித்துக்கொண்டபின் அதை ஒரு குறிப் புத் தாளுடன் இணைத்து அரசாங்க சபைக்குச் சமர்ப்பிக்கும். இக்குறிப் புத் தாளில் நிதியோடியைந்த அலுவல்கள் எல்லாம் விரிவாக விளக் கப்பட்டிருக்கும். இதைப் பொருளாளர் துணைக்கொண்டு அச்சபை ஆக் கும். வரவுசெலவுத்திட்டத்தில் அடங்காத, ஆனல், நிதியோடியைந்த எல்லா அலுவல்களிலும் இவ்வொழுங்குமுறை கடைப்பிடிக்கப்படும். இன் னும், எல்லாத் திணைக்களங்களினதும் அவற்றேடியைந்த நிறுவகங்களி னதும் நிதிபற்றிய நடவடிக்கைகளை மேற்பார்க்கும் பொறுப்பைப் பொருளா ளரே கொள்ளவேண்டுமென்றும் நாம் கூறியுள்ளோம். இப்பொறுப்பு பெரிய பிரித்தானியாவிலுள்ள இறைசேரியில் உள்ளவாறு இருத்தல் வேண்டும். எனவே, அவருடைய அறிவுரைகளைக் கேட்கவேண்டிய கடப் பாடில்லாத ஒரு செயலகத்தினல் மறைத்துவிடப்படாமல் எல்லாப் பிரச்சினை களையும் அவை தோன்றிய காலந்தொட்டு இறுதி வரையுள்ள எல்லா இயல்புகளோடும் அவர் அறிந்திருப்பர் ; எனவே, ஒரு முன்மொழிவின் ஆரம்ப காலத்திலேயே அதுபற்றிய நிதியோடியைந்த சகல கருத்துக்களை யும் எடுத்துக் கூறக்கூடிய வாய்ப்பு அவருக்கிருக்கும் ; ஆரம்ப காலத்தில் மட்டுமன்றி அமைச்சர் சபை அதை ஆராய்கின்ற நடுக்காலத்திலும் அரசாங்க சபை அதை ஆராய்கின்ற கடைக்காலத்திலும் தம் அறிவுரைகளைக் கூறும் வாய்ப்பு அவருக்கிருக்கும். அவர் அரசாங்கத்திற்கு நிதி அறிவுரையாளராக இருப்பர். அவருக்கு ஒர் அமைச்சருக்குள்ள நிலையும் அதிகாரமும் இருக்கும். எனவே, தம்முடைய தோழர்களுக்கு ஒரு முடி வுக்கு வருவதற்கு வேண்டிய எல்லாப் பொருளியல்புகளையும் அவர் புகலக் கூடியவராய் இருப்பர். நாங்கள் இங்கு எடுத்துக் கூறும் ஒழுங்கு முறைகளெல்லாம் அவருடன் வேலையைச் செவ்வனே செய்தவற்கேற்ற வகையில் அமைந்திருக்கும் என்று நாம் நம்புகின்றேம். ஆனல், இங்கு அரசலுவலர்களுக்கு நாங்கள் வகுத்துள்ள பதம் நிறைவேற்று முறையில் அமையாது அறிவுரை முறையில் அமைந்ததே என்பதை வலியுறுத்த விரும்புகின்றேம். எனவே, வேண்டிய வேண்டிய தறுவாய் களுக்கேற்ற வகையில் பொருளாளர் அறிவுரை கூறுவதற்கு ஏற்ற நிலையை நாங்கள் வலுப்படுத்துகின்ருேமாயினும், பிரச்சினைகளில் முடிவு காணும் பொறுப்பு அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களிலும் அர சாங்க சபை உறுப்பினர்களிலும் தங்கியிருக்குமேயன்றி, அவரில் தங்கி யிருக்காது. ஆயினும், ஆட்சி செவ்வனே நடப்பதற்கு வாய்ப்பாக அவரு டைய பதத்திற்கு இயல்பாக அமைந்துள்ள நிறைவேற்று கடமைகளை நடத்தும் பொறுப்பைப் பொருளாளரே கொள்ளல் வேண்டுமென்று கூறு கிருேம். இக்கடமைகளின் வரிசையொன்றை இவ்வறிக்கையின் பின் னிணைப்பு WI இல் கொடுத்துள்ளோம்.

97
சட்டத்துறை நாயகம்
இம்முறையிலேயே அரசாங்கத்தின் சட்டத்துறை நாயகமானவர் சட்ட முறை அறிவுரையாளராக விளங்குவார். அவருக்கு அமைச்சருக்குரிய முழுப் பதவியுண்டு. எனவே, அரசாங்க சபை, அமைச்சர் சபை ஆகியவை மேற்கொள்ளும் யோசனைகளில் அவர் பங்குபற்றல் முடியும். அவரிடம் குறிப்புக்கு வரும் அலுவல்கள்பற்றி நிறைவேற்று குழுக்களுக்கும் திணைக் களத் தலைவர்களுக்கும் அறிவுரை கூறுவதற்கு அவர் பொறுப்பாளி. எடுத் துக் காட்டாக, ஒப்பந்தங்களை ஆய்தல், சட்டப் பத்திரங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அவர் அறிவுரை வழங்குவர். இன்னும், இத்தீவு முழு வதும் நீதியைப் பரிபாலிப்பதற்கும் அவர் நிறைவேற்று முறையில் பொறுப் பlளி. இதனல், நீதிபரிபாலனம் அரசியற் சார்பற்ற முறையில் செவ் வனே அமைந்து விடுமென்க. இன்னும், தேர்தல்களை நடாத்துவதற்கும் அவர் பொறுப்பாளி. இன்னும், குடியேற்றநாட்டுப் பிரமாணம் 182 இன் கீழ் அவருக்கு விதிக்கப்பட்ட கடமையை அவர் தொடர்ந்து நடாத்துவார். இப்பிரமாணத்தின் கூற்று வருமாறு : “ மாட்சிமை தங் பிய மன்னரின் இசைவு பெறுவதற்கு அரசுச் செயலாளருக்குச் சமர்ப் பிக்கப்படும் ஒவ்வொரு சட்ட விதியும் முடிக்குரிய சட்ட அலுவலரிடமிருந்து அறிக்கையொன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வறிக்கை விதிக்கு ஆள்பதி, முறைமையில், இசைவளிக்கலாம் அல்லது அளிக்கலாகாது என் பதைக் கூறுவதாயிருத்தல் வேண்டும். இன்னும், ஆள்பதியோ அல்லது சட்ட அலுவலரோ அந்த விதியின் நோக்கத்தையும் அதனேடியைந்த அரசியல் பிரச்சினைகளையும் சட்டப் பிரச்சினைகளையும் விளக்கும் ஒர் அறிக்கையை இணைத்தல் வேண்டும்.” இத்தகைய பணிக்கைகள் ஆள்பதிக்கு அளிக் கப்படும் வேந்துக் கட்டளைகளில் அடங்குவதற்கு உரியன என நாம் கருது கின்றேம். சட்டத்துறை நாயகத்தின் கடமைகள் செவ்வனே நடை பெறுவதற்கு அவருடைய திணைக்கள அலுவலர்களை அமைப்பதில் நல்ல கவனம் செலுத்த வேண்டும். இதை ஒரு தடையரண் என மற்றவர்கள் கடிந்துரைத்துள்ளனர். பொது அலுவல்களை நடத்துவதில் செயலகம் காட் டிய திறனின்மையிலும் இதன் திறனின்மை குறைவானதன்று என்பதே அக்கண்டனத்தின் பொருளாகும். இதுவரை சட்டநிறுவு நடவடிக்கைகள் யாவையும் வரையும் பொறுப்பு சட்டத்துறை நாயகத்தினதாயிருந்தது. எனவே, அவரும் அவர் திணைக்களத்தினரும் மேலதிகமாக வேலை செய் தார்கள் என்பது வியப்பன்று. இதனல், நகராண்மை யாப்புக்களைச் சீர் திருத்தும் திட்டங்கள், சட்டக் கோவைகளைச் சீர்திருத்தும் திட்டங்கள் போன்ற சமூக நிலைகளைச் சீர்திருத்தும் திட்டங்கள், அவர் அலுவலகத்தை அடைந்தும் உருவாகாமல் வாளா கிடக்கின்றன. அவருக்குத் துணை செய்வ தற்காக அண்மையில் ஒரு வரைவாளர் நியமிக்கப்பட்டார். இதனல், அவ ருக்குச் சிறிது ஆறுதல் கிடைக்கும். ஆயினும், இவ்வலுவலரைத் தலை மைச் செயலாளர் திணைக்களத்திற்கு மாற்றிவிடல், நலந்தரும். இதனல்,

Page 55
98
சட்டத்துறை நாயகம் வரையும் கடமையிலிருந்து இன்னும் கூடிய ஒய்வு பெற லாம். ஐக்கிய இராச்சியத்தில் இவரோடு ஒத்த அலுவலர் யாவரும் முடிக்குரிய சட்ட அலுவலர்களோடு தொடர்பில்லாதவர்களாக இருக்கின்றர்கள். இன் னும், நெருக்கமில்லாமல் இருத்தற் பொருட்டுப் புதிய அமைச்சர்களுக்கு அவரவர்களுக்கேற்ற சட்ட அறிவுரையாளர்களை நியமித்துவிடல் நல்லதோ என ஆய்தல் நலந்தரும். இவ்வமைச்சர்கள் தங்கள் தங்கள் அலுவ லோடொத்த விடயங்களைப்பற்றி இவ்வறிவுரையாளருடன் கலந்தாலோசிக் கலாம். ஒவ்வோர் அமைச்சருக்கும் சட்ட அறிவுரையாளரை நியமிக்கும் அளவுக்கு அரசாங்கத்தின் அலுவல் பெருகியிராவிடினும் இந்நிலை விரை வில் உருவாகிவிடும் என நாம் எதிர்பார்க்கலாம்.
நீதிபரிபாலனத்திலும் கால தாமதம் ஏற்பட்டிருப்பதாகப் பல சான்றுகள் எங்களுக்குக் கூறினர்கள். இக்கூற்றினை நாங்கள் இங்கு குறிப்பிடுவதன்றி, நீதிபரிபாலனம்பற்றி யாதாயினும் ஒரு திருத்தத்தையேனும் இங்கு நாங் கள் எடுத்துரைக்க விரும்பவில்லை. எனெனில், பொதுச் சேவையின் இப்பிரிவினைத் திருத்தி அமைப்பதற்காகச் சட்ட சபையின் ஒரு தேர்ந் தெடுத்த குழு நியமிக்கப்பட்டிருப்பதனலென்க. எனவே, இக்குழுவினு டைய ஆய்வுகள் இதுபற்றி வந்த குறைபாடுகளை நீக்கக்கூடிய வகையில் பயன்படுமென்று நம்புகின்றேம். அவ்வளவில் எங்கள் கூற்று அமை வதாகும்.
ஆள்பதியின் அதிகாரமும் நிலைமையும்
இவ்யாப்பு முறையிலே ஆள்பதிக்கு அமைந்திருக்கின்ற அதிகாரம், நிலைமை ஆகியவற்றை இப்பொழுது நாம் விரித்துரைத்தல் வேண்டும். உடனடியாக நமக்குப் புலப்படுகின்ற ஈர் எதிர் முரணுன வழிகளைப்பற்றி இங்கு நாங்கள் குறிப்பிட விரும்புகின்றேம். முதலாவது, தம்முடைய மாட்சிமை தங்கிய அரசருக்குப் பிரதிநிதியாக இருக்கின்ற நாட்டின் ஆட்சி யிலே அவருக்கு யாப்பு முறையிலே அமைந்த ஒரு பொறுப்பும் அளிக்கப் படாதிருத்தல் ; மற்றையது, இந்நாட்டின் சகல அலுவல்களையும் நடத்தும் முழுப் பொறுப்பிற்குரிய நிலைமையை அவருக்கு அளிப்பது. இவற்றுள் யாதாயினும் ஒரு பூட்கையை மேற்கொண்டால் அவருடைய நிலைமை நன்கு வரையறுத்ததாகிவிடும். முதலாவது வழியிலே, அரசுக் செயலா ளருக்கு அவர் கொண்டுள்ள பொறுப்பானது ஒரு கருத்தில் நோக்கு கின்றபொழுது இரண்டாந்தரத்ததாயிருக்கும் ; எனெனில், அவருடைய செயல்களுள் யாதாயினும் ஒன்றைப்பற்றி ஒரு கேள்வி எழின், அவர் அதற்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சரைச் சுட்டிக் காட்டலாம். இரண் டாவது முறையிலே, அவரே தனித்து முழுப்பொறுப்புடையவராக இருப் பார். அதனல், தம்முடைய பொறுப்பை முழுதும் உணர்ந்தவராக அவர் தம் அதிகாரங்களைச் செலுத்தக் கூடியவராக இருப்பார். ஆயினும், ஓர் ஆள்பதி இந்த வெவ்வேறு வகையிலமைந்த இரு வழிகளுள் யாதா

99.
யிலும் ஒன்றை மேற்கொள்ளலாம். ஆனல், இப்போதுள்ள நிலைமையில் அவையிரண்டும் உதவா. முன்னர் நாங்கள் கூறியுள்ளோம், இலங்கை மீண்டும் குடியேற்றநாட்டு அரசாங்கம் என்ற ஒரு நிலைமையைக் கொண்டு வருதல் இயலாததென்பதை. ஆனல், இத்தகைய நிலைமை களிலிருந்து இலங்கையானது ஒரு சிறு காலத்து இடைப்படி ஒன்றில் மட்டும் தங்கி முழுப்பொறுப்பு வாய்ந்த அரசாங்க நிலைமைக்கு நேரே செல்வதும் இயலாததொன்றகும். ஆள்பதியின் நிலையும் இப்பொழுது நாங்கள் எடுத்துரைக்கின்ற யாப்பின் வகைக்கு உவந்ததாக இருத்தல் வேண்டும். இப்பொழுதுள்ள புதிய யாப்பு முறையானது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளுக்குப் பொறுப்பில் பெரும்பான்மையை அளிக்க வேண்டுமெனின், முள்பதியின் அதிகாரத்தையும் மாற்றது வைத்திருப்பது பொருந்தாத தொன்றகும். ஆனல், யாப்பு முறையானது முழுப் பொறுப்புவாய்ந்த அரசாங்கத்துக்கு ஒத்ததாக இல்லாவிடின் ஆள்பதியை அத்தகைய ஒர் அரசாங்கத்துக்கு யாப்பு முறைமையில் அமைந்த ஒரு தலைவராகவும் அமைப்பதும் நியாயமற்றதாகும். எனவே, எவ்வளவில் பொறுப்பு மாற் றப்படுகின்றதோ, அவ்வளவிற்கு ஆள்பதியின் நிலைமையில் உள்ள மாற் றமும் ஏற்றதாக இருத்தல் வேண்டும். எவ்வளவிற்குப் பொறுப்புமுறை டியூட்சியில் முன்னேற்றம் எற்படுகின்றதோ, அதற்கு நேர் முறையிலேயே ஆள்பதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படல் வேண்டும். இத் தகைய ஒழுங்கு முறையிலே மலைத்தலுக்கு உரியதோ, செய்ய இயலாததோ ஒன்றுமில்லை. ஒரு நாடானது தன்னட்சி முறையில் முன்னேறுகின்ற பொழுது ஆள்பதியின் அதிகாரங்கள் படிபடியாகக் குறைக்கப்படல் இன்றியமையாததாகும். இன்னும், இந்தப் பிரித்தானியப் பேரரசிலே முழுப்பொறுப்பு வாய்ந்த அரசாங்க நிலையைக் கொள்ளாது ஓரளவுக்கு நற்பொறுப்புள்ள அரசாங்கத்தை வகித்து நடக்கின்ற நாடுகளிலே ஆள் பதியின் யாப்புமுறை நிலைமையை அதற்கேற்றவாறு மட்டுப்படுத்தியுள்ள நாடுகள் பல உள. எனவே, ஆள்பதியின் நிலைமைபற்றிய இருவேறு படிகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாது இவை இரண்டிற்கும் நடுவில் அமைந்த ஒரு நிலை நியாயமானது எனக் கூற விரும்புகின்றேம் ; இன் ஒனும், இப்பேரரசிலே நடந்துவருகிற யாப்புமுறை முன்னேற்றத்திற்குரிய தத்துவங்களோடு இஃது இயைந்ததொன்றகும்.
இலங்கையிலுள்ள மக்களில் உண்ணுட்டு அலுவல்களைக் கட்டுப்படுத்தி ஆள்கின்ற பொறுப்பினை மென்மேலும் சாருமாறு செய்வதே இப்புதிய யாப்புமுறையை வகுக்கின்றபொழுது எங்கள் பெருநோக்காயிருந்தது; இப் பொறுப்பும் ஓரளவுக்குச் சில பாதுகாப்புக்களுடனே சேர்ந்ததாய் இருக்க வேண்டுமென்பதும் எங்கள் நோக்கு. எனவே, இதிலிருந்து பெறப் படுவது யாதெனில், ஆள்பதியின் நிருவாகப் பொறுப்புரிமையும் அவ்வள விற்குக் குறைக்கப்படல் வேண்டுமென்பதாகும். ஆனல், இங்கு எங்களை நோக்கி ஒரு முரண்பாடுள்ளது. பொறுப்புவாய்ந்த நிலையங்களுக்கு அளிக்

Page 56
100
கப்படுகின்ற ஒவ்வொரு பொறுப்புரிமைக்கும் எற்றவாறு ஆள்பதிக்கும் கூடிய காப்பு அதிகாரம் அளிக்கப்படல் வேண்டும். பொறுப்புரிமை தகாத முறையில் பயன்படுத்தப்படுகின்ற வேளைகளில் அவ்வாறு நேராமல் அதைத் தடுப்பதற்கே, காப்பதிகாரம். காப்பதிகாரங்கள் ஒருவிதமான பாதுகாப் பாக இருக்கும் ; இவை யாப்பு முறையின் தத்துவங்கள் மீறப்படினே பயன்படுத்தப்படும். எங்கள் மனத்திலுள்ள மற்றைப் பாதுகாப்பு யாதெனில், துறைபோகிய அறிவுரையாளர்களே ஆய்வுரையாளர்களாகவும் அரசலுவலர்களாகவும் கடமை பார்க்கவேண்டுமென்பதாகும். இத்தகைய பாதுகாப்புக்களை நன்முறையில் பயன்படுத்தும் பொறுப்பு ஆள்பதிக்கு உரியது. ஆள்பதிக்கு என்னென்ன அதிகாரங்கள் அளிக்கவேண்டுமென்று நாங் கள் விதந்துரைக்கின்றேமோ, அவற்றை இங்கு நன்கு விரிவாக எடுத் துரைக்கின்றபொழுது, அவர் விதிக்கவேண்டிய நிலைமை ஒருவாறு தெளி வாகும.
சட்டவாக்கம்
1923 ஆம் ஆண்டுக்குரிய கழகப் பணிக்கை இத்தீவின் நல்லாட்சி ஒழுங்குமுறை, அமைதி ஆகியவற்றிற்குரிய சட்டங்களை ஆக்குவதற்கு ஆள்ப திக்கு அதிகாரம் அளிக்கின்றது, (கூறு XLVI) ; இன்னும், மாட்சிமை தங்கிய அரசர் பொருட்டு அவர் பெயரால் ஆள்பதி அதற்கு இசைவு கொடுத்தாலன்றி, அல்லது மாட்சிமைதங்கிய அரசர் தம்முடைய கழகப் பணிக்கை மூலமாகவோ தம்முடைய முக்கிய அரசுச் செயலாளர்களுள் ஒருவர் மூலமாகவோ அதற்கு இசைவு கொடுத்தாலன்றி, சட்டம் செயல் பெருதென்றும் கூறுகின்றது, (கூறு XLVI). ஆள்பதியின் இசைவு பெற்ற எந்தச் சட்டத்தையும் மாட்சிமைதங்கிய அரசர் விலக்கு வதற்குரிய உரிமை கூறு XIX என்பதனல் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வேற்பாடுகள் யாவும் புதிய யாப்பில் இருத்தல் வேண்டுமென்று நாங்கள் கூறுகின்றேம்.
1920 ஆம் ஆண்டுக்குரிய வேத்தியற் கற்பனைகளிலுள்ள கூறு XI என்பது, மாட்சிமை தங்கிய அரசர் பெயரால் கீழ்க்காணும் வகையைச் சார்ந்த எந்த முறிக்கும், ஆள்பதியானவர் இசைவு அளித்தலாகாது என்று கூறுகின்றது :
(1) திருசேர் மணத்தில் ஒன்றகிய மக்களின் மண நீக்கத்திற்குரிய
யாதாயினும் ஒரு முறி. (2) நிலம், பணம், வேறு பிற கொடை, கொடைப்பணம் ஆகியவற்றை
அவருக்கே உரிமையாக்குகின்ற யாதாயினும் ஒரு முறி. (3) இத்தீவின் நாணய முறையோடு சம்பந்தப்பட்ட அல்லது வங்கித்
தாள்களை வெளிவிடுவதைப்பற்றிய யாதாயினும் ஒரு முறி.

O
(4) யாதாயினும் ஒரு வங்கி அலுவல் சங்கம், யாதாயினும் ஒரு வங்கி அலுவல் கூட்டத்தின் யாப்பு அதிகாரம், பேறுகள் ஆகியவற்றை மாற்றுகின்ற, அல்லது திருத்தியமைக்கின்ற யாதாயினும் ஒரு முறி. {5) uாகுபாடான தீர்வைகளை விதிக்கின்ற யாதாயினும் ஒரு முறி. (6) இணங்கரால் மாட்சிமை தங்கிய மன்னருக்கு விதிக்கப்பட்ட கடப்பாடு களோடு முரணுன எற்பாடுகளைக் கொண்ட யாதாயினும் ஒரு முறி. (1) மாட்சிமைதங்கிய மன்னரின் படைகளின் கட்டுப்பாடு, ஒழுங்கு
ஆகியவற்றைப் பாதிக்கின்ற யாதாயினும் ஒரு முறி. (8) இத்தீவில் இல்லாத பிரிட்டிசுக் குடிமக்களின் உடைமை, உரிமை ஆகியவற்றையோ, அரசரின் பெரும் அதிகாரத்தையோ, ஐக்கிய அரசின் அல்லது அதைச் சார் நாடுகளின் வணிகம், கப்பல் ஆகியவற்றையோ பாதிக்கக்கூடிய அசாதாரணமான இயல்பும் முக்கியத்துவமும் உடைய யாதாயினும் ஒரு முறி. (9) ஐரோப்பியக் குலமுறையில் வந்த மக்கட்கு, அல்லது ஐரோப்பிய மக்கட்கு விதிக்கப்பட்ட, அல்லது அவர்களை ஆளாக்கும் கட்டுப் பாடுகள், குறைபாடுகள் ஆகியவற்றை ஐரோப்பிய வழிவராத, அல்லது அவர் குலமுறையிலல்லாத மக்கட்கு விதிக்கின்ற யாதாயினும் ஒரு முறி. (10) ஒரு முறை அரசரின் இசைவைப் பெருத எற்பாடுகளைக் கொண்ட அல்லது சில பாதுகாப்புக்கள் வேண்டுமென்ற காரணத்தால் மாட்சிமை தங்கிய மன்னரால் இசைவளிக்கப்படாத யாதாயினும் ஒரு முறி.
ஒன்பதாவது பந்தியைத் தவிர்ந்த மற்றை எற்பாடுகள் யாவும் புதிய யாப்பில் இருத்தல் வேண்டுமென்றும் கீழ்க்காணும் புதிய எற்பாடுகள் அவற்றேடு சேர்க்கப்படல் வேண்டுமென்றும் நாங்கள் கூறுகின்றேம். (அ) யாதுமொரு வகுப்பையோ, சமயத்தையோ சார்ந்த மக்கட்கு விதிக்கப்படாத குறைபாடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பிறிதொரு குறிக்கப்பட்ட வகுப்பையோ, மதத்தையோ சாந்தவர் கட்கு விதிக்கின்ற யாதாயினும் ஒரு முறி, அல்லது பிற வகுப்பினர், சமயத்தினருக்கு அளிக்காத பெரும் பேறுகளை அவர்க்கு அளிக்கின்ற முறி. (ஆ) பொது ஊழியர்களின் பேறுகள், உரிமைகள் ஆகியவற்றைப்
பாதிக்கும் யாதாயினும் ஒரு முறி. (இ) இலங்கையின் நிதிமுறை உறுதிநிலையைப் பாதிக்கும் யாதாயினும்
ஒரு முறி.

Page 57
O2
(ஈ) எதிர்காப்புடனே, பொதுமக்கள் பாதுகாப்புடனே, நிலங் கடல் வான் படையுடனே, தொண்டர் சேவையுடனே, வான் செலவு, வான் கலம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுடனே சம்பந்தப்பட்ட யாதாயினும் ஒரு முறி.
(உ) பேரரசோடிணைந்த தீவுக்கு வெளியே நடக்கின்ற வணிகதcதா டிணைந்த, அல்லது உறவான, அல்லது பேரரசு, நிலங் வான் படை ஆகியவற்றேடிணைந்த கப்பற்றளம், துறைமுகம், கப்பற் சேவை, அல்லது அலுவல், நிலம், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பாதிக்கின்ற யாதாயினும் ஒரு முறி.
(ஊ) இந்நாட்டிலே நீதிபரிபாலனத்தோடு சார்புள்ள, அல்லது பாதிக்
கின்ற யாதாயினும் ஒரு முறி. -
இத்தடைவிதிப்புக்கள் ஒரு பொதுக்காப்புரைக்கு அமைந்தனவாயிருத் தல் வேண்டும்; அஃது ஆள்பதியின், அல்லது அரசுச் செயலர்ளரின் முந்திய இசைவுடனே, அல்லது வேண்டுகோளின்படியோ விதிக்கப்படும் முறிகளை விலக்குவதாயிருத்தல் வேண்டும். மேற்கூறிய * இ’ வகையிலே, நாங்கள் கீழ்க்காணும் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டுமென்று எடுத்துக்கூற விரும்புகின்ருேம். மாட்சிமைதங்கிய அரசருடைய இசைவுக்காகச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சட்டவாக்கு விதியும் அது நிதியோடு சம்பந்தப்பட்டதாயிருந்தால், தீவினுடைய நிதியியல் உறுதிநிலை அதனல் கெட்டுவிடுமோ, விடாதோ என்பதுபற்றிப் பொருளாளர் கூறுகின்ற ஓர் உறுதிப்பத்திரத்தோடு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் ; ஆள்பதிக்கு அளிக்கப்படுகின்ற வேத்தியற் கட்டளைகளில் இக்கருத்துக்கொண்ட ஒர் எற்பாட்டினைச்சேர்த்தல் வேண்டும்.
1923 இன் கழகப் பணிக்கையிலுள்ள கூறு L என்பதற்கிணங்க அரசாங்க சபை வரித்துக்கொண்ட எந்த முறியையேனும் மாட்சிமைதங்கிய மன்னரின் இசைவின் பொருட்டு ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். இவ்வாருக, கழகப் பணிக்கையின் எற்பாடுகளுக்கு முரணுயமைந்த எந்த முறியையும் அவர் அவ்வாறு ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். இக்கூற்றில் மாற்றஞ்செய்ய நாம் விரும்பவில்லை.
இவ்வாறக, அரசாங்க சபை வரித்துக்கொண்ட எந்த முறியையும் எற்றுக்கொள்ளாமல் விடவோ, அதற்கு இசைவு கொடாது காலந்தாழ்த்தவோ செய்யக்கூடிய பொது உரிமை ஆள்பதிக்குண்டு. ஆனல், பொதுவாக இவ்வுரிமையை அவர் எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார். ஆனல், முறிகள் மேற்கூறிய முறிகளின் வகைகளில் சேர்ந்தவையானலும் அதற்கு மாறக அமைந்த ஏற்பாடுகளை உடையனவா யிருந்தாலும் அவர் அவற்றை எற்றுக்கொள்ளாமல் மறுக்கவும் அவற்றிற்கு இசைவு கொடாமல் காலந்தாழ்த்தவும் உரிமையுடையவராவர்.

103
ஆனால் முறிகளுக்கு இசைவு கொடுக்கும், இசைவு கொடாது விடும், அல்லது இசைவளிக்கக் காலந்தாழ்த்தும் செயல்களளவில் அவருடைய கடமையை நாங்கள் மட்டுப்படுத்த விரும்பவில்லை. எனவே, அவருக்குக் ழ்ேக்காணும் கூடிய அதிகாரங்களையும் கொடுக்க வேண்டுமெனக் கூறுகிறேம் :
(1) தம்முடைய எண்ணத்திற்கு விரும்பத்தகா எற்பாடுகளைக் கொண்டவை எனத் தோன்றுகின்ற எந்த முறியையேனும் மேற்கொண்டு பரிசீலனை செய்யவேண்டுமென அரசாங்க சபைக்கு மீண்டும் அனுப்புவதற்குரிய அதிகாரம் அவருக்கு இருத்தல் வேண்டும். அத்துடன், அவர் கருத்துக்கு உவந்தவையெனக் கருதுகின்ற திருத்தங்களையும் அவர் சுட்டிக் காட்டலாம். (2) முக்கியமான ஒரு தத்துவத்தை உடையதென ஒரு முறியை ஆள்பதி உறுதிப்படுத்துவாரெனின், அத்தகைய முறியானது அரசாங்க சபை உறுப்பினருடைய வாக்குக்களில் 2/3 பகுதியைப் பெற்ருலே வரிக்கப்பட்டதென எடுத்துக்கொள்ளப்படுமெனக் கழகப் பணிக்கை விதித்தல் வேண்டும். இவ்வாறக, கழகப் பணிக்கையின் இக்கூற்றின்பாற்படுவதென எந்த முறியையும் உறுதிப்படுத்தி, அவ்வாறு உறுதிப்படுத்திய முறியை மீண்டும் பரிசீலனை செய்வதற்காக அரசாங்க சபைக்கு அனுப்புவதற்குரிய அதிகாரத்தை ஆள்பதி கொண்டிருத்தல் வேண்டும். (3) கட்டளைச் சட்டமானது குறித்த ஒரு காலவளவிற்குச் செயற்படா திருத்தல் வேண்டுமென்ற ஒரு நிபந்தனையைத் தம் இசைவுடன் சேர்ப்பதற்கு ஆள்பதிக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும் ; ஆனல், இஃது எந்த வகையிலும் ஆறு மாதங்களுக்கு மேற்பட்டதாய் இருத்தலாகாது.
இவ்வுாருக அரசாங்க சபை வரித்துக்கொண்ட முறிகளைத் தீர்ப்பதில் ஆள்பதிக்கு ஆறு விதமான வழிவகைகள் உண்டு. அவர் :-
(1) அவற்றிற்கு இசைவளிக்கலாம். (2) மாட்சிமைதங்கிய அரசரின் இசைவினைப் பெறும் வரைக்கும் ஒதுக்கி
வைக்கலாம். (3) வேண்டிய திருத்தங்களை எடுத்துரைத்தோ, எடுத்துரையாமலோ அரசாங்க சபை மீண்டும் அதைப்பற்றிப் பரிசீலனை செய்வதற்காக அனுப்பலாம். (4) "குறிக்கப்பட்ட முறியானது 2/3 பெரும்பான்மையால் வரிக்கப்பட ・ ー - வேண்டுமெனக் கூறுகின்ற கழகப் பணிக்கையின் கூற்றின்
பாற்பட்டதென ஒரு முறியை உறுதிப்படுத்தலாம்.

Page 58
104
களுக்கு மேற்படாத ஒரு கால எல்லைக்குச் செயற்படாதிருத்தல் வேண்டுமென்ற ஒரு நிபந்தனையை விதிக்கலாம்.
(5) தம்முடைய இசைவுடனே குறித்த கட்டளைச்சட்டமானது ஆ6
(6) இசைவளிக்க மறுக்கலாம்.
இவ்வதிகாரங்களை அவர் ஒருவிதமான கட்டுப்பாடுமின்றி வேண்டிய வாறு செலுத்தலாம். ஆனல், ஒவ்வொரு வகையிலும் தம்முடைய செயலைப்பற்றிய ஓர் அறிக்கையை அரசுச்செயலாளருக்கு அவர் அனுப்புதல் வேண்டுமென்ற ஓர் ஏற்பாட்டினை யாப்பு விதித்தல் வேண்டும் ; அவ்வரசுச் செயலாளர் ஆள்பதியின் முடிவினை ஏற்கலாமோ, ஆகாதோ என்பதைப்பற்றி மாட்சிமைதங்கிய அரசருக்கு அறிவு கொளுத்துவார்.
இன்னும், பொதுநலனுக்கு மிகவும் இன்றியமையாததென அவர் கருதுகின்ற ஒன்றில் அரசாங்க சபை ஒத்துழைக்க மறுக்கின்ற காலங்களிலே ஆள்பதிக்குத் தாமே சட்டம் ஆக்கக்கூடிய அதிகாரம் அளித்தல் வேண்டும் ; இத்தகைய ஒர் எற்பாடு இப்பொழுதுள்ள யாப்பினுள் சேர்க்கப்பட்டுள்ளது. இஃது 1923 ஆம் ஆண்டு கழகப் பணிக்கை கூறு IV இல் வருமாறு உள்ளது :
* LIV-(1) யாதுமொரு முறி, அல்லது அதனுடைய வாசகம், அல்லது யாதுமொரு முறிக்கு ஒரு திருத்தம், அல்லது ஒரு தீர்மானம், அல்லது ஒரு வாக்கெடுப்பு பொதுநலனுக்கு மிக்க இன்றியமையாதது என அவர் கருதினல் அவர் இத்தகைய முறியினை, வாசகத்தினை, திருத்தத்தினை, தீர்மானத்தினை, அல்லது வாக்கினை மிக முக்கியமானதெனப் பிரகடனஞ் செய்யலாம். இத்தகைய பிரகடனத்தை அங்கத்தினர்களின் வாக்கெடுப்புக்கு முந்தியோ, அல்லது வாக்கெடுத்து முடிந்தபின்னரோ ஆள்பதி செய்ய லாம், அல்லது ஆள்பதியின் அதிகாரம் பெற்று அவருடைய அறிவுரை களுக்குத் தகச் செயலாற்றுகின்ற அலுவல் பற்றுடைய ஓர் அரசாங்க சபை அங்கத்தினர் செய்யலாம்.
(2) இத்தகைய வகைகளிலே அலுவல் பற்றுடைய உறுப்பினர் களுடைய வாக்குக்களும் நியமிக்கப்பட்ட அலுவல் அங்கத்தினர்களுடைய வாக்குக்களுமே கணிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும். அலுவல் பற் றுடைய அங்கத்தினர் நியமனம் செய்யப்பட்ட அலுவல் அங்கத்தினர் ஆகியோர் அளிக்கும் பெரும்பான்மை வாக்குக்கள் இத்தகைய முறி, வாசகம், திருத்தம், தீர்மானம், வாக்கெடுப்பு ஆகியவற்றிற்கு ஆதரவாக இருக்குமெனில், அத்தகைய முறி, வாசகம், திருத்தம், தீர்மானம், ! வாக்கெடுப்பு அரசாங்கசபையில் நிற்ைவேற்றப்பட்டதென எடுத்துக் கொள்ளல் வேண்டும்.”

05
இக்கூற்றினுடைய தத்துவத்தைப் புதிய யாப்பில் அமைத்தல் வேண்டு மென்று நாம் கருதுகின்றேம். ஆனல், இதனுடைய வாசக அமைப்பைத் திருத்தம் செய்ய வேண்டும். இக்கூற்றிலுள்ள நடைமுறையானது, தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அமைய அலுவல் பற்றுடைய அங்கத்தினர்களின் எண்ணிக்கை மூன்று அரசலுவலராகக் குறைக்கப்பட்டுள்ளதுமான ஓர் அரசாங்க சபைக்கு ஏற்றதன்று. இத்தகைய சந்தர்ப்பங்களிலே சட்டமொன்றை நிறுவுவதற்குரிய அதிகாரம் ஆள்பதியிலேயே தனித்திருத்தல் வேண்டும். இத்தகைய முறிக்கு வாக் கெடுப்பு ஒன்றும் வேண்டியதில்லை.
நிறைவேற்று செயல்
எங்களுடைய முன்னிடுகளில் அரசாங்க சபை திருத்தி வரித்த நிறை வேற்று குழுக்களின் அறிக்கைகள் ஆள்பதியின் உறுதிப்பாட்டிற்காகச் சமர்ப்பிக்கப்படுமென்றும் அவர் உறுதிப்பாட்டினைப் பெறும்வரைக்கும் நிறைவேற்றலுவலர்கள் அந்த முன்னிடுகளின் எந்தப் பிரிவிற்கும் ஏற்ற விதத்தில் செயலாற்றல் முறையன்று என்றும் கூறியுள்ளோம். இத்தத்து வத்தினை யாப்பிலே திட்டவட்டமாக நிலைநிறுத்தல் வேண்டும். இத்தகைய அறிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குச் சட்டவாக்கு துறையிலே எத்தகைய அதிகாரங்களை அவர்கொண்டிருக்க வேண்டுமென்று எடுத்தோதப்பட்டதோ, அத்தகையவற்றை அவர் இங்கும் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வாருக இசைவளிக்க, இசைவளியாதிருக்க, அரசுச்செயலாளருக்குச் சமர்ப்பிக்கும் வரையும் ஒத்திவைக்க, மீண்டும் பரிசீலனை செய்வதற்கு அரசாங்க சபைக்கு அனுப்ப, குறிக்கப்பட்ட ஓர் அலுவல் முக்கியமானதொரு தத்துவத்தோடு இயைந்தது, எனவே அரசாங்க சபை அங்கத்தினரில் 2/3 பங்கு உறுப்பினரின் ஆதரவை அது பெறல் வேண்டுமென்று உறுதிப்படுத்த அவருக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும். சட்டவாக்கு துறைக்கு மிகவும் உவந்த இத்தகைய காலந்தாழ்த்து அதிகாரங்கள் நிறைவேற்று நடவடிக்கைகளுக்கு எற்றவையெனக் கொள்ளல் நன்றன்று எனச் சிலர் கருதல் கூடும். ஆயினும், இவ் யாப்பு முறைமையிலே, எவ்வாறு சட்டவாக்கு துறையில் நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டனவோ, அவ்வாறு அரசாங்க சபை நிறைவேற்று நடவடிக்கைகளிலும் ஆணை செலுத்துவதற்கு ஏற்ற அதிகாரத்தை அவருக்கு அளித்தல் வேண்டுமென்ற ஒரு பொது எற்பாட்டை யாப்பில் சேர்த்தல் பெரும் மலைவினைத் தீர்ப்பதற்கு உதவும். எத்தகைய அலுவல்களுக்கு அவர் இசைவளிக்கலாம், இசைவளித்தல் ஆகாது என்று அவருக்கு அறிவு கொளுத்துவதற்கு ஏற்ற கட்டுமைகளும் விதிக்கப்படல் வேண்டும் ; பொதுநலனுக்கு மிக இன்றியமையாததென்று கருதப்படுகின்ற அலுவல்களிலே அரசாங்கசபை ஒத்துழைக்கத் தவறுகின்ற

Page 59
06
பொழுது நிறைவேற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஒத்த அதிகாரத்தை அவருக்கு அளித்தல் வேண்டும். இவ்வாருக, அரசாங்க சபையின் நிறை வேற்று நடவடிக்கை எதற்காயினும் அவர் இசைவளிக்காதிருக்கவும் இசை வினை ஒத்திவைக்கவும்கூடிய ஒரு பொது உரிமை அவருக்கு இருக்கும். வேத்தியற் கட்டளைகளுக்கேற்ப எவ்வகையைச் சார்ந்த நடவடிக்கைகட்கு அவர் இசைவளித்தலாகாது, அல்லது இசைவினை ஒத்திவைத்தல் வேண்டு மென்று குறிக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய நடவடிக்கைகளின் வரிசையில் சேர்க்கப்படக்கூடியவற்றிற்கே அவர் இத்தகைய அதிகாரத்தைப் பொதுவாக உபயோகித்துக் கொள்வார். மற்றை வகைகளில் அவர் அவ்வாறு அதிகாரம் செலுத்த மாட்டார். மேலும், குழுவின் நிறைவேற் றலுவல் நடவடிக்கைகளுடன் அக்குழுவினுடைய முடிவுகளுக்குத் தாம் மாறுபடின் தாம் மேற்கொள்கின்ற செய்கையைப்பற்றிய ஒர் அறிக்கையையும் ஆள்பதி காலத்துக்குக் காலம் அரசுச் செயலாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும் ; இவர் ஆள்பதியின் முடிவுகளை ஆராய்வார். இவ்வாறு அறிக்கைகளே அவர் அளிப்பதால் அவருடைய முடிவுகள்பற்றித் தொடர்ந்து எழும் நடவடிக்கைகள் நடவாமல் இருப்பதற்கில்லை ; இவை சட்டவாக்கு நடவடிக்கைகளுக்கு இசைவளிக்கின்ற வகைகளில் எவ்வாறு செயற் படுவனவாய் விளங்குன்றனவோ அவ்வாறே அவர் இசைவு பெற்றவுடன் தொழிற்படும். பொதுச் சேவைக்கு நியமனஞ் செய்யும் அதிகாரம் ஆள்பதியிலேயே தங்கியிருத்தல் வேண்டுமென்று யாப்பினில் ஏற்பாடு செய்தல் வேண்டும். அரசாங்கத்தின் பொது விதிகளை எங்கள் அறிக்கையில் 102 இலிருந்து 105 வரை எடுத்துரைக்கப்பட்ட ஒழுங்கிற்கேற்பத் திருத்தி யமைத்தல் வேண்டும்.
அரசலுவலர்களின் பொறுப்பில் விட்டுவிடவேண்டுமென்று நாம் எடுத் துரைத்த அலுவல்களிலும் இன்னும் மேற்கொண்டு நிறைவேற்று செயல் கள் நடைபெறல் வேண்டும். நாங்கள் முன்னர் எடுத்துக் கூறியவாறு, இவர்கள் யாப்பு முறைக்கேற்ப ஆள்பதிக்குப் பொறுப்புடையோராக இருப் பர். ஆனல், நிதிப்பூட்கை, நிதியாட்சி ஆகிய இரண்டும் அரசாங்க சபையில் அதிகாரத்தில் இருப்பனவாதலாலும் அரசலுவலர்கள் தங்களுடைய திணைக் களங்களின் ஆட்சியைப்பற்றிய அரசாங்க சபைக்கே வகைசொல்லக் கடமைப் பட்டுளராதலாலும் கொள்கை முறைப்படி இவர்களுடைய நிலைமை ஒரு கருத்தற்றதாகிவிடுகின்றது. எனவே, இவர்களுடைய பொறுப்பிலமைந்த திணைக்களங்களின் அலுவல்களில் இவர்கள் மற்றை அமைச்சர்களைப் போலவே அமைவர் ; ஆள்பதியும் இவ்வலுவலர்களின் அறிவுரைகளுக் கேற்றவாறு நடப்பார். ஆயினும், இவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட அலுவல் கள் யாவற்றிற்கும் ஆள்பதி தனிப்பொறுப்பு வாய்ந்தவராதலின், அவை பற்றிய முடிவுகளில் தான் வேண்டியவாறு செய்வதற்குள்ள உரிமையை அவர் பெற்றிருப்பார். ஆகவே, உள்ளூர்ச் சார்பற்ற பேரரசுப் பற்றுடைய அலுவல்களில் தம்முடைய மதிப்புக்கும் தம்முடைய எண்ணத்திற்கும்

10፲
இய்ைந்தவாறு நேர் நடவடிக்கைகள் எடுக்கக் கூடியவராக அவர் இருப் பார். பொதுவாக மற்றை அலுவல்களிலுள்ளவாறே சொந்த இவ்வலுவல் களிலும் அவருடைய அதிகாரங்கள் நிறைவேற்று முறைமையிலன்றி மேற் பார்வை முறைமையிலேயே அமைந்திருக்கும். இவ்வலுவல்களில் நடை முறை விவரங்களைப்பற்றியவிடத்தில் அரசலுவலர்களுக்குச் சுதந்திரம் இருக்கும்.
மேல் நாம் குறித்த பேரரசு அலுவல்களில் அதிக முக்கியமானதொன் அறுண்டு : நாட்டின் பாதுகாப்பே அது. இந்த அலுவலில் இப்பொழுது எவுநர் தலைவராகக் கடமை பார்க்கும் ஆள்பதிக்கும் படையேவும் அலுவ லர்க்கும் உள்ள நிலைமையில் மாறுதல்கள் ஆக்கவேண்டுமென்று நாங்கள்
கருதவில்லை.
இவ்வலுவலிலும் வெளிநாட்டுத் தொடர்புகள்பற்றிய அலுவல்களிலும் ஆள்பதி செலுத்துகின்ற ஆட்சியைப்பற்றி ஒரு வார்த்தை. பேரரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பாயமைந்த அலு வல்களிலும் அந்நாட்டு மக்களுக்குப் பொறுப்பாக வமைந்த அலுவல் களிலும் பேரரசு ஆணையிலேயே இருத்தல் வேண்டுமென்று நாம் கருது கின்றேம் ; இன்னும், இந்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் தாம் எந்தப் பொதுநலவாயத்தில் ஒர் உறுப்பினராக இருக்கின்றர்களோ, அவ்வாயத் தார் நலனுக்கு மாறகவோ, அல்லது இத்தீவுடன் வணிக, நிதி, மற்றைத் தொடர்புகள் கொண்டுள்ள பெரிய பிரித்தனின் மக்களினுடைய சிறப்பு நலன்களுக்கு மாறகவோ இத்தீவின் பூட்கையினை மாற்ற விரும்புவர் என நாம் அஞ்சவில்லை. நாங்கள் இலங்கைமில் கண்டதும் கேட்டதும் அங்கு அவர்கள் எங்களுக்குக் காட்டிய பரிவும் மேன்மை தங்கிய ஆள்பதிக்கும் அவருடைய உயர் பதத்திற்கும் அவர் காட்டிய வணக்கமும் பெரிய பிரித்தனுடன் கொண்டுள்ள தொடர்பினல் தீவிற்கு எற்பட்ட நன்மை யைப்பற்றிய ஒத்துக்கோளும் இவ்வாறு எங்களை அச்சங்கொள்ளவிடவில்லை.
பொது
சபையமைந்த ஆள்பதிக்குக் கட்டளைச் சட்டத்தில் குறித்த சில கடமைகள் பணிக்கப்பட்டுள்ளன. எங்களுடைய முன்னிடுகளுக்கிணங்க இந்த நிறை வேற்று சபை நீக்கப்படும். ஆள்பதிக்கு வருங்காலத்தில் துணைசெய்வதற்கு ஒரு சபையும் இருக்காது. ஆயினும், இந்தக் கடமைகளை, அவை சிறப்பில் லாதவையாக இருப்பினும், நிறைவேற்றுவதற்குப் புதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எனவே, இக்கடமைகளைக் குறிக்கப்பட்ட திணைக்களத் தலைவர் மேலோ, அமைச்சரும் நிறைவேற்று குழுவினரும் மேலோ அமையுமாறு ஒரு சட்டம் பிறப்பித்தல் வேண்டும். ஆனல், இவ்வாறு இக்கட்மைகளை மற்றவர் பொறுப்பில் விடுவது நன்றன்று, அவை முக்கிய மானவை என அரசுச் செயலாளர் கருதின் அவற்றை ஆள்பதியின் சொந்தப் பொறுப்பிலேயே விடுவது நல்லதென்று நாங்கள் கருதுகின்ருேம்.

Page 60
08
சபையமைந்த ஆள்பதி குறித்த சில அதிகாரங்களை வகிப்பதற்கு யாப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றை அவர் தம் சொந்தப் பொறுப்பிலேயே வகிப்பர். ஆனல், அவற்றைச் செயற்படுத்துகின்றபொழுது அவர் நிறை வேற்று குழுக்களைக் கலந்தாலோசிக்க வேண்டிய கடப்பாடுடையர். அவர் களுடைய அறிவுரையை அவர் ஏற்க வேண்டுமென்ற கடப்பாடு இல்லா விடினும் கேட்பதற்கு அவர் கடப்பாடுடையவர். இவ்வாறுள்ள அதிகா ரங்களுள் கருணை அளிக்கும் அதிகாரமும் ஒன்றகும்; இஃது அவரிலேயே பொறுப்பாக அமைந்திருத்தல் வேண்டும். மிக முக்கிய அலுவல்கள் என்று உறுதியளிக்கும் அதிகாரம் போன்ற மற்றை அதிகாரங்கள் விரி வாக்கப்பட்டுப் பலப்படுத்தப்படல் வேண்டும். இவற்றைஆள்பதி தம்முடைய சொந்தப் பொறுப்பிலேயே தம் சொந்தக் கருத்து முடிவுகளுக்கு ஏற்ற வாறு வகித்துக் கொள்வார். நிறைவேற்று கழகத்தை நீக்குவதால் ஆள்பதி தம்முடைய அரசாங்கத்தவர் அறிவுரையைக் கேட்கும் பேற்றி னின்றும் நீக்கப்பட்டவராகார், நாங்கள் பின்னர் குறிப்பிடுவதுபோல், அவர் தாம் வேண்டியவாறு அமைச்சருடன் கலந்தாலோசித்து நடை முறையிலுள்ள அரசியல் நோக்குக்களை, இப்பொழுது அறிவதுபோல் இயன்ற அளவில் நன்முறையிலறிந்து, அவற்றேடு நெருங்கிய தொடர்பு கொள்ளக் கூடிய சிறப்புற அமைக்கப்பெற்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தக் கூடியவரா யிருப்பார். இன்னும், மேலதிகமான குறித்த சில அதிகாரங்களை ஆள் பதிக்குக் கொடுப்பதற்கும் யாப்பு வழிகோலல் வேண்டும். நிறைவேற்று குழுக்களின் முதல்வரை நியமிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும் ; இவ்வாறு நியமனம் செய்வதற்குரிய ஒழுங்கு முறைகள் செவ்விதில் வரையறுக்கப்படல் வேண்டும். அவசரகால நிலைமையெனப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தையும் அவர் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு பிரகடனம் செய்யும் காலத்தில் பொலிசுச் சேவையின் கட்டுப் பாட்டை மேற்கொள்ளவும் பொது நலனுக்குத் தாம் எடுத்துக்கொள்ள வேண்டிய வேறு திணைக்களம், சேவை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும் அவருக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும்.
இவ்வாருக ஆள்பதியின் கடமைகள் பொதுவில் நேர்முகமாகவன்றி, எதிர்முகமாக இருக்கும் ; நிறைவேற்று முறையிலன்றி மேற்பார்வை . முறையிலமைந்திருக்கும். இன்னும், இனிமேல் இந்நாட்டின் ஆட்சிக்கு அவரே பொறுப்பாக இருக்கார். அவர் கடமை எல்லாவற்றிற்கும் மேலாக, யார் மேல் இவ்வாளும் பொறுப்பு வருகிறதோ அவர்களுடைய ஒழுங்கு முறைக்கென யாப்புறுத்த விதிகளை அவர்கள் மீறமல் இருக்கிறர்களா என்பதைப் பார்த்தலேயாகும்.
இதுவரை இந்நாட்டின் ஆட்சிக்கு முழுமையாக இருந்த அவர் நேர் பொறுப்புக்கள் பொதுவாக வேத்தியற் கட்டளைகளின் திட்டமான எற்பாடு களுக்கியையக் கட்டுப்படுத்தப்படும். ஆனல், இப்பொது வாட்சியைச் செவ்விய முறையில் அமைப்பதில் அவருக்கு உயர்ந்த ஓர் இடமுண்டு. இவ்வலுவலில்

109
அவர் ஒரு தடுப்புப் போலவும் நன்னிலைப்படுத்தும் ஓர் ஊக்குப்போலவும் கூச்சம் உள்ளவரை உறுதிப்படுத்தும் ஒரு முகவர் போலவும் பணியாற்றல் வேண்டும். இப்பணியில் அவர் முழுப்பொறுப்புவாய்ந்த அரசாங்க முறையில் எவ்வாறு நடப்பாரோ, அதனிலும் கூடிய ஊக்கம் உள்ளவராக நடந்து கொள்ளல் வேண்டும்.
ஆனல், அவர் மற்றை எல்லைக்குப் போகாதிருப்பதிலும் ஒத்த கவனம் உடையவராக இருத்தல் வேண்டும். குடியிருப்பேற்றநாட்டு அரசாங்கத்தில் அவருக்கு முந்தியவர் எவ்வாறு செயல் புரிந்தனரோ அவரைப் பின் பற்றதவராக இருத்தல் வேண்டும். ஒரவஞ்சனையற்ற தம்முடைய முடிவு களில் பொதுமக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமெனில் ஊரரசியலில் கலவாதவராக அவர் இருத்தல் வேண்டும்.
முக்கியமாக இக்காரணத்திற்காகவே ஆள்பதிக்குத் துணை செய்வதற்காக அவர் தலைமை வகிக்கின்ற ஒரு முறைமையிலமைந்த கழகத்தை ஆக்க வேண்டுமென்று நாங்கள் எடுத்துரைக்கவில்லை. இத்தகைய ஒரு கழகத் தோடு அவர் உறவு கொண்டிருப்பது அரசியல் சச்சரவுகளில் அவரை ஈடுபடச் செய்து, ஒரவஞ்சனையற்ற மேற்பார்வைக்கு இன்றியமையாத, சுதந்திர நிலையினைக் கெடுத்துவிடும். மிகவும் விவாதத்திற்குரிய நிலையி லிருக்கின்ற சட்ட சபை அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஓர் அமைச்சர் சபையின் நடவடிக்கைகளிலோ, அரசாங்க சபையின் நாள் நடவடிக்கை களிலோ நடைபெறுகின்ற விவாதங்களோடு இணைந்தவராக அவர் பொதுமக்கள் மனத்தில் தோன்றுவது ஒரு நற்பேறற்ற நிலையை உண் டாக்கிவிடும். இன்னும், அமைச்சர் சபையின் நடவடிக்கைகளில் அவர் மேலாண்மை கொண்டு நடந்து கொள்கின்றர் என்ற ஒரு குற்றச்சாட்டுக்கும் அவர் இடம் கொடுத்தலாகாது. இச்சபையின் கூட்டங்களில் அவர் தலைமை வகிப்பாரேயானல் இவ்விதக் குற்றச்சாட்டு அவருக்கு எய்துவது திண்ணம். இப்பொழுது நிறைவேற்று சபையில் தீர்க்கப்படுகின்ற அலுவலானது வருங் காலத்தில் அமைச்சரைக் கொண்டுள்ள கழகத்தமைந்த ஆள்பதியால் நடைபெறவேண்டுமென்று யாப்பு விதிக்குமேயானல், அஃது அமைச்சர்க்கு வேறுவழியால் கிடையாத ஒரு கூட்டு முறையிலமைந்த பொறுப்பை ஏற்றி விடும். இன்னும், அமைச்சர்களைக் கொண்டிராத ஒரு சிறப்புக் கழகமானது ஆள்பதியுடனிணைந்து அலுவல் பார்க்குமேயானல், அஃது உவந்த ஒரு முடிவாகாது ; ஏனெனில், அவர்கள் மீது அமைச்சர்களும் அரசாங்க சபை அங்கத்தவர்களும் நம்பிக்கையீனமும் சந்தேகமும் கொண்டிருப்பர். அர சாங்க சபைக்குப் பொறுப்பில்லாதவர்களாக அவர்கள் இருப்பதால் அவர் கள் ஆள்பதிக்கு அறிவுறுத்தும் சிறப்பான பேற்றினைப் பெற்றிருப்பர் ; எனவே, அரசாங்க சபை நிறைவேற்றிய நடவடிக்கைகளில் ஆள்பதி என்றேனும் குறுக்கிட்டுச் செயலில் இறங்குவாரேயானல் அஃதவர் கழகத் தினர் அவர் மேற்கொண்டிருக்கும் மேலதிகமான அதிகாரத்தால் நடந்தது

Page 61
10
என்று சொல்லப்படும். எப்பொழுதேனும் அமைச்சர்களோ, நிறைவேற்று குழுக்களோ தாங்கள் கொண்டுவருகின்ற முன்னிடுகள் தங்களுடைய செயல் களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடமையற்ற புறம்பான ஒரு கழகத் தின் ஆராய்விற்கு விடப்பட்டுத் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றப் படாது தடுக்கப்படுகின்றன என்று அபிப்பிராயம் கொள்வரேல், ஆள்பதி யின் நிலையானது மிகவும் இடர் நிறைந்ததொன்றகும். புதிய யாப்பும் நல்வழியில் முறைப்படாது தடைப்படும். எனவே, ஆள்பதியானவர் அமைச் சர் குழு, அரசாங்க சபை ஆகியவற்றின் நடவடிக்கைகளிலிருந்து விலகி யிருத்தல் நன்றகும். இன்னும், முறைமையிலமைந்த யாதுமொரு கழக மேனும் அவருக்குத் துணைபுரிய அமைக்கப்படலாகாது. இவ்வாருக அவர் ஒரவஞ்சனையற்ற சுதந்திரமான மிக உயர்ந்த ஒரு நடுவன் நிலையை வகிப்பர் ; இது பொதுநலனுக்கு மிக்க உவந்ததாகும்.
ஆட்சிமுறையைக் கொண்டு நோக்குகின்றபொழுது இவ்வொழுங்கு முறை யானது மிகவும் நன்முறையில் செயற்படக்கூடியதொன்றகும். ஏனெனில், இப்பொழுது நிறைவேற்று சபை செய்யவேண்டிய கடமைகளை வருங்காலத் தில் இடரின்றிச் செய்வதற்கு வேறு ஒழுங்குகளைச் செய்யலாம். இவ் வழியை நாம் முன்னர் எடுத்துக் கூறியுள்ளோம். ஆயினும், ஆள்பதி யானவர் தம் மனம் நிறைந்தவாறு அவருக்களிக்கப்பட்ட மேற்பார்வைக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டுமெனில் அரசாங்கத்தின் செயல்களைப் பற்றிய நல்லறிவை அவர் பெறுவதற்கு அவற்றேடு தொடர் புறும் நல்வாய்ப்பு அவருக்கு அளித்தல் அத்தியாவசியமாகும். எப்பொழுதும் அவர் தம்முடைய அமைச்சர்களுடன் இடையருத் தொடர்பு வைத்துக்கொள்ளல் வேண்டும் ; அவர்கள் மூலமாக ஆட்சிமுறையின் ஒவ்வொரு துறையிலும் அவர் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். இப்பொழுதிருக்கின்ற ஆட்சி முறையிலே இக்கடமையை நிறைவேற்று வதிலும் பார்க்க வருங்காலத்தில் எளிதாக நிறைவேற்றலாம். ஏனெனில், வருங்காலத்தில் ஆட்சியானது குடியேற்றநாட்டுச் செயலகத்திலிருந்து கீழ்ப் பரவிப் பன்முகப்பட்டிருக்குமென்க. இவ்வாறு அவர் எல்லா அலுவல் களோடும் தொடர்புடையவராக இருப்பதற்காக நிறைவேற்று குழுக்கள், அமைச்சர் சபை ஆகியவற்றின் ஒவ்வொரு கூட்டத்தினதும் நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல்கள் ஆகியவற்றின் படிகளைக் குறித்த அலுவலர் அங்கத் தவர்க்கு அனுப்புகின்றபொழுது ஆள்பதிக்கும் அனுப்பல் வேண்டும். அரசாங்க சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் பத்திரங்களும் படிகளும் அவருக்கு அனுப்பப்படல் வேண்டும். நாள்முறைகளும் நடவடிக்கைகளின் அலுவல் முறைப் பதிவுகளும் அனுப்பப்படல் வேண்டும். இம்முறையானது அர சாங்க சபையின் சட்டவாக்கு செயல், சட்டநிறைவேற்று செயல் ஆகிய வற்றேடு இயைந்த சகல நடவடிக்கைகளையும் ஆள்பதியானவர் அறிந் திருக்கச் செய்யும். அவர் அமைச்சர்களுடன் இடையறத் தொடர்பும் நட்புமுறை உறவும் கொண்டிருப்பார் என்று எலவே கூறியுள்ளோம்.

11
அவரே இந்த இலங்கையின் ஆள்பதியெனும் உயர் பதத்திற்கு அவர்தம் சிறந்த பண்பினல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ; இத்தகைய பதவி வகிக்கும் மாட்சிமை தங்கிய மன்னரின் அலுவலர்க்கு இயல்பாகவே அனுபவமும் நன்மதியும் இருக்கும். ஆகவே, அவர் அமைச்சர் மூலமாக இச்சிறப்புப் பண்புகள் யாவையும் சபையின் எல்லாச் செயல்களிலும் பிரதிபலிக்கச் செய்வார்.

Page 62
அதிகாரம் ν
வாக்குரிமையும் பிரதிநிதித்துவமும்
1. வாக்குரிமை
தற்போதைய நிலை
கடைசியாக நிகழ்ந்த குடிமதிப்பின்போது (1921) இலங்கையின் குடித் தொகை 4,498,605 ஆக இருந்தது ; தற்போது இது 5,125,000 இற்கு அண்மையிலுள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 700,000 தொகையினராகியிருக்கும் இந்தியரையும் இது அடக்கியுள்ளது ; இவ் வறிக்கையில் வேறிடத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் இவர்களுட் பெருந் தொகையினரை இலங்கையின் நிரந்தரக் குடிமக்கள் எனக் கருதல் கூடும். 1921 இல், முதிர்ந்த ஆண்களின் தொகை 1,180,000 ஆகவும் முதிர்ந்த பெண்களின் தொகை 975,000 ஆகவும் இருந்தன. இப் போதுள்ள வாக்குத் தொகுதி ஆண்கட்கு மட்டுமே உரியது ; சட்ட சபையினர் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒருவர் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் யாவும் 1923 ஆம் ஆண்டுக் கழகப்பணிக்கை பிரிவு XXVI இலே வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
"XXVI-(1) பிற்கூறப்படும் நிலையிலிருப்பவர் எவ்வாண்டிலாயினும் எந்த வாக்கெடுப்புப் பதிவேட்டிலாயினும் தம் பெயரைப் பதிவு செய் வித்தற்குத் தகுதியற்றவராவர்.
(அ) பிரித்தானியப் பிரசை அல்லாதவர் ; (ஆ) பெண்ணுய்ப் பிறந்தவர் ; (இ) 21 வயது வராதவர் ; s (ஈ) ஆங்கிலமோ, சிங்களமோ, தமிழோ எழுதப் படிக்கத் தெரியாதவர் ; (உ) பதிவேடு ஆக்குவதற்குத் தொடங்கிய காலத்திற்கு உடன் முன்னர் உள்ள ஆறுமாத காலம் முழுவதற்கும் அப்பதிவேடு தொடர் பான வாக்காளர் மாவட்டத்தில் வசிக்காதவர் ; (ஊ) மாட்சிமை தங்கிய மன்னரின் அரசியல் எப்பகுதியிலாயினும் மரண தண்டனையோ, சேவைத் தண்டனையோ விதிக்கப்பட்டும், இன்றேல், கடும் வேலைத் தண்டனை பெறத் தக்கதான குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்றும், இன்றேல் 12 மாதத்திற்கு மேற்பட்ட கடுங்காவல் தண்டனை பெற்றும், தாம் பெற்ற தண்” டனையை அனுபவியாதவர் அல்லது அத்தண்டனைக்கு நிகரென
12

113
உரிய அதிகாரியால் கருதப்பட்ட வேறு தண்டனையை அனுப வியாதவர் அல்லது மாட்சிமை தங்கிய மன்னரால் மன்னிக் கப்படாதவர்; V
(எ) அதிகாரம் பெற்ற ஒரு நீதிமன்றத்தால் மூளைக் கோளாறுடையவர்
எனக் கருதப்பட்டவர் ; (எ) பின்வரும் தகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப் பெருதவர். (i) தெளிவாக ஆண்டுக்கு உரூபாய் 600 இற்குக் குறையாத வருமா னத்தைப் பெறுதல், துய்த்தல் ; இத்தகைய துய்த்தலோ பெறுதியோ பதிவேடு ஆக்குவதற்குத் தொடங்கிய காலத்திற்கு உடன் முன்னர் உள்ள ஆறு மாத காலம் முழுவதற்கும் தொடர்ந்து நிலைபெற்றிருத்தல் வேண்டும்.
(i) தன் உரிமையில் அல்லது தன் மனைவி உரிமையில், (குத்தகை அல்லது ஒற்றி உரிமையில் அன்று) பதிவேடு ஆக்குவதற்குத் தொடங்கிய காலத்திற்கு உடன் முன்னர் உள்ள ஆறுமாத காலம் முழுவதற்கும் அப்பதிவேடு தொடர்பான வாக்காளர் தொகுதியில் ஈடு முதலிய கடன் களுக்குரிய தொகை கழிக்கப்பட்டபின் உரூபாய் 1,500 இற்குக் குறையாத பெறுமானமுடைய அசைவற்ற உடைமைபெற்றிருத்தல்.
(ii) பதிவேடு ஆக்குவதற்குத் தொடங்கிய காலத்திற்கு உடன் முன்னர் உள்ள ஆறுமாத காலம் முழுவதற்கும் அப்பதிவேடு தொடர்பான வாக் காளர் தொகுதியில் ஒரு வீட்டிலோ, பண்டசாலையிலோ, வணிகச்சாலை யிலோ, கடையிலோ மற்றெவவிதக் கட்டிடத்திலோ (இது இனிமேல் தகுதியளிக்கும் உடைமை என்றழைக்கப்படும்) உடைமையாளராகவோ உறை பவராகவோ வசித்திருத்தல் வேண்டும். இத்தகைய உடைமை (அ) மாநகர சங்கம், உள்ளூர்ச் சபை, சுகாதாரச் சபைப் பட்டணம் ஒன்றிலோ அல்லது யாதாவதொரு நகரமாவட்டச் சங்கம் அல்லது நுவரேலியா சீர்திருத்தச்சபை ஆகியவற்றின் எல்லைக்குள் இருக்குமாயின் அதன் பெறு மதி வருடம் ஒன்றிற்கு உரூபாய் 400 ஆக இருத்தல் வேண்டும், (ஆ) வேறு இடத்தில் இருப்பதாயின் அதன் பெறுமதி வருடம் ஒன்றிற்கு உரூபாய் 200 ஆக இருத்தல் வேண்டும்.
(2) ஒரு கட்டிடத்தின் எப்பகுதியேனும் புறம்பாக யாதாவதொரு வணி கத்திற்கோ வியாபாரத்திற்கோ தொழிலுக்கோவென ஒதுக்கப்பட்டிருப்பின் வீடு, பண்டசாலை, வணிகச்சாலை, கடை என்னும் சொற்கள் அதைக் குறிக்கும். இத்தகைய பகுதி அதன் தகுதியைக் குறித்தற்பொருட்டு அலுவலகம், கூடம், அன்றி அவை போன்ற வேறு எச்சொல்லாலேனும் குறிக்கப்படலாம்

Page 63
14
(3) ஒரிடத்து உறைவார் ஒருவர் ஒரு கட்டிடத்தின் யாதுமொரு பகுதியை உபயோகிக்கத் தனியுரிமை கொண்டவரானல் அவர் பிறபகுதியை உப யோகிக்கக் கூட்டுரிமை கொண்டிருக்கின்றர் என்ற ஒரு காரணத்தால், அவர் அப்பகுதியில் தனியே உறைகின்றரென்றன்றி வேறுவிதமாகக் கொள்ளலாகாது.
(4) இந்தக் கூற்றிற்காக, ஒரு வாக்குத் தொகுதியில் வாழ்வதோ ஒரு வீட்டில் உறைவதோ பின்வரும் காரணங்களால் தடைபெற்றது எனக் கொள்ளலாகாது ; பிறன் ஒருவனுக்கு அவ்வீடானது தளபாடம் நிறைத்து விருப்பிற்கியைந்த மாத வாடகைக்கு உறையக் கொடுக்கப்பட்டது எனும் ஒரு காரணத்தால் ; முழுமையும் ஐந்து மாதத்திற்கு மேற்படாத காலத் திற்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது எனும் ஒரு காரணத்தால் ; வீட் டின் சொந்தக்காரன் உறைவான வீட்டை விடுமாறு அறிக்கை கொடுத்து வீட்டைத் தன்னிடம் கொடுக்குமாறு கேட்கின்றன் எனும் ஒரு காரணத் தால் ; வேறு பிற காரணங்களால் தன் பெயரைப் பதிவேட்டில் பதிவு செய்யக்கூடிய தகுதியுடையார் ஒருவர், கொண்டிருக்கின்ற அல்லது செய்யக் கடம்பூண்ட தொழில், அலுவற்பதம், சேவை இவை யாதொன்றினேடும் சார்ந்த கடமையைச் செய்வதில் வதிவு தடையுற்றது எனும் ஒரு காரணத்தால்.
(5) வாக்காளர் பதிவேட்டில் தம்பெயரைப் பதிவு செய்ய விரும்பு வாரைத் தம் கோரிக்கைகளைப் பதிவலுவலர்க்கு அனுப்புமாறு வேண்டும் அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுகின்ற தேதியே வாக் காளர் பதிவேட்டை ஆக்கும் ஆரம்ப தேதியெனக் கருதப்படும்.
1924 இல் பதிவு செய்யப்பட்ட வாக்காளரின் தொகை 209,997 ; இது முழுக் குடித்தொகையான 50 இலட்சத்தில் நூற்றுக்கு 4 விகிதமாகும். முழுக் குடித்தொகையினின்றும் பெண்களின் தொகையையும் 21 வய துக்குக் கீழ்ப்பட்டோரின் தொகையையும் குறைத்த பின்னரும் மிகக் குறைந்த தொகையினரே வாக்குரிமையைத் தற்போது பயன்படுத்து கின்றனர் என்று தெரிகிறது. மாதம் 50 உரூபாய் வருமானம் வாக்கு ரிமைக்குத் தகுதியாயிருந்தபோது அத்தொகையிலும் மிகவும் குறைந்த வருமானம் கொண்ட, உடைமையற்ற பெருந்தொகையான தொழிலாளி கள் தகுதியற்று நின்றனர். இலங்கை நாட்டின் மாசபை-இதன் தூதுக் குழுவில் சட்டசபையின் பிரதான சிங்கள உறுப்பினர் இருந்தனர்-முழுப் பொறுப்புரிமையுடைய அரசாங்கம் வேண்டுமெனத் தீவிரமான வேண்டு கோள்கள் விடுத்தபோதினும் தற்போதுள்ள வாக்குரிமை மேலும் விரி வாக்கப்படவேண்டும் என விரும்பவில்லை எனக் கூறியது கவனிக்கத்தக் தொன்றகும். மாசபையின் இக்கொள்கை பின்னர் சிறிது மாற்றப் பட்டது எனத் தெரிகிறது. ஆயினும் முழுப் பொறுப்புரிமையுடைய அர சாங்கம் அளிப்பதை எதிர்த்து, வாக்குரிமை கீழ் வகுப்பினர்க்குப் பரப்பப்

115
படுவதை ஆதரித்தது மட்டுமன்றி குறைந்த ஊதியம் பெற்ற தொழி லாளருக்கு சிறப்பான பிரதிநிதித்துவம் வழங்கவும் விரும்பிய வேறு சில சாட்சிகளின் கொள்கைக்கு இவர் கொள்கை முற்றிலும் வேறுபட் டிருந்தது. சட்டசபையின் பிரித்தானிய உறுப்பினர் ஒருவர் ஆண்கட்கு வாக்குரிமை 25 வயதில் அளித்தல் வேண்டும் என்றர். தமிழ் (இந்து) சமூகத்தின் தலைவர்களும், பொதுவில் மாசபைப் பிரதிநிதியின் கருத்தை ஆதரித்து வாக்குரிமை மேலும் விரிவாக்கப்படுவதை விரும்பவில்லை ; அவர்களும் முழுப் பொறுப்புரிமையுடைய அரசாங்கம் அளிக்கப்படுவதை விரும்பினர். இலங்கைத் தொழிலாளர் சங்கம், தன் 40,000 உறுப்பி னருள் மிகச் சிலருக்கே வாக்குரிமை உண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆண்மைக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தியது. பெரும்பகுதி, மக்களை வாக்குரிமையினின்றும் விலத்திய தேர்தல் தொகுதிகளுடன் முழுப் பொறுப்புரிமையுடைய அரசாங்கம், ஒன்றை நடாத்துவதையே இலங்கையின் நாட்டினத் தலைவர்கள் விரும்பினர் என்பது தெள்ளிதாகத் தெரிந்தது. வாக்குரிமை கீழ்ப்பகுதி மக்கட்கு அளிக்கப்பட்டால் கைக்கூலியும் ஊழலும் எற்படும் என்றும் அவர்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனர்.
வாக்குரிமை விரிவின் தேவை
தொழிற்சாலை விதிகளுள் முதற்படியான வற்றை மட்டும் கொண்டு வறியோர்க்கு உதவி, தொழிலாளர்க்கேற்ற வேறு நட்டஈடு, வேர்வை சிந்தி உழைக்கும் தொழில்களில் வேலை நேரம், கூலி முதலியனபற்றிய கட்டுப்பாடு ஆகியவைபற்றி ஒன்றும் கூரு, இலங்கையின் பிற்போக்கான சமூக, கைத் தொழில் சட்ட அமைப்பு காரணமாக வாக்குரிமையை விரிவாக்கல் அர சாங்கப் பொறுப்பைக் கூட்டுவதிலும் முக்கியமானதாகும். ஆதலால், கூடு தலான பொறுப்புடைய அரசாங்கம் அளிக்க எடுத்துரைக்கும்போது வாக் குரிமைபற்றிய கேள்வி முதன்மையான இடம் பெறுகிறது.
கீழ்நாடுகளில் பல நூற்றண்டுகளாகத் தலைவராட்சி முறையும் நில மானிய முறையும் இருந்து வந்ததையும் இந்நாடுகளில் மக்களாட்சி முறையிலமைந்த நிலையங்கள் மிக அண்மையிலேயே தோன்றிய என்ப தையும் நாம் நோக்கும்போது சிங்கள, இந்துத் தலைவர்களின் கொள்கை நமக்கு முற்றிலும் வியப்பு அளிப்பதொன்றன்று. சமூகத்தின் பல்வேறு வகுப்புகளும் நீண்ட காலமாகவே வகுக்கப்பட்டு வாழ்ந்து வந்தன; கீழ் வகுப்பிலிருந்து மேல்வகுப்பிற்குச் செல்லுதல் நடை முறையில் இயலாத தொன்ருகியது ; ஒருவரோ, ஒரு சிலரோ ஏனையோரைத் தம் கீழ் அடக்கி ளுதற்குப் பெற்றிருந்த தனிப்பெரும் உரிமையை யாரும் எதிர்க்க ဓါး႔ø)%). இத்தகைய வகுப்பு வேற்றுமைகள் குறைந்து வருவதற்குரிய அறிகுறிகள் கண்டு மகிழ்ச்சியடைகின்றேம். மக்களாட்சி முறையிலமைந்த நிலையங்களும், தேர்வாலாகும் நிலையங்களும் ஏற்கப்படுகின்றன; விரும்பியும்

Page 64
16
வேண்டப்படுகின்றன; ஆனல், இவற்றுடன் ஒரு பகுதியாகவுள்ள அரசியல் சமத்துவம் இன்னும் முற்றக உணரப்படவில்லை. பிரித்தானியா மற்றும் பிறநாடுகள் ஆகியவற்றின் வரலாற்றை ஆராயுமிடத்து இது வியப்பளிப்பதற் கில்லை ; எனினும், மக்களின் பெரும் பகுதியினர்க்கு பிரதிநிதித்துவம் அளித்தாலன்றி அரசாங்கத்திற்கு மேலும் பொறுப்புரிமை அளிக்க எடுத் துரைத்தல் இயலாததாகும்.
இக்கொள்கையின் சிறப்பு தவிர்க்க முடியாதவொன்று என்ற முறை யிலும் வலுப்பெறுகின்றது. வாக்குரிமை விரிவடைவதால் தற்போது முன் னேற்றமுள்ள எந்த நாட்டிலும் காணப்படும் சமூக கைத்தொழில் சட்டங் கள் இங்கும் விரைவில் உருவாகும் என்ற நம் கருத்தை எலவே குறிப் பிட்டுள்ளோம். அத்துடன் எம்முன் எடுத்துக்கூறப்பட்ட சில கருத்துக்கட்கு முற்றிலும் மாருக, தேர்தல் தொகுதி அகல அகல அதில் சூழ்ச்சியும் ஊழலும் எற்படுதல் மிகக் கடினமாகும் என்று கருதுகிறேம். பிரித் தானிய அரசியல் வரலாற்றிலே வாக்குரிமை விரிவாக்கப்பட்ட ஒவ்வொரு போழ்தும் ஊழல் குறைந்து வந்து இன்று அருகிவிட்டது என்றே சொல்லலாம். மேலும், இவ்வாறு ஊழல் அருகிவிட்டமைக்குப் போதிய நியாயம் உண்டென்றே நாம் கருதுகிறேம் ; வாக்குரிமையை உபயோகிப்ப தன் மூலமே, அதை உபயோகிப்பதற்கு வேண்டிய மக்களின் அரசிய லறிவு விருத்தியாகும்.
இக்காரணங்களுக்காக வாக்குரிமை விரிவாக்கப்பட வேண்டுமென்று
முடிவு செய்துள்ளோம் ; இவ்வாறு முடிவு செய்ததனல் வேறு பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
வயதுத் தகுதி
வாக்குரிமையைப் பெரிதும் விரித்து அத்துடன் தேர்தல் தொகுதிகளில் உள்ளோரின் தொகையையும் நியாயமான அளவில் வைத்திருப்பதற்கு வாக்குரிமைக்குரிய வயதை இருபத்தைந்து ஆகச் செய்வது நலம் எனச் சிலர் கூறினர். இது ஒரு முக்கிய விடயத்தில் எம் கடமையைச் சுலப மாக்கியிருக்கும். ஆயினும், இதை எம்மால் ஏற்க முடியாதிருந்தது. உலகெங்கணும் சட்டத்திலும் சமூகத்திலும் இருபத்தொரு வயதே முதிர்ச்சி அடைந்து முதியவராய் வாழ்க்கைக் கடமைகளை ஒருவர் எற்கும் வயது என்று எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது வாக்குரிமைக் குரிய வயது இருபத்தொன்று ஆதலால், தற்போது வாக்குரிமை பெற் றிருப்பவர் சிலர் இவ்விதியால் அவ்வுரிமையை இழப்பார் இன்றேல் இவ்விதி புது வாக்காளர்க்கு மட்டுமே விதிக்கப்படல் வேண்டும். இதிலு' இதுபோன்ற ஏனைய விடயங்களிலும் முன்பு வழங்கிய உரிமைகளைப் பின்னர் மீட்பது பிரித்தானியாவில் செயல் முறையில் இயலாதிருந்தது ; இலங் கைக்கும் இவ்வுண்மை பொருந்தும்.

