கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட்டக்களப்புத் தமிழகம்

Page 1

|းရ ၅၅း။

Page 2


Page 3

மட்டக்களப்புத் தமிழகம்
ஈழகேசரிப் பொன்னேயா நினைவு வெளியிட்டு மன்றம்

Page 4

மட்டக்களப்பு த் தமிழகம்
வித்துவான், பண்டித வி. சீ. கந்தையா, B, O, L.
(ஆசிரியர், சிவாநந்த வித்தியாலயம், மட்டக்களப்பு)
ஈழகேசரிப் பொன்னயா நினைவு வெளியீட்டு மன்றம் குரும்பசிட்டி : யாழ்ப்பாணம் : : இலங்கை
1964

Page 5
ஈழகேசரிப் பொன்னேயா நினைவு வெளியீட்டு மன்றப் பிரசுரம்-5
முதற் பதிப்பு: ஐப்பசி - 1964
திருமகள் அழுத்தகம் சுன்னுகம்
விலை ரூபா 10-00
(பதிப்புரிமை/


Page 6
பராக்கிரம ஏரி
:
“巨
, 體 : །-
a. 擢蔷 : 6. 3
கியங்கான
 

மட்டக்களப்புத்
தமிழகம்
கப்பல்துறை
y s
திருக்கோணமலை
கோட்டியாரக்குடா
மூதூர் ド/2
C7 இலங்கைத் துறை (இலம்பித் துறை) 8 வேருகல்
7 கதிரைவேளி ہجلاGG
వరీ 邻 ● Ad Ա (' : 6.5GT95 BEL6) け/
t ܀܀
வாழைச்சேனை
கற்குடா y
•  ̈Հ-) (3 சிற்றண்டி தீத்த் ઉો வந்தாறுமூலை
கழககு எறவூா , சத்துருகோன்றன்
தாண்டவன்வெளி
DTST600T) மட்டக்களப்புநகர்
X- கல்லடி - உப்போடை ల్లోకి a 茨 காத்தான்குடிگرہ
Locatcy?ti
ό சேட்டிபாளையம்
ரைப்பற்றை களுவாஞ்சி பிரிவு Ugi sull
போாதீவு VA9; குறுமண் வேரி
மகிழுர் ,ーイ) ഥങ് 5. கல்லாறு း" 7_• பாண்டிருப்பு!!!!!!!! محہ சோறிக்கல்மு Nò &dსტყხ?ვ0I نہ crgడిగా ཕམ་ཁ་ ཕ་ 51ಣ: ಕ್ಲಿಯೂ } ~ مخ؟
y ; `Y ટD ၅ပ္!!!!! :P சேனாநாயக்க \ SP :å یہ \ a w .Ն;! சமுத்திரம் A சேங்கற்பட்டி
அக்கரைப்பற்று گلاجي
o Ꮳ85mᏣrrfᎢ6ᏛᏍ
(7 Զ C%, தம்பிலுவில் திகவாபி திருக்கோவில்
£¤nuorff
(V 8.9
*
இங்கினியாக3ல

Page 7

பதிப்புை
–Nefos-~
* ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத் தினர் நோக்கங்களுள் ஒன்ருகிய, சிறந்த நூல்களை வெளி யிடுதல் என்னும் நோக்கத்தை நிறைவேற்றும் பணியில், இந்நூல் ஐந்தாவது வெளியீடாக அமைந்துள்ளது. கலைப் புலவர் க. நவரத்தினம் அவர்கள் எழுதிய இலங்கையிற் கலைவளர்ச்சி’ என்னும் நூலை 1954ஆம் ஆண்டிலும், நியாய வாதி சி. கதிரவேற்பிள்ளை அவர்கள் எழுதிய மேனுட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம் ? என்னும் நூலை 1958ஆம் ஆண்டிலும், கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் எழுதிய Tamil Element in Ceylon Culture 6Tait 60fth 9, i3a) 15Tal) 1959ஆம் ஆண்டிலும், 'கணேசையர் நினைவு மலர்’ என்னும் நூலே 1960ஆம் ஆண்டிலும் வெளியிட்ட நாம், இப்பொழுது அவற்றைத் தொடர்ந்து பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் எழுதிய " மட்டக்களப்புத் தமிழகம் ? என்னும் நூலை வெளி யிடுவதில் மகிழ்ச்சியடைகிருேம்.
எமது மன்றத்தின் ஆரம்ப கர்த்தாக்களாகிய கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்களும், தனலக்குமி புத்தகசாலை கிர்வாகியாயிருந்த திரு. கோ. அப்பாக்குட்டி அவர்களும் ஒருவர் பின் னெருவராக இவ்வுலக வாழ்வை நீத்தமை மன்றத் தினருக்கும் மற்றையோருக்கும் மிகவும் துக்கத்தைத் தருவன வாயின. இவர்களது மரணமே இந்நூல் இத்துணைக்காலம் தாழ்த்து வெளிவருவதற்குக் காரணமாகும். இல்லையெனின் இதற்குமுன் இந்நூலின் வெளியீட்டு விழா நிகழ்ந்திருக்கும். * உருவத்தால் மீண்ட உயர் மரங்களாயினும் பருவத்தா லன்றிப் பழா ஆதலாற் போலும் இந்நூல் இப்பொழுது வெளிவருவது திருவருளுக்கு ஏற்றதாயிற்று.
பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் நான்காம் தமிழ் விழா மலரில் எழுதிய ‘மட்டக்களப்புத் தமிழகம்’ என்னும் கட்டுைேரயை விரித்து இந் நூலாக்கியுள்ளார். இந்நூலை, தவப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணுசல தேசிக அடிகளார் (குன்றக்குடி

Page 8
νi
அடிகளார்) அவர்கள், வணக்கத்துக்குரிய சேவியர் தனி நாயக அடிகளார் அவர்கள், திரு. வி. செல்வநாயகம், எம். ஏ. அவர்கள், செனெட்டர் சு. நடேசபிள்ளை அவர்கள், தவத்திரு. கடராஜாநந்த அடிகளார் அவர்கள் ஆதியோரின் அணிந்துரைகள் அழகு செய்கின்றன. இத்தகைய சிறந்த நூலை எமது மன்றத்தின் ஐந்தாவது மலர்க் காணிக்கையாகத் தமிழ் மக்களது திருமுன்னர் சமர்ப்பிக்கிருேம்.
வணக்கம்
ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத்தினர்

பொருளடக்கம்
மட்டக்களப்புத் தமிழகம் (படம்) p O 8 பதிப்புரை 9 ) 9 மேற்கோள் ஆசிரியர்களின் அட்டவணை
மேற்கோள் நூல்களின் அட்டவணை 8 இடம்பெறும் படங்களின் அட்டவணை 0 அணிந்துரைகள் () ) ()
பக்கம்
v ix xii Xiv xvii
அருணசல தேசிக அடிகளார் (குன்றக்குடி அடிகளார்)XVi
சேவியர் தனிநாயக அடிகளார் O O திரு. வி. செல்வநாயகம் செனெட்டர் சு. நடேசபிள்ளை நடராஜாநந்த அடிகளார் O முன்னுரை O 8 சமர்ப்பணம்-குஞ்சித்தம்பி உபாத்தியாயர் ஈழகேசரிப் பொன்னேயா விபுலாநந்த அடிகளார் so
1ஆம் இயல் : அறிமுகம் 2ஆம் இயல் : உணர்ச்சிக் கவிநலம் O 3ஆம் இயல் : நாட்டுக் கூத்துகள் a 4ஆம் இயல் : நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 5ஆம் இயல் : செந்தமிழ்ச் சொல்வளம் 6ஆம் இயல் : கண்ணகி வழிபாடு
i. பத்தினித் தெய்வம் i. சடங்கும் வழக்குரையும் i. கொம்பு விளையாட்டு ίν. தமிழ்க்குரவை
v. வசந்தன் ஆடல் 7ஆம் இயல் : புலவர் பரம்பரை . i. வித்துவான் ச. பூபாலபிள்ளை i. வித்துவான் அ. சரவணமுத்தன் i. குமாரசுவாமி ஐயர் iv. மொட்டைவேலாப்போடியார்
w, பண்டிதர் குஞ்சித்தம்பி
wi. வித்துவான், புலோலியூர் வைத்திலிங்க தேசிகர் 241
wi. புலவர் வினுசித்தம்பி wi. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
ix. சின்ன ஆலிம் அப்பா v 8
xviii
XX
XXi xxiii xxvilii XXXγii xxxix xl
24 47 67 84 153 上53 167 179 191. 198 205 2O7 213 224 23O 236
253, 260 275

Page 9
viii
பக்கம்
x. சேகுமதாறுசாகிப் புலவர் 0 0 is 281 xi. முகம்மதுருபிப் புலவர் v 0. w w a 287 xi. அப்துற்ற ஹ"மான் ஆலிம் புலவர் 0 to 391 xi. ஹாஷிம் ஆலிம் பாவலர் . 295 xiv. விபுலாநந்த அடிகளார் • ч • 3OO. xv. தமிழ் மணிகள் : 316 சோமசுந்தர தேசிகர் ... ... 316 உவில்லியம்பிள்ளை se 8 319 வேதநாயகம் போதகர் o o 6 322 கணபதிப்பிள்ளைப் புலவர் . Ab db 4 824 சின்னவப் புலவர் 0. v 326 கார்த்திகேசு (பொலிய விதான) a 0 0 328 வேடப்பிள்ளை 0 a po 329 சண்முகச் சட்டம்பியார் o o 0. 330 வீரபத்திரச்செட்டி-நாகமணி 331 அருணுசலதேசிகமணி 8 o V KM (4) 332 8ஆம் இயல் : மருந்தும் மந்திரமும் 9 338 i. மந்திர வழக்கு 338 i, பாம்புக்கடி a 4. o a 358 9ஆம் இயல் : வரலாறு • 390 i. அரசியலும் தமிழர் குடியேற்றமும் . 390 திகவாபி a A 398 பிற்காலம் ''' . . . . 4O3 திருக்கோவில் 0 0 0 8 405 மட்டக்களப்பு மான்மியம் . . . 41 1 i. மட்டக்களப்புத் துறைமுகங்கள் P D . 4 18 10ஆம் இயல் : ஒழிபு O. O. O. 430 இந்துசமயம் (பொதுக்குறிப்பு) 43O தீப்பள்ளயம் . . . . . . . 431 திருப்படைக்கோவிலும் குடிப்பிரிவும் 433 குலவிருதுகள் Q0 • 439 பழக்க வழக்கங்கள் சில 8 8 445 மேனட்டார் வரவு 449 கத்தோலிக்க மதம் ø o 45 1 மெதொடிஸ்த திருச்சபை a es » ( ) 453 சுகாத்தியம் w w w 49 கைத்தொழில்கள் ab A ao o 4 (O பொது . . . . . 46 சொல் அட்டவணை a O R 46)
விளக்கப் படங்கள் 8 a v நூலாசிரியரைப்பற்றிச் சில XI, vil

மேற்கோள் ஆசிரியர்களின் அட்டவணை
(எண் -இயல்களைக் குறிக்கும்)
அகத்தியன் 7, 8 அசன் புலவர் 7 அசீஸ், ஏ. எம். ஏ. 7
அந்தோனி 7 அப்துற்றகுமான் ஆலிம் 7 அருணந்தி 7 அருணுசல தேசிகர், 1, 7 அலித்தம்பி 7
ஆதிமூலம்பிள்ளை தா. அண்ணு
வியார் 7
ஆலிம் அப்பா - சின்ன 7
இசுமாலெப்பை முகியதீன் 7
இராகவையங்கார் மு. பேரா
சிரியர் 6 இளங்கோவடிகள் 2, 6 இளையாப்போடியார் 7 ஈழத்தடிகள் 7 உதுமாலெவ்வைப் புலவர் 7 உமறுப் புலவர் 7 உவில்லியம்பிள்ளே 7 உவில்லியம் மனிங்ஸ் 6 ஏர்ஸ்கின் 10 ஒட்டக்கூத்தர் 2 கணபதி ஐயர் 7 கணபதிப்பிள்ளை க., கலாநிதி 6 கணபதிப்பிள்ளை, புலவர் 1, 7 கணேசையர் 7 கண்ணப்பர், கட்டாடி 6, 7 கதிரேசச் செட்டியார், பண்டித
மணி 7 கந்தப்புலவர் 7 கந்தையா ஒடாவியார் 7 கபிலன் 7, 8 கம்பன் 2 கயிலாயபிள்ளை 7 கலாநிதி ஆநந்தகுமாரசுவாமி 6
கலாநிதி தோமாஸ்குக் 10 கலியாணசுந்தரமுதலியார் 7 கனகசுந்தரம்பிள்ளை த. 7 கனகரெத்தினம் எஸ். ஒ. 7 கார்த்திகேசு 7 கார்ல் வெல்ட் 5, 7 கிரகாம், ஜோன் 5 கிரேடி ஓ. எஸ். டீ. ஒ. (O. S.
De. O’ Grady) 10 கிளவ் 10 Gfsår 6svgt 65r 66 (Mr. Stanley
Green) 10 குஞ்சித்தம்பி ஆசிரியர் 6, 7 குமாரசாமி ஐயர் 7 குமாரசாமி, புலவர் 7 G5GGyöfb (Miss. Groft) 10 கேணல் வால் 8 கோணுமலை, உபாத்தியாயர் 7 சண்முகம், அண்ணுவியார் 7 சண்முகம், சட்டம்பியார் 7 சதாசிவ ஐயர் தி. 1, 6 சந்திரசேகரம் பிள்ளை 7 சபாரெத்தினசாமி, நொத்தா
for 7 சரவணமுத்து, வித்துவான் 7 சின்னத்தம்பி 7 சின்னத்தம்பி சாத்திரியார் 7 சின்னலெவ்வை வன்னியன் 7 சின்னவப் புலவர் 1, 7 சுப்பிரமணிய சாஸ்திரிகள் 7 சுப்பிரமணிய பாரதியார் 1, 7 GF 456Fijih 3 4 JT i (Shakespeare) 3 ஷெய்கு இப்ருகிம் லெவ்வை 7 சேகுமதார்ப் புலவர் 7 சேகுமதாறு சாகிப் புலவர் 7 சேதுகாவலர் ஆர். டபிள்யு 7

Page 10
சோமசுந்தர உபதேசியார் 1, 7 சோமசுந்தர தேசிகர் 7 ஸ்டான்லி கிறீன் 4, 10 டெனன்ட் 4, 8 தம்பிமுத்து, ஈ. ஆர். 1 தம்பிமுத்து ஈ. எல். 7 தாகூர் 7 திருநாவுக்கரசர் 3 திருவள்ளுவர் 2 தெனிசன் 7 தொல்காப்பியர் 1 நச்சினர்க்கினியர் 5 நடேசபிள்ளை, சு. 6 நவநீதகிருஷ்ணபாரதியார், சு. 7 நவரத்தினம், க. கலேப்புலவர் 6 நீலகண்ட சாஸ்திரியார், கே.
ஏ. 7 பத்மன் 10 பவணந்தியார் 5 பரணர் 7, 8 பர்னட், எச். ஒ. 8 பிரீட்ஸ் 4 பிலிப் சகோதரர் 4, 7 புட்கரனுர் 8 புனித சவேரியார் Xavier) 10 பூபாலபிள்ளை வித்துவான் 7 பெரியதம்பிப்பிள்ளை, புலவர்
மணி 1, பெரியதம்பி விதானை 7 பெருந்தலைச் சாத்தனர் 8 பொணல் சுவாமியார் 7, 10 பொய்கையார் 1 பொன்னம்பலபிள்ளை 7 போப் ஐயர் 7 பெளலர் 4 மகாலிங்கசிவம் 7 மாக்ட், டாக்டர் 8 மாமூலர் 8 பிராலெவ்வைமுகம்மதுத்தம்பி 7 முகம்மத்லியார் 7
(Francis
முகம்மதுருபிப்புலவர் 7 முகைய தீன் பிச்சைப்புலவர் 7 முத்துக்குமாரசாமிக்குருக்கள் 7 முத்துக்குமாரு அண்ணுவியார் 7 முருகேசபிள்ளை 7 மொருன் அடிகளார் 4 ரெனட், சேர் ஜேம்ஸ்
எமெர்சன் 8 லாங் அடிகளார் 4 லின்ச் 10 வசந்தராசபிள்ளை 7 விபுலாநந்த அடிகளார் 1, 4, 7 வில்லிபுத்தூராழ்வார் 2 வில்லியம் ஒல்ட் 10 வினுசித்தம்பி, புலவர் 7 வினுசித்தம்பி, விதானை 7 வின்சன்ற் 10 வீரபத்திரச் செட்டி நாகமணி 7 வீரமாமுனிவர் 7 வேடப்பிள்ளை 7 வேதநாயகம் பாதிரியார் 7 வேலாப்போடியார்,மொட்டை7 வேலுப்பிள்ளை, கல்லடி 7 வேலுப்பிள்ளை ச. 7 வேல்மயில்வாகனப் புலவர் 7 வைத்திலிங்க தேசிகர் 7 வைத்தியலிங்கம்பிள்ளை, ச. 7 ருபிப் புலவர் 7 gpT6îulu IT di sgyugat561T IT i (Rev. Fr.
A. M. Rouffiac) 10
றைட் சகோதரர் (Rev. Br.
Wright) 10
ஹாசீம் ஆலிம் பாவலர் 7 ஜம்புலிங்கம்பிள்ளை சே. வை 7 ஸ்குவன்ஸ் 10 ஹாவார்ட் 10 Ananda Kumaraswamy, K.
Dr. 6 Codrington, H. W. 5 Graham, John 5 Queroz. Rev. Fr. 9 Shakespeare 3, 8

மேற்கோள் நூல்களின் அட்டவணை (எண் - இயல்களைக் குறிக்கும்)
...ー層-*→一ー*
அகநானூறு 2 அப்பூதி அடிகள் புராணம் 8 அம்மன் பள்ளு 6 அமிர்தசாகரம் 8 ஆயுள்வேத வைத்தியக்
கருவூலம் 7 ஆரைப்பற்றை திருநீலகண்ட
விநாயகர் பதிகம் ' இசை நுணுக்கம் 4 இந்திராபுரி இரகசியம் 7 இந்துசமய மாத மகத்துவ
மான்மியம் 7 இராசாவளி 6, 9 இராமகிருஷ்ண விஜயம் 7 g@Gáš@5(36) 35th (Rig Ved I.
32: 5, 8 etc) - 9 இலக்கண விளக்கக் குறிப்புகள் 7 இலங்கை 8 இலங்கைச் சுதந்திரம் 7 உடுகுச்சிந்து அல்லது
ஊர்சுற்றுக் காவியம் 6 உமாமகேசுவரம் 7 உருத்திராக்கமான்மியம் 7 உலகியல் விளக்கம் 7 ஊர்சுற்றுக் காவியம் 6 எட்டுத்தொகை 5 ஒருபா ஒருபஃது 7 ஒல்லாந்தர் கடல் வழிப் படம் (Hollanders Hydraulic Map) 9 கடல் கடந்த கண்ணகி 6 கத்தோலிக்கமதப் பழைய
a tra 60Tub Documents found in the Archives of the Roman Cotholic Mission,
• Bạtticaloa) 10 கண்டி ஒப்பாரி 7 கண்டிராசன் சரிதை 7 கண்ணகி கதை 6 கண்ணகி வழக்குரை 1, 6
கண்ணகி அம்மன் குளுத்தி 1, 6 கணேச தோத்திர பஞ்சகம் 7 கணேசர் கலிவெண்பா 7 கதிர்கா மக்காதல் 7 கதிர்காமசதகம் 7 கதிர்காமத்தந்தாதி 7 கதிர்காமத்தம்மானை 7 கதிர்காம விருத்தம் 7 கதிர்காம வேலவர் தோத்திர
மஞ்சரி 7 கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளை யார் இரட்டை மணிமாலை 7 கந்தப்புராணம் 7 கந்தப்புராண விருத்தியுரை 7 கம்சன் வத நாடகம் 7 கர்மயோகம் 7 கல்கி - தீபாவளி மலர் 1952, 6 கல்லாடம் 8 கல்லாற்று ஒப்பாரி 7 கலித்தொகை 2 கிருஷ்ணன் துரது நாடகம் 7 கிருஷிக ஆத்திசூடி 7 கிருபாம்பாள் 7 கிறித்தவ சபைத்
துயிலுணர்ச்சி 7 குணநூல் 4 குமரவேள் நவமணிமாலை 7 குருதேவர் வாக்கியம் 7 குருபரதரிசனத் திருவேட்கை 7 குளக்கோட்டன் கல்வெட்டு 9 குறுந்தொகை 2 கெருட பஞ்சாட்சரம் 8 கெருடாருடம் 8 கொத்துக்குளத்து மாரியம்மன்
பதிகம் 7 கொம்பு விளையாட்டுப்
பாடல்கள் 6 கோட்டை முனே வைரவன்
காவியம் 7
கோணேசர் கல்வெட்டு 7 கோவலன் கதை ே

Page 11
சங்கமாங்கண்டிப் பதிகம் 7 சந்தனு நாடகம் 7 சந்திரா ரூடம் 8 சயந்தம் 4, 8 சர்ப்பாரூடம் 8 சராசந்தன் நாடகம் 7 சனிவெண்பா 7 சாரங்கதரனின் சரிதை 7 சித்தர் ஆரூட நொண்டிச்
சிந்து 8 சித்தியாரூடம் 8 சிவஞான சித்தியார் 7 சிவதோத்திரம் 7 சிவராத்திரி அம்மானை 7 சிவனுரா ரூடம் 8 சிலப்பதிகாரம் 1 சிலம்பகதா 6 சீமந்தனி புராணம் 7 சீவகசிந்தாமணி 5, 8 சீருப்புராணம் 7 சுதேச நாட்டியம் 7 சுந்தர விலாசம் 7 சுப்பிரமணிய சுவாமிகள்
இரட்டைமணிமாலை 7 செங்குக்த மித்திரன் 7 செந்தமிழ்ப் பத்திரிகை 7 செயிற்றியம் 4 சைவக்களஞ்சியம் 7 சைவசமய இளைஞர் போதினி 7 சைவசமய சிந்தாமணி 7 ஞானகுருபதிகம் 7 ஞானயோகம் 7 ஞானரை வென்றன் 7 தட்சிண கைலாசபுராணம் 7, 9 தம்பிலுவிற் பள்ளு 7 தமிழ்ப் பொழில் - துணர் 16,
மலர் 18; 1940, 4, 7 தமிழ் வரலாறு 7 தமிழின் ஒலிமரபு (Phonetics
in Tamil) 7 தாமரைக்கேணி மாரியம்மன்
பதிகம் 7 திராவிட மொழிகளின் ஒப்பியல்
இலக்கணம் 5 திருக்குறள் 4 திருக்கோவையார் 6 திருக்கோயில் ஊஞ்சல் 7 திருச்செந்தூர்ப் புராணம் 7
திருமுகர் பதிகம் 7 திருமுருகாற்றுப்படை 6, 7
ருவாசகம் தில்லைத்திருநடனம் 7 தில்லைநடராசர் பதிகம் 7 தீபம் பத்திரிகை 7 தேவதோத்திர சங்கிரகம் தேவியாரூடம் 7 தொல்காப்பியம் 2 நச்சுப்பொய்கைச் சருக்கம் 7 நடராசர் திருவடிவம் 4 நம்மவர் நாட்டு ஞான
வாழ்க்கை 7 நல்லிசை நாற்பது 7 நற்றிணை 2 நன்னுரல் 7 நாகாரூடம் 8 நாலடியார் 5 நிகண்டு 7, 8 நீரரமகளிர் இன்னிசைப்
பாடல் 4 நைடதம் 7 பக்த குசேல நாடகம் 7 பகவத்கீதை வெண்பா 1, 5, 7 பஜனுமிர்தம் 7 பஞ்சபாரதீயம் 4 பஞ்சாட்சராரூடம் 8 பஞ்சாமிர்தக் கீர்த்தனம் 7 பத்தினி படிமா ே பலபாமாலை 7 பவளேந்திரன் நாடகம் 7 பறையன் ஒப்பாரி 7 பாணகை வழிநடைக் கும்மி 7 பார்க்கவ புராணம் 7 பாலசரித நாடகம் 7 பாலையடி வாலவிக்கினேசுர
ரூஞ்சல் 7 பிச்சை வேலைக்கும்மி 7 பிரபுத்த பாரதம் 7 பிள்ளைக்காவியம் 7 பிள்ளையார் கதை 7 பிள்ளையார் புராணம் 7 புசற்காவியம் 7 புதுமைக் கமக்காரன் 7 புலந்திரன் தூது நாடகம் புவனேந்திரன் விலாசம் 7 புளியநகர் ஆஃனப்பந்தி விக்கி
னேசுவரர் பதிகம் 7
7

புறநானூறு 1
பூசாவளிய 9 பெரியபுராணம் 8 பெருங்குருகு 4 பெருநாரை 4 மகாபாரதம் 7 மகாலட்சுமி தோத்திரம் 7 மகாவமிசம் 1, 9 மஞ்சட்பூதம் அல்லது இழந்த
செல்வம் 7 மட்டக்களப்பு மான்மியம் 7, 9 மண்டூர் இரட்டைமணிமாலை 7 மண்டூர்க் கந்தசுவாமி லீலா சங்
கரமானவரூஞ்சல் 2 மண்டூர்ப்பதிகம் 7 மண்டூர் முருகன் காவடிப்
பாட்டு 7 மண்டூர் வடிவேலவர் குறம் 7 மணமங்கலமாலே 7 மணிசேகரநூல் 8 மணிமலர் 7 மணிமேகலை 8 மதங்கசூளாமணி 3 மதுரைக்காஞ்சி 6 மதுரைவீரன் 7 மலேரியாக்கும்மி 7 மழைக்காவியம் 6, 7 மலைபடுகடாம் 6 மனேன்மணி 7 மாணிக்க கங்கைக் காவியம் 7 மாமாங்கப்பிள்ளையார் பதிகம் 7 மாரியம்மன் குளுத்தி 7 மீட்சிப்பத்து 1 を முகையதின் ஒப்பாரி 7 முப்பொருளாராய்ச்சிக்
கட்டுரை 7
முறுவல் 4 மொடேர்ன் றிவியூ 7 யாப்பருங்கல உரை 8 யாழ்நூல் 1, 4 லங்காவர்த்தமானி 7 வசந்தன் கூத்து 2 வசந்தன் பாடல்கள் 1, 6 வயிரநுரல் 8 வருக்கமாலை 7 விஷ்ணுபதிகம் 7 விநாயகர் மான்மியம் 7 விபுலாகந்த அமுதம் 7 விபுலாநந்தத் தேன் 7 விபுலாநந்த வெள்ளம் 7 விவேகாநந்த சம்பாஷணை 7 விவேகாநந்த ஞானதீபம் 7 வேதாந்த கேசரி 7 Ancient Antiquities of Ceylon
Vol. 6. Ancient Ceylon 6 Conguesta or the Historic Tragedy of the Island of Ceilao 9 Dravida - A History of the Tamils from Pre - Historic times to A. D. 1800 7 English Word Book 5 Glossary of Native Foreign
Anglosised words 5 History of Indian and Indo
nesian Art. 6 Modern Review 7 Monograph of Batticaloa 7 Spolio Zeylanica 8
The Journal of the American Medical Association 8

Page 12
இடம்பெறும் படங்களின் அட்டவணை
படம் இலக்கம்
1. எழுவான் கரை - தென்னஞ்சோலை
2. திருக்கோவில் - சித்திரவேலாயுத சுவாமி கோவில்
3. அமிர்தகழி - தீர்த்தக் குளமும், மாமாங்கப் பிள்ளை
யார் கோவிலும், மண்டூர்க் கந்தசுவாமி கோவில் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் கோவில் புதிர் காவுதல் பொலிதூற்றுதல் (அவுரி திரித்தல்) . எருமைக் கடாக்களாற் சூடுபோடுதல்
9. சேவரக்கால், வட்டி-தனித்தனி 9 (A) சேவரக்கால்மீது-வட்டி 10. கொண்டவட்டவான் குளத்திற் கண்டெடுக்கப்பட்டு, இன்று அம்பாரையில் உள்ள அரசாங்கக் காரி யாலயத்தின் முன் வைக்கப்பட்டுள்ள கல்வெட் டுத் தூண். 10 (A), 10 (B) திருக்கோவிலிற் கிடைக்கும் கல்வெட்டுகள் 11. காறையும் மற்றும் சில பழங்கால நகைகளும் 12. கடுக்கெண்டாப் போடியார் ஒருவரின் தோற்றம்: இவரது காதிற் "கடுக்கன் கொல்லை" என்னும் காதணி தொங்குவதைக் காணலாம் 13. கருங்கல்லினல் அமைக்கப்பெற்ற பழைய காலத்துப்
பெரிய கட்டிலொன்றின் படம் 14. கல்லடிப்பாலம் 14 (A) கல்லடிப் பாலம்-1923ஆம் ஆண்டில் வேலைகள்
நிறைவுறும் நிலையில் 15. மட்டக்களப்புத் துறைமுகமும் கலங்கரை விளக்கமும் 16. தென்மோடிக் கூத்தர் கொலு-இக்கால உடையில் 17. வடமோடிக் கூத்தர் கொலு-பழைய உடையில் 18. கத்தாக்கு என்னும் உடையில் இரு போர் வீரர் 19. விபுலாநந்த அடிகளார் 20. பாடும் மீன் ? என்று அழைக்கப்பெறும் ஊரியின் தோற்றம் ۔
21. காரைதீவுக் கண்ணகை அம்மன் கோவில்

22. பத்தினித் தெய்வம் - இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்திற் காணப்படுவதும், மட்டக்களப்புப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டதுமான கண்ணகி தேவியின் முழுச் சிலை ஒன்று 23. தென்சேரிக் கொம்பு 23(A) வடசேரிக் கொம்பு 23(B) பீலி (பில்லி)யுடன் வைத்துக் கட்டப்பட்டுள்ள
கொம்பின் தோற்றம். 24. குரவை போடும் நிலையில் பெண்கள் மூவர். 25. மட்டக்களப்புக் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குறவர் குடிசை-குறப்பெண்கள் இருவரும் ஒரு கைக் குழந்தையும் 25(A) பழக்கப்பட்ட நாக பாம்பொன்றைக் குறவன் தன்
மகுடி இசையினுல் ஆடச் செய்தல். 35(B) காட்டு வழியிற் சந்தித்த நாக பாம்பு ஒன்றைப் பிடித் தற்காகக் குறவன் தன் மகுடி இசையில் மயங்கி அதை ஆடச் செய்தல் 26. வசந்தன் ஆட்டம் 27. விற்குறி பார்த்தல் 28. ஒரு இராசநாகத்தின் சீறிய தோற்றம் 29. கண்ணுடிப் புடையன் பாம்பு 30. திருக்கோவிலில் உள்ள பாம்புக்கல் 31. வித்துவான் பூபால பிள்ளை 32. வித்துவான் சரவணமுத்தன் 33. குமாரசுவாமி ஐயர் 34. காரைதீவுக் கயிலாய பிள்ளைக் கப்புகஞர். " கயிலாய பிள்ளை அண்ணுவியார் ' என்றும் அழைக்கப் பெறுவார். 88. புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை 36. குஞ்சித்தம்பி உபாத்தியாயர்
(சமர்ப்பணப் படம் Lחוrff ék &( 37. விபுலாநந்த அடிகளாரது கல்லறை (முன்னைய - தோற்றம்)
37(A) விபுலாநந்த அடிகளார்து கல்லறை (நினைவுக் க்ல்
es வெட்டுடன் இன்றைய தோற்றம்) 38. விபுலாநந்த மணிமண்டபம் 39. சிவாநந்த வித்தியாலயம் 40. கணபதிப்பிள்ளைப் புலவர்

Page 13
41.
42.
43.
44,
XV1
சின்னவப் புலவர் அருணசல தேசிகமணி சோமசுந்தர தேசிகர் அர்ச் . மிக்கேல் கல்லூரி
44(A) அர்ச். மிக்கேல் கல்லூரியின் தந்தையான பொணல்
45.
46.
47.
4S。
A 9.
5 0.
5 l.
52.
53.
54。
55.
5 6.
57.
58.
59.
சுவாமியார் வின்சன்ற் மகளிர் கல்லூரி மட்டக்களப்புக் கோட்டை குருெ வ்ற் அம்மையார்-தமிழ் உடையில் கல்லோயா அணைக் கட்டு சம்மாந்துறைப் பள்ளிவாசல் தும் புவேலை - ஆரைப்பற்றைக் கிராமத்தில் பிரம்புக் கைத் தொழில்-புதுக்குடியிருப்பில் நாடன் குடுகு-குறவரது தண்ணிர்ப் பாத்திரம் வேடர் கூட்டம் ஒன்று கற்குடாத் துறைமுகப்பாலம் (சிதைந்த நிலையில் உள்ள இன்றைய தோற்றம்) சிற்றண்டிக் கந்தசுவாமி கோவில் மெதொடிஸ்த மத்திய கல்லூரி திகவாபி-புதிய கிராமத்துக் கோவில் லகுகலைக் காட்டினுள் சிதைந்த நிலையில் உள்ள
பழமையான தாதுகோபம் ஒன்று லகு கலைக் காட்டினுள் அழிந்துபோன நிலையிற் காணப் படும் பழமையான சைவக்கோயில் என்று கூறப் படும் கட்டிடம் ஒன்றினது அடிப்பாகத்தில் உள்ள அழகிய சிற்பங்கள்
59(A) அக் கோவிலின் இன்னெரு பகுதியில் உள்ள ஒரு
60.
6 .
வைரவர் சிலை உகந்த மலை உச்சியிற் பாதுகாப்புடன் அமைந்திருக்கும் ஒரு தீர்த்தக் கிணறு. இம்மலை அடிவாரத்திற் பழமை வாய்ந்த முருகன் ஆலயம் ஒன்றும் இருக் கின்றது
தென்மோடிக் கூத்தர் கொலு ஒன்று-பழைய பூமுடி முதலான உடைகளுடன்

<实 ரிைந்துரைகள்
குன்றக் குடி , திருவண்ணுமலையாதீனத்து மகாசந்நிதானமாகிய தவப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணசலதேசிக அடிகளார் (குன்றக்குடி அடிகளார்)
அவர்கள் அளித்த
வாழ்த்துரை
* மட்டக்களப்புத் தமிழகத்தைப் பார்த்தேன். ஆம் ; சைவத் தமிழ் ஞானக் கொழுந்தாகிய விபுலாநந்த அடிக ளாரை ஈன்றெடுத்த மட்டக்களப்புத் தமிழகத்தின் புகழ் பாடுதற்குரியது ; பாராட்டுதற்குரியது.
இந்நூல், மட்டக் களப்புத் தமிழகத்தைப் பலகோணங் களிலும் நமக்கு அறிமுகப்படுத்திவைக்கின்றது. இத் தமிழகத் திற் பயிலும் நாடோடிப்பாடல்களில் நிறைந்துள்ள தமிழின்ப மும் அதனேடு இணைந்து நிற்கும் கருத்து வளமும் பேச்சு மொழி நலமும் எல்லாம் நினைத்தொறும் இன்பம் தருவன.
இக்காலத் தமிழ் உரைநடையினுக்குச் சிகரம் போன்று உயர்ந்த இலக்கிய நடையில் அமைந்து, மட்டக்களப்புத் தமிழ் நிலத்தாரது பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, புலமைச் சிறப்பு என்பனவற்றைத் தெளிவுறுத்தும் திருநூல் இது.
இவ்வினிய நூலைப் படித்து முடித்தவுடன் நம்முடைய நெஞ்சகத்திலிருந்து எழுந்த உணர்ச்சி, மட்டக்களப்புத் தமிழ்நிலத்திடை வளைந்து சூழ்ந்து கிடக்கும் வாவி தமிழ்ச் சுனே ; ஆங்கு வாழும் மக்கள் பண்பட்ட பழந் தமிழ்க் குடிகள்" என்றுதானே சொல்லுகின்றது. vm
சிறந்த இந்நூலை எழுதிய தண்பர் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் நமது பாராட்டுதலுக்குப் பெரிதும் உரியவர். அவர் செந்தமிழ் அறிஞர் ; சிவநெறிச் செல்வர். அவருடைய வாழ்க்கைத் துணைவியாகிய திருவாட்டி கங்கேஸ் வரி அவர்கள் மனை மாட்சிக்குரிய தமிழ் நல்லாள் : சைவம் கமழும் செந்தமிழ்ப் பண்டிதை. இத்தகு மனையற வாழ்வி லிருந்துதான் மட்டக்களப்புத் தமிழகம் மலர்தல் கூடும். இம் மட்டக்களப்புத் தமிழகத்தின் மண்டுபுகழ் அனைவ ராலும் போற்றப்படுதற்குரியது.
வாழ்க தமிழ் ! வாழ்க மட்டக்களப்புத் தமிழகம் !!
திருவண்ணுமலே ஆதீனம், A. p குன்றக்குடி, தெய்வசிகாமணி தமிழ்நாடு.
ii

Page 14
தூத்துக்குடித் தமிழ் இலக்கிய மன்றத் தலவரும், * தமிழர் பண்பாடு’ என்ற ஆங்கில மாத வெளியிட்டின் ஆசிரியரும், இலங்கைப் பல்கலைக் கழகத்து முன்னேநாட் கல்விப்பகுதித் தமிழ் விரிவுரையாளரும், மலாயா தேசத்துப் பல்கலைக் கழகத்துக் கீழைத் தேய மொழித்துறைகளின் தலைவரும், தமிழ்ப் பேராசிரியருமாகிய
வணக்கத்துக்குரிய சேவியர் தனிகாயக அடிகளாருடைய
அணிந்துரை
* மட்டக்களப்புத் தமிழகம் ' என்ற பெயரால் ஒரு நூல் வெளிவந்தமை குறித்து நான் பெரிதும் மகிழ்வுறுகின் றேன். ஈழத் திருநாட்டிற் சிறந்தோங்கும் மட்டக்களப்புப் பிரிவினது இயற்கை வனப்பு, கலை, மொழிவளம், பண்பாடு முதலியவற்றில் நிறைந்த ஆர்வம் எனக் குண்டு. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்குள்ள நமது தமிழ் மரபின ருடன் பழக நான் தவறுவதில்லை. இந்நிலையில் மட்டக் களப்புத் தமிழகத்தின் செல்வமனைத்தினையும் மற்றையோரும் கண்டு மகிழுதல் வேண்டும் என்று நான் எண்ணுவதுண்டு. அப் பெரு விருப்பினை நிறைவுறுத்துகின்றது இச் சிறந்த நூல்.
மட்டக்களப்புக்குச் செல்லும் வெளிநாட்டார்க்கு வியப் பூட்டும் வகையில் அங்கு வழங்குவதும் பழங்காலத் தொடர் புடையதுமான மொழிச்செல்வம் என்னைப் பெரிதும் க்வர் ந் துள்ள ஒன்று. அத்துறை, இந்நூலில் விரிவாக ஆராயப் பெற்று, நாட்டு வழக்கிலுள்ள பல சொற்களின் பொருள் வள மும் நன்கு காட்டப்பெற்றுள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதி களிலே வழக்கினின் ருெழிந்தனவாய் இங்கே வழங்கிவரும் சொற்கள் சிலவற்றின் பயிற்சிச் சிறப்பைப் பண்டைய இலக் கிய ஆட்சியிலிருந்து எடுத்துக் காட்டி ஆசிரியர் அவற்றிற்கு நல்விளக்கம் தந்துள்ளார்.
நாட்டுப் பாடற்றுறையில் வளம் நிறைந்தது ஈழத்து மட் டக் களப்பு நாடு என்பதை யாவரும் அறிவர். எனினும் அப் பாடல்களின் இன் பத்தினையும் இலக்கியச் சுவையினையும் பெரும்பாலோர் கருதுவதில்லை. சங்கச் செய்யுள்களை ஒத்து "நலம் கனிந்த அவற்றினை எடுத்து அகம், புறம் என்று ஆசிரி யர் இருகூருகப் பிரித்துக் காட்டியிருப்பது மிக்க சுவை அளிப்ப

xix
தாகும். நாட்டுக் கூத்துகளைப்பற்றிய பகுதியானது வேத் தியல், பொதுவியல் என்ற சங்கச் சான்றேரின் பிரிப்புக்கும் மங்கல முடிவின, அமங்கல முடிவின என்ற மேல் புல அறிஞ ரின் பிரிப்புக்கும் அமைய நடக்கின்ற தென்மோடி, வட மோடி நாடகங்களை இலக்கணத்துறையோடு சுவைபெறக் காட்டுவதாயுள்ளது.
இத் தமிழகத்தினரிடை அழியாதிருக்கும் பழைய இலக் கியச் செல்வங்களான " கண்ணகி வழக்குரை ', ' குளுத்திப் பாடல்’, ‘ மழைக்காவியம் ', " உடுகுச்சிந்து முதலான வற்றையும், கலை பொலிந்த ஆடல்களான கொம்பு விளை யாட்டு, வசந்தனுடல், குரவையயர்தல் என்பவற்றையும் விளக்கும் " கண்ணகி வழிபாடு ' என்னும் பகுதி படிக்கும் போது புதிய இன்பந் தருவதொன்ருக அமைகின்றது.
புலவர் பரம்பரை, அரசியல் வரலாறும் தமிழர் குடியேற் றமும், மருந்தும் மந்திரமும், ஒழிபு என்னும் பகுதிகள் நாட்டு வரலாற்றில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை எடுத்து விளக்குவன. இந்நூலுக்கோர் முகவுரை போன்று அமைந்துள்ள அறிமுகம் ' என்ற பகுதி பெயருக்கு ஏற்பப் பொருள் நிறைந்து விளங்கும் ஒன்ரு கும்.
இவ்வாரு ன நூல் முழுவதும் தெள்ளிய தமிழ்நடையில், இலக்கியச் சுவை நிரம்ப எழுதப்பட்டுள்ளது. இதனுசிரிய ரான பண்டிதர் கந்தையா அவர்கள் என் நண்பர்; மொழிப் பற்றும் நாட்டுப்பற்றும் நிறைந்தவர் ; ஆராய்ச்சியில் ஈடுபட்டு இன் புற்று வருகின்ற வர். இவ்வெளியீட்டின்மூலம் தாம் பெற்ற இன்பத்தைத் தமிழுலகிற்கும் நல்கியதுபற்றி அன் ஞரைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.
தமிழ் உலகு இந்த அரும் பணியை மகிழ்ந்து ஏற்று அன்ன ருடைய சிறந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
சே. தனிநாயகம் கொழும்பு

Page 15
இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ் விரிவுரையாளராயுள்ள திருவாளர் வி. செல்வாகாயகம், எம். ஏ. அவர்கள் தந்த
சிறப்புரை
பழந்தமிழ் நாட்டில் விளங்கிய இயலிசை நாடக மென்
னும் முத்தமிழையும் போற்றி வளர்த்துவரும் மட்டுநாட்டின் பெருமையைத் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்து பாராட்டு தற்கு வாய்ப்புடைய ஒரு கருவிநூலாக விளங்கும் மட்டக் களப்புத் தமிழகம் ' என்னும் இந்நூலைத் தமிழுலகத்துக்கு அறிமுகப்படுத்துவதிற் பெருமகிழ்ச்சி யடைகின்றேன்.
இந்நூலாசிரியர் திரு. வி. சீ. கந்தையா அவர்கள் இலங் கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ் வித்து வான் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்து B, O, L. பட்டதாரி : யாழ்ப்பாணம், மது ரைத் தமிழ்ச் சங்கங்களின் பண்டிதர். விபுலாநந்த அடிகளின் மாணவர் ; சிவாநந்த வித்தியாலயத்து ஆசிரியர். இந்நூலின் கண் புலவர் பரம்பரை ' என்ற இயலுள் ஏழாவது புலவராக இடம்பெற்றுள்ள புலவர் வினசித்தம்பி அவர்களின் மகன். மட்டக்களப்புக் கலைவளம் சம்பந்தமாகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளவர்; 'குளுத்திப்பாடல் முதலிய நூல்களையும், நாட்டுப் பாடல்களையும் இவர் வெளியிட் டுள்ளனர். மட்டக்களப்பு நாட்டுக்குப் பல்லாற்ருனும் தொண் டாற்றிவரும் இந்நூலாசிரியர் பன்னெடுங்காலம் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்ற இறைவன் அருள்புரிவாராக.
இந்நூல் மட்டக்களப்பு நாட்டைப்பற்றிப் பலவகையாக ஆராய்ந்து கூறுகின்றது. அறிமுகம், உணர்ச்சிக் கவிநலம், நாட்டுக் கூத்துகள், நீரரமகளிரும் யாழ்நூ லாசிரியரும், செந்தமிழ்ச் சொல் வளம், கண்ணகி வழிபாடு, புலவர் பரம் பரை, மருந்தும் மந்திரமும், வரலாறு, ஒழிபு என்னும் பத்து அதிகாரங்களையும், விளக்கப்படங்கள் பலவற்றையும் இது கொண்டு விளங்குகின்றது. தெள்ளிய இலக்கிய நடையிலே அரிய விஷயங்கள் பலவற்றை எடுத்துக் கூறும் இந்நூல் கற் றறிந்தார் போற்றும் தகைமையுடையதாக விளங்குகின்றது: ஆசிரியருடைய சிறந்த சிந்தன சக்தியும், ஆராய்ச்சிவன்மை யும், அறிவும் இந்நூலைப் படிப்பார்க்கு எளிதிற் புலனுகும். மட்டக்களப்பு நாட்டின் பண்பாட்டையும், கலைவளத்தையும் அறிந்து கொள்ள விரும்புவார்க்கு இந்நூல் பெரிதும் பயன் படும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.
வி. செல்வநாயகம்
இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனே.

முன்னைநாள் தபால் வாணுெலி மந்திரி, செனெட்டர், இராமநாதன் பல்கலைக்கழக அமைப்பாளர்
திருவாளர் சு. ஈடேசபிள்ளை அவர்களின் மதிப்புரை
இலங்கையிலே தமிழ் மக்கள் பன்னுாருண்டுகளாக வாழ்ந்து வரும் பகுதிகளுள், வடக்கில் யாழ்ப்பாணம் பிரசித்தி பெற் றிருப்பதுபோன்று, கிழக்கில் மட்டக்களப்புப் பகுதி பிரசித்தி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் தோன்றி அதல் குப் புகழீட்டித் தந்தனர். மட்டக்களப்பில் விபுலாநந்த அடிகள் சமீபகாலத்திற் தோன்றி அதற்குப் புகழீட்டித் தந் துள்ளார். இவ்விரு பெரியாரும் தமிழ்மொழிக்குச் செய்த அரும் பெருந் தொண்டினல், இவர்கள் இலங்கையில் மாத்திர மன்றி இந்திய நாட்டுத் தமிழகத்திலும் போற்றப்படுகின் றனர். அங்குள்ள மக்களின் பாராட்டுக்கு யாழ்ப்பாணம் உரியதாவதுபோல், மட்டக்களப்பும் இக் காலத்தில் உரிய தாகின்றது.
மட்டக்களப்புக்குச் சில தனிச் சிறப்புகளுண்டு. நீர் வள மும் நிலவளமும் நிரம்பப்பெற்ற இப்பகுதி இலங்கையின் நெற் களஞ்சியமாக விளங்குகிறது . பாலுந் தேனும் பாய்ந் தோடும் நாடு என்று இதனைப் புலவர்கள் பாடியிருப்பது வெறும் புனைந்துரையாகாது. மட்டக்களப்பிற் பாடும் மீன்கள் உள்ளன என்பதைப் பலரும் அறிவார்கள். விபுலாநந்த அடிகள் தமது யாழ் நூலில் இம் மீன்களின் இசையைக் குறிப் பிட்டு, அதைப் பீடிகையாகக் கொண்டு தமிழிசை ஆராய்ச் சியைத் தொடங்குகின்றனர். பல ஆராய்ச்சிகளுக்கு மட்டக் களப்பு நிலைக்களஞக இருக்கிறது. இந்திய நாட்டில், பண் டைக்காலத்துத் தமிழ் மக்களிடையே நிலவிய சில பழக்க வழக்கங்களும் சொல்லாட்சிகளும் மட்டக்களப்புத் தமிழ் மக்களிடையே இன்றுங் காணப்படுவது இம் மக்களின் தொன் மைத் தொடர்பைப் புலப்படுத்துகின்றது. கண்ணகி வழிபாடு இந்திய நாட்டுத் தமிழகத்தில் மறைந்தும், மட்டக் களப்பிற் பன்னூருண்டுகளாக நிலைபெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தொன் மைத் தொடர்புள்ள தமிழ்க் கூத்து வகைகள் மட்டக்களப்பில் இன்றுங் காணக்கூடியனவா யிருக்கின்றன.

Page 16
xxii
மட்டக்களப்பைப்பற்றி இவ்வாறு அறியத்தக்கன எல்லா வற்றையும் விரிவாக ஆராய்ந்து விளக்கி, "மட்டக்களப்புத் தமிழகம்’ என்ற ஓர் அரிய ஆராய்ச்சி நூலைத் திரு. வி. சீ. கந்தையா அவர்கள் இயற்றி வெளியிடுகிறர்கள். இந் நூலில் மட்டக்களப்பில் தோன்றிய புலவர்களைப் பற்றி இவர்கள் எழுதிச் சேர்த்துள்ள பகுதி மிகவும் பயன்படத்தக்கதாகும். திரு. கந்தையா அவர்கள் பண்டிதப் பட்டமும், வித்துவான் பட்டமும் பெற்றதோடு அண்ணுமலைப் பல்கலைக்கழகத்திற் பயின்று பி. ஓ. எல். பட்டமும் பெற்றுள்ளார்கள். இவர்கள் மட்டக்களப்பில் ஒரு வித்துவ பரம்பரையைச் சார்ந்தவர்கள்; மட்டக்களப்பின் அருந்தவப் புதல்வராகிய விபுலாநந்த அடிகளிடமும், இக்காலத்தில் மட்டக்களப்பிற் செஞ்சொற் கவிஞராக விளங்கும் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்க ளிடமும் தமிழ் பயின்றவர்கள். இவர்கள் இப்பொழுது வெளியிடும் நூலினின்று இவர்களது சீரிய புலமையும் நுணு கிய ஆராய்ச்சித் திறனும் நன்கு விளங்கும். வாழ்க இவர் தமிழ்ப்பணி.
* இராமநாதன கம்", ér, நடேசபிள்ளை சுன்னுகம்.

இராமகிருஷ்ண சங்கத்து இலங்கைப் பாடசாலைகளின் முகாமையாளரான தமிழ்ப்பேரறிஞர்
தவத்திரு. ஈடராஜாாகங்த அடிகளார் தந்த பொன்னுரை
ஈழமணித் திருநாட்டின் வட, மத்திய, கிழக்கு மாகா ணங்களிற் தமிழ் மக்கள் கூட்டமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களனைவரும் ஏதோ ஒரு காலத்தில் தென்னிந்தியத் தமி ழகத்திலிருந்து இலங்கையிற் குடியேறியவர்கள் என்று அறி யப்படுகின்றது. தாய்நாட்டுத் தமிழ் மக்களிடம் காணப் படும் பொதுப் பண்புகள் பல இம்மூன்று பிரிவினரிடையேயும் பொதுவாக மிளிர்வதைக் காணலாம். வட, மத்திய பகுதிகளில் வதியும் மக்களுக்குத் தாய்நாட்டுத் தொடர்பு அன்று தொட்டு இன்றுவரை இருந்துவருகின்றது. ஆனல் கிழக்கிலங்கை மக் கள் தம் தாய்நாட்டுத் தொடர்பு மட்டுமன்றி ஈழத்தின் வட, மத்திய பகுதிகளில் வதியும் சகோதரத் தமிழ் மக்களின் தொடர்புங் குன்றிய நிலையிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இக் காரணத்தினலே, மட்டக்களப்புப் பகுதித் தமிழ் மக்கள், ஈழத்தின் ஏனைய பகுதிகளில் வதியும் மக்களிடங் காணப் படாத சில சிறப்பியல் புகளைக்கொண்ட ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனல் இவர்களைப் பற்றிய விரிவான வரலாறு அல்லது ஆராய்ச்சிநூல் எதுவும் இதுவரை வெளிவந்ததேயில்லை. மட்டக்களப்புச் சிவாநந்த வித்தியாலயத் தமிழ் விரிவுரையாளர் வித்து வான், பண்டித வி. சீ. கந்தையா அவர்கள் எழுதிய " மட்டக்களப்புத் தமி ழகம் ' என்னும் இப் புதிய ஆராய்ச்சி வெளியீடு இப்பெருங் குறையை நிவிர்த்தி செய்கின்றது.
இந்நூல், மட்டக்களப்பு நாட்டைப்பற்றிப் பல கோணங் களிலிருந்தும் ஆராய்வது; பத்து இயல்களைக் கொண்டது. முதலாம் இயலில், மட்டக்களப்புத் தமிழகத்தின் வரை விலக்கணத்தையும், ஆசிரியர் மேற்கொண்டுள்ள அடுத்த ஒன்பது இயல்களிலும் ஆராயப்போகும் விடயங்களான (2) உணர்ச்சிக் கவிநலம், (3) நாட்டுக் கூத்துகள், (4) நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும், (5) செந்தமிழ்ச் சொல் வளம், (6) கண்ணகி வழிபாடு, (7) புலவர் பரம்பரை, (8) மருந்தும் மந்திரமும், (9) மட்டக்களப்புத் தமிழர் குடி யேற்றமும் அரசியற் குறிப்புகளும், (10) ஒழிபு - என்பன வற்றையும் பற்றிச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் வரசகர் களுக்கு அறிமுகப்படுத்துகிருர்,
உணர்ச்சிக் கவிநலத்தை ஆராயப்புகுந்த வித்துவான் அவர்கள் அக் கவிதைகளின் உணர்ச்சி வேகத்தினுல் உந்தப்

Page 17
xxiv
பட்டு நாமிதுவரை கேட்டிராத பல பொறுக்கு மணிகளாகிய சொல்லோவியங்களை வடித்துத் தந்துள்ளார். பாமர மக்க ளின் இன்ப நிகழ்ச்சிகளின் எழிலை இனிய, எளிய செந்தமிழ் மொழியிற்கூறும் இந் நாடோடிப் பாடல்களுட் பல, இது வரை அச்சு வாகன மேரு மற் செவியேறல் மூலம் பொதுமக்க ளின் நாவிலே தவழ்ந்து வளர்ந்துள்ள வை. நாடோடிக் கவிதைகளை அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து பாராத இக் காலக் கல்விமான்கள் அவற்றைக் கொச்சைத் தமிழ்ப் பாடல்களெனப் புறக்கணித்து வந்தார்கள். இவ் வாசிரியரின் ஆராய்ச்சியின் பயனக நாட்டுப்பாடல்கள் தமக்குரிய தனி மதிப்பையும் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு சங்க காலச் செய்யுள்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த ஒரு சில தனிச் சிறப்புக்களிலுங் கூடப் பங்குகொண்டுவிட்டன.
நாட்டுக் கூத்துகள் மட்டக்களப்பு மக்களின் பாரம்பரியச் சொத்தாகும். வடமோடி, தென்மோடி நாடகங்கள், விலா சங்கள், வசந்தன், கும்மி, குரவை போன்ற ஆடல்கள் என் பன இந்நாட்டுக் கேளிக்கையாகவும் பொழுதுபோக்கு விளை யாட்டுக்களாகவும் அமைந்துள்ளன. இவற்றிற் பெரும்பாலும் இளங் காளையர்களும் கன்னியர்களும் பங்குபெறுகின்றனர். இவ்வாறு களிப்பூட்டும் கலையினைப் பற்றி ஆராயப் புகுந்து பல ஏட்டுப் பிரதிகளைத் துருவிப் பார்த்தும், அண்ணுவிமாரின் விளக்கங்களைக் கேட்டும், நாட்டுக் கூத்துகளைப் பற்றிய முழு விபரங்களையும் இந்நூலாசிரியர் விளக்கியிருப்பதோடு, ஆடல், பாடல், கூத்து என்பனவற்றில் திறமை பெற்ற ஆடவருக்கு விவாகச் சந்தையில் நல்ல மதிப்புண்டு என்பது போன்ற செய்திகளையும் சுவைபெற இப்பகுதியுட் கூறியுள்ளார்.
விபுலாநந்த அடிகளாரின் தலைசிறந்த இசைத் தமிழ் நூலாகிய யாழ் நூலின் மூலம் மட்டக்களப்புத் தமிழகம் வான் புகழ் எய்தியுள்ளது. அவர்களின் நன் மாணவரான பண்டிதர் கந்தையா அவர்கள், நீரரமகளிரும் யாழ் நூ லாசிரியரும் என்ற கட்டுரையில் அடிகளார் கண்ட இசை நுட் பங்களைப் பல்லோரும் விளங்கக்கூடிய முறையில் விளக்கி, இளங்கோவடிகளின் திருவவதார மெனப் போற்றப்படுகின்ற யாழ் நூல் முனிவரின் இசைத் தமிழ் ஆற்றலை எடுத்து நன்கு விளக்கியிருப்பதன்மூலம் தாமும் ஓர் இசைத் தமிழறிஞ ராகக் காட்சி தருகிருர் எனலாம்.
மட்டக்களப்பு நாட்டின் பல்வேறு தரப்பட்ட மக்க ளிடையே வழங்கிவரும் சொல்லாட்சிச் சிறப்பைப் பொருத்த மான உதாரணங்களுடன் இம் மட்டக்களப்புத் தமிழகத்தில் விளக்கிக் காட்டியுள்ளார் இதன் ஆசிரியர். பழந்தமிழ்ச் சொற்களையே பேச்சு மொழியிற் பாமர மக்களும் கையாள் வதை இங்குச் சர்வசாதாரணமாகக் காணலாம். சண்டை

XXV
போட்டுக்கொண்டு ஒருவர் மற்ருெரு வரை வையும்போது கூட மங்கல மொழியிலேயே தூற்றுவது மட்டக்களப்புத் தமிழகத்தாரது பண்பாகும். பேசுந்தமிழும் பண்டை இலக் கியத் தமிழும் இந்நாட்டிற் பெரும்பாலும் ஒரே தன்மை யனவா யிருக்கின்றன. ஊன்றி நோக்கினற் கொச்சைத் தமி ழென்பது இப்பகுதியில் மிகக் குறைவாயு ள்ள தென்றே கூற லாம். அவ்வாறன செந்தமிழ்ச் சொல் வளத்தை இந் நூலா சிரியர் மிகச் சிறந்த முறையிற் காட்டியுள்ளமை அவரது மொழி நூலறிவை (Linguistic Knowledge) நன்கு புலப் படுத்துவதாயுள்ளது. காலா காலங்களில் எடுத்தாளப்பட்டு வந்த பிற மொழித் திசைச்சொற்கள் இந்நாட்டுத் தமிழ் வளர்ச்சியிற் கொண்டுள்ள பங்கும், இவ்வரிய ஆராய்ச்சியில் இடம்பெற்றுள்ளது.
மொழியிலே காணப்படும் சிறப்பியல்புகளைப் பேர்ன்று சமய, வழிபாட்டு முறைகளிலுஞ் சில புதிய அம்சங்கள் இந் நாட்டிலுள்ளன. கண்ணகி, முருகன், பிள்ளை யார், பேச்சி, மாரி, திரெளபதி, நாகராசா என்ற தெய்வங்களை மட்டக் களப்பு மக்கள் வழிபடுவர். பத்தினித் தெய்வமாகிய கண் ணகியைத் தமிழ் மக்கள் மட்டுமன்றிச் சிங்கள மக்களும் ஈழ நாட்டில் வழிபடுகின்ருர்கள். கண்ணகி வழிபாடு பற்றிய செய்யுள் நூலொன்றை வெளியிட்ட இவ் வாசிரியர் பத்தினித் தெய்வம், சடங்கும் வழக்குரையும், கொம்பு விளையாட்டு, தமிழ்க்குரவை, வசந்தன் ஆடல் என்னும் ஐந்து உட்துறை களின் மூலம் கண்ணகி வழிபாடுபற்றித் தெளிவாக இங்குக் கூறியிருக்குஞ் சிறப்பு மிகுதியும் பாராட்டுதற்குரியது.
மட்டக்களப்பிலே புலவர் பரம்பரை யொன்றிருந்த தென்பதை யறியாத பல்லோரும் வியப்புறும் வகையிற் பண் டிதர் அவர்கள் பதினைந்து புலவர்களின் கவிதை வாழ்வினை யும், இன்னும் பதினைந்து புலவர்களின் வரலாற்றுக் குறிப் புக்களையும் தம் நூலுட் கொடுத்திருப்பது இந்நாட்டைப் பற்றி மற்றையோருக்கிருந்த அறிவுக் குறைவினை நீக்கி மட் டக்களப்புத் தமிழகத்தின் புகழை மேலும் உயரச்செய்வதா யுள்ளது. தம் பேரையும் புகழையுங் கருதாது, தாய்மொ ழியை அரியாசனமேற்ற வேண்டுமென்ற ஒரேயொரு எண்ணத் துடன் மட்டக்களப்புத் தமிழ்ப் புலவர்கள் தெய்வத்தை முன்னிட்டுப் பாடிய தனிப்பாடல்கள் பல தெய்வ மணங் கமழ்வன வாய் இங்கு உள்ளன. இவற்றுட் சில மந்திர சக்தி வாய்ந்திருக்கக் காணலாம். இவற்றைப் பாடிய புலவர் பெரு மக்களிற் சிலர் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந் தவர். இவ்வாரு ன புலவர் பெருமக்கள் அனைவரது தமிழ் வாழ்வினையும் தமது மட்டக்களப்புத் தமிழகத்தின் மூலம்

Page 18
XXνι
வெளிக்கொணர்ந்திருக்கும் பண்டிதர் கந்தையா அவர்களது நடுநிலைச் சிறப்பையும் தமிழ்ப்புலமை, ஆராய்ச்சித்திறன் என்பவற்றையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றே ம்.
மருந்துக்கும் மந்திரத்துக்கும் பேர் பெற்ற நாடு மட்டக் களப்பு. விஞ்ஞான அறிவு நிறைந்த இக்காலத்திலும் அவற்றில் நம்பிக்கையுடைய மக்கள் பலர் இங்கு உள்ளனர். முறிந்த எலும் பை உருக்கு மருந்து வைத்து ஒட்டச் செய்தல்; பேய், பில்லி, சூனியம் முதலியவற்றை நீக்குதல்; பாம்புக்கடிக்குக் கைதேர்ந்த சிகிச்சைசெய்தல், பிரசவ வேதனையைக் குறைத் துப் பிள்ளைப்பேற்றை இலகுவாக்குதல் ; காதலர் காதலி யரைச் சேர்த்தி மருந்தின் மூலம் பிணைத்துவைத்தல் போன்ற துறைகளில் மந்திரமும், மருந்தும், மூலிகைகளும் இங்குக் கையாளப்பட்டு வருகின்றன. இவை மட்டக்களப்பு மக்க ளின் பரம்பரைச் சொத்தாயுள்ளவை. இக்கலைகளிற் தேர்ச்சி பெற்றுள்ளோர் தம்மறிவை இரகசியமாகவே வைத்துக் கொள்ளுகின்றர்கள். இது காரணமாகப் பெரும்பகுதியான மருந்தும் மந்திரங்களும் பிற்சந்ததியாரின் நலனைக் கருதாத சுயநலமிகளோடு மறைந்து போகின்றன. தற்கால வைத்திய முறைகள் பயனளிக்காவிடத்து மந்திர சிகிச்சை கை கண்ட பயனளித்திருப்பதையும் நாம் அறிவோம். ஒருசிலர் இவற் றைத் தகாத முறைகளிற் பிரயோகஞ் செய்தபோதிலும் இவற் ரு ல் மக்களுக்குக் கூடிய நன்மையே கிடைத்திருக்கின்றன என இக் கலைப் பயனை ஆசிரியர் நன்கு ஆராய்ந்து எழுதி
யுள்ளார்.
இந்நாட்டு அரசியல், தமிழர் குடியேற்றம் என்னும் விஷயங்களைப்பற்றி இக்காலச் சரித்திர ஆசிரியர்களும் ஏற் றுக்கொள்ளத்தக்க முறையிலே, தமது நீண்ட ஆராய்ச்சியின் பயனுகக் கண்ட முடிபுகளை ஆசிரியர் இந்நூலில் நன்கு எடுத் துக் காட்டியிருப்பதன்மூலம், தாமும் சிறந்த ஒரு சரித்திர ஆராய்ச்சியாளராகிவிட்டார்.
மேலே கூறப்பட்ட தலைப்புக்களில் அடங்கப்பெருது எஞ் சியவை நூலின் இறுதியாக உள்ளதான ஒழிபியலில் இடம் பெற்றுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இருக்கும் சாதி, குடிப்பிரிவுகள், சமய சமூகச் சடங்குகள் என்பனவற்றையும், வெளிநாட்டாரது வரவால் மட்டக்கள்ப்புத் தமிழகத் தாருக்கு ஏற்பட்ட புதிய சமய, சமூக, கலாச்சார உறவு களையும் எடுத்து விளக்கும் அப்பகுதி மட்டக்களப்பு நாட் டைப்பற்றி நாம் மேலும் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி களைக் கொண்டதாகும்.

XXVii
இத்தகைய அரிய விடயங்களோடு ஏறத்தாழ அறுநூறு பக்கங்களைக் கொண்டமைந்துள்ள இந்நூலில் ஏறக்குறைய எழுபத்தைந்து விளக்கப் படங்களும் சேர்க்கப்பட்டிருத்தல் நூலாசிரியருடைய கருத்தினை நாமனைவரும் நன்கு கண்டு மதிழ்வதற்குக் கருவிசெய்கின்றது. சொல்லட்டவணையும், இந் நூலின் மேற்கோளாக அங்கங்கே எடுத்தாளப்பட்டுள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட ஆசிரியர் பெயர், நூற்பெயர் என்ப வற்றின் அட்டவணையும், மட்டக்களப்புத் தேசப்பட மும் அழ குற அமைந்து நூலினை இனிதே நிறைவேற்றி வைக்கின்றன.
இவ்வாறு பலப்பல வகையாலும் சிறந்த இந்நூலை வெளி யிடுவதன் மூலம் யாழ்ப்பாணத்து 'ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத்தினர் சிறந்ததொரு தமிழ்ப் பணியைச் செய்திருக்கின் ருர்கள். மட்டக்களப்பு, யாழ்ப் பாணம், இந்தியா, மலாயா என்று தமிழர் வாழும் இடங் களையெல்லாம் இணைத்த கலைப்பாலமாக விளங்கிய "ஈழகேசரி" என்னும் அரிய தமிழ் இதழை நிறுவிக் காத்த பெருந்திருவாள ரான பொன்னையா அவர்களது நினைவு மன்றத்தினரால், தமிழுலகு அனைத்தையும் பிணைத்து ஒருங்கே மகிழ் விக்க வல்ல இந்நூல் வெளியிடப்பெற்றமை மிகுதியும் பொருத்தமான தென்றே சொல்லவேண்டும்.
பண்டிதர் கந்தையா அவர்கள் அரும் பாடுபட்டுப் பல ஏடுகளை ஆராய்ந்து , பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பழங் குடி மக்கள், அறிஞர், முதியோர் ஆதியோருடன் நடத்திய சம்பாஷணை மூலமும் தற்காலம் வெளிவந்து கொண்டிருக்கும் புதிய நூல்கள், சரித்திர விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமும் தமது மட்டக்களப்புத் தமிழகத்தைச் சிறப்புற உருவாக்கி மங்காப் புகழை ஈட்டிக்கொண்டனர். தமிழன்னை யைப் பழையபடி அரியாசனமேற்ற வேண்டுமென்ற சிறந்த எண்ணத்துடன் பண்டிதர் கந்தையா அவர்கள் எழுப்பிய கலைக்கோயில் போன்ற இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. இதை மனமுவந்து ஏற்றுத் தமதுள்ளங்களில் அரங்கேற்றி இதற்குரிய சிறந்த மதிப்பைக் கோடுப்பது மட்டக்களப்புத் தமிழ் மக்களைச் சார்ந்த பெருங்கடனுகும். பண்டிதர் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து இத்தகைய அரும் பெரும் பணிகளில் மேன்மேலும் ஈடுபட்டுத் தாம் பிறந்த நாட்டுக்கும், தமிழுக்கும், சமயத் துக்குந் தொடர்ந்து சேவை செய்து வர வேண்டுமென மனமார வாழ்த்துகின்ருேம்.
சுவாமி நடராஜாநந்தா சிவபுரி ?, இராமகிருஷ்ண ஆசிரமம், மட்டக்களப்பு.