17
உடைமை, வருமானத் தகுதி
குறிப்பிட்ட ஒரளவு உடைமையோ குறிப்பிட்ட ஒரளவுக்குக் குறை யாத வருமானத்தையோ பெற்றிருப்பதை வாக்குரிமைக்கு ஒரு தகுதியாக வைத்திருப்பதன் நன்மையை ஆராய்ந்துள்ளோம். பண்டை நாள் அரசியல் யாப்புக்களில் உடைமைத் தகுதி ஒரு நிலையான கூருக இருந்து வந்தது ; ஆயினும், படிப்படியாக இதன் சிறப்புக் குறைந்து வந்துளது. உடைமை வைத்திருப்பது நாட்டிலே ஒரு பற்று வைத்தது போலாகும் ; அதனல், அரசமைந்த அதிகாரத்தில் மதிப்பும், அரசு சீர்குலையாது நிலைபெற்றிருத் தல் வேண்டும் என்ற ஆவலும் எழும் இயல்பு எற்படும் என்று கருதப் பட்டது. ஆயினும், உடைமை பெற்ற ஒருவரிலும் உடைமையற்ற மதிப்புக் குரிய ஒரு குடிமகன் அரசமைந்த அதிகாரத்தின் சீராலோ சீரின்மை யாலோ கூடுதலாகப் பாதிக்கப்படுவான் ; எனவே, தன்னை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கும் சமமாக இருத்தல் வேண்டும் என்று எடுத்துக் கூறும் வாதத்தில் போதிய பொருளுண்டு. எவ்வாரு யினும், இது தொடர்பாக எமது எனைய எடுத்துரைகட்கேற்ப உடைமைத் தகுதி பொருத்தமற்றதாகும் ; அது விலக்கப்படல் வேண்டும் எனக் கருதுகிருேம்.
தற்போதுள்ள ஐம்பது உரூபாய் வருமானத் தகுதி இலங்கையின் பெரும் பகுதியான தொழிலாளர்களை வாக்குரிமையினின்றும் விலக்கு கிறது என்று முன்பே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வருமானத் தகுதியை ஒரு குறிப்பிட்ட குறைந்த தொகைக்குக் குறைப்பதால் என்ன பலன் ஏற்படக்கூடும் என்பதுபற்றி எமக்குத் தெளிவான ஒரு அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை ; தொழிலாளர் பலர் மாதம் ஒன்றிற்கு உரூபாய் 15 தொடக்கம் 20 வரை உழைப்பார்கள் என்று கூறப்பட்டபோதிலும் கூலிகள்பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இவ்விடருடன், குடித் தொகையின் பெரும் பகுதியினரான சிறு கமம் வைத்திருப்போரின் வருமானத்தை அறிவது கடினம் என்றும் எடுத்துக் கூறப்பட்டது; பெரும் பாலும், இவர்களின் வருமானம் மேற்கூறிய தொகைகளிலும் குறை வாயிருத்தல் கூடும். தாழ்த்தப்பட்ட கீழின மக்கள் பெயரளவிலேயே ஒரு வருமானம் பெற்றனர். கிராமத்தாண்கள் எலவே ஆண்மை வாக்கு உரிமையில் பழகியவர் ; ஏனெனில், கிராமச் சங்கங்கட்குரிய தேர்தல்கள் (இவை மிகப் பழைய காலந்தொட்டு யாதோ ஒரு முறையில் இருந்து வந்தன) இம்முறையிலேயே நடத்தப்பட்டன. இதை நோக்கும்போது உடைமைத் தகுதி வைத்திருப்பதன் அவசியம்பற்றி மேலும் ஐயம் எழுகிறது; வாக் காளர் தொகை போதிய அளவு பெருக வேண்டுமாயின் இவ்வுடைமைத் தகுதியை மிகக் குறைந்த தொகையிலேயே வைத்தல் வேண்டும்.

Page 65
118
கல்வித் தகுதி
இவ்வறிக்கையின் இப்பகுதியில் எடுத்து ஆராயப்பட்ட தகுதிகள் யாவற் றுள்ளும் கல்வித் தகுதியை வைத்திருப்பதா என்ற கேள்வியே நம் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. சான்றளிப்பின்போது இத்தகுதிக்குச் சார் பாகவும் இதற்கு எதிராகவும் பல வாதங்கள் மிக்க திறமையுடன் எம்முன் எடுத்துக் கூறப்பட்டன. தேர்தல் தொகுதியிலுள்ளோர் அறிவுடையோ ராய் இருத்தல் வேண்டும் ; யாதாவதொரு மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் இத்தகுதியை மிகக் குறைந்த அளவிலாவது பெற்றிருப் பதற்கு ஒரு சான்றகும் என்று எமக்கு எடுத்துக் காட்டப்பட்டது. வாக் காளன் செய்தித் தாள்களையோ தேர்தல் தொடர்பான இலக்கியங்களையோ படிக்க அறிந்திருத்தல் விரும்பத்தக்கது என்றும் கருதப்பட்டது. தற் போது கிராமச் சங்கத் தேர்தலில் வாக்குரிமைக்குக் கல்வித் தகுதி இல்லை யெனினும் இங்கு வாக்காளன் தன் அறிவிற்குட்பட்ட விடயங்களிலேயே கலந்து கொள்கிறன் ; பிரதிநிதியின் கொள்கை, குணவியல்பு ஆகிய வற்றை நன்கறிந்தவனுயிருக்கிருன். கல்வித் தகுதியிருப்பதால் கல்வி யில் ஆர்வமும் தூண்டப்படும் என்றெரு நியாயமும் கூறப்பட்டது.
இதற்கு மாருக, எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது மட்டும் அரசிய
லறிவிற்கோ மற்றும் அறிவிற்கோ சான்ருகாது ; கல்வியறிவற்ற நாட்டுப் புறத்தான் தன் இயற்கையறிவால், பட்டணத்துள்ள மட்டமானேர், படிப் புப்பெற்ற மட்டமானவறிவுடையார் ஆகியோரிலும் கூர்புத்தியும், நல்லறி வும், மனிதரின் குணவியல்பை அளந்தறியும் ஆற்றலும் உடையவன யிருக்கின்றன் ; செய்தித் தாள்களும் தேர்தல் இலக்கியங்களும் சில சமயம் தப்பான கருத்துக்களைக் கொடுக்கும் ; தேர்தலுக்கு நிற்போர் பற்றியும் அவர் தம் கொள்கைகள் பற்றியும் நாட்டின் முக்கிய விட யங்கள் பற்றியும், சிந்தனையாலும் உரையாடலாலுமே, நேரான கருத்துக் கள் எற்படும் ; இலங்கை போன்ற ஒரு நாட்டிலே கல்வித் தகுதி ஏற் படுத்துவதாயின் அத்தகுதி மிக்க எளிதான தரத்திலே அமைதல் வேண் டும் ; அத்தரம் "கல்விக் குறிக்கோள் என்ற அளவில் அதிக பயனில் லாததாயிருத்தல் வேண்டும்.
இவ்விடயத்தில் இரு பெருங் கருத்துக்கள் எம் தீர்மானத்தைப் பெரு மளவில் ஊக்கியுள்ளன. முதலாவது, அண்மையிலும் தற்போதும் இந் நாட்டில் எற்பட்டுள்ள கல்வி நிலையைப்பற்றியது. பல்லாண்டுகளாகப் படிப் படியான சீர்திருத்தம் இதில் ஏற்பட்டு வந்ததெனினும் தற்போது இலங் கையில் நூற்றுக்கு 45 விகிதப் பிள்ளைகள் கல்வி பெறுவதில்லையென்றும், கொழும்பிலும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதில்லை யென்றும் கல்வி அதிபர் எமக்கு அறிவித்தார். மேலும் ஆரம்பப் பள் ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியருள் பெரும் பகுதியினர் சிறப்புப் பயிற்சி
ஒன்றும் பெறவில்லை. ஆதலால், உண்மையான நேரான கல்வியறிவுச்

3.19
சோதனை பல்லாயிரக் கணக்கானேரை வாக்குரிமையினின்றும் விலக்கி விடும் ; இவர்களுள் மற்றை வகையில் தகுதியுடைய புத்திக்கூர்மையுள்ள குடியானவரும் எனையோரும் அடங்குவர் ; ஏனெனில், இவர்கட்குக் கல்வி யறிவு பெறுதற்கு வாய்ப்பு ஏற்படாதது இவர்களின் பிழையன்று என்க:
தமிழினத்திலுள்ள 70,000 அல்லது 80,000 தாழ்த்தப்பட்ட வகுப்பின ரைப்பற்றி எலவே குறிப்பிட்டுள்ளோம். இம்மக்கள் வாக்குரிமை பெறுவ தால் தம் துன்பங்கட்கு ஈடுபெறுதற்கு வற்ற நிலைமை அடைவது மட்டு மன்றி குடிமக்கள் என்ற வகையில் பெறக்கூடிய உயர் உரிமை ஒன்றை யும் பெற்றுச் சமூகத்தில் புதுமதிப்பும் தன்மானமும் பெற்றவராவர். ஆயின், கல்வியறிவு தொடர்பாகக் கடும் சோதனை நடத்தினுல் இவ் வகுப்பினருள் மிகச் சிலரே வாக்குரிமை பெறுவர் ; ஏனெனில், தற் போதுள்ள முதியவருள் கிறித்துவப் பாடசாலைகள் உதவியளித்த சிலரைத் தவிர ஏனையோர் கல்வியறிவு பெறவில்லை என்க. உண்மையில், அண் மையில் அரசாங்கத்தின் கண்டிப்பினலேயே தற்போதுள்ள தலைமுறை யினர் சிலர் எனைய சாதிப் பிள்ளைகளுடன் அறிவு பெறுதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர் ; ஆயினும் அவர்களின் தாழ்ந்த நிலையை எடுத்துக் காட்டும் வகையிலேயே அவர்கள் இப்பேற்றினைப் பெற்றனர். சிங்களவ ருள்ளும் இத்தகைய குறைபாடுகள் உள்ள பகுதியினர் சிலர் உளர் ; ஆயின், அவர்களின் உண்மையான தொகையும் முழுத் தொகையினருள் அவர்களின் விகிதமும் மிகக் குறைவானவையே. மேலும் இந்தியக் குடி யேற்ற மக்களிடையேயும்-இவர்களின் நிலையைப் பின்னர் ஆராய்வோம்கல்வியறிவுச் சோதனை நடத்துவதால் மிகச் சில வாக்காளரையே பெற லாம் ; இதற்குக் காரணம் இவர்கள் தாழ்ந்த குலத்தினராயும் வாய்ப்பு அற்றவராயுமிருந்து பெரும்பாலும் கல்வியற்றவராய்ப் போனமையா லென்க. -
இவ்வேழை மக்கள் தம்போன்ற ஏனையோர் பெற்றுள்ள, அரசியல்
நிலையைப் பெருது தடுக்கக் கூடியதும், நன்னிலையிலமைந்த குடியாட்சி நிலையங்கள் நிலவும் எந்த நாட்டிற்கும் இழுக்காயமையக்கூடிய சில நிலைகளிலிருந்தும் இன்னும் வேறு பலவற்றிலிருந்தும் தம்மை விடு வித்துக் கொள்ளக் கூடியதுமான வாய்ப்பை அழியச் செய்வதுமான எந்தத் தகுதியையும் நாம் விதிக்க விரும்பவில்லை.
நாம் ஆராய்ந்த இரண்டாவது பெரும் கருத்து தற்போதுள்ள கல்வி யறிவுச் சோதனையே. நாம் ஆராய்ந்து உறுதிப்படுத்தியவரை இச்சோதனை நம்பிக்கைக்கேற்றதன்று. வாக்காளரின் பட்டியலை ஆக்கியளித்து அவை சட்டப்படி அமைந்தனவோ எனப் பார்ப்பதற்குக் கிராமத் தலைவர் பொறுப் பாளர். மாகாண அதிபர் யாவரும் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர் பலரும், எம்முன் சான்று கூறினர். நாம் கேள்வி கேட்ட ஒருவரா * யினும் இத்தகைய ஒரு அறிவுச் சோதனையை நடத்தவும், பிறர் நடத்திய
6-ஜே என். பி 22574 (3/60)

Page 66
20
தாகக் கேள்விப்படவும் இல்லை. ஆதலால், வாக்குரிமை அளிப்பதற்கு அறிவுச் சோதனை ஒன்றே வேண்டும் என நாம் எடுத்துக் கூறுவோமா யின் தற்போதுள்ள நடவடிக்கை முறையில் நாம் அமைவு பெறுதல் அரிது ; ஆதலால், சோதனை உண்மையான தொன்ருக அமையவேண்டும் என்பதை உறுதிப்படுத்த மேலும் பல எடுத்துரைகளைக் கூறவேண்டும். இதனல், எழும் இடர்களுள் குடிமக்கள் தொகையில் பெரும்பான்மையின ரான சிங்களவரின் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்குமிடையே அமைந்த வேறுபாடுமொன்றகும். உண்மையான அறிவுச் சோதனை வைப்பதால் தற்போதுள்ள வாக்காளருள் பெரும் பகுதியினர் வாக்கை இழப்பர் என்பதை நன்கு அறிந்துள்ளோம். இது உண்மையில் தகுதிகளில் ஒரு புது இயல்பை ஏற்படுத்தும் ; இதனல், புதிதான ஆய்வுமுறை, நிருவாக முறை அமைப்புக்களை அரசாங்கத்தில் எற்படுத்த நேரிடும் ; இது குழப் பத்தை உண்டுபண்ணிவிடும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சென்ற ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் மதுவிலக்குத் தேர்தலில் அறிவுத் தகுதி வற்புறுத்தப்படவில்லை ; கல்வி யறிவற்ற வாக்காளரின் வாக்குச் சீட்டு தேர்தல் அலுவல் உத்தியோகத்த ரால் குறியிடப்பட்டன. இவ்வுத்தியோகத்தர் எப்போதும் ஓர் அரசாங்க ஊழியரே. இம்முறையின் திறமைபற்றியோ நேர்மைபற்றியோ யாதொரு முறைப்பாடும் வரவில்லை என்றும் எமக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அனுபவத்தால் நமக்கு ஒரு முக்கியமான முன்மாதிரி தோன்றுகின்றது.
ஆதலால், இக்காரணங்களால், ஆயின் தயக்கத்துடனேயே, அரசாங்க சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குக் கல்வியறிவு ஒரு தகுதியாயிருக்கக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். முன்பு நாம் குறிப் பிட்டவாறு பொறுப்புள்ள அரசாங்கம் வளர்வதற்கு அந்நாட்டுக் கீழ் வகுப்பு மக்கட்கும் அரசாங்கத்தை உருவாக்கும் உரிமை கூடுதலாக அமைய வேண்டும் ; வாக்குரிமை கற்றவர்க்கு மட்டும் அளிக்கப்படுவது நேர்மை யாகாது, புத்தியுமாகாது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பிள்ளை கள் அனைவர்க்கும் ஆரம்ப, நடுத்தரக் கல்வி பயில்வதற்கு உதவியளிப்பது பற்றிச் சட்டசபை உறுப்பினர் விரைவில் கருத்துடன் ஆவன செய்தல் வேண்டும். ஆசிரியர் தேவை ; பயிற்சிக் கல்லூரிகளும் உடனே வேண்டப் படுகின்றன என நாம் அறிந்தோம். இலங்கையில் தற்போது ஆசிரியர்க்கு வழங்கப்படும் சம்பளமும் அவர்களின் வாழ்க்கை நிலையும் உயர்த்தப்படின் தகுதியுடைய ஆசிரியர் கிடைப்பது எளிதாகும். கல்வி பயில்வதில் பிள்ளை கட்குச் சமமான வாய்ப்புக் கிடைப்பதில் சமூகம் சாதி வேற்றுமைகள் தலையிட விடலாகாது. இக்குறிக்கோளை மிக்க வலிமையுடன் உடனடியாகக் கையாளின் அறிவின்மை என்ற கேள்வி சில ஆண்டுகளில் வெறும் எட்டுப் பொருளாகிவிடும்.

121
ஆண்கள் வாக்குரிமை
வாக்காளருக்கு இருக்கவேண்டிய வாக்குரிமையில் எமக்கு எடுத்துக் கூறப் பட்ட வயதை மாற்றல், உடைமை வருமானம், கல்வி ஆகிய தகுதிகளை நீடித்தல் என்பனபோன்ற கருத்துக்களுள் ஒன்றேனும் கடும் எதிர்ப்புக்கு விலக்காக அமையவில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளோம். நாம் எடுத் துக் கூறியுள்ள இடர்கள் காரணமாகவும், தேர்தல் தொகுதிகள் பெருமளவில் அகன்றிருத்தல் நலம் என்ற எமது நம்பிக்கை காரணமாகவும் ஆண்கள் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என எடுத்துரைக்கத் தீர்மானித் துள்ளோம். இந்த முறையில் எமக்குக் கிடைத்துள்ள புள்ளிகளின்படி தேர்தல் தொகுதியின் வாக்காளர் தொகை 1,200,000 ஆகக் கூட்டப்படும். ஆயின், இரு காப்புக்களை எற்படுத்த விரும்புகிறேம். முதலாவதாக, இந் நாட்டில் ஐந்து வருடம் வாழ்ந்த தகுதி (இவ்வைந்து ஆண்டுகள் எல்லா மாக எட்டுத் திங்கட்கு உட்பட நாட்டினின்றும் விலகியிருத்தல் அனுமதிக்கப் படலாம்) இருத்தல் வேண்டும். நாட்டில் நிலையான கவற்சி கொண்” டோர்க்கோ, நிலையாகக் குடியிருப்போர்க்கோ மட்டும் வாக்குரிமை அளிப் பதே இதன் நோக்கம். இந்த விதி இந்தியக் குடியேற்ற மக்கள் தொடர் பாக, சிறப்பான முக்கியத்துவம் பெறுவதை நாம் பின்னர்க் காண்போம். இரண்டாவதாக, வாக்காளர் பதிவு கட்டாயமாகவும் தானகவும் நடை பெறும் ஒன்ருயிருத்தலாகாது ; விண்ணப்பஞ் செய்வோர் மட்டுமே பதிவு செய்யப்படுவர் ; விண்ணப்பஞ் செய்யும் முறை திட்டவட்டமாகக் குறிக்கப் பட்டுப் பலரறிய வெளியிடப்படல் வேண்டும். இந்த விதியால் தேர்தல் தொகுதியின் வாக்குத்தொகை கூடுதலான தொகையான 1,200,000 இற்குத் திடீரென எருது படிப்படியாக எறும் ; வாக்கின் பெருமையை ஒருவன் உணருமட்டும் அவனுக்கு வாக்குரிமை அளிக்கப்படாது என்பது இதனல் உறுதியாகும். ஏனைய விடயங்களில் நாம் செய்துள்ள பெரும் மாற்றங்களினல் இவ்விரு கருத்துக்களும் முக்கியம் என நாம் கருது கிறேம் ; ஆயின், இம்மாற்றங்கள் மக்கட்குப் பழக்கப்பட்ட பின்னர் வாக் காளர் பதிவு மிகப் பரந்த முறையில் தானக நிகழ்வதொன்றகலாம்.
பெண்கள் வாக்குரிமை
பெண்கள் வாக்குரிமைபற்றிய கேள்வியை நாம் கருத்துடன் ஆராய்ந் துள்ளோம். அவர்கள் சார்பில் எடுத்துக் கூறப்படும் வழக்கமான வாதங் கள், ஆண் பெண் சமத்துவம் ஆகியவற்றைத் தவிர, இலங்கையில் குழந்தை இறப்பு உயிர் விகிதம், வீடமைப்பில் சீர்திருத்தத்தேவை, குழந்தை நலம், மருத்துவம், கர்ப்பிணிகட்கான உதவி ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படவேண்டிய தேவை ஆகியன எம்மைக் கவர்ந்தன. இச் சிக்கல்கள் யாவற்றையும் தீர்ப்பதில் பெண்களின் ஆர்வமும் உதவியும் மிகுந்த பயனளிக்கும். மேலும் கீழ்நாடுகளில், அண்மையில் சில ஆண்டு

Page 67
122
கள் வரை பெண்களின் நிலை அவர்கள் அரசியல் உரிமைகளைப் பய்ன். படுத்தக்கூடியதாக இருக்கவில்லையெனினும் இந்நிலை இப்போது விரை வாக மாறிவருகிறது; இலங்கைப் பெண்மணிகளுள் பலவகையினரும் சேர்ந்த பெரும் ՓԱ ஒன்று தங்கட்கு வாக்குரிமை வேண்டும் என எம்மை வேண்டியது. வாக்கைப் பயன்படுத்துவதில் இந்தியப் பெண்களுக்குள்ள திறமை இலங்கைப் பெண்களுக்கும் உண்டு என்ற வாதத்தை மறுப்பது கடினமாயிற்று. இந்தியப் பெண்களுள் நியாயமான தொகையினர் எலவே வாக்குரிமை பெற்றுள்ளனர்.
ஆண்கள் வாக்குரிமையை விரிவாக்கிய முறைகளில் பெண்கள் வாக்குரி மையையும் விரிவாக்குவதுபற்றி ஆயுங்கால் ஓர் பெரும் இடர் எம்மை எதிர்கொள்கிறது. நாம் முன்பு கூறியவாறு ஆண்கள் வாக்குரிமைபற்றி நாம் கூறிய எடுத்துரைகளால் தேர்தல் தொகுதியிலுள்ள தொகை 200,000 இலிருந்து 1,200,000 ஆகக் கூடும். இதே வகையில் பெண் களுக்கும் வாக்குரிமை அளிப்பின் தேர்தல் தொகுதியிலுள்ள மொத்தத் தொகை 2,175,000 ஆகும். இதனல் எற்படும் மாற்றம் மிகப் பெரிய தொன்றகும். வேறு வகையில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நாம் எலவே செய்துள்ள சீர்திருத்தங்கள் பயனளிப்பதைத் தடை செய்ய நாம் விரும்பவில்லை. இக்காரணமாக பெண்கள் வாக்குரிமைபற்றிய விதிகளை நாம் சிறிது மாற்றியைமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்முன் வந்த பெண்கள் தூதுக் குழுவினர், குறிப்பிட்ட ஒரு தரக் கல்வித் தகுதி உட்பட வாக்குரிமைக்கு உயர் தகுதிகள் ஏற்படுத்துவதைத் தாம் எற்றுக் கொள்வதாகக் கூறினர். ஆண்கள் தொடர்பாக என்ன விதிகள் நிறுவப்படக்கூடும் என்பது அவர்கள் அறியாததொன்றேயாகும். தேர்தல் தொகுதியின் அளவு கட்டுப்படுத்தப்படல் அவசியமாதலால் அதைப் பெண் கள் தொடர்பாக நடத்துதலே நேர்மையாகும் ; இக்கட்டுப்பாடு இருப்பினும் பெண்கள் குறிப்பிடத்தக்க வகையில் அரசியல் தொடர்பாக முன்னேற்றம் பெறுவர். தொகையைக் குறைப்பதற்குக் கல்வித் தகுதியே எளிதான வழியாகும் ; ஏனெனில், ஆண்களிலும் பார்க்கப் பெண்களிடையே கல்வி யறிவு குறைவாகும், ஆயின் முன்பு இது தொடர்பாக நாம் எடுத்துக் கூறியுள்ள வாதங்கள் இத்தகைய ஒரு கல்வித் தகுதியை எற்படுவதைத் தடுக்கின்றன. வாக்காளர்க்கு இருக்கவேண்டிய குறைந்த வயதைக் கூட்டு வது ஒர் இலகுவான வழி ; இது அதிக எதிர்ப்புக்கு இலக்காகாது ; ஆதலால், ஆண்களுக்கு உள்ள முறையிலேயே பெண்களுக்கும் வாக் குரிமை அளிக்கப்படும் ; ஆயின், அவர்கட்கு இருக்க வேண்டிய குறைந்த வயது 30 ஆகும் என்று நாம் தீர்மானித்துள்ளோம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசாங்க சபை அங்கத்தவராதற்கு, தேர்தலுக்கு நிற்பதற்கு உரிமை பெறல் வேண்டும். இந்நடவடிக்கையால் ஆண் பெண் சம உரிமைக் கொள்கை நிலைநிறுத்தப்படும் ; இதனுல் பிரித்தானியாவில் ,

23
நடைபெற்றதுபோல் முதலில் ஆண்களிலும் பெண்களுக்குக் கூடிய வயதுக் கட்டுப்பாடு எற்படுத்திப் பின்னர் பெண்கள் வாக்குரிமை படிப் படியாக விரிந்து வருவதற்கு அடிகோலும். மேலும் பெண்கள் தாமே முயன்று தமக்கு முழுவாக்குரிமை கிட்ைப்பதற்குச் சார்பாக இலங்கைப் பொதுமக்களின் கருத்தைக் கவர உழைக்கும் வகையில் அவரைத் தூண்டு முகமாக அமைந்த இந்நடவடிக்கையால் பல நன்மைகளுண்டு.
இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் தொகை எறத்தாழ 650,000 என்று கூறலாம். ஆதலால், நம் எடுத்துரைகளை எற்பதால் தேர்தல் தொகுதியின் மிகக் கூடிய தொகை 1,850,000 ஆகவே இருக்கும். முதல் நோக்கில் இத்தொகை சிலர்க்குக் கவலையைக் கொடுக்கும் ; ஆயின் முன்பு கூறப்பட்ட குடியிருக்கும் தகுதி, பதிவுபற்றிய விதிகள் ஆகியன ஆண்களுக்கு அமைவது போலவே பெண்களுக்கும் அமையுமாதலால் தேர்தல் தொகுதியில் உண்மையில் வாக்களிப்போரின் தொகை கட்டுப் படுத்தப்படும். உண்மையில் தேர்தல் தொகுதியின் மிகக்கூடிய எண் ணிக்கையை அடைவதற்குச் சில ஆண்டுகள் செல்லும். அத்தகைய காலம் வரும்போது வளர்ந்தோர் யாவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதற்கும், யாவரும் கட்டாயமாக இயல்பாக பதிவு செய்யப்படுவதற்கும் யாதொரு எதிர்ப்பும் இருக்கத் தேவையில்லை என்றே கருதுகிருேம். அரசாங்கத்தில் கூடுதலான பொறுப்பை அளிக்குமாறு நாம் செய்துள்ள எடுத்துரைகளால் வாக்குரிமை விரிவாவது இன்றியமையாததாகின்றது என்பதை இங்கு நாம் மீண்டும் எடுத்துக் கூறுதல் வேண்டும். இத்தகைய பொறுப்புடைய ஒர் அரசாங்கம் எம்மக்கட்குப் பணிபுரிகிறதோ அம்மக்களுடன் நேரில் தொடர்பு வைத்து அவர்கட்குப் பொறுப்பாயிருக்க வேண்டும். வாக்குரிமை யைப் பயன்படுத்துவதிலும் மற்றும் நாம் எடுத்துரைக்கும் பெரும் மாற்றங் களை எற்பதிலும் இலங்கை மக்களில் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் அவர்கள் நடப்பார்கள் என்று நாம் நம்புகிறேம்.
சுருக்கம் -
எனவே, இந்த முன்னிடுகளின்படி வாக்குரிமை அளிப்பதைக் கட்டுப் படுத்தும் நிபந்தனைகள் (தற்போதுள்ள கழகப்பணிக்கையில் அடங்கிய வையும் இவற்றுள் அடங்கும் ; இவைபற்றி நாம் ஒன்றும் கூறவில்லை) பின்வருவோரை நீக்கிவிடும் :-
(அ) பிரித்தானியக் குடிமக்கள் அல்லாதார். (ஆ) ஆண்களாயின் 21 வயதுக்குக் கீழ்ப்பட்டோர், பெண்களாயின் 30
வயதுக்குக் கீழ்ப்பட்டோர். (இ) 5 வருடங்கட்கு இந்நாட்டில் குடியிருக்காதது மட்டுமன்றி பதிவேடு ஆக் கத்தொடங்கும் காலத்திற்கு உடன் முன்னர் உள்ள 18 மாதங்களில்,

Page 68
124
ஆறு மாத காலம் முழுவதும் அப்பதிவுப் புத்தகம் தொடர்பான தேர்தல் தொகுதியில் வசிக்காதோரும். (ஈ) மாட்சிமை தங்கிய மன்னரின் அரசில் எப்பகுதியிலாயினும் மரண தண்டனையோ, சேவைத் தண்டனையோ விதிக்கப்பட்டவர் ; இன் றேல் கடும் வேலைத் தண்டனை பெற்றவர் ; இன்றேல் 12 மாதத்திற்கு மேற்பட்ட கடுங்காலம் தண்டனை பெற்றவர் ; இத் தகையோர் தாம் பெற்ற தண்டனையை அனுபவித்தால் அல்லது அத்தண்டனைக்கு நிகரென உரிய அதிகாரியால் கருதப்பட்ட வேறு தண்டனையை அனுபவித்தால் அல்லது மாட்சிமை தங்கிய மன்ன ரால் மன்னிக்கப்பட்டால் சேர்க்கப்படலாம். (உ) அதிகாரம் பெற்ற ஒரு நீதிமன்றத்தால் மூளைக் கோளாறுடையவர்
எனக் கருதப்பட்டவர். (இ) என்னும் பகுதியில் குறிக்கப்பட்ட தேர்தல் தொகுதியில் வசிப்பது எனக் குறிக்கப்பட்ட தகுதி IX ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்ட வற்றுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. அரசாங்க சபை உறுப்பினராதற்குரிய தகுதிகள் வாக்காளர்க்குரிய தகுதி களேயாம் ; ஆயினும், ஆங்கில அறிவு அற்றவர் தகுதி பெற்றவராகார். நீதியற்ற வீணுன நாடிகளைத் தடுப்பதன் பொருட்டு இங்கிலாந்தில் உள்ள முறைப்படி தேர்தற்கு நிற்போர் ஒரு கட்டுப்பணம் கட்டவேண்டுமென்றும் வாக்குக்களில் குறிக்கப்பட்ட ஒரு விகித வாக்குக்களைப் பெருவிட்டால் கட்டுப் பணத்தை அவர் இழக்க நேரிடும் என்றும் விதிப்பது விரும்பத்தக்க தாகும். மாநகர சங்கம், நகர மாவட்டச் சபை, உள்ளூர்ச் சபைகள் ஆகியவை இருக்கும் வரை அவற்றில் உறுப்பினராதற்கும் வாக்களிக்கும் உரிமை பெறுதற்கும் இவ்விதிகளே இருத்தல் வேண்டும். உறுப்பினர் மட்டும் தாம் எப்பகுதிக்குப் பிரதிநிதியாக நிற்கின்றனரோ அப்பகுதியில் வசிப்பவராதல் வேண்டும். இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்களைப்போல், வாக்குரிமை பெறுதற்கும் இச்சபைகட்கு உறுப்பினராய் வருவதற்கும் தகுதியுடையவராவர். கிராமச் சங்கங்களின் யாப்பு, தேர்தல் ஆகியவை தொடர்பாக சிறப்பான விதி முறைகள் இருப்பதால் இத்தகைய சங்கங்களில் உறுப்பினராதற்கோ வாக்களிப்பதற்கோ உள்ள தகுதிகளில் நாம் எவ்வித மாற்றங்களையும் செய்யுமாறு எடுத்துரைக்கவில்லை. பட்டினச் சங்கங்கள் அமைக்கப்படுகின்றபோது அவற்றிற்கும் இத்தகுதிகளே அமைக் கப்படும் என நாம் எதிர்பார்க்கிறேம்.
11. சமுதாயப் பிரதிநிதித்துவம் பேரரசின் வெளிநாட்டு அரசியல் யாப்பு, ஆக்கம், மாற்றம் ஆகியவற்றில் மிகச் சிக்கலானதொரு கேள்வி சமுதாயப் பிரதிநிதித்துவமே. இங்கு குடிமக்கள் அடிப்படையான சமுதாய சமய வேற்றுமைகள் பொருந்திய பல்வேறு பகுதிகளைக் கொண்டவர். ஒரே இன அல்லது சமயக் குழுவிலும்

125
சாதி வேற்றுமையால் தெளிவான பாகுபாடுகள் இருப்பது கூடும். இப் பல்வேறு பகுதியினரும் சாதியினரும் தம்முள் பகை கொள்ளாவிடினும் ஏறத்தாழத் தனித்தனி பகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் ; இதனல் மக்கள் ஒருமைத் தன்மையும் கூட்டுணர்ச்சியும் அற்றிருக்கின்றனராதலின் எத்தகைய குறிக்கோளையும் கொண்ட நாட்டின் ஒற்றுமையையும் எற் படுத்துதல் கடினமாகும். பல்வேறு இனங்களும் சமயங்களும் உள்ள நாடுகளில் மக்களாட்சி நிலையங்களை வளர்த்தற்பொருட்டு தேர்தலின்போது பல பகுதியினரும் மோதுதலைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையினல் சமுதாயப் பிரதிநிதித்துவ முற்ை எற்படுத்தப்பட்டது. அது, சமூகத்திலுள்ள பல்வேறு மக்களினத்தாருக்கும் நற் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய சட்டசபையை அமைதியுடன் அளித்து மக்களிடை ஒற்றுமையை வளர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயின், தீவினையாக, இப்பரிசோதனையால் எதிர் பார்த்த பலன் கிட்டவில்லை. பலன் கிடைத்ததெனில் அது எதிர்விதமான பலன் என்றே சொல்லல் வேண்டும். பல்வேறு சமுதாயங்களின் பிரதி நிதிகளும் ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை ; சமு தாயப் பிரதிநிதித்துவம் ஒற்றுமைத் தொடர்பை ஏற்படுத்த உதவி புரிய வில்லை. மற்றைச் சமுதாயத்தவர்க்கு மேலதிகமாகக் கிடைக்கக்கூடிய அர சாங்க அதிகாரத்தை ஈற்றில் அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராகவே உபயோகிப்பர் எனச் சிறுபான்மைச் சமுதாயத்தவர் அஞ்சுகின்றனர்; ஆதலால், வேற்றுமை காட்டும் அறிகுறிகளை மிக்க கூர்மையாக நோக்கிய வண்ணம் அவர் இருக்கின்றனர். நாட்டின் குடிமக்களிடையுள்ள பிரிவுகள், அவர்களின் மனநோக்கு ஆகியவை தவிரக் குடிமக்களுள் ஐரோப்பியப் பகுதியினரின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வியும் எழுகிறது; இவர் களின் தொகை மிகக் குறைவு; இவர்கள் பல இடங்களிலும் சிதறி யிருக்கின்றனர் ; நாட்டின் பொது வாழ்க்கையினின்றும் இவர்கள் பெரிதும் வேறுபட்டாராதலின் நிலப்பிரிவு வகையில் அமைந்த எந்தத் தேர்தல் முறை மூலமும் இவர்கட்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பது அரிது.
. இலங்கை இத்தகைய இடர்கள் கொண்ட ஒருதாரண நாடாக விளங்கு கிறது. நாட்டில் உள்ள மக்கள் யாவரும் “இலங்கையர் ” என்ற பொதுச் சொல்லால் ஒரு தொகுதியாகக் குறிக்கப்படுகின்றனர். இவர்களுள் கீழ் நாட்டுக் கரைப்பகுதிச் சிங்களவர், கண்டிச் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், மலாய்க்காரர், பேகர் ஆகியோர் அடங்கியுள்ளனர். பொதுவாகக் கூறுமிடத்துச் சிங்களவர் பெளத்தராவர் (2,800,000), தமிழர் இந்துக்களாவர் (985,000), சோன கரும் மலாய்க்காரரும் முகம்மதியராவர் (310,000). இவர்களுடன் முக்கிய மான கிறித்துவப் பகுதியினரும் உளர். பேகர் ஐரோப்பியர் உட்பட இவர்களின் தொகை 445,000. இலங்கையில் பெளத்த சமயம் இந்து
1921 ஆம் ஆண்டுக் குடிமதிப்பு (பிற்சேர்க்கை பார்க்க).

Page 69
26
சமயத்தால் பெரிதும் ஊக்கப்பட்டது. இத்தகைய ஊக்கின் ஒரு விளைவைச் சாதி முறையில் காணலாம். புத்தபெருமானின் போதனை சாதி வேற்று மையை விலக்குகிறதெனினும் தமிழரிடை இருப்பதுபோல் சிங்களரிடையும் சாதி வேற்றுமை உளது; இந்தியாவில் இருப்பதுபோன்ற “தீண்டாதார் ’ வகுப்பினர் இலங்கையில் இல்லையெனினும் நீண்ட காலமாகக் கல்வி முன்னேற்றம் ஆகியன பெறுதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமையால் ஆர்வ மும் தன்மதிப்பும் முற்றிலும் இழந்துவிட்ட சாதியினர் பலர் உளர். இச்சாதிக் கட்டுப்பாட்டின் உறுதி பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஒரள விற்குத் தளர்த்தப்பட்டது என்பதை யாரும் மறுத்திலர் எனினும் பிரதான மான விடங்களில் இது முன்பு இருந்ததுபோலவே இன்றும் சற்றும் தளர்த் தப்படாதுளது ; இலங்கையர் சுதந்திரமுடைய ஒற்றுமையான மக்களாட்சி யுடைய நாட்டினராய் முன்னேறுவதற்கு இது ஒரு பெரும் முட்டுக்கட்டை Այո ԱվԹո5].
சிங்களவர் : கரைப்பகுதியினரும், கண்டியரும்
இலங்கையின் குடிமக்களுள் உள்ள பல பகுதியினரிலும் சிங்களவரே மிகப் பெரிய தொகையிலுளர்; இவர்களின் தொகை தற்போது 3,300,000 ஆகும். இவர்கள் ஓர் இனத்தவர் எனினும் இவர்கள் கரைப் பகுதியினர், கண்டி மக்கள் என இருவகையாகப் பிரிந்துள்ளனர். பின்னவர் தொகை 1,200,000 ; இவர் மத்திய, வடமத்திய, ஊவா, சபரகமுவ ஆகிய மாகா "ணங்களிலும் வடமேற்கு மாகாணத்தின் ஒரு பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் தம் பண்டை அரசைப் பெருமையுடன் நினைவு கொண்டுள்ளனர்; மலைநாட்டில் இவர்கள் தம் மூதாதையரின் பழக்க வழக்கங்கள் பழமை கள் ஆகியவற்றை இன்றும் வழுவாது கடைப்பிடித்து வருகின்றனர். மேற்கு, தெற்கு மாகாணங்களிலும் வடமேற்கு மாகாணத்தின் எஞ்சிய பகுதியிலும் உள்ள குடிமக்களுள் கரைநாட்டுச் சிங்களவரே பெரும் பகுதியினர். இம்மாகாணங்கள் வெளியுலகின் தொடர்பை எளிதில் பெற்றமையாலும் செழிப்பான நிலம் உடைமையாலும் இங்குள்ளோர் செல்வமும் முன்னேற்றமும் பெற்றனர்; இம்மக்கள் கண்டியரிலும் பரந்த நோக்குடையராயினர்.
இவ்வாறு இவர்கள் குடித்தொகையில் பெரும்பான்மையராயிருப்பதால் நிலப்பிரிவு வகையில் அமைந்த எந்தத் தேர்தலிலும் இவர்கட்கு உறுதி யான ஒரு தொகை இடங்கள் கிடைக்கும் ; ஆதலால் சமுதாய பிரதி நிதித்துவத்தை இவர்கள் வேண்டி நிற்கவில்லை. ஆயினும், கண்டித் தலைவர்கள் தம் மாகாணங்களைத் தாமே ஆளவேண்டும் என உறுதியான கோரிக்கை விடுத்துள்ளனர் ; 1815 ஆம் ஆண்டுக் கண்டி உடன்படிக்கை யின்படி இதற்குத் தாம் உரிமையுடையர் என்று இவர்கள் கூறியுள்ளனர். இந்தக் கோரிக்கைபற்றி அடுத்து வரும் அத்தியாயத்தில் எடுத்து விபரிக்கப் பட்டுள்ளது. எனைய சமுதாயத்தவர் சமுதாயப் பிரதிநிதித்துவம் வேண்டு

127
வதுபற்றிச் சிங்களவர் பொதுவாக எதிர்ப்புத்தான் கொண்டுள்ளனர். ஆயின், நாட்டில் கூடிய அளவு பொறுப்பான அரசாங்கம் வேண்டுவதில் தம்முடன் எனையோர் ஒத்துழைப்பதற்கும் அவர்களின் நல்லெண்ணத் தைப் பெறுதற்குமாக, சமுதாயப் பிரதிநிதித்துவக் கொள்கையைத் தற் போதைக்கு ஒரளவு செயல்முறையில் எற்பதற்கு ஒப்புக்கொள்ள உடன் பாடுடையராய் உளர். தற்போது இவர்கள் சட்டசபையில் நிலப்பகுதி முறை யில் 16 இடங்களைப் பெற்றுள்ளனர்.
இலங்கைத் தமிழர்
இலங்கைத் தமிழர் தொகை 540,000 ; இவர் பிரதானமாக வடக்கு, இழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்களின் முன்னேர்கள் தொடக்கத்தில் தென்னிந்தியாவினின்றும் குடியேறினேராவர் ; ஆயின் இவர்கள் தற்போது இலங்கை மக்களுள் ஒரு பகுதியினராகவே கருதப் படுகின்றனர். பலவித காரணங்களால், இவற்றுள் பல மிகவும் போற்றத் தக்கன, இவர்கள் தம் எண்ணிக்கைக்குச் சற்றுக் கூடுதலான விகிதத்தில் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளனர். முன்னர் இவர்கள் தொடுவாய்க் குடியிருப்புக்களிலும் மலாயா நாடுகளிலும் பிழைப்புத் தேடிச் சென்றனர்; ஆயின், மலாயாவில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டதும் அந்நாட்டில் இவர்களின் பணியின் தேவை குறைந்தது. இப்போது இவர்கள் படிப் படியாகச் சிங்கள மாவட்டங்களுள் பரவி வருகின்றனர். இவர்கள், பல் வேறு தொழில்களிலும் எழுதுவினையிலும் அமர்ந்து இலங்கை எங்கணும் காணப்படுகின்றனர். சென்ற முறை யாப்பு மாற்றியமைக்கப்படுதற்கு முன்பு இலங்கை நாட்டின் மாசபையின் சிங்கள உறுப்பினர் சிலர், தமிழ்ப் பிரதிநிதிகள் சிலருடன் கலந்துபேசி, சட்டசபையில் ஒவ்வொரு சமுதாயத் திற்கும் எத்தனை இடங்கள் அளிக்கப்படவேண்டும் என்பதுபற்றித் தம்முள் ஒரு முடிவுக்கு வந்தனர். இவ்விகிதம் ஒரு தமிழர்க்கு இரு சிங்களவர் எனவிருந்தது; சட்டசபையின் ஒரு குழு, இடங்களைப் பகிர்வதுபற்றி அளித்த ஒரு முன்னிட்டில் இது அடங்கியிருந்தது. தற்போதுள்ள அரசியல் யாப்பை வகுத்தோரால் எற்றுக் கொள்ளப்பட்ட இக்குழுவின் அறிக்கை 8 தமிழ்ப் பிரதிநிதிகட்கும் 16 சிங்களப் பிரதிநிதிகட்கும் சபையில் இடமளித்தது. சென்ற முறை யாப்பு மாற்றியமைக்கப்பட்டபோது தமிழர் மேலும் கொழும் பில் ஓர் இடம் தங்கட்கு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இவ்விடம் மேல் மாகாணத் தமிழ்’ இடம் என அழைக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு இடம் விட்டுக் கொடுக்கப்பட்டது; ஆயின், இதுபற்றிய நிலை பின்னர் யாப்பு மாற்றியமைக்கப்படும்போது மீண்டும் ஆராயப்படும் என்ற தெளிவான கட்டுப்பாட்டுடனேயே இது அளிக்கப்பட்டது. பொதுவாகச் சட்டசபையில் விகிதத் திற்கேற்ப இடம் அளிக்கும் விடயத்தில் சிங்களவர் தமிழர்க்குப் பெரு மளவில் விட்டுக் கொடுக்க ஆயத்தமாயிருந்தனர் ; உண்மையில் கொடுத் தனர் எனினும் அவர்களின் நாட்டின் மாசபை (இதில் சிங்களவர்

Page 70
128
பெரும்பான்மையாயிருந்தனர்) மேற்கு மாகாணத்தில் தமிழர்க்கு இடம் அளிக்கப்படுவதை எதிர்த்தது. இவ்விடயத்தில் ஒற்றுமை எற்படாததன் காரணமாக மாசபையில் பிளவு ஏற்பட்டதும் எறத்தாழத் தமிழர் யாவரும் இதினின்றும் விலகினர். ஆகையால் சட்ட சபையில் இடங்களின் விகிதம் பற்றியிருந்த முன்னைய உடன்படிக்கை தற்போது அதன் முக்கியத்து வத்தை இழந்துவிட்டது. எவ்வாருயினும், பிரதிநிதித்துவம்பற்றிய முழுக் கேள்வியையும் மீண்டும் புதிதாக ஆராயுமிடத்து, இனங்களிடையோ குழுக் களிடையோ (அவை எவ்வளவுதான் நல்லவையெனினும்) உள்ள தனிப் பட்ட எற்பாடுகள், இலங்கை நாட்டின் மக்கள் முழுப்பேருடைய நன்மை யையும் பேணும் கருத்துக்களினும் சிறந்த இடத்தைப் பெறலாகாது. மேற்கு மாகாண இருக்கைபற்றியும் தமிழர் அதைத் தொடர்ந்து வைத் திருப்பதுபற்றியும் உள்ள கேள்வியை இவ்வாணைக்குழு நன்கு ஆராய்ந் துள்ளது ; ஆயின், இவ்விருக்கை தொடர்ந்திருப்பதற்குத் தக்க காரணம் ஏதும் காணமுடியாதிருக்கிறது. புவியியல் முறையில் தமிழ் மக்கள் பரவியுள்ள வகையை நோக்குமிடத்து, அவர்கட்குப் போதியவளவு இருக் கைகள் கிடைக்கும் என்பதும் உறுதியாகிறது ; ஆதலால், சிங்களவர்க்கும் தமிழர்க்கும் எவ்விகித முறையில் இருக்கைகள் அமைய வேண்டுமென் பதுபற்றி மனம்போன போக்கில் ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை இல்லை, என இவ்வாணைக்குழு கருதுகிறது.
முகம்மதியர்
இசிலாமிய இனத்தவர் 312,000 தொகையினராவர் ; இவர்களுள் 262,000 தொகையினர் இலங்கையில் குடியேறிய அரபு வணிகரின் வழி வந்தோர் ; 35,000 தொகையினர் இந்தியாவில் குடியேறிய அரபு வணி கரின் வழிவந்தோர் ; 15,000 தொகையினர் இடச்சுக்காரரால் 'யாவா நாட்டினின்றும் கொணரப்பட்ட படையினரின் வழிவந்தோர். இவ்வினத் தவரின் தொகை குறைவானதெனினும் இவர்களின் வணிக வியாபார முயற்சிகளால் இவர்கள் குடி மக்களுள் ஒரு முக்கிய பகுதியினராகின் றனர். கொழும்பிலே பெருந்தொகையினரான இசிலாமியர் உளர் ; மற்றும் பலர் நாடெங்கணும் கடை வைத்து வியாபாரம் செய்வோராய்ப் பரந்து காணப்படுவர். கீழ்மாகாணத்தில் சிலர் கமத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சட்ட சபையிலே மூன்று முசிலிம் பிரநிதிகள் உளர்.
சமயம் தொடர்பாகச் சமுதாயப் பிரதிநிதித்துவம் விரும்பத்தக்க தொன்று எனப் பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குடியாட்சி முறை நிலை யங்களை நிலைநாட்டுவதில் முயன்று வரும் ஒரு நாட்டில் சமயத்தில் சகிப்புத்தன்மை மிகவும் அவசியமாகின்றது ; குறிப்பிட்ட ஒரு சமயத்தைப் பாதுகாப்பதற்குச் சட்டத்தில் அச்சமயத்திற்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டிய ஒரு தேவையில்லை. சமயத்தை அடிப்படையாகக் கொண்ட

129
இசிலாமியரின் சில சட்டங்களும் வழக்கங்களும் ஏனைய பெரும்பான்மை இனத்தவரின் வழக்கங்களினின்றும் மிகவும் வேறுபட்டவை என்ற முக்கிய காரணத்துடனேயே இக்கோரிக்கை வேண்டப்படுகிறது; இசிலாமியப் பிரதிநிதி ஒருவர் இல்லாவிடத்து மேற்கூறிய வழக்கங்குட்கு மாறன சட்டங்கள் வகுக்கப்படுதல் கூடும். எனினும், இவ்வாறு நடைபெற்ருல் அது அறியாமையோ விளக்கமின்மையோ காரணமாய் இருக்குமேயன்றி வேண்டுமென்று செய்யப்பட்டதாயிருக்காது என்று எம்முன் பேசிய இசிலாமியப் பிரதிநிதிகளே ஒப்புக்கொண்டனர். இவ்வறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட எடுத்துரைகள் செயல் முறையில் வரும்போது சட்ட சபையில் இசிலாமிய மத்த்தவர் புகாதிருக்க மாட்டார் என்பதே இவ்வாணைக் குழுவினரின் நம்பிக்கை , ஆயின் இவர்கள் சமயப் பிரதிநிதிகள் என்ற முறையிலன்றி நிலப்பிரிவினல் வந்த பிரதிநிதிகள் என்ற முறை "யிலேயே உறுப்பினராவர் என நம்புகிறேம். இவ்வாறு நடைபெறவிடி னும், எவ்வழக்கங்கள் பாதிக்கப்படுதல் கூடும் என்று கருதுகின்றனரோ அவ்வழக்கங்களைப் பாதுகாத்தற்பொருட்டு இசிலாமியர் தாமாகவே தெரிந் தெடுத்த ஒரு பிரதிநிதிக் குழு மூலம் சட்ட சபைக்குத் தம் முறையீடு களைக் கூறலாம் ; இதனல், எந்தக் குறையும் நேர்மையாகவும் நீதி யாகவும் தீர்க்கப்படும் என்பது உறுதி. இதைவிட இவ்வறிக்கையில் வேறு ஒரு பகுதியில் ஆள்பதி அவர்கட்கு அளிக்கப்பட்டிருக்கும் கூடுதலான அதிகாரத்தின் மூலம் வேறு எந்தச் சிறுபான்மையினர்க்கும்போல் இசிலாமி யர்க்கும் அநீதி வழங்கப்படுதல் தடுக்கப்படும். இக்கருத்தைப் பொதுவான இசிலாமியக் குழுவினர் உடனடியாக எற்க மறுத்தல் கூடும். ஆயின், இலங்கையில் சமயசகிப்புத் தன்மையின்மை ஏற்படுதல் அரிது என்று நாம் கருதுகிறேம்; ஆதலால், இசிலாமியர் இனப் பிரதிநிதித்துவம் பெறுதலை நீக்கிப் பொதுவான தேர்தல் தொகுதிகளுள் அவர்களும் ஒன்றி விடுதலே அவர்கள் நலத்திற்கும் எற்புடைத்து என்றும் நாம் கருது கிருேம்.
சமுதாயப் பிரதிநிதித்துவத்தால் இனப்பிரிவு நிகழ்வதைக் கவனித்தல் சுவைமிக்க தொன்றகிறது; இது இசிலாமியர்பற்றிய வகையில் நன்கு புலப்படும். தற்போதுள்ள முறையில் மேலதிகமான இரு சமுதா யப் பிரதிநிதிகளைப் பொதுவாக இசிலாமியர் வேண்டியதும் சில மலாயப் பிரதிநிதிகள், சாட்சியின்போது, சமயத்தைத் தவிர மற்றும் வகையில் தமக்கும் சோனகருக்குமிடையில் யாதொரு பொதுவியல்பும் இல்லை யென்றும் ஒரே சமுதாயப் பிரதிநிதித்துவ முறையில் தம்மைப் புறம்பாக வைத்தல் வேண்டும் என்றும் கேட்டனர். தற்போதுள்ள மூன்று இருக் கைகளில் இரண்டு சோனகருக்கும், ஒன்று மலாய்க்காரருக்கும் அளித்தல் வேண்டும், என்று இவர்கள் கேட்டுக்கொண்டனர்; சமுதாயப் பிரதி நிதித்துவம் சமயத்தில் அன்றி இனத்திலேயே தங்கியிருத்தல் வேண்டும், என்பது இவர்கள் கருத்து. மேலும் கீழ்மாகாணத்தைச் சார்ந்த இசிலா

Page 71
30
மியர் தம் இனப் பிரதிநிதிகளில் தாம் எமாற்றம் அடைந்ததை எடுத்துக் கூறி, இப்பிரதிநிதிகள் வணிகம் செய்யும் சோனகரிடையிருந்து தெரிந் தெடுக்கப்பட்டனர் ; கீழ்மாகாணத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் கமத்தொழில்பற்றி இவர்கள் ஒன்றும் அறியார் ; அதில் கவற்சியும் கொள்ளவில்லை என்றனர். எனினும், இப்பிரதிநிதித்துவ முறை அவ்வாறே இருப்பதாயின் தற்போது உள்ள மூன்று இருக்கைகளில் ஒன்று கீழ்மாகாணத், திற்கெனச் சிறப்பாக அளிக்கப்படல் வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இலங்கையிலுள்ள இசிலாமிய இனத்தவர் முக்கியமாக வணிகராயும் வியாபாரிகளாயும் பல நூற்றண்டுகளாக நற்றெண்டு புரிந்து வந்துள் ளனர். எம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போர்க்காலத்து நிகழ்ந்த சில பொல்லாத சம்பவங்களைத் தவிர மற்றும் வகையில் அவர்கள் நாட்டிலிருப்பதை எனைய இனத்தவர் வெறுக்கவில்லை. தற்போது செய் வதுபோல், தம் சிறப்பியல்புகளால் அவர்கள் நாட்டின் பொதுநலத்தை யும் செழிப்பையும் மேன்மையுறச் செய்வரெனின் சட்டசபையில் அவர்கள் நலத்தைப் பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுதல் அரிதா கும். பொதுத் தேர்தல் தொகுதியில் எனையோருடன் அவர்களும் கலந்து கொள்வதால் எனைய இனத்தவருடன் அவர்களுக்குக் கூடிய தொடர்பு எற்படும் ; வேறுபட்ட இயல்புடையதாயினும் ஒரே தாய்நாடும் ஒன்று பட்ட நாட்டின உணர்ச்சியும் உடையதான குடிமக்களுள் இவர்களும் ஒரு பகுதியினராவர்.
பேகர்
பேகர் சிறிய இனத்தவர்; ஆயின், முக்கியமற்றவரல்லர். இவர்கள் இடச் சுக் குடியேற்றக்காரரின் வழிவந்தோர் என்பது யாவரும் அறிந்ததே ; இவர்கள் நாட்டின் பொதுச் சேவையிலும் தொழில்களிலும் பெரிதும் சிறப்புப் பெற்று வந்துள்ளனர். தற்போது, சட்ட சபையில் இரண்டு பேகர் இருக்கைகள் உள ; இவ்விரண்டாயினும் தொடர்ந்து இருத்தல் வேண்டும் என்று எமக்கு வலிமையாக எடுத்துக் கூறப்பட்டது. எந்தச் சிறுபான்மையினத்தவர் விடயத்திலும் நீதியாக அளிக்கப்படக் கூடிய வளவு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்ட போதிலும் பெரும்பான்மையோர் கருணையிலேயே அவர்கள் வாழ நேரிடும் என்று கூறுவது உண்மை யாகும் ; பேகர்மாரைப் பொறுத்தவரையில் இது சிறப்பாகப் பொருந்தும். சட்டம் பேகர்மாரை எவ்வகையிலாவது வருத்த வேண்டும் என விரும்பின் இரண்டு பேகரினப் பிரதிநிதிகள் இருப்பதால் அது தடுக்கப்படமாட்டாது. எனையவிடயங்களிற்போல் இங்கும் பெரும்பான்மையினத்தவரின் நேர்மை யிலும் பகுத்தறிவிலும் எல்லாப் பகுதி மக்களினதும் நலன் ஒரு தன்மைத் தென்பதை அவர்கள் உணர்வதிலுமே உண்மையான பாதுகாப்புத் தங்கி '

131
யுளது எனலாம். இசிலாமியர் விடயத்திற்போல் நாட்டின் பொதுச் சேவை யிலும் அறிவியலிலும் இவர்கள் தொடர்ந்து நற்பணி புரிவராயின் இவர் கள் இந்நாட்டில் இருப்பதும் விரும்பப்படும் ; இவர்கட்கு நேர்மை யான சமமான நீதி வழங்கப்படும். சிறுபான்மையோர்க்கென அரசியல் அமைப்பில் அளிக்கப்படும் பாதுகாப்பு பேகர்மாருக்கும் கிடைக்கும்.
இந்தியத் தமிழர்
இந்தியக் குடியேற்ற மக்களான இந்தியத் தொழிலாளர்பற்றிய கேள்வி முக்கியமானதும் கடினமானதும் ஆகும். இது இங்கு இந்தியச் சமுதாய பிரதிநிதித்துவம் தொடர்பாக எழுகிறது. தற்போது இவர்களுள் 700,000 மக்கள் இந்நாட்டில் உளர் ; இவர்கள் உயர் மட்டத்திலுள்ள தேயிலை, இரப்பர் தோட்டங்களில் பணி புரிகின்றனர் ; இவ்விடங்களில் இதுவரை சிங்களவர் பெருந்தொகையாக வேலை செய்ய மறுத்தனர். பட்டணங்களில் அரசாங்க, நகரசபை வேலைகளிலும் இந்தியத் தமிழர் தொழிலாளராக அமர்த்தப்பட்டுள்ளனர் ; இவர்கள் வியாபாரிகளாகவும் கடைக்காரராகவும் உளர். இவர்களுள் கூலிப் பகுதியினராயுள்ளோர் தம் தாயகமான தென்னிந்தியாவிலுமே நன்னிலையில் இருக்கவில்லை. இவர் களுட் பலர் தாழ்த்தப்பட்ட, விலத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராய் மிகுந்த வறுமையில் வாழ்ந்தவர் ; தென்னிந்தியாவில் இவர்களின் இனத்தவரினது நிலையிலும் இலங்கையில் இவர்களின் நிலை பல வகையில் மேம்பட்டதாகும். "ஆயினும், இலங்கையில் இந்தியத் தொழிலாளியின் நிலையில் இன்னும் 'திருத்தத்திற்கு இடமுண்டு ; இந்நிலை இன்னும் திருத்தப்பட்ட பின்னரே அதைத் திருத்தியளிப்பதொன்று எனலாம். சட்ட சபையில் ஓர் இருக்கை கொண்டுள்ள பிரதான அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இந்தியக் குடியேற்றத் தொழிலுக்கு அதிபராய் அமைந்து இத் தொழிலாளிகளின் நலனையும் பாதுகாப்பையும் கவனித்து வருகிறர். இந்திய அரசாங்கமும் தம் சிவில் சேவையில் ஒர் உறுப்பினரை இவ் வேலைக்கெனப் புறம்பாக நியமித்துள்ளது ; தற்போது இவ்வுத்தியோகத்தர் ஒர் இந்தியராவர். இவர் இலங்கையில் வாழ்கிறர் ; இக்குடியேற்றத் தொழிலாளிகள்பற்றிய விடயங்கள் சார்பாக இவர் இலங்கை, இந்திய அரசாங்கங்கள் இரண் டுடனும் தொடர்பு கொண்டுள்ளார். இந்திய அரசாங்கம் எடுத்துரைத்த தன் பயனகவும் குடியேற்றத் தொழில் அதிபரின் முயற்சியாலும் அண்மையில் சில ஆண்டுகளில் வீடமைப்பு, கூலி, வைத்திய உதவி ஆகியவற்றில் சீர்திருத்தம் எற்பட்டுள்ளது. .
தம் கூலிகள் நன்னிலை பெறவேண்டும் எனத் தோட்ட உடைமையாளர் புொதுவாக விரும்புகின்றனரெனினும் அவர்கள் அரசாங்கத் தலையீடு என்று கருதும் ஒன்றையிட்டு அமைவின்மை அடைகின்றனர். அதனல் சீர்திருத்தம் செய்வதுபற்றி முன்னிடுகள் எழும்போது சிறிது எதிர்க்கும்

Page 72
32
மனப்பான்மையுடையராய் விளங்குகின்றனர். மேலும், பிரித்தனின் வரை யறுத்த பொறுப்புடைய கம்பனிகள் பல தோட்டங்கட்கு உடைமையாளராய் உள்ளன என்பதை நினைவிற் கொள்ளல் வேண்டும் ; இலங்கையில் உள்ள முகாமைக்காரரோ முகவரோ முதற்பணவிருத்தி, வழக்கத்திலுள்ள செலவைக் கூட்டுதல் ஆகியவற்றேடியைந்த எத்தகைய கருத்துக்களையும் ஆர்வத்துடன் எற்பதற்கு ஏற்ற சுதந்திரம் கொண்டு விளங்கவில்லை என்பதையும் நினைவிற் கொள்ளல் வேண்டும். நாட்டின் சுதேசத் தொழிலாளிகளின் வேலையை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. தோட் டத்துக் கூலியாட்களிலும் மிகவும் கேவலமான நிலையிலுள்ள எனைய தொழிலாளிகள் தொடர்பாக ஏற்படுத்தப்படாத சிறப்புச் சட்டங்களைத் தம் தொழிலாளிகட்கு மட்டும் எற்படுத்துவதை தோட்ட உடைமையாளர் வெறுத்து இயல்பாகவே எதிர்க்கின்றனர். இத்தகைய வேற்றுமை விரை வில் ஒழிக்கப்படும் என்று நம்புகிறேம்.
இந்தியத் தொழிலாளிகளின் தாழ்ந்த பொருளாதார நிலை, அவர் களின் பெருந்தொகை அவர்களிடை யாதொரு ஒழுங்கும் அற்ற தன்மை ஆகியனவற்றை நோக்கி, சென்ற முறை யாப்பு மாற்றியமைக்கப்பட்ட பொழுது, சட்டசபையில் இந்திய இனத்தவரின் பிரதிநிதிகள் இருவர் சட்ட சபை அங்கத்தினராதல் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கூலிகள் மட்டுமன்றி நாட்டிலுள்ள இந்தியர் யாவர்க்கும் இவர்கள் பிரதி நிதிகளாயினும் இவர்கள் தம் இனத்தவருட் கூலிப் பகுதியினர்க்கே சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதப்பட்டுள்ளது. இவ்விரு இருக்கைகளும் தொடர்ந்து நீடித்தல் வேண்டுமோ என்பதை ஆராயுமிடத்து இரு விடயங்களை நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். ஒருபுறம், பிரித்தானியத் தோட்ட உடைமையாளரோ தம் தொழிலாளி களுடன் தாம் கொண்டுள்ள உறவு முதற்படியாகத் தொழில் தொடர் பானதே என்று கருதும் இயல்புடையராயுள்ளனர் ; மறுபுறம், சட்ட சபையிலுள்ள இலங்கை உறுப்பினரோ, இவர்களுட் சிலர் தாமே தோட்ட உடைமையாளர், குடிமக்கள் தொகையில் புறம்பான நாட்டினரான ஒரு பகுதியினராயும் அதனல் ஏனையோரால் ஆர்வத்துடன் நோக்கப்படா தோராயும் உள்ள இம்மக்களின் பொறுப்பைப் பெரிதாகக் கருதாதவரா யிருக்கின்றனர். சட்டசபையில் இருந்த இந்தியப் பிரதிநிதிகள் இருவரும் தோட்டத்தில் வேலைமுறைகளில் சீர்திருத்தம் ஏற்படுத்தியுள்ளனரோ என் பதுபற்றி எம்முன் சாட்சியளிக்கப்பட்டபோது மாறுபட்ட பல்வேறு கருத்துக் கள் எடுத்துக் கூறப்பட்டன. இவர்கள் கருத்திற் கொண்டிருக்கும் செயலில் எற்படுத்தியிருக்கும் புதுச் சட்டங்கள் யாவும் கொண்டு வருதற்குப் பெரும் தூண்டுதலாயமைந்தவற்றுள் இந்திய அரசாங்கத்தின் கண்டிப்பே முக்கிய மானது என்பது தெளிவாகிறது. இத்தூண்டுதல் தொடர்ந்தும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மற்ருெரு முக்கியமான கருத்து யாதெனில் இக்

33
குடியேற்றத் தொழிலாளிகளுட் பெரும்பகுதியினர், 40 விகிதத்தில் 50 விகிதம் வரை என்பர், பேர் இலங்கைக் குடிமக்கள் எனக் கொள்ளத் தகுந்த வர்; தோட்டத் தொழிலாளிகளுட் பெருந்தொகையினர் உண்மையில் இந் நாட்டிலேயே பிறந்தவர். தற்போது மிகக் குறைந்த பகுதியினர், முக் கியமாகக் கண்காணியர் என்றழைக்கப்படும் மேற்பார்வையாளரும் அர சாங்கம் அல்லது நகரசபையில் வேலை பார்க்கும் கூலிகள் சிலருமே, சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர். இவ்வதிகாரத் தில் முன்பு ஒரு பகுதியில் எடுத்துக் கூறப்பட்ட வாக்குரிமை தொடர்பான மாற்றங்கள் நிகழும்போது, ஐந்து ஆண்டு வசிக்க வேண்டிய தகுதி ஏற்படுத் தினும், இம்மக்களுட் பெருந்தொகையினர் நிலவழி முறையிலமைந்த பிரதிநிதி ஒருவரைத் தேர்வதில் வாக்களிக்கும் தகுதியுடையராவர் ; இவ் வழியில் தமக்குள்ள கவலைகள் இடர்கள் ஆகியவற்றைச் சட்டசபையில் எடுத்துரைத்து ஈடுபெறுதல் முன்னிருந்த அரசாங்கத்திலும் இப்பொழுதுள்ள அரசாங்கத்தில் செய்யக்கூடியதொன்றக இருக்கின்றது. இது காரணமாகவும் எலவே கூறப்பட்ட காரணங்கட்காகவும் கூலிமக்களின் நன்மைக்காக இந்திய இருக்கைகள் இரண்டையும் தொடர்ந்து வைத்திருத்தற்கு அவசியம் இல்லை என்று கருதுகிருேம். இந்திய இனத்தவருள் நாட்டில் வியாபாரம், வணிகம் ஆகியன செய்து ஓரளவு முக்கியம் உடையவராய் விளங்கும் ஏனையோரை நோக்கும்போது, ஏனைய சிறுபான்மையினர் சார்பாக முன்பு கூறப்பட்டன யாவும் இவர்கட்கும் ஒப்பவே அமையும் ; ஆதலால், சட்டசபையில் இந் திய இனப் பிரதிநிதிகட்கெனப் புறம்பாக இருக்கைகளைத் தொடர்ந்து வைப்பதற்குப்போதிய காரணம் இல்லை என்று இவ்வாணைக்குழு கருதுகிறது; ஆயினும், நிலவழி முறையில் இச்சமுதாயத்தாரின் சில பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேம்.
தாழ்த்தப்பட்டோர்
பிரதானமாக, வட மாகாணத்திலும் கீழ் மாகாணத்திலும் காணப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை எமக்கு மிகுந்த கவலையையும் பதற்றத் தையும் எற்படுத்தியுள்ளது. இவ்வத்தியாயத்தின் முதற் பகுதியில் எலவே அவர்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது ; அவர்கட்கென எவ்வகையான ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் எற்படுத்துதல் வேண்டுமோ என்பது பற்றியே நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். நாம் காட்டிய பொதுக் காரணங்களைத் தவிர்த்தாலும், அம்மக்கட்கு வாக்குரிமை அளிக்கப்படுத லும், அவர்கட்குச் சமமான போதிய கல்வி வாய்ப்புக்கள் அளிக்கப்படுத லுமே அவர்களின் நிலையைச் சீர்திருத்துவதற்கான வழிகள் என்று நாம் கருதுகிருேம். ஒப்பான குடிமக்கள் என யாவரையும் கருதுதலை எதிர்த்து நிற்கும் சமூக வேற்றுமைகளைத் தகர்த்தெறிதற்கென இந்து இனத்துத் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எமக்கு உறுதி யளிக்கப்பட்டது; இந்நடவடிக்கையால் நன்மை ஏற்படும் என்று அமைவு
கொண்டுள்ளோம்.

Page 73
l34
ஐரோப்பியர்
ஐரோப்பியரைச் சிறப்பு நிலையில் உள்ள சிறுபான்மையினர் எனக் கருதலாம். இவர்கள் தொகையிற் சிறியர் ; இவர்கள்தொகை 11,000 ; இவர்கள் தோட்டக்காரராயும், வணிகராயும், வங்கியாளராயும். வியா பாரத்துறையினராயும், உயர் கலைத் தொழிலாளராயும் (கம்மியராயும்), பொதுச் சேவையில் அமர்ந்தோராயும் உளர். உடைமையாளராயிருந்த தோட்டக்காரரின் காலம் எறத்தாழ மறைந்துவிட்டது ; தற்போது உள்ள தோட்டக்காரர் யாவரும் தாய்நாட்டிலுள்ள வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனி ஊழியராகவே உளர். இவர் நாட்டின் உட்பகுதியிலுள்ள தேயிலை, இரப்பர் தோட்டங்களில் பரந்து காணப்படுகின்றனர். பொதுவாகக் கூறின், இவர்கள் அரசியல் விடயங்களில் அதிக பங்கு எடுப்போரல்லர் ; கொழும் பிலே பிரதானமாகக் குழுமியிருக்கும் வியாபாரக் குழுவினரும் இத்தகை யோரே எனலாம். நாட்டின் பொதுவான தொழில் பணம் தொடர் பான செல்வாக்கு யாவும் பெரும்பாலும் ஐரோப்பியர் கையில் உள்ளன ; பிரித்தானியாவைச் சேர்ந்த முதல், நாட்டில் பெருந்தொகையாயுளது. இந்த முதலைக் கொண்டு நாட்டு மக்கள் நலமுறும் வகையில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதில் நாம் அமைவு கொண்டுள் ளோம். ஐரோப்பியர் சிலரை நிலையான குடிகள் எனக் கருதலாம் ; ஆயின், இவர்களுட் பெருந்தொகையினர் தம் பற்றுக்களையும் குடும்ப வாழ்வையும் நாட்டிற்கு வெளியே கொண்டுள்ளனர் எனலாம். தற்போது சட்டசபையில் இவர்களுக்குச் சமுதாயப் பிரதிநிதிகள் இருவர் உளர் ; அவற்றுடன் ஐரோப்பிய இருக்கையை-வணிக மன்றத்திற்குரியது -கொண்ட ஒருவரும் உளர் எனலாம். வணிக மன்றத்தில் ஐரோப்பி யர் மட்டும் உறுப்பினராதல் வேண்டும் எனக் கட்டாயம் இல்லை ; ஆயின், இதில் இலங்கை உறுப்பினர் மிகச் சிலரே உளர்.
எனைய சிறுபான்மையர் தொடர்பாக நோக்கும்போது, சிறிதான தேர்தல் தொகுதிகள், சிறப்பாக இனப் பகை குறைதல், ஒற்றுமை மனப்பான்மை வளர்தல் ஆகியவற்றின் மூலம் நிலவழி முறையில் சட்டசபையில் பிரதிநிதிகளை அமர்த்துதல் கூடும் எனத் தெரிகிறது. ஐரோப்பியரும் இவ்வகையில் தெரிந்தெடுக்கப்படுதல் கூடும் எனச் சிலர் கருதியபோதிலும், இது நடைபெறக் கூடியதன்று என்றே பெரும்பான்மையினர் கருதி னர். முன்னை நாளில் அரசாங்க உத்தியோகத்தராயிருந்த பிரீமன் என் பார் அவர் புரிந்த நற்பணி காரணமாகவும் மக்கள் அவர் மேல் கொண்ட அன்பு காரணமாகவும் நிலவழி இருக்கையான வடமத்திய மாகாணத் திற்கு யாதோர் எதிர்ப்புமின்றி மீண்டும் அமர்த்தப்பட்டார் என்பது எமக்கு எடுத்துக் காட்டப்பட்டது. ஆயின், இது ஒரு புறனடை என்றும் இதுபோல் மீண்டும் நடத்தல் அரிது என்றும் கருதப்பட்டது. மேலும், கொழும்பிலுள்ள கோட்டைப் பகுதியிலும், தோட்டப் பகுதிகளில் இரண் டொரு இருக்கைகளிலும் ஐரோப்பியர் நிலவழி முறையில் சட்டசபைக்

35
குத் தெரிந்தெடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுதல் கூடும் என்றும் எமக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஐரோப்பியர் பிரதிநிதித்துவம்பற்றிய கேள்வியை நாம் ஆராயும்போது, சமுதாயச் சிறப்பு நலப் பிரதிநிதித்துவம் ஒழிக் கப்படுமாகில், வேறு ஒழுங்கு இல்லாவிடத்து, சட்டசபையினின்றும் உத்தியோகமுறையற்ற ஐரோப்பியர் அறவே நீக்கப்படுவர். அதே நேரத்தில், எம் எடுத்துரைகட்கமையச் சபையிலுள்ள உத்தியோக முறையிலமைந்த இருக்கைகள் பன்னிரண்டிலிருந்து மூன்றிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதையும் நினைவிற் கொள்ளல் வேண்டும். தோட்டக் காரர் சங்கம், ஐரோப்பியர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர் சிலர் எடுத்துரைத்த ஐரோப்பியர்க்கெதிரான அல்லது பிரித்தானியர்க்கு எதிரான மனக்கோட்ட நிலைபற்றி நாம் பொருட்படுத்தவில்லை ; சட்ட சபையின் இலங்கை உறுப்பினர் தம் நலன்களைப் பாதிக்கும் வகையில் கண்மூடித்தனமாக இலங்கையில் மிக முக்கியமாயுள்ள ஐரோப்பியர் நலன் கட்கு அநீதி விளைக்கும் வகையில் நடந்து கொள்வர் என நாம் அஞ்ச வில்லை. ஆயினும், குடிமக்களிடையுள்ள பிரித்தானியச் சமுதாயத்தவர்க் கும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் அளித்தல் விரும்பத்தக்கது எனக் கருதுகிறேம். செல்வாக்கும் பிரதிநிதித்துவப் பேறுமுடைய இலங்கை அரசியலாரும் பெருமக்களும் சட்டசபையில் பிரிட்டிசுப் பிரதிநிதிகள் இல்லாவிடின் அது தமக்குத் துயர் தரக்கூடிய விடயம் என்று நமக்கு உறுதி கூறியுள்ளனர். இன்னும், அவர்கள் தற்போது கொண்டுள்ள மூன்று இருக்கைகளையும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கேற்ற கார ணங்களை அவர்கள் எடுத்துக் கூறவும் இல்லை. ஆயின் மறுபுறம், புதிய யாப்பில் பிற சமுதாயப் பிரதிநிதித்துவம் விலக்கப்படுமெனின், பழைய முறையில் ஐரோப்பியர் இருக்கைகளை மட்டும் தொடர்ந்து வைத்திருப்பது பெருங்கேடான பாகுபாட்டொழுக்கமாகத் தோன் றும். ஆகையால், ஐரோப்பியர் தேவையையும் நிறைவாக்கி, நாட்டின் பொதுநலத்தைப் பேணக்கூடியதும், சமுதாயப் பிரதிநிதித்துவத்தை வேறு ஒருவகையில் ஏற்படுத்தாது, புது யாப்பு அளிக்கப்படும்போது ஏற் படும் மாறுதல்கட்கேற்பப் பொருத்தங்கள் செய்யுங்காலை, சட்டசபை கூடிய அளவு பிரதிநிதித்துவம் பெற்றதாக விளங்குமாறு செய்யக்கூடியதுமான ஒரு யாப்பை நாம் வகுத்தல் வேண்டும்.
பொதுவான கருத்துக்கள்
சமுதாய முறையில் சட்டசபைக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தல் தீமை என்றும் பல்வேறு இனத்தவரிடை நட்புறவும் ஒன்றுபட்ட குறிக்கோளும் எற்படும் காலம் வரை மட்டுமே இம்முறை தொடர்ந்திருத்தல் வேண்டும் என்றும் சமுதாயப் பிரதிநிதிகளும் பொதுவாக ஒப்புக்கொண்டனர். சமு தாயப் பிரதிநிதித்துவம் இருப்பதே இத்தகைய உறவுமுன்ற வளர்தற்கு இடையூறகும் என்பது எம் கருத்து ; இதை ஒழிப்பதன் மூலமே பல்

Page 74
136
வேறு இனத்தவரும் ஒருங்கு சேர்ந்து, உண்மையான நாட்டின ஒற்று மையை வளர்த்தல் கூடும்.
இலங்கையில் சமுதாயப் பிரதிநிதித்துவம் பழமையானது என்று போற்று தற்கும் உரியதன்று ; அரசியல் யாப்பில் இது நல்லெண்ணத்துடன் சேர்க்கப்பட்டதெனினும் நல்வினையான பலன்களை இது அளிக்காது போய் விட்டது. எலவே குறிப்பிட்டது போல், இது இனங்களைப் பிரித்துவைக்கும் இயல்புடையது ; யாவரது பொதுநலத்தையும் பேணுதற்குத் தம் சிறப்பான தொண்டை அளிப்பதைவிட்டுக் குறுகிய நலங்களைப் பாதுகாக்கும் நோக் கங்களுடன் சமுதாயப் பிரதிநிதிகளைச் சட்டசபைக்கு அனுப்புகிறது. ஆயி னும், இப்பிரதிநிதிகள் எல்லோரும் அல்லாவிடினும் இவர்களுட் பெரும் பான்மையினர், அவ்வியல்பை அடக்கி அதனினும் உயர்ந்து நாடு முழுவ வதன் நலத்தையும் பேணும் விடயங்களில் கவனம் செலுத்தி வந்துள்ள னர் என்பதை நாம் மகிழ்வுடன் போற்றுகிருேம். எனினும், இப்பிரதி நிதிகளே மீண்டும் நிலவழி முறையிலே பிரதிநிதிகள் எனத் தேர்ந் தெடுக்கப்படின், அவ்வாறே நிகழும் என நாம் எதிர்ப்பார்க்கிருேம்; இவர்கள் எனைய இனத்தவரின் பகைமை, எதிர்த் தாக்குதல் ஆகியவற்றை என்றும் எதிர்பார்த்திருக்கும் தன்மையை விட்டு நாட்டிற்குத் தம்மாலான வற்றைச் செய்தல் கூடும்.
சமுதாயப் பிரதிநிதித்துவம் அவசியம் என எடுத்துரைப்போர் குறைந் * திருப்பின் ஒரு வேளை ஒரளவு சமுதாயப் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு நாம் கூறத் தூண்டப்பட்டிருப்போம். ஆயின், நாம் கண்டது இதுவே ; சமுதாய முறையில் இருக்கைகள் கொண்டிருந் தோர் அவ்விருக்கைகளின் தொகை கூடுதல் வேண்டுமென்று கேட்டது மன்டுமன்றி, தற்போது பிரதிநிதித்துவம் பெற்றிராத எனைய சமுதாயத்த வர், சமயப் பிரிவினர், சாதிப் பிரிவினர் மற்றும் தனிப்பட்ட இயல்புகளைப் பாதுகாக்க விரும்பியோர் யாவருமே தத்தமக்கெனச் சட்டசபையில் இருக்கை. வேண்டும் என்றும், இவற்றைப் பெறுதற்கு ஏனையோரைப்போல் தமக்கும் உரிமை உண்டு என்றும் கூறினர். இதன் பலனக, இனப் பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கைகள் குறையவில்லை ; அதற்கு எதிராக இவற்றைக் கூடுதலாகப் பெறுதற்குப் புது உரிமைகள் எடுத்துக் கூறப்பட்டன. இதனல் சமுதாயமுறையில் அமைந்த இருக்கை கள் தற்போதுள்ள தொகையான பத்திலிருந்து ஐம்பதிற்கும் மேலாக, எற்படுதல் நேரிடும். சமுதாயப் பிரதிநிதித்துவம் பெறும் ஆவல் குறைந்து ஒழிவதற்கு மாருகப் பெருகி வளரும் இயல்புடையது என்பதையே எம் ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. இச்சமுதாயப் பிரதிநிதித்துவமே எவரும் ஒப்ப விரும்பப்படாத தொன்றகையால் இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக உள்ள இருக்கைகளின் தொகை குறைவாக இருக்கும்போதே, இதை முற்றக ஒழித்துவிடுதல் விரும்பத் தகுந்த ஒன்றகும்.