Page 19
முன்னுரை
-----—
மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ் ஏட்டின் 1949ஆம் ஆண்டு மார்கழி இதழிலே வெளியிடப்பெற்ற நீரரமகளி ரும் யாழ்நூலாசிரியரும் ’ என்ற கட்டுரையினேடு- ஏறத் தாழப் பதினேந்து ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து தொடங் குகின்றது மட்டக்களப்புத் தமிழகம் என்னும் இந்நூலின் ஆராய்ச்சி வரலாறெனலாம். மட்டக்களப்பு நாட்டிலே பலதுறைப்பட்டுக் கிடக்கும் கலேவளத்தினை மற்றையோ ரும் அறிந்து இன்புறத்தக்கவாறு வெளிப்படுத்துதல் வேண்டும் என்ற எமது பெருவிருப்புக்குத் துணைகின்று வளர்த்தவை சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் 1951ஆம் ஆண்டு சித்திரை மாதம் யாழ்ப்பாணத்திலே நடத்திய இலங்கைத் தமிழ் விழா நிகழ்ச்சிகள், அக்காலை அன்னுரால் வெளியிடப்பெற்ற இலங்கைத் தமிழ்விழா மலரிலே என்னேயும் ஒரு கட்டுரை எழுதுமாறு அம் மலர்க் குழுவினர் கேட்டுக்கொண்டனர். அக் கட்டுரை, மட்டக் களப்பு மாநாட்டின் கலேவளம் பற்றியதாக அமைதல் வேண்டும் என்று அவ்விழாவின் சார்பில் மட்டக்களப் பிலே பணிசெய்த குழுவிலிருந்த தமிழறிஞர்களனைவரும் எனக்கு ஆலோசனை கூறினர். அதன்படி உருப்பெற்று இலங்கைத் தமிழ் விழா மலரிலே மட்டக்களப்புத் தமி ழகம் என்ற பெயரால் வெளிவந்த கட்டுரைதான் இந் நூலுக்கு அமைந்த திடமான அடிப்படையாகும். இலங் கைத் தமிழ் விழாவுக்கு வந்திருந்த இந்திய அறிஞர் பலர் அக் கட்டுரையினேப் படித்து மகிழ்ந்தார்களென்றும், அதன் கண் அமைந்துகிடக்கும் பொருட்துறைகளை எல் லாம் தனித்தனி விரிவாக ஆராய்ந்து தமிழுலகுக்கு அளித் தால் அது பெரும் பயனளிக்குமென்றும் * கல்கி ' ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ண முர்த்தி அவர்கள் மகிழ்ச்சியோடு என் னிடம் அக்காலை கூறினர். உடன் நின்ற, தமிழ்விழா மலர் ஆசிரியர் குழுவின் தலைவரும், ஈழகேசரிப் பத்திராசிரியரு LO (T 650f நண்பர் இராஜ அரியரத்தினம் அவர்களும் கல்கியாரின் கூற்றை வழிமொழிந்து என்னை ஊக்கப்

Xxix
படுத்தலாயினர். அன்றிலிருந்து இந்நூலமைப்பிற்கான உள்ளத்தெழுச்சி எம்மிடத்துக் காலூன்றப்பெற்று வளர்வ தாயிற்று. அக் கட்டுரைப்பெயரே இந்நூலுக்கும் பெயராய் அமைந்ததோடு, அக்கட்டுரையே அறிமுகம்’ என்ற பெய ரோடு நூலின் முதலாவது இயலாயெழுந்து மட்டக் களப்புத் தமிழகத்துக்கும் புகுமுகமாயிற்று.
மட்டக்களப்புத் தமிழகம் என்ற கட்டுரைப் பொருளின் தொடர்பாக மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் ' (1952), * மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள் ’ (1953) என்ற இரு கட்டுரைகளை மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ் ஏட் டிலே பின்னர் எழுதலானேன். தமிழகத்தின் பலபாகங் களிலுமிருந்து அவைபற்றிப் பாராட்டுக்கள் பல வந்தன. ஈழத்திலே சுதந்திரன், வீரகேசரி என்ற வார இதழ்கள் அக் கட்டுரைகளை மறு பிரசுரஞ்செய்து சிறப்பித்தன. சிலகாலத் தின் பின்னர்த் தினகரன் இதழார் தமது வெள்ளி விழா மலரிலே மட்டக்களப்பு நாட்டுக்கூத்துகள் பற்றி யெழுது மாறு என்னேக் கேட்டு, அப்பொருளில் மேலும் ஒரு கட்டுரையைத் தோற்றுவித்து வெளிப்படுத்தினர்கள். மட்டக்களப்புப் புலவர் பெருமக்கள் பலரதும் வரலாற்றுக் கட்டுரைகளைத் தமது இலக்கிய வார ஏட்டில் ஈராண்டு களாகத் (1955 - 1956) தொடர்ந்து வெளிவரச்செய்து இந்நூலின் எழுத்து வளத்தை வளரச் செய்தனர் ஈழகேசரி ஆசிரியராகிய இராஜ அரியரத்தினம் அவர்கள். மேலும் அவர் தந்த பேரூக்கம் இந்நாட்டிலே கிலவும் கண்ணகி வழி பாட்டின் தொடர்பானமைந்ததான ‘ கொம்பு விளையாடல்’ பற்றிய எமது கட்டுரை ஒன்றினையும் தோற்றுவித்து, ஈழகேசரி வெள்ளிவிழா மலரிலே வெளிவரச் செய்வ தாயிற்று. நல்ல எழுத்தாளரைத் தோற்றுவித்துத் தமிழ் மொழியினே மேன்மேலும் வளமூட்டிவைக்கும் பெரும் பணியிற் திளைப்போரான செக்தமிழ், ஈழகேசரி, வீர கேசரி, தினகரன், சுதந்திரன் இதழ்களின் ஆசிரியப் பெருமக்கள் காட்டிய பேரூக்கத்தினுற் காலத்துக்குக் காலம் என்னுற் படைக்கப்பட்ட கட்டுரை யனேத்தும் வேண்டிய திருத்தங்களையும், மாற்றங்களையும் பெற்று இந்நூலுள் அமைந்து கிடக்கக் காணலாம். வசந்தனுடல்’

Page 20
xxx
* குரவையாடல் ’, ‘மந்திர வழக்கு ' என்ற கட்டுரைப் பொருள்கள் இலங்கை வானெலியின் மூலம் அவ்வப் போது ஒலியலைகளினூடு உலவப்பெற்றவை.
இவ்வாறு பலவாயில்களாலும் வளர்ந்துவந்த எமது முயற்சி கைகூடுவதற்கு மட்டக்களப்புக் கிராமத்தோறும் உள்ள அண்ணுவிமாரும், தமிழ்க் கிழவர்களும் பெரிதும் துணேபுரிந்திருக்கின்றர்கள். மற்றையோருடைய கண்க ளிலும் படாதவாறு அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டயங்களும் கல்வெட்டுக்களும் உள்ள ஏடுகள், கண்ணகி வழக்குரை ஏடுகள், மட்டக்களப்பு மான்மிய ஏடுகள், நாட்டுக் கூத்துகள் பலவற்றின் ஏடுகள் ஆகிய வற்றை என் கையில் மகிழ்வுடன் தந்ததோடு அவற்றின் பரிசீலனையின் போதும் வேண்டிய உதவிகளை மகிழ்வுடன் செய்தார்கள். அவருள் திருக்கோவில் வரலாறு, சாதித் தெய்வக் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம் என்ற பொருள் பல பொதிந்த ஏடுகளைத் தந்துதவிய தம்பிலு வில்லைச் சேர்ந்த தமிழ்மணியாகிய உவில்லியம்பிள்ளை என்பார் குறிப்பிடத்தக்கவர். அவர் இந்நூலின் புலவர் பரம்பரையுள்ளும் (பக். 319) இடம்பெறுகின்றர். மற் ருெருவர், மண்முனைப்பகுதி அரசியல் வரலாற்றுக் குறிப் புகள் பலவற்றையும், கொக்கட்டிச்சோலைத் தான் தோன் ரீஸ்வரர் கோயிற் பட்டயங்கள், கல்வெட்டுக்கள் என்பன வற்றையும், மட்டக்களப்பு மான்மியத்தின் வெவ்வேருன ஏட்டுப்பிரதிகள் இரண்டையுந் தேடித் தந்துதவியதோடு, மண் முனைப்பகுதிச் சாதிக்கட்டுப்பாடு, குலவிருதுகள் முதலானவற்றைச் சரிவர அறிவதிலும் துணை செய்த வர், முதலைக்குடாவைச் சேர்ந்த தமிழறிஞர் திரு. தோ, மு. சிவசம்பு ஆசிரியர் அவர்கள். மட்டக்களப்புத் தமிழகத் தின் பெருகன்றிக்குரியோரான இப்பெரியோர் இருவரும் அண்மையில் இயற்கை எய்திவிட்டனர். வாழ்க அன்னர் தமிழ்ப் புகழ்,
கண்ணகி வழிபாட்டினேடு தொடர்புள்ள இந்நாட்டுப் பழைய இலக்கியச் செல்வங்களின் ஆராய்ச்சியின்போது காரைதீவுத் தமிழ்ச் செல்வர்களான திரு. வே. தம்பிராசா ஆசிரியர், திரு. க. கயிலாயபிள்ளைக் கப்புகளுர் (படம் 34)

XXXί
ஆகியோர் பெரிதுந் துணைசெய்தனர். புலவர் பரம்பரைக் குறிப்புக்களைத் தேடிச்சேர்ப்பதில் மட்டக்களப்புக் கிராமக் தோறும் உள்ள எமது மாணவர் பலரும் நன்கு உழைத் தார்கள். மட்டக்களப்புத் தமிழ்ப் பணிகளிலே தாமும் ஒன்றி வாழ்வோராகிய முஸ்லீம் மக்களிடை விளங்குக் தமிழ்ப்புலவர்களுடைய வரலாற்றுக் குறிப்புக்களைப் பெறு வதிற் துணைகின்றேர் அக்கரைப்பற்றினேச் சேர்ந்த ஜனப் அ. ஸ. அப்துஸ் ஸ்மது ஆசிரியரும், ஏருவூரைச் சேர்ந்த ஜனுப். மு. அகமது லெவ்வை ஆசிரியருமாவர். மட்டக்களப்பு வரலாற்றினுேடு தொடர்புடைய இலங்கை யின் அரசியற் குறிப்புக்களைச் சரிவரப் பெறுவதிற் துணை கின்று வேண்டிய ஆலோசனைகளையுங் கூறினர் இலங் கைப் பல்கலைக் கழகத்துக் கல்விப்பகுதி விரிவுரையாள ராக உள்ள திருவாளர் ப. சந்திரசேகரம், எம். ஏ. அவர்கள். சிவாநந்த வித்தியாலயத்தில் வரலாற்று ஆசிரியராக உள்ள வரும், எமது மாணவருமான திரு. க. தியாகராசா, பீ. ஏ. அவர்களும் நூல் அச்சாகும் காலத்து, இதுபற்றி வேண்டிய திருத்தங்களைச் செய்யத் துணைபுரிந்தனர். மட்டக்களப்புக் கத்தோலிக் மதத்தாரது வரலாறும் சேவைகளும் பற்றிய குறிப்புக்கள் சரிவரக் கிடைப்பதில் உறுதுணையாயிருந்தவர் அர்ச். மிக்கேல் கல்லூரியைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜோசப் மேரி அடிகளார். அவர் எமது தமிழ்ப் பண்டித மாணவருமாவர். மெதொடிஸ்த திருச்சபை பற்றிய குறிப் புக்களைச் சரிசெய்வதில் வேண்டிய ஆலோசனைகளைத் தந் துதவியவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் உப அதிப ரான திருவாளர் பிரின்ஸ் காசிநாதர் அவர்கள். இப் பெரியோர் அனைவர்க்கும் மட்டக்களப்புத் தமிழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலதுறைகளிலும் இவ்வாறு சேர்க்கப்பெற்ற குறிப்புக் களேத் தெளிவுபடுத்துவதற்காக இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ள படங்களை எடுத்துதவுவதிற் சிறிதும் மனங்கோணது நாட்டின் உட்பகுதிகளிலே வெகுதூரத் தில் உள்ள கிராமப்புறங்களுக்கும், காடுகள், மலைக் குகைகள், மலையுச்சிகள், பாழ்ங்கோயில்கள், சிதைந்து

Page 21
1 xxxii
அழிந்து கிடக்கும் தாதுகோபங்கள் என்பனவற்றுக்கும் வேண்டியபோதெல்லாம் என்னுடன் வந்த புகைப்படக் கலைஞர்களான அக்கரைப்பற்றைச் சேர்ந்த திரு. வி. பி. சிவப்பிரகாசம், கல்லடி உப்போடையைச் சேர்ந்த திரு. ம. த. லோறன்ஸ் ஆகிய இருவரும் இந்நூல் அழகுற நிறைவுறுவதிற் பெரிதும் பங்குகொண்டோராவர். இவ ருள் கைதேர்ந்த தமிழ்த் தட்டெழுத்தாளருமான திரு. சிவப்பிரகாசம் அவர்கள் இந்நூலுக்கான ஆய்வு வேலை களின் போது உடனிருந்து தட்டெழுத்துப்படிகளில் அனேத் தையுஞ் சிறப்புற வடித்துத் தந்தார்கள். அப்படிகள் அழுத்தகத்தாரின் வேலையை இலகுவாக்கி எனது வேலை யின் பெரும் சுமையையுங் குறைத்தன. இந்நூலுக்கான புகைப்படங்களை எடுத்துத்தந்த மற்றும் இரு பேரன்பர்கள் மட்டக்களப்பு ராஜா ஸ்ரூடியோ’ அதிபரான திரு. கே. எஸ். எஸ். நடராசா அவர்களும், கல்லடி உப்போடை யைச் சேர்ந்த திரு. வீ. மகாலிங்கசிவம் அவர்களும் ஆவர். சொல்லட்டவணை, மேற்கோள் பெற்ற புலவர் பெயர் வரிசை, நூற்பெயர் அகராதி என்பனவற்றையெல்லாம் சரிவரச் செய்து தந்தனர் சிவாநந்த வித்தியாலயத்து ஆசிரியரும் எமதுமாண வருமான திருவாளர்கள் வே. கண பதிப்பிள்ளை, க. பழநித்தம்பி என்பார். இந்நூலின் புற அழகும் உட்பொருளோடு பொலிவுற அமைந்து விளங்கு மாறு பொருத்தமான தோர் அட்டைப் படத்தை வரைந் தளித்தனர் சிற்ருண்டியைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் குமார் அவர்கள்.
பல்வேறு வகையிலும் இந்நூல் இனிதே பொருள் பொதிந்து அழகுற விளங்குதற்குக் காலாக ஊக்கமும், உதவியும், உறுதியும் தந்துநின்ற இப்பெருமக்கள் அனை வருக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்திக் கொள்ளுகின்றேன்.
இவ்வாறு வளர்ந்த பொருட்தொடர்பனே த்தையும் நூலுருவில் வெளிப்படுத்து தற்கான கன்முயற்சியில் முன் னின்று உழைத்தனர், திருக்கோணமலை நண்பர் திரு. கோ. இராஜகோபால் அவர்களும், திரு. இராஜ அரியரத் தினம் அவர்களும், அன்னர் . ஈழகேசரிப் பொன்னையா

xxxiii
நினைவு வெளியீட்டு மன்றத்தாரின் அன்புத் தொடர்பினை இந்நூலுக்கு ஆக்கிவைத்தனர். அம்மன்றத்தின் செய லாளராக இருந்த கலைப்புலவர் க. நவரத்தினம் அவர் களும், மன்றப் பொருளாளரும் திருமகள் அழுத்தகத்து அதிபருமாயிருந்த திருவாளர் கோ. அப்பாக்குட்டி அவர் களும் மட்டக்களப்புத் தமிழக வெளியீட்டிற்குப் பெரிதும் காரணமாக இருந்த தமிழறிஞர்களாவர். இந்நூலின் அச்சுப் பணியைத் தொடங்கிவைத்த இப்பெருமக்கள் இருவரும் நூல்நிறைவு காணுமுன்னரே விண்புகுந்து விட்டார்கள். அவர்களின் பிரிவினைத் தொடர்ந்து அழுத் தகத்திலே ஏற்பட்ட இதன் வளர்ச்சிக் குறையை நீக்கி, நூலினை வெளிக்கொணர்ந்து தருபவர், குறித்த மன்றப் பணிகள் பலவற்றிற்கும், திருமகள் அழுத்தகத்திற்கும் தற்காலம் பொறுப்பாளராக விளங்கும் தமிழ்த் திருவாள ரான திரு. மு. சபாரத்தினம் அவர்கள். இவர்கள் அனை வரும் யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு ஆகிய ஈழத்தின் இருபெருந் தமிழ்ப்பகுதிகளுக்கு மிடையே சிறந்ததொரு கலைப்பாலம் அமைத்த பெரும் சிற்பியாகிய ஈழகேசரிப் பொன்னையா அவர்களின் உளமறிந்து தமிழ்ப்பணிபுரியும் கலைக்குரிசில்கள். இவர்களுக்கும், மற்றும் இந்நூலினை நல்லன் போடு வெளியீடு செய்த ஈழகேசரிப் பொன்னையா நினைவுமன்றத்துத் தலைவர் திரு. ச. பேரின்பநாயகன் அவர் களுக்கும், மன்றத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும், திருமகள் அழுத்தக உதவியாளர் அனைவருக்கும் மட்டக் களப்புத் தமிழகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இவர்க ளனவருக்கும் எனது உளங்கலந்த பெருநன்றியை என்றும் உரித்தாக்குகின்றேன்.
இந்நாட்டின் கலைவிளக்குப் போன்றிலங்கும் தமிழ்ப் பேரறிஞரான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்க ளது பகவத்கீதை வெண்பாவானது விரைந்து அச்சேறி வெளிவருதல் வேண்டும் என்ற எனது விருப்பத்தை, இந்நூலினே எழுதும்போது காட்டியிருந்தேன். அவ்விருப்பு நிறைவுபெற்றுப் பகவத்கீதை வெண்பாவின் முதற்பகுதி அச்சூர்ந்து தற்போது வெளிவந்திருத்தல் கண்டு அனை வரும் மகிழ்வுறுகின்ருேம். மட்டக்களப்பு மான்மியம்’. என்ற இந்நாட்டு வரலாற்று ஏடுகளிலிருந்து பெற்ற
t

Page 22
XXXίν
குறிப்புக்களும் எனது மட்டக்களப்புத் தமிழக அரசியல் வரலாற்றிலே ஆங்காங்கு எடுத்தாளப் பட்டிருப்பதைக் காணலாம். மறைந்துகிடந்த அவ்வேடுகளும் நூலுருவில் வெளிப்படுதலின் அவசியத்தை இந்நூலுள் எடுத்துக் காட்டியிருக்கின்றேன். பழமையான அந்த ஏடுகள் பலவற்றையும் துருவி ஆராய்ந்த வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா அவர்கள் மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலை அண்மையிலே பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். மட்டக் களப்பு காட்டுப்பாடல், நாட்டுக்கூத்து, மற்றும் கலேச்சிறப் புக்கள் முதலியவற்றிலெல்லாம் பெரிதும் ஈடுபாடுள்ள வித்துவான் அவர்கள் மட்டக்களப்பில் வழங்கும் எண் ணேச் சிந்துப் பாடல்கள் பலவற்றையும் திரட்டி அச் சேற்றி வெளியிட்டுமிருக்கின்றனர். புலவர்மணி அவர்க ளின் பகவத்கீதை வெண்பாவும், வித்துவான் நடராசா அவர்களது மட்டக்களப்பு மான்மியப் பதிப்பும் இலங் கைச் சாகித்திய மண்டலப் பரிசுகளைப் பெற்ற நூல்க ளாகும் என்பதை மகிழ்வுடன் இங்குக் குறிப்பிட விரும்பு கின்றேன்.
இந்நூலுள் விளக்கப்பட்டுள்ள மட்டக்களப்பின் பழம் பெருங் கலேகளான நாட்டுக் கூத்துகளும், நாட்டுப் பாடல்களும் பிற்காலத்திலே, பிறமொழிக் கல்வி, அந்நிய நாகரீகம் என்பவற்றினது தொடர்பினுற் பொதுமக்க ளிடையிலிருந்து மங்கி மறைந்துகொண் டிருந்ததோடு, வெளியுலக மதிப்பையும் இழந்து வந்தன. அந்தத் தாழ் நிலையை அகற்றி, நமது பழம் பெருங் கலைகளுக்கு உரிய மதிப்பைக் காட்டி அவை புத்துயிர்பெற் றெழுதற்காகப் பெரிதும் உழைத்தவர் இலங்கைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் விரிவுரையாளரான கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள். அவரது தலைமையிலே, இலங்கைக் கலைக் கழகத் தமிழ்நாடகக் குழுவில் யானும் ஓர் உறுப்பினனுக இருந்து மட்டக்களப்புப் பழந் தமிழ்க் கலைகளின் மறு மலர்ச்சிப் பணியில் அன்னுருடன் உழைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். மறைந்து கிடந்த நாட்டுப் பாடல்களைத் திரட்டி அச்சேற்றி வெளியிடவேண்டும் என்றும், பல நாட்டுக்கூத்துப் பாடல்களையுந் திரட்டி அச்சேற்றி வெளிக் கொண்ரல் வேண்டும் என்றும், மட்டக்களப்புக் கிராமங் தோறும் பண்டுபோலக் கூத்துக்களரிகள் தோன்றிக்

XXXV
கலை ஒலியினை எங்கணும் கேட்கச் செய்தல் வேண்டும் என்றும் இந்நூலினுள் யாம் காட்டியிருக்கும் பெருவிருப் பினை நிறைவேற்றுதலில் அவர் எடுத்த பேரூக்கத்தின் பயணுக மட்டக்களப்பு காட்டுப்பாடல்கள், அலங்காரரூபன் ாகாடகம் என்னும் இருநூல்களும் இலங்கைக் கலைக்கழக நாடகக் குழுவின் சார்பில் அவரால் வெளிப்படுத்தப் பெற்றன. கலாநிதி அவர்கள் மட்டக்களப்பு அண்ணுவி மார்களது காவில்மட்டும் வாழும் கூத்திலக்கண ஒலியான தாளக்கட்டுகளை யெல்லாம் அக் கலைக்கழகத்தின் மூலம் ஒலிப்பதிவுசெய்து பாதுகாத்துவைக்கவும செய்தனர். அன்னரது கலையார்வத்தினுற் கிராமத்தோறும் நாட்டுக் கூத்துகள் பலவும் புத்துயிர் பெற்று ஆடப்பெற்றன; நாடக நூல்கள் பல எழுதப்படுகின்றன. மேலும் பல நாட்டுக்கூத்து ஏடுகளைப் பரிசோதித்து வெளியிடக்கூடிய சூழ்நிலைக்கு அரசினரிடம் வழிகோலி நிற்கும் அப்பெரியார் இத்துறையிலே மட்டக்களப்புத் தமிழகத்துக்கு ஆற்றி வரும் சிறந்த தொண்டுகளுக்காக இத் தமிழகம் அன் னருக்கு என்றும் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது. இவை நாட்டுக் கூத்துகள் ' என்றும், f உணர்ச்சிக் கவிகலம் ' என்றும் இந்நூலில் உள்ள இரண்டு இயல்க ளோடும் தொடர்புடைய நற்செய்திகளாய் இங்குப் பொறிக்கப்படல் வேண்டியனவுமாயின.
மேலும், இந்நூலின் ஆருவதாக உள்ள கண்ணகி வழிபாடு என்னும் இயலின்மூலம் மட்டக்களப்புத் தமி ழகத்தில் மறைந்துகிடக்கும் கண்ணகி இலக்கியமனத்தும் வெளிக்கொணரப்படவேண்டியதன் அவசியத்தை நாம் நன்கு உணரலாகும். காலஞ்சென்ற தி. சதாசிவ ஐயர் அவர் களது பதிப்பாக வெளிவந்த ‘வசந்தன்கவித்திரட்டு’, எமது பதிப்பான கண்ணகியம்மன் குளுத்திப் பாடல் முதலிய நான்கு நூல்கள்’ என்ற வெளியீடுகள் போக, மற்றையவற் றுள் கண்ணகி வழக்குரை என்னும் நூல் மிக முதன்மை யான ஒன்ருயுள்ளது. அதனல், மட்டக்களப்புத் தமி ழகத்து வேலைகளோடு, இந்நாட்டிற் கிடைக்கக்கூடியனவா யிருந்த வழக்குரை ஏடுகள் பலவற்றையுந் தேடிப் பெற் றுப், பரிசீலனை செய்து, அச்சிட்டு வெளியிடுதற்காக யானே ஒருபடியினை அண்மையில் எழுதி எடுத்தேன், அதனை விரைந்து பதிப்பித்து வெளியிட வேண்டியதன்

Page 23
XXX νi
அவசியத்தை அறிந்து, அதற்காக இலங்கைச் சாகித்திய மண்டலத்தாருடைய தொடர்பினே, இலங்கைப் பல்கலேக் கழகத்து விரிவுரையாளரும், சாகித்திய மண்டலத்து உறுப் பினராகிய தமிழறிஞருள் ஒருவருமான கலாநிதி ஆ. சதாசிவம் அவர்கள் ஆக்கிவைத்துள்ளனர். இத்தொடர்பு கண்ணகி வழக்குரையினே மட்டுமின்றி, இங்கு மறைந்து கிடக்கும் மற்றைய இலக்கியச் சுவடிகக்ளயும் வெளிக் கொணருதற்கு வழிகோலும் என்று நாம் எதிர்பார்க்க லாகும்.
இவ்வாறு கேர்முகமாகவும் மறைமுகமாகவும் மட்டக் களப்புத் தமிழகத்தின் கலேவளப் பணியில் ஈடுபட்டுள்ள பெருமக்கள் அனேவருக்கும் இக்காட்டுப் பொதுமக்கள் பாவரும் மிகுதியுங் கடப்பாடுடையராவர்.
மட்டக்களப்புத் தமிழகத்தின் நிறைவுகண்டு பெரு மகிழ்வோடு அணிந்துரைகள் நல்கி எமது முயற்சியை ஊக்கிவைத்த தமிழ்ப் பேரறிஞர்களான தவத் திருவாளர் கள் குன்றக்குடி அடிகளார், நடராஜாநந்த அடிகளார், தனிநாயக அடிகளார் ஆகியோருக்கும், உயர் திருவாளர் கள் வி. செல்வநாயகம், சு. நடேசபிள் ஃள ஆகியோருக் கும் எனது அன்பும் நன்றியும் கலந்த வணக்கத்தைச் செலுத்திக்கொள்கின்றேன்.
இயன்றவரை, பல்லோர் துனேயுடனும் தொடங்கிய இம்முயற்சி ஒருவாறு நிறைவுற்று வெளிவருதற்குத் தோன் ருத் துனேயாயிருந்த திருவருளே நினேந்து வழுத்து கின்றேன்.
மிகப் பரந்துபட்ட இத்துறையில் இயல்பாய் விடு பட்டுப் போனவற்றையும், மேலும் சேர்க்கை, திருத்தம் பெற வேண்டிய பொருட்துணிபுகளேயும், மற்றும் ஆலோ சனேக் குறிப்புக்களேயும் அறிஞர் பெருமக்கள் எமக்குக் கூறுவாராயின் நன்றியுடன் ஏற்று மறுபதிப்புகளில் அவற் றைப் பொருத்தம் நோக்கிச் சேர்த்துக்கொள்ளுதலாகும்.
வணக்கம், " கூடல் ", இங்கனம் 15, மாடி வீதி, வி. சீ. கந்தையா மட்டக்களப்பு, நூலாசிரியன்,
34-10 - l ᏭᏮ 4. மட்டக்களப்புத் தமிழகக்

Μ
甲
' JI i III))
கண்னமுத்து-குஞ்சித்தம்பி உபாத்தியாயர் அவர்களுக்கு

Page 24
சமர்ப்பண உரை
--n-u nr urm
க. குஞ்சித்தம்பி உபாத்தியாயர் அவர்கள்
விபுலாநந்த அடிகளாரின் கல்லாசிரியர்.
" அம்புவியிற் செந்தமிழும் ஆங்கிலமும்
எனக்குனர்த்தி அறிவு தீட்டி
வம்புசெறி வெண்கலச வல்லியருள்
h; ட்டி ெைத்த வள்ளல் குஞ்சித்
தம்பியெனும் பெயருடையோன் தண்டமிழின்
கரைகண்ட தகைமை போன்ரன்
செம்பதும (Pலர்ப்பதத்தைச் சிரத்திருத்தி
எஞ்ஞான்றும் சிந்திப் பேனே. '
(மட், தமிழ. பக். 301)
என்று அடிகளாராற் குருவணக்கம் செய்யப்பெறுபவர். எனது பெரிய தந்தை முறையினரும், விபுலாநந்த அடிகனாரின் மாணவனுக என்னே வழிமுறை செய்து தமிழ்ப் பயனுTட்டிய பெருக்தகையினருமாகிய அன்னுர்தம் பொன்னடிகளில் இந் நூஃலச் சூட்டி மகிழ்கின்றேன்.
வி. சி. கந்தையா நூலாசிரியன் , ஐப்பசி 11:4. மட்டக்களப்புத் தமிழகம்.

ஈழகேசரி அதிபர்
நா. பொன்னேயா அவர்கள்
தமிழனங்கின் புகழ்பரப்பும்
சால்புடையான் பொன்னேயத் தமிழறிஞன் சுன்னுகத்
தனி+ழ கேசரியால் அமிழ்த&ளந்த புகழ்தளேந்தான்
ஆங்கவன்றன் கஃலப்பணிக்கு இமிழ்கடல்சூழ் புவிமீதே
இ&ண பேதும் உண்டாமோ !

Page 25
|- _ ? -:-, 1,...” () _ _ _* - 제 「. 다 ------ 고 ------ *** Te () -( -- No ..." --★ → — T. ? - 1 = -5 -- = = s ? | - - -*- --------=_ E = ---- ---- ---- - -
= —
---- – s –"교 - : = = "= so I_s = 七“日”事 |- s
---- * 3 = --------- -|- – !! != * L*心 ----·|- : c = ----- = o E· * so =
I ,
i u i
I rit ,
i, i
ܨ
 
 

மட்டக்களப்புத் தமிழகம்
1. அறிமுகம்
உலகெங்கும் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் விழிப் புணர்ச்சியால் மக்களுள்ளத்திலே மூண்ட தாய்நாட் டன்பு என்னும் கலை' எனது வளர்ந்து தாய்மொழிக் கிளர்ச்சி எனும் ஒளிப் பிரம்பாக இன் / விளங்குகின்றது. சுதந்திர நாடுகளிலுள்ள தேசத் தொண்டர்களெல்லோரும் தத்தம் தாயகத்தின் மானம் காக்கும் முதற் செயலாகத் தாய்மொழியைப் பேணி வளர்ப்பதில் ஈடு |ட்டுள் ளர்கள். இங்கிலேமையில் நம் தமிழ்மொழியின் பழமை பும் செழுtையும் துலங்கி அது மீண்டும் உலகறிந்த சிறப் புற்றுத் திகழ்ச்செய்தல் தமிழர் 'ற் சார்ந்துள்ள இன் றைய பெருங் கடமையா புள்ளது. இந்தியா, இலங்கை, பர்மா, தென் குபிரிக்கா முதலிய பல நாடுகளி ற் பரந்து வாழ்ந்துவரும் தமிழ்க்ஸ் அக்னவரும் தமிழினம் என்ற ஒரே குழுவில் ஒன்று பட்டுத் தோளோடு தோள் சேர்ந்து உழைத்தாலன்றி இப்பெருங் கடமையை நன்கு கிறை வேற்றுதல் ஒல்லாது. இந்த அடிப்படையான ஒற்றுமையை வளர்க்கும் கருவியாகக் தனிப்பட்ட ஒவ்னொரு தமிழ்க் குழுவின குடை "ரிமுர், பார்க்கை, பண்டாடு, நாகரிக வளர்ச்சி என்பனவும் அறிந்துகொள்ளப்படு தல் அவசிய

Page 26
2 மட்டக்களப்புத் தமிழகம்
மாகும். இக் குறிக்கோளில், ஈழநாட்டின் ஒரு பகுதியில் வாழும் ஒரு பழந்தமிழ்க் குழுவினரின் வரலாறு சுருக்க மாக இந்நூலிற் கூறப்படுகிறது.
66
ஆரியர் போற்றும் அணிசால் இலங்கையிலே சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும் ஏரால் இயன்ற செந்நெல் இன்சுவைத்தீங் கன்னலொடு தெங்கி னிள நீரும் தீம்பலவி னள்ள மிர்தும் எங்குங் குறையா இயலுடைய நன்னடு மட்டக் களப்பென்னும் மாநாடு. A A a தத என்று யாழ்நூலகத்துப் புகழ்ந்து கூறப்பெறும் இப் பழந் தமிழகம், ஈழநாட்டின் கீழ்கடல் சார்ந்து, கிழக்கு மாகாண மென்னும் அரசியற் பிரிவுள் அடங்கிக்கிடக்கின் றது. சிவனுெளிபாதமலையிடைத் தோன்றிக் கீழைக்கடல் சேரும் ஈழப் பேராருகிய மகாவலிகங்கை இம் மாகா ணத்தை, வடபாற் திருக்கோணமலை என்றும், தென்பால் மட்டக்களப்பு என்றும் எல்லே வகுத்துக் கடலுட் பாய்கின் றது. இவ்வாற்றிலிருந்து தெற்கே குமுக்கறுைவரை ஏறக் குறைய நூற்றுமுப்பது மைல் நீண்டு கிழக்கு மேற்காய் முறையே கெய்தலும், மருதமும், முல்லையும், குறிஞ்சியும் அணிபெற அமைந்து ஏறக்குறைய எழுபது மைல் அகன்று கிடப்பது இந் நாடு. இதன் நடுவணதாய் வடக்குத் தெற்காக நீண்டு மட்டக்களப்புவாவி என் ருெரு நீர்ப்பரப்புக் கிடக்கின்றது. மட்டமான (ஆழ மற்ற) நீர்நிலை எனும் பொருளமைந்த வாவியின் இப் பெயர் அதனிருமருங்கிலுமுள்ள நாட்டிற்குப் பெயராயிற் றென்று பெரும்பாலுங் கொள்ளப்படுகின்றது. இப் பெயர் மட்டக்களப்புவ’ எனும் சிங்களச் சொல் லின் திரிபா யமைந்ததென்று கருதுவர் ஒரு சாரார். இந்நாட்டு வளத்தில் ஈடுபட்ட புலவர்கள் இது மட்டுக் கலப்பு (தேனுறு கலக்கும் நாடு) என்ற தமிழ்ச்சொற் பிறப்பி னமைந்ததே யென்று கூறி மகிழ்கின்றர்கள். * வம்பரை' என்ற வகையினைச் சார்ந்த பெருந் தேன் மட்டக்களப்புக் காடுகளிலிருந்து நிறையப் பெறப்பட்ட தென்றும், பெருங் கோவில்கள், கற்கிணறுகள், இன்று

அறிமுகம் 3
முள்ள பழமைவாய்ந்த கோட்டை மதில்களெல்லாம் சுண்ணும்புடன் இவ்வகைத் தேன் கலந்தே அரனுற அமைக்கப்பெற்றனவென்றும், காடுகளிலிருந்து வாவியுட் கலந்த கான்யாறுகளெல்லாம் மாரிகாலத்துத் தேன் வெள்ளமாகவே பாய்ந்தனவென்றும் தெளிவாக அறியப் படுகின்றது. பெயர்க்காரணம் எவ்வாறயினுங் கலைவளத் தாலும் நிலவளத்தாலும் அனைவரையுங் கவர்ந்து கிற்கும் சிறப்பும் பெருமையும் மட்டக்களப்பு நாட்டிற்கு உண்டு.
இந்நாட்டின் இயற்கை வனப்பைக் குறித்து யாழ்நூற் புலவர் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடுகிறர்கள் :-
* மட்டக்களப்பிலே முப்பது மைல் நீண்ட வாவி ஒன்றுளது.
இது கடலொடு கலக்கும் வடகோடி அமிர்தகழி என்னும் புண்ணியப் பழம்பதிக்கு அணிமையானது. அழகிய தெற்குக் கோடிக்கு அணிமையாக மேற்குக் கரையிலே மண்டூர் என்னும் புண்ணியப் பழம்பதி உளது. வாவியின் மேற்குக்கரை முழுவதும் மருதத் தண்பணேயாகும். கிழக்குக் கரையிலுள்ள ஊர்கள் தெங்கு, மா, பலா முதலிய மரங்கள் செறிந்து கண்ணுக்கும் மனத்துக்கும் உவகை தருவன. புலியன் என்னும் வேடர்குலத் தலைவன் அரசு புரிந்த இடமாதலின் முன்னுளில் புலியன் தீவு ? என வழங்கப்பெற்றதும், இங்காளிலே மொழிச் சிதைவி னலே புளியந்தீவு’ என வழுங்கப்படுவதும், மூன்று மைல் சுற்றளவுடையதுமான அழகிய நகரம் ஒன்று, காவிரி நடுவணமைந்த திருவரங்கம்போல, மட்டக்களப்பு வாவியின் நடுவணமைந்துள்ளது. இந்நகர் மட்டக்களப்புப் பிரிவிற்குத் தலைநகராகும்.”
புளியந்தீவு எனும் இடப்பெயர் இப்பந்தியுட் காட்டப் பட்டவாறு காரணத்தா னமைந்தமைபோல, இங்குள்ள வேறு பலவிடங்களும் காரணத்தாற் பெற்ற பெயர்களே யுடையன.
* மட்டக்களப்பு வாவியுள் பல தீவகங்கள் ஆங்காங் குள்ளன. அவற்றுட் பெரும்பாலானவை மருத வயல்களையுடையன. புளியக்திவை யொட்டிய வாவியின்

Page 27
4 மட்டக்களப்புத் தமிழகம்
பகுதியிலேதான் நீரரமகளிர்” என்று பாராட்டப்பெறும் ஊரிகளின் (Sir Ps) இன்னிசை இடையரு தொலிக்கின் றது. மட்டுநகரத்திலிருந்து எழுவான்கரை ’ (வாவியின் கிழக்குக்கரை - அதாவது : சூரியன் எழும்புக் திசையி லுள்ள கரை) வழியே தென்முகமாக ஒரு நெடிய வீதி கிராமங்களுடே செல்கிறது. இவ் வீதியின் 25ஆவது மைலில் உள்ள கல்முனே எனும் இடம் இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லுகையில் மட்டக்களப்பு நாட்டின் வயல் வளம் இனிதாகக் காட்சியளிக்கிறது. வழியின் வலப் புறமாகக் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு அடிவானம் வரையுந் தோன்றும் பரந்த மருதத் தண்பணேயின் காட்சி மிகுதியும் இன்பம் பயப்பதாயுள்ளது. உழவும், விதைப் பும், வெட்டும் ஒரேகாலத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுதலால் பல்வேறு தோற்றப் பொலிவு சான்ற இவ் வயற்பரப்பு ஆங்காங்குள்ள வாய்க்கால், வடிகால் களினுலும், தாமரை, ஆம்பல், அல்லி என்பன நிறைந்த குளம் குட்டைகளினுலும் மேலும் புதிய அழகுவாய்ந்து காண்போர் கருத்தைக் கவர்ந்து தோன்றும், இடப்புறம் பார்த்தாலோ கடற்கரை சார்ந்து, அடர்ந்து வானுற வோங்கிய குலைத் தெங்குகளின் காட்சி (படம் 1). மக்கள் குடியிருக்கும் பகுதி அது. பழந்தமிழ் நூல்களிற் குறிப் பிடப்பெற்ற மன்றம் ’ ஆக அமைந்து ‘நரை மூதாளர் நாயிடக் குழிந்த ’ (முதியோர் பொழுது போக்காகக் கவறு ஆடுதலாற் குழிவுபெற்ற) இடங்களையுடைய பெரிய ஆல், அரசு, வேம்பு, வாகை முதலிய மரங்கள் சூழ்ந்த கோயில்கள் கிராமத்தோறுங் காணப்படுவன. இக்கிராமங்களில் நானில வளமும் குவிக்கப்பெற்ற காட்சிச்சாலைகள் போன்று மிளிரும் சந்தைகள் இடந் தொறுங் கண்கொள்ளாக் காட்சியளிக்கும்.
* படுவான்கரை (பொழுதுபடும் மேல்திசைக்கரை) வழியே பயணஞ் செய்தாலோ கண்ணுக்கும் மனத்துக்கு .மினிய் புதிய வேறு காட்சி. பழந்தமிழ்ப் பண்புடன் வாழும் உழவர் அங்கே காணப்படுவர். உழவர்தம்

அறிமுகம்
உயிர்போன்ற செல்வமான மந்தைகள் மேயும் முல்லே நிலத்தைச் சார்ந்துள்ள கழனிகள் தனியழகுடன் அங்குத் தோன்றுவ. முதிரை, கருங்காலி முதலிய மரங்கள் நிறைந்த பெரிய சோலைக்காடுகள், சிள்வண்டின் ஒசை யாலும், ஆனே அரவத்தாலும் செல்வார்க்கு அச்சத்தை விளைவிப்பன. அக் காடுகளிலும் மலைச்சாரல்களிலும் இருந்து எடுக்கப்படும் குறுந்தேனுக்கு “ அளவுகணக்’ கில்லை. இந்த மேல்பகுதிச் செல்வம் பாலோடு தேனுறு பாய்ந்தோடு கன்னடு’ என்று மட்டக்களப்புக்குப் பெரும் புகழையும் ஈட்டித் தந்துள்ளது.
சில இடங்களில் நானில வளமும் நெருங்கி அங்கங்கே விளங்கும் இந்நாட்டின் இயற்கை யமைப்பு, பொய்கை யார் எனும் புலவர், சேர அரசன் ஒருவனைப் புகழ்ந்து பாடியதாகவுள்ள :-
66
புனவர் தட்டை புடைப்பி னயலது
இறங்குகதி ரலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே.”*
- புறம் 49.
(சேனைப் பயிர்களில் வந்துவீழுங் கிளிகளைக் கடிவோர் சுழற்றுகின்ற தட்டை ' எனும் கருவியினது ஒசையினுல் வெருண்டு, மருத வயல்களிலிருந்தும் நெய்தற் பொழில்களி லிருந்தும் பறவைகள் உடனெழுந்து செல்கின்றன) என்ற பாடலே நினைவுறுத்துகின்றது. இதுபோன்று, மட்டக் களப்புப் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் இந்நாட்டின் நானில மயக்கினையுங் குறித்துப் பாடிய:-
* திருவளர் தாமரைத் தெண்ணிர்ப் பொய்கைவாய்
உருவஒண் சிருஅர் மலராய்க் துழக்கலின் செழுநீர்ப் பறவைத் தொழுதிஆர்த் தெழுந்தே கொழுமடற் தெங்கிற் குயிலொடு பயிலும் ; "தாட்டுணை ஆடவர் சதங்கைக் கூத்தொலி
சூட்டுமிசை மயிலந் தோகைதுயி லெழுப்பும் ; பால்மலி எருமைப் பகட்டொடு மயங்கி

Page 28
6 மட்டக்களப்புத் தமிழகம்
மால்மருப் பியானே வனந்தொறுந் திரியும் ; குடம்பொழி பசுவினம் கண்துயி லிடந்தொறும் மடம்பயில் மான் கணம் வண்புல் கறிக்கும்;
என்ற செய்யுளடிகளும் ஈண்டுக் கருதி இன்புறத்தக்கன.
மேலும் அவராற் பாடப்பெற்ற :- * பால்பெருகுந் தேன் பெருகும் பண்புடைய மன்னவர்செங் கோல்பெருகும் படிவயற் பைங் கூழ் பெருகும் புனல்பரந்து கால்பெருகுங் கல்லார்க்குஞ் சொல்லாட்சி மிகப்பெருகும் நூல்பெருகும் இடையார்க்கு நுவலறங்கள் பெருகுமால்.’ * மட்டக் களப்புநீள் வளவயற் காய்த்த
நெல்லினும் பொலிகநல் யாண்டு பலவே.?
* புன்னைமரம் வளர்கெய்தற் புலவுமணற் கடற்கரையில்
தென்னைமரம் வளர்ந்தோங்கிச் செல்வமிக வளருமால் என்னே குறை கலேமகளும் இனிதுகளி நடம்புரியும் அன்னையெனு மட்டுருன்னுட் டம்மைதனக் கிணையெதுவோ.’ * மோட்டெருமை வெண்டயிரும் முப்பழமும் கற்கண்டும்
போட்டினிய சீனிதேன் பொருந்துசெந்நெல் வெண்சோற்றைக் கூட்டிஒன்ருய்க் குழைத்ததனேக் குலக்குமரர் தமைக்கூவிக் கூட்டுனுவார் அமிர்தமெனக் குறைவில்செல்வமவர்க்கம்மா..? என்ற செய்யுள்களும் நாட்டின் வளச் சிறப்புக்களை நன்கு விளக்குவன. இங்குத் தந்தவற்றுள் ஈற்றுச் செய்யு ளானது வளத்தினை மட்டுமன்றி இங்குள்ளாரின் புதி துண்ணும் பண்பாட்டு வழக்கினேயும் விவரிக்கின்றது. வெண்டயிருடன் கறிமிசையாது, சீனி, தேன் சேர்த் தொன்ருய்த் திரட்டி யுண்ணும் வழக்கம் மட்டக் களப்புக்கே தனித்துரிய தொன்ருகும்.
இவ்வாறு நீர்வள நிலவளஞ் சான்ற மட்டுநன்னடு 2500 வருடங்களுக்கு முற்பட்டு இங்கே வாழ்ந்துவரும் பழந்தமிழ்க்குடிகளை யுடையது. விஜயன் கி. மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டுவந்த தமிழ் மக்களைக் * கதிரகால ’ என்னும் மலேச்சாரலிற் குடியேற்றினன் என்றும், அப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப்

அறிமுகம் 7
பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற கதிரகால மலேப்பகுதி ஏறக் குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமி ழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உளது. இக் குடியேற்றத்திற்கு நெடுங் காலத்துக்கு முற்பட்டது இராவணனுட்சி. அவனுடைய பக்திக்குரிய தலமான திருக்கோயிலும், அதன் தென் பால் கடலுள் அமிழ்ந்து தோன்றும் 'இராவணன் கோட்டைகளும் பழமையின் சின்னங்களாக இன்னமுங் காணப்படுவ. விஜயனுடைய ஆட்சிக்குப் பின்னர்த் தொடர்ந்து சிங்கள ஆளுகையிலே இருந்த இத் தமிழகம் கி. பி. 200இல், ஏலேலசிங்கன் எனும் சோழ அரச னுடைய படையெடுப்புக்கு இலக்காயிற்று. பின்னர், கி. பி. ஏறக்குறைய 425இல், குளக்கோடன் என்ற சோழ அரசன் படை திரட்டிவந்து இப் பகுதியைப் பிடித்துத் திருக்கோணமலைக் கோயிலையுங் கோட்டையையுங் கட்டித் தலைநகராக்கி வன்னியர்’ என்னுஞ் சிற்றரசர் எழுவ ரைத் தன் பிரதிநிதிகளா யங்கங்கமர்த்தி ஆண்டா னென்றும், அவனுலும் தமிழர் பலர் இங்குக் குடியேற்றப் பட்டனரென்றும் கல்வெட்டுகளும், மகாவம்சமுங் கூறு கின்றன. குளக்கோடனுடைய ஆட்சியின் பின்னர் நெடுங்காலமாக மட்டக்களப்புப் பகுதி, கண்டிச் சிங்கள அரசரின் கீழ்ப்பட்டுத் தமிழரசர்களால் ஆளப் பட்டு வந்துள்ளது. இடைக்காலத்தே கி. பி. 113இல் கஜபாகு என்னும் சிங்கள மன்னன் சேரநாட்டிலிருந்து இலங்கைக்குப் பத்தினிக் கண்ணகி வழிபாட்டைக் கொண்டுவந்தானென்று சிலப்பதிகாரத்து வரந்தரு காதையால் அறிகின்ருேம். இலங்கையிற் பத்தினி வழி பாட்டை மட்டக்களப்பிற்ருன் அவன் நிறுவினனே என்று ஊகிக்கும்வண்ணம் கண்ணகி கோயில்களும், பண்டைய வழக்கத்தைத் தழுவிய அவ் வழிபாட்டு முறை யும் இப்பகுதியிலேயே மிகுந்து இன்றுங் காணப்படு கின்றன. இந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளினல் மட்டக் களப்புத் தமிழ்மக்கள் நெடுங்காலத்துக்கு முன்னரே

Page 29
8 மட்டக்களப்புத் தமிழகம்
இப்பகுதியிற் குடியேறினேரென்பது தெளிவாயிருப்பினும் இவர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் எந் நாட்டினரின் சந்ததியினரென்பதை நாம் தெளிவாகக் கூறுவதற்கில்லே.
இங்குள்ளாரின் பழக்க வழக்கங்களை ஆராயும்போது, பழைய சேரநாட்டிலிருந்தனவாய், இன்று மலையாளக் கரையிற் காணப்படுவன சில, மேல்நாட்டு நாகரிகச் சூழலிலே மயங்கி மறைந்துகொண்டிருக்கும் நிலையில் காணப்படுகின்றன. மருமக்கட்தாய முறையும், மந்திரப் பயிற்சிகளும், தேங்காய் கலந்த உணவுண்பதும், தலைக் குத் தேங்காயெண்ணெய் பூசுதலும், மங்கல நிகழ்ச்சிக ளிற் குரவை அயர்தலும், நாட்டுக்கூத்து நிகழ்த்துதலும் போன்றவை அவற்றுட் குறிப்பிடத்தக்கன. தாய் வழிக் குடியே பிள்ளையின் குடியாதலும், பெண் மைக்கு அதனல் முதன்மை கொடுத்துப் பேணி, மணம்முடித்த பின்னரும் பெற்ருேர் தம் மகளே அவள் கணவனுடன் தம் வீட்டி லேயே வைத்திருக்கும் ஒழுகலாறும், பெண்வழிக்கென்றே சில ஆதனங்களைப் பெண்ணடி முதிசம்’ ஆக எழுதி வுைக்கும் வழக்காறும் இம் மருமக்கட்தாயத்தின் தொடர் பாக இன்னும் இங்கு கைக்கொள்ளப்படுகின்றன. பெண்மக்களும் பெற்றேர் வழிக்குப் பெருநிழலா யமைதலை ஆண்நிழலில் நின்றுபோ, பெண்ணிழலில் இருந்துபோ’ என்று இங்கு வழங்கும் பழமொழியால் நன்கு அறியலாகும்.
மட்டக்களப்பு நாட்டின் மணமுறையானது ஆரியக் கலப்பற்ற தனிச்சிறப்பு வாய்ந்தது. மைத்துனர் குடியில் மணமக்கள் தீர்மானிக்கப்பெற்ற பின்னர்ப் பெண் வீட்டார் மாப்பிள்ளை’ கேட்டு அவர் வீட்டுக்கு முறைப் படி போவதும், அப்பால் மாப்பிள்ளை வழியினர் அவ் வாறே பெண்பிள்ளை வீட்டுக்குப் போவதும் நிகழ்ந்தபின் நல் முழுத்தம்’ (முகூர்த்தம்) நிச்சயிக்கப்பெறும். அச் சுபநேரத்துப், பெண்பிள்ளை வீட்டிலே மணப்பலகையில் இருவர்க்கும் ‘கண்ணுறு கழித்த பின்னர்ப் பெண்

அறிமுகம் 9
ணின் தந்தையார் தம் மகளைக் கைப்பிடித்து மணமகன் கைக்கொடுத்து மங்கல வாழ்த்துக் கூறுவார். பின்பு கலத்தில் போடுதல் ’ என்னும் முக்கிய நிகழ்ச்சி இடம் பெறும். சேவரக்கால் (சேமக்கலக்கால்-படம் 9) மீதிட்ட பெரியதோர் வெங்கலவட்டியிற் படைத்த ஏழு மரக் கறி கூட்டிய அறுசுவை யுண்டியை மணமகனும் மணமகளும் ஒருவர்க்கொருவர் மும்முறை ஊட்டி உண்டு உறவு கலப்பர். இவ்வினையுடன், கூறை தாலி கட்டுத லும் நிறைவேறியதும் மட்டக்களப்புத் தேசவழக்கப் படி திருமணம் முடிந்ததாகக் கொள்ளப்படும். சில நாட்களின் பின்னர் மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்கும் தம் உறவினர் வீட்டுக்குஞ் செல்வர். இது கால்மாறிச் செல்லுதல்’ என வழங்கும்.
மருதம் சான்று, ஈழநாட்டின் மற்றைய பகுதிக ளுக்கும் கெல் முதலிய உணவளித்துப் புகழ் ஈட்டிய இக்காட்டு மக்களின் வேளாண் செய்கை முறைகளும் தனிப்பட்டவை. இங்கு வேளாண்மைச் செய்கை மூவகைப்படும் மழையை நம்பிச் செய்வது ஒன்று; இது ‘மானவாரி (வானவாரி) என வழங்கும். நீழ்ப் பாய்ச்சிச் செய்யப்பெறுவது மற்ருென்று ; இது கால போகம் ஆகும். இவ்விரண்டுக்கும் இடைக்காலத்துச் செய்வதை ‘இடைப்போகம்’ என்பர். இங்குள்ள மிகுந்த வயற்பரப்பு, பெரும்பாலும் காற்று நடுதல், களை பிடுங்குதல் என்பன இன்றியே நல் விளைவை அளிக் கிறது. ஏக்கர் ஒன்றிற்கு 20 அவனம் (150 புசல்) விளைவுதரும் நிலமும் இங்குண்டு. இந்நாட்டில் உழுவித் துண்பாரைப் போடியார்’ என்றும், உழவர் தலைவனே * முல்லைக்காரன் ’ என்றும், உழவனேச் செய்கைக்காரன்’ என்றும் பெயரிட்டு வழங்குவர். வயலிலே, விசேடமாகப் போரடுங்காலத்துக் குழுஉக்குறிச்சொற்களையே பேசுவர். பொலி (நெல்), களம் (குடுமிதிக்கும் இடம்), வெள்ளம் அல்லது கலங்கல் (தண்ணிர்), வேர்லக்காரன் (போர் கிளறும் வளைவான தடி), போர் அல்லது சூடு (கதிர்க் குவியல்), வாரிக்காலன் (மாடு), கரைஞ்சான் (வாழைப்

Page 30
1 O மட்டக்களப்புத் தமிழகம்
பழம்), வலிச்சான் (உரொட்டி), வெள்ளோடன் (கேங் காய்), கூரைக்கோடு (வீடு), பொலிக்கொடி (வைக் கோல்), கணக்கன் (மரைக்கால்), குஞ்சு வாயன் (கைப் பெட்டி), பெருவாயன் (கடகம்), நெடுமுழவன் (கயிறு), கட்டு (வா, போ), பெருக்கம் (இல்லை), மின்னிகட்டுதல் (நித்திரை செய்தல்), நெடுமின்னி (மரணம்), வாட்டி கட்டுதல் (கள ஓரங்களேக் கூட்டுதல்), வருணன் (மழை), கூளக்கையன் (பேய்), பெருமாள் (ஆண்பிள்ளை), அடைக்கலச்சல்லி (பெண் பிள்ளை), கடற்கரும்பு (மீன்), கருங்காய் (பாக்கு), புகைஞ்சான் (புகையிலே), களம் பொலிதல் (சூடுபோட்டு முடிவுறுதல்) என்பன அத் தகைய சொற்களிற் சிலவாம். தண்ணிர் இல்லை என்ப தற்கு ‘ வெள்ளம் பெருக்கம் ’ என்று சேர்த்துப் பேசுதல் வழக்கம். குடுமிதிக்கும் தலைமை வாரிக்காலனே அரக் கன்’ என்றும், ‘குடுபோடும்’ (சூடுமிதிக்கும்) ஆரம்ப விழாவை அரக்குப் புதைத்தல்’ என்றும், குடுபோடுத லாகிய பொலிவிழாவின் முடிவை அரக்குக் கிளப்புதல் ? என்றும் வழங்குவர். போரடுங் காலத்துப் பாடப்படும் பொலிப்பாடல்கள் பல இங்கு நாடோடி இலக்கியமாக உள்ளன :-
* தாயே பொல் தம்பிரானே பொலி !
பூமி பொலி பூமாதேவித் தாயே மண்ணின் களமே மாதாவே நிறைகுடமே பொன்னின் களமே பொலிபொலி . முன்னங்கால் வெள்ளையல்லோ - பொலி அம்மதாயே முகம் நிறைந்த சீதேவி பொலிபொலி. வெள்ளி வெளிச்சத்திலே - நீ விளையாடிவா பொலியே வாரி சொரியப் பொலி தன்மதாயே - இந்த வளநாடு பொன்சொரியப் பொலி பொலியோ,29
என்று பின்னிலா இரவில் சூடு மிதிக்கும்போது (படம் 8) கடாக்கள் நோமறந்து வேலை செய்யத்தக்க தாக மட்டக்களப்புத் தமிழகத்தார் இன்குரற் தொடுத் துப் பாடும் பொலிப்பாடல்கள் சித்திரை தொடக்கம்

அறிமுகம் | 1
புரட்டாதி மாதம் வரையும் நெடுந் தொலைவிலும் சென்ருெலிக்கும்.
வயல் வேலைகள் முடிந்த ஓய்வு காலங்களில் மக்கள் கலைகளிற் கவனம் செலுத்தி வருகின்ருர்கள். உடலுக்கும் உளத்துக்கும் பயிற்சி கொடுக்கும் அவை பெரும்பாலும் மக்களின் தொழில்களுடன் தொடர்புபெற்றனவா யுள்ளன. வசந்தன் அடித்தல் இவற்றுட் பிரதான மானது. பன்னிருவர் சேர்ந்து கோலடித்தாடும் இக் கூத்தில் அநுமான் வசந்தன் , அம்மன் பள்ளு, மாதவி நடனம், குயில் வசந்தன், செவ்வாய் வசந்தன், ஊஞ்சல் வசந்தன் போன்றனவும், வேளாண்மைவெட்டு வசந்தன், உப்பட்டிகட்டு, குடுமிதிப்பு, களேபிடுங்கல் போன்றனவும் இடம்பெற்றுள.
* வாடை யாலே மழையும் வருகுது
வாருங்கோ பள்ளர் உப்பட்டி கட்டுவோம் ? * தென்றல் வந்திடு தெற்குத் திசையினில் சென்று காரிருள் மண்டி ஒதுங்குது ? என்று தம் தொழில்முறைகளைக் கூறி வசந்தனடித் தாடுதல் காண்போர் கண்ணையுங் கருத்தையுங் கவரும். மட்டக்களப்பு நாட்டின் வளத்தையும் மக்களின் தொழில், பண்பு, நாகரிகம் என்பவற்றையும் உள்ளுறை யாகக் கொண்டெழுந்த சிறந்த இலக்கியமான இவ் வசந்தன் ஏட்டுப் பாடல்களிற் பலவற்றை அண்மையிற் காலஞ்சென்ற யாழ்ப்பாணத்து அறிஞர் திரு. தி. சதாசிவ ஐயரவர்கள் திரட்டி நூலாக அச்சேற்றித் தமிழர்க்களித் துள்ளார்கள். அவர் தொண்டு வாழ்க. அன்னரது வசந்தன் கவித்திரட்டில் இடம்பெறத் தவறிக் காணப் படும் பாடல்களையுந் திரட்டியுதவி அதன் மறுபதிப்பினை வளர்த்தல் வேண்டும்.
மேலும் தென்மோடி, வடமோடி, விலாசம் எனும் அாகுபாடுளமைந்த பல நாட்டுக் கூத்துக்கள் இங்குள் ளாரால் முறைப்படி ஆடப்படுகின்றன. பழந்தமிழ் நாடக இலக்கண அமைதியும், நல்ல நடையும், பொருட்

Page 31
12 மட்டக்களப்புத் தமிழகம்
பொலிவுங் கொண்டு மிளிரும் அநிருத்த நாடகம், இராம நாடகம், தருமபுத்திர நாடகம் என்பன இவற்றுட் குறிப் பிடத் தக்கவை. ஆடவர் அரங்கேறித் திறம்படக் கூத் தாடிப் பெறும் புகழை, நல்ல மணமகனதற்கோர் மேலதிகமான சிறப்பாக முன்னேர் கருதுவர்.
வசந்தனையும் நாட்டுக் கூத்தையும்விட இன்னேர் உணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு கொம்புவிளையாட்டு ' ஆகும். நாடு மழை வளம் குன்றி, பசியும் பிணியும் மிகுந்து மக்கள் அல்லற்படுங் காலத்து, அவை நீங்கி, மழையும் வளமும் சுரக்குமாறு கண்ணகியம்மனேச் சாந்தி செய்யும் ஒரு விழாவாக இது நடத்தப்படுகிறது. விழாக் காலத்து மக்கள் அனேவரும் தென்சேரி (கண்ணகி கட்சி), வடசேரி (கோவலன் கட்சி) என்று பிரிந்துநின்று கொம்பு முறித்து வெற்றி கொண்டாடி அம்மனுக்குச் சடங்குசெய்து தேர் இழுத்துக் குளுத்தி’ பாடி வழிபா டாற்றுவர். வடசேரி, தென்சேரி என்பன வாரம்’ என வழங்கப்படும். இந்த வாரப்பிரிவில் மாத்திரம் பெரும்பாலும் மக்கள் தந்தைவழிச் சேரியைக் கொள்ளும் உரிமையுடையர். இவ்விளையாட்டில்,
(வடசேரியார் கூற்று :-)
* தவிட்டங் காயான் தென்சேரியான்-அவன்
தன்மானம் சற்று மில்லாண்டி, அவிட்டுத் தலைப்பாவைக் கையி லெடுத்து
அஞ்சியதே 7 ஓடிப் போருண்டி’ (தென்சேரியார் கூற்று :-)
* வாழைக் காயான் வடசேரியான்-அவன்
மான ஈனம் கெட்டவண்டி, பெண்பிள்ளைப் பேச்சுக்கு ஆற்ருமலே அவன் பேரழிந்தே வெட்கிப் போருண்டி.” என்பனபோல ஒரு சேரியார், மற்றைச் சேரியாரை வசைபேசிப் பாடுதலும் வழக்காகும். இவ்விழாவின் முடிவில் மக்கள் வேண்டியாங்கு, மழைபெய்து வருதல் இன்றும் கண்டு வியக்கத்தக்கதொரு நிகழ்ச்சியாகும்

அறிமுகம் 13
களுதாவளை என்னுமூர் முன்னுட்களிலே இக் கொம்பு விளையாட்டிற் பெயர்பெற்றிருந்தது. கொம்பு முரித்தல் நடைபெற்ற சிறப்புக் காரணமாக இங்குக் கொம்புச் சந்தி’ என்னும் பெயருள்ள ஓரிடம் இன்றுமுண்டு. குளுத்தி' யின்போது கேட்கப்பெறும் கண்ணகி கதை சம்பந்தமான பாடல்கள் மிக இனிமையானவை. ஆண்டு தோறும் வைகாசிமாத வளர்மதி நாட்களிற் சடங்கும், நிறைமதி நாளன்று குளுத்தியும் கண்ணகியம்மன் கோயில்களில் தவருது நடைபெற்று வருகின்றன. சிலப் பதிகாரத்திற் காணப்படுவதுபோற் தெய்வம் ஆடிக் கட்டுச்சொல்லும் முறையும் கண்ணகி கோயில்களில் உண்டு. இவ் விழாக்காலத்தே சிலப்பதிகார விரிவுரை போன்று விளங்கும் கண்ணகையம்மன் வழக்குரை' கோயில் தொறும் பாடப்பெறும். ஒலேச் சுவடியாகவே கிடைப்பதும், பழந்தமிழ் நடையைப் பின்பற்றியுள்ளது மான இந்நூல் முழுவதும் இசைப்பாடல்களா லானது. கண்ணகி வழக்குரைத்து மதுரையை எரித்தபின்னர், அப் பத்தினித் தெய்வத்தின் கோபத் தீயைத் தணித்துக் குளிர் செய்தற்காகப் பலி கொடுத்துச் சடங்கு செய்து அவ ளருள் பெற்று மக்களுய்ந்ததாக உள்ள அவ்வளவிலே நூல் முடிவடைகிற காரணத்தாற்போலும் வழக்குரை' என்று இதற்குப் பெயராயிற்று. கண்ணகையம்மன் சடங்கின் இறுதிநாளான 'குளுத்தி' யிலன்று,
G கோடற் புருவே கொடுவாராய் வெற்றிலேயே
அன்றனைய நோய்பிணிகள் இன்றே அகன்ருேட* என்பது முதலியனவாக உள்ள கண்ணகை யம்மன் குளுத்திப் பாடல்களே இருவர் சேர்ந்து இசையுடன் தொடர்ந்து பாடுதல், கேட்போர்தம்மை அகங்குழைந் தின்புறச் செய்யும்.
இங்குள்ள தமிழ் மக்களின் சமயம், வழிபாட்டு முறை என்பவற்றை ஆராயும்போது சைவசமயமே பழ்மையாக இவரிடை இருந்திருத்தல் தெரிகின்றது. பிள்ளையார், அம்மன், முருகன் ஆலயங்கள் பலவாய் எங்குங் காணப்படுவனவாயினும் முருகன் வழிபாடே

Page 32
14 மட்டக்களப்புத் தமிழகம்
பெருவழக்காயுள்ளது. திருக்கோயில் (படம் 2), அமிர்த கழி (படம் 3), மண்டூர் (படம் 4), கொக்கட்டிச் சோலே (படம் 5) போன்ற இடங்களிலுள்ள ஆலயங்கள் இவர்களின் பழமையான சமய வழிபாடுகளுக்குச் சான் ருக உள்ளன. கடற்கரை சார்ந்துள்ள திருக்கோயில் இராவணனுடைய தொடர்புடைய தலம் என முன்னர்க் கண்டோம். இலங்கையை எரிக் குணவுசெய்த பின்னர், அநுமான் தன் வால்கெருப்பை அவித்த சந்தனச் சேறமைந்த திருக்குளமுடையதும், இராமராற் பூசிக்கப் பெற்ற இலிங்கம் உடையதென்று கருதப்படுவதுமான பழம்பதி அமிர்தகழி. மண்டூர் இப் பகுதியிற் பிரசித்தி பெற்ற முருகவேள் கோயில், தில்லைமண்டூர் ’ எனவும் * சின்னக் கதிர்காமம்’ எனவும் சொல்லப்படும் இவ் வாலயத்தில் மந்திரம் இல்லாத மெளன பூசையும் இறைவ னது அருவத் திருமேனி வழிபாட்டு முறையும் நடை பெறுகின்றன. தான்தோன்றீசுவரர் கோயில்கொண் டுள்ள கொக்கட்டிச்சோலே இந்நாட்டில் உள்ள ஒரே ஒரு பழைய சிவதலமாகும். மிகப் பழமையான சிற்ப வேலைப்பாடமைந்த தேர் இவ்வாலயத்துமட்டுமே இப் பகுதியில் உள்ளது. இந்த ஆலயங்களின் வரலாறும், இவைபெற்ற மானியங்களும் பொறித்த செப்புப்பட்டயங் களையும் கல்வெட்டுக்களேயும் (படம் 10A) நாம் இன்ன மும் அங்கங்குக் காணலாம். தம்பிலுவில் அம்மன் கோயி லுக்கு அளிக்கப்பெற்ற மானியமொன்று திருக்கோயிலி லுள்ள பின்வருங் கல்வெட்டிற் குறிப்பிடப்பெற் றுள்ளது :- (படம் 10B)
* சிறி சங்கபோதி பருமரான திரிபூவன சக்கிரவர்த்திகள் சிறி விசயவாகு தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மீ" 20ந், திகதி சிவஞான சங்கரகோவிலுக்கு கொடுத்த வோவில. இதை தன்மத்துக்கு அகித்தம் செய்தானகில் கெங்கைக் கரையில் காராம்பசு வைக் கொன்ற பாவத்தைக் கொள்ளக்கடவராகவும் ?
இதிற் குறிப்பிடப்பட்ட அரசன் 1ஆம் விஜயபாகு (கி. பி. 1075) ஆவன். இப்படியான கல்வெட்டுக்களை

பிட்ட குறிப்புகள் சில, மட்டக்களப்பு வரலாற்றை ஆங்கிலத்திலெழுதிய முதலியார் எஸ். ஓ. கனகரத்தினம் அவர்களால் எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன.
அருகிவரும்நிலையில் இங்கேயுள்ளனவான நாகபடம் , மேலீடு’, ‘காதுப்பூ ’, ‘காறை ’, ‘கைக்கட்டு ’ எனும் ஆபரணங்கள் (படம் 11) பழங்காலத் தொடர்புடையன. ஆண்கள் வாலிப வயதடைந்ததும் முதல்முதல் முகத்து மயிர் எடுத்து, ஆண்மைக்கு அறிகுறியாகக் காதிலே கடுக் கன் அணிந்துகொள்ளும் வழக்கமும் (படம் 12) மறைந்து வருகின்றது. ஊர்த் தலைவனைத் தெரிந்து இங்கே கடுக் கென்றவர்’ எனும் பெயரால் அழைப்பர். இத் தொட ரில் வரும் கடுக்கென்றல்’ எனும் சொல் ‘ நெஞ்சம் கடுத்ததுகாட்டும் முகம்’ எனும் திருக்குறளில் வரும் கடுத்தல்’ எனும் சொல்லின் கருத்திலேயே (மிகுதி, முனேப்பு என்று) இருப்பது கருதத்தக்கது. பதினெண்குடி வேளாளர் பற்றித் தொல்காப்பியத்திற் கேள்விப்படுகின் ருேம். வேளாளர்களையும் முக்குவரையும் வேறுசில வகுப் பினரையும் குடி” ப் பெயரால் அழைக்கும் வழக்கம் மட்டக்களப்பில் இன்றும் நிலவுவதை நாம் காணலாகும். தீபாவளி போன்றவற்றைப் பார்க்கிலும் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு என்ற திருநாட்களையே இங்குள் ளார் சிறப்புறக் கொண்டாடுவது சிந்திக்கத்தக்க ஒன்று. சில இடங்களில் இப்பொழுது கிடைக்குங் கருங்கல்லிற் செதுக்கப்பெற்ற பெரிய கட்டில், (படம் 13) நாற்காலி என்பனவும், எஃகினற் செய்த வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களும், செப்பு நாணயங்களும், புதுமைதெரியும் பழமையான சில நகைகளும், மயில் மீன் என்பன எழுதப் பெற்ற கொடிகளும் இப்பகுதி மக்களின் பழைய நாகரிக வளர்ச்சி முதலியவற்றைக் காட்டும் சின்னங்களாகும்.
இப்படிப் பல வேருன பண்புகள் கொண்ட தமிழ்ச் சாதியாருடன் இந்நாட்டிலே, பழமையான சோனகச் சாதியினரும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றர்கள். இவர்கள் அராபியாவிலிருந்து வந்து கி. பி. 8ஆம் நூற்

Page 33
16 மட்டக்களப்புத் தமிழகம்
ருண்டிற் குடியேறிய வியாபாரிகளின் சந்ததியார். தமி ழையே தாய்மொழியாகக் கொண்டோர். இம்மக்கள் காத்தான்குடி, கரவாகுப்பகுதி, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, ஏருவூர் முதலிய இடங்களிற் செறிந்து வாழுகிருர்கள். அவர் வழிபாடாற்றும் பழமையான பள்ளிவாசல்கள் பல இந்நாட்டில் உள்ளன (படம் 49). மட்டக்களப்பின் மொத்தக் குடிசனத் தொகையான 2,03, 137ல், 85,375 பேர் சோனகர் என்றும் 1,02,264பேர் தமிழர் என்றும் மீதிப்பேர் பறங்கியர், சிங்களவர் முதலியோர் என்றும் 1946ஆம் ஆண்டின் குடிசன மதிப்பு அறிக்கையின்படி தெரிகின்றது. இப் பகுதிச் சோனகர் பழம் பண்பாடும், கட்டுப்பாடும் உடையோர், “ கவி’ என்று வழங்கப்படும் நாட்டுப் பாடல்களைப் பெருவழக்காக இவர்களிடைக் கேட்கலாம். அப் பாடல்கள் பெரும்பாலும் அகச்சுவை தழுவிச் சொல்லழகும், பொருணயமும் பொலிந்து விளங்குவன :- * வாழைப் பழ்மே எந்தன் வலதுகையிற் சர்க்கரையே
ஏலம் கிராம்பே உன்னே என்னசொல்லிக் கப்பிடட்டும் ? ' குஞ்சு முகமும், உன்ர கூர்விழுந்த முக்கழகும்,
நெற்றி இளம்பிறையும், எத்தன்கினேவைவிட்டுப்போகுதில்லை? * காவ லரணுே மச்சான் கள்ளனுக்கு முள்ளரணுே
வேலி யரனே மச்சான் வேணுமென்ற கள்ளனுக்கு ?ன * கடலே இரையாதே கற்கிணறே பொங்காதே
நிலவே எறியாதே என்கீலவண்டார் வருமளவும் ?
என்பன போன்று நல்ல உவமைகளும் கொண்டுள்ள கணக்கிறந்த கவி’ கள் இம் மக்களின் வாழ்க்கைப் பண்புகளை நன்கு அறிதற்குக் கருவியாகின்றன.
இவையும், இவை போன்று அகச்சுவையும் புறச் சுவையுந் தழுவித் தமிழ் பேசும் மக்களிடையே வழங்கும் பிற கவிகளும், பண்டைய குருகுலக் கல்விமுறையை ஒட்டிப் பள்ளிச் சிருர் பாடும் எண்ணெய்ச் சிந்து களும் இங்கே வழக்கத்திலுள்ள தனிப்பாடல்களாகும்.

அறிமுகம் 17
அகவல்கள், காவியங்கள், வசைப் பாடல்கள், ஊஞ்சற் பாட்டுகள், பள்ளுப்பாட்டுகள் என்பனவும், முன்னர்க் கண்ட குளுத்தி, வழக்குரை', 'பொலிப்பாட்டு என்பனவும் இவைபோன்ற பிறவுமாய் இக்காட்டு வழக்கிலுள்ள அச்சேருத பண்பட்ட இலக்கியங்கள் யாவற்றையும் தமிழ் உலகிற்கு வெளிப்படுத்துதல் அறிஞர் கடனுகும்.
இச்சிறப்புகள் வாய்ந்த மட்டக்களப்புநாடு பண்டு சிங்கள ஆட்சியில் நெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. கண்டி மன்னர்க்குத் திறை கொடுத்து ஆண்ட தமிழ்ச் சிற்றரசர்கள் தமிழர் பண்பாட்டை வளர்த்து வந்திருக் கிருர்கள். அக்காலத்து இங்கிருந்தோர் கண்டி நகருக்குப் பொதி எருதுகளிற் சென்று வாணிபஞ் செய்து வந்துள் ளார்கள். கண்டிக்குச் சென்று வந்த மட்டக்களப்பு வணி கர்கள் கூறிய அநுபவ மொழியான அட்டை கடியும் அரிய வழிகடையும், கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே’ என்னும் தொடர், பழமொழியாக இங்கு வழக்கத்தில் இருக்கின்றது. மண்டூர், பழுகாமம், சம்மாந்துறை என்னும் இடங்களிலிருந்து கண்டிக்குச் சென்ற பழைய கிட்டிய பாதைகள் தூர்ந்தநிலையில் இன்னும் உள்ளன. மட்டக்களப்புநாட்டார் இவ்வழியிற் காணும் கண்டியின் எல்லே ‘கண்டியக்கட்டு’ என்று இன்றும் பெயர் வழங்கப்படுகிறது.
சிங்களரின் நீண்ட ஆட்சிக்குப் பின்னர் அவரிட மிருந்து போர்த்துக்கீசரும், டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் முறையே இக்காட்டைக் கைப்பற்றியுள்ளனர். போர்த்துக் கீசராற் தொடங்கப்பட்டு டச்சுக்காரரால் கி.பி.1684இல் கட்டி முடிக்கப்பெற்ற கோட்டை ஒன்று புளியந்தீவில் உளது (படம் 46), ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்திலிருந்து தினம் மாலை 4-15 மணிக்கு இக்கோட்டையில் ஒரு பீரங்கி வெடி சுடப்பட்டு வந்தது. இங்குள்ள வெயிற் கொடு மைக்காக மாலை 4-15 தொடக்கம் இரா 9மணி வரையுமே ஒல்லாந்தர் வேலை செய்து வந்தனரென்றும், அவரை
ա) - 2

Page 34
18 மட்டக்களப்புத் தமிழகம்
வேலைக்கழைக்கும் அறிவிப்பான அதே பீரங்கிவெடி ஆங்கிலேயர் காலத்துத் தொழிலாளர் வேலை கலைதற் குரிய அறிவிப்பாக மாறியதென்றும் அறிகின்ருேம், * நாலேகால் குண்டு’ போடும் இப்பழைய வழக்கம் மிக அண்மையிற் கைவிடப்பட்டுவிட்டது. கோட்டைக் கல்லாறு எனும் இடத்திற் சிதைந்து காணப்படும் கோட்டை அத்திவாரமும், கிணறும் ஒல்லாந்தருடைய ஆட்சியை மேலும் நினைவூட்டுஞ் சின்னங்களாம்.
வெளிநாட்டாரின் சந்ததியினரான, போர்த்துக் கீச, ஒல்லாந்த மக்கள் இன்றும் மட்டக்களப்பில் வாழு கின்றனர். ஆங்கிலக் குடிகளும் ஒருசிலர் உளர். இங்குக் குடியேறிய ஆங்கிலேயர் பெரும்பாலும் மட்டக்களப்பிற் பெரிய தென்னந் தோட்டங்களை அமைத்து, தென்னையின் ஆக்கத்தில் இங்குள்ளோர்க்கும் ஊக்கமளிப்பாராயினர். திருக்கோவில், பட்டிருப்பு முதலிய இடங்களில் உள்ள மிகப் பெரிய தென்னந்தோட்டங்கள் அவர்களுடைய இம்முயற்சியின் பயனுய் விளங்குவனவே.
வெளிநாட்டாரின் ஆட்சிக்காலத்தே மதபோதனையை அடிப்படையாகக்கொண்டு கிறித்துவ சபையாரால் உலகியற் கல்வியும், அறிவியற் கல்வியும் முதல்முதல் இங்கு பரப்பப்பெற்றன. புதுக் கல்வியைத் தொடர்ந்து மக்களிடையே மதமாற்றமுங் கிளர்ச்சியுந் தோன்ற லாயின. பின்னர் 1925இல் உயர்திரு விபுலாநந்த அடிக ளாரால் இங்குக் கொண்டுவரப்பெற்ற இராமகிருஷ்ண இயக்கமானது சமய சமரசநோக்கைப் பரப்பி மத வேறுபாடு காரணமா யுண்டான வெறுப்பை நீக்கி அமைதியையும் இங்கே கிலேகாட்டிற்று. தீண்டாமைப் பிரச்சினை மக்கள் வாழ்க்கையை இந்நாட்டிற் பாதித்த தாகத் தெரியவில்லை. மக்களனைவரும் தமக்குள் சாதி சமய வேறுபாடின்றி ஒன்றி வாழ்கின்ருர்கள். வெளி யிடங்களிலிருந்து அறிமுகம் குறித்தும் குறியாதும் புதிதாக வருவோரை மகிழ்ந்து வரவேற் றுபசரித்து, விருந்தயரும் பண்பில் மிகுதியும் சிறந்து வந்தாரை

அறிமுகம் 9
வாழவைக்கும் மட்டக்களப்பு’ எனும் பழம் புகழை மக்கள் நிலைநிறுத்தி வருகின்றனர். இப் பண்புகளும், இயற்கை வனப்பு இயற்கை விளைபொருள்கள் என் பனவும் பிறரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுதலால் ஈழத்தின் மற்றைய பகுதிகளின் அன்பையும் இந்நாடு பெற்றுள்ளது. இக்காட்டை நோக்குவார், * உழவ ருழாதன நான்குபய னுடைத்தே' என்னுந் தொட்ரை நினைவுகூராதிரார்.
மொழிவளத்தை ஆய்ந்து பார்க்கின் பழமையான நல்ல தமிழ்மொழி வழக்கு இங்கே இருப்பதை அறிய லாகும். தமிழுலகிலேயே இன்று வழக்கொழிந்து போனதும் தொல்காப்பியர் காலத்ததுமான ‘கா ’ என்னும் அசைகிலே இடைச்சொற் பிரயோகம் இங்கே இருக்கின்றது. எலுவன், எல்லா, ஏலா என்ற பண்டை விளிப்பெயர்களின் திரிபான இல’ என்றதனுடன் கா’ என்ற அசைச் சொல்லும் சேர்ந்து ‘இலக்கா என்னும் விளியாகிக் கிராம மக்களிடை இங்கு வழங்கு கின்றது. மட்டக்களப்பிலே ஆடவர் தோளிலுங் கா, அரிவையர் நாவிலுங் கா’ என்று இதனை ஒரு யாழ்ப் பாணத் தமிழறிஞர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். இன்னும் இக்காட்டு வழக்கிலிருக்கும் மறுகா (மறுகால்), அப்புதல் (பூசுதல்), ஏமம் (யாமம்), முடுகு (கிட்டப்போ), ஒப்பினை (ஒப்புவமை, அழகு), கறணே (நறுநெய்), ஒண்ணு (ஒல்லா), கிறுகு (திரும்பு), கொள்ளை (அதிகம்), விரசு (துரத்து, நெருங்கு), மப்பிலி (மயிற்பீலி), உவட்டு (பெருக்கு), பொருப்பத்தல் (பொருட்படுத்துதல்), வண்ணக்கன் (கணக்கறிஞர் தலைவன்), என்பன போன்ற சொற்கள் மிகப் பழமையான மூலப்பிறப்பினை உடையன. கணகாட்டு’ (தொல்லை), கப்புகளுர் (பூசை செய்வோர்), கணத்தை (சிறுபற்றைக்காடு), போட்டா (பெருவரவை), கோப்புத்த (கமுகம்பட்டை), கிணுட்டை (சிறு வாழைக்குலை) என்பனபோன்ற சொல்வழக்குகள் சிங்கள மொழித் தொடர்பாற் பெற்ற கலப்பாலானவை. இன்னும் போர்த்துக்கீசமொழிச் சொற்களான மேசை,

Page 35
20 மட்டக்களப்புத் தமிழகம்
கதிரை, அலுமாரி, அலவாங்கு போன்றவையும் ஒல்லாந்தமொழிச் சொற்களான கந்தோர், இலாச்சி, இருக்கை, கொத்தாரிசு போன்றவையும் இங்குக் கலந்து வழங்குவ.
இந்த இலக்கியங்களும் பண்பாடும் நிறைந்த சூழ் நிலைப்பிற் காலந்தோறும் பல பெரியோர்கள் தோன்றித் தமிழ்த்தொண்டாற்றி வந்துள்ளார்கள். தமிழ்வரலாறு முதலிய பல நூல்களின் ஆசிரியரும், ! உலகியல்விளக்க உரையாசிரியரும், மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீட்சகருமாகிய வித்துவான் ச. பூபாலபிள்ளை யவர்களையும் (படம் 31), நாடக வல்லுநரும் மதுரைத் தமிழ்ச்சங்க அங்கத்தினரு மாகிய வித்துவான் அ. சரவணமுத்தன் (ஈழத்துநான லம் கித்திலக்கிழார்) அவர்களையும் (படம் 32) தமிழுலகு நன்கறியும். சிறந்த தமிழாசிரியர்களாயும், எழுத்தாளர்க ளாயும், சரித்திர விற்பன்னர்களாயுமிருந்து தமிழுக்கு ஆக்கவேலைகள் செய்து போந்தார் இன்னும் பலராவர். அவர்களுள் சின்னவப்புலவர், வித்துவான் பொ. வைத் திலிங்கதேசிகர், டக்டர் எம். கோவிந்தர், எஸ். ஒ. கனக ரெத்தினம், ஆர். என். சேதுகாவலர் பாதிரியார், டி. டப்ளியு. கதிர்காமர் என்பார் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் மிக அண்மையில் நம்மிடை வாழ்ந்து நம்முட் கலந்தவரும் மட்டக்களப்புக் காரைதீவு தோற்றுவித்த முத்தமிழ் முனிவரும், பன்மொழிப் புலவருமான விபுலா நந்த அடிகள் (படம் 19), தமிழ் இசைச் செல்வமான யாழ் நூல்மூலம் இக்காட்டின் பெயரைப் பொன்னெழுத்திற் பொறித்துச் சென்றுள்ளதையும் நாமறிவோம். அப் பெரியாருடைய மதிப்பும் அன்பும் பெற்று அவர்களையே மெய்ம்மறந் துருகச் செய்த குழைவுபொருந்திய மீட்சிப் பத்துப் பாடல்களின் ஆசிரியரான பெரியதம்பிப்பிள்ளை என்பார் (படம் 35) இக்காட்டில் இன்றுவாழும் ஒரு புலவர் திலகமாவர். ‘இலங்கை மணித்திருநாடு’ எனும் தம் பாட லாற் பரந்த புகழ்பெற்ற இப் பெரியார் பகவத்கீதை வெண்பா எனும் நூலே இனிய செந்தமிழில் யாத்து வைத்திருக்கிருர்கள். இந்நூலும், இன்னரது நூற்றுக்

அறிமுகம் 21
கணக்கான மற்றைய தனிப்பாடல்களும் அச்சேறி வெளிவருங் காலத்து மட்டக்களப்புநாட்டின் புகழ் மேலும் மிக்கோங்கும் எனக் கூறல் மிகையாகாது. இன்னும் கணபதிப்பிள்ளைப் புலவர் (படம் 40), சின்னவப் புலவர் (படம் 41), கா. அருணசல தேசிகர் (படம்42), சோமசுந்தர உபதேசியார் (படம் 43) போன்ற பெரியோர் தம் வரகவிகளினலும் செந்தமிழ்ப் பிரசங்கங்களாலும் பொதுமக்களுடைய நன்மதிப்பைப் பெற்று வாழ்கின் றர்கள். இவர்களுடைய புலமையைப் பயன்படுத்தி நலனடைதல் தமிழர் கடமை.
எவ்வளவு பழமையும், பெருமையும் பெற்றிருந்த போதிலும், மட்டக்களப்புநாடு தன் இயற்கை அமைப்பி ேைல இங்குள்ளாரை மற்றேருடன் கலந்து வாழ இயலாமற் செய்துள்ளது. மட்டக்களப்புவாவி நாட்டை இரு நெடுங்கூருக்கியிருத்தலால் வேண்டியபோது அதன் இரு கரையினரும் தம்முட் சந்தித்தல் ஒல்லாதாயிற்று. மற்றைய மாகாணங்களுக்கும் இக்காட்டுக்கும் இடையி லுள்ள மலை, ஆறு, பள்ளத்தாக்கு போன்றவை புறத் தொடர்புக்குத்தடையாயின. நாட்டின் செல்வத்தில் மயங்கி இங்கு வந்த அயல்நாட்டவரும் கற்குடா (படம் 54), மட்டக் களப்பு (படம் 15), அறுகம்குடா போன்ற கடற்றுறைகளை அஞ்ஞான்று அமைத்து அவற்றின்மூலம் வளத்தை வாரிச் செல்வதிலேயே கருத்தாயிருந்தனர். சில வ்ருடங்களின் முன்னர் அரசியலறிவரும், சட்டநூல் வல்லாருமாகிய ஈ. ஆர். தம்பிமுத்து அவர்களின் அரு முயற்சியினல் நிறைவுபெற்ற கல்லடிப்பாலம் (படம் 14) மட்டக்களப்பின் தென்பகுதிக்கும் வடபகுதிக்கும் ஒரு பிணேப்பை ஏற் படுத்தி வைத்தது. நகருக்கு அண்மையில் அமைந்ததும், இலங்கையிலேயே பெரியதுமாயுள்ள இந்தப் பாலமும், வாழைச்சேனைக் கருகிலுள்ள 'ஒட்டமாவடிப் பாலமும்’ மிகுந்த அழகும் பயனும் பொருந்தியன. இவையிரண்டும், வெளியூர்களுடன் இணைக்கப்பெற்ற மற்றைய புதிய பிரயாண சாதனங்களும் மட்டக்களப்பினர்க்கு அயல் நாடுகளுடன் இருந்த கலாசாரத் தொடர்பை இலகுவில்

Page 36
22 மட்டக்களப்புத் தமிழகம்
வளர்க்கக் கருவியாயின. கால வெள்ளத்திற் கரைந்து போன நாட்டின் பழஞ்செல்வம் மீட்கப்படுதற் கேதுவாக புதிய அமுதசுரபிபோன்ற மாபெருங் கல்லோயா அணைக் கட்டு (படம் 48) வேலைகள் அண்மையில் நிறைவேற்றப் பட்டுள. ஈழத்துணவு' என்று சங்கச் சான்றேர் தந்த பழம் புகழை மட்டக்களப்புகாடே, வருங்காலத்தில்
இலங்கைக்கு மீட்டுக்கொடுக்கும் நிலை இன்னும் ,
வெகுதூரத்தில் இல்லை என்று கூற இந்த அனேக்கட்டுத் திட்டம் நமக்குத் திடமளிக்கிறது. மட்டக்களப்பின் தென்பகுதியிலிருந்த பெரிய காடுகளெல்லாம், பரந்த நீர்வள நிலவளஞ் சான்ற வயல்வெளிகளாகவும், குடி யேற்ற நிலமாகவும் விளங்கவைத்திருக்கும் இக் கல் லோயாத் திட்டம் மட்டக்களப்புநாட்டின் பொருள் வளத்தை உயர்த்தக் கருவியாகவிருப்பதொன்று.
இப்படிக் கலைவளம், நிலவளம் என்பன நிறைந்து 'ஈழத்தின் ஒருபுறத்துக் கிடக்கும் மட்டக்களப்புத் தமிழக மும் காலப்போக்கை ஒட்டி உலகின் மற்றைய தமிழ்ப் பகுதிகளுடன் சேர்ந்து உழைத்துத் தமிழன்னைக்குச் செய்யவேண்டிய கடமைகளிற் தன் பங்கை நிறை வேற்றுதல் வேண்டும். நாட்டின் பழமையைமட்டும் பாராட்டிச் சும்மா இருப்பதை ஒழிந்து இங்குள்ள அறிஞர் யாவரும் ஒன்றுபட்டு அப் பழமையிற் புதுமலர்ச்சி கண்டு இப்பகுதியின் தொன்னலம் தூர்ந்துபோகாது வளர்த்துவரல் வேண்டும். இந்நாட்டிலே மறைந்து போகும் நிலையிலுள்ள பண்டைய நாடோடி இலக்கியங் களையும், கல்வெட்டுப்போன்ற சாதனங்களையுந் திரட்டி வெளியுலகுக்கும் காட்டி மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றுக்கும் நம்மை இலக்கியமாக்கிக்கொள்ளல் வேண்டும். இந்நாடு போன்று வெளியுலகில் அங்கங்கே சிதறிக்கிடக்கும் மற்றைய தமிழகங்களிலுள்ள மக்களுடைய தனிப்பட்ட பண்புகளையும் காம் தேடித்தேடி அறிந்து அவர்தம்முடன்

அறிமுகம் 23
பிணேந்து, இந்தியத்தமிழன்,இலங்கைத்தமிழன் -திேலும் யாழ்ப்பாணத்தமிழன், மட்டக்களப்புத்தமிழன் என்பன போன்ற வேறுபாடு நீங்கி, தமிழர் ஒன்றுபட்டு வாழ் தற்கும் நம்மாலானதைச் செய்தல் வேண்டும். இப்படி" யான பல நற்பயன்கள் கைகூடுதற்காய் அங்கங்கே உழைத்துவரும் தமிழ்க் கழகங்கள் ஆற்றிவருகின்ற நற் பணிகள் நிறைவெய்துதலில் நம்மாலான ஒத்துழைப்பை யும் நாமளித்தல் அவசியம். இன்று சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் இடக்தொறுஞ் சென்று காலத்துக் கேற்றபடி தமிழ்விழாக்கள் நடத்தி, இலக்கிய மலர்கள் வெளியிட்டுக், காட்சிச் சாலைகள் வகுத்து, அவற்றின் மூலம் தமிழ்ப் பண்புகளை வெளிப்படுத்தி, தமிழனுடைய பழஞ் சிறப்பை மலர்வித்து, தமிழினுக்குப்பெருமையூட்டி வருகின்றது. அக் கழகத்தாரின் தொண்டுகளும் நிலை பேருன அரிய நற்பயன்களைச் செய்ய நம் கன்னிமை குன்ருச் செந்தமிழணங்கின் இன்னருள் என்றும் உடனிற்க வாழ்த்துவோம். இயன்ற கலைப்பணிகளைச் செய்தலின்மூலம் தமிழன்னையினை மீண்டும் அரியணையி லிருத்தி வாழ்வோம்.

Page 37
2. உணர்ச்சிக் கவிநலம்
15Tட்டுப் பாடல்கள் என்றதும் ஈழத்து மக்கள் பெரும்பாலும் மட்டக்களப்புநாட்டினே உடனே நினைந்து கொள்கிறர்கள். ஈழத்தின் பழந்தமிழகமான இம் மட்டக்களப்பு அவ்வளவு அதிகமான உணர்ச்சிக் கவிதை நிறைந்த ஒரு நாடாக உள்ளதென்பதை இதல்ை அறிய லாகும். கவிதையிற் பேசிக், கவிதையில் வளர்ந்து, கவிதையிலேயே வாழ்ந்த பழங்காலத்துப் பரம்பரையைச் சேர்ந்த தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்ருர்கள். 3. மக்களிடை வழக்கத்திலிருக்கும் நாட்டுக்கூத்து ைேககளும், குரவையாடலும், கண்ணகி வழிபாட்டு வழக்கும், குளுத்திப்பாடலும் சிலப்பதிகாரகாலத் தொடர் புடையனவாய்க் காணப்படுகின்றன. சிலப்பதிகார நடையை ஒட்டி எழுந்ததான ‘கண்ணகி வழக்குரை' ஏட்டுப்பிரதியாகவே இங்குக் கிடைக்கும் ஒரு கண்ணகி வரலாற்று நூல். "கொம்பு விளையாட்டு’ என்று இங்கு வழங்கப்படுகின்றதும் தெய்வ வழிபாடு கலந்ததுமான ஒருவித மங்கல விழாவும், 'வசந்தன்கூத்து’ என்னும் களியாட்டமும், இக் கண்ணகி வழிபாட்டின் தொடர் பினவாய் நடந்து கலையும் திருவும் நல்கி ஊரை அணி செய்கின்றன. இவ் விழாக்காலங்களிற் பாடப்படும் சிறந்த பாடல்களெல்லாம் நாடோடி இலக்கியவகையைச்

உணர்ச்சிக் கவிநலம் 25
சேர்ந்தன போலவே இன்னமும் வழக்காற்றில் உள. தனித்தனிக் கட்டுரைகளில் விரித்து விளக்கவேண்டிய சிறப்பும், நுணுக்கமுங் கொண்ட இவைபோன்ற எத்தனையோ கவித்துறை சார்ந்த கலைத்துறைகளை நாம் இங்குக் காணலாகும்.
நாட்டுப் பாடலானது சாதாரண மக்களின் ஒரு பரம்பரைச் சொத்து. கல்வியறிவு பெருத கிராமவாசிகள், தமது நாளாந்தத் தொழில் அரங்கில் தாமே பாடித், தாமே கேட்டுச், செவி கருவியாய் மனதில் தாமே எழுதிப் பிரசுரம்செய்து இதை வளர்த்து வருகின்றனர். வயல் உழுகிறவர்கள், வேளாண்மை வெட்டுவோர், சூடு மிதிப்போர், நீர் இறைப்போர், மீன் பிடிப்போர், வண்டில் ஒட்டுவோர், தம் உடல்நோ மறந்து பாடுகிற பாடல் நாட்டுப்பாடல். எழுத்தறிவில்லாத இத்தகைய தொழில் மக்களின் உள்ளத்திலே பொங்குகின்ற உணர்ச்சி கவிதையாகப் பெருகுவதுண்டு. இப் பெருக்கிலே ஓசை யின்பம், தாளக்கட்டு, சொல்லழகு, தொடைச்சிறப்பு என்பன இருக்கும். சில பாடல்கள் இலக்கண வரம்புக்கு உட்பட்டிருக்கும். பல அவ் வரம்பை மீறி நடக்கும். எழுதாமறையாயுள்ளன. இப் பாடல்கள். காலவெள்ளம் இவற்றைக் கரைத்திலது ; கடல்வெள்ளமும் அரித்திலது. நெருப்பின் நா இவற்றின் சுவை யறியாது. ஏட்டி லேருவிடினும் இவ்வாறு தோன்றும் எந்த இன்னலினலும் அழிந்துபோகாது தலைமுறை தலைமுறையாக வழங்கிவருஞ் சிறப்புக்கொண்டு நம்மை வியப்புக்குள்ளாக்கும் உயிரும், ஆற்றலும் படைத்த இலக்கியமாக உள்ளது நாட்டுப் LITL 6i.
எழுத்துருவம் பெற்று அறிஞர்களாற் படித்துப் போற்றப்பட்டுவரும் கவிகள் எல்லாம் நல்ல பண்பட்ட புலவர்களின் ஆக்கங்களானவை; செய்யுள்களுக்குரிய இலக்கணவமைதி நிறைந்தவை; நல்ல சொற்கோப்பினுற் பெறப்படும் ஆழ்ந்த கருத்துக்களால், கற்போர் கருதீதைக் கவர்ந்து நிற்பவை; நல்ல க்விதைகளுக்கு இன்றி

Page 38
26 மட்டக்களப்புத் தமிழகம்
யமையாது வேண்டப்படுவதான கற்பனைச் செறிவு பொருந்தியவை ; உவமையும், உருவகமும் முதலான பல வேறு அணிகளால் அழகுபெற்று நிற்பவை. நாட்டுப் பாடல்களோ என்ருல் இலக்கணம், இலக்கிய மரபு, செய்யுள் வழக்கு ஆகிய வரம்புகளுக்கடங்கிக் கற்பனே யூற்றிற் பிறக்கும் அத்தகைய செய்யுள்களைப்போல அன்றி உணர்ச்சிப்பெருக்கொன்றினையே முதன்மையான அடிப்படையாகக் கொண்டு 9Ꭷ -6uᏑ வழக்கிைேடு பொருந்திப் பிறப்பவையாகும். கருத்தை விளக்கும் செம்மொழிகளே யன்றிக் கற்பனை இங்கே இடம் பெறுவதில்லை. கவிகளை இயற்றும் ஆற்றல் நோக்கிய உரிமை, நாடோடிக் கவிதை உலகில் யாருக்கும் கட்டுப் படுத்தி வைக்கப்பட்டிலது. கவியரங்கேறும் மன்றங்கள் கூடிப் பிழைநீக்கம் செய்து, துருவி அவற்றை நிலை நிறுத்தவுமில்லை. பிழையுறப் பாடுவோரைப் பழித்துத் தண்டித்த புலவர்கள் என்று கருதப்படும் ஒட்டக்கூத்தர், வில்லிபுத்தூராழ்வார் போன்றவர்களின் பயம் நாடோடிக் கவிஞர்களின் சுதந்தர ஆட்சியில் தலைகாட்டியது கிடையாது. வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும் முதலான பெரும் புலவர்களே நல்ல செய்யுள்களை ஆக்கினர் என்பதுபோன்ற சிறப்பின் வரையறையும் இக் கவிஞரிடை உளதன்று. சமையம் வரும்போது சின்னவப் போடியும், உதுமாலெவ்வையும், பாத்தும்மாவும்கூட நில்ல உயிரோவியங்களைப் படைத்துவிடுகிறர்கள் இக் கவிதைய்லகிலே.
உணர்ச்சி வயப்பட்ட ஒருவன் தன் மனக்கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்கும்போது சொல்லடுக்குகள் இயல்பாகவே ஒரு ஒழுங்கில் அவனிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. கேட்போனும் உணர்ச்சி வயப்பட்டு மொழிப் பெருக்கில் ஆழ்கின்றன். ஒசையின்பமே அவ னுக்கு வழிகாட்டி. குறிப்பிட்ட ஒரு சொல்லொழுங்கிலே உணர்ச்சி வழியாக அவனது பதிலும் உடனே வெளிப் படுகின்றது. உணர்ச்சி அங்குக் கவிதையாகின்றது. இத்தகைய கவிதைக்கு உயிர் உணர்ச்சியேதான்.

உணர்ச்சிக் கவிநலம் 27
இதனலேயே செய்யு ளமைத்தற்கு இன்றியமையாத தாகக் கருதப்படும் அறிவுப்புலமை நாடோடிக் கவிதை யுலகில் இடம்பெறும் அவசியம் வேண்டாது ய்ோயிற்று.
இவ்வாறு பொதுமக்களின் உணர்க்சிவேகத்தினல் மட்டும் எழுந்தனவன்றிப் புலமையினுற் புனேந்தனவல்ல ஆதலினலேயே, புலவர்கள் நாடோடிக் கவிதைகளைப் பண்பட்ட பாடல்கள் என்று கொள்ளாராயினர். எனினும், கிராமியக்கவிதை என்றும், நாட்டுப்பாடல் என்றும் இப் பாடல் வகைகள் எழுத்தறியாப் பொது மக்களிடையிலும், அறிஞர் குழுவினுள்ளும் வழங்கி வருவதிலிருந்து கவி, பாடல், பாட்டு எனும் பெயர்களுக் குரிய தன்மை இவற்றிலும் ஒப்புக்கொள்ளப்பட் டிருப்பதை நாம் அறிகிருேம்.
இத்தகைய உணர்ச்சிக் கவிதைவளம் மட்டக் களப்புத் தமிழகத்தின் கிராமப் புறங்களிடையே பல் வேறு துறைப்பட்டு, நிறைந்து விளங்குகின்றது. சில கவிதைகள் மாந்தர்தம் தொழிற்களத்துப் பாடப்படு கின்றன. சில இந்நாட்டுக்கே யமைந்த விளையாட்டு விளக்கங்கள் ; சில சாதி வரன்முறை கூறுவன ; சில வசைக்கவிகளாயுள்ளன ; சில காதலர்தம் இன்ப உரை யாடல்களாயெழுந்தவை. இவ்வாறு பல்வேறு பிரிவுகளை யும் சார்ந்து வழங்குவனவாய் இதுவரை கிடைத்த பல பாடல்களையும் தொகுத்துப் பார்க்கும்போது, சங்ககால எட்டுத்தொகை நூல்களுள்ளே ஐந்து நூல்கள் அகத் தினே எனப்படும் இன்பப் பகுதியினவாய் இருத்தல் போன்று, இப் பாடல்களுள்ளும் பெரும்பாலானவை அகத்திணை ச்ார்ந்திருத்தல் புலனுகின்றது. சங்கச் சான் ருேர் அகத்திணைச் செய்யுள்களுக் கமைத்துச் சென்ற துறைகளிலும்கூட இப் பாடல்களுட் பல ஒத்திருப்பது கண்டு மகிழத்தக்கதாகும்.
இன்பத்திணையையும் இன்பவாழ்வின் படிகளையும் பிற்காலத்துக் கவிஞர்கள் மக்களின் சாதாரண விாழ்வி லிருந்து பிரித்துவைத்துவிட்டனர். காதலிலக்கியத்திற்கு

Page 39
28 மட்டக்களப்புத் தமிழகம்
நானூறென்று துறைவரையறை செய்து காதலையும் கோவைநூல்களுட் கட்டுப்படுத்தி வைத்துவிட்டார்கள்." அந் நூல்களுள் வரும் காதல் நிகழ்ச்சிகளெல்லாம் பாடல் சான்ற புலனெறி வழக்கம்ாக உள்ளனவன்றி மக்கள் வாழ்வுக்கு ஏட்டாதனவுமாயின. தன்னிகரில்லாத் தலைவ ைெருவன் அத்தகைய தலைவி ஒருத்தியுடன் நுகரும் இன்பநிகழ்ச்சிகளே அப் பாடல்களில் இடம்பெற்றன. தரம் குறைந்த பொதுமக்கள் காதல் செய்யவும், " உயர்ந்த அக் காதலைச் சுவை தேரவும் தெரியாதவர்கள் என்று இடைக்காலத்துக் கவிஞர்கள் கருதிவிட்டனர் போலும் ! அதனலேயே, கோவைநூற் காதல் நிகழ்ச்சிகள் ஒரு நாடக நிகழ்ச்சிகளைப்போல் அமைந்து பொலிவிழந்து காணப்படுகின்றன.
எனினும், பழந்தமிழரின் இன்பவாழ்வுச் சின்னங்க ளாக இலங்கும் கற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ଟା ଭର୍ତt[D அகத்திணே சார்ந்த சங்க இலக்கியங்களிலே இத்தகைய் கட்டுப்பாட்டினே நாம் காணமுடியாது. அரசன் கண்ட காதலும் அங்குண்டு; உழவன், இடையன், குறவன், வலைஞன் என்போர் கண்ட காதலும் அங்கே இடம்பெற்றுள்ளது. காதல் நிகழ்ச்சிகளைப் புனேந்துரை வகையானன்றி இயல்பாய் உள்ளபடியே சங்கச் சான்றேர் பாடிவைத்துள்ளார்கள். இவ்வாருன சங்கத்துப் பாடல்களைத் துறைவகையாலும், பொருள்வகையாலும் ஒத்த இயல்புடையனவாய்க், காதலரைக் கல்வி, செல்வம், தொழில், வலி என்ற பேதங் காட்டிப் பிரித்துவைக்காது எல்லாருடைய காதல் நிகழ்ச்சிகளையும் உணர்ச்சியுறக் காட்டும் இன்பப் பாடல்களாய் இங்கு வழங்குவனவே “ கவி’ வகையைச் சார்ந்த நாட்டுப் பாடல்கள் என்பதை அறிந்து நாம் இன்புறல் வேண்டும். கவி’ என்னுஞ் சொல் பாடல்கள் அனைத்தையுங் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக இருப்பினும், மட்டக்களப்புகாட்டிலே இது அகத்திணை சார்ந்த் நாட்டுப் பாடல்களையே குறிக்கும ஒரு சிறப்புச் சொல்லாய் வழங்குகின்றது. பன்மைபற்றி வந்த

உணர்ச்சிக் கவிநலம் 29
ஆட்சிச் சிறப்புப் பெயர் இது என்று நாம் கொள்ள லாகும். இக் கவிகளில் அதிகம் ஈடுபாடுடையோர் இந்நாட்டு முஸ்லீம் மக்கள். கவிகளிற் பல இவரின் முந்தையோர்வாய்த் தோன்றினவையே. நினைத்தவுடன் நல்ல கவிகளைக் கோக்கும் ஆற்றல் வாய்ந்த கவிப் புலவர்கள் இவர்களிடை இன்றும் பலர் உள்ளனர்.
இத்தகைய உணர்ச்சிக் கவிஞர்களால் யர்க்கப்படும் உணர்ச்சிக் கவிதைகளிலே இலக்கிய வழக்கினுக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகள் இடம்பெறுதலும் இயல்பேயாகும். களவுக் காதலர்க்கு இடைத்தூதர் ஒருவரின் துணை வேண்டுவதே யென்ருலும், அத் தூதுவரையே எதிர் பார்த்துக் காதலர், தம் காலத்தை வீண்செய்யும் இலக்கிய வழக்கு, நடைமுறைக்கு எப்போதும் இயைந்துவரக் கூடியதன்று. தமது முதற் கூட்டத்தின் பின்னர், வேண்டியவற்றைக் காதலர் தாமே நேரிற் பேசிக் கொள்ளும் இயல்பினேக் களவு ஒழுக்கத்திலே கைக் கொள்கின்றனர். ஆகையால் இலக்கியவழக்கிற் போலத் தோழி மூலமாக வன்றிக் குறியிடம்’ (காதலர் தனிமையிற் கூடும் இடம்) இது என்று தலைவிதானே தலைவனிடம் கூறும் பொதுமக்களின் வழக்கை இந் நாட்டுக் கவிகளில் நாம் காணலாகும்.
* சந்தன மரத்தைடிச்சான் சந்திக்க வேணுமென்ருல் பூவ லடிக்குமச்சர்ன் பொழுதுபட வந்திடுங்கோ ? * கடப்படியில் வந்துகின்று காளே கனேக்குமென்ருல்
எங்கிருந்த போதும்காகு எழுந்துவர மாட்டாதோ ? என்னும் பாடல்கள் தலைவி குறியிடங் கூறும் துறையி லமைந்துள்ளன. மணநிகழ்ச்சி மைத்துனர் குடியுள் நடப்பதே இக்காட்டு மரபாதலால், தன் மைத்துனன் மீது காதல் பூண்ட ஒரு மங்கை மாலே நேரத்திலே தான் நீர் அள்ளப்போகும் பூவலின் (ஆறு, குளம் என்பவற்றினருகில் உண்ணிர் பெறுதற்காகத் தோண்டப் பட்டுள்ள சிறுமடுவின்) புறமாக வர வேண்டுகின் ருள். காலமும் இடமும் கற்பித்த நங்கை தன்னைச் சந்தன

Page 40
3O மட்டக்களப்புத் தமிழகம்
மரம் என்று சொல்லுவது மிக்க நயம் பொருந்தியதாயிருக் கின்றது. சந்தனமரம் எங்கே நிற்பினும் அதன் நறு மணம் திசைதொறும் சென்று வீசி மரம் நிற்குமிடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். மரத்தின் இனிய மணத்தால் அதனை எடுத்துப் பயன்கொள்ள அனைவரும் விரும்புதல் , இயற்கை. அதுபோன்று மங்கைப்பருவம் அடைந்த தன்னுடைய அழகும், இன்பச்செவ்வியும் நோக்கி மற்றையோரும் மணம் விரும்பக்கூடும் என்ற கருத்தைத் தலேவி குறிப்பாக இங்குக் காட்டுகின்ருள். தான் விரும்புவதுபோலத் தலைமகனும் தன்னை விரும்பினல் மட்டுமே சந்திப்பு நிகழட்டும் என்பது தோன்ற * சந்திக்க வேணுமென் ருல் ’ என்று கூறுவதனல் தலைவ னிடத்திலேயே முடிபை விட்டுச் செயலுக்கு அவனைத் தூண்டும் விரைவு புலனுகிறது. அக் குறிவழியே சென்று கூட்டம் நிகழ இடம்பெருவிடின் யாமத்தில் வந்து துயிலெழுப்பிக்கொள்ளலாம் என்பதற்காகவே இன்னேர் குறியிடமும், துயிலெழுப்பும் விதமும் குறிப்பிட்டனள், * காளை கனைத்தால் நாகு எழுந்துவரமாட்டாதோ' என்ற கேள்வியினை அவனிடம் கேட்ட்தன்மூலம், கட் டாயம் எழுந்துவரும் என்ற திடத்தினைக் காட்டித் தன் பூரண மனநிலையையும் வெளிப்படுத்தும் முறை இதில் இனிதே யமைந்துளது. அவனைக் காளை என்றதற்கேற்பத் தன்னை 5ாகு’ என்று அவள் கூறுதல் மிகுதியும் பொருத்தமுடையதாகும்.
காதலி ஒரு உழவர் மடமகள். இரவில் வயற் காவலுக்கு அவள் சகோதரரும் தந்தையும் போய்விடு கின்றனர். வீட்டில் ஆளரவம் குறைந்து துயிலுறையும் அரையாமத்தில் காதலன் அங்கு வந்து துயிலெழுப்பு கின்றன் :-
* பொடுபொடென்ற மழைத்துாற்றல் பூங்கார மானநிலா கடுமிருட்டு மாலைவெள்ளி கதவுதிற கண்மணியே ?
என்பது அவன் கூறும் காதற் கவி. மழையின் சிறு தூற்றலிலே நனைந்து, மங்கிய நிலவொளியிலே வந்துள்

உணர்ச்சிக் கவிநலம் 3i
ளான். வானத்தில் மாலேவெள்ளியின் வெளிச்சமும் மின்னுகின்றது. எனினும் அவனே அந்த வேளையைக் கடும் இருட்காலம் என்றே குறிப்பிடுகின்றனன். தன்னை ஒருவரும் கண்டிலர் என்று கருதிப் பதுங்கிவந்த அவ ணுக்கு உலகமே இருண்டு தெரிதல் இயல்புதானே. அன்றியும் தன் கண்மணி கதவு திறப்பதை மற்றை யோர் காணமுடியாத இருட்செறிவு வெளியில் உள்ளது என்று ஊரார் வம்புக்குப் பயந்த தன் மனநிலைழையும் அவனல் மறைக்கமுடியா நிலையிற் கூறுகின்றன். எது இருப்பினும் கதவு திறக்கப்படவேண்டியது அவன் கருத்து ஆதலால் ‘கண்மணியே’ என்று காதல் ஒழுகக் கடைசியில் தன் அழைப்பினை அமைத்தனன்.
இன்பம் நுகர்ந்த தலைமகன் தலைவியினருமையில் மெய்ம்மறந்து அவளைப் பாராட்டத் தலைப்படுதல் இயல்பு. கோவை நூல்களிலே ‘குலம்புனேந்துரைத்தல்’ என்று குறிக்கப்படும் இத்துறையி லமைந்தனவாய் வழங்கும் இன்பக் கவிகள் பல இங்குள.
* வாழைப் பழமே எந்தன் வலதுகையிற் சர்க்கரையே
ஏலம் கிராம்பே உன்னை என்னசொல்லிக் கூப்பிடட்டும் ? * தங்கக் கிளியே என்ர தாய்மாம னின்ற கண்டே
மையிட்ட கண்ணே உன்னை மறந்திருக்கக் கூடுதில்லை ? குஞ்சு முகமும் உந்தன் கூர்விழுந்த முக்கழகும் நெற்றி இளம்பிறையும் - கண்ணே நித்திரையிற்
(தோணுதுகா’ * காலிவிளை பாக்குக்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்புக்கும் ஏற்றதுகாண் உன்னெழில்வாய்?
V அங்க க்லன்களைப் பாராட்டிக்கொண்டிருக்கையில் வெற்றிலே யருந்துகின்றனர். இக் காட்டின் எழுவான் கரை ஊர்கள் பலவற்றிலே நீர்வெற்றிலேத்தோட்டங்கள் உள்ளன. அவற்றுள் களுதாவளை என்னும் ஊரில் உண்டாகும் வெற்றிலே சிறந்ததென்று சொல்லப்படு கிறது. ஈழத்தின் தென்கரைத் துறைமுகமாகிய காலியி லிருந்து கிடைக்கும் கொட்டைப்பாக்கும் அவ்வாறு

Page 41
32 மட்டக்களப்புத் தமிழகம்
சிறந்தது என்பர். அவ்விரண்டனுடன் ஏலம், கராம்பு என்பவற்றையுஞ் சேர்த்து மணம்பெற உண்டபோது தலைவியின் மெல்லிய உதடுகள் மிகுதியும் சிவப்பூர்ந்து மேலும் அழகு கனிந்து விளங்குவதைக் காணுகின்ருன், அவளழகினை மிகுத்து அவ்விதழ்களைப் புகழ்ந்த உள்ளத் துணர்ச்சியே கடைசிக் கவியில் துளும்புகின்றது.
உணர்ச்சிவயத்தளாய தலைமகளும் அவன் நலத் தினேப் பாராட்டுதல் நாடோடிக் கவிதையுலக வழக் காகும் :-
கித்திரைக் கண்ணிலயும் நினைவிலயும் தோணுவது கலிமா விரலும்மச்சான் கல்பதித்த மோதிரமும் ? * வட்ட முகமும் உந்தன் வடிவிலுயர் முக்கழகும்
கட்டு உடலும்மச்சான் என் கருத்தழியச் செய்யுதுகா? * தங்கத் தகடோஎந்தன் தகதகத்த பொன்தகடோ
வெள்ளித் தகடோஉன்னை விலைமதிக்கக் கூடுதில்லை ? என்பன அவள் பாடும் பாராட்டுக் கவிதைகளாகும்.
தாய் துயிலாமை, இற்செறிப்பு முதலிய காரணங் களால் தலைமகள் வெளிச்சென்று தலைவனைக் குறியிடத் திற் காணமுடியாதவளாகிருள். அக்காலங்களில் அவனும் அங்கு வந்து காத்திருந்து வறிதே மீள்வதுண்டு. காதலிலக்கியங்களில் இடையீடு' என்று வழங்கப் பெறும் இத்துறையைச் சார்ந்த இன் கவிகளும் பல உள.
வில்லுக்கு வந்து கொம்பன் விடியளவும் புல்லருக்திக் கல்லில் முதுகுரஞ்சிக் கொம்பன் காடேறிப் போகுதுகா’
* ஆருயம் வெள்ளி 2 அதராலே சாயுமட்டும் காத்திருந்து போனேனென்று - உன்ர கதவுநிலை சாட்சி சொல்லும் ?
1. கலிமா - இங்கு ஐந்து என்னும் பொருளேக் குறிக்கும் ஒரு அரபுச் சொல்.
2. அதர் என்பது ‘அசறு ' என்ற அரபுச் சொல்லின் திரிபு. அசர் - 3, 4 மணிப் பொழுது: .

உணர்ச்சிக் கவிநலம் 33
மறுநாட் தலைவியைத் தனிமையிற் காணமுடிந்த போது தலைமகன் அவளிடம் தன் ஆற்ருமை தோன்றக் கூறிய கவிகள் இவை. முதற்பாடல் வீட்டுக்கு வெளியிற் குறியிடமுடையோர் கூற்று. இரண்டாவது வீடே குறியிட மாகவுடையோர் கூறுவது. குளக்கரையிலே கொம்பன் யானே வந்து விடியும்வரை நின்றதென்பதும், எண்ணம் கைகூடாமற் போனமையால் காடேறிப் போன தென் பதும் அவனது விடாமுயற்சியையும், ஏமாற்றத்திை லடைந்த மனத்துயரையும் காட்டுவனவாகும். அறிமுக வுரையுள் யாம் குறிப்பிட்ட 'கா' என்னும் முன்னிலே யசைச்சொல் வழக்கு போனதுகா’ என்னுமிடத்தில் இங்கு ஆளப்பட்டிருத்தலேக் காணலாம். ஆறு நட்சத் திரங்கள் சேர்ந்த ஒரு வெள்ளிக்கூட்டம் ஆருயம் வெள்ளி’ எனப்படும். அக் கூட்டம் மாலேவானத்திற் சரிந்துகிற்றல் பொழுது விடியப்போகின்ற தென்பதற்கு அடையாளமாகும். இரவெல்லாம் தான் காத்திருந்த நிலைமையையே காதலன் ஆருயம் வெள்ளி அதராலே சாயுமட்டும் காத்திருந்து போனேன்’ எனக் கவியுட் குறிக்கின்றன். மெல்ல மெல்ல இறங்கிச் செல்லும் வெள்ளிக் கூட்டத்தினைக்கொண்டு நேரங் கணித்துக் காத்திருந்த அவனது பொறுமை மிகப் பெரியதேயாகும். அதற்குச் சான்று அவள்வீட்டுக் கதவுதான். யாரும் காணுத தனிமைதேடிக் கூடும் காதலர்க்குச் சிலவேளை களிற் சாட்சி தேவைப்பட்டுவிடுதலுண்டு. இயற்கைப் பொருட்களேயன்றி வேறுயார் அப்போது துணை செய்வர் !
* ஒழுகு நீராரல் பார்க்கும்
குருகும் உண்டு தான்மணந்த ஞான்றே என்று குறுந்தொகையுள் வரும் தலைவி ஒருத்தி நாரையைச் சான்று காட்டுகின்றதை அறிவோம். மீனைப் பிடிக்கக் காலம் ஓர்ந்துநின்ற குருகு தமது கூடல் நிகழ்ச்சியைக் கண்டதோ இல்லையோ என்ற ஏக்கம் அப் பாட்டிற் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனல் இங்கே ஐயம் இல்லாத ஒரு சாட்சியைத் தலைமகன் தன் கட்சியில்
մ) - 3

Page 42
34 மட்டக்களப்புத் தமிழகம்
வைத்திருக்கின்றன். கதவுநிலை அவளுடைய வீட்டது: ஆயினும் தான் காத்துக்கிடந்த எளிநிலைக்கு அதுகூட மனம் இரங்கிக் கட்டாயம் தன் கட்சியை வலியுறுத்தும் என்ற அவனது தெளிவினை நாம் இப் பாடலுட் காணுகின்ருேம்.
இந்தக் களவொழுக்கினை ஊரார் அறிந்து தம்முள் உரையாடும் கவிகளும் உள்ளன.
* வெள்ளைக் கிடாநாம்பன்
வீசுகொம்பன் தாமரையன் பள்ளத்து வெள்ளாமையைப்
பால் பறக்கத் தின்னுதல்லோ’
* திடுதிடென்று மழைபொழியத்க திட்டியெல்லாம் தண்ணிகிற்
மதுரையடி நாய்குலேக்க-அங்கு
வந்த கள்ளன் ஆரோடி ’
பள்ளவயல் வேளாண்மை, அழகும் இளமையும் பொருந்திய எருமைக்கடா ஒன்றினுல் உண்ணப் படுகின்றது என்று கூறும் நயமும் குறிப்புப் பொருளும் அறிந்து இன்புறத்தக்கன.
* பூவலைக் கிண்டிப் புதுக்குடத்தைக் கிட்டவைத்து ஆரம் விழுந்த கிளி அள்ளுதுகா நல்லதண்ணி” என்னும் கவியும்,
* மான்போல் நடைநடந்து
மயில்போற் சிறகொதுக்கித் தேன் போற் குடிகிளம்பி-என்ர
சின்னவண்டு போற தெங்கே ?? என்னும் கவியும், தலைவன் நயப்புரைத்தலா யமைந் துள்ளன. 'ஆரம் விழுந்த கிளி’ என்று தலைவியின் அழகினேயும் இளமைச் செவ்வியினையும் நயந்து இன்புறு கின்றன். தன் தரத்துப் பெண்களுடன் செல்லும் காதலி நடையால் மான்போலவும், ஒதுங்கி ஒதுங்கிச்

உணர்ச்சிக் கவிநலம் 35
செல்லும் அழகினல் மயில்போலவும், தோழியர் கூட் டத்தாற் குடியெழும்பிச் செல்லும் தேனிபோலவும் அவ னுக்குக் காட்சிகொடுக்கின்ருள். ஆயினும், இத்தனே உண்மைக்கும் நடுவே சின்னவண்டு’ என்ற கடைசிச் சொல்லிலேதான் அவனுடைய காதல் உணர்ச்சியின் உயர்நிலை செறிக்கப்பட்டுளது. * வண்டு ’ என்று அன்பு கனிந்த முறையிற் செல்வமாகக் குழந்தைகளை இங்கே அழைக்கும் வழக்கமுண்டு. காதற் கனிவினல் அம் மரபினைத் தழுவிச் சின்னவண்டு ’ என இனிய அடை கொடுத்தழைத்தமை அவள்மீதுள்ள அன்பினுயர்வை நன்கு வெளிப்படுத்துகின்றது. இதுவன்றித் தலைவி தலைவனே வண்டு ’ என்று சொல்லி மகிழும் கவிகளும் இங்கு உள:
* கடலே இரையாதே கற்கிணறே பொங்காதே
நிலவே எறியாதே என் நீலவண்டார் வருமளவும் ?
என யாம் அறிமுகவுரையிற் காட்டிய பாடலும் இத் தகையது. வழியில் உள்ள இடையூறெதனையும் பொருள் கொள்ளாது தன்னை இரவிற் கூடவரும் தலைமகனே அயலவர் காணுமலும், இயற்கை இன்னலெதுவும் அவனுக்கு ஏற்படாமலும் இருக்கவேண்டும் என்று உள்ளம் துடிக்கின்ருள். அத் துடிப்பும் அவளது அருட் குறிப்பும் இவ் வருமைக் கவிதையில் உணர்ச்சியோடு பொறிக்கப்பட்டுள்ளன.
பிறன் எவனையும் வரைந்துகொள்ள விரும்பாது மாமன் மகனுக்கென்றே தன்னே வளர்த்துவரும் மங்கை ஒருத்தி வேலிப்புறமாகச் செல்லும் அம் மச்சானுக்குக் கேட்கக்கூடிய மென்குரலிற் பாடிய இன் கவி இது :
* கச்சா னடிக்கக் கயல்மீன் குதிபாய
மச்சானுக் கென்றே வளர்த்தேன் குரும்பைமுலை ? மட்டக்களப்புகாட்டிலே ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசும் வரண்ட மேல்காற்று கச்சான் என்

Page 43
36 மட்டக்களப்புத் தமிழகம்
றழைக்கப்படும். இக்காற்று வீசுங் காலத்தில் ஏற்படும் கூடிய வெப்பங் காரணமாய் மக்கள் உமிழ்நீரும் வற்றி உதடுகளில் வெடிப்புங் கொள்வர். எனினும் கச்சான் காலத்தில் பெண்கள் மட்டும் உடல் பூரிக்கப்பெறுதலும், வயதடைந்த இளங் கன்னியர் பலர் ? புத்தியறிதலும் ? இயல்பாயிருத்தலால் * கச்சான் பெண்களுக்கு மச்சான்’ என்ற பழமொழியும் இங்கு எழுவதாயிற்று. அது போலவே கயல்மீனும் அக்காலத்துக் கொழுப்பேறி மிஞ்சிய மகிழ்வால் குதிபாய்ந்து நீர்நிலையினை அழகு செய்யும். கச்சான்காலம் பருவப்பிரிப்பில் வேனிற் கால மாகக் கருதப்படக்கூடியது. கார், கூதிர்க்காலத்து மட்டு மன்றி வேனிற் பருவத்தும் இன்பநினைவினைக் காதலர் பெறும் நிகழ்ச்சிகளைப் பண்டைய இன்பநூல்களுட் காண்கின்ருேம். அத்தகைய வேனில்சான்ற கச்சான் காலம் மகளிர்க்கு இன்ப நினைவை யூட்டுதலால், அவ் வினிய காலவாய்ப்பினேயும் முலையும் வாரா முதுக் குறைந்த தன் பருவநலனையும் மச்சானுக்கு மச்சாள் நயம்பொருந்த இக் கவிதையினுற் தெரிவிக்கின்ருள்.
தம்முட் காதல்கொண்ட கூனி ஒருத்தியும், குறளன் ஒருவனும் ஒருவரை ஒருவர் முதலில் வசைபேசிப் பின்னர்ச் சமாதானம் பெற்றுக் கூடி இன்பநுகருதலேக் கூறும் பாடல் ஒன்றைக் கலித்தொகையுள் (மருதம் 29) நாம் காணலாம்.
* அடியவர் பாங்கினும் வினவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத் தென்மனர் புலவர்” (பொருள் 23)
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தான் அமைத்துக் கொள்ளப்பட்ட அக் காதல் நிகழ்ச்சியை ஒத்து வழங்கும் காதற் கவிகள் பலவற்றை மட்டக்களப்பு உணர்ச்சிக் கவிகளிடை காம் காணலாம்.
தலைவன் கூறுவது :-
* அட்டாளைக் காலி அதுக்கடுத்த முக்காலி
பாக்குவெட்டிக் காலி உன்னைப் பார்க்கவர நேரமில்லே "

உணர்ச்சிக் கவிநலம் 37
இவ்வாறு தன்னை இழிவுபடுத்திப் பேசியவனே அவளும் பதிலுக்குப் பழிக்கின்ருள் :-
* சுட்டகட்டை போலமச்சான் சுடுகாட்டுப் பேய்போல மாட்டட்டை போலஉன்னை
மாப்பிளைக்கு ஆரெடுப்பார் ?
அவன் பதிலாக, எவ்வளவுக்கு நீ உன்னே அணி செய்துகொண்டாலும் வேறு எவனும் உனக்கு வாழ்க் கைப்பட மனம் ஒருப்படான் ’ என்னும் கருத்தில்,
*சாயக் கொண்டை கட்டுறதும்
சளிக்க எண்ணை பூசுறதும் ஏவி ஏவி நடக்கிறதும் - எந்த
இளந்தாரிக்கு வாழ வென்ருே ?
எனப் புறத்தே பழிப்பதுபோலப் பாடிவிட்டு நிலைமை மேலும் முற்றிக் கெட்டுப்போதல் கூடாதென்று கருதித் தன் தோல்வியை ஒப்புக்கொண்டவன்போல் நலிந்து நின்று அவளைப் பாராட்டி மன ஒருப்பாடு வேண்டு கின்றன் :-
* கன்னி விராலே எந்தன்
கற்பழியா நங்கணமே தங்கமுலைக் கோட்டையிலே-மச்சி
தானருந்தத் தந்தாலென்ன ?
* தாலிக் கொடியே-எனது
தாய்மாம னின்றகன்றே மாமிக் கொருமகளே-மச்சி
மறுகுதலை பண்ணுதகா ”
அவளும் மனம் விரும்பிக்கொள்கிருள். எனினும் மானம் குறுக்கே நிற்கிறது :-
* தங்கமுலைக் கோட்டையிலே
தானருந்தத் தந்தனென்ருல் மானமென்னும் கண்ணுடி-அது
மங்கிடாதோ நானறியேன் ??

Page 44
38 மட்டக்களப்புத் தமிழகம்
என அதனைத் தெரிவித்து, இரகசியமான வேறேர் இடத்துக்கு வரும்படி கூறுகின்ருள். அவ்விடத்தின் காவ லருமை பற்றியும், காவலைத் தாண்டும் முறைபற்றியும் அவர்களுள் நடந்த உரையாடல் இது :-
தலைவன் கூற்று :-
* சுற்றிவர வேலி சுழலவர முள்வேலி
எங்கும் ஒருவேலி எதாலபுள்ள நான் வரட்டும்’
தலைவி பதில் :-
* காவலரணுே மச்சான் கள்ளனுக்கு முள்ள ரணே
வேலியரனே மச்சான் வேணுமென்ற கள்ளனுக்கு?
* வெற்றிலையைக்கைப்பிடித்துவெறும்புளகைவாயிலிட்டுச்
சுண்ணும்பு இல்லையென்று சுற்றிவர லாகாதோ ?
காவலைக் கடந்து உள்ளே புகுதற்குக் கூறப்பட்ட முறை செயன்முறைக்கு ஏற்றதாய், பெண்களுக்கு இயல்பானமைந்த புத்தி நுட்பத்தை மிகுதியும் புலப் படுத்துவதாய் அமைந்துள்ளது. ‘பாக்குச் சீவலை வாயிலே போட்டுக்கொண்டு, வெற்றிலேயிற் பூசி மெல்லுதற்குச் சுண்ணும்பு கேட்பவனைப்போல் உள்ளே வந்தால் யாரும் தடுக்கமாட்டார் ; ஐயுறவும் கொள்ளார்’ என்று அவள் குறிப்பிட்டனள். அப்பால் அவர்கள் விருப்பம் நிறைந்து கூடுதல் கைகூடுகின்றது.
வயல் வேலைக்குச் சென்று அங்குத் தங்கியிருக்கும் கணவனுக்கு அவன் மனேவி, தான் பூப்புற்றிருத்தலைச் சொல்லிவிடும் இனிய முறையைப் பாருங்கள் :-
* ஆதங்காக்கா ஆதங்காக்கா
அவரைக் கண்டாற் சொல்லிடுங்கோ பூவரசங் கன்னிஒன்று
பூமலர்ந்து போச்சுதென்று?
பூப்படையா முன்னர்ப் பெண்களை மணம் செய் விக்கும் வழக்கமும் சில இடங்களில் உளதாதலால், அவ்வாறு மணம்பெற்ற ஒரு கன்னிப்பெண், தான்

உணர்ச்சிக் கவிநலம் 39
பூப்படைந்து மங்கைப் பருவமுற்ற மங்கல நிகழ்ச்சியை அப்போதுவீட்டிலில்லாத தன் கொழுநனுக்கு ஆதங்காக்கா மூலக் தெரிவிக்கின்ருள். பூ மலர்ந்து போச்சு தென்று அறுதியிட்டுக் கூறும் முறையால் முன்னர்ப் பூப்படையா திருந்த நிலைமை நமக்குத் தெளிவாகின்றது. அன்றி, மாத நிகழ்ச்சியையே கூறுகின்ருள் என்னலுமாம். வயலே நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆதம் என்பவனேக் காக்கா (முஸ்லீம் மக்கள் தமையனைக் காக்கா’ என்று அழைப்பது மரபு.) என்று அன்புகனிய அழைத்துத் தன் செய்தியை அவரிடம் கூறுமாறு வேண்டிக்கொள் கிருள். அவர் ' என்ற சொல்லினுள்ளே, கணவனிடத்து அவளுக்குள்ள அன்பும், மதிப்பும், காதலும் குழைக் திருப்பதையும், தன் காதல் மனத்தினை ஆதம் அறிவதற் காக அடைந்த நாணங்லை கண்டாற் சொல்லிடுங்கோ’ எனக் கட்டாயப்படுத்தாது கூறியதில் மறைந்திருப்பதை யும் நாம் அறிந்து இன்புறலாகும்.
புணர்ச்சிக்கினிய கார்காலம் வந்தும், தன் கொழுநன் மீண்டு வீட்டுக்குவரப் பிந்துமிடத்துக் காதலியொருத்தி கார்கால அருமை கூறி வருந்தும் அழகு பின்வருங் கவிகளில் அமைந்துள்ளது.
* கன்னிக் * கிரான்குருவி கடுமழைக்கு ஆற்ருமல்
மின்னிமின்னிப் பூச்சாலே விளக்கெடுக்கும் கார்காலம்? * இந்த மழைக்கும் இனிவாற கூதலுக்கும்-என்
சொந்தப் புருஷனென் ருல் சுணங்குவாரா வட்டையிலே ?
இலகுவிலே குளிர் உட்புகாவாறு செப்பமாய் அமைக் கப்பட்ட கூட்டினுள் வாசம் செய்வது கிரான்குருவி. ஆயினும், மழையின் கடுமை காரணமாக ஏற்பட்ட கார்காலக் குளிரானது அக் கூட்டினுள்ளும் புகுந்து கொடுமை செய்யும். அப்போது உள்ளே உறையும் கன்னிப் பருவமடைந்த கிரான்குருவி குளிர் பொறுக்க மாட்டாமல் அதனைப் போக்கிக்கொள்ளுதற்கு நெருப் பைப்போற் தோன்றிய மின்மினிப் பூச்சிகளை உண்மை
--ܚܚܚܚ-ܝܚܚܝܝܝ----ܝ----- --ܚܝ - ܥܝܝܝܝܝܝ-ܚ
() கிரான்குருவி - தூக்கணங்குருவி என்று சொல்வர்,

Page 45
40 மட்டக்களப்புத் தமிழகம்
நெருப்பென்று கருதித் தன் கூட்டினுட் சேர்த்து அதன் குட்டிலே அணைந்து துயில்கொள்ள முயல்வதும் கார்கால வரவினேடு காதலியின் கருத்தில் வருகின்றது. * கன்னிக் கிரான்குருவி' யை எண்ணும்போது தானும் கன்னிப் பெண்ணுய் இருந்தால் வேறு நினைப்பின்றி நெருப்பினை அணைந்து இன்பம் பெறல்கூடும் என்ற நினைவும் தோன்றுகின்றது. ஆனல் கார்கால மழைக் குளிருக்குத் தனது இன்பக் காதலரின் அணைப்பினைப் பெறுதலேவிட வேறு எதுவும் அவளுக்கு நிறைவுடைய தாகாது. அப்படி நிறைவுபெற முயலுதல் மின்மினி கொண்டு குளிர்துடைக்க எண்ணுவது போன்று மதியீன மான செயலேயாகும் என்னும் உட்பொருள் தோன்றப் புனையப்பட்ட இக் கவிதை அறிவுக்கு நல்விருந்தா யிருக் கின்றது. அத்தகைய மழையையும், கூதலேயும், அவற்ருல் தான்படுத் துன்பத்தையும், உணர்ந்து வந்துசேராத நாயகனைத் தனக்கே சொந்தமான புருஷன் ' என்று எங்ங்ணம் செர்ல்லலாகும். அவளது ஆற்றமையைப் புலப்படுத்தும் இக் கருத்தே சொந்தப் புருஷனென்றல் சுணங்குவாரா ’ என்னும் அடியில் செறிந்துள்ளது.
காதற் துறை சார்ந்த இக்கவிகள் போன்று, உணர்ச்சி வயப்பட்டு எழும் புறப்பாடல்களும் பல மட்டக்களப்புத் தமிழகத்தின் கிராமமெங்கும் வாழ்கின்றன. சித்திரை வருடப்பிறப்புக் காலத்தும், தைப்பொங்கல், தீபாவளி ஆகிய சைவத் திருநாள்களின்போதும், முஸ்லீம் புது வருடம், பெருநாள் ஆகிய காலங்களிலும் ஊஞ்ச லாடுதல் இடந்தோறும் கடக்கின்ற ஒரு மகிழ்வூட்டும் விளையாட்டாகக் கருதப்படுகிறது. அப்போது படிக்கப் படும் பாடல்கள் நல்ல தமிழ்ச்சுவை சொட்டுவனவா யுள்ளவை :-
** என்றபொழு தேவேட ரனைவோருங் கூடி
இந்தமரம் கல்லநிழல் ஏகாந்த நிலையம் - (தெந்தன) - தனியே இருக்கின்ற தங்கச்சி யார்க்குத்
தக்க துணை யென்றெண்ணி மனமிசைக்தவராய்-(தெந்தன)

உணர்ச்சிக் கவிநலம் 41
தறியாமல் விட்டுவன வேடரெல் லோரும் தங்கள் சிற் றூருக்கு வழிகொண்டு போனுர் - (தெந்தன)
போனதைக் கண்டுசித் திரவேலர் தாமும் புதியநிழல் மாறியே பரதேசி யானுர் - (தெந்தன)
தெந்தன தெனதென தெனதென தெனணு
தெனணு தெனுதெந்த னதெத் தனணு ’ என்ற தருவுக்கேற்ப இசையமைத்துப் படிக்கப்படும் இப்பாடல்கள் ஊஞ்சலாயமைந்து வள்ளியம்மை திருமண வரலாற்றைக் கூறுவனவாகும். இவை காரைதீவில் வாழ்ந்த வித்துவான் வைத்திலிங்க தேசிகராற் பாடப் பெற்ற மண்டூர்க் கந்தசுவாமி லீலா சங்கிரகமானவ ரூஞ்சல்’ என்னும் நூலுள மைந்தவை.
* காத்திடுவாய் வேலவரே-ஊஞ்சல்
கவியிசைக்க அருள்தருவாய்” * உன்னுங்கடி தோழியரே-நல்ல
பொன்னினுTஞ்சல் ஆடிடுவோம்’ 66 காக்காய்க்கும் குருவிக்கும்
கழுத்திலே கொண்டை கடுக்கண்டாப் போடிக்குக் காதிலே கொண்டை ?
(பருத்த கடுக்கன் கொல்லை’ என்னும் காதணி கொண்டை என இங்குக் குறிப்பிடப்படுகின்றது. (படம் 12)
* வெள்ளைமாட்டு வண்டிகட்டி
விடியற் காலை எழுந்திருந்து புள்ளிமாட்டுத் தயிருங்கொண்டு எம்புருஷன் வருவாரடி ?
' குரும்பைக்குலை குரும்பைக்குலை குலுக்கி முடியாதோ * பொழுதேறப் பொழுதேறப் பூசை முடியாதோ ?
என்பனவாக வழங்குவனவெல்லாம் தனித்தனியான ஊஞ்சற் பாடல்களாம்.

Page 46
42 மட்டக்களப்புத் தமிழகம்
மேலும் இராமநாடகம், பூருவச்சக்கரவர்த்தி நாடகம் என்னும் நாடக வரலாறுகளிற் சில பகுதிகளும், திருக் கோவி லூஞ்சல் (புலவர் பரம்பரையுள் மொட்டை வேலாப் போடியாரைப்பற்றிய பகுதியிற் காட்டப்பட் டுள்ளது.) வன்னியனர் ஊஞ்சல் என்ற தனித்தொகுதி களும், குறத்தி ஊஞ்சல் போன்று வழங்கும் தனிப் பாடல்களுமாக எண்ணிறந்த ஊஞ்சற் கவிதைகள் செவி யேறலாக இங்கே உள்ளன. இவற்றை அவ்வப்போது பாடிய பொதுமக்களும், புலவர்களும் இத் தமிழகத் தாரேயாம் என்று தெரிகின்றது.
வயற்களங்களிலே உழவு, மிதிப்பு என்பன நடை பெறுங் காலங்களில் மாடுகளைக்கொண்டு வேலைகொள் வோர் அப்போது பாடும் தனியடிகளாலான பாட்டுகள் பல ஏர்ப்பாட்டு’ என்று வழங்குவ.
* வரம்போ தலகாணி-தம்பி செல்லா உனக்கு
வாய்க்காலோ பஞ்சு மெத்தை ?
* இந்த நடைநடந்தே-என்தம்பி செல்லா நாம்
எப்போகரை சேர்வமடா ?
* ஒடிநட கண்டே-என் தம்பி செல்லா உன்
உறுதியுள்ள காலாலே ?
“ வெள்ளியினுற் சுள்ளாணி-என்தம்பி செல்லா உனக்கு
வெண்கலத்தால் மதியாணி?
என்பன அப்பாடல் வகையின. இங்குத் தந்த கடைசிப் பாட்டில் வந்த சுள்ளாணி', 'மதியாணி ' என்பன கலப்பை, கொழு என்பவற்றில் வந்துள்ள ஆணிகளைக் குறிக்கும் சொற்களாகும். பாடல்களில் மட்டுமன்றிப் பேச்சுவழக்கிலும், உழவர் தம் நாற்காற் செல்வங்களைச் ‘செல்லன் ’ என்பது போன்ற அன்புப் பெயர்களாலேயே அழைத்தல் பொதுவழக்காகும். இன்குரலிசையினல் ஏர்க் களத்தோரும், வேலைக் கடாக்களும், கோமறந்து தம் தொழில்புரிய உதவியாகும் இக் கவித்துறை சார்ந்த பாடல்கள் இத் தமிழகத்தில் நிறைய வழங்குகின்றன.

உணர்ச்சிக் கவிநலம் 43
இவைபோன்று குடுபோடும் (போரடும்) களத்தில் வழங்கும் பொலிப் பாடல்களும் மிகப் பலவாதலே அறிவோம். பொலி’ என்ற சொல் நெல்லைத் தனி யாகவும், தொகையாகவும் குறிப்பது. பொலியின் வாரி (வளம்) பெருகவேண்டி இரவிலே குடுபோடும்போது பாடும் பாடல்களும் இதனுற் பொலிப்பாட்டு’ என்றே அழைக்கப்படுகின்றன. அறிமுகவுரையுள் யாம் கண்ட பொலிப்பாடல்களைத் தொடர்ந்து :-
* கண்டுப் பனையோலே-பொலி தன்மதாயே
உனக்குக் கணக்கெழுத நல்லோலை
--பொலி, பொலி, பொலியோ ??
* மாவிலுப்பைத் தோணிவெட்டி-பொலி தன்மதாயே
கந்தர் மாமாங்கம் போருராம்
-பொலி, பொலி, பொலியோ ?
* சங்கீன்ற முத்தோ-பொலி தன்மதாயே
சமுத்திரத்தி லானிமுத்தோ
-பொலி, பொலி, பொலியோ ?
* சங்கு முழங்குதல்லோ - பொலி தன்மதாயே
சங்கரனுர் கோயிலிலே - பொலி, பொலி, பொலியோ ?
* வாட்டி வலமாக - பொலி தன்மதாயே
வலம்புரியோர் சங்காக - பொலி, பொலி, பொலியோ?
என்பனவாக அத்தகைய பாடல்கள் பல இங்குப் படிக் கப்படுகின்றன. சூடுபோடும்போது பொலிப்பாட்டுப் படித்தலேக் குரற்காட்டுதல் ’ என்று கூறுதல் மரபாகும். இவைநீங்கலாக :-
* ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்க முட்டைவைத்தாய்,
கல்லேப் பிளந்து கடலருகே முட்டைவைத்தேன்; வைத்ததுமோ மூணுமுட்டை பொரிச்சதுமோ ரெண்டுகுஞ்சு, மூத்தகுஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுத்திவந்தேன்; இளையகுஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுத்திவந்தேன்; எல்லா மலையும் ஒருமலையாச் சுத்திவந்தேன்;

Page 47
44 மட்டக்களப்புத் தமிழகம்
மாயாக் குறத்திமகள் வழிமறிச்சிக் கண்ணிகுத்த, நானழுத கண்ணிரும் என் குஞ்சழுத கண்ணிரும், வாய்க்கால் வழியோடி வழிப்போக்கர் கால்கழுவிக், குண்டு நிரம்பிக் குதிரை குளிப்பாட்டி, ஆழி கிரம்பி ஆனை குளிப்பாட்டி, இஞ்சிக்குப் பாய்ந்து இலாமிச்சைக்கு வேரோடி, மஞ்சளுக்குப் பாய மறுகுதுகாண் அம்மானே.”
என்பதுபோன்ற சிறுகதைகூறும் பாடல்களும்,
* ஆலையிலே சோலையிலே ஆலம்பாடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு ?
என்பது போன்று விளையாடல் கூறும் பாடல்களும்,
* சுட்ட கருவாடாம் பறங்கிக்குச் சோறுமிறங்காதாம்
குரப்பற்றைக்குள்ளே பறங்கி சுங்கானை மாட்டிக்கொண்டான் இழுக்க இயலாமல் பறங்கி ஏலேலம் சொல்லுருண்டி ?
என்பது போன்ற பரிகாசப்பாடல்களும் ஆக வழங்கு வன எல்லாம் ஒருசார் உணர்ச்சிக் கவிகளேயாகும்.
இவ்வாறு பொருளின்பமும் சொல்லின்பமும் பொதிந்து பொதுமக்களுடைய உணர்ச்சிப் பெருக்கின் சின்னமாக விளங்கும் காதற்கவிகளும், புறத்துறை சார்ந்த ஏனைய கவிதைகளான ஊஞ்சற்பாடல்கள், ஏர்ப் பாட்டுகள், பொலிப்பாடல்கள், கொம்புவிளையாட்டுப் பாடல்கள், குளுத்திப்பாட்டுகள்,வசந்தன்கவிகள், வசைக் கவிகள், தோணிப்பாட்டுகள், ஆரியப்பூமாலே என்னும் உடுக்கைப்பாட்டுகள், சவணிக்கைப்பாட்டுகள், கார்த் திகைப்பறைப்பாட்டுகள், தீர்த்தமாடும் LITL . (B8ir, மற்றும் தெருப்பாடல்கள் என்பனவும் பிறவுமாக இங்கு வழங்கும் எண்ணிறந்த ஏனைய பாடல்களுமெல் லாம் தனித்தனி எடுத்து நலய்ைந்து சுவைதேர வேண்டிய சிறப்புடையன. இவற்றுள், குளுத்தி, வசந்தன், கொம்புவிளையாட்டு என்பனபற்றிய பாடல்க ளிற் சிலவற்றை இந்நூலில், கண்ணகி வழிபாடு என் னும் அதிகாரத்துள் காணுவோம். எல்லாப் பாடல்களை

உணர்ச்சிக் கவிநலம் 45
யும் நன்முறையிற் தொகுத்து வெளியிட்டால் அவைகளை மற்றையோருமறிந்து பயனுறலாகும்.
இத்துறையில் மட்டக்களப்புநாட்டுக் கவிகள் பற்றிய கட்டுரைகள் சில, பத்திரிகைகளில் வெளிவரு கின்றன. அவ்வாறு வெளியிடும் சேவை நன்னுேக்க முடையதே யெனினும், மரபு கடந்த கருத்துகளையும் கற்பனைகளையும் கட்டுரையாளர் தாமே சேர்த்து உண்மைக் கவிகளின் உயிர்த்தன்மையைச் சிதைக்க முற்படாது பார்த்துக்கொள்ளினன்றி உரிய பயனே அது தரமாட்டாது. மட்டக்களப்புப் பெண்கள் அருவி வெட் டும்போது பாடிய கவிகளிவை யென்றும், களை பிடுங்குகையிற் பாடியவை இவை யென்றும், சில நாட்டுப் பாடல்களுக்குப் பிழையான தலையங்கங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை மரபறியாதே அவர்தம் கலைகளை ஆராயத் தலைப்படுத லால் இத்தகைய பிழைகள் நேருகின்றன வென்னலாம். மட்டக்களப்பு நாட்டிலே பல்லாயிரம் ஏக்கர் நன்செய் நிலம் நீர்ப்பாய்ச்சல் வசதிகள் நிறைந்து ஒரேகாலத்தில் பயிரேற்றப்படுதலாலும், அவ் வயலெங்கும் களை பிடுங்கு தற்கு வேண்டிய அளவு தொழிலாளர் நிறைய இங்குக் கிடையாமையாலும், நிலத்தின் இயற்கைவள அமைப்பும், * உழவு’, ‘மிதிப்பு’ என்பன நடக்கும் சிறந்த முறைகளும் காரணமாகக் களைபிடுங்கும் அவசியம் வெகு தூரம் குறைக்கப்பட்டுள்ளமையாலும் இக்காலம் பயிற்சிவகை யில் இடைக்கிடை காட்டப்படுதலைவிட இக்காட்டு வயல் களிலே களை பிடுங்கும் வேலை நடைபெறுவதில்லை. எனவே வேறு தொழிற் களத்துக் கவிகளை வலிந்து இந்நிலைக்கு இழுக்கவேண்டிய அவசியம் ஏற்படா தா கின்றது. வேளாண்மை வெட்டுதலே அருவி வெட் டுதல்' என்று சொல்லும் வழக்காறு இந்நாட்டில் இல்லை. அவ்வேலை இங்கே பெண்களாற் செய்யப் படுவதுமன்று. வயல் வேலைகளிற் பெரும்பாலானவைகதிர் துவைக்க வேண்டிய அவசிய மேற்படின் அது தவிர-எல்லாம் ஆண்களாலேயே செய்யப்படுவன.

Page 48
46 மட்டக்களப்புத் தமிழகம்
ஆதலால் இத்துறைகளிலெல்லாம் துறைபோன நல் லறிஞர் கூட்டம் செய்யும் பரிசீலனைகளுடன் இவ் வுணர்ச்சிக் கவிதைச் செல்வம் சீரியமுறையில் வெளி வரின் அது இந்நாட்டு மக்களின் கலையையும், பண்பை யும் காப்பாற்றி வளர்க்கும் ஒரு பெரும் பணியாகும். கலைச்சங்கங்கள் இதனைக் கருத்திற் கொள்ளல் வேண் டும். தனி அறிஞர்களும் இக் கவிதைச் செல்வம் வளர்க்கும் தொழின் மாந்தரின் சிறப்பினைப் போற்றி அவர்தம் உணர்ச்சிக் கவிதைகள் இயந்திர ஆட்சி மிக்க இக்காலமயக்கில் மறைந்துபோகாது காத்தல் வேண்டும். ‘செவியேறல் வாயிலாகச் சிறந்த கவிதை களைத் திரட்டி நெஞ்சிற் பொறித்து வைத்திருக்கும், எழுத்தறியாக் கவிவாணர்களையும், அத்தகைய கவிகளை உணர்ச்சி சொட்ட உடனுக்குடன் பாடும் ஆற்றலோடு இன்று வாழும் கவிப்புலவர்களையும் காம் அனேவரும் மதிப்புக் கொடுத்துப் போற்றுதலும் இன்றியமையாத தொன்று. ஒருநாட்டின் உண்மையான பண்பாடுகளைப் பொறித்துக் காட்டும் பெருஞ் சிறப்புடையனவும், அந் நாட்டினது பொது மக்களின் அறிவு, கலே, புலமை என்ப வற்றை நிலைப்படுத்தி அதன் மக்கட் குழுவின் பரம்பரை யான நாகரிகச் சிறப்பை உறுதி செய்யும் பெருமை யினல் முதுகெலும்பு போன்று விளங்குவனவுமான இந் நாட்டுப் பாடல்களைப் பேணிச் சிறப்புச் செய்யும் பணி யில் அனைவரும் ஒத்துழைப்பாராக.

3. நாட்டுக் கூத்துகள்
கிழக்கிலங்கைத் தமிழகமான மட்டக்களப்பிலே நாட்டுக் கூத்துகள் பல, பழங்காலக்தொட்டு ஆடப்பட்டு வருகின்றன. புதிய விஞ்ஞானச் சிறப்பினுற் குறைந்த செலவில் மக்களுக்கு நிறைந்த இன்பமூட்டவல்ல பேசும் படங்கள் இக்காலத்து மலிந்துள்ளபோதிலும் இங்குக் கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தாம் கூத்தாடி மகிழ்வதிலேயே பெரிதும் இன்பங் காணுகிருர்கள். நாட்டுக் கூத்துகள் என்று சொன்னல் காலத்துக்கேற்ப முன்னேருததும் நாகரிகமற்றதுமான ஒருவித ஆட்டம் அது என்று பலர் இக்காலத்துக் கருதுகின்றனர். நாட்டுக் கூத்துகளின் சிறப்பியல்புகளையும், கூத்தாட்டங் களில் உள்ள தாள அமைதி, அவற்றில் வெளிப்படும் கலைச்சிறப்பு, நாடகப் பொருளமைவு என்பவற்றையும் கருதும் ஆற்றல் பெரும்பாலும் அவர்க்கில்லாமையே இதற்குக் காரணம் என்று நாம் கொள்ளல் வேண்டும்.
. மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள் என்ற தலைப்பில்
இங்கு எழுதப் புகுந்தாலும், கூத்துகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு என அமைந்தன அல்ல என்பதை முதலிற்

Page 49
48 மட்டக்களப்புத் தமிழகம்
குறிப்பிட விரும்புகிறேன். அவிநயத்தின் மூலம் மனக் கருத்தை வெளிப்படுத்துதல் உலகமக்க ளனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் போலவே, கூத்துகளிலே பாட்டுகளின் பொருளுக்கேற்ப உணர்ச்சி புலப்பட அவிநயஞ் செயதலும் மக்களுக்குப் பொதுவானதாக அமைந்துள்ளது. இதனலேயே நமது இயற்றமிழும் இசைத்தமிழும் வழங்குதற்கேற்ற நிலம் வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ' என எல்லை வகுக்கப்பட்டதுபோல, நாடகத் தமிழ்வழக்கிற்கு நம் முன்னேர் எல்லே கூருதுவிட்டனர். செகசிற்பியார் என்னும் மேல்நாட்டு நாடகப் பேராசிரியர் இயற்றிய ஆங்கில நாடகங்களும்கூட நம் தமிழ் நாடக இலக்க ணங்களுக்கு அமைந்தனவாய் இயற்றப்பட்டிருத்தற்குக் காரணம் இப்பொதுத் தன்மையேயாகும். இப்படிப் பொதுவானவையாயினும் தமிழர்தம் பண்பாட்டைப் பிரதிபலிப்பனவாய் அமைந்த நாடகங்கள் பல முன்ன ளில் தமிழ்நாடெங்கும் கடந்தன என்றும், காலகதியில் அவற்றினமைப்புமுறைகூட அறிய முடியாதவாறு அழிக் தொழிந்தன என்றும் தெரிகின்றது. தமிழ்நாட்டிலே சில கிராமங்களில் நாடகங்கள் நடிக்கப்படுகின்றன எனினும், சிறந்த கூத்துமுறையில் அவை ஆடப்படு கின்றில. மலையாளக் கரையிலும் இலங்கையின் மட் டக்களப்புப் பகுதியிலும் 5ல்லமுறையிலமைந்த நாட்டுக் கூத்துகளை ஆடும் பெருவழக்கம் இன்றும் அழியாது நிகழ்ந்துவருதல் இங்குக் கருதத்தக்க ஒன்ருகும்.
மட்டக்களப்புநாட்டில் ஆடப்படும் கூத்துகளை நாம் நோக்கும்போது அவை வடமோடி, தென்மோடி என்ற இரு பெரும் பிரிவினவாய் இருப்பதை அறி வோம். இவற்றைவிடச் சிறுபான்மையாக வழங்கும் * விலாசம் ' என்னும் ஒரு வகைக் கூத்தும் இங்குண்டு. விலாசங்கள் மேற்காட்டப்பட்டவற்றைச் சில பகுதிகளிற் சார்ந்து சில துறைகளிற் புதிய மாற்றங்களைக் கொண் டனடிாய் இருக்கின்றன. பெருவழக்காக நடக்கும் நாடகங்களான வடமோடி, தென்மோடி என்ற இரண்

நாட்டுக் கூத்துகள் 49
டிற்கும் இடையே பெரிதும் வேறுபாடு காண்கின்ருேம். இவற்றின் கதைப்போக்கு, ஆடல்வகை, தாளக்கட்டு (தாள ஒழுங்கு), உடை அணியும் முறை என்பன இம் மாற்றங்களிற் குறிப்பிடத்தக்கவைகளாம். வட மோடி, தென்மோடி என்ற பிரிவுகளின் பெயர்க் காரணங்கள் யாவை என வரையறுத்துக் கூற முடியா விடினும் வடகாட்டிலிருந்து வந்து தமிழரிடைக் கலந் ததும், பண்டைத் தமிழகத்தில் வழங்கிய ‘ஆரியக் கூத்து வகையைச் சேர்ந்ததுமான கூத்து வடமோடி என்றும், தமிழுக்குச் சொந்தமாகத் தென்னுட்டில் நிலவிய கூத்து வகையைச் சேர்ந்தது தென்மோடி என்றும் வழங்கப்படுகின்றன எனக் கொள்ளல் ஒருவாறு பொருத்தமாகத் தெரிகின்றது. கூத்துகளின் கதைப் போக்கை நோக்குமிடத்து வடமோ டி நாடகங்கள் பெரும்பாலும் போர்செய்து வெற்றி பெறுவதில் முடி வுறுவனவாய் இருக்க, தென்மோடி நாடகங்கள் காதற் சுவை பயந்து அக்காதல் கைகூடுவதில் முடிவனவாய் விளங்குகின்றன. இங்கே ஆடப்படும் வடமோடிக் கூத்து களிற் சிறந்தனவாக உள்ள இராம நாடகம், வீரகுமார நாடகம், தருமபுத்திர நாடகம், பப்பிரவாக நாடகம், 18ஆம் போர், குருக்கேத்திரன் போர், சூரசம்மாரம், குசலவ நாடகம், பாண்டவர் வனவாசம் என்பவற்றிற் போர்க்கள முடிவையும், தென்மோடியிற் சிறந்தனவாக உள்ள அகிருத்த நாடகம், பவளவல்லி நாடகம், அலங் காரருப நாடகம், வாளபிமன் நீாடகம், நரேந்திர நாடகம் என்பவற்றில் காதல் வெற்றி பெறும் முடிவினை யும் நாம் கருதிப் பார்த்தல் வேண்டும். இவ்வகையிலே பழந்தமிழர்தம் நாடக இலக்கணங்களையும், மேனுட்டாரது நாடக அமைப்பு வகைகளையும் ஒத்து இக் கூத்துகள் அகத்திணையையும் புறத்திணேயையும் சார்ந்து விளங்கு கின்றன. மேல்புல உலகிற் சிறந்த நாடகாசிரியர் எனப் போற்றப்படும் "செகசிற்பியாருடைய (Shakespeare) 5ாடகங்களை துன்பியல் அல்லது அமங்கல முடிபின (fi/DGegL)-Tragedy), இன்பியல் அல்லது மங்கல முடிபின (கொமெடி-Comedy) என்றும் வகுத்துள்ளார்தyள்.
ւ0 - 4

Page 50
50 மட்டக்களப்புத் தமிழகம்
*ரிறஜெடி’ என்பது போர் சம்பந்தமான அல்லது மனத் துன்பமான முடிவினைப் பெறும் நாடகம். கொமெடி காதலின் பத்தினே முடிவாக உடையது. மட்டக்களப்பு காட்டுக் கூத்துகளின் கதைப் போக்கினை நோக்கும் போது பெரும்பாலும் வடமோடி நாடகங்கள் (ரிறஜெடி) அமங்கலம் ஆகவும், தென்மோடி நாடகங்கள் (கொமெடி) மங்கலம் ஆகவும் முடிதல் தெரிகின்றது. காதல் என்னும் அடிப்படையில் எழுந்த அன்பு வாழ்வு வாழ்ந்த தமிழ ரிடைத் தமது வெற்றியையும், வீரவெறியையும் புலப் படுத்திப் பெருமிதப்பட்டனர் ஆரியர். பெரும்பாலும் சிறப்புடையன எனத் தாம் கருதிய போர்க்கருத்துகள் போன்ற புற வாழ்வின் இலக்குகளைத் தமிழர் வடதிசை நடிப்புடன் சேர்த்து வடமோடி என்றனர் எனலாம். தமிழ்நாடு தென்னடுதானே ; ஆகவே காதல் கலந்த தமிழ்மோடி தென்மோடி எனப்பட்டது. மோடி என்ற சொல் இந்நாட்டிலே வகை, விதம், பகுப்பு என்ற கருத்துகளிற் பேச்சிலும் வழங்குகின்றது.
"செகசிற்பியருடைய (Shakespeare) நாடகங்கள் ஆடவ ரும், அரிவையரும் அரங்கிலேறிப் பெரும்பாலும் சொல் லாற் கருத்தைப் புலப்படுத்தி நடிக்கும் வகையிலே அமைந் துள்ளன அன்றி 5ம் நாட்டுக் கூத்துவகையில் ஆடும் முறையிலே அமைக்கப்பட்டில. ஒருவாறு இத்தகைய சொல் நடிப்பை முக்கியமாக உடைய கூத்துகளே மட்டக்களப்பு நாட்டில் விலாசம்’ என்ற வகுப்பைச் சார்ந்தன வாயுள் ளன. விலாசம்’ என்பது ‘டிருமா’ (Drama) என்று ஆங்கி லத்திற் சொல்லப்படும் நாடகத்துக்கும், கூத்து என்று தமிழிற் சொல்லப்படும் காடகத்துக்கும் இடைப்பட்ட ஆட்ட அமைப்பினை உடையதாக இருக்கின்றது. தென் மோடி வடமோடியாகி, வடமோடி விலாசமாகி, விலாசம் *டிருமாவாய்ப் படிப்படியே நடைவேறுபட்டுச் செல்லு தல் நோக்கத்தக்கது. அவ்வாறு ஆடப்படும் விலாசங் களிற் சிறந்துள்ளவை பூதத்தம்பி விலாசம், 'அரிச்சந்திர விலாசம், கண்டிராசன் விலாசம் என்பனவாம்.