37
சென்ற முறை யாப்பு மாற்றி அமைக்கப்பட்டபோது சமுதாயப் பிரதி நிதித்துவம் தொடர்ந்து இடம் பெற்றதெனினும், நில வழிமுறையில் அமைந்த வாக்கையும் அத்துடன் சமுதாய முறையில் அமைந்த வாக்கையும் எல்லாச் சமுதாயத்தவர்க்கும் அளித்தமை நல்லதோர் நடவடிக்கை என்றே சொல்லல் வேண்டும். இதனல், பெரும்பான்மைச் சமுதாயத்தவர்க்கு அநீதி விளைந்ததுபோல் தோன்றியது ; எனெனில், இதனல் சிறுபான்மைச் சமு தாயத்தவர் ஒருவர்க்கு இரண்டு அல்லது சில சமயத்தில் அதற்கும் கூடுதலான வாக்குகள் கிடைத்தன. ஆயினும், சமுதாயப் பிரதிநிதித்து வம் பெற்றிருக்கும் சமுதாயத்தவர் தாம் வாழும் பகுதியில் தாமும் தம் உடனுறை இலங்கையரும் கொண்டுள்ள பொது நலத்தை உணர் தற்கு வாய்ப்பு எற்படுத்துவதன் மூலமாகச் சமுதாயப் பிரதிநிதித்து வத்தை முற்றக அழிப்பதற்கு இது வழி வகுத்தது. ஆதலால், இனி ஏற்படவிருக்கும் மாற்றங்கள், மேற்கூறியவாறல்லா வழிகளால் விளங் கிப் போற்றக் கூடிய வகையிலும் இப்பொழுது கூறியவற்ருல் விளங்கிப் போற்றக்கூடியனவாயமையும்.
விகிதசமமுறையில் பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் சிறுபான் மைச் சமுதாயத்தவர்க்குப் பிரதிநிதித்துவம் வழங்கும் முறை எம் சீரிய கவனத்தை ஈர்த்தது. இக்கொள்கையில் பல்வேறு மாற்றுக்களையும், சேமனியிலுள்ளது உட்பட, நாம் நன்கு ஆராய்ந்தோம். ஆயினும், இதனல் தேவையான பெருமளவு நிலப்பரப்பு (அத்துடன் ஒரு உறுப் பினர்க்கும் அவரின் வாக்காளர்க்கு மிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தும் கடினம்), வாக்களிக்கும் முறையில் ஏற்படும் சிக்கல் ஆகிய வற்றல் விகிதமுறையில் பிரதிநிதித்துவம் வழங்குதல் இலங்கையின் தேவைகட்கு ஏற்றதன்று என நமக்குத் தோன்றியது.
நியமிக்கப்படும் உறுப்பினரை எடுத்துரைத்தல்
ஐரோப்பியர் பற்றி ஆராய்ந்தபோது, அரசாங்க சபையிலிருந்து ஐரோப்பி யரை விலக்குவதை நாட்டிலுள்ள உயர்ந்தோர் விரும்பமாட்டார் என நாம் கருதுவதாகக் குறிப்பிட்டோம். மற்றும் வகையிலும், சமுதாயப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்படுவதால் அரசாங்க சபை முழுப் பிரதிநிதித்துவம் பெற்றதாக விளங்காது. குறித்த ஓர் இனம், சமயம், அல்லது வேறு சிறப் பியல்புகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி அரசாங்க சபையின் அமைப் பில் இயன்றளவு பல்வேறு கருத்துக்கட்கும் இடம் அளித்தல் விரும்பத்தக்க தொன்ருகும் எனப் பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மக்களாட்சி முறையில் அமைத்த ஒரவைக்கு மக்களாட்சி முறையிலமைந்த தேர்தல் மூலமே இது ஏற்படுதல் சிறந்தது. வெகுவிரைவில் இம்முறை இலங்கையில் எற்படும் என நம்புகிறேம். எனினும், இதற்கிடையில் சமுதாயப் பிரதி நிதித்துவத்தை முற்றக அழித்து நிலவழிமுறையில் அமைந்த தேர்தலில் முழு நம்பிக்கையும் வைத்தல் திடீர் மாற்றமாகும்; இது அதிக அச்சத்தை

Page 75
138
ஏற்படுத்தும். ஆதலால், பொதுத் தேர்தலின் பின்னர், உத்தியோக முறையற்ற உறுப்பினர் பன்னிருவர்வரை நியமித்தற்கு ஆள்பதிக்கு அதி காரம் அளித்தல் வேண்டும், என நாம் எடுத்துரைக்கக் கருதியுள் ளோம் ; இவர்களுள் அறுவர்க்கு மேற்படாதோர் ஐரோப்பியராதல் வேண் டும். பொதுத் தேர்தலின் பயனகச் சிறுபான்மையினர் சமுதாயப் பிரதிநிதித்துவத்தில் எற்பட்ட குறைகளை நீக்குதற்காகவே நியமனவிருக் கைகளை எற்படுத்துதல் எம் நோக்கமன்று. இந்த நியமனங்களின் மூலம், ஆள்பதி, நாட்டின் பலவித நலங்களும் பிரதிநிதித்துவம் பெறு மாறு அரசாங்க சபையை அமைத்தல் இயலும் என்பதே எம் நம்பிக்கை ; நாளடைவில் இத்தகைய சிறப்பு நியமனங்கள் படிப்படியாகக் குறைந்து வரும் என்றும் நம்புகிருேம்.
I-தேர்தல் பகுதிகள்
சமுதாயப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆராய்ந்தபோது நிலவழிமுறை யில் அமைந்த இருக்கைகளைச் சிறிது மாற்றி மீண்டும் பகிர்ந்து விடுவதன் மூலம் சிறுபான்மையினர்க்குப் பிரதிநிதித்துவம் கிடைத்தற்கு உதவலாம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில இனங்களும் வகுப்புக் களும் சில இடங்களில் பெருமளவில் குழுமியிருந்தபோதிலும் தேர்தல் தொகுதியின் அளவாலும் அமைப்பாலும் அவ்வினத்தவரோ வகுப்பினரோ தேர்தலில் தோல்வியுற்றனர் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக்கள் எமக்குக் கூறப்பட்டன. இச்சந்தர்ப்பங்களில், எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துதல் தகுதியாகும் என வழிகாட்டும் பொருட்டு இத் தேர்தல் தொகுதிகள் யாவற்றையும் பற்றி விரிவான ஆராய்ச்சியில் இறங்குதல் எமக்கு இயலாது. ஆயினும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியையும் 70,000 தொடக்கம் 90,000 வரை குடிமக்கள் கொண்டதாக அமைப்பின் நிலமுறையி லமைந்த தேர்தலில் சிறுபான்மையின உறுப்பினருக்கும்-அவர்கள் தங்கள் இனத்தவரின் ஆதரவிலேயே தங்க நேரிடினும்-ஒரளவு வாய்ப்பு எற்படும் என அமைவு கொண்டோம். இத்தகைய உறுப்பினா மீண்டும் இடம்பெறுதற்குக் குறிப்பாகக் கொழும்பு, வடமாகாணம், கீழ் மாகாணம் ஆகியவற்றில் ஆதரவு கிடைக்கும்.
ஆயின், சில சிறுபான்மையினங்களின் தொகை மிகக் குறைவாயிருப்ப தால், தேர்தல் தொகுதிகள் எத்துணையளவு சிறிதாக்கப்பட்டபோதிலும், அவர்கள் எந்த ஒரு பகுதியிலும் பெரும்பான்மை வாக்குப் பெறுதல் அரிதாகும் என்பதை நாம் முற்றிலும் உணர்கிறேம். ஆயினும், வாக் குரிமை பெருமளவில் விரிவாக்கப்பட்டதனல் சபைத் தேர்தற்குத் தோற்று வோரின் தொகையும் பெருகும்; ஆதலால், பலவிடங்களில் இருவர்க்கு மேற்பட்ட பலரிடையே தேர்தல் போட்டி நடைபெறும். தேர்தற்கு நிற்போ ரின் தொகை எவ்வளவிற்குக் கூடுகிறதோ அவ்வளவிற்குச் சிறுபான்மை

39
இனத்தவர் ஒருவர் வெற்றி பெறும் வாய்ப்பும் கூடுகிறது, என்பது நன்கறிந்த உண்மையாகும். ஆயினும், மக்களை நிலவழிமுறையில் அமைந்த தேர்தல் தொகுதிகளில் ஒன்று சேர்ப்பதன் பலனக இறுதியில், இன வேற்றுமையை அடிப்படையாகக்கொண்டு வாக்களித்தல் அழிந்து விடும் என நாம் எதிர்பார்க்கிருேம். சமுதாய இருக்கைகள் அற்ற உள்ளூ ராட்சித் தாபனங்களுக்கான தேர்தல்களில் சமுதாய சார்பு கருதாது தேர் தலுக்கு நிற்போரின் எனைய தகுதிகளை ஆராய்ந்து வாக்களிக்கும் முறை எவ்வாறு வளர்ச்சியுற்றிருக்கின்றதோ அதேபோல் எதிர்காலத்தில் அர சாங்க சபையில் சமுதாய இருக்கைகள் ஒழிக்கப்பட்டதும் மக்கள் தம் ஒன்றுபட்ட பொதுநலத்தை உணர்ந்து, சமுதாய வேற்றுமை கருதாது வாக்களிக்கும் முறைக்கு வழிவகுக்கப்படும். இலங்கை மக்களின் ஒற் றுமையை வளர்க்கும் ஆவலும், அதற்கு அவர்களை ஒரு தன்மைத்தான தேர்தல் தொகுதிகளில் அமைப்பதே வழி என்ற நம்பிக்கையுமே இவ்விடயம்பற்றிய எம் எடுத்துரைகட்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
சிறுபான்மைச் சமுதாயத்தவர்க்கு அரசாங்க சபையில் போதிய பிரதி
நிதித்துவம் கிடைக்காது எனத் தோன்றுமாகிலும் அல்லது அறவே கிடையாது போகினும் அவர் மனதில் அச்சமும் நம்பிக்கையீனமும் ஏற் படுதல் கூடும் என்பதை நாம் உணர்கிறேம். ஆயினும், அரசாங்க சபையின் உறுப்பினர் எத்தகையோராயினும் இலங்கையின் சிறப்பி யல்பான, அரசியல் சமய சகிப்புத் தன்மை தொடர்ந்து காட்டப்படும் என்றும் சிறுபான்மையினத்தோர் தம் அச்சம் காரணமற்றது எனப் படிப்படியாக உணர்வர் என்றும் நாம் நம்புகிருேம். மேலும், அர சாங்க சபை எவ்வளவுக்கு எல்லாப் பகுதி மக்களினதும் பிரதிநிதித் துவத்தைப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கே அதன் நாட்டினச் சார்பு டைத்தன்மை ஏற்புடையதாகும். அத்துடன் அதிக காலம் கழிவதற்கு முன்னர், நிலமுறை அமைப்பின்படி, நாட்டின் ஆட்சிக் குழுவில் இது வரை இடம்பெருத அளவு பெருமளவில் பல்வேறு மக்கட் பகுதியினரும் பிரதிநிதித்துவம் பெறுவர் என நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கி ருேம். பல சமுதாயத்தவரும் சிறப்பான சில நலன்களைப் பாதுகாக்க விரும்புவோரும் தாமே தெரிந்தெடுக்கும் ஒருவரைப் பிரதிநிதியாகக் கொள்ளுதலையே விரும்புவது இயற்கையெனினும், எலவே உள்ளூராட் சித் தேர்தல்களில் மட்டுமன்றிச் சட்டசபையின் தேர்தல்களிலும் நிகழ்ந்தது போல் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருறுப்பினரை (அவ்வினம், சிறு பான்மையினம் ஆதல் கூடும்) அவரின் பண்பு, ஆற்றல் ஆகியவற்றிற்காக மற்றைச் சமுதாயத்தவரும் போற்றுதல் கூடும்.

Page 76
40
ஆதலால், இவ்வறிக்கை வெளியிடப்பட்டதற்குப் பின்பு இயன்ற விரை வில் உள்நாட்டு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுதல் வேண்டும் என எடுத்துரைக்க விரும்புகிறேம். இக்குழு, நிலமுறையிலமைந்த தேர்தல் தொகுதிகளை மீண்டும் ஒழுங்குபடுத்திப் பிரித்து ஒவ்வொன்றும் 70,000 தொடக்கம் 90,000 வரை குடித்தொகை கொண்டதாக அமைத்தல் வேண்டும். இந்த ஆணைக் குழுவின் அறிக்கையும் முடிபுகளும், ஒத்துக் கொள்ளப்படின் புது யாப்பின் எற்பாடுகளை விரிக்கும் கழகத்துப் பணிக் கையில் அவை இடம் பெறத் தகுந்தவாறு உரிய காலத்தில் ஆயத்த மாதல் விரும்பத்தக்கதாகும். ஆயினும், சில தேர்தல் தொகுதிகளை வாய்ப்பற்ற முறையில் மிகப் பெரிதாக அமைக்காது நாம் குறிப்பிட்ட குடித்தொகையைப் பெறுதல் அரிதாயிருப்பின் இக்குழு இவ்விதியைச் சிறிது தளர்த்தும் உரிமை கொண்டிருத்தல் வேண்டும். எனினும், புறநடையாய மைந்த தருணங்களிலன்றி இத்தொகைகளையே கணித்து நடத்தல் வேண் டும் ; புறநடையாய் இத்தொகையிற் சிறிதளவான தொகை ஏற்கப்படு வதாயின் அத்தொகை 50,000 இற்குக் குறைதலாகாது.
தேர்தல் தொகுதிகள் இவ்வாறு மீண்டும் பிரித்து அமைக்கப்படுவதால் சட்ட (இப்போது அரசாங்க) சபையின் உறுப்பினர் தொகை கூடும் ; இத னல், நிலவழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 உறுப்பினரைக் கொண்ட தாக இச்சபை விளங்கும். இத்தொகையுடன் நியமிக்கப்படும் உறுப் பினரையும் அரசலுவலரையும் சேர்த்தால் சபையின் கூடிய தொகை 80 ஆகும். இத்தொகை உயர்வு மேலே கொடுக்கப்பட்ட காரணங்களால் மட்டுமன்றிக் குறிப்பாகத் தேர்தல் தொகுதிகளின் தொகை கூடுவதா லும் வற்புடைத்தாம்.

அதிகாரம் W1
கண்டியர் உரிமை
முந்திய அதிகாரத்திலே, கண்டி மாகாணங்கட்குச் சுயவாட்சி வேண்டும் என்று, செல்வாக்குப் பெற்ற கண்டியர் கட்சி ஒன்று வேண்டுகோள் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளோம். இவ்வேண்டுகோளுக்குச் சார்பாக, நிலமானிய தலைவரதும், கிராமத் தலைவரதும் கொள்கைகளையும் ஐயப்பாடுகளையும் கொண்டுள்ளதும் அண்மையில் நிறுவப்பட்டதுமான கண்டி நாட்டினச் சபையின் பிரதிநிதிகள் மிக்க உறுதியுடனும் திறமையுடனும் எம்முன் சான்று அளித்தனர். இது ஏனைய பல்வேறு சங்கங்களாலும்-இவை எல்லாம் கண்டியர் சங்கங்கள் அல்ல-தனிப்பட்ட கண்டியர் சிலராலும் வன்மையாக எதிர்க்கப்பட்டன.
பண்டைய போர்த்தலைவர், குடிமக்கள் பாதுகாவலர் ஆகியோரின் பிரதிநிதிகளாய் அமைந்தவர்க்கு அரசியல் சீர்திருத்தம்பற்றிய இயக்கங்கள் ஐயத்தை எழுப்புவனவாயிருப்பது இயற்கையே ; அவதூறல் நிரம்பிய அவர் காதுகட்கு இவ்வியக்கத்தினரின் பேச்சே புதுமையாகவும் பொறுக்கத்தக்க பொருளற்றவொன்றகவும் இருக்கும் ; எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகளை எழுப்பும் இவ்வுகத்திலே, தாம் நீண்ட காலமாகப் பேணிவந்த வழக்கங்களையும் பொருமைப் பெருமையுடன் பாதுகாத்துத் தமக்கு அளிக்கப்பட்ட மரபுகளையும் பற்றி இவர்கள் கவலைகொள்வதும் இயல்பே. கண்டித் தலைவரின் கருத்துக்கு மூன்று காரணங்கள் உள எனலாம் ; முதலாவதாக, பொருளாதார நெருக்கடி காரணமாகக் கரைநாட்டுச் சிங்களவரும், தமிழரும், சோனகரும் குடிநெருக்கம் கொண்ட கடல் சார்ந்த மாவட்டங்களிலிருந்து கண்டிய உள்நாட்டுக்குள் ஆண்டு தோறும் பரவி வருகின்றனர் ; இரண்டாவதாக, அவ்வாறு அங்கு வந்தோர் உலகியல்பறியாக் கண்டிக் குடியானவரைத் தமக் கேற்பப் பயன்படுத்துதல் கடினமன்று ; மூன்றவதாக, இலங்கையில் தனிப் பட்ட சமுதாயங்களுட் பெரும்பான்மையான சமுதாயமான கரைநாட்டுச் சிங்களவரிடையேதான் பொறுப்பான அரசாங்கம் வேண்டும் இயக்கம் தொடங்கியுள்ளது. இவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படின் தம் நாட்டிலேயே தாம் தாழ்ந்த நிலையில் வாழவேண்டிய காலம் விரைவில் வரும் எனக் கண்டியர் அஞ்சுகின்றனர். கூடிய திறமை பெற்ற இப்படையெடுப்பாளரை, வலுவில் நுழைந்தோரை, எதிர்க்கக் கண்டியர் ஆற்றல் அற்றவராயிருப்பர். கண்டி மாகாணங்களிலிருந்து சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்படுவோர் கண்டியராயிருப்பினும் கரைநாட்டு மாவட்ட உறுப்பினர் தொகை இவர்கள் தொகையிலும் பெரிதாயிருக்கும். கண்டியர்
14

Page 77
42
கருத்துப்படி, இலங்கைத்தமிழரும் கரைநாட்டுச் சிங்களவரும் தம்முள் செய்துகொள்ளும் உடன்படிக்கையினல் கண்டி மாகாணங்களில் அரசி யல் செல்வாக்கு முழுவதும் எனைய இரு பெரும்பான்மை இனத்தவர்க் குச் செல்வதற்கும், கண்டியர் நலன்கள் முற்றக அழிவதற்கும், கண் டியர் இனமே முற்றக மறைவதற்கும் யாதொரு தடையும் இருக்க மாட்டாது. அரசியல் சீர்திருத்தத்தை வேண்டும் இயக்கத்தைப்பற்றிக் கண்டியர் கொண்டுள்ள கருத்து தாம் இலங்கையின் எனைய முன் னேற்றமுள்ள இனங்களால் அழிக்கப்பட்டுக் கரைநாட்டு இனத்தவரின் நெருக்கடிக்குப் பலியாக்கப்படுவர் என்பதே.
இத்தகைய நிலையில் கண்டித் தலைவர்கள் தம்மை அழிக்கவரும் ஆபத்தைத் தடுப்பதற்கு வழிவகை தேடினர் ; 1815 ஆம் கண்டிச் சமவாயம் தம் சிக்கலைத் தீர்க்கக்கூடியது என மீண்டும் கருதுகின்றனர். இச் சமவாயத்தில் கைச்சாத்திடுதற்கு நேர்ந்த நிகழ்ச்சிகளை ஏலவே நாம் கூறியுள்ளோம். இது பிற்சேர்க்கை V இல் முழுவதும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு, வருமளவு கூறினல் போதுமானதாகும். அக்காலத்து மலபார் ஆட்சியாளன் கொடுமையால் தன் மக்களின் அன்பையும் தலைவரின் ஆதரவையும் இழந்தான். பிரித்தானியக் குடிமக்களான இலங்கைச் சுதேசிகள் தாக்கப்பட்டதற்குப் பழிவாங்குதற்பொருட்டு 1815 இல் பிரித்தன் கண்டிமேல் போர் தொடுத்தபோது இந்நிலை உச்சத்தை அடைந்தது. தலைவர் யாதொரு எதிர்ப்பும் காட்டவில்லை ; சில வாரங் களில் தலைநகர் கைப்பற்றப்பட்டு மன்னன் கைதியாக்கப்பட்டான். 1815 மாச்சு 2 ஆம் நாளன்று கண்டி அரண்மனை அவையிலே தலைவர் சமவாயம் ஒன்று கூடியது. இங்கு, மன்னன் முறைப்படி அரியாசனத்தி லிருந்து நீக்கப்பட்டு அவன் அரசு பிரித்தானிய முடியின் கீழ் கொண்டு வரப்பட்டது , பெளத்த சமயம் அழிக்கப்படாதென்றும், அதன் சடங்குகள் பாதுகாத்து நடத்தப்படும் என்றும், சமயகுருமாருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தலைவரின் உரிமைகளும் அதிகாரங்களும் அளிக்கப்படும் என்றும் எல்லா வகுப்பையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பும் அவர்கள் உடமைகளின் பாதுகாப்பும் “ அவர்கள் சிவில் உரிமைகள் விலக்குகள் யாவற்றுடனும் அவர்கட்கிடையில் வழங்கிவரும் சட்டம், நிலையங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிற் கேற்ப* அளிக்கப்படும் என்றும் உறுதி கொடுக்கப்பட்டது.
இந்தப் பத்திரத்தையே கண்டித் தலைவர் தம் உரிமைக்கு முக்கிய காரண மாகக் காட்டுகின்றனர். “ கண்டி அரசை அதன் முழுமையுடன் பாதுகாப்பதற் கும், கண்டி நாட்டினர்க்கென அவர் சுதந்திரம், நிலையங்கள், சட்டம், சமயம் ஆகியவற்றைச் சிதைவுருது பாதுகாப்பதற்கும் கண்டிச் சட்டம், வழக்கம்
i815 ஆம் சமவாயம் வாசகம் IV (பிற்சேர்க்கை W)

143
ஆகியவற்றிற்கேற்பக் கண்டியை ஆளுதற்கும் கண்டியின் வருமானத்தைக் கண்டியரசின் சீர்திருத்தம், நிர்வாகம் ஆகியவற்றிற்கு மட்டும் உபயோ கிப்பதற்கும், கண்டியர் ஒரு தனி நாட்டினத்தார் என்ற வகையில் அவர் பெருமையையும் அதிகாரத்தையும் போற்றுதற்கும் ” பிரித்தானிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என இவர்கள் வலியுறுத்துகின்றனர்; இவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயமிருந்தது. இக்கடமைகள் புறக்கணிக்கப் பட்டன என்றும் அரசாங்கம் கண்டியரை நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது என்றும், தற்போதைய நிலை தொடர்ந்து இருப்பின் பிரித்தானிய மக்களின் மரபிற்கு ஒவ்வாத வகையில் அவர்கள் கண்டி மக்கட்கு ஆநீதியும் துன்பமும் விளைவிப்பர் என்றும் இவர்கள் எடுத்துக் கூறினர். இக்கருத்துகட்காக இவர்கள் எடுத்துக்காட்டும் நியாயங்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
(1) கண்டியரல்லாதோரைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதிகளாகக் கொண்டதும் குறைந்த அளவு வாக்குரிமை கொண்ட தேர்தல் மூலம் அமைக்கப்படுவதுமான சட்டசபைக்குட்பட்ட ஆட்சி முறையில் கண்டியரசும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டி மக்கட்கான சட்டத்தை வகுப்பதும், வருமானத்தைக் கட்டுப்படுத்துவதும் கண்டியரும் பிரித்தானியரும் அல்லாத மூன்ருவது பேரிடம் சென்றுவிட்டது.
(2) கண்டிச் சட்டங்கள் பெரும்பான்மைக்கும் ஈடாக முன்னைய இடச்சுக் குடியேற்றங்களில் நிலவிய சட்டங்கள் இடம்பெற்றுள்ளன ; கண்டிய நிலையங் கள் பிறநாட்டு நிலையங்கட்கு இடமளிக்குமாறு முறை செய்யப்பட்டுள்ளது; கண்டியரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக எவ்வினத்தைச் சேர்ந்த பெளத்தரும் தலையிடுமாறு இடம் விடப்பட்டுள்ளது.
(3) அரசாங்க உத்தியோகங்கள் யாவும் கண்டியராலோ, பிரித்தா னியராலோ கொள்ளப்படாது, தலைவரின் உத்தியோகங்கள் தவிர்ந்த எனைய உத்தியோகங்கள் பெரும்பான்மையும் புறத்தாரால் கொள் ளப்பட்டுள்ளன.
(4) கண்டி மக்களின் தற்போதைய நிலை பல்வகை விடயங்களில் 1815 இல் அவர்களின் நிலையுடன் ஒப்பிடும்போது மிகத்தாழ்ந்ததாயுளது ; உதாரணமாக, கல்விக்கான வசதிகள் மிகக்குறைவு ; பழைய முறையான பன்சாலைப் பள்ளிக்கூடங்கள் அகற்றப்பட்டன; ஆயின், அவற்றிற்கீடாக வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இச்சிக்கல்களே நீக்கும்பொருட்டுக் கண்டித் தலைவர்கள் நாட்டை மூன்று சுயவாட்சிப் பகுதிகளாகப் பிரிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்துக் காட்டினர் - (1) தமிழர் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள், (2) கண்டி மாகாணங்கள் (3) பிரதானமாகக் கரைநாட்டுச்
கண்டிச் சுதேச சபையின் விண்ணப்பம்.

Page 78
44
சிங்களவர் வாழும் மேற்கு, தெற்கு மாகாணங்கள். இந்த மூன்று இனத்தவர் ஒவ்வொருவரும் தத்தமக்கென ஓர் அரசாங்கத்தை உடை ш6)JUпо)ufї ; கண்டியர் தம் இனப்பண்பைப் பாதுகாத்து வருவர் ; தெற்கிலிருந்தோ வடக்கிலிருந்தோ வரும் ஆபத்துக்குத் தாம் பலியாவர் என்ற அச்சம் அவர்கட்கு ஏற்படாது. நாடு முழுவதன் நலத்தையும் பாதிக்கும் விடயங்கட்காக இம்மூன்று அரசாங்கங்களும் ஒரு கூட்டு ஆட்சியாக்கப்படும்; இவ்வாறு எந்த ஒரு பகுதியினரும் ஏனையோரை அடக்கியாளும் நிலை எற்படாது.
இந்த உரிமை வேண்டுகோளை நோக்கும்போது 1815 ஆம் ஆண்டுச் சமவாயம் கவனிக்கப்படாது விடப்பட்டது என்று பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டபோதிலும் இதற்குக் கண்டியர் தம்மைத் தாமே பொறுப்புக் கொள்ள வேண்டுமென எம்முன் எடுத்துக் கூறப்பட்டது; எனெனின், 1817-1818 இல் நடைபெற்ற கலகம் சமவாயத்தை பயனில்லதாக்கி விட்டது. எனினும், இக்கூற்றைக் கண்டித் தலைவர்கள் ஒத்துக்கொள்ள ஆயத்தமாகவில்லை ; 1818 ஆம் ஆண்டுக் கலகத்தின் பின் ஆள்பதி விடுத்த பிரகடனத்தில் சொல்லளவில் சமவாயக் கொள்கை சிறிது மாற்றப்பட்டதாயினும் பொருளவில் அது முழுதாக உளது என்று கூறுகின்றனர். மேலும், பின்னல் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் அவர் பாராட்டாது சமவாயக் கடப்பாடு என்றும் உளதாக அரசாங்கம் கருதியதற்குச் சான்று காட்டுதல் இவர்கட்குக் கடினமாயிருக்கவில்லை. 1818 ஆம் அரசாங்க அறிக்கை பிற்சேர்க்கை V இல் அச்சிடப்பட்டுள்ளது.
கண்டியரின் உரிமை வேண்டுகோளை எதிர்ப்பவர், கண்டி மாகாணங்கள் நாட்டின் எனைய பாகங்களுடன் ஒன்றக்கப்பட்டதனல் மக்கட்கு ஐயத்திற் கிடமின்றி நன்மையே ஏற்பட்டுள்ளது என்று வாதாடுகின்றனர். அத்துடன் இவ்விணைப்பை எற்படுத்துதற்கு எடுத்துரைத்த 1831-32 ஆம் ஆண்டு அரசஆணைக்குழுவின் அறிக்கையிலே கண்டி மாகாண்ங்கட்கு அதுவரை யிருந்ததுபோல் தனியரசாங்கம் இருத்தல் புத்தியானதன்று என்றும் அது கண்டியரின் உண்மை நலத்தைப் பாதுகாப்பதற்கு மாருக இம்மக்கட்கும் கடல் சார்ந்த மாவட்டங்களிலிருந்த அயலார்க்குமிடையில் இயற்கையாக எழும் வியாபாரத்தைத் தடுக்கின்ற தென்றும், எவ்வகை யிலும் நாம் பெரிதும் விரும்பித் தூண்டி வளர்க்க வேண்டியதான பல்வகை வகுப்பினக் கலப்புறவு இதனல் தடைப்படுகிறதென்றும் “ சில சமயங்களில் மக்களின் நலத்திற்கு எதிராக இருக்கும் ” தலைவரின் செல்வாக்கை இது நிலை நிறுத்துகின்றது என்றும் காட்டப்பட்டுள்ளதாக இவர்கள் எடுத்துக்கூறினர். கண்டியரே சட்டத்தொகுப்புப்பற்றி எதிர்ப்புக்
மேன்மைதாங்கிய அரசரின் ஆணைக் குழுவினருள் ஒருவரான இலெற்றினன் கேணல் கோல்புறுக்கு அவர்கள் இலங்கை யரசு பற்றியளித்த அறிக்கை 24-திசெம்பர் 1831-ப. 22.

145
காட்டவில்லை என்றும் கண்டி மாகாணங்கட்கும் கடல்சார்ந்த மாகாணங் கட்கும் பொதுவான ஒரு சட்ட அமைப்பு வைப்பது பற்றித் தலைவர் யாதொரு எதிர்ப்பும் காட்டவில்லை என்றும், இவற்றிலிருந்து, ஏனைய மாகாணங்களிலிருந்தும் கண்டியைப் பிரித்து நின்ற தடைகளை நீக்கி நாடு முழுவதையும் ஒன்ருகக் கருதுவதுபற்றி இவர்கள் பொதுவாக எதிர்ப்புக் கொள்ளவில்லை என்றும் இவ்வறிக்கை எடுத்துக் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், இம்மேற்கோளுக்கு எதிர்ப்புக் கூறப் பட்டுள்ளது; இந்நிலை கண்டியரால் ஒருபோதும் முற்றக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்றும், பொதுவாக இம்மக்கள் கரைநாட்டுச் சிங்களவரைப் புறத்தார் என்றே இன்னும் கருதுவதாகவும், மாகாணங்கள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டதை இவர்கள் வாளா எற்றமை அரசியல் உணர்ச்சி இன்மையாலேயன்றி அவ்வொற்றுமையால் நலம் ஏற்படும் எனும் கருத்தாலன்று என்றும் சான்றுடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இக்கூற்றுக்கள், மறுப்புக்கள் யாவற்றையும் கருத்தில் கொண்டு கண்டிச் சுதேச சபையின் முறைப்பாடுகளை அனுதாபத்துடன் ஆராய்ந்துள்ளோம். இனி, வரலாறெனக் கருதப்படவேண்டிய பழைய நிகழ்ச்சிகளின் நீதியை எடுத்துக்கூற நாம் புகலவில்லை. 1815 இல் ஏற்பட்ட சமவாயம் பின்னர் 1817-1818 இல் ஏற்பட்ட புரட்சியால் வலுவற்றதாகிவிட்டதோ, புரட்சிக்குப்பின் வெளிவந்த 1818 அறிக்கைக்கு என்ன வகையில் கருத்துக் கூறுதல் வேண்டும், அக்காலத்துச் சூழ்நிலைக்கு ஏற்ற முறையிலே 1831-32 இன் வேத்தியல் ஆணைக்குழுவின் எடுத்துரைகள் அமைந்தனவோ இவ்வாணைக் குழுவின் அறிக்கை எவ்வளவில் கண்டியரின் இசை வுடனும் நல்லெண்ணத்துடனும் அமைக்கப்பட்டதோ இல்லையோ ஆகியன போன்ற கேள்விகள் யாவற்றிற்கும் வரலாற்றசிரியரும் மாணுக்கருமே விடை காணல்வேண்டும். இக்கேள்விகட்கு விடை எவ்வாறு அமையினும் அமைக, இவை பலவகையாய் முரண்பாடுடையனவாய் அமையும் என ஒரளவு உறுதியுடன் முன்னுரைக்கலாம். ஆனல், எறத்தாழ நூறு ஆண்டுகட்கு, இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் முக்கால் அளவு காலத்திற்கு, கண்டி மாகாணங்கள், நாட்டு நிர்வாக விடயத்தில் நாட்டின் எனைய பாகங்களுடன் ஒன்ருகக் கருதப்பட்டு வந்துள்ளன. இங்குள்ள மூன்று பெரும் சமுதாயத்தவர்க்கு அவரவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சுயவாட்சி அளித்து, அவர்களுள் ஒருபகுதியினர்க்கேனும் யாவர்க்குமேனும் தீங்கு எற்படாதவண்ணம் பரிசோதனை செய்யும் காலம் கடந்துவிட்டது. நாம் முன்னர் ஒர் அதிகாரத்தில் காட்டியதுபோல் பல பகுதி மக்களின் நலங்களும் தற்போது மிக நெருக்கமாக ஒன்ருேடு ஒன்று பின்னப்பட்டுள்ளன ; அவற்றைப் பிரிப்பது பழியஞ்சா மடைமையாகும். இதே காரணத்தால்தான் தற்போது சமூகத்திற்குப் பெருங்கேடாகவிருந்து பல சமுதாயங்களிடையும் பிளவை வளர்த்து, நாட்டின் பொதுநலத்திற்கு

Page 79
疆46
மேலாக சமய இனப்போட்டிகளைப் பெரிதெனக் கருதுமாறு செய்யும் இனப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்குமாறு ஊக்குகின்றேம். இப்பிளவை மறைத்தற்கும் இலங்கையின் பல்வேறு இனங்களும் ஒருங்குசேர்ந்து ஒற்றுமையும் முன்னேற்றமும் உடைய மக்களாதற்கும், குறுகிய இனப்பற்று நோக்கன்றி நாட்டினப்பற்று நோக்கு வளர்தற்கும் எம்மாலியன்றவரை ஆவன செய்தலையே நோக்காகக் கொண்டுள்ளோம். கடந்த நூறு ஆண்டுகளாகக் கண்டியர்க்கு வினையோருடன் ஏற்பட்டுவந்த கலப்புறவை நாம் புறக்கணிப்பதாயின் நம் நோக்கத்திற்கு மாறுபட்டவரா வோம் ; ஆதலின் அதற்கு மாறக அக்கலப்புறவை வரவேற்று அதை வளர்க்க முயலுதல் வேண்டும். நாம் ஏலவே எடுத்துரைத்துள்ள வாக்குரிமை விரிவு, கல்வி பெறுதற்குக் கூடுதலான வாய்ப்புக்கள் (இவை அளிக்கப்படும் என எமக்கு உறுதியளிக்கப்பட்டது), நாம் முக்கியத்துவம் அளித்திருக்கும் உள்ளூர்ச் சுயவாட்சி முறைகளை ஊக்கப்படுத்தல் ஆகியவற்றின் பலனகக் கண்டியர் இதுவரை பெற்றுவந்ததிலும் கூடுதலான சுயவாட்சியுரிமை பெறுவர் என நம்புகிருேம். இதுவரை தடைப்பட்டிருந்த அவர் அரசியல் வளர்ச்சி தூண்டப்பட்டு அதன் பலனக நாட்டின் அரசாட்சியில் தம் முழுப்பங்கையும் அவர் எற்கக் கூடியவராவர்; எனைய இனங்கள் தம்மை அடக்கக்கூடும் என்ற அவர் அச்சத்திற்கும் இடம் ஏற்படாது என்பவற்றிலும் ஐயமில்லை. தம் பண்டையரசின்பாலும் வரலாற்றுப் புகழுடை நிறுவனங்கள்பாலும் அவர் கொண்ட இறுமாப்பு ஓர் உயர் நாட்டின ஊக்கில் பங்குபெறுமென்றும் ஓர் ஒன்றிய வல் லிலங்கையரசின் வளர்ச்சியிலும் இறுதி மலர்விலும் அது விழுமிய முழுமையையும் பெறுமென்றும் நாம் நம்புகிருேம்.
இலங்கை வாழ் மக்கள் ஏனைய நாட்டினத்தவரிலும் கூடிய அளவு காலம், நிலையான அரசியலைப் பெற்றிருந்தனர்என இலங்கையின் வரலாறு காட்டுகிறதெனினும் அவர்கட்கு ஏற்பட்ட பேரிடர்களும் இறுதியில் முழு நாடும் கைப்பற்றப்பட்டமையும், அவர்களுள் பல்வேறு பகுதியினர்க்கும் இடையே நிகழ்ந்த போராட்டங்களாலானவை என்பதை நாம் இவ்விடத்துக் கவனித்தல் வேண்டும். பல இனங்களும் ஒன்று கூடி ஒரு கூட்டமைப்புடன் இருந்திருந்தால் நாட்டின் ஒரு பகுதியில் செல்வம் குன்றி ஏற்பட்ட அழிவையும் ஒன்றன் பின் ஒன்ருகப் படையெடுப்புக்கள் நிகழ்ந்து இறுதியில் நாடு முழுவதையும் அவை பாதித்தமையையும் தடுத்திருக்கலாம். பிரித்தானியப் பொதுநலவமைப்பில் அடங்கியோராய் இலங்கை மக்கள் புதுச் சுதந்திரம் பெற எழுகின்றனர்; ஆதலால், இந்நாட்டினத்தின் நல் வளர்ச்சிக்கு மட்டுமன்றிப் பேரரசின் பாதுகாப்பிற்கும் அவர்கள் ஒற்றுமை அவசியமாகின்றது; எனெனில் பேரரசின் பலம் அதன் முக்கிய பாகங்களின் பலத்தில் தங்கியுள்ளது.

14
இந்நிலையை உணரும் வகையில் கண்டியர் முன்னேறுவர் என நாம் உறுதி கொண்டுள்ளோம். அதே போல கரைநாட்டுச் சிங்களவரும், நாட்டிற்குகந்த நல்ல குறிக்கோள் அடக்கியாள்வதன்று, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதே என்றும், ஓர் பிரதேசப்பற்று நாட்டின அமைவையும் முன்னேற்றத்தையும் அளிக்கும் என்றும் உணர்வர் என நம்புகிறேம். பிரித்தனின் ஒற்றுமை அங்கு வாழும் பல்வேறு இனத்தாரின் தனிப்பண் புகளையும் வழக்கங்களையும் அடக்குவதால் எற்பட்டதன்று ; நாட்டின் எதிர்கால நலனிற்கு இப்பல்வேறு இனத்தாரும் பணிசெய்து ஒருவர்க் கொருவர் உதவுவதாலேயே எற்பட்டதாகும். இலங்கையிலே அரசாட் சிக்குப் பொறுப்பாக இருப்போர் யாவரும், தமிழர், கண்டியர், கரைநாட்டுச் சிங்களவர் முதலிய நாட்டின் பல்வேறு பகுதியினரும் வாழும் சூழல்; அவர்கள் மனநிலை ஆகியவற்றை நன்கு அறிந்திருத்தல் வேண் டும். இந்த அறிவைப் பெறுதற்கு உதவும் வகையில் அரசாங்க சபை, இப்பல்வேறு இனத்தவரும் வாழும் இடங்கட்கு அருகாமையில் தன்தொழிலை நடத்துதல் எற்புடைத்தாகும் என நம்புகிறேம். அஃதாவது இடையிடையே அரசாங்க சபை கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் கூடுதல் வேண்டும் என எடுத்துக் கூறுகிறேம். இதனைச் செயற்படுத்துவதில் சில இடர்கள். எற்படுதல் கூடும் என நாம் அறிகிருேம் ; ஆயினும், மலை நாட்டு கரைநாட்டு மக்கள் யாவரினதும் சமஉரிமை நிலைமையை உணர்ந்து போற்றுவதில் இடவசதி பொருள்செலவு ஆகியனபற்றிய கேள்விகள் இடையூறக இருத்தலாகாது.

Page 80
அதிகாரம் VII
உள்ளூராட்சி தற்போதுள்ள உள்ளூர்ச் சபைகள்
தொகையும் இயல்பும்
பொதுவான நிர்வாகத்தின் பொருட்டு நாடு ஒன்பது மாகாணங்க ளாகவும் பத்தொன்பது வருமான (இவை தேர்தல் தொகுதிகளுமாகும்) மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மாகாணங்கள் மாகாண முகவர்களின் பொறுப்பிலுள்ளன ; இவர்க்கு உதவி மாகாண முகவர் உதவி அளிப்பர் ; பின்னவர் மாகாணத் தலைமையகமல்லாத மாவட்டத் தலைமையகங்களில் உறைவர். மாவட்டங்கள் பிரதான தலைமைக்காரரின் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன ; இவற்றில் 110 உள ; இவற்றுள் உயர் தலைமைக்காரரின் பொறுப்பில் 613 பிரிவுகள் வரை அடங்கியுள்ளன ; இவற்றின் உட்பிரிவுகள் ஏறத்தாழ 4000 கிராமங்களும் சிற்றுார்களும் கொண்டுள்ளன ; இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிராமத் தலைமையா ளனதும் பொறுப்பில் உள்ளன. பிரதான தலைமைக்காரர், உயர் தலைமைக்காரர், கிராமத் தலைமைக்காரர் ஆகியோர் யாவரும் கண்டி, கரைநாட்டுச் சிங்கள, தமிழ் மாவட்டங்கள் ஆகியவற்றில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்; ஆயின், இங்கு குறிக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களிலிருந்து இவர்களது ஆட்சியுரிமை வற்றத்தாழ்வு நன்கு புலப்படுகின்றது. இவர்கள் அரசாங்க உத்தியோகத்தர். குற் றத்தைக் கண்டு பிடித்தல், தடுத்தல், சிறு வருமானங்களைச் சேகரித்தல், பதிவு, புள்ளிவிவரம் சேகரித்தல் ஆகியன கிராம விதானையின் கடமை களாகும் ; இவர்களை உயர் தலைமைக்காரர் மேற்பார்வை செய்வர் ; இவ்வுயர் தலைமைக்காரரைப் பிரதான தலைமைக்காரர் மேற்பார்வை செய்வர். இறுதியாகக் கூறப்பட்ட பிரதான தலைமைக்காரரே, நாட்டில் நடப்பவற்றையும் மக்களின் தேவைகளையும் அரசாங்கத்திற்கு எடுத்துரைப் பதற்கும் அரசாங்கத்தின் கட்டளைகளையும் விருப்பங்களையும் மக்கள் அறிந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துதற்கும் பொறுப்பானவர்.
இலங்கையில் பண்டைக் காலத்தில் மன்னரின் அலுவல்களைக் கவனித்து வந்த அரச உத்தியோகத்தர்க்கு ஈடாக இத்தலைமைக்காரர், முக்கியமாகப் பிரதான தலைமைக்காரர் விளங்குகின்றனர். இவ்வரச நிர்வாகத்துடன் கிராம சபைகளும் இருந்தன ; பழைய மன்னன் ஒருவனல் பிரிக்கப்பட்ட சிறு நிலப்பரப்புகளை இக்கிராம சபைகள் ஆண்டு வந்தன. இத்தகைய ஒரு நிலப்பரப்பிலிருந்த கிராமத்தவர் தொகுதிகளின் பிரதிநிதிகளைக்
48

149
கொண்டதாக இக்கிராமக் கழகம் எனும் கன்சபா விளங்கியது ; இத்தொகுதி மக்களின் அலுவல்களைக் கவனிப்பதற்கும், நிர்வாகம் நடத்துதற்கும், தகராறுகளைத் தீர்ப்பதற்கும் அரசுக்குரிய வரிகளை இறுக்க உதவுவதற்கும் இப்பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இவ்வமைப்பு சுதேச ஆட்சியாளரின் பல நூற்றண்டு ஆட்சியிலும் போத்துக்கேயர், இடச்சுக்காரர் ஆகியோரின் ஆட்சியிலும் நிலைபெற்று வந்து சென்ற நூற்றண்டின் நடுப்பகுதியில் வழக்கற்றுப்பின் 70 ஆம் ஆண்டு வரையில் மீண்டும் வழக்கில் கொணரப்பட்டது; அன்று தொட்டு நன்முறையில் உழவு, நீர்ப்பாய்ச்சல், சுகாதாரம் ஆகியவற்றைக் கவனிக்கவும் சிக்கலான மரபுரிமையால் வந்த தகராறுகளைத்தீர்க்கவும் உதவும் பொருட்டு இவ்வமைப்பைப் பண்டைய வளத்துடன் நிறுவுதற்கு முயற்சி எடுக்கப் பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 657 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் 371 பகுதிகளில் இவ்வமைப்புக்குப் பதிலாகக் கிராமச் சங்கங்கள் உள்ளன ; இவை பொதுவாக, நிர்வாகத்திற்கு மட்டும் உரியன ; இவற்றுடன் நீதி தொடர்பான சிறு விடயங்களைக் கவனித்தற் பொருட்டுக் கிராம முறை மன்றுகள் உள. ஒவ்வொரு தலைமைக்காரன் பிரிவிற்கும் ஒவ்வொரு கிராம முறை மன்றும் இருந்தது ; அதற்கு அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தலைமை வகிப்பார் ; அவர்க்கு உதவியாக மூவர் சீட்டுமூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வடமாகாணங்களிலே கிராம முறை மன்றுகள் அமைக்கப்படவில்லை ; அங்கு கிராமச் சங்கங்கள் சிறிதளவு நீதி அதிகாரம் பெற்றுள்ளன. மிகப் பழைய காலந்தொட்டு நிலவிவந்த உள்ளூராட்சி அமைப்பு கிராமச் சங்கமொன்றேயாகும். தற்காலத் தேவைகளை, பிரதானமாக சுகாதாரத் தேவைகளை நிரப்புதற் பொருட்டு உள்ளூராட்சிக்கென ஓர் அமைப்பு 1892 இலே நிறுவப்பட்டது; இது சிறு நகர்களின் நிர்வாகத்தைக் கவனித்தற்கேயாம். இத்தகைய நகர்கள் சுகாதாரச் சபைகளின் கீழ் அடங்கும் , தற்போது 110 நகர்களை அடக்கிய இத்தகைய சபைகள் பத்தொன்பது உள. பெயருக்கேற்ப இச்சபைகள் பெரும்பாலும் சுகாத்ாரம் தொடர்பான விடயங்களையே ஆளுகின் றனவெனினும், அவற்றுடன், சிறிதளவு குடித்தொகையுள்ள இந்நிலப்பரப் புக்களின் ஆட்சிமுறை தொடர்பான விடயங்களையும் அவை கவனித்து வருகின்றன. சுகாதாரச் சபைகளின் சட்டங்கள், கிராமச் சங்கங்களின் சட்டங்களைப்போலக், கிராம முறைமன்றுகள் மூலம் நடைமுறையில் விதிப்படுத்தப்படக்கூடியன. 1898 இல் பெரிய நகர்களை உள்ளூர்ச்சபைகளின் ஆட்சிக் கீழ் அமைப்பதன்மூலம் நிறை நிருவாகம் நடத்துதற்கு முயற்சி எடுக்கப்பட்டது ; சிறு நகர்த் தொகுதிகள் தொடர்பாகச் சுகாதாரச் சபைகள் எத்தகைய அதிகாரம் பெற்றிருந்தனவோ அத்தகைய அதிகாரத்தைப்

Page 81
T50
பெரும் நகர்கள் தொடர்பாக இச்சபைகள் பெற்றிருந்தன. பதின்மூன்று பெரிய நகர்கட்குத் தற்போது உள்ளூர்ச் சபைகள் உள. 1920 இல் இன்னும் நிறைவான உள்ளூராட்சி முறை நிறுவ முயலப்பட்டது : அப்போது மாநகரசங்க நிலப்பகுதிகளல்லாத இடங்களில் மாவட்டக் கழகங் கள் நிறுவுதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது; இச் சங்கங்கள்பற்றிப் பின்னர் குறிப்பிடப்படும். பொது நிருவாகம், பொதுப்பாதைகள் தொடர்பான சட்டம், கட்டுப்பாடு, பொதுநலவழி, பொதுச்சேவை, உள்ளூர்த் தேவைக்ள், பொதுநலம் ஆகியவற்றிற்கெல்லாம் இவை பொறுப்பாக இருத்தற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. இவற்றை மூவகையாக்கத் திட்டமிருந்தது. பெருநகர்கட்கு நகர சபைகளும், நாட்டில் காடு நிறைந்த குடி நெருக்கற்ற குறைந்த முன்னேற்றமுடைய பகுதிகட்கு ஊர்ச் சபைகளும், ஆங்காங்கு செறிந்த குடித்தொகுதிகள் உடைய மற்றைப் பொது நிலைகளில் ஒரே தன்மையவாயிருக்கின்ற நிலப்பரப்புகட்குப் பொதுச் சபைகளும் நிறுவப் படவிருந்தன. இத்திட்டத்தின்கீழ் எட்டு நகரசபைகள் நிறுவப்பட்டன : ஆயின், ஊர்ச் சபையோ, பொதுச் சபையோ யாதாயினும் நிறுவப்படவில்லை. நகர மாவட்டக் கழகங்களால் ஆளப்பட்ட வெவ்வேறு பகுதிகளின் குடித் தொகை 7,360 தொடக்கம் 43,529 வரையிலமைந்திருந்தது. கிராமச் சங்கங் கள் பண்டை வழக்கிலிருந்து எழுந்தவை : சுகாதார சபைகளும் உள்ளூர்ச் சபைகளும் நகர மாவட்டக் கழகங்களும், தற்கால நிலையில் ஏற்படும் வளர்ச்சி யுடன படிப்படியாக நிர்வாக முன்னேற்றம் வளர்க்கும் முயற்சியின் பயனகத் தோன்றியவை ; 1865 ஆம் ஆண்டு ஆகிய பழைய காலத்திலேயே மாநகர சங்கங்களைத் தோற்றுவித்தமை, பிரித்தனின் பொறுப்பிலிருந்த நாடுகளில் பிரித்தானிய மக்களாட்சி முறை நிலையங்களை நிலைநாட்ட வேண்டுமென அக்காலத்துக்கியல்பாய் உரித்தான ஒரவாவால் ஆனது எனலாம். இத்தகைய நிலையங்கள் அந்நாள் தொட்டு கொழும்பு (1926 இல் குடித்தொகை 258,907), கண்டி (1921 இல் 32,562), காலி (1921 இல் 39,073) ஆகிய இடங்களில் இருந்து வந்திருக்கின்றன. இன்னும் பழைமையானவோர் உள்ளூராட்சி அமைப்பு தெருக்குழுவாகும். அரசாங்கம் அளிக்கும் கொடையின் உதவியாலும் தோட்டங்களிலிருந்து வரும் பங்குப் பணத்தின் உதவியாலும் பாதுகாக்கப்படும் தெருக்களில், நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்தற்கும் கட்டுப்படுத்துதற்குமென, 1861 இலே மாகாணங்கட்கும் மாவட்டங்கட்குமென நிறுவப்பட்டன இத்தெருக்குழுக்கள். இவ்விடத்தில், ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் தொடர் பாகக் கல்வி அதிபதிக்கு உதவியளித்தற் பொருட்டு, மாநகரசங்க மாவட்டக் கழகப் பகுதிகளிலும், நிறைவேற்று சபையிலமைந்த ஆள்பதி அறிவித்தல் கொடுத்த பகுதிகளிலும், 1920 ஆம் ஆண்டுக் கட்டளை ஒன்றின்படி அமைக்கப்பட்ட மாவட்டக்கல்விக் குழுக்கள் பற்றியும், இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

151
աnւյւ
இவ்வூராட்சி அமைப்புக்கள் யாவும் பல்வேறு தொடக்கத்தனவாயிருப் பதைக் கொண்டு நாம் ஊகித்தறியுமாறுபோல், இவற்றின் யாப்புக்களும் பெருமளவில் வேறுபடுகின்றன. யாவர்க்கும் பொதுவான கேள்விகளைத் தீர்ப்பதற்கெனக் கிராமத்தின் பிரதான, அனுபவம் வாய்ந்த மக்களவையைக் கொண்டதாக விளங்கிய பழைய கிராமக் கழகங்களி *ருந்து தோன்றிய கிராமச் சங்கங்கள், ஆண் முதியோர் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இச்சங்கங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைத் தம் கையில் வைத்திருத்தற்குக் கிராமத்தவர்க்கு வாய்ப்பு உண்டு. உண்மையில் இவ்வதிகாரங்கள் குறிப்பிட்ட சிலரிடம் விடப் படுகின்றன ; இச்சங்கங்கள் சிறிதளவு உடைமைத் தகுதியுடைய, 25 வயதிற்கு மேற்பட்ட கல்வியறிவுடைய, அப்பகுதியில் உறையும் ஆண்களைக்கொண்டனவாக விளங்குகின்றன. கிராமச் சங்கத்தின் தலைவரை முன்பு பிரதான தலைமைக்காரரே இப்பதவியை எப்போதும் கொள்வர்இப்போது இச்சங்கமே தேர்ந்தெடுக்கலாம். கிராமச் சங்கங்கள்பற்றி அண்மையில் வந்த சீர்திருத்தம் தொடர்பாக இவ்வுரிமை உபயோகிக்கப் பட்ட 117 இடங்களில் 70 அலுவல் பற்றற்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட் டனர். சுகாதாரச் சபைகள் விடயத்தில் உறுப்பினர் யாவரும் அரசாங் கத்தால் நியமிக்கப்படுவர் ; மாகாண முகவர் அல்லது மாகாண உதவி முகவர் தலைவராயிருப்பர். உள்ளூர்ச் சபைகள், சமமான அளவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரையும் நியமிக்கப்பட்ட உறுப்பினரையும் "உடையன ; நியமிக்கப்பட்ட உறுப்பினருள் ஒருவர் மாகாண முகவர் ; இவரே தலைவராயிருப்பர். வீடுடையோரே தேர்வினைச் செய்பவர். நகர மாவட்டக் கழகங்களில் உறுப்பினருள் மூன்றில் ஒரு பகுதியினர் நியமிக்கப்படுவர் ; மூன்றில் இரு பகுதியினர் சிறிதளவு உடைமைத்தகுதியுடைய வாக்காளரால் தேர்ந்தெடுக்கப்படுவர். கழகங்கள் தொடங்கிய முதற் சிலவாண்டுகளின்போது மாகாண முகவரோ, மாகாண உதவி முகவரோ தலைவராயிருந்தார் ; தற்போது தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகின்றர். தொடக்கத்தில் மாநகர சங்கங்கள் மாகாண முகவரைத் தலைவராகக் கொண்டனவாயும் வீடுடையோரால் நகரின் மாவட்டம் ஒன்றிற்கு ஒர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தாரையும், நகரின் மாவட்டங்களின் தொகையில் பாதித்தொகைக்கு மேற்படாத தொகையளவு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றையோரையும் உடையனவாயிருந்தன. இதன் பின்னர் எழுந்த சட்டத்தால் சங்கங்களின் யாப்பு மாற்றப்பட்டது; இதன்படி தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர் தொகை மூன்றில் இரண்டு பங்கிலிருந்து முழுவதன் அரைப்பங்காகக் குறைக்கப்பட்டது; அத்துடன் பழைய திட்டத்திலே, மூன்றே, நான்கோ சங்கத்தார் கூடி அண்மயும் நடுவர் குழு இருக்கைக்கு ஈடாக ஒரு புது மாநகரசங்க நிருவாக அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போதுள்ள வாக்காளர், உடைமை அல்லது . 7-ஜே. என். பி 22574 (3/60).

Page 82
52
வருமானத் தகுதி அல்லது உயர் கல்வித்தகுதி உடைய ஆண்களாவர். சங்கத்தார் நியாயமானவளவு உடைமை உடையராதல் வேண்டும். முழு நிர்வாக அதிகாரமும் பொறுப்பும் உடைய சங்கத்தலைவர், கொழும்பு மாநகர சங்கமாயின் குடியியற் சேவையைச் சேர்ந்தவராதல் வேண்டும் ; தற்போது கண்டியைப் பொறுத்தவரையிலும் இவ்வாறே ; காலியில் மாகாண முகவரே இன்னும் தலைவராயுள்ளார். மாகாணத் தெருக் குழுக்களிற்கு மாகாண முகவர் தலைமை தாங்குகிறர் ; மாடி!'Aக குழுக்களுக்கு மாகாண உதவி முகவர் தலைமை தாங்குகிறர் ; இரு குழுக்களிலும் பொதுவேலைத் திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றுள்ளார். மாகாணத் தெருக்குழுவில் மற்றும் வேறு நியமிக்கப்பட்ட உறுப்பினர் உளர் ; மாவட்டத் தெருக் குழுவில் ஐரோப்பியர், பேகர், இலங்கை வாழ்நர் ஆகியோர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் உளர். கல்விக் கழகங்கள் ஆறிற்குக் குறையாத ஒன்பதிற்கு மேற்படாத நியமிக்கப்பட்ட உறுப்பினரைக் கொண்டுள்ளன ; மாநகரச் சங்கங்களிலும், நகர் மாவட்டக் கழகங்களிலும் இவர்களுள் இருவர் உள்ளூராட்சியாளரால் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு குழுவும் தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.
அதிகாரங்களும் கடமைகளும்
பல்வேறு உள்ளூர்ச் சபைகளின் அதிகாரங்களும் கடமைகளும் எலவே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உள்ளூராட்சிச் சட்டத்தில் (1920 ஆம் ஆண்டு இல. 11) நகர மாவட்டக் கழகங்கள் தொடர்பாகக் கூறுமிடத்து இவை முழுமையிலும் தருக்க முறையிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன வாதலால் இவ்விடத்துச் சில சொல்லல் போதும் ; இக்கழகங்கள், சுகாதாரம், கட்டிடங்கள், சந்தைகள் ஆகிய வேலைகளைக் கட்டியாள்கின்றன ; மலகூடவேலை, தோட்டிவேலை ஆகியவற்றைக் கவனிக்கின்றன ; சிதையக் கூடிய, ஆபத்தான, சுகாதாரமற்ற கட்டிடங்களைக் கவனிக்கின்றன் ; தொல்லைகளைக் குறைக்கின்றன ; தெருக்கட்கும் பொதுவிடங்கட்கும் விளக்கேற்றுகின்றன; பொதுவேலைத் திணைக்களத்தின் பொறுப்பி லிருக்காத எனைய பொதுப் போக்குவரத்துத் தெருக்களைப் பாதுகாக்கின்றன; புதுக் கட்டிடங்கட்கும் பழைய கட்டிடங்களில் மாற்றங்கட்கும் அனுமதியளிக் கின்றன. காணியோ கட்டிடங்களோ வாங்குதற்கும் விற்பதற்கும் இவற்றிற்கு அதிகாரம் உண்டு ; ஒப்பந்தங்கள் செய்தற்கும் பொதுநலத்தை விருத்தி செய்தற்கும் நீர்வழங்கல், மின்விளக்கு, சந்தைகள் போன்ற பொதுச் சேவை அளித்தற்கும் உத்தியோகத்தரையும் ஊழியரையும் நியமித்தற்கும் அதிகாரம் உண்டு ; துணைவிதிகள் ஆக்குதற்கு இவற்றிற்குப் பரந்த அதிகாரம் உண்டு. மாநகர சங்கங்களின் உரிமை ஓரளவு கூடுதலான விரிவுடையது ; இது பள்ளிக்கூடங்களை நடத்துதல், எழைகட்கான உதவி ஆகியவற்றையும் அடக்கியுள்ளது. உள்ளூர்ச் சபைகள், சுகாதாரச் சபைகள்

153
ஆகியவற்றின் அதிகாரங்கள் இயல்பாகவே இவற்றினும் குறுகியவை. கிராமச் சங்கங்கள் இதே விடயங்கள்பற்றி, அவை கிராம நிலைக்கு ஏற்றவை என்ற அளவில் விதிகள் வகுக்கலாம் ; பள்ளிக் கூடங்கள் நிறுவுதல், பழுதுபார்த்தல், ஒழுங்கற்ற நடத்தையைத் தடுத்தல், கமம், நீர்ப்பாய்ச்சல் ஆகியன தொடர்பாகப் பழைய வழக்கங்களை வலுவில் புகுத்தல் ஆகியவற் ### இவை வழி வகுக்கலாம். வருவாய் வழிகள்
கிராமச் சங்கங்களுக்குள்ள முக்கிய வருவாய், ஊழியங்களுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் வரியேயாகும். இது ஒவ்வொரு முதிர்ந்த ஆடவனுக்கும் ஓராண்டுக்கு பத்து நாளை வேலைக்கீடாகக் கணிக்கப்படும். மற்றை வருவாய்கள் விதிப் பிரமாணங்களை மீறியதற்கு விதிக்கப்பட்ட தண்டனைப் பணமும் சேவைகளுக்காகப் பெறும் ஊதியமுமாகும். காலத்துக்குக் காலம் பொதுப் பயனுக்குரியவேலைகளைச் செய்வதற்காக நன்கொடைகள் அரசினராற் கொடுக்கப்படும். பாலங்கள், தெருக்கள் அமைப்பதே பொது நலத்துக்குரிய சேவைகளாம். இச்சங்கங்களின் குழுக்களுக்குக் கடன் வாங்க அதிகாரமுண்டு. அசையா உடைமைகளின் ஆண்டுப் பெறுமானத்தில் ஒரு சதவீதத்திலே ஒரு பொது வரியையும், நீர் வரியையும் பெற சுகாதார, உள்ளூர்ச் சபைகளுக்கு உரிமையுண்டு. இவை வண்டிகள், மிருகங்கள் ஆகியவற்றில் வரி விதிக்கலாம். அவ்வாறே செய்யும் சேவைகளுக்கும் ஊதியம் பெறலாம். இவை சில நிபந்தனைகளுக் கிணங்க காசுகடன் வாங்கலாம். மாவட்டச் சபைகளின் வகைகளிலே அசையா உடைமைகளின் ஆண்டுப் பெறுமதியில் விதிக்கக்கூடிய வரிவீதத்திற்கு எல்லையில்லை. மற்றை வருவாய்களின் வகைகளோ சுகாதார, உள்ளூர்ச் சபைகளுக்கு உரியவைபோலவே இருக்கும். பொலிசு வரியினிடத்திற்கும் அந்த மாவட்டத்திலே விதிக்கப்பட்ட உத்தரவுச் சீட்டு வரிகளினிடத்திற்கும் பதிலாக இவைக்கு அரசாங்கக் கொடைகள் கொடுக்கப் படும். இன்னும், ஊழிய வரியினிடத்திற்குப் பதிலாகவும் கொடையளிக்கப் படும். மாவட்டச் சபையானது ஒர் ஆண்டிற் கிடைக்கும் வரி, இறுப்பு ஆகியவற் றிலிருந்து பத்து மடங்குக்கு மேற்படாத ஒரு தொகையைக் கடனுகப் பெறலாம். இவ்வாறே மாநகர சங்கமும் பெறலாம். ஆனல், இதனுடைய வருவாய் வழிகளோ பல்வகைப் பட்டனவாயிருக்கும். ஆனல், எலவே நாம் கூறிய சங்கங்களின் வகைகளைப் போன்றே அவையுமிருக்கும். தெருச் சபைகளின் வருவாய் வழிகளோ இளைப்பாறகங்களின் ஊதியத்திலிருந்து வருவனவாம். இன்னும், அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்கும் கொடையும் சிறப்புக் கொடையும் இதிலடங்கும். மாவட்டக் கல்விக் குழுக்களோ, கல்வி அதிபதி மூலமாக அரசாங்கம் கொடுக்கும் பணத் திலேயே முழுவதும் தங்கியுள்ளன. இப்பணத்தை அரசாங்கப் பாடசாலை களுக்கே செலவழிக்கலாம். சில சிறப்பு வகைகளிலே அதிபதி இசைவுடன் மற்றைப் பாட்சாலைகளுக்கும் அதைச் செலவழிக்கலாம்.

Page 83
154
கட்டுப்பாடு
கட்டுப்பாட்டு முறையிலே கிராமச் சங்கமும் கிராம முறை மன்றும், அரசாங்க முகவர் அதிகாரத்திலிருக்கும். அவர் கிராமப் பணத்தொகை யைச் செலவழிப்பதில் மேற்பார்வை பார்ப்பார். அலுவலர்களை நியமிப்ப தற்கும் அவர் இசைவு வேண்டும். கிராமச் சங்கங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வேண்டுமென்றல் அவற்றில் தலையிடவும் அவரு"கு முடியும். இவ் வழியிலேயே அவர் அதிகாரம் செல்லும். சுகாதாரச் சபைகளும் உள்ளூர்ச் சபைகளும் தம்மை வழிகாட்டவோ துணைசெய்யவோ கட்டுப்படுத்தவோ ஒரு மத்திய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை ; ஆயினும் அவற்றின் துணைவிதிகளை நிறைவேற்று சபையிலமர்ந்த ஆள்ப்தி யின் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். சுகாதாரச் சபைகளின் கணக்குகளை அரசாங்கம் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. ஆனல் உள்ளூர்ச் சபைகளின் கணக்கைச்சட்டத்திற்கியையப் பரிசோதனை செய்யவேண்டும். மாவட்டக் கழகங்களே உள்ளூர்ச் சபையின் கட்டுப்பாடு, மேற்பார்வை ஆகியவற்றின் கீழமைந்த உள்ளூர்ச் சபைகளாகும். இதற்காகவே, இச்சபை எற்படுத்தப்பட்டது. இச்சபையானது இத்தாபனங் களுக்கு வேண்டிய அறிவுரைகளை அளித்து வேண்டிய தகவல்களையும் கொடுக்கின்றது. அவர்களுடைய துணைவிதிகளை ஆராய்ந்து ஒன்ருய் இணைக்கின்றது. உள்ளூர் ஆட்சிச் செலவிற்காகச் சட்டசபை வாக்களித்த பணக் கொடைகளை அவைக்கு அளிக்கின்றது. இம்மாவட்டக் கழகங்களின் கணக்குக்களை அரசாங்கம் பரிசோதனை செய்கின்றது. மாநகர சங்தங் களின் கட்டுப்பாட்டை நிறைவேற்று சபையிலமைந்த ஆள்பதி ஆட்சி செய்வார். இச்சங்கங்கள் யாதாயினும் ஒரு தொழிலைச் செய்யாவிடத்து அதனைக் கலைக்க அவர்க்கு முடியும். மாநகர சங்கத்தின் துணைவிதி களுக்கு அவருடைய இசைவு வேண்டும். கடன்பணம் எடுப்பதற் கும் அவருடைய அதிகாரம் வேண்டும். மாகாணத் தெருக் குழுக்கள் ஒன்றுடனென்று தொடர்பு இல்லாதன ; சட்டத்தின்படி அவைகளின் கணக்குக்களை அரசாங்கம் தணிக்கை செய்யவேண்டியதில்லை. மாவட்டக் கல்விக் குழுக்களின் வேலைகள் கல்விச் சபை ஆக்கிய விதிகளுக்கியைய நடாத்தப்படும். அவை கல்வி அதிபதியின் கட்டுப்பாட்டிலேயே முழுவதும் இயங்கும்.
வேலை செய்யும் முறை
மேற்கூறிய நிறுவனங்கள் தொழிற்படும் வழிவகைகளைப்பற்றி ஆராய்கின்றபொழுது இவ்வாணைக்குழுவின் முன்னர் அளிக்கப்பட்ட சான்றுகளிலிருந்து மக்களிடையே தலைமைக்காரன் முறைக்கு ஒர் எதிர்ப்பு இருந்து வந்ததென்பது புலனயது ; ஆயினும், இதற்கீடாக அமைந்த வேறெரு முறையும் நமக்கு எடுத்தோதப்படவில்லை. தலைமைக்காரருக்கு

55
எதிராகப் பொதுவாக எடுத்துக் க்றப்பட்ட குற்றச்சாட்டுக்கள் யாவெனில், இவர்கள் வழக்கமாகக் கிராமத்தவரிடமிருந்து ஊழியம் பெற்றனரென் பதும், பரிசுகள் பெற்றனரென்பதும், கையூட்டுக்கள் பெற்றனரென்பதுமாம். ஆயினும், இதற்கு விதிவிலக்காயமைந்தவர்கள் உளர் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. பிரதம தலைமைக்காரனே இங்கு நன்ருகத் தாக்கப் பட்டான். இவற்றிற்குத் தேவையான நேரெடுத்துக்காட்டுக்கள் என் கொடுக்கப்படவில்லையென்ற வினவிற்கு இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருவதில் உள்ள அபாயமும் இடரும் சுட்டிக் காட்டப்பட்டன. இலங்கைச் சான்றுகள் கிராமச் சங்கங்களைப்பற்றிக் கூறுகின்றபொழுது, அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருத்தல் வேண்டுமென்ற உரிமை அளிக்கப்பட்டதனல், அவை நாட்டு மக்களின் விருப்பினைப் பெரிதும் கவர்ந்துள்ளன என்றும் அவை நன்முறையில் தொழிற்பட்டன வென்றும் கூறினர். எந்தச் சபைக்கும் பிரதம தலைமைக்காரன் தலைவராக நியமிக்கப்படலாகாது என்ற கருத்துரைகள் நமக்கு அறிவிக்கப்பட்டன. இன்னும், உறுப்பினர்களைக் குடவோலை முறையால் தெரிந்தெடுக்க வேண்டுமென்றும் இச்சங்கங்களுக்கு நல்ல பண வருவாய்கள் இருத்தல் வேண்டுமென்றும் இங்கு எடுத்தோதப்பட்டது. கிராமச் சங்கத்தின் கிராம முறை மன்றுகள் ஆகியவற்றின் சட்டவ திகாரத்திற்கு ஐரோப்பியர், பறங்கியர், இறக்குமதி செய்யப்பட்ட வேளாண்மைத் தொழிலாளிகள் ஆட்பட்டவராக இருக்கவில்லையென்றும் நமக்கு எடுத்துக்காட்டப்பட்டது; அது தவறு என்றும் கூறப்பட்டது. சுகாதாரச் சபைகளின் வேலைகளைப்பற்றி அதிகம் நமக்கு எடுத்துக் கூறப்படவில்லை. சில சான்றுகள் நமக்குக் கூறியவாறு, கிராமச் சங்கங்கள் பெற்ற மக்கள் மதிப்பினை இச்சபைகளின் ஆட்சி பெறவில்லை என்பது நமக்குப் புலனயது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இல்லாமையே இதற்குக் காரணமாகும். உள்ளூர்ச்சபைக் கட்டளைச் சட்டத்திற்கியைய நடாத்திய நகர்களின் ஆட்சிகளைப் பற்றிக் குறைவாகவோ, நன்றகவோ எங்களுக்கு ஒன்றும் எடுத்துக் கூறப்படவில்லை. ஆயினும், குறித்த ஒரு நகர மாவட்டக் கழகம் நிறுவுவதைப்பற்றி எதிர்த்துக் கூறிய வகையில் மட்டுமே இதைப்பற்றிய பேச்சு தலையெடுத்தது. நன்முறையிலமைந்த ஒரு உள்ளூராட்சி முறையிலே உள்ளூர்ச்சபை தேவையற்றவையென இலங்கை நாட்டின OTF6) கருதியது. இவ்வாறு அலுவல் முறையிலமைந்த ஓர் அறிக்கையும் கருதியது. 1920 ஆம் ஆண்டுக்குரிய உள்ளூராட்சிக் கட்டளைச்சட்டத்தில் கருதியவாறு அமைந்த கிராம மாவட்டக் கழகங்கள், பொது மாவட்டக் கழகங்கள் நன்முறையில் வேலைசெய்யா என்பது ஒரு பொதுவான கருத்தாய் விளங்கியது. நகர மாவட்டக் கழகங்களைப்பற்றிய இடத்து, அவை இதுவரை தோன்றமை சட்ட ச்பையின் செயலாலும் நாடு அதை விரும்பவில்லை என்பதாலும் என்பது ஒரு கருத்து ; அரசாங்கம் தொடர்பாக அமைந்த ஒரு செயலில் இறங்காமையால்

Page 84
56
அது அவ்வாருயது என்பது சிலர் கருத்து. இம்முறையிலே நாட்டு மக்களிடையே உள்ளூராட்சி அகன்று விரிவாக வேண்டுமென்ற ஒரெண்ணம் இருந்ததற்கு ஒர் அத்தாட்சியுண்டு. இந்த ஆணைக்குழு கொழும்பிலிருக் கின்ற காலத்திலே, இலங்கை நாட்டின மாசபை ஒரு கூட்டம் கூடி, அந்தக் கூட்டத்திலே, அதன் தலைவர், 1920 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டக் கோவையில் கீழ்க்காணும் முறையிலமைந்த ஒரு திருத்தம் செய்யவேண்டுமென்ற கருத்துத் தெரிவித்தார். அத் திருத்தம் குறித்த ஒரு மக்கட்டொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு நகரும் மக்களுடைய இசைவின்றியேனும் நகர மாவட்டக் கழகங்களை நிறுவல் வேண்டும் எனக் கூறியது. இவ்வாறு ஆக்கப்பட்ட கழகங்களின் வேலையமைப்பை ஆயுமிடத்து, 1926 ஆம் ஆண்டுக்குரிய அவற்றின் ஆட்சியிலமைந்த பகுதிகளின் புள்ளிவிவரங்கள் வேலை தொடங்கிய முதலாம் ஆண்டு 1923 இல் உள்ள நிலையிலும் அவை மேம்பட்டு விளங்குகின்றன என்பதைக் காட்டுகின்றன. ஓரிடத்தைத் தவிர, மற்றை இடங்களில் எல்லாம் உடனலம் சீர்திருத்தம் அடைந்துள்ளது. குழந்தை இறப்பு குறைக்கப்பட்டது, மதிக்கப்பட்ட உடைமைகளின் ஆண்டுப் பெறுமானம் உயர்ந்துள்ளது. அவ்வாறே வருவாயும் உயர்ந்துள்ளது. ஆயினும், நிலையான அனுபவமுற்ற ஒரலுவலர்இல்லாவிடத்தில், இச்சங்கத்தின் அலுவலகத்திலே இவை வெற்றிபெற்றவகை, தலைவரின் சொந்தக் கவற்சியிலும் தளரா உழைப்பிலுமே தங்கியிருந்ததெனலாம். மாநகர சங்கங்களைப்பற்றிக் கூறுமிடத்து, இச் சங்கங்களிலுள்ள இடர்களைப்பற்றியெல்லாம் எமக்கு எடுத்துரைக்கப்பட்டது. முக்கியமாகக் கொழும்பைப்பற்றி எடுத்துக் கூறப்பட்டது, இச்சங்கங்களைத் திறம்பட நடாத்துவதற்குரிய அதிகாரத்தைச் சட்டசபையிலிருந்தும் நிருவாக அரசாங்கத்திலிருந்தும் பெறுவது இடராயிருந்தது. மற்றும்படி, இம் மாநகர சங்கம் தொழிற்படுகின்ற அலுவல்பற்றி நமக்கு அளிக் கப்பட்ட சான்றுகளும் கூடாதவையல்ல. குழந்தையிறப்பு விகிதம் இன்னும் உயர்நிலையிலிருந்தது; வீடமைப்பு நன்முறையில் இல் லாதிருந்தது; ஆயினும் இதன் வேலைத்திறன் நன்னிலையி லிருந்தது குறிப்பிடத்தக்கது. 1926 ஆம் ஆண்டுக்குரிய தலைவரின் ஆட்சியறிக்கையிலுள்ள புள்ளி விவரங்கள் ஆர்வம் தரக்கூடியனவாக அமைந்துள்ளன. மேலெடுத்துக் கூறப்பட்ட விவரங்களைத் தவிர்ந்த மற்றை வாழ்க்கை முறைப் புள்ளிகள் பொதுவாக நன்றக உள்ளன. இன்னும், சுகாதாரச் சேவைபற்றிய தொண்டுகள் இன்னும் விரிவாக்கப் படவேண்டுமென்ற உணர்ச்சி எங்கும் காணப்படுகின்றது. தெருக்கள் நன்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. வருவாயும் உயர்ந்து வருகிறது. வரிகளைச் சேர்ப்பதில் ஒருபொழுதும் தவறு நேரவில்லை. காலி மாநகர சங்கம் கொழும்பைவிட வினைத்திறன் குறைந்ததாக உள்ளது. இதை நியமித்த வாக்குத் தொகுதியின் சிறுமையைப்பற்றி எமக்கு எடுத்துரைக்கப்

157
பட்டது. இச் சங்கத்திற்குத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவரின் எண் ணிக்கையை உயர்த்தவேண்டுமென்றும் வாக்குரிமையை விரிவாக்க வேண்டுமென்றும் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. எங்களுக்கு எடுத்தோதப் பட்ட சான்றுகளிலிருந்தும் நாமே நேரே ஆராய்ந்தறிந்ததிலிருந்தும் கண்டியிலுள்ள சுகாதாரச் சேவையும் நன்முறையில் இல்லையெனத் தெரிகிறது. இங்கும், காலி மாநகர சங்கத்திலும் தொற்று நோய்கள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் மருத்துவத் திணைக்களத்தின் துணையைப் பெறவேண்டுமென்ற எண்ணம் உண்டாயது குறிப்பிடத்தக்கது.
புத்துயிரளித்தலும் அகற்சியும் ஆராய்ந்து பரிசோதனை செய்தலின் அவசியம்
முந்திய பந்திகளில் சுருக்கமாகக் கூறப்பட்ட செய்திகளிலிருந்தும் எங்க ளுக்கு முன் அளித்த சான்றுக் கூற்றுக்களின் மிகக் குறுகிய சுருக் கங்களிலிருந்தும் இத்தீவிலுள்ள சகலவிதமான உள்ளூர் ஆட்சிகளும் பொதுவாக ஓரளவு வெற்றியுடன் நடாத்தப்பட்டன என்பது எமக்குப் புலனுகியது. யாதுமொரு வகையிலேனும் இவ்வாட்சிக்குப் புத்துயிரளித்து, அதை இன்னும் விரிவாக்க வேண்டுமென்பது எங்களுக்கு இதைப்பற்றி எடுத்தோதிய அலுவல் முறை, அலுவல் முறையற்ற சான்றுகளிலி ருந்து எங்களுக்குப் புலனகியது. சட்ட சபையின் தெரி குழு இதை ஆய்ந்தது என்பதை அறிய நாம் மகிழ்வடைகின்ருேம். ஆனல், அவர்கள் இதைப் பற்றி எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி இப்பொழுது தடைப்பட்டுள்ளதென்றும் அறிகின்றேம். எனவே, இந்தச் சபையினுடைய ஆயுட்காலம் முடிவதற்கு முன்பாக உள்ளூராட்சியை விரிவாக்குவதற்குகந்த முடிவான எடுத்துரை களை அவர்கள் கூறமாட்டார்கள் என நாம் கருதுகின்றேம். இந்த விரி வாக்கம் எந்த வழியில் நடைபெற வேண்டுமென்று நாங்களும் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு நிலையிலில்லாமலிருக்கின்றேம். ஆயினும், இலங்கையில் நாம் நிற்கின்றபொழுது காலம் கிடைத்த பொழுதெல்லாம் இப்பிரச்சினை யைப்பற்றி நன்கு ஆராய்ந்துள்ளோம். இந்தப் பிரச்சினையைப்பற்றி ஒரு முடிவுக்கு வருதல் அவசியமாதலின், புதிய யாப்பு முறையிலே இந்தப் பிரச்சினையை இன்னும் ஆராய்வதற்கு வாய்ப்பாக சில எடுத்துரைகளைக் கூற விரும்புகின்றேம்.
எந்தவிதமான பூட்கையை மேற்கொண்டாலும் அது முடிவில் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டனவும், குறைவழி தேர்ந்தெடுக்கப்பட்டனவுமான உள் ளூர்ச் சபைகளில், அரசாங்கம் பன்முகப்பட்டிருத்தலில் அமைவது விரும்பு தற்குரியதாகும். இந்நோக்கத்திற்காகவே அவையும் அமைக்கப்பட்டனவா