நாட்டுக் கூத்துகள் 5 I
இது கிற்க, அகம் புறம் என்று தமிழர் பகுத்துக் கண்ட கூத்தியல்புகளோடு, மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகளைத் தொடர்பு படுத்திக் காண்போம். உள்ளத்து நிகழும் அநுபவத்தைச் சுவை என்று சொல்லல் தமிழ் மரபு. இச்சுவை முகக் குறிப்பாலும் வெளி உறுப்பு களின் அவிநயச் செயலாலும் உடம்பிற் புறப்பட்டுத் தோன்றுதலால் மெய்ப்பாடு என்றும் சொல்லப்படும். வீரம், அச்சம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலைமை என இச்சுவை என்று சொல்லப்படு கின்ற அநுபவம், அல்லது மெய்ப்பாடு ஒன்பது வகைப் படும். இவற்றுள்ளே மனமகிழ்வும் சிரிப்பும் அவற்ருல் வரும் அதிசய கிலேயும் என்ற முன்றையும் தருவனவா யுள்ள உவகை, நகை, வியப்பு என்னும் சுவைகள் இன்பப் பகுதியைச் சார்ந்து அகத்திணை எனப்படுவ. மற்றைய ஐந்து சுவைகளும் பெரும்பான்மையாக வருவது புறத் திணை எனப்படும். இவ்வேறுபாடு கொண்டு வரும் அகத் திணைக் கூத்துகளையும், புறத்திணைக் கூத்துகளையுமே விபுலாாகந்த அடிகளார் தமது மதங்கசூளாமணி’யுள் வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் முறையே குறிப்பிட்டார்கள். இதன்படி மட்டக்களப்பு நாட்டுக்கூத்து வகையை நாம் ஆராய்ந்தால் தென்மோடி நாடகங்களிலே இன்பமும் நகையும், காதல் தடைப்படுதல் நிறைவேறு தல் என்பவற்ருலாம் வியப்பும் ஆகிய சுவைகளே பெரும் பாலும் பயின்று வரல் காண்போம். இத் தென்மோடி யுள் போர் வீரம் என்பன வர நேர்ந்தால் அவையும் காதல் காரணமாய் அந்த உவகைச் சுவையினையே மிகுப் பனவாய் அமைந்துள்ளன என்று அறிதல்வேண்டும். வடமோடி நாடகங்களில் வரும் முதன்மையான சுவை வீரமாக இருக்கின்றது. அதனைச் சார்ந்து கோபம், அழுகை முதலான சுவைகள் தோன்றுகின்றன. இந்தச் சுவைப்போக்கை நோக்கும்போது அகத்திணை, புறத்திணை என்பவற்றை முறையே சார்ந்த வேத்தியல், பொதுவியல் என்ற பழந்தமிழ்க் கூத்துவகைகளுக்கும் கொமெடி, *ரிறஜெடி என்ற ஆங்கில நாடகவகைகளுக்கும் கிரனிறையே பொருந்துவனவாக மட்டக்களப்புகாட்டின்

Page 51
52 மட்டக்களப்புத் தமிழகம்
தேன்மோடி, வடமோடி நாடகங்கள் அமைந்து கிடத்த லேக் காண்போம். -
இச்சிறப்புக்கள் வாய்ந்து நடைபெறும் நாட்டுக் கூத்துகளை மட்டக்களப்புத் தமிழகத்தின் கிராமந்தோறும் உள்ள மக்கள் தம் ஓய்வு காலங்களில் ஆடிப் பழகு வார்கள். கூத்துக்களைப் பழக்கும் ஆசிரியர் அண்ணு வியார் ’ என அழைக்கப்படுவர். கூத்தாடும் மேடையின் இடமாகக் கட்டப்படும் உயர்ந்த ஒலேக் கொட்டில் * இலங்கக்கூடம் ' என்ற சொல்லாற் கிராமப்புறங்களிற் குறிக்கப்படுகின்றது. " அரங்கக்கூடம்’ என்னும் இனிய சொற்ருெடரின் திரிபு இது என்பதை அறிந்து நாம் இன் புறல் வேண்டும். கூத்தாடும் அரங்கு * களரி ' ஆகும். அரங்கின்மேல் அமைந்த இந்த அரங்கக்கூடத்தில் நன்கு ஆடிப் பழகியபின் நடிகர் முறைப்படி கோலம் பூண்டு பரந்த பொது இடமொன்றிலே கூத்தை அரங்கேற்றம் செய்வார்கள். அரங்கேற்றத்துக்கான உயர்ந்த மண் மேடை பெரும்பாலும் ஊர்க்கோயில் வீதியி லமைக்கப் படும். இதன் அமைப்பு, மேடையில் இடம்பெறும் மேற்கட்டி, எண்ணெய் விளக்குகளை வைப்பதற்கான தூண்கள் என்பனவும், சிலப்பதிகார உரையுட் காணப் படும் பழந்தமிழ் நாடக அரங்கின் இலக்கணங்க ளுடன் பொருந்திப் பழம் பெருமையை நினைவூட்டி அறிஞர்க்கு வியப்பை அளிக்கின்றன.
இக் கூத்துக்கள் தொடங்கும்போது கட்டியகாரன் முதலில் தோன்றுதல் பொதுவான வழக்கம். கூத்தின் தலைமைக் கதாநாயகனன பேரரசனுடைய சபைக் கட் டியகாரன் அவன். அவன் வந்து தன் வரவையும் பின்னல் வரப்போகும் அரசனுடைய சிறப்பு முதலிய வற்றையும் சொல்லி அமைதியாய் இருந்து பார்க்கும் படி சபையோரை எச்சரிக்கை செய்து செல்வான். - இது கட்டியங் கூறுதல் என வழங்கும். அப்பால், கதைப் போக்குப்படி கூத்துக்காரர் முறையே தோன்றி கடிப்பர். அரச்ன், அரசி, மந்திரி பிரதானிகள் என்போர் கூட்டங் கூட்டமாக வந்து ஆடுதல் மரபு. இவர்களுடைய கூட்டம்

நாட்டுக் கூத்துகள் 53
* கொலு ’ என்று வழங்கப்படுகிறது. இராமர் கொலு, தருமர் கொலு என்ற தொடர்கள் இதற்குதாரணம். நடிகர்களுடைய முதற் தோற்றத்துக்கு வரவு' என்று பெயர். அம் முதற் தோற்றத்தின்போது மட்டுமே வரவுப் பாட்டுகளும், ஆட்டங்களும் இடம் பெறுகின்றன. அரங்கில் ஒரு கொலுவினருக்கோ, தனிப்பட்ட ஒரு கொலுவுக்கோ வரவு நிகழும்போது மிகச் சிறந்த ஆட்டம் ஒன்று இடம்பெறும். தாள அறுதி பிசகாது மத்தளம் அடிப்பவருடைய திறமையில்ை இந்த நேரத் தில் மேடை அதிர்ந்து விளங்கும். அமைதியாக இருந்து குழந்தைகள் கூட இந்த ஆடல் இன்பத்தைப் பருகும் சிறப்பு வரவு ஆட்டங்களுக்கு உண்டு. கூத்தைப் பழக்கிய அண்ணுவியார் பெரும்பாலும் " சல்லரி ’ என்ற தாளத் துடன் மத்தளம் அடிக்கும் அண்ணுவியின் பக்கலில் நிற்பார். பக்கப் பாட்டுப் பாடுவோரும், கூத்து ஏட்டுப் பிரதி பார்ப்பவரும் இவர்களுடன் மேடையில் இடம் பெறுவர். இவர்களைச் சபையோர் ’ என்று கூறுதல் இந்நாட்டு வழக்காகும். வரவின்போது வேறு வேருன தாளங்கள் மத்தளத்தில் ஒலிக்கும். அத்தாளங்களை ஒலிவகையாக வாயாற் சொல்லும் சொல்வரிசைக ளுக்குத் தாளக்கட்டு’ என்று பேர். அரசன் கொலு வரவு, சேபைதி வரவு, அரசகுமாரி வரவு, முனிவர் வரவு என்ற வேறு வேருண இயல்புடையவர்களின் வரவுகளுக்கெல்லாம் வேறு வேருண ஆட்டங்களும் அவற்றுக்கேற்ற தாள ஒழுங்குகளும் உண்டு. ஒரு அரச னுடைய ஆட்டம் சேனதிபதியுடைய ஆட்டத்தை விட இலகுவாய் இருக்கும். பெண்கள் வரவு மென்மைத் தன்மையுடைய நுணுக்கமான அவிநயங்களைப் புலப்படுத் தும் தாளக் கிட்டுகளையும் ஆட்டங்களையும் கொண்டு நிக ழும். அதிலும் அரச கன்னியர் வரவு சாதாரண பெண் களின் தனிப்பட்ட வரவை விடச் சீர்மைபெற்ற ஆட்ட நுணுக்கமும் சிறப்பும் பொருந்தி விளங்கும். இந்த எல்லா விதமான ஆட்ட நுட்பங்களும் வடமோடி, தென்மோடி இரண்டுக்கும் தனித்தனி வேருண வகையில் இயங்கிச் செல்வன.

Page 52
'රි 4 மட்டக்களப்புத் தமிழகம்
தென்மோடியில் வடமோடியினைப் பார்க்க அதிக நுணுக்கமும் கடினமுமான ஆட்டங்கள் உள. தென்மோடி வரவுக்குரிய ஆட்டங்களை முடித்துப் பாட்டுப் படிக்க வேண்டிய கட்டத்துக்கு வரும்போது கூத்துக்காரர் (இளைத்த உடம்புடையவராயின்) பெரும்பாலும் களைப் படைந்து விடுவார்கள். வடமோடி ஆட்டம் இப்படி உடம்பை அதிகம் முறிக்காதது. இதற்ைபோலும் வட மோடியில் வரவு ஆட்டத்தின் பின்னர், தம் வரவைக் குறிக்கும் பாட்டை நடிகர்தாமே (தருமர் வந்தாரே என்று தருமராக வருபவரே) படிக்க, தென்மோடியில் அதனைச் சபையோர் என்றழைக்கப்படும் பக்கப் பாட்டுக்காரர் படிக்கும் ஏற்பாடு உண்டு. சபையோர் அவ்வாறு படிக்கும் வரவுப் பாட்டுக்குரிய இலகுவான ஆட்டத்தின்போது தென்மோடிக் கூத்தர் ஒருவாறு தம் களைப்பினைப் போக்கிக்கொள்ள இது வசதிதருகின்றது. வரவுப் பாடல்கள் அரங்கில் தோன்றி நடிப்போரைப்பற்றிய புகழ்ச்சிப் பாடல்களாயிருப்பதால் தம்மைத் தாமே புகழ்ந்து கூறும் பண்பு தமிழர்க்கு உரியதன்று என்னும் கொள்கை, அவர்தம் சொந்தக் கூத்தான தென்மோடி யில் அப்பாடல்களைச் சபையோர்வாயிலாகப் பாடுதலின் மூலம் காட்டப்படுகின்றது என்றும் கொள்ளலாம்.
வடமோடியார் தம் விருத்தங்களை அதிகம் நீட்டி இசைக்காது படிப்பதும், தென்மோடியார் அவற்றை நீண்ட ஒசை புலப்பட இழுத்துப் பாடுவதும் வழக்கம். வசனங்களும் அவ்வாறே வடமோடியிற் சாதாரணமாகச் சொல்லப்படத் தென்மோடியில் அவை இசைபட இழுத்துச் சொல்லப்படுகின்றன. வடமோடிக் கூத்தர் ஒரு பாட்டைப் படித்தால் பக்கப்பாட்டுக்காரரும் அதனைத் தொடர்ந்து படிப்பர். அப்போது பாட்டுக்கேற்ற தாளத்துடன் கூத்தர் நடிப்பது வழக்கம். தென்மோடி யிலோ என்ருல் பாட்டை நடிகர் படிக்க அப்பாட்டின் கடைசிப் பாகத்தை மட்டும் பிற்பாட்டுக்காரர் தொடர்ந்து படித்துவிட்டுப் பாட்டு முழுவதற்குமுரிய தருவைப் படிப்பார்கள். பாட்டுக்கு அமைக்கப்படும் சுரவரிசை போன்று, கூத்துப்பாட்டுகளைப் பாடும்

நாட்டுக் கூத்துகள் 55
முறையை அமைத்துக்காட்டும் ஒருவித சொற்கோப்பு *தரு ' எனப்படும். உதாரணமாக -
பதினறு வயது மகனுருவம் - அவன் பாவையரோ டனுபவிக்கும் பருவம். VA (அலங்காரரூபகாடகம்) என்ற பாட்டுக்குரிய தரு :-
நன்னருன்ன கான நன்னநானு - நன்ன நானநன்ன கானநன்ன நானு. •
என்று இருக்கும். இப்படித் தருப்படிக்கும்போது நடிகர் அத்தருக்களுக்கேற்ற தாளத்துக்கே நடிப்பர். இவ்வாறு கூத்துப் பாட்டுக்களுக்குத் தருப்பாடும் வழக்கம் தென்மோடிக்கன்றி வடமோடிக்கு இல்லை. நடிகர் தம் வரவு, ஆட்டம், பாட்டு என்பவற்றை முடித்துக்கொண்டு களரியைவிட்டுப் போகவேண்டிய நேரம் வந்ததும் ஒரு துரிதமான ஆட்டத்தை ஆடுதல் வடமோடியார்க்கு நியதியாகும். இக் கடைசி ஆட்டத்துக்குக் காலமேற் றுதல் ’ என்று பெயர். காலமேற்றுதல் தென்மோடிக்கு
மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகளுக்குரிய ஆட்டங்க 'ளின் நுணுக்கங்களைப்பற்றிய பொதுக்குறிப்புகள் சில வற்றை இதுவரை கண்டோம். அவைகளைத் தொடர்ந்து, கூத்துக்களிலே விசேட இடம் பெறுவனவாய், நடிப் புக்கு உயிர்நாடியாய் உள்ள தாளக்கட்டுகளை இனிக் கவனித்து மேற்செல்லல் பயன் தருமென்று கருதுகின் றேன். கூத்தர் மேடையிலே தோன்றி ஆடும் தாளங் களைச் சொற்கோப்பினுல் தொடுத்து (கட்டி அல்லது சேர்த்து)க் கர்ட்டுவது தாளக்கட்டு ஆகும். கீர்த்தனைகளி லிருக்கும் பல்லவி’ போன்ற ஒரு உறுப்பு இத் தாளக் கட்டுகளிலும் முதலில் இருக்கின்றது. நடிகரின் வரவுத் தொடக்கத்திலே 8 முதல் 12 முறைவரை அண்ணுவி யார் இம் முதற்பகுதியைத் திருப்பித் திருப்பித் தாள அமைதியுடன் படிக்க அதற்குரிய அவிநயம்காட்டி அரங்கின் முகப்பிலேயே நின்று கூத்தர் ஆடுதல் மரபு.

Page 53
56 மட்டக்களப்புத் தமிழகம்
இந்த முதல் ஆட்டத்தின் பின்னரே அவர்கள் களரியுள் இறங்குவர். வரவுக்கேற்றபடி தாளக் கட்டினை அண்ணு வியாரும் பக்கப்பாட்டுக்காரரும் தொடர்ந்து சொல்லு கையில் அவர் கூற்றை அவ்வாறே மத்தளமும் தன் மொழியிற் சொல்கின்றது. அப்போது உணர்ச்சியைக் கடந்த ஆட்டமானது கூத்துக்காரரை மேற்கொண்டு பார்ப்போரனைவரையும் பரவசப்படுத்திவிடுகின்றது. மத் தளத்தின் இந்தச் சிறப்பு நிலையை மக்கள் * மத்தளம் நன்கு பேசுகின்றது ’ என்று சொல்லி அநுபவித்து மகிழ்கின்றர்கள்.
வடமோடி அரசர் கொலு வரும்போது :-
* தகதிகதா தெய்யத் தெய்தெய்
தாத்தெய்யத்தோம் தகதிகதா ? என்று ஆட்டம் தொடங்குகின்றது. பல்லவிபோன்ற இம் முதற்பகுதி, குறிக்கப்பட்ட காலஅளவுக்கு மீட்டும் மீட்டும் சொல்லப்படும்போது கூத்தர் நின்ற நிலையிலும், பக்கங் களுக்குத் திரும்பியும் அவிநயஞ்செய்து ஆடி அந்த இடத்திலே வீசாணம் போடுதல், எட்டுப் போடுதல், இவ்விரண்டுபேராகத் தமக்குள் இடம்மாறியாடுதல் என்ற சுழல் ஆட்டங்களையும் முறைப்படி முடிப்பர். ஒருவர்பின் ைெருவராகப் பாம்புபோல் வளைந்து ஆடிச் செல்வது வீசாணம். எட்டு என்ற இலக்கத்தைப் போன்று வளைந்து செல்லும் ஆட்டம் எட்டுப் போடுத ¥ಅಸಿ: பின்னர் :-
* தகதத் தகதத் தகதத் தகத
தந்தரி நாதரி தகுந்தரி குகுந்தரி தந்தரி நாதரி தகுந்தரி குகுந்தரி சணுத்தச் சணுத்தச் சணு தகததிங்கிணத்தோம் சணுத்தச் சணுத்தச் சணு தகததிங்கிணதோம் தகததிங்கிணதோம் ? என்று நடு அரங்கில் ஆடி :-
* தாம் தாம்தக தந்தரிகிடதக தீந்தாரத் தில்லானு சுந்தரி

நாட்டுக் கூத்துகள் 57
தகணக சுந்தரி ததிமிர்த கிடதெய்
தளங்கு தித் தக தகததிங்கிணதோம்
தகததிங்கிணதோம், தகததிங்கிணதோம் ? என்று முன் களரியிலும், பக்கங்களிலும் சென்று ஆடிப் பாட்டுத் தொடங்குதற்காக வரவு ஆட்டத்தை முடித்துக் கொண்டு வருவர். இப்படி அது முடிவுறும்போது தக ததிங்கிணதோம் ' என்ற கடைசித் தாளம் இரண்டு மூன்று முறை மத்தளத்தில் இறுக்கி அடிக்கப்படும். இந்த அடிக்குத் தாளம் தீர்தல்’ என்று பெயர். தாளக் தீர்ந்ததும் கொலுவின் முதன்மைக் கூத்தர் தன் வரவைப் பற்றிய பாட்டுகளைப் படிப்பர். பின்பு கதைப்போக்கிற் கேற்ப உரையாடல் முதலியவை தொடர்ந்து நடக்கும்.
இங்கு நாம் காட்டிய தாளக்கட்டும் அதன் ஆடலும் வடமோடியில் வரும் எல்லாக் கூத்தர்களுக்கும் பொது வானதாய் இருந்து நடிகர்களின் தன்மைக்கேற்பக் சில மாற்றங்களைக் கொள்ளுகின்றது. உதாரணமாக : ஒரு சேனதிபதி, அல்லது ஒரு காவலாளியின் வரவின்போது தாளக்கட்டு வீரந் தொனிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். எனவே தகதிகதா தெய்யத் தெய் தெய்' என்று நாம் மேற்காட்டிய தாளக்கட்டின் முதல் அடியானது :-
* தாத்தெய்யத் தெய், தக்கச்சந்தரிகிட தெய்
தாத்தெய்யத் தெய், தக்கச்சந்தரிகிட தெய் ?
என்று மாறும். அது தொடர்ந்து :-
தகதத் தகதத் தகதத் தாஞ்சணந்தக்க தகதத்தகதத் தகதத் தீஞ்சணந்தக்க திருத்தில்லான தீஞ்சணந் தக்க திருத்தில்லான . தாதிந்தத் தோதிந்தத் தோதிந்தத் தாதாம் தாதிந்தத் தோதிந்தத் தோதிந்தத் தாதாம் தாதகதா தோதகதெய், தாதகதா தோதகதெய் என்பனபோன்ற புதிய தாளக்கட்டுகளாகி முடிவுறுகின் றது. தாளந் தீர்தற்கு முன்பு வீரவான்களுக்கு மாத்திரம் என வகுக்கப்பட்ட ஒரு கடினமான ஆட்டம் உண்டு.

Page 54
58 மட்டக்களப்புத் தமிழகம்
அதற்கு நாலடி என்று பெயர். வீரந் தொனிக்கும் குதிநடை கொண்டு கால்களைத் தனித்தனி முன்னும் பின்னும் நீட்டித் துரிதமாய் நான்கு விதமாக மிதித்து ஆடுவதாகிய நாலடி போடுதலோடு ' இன்னும் சில கடினமும் நுணுக்கமுமான ஆட்டங்களும் இவர்க்குள. இந்த வீரர் ஆட்டமே சில மாற்றங்களுடன் கன்னியர் களுக்கும் பொருந்துகின்றது. தகதிகதா ’ என்றும் * தாத்தெய்யத்தெய்' என்றும் வந்த தொடக்க அடிகள் பெண்களுக்கு வரும்போது வேறுபட்டு நீண்டு :-
* தத்திமித்திமி தெய்யதி மித்திமி
தாகிட சுந்தரி தோம் ததிங்கிண *
என மாறும். பின்னர்த் தீந்தாரத்தில்லாணு ' என்பது வரைக்கும் அதிக மாற்றமில்லை. காலடி போடுதலுக்குப் பதிலாகப் பெண்களுக்கு குந்துதல் ’ என்ற நடனங்லை சேர்க்கப்படுகின்றது. பின்பு :-
* தாதிந்தத் தோதிந்தத் தோதிந்தத் தோம் தாதிந்தத் தோதிந்தத் தோதிந்தத் தோம் தந்தகதா திந்தகதெய், தந்தகதா திந்தகதெய்” என்று தாளந் தீர்ந்து முடிக்கப்படும். இவ்வாட்டங்களில் சில அடிகள் இரட்டிக்கப்படும்போது வலம், இடம் என்ற இரு கைக்கும் (இருபக்கத்துக்கும்) ஆடுதலும் அவிநயம் பிடித்தலும் நடைபெறும். வீசாணம் எனும் பூட்டம் இடைக்கிடை நடப்பது அவசியம். நடிகர் தம்மைத் தாமே சுற்றி ஆடும்போது வடமோடியில் வலப்புறமாகவும், மற்றையதில் இடப்புறமாகவும் திரும் புதல் ஒரு பிரதான குறிப்பாகும்.
* முத்திரைப் பல்லவம்’ என்னும் ஒரு ஆட்டமும் வடமோடி நடிகர் சிலருக்குண்டு. இது வரவுப் பாட்டின் பல்லவியை இரட்டித்துப் படிக்கும்பொழுது முத்திரை பிடித்து ஆடும் ஒரு துரித ஆட்டமாகும். உதாரணமாக: கிருட்டினர். வரவில், x

நாட்டுக் கூத்துகள் 59
* ராசராசன் மகா ராசன் கிருஷ்ணபதி ராசன் கொலுவில் வந்தான்-மிகு போசன் கொலுவில் வந்தான் - (பல்லவி) ° செங்கையிற் சங்கும்-மற்றேர்கையிற் சிறந்தசக்கரமும்
பொங்கரவநிழலிற் புனலில் துயில்செய்வோன் மங்கைபாகன் செய்ய மாயன் தருமர்முன்பு
(தருமபுத்திரகாடகம்) என்று பாட்டை முடித்து உடனே,
* தாம் தானதகதிக தெய், தகதத்தத்தி? என்று தாளம் தீர்ந்து பல்லவியைத் துரிதமாகப் படிக் கும்போது கிருஷ்ணர் ஆடவேண்டிய ஆட்டம் ‘முத்திரைப் பல்லவம்’ என்று பெயர் பெறும். இரட்டித்துப் படிக்கப் படும் இப் பல்லவியும் இதல்ை ‘முத்திரைப் பல்லவி என்று பெயர்பெறுகிறது. -
தென்மோடி வரவுக்குரிய தாளக்கட்டு :-
*ததித்தளாதக ததெய்யதிமிதக தாதிமிதத்தித்தெய்யே
ததித்தளாதக ததெய்யதிமிதக தாதிமிதத்தித்தெய்யே ? என்ற முதலையுடையது. அது பின்னர் :-
* தச்சோந்திமி தொந்தரிகிட திமிதக தாதெய்யதா தளங்கு ததிங்கின தொங்கதீந்தா, தொங்கதீந்தக தீந்தாந்தா தாதெய்யதா தளங்கு ததிங்கிண தாதத்தோ தீந்தத் தீந்தத்தாம் - தளங்குததிங்கிண தாதத்தோ தீந்தத் தீந்தத் தாம் தாதத்தோ தீந்தத் தோதக தாதீந்ததி தோதீந்தத் தோதக "தச்சோந்திமி தளங்கு ததிங்கிண
தொங்கதீந்தா தீந்தாந்தா ?
என்று தொடர்ந்து செல்கின்றது. இவ்வளவுக்குமுரிய ஆட்டத்தைக் களரியின் நாலு வாட்டி ' (திசைமுகம்) களிலும் தனித்தனி ஆடும் ஆட்டமே சிற்சில மாறுபாடு களுடன் மற்றையோர்க்கும் வருகின்றது. இத் தாளக்

Page 55
60 மட்டக்களப்புத் தமிழகம்
கட்டிற்கு முதலில் கொலுத்தாளம் ' என்ற ஒரு பாடற்பகுதி அரசகுமாரன், அரசகுமாரி என்போர் வரவுக்குச் சேர்க்கப்படுதலுமுண்டு. அரசகன்னியர்க்கு மேற்காட்டியவற்றுடன் :-
தாதத்திமித்தத் தெய்யோ தாதாந் தாந்தெய்யோ
தாதத்திமித்தத் தெய்யோ தாதாந் தாங்தெய்யோ
தாதத் தாதத் தாதத் தெய்யத் தெய்யத் தெய்ய. என்ற ஆட்டத்தருக்களும் சேர்க்கப்படுகின்றன. தலை யாரி (தலைமைக்காவலன்) ஒருத்தனின் வரவில் இவை யாவும் துரிதம் பெற்ற வேறு தாளமாகின்றன.
* தாதாந் தெய் தெய்ய தாதாந் தெய்தெய்ய ? என்பது அவனுக்குரிய முதற் தாளமாகும். * தச்சோந்திமி தந்தரிகிட திமிதக
தாம் தெய்யதா தளங்கு ததிங்கின தாதொங்க தீந்தா தீந்தாந்தா தானன்ன தனன்னதான தானன்ன தனன்னதான தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தாதெய்யதா தளங்கு ததிங்கிண ?? என்ற குதிகடை நிறைந்த இப்பகுதி வீரருடைய ஒரு வாட்டிக்குரிய ஆட்டமாகும். இவ்வாறு அடிதோறும பேதமும், நுணுக்கமும் வாய்ந்த ஆட்டங்களுக்குரிய தாள வகையெல்லாம் இத் தாளக்கட்டுகளாய் மட்டக்களப்பு நாட்டு அண்ணுவிமாரின் வாயிலாகக் கேட்டறியக்கூடியன வாக மட்டுமே கிடைக்கின்றன. எழுதா இலக்கணமான இவைகள் புதிய நாகரிக மயக்கில் மறைந்தொழிந்து போகாவண்ணம் பாதுகாத்தல் எம்போன்ருர் கட னென்று கருதியே இவற்றின் நுணுக்கங்களை ஒரளவு விரித்துக் கூற முற்பட்டேன்.
இந்த ஆட்டங்களுக்கேற்பவே கூத்தர்களின் உடை யும் அமைந்திருக்கின்றது. உடல் வருந்த வளைந்து ஆடப் படும் காரணத்தால் தென்மோடியாருடைய உடைகள் மற்றவர்களுடையவற்றிலும் பார்க்கப் பாரங் குறைந்

நாட்டுக் கூத்துகள் u
தவையாய் இருக்கின்றன வடமோடி அரசருடைய முடி கெருடம்’ (கிரீடம்) ஆகவும், தென்மோடி யாரது பூமுடி’ ஆகவும் இருத்தல் முறை. இவற்றுள் பின்னது தமிழ்ப் பெயராய் இருத்தலே நாம் கவனித்த லாகும். வடமோடி நடிகர் பெரியகரப்புடுப்புகளே அதாவது இடுப்பில் ஒடுக்கமாகவும், கீழ்ப்பாகம் அகன்று வட்ட மாகவும் கர்ப்புப்போற் தொங்குகின்ற வட்டுடைகளை அணிவர் (படம் 16). தென்மோடி உடைகள் பெரும் பாலும் பட்டுத் துகிலாலும், மணிகளாலும் குயின்று வேட்டி, சேலை என்பவற்றைப் போன்று உடுக்கத் தக்கன வாய் அமைந்துள (படம் 17). சன்னியாசிகளுக்குரிய கத்தாக்கு, மரவுரி என்ற உடைகள் மட்டும் பெரும் பாலும் இருமோடியிலும் ஒத்திருக்கின்றன. போர்வீரர்க ளுடைய உடையும் கத்தாக்கு எனப்படும் (படம் 18). அரங்கேற்றத்தின்போது இடம்பெறும் இவ்விதமான எல்லா உடைகளும் சோடனை' என்று வழங்கப்படுவ.
கதைப்போக்கு, சுவை, ஆடல், அவிநயம், பாட்டு, இசை, உடை, நடை என்ற பல துறைகளிலும் வேறு பட்டு நடக்கும் வடமோடி, தென்மோடி என்ற நாட்டுக் கூத்துக்கள் சுமார் இருபத்தைந்துக்கு மேற்பட்டு மட்டக் களப்பில் ஆடப்படுகின்றன. இவற்றின் பெயர் சில வற்றை ஆரம்பத்திற் குறிப்பிட்டேன். அக்காடகங்கள் பலவற்றுள்ளும் சொல்லாலும் பொருளாலும் 5டையா லும் கயத்தாலும் சிறந்து விளங்குவன வடமோடியில் இராம நாடகம், வீரகுமார நாடகம், தருமபுத்திர நாடகம் என்பனவாம். தென்மோடியில் அத்தகையன அலங்கார ரூப நாடகம், அகிருத்த நாடகம், வாளபிமன் நாடகம் முதலியன. இக்கால வழக்கத்தில் உள்ள பல பழமொழி களே ய்மைத்துக் காட்டும் சிறந்த பாடல்களைக்கொண்ட தருமபுத்திர நாடகம் மிகப் பிற்பட்ட காலத்துள் எழுதப் பட்ட ஒன்ருகத் தெரிகின்றது பஞ்சபாண்டவர் சூதாடி 15ாடு நகரிழந்து வனம்புகுந்து இருக்கும் நிலையில், தம்மிடம் வந்த வியாசரைக் கண்டதும் அவர்கள் கூறும் பாடல் களிலே துரியோதனன் செய்த கொடுமையெல்லாம்

Page 56
63 மட்டக்களப்புத் தமிழகம்
நாடோடிப் பழமொழி வாயிலாக நன்கு வெளிப்படுதலேக்
காண்போம்.
* கும்பிடப் போனவர் தலையிற் கோழிலிடிந்தே
விழுமோ முனிநாதா?
என்று தருமரும்,
* ஏழைக ளழுதகண்ணிர்
கூரியவாள் நிகராமே முனிநாதா ?
என்று திரெளபதியும் இங்கே முறையிடுகின்றனர். அருச்சுனன் தவநிலையில் சிவவேடனுடன் அவன் போர் தொடுக்க வேண்டி வருதலையறிவோம். அவ்விடத்து, இந்திரன் மகனன தான் அதற்கேற்ற வீரமுமுடையவனே என்று காட்டுமாறு அருச்சுனன்,
* ஆவேறு கிறமெனினும்
பால்வேறு நிறமாகா தறிகுவாயே? என்றும்,
* பட்டினத்து நரியதன்னப்
பனங்காட்டு நரியேய்த்த பருவந்தானே ? என்றுங் கூறும் பகுதிகளும், பதில் உரைக்கும் வேடன் அருச்சுனனை வெல்வது தனக்கு அரிதல்ல என்பதைக் காட்ட ,
* எலிவேட்டையாடத் தவிலடியும் வேண்டுமோ இயம்புவாயே? என்று கூறும் பகுதிகளும் பழமொழிகளோடு கவிச் சுவையும் நன்கு நிறைந்து விளங்குவன. அகிருத்த நாடகத்திலே காதலால் மெலிந்த ஒரு மங்கையின் உண்மைநிலை வாணுசுரன் மகளான வயக்த சுந்தரி வாயிலாக நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. கனவிடை அகிருத்தனைக் கண்டு கூடிய சுந்தரி அவன் அழகை : XV
* மேகமொத்த கறுப்பழகும் - அவரிட
விழியிரண்டும் சிவப்பழகும் வாகையொத்த புயத்தழகும் - கண்டால் மரப்பாவை உருகாதோ ?

நாட்டுக் கூத்துகள் 63.
என வியந்து தோழியர்க்குக் கூறி :
* சோறருந்தத் தானு மருவருப்பு-எந்தன் துய்யதன மிரண்டும் விறுவிறுப்பு-நீ கூறுமொழி தானெனக்கு நெருப்பு-அவரைக் கொடுத்தாலென் தோலுனக்குச் செருப்பு? என்று அவனைப் பெறுதற்குத் தோழியருடைய துணையை வேண்டுகிருள். தோழியரும் தாமறிந்த மன்னர்தம் படமெல்லாம் எழுதிக் காட்டி :
* சிங்கள தேசமோ வங்காள தேசத்து மன்னவரோ சொல்லுவீர் என்னம்மா மன்னவரோ சொல்லுவீர்? எனக் கேட்கின்றனர். -
* கங்குலில் வந்தெனக் கிங்கிதம் தந்திடும்
காதல ரல்லவடி இவர்என் காதல ரல்லவடி’ என்று அவள் மறுத்துக் கூறிவந்து, அகிருத்தனின் படத்தைக் கண்டதும் காதலால் உளம் நெகிழ்ந்து அவனே தன் காதலனெனக் காட்டி நிற்பதும் எல்லாம் * சிருங்காரம்’ என்ற காதற் சுவை நிறைந்து வழியும் பகுதிகளாம். அகிருத்தனும் சுந்தரியும் வாணன் மாளிகை யிற் காதல் புரிந்து வாழ்வதைக் குறிப்பிடும் பாட்டு களும் இவ்வாறே இன்பச் சுவையும், வியப்பும் நிறைந் தன. தன் மாளிகையில் அகிருத்தன் மறைவாக மக ளுடன் வதிவதையறிந்த வாணன் கோபம் கொண்டு அவனைப் பிடித்துவரச் செய்கிறன். அப்போது இருவ ருக்கு மிடையில் கடந்த உரையாடற்பகுதி வீரச்சுவை நிறைந்ததாகும். வாணன் :
அத்தனைக்குன் கெறுவென்னடா-என்விட்டில்வர அத்தனைக்குன் கெறுவென்னடா மத்தருக்குள் வைத்தசடி லத்தருக்கு மேயரிது இத்தெருக்குள் ஏகுதற்குப் பித்தருக்குள் வாறதடா -அத்தனைக்குன் கெறுவென்னடா? என்று கேட்பதும், , -

Page 57
64 மட்டக்களப்புத் தமிழகம்
அதிருத்தன் :
* கெட்டி கெட்டி மட்டிநீ போடா-உனக்கு ரன்ன
கேடுகாலம் வந்ததோ மூடா துட்டகெறு மட்டடக்கும் உக்ரசே!! ருத்திரனே கட்டியடித் திடவுந்தன் சித்தமதியே நினைந்தாய் கசடா துடியாதே எனது கெறுவதனை அறியாயோ?
என்று விடையளிப்பதுமாக இப்பகுதி சுவை மிகுந்த பாட்டுகளால் அமைந்துள்ளது.
அலங்காரரூப நாடகமும் மிக்க சுவை செறிந்த பாட்டுகளால் நிறைந்துள்ளதெனப் பாராட்டப்படுவது எனினும், பெரும்பாலாக அரங்கேற்றம் பெருதே முடிவுறும் ஒருகுறை இதற்குண்டு. இந்நாடகம் செய்யுட் சுவை நிறைந்ததாயினும், பாடல்களின் தொகையும் நாடகத்திற்கு வேண்டிய நடிகர் தொகையும் அதிகமா யிருத்தலால் அரங்கேற்றத்திற்கு வேண்டிய மீண்டகால நடைமுறைக்குக் கொஞ்சம் விலகி நின்றுவிடுகின்றது. நாடகங்களுளெல்லாம் அகிருத்த நாடகம், அலங்காரரூப நாடகம், வீரகுமார நாடகம், இராம நாடகம் என்பன காலத்தால் முற்பட்டன. அகிருத்த நாடகம் இணுவிற் சின்னத்தம்பி என்பவராலும், இராம நாடகம், தரும புத்திர நாடகம் என்பன மானிப்பாயைச் சேர்ந்த நாடக சுவாமிநாதர் என்பவராலும், வாளபின் நாடகம், அலங் காரருப நாடகம் என்பன கணபதி ஐயர் என்பவராலும் எழுதப்பெற்றன எனத் தெரிகிறது. இங்கு வழங்கும் மற்றைய 5ாடகங்களிற் பலவற்றை எழுதிய ஆசிரியர்கள் மட்டக்களப்பு நாட்டின் வேறு வேறு கிராமங்களைச் சேர்ந்த அண்ணுவிமார்களே என்று அறிகின்ருேம். மக்களுக்கு இன்பமும் அறிவும் ஊட்டி அவர்களுடைய மதிப்பைப்பெற்று வாழ்ந்த இக் கவிஞர்களும் அண்ணுவி மார்’ என்றே அழைக்கப்படுகின்ருர்கள். இவர்களுடைய புலமையானது கிராம மக்களை இலக்கியம், நடனம், இசை என்ற முத்தமிழ்க் கலைகளிலும் தூண்டி அவர்களுடைய பழம் பண்பை வளர்க்கக் கருவியான நாட்டுக்கூத்துகளாக

நாட்டுக் கூத்துகள் 6う
மிளிர்கின்றன. இக் கூத்துக்களை ஆடும் காலம் ஒருருக்கு மகிழ்வும் கலேயின்பமும் துளும்பும் காலம் என்று கருதப் பட்டது. அதனல், கூத்தாடுதல் ஒரு இன்பக் கலையாக இப்பகுதி மக்களிடை நிலைநின்றுவிட்டது. இளைஞரும் நடுத்தர வயதினரும் கூத்தாடுவதில் அதிகம் ஈடுபடுவர். இளமையில் ஆடி மகிழ்ந்தோர் முதுமையிற் கூத்துப் பழக்கி இன்பம் காணுகின்றனர்.
ஒரு கிராமத்திற் கூத்து அரங்கேற்றமொன்று நடந்து விட்டால் அதனைத் தொடர்ந்து அவ்வூரிற் பல திரு மணங்கள் கடப்பது வழக்கம். திறம்படக் கூத்தாடும் காளேயர்க்கு அப்புகழ் மேலதிகமான ஒரு திருமணத் தகுதியாகக் கருதப்படுகிறது. கூத்தாடிப் பெற்ற புகழால் சிலர் அக்கூத்தின் பெயராலே அநுமான் முத்தர், தருமர் வேலுப்பிள்ளை, துரோபதை சீனி என்பன போல ஆயுள் முழுவதும் அழைக்கப்படுதலும் உண்டு. இப்படி மக்களிடைச் சிறப்புப் பெற்று வழங்கும் நாட்டுக் கூத்துக்களைத் திறம்பட நடிக்கவும், பழக்கவும் வல்லார் பலர் காரைதீவு, களுதாவளை, மண்டூர், ஆரப் பற்றை, அக்கரைப்பற்று, தம்பிலுவில், வந்தாறுமூலே முதலான கிராமங்களில் இருக்கின்றனர். அவர்க ளுக்குத் தெரிந்த இப் பழங் கலையானது காலமயக்கில் மறைந்துபோகாது நாம் பார்த்தல்வேண்டும். இதனை நிறைவேற்றுதலினல், 5மது தமிழ்க் கூத்துக்களை மட்டு மன்றி, அவற்றுள்ளே கலந்து விளங்கும் திம், தக, திமி முதலான தாளங்கள் வாயிலாகக் கிடைக்கும் தமிழ் இசைச் செல்வத்தினையும் நாம் போற்றிக் காத்தவர்க ளாவோம். அச்சேருது ஏட்டுப் பிரதிகளாகவே கிடக்கும் நாடகங்களையெல்லாம் அச்சேற்றிப் பேணல் இவ்வகை யில் முதன்மையான ஒரு பணியாகும். கிராமத்தோறும் பெருவரவிற்ருய்ப் பண்டுபோலத் தொடர்ந்து நாட்டுக் கூத்துகள் நடந்து வருதற்குக் கற்ருேரனைவரும் நல்லா தரவு கொடுத்தலும் அவசியம். தமிழ்க் கூத்துகளுக்குப் புறம்பானவையாய் அவற்றை மருவி கடந்த பல கூத்து களுள் ஒன்றனதும், “ சிங்களக் கூத்து ’ என்று சிலப்
ԼԸ - 5

Page 58
66 மட்டக்களப்புத் தமிழகம்
பதிகார உரையுள் குறிக்கப்பட்ட கூத்தின் தொடர் பானதுமான கண்டி நடனம் " சிங்களவரால் இன்று மிக உயர்ந்த நிலையிற் போற்றி வளர்க்கப்படுவதை யறிவோம். இதனை நோக்கும்போது சிறந்த பெருமரபின வான தமிழ்க் கூத்துகளை நாம் புறக்கணித்து நடப்ப தற்காக வெட்கப்படுதல் வேண்டாமா! மங்கி, மறைந்து, அழிந்துபோகாது இச் செல்வத்தினைக் காத்தல் தமிழர் கடமை என்பதை உணர்ந்து, இக் கூத்துகளின் பெருமை யினை எடுத்து உலகறியச் செய்து போற்றி வளர்க்கத் தமிழறிஞர் முன் வருவாராக.

4. நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும்
இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுக ளாக முன்னேரால் வளர்க்கப்பெற்று வந்த ஒரு பண்பட்ட மொழி நமது தமிழ். அக்காலத்தில் முத் தமிழ் என்னும் பெயரையும், இம்மொழி பெற்றுளது. இலக்கண இலக்கியங்களைப்போலவே இசைக் கலையும், நாடகக் கலையும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்றி யமையாதனவாக விளங்கின. எனினும், பழங்காலத் தில் இக் கலைகள் அடைந்திருந்த பெருஞ்சிறப்பை நாம் முற்றும் அறிந்து பயனுற முடியாதவாறு காலவெள்ள மும், கடல்கோளும் செய்த இடையீடு பெரிதாயிற்று. தமிழ் வளர்த்த சான்ருேர்காலத்திருந்த சிறந்த இசை, நாடகத் தமிழ் நூல்கள் எனக் கூறப்படும் பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், பஞ்சபாரதீயம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பன இன்று நமக்குக் கிடைத்தில. ஆயினும் இந்நூல்கள் எழுந்த காலத்தும், பின்னரும், இக்கலைகள் இருந்த வரலாற் றைச் சிலப்பதிகார உரையிலும், பிற மேற்கோள்களிலும் இருந்து எடுத்து விளக்கப் பிற்கால அறிஞர்கள் முற் பட்டிருக்கிருர்கள். அவர்களுட் தலைசிறந்தோராகக்

Page 59
68 மட்டக்களப்புத் தமிழகம்
கொள்ளத்தக்கார் ஈழத்துப் பல்கலை மன்றத் தமிழ்ப் பேராசானக இருந்து அண்மையில் விண்ணுலகு புகுந்த முத்தமிழ் முனிவர் விபுலாநந்தர் ஆவர் (படம் 19). அவர்கள் யாத்த மதங்க சூளாமணி, நடராசர் திரு வடிவம் ஆகிய நாடகத்தமிழ் நூல்களும், யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூலும் தமிழுலகுக்குச் சிறந்த பெருங் கொடைகளாக மிளிர்வன.
இவற்றுள், இசைக்கடற் பரப்பினை அளந்துகாட்டும் நுண்கருவிபோன்ற யாழ்நூல் வழியாக இப்பெரியார் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு மிகப் பெரிதென்ன லாம். மும்மையாக வளர்க்கப்பெற்ற நம் தமிழ்க் களஞ் சியத்திலிருந்து மறைந்துபோன * நடுநாயகத்தை ’- இசைத் தமிழ்ச் செல்வத்தை - இந்நூல் இன்று நமக்கு ஒரளவு மீட்டுத் தந்திருக்கின்றது. இதனை உருப்படுத்தித் தருவதில் அடிகள் செய்த ஆராய்ச்சிகளும் அடைந்த அநுபவங்களும் மிகப் பல. அவருடைய ஆராய்ச்சி சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையினே நிலைக்களனகக் கொண்டு தொடங்கிற்று; அநுபவம், ஈழநாட்டு மட்டக் களப்பு வாவியிலெழும் இன்னெலி முதலாகத் தொடங் கிற்று. காற்றினும், காவினும், யாற்றினும், எங்கணும் இன்னிசை கேட்டு மகிழ்ந்து, இசை வளர்த்த தமிழ் மக்களின் பண்டைச் சிறப்புக்களை, அடிகள் தாம் கேட் டநுபவித்த ' விளங்கும் மட்டுநீர் நிலையுள் எழுந்த வொருநாதத்திலிருந்து தொடங்கி ஆராயப் புகுந்தார் கள். இந்த அநுபவம் பழுத்த கனியே நீரர மகளி ரின்னிசைப் பாடல் ' எனும் உரைத் தொடராக விக்கிரம ஆண்டு (1940) கார்த்திகைத் திங்களிலே தமிழ்ப் பொழிலில் (துணர் 16, மலர் 8) வெளிவரலாயிற்று.
சுவாமிகள் மட்டக்களப்பிற் சிவாநந்த வித்தியா லயத்தே தங்கியிருந்த காலத்து அண்மையிலுள்ள வாவியிலெழும் இன்னெலியைக் கேட்கும் வாய்ப்பினைப் பன்முறை பெற்றுள்ளார்கள். இந்தியாவிலிருந்து, இராமகிருஷ்ண மடத்துச் சாதுக்கள் அடிக்கடி வித்தி

நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும் O9
யாலயத்துக்கு வருவது வழக்கம். வருவோர் பாடும் மீன் இசை (ஊரி - Singing Fish) என்று கூறப்படும் இசை யினைக் கேட்க விரும்புவர். சுவாமிகள், அவர்களே அழைத்துச் சென்று, அவ்விசையைப்பற்றி விளக்கமும் செய்வார்கள். ஒருமுறை வங்காளத்திலிருந்து இசை வல்லுநரான சாது ஒருவர் வந்திருந்தார். அன்று இள வேனிற் பூரணை நாள். அந்தச் சாதுவுடன் சுவாமிகளும் தோணியேறி இசை பருகச் சென்றனர். அவ்வாறு சென்று வந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நீரரமகளிரைப் பற்றிய அவருடைய பாடல் எழுவ தாயிற்று.
சிலநாட்களின் முன்னர் வெளிவந்த விபுலாநந்தர் நினைவுமலர் ஒன்றில் நீரரமகளிர் ’ எனும் தலைப்புடன் ஒரு கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அக் கட்டுரை ஆசிரியர் ஒரு தமிழ் அறிஞர். அக்கட்டுரையிலே சுவாமிக ளுடைய பாடலேப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் பகுதி யினே இங்கு யாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளுதல் அவசியமாகின்றது.
அப்பகுதி ;-
* ஈழ நாட்டிலே பண்டைத்தமிழ்க் குடியேற்றப் பட்டினமாகிய மட்டக்களப்பிலே அழகிய யங்கள் உண்டு. அவற்றில் ஒன்று புளியந்தீவுக்கும் கல்லடிக்கும் இடையில் இருப்பது. இங்கே இளவேனிற் காலத்தில், முழுமதி நாளில் படகில் ஏறிச் சென்றல் மிகவும் மனேரம்மியமான இன்னிசையைக் கேட்கலாம். அவ் விசையைப்பற்றிய பல கதைகள் உண்டு. மேல் நாட்டார்கள் அவ்விசை ஒருவகை மீனினத்தால் எழுப் ப்ப்படுகின்றது என்பர். ஆனல் மீன் பாடுவது இல்லை என்று அடிகள் குறித்துள்ளார்கள். இவ்விசை நீரர மகளிர்களாலே பாடப்படுகின்றது என்றே அடிகள் வெளியிட்டுள்ளார்கள். இவ்விசையைக் குறித்து ஒரு தமிழ்க்கவிஞர் பாடியுள்ள ஒரு கவிதையை யாழ் நூலில் அடிகள்ார் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஒரு பகுதியைமட்டும் எடுத்துக்காட்டுவோம் :-

Page 60
7Ο மட்டக்களப்புத் தமிழகம்
நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீருவோம்; சால நாடியே சலதி நீருளே ベ பாலை பாடியே பலரொ டாடுவோம் ; நிலவு வீசவே மலைவு தீருவோம் சலதி நீருளே பலரொ டாடுவோம் ; நிசரி காகமா மபத நீகிசா சரிக மாமபா பதகி சாசரி
இதைப் பாடிய கவிஞரின் மன எழுச்சியைப்பற்றி இக் கவிதையே காட்டுகின்றதல்லவா??’ என்பது 15மக்கு வேண்டிய பகுதியாகும். குறித்த கட்டுரையின் இப் பகுதியிற் சில பொருந்தாமைகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது விபுலாநந்த அடிகள் மற்ருெரு தமிழ்க் கவிஞருடைய இப் பாடலைத் தம் ‘யாழ்நூலில் வெளியிட் டுள்ளார்கள் என்பதாகும்.
அடிகளார் ‘தமிழ்ப்பொழிலில் வெளியிட்ட நீரர மகளிர் இன்னிசைப்பாடல் ’ என்ற தமது கட்டுரையி லிருந்து, இசையாராய்ச்சிக் கவசியமான பகுதியினை யாழ் நூற் பாயிரவியலுள்ளும் எடுத்தாண்டாாகள். கட்டுரை யின் முற்பகுதி ஈழநாட்டையும், மட்டக்களப்பையும் பற்றி ஆராய்ச்சியுடன் விளக்குவது. கட்டுரையில் நீரர மகளிரைப் பற்றியுள்ள பாடலானது சுவாமிகளாலேயே அன்றி, இன்னெருவராற் புனையப்பெற்றதன்று என் பதை நாம் உணருதல் வேண்டும். பாடற்ருெடக்கத்தின் முன்னர் யாழ்நூலில் அடிகள் கூறும் வசனப் பகுதி, பாடல் வேருெருவருடையது என்ற விளக்கத்தை மேற் குறித்த கட்டுரையாளர்க்குக் கொடுத்திருத்தல் கூடும். அடிகள் கூறும் அப்பகுதியை இங்குத் தந்து உண்மையை அறிவோம் :-
* இலங்கைக்கு வரும் மேனுட்டார் இவ்விசையைச் செவிமடுப்பதற்காக மட்டக்களப்புக்கு வருவ துண்டு. இவ்விசை நீரினுள்ளிருந்து எழுவதாதலின் நீர்வாழ் செந்துவின் ஒலியாதல் வேண்டும் என

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 7 ן
எண்ணிப்போலும் அந்நிய நாட்டார் இதனைப் பாடும் மீன் (Singing Fish) இசையென்பர். மீன்கள் நீரினுட் குதித்து ஆடுதலைக் கண்டோமேயன்றி அவை மகிழ்ச்சி யாற் பாடுதலே யாண்டும் கேட்டிலம் ஆதலின் அங்கிய காட்டாரது உரையினை யாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கலேவல்லார் காணுத உண்மைகள் சில கவிஞரது உள் ளத்து உதிப்பனவாதலின் இவ்வற்புத கீதவொலியைக் குறித்துத் தமிழ்ப்புலவர் ஒருவர் எழுதிய செய்யுள் ஒன் றினை ஈண்டுத் தருகின்ருேம். அறிஞர் உவந்தேற்று அருள்புரிவாராக. கவிஞர்க்கு இயல்பாக அமைந்த புனைந்துரையெனக் கொள்ளினும் இழுக்காது? என்பது
நமக்குவேண்டும் அப்பகுதியாகும்.
பழந்தமிழ்ப் பண்பாடு கனிந்த அடிகளாருடைய உள்ளம், செய்யுள் தமதேயென்று வெளியாகக் கூற மறுத்தமையாற்போலும் தமிழ்ப் புலவரொருவர் எழுதிய செய்யுள் என்று குறிப்பாய்க் காட்டினர். ஆயினும் * அறிஞர் உவந்தேற்று அருள் புரிவாராக’ என்னும் அவையடக்க மொழியினுலும், “ கவிகற்பனை யெனக் கொள்ளினும் இழுக்காது’ என இலேசாகக் கூறுவதி லுைம், செய்யுள் அடிகளாருடையதே யென்பது தெளிவு படுகின்றது. பாடல் முழுவதையும் இனி இங்குக் கவனித்தல் நன்று :-
* தண்ணளிசெங் கோலாய்த் தனியறமே சக்கரமாய் மண்முழுதும் ஆண்டபுகழ் வாமன் அடியினேயே என்றும் அழியா திலங்கும் சமனுெளியும் கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவற்கு
மூவடிமண் ணிந்தளித்து மூவாப் புகழ்படைத்த மாவலியின் பேரால் வயங்கு மணிருதியும் காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளனிந்த ஏரியும் மல்கி இரத்தினத் தீவமென ஆரியர் போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்
ஏரால் இயன்றசெந்நெல்இன்சுவைத்தீங்கன்னலொடு தெங்கி னிள நீரும் தீம்பலவின் அள்ள மிர்தும் எங்கும் குறையா இயலுடைய நன்னூடு

Page 61
72
மட்டக்களப்புத் தமிழகம்
மட்டக் களப்பென்னும் மாநாடந் நாட்டினிடைப் பட்டினப் பாங்கர்ப் பரந்ததோ னுமுகமாய் ஐங்கரன் கோயில் அமிர்த கழிக்கணித்தாய்ப் பொங்குகழி யுட்புகும் நீர்நிலை யொன்று, நீர்நிலையி னுள்ளே நிகழ்ந்த அதிசயத்தைப் பாரறியக் கூறும் பனுவல் இதுவாகும் : மாசகன்ற மணிவிசும்பில் வயங்கு நிறைமதியம் மலர்க்கிரண ஒளிபரப்ப வளரு மிளவேனில் வீசு தென்ற லொடுங்கூடி விளையாடல் கண்டு விண்ணகத்தார்மண்ணகத்தில்விழைவுகொளும்யாமம் அஞ்சிறைய புள்ளொலியும் ஆன்கன்றின் கழுத்தில் அணிமணியின் இன்னெலியும் அடங்கிய பின் நகரார் பஞ்சியைந்த அணைசேரும் இடையாமப் பொழுதில் பாணனெடும்தோணிமிசைப்படர்ந்தன னேர்புலவன் ; தேனிலவு மலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயிலச் செழுந்தரங்கத் தீம்புனலுள் நந்தினங்கள் துயில மீனலவன் செலவின்றி வெண்ணிலவிற் துயில விளங்குமட்டு நீர்நிலையு ளெழுந்ததொரு நாதம் ; நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீருவோம்
சால நாடியே சலதி நீருளே பாலே பாடியே பலரொ டாடுவோம்;
நிலவு வீசவே மலைவு தீருவோம் சலதி நீருளே பலரொ டாடுவோம் ;
நிசரி காகமா - மபத நீநிசா சரிக மாமபா - பதகி சாசரி ரிகம பாபதா - தநிச ரீரிகா கமப தாதரீ - நிசரி காகமா
என்ன எழுந்த அந்த இன்னிசைத்தீம் பாடலினைக்
கன்னலெனக் கேட்டுக் களித்த புலவனும்தன் அன்பன் முக5ோக்கி ஆகா,இவ் வற்புதத்தை என்னென் றுரைப்பேன், இசைநூற் பொருளுணர்ந்தேன்;
ஐந்தாம் நரம்பின் அமைதியினை யானறிந்தேன்
காந்தாரத் தைந்தாய்க் கனிந்த கிஷாதமெழும்

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 73
செய்ய நிஷாதச் செழுஞ்சுரத்தின் பஞ்சமமே வையம் புகழுகின்ற மத்திமமாம் மத்திமத்திற்கு அஞ்சாஞ் சுரமாம் அணிசட்ஜம் சட்ஜத்தின் பஞ்சமமே பஞ்சமமாம் பன்னு ரிஷபமதற்கு அஞ்சாஞ் சுரமாய் அடையும் அணிரிஷபத் தெஞ்சாத பஞ்சமமாய் எய்திகிற்குக் தைவதமே தைவதத்திற் கைந்தாய்த் தனித்தகாங் தாரமெழும் இவ்வகைய்ே ஏழாகி இன்னிசையாழ் தீங்குழலில் நாதமாய்த் தோன்றி குவைதீர் அமிழ்தனைய கீதமாய் மேவும் கிளேயாய்ப் பகைநட்பாய் நின்ற முறையை நினையின் இவைகிளையாம் என்ற பொழுதில் எழுவர் மட5ல்லார் நீரு விருந்தெழுந்து நின்ருர் அரமகளிர்; ஆதலினல் மூப்பறியார் அந்திங் குழலொலியும் ஒதிய யாழின் ஒலியுமென மொழிவார் பைம்புனலின் மேற்படர்ந்த பாசிநிகர் கூந்தலார் அம்பொன்னின் மேனி அரையின்கீழ் மீன்வடிவம் செங்கமலம் போற்கரங்கள் திங்கள் மதிமுகத்திற் பொங்கிய புன்முறுவல் பூத்தார் புலமையார் கவிமுகத்தை நோக்கிக் கனிந்துரைப்பார் யாங்கிளேயே புவியிலெனைத் தாரமென்பார் புதல்வியிவள் பேருழையே உழையின் மகள்குரற்பே ருற்ருள் இளிதநயை பிழையில் இளிபாற் பிறந்தாள் பேர் துத்தமே துத்தம் பயந்த சுதை விளரிப்பேர் பூண்டாள் உய்த்த விளரிக் குறுதகயை கைக்கிளையே பொன்னின் கபாட புரத்துறை வோம் மாவலிநீர் தன்னிற் படிந்து சமனுெளியைக் கும்பிடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஆராத காதலினல் வாடுவோம் பின்னர் மகிழ்வோம் நகைபுரிவோம் அச்ச முறுவோம் அடையாதார் தங்களேயாம் இச்சை யறவே இழித்துரைக்கும் நீர்மையேம் உருத்தெழுந்து கோபிப்போம் உண்மை யுரைப்போம் அருத்தியொடு வீரம் அறைவோம் வியப்புறுவோம் திங்கள் நிறைநாளிற் சேர்வோமிக் நீர்நிலையைக் கங்குல் கழியுமுன்னே கார்படிந்த மைக்கடலைச் சென்றுயாஞ் சேர்வோமெஞ் செய்கை யிதுவென்ருர் ஒன்ருக நீருள் ஒளித்தார்; தமிழ்ப்புலவன்

Page 62
74 மட்டக்களப்புத் தமிழகம்
சிந்தையை அன்னுர்பாற் சேர்த்தி மனை புகுந்தான் வந்த இசையின் வரன்முறையு மீங்கிதுவே.
( யாழ் நூல் - பாயிரவியல் )
பாட்டின் இடையே பாணனெடும் தோணிமிசைப் படர்ந்தனனேர் புலவன்’ என்று அடிகள் குறிப்பிடுவது, மேலே நாம் கூறிய வங்கத்துச் சாதுவையும் தன்னை யுமே யாகும். இது யானும் உடனுறைந்து அறிந்த gD 600T (60) LO -
மேலும் இவ்விசை நீரரமகளிராலேயே பாடப்படு கிறது என்று அடிகள் கருதியதாக நாம் கொள்வதும் தவருகும். உண்மையாக மீன்கள் பாடுவதில்லையென, பாடும் மீன் ( Singing Fish) என்ற மேட்ைடார் கூற்றை மறுத்துவிட்டுக் கற்பனைக் கண்களால் அதை நோக்கி, ஏழு இசைப் பிறப்பினையும், எழுவர் அரமகளிராகப் புனைந்து கூறினர்கள். இசைக்கு இயல்பான மென்மை, அழகு, இன்பம் என்பவற்றை அரமகளிர்தம் தன்மைக ளாகவும், சேர்ந்துவரும் ஒன்பது சுவைகளையும் அவர்தம் குணங்களாகவும் வகுத்தமைத்து அடிகள் தமது கற்பனையை மிகுதியும் நயம்பெருகச் செய்துள்ளார்கள். யாழ்நூலுள், நீரரமகளிருடைய இன்னிசைபற்றித் தாம் எழுதிய செய்யுளைத் தந்து அதன் முடிவிலே கூறும் வசனப்பகுதியால், மட்டு நீர்நிலையு ளிருந்தெழும் இவ் வின்னிசையின் உண்மைக் காரணத்தையும் ஒருவாறு தெளிவுபடுத்தியுள்ளனர். அவ்வுரைப் பகுதியை இங்கு எடுத்துக் காண்பது பயன் தருவதாகும் :-
* நீரரமகளிர்தோன்றியது கவிகற்பனையாமெனக் கொள்ளு மிடத்து இசைத் தோற்றத்திற்குப் பிறிதோர் காரணம் காட்டல் வேண்டும். மணி, கடல், யானை, குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் எனக் கூறிய பத்து வகை காதங்களுள்ளே சங்கமானது முரற்சி, முழக்கம் என இருவகைப்படும் என்று அறிஞர் கூறுவர். இம் முரற்சியானது சங்கினது வளர்ச்சிக்கேற்ப நாதம் வேறு பட்டுத் தோன்றும். மட்டக்களப்பு வாவி கடலொடு கலப்பதாதலின் ஒருவகைச் சங்கு வாழ்தற் கிடமாயிற்று,

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 75
அளவிற் சிறியவும் பெரியவுமான சங்குகள் இடையிட்டு முரல்வதினலே ஏற்படும் ஒசையின் சேர்க்கை இசைத் தன்மை பெற்றுத் தோன்றுகின்றது. அஃதெவ்வாருயினும் கவிதையுட் கூறப்பட்ட நீரரமகளிரது கிளையிற் பிறப்பு முறை இசைமரபிற்கு ஒத்ததேயாகும்’ என்பது அடிக ளார் கூற்று.
இலங்கையின் ஏனைய பகுதியினரும், மற்றும் வெளி
நாட்டாரும் இதனைப் பாடும் மீன் இசை யென்றழைத் தாலும், மட்டக்களப்புநாட்டில் இதனே ஊரிபாடுதல்’ என்றே சொல்கின்றர்கள். ஊரி என்பது (படம் 20) அடிகள் மேற்குறிப்பிட்டபடி சங்கினத்தைச் சேர்ந்த ஒன்று. தோற்றத்திலும் சங்கைப்போன்று, ஆனல் /சற்று மெலிந்து நீண்டதாக இருப்பது. சிறியவும் பெரியவு மான ஊரி பலவற்றைக் கோடைகாலங்களில் வாவிக் கரையெங்கும் காணலாம். மிகச் சிறிய ஊரி, கால் அங்குல நீளம் உடையதாக இருக்கும்; பெரியதின் நீளம் பெரும்பாலும் மூன்று அங்குலத்துக்குமேல் இல்லையென லாம். இவை வாவியினடியிற் காணப்படும் பாறைகளிற் படிந்து கிடப்பனவென்றும், நீர் கலக்கமற்று வானமும் களங்கமற்றுள்ள காலமாகிய சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி (பெரும்பாலும் வைகாசி, ஆணி) மாதங்களில், பூரணை நிலா நாட்களில் நீரினடியிலிருந்து ஒசையிடு கின்றனவென்றும் இப்பகுதியிலுள்ள அநுபவம் வாய்ந்த மீன்பிடிகாரர் கூறுகின்றனர்.
நீருள் வாழ் செந்துவின் ஒலியாதலால், அதிகம் ஆராய்ச்சியின்றி மேனட்டார் இதனை மீனெனக் கருதினர் என்றே, அடிகள் அன்னர் கூற்றை ஏற்க முற்ருக மறுக் கின்றனர் எனலாம். இவ்வூரியிசை, பாடல்களாகவன்றித் தனித்தனிச் சுரங்களாகவே கேட்கப்படுகின்றது. பல் வேறு தனி ஒசைகளாக இவ்வொலி கேட்கப்பெற்ற போதிலும் ஊரிகளின் முரற்சியில் ஓர் இனிய பொருத்தம் இருப்பதை இசையறிவாளர் காணலாம். அடுத்தடுத்துக் கேட்கப்படும் சுரங்கள் தொடர்ந்து ஒன்றுக்கொன்று பொருந்த இசைப்பனவாகவே இருக்கின்றன, மிக

Page 63
76 மட்டக்களப்புத் தமிழகம்
அநேகமான சுரவொலிகள் கேட்கப்படும்போதும் ஒன் றேனும் அவச்சுரம் படாமை அதிசயிக்கத்தக்கவொன் ருகும். எடுத்தும், படுத்தும், நலிந்தும் கேட்கப்படும் ஏழு சுரங்களையும், அடிகள் கோத்து அரமகளிர் பாடிய இன்னிசைப் பாடலாக்கி நமக்குக் காட்டினர் :-
நீதி - சாச - f = நீல - வாணி - லே நிசரி - காக - மா = நிலவு - வீச - வே மாம - பாப - தா - மாலை - வேளை - யே மபத - நீகி - சா = மலைவு - தீரு - வோம் சாச - ரீரி - கா = சால - நாடி - யே சரிக - மா ம - பா = சலதி - நீரு - ளே பாப - தாத - நீ = பாலே - பாடி - யே பதகி - சாச - ரி - பலரொ - டாடு - வோம்
சுரங்களுக்கேற்ப எழுதப்பெற்றுள்ள பாடற்பகுதியை ஒன்றுசேர்க்கும்போது முன்னர் வந்த செய்யுளாதல் காணலாம்.
நிற்க, இசைப்பிறப்பு முறையை விளக்குவதாக வுள்ள கடைசிப்பாகச் செய்யுளை நோக்குவோம், :* ஐந்தாம் நரம்பின் அமைதியினை யான் அறிந்தேன். நின்ற முறையை நினையின் இவைகிளையாம் ’ எனும் பகுதியுள் அடிகள் கூறும் இசையின் பிறப்புவரலாற்றைச் சுரங்களின் ஒழுங்கின்படி விளக்கிக் காட்டுதும். சுரங்களி னருகே இங்கு எம்மால் இடப்பெற்றுள்ள எண்களே முதலிற் கவனிக்க வேண்டியதில்லை.
巴丹 - சட்ஜம் 4, ரி - ரிஷபம் 6, க - காந்தாரம் l, ,3 p - மத்திமம்ו i J - பஞ்சமம் 5。 த - தைவதம் 7, நி - நிஷாதம் 名,
இது சுர ஒழுங்கு,

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 77
* காந்தாரத் தைந்தாய்க் கனிந்த நிஷாதமெழும் ” என்ற அடியின் பொருள் :- காந்தாரம் என்னும் சுரத் துக்கு நிஷாதம் என்னும் சுரம் ஐந்தாம் சுரம் (நரம்பு) ஆகும் என்பதாம். இசைப்பிறப்பு முறைப்படி காந்தா ரமே 1ஆம் சுரம் ஆகிறது என்பதை இங்குக் கருத்திற் கொள்ளல் நன்று. காந்தாரத்திலிருந்து முறையே ஐந்தாம் சுரங்களை எண்ணிக் கிளைமுறை காணல் வேண்டும். எனவே 2ஆம் சுரம் நிஷாதமாகும். இப் படியே மற்றைய அடிகளுக்கும் பொருள் கொண்டால் மேலே போட்டுக் காட்டப்பட்ட எண்களின் ஒழுங்குப் படி காந்தாரம், நிஷாதம், மத்திமம், சட்ஜம், பஞ்சமம், ரிஷபம், தைவதம் என்ற முறையில் சுரங்கள் அமை வதைக் காணலாம். சட்ஜத்தின் பஞ்சமமே பஞ்சமமாம்’ என்னும் தொடருக்கு சட்ஜம் எனும் நரம்பின் ஐந்தாம் நரம்பே பஞ்சமம் எனும் நரம்பு என்று பொருள். இசை நரம்பு ஒவ்வொன்றுக்கும் அதன் ஐந்தாம் 5ரம்பு கிளை நரம்பாகும் என்பது பண்டைய இசைநூன் முடிபு. கிளே, இனம், உறவு, சந்ததி என்பன ஒரு பொருட் சொற்கள். இதன்படி நோக்கினல் இங்குப் பின்னர்க் கண்ட ஒழுங்கு கிளையொழுங்காதல் புலனுகும். இசை, ஒன்றிலிருந்து ஒன்று கிளேத்து வந்தது என்றும், அவ் வாறு கிளைத்த ஒழுங்கே இது என்றும் கூறுவதே * (கின்ற முறையை நினையின் இவை கிளையாம்” எனும் அடிப் பொருளாகும்.
முந்தையோர் ஏழு இசைகள் எனக் கொண்டதைப் பிற்காலத்தினர் ஏழு சுரங்கள் என்று அமைத்தார்கள். சுரங்கள் பின்வருமாறு இசைப்பெயருறுவன :-
இசைப் பிறப்பு முறைப்படி :-
1 க - காந்தாரம் - தாரம், 2 நி - நிஷாதம் - ഉ.ഞ!, 3 ம - மத்திமம் - குரல்,
4 ச - சட்ஜம் - இளி, 5 ப - பஞ்சமம் - துத்தம், 6 ரி - ரிஷபம் - விளரி,
7 த - தைவதம் - கைக்கிளை.

Page 64
78 மட்டக்களப்புத் தமிழகம்
சிலப்பதிகாரத்துள் இசைபற்றிவரும் பகுதிகளு ளெல்லாம் இசைப்பிறப்புமுறை இங்குக் கண்ட தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளே என் னும் ஒழுங்கின்படியே காட்டப்பெற்றுள்ளது. இதனேயே, ஏழிசையாகிய எழுவரரமகளிரும் கூறியதாக :-
* புவியிலெனேத் தாரமென்பார் புதல்வியிவள்
-பேருழையே
உய்த்த விளரிக் குறுதநயை கைக்கிளையே? எனும் அடிகளில் யாழ்நூற் புலவர் கூறியுள்ளனர். மேலே காட்டிய விளக்கத்தை அறிந்துகொண்டால், பாடல் முழுவதும் தெள்ளிதிற் பொருள் புலப்பட்டு நிற்பது காணலாம்.
இசைகளுடன் பொருந்திச் சுவைகளொன்பதும் வருமாறு யாழ் நூலுள் நன்கு விளக்கப்பெற்றுள்ளது. கலிப்பாவாலான மேற்போந்த இச்செய்யுளுள், தரவிலும் தாழிசைகளிலும் வந்துள்ள வருணனைகளும், அவற்றுக் காக அடிகளார் எடுத்தாண்ட செஞ்சொற்களும் மிக இனிமை பயந்து அவருடைய கவிதாசக்தியின் பெரு மையை நமக்குக் காட்டுகின்றன. மட்டக்களப்பின் ஊரிப் பாடலே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானேர் கேட்டுச் செல்கின்றனர். இவ்விசையில் என்ன சிறப்பு உளது, இதற்கேன் இவ்வளவு முதன்மை கொடுத்தல் வேண்டும்’ என்று பேசிச் செல்வோருமுளர். ஆனல் அடிகளுக்கோ தம்முடைய இசைநூற் புலமையாலும், நுண் கணிதப் பேரறிவாலும், தமிழர் தவப்பயனுலும் இவ்விசை பெரிய கிளர்ச்சியைச் செய்து அரியதோர் இசையாராய்ச்சி யினைச் செய்யத் தூண்டுவதாயிற்று. உயிரற்றுக்கிடக்கும் சிறு கற்துண்டுகள்கூடக் கவிஞனுடனும், ஓவியக்கார னுடனும் உரையாடுகின்றன என்றல் அடிகளுடன் இந்த ஊரியிசை உருப்பெற்றுப் பேசியதில் என்ன வியப்புளது!

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 79
இவ்வாறு யாழ்நூற் பிறப்பின் அடிப்படையாயிருந்த ஊரியிசை உலகப் பேரதிசயங்களுள் ஒன்ருக இடம்பெற் றிருக்கின்றது. பெரும்பாலும் இலங்கையிலுள்ள மட்டக் களப்பு வாவியிலும் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாக் கடற்கரையிலும் மட்டுமே இவ்விசை கேட்கப்படுகின்ற தென்பர். இவ்வருமைப்பாட்டினல் ஈழத்திற்கு வரும் அயல்நாட்டவரெல்லோரும் இவ்வொலியைக் கேட்கப் பெறுதல் பெரும் பேறென்று கருதுவர். மட்டக்களப்பு மண்ணகத்தை அழகுசெய்யும் வாவியும் இதல்ை உல கோர் மனத்திடை உயர்ந்த மதிப்பினைப் பெறுவதாயிற்று. நீருள் இருக்தெழும் இன்னெலியாதலின், இது மீனினத்தி ேைலயே எழுப்பப்படுகின்றதென்று துணிந்துபோலும், ஆங்கிலேயர் இந்த இன்னெலியினேப் ‘பாடும் மீன் (Singing Fish ) இசை என்றனர். இப்பெயர் பொருத்த மற்றதாகுமென்று மறுத்த யாழ்நூல் ஆசிரியரது கருத் தினை மேலே காட்டினுேம்,
வானம் களங்கமற்றிலங்கும் வைகாசி, ஆனி மாத நிறைமதி நாட்களிலே உருக்கின வெள்ளியை வார்த்தா லென்ன விளங்கும் மட்டக்களப்பு வாவியின் நீர்ப்பரப்பு இந்த இன்னெலியால் நிறைந்திருக்கும். அடிகளார்தம் பாடலிற் குறிப்பிட்டது போன்று விண்ணுலகினரும் மண்ணுலகத்திற்கு வர விழைவு கொள்ளத்தக்க பேரழகு வாய்ந்த வெள்ளி நிலவின் குளிப்பு மட்டக்களப்பு வாவியை மட்டுமன்றி அதனைச் சூழ்ந்து கிடக்கும் பெரு நிலப் பரப்பினையும் அழகு செய்து நிற்கும். அவ்வின்ப வேளையில் மீன் பாடுதலைக் கேட்க விரும்புவோர் புளியந் தீவுக்கும் கல்லடி என்னும் ஊருக்கும் இடையிலுள்ள வாவிப்பகுதிக்குத் தோணியிலேறிச் செல்லுதல் வழக்கம். கல்லடி என்ற பெயருக்கே காரணமாகி வாவியுட் பரந்து கிடக்கும் * யானைக்கல்’லினையண்டி இந்த இன்னெலி பிறக்கக் கேட்கலாம். நீண்ட ஊன்றுகோல் ஒன்றினை ஆழமான நீருள் கட்டு அதனருகில் தோணி யுள் நின்று செவிகொடுக்கும்போது குறித்த இசைக் கச்சேரியை நாம் நன்கு அனுபவித்தல் கூடும். இவ்

Page 65
8O மட்டக்களப்புத் தமிழகம்
வின்னிசையின் சுவை தேர்ந்தோர் ஈடெதுவும் காணுத இன்பநிலையினை இதற்கு உவமை காட்டுவர். இசை உணர்ச்சியின் மணமே அறியாதோர் இவ்வொலியினை வெறுத்துக் கூறுதலையும் நாம் கேட்டல் கூடும். இசை உணராத இவர்களது துளைச் செவிகளை இதற்காகக் குறை கூறுவதிற் பயனென்ன இருக்கின்றது!
வீணே நரம்புகளைத் தனித்தனி 5ெருடிவிட்டாலொத்த ஒலிக்குறிப்புக்களும், குழலின் மெல்லொலிபோன்ற கீற்ருெலிகளும், மென்பட்டுத் தாளினே வாயில் வைத்து ஊதுதலாற் பிறக்கும் இனிய ஓசைக் கூறுகளே ஒத்தன வும், ஆர்மோனியத்தின் அடிக்கட்டைகளை விட்டு விட்டு நசித்தலால் எழுவது போன்ற எடுத்தல் ஒலிக்கூறு களும் கலந்து கேட்கும் ஊரி ( பாடுமீன்) களது இசைக் கச்சேரியின் இன்பமானது, இசை இன்பம் நுகர்ந்த செவிகளை யுடையாரை மெய்ம்மறக்கச் செய்துவிடுகின் றது, வாவிக்கரை யோரத்திற் கிடக்கும் தவளைகளின் ஒலிகளிலே தம்மை மறப்பார் இவ்வின் பத்தினே அறியா
ராவT.
நீரிலெழும் இந்த இசைப் பிறப்பினுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தந்திக்கம்பிகளுடே செல்லும் காற்ருேசையின் எதிரொலிதான் நீருள் இருந்து இவ்வாறு கேட்கப்படுகின்றதென்று கூறும் நூதன ஆராய்ச்சியாளர் " பாடும்மீன்' என்று கொள்ளத்தக்க ஒன்றேயில்லை யென்கின்றனர். ஆனல் இத்தகையோர் கூற்றுக்கு விஞ்ஞானக் கலேவளர்ச்சி அப்படியொன்று உண்டு ’ என்று திடமாகப் பதில் தந்துவிட்டது.
மட்டக்களப்பில் உள்ள அர்ச் மைக்கேல் கல்லூரி யைச் சேர்ந்த அமெரிக்க யேசுசபைத் துறவிகளான * லாங் அடிகளாரும், மொருன் அடிகளாரும் வாவியின் மேல் உள்ள கல்லடிப் பாலத்தின் நடுப் பாகத்திலிருந்து நீருள் எட்டடி ஆழ்த்திய ஒலிபெருக்கி ஒன்றினுல் பாடும் மீனின் இன்னெலியை-மட்டக் களப்புத் தமிழகத்தின் மங்காத புகழொலியை-வெளிக்

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 8
கொணர்ந்து எர்ட்டுநிமிட நேரம் இசைத்தட்டுக்களிற் பதிவு செய்துகொண்டார்கள். இவ்வொலியைக் கேட்போர் இது தவளைகளினதா, தந்திக் கம்பிகளின் எதிரொலியா, அன்றிப் பாடும் மீன் என்று கொள்ளத்தக்க ஒன்றினது ஒலிதான என்பதை இலகுவில் அறிந்துகொள்ளுவர். இந்த அற்புத சாதனையின்மூலம் அந்த அமெரிக்கத் துறவிகள் இருவரும் மட்டக்களப்பு நாட்டுக்குச் செய்த தொண்டு பெரும் பயனுடையதாயிற்று.
அப்பெரியோர் தம் இசைத் தட்டுகளில் அமைத்துக் கொண்ட நான்கு வேறு ஒலிகளைத் தெளிவாகக் கேட்க லாம். ஐந்தாம் ஒலியின் பதிவும் மெல்லியதாகக் கேட்கப் படுகின்றது. ஆருவது ஒலியினைப் பதிவுசெய்ய முடியாத வாறு காற்று அதனைக் கலைத்துவிட்டதென்கின்றனர். இவற்றையடுத்த ஏழாம் ஒலியோ இசையறி புலவரை மட்டும் தேடிக்கொண்டு மெல்ல நீருள் ஒலித்துக்கொண் டிருக்கின்றது. இந்த ஏழு ஒலிகளையுமே பூாழ்நூல் அடிக ளார் 8 அரமகளிர் எழுவர் மடநல்லார்’ என்று கற்பனை சேர்த்தார்கள் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
வேறுவேருனவையாயினும் அவச்சுரம் படாத பெருஞ் சிறப்புடைய இவ்வொலியைப் பிறப்பிப்பதுதான் மட்டக் களப்புத் தமிழகத்தார் கூறும் சங்கினத்தைச் சேர்ந்த ஊரி (Mollusc) என்று காட்டினுேம். ஒருவகை மீனின் ஒலி இது என்று சிலர் கொள்வதுமுண்டு, கற்பாறை களில் வசிக்கும் சில பிராணிகளின் கெட்டியான ஒடுகளில் நீர் உராய்ந்து செல்லுதலால் இவ்வொலி பிறப்பதென்று வேறும் சிலர் கூறுகின்றனர். நீர்க்கரையில் உள்ள பிராணி களின் ஒலி நீருட்பட்டு எதிரொலிப்பதனல் இது பிறக்கிற தென்பர் சிலர். மேட்ைடு ஆராய்ச்சியாளர் சிலரது கூற்றுக்களும் இக் கருத்துடையனவாயிருக்கின்றன.
பிரீட்ஸ் என்பார், சில மீன்களைப் பிடித்து வெளியில்
எடுக்கிறபோது, அவை வெவ்வேறுவித ஒலிகளைச் செய்யக்
காண்கிருேமாகையால் நீருள்ளும் அவை இனிய பாடல்
களை எழுப்புதல் கூடும் என்கின்றர். கெளிறு, கருமுரல்,
ud - 6

Page 66
82 − − மட்டக்களப்புத் தமிழகம்
பேத்தை முதலான மீனினங்கள் நீரினின்று நிலத்திற் போடப்பட்டவுடன் ஒருவகை ஒலி செய்வதை நாமும் நேரில் கேட்டுள்ளோம். ஆயினும் அவை நீரினுள் இசைத் தல்பற்றி நம்மால் அறிந்துகொள்ளப்படவில்லே. அவுஸ் திரேலியாக் கரையில் காணப்படும் மீனினம் சிலவும் பாடுகின்றன என்று தெரிகின்றது. திமிங்கிலத்தின் இனத் தைச் சேர்ந்த காத்தலையன் ’ என்னும் பெருமீன் ஒன்று (இதனைக் * கத்தலை ’ என்றும் கூறுவர்.) நீர் மட்டத்துக்கு மேல் வந்து ஒருவகை இன்னெலி செய்கின்றது என அறிந்தோர் கூறுகின்றனர். இது நீங்கலாக பெளலர் என்னும் ஆராய்ச்சியாளர் ஒருவர், ஒடுள்ள பிராணிகள் நீரோட்டத்திற் செல்லும்போது இன்னெலியினைப் பிறப் பிக்கின்றன என்கிஞ்ர். ஆனல் ஸ்டான்லி கிரீன் என்னும் ஆங்கில அறிஞர், பெளலரது கூற்றை முற்ருக மறுக் கின்றனர். நேரில் இங்கு வந்து 8 பாடும்மீன் இசையின் ஒலிக்கூறுபாடுகளை யெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து, யூதர்களின் பழமையான ஹார்ப் (Harb) என்னும் வீணை யின் இன்னெலியை ஒத்ததாய் உள்ள இவ்விசை ஊரி களாலேயே பாடப்படுகின்றன என்று தெளிவாகக் கூறி யுள்ளார். இன்னருடைய கூற்றினை ஆராய்ந்த எமர்சன் டெனன்ட் என்ற அறிஞர் தாம் இலங்கையைப் பற்றி எழுதியுள்ள நூலுள் பாடும் மீனைப்பற்றியும் குறிப்பிட் டுள்ளனர். இதுபோன்ற ஒலி இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள பம்பாய்த் துறைமுகத்தை அண்டிய பகுதிகளிலும், தென்னமெரிக்கச் சில்லி மாகாணக் கடற் கரை சார்ந்த கல்டெற' என்னுமிடத்திலுங் கேட்கப் படுகின்றன என்று கூறி, மீன்களன்றி ஊரி (Molluscs) களே இசைபாடி மட்டக்களப்பினைப் புகழ் உறுத்துகின் றன என்று அறுதியிட்டுள்ளார். இவ்விதியை ஆதரித்த தமது கருத்தை 1826ல், ராபர்ட் கிரான்ட் என்பாரும் எடின்பரோ கலைக்கழக விஞ்ஞான பீடத்தினர்க்கு ஒரு கட்டுரைமூலம் தெரிவித்துள்ளார்கள்.
ஆனல், டெனன்ட் என்பார் கருதுவதுபோல ஊரிகள் நீருள் பாறைக்கல்லருகில் மட்டும் பாடுவதாகத் தெரியவில்லை. ஸ்டான்லிகிரீன் என்பவர் இவ்வொலியை

நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் 83
ஆராய்வதற்காக மட்டக்களப்புக்கு வந்திருந்தபோது இயக் திரப் படகொன்றில் கல்லடிப் பாலத்திற்குத் தெற்கே ஏறக்குறைய 20 மைல் தூரம்வரை சென்ருர் என்றும், ஏழு மைல்களுக்கப்பால் உள்ள மண்முனையிலும், பதினறு மைல்களுக்கப்பால் இருக்கும் பட்டிருப்பு என்னும் ஊரி லும் தெளிவாக இவ்வொலி கேட்கப்பட்டதென்றும் தமது குறிப்பில் பொறித்துள்ளார். இவ்விடங்களிலெல்லாம், பாறைகளே இல்லை என்பது கருதத்தக்கது. இன்னும் தெற்கே மண்டூருக்கு அப்பால் வாவியின் நடுவில் உள்ள கவடாதீவின் கிழக்குக்கரையிலும் இவ்வொலி நன்கு கேட்கப்படுவதை நாம் அறிகின்றேம். ஆனி ஆடி மாதங் களில் வாவியின் நீர்மட்டம் வற்றுகிறபோது ஆயிரக்கணக் கான ஊரிகளை அப்பகுதிக் கரையொதுக்கிலும் காண முடிகின்றது. இவையனைத்தும், ஊரிகளே வாவியுள்ளிருந் தெழும் இன்னெலிக்குக் காரணமானவை என்ற முடி வினைக் காட்டப் பயன்படுவன. எனினும், ஆராய்ச்சி யாளர்களது கருத்தைத் தூண்டி நிற்கும் இப்பொருள் பற்றி மேலும் ஆராய்ந்து தேறுதல் நன்ருகும்.
இவ்வாறு, மட்டக்களப்புத் தமிழகத்தின் மண்டு புகழினை மேல்புல உலகிலும் எடுத்து விளக்கி நிற்கும் பெருஞ் சிறப்பால் இப் “ பாடும் மீன்' ஒலியினை ? நீரர மகளிர் இன்னிசை ’ என்று தெய்வப்பண்பு சேர்த்த விபுலாநந்த அடிகளாரது கற்பனேத்திறனையும் மதிநுட்பத் தினையும் வியந்து நாம் பெருமைகொள்ளுதல் வேண்டும்.

Page 67
5. செந்தமிழ்ச் சொல்வளம்
ஒரு மொழியின் பேச்சு வழக்கானது பொதுமக்க ளாலும், அதன் இலக்கியம் புலமக்களாலும் இயன்று நடத்தல் எங்கணும் இயற்கை. பண்டைத் தமிழகத்திலே அறிவியற்துறைகளிற் தேர்ந்த புலமக்கள் மட்டுமன்றிப் பொதுமக்களும் கூட நுண்ணறிவு படைத்தோராய் இருந் திருக்கின்றனர். அதனல் அவர்கள் பொருள்களின் இயல்புகளை யெல்லாம் நுணுகியறிந்து அவற்றுக்கியைந்த நற்பெயரிட்டு வழங்கினர்கள். இவ்வாறு வளர்க்கப்பட்டு வரும் சொல்வளம், இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவானதாகும். எனினும், தனக்கென்றே அமைந்த அச் செஞ்சொல்வளத்தில் தமிழ்மொழியானது மற்றைய மொழிகளிலுஞ் சிறந்து விளங்குகின்றது என்று தமிழ் மொழியை நன்கு கற்றுணர்ந்த மேல்புல அறிஞர்கள் கருதுகின்றனர். ** திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்’ அமைத்துத் தந்த கார்ல்ட் வெல்ட் என்னும் மொழிநூற் புலவர் தமிழின் சொல்வளச் சிறப்பினையும் பொருள்களின் நுண்ணிய பேதமெல்லாம் தனித்தனி புலப்படுமாறு வெவ்வேறு சொற்களை வகுத்தமைத்த பழந் தமிழரது மதிநுட்பத்தினையும் பாராட்டும்போது :

செந்தமிழ்ச் சொல்வளம் 85
* தமிழ்போன்ற திராவிட மொழியை நன்று கற்ற ஐரோப்பியரொருவர், அத்தகு வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்களினத்தை மதிப்போடு கருதாம லிருக்க முடியாது.”
என்றும், இவ்வகையில் :
* தென்னிந்தியப் பழங்குடிமக்கள் மிக மதிநுட்பம் வாய்ந்தவர் என்பதற் கையமில்லை.’
என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழிலே இவ்வாறு வியத்தகுமுறையில் சிறந்து விளங்கிய கம் சொல்வளம், இன்று எங்குச் சென்றது! * தமிழ்மொழியில் சொல் நிறைவு இல்லை ; தனித்தியங் கும் ஆற்றலும் இம்மொழிக்கில்லை’ என்று நம்மவருட் சிலர் இன்று போடும் கூச்சல் எழுதற்குக் காரணந்தான் என்ன ? புறநாகரிகத் தொடர்பாலும், பிறமொழியாளர் ஆட்சியாலும், நமது மொழிச் செல்வத்தை நாம் மெல்ல மெல்ல இழந்துவந்துள்ளோம். எத்தனையோ சீரியசொற்க ளெல்லாம் தமிழுலகின் பெரும் பகுதியிலிருந்து, வழக்கா றற்றுச் சென்றுவிட்டன. மொழியினது சொல்லமைப் பின் நுண்சிறப்பு, இன்றியமையாமை என்பவற்றை அறிந்துகொள்ள நாம் தவறிவிட்டோம். நாம் விட்ட பிழையினை உணர்வதும், அதனைத் திருத்த முயல்வதும் கூட அவமானமாகும் என்ற போலிமானத்தைப் பிறராட்சி யிற் கடைப்பிடித்தோம். எனவே தமிழ்ச் சொல்வளமும் நம்மைக் கைவிட்டு மேற்கண்ட கேள்விகளைக் கேட்கும் இழிநிலையில் நம்மை விட்டு அகலச் சென்றது எனலாம்.
கைதந்த செல்வர் :
ஆயினும், தமிழகத்தின் மானங்காக்கும் பழம் பரம் பரையினர், நாட்டுப்புறங்களிலே இன்னமும் வாழ்ந்து கொண்டிருத்தல் நமது பெரும் புண்ணியமாயிற்று. அரசி யல் அடிமை நீக்கத்தால் நாம் விழிப்புணர்ச்சி பெற்று நம் மொழிச் சிறப்பை வேண்டி அலமந்து நிற்கும்போது நமக்குக் கைகொடுத்து, பழந்தமிழ்ச் சொற்குவியலுக்கு வழிகாட்டிச் செல்கின்ற பெருமக்கள் கிராமப்புறங்களிலே

Page 68
86 மட்டக்களப்புத் தமிழகம்
வாழ்கின்றனர். வெறும் வெளிப் பகட்டினைச் சிறந்த வாழ்வின் சின்னமென்று நம்மிற் பலர் கருதினுேம், அப் பகட்டினே மதிக்காது, பழைய பண்பட்ட மொழிவளத் தினேயும் பழைய நாகரிக வாழ்வின் சிறப்பினையுஞ் சிறந் தன என்று போற்றி, வழிவிலகாது வாழ்ந்துவந்த நாட் டுப்புற மக்கள் அதனல் நமக்கு அநாகரிகராகத் தெரிந் தனர்; அவரிடைக்கலந்து வாழ்தலும் அக்கிலேயில் நமக்கு அருவருப்பாயிருந்தது. ஆயினும் காலம் நம் நிலையை மாற்றி, ஒருமொழிக்கிருக்கும் சிறப்பும் மதிப்புங்கொண்டே அம்மொழிபேசும் மக்களின் பெருமை அளவிடப்படுகின்ற தென்ற உண்மையை நமக்குக் காட்டியுள்ளது.
ஒரு மொழியானது அந்நாட்டு மக்களின் பேச்சுச் சிறப்பினையும் இலக்கிய அழகினையும் மட்டும் காட்டுவ தாகாது. காட்டின் பண்பாட்டு வளர்ச்சியினையும், வர லாற்றையுங்கூட அது காட்டுகின்றது என்னலாம். அது போலவே ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை அறிவ தற்குப் புத்தகங்களும் செய்யுள்களுந்தான் வேண்டு மென்பதற்கில்லே. அந்நாட்டுமொழி, அல்லது சொல்கூட வரலாறுரைக்கும் பெருங் கருவியாய் அமையும். இவ் வுண்மையை நாம் இன்றுணர்ந்து நமது தமிழ் வளத்தை அணைந்து மகிழத் தலைப்பட்டுள்ளமை 5ற்பயன் தரும் ஒன்ருகும்.
இவ்வகையில், மட்டக்களப்புத் தமிழகம் தனது பழைய செஞ்சொற் செல்வத்திற் சிறந்து நிற்பதை அறிந்து மகிழுகின்ருேம். அயல் மக்களுடன் இலகுவிற் தொடர்பு கொள்ளவிடாது தடுத்த இயற்கை ஏதுக்கள் மொழி வளத்தைப் பொறுத்தவரையில் இக்காட்டுக்குப் பெரு நன்மை செய்துள்ளதென்றே சொல்லுதல் வேண்டும். தமிழ்நாடு மறந்துவிட்ட எத்தனையோ தண் தமிழ்ச் சொற்கள் இங்குள்ள பொதுமக்களின் பேச்சிலே வழங்கு கின்றன. பழமையான தோற்ற வடிவுகளும் உயர்ந்த இலக்கியப் பொருளுங்கொண்ட சொல்வழக்குடையார் இந்நாட்டு மக்கள். இவர்தம் பேச்சு வழக்கில் உள்ள பல சொற்கள் மொழி ஆராய்ச்சியாளருக்கு நல்விருந்தாய் அமைந்து நடக்கின்றன.

செந்தமிழ்ச் சொல்வளம் 87
செந்நெற் செல்வம்:
ஒரு நாட்டின் பொருள்வளங் கூட, அதன் விளை பொருள்களுக்குரிய சொல்வளங்கொண்டு நன்கறியப் படுகின்றது. மருதவளம் சான்ற மட்டக்களப்பு நாட்டில் விளையும் தானியங்களின் உட்பிரிவுகளோ மிகப் பலவாகும். செந்நெல், வெண்ணெல், கருநெல், சம்பா, வாணன் என்று நெல்லின் வகைகளைக் குறிக்கும் சொற்கள் பலவுள அவற்றுள் சம்பா ஒன்றையே இனமும், குணமும் நோக்கி ஆவரம்பூ, முத்து, ஆனேக்கொம்பன், குண்டு, குருவி, சிறுமணி, சீரகம், புனுகு, இளங்கலே, அல்லி, முருங்கை யன் எனப் பல பெயர் வகுத்து வழங்குகிறர்கள். இவை விளைதற்கு வேண்டிய காலமும் நிலமும் ஒன்றுக்கொன்று சிறிது வேறுபடுவன. இந் நெல்லரிசிகளின் மணம், குணம், சுவை என்பனவும் வேறுபடுவன. இந் நுட்பங்களை நாம் காணும்போது சொல்வளத்தினேவிட்டு வயல் வளமும், நெல்விளைவு செய்வதில் மக்கள் அடைந்திருக்கும் புலவள மும் நோக்கி நம் கருத்தே சென்றுவிடுகிறது.
தென்தமிழ்ச் சிறப்பு:
பழங்காலத்துத் தமிழ்க் கண்டம் தென்திசைக் கடலுள்ளே பரவிக் கிடந்ததென்பர். அதனையொட்டித் தென்திசையாரே தமிழ்மொழியிற் சிறந்தனரென்றும், தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல மொழிவளம் பழமையும் உயர்வும் உற்றிருக்கிறதென்றும் தமிழ்காட்டிற் கருதப்படு கின்றது. ஒருவர் பேசும்போது விடும் பிழையை இன் ைெருவர் திருத்தம் செய்யப்போனல் அவ்வாறு திருத்த வருவோரை மற்றையவர், நீர் திருத்தக் கல்லிற்குத் தெற்கே பிறந்தவரோ ’ என்று குத்தலாகக் கேட்கும் பழமொழி வழ்க்கு இன்றும் தமிழகத்தில் உண்டு. இத ல்ை தெற்கே வழங்கும் தமிழின் சிறப்பும் திருத்தமுங் காரணங்களாகி, தமிழ்மொழி வழக்கின் திருத்தத்திற்கு எல்லைக்கல் தெற்கிலேதான் இருக்கிறது என்ற கருத்தை யும் ஊட்டியிருத்தல் உணரப்படுகின்றது. தமிழின் பிறப் பிடமாகத் தென்திசை இருத்தல் மட்டுமன்றி, ஆரிய நாட்டாருடைய கொள்கையும் கலப்பும் மிகுந்து தமிழ் வழக்குச் சிதையாத நிலையும் தெற்கிலே செல்லச் செல்லக்

Page 69
88 மட்டக்களப்புத் தமிழகம்
கூடிக் காணப்படுதலும் இவ்வுண்மைக்குக் காரணங் களாம். இவ்வகையில் தமிழுலகின் தென்கோடியிலே -யாழ்ப்பாண நாட்டுக்கும் தென்பால்-கிடக்கும் மட்டக் களப்புத் தமிழகம் தனது செந்தமிழ் வளத்திற் சிறந் திருப்பது குறித்து நாம் வியப்படைதற்கில்லே யெனலாம்.
* இலக்கா’ ஆராய்ச்சி:
மிகப் பழையனவான விளிப்பெயர்களும், அசைச் சொற்களும் கொண்டுள்ள சிதையா வழக்கினை இன்றும் நாம் இங்குக் காண்டல் கூடும். அறிமுகவுரையுள் யாம் குறிப்பிட்ட கா , * இல’ என்ற சொற்களை எடுத்து இங்கு விளக்கிக் காட்டுதல் சாலும் :
* யா, கா,
பிற, பிறக்கு, அரோ, போ, மாது எனவரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.? --சொல். 279
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக் காட்டப்பட்ட ஏழு அசைச் சொற்களும் பண்டைச் செய்யுள் வழக்கிற் பயின்று கடந்தவை.
* அறநிழலெனக் கொண்டாய் குடையக் குடைப்
புறநிழற் கீழ்ப்பட்டாளோ இவளிவட் காண்டிகா.?? என்னும் 8 கலித்தொகையுள் ? காண்டி’ என்னும் முன் னிலைவினை சேர்ந்து ? கா’ என்ற அசைநிலைச் சொல் வழங்கியது. பவணந்தியார் காலத்தில் * கா’ என்பது உயர்ந்தோர் வழக்காக அமைக்கப்பட்டதை நன்னூலிற் காணலாம். இவ்வழக்கும் பிற்காலத்து அருகிவந்து மறைந்துபோயிற்று.
ஆயினும் மட்டக்களப்புத் தமிழகத்திலே செய்யுள் வழக்கில் மட்டுமன்றிப் பேச்சு வழக்கிலும் இது மல்கி வழங்குவதை இன்றும் காணலாம். * காண்டிகா கால்கள் கழலுமே ’ என்பது மட்டக்களப்புப் புலவர்மணி அவர்கள் செய்த பகவத்கீதை வெண்பா’வில் ஒரடி. தம்முள் ஒத்தாரையும் முதிர்ந்தாரையும் பெண்கள் அன் பால் அழைக்கும்போது பெரும்பாலும் இந்த அசையினைச் சேர்த்துக்கொள்வர். வயதின் முதிர்ந்த ஆடவர் தம்முள் ஒத்தாரையும் நண்பரையும் “கா’ சேர்த்து அழைப்பதும்,

செந்தமிழ்ச் சொல்வளம் 89
இருபாலாரும் மாறி அழைத்தலும் சிறுபான்மையாக உண்டு.
* நெல்லிருக்குதாகா காசிக்கே எஎ ?? என்று நெல்வாங்கும் மகளிர் கூவிக்கேட்டலும், ** இருக் குது வாகா ’ என்று கொடுப்பார் கூவி அழைத்தலும், இல்லையேல் ? இல்லகா’ என்று சொல்லி விடுத்தலும் போலப் பயின்று பண்டமாற்றிலும் * கா. ’ இடம்பெற் றுள்ளது.
* புள்ள லெக்கா புள்ள லெக்கா-உன்ர
புருசனெங்க போனதுகா
கல்லூட்டுத் திண்ணையில
கதைபழகப் போனது.கா.’ ன்ெறு மட்டக்களப்பு நாட்டுக்கவி வழக்கில் 'கா' முன் னிலைக்கேற்ற அசையாகி இரு பெண்களின் வினவும் விடையுமாய் அமைந்திருக்கும் இக் கவியுள் இடம்பெற் றுள்ளது. * வீடு ’ என்ற சொல் * ஊடு’ என மருவிய வழக்கம் * கல்லூடு’ என்ற தொடரில் அமைந்திருக்கின் றது. கவியுலகில் இவ்வாறு ? கா’ பெற்றுள்ள பெரு மிடத்தை இந் நூலில் * உணர்ச்சிக் கவிருலன் ’ பற்றிய பகுதியுள்ளும் கண்டுகொள்ளலாம்.
* கா. ’ என்ற அசைநிலையை ஏற்று இக் கவியுள் வந் திருக்கும் * இல’ என்னும் விளிப்பெயர் ஆராய்ச்சிக்குரிய ஒரு சொல்லாகும். பிள்ளை, இலக்கா என்னுமிரு சொற் களும் ஒன்று சேரும்போது 8 கவி’ யுலகின் ஒசையிலக் கணத்திற்குட்பட்டுப் * புள்ள லெக்கா ’ என்று ஆகியிருக் கின்றன. * பிள்ளை ’ என்ற சொல் திரிந்து ? புள்ளை ? ஆயிற்று. தமிழ்நாட்டினர் ஆண்மக்களைப் * பிள்ளை ’ என்று அழைக்கும் வழக்கம்போலன்றி அதற்கு மாருகப் பெண்களைப் * பிள்ளை ’ யென்றழைப்பது மட்டக்களப்புப் பெருவழக்காகும். தம்குடியைப் பெருக்கும் குலக்கொழுந்து மகளேயாதல் இக்காட்டு மருமக்கட்தாயமுறைக்கு உரிய தொன்று. அதனல் வழக்காருன ? புள்ளை’யுடன் சேர்ந்து வந்த * இலக்கா’ என்பது இல-கா என்ற இரு சொற் களின் தொடராகும். இல’ என்னும் சொல்வழக்கு மிகப் பழங்காலத் தொடர்பினது.

Page 70
90 மட்டக்களப்புத் தமிழகம்
தொல்காப்பியர் காலத்திற், தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் விளித்தற்கமைந்ததாய் “ எல்லா ’ என்ருெரு பொதுச்சொல் வழங்கியிருக்கின்றது. அன்பு கனிந்தவர் தம்முள் விளித்து வழங்குதற்குரிய ஒரு முறைப் பெயராகக் கருதப்பட்ட அதனே விளக்கும் :
* முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்று முரித்தே. ’’
-பொருளியல் : 220 என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு நச்சினர்க்கினி யர் கூறும் உரைவளம் இங்குக் கண்டின்புறத்தக்கது :
* முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியுடைய * எல்லா ’ வென்னுஞ் சொல், புல னெறி வழக்கிற்குரிய முறைமையினலே வழுவா காது ஆண்பாற்கும் பெண்பாற்கும் உரியதாய் வழங்கும் என்றவாறு. * கெழுதகை’ என்றதனனே, தலைவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மையென்றும், தலைவன் தலைவியையும் பாங்கனையும் கூறுதல் சிறுபான்மை வழு வமைதி என்றும் கொள்க.
உ - ம் :
* அதிர்வில் படிற் றெருக்கிவந்தென் மகன்மேல்
எதிர்வழி நின்ருய் நீயே செல் ; இனி எல்லா ? -கலி-81
எனத் தலைவியைத் தலைவன் இழித்துக் கூறலில் வழுவா யமைந்தது. V
என்னிபெருத தீதென் ? -கலி-61
எனத் தோழி தலைவனே விளித்துக் கூறலின் வழுவாய் அமைந்தது. “ எல்லா விஃதொத்தன்’ (கலி-61) என் பது பெண்பால்மேல் வந்தது. ஏனைய வந்துழிக்காண்க. பொதுச்சொல் என்றதனனே எல்லா, எலுவ என்பனவும் கொள்க, * எலுவசிருஅர்’ (குறுந்தொகை-129) எனவும்,

செக் தமிழ்ச் சொல்வளம் 91
* யாரை எலுவயாரே ’ (நற்றிணை-295) எனவும் தலைவ னைத் தோழி கூறினள். * எலுவி’ என்பது பாலுணர்த்த லின் ஆராயப்படா’ என்பது நச்சினர்க்கினியர் செய்த தொல்காப்பிய விளக்கமாகும்.
இதனுல் “ எல்லா ’ என்னும் சொல்லை, ஒத்தார் தம்முள் வழங்குவதே முன்னளிற் பெரும்பான்மையென்று தெரிகிறது. ஒத்தார் தம்முளன்றி மாறி வழங்குதல் மரபுக் குப் பொருந்தாமைபற்றியே அவ்வாருனவற்றை வழுவா யமைந்தன என உரைகாரர் கொண்டுள்ளார். “ எல்லா ? என்னும் விளியானது “ஹலோ ’ (Halo) என்ற ஆங் கிலச் சொற்போன்று இருபாற் பொதுவாய் வழங்கிய ஒன்று எனினும், திரிபு நிலையில் “ எலுவன்’ என்னும் ஆண்பால் வடிவத்திற்கும் * எலுவி’ என்னும் பெண் பால் வடிவத்திற்கும் இடந் தந்தது. அவ்வாறே ° ஏலா, ஏலாள், எலுவன், எலுவை, எலுவல் ’ என்னும் பெயர்ச் சொற்களும் எலுவா, எலா, எல்லே, எல்ல, எல, இல என்ற விளிப்பெயர்களும் இதன் திரிபாய் வழங்க லாயின. (* எலுவா ’ என்று மட்டக்களப்பில் வழங்கும் வினச்சொல் * அல்லவா’ என்னும் உடன்பாட்டு விணு வின் சிதைவு அன்றி எல்லாவகையைச் சேர்ந்த பிறப் பினதன்றென்பதை இவ் விட த்தில் நினைவுகொள்ளல் நன்று.) எல்லா என்னும் சொல் இன்று தென்னுட்டில் * எல, எலா, எலே ’ என்னும் வடிவுகளில் ஆண்பால் விளியாகவும் * ஏழா ’ என்னும் வடிவில் பெண் பால் விளியாகவும் சிறுபான்மை வழங்கி வருகின்றது. எண, இணை, அனே என்பன வாய், ணகரஒசை இயைந்து யாழ்ப்பாணத்துப் பொதுமக்களிடை வழங்கும் சொற்கள் எல்லாவின் பண்டைப் பொருளமைதியினேயும் ஒருங்கே பெற்ற திரிபுகளாம்.
* ஏல ’ என்னும் வடிவம் ஏட, ஏடா, ஏடே, அட, அடா, அடே என்று திரிபுபெற்று ஆண்பால் விளியாக வூம் ; எடி, ஏடி, அடி, அடீ என்று பெண்பால் விளியாக வும் தமிழகம் எங்கணும் வழங்குகின்றது. எனினும் * எல்லா ’ வின் பண்டைய அன்பு வழக்கு இத்திரிபுகளில் அதிகம் இடம்பெறவில்லை. ‘அடா’ என்பதை அரா, ரா

Page 71
92 மட்டக்களப்புத் தமிழகம்
என்றும் * அடே' என்பதை அரே, ரே என்றும் தெலுங்கர் வழங்குவர். மலையாளிகள் ஏடா ’ என்று இதனைக் குறிப் பிடுவர். ரா, ரே என்னும் சிதைவுகள் இந்தி, உருது மொழிகளிலும் வழக்காறு பெற்றுள என்பர். இங்ங்னம் தமிழ்மொழி தன் குழுமொழிகளுக்குத் தாய்மைபூண் டிருந்த தன்மையை நன்குணர்த்தும் இச்சொல் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மதிப்பாய் அழைக்கும் விளி யாய் இருந்து, இன்று நேர்வழக்கொழிந்துவிட்டமை மட்டு மன்றித் திரிந்த உருவில் அடியவரையும் கீழ்மக்களையும் விளிக்கும் இழிவுச் சொல்லாய் மாறிவரும்போதும் மட்டக் களப்புத் தமிழகத்திலே, பண்டையமரபு தவருத நிலையில் * இல’ என்பதன் ஆட்சி விளங்க வழங்குதல் பெருமை கொள்ளத்தக்க ஒன்ருய் உள்ளது.
* சீறடி சிவப்ப
எவன் இலகுறு மகள் இயங்குதி ??
என்னும் அகநானூற்றுச் செய்யுளடியில் ஒரு தோழி தன் தலைமகளை அன்போடு * இல’ என்றும், * குறுமகள் ? என்றும் அழைத்து “ கின் சிறியபாதம் நோவினுற் சிவப் பூர ஏன் இங்கு நடந்து திரிகின்றன’ என்று கேட்கின் ருள். அன்பொத்த விளிப்பொருளிலே இச் சங்கச் செய் யுளில் ஆளப்பெற்ற மரபினை யொட்டியே * புள்ள லெக்கா’ என்ற மட்டக்களப்புக் கவித் தொடரிலும் 8 இல’ என்னும் விளி அமைந்திருத்தல் கருதத்தக்கது. கவி வழக்கில் மட்டுமன்றி இந்நாட்டு மகளிர் தம் நாவழக் கிலும் * இலக்கா’ நிறைந்து பயிலப்படுதலைப் பெரு வழக்காகக் காண்டல்கூடும். இத் தொன்னெறி வழக்கு களும் இவைபோன்ற பிறவும், மட்டக்களப்புத் தமிழகத் தாரின் பழம் பெருமைக்குச் சான்ருய் விளங்குவன.
கொச்சைச் சொற்களின் சிறப்பு:
சொற்கள்மூலம் இவ்வாறு மொழிவழக்கின் தொன்மை மட்டுமன்றி மக்களின் ஒழுகலாறு, காட்டுவரலாறுபோன்ற பிற குறிப்புக்களும் புலப்படுகின்றன. இச் சிறப்பினையே ஆங்கிலச் சொல் நூலாசிரியரான ஜோன் கிரகாம் என்ப வரும் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.

செந்தமிழ்ச் சொல்வளம் 93
* பழங்காலத்துச் சமூகநிலை, அரசியல் நிலை என்பவற் றைக் கண்டு அவற்றைப்பற்றிய தம் கருத்தை மற்ருேரும் நமக்கு அறிவிக்குமாறு, அந்நிலைகளைக் காட்டுவ்னவாய் இன்றைய சொல்வடிவில் வழங்கும் நினைவுச் சின்னங் களை ஒர் ஆசிரியன் குறித்துவைத்தல் வேண்டும். ஒவ் வொரு நாட்டவரினதும் அகவாழ்வானது, அவரது மொழி விலகா எழுத்திற் பேச்சுவழக்குப்படி பொறிக்கப்பட்டு எதிர்கால மக்களின் அறிவுக்காகப் போற்றப்படுகிறது. அதனுல் 5ாட்டு வரலாறு, பழக்கவழக்கங்கள், ஒழுக்க விதிகள் என்பவற்றைப் பொருள்வழக்கொழிந்த சொற் களினின்றும் வெளிக்கொணராத ஆசிரியர் தமது வர லாற்று ஆராய்ச்சியில் மிகுதியும் தவறியவராவர்.’
“The teacher ought to note for remark the living memorials, in the words of today, of the social and political condition of the people in ages of gone by. The inner life of every people is stereotyped in their Language and retained therefore the instruction of future generations and the teacher will signally fail if he does not evoke from the fossil elements of words much of national history customs and morals'
- English Word Book-by John Graham
அதனுல் மட்டக்களப்புத் தமிழகக் கலைவளமும் பண் பாடும் பற்றிய இந்நூலுள், இக்காட்டிலே சிறப்புற வழங் கும் சொற்களில் இதுவரை திரட்டிப்பெற்ற சிலவற்றை பாவது பேச்சுவழக்குப்படி மேலும் குறிப்பிட்டு அவற் றின் பொருளேயும் ஒரளவு விளக்கிக் காட்டுதல் பயன் தருமென்று கருதுகின்றேன். தமிழுலகின் பொதுவழக்கா றுடையனவாய் இங்கேயும் வழங்குகின்ற பழஞ் சொற் கள் கூடியவரை இப்பகுதியுள் ஆய்ந்து விலக்கப்பட்டுள் ளன. தமிழகத்தின் மற்றைய பகுதிகளில் வழங்குவன வம் எனது எடுத்துக்காட்டுக்களில் இங்கு இடம்பெற் றிருப்பின் அவை இக்காட்டின் பெருவழக்கும் சிறப்புப் பயிற்சியும்பற்றியே எடுத்தாளப்படுகின்றன என்று அறிஞர் கொள்வார்களாக,

Page 72
94 மட்டக்களப்புத் தமிழகம்
ஆட்சிக்குறி:
சொற்களைப்பற்றிய ஆராய்ச்சியின்போது அவை தரும் பொருள்களுக்குரிய காரணத்தைக் காணமுடியாத நிலைமை பல இடங்களிற் தோன்றுகின்றது. அவற்றுக்கு ஆட்சியும் வழக்குமன்றி வேறு காரணம் கற்பித்தல் ஒண் ணுது. உதாரணமாக : வாழ்க்கை, வாழ்வு என்பன ஒரே நிலைச் சொற்களாயினும் ஒன்று உயிர் வாழும்காலத் துக்கும், மற்றென்று இன்பமான வாழ்வுக்கும் ஆளப் படுதலைக் காணலாம். இவ்வாறே ஒரே பிறப்பும் இலக் கண முடிபுமுடைய பின்வரும் தொழிற் பெயர்ச் சொற் களும் பேச்சுவழக்கிலே ஒன்றுக்கொன்று பொருட்பேத முடையனவாகின்றன.
1. நிறுத்தல் - தராசில் (துலாக்கோலில்) வைத்து
நிறுத்துப்பார்த்தல்.
2. நிறுத்துதல் - நிறுதிட்டமாக (நேராக நிறுத்தி) வைத்தல்.
3. நிறுவுதல் - ஆராய்ந்து நிலைநாட்டல் அல்லது
முடிவுகாட்டல்.
4. நிற்பித்தல் - ஒருவனே கிற்குமாறு செய்தல்.
5. நிற்பாட்டுதல் - (வேலையிலிருந்து) நீக்குதல்,
தொடர்ச்சியைத் துண்டித்தல்.
சொற்பிறப்பின்படி நிறுத்தல், நிறுத்துதல், நிறுவுதல், நிற்பித்தல், நிற்பாட்டுதல் என்ற சொற்கள் யாவும் ஒரே பொருளனவாயினும், ஆட்சிக் குறியினல் இவை பெரிதும் வேறுபடுவதைக் காண்கின்ருேம். இத்தகைய ஆட்சிக் காரணம் பற்றித் தமிழின் பொதுக் கருத்தினின்றும் விலகி நடக்கும் சொற்கள் பல இங்குள்ளன.
வெப்பத்தைக் குறிக்கும் * வெக்கை’ என்னும் சொல் இங்குக் கெட்ட நாற்றத்தையும் குறிக்க வழங்குகின்றது. சன நெருக்கத்தினுலுண்டாகும் வெப்பத்தாற் பிறக்கும் தீ நாற்றத்தினை “மனித வெக்கை’ என்று கூறுதல் இந் நாட்டு வழக்கு, பூசினி, சுரை, காடை என்னும் சொற்கள்

செந்தமிழ்ச் சொல்வளம் 95
இந்நாட்டுக்கே தனித்த சிறப்புப்பொருளைக் குறிக்கின்றன. நீற்றுப்பூசினிக்காய்தான் இங்குப் பூசினிக்காய் எனப் படும். பூசினிக்காய் என்று மற்றையோர் குறிப்பிடும் காய் இங்கு “ சுரைக்காய் ’ ஆகின்றது. மற்றையோர் கருதும் * சுரைக்காய் ’ இங்கு ** நாடங்காய் ’ ஆகும். ஆனல் காடையின் குடுகைச் * சுரைக்குடுகு ’ என்பதும் * நாடங் குடுகு ’ என்பதும் இங்குள்ள வழக்கு. இக்நாட்டில் வழங் கும் “ அமுது, விருந்து, பரத்தை ’ என்ற சொற்கள் மூன்றும் நுண்ணிய பொருட்பேதமுடையன. * அமுது’ சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்து, விருந்து - திருமணம், வெற்றிவிழா போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் நடப்பது ; பரத்தை - வீடுவேய்தல்; கிணறு வெட்டுதல், வேலியடைத்தல் போன்ற வேலைகளின் முடி வில் அவற்றைக் கூலி பெருது செய்து தந்த உறவினர், நண்பர் ஆகியோர்க்குக் கொடுக்கும் பெருவிருந்துணவு. பரத்தை - பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொரு ளுடையது. மருங்கை’ என்ற பெயராலும் உறவினர் மட் டும் கலக்கும் விருந்து ஒன்றுளது. அது பிள்ளைப் பேற்றினை ஒட்டி நடப்பது. மருங்கு - பக்கம் : அச் சொல்லடியாகப் பிறந்த மருங்கை - பக்கத்தார் (உறவினர்) தம் தொடர் பைக் குறிப்பதாயிற்று. அரங்கேற்றம் செய்தற்கு முன் னர்க் கூத்தினைக் கடைசிமுறையாக ஆடிப்பார்க்கும் ஒழுங்கிற்கு “ அடுக்குப்பார்த்தல்’ என்று பேர். வில்லங் கம், கஷ்டம் என்ற சொற்களால் மற்றையோர் வழங் கும் கருத்து இங்கு பொறுப்பு’ என்னும் சொல்லாற் குறிக்கப்படும். இது ஒரு பொறுப்பான பாட்டு’ என்றல், இலகுவில் பொருள்விளங்கக் கூடாத பாட்டு இது ? என்று பொருளாகும். இவையும் இவைபோன்ற பிற சொற்களுமெல்லாம் மட்டக்களப்புப் பகுதியிற் சிறப்பான கருத்துக்கள் உடையனவாய் ஆட்சிப்பட்டு வழங்குதலை இங்குக் கலந்து செல்லும் மற்றைய தமிழகப் பகுதியினர் நன்கு காணலாகும்.
மருஉ வழக்கு :
சொற்கள் உரு வேறுபட்டு வழங்குதல் எம்மொழிக் கும் பொதுவான இயல்பாகும். திரிபுபெற்ற சொல்

Page 73
96 மட்டக்களப்புத் தமிழகம்
லொன்றே பேச்சு வழக்கில் இடத்துக்கிடம் வேறுபட்டுப் பல தோற்றம் அளித்தலும் உண்டு. வாழைப்பழம் என்ற ஒரு சொல் தமிழகத்தின் வட எல்லையில் * வாயப்பயம்’ என்று உருத்திரிய, அதன் தென்கோடியான மட்டக்களப் பில் 6 வாளப்பhம் ?? என்று வழங்குகின்றது. 8 ரகர ’, * றகர ’ ஒசை மயக்கம் தென்னுட்டு மொழிவழக்கில் இருத்தல்போன்று *ழகர ’, ‘* ஸாகர ’ ஓசை மயக்கு ஈழத்திலுண்டு. பேச்சிலே எப்படி இருப்பினும் எழுத்திற் பொறிக்கும்போது கொச்சை தவிர்ந்த பொதுச் சொல் லேயே குறிப்பிடுதல் எழுத்துலகின் பொதுக்கொள்கை யாயினும், ஒருநாட்டு மக்களின் பேச்சு மரபினேயும், சொற்திரிபு வரலாற்றையும் அறியக் கருவியாகும் சிதைந்த சொற்களையும் அப்படியே குறித்துக்கொள்ளுதல் சில போது பெரும்பயன் தருவதாகும் என முன்னர்க் கண் டோம். * இழுத்துக்கொண்டு போய்விட்டான் ’ என்னும் செந்தமிழ்த் தொடரானது சென் னை நகர் வழக்கில் * இஸ்துகுனு பூட்டான் ’ என்றுலவுகின்றது. இதனே மட் டக்களப்பார் வேருேர் வகையிற் திரித்து இளுத்திற்றுப் பெயித்தான் ’ என்று வழங்குகின்றனர். இத்தகைய மொழிநடை வழக்கு ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் சுவைதரும் ஒன்ருய்த் தோன்றும்.
* அவர்கள்’ என்னும் சொல்லொன்று தமிழகத்தின் பேச்சுவழக்கில் எத்தனையோ மாற்றங்களைப் பெற்று நடக் கக் காண்போம். “ அவர்’ என்ற பண்டைப் பலர்பாற் சொல் இடைக்காலத்தில் உயர்ந்த ஒருவரைக் குறிக்கும் சொல்லுமாகிப், பன்மையைக் குறித்தற்குக் °கள் ’ என் விகுதியையும் பிற்காலத்தே சேர்த்துக்கொண்டது. இவ் வாறு வழக்கிற் பயின்ற “ அவர்கள்’ என்னும் சொல் லைத் தென்னுட்டினர் அவா ’ என்றும், “ அவாள்' என் றும் வழங்குவாராயினர். யாழ்ப்பாணப் பொதுமக்கள் பன்மையை ஆண், பெண் என்ற இருபாலாருக்கும் வேருக்கி ஏற்ற விகுதி சேர்த்துக்கொண்டனர். ' அவன் ?? என்ற சொல்லுடன் * கள் ’ சேர்த்து “ அவன்கள் ?? என்றும், “ அவங்கள்’ என்றும் ஆண்பாற் பல்லோரை யும்; அவள் என்ற சொல்லுடன் “அவை ’ இன்பதோர்

செந்தமிழ்ச் சொல்வளம் 97
விகுதி சேர்த்து “ அவளவை’ எனப் பெண்பாற் பல் லோரையும் அவர் குறிப்பிடுவர். பல்லோர் பொது அங்கே * அவை ’ எனத் திரிந்து வழங்குவதுமுண்டு. பலர்பாற் சொல்லை ஆண், பெண் எனப் பால்பிரிக்கும் வழக்கு மட் டக்களப்பிலும் உள்ளது. இங்கே அவன், அவள் என்ற சொற்கள் பன்மை குறிக்கும்போது உகரச்சாரியையையும் * கள் ’ என்ற விகுதியையும் பெறுதல் ஒரு விலகா மரபா கும். “அவனுகள்’, ‘அவளுகள் ' என்பவை அம்முறையே நடக்கும் சொற்களாம். மேலும் இந்நாட்டு வழக்கிலே * அவர்கள் ’ என்ற பல்லோர் பொதுச் சொல்லின் ' + ' என்ற மெய்யெழுத்து அடுத்துள்ள ககரத்துக்கினமான * ங் ’ ஆகி அவங்கள் ’ என்று உருப்பெற்று பல்லோர் பொதுவினைக் குறிக்க வழங்குகின்றது. அவர்கள் என் பது “ அவையள்’ என்றும் ஒரோவழித்திரிந்து வழங்கு தல் உண்டு. மட்டக்களப்புச் சோனக மக்கள் அவர்கள் என்பதை அவகள் ' என்றும், அவக ’ என்றும் வழங்கு வர். எனவே இப்படி முறையே அவர்கள், அவங்கள், அவகள், அவக, அவை, அவா, அவாள் என்று மருவி இடத்துக்கிடம் வேறுபட்டு ஒரேசொல் வழங்குவதைக் காண்கின்ருேம்.
அரிவாள்மணே - அருவாமனை ; நிழல் - இணல் ; இளநீர் - இணலி ; வீடு - ஊடு ; ஓமடா - ஒண்டா ; விளை யாட்டு - விளாட்டு ; அறைந்துவிடுவேன் - அறைஞ்சிரு வன்; இதோபாருங்கள் - இஞ்சாருங்க; இதோ - இன்னு, இந்தா ; அதோ - அன்ன, அந்தா ; எங்களுடையது - ாங்கட ; பெண்பிள்ளை-பொம்புள ; சேர்வைக்கால்-சேவ ரக்கால் , தலையணை - தலகாணி , திறப்பு - துறப்பு ; நெரித் தான் - நசிச்சான் ; மயிர்கொட்டிப்புழு-மசுக்குட்டிப்புழு ; சிற்றெறும்பு - சித்திரம் பூச்சி ; குறுநெய் - நறணை, நறலா என்பனபோன்ற சொற்களெல்லாம் இவ்வாறு மட்டக் களப்பு மொழி வழக்குக்கேற்ற சிதைவுபெற்றனவாம்.
இல்க்கிய ஆட்சி:
பழந்தமிழ் இலக்கியங்களிலே ஆளப்பட்டுள்ள பல
சொற்களும் தொடர்களும், அப் பொருள்களிலேயே
ud - 7.

Page 74
98 மட்டக்களப்புத் தமிழகம்
பேச்சுவழக்கிற் சிறிது திரிந்தும், திரிபுபெருதும் இங்கு வழங்குகின்றன. தமிழ்நாட்டினர் பொங்கல் என்று தொழிலாகு பெயராற் குறிப்பிடும் உணவை இங்குள் ளார் ? புக்கை ’ என்று சொல்வர். * உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று. தம்மால் ஒரு வேலையைச் செய்ய இயலாத போது “ ஒண்ணு ’ என்றும், இயலுமேல் * ஒண்ணும்’ என்றும் இங்குள்ளார் கூறுவர். இவை * ஒல்லா ’, ‘* ஒல் லும்’ என்ற சொற்களினின்று பிறந்து முறையே எதிர் மறையும் உடன்பாடும் குறிப்பவையாம்.
" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வல்வினை
இட்ட வித்தி னெதிர்ந்து வந்தெய்தி
ஒட்டுங் காலே ஒழிக்கவும் ஒண்ணு ? என்று “ ஒண்ணு ’ என்னுஞ் சொல் சிலம்பினுள் இதே பொருளில் ஆளப்பட்டிருத்தல் கருதத்தக்கது. இக் கருத்து ஏலும், ஏலாது என்று சொல்லப்படுதலுமுண்டு. * இய லாமை ’ என்னும் சொல் பெரிய நோயையும் இங்குக் குறிக்கும். காட்டுவழியையும், ஒற்றையடிப் பாதையினை யும் இங்குள்ளார் * அதர்’ என்றே வழங்குவர். * ஆக் கம் அதர் வினய்ச் செல்லும் ' என்ற வள்ளுவப் பயணி லும், *அதர்’ என்னும் பழஞ்சொல்லானது நுழைந்து செல்லும் வழியினேக் குறிப்பதை அறியலாகும்.
* வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் ’ என்ற சீவக சிந்தாமணியிற் பயிலப்பெற்ற 8 வாரம் ’ என்ற சொல் அதே பொருளில் இங்கு வழக்காற்றில் உள்ளது. இத் தமிழகத்துக் கொம்பு விளையாட்டில் மக்கள் இருபகுதி யாகப் பிரிவுற்று வடசேரி வாரம், தென்சேரி வாரம் எனப் பண்டுதொட்டே குறிக்கப்பெற்று வருதலே இங்குக் காணலாம். ஒரு கட்சியைக் குறிப்பிடும்போது 8 வாரம் என்றும், கட்சியொன்றைச் சார்ந்து நிற்றலை 8 வாரப்பாடு ' என்றும் இங்குக் குறிப்பிடுதல் அவ்வழக்கின் தொடர்ச் சியேயாகும். * கத்தரிக்காய்’ என்ற சொல் இந்நாட்டுக் கிராமப்புற வழக்கிலில்லை. “வளுதிலங்காய்’ என்பதே

செந்தமிழ்ச் சொல்வளம் 99
அவர் ஆளும் சொல். இது 8 வழுதுணங்காய்’ என்பதன் சிதைவாகும். இச் சொல்லை : ,
“ வட்டும் வழுதுணேயும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து ’
என்று பழந்தமிழ் இலக்கிய ஆட்சியிலும்,
* வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்’ என்று இடைக்கால ஒளவையார் பாடலுள்ளும் காண் கின்ருேம், “ தூதுவழுதுணை ’ என்னும் செடி ** தூது வளை’ என்று இங்குச் சொல்லப்படும். தூது - சிறிய உருண்டைக்கல், என்பது பழங்கருத்து. தூதுணம் பறவை’ (புரு) என்பது கலித்தொகை. வயது, அறிவு, ஆண்மை என்பவற்றில் முதிர்ந்தோரைக் கடுக்கென்ற வர்’ என்றும், ஊர்த்தலேமையையும் பெற்ற அத்தகை யோரைக் ? கடுக்கொண்டாப் போடியார் ’ (படம் 12) என்றும் இங்கே அழைப்பர். இவற்றில் உள்ள “கடுத் கல்’ என்ற வழக்கிட்ைசி திருக்குறளிலுள்ளதென்பதை அறிமுகவுரையுட் கண்டோம். வயதுவந்த ஆண்கள், * கடுக்கன் ’ என்னும் காதணியினை அணியப்பெறுதல் ஒரு மங்கல விழாவாக நடத்தலும், * கடுக்கெண்டாப் போடியார்’ ஒருவர் இறக்கநேரிடின் உடனே அவருடைய இடத்திற்கு ஒருவரை ஊர்கூடித் தெரிவு செய்தலும் பண்டுதொட்டுள்ள வழக்காகும். குழப்படி காலங்களில் அப் போடியார் சொல்லையே முடிவான தீர்ப்பென்று மக்கள் கொள்ளுவர். கருக்கொண்ட மகளிர் உறும் உணவு வேட்கை நோயினே ? வயா ’ என்றும் 8 வயவு ’ என்றும் பண்டையோர் வழங்கினர்.
* வயவுறு மகளிர் வேட்டுனி னல்லது
பகைவ ருண்ணு வருமண் ணினையே ?
என்பது புறநானூறு. 8 வயா ’ என்ற சொல் யா? என முதல் கெட்டு அக்கருத்திலேயே இங்கு வழங்குகின்றது. * யா’ என நிற்பதன்றி * இயா ’, ‘* இசா ? என்றும் இக் கருத்துப் புலப்படுத்தப்படல் உண்டு. இவையே

Page 75
10Ö மட்டக்களப்புத் தமிழகம்
யன்றி * மசக்கை ’ என்னும் சொல்லாட்சி இந்நாட்டுக் குப் பொதுவானதாகாது. கருக்கொண்ட வேளாண் மையை யாப்பருவம் உடையதென்று குறிப்பிடுதலும் இத் தொடர்பினதேயாகும்.
* அரிமயிர்த் திரண்முன்கை வாலிழை மடமங்கையர்* என்னும் புறப்பாட்டில் நெருக்கமின்மையைக் குறித்தற்கு *அரி’ என்ற சொல்லாளப்பட்டுள்ளது. “அருஅலின்று அரிமுன்கைக் கொட்கும்’ என்ற நெய்தற் கலியுள்ளும் * அரிமுன்கை ’ என்பதற்கு f ஐதாகிய மயிரினையுடைய முன்கை ’ என்றனர் நச்சினர்க்கினியர். ** அரியே ஐமை ’ என்பது தொல்காப்பியம். ஐமை, ஐது என்பன ஒரு சொல்லின் இருவேறு வடிவங்கள். இவையும் அரி என் பதும் நெருக்கமின்மையைக் குறிக்கப் பண்டுவழங்கிய சொற்கள். பழைய இலக்கிய ஆட்சிப்படியே அரி, ஐது என்ற செஞ்சொற்கள் இரண்டும் பொதுமக்களுடைய பேச்சுவழக்கில் இங்கு வழங்குகின்றன. வீடுவேயும்போது கிடுகுமட்டைகள் அளவுப்படி நெருக்கமாக அமையாவிட் டால் அதனைக் கிடுகு அரிமட்டையாகக் கட்டப்பட்டுள் ளது என்றும், வயல்களில் நெற்பயிர் நெருக்கம் குறைந்து காணப்படின் “ பயிர் ஐதாக இருக்கிறது ' என்றும் கூறு தல் மட்டக்களப்பிற் பொது வழக்காருகும். நீர் கொஞ் சம், கொஞ்சமாக ஓடுதலை * அரிந்தோடுதல்’ என்று குறிப்பிடலும் இச் சொல்லாட்சியையே காட்டும். மரநிழல் களில் நெருக்கம் குறைந்து காணப்படும் வெயிற்பகுதிகள் * அரிவெய்யில் ’ என்று இங்கு வழங்கப்படுதல், “ வலை வலந்தன்ன மாநிழல்’ என்ற சங்கச் செய்யுளடியினையும் அதன் உரையினையும் கற்றேர்க்கு நினைவூட்டும்.
கதிரீனுதல் அல்லது குலே பறிதலே 8 வாங்குதல் ? என்ற சொல்லால்,
66 கொல்லை குரல்வாங்கி யீன மலைவாழ்நர்
அல்லபுரிக் தொழுக லான் ? என்ற குறிஞ்சிக் கலியுட்போல வழங்குதல் இந்நாட்டுச் சேனை(புன்செய்)ப் பயிர்ச் செய்கையாளரிடைப் பெரு

செந்தமிழ்ச் சொல்வளம் 1 Ol
மரபாகும், “ இம்முறை மிளகுகொடி நிறையக் கால்வாங் கிக் கிடக்கிறது’ என்று அவர் கூறும்போது, அதிக குலை யீன்று காய்த்துக் கிடக்கும் மிளகுகொடி நம் மனக்கண் முன் வந்து தோன்ருமல்விடாது. “கால்’ என்ற சொல்லால், கதிர்களையும், கதிர்போன்ற குலைகளையும் குறிப்பிட்டு வழங்குதல் கருதத்தக்க சிறப்பினது. நெல் முளைத்து வேர் விடுதலைக் கால்வாங்குதல் என்றும், கதிர் வெளிவருதலைக் * கதிர்வாங்குதல் ’ என்றும் சொல்வர். கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும் “ கான்முளை ’ என்னும் பழஞ் சொல்லே நினைவூட்டுவது.
* குடிப்பிறந்தார்சொல் கால்காட்டும் ??
என்ற நாலடியாரில் : கால் - சந்ததி, வேர் என்ற கருத் துக்களைத் தருதல் கருதத்தக்கது.
பருவம் பார்த்து ஒன்றைப் பயன்கொள்ளுதல் இங்கே * பாடுபார்த்தல் ’ என்று வழங்கப்படுகிறது. இது ? காடு களை இந்தனம் பாடு பார்த்தெடுத்து’ என்னும் நற்றிணை யுள் காணப்படும் சொல்லாட்சியின் தொடர்பினதாகும். மேலும், ஒருமுறை, இருமுறை என்ற கருத்திலும் ஒரு பாடு, இருபாடு என அடைபெற்று இச் சொல் வழங்குவ துண்டு. தலைமயிரை முற்றும் நீக்கி மொட்டையடித்தலைத் * தலை வழித்தல் ’ என்று இங்கே சொல்லும் பெருவழக்கா றுண்டு. அது ** மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’ என்ற வள்ளுவப் பயனிலே யுள்ள * மழித்தல்’ என்பதின் சிதைவாய் அமைந்திருத் தலை அறியலாகும். மொட்டையடித்தலைச் * சிரைத்தல் ?? என்றும் கூறுவர். இச்சொல் “ சிதைத்தல் ’ என்ற சொல் லின் தொடர்பினதாயிருக்கலாம். இவ்வாறன பண்டைய இலக்கியச் செஞ்சொற்கள் பலவற்றின் இறந்துபடா எளி நடை வழக்கினைக் கற்றறிவாளர் இம் மட்டக்களப்புத் தமி ழகத்துப் பொதுமக்களிடைப் பரக்கக் கண்டு மகிழுவர்.
உரற்கடை :
இவை ஒருபாலாக, மக்களுடைய தினசரித் தொழிற் களங்களிலும் நிறைந்த செஞ்சொல் வளத்தினை நாம்

Page 76
102 மட்டக்களப்புத் தமிழகம்
காண்டல்கூடும். நெற்குத்தும் வேலைகளை இங்கேயும் இயந் திரங்கள் அண்மையில் மேற்கொண்டுள்ளன. அதனல் உரற்கடையில் (உரல்வைத்து நெற்குற்றுமிடத்தில்) வழங் கும் நுண்ணிய செஞ்சொற் செல்வமும் நம்மை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுவருகின்றது. நெல்லை அரிசியாக் கும்போது நடைபெறும் ஒவ்வொரு குற்றுவேலையும் வேறு வேறு நுண் பெயரால் விழங்கும். முதற் குற்றிலுள்ள மூன்றுபடிகளும் முறையே குத்துதல், நசித்தல், குமைத் தல் எனப்படுவ. அடுத்தவை முறையே அடுக்கலாக்கு தல், தீட்டுதல், வெள்ளையாக்குதல் என அழைக்கப்பெறு கின்றன. முறம் இங்குச் * சுளகு ’ ஆகும். சுளகினல் தூய்மை செய்து வகைப்படுத்தும் படிமுறைகள் புடைத் தல், கொழித்தல், தெள்ளுதல், தாத்துதல் எனப் பலவாய் வழங்குகின்றன. இவ்வேலைகளால் அரிசியானது அதன் பருமனுக்குத் தக்கபடி முறையே அரிசி, குறுனல், மங்கு, தலைப்பு, மூக்கு, ஆர்ப்பு என்று நுணுகிப் பிரிக்கப்படுகின் றது. இடிக்கும்போது மிஞ்சும் குறுணல்போன்ற அடிப் பாகம் * கப்பி’ ஆகும். * நுங்கும் குறுணியும் நீக்கி ’’ என்ற பண்டை வழக்குத் தொடரிற் காணப்படும் * நுங்கு ’ இந்நாட்டிலே "மங்கு’ எனத் திரியப்பெற்றுளது. அவ் வாறே குறுணியும் * குறுணல் ஆயிற்று.
ஏர்க்களம் :
உழவர் பரம்பரையினர், தம் வயற்பரப்பிற் தனிப்பட வழங்கும் சொல்வளமோ மிகப் பெரியதாகும். வயலிடத் திலே போடியார், முல்லைக்காரன், செய்கைக்காரன் என்ற பெயர்களாற் குறிக்கப்படுவோரை அறிமுகவுரை யுட் கண்டோம். “ போடி’ என்ற சொல் உழவர் பெரு மகன், உழவர் தலைவன் என்ற கருத்துக்களில் வழங்கி வந்துளது. பிறப்பான் முக்குவர் குடிவகுப்பைச் சேர்ந் தோருக்கும், சிறப்பான் மற்றையோரிற் பெருமக்களுக் கும் இச்சொல் வழங்கப்பெறுகின்றது. போடிமார் குடி மக்களுக்குத் தலைமை பூண்டு போஷிப்பா ராதலினல்

செந்தமிழ்ச் சொல்வளம் 103
* போடி’ என்னும் சொல்லும் போஷி' என்ற சங்கதத் தொடர்புடையதாக இருக்கலாமென்று சிலர் கூறுவர்.
எனினும் போடியார் (நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்) என்னும் சொல் பெருநிலக்கிழவ னுக்கே உரியதாய், மாகாணச் சிறு பகுதியொன்றுக்கு நியமிக்கப்பெறும் அதிகாரியையும் குறிப்பிடுவதாக வழங் கிய ஒரு பழைய தமிழ்ச் சொல் என்றே கொள்ளு தல் வேண்டும். கொட்றிங்டன்துரை யவர்கள் தமது சொல்லாராய்ச்சிபற்றிய நூலுள் (Glossary of Native, Foreign Anglosised Words by H. W. Codrington) * பற்று ’ எனப்பட்ட மாகாண உட்பிரிவுகளின் தலைமைக் காரர் போடியார்’ என்று அழைக்கப்பட்டனர் என் றும், இன்று வயற் சொந்தக்காரரை இச்சொல்லாற் குறிக் கின்றனரென்றும் கூறுகிருர்கள். மேலும் கெளரவப்பட்ட மாகவும் வழங்கப்படுகின்ற ஒரு சொல் இது என்பது அவர் கருத்து. அன்னர் கொள்கைக்குச் சான்ருன ஒல் லாந்தர் காலத்தைய ஆக்கத்து ’ (எழுத்துருவமான உத்தியோக அதிகார சின்னம்) ஒன்றை இங்கே காட்டு தல் பொருந்துவதாகும்.
ஆக்கத்து
* அறுமக்குட்டி சாதி முக்குவன் எங்களிடத்திலே மண் முனைப்பகுதிக்குப் பெடியாய் இருக்கக் கெட்டபடியால் அதற்கு நாங்கள் நிர்ணயித்துப் பார்த்துத் தன்னுடைய நல்ல நடபடியைக் கெட்டுத் தெர்மானித்து முன் சொல்லப் பட்ட மண்முனைப் பகுதிக்குப் பெடியாகக் கற்பிக்கிருேம். அது கூடக் கொடுக்கப்பட்டது. தமது தொளிருக்கடுத்த சங்கையும், புரோசனமும், பெரியவர்களுக்கு நடக்கும் பூச்சியமும் பொதுக்கிடைத்திருந்தபடிக்கு இப்பொவும் அந்தப் பிரகாரந்தான் யிதிற் கட்டளைபண்ணுகிருேம். இதிலடங்கிய சகலமானபேரும் இந்த அறுமக்குட்டியைப் பெடியாக அறிந்து உண்டானபடிக்குச் சங்கிக்க வெணும். இதற்கு அடையாளம் திட்டப்படுத்தி வளமையான முத் திரையும் வைத்துக் கையொப்பம் பொட்டுக்கொடுத்தோம். இப்படிக்கு இலங்கைத்தீவிற் கொழும்புக் கோட்டைய்.

Page 77
l()4 மட்டக்களப்புத் தமிழகம்
776ளுடு கார்த்திகை மீ 6ஆந் தீயிலே கையொப்பம் வைத்தது. இமான்வெல்லம்பல்க்.
மேலான சங்கைபோக்த யுத்தம
கத்தணுகிய இலங்கையில் கொலாண் தோர்
山D85『ア「5FT முத்திரை சிவத்த மெஸ்த்தர் இமான்வெல் லொக்கிரியாலே லம்பல்க் அவர்கள் வைத்தது. கட்டளைப்படிக்கு
அதன் கீழ்க் கையொப்பம் வைத்தது யோகான் கொஸ்தன் அங்கலவெக் சக் கடத்தார். சரிவரக் கண்டது
அதிரியானிஸ் யுவானிஸ் பிருன்ஸ் கே. தோலுக்கரித்தது
கணக்கன். * ஆக்கொத்து ' என்ற ஒல்லாந்தச் சொல் ஆக்கத்து என மருவி இன்றும் இங்கே வழங்குவதொன்று. போடி என்ற சொல் இந்த ஆக்கத்தில் * பெடி ' எனத் திரிந்து நிற்பதைக் காணலாம். (தொளிர் - தொழில், புரோ சனம் - பிரயோசனம், சங்கித்தல் - மரியாதை செய்தல், நல்லநடபடி - நன்னடத்தை, சங்கை - மதிப்பு). மட்டக் களப்பில் வழங்கும் புதிர்காவு வசந்தன் பாடலிலும் :
போடியார் வீட்டுக்குப் புதிர்காவியே போருேம் (படம் 6) போடியார் முன்னேபோக முல்லைக்காரன் பின்னே வர, காணியில் விளைந்தநெல்லுக் காவிக்கொண்டு போகிருேம் ?? என்று போடியார் என்ற சொல் நிலக்கிழவனைக் குறிப் பிடுவதாய் வழங்குகின்றது. இச்சொல் பயின்று வழங் கும் நாட்டுப் பாடல்களும் பல உள்ளன.
முல்லை என்பது இடையர் வாழும் காட்டு நிலத்திற் கும், அந்நிலத்து மக்களின் ஒழுகலாற்றுக்கும் வழங்கி வந்த சொல். வயற்செய்கைக்கு வேண்டிய மந்தைகளைப் *பராயரிக்கும்” தொழிற் தலைமையையும், ஆதி நாட்க ளரில் உழவர் தலைவனே இங்கு மேற்கொண்டிருந்தமை யால் அதுபற்றி அவனை “முல்லைக்காரன் ’ என்று

செந்தமிழ்ச் சொல்வளம் "I 05
அழைக்கும் மரபு ஏற்பட்டிருத்தல்கூடும். பராபரிப்பு என்ற சொல் வயல்கள், மந்தைகள் என்பவற்றைப் பாதுகாத் தல் என்னும் பொருளது. இத் தொழிலை மேற்பார்க்கும் அதிகாரி ஒருவர் பராயரிப்பு உடையார் என்ற பெயரால் நியமனம் பெறும் வழக்காறு பண்டைய மரபினதாய் மட்டக்களப்பில் இருந்துள்ளது. வேளாண்மைக்காரருக்கு உணவு கொண்டுவருதலும், வயலிற் குருவிகளை ஒட்டிக் காத்தலும்போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன் * குருவிக்காரன் ’ எனப்படுவான். அவனுக் குச் சிறப்புரிமையாக வயலிலே ‘குருவிமூலை வரவை ? என ஒரு சிறு பகுதி இலவசமாக அளிக்கப்படுதலும் உண்டு. வயற் பரப்பின் சிறு பகுதிகள் தனித்தனி * வரவை’ என்றழைக்கப்படும். வரம்பினுல் எல்லைப் படுத்தப்பட்டது என்று இதற்குப் பொருளாகும். மிகப் பெரிய வரவை * போட்டா ’ என்றும் சிறிய வரவை * கன்னட்டி’ என்றும் அழைக்கப்படுகின்றன. கன் னட்டி - கன்னம் -தி (ஒரத்தில் உள்ளது) என்றதா யிருக்கலாம். கன்னம் என்பது ஒரு ஒரம் அல்லது மூலே யைக் குறிப்பிடும் சொல். ஒவ்வொரு வயலிலும் குறிப் பிட்ட ஒரு பகுதியினே * முத்தெட்டு’ என்று வழங்குவ துண்டு. இது ** முற்றுாட்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல் லின் திரிபு ஆகும். முழு உரிமையாக ஒருவனுக்கு விலை எதுவும் கொள்ளாது அளிக்கப்படும் நிலம் பண்டு முற் றுாட்டு எனப்பட்டது. இன்று மட்டக்களப்பு வயல்களிலே போடியாருக்கென ஒரு பகுதியையும், முல்லைக்காரனுக் கென ஒரு பகுதியையும் உழவர் செய்து, கூலி யெதுவும் கொள்ளாது அவற்றின் முழு விளைவையும் முறையே அவ்விருவருக்கும் அளிக்கும் வழக்கம் உள்ளது. இவற் றிற் போடியாருடைய வயற்பகுதிக்கு ? இலவிசம்’ என் றும் முல்லைக்காரனுடையதற்கு “முல்லேவயல் ’ என்றும் பெயர். ? இலவிசம்’, ‘* முல்லைவயல்’ இரண்டும் சேர்ந்த பகுதியே பண்டையிலிருந்து இங்கு “முத்தெட்டு ’ என் றழைக்கப்படுவதிலிருந்து * முற்றுாட்டு’ என்னும் சொல் லுக்கும் இதற்கும் உள்ள பெருக் தொடர்பு நன்கு புலன கின்றது. வேளாண்மை விளைவித்தலைச் * செய்கை ?? என்று வழங்குதல் மரபாகும்.

Page 78
1 O6 மட்டக்களப்புத் தமிழகம்
வயற் பரப்பு முழுவதும் வட்டை என்றழைக்கப்படும். இது வெட்டை என்ற சொல்லின் திரிபாகும் என்பதை வயலுக்குள்ள “ வெளி’ எனும் பெயரினலும் நாம் துணிந்துகொள்ளலா மெனினும், வட்டை என்பது வட் டம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தே வந்ததென்று கொள் ளுதல் வேண்டும். வட்டமாகவே வயற்பகுதிகள் அமைக் கப்பட்டிருந்தமையை * வட்டை வளைத்தல்’ என்ற வழக் காற்றுத் தொடரும் காட்டும். வயலைக் காவல் செய்வோர் வயற்புறத்தைச் சுற்றி வருவது * வட்டை வளைத்த ’ லென்று அழைக்கப்படுகிறது. ஆற்றுப்படுக்கையின் கரை நெடுகிலேனும் அல்லது ஒரு வயலின் எல்லையைச் சூழ்ந்தே னும் உள்ள மதில்போன்ற பெருவரம்பு ** அடையா வளஞ்சான்’ எனப்படுகின்றது. பண்டைநாளிற் கோயிற் புறப் பெருமதிலே “ அடையவளைந்தான் ’ என்று வழங்கி யிருத்தலினல் அச்சொல்லின் பொருட் தொடர்பும் திரிபு முடையது இது என்று துணியலாகும். இவைபோன்று வழங்கும் வேறு சொற்கள் :
அளை - (சிறிய நீர்க்கால்), தாயளை (அளைகளுக்கு நீர் கொடுக்கும் பேரளை), காலளே, சிற்றளை எனப் பலவகைப் படும். வக்கடை (நீர் செல்லுதற்காக வரம்பில் வெட்டிவிடப் படுவதும், வேண்டும்போது அடைக்கப்படுவதுமான வழி). வங்கு - (வெட்டப்படுவது), அடை- (அடைக்கப்படுவது) இரண்டும் சேர்ந்த ஒரு இடம் “வக்கடை’ ஆகும். இது வைகறை என்ற பழஞ் சொற் போன்ற அமைப்பினது. முறிவு - வெள்ளத்தால் உடைவுற்ற வரம்புகளில் உள்ள ஆழ்ந்த மடு; ஆரப்பற்றை - நீரோடுதற்கென இயற்கையா னமைந்த பெரிய ஓடை , வாய்க்கால் - வயலுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய் ; வடிச்சல் - நீரை வெளி யேற்றும் வடிகால்; கட்டுமை- வரம்பினுTடு (நடுவணதாக) கண்ணுக்குப் புலப்படாது நீர்க்கசிவினல் அமைந்து நீரை வெளியே விடும் சிறு து வாரம். ஆறுதலை - பேராறும் வயலுக்கு நீர் செலுத்தும் பெருவாய்க்காலும் பொருந்து மிடம்; புரன் - செய்கைபண்ணுத தரிசு நிலம் ; நிலை யெடுப்பு - முதல் உழவு; இரட்டிப்பு - இரண்டாம் உழவு; சார் - கலப்பை சென்றவழி; இது உழவுசால் என்று

செந்தமிழ்ச் சொல்வளம் 107
சொல்லப்படுவது. பரம்படித்தல் - மிதித்துச் சேருக்கிய களிBலத்தைச் சமன் செய்தல்; கங்களவு தண்ணிர்இளம் நெற்பயிர் நீருள் மறையத்தக்கதாக (கண்கழுவும் உயரத்துக்குப்) பாய்ச்சப்படும்நீர். யாப்பருவம் கடந்து, குடலேப்பருவம் அடைந்து நெற்பயிர் கதிரீனும். மாவக்கை - அரிந்த ஒரு பிடியளவு நெற்கதிர்த்தொகுதி: மாவக்கை சில சேர்ந்தது உப்பட்டி ; உப்பட்டி சில சேர்க் தது கட்டு; பல நூறு கட்டுக்கதிர் சேர்ந்த போர்க்குவை குடு; கந்து - சிறிய குடு; ஒட்டுத்தாள் - கதிர் அறுக்கப் பட்டு வயலில் மீந்து நிற்கும் பயிரின் அடிப்பாகம் ; தாள் - நெற்பயிரின் கீழ்ப்பகுதி ; “தா(ள்)க்கத்தி’- வேளாண்மை வெட்டும் கூன் கத்தி; வந்தை - நென் முளைகள் தெரிக் தெடுக்கப்பட்டு மீந்து கிடக்கும் முளைக்காத நெல் ; வந்தி (மலடி) போன்றிருப்பதால் இப் பெயர் பெற்றது. மடிஈரம் பட்டுப் பழுப்பூர்ந்து பழுதான நெல், மடி (சோம்பல்) உற்றுத் தொழிற்படாதிருப்பது பற்றிய காரணப் பெயர் இது.
போர் மிதித்தலைச் 8 குடுபோடுதல்’ என்று சொல்லு தல் வழக்கம். சூடுபோடும்போது சூடு தள்ளுதல், சூடு கல்லுதல், சூடுகிளறுதல், திரைவெடுத்தல் என்னும் நுண் பெயர்கொண்ட வேலைகள் பல நடைபெறுகின்றன. வாரிக் காலியின் (மாட்டின்) கால்களினல் மிதிப்புண்டு, நெல் உதிரப்பெற்று, வெறுமையாய் அலேபோற் திரண்டு, மேலே வரும் வைக்கோலை நெல் உதிராத கதிர்களிலிருந்து பிரித்தெடுப்பது திரைவெடுத்தலெனப்படும்.
நெல்லைக் குவித்துப் பதர் நீக்கித் தெரிவு செய்கை யில் வைரப்பொலி (நல்லகெல்), கந்துமுறி (நெல்லின் இரண்டாந் தெரிவு), அரைவயிறன் (பாதியளவு உள்ளிடு கொண்ட நெல்), பதர்க்கடை எனப் பிரிக்கப்படும். பொலி தூற்றுதற்காகப் பயன்படுவதும் வைக்கோலாற் சமைக் ததுமான உயர்ந்த முக்காலிக்கு “ அவுரி’ என்று பெயர். நெல் தூற்றுதலே “ அவுரி திரித்தல் ’ (படம் 7) என்று சொல்லுதல் பண்டைய வழக்கம். இதில் வரும் அவுரி? என்ற சொல் இங்கு வழக்கில் இருத்தலைக் காணலாம். வாரி’ என்னும் பண்டைச் சொல்லே நல்ல விளைச்சலைக்

Page 79
108 மட்டக்களப்புத் தமிழகம்
குறிக்க இன்னும் இங்கு வழங்குகின்றது. சூடு மிதிக்கும் களம் * களவெட்டி அல்லது 8 களவட்டி’ எனப்படும். களத்தைக் கூட்டுதற்குப் பயன்படும் மாறுகள் ** கோலம்’ (நெருக்கமாக மிலாறுகளாற் கட்டப்பட்டது) எனப்படும். பெரிய மிலாறும், பெரிய இடைவெளியும் கொண்டு அமைந்தது 8 கட்டமிலாறு’ ஆகும். சூடு மிதிக்கும்போது பொலிப்பாட்டுப் பாடுதலைக் * குரல்(க்)காட்டுதல்’ என்று வழங்குவர். வேளாண்மை செய்யப்படும் காலத்துப் போடியார் உழவர்தம் உணவுக்காக வாரந்தோறும் நெல் கொடுக்கும் வழக்கம் * படிகொடுத்தல்’ எனப்படும். குடுபோட்டு முடியும்வரை வயலில் அவ்வாருன வகை களிற் செய்த விடுமுதலாக (செலவாக) விளைவிலிருந்து போடியார் பெறவேண்டிய பங்கு ? இலம்பை ’ ஆகும். இது இலக்கு என்ற கருத்திலுள்ளது. காணிக்குரிய குத் தகை * ஆயம்’ எனப்படும். நெல்லை வைக்கோலால் முடிவைக்கும் போர் “ பட்டறை ’ எனப்படுகிறது. இது * பட்டடை ‘ என்ற சொல்லின் திரிபுடையது. பண்டை நாளில் * நெற்கூடு’ என்று வழங்கப்பட்டதும் இதுவே. நெல் அல்லது அரிசியினை உள்ளிடாக வைத்து வைக்கோ லாற் போர்போல் அமைத்துத் தூக்கிச் செல்லும் சிறு * நெற்கூடு “ கோட்டை’’ எனப்படும். உழவர் தம் வயல் வேலை யாவும் முடிந்த பின்னர்ப் போடியார் வீட்டுக்குப் புதிர்க்கோட்டை காவிச் செல்லுதலும் (படம் 6) அவர்க் குப் போடியார் விருந்தளித்துமகிழ்வூட்டுதலும் “கோட்டை யின் தொடர்பான நிகழ்ச்சிகளாம். வயற் காவலுக்காக அமைக்கப்படும் காவலிடங்களும் வகை நோக்கிப் பல் பெயருடையன.
அட்டாளே - மிக உயர்ந்த பரண் ; புரை - உயர்ந்த கால்களின் மேற் பரவிய கம்புகளின் மீது மண்பூசி ஓரளவு நிலையாய் அமைக்கும் வசிப்பிடம் ; பரண் - பதிந்த காவற் படுக்கையிடம் ; சிரும்பி - சிறிய பரண்.
இவைபோக மேலும் உழவர் மொழியான குழுஉக் குறிச் சொற்கள் மிகப் பலவாகும். அவற்றுட் சிலவற்றை இந்நூலின் அறிமுக உரையிற் கண்டோம் (பக். 9-10).

செந்தமிழ்ச் சொல்வளம் 109
மீன் பிடிக்கும் தொழிலாளரிடை வழங்கும் பொதுச் சொற்கள் சிலவற்றையும் இங்குக் காண்போம். தோணி, வள்ளம், கூறைப்பாய் வள்ளம் (சீலையைப் பாயாகக் கட்டி ஓடுவது), ஒட்டங்குத்தி (ஒரே மரத்தில் குடைக் தெடுத்த பெரிய தோணி), மச்சுவாய், உரு என்பன ஒடத்தின் வகைகளாம். அணியம் - தோணியின் முன் புறம் ; புறகம் - பின்புறம் ; தோணியில் கொல்லா இருப் பதற்கு எதிர்ப்பக்கமாக உள்ள விளிம்பு கச்சு எனப்படும். கொல்லா - தோணியுடன் கட்டப்படும் மிதவைக்கட்டை, ஏரா - தோணியின் கீழ்ப்புறம். விசாள் - கொல்லாவை யும் தோணியையும் இக்ணக்கும் கம்புகள். கம்பை, தீரை என்பன தோணியின் விளிம்பைச் சுற்றி அடிக்கப்படும் நீளமான சட்டம். வாரி - ஆட்கள் இருக்கும் பலகை. சவள் - தோணியைச் செலுத்தும் துடுப்பு ; தண்டு - தோணியை விரைந்தோட்டப் பயன்படும் பெரியதுழா, தண்டினல் தோணி செலுத்துதலே ° வலித்தல் ’ என்றும், சவளிற்ை செலுத்துதலைத் தொடுத்தல் ’ என்றும் வழங்கு வர். பண் - வலை, அளி - வலையோரம், அளிக்கட்டுதல் - வலைவிளிம்பை மடித்துக்கட்டுதல். அத்தாங்கு - ஒரடி முதல் மூன்றடிவரை குறுக்களவுள்ளதும் மட்டை கட்டப் பட்ட வட்டமான வாயை உட்ையதுமான ஒரு மீன்பிடி வலைக்கருவி; இது ஆழம் குறைந்த நீருள் மீன் பிடிக்கப் பயன்படுவது. அத்தாங்கினல் மீன் பிடித்தலே 8 வடித்த லென்று சொல்வர். பெரிய அத்தாங்கு ‘ கொண்டடி ?? எனப்படும். சிறுதடிகளால் வட்டமாய் வேலிபோல் வாய் குவிய நிரைத்து வரிந்து கட்டப்பட்டுள்ள ஒரு மீன்பிடி கருவி * கரப்பு’ என வழங்கப்படும். இக் கருவியினல் மீன் பிடித்தலைக் “கரப்புக் குத்துதல்’ என்பர். கரப்பு என்பது மறித்தல், மறைத்தல் என்ற கருத்தில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல். மேலும் மண்டா , முள் அம்பு, தூண்டில், எறிகயிறு என்பன வேறு வேருண மீன்பிடி கருவிகளின் பெயர்களாகும். சூழியம், * கம்பான் ’, * ஆஞ்சான் ’ என்னும் சொற்கள் தோணி, கூறைப் பாய் வள்ளம் என்பவற்றிற் கட்டப்படும் கயிறுகளையும், * பரமன் ' என்பது அவற்றிற் கட்டப்படும் கம்புகளையும் குறிக்கும் சொற்களாம்.