Page 85
58
யிருத்தல் வேண்டும், இன்னும், ஆட்சியைப் பன்முகப்படுத்தலை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே செய்தல் வேண்டும். இதைப் பற்றி நல்லவொரு திட்டமான முடிவு கொள்ளல் வேண்டும். கொள்கின்ற பொழுது வாழ்க்கைத் துறையிற் பல மையங்களை இன்னும் உண்டாக்கு வதால் உண்டாகும் நன்மைகளையும் பரந்த ஆட்சிப் பரப்புக்களை இத்தாபனங்களோடு இணைத்தல் வேண்டும் என்று துறைபோகியோர் கூறு கின்ற கூற்றையும் நன்கு ஆராய்ந்து அவற்றிற்கிடை ஒரு நடுநிலையைக் கடைப்பிடித்தல் வேண்டும். மத்திய ஆட்சிக்கும் ஊராட்சி அதிகாரத்துக்கும் இடையே உள்ள அதிகாரங்கள், கடமைகள் வரையறுக்கப்பட்டுத் திட்ட வட்டமாயிருத்தல் வேண்டும் என்பது இதிலிருந்து புலனுகின்றது.
வேண்டியன யாவையெனில், மத்திய அரசாங்கத்திலே ஒரு செலுத்தல் இயக்கமும், மற்றைப் பரிதியிலமைந்த ஊராட்சிகளில் “ ஒன்றை வேண்டும்” எனும் இயல்புமாம். மத்திய அரசாங்கத்தைப்பற்றி இங்கு ஒருவார்த்தை சொல்ல வேண்டியது அவசியமாகின்றது. இலங்கைக் குடியியற் சேவையிலே அண்மைக் காலங்களிலே மிகவும் ஊக்கத்துடன் செயலாற்றி வந்த சேர் யோன் பிரேசர் என்பாரின் முயற்சிகளை இந்த மத்திய அரசாங்கம் கைக் கொண்டு நல்லார்வத்துடன் அவற்றைச் செயன்முறையில் நடத்தி வந் திருந்தால், 1920 ம் ஆண்டுக்குரிய கட்டளைச் சட்டத்திற்கமைந்த முறையிலே ஊராட்சியை வளர்ப்பதற்கேற்ற வாய்ப்புக்களை இலங்கையர் கைக்கொண்டு உழைக்கத் தவறிவிட்டார்கள் என்ற பேச்சே எழுந்திருக்காது. இக்கட்டளைச் சட்டம், முதன் முறையாக வரைந்த வகையிலே, உள்ளூர்ச் சபை கட்டாய மாக நிறுவுவதற்கு அரசாங்கத்துக்குக் குறித்த சில கட்டாய அதிகாரங்களே அளித்ததாயினும், சட்ட சபையிலே இதைப்பற்றி ஆராய்ந்தவிடத்து, இச் சட்டத்திற்குக் கொண்டு வந்த திருத்தங்கள், அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட இவ்வதிகாரங்களை நீக்கிவிட்டன. இன்னும், நாட்டிலிருந்த கண்டனங் களுக்கு அளவுக்கு மிஞ்சிய மதிப்புக் காட்டியதால், இக்கட்டளைச் சட்டம் கருதிய நகர மாவட்டக் கழக நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இன்னும், உள்ளூர்ச் சபையின் அதிகாரம் இலங்கையில் மிக்க வேலை நிறைந்த மாகாணத்துக்குரிய அரசாங்க முகவர் தலைமையில் விடப்பட்டது. இவர்க்கோ இவ்வலுவல்களைக் கண்காணிப்பதற்கு அதிக நேரம் இல்லாம லிருந்தது. இன்னும், இச்சபையில் தொழில் நுட்ப அதிகாரிகளைச் சேர்ப்ப தற்கு ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. இவர்களை இவ்வாறு இந்தச் சபையோடு இணைத்திருந்தால் யாதாயினும் ஒர் உள்ளூர்ச் சபை, அல்லது ஒரு கழகம் அவர்களுடைய சேவைகளை நன்முறையில் பயன்படுத்தியிருக்கும். இன்னும், உள்ளூர்ச் சபைகள் இப்பொழுது கொண்டுள்ள முயற்சிகளையோ, வருங்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளையோ செவ்வனே நடாத்து வதற்குரிய செல்வத்தைத் தேடுவதற்கேற்ற வழிவகைகளைக் காண்பதற்கும் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. இன்னும், இந்த உள்ளூர்ச் சபைகளின்

59
திறமைக்கு மிகவும் பொறுப்பு வாய்ந்தவரான தலைவர்களுக்குப் போதிய எழுதுவினைஞர்களும் அளிக்கப்படவில்லை. நல்ல மனிதர்கள் வந்து இத் தலைமைப் பதவியைப் பெறுவதைத் தடை செய்வதற்கு இதைவிடச் சிறந்த வழி ஒன்றுமில்லையெனலாம். அவ்வாறுதான் அவர்கள் வந்து தலைமைப் பதவியைப் பெற்றலும் அங்கு செயலாற்றும் முறையோடியைந்த சில சிறு விவரங்களைக் கவனிப்பதிலேயே அவர்கள் நேரம் போய்விடும்.
இன்னும், மற்றை உள்ளூர்ச் சபைகட்கு அதிகமான தேவைகளிருந் தும் அவற்றை நன்முறையில் பூர்த்திசெய்ய வேண்டுமென்ற கேள்வி அவற்றிடமிருந்து எழவில்லை. இது எங்களுக்கு ஆச்சரியத்தை விளைத்தது. ஆயினும், சென்ற காலங்களில் இந்தக் கிராமச் சங்கங்களையும் கிராம முறை மன்றுகளையும் நன்முறையில் செயற்படுத்தியதும் இப்பொழுதும் அவ் வாறே அவற்றை வெற்றியான முறையில் நடத்துவதும் இலங்கையர் பொறுப்பு வாய்ந்த ஒரரசாங்கத்தை வகிப்பர் என்பதற்கு ஓரெடுத் துக்காட்டாய் விளங்குகின்றன என்று எங்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நாட்டில் இச் சங்கங்கள் குறுகிய ஒரெல்லைக்குள்ளேயே தம் கடமையை யாற்றின. மிகவும் ஆர்வத்துடன் எங்களுக்குச் சான்று சொன்ன சிலருடைய கூற்றுக்களை நாம் கேட்டபின், எவ்வாறு இக்காலத்துக்குரிய உள்ளூர்ச் சபைகள் அமையவேண்டும், எத்தகைய நிலைகளில் அவை இயங்கவேண்டு மென்ற பிரச்சினைகளைப்பற்றி இவர்கள் ஒன்றும் நன்கு அறிந்திருக்க வில்லை என்பதையும் அவற்றைப்பற்றிப் பொதுவான ஒரு பராமுகமும் இருந்ததென்பதையும் நாங்கள் கூறத்தான் வேண்டும். சிறிய நகரங்களி லிருந்த இலங்கையர்கள் மிக வெளிப் போக்காகவே உள்ளூராட்சியை விரிவாக்குவதை எதிர்த்தார்கள். உள்ளூராட்சிக்கு எவ்வாறு நிதி திரட்டுவ தென்ற ஒரு காரணத்தினலேயே அவர்கள் எதிர்த்தார்கள். அலுவல் பற்றற்ற ஐரோப்பியர்கள் இத் துறையில். ஒருவிதமான உதவியும் செய்ய வில்லை. அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம். அயினும், சில ஐரோப்பியப் பெண்மணிகள் இத் துறையில் சிறிது ஆர்வங் காட்டியது கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றேம். இது எவ்வாறிருப்பினும், அடிப்படையான இடர் நிதிபற்றியதேயாம். இலங்கையில் வரி விதிப்போ, மறைவழியானது. ஆனல், உள்ளூராட்சிச் செலவுகளுக்கு அவ்வவ்விடத்திலே நேர்முகமாக வரி சேர்க்க வேண்டியிருக்கும். எனவே, மறைவழியாயிருக்கும் வரி விதிப்பை நேர்முகமானதாக்குகின்றபொழுது அவற்றற் சில புதிய இடர்கள் தோன்றுமன்றே ? உயர்ந்த நேர்முக வரிவிதிப்புக்கு மற்றை வேறெரு வழி கண்டு பிடிக்கப்படுமெனில், உள்ளூராட்சி மக்கள் விரும்பிய ஆட்சியாக அமையுமென்பதில் ஒருவிதமான ஐயமும் எங்களுக்கு இல்லை. ஆயினும், இவ்வுள்ளூர்ச் சபைகள் நேர்முகமாக வரி சேர்ப்பவையாயின் சுங்கம் போன்ற வழிகளிற் சேர்க்கின்ற பணத்தைச் செலவு செய்யும் வழியிலே மத்திய அரசாங்கம் அவற்றைக் கட்டுப்பாடு செய்யும் ஒரு அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

Page 86
60
உள்ளூராட்சியின் செயற்றுறையிலே நடந்த ஒரு பரிசோதனை எங் களுக்கு மிகவும் உயர்ந்த ஒரறிவைப் புகட்டக்கூடியதாக விருந்தது. இத் துறையில் இணைந்த பலருடைய ஆதரவால் இதைப்பற்றி நாங்கள் ஆராய எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. உரொக்குபெலர் தாபனத்தாரின் பிரதி நிதிகள் தொடக்கிவைத்த மலேரியா தடுப்பு, கொளுக்கிப்புழுநோய்த் தடுப் புப் போராட்டம் மிக நன்முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இப்போ ராட்டத்தை அரசாங்கம் இப்பொழுது கைக்கொண்டுளது. இவற்றையும் நாம் ஆராய்ந்து கவனித்தோம். இங்கு இவ்வனுபவத்தைப்பற்றி விரி வாய்க்கூற வாய்ப்பில்லை. ஆனல், இம் முயற்சி திட்டவட்டமான முறை யிலே வளர்ந்தோங்கியுள்ளது என்பதை இங்கு கூறிக் கொள்வோம். இங்கு மேற்கொள்ளப்பட்ட முதல்வழி யாதெனில், மேலனுவலக அலு வலர் யாவரையும் கொண்டுள்ள ஒரு பணிமனையை அமைத்ததாகும். களத்தில் நடந்த பரிசோதனைகள் மூலமாகப் பெற்ற எல்லாத் தகவல்களையும் இவ் வலுவலகத்தில் ஒருவர் பெறக்கூடும். இரண்டாவது, பரிசோதனை முறைக்கு மிக வாய்ப்பானதெனக் குறித்த ஒரு பிரதேசத் தைத் தேர்ந்தெடுத்தது. இங்கு அளவெடுக்கப்பட்ட பிரதேசமானது நன். முறையில் கல்வியறிவு கொண்ட பொது மக்கள் நெருங்கிப் பழகுகின்ற ஓரிடமென்பதை நாம் குறித்தல் வேண்டும். அடுத்து நடந்த தொழில், மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகளைக் குறித்த சில மாவட்டங் களிலே நன்முறையில் கைக்கொண்டது. இதைத் தொடர்ந்து மக்க ளிடையே இதைப்பற்றிய மிக விரிவான ஒரு பிரசாரம் நடை பெறலுற்றது. மக்களிடையே உயர் உடனலத்தையும் பெரு மகிழ்ச்சி யையும் விளைவிக்கக்கூடியன இவ்வழிவகைகள் என மக்களுக்கு எடுத் தோதப்பட்டது. அடுத்து இம் முயற்சிகள் எந்த மாவட்டத்தில் நடை பெறுமோ அங்கெல்லாம் இந்தப் பிரசாரம் மிகவும் உயிர்ப்படு முறை யிலே எடுத்து வெளியாக்கப்பட்டது. அயனமண்டலப் பிரதேசங்களிலிருக் கின்ற நிலைமையை நன்கு அனுபவித்துரைக்கக் கூடிய வல்லமை பெற்ற உரொக்குபெலர் ஒம்படையாளர், இத்தகைய விரிவானதும் பொறுமை வாய்ந்ததுமான ஒரு வழித்துறைக்கு, இவ்வளவு முக்கியத்துவம் அளித் தனரென்பது சிந்தனைக்குரியதே.
புதிய அரசாங்கத் திணைக்களம்
உள்ளூராட்சியை விரிவாக்கி வெற்றிகரமான முறையிலே நடாத்த வேண்டுமெனின், இதுவரை நடந்த முறைகளிலும் நல்ல சிந்தனை முறை யிலமைந்தனவாயும் ஆழ்ந்த கருத்துக்களோடு பொருந்தினவாயும் ஆன முறைகளிலே பரிசோதித்து, அவற்றை அமைத்தல் வேண்டும். எனவே, யாதாயினும் ஓர் ஆணைக் குழுவோ, ஒரு பொதுக் குழுவோ சிக்கலான இப் பிரச்சினையை நல்முறையில் தீர்த்து வைப்பதென்பது இலகுவிற் செய்யக்கூடியதொன்றன்று. ஏனெனில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப

161
தென்றல் அது பல ஆண்டுகள் செல்லும். எனவே, மக்களுக்கு ஏற்ற உள்ளூராட்சியை அமைத்து வளர்த்து, கட்டுப்படுத்தும் எல்லா அலுவல்களையும் புதியதோர் அரசாங்கத்திணைக்களத்தின் பொறுப்பில் விடலே நல்லதென நாம் கருதுகின்றேம். இப்படியான திணைக்களத் திற்கு வாரிக்கட்டுப்பாட்டு அதிகாரியாக இருப்பவர் வருங்காலத்தில் உள் ளூராட்சிக் கட்டுப்பாட்டு அதிகாரி எனும் பெயருடன் நிலையான அதிபராக விளங்குவார். இத் திணைக்களம் அரசாங்க சபையின் ஒரு நிறைவேற்று குழுவின் கட்டுப்பாட்டிலிருக்கும். இஃது, எலவே அமைந்துள்ள திணைக் களங்களோடு நல்ல தொடர்பு கொண்டு இயங்கும் ; குறிப்பாகப் பொது உடனலம், பொது வேலைகள் ஆகியவற்றேடு இணைந்த திணைக் களங்களுடன் இது நல்ல தொடர்புகொண்டிருக்கும். இந்த நிறைவேற்று குழு நிலவாட்சித் துறையையும் மது நீக்கு அலுவல்பற்றிய வேலைகளையும் நிலக்குடியிருப்பு, நிலவளவைத் திணைக்களங்களைப்பற்றிய அலுவல்களை யும் தன் அதிகாரத்தில் கொண்டிருக்கும். இக் குழுவோ இப்பொழுது நடக்கின்ற முறையில் உள்ளூராட்சியை நடத்துவதற்குப் பொறுப்பாயிருக் கும். இன்னும், இவ்வாட்சியை விரிவாக்குவதற்கேற்ற வழிவகைகளே ஆக் குவதிலும் இது பொறுப்பாயிருக்கும். உள்ளூராட்சிகளைக் கண்காணிக்கும் அதிகாரமும் இதற்குண்டு. உள்ளூர்ச் சபகைளின் துணை விதிகளுக்கு இசைவளிக்கும் அதிகாரமும் இதற்குண்டு; இச்செயல் இதுவரை நிறை வேற்று சபையிலமைந்த ஆள்பதியின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. இவ்வாறே மாநகர சங்கங்களின் வேலைகளையும் இத் திணைக்களம் தொடர் ந்து நிலையாகக் கண்காணித்தல் வேண்டும். இம் மாநகர சங்கங்கள் தங்கள் வேலைகளில் தவறுகின்றபொழுது அவற்றில் தலையிட்டு அவற்றைச் செம்மையாக்கும் அதிகாரம் இப்பொழுது நிறைவேற்று சபையிலமைந்த ஆள்பதிக்குண்டு ; இவ்வதிகாரத்தைக் கொள்வதற்காகவே இந்தத் திணைக் களம் இச் சங்கங்களைக் கண்காணித்தல் வேண்டும். ஆயினும், ஆரம்! காலத்திலே இந்த உள்ளூராட்சித் திணைக்களத்தின் கடமை ஆட்சிமுறை அலுவல்களை ஆராய்ந்து தொடங்கி வைத்தலாகும். அஃது அந்தச்சபை களுக்கு ஒரு கிளர்ச்சியை அளித்து அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கு டையதாக இருத்த்ல் வேண்டும். அது உள்ளூராட்சியை மக்களிடையே பரப்பும் சாதனமாக அமைந்து தொழில் நுட்பத் துறையிலும் ஆட்சி அனுபவத்திலும் துறைபோகிய அலுவலரைத் தன்னகத்தே கொண்ட தாயும் விளங்கல் வேண்டும்.
எது எவ்வாறிருப்பினும், இந்த நிறைவேற்று குழு ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு உள்ளூராட்சித் துறையில் வல்லுநரான ஒர் அறிவுரை யாளரைப் பெரிய பிரித்தனிலிருந்து பெற்றுக்கொள்ளல் வேண்டும். இவர் புதிய ஆட்சித் துறையில் அண்மைக் காலத்தில் வளர்ச்சியுற்ற புது முறைகளில் நல்ல அனுபவம் பெற்றவராய் தம்மறிவை இத் திணைக்களத்துக்கு அளித்து நல்ல துணை செய்யக்கூடியவராக இருத்தல்

Page 87
162
வேண்டும். இன்னும், ஒரு முதிய மருத்துவ அலுவலரை மருத்துவத் திணைக்களத்திலிருந்து இங்கு கடமை பார்ப்பதற்காக அனுப்பல் வேண் டும். பொதுவேலைத் திணைக்களத்திலுள்ள ஒன்று, அல்லது இரண்டு திறமையான எஞ்சினியர்களை இங்கு கடமையாற்ற அனுப்பல் வேண்டும். இவர்கள் இந்த உள்ளூராட்சித் திணைக்களத் தலைமை அலுவலகத்தில் இணை அலுவலர்களாகக் கடமையாற்றல் வேண்டும். நகர அமைப்பாளர் ஒருவரை இங்கு வேலைக்கு அமர்த்தல் வேண்டும். ஒரு கணக்காளரும் ஒன்று அல்லது இரண்டு வரிமதிப்பாளரும் இங்கு அமர்த்தப்படல் வேண் டும். காலத்துக்குக் காலம் வேலையின் நிறைவுக்கு எற்றவிதத்தில் இந்த அலுவலர்களைக் கூட்டிக்கொண்டு வருதல் வேண்டும். இவர்கள் தலைமை அலுவலக ஆட்சி அதிபர்களுக்குத் துணை செய்யக்கூடிய அனுபவம் வாய்ந்த ஒர் அறிவுரைக் குழுவாக அமைவர். அவர்கள் பொது வேலை களை ஆக்கி நிறைவேற்றுவதிலும் நாள் அலுவல்களைச் செவ்வனே நட த்துவதிலும் தலைமைத் திணைக்களத்திற்குப் பணி செய்வர் ; இன்னும் பல்வேறு உள்ளூர்ச் சபைகளுக்கு, அவைதம் ஆட்சித்துறைகளை வெவ்வேறு வகைகளிலும் வெவ்வேறு தேவைகளுக்கு எற்ற விதத்திலும் புதிய முறையில் அமைத்துப் பேணத் துணை செய்வர்.
மாகாணக் கழகங்கள்
மக்கள் விரும்பும் உள்ளூராட்சி எங்கும் நன்முறையில் விரைவில் விரிவடையும் என்று நாம் நம்பவில்லை. இப்பொழுது நாம் இங்கு கூறி யது போன்று ஒர் அலுவலகத்தை நிறுவினல் இத்தகைய வளர்ச்சி தாமதப்படுமென்று நாம் எண்ணவில்லை. இத்தகைய திணைக்களம் மற் றைத் திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து இவ்வளர்ச்சிக்கேற்ற திட்டங் களை ஆக்கி நிறைவேற்று குழுவுக்குச் சமர்ப்பிக்குமெனில் இவ்வளர்ச்சி பெரிதும் இடரின்றி நிறைவேறும். அவர்களால் அவ்வாறு மிக விரைவில் ஆராயப்பட வேண்டியதும், இந்தப் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்கள் நற்பயனைத் தரக்கூடியதொன்றென்று கருதுவதுமான செயல், மத்திய அரசாங்கத்தின் குறித்த சில ஆட்சித் துறைகளை மேற்கொள்ளக் கூடிய தாக ஓர் இணைப்புத் தாபனத்தை அமைப்பதாம். இதற்கு மாகாணச் சபைகளை ஒவ்வொரு மாகாணங்களிலும் நிறுவல் வாய்ப்புடையதொன்ற கும். இதனல், சட்டசபை இப்பொழுது மேற்கொண்டிருக்கும் ஆட்சி அலு வலின் பெரும் பகுதி, நாட்டின் மாகாணங்களில் நிரந்தரமாக வதிகின்ற மக்கள்பாற் சென்றடையும். இதனல், மக்களின் தேவைகளை நன்முறை யில் அறிந்தவர்கள் பொறுப்பிலேயே இவ்வாட்சிப் பொறுப்பு சென்ற டையும். இவ்வாறு அமைக்கப்படும் திணைக்களமானது மத்திய அர சாங்கத்தின் திணைக்களங்களில் அதிகம் விவரமாகச் செய்யப்படும் வேலை களின் பளுவைக் குறைக்கும் ; இதனுல் மத்திய அரசாங்கத் திணைக்களங் கள் நாட்டுக்கு மிக நன்மை பயக்கும் அலுவல்களைப்பற்றி நன்கு ஆலோ

63
சித்து அரசாங்கத்துக்கு அறிவுரை கூறக் கூடியனவாய் இருக்கும், இன்னும் இத்தகைய் சபைகள் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுமிருக்கின்ற வெவ் வேறு சாகியத்தாருடைய சிறந்த அபிப்பிராயங்களைப் பிரதிபலித்து, அவ்வப் பகுதிகளை ஆள்கின்ற முறையில் ஒருவிதமான ஊக்கினை அளிக்கக்கூடிய வாக இருக்கும். இன்னும், இந்நாட்டிலே வளர்ந்து வருகின்ற அரசியற் பற்றுடையவரை ஆட்சித் துறையிலே உண்மையான உதவியை அளிக்கக் கூடியவர்களாக ஆக்குவதற்கும் இது உதவும்; இன்னும், குறைந்த தரத்திலுள்ள உள்ளூர்ச்சபைகளின் பிரதிநிதிகளாக அமைந்தோர் அத ணுல் சிறந்த அறிவு பெற்று பெருங் கழகங்களில் அமர்ந்து பணியாற்றவும் இது உதவும். இன்னும் இம் மாகாணக் கழகங்களை அமைத்து, அவற் றிற்குரிய யாப்பு அதிகாரம், கடமை, நிதியலுவல் யாவற்றையும் ஒழுங்கு படுத்தும் துறைகளை நாம் ஆராய வேண்டும். அதுபற்றிய பிரச்சினைகள் வருமாறு : சட்டசபயிைலுள்ள அங்கத்தவர்கள் அவர்களுடைய மாகாணங் களிலுள்ள கழகங்களில் உறுப்பினராக இருத்தல் வேண்டுமோ ? இருந்து, மாகாண ஆட்சிக்கும் மத்திய ஆட்சிக்கும் ஒரு தொடர்பாக அமைதல் வேண்டுமோ ? இன்னும், இத்தொடர்பினை விரிவாக்குவதற்காக மற்றை அங்கத்தவர்கள் மாநகர சங்கங்கள், நகர மாவட்டக் கழகங்கள் ஒவ்வொரு பிரதம தலைமைக்காரன் பகுதிக்கும் உரிய சிறு பட்டினச் சபைகள், கிராமச் சங்கங்கள் அடங்கிய தொகுதிகள் ஆகியவற்றிற்கும் பிரதிநிதிகளாக அமைதல் வேண்டுமோ ? இன்னும், அரசாங்க முகவர் இச் சபையின் தலைவராகவும் நிறைவேற்று அலுவலராகவும் கடமை பார்த்தல் வேண் டுமோ ? தொழிற்றுறைத் திணைக்களத்தைச் சார்ந்த மாகாண அலுவலர் கள் இச்சபையின் தொழிற்றுறை அறிவுரையாளராக இருத்தல் வேண் டுமோ ? இவ்வலுவலர்கள் இச்சபையின் கூட்டத்திற்குச் சமூகமளிப்பி னும், வாக்களிக்காதிருத்தல் வேண்டுமோ ? பொதுவான ஆட்சி முறை, பொது வேலைகள், போக்குவரத்து வேலைகள், நீர்ப்பாய்ச்சல், வேளாண்மை சுகாதார உடனலச் சேவைகள், கல்வி நிதி, ஆகியவைபற்றிய துறைகளிலே இக் கழகங்களுக்கு மத்திய அரசாங்கம் விரிவான அதிகாரத்தை அளித்தல் வேண்டுமோ ? இந்த அதிகாரங்களையும் மாநகர சங்கம், மாவட்டக் கழகங்கள், மற்றைய நகர்கள் ஆகியவற்றிற்குப் புறம்பாயுள்ள இப்பொழுதுள்ள தெருக் குழுக்கள், மாவட்ட கல்விக் குழுக்கள் ஆகியவை கொண்டுள்ள அதி காரங்களையும் மாகாணக் கழகங்கள் வகித்தல் வேண்டுமோ ? இச் சபைகள் ஆக்கப்படுகின்ற காலத்திலே உள்ளூர்ச் சபைகள் கொண் டுள்ள கட்டுப்பாடுகள், இத் தீவுக்குரிய கட்டளைச் சட்டங்கள், இந்தக் கட்டளைச் சட்டங்களுக்கியைய மத்திய அரசாங்கம் படைத்திட்ட விதிகள், பிரமாணங்கள், மத்திய அரசாங்க அலுவலர்களின் தொழில்முறைக் கட் டுப்பாடு, பரிசோதனை ஆகியவற்றிற் கெல்லாம் இவை கட்டுப்பட்டிருத்தல் வேண்டுமோ ? என்பவை அவை. (இங்கு இக்கட்டளைச் சட்டம் ஆனது இந்நாடு முழுவதற்கும் செல்லுமதியாகக் கூடிய தற்கால முறையிலமை

Page 88
164
ந்த பொது உடனலக் கட்டளைச் சட்டமொன்ருல் நிறைவாக்கப்படல் வேண்டும்). உள்ளூர் வரிவிதிப்பினல், உள்ளூராட்சியை அமைப்பதில் வரும் இடரைப்பற்றி முன்னர் கூறியுள்ளோம். இப்பொழுது உள்ள சூழ்நிலைகளிலே மாகாணக் கழகங்கள் நிறுவப்படின் மத்திய அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் பொது வருவாயிலிருந்தே அவற்றின் செலவுக்குப் பணம் ஒதுக்கப்படல் வேண்டும். ஒவ்வோராண்டுக்கும் உரிய செலவீடுகளை ஒதுக்கும் பொழுது ஒவ்வொரு மாகாணக் கழகத்திற்கும் சட்டசபை தேவையான பணத்தை ஒதுக்கல் வேண்டும். புதிய யாப்பு முறையி லமையும் இலங்கை அரசாங்கம் நேர்முகமாக அறவிடப்படும் வரியின் விகிதத்தைக் கூட்டுவதற்கு வரி விதிப்பு முறையை மாற்றுமெனில், இவ் வுள்ளூர்ச் சபைகள் தங்களுக்கு வேண்டிய வருவாயை, மத்திய அர சாங்கத்திலிருந்து பெறுவதற்குப் பதிலாகத் தங்கள் வருவாயின் பெரும் பகுதியை, நேர்முக வரி அறவீட்டால் பெற்றுக் கொள்ளும் பொறுப்பினைத் தாங்குவதற்கேற்ற வழிவகைகள் செய்தல் வேன்டும். மாகாணங்கள் பல வித நிலைகளிலே இருக்கின்றன. எனவே, இச் சபைகள் வெவ்வேறு முறையிலே தொழிற்பட வேண்டியிருக்கும். ஆயினும், புதிய திணைக் களமானது இம் முறையை விரைவில் நன்கு பரிசீலனை செய்துகொள்ளல் நல்லது. ஏனெனில், இம் முறையானது நிறைவேற்று குழுவுக்கு மன முவந்த ஒன்றயமையின், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு மாகாணத்திலே இத்தகைய ஒரு சபையை நிறுவிப் பரிசோதித்துப் பார்த்தல் வேண்டும். இம்முறையானது வெற்றியைத் தரக் கூடியதொன்றயின், இந்த முறையைத் தீவின் மற்றைப் பாகங்களிலும் கைக்கொள்ளல் வேண்டும்.
இப்பொழுதுள்ள உள்ளூர்ச் சபைகளைப்பற்றிய சில குறிப்புரைகள்
இப் புதிய திணைக்களமானது இன்னுமொரு பிரச்சினையை நன்கு ஆராய வேண்டும். 1920 ஆம் ஆண்டுக்குரிய உள்ளூராட்சிக் கட்டளைச் "சட்டத்தில் குறிக்கப்பட்டவாறமைந்த பல பொது மாவட்டக் கழகங்கள், கிராம மாவட்டக் கழகங்கள், புதிய உள்ளூராட்சி முறையிலே இடம் பெறல்வேண்டுமோ என்பது அப்பிரச்சினை. இன்னும், உள்ளூர்ச்சபைப் பட்டினங்கள் குறித்த ஒரு மக்கட்டொகைக்கு மேலான ஒரு தொகையைக் கொண்டிருந்தால் அத் தன்மையிலேயே நகர மாவட்டக் கழகங்களாக வேண்டுமோ என்பதையும் அவை ஆராய வேண்டும். ஒரு பிரகடனத்தால் "சுகாதாரச் சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்திலுள்ள சிறிய நகரங்களை ஆட்சி செய்கின்ற சுகாதாரச் சபபைகளினிடத்தில், பிரகடனத் தால் நகரங்களாக்கப்பட்ட தனித்தனி நகரங்களை ஆட்சி செய்கின்ற பட் டினக் குழுக்கள் அமைக்கப்படல் வேண்டுமோ என்றும், வருங்காலத் தில் யாதுமொரு கிராமச் சபையும் இச் சுகாதாரச் சபையின் பரிபாலனத்தில்

165
அமைக்கப்படக்கூடியதாக முக்கியத்துவத்திலும் பருமனிலும் வளர்ந் தோங்குமாயின், அதற்கு ஒரு பட்டினக் குழுத் தகுதி அளிக்கப்படல் வேண்டுமோ என்றும் ஆலோசித்தல் வேண்டும்.
உள்ளூர்ச் சபை யாப்பட்ைபற்றி நாம் பின்வரும் எடுத்துரைகளைக் கூற விரும்புகின்றேம். இவை மத்திய ஆட்சி சம்பந்தமாகக் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவங்களோடு இயைந்தனவாம். இச்சபைகள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரைக் கொண்டிருக்க, அலுவல் பற்றுள்ள உறுப்பினர் அறிவுரையாளராயிருத்தல் வேண்டும். பட்டினக் குழுக் களுக்குரிய தேர்வு முறையும் கிராமச் சங்கங்களுக்குள்ளவாறுபோல வயது வந்த ஆண் வாக்குக்களாலேயே நடைபெற வேண்டியதாகும். நகர மாவட்டக் கழகங்கள், மாநகரச் சங்கங்கள் ஆகியவற்றிற்குச் சட்டசபைக் கமைந்தவாறு வாக்குரிமை இருத்தல் வேண்டும். பின் கூறப்பட்ட உள் ளூர்ச் சபைகளுக்கு உறுப்பினராக வரவேண்டியவர்கள் அந்தந்தச் சபை களின் தொகுதிகளிலேயே உறைபவர்களாக இருத்தல் வேண்டும். மற்றை வகைகளில் சட்ட சபைக்குள்ள உறுப்பினர்களின் தகுதிகளை அவர் கொண் டிருத்தல் வேண்டும். கிராமச் சங்கங்களின் உறுப்புமைக்கு இப்பொழு துள்ள தகுதிகள் அவ்வாறே இருத்தல் வேண்டும். வருங்காலத்தில் பட் டினக் குழுக்கள் அமைக்கப்படுமிடத்தும் இத்தகுதிகள் அவைக்கும் பொருந்தும், இந்தச் சபைகள், குழுக்கள் ஆகியவற்றின் தலைவர்களை அந்தச் சபைகளே தெரிவு செய்யும். ஆயினும், உள்ளூராட்சி நிறை வேற்று குழுவின் கருத்துக்கியைய தகுதியுள்ள ஒருவர் முன் வராம லிருந்தால், அல்லது அந்தச் சபை, சங்கம் ஆகியவற்றின் கடமைகளை யாதுமொரு காரணத்தினல் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியிருந் தால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. இத்தகைய வகைகளில் அன்றி, அரசாங்கத்தில் முழுநேரக் கடமை பார்க்கும் ஊழியர் எவரும், பிரதம தலைமைக்காரன் உட்பட, மாநகர சங்கம், நகர மாவட்டக் கழகம், நகரக் குழு, கிராமச் சங்கம் என்பவற்றின் உறுப்பினராகவோ, தலைவராகவோ இருக்கத் தகுதியற்றவராவர்.
எலவே, ஒரு பிரச்சினையைப்பற்றிக் குறித்துள்ளோம். அதைப்பற்றி அவசியம் ஆராய வேண்டும். நகர மாவட்டக் கழகங்களிலே போதிய எழுதுவினைஞர் இல்லாததே அப்பிரச்சினை. இன்னும், இந்தச் சபை களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நல்ல தகுதிவாய்ந்த நாடிகள் இல்லை என்பதும் எமக்கு எடுத்துரைக்கப்பட்டது. இன்னும், நற்றிறமை வாய்ந்த துணைவர்கள் இத்தலைவர்களுக்கு அகப்படாமலிருந்தால், இச் சம்பளம் இல்லாத உத்தியோகக் கடமையை அவர் ஆற்றுவதற்கு அவர் தம்முடைய முழு நேரத்தையுமே பயன்படுத்த வேண்டி நேர்ந்தால், தகுதி வாய்ந்தவர்கள் தலைவர்களாக முன் வருவது மிக அருமையாகும். இத் தகைய முறை திறனின்மைக்கும் அமைவின்மைக்கும் வழிகாட்டிவிடும்.

Page 89
66
ஏனெனில், இவ்வழி திறம்படக் கடமை பார்க்கக் கூடியவர்களை இத் தலைமைப் பதவியை நோக்காமல் செய்துவிடுவது மட்டுமன்றி, இன்னும் சிக்கல் நிறைந்த பொது அலுவல்களைத் திறம்படச் செய்யக் கூடியவர்க்குப் பெரும் இடரையும் அளித்து விடுமென்க. இன்னும், ஆட்சித் துறை யிலே ஒடியாத ஒரு தன்ம்ையைப் பேணுவதற்கு ஏற்ற ஒரு வாய்ப்பையும் இம்முறை அழித்துவிடுகின்றது. தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களையுடைய தன்மையினல் ஒடியா நிலைமையைப் பேணுவது இன்றியமையாததாகின்றது. எனவே, இந்த உள்ளூர்ச் சபைகளுக்கு எழுதுவினைஞர்களை அமர்த்துவதற் கேற்ற ஓர் ஏற்பாட்டினைப் புகுத்துவதை நாம் பெரிதும் விரும்புகின்றேம். இத்தகைய எழுதுவினைஞர்கள் இப்பொழுது தலைவர் செய்கின்ற நாள் முறை வேலையின் பளுவினை ஒரளவுக்கு அகற்றுவர். இவ்வாறக, ஒவ் வொரு நகர மாவட்டக் கழகத்திலும் ஒரு பிரதம எழுதுவினைஞர் இருத்தல் வேண்டும். இவர் இங்கிலாந்தில் ஒரு பரோ சபையில், அதன் தலைவர்க்கு எவ்வாறு அந்தப் பட்டின எழுதுவினைஞர் முறை கொண்டுள்ளாரோ, அந்த முறையில் இங்குள்ள தலைவர்க்கமைந்து கடமையாற்றுவர். இப் பிரதம எழுதுவினைஞர்க்கு அந்தச் சபையினுடைய வேலைப் பளுவுக்கும் இயல்புக்கும் எற்றவாறு துணை எழுதுவினைஞர் அமைந்து கடமையாற்றுவர். இப்பிரதம எழுதுவினைஞர்கள் நல்ல கல்வியறிவும் ஆற்றிலும் உடையவராக இருத்தல் வேண்டும். சட்ட அனுபவமுடையவராகவும் இருத்தல் வேண்டும். ஆயினும், இவர்களை எத்தகைய முறையில் தேர்ந்தெடுத்தல் வேண்டு மென்ற பிரச்சினையை ஆராய்வது உள்ளூராட்சி நிறைவேற்று குழுவின் பொறுப்பாக இருத்தல் வேண்டும். இவர் நகர மாவட்டக் கழகங்களோடு கலந்தாலோசித்து இதைப்பற்றிய ஒரு முடிவுக்கு வருவார்.
நல்லோர் பலர் இப்பதங்களை நாடுவதற்கேற்றவாறு இப்பதங்கள் நல் வருவாயுடையனவாய் அமைதல் வேண்டும். இதற்காக இந்நிறைவேற்று குழுவானது, நகர மாவட்டக் கழகங்களிலுள்ள எழுதுவினைஞர் பதங்கள் யாவற்றையும் கோவைப்படுத்துமாறும் அப் பதங்களை வகிக்கின்றவர்களுக் குப் பொதுச் சேவையில் அவர்களுடைய தரத்தில் அமைந்தவர்கள் பெறு கின்ற சம்பளங்களுக்கு ஒத்த சம்பளங்களை அளிக்குமாறும் அவர்களுக்கு இளைப்பாறற் சம்பளத் தகுதியை அளிக்குமாறும் நகர மாவட்டக் கழகங்களை ஊக்குதல் வேண்டும். இவ்வாறக, இம்மாவட்டக் கழகங்களின் சேவை களிலே பலர் அமர்ந்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குப் பதம் மாறி உயர்ந்து சென்று, தமக்கென ஒரு வாழ்வு முறையைக் கோரிக்கொள்ளுமாறு செய்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்க நாம் விரும்புகின்றேம். இன்னும், காலஞ் செல்லச் செல்ல இம்மாவட்டக் கழகங்களிலுள்ள எழுது வினைஞர்கள் மாநகர சங்கங்களிலுள்ள பதங்களோடு இணைந்தவர்களாய், ஒரே தன்மை கொண்ட பதங்களில் அமரக் கூடியவராக இருத்தல் வேண்டு மென்றும் நாம் விரும்புகின்றேம். இத்தகைய பண்பு ஒருவர் பெற்ற

6
.ணுபவத்தை மற்றவர் பெறக் கூடியதாகவும் செய்யும். இன்னும், உள்ளூராட்சி முறைமையை ஓரியல்புடையதாக்கவும் செய்யும். இன்னும், இதற்கெனத் தெரிந்தெடுக்கப்பட்ட சிறப்பு வகுப்பு அலுவலர்களுக்கு வேறு பல துறைகளிற் செயலாற்றவும் இது வாய்ப்பை நல்கும் ; இச்சிறப்பு வகுப்பு அலுவலர்கள் இத்தகைய பொதுச் சேவைக்கெனத் தேர்ந்தெடுக் கப்பட வேண்டுமென்றும் இன்னும், இத்தகைய சேவை, நற்றகுதியுடைய அலுவலர்களைக் கவரக் கூடியதொன்றகவும் அமையவேண்டுமென்றும் நாம் எடுத்துக் கூறவிரும்புகின்றேம்.
எங்களுடைய முன்னிடுகளைப் பேணிப் போற்றுவதால், நகர மாவட்டக் கழகங்களை ஆக்கியமைத்துப் பரிபாலனம் செய்யக் கூடிய அளவுக்கு, மக்கட்டொகை பெருகிய சில புலங்களில், மிக உயர்ந்த தரமுடைய உள்ளூராட்சி வளர்ந்தோங்கும் என நம்புகிறேம். இந்த உள்ளூராட்சிக் கட்டளைச் சட்டத்திற்கியைய, கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை இதுவரை பெருத இடங்களையே நாம் கருத்திற்கொண்டு கூறுகின்றேம். இவை எண்ணிக்கை யில் குறைந்தவையே. இன்னும், இத்தகைய கழகங்கள் ஐரோப்பிய அலுவலர்களுடைய அனுபவத்தையும் பெறல் வேண்டியது முக்கியமென் றும் கருதுகின்றேம். இவை நாட்டின் மற்றைப் பாகத்திலுள்ள அனுபவ அறிவைப் பெறுதலோடு, பெரிய பிரித்தனிலும் மற்றை நாடுகளிலும் பயிற்சி முறையிலிருக்கின்ற புதிய முறைகளையும் அனுபவத்தையும் அறிந் திருத்தல் வேண்டும். இத்தகைய அறிவையும் அனுபவத்தையும் எவ் விதத்தில் நன்முறையிற் பெறலாம் என்ற பிரச்சினையை உள்ளூராட்சித் திணைக்களமும் நிறைவேற்று குழுவும் நன்கு ஆராய வேண்டும்.
இங்கு நாம் முன்னர் எலவே எடுத்துரைத்த ஒரு பிரச்சினையைப் பற்றிக் கூறவேண்டும். பட்டினங்களிலும் நகர்களிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பல உள. அவை தெள்ளத்தெளியப் புலப்படுவன வாயும் அவசரம் தீர்க்கப்பட வேண்டியனவாயுமுள்ளன. இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாக விளங்குகின்ற கமத்தொழிலார்பற்றிய பிரச் சினையோ, இன்னும் மிக முக்கியமான தொன்றகும். எனவே, நகர் களுக்கும் நாட்டுப் புறங்களுக்குமுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்ப தில், உள்ளூராட்சித் திணைக்களமும் நிறைவேற்று குழுவும் ஒப்புயர்வற்ற ஒரு நடுநிலைமையைக் கைக்கொள்ளல் வேண்டும். உள்ளூராட்சி வளர்ச் சிக்காக எடுக்கப்படும் எல்லா முறைகளும், நாட்டுப்புற வளர்ச்சியை யன்றி யும் நகர வளர்ச்சியையும் நோக்கிற் கொண்டிருத்தல் வேண்டும். ஆயி னும், இத்தீவின் வறட்சி வலயங்களிலுள்ள கிராமங்களின் தேவைகளைச் சிறப்பான முறையில் ஆராய வேண்டுமென்று நாம் எடுத்துக்கூற விரும் புகின்றேம். இக்கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் எல்லையில்லாத் துன்ப நிலையைப் போக்குவதற்குரிய வழிவகைகள் எடுத்தல் வேண் டும். மலேரியா நோயும் கொக்கிப் புழு நோயும் இம்மக்களின்

Page 90
168
உயிர்ப்புத் திறனைப் போக்கிவிட்டன : மக்களே வலுவில்லாதவர்களாக இருக்கின்றர்கள். திறமையான வேளாண்மைக்கு இன்றியமையாத கடும் வேலையைச் செய்யவும் இவர்கள் விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றர் கள். இத்தகைய கடினமான வேலையை இவர்கள் செய்யாமையால் பயிர் விளைவும் உணவும் குறைபாடுறுகின்றன. உணவுக் குறை, மேலும் இவர்கள் உடல் வலுவைக் குறைத்து, நோய்க் கொள்ளைக்கு இவர் களை இன்னும் ஆளாக்கிவிடுகின்றது. நல்லதொரு பருவ காலத்திலும், இவர்கள் விளைவு பொலிவுடையதாக இருந்தாலும், இவர்கள் தம்முடைய வறுமைக்காலத்திலே, தமக்குப் பொருளளித்து உதவி செய்த கடைக்காரர்களுக்கெல்லாம், தம்முடைய விளைவின் பெரும் பாகத்தையோ, முழுவதையுமோ, குறித்த ஒரு விலைக்கு விற்கவேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். இன்னும், இக்கிராமத்தவர்களோ அவ்வூர் வியாபாரிகள், கடைக்காரர்கள் ஆகியவர்களின் தயவில் பெரிதும் தங்கியிருக்கின்றர்கள். இக்கமக்காரர், கடனில்லாத காலத்திலும் அவர்களுடைய கொடுமையால் தம்முடைய விளைபொருள்களுக்குரிய நியாயமான விலையைப் பண வடி விலோ, பொருள் வடிவிலோ பெறவும் முடியாதவர்களாக இருக்கின்றர் கள். இப்பிரச்சினை கிராமப் பிரச்சினையில் ஒரு முக்கிய கூருகும். இக் கிராமத்தவர்களுடைய விளைபொருள்களுக்கு, நல்ல பொருள் வரவு கிடைக்கக் கூடியதாக ஒரு வழிவகையை ஆக்கிவிடின், இக்கிராமத்தவர், தாமே தமக்கும் தம்முடைய குடும்பத்தினர்க்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை அளிக்கக் கூடியவராவர். இந்நிலைமை சீர்திருத்தமடையு மெனில், இவர் உடனலமும் சீர்திருத்தமடையுமன்றே ? இதனல், இவ ருக்குப் புதியவொரு இதயமும் புதியவோர் ஊக்கும் பிறந்து, வேளாண் மைக்குரிய கடின வேலையை இவர் உவந்து மேற்கொள்வர். இதனல், மலேரியாத் தாக்கமும் இவரைப் பெரிதும் பாதிக்காது. மருத்துவத் துறை யினர் இத்துறையில் ஆற்றும் பெருந் தொண்டைப்பற்றி நாம் அறியாம லில்லை. ஆயினும், இப்பிரச்சினை மருத்துவப் பிரச்சினை மட்டுமன்றிப் பொருளாதாரப் பிரச்சினையுமாகும். அதனலேயே, நாங்கள், விளைபொருள் களை விற்பதற்கேற்ற வாய்ப்பினை அளிக்கக்கூடிய ஒரு வழிமுறையை, இம் மக்களிடை புகுத்தல் வேண்டுமென்று எடுத்துரைக்கின்ருேம். இன் னும், இக்கமத்தோருடைய வறுமைக் காலத்தில், இவர்களுக்குப் பண உதவி செய்யக்கூடியதான கூட்டுறவு நாணயச் சபைகளைக் கிராமங்களிடை ஆக்கியமைத்து வளர்க்கும் ஒரு வழிவகைகயையும் ஆக்கவேண்டுமென நாம் எடுத்துக் கூறுகின்ருேம்.
நகர்ப்புறமன்றி மற்றைப் புறங்களிலும் இந்நாட்டிலே நடக்கின்ற பொது ஆட்சியைப்பற்றி ஒரு வார்த்தை கூற நாம் விரும்புகின்றேம். இது தொடர்பான சான்றுபற்றி எலவே கூறியுள்ளோம். இச் சான்றின் பேராலேயே தலைமைக்காரன் முறை கொடியது எனக் கூறுவது

169
நீதிபற்றது. எனெனில், முடிக்கு நல்ல சேவை செய்த ஒரு குழுவினை இவ்வாறு கூறுவது நன்றியறிவற்ற செயலாகும் என்க. ஆனல், இத்தகைய முறை குடியேற்ற ஆட்சியின் ஆரம்ப பருவத்திற்கேற்ற ஒரு சாதனமே. இலங்கையும் இப்போழுது அந்தப் பருவத்தைக் கடந்து வளர்ந்து வருகின்றது. எனவே, இந்தப் பிரதம தலைமைக்காரனில் தொடங்கி அமைந்திருக்கின்ற, இத்தலைமைக்காரன் முறையிலே, இப்போழுது இம்முறைமையால் உண்டாகக் கூடிய குறித்த சில தீங்குகள், அவ்வாறு வளராது குறைப்பதற்கேற்ற வழிவகைகளை ஆராய்வதற்குரிய காலம் வந்துவிட்டதோ, இல்லையோ என்பதை நாம் உற்று நோக்கல் வேண்டும். இவ்வாறு வரும் தீங்குகள் யாவையெனில், பழைமை முறையில் பரிசுகள் அளித்தலும், மானியத் தலைவர்களைப் பாது காப்பதற்குப் பதிலாக அளிக்கப்படும் சேவையுமாம். இப் பிரிவுகளின் தலைமைக்காரர்கள், மரபு வழி வந்த மானிய உரிமைகட்கு உரியரல்லாது போயின், இத்தீங்குகள் ஓரளவுக்கு நீங்கக்கூடும். இத்தலைமைக்காரர் கள் தங்கள் தங்கள் மாவட்டங்களிலே, மானியமுறைத் தலைவர்கள், அல்லது பொது மக்கள் கருத்துக்களுக்குத் தலைமை பூண்டவர்கள் என்னும் முறையில் அமையாமல், நிறைபொறுப்புடைய பொதுச் சேவையினர் என்றும் ஆட்சியாளர் என்றும் நன்முறையில் அமைதல் வேண்டும். இவர்கள் வகிக்கும் இப்பொறுப்புக்களுக்காக இவர்களுக்குப் போதிய சம்பளம் கொடுக்கப்படல் வேண்டும். எனவே, பல பிரிவுகளுக்குப் பொறுப்பு வாய்ந்த ஒரு பிரதம தலைமைக்காரனுடைய இடம் ஆளில்லாமல் போகுமிடத்து அவ்விடத்தில் இரண்டு, மூன்று பிரிவுகளை ஆங்காங்கு சென்று மேற்பார்வை செய்யக்கூடிய அலுவலர்களை நியமித்தல் வேண்டும். இந்தத் தலைமைக்காரர்களுடைய பதங்களில் ஓரிடம் வெறுமையாக வந்தால் அவரு டைய அந்தப் பகுதியை அடுத்தவொரு பகுதியோடு இணைக்கக்கூடாத ஒரு சந்தர்ப்பத்திலேயே இது செய்யப்படல் வேண்டும். இவர்களைப் பயிலுநராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களை ஒவ்வொருவராகவோ, கூட்டங் கூட்டமாகவோ எடுக்கலாம். இவர்கள் தங்கள் பதங்களை வகிப்ப தற்கு முன்னர் இரண்டு ஆண்டுக் காலம் பயிற்சி பெறல் வேண்டும். இவர்களுக்கு மொழிப் பயிற்சி அளிக்கப்படல் வேண்டும். மன்று வேலைகள், பொதுவாட்சிவேலை, வேளாண்மை, நீர்ப்பாய்ச்சல், அளவை, கூட்டுறவு, சுகாதாரம், பாடசாலை முகாமை ஆகிய தொழில் நுட்ப வேலைகளிலும் இவர்களுக்குப் பயிற்சியளித்தல் வேண்டும். இத்தொழி னுட்ப அலுவல்களின் முக்கியத்துவத்தை இந்நாட்டின் நாட்டுப்புற மாவட்டங்களில் நாம் சுற்றுப்பயணம் செய்தபொழுது நேர்முகமாக அறிந்துள்ளோம். இவர்கள் அரசாங்க முகவர்களின் கீழும் உதவி முகவர்களின் கீழும் கடமை பார்த்தல் வேண்டும். இவர்கள் சிறு பிரிவுகளின் தலைமைக்காரர்களை மேற்பார்த்து ஆற்றுப்படுத்தல் வேண்டும். இவர்கள் மூலமாக கிராமத் தலைமைக்காரர்களை அவர்கள் கண்காணிப்பர்.

Page 91
170
"உள்ளூராட்சி நிறைவேற்று குழுவின் ஆராய்விற்காக இத்தகைய அலுவலர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பதுபற்றி இரண்டு முறைகள் கூறுகின்றேம். முதலாவது வழி, இவர்கள் இப்பொழுதுள்ள குடியியற்சேவைத் தேர்வு மூலமாக அச்சேவைக்குரிய நிபந்தனைகளுக் கியையத் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டுமென்பது. இஃது அவர்களை உயர் மரபும் நல்லாற்றலும் நேர்மையும் நிரம்பிய ஒரு சேவையைச் சேர்ந்தவர்கள் என்ற பயனைக் கொண்டிருக்கச்செய்யும். இன்னும், இந்த அரசின் முக்கிய பதங்களையும் இவர்கள் பெறக்கூடிய ஒரு வாய்ப்பினையும் இது நல்கும். இலங்கையிலே மிகத் தகுதிவாய்ந்த உயர்நிலைப் பள்ளிகள் பல உண்டு எனும் ஒர் உண்மை அடுத்த வழிக்கு ஒரு வாய்ப்பினை நல்குகின்றது. ஆனந்தக்கல்லூரி, சென் யொசெப்புக் கல்லூரி, உருேயல் கல்லூரி, திரினிட்டிக்கல்லூரி, சென் தோமசு கல்லூரி ஆகியவற்றின் மாணுக்கர்கள் உலகத்திலுள்ள எந்த நாடும் பெருமிதப்படக்கூடிய பண்பு கொண்டவர்கள். இவ்வாறே வேறு பல கல்லூரி மாணவர்களும் உளர். இப்பொழுது இம்மாணுக்கர்கள் இந்நாட்டுச் சேவையில் நேரே புகுகின்றனர். இப்பொழுதுள்ள முறையிலே ஒரு சீரில்லை என்று நமக்கு எடுத்துக் கூறப்பட்டது. இம்மாணுக்கர்கள் பல்வேறு கச்சேரிகளிலும் அலுவற் சிற ராகக் கடமை பார்க்கின்றபொழுது, பாடசாலைகளில் வளர்ந்தோங்கிய நற் பண்புகளெல்லாம், பறந்தோடிவிடக்கூடுமென்றும் எடுத்துக் கூறப்பட்டது. இவ்வுயர் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியவர் களோடு சேர்ந்து, குறித்த ஒரு தேதியின் பின்னர் வரும் தலைமைக்காரர்கள் பதவியில் ஏற்படும் வெற்றிடங்களுக்கெல்லாம், இப் பாடசாலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைமைக்காரப் பயிலுநர் குழுவிலிருந்தே, அலுவலர் நியமிக்கப்படல் வேண்டுமென்ற ஒரு நியதியைக் கொண்டு வரமுடியும். இத்தகைய நியமனங்களை நல்லதோர் ஆய்வின் பின்னரே செய்யலாம். இவ்வலுவலர் யாவரும் பொதுச் சேவையில் புறம்பான ஒரு கிளையினராக அமைவர். இத்தகைய ஒரு முறையின் சிறப்பியல்பு யாதெனில், இந்நாட்டின் பழக்க வழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றின் பயிற்சியை வேண்டி நிற்கும் ஒர் அரிய சேவையில், நல்ல பதங்களை இஃது இலங்கை இளைஞர்களுக்கு அளிக்குமென்க.

அதிகாரம் VIII
குடியியற் சேவையும் பொதுச் சேவையும் முன்னுரை
இலங்கையிலே யாப்பு முறைச் சீர்திருத்தம்பற்றிய பண்புகளில் முக்கியமானது யாதெனில், பொறுப்பினை இலங்கை மக்களுக்கு மாற்று கின்றபொழுது நாட்டின் பொதுச் சேவைகளில் எற்படும் மாற்றமேயாம். எனவே, இப்பொழுது பொதுச் சேவையின் அலுவலர் எத்தகைய நிலைமைகளில் கடமை பார்க்கின்றனர் என்பதையும் அவர்களுக்கு இப்பொ ழுதுள்ள இடர்களையும் அவர்களுடைய நிலையைப் பேணுவதற்கு எடுத்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளைப்பற்றியும் நாம் ஆராய்ந்துள்ளோம். இப்பிரச்சினைகள் இந்நாட்டுச் சூழல்களில் எவ்வாறு அமைந்தன என்பதை நாம் நுணுகி ஆராய்ந்ததின் பின்னர் ஏற்பட்டுள்ள எங்களுடைய எண்ணங்களை எடுத்துரைப்பதற்கு முன்னர், இப்பல்வேறு சேவைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பெயர்களைப்பற்றி நாம் இங்கு விளக்குவோம். இலங்கை யிலே பொதுச்சேவையென்பது ஆட்சி நிரலில் அமைந்த எல்லாக் கிளை களையும், பொது அலுவலர்களின் எல்லா வகுப்புக்கள், தரங்கள் யாவையும் உள்ளடக்கியுள்ளது. குடியியற் சேவை இப்பொதுச் சேவையின் ஒரு பகுதியாக உள்ளது ; ஆனல், இஃது உயர்ந்த ஆட்சித் துறை வகுப்பினரான குறித்த ஒரு வகுப்பு அலுவலரையே குறிக்கும். குடியியற் சேவையிலுள்ள இலங்கை அலுவலரும், ஐரோப்பிய அலுவலரும் பெரிய பிரித்தனிலே ஆண்டு தோறும், உள்நாட்டு, இந்தியக் குடியியற் சேவை, கீழைநாட்டுப் பயிலுநர் சேவை ஆகிய வற்றிற்காக நடாத்தப்படுகின்ற வெளிப்போட்டிச் சோதனைகள் மூலமாகத்தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இறுதியில் குறித்த கீழைநாட்டுப் பயிலுநர் சேவை மூலமாகவே இலங்கைக் குரிய குடியியற் சேவையினரன்றி, மலாயா, ஒங்கொங்கு ஆகியவற்றிற் குமுரிய குடியியற் சேவையினரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ் வாருகத் தொழில் நுட்ப முறையிலே குடியியற் சேவை என்பது பயிலுநர் சேவையென அறியப்படும். இச்சேவையினர் பொதுவாக உள்நாட்டுக் குடியியற்சேவையிலுள்ள உயராட்சி வகுப்பினர் கொண்டுள்ள தகுதி, கடமைகள் யாவற்றையும் கொண்டிருப்பர். ஆயினும், இது பரந்த எல்லையைக் கொண்டிருக்கும் ; ஏனெனில், இதிலுள்ள மூத்த அலுவலர் தொழில்துறை திணைக்களத் தலைவர்கள் போலவே நாட்டின் ஆட்சி முறைக்கு நேராக ஆள்பதிக்குப் பொறுப்பானவராக இருப்பரேயன்றி, சட்டசபைக்குப் பொறுப்பாயிருப்பவரல்லர். இது
71.

Page 92
72
தனிப்பட்ட ஒரு சேவையாகும். இந்தச் சேவையில் சேர்வதற்கு எலவே குறிக்கப்பட்ட தேர்வு மூலமாகவே சேரலாம். இக்குடியியற்சேவையில் மூத்த பதம் குடியேற்றநாட்டுச் செயலாளர் பதமே. ஆனல், இப் பதமானது ஆள்பதி பதத்திற்கு ஒரு முன்னமர் பதமாகக் கருதப் படுகின்றது. எனவே, இப்பதத்திற்குத் தீவின் வெளியே இருந்தே ஆட்கள் நியமிக்கப்படுவர். எனவே, இப் புதிய யாப்பு முறையினை இங்கு நாம் அமைத்துக் கொண்டதன் பின்னர், உள்நாடு பற்றிய அறிவு, அனுபவம் ஆகியவை நற்பயன் தரக்கூடிய தாயிருக்கின்ற இப் பதத்திற்கு, மேற்கூறிய ஒழுங்கு முறையைப் பின்பற்றுவது நல்லதா என்பது ஆராய்ச்
சிக்குரியதாகும்.
எனவே, இங்கு உரையாடும் முறைகளில், குடியியற் சேவையென்பது
உயராட்சி முறைச் சேவை என்பதைக் குறிக்கும் ; பொதுச் சேவை யென்பது, இது தொழில் முறையில் குடியியற் சேவையையும் கொண் டிருக்குமெனினும், குடியியற் சேவைக்கு அப்பாற்பட்ட எல்லா ஆட்சித் துறைக் கிளைகளையும் அடக்கும். இவ்வாருக, வேளாண்மை, வனபரி பாலனம், நீர்ப்பாய்ச்சல், உடனலம், இருப்புப் பாதை, பொது வேலைத் திணைக்களம் ஆகியவற்றேடு இயைந்த தொழில்முறை அலுவலர் யாவரும் பொதுச் சேவையினரன்றி, குடியியற் சேவையினராகார். ஆனல், தொழில் முறையல்லாத் திணைக்களத் தலைவர்கள், மாநில அரசாங்க முகவர்கள் ஆகியோரைப்போன்ற ஆட்சிமுறை அலுவலர் யாவரும் குடியியற் சேவை யினர் எனப்படுவரேயன்றி, பொதுச் சேவையினர் எனப்படுபவரல்லர். இக் குடியியற் சேவையைத் தவிர்ந்த, பொதுச் சேவையோடியைந்த வேறு சில துறைகளும் உண்டு. அவை, தமக்கென உரிய சில பெயர்களைக் கொண்டிருக்கும் ; அவை எழுதுவினைஞர் சேவை, உதவிச் சேவை என் பனவாம். இவற்றிற்குரியவர்கள் போட்டித் தேர்வு மூலம் உள்நாட்டி லேயே தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனல், இங்கு நாங்கள் எடுத்துக் கூறப் போகின்ற கட்டுரையில் இவ்வகுப்பு வேறுபாடுகளைக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், எங்கள் குறிப்புரைகள் எல்லாம் பொதுவாக யாவருக்கும் உவந்தன. எனவே, நாம் பொது அலுவலரென்றே, பொதுச் சேவைக ளென்றே குறிப்பிடும் பொழுது இவற்றை வரையறுக்கப்பட்ட கருத்துடை யனவெனக் கொள்ளலாகாது. ஆனல், இவை இலங்கை அரசாங்க சேவை யிலுள்ள எல்லா வகுப்பு அலுவலரையும் கருதும் எனக் கொள்ளல் வேண்டும்.
இப்பொழுதுள்ள நிலை
எலவே, முன்னேர் அதிகாரத்தில் நாம் கூறியவாறு, இலங்கை அரசியல் வரலாற்றில் வியக்கத்தக்க பண்புகளுள் ஒன்று என்னவென்றல், இற்றை ஆண்டுகளில், யாப்பு முறைகளிலமைந்த மாற்றங்கள் எவ்வாறு

173
த, !றன்பின் ஒன்ருக விரைவில் ஆகின என்பதே. 1833 இலிருந்து 1910 வரை, யாப்பு முறையானது, உண்மையில் மாரு நிலையிலேயே இருந்துள்ளது. இதைத் தொடர்ந்துவந்த 13 ஆண்டுகளிலும், முடிக் குரிய குடியேற்றநாட்டு அரசாங்கம் என அறியப்படுகின்ற நிலையிலிருந்து, நிறைவேற்றுப் பொறுப்பு அளிக்கப்படாவிட்டாலும், சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் யாவரும், தங்களுடைய நிலைமைக்கு உண் மையான அதிகாரிகளாக வரும் வரைக்கும், ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்த பல மாற்றங்களை இலங்கை கொண்டுள்ளது. இந்த மாற்றங் Soft மூலாதாரமானவையாயும் வன்மையுடையனவாயுமிருந்தாலும் நிலையான பண்பு உடையனவாயிருக்கவில்லை. அவற்றின் இயல்பினலேயே இன்னும் மேல் முறையான சீர்திருத்தங்களைப் புகுத்தவேண்டிய இயல் புடையனவாக அவை அமைந்திருந்தன ; இவ்வாருக வந்த ஒன்றை இப்பொழுது நாம் எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடுடையவர்களாக இருக்கிறேம்.
இவ்வாறக, அடுத்தடுத்து வந்த சீர்திருத்த முறைகள், நாட்டின் பொதுச் சேவைமேல் பொல்லா ஊழியக் கடப்பாட்டினைச் சுமத்தின. மிகப் பழையவையும், மிக்க அனுபவமுற்ற முறையிலமைந்தவையுமான குடியேற்றநாட்டு அரசாங்கங்களோடு, அனுபவம் கொண்டவர்களும் அரசி யல் வரன்முறையில் தேர்ந்தவர்களுமான பொதுச் சேவையில் உள் ளோர், உரிய நிலைமைகளுக்குத் தம்மைத் தாமே செம்மையாகப் பயன் படுத்திக் கொள்வதற்கேற்ற கால நேரத்தை வேண்டியவராக இருந்தனர். இந்த அரசியல் வரன்முறைகள், விமரிச உரிமையை ஏற்றுக்கொண்டன எனினும், பாராளுமன்ற வழியால் வரும் தலையீடுகளினின்றும் அலு வலர்களை அரசாங்கம் பாதுகாக்கவேண்டுமென்ற உரிமையில், நம்பிக்கை உடையனவாக இருந்தன. ஆனல், இந்தப் பொதுச் சேவையினருக்கோ தம்மைத் தாம் செம்மைப்படுத்தப் போதிய காலம் அளிக்கப்படவில்லை. ஒருமுறை வந்த சீர்திருத்தங்களின் உண்மையான இயல்பை அவர்கள் விளங்கிக் கொள்வதற்கு முன்னரே, வேறு புதிய சீர்திருத்தங்கள் அவர்முன் தோன்றின. மாற்றங்களின் விரைவினலேயே, என்றும் இடர் தரக்கூடிய ஆட்சிமுறையோடு சேர்ந்த இடர்கள், மாறிய ஆட்சிமுறை தரும் இடர்களிலும், இன்னும் கூடின இடரை அளவின்றித் தந்தன. அரசியல் சீர்திருத்தம் வேண்டுமென்ற ஒரு நசை, எல்லோரையும் மயக்கி, ஆட்சி முறைத் திறனுக்கு வேண்டிய உரிமைகளுக்குச் செவி சாய்த்து செய்யவேண் டிய செம்மைகளைச் செய்யாமல் தடுத்துவிட்டது. இத்தகைய கவலையீனம் இருந்தும், பெரிய மாற்றங்களினுடைய தொல்லைகளுக்கூடாக நிலை நின்று செவ்வனே கடமையாற்றும் ஆட்சிமுறை பாராட்டுத்லுக்குரியதே; யாப்பு முறைப் பரிசோதனையின் சோதனைக் காலத்தில் திடீர் மாற்றங்கள் யாவற் றிற்கும் இம்முறை நிலைநின்றது வியப்பிற்குரியதே. இதை மாற்றியமைக்க

Page 93
74
வேண்டிய இன்றியமையாமையிருந்தும் இது பத்தாண்டுகளுக்கு முன் எவ்வாறு திறம்பட இருந்ததோ, அவ்வாருன நிலையில் இன்றும் இருக் கின்றது.
இச்சிறப்பான விளைவினைத் தனிப்பட்ட அலுவலர்களின் சொந்த உட னலத்தைத் தியாகஞ் செய்தே பெறவேண்டியிருந்தது. அலுவல் பற்றற்ற உறுப்பினர்களின் அதிகாரம் உயர உயர, அது, அரசாங்க அலுவலர்கள் மேலே இடையருத தாக்குதல்களினலே தன் வெறுப்பினை வெளிக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அலுவல் பற்றற்ற உறுப்பினர்களு க்கு நிறைவேற்று பொறுப்பு அளிக்காததால், அந்நிலைமை அவர்களைத் தாங்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் என்று உணரச் செய்யாது தடுத்து, அரசாங்கத்திற்கு இன்றும் நிலையான ஓர் எதிர்க்கட்சியாக அவர் களை அமைத்துவிட்டது. எனவே, இந்த இலகுவான நிலையிலிருந்து கொண்டு எப்பொழுதும் அவர்கள் அரசாங்கத்திற்குத் துன்பமளித்து அதன் அலுவலர்களுக்கும் துன்பமளிக்க எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத் திக் கொண்டனர். இப்பொதுச் சேவை அலுவலர் நாட்டிற்குச் செய்த ஊழியத்தைப்பற்றி, பாரபட்சமற்ற முறையில் அமையும் மதிப்பீடு, நாட் டுக்குச் சுதந்திரத்தைக் கொண்டு வரவேண்டுமென்ற நியாயத்திற்கு எதிர் மாருயமைந்து எவ்விதமான நெருக்குதலினல் சுதந்திரத்தைப்பெற அவர் கள் கருதுகின்றர்களோ அதன் வன்மையையும் தளர்த்திவிடும் என்பது அவர் கருத்து. யாரை இவர்கள் தாக்குகின்றர்களோ அவர்களுடைய மென் குணவியல்புகளுக்காக தங்களுடைய கலப்படையில் உள்ள மிக்க வன்மை பொருந்திய கலன்களை அவர்கள் எவாது வாளாவிருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது ; என்னை? தாக்கப்பட்டோர்களுமோ எவ்வளவுதான் பற்றற்றவர் போலிருப்பினும் யாப்பின் ஒழுங்கு முறையிலேயே எதிரான நிலையில் வைக்கப்பட்டனரன்ருே ?
அரசாங்க அலுவலர்களை இவ்வாறு நிந்திப்பது ஒர் இடையரு நிகழ்ச்சி யாக இருந்து வந்துளது. அரசாங்க சபையில், நிதிக்குழுவின் கூட்டங் களில், பொது மேடைகளில், பத்திரிகைகளில் இவர்களைத் தாக்குவதும் கண்டித்துரைப்பதும் ஓயாமல் நடந்து வந்தன. பதவி முறைகளில் ஈடு படாமல் எப்பொழுதும் ஆட்களைப்பற்றிய உரையாடல்களிலேயே இக்கண்ட னங்கள் நடைபெறும். சில வேளைகளில் இவ்வாராய்ச்சி உரைகளெல் லாம் பண்பற்றனவாயும் கண்ணியமற்றனவாயுமிருந்தன. குறித்த ஒரு செயலொடு இசைவு படாமல் இருந்தால் அந்தச் செயலைச் செய்தவரி னுடைய நோக்குக்கள்பற்றியும் ஐயத்திற்குரிய வினக்கள் எழுப்பப் படும். மறுமொழி கூறக்கூடிய வாய்ப்பில்லாத இவர்களுக்கு எதிராக எல்லா விதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டன. பெரும்பாலும் திணைக்களத் தலைவர்களே இவ்வசைக்கு ஆளாகியிருந்தாலும், இத்தகைய துன்பம் நிறைந்த தாக்குதல்களுக்குப் பொதுச் சேவையிலமைந்த எந்த வகுப்

175
பினரும், எந்தத் தரத்தினரும் விலக்கப்பட்டவரல்லர். எனவே, நியாய மான முறையில், எவ்விதம் இத்தேர்வு பெற்ற உறுப்பினர்களிடமிருந்து உதவி பெறலாம் என இப்பொது அலுவலர்கள் நம்பியிருந்தும், இப் புதிய ஆட்சியிலே தங்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் அரைகுறையான அறிவினல் வரும் எதிர்ப்புக்களையே கண்டார்கள். தங்களுடைய முடிவு களெல்லாவற்றுக்கும் உற்சாகமற்ற முறையில் குறிப்புரைகள் வருவதை யும் அவர்கள் கண்டார்கள். பலம் பொருந்திய ஒரு நிருவாகத்தின் ஆத ரவை இதற்கு முன் அவர்கள் ஒருபொழுதும் இப்பொழுதிருப்பதுபோல் எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கவில்லை.
இந்த யாப்பு முறையை எவ்விதத்தில் இந்த அரசாங்கம் செயற்படுத்தி வந்தத்ோ, அம் முறையில் இவர்களுக்கு ஆதரவு ஒன்றுமில்லாமற்போய் விட்டது. இங்கு அரசாங்கமானது, அலுவல் பற்றற்ற உறுப்பினர்களுக்கு இடங்கொடுத்து எவ்வளவுக்கு அது சென்றுள்ளதென்பதைப்பற்றி ஆராய் வதையோ, அல்லது அதற்கு மாறக தாங்கள் கொண்ட முடிவுகளையே நன்முறையில் உறுதியாகக் கடைப்பிடித்து, தம்முடைய ஆட்சித்துறை அலுவலர்கள் வேலைகளில் அவர்கள் தலையிடுவதை ஒரு நெருக்கடியான நிலை வரக்கூடிய அளவுக்குத் தடுத்திருக்கலாம் என்பதையோ நாம் எடுத்தாராய வேண்டிய அவசியமில்லை. ஆயினும், எல்லா எதிர்ப்பிற்கும் சரணடைகின்ற ஒரு பூட்கையை இவர்கள் கடைப்பிடிக்கின்றர்கள் என்ற எண்ணத்தை, இவ்வலுவலர்களுக்கு அளித்ததும், அவ்வாறு என் கடைப் பிடிக்கப்பட்டது என்பதை இவர்களுக்கு நன்முறையில் எடுத்துச் சொல் லாமல் விடப்பட்டதுமான அக்கொள்கை முறை, இவ் வலுவலர்களை நெஞ்சுறுதி யற்றவர்களாகவும் மலைவு கொண்டவர்களாகவும் ஆக்கிவிட்ட தென்பதை இங்கு எடுத்துக் கூறத்தான் வேண்டும்.
தங்களுடைய பதங்களிலும் ஒர் உறுதியான நிலையைத் தாம் கொண் டுள்ளனர் என்ற உணர்ச்சியும் இப்பொழுது இவர்களுக்கில்லாமற்போய் விட்டது. இலங்கையில் வாழ்க்கைச் செலவு மிகவும் உயர்ந்தது. ஐரோப்பிய அலுவலர்கள் பலர்க்கு மனைவிகள் உளர் ; கல்வி புகட்டவேண்டிய மக்கள் உளர். பலர்க்கு இலங்கையிலும் பெரிய பிரித்தனிலும் வீடுகளுண்டு ; அவற்ருற் செலவுண்டு. இவர்களுக்குரிய சம்பளங்களும் உதவிப் பணங் களும் குறைவானவையல்லவாயினும், இத்தேவைகளுக்குப் போதியன வல்ல. ஆயினும், சில ஆண்டுகளுக்கு முன்னல் இவர்களுடைய சம்பளம் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக இருந்ததென்பதை இவர்கள் மறுக்க மாட்டார்கள். ஆள்பதியானவர், இடையருத எதிர்ப்பு அதற்கிருக்குமானல், உறுதிப்படுத்தும் தம்முடைய அதிகாரத்தை அதற்கு உபயோகிப்பார் என்ற தின் பின்னரே, சபை அச் சம்பளங்களை எற்றுக்கொண்டது. இப்பொழுது சம்பளங்களையும் உதவிப் பணங்களையும் எதிர்க்கும் ஓரியல்பு தோன்றி யுள்ளது. ஆயினும். இவ்விடைக் காலத்தில் யாப்பு முறையிலே செய்யப்

Page 94
76
பட்ட மாற்றங்களால் அரசாங்கத்தின் பூட்கையின் முழுப் போக்கே மாற்றப் பட்டுள்ளது. எவ்வளவிற்குப் பொது அலுவலர்க்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்பது நிச்சயமற்றதாயுள்ளது. குடியியற் சேவையின் வாக்கினை ஐந்து உரூபாயால் குறைக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானம் சென்ற ஆண்டில் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானமானது, சேவைக்கு எதிராக அமையாமல், அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கண்ட னம் எனக் கொள்ளினும், ஒராண்டு ஐந்து உரூபாயாக இருந்தது மறு ஆண்டில் ஐயாயிரம் உரூபாயாக மாறி, எதிரண்மையில் ஐந்து இலட்ச உரூபாயாக மாறும் என்ற ஓர் துன்புநிறை எண்ணம் இச்சேவையினரிடம் நிலவுகின்றது. சட்ட சபையின் ஒரு தெரி குழுவானது அரசாங்க அலுவலர் களின் சம்பளங்களை ஆராயவும் அரசாங்கத் திணைக்களங்களின் பதநீலைகளை ஆராயவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிப் பின்னர் நாம் எடுத்துக் கூறுவோம். இத்தகைய சிக்கலும் பெருப்பமும் உடைய ஓர் அலுவலை ஆராய்வதற்கு இக்குழு செயற்றிறனற்றதும் அறிவு குறைந்ததுமாக உள் ஷது. அவ்வலுவலைத் துறைபோகிய அறிஞர்களே செவ்விதில் கையாள முடியும். இத்தகைய குழுவை நியமித்ததையிட்டு இலங்கைச் சேவையின ரிடையே கவலையேற்பட்டுள்ளது. கப்பற் செலவுப் பயணம்பற்றிய அளியோ இடர் நிறைந்த நிலையில் இருக்கின்றபோது, பொது அலுவலர்கள் விடு முறை எடுத்துக் கொண்டு தம் நாடு திரும்புவதும் இயலாதவொன்ற யிருக்கின்றது. பேரரசின் மற்றைப் பாகங்களிலே செயன்முறையில் இருப் பனவும், எலவே, அரசுச் செயலாளரின் இசைவு பெற்றனவுமான இளைப் பாற்றுச் சம்பளம், இறப்புக் கொடை ஆகியவைபற்றி நிதிக்குழு கூறிய உரைகளை, அரசாங்கம் கவனத்துக் கெடுத்துக் கொண்டதும், தங்களுடைய இளைப்பாறல் உரிமையையும் இச்சபை நீக்கிவிடுமோ என்ற ஓர் ஐயமே இவ் வலுவளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்துக்குரிய பாதுகாப்புக்கள்
இத்தகைய சந்தர்ப்பங்களின் சேர்க்கையிலே, இலங்கைச் சேவையின ரிடையே மனங்குன்றலும், உற்சாகக் குறைவும், காரியங்களில் தலைமை யெடுத்து உழைப்பதில் தடையும் ஏற்பட்டுள்ளன. இப்பொழுதுள்ள யாப்பு முறையிலே வந்த பொல்லா விளைவுகளிலே, இம்மனவமைவில்லா விளைவு மிகப் பொல்லாதது என்று நாம் கருதுகின்றேம். ஒரு நாட்டினுடைய அரசியல் முன்னேற்றமானது ஆட்சிமுறைத் திறனைத் தியாகம் பண்ணிப் பெறவேண்டியதாயிருப்பது அந்நாட்டுக்கு நல்லதன்று. உண்மையில், பொறுப்பினை மாற்றுகின்ற ஒவ்வொரு முறையும், அனுபவமும், ஆற்றலும் நிறைந்த ஒரு பொதுச் சேவையின் இன்றியமையாமை தெள்ளிதில் புலனுகின்றது. ஆற்று திறன் என்பது, நம்பிக்கையும் மன அமைவும் என்றே நாம் சொல்லலாம். அரசியல் முறை சார்ந்த தலையீடுகளினின்றும்,

177
இப்பொழுதுள்ள யாப்பு முறையில் அவர் பட்டுழந்த மனக் கவலைகளி னின்றும், இப்பொதுச் சேவையினர் காக்கக்பட்டாலன்றி, இப்புது முறையை வெற்றி முறையில் செயற்படுத்தற்கு இன்றியமையாத அவர்களின் ஒத் துழைப்பை, அமைச்சர்கள் பெறுவார்கள் என்பது ஐயத்திற்குரியதே. ஒயாது அவர்கள் மேல் நடாத்திய தாக்குதல்களினல் அவர்களுடைய நோக்கானது விபரீதமான முறையில் கோணவில்லையாயினும், அவர்கள் இலங்கையர்களின் குறிக்கோள்களில் இயல்பாகவே தமக்கமைந்துள்ள பரிவினை ஒரளவு கடைப்பிடித்துள்ளார்கள் ; எனவே, இப்போது அவர்க ளுக்குள்ள கவலைகள் நீக்கப்படின் புதிய சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுதற்கு அவர் தம்மால் இயன்றவெல்லாம் செய்ய ஆயத்தமா யிருப்பர். எனவே, இப்பொழுதுள்ள சீர்திருத்தங்கள், வாய்ப்பான ஒரு சூழ்நிலையிலே புகுத்தப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டுமெனில் பொதுச் சேவையினர் நீதி முறையிலும் நன்முறையிலும் நடாத்தப்படுவர் என்ற ஒரு வாக்குறுதி இன்றியமையாததாகும்.
அண்மை ஆண்டுகளில் நடந்த யாப்பு முறை மாற்றங்கள், பொதுச் சேவையிலமைந்த ஊழியர்களுடைய நிலைமையைப் பொருளியல் முறையில் கீழ்ப்படுத்திவிட்டன என்பது தெளிவே. கொள்கை முறை அளவில் அவர்கள் ஆள்பதிக்குப் பொறுப்பாயுள்ளவர் எனினும், சட்டசபையில் உள்ள தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் அதிகார வளர்ச்சியினலே, அவர் கள் இரு தலைவர்களுக்கு ஊழியம் புரிகின்ற ஓர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். புதுக் கடமைகள் அவர்கள் மேல் பொறுப்பிக்கப்பட்டுள்ளன அவர்களுடைய வேலையோ மிகவும் இடருடையதாயும் சிக்கலுடையதாயும் ஆக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அதிகாரம் நசுக்கப்பட்டுள்ளது. J9|6) JfŤ களுடைய பத நிலையோ காப்பற்றதாய் ஆக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய எதிர்கால உயர்ச்சியோ ஐயத்திற்கிடமாயுள்ளது. இப்பொழுது, நாங்கள் எடுத்துரைத்த சீர்திருத்தங்கள், அவர்களை, அவர்களுடைய திணைக்களங் களில் தலைமை வகிப்பவராகக் கூடிய வாய்ப்புக்களை நீக்கிவிடும் ; அவர்களை அமைச்சர்களுக்குக் கீழ் வைப்பதும் அவர்களுடைய சேவை நிபந்தனைகளை அடிப்படையில் மாற்றிவிடும் ; எனவே, அவர்களுக்கு அவர்களின் ஊழிய நிலை இழப்பிற்காக இழப்பீடளித்து, விகிதசமனன இளைப்பாறற் சம்பளத் துடன், இளைப்பாறலுக்கு உரிமையும் கொடுப்பதன்றி வேறு வழியில்லை யென்பது எங்களுடைய எண்ணம். இந்த உரிமையைப் புதிய யாப்பு பேணல் வேண்டுமென்பது எங்கள் எண்ணம். எனவே, அதை வகிப்ப தற்காக மூன்று விதிகளை நாங்கள் இங்கு விதித்தல் வேண்டும் :-
(1) இவ்வுரிமை கட்டில்லாததாயிருத்தல் வேண்டும். (2) இவ்வுரிமையானது இப்பொழுதுள்ள இலங்கை அரசாங்க சேவையி லுள்ள ஐரோப்பிய, இலங்கை அலுவலர் யாவருக்கும், இக்குழுவின் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர்

Page 95
178
இத்தகைய சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயும், அரசச் செயலாளரின் இசைவிற்கமைந்த நியமனங்களைக் கொண்டுள்ள வர்களாயும் உள்ளவர்களுக்கும், இது உரியதாயிருத்தல் வேண்டும். . (3) இவ்வுரிமையானது இடையீடின்றி உள்ளதாயிருத்தல் வேண்டும். குறித்த ஒரு கால வரையறைக்கு மட்டும் செயற்படுவதாயிருக் காது ; இலங்கை அரசாங்கத்தின் கீழ் ஒவ்வோரலுவலரும் சேவை செய்கின்றபொழுது அம்முழுக் கால எல்லைக்கும் இது உரியதா யிருத்தல் வேண்டும். இவ்வாருக, இளைப்பாறும் உரிமையை ஐந்து, அல்லது பத்து ஆண்டு களுக்கென, குறித்த ஒரு வரையறுத்த காலத்திற்கு மட்டுமே செய லுடையதெனக் கொள்வது ஒரு குறுகிய நோக்குடைய பூட்கையாகும். இவ்வாறு சிலர் தெரிவித்துள்ளார்கள் ; குறித்த ஓரளவு அலுவலர்கள் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக, அல்லது ஒரே முறையிலாக இவ்வுரி மையைப் பயன்படுத்தி இளைப்பாறுவார்களேயானல், இவ்வாட்சி முறை இடருறுமாதலின், இது ஒரு குறுகிய நோக்குடைய கொள்கையென்பது எவர்க்கும் புலப்படும். இன்னும், இந்த யாப்பு முறை மாற்றத்தால் வரும் சூழ்நிலைகளுக்கேற்றவாறு தம்மை அமைத்துக் கொள்வதற்கேற்ற நல் வாய்ப்பினை இவ்வலுவலர்களுக்குக் கொடுப்பது நலந்தருவதொன்றகும். அன்றியும், இவ்வாறு உரிமையைப் பயன்படுத்தும் ஒரு காலவெல்லை, ஒரு பொழுது முடியுமென்ற ஒரெண்ணத்தினலே இவர்களுடைய நிலைமை இழிவுறும் தகையையும் பாதுகாத்தல் வேண்டும்.
எவ்வாறக இவ்விகிதசமனன முன்றயிலமைந்த இளைப்பாறற் சம்பளத் தைக் கணித்தல் வேண்டுமென்று இங்கு நாங்கள் எடுத்துரைக்க விரும்ப வில்லை. ஏனெனில், இது எங்கள் கடமையெல்லைக்கு அப்பாற்பட்டதென்க. ஆயினும், மேற் குறித்த விதிகளைக் கொண்டிருக்கும் புதிய கழகத்துப் பணிக்கைக்குரிய கூறு, அரசுச் செயலாளர் எவ்வாறு இந்த இளைப்பாறற் சம்பளத்தை முடிவு செய்தல் வேண்டுமென்ற கருத்துரைகளைக் கொண் டிருத்தல் வேண்டும். விகிதசமனன முறையிலமைந்த இளைப்பாறற் சம்ப ளத்தைக் கொடுக்கின்ற முறைகளைப்பற்றிய விதிகளை அமைக்கின்றபொழுது, போர்ச் சேவையின் பின்னர், தம்முடைய வயது வந்த காலத்தில், இலங்கை அரசாங்கத்தில் சேவைகொண்ட அலுவலர்களின் வகையில், சிறப்பான கவனஞ் செலுத்த வேண்டுமென்று நாம் எடுத்துரைக்கின்றேம்.
விகிதசமன் முறை இளைப்பாறற் சம்பளத்தில், பொது அலுவலர்கள் ஒரே முறையில் இளைப்பாறுவது விரும்பத் தக்கதன்று. இன்னும், அண் மையிலோ, அல்லது அடுத்து வரும் காலத்திலோ பலர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி இளைப்பாறின், அதுவும் ஒர் அவப்பேறே. மாறிய ஒரு சூழ்

179
நிலைக்கு, குணப்பண்பு முறையில் உவப்பில்லாதவர்கள் விலகுவதற்கு
இத்தகைய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தினலும், ஆட்சி முறையினை ஒடியாத ஒரு நல்ல முறையிலே பேணுவதன் பொருட்டு, தொழில் செய்யும்
அலுவலர்களின் ஒரு பெருத்த கூட்டத்தை நிலை நிறுத்துவதை அரசாங்கம்
தனது இலக்காகக் கொள்ளல் வேண்டும். புது யாப்பு முறைப் பொறுப்புக்
களையும் சுமைகளையும் தாங்குவதற்கு விரும்புவோர் யாவரும், இலங்கைச்
சேவையில் நீடூழி உழைக்க விரும்புவதே பொதுமக்கள் நலனுக்கு உரிய
தாகும். ஆயினும், இதுவரை ஆட்சிமுறையின் சிக்கல்களைப் பற்றிய நல்
லறிவு இல்லாதவரும், எப்பொழுதும் அரசியல் நோக்குக்களினல் தங்க
ளுடைய தீர்மானங்களைத் திரிவுபட விடுபவரும், வருங்காலத்தில் தமக்குக் கீழமைந்த கடமையாற்றுபவர்களுடைய நம்பிக்கைக்கு எற்றவிதமாக இது
வரை நடந்து கொள்ளா இயல்புடையவருமான, இந்தத் தேர்ந்தெடுக்கப்
பட்ட அங்கத்தினர்கள், வருங்காலத்தில் தமக்குப் பரிவு காட்டுவரோ என்று
இவ்வலுவலர் ஒருபொழுதும் நம்ப மாட்டார்கள். எனவே, புதிய யாப்பு முறையிலே வேறு பிற காப்புக்களை ஏற்படுத்தல் வேண்டும். இக்காப்புக்கள்,
இறுதியாக இந்த பொதுச் சேவையினருடைய சம்பளம், உதவிப் பணம்,
சேவையின் நிலைமை, எதிர்கால வாய்ப்பு ஆகியவைபற்றிய அதிகாரம்
யாவையும் அரசுச் செயலாளர் பொறுப்பில் விடுவனவாயிருத்தல் இன்றி
யமையாதது.
காப்புக்களைப் பயன்படுத்தல்
மேற்கூறிய பந்தியிலே எடுத்தோதப்பட்ட காப்புக்களை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதைப்பற்றி ஆராயு முன்னர், எவ்வாறு வருங்கால இலங்கைச் சேவைகளில் அமரும் அலுவலர்க்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்தல் நல்லது ; அலுவலர் என்கின்ற பொழுது இவ்வாணைக் குழுவின் அறிக்கைவெளியிட்ட பின்னர் இச்சேவைக்கு ஏற்கப்படும் அலுவலர்களையே நாம் குறிக்கின்றேம். இச்சந்தர்ப்பத்திலே பொதுவாக மற்றையோர் கூறுவது யாதெனில், எதிர்காலச் சேவைக்கு அமர்வோர் விழிப்புடனே சேவையில் அமர்வர்
என்பதாகும். இவ்வாணைக் குழுவின் அறிக்கை வெளியாவதும் அதன்பின்னர் புதிய யாப்பு முறையை அமைத்தலும் இனி வருங்காலச் சூழ்நிலையை அவருக்குச் செவ்வனே அறிவுறுத்துமன்றே ! அதன் பின்னர், அவர் சேவையில் அமர எண்ணுவரேல் அதனல் வரும் இடர்களையெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தல் வேண்டுமன்றே ! இந்த விதிமுறையானது பிழையற்றதெனினும், செயன்முறையில் பொல்லா விளைவுகளைக்கொண்டுவரும். ஏனெனில், இச்சேவையில் அமர விழையும் நல் தகுதியுடையோர் அவர்களுக்கு வேறு வேலையில் அமரக் கூடிய வாய்ப்பு இருக்கின்றபொழுது, மிகவும் நிலையற்ற ஒரு பதத்தினைத் தருகின்ற அயனமண்டலப் பிரதேசத்திலுள்ள ஒரு சேவையை மனமுவந்து

Page 96
80
விரும்புவர் என்று நாம் எதிர்பார்க்கலாகாது. வருங்காலச் சேவையில் புகுவோர் தம்மையே கண்காணித்துக் கொள்வரென்று எதிர்பார்த்தல், நல்தரத்திலில்லாச் சேவையினரை இழத்தல் அன்றியும், அவ்வாறு சேவை நிலைமைகளை நன்கு அறியாது வருவோர் விரைவில் மனமுடைந்து போதலும் ஆகும். எவ்வாறு, என்ன வகையில் நோக்கினலும், சேவையின் திறன் கெடுவது திண்ணம். உண்மையில் ஆட்சிமுறையும் வருங்காலத்தில் சீரழிந்துவிடும். உண்மையில், இலங்கை யில் சேவையில் இப்பொழுதிருக்கின்ற பொது அலுவலர்கள், தங்களுடைய திணைக்களங்களில், சேவை பார்ப்பதற்காகத் திறன்படைத்த நல்லறிவுடைய மன அமைவு பெற்ற புதிய அலுவலர்களை இடையருது பெருவிடின், அவர்களுடைய நிலைமையோ மிகவும் இடர் நிறைந்ததாய் மாறி, விகித சமன் இளைப்பாறற் சம்பளத்தில் அவர்களை இளைப்பாறத் தூண்டியும் விடும். எனவே, பொதுச் சேவையிலமைந்தோர் ஒரு பெருத்த எண்ணிக்கையில் வெளியேறக் கீழ்த்தரத்திலுள்ள, அனுபவமற்ற அலுவலர்கள் அவர்களிடத்தைக் கொள்வரேல், நாட்டுக்கு அழியாத் தீங்கு ஏற்படுமென்பது எவர்க்கும் புலனுகுமன்றே !
எனவே, எதிர்காலச் சேவையில் அமர விழைவோர்களுக்குரிய நிலைமைகள், எலவே, சேவைக்கு அமர்த்தப்பட்ட அலுவலர்களைப்போன்ற நற்பயிற்சியுடைய, திறமை வாய்ந்த நாடிகளை ஈர்க்கக்கூடியனவாயிருத்தல் வேண்டும் ; இது மிக முக்கியமானது இப்பொழுதுள்ள அலுவலர்களுக்கு எவ்வாறு காப்பளித்தல் இன்றியமையாததோ, அவ்வாறே ஐய நிலையானது ஏற்படாவண்ணம் வருங்காலச் சேவையினர்க்கும் காப்பளித்தல் இன்றியமையாததென்பது மேற்கூறியதிலிருந்து புலப்படும். எனவே, இப்பொழுதுள்ள அலுவலர்களுக்கும் இனி வருவோர்களுக்கும் ஒத்த முறையில் பயன்தரக்கூடிய காப்புமுறையொன்றினைச் குழ்தல், எங்களுடைய நோக்காயிருத்தல் வேண்டும் ; இவர்களுக்கிடையேயுள்ள ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், எலவே சேவையிலிருந்தோர் சூழ்நிலை மாறின தன்மையாலே, எந்நேரத்திலும் விகிதசம இளைப்பாறற் சம்பளத்தைப் பெற்று இளைப்பாறுதலுக்குச் சுதந்திரமுடையவராயிருக்க, பின்வருவோர் அச்சுதந்திரம் இலாதவராயிருத்தல் வேண்டும்.
பதிற் பாதுகாப்புக்கள் கீழ்வரும் வேறுவித காப்பு முறைகளையும் எடுத்துக்கூறப்
LJL LL 607 :-
(1) ஒதுக்கப்பட்ட பொருள் :-இலங்கைச் சேவையினர் grsTfL fT6 எடுத்துத் தெரிவிக்கக் கூடியவரினுடைய முடிவான தீர்மானமானது, பொது அலுவலர்களின் சம்பளம், உதவிப் பணம், இளைப்பாறற் சம்பளம்

8.
ஆகியவை சட்ட சபையின் ஆண்டு வாக்கெடுப்பில் பொருளாயமைதல் ஆகாது. ஆனல், என்றும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றும் இன்னும், பொதுச் சேவையினருடைய விதவைகள், அனதைகள் ஆகியோருக்குரிய இளைப்பாறற் சம்பளங்களுக்கும் அந்தப் பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டுமென்றும் எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தெரிப்புரையை நாம் எற்றுக்கொண்டால் இது “ ஒதுக்கப்பட்ட பொருள்கள் ” என்ற ஒன்றினைப் புதிதாக எற்படுத்துவது ஆகும். இது இந்திய அரசாங்க விதியில் அமைக்கப்பட்ட ஒன்றினை ஒக்கும். இதனல், இந்த யாப்பு முறையிலே ஒர் இரட்டையாட்சிப் பண்பு தோன்றுவதாகும். இதை மற்றை முறைகளில் நாம் கடிந்து ஒதுக்கியுள்ளோம். இலங்கையிலே இது ஒரு பிற்போக்கான நடவடிக்கையாயிருக்கும். ஏனெனில், இங்கு செலவுபற்றிய முழு அதிகாரத்தையும் சட்டசபையானது, இந்திய சட்டசபை யினைப் போலல்லாது, தானே கொண்டிருந்த தென்க. எனவே, நல்ல யாப்பு முறையைக்கொண்டு நோக்குகின்ற பொழுது வரவுசெலவுத்திட்டப் பொருளைப் பிரிப்பது பிற்போக்கான ஒரு நடவடிக்கையாகும். இன்னும், இயைந்த வேறேர் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க முடியுமெனில் இது தவிர்க்கப்பட வேண்டியதொன்றகும். இன்னும், பொதுச் சேவையினர், இப்பொழுதுள்ள இடர்கள் மேலும் எதிர்வராமல் இருப்பதற்குரிய பாதுகாப்புக்கள் பெறவேண்டுமென்பது இன்றியமையாதது என நாம் கருதினும், அவர்கள் என்றும் அலுவல் பற்றற்றவரினுடைய கண்டனங்களுக்குச் செவிசாயாத ஒரு மிதப்பான நிலையிலே தம்மை அமைத்துக்கொள்வது, அவர்களுக்கு நலந்தருமோ என்பது எங்களுக்கு ஐயந்தருவ தொன்ரும்.
(2) திரட்டிய நிதி-பொதுச் சேவையினருடைய சம்பளங்கள், உதவிப் பணங்கள், இளைப்பாறற் சம்பளங்கள் திரட்டிய நிதியில் கட்டப்படல் வேண்டும் ; இதைப்பற்றிச் சட்டசபை ஒரு கேள்வியும் எழுப்பலாகாது.
இந்தத் தெரிப்புரை கடைப்பிடிக்கக்கூடிய தொன்ருயினும், நல்ல ஆதரவைப் பெறவில்லை. இதற்குப் பல எதிர்ப்புரைகள் கூறி)ாம். அவை வருமாறு:-
(அ) பொது அலுவலர்களின் சம்பளங்களை ஆராய்வதில் சபை உறுப்பினர் நெடு நேரத்தைச் செலவழிப்பது நன்றன்று : ஆயினும், இதைப்பற்றிய அதிகாரம் அவர்கள் பொறுப்பில் மட்டுமே இல்லாவிடத்து, இதைப்பற்றி அவர்கள் ஆராய்வதை என் தடைசெய்ய வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை.

Page 97
182
(ஆ) நிறைவேற்று குழுவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்
புரிமைக்கு இத்தடை முழு மாறயமைந்திருக்கும் ; இன்னும் தாபன அலுவல்களை ஆராய்கின்றபொழுது இத் தடை அவர்களுடைய அலுவலையும் தடைசெய்யக் கூடியதாகவும் இருக்கும். எனவே, இதனுல் பிணக்குக்கள் எற்படக்கூடும்.
(இ) எல்லாச் சம்பள அமைப்புக்களும் அவை போன்றவையும் அரசுச் செயலாளர் பொறுப்பிலேயே இருத்தல் வேண்டுமென்ற சிறப்பு முறையை விதித்தாலன்றி, இது ஒரு போதிய பாதுகாப்பாகாது இதை இவ்வாறு செய்யும் பொழுது இங்கு கூறிய ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்தல் வேண்டிய தொன்றன்று.
(3) பொதுச் சேவைக் கட்டளைச் சட்டம்-திட்டமான சம்பள வகுப்பு, உதவிப் பணம், இளைப்பாறற் சம்பளம் ஆகியவற்றைப் பொதுச் சேவை யினருக்கு உறுதிப்படுத்துகின்ற ஒரு கட்டளைச் சட்டம் இயற்றிய பின்னரே புதிய யாப்புமுறை அளித்தல் வேண்டுமென்று எங்க்ளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பின் நாம் எடுத்துக் கூறப்போகும் காரணங்களுக்காகவே இத் தெரிப் புரை எடுத்துக் கொள்ளக்கூடிய தொன்றன்று எனக் கருதுகின்றேம் :- (அ) இத்தகைய ஒரு கட்டளைச் சட்டம் செயன்முறைக்கு உதவாததும் ஒழுங்கற்றதாயுமிருக்கும். இதற்குத் திருத்தங்கள் அடிக்கடி செய்யவேண்டிநேரிடும். இன்னும் சபையானது இத்தகைய திருத்த முறிகளை வரிப்பதற்கு இசைவு கொள்ளுமோ என்பதும் ஐயத்திற்குரியது. இன்னும், சபையானது இக்கட்டளைச் சட்டத்தை, யாப்பு ஒழுங்கு முறையில் அவ்வாறு செய்ய்த் தடுக்கப்படாவிடின் தானே மாற்றவும் கூடும். இவ்வாறு செய்யும் நடவடிக்கையின் பயன் எவ்வாறு இருப்பினும் அது இந்த முன்னிடுகளுக்குரிய கருத்துக்களுக்கு முரணுயமையும் ; இன்றேல், ஆள்பதியின் வீட்டல் உறுதிப்படுத்தல் அதிகாரமே ஒரு பாதுகாப் பாகும் ; இவ்வதிகாரம் எப்பொழுதும் பயன்படுத்துவதற்கு உவந்ததன்று. (ஆ) பரிபூரணமான சம்பளம், உதவிப் பணம், இளைப்பாறற் சம்பள உரிமை, மற்றைப் பேறுகள் ஆகியவைபற்றிய ஒரு திட்டத்தைப் பெரிய பிணக்குக்கள் இன்றி மிக இன்றியமையா தனவென வகுத்துக் கொள்ளல் மிகச் சிக்கலானதும் பொறுப்பு வாய்ந்ததுமான ஓர் அலுவலாகும். எவ்விதமாகத்தான் நாம் இந்தப் பொருளை ஆராயப் புகினும் இந்தச் சம்பளங்களை நாம் ஆராய்ந்து புதிய ஒரு கட்டளைச் சட்டத்தை ஆக்குவதில் பெரிய காலதாமதம் ஏற்பட்டுவிடும்.

183
(இ) இவ்வாறமைந்த ஒரு தெரிப்புரை சபைக்கு ஒர் எச்சரிக்கை போன்றதாயமையும். அதனல், சபையினர் அதைப்பற்றிப் பகைமை கொள்ளல் கூடும். புதிய ஒரு யாப்பு முறையை அமைக்கின்ற நேரத்திலே இதனிலும் மிக எதிர்ப்பு நிறைந்த சூழ்நிலையை நாம் நினைக்கவும் முடியாது.
(ஈ) தெரிப்புரையை நாம் கடைப்பிடித்தால் மீண்டும் அது பொதுச் சேவையினரை அரசியல் போட்டிகளுக்குப் பொருளாக்கிவிடும். இத்தகைய ஒரு நிலையையே நாம் தவிர்ப்பதற்குப் பெரிதும் விரும்புகின்ருேம். பொதுச் சேவையினர் தாமே இத்தகைய ஒர் ஒழுங்கு முறையைக் கடிந்து ஒதுக்கிவிடுவர் என நாம் கருதுகின்ருேம்.
(4) கட்டுப்பாட்டு அதிகாரத்தை அரசச் செயலாளருக்கு அளித்தல் :- பொது அலுவலர்களின் சேவைக்குரிய நிலைமை, முன்னேற்றம், சம்பளம், உதவிப் பணம், இளைப்பாறற் சம்பளம் ஆகியவைபற்றிய முடிவினை அரசுச் செயலாளர் அதிகாரத்தில் விட்டுவிட வேண்டுமென்ற ஒரு கூற்றினைப் புதிய கழகப் பணிக்கையில் எற்படுத்தி, இவ்வளவு நாளும் நடந்ததுபோலவே இவற்றைப்பற்றிக் குறிப்புக்கள் கூறி விமரிசனம் செய்யச் சபைக்கு உரிமை உண்டென்பதை அறியுமாறு விடல். * இத்தெரிப்புரை கவர்ச்சிகரமானது. இது வரவுசெலவுத்திட்டத்தைப் பிரிக்காது. ஆனல், ஒரளவுக்குப் புதிய காப்பினை அளிக்கும். தங்க ளுடைய பாதுகாப்புக்கென உருவாக்கப்படும் எந்தத் திட்டத்திலும் பொதுச்சேவையினருடைய நம்பிக்கை முழுவதும் இயல்பாகவே அரசுச் செயலாளரில் தங்கியிருத்தல் வேண்டும். இவரே தங்கள் காப்புக்கு ஏற்றவர் என்றும் நடுநிலைமையான முறையை வகிக்கக் கூடியவரென்றும் அவர்கள் எற்றுக்கொள்ளவும் கூடும். இது இவ்வாருக, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து குறிப்புக் கூறுவதற்குரிய உரிமையை விலக்கிவிடுவதற்கு ஏற்ற காரணமொன்றும் புலப்படவில்லை. உத்தியோகப் பற்றற்றவர்களுடைய விமரிசனத்தைக் கேட்டு அரசுச் செயலாளரானவர் நியாயமற்ற முறையிலே நடந்து கொள்வரென்ற ஓர் எடுகோளினல் சபையின் அங்கத்தினர்களுக்குரிய குறிப்புரை கூறும் உரிமையை நீக்கல் வேண்டுமென்ற ஒரு கூற்று எழுமாயினும் அதற்கு ஒரு விடையுண்டு. எனெனில், இங்கு எடுத்துக் கொண்ட பிரச்சினையைப் பற்றி, ஒரு பக்கத்தார் கொண்டு வருகின்ற முறையீடுகளை மட்டுமே கேட்டு, ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசுச்செயலாள ருக்கு உண்டாக்குவதிலும், மேற்கூறியவாறு அவரைச் செய்யவிடுவதால் வரக்கூடிய இடர் மிகக் குறைவானதாயிருக்கும். ஆயினும், அவ்வாறு அவர் செய்வாரெனும் ஓர் எடுகோள் உண்டென நாம் எண்ணவில்லை. அது எவ்வாருயினும், அவ்வாறு நமக்கு ஒருவரும் எடுத்துக் கூறவில்லை.
8-ஜே என். பி 22574 (3/60)

Page 98
184
இப்பொழுது நாம் எடுத்துக் கூறிய கூறு போன்றதொன்று இப்பொழுது நாம் கொண்ட நோக்கத்திற்குப் போதியதாயினும், பொதுச் சேவையா ளருடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்குப் பொலிவுள்ளதாகாது. ஆனல், இத்தெரிப்புரை தனிமையாக இருந்தாற்றன் அது இவ்வா றிருக்கும். இன்னென்றேடுசேர்ந்தால் அது சேவையினருடைய நியாயமான தேவைகளுக்குப் போதியதாயிருக்கும். இன்னென்று யாதெனில், நாம் எலவே குறித்த விதத்தில் இச்சம்பளங்களை ஒருநிலைப் படுத்தலாகும். எனவே, இப்பொழுது எடுத்துரைத்ததெரிப்புரை எங்கள் முன் அளித்த தெரிப்புரைகள் யாவற்றிலும் மிக உவந்ததென்று நாம் கருதுகின்றேம்.
(5) காலத்துக்குக் காலம் சம்பள ஆணைக்குழுவை நியமித்தல்:- பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, அல்லது அரசுச் செயலாளர் கருதுகின்ற கால எல்லைகளுக்கு ஒருமுறை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து அனுப்பப்படு கின்ற சுதந்திரமான ஆணைக் குழுக்களினல் சம்பளம் முதலியவற்றை நிலையாக்கும் ஒரு முறையை வகுத்தல். இந்த முறைப்படி இத்தகைய ஆணைக்குழு எடுத்துரைத்த சம்பளக் கோவைக்கு இணங்கவே சம்பளங்கள் கொடுக்கப்படும். ஆனல், இவை அரசுச் செயலாளரின் இசைவுக்கு அமைந்தனவாயிருத்தல் வேண்டும் ; அரசுச் செயலாளருக்குக் காலத்துக் குக் காலம் வேண்டிய சிறு மாற்றங்கள் புகுத்த உரிமையுண்டு.
இந்த முறையிலே கீழ்க்காணும் நலன்கள் உண்டு :- (அ) இது நியாயமான பாதுகாப்பை அளிக்கும். தோற்றத்தில் இது மனப்போக்கிலமைந்ததாகாது ; அரசுச் செயலாளரின் பொறுப்பினைச் சிறிது குறைத்துவிடும்.
(ஆ) இப்பொழுதுள்ள சம்பள விகிதங்கள் இத்தகைய ஒரு குழுவினலே விதிக்கப்பட்டனவே. எனவே, இந்த முறையானது இப்பொழுதுள்ள ஒரு முன்மாதிரியைப் பின்பற்றியதை ஒக்கும்.
இப்பொழுது நாம் எடுத்துக்கூறிய அனுகூலங்களுக்கு எதிராக இலங்கை யில் ஒரு நிலையின்மையை ஆக்குவதுபோன்ற ஒரு பிரதிகூலமும் இதனுல் தோன்றுகின்றது. உண்மையில், இப்பொழுது நிலையாக்கப்பட்ட சம்பள விகிதங்கள் எதிர்காலத்திலும் நிலையாக நிற்கும் என எதிர்பார்க்க முடி யாது எனினும், இந்தப் பண்பை அழுத்திக் கூறுவது நற்பயனுடைய தன்று. எனெனில், சேவையில் இனி வருவோருடைய மனத்தை இது குன்றச் செய்துவிடு மென்க. இயன்ற அளவில், இலங்கை அரசாங் கத்தின் நோக்கு, சம்பளங்களிலும் இளைப்பாறற் சம்பள விகிதங்களி லும் ஒரு நிலையான தன்மையைப் போற்றுவதாயிருத்தல் வேண்டும். இந்தக் காரணத்திற்காகக் காலத்துக்குக் காலம் சம்பள ஆணைக் குழுக்களை நிறுவல் வேண்டுமென்ற ஓர் ஏற்பாட்டினைக் கைவிடல் வேண்டும்.

185
சம்பள ஆணைக்குழு
ஆனல், பொது அலுவலர்களுடைய சம்பளங்களை ஆராயும் பொறுப் பினைக் கடமையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணைக் குழுவொன்றை, இப்பொழுதே நியமித்தல் வேண்டுமென்பதற்கு, பலத்த நல்ல காரணங் கள் உண்டு என நாம் கருதுகின்றேம் ; இவ்வாணைக் குழுவில் இத்தகைய சிக்கலும் பொறுப்பும் வாய்ந்த அலுவலை மேற்கொள்ளக்கூடிய சிறப்புத் தகுதிபெற்ற உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்.
இந்த எடுத்துரையை நாம் நன்றக ஆலோசித்து முடிந்த பின்னரே கூறுகின்றேம். ஏனெனில், இதே நோக்கத்திற்காக 1926 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சட்ட சபையின் தெரி குழுவினை இது நீக்கிவிடுவதை யொக்கும், ஆதலின், இவ்வாறு நாம் இங்கு சொல்கின்ற இடத்திலே, இக்குழுவினுடைய முயற்சிகளைக் குறைத்துக் கூற அல்லது அத னுடைய செயலை ஒதுக்கிவிடக் கருத்துக்கொண்டிலோம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேம். சபையின் உறுப்பினர்கள் மனமுவந்து ஆற்றிய கடுமையான, பொறுமையான இவ்வேலையை நாம் போற்றுகின்றேம். ஆனல், எங்கள் குறிப்புரைகளில் யாதே னும் ஒன்று இக்குழுவில் சேவை செய்கின்றவர்கள் யாரையேனும் இகழ்கின்றது என்றே, அல்லது அந்தக் குழுவினுடைய நிலையின் பெரு மைக்கு இழுக்காய் அமைந்ததென்றே கருத்துக் கொண்டால், அது எங்க ளுக்கு மனக்கவலையைத் தரக்கூடிய தொன்றகும். ஆயினும், சட்ட சபையின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு இவ்வலுவலுக்கு உவந்த குழுவன்று என இப்பொழுதே, நாம் மிகவும் அழுத்தமாக, சொல்ல விரும்புகின்றேம். ஒன்றேடொன்று முரண்பட்ட பல பிரச்சினைகளை மேற் கொண்டவர்களாய் இவ்வுறுப்பினர்கள் இருப்பர். இதைப்போன்ற மிகவும் பரந்து விரிந்த, நீண்ட காலத்தை எடுக்கின்ற ஆராய்வுகளை மேற்கொள்ளக் கூடிய நேரமும் அனுபவமும் உடையவர்களாக, இவர் இருப்பர் என்று நாம் எதிர்பார்க்கலாகாது. ஒரே முறையிலேயே, இச்சபையின் உறுப்பினர் கள் பல தெரி குழுக்களில் கடமையாற்ற வேண்டியவர்களாக இருக்கின் ருர்கள். இன்னும், அக்கடமையோடு நிதிக்குழுவிலும் சபையிலும் இவர் கள் தங்கள் இடத்தை வகித்தல் வேண்டும் ; தங்கள் தேர்வுத் தொகுதிக் குரிய கடமைகளை ஆற்றல் வேண்டும். பொதுவாழ்வோடு சார்ந்த பல கடமைகளையும் ஆற்றல் வேண்டும். ஆனல், பொதுச் சேவையினுடைய தாபனம், சம்பளம் ஆகியவைபற்றிய, ஆன்றமைந்த கேள்வி ஆராய்ச்சி நிறைவுபட, உவந்த முறையில் நடாத்தப்பட வேண்டுமெனின், ஆராய்ச்சி யாளர்களுடைய முழு நேரமும் அதற்கே பயன்பட வேண்டும். சபை உறுப்பினர்களை, இத்தகைய ஒரு கடமையைக் கொள்ளுமாறு கேட்பது அவர்களுக்கும், அவர்கள் எந்தச் சேவையினருடைய பொறுப்பைப் பேண வேண்டியவர்களாக இருக்கின்றர்களோ அந்தச் சேவையினர்க்கும் தீங்கு

Page 99
186
புரிந்ததாக இருக்கும். இத்தகைய நோக்கினைக் கொண்டுள்ள நாம் இக் குழுவானது இலங்கையில் ஓராண்டு கடமை பார்த்தும் முக்கிய அலுவலைச் செய்வதில் சிறிது முன்னேற்றமே கொண்டதென்பதை அறிந்து ஆச்ச ரியப்படவில்லை.
ஆயினும், இந்தக் குழுவானது செயலாற்றிக் கொண்டிருக்கின்ற தன்மை யில், பொதுவாக, அதன் முடியில் தலையிடும் எந்த முன்னிட்டினையும் நாம் இப்பொழுதும் கூற விரும்பவில்லை. ஆயினும், எங்களுடைய எண் ணத்தின் படி, வேறு பல காரணங்களுக்காக, இவ்வளவு நாளும் எடுத்த வழிமுறைகளைத் தவிர்ந்த வேறு துறை வழி, இவ்வாராய்ச்சி நடாத்தப்பட வேண்டுமென்று நாம் கருதுகின்ற தன்மையாலேயே, இப் பொழுது அந்தத் தலையீட்டினைப்பற்றிக் கூற விரும்புகின்றேம். இலங்கை அரசாங்கத்தின் விரிவான நிதித் திட்டங்களை ஆராய்ந்து பார்க்கின்ற எவரும், பொதுச் சேவையாளரின் சம்பளங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற, இப்பொழுது மிக உயர்ந்த விகித சமனிலமைந்த செலவினைக் கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்கமாட்டார். இலங்கைச் சேவையிலுள்ள சேவை யினருக்குரிய செலவோ, அண்மை ஆண்டுகளில் இலங்கைக்கு மிக இடரைத் தரக்கூடிய அளவுக்கு உயர்ந்து விட்டதென்று நாம் அறிகின்றேம். இலங்கையின் சரித்திரத்திலே இலங்கை மிகவும் ஓர் இக் கட்டான நிலையை அடைந்துவிட்டது என்று எலவே கூறியுள்ளோம்.' இப்பொழுது இலங்கையை மிகப் பெரிய சமூக, பொருளாதாரப் பிரச்சினை கள் எதிர் நோக்கி நிற்கின்றன. இவற்றை நல்ல தருணத்தில் ஆற்ற லுடன் தீர்த்துவைத்தல் வேண்டும். எனவே, இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முகத்தால், அது செலவிடக் கூடிய மிக உயர்ந்த தொகையைச் செலவு செய்வதில், ஒரு தடையையும் வைக்கக் கூடாது என்பது மிக முக்கியமானது. ஆயினும், பொதுச் சேவையாளர் சம்பளச் செலவின் உயர்வினல், இலங்கை அரசாங்கம், தன்னுடைய பூட்கையைத் திறம்பட நடத்துவதற்கு எவ்வளவோ சேவையினர் தேவையாயிருந்தும், மேற் கொண்டு சேவையினரைக் கூட்டுவதற்கு மனம் விரும்பாததாயிருக்கின்றது. இக்கொள்கையாலே மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன எனச் சொல்லப்பட்ட, முக்கிய பல சேவைகளை விரிப்பதும் திருத்துவதும் தடைசெய்யப்பட்டு, சில வேளைகளில் ஒத்திவைக்கப்படவும் கூடும்.
இக்கசந்த நிலையானது இலங்கையர்க்குக் கொடுக்க வேண்டிய சம்பளத் துக்கும் ஐரோப்பியர்க்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்துக்கும் ஒரு வித்தியாசம் இருக்கக் கூடாது என்ற ஒரு நிலைமையில் ஆனதாகும். முற் காலத்திலே இத்தகைய வித்தியாசத்துக்கு எதிராகப் பல சொல்லல் கூடும் ; அக்காலத்திலே பொதுச் சேவையின் உயர்ந்த பதங்களில் பெரும்பாலான வற்றை ஐரோப்பியர் கொண்டிருக்க, இலங்கையர்க்கு ஒரு தனியான சம்பள விகிதத்தைப் புகுத்தியது சேவையின் ஓரினவியல்பிற்குப் பங்கம்

187
விளைவித்ததை யொக்கும். ஆனல், இப்பொழுதோ காலம் எதிர்மாறகச் செல்கின்றது. மிக விரைவிலே, இலங்கையர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கைகொண்ட ஐரோப்பிய அலுவலர்களின் துணையுடன், தங்க ளுடைய பொதுச் சேவைகளைத் தாங்களே அமைத்துக் கொண்டு நடாத்தும் ஒர் காலம் வருவதை நாம் எதிர்பார்க்கலாம். தொழிற்றுறை வல்லார் களின் சேவை இன்னும் வேண்டப்படுவதொன்றக இருக்கும். ஐரோப்பிய அலுவலர்களில் ஒரு சிறு குழு ஆட்சியில் அமைந்திருப்பர் ; ஆனல், இலங்கைச் சேவைகள் இலங்கையர் மயமாகிவிடும். ஆகவே, இவ்வாறக இந்த ஆட்சிமுறை வளர்ச்சி பெறுகின்ற நேரத்தில், இந்த இடத்துத் தேவைக்கு மிகவும் ஒவ்வாத முறையிலமைந்த விகிதத்தில், இலங்கைப் பொதுச் சேவையினருக்குச் சம்பளம் கொடுத்தல் பொது நலனுக்கு மாறன தன்றியும், அந்நோக்கத்திற்கே மிகவும் இடர் தரக்கூடிய தொன்றகவும் அமையும். இச்சம்பள விகிதங்கள் இவ்விடத்துத் தேவைகளுக்கு ஒவ்வாதன அன்றியும், நாட்டின் வருவாயை மிகவும் பாதிக்கக் கூடியனவாயும் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு போலிப் பகட்டினைக் கொடுப்பனவாயுமிருக்கும்.
இப்பொழுது, நாம் எடுத்துக் கூறியவற்றிலிருந்து ஒரே முறையில் இரு வகைப் பொதுச் சேவையினர்க்கும் ஊதியம் கொடுப்பதற்கு நல்ல நியாயம் கிடையாது. ஒரு வகுப்பில், பிறந்த இடமாகிய மிதமான கால நிலையுள்ள நாட்டிலிருந்து நாடுபிரிந்த மக்கள் குழு இருக்கின்றது; இவர் களோ தங்கள் அகத்திலிருந்தும் ஆயிரம் மைல்களுக்கப்பாலுள்ள அயன மண்டல நாட்டில் கடமைபார்க்க வேண்டியுள்ளனர். இந்நாட்டிலோ இவர் கள் தங்கள் புதல்வரை வளர்த்துக்கொள்வது இயலாததொன்ருகும். இந்நாட்டிலிருந்தும் உடனலம் பொருட்டு ஒழுங்கான கால வரையறை களில் இவர்கள் விடுமுறை எடுத்துத் தம் தாய்நாட்டுக்குப் போதல் வேண்டும். இந்நாட்டிலோ, இவர்கள் சேவை செய்கின்றபொழுது, இரண்டு மனைகளை நடாத்த வேண்டிய இடரையும் பொறுப்பையும் மேற்கொள்வதோடு தங்கள் உடனலத்துக்கு உறக்கூடிய இடரையும் இவர் எதிர்பார்க்கவேண்டி இருக்கின்றது. குடும்ப நல உறவையும் தியா கம் பண்ணவேண்டி இருக்கின்றது. இவை மட்டுமல்ல. இவர்கள் தங்களுடைய வரன்முறைக்கு ஏற்ற ஒரு வாழ்வையும் விருந்தோம்பலையும் பாதுகாக்கவேண்டி இருக்கின்றது. தங்களுடைய வரன்முறை மட்டுமன்றி, 125 ஆண்டுகளாகப் பெரியதொரு வல்லரசுக்குப் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஒரு சேவையில் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரம், விருந்தோம்பல் ஆகிய வற்றின் தரத்தையும் பேணவேண்டிய கடப்பாட்டையும் கொள்ளவேண்டி யுளர் ; இவர்களுடனே தங்களுடைய மனையிலே வாழ்ந்து, தங்கள் சொந்த நாட்டிலே உழைக்கின்ற ஒரு வகுப்பினர் உள்ளனர். இவர்களுக்குக் காலநிலையால் வரும் இடர்கள் இல்லை. இவர்களுக்கு ஐரோப்பியத் தோழர்களுக்குள்ள நிதிச்சுமையில் ஒரு பங்கே உண்டு.

Page 100
88
எனவே, இப்பொது அலுவலர் சேவையிலுள்ள ஐரோப்பிய வகுப்பினர்க்கு அவர் செய்கின்ற வேலையிலும் மேலதிகமாக, அவர் வேலை செய்கின்ற பொழுது எற்பட்ட தியாகம், விற்படக்கூடிய இடர் ஆகியவை பொருட்டுக் கூடிய சம்பளம் கொடுபடல் வேண்டும். ஐரோப்பிய வகுப்பினர்களுக்குக் கொடுக்கப் படக்கூடிய இந்த மேலதிகமான சம்பளம் மற்றவர்களுக்குக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது, இந்த இரு வகுப்பினர்களுக்கும் ஒரே முறையில் சம்பளம் கொடுக்கப்படுகின்றது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கின்றபொழுது, எங்களுக்கு இரு வேறுவிதமான முடிவுகள் தோன்று கின்றன. இப்பொழுதுள்ள சம்பளம் ஐரோப்பியருக்குப் போதும் எனின், இலங்கையர்க்கு அது மிதமிஞ்சியதென்றே சொல்லல் வேண்டும். இலங்கை யர்களுக்கு மிதமிஞ்சிய சம்பளம் கொடுக்கப்படவில்லையெனின் ஐரோப்பியர் களுக்குச் சம்பளம் குறைவாகவே கொடுக்கப்படுகின்றதாகும். எவ்விதம் 受 நோக்கினும் இந்நிலைமை உவந்ததொன்றன்று.
இந்த இடர்ப்பாடுகளைப்பற்றிய செய்தி மேலெழுந்த முறையில் எங்களுக்குக் கூறப்பட்டது. ஆனல், இவற்றைத் தீர்த்து வைப்பதற்கு வழிவகைகள் எங்க ளுக்குக் கூறப்படவில்லை. ஆயினும், அலுவல் பற்றற்றவர்களுடைய எண்ணங் களையும் அலுவல் பற்றுடையவர்களுடைய எண்ணங்களையும் எடுத்துக் கூறக்கூடிய நிலைமையிலுள்ள பெரியோர்களுடனே, நாம் நடாத்திய உரை யாடல்களிலிருந்து, இப்பொருள்பற்றி இப்பொழுது நாட்டிடை நிலவுகின்ற எண்ணம் யாதென அறியக்கூடிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்தியாவிலே இதுபற்றிய அபிப்பிராயம் பிளவுபட்டுள்ளது. அரசியலார் சந்தை விலையெனும் விதிக்கிணங்க அடிப்படையான சம்பள விகிதத்தி லேயே வித்தியாசம் வேண்டுமென்று கூற சேவையில் அமைந்தவர்கள், ஒருமுகத்துடன், அதை எதிர்ப்பதை நாம் அறிந்துள்ளோம். ஆயினும், இலங்கையில் இத்தகைய பிளவுபட்ட அபிப்பிராயம் இல்லை. ஆயினும், பொது அலுவலர்களுக்கிடையும் அரசியலாரிடையும், இச்சம்பள விகிதத் தில் ஒரு வேறுபாடு விரைவில் கொண்டுவர வேண்டுமென்றும், இதைப் பற்றிய முடிவைக் காலந்தாழ்த்தாது செய்தல் வேண்டுமென்றும் ஓர் எண்ணம் உண்டாகியுள்ளது. இவ்விதமான ஒரு சம்பள வித்தியாசம் இலங்கையர்க்கு அவமதிப்பைத் தருவதாகாது. ஆனல், இது இலங்கை அலுவலர் தங்கள் நாட்டில் வாழ்ந்து வேலை செய்ய, ஐரோப்பியர் அவ்வாறு செய்யவில்லை என்ற ஒர் எண்ணத்தைச் செயன்முறையில் காட்டுவதொன் றகும் என்றே கொள்ளல் வேண்டும்.
இவ்வெண்ணத்திற்கியையவே ஒர் அலுவல் பற்றற்ற உறுப்பினருடைய தூண்டுதலின் பேரில் 1926 ஒற்ருேபரில் சட்ட சபையில் பல பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றுள் இரண்டு பொது அலுவலர்களின் சம்பளங்கள் ஓர் இலங்கை அலுவலரின் தேவைக்கியைந்த அளவில் பொது

89
வாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும், கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்த சேவையினர்களுக்கு இத்திருத்தியமைக்கப்பட்ட சம்பளத்துடன் புற நாட்டு உதவிப் பணம் அளிக்கப்படல் வேண்டுமென்றும் கூறின. இதில் முதலாவது பிரேரணை 13 வாக்குக்களுக்கு 31 வாக்குக்களால் தோல்வி யடைந்தது. அலுவல் பற்றுள்ள அங்கத்தினர் யாவரும் இதற்கு எதி ராக வாக்களித்தனர். இரண்டாவது பிரேரணை மீட்கப்பட்டது. அலுவல் பற்றுடைய அங்கத்தினர் இப்பிரேரணைக்கு உடன்பாடாக வாக்களித்திருப்ப ரேல், இப்பிரேரணை 19 வாக்குக்களுக்கு 25 வாக்குக்களால் நிறைவேற்றப் பட்டிருக்கும். அவர்கள் வாக்களியாது விட்டிருப்பரேல் 13 வாக்குக்களுக்கு 19 வாக்குக்களால் தோல்வியுற்றிருக்கும். இதைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கையில், எலவே நாம் குறிப்பிட்ட சம்பளக் குழுவானது, இக்கேள்வியை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று கொண்டு வந்த ஒரு திருத்தமானது 14 வாக்குக்களுக்கு 30 வாக்குக்களால் தோல்வி யுற்றது. அக்காலத்தில், சம்பள விகிதத்தில் வித்தியாசம் காட்டுவதை விலக்க வேண்டுமென்று அரசாங்கம் கருதியிருந்ததால், அலுவல் பற் றுடை வாக்குக்கள் அந்நோக்கினைக் கடைப்பிடித்தன. ஆனல், கழிந்து வரும் ஒவ்வோராண்டிலும், இத்தகைய வித்தியாசமானது இன்றியமை யாதது என்பது செவ்விதில் புலனுகிவருகின்றது. கழிந்த இந்தக்கால எல்லைக் குள்ளே, அரசாங்கத்தின் நோக்கம் முன்னர் கொண்டிருந்ததிலிருந்து மாறுபட்டுள்ளது. எனவே, இச்சம்பளங்களைத் திருத்தியமைத்தல் வேண்டு மென்னும் எண்ணம், இதை முன்னர் எதிர்த்தவர்களுள் பெரும்பா லோர்க்கு உவந்ததாயிருக்கும்.
ஆகவே, பொது அலுவலர்களின் சம்பளங்களை மீள அமைப்பதற்கு ஒரு சுதந்திரமான ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும்மென்று நாம் எடுத்துரைக்கின்றேம் ; இவ்வாறு திருத்தியமைப்பதற்கு ஓர் இலங்கை அலுவலரின் தேவையே அடிப்படையாக அமைதல் வேண்டும். இலங் கைக்குப் புறம்பான நாடுகளிலிருந்து சேவைக்கு அமர்த்தப்படும் அலுவலர் கள் தங்கள் பதவிகளுக்குரிய திருத்தப்பட்ட சம்பளத்துடன் இளைப்பாறற் சம்பளத்துக்குரிய புறநாட்டு உதவிப் பணமும் பெறல் வேண்டும். இவ் வாணைக் குழுவானது ஒவ்வொரு வகைப் பதவியினர்க்கும் எந்த வகை யிலமைந்த புறநாட்டு உதவிப் பணம் கொடுக்கவேண்டுமென்று அதைப் பற்றிய விவரம் எல்லாவற்றையும் சமர்ப்பித்தல் வேண்டும். இன்னும், பொது அலுவலர்களின் சம்பளங்களை விதிக்கின்ற அரசாங்க ஆணைகளையும் அவர்களுடைய போக்குவரவு, உணவு உதவிப் பணம், விடுமுறை, அயல் நாட்டுச் செலவுப்பேறுகள், வீடமைப்பு உதவிப்பணம், கல்வி ஆராய்ச்சி, அவற்றுக்குரிய பேறுகள் ஆகியவற்றை விதிக்கின்ற அரசாங்க ஆணைகள் ஆகியவற்றையும் இக்குழுவானது ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல் வேண் டும். இன்னும் ஒரு சிறு விடயத்தையும் நாங்கள் இப்பொழுது இங்கே குறிப்பிட விரும்புகின்றேம். இத்தீவினின்று விடுமுறை பொருட்டு அயல்

Page 101
190
நாட்டுக்குப் போகின்றவர்களுடைய தளபாடங்களை, ஒரிடத்திற் சேர்த்து வைப் பதற்கு யாதாயினும் ஓர் ஒழுங்கு செய்ய முடியாதோ என்பது அது. இத்தகைய ஒரு வாய்ப்பில்லாததால் இவ்வலுவலர்க்கு வரும் இடரைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். இவர்கள் பன்முறையும் தங்கள் தள பாடங்களை மிகக் குறைந்த விலையில் ஏலத்தில் விற்க வேண்டியவர்களாய்விடு கின்றனர். அதனல், பின்னர் தம் கடமையை எற்றுக் கொள்கின்ற பொழுது தங்கள் வீடுகளுக்குப் போதிய தளபாடங்களை வாங்குவதில் எராளமான பணம் செலவிடவேண்டி நேர்கிறது.
இவ்வாணைக் குழுவுக்கு இன்னுமொரு கடமையைப் பொறுப்பித்தல் வேண்டும். பொதுச் சேவையிலுள்ள ஒவ்வொரு கிளையிலும், எவ்வளவு விகிதத்தில் இலங்கையர்களையும் ஐரோப்பியர்களையும் அமர்த்தல் வேண்டு மென்பதை அக்குழு தீர்மானித்தல் வேண்டும். இப்பொழுது அனை வரும் ஒப்புக்கொண்ட ஒர் ஒழுங்குமுறை நிலவுகின்றதென அறிகின் ருேம். இதனல், குடியியற் சேவையில் ஐம்பது சத அளவில் இலங்கை யரும் ஐம்பது சத அளவில் ஐரோப்பியரும் அமர்த்தப்படுகின்றனர். இவ்வொழுங்கினைத் திருத்தியமைத்தல் நல்லதென்று நாம் கருதுகின் ருேம். இன்னும், பொதுச் சேவையின் மற்றைக் கிளைகளில் இத்தகைய ஒழுங்கு செய்யப்படவில்லை. இதைப்பற்றிப் பிணக்குக்கள் எற்படாமல் இருப் பதற்காக, ஒவ்வொரு திணைக்களத்துக்கும் என்ன விகிதத்தில் இவை அமையவேண்டுமென்பதை வரையறுத்தல் வேண்டும். பதங்களில் ஆட் களை நியமித்தலில் என்றும் பிணக்குக்கள் ஏற்படுவது வழக்கமே. இப் பிரச்சினையானது, புதிய யாப்போடு தொடர்பு கொண்டிருக்கின்ற முறை யில், மிகவும் முக்கியமானது என நாம் கருதுகின்றேம். எனவே, இச் சேவையின் எல்லாக் கிளைகளிலும், என்னென்ன விதத்தில் இப்பதங்கள் நிரப்பப்பட வேண்டுமென்பதை, அரசுச் செயலாளரே முடிவு செய்தல் வேண்டுமென்று புதிய கழகத்துப் பணிக்கை விதித்தல் வேண்டும். இப் பிரச்சினையை ஒரு சுதந்திரமான குழுவின் முடிவுக்கு விடுவதால் அதை விரைவில் ஒரு முடிவிற்குக் கொண்டுவரல் சாலும். இன்னும் சேவையின் ஒவ்வொரு கிளையிலும் என்னென்ன சிறப்பு இயல்கள் உள்ளன, அவற் றை எவ்வாறு சீர்ப்படுத்தல் வேண்டும் என்பதைப்பற்றியும் இக்குழு ஆராய முடியும். இதனுல் இக்குழு, அரசுச் செயலாளர் முடிவுக்கு வரு வதற்குத் துணை செய்யுமாறு வேண்டிய விவரங்களை அளிக்கும். இவ்வா ணைக்குழு எடுத்துரைக்கும் எடுத்துரைகளின் அடிப்படையாக அமையவேண் டியவை வருமாறு : முதலாவது, இலங்கைச் சேவை இறுதியில் இலங் கையராலே ஆளப்படல் வேண்டும் ; இரண்டாவது, இந்நோக்கத்தினலே இலங்கையர்க்குரிய பதங்களின் விகிதசமன் உயர்ந்துகொண்டு செல்லல் வேண்டும். இதனல் இலங்கைக்குப் புறம்பான நாடுகளிலிருந்து வரு வோருக்குரிய பதங்கள் குறைந்து கொண்டே வரும். ஆனல், இது ஒரு பொதுவான விதியாக இருக்கலாமெனினும், குறித்த சில திணைக்

19.
களங்களுக்கு இவை மாற்றியமைக்கப்படவும் கூடும். ஆனல் கிடைக்கக் கூடிய இலங்கையர் தகுதிகள், இதுவரை பேணிவந்த தரத்தைக் குறைக் கக் கூடியனவல்ல என்பதை உறுதியாக்கிய பின்னரே மேற்கண்ட விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்று எடுத்துரைத்தல் வேண்டும்.
மேற்கூறிய எண்ணங்களைக் கருத்திற் கொண்டே சுதந்திரமான சம்பள ஆணைக்குழுவொன்றை உடனே நியமிக்க வேண்டுமென்று நாம் எடுத்து ரைத்துள்ளோம். ஆயினும், இப்பொழுது நாம் கருத்திற் கொண்டுள்ள சம்பளங்களை ஒருநிலைப்படுத்தலும் உறுதியில்லா நிலையிலிருந்து புது அலு வலர்களேப் பாது காத்தலுமாகிய எண்ணங்களை நிலைநிறுத்தவதற்கு இது மட்டுமே போதியதாகாது என நாம் அறிவோம். புதிய கழகத்துப் பணிக் கையினுடைய கூறுகள், அரசுச் செயலாளர் இசைவளித்த ஆணைக்குழு எடுத்தோதிய உரைகளே இலங்கை அரசாங்கம் எற்றுக்கொள்ளத் தக்கன வாக அமையுமாறு இருத்தல் வேண்டும் ; இரண்டாவதாக, இக் கழகப் பணிக்கை வருங்காலத்துக்குக் காப்பு அளிக்கக் கூடியதாக அமையுமாறும் இருத்தல் வேண்டும். இந்நோக்கத்திற்காக எங்களுக்கு எடுத்தோதப்பட்ட முன்னீடுகளின் பலாபலன்களை ஆராய்ந்துள்ளோம். மேற்கொள்ளவேண் டிய ஒழுங்கு முறையையும் எடுத்துக் கூறியுள்ளோம். அது வருமாறு :- அக்கூறனது, இலங்கை அரசாங்கத்தில் அரசுச் செயலாளர் இசைவு பெறவேண்டிய பதம் வகிக்கின்றவர்களுடைய, வருங்காலத்தில் வகிக்கப் போகின்றவர்களுடைய சம்பளங்கள், இளைப்பாறற் சம்பளங்கள், கொடைப் பணங்கள், சேவை நிலைமைகள், வளர்ச்சிகள் ஆகியவைபற்றிய எல்லா அலுவல்களிலும் அரசுச் செயலாளாரின் முடிவே இறுதியானது என்று காப்பளிக்கும் ஒரு கூற்றினைக் கழகப் பணிக்கையில் சேர்த்தல் வேண்டும். இன்னும், அனதைகள், விதவைகள், சட்டமுறையிலமைந்த பிரதிநிதிகள் ஆகியவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய இளைப்பாறற் சம்பளம், கொடைப் பண்ம் ஆகிய அலுவல்களிலும் அவரே முடிவான தீர்ப்பைக் கூறுபவரா யிருத்தல் வேண்டும். '
பொதுச்சேவை ஆணைக்குழு
இலங்கை அரசாங்கத்தை நாள்தோறும் உறுத்துகின்ற பொது அலுவல் கள் பலவற்றுள்ளும், மிகவும் கவலையும் ஒயாப் பிணக்கையும் தருவன, பொதுச்சேவையில் உள்ள பதங்களுக்கு ஆட்களை அமர்த்துவதும் அவற்றில் பதவி உயர்வு அளிப்பதுமாகும். இந்த ஒரு விடயத்திலேயே சமுதாய முறை உணர்ச்சி மிக எழுப்பப்படுகின்றது. ஆனல், இப்பொழுது நிகழ்ந் துள்ள மாற்றமொன்றை அறிந்து நாம் மகிழ்வடைகின்றேம். இப் பொழுதுள்ள யாப்பு முறைக்கிணங்க அரசாங்கத் திணைக்களங்கள் இயங் குகின்ற தன்மையால் ஏற்பட்ட அனுபவத்தின் பின்னர், சபை உறுப் பினர்கள், தம் சமுதாயத்தைச் சார்ந்த பதம் நாடிகளினுடைய விண்ணப் பங்களை ஏற்காது மறுத்தும், தனிப்பட்ட பொதுச் சேவையினருடைய பதவி

Page 102
92
உயர்வுகளில் அதிகம் கவர்ச்சி எடுக்காது விட்டும், பல்வேறு திணைக்களங் களைப்பற்றிய அலுவல்களில் அவற்றின் வேலைகள், பூட்கைகள் ஆகிய வற்றை ஆராய்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய மாற்றமே. எங்களுடைய முன்னிடுகளுக்கு அமைய, சபை உறுப்பினர்கள் ஏற்று வகிக்கவேண்டிய கடமையின் பொறுப்பு நல்ல தொரு மரபை ஏற்படுத்திவிடும் என்று நாம் நம்புகின்றேம். இம்முறையிலே பொதுச் சேவையிலுள்ள ஒரு பதத்தில் ஒருவருக்கு உயர்வு அளிக்க வோ, அல்லது ஒரு பதத்தில் ஒருவரை அமர்த்தவோ அரசியல் முறையால் வந்த ஊக்கும் வகுப்புமுறையால் வந்த ஊக்கும் கையாளப் படாவென்றும் நாம் நம்புகின்றேம். ஆயினும், ஒவ்வோரு உறுப்பினரும் கூடிய பொறுப்பை வகிப்பரெனும் உண்மை அவர்களுடைய தேர்வுத் தொ குதியில் உள்ளவர்களுக்கு இன்னும் மிகுந்த நம்பிக்கையையும் மேற் கொண்ட உரிமைகளைப் பெறும் வேணவாவையும் ஏற்படுத்திவிடும். எனவே, இப்பதங்களுக்குரிய நியமனங்களைச் செய்யவும் பத உயர்வளிக் கவும், சபை அங்கத்தினர்களை அவர்களுடைய தேர்வுத் தொகுதிகளி லிருந்து வரும் வேண்டுகோளினின்றும் விடுவிக்கக் கூடிய தாயும், சமு தாயச் செருக்கால் வரும் நோக்கு, அரசியல் வாழ்வால் வரும் இடர்ப் பாடு ஆகியவற்றை நோக்காது நியமனங்களும் பத உயர்வுகளும் உண் மைத் தகுதியை நோக்கியே செய்யப்படுமென்ற ஒரு நம்பிக்கையைப் பொதுச் சேவையினரிடம் ஆக்கி வளர்க்கக் கூடியதாயுமமைந்த ஒரு சாதனத்தை அமைத்தல் முக்கியமென்று கருதுகின்றேம்.
இந்நோக்கத்திற்காகப் பொதுச்சேவை ஆணைக்குழுவொன்று நிறுவப் படல் வேண்டும். இது நிலையான ஒரு குழுவாயிருத்தல் வேண்டும். இது ஆள்பதிக்கு அறிவுரை கூறுவதாயிருத்தல் வேண்டும். தலைமைச் செய லாளர் அதற்குத் தலைவராக இருத்தல் வேண்டும். அவருடன் இரு முதிய அரசாங்க அலுவலர் இருத்தல் வேண்டும். அவர்களை ஆள்பதி நியமிப்பார். அவர் இசைவுள்ள வரைக்கும் அவர் பதவி வகிப்பார். அது ஆள்பதிக்குத் தன் கருத்துக்களை அறிவிக்கும் ; கீழ்க்கண்ட பொருள்கள் பற்றி அவருக்கு அறிவுரை கொடுத்துதவற்கு அது பொறுப்புள்ளதா யிருக்கும்.
1. திணைக்களத் தலைவர் தம் அதிகாரத்தால் நியமிக்கக்கூடிய அலு வலர்களின் சம்பளங்களைவிட உயர்ந்த சம்பளங்களைப் பெறுகின்ற அலுவலரை இலங்கைச் சேவையில் அமர்த்தல். 2. இச் சம்பள வரையறைக்கு மேலான பதங்களுக்குத் தனி அலு
வலர்களை உயர்த்தல் 3. இலங்கைச் சேவையின் யாதுமொரு கிளையிலே உத்தியோகம் பெறும் பொருட்டோ, அல்லது பதவி உயர்வு பெறும் பொருட்டோ தனிப்பட்ட பதம் நாடிககளுக்கு வாய்ப்புக்கள் அளித்தல்.

193
4. இலங்கைச் சேவை முழுவதற்கும் அல்லது இலங்கைச் சேவை யின் ஒரு கிளைக்கு மட்டும் உரியதான பிரவேச நிலைமைகள், பத உயர்வுகள், பரிசுகள், தண்டங்கள், பதவி நீக்கங்கள் ஆகியவற்றேடு இயைந்த பிரமாணங்கள் ; இவை மொழித் தேர்வு பற்றியவையாயும் இருத்தல் கூடும். இந்தியாவிலும் மற்றைச் சுயவாட்சி பெற்றுள்ள ஆணிலப் பகுதிகளிலும் நிறுவப்பட்ட இத்தகைய ஆணைக் குழுக்களின் அதிகாரம், கடமை, யாப்பு ஆகிய யாவையும் நாம் ஆராய்ந்துள்ளோம். இத்தகைய குழுக்குள் கொண் டுள்ள அகன்ற கடமைகளை இலங்கையிலுள்ள பொதுச் சேவை ஆணை குழுவும் கொண்டிருத்தல் வேண்டுமென்றே, அல்லது கொண்டிருத்தல் நல்லதென்றே நாம் கருதவில்லை. நாம் இலங்கையில் நிறுவவிருக் கும் இவ்வாணைக் குழுவானது எவ்விதத்திலும் நிறைவேற்று இயல்பு உடை யதாயிருக்காது; இது எவ்விதத்திலும் இலங்கைத் திணைக்களங்களின் அலுவல்களிலும் தலையிடும் உரிமையும் கொண்டிருக்காது. இத்திணைக்களங் கள் அவையவைக்குரிய அமைச்சர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கும். இவ்வாணைக் குழுவானது அமைச்சர்களினுடைய நல்ல தீர்ப்புக்களையோ, அல்லது நிறைவேற்று குழுக்களின் தீர்ப்புக்களையோ, திணைக்களத் தலை வர்களின் தீர்ப்புக்களையோ தடைப்படுத்துவதற்காக ஆக்கப்பட்டதன்று; ஆனல், அரசாங்க சபை, நிறைவேற்று குழுக்கள் ஆகியவற்றின் அமைப் புக்களில், எவ்வளவுதான் மாற்றங்கள் நடைபெற்றலும், அலுவலர்களைப் பற்றிய பூட்கையில் இடையருத ஒரு தொடர்பான கடைப்பிடியை நிலை நிறுத்துவதன் பொருட்டு, மேற்கூறிய அமைச்சர், குழுவினர், தலைவர் ஆள் பதிக்குத் தங்களுடைய எடுத்துரைகளைக் கூறுவதில் துணைபுரிவதற்காகவே இது ஆக்கப்பட்டது.
தனிப்பட்டோர்களுடைய நியமனம், சம்பள உயர்வு ஆகிய வகைகளிலே எந்த ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று முந்திய ஓர் அதிகாரத்தில் குறித்துள்ளோம் ; ஆயின் இங்கு நாங்கள் அந்தக் குறிப் புரைகளை விரித்துரைக்க விரும்புகின்றேம். இப்பொழுது நடைமுறை யிலிருக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் பொது விதிகளுக்கியைய, கீழ்க் காணும் வகைகளுக்குரிய நியமனங்களை, தம்முடைய சொந்த அதிகாரத் தில் செய்வதற்குத் திணைக்களத் தலைவர்களுக்கு அதிகாரமுண்டு ; அவர் கள் தங்களுடைய எண்ணத்திற்கியைய அவர்களை வேலையினின்றும் இடை நிறுத்த, விலக்க, மீளவமர்த்த, அல்லது அவர்களுடைய பதவி விலகற் கோரிக்கைகளை எற்றுக்கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு. அவ்வ கைகள் வருமாறு :-
(1) ஆண்டுக்கு 1,200 உரூபாய் அல்லது 80 பவுணுக்கு மேற்படாத சம்பளத்தைப் பெறும் இளைப்பாறற் சம்பளமற்ற எல்லா அலு வலரும் ; இச்சம்பளம் எல்லா உதவிப் பணங்களையும் தவிர்த்த தாயிருத்தல் வேண்டும்.

Page 103
194
(2) சம்பளங்களினலோ, இல்லாமலோ சேவைக்கு அமர்த்தப்பட்ட நிலையான ஒரு சம்பளத்தைப் பெருத எல்லா அலுவலரும்.
(3) நாள்முறைச் சம்பளத்தைப் பெறும் எல்லா அலுவலரும்.
இவ்வுரிமை திணைக்களத்து நிலையான தலைவர்களிலே என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று நாம் விரும்புகின்றேம். எனவே, இவ்வகையிலமைந்த நியமனங்களைப்பற்றி அமைச்சர்களுக்கோ, அவர்களின் நிறைவேற்ரீ குழுக்களுக்கோ, பொதுச் சேவை ஆணைக் குழுவுக்கோ குறிப்பி டவே ண்டியதில்லை.
மேற்கூறிய வகையில் அடங்காத எல்லா நியமனங்களும் உத்தியோக உயர்வுகளும் இப்பொழுது ஆள்பதியாலேயே நடாத்தப்படுகின்றன. இவற்றை அவ்வாறே தொடர்ந்து நடாத்தல் வேண்டுமென்று நாம் விரும்புகின்றேம். இதனல் வரும் ஐயப்பாடுகளை நீக்குவதற்குப் புதிய உரிமையோலைகள், பொதுச் சேவையிலுள்ள எல்லா நியமனங்களையும் செய்வதற்குரிய உரிமையை ஆள்பதி கொண்டிருத்தல் வேண்டுமென்று கூறும் ஒரு கூற்றினை உடையனவாயிருத்தல் வேண்டும். இப்பொழுதுள் ளளாறுபோலவே மேற்கூறிய பண்புடைய நியமனங்களைச் செய்வதற்கு, திணைக்களத்து நிலையான தலைவர்களுக்கு ஆள்பதி அதிகாரம் அளிப்பர் என்று நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும் ; இன்னும், இத்தகைய நியமனங்கள் யாவும் ஆள்பதிக்காகவே திணைக்களத்துத் தலைவர்கள் செய்வார்கள் என்றும் நாம் கொள்ளல் வேண்டும்.
இப்பொழுதுள்ள முறைக்கிணங்க, ஆண்டுக்கு உரூபாய 4,500 அல்லது 300 பவுண் ஆகிய தொகைக்கு மேற்பட்ட சம்பளங்களையுடைய குறித்த சில நியமனங்களும் ஆண்டுக்கு உரூபாய், 6,750 அல்லது 450 பவுண் ஆகிய தொகைக்குமேற்பட்ட சம்பளங்களையுடைய எல்லா நியமனங்களும் அரசச்செயலாளர் இசைவினைப் பெறல் வேண்டும்.
இவ்வொழுங்கு முறையில் மாற்றம் ஒன்றும் செய்யக்கூடாது என்பது எங்கள் நோக்கம். ஆனல், அரசச் செயலாளர், அதைத் தம் எண்ணத் திற்கியைய மாற்றியமைக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். எனவே இத்தேவையை விவரமான முறையில் புதிய உரிமையோலைகளில் எடுத்துக் கூறல் உவந்ததன்று. ஆனல், இந்நியமனங்களைச் செய்யும் அதிகா ரத்தை ஆள்பதிக்கு அளிக்கின்ற கூற்றில் அரசுச் செயலாளர் குறிக்கின்ற எல்லாவகை நியமனங்களும், அரசுச் செயலாளரின் இசைவு பெறல் வேண்டுமென்ற ஒர் ஏற்பாட்டையும் சேர்த்துவிடல் நல்லது.