Page 80
1 1 0 . மட்டக்களப்புத் தமிழகம்
பெரு நீர்நிலைகளிலே எழும்பும் அலைமேடுகளை * உவட்டு’ என்பர். அவை கரையில் வந்து அலையாகி மடியுமிடம் * மடங்கு ’ ஆகும். மடங்கு என்னும் சொல் பெரியநூலையும் குறிப்பது. இராக்காலத்தில் மட்டக்களப்பு வாவி நீரினுட் பரந்து காணப்படும் ஒருவித ஒளி * கவிர்’ எனப்படும். நீரின் உப்புத்தன்மை முறுகி இருக்கும்போது அதிற் செறிந்துள்ள தீயதை (Phosphorus) ஒளிகாலுதலே இக் கவிர்’ எனப்படுவதாகும். ஆழமான நீர்ப்பகுதியில் இருக்கும் மீன்களையும் இரவில் இவ்வொளி வலைஞருக்குக் காட்டிக்கொடுத்து உதவி செய்கிறது.
வலைசெய்தற்கான நூல் பதஞ் செய்யும் இடத்தினரின் காவில் இருந்து பத்தவளையம் (நூல் சுற்றுதற்காகப் பிரம்பினலாக்கப்பட்ட வளையம்), திருவட்டம் (நூல் இழை எடுக்கப் பயன்படும் கருவி), இழை (நூல்), கைவிளா (ஒருவகைச் சுற்றுநூல்), வடிகதிர் (நூல் முறுக்கும் கருவி), நூல்தீற்றுதல் (நூலுக்குப் பசைபோடல்), துவர்ப் போடல் (நீருள் அவியப்போடல்), கத்தை (சணற் பஞ்சு) முதலான சொற்கள் வழங்குவதைக் காணலாம். இவ்வாறே மற்றைய தொழிற் களங்களிலும் செந்தமிழ்ச் சொற்கள் பலவற்றின் சிறந்த நடையினை நாம் காண்டல் கூடும். அவைகளையும் அவற்றின் மரூஉச்சொற்களையும் காலம் வாய்க்கும்போது தொகுத்துக் காண்போம்.
தொழிற்களம், வேறு சூழ்நிலைகள், பழக்தொடர் வழக்கு முதலியவற்றில் மட்டுமன்றி, ஒலிமாற்றம், எழுத் துத் திரிபு முதலான மொழி இயல் (Linguistics) நோக்கி லும் மட்டக்களப்புத் தமிழகச் சொல்வளத் துறையினுள் அறிஞர் நுழைவாராயின் தம் கருத்துக்கினிய சிறந்த விருந்தினை அங்கும் பெற்று மகிழ்வுகொள்ளுவர். அவ் வாறு மொழிஇயல் நோக்கில் 5ாம் இத் தமிழகத்துக் காணக்கூடிய சிறப்புகளோ மிகப் பல என்னலாம். தனிப் பட்ட ஆராய்ச்சிக்குரிய பெரும் பொருளாய்ப் பரந்து கிடக்கும் அத்துறையில் நின்று இரண்டொரு உதாரணங் களை மட்டும் இங்குக் கண்டு மேற்செல்லுதல் சாலும் என்று எண்ணுகின்றேன். இங்குள்ள மொழிநடை வழக்

செந்தமிழ்ச் சொல்வளம் I 11
கிலே *ன கரமும், 8 றகரமும் தொடர்ந்துள்ள சொற் கள் முறையே f ன கர, டகரமாக மாறி ஒன்று - ஒண்டு ; கன்று - கண்டு; கொன்று - கொண்டு ; பன்றி - பண்டி (பன்றி’ என்ற சொல் தமிழ்நாட்டிலே பொது வாக * பன்னி’ என, றகரம் தன்முன்னுள்ள னகர மாக மாறியே ஒலிக்கும்) ; வென்று - வெண்டு என்பன வாக நடக்கக் காணலாம். வைத்த - வச்ச, வெச்ச ; பச் சைப் பொய் - பச்சப் பொய் ; பிள்ளை - புள்ள , ஐம்பது - அம்பது என்பவற்றில் ஐகாரம் அகரமாக மாற்றம் பெற்று வழங்குகின்றது. வைத்த - வச்ச, வெச்ச என்பவற்றில் தகரஒலி சகரமாக மாற்றம்பெற்று கடப்பதையும், வைத்தவெச்ச என்பதில் மேலும் ஐகாரம் எகரமாக மாறுவதையும் காண்கின்ருேம். அரிசி - எரிசி ; அரிக்குமில (அரிக்கன் சட்டி)- எரிக்குமில (இச்சொல் அத்திமில என்றும் மாற்றம் பெற்று வழங்கும்) ; மன்னன் - மென்னன் ; அலங்கார ரூபன் - எலங்காரரூபன் ; வட்டை - வெட்டை என்பன வாக மொழிமுதல் அகரம், எகரமாதலும் சில கிராமங் களில் வழக்காருக உள்ளது.
முடிந்தது - முடிஞ்சது; விடிந்தது - விடிஞ்சது என்ப வற்றில் *ந்த ’, ‘ஞ்ச ' ஆகி நடக்கக் காண்கின்ருேம். பிள்ளை - புள்ள என்பதில் ஐகாரம் * அகரமாயிருத்த லோடு மொழிமுதலில் உள்ள இ’ கரம் 8 உ'கரமாகி நிற்பதையும் காணலாகும். ? ஏன் ’ என்னும் விகுதி 8 அன் ’ ஆக மாறி ஒலித்தல் ஈழநாட்டுத் தமிழ்வழக்கிலே பொது வான ஒன்ருயினும், மட்டக்களப்பாரது மொழியிடை இம்மாற்றம் மிகுந்து பயிலுதல் வழக்காயுள்ளது. வந் தேன் - வந்தன் ; வருவேன் - வருவன் ; தந்தேன் - தந் தன் ; அடித்தேன் - அடிச்சன் ; பிடித்தேன் - பிடிச்சன்; கதைத்தேன்- கதைச்சன் ; படிப்பேன் - படிப்பன் ; படிக் கிறேன் - படிக்கிறன் என்பன இதற்குச் சில உதாரணங்க ளாகும். இவ்விகுதி மாற்றம் மூன்று காலங்களிலும் மாருது வருவது. சில நிகழ்காலச் சொற்கள், இவ்வாறன விகுதி மாற்றத்தோடு மொழிமுதல் நீண்டும், இடைநிலை திரிந்தும், தருகிறேன் -தாறன் ; வருகிறேன்-வாறன் :

Page 81
12 . மட்டக்களப்புத் தமிழகம்
போகிறேன் - போறன் என்பனவாக வழங்குகின்றன. நிகழ்காலச் சொற்கள் f கின்று இடைநிலையினே ஏற்கா மல், கிறு இடைநிலையினையே ஏற்று ( நடக்கின்ருன்’ என்று வழங்குதல் இன்றி நடக்கிருன்’ என்பது போலவே) பெரும்பாலும் இங்கு வழங்கும்.
ஒன்பது - ஒம்பது என்று f ன் ம் ஆதலும் , ஐம் பது - அன்பது என ம்’ ‘ன்’ ஆதலும் உண்டு. நாற்பது - நாப்பது ; வெட்கம் - வெக்கம் ; நிற்கிருன் - நிக்கிருன் ; என்பவற்றில் எழுத்துக்கள் ஓரினமாதலே (ASSimilation) அறியலாகும். சிவப்பு ’ என்ற சொல் சில இடங்களில் * சிகப்பு’ என ° வ ’, ‘க ’ ஆகி வழங்குர். அயறு - அசறு ; பயறு - பசறு ; வியாதி - விசாதி என ய கரம் சகரமாத லும், சில இடங்களில் யோசின்ன - ரோசினே என்று யகரம் ரகரமாதலும் உண்டு. கேற்று-ருேத்து; புற்று - புத்து; ஊற்று - ஊத்து ; காற்று - காதது என றகரம் தகரமாக மாறும் வழக்கு இக்காட்டிலே நிறையப் பயிலுவதாகும். வாழைப்பழம் - வாளேப்பளம் , தமிழன் - தமிளன் ; மழை - மளே என்று ழகர ஒலி ளகரமாகவே ஒலிக்கப்பெறல் இங்கு மிகுதியும் காணப்படுவது. மண் - மண்ணு; பொன் - பொன்னு என மெல்லின மெய்யீறும், கல் - கல்லு , நெல் - நெல்லு என இடையின மெய்யீறும் குற்று கரம் ஏற்று மொழிவழக்கில் இயலுதல் இங்குமுள்ள தாகும். சேவல் - சாவல் ; பேடு - போடு என்னும் சொற் களில் ஏகார உயிர் முறையே ஆ’, ‘ஓ’ என மாற்றம் பெற்று நடக்கின்றது. குரவை - குலவை ; சரவை - சலவை என்னும் இடங்களில் ரகரம் லகரமாக நடக்கும் வழக் காறு அறியப்படுகின்றது. خ
இவ்வாருன மொழி இயல் நோக்கத்துக்கும், பழந் தொடர்பு, இலக்கிய ஆட்சி முதலான சிறப்புகளை அறி தற்கும் பயன்படலாம் என்று கருதிப் பலதுறைகளிலும் உள்ள பெரும்பான்மையான பொதுவழக்காற்றுச் சொற் களைமட்டும் முடிந்தமட்டில் இங்கு அகரவரிசைப்படுத்திக் காட்டுகின்றேன் :

செந்தமிழ்ச் சொல்வளம் 3
அங்கால - (அங்கு+ஆல்)
,அங்கு ۔۔سمبر ◈ அங்கிட்டு - リ) பேத்தில் அவடத்த - (அ+ இடத்தில்) கப்பக்கம் அன்ன, அயின - அங்ங்னே அ9தபடக்கம்
இஞ்சால - (இங்கு + ஆல்) இந்தப் இஞ்சிற்று - (இங்கு + இட்டு) : இன்ன, இயின, ஈன, (இங்ங்ண்) இங்ங்னே "
அசவு - விறகு, பாய் முதலிய பொருள்களின் அடுக்காய், ஊஞ்சல் போன்று தொங்குவது. தொங்கி அசைவ தால் அசைவு எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
அசறு - ஆறிய புண்ணில் உள்ள காய்ந்து தடித்த தோற் படை, மாலை அல்லது அதிகாலை மூன்று மணிநேரம் என்ற பொருளில் இங்குள்ள சோனக மக்களிடை வழங்கும் அரபுச் சொல்லும் ஆகும். “ ஆருயம் வெள்ளி அசருலே சாயுமட்டும் ’ -என்னும் நாட்டுப் பாடலில் * அசறு’ என்பது அதிகாலை நேரத்தைக் குறித்தது. அசமதாகம் :- ஓமம், அசுப்பு :- நடமாட்டம்; இக்கருத்தில் சிலாவினை, பரு
மாறுதல் என்னும் சொற்களும் வழங்குவ. அடுக்குப்படுத்துதல் :- ஒன்றைச் செய்தற்கு வேண்டிய
ஏற்பாடுகளைச் செய்தல். அடுக்குப்பார்த்தல் :- நாடகம் முதலியவற்றை ஒத்திகை
பார்த்தல். அடைக்கலச்ச்ல்லி - நுணல் என்னும் பெரும் தவளை, போரடும் இடங்களில் * பெண் ' என்ற கருத்தி லும் குழுஉக்குறியாக இச் சொல் வழங்கும். அட்டாதுப்டி :- துட்டத்தனமான குழப்படி, அட்டுவம் :- மரம், விறகு என்பவற்றை அடுக்கும் பரண். வீட்டுள் மச்சுப்போலப் பரவிக் கட்டப்படும் மேலிட மும் இப்பெயர் பெறும்.
մ) - 8

Page 82
114 மட்டக்களப்புத் தமிழகம்
அண்டைபோடல் - கிழிந்த சீலை, உடைந்த பாத்திரம் என்பவற்றிற்குத் துண்டுபோட்டு ஓட்டையடைத்தல். அண்டச் செய்வதெனப் பொருள். அதப்பியம் :- மறைத்துச் சொல்லவேண்டிய சொல் ; சபைக்கு ஏற்காத சொல்லெனக் கருத்துடையது. * அசப்பியம்’ என்ற சங்கதச் சொல்லின் திரிபு. அதியாகுதியா நேரம் :- கடும் வெயிலெறிக்கும் நேரம். அத்தக்கூலி - நாட்கூலி (அன்று + ஐ+கூலி), அற்றைக்
கூலி என்பதன் திரிபு. அத்திமடக்கு :- ஒருவகைச் சிறு சட்டி. அத்திமில - அரிசியை அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி. இதனை அரிக்குமில, அரிக் கன்சட்டி என்றும் சொல்வர். அந்துபோச்சி :- அறுந்துபோயிற்று என்பதன் திரிபு. இக் கருத்தினைப் * பிஞ்சுபோயிற்று ’ என்றும் சொல்லு தல் வழக்காறு. அந்தை - வேலியின் ஒருபகுதி. நில எல்லேயின் அந்தத் தில் இடப்படுவதுபற்றி இப்பெயர் பெற்றிருக்கலாம். அப்புதல் :- பூசுதல், தடவுதல், ஒட்டுதல். அமசடக்கு - செய்திகளை இரகசியமாக வைத்திருத்
தல். இக் குணமுடையோரை * அம்மமுண்டி’ என்றழைப்பர். அம்மாச்சி :- மாமா ; அம்மாவின் உடன்பிறந்த ஆண்
என்று பொருள். (பெத்தாச்சி, அண்ணுச்சி, அப்புச்சி என்று முறைப்பெயர்கள் சில, மரியாதைப் பொருளில் இவ்வாறு ‘சி’ விகுதிபெற்று வழங்குவ, அம்மான்-சி.) அரட்டுதல் - நீரை இளஞ்சூடாக்கல் : நித்திரை செய் வோரை மெல்ல எழுப்புதலுக்கும் இப்பெயருண்டு. அரிச்சாணியம் :- தொந்தரவு. அருக்குதல் :- தயங்குதல். அரையாப்பு :- பவுந்திரம் ; தொடையும் இடுப்பும் முன்
புறத்தில் பொருந்துமிடம்.

செந்தமிழ்ச் சொல்வளம் 115
அலசுவாரக்கதை:- மற்றையோர்களைப் பற்றியதும் அவசிய
மற்றதுமான பேச்சு.
அலவரை :- எல்லைப்புறத்தில் உள்ள தரிசுநிலப்பகுதி. செய்கைபண்ணப்படும் நிலவரைக்கு (எல்லே வரம் புக்கு) வெளியே அலந்து (பயனற்று) கிடப்பது என்று பொருள்.
அலுவல் :- தொழில், காரியம்.
அவுரி - போர்க்களத்தில், ஏறி நின்று பொலி தூற்ற உத
வும் முக்காலி (படம் 7).
அளைதல் - கைவிரல் பலவற்றல் குழப்புதல், தொடுதல்.
அறுதோசி :- குற்றம் அற்றவன். குற்றம் உடைய ஒருவனே அதற்குரிய எதிர்ச்சொல்லால் இவ்வாறு அழைத்தல் போன்று * நாசமற்றுப்போ’ என்பது முதலான பல மங்கல வழக்குத் தொடர்கள் இங்குள்ளன.
அறுத்தாப்பாற்கிழங்கு - உருளைக்கிழங்கு ; இது ஒல் லாந்தரது மொழிவழக்கின் தொடர்பினுற் கிடைத்த புதுச்சொல்.
ஆக்கின :- தொல்லை; தண்டனை.
ஆத்தாது :- இயலாது; இது ஆற்ருது என்ற சொல்லின்
சிதைவு.
ஆணம் :- சொதி; தேங்காய்ப்பாலினே முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் கீர்த்தன்மையான ஒரு கறி; சாப்பிடும்போது கடைசியாக * இரசம்’ என்று மற் றைய இடங்களில் வழங்கப்படுவதுபோல இடம் பெறுவது.
ஆண்டார் :- சந்திரன் ; (இரவினை) ஆளுபவ்ர் என்பது
பொருளாகும்.
ஆங்தல் - பறித்தல், பிடுங்குதல்; இது ? தெரிந்தெடுத்
தல்’ என்ற கருத்தினை உடைய சொல்.
ஆல்வாடுதல் :- இளம் வெயிலிற் காய்தல்; இலேசாக
வாடுதல்.

Page 83
1 16 மட்டக்களப்புத் தமிழகம்
ஆவலாதி - ஊர்க்கதை, வம்பளத்தல், ஆவாசம் :- ஆறுதல். இக்கட்டு :- துன்பம். இட்டறுதி - (இட்ட+அறுதி) கடைசிகாலம். இராவு - கடந்த இரவு. இருட்டுப்பட :- மாலைநேரம் ; இருள் உண்டாகும் நேரம்
என்று பொருள்படும். இருட்டோட :- காலைநேரம் ; இருள் ஒடும்நேரம் என்று
பொருள்படும். இறடுதல் :- இடறுதல் என்பதன் ஒலிமாற்றம். இறுக்கி - கெட்டியாக. ஈர்ப்புவைத்தல் :- (புண்ணில்) சிறுபுழு உண்டாதல். ஈர் :- பேன் முட்டை. ஈவுவிடல் :- இடைவெளி உண்டாகுதல். ஈறல் - பெரிய காடு ; மாருத மனக்கவலை.
உக்குதல் :- (உட்குதல்) மனமாரப் பயப்படுதல். ஒன்றை
நினைந்து நினைந்து கவலைப்படுதல்.
உசத்தி - உயரம், பெருமை. உசுப்பிராணி :- உயிர்ப்பிராணி. உசுப்பு :- உயிர்ப்பு ; பெலன்.
உசும்புதல் :- அசைதல்; இதன் பிறவினை * உசுப்புதல்
என்றும் உலுப்புதல் என்றும் வழங்கும்.
உச்சாணி - ஆக உயர்ந்த தலைப்பு ; உயரத்தின் இறுதி
எல்லை.
உச்சாப்பு :- உற்சாகம்.
உடுகு - உடுக்கு என்னும் சிறுபறை, சடங்கு வேளைக ளிற் பூசாரியினல் ஒருபக்கம் மட்டும் அடிக்கப்படுவது.
உணத்துதல் :- காயவைத்தல் அல்லது தலையை ஈரம் துடைத்தல். இது உணக்குதல் என்னும் பழஞ்

செந்தமிழ்ச் சொல்வளம் • 11 7
சொல்லின் திரிபாகும். அன்றி, உலர்த்துதல் என்னும் சொல்லின் தொடர்பினது என்றும் கொள்ளலாம்.
உண்டெண்ண :- சற்று அதிகமாக (உண்டு + என்ன.) உதப்பழம் - நன்கு கனியாத காய்ப்பழம். உதப்பழ
மாதற்குக் கொஞ்சம் முந்திய பருவம் ‘கருங்காய் எனப்படும். உத்தரிப்பு :- துன்பம் அனுபவித்தல் ; நீங்காத நெடுந்
துன்பம். உமல் :- பன்னுற் செய்யப்பட்டதும், வாய் குவிந்து,
அடிப்புறம் விரிந்துள்ளதுமான கூடை. உம்பாரம் :- மிக அதிகம். இது அம்பாரம் என்றும் சொல்
லப்படும். உரஞ்சுதல் :- தனகுதல், சருவுதல். உலுவாரிசி :- வெந்தயம். உள்ள நாளும் :- ஒவ்வொரு நாளும். உள்ளுடு - வீட்டின் நடுஅறை. (உள்-வீடு). உழலை :- வேலிக் கடவையின் குறுக்கில் இடப்படும் சுழல்தடி; * உழலை பாய்ந்துலாம் முன்றிற் பள்ளி யும் ’ என்னும் செய்யுளடியுள் உள்ளதுபோல. (உ)ருேதை :- உருளை. உன்னிப்பு :- முனைப்பு, ஊக்கங்கொள்ளுதல். ஊருற - ஊர்ந்து செல்லுகின்ற, ஊத்து - ஊற்று. ஊறல் - குடிநீர் ; இதனைக் கருக்கல்’ என்றும் வழங்கு வர். மருந்து மூலிகைகள் ஊறவைக்கப்பட்ட கொதி நீர் ஊறல்’ என்றழைக்கப்படும். எங்கட - எங்களுடையது. எங்கிட்டு :- எந்தப்பக்கம்.
எண்படுதல் 円 அகப்படுதல். இது திரிந்து “ அம்படுதல் எம்பிடுதல் என்றும் வழங்கப்பெறும்.

Page 84
118 மட்டக்களப்புத் தமிழகம்
எத்துதல் - ஏமாற்றுதல்.
எம்பிட்டு :- எவ்வளவு.
எலுகமானம் :- எல்லை; இது எலுகை -- மானம் என்ற
இரு சொற்களாலானது.
எலுவா - அல்லவா?
எழுவான் :- கிழக்கு ; சூரியன் எழுந்திசை. வானிற்றுப் பெயராய் அமைந்த சொல். சூரியன் படும் திசை * படுவான் ’ என்று சொல்லப்படும்.
ஏகாலி - வண்ணன்.
ஏத்தாப்பு :- பெண்கள் மார்பை மூடியணியும் மேலாடை.
ஏத்தாலே - இடைக் காலத்துச் செய்யப் படும்
வேளாண்மை. - .
ஏமலாந்தி, }:- ஏமாந்தவன். பாத்திரம் போன்ற
ஏனவாயன் திறந்த வாயோடு எதையும் கேட்டுக் கொண்டிருப்பவன் ஆதலால் ஏமாளி இவ்வாறு கூறப்படுவான் போலும்.
ஏருவப்படல் :- ஒன்றைச் செய்வதாக ஏற்றுக்கொள்
ளுதல்.
ஏலா :- இயலாது என்பதன் திரிபு.
ஏலாமை :- நோய் ; உடலின் இயலாமையை இது குறிப்
பிடுவதாகும்.
ஏனம் - பாத்திரம் , * ஒலைக்கலம்’ என்று திவாகர
நிகண்டு கூறும். セ・ー
உவனியம் - கறி ; * சோற்றுக்கு இன்று ஒரு உவனிய மும் இல்லையே’ என்பதுபோல் வழக்கில் இடம் பெறும். (சோற்றுடன்) சேர்த்து உண்பது என்று பொருள்.
ஒகுத்து :- தருணம், நேரம். இச்சொல் திரிந்து ஊத்து
என்றும் வழங்கும்.

செந்தமிழ்ச் சொல்வளம் 119
ஒசில் :- இச்சொல் சந்தர்ப்பத்தை ஒட்டி அழகு, அழ கின்மை ஆகிய இரண்டையும் குறிப்பது. இது * ஒயில் ’ என்பதன் திரிபு ஆகும். ? ஒயில் ’ அழகு (திருப்புகழ் 1, 58) இச்சொல் அலங்கோலத்தைக் குறிகுக்கும்போது வஞ்சப் புகழ்ச்சியாவது. இங்கு நடைமுறையிலே, புகழ்வதுபோல் இகழ்தல் ஆகிய கருத்திலேயே வழங்குகின்றது. -
ஒஞ்சுதல் :- தயங்குதல். ஒடுங்கா - ஒடுக்கமான இடம்.
ஒட்டு போல என்னும் உவம உருபுப்பொரு
உட்டு :- ளில் இவை வழங்குவ. வழக்கிலே
ஆட்டம் * பொன் உட்டுத் தெரியுது ’ என்ருல் பொன் போன்று தெரிகிறது என்று பொருளாகும்.
ஒத்தாப்பு :- தாழ்வார வீடு. ஒத்தி - மற்றவரைச் சார்ந்து வாழ்தல்; ° உதைத்து விட்டு’ என்ற இறந்தகால வினையெச்சப் பொருளி லும் வரும் (ஒத்திப்போட்டான் - உதைத்துவிட்டான்). * ஒற்றி’ என்னும் சொல்லின் திரிபு இது. இதே தமிழ்ச்சொல்லை இலங்கை அரசாங்க நெற்காணிச் சட்டத்தில் ஆங்கிலமொழியிலும் அப்படியே ஏற்று (otti) வழங்குகின்ருர்கள். இன்னெருவரிடம் தான் வாங்கிய கடனே வட்டியில்லாமல் திருப்பிக் கொடுக் கும்வரை தன் வயலைக் கடன் தந்தவர் செய்து பயன் இவ்விடத்தில் கொள்ளுமாறு கொடுப்பது ஒத்தி எனப்படும். ஒத்திக்குக் கொடுத்தல் - இவ்வாறு தன் வயலை மற்றவருக்குக் கொடுத்தல். ஒய்யாரம்:- எழில், அழகு. ஒல்லி - தேரை ’ என்னும் நோய் பிடித்த தேங்காய்; யானை என்னும் நோய்பிடித்த விளாங்காய்போல, இது 8 பிச்சி’ என்ற சொல்லாலும் குறிப்பிடப்படும். இலேசாகத் தேரைமேய்ந்த தேங்காயை 88 நிலாப் பார்த்த காய்’ என்பதும் உண்டு. பிச்சித் தேங்காய்,

Page 85
120 மட்டக்களப்புத் தமிழகம்
ஒல்லித் தேங்காய், தேரைமேய்ந்தகாய், நிலாப்பார்த்த காய் என்ற சொற்கள் முறையே தேங்காயின் உள்ளிடற்ற தன்மையின் படிமுறையே வழங்குவன. ஒளி:- மறைவு; ஒளித்திருந்து மிருகங்களைக் கொல்லு தற்காக மரங்களின் மேலும் மடுக்களினுள்ளும் அமைந்த மறைவிடம். ஒளுங்கை - சிறிய தெரு ; கிராம மக்களெல்லாராலும் மனமொத்து ஒழுங்காக விடப்பட்டது என்ற கருத் தில் அமைந்த சொல் இது. ஒளும்பு - எழும்பு என்பதன் சிதைவு. ஒள்ளுப்பம் :- கொஞ்சம், எள்ளுப்போல. ஒட்பம்’
என்ற பழஞ் சொல்லின் திரிபு. ஒறுவாய் - வாயுடைந்த பாத்திரம் ; ஒறுத்த (குறைந்த)
வாய் என்று பொருள். ஒசி :- இலவசம். ஓர்மை :- துணிவு. கக்கம் :- ஒக்கலை, இடுப்பின் பக்கம். கக்கிசம் :- பெருங்கவலை ; இது 88 கவலை’ என்ற சொல் லோடு சேர்ந்து ? கவலை கக்கிசம் ’ என அடுக்குத் தொடர் ஆதலும் உண்டு. கசிதல் :- ஊறுதல், பொசிதல். கச்சை :- கோவணம். கஞ்சல் :- குப்பை அல்லது அழுக்கு; ஒழுக்கக்கேடு உடையவனையும் இச்சொல்லாற் குறிப்பர். * கந்தல் ? என்ற சொல் இவ்வாறு மாறிற்று. கடவல் தெருவாசல்; கடந்து செல்லப்படுவதால் இப்
பெயர் பெற்றது. கடைக்குட்டி - ஆக இளையபிள்ளை. கட்டாடி - வண்ணன். கட்டாடியார் - பூசாரி, அம்மன்கோவில்களின் பூசகரே பெரும்பாலும் இச்சொல்லாற் குறிக்கப்படுவர்.

செந்தமிழ்ச் சொல்வளம் s 121
கட்டாது :- முடியாது ; போதாது. கட்டுச் சொல்லுதல் :- தெய்வ ஆவேசங்கொண்டோர் கூறும் வார்த்தை. இது சொல்பவளைப் பண்டைய மர பில் * கட்டுவிச்சி’ என்று கூறுவர். தெய்வ ஆவேசங் கொள்ளுதலே * உருவேறுதல் ’ அல்லது “ சன்னதம் கொள்ளுதல் ’ என்று இங்குக் குறிப்பிடல் வழக்கு. கட்டிறம்பூச்சி :- கட்டெறும்பு. கடு + எறும்பு-கட்டிறம் பூச்சி ஆதல் போலவே சிறு+எறும்பு-சித்திரம் பூச்சி ஆதல் வழக்கு. கணகாட்டு :- கரைச்சல், இது ஒரு சிங்களச் சொல்
என்பர். கணத்தை - சேனைப் பயிர் செய்து கைவிட்ட நிலத்தி
லுண்டாகும் சிறு பற்றைக்காடு. கண்ணயர்தல் :- சிறு உறக்கம் கொள்ளுதல். அறிதுயில் எனப்படுவது. இதுவே உள்ளம் உறங்காது கண், மாத்திரம் அயர்ந்து மூடிப்படுத்தல். கதியால் :- (கதி + கால்) கூரிய அடியை உடையதாக
வெட்டப்பட்ட காட்டுக்கம்பு. கதிர்வாங்குதல் :- கதிரீனல். கொல்லை கதிர்வாங்கியீன
என்ற கலித்தொகையில் உள்ளதுபோல வழங்குவது. கத்தறை :- சந்ததி, கோத்திரம். இச்சொல் * கத்தரை ? என்பதன் திரிபு. இது 88 வறுகை ’ என்ற சொல்லா லும் குறிக்கப்படும். கந்தப்பார்த்தல் :- துப்புரவாக்குதல் (கந்தல்+பார்த்தல்). கந்தலை வேருக்குதல் ; கந்தல் என்பதற்கு கழிவு என்று இங்குப் பொருள். கந்தறுத்தல் :- முடிவாக்குதல், ஆதாரமில்லாமற் பண்ணு
* தல். கந்து - பற்றுக்கோடு ; ஆதாரம். கப்பு :- கவர்த்ததூண், கவருள்ள கம்பு ; கவர்வு என்ற
சொல்லின் திரிபு.

Page 86
122 மட்டக்களப்புத் தமிழகம்
கப்புகன் :- மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் சைவக் குருக்கள். கதிர்காமத்தில் வழங்கும் கபபுருளை ’ என்பது போன்ற சொல். * கற்பகன்’ என்பதன் திரிபா யிருக்கலாம். தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் கற்பக தருப் போன்றவன். கப்புகன் தோன்றும் மரபு * கப்புகக்குடி’ எனப்படும்.
கமம் :- வேளாண்மைச் செய்கை , வயல்.
கம்மாலை :- கொல்லர், கம்மாளர், தச்சர் முதலியோரது தொழிற்சாலை. கம்மசாலை என்பதன் திரிபு. பட்டறை எனவும் இது வழங்கப்பெறும்.
கம்மாளர் :- தட்டார் ; கம்மியர் என்பதன் திரிபு.
கயட்டம் :- கஷ்டம் என்ற சங்கதச் சொல்லின் திரிபு;
துனப0.
கரட்டி :- கரடு (சுண்ணும்புக் கரட்டி - காய்ந்த சுண்
ணும்பு).
கரப்பு - மீன் பிடிக்கும் ஒரு பொறி. காய்ந்த மெல்லிய கம்புகளால், வளைந்தவேலிபோல் வாய்குவித்து, அடிவிரித்துக் கட்டி அமைக்கப்படுவது. கரப்புப் போன்ற வடிவினதாக உள்ள கூத்து உடுப்பு ஒன்று * கரப்புடுப்பு’ என வழங்கப்பெறும். கருக்கட்டை :- முட்கம்பிக்காக வேலியில் நாட்டும் கட்டை
கள் ; கரு - முள். கருக்கல் - மிளகை வறுத்து நீரிலவித்த குடிநீர் ; மாலை
நேரம். ヘ” கருக்கு :- வாளின் பல்போன்று வரிசையான கூரிய முள். பனங்கருக்கு - பனமட்டையின் வாள் போன்ற முள். கருமாரி - பிள்ளை சிரசாதற்குரிய கடிய பிரசவ நோக்காடு; நெருக்கடியான நேரத்துக்கும் சிலபோது இச்சொல் வழங்கப்பெறும். கரைச்சல் :- தொந்தரவு, தொல்லை.

செந்தமிழ்ச் சொல்வளம் 123 கலத்தில்போடுதல் :- திருமண நிகழ்ச்சியின்போது மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
கலம்பக்கயிறு :- தென்னம் தும்பினல் செய்த கயிறு.
கதம்பைக்கயிறு என்பதன் திரிபு. கலவாங்கட்டி - கலவோட்டின் சிறு துண்டு. இது கள
வட்டாங்கட்டி ' என்றும் சொல்லப்படும். கல்லு :- தோண்டு, கிண்டு. கவடா - பண்டகசாலை; சிறப்பாகக் கோவில்களில்
மட்டும் வழங்கும் சொல். சிங்களச் சொல். கவடாக்காரன் - பண்டகசாலையின் பொறுப்பாளி. கவுத்தன் - பூசகன் ; கவுத்தன்குடி’ என்னும் வேளாளர் குடித் தலைவன். கார்காத்த வேளாளர் என்பது போன்று இங்கு மதிப்பிற்குரிய ஒரு வேளாண் குடிப் பிரிவு கவுத்தன்குடி எனப்படும். கவையில்லை :- காரியமில்லை; கட்டாயம் பொருட்படுத்த வேண்டாத ஒன்றை இவ்வாறு சொல்லி, ஏற்றுக் கொள்ளுதல் மரபு. களப்பு - ஆழமற்ற நீர்நிலை. களம் உடையது களப்பு. களம்:- குடுபோடுமிடம். ஆழமற்ற நீர்நிலைப் பரப்பு. களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது). களிக்கோல் :- நாயைக் கட்டும் குறுந்தடி, கழி, கோல்
என்ற இரு சொற்களாலானது.
கள்ளறை - வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை. அலுமாரி பை என்பவற்றில் அவ்வாறுள்ள பகுதி கள்ளத்தட்டு எனப்பெறும். கழிசறை - பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடைய
வன். கழிப்புச் செய்தல் :- வேள்வி செய்து பேயோட்டுதல். கறுகும்மென்றுவரல் :- மழைமேகம் கடுமையாக இருண்டு
வரல், கிறக்குறிப்புச்சொல்,

Page 87
124 மட்டக்களப்புத் தமிழகம்
கறுவித்தல் - பழிவாங்கக் காத்திருத்தல். * கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல. காத்தாடி - பாரங்களைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இது * காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி). காயம் - பிள்ளைப்பெற்ற காலத்தில் பெண்கள் உண்ணு மொரு மருந்து. * குறத்தி பிள்ளைப்பெறக் குறவன் காயம் தின்னுதல்போல’ என்ருெரு பழமொழி உண்டு. உடம்பில் உண்டாகும் புண்ணைக் குறிப்பது பொது. காரண காட்சி :- துன்பமுண்டாதற்குக் கார ண மா ன
கோலம் காட்டுதல். காராவட்டி :- முதலியன ; f கலியாணம் காராவட்டி’ என் ருல் கலியாணமும் அதன் தொடர்பான வேலைகளும் எனப் பொருள்படும். காலமே :- காலேநேரம். காலே - பயிர்த்தோட்டம்; ஆடு, மாடு முதலிய விலங்கு களை அடைக்கும் வேலி சூழ்ந்த இடம்; காலை நேரம் கால்மாறுதல் :- மணமானபின் கணவனும் மனைவியும் மணமகன் வீட்டுக்கும், உறவினர் வீட்டுக்கும் செல் லும் முதற் செலவு. கால்வாங்குதல் :- விதைமுளைத்தல்; கதிர்விடுதல். காளாஞ்சி - பூக்கிண்ணம். கோவில்களில் வெண் கலத்தாலான குவிந்த வடிவுள்ள இப் பாத்திரத்தில் பூசைக்கு வைக்கப்பட்ட மலர், பழம், பாக்குகளை வைத்து முன்னிடாகக் கொடுப்பது வழக்கம். காற்றணவு :- பிள்ளைகளைப் பேய் பிசாசு பிடித்தல் : * கண்ணுாறு நாவூறு காற்றணேவு வாராமல், வெண் ணிற்றி னலே வினைதீர்ப்பாய் மாதாவே ’ என எண் ணெய்ச்சிந்துப் பாடலில் வரும்.
கிரிகோலம் :- அவலட்சணமான காட்சி ; அலங்கோலம்.

செந்தமிழ்ச் சொல்வளம் 126
கிரிசைகெட்ட :- ஒழுங்கில்லாத ; கிரியை கெட்ட என்ப
தன் சிதைவு.
கிளைகள் - பல பிள்ளைகள் ; பீள்ேளைக் கிளைகள் ? என் பது வழக்கு ; * நாகநம்பனினங்கிளை ’ என்னும் செய்யுளிற்போல.
ಸ್ಥಳಿ:o) _ சிறுகுலை ( வாழைக்கிணுட்டு', 'வாழைக்
கிணுட்டை ' கிணுட்டை ‘ என்று சேர்த்துச் சொல்லுதல்
மரபு) ; சிங்களச்சொல் என்பர்.
கிளைதல் :- மானங்குறைத்தல்.
கிள்ளவடு :- சுண்ணும்பு வைக்கும் சிறு பாத்திரம்.
கிறு :- செருக்கு, மதம், பெலம். * கறு ’ என்பதன் திரிபு ;
கெறு என்றும் வழங்கும்.
கிறுகு :- திரும்பு.
கிறுக்கி - கதவின் உட்பக்கத்திற் தாழிடும் சிறு மரக் கட்டை. பல பக்கமும் கிறுகுவதால் (திரும்புவதால்) இப்பெயர் பெற்றது.
குச்சிக்குடில் :- சிறியவிடு.
குஞ்சப்பு:- சிறிய தந்தை.
குஞ்சாத்தை :- சிற்றன்ன.
குடக்குழி - கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம், அல்லது வாளி புதைந்து நீர் மொள்ளக்கூடிய தாக வெட்டப்படும் ஆழமான சிறு குழி.
குடுதியம் பொருள் :- குடிலையம் பொருள் " போன்ற
அருமையான சொத்து.
குடுகு, குடுக்கை - உட்குழிந்த பாத்திரம்.
குடிச்சிரு :- குடித்துவிடு என்பதன் சிதைவு.
குண்டணி :- கோள் சொல்லுதல் ; கோள் சொல்லு வோன் ; குண்டுணி என்பதன் திரிபு. கோள்குண் டணி என்று அடுக்குத்தொடராக வழக்கில் வரும்.
குண்டாழம் :- உள் தாழ்ந்தது ) (குண் டு + ஆழம்),
* குண்டுசுனை பூத்த ’ என்பது முருகாற்றுப்படை,

Page 88
126 மட்டக்களப்புத் தமிழகம்
குதாவிடை :- கிண்டலான வார்த்தை. குப்பி - சிறுபோத்தல்.
குமுதம் :- பேரொலிசெய்து விளை யா டு த ல் குமுதம் குத்தல் * குமுதமிட்ட குலவரை ’ என்னும்
செய்யுளடியில் குமுதம் என்பது பேரொலியைக் குறிப் பிடுதல் காண்க. * குமுதம்’ என்பது ஒலிமாறிக் * குதுமம் ’ என்று வழங்குதலும் உண்டு. கும்புதல் - நீர் குறைந்து நெருப்புக் கூடும்போது, பக்குவ நிலையைக் கிட்டிய உணவு அடுப்பிலிருந்து தீய்ந்து போதல். குரும்பட்டி :- தென்னேயின் பூம்பிஞ்சு, குலுமாசி - பாசாங்குபண்ணுதல், குழச்சி :- கைகால்களின் மொழிப் பொருத்து ; குழைவு
பெறுமிடம் குழைச்சி ஆகும்,
குளறுதல் _ s குளாறுதல் } :- அழுதல. குளு - கூச்சம், பழக்கப்படாத, அக்குளுக் குத்துதல் - கமுக்கட்டிலும், கழுத்து, இடுப்பின் பக்கம்போன்ற இடங்களிலும் தொட்டு உடற்கூச்சம் பெறச்செய்தல். குளுமாடு - பழக்கப்படாத கொழுத்த காட்டுமாடு. குளையடித்தல் - புத்திமதிகள் சொல்லுதலால் ஒருவரது மனத்தை மாற்றுதல். மந்திரம் சொல்லி வேப்பங்குழை களால் ஒரு நோயாளியின் தலையில் அடித்தல்மூலம் அவரது நோயை மாற்றும் செயல் குளேயடித்தல் எனப் படும். இச் செயல்போன்று புத்திமதிகளால் ஒருவர் மனத்தை மாற்றுதலும் இப்பெயர் பெற்றது. கூதல் :- குளிரால் வரும் சிறு நடுக்கம். கூதிர்கால உடல்
உணர்ச்சி பண்டு இவ்வாறு கருதப்பட்டது. கெந்துதல் :- நொண்டுதல். கெளிதல் படுத்தல், சரிதல் ; சிறிதுநேரம் இளைப் கெள்ளார்தல் : பாறுதற்காகப் படுத்தலையே இச்சொற்
கள் குறிப்பிடுவ.

செந்தமிழ்ச் சொல்வளம் 127
கெளித்தல் - கவிழ்த்து ஊற்றுதல். சரித்தல் என்று மற் றைய இடங்களிற் குறிப்பிடப்படுவது இங்கு இவ் வாறு வழங்கும். கெளுத்தி - கெளிற்றுமீன். * கெளிறு ’ என்பதன் திரிபு.
* கெளிறு பெய்வட்டில்’ என்பது பழம் செய்யுள். கெளுத்திநாடு - கெளிற்றுமீனின் இருகடைவாயிலும்,
முதுகிலும் உள்ள நீண்டமுள். கைமுளுத்தம் - நல்ல முழுத்தத்தில்’ (முகூர்த்தத்தில்)
* கொடுக்கல் வாங்கல் ' பண்ணுதல். கொக்கை, கொப்பா, கொம்மை, கொண்ணன் :- இச் சொற்கள் முறையே உன் அக்கா, உன் அப்பா, உன் அம்மா, உன் அண்ணன் என்னும் முன்னிலைப் பொருளில் வழங்குவன. கொச்சிக்காய் - மிளகாய்; கொச்சிகாட்டில் இருந்து வந் தது என்று கருத்து. மிளகாயினைப் பெரும்பாலும் இச் சொல்லாலேயே மட்டக்களப்பு மக்கள் குறிப்பிடுவர். கொஞ்சுதல் :- முத்தமிடுதல். கொடுக்குக்கட்டல் - ஆயத்தமாதல். கொடுவாக்கத்தி (கொடுவாய்க்கத்தி) - கொடுமையான (வளைந்த) வாயை உடைய வெட்டுக்கத்தி. * கொடு வாய்க்குயத்தின் விடுவாய்செய்து ’ என்பது செய்யுள். கொட்டகை - சுவரில்லாத கெடியகூடம். கூத்தாடும் இடம்
போன்று உயர்ந்து நீண்ட குடில், கொட்டறை :- " வீட்டின் பின்புறமாக உள்ள சிறிய அறை. கொட்டு :- மரத்தின் குடற்பகுதியைக் குடைந்து நீண்ட குழாய்போ லாக்கியபின் கற்கிணற்றுக்குப் பதிலாக ஆழமாக நாட்டிவைப்பது. கற்கிணறுபோல் அவ்வாறு மரத்தாலமைந்த கிணறு கொட்டுக்கிணறு ’ எனப் படும். - கொட்டு இறக்குதல்- மணல் நிலத்துள் அவ்வாறன மரக்கிணற்றை (இக்காலம் கற்கிணற்றை) பதித்தல்,

Page 89
128 மட்டக்களப்புத் தமிழகம்
கெரம்புதல் - ஏசுதல் ; (கொம்பு-கொழு உடையது ஆத லால்) கொம்புதல் என்பது கொழுவுதல் என்ற பொருளில் இவ்வாறு வழங்கியிருத்தல்கூடும்.
கோடி - புதிய உடை , வீட்டின் மூலையில் அமைந்திருக்
கும் கொல்லே அல்லது பின்பகுதி.
கோணி - குணமுடையவன்; ஆண்கோணி என வழங் கும். பெண்ணுய்ப் பிறந்திருந்தும் ஆண்மைக்குணமே மிகுதியும் உள்ளவர் ஆண் கோணி என இழிவாகக்
கூறப்படுவர். − கோந்தல் :- அணில் முதலிய பிராணிகளாற் கொஞ்சம்
கடிக்கப்பட்ட பழம் முதலியன. * குயிலலகாற்
பல்லவங்கள் கோதுமாலோ ’ என்பதில் உள்ள
கோதுதல் என்ற சொல்லினைக் காண்க. கோப்புசம் :- வீட்டின் கூரைப்பகுதி ; கோர்க்கப்பட்ட
கூரைத்தளம். கோப்புத்த - கமுக ஓலேயின் மட்டையினுடைய அகன்ற
அடிப்பாகம். சகதி - நெருக்கம் ; நீரும், மண்ணும் கலந்துள்ள சேற்
றுப்பாங்கு. சக்கட்டு :- சாமான் சக்கட்டு’ என்பதுபோலச் சேர்த்
துச் சொல்லப்படும் ஒரு சொல்; சாமான் முதலியன என்பது இதன் பொருள். சக்கு - பூசணம். சக்குப்பிடித்தல் - பூசணம் கொண்டு
பழுதுபடல். சங்கை - மானம். “மானம் போச்சே, சங்கைக்கீன
மாச்சே ' என்பது கூத்துப்பாட்டு, சச்சடி :- ஆரவாரம் ; சனச்சச்சடி - ஆரவாரமுடைய சன
நெருக்கடி. சமுர்த்தம்பழம் :- காரத்தம்பழம். சம்பா ஊதுதல் :- இளங்கன்றை இழந்த எருமையினது வாலின் அடிப்பகுதியை நோக்கிப் பப்பாசிக்குழலால்

செந்தமிழ்ச் சொல்வளம் 129
ஊதுவதன்மூலம் அதன் மடியில் பால் சுரக்கச் செய் தல். இவ்வாறு கன்று இன்றியே பால்தரும் எருமை யையும் * சம்பாஎருமை ’ என்று சொல்லுதல் உண்டு. 7ம்பாப்பால் - சம்பா ஊதுவதன்மூலம் கறந்தெடுத்தபால். சரக்கு - கொத்தமல்லி ; மருந்துக்குரிய மூலிகைகளுக்கும்
இது பொதுச் சொல்லாக வழங்கும். சரிசாமம் :- நடுஇரவு. சருவுதல் :- கோபமுண்டாக்கல்; சண்டைக்கு அடிப்
போடுதல். W− சலிப்பு :- அழுகை , விருப்பமற்றது.
சவணிக்கை - கவுத்தனர் முழக்கும் ஒருவகைத் தோற்
கருவி.
&6)J6ITóæ60L– :– Gaf 6ITGIT Lb–560L– (Barbers' Shop). 2l
பெயரால் கிட்டங்கித்துறைக்கு அருகில் ஓர் ஊருண்டு.
சவுத்தல் - களைத்தல் ; பின்வாங்குதல். சள்ளு :- தொந்தரவு.
சாங்கம் :- சாயல்; பொருத்தமான அவயவ அமைப்பு.
சாட்டு :- காரணம். சாக் குப் போக் கு’ என்னும்
பொருளது.
சானகம் :- சாணி ; புறப்பொருள் வெண்பாமாலை
உரையுள் இதே சொல் ஆளப்பட்டுள்ளது. சாதிமான் :- உயர் குடியிற் பிறந்தோன். சாய்ப்பூடு - (சாய்ப்பு வீடு) - வீட்டின் தொங்கற் சிறு
அறை. சித்திரம்பூச்சி :- சிற்றெறும்பு. இதனையே மற்றையோர், "நுள்ளான்’ என்று அழைப்பர். கட்டிறம்பூச்சி பார்க்க. சிம்புளி - அதிகமாகக் கண் இமைத்தல், கண் கூசும் நிலை (சிம்புளிக் கண்ணர்). * ஒவற இமைக்கும் சேண் விளங் கவிரொளி’ என்ற திருமுருகாற்றுப் படைப் பொருளது.
9 - מש

Page 90
130 மட்டக்களப்புத் தமிழகம்
சிராம்பு :- மரங்களிலுள்ள கூரிய ஈர்க்குப்போன்ற பகுதி. இச் சொல்லே * செறும்பு’ என்று சிறுபாணுற்றுப் படை உரையுள் வருகின்றது. - சுண்டு :- முகத்தலளவைக்குரிய பாத்திரம். சுண்டுக்
கொத்து என வழக்கில்வரும். - சுதந்திரம் - வயல்களில் வட்டவிதானே, அதிகாரி எனப் Lடும் மேற்பார்வையாளருக்குக் கூலியாகக் கொடுக் கும் விளைவுப்பங்கு. வட்டவிதானைச் சுதந்திரம் என் பதுபோல அடையடுத்தும் இச் சொல் வழங்குவ துண்டு. சுளித்தல்:- (சு ழித்த ல்) - ஏ மாற்று த ல் , * சுழிக்கும்
வினையாலென்னே ’ என்ற செய்யுளிற்போல. சுள்ளி - காய்ந்த குச்சு.
சுறுக்காக - விரைவாக ; இரட்டைக்கிளவிகள் சிலகால் எச்சமாய்த் திரிந்தவிடத்து ஒரு சொல்லே அப் பொருளைக் குறிப்பதுண்டு. கிறுகிறுப்பு என்பது கிறுகி எனவும் சுறுசுறுப்பு என்பது சுறுக்கு சுறுக்காய் என் வும் வருவன கொள்க.
சூத்திரம் :- சைக்கிள் வண்டி.
சூம்புதல் :- மெலிதல்.
செகிடன் :- செவிடன்.
செக்கல் :- (செக்கர்) . மாலைநேரம்.
செங்கல் மங்கல் :- மாலைநேரம் ; செம்மையும் கருமையும்
கலந்த அந்திமாலைப்பொழுது.
செடி _ மணம் அல்லது காற்றம்; கூடிய கெட்ட
செடிநாற்றம் நாற்றம்.
செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி அல்லது சுவர்.
செமித்தல் :- சீரணமாதல்; சமித்தல் என்னும் சொல் முதல் எகர ஒசை பெற்றது. ஜயம், ஜெயம் ; ஜபம், ஜெபம் : அரிசி, எரிசி என்பனவாகச் சொல் வழக் காறு உண்டு.

செந்தமிழ்ச் சொல்வளம் | 3 | செருக்குதல் :- தடி, மரம் என்பவற்றைச் சீவுதல், செதுக்கு
தல் ; வெறியுண்டாதல் (செருக்கு - மதம்). செவிட்டை - கன்னம் ; செவியைச்சார்ந்த பகுதி என்று
பொருள். செவியேறல் :- கேள்விஞானம். சேவரக்கால் :- வெண்கல வட்டிலே வைத்து உண்ப தற்காக வெண்கலத்தாற் சமைக்கப்பெற்றதும், சுமார் ஒரு அடி உயரமுள்ளதுமான ஒற்றைக்காற்பீடம். (சேமக்கலக்காற்பீடம் என்பதும் சேர்வைக்கால் என்பதும் இது. படம் - 9).
சொக்கு
ਕੋਲ :- கன்னம்.
சொட்டு :- தேங்காய்ச்சொட்டு (சிறுதுண்டு); கிண்ணஞ்
சொட்டு - கிண்ணைமர ஆகாயவேர், சோக்கு :- அழகு ; இது " ஜோக்' என்ற மேல்புல
மொழித்திரிபு. சோங்கல் :- தூக்கக் குணமுடைய (சோம்பல்), சோம்
பல் உடையவன்.
சோட்டை - ஆசை, விருப்பம். சோலி - தொந்தரவு ; இச்சொல் தென்னிந்தியாவில்,
அலுவல் என்னும் பொருளில் வழங்குவது. தண்ணிச்சோறு :- பழஞ்சோறு. தண்டக்காரன் - வண்ணுர் தலைவன். தண்டயல் - வலைஞர் தலைவன். தத்தி - ஒரு பரம்பரையினர்; * தியாகப்பர்தத்தி என் ருல் தியாகப்பர் என்பவருடைய வழியைச் சேர்ந் தோர் என்று பொருளாகும். தத்துவம் :- அதிகாரம். ر தப்பிலி :- தப்புள்ளவன் (தப்பு+இலி) என்பது மங்கல
வழக்காக இவ்வாறு வழங்கும்.

Page 91
132 மட்டக்களப்புத் தமிழகம்
தயிலாப்பெட்டி - மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள
அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி. தலைவெட்டுதல் - தலைமயிர் களைதல் ; (ஆகுபெயர்), முடி வெட்டுதல் என்று சொல்லும் வழக்கம் இங்கு இல்லை. தளிசை - தட்டம், தாம்பாளம். - தறக்கணித்தல் - கண்டித்து (பிஞ்சு, காய் முதலியன)
கனியாத நிலையினை அடைதல்.
தனகுதல் :- கோபமூட்டுதல், சருவுதல் ; இக் கருத்தில்
* உரஞ்சுதல்’ என்று சொல்லுதலும் உண்டு.
தாக்கத்தி - வேளாண்மை அடியை (தாள்களை) வெட்டு
தற்குப் பயன்படும் (தாள்க்கத்தி) கூன்கத்தி.
தாயதி - வழிவழி வந்த பழஞ் சொத்து; இது, தாயம்
என்பதிலிருந்து வந்த சொல்.
தாயம் :- நல்லதருணம்; இதுதான் தாயமென்று அவன் தன்னுடைய அலுவல் முடித்துக்கொண்டான் என் பது போன்று வழங்கும். திடல் _ மேட்டுநிலம் : “ திடுதிடென்று மழையடிக்கத் திட்டி J " திட்டி எல்லாம் தண்ணி நிற்க ’ என்ற நாட்டுப்
பாடலிற்போல. திண்ணை - வீட்டின் முன் வெளிப்புறமாக மேடைபோல் அமைந்துள்ளது ; இதனேயே விருந்தை (Weranda) என்று சொல்வர். திப்பிலிக்கொச்சிக்காய் _பருமனிற் சிறியதான ஒருவகை சீரகக்கொச்சிக்காய் மிளகாய்; இது மிகவும் காரம்
உள்ளது.
திருகாணி - பாத்திரங்களை அடுக்கிவைத்தற்காக வீட்டுள் நிலத்தில் வட்டமாகத் தோண்டி அமைப்பது. பெரும் பாலும் உடைந்த குடம், பானே என்பவற்றின் வாய் வளையமும் இதற்குப் பயன்படுத்தப்படுவதால், இச்சொல்லினை * வாய்வளையம்’ என்று குறிப்பிடுத லும் வழக்காயுள்ளது.

செந்தமிழ்ச் சொல்வளம் 183
திருகுதாளம் :- ஏமாற்றுதல் கலந்த வெருட்டு.
திருக்கு :- சவாரி செய்யும் சிறு வண்டில் ; இதனைத் திருக்கல் என்று சொல்லுதலும் உண்டு. திருக்கல் வண்டிகளைப் போட்டியாக ஒட்டுதல் கிராமப்புறங் களில் வழக்கத்திலே உள்ள ஒரு மகிழ்வூட்டும் விளை
யாட்டாகும்.
திருக்குப்போடுதல் :- குறுந்தடியை நடுவே இட்டுக் கட்டு களைக் கடுமையாகத் திருகி முறுக்குதல். இதற்குப் பயன்படும் தடிக்குத் *திருக்குப்பொல்லு' என்று பெயர்.
திலாந்து :- துலா திலா என்று மருவி திலாந்து என
வழக்கேறிற்று.
திலாவுதல் :- நெல்போன்ற தானியங்களை நிலத்தில்,
அல்லது பாயில் பரவுதல்.
திருவுதல் - தடவுதல்.
துக்குறி :- கேட்டுக்கு அறிகுறி (துர்க்குறி).
துடியன் :- சற்றுப்பெரியது.
துமித்தல் :- மழை தூறுதல் ; துமிதம்’ என்பதன் மறு வடிவம். * துமித மூர்புக வானவர் துள்ளினர்’ என்பது செய்யுள்.
துரவு :- நீர்க்கேணி.
துரு :- பூம்பிஞ்சுக்கு அடுத்த பருவத்தினதாயுள்ள இளம் பிஞ்சு இப் பெயராற் குறிப்பிடப்படும். இது சில வேளைகளில் துருப்பிஞ்சு ’ என்று சேர்த்து வழங்கப் படுவதும் உண்டு.
துவஞதல் :- வளைதல்.
துறிட்டி :- நுனியில் கொழுவைத்துக் கட்டப்பட்ட நீண்ட கம்பு ; தோட்டி (வளைவு) என்பதன் திரிபு. இதனைக் * கொக்கை என்று மட்டக்களப்பார் கூறுவதில்லை. * அக்கா’ என்னும் சொல்லின் முன்னிலையுருவமே

Page 92
134 மட்டக்களப்புத் தமிழகம்
இந்நாட்டில் கொக்கா’ என்றும், கொக்கை என் றும் வழங்கப்பெறும்.
துறட்டிபோடுதல் - கொழுவுதல்; சண்  ைடக் கா கத் தனகுதல். வளைத்து இழுத்தல் என்னும் பொருளது.
துறப்பு :- திறவுகோல், சாவி.
தெங்கடிதேவை வேண்டாவிருப்பு, ஒன்றை தெண்டைக்குத்தேவை :- விருப்பமில்லாமல் செய்தல், வேண்டாவெறுப்பு அல்லது அப்படிச்செய்ய ஏற்
றுக்கொள்ளுதல். -
தெண்டித்தல் - விடாது முயலுதல்.
தேவல்ல :- வேண்டாம், (தேவையில்லை) ; இச் சொல் தென்னிந்தியாவில் *ஓரளவு நல்லது ’ என்னும் பொருளில் வழங்குகின்றது. அக்கருத்தை இங்குக் * குற்றமில்லை’ என்று குறிப்பிட்டுக்கொள்வர்.
தொப்பட்டம் :- பெருமழையில் உடுத்த துணியோடு நனதல் ; இது ** தப்பட்டம் தொப்பட்டம்’ என்ற ஒரு தொடராகவும் வழங்கும்.
தொம்பல் }:-
சுரி
தொழில் :- மந்திரத்தோடு செய்யும் பேய்க்கழிப்பு முத
லிய செய்கைகள். இது தொளிர் என்றும் வழங்கப்
பெறும்.
சேறு.
தோணு :- கடற்கரையில் அமைந்த சிறு நீர்நிலை ; ? பட்டி னப்பாங்கர்ப் பரந்த தோணுமுகமாய் ’ என்பது யாழ் நூற் செய்யுள்.
தோம் :- விளையாட்டுச் சம்பந்தமான ஒரு குறிப்புச் சொல் , * குற்றம்’ என்பது பொருள். ** தோமிரா மூன்று நாலும் ’ என்னும் செய்யுளிற்போல.
தோம்புதோர் - விவாகம், பிறப்பு, இறப்பு முதலியவை களைப் பதிவு செய்பவர். ஒல்லாந்தர் காலத்திற் கலந்த சொல் இது.

செந்தமிழ்ச் சொல்வளம் 135
தோய்தல் - கத்தி முதலிய ஆயுதங்களைக் கொல்லுலே யிற் கூராக்குதல் ; காயாம்பூ நிறமெடுத்து தோயடா கொல்லா ’ என்று தோய்ச்சலின் சிறப்பு இங்கு நிறத்தினுற் குறிப்பிடப்படும். வடித்தல் என்னும் இலக்கியச்சொற் பொருளது. நகைகட்டு :- ஏதாவது ஒரு நகை. நசித்தல் :- நெரித்தல் ; நெல்லைக் குற்றுதலின் முதற்படி. நடப்பு :- செல்வாக்கு. நட்டாமுட்டி :- சண்டைக்காரன் ; நாட்டாண்மை கூறி
முட்டுபவன். கட்டுமுட்டு :- நட்டுவரது மேளவாத்தியம். நட்டுவக்காலி தேள் ; நண்டுவாய்க்காலி என்னும் ರಾ??! சொற்திரிபு. நண்டின் இடுக்குங்கால் போன்ற வாய்கொண்ட கால்களை உடையது.
நறுவிசை - வரையறை, கண்டிப்பு. நற்சீரகம் :- சின்னச்சீரகம். நன்னித்தீன்
': ;- சிற்றுண்டி, நாசமறுப்பு :- தொல்லை (நாசம்+அறுப்பு) என்பதன்
மங்கல வழக்கு. - நாசிவன், நாவிதன், பரியாரி - அம்பட்டன். நாட்டுக்கட்டை :- காட்டு நிலத்தில் வெட்டப்பட்ட சிறிய
கம்புகளின் அடிக்கட்டையாக இருப்பது. நாத்து :- நாள் ; முந்தநாத்து - முந்தைநாள், நேற்றைக்கு
முதல்நாள். நாம்பன் :- இளைய எருத்துமாடு. இது ‘நாகு ’ என்ப
தன் ஆண்பாற் சொல். நர்ளைப்புறத்தை :- நாளைக்கு அடுத்தநாள்.
நாருணி :- நாராயணன் என்பதன் சிதைவு. பொது வாக செவிடர்களை இப் பட்டப்பெயராற் கூறுவது

Page 93
136 மட்டக்களப்புத் தமிழகம்
உண்டு. நாராசம்போல் உறைக்கச் சத்தமிட்டுக் கதைக்கப்பெற வேண்டியவர் என்பது பொரு ளாகலாம்,
கிண்டான் பாஞ்சான் :- அவசரம். ஓடிவந்து பாயாமல், நின்ற நிலையிலிருந்தே நினைத்தவுடன் பாய்தல் போன்ற அவசர நிலையில் ஒன்றைச் செய்தல். கிப்பிலி ஆட்டுதல் :- (நிற்பு+இலி) ஓரிடத்தில் ஆறுதலாய் நிற்றல் இல்லாத நிலைமை ’ என்னும் பொருளி லிருந்து பிறந்த ஒரு சொல். ஓயாத கரைச்சல் கொடுத் தல் என்பது இத்தொடரின் கருத்தாகும். நிறைத்தல் - விளக்கை அணைத்தல் ; இதுவும் மங்கல
வழக்குச் சொல். நிறைமதியம் :- நடுமத்தியானம் ; நடுப்பகல். நூர்தல் :- (விளக்கு) அணைதல்; “ நூர்த்தல்’ என்பது
இதன் பிறவினைச் சொல். விளக்கை நூர்த்துவிடு என்று ஏவலில் வரும். T
நெஞ்சாங்கடைய விழுதல் :- நெடுஞ்சாண்கிடை வணக் கம். நெஞ்சு நிலத்தில் படத்தக்கதாக விழுந்து வணங்குதல்.
நெஞ்சாங்குலை :- இருதயம் அல்லது ஈரற்குலை. கெட்டை (கிட்டை) :- ஒரே நிலையில் அசையாது நிற்கச்
செய்யும் ஒரு மந்திரம். நெத்திமுட்டு, (நெற்றிமுட்டு) - வீட்டின் சரிவுச்சுவர். நேரத்தோட - முன்னடி, முதலில், V 鶯}- ஒலேயால் அல்லது கம்புகளாற் கட்டப்பட்ட படல் தெருவாசற் கதவு. ‘பால்போல் நிலவெறிக் கப், படலை திறந்தவனுர் தோழி. ’’
-கொம்பு விளையாட்டு வசைப்பாட்டு படிகடத்தல் :- கோவிலின் மூலத்தானத்தை அடைந்து பூசைசெய்யும் நிலைமைக்கு ஒருவர் உயர்தல்; கற்பகன g Tabai) (Promotion).

செந்தமிழ்ச் சொல்வளம் 137
படிக்கம் :- எச்சிலை உமிழும் பாத்திரம். படிகம்’ என் பதிலிருந்து பிறந்தது. (படிகம் - கண்ணுடி, கண்ணு டிப் பாத்திரம்). படுவான் :- மேற்கு ; சூரியன் படும் திசை என்னும்
பொருளில் வந்த வானிற்றுப் பெயர்ச்சொல். பட்டங்கட்டி - வலைஞர் தலைவன். பட்டறை - பட்டடை என்பதன் திரிபு. உலோகத் தொழிற் சாலை. இது கம்மாலே எனவும் வழங்கப்பெறும். பட்டி - கூட்டம் (ஆட்டுப்பட்டி), குவியல் (சாணிப்பட்டி), விருது (அரசாங்க உத்தியோகத்தர் சிலர் அணிவது). பட்டை - தண்ணிர் இறைப்பதற்காக மரத்தால் அல்லது
ஒலேயாற் செய்யப்பட்ட வாளி. பட்டோலே - மருந்துச் சரக் கு களின் அட்டவணை
(Prescription); 5603TL Gaul.g.
பம்பல் - அதிகம் ; (பம்பு- அல் - நெருக்கமாய் உள்ளது).
பரவணி - பரம்பரைப் பழக்கம். * பழக்கம் பெரிதோ
பரவனி பெரிதோ ’ என்பது பழமொழி. பரிசாரி - வைத்தியன் (பரிகாரி), அம்பட்டன். (5- சிறுகட்டு , * முகப்பரு’ என்பதுபோல் சொல்
லாட்சிபெறும். பருமாறுதல் :- நடந்து திரிதல். “நானறியேன் தோழி எனக்கு 5டக்கப் பருமாற ஒண்ணு. ' -நாட்டுப்பாடல்.
பவிசு :- நடப்பு (பவிஷ"), செல்வாக்கு, எடுப்பு. பறப்பு :- அதிக ஆவல், பேரவா. பறவாதி - அதிகம் ஆவலும் பேராசையும் உடைமை
யால் பறந்து திரிபவன். பன்னரை :- அரிதட்டு. பன்னடைபோன்றது. பன்னுடை :- தென்னை, பனை என்னும் மரங்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கைப் பன்னரை.

Page 94
138 மட்டக்களப்புத் தமிழகம்
பாடு :- ஒருமுறை. ஒருபாடு, இருபாடு என்று எண்
சேர்த்து வழங்கப்பெறும். பாட்டம் :- கூட்டம் , பறவைகளின் தொகுதி ; ஒருபாட்டம் என்னும்போது - ஒருமுறை எனப் பொருள்படும் ; ஒருபாட்டம் குருவி - குருவிக்கூட்டம் ஒன்று. பாமங்கை - வயல்களில் நீர் உள்ள இடங்களிலிருந்து உப்பட்டிகளை வெளியேற்றவும், மண் சுமக்கவும் தக்க தாக இருவர் கைகளாற் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் கம்புகளாலும் பலகைகளாலும் அமைந்த தட்டி. இது பரவப்பெற்றது என்னும் பொருள்படுவ தான ‘பா’ என்னும் முதலிலிருந்து அமைவுபெற்ற சொல்லாகும். பாவுங்கை. பாவறை - நீர்ப்பரப்பை அடுத்த நிலத்தின் கீழுள்ள பாழி; நிலத்தின் கீழ் பரந்துபட அறுக்கப்பட்டு முதலே முதலியன பயமின்றி வாழுமிடம். (பா - பரப்பு ; அறை - அறுக்கப்பட்டது). பாளி (பாழி) :- முதலை வசிக்கும் வங்கு. பிசினி - ஈயாதவன், பிசினல் ஒட்டியதுபோல் கைப் பொருளை இறுகப் பிடிப்பவன். வேண்டியவற்றிற்கும் செலவு செய்யாத பெரு லோபி. பிள்ளைத்தாச்சி :- கருப்பவதி; குட்டித்தாச்சி, கன்றுத்தாச்சி
என அவ்வாறன விலங்கினங்கள் குறிக்கப்படுவ. பினைதல் - பிசைதல் ; குழைத்தல். பின்னேரம் :- மாலைநேரம்.
} :- பிடரி. / ԼվՈ)ւգ
புடை - பானையின் வளைந்த உட்பக்கம்.
புடைத்தல் :- அரிசிபோன்றவற்றைச் சுளகினல் துப்புர
வாக்கல்; வீங்குதலுமாம்.
புட்டி (பிட்டி) :- மேட்டுகிலம்.
புழுங்குதல் :- அவிதல், மனம் வேகுதல் ; கடும் வெப்
பத்தால் வியர்த்தல்.

செந்தமிழ்ச் சொல்வளம் 139
புளகு :- சிறுதுண்டு; பாக்குப்பிளவு. புளக்கம் :- பெருவழக்கானது என்று பொருள்படும் சொல் ; ஆள்நடமாட்டம், பொருள்களை உபயோ கித்தல் என்பனவுமாம். புளங்குதல் - உபயோகித்தல் ; இது புழக்கம் என்றும்
சொல்லப்படும். புளுகு - மீன் துண்டு; மீன்புளுகு என்று சேர்த்துச்
சொல்லப்பெறும். புளைப்பு :- தொழில், பிழைப்பு. புள் :- ° கிட்டிப்புள் ' என்னும் ஒரு விளையாட்டு. புள்ளக்குஞ்சு :- சிறு குழந்தை. புறணி - புறங்காட்டல், புறங்கூறல். புறுபுறுப்பு :- ஏச்சுக்கலந்த முணுமுணுப்பு. புன்ன :- பின்னை, பிறகு. பூசாரி - பூசகர் ; கவுத்தன், கப்புகன் எனப்படுவோர்; பெரும்பாலும் இந்நாட்டு மந்திரங்களோடு தொடர் புடைய பூசகரே இப்பெயராற் குறிப்பிடப்படுவர்.
பூஞ்சாணம் :- பூசணம் அல்லது சக்கு. பூணுரம் :- நகைகளுக்கான பொதுப்பெயர்.
பூந்தபொழுது :- பொழுது (சூரியன்) படும் நேரம்; புகுந்த பொழுது; பொழுது கடலுட் புகும் மாலேநேரம். இது * இரண்டுங் கெட்டநேரம் ’ என்றும் சொல்லப்படும்.
பூரான் :- முளைத்த தேங்காய்க்குள்ளிருக்கும் சுவை மிக்க, வெண்ணிறச் சதைப்பகுதி , * பூரான் அட்டி யல் ’ என்று வழங்கும் ஒரு ககைக்கும் இது பெயர்; மட்டைத்தேள் எனும் விடசந்தையும் குறிக்கும்.
பூருதல் :- நுழைதல் (புகுதல் என்பதன் மரூஉ).
பூவ்ல் :- குடிநீரையுடைய சிறிய ஊற்றுநீர் மடு.
* பூவலைக் கிண்டிப் புதுக்குடத்தைக் கிட்டவைத்து
ஆரம் விழுந்தகிளி அள்ளுதுகா நல்லதண்ணி”
-5ாட்டுப்பாடல்.

Page 95
1 40 -- மட்டக்களப்புத் தமிழகம்
பெட்டை பொடிச்சி :- சிறுபெண். பெத்தப்பா - பாட்டன்.
பெத்தா *-- பெத்தாச்சி }: ԼlTւ-ւգ.
பெருந்தலைமட்டை - தென்னேலை மட்டையின் அடியி
லுள்ள பெருத்த தலைப்பாகம்.
பையப்பைய :- மெல்ல மெல்ல.
பொசிதல் :- நீர் கசிந்து வெளிவரல், பொடியன் - மருமகன், சிறுபையன் ; பொடியா மரு மகனே' என்று சேர்த்துச் சொல்லுதலும் உண்டு. பொட்டுக்கட்டு :- ஒருவனைப்பற்றி மற்றையோருக்குத்
தெரியாதிருக்கும் உள் இரகசியம். பொட்டுக்கேடு :- இரகசியம் வெளிப்படுதல். பொதும்புதல் - (வீட்டுள்) நிலம் இளகக்கூடியவரையில்
தண்ணிர் தேங்கி நிற்றல். பொத்தல் :- துவாரம், ஓட்டை. பொத்தி - வாழைப்பூ, சோழன்குலை. இது மொத்தி’ எனவே பெரும்பாலான இடங்களில் வழங்கப்படும். பொத்துதல் :- துவாரம் அடைத்தல் ; அடைத்தல், கைக் குள் ஒரு பொருளை வைத்து இறுகப் பிடித்துக் கொள்ளுதல்.
பொந்து போறை பொருக்கு :- கரடுமுரடான தடித்த மேற்தோல். பொருப்பத்தல் - செவிகொடுத்துக் கேட்டல். பொருட்
படுத்துதல் என்பதன் திரிபு.
:- பெருத்த துவாரம்.
பொலியர் :- (பிள்ளையார்) பெரியவர். சிதம்பரப்பொலி
யர், கணபதிப்பொலியர் என்பனபோன்று பெரி

செந்தமிழ்ச் சொல்வளம் | 4 |
யோர்களை அழைக்கும் வழக்காறுண்டு. கணபதிப் பிள்ளை என்பது கணபதிப்பிள்ளையார் ஆகி, கண பதிப்பொலியர் ஆகியிருக்கலாம். பொல்லு :- குறுந்தடி. பொறிவு :- தோற்றம். பொறுப்பு :- கஷ்டம் ; வில்லங்கம், துன்பம். போகயா :- போகப்போகிருயா என்று முன்னிலை யோரையும் போகட்டுமா என்று தன்மையினையும் குறிக்கும் வின.
போக்கணங்கெட்டவன் O
QO :- உரோசமில்லாதவன்.
சுணேகெட்டவன் } J த
போடியார் - வயற் சொந்தக்காரனன செல்வர்.
போட்டா - பெருவரவை. “ போட்டா வரம்பாலே புரு மேய்ந்து போவதுபோல்’ என்பது நாட்டுப்பாடல். பெளவல் :- அடைமழை ; காட்கணக்கில் விடாது பெய்
யும் மழை. மகுடி - ஏமாற்றுந் தந்திரம் ; பாம்பாட்டி ஊதும் குழல். மகுணம் :- செருக்கு. மச்சி மதினி மதவுதல் - அதிகம் குடித்தல். மதித்தல் :- அடையாளம் கண்டுபிடித்தல். மப்பு :- வானம் மந்தாரமாய் இருத்தல். மயண்டை - அந்திநேரம். மயன்றை என்ற பழஞ்சொற் திரிபு. சூரியன் அந்திவானில் மயங்கும் நேரம். மயிந்துதல் နှီးခိ|- பிடிகொடாதிருத்தல், விலத்துதல். மறுகுதல் மருங்கை - உறவினர்மட்டும் கலந்துகொள்ளுவதும் மகப் பேறு சம்பந்தமானதுமான விருந்துவிழா. மருங்கு என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்ட ஆகுபெயர்.
}:- மச்சாள், மைத்துணி என்பதன் திரிபு.

Page 96
142 மட்டக்களப்புத் தமிழகம்
மல்லாக்கப்பறிய - மல்லாந்து. மறிமாடு - பசுவோடு இணையும் காதல் நிலையில் போகும்
எருத்துமாடு.
மாங்கு :- கூரையின் இருசரிவுகளிலுமுள்ள பத்திக்கம்பு ;
கைமரத்துக்குப் பதிலாகப்போடும் கம்பு.
மாசாலம் :- வெளிவெருட்டு. 8 மாசாலம் போடாதே? மாய்மாலம் என்பதுபோன்று வழங்கும் சொல்.
மாய்ச்சல் :- சோம்பல்.
மாய்தல் - பிடிவாதம் செய்தல் ; ஏன் அதிலே மாய் கிருய் என்ருல் ஏன் அதனை விடாப்பிடியாக விரும்பு கிருய் என்று பொருள்.
மாராப்பு :- மூட்டை.
மாரி - ஆண் மாரி, பெண்மாரி என்ற சொற்களில், மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணுய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்.
மாலைபடுதல் :- மாலைக்காலம் தோன்றுதல்.
மால் :- பெரிய ஒலேக்கூடம்.
மாவரை மீள்தடி, நீண்டவரிச்சுக்கம்பு ; கூரையில்
வரிச்சி }:- மாங்குகளுக்குக் குறுக்கே வைத்து வரிந்து கட்டப்படும் மெல்லிய கம்பு.
மிடா :- பெரியபானே.
(Մ)ւ-T
மிலாறு :- நெருங்கிய மரக்கிளைகள். விளார் என்பதன் திரிபு ; பெரும்பாலும் காய்ந்த மரக்கந்துகளையே குறிப்பது.
மினக்கேடு - வீண்நேரச் செலவு - வினைக்கேடு என்ப தன் திரிபு இச்சொல். ஒரு வினையினை முடிக்காது அதிக நேரத்தை வீணுக்குதலைக் குறிக்கும்போது இது வழங்கும்.

செந்தமிழ்ச் சொல்வளம் 1 4 3
முகத்தாச்சினை _முகத்தாட்சண்ணியம். முகம் முறிக்க முகத்தாச்சனியம் ' முடியாமை, கண்ணுேட்டம் என்ற
சொல்லின் கருத்துடையது. முகறக்கட்டை :- முகம், இது இழிபொருளில் (பழித்துக்)
கூறும்போது வழங்கப்பெறும். முசுப்பாத்தி:- (மு சுப்பு + ஆ த்தி) பொழுதுபோக்கு, முசுப்பு - இளேப்பு, ஆற்றி - ஆற்றுவது. இக் கருத் தறியாதோர் முஸ்வாத்தி - என்ற பிறமொழிச் சொல் லின் திரிபென்பர். முசுறு :- முயிறு என்னும் பூச்சி. மரங்களில் வாழும் சிவந்த
நிறமுடைய எறும்புபோன்றது. முச்சுக்கூடுதல்:- சித்தியாதல். முடுகடி - கிட்டடி. முடுகுதல் :- விரைதல் (முடுகு - விரைவு), கிட்டப்போதல்.
முண்டாசி - தலைப்பாகை. * வட்டமுண்டாசி துன்ன.”
-கூத்துப்பாட்டு.
முந்தகாத்து :- நேற்றைக்கு முந்தியநாள் , * நாத்து ’
பார்க்க.
முந்தானே :- பெண்களனியும் சீலையின் முன்பகுதி.
(முன்+தானை), முல்லைக்காரன் - வயல் செய்கையாளருள் முதல்வன்.
முளிவிசளம் :- வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர்
முதலில் சந்திக்கும் சகுனம். விழாவிசேடம். முன்னிடு - ஆலயங்களில் பிரசாதத்தை முதலில் ஆலய அதிகாரி, பெரிய மனிதர் போன்ற ஒருவருக்குக் கொடுத்தல். பெருஞ்சபைதனில் உள்ள பெரிய மனிதர் ஒருவருக்குச் செய்யப்படும் முதல் மரியாதைக் கும் இப்பெயர் வழங்கப்பெறும். மூசாப்பு _ வானம் மப்பாயிருத்தல். ‘ வெளிப்பு’ என் மூசறை ரி " பது "மூசாப்பு’ என்னும் சொல்லுக்கு
எதிர்க்கருத்தைக் குறிக்கும்.

Page 97
144 மட்டக்களப்புத் தமிழகம்
முள - பிறகு (மீள), மீண்டு.
மூளி:- அங்கக்குறைவுடையது ; ஒல்லித் தேங்காயையும் குறிக்கும். மூளிவெற்றிலே, மூளிப் பாக்கு என்பன போல் அங்க அழகு கெட்ட பொருள்கள் குறிப்பிடப் பெறுவ.
மென்னி _ மென்னை ரி ' பிடரி. மேய்தல் :- (வீடு) வேய்தல்.
மொச்சை - மணம். இளம் ஆட்டிறைச்சியிலுள்ள ஒரு வகை மணத்தை விசேடமாக இச்சொல்லாற் குறிப் பர். பால் வைக்கப்பெற்ற பாத்திரங்களிலிருந்துவரும் மணமும் இச் சொல்லால் ‘பால்மொச்சை ' என்று குறிப்பிடப்படும்.
மொத்தி - வாழையின் விரியாத பூ. இது சில இடங்
களில் * பொத்தி’ என்றும் வழங்கப்பெறும்.
மொல்லாப்பு
இலைச்சல்
மோக்கான் :- பெருந்தவளை.
ராங்கி } :- பெலம்.
ராணுவம
ரேகித்தல் :- ஒருகுணம் அல்லது ஒரு மருந்து உளத்தில் அல்லது உடலில் பழக்கமாய் அமைந்துவிடுதல். இமியூண் (Immune) என்னும் ஆங்கிலச்சொல்லின் பொருளது.
- மீன்கூட்டம்.
லந்து :- பெருங்காடு.
லாசுவாரிக்கதை - பயன் இல்லாததும், பொருத்தம் அற்
றதுமான பேச்சு.
வகில் o வவுல் } :- உலோபித்தனம்.
வங்கு :- பெரிய புதைகுழி, கிடங்கு.