95
இவ்வாருக, தேவையான இடங்களில் அரசுச் செயலாளரின் இசைவு
பெற்று, ஆள்பதி தம்மாலேயே செய்யப்படுகின்ற நியமனங்கள் யாவையும்
இவ்வாராய்ச்சி உரைக்கு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். நியமனங்கள்
என்பவை இங்கு பதவி உயர்வுகளையும் அடக்கும். இப்பிரிவுகள் வருமாறு:-
H( ஆட்சியின் எல்லாப் பகுதிக்கும் பொதுவான ஒரு வகுப்புக்குரியی) நியமனங்கள் ; இப்பதவி வகிப்பார் ஒரு பதவியிலிருந்து மற்றப் பதவிக்கு மாற்றப்படல் கூடும் ;
(ஆ) எல்லா ஆட்சித் துறைக்கும் பொதுவாக அமையாது ஒரே அமைச் சரால் அல்லது ஒரே நிறைவேற்று குழுவினல் அதிகாரம் பண்ணப்படாது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுக்குப் பொதுவான ஒரு வகுப்புக்குரிய நிய
மனங்கள் ;
(இ) ஒரே திணைக்களத்துக்குரிய ஒரு வகுப்புக்குரிய நியமனங்கள்; அல்லது ஒரே அமைச்சராலோ, நிறைவேற்று குழுவினலோ அதிகாரம் செய்யப்படுகின்ற இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட திணைக்களங்களுக்குரிய ஒரு வகுப்புக்குரிய நியமனங்கள் ;
(இ) வகுப்புக்குரிய நியமனங்களைப்பற்றிய வகையிலே ஆள்பதிக்கு ஒர் எடுத்துரையைச் சமர்ப்பிக்கின்ற பொறுப்பு அப்பதத்திற்குரிய அமைச் சரையோ, நிறைவேற்று குழுவையோ பொறுத்ததாகும். அவ்வாறே அரசுச் செயலாளரின் திணைக்களங்களின் வகையில் அவருடைய பொறுப் புாகும் அது. இவ்விருவகையிலும் ஒழுங்குமுறை ஒரே வகைத்து. வகைக்கு எற்றவாறு, நியமனமோ பத் உயர்வோ பற்றிய இயல்பையும் அதற்கு வாய்த்த பதம் நாடிகளினுடைய பண்புகளைக் குறிக்கும் முன்னிடுகளுக்குரிய காரணங்களையும் பற்றிய ஒர் அறிக்கை அமைச்சரினதும் அவரின் நிறை வேற்றுக் குழுவினதும் எடுத்துரையுடனே, அல்லது அரசச் செயலாளரின் எடுத்துரையுடனே ஆள்பதிக்கு அனுப்பப்படல் வேண்டும். இதன் பின்னர் இப் பத்திரங்கள் பொதுச்சேவையின் ஆணைக் குழுவின் தலைவர்க்கு அனுப் பப்படும். அவர் அம் முன்னிடுகளைத் தம் தோழருடன் ஆய்வர். எடுத்துக் கொண்ட அலுவலுக்குத் தேவையான தகவல்களையோ, பத்திரங்களையோ பெறுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. தங்கள் ஆய்வுகள் முடிந்தபின் ஆணைக்குழு ஆள்பதிக்கு அறிக்கை அனுப்பும். அமைச்சர், அவருடைய நிறைவேற்றுக் குழு ஆகியவர், அல்லது அரசுச் செயலாளர் அளித்த எடுத்துரைகளுடன் ஆணைக்குழு மாறுபடுகின்ற வகையிலே, அது அமைச்சருக்கோ, அரசலுவலர்க்கோ, அவர்களுடைய எடுத்துரைகளை மாற்றுவதற்கோ, அல்லது அவர்கள் முடிவுக்கு இன்னும் வேண்டிய காரணங்களைக் காட்டுமாறே ஒரு சந்தர்ப்பம் அளிக்கும். பின்னர் அமைச்ச ரிடமிருந்தோ, அல்லது அரச அலுவலரிடமிருந்தோ பதில்கள் பெற்ற

Page 104
196
பின் பத்திரங்கள் யாவும் ஆள்பதிக்குச்சமர்ப்பிக்கப்படும். ஆள்பதியானவர் தான் எண்ணியவாங்கு ஒரு முடிவுக்கு வருவார், அல்லது தம் எடுத் துரையுடன் அரசுச் செயலாளரின் முடிவுக்கு அதை அனுப்பிவைப்பார்.
(அ), (ஆ) ஆகிய வகுப்புக்களுக்குரிய நியமனங்கள்பற்றிய வகையிலே இந்தப் பதவிவெற்றிடமுள்ள திணைக்களத் தலைவர் ஆணைக்குழுவுக்கு அதைப்பற்றி அறிவிப்பர் ; இது எவ்வாறு நிரப்பப்படலாம் என்பதைப் பற்றி ஆள்பதிக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு ஆணைக் குழுவைச் சாரும். ஆயினும், இப்பதத்திற்குரிய அரசஅலுவலரோ, நிறைவேற்று குழுவின் தலைவரோ தாம் எண்ணியவாங்கு ஆணைக் குழுவுக்குத் தம் கருத்துரைகளை எடுத்துக் கூறலாம். இவ்வாணைக் குழுவும் தன்னுடைய எடுத்துரையை ஆள்பதிக்குச் சமர்ப்பிக்குமுன் குறித்த அமைச்சரிட மிருந்தோ, அரசலுவலரிடமிருந்தோ அவர்கள் வேறுயாதாயினும் விண்ணப்பம் செய்ய விரும்புகின்றனரா என்று அறிந்து கொள்ளல் வேண்டும். அவர்களிடமிருந்து பெற்ற விடைகளை நன்கு ஆலோசித்துப் பின்னர் அவர்களுடைய கருத்துக்களை மேலும் நன்கு ஆராய்ந்து, ஆணைக் குழுவானது, இன்னும் தேவையெனில், வேண்டிய தகவல்களையும் பத்திரங்களையும் கேட்டுவாங்கலாம். அதன்பின்னர், குழுவினர் ஆள்பதிக்கு ஒர் அறிக்கை அளித்தல் வேண்டும். ஆள்பதியானவர் தாம் எண் ணியவாங்கு ஒரு முடிவுக்கு வருவார். இன்றேல் தம் எடுத்துரையுடன் அரசச் செயலாளருக்கு அதைச் சமர்ப்பிப்பார். இவ்வொழுங்கு முறையானது பதவிவெற்றிடம் எற்படுகின்ற திணைக்களத்துக்குரிய அரசலுவலர் தலைமைச் செயலாளராகின்ற இடத்திலே, (இ) வகுப்புக்குரிய நியமனங்களுக்கும் பொருந்தும்.
எனவே, நிரந்தரமான திணைக்களத் தலைவர்கள், கீழமை, இளைப் பாறற் சம்பளமற்ற பதத்திற்கு நியமனம் செய்கின்ற அதிகாரத்தை இப்பொழுதுள்ளவாறே கொண்டிருப்பரென்று நாம் கருதுகின்றேம். மற்றை நியமனங்கள் யாவும் ஆள்பதியாற் செய்யப்படும் ; இதுவும் வேண்டியவிடத்து அரசுச்செயலாளர் இசைவுடனேயே செய்யப்படும். முழு ஆட்சிப் பரிபாலனத்துக்கும் பொதுவான ஒரு வகுப்புக்குரிய நியமனங்களைப் பற்றிய வகையிலோ, ஒரே அரசலுவலர் அல்லது ஒரே அமைச்சரும் அவர் நிறைவேற்று குழுவும் ஆகியவரால் அதிகாரம் பண்ணப்படாத, இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட திணைக்களங்கள் ஆகியவற்றிற்குரிய நியமனங்களைப்பற்றிய வகையிலோ, அந்நியமனங்களைப்பற்றிய அறிவுரை கொடுக்கும் கடமை பொதுச்சேவை ஆணைக்குழுவிலேயே தங்கியிருக்கும். இங்கு இவ்வலுவலோடியைந்த அரசலுவலரோ, நிறைவேற்று குழுத் தலைவரோ தாங்கள் கருதியவாறு இப்பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு வேண்டிய கருத்துரைகளை எடுத்துக் கூறலாம். ஒரே அரசலுவலராலோ, அல்லது ஒரு அமைச்சரும் அவர் நிறைவேற்று குழுவுமாலோ அதிகாரம் பணணுகின்ற, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திணைக்களங்களுக்குரிய

197
ஒரு வகுப்புபற்றிய நியமனங்களின் வகையிலும் அதைப்பற்றிக் கருத்துரை கூறுகின்ற பொறுப்பு அவ்வமைச்சரிலும் அவர் நிறைவேற்று குழுவிலும், அல்லது\அந்த அரசலுவலரிலும் தங்கியிருக்கும். இந்நியமனங்கள்பற்றிய கருத்துன்ரகள் பொதுச் சேவை ஆணைக் குழுவினுடைய அறிவுரைகளுடனே சேர்த்து ஆள்பதிக்குச் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வ்ொழுங்கு முறையை இங்கு நாம் விரித்துள்ளவாறு என் அமைதி
துள்ளோ பொதுச் சேவையினரிடத்து நம்பிக்கையை நிறுவு வதற்கு மட்டுமன்றி, இவ்வரசுச் சேவைகளை ஒருங்கமைந்தவையாய், இசைவு பட்டனவா திறமையுடைய ஒரு பூரண அலகாய்ப் பாதுகாப்பதற்கு, இன்றியமையாதனவான நன் முடிவுச் சுதந்திரம், மாறுபடாத பூட்கை ஆகியவற்றை நிலைநாட்டுவதில், அமைச்சர்களுக்கும் நிறைவேற்று குழுக்களுக்கும் அரசலுவலர்களுக்கும் துணை புரிவதற்காகவுமேயாம் என்க. ஆயினும், ஆள்பதியினுடைய நற்றுணிபைக் கட்டுப்படுத்துவது எங்கள் நோக்கமன்று என்பதை இங்கு எடுத்துரைக்க விரும்புகின்றேம். ஆள்பதி .யிலேயே இச்சேவையினருடைய தாபனம் பற்றிய அலுவல்களின் முடிவு யாவும் தங்கியிருக்கும். அவரிலேயே அப்பொறுப்பு நீடித்திருக்கும். அவர் ஒவ்வொருவகையையும் தம்முடைய மதிப்பிற்கு எற்றவாறு முடிவு செய்வார். இன்றேல், ஆராய்ந்தமைந்த கருத்துடன் அரசுச் செயலாளருக்கு அதைப்பற்றி எடுத்துரைப்பார். இவ்வலுவல்களில் ஆள்பதியானவர் முடிவான நற்றுணிபைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது இன்றியமையாததாகும். ஏனெனில், அவருக்கு எடுத்துரைக்கப் பட்ட அறிவுரைகள் ஒன்றேடொன்று முரண்பட்டனவாயிருக்கும். சில வகைகளில், இத்தகைய முரண்பாடுகள் இல்லாவிடத்தும், தம்முடைய பொறுப்பினை நன்கு வகிக்கின்ற முறையிலே தமக்கெடுத்துரைக்கப்பட்ட கருத்துரைகளைப் பாரபட்சம் இல்லாதவர்களிடத்தில் காட்டி, அவர்தம் ஆலோ சனைக்கு அவற்றை விடல் வேண்டும். நாம் இங்கு எடுத்துரைக்கின்ற இவ் வொழுங்கு முறையானது, சுதந்திரமான பாரபட்சமில்லாத ஒரு முடிவுக்கு வரவேண்டிய, முழு ஆதாரமான விடயங்கள் யாவையும் அவர்க்கு அளிக்கப்படும் எடுத்துரைகள் கொண்டிருத்தல் வேண்டுமென்பதற்கா கவும், அவ்வாறில்லாத கருத்துரைகளை அவர்க்குச் சமர்ப்பித்தலாகா தென்பதை நிலைநாட்டுவதற்காகவுமேயாம்.
தனிப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவைபற்றிய வகை களில் பொதுச்சேவை ஆணைக்குழு கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறையும் நோக்கங்களும் மேற்கூறியவாறே இருக்கும். நியமனங்களையோ அல்லது பதவி உயர்வுகளையோ நாடிவருவோர்க்குத் தகுந்த துணைபுரிவதற்கு அளிக்கப்படும் நல்லவாய்ப்புக்கள்பற்றிய விடத்தும், மேற்கூறிய ஒழுங்குமுறை பொருந்தும். இன்னும் பல பிரச்சினைகளிலும் இவ்வாணைக் குழு ஈடுபடும் இலங்கையின் பொதுச் சேவையில் சேர்வது அல்லது ஒரு கிளையிற் சேர்வது, அவற்றேடு சம்பந்தப்பட்ட உயர்வு, பதவி

Page 105
98
நீக்கங்கள், நற்பரிசு, தண்டங்கள் ஆகியவைபற்றிய விதிகளை ஆள்பதிக்கு எடுத்துக் கூறும் கடமையும் இவ்வாணைக் குழுவின் பொறுப்பாயிருத்தல் வேண்டும். இக்கடமையில் மொழித் தேர்வு, வேறுதுற்ைபற்றிய தேர்வுகளும் அடங்கும். இவ்வாணைக் குழுவினுடைய கடமைகளுக்குள்ளே, பொதுச் சேவையாளர் சேவையில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள்ள்ே எடுக்கப்படவேண்டிய மொழித் தேர்வுகள்பற்றிய விதிகளை ராய்வது முக்கியமானது என்று நாம் கருதுகின்றேம். நாங்கள் ந்நாட்டில் பிரயாணம் செய்கின்றபொழுது, எத்தனையோ அலுவலர் சிறந்த முறையில் இத்தேர்வுகளில் சித்தி பெற்றவராயிருந்தும் தம்முடைய சிங்க? த்தையோ தமிழையோ நன்முறையில் பேசவோ, விளங்கவோ அறியாமல் இருந்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டோம். ஆயினும், அவர்களுள் சிலர் இவ்விரு மொழிகளிலும் திறமை பெற்றவராக இருப்பதையும் கண்டோம். இவ்விரண்டு மொழிகளில் யாதாயினும் ஒன்றில் எல்லோரும் நல்லறிவு பெற்றவராக இருத்தல் மிக்க இன்றியமையாததாகும். ஏனெனில், இவர்கள் கடமைபார்க்கின்ற மாவட்டத்திலுள்ள மக்களுடன், இவர்கள் நன்முறையில் உரையாடக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். அன்றியும், பொதுவான அலுவல்களில் ஈடுபடுகின்றபொழுது மொழிபெயர்த்துரைப்போர் சேவையைப்பயன்படுத்தாது தம் கடமையை ஆற்றக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். இந்நோக்கத்தின் பொருட்டு மொழிபற்றிய தேர்வுகள் மிகச் செவ்விதான முறையில் அமைக்கப்பட்ஸ்" வேண்டும்; இன்னும், மொழிபெயர்த்துரைப்பாளர் தம் தரத்தை உயர்த்து வதற்காக நன்கொடைப் பணங்களும் கொடுக்கப்படல் வேண்டும்.

staruh IX
ஒழிபியல்
நாங்கள் இப்பொழுது கருத்திற் கொண்டுள்ள யாப்பு முறையை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமெனில், புதிய கழகத்துப் பணிக்கை வெளியிடப்பட வேண்டும் ; உரிமையோலைகளும் வேத்தியற் கட்டளைகளும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். எவ்வாறன வகையில் இக் கட்டளைகள் மாற்றியமைக்கப்படல் வேண்டும் என்று குறிப்பது எம் கடமையென்று நாம் கருதவில்லை ; எனெனில், அவற்றை ஆக்குவதற்குத் துறைபோகிய சட்ட அறிவு வேண்டும். எனவே, புதிய யாப்பானது எவ்விதத்தில் அமையவேண்டு மென்ற தத்துவங்களைப் பொதுவாகக் கூறுவதிலும் இத் தத்துவங்களே யாப்பியற் செயன்முறையில் அமைப்பதற்குரிய ஏற்பாடு கள் யாவை என்பதைக் கூறுவதிலுமே நாம் கருத்துக் கொண்டோம். இப்பொழுதுள்ள கருவிகளை நல் விரிவாக ஆராய எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததாதலின், அவற்றுள் சில எற்பாடுகளைப்பற்றி இங்கு குறிப்புக் கூறுவது உவந்ததாகும் ; இந்த எற்பாடுகளின் சீர்திருத்தத்தைப்பற்றி எங்களுக்கு முன் சான்றளித்த பலர் அழுத்திக் கூறியுள்ளார்கள்.
* இந்தியர் ” என்ற பதத்தின் வரைவிலக்கணம்
இவற்றுள் முதலாவதானது “இந்தியர் ’ என்ற பதத்தின் வரை விலக்கணத்தைப் பொறுத்தது. இப் பதத்திற்கு (கழகத்துப் பணிக்கை) கூறு III (1), கூறும் வரைவிலக்கணம் வருமாறு :-“இந்தியன் என்பான் இந்தியாவின் ஆள்பதிநாயகம் மூலமாக அல்லது அவர்க்கீழமைந்த ஆள் பதி அல்லது அலுவலர் மூலமாக அமைந்த மாட்சிமை தங்கிய மன்னரின் மேலாண்மைக்குட்பட்ட பிரிட்டிசு இந்தியா, அல்லது சுதேச மன்னர், அல்லது தலையோர் ஆகியோருடைய ஆள்புலம் ஆகியவற்றின் ஒரு நாட்டினனக இலங்கையில் வசிப்போனய், ஆனல் இங்கு குடிவாழாதவ ஞய் உள்ளவன் ’. இந்தியத் தமிழர்க்காகப் பேசக்கூடிய யாவரும் இவ்வரைவிலக்கணமானது இலங்கையில் பிறந்த இந்தியர்களை நீக்கி விடுகின்றது என்றும், இந்தியாவிலே நிலையான மனை கொண்டோர் களுக்கு மிகுந்த வாய்ப்பைக் கொடுக்கின்றது என்றும் எமக்குக் கூறினர்.
அரசாங்கமானது இந்த மறுப்புரையின் நியாயத்தை நன்கு அறிந்து கொண்டது. எனவே, புதிய கழகத்துப் பணிக்கையில் இந்தியன் என்ற பதத்தைக் கீழ்வரும் முறையில் வரையறுப்பது என்று முடிவாக்கப்பட் டுள்ளது :
199

Page 106
200
* இந்தியன் என்பான் ஓர் இந்திய நாட்டு மொழியைத் தன் தாய் மொழியாகக் கொண்டவனுய் இந்தியாவைத் தனதோ, தன் தந்தையினதோ, தன் தந்தையின் தந்தையினதோ பிறப்பிடமாகக் @&#ffort-off:# இந்த வரைவிலக்கணத்துக்கு இந்தியாவின் ஆள்பதிநாயகம் மூலம் அல்லது அவர்க்கீழமைந்த ஆள்பதி அல்லது அலுவலர் மூலம் மாட்சிமை தங்கிய மன்னரின் மேலாண்மைக்குட்பட்ட பிரிட்டிசு இந்தியா, சுதேச மன்னர் அல்லது தலையோர் ஆகியோருடைய ஆள்புலம்’ ஆகியவை இந்தியா என்பதில் அடங்கும்.
இவ்வரைவிலக்கணம் கடியப்படக்கூடியதொன்றன்று என்பதே எமது எண்ணம். இன்னும், சமுதாயப் பிரதிநிதித்துவத்தை நீக்கி, வாக்களிப் பதற்கு வதிவுத் தகுதி உரியதென்று நாம் விதியாக்கியுள்ளோமாதலின், மேற்கூறிய மறுப்புப் பொருளெதுவும் முக்கியத்துவ முடையதன்று.
இந்தியர்க்கு வேண்டிய கல்வியறிவுத் தகுதிகள்
இன்னும் இலங்கை இந்தியர்களுக்காக கருத்துரை கூறியோர் கூறிய இன்னுமொரு முக்கிய பொருள் யாதெனின், இந்திய வாக்காளர்க் குரிய கல்வித் தகுதிபற்றியதாகும். இது, இவர்கள் கழகத்துப் பணிக்கைக் குரிய கூறு XXVI (1) (d) என்பதற்கிணங்க மற்றை வாக்காளர்களைப் போலவே, ஆங்கிலம், அல்லது சிங்களம், அல்லது தமிழ் யாதாயினு; ஒன்றை வாசிக்க, எழுதக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென விதித் தது. தென்னிந்தியாவிலே பயிலப்படுகின்ற நாட்டு மொழிகள் பலவாய் இருப்பதனல் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகியவற்றுள் ஒன்றை எழுத, வாசிக்கத் தெரியாத ஒரு காரணத்தினுல் இலங்கையிலுள்ள இந்தியர்களை வாக்குரிமையற்றவர்கள் ஆக்குவது நீதியன்று ; அவர்கள் இந்திய நாட்டு மொழிகளுள் யாதாயினும் ஒன்றை வாசிக்க, எழுதக் கூடியவர்களாக இருப்பினும் போதுமானது என்பது அவர் கூற்று. இந்நோக்கு நல்லதே. ஆனல், இந்தியர் தாம் இப்பொழுது குடிபுகுந்த நாட்டிலே வழங்கு கின்ற யாதாயினும் ஒரு மொழியிற் பயிற்சி உள்ளவராயிருத்தல் முக்கிய மானது என்று நாம் கருதுகின்றேம். ஆயினும் அதிகாரம் V இலுள்ள கருத்துரைகள் மேற்கொள்ளப்படின் இக் காரணத்திற்காக வாக்குரிமை அற்றவர்களாக்கப்படும் பிரச்சினை எழாது என்பது எங்கள் எண்ணம்.
தேர்வு செய்யப்பட்ட ஒர் உறுப்பினரின் இருக்கை: ஒரு வெற்றிடமாகும் வழி
கூறு XVI (1) என்பதைப்பற்றிப் பல இடங்களிலிருந்தும் நமக்குக் கருத்துரைகள் எடுத்துக் கூறப்பட்டன. இக்கூறு கூறுவது வருமாறு : * ஒரு சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட எவரேனும், இருபத்தைந்து ஆட் களுக்கு மேற்பட்ட உறுப்பினரைக் கொண்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியில் உள்ள மற்றை உறுப்பினர்களோடு சேர்ந்து, அதன் ஓர் உறுப்பினர்

2O1
என்ற வகையில்லாது, இலங்கை அரசாங்கத்தோடு அதனுடைய பொதுச் சேவைக்காகவோ, அதன் பொருட்டோ, நேர்முகமாகவோ, மறைமுகமாக கவோ பணம் தரும் வருவாயுடைய ஒர் ஒப்பந்தத்தைக் கொண்டிருந் தால், அல்லது இத்தீவிலுள்ள அரசாங்கத்தில் யாதுமொரு பொதுச் சேவையை எற்றுக்கொண்டால், சபையில் அவர் கொண்டிருக்கும் இடம் வெற்றிடமாகிவிடும் ”. இணைக்கப்பட்ட கம்பனிகளின் இயக்குநர்கள் அர சாங்கத்தோடு தொடர்புடையவர்களாய் இருந்துகொண்டு சபையின் உறுப் பினர்களாக வருவதை, இவ்வேற்பாடு தடுப்பது மட்டுமன்றி, சபை உறுப் பினர்களுள் ஒருவர் கம்பனியின் இயக்குநர்களுள் ஒருவராயிருந்தால், அவர் சபை உறுப்பினராக இருக்கும் காலம் வரைக்கும், அக்கம்பனி க்கு யாதுமோர் ஒப்பந்தத்தையும் அளிக்காது தடுத்தும்விடும். இலங்கையி லுள்ள சிறிய ஒரு சமுதாயத்திலே இத்தகைய ஒரு விதி கடுமையாயிருந்த தென்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்ததிலும் இங்கு இது மிக வன்மை யுடையதாயுள்ளதென்றும் பலர் கூறினர். இதுபற்றிய அலுவலிலே இந் நாட்டிலுள்ள வழக்கு 22 சோச்சு 3, தலைப்பு 45, பகுதிகள் 2, 3 ஆகிய வற்றிற்கு உட்படுகின்றது. இது வருமாறு :-
* 32 மக்கள் சபையிலுள்ள உறுப்பினர் யாராயினும் ஒருவர் நேர் முகமாகவோ, மறைமுகமாகவோ, இன்றேல் தம் பொருட்டு, தம் பயன் நஒள் கணக்கு ஆகியவற்றிற்காக வேறெருவரால் மேற்கூறிய விதத்திலே யாதுமோர் ஆணையையோ, ஒப்பந்தத்தையோ, இணக்கத்தையோ முழுவதி லுமோ, ஒரு பகுதியிலுமோ எற்று, இசைவுபட்டு, எடுத்துக்கொண்டு நிறைவேற்றினல் அவருடைய மக்களாட்சி சபையிலுள்ள இடம் வெற்றிட மாகிவிடும் என்று பிரசித்தம் செய்யப்படும்.”
3. ஆனல் இதிலுள்ள எற்பாடுகள், தம் இணைக்கப்பட்ட பண்பி லிய்ங்கும் இணைக்கப்பட்ட வியாபாரக் கம்பனி, அல்லது பத்துப்பேருக்கு மேற்பட்டோரை உடைய, இப்பொழுதுள்ள அல்லது இதற்கு முன் நிறுவப்பட்ட கம்பனி ஆகியவை, தம் இணையம், கம்பனி ஆகியவற்றின் நலனுக்காக ஒப்பந்தம், இணக்கம், ஆணை ஆகியவற்றைப் பெற்றிருந் தால் அத்தகைய ஒப்பந்தம், இணக்கம், ஆணை ஆகியவற்றிற்கு, செல்லா.”
இப்பொழுது நாங்கள் எடுத்தாராய்கின்ற கூற்றிலுள்ள தடைப்பாடுகள், அண்மையில் சிறிய இரண்டொரு குடியேற்ற நாடுகளின் யாப்பில் நின்றும் நீக்கப்பட்டன என்று அறிகின்றேம். இங்கு, இதனலாய இடர் கள், இலங்கையில் ஏற்படக் கூடியவற்றிலிருந்தும் மிக்க பொறுத்த அளவிலே சட்ட சபையின் அமைப்பைப் பாதிக்கக் கூடியனவாயிருந்தன. இலங்கைக்குரிய கழகத்துப் பணிக்கையிலிருந்து இவ்வேற்பாடுகளை நீக்க வேண்டுமென்று நாம் கூற விரும்பவில்லை. ஆனல், நாம் மேற்கூறிய வாறு எவ்விதத்தில் இவ்வேற்பாடுகள் " ஐக்கிய இராச்சியத்தில் உள்ள

Page 107
202
னவோ, அவற்றிற்கேற்ற முறையிலே இக்கூற்றினைத் திருப்பி வரைய வேண்டும் என்று நாம் கருதுகின்றேம். ஆனல், இதனுடன் இன்னும் ஒரு எற்பாட்டையும் சேர்த்தல் நலம். அவ்வேற்பாடு அமைச்சர்கள் தங் களுடைய கடமைக் காலத்திலே கம்பனிகளின் இயக்குநர் பதத்தை வகித் தல் ஆகாது என்பதாம். இன்னும் இக்கூற்றினுடைய கருத்திலே அமை ச்சர் பதமானது நாட்டிலுள்ள, அரசாங்கத்திலுள்ள ஒரு பொதுச் சேவைப் பதம் என்று கொள்ளலாகாது என்ற ஓர் ஏற்பாடும் இருத்தல் வேண்டும்.
தகுதியற்ற ஒருவன் வாக்களித்தால், அல்லது சபையில் அமர்ந்தால் அதற்
குரிய தண்டனை
கழகத்துப் பணிக்கையில் உள்ள கூறு XVI வருமாறு கூறுகின்றது: * தேர்வு செய்யப்படும்பொழுது தெரிவு செய்யப்படக்கூடிய தகுதியில் லாமல் அரசாங்க சபைக்குத் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினராக அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், அந்த அரசாங்க சபையிலே இருந்து வாக்களித்தால், அவ்வாறு அவர் இருந்து அளிக்கின்ற ஒவ்வொரு நாளுக்கும், இன்னும், அரசாங்க சபையில் தம் இருக்கையானது வெற்றிடமான பின், அங்கிருந்து வாக்களிக்கின்றவர் அவ்வாறிருந்து வாக்களிக்கின்ற ஒவ்வொரு நாளுக்கும் 500 உரூபாய் தண்டத்துக்கு உரியவராவர்; அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எந்த இட தி லிருந்து வந்தாரோ, அந்த இடத்திற்கு நீதியாண்மையுடைய மாவட்ட மன்றில் யாரேனும் தொடரும் ஒரு வழக்கினல் இத்தண்டம் அறவாக்கப் படலாம். ’
சபையின் உறுப்பினர்களைக் கட்டுப்பாடில்லாச் சில மக்கள் வழக்கு க்கு இழுக்கக்கூடும். அவ்வாறு நேரும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கும் முறையிலே இக்கூற்றின் வாசகத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாருண முறையில் எழும் வழக்குக்களை, இவ்வாறு வழக்குத்தொடர்வதற்கு முன் ஆள்பதியின் இசைவைப்பெற வேண்டுமென்ற ஓர் எற்பாட்டைவிதிப்பதால் நீக்கக்கூடும். இக்குறிப்பு முக்கியமானது என்று நாம் கருதவில்லை. இன்னும், இவ்வாறு வழக்குத் தொடரும் உரிமை அலட்சியமான முறையிலே கையாளப்படுமென்றும் நாம் எதிர்பார்க்கவில்லை. ஆயினும், எந்தக் காரணத்தையிட்டும் இவ்வாருன வழக்கானது, ஆள்பதியின் இசைவைப் பெற வேண்டுமென்று விதிக்கவும் நாம் விரும்பவில்லை. இத்தகைய ஒழுங்கு புதிய யாப்புக்கு முரண்பட்டதாகும். ஆனல், இவ்வாறு வழக்குத் தொடர விரும்பும் ஒருவர் எந்தவிடத்து மன்றில் அதைத் தொடர விரும்புகின்றரோ, அந்த இடத்து மாவட்ட நீதிபதியினுடைய இசைவினை முதலாவதாகப் பெற வேண்டுமென்ற ஓர் எற்பாட்டை விதித்தால், அது

203
போதியதொன்றயும் யாப்பு முறையில் அமைந்ததாயும் ஆகும் என நாம் கருதுகின்றேம். இம்மாவட்ட நீதிபதிக்கு இந்த இசைவைக் கொடுக்கவோ, மறுக்கவோ உரிமையுண்டு; அவர் இயல்பாகவே, நல்லாதார மில்லா வழக்குக்களுக்கு இசைவழிக்கமாட்டார்.
வாக்காளருக்குரிய வதிவுத் தகுதிகள்
கூறு XXVI (1) (e) கூறுவதாவது: “எவ்வாறேனும் ஒருவர் ஒரு வாக்குத் தொகுதிக்கு உரிய பதிவேட்டிலே, அப்பதிவேடானது ஆயத்தப்படுத்துவதற்கு உடன் முன்னர் ஆறு மாதங்கள் கொண்ட ஒரு காலவெல்லை முழுவதும் வதிந்திராவிட்டால், அவர் தம்முடைய பெயரை அப்பதிவேட்டில் பதிவதற்கு உரிமையுள்ளவராகார்.” இந்த ஏற்பாடானது நெட்டோய்வின் பின் நடைபெறும் அல்லது வேறு காரணத்திற்காக நடைபெறும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றெரு மாவட்டத்திற்கு மாற்றப்படுதல், ஆகிய பல காரணங்களினலே, இடம் மாறும் பண்ணைக்கா ரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடர் தருவதாயமைந்திருக்கின்றது. இக் கூற்றினை வருமாறு திருத்தியமைத்தல் நலமெனக் கருதுகின்றேம் : “ இப்பதிவேடானது இலங்கையில் எந்த வாக்குத் தொகுதி மாவட்டத் திற்குரியதோ, அந்த மாவட்டத்தில் இந்தப் பதிவேடு ஆயத்தப்படுத்து வதற்கு உடன் முன்னர் 18 மாத காலத்துள் ஒர் ஆறுமாத காலம் முழுவதும் வாழ்ந்தும், பொதுவாக இலங்கையிலே ஐந்து ஆண்டு காலம் வாழ்ந்தும் இராத ஒருவருக்கு, அந்தப் பதிவேட்டில் தம் பெயரைப் பதிவதற்கு உரிமையில்லை.” எலவே வாக்குரிமையுள்ளவர்களுக்கு நாம் விதித்த ஐந்தாண்டு வதிவுத் தகுதிக்கு இவ்வேற்பாடு உவந்ததாயிருக்கும். இன்னும், இத்தீவிலிருந்தும் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குப் போகின்ற வாக்காளருடைய தேவைக்கும் இது உகந்ததாயிருக்கும்.
தேர்வு செய்யப்பட்ட அரசாங்க சபை உறுப்பினருடைய தகுதிகளைப் பாதிக்
கின்ற வாக்காளர் பதிவேடு
* போதிய காலத்தில் யாதாயினும் ஒரு பதிவேடு ஆயத்தப்படுத் தப்படாவிட்டால் இப் புதிய பதிவேடு ஆயத்தப்படுத்தப்படவேண்டிய காலத்துக்கு உடன் முன்பாக செயன்முறையிலிருந்த பதிவேடு, புதிய பதிவேடு ஆயத்தப்படுத்தப்படும்வரை செயற்படக் கூடியதாயிருக்கும் ” எனக்கூறும் கூறு XXIII (2) என்பதைப்பற்றியும் எமக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதைக் கூறு XV (1), (5) என்றதோடு இணைத்து நாம் பார்த்தல் வேண்டும். இக்கூறு சொல்வதாவது :-" யாதாயினும் ஒரு வாக்குத் தொகுதியிலே உண்மையான வாக்காளர் என்ற முறையில் பதிவு செய்யப்படாதவரும், அவ்வாறு பதிவு செய்வதற்குத்தகுதியற்ற ஒருமான ஒருவர், சபையின் ஓர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படக்

Page 108
204
கூடியவராகார் ; அவ்வாறு தெரிவு செய்யப்படினும் சபையில் இருக்கவோ, வாக்களிக்கவோ அவர் தகுதியுடையவராகார்.” இவ்வீர் எற்பாடுகளும் சேர்ந்ததன் பலனக, சில வேளைகளில், இந்தப் புதிய பதிவேடு ஆயத்தப்படுத்துவதில் யாதாயினும் ஒரு தாமதம் ஏற்படுவது ஒன்றினலேயே, நாடி ஒருவர் சபையின் உறுப்பினராகத் தகுதியற்றவராதல் கூடும். எல்லாவிதத்திலும் தகுதி பெற்ற ஒரு நாடி, இப் பதிவேடு ஆயத்தப்படுத்துவதால் வரும் தாமதத்தினல்மட்டும், தகுதியற்றவராகக் கூடிய ஒரு நிலைமையைத் தடுப்பதற்குக் கூறு XV (1), (5) என்பதற்குச் சில திருத்தங்கள் கொண்டுவரல் வேண்டுமென நாம் கருதுகின்றேம் ஆனல், உரிய காலத்தில் செயலிலிருக்கின்ற வாக்காளர் பதிவேடு, வாக்களிப்பதற்குள்ள உரிமைக்கு முடிவான சான்றகும் என்பதைக் கூறுகின்ற கூறு XXV இற்கு, அத்தகைய ஒரு திருத்தத்தை நாம் எடுத்துக் கூற விரும்பவில்லை.
“பொதுச் சேவையிலுள்ள ஆட்கள்” என்பதற்குரிய விளக்கம்
கழகத்துப் பணிக்கையின் கூறு II இலுள்ள “இத்தீவுக்குரிய அரசாங்கத்தின் பொதுச் சேவையிலுள்ள ஆட்கள் ” என்னும் பதம் கீழ்வரும் ஆட்களை அடக்காது - (1) தீவின் அரசாங்கத்தில் நிரந்தரமான ஊழியத்தில் இல்லாத ஆட்கள் ; ஆனல், தீவிலுள்ள அரசாங்கத்திலே குறித்த சில ஆண்டெல்லைக்குக் கடமை பார்க்கும் ஆட்கள் இதில் அடங்குவர்; −
率 率 率
(3) முடிக்குரிய பிறக்கிராசிமார்; ܫ
(4) முடிக்குரிய நியாயவாதிகள் ; ஆனல், முடிக்குரிய அறிவுரை நியாயவாதிகள் இதில் அடங்கார்.
இவ்வேற்பாடுகளை அகற்ற வேண்டும் எனச் சிலர் கூறினர். இதற்கு ஆதாரமாகக், கொழும்பிலிருந்து சேய்மையிலுள்ள சில மாவட்டங்களிலே, அங்குள்ள சில நகர்களிலிருக்கின்ற நியாயவாதிகளுள் புகழ்பெற்றரை விட, சட்டசபையின் உறுப்பினராவதற்குப் போதிய கல்வியறிவும் சமூக நிலையில் நல்லுயர்வும் படைத்தவர்களைக் காண்பது அரிதாதலின், முடிக் குரிய பிறக்கிராசிமாரும் முடிக்குரிய நியாயவாதிகளும் சட்ட சபை யிலே அலுவல்பற்றற்ற உறுப்பினர்களாக இருப்பதற்கு வாய்ப்பளிக்கப் பட்டதென எடுத்துக்கூறப்பட்டது. பொதுவாகச் சட்டசபை உறுப்பினர் களுக்கு அவர்களுடைய அந்தச் சபைத் தொழிலுக்காக ஊதியம் கொடுக்காத அளவில், இந்நியாயம் பொருத்தமானது. ஆயினும், நியாயமான ஓர் ஊதியம் இவ்வுறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படவேண்டு மென்ற தீர்மானப்படி, இச்சட்டசபையில் தொண்டாற்றவேண்டுமென்று விரும்புகின்ற முடிக்குரிய நியாயவாதிகள், அதிகம் இழப்பின்றி முடிக்குரி.

205
தம் வேலைகளை இப்பொழுது கைவிடலாம். முடிக்குரிய நியாயவாதிகள் சட்டசபை வேலையை மேற்கொள்கின்றபொழுது, அவர்களுடைய முடிக்குரிய வேலையும் சட்டசபை வேலையும் போதிய அளவில் பாதிக்கப்படுகின்றன என்றும், முடிக்குரிய வழக்குக்கள் அடிக்கடி ஒத்திவைக்கப்படுகின்றன என்றும், இன்னும் முடிக்குரிய நியாயவாதிகளின் பொறுப்புடைய கடமைகள் ஒரளவுக்குப் பாதிக்கப்படக் கூடுமென்றும் எடுத்துக் கூறப்பட்டது. நில வழிமுறையிலமைந்த வாக்குத் தொகுதிகளுக்குப் பிரதிநிதியாயமைந்த உறுப்பினர்களுக்குரிய வதிவுத் தகுதிநீக்கியமை, இவ்வாக்குத் தொகுதிகள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை நன்கு விரிவாக்கி விட்டது என்றும், சட்டசபை இருக்கைக்குரிய நாடிகளைத் தேடியெடுப்பது மிகவும் கடினம் என்று எதிர்பார்த்ததும், எல்லா விடங்களுக்கும் பொதுவான உண்மையன்று என்றும் கூறப்பட்டது.
இவ்விடயத்தைப்பற்றி நாம் பெற்றுக்கொண்ட சான்றுகள் நன்முறை யிலமைந்த ஒரு கருத்துரையைச் சொல்வதற்குப் போதியனவாயிருக்க வில்லை. சட்டசபை அங்கத்தினர்களுக்கு ஊதியம் கொடுப்பது ஒன்றுமே முடிக்குரிய நியாயவாதிகள், முடிக்குரிய வேலைகளைத் தியாகம் பண்ணுவதற்குப் போதிய ஒர் ஊக்காகும் என்று நாம் கருதவில்லை. ஆனல், வதிவுத் தகுதியைச் சபைக்குரிய உறுப்பினர் வகையிலே இப்போழுது நீக்கிவிட்டபடியால் நாடிகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் இடரிருக்காது என்பதில் உண்மையுண்டு. வாக்குத் தொகுதி களில் எண்ணிக்கையும் பருமனும் மாறுபடாமல் இருக்கவேண்டுமென்ற கருத்து நிலவுவதாயின், இவ் வேற்பாடுகளை இப்பொழுது நீக்கிவிடவேண்டு மென்ற எண்ணத் திற்கு நாம் இசைவளித்திருப்போம். எங்களுடைய கருத்துரைகளிலே, ஒன்றயமைந்த அரசாங்க சபையின் அகற்சி நடைபெற வேண்டுமாயின், அந்த அலுவலை நாம் மிக்க கவனத்துடன் ஆராய்தல் வேண்டும். மேலும் புதிய வாக்குத் தொகுதிகளினுடைய பிரதிநிதித் தேவைகளுக்கேற்ப வரும் நாடிகளின் தகுதி உவந்ததோ என்ற பிரச்சினையை நாம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே, மேற்கூறிய பிரச்சினைகளை நாம் ஆராய்தல் வேண்டும்.
அரசாங்க உதவிப் பணம் ப்ெறும் பள்ளிக்கூடங்களின் தலைவர்கள்,
முகாமைக்காரர்கள் ஆகியோர் உறுப்பினராவதற்குரிய தடைகள் அரசாங்க உதவிப் பணம் பெறும் பள்ளிக்கூடத்துத் தலைவர்கள், முகாமைக்காரர்கள் சட்டசபைக்குத் தேர்ந்தெடுப்பதைத் தடைசெய்யும் அளவுக்குக் கழகத்துப் பணிக்கையின் கூறு XV விரிவாக்கப்பட வேண்டு மென்றும் எமக்கு எடுத்துக் கூறப்பட்டது.

Page 109
206
இத்தெரிப்புரையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று நாம் எடுத்துரைக்க விரும்பவில்லை. இந்தச் சபையிலுள்ள ஒவ்வோர் உறுப்பினரும், தொண்டு முறையளவிலே, அரசாங்கத்திலிருந்து நன்கொடை பெறக்கூடிய பள்ளிக்கூடங்களின் வளர்ச்சி, நலம் ஆகியவற்றில் அக்கறை கொண்டிருக் கின்றனர். இத்தகைய உறுப்பினர்கள், தாம் அக்கறை கொண்டுள்ள பள்ளிக்கூடங்களுக்கு, நல்ல நன்கொடை பெறுவதில் முறையற்ற விதத்தில் ஊக்கம் செலுத்துவார்கள் என்பதே கருத்தாயின், அவர்களை உறுப்பினராவதற்குத் தடைசெய்வதால் இப் பிழையை நீக்க முடியாது. ஆனல், இவ்வரசாங்க உதவிப் பணம் கொடுக்கும் முறையை, நன்கு கடைப்பிடிப்பதிலும், அவற்றை நன்முறையிலும் செவ்விய முறையிலும் அமைப்பதிலுமே, அந்தப் பிழையை நீக்கிக் கொள்ளலாம்.
பொருள்கோடற் பிரச்சினைகள்
கழகத்துப் பணிக்கையின் கூறு LXVI இலே வருமாறு விதிக்கப்பட் டுள்ளது : “ இந்தப் பணிக்கையை எவ்வாறு பயன்படுத்தலாம். எவ்வாறு அது அமைந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பவற்றைப்பற்றிய பிரச்சினைகளிலும் அவற்றின் கீழமைந்த விதிகளைப்பற்றிய பிரச்சினை களிலும் நிறைவேற்று குழுவிலமைந்த ஆள்பதியின் தீர்ப்பே முடிவானது”. சட்டசபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்தபின், அவர்களின் தொகுதி பற்றிய பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அவ்வுறுப்பினர்கள் சபையிலிருந்து வாக்களிப்பதற்கேற்ற தகுதியைப்பற்றி ஒரு முடிவு சொல்வதற்கும், ஏற்ற நீதிமன்று தீவின் உச்ச நீதிமன்றேயாகும். இவ்வுச்ச நீதிமன்று தேர்வு விண்ணப்பங்களை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிமன்றகும். இக்கூறுபற்றிய விமரிசத்தோடு நாங்களும் ஒத்துக்கொள்கின்றேம், இதனுடைய வாசகங்கள் எவ்வகையாலும் நிறைவேற்று சபை வருங்காலத் தில் நீக்கப்படல் வேண்டுமேன்ற எம்முடைய முன்னிட்டால் தேவையற்றன. வாகிவிடும். இப் பொருள்கோடற் பிரச்சினைகளிலே கழகத்துப் பணிக்கை மெளனமாக இருத்தல் வேண்டுமென நாம் கருதுகின்றேம். எல்லாச் சட்டங்களுக்கும் பொருள் கூறும் அதிகாரத்தையுடையது உச்ச நீதிமன்றே. அதுபோலவே, இவைபற்றிய பொருள்கோடற் பிரச்சினைகளிலும் தீவின் மன்றுகளே பொறுப்பை வகிக்க வேண்டும்.
தேர்வு விண்ணப்பங்கள் பற்றிய விதிகள்
கடந்த தேர்தலுக்குப் பின்னர் 247 குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒரு தேர்வு விண்ணப்பம் முறையாக்கப்பட்டதென எங்களுக்கு அறிவிக்கப்பட்டது; இதனல், நீண்ட ஒர் உசாவும் நூற்றுக்கணக்கான சாட்சிகளை விளங்கலும் வேண்டப்படுவனவாயின. தேர்வில் வெற்றி பெற்றவர்களை வீணே துன்புறுத்துவதைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் கொண்டுவரும் குற்றச்சாட்டு

207
க்களுக்குவிகிதசமனன முறையிலே, விண்ணப்பக்காரரிடமிருந்து பொறுப்புப் பணம்பெறல் வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது. விண்ணப் பத்திலுள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவாயிருப்பினும், ஒவ்வொரு விண்ணப்பக்காரரிடமிருந்தும் ஐயாயிரம் உரூபாய் காப்புப் பணம் வாங்குவது வழக்கமாகியுள்ளது. இக் காப்புப் பணம் மூன்று குற்றச்சாட் டுக்களை ஏற்றுக் கொள்ளவேண்டு மெனவும் அம் மூன்றிற்கும் மேலான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், உரூபாய் இரண்டாயிரம் காப்புப் பணம் மேற் கொண்டும் அறவிடல் வேண்டுமெனவும் எடுத்துரைக்கப்பட்டது.
இத்தெரிப்புரை நியாயமானது @T@ö7 நாம் கருதுகின்றேம். இவ் வழியில் தேர்வு விண்ணப்பங்களைப்பற்றிய விதிகளை மாற்றியமைத்தல் வேண்டுமென நாம் கூறுகின்றேம்.
நியாயவாதிகளான சட்டசபை உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியப்
L6)
இன்னும் பல சாட்சிகள் எங்களுக்கு ஒரு விடயத்தைப்பற்றி எடுத்துக் கூறினர். தம் தொழில் முறையிலே நியாயவாதிகளாகவுள்ள சட்டசபை உறுப்பினர், சட்டசபை உறுப்பினர் என்ற பாங்கில், தங்களுடைய நண்பர் க்ளுக்கும் தங்கள் தொகுதியினர்க்கும், அவர்கள் உரிமையை நாட்டுவ தற்காகச் சட்டசபையிலும், அரசாங்கத்துடனும் திணைக்களத் தலைவருடனும் மேற்கொள்ளும் கடிதத் தொடர்பிலும், தாம் ஆற்றிய சேவைகளுக்காக, தங்களுடைய நியாயவாதித் தொழிலின் பங்கென ஊதியம் பெறும் வழக்கொன்று இருந்து வருகின்றது. சில வகைகளிலே, இவ்வாறு ஊதியம் "பெற்றிருத்தல் கூடுமெனினும், இது இதிற் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் அனுபவமின்மையால் நேர்ந்ததென்றும், இத்தகைய பொதுவான வழக்கு நடைபெறவில்லையென்றும், அவ்வாறு நடை பெறினும் சட்டசபை அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாதென்றும நாம் நம்புகின்றேம். இவ்வாறு ஒரு வழக்கம் இருப்பதை யாரும் எற்றுக்கொள்வரேல், அது பொறுப்பு வாய்ந்த அரசாங்க முறைக்கு மிக்க முரண்பாடாகி, சட்டசபை உறுப்பின் ஒவ்வோர் உறுப்புரிமைக்கும் ஒரு கூலி முறையிலமைந்த மதிப்பினை அளிக்கும் என்பதை, நாம் இங்கு எடுத்துக்கூறவேண்டியதில்லை ; இவ்வாறய ஒரு பண்பு வளர்வதை மிக்க வன்முறையில் நாம் கண்டித்தல் வேண்டும். இத்தகைய வழக்கமானது வளர்ந்தோங்க விடாமல் உறுப்பினர்களின் நல்லெண் ணமும் நல்லறிவும் பாதுகாப்பரண்களாய் விளங்குமென நாம் நம்பு கின்ருேம். எனவே, இத்தகைய ஒரு முறை வளர்ந்தோங்குவதைத் தடைசெய்வதற்காக, ஓர் எற்பாட்டினைக் கழகத்துப் பணிக்கையில் புகுத்த வேண்டுமென நாம் எடுத்துக் கூற விரும்பவில்லை.

Page 110
அதிகாரம் X
எடுத்துரைப்பின் சுருக்கம் மத்திய அரசாங்கம் (அதிகாரம் IW)
1. பக்கங்கள் 66-82 வரை சுருக்கியோதப்பட்ட புதிய யாப்பு முறையைக் கொண்டுள்ள புதியதொரு கழகத்துப் பணிக்கை இப்பொழுதுள்ள கழகத் துப் பணிக்கையின் இடத்தைப் பெறல் வேண்டும். இதனுடைய நோக் கானது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டின் உள் நாட்டு அலுவல்களில் பூரண பொறுப்பை அளிப்பதாயிருத்தல் வேண்டும். அனுபவமுள்ள அலுவலர்களின் அறிவுரை, குறித்த சில பாதுகாப்பு அதிகாரங்களை ஆள்பதி வகித்தல், ஆகிய கட்டுப்பாடுகளால் மட்டுமே இப் பொறுப்பு வரையறுக்கப்பட்டதாயிருக்கும்.
2. இப்புதிய யாப்பின் முக்கிய பண்புகளானவை : இப்பொழுதுள்ள சட்ட சபையின் இடத்தில் ஆட்சி அலுவல்கள், சட்டநிறுவு சபை அலுவல்கள் ஆகிய இரண்டையும் கைக்கொண்டு அதனல் நிறுவு அமர்விலும் சட்ட நிறைவேற்று அமர்விலும் அமரும் ஒர் அரசாங்க சபை அமைதல் : இப் பொழுதுள்ள குடியேற்ற நாட்டு அலுவலகத்தின் அதிகாரத்தைப் பல்முகப் படுத்தி அரசாங்கத்தின் திணைக்களங்களைப் பத்து அமைச்சர்களின் பொறுப்பில் அமைத்தல், இப்பதின்மரில் எழுவர் இனிமேல் கூறப்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்க சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக மற்றை மூவரும் அரசலுவலர் எனப்படுவர் ; இவர்கள் தலைமைச் செயலாளர் (முன்னர் குடியேற்றநாட்டுச் செயலாளர்), பொருளாளர், சட்டத்துறைநாயகம் என்போராவர் : இத்தெரிந்தெடுக்கப் பட்ட எழு அமைச்சர்கள் ஒவ்வொருவருடனும் அவர்களுடைய திணைக் களங்களை ஆட்சி செய்வதற்காக அரசாங்க சபையினின்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நிலையான நிறைவேற்று குழு இணைக்கப்பட்டிருக்கும்.
3. புதிய ஒரு சபை கூடியதும் உறுப்பினர் தம்மைத் தாமே எழு நிறைவேற்று குழுக்களாகப் பிரித்துக் கொள்வர். அவை ஒவ்வொன்றும் தங்களுடைய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்களை ஆள்பதி நிய மிப்பார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே நாம் முற்கூறிய அமைச் சராவர். அவர்கள் தங்களுடைய நிறைவேற்று குழுக்களுடன் திணைக்கள ஆட்சி, கட்டுப்பாடு ஆகியவற்றிற்குச் சபைக்குப் பொறுப்பாவர். இன்னும், அரசலுவலர்களுடனே அவர்கள் ஆட்சிக்குட்பட்ட திணைக்களங்களோடியைந்த அலுவல்களில் நிறைவேற்று குழுக்கள் இணைந்திரா ; ஏனெனில், அவர்
208

209
களுடைய கடமைகள் பெரும்பாலும் அறிவுரை முறையில் அமைந்தனவாக அவர்களுடைய திணைக்களங்களின் செயல்களும் அரசாங்க சபையின் முடிவு களை நிறைவேற்றும் முறையில் அமைந்தனவாமாதலின்.
4. நிறைவேற்று சபை நீக்கப்படல் வேண்டும். இந்தப் பத்து அமைச்சர் களும் ஆண்டு வரவுசெலவுத் திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு, அவற்றேடியைந்த நிதி நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு இறுதியான கூட்டுப் பொறுப்பு முறைகொண்ட ஒரு சபையாக அமைக்கப்படல் வேண்டும். இவ்வமைச்சர் சபை அரசாங்க சபையின் அலுவல்களின் முறையையும் ஒழுங்காக்கும். ஒரு நிறைவேற்று குழுவுக்கு மேலான பலவற்றேடியைந்த அலுவல்களை எவ்வாறு நிறைவேற்றலாம் எனும் முறையையும் அது ஒழுங்கு படுத்தும். தலைமைச் செயலாளரே இந்தச் சபைக்குத் முதல்வராக இருப்பார். ஆனல், அவரும் மற்றை அரசலுவலரும் அரசாங்கத்திற்கு முறையே அரசியல், நிதியியல், சட்டவியல் அறிவுரையாளராகக் கடமை பார்க்கின்றனராதலின், அவர்கள் அமைச்சர் சபை கூட்டத்திலோ, அரசாங்க சபைக் கூட்டத்திலோ வாக்களியார்.
5. இவ்வமைச்சர் சபை ஒரு துணை முதல்வரைத் தெரிவுசெய்யும். இவர் பதவி முறையில் அரசாங்க சபைக்குத் தலைவராக இருப்பார். இத்துணை முதல்வரை நிறைவேற்று குழுக்களின் எழு முதல்வர்களிலிருந்தும் தெரிவு செய்தல் வேண்டும். அரசாங்க சபை தன்னுடைய வாசகரையும் குழுக்களின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரையும் தெரிவுசெய்யும்.
6. இந்நிறைவேற்று குழுக்களின் நடவடிக்கைகள் யாவும் நிறைவேற் றமர்விலுள்ள அரசாங்க சபைக்கு அறிவிக்கப்படும். பின்னர் இவை சபை யின் இசைவு பெற்றபின் உறுதிப்படுத்துவதற்காக ஆள்பதிக்குச் சமர்ப் பிக்கப்படும். இவ்வாறே, அரசாங்க சபை வரித்துக்கொண்ட சட்டநிறுவு நடவடிக்கைகள் யாவும் ஆள்பதியின் இசைவிற்காக அவருக்குச் சமர்ப் பிக்கப்படும். நிறைவேற்றலுவல்களிலும் சட்ட நிறுவு அலுவல்களிலும் தம்முடைய இசைவை அளிக்கவோ, மறுக்கவோ கட்டற்ற அதிகாரத்தை ஆள்பதி கொண்டிருப்பார். பொதுவாக இந்த முன்னிடுகள் ஆள்பதியின் கருத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வேத்தியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு முரணுயிருந்தால் அன்றி, ஆள்பதியானவர் தம்முடைய இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தார். ஆள்பதியின் அதிகாரங்கள் நிறைவேற்று முறையிலன்றி, மேற்பார்வை முறையிலேயே அமைந்திருக்கும். அவருடைய நிறைவேற். றதிகாரங்கள் குறைவுபடுத்தும் அளவில் அவருடைய ஒதுக்கிய அதிகாரங்கள் வலிமைப்படுத்தப்படும்.
1. நடவடிக்கைகளை ஆய்ந்து முடிவுசெய்யும் அதிகாரத்தினர் ஆக்கிய குழுவினர்க்கு, அவற்றை மீண்டும் ஆலோசிப்பதற்காக அனுப்பக் கூடிய அதிகாரம் புதிய யாப்பில் ஒரு புதிய பண்பாகும்; இப்பண்புக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றேம். எங்களுடைய முன்னிடுகள் மூன்று வகையான மீளாலோசனைக்குத் திருப்பியனுப்பும் வகைகளைக்

Page 111
210
கருத்திற் கொண்டுள்ளன. ஆள்பதியானவர் நிறைவேற்று நடவடிக்கை களையோ, சட்ட நிறுவு நடவடிக்கைகளையோ, அரசாங்க சபைக்குத் திருப்பி அனுப்புதற்குச் சுதந்திரமுடையவராவார் ; சட்டசபையானது நிறைவேற்று அலுவல்கள்பற்றிய பிரச்சினைகளை, ஆதியில் தொடக் கிய நிறைவேற்று குழுவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு உரிமை கொண் டது ; ஆண்டு வரவுசெலவுத் திட்டம், மதிப்பீடு, குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவை பற்றிய வகையிலே, அரசாங்க சபை அவற்றை அமைச்சர் சபைக்குத் திருப்பியனுப்பக்கூடும். பிற்கூறிய வகையிலே அரசாங்கசபையானது ஒரு முறைக்கு மிஞ்சி அதைத் திருப்பி அனுப்புவதைத் தடை செய்ய வேண்டும். 8. சபையின் நிலையான பணிக்கைகளைத் திருத் தியமைப்பதற்கு ஆள் பதியானவர் ஒரு குழுவினை நியமித்தல் வேண்டும். இது எங்களுடைய கருத்துரைகளை மேற்கொள்வதால் தேவைப்படுகின்ற மாற்றங்களை, புதிய யாப்பினைப் புகுத்துவதற்கு முன்னரே ஏற்றுக்கொள்வதற்காகவேயாம். சட்டசபையின் புதிதாக விரிவாக்கப்பட்ட அதிகாரம், தகைமை ஆகிய வற்றிற்கு உவந்தனவெனக் கருதப்படுகின்ற வழக்குக்கள், கிரியை முறை கள் ஆகியவற்றை நிலையான பணிக்கைகளில் விரிவாக ஒதிப் பேணுவதற்கு இக்குழு முயற்சி எடுத்தல் வேண்டும்.
9. புதிய யாப்பினை அமைப்பதற்கு முன்னர், அமைச்சர்களுக்கிடை யேயும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயும் உள்ள பொறுப்பினை வரை யறுப்பதற்காக விதிகளை ஆக்கி அமைவுபடுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கம் வேண்டிய வழிவகைகளை உடனே செய்தல் வேண்டும்.
10. இந்த யாப்பு முறையை மாற்றுவதற்குரிய மற்றை வழிவகைகளைத் தடையின்றி உடனே செய்தல் வேண்டும். செயலகத்திலிருந்துள்ள ஆட்சிக் கட்டுப்பாடுகளைப் பன்முகப்படுத்துவதற்குரிய திட்டத்தை ஆக்கல் வேண்டும். அரசாங்கத் திணைக்களங்களைத் தொகுப்பதற்குரிய திட்டம் வகுக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு நிறைவேற்று குழுவின் தலைவர்க்குமுரிய செயலக அலுவலர்பற்றிய எற்பாடுகளையும் பணிமனைபற்றிய ஏற்பாடுகளையும் செவ் வனே செய்தல் வேண்டும். இத்தகைய பெரியதொரு வேலையையும் பொறுப்பையும் மாற்றியமைக்கின்ற வகையிலே உண்டாகும் பல சிறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய ஏற்பாடுகளையுஞ் செய்துகொள்ளல் வேண்டும்.
வாக்குரிமையும் பிரதிநிதித்துவமும் (அதிகாரம் W) 11. இப்பொழுது வாக்குரிமைக்குள்ள சொத்து, வருமானம், கல்வி ஆகியவற்றேடு இயைந்த தகுதிகளை நீக்கிவிடல் வேண்டும். இவ்வாக் குரிமையானது, சில குறித்த சிறிய வரையறைகளுடன் இத்தீவிலே குறைந் தது ஒர் ஐந்தாண்டுகளுக்கு வாழ்ந்து தேர்வோர்களாகப் பதிவுசெய்ய விண்ணப்பித்த 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும்.

211
12. அரசாங்க சபையின் உறுப்புமைக்குரிய தகுதி தேர்வாளர்களுக் குரிய தகுதிகளைப் போன்றிருத்தல் வேண்டும். ஆனல், ஆங்கில அறிவுத் தகுதியில்லாதவர்கள் தகுதியற்றவர்களாவர்.
13. அரசாங்க சபையின் எண்ணிக்கை 49 இலிருந்து 80 இற்குக் கூட்டப்படல் வேண்டும்.
14. சமுதாய முறைப் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு அரசாங்க சபை பின்வருமாறு அமைந்திருத்தல் வேண்டும் : நில வழி முறையிலமைந்த வாக்குத் தொகுதிகளினின்று தேர்ந்தெடுக்கப்பட்ட 65 உறுப்பினர்; மூன்று பேர் அலுவல் முறையிலமைந்த உறுப்பினர் ; (அரசலுவலர்கள்). 12 இற்கு மேற்படாமல் ஆள்பதியால் நியமிக்கப்பட்ட சிலர் , இங்கு இத்தகையோரை நியமித்தல் அரசாங்கம் சபையின் பிரதி நிதித்துவத் திற்கு ஒரு முழுமையை அளிப்பதற்கு இத்தகையோரை நியமித்தல் அவசியமென்றலே ஆள்பதியானவர் அவ்வாறு நியமித்தல் வேண்டும்.
15. ஒவ்வொரு தேர்வுத் தொகுதியும் 70 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம் வரை மக்கட்டொகை உடையனவாய் அமைய, நிலவழி முறையி லமைந்த தேர்வுத் தொகுதிகளை மீண்டும் திருப்பி அமைக்குமாறு நேரந் தாழ்த்தாது ஒரு நாட்டு ஆணைக் குழுவை அமைத்தல் வேண்டும்.
கண்டியர் உரிமை (அதிகாரம் WI) 16. அரசாங்க சபை கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் அடிக்கடி கூடுதல் வேண்டும்.
உள்ளூராட்சி (அதிகாரம் WI)
17. இப்பொழுதுள்ள உள்ளூராட்சிக்குழு நீக்கப்படல் வேண்டும். உள்ளூ ராட்சியின் பொறுப்பை எற்பதற்குப் புதிய ஓர் அரசாங்கத் திணைக்களம் அமைக்கப்படல் வேண்டும். இத்திணைக்களம் அரசாங்க சபையின் ஒரு நிறைவேற்று குழுவின் பொறுப்பிலிருத்தல் வேண்டும். இந்நிறைவேற்று குழு நிலவாட்சி, நிலக்குடியேற்றம், நில அளவைத் திணைக்களம் ஆகிய வற்றிற்குப் பொறுப்பாயிருக்கும்.
18. இத்திணைக்களத்தின் பண்புகள் இரு வகையினவாயிருத்தல் வேண்டும். மாநகர சங்கங்கள் உட்பட, இப்பொழுதுள்ள உள்ளூர்ச் சபை களின் ஆட்சிகளைக் கண்காணித்தல் இதன் பொறுப்பாயிருத்தல் வேண்டும். இத்தீவிலே உள்ளூராட்சியை விரிவாக்குவதற்கு வேண்டிய வழிமுறைகளை ஆய்ந்து ஆக்கி வளர்ப்பது இதன் கடமையாயிருத்தல் வேண்டும்.
19. உள்ளூராட்சித் திணைக்களம் அதன் கடமைகளை ஆற்றுவதற்கு, இப்பொழுது உள்ளூராட்சி முறையில் துறைபோகிய ஓர் அலுவலர் துணை புரிதல் வேண்டும். இதற்காகப் பெரிய பிரித்தனிலிருந்து ஒருவரை வரவழைத்தல் வேண்டும்.

Page 112
22
20. மூத்த ஒரு சுகாதார அலுவலரும் இரண்டொரு சிறப்பியல் எஞ்சி னியர்களும், இந்தத் திணைக்களத்திலே, இணை அலுவலர்களாகக் கடமை யாற்றுவதன் பொருட்டு, சுகாதாரப் பொது வேலைத் திணைக்களங்களி லிருந்து அனுப்பப்படல் வேண்டும். நகர அமைப்பாளர் ஒருவர் கடமை பார்ப்பதற்கும் ஒழுங்குகள் செய்யப்படல் வேண்டும். இதில் ஒன்ருே ` இரண்டோ வரிமதிப்பாளரும் இருத்தல் வேண்டும். குறைந்தது ஒரு கணக் காளரும் இங்கு சேர்க்கப்படல் வேண்டும். அலுவல்களைக் கண்காணிப்பதற்கு அத்தியாவசியமெனின், இவ்வலுவலர்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம். இவர்கள் இத்திணைக்களத்துக்கு அறிவுரை கூறுவதற்கு ஒரு சிறுகுழுவாக, அமைவர். இவர்கள் இத்திணைக்களத்துக்கு மட்டுமன்றி, இவர்களுடைய அறிவுரையை விரும்பும் மற்றை உள்ளூர்ச் சபைகளுக்கும், அறிவுரை கூறக்கூடியவராக இருப்பர்.
21. இப்புதிய திணைக்களத்தின் முதற் கடமைகளுள் ஒன்று, மற்றைத் திணைக்களத்துப் பிரதிகளோடு சேர்ந்து மாகாணக் கழங்கள் போன்ற இணைப்புச் சபைகளை நிறுவி, மத்திய அரசாங்கம் இப்பொழுது வகிக்கின்ற ஆட்சிக் கடமைகளுள் சிலவற்றை, அவற்றின் அளிக்கக்கூடிய வழிவகைகளை நன்கு ஆராய்வது.
22. இந்த ஊராட்சி முறையிலே, பொது மாவட்டக் கழகங்கள், கிராம மாவட்டக் கழகங்கள் ஆகியவையும் பங்குபற்றல் ஆகுமோ என்ற பிரச் சினையையும் ஆராய்ந்து, அதற்குச் செயன்முறையில் யாதாயினும் வழி வகுக்கலாமோ என்பதையும் இந்த உள்ளூராட்சித் திணைக்களம் ஆராய்தல் வேண்டும். குறித்த ஒரு மக்கட்டொகையில் கூடிய மட்க்கடொகையுடைய உள்ளூர்ச் சபைப் பட்டினங்கள் நகர மாவட்டக் கழகங்களாக வரலாகுமா என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும். அவ்வாறே இப் பொழுதுள்ள சுகாதாரச் சபைகளினிடத்தில் தனிப்பட்ட பட்டினங்களை ஆட்சி புரியும் பட்டினக் குளுக்களை அமைக்கலாமோ என்பதும் ஆராயப்பட வேண்டியதாகும். வருங்காலத்தில், யாதுமொரு கிராமமேனும், ஒரு சுகா தாரச் சபையின் அதிகாரத்தில் விடக்கூடிய பருமனும் முக்கியத்துவ மும் பெறுமாயின், அதை ஒரு பட்டினக் குழுவாக்கலாமோ என்பதும் ஆராயப்பட வேண்டியதாகும்.
23. மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த விதி கடைப்பிடிக்கப் பட்டதோ அந்த விதிக்கியைய உள்ளூர்ச் சபைகளும் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினரைக் கொண்டே அமைந்திருத்தல் வேண்டும். அலுவல் பற்றுடைய உறுப்பினர்கள் அறிவுரையாளராகவே இருப்பர். கிராமச் சங்கங்களுக்கு எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றதோ, அவ்வாறே பட்டினக் குழுக்களுக்கும் வயதுவந்த ஆண் வாக்களரே தேர்வு செய்தல் வேண்டும். நகர மாவட்டக் கழகங்களுக்கும் மாநகர சபகைளுக்கும் வாக் குக் கொடுப்பதற்குரிய தகுதிகள் சட்ட சபைக்குரிய தகுதிகளை ஒத்தன வாக இருத்தல் வேண்டும். •ረ

23
24. மாநகர சங்கங்கள், நகர மாவட்டக் கழகங்கள், உள்ளூர்ச் சபைகள் ஆகியவற்றிற்கு உறுப்பினராக அமைவதற்குரிய தகுதிகள், இச்சபைகள் இருக்குமட்டும், அரசாங்க சபயிைன் உறுப்புமைக்குரிய தகுதிகளை ஒத்தன வாக இருத்தல் வேண்டும். இப்பொழுதிருக்கும் கிராமச் சங்கங்களின் உறுபுமைக்குரிய தகுதிகளை மாற்றல் ஆகாது. இத் தகுதிகள், பட்டி னக் குழுகள் ஆக்கப்படுகின்ற காலத்திலே, அவற்றின் உறுப்புமைக்கும் உரியனவாயிருத்தல் வேண்டும்.
25. இச்சபைகள், கழகங்கள் ஆகியவற்றின் தலைவர்களை எல்லா வகை களிலும் அந்தச் சபகைளே தேர்வு செய்தல் வேண்டும். ஆனல், உள்ளூ ராட்சிக் குழுவின் கருத்தின்படி அவ்வாறு தேர்வு செய்யப்படுவதற்குத் தகுதியான ஒரு நாடியும் முன்வரவில்லையென்ற இடத்தும், யாதுமொரு காரணத்தினல் அச்சபையினதோ, சங்கத்தினதோ கடமையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியவிடத்தும் அவ்வாறு நடைபெற வேண்டியதில்லை. இத்தகைய வகைகளில் அன்றி அரசாங்கத்தில் முழு நேரக் கடமை பார்க்கும் எவரும் பிரதம தலைமைக்காரர் உட்பட, நகர சபை, நகர மாவட்டச் சபை, பட்டினக் குழு, கிராமச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பு மைக்கோ, தலைமைக்கோ தகுதியுடையவராகார்.
26. ஒவ்வொரு நகர மாவட்டக் கழகத்திற்கும் ஒரு பிரதம எழுது வினைஞர் இருத்தல் வேண்டும். இவருக்குத் துணைபுரிய வேறு சில எழுதுவினைஞர் இருத்தல் வேண்டும். இவ்வாறக எங்கும் பரந்துள்ள சபகைளின் எழுதுவினைஞர்கள் பதங்களும் ஒன்றேடொன்று இணைக்கப் பட்டு, அதில் உள்ளவர்க்கு, பொதுச் சேவையில் இவர்களோடு ஒத்த நிலைமையில் இருக்கின்றவர்களுக்குரிய, சம்பளம் கொடுக்கப்படல் வேண் டும். இவர்களுக்கு இளைப்பாறற் சம்பளத் தகுதியும் அளித்தல் வேண் டும்.
குடியியற் சேவையும் பொதுச் சேவையும் (அதிகாரம் WI)
27. பிரதம தலைமைக்காரரைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் வழிவகை களிலே மாற்றங்கள் செய்வதைப்பற்றி ஆராய்தல் வேண்டும்.
28. உரிமையோலைகளில் பொதுச் சேவைக்குரிய எல்லா நியமனங் களையும் செய்வதற்கு ஆள்பதிக்கு உரிமையிருக்க வேண்டுமென்ற ஓர் கூறு இருத்தல் வேண்டும். ஆனல், அதில் அரசுச் செயலாளர் விரும்பிய வகைகளிலே, அவர் இசைவைப் பெற்றே நியமனங்கள் நடைபெறல் வேண்டுமென்றும் விதிக்கின்ற, ஒரு கூறுமிருத்தல் வேண்டும்.
29. இலங்கை அரசாங்கத்திலே, அரசுச் செயலாளர்களின் இசைவு பெற்ற நியமனமுடைய எல்லாப் பொதுச் சேவையாளர்க்கும், ஆணைக் குழுவின் அறிக்கை வெளியாகு முன்னர் இத்தகைய பதங்களுக்குத்

Page 113
214
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், விகிதசமனன இளைப்பாறற் சம்பளத்திலே
வருங்காலத்தில் இப்பொழுதோ, அல்லது வேறு எந்தக் காலத்திலோ
தம்முடைய பத இழப்பீட்டிற்கென அமைந்த ஒரு பணத் தொகையுடன்,
இளைப்பாறுதற்குரிய கட்டற்ற ஓர் உரிமையை அளிக்கும் கூருென்றினை,
புதிய கழகத்துப் பணிக்கை கொண்டிருத்தல் வேண்டும். இளேப்பாறற்' சம்பள விகிதமும் ஈடுசெய்யும் விகிதமும் அரசுச் செயலாளர் விதிக்கின்ற
வகையிலே கணிக்கப்படல் வேண்டும்.
30. இவ்வழிவகைகளைத் தீர்மானிக்கின்றபொழுது, போரில் சேவை செய்து, இயற்கையாய்த் தாம் சேரக்கூடிய வயதிலும் முதிர்ந்த ஒரு வயதில், இலங்கை அரசாங்கச் சேவையிலமர்ந்த அலுவலர்கள் வகை யிலே, சிறப்பான ஒரு முறையைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
31. தம்முடைய இசைவு, பெற்று இலங்கை அரசாங்கத்திலே பதம் வகிப்பதற்காக வருங்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படப் போகின்ற அலுவலர் களின் வகைகயிலும் இப்பொழுது பதத்தை வகிக்கின்ற எல்லா அலு வலர்களினதும் வகயிைலும், அவ்வலுவலர்களின் சம்பளங்கள், ஊதி யங்கள், இளைப்பாறற் சம்பளங்கள், கொடைப் பணங்கள், அவர்களின் சேவையின் வளர்ச்சி நிலைமை ஆகியவற்றேடமைந்த அலுவல்கள், அவ்வலுவலர்களின் விதவைகள் அனதைகள் சட்டவழி உரிமையாளர் ஆகியவர்க்குரிய இளைப்பாறற் சம்பளம், கொடைப் பணம் ஆகியவைபற்றிய எல்லா விடயங்களிலும் அரசுச் செயலாளர்க்கே முடிவு யாவையும் ஒதுக்கு கின்ற ஒரு கூற்றினைக் கழககதுப் பணிக்கை கொண்டிருத்தல் வேண்டும்.
32. பொதுச் சேவையிலுள்ள எல்லாக் கிளைகளிலும் அமர்த்தப்பட வேண்டிய ஐரோப்பியர், இலங்கையர் ஆகியவர்களுக்கிடையே என்ன விகித சமம் அமையவேண்டுமென்ற ஒரு முடிவுக்கு வரும் உரிமையை அரசுச் செயலாளருக்கு அளிக்கும் ஒரு கூற்றினைக் கழகத்துப் பணிக்கை கொண் டிருத்தல் வேண்டும். இன்னும், இவ்விடயத்தில் உகந்தவையெனக் கருதப் படுகின்ற எல்லாவலுவல்களுக்கும் வேண்டிய விதிகளையும் ஆக்கும் உரிமையும் அவருக்கு இத்துடன் அளிக்கப்படல் வேண்டும்.
33. கீழ்க்காணும் கட்டளைகளுடன் சுதந்திரமான சம்பள ஆணைக்குழு வொன்று பெரிய பிரித்தனிலிருந்து இந்நாட்டுக்கு அனுப்பப்படல் வேண்டும்.
(1) ஓர் இலங்கை அலுவலரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக இலங்கைச் சேவையில் உள்ள பதங்களின் ஒவ்வொரு வகைக்கும் என்ன சம்பளம், மேற்பணம், உதவிப் பணம் அளிக்கவேண்டுமென்று அது முடிவு செய்யவேண்டும். (2) இப்பதங்களைக் கொண்டிருப்போர் ஐரோப்பியரெனில், புறநாட்டு உதவிப் பணம் எவ்வளவு அளிக்கப்படல் வேண்டுமென்று தீர்மானிக்கவேண்டும்.

Z15
(3) கடற்செலவுப் பிரயாணத்துக்குரிய பேறுகளைப்பற்றிய கருத்துரை
கள் கூறவேண்டும். r
(4) இலங்கைச் சேவையின் பல் துறைகளிலும், என்ன விகிதத்தில், இலங்கையரும் ஐரோப்பியரும் அமர்த்தப்படல் வேண்டுமென்ற கருத்துரைகள் கூறவேண்டும்.
(5) அரசுச் செயலாளரோ, அல்லது அவருடைய இசைவுடன் இலங்கை அரசாங்கமோ, இவ்வாணைக் குழுவின் ஆராய்விற்கு அனுப்பப் படும் எல்லா அலுவல்களையும் ஆலோசித்து, அதற்கு ஒர் அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.
34. தலைமைச் செயலாளருடன் வேறு இரண்டு மூத்த அரசாங்க அலுவலர் சேர்ந்த ஒரு பொதுச் சேவை ஆணைக்குழு நிறுவப்பட வேண். டும் ; இவ்விருவரும் ஆள்பதியால் நியமிக்கப்பட்டு அவர் விரும்பிய காலம் அளவே கடமை வகிப்பர்.
35. இவ்வாணைக்குழு தன்னுடைய அலுவல்களைப்பற்றி ஆள்பதிக்கு எடுத்துக் கூறும் ; இக்குழுவினர் பின்வரும் விடயங்களைப்பற்றி ஆள் பதிக்கு அறிவுரை கூறப் பொறுப்பாக இருப்பர் :- .
(1) திணைக்களத் தலைவர்கள் தம் அதிகாரத்தாலேயே நிரப்பக்கூடிய பதங்களின் சம்பளங்களிலும் உயர்ந்த சம்பளங்களைக் கொண் டுள்ள இலங்கைச் சேவையின் பதங்களை, நிரப்பும் வகை. (2) இச்சம்பளங்கள் கொண்ட மேலான பதங்களிலே உள்ள அலு
வலர்களுக்கு பத உயர்வு அளிக்கும் வகை. (3) இலங்கைச் சேவையின் யாதுமொரு கிளையிலேனும் புதிதாக ஒரு பதத்தில் அமர்த்துவதற்கோ, அல்லது பத உயர்வுக்காக ஒரு வரை ஆயத்தம் செய்தற்கோ அவருக்கு வேண்டிய வசதி களை அளிக்கும் வகை. (4) இலங்கையின் பொதுச் சேவையிலோ, அல்லது அதற்குரிய சில துறைகளிலோ சேர்வதற்கு வேண்டிய விதிகள், அவற்றில் ஆகும் பத உயர்வு, பரிசு, தண்டனை பதவி நீக்கம் ஆகிய எல்லா அலுவல்களையும் அமைக்கும் வகை : இவற்றுள், மொழித் தேர்வும் மற்றைத் தேர்வுகளும் அடங்கும்.
வேறுபிற
இவற்றை அதிகாரம் IX இல் காணலாம். அவை விவரமாகக் கூறப்பட வேண்டியனவாதலின் இங்கு சுருக்கம் கொடுக்கப்படவில்லை.
(3/60) 22574 .J. N. R بسست .9

Page 114
அதிகாரம் X
நன்றி கூறல்
இலங்கையில் எம் கடமைகளின் பளுவினைப் பொறுப்பதற்கும் எங் களுடைய ஆய்வுகளை இலகுவாக்குவதற்கும் வேண்டிய உதவி செய்த தற்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியறிதலை இங்கு கூறல் மிக இன்றியமையாததாகும். இக்கடமையை நாம் மேற்கொள்ளுமுன்னர், இலங் கையின் விருந்தோம்பற் பண்பைப்பற்றி நாம் அறிந்துள்ளோம். ஆனல், இது நாம் எதிர்பார்த்ததை விட உயர்ந்ததாக இருந்தது. எங்களுடைய நியமனங்பளைப்பற்றி இலங்கை மக்கள் அறிந்தவுடனேயே, அவர்கள் யாவ ரும் அவர்களுடைய சட்ட சபைப் பிரதிநிதிகளும் எங்களுடைய அலுவ லைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவிதமான இடையூறையும் வரவிடக் கூடாது என்பது மட்டுமன்றி, எங்களுடைய வேலையை மிகக் கூடிய சுலபமாகச் செய்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்யவேண்டுமென்றும் பெரிதும் விரும்பினர்கள். இவ்வாறக, நாங்கள் இலங்கை வந்தடைந் ததும் எங்களுடைய வாய்ப்புக்கு ஏற்ற விதத்தில், நன்முறையில் ஒழுங்கு கள் செய்திருப்பதை நாம் கண்டோம். நாங்கள் கேளாமலேயே, அவர்கள் அவ்வாறு செய்யவேண்டிய கடப்பாடு இல்லாமலேயே, சட்ட சபை உறுப் பினர்கள், எங்களுக்கு நல்ல அலுவலக வசதிகள் கொடுக்கப்பட வேண்டு மென்றும், அரசாங்கப் பணத்திலேயே கொடுக்கப்பட வேண்டுமென்றும், எங்களுடைய பயனுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக மோட்டர் வண்டி கள் அளிக்கப்பட வேண்டுமென்றும், எங்களுக்கு வேண்டிய எழுதுவினை ஞர், சேவகர், தூதர் ஆகியோருடன் வேண்டிய நூல்கள், தாள்கள் ஆகியவையும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வற்புறுத்தியிருந்தார்கள். தீவில் நாங்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும், இலங்கை அரசாங்கத் தின் விருந்தினராகவே இருந்தோம். மாநகர சங்கமும் அதே ஆர் வுடன், அப்பொழுதுதான் கட்டி முடிக்கப்படும் தறுவாயிலிருந்த நகர சங்க மண்டபத்தை, எங்களுடைய பயனுக்காக அளித்தது. இவ்வாறக, எங்களுக்கு மிக்க விசாலமான நல்வாய்ப்புக்கள் உடைய அலுவலகங் கள் கொடுக்கப்பட்டன.
இவ்வாறக, எங்களுடைய ஆய்வு வேலையை நல் மகிழ்வுடை முகிழ்த் தத்தில் தொடங்கினேம். எல்லோரிலும் எங்களுக்கு நிறைவான தகவல் கள் கொடுக்கும் ஓர் ஆர்வம் காணப்பட்டது; அவ்வாறே எங்களை எதிர் நோக்கி நின்ற சகல பிரச்சினைகளைப்பற்றியும் மறைவின்றி, கட்டின்றி ஆய்வதற்கும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வேண்டிய அறி
216

217.
வினைத் தந்து மக்கள் உதவி செய்தார்கள். நாங்கிள் இலங்கை வரு முன்னர், கிட்டத்தட்ட 70 விண்ணப்பங்களைச் சபைகளிடமிருந்தும் தனிப் பட்டோர்களிடமிருந்தும் பெற்றிருந்தோம். தீவில் நாம் நிற்கின்ற காலத் திலே, இவ்வெண்ணிக்கை ஏறக்குறைய 350 இற்கு வந்தது. இவ்வாருக, மிகவும் பயனுடைய இவ்வெழுத்து விண்ணப்பங்களுடன், தீவிலுள்ள எல்லாப் பாகங்களிலிருந்தும் எல்லா வகுப்பினரிடமிருந்தும் வாய்முறைச் சான்றுகளும் நமக்குக் கிடைத்தன. இச்சான்றுகள் எல்லாம் பொது மக்கள் முன்னிலேயே அளிக்கப்பட்டன. அவை மிகவும் கவர்ச்சிகரமா யிருந்தன. அவற்றை, ஒரு முழுத்தாளில் எழுதினல் மூவாயிரம் பக்கங் கொள்ளும். எழுத்து முறை விண்ணப்பங்களையும் வாய்முறை விண்ணப் பங்களையும் எமக்கு அளித்தோர் எடுத்த கடைப்பிடியும், அவர்கள் தம் நோக்குக்களை நமக்கு எடுத்தோதிய தெளிவும், கனிவும், மறைவின்மை யும் போற்றற்குரியன; இவ்வாறு எங்களுடைய கருத்துரைகளுக்கு அடிப் படையாக அமையக்கூடிய உரைகளைக் கூறியோர்க்கு, நாம் மிகவும் நன்றியறிவு உடையவர்களாக இருக்கின்றேம்.
எங்களுடைய பயணத் திட்டத்திலிருந்து பார்த்தால் நாங்கள் யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, கண்டி, காலி ஆகிய இடங்களுக்குச் சென்று சான்றுகள் கேட்கக் கூடியதாயிருந்தது என்பது புலப்படும். இதை நாங்கள் பின்னிணைப்பு 1 இல் அச்சிட்டுள்ளோம். நாங்கள் இன்னும் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லக்கூடியதாயிருந்தது. நாங்கள் அவ்வவ்விடங்களிலே உள்ள நிலைமைகளைக் கண்டு அறிந்ததால், எங் களுடைய ஆலோசனைக்கு வேண்டிய பிற்கள அறிவினைப் பெறக் கூடியவர் களாக இருந்தோம். கொழும்பில் நடந்தவாறு மற்றைப் புறஇடங்களிலும் எங்களுடைய சுகத்திற்கும் வசதிக்கும் எற்ற அற்புதமான ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தன. எனவே, இவ்வேற்பாடுகளின் பொருட்டும் எங் களுக்குக் காட்டிய பரிவின் பொருட்டும் (நாங்கள் பிரயாணஞ் சென்ற பகுதிகளைச் சேர்ந்த) இலங்கையரசாங்க இருப்புப் பாதை அலுவலர், தலைமை அதிபர், மாவட்ட அரசாங்க முகவர் ஆகியோருக்கு எங்களுடைய கடப்பாட்டையும் நன்றியறிதலையும் தெரிவிக்க விரும்புகிறேம்.
நாட்டைவிட்டு நாம் இங்கு வருகிற தறுவாயிலே, எங்களை அழைத்து ஒரு விருந்துபசாரம் அளித்த சட்ட சபைக்கும் நாங்கள் கடப்பாடுடையோம். எங்களுக்களித்த வரவேற்பின் தாராளம், எங்கள் ஆராய்ச்சிகளோடு இணை ந்த மகிழ்ச்சியான சூழல், நாங்கள் நாட்டில் தங்கியிருக்கின்றபொழுது எல்லா வகுப்பினரும் எங்களுக்குக் காட்டிய நட்புறவு ஆகியவற்றை வேறு குழுக்கள் பெற்றிருக்குமென நாம் நம்பவில்லை. எங்களுக்கு இலங்கை அரசாங்கம் காட்டிய விருந்தோம்பலுக்கும், அரசாங்க சபை அங்கத்தினர்கள் தன்ரிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் எங்களுக்கு காட்டிய என்றும் தளராத அன்பு, பரிவு ஆகியவற்றுக்கும், நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேம். எங்களுடைய ஆராய்விற்காகத்

Page 115
218
தங்களுடைய வேலைக்களங்களை, நாங்க்ள் சமுகமளித்துப் பார்வையிடுமாறு வாய்ப்பளித்த தனிப்பட்ட முறையில் அமைந்த தாபனங்களுக்கும், அரசி யல் நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட முறையிலே எங்களுக்கு விருந் தோம்பிய எண்ணற்ற பொதுமக்களுக்கும், நாட்டிலே எங்களுடைய தங் குகையை இன்பமுடையதாயும் மனத்தைவிட்டு அகலாததொன்றயும் ஆக் கிய ஏனையோர்க்கும், எங்களுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் கிருேம்.
மேன்மைதங்கிய ஆள்பதி, குடியேற்ற நாட்டுச் செயலாளர், குடியியற் சேவையினர், பொதுச் சேவையினர் ஆகிய எல்லோரிடமிருந்தும் தளராத் துணையையும் அன்பையும் நாம் பெற்றேம். இலங்கைக் குடியியல் சேவை யைச் சார்ந்த திரு. எசு. பிலிப்புசன் என்பவரை, துணைச் செயலாளராக எங்களுக்களித்த மேன்மைதங்கிய ஆள்பதிக்கு எம்நன்றி. எங்களுடைய பிரயாணத்தை அமைப்பதும், குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் இணைப்பு அலுவலராகக் கடமை பார்ப்பதும், எங்களுடைய பிரயாணங்களின்பொழுது நாள்தோறும் வரும் எண்ணற்ற பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு வேண்டிய அனுபவ அறிவையும் விடய அறிவையும் எங்களுக்குத் தந்துத வுவதும், பிலிப்புசனின் கடமையாக இருந்தன. இன்னும், பிரத்தியேக மான தகவல்களையும், அறிவுரைகளையும் இவர் தந்து நமக்கு ஆதர வளித்தார். இவர் இந்தக் கடமைகளை எல்லாம், ஊழியத்திற்கே சிறப்புப் பெயர்பெற்ற ஒரு சேவைக்குரிய இயல்பான திறனுடனேயே செய்தார். ஆனல், இந்தக் கட்மைகளே இவர் ஆற்றுகின்றபொழுது, இப்பொழுதுள்ள பிரச்சினைகளை நன்கு அறியும் இயல்பையும் ஒரு சொந்தமான பரிவையும் மேற்கொண்டே அவ்வாருற்றினர். இவர் இவ்வாறு கடமையாற்றியது எங்கள் பணிக்கு மிகவும் உதவியாயிருந்தது. இவ்வாறு நற்பணி புரிந்த தற்காக இவருக்கும், இந்நற்பண்புகளை ஆற்றுவதற்கு இவரை எமக் களித்த மேன்மைதங்கிய ஆள்பதிக்கும் எம்நன்றி. எங்கள் பிரதம எழுது வினைஞராகக் கடமையாற்றிய திரு. பி. எம். கிறித்தபல்சு அவர்களுக்கும் எம்நன்றி. இன்னும் இலங்கையரசாங்கம், எங்களுடன் கடமையாற்றுவ தற்காக, எமக்களித்த மற்றை அலுவலர்கட்கும் எம்நன்றி. எங்களுடைய அலுவலகத்தையமைத்து அதை நிறுவும் முழுப் பொறுப்பும் திரு. கிறித் தபல்சு அவர்களின் கடமையாகவிருந்தது. எங்களுடைய கடிதப் போக்குவரத்துக்களைப் பதிவுசெய்து அனுப்பும் பொறுப்பும் அவருடைய தாகவிருந்தது. ஆணைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களைப் பாது காத்து, யாவரும் வாசிப்பதன் பொருட்டு அனுப்புவதும் அவர் கடமை யாகவிருந்தது. தளராத ஆர்வுடனும் திறனுடனும் இவர் இக்கடமை யைச் செய்தார். அவருடைய ஒயா உழைப்பினலும், அவருடைய துணை வர்களின் மனமொன்றிய முயற்சியினலுமே, ஆணைக்குழுவினுடைய கடி தப்போக்குவரத்துக்கள் யாவும் திறம்பட நடாத்தப்பட்டன. தட்டச்சடிப் போரும் எழுதுவினைஞரும் எங்களுக்குக் கடமை பார்க்கின்ற வழியில்

219
நன்முறையில் பணியாற்றினர். மிகவும் இடர் நிறைந்த சூழலிலும் சில வேளைகளில் மிகவும் கடினமான தறுவாய்களிலும், மிக்க நன்முறையில் அவர்கள் பணியாற்றினர். நன்முறையில் பணியாற்றவேண்டுமென்ற அவ ருடைய முடிவினலும் துணையாலுமே எங்களுடைய பணி வெற்றியடையக் கூடியதாயிருந்தது.
பின்னிணைப்பு WI இலே ஒரு பத்திரிகை வெளியீட்டைக் காணலாம். அதில் நாங்கள் இந்நாட்டை விட்டு வெளிப்படுகின்றபொழுது எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனத்திலிருந்த நன்றியறிதல் உணர்ச்சி யையும் மனத்துன்பத்தையும் எடுத்துக் கூறியுள்ளோம். இன்னும், அதில் எங்களுக்கிடையேயும் குடியேற்றநாட்டுச் செயலாளருக்கும் கொழும்பு மா நகரச் சங்கத் தலைவர் அவர்களுக்கிடையேயும் நடைபெற்ற சில பிரியாவிடை முடங்கல்களையும் காணலாம். இவற்றை நாம் என்றும் பேணுதற்காகவே அவ்வாறு செய்துள்ளோம்.
எங்களுடைய அலுவல் முறை அறிவிப்பாளர்க்கும் எங்களுடைய கடப் பாட்டினைத் தெரிவிக்க விரும்புகின்றேம். இவ்வறிக்கையாளர் திரு. டபி ள்யு. சி. பாட்டில் ஆவர். வாய்முறையில் அளிக்கப்பட்ட சான்றுகளைச் சுருக்கி எழுதி, பின் அச்சடித்துத் தந்துதவிய பெரும் பொறுப்பு அவரு டையதாக இருந்தது. நாங்கள் இங்கு தங்கி நின்ற காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் சான்றுகளைக் கேட்கவேண்டி இருந்தத ஞலும் திரு. பாட்டில் அவர்களுக்கிருந்த பளுவும் சிரமமும் எத்தகையவென ஊகித்துக் கொள்ளலாம். அயனமண்டல நாடொன்றினிலே, அறிமுகமற்ற சூழலிலே இத்கைய ஒரு பணியை வெற்றிகரமாக முடித்தார் என்பதே அவருடைய திறமைக்கு ஒரு பாராட்டாகும். இத்தகைய பொறுமைக்குரிய அவருடைய சாதனை எந்த இளைஞர்க்கும் பெருமை தரக்கூடிய ஒரு பணியாகும். என்றும் தளரா அவருடைய சுறுசுறுப்புணர்ச்சியும், பரிவு நடத்தையும் மக்களிடை அவருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின; இன்னும், எங்களுடைய வேலைக்கு அவர் செய்த தொண்டிற்கும் ஒரு சிறப்பை அளித்தன.
இறுதியாக, எங்களுக்கும் எங்கள் குழுவுக்கும் எங்களுடைய செய லாளர் திரு. பி. ஏ. கிலட்டபக்கு அவர்கள் ஆற்றிய சேவையை இங்கு எடுத்துக் கூறல் வேண்டும். எங்களுடைய பயணம்பற்றிய அறிக்கையி லிருந்தும், எங்களுடைய கூட்டங்களின் எண்ணிக்கையிலிருந்தும், எங்கள் முன் தோன்றிய சான்றுகளின் எண்ணிக்கையிலிருந்தும் எங்களுக்களிக் கப்பட்ட பத்தி மூலத்திலமைந்த சான்றுகளின் அளப்பரும் தன்மையி லிருந்தும் இலங்கைக்கு நாமெடுத்துக் கொண்ட பிரயாணத்தினலேற் படக்கூடிய உயர் பயனை எமக்கு அவர் தேடியளிக்கும் பணியின் பெருமை புலப்படும். இந்தப் பணியை அவர் நல் உத்தியுடனும் நிறைவெற்றியுடனும் ஆற்றினர். இந்நாட்டுக்கு வந்த பின்னரும், நாமே நேரே அறிய முடியாத

Page 116
220
இலங்கையின் நிலைமை, குடியேற்றநாட்டு வழக்கு முறை ஆகியவற்றின் சில பண்புகளை எடுத்து நமக்குக் கூறிய நிறை ஆற்றலுக்கும், நற்பய னுள்ள தெரிப்புரைகளைக் கூறி எங்களுடைய பல்வேறு நோக்குகளையும் இணைத்து ஒழுங்குமுறையில் வரைவுகளை யாத்த அவருடைய சுறுசுறுப்பு, செயற்றிறன் யாவற்றிற்கும் அவருக்கு நாம் கடப்பாடுடையோம். இதனல் ” நாங்கள் இவ்வறிக்கையை நல்ல நேரத்தில் ஆக்கி அளிக்கக் கூடியவராக இருக்கின்றேம். எனவே, இப்பொழுது இவ்வறிக்கையை நாங்கள் உங்களு டைய ஆராய்விற்காகச் சமர்ப்பிக்கின்றேம்.
தொனமூர் மத்தியூ நாதன் சியோபிரி பட்டிலர் ரி. திறம்மன் சீல்சு பி. ஏ. கிளட்டயக்கு, 26, யூன், 1928.

1927
ஒற்ருேபர் 27 ஒற்ருேபர் 28 நவம்பர் 13
நவம்பர் 14-திசம்பர் 9
திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர் திசம்பர்
திசம்பர்
1928
யனவரி
யனவரி
யனவரி
யனவரி
யனவரி
9
0-2
12-14
14-15
15
17
18
l8-2
21-27
27
8-18
18
பெப்பிரவரி 3 பெப்பிரவரி 4
பின்னிணைப்பு 1
பயனவிவரம்
இலண்டனிலிருந்து புறப்படல். மாசேய லிருந்து பி. அன் ஒ. கப்பல் மலோசாவில் புறப்படல் கொழும்பையடைதல்.
கொழும்பில். அனுராதபுரத்திற்குப் புகைவண்டியிற் செல்லல். அனுராதபுரத்தில், யாழ்ப்பாணத்துக்கு மோட்டாரில். யாழ்ப்பாணத்தில். Y− மட்டக்களப்பிற்குப் புகைவண்டியிற் செல்லல். மட்டக்களப்பில்.
மோட்டாரில் பதுளைக்கு.
மோட்டாரில் கண்டிக்கு. கண்டியில், நுவரெலியாவிற்கு மோட்டாரில். நுவர்ெலியாவில்,
மோட்டாரில் கண்டிக்கு, பேராதனையைச் சென்று பார்த்தல், குழுவினர் பிரிந்து, கொழும்பிற் கூடல்.
கொழும்பில்.
மோட்டாரில் காலிக்கு.
'காலியில், மோட்டாரில் கொழும்பிற்கு.
கொழும்பில், மாசேயிற்கு பி. அன் ஒ. மொழ்தேவியாவில் புறப்படல். மாசேயையடைதல்.
இலண்டன் சேரல்.
22

Page 117
சான்று இருக்கை
எண்ணிக்கை
6tଟffit
O. . .
ll . .
12 . .
13 . .
14 . .
15 . .
1
2
பின்னிணைப்பு II
சான்றுகள் வரிசை
தேதி நவம்பர்
16
21
22
:23
24
25
28
29
30
பொது அமர்வுகள்
அமர்வின் தொடக்கம்
கெளரவ திரு. எ. சி. எம். பிளெச்சர், C. M. G.
C. B. E. குடியேற்றநாட்டுச் செயலாளர்.
இலங்கை நாட்டின் மாசபை (கெளரவ திரு. ன. டபிள்யு. பெரேரா, கெளரவ கலா, டபிள்யு. எ. டி. சில்வாவும் பிறரும்).
கெளரவ திரு. சி. எ. உவில்லியும் பறங்கியர்
பிரதிநிதிகளும்.
மலாயர் அரசியற் சங்கம் (திரு. யே. எ.
குடிலனும் பிறரும்).
ஐரோப்பியர் சபை (கேணல் ரி. வை. இறைற்றும்
பிறரும்).
இலங்கை இந்தியர் சபை (கெளரவ திரு ஐ
எக்சு. பேரேராவும் பிறரும்)
கெளரவ திரு. ஆர். என். தைன், C. M. .ே மேல்மாவட்ட அரசாங்க முகவர், உள்ளூராட்சிச் சபைத் தலைவர், சுயராட்சியக் கட்சி (சி. இ. சி. புலற்சிங்கல).
அகில இலங்கை கிராமச் சங்க மாநாடு (கெளரவ கலா, டபிள்யு. எ. த சில்வாவும் திரு. சி. கே. டபிள்யு. பெரேராவும் பிறரும்).
களுத்துறை மகாசன சபை (திரு. எசு. ஆர்.
விசயமனே).
முசிலிம் அரசியற் குழு (கெளரவ திரு. எ. எச். எம். அத்துல் காதரும் பிறரும்)
திரு. எச். எவ். உரூபசிங்க தோடண்டுவை மகாசன சபை (திரு. கினிசேவும்
பிறரும்).
இலங்கைத் தமிழர் சபை (கெளரவ சேர். பி. இராமநாதன், K.C., C. M. G. உம் பிறரும்)
இளம் இலங்கைச் சபையும் சிலாபச் சபையும் (திரு. சி. இ. கொரியா, கெளரவ திரு. சி. இ. விற்றர் கொரியாவும் பிறரும்).
222

சான்று afar
6 . .
17 . .
8 . .
9 . .
20 . .
21 . .
22 ...
38 . .
24 . .
25 . .
26 . .
2ሽ . .
28 . .
29 . .
30 . .
3. . .
32 . .
33 、。
34 . .
35 . .
36 ..
37 . .
38 . .
39 . .
40 . .
4l . .
இருக்கை எண்ணிக்கை
O
13
15
8, A
தேதி திசம்பர்
1.
223
பொது அமர்வுகள்
இலங்கை மகாசன சபை (கெளரவ திரு. டி.
பி. செயதிலகவும் பிறரும்). கலா, டபிள்யு. பி. உரொடரிகோ, திரு. சாமுசன் அபயகுரியா. திரு. வி. எல். டபிள்யு. அபயரத்தின. திரு. ஆர். எச். எசு. த சில்வா. திரு. யு. எ. சே. சயவர்த்தன. திரு. டி. எ. வித்தனுச்சி. தெலுவத்தை மகாசன சபை (திரு. எ. ஏ.
த சில்வா). கிராமரட்சக மகாசன சபை (திரு. எம். இ.
முனசிங்காவும் பிறரும்). திரு. பி. டபிள்யு. இரணசிங்கா, திரு. பி. எல். எசு. சில்வா, கவதித்லகா. பன்னட்டுக் கழகம், (திரு. சி. பொன்னம்பலமும்
பிறரும்). கேணல் ரி. சி. சயவர்த்தன. கெளரவ திரு. எ. சி. சி. விசயக்கூன். இலங்கைப் பண்ணையார் சபை (திரு. சோச்சு
பிறவுணும் பிறரும்). இலங்கை வணிகச் சங்கம் (திரு. சே. சே. உவா
லும் பிறரும்). ஒருமையாளர் சபை (சேர் சொலமன் தயசு uador LiTurbiTusit, K. C. M. G., Garíř. மாக்கசு பேணண்டோவும் பிறரும்). அகில இலங்கைத் தமிழர் சங்கம் (திரு. சிறீ பதும
நாதன், கலா. எம். எம். குமாரசுவாமி). திரு. எச். எ. பி. சந்திரசேகரா, K. C, திரு. எ. இராமநாதன். கெளரவ திரு. நடேச ஐயர். திரு. டி. சி. மணி. திரு. பெரிசுந்தரம். கலா, ஐ. தேவீது கெளரவ திரு. எல். 67ಕೆ. எல்பின்சன், к. C
சட்டத்துறை நாயகம்
. கீழ்நாட்டு விளைபொருட்சபை (திரு. சி. ஆர். த
சொயிசா, திரு. எச். எல். த மெல் 0.B.E., உம் பிறரும்).

Page 118
224
சான்று. இருக்கை
எண்ணிக்கை
எண்
42 . .
43 . .
44··
45 . .
46 . .
47 . . .
48 . . .
49 . .
யாழ்ப்பாணம்
50 . .
5 . .
52 . .
53 . .
54 ..
65 . .
56 . .
57
58 . .
59 . .
60 . .
61 ..
62 ..
63 . . 64. 65 ..
17
18
தேதி திசம்பர்
13
. . l3gpub l4gDub
4.
O. P.
பொது அமர்வுகள்
திரு. சி. ஆர். த சொயிசா, இலங்கைத் தொழிற் சபை (திரு. எ. இ. குண
சிங்காவும் பிறரும்). இலங்கை கத்தோலிக்கர் சங்கம் (சேர். மாக்கசு
பேணன்டோவும் பிறரும்). நீர்கொழும்புப் பரதர் சபை (திரு. என். இ. த.
குரூசும் பிறரும்). சோனகர் அரசியற் சபை (திரு. எம். எல். எம். இரேயலும் திரு. எசு. எம். இசுமெயிலும்). கொழும்பு கிறித்துவ செட்டிமார் சபை (திரு. எல். எம். முத்துக்கிருட்டினவும் பிறரும்). திரு. யே. இ. உலுடவைக்கு. திரு. எ. எல். யே. குரூசு த பிரேரா.
யாழ்ப்பாணச் சபை (கெளரவ திரு. டபிள்யு
துரைசுவாமியும் பிறரும்). கெளரவ திரு. எ. கனகரத்தினம். யாழ்ப்பாணம் வரிகொடுப்போர் சபை (திரு. எ.
பி. தம்பையாவும் பிறரும்). இந்துசாதனம், பத்திராதிபர் (திரு. இராசரத்
தினம்). கிறித்துவ குடிகள் சபை (கலா. ஐசாக்கு
தம்பையாவும் பிறரும்). யாழ்ப்பாணம் கத்தோலிக்க தயோசசன் சபை,
(திரு. யோசப்புக் பிறரும்). கல்தோலிக்க பாதுகாவலன், பத்திராதிபர்,
(வண. பிதா பிரான்சிசு). வடஇலங்கை தொழிலாளர் சபை (திரு. எ. பி.
தம்பையாவும் பிறரும்). யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டோர் சேவா சபை
(திரு. என். செல்வத்துரையும் பிறரும்). திரு. சே. கே. சண்முகம், திரு. எ. எம். புரோடி. திரு. டி. சி. அங்கிற்றல். பேரா. எசு. என். துரைசுவாமி,
திரு. எசு. ஆனந்தன்.
. திரு. சே. எப். பிலிப்பிசு.
திரு. ஆர். சி. கனகசிங்கம்.

சான்று இருக்கை
எண் எண்ணிக்கை
மட்டக்களப்பு
66 ..
67 . .
68 .
69 . .
70 . .
7 . .
2 . .
78 ..
74 . .
set is
75 .
76 ...
77 . .
78 ..
79 . .
80 ...
8 . .
82 ..
83 ..
84 。。。
85 . .
19
20
21
தேதி திசம்பர்
16
19
225
பொது அமர்வுகள்
வட மட்டக்களப்புச் சபை (திரு. என். எம். வனசிங்க, திரு. டபிள்யு. என். அமரசிங்க மற்றும் பிறரும்). மட்டக்களப்பு மக்கள் சபை (திரு. இ. ரி. கதிர்காம
ரும் திரு. உலகசேகரமும்). மட்டக்களப்பு முசிலிம் சபை (திரு. எ. கே.
காரியப்பரும் பிறரும்). வண. ரி. எசு. வேதநாயகம். திரு. யே. ரி. தம்பிராசா. திரு. சி. முத்தையா. திரு. எசு. பி. சி. ரி. பண்டாரவன்னியா, திரு. எசு. ஒ. கனகரத்தினம். கெளரவ திரு. இ. ஆர். தம்பிமுத்து.
கண்டி நாட்டினச் சபையும் கண்டியர் ஐக்கிய மும், கொழும்பு (கெளரவ திரு. எச். எச். மீடீனிய அதிகார், திரு. பி. பி. நுகவலை மற்றும் பிறரும்). கெளரவ திரு. எ. எப். மொலமுரே. சுவசாதி அபிவர்தன மகாசன சபை (திரு. எசு. டபிள்யு. பேணண்டோவும் பிறரும்). தும்பனை மகாசன சபை (திரு. டி. எச். டி.
அடிரதுங்காவும் பிறரும்). பாத எவகேதா மகாசன சபை (திரு. இ. டபிள்யு. அபயகுணசேகராவும் பிறரும்). சிறீ இலங்கை சிங்கள சாதிக சங்கம் (திரு.
எசு. சந்திரசேகராவும் பிறரும்). தண்டகமுவை மகாசன சபை (திரு. உரோலந்து
தெனக்கோனும் பிறரும்). உடரத்தை சாதிக சங்கம் (திரு. என். எச்.
கீர்த்திரத்தினவும் பிறரும்). உட தும்பரை மகாசன சங்கம், பாத தும்பரை மகாசன சங்கம் (திரு. ஆர். வி. சவரியப்பரும் திரு. எ. டபிள்யு. செனிவிரத்தினவும் பிறரும். கண்டி மகாசன சபை (திரு. சோச்சு த சில்வா).
கலா, சே. டபிள்யு. .எசு. அத்திகலை.

Page 119
89
90 ...
91 .
92 ..
93 ..
94. . .
96 ..
97 . .
'98. ,
99 .
100 . .
to . . . .
02. . .
、银03 。。
04. . . . .
"22
23
AS Ab
2
பொது அமர்வுகள் திரு. சே. சி. இரத்துவத்தை திசாவை. கண்டி மலாயர் சபை. V கண்டி மலாயர் சபை (திரு. ரி. அசன், திரு. எம். "
யே. மசீது, மற்றும் பிறரும்). திரு. பி. தொலயில்லை.
. . அசுகிரிய, மல்வத்தைக் கோயில் உயர் குருக்கள்
ιρπή.
தலைமைக் கண்காணிமார் சபை.
இந்தியர் சபை, கண்டி, தலத்துஒயா, தும்பரை ,
கம்பளை (கெளரவ திரு. கே. நடேச ஐயரும் பிறரும்).
மறையமர்வு
. திரு. டபிள்யு. எல். கிண்டேசிலி, மத்திய
மாகாண அரசாங்க முகவர். . கலா. பி. இ. பீரிசு, கண்டி மாவட்ட நீதிபதி.
கெளரவ திரு. எப். எ. சுதொக்கேல், C. B. E.,
பயிர்ச்செய்கை அதிபதி. ve கெளரவ திரு. எச். எச். மீதினிய, அதிகார். . திரு. எல். நுகவலை, திசாவை.
கொழும்பு, சனவரி, 1928
რიო-კით
பொது அமர்வு
கெளரவ திரு. எச். ஆர். பிறீமன்.
கெளரவ திரு. ரி. இறிது, இந்தியக் குடியேறு
தொழிலாளர் கட்டுப்பாட்டதிகாரி.
. கெளரவ திரு. எச். எம். மாக்கன் மரக்காயர்.
மறையமர்வு
. கெளரவ சேர். பி. இராமநாதன், K.C.C.M.G.
மறையமர்வு
. கெளரவ திரு. டி. எசு. சேனநாயக. . திரு. எசு. பி. த சில்வாவும் பிறரும். . மூகாந்திரம் எசு. சோமநாதர்

சான்று erei
105 ..
.06
0 .
08 . .
109 . .
0.
ill .
12 . .
13 . .
14 ...
15 ...
6 . .
17 . .
ที่ 118 ...
119 . . .
இருக்கை எண்ணிக்கை
25
26
编?
28.
தேதி ஜனவரி
227
மறையமர்வு
. கெளரவ திரு. எப். சி. திரல், C. M. G., வாரிக்
கட்டுப்பாட்டதிகாரி. . . இலங்கைக் குடியியற் சேவைச் சபை (கெளரவ திரு. எப். சி. திரல், C. M. G. உம் பிறரும்). . இலங்கைப் பொதுச் சேவைச் சபை (திரு. ரி. இ.
தற்றணும் பிறரும்). . கெளரவ திரு. எப். யே. சிமிது, தற்காலிக
குடியேற்றநாட்டுப் பொருளாளர்.
. திரு. எம். எ. யங்கு, பிரதம துணைக்குடியேற்ற
நாட்டுச் செயலாளர்.
மறையமர்வு
.. கெளரவ திரு. எம். ரி. அகுபர், தற்காலிகச்
சட்டத்துறை நாயகம்.
. திரு. எச். எல். தெளபிகின்,.C.M.G., பொலிசுப்
பரிசோதகர் நாயகம்.
.. கெளரவ திரு. ஆர். என். தெயின், C.M.G.,
மேல் மாகாண அரசாங்க முகவர்.
காலி
பொது அமர்வு
காலித் தன்மொழி ஆசிரியர் சபை (திரு. யே"
பி. அமரசிங்காவும் பிறரும்). காலி முசிலிம் சபை (எப். எம். இசுமெயிலும்
பிறரும்). காலி, முசிலிம் இளைஞர் சபையும் கொழும்பு, முசிலிம் இளைஞர் சபையும் (திரு. எசு. எ. மரக்காயர், திரு. எம். எப். கனி, மற்றும் பிறரும்). காலி ஆயுள்வேத சபை (திரு. என். கே. எச்.
வைத்தியசேகரவும் பிறரும்). மாத்துறை மகாசன சபை (திரு. இ. வை. டி.
அபயகுணவர்த்தனவும் பிறரும்) .. கொசுகொடை மகாசன சபை (திரு. சி. எம்.
விக்கிரமசிங்க). கொட்டகொடை மகாசன சபை (திரு. எசு,
அபயவிக்கிரமவும் பிறரும்).

Page 120
228
பொது அமர்வு சான்று இருக்கை தேதி
ତtତଥ୍ଯ எண்ணிக்கை ஜனவரி
20 . . - es a m .. தென்மாகாணப் பிரதம தலைமைக்காரர் (திரு.
',சி. இ. குணத்திலக, அட்டப்பட்டு முதலியார் ܫ ܫ
மற்றும் பிறரும்). v
கொழும்பு மறையமர்வு
12.I . . 29 . . . , 9. .. திரு. எம். எம். வெப்பேண், வடமத்தி
மாகாண அரசாங்க முகவர். ● 22 . . --  ܼ , -ܗ . . கெளரவ கலா. யே. எப். இ. பிரிட்சர், மருத்துவ,
சுகாதாரச் சேவை இயக்குநர்.
மறையமர்வு
23 ... 30 ... , 10. .. கெளரவ திரு. ரி. இது, இந்தியக் குடியேற்றத்
தொழிலாளர் கட்டுப்பாட்டதிகாரி. 24 . . سے one- திரு. ரி. எ. அட்சன், வடமேல் மாகாண அரசாங்சி
முகவர்.
125 . . . ΚΑ" . . . , , , തത്ത, .. கெளரவ திரு. எ. எப். மொலமுரே.
g
மறையமர்வு
26 . . S1 . . ll .. கெளரவ திரு. எச். பி. இலீசு, பொதுவேலை
அதிபதி. 27 . . -w .. திரு. எல். டபிள்யு. சி. சிரேடர், தென்
மாகாண அரசாங்க முகவர். À 28 .. man ... -- .. திரு. சி. கே. டபிள்யு. பெரேரா,
பொது அமர்வு
数29 。。 32 a 12 , , கெளரவ சேர், சேமிசு பீரிச,
மறையமர்வு
30 . . - திரு. எச். டபிள்யு. கொடிறிந்தன் ஊவா
மாகாண அரசாங்க முகவர். - 131 . . -- - .. திரு. ஆர்.எப். மொரிசு, நீர்ப்பாய்ச்சல் அதிபதி.
32 . . man nnnnnn .. கெளரவ திரு. டபிள்யு. டபிள்யு. உஆட்சு
0.M.G., குடியேற்றநாட்டுப் பொருளாளர். 133 .. - . . .. கெளரவ திரு. டபிள்யு. இ. உவெயிற்று, பிரதம்
சுங்கக் கட்டுப்பாட்டதிகாரி.

சான்று இருக்கை
எண்ணிக்கை
எண்
134 . .
135 . .
36 . .
37 . .
38 . .
39 . .
40 ...
14l ··
33
34
229
தேதி ஜனவரி
மறையமர்வு 13 . கெளரவ திரு. எல். மக்கிரே, கல்வி அதிபதி. - . திரு. ரி. பி. இரசல், வடமாகாண அரசாங்க
முகவர். Kunna . . திரு. சி. அரிசன் யோன்சு, கீழ்மாகாண அரசாங்க
முகவர்.
. . திரு. இ. ரி. மில்லின்றன், சபரகமுவா மாகாண
அரசாங்க முகவர்.
· .. கெளரவ எ. சி. எம். பிலெச்சர், C. M. G. C. B. E. குடியேற்றநாட்டுச் செயலாளர்.
பொது அமர்வு 14 . கெளரவ திரு. கே. பாலசிங்கம். - .. கெளரவ திரு. ரி. எல். வில்லியேசு. wmaw .. பெண்கள் வாக்குரிமைச் சபை (திருவாட்டிகள்
இ. ஆர். தம்பிமுத்து, சி. இ. த சில்வா ஆகியோரும் பிறரும்).

Page 121
பின்னிணைப்பு III அரசாங்கத் திணைக்கள வரிசை
தொல்பொருளியல் திணைக்களம். சட்டத்துறை நாயகம் திணைக்களம். கணக்குப் பரிசோதனை அலுவலகம். இலங்கைப் பாதுகாப்புப் படை. கொழும்பு அரும்பொருளகம். கொழும்புத் துறையாணை. அரசிறை கட்டுப்பாட்டாளர் திணைக்களம் சுங்கத் திணைக்களம். மாவட்ட மன்றுகள். பயிர்ச் செய்கைத் திணைக்களம். குடிவரவு இந்தியத் தொழிலாளர் திணைக்களம் மருத்துவ, சுகாதார சேவைத் திணைக்களம். கணிப்பொருளியல் திணைக்களம். புள்ளியியல் அலுவலக முறைமைத் திணைக்களம். கல்வித் திணைக்களம். மின்னியல் திணைக்களம். உண்ணுட்டுப் பொருள்வரித் திணைக்களம். மீன்பிடிப்புத் திணைக்களம். காட்டுத் திணைக்களம். அரசாங்க ஆய்வாளர் திணைக்களம். அரசாங்க அச்சலுவலகம். அரசாங்கக் களஞ்சியத் திணைக்களம். நீர்ப்பாய்ச்சல் திணைக்களம். உள்ளூராட்சிச் சபை. சுரங்கத் திணைக்களம். பொலிசுத் திணைக்களம். அஞ்சல், தந்தித் திணைக்களம். மறியற்சாலைத் திணைக்களம். கானவாட்சி. பொதுவேலைத் திணைக்களம். இருப்புப்பாதைத் திணைக்களம். பதிவாளர் நாயகம் திணைக்களம். இரப்பர் ஆராய்ச்சித் திட்டம். உப்புத் திணைக்களம். பரிந்துரைஞர் நாயகம் திணைக்களம். உச்ச மன்று.
அளவைத் திணைக்களம்.
இறைசேரி.
பல்கலைக்கழகக் கல்லூரி. விலங்கு மருத்துவத் திணைக்களம்.
230

ĝ6s,068 og Þýzggoż08g|L0“Z86ĝ08°69 Lozg09°36Ť“† ’ ”gnoșuung) ogz o * 6Țgog‘ “ Is Log· · ez Iozi* - † Igog' * 6.g6“ IZ* *象鲁yurmgjasooqfa ---- * * oz· · · Ľ' * 16&ogo £6I ‘Io osgois→ +e es· · Ur-Tr영9%) &* * g* ' grosoɛI· · z* * LI* * gosoɛI• •→ ·• • ymu@9ơn ġġ · · 810'6%, , 학* * 9I* o II 8* * 6.gs“6%总色* *gi@mgmg,f( qī@orio) †9' * 980'8|--• • 8I* ( 3 IL ‘$- -• •prnsīņu 1988 – ‘ “ g' ' IO 0°88· · #1· · g.* * 940° 88- -* ·polno uog) sortiĝojế) ~ ' ' + I' ' 1,18° Igo,· · # {"  ̈ ፪ኗ· · 386“IgZ- -- •„șlgou-og) pogos 109ố říz · · 167°6ý* * 8ț8· · g Ig‘98.g· · 19'1'91' o go Loz09* - •ミシ soos ‘ ’ 61.9° 18* * 69· · 9țț¢°6′ZŤ* * 196 og· · †Zgo I,Ig· *• →possign@ § 309ffd9ě) öt· · ĝ# Lol,o o go,* ^ g&&· · Z80° 180‘I· · 160°680‘I- - · ·4499迫岛曲tIA官9 99' ' £61°893* o Is,* o II*· · LI Logogo I· · 1,90‘LØ6‘I- -- -„1991)3 #0.-iugiosio polyi pressoqosoɛ!mgqīqīștf)岛均感ĮoșilorT(g)pogousto,$51%)q1109ổ -
(Iz6I hŋgonbi@)•«sugstogặbig) giusmsfire retssingsẽ gimno‘quos&—“I
giaregs įsigh sostosugšu)$bi@—; seo鲁
AI HEIlgoogų991995
10-ஜே என். பி 22574 (3.160)

Page 122
ー 〜〜〜〜〜ā),
†98‘gęż
ggg‘96
IZ8‘Z6I
† 8.3% I19
68 Lo LIL
Lỹ8o9fg‘L
† I 8‘ ILŶ181’2676Z8‘ț18 g09°86ý“†} · · quos uJisg) I$8%6LI ‘IOIZ6ỹ0‘I90 Ig0ZŁ08ȘIso I089“†Ī6.g6‘IZ-Įumg)aĵo,9qson
-9球寸838-88I og0g--IO Igos- -ĮTrog) 66ኽ”019IO I90’s ‘I6900IIŢI ‘I9Ꭽ8*Ꮆ.£18°9ZOŤ“ĶI4ytmugoun 8688993 LI008I 18‘I099Z9ĝĆI0g IosZZI ‘6 I68 so 64qi@megegysĩ qi@song) 0I9†998g88ł0 IŤ88 I†6%36 Losĝ9ț¢° 88II ‘8ĮmŲTIJL 0983 «IgozGIŤ“Ig09 - || 649 og1. Ig18ț7ĝ08I83 ‘LZ Lŷo9I |930‘88Ļo 1991) og) #rīggiỗ 9.Lg‘ZI960‘9£86“OIĶTI ‘8%glý og 1.809 ‘ZEL6g‘OZZ89° 88968‘ Ig886‘IgZ· įsotoo uog) pogorg (9ố 860°86 , |39g‘Z8gggos08 LoßZILĘ“I6&或“寻9ĝ9°ZIILL‘884 | 863 ‘I6ggs, ‘039-Įsigis ŷmgqs, 0ZOogI94%;Z8I og°&I088‘ IOI EZZgo@g9 | 19 LosZỹ L‘6ZLOogz†Zgo L'Ig-sựƯigio sotooɓe ɓ 006‘ZOg |886‘VZI IZI6‘99†86°țgZ 149g‘990I%†g 1, ‘I8Ť Log Ig |g8 Loz, I1.6O°680‘I || ' '41193?! (3 ștī1999? gŁgoŞŢ8IO“ZIᎭᏞᏮ*gg89“†91 |Z8I ‘Z689°IIg8°089 |0.16′gg88Zoĝ00‘I || 190‘LZ6‘I | • •பகுFEடு ஒஇய9ர்ரிஜ்
urtocsi)so· Ľ RỒIĘK 000 00 00SK 0000 0L 0LSK 000 LL LLLSK 000 00 00SK 0000 LLL 00SK 0000 0L LLSK 0000 0L 0L0q闽岭4079qi soosố aeris?m@oson-Trø| gøgng)-Irođfig-Isto49喻9mốsan1990-ig)șigosoɛĝ}
232
(Iz6I Hņĝơıbı@) otsu@tos@bı@ @ @oiosłe qui@ugĒĢıcaesus, ugiquiĝuosiosĞ–II

233
I-இனவழியான குடித்தொகை-1921, 1926.
இனம்
கீழ்நாட்டுச் சிங்களர் கண்டிச் சிங்களர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் இலங்கைச் சோனகர் இந்தியச் சோனகர்
ஐரோப்பியர் OO e un பேகரும் யூரேசியரும்
napituit
வேடர் -
மற்றையோர்
1921 ஆம் ஆண்டின் பின் குடியகன்றரிலும் குடியேறியோர் மிகை (ஐரோப்பியர் தவிர) . .
மொத்தம்
குடிமதிப்பு 921
1,927,057
1,089,097
517,324
602,735
251,938
33,026
8,118
29,439
13,402
4,510
21,959
4,498,605
மதிப்பிடப்பட்டது 1926, திசம்பர் 31
2,107,553
1,191,104
537,818
626,613
262,621.
34,427
10,834.
32,029.
14,723.
4, 50l.
21,918.
4,844,141.
280,851.
5,124,992:

Page 123
ஆ-வருவாயும் செலவும்
1-வருவாய்
உரூ. ச. 1921-22 .. ... 79,270,116 72 1922-23 .. ... 93,720,169 33 1923-24 ... - ... 102,363,115 67. 1924-25 ... ... 115,539,669 56 1925-26 .. . 124,516,155 04
இப்புள்ளி விவரங்கள், சட்டத்தால் சிறப்பு வேலைக்கென ஒதுக்கப்பட்ட கடன் பெறுதிகள், முதலீட்டுகள் விற்பனையால் வந்த பெறுதிகள், முற்பணம் மீளக் கட்டல், வைப்புகள், பெட்டி களிடை நடைபெறும் பணமாற்றம், ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.
I-செலவு உரூ. ச. 1921-22 ... ... 77,359,068 48 1922-23 ... ... 85,583,909 72 1923-24 ... s ... 100,695,713 05 1924-25 . . ... 105,004,348, 17 1925-26 . . . ... 112,943,821 68
இப்புள்ளிகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடன் பணம், ஒம்படைப் பணம் ஆகியவற்றிலிருந்து செலவழித்த பணத்தைத் தவிர்த்தவை.
I-சுங்க வருவாய் 1921 ஆம் ஆண்டின் பின் சுங்கத் திணைக்களஞ் சேர்த்த வருவாய் வளர்ச்சியைப் பின்வரும் நிரல் காட்டும் :-
ஆண்டு உரூ. ச. 92 . . . ... 26,152,640 62 1922 - .. 32,515,26330 1923 - A ... 37,326,845 87 1924 - . . 41,296,160 12 1925 . . ... 46,907,450 17 1926 56,337,612 15
1926 ஆம் ஆண்டில் துறைகளில் சேர்த்த வருவாய் முழுமையின் 45 சதவீதமாயுள்ளதைக் காண்க.
கீழ்வரும் கூற்று தேறிய சுங்க வருவாயைக் காட்டும் :- 1925, 1926 ஆம் ஆண்டுகளில் சேர்த்த வருவாய் பிரதான தலைப்புக்கள் வழி பாகுபடுத்தப்
பட்டுள்ளது எற்ற அல்லது இறக்குமதி தீர்வை 1925 926 இறக்க
உரூ. ー。 உரூ. *。 சதவீதம் பருத்தி உற்பத்திப் பொருள் l,511,818 31 . . 1,510,755 71 .. -- 07 தானியம் 8,956,782 63 .. 9,422,076 82 . . - 493 மண்ணெண்ணெய் 3,076,663 77 . . 3,540,921 08 . . --13'll மதுவகை, தீம்பானம் 3,455,977 49 . . 4,573,897 39 . . --24'44 இனி un o 2,767,194 78 .. 3,220,656 85 . . -1407 பிறபொருள் ... 11,637,389 80 ... 15,085,249 62 .. --22'85
(அ) மொத்த இறக்குமதித் ܡܚ-- ܫܝ܀ܚܡ தீர்வை 31,405,826 78 37,353,557 47 --15-92

ஏற்றுமத்ெ தீர்வை
மொத்தத் தெங்கை .
1,099,343 69
1,335,396 72
11-ஜே என். ဖီးဒူး574 (3/60)
1926
s உரூ. ረጃ* • கொக்கே" 103,835 93 . 84,504 86 . . உலர்த்திய தேங்காய் 666,059 65 579,902 06 . . தேங்காய் புதியது o 70,205 97 . Ꮞ2,185 1Ꮾ . . தேங்காபெண்ணெய் 457,845 78 . 428,014. 96 . . கொப்பரா. . 1,367,794 74 .. 1,327,896 88 . . காரீயம் 62,548 48 . am பிண்ணுக்கு 61,927 96 45,143 77 . . இரப்பர் 1,820,284 02 3,185,044, 29 . . தே 5,943,387 93. 6,195,391 20 . . பிற 9,308 51 12,083 22 . .
(ஆ) மொத்த எற்றுமதித் 10,563,198 97 11,900,166 40 . .
தீர்வை
சில்லறைகள் 52,370 77 . . 71,491 73 ..
பெருமொத்தம் 42,021,396 52 49,325,215 60
கொழும்புத் துறைமுக
வருவாய் 1925 1926 துறைமுக இறை 2,941,950 64 . . 3,149,280 74 .. குளத்திலிருந்து துறைமுகம்
வரையுள்ள இறை 13,497 66 .. 14,286 10 .. பண்டசாலை வாடை 724,915 27 . . 847,088 10 . . மற்றை வாடை 328,668 12 .. 343,822 21 .. வழிகாட்டற் கட்டணம் 22,150 04 . . 239,068 76 . . இருப்புப்பாதைப் போக்கு -
வரத்து - 56,176 71 .. 57,786 08 .. மற்றைத் துறைமுகச் சேர்ப் 188,505 07 . . 135,610 36 . . எண்ணெய் நிறுவகங்கள் . 869,604, 21 .. 758,006 15 .
வெளித்துறைகளில் அறவிடக்கூடிய இறைகள் துறை இறைகள் 81,132 10 .. 32,733 98 பண்டசாலை வாடை 75,214 29 . . 84,897 35 .. பிற 14,586 50 . . 14,420 00 . .
மொத்தத் தொகை 5,465,400 61 5,676,999 83
மருத்துவ உதவி (ஏற்று , மதித் தீர்வை) 1,092,011 92 .. 1,325,771 30 சில்லறைகள் 7,331 77 9,625 42
வரி
235
வற்ற அல்லது
இறக்க சதவீதம் --20-50
----l4 85
----66- 42
96 ه 6 . سیست
- 300 நீக்கப்பட்டது
3T * lt-سسس 十42・84 -+- Ꮞ.0Ꮾ
十22·96
-- 1:23
--26-74
--14-81
எற்ற இறக்க
சதவீதம்
-- 6:58
-- 5:51 十14・42 -- 4:41 - 749
+. 278
00•39.س-- --l4 ۰ T2
--17-62 --23-82
--1760

Page 124
236
இ-கப்பலோடல்
1925 ஆம் ஆண்டில் மொத்தம் 11,517,519 தொன்னிறை 4,112 கலங்கள் தீவின் துறைகளே யடைந்தன, 1926 இலே 11,875,547 தொன்னிறையுடைய 4,053 கலங்கள் அடைந்தன
கீழ்வரும் நிரல் நான்கு பொதுத் தலைப்பில் அமைந்த வகுப்பீடைக் காட்டும் :-
1925 1926
rー ار۔
�tଈ୪ot @T6 ணிைக்கை தொன் ணிக்கை தொன்
வணிகக் கலங்கள் (சரக்குடனும்
ஞாலப் பாரத்துடனும்) - 2,677 . . 9,671,318 . . 2,765 ... 10,149,934 வணிகக் கலங்கள் (நிலக்கரி,
எண்ணெய்க்கு வந்தவை) . . 460 . . 1,549,560 . . 369 . . .294,281 நாட்டுக் கலங்கள் 918 . . 78,623 .. 843 .. 83,093 போர்க் கப்பல்களும் பயணக்
களும் a o 5 ... 218,018 . . . . 76 . . . 348,319
மொத்தம் . . 4,112 11,517,519 4,053 11,875,547
போர்க் கப்பல்களின் பெயர்ச்சித் தொன்னிறை
கீழ்க்காணும் நிரல் கரியெடுக்க மட்டுமே வந்த கலங்களையும் சேர்த்து வணிகக் கலங்களை வகை செய்கின்றது :-
1925 1926
நாட்டினம் எண்ணிக்கை தொன்னிறை எண்ணிக்கை தொன்னிறை பிரிட்டிசு OM O 2,412 .. 7,101,023 .. 2,093 .. 7,072,449 பிரிட்டிசுக் குடியேற்றநாடு 98 ... 78,623 .. 843 .. 83,093 மொத்தப் பிரிட்டிசுக்கலங்கள் . . 3,330 7,179,646 2,936 7,155,542 அமெரிக்கா 40 . . 253,432 . . 45 . . 241,470 பெல்சியம் H - .. 3 . . 9,539 தென்மாக்கு 22 . . 57,288 . . 35 ... 111,731 இடச்சு 2 . . 984,402 .. 199 . . 919,561 பினிலந்து m . . - . . 6 . . . 15,187 பிரான்சு 146 .. 716,886 . . 152 . . . 774,582 சேமனி - 165 ... f64,221 .. 187 . . 740,122 கிரீசு , , 8 ... 22,440 . . 2 . . 4,407 இற்றலி 109 . . 898,1Ꮾ8 . . Ꮥ 105 . . 889 ,28Ꮾ uurt 6öt 186 . . 835,278 .. 21Ꮞ . . ' ᏭᏎ8,289 யுகோசிலவியா 3 . . 7,033 . . ... - . . நோர்வே 63 .. 112,465 .. 60 . . 128,218 பஞமா m . . - . . - ... - இரசியா -2,604 . . 1 -ܝ . . m . . ma சுபெயின் 14. . . 33,099 . . 2 . . 28,449 சிவீடன் 2 . . 68,539 . . 21 . . . . 65,945
மொத்தப் பிறநாட்டுக் கலங்கள் . . 995 4,119,855 1,041 4,371,686

ஈ.-இறக்குமதி ஏற்றுமதி
237
1-ழ்ேவரும் நிரல் 1921 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள எற்றுமதி, இறக்குமதிகளின் ஆண்டுப் பெறுமானத்தைக் காட்டுகின்றது; இதில் அஞ்சற் பொருள், கப்பற் களஞ்சியம், நாணயம் ஆகியவற்றின் பெறுமானம் நீக்கப்பட்டது :-
ஆண்டு
1921
1922
1923
1924
1925
1926
இறக்குமதி
உரூ.
260,897,161 .. 280,414,704 . . 287,947,472 . . 302,734,490 .. 351,328,702 . . 395,244, 24 . .
வற்றுமதி 의 5.
256,600,413 . . 297,753,215 .. 35,035,248 . . 385,354,418 . . 492,489,296 . . 503,262,489 . .
மொத்தம்
உரூ.
517,497,574 578,167,919 638,982,720 688,088,908 843,817,998 898,506,730
I.-கடந்த ஆறு ஆண்டுக்குமுரிய இலங்கை வணிகத்தின் மொத்தப் பெறுமதி ; நாணயம், அஞ்சற்பொருள், கப்பற் களஞ்சியம் ஆகியவை விலக்கி நீராவிக் கப்பல்களுக்கு அளிக்கப்பட்ட திரவ எரிபொருள், கரி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஆண்டு
192
1922
1923
1924
1925
1926
இலட்ச உரூபாய்
5,481器 5,982 6,601 7,119 8,670 9,216
ா-கடந்த மூன்று ஆண்டுக்குமுரிய மொத்த வணிகத்தின் ஏற்றுமதி இறக்குமதிகளின் ஒப்பீட்டுச் சதவீதங்கள். இறக்கிய இறப்பர், கரி, திரவ எரிபொருள், மற்றைக் கப்பல் களஞ்சியப்
பொருள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி
ஐக்கிய இராச்சியம் பிரிட்டிசு உடைமை பிற நாடுகள்
ஏற்றுமதி
ஐக்கிய இராச்சியம் பிரிட்டிசு உடைமை பிற நாடுகள்
மொத்த வணிகம்
ஐக்கிய இராச்சியம்
பிரிட்டிசு உடைமை பிற நாடுகள்
1924
சதவீதம்
2306 ...
53.76 . . 238 . .
44·72 。。
820 . .
308 . .
3529 . .
33"69 . .
3.02 . .
1925
சதவீதம்
23'23 . .
55 *23 . . 2丑·54 。。
38-29 . .
15:08 . . 4,668 . .
82.8 . .
31-3 . .
36-45 . .
926 சதவீதம்
22·77
5-39
2584
440 14:03
44*?
33 26 30 * 14
3650

Page 125
238
TV-கழிந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையிலிருந்து எற்றுமதியான முக்கிய விளை பொருள்களின் பெறுமதி வருமாறு :-
இலட்ச உரூபாய்
الار- ーい
1922 1923 1924 1925 1926
தே. . . ... 1,460 . . 1,857 . . 2,150 . . 1,997 . . 2,132 இரப்பர். 50 . . 736 .. 637 . . 1,700 ... 1,701 கொப்பரா - ... 288 . . 18 ... 310 ... 383 ... 398
உலர்த்திய தேங்காய் . . ... 202 ... 227 . . 220 ... 188 . . . .73
தேங்காயெண்ணெய் . . 149 . . 39 . . 158 . . 168 . . 155
பாக்கு . . 33 .. 35 .. 33 . . 40 . . 42 கறுவா ... 20 .. 21... 29 .. 32 .. 42 &ոհաւք − KO 16 . . 15 . . 13 . . 30 . . 26
கயிற்றுத் தும்பு 13 . . 24 . . 29 . . 19 . . 21
கொக்கோ 3, .. 22 .. 25 . . 23 . . 20
கயிற்றுப்புரி ... - 13 . . 20 . . 21 .. 21 .. 18
பங்கிரி எண்ணெய் a 16 . . 2 . . 29 . . 23 . . 8
புதுத் தேங்காய் 18 . . 13 . . 25 . . 19 . . 14 தோல் (பதனிட்டதும் இடாததும்) 6 . . . . 6 . . . . 13
பிண்ணுக்கு (தேங்காய்) 8 . . 6 . . 9 . . 11 . . aJT6)uh . . ... s 5 . . 6 . . 7. . . ll .. 8

239
% LLZ“09I 189o&I 898 ‘Ig6°9'I Igß“IĢso I g88‘LOI IgLos 9 †ßZoLgï 89ኽ“686 gII‘çiğ gLŶog9I 89Ť“OĽg Ł98“†gs, 868°6'I Ŵoz LýI ‘LLI‘I 999'88I ‘LIZ 936. I
Z08 og 688‘89I gïo II 981.“88.goog 699 og Iso I 188‘IGI 881°89 gŤZo09† £Zg‘808 098 ogs I6% of gT LI6‘919 [9][*#6}, LIL“ÇLZoz 018', [6 †88‘I6Loő04 gŻ6I
1.99% IgZo9gI g89‘OI IŤ0“IZI ‘6% I88 og&#‘I 66 I ‘LII Igßo69 Z6Ť“087 LIO‘86I #8ý“Lý †06‘08I 989“Zgg I† 8° IL8 68 I ‘69), “I ZZL'Oï !, 108°086‘f0Z †Z6I
881, “Z 6țg‘9II g09°8 01.9°869‘g I I 13“IZI ‘I 880‘gOI †06‘09 Z80*6go $$$$$IZ 球96*** 81. go09I &#g‘OŞŢ 861'sis g9ỷogIO“ I 6ĝ8°8Ť Ľ. IgLo686“ISI $36I
960's 61. Þog II I90‘6 LțL“ LIĢozz 688‘66&o I 889“ZOI IIZo98 gỚI ‘618 666‘9IZ † 16ozis I8 gosoɛI 939“†gg gIZ ‘891, 68.gog89’I 988‘886 I8go 1,08° ILI ŹZ6I
--: spoluoto)
• •« »(49均hr)qQ9日 -(g的妈可)(习49因闽g)四胡包启95
(ụoạsso) (ou-số) *-TIŲgoon) gọuog) - -(:logoro) (nuosog) soh
- -(-0)ổ) miano(o)upo 19 lygąın - -→ ·ựfırısąjuns
• -(ụsąffo) usog)?uso(g)
• •(ụợąsło) shqip????ąstymo - - メ· · (ụoạffo) qirnyuso - -• •(ụogfræ) surtos@so « »- - -(ụogsło) @ puri
(ų sąsło) smlogo(o)logomorsuosiog) (ụogsło) quosog) mgogoy@9-æ
« »· · (ųogsho) udriņuolo) - -· · (ụogssør) yn fficē) - - · ·(-0)ổ) • sg)
omoto) (5 gif@ąfrø ogųoo@logo ureforæ–A

Page 126
240
உ.--கல்வி
இடாப்பிலுள்ள மாணுக்கர் பாடசாலைகளின் எண்ணிக்கை பாடசாலை வகை எண்ணிக்கை ஆண் @uar
2 3 4
மொத்தம் 4,523 322,636 17,368
1. ஆங்கிலம் :
மொத்தம் . . 243 37,101 11,453 (அ) இரண்டாம் நிலை- w அரசினர் . 585 - உதவிபெறும் 44 14,882 5,012 (ஆ) உயர் நிலை
அரசினர் - nnn - - உதவிபெறும் 25 3,517 1,995 (இ) ஆரம்ப
அரசினர் 15 1,776 4. உதவிபெறும் 144(a) 15,239 4,399 (ஈ) இராப்பாடசாலை
அரசினர் 94 உதவிபெறும் 13 1,008
2. ஆங்கில-சுயமொழி :
மொத்தம் 96 18,116 4,697 (அ) பகற் பாடசாலைகள்
øg 6607 fît 60 14,676 1,686 உதவிபெறும் 34(ஆ) 3,343 3,011 (ஆ) இராப் பாடசாலைகள்
அரசினர் - உதவிபெறும் 2 97 un
3. சுயமொழி :
மொத்தம் . . 2,924 243,238 143,080 (அ) பகற் பாடசாலைகள்
அரசினர் 1,101(இ) 113,137|| 54,778(r) உதவிபெறும் . 1,821(의) 129,990 88,302 (ஆ) இராப்பாடசாலைகள்
அரசினர் Hy an vnnd உதவிபெறும் 2 -
4. பயிற்சிப் பாடசாலைகள்
மொத்தம் 15 353 402 அரசினர் 3 155 84 உதவிபெறும் 2 198 818

24.
இடாப்பிலுள்ள மாணுக்கர்
பாடசாலைகளின் எண்ணிக்கை பாடசாலை வகை எண்ணிக்கை ஆண் பெண்
2 3 4
5. தொழிற் பாடசாலைகள்
மொத்தம் 88 2,618 4,061 அரசினர் 4. 66 45 உதவிபெறும் 41 2,002 (2011) 4,016 (67) 6. தொழிற் நுட்பப் பாடசாலைகள்
மொத்தம் 46 22 அரசினர் 467 22 உதவிபெறும் .-
7. பிரிவீனுக்கள் 24 2,156 m 8. சிறப்பான பாடசாலைகள் 2 94 81
9. உதவிபெருதவை
மொத்தம் 1,130 18,493 7,572 (அ) ஆங்கிலம் 29 1,310 250 (ஆ) ஆங்கில சுயமொழி 6 698 298 (இ) சுயமொழி 276 9,187 5,099 (ஈ) தொன்முறை (சுயமொழி) 36 1,083 8 (உ) பன்சாலைப் பாடசாலை 571 2,024 ы_ы__ (ஊ) குரான் பாடசாலை 202 4,星91 1,907
(ஆ) 5 தொழிற் பாடசாலைகளைத் தவிர்த்தது. (இ) இப்பாடசாலைகளுள் 49 இல் கூடை பின்னல் போதிக்கப்படுகிறது.
(உ) 33 தொழிற் பாடசாலைகளைத் தவிர்த்தது. (ஊ) இவர்களுள் 410 பேரே தொழிற்பாடம் படிக்கின்றனர். (எ) இவர்களுள் 1,360 பேரே தொழிற்பாடம் படிக்கின்றனர்.
(அ) 3 தொழிற் பாடசாலைகளையும் 1 சிறப்புப் பாடசாலையையும் தவிர்த்தது.
(ஈ) இவர்களுள் 1,245 பேர் கூடை பின்னலைத் துணைப் பாடமாகப் படிக்கின்றனர்.
1921 ஆம் ஆண்டுக் குடிமதிப்பில் பதிவு செய்யப்பட்ட பள்ளி செல் வயதுடையச் சிருருள் 55 சதவீத மாணுக்கரே பள்ளி செல்கின்றனர்.

Page 127
242
ஊ.-பயிர்ச்செய்கைப் புள்ளி விவரங்கள்
பல்வேறு பயிர்களும் பயிரிடப்படும் பரப்பு (அண்ணளவில்)
பாக்கு e 68,476 கொக்கோ - 34,566
6T6)Lb 6,282
G8926:37 Julíř - 77,317 கறுவா ... 25,080 பங்கிரி 10 a 36,386
தேங்காய் - ... 883,460 பருத்தி M 0 - − ... 1,817 தானியம் (நெல், சேனை தவிர்ந்தவை) 26,981 நெல் ... 834,325 Lu260T ... 49,480 இரப்பர் - . . 475,051 கரும்பு 90. தே. - - . . . . 442,034 புகையிலை « 13,072 காய்கறி - - 30,843
மொத்தம் 3,006,070
இலங்கையின் பரப்பு ... 16,212,480 பயிர்ச்செய்கைப் பரப்பின் சதவீதம் 186
மேற்காட்டப்பட்ட புள்ளி விவரங்கள் 1926 ஆம் ஆண்டுக்குரிய நீல நூலிலிருந்து எடுக்கப் பட்டவை ; அந்நூல் கீழ்க்காணும் குறிப்பைக் கொண்டுள்ளது.
* இந்நிரல்களில் காணப்படும் புள்ளி விவரங்கள் 1921, 1924 ஆம் ஆண்டு உற்பத்திக் கணக் கிட்டுப் பேறுகளிலிருந்து மதிப்பிடப்பட்டவை. பரப்புக்களில் பிழைகள் இருக்கலாம். கிராமப் பயிர்ச்செய்கையொடு சம்பந்தப்பட்ட பரப்புக்கள் மாறுபாடடைவது வழக்காதலின் திட்டமான தகவல் பெறுவது இலகுவன்று ; ஆதலின், அவை செவ்வையானவையென்று சொல்ல லியலாது. தென்னைப்பரப்பு குறைவாக மதிப்பிடப்பட்டதுபோல் தோன்றுகின்றது ; இது, 1,000,000 எக்கரிற் கூடியதெனப் பொதுவான ஒரு கருத்துண்டு. ”
ஆயினும், தீவு வளமுடையதாயிருந்தும் நாலிலொரு பங்கே பயிரிடப்படுகிறது. மக்களின் முக்கிய உணவுப் பொருளான நெல்லைவிட மற்றை மூன்று பிரதான பயிர்களாயுள்ளவை இரப்பர், தே. தென்னையாம். தென்னை தெற்கு, மேற்குக் கரையோரங்களில் பெருமளவிற் பயிரிடப்படுகின்றது. மேல்நாடு தேயிற்கும் இரப்பருக்கும் உடைய பகுதியாக விளங்குகின்றது. தென்னைத்தோட்டங்கள் பெரும்பாலும் இலங்கையர் உடைமையாயிருக்க தேயிலைத்தோட்டங்களில் 80 சதவீதமும் இரப்பர்த் தோட்டங்களில் 60 சதவீதமும் பிரிட்டிசார் உடைமைகளாயுள்ளன.

243
பின்னிணைப்பு V
1815 ம் ஆண்டு மாச்சு 2 ஆம் நாள் நடந்த கண்டியர் சமவாயம்
கிறித்து ஆண்டு 1815 இற்குச் சமமான சிங்கள ஆண்டு 1736 இல் மாச்சு மாதம் இரண்டாம் நாள் ஐக்கிய இராச்சியமான பெரிய பிரித்தன், அயலந்து ஆகியவற்றின் மாட்சிமைதங்கிய மூன்றம் சோச்சு மன்னர், அரசுரியர் வேத்தியல் உயர்புகழ் உவேல்சு இளவரசர் சோச்சு ஆகியோர்க்கு, அவர் பெயரிற் கடமை பூண்ட, இலங்கைத் தீவில் உள்ள பிரிட்டிசுக் குடி யிருப்பு, ஆள்புலம் ஆகியவற்றின் ஆள்பதியும் தலைமை ஆணையருமான மேன்மைதங்கிய இலெற்றினன் தளபதி உரபெட்டு பிறவுன்றிக்கு அவர்கள் ஒருபாலும், கண்டி மாநில மக்கள் தம் பிரதிநிதிகளாயமைந்த அதிகார்கள், திசாவைகள், மற்றைத் தலையோர், மற்றைப் பல மாநிலங்களிலிருந்து வந்த மொகத்தலை மார், கோரளைகள், விதானமார், வேறுபிற சிறு தலைமைக்காரர், பொதுமக்கள், அங்கு அப்பொழுது குழுமிய மற்றை மக்கள் ஆகியோர் மறு பாலுமாக நடந்த சமவாயத்தில் பின்வருமாறு உடன்பாடு கண்டு உறுதியாக்கப்பட்டது :
முதலாவது :
எல்லாக் குடியியல் உரிமைகளுக்கு மாருகவும் அவைமேல் வெறுப்பாகவும் மலையாள மன்னன், சிலவேளைகளில் குற்றமொன்றும் நடைபெருமலிருக்கவும், குற்றச் சாட்டில்லாமலும் விசாரணையில்லாமலும் மனம் போனபோக்கில் நியாயமற்ற முறையில் உடற்குறைப்பு, மரணதண்டனை ஆகியவற்றை விதித்துப் பொல்லாத் துன்பத்தையும் கொடூரத்தையும் அள்ளி இறைக்கின்றன் ; இவை அளவிக்ந்தன; அநீதியானவை ; சகிக்க முடியாதவை. அவனின் அரசாட்சியும் அதற்கேற்ற வகையில் தன் குடிமக்களின் பாதுகாப்பைப் பேணக்கூடிய நீதியை அறவே ஒழித்த தொன்றகும். இன்னும், அடுத்துள குடியிருப்புக்களுடன் நல்லுறவைப் பெறக் கூடிய நன்மதிப்பை அறவே இழந்ததுமொன்றகும்.
இரண்டாவது :
மன்னன் சிறீ விக்கிரமஇராசசிங்கன் ஒரு மன்னனுக்குரிய முக்கிய திருமிகு கடமைகளைப் செய்ய என்றும் தவறியதால் அப்பட்டத்திற்கோ, அதனேடு சார்ந்த அதிகாரங் களுக்கோ உரிய உரிமைகளை இழந்தவனகிவிட்டான் ; இதனல் அவன் அரசுப் பதத்திலிருந்து வீழ்ந்தவனனன் என்றும் அப்பதத்தினின்றும் அகற்றப்பட்டா னென்றும் அறிவிக்கப்படுகின்றது. அவன் குடும்பத்தாரும் குருதிமுறை, அல்லது இனமுறையால் அவன் குலத்தின் முந்திய வழி, பிந்திய வழி, பக்க வழி, எந்த வழியைச் சார்ந்தவரும் என்றும் அரசணையினின்று விலத்தப்பட்டவராவர். கண்டி மாநில ஆள்புலத்திற்கு மலபார் இனத்தவர் கொண்ட சகல உரிமையும் பட்டமும் இதனல் விலக்கி அழிக்கப்பட்டன.
மூன்ருவது :
குருதிமுறையாலோ, இனவழியாலோ அவன் குலத்தின் முந்திய வழி, பிந்திய வழி, பக்கவழி காலஞ்சென்ற மன்னன் சிறீ விக்கிரம இராசசிங்கனின் உறவினராயிருக்கின்ற, அல்லது அவ்வாறு நடிக்கின்ற எல்லா ஆண்மக்களும் கண்டி மாநிலங்களின் அரசிற்குப் பகைவரென இத்தால் அறிவித்தல் செய்யப்படுகின்றது; இவர்கள் எக்காரணங்கொண்டும் பிரிட்டிசு அரசாங்கத்தின் அதிகாரத்தாலன்றி இந்நாட்டுப் பகுதியுள் வரலாகாதென்று தடை

Page 128
244
செய்யப்பட்டுளர். இவர்கள் அவ்வாறு வருவரேல் இதற்கென விதிக்கப்பட்ட போர் வினைச் சட்டத்தின் துன்ப தண்டனைகளுக்கு ஆளாவர். இப்பொழுது இந்நாட்டி னின்றும் வெளியகற்றப்பட்ட எல்லா மலபார்ச் சாதி ஆண்மக்களும் மேற்கூறிய அதிகாரத்திலிருந்து இசைவு பெற்ருலன்றி நாட்டுள் வரலாகாதென்று தடைசெய்யப் பட்டுளர்; இதை மீறுவோர் மேற்கூறிய தண்டனைக்காளாவர்.
நாலாவது :
கண்டி மாநில ஆள்புலம் பிரிட்டிசுப் பேரரசு அரசர்க்கு பொருளாக்கப்பட்டுள்ளது; அவர் அதிகாரம் இப்பொழுதுள்ள காலத்திற்கு இலங்கை ஆள்பதி, அல்லது பதிலாள்பதி யாலும், அதிகாரம்பெற்ற அவர்க்குரிய முகவராலும் கொண்டு நடாத்தப்படும் ; ஆணுல், பிரிட்டிசு அரசாங்கத்தால் சட்டமுறைப்படி நியமிக்கப்பட்ட அதிகார்மார், திசாவைமார், மொகத்தளைமார், கோரளைமார், விதானமார், மற்றும் பிரதம தலைமைக்காரர், தலைமைக்காரர் ஆகியோர்க்கு அவர்தம் பதத்திற்குரிய சட்ட முறையிலமைந்த உரிமைகள், பேறுகள், அதிகாரங்கள் யாவும் உறுதியாக்கப்படும் ; மற்றை எல்லா மக்கள் வகுப்பினர்க்கும் அவர்தம் உடல், உடைமை ஆகியவற்றின் ‘ காப்பும் அவர்களிடை வழங்குவனவும் நிறுவப்பட்டனவுமான சட்டங்கள், வழக்குகள், வழமைகள் ஆகியவற்றிற்கியைந்த குடியியல் உரிமைகள், பாதிப்பின்லைப் பேறுகள் ஆகியவையும் உறுதியாக்கப்படும்.
ஐந்தாவது :
இம்மாநில மக்களும் தலையோரும் கடைப்பிடிக்கும் புத்தோவின் சமயம் மாற்றப்படாது என்று அறிவித்தல் செய்யப்படுகின்றது. அதன் கிரியைகள், அதன் குருமார், வழிபாட்டிடங்கள் ஆகியவை பேணப்பட்டுப் போற்றப்படும்.
ஆருவது : உடல் துன்புறுத்து, உறுப்புக் குறைப்பு ஆகியவையும் அவற்றின் வகைகளும் தடைசெய்யப்பட்டு
ஒழிக்கப்பட்டுள்ளன.
எழாவது :
உரிய காலத்துக்குள்ள பிரிட்டிசு ஆள்பதி, அல்லது பதிலாள்பதி, உள்ளாள்புலத்து உறையும் அரசாங்க முகவர், அல்லது மூகவர்கள் முலமாகப் பெற்ற அறிக்கை யொன்றின்பேரில் விடும் எழுத்துக்கட்டளை ஒன்றினலன்றி, எந்த ஒரு குடிவாழ்வானை யும் கொலைத்தண்டனைக்கு ஆளாக்கலாகாது. மேற்கூறிய முகவர் முன்னிலையிலேயே எல்லாக் கொலை வழக்குகளும் உசாவப்படல் வேண்டும்.
எட்டாவது :
இந்நிபந்தனைகளுக்கிணங்க கண்டிய மக்கள் மீதமைந்த குடியியல் நீதி, குற்றவியல் நீதி, பொலிசு ஆகியவற்றின் பரிபாலனம் நிறுவப்பட்ட முறைகளாலும் சாதாரண அதிகாரிகளாலும் நடாத்தப்படும் ; ஆனல், தலையீடு இன்றியமையாதது என்ற இடங்களில் பொதுவான சிறப்பான வகைகளிளெல்லாம் ஆகும் துன்பங்களைத் துடைக்கவும் சீர்கேட்டைத் திருத்தவும் இயல்பாயமைந்த உரிமை அரசாங்கத்திற்கு உரியது.

245
ஒன்பதாவது :
இம்மாநிலங்களில் உறையும், அல்லது வரும் கண்டியரல்லா, குடி, படை, மக்கள் ஆகி யோர்க்கு குடியியல், குற்றவியல், நீதி பொலிசாட்சி ஆகியவையாவும் மாட்சிமைதங்கிய இங்கிலந்து மனனர் வேறு விதமாக அறிக்கை விடும் வரைக்கும் பின்வரும் முறை யிற் பாலனஞ் செய்யப்படும்.
(t) ஆணைக்குட்பட்ட, உட்பாடப் படையலுவலர், படைஞர், படை ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்ட படையினர் அல்லா எல்லோரும் கொலைக் குற்றமல்லா மற்றை எல்லா வகையிலும், பிரிட்டிசு அரசாங்கத்தின் தகுதி யுரிமை பெற்ற முகவர், அல்லது முகவர்களின் நீதி பரிபாலனத்திற்கு ஆளாவர் ; கொலைக்குற்றங் கள் அவற்றிற்கெனக் காலத்துக்குக் காலம் ஆள்பதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களால் உசாவப்படும் ; பிரிட்டிசுக் குடி ஒருவன் எதிராளியா யிருக்கின்ற ஒரு கொலை வழக்கில், பிரிட்சிசுக் குடிகள் பிறநாட்டில் செய் யும் குற்றங்கட்காக, அக்காலத்து வழக்கிலிருக்கும் பெரிய பிரித்தன், அய லந்து, ஐக்கிய இராச்சியத்துச் சட்டங்களுக்கியைய அவன் விசாரணை செய்யப் படவேண்டியவனயின், அவனை, கண்டி மாநிலங்களில் செய்தான் என்று கூறப்படும் ஒரு கொலைச்சாட்டிற்காக ஐக்கிய இராச்சியத்தின் சட்டங்களாலன்றி பிறவற்றல் விசாரணை செய்தலாகாது. (i) ஆணைக்குட்பட்ட உட்படாப் படையலுவலர் படைஞர், படை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்ட படையினர் தாம் பிரதிவாதிகளாக இருக்கின்ற எல்லாக் குடியியல் குற்றவியல் வழக்குகளிலும் போர் வழக்குவிதி, சட்டம் ஆகிய யாவற்றிற்கும் கட்டுப்பட்டவராவர். ஆனல், இவ்வொன்பதாம் கூற்றில் அடங்கும் எல்லா வகைகளிலும் ஆள்பதிக்கும் எவுநர் நாயகத்திற்கும், அக்கூற்றிற்கிணங்க நடைபெற்ற குடியியல் படையியல் விசாரணைகளை மேற்பார்வை செய்யக் கட்டில்லா உரிமையுண்டு ; இன்னும் அக்கூற்றின் தத்துவத்தை முழு நிறைவு பெறச் செயலாக்குவதற்கு என்னென்ன எற்பாடுகள் தேவையோ, அவற்றை அக்கூற்றின் பொதுத் தத்துவத்திற்கியைய ஆக்குவதற்கும் அவர்க்கு உரிமை யுண்டு.
பத்தாவது ? பட்ை முன்னேறிச் செல்லும் தறுவாயில் அறிவித்தல் செய்யப்பட்ட தற்காலிக பகுதிப் பிரசித்தங்கள் மேற்கூறிய வாசகங்கட்கு எதிர்மாருக அமையுமெனின், அவை மேற்கூறியவற்றிற்கு மாறக அமையுமளவில் இத்தால் விலக்கப்படுகின்றன.
பதிஞெராவது :
மாட்சிமைதங்கிய மன்னர் பயனிற்கும், மாநில ஆட்சிக்குமாக சட்டத்திற்கியைந்த வழக்கிற் கியைய பிரிட்டிசு அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற முகவர், அல்லது முகவர்களின் பணிப்பு, மேற்பார்வைக்கிணங்க வேந்தின் இறைகளும் வாரியும் ஆட்சிப்படுத்திச் சேர்க்கப்படும்.
பன்னிரண்டாவது :
மேன்மைதங்கிய ஆள்பதியவர்கள், இம்மாநிலங்களின் விளைபொருட்களின் எற்றுமதியை வளர்க்கவும் பண வழியிலோ, உப்பு வழியிலோ, ஆடை வழியிலோ வேறுபிற பண்டங்கள் வழியிலோ கண்டி மக்கட்குப் பயன்படும் உவப்பான வருமதியை வளம்படுத்தவும், வாய்ப்பான ஆட்சி முறையை ஒரு நடைமுறை ஒழுங்காக மாட்சிமை தங்கிய மன்னர் பேரில் அவர்பொருட்டு அமைத்து, உயர்இறை ஆள் இளவரசர்க்கு இசைவின்பொருட்டு எடுத்துரைப்பார்.

Page 129
246
அரசை இறை காகக்க
ஒப்பம் : உரெபட்டு பிறவுன்றிக்கு (ஆள்பதி) ஒப்பம் : எகலெப்பொலை
மொல்லிகொடை
கோரளைகளின் முதல் அதிகாரும் திசா
வையும்
பிலிமதலாவ
சபிரகம் 2 ஆம் அதிகாரும் திகாவையும்
பிலிமதலாவை
4 கோரளைகளின் திசாவை
மொனராவிலை
ஊவா திசாவை
இரத்துவத்தை,
மாத்தளை திசாவை
மொல்லிகொடை,
3 கோரளைகளின் திசாவை
துல்லேவை,
வலப்பனை திசாவை
கலகம,
தமங்கடவை திசாவை
கலகொடை,
நுவரகலாவிய திசாவை
மில்லாவ,
வெல்லச விந்தனை திசாவை சே. தஒயிலி,
அரசின் தலைமை மொழிபெயர்ப்பாளர்
சேமிசு சுதலந்து,
அரசின் பதிற்செயலாளர்
கீழ்க்காண்போர் முன்னிலையிற் கையொப்ப
மிடப்பட்டது.

247
1818 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் செய்த அரசாங்கப் பிரகடனம்
இலங்கைத் தீவின் சார்நாடுகளுட்பட்ட ஆள்புலங்கள், பிரிட்டிசுக் குடியிருப்புக்கள் ஆகிய வற்றின் ஆள்பதியும், எவுநர் நாயகனுமான மேன்மை தங்கிய பாதின், மிகக் கெளரவ படையியல் முறைமையின் பரனற்றும், பெரும் சிலுவையின் பிரபு உரபெட்டுவான பதிலாள் பதி சேர்வு பிறவுன்றிக்கு விடுப்பது :
உரபெட்டு பிறவுன்றிக்கு
கண்டி மக்களும் அவர்தம் தலையோரும் அவர்கட்கெதிராகக் கண்டிக் கடைசிமன்னனயிருந்த சிறீ விக்கிரம இரசாசிங்கன் சொடுங்கோன்மையின் இழைத்த துன்பங்கள், கொடுமைகள் ஆகியவற்றைத் தாங்கொணதவராய் தங்கள் துயர் நீக்குமாறு பிரிட்டிசு அரசை வேண்டினர் ; வேண்டி அவர்கள் உள்ளார்ந்த அறிக்கையொன்றினல் அரசன் அரியணை நீக்கப்பட்டான் என்றும், அவனும் அவன் குடும்பத்தின் வழிவந்தோரும் எதுவகையிலும் அவன் குடும் பத்திற்கு உறவானவரும், கண்டி மாநிலங்களுள் எவ்வித அதிகாரமும் வகிக்கமுடியா தென்றும் பிரசித்தம் செய்கின்றனர். அதே முறையில் அவ்வாள்புலங்கள் பிரிட்டிசரசின் ஆட்சிக்கு அளிக்கப்பட்டன என்றுங் கூறுகின்றனர்.
2. சமவாயம் நடந்த 1815, மாச்சு 2 ஆம் நாள் தொடங்கிக் குழப்பம் கிளர்ந்தெழுந்த நாளான 1817, ஒற்றேபர்த் திங்கள்வரை மாட்சிமை தங்கிய பிரிட்டிசு மன்னரின் பிரதிநிதி யவர்கள் எல்லா வகுப்பினர்மீதும் நடாத்திய அதிகாரம் பெரும் ஆதுரவையும் பொறுமையை யும் கொண்டு விளங்கியது. புத்தோ சமயத்திற்குரிய வழிபாட்டுத் தலம், குருமார், உரிமைகள் ஆகியவற்றைப் பேணிப் போற்றுவதில் நற்கவனம் செலுத்தப்பட்டது. புதிய தம் குடிமக்களின் மகிழ்வை உறுதியாக்குவதில் அரசாங்கத்திற்கு தம் பதவியாலும் அறிவாலும் நல்லுதவி செய்யக் கூடியவர்கள் என அறியப்பட்ட தலையோர் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கப் பட்டது. கழிந்த மன்னன் கடைப்பிடித்த கொடிய வழக்கினல் உண்டான கெடுதிகளினின்றும் இலகுவில் தேறி வளர்ச்சியடைவான்பொருட்டு வரிகள் அரசுச் சேவைகள் அறவிடுதல் ஆகிய வற்றில் முன் பின்னறியாத, பொதுவல் கண்ணுேட்டம் காட்டப்பட்டது. அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சூழ்ச்சி நடைபெற்றது என்று நிறுவப்பட்ட குற்றங்களிலும் பொதுவான குற்றங் களிலும் தண்டனை விதிப்பதில் பிரிட்டிசு ஆட்சியுடன் என்றும் இன்றியமையாது விளங்கிய பண்பு, மிகப்பொல்லா விலங்குமுறைச் சித்திரவதைகள் முன்வர அடிக்கடி தொடர்ந்துவரும் பண்டைமுறைக் கொலைத் தண்டனைகளுக்கு மிக மாறுபட்டே விளங்கியது.
3. இவ்வாறமைந்த பிரிட்டிசு அரசாங்கத்தின் மெல்லியல் ஆட்சியில் நாடு அமைதிபெற்று விளங்கியதுபோல் தோன்றியது ; பயிர்ச்செய்கை ஓங்கி உயர்ந்தது ; பயிர் செய்வோர் முயற்சிக்கு தெய்வ ஊழும் வளமான விளைவளித்து அருள் செய்தது. ஆயினும், இக்காலம் முழுவதும் பிளவுகளும் கபட நோக்குக்களும் அரசாங்கத்தைப் புரட்டச் சூழ்ச்சி செய்துகொண்டே வந்தன. குடிமக்கள் உடைமை, உயிர் ஆகியவைமிது தனியாண்மையைத் தாம் கொள்வதே இவற்றின் ஒரே நோக்கம். ஆயினும், இக்குடி மக்களோ ஆன்ற பிரிட்டிசு அதிகாரத்தின் நீதிமுறைமை யால் பொல்லாக் கொடூரம், பேரவா ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
4. பிரிட்டிசு அதிகாரத்தால் காப்பளிக்கப்பட்டு நன்னிலையில் வைக்கப்பட்ட ஆட்களிடையே அரசுக்கெதிராகச் சூழ்ச்சி செய்தோர் இருந்தனர். எல்லா வகுப்புக் கண்டி மக்களும் தாம் காட்டவேண்டிய நம்பிக்கைப் பொறுப்பினின்றும் வழுவார் என நம்பியகாலத்திலேயே இக்கிளர்ச்சி நடத்தப்படலாமெனக் கருதப்பட்டது. அரசினர் படைஞர் தொகையைக் குறைத் திருந்தனர். கிளர்ந்தெழுந்த தலைவர்களோ பிரிட்டிசுப் பேரரசின் பரந்த வளத்தினை அறியாத வராய் கலகஞ் செய்து வெற்றி பெறலாமென்றெண்ணினர் ; எவ்வாறு ஒரு போலியுரித்தாளன் முன் மக்களை அடிபணியுமாறு எமாற்றினரோ அவ்வாறு நாட்டிலிருந்து ஆங்கிலரை வெளி யகற்றலாமென்றும் இவர் எண்ணினர். இவர்கள் அந்தப் போலியாளனின் நடிப்பிஜன ஆதரித்ததும் நாட்டு மக்களைத் தம்மிச்சைக்கு ஆளாக்க விழைந்த பேரவாவை மறைக்கவேயாம்.