செந்தமிழ்ச் சொல்வளம் 145
வங்கிசம் :- வம்சம். இது முறையே வம்மிசம், வங்கிசம் என்று திரிந்த உருபினை அடைந்திருக்கின்றது. 18 வந்
தார் அழுவினமோ, வங்கிசத்தார் இல்லாமல்.’
-நாட்டுப்பாடல்.
வசைவு - வளைவு.
வடிச்சல் - நீர் வெளியேறும் வடிகால். வடிவு - அழகு (ஒசில் என்பதன் எதிர்ச்சொல்). வடுவா - வடுவுள்ளவனே ! வட்டா :- வெற்றிலை பாக்கு வைக்கும் வெண்கலத்தட்டு
(வட்டவடிவமாய் உள்ளது). வட்டி :- சாப்பிடும் வெண்கலத்தட்டு. வட்டமாக அமைந்த
வயற்பரப்பும் இவ்வாறு பெயர்பெறும். வதனமார் :- இடையர்குலத் தெய்வம்.
வந்தி - நட்டஈடு ; * இடுவந்தி கூறி நட்டம் கேட்டல் மட்டக்களப்பு வழக்கு. “ போருய் மகனே புத்தி சொல்லத் தேவையில்லை, ஊரார் கலச மணி
உடைஞ்சுதெண்டால் வந்திவரும்.’’ -நாட்டுப்பாடல் வம்பரை :- பெருந்தேன்கூடு. * வாழைப் பழம் எடுகா வம்பரையிற் தேன் எடுகா’. -5ாட்டுப்பாடல்
வம்புக்காய் :- அகாலத்திற் காய்த்தகாய்; * வம்பு நிலை
யின்மை ’ என்பது தொல்காப்பியம். வயக்கேடு :- மெலிவு. வசம்கேடு - தன்வசம் கெடுதல். வல்லுகம் :- வெற்றிலை ப்ாக்கு வைக்கப்பெறும் பை. வழங்காமுட்டு :- ஒன்றுக்கும்;இயலாதவன்; (வழங்கா - இயலாத). பரிகாசச் சொல். இதே கருத்தை ஏலா வாளி என்று கூறினல் அது பரிதாபச் சொல்லாகும். வழிசல் :- விடுகாலியானவன். ஒழுங்குகளை மீறி (வழிந்து)
5டப்பவன். A. வளவு :- வீடு கட்டுதற்கும், பயிர் செய்தற்கும் ஏற்ற
" மேட்டு நிலப்பகுதி. வறக்கத்து :- பெரிய வறுமை, அராபிய மொழியில் இது பெருஞ் செல்வ நிலையைக் குறிப்பது. இச்சொல்,
Ա) - 10

Page 98
146 மட்டக்களப்புத் தமிழகம்
இங்குள்ள சோனக மக்களிடமிருந்து பெற்று மங்கல வழக்காக வறுமையைக் குறிக்கப் பயன்படுகின்ற தென்னலாம். வறுகுதல் :- அபகரித்தல் ; மற்றையோர் பொருளைச்
சுரண்டுதல். வறுகை - சந்ததி. வாகடம் :- வைத்திய ஏடு , * மடத்தனத்துக்கு மருந்து
வாகடத்திலும் இல்லே ’ என்பது பழமொழி. வாசற்கடை - முற்றம். வாசி - தருணம் அல்லது நல்லகாலம். வாடி - வயல் முதலான தொழில் இடங்களிலுள்ள சிறு வீடு. பாடிவீடுபோன்றது. * பாடி’ என்ற சொல் லின் திரிபு இது. 8 வாடிய ’ என்ற சிங்களச்சொல்லின் சிதைவானது என்றும் கூறுவர். வாணற்காந்து :- அறுக்கப்பட்ட மரக்கட்டிகளில் மரத்தின் புறத்தோல் சார்ந்த பகுதி சேர்ந்திருப்பின் அப்பகுதி இச் சொல்லாற் குறிக்கப்படும். வாய்ச்சப்பை :- வெற்றிலே பாக்கு முதலிய எல்லாம் சேர்ந்த தாம்பூலம் ; வாயிற் சப்புதற்காக இடப்படு வது என்ற பொருளது.
வாருகல் - (வாருகோல்) கூட்டுந்தடி, துடைப்பம். வாருதல் :- அள்ளுதல். வாலாயம் :- மிகவாய்ப்பு, கைவந்த நிலை.
வாறன் :- வருகிறேன்.
விசர் :- பைத்தியம்.
விசளம் :- செய்தி; இது விசேடம் என்பதன் திரிபென்று
சிலர் கொள்ளுவர். w
விசுக்குதல் - விசிறியால் மெல்ல வீசுதல்; தூர ஒன்றை
எறிதல் ; அடித்தல். −
விட்டவிடியவும் :- அதிகாலையில் ; இது விடிய விடிய என்ற அடுக்குத் தொடரால் ஆனது. தெள்ளத் தெளிய - (தெட்டத்தெளிய) என்பதுபோல.

செந்தமிழ்ச் சொல்வளம் 147
விட்டாடி - தனித்த நிலைமை (விட்டு+ஆடி); துணைகளை
இழந்து துயருறுகிற தனிமை நிலை. விணுசல் :- மென்மையான வாய்ச்சளி. விண்ணன் :- கெட்டிக்காரன். ஆகாயம்போன்ற விசால மான ஆராய்ச்சி உடையவன் என்பது கருத்து. விசும் பின்னச் ‘சூழ்ச்சியதகலத்துக்கு உவமையாகக்காட்டிய புறநானூறு 2ஆம் பாட்டில் உள்ளதுபோல. வித்தாந்து :- கெட்டித்தனம். விரசு :- துரத்து ; “நெருங்கு’ என்பது இலக்கியப்பொருள். வில் :- குளம் ; இச் சொல்லாற் பெயர்பெற்ற ஊர்கள் (தம்பிலுவில், எருவில்) மட்டக்களப்பிற் பல உள்ளன. வில்லுக்கத்தி - விரித்து மடக்கக்கூடிய வில்லில் இயங்
கும் சிறிய கத்தி, விறுக்கன் :- முரடன். வீசம் :- அவசியம் ; * கிளக்கன் மீனைச் சுட்டுத்தாடா முடக்குராமா, அதுக்கு வந்த வீசமென்னடா - வையாளிப்போடி’ என்ற நாட்டுப்பாடலில் இப் பொருளிலே “ வீசம்’ வந்துள்ளது. அவசரம் என்ற பொருளிலும் சில இடங்களில் வரும்.
விருப்பு ; :- செருக்கு.
வெக்கடை :- (வெட்கம்+அடை) - நாணம். இது உடைய
வனை ‘ வெக்கடையன் ' என்பர்.
வெடுக்கு :- புலால்மணம்.
வெட்டாப்பு:- மழை இருள் நீங்கி வானம் வெளிப் படைந்துள்ள நிலை. "மூசாப்பு’ என்பது இதன் எதிர்ச் சொல்லாகும்.
வெட்டை :- வெளி (வெளி+வெளி - வெட்டவெளி). வெட்டைக்கிறங்கு :- புறப்படு (வெட்டைக்கு+இறங்கு).
வெம்பு :- சுடுமணல், வெந்தநிலம், பயிர் முதலியன எளி
தில் உண்டாகாத நிலம்.

Page 99
148 மட்டக்களப்புத் தமிழகம்
வெளியாக்கல் :- துப்புரவு செய்தல். கந்தல் பார்த்தல்
எனவும் இது சிலபோது வழங்கப்பெறும். வெள்ளாமை :- வேளாண்மை. வெள்ளைக்கறி :- குழம்புக்கறி போன்றதும், தடிப்பான தேங்காய்ப்பாலை மிகுதியும் சேர்ப்பதால் வெண்ணிற முடையதுமான கறி. வெள்ளை வெங்காயம் :- உள்ளி.
வெள்ளென, வெள்ளாப்பு, குமரி வெள்ளாப்பு, யானே வெள்ளாப்பு, இருள்பிரியும் நேரம் என்னும் சொற்கள் பொழுது விடிவதற்குச் சற்றுமுன் உள்ள நேரத்தின் சிறு பகுதிகளை முறையே குறிப்பன. இதற்குக் கொஞ்சம் முன்னுள்ள இருட்காலம் குமரி இருட்டு என்று சொல்லப்படும். வெள்ளாப்பு என்பதற்கு எதிர்ச்சொல் * கருக்கல்’ ஆகும். வெறுமனே :- ஒன்றுமில்லாமல்,
வெறுவாய்க்கிலங்கேடு - பெருவறுமை. உண்ணுதற்கு ஒன்றும் இல்லாமை மட்டுமன்றி, வெறுமையாக இருக் கின்ற வாயில் இடுதற்கு வெற்றிலேயாவது கிடைக் காத ஏழ்மைநிலை. (வெறும்வாய்க்கு இலேயும் கேடு). வேகரம் :- காரமான மணம். வேட்டைக்கிடா - காட்டில் வேட்டைக்குச் செல்வோர், தமக்கு மறைவிடக் தந்து பதுங்கிப் போதற்குப் பயன் படுவதற்காக உடன் அழைத்துச் செல்லும் பழக்கப் பட்ட எருமைக்கடா, “யானேயால் யானே யாத்தற்று’ என்ற குறளிற்போலக் காட்டெருமைகளைப் பிடித்தற் குதவும் பார்வை மிருகமாக மட்டுமன்றி, வேட்டை யாளர் மற்றைய விலங்குகளை அகப்படுத்திக்கொள் ளுதற்காக மறைந்து செல்லுதற்கும், காட்டுள் முள் வழிகளில் வாகனமாக ஏறிச் செல்லுதற்கும் வேட் டைக் கடாக்கள் இங்குப் பயன்படுவ. வேலிக்கால் - வேலியின் அருகு, வேலி ஒரம்.
வைத்து :- இது ஒரு இடைச்சொல். * மரத்தடியில் வைத் துச் சொன்னேன் ' என்பதிற்போல வழங்கப்படுவது.

செந்தமிழ்ச் சொல்வளம்
49
இவை ஒருபாலாக, வெளிநாட்டவர் தொடர்பாலும் பேச்சுத் தமிழிடைக் கலந்து வழங்கும் பிறமொழிச் சொற் களும் பல இத் தமிழக வழக்கில் உள்ளன.
போர்த்துக்கீச மொழிச் சொற்கள் சில :
95 3Ftrg) - Achar. gya)6).JTig5 - Alawanco. egy 6y(35T 3. – Algos. egygyLDITIf - Almario. egy6öT6)3F - Anona. gggjö356ò - Arrated. p_Googh - Roda. 5FT 5 - Casado. 536OT - Cadeira. கப்பாத்து - Capado. 45 TjGODB5 — Carrete.
8g6 - Grade. (3535th — Gudao. (5(53 - Cruz.
கொய்யா - Gotaba. (35 Tü6).L1 - Copo. G3576? - Couve. சப்பாத்து - Sapato.
FGM) ITg5 — Saladu. 3FT6? - Chave. 3FÜLulub — Cibao. ĝoG3LDög/ — Cemento. 356) usp&OOT — Taberna. தோம்பு - Tombo, நத்தால் - Natal. LJLLT Jr. - Petardo. LLLTGTLb - Batalhas.
LIT gif - Padre. Lol gerLi - Peticao. G3Lu&OT — Pena.
GLDGO)5 - Mesa. LJ6576076) - Janella.
வாங்கு - Banco.
6) Tig5 - Pato. விசுக்கோத்து - Biscotto. 676ör695 fil - Vinagre
ஒல்லாந்த மொழிச் சொற்கள்
együU6ü - Appel. அறுத்தாப்பால் கிழங்கு -
Aardappal. 957 - Ace.
L-5,565r - Hart. 9)aoTTjáF? — Laadje. g)(g điề60Db - Rak. gJonio – Heer.
d5ëGé5/Tif - Kantoor. đ56d1T6JGODT - Kalaver. (336,556ö - Ketel. (35Tdi5 - Kok. திறைசேரி - Tresorie. Gog51T6ydišGg5 - Tolk. நொத்தாரிசு - Notaris. Laidanai - Fiscal.

Page 100
O மட்டக்களப்புத் தமிழகம்
L/Gg - Vrouw. GUTjö356 - Bottel. GLD/Tair - Molen.
6)Jácsi - Bakker. 6) 1 Jg5GO?gjigi - Bankerot. aid) - Boer.
பிறமொழிகளுள் ஆங்கிலத்தின் தொடர்பு இக்காலத் தில் மிகப் பெரிதாயினும் மட்டக்களப்புத் தமிழகத்தார் அம் மொழிவழக்கிலிருந்து சொல்லிரவல் அதிகம் பெற்றி லர். இலங்கை முழுவதையும் பொறுத்தவரையிலும் இம் மொழிக் கலப்பு அதிகம் உண்டாகவில்லை எனலாம். வேண்டியவிடத்தெல்லாம் ஆங்கிலச் சொற்கள் கூடிய வரை நற்றமிழில் மொழிபெயர்க்கப்பெற்றே வழக்கேறி
உள்ளன. எனினும் ஒருவாறு இடம்பெற்றுவிட்ட ஆங்
கிலச் சொற்கள் சில :-
egy GQL (B) - Arrowroot.
g(53.60fu Ji - Engineer, (3)Lifeggië,5Ť — Docter.
6J d535i - Acre. d56ddi - Couch. C35T () - Court. கோப்பி - Coffee, கோதணமேந்து -
Government.
கோற்று - Coat. fg) 3 - Circus. FIT'ULL - Shop.
Gd dig5 - Cheque. சேட்டு - Shirt. g5 D600f - Attorney. புணில், புனல் - Funnel, Guait Sai) - Pencil. LDTiidid, G - Market.
Lustif - Yard.
G3TTdi55 - Talkie. வத்தை - Boat. 6) It air - Wine.
6a) - Bill.
GQ6) u Gofu u Gör - Banion. Gol (B) - Road.
(5ül | - Soup.
கலைச்சொற்களின் கலப்பு எங்கும் பொதுவான தாதலால் அவற்றை நாம் இங்குக் கொள்ளவில்லை.
மட்டக்களப்புத் தமிழகத்தின் நிலவளமும் கலைவள மும் பெருக்குவதில் தமிழின மக்களோடு பங்கு கொண் டுள்ள சோனகர் பெருங்குழுவினரும் நாட்டிற் பல இடங் களில் வாழ்கின்றனர். பசுந் தமிழிலே இனிமையுறப்

செந்தமிழ்ச் சொல்வளம் 151
பாடல்புனையும் புலவர் பெருமக்களும் இவரிடைத்தோன்றி
நாட்டைப் புலமைநலம் விளங்கச் செய்திருப்பதை நமது
புலவர் பரம்பரைக் கட்டுரைகளிற் காணலாகும். அம்
மக்களின் சூழலில் உள்ள ஒரு சில இடங்களில் அரபு
மொழிச் சொற்களும் தமிழிடைக் கலந்து வழங்குகின்
றன. அவ்வாறு வழங்கும் சொற்களுள் சில :-
அக்பர் - மிகப்பெரியவர்.
அசறு - பின்னேரம்; சுமார் மூன்றுமணிப் பொழுதினைக் குறிப்பது. * ஆருயம் வெள்ளி அசருலே சாயு மட்டும். ss -5ாட்டுப்பாடல்.
அமல் - அநுட்டானம், நடைமுறை.
ஆமீன் (ஆமென்) - பிரார்த்தனையை ஒப்புக்கொள்.
ஆலிம் - அறிஞர்.
ஈமான் - நம்பிக்கை.
கந்தூரி - அன்னதானம்.
கபீர் - பெரியவர்.
கலம் - பேணு.
கிதாபு - புத்தகம்.
குர்ஆன் - இறைவன் கூறியவை.
சதக்கா - தாளம், தருமம்"
சபர் - பிரயாணம்.
சபுர் - பொறுமை. * சவுறு பொறுத்துக்கொள் ' என்பது
போல, வழக்கிற் சேர்த்துச் சொல்லப்படும்.
சாஹிப் - தோழன்.
சுன்னத்து - செய்தால் நல்லது என்னும் தன்மையுடைய
கிரியை.
சீெய்த்தான் - பசாசு (சாத்தான்).
செய்லான் - இலங்கை (சிலோன்).
நஜீஸ் - அசுத்தம்.

Page 101
152 மட்டக்களப்புத் தமிழகம்
நிக்காஹ் - கலியாணம்.
பிஸ்மி - ஆரம்பம்.
மகரி - சூரிய அஸ்தமனம்,
மத்ரஸா - மதபாடசாலை.
மலக்குகள் - தேவர்.
மவுத்து - இறப்பு.
மெளலவி - மார்க்கப்பண்டிதர்.
மெளலான - நாயகப் பரம்பரையினர்.
ராகத்து - சுகவுணர்ச்சி.
வலாய் - அகியாயம், கெட்டது.
ஹக் - உண்மை.
ஹயாத் - வயது.
ஹயிறு - நன்மை. s
ஹலால் - விதி, அறம், இறைவனல் அங்கீகரிக்கப்பட்டது.
ஹரும் - இல்லை என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இறைவனல் நிராகரிக்கப்பட்டது என்பது சரியான பொருள்.
ஷர் - தீமை, ஹயிறு என்பதற்கு எதிர்ப்பதம்.
ஷர்த்து (ஷரத்து) - சட்டம்.
ஸ்லாம் - சாந்தி வணக்கம்.
இவையும், இவைபோன்றனவுமான தனிச்சொற்
கள் பல இங்கே உள்ள மொழிநடை வழக்கை அழகு
செய்வன. மட்டக்களப்புத் தமிழகத்திலுள்ள இத்தகைய
செந்தமிழ்ச் சொல்வளம் கற்றேர் கண்டு இன்புறத்
தக்கது; சொல்லாராய்ச்சி செய்வார்க்குச் சுவைதரும்
விருந்தாயமைவது. பழம்பெரும் கருத்துக்கள் செறிந்துள்ள
இவற்றின் நயத்தினை மற்றையோரும் உணர்ந்துகொள்ளு
தற்கு வழிசெய்து, வழக்கிலிருந்து இச் செல்வம் மறைந்து
போகாது பேணுதல், கற்றேரது பெருங்கடகுைம்.

6. கண்ணகி வழிபாடு 1. பத்தினித் தெய்வம்
மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழ்மக்களிடை நிலவி வருவது பத்தினித் தெய்வ வழிபாடு. பத்தினித் தெய்வம் என்று நாம் கொள்ளும் அணங்குதான் சிலம்பு தந்த கண்ணகியாவள். சோழ மண்டலத்துக் கண்ணகி பாண்டி மண்டலத்தில் வீரக் கற்பரசியாகி, சேரமண் டலத்திலே பத்தினித் தெய்வப் படிமம்சார்ந்து, ஈழமண் டலத்துச் சிங்களவரிடைப் * பத்தினித் தெய்யோ’ எனப் பெயர்பெற்று, மட்டக்களப்புத் தமிழகத்திலே **கண்ணகை அம்மன் ’ ஆகி விளங்குகின்ருள். கண்ணகி, தமிழரசு மூன்றும் கண்ட பெருமையள் என்று சிலப்பதிகாரம் கூறும். கண்ணகி பிறந்து தெய்வநிலை சான்ற தமிழ்த் திருநாட்டிலே அவள் பெயர் நிலைபெற்றுள்ள சிலப் பதிகாரம் என்னும் கலைக்கோயிலைத் தவிர்ந்த வேறு கோயில்கள் இல்லை என்றே சொல்லலாம். ஈழமண்டல மாகிய இலங்கையிலோ எனில், கண்ணகி கோயில்கள் மிகப் பல விளங்கக் காணுகின்ருேம். தமிழ் மணமோ, கண்ணகி வரலாருே சற்றும் அறியாத சிங்கள மக்களும் கூட அவளை வழிபடுகின்ற பெருஞ்சிறப்பு ஈழநாட்டிலே கண்ணகிக்கு உள்ளதாகும்.
சிங்கள மக்களிடை வழங்கும் * பத்தினித் தெய்யோ ? வழிபாடுதான் ஈழத்திலுள்ள மிகப் பழமையான கண்

Page 102
154. மட்டக்களப்புத் தமிழகம்
ணகி வழிபாடு என்று தெரிகிறது. கண்ணகி தேவியின் உண்மை வரலாற்றைச் சிங்கள மக்கள் அறியாராயினும், இந்தியாவிலிருந்தே பத்தினித் தெய்வ வழிபாடு கொண்டு வரப்பட்டதென்பதை ** இராசாவளி’ என்னும் நூலினல் நன்கு அறிவார்கள். கயபாகு மன்னன் சோழநாடு நோக் கித் தமிழகம் புகுந்து பல வெற்றிகளிட்டி மீண்டு வருகை யில் கண்ணகி தேவியின் காற்சிலம்பு ஒன்றினைக் கொண்டுவந்தானென்றும், பின்னர் ஈழத்தில் பல இடங் களிலும் அவளுக்குக் கோயில்கள் எடுப்பித்தானென்றும் இராசாவளி கூறுகிறது. சிங்கள மக்களிடையே பரம்பரை பரம்பரையாகக் கேட்கப்பட்டுவந்த பத்தினித் தெய்வத் தின் ஈழநாட்டு வருகை, கி. பி. 16ஆம் நூற்ருண்டில் எழுந்ததாகக் கருதப்படும் இந் நூலிலேதான் முதல் முதல் எழுத்துருவில் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் அறியும்போது இற்றைக்குச் சுமார் 1800 ஆண்டுகளின் முன்னர் நடந்ததெனக் கருதப்படும் கண்ணகி வரலாற் றிலே நிறைந்திருக்கும் உண்மையின் சிறப்பினைக் கண்டு மகிழக்கூடியதாயிருக்கின்றது.
சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திலே பத்தினித் தெய் வத்துக்குச் சேரன் செங்குட்டுவன் கோயிலெடுத்த வர லாற்றினை இளங்கோவடிகள் கூறியிருக்கின்ருர், சிங்கள நாட்டுக் கயவாகு மன்னனும், மற்றைய அரசரும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறுகின்ற சூழ்நிலை அங்கு ஏற்படு கின்றது : * வலமுற மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றேன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ Nலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பன்இந் நன்னுட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தக்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்’ என்பது சிலம்பு.
- சிலம்பு, வரக். 155 - 164.

கண்ணகி வழிபாடு I55
இதிற் கூறப்பெற்ற கயவாகு வேந்தன் அநுராதபுரி யைத் தலைநகராகக்கொண்டு கி. பி. 2ஆம் நூற்ருண்டிலே இலங்கையை ஆட்சி செய்தவனென்றும், தமிழகத்தில் கண்ணகிகதை நடந்த காலத்திலேயே ஈழத்துக்கு அவள் வழிபாடு இவனுல் கொண்டுவரப்பட்ட தென்றும் தெரிய வருகிறது. இம் மன்னன் இலங்கைக்கு மீண்டகாலை ? சம்பு கோளா ’ எனப்படும் சம்புத்துறைமுகம் வழியாக வந்த னன் என்பது வரலாறு. இத்துறை யாழ்ப்பாணத்தில் மாதகலுக்குக் கிட்டவுள்ள திருவடிநிலை ’ என்பதேயாகும் என்றும், அரசன் தான் இறங்கிய இடத்துக்கு அருகிலிருந்த * அங்களுமைக்கடவை' என்னும் இடத்திலே ஒரு கண் ணகி கோயிலை முதலில் கட்டினுனென்றும் பத்தினி வழி பாடு பற்றி ஈழத்திலே எழுந்த பழமையான கோயில் இதுவேயாகும் என்றும் இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியராகிய கலாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்களும் கூறுகின்றனர். அங்கணுமைக்கடவை, பழமை யும் பெருமையும் உள்ள ஒரு கண்ணகி தலமாகும் என்ப தற்கு மட்டக்களப்பிலே வழங்கும் உடுகுச்சிந்து 2 என் னுந் நூற் குறிப்புகளும் பயன்படுகின்றன. மட்டக்களப் பிலே கண்ணகி கோயில் கொண்டுள்ள ஊர்களெல்லா வற்றையும் தனித்தனி கூறி வழிபாடு செய்யும் காரணத் தால் இந்நூல் ஊர்சுற்றுக் காவியம்’ எனவும் வழங்கப் படுவது. விருத்தயாப்பினல் எழுந்த இந்நூலின் ஆசிரியர் மட்டக்களப்பிலுள்ள ஊர்களைப்பற்றிக் கூறுமுன் அங்கணு மைக்கடவை அம்மையினை நான்கு பாடல்களிலே வழுத்தி யுள்ளார். காரைதீவு பற்றிய பாடல்கள் ஏழும், வந்தாறு மூலை, செட்டிபாளையம், களுவாஞ்சி எனும் ஊர்களுக்கு முறையே மூன்றும், வீரமுனை, நீலாவண என்பவற்றுக்கு முறையே இரண்டும் நீங்கலாக மற்றைய திருப்பதிக ளெல்லாம் ஒவ்வொரு பாட்டிலேயே நூலுள் வாழ்த்தப் பெற்றுள்ளன. இறுதிப்பகுதியிலுள்ள பாடல் ஒன்றிலே * காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே’ (பாடல் 68) என்று கூறுதலாற் கண்டி நகரியிலிருந்த கண்ணகி கோயி லும் மட்டக்களப்பில் பிரசித்திபெற்றிருந்ததென்று தெரி கிறது.

Page 103
156 மட்டக்களப்புத் தமிழகம்
ஈழம் புகுந்த கண்ணகி வழிபாடு சிங்கள அரசனுல் முதலிலே தலைநகரமான அனுராதபுரத்தில் நிறுவப்பெற் றது. மன்னவன் இத் தெய்வத்துக்கு ஆடிமாதம் தோறும் விழாவெடுக்க இசைந்து வந்தனனென்று சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கூறும். கயவாகு வேந்தன் காலத்தி லிருந்து ஆடி (எசலா) மாதப் பூரணை தோறும் பெரஹரா என்ற பெயரிலே பத்தினித் தெய்வத்துக்கான திருவிழா வும் தவருது நடத்தப்பெறலாயிற்று. பெரஹரா ’ என்ற சிங்களச்சொல் பிராஹாரம்’ என்ற சங்கதச் சொல் லின் திரிபுடையது. ஊர்வலமாக வரும் திருவிழாவென நாம் இதன் பொருளைத் தமிழிற் கொள்ளலாகும். பத் தினி விழாவாக விருந்தபோது இந்த ஊர்வலத்திலே 68 நாத தெய்யோ’ (சிவன்), “ விட்டுணு தெய்யோ ’, * கதிர்காமத் தெய்யோ ’ (முருகன்) என்ற தெய்வங் களும் இடம்பெற்றன. சிங்களமக்கள் எல்லோரும் மிகுந்த பக்திசெய்யும் விழாவாக இது கடந்தது. சிங்கள மன்னர் கள் தம் தலைநகர்களிலெல்லாம் காலந்தோறும் பெரஹ ராவை இடம்பெறச் செய்தனர். பல்லாயிரம் மக்களும், நன்கு அலங்கரிக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான யானை களும் பங்குகொள்ளும் இந்த ஊர்வல விழாவானது கண்ணுக்கும் மனத்துக்கும் உவகைதரும் ஒன்ருக இன் றும் கண்டியில் வருடந்தோறும் எசலா பெரஹரா ’ எனும் பெயரோடு நடக்கக் காணலாம். இற்றைக்கு இருநூறு ஆண்டுகளின் முன்னர்ச் சீய நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த புத்தபிக்குகள் சிலருடைய விருப்பப் படி புத்தர்பிரானின் புனித தந்தப் பேழையும் கண்டி நகரில் நடந்துவந்த இப் பெரஹராவிலே இடம்பெறலா யிற்று. சுமார் இரண்டாயிர வருடப் பழமை வாய்ந்த பத்தினித் தெய்வ ஊர்வல விழாவில் காலப்போக்கிலே புத்தரின் புனித தந்தத்துக்கே முதலிடம் சிங்கள மக்க ளால் அளிக்கப்பட்டுவிட்டது. எனினும், சிங்களமக்கள் தம் வழிபாட்டு நிலையங்களுக்கு அருகிலெல்லாம் * பத்தினித் தெய்யோ’ வினுக்கும் கோயில் அமைத்து வைக்கத் தவறி யது இல்லே.

கண்ணகி வழிபாடு 157
சிங்கள மன்னனல் ஈழம் சேர்ந்த கண்ணகி வழிபாடு மட்டக்களப்பில் இடம்பெற்ற வழிபற்றிய திட்டமான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லையாயினும், அனுராத புரத்திலிருந்து முல்லைத்தீவைச் சேர்ந்த வற்ருப்பழைக் கும், அங்கிருந்து கடல் வழியாக மட்டக்களப்புக்கும் இது கொண்டுவரப்பட்டிருக்கிறது எனப் பலர் கூறக் கேட் டுள்ளோம். மட்டக்களப்பிலே உள்ள இருபத்தைந்துக்கு அதிகமான ஊர்களில் கண்ணகையம்மன் கோயில்கள் (படம் 21) விளங்குகின்றன. இவற்றுள் எந்த ஊரிலே கண்ணகை முதலில் எழுந்தருளினள் என்பதும் இலகு விற் கூறமுடியவில்லை. கோயில் உள்ள ஊர்களிலெல்லாம் அங்கங்கே கண்ணகியம்மன் குடிபுகுந்ததுபற்றிய பழமை யான வரலாறுகள் பல கேட்கப்படுகின்றன. வீரமுனை, காரைதீவு, தம்பிலுவில் என்ற இடங்களிற் கிடைக்கும் சில சான்றுகளால் கண்ணகி அங்கிருந்தே வேறு இடங்களுக் கும் போயிருக்கிருள் எனத் தெரிகிறது. அனுரதபுரியிற் பத்தினிவிழா நிறுவப்பட்டபோதே சிங்களநாட்டில் இருந்த குறுநில மன்னர்களும் தத்தம் இடங்களில் அவ் வழி பாட்டை ஏற்படுத்தினரென்பது வரலாற்றுக் குறிப்பு. அதன்படி கண்டிக்கும் உடனே சென்ற கண்ணகி அங் கிருந்து மட்டக்களப்புக்கு வந்திருத்தல் கூடும். கண்டி நாட்டாரும் மட்டக்களப்பாரும் வாணிகத்தின் வழியாகப் பண்டிருந்தே நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பிலிருந்து கண்டிக்குச் செல்வதற்கான பழைய வழியொன்றிருந்த தென்பதை அறிமுகவுரையுட் கண் டோம். அது காரைதீவிலிருந்து சம்மாந்துறை, வீரமுனை களுக்கூடாகச் சென்றது. மண்டூரிலிருந்தும், பழுகாமத்தி லிருந்தும் வந்த ? கண்டி அதர் ’ (கண்டிக்குச் செல்லும் காட்டுவழி) இரண்டும் ஊவாமாகாண எல்லேயினைச் சார்ந்துள்ள * கண்டியக்கட்டு’ என்னும் இடத்தில் வீர முனை வழியோடு ஒன்றுபட்டன. இவையெல்லாம் கண்டி நாடு மட்டக்களப்புடன் கொண்டிருந்த பெரும் தொடர் பினை உறுதிப்படுத்துவனவாகும். எனவே கண்டியிலிருந்து வீரமுனை வழியாகக் கண்ணகி வழிபாடு மட்டக்களப் புக்கு வந்து நாட்டின் வடபகுதியில் உள்ள கிராமங்க

Page 104
158 மட்டக்களப்புத் தமிழகம்
ளுக்கும் பரவியிருத்தல்கூடும். மட்டக்களப்பிலே தெற்கி லிருந்து வடக்கு நோக்கிக் “கண்ணகையம்மன் பறந்து வந்தனள் ’ என்று வழங்கும் கதைகளும், மேற்குறித்த வீரமுனை, தம்பிலுவில் முதலாகத் தெற்கில் உள்ள இடங் களிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய வழிபாட்டு வரலா றுரைப்பனவாக இருக்கலாம். எனினும் மட்டக்களப்பிலே கண்ணகி வழிபாடு இடம்பெற்ற ஊர்களின் வரன்முறை யானது மேலும் சான்றுகொண்டு நன்கு ஆராய்ந்து நிறுவப்படவேண்டிய ஒன்ருகவே உள்ளது. உடுகுச் சிந் தின் 71ஆம் பாடலில் :-
* பட்டிநகர் தம்பிலுவில், காரைநகர், வீரமுனை
பவிசு பெறு கல்முனே, கல் லாறு,மகி மூர், எருவில் செட்டி பாளையம், புதுக்குடியிருப்பு, செல்வ முதலைக் குடா, கொக்கட்டிச் சோலை, அட்டதிக்கும் புகழு வந்தாறு மூலை, அன்பான சிற்றண்டி நகரதனில் உறையும் வட்டிவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே ? என்று கண்ணகி கோயில்கொண்ட ஊர்கள் சில மட்டக் களப்பின் தென்கோடியிலிருந்து வரிசைபெற்றிருக்கக் காண்கின்ருேம். துறை நீலா வணை, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, ஆரப்பற்றை, தாண்டவன்வெளி, கோரு வெளி முதலான ஊர்களும் கண்ணகை அம்மன் அங் கங்கே குடிகொண்டமைபற்றி வேறு வேறு பழமையான ஒவ்வொரு வரலாறு கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பெங்கும் இவ்வாறு நிறைந்துள்ள கண் ணகி கோயில்களிலே வருடந்தோறும் வைகாசிமாத வளர்மதி நாட்களில் மட்டுமே பூசனை நடத்தப்பெறும். பூசனைக்கான விழாக்களைச் * சடங்கு ’ என்று அழைத் தலே மட்டக்களப்பு வழக்கமாகும். அதன் விவரமெல் லாம் அடுத்துள்ள சடங்கும் வழக்குரையும் ' என்னும் பகுதியுட் காண்போம். வசந்தன் கூத்து’ என்னும் ஆடல் களும் கண்ணகி விழாவின் தொடர்பாக இங்குச் சிறப் புற நடப்பதுண்டு. இதனையும் இனிமை நிறைந்த

கண்ணகி வழிபாடு 159
வசந்தன் பாடல்களின் சிறப்புகளையும் பற்றி இதே அதிகாரத்தில் உள்ள வசந்தன் ஆடல் ’ என்ற பகுதியுட் குறிப்பிட்டுள்ளேன்.
இவைபோக, ஈழநாட்டிற்குக் கண்ணகி வழிபாடு வந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்திலும் கண்ணகிக் கான பல கோயில்கள் அமைக்கப்பட்டன என்று தெரிய வருகிறது. ஆனல், சைவம்கொழிக்கும் அத்திருகாட்டிலே கண்ணகி சைனத் தொடர்புடையவள் என்று கருதப் பெற்றதனுற்போலும் சைவம் பரப்புவோர் சிலரின் முயற்சியால் கண்ணகி கோயில்கள் பல இராஜராஜேஸ் வரி அம்மன் கோயில்களாக மாற்றப் பட்டு விட் ட் ன. இலங்கை அரசாங்கத்துப் பழைய மந்திரியும் தமிழறிஞரு மான திரு. சு. நடேசபிள்ளை அவர்களும் இதுபற்றிய தமது ஆராய்ச்சியில் இவ்வாறே கூறுகின்றனர். ஆயினும் கண்ணகி பெயரால் வழங்கும் ஒரு சில கோயில்கள் இன்றும் அங்கே இருக்கின்றன. முல்லைத்தீவைச் சேர்ந்த வற்ருப்பழையில் இருக்கும் கண்ணகையம்மன் கோயில் வட இலங்கையிலே மிகப் பிரசித்திபெற்றுள்ள ஒன்ருகும். வைகாசிமாதப் பூரணையினே அண்டிய திங்கட்கிழமையி லன்று அக் கோயிலில் நடக்கும் பொங்கலுக்கு யாழ்ப்பா ணத்திலும், திருக்கோணமலையிலுமிருந்து பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடுதல் கண்கொள்ளாக் காட்சியாக இருக் கும். வற்ருப்பழை யம்மன் கோயிலுக்கும் மட்டக்களப்புக் காரைதீவில் உள்ள கண்ணகை யம்மன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததாக மட்டக்களப்பில் வழங்கும் கதைகளிற் சொல்லப்படுகிறது.
மட்டக்களப்பிற் கிடைத்த கண்ணகி சிலையொன்று கடல் கடந்து லண்டன் சென்று உலகப் புகழீட்டியுள்ளதாய் அறிகிருேம். * இந்திய, இந்தோனேசியக் கலை வரலாறு (History of Indian and Indonesian Art-by Dr. K. Ananda Kumaraswamy Page 167) 6TGổT GDJub graộG3ao (56ait யோகி ஆகந்தக் குமாரசுவாமியவர்கள் பிரிட்டிஷாரின் * மியூசியத்தில் இருக்கும் இந்த அற்புதமான கண்ணகி சிலையின் (படம் 22) சிறப்பினை வியந்து எழுதியுள்ளார் கள்த இது திருக்கோணமலேக்கும் மட்டக்களப்புக்கும்

Page 105
16O மட்டக்களப்புத் தமிழகம்
இடையில் உள்ள ஓரிடத்தில் அகப்பட்டிருக்க வேண்டு மென்பது அவர்கருத்து. பஞ்சலோகத்தினுற் செய்யப்பட்ட இச்சிலேதான் கலையறிஞர் இன்று கண்டு மகிழ்தற்குரிய கண்ணகியின் ஒரு முழுச் சிலையாக விளங்குகிறது. இடது கால் ஒடிந்துபோன நிலையில் இன்னேர் அழகிய கண் ணகி சிலையும் அங்குள்ளது. இலங்கையிற் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கால முதற்பகுதியில் (சுமார் 1730இல்) ஒரு கண்ணகி சிலை மட்டக்களப்புக் குளக்கட்டு ஒன்றில் நின்ற புளியமரத்தின் கீழ் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட தாகத் தெரிகிறது. எனினும், மட்டக்களப்புத் தமிழகத்தில் இதன் தொடர்பாகக் கூறப்படும் ஊர்கள் பலவற்றுள் உண்மையாக எவ்விடத்திலிருந்து இது இங்கிலாந்து சென்றதென்று திட்டமாகச் சொல்லமுடியவில்லை. ஒல்லாந் தர் தம் ஆட்சிக் காலத்திலே மட்டக்களப்பிற் செல்வம் நிறைந்து விளங்கிய சைவக் கோயில்கள் சிலவற்றைக் கொள்ளையடித்து வந்தனரென்றும், அன்னருடைய துன் பப் பிடிப்பினின்று தமது உயிருக்குயிரான கண்ணகி தேவி யைக் காப்பாற்றுதற்காக அவளுடைய இச் சிலையினை முதியோர் சிலர் கோயிலிலிருந்து வேறிடம் பெயர்த்து மறைத்து வைத்தார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது. அற்புதமான அந்தச் சிலையின் உருவப்படமொன்றினை இறுதியிற் காட்டியுள்ளோம் (படம் இல, 22).
இம் முழுச் சிலையின் அமைப்பினை நன்கு ஆராய்ந்து கண்ட கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள், வடஇந் தியக்கலை அமைப்பினையுடையதாய் மகாயான புத்தமதச் சாயலும், தீபேத்திய முத்திரையும்கொண்டு விளங்கும் இச் சிலை புத்தமதப் பெண் தேவதை ஒன்றினதாக இருத் தல்கூடும் என்று கருதுகிருர்கள். கொழும்பு, மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணகி சிலையும் மேற்கண்ட வாருன அமைப்பினையுடையதாய், லண்டன் * மியூசியத் துச் சிலையினையே ஒத்திருத்தலும், இச்சிலைகள் ஒரு முலை யிழந்த திருமா பத்தினியான கண்ணகிக்குரியனவல்ல என்ற அவர் கருத்தையே காட்டுகின்றது. சேரன் செங் குட்டுவன் சமைத்த கண்ணகியின் தமிழ்ச்சிலையினைப் படியொற்றியே கயவாகு மன்னன் இலங்கைக்குச் சிலை

கண்ணகி வழிபாடு | 6 |
கொணர்ந்திருத்தல்வேண்டுமாயினும், காலஞ் செல்லச் செல்ல அத் தமிழ்ச் சிலையினேப் படியொற்றி யெழுந்த வேறு படிமங்கள் இலங்கைப் புத்தர்களதும், பிற்காலச் சோழர்களதும் சிற்பக்கலேத் தொடர்பினல் மெல்ல மெல்ல இவ்வுருவத்தினை அடைந்திருத்தல் கூடும் என்று கொள்ளுதலும், கலாயோகி ஆநந்தக் குமாரசுவாமியவர்க ளது கருத்துப்படி நாம் இவற்றைக் கண்ணகி சிலே யாகவே கொள்ளுதலுமே பொருத்தமென்று எண்ணு கின்றேன்.
ஈழநாட்டிலே கண்ணகி வழிபாடு இவ்வாறு நிலைத்து நிற்க, பல்வேறு காரணங்களால் இந்தியத் தமிழகத்திலே அது மறைந்துபோவதாயிற்று. சோழநாட்டு வரலாற்றுக் குறிப்பொன்றைப் பார்க்கும்போது ஈழத்து அரசி ஒருத்தி யால் அங்குப் பத்தினித் தெய்வம் கோயில்கொண்டன ளென்று தெரிகிறது. கி. பி. 11ஆம் நூற்ருண்டிலே தமி ழகம் முழுமையும் ஒருகுடைகொண்ட சோழர்குலப் பெரிமன்னனுகிய இராசராசன் என்பான், இலங்கை யினையும் அடிப்படுத்திச் சிங்கள மன்னனுகிய ஐந்தாம் மகிந்தனையும் மனைவியையும் சிறைப்பிடித்துச் சென்றனன். தஞ்சையில் அமைந்த மாளிகை ஒன்றிலே அவ்விருவரும் மரியாதையுடன் வைத்துக் காவல் செய்யப்பட்டார்கள். சிங்கள மன்னனின் மனைவி பத்தினிவழிபாடு குன்ருதவ ளாகையால் அவ் வழிபாடிழந்து உயிர் வாழ்வதற்காகப் பெருதும் வருத்தினுள். ப ைக வர் மீதும் அருட்கண் செலுத்தும் பண்புபடைத்த தமிழ்ப்பெரு மன்னனுகிய இராசராச சோழன் இதனை அறிந்து அவள் விருப்பப் படியே கண்ணகி கோயில் ஒன்றை அமைத்துக் கொடுத்த தோடு பத்தினி விழாவும் அங்கு ஒழுங்குற நடந்துவரச் செய்தான். இச் சோழ மன்னது புகழினுக்கோர் சிகரம் போன்று விளங்குக் தஞ்சை இராசராசேசுவரப் பெரும் பள்ளி என்ற பிரகதீசுவரர் கோயிலுக்குச் சிறிது தூரத்தே இந்தக் கோயில் இன்றும் இருக்கின்றது. சோழநாட்டில் பத்தினித்தெய்வ வழிபாடு மறைந்திருந்த அக்காலத்தில் மக்கள், கண்ணகி தேவியினைச் சிங்கள நாட்டிலிருந்து தம்முருக்கு வந்த ஒரு தெய்வமாகக் கருதிவிட்டமையாற் போலும் “சிங்களநாச்சி” கோயில் என அதனை அழைக்க
tD – 11

Page 106
162 மட்டக்களப்புத் தமிழகம்
லாயினர். நாச்சி என்பது அம்மை என்ற பொருளில் வழங்கிய மிக உயர்ந்த ஒரு சொல்லாகச் சோழ அரசர்க ளது கல்வெட்டுக்கள் பல குறிப்பிடுவ. சிங்களநாச்சி என்னும் சொல் பிற்காலத்தே திரிபுகொண்டு இன்று * செங்களாச்சி’ அம்மன் கோயில் என்று வழங்கப்படு கிறது. சிங்கள அரசியார் குறிப்பிட்ட வழக்கப்படி இன் றும் செங்களாச்சி அம்மன் கோயிலிலே வருடந்தோறும் திருவிழா நடந்துவருதலேத் தஞ்சையிற் காணலாகும்.
இதுபோக, தமிழகத்தின் மாபெரும் பத்தினியாகிய கண்ணகி பெயராற் பழங்காலத்தே தென் இந்தியா வெங்கும் கோவில்கள் பல இருந்தனவென்று கொள் ளத்தக்க சான்றுகளும் உளவாகின்றன. சேரன் செங் குட்டுவன் கண்ணகிக்கு இமயக்கல்லிற் படிமஞ்செய்து கடவுள் மங்கலம் (" சேரன் செங்குட்டுவனர் கண்ணகி யைக் கடவுள் மங்கலஞ் செய்தற்குப் பிரிந்த பிரிவு சிலப் பதிகாரத்தில் கண்டுகொள்க. ’- தொல். அகத். 30 உரை) செய்தகாலத்திலே சோழபாண்டிய நாடுகளிலும், மற்றும் உள்நாடுகள் பலவற்றிலும், ஈழம் முதலான வெளிநாடு களிலும் கண்ணகி கோயில்களும் வழிபாடும் எழலாயின. சில நூற்ருண்டுகளுக்குப் பின்னர் தென் இந்தியாவில் இவ் வணக்கம் வேறு உருவில் மாறுபெற்றது. பத்தினித் தேவியைத் துர்க்கைஎன மக்கள் கொள்ளலாயினர். கண் ணகியைத் துர்க்கை என்று கருதுதற்குச் சிலப்பதிகாரத் திலே ஆதாரம் இல்லை எனினும் கணவன் இறந்தா னென்று கண்ட கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் பூாண்டிய னுடைய அரமனைவாயிலில் நின்றபோது வாயில் காவலர் அவளது தோற்றத்தை, கொற்றவை, காளி, துர்க்கை என்ற பயங்கரத் தேவதைகளிலொன்ருே என நினைந்து பின்னர் மானிடப் பெண்ணேயன்றி அவை யல்லள் என்று தேறினர் என்பதாகக் கூறப்பட்டிருத்தலைக் காணலாம்.
* வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள்
கானக முகந்த காளி தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்.?
-சிலம்பு. வழக். 36 - 41.

கண்ணகி வழிபாடு I6ご
அன்றியும், ‘இனிய கண்ணகை’ ‘அன்பான பத்தினி கங்கை’ என்று இவளைப் போற்றியுள்ள நூலாகிய உடுகுச் சிந்திலே மூன்று பாடல்கள் (65-67) மூர்க்க மாதா (துர்க்கை) என்று கண்ணகை யம்மனேக் குறிப்பிடுகின் றன. இதனல் கண்ணகியின் சீறிய கற்பு நிலையும், மதுரை 0ாரித்த வீரப்பாங்கும் கொண்டு அவளைத் துர்க்கை என் றும் மக்கள் கொண்டனரென்னலாம். மட்டக்களப்பில் உள்ள கண்ணகி கோயில்களிற் பெரும்பாலானவை காட் டோரங்களில் இருத்தலும் வைகாசிமாத விழா ஒழிந்த நாட்களில் அவற்றின் பக்கம் செல்லுதற்கு மக்கள் பயப் படுவதும் இக் கருத்தினை வலியுறுத்துவனவாகும். இத ஞல் இந்தியாவிலே துர்க்கையின் பெயரால் கண் னகி கோயில்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன வென்று கொண்டாலும் இன்றுள்ள நிலையில் துர்க்கை கோயில்கள் எல்லாம் அப்படி மாற்றம் பெற்றனவே யென்று கொள் ஞதற்கில்லை. ஆயினும் புத்தினியின் தொடர்பான பெயர் களும், வரலாறுகளும் உடைய கோயில்கள் சில அவற் றிடை இருக்கக் காணலாம்.
மலையாள நாட்டிலே கொடுங்கோளூர் (கொடும்பா நேர்-சிருங்கனூர்-0ranganore) என்ற நகரத்தில் ஒற்றை முலேச்சி’ என்னும் அம்மன் கோவில் ஒன்று மிகப் பிரபல மாக விளங்குகிறது. இப் பெயரினை “ஒரு முலையிழந்த திருமாபத்தினி” என்ற கண்ணகியின் பெயராகவே கருத இடமுண்டு. பங்குனி (மீன) மாதத்துப் பரணிநாளில் இப் பகவதிக்குப் பலிகள் பல கொடுத்து விழாக் கொண்டாடு கிருர்கள். இக்கோயில்தான் சேரமன்னன் பத்தினிக்கடவு ளுக்கெடுத்த முதற்கோட்டம் என்று ஈழநாட்டுப் பேராசிரி யர் கணபதிப்பிள்ளை அவர்கள் கொள்கின்றனர். ஆணுல், கொங்குநாட்டுக் கருவூரிலே வஞ்சியம்மன், வலங்கை பம்மன் என்ற திசைகாவற் தெய்வங்களுக்குக் கோயில்கள் உள்ளன. இவற்றுட் பின்னையது அங்கு நடைபெறும் வழிபாடுகளாலும், வரலாறுகளாலும் கண்ணகிக் கெழுந்ததோர் கோவிலேயாமென்று கருத இடந்தருகின் றது. இக் கோவில்கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் எடுத்த முதற் கோவிலாதல்கூடும் என்று பேராசிரியர்

Page 107
164 மட்டக்களப்புத் தமிழகம்
மு. இராகவையங்கார் அவர்கள் கருதுகின்றனர். மலையா ளத்தில் வழங்கும் கோவலன் கதையிலே கண்ணகி யானவள் இறுதியில் மலைநாடு சென்று திருச்செங்குன்றில் பகவதியாகக் கோயில்கொண்டு தரிசனந் தருகிருள் என்று காணப்படுகிறது. அதன்படி அங்குள்ள பகவதி கோயிலும் கண்ணகி கோயிலாகவே இருந்தமை புலப்படுகிறது.
மதுரை மீனட்சியம்மன் கோயிலுக்கருகிலே செல்வத் தம்மன் கோயில் என்றழைக்கப்படும் துர்க்கை கோயி லில் ஒற்றைக்காற் சிலம்புடன் காணப்படும் சிலை கண் ணகியின் படிமமாகவே இருக்கலாமாயினும், துர்க்கை ஒருகாலிற் சிலம்பும் மற்றைக்காலில் வீரக்கழலும் பூண்ட வள் என்று சிலப்பதிகாரத்துப் பழைய உரை கூறுகின்ற தாகையால் இதனை நாம் மேலும் தெளிவு செய்து கொள்ளுதல் கன்ருகும். இவ்வாறு ஒற்றைக்காலிற் சிலம்புடைய சிலை ஒன்று கங்கை கொண்ட சோழபுரத் துப் பெருங்கோயிலிலும் காணப்படுகின்றது.
நீலகிரியைச் சேர்ந்த உதகமண்டலத்து மலைக்குன்று களில் வாழும் தோடர்(Todas)களுடைய வழிபாட்டு வழக் கத்தினை ஒருமுறை நேரிற் சென்று விசாரித்தபோது, தாம் வணங்கும் துர்க்கா பகவதி பாண்டிநாட்டை எரித்த வள் என்றும் சிலம்பு காரணமாகத் தன் கணவனைக் கொலைசெய்த அரசன் மீது கொண்ட கோபத்தால் ஒரு காட்டையே எரியூட்டிய அத் தெய்வத்தின் பெயரைத் தாங்கள் வீடுகளிலே சாதாரணமாகச் சொல்லுவது மில்லை என்றும் அவர்களுள் முதியோர் சிலர் கூறினர். ஆயினும் தங்களிடம் வந்துதான் கோபம் ஆறப்பெற்ற வள் அப்பகவதி ஆதலால், தங்களுக்குத் தீங்கு ஒரு போதும் செய்யாது அருள்சொரியும் அன்னே அவளென்ற நம்பிக்கையும் அவர்க்குண்டென்று தெரிந்தது. அவ ருடைய மொழியினே அறிந்து கூறுதற்காக எம்முடன் வந்திருந்த மலையாளத்தைச் சேர்ந்தவரான இராம கிருஷ்ண மடத்துத் துறவி ஒருவர், தம் நாட்டு மலைவாசி களிடை வழங்கும் கண்ணகி வழிபாடு பற்றியும் மலை யாள மொழிக் கோவலன் கதைபற்றியும் மேலும் எமக்குக் கூறியவற்றிலிருந்து கண்ணகிதேவி மலையாள நாட்டிற் கலந்து அங்கங்கே அருள்சுரந்து வாழ்கிருள் என்றும் அறிதல் முடிந்தது.

கண்ணகி வழிபாடு 165
சென்னை நகருக்கு வடபால் உள்ள திருவொற்றி யூரில் இருக்கும் சிவாலயத்தின் வடக்கு வீதியிலே ஒரு துர்க்கை கோவில் தனியாகவுள்ளது. அதிலுறையும் தேவியும் பத்தினிக் கண்ணகியின் மாறுபாடு கொண்ட வளே என அங்கிருந்த முதியோர் கூறினர். தமிழகத் திலே வழங்குகின்ற கோவலன் கதையிற் கூறப்படும் வரலாறும் இக் கூற்றுக்குச் சான்றுபகருகின்றது. காளி யம்ச மாக இருந்த பத்தினிதேவி திருவொற்றியூருக்கு வந்து வட்டபுரியம்மன் ஆகி விழாக்கொண்டிருந்தாள் என்பது அந்நூற் கதைக்கூற்று. திருவொற்றியூரிலே இவ் விழாக்கள் பதினைந்துநாட்களுக்கு நடப்பதும் முடிவில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியை நினைவதாகப் பொய்ப் பந்தலொன்று சமைத்து அதனை எரியூட்டுவதும் இக் கோவிலைக் கண்ணகிக் குரித்தாக்குகின்றன. மட்டக் களப்பில் வழங்கும் * கோவலன் கதை’ வரலாறு அங்கு வழங்குவதற்கு வேறுபட்டதாயுள்ளது. திருவொற்றியூர்ச் செய்திகளும் மட்டக்களப்புக் கோவலன் கதையினுள் காணப்பட்டில.
கன்னடநாட்டிலே தமிழ்ச் சிலப்பதிகாரம் கூறுமாறே கண்ணகி கதை நடந்து இறுதியில் மட்டும், வெட்டுண்ட கோவலன் கண்ணகியின் கற்பினுக்கிரங்கிய சிவனருளால் உயிர்பெற்றெழ, அப்பால் இருவரும் தம்மூர் சென்று சுகமே வாழ்ந்தனரென்று திரிவுகொண்டு வழங்குவதாக அறிகின்ருேம். கண்ணகி, கோவலன், மாதவி என்பார் முறையே சந்திரா, கொய்லா, மெளலீ என்ற பெயர்க ளுடன் அங்கு வழங்கவும் பெற்றுள்ளனர். மாளுவநாட்டு நாகோட்ஸ் சமஸ்தானத்தில் ‘பதைனிதேவி என்று எழுத் திற் பொறிக்கப்பட்டு விளங்கும் கோயிலே சிலப்பதிகாரத் திற் கூறப்பட்ட மாளுவ வேந்தன் கண்ணகிக் கெடுத்த கோயிலாக இருக்கலாம் என்று கருத இடம் உண்டு.
வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக் கடுப்பு, மங்கமாரி, கண்ணுேய், பெருஞ்சுரம் என்னும் சூட்டுநோய்கள் கண்ணகி அம்மனின் கோபத்தினலேயே பரவுகின்றன என்று மட்டக்களப்பு மக்கள் பலர் கொள் கின்றனர். காளியின் அம்சமான கண்ணகையம்மனின்

Page 108
166 மட்டக்களப்புத் தமிழகம்
* பரிகலங்கள் (அணுக்கத் தேவதைகள்) எண்மர் உளர் என்றும் அவர்களே இந்நோய்களுக்குத் தலைவர் என்றும் கூறப்படுகின்றது.
* அன்றுதொட்டுப் பாண்டியநாடு மழைவறங்கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற் கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற் கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழா வோடு சாந்திசெய்து, நாடுமலிய மழைபெய்து நோயுக் துன்பமும் நீங்கியது ’ என்ற சிலப்பதிகார உரைபெறு கட்டுரையிலும் கண்ணகி காரணமாக வெம்மை நோய் கள் வந்துநீங்குதல் அறியப்பட்டுள்ளது. இந்த வெம்மை நோய்கள் பத்தினித் தெய்வத்தின் கோபம் காரணமான வையே என்றும், இவைகள் வராமற் காப்பதற்கே இத் தேவியாருக்கு வழிபாடாற்றப்படுகின்றதென்றும் சிலம்ப கதா', 'பத்தினிபடிமா’ என்ற சிங்கள நூல்களாலும் அறிய வருகின்ருேம். இது பற்றிய ஆராய்ச்சியை இலங்கையின் Lulp60LDu JiT60T 606), (Ancient Antiquities - Volume No. I) என்ற நூலிலும் காணலாம். ஈழநாட்டுக்குப் பத்தினித் தெய்வம் வந்தபோது இங்குள்ள காவற்தெய்வங்களின் கட்டுகளை மீறியே உட்புகுந்தனளென்றும், அவள் கால் வைத்த கற்பாறைகளுங்கூட அருள் விசேடத்தால் நன் னிர் சுரந்து வளம் நிறைந்தன என்றும், காளியின் அம்ச மான இவளது கோபம் பயங்கர முடிபின்னத் தரவல்ல தென்றும் மக்களிடை வழங்குவதாக பண்  ைடய இலங்கை (Ancient Ceylon) என்னும் நூலாசிரியர் கூறி யிருக்கின்றர்.
இவ்வாறு அருளன்னேயும் வீரபத்தினியுமாயுள்ள கண்ணகி தேவியினது சினம் நிறைந்தகாலை அதனைத் தணித்தற்காக மட்டக்களப்பு மக்கள் அவள் பொருட்டு * கொம்பு முரித்தல்’ என்னும் ஆடலினை மேற்கொள்ளு கின்றனர். அவ்வாடற் சிறப்பும் சுவையும், கண்ணகி விழா நிகழ்ச்சிகளும், அக்காலைக் கேட்கப்படும் வழக்குரை, குளுத்தி முதலான பாடற் சிறப்புகளும் தனித்தனி அறிந்து கொள்ள வேண்டியன ஆதலால் வேறு கட்டுரைகளாக அவற்றை இங்குத் தருகின்ருேம்.

I. சடங்கும் வழக்குரையும்
உலகறிந்த பெரும்புகழ் படைத்த இப் பத்தினித் தெய்வம் 8 கண்ணகை அம்மன்’ என்ற பெயரோடு மட்டக்களப்புத் தமிழகத்திற் குடிகொண்டுவிட்டாள். சிலம்பினுள் வரும் கண்ணகி ' என்னும் பெயர், இங்கே * கண்ணகை ’ என்று சிறந்த பொருள் கொண்ட ஒன்ரு கத் திரிபு பெற்றுள்ளமை நோக்கத்தக்கதாகும். கண் - நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையாலான இப் பெயர் கண்ணின் ஒளி, கண்ணுக்கு அணிகலம் என் ணும் பொருள்களிலே இக்காட்டிற் கருதப்படுகின்றது. மதுரையைச் சுட்டெரித்தற்குக் காரணமான கோபப் பொறி பறந்த கண்களாதலால் இப்பெரும் பேராட்டி யிடத்து அவற்றை முதன்  ைம ய ர க க் கொள்ளுதல் வேண்டும் என்று கூறுவர். மட்டக்களப்பு நாட்டிலே வெப்புநோய் பலவற்றுள்ளும் கண்களைப்பற்றிய நோயி னுக்கு மக்கள் இவ்வம்மையினையே கருதி வழிபாடும், நேர்த்தியும் செய்தலே வழக்கமாக உடையர். கண்ணகை அம்மன் சடங்கு காலத்தில் பொன்னலும் வெள்ளியின லும் செய்யப்பெற்ற கண்ணுருவங்களும், கண்மணிக ளும் அம்மனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்படுதலை யும் இக் கருத்தில் நாம் கண்டுகொள்ளலாம்.
மட்டக்களப்புப் பகுதியிலே அம்மன் கோயில்களில் நடக்கும் பூசனையினைச் சடங்கு ’ என்று கூறுதல் வழக்கம். அதனல் கண்ணகி விழாவும் மட்டக்களப்புத் தமிழில் * கண்ணகையம்மன் சடங்கு ’ என்றே அழைக்கப்பெறும். சடங்கு என்ற சொல்லுக்கு மற்றைய இடங்களிற்போலத் திருமணம் என்ற கருத்தன்றி மேலே கண்ட பொரு ளொன்றே பெருவழக்கமாக இங்குள்ளது. இந்தக் கண் னகையம்மன் சடங்கானது வருடந்தோறும் வைகாசிமாத வளர்மதிநாட்களில் மட்டுமே நடைபெறுவது. ஆண்டு முழுவதும் பூட்டப்பெற்றுக் கிடக்கும் கண்ணகி கோயி லெல்லாம் வைகாசிமாதம் பிறந்துவிட்டதும் பூரணையினை யண்டிக் குறிப்பிட்ட சில நாட்களின் முன்னர்த் திறக்கப்

Page 109
168 மட்டக்களப்புத் தமிழகம்
பெற்றுவிடுவ, மந்திர பூசனைகளோடு தேங்காயுடைத்த லாகிய ஆன்மபலி கொடுத்து அம்மனின் அருட்கதவினை அன்பர் திறப்பாராதலினல் முதல்நாள்விழா “ கதவு திறத்தல் ’ என்ற பெயராலேயே அழைக்கப்பட்டுவரு கிறது. பின்னர் நாள்தோறும் மதியம், இரவு ஆகிய இருவேளைகளிலும் சடங்கு நடக்கும். அம்மனுக்கு நடை பெறும் பூசை, தெய்வம் ஏறியோர் அவ்வேளைகளில் உருவேறப்பெற்று ஆடுதல், உடுக்கு வாத்தியங்களோடு அம்மன் காவியம், உடுகுச்சிந்து என்பன பாடுதல், அம் மானைக்காய், சிலம்பு என்பனவற்றைச் சிறுவர் * கிலுக்கு தல்’ (குலுக்குதல்), மகளிர் இடும் பேரொலிக்குரவை, ஆலத்தி முதலான எல்லாவற்றையும் சடங்குஎன்ற சொல் உளப்படுத்துவதாகும். கதவு திறந்த ஐந்தாவதுநாள் 8 கலி யாணக்கால் வெட்டுதல்’ என்னும் விசேட சடங்கும், கலி யாணப் படிப்பும் நடக்கும். குறித்ததோர் தூய இடத்தில் வளர்ந்து நிற்கும் பூவரசங்கம்பு ஒன்றினே மங்கல முழவுக ளொலிப்ப வெட்டிக்கொண்டு வருதலும், அப்படி வந்த கலியாணக் காலினைக் கோயில் மண்டபத்துள் கட்டு, ஆடை அணிகளால் ஒரு பெண்ணெனக் கோலம்செய்து கண்ணகையம்மனகப் பாவித்துக் கோவலனுர்க்கு அவ் வம்மையினைத் திருமணம் செய்வித்தலும் கலியாணப் படிப்புக்கான சடங்குநாளில் நடப்பனவாகும். அன்றெல் லாம் வீதிதோறும் கலியாணக்கால் ஊர்வலத்துக்காக அமைந்த தோரணங்களும், பந்தர், நிறைகுடம் குத்து விளக்குகள் என்பனவும் ஊர் முழுவதையுமே ஒரு திரு மண அரங்காக அழகுசெய்து நிற்றல் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும். தினமும் முறைப்படி சடங்கு நடந்து, இறுதிநாளன்று * குளுத்தி’ என்னும் பெயரினைப் பெற்று விழா நிறைவெய்தும். குளுத்திநாள் நிறைமதி சேர்ந்ததொரு திருநாளாய் மட்டக்களப்புத் தமிழகத்தி னைக் களியூட்டி மகிழ்விக்கும் ஒரு பொன்னுளாய் விளங்கு வது. இரவெல்லாம் மக்கள் துயில் நீத்துக் கண்ணகி கோயில்களிலே தங்கியிருப்பர். சடங்கு நாட்களிற் சில வற்றை மக்கள் கோயில்காத்தல்’ என்னும் நேர்த்திக் கடனுக்காக அம்மன் வீதியிலேயே தங்கிக் கழிப்பது

கண்ணகி வழிபாடு I 69
முண்டு. குளுத்தியன்றிரவு நடக்கும் சடங்கிலே பொங்கல் இடுதல் மிக முதன்மையான ஒன்ருக இடம்பெறும். நடு நிசி கழிந்த பின்னர் அம்மன் சன்னிதியில், கோயிற் பொங்கலுக்குரிய விநாயகப்பானை'யினை அடுப்பேற்றுத லோடு தொடங்கும் பொங்கல் விழாவிலே வீதியைச் சூழ்ந்து எல்லாரும் தத்தமது பொங்கலேத் தனித்தனி செய்வார்கள். விநாயகப்பானையிலிருந்து குளுத்திப்பாணக் கத்துக்காகக் கொதிக்கும் பால் கட்டாடி ( பூசாரி ) யின் கைகளினல் அள்ளிக்கொள்ளப்படும். பின்னர் நடக்கும் சுண்ணமிடித்தல் அழகிய காட்சியினையும் பத்திப் பெருக்கினேயும் தருவதொன்று. முடிவில் பொங்கலைப் படைத்து இறுதிநாட் சடங்கை மக்கள் நிறைவேற்றுவர். பொழுது உதயமாகும் வேளையில் நடைபெறும் அச் சடங்கினேத் தொடர்ந்து * குளுத்தி ஏடு படிக்கப்பெறும். கண்ணகி அம்மனது மதுரையை எரித்த கோபமானது தம் பூசனைகளால் தணிந்து குளிருமாறு அவளை வேண்டுதல் செய்யும் குளுத்திப் பாடல்களைப் பாடியபின்னர் வாழி' பாடப்பெறும். அம்மனே வரம் வேண்டி வாழ்த்தும் அந் நிகழ்ச்சிக்குப் பின்னர் எல்லாரும் குளுத்திப் பாணக்கம் ? பெறுவார்கள். பொங்கற்பானேயிலிருந்து எடுக்கப்பட்ட பாலோடு சர்க்கரை, தோடம்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு, கெய், தேன் முதலான பூசனைத் திரவியங்கள் கலக்கப்பெற்று, இனிமையும் குளிர்மையும் நிறைந்த ஓர் அமிர்தம்போன்று விளங்கும் இப் பாணக்கம் எல்லா அன்பர்களையும் உளம் குளிரச் செய்வதாயிருக்கும்.
இவ்வாறு கண்ணகையம்மன் சடங்கின் இறுதிப் பயனுய் நிறைந்து நிற்கும் குளுத்தி(குளிர்ச்சி)யே கண் ணகி விழாவில் மிக முதன்மையான ஒன்ருக இருக்கும். அக்காலேப் படிக்கப்பெறும் குளுத்தி ஏடு (இதுவும், உடு குச் சிந்து முதலிய கண்ணகி வழிபாடு பற்றிய வேறு மூன்று நூல்களும் கண்ணகை அம்மன் குளுத்திப் ப்ாடல்’ என்னும் பெயரோடு எம்மாற் சென்ற ஆண்டு அச்சிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.) கண் ண கியா ரின் பிறப்பினை :-

Page 110
17O . மட்டக்களப்புத் தமிழகம்
* காரணி யுங்கொடை வாழ் வணிகர்
காதல் மிகுத்ததோர் கோவலனர் சீரணி யுந்திரு மாமணி நங்கை
செல்வி உலகுய்யத் தோன்றினளே.??
--குளுத்திப்பாடல் 1 என்று முகம் செய்து, அம்மையின் வரலாற்றைச் சுருங்கக் கூறி, அத் தேவியின் திருவுள்ளத்திற் பிறந்த கோபத்தை யும் துன்பத்தையும் ஆற்றிக் குளிர்வித்து, வாழ்த்துகள் கூறி நிறைவுறும் ஒரு பழைய நூலாகும். அது ஆசிரியச் சீர்களிடை, வெண்தளையும், கலித்தளையும் பயின்ற சீர்க் கோப்புகளும் விரவியமைந்த செய்யுள்களை உடையது. தாழிசைகளைப் போலவே இசைநிறைத்து இவ்விரண்டடி கள் சேர்த்துப் பாடப்படும் இந்நூல் தொண்ணுாறு ஈரடிப் பாக்களா லமைத்திலங்குவது. இவற்றுள் முதற் பதினறு பாடல்களால் மதுரையை எரியுறுத்தியதுவரையு முள்ள கண்ணகி வரலாறுரைக்கப்படுகின்றது. அடுத் துள்ள இருபத்தொன்பது பாடல்கள் கண்ணகியைத் தெய்வச் சிறப்பூட்டி வழுத்துவன. மிகுதியால் அத்திருமா பத்தினியை வாழ்த்திக் * குளுந்தருள்வாய் ' என்று அவ ளைச் சாந்திவேண்டி முடிக்கின்ருர் நூலாசிரியர். நூலிற் பெரும் பங்கு அன்ளிைன் உள்ளக் குளிர்ச்சியை வேண்டு வதாற்போலும் அந்நூலும் * குளுத்திப்பாடல்’ எனப் பெயர் பெறுவதாயிற்று. V
தட்டான் பொடியாகத் தார்வேந்தன் நீருகச் சுட்டெரித்துப் போட்டதொரு தோகாய் குளுந்தருள் வாய். -குளுத்திப்பாடல் 71 எல்லை படும்பழிக்கு எண்ணவொண்ணுப் பழிவாங்கிச் சொல்லரிய மாமதுரை சுட்டாய் குளுந்தருள்வாய்.
- குளுத்திப்பாடல் 72 மதுரா புரித்தெய்வம் வாய்மாற்றந் தான்கேட்டுச் சதுராக வேகம் தணிந்தாய் குளுந்தருள்வாய்.??
- --குளுத்திப்பாடல் 78 என்று நூலின் இறுதிப்பகுதி அம்மனைக் குளிருமாறு வேண்டி நிறைவுறக் காணலாம். கண்ணகியைப் பற்றிச்

கண்ணகி வழிபாடு 171
சிலம்பு கூறும் செய்திகளுள் மதுரையை எரித்த வரலாறு வரையுமே இந்நூலும், மட்டக்களப்பில் வழங்கும் வேறு கண்ணகி கோவலன் கதைகளும் கூறுகின்றன. சிலப்பதி காரத்து வஞ்சிக்காண்ட வரலாறு இளங்கோவடிகளால் இயற்றப்பட்டதன்றிப் பின்னர்ச் சேர்க்கப்பெற்ற ஒன்ரு யிருக்கலாமென்று சிலர் கொள்ளும் ஐயப்பாடு இவ் விடத்துக் கருதத்தக்கதாகும்.
இந்நிலையில், மட்டக்களப்புக் கண்ணகி கோயில் தோறும் படிக்கப்பட்டுவரும் பழைய கண்ணகி காவியம் ஒன்றன நாம் நோக்குதல் வேண்டும். கண்ணகி வரலா றுரைப்பதாய் அவள் பெயராலோ, அன்றி இளங்கோ வடிகள் கூறுவதுபோன்று அவளது சிலம்பின் பெய ராலோ அன்றி, அவள் உரைத்த வழக்கின் பெயர் கொண்டு இயல்வதான அந்நூல் வழக்குரை' என் றும், வழக்குரை காவியம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணகி உரைத்த தோலாவழக்கினைச் சிறப்புறக்காட்டி மதுரையை அவள் எரியூட்டிய வரலாற்றேடு இந்நூலும் நிறைவுறுவதாயுள்ளது. கண்ணகி உரைத்த வழக்கினற் பிறந்த அறமே மதுரையை எரித்து மங்காப்புகழினை அந்த வீரபத்தினிக்குக் தந்து அவளைத் தெய்வ நிலை சேர்த்ததாகலின் நூலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அப் பெயர் மிகுதியும் பொருத்தமானது என்றே கூறலாம்.
இந்த வழக்குரையானது வரம்பெறுகாதை முதல் குளிர்ச்சிக்காதை ஈருகப் பதினெரு காதைகளால் நடக்கின் றது. சில ஏட்டுப்பிரதிகள் இப் பதினெரு காதைகளின் உட்பிரிவுகளையும் தனித்தனிக் காதைகளாகக் கொண்டு இருபது கான்தகளை உடையது நூல் என்றும் கூறுவ. இப் பதினென்றனுள் பத்தாவதாக உள்ள வழக்குரைகாதை யும், கண்ணகி தேவியாருக்கான காற் சிலம்பினுள் இடு தற்கென நாகமணி தேடிச்சென்ற மீகாமன், வெடியரச னுடன் போர்செய்த வரலாறு கூறும் இரண்டாவது கப்பல் வைத்தகாதை, மூன்ருவது கடலோட்டுகாதை என்பன வும், மாதவியின் நடன அரங்கேற்றம் கூறும் ஐந்தாவது அரங்கேற்றுக்காதையும், அதிகமான செய்யுள்களைக்

Page 111
172 மட்டக்களப்புத் தமிழகம்
கொண்டன. காவியம் முழுவதும் அகவலடிகளும், வெண்பா தாழிசை என்பன சிலவும் கலந்த ஒரு விருத்த நூலாக விளங்குகின்றது. கலிவிருத்தங்கள் நடைசாரி என்னும் பெயராலும், மற்றைய சந்தவிருத்தங்கள்
* சிந்து ’ என்னும் பெயராலும் இந்நூலுள் அழைக்கப்படு கின்றன. ஏறக்குறைய 2220 இத்தகைய பாடல்களைக் கொண்ட வழக்குரை காவியம் பெரும்பாலாக அந்தாதித் தொடையால் இயல்வது. இதனுள் இனிய இலக்கியச் சுவை நிறைந்த பல செய்யுள்களை நாம் காணலாம். ஆருவ தான பொன்னுக்கு மறிப்புக்காதையின் உட் பிரிவாக உள்ள இரங்கிய காதல்’ என்னும் பகுதி, கோவலன் தன்னை நீத்துச் சென்ற பின்னர் மாதவிபட்ட காதற் துன் பத்தை எல்லாம் அழகுற வர்ணிப்பதாய் அமைந்துள்ளது.
* கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிரங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்காய்த் தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார் தானிரங்கு கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமெல்லாம் ??
என்பது முதலான இன்சொற்புணர்ந்த எழுபத்தேழு பாடல்களை இப்பகுதி கொண்டிருக்கின்றது. நூலுக்கு உயிர்நாடிபோன்று இறுதியில் உள்ளதான வழக்குரை காதை கண்ணகி தேவிக்கும், கோவலனைக் கொடுங் கோன்மை செய்த பாண்டிய மன்னனுக்கும் இடையில் கடந்த நீதிப் போராட்டத்தை இருநூற்றிருபத்தைந்து பாடல்களால் விவரிப்பது. * கண்டனளே நெஞ்சகத்தே கடுங்கோபங் கனலெழவே
தொண்டையது பதைபதைக்கத் துடியிடையா ளfதுரைப்பாள் கொண்டலெனக் கொடைபடைத்த கோவலரைக் கள்வனென்று விண்டுரையால் வெட்டுவித்த மீனவன்றன் வாசலிதோ.--33 மீனநெடுங் கொடிவிளங்க வென்றிமன்னர் புடைசூழச் சோனை மத கரிபரியும் துங்கமணித் தேர்படையும் தேனமரும் தொடைபுனைந்து செங்கனக முடியிலங்க மானபங்கம் பாராத வழுதிதிரு வாசலிதோ.”* 34
எனப் பாண்டியனது அரமனைத் தலைவாசல் கண்ணகியின் கண்களினூடு இப்பகுதியுட் காட்டப்படுகின்றது. கண் ணகி தேவியினது வீரக் கற்பினை நமக்குத் தெளிவுறுத் தும் இவ்வாருண பாடல்கள் வழக்குரைகாதையில் நிறைந் துள்ளன. மதுரையினை எரித்த வீரபத்தினியை இடைச்சேரி

கண்ணகி வழிபாடு 1 78
மாதர் குளிர்விப்பதைக் கூறுவது இறுதியிலுள்ள குளிர்ச் சிக்காதை, வழக்குரை காவியத்தின் பெரும்பகுதி, அந்தா தித் தொடையால் நடத்தல், நூலே மனப்பாடம் செய்து கொள்ளுவார்க்கு இலகுவானதாய் இருக்கின்றது.
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான இத்தகைய வழக்குரை காவியமானது சிலம்பிலே நாம் காணும் கண் ணகியினேப், பிறப்பிலிருந்தே தெய்வ நிலை சேர்த்து வளர்த்துவரும் ஒன்ருய்ப், பல வேறுபாடுகளைக்கொண்ட கதைப்போக்கினை உடையதாய் இலங்குகின்றது. அதில் கூறப்பட்டுள்ள கண்ணகி வரலாற்றின் சுருக்கத்தினை நாம் இங்குக் காணுதல் நன்று :-
பராசர முனிவரது மகளின் அருங்குணத்தையும், பேரழ கினையும் கண்டு மகிழ்ந்த சிவபிரான் அவளை நோக்கி நீயும் பூலோகத்தாராற் தெய்வமாகப் போற்றப்படும் தகைமை உடையவளாதலால் கற்புக்கரசியாக விளங்கவும், மானி டர் உன்னைப் பத்தினித் தெய்வமாக வணங்கவும் ஒரு வரம் தந்தோம் என்றனர். தன் தவப்பேற்றினல் சிவனைப் போல நெற்றியிலும் கண் கொண்டிருந்த பாண்டியமன்ன னிட மிருந்து அக்கண் நீங்கிவிடல் வேண்டும் என்று தனக்கிருந்த நீண்டநாளைய ஆசையைப் பார்வதி தேவியும் அவ்வேளை இறைவனிடம் கூறினுள். அவ்விருப்பினை நிறைவேற்றுதல் வேண்டும் என்று தேவி வேண்டிக் கொண்டதற்கிணங்கப் பராசரன் மகளுக்குப் பாண்டிய நாடு பூலோக பிறப்பிடமாகக் கற்பிக்கப்படலாயிற்று.
பின்னர் ஒருபோது அங்காட்டிலே புதுமை வாய்ந்த மாங்கனி ஒன்று காணப்பட்டது. அதனைப் பறிக்க மரத் தில் ஏறினுேர் கண்களுக்கு மறைந்த அப் புதுமைக் கனி யினை அறிந்த அரசன், முனிவர் சிலரின் யோசனைப்படி அம்பினல் அதனே அறுத்து வீழ்த்தினன். நிலத்தில் வீழாது அந்தரத்தே தொங்கிய அம் மாங்கனியைப் பிடிக்க அரசன் மீட்டிய கைகளில் நெருப்புருண்டையாகி அது விழவே அரசனும் பயந்து நிலத்திடை அதனைவிட் டெறிந்து தன் கையால் நெற்றியின் வியர்வையைத்

Page 112
174 மட்டக்களப்புத் தமிழகம்
துடைத்தனன். மாங்கனியைத் தொட்ட அக் கை பட்ட தும் அரசனது நெற்றிக்கண் அழியலாயிற்று. நிலத்திடை வீழ்ந்த கனியினை அரசன் தன் மனைவியிடம் கொடுத்து நடந்ததைச் சொல்லி வருந்தின்ை. அவளும் தெய்வத் தன்மை பொருந்திய அக்கனியினைப் பொற் குடத்திலிட்டு வைத்தனள். மூன்ரும்நாள் அரசவைக்கு அக் குடத்தி னைக் கொண்டுவரச் செய்து பார்த்தபோது மாங்கனி அழகிய பெண்ணுயிருக்கக் கண்டு அனைவரும் வியப்புள் மூழ்கினர். இந் நிகழ்ச்சியெல்லாம் ‘பீடுறும் மதுரை அரசோ டழியக் காரணமாகும் ’ என்று கணிதர் சொன்னபடி, அறிந்த மன்னனும் அழகிய பேழையொன்றிலே குழந் தையை வைத்துக் கடலில் விட்டெறிந்தான்.
சோழநாட்டிற் கரிகாற் பெருவளத்தான் ஆட்சிசெய்த இக்காலத்தில், அந்நாட்டின் தலைநகரமாகச் சிறப்புற்று விளங்கிய காவிரிப்பூம் பட்டினத்திலே மாசாத்துவான், மாநாய்கன் என்றிரு வணிகர் பெருமக்கள் வாழ்ந்திருந் தார்கள். அவருள் மாசாத்துவானுக்குக் கோவல னென் ருெரு புதல்வன் இருந்தனன். மற்றையவனே பிள்ளைப் பேறில்லாது கவன்று வாழ்ந்தவன். இருவரும் ஒருநாட் கடற்கரையில் நிற்கும்போது கரை சேர்ந்த மேற்படி பேழையுள் இருந்த குழந்தையினையே மாநாய்கன் தன் மகளாகப் பெற்றன். பிள்ளையில்லாக் கவலையால் ஒளி யிழந்திருந்த தன் கண்களுக்கு ஒளியும், மகிழ்வும் ஊட்டிய அக் குழந்தையைக் கண்ணகை என்று பெயர் சூட்டி வளர்த்துவரலாயினன்.
பருவம் எய்திய கண்ணகை கோவலனுக்கு மண மகளாகக் குறிக்கப்பெற்ருள். திருமணத்தின் முன்பு தன் பெண்ணுக்கு மாநாய்கன் விலையுயர்ந்த நகையெல்லாம் செய்வித்து அணிய விரும்பினன். காற் சிலம்புக்கு மட்டும், தகுந்த உள்ளிடு மணி பெருது வருந்திய அவனுக்குச் சோழநாட்டின் தென்றிசையிலே உள்ள தீவொன்றிற் கிடைக்கும் நாகமணியின் சிறப்பும் அதன் பெறுதற்கருமை யும் கூறப்பட்டது. வெடியரசனின் ஆளுகையில் உள்ள அத் தீவுக்குச் சென்று மணி கொணர்தற்கு வேண்டிய

கண்ணகி வழிபாடு 75ן
கப்பற் படைகளை ஒரு மீகாமனிடம் மாநாய்கன் கொடுத் தனுப்பினன். கப்பல் சமைத்தற்கான மரம் ஈழ5ாட்டி லிருந்து பெறப்பட்டது. உறுதிபெறச் சமைத்த கப்பல்க ளுடன், மீகாமனும் அத் தீவகத்தை அணுகி வெடி யரசனிடம் நாகமணி கேட்டபோது அவன் மறுத்துரைத்த னன். அதனுல் இருவர்க்குமிடையில் நடந்த பெரும் போரில் வெடியரசன் தம்பியாகிய வீர நாராயணன் கொல்லப்பட்டு வெடியரசனும் சிறைசெய்யப்பட்டான். பின்னர் வெடியரசனின் இன்னேர் தம்பியாகிய விளங்கு தேவன் எதிரிகளைத் தன்னுற்றலாற் சிறைசெய்து தமை யனை மீட்டுக்கொள்ளவே மீகாமன் அவனே இரந்து நின்று தான்வந்த காரியத்தைக் கூறி நாகமணிகளைப்பெற்று மீண்டனன். இத்தனை அரிய மணிப்பரல் கொண்டு செய்யப்பெற்ற சிலம்பு கண்ணகியின் காலில் அணியப் பெற்றபின்னர்க் கண்ணகியும் கோவலரும் சிறப்புறத் திருமணம் நடக்கப்பெறலாயினர்.
இது இவ்வாருக, தேவலோகத்தில் நாரதமுனிவரின் சாபத்துக்காளாகிய ஊர்வசி,கணிகையர் குலத்தினளாகிய சித்திராபதிக்கு மகளாய் மாதவி என்னும் பெயரோடு காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்திருந்தாள். ஆடல் பாடல் வல்ல அவளது நடனம் அரசன் ஏவலால் ஒரு5ாட் சிறப் புற அரங்கேற்றம் பெற்றது. மாதவியின் அழகினலும் இசை, நடனச் சிறப்பினுலும் பெரிதும் மகிழ்வுற்ற அரசன் விலையுயர்ந்த பல பரிசில்களோடு ஒரு பொன்மாலேயினேயும் அவளுக்களித்தான். மாதவியை மணஞ்செய்யவிரும்பு வோர் ஆயிரத்தெண்ணுரறுகளஞ்சுபொன் கொடுத்து அம் மாலையை வாங்குவதோடு, நாள்தோறும் அவ்வளவு பொன்கொடுக்கவும் கடமைப்பட்டவராவர் என்று மதிப் பும் செய்தனன். அவள்பாற் பெரிதும் மயங்கிய கோவல ஞர் அதற்கு உடன்பட்டு மாதவியுடன் வாழ்வாராயினர்.
ஈராண்டு வாழ்க்கையின் பின்னர்ப், பரந்துபட்ட அவனது கடல்வாணிகம் இதனுற் சுருங்கி வருவாய் குன்றவே மாதவிக்குக் குறித்தபடி பொன் கொடுத்தலும் சிறிது சிறிதே தாமதமாயிற்று. சித்திராபதியோ குறித்த பொன்னைப்பெருது இலகுவில் அவனை விடுபவளாயில்லை. மாதவியின் தோழி ஒருத்தியால் தன் கணவனுக்

Page 113
176 மட்டக்களப்புத் தமிழகம்
ஏற்பட்ட இந்த அவமானத்தை அறிந்த கண்ணகிதேவி தன் நகைகளே அவனிடம் அனுப்பிவைத்தாள். கண்ணகி அணிந்தவற்றைத் தான் அணிய முடியாதென்று கூறி அவற்றை உருக்கிப் பொன்னகத் தரும்படி மாதவி கேட்ட னள். குறித்த அளவுக்கு ஒருசிறிது (அரைமாப்பொன்) . குறைந்த இப் பொன்னைச் சித்திராபதியின் தூண்டுதலால் ஏற்க மறுத்த மாதவியினது பிடிவாதம் கோவலனைப் பெரி தும் மனம்வருந்தச் செய்தது. இதன் பின்னர் மாதவியின் விருப்பப்படி அவளுடன் ஒருகாட் காவேரியாற்றின் கரைக் குச் சென்றிருந்த கோவலன் பேசாதே அவளைப் பிரிந்து செல்லலாயினன். வயந்தமாலை என்னும் தோழியைத் தூதுவிட்டு அவனே மீட்டுத்தர மாதவி செய்த முயற்சி யும் பலிக்காது போயிற்று.
தனது இந்த இழிதகவுக்கு வருந்திய கோவலன் கண்ணகியோடு, இரவோடிரவாக மதுரை நோக்கி நடந்து சின்னுளில் அந்நகர்ப்புறத்திருந்த இடைச்சேரியினைச் சேர்ந்தனன். இடைச்சியரது ஆதரவில் சிலநாள் இரு வரும் மகிழ்ந்திருந்த பின்னரே சிலம்பு விற்கச் சென்ற கோவலன் அரமனேச் சிலம்பைத் திருடிய தட்டான் ஒருவனுல் கள்வன் என்று அரசனிடம் காட்டிக்கொடுக்கப் பெற்றனன். ஆராயாது கொலேத்தீர்ப்பிட்ட அரசனது கொடுங்கோன்மையும் கோவலனைப் பலிகொள்ள லாயிற்று.
தன் தீக்கனவுகளால் கோவலற்குற்ற தீமையை உணர்ந்த கண்ணகி வேப்பங்கிளை ஒன்றினை ஒருகையி லும் ஒற்றைச் சிலம்பினே மற்றைக் கையிலும் கொண்டு கொலைக்களம் நோக்கி ஓடினுள். இறந்து கிடந்த கணவ னுடலேக் கட்டித்தழுவி உயிர் பெற்றெழச்செய்து க்டந்ததை அவன் மூலம் அறிந்து கொண்டாள். கோபக்கனல் பறக்க அரசவைபுகுந்து தன் கணவன் கள்வனல்லன் என்று பாண்டிய மன்னனுடன் வழக்குரைத்து உண்மையை அவள் நிலைநாட்டிய உடனே அரசன் உயிர் துறந்தான். அதுகண்டு அவன் மனைவியாகிய கோப்பெருந்தேவியும் இறந்துவிடுவாளாயினள்.