Page 130
248
6. துன்பத்தைப் பெருக்கிப் பல்லோர்க்கு அழிவை அளித்த ஒரு வருடத்திற்கு மேலான போராட்டத்தின் பின், பிரிட்டிசு அரசாங்கத்தின் முயற்சியும் மாட்சிமை தங்கிய மன்னரின் படைகளின் வீரமும் தொடர்ந்து போரிடுவதின் புல்லறிவினைக் கண்டியர்க்குப் புலப்படுத்தின; இன்னும், மகிழ்வான வாழ்வு வாழ அவர்க்குப் பாதுகாப்பளிக்கும் அதிகாரமும் அரசாங்கத்தி லேயே உள்ளது என்பதும் அவர்க்குப் புலணுகியது. கலகத்தினர் தம் பேரவா நோக்கை மறைத்து மூடிய மெல்லிய திரையும் அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது : கடவுளின் வழித்தோன்றல் என்று மக்கள் போற்றல் வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்ட அந்தப்
புதுமை விரும்பியின் "ஆடம்பரம்” ஓர் எழைச் சிங்கள மகன் என்று அம்பலப்படுத்தப்பட்டது.
6. துன்பந் தரக்கூடியதும் சற்றும் எதிர்ப்பாராததுமான சூழ்ச்சி, மிகக் கீழ்த்தரமான கபடம் ஆகியவற்றைப் பொதுமக்களுக்குக் காட்டிய பின்னர், ஆன எ மாற்றத்தால் மக்களுக்காய துன்பத்தைப் பற்றிய உணர்ச்சி, பொதுவாக, இனிமேல் வருங்காலத்தில் அவர்களைத் தங்கள் நல்லரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்யாதிருக்குமாறு செய்யு மென அரசினர் ஒரளவுக்கு எதிர்பார்த்திருப்பர். ஆயினும், நடந்த சூழ்நிலைகளை நோக்கியும் நாட்டின் மன்னர்க்குப் பணிய வேண்டிய கடப்பாட்டையளியாது தங்கள் தலையோர்க்கோ தாம் கடமையர் என்ற கண்ணற்ற கீழ்ப்படிவாலாய விளைவுகளை நோக்கியும், அதற்கு இயல்பான உரிமையால், வேத்தியல் அரசின் மேன்மையை மறந்து பல்வேறு தலையோரினதும் அதிகாரத் திலேய்ே தான் தங்கியுளன் எனக் குடிமகன் கருதுவான் ஆதலின், அவ்வதிகாரத்தை நீதி முறையாக்க நாட்டின் முழு ஆண்மை கொண்ட இறையிலிருந்தே அது பெறப்படல் வேண்டு மென்ற, வழிமுறையிலமைந்த ஆட்சி முறையைக் கைக்கொளல்வேண்டும்.
7. ஆகவே, மேன்மைதங்கிய ஆள்பதி இக்குடியிருப்புக்குள்ளிருக்கும் எல்லா வகுப்பின ருக்கும் எல்லா மக்கட்கும் பெரிய பிரித்தன், அயலாந்து ஆகியவற்றின் மன்னன், தன் பிரதிநிதியான இலங்கை ஆள்பதிக்கூடாகவும் கண்டி மாநிலத்திலுள்ள அவர் முகவரூடாகவும் செலுத்தும் நிறை இறைமையே எல்லா ஆணைகளுக்கும் முதல் எனவும் அதற்கே எல்லாக் கீழ்ப்படி வும் உரியதெனும் உளங்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறர் ; இந்நிறை முதலிலிருந்து அதி காரமும் பட்டமும் பெருத தலையோர் கீழ்ப்படிவுக்கோ, வணக்கத்திற்கோ உரியரல்லர் ; அரசாங்கத்திடமிருந்து அதிகாரம் பெருத எவரும் எவ்விதச் சட்டவதிகாரமும் செலுத்தல் முடியாது ; எவ்விதத் தண்டனையும் விதித்தலியலாது. கண்டியர் ஒவ்வொருவரும் கீழ் வகுப்பினராக, மேல்வகுப்பினராக, எவராலும் எவ்வழியாலும் தீண்டப்படாமல், உயிர், உடைமை, சுதந்திரம் ஆகியவற்றைப் பேண உறுதியளிக்கப்படுவர் ; இன்னும், அவர் மேன்மை தங்கிய மன்னர் பெயரால் அவருக்காக அமைந்த அதிகாரிகள், ஆட்கள் ஆகியோரால், எற்ற வழியில் பரிபாலிக்கப்படும், பழைய மரபு வழிவந்த உறுதியான வழக்குக்களுக்கியைந்த சட்டங்களுக்கே ஆளாக்கப்படுவரென்பது இதனுல் உறுதியாக்கப்படுகின்றது.
8. மேன்மை தங்கிய ஆள்பதியால் கண்டி மாநிலங்களிலுள்ள பொது நிருவாக நீதி பரிபாலன அதிகாரம் ஆணையோர் சங்கத்திற்கு அளிக்கப்பட்டடுள்ளது ; அவர்கள் மேற்பார்வை யில், மேற்கூறிய மாநிலங்களிலுள்ள திசாவணிகளில் வதிகின்ற அரசாங்க முகவர்களுக்கும் அது அளிக்கப்பட்டுள்ளது; இன்னும், மேற்கூறிய அதிகாரம், சட்டவதிகாரம் ஆகியவறறில் குறைந்த அதிகாரத்தையோ, கூடியவதிகாரத்தையோ உடையவர்களாக வேறு முகவர்களே அவரவர்க் குரிய வேறு கற்பனைகளுடன் இருத்தவும் மேன்மைதங்கிய ஆள்பதிக்கு அதி காரமுண்டு ; இவைபற்றிய அதிகாரம், ஒழுங்குகளைக் கீழே காணலாம்.
9. அதிகார்மார், திசாவைமார், பிரதம தலைமைக்காரர், மற்றைத்தலைமைக்காரர், மேற் கூறிய ஆணைச் சபையினர், பிரிட்டிசு முகவர் ஆகியோரின் ஆணைகளின் பேரால் மட்டுமே கடமை செய்யக் கடப்பாடுடையர் ; வேறு வழியில் அவர் செய்தலாகாது.
10. எவரும் உயர் வகுப்புத் தலைமைக்காரராக, கீழ்வகுப்புத் தலைமைக்காரராக உயர் தலை மையோர் வகையில் மேன்மைதங்கிய ஆள்பதி கையெழுத்திட்ட பத்திரமும் கீழ்வகுப்புத் தலை மையோர் வகையில் கெளரவ பதியாள் முகவராலோ, அல்லது ஒரு பொழுதுக்காக இதற்கென

249
அதிகாரம் பெற்ற யாராயினும் ஓர் அரசாங்க முகவராலோ எழுத்தால் நியமனப்பத்திரமும் பெற்ருலன்றி, ஒரு பதவி வகிப்பதற்கு உரியவராகார். இவற்றிற்கு விதிவிலக்காக உள்ளன, சில கிராமங்களும் சில திணைக்களங்களுமாம் ; இவை திசாவைமாரின் தனிச் சேவைக்கென ஒதுக்கப்பட்டனவாக இருக்கும் ; இவற்றில் முன்னர் நடந்தவாறு பல திசாவைமாருக்கு நியமனமளிக்கும் தனிப்பேறுண்டு.
11. முன்னிருந்த அரசாங்கத்தில் நடந்தவாறுபோலவே, எல்லா வகுப்புத் தலையோருக்கும் மரியாதை அளிக்கப்படும் ; ஆனல், நன்முறையிலமைந்த ஆட்சியானது வெறுக்கத்தக்கதாக அமைந்தனவும் பழைய கொடும்பான்மையாலே தலையோரும் மக்களும் தாழ்த்தப்படுவதற்கு எதுவாயமைந்திருந்தனவுமான மிக இழிந்த முறையாவற்றையும், பிரிட்டிசு அரசாங்கம் நீச்கவேண்டுமென்ற உறுதிக்கு மாறுபாடாய் அமையாதனவாயிருக்கக்கூடிய மரியாதைகள் தொடர்ந்து நிலைபெறும் ; ஆள்பதி உட்பட எவருக்கேனும் முழு உடம்பும் நிலத்தில் பட விழுந்து வணக்கம் செய்வது இத்துடன் அறவே ஒழிக்கப்படும் ; இது முன்னரே ஓரளவுக்கு ஒழிக்கப்பட்டது. இறையதிகாரத்தின் முன்வரும் தலையோருக்கும் மற்றேருக்கும் முழங்கால் மண்டியிட்டு நிற்க வேண்டுமென்ற கட்டாயமும் இத்துடன் விலக்கப்பட்டது ; ஆயினும், இலங்கைத்தீவிலுள்ள நல்லதிகாரத்தின் உயர்பதவியிலுள்ள குடிக்குழுச் சேவையைச் சார்ந்த, படைச் சேவையைச் சார்ந்த எந்தப் பிரிட்டிசு அலுவலரின் முன்னர் வருகின்றபோதும் அவரைத் தலைப்படுகின்றபோதும், பக்கத்திற் போகின்றபோதும் வழியின் நடுப்பகுதியை விட்டு யாவரும் விலகக் கடவர் ; இருப்பாரெனில் எழுந்து இயன்றதொரு வணக்கம் செலுத்தக் கடவர் ; இது மிகவும் நன்முறையில் வரவேற்கப்படும் ; அதற்குரிய பதில் வணக்கமும் அளிக்கப்படும்.
12. இவ்வகையிலே ஓலக்க மண்டபத்துள் புகும் எவரும் அங்கு மாட்டப்பட்ட மாட்சிமை தங்கிய மன்னரின் படத்துக்கு வணக்கம் செலுத்தவேண்டுமென்றும் விதிக்கப்படுகின்றது ; அவ்வாறே எந்த நீதிமன்றிலும் அங்கு தலைமை வகிக்கின்ற அதிகாரிகளுக்கும் வணக்கம் செலுத்தல் வேண்டும் ; மாட்சிமைதங்கிய ஆள்பதியானவர் மாட்சிமைதங்கிய பிரிட்டிசு மன்னரின் பிரதிநிதியாகப் பயணம் செய்கின்றபொழுது, முன்னர் எவ்வாறு கண்டி மன்னர் பவனியின்போது பதத்திலுள்ள யாவரும் அவரைச் சூழப் பரிவாரமாக அமைந்து சென்ற னரோ, அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள அலுவலர் யாவரும் இவ்வாள்பதிகளுக்குச் சேவை செய்தல் வேண்டும் ; ஆனல், இதற்கும் விதிவிலக்குண்டு : திசாவைமார், மகாவலி கங்கை ஆற்றுக்கு அப்பால் பல்லக்குகளை உபயோகிக்கலாம் ; இவ்வெல்லைக்குள்ளேயே அதிகார் மாருக்கு இப்பேறுண்டு ; மாட்சிமைதங்கிய அரசர் கழக உறுப்பினர்களாக, கண்டி மாநில ஆணையாளராக, கண்டி மாநில படை எவு அலுவலராக, எந்த மாகாணத்திலேனும் தம் கடமை நிமித்தம் பயணம் செய்தால், எவ்வாறு பெரிய தி சாவை மார் வரவேற்கப்பட்டு உபசாரம் செய்யப்பட்டனரோ, அவ்வாறு அவர்களுக்கும் மரியாதை செய்தல் வேண்டும் ; இவ்வாறு, ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள படையேவு அலுவலர்களும் பதியாள் முகவர் களும் வரவேற்கப்பட்டு அவர்தம் மாநிலங்களில் மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்படல் வேண்டும்.
13. முதலாவது, இரண்டாவது அதிகார் பதங்களை வகிக்கின்ற தலையோர்களை, அவர்களை எதிருறுகின்ற படைதாங்கிய காவலாளர்களும் படைக் கடமை அலுவல் இருக்கின்ற வேளைகளில் எதுருகின்ற ஐரோப்பிய, அல்லது ஐரோப்பிய மக்கள் வழிவந்த படைஞர்களும், தங்களுடைய தலையணியில் தொட்டோ, அல்லது அவற்றைச் சிறிது உயர்த்தியோ வரவேற்பளித்தல் வேண்டும்; மற்றை நாட்டினராக, கண்டியராக, பிறராக, யாவரும் தம் இருக்கையெழுந்து அவரை வரவேற் பர் ; வழியின் நடுப் பகுதியில் நின்றும் விலகி அவர் போகின்றபொழுது வணங்கி வரவேற்பர் ; மற்றைத் திசாவைமார், தலையோருக்கு அவர் முன் எதிர்ப்படுகின்ற நாட்டு மக்கள் யாவரும் அவரைத் தாண்டிச் செல்கின்றபொழுதும் மற்றை நேரங்களிலும் தம் உடல் வளைப்பினல் அவருடைய பதத்திற்கேற்றவாறு வணக்கம் செலுத்தல் வேண்டும்.

Page 131
250
14. ஆணைக் குழுச் சபையினரிடமிருந்து அறிக்கை பெற்ற பின்னர் எவ்வளவினர் பரிவார மாக அமைதல் வேண்டுமென்று மேன்மைதங்கிய ஆள்பதி அவர்கள் தீர்மானித்ததன் பிரகாரம் அதிகார்கள், திசாவைகள், மற்றைத் தலையோர்கள் வெவ்வேறு திணைக்களங்களுக்குமுரிய் ஆட்களின் உபசாரத்தைப் பெறுவர் ; ஆனல், அதிகார்கள், திசாவைகள் ஆகியோருக்குரிய கிராமங்கள், திணைக்களங்களுக்கு இத்தகைய ஆட்கள் இல்லையேல், இத்தகைய உபசாரம் வேண்டுமெனில், கண்டியில் வதிகின்ற அரசாங்க முகவர்க்கோ, மாநிலங்களிலுள்ள அரசாங்க முகவர்களுக்கோ இதற்கென விண்ணப்பித்தல் வேண்டும். -
15. ஒலக்க மண்டபத்திலோ, அரசாங்க முகவர்களின் முன்னிலையிலோ இருப்பதற்கு உரிமை பெற்றவர்கள் ஆள்பதியின் ஆணைபெற்ற தலையோரே ; அவர்களன்றி, மேற்கூறிய அதிகாரியிட மிருந்து இதற்கெனச் சிறப்பதிகாரம் பெற்றவரும் அவ்வுரிம்ை பெறுவர் ; இவ்வாறு பெற்ற வருள் ஈர் திசாவைகளும் ஆள்பதியின் உத்தரவு முகம் பெற்ற ஆட்களும் நாற்காலிகளில் இருக்கலாம்; மற்றையோர் அவரவர் தகுதிக்கேற்ற உயரங்கொண்ட பாய்களால் மூடப்பட்ட வாங்குகளில் இருக்கலாம். பிற்கூறப்படும் அரசாங்க முகவர்களின் மன்றுகளில் மதிப்போராகக் கடமை பார்ப்போர், மொகத்தலைகள், கோரளைகள் ஆயின், நிலத்தின் மேலுள்ள பாய்களில் இருக்கலாம்.
16. புத்த சமயத்திற்குரிய விழாக்கள், கிரியைகள், குருமார் பதம் ஆகிய எல்லாம் அவைக்கு முன்னர் அளித்த மரியாதையைத் தொடர்ந்து பெறலாம் ; ஆயினும், இதே சமயத்தில் மற்றைச் சமயங்களில் பற்றுக் கொண்டு ஒழுகுவோருக்கு அவரவர் தம் சமயத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு வாய்ப்பளிக்கப்படாதென்றும் அல்லது இந்தப் பாதுகாப்பினலே உரிய இடங்களில் வணக்கத்திற்குரிய இடங்களை மேன்மைதங்கிய ஆள்பதியின் உத்தரவுச்சீட்டுப் பெற்று நிறுவலும் தடை செய்யப்பட்டதென்றும் கருதலாகாது.
17. பதறியமனத்திற்காக அரசாங்கத்திற்கும் வேறெந்தத் தலையோருக்கும் ஊதியம் கொடுப் பதை ஆள்பதி இதனுல் நீக்கிவிடுகின்றர் ; கிராமக் கோயில்களுக்குரிய பதங்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியம் இதற்கு விலக்காகும். இதற்குரிய பதம் ஆள்பதியால் நியமிக்கப்பட்ட பசநாயக்க நிலமை, அல்லது தேவநிலமை ஆகிய ஒருவருடைய எடுத்துரைப்பிற்கிணங்க பதியாள் முகவராற் செய்யப்படும் ; இங்கு தேவநிலமையோ, பசநாயக்கநிலமையோ வழக்கத்தில் ஊதியத்தைப் பெறுவார். இன்னும், இதற்கு முன்னர், கபெத்தவாசு அரமுதலி ஒளடகேயிற்
குக் கொடுக்கப்படவேண்டியிருந்த இறைகளும் மற்றை இறைகளும் வரிகளும் இதனுல் நீக்கப் படுகின்றன. இதற்கு விலக்காக உள்ளது இப்பொழுது விதிக்கப்பட்டு உறுதிப்படுத்துவதொன் ருகும். அது எல்லா நெற்காணிகள் மேலும் அதன் ஆண்டு விளைவில் ஒரு பகுதியாக அமைந்த வரியாகும். இது கீழ்க்காணப்படும் விதிவிலக்குக்கள், திருத்தங்கள் ஆகியவற்றிற்கும்
விகிதத்திற்குமியைந்த முறையில் அறவாக்கப்படும்.
18. கண்டி மாநிலத்திலுள்ள எல்லா நெற்காணிகளிலுமுள்ள பொதுவரி ஆண்டு விளைவில் பத்திலொன்ருக நியமிக்கப்பட்டுள்ளது ; இங்கு இந்த வரியைக் கமஞ் செய்வோன், அல்லது சொந்தக்காரன் அவ்வவ்மாகாணங்களிலோ, அல்லது மாகாணங்களின் சிறு பகுதிகளிலோ உள்ள வாய்ப்பான களஞ்சியத்தில் கொண்டுபோய்க் கொடுத்தல் வேண்டும். இந்த வரி யானது குடிமக்களின் நலனுக்கியைந்ததாய் விதிக்கப்படும். இக்களஞ்சியங்களும் வாரி முகவரின் கட்டளைகளுக்கியைய நியமிக்கப்படும், அல்லது விதிக்கப்படும்.
19. கீழ்க்காணும் கோரளைகளிலுள்ள தலையோர்களின் நன்னடத்தை, பற்றுறுதி ஆகிய வற்றைப் பாராட்டும் முகமாக நல்லறிவுடன் மேன்மைதங்கிய ஆள்பதி அவர்கள், வரிவிதிப்பு விகிதம் இங்கு ஆண்டு விளைவில் பதினன்குலொரு பங்காக இருக்குமென்று விதிக்கின்றர். அவையாவன :-உடுனுவரை, நான்கு கோரளைகள், மூன்று கோரளைகள், சபிரகமுவாவிலுள்ள கீழ்வரும் கோரளைகள் : குறுவிதிக் கோரளை, நவதும் கோரளை, கொலன கோரளை, குக்குல கோரளை, அடக்கலன் கோரளை, கடவத்தைக் கோரளையின் உடவக்க கம்பகா, உடகமை, கொணி

25.
லந்தை, கொளுத்தோட்டை, கொளத்ததோட்டை, மொலமுறை, பியங்கிரியா, முல்கமை ஆகிய கிராமங்கள் தலிர்ந்த மெத்தக் கோரளை, எழு கோரளைகளில் பின்வரும் கோரளைகள் : எவப் பொலே, கடுப்பிற்றிய, தொரவத்தறை ஆகிய கிராமங்கள் தவிர்ந்த திரிகண்டதாயி, ஊடப்பொலக் கோரளை, கட்டுகம்பகை கோரளை, உடுகக, கட்டுகம்பளை கோரளை, மெதப்பட்டு, பெற்றிகல் கோரளை, யகம கோரளை, இறகவபட்டு கோரளை, அங்கம்மை கோரளை, யட்டகுக கோரளை, மாத்தளையி லுள்ள உடுகொட்டை கோறளையிலிருக்கும் பு:பிலியா, கொங்கவலை, நிக்கவலை ஆகிய கிராமங்கள்.
20. கீழ்ப்படிவின்மைக்கும் கிளர்ச்சிக்கும் தலைவர்களாயிருப்போரும் மற்றும் பிறரும் தண்டனைக்குள்ளாவார் என்பதை யாவருக்கும் எடுத்துக் கூறும் முகமாக சொந்தக்காரரின் கெடுநடத்தைக்காகப் பறிமுதல் செய்யப்பட்ட எல்லா நிலங்களும் அரசாங்கத்தினுடைய கருணை யினலே முந்திய சொந்தக்காரருக்குத் திருப்பிக் கொடுக்கப்படுமேல், அவர்கள் ஆண்டுவிளைவில் ஐந்திலொரு பங்கு வரியாகக் கொடுத்தல் வேண்டும்.
21. ஆள்பதியானவர் மக்களின் சமயங்களுக்கு ஆதரவளித்தல் வேண்டுமென்று கூறிய விதிக்கு அரசாங்கம் மாருமல் நடக்கின்றதென்பதைக் காட்டும் முகமாகக் கோயில்களின் உடமையாக விளங்குகின்ற எல்லா நிலங்களையும் எல்லா வரியினின்றும் விலக்குகின்றர். ஆனல், இக்கிராமங்களிலுள்ள சில குடிமக்கள் முடிக்குக் குறித்த சில சேவைகள் செய்ய வேண்டு மாதலின், இக்கடமை தொடர்ந்து நடைபெறுவதாகுக.
22. கீழ்க்காணும் சட்டமுறையில் அமைந்த அரசுக்குக் கீழ்ப்படிவும் வழிபாடும் கொண்ட மதிப்புக்குரிய தலையோர்களுக்குரிய நிலங்கள் அவர்களுடைய வாழ்வுகாலத்தில் இறையினின் றும் விலக்கப்படுவதாக ; அவர்களுடைய உரிமைக்காரரும் அவ்விறையினின்றும் விலக்கப் படுவோராகுசு. ஆணுல், இவர்கள், கொடுக்கப்படும் பிங்கோதீர்வையைமட்டும் கொடுத்தல் வேண் டும். இஃது, இப்பொழுதும் பின்பும் ஆண்டுவிளைவில் பத்திலொரு பகுதியாக அரசினர்க்குக் கொடுபடல்வேண்டும். இத்தீர்வையும் அடுத்து வரும் வாசகத்தில் விலக்கப்படாதிருக்குமேல் கொ டுக்கப்படவேண்டும். அவராவார் : மொலிகொடை மகா நிலமை, மொலகொடை நிலமை, இரத்துவத்தை நிலமை, கடுகமுனே நிலமை, தெகிகம்மை நிலமை, முள்ளிகம்பை நிலமைஇவர் வெள்ளசவின் திசாவையாக இருந்தார் - எகனெலிகொடை நிலமை, மகாவள்ளத்தனை நிலமை, தொளசுவல நிலமை, எகலியகொடை நிலமை, மூத்த கட்டுககை, இளைய கட்டுககை, தம்புலனை நிலமை, கொடிய கெதர நிலமை, கொண்கொடை நிலமை-இவர் பிந்தனையில் அதிகாரமாக இருந்தவர்.
23. மேல்வகுப்பு, அல்லது கீழ்வகுப்பு ஆகிய பதங்களைக் கொண்டிருக்கும் தலையோர், கீழ்வகுப்பு தலைமைக்காரர் பதத்தைக் கொண்டிருப்போர் ஆகியோருக்குரிய நிலங்கள் அவர்கள் அப்பதம் வகிக்கும் காலத்தில் தீர்வையினின்றும் விலக்கப்பட்டன.
24. கறுவா வெட்டுவதற்கென அளிக்கப்பட்ட திணைக்களங்கள், நிறுவனங்கள் ஆகிய வற்றேடு சம்பந்தப்பட்ட மக்களுக்குரிய எல்லாக் காணிகளும் தீர்வையினின்றும் விலக்கப் பட்டுள்ளன. இன்னும், வேந்துக் காணிகளைப் பயிர் செய்வதற்கு, அல்லது பயிர் செய்ய உதவி செய்வதற்குக் கடமைப்பட்டவர்களின் காணிகளும் தீர்வையினின்றும் விலக்கப்பட்டுள்ளன. இன்னும், ஆணையோர் சபையினரால் திசாவைகளுக்கு நேர்ச்சேவை செய்வதற்கென விதிக்கப்பட்ட மக்களுக்குரிய காணிகளும் ஒர் ஊதியமுமின்றி கடப்புரளைச் சேவை, அல்லது அடப்பத்துச் சேவை செய்கின்றவர்களுக்குரிய காணிகளும் நீக்கப்பட்டுள்ளன. அடப்பத்துச் சேவை செய்வோரும் கடப்புரளைச் சேவை செய்வோரும் பொதுச் சேவைக்கென அனுப்பப்பட்ட தருணங்களில் ஊதியம் பெறுவதற்கோ, அறவிடுவதற்கோ, தண்டப்பணம் பெறுவதற்கோ உரிய வர்களல்லர். இவர்கள் அச்சேவைகளை வஞ்சகமின்றிச் செவ்விய முறையில் செய்வதற்குக் கட்டுப்பாடுடையர்.
25: நெற்காணிகள் இல்லா வேடரும் அரசினர்க்குரிய திறையினை மெழுகால் கொடுக்கக்
கடவர்.

Page 132
252
26. ஆள்பதிக்கோ, பிரிட்டிசு அதிகாரிகளுக்கோ எவ்வித பரிசும் அளித்தலாகாது ; பிரயாணம் செய்கின்ற ஒவ்வோர் அலுவலரும், படையினராக, குடிக்குழுவினராக, தலை யோரும் பட்டாளப் பகுதியினரும் அரசாங்க சேவையாளரும் தங்களுடைய பிரயாணத்தைப் பற்றியோ, அல்லது தாவடியைப் பற்றியோ அறிவித்தல் கொடுத்தால் அவர்களுக்கு நாட்டுக் குரிய பொருள்கள் நியாயமான அளவில் கொடுபடல் வேண்டும். இதற்கு அங்கு வழங்கும் உரிய விலை கொடுக்கப்படல் வேண்டும்.
27. அரசினர் கடப்பாட்டிற் காய் அமைந்த வழக்குக் களை உசாவுதற்கு திசாவை மாருக்கோ, மற்றவருக்கோ ஊதியமளித்தல் ஆகாது. பின்னர் கூறப்படும் வகைகளில் அறவிடலாம்.
28. அதிகார்கள், திசாவைகள், அரசாங்கத்திற்குரிய மேல் தலைமைக்காரர் ஆகியோருக்கு அவர் சேவை பொருட்டு நிலையான ஒரு மாதச் சம்பளம் கொடுத்தல் வேண்டும் ; இஃது, அவர்களுக்குரிய காணித் தீர்வை விலக்கப்பட்ட உரிமையுடன் மேற்கொண்டு அமைந்ததாகும்.
29. கீழ்வகுப்புத் தலைமைக்காரருக்குரிய சேவைகளுக்கும் மேற்கண்டவாறு தீர்வை விலக்கல் உரியதாகும். இவர்களுக்கு இவர்களின் கீழுள்ள மக்களிலிருந்து சேர்க்கும் வரி முறையி லமைந்த நெல்லில் 1/20 பங்கு கொடுபடும். இவர்களுக்கு இவ்வாறு அளிக்கப்படும் மக்கள் பிரிவு அரசாங்கத்தின் அதிகாரத்திற்கியைய ஆணையோர் குழுவால் அளிக்கப்படும்.
30. அரசாங்க முகவர்களோ, ஆணையோர் குழுவோ வேண்டியபொழுது எல்லா மக்களும் தத்தம் பழக்கவழக்கம், குடும்பம், காணியாட்சியுரிமை ஆகியவற்றிற்கேற்றவாறு தங்கள் உழைப்புக்குப் போதிய ஊதியம் கொடுக்கப்பெற்றல், அரசாங்க சேவைக்குக் கடமைப்பட்டவரா வர். இவ்வாணையோர் குழுவானது, மேன்மைதங்கிய பதியாள்வாரின் அதிகாரத்திற்கியைய, பொதுமக்கள் நலனுக்கு இப்பொழுதுள்ள சூழலிற் பயன்படா என்று கருதுகின்ற சில சேவை வகைகளை நலனுக்குரியவெனக் கருதப்படும் பிறவற்றிற்கு மாற்றலாம் ; இன்னும், தீர்வையில்லாக் காணிகளைக் கொண்டிருப்பதே கடப்புரளைத் திணைக்களம், அடப்பட்டுத் திணைக் களம் ஆகியவற்றின் சேவைக்கும், திசாவைமாரினுடைய சேவைக்குரிய மக்களுக்கும், கோயில் கிராமங்களிலுள்ள சில மக்கள் அரசினருக்குச் செய்யும் சேவைக்கும், பகுதியளவில் கறுவா வெட்டுவோருக்கும், சம்பளமாக அமைந்ததெனக் கருதப்படும். காட்ழித்துத் தெருக்கள் அமைத்தலும் பாலங்களை அமைத்தலும், திருத்தலும் அவை உள மாவட்ட மக்களுக்குரிய சம்பளமில்லாச் சேவையெனக் கருதப்படும். பெரு விழாவிற்கு வருதல், குறித்த சில மக்களுக் குக் கடமையெனின், அவர்கள் அதைத் தப்பாது ஊதியம் கருதாது செய்தல் கடனுகும். கோயில்கட்கும் தலையோருக்கும் வண்ணுர் ஊதியமின்றி வெள்ளைச் சீலை விரித்தல் கடனுகும்.
31. நாடெங்கணுமுள்ள கடவத்தைகளின் பழைய தடக்குக்களும் இதுமுதல் நீக்கப்பட்டு
ஒழிக்கப்படும். அவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கும் சகல சேவைகளும் இதனுல் ஒழிக்கப்படும்.
இவற்றிற் சேவை செய்த மக்களை ஆணையோர் குழு பயன்படக்கூடிய வேறு வேலைகளில் அமர்த்தலாம்.
32. கண்டி மன்னனுக்குக் கடமை செய்ய வேண்டியிருந்த, குறித்த, சில மக்களுக்குச் சேவை செய்வதற்கு விதிகள் ஆக்கவேண்டி நேரிடுகின்றது. அவராவார் : குணமடுவை எனப்படும் " பல்லக்குக் காவிகள், தலைப்பட வெதுனக்காரிய, தலப்பட்டுக் காவிகள், பந்தங்காரர் ஆகியோர். இவர்கள் தம் சேவைக்கேற்ற கூலியைப் பெற்றுத் தங்களுக்குரிய தொழில் முறையில் ஆள்பதி, மாட்சிமைதங்கிய மன்னரின் கழகத்திற்குரிய உறுப்பினர், படையணி வரிசையைச் சார்ந்த பொது அலுவலர், கண்டி அலுவல் ஆணையாளர், கண்டி மாநிலச் செயலாளர், உண்ணுட்டுப் படையேவு அலுவலர் ஆகியோருக்குச் சேவை செய்யக் கடப்பாடுடையர். V

203
33. எல்லாத் தலைவர்களும் மற்றையோரும் செய்யவேண்டிய பொதுச் சேவை, வாரி சேர்த்தல் ஆகியவற்றேடு சம்பந்தப்பட்ட எல்லாக் கட்டளைச் சட்டங்களையும் செவ்வனே நிறை வேற்றுவதற்குக் கண்டியிலுள்ள ஆணையோர் குழுவிற்கு கூட்டு முறையிலும் தனித்தனி திணைக்கள முறையிலும் ஆள்பதி அதிகாரம் அளித்து ஆணையிடுகின்றர் ; மாநிலங்களிலுள்ள அரசாங்க முகவர் ஆகியோர் இச்சேவைகளைச் செய்யத் தவறுவோரையும் செய்ய ஊக்கம் காட்டாது விடுவோரையும், அவரவர் வகைக்கு எற்றவாறு, அவர்களை வேலையினின்றும் நீக்கியும், பதத்தினின்று ஒருபொழுது நிற்பாட்டி வைத்தும், தண்டம் விதித்தும், சிறைவைத் தும் உரியதண்டனைகளை அளிப்பர். ஆனல், ஆள்பதியின் ஆணைபெற்ற எந்த ஆளும் அவராணை யின்றி வேலையினின்றும் அறவே நீக்கப்படலாகாது ; இன்னும், மேல்வரிசையிலமைந்த தலை யோர், கீழ்வரிசையிலமைந்த தலையோர் ஆகியோரைப் பதியாள் முகவர் ஆணையாலன்றி வேலையினின்றும் நிற்பாட்டிவைத்தல் முடியாது ; ஆள்பதியின் உத்தரவுகளினல் ஆணை பெற்ற முகவர் தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே அரசாங்கத்துக்கு உகந்தனவற்றையோ, "ஆணைகளையோ செய்யத் தவறுவது, அல்லது செய்யாதிருப்பது ஆகியவற்றுக்காக இவர்களைத் தண்டிக்கலாம் ; இவர்கள் உடனே அந்தந்த வழக்குகளுக்கு ஏற்றவாறு ஆள்பதிக்கோ, அல்லது பதிலாள்வாருக்கோ, தங்கள் உசாவின் நடவடிக்கைகளை இசைவிற்கோ, மறுப்பிற்கோ அனுப்பிவைத்தல் வேண்டும்.
34. கண்டி மாநிலத்திலுள்ள எல்லா வகுப்பினர்க்கும் நீதியானது உறுதியாகவும் உடனடியாகவும் வஞ்சகமில்லாமலும் நடத்தப்படுமென்பதற்காகத் தாம் மகிழ்வுகொண்டாரென மேன்மைதங்கிய ஆள்பதியானவர் கூறி, கீழ்க்கூறிய ஆட்சி யதிகாரத்தை அரசாங்கத்தின் பொது அலுவலர்களுக்கு, கண்டியர் குடியியல் முறையிலோ குற்றவியல் முறையிலோ, பிரதிவாதிகளாயமைந்த வழக்குக்களைக் கேட்பதற்கும் முடிவு செய்வதற்கும் உரிமையளிக் கின்றர்.
35. வழக்குப் பொருள் மதிப்பில் 50 இரிக்கு தொலர்களை மீறவிடத்தும் வழக்கானது காணிபற்றிய தல்லாவிடத்தும் ஆகிய குடியியல் வழக்குக்களை மட்டுமே கேட்டு முடிவு செய் வதற்கு ஒவ்வோர் அரசாங்க முகவருக்கும் சட்டவதிகாரமுண்டு. இவர்கட்கு மிக எளிய வகுப் பான குற்றவியல் வழக்குக்களையும் கேட்க உரிமையுண்டு. சிறு தாக்குதல்கள், சிறு களவுகள், அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் ஆகியவைபோன்ற வழக்குக்களே அவை. இவ்வழக்குக்களில் 25 இரிட்சு தொலர்களுக்கு மேலாகாத தண்டம் விதிப்பதற்கும் பிரம்பினலோ, கசையி னலோ 30 அடிக்கு மேலாகாத உடற் றண்டனை விதிக்கவும் ஊழியத்துடனே, இல்லாமலோ இரண்டு மாதத்திற்கு மேற்படாத தண்டனை விதிக்கவும் இவர்களுக்கு உரிமையுண்டு. இவர்கள் மேற்கூறிய விதிகளுக்கியையவே ஆணைகளைச் செய்யத் தவறுதல், ஆணைகளைச் செவ்வையாகச் செய்யத் தவறுதல் முதலியவற்றிற்குரிய தண்டமளித்தல் சிறையளித்தல் ஆகிய தண்டனைகளை யளிக்கலாம்.
36. மேற்கூறிய வாசகத்தில் அரசாங்க முகவர்க்கு அளித்தவாறுள்ள குற்றமளிக்கும் அதிகாரத்துடன், பிணக்குடைய பொருள் காணியல்லாவிடத்தும் ஒரு நூறு இரிக்கு தொலரிலும் கூடிய பெறுமானமில்லாவிடத்தும் எழும் வழக்குக்களிலும் குறைவான நிலை யுடைய குற்றவியல் வழக்குக்களிலும் இரண்டாம் ஆணையாளரான நீதித்துறை ஆணையாளர் தனித்து விசாரணை செய்யக் கூடிய அதிகாரமுடையர்.
37. இரண்டாவது ஆணையாளரான நீதிமுறை ஆணையாளரும் ஆள்பதியானவர் தம் கட்டளை களால் இதற்கென அதிகாரம் அளித்த மாகாணங்களிலுள்ள அரசாங்க முகவரும் கண்டி யிலும் மாகாணங்களிலும் மற்றை எல்லாக் குடியியல் வழக்குக்கள், மன்பழி கொலை ஆட் கொலை ஆகிய குற்றங்களல்லா மற்றைக் குற்ற வழக்குக்கள் ஆகியவற்றை ஆய்ந்து நீதிவழங்க மன்றுகள் நடாத்துவர் : இம்மன்றுகள் மரணதண்டனை, உறுப்புக் குறைப்பு ஆகிய அளவுக்குச் செல்லாத்தண்டனை அளிக்கலாம் ; இதில் கண்டியிலுள்ள மன்றில் இரண்டாம் ஆணையாளரும் தீருதலையோரும் இருப்பர் மாகாணங்களிலே, அரசாங்க முதல்வர்-குறைந்தது இரண்டு

Page 133
254
கண்டி மதிப்பாளர் இருக்குமாறு-மாகாணத்திலுள்ள ஒன்று அல்லது இரண்டு திசாவைமார் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொகத்தலைமார் அல்லது கோரளைமார், அல்லது திசாவை மார் இல்லாவிடத்து இரு மொகத்தலை மார் அல்லது கோரளைமார், இருப்பர்.
38. மாகாணங்களில் மன்றுகளின் முடிவிற்குப் பொறுப்பானவர் அரசாங்க முகவர்; கண்டி மதிப்பாளர் அறிவுரை கூறலாம் ; இம்மதிப்பாளரின் பெரும் பான்மை முடிவு அரசாங்க முகவரின் முடிவிற்கு மாறுபடுமெனின் உடனே ஒரு முடிபிற்கும் வரலாகாது ; ஆனல் விசா ரணை நடவடிக்கைகளை இரண்டாம் ஆணையாளர் மன்றிற்கு அனுப்புதல் வேண்டும். இவர் முறைமன்றில் நடந்த நடவடிக்கைகளைக் கொண்டு ஒரு முடிவிற்கு வரலாம், அல்லது வழக் குடன் தொடர்புடைய கட்சிகளையும் அழைத்து மீண்டும் விசாரணை செய்யலாம் ; அல்லது தாமோ அரசாங்க முகவரைக் கொண்டோ மீண்டும் புதிய சாட்சிகளை விசாரித்து முடிவிற்கு வரலாம்.
39. வழக்குப் பொருள் காணியாய் அல்லது நூற்றைம்பது இரிக்கு தொலரிலும் கூடிய பெறுமானமுடைய சொத்து உடைமையாயுள்ள விடத்து முகவர் முடிபிலிருந்து இரண்டாம் ஆணையாளர்க்கு மேன்முறையீடு செய்யலாம். இம்முறையீடு முகவர் தீர்ப்பு நடந்த பத்து நாட்களுக்குள் அவர் முன்னில் செய்தாலே வலுவுடைத்தாம் ; இத்தகை வகையில் நிறை வேற்றலுவல்நிற்பாட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கூறிய ஆணையாளர் மன்றிற்கு மாற்றப் படும் ; அம்மன்று மேற்கூறிய வாசகத்திலுள்ள முறையில் நடைபெறும், பெறல் வேண்டும் ; பத்து நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யாவிட்டால் ஆள்பதியின் ஆணையினல் அல்லது ஆணையாளரின் ஆணையினல் ஓராண்டுக்குள் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் எற்றுக் கொள்ளப்படும்.
40. இரண்டாம் ஆணையாளரின் முடியே அவர் மன்றின் முடிபாகும் ; கண்டி மதிப்பாளர் அறிவுரை கூறுவர் ; வழக்கில் மதிப்பாளரின் பெரும்பான்மை முடிவு ஆணையாளர் முடிவிற்கு முரண்படின், இவ்வழக்கு முதல் வழக்காகிலென், அரசாங்க முகவரிலிருந்தும், மேன்முறையீட்டாலோ ஆய்விற்கே அனுப்பப்பட்டு வந்ததாகிலென், கூட்டுச் சபைக்கு மாற்றப் படும் , அங்கிருந்து இது மேன்மைதங்கிய ஆள்பதிக்கு அறிவிக்கப்படும் ; அங்கு இவர் முடிவு இறுதியானது ; அதற்கு மேன்முறையீடில்லை ; இரண்டாம் ஆணையாளர் முடிவு செய்த குடி யியல் வழக்குக்களில், அவை முதலானவையாக அரசாங்க முகவரிடத்து மேன்முறையாலோ ஆய்விற்கோ வந்தவையாக, அவர் தீர்ப்புச் செய்து பத்து நாட்களுக்குள் அவர் முன்னிலையில் ஆள்பதிக்கு மேன்முறையீடு செய்தாலே அது வலுவுடைத்து. இன்னும், இங்கு வழக்குப் பொருள் காணியாகவோ நூற்றைம்பது இரிக்கு தொலருக்கு மேற்பட்ட சொந்த வுடைமை யாகவோ இருந்தாலே அது இயல்வதாகும் ; இவ்வகையில் தீர்ப்பின் செயற்படுத்து நிற்பாட்டி வைக்கப்படும் ; நடவடிக்கைகள் ஆள்பதிக்கு அனுப்பப்படும் ; ஆயினும், ஒராண்டுக்குள் மேன் முறையீடு செய்தால் ஆள்பதியின் உத்தரவால் அது எற்கப்படலாம்.
41. ஆள்பதிக்கனுப்பப்பட்ட மேன்முறையீடுகளை அவர் ஆணையோர் குழுவுடன் முடங்கல் தொடர்பு கொண்டு நீதிமுறைக்கியையத் தீர்த்து வைக்கலாம்.
42. குற்றவியல் வழக்குக்களில் அவை ஒரு நூற்றுச் சவுக்கடிக்கு மேற்பட்ட உடற்றண்டனை; சங்கிலியோடோ இன்றியோ சிறை, நான்கு மாதத்திற்கு மேற்பட்ட ஊழியம், ஐம்பது இரிக்குக்கு மேற்பட்ட தொலர் தண்டம் ஆகியவற்றை விதிப்பனவாயின், ஆணையோர் குழு மூலம் வழக்கை யும் தீர்ப்பையும் ஆள்பதிக்கு அறிவித்து, அவர் தீர்ப்பை உறுதிபடுத்து முன்னர், இரண்டாம் ஆணையாளரோ அல்லது அரசாங்க முகவரோ தீர்ப்புக்களை நிறைவேற்றலாகாது.
43. கெளரவ பதியாள்வார் அவர்தாம் உவந்தது என்று கருதியவிடத்து நீதியாணையாளர் மன்றில் தலைமை வகித்து உதவி புரியலாம் ; இன்னும், அவருடன் இரு கண்டித் தலையோரோ, மதிப்பாளரோ சேர்ந்து, மாட்டெறிவு, மேன்முறையீடு, நீதியாணையாளர்க்கென எடுத்து விதிக்கப்பட்ட குற்றவியல் வழக்குக்களில் தண்டனை விதிப்பைக் குறைத்தல் ஆகியவைபற்றிய்

255
விதிகளுக்கியைய மன்றுகள் நடாத்தலாம் ; ஒழுங்கு முறையைப் பேணுவதற்காக பதியாள் வார் நீதி விசாரணைகளின் பதிவுகள் ஒவ்வொரு வழக்காய்வின் பின்னரும் நீதியாணையாள ரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
44。 மன்பழி, கொலை, உயிர் நீக்கம் ஆகிய வழக்குக்கள் பதியாள்வார் மன்று, அல்லது இரண்டாம் ஆணையாளரோடு அவர் கண்டிய நீதியாய்வாளர் சேர்ந்த மன்று ஆகியவற்றில் நடைபெறும் ; இவ்வகைகளில் பிரதிவாதியின் குற்றம் குற்றவாளியாக்கபட்டவர் மீது விதிக்கப்படவேண்டிய தண்டம் ஆகியவைபற்றி இவர்கள் தம் கருத்தை ஆணையோர் குழு மூலம் அனுப்புதல் வேண்டும். இன்னும் ஆள்பதிக்கு அவர் முடிபிற்காக அனுப்புதல் வேண்டும்.
45. உயர் தலையோர் பிரதிவாதியாயமைந்த எல்லாக் குடியியல், குற்றவியல் வழக்குக்களும் முதன்முதலாக பதியாள்வார், அல்லது இரண்டாம் ஆணையாளர் முன்னில் தொடரப்படல் வேண்டும். மற்றை வழக்குக்கள் பிரதிவாதிகள் வாழும் நீதியாட்சியெல்லை மன்றுகளில் தொடரப்படல் வேண்டும். எல்லாக் குடியியல் வழக்குக்களிலும் வாதி தன்பொருட்டு வாதாட ஒரு நியாயவாதியை அமர்த்தலாம் ; அவ்வாறே பிரதிவாதியும் தன்னை எதிர்காக்க ஒருவரை அமர்த்தலாம்.
46. குடியியல் வழக்குக்களில் தகையறிந்து இரண்டாம் ஆணையாளரோ, அரசாங்க முக வரோ தோற்ற கட்சியை வழக்குப் பொருளின் பெறுமானத்தில், இருபதில் ஒரு பங்கை எவ்வகையிலும் இது ஐம்பது இரிக்கு தொலருக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும், அரசாங்கத்திற்குக் கட்டுமாறு பணிக்கலாம்.
47. முதலாம் அதிகாரும் இரண்டாம் அதிகாரும் எல்லாக் கடப்புரளைகள் மீதும் அவர் உடைமை மீதும் குடியியல் நீதியாட்சி அதிகாரம் கொண்டிருத்தல் கூடும் ; ஆயினும், இதனினின்றும் இரண்டாம் ஆணையாளர்க்கு மேன்முறையீடு செய்யும் பேறு இவர்க்குண்டு. இன்னும், இவ்விரு பேரலுவலுவலரும் எவரெவர் மீதும் எவர் உடைமை மீதும் குடியியல் நீதியாட்சியதிகாரம் கொள்ளலாமென்று ஆள்பதியானவர் சிறப்புக் கட்டளையான் அதிகாரம் அளிக்கின்றரோ, அவர் மீதும் அவர் உடைமை மீதும் இவர் அதிகாரம் செலுத்தலாம். இங்கும், மேற்கூறிய மேன்முறையீட்டுரிமையுண்டு. இரண்டாம் ஆணையாளரும், எந்த அரசாங்க முகவரும் அதிகார்மார்க்கும், திசாவை மார்க்கும், மொகத்தலைமார்க்கும் வழக்குக் களை உசாவி தமக்குத் தம் மன்றில் அறிக்கை கொடுக்குமாறு வழக்குக்களை அனுப்பலாம்.
48. சிறு குற்றங்களுக்கும் தம் கட்டளைகளை நிறைவேற்றமைக்கும் திறந்த கையால் ஐம்பதுக்கு மேற்படா அடிகளும், முதுகில் இருபத் தைந்துக்கு மேற்படா பிரம்படிகளும், பதினறு நாட்களுக்கு மேற்படாத சாலத்திற்கு மறியலும் தண்டனையாகவளிக்க அதிகார் மார்க்கு நீதியாட்சியதிகாரமுண்டு.
49. ஆள்பதி ஆணைகொண்ட திசாவைமாரும், தலையோரும் குற்றங்கட்காக, திறந்த கையால் இருபத்தைந்துக்கு மேற்படாத அடிகளும், எழு நாட்களுக்கு மேற்படாத காலத்திற்கு மறியலும் விதிக்கலாம். இவ்வாறே, பதவி வகிக்கும் பிரதம மொகத்தலை மார், இலினாாளைமார், கோரளைமார், முந்திய அரசாங்கத்தில் தாம் அதிகாரம் வகித்த மக்கள் மீது, குற்றங்கட்காக, திறந்த கையால் பத்திற்கு மேற்படாத அடிகளும், மூன்று நாட்களுக்கு மேற்படாத காலத் திற்கு மறியலும் விதிக்கலாம். இத்தகைய அதிகாரத்துக்குட்பட்டோர் குறித்த அதிகார்மார், திசாவை மார், தலைமை மொகத்தலை மார், இலினராளைமார், கோரளைமார் ஆகியோரின் கட்டளை களுக்குச் சட்டப்படி கீழ்ப்பட்டவராயிருத்தல் வேண்டும் ; இத்தகைய அதிகாரம் அலுவற்பதம் வகிப்போர், கீழ்நாட்டோர், பிறநாட்டார், கண்டி மாகாணச் சோனகர் ஆகியோர் மேல் செலுத்தப்படலாகாது. மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காலத்திற்குச் சிறையளிக்கப்பட்டதெனின் சின்றயாளியை மறியலில் வைக்கும்பொருட்டு இரண்டாம் ஆணையாளரிடம் தண்டனைக்குரிய குறிப்புத் துண்டுடன் அனுப்புதல் வேண்டும்.

Page 134
256
50. ஒருதன்மைத்தாய ஆட்சி நிலைபெறுவான் பொருட்டு பதியாள்வார், இரண்டாம் ஆணையாளர், அல்லது அரசாங்க முகவர் ஆகியோர் முன்னிலையில் நடக்கும் குற்றவியல் குடியியல் வழக்குக்களில் அளிக்கப்படும் சாட்சிகள் யாவும் சத்தியமளித்த பின்னரே எடுக்கப் படல் வேண்டுமென்று ஆள்பதி அவர்கள் சட்டப் பிரகடனம் செய்கிறர் ; இவ்வித சத்தியம் கண்டியர், இந்துக்கள் ஆகியோர் வகையில் சாட்சி கொடுத்தபின் அண்மையிலுள்ள தேவால யத்தில் இதற்கென நியமித்த ஆணையாளர் ஒருவர் முன்னே, பலர் முன்னே செய்தல்வேண்டும்; இவ்வாணையாளர் முன் சாட்சி கொடுத்தோர், தாம் அளித்தது முழுவதும் உண்மையன்றிப் பிறிதல்ல என்று பயபத்தியுடன் உறுதி கூற வேண்டும். இதற்கு, பெளத்த பிக்குமார் சம்பந்தப்பட்ட வகையிலன்றி விதிவிலக்குக் கிடையாது ; பிக்குமார் அன்றி மற்றையோர் சாட்சி யளிக்கும்பொழுது நின்றுகொண்டே சாட்சியளித்தல் வேண்டும்.
51. கண்டி மாகாணங்கட்கு வரும் கீழ் நாட்டவரும் புறநாட்டோரும், அரசாங்க முகவரின் தனிக் குற்றக் குடியியல் சட்டவதிகாரத்துக்காட்படுவர் ; இவ்வகையில் இவ்முகவர்க்கு ஆள்பதி கூடிய சிறப்புடை அதிகாரங்கள் அளித்தல் கூடும் ஆணையாளர் குழு மூலம் ஆள்பதிக்கு மீளாய்விற்கு அனுப்பும்வரை, 42 ஆம் வாசகத்தில் கண்டியர்க்கு விதித்த குற்ற வியல் வழக்குத் தண்டனைகளை நிறைவேற்றுவதற்குரிய கட்டுப்பாடுகட்கு அமைந்தே முகவர் தம் அதிகாரத்தைச் செலுத்துவர். மன்பழி, கொலை, ஆட்கொலை ஆகியவை இவ்விதிக்கு விலக் காம் ; இவ்வகைகளில் மேற்கூறியோர் கண்டியர்க்குரிய சட்டவதிகாரத்தைப் பெறுவர் : கண்டிச் சோனகர் பிரதிவாதிகளாயிருக்கின்ற வகையிலும் இவ்வாருய முறையே கடைப் பிடிக்கப்படும்.
52. மேன்மைதங்கிய ஆள்பதியவர்கள் சோனகர் பற்றிய 1818 ஆம் ஆண்டு மாச்சு இரண்டாம் தேதி கொண்ட பிரகடனத்தில் ஏற்பாடுகளை உறுதிப்படுத்துகின்றர் ; ஆயினும், இவர்கள் கண்டியர் வாழும் கிராமங்களில் வாழில், கண்டித் தலையோரின் அல்லது கிராமத் தலைமைக்காரரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும் , தவறின் மேற்கூறிய பிரகடனத் தில் எவ்விதம் கூறப்பட்டிருப்பினும் அரசாங்க முகவர் தண்டனைக்கு ஆளாதல் வேண்டும்.
53. அறியப்பட்ட சட்டங்களுக்கியைய எவர்க்கும், கீழோராக, மேலோராக, செல்வராக, வறியோராக, செயன்முறையில் எவ்வளவு இயலுமோ அவ்வளவில் முடிபின் ஒரவஞ்சனை யற்ற தன்மையில் முழு நம்பிக்கையுடனும் நீதி வழங்கப்படும். நீதி பரிபாலனத் திட்டத்தைச் செயற்படுத்தவும், பொது வாரியைச் சேர்க்கவும், பொதுக் கடமைகளை நிறைவேற்றவும், ஆணை யோர் குழுவின் கட்டுப்பாட்டிற்கும் சட்டவதிகாரவாட்சிக்கும், கீழ்வரும் மாகாணங்களை உடனே ஒப்படைக்க ஆள்பதி கருதியுள்ளார். நாலுகோராளைகள், மாத்தளை, மேல் புலற்கமையைக் கொண்ட உடபலாத, உடுநுவரை, யற்றிறுவரை, தும்பணை, அரிசுபட்டு, தும்பரை, எவகேதா, கொத்துமலை, குட, உம உருளை ஒயா ஆகியவற்றிற்கு மேற்பால் கிடக்கும் வலப்பனையின் பகுதி, நுவரகலாவியாவின் தமிரவனை மமினியா, உலகலைப்பட்டுக்கள். இவற்றில், உயர் நீதிமுறைக் கடமைகள் வாரி சேர்த்தல் குழுவின் ஆணையோரால் நடாத்தப்படும் ; ஆயினும், இவ்வெல்லை களுக்குள் நாலு கோரளைகளின் அடப்பிற்றியாவிலும் மாத்தளையில் நாலந்தாவிலும் சிறு வழக்குக்களை உசாவ ஈர் அரசாங்க முகவர் இருப்பர்.
54. ஊவாவில் ஒர் அரசாங்க முகவர் இருப்பார் ; அவரின் நேர்ச் சட்ட்வதிகாரத்துள் ஊவா, வெல்லாச, பிந்தனை, வியலுவா மாகாணங்களும் மதுல எனும் வேந்துக் கிராமம் இருக்கும். மேற்கூறிய விதிகளுக்கியைய அவை கூறும் புறனடைகள் நீங்கலாக எல்லாக் குற்றக் குடியியல் வழக்குக்களையும் அவர் விளங்குவர். வாரி சேர்க்க, பொதுச் சேவையாற்ற, பணியாமைக்காகத் தலைமைக்காரரை வேலையினின்றும் நிறுத்த, தண்டனையளிக்க அவர் கட்டளையளிக்கலாம்; அவ்வெல்லைகளுக்குள் ஆணையோர் குழுவின் மேற்பார்வைக்கமைய (ou அரசாங்கவாணையை அவர் செலுத்தலாம். " .א *

257
55. இவ்வாறே வழு கோரளைகளுள் உள்ள ஓர் அரசாங்க முகவர் அம்மாகாணத்திலும் நுவச கலாவியாவின் வடபுலத்திலும் ஆணை செலுத்துவர். சபிரகம மாகாணத்து அரசாங்க முகவர் ஒருவரும் அம்மாகாணத்தில் அவ்வாறே செய்வர். மூன்று கோரளைகளிலும் இத்தகை யதிகாரம் பெற்ற முகவர் உறைவர். திருக்குணமலையிலுள்ள சேர்வையாளரும் தம்பங்கடவை யில் எல்லா வழக்குகளையும் விசாரிப்பார் ; வாரி சேர்ப்பார் ; பொதுச் சேவை நடைபெறச் செய்வார்.
56. இப்பிரகடனத்திலும் இதற்கு முன் பிரிட்டிசு அரசாங்க அதிகாரம் வெளியிட்ட பிர கடனத்திலும் சொல்லப்படா எல்லா அலுவல்களிலும் தமக்கும், பின்வருவோர்க்கும் பிழை நீக்கி வேண்டிய நல் விருப்புடை நடவடிக்கைகள் எடுக்கும் உரிமையை மேன்மை தங்கிய ஆள்பதிவரைவுபடுத்திக் கொள்கின்றர். வருங்காலத்தில் வேண்டியதெனவும் இன்றியமை யாததெனவும் தோன்றுமெனின் இவ்வேற்பாடுகளை மாற்ற அவர்க்கு முழுச் சுதந்திர முண்டு ; குடிபடையலுவலர், அதிகார், திசாவைமார், தலையோர், மாட்சிமை தங்கிய மன்னர், குடிமக்கள் யாவரையும் கீழ்ப்படிவுடையோராய் இருக்குமாறும் இக்கட்டளைகளையும் மற்றவற் றையும் நிறைவேற்றுவதில் அவர்க்குத் துணையாயும் உதவியாயும் இருக்குமாறும் மாட்சிமை தங்கிய மன்னர் பேரில் வேண்டுகின்றர் ; ஏனெனில், மாறுபடுவர் துயருறுவார் என்க.
மேற்கூறிய இலங்கைத் தீவில் ஆயிரத்தெண்ணுாற்றுப் பதினெட்டாம் ஆண்டு நவம்பர் இருபத்தொராம் நாள் கண்டியில் வெளியிடப்பட்டது.
மேன்மைதங்கிய ஆள்பதி ஆணையின், சியோ உலுசினன், கண்டி மாகாணச் செயலாளர்.
அறசை இறை காக்க,

Page 135
258
பின்னிணைப்பு WI
நிதித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் :-
(அ) நிறைவேற்றலுவல்கள்
1. மத்திய நிதிப் பதிவுகளைப் போற்றல். 2. அரசின் முக்கிய காசு வங்கி நிலுவைகளை நற்காப்புடன் பேணலும் வகுத்தலும். 3. பொதுக் கடனை ஆள்தலும் அரச நிதிகளை முதலீடு செய்தலும். 4. சுங்கம், தீர்வை, உப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட பணம் உட்பட, பொதுப் பணத்தை எற்றலும் செலவழித்தலும்.
5. இளைப்பாறற் சம்பளத்தைக் கணித்தலும் அளித்தலும். 6. அமைச்சர் சபையால் அரசாங்க சபைக்குச் சமர்ப்பிப்பதற்காக ஆண்டு வரவு செலவுத் திட்டம், மதிப்பீடு ஆகியவற்றை ஆக்கல்.
7. அமைச்சர் சபையால் அரசாங்க சபைக்கு அளிப்பதற்காகக் குறைநிரப்பு மதிப்பீடுகளை ஆக்கல்.
8. திணைக்களங்களுக்கு நிதி அனுமதிகளை அறிவித்தல். - 9. நாணய ஆணையாளருக்குரிய நியதிச் சட்டமுறைக் கடமைகள். (மற்றை ஈராணையாள ருடன் கலந்தாலோசித்துச் செய்ய வேண்டியது)-1884 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம் 32, தொகுதி 1, பக்கம் 888 பார்க்க. மற்றை ஈராணையாளரும் தலைமைச் செயலாளராகவும் கனக்குப் பரிசோதகராகவும் இருத்தல் வேண்டுமென்றும் பிற்கூறியவர் வாரிக் கட்டுப் பாட்டதிகாரியின் இடத்தை எடுத்தல் வேண்டுமென்றும் அவர் தமக்கியல்பான பதமான உள்ளூராட்சித் திணைக்களத் தலைமைப் பதவியினை எடுத்தல் வேண்டுமென்றும் நாம் இங்கு எடுத்தியம்புகின்ருேம்.
10. முத்திரை ஆணையாளருக்குரிய நியதிச் சட்டக் கடமைகள்.-1909 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம் 22, தொகுதி 2, பக்கம் 895 பார்க்க.
11. மரணச் சொத்துவரி ஆணையாளருக்குரிய நியதிச் சட்டக் கடமைகள்.-1909 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம் 8, தொகுதி 3, பக்கம் 604 பார்க்க.
12. கடன் சபை ஆணையாளருக்குரிய நியதிச் சட்டக் கடமைகள். (ஆள்வார் நியமிக்கும் மற்றை ஈராணையாளர்களுடன் கலந்தாலோசித்துச் செய்யவேண்டியது)--1885 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம் 4, தொகுதி 1, பக்கம் 558 பார்க்க.
13. உள்ளூர்க் கடன்கள், அபிவிருத்தி ஆணையாளருக்குரிய நியதிச் சட்டக் கடமைகள். (ஆள்பதி நியமிக்கும் அவற்றிற்குரிய ஆணையாளருடன் கலந்தாலோசித்துச் செய்யவேண்டி யது.)-116 இன் 22 ஆம் இலக்கக் கட்டளைச்சட்டம், தொகுதி 3, பக்கம் 414 பார்க்க. இவ்வாணை யாளருள் இயல்பாகவே உள்ளூராட்சியுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க சபை நிறைவேற்ற குழு பிரதிநிதிகள், அத்திணைக்களத்தில் நிறைவேற்று அதிகாரி ஆகியோர் இடம் பெறுவர்.
14. விதவைகள், அஞதைகள் நிதி அதிபதி, அரசாங்க அலுவலர், இளைப்பாறற் சம்பள நிதி அதிபதி ஆகியோருக்குரிய நியதிச் சட்டக் கடமைகள். (ஆள்பதி இதற்கென நியமிக்கும் மற்றை அதிபதியுடன் கலந்தாலோசித்துச் செய்யவேண்டியது)-1898 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம், எண் 1 தொகுதி 2, பக்கம் 396 பார்க்க.
15. அரசாங்க அலுவலர் கொடுக்கவேண்டிய உறுதிப் பணத்தை உறுதியாக்கலும் அவர்களின் பிணைகளைக் காத்தலும்.
16. கடன், முதலீடு ஆகியவற்றின் செலவீடு, வரவு ஆகியவற்றேடு சம்பந்தப்பட்ட எல்லா விடயங்கள்பற்றியும் வெளிநாட்டிலுள்ள முகவர், முடிக்குரிய முகவர் ஆகியோருடன் தொடர்டி கொண்டிருத்தல்.

259
(ஆ) மேற்பார்வைக் கடமைகள்
1. எல்லாத் திணைக்களங்களின் நிதியியல் முறைகளையும் கணக்குப் பதிவையும், மேற் பார்வை செய்தலும் கட்டுப்பாடு செய்தலும்.
2. களஞ்சியக் கொள்முதல்கள், களஞ்சியக் கணக்குப் பதிவுகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடு செய்தலும் மேற்பார்வை செய்தலும், எல்லாத் திணைக்களங்களின் களஞ்சியங் களைக் காத்தலும்.
3. எல்லாத் திணைக்களங்களுக்கும் உரிய களஞ்சியக் காப்பு விதி முறைக்கும் கணக்குப் பதிவுகளுக்கும், இசைவளித்தலும் ஆய்தலும்.
4. எல்லாத் திணைக்களங்களிலும் ஒப்பந்தங்களை ஆக்கல், ஆளல் ஆகியவற்றை மேற். பார்வை பார்த்தலும் கட்டுப்பாடு செய்தலும்.
5. களஞ்சியங்கள், பொதுப்பணங்கள் ஆகியவற்றின் இழப்புக்களைப்பற்றி விசாரணை செய்தல்.
6. சேவை நலன்களைச் சார்ந்த கேள்விகள் :-
(அ) சம்பள விகிதங்களும் சம்பளத் திட்டங்களும். (ஆ) படிப்பணங்கள். (இ) விடுதலை விதிகள். (ஈ) பிரயாண விதிகள்.
7. திணைக்களத் தாபனங்களின் பருமன்பற்றிய கேள்விகள்.
8. எல்லாத் திணைக்களங்களிலும் கணக்குப் பதிவலுவலர்கள், நிதி அலுவலர்களை நியமித்தல்.
9. புகைவண்டிப் பாதைக்குரிய விகிதங்கள், பயணக் கூலிகள்.
(இ) அறிவுரைக் கடமைகள்
1. பொதுவாக வாரி சேர்த்தலும் வரி விதித்தலும்.
2. திணைக்களங்களின் செலவுபற்றிய முன்னிடுகளும் அவற்றலெழும் பிரச்சினைகளும.
3. பெரிய வேலைகளுக்குப் பணமளித்தலும் கடன் எடுப்பதும்.
4. நாணயமாற்றுப் பிரச்சினைகள்.
5. மாநகர சங்கங்கள், மற்றை உள்ளூர்ச் சபைகள் ஆகியவற்றேடு உள்ள நிதித் தொடர்புகள்.
6. பொதுவான நிதிப்பூட்கை,

Page 136
260
பின்னிணைப்பு VII
இலங்கையினின்றும் ஆணைக் குழு புறப்படுகின்ற பொழுது நடந்த பிரியாவிடை முடங்கற்றெடர்பு (1) பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கை, சனவரி 18, 1928
நாங்கள் இந்நாட்டுக்கு வந்தவுடனே, எங்கள் கடமையில் உதவி அளிப்பதற்காக, எலவே அளித்த வாக்குறுதிகளைப் பாராட்டி நாம் எவ்வாறு அறிக்கை கொடுத்தோமோ, அவ்வாறே, இப்பொழுதும் நாங்கள் இந்நாட்டைவிட்டுப் புறப்படுகின்றபொழுது, அவ்வாக்குறுதியை முழுமையில் நிறைவேற்றியதற்காக, எங்களுடைய நன்றியறிதலைக் கூற விரும்புகின்ருேம். மக்களின் எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக எங்களுக்கு உண்மைகள், நோக்குக்கள், கருத்துக்கள் எடுத்தியம்பப்பட்டன; இன்னும், தனிப்பட்ட முறையிலே பலர் இப்பொழுதுள்ள நிலைமைகளைப்பற்றிப் பயன்படும் விமரிசனம் அளிக்க முன் வந்தனர். இன்னும், அவை எவ்வாறிருத்தல் வேண்டுமென்றும் பயன்படும் குறிப்புக்களைப் கூறவும் அவர் வந்தனர். எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியனவாகவும், இலகு வில் நடக்கக் கூடியனவாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்ட பயணங்களிலே, நல்லெழில் ஓங்கும் இந்நாட்டைப்பற்றி எங்களுடைய ஆராய்வுகளுக்கு எல்லாம், பிற்களமாக அமையக் கூடிய அறிவு எங்களுக்குக் கிடைக்கப் பெற்றது. இன்னும், எங்களுடைய ஆராய்ச்சிக்காய நல்வாய்ப்பளித்த நிலையங்கள், தாபனங்கள் ஆகியவற்றலும் எங்களுக்கு நல்லறிவு கிடைத் தது. நாடெங்கணும், எங்களுடைய கடமைகளைத் தீர்க்கின்ற முறையிலே, எழும் இடர்கள், யாவும், அந்தப் பிரச்சினைகளோடு இயல்பாக அமைந்தவையாய் இருத்தல் வேண்டுமன்றி, மக்களின் செயலால் எழுந்தனவாக இருத்தலாகாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக நல் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
எனவே, மாட்சிமைதங்கிய மன்னரின் அரசாங்கத்திற்கு இலங்கையின் வருங்கால நலனுக்கு உதவக் கூடியனவான எடுத்துரைகளைச் செய்யும் தொழிலுக்கு, இன்றியமையாத தகவல்களைச் சேகரிப்பதற்குரிய எல்லா அனுகூலமான சந்தர்ப்பங்களையும், நன்முறையில் பயன்படுத்துவ தற்கு நாங்கள் முயன்றுள்ளோம் ; இதுவே, எங்களுக்கு அளிக்கப்பட்ட கடமையில் முழுக் கூறயமைந்தது. இப்பொழுது நாங்கள் இரண்டாவது கூறுக்குச் செல்வோம். அது எங்கள் எடுத்துரைகளை வரைவதேயாம். மிக்க பொறுப்புணர்ச்சியுடனும், எவரால் நாம் மிக்க நற் கண்ணியமான முறையில் வரவேற்கப்பட்டோமோ, அவர்களிடமிருந்து நாம் இப்பொழுது துயருடன் விடைபெற்றுச் செல்கின்றேமோ, அவர்களுக்கு நல் உவப்பான பரிவு கொள்முறை யிலும் அத்தொழிலில் நாம் ஈடுபடுவோம் என்பதை இலங்கை மக்கள் நன்கு மனதிற் கொள்ளலாம்.
(II) ஆணைக்குழுவின் செயலாளரிடமிருந்து கெளரவக் குடியேற்றச்
செயலாளருக்கனுப்பிய முடங்கல்.
புதிய நகர மண்டபம், கொழும்பு, சனவரி 13, 1928. ஐயா,
இலங்கை யாப்பினை ஆயும் சிறப்பாணக் குழுவினர், அவர்களின் ஆய்வுகள் இப்பொழுது முடிவுறும் தறுவாயிலிருக்கின்றன என்றும் சனவரி 18 ஆம் நாள் அவர்கள் தாம் இங்கி லாந்துக்கு பி. அன். ஓ. எசு.எசு. மொழ்தேவியாவில் எறிச் செல்வதற்கு முடிவு கொண்டுள்ள னர் என்றும் மாட்சிமைதங்கிய ஆள்பதிக்குக் கூறுமாறு வேண்டிக்கொள்ள எனக்குக் கட்டளை அளித்துள்ளனர்.

26
2. இலங்கை அரசாங்கம் தமக்களித்த விருந்தோம்பலை ஆணைக் குழுவினர் நன்கு பாராட்டுகின்றனர்; அவர்களுக்கு நலன் அளிக்கவும் அவர்கள் வேலையை இலகுவாக்கவும் எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கும் அவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றனர். ஆணைக் குழு நாட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்னரே குழுக்கள் தலைவர் இந்த உணர்ச்சிகளை வெளிமுகமாகக் கூற எற்றதொரு வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனினும், விருந் தோம்பும் நல்வரவு மனங்கனிந்த ஒத்துழைப்பு, கெளரவ உறுப்பினர்கள் தாராளமாக அளித்த பயனுடைய உதவி ஆகியவற்றிற்குரிய நன்றியறிதலை, சட்டசபைக்கு அறிவிப்பதற்கு மேன்மைதங்கிய ஆள்பதி யானவர், தமக்கியைந்த முறையில் முறையான வழிவகைகள் எடுப்பரேல் தலைவர் மிக்க மகிழ்ச்சியுறுவர்.
3. மேலும், ஆணையாளர் தமக்களிக்கப்பட்ட அலுவலர்கள் அளித்த சேவைகளுக்குரிய நற்பாராட்டை எடுத்தியம்புமாறும் எனக்குக் கூறியுள்ளனர். சிறப்பாக திறமையும் பரிவும் உடைய திரு. எசு. பிலிப்புசன் சீ. சீ. எசு. அவர்களை உதவிச் செயலாளராகத் தங்களுக்கு அளித்ததற்காக மேன்மைதங்கிய ஆள்பதி அவர்களுக்குத் தங்கள் நன்றியறிதலைக் கூறு மாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இன்னும், தங்கள் தலைமை எழுதுநராக, மிக்க அனுபவம் பெற்ற திரு. பி. எம். கிறித்தல்சு போன்ற ஒருவரைத் தாம் பெற்றமைக்காக, ஆணைக் குழு மகிழ்ச்சியடைகின்றது. அவர்கள் தங்களுடைய கடமைகளை, அலுவலகத்தை நிறு வும் முதற்கடமை உட்பட, ஒயாத் திறனுடனும் ஆர்வத்துடனும் ஆற்றியுள்ளார்கள். அவ ருடைய ஓயா முயற்சியினலேயே, ஆணையாளருக்குரிய மிகப்பரந்த முடங்கல் தொடர்பு, அமைவுறும் வழியில் தீர்க்கப்பட்டது. இவ்வலுவலர் அளித்த சேவைகளைப் பற்றி ஆணை யாளர் தம் அறிக்கையில் குறிப்பிடக் கருதியுள்ளார்கள்.
4. திருவாளர்கள் : வி. சி. தேவகுலவரத்தின, யி. சி. மொரயசு, திரு. எல். டபிள்யு. பெரேரா ஆகியோர் ஆணைக் குழுவிற்குப் பேருதவியளித்தனர். இவர்கள் தம் கடமையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, ஒருவிதமான முறையீடுமின்றி பல மணிநேரம் இடையருது உழைத் துள்ளனர். அவர்களிலேயே பெரும்பாலும் சான்றுகளைத் திறம்பட வரைதல், ஆணையாளரின் தட்டச்சடித்தல் வேலை ஆதியன தங்கியிருந்தன. அவர்களிடமிருந்து பெரும் வேலை எதிர் பார்க்கப்பட்டதாயினும், அவர்கள் எப்பொழுதும் தருணத்திற்கேற்றவர்களாகவே நடந்து கொண்டனர். அவர்களுடைய சேவையை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துரைப்பதில் ஆணைக்குழு மகிழ்ச்சியடைகின்றது. இக்குறிப்புக்கள் யாவும் ஒத்த முறையிலே மற்றை உதவி யாளர்க்கும் பொருந்துவனவாகும். இவர்கள் திறம்படக் கடமைபுரிந்துள்ளனர்.
5. இன்னும், இலங்கை அரசாங்க இருப்புப்பாதை பொது முகவர் அவர்களுக்கும் அவர் திணைக்கள அலுவலர் யாவருக்கும் ஆணையாளர் இவ்விலங்கையிலே தம் கடமை பொருட்டுச் செய்த பயணங்களை அற்புதமாக அமைத்துக் கொடுத்ததற்காக, ஆணைக் குழுவினரின் நன்றி யறிதலைத் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நலனை மிக்க நன் முறையில் அவதானித்து அதற்கேற்ற கவற்சியும் கருத்தும் எடுத்துக் கொண்டதையிட்டு ஆணைக் குழு மிக்க நன்றியுடையதாக இருக்கின்றது. இன்னும், ஆணையாளரின் பயணமானது திறம்பட முடிவதற்கு ஏற்ற உரிய எல்லாத்திறனுடையமைப்புக்களையும் கண்டு ஆணையாளர் மகிழ்ச்சியுற்றனர்.
இன்னும், ஆணையாளர் சென்ற மாகாணங்களிலுள்ள அரசாங்க முகவர்கள், ஆணையாளரை வரவேற்று அவர்களுக்கு உறைவிடமளிப்பதற்குச் செய்த ஒழுங்குகளையிட்டு, ஆணையாளர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றனர்.

Page 137
262
6. இறுதியாக, ஆணைக்குழுவினர் இலங்கைக்கு வருகின்றபொழுது, அவர்களுடைய ஆய்வுகளுக்கேற்றதோர் அரசியற் சூழ்நிலையிலே தாங்கள் வரவேற்கப்பட்டதையிட்டு தங்களை நற்பேறு பெற்றவர்கள் எனக் கருதுகின்றர்கள் என்பதை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்னும், நாட்டில் தங்யிகிருக்கின்ற காலத்திலே நாட்டிலுள்ள பல்வேறு சமுதாயத்தினர் களுக்கும் அவர்களுக்கும் இடையிருந்த உறவிலே, இந்நல்லுறவு பேணப்பட்டதென்பதையும் அறிந்த அவர்கள் மகிழ்வுறுகின்றர்கள். இன்னும், அவர்கள் இந்நாட்டைவிட்டுப் போகின்ற பொழுது எப்பொழுதும் இந்நாட்டைப்பற்றி நல் மகிழ்வுடன் நினைவு கூர்வார்கள் என்றும், அவர்களுடைய ஆய்வு ஆலோசனை ஆகியவற்றல் வரும் விளைவு, இந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நிலையான நன்மையைப் பயக்குமென்ற ஒரு நம்பிக்கையும் உண்டென்றும் அவர்கள் தங்களுக்கு அறிவிக்கச் சொல்லியுள்ளார்கள்.
இங்ங்ணம்
பி. எ. கிளட்டபக்கு செயலாளர்.
(II) குடியேற்றநாட்டுச் செயலாளரிடமிருந்து ஆணைக்குழுவின் செயலாளருக்கனுப்பிய முடங்கல்
குடியேற்ற நாட்டுச் செயலாளர் அலுவலகம்,
கொழும்பு, சனவரி 17, 1928. ஐயா
சிறப்பாணைக் குழுவின் ஆய்வுகள் முடிவடைந்ததுபற்றிக் கூறும், தங்களுடைய சனவரி 13 ஆம் நாளிட்ட முடங்கல் கிடைத்ததை உங்களுக்கு அறிவிக்குமாறு எனக்குப் பணிக்கப் பட்டுள்ளது ; அம்முடங்கல் மேன்மைதங்கிய ஆள்பதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2. சட்டசபை அளித்த ஒத்துழைப்பு, உதவி ஆகியவற்றிற்கு ஆணைக் குழுவினர் அனுப்பிய நன்றியறிதற் செய்தியை அவர்களுக்கு அறிவிப்பதையிட்டு மேன்மைதங்கிய ஆள்பதி அவர்கள் மகிழ்வடைந்துள்ளார்கள் என்று உங்களுக்கு அறிவித்துக் கொள்கின்றேன்; இன்னும், அரசாங்க முகவர்கள், இலங்கை அரசாங்க இருப்புப்பாதைப் பொது முகவர், அலுவலர் ஆகியோர் ஆணைக்குழுவினர்க்கு அளித்த நல்லுதவி பொருட்டு ஆணையோர் அறிவித்த நற்குறிப்புக்களையும் அவர்களுக்கு அறிவிப்பதிலும் அவ்வாறே.
3. இன்னும், உதவிச் செயலாளர் திரு. எசு. பிலிப்புசன், திரு. பி. எம். கிறித்தபல்சு, ஆணைக் குழுவினர்க்கு அளிக்கப்பட்ட ஆழுதுவினைஞர், அலுவலர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட வேலை, திறம்பட ஆணைக்குழுவினருடைய உவப்பிற்கு இயையுமாறு நடாத்தப்பட்டதை யறிந்து மேன்மைதங்கிய ஆள்பதி அவர்கள் உவகை கொண்டுள்ளார்கள் ; இன்னும், ஆள்பதி அவர்கள் இவ்வலுவலர்கள் சேவையை ஆணைக் குழுவினர் எடுத்துரைத்தை அவர்களுக்குரிய கோப்புக்களிலே பதிவு செய்யுமாறு கட்டளை அளித்துள்ளார்கள்.
4. முடிவில், இந்நாட்டு மக்களின் எல்லா வகுப்பின்ரிடமிருந்தும் பெற்ற நல்வரவுபற்றி அவர்கள் மிக்க நன்றியறிதலுடன் குறித்ததையிட்டும், இன்னும், அந்நல்வரவை இந் நாட்டு மக்களிடையும் தூண்டி வளர்த்து, தங்களுடைய அனுதாபத்தின் உண்மையால், எல்லா மக்களிடையிலும் ஒருமித்து ஒரு பற்றுறுதியை வளர்த்ததற்கும், ஆணைக் குழுவின் உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும், மேன்மைதங்கிய ஆள்பதியவர்கள் தங்க ளுடைய அன்புறவான நன்றியறிதலை அறிவிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளுமாறு எனக்குக் கூறியுள்ளார்கள்.
இங்கினம்,
எ. சி. எம். பிளச்சர், குடியேற்றநாட்டுச் செயலாளர்.

263
(IV) ஆணைக் குழுவின் செயலாளரிடமிருந்து கொழும்பு மாநகர சங்கத் தலைவருக்கு எழுதப்பட்ட முடங்கல்.
சனவரி 13, 1928.
Հgաn,
யாப்புபற்றிய சிறப்பாணைக் குழுவினர், மாநகர சங்கமானது, புது நகர மண்டபததை அவர் களுடைய விருப்பிற்கேற்றவாறு அவர்கள் வயம் அளித்தமைக்கு, தங்களுடைய அன்புறவான நன்றியறிதலை, மாநகர சங்கச் சபையினருக்குச் சொல்லுமாறு உங்களைக் கேட்டுக்கொள்ள என்னைப் பணித்துள்ளார்கள். அங்கு கிடைத்த இட வாய்ப்போ ஆணைக் குழுவினரின் வேலைக்கு மிகவும் அற்புதமான முறையில் உவந்ததாக இருந்தது. இது அவர்களுடைய வேலையை மிகவும் எளிதாக்கியது. இதற்குப் பொறுப்பாயிருந்த மாநகர சங்க அலுவலர்கள் ஆணைக் குழுவினர்க்குக் காட்டிய பரிவுக்காக ஆணைக் குழுவினர் நன்றியறிதல் உடையவர்களாக இருக் கின்றர்கள். அலுவலர்கள் காட்டிய கவற்சி, கவனம் ஆகியவற்றிற்கு அலுவலர்களுக்கு நன்றி கூறுமாறு அவர்கள் கேட்டுக்கொள்கின்றர்கள்.
இனி வருங்காலத்திலே இந்நாட்டின் தலைநகராட்சி எங்கிருந்து நடைபெறப் போகின்றதோ, அந்த மனங்கவரும் கம்பீரமான நிலைய இடத்திலிருந்து தங்களுடைய ஆய்வு நடைபெற்றது ஒரு சுமுகமான நல் அறிகுறி என இவ்வாணைக் குழுவினர் கருதுகின்றனர்.
இங்ங்ணம்,
பி. ஏ. கிளட்டபக்கு,
செயலாளர்.
(V) கொழும்பு மாநகரசங்கத் தலைவர் அவர்களிடமிருந்து ஆணைக்குழுச் செயலாளருக்கு
− எழுதப்பட்ட முடங்கல்.
கொழும்பு, சனவரி 17, 1921.
.83աn,
தங்கள் 13 ஆம் நாள் எழுதப்பட்ட முடங்கல் கிடைக்கப்பெற்றேன். சிறப்பாணைக் குழுவினர் அனுப்பிய செய்தியை நான் மாநகர சங்கத்திற்கு அளிப்பேன். தாங்கள் விரும்பியவாறு புது நகர சங்கத்திற்குப் பொறுப்பாயுள்ள மாநகர சங்க அலுவலர்களுக்கும் நன்றியறிதல் அறிவிப் பேன். 宠。
சிறப்பாணைக் குழுவினருடைய செய்தியை மாநகர சங்கத்திற்கு அறிவிப்பதற்கு நேரம் மிகக் குறுகியதாயிருக்கின்றதெனினும், இந்நகர சங்க உறுப்பினர்கள் யாவரும், இவ் வாணைக் குழுவினர்க்குப் பயன்படச் சேவையளிக்கக் கூடியவர்களா யிருந்தார்கள் என்பதை யிட்டு மகிழ்ச்சியடைகின்றர்கள் என்றும், இவ்வாணைக் குழுவினரின் அலுவலுடன் புது மாநகர சங்கக் கட்டிடங்கள் தொடர்புற்றிருந்தன என்பதையிட்டு அவர்கள் பெருமிதம் அடை கின்றர்கள் என்றும், இம்மாநகர சங்க உறுப்பினர் யாவரும் கருதுகின்றர்கள் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.
இங்ங்னம்,
டபிள்யு. ரி. சினுேசு, மாநகர சங்கத் தலைவரும், கொழும்பு மேயரும்.

Page 138