கண்ணகி வழிபாடு .7לן
கண்ணகியோ அதன் பின்னரும் சீற்றம் தணி யாளாய்த் தன் ஒரு முலையினைத் திருகி அக்கொடியோன லாளப்பெற்ற “மதுரையும் எரிந்தழிக’ என்று வீசினள். எங்கும் தீச்சுவாலே கொழுந்துவிட்டதும், தன் கட்டளைப் படி எரிபுகாது தவிர்ந்திருந்த இடைச்சேரியிடையே புகுக் தாள். இடையர்குல மகளிரெல்லாரும் அவளை நெய், பால், தயிர் பெய்து திருமுழுக்காட்டிக் கோபம் தணிவித் கார்கள். * பத்தினித்தெய்வம் இவள் ’ என்று பராவிக் குளிர்ச்சி செய்தார்கள். கண்ணகையும் அவர்கள் வேண்டு தற்படி எரியுண்ட மதுரை தழைக்க வரங்கொடுப்பா ளாயினள். மக்கள் குலமும் அவளைத் தெய்வமென்று போற்றி வாழ்வு பெறுவதாயிற்று; என்று வழக்குரை காதைக் கண்ணகிவரலாறு நிறைவுறுகின்றது.
இடையர் செய்த குளிர்ச்சிவிழாவே கண்ணகை யம்மன் சடங்கின் இறுதிநாளிற் குளுத்தி ஆக இங்கு நடை பெறுகின்றது என்பர். அவ்வேளையிற் பாடப்படும் குளுத் திப் பாடல்களும் கண்ணகையைச் சாந்திசெய்த வரலாறு கூறுவனவே யென்பது தெளிவாகின்றது. இடையர் மகளிர் செய்த குளிர்ச்சி விழா ஒருபாலாக, இடையர் குலச் சிறுவர்களும் சில விளையாட்டுக்களைக் கண்ணகியின் முன்னிலையிலே அவளது கோபந் தணிந்து உளங்குளிரு மாறு செய்தனரென்றும், அவற்றுள் கொம்பு விளையாட் டும், வசந்தனுடலும் குறிப்பிடத்தக்கவை என்றும் மட்டக் களப்புத் தமிழகத்திற் கூறப்படுகின்றது. அவ்வாடல்கள் பற்றிய விபரம் இவ்வதிகாரத்திலே தனித்தனி காட்டப் பெற்றுள்ளது.
* அம்மன்-பள்ளு ’ என்ற வசந்தன் பாடல்களிலே கண்ணகியின் முதற்தோற்றமான மாங்கனியினது பிறப்பு வேறுபடக் காணப்படுகிறது. பாண்டியனது பேரவை யிலே மாதவியின் நடன அரங்கேற்றம் நடந்ததென்றும், அக்கடனச் சிறப்பினல் அரசன் மிக மகிழ்ந்து அவளை வியந்து சிரித்தானென்றும், மதுரையின் தெய்வமாகக் குடிகொண்ட தன்னை மறந்து அவளை வியந்த அன்ன னது ஆணவச் சிரிப்பினைச் சகியாத பரமேசுவரியின்
12 - מL

Page 114
78 மட்டக்களப்புத் தமிழகம்
நுதல்விழியிலிருந்து பறந்த கோபப்பொறி ஒன்று மாங்கனி யாயிற்றென்றும் அப்பள்ளு கூறும். பின்வரும் பாடல்களில் அம் மாங்கனியின் அவ்வரலாறு உள்ளது :
9. ஆடும் பரதக் தனக்கண் டரசனும்-வழுத்திச்சபையில்
அகமகிழ்ந் திணிதாக நகைத்தனன் நீடு மரசன் நகைத்த நகைகண்டு-பரமேஸ்வரியும்
கிறைசபை தனில் உருப்படாமலே,
10. உருவில் லாத மாய மாகியே-நுதல்விழிதனில்
ஒருபொறி கவிழ்க் துறக்க மானதே விருத ரரசர் புகழ்தென் பாண்டியன்-வீற்றிருக்கிற
வேளை யன்னதில் மாங்கனி யானதே.
பத்தினித் தேவிபற்றிய கதைகள் இடந்தோறும் பல பட வழங்கினலும் பிறப்பிலிருந்தே தெய்வதிலே சான்ற பெருநங்கை கண்ணகை என்பது இந்நாட்டின் பெரு வழக்கான முடிவு. அவளது புகழுரைக்கும் வழக்குரை காவியம், குளுத்திப் பாடல், வசந்தன் கவிகள், உடுகுச் சிந்து என்னும் நூல்கள் மட்டக்களப்பின் பெருஞ் சிறப் புரைக்கும் பழைய இலக்கியச் செல்வங்கள். அவற்றைப் பேணுவதால் காட்டின் கலேவளமும் பத்தினி வழிபாட்டுச் சிறப்பும் நம்மாற் பெரிதும் போற்றப்படுவனவாகும்.

II. கொம்பு விளையாட்டு
* கொம்பு’ என்ற சொல் விலங்குகளின் கொம்பு களைப்பற்றிய எண்ணத்தையே பொதுவாக நமக்கு ஊட்டு வது. ஆயினும் இங்குக் குறிப்பிடும் கொம்பு என்பது மரங்களில் இயல்பானமைந்து காணப்படும் வளைதடி ஒன்றே என்பதைப், பயின் ருேர் உடனே அறிந்து கொள்ளுதல்கூடும்.
செங்கோல் கோடியவனுய்க் கோவலனைக் கொலை செய்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கி அவனரசியற்றிய மதுரையினை எரியூட்டிய பின்னரும் கோபந் தணியாது வந்த கண்ணகிமுன்னர், இடையர்குலத் திளைஞர் ஒரு காதல் கலந்த விளையாட்டு விழாவாகக் கொம்புவிளே யாடலைச் செய்து அவளைக் குளிர்வித்தனர் என்றும் அதன் தொடர்பினதாக எழுந்ததே இன்றும் மட்டக்களப் பில் வழங்கும் கொம்பு விளையாட்டு என்றும் கண்டோம். கோவலன் கட்சியாரும் கண்ணகை கட்சியாருமாக மக்கள் பிரிந்து நின்று இரண்டுவேறு வளைந்த தடிகளை ஒன்ருே டொன்று கொளுவி இழுத்துக் கோவலனதை முறித்துக் கண்ணகிக்கு வெற்றிகாட்டி மகிழ்வித்தபோது அந்தப் பத்தினித் தெய்வம் சினம் தணிந்து ஆறி இடைச்சேரியை மேலும் வாழ்த்திச் சென்றனள் என்றும் கொம்புவிளை யாடிக் கண்ணகியம்மனுக்குக் குளுத்தி செய்து வேண் டிய வரம் பெற்றனர் என்றும் இங்கு கூறப்படுகிறது.
மட்டக்களப்பு நாட்டிலே மழைவளம் குன்றிப் பசி யும் பிணியும் மிகுந்து மக்கள் கொடிய வெய்யிலினுல் நலிந்து அல்ல ற் படும் கா லேக் கண்ணகி தேவியினை நினைந்துகொள்ளுதலும் அத்தகைய கொடிய வெப்ப நிலைக்குக் காரணம், அந்த வீரபத்தினியின் சீற்றமிகுதியே என்று அவளுக்குச் சாக்தி செய்ய முனைதலும் இன்றும் உள்ள வழக்கமாகும். அத்தகைய சாந்தி நிலையைக் கண் ணகிக்கு ஊட்டுமுகத்தான் ஊர் முழுவதற்குமே மகிழ்வூட் டும் கலையாடலே கொம்புவிளையாட்டு. இவ் விளையாடல் கடந்தால் உடனே நாடு குளிர மழை பொழிந்து இன்ன

Page 115
80 மட்டக்களப்புத் தமிழகம்
லெல்லாம் நீங்கப் பெறுதல் வியக்கத்தக்க வொன்ருக இன்னமும் மட்டக்களப்புத் தமிழகத்தில் கடப்பதைக் காணலாகும்.
கொம்பு விளையாட்டுத் தொடங்கியதும் ஊர் முழுதும் இரண்டு கட்சியாகிவிடுதல் உண்டு. ஒன்று கண்ணகிக்கும் மற்றையது கோவலனுக்குமான அக் கட்சிகள் முறையே தென்சேரி, வடசேரி என்று பெயர் குறிப்பிடப்படுவன. சேரியென்பது சொல்வழக்கில் இங்கு 8 வாரம் ’ ஆகும். பண்டுதொட்டே மருமக்கட்தாய வழக்குடையதாதலால் தாய்வழி கொண்டே குடிப்பெயர் முதலியவற்றிற்கு இக் காட்டுமக்கள் கருதப்படுவாராயினும், கொம்பு விளையாட் டுச் சேரிவாரத்தில் மட்டும் அவர் தந்தை வழியைச் சார்ந்து நிற்றல் நோக்கத்தக்கது. இங்கு வாழும் தமிழ் மக்கள் மருமக்கட்தாயம் வளர்ந்த பண்டைச் சேரநாட்டின் தொடர்பினராதல் கூடுமென்றும், தந்தைவழிச் செல்லும் மரபினையுடைய பாண்டிநாட்டு மதுரையினின்றும் வந்த தொடர்பினதான கொம்புவிளையாட்டில் அந்நாட்டு மரபை யொட்டிய பிரிவு இங்கே இடம்பெற்றதென்றும் கொள்ளு தற்கு இங்கிலே இடம் தருகிறது. சாதாரண காலங்களில் பொருள் எதுவும் அற்றதாகத் தெரியும் இவ்வாரப் பகுப் பானது கொம்பு விளையாட்டுக் காலங்களில் உயர்ந்த பொருள்கொண்ட உணர்ச்சிப் பகுப்பாக விளங்குவதைக் காணலாம். குலம், குடி அனைத்தையும் மறந்து அந்தந்தச் சேரியார் ஒன்றுபட்டு நின்று விளையாட்டின் வெற்றி தோல்விகளை உணர்ச்சியுடன் அனுபவிப்பர். கணவனும் மனைவியும் முறையே இரு வேறு வாரங்களையும் சேர்ந்த வர்களாக இருக்க நேர்ந்தால் கொம்பு விளையாடலது வெற்றி தோல்விகளின் எதிரொலியினை வீடுதோறும் நடக்கும் பெருத்த சண்டைகளாக நாம் காணக்கூடிய அவ்வளவு உச்சநிலையை நோக்கி இவ்வாடல் நடைபெறு தல் பெருவழக்கு.
கொம்பின் அமைவினே உடனுள்ள படங்களின்மூலம் ஒருவாறு காட்டியுள்ளோம் (படம் இல: 23, 28A). வட சேரியாரது கொம்பு பெரும் பாலும் தொண்ணுரறு பாகைக்கு மேற்பட்ட வளைவுடையதாகவும் தென்சேரி

கண்ணகி வழிபாடு 18
யாரது அதிலும் ஒடுங்கியதாயும் இருக்க வேண்டியது பொதுவிதி. இயல்பான் அமைந்த வளைவுடைய இத்தகைய கொம்புகளை எல்லா மரங்களிலும் காணலாமாயினும் * கரையாக்கு’ என்னும் ஒருவகை மரத்திலிருந்து மட் டுமே விளையாட்டுக்கான கொம்புகளை எடுப்பது மர பாகும். கருவீரம் என்றும், வெட்சியென்றும் இம் மரம் இலக்கியப் பெயர்பெறும். . கொம்பு விளையாட்டுத் தொடங்கப்படுதல் வேண்டு மென்று ஊர்கூடித் தீர்மானஞ் செய்த பின்னர், பொது மன்றிலே ஓர் இரவு போர்த்தேங்காய் அடித்தலைக் கொம்பு முறித்தலின் முதல் விழாவாக நடத்துதல் மட் டக்களப்பு வழக்கு. எதிரெதிராக இருக்கும் இருவாரத் தினரதும் பிரதிநிதிகளிருவர் தம் கையிற்கொண்டுள்ள வலிவுடையதான சிறிய போர்த்தேங்காய்மூலம் முறையே எதிர் வாரத்தார் உருட்டியனுப்பும் தேங்காய்களை ஒவ் வொன்ருய் உடைப்பர். ஒருபகுதியாரால் உடைக்கப் பட்ட தேங்காய்களின் கூடிய எண்ணிக்கை கொண்டு வாரத்தினுடைய வெற்றி தீர்மானிக்கப்படும். அது முடிந்த தும் கொம்பு விளையாட்டின் முதற் குறியாக ஒரு கொம்பை முறித்து அவ்விழாவினை ஆரம்பித்துவைப்பது வழக்காகும். முதல் முதல் உடைக்கும் தேங்காயிலும், போர்த்தேங்காய் உடைத்தல் நடந்த பின் முறிக்கும் முதற் கொம்பிலும் அம்மனின் (கண்ணகை அம்மாளின்) தென் சேரிவாரத்துக்கே வெற்றிகொடுத்தல் மரபு.
மறுநாளிலிருந்து கொம்பு முறித்தல் நடக்கும். இரு வாரத்தாரது கொம்புகளின் வளைவிலுமுள்ள ‘குச்சு’க்கு அண்டிய பாகத்தின் சுற்றளவால் ஒத்த கொம்புகளே போட்டிக்காகத் தெரிந்தெடுக்கப்படுவன. அவை முறுக் கேறிய புரிகளால் வரிந்து கட்டப்பெற்றுப் பணிச்சங்காய்ப் பசையூட்டிக் காயவைக்கப்படும். அவ்வாருன கொம்பினை நடுவில் வைத்துப், பசையூட்டிய புரியாற் சுற்றப்பட்ட இரண்டு கம்புகளை இருபுறமும் அணைத்துக்கட்டுதல் கியதி. கொம்புடன் அணேத்துக்கட்டப்பட்ட இரு கம்பு களும் 8 பில்லி’ என்றழைக்கப்படுவ. பில்லி கட்டப்பட்ட கொம்பே விளையாட்டுக்குத் தகுதியான நிறைந்த நிலையை

Page 116
182 மட்டக்களப்புத் தமிழகம்
அடைந்ததாகும். ஒரு மரத்திற் பூட்டிய அரிப்பு' (சிறு வடம்) எனப்படுவதான கயிற்றில் தென்சேரியாரின் கொம்பு தொடுக்கப்படும். அக் கொம்பிற் கொளுவிய வடசேரிக் கொம்பிலே இன்னேர் அரிப்பினைப் பிணைத்து அவ்வரிப்பிலே பெரிய வடமொன்றை மாட்டுவர். அவ் வடத்தைப்பற்றிப் பலர் இழுக்கும்போது இரு சேரியை யும் சேர்ந்த திறமையாளர் சிலர் தத்தம் கொம்புகளிற் * பல்வாய் (கொம்பின் தலைப்பகுதி), * குச்சு ’ (கொம் பின் வளைந்த இடத்து நடுஆணி), 8 முதுகுமரம் ’ (கொம் பின் தலைப்புப்பகுதி), 8 பில்லி (கொம்பின் இருபுற மும் அணைத்துக்கட்டிய தடிகள்) என்னும் உறுப்புக்களே யெல்லாம் முறைப்படி பிடித்துக்கொள்வர். அரிப்பிற் பினேந்த பெருவடத்தினை இருசேரிப் பொதுமக்களும் இழுப்பர். அப் பலரது இழுவைப் பொறுப்பினல் இரண்டி லொரு கொம்பு முறியும். உடனே வென்றபகுதியார் தமது வாரத்தின் பெயரைச் சொல்லி அதற்கு வெற்றி யென்று கூவி ஆடிப்பாடிச் செல்லுவர். இந்த வெற்றிக் களியாட்டத்தின் அளவு, முறிக்கப்படும் கொம்பின் தரத் தைப் பொறுத்ததாகும். கொழுக்கொம்பு, கொம்புத்தட்டுக் கொம்பு, கூடாரக் கொம்பு, ஏடகக் கொம்பு, தண்ணிர்க் கொம்பு என்ற கொம்பு வகை ஐந்திலும் முறையே ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்று ஆகப் பதினேழு இணைக் கொம்புகள் பூட்டி இழுக்கப்படுதல் கொம்பு விளையாட் டில் ஒரு கணக்காகும். இவற்றுள் கொழுக்கொம்பென் பது, போர்த்தேங்காய் அடித்தலைத் தொடர்ந்து தென் சேரிக்கு வெற்றியளிப்பதற்காக முறிக்கப்படும் முதற் கொம்பாகும். தண்ணிர்க் கொம்பென்பதும் விழா நிறை வில் அவ்வாறே முறிக்கப்படுவது. விழா முதல்காளி லிருந்து கொம்புத் தட்டுக்கொம்பு, கூடாரக்கொம்பு என்ற இரண்டுவகைக் கொம்புகளும் முறிக்கும்போது மக்களின் கட்சிப்பற்றும், வெற்றிவிழா நிகழ்ச்சி அமைப்பு முறை களும் வளர்ந்துகொண்டேபோகும்.
ஒவ்வொருநாளும் கொம்பு முறித்தபின் இரவுதோறும் இருகட்சியாருக்கும் பொதுவான "கொம்புத்தட்டில் (ஒரு பூம்பந்தர் அமைவுடன், கொம்புகளை வைத்து ஊர்வல

கண்ணகி வழிபாடு っ3
மாக எடுத்துச் செல்லப்படும் பூந்தட்டில்) நன்கு அலங் கரிக்கப்பட்ட அம்மன் சிலையினையும் வைத்து ஊர்வலம் செய்யவேண்டியது முறை. அவ்வேளையில் ஒரு கட்சியின ரின் வெற்றிப் பாடல்களன்றி, பொதுவான உடுகுச் சிந்து எனப்படும் ஊர்சுற்றுக் காவியம் முதலான அம்மன் காவியப் பாடல்களே படிக்கப்படுவன. ஊரின் நடுச்சந்தி யில் தட்டை வைத்துவிட்டுச் சிறிதுநேரம் வசந்தன் கூத்து ஆடி அம்மன் புகழ் பாடுதலும் வழக்கு. இவற்றின் இடையே மந்திரங்கள் சொல்லப்பெறுதலும், பேயாட்ட மும், வினுேத உடை அணிந்தோரது ஊர்வலம் முதலான காட்சிகளும் இடம்பெறுவ. பின்னர் இடம்பெறும் ஏடகக் கொம்பு முறித்தலானது எல்லோராலும் பயபக்தியான ஒன்ருகக் கருதப்படுவது. மற்றைய கொம்புகளைவிட இரண்டு மடங்குக்குக் குறையாத பருமனுடைய இந்த ஏடகமரங்களை முறித்தற்கு ஊர் கூடி வடம் இழுக்க வேண்டி இருக்கும். இக்கிலைக்கு முன்னர் இரு சேரி யாரும் தத்தம் கொம்புகளை வைத்துப் பூசைபண்ணுதற் காக இருவேறு தேர் கட்டுவர். அத்தேர்களை வைக்கும் கூடம் தேர்ப்புரை எனப்படும். ஏடகக் கொம்புகளை வைத்துப் பூசைசெய்யும் தேரும் ஏடகம்' என்றே குறிக்கப்படுவது. வடசேரியாருடைய தேர்ப்புரை, ஏடகம் என்பவற்றின் முடிகள் தென்சேரியாரதிலும் பார்க்கச் சற்று உயர்ந்திருக்க வேண்டியது இலக்கணமாகும். தமது தேர்ப்புரைகளுள் வைத்து மற்றைச் சேரியாருடையதி லும் அழகுமிக்கு விளங்குதல் வேண்டுமென்ற நோக் குடன் தனித்தனி தம் ஏடகங்களை இரு கட்சியாரும் சோடனே செய்வது வழக்கம்.
பூசனைக்குப் பின்னர் ஏடகமரங்களை எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபோய் வடத்திற் பூட்டி இழுத்தல் வழக்கு. தம் சேரிக்கொம்பு வென்றுவிட்டால் அக்காலத் தில் ஒரு திறத்தார் காட்டும் மகிழ்ச்சியின் எல்லையைக் கூறவே முடியாது. வென்ருேரை மறுநாள் தாம் வெல்லு தல் வேண்டுமென்று வேறு கொம்பெடுத்து அதற்கு மந்திரம் சொல்லி வலுவூட்டுதல் முதலியவற்றிலே தோற்ற

Page 117
184 மட்டக்களப்புத் தமிழகம்
கட்சியார் சென்றுவிட, வென்ற பகுதியினர் அன்று இரா முழுமையும் நாட்டுக்கூத்துகளும், வசந்தன் ஆட்டங்களும் வசைப்பாடற் போட்டிகளும் ஆகப் பல களிகிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பெண்களும் பிள்ளைகளுங்கூட உணர்ச் சியினுற் தம் நிலை மறந்து வெற்றிவிழாவில் ஈடுபடுவ துண்டு. வேடர், குறவர், போர்வீரர், முடிமன்னர், முனிவர், ஆண்டிகள் முதலாக பலகோலம் புனேந்து மக்கள் அப்போது ஆடல்புரிவர். அக்காலே, பல கொம்பு விளையாட்டுப் பாடல்கள் போட்டியாகப் படிக்கப்படும்.
1. கோலப் பணிச்சேலை கொய் துடுத்து
கொம்பு விளாட்டுக்குப் போகையிலே வேலப்பர் வந்து மடிபிடித்து
மெத்தவும் சிக்கிக்கொண் ட்ார்தோழி.
2. காப்பணி மங்கையர் மன்மதவேள் கந்தன் குமரன் அருள் வேலன் சீப்புடன் மல்லிகைப் பூமாலைதந்து
சேர்வமென் ருரடி தோழியரே.
வேறு 3. தோழி ஒருவசனம் - சற்றே
சொல்கிறேன் கேளடி நற்தோழி வாளிதந் தென்னையுமே - இங்கு
வரச்சொன் னுரடி மானுரே. 4. மலைக் குறத்திக்கு மையல் - கொண்டு
மணிபவளம் வளையல் விற்று தினப்புனத்தினில் கண்டவுடன் - வேலர் வேங்கை மரமானுர் தோழியரே.
என்பன வெற்றியாடுவோர் குறவள்ளியும் தோழியரு மாகக் கோலம் புனைந்து தம்முட் படித்தாடும் கொம்பு விளையாட்டுப் பாடல்கள்.
1. ஆற்ருேரம் போற மயில் - அது
ஆண்மயிலோ பெண்மயிலோ பார்த்துவாடா வடசேரியான் - உனக்கு
பாவற்பழம்போல மாலைதாறேன்.

கண்ணகி வழிபாடு 185
2. ஆற்றேரம் சிரும்பிகட்டி
அங்கேகின்று வடமிழுத்து வேர்த்துவாறன் தென்சேரியான் - அவனை வெள்ளி மடல்கொண்டு வீசுங்கடி.
3. ஆற்றேரம் சிரும்பிகட்டி
அங்கேநின்று படைபொருது தோற்றுவாருன் தென்சேரியான் - அவனைத் .துடைப்பங் கட்டாலே அடியுங்கடி مر
4. வடசேரியான் கொம்பு எங்கேயெங்கே
மணமுள்ள தாழையின் மேலேமேலே தென்சேரியான் கொம்பு எங்கேயெங்கே
செம்பரப் பற்றைக்குக் கீழேகீழே.
5. வடசேரியான் கொம்பு எங்கேயெங்கே
வண்ணுண்ட சாடிக்கு உள்ளே உள்ளே தென்சேரியான் கொம்பு எங்கேயெங்கே
சித்திரத் தேருக்கு மேலேமேலே.
இவ்வகையாக இயல்வன ஒரு சேரியாரை இன் னெரு சேரியார் பழித்தும் தம்சேரியைப் புகழ்ந்தும் பாடும் வசைப்பாடல்கள். முதல் மூன்று பாடல்களிலுமுள்ள தென்சேரியான், வடசேரியான் என்ற சொற்கள் பாடுவாரது சேரிக்கேற்ப மாற்றியமைக்கப்படுவன.
* பால்போல் நிலவெறிக்கப்
படலை திறந்தவன் ஆர்தோழி நான்தாண்டி தென்சேரியான் - உனக்கு
நாழிப்பணம் கொண் டுலாவுறண்டி.?
என்பன முதலிய தனிவசைப் பாடல்களும் பலவுள.
1. கற்பகனர் நிதம் அர்ச்சனை செய்யக்
கரிமிசை வாறவர் ஆர்தோழி முப்புரம் நீறெழச் செய்த சிவனருள் முருகவே ளாமடி மானுரே.
2. மஞ்சட் குருவி போலே
மடி நிறைந்ததோர் மல்லிகைப்பூ சிந்தித் தெருவில் வாற
சிறுக்கனல் லோடி தென்சேரியான்,

Page 118
186 மட்டக்களப்புத் தமிழகம்
3. மானே மடப்பிடியே - எங்கள்
வண்ண விரலுக்கு மோதிரமே நானே தருவேனென்று - என்னை களும்பு ருனடி நல்லன்னமே. 4. நத்தை மிதந்தாற் போலே
நாவற்சருகு பறந்தாற் போலே பாவட்டம் பத்தைக்குள் ளேயிருந்து - பயல்
பாய்ந்து கரத்தைப் பிடித்தானடி. என்பனபோன்ற பாடல்களும் படிக்கப்பெறுதல் உண்டு. இவற்றையெல்லாம் இசையும் தாளமும் அறுத்து மக்கள் தம்முட் பாடுதலைக் கேட்கும்போது உணர்ச்சி வசப் பட்டு அவற்றின் சுவை மீதூர எவரும் மெய்ம்மறந்து நிற்றல் இயல்பாகும்.
1. மலையோரம் வேட்டைக்குப் போய் மானடி பார்த்து வருகையிலே கலையோ கலை மானே
காடேறி மேய்ந்ததோர் பெண்மானே. 2. புல்லாந்திப் பத்தைக்குள்ளே
புலிகிடந்து உறுமுகுது, ஒக்க மிதிப்பாய் புல்லாந்தி - அதை
ஒருகுத்தாய்க் குத்தாய் புல்லாந்தி. என்பது முதலான பாடல்கள் வேட்டுவவேடம் புனைந்து ஆடுவோர் தம்முட் பாடுவன. இரண்டாம் பாடலில் உள்ள முதலாவது ‘புல்லாந்தி ஒரு மரத்தையும் மற் றையன அப்பெயருடைய ஒரு வேடனேயுங் குறிக்கும்.
இவ்வாறு இயலும் ஏடகக் கொம்புகளின் முறிப்புக் குக் குறிப்பிட்ட காலக் கடைசிநாளன்று தண்ணிர்க் கொம்பு முறிப்பது வழக்கம். பகைகொண்டு போராடி நின்ற மக்களும் தண்ணிர்க் கொம்பு என்றதும் ஒன்று பட்டுவிடுதல் இயல்பு. அது தென்சேரிக்கு (கண்ணகி யம்மனுக்கு) வெற்றியாக முறிக்கப்பட்டதும் இருசேரித் தேர்களும் ஊர்வலத்திற்காகப் புறப்படும். வடசேரித் தேர் செல்லவேண்டிய தெரு இதுவென்றும் தென்சேரித் தேர் செல்லவேண்டிய தெரு இதுவென்றும் பண்டுதொட்டே குறிப்பிடப்பட்டுள்ள வழியாகத் தேர், வீதிதோறும் இழுக்

கண்ணகி வழிபாடு 187
கப்பட்டுக் குறித்த பொது இடமொன்றிற் சந்திக்கும். அப்பால் இரு தேர்களும் ஒருமித்துத் தம் புரைகளை நோக்கிச் செல்லுதல் இயற்கை, ஊர்வல காலத்தில் மக் கள் தம் கட்சிப் பற்றினை மறந்து தென்சேரித் தெய்வ மான அம்மனை வழிதோறும் வாழ்த்தி நிற்பர். ஊர்வலம் முடிந்த மறுநாள் குளுத்தி ஆடுதல் நடைபெறுவதும் அக் குளுத்தியின்போது கண் ணகையம்மன் குளுத்தி’ படிக் கப்படுவதும் வழக்காறு.
1. ஒருமா பத்தினி வந்தாள் - உல
கேழுந் தழைத்திட வந்தாள் வந்தாள்
--குளுத்திப்பாடல் 30 2. கொற்றவன் செல்வ மழித்த கோபம்
கோல மழகிய மாதே யாருய்.
--குளுத்திப்பாடல் 40
3. மாதவிக்குப் பொன் தோற்று
வாழ்வணிகர் தம்முடனே காதலித்துப் பின்போன
கன்னி குளுந்தருள் வாய். -குளுத்திப்பாடல் 50 4. தென்னம் பழம்சொரிய தேமாங் கனியுதிர வன்னி வழிநடந்த
மாதே குளுந்தருள்வாய். --குளுத்திப்பாடல் 55 5. எச்சேரி வெந்தாலும்
இடைச்சேரி வேகாமல் உன்முலை குளுந்தாற்போல்
நீயும் குளுந்தருள் வாய். -குளுத்திப்பாடல் 78 என்பனவாக இருவர் கின்று அடிதோறும் மாறிமாறி இசையெழப் படிக்கும் இப்பாடல்களே வைகாசிப்பூரணை காலத்தில் நடக்கும் அம்மன் சடங்குக் குளுத்தியின் போதும் கேட்கப்படுவனவாகும்.
குளுத்தியும் வாழியும் பாடி முடிதலோடு கொம்பு விளையாட்டு நிறைவெய்தி மக்கள் செய்யும் வேண்டுதல் களும் நிறைவுறுத்தப் டெறுதல் இயல்பாயுள்ளது.

Page 119
188 மட்டக்களப்புத் தமிழகம்
பொதுவான இந்த நடைமுறைபோக, மழைக்காவி யம் என்னும் வகையைச் சேர்ந்த சில பாடல்களும் கொம்பு விளையாட்டு இரவுகளில் நடக்கும் சடங்குகளிற் படிக்கப்படுதல் உண்டு. மழைவளங்குன்றிக் கொடிய வெப்பமும், வெம்மை நோய்களும் மிகுந்து, பயிர் வகை யும் விலங்கினங்களும் வருந்துதலைத் தவிர்க்க எழுவதான கொம்பு விளையாட்டின்போது மழை குறித்த கவிகள் இடம்பெறுதல் இயல்பேயாகும். இந்த மழைப் பாடல் களுட் தம்பிலுவில் பிராமணப் பொடியன் பாடிய மழைக் காவியம்’ என்னும் தலைப்பில் வழங்குகின்ற பாடல்கள் முதன்மைபெற்று வழங்குகின்றன. அறுசீரடியானமைந்த பதினைந்து ஆசிரிய விருத்தங்களைக்கொண்ட இச் சிறுபிர பந்தம் தம்பிலுவில் என்னும் ஊரில் உறையும் கண்ணகை யம்மனே வாழ்த்தி அவளருளால் மழைபெய்து வளம் சுரக்க வேண்டுவதாய் உள்ளது.
* கப்பல்திசை கெட்டது கரைக்குள் அடையாதோ
கட்டையினில் வைத்தபிண மற்றுயிர் கொளாதோ உப்பள மதிற்பதர் விதைக்க முளையாதோ உத்தரவு ஊமைய னுரைக்க அறியானே இப்பிறவி யர்குருடு இப்ப தெளியாதோ எப்பமா மழை தருவ தென்றினி திருந்தாய் தப்பினுல் உலகமுறு வார்கள் துயர் கண்டாய் தற்பரா பரனுதவு சத்திகண் ணகையே ? 8
என்பதுபோன்று கண்ணகை யம்மனின் அருட்சிறப்பினை வியந்து வேண்டுவன இப்பாடல்கள். இப்ப - இப்போது ; எப்பமா - எப்போது அம்மா என்பதன் திரிபாகும். * இப்போ ? ? எப்போ’ என்பனவாக உள்ள இந்நாட்டுப் பேச்சு வழக்குச் சொற்கள் பாடலுட் பயின்றுவருவதைக் காணலாம். நீண்டகால அருங்கோடை ஒன்றினல் மக்கள் துயருற்றபோது எழுந்த இப்பாடல்கள் நிறைவுற்ற உடனே திடுதிடென்று இரவுபகலாக மழை பெய்து ஆறு குளம் எல்லாம் நிரம்பப்பெற்றன என்று கேட்கின்ருேம். இப்பாடலைத் தெய்வீகமாகத் தோன்றிய ஒரு பிராமணப் பையன் பாடினன் என்றே பலர் சொல்லுகின்ருர்கள்.

கண்ணகி வழிபாடு 189
எனினும் பாடகனுடைய பெயரமைந்த செய்யுளொன்று உரிய புலவனைக் காட்டுவதாக அமைந்து நிற்கின்றது.
* சோதிமதி பானுசுழல் பொய்த்திடினும் மேலோர்
சொன்னமொழி தவருத குறிதவறி னலும் காதலுறு வேதவிதி பொய்த்திடினு முங்கள் கற்புநெறி பொய்த்ததொரு காலமதி லுண்டோ காதலடி யார்கள் பணி விடைகார னுன்னுடைய கட்டாடி கண்ணப்ப லுக்காயினு மிரங்கி மோதுகுளிர் தாரை மழை நீயருள வேணும் மேகநகர் தம்பிலுவில் வாழுமா தாவே.”* 14 இச்செய்யுளிற் கண்டபடி கண்ணப்பன் என்பாரே மழைக்காவியப் புலவராதல் வேண்டும். அம்மன்கோயில் களிற் பூசகராக நிற்போரைக் கட்டாடி’ என்ற பெய ராற் குறிப்பிடுதல் மட்டக்களப்பு வழக்கு. பக்தியிற் சிறந்த கட்டாடி கண்ணப்பர், மழையின்றி மன்னுயிர்கள் படும் பெருந்துன்பம் கண்டு மனம் மிக நொந்து, அம்மனை வேண்டி இவை பாடிப் பெருமழை பெற்றுத் தந்தா ரென்று கொள்ளுதல் பொருந்தும். கண்ணகி தேவியின் பேரருளிற் கடுகளவும் நம்பிக்கை குன்ருத அவருடைய பழுத்த சைவநெறி, அவரை ஒரு அற்புதப் பிராமண ராகக் கற்பிக்க இடந்தந்ததெனலாம். அன்றி, பாடல்களின் வல்லமை கண்டு அவற்றிற்கோர் தெய்வ நிலை ஊட்டுதற் கெழுந்த கற்பனைப் பெயராகவும் * பிராமணப் பொடி யன்’ என்பது இருத்தல் கூடும். இக் கருத்துக்களோடு கட்டாடி கண்ணப்பரே மழைக்காவியம் செய்த தெய்வப் புலவராவார் என்று தம்பிலுவில்லில் உள்ள முதியோர் சிலர் கூறுதலையும் கருதுதல் பயன்தரும். மேலும் தம்பிலு வில் அறிஞர்களால் அமைக்கப்பட்ட இனிய வசந்தன் காவியங்கள் சிலவற்றை அவ்வாறு பிராமணர் ஒருவர் தலையிற் சார்த்திக்கூறும் வழக்கும் இப்பகுதியிற் கேட்கப் படுதலை இங்கு நாம் கருதுதல் 15ன்று. மழைக்காவியப் பாடல்கள், உடுக்கை ஒலியோடு பாடப்படும்போது கருத்

Page 120
190 மட்டக்களப்புத் தமிழகம்
துக்கும் செவிக்கும் இனிமையையும் எழுச்சியையும் தந்து கொம்புவிளையாடற் பயனை இனிது நிறைவேற்றுவனவா யுள்ளன.
இவ்வாறு இலக்கியச் செல்வமும் கொண்டு காட் டைக் கலைவளம் செய்து களிப்பூட்டுவது கொம்பு விளை யாடல். பரந்துபட்ட இவ்வாடல் மட்டக்களப்பின் பல கிராமங்களிலும் முன்பு நடைபெற்றுவந்த தெனினும் இன்று அந்நிலைமாறி மண்டூர், தம்பிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை என்ற சில ஊர்களில் மட்டுமே காணப் படுவதாய் இருக்கிறது.
கொம்பு விளையாட்டு நடைபெற்ற சிறப்பினல் களுதா வளையில் கொம்புச்சந்தி யென்ருேர் இடமும் பெயர்பெற் றுள்ளதென்று அறிமுகவுரையுட் கண்டோம். மேலும், தம்பிலுவில்லிலுள்ள கண்ணகி ஆலய முன்றிலில் இவ் வாடல் நடந்த பழைய இடமும், மண்டூரில் இது பற்றி யுள்ள இடமும் * கொம்புவம்மியடி’ என்றே குறிப்பிடப் படுதலை அறியலாம். இவ்விளையாட்டில் பெரிதும் சுவை பெற்ற சிலர் 'சேரியார்’ என்று அங்கங்கே இன்ன மும் குறிப்பிடப்படுகின்றர்கள்.
இவ்வாருன கொம்பு விளையாடற்காலம் மக்கள் பய பக்தியாக வாழும் நாட்களைக்கொண்டது. வீதிதோறும் மங்கள முழக்குகளும் இரவெல்லாம் நிறைந்த தெரு விளக்குகளும் கொண்டு ஊரை அணி செய்யுங்காலம் இது. மக்கள் உள்ளமும் சேரி உணர்ச்சியினல் நிறைந்து கவலை மறந்து களிபொங்கும் அக்காலத்தில் கொம்பு விளையாடல்பற்றிய உணர்ச்சிக் கவிதைகள் எல்லார் வாயிலிருந்தும் கேட்கப்படும். வாரப்பாட்டு உணர்ச்சியி னற் புதுப்புதுக் கவிதைகள் பல்லோர் காவினும் பிறக்கும். அதனுற் பல கவி’ப் புலவர்களையும் ஆக்கிவிடும் சிறப் புடைய இக்காலத்தை நினைந்தாலே மட்டக்களப்பின் கிராமப்புற மக்கள் மகிழ்பூத்து உணர்ச்சியாற் தூண்டப் பட்டு எழுவதை இன்னமுங் காணலாகும்.

IV. தமிழ்க் குரவை
பண்டைத் தமிழகத்தில் வழங்கி வந்தது போன்று இன்னமும் மாருது நடக்கும் கலையாட்டங்கள் பலவும், சிறு மாற்றங்களுடன் வழக்கினின்று நீங்காது இயலும் கலைத்தொழில்கள் பலவும் இங்குள்ளன என்று கண் டோம். அத்தகைய கலே துளும்பும் ஆட்டங்கள் பலவற் றுள் குரவை யயர்தலும் கருதிப் பார்க்கக்கூடிய சிறப் புடைய ஒன்ருகும். சங்கம் வளர்ந்த தமிழ்நாட்டில், இலக் கியமும் கலையும் பின்னிக்கிடந்த திருநாட்களிலே மக்கள் ஆடிவந்த பலவகைக் கூத்துக்களுள் குரவையும் ஒன்ருக இருந்தது.
பண்டைக் கூத்தியலிலக்கணத்தை இன்னும் நாம் காணத்தக்கதாய் ஒரு கலைக்களஞ்சியமாக விளங்கும் சிலப் பதிகார அரங்கேற்று காதையுள் அதன் உரைகாரர் * குரவை என்பது விநோதக் கூத்தென்ற வகையினுள் அடங்கி நடைபெறும் ஒரு கூத்தென்று கூறுகின்றர். கலி நடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, வெறியாடல் என்ற ஆறும் விநோதக் கூத்தின் மற்றைய உட்பகுதிகளாம். இவற்றுக்குக் காட்டப்பட்ட இலக்கணங் களை நாம் பார்க்கும்போது மக்கள் களிசிறந்து மகிழ் நிறைவாற் பலவித கோலம்பூண்டு பல்வேறு துறைகளில் விநோதம் விளைக்கும் பெருநோக்குடன் ஆடிய கூத்துக்கள் எல்லாம் விநோதக் கூத்துக்களாயின என்று தெரிகிறது.
* குரவை வரிக்கூத்தின் ஓர் உறுப்பு’ (பக்கம் 80) என்றும், * குரவை நாடகத்தை ஆடி முடித்தார் ; இது கூத்தாற் பெற்ற பெயர் ’ (பக்கம் 461) என்றும் சிலம்பு உரைகாரர் காட்டுவதால் இது ஒரு கூத்தாகவே இயன்ற தென்றறிகின்ருேம். ஆய்ச்சியர் ஆடுவது ஆய்ச்சியர் குரவை’ என்றும், குன்றவர் ஆடுவது * குன்றக் குரவை என்றும் பெயர் பெறலாயின. சிலம்பினுள் 66 கோத்த குரவை ’ (பக். 450, வரி 2), * குரவை தொடுத்தொன்று பாடுகம் வாதோழி’ (பக். 515 வரி 20) என்று வரும் தொடர்களாற் குரவைச் செய்யுளையும் அது குறித்து கிற்றல் காணலாம்.

Page 121
192 மட்டக்களப்புத் தமிழகம்
* குரவை தழீஇயா மாடக் குரவையுட்
கொண்டுநிலை பாடிக் காண்.’ -கலி, 39 என்னும் செய்யுள் அடிகளால் குரவை என்னுஞ் சொல் குரவைச் செய்யுளையும் குரவைக் கூத்தையும் ஒருங்கே குறித்து நிற்பதை அறிவோம்.
எனினும், இன்று மட்டக்களப்புத் தமிழகத்தில் * குலவை ” என்ற திரிந்த சொல்லால் வழங்கப்படும் குரவையானது கூத்து வழக்கினின்றும் பிறந்த ஒன்று போலவே தெரிகின்றது. அன்றியும் இங்கே அது விநோதம் விளைத்தற்காக எழுந்த ஒன்று எனக் கொள் ளும் தன்மையுடையதாயும் காணப்படவில்லை.
மண நிகழ்ச்சிபோன்ற மங்கல விழாக்களிலும் கோயி லில் நடக்கும் திருவிழாக்களிலும், மட்டக்களப்புப் பெண் கள் 8 குலவைபோடும் ” வழக்கம் கொண்டுள்ளனர். பண்டைத் தமிழகத்தில் வழங்கிய குரலையாடலுக்கு,
* குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த உரைக்கும் இயல்பிற் றென்ப.’ என்றும், * குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டிலக் கடகக் கைகோத்து அந்நிலைக் கொட்ப கின்ருட லாகும்.’ என்றும்
சிலம்பின் உரையுள் இலக்கணம் கூறப்படுகின்றது. அரசரும் தலைமக்களும் பெற்ற வெற்றியின்போதும், காமங் கலந்த மங்கல நிகழ்ச்சிகளிலும் எழுவர் மடநல்லார் கைகோத்து நின்று குரவைக்கூத்தினை ஆடுதல் பழந்தமிழக வழக்கமாயிருந்தது என்பதை இதனுல் நாமறியலாகும்.
மட்டக்களப்புத் தமிழகத்திலே மேற்காட்டிய நிகழ்ச்சி களோடு கோயிற் திருவிழாக்களிலும், தெய்வம் பராவும் மற்றைய சடங்குகளிலும் பெண்கள் குரவையிடுகின்ருர்
வோர் தொகை எண்வகையால் ஒன்று சேர்க்கப்படா விடினும் காமங்கண்ணிய நிகழ்ச்சிகளிலே சில இடங்க Oற் குரவையிடும் மகளிர் தொகை ஒற்றை இலக்கம்

கண்ணகி வழிபாடு 93
உள்ளதாக இருத்தல் காணப்படுகின்றது. அக்காலங் களில் எழுவர் அல்லது ஒன்பதின்மர் சேர்ந்து நின்று குரவை போடுகின்றனர். வாயிதழ் குவித்து நாவை ஒடுக் கிச் சுருட்டி வாயின் உட்புறமிரண்டினேயும் முறையே நா நுனியால் தடவும்போது எழும் ஒருவித ஒலியே குரவை யென இங்குக் கூறப்படுகின்றது. குரவையிடும்போது வலது கையை மேல் உதட்டின்மேல் வைத்துக்கொள்ள லும், மடித்து மேல்நோக்கி நிற்கும் அவ் வலக்கையினே முழங்கைப்புறமாக இடக்கையால் தொட்டுக்கொள்ளலும் பொது வழக்கமாகும் (படம் 24). கன்னியர் மங்கைப்பருவ மடைந்தமை குறித்த கல்விழாக்களிலே குறிப்பிட்டபடி யான ஒன்றுபட்ட எண்கொண்ட மகளிர் வட்டமாகச் சூழ்ந்து நின்று மேற்காட்டியபடி குரவையிடுதல் கிராமப் புறங்களிலே பெருவழக்கமாக உள்ளது.
கண்ணகி வழிபாடு மிகுந்த இத்தமிழகத்தில் வைகாசி மாதத்துப் பூரண்யினை அண்டியகாலம் கண்ணகியம்மன் கோயில்களிலே சடங்கு நடைபெறும் நாட்களை யுடைய தென்றறிந்தோம். இந்தச் சடங்குக்கான பூசைவேளை களில் குரவையிடுதல் இன்றியமையாத ஒரு வழிபாட்டு முறையென்று கருதப்படுகிறது. உடல்நலம் குன்றித் தம் பெண்மக்கள் இருக்குங்காலத்து, தாயர் அவர்களுடைய நோயின் கடுமையினைக் குறைக்குமாறு கண்ணகி அம் மனே வேண்டி * மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழுநாட் களுக்கு நின்கோயில் காத்து (சடங்குகால முற்றும் கோயிலடியிலேயே தங்கிப் பணிசெய்தல்) குரவையிடச் செய்வேன் ’ என்று நேர்த்திக்கடன் செய்வதிலிருந்து குரவையிடுதல் கண்ணகி வழிபாட்டுடன் எத்தகைய பிணைந்த நிகழ்ச்சியாயிற்று என்பதை நாம் அறிந்துகொள் ளுதல் கூடும்.
இடந்தோறும் இங்குள்ள தமிழ் முருகனது கோயில் களில் நடக்கும் பூசைவேளைகளில் மக்கள் பலர் ஒன்று கூடும்போது குரவையிடுதலுமுண்டு. எனினும் சூரன் போர் நடத்தப்படும் காலங்களிலே, முருகன் சூரபன்மனை வெல்லும் நிகழ்ச்சிபற்றிய இடத்திலும், பின்னர்த் தெய்வ
LD - 13

Page 122
194 மட்டக்களப்புத் தமிழகம்
யானை திருமணக்காலத்தும் குரவை வழிபாடு இன்றியமை யாது அக்கோவில்களில் வேண்டப்படுகிறது. சூரன்போர் நிகழ்ச்சியோ, அதுபற்றிய புராணப் படிப்போ நடவாத தும், தமிழ் முருகனுக்கும் குறிஞ்சித் தலைவியான வள்ளி நாயகிக்கும் நடந்ததாகக் கருதப்படும் பண்டைக்காதல் முறை வழிபாடுகள் அழியாது கடத்தப்படுவதுமான மண்டுர்க் கந்தசுவாமி கோயிலில் 8 கந்தர்சட்டி’ விரதம் தொடங்கிய மூன்ரும்நாளில் வள்ளியம்மை திருமணம் நடத்துகிறர்கள். பொதுமக்கள் இதனைக் * கலியானப் படிப்பு’ என்றும், ' குரவைத்திருநாள் ” என்றும் கருது கின்றனர். அன்று இரவு முற்றும் முருகனுக்கும் வள்ளி நாயகியாருக்குமான திருமண நிகழ்ச்சியும் அதற்குரிய தெனக் கருதப்படும் குரவையிடும் வழிபாடும் கடக் கின்றன.
இக்காட்டில், அங்கங்கே உள்ள கண்ணன் கோயில் களிலே முல்லைநிலத்து இடையர் பாங்கில், அந்த மணி வண்ணனுக்கு வழிபாடுகடத்தும் ச ட ங் குக் கால மும் குரவை குன்றத் திருநாட்களை உடையதாகும். இத்தகைய விழா நிகழ்ச்சிகளில் மக்கட் குழுவினரனைவரும் தம்முட் பேதமின்றி ஒன்றுபட்டு நின்று குரவையிடும்போது எழும் இனியபேரொலியானது மெய்ம்மறந்த பக்தி நிலையினை எல்லாருக்கும் ஊட்டவல்லதாயிருக்கின்றது.
குரவையைப்பற்றிப் பேசு ந் தமிழ் நூல்க ளு ஸ் முதன்மைபடைத்த இலக்கியமான சிலம்பினுள் இரண்டு பெரிய தமிழ்க் குரவைகளை நாம் காணுகின்ருேம். ஆய்ச்சி யர் குரவையும், குன்றக்குரவையும் என்று அவ்விரண் டும் முறையே திருமாலேயும் முருகனேயும் பராவுமுகத் தான் அமைந்தன என்று தெரிகின்றது. வழிநடைக் களைப்பு நீங்குமாறு கண்ணகி கண்டுகளித்ததும், வேடர்க ளாடியதுமான வரிக்கூத்துகளுள்ளும் ஒரு குரவையினை காம் அங்குக் காணலாகும். இவையெல்லாம் குரவையிட்டு மகளிர் கைகோத்து நின்று ஆடும் கூத்துக்கள் எனவும், கூத்தாடுங்காலத்து முருகனையோ, திருமாலேயோ, கொற் றவையையோ அவர்கள் பரவி அதற்கேற்பப் பாடுதல் வழக்கம் எனவும் காட்டுகின்றன. தமது வீடுகளில் எவ்

கண்ணகி வழிபாடு I 95
வித துன்பக் குறிகள் தோன்றும்போதும் அவை நீங்க வேண்டுமென்று கண்ணனை வணங்கி ஆயர்பாடியில் இடைப்பெண்கள் குரவை யயர்ந்தனரென்றும், அவரும், கண்ணன், பின்னப்பிராட்டி என்பாரது வேடந் தரித்து ஆடினரென்றும் ஆய்ச்சியர் குரவையா லறிகின்ருேம். இதனுல் கண்ணனது திருவருளைப்பெற உடனே குரவை பயன்தருமென்பது தெளிவாகின்றது. குரவைக்கும் இறை வழிபாட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்துப் போலும், மதுரையை எரித்தும் கோபந் தணியாளாய கண்ணகியின் முன்னிலையில் மகளிர் குரவை யயர்ந்து, கொம்பு முரித்து அவளைக் குளிர்ச்சி செய்தனர் என்று மட்டக்களப்பு காட்டில் ஏட்டுருவமாய் வழங்கும் பழைய இலக்கியங்களான ‘கண்ணகி வழக்குரை ’ முதலியன கூறுகின்றன. எனினும், குரவையாடல் என்பது எவ்வாறு கூத்துவகையில் கடந்ததென்பதை இந் நூல்களுள்ளும் அறியக்கூடியதாக இல்லே.
சிலம்பு கூறும் ஆய்ச்சியர் குரவையும், குன்றக்குரவை யும் தெய்வ வழிபாடு கலந்தனவாகத் தெரிந்தாலும் பல வேறு களிநோக்குகளிலும் குரவையிடும் வழக்கத்தை ஏனைய தமிழ்நூல் சிலவற்றிற் காணுகிருேம்.
* அருங்குறும் பெறிந்த கான வருவகை
திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு மான்ருேற் சிறு பறை கறங்கக்கல் லென்று வான்ருேய் மீமிசை யயருங் குரவை’
என்னும் மலைபடுகடாமும் (318-322),
“பெருமலை . . . . . . . . . . . . . . . . . . .
வாங்கமைப் பழுகிய நறவுண்டு வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே?
என்னும் நற்றிணையும் (276), * குறியிறைக் குரம்பைக் குரவன் மாக்கள் வாங்கமைப் பழுகிய தேறன் மகிழ்ந்து வேங்கை நீழற் குரவை யயரும்’
என்னும் புறப்பாட்டும் (129),

Page 123
196 மட்டக்களப்புத் தமிழகம்
* கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை யயரும்.’
என்னும் திருமுருகாற்றுப்படையும் (194-197)
கானவர், குறவர், வேட்டுவர் என்பார் கட்குடித் துக் குரவையயரும் வழக்குடையாரென்று கூறுகின்றன. ஆயினும் இவர்களது ஆடலிற், குரவைக்கூத்து மக ளிர்க்கு மட்டுமே உரியது என்று வரையறைப்படுத்தப் பட்டிலது.
இதுபோலவே மட்டக்களப்புக் காடுகளிலும் மலைச் சாரல்களிலும் வாழுங் குறவர்குலத்தாரும், கட்குடித் தாடும்போது குரவையிடுதலைக் காண்கிருேம். அவரும் தலையிற் கலசம், வில், அம்புகள் என்பவற்றை வைத்து ஆடுகின்றனர். அவ்வாடல்களிற் பெண்பாலாரும் கலந்து கொள்ளலும் (படம் 25) இருபாலாரும் வாயினுற் குரவை யொலி கிளத்தலும் வழக்கமாக உள்ளது. அவர்களுடைய ஆடல்தானும் எந்தத் தாள அமைதிக்கு உட்பட்டது என்றும் தெரியவில்லே. இக் குரவைக் கூத்துத் தனித்தனி நின்றே ஆடப்படுகின்றது. வெயில் மிகுந்த ஆடி, ஆவணி மாதங்களில் விளைவுவிழா முடிந்த படுவான் கரைவயல் களில் குறவர் வந்து குடிபுகுந்து சிறு கூடாரம் அடித்துத் 'தங்குதலையும், அன்னர் தமது தெய்வமொன்றுக்குச் சடங்கியற்றி உயிர்ப்பலியிட்டு இவ்வாடல் புரிவதையும் நாம் காணலாகும். அவர்கள் பொதுவாக முருகனைக் குறித்தே குரவையாட்டம் செய்கிருர்களென்று தெரி கின்றது.
“கடம்பின் . சீர்மிகு நெடுவேட் பேணித்தழுஉப் பிணையூஉ மன்றுதொறும் கின்ற குரவை.”*
என்னும் மதுரைக்காஞ்சியும் (614-615) முருகவேட் குகந்த குரவையாடலைப்பற்றிக் கூறுகின்றது. குறவர் குரவையாடல் புரிதல் பெருவழக்கென்பதையே :

கண்ணகி வழிபாடு 197
* கிழங்கு மருந்திஇருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக.’ என்ற திருக்கோவையாரும்(127) கூறுகின்றதென்னலாம்.
மேலும், மகளிர் கூடிநின்று குரவையிடுதற்குப் பதி லாக, மட்டக்களப்புத் தமிழகத்தின் சில கிராமங்களிலே * செம்பூதுதல்’ என்னும் செயல் வழக்கத்தினேயும் சிறு பான்மை உடையவராயிருக்கின்றர்கள். குறிப் பிட்ட தொகையான மகளிர்கூட்டம் தனித்தனி செம்டை வாயில் வைத்து அதனுள் ஊதிக்கொண்டு பக்கமாகச் சாய்ந்து ஆடுகின்றனர். இதுவும் நடைமுறை இடங்களில் குரவையையே ஒத்தியல்கின்றது. எனினும் குரவை இடு தலோ, செம்பூதுதலோ இங்கு ஆடலாக அன்றி மங்கல மான இன்னெலி கூட்டும் செயல்களாகவே கருதப்படு கின்றன.
சில இடங்களில் மாத்திரம் மண நிகழ்ச்சி முடிந்த பின்னரும் கண்ணகி வழிபாட்டுக் காலத்தும் குரவை யிட்டுக்கொண்டே மகளிர் தனித்தனி ஆடும் வழக்கம் இருந்ததென்பர்.
புதிய நாகரிகப் பழக்கங்களும் மேல்நாட்டு நாகரிகப் படிப்புகளும் வளர வளர இத்தகைய பண்டைக்கலே வளம் மக்களிடையிருந்து விடைபெற்றுக்கொண்டே வரு கின்றதென்னலாம். புதுமைக் கல்வி பயின்ருேர் இப் பழங்கலே நிகழ்ச்சிகளில் மறைந்துகிடக்கும் நுட்பங்களை யும் ஆய்ந்தறிந்து இவற்றைப் பேண முற்படுதல் பெரும் பயன் தருவதாகும்.

Page 124
V. வசந்தன் ஆடல்
உணர்ச்சிக் கவிவளம் நிறைந்துள்ள இம் மட்டக் களப்புத் தமிழகத்திலே, மக்களது களிப்பினல் நடிக்கப் படுவனவாய் நாட்டை உயர்வுறுத்தும் சிறப்புவாய்ந்த கூத்து வகைகள் பல உள்ளன என்றும், அவற்றுள் நன்கு மதித்துப் போற்றத்தக்க பெருமையுடைய ஒன்று வசக் தன் ஆடல்' என்றும் அறிந்தோம். பன்னிருவர் வட்ட மாக நின்று கோல்கொண்டு தாள அமைதி பிசகாது ஆடும் ஓர் ஆடல் இது (படம் 26). இவ்வாடல் நடை பெறும்போது வேறு வேருன சந்தங்கொண்ட பாடல்கள் வெவ்வேறு பெயருடன் படிக்கப்படுகின்றன. ஆடல் களின் பெயரால் அப்பாடல்களும் (வேளாண்  ைம வெட்டு வசந்தன், அம்மன் பள்ளு வசந்தன் என்பன போல) பெயர்பெற்று, அப் பெயருக்கேற்ற பொருள் பொதிந்தனவாய் இயலுவ.
* வசந்தன் என்ற தனிச் சொல்லாலும், வசந்தன் கூத்து ' என்ற தொடராலும் இந் நிகழ்ச்சி பெயர்பெற் றிருப்பினும் பின்னேயதே பெருவழக்கா யிருத்தல் கொண்டு கூத்துவகையைச் சேர்ந்த ஒன்றே இது என்று துணியலாகும். இவ்வாடல் நடைபெறும்போது வட மோடி’, ‘ தென்மோடி ' என்ற நாடகங்களைப்போல்வே மத்தளம், சல்லரி என்பன இசைநடைக்கியைய அடிக் கப்படுவன எனினும் இவ் வசந்தன் கூத்து அவற்றுள் எந்த வகையைச் சேர்ந்ததென்று பழங்கோள் காட்டி நாம் இன்று அறுதியிடக்கூடாததாயிருக்கின்றது. என்ரு லும் தாள அமைப்பின் ஒழுங்கினையும், பாட்டுக்களின் முடிவில் தருப்படித்தாடுகின்ற மாருத வழக்கினேயும், அரங்கேற்ற காலங்களில் அணியும் உடை விசேடங்களை யுங் கொண்டு, நமது பழஞ்சொத்தாக வழங்கி வருகின்ற தென்மோடி நாடக வகையினை இவ்வாடல் ஒரு புடை சார்ந்து நிற்றல் புலனுகும். இதனுல் காலவழக்கில் மக்கள் இதனை வெறும் கோலாட்டம்போலக் கருதினும் பண் டைய வழிப்படி இதனே நாம் ஒரு கூத்து என்றே கொள்ளுதல் பொருத்தமாகத் தெரிகின்றது.

கண்ணகி வழிபாடு 199
இவ்வாடலை அழகுபடுத்தும் வசந்தன் கவிகள்' தமிழறிந்த பெருமையுடையன. அப் பாடல்களின் பெருஞ் சிறப்பைக் கண்டு மகிழ்ந்து மற்றையோரும் இவற்றைப் படித்துப் பயன்கொள்ளல் வேண்டும் என்ற நன்னுேக் கத்தினேடு காலஞ்சென்ற யாழ்ப்பாணத்துத் தமிழறிஞ ராகிய தி. சதாசிவஐயர் அவர்கள், பல்லோரறியாது ஏட் டுருவிலே இந்நாட்டிற் கிடந்த வசந்தன் கவிகளைத் திரட்டி நூல் செய்து வசந்தன் கவித்திரட்டு ' ஒன்றை நமக்குத் தந்து சென்ருர்கள். ஆயினும் இன்று நாம் அந்தப் பழங் கலேயை மறந்துவிடும் கிலேயில், ஆடலும் அறியாது பாட லும் தெரியாது அதன் பெருமைகளைச் சிந்தியாது, பெரி தும் வெட்கப்படக்கூடிய இழிநிலையிலேயே வாழுகின்ருேம்.
செய்யுளிலக்கணம் எதுவும் கல்லாமலே உணர்ச்சிப் பெருக்கின் வசப்பட்டு நல்ல கவிகளையாக்கித் தந்தோரின் பரம்பரையினர் வசந்தன் பாடல் ஆசிரியர்கள். அவர்கள் தமது ஊரையும் பெயரையுங் குறிப்பிடாது சென்றுவிட்ட னர். ஆனல் ஆடலின் பகுதிதோறும் வசந்தன்' என்ற தலையங்கத்தை (குயில் வசந்தன், மாதவி வசந்தன், வேளாண்மை வெட்டு வசந்தன் என்பனவாக) வைத்துப் போற்றுதற்கு மட்டும் மறந்திலர். இதனல், இவற்றுக் கெல்லாம் வசந்தன் என்ற பெயர் எவ்வளவு முதன்மை யாகக் கருதப்பெற்றது என்று தெளிவாகின்றது. வசந்த காலத்தில் ஆடப்படுதலே இப் பெயர்க்குக் காரணமாகப் பொருந்துவதென்று சிலர் கூறுகின்றனர். நடுநிலப் பகுதி யினைச் சார்ந்து மாரியும் கோடையுமின்றி வேறு பருவ பேதங்களை உணராத் மட்டக்களப்பு நாட்டுக்கு வசந்த காலம் வருதல் நில இயல் அறிவுக்குப் பொருத்தமானது போற் தெளியவில்லை. அம்மன்பள்ளு என்னும் வசந்தன் பாடல் ஒன்றில் " அமிர்தம்சேர் சின்ன ப் புல வன் பாடவே ’ என்றிருக்கும் அடியின் பாடபேதமாக * வசந்தன் சேர் சின்னப் புலவன் பாடவே ’ எனச் சில ஏடுகளில் இருப்பது, வசந்தன் என்பது காலத்தை ஒட்டிய பெயராய் இருக்காது என்ற கருத்தினே ஒருபடி வலி யுறுத்துகின்றது. வசந்தன் ’ என்ற சொல் லுக்கு * நிறைந்த இன்பம் ' என்னும் கருத்து இங்குள்ள சில

Page 125
200 மட்டக்களப்புத் தமிழகம்
கிராமங்களில் வழங்குவதையுங் காணலாம். அதை ஏற் றுக்கொண்டால் மக்கள் வயல் வேலைகள் முடிந்தபின்னர், நிறைந்த இன்பத்தினுல் ஆடும் ஒரு இனிய கூத்து என இதனைக்கொள்ள இடமுண்டு. அமிர்தம்’ என்பது நிறைந்த இனிமையைக் குறிக்கின்ற ஒரு சொல்லாதலால் மேற்கண்ட பாடபேதத்தையும் இதே பொருளில் ஏற்றுக் கொள்ளச் செய்கின்றது. சித்திரை தொடக்கம் ஆடி யீருகவுள்ள பகுதியே மட்டக்களப்பு நாட்டில் முன்னர் இக்கலை நிரம்பி வழிந்த காலமாகும். கண்ணகிதேவி வழி பாடு பற்றிய இன்னேர் ஆடலான கொம்பு விளையாட் டின்போது ஆவணி, புரட்டாதி ஆகிய மாதங்களிலும் இது நடைபெறுவதுண்டு.
வசந்தன் பாடல் பலவற்றையும் செய்த புலவர்கள் இந் நாட்டுக் காரைதீவினையும் தம்பிலுவில்லையும் சேர்ந்த வர்களாய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சின்னப் புலவர், சின்னவி அண்ணுவியார், வசந்தராசபிள்ளை என்ற பழம்பெயர்கள் சில அவ்வூர்களில் இதுபற்றிக் கேட்கப்படுகின்றன எனினும் இப் பொருள் நன்கு ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டிய ஒன்ருகும்.
வசந்தன் பாடல்களிற் பல கண்ணகி வரலாற்றைக் கூறும் வகையில் அமைந்து அவ்வழிபாட்டின் தொடர் பினவாய் இயலுகின்றன. இவற்றிற் காணும் கண்ணகி வரலாறு சிலப்பதிகாரக் கதைக்கு மாருன ஒன்ருகத் தெரிகின்றது. கண்ணகியின் பிறப்புத் தெய்வீகமுறை யிலே இப்பாடல்களிற் கற்பிக்கப்பெற்றுள்ளது.
* உருவில் லாத மாய மாகியே - நுதல்விழிதனில்
ஒருபொறி கவிழ்க் துறக்க மானதே விருத ராசர்கள் புகழ்தென் பாண்டியன்-வீற்றிருக்கின் வேளை அன்னதில் மாங்கனி யானதே.?? இறைவனது நெற்றிக்கண் பொறி ஒன்று மாங்கனி யாகி, அம்மாங்கனியே பின்னர்க் கண்ணகியாய் மாறிற்று என்று அம்மன் பள்ளு வசந்தனிற் குறிப்பிடப்படும் வர லாறு இங்குள்ள கண்ணகி வழக்குரை ’ என்னும்

கண்ணகி வழிபாடு 2O 1
பழைய நூலிற் கூறப்படும் வரலாற்றுப் பகுதியினை ஒத் துள்ளது. * கூவாய் குயில் ’ என்பதுபோன்ற வசந்தன் பாடல்கள், வரலாறு மட்டுமன்றி கண்ணகி வழிபாட்டினை யும் கூறுவதாயிருக்கின்றன.
கண்ணகி கதையின் தொடர்பானவை போக மிகுதி யிற் பெரும்பகுதி வேளாண்மைச் செய்கைபற்றிய ஆடல் களாகும.
* கொண்ட லாலே மழையும் இருளுது
கூடுங்கோ மள்ள ருப்பட்டி கட்டுவோம் தென்றல் வந்திடு தெற்குத் திசையினில் சென்று காரிருள் மண்டி ஒதுங்குது.’
என்று இயற்கையின் காலநிலை கூறி வேலைக்கு மள்ள ரைக் கூவி அழைக்கும் பொருள்கொண்ட இது உப் பட்டி கட்டு வசந்தனே' அழகுறுத்தும் முதற் பாடலாகும். இவையும், இராமகாதை சார்ந்த சிலவும், செல்லப்பிள்ளை வசந்தன் முதலாயினவுமாக அறுபத்துமூன்று வசந்தன் ஆடல் களு க்கு ரிய பாடல்களே ஐயரவர்கள் திரட்டி நூலாக்கியுள்ளனர். இன்னும் சில ஆடல்பற்றிய பாடல் கள் இப் பதிப்பில் இடம்பெருது கிடக்கின்றன. காரை தீவு, தம்பிலுவில், மண்டூர், வந்தாறுமூலை என்னும் ஊர் களிலே பல வசந்தன் ஏடுகள் பெட்டகங்களிற் கிடந்து துயில் செய்கின்றன. அவ்வாறன ஏடுகள் சிலவற்றில் * கண்ணகியம்மன் பத்ததி' என்ற அம்மன் பூசை விதி களும் காணப்படுவ. பூசைவிதிகள் தமிழ் மந்திரங்களா லானவை; மறைத்து ஒதப்படுபவை. அதனுற்போலும் பொதுமக்களின் கைக்கு இவ்வேடுகளைச் சேர்க்கச் சிலர் ஐக்கிருர்கள் என்றும் தெரிகிறது.
வசந்தன் பாடல்களுள் நரேந்திரசிங்கன் பள்ளு, இராசசிங்கன் பள்ளு என்ற தலைப்பிலுள்ளவை, தாம் எழுந்த காலத்தை ஒருவாறு காட்டுவன. முதலதை நர சிங்கன் பள்ளு எனவும், கண்டிராசன் பள்ளு எனவும் கூறுவதுமுண்டு. இது கி. பி. 1706 முதல் 1739 வரை கண்டியில் இருந்து அரசாண்ட நரேந்திரசிங்கன் என்

Page 126
2O2 மட்டக்களப்புத் தமிழகம்
னும் அரசன் மீது பாடப்பட்டதாகும். மற்றையது, அவ னுக்குப் பின் (1739-1747) இருந்த கண்டி அரசனுகிய இராசசிங்கன்மேற் புனையப்பெற்றது. ந ரே ந் திர சிங்க னுடைய பட்டத்து இராணியின் சகோதரனை இம்மன் னன் மதுரை நாயக்கமரபைச் சேர்ந்தவன். கண்டி அர சர்களிற் பலர் நல்ல தமிழ் அறிஞர்களாய் இருந்திருக் கிருர்கள். அவர்கள் மட்டக்களப்பு நாட்டினேப் பண்டு தொட்டே ஆண்டுவந்தவர்கள். அன்னர் மட்டக்களப்பு நாட்டுக்கு வந்து அடிக்கடி கலைநுகரத் தவறுவதில்லை. அம் மன்னர்களைக் காலந்தோறும் இங்கிருந்த புலவர்கள் பாடிப் பரிசில் பெற்றுவந்த வழக்கின் தொடர்பாக உள்ள தனிப் பாடல்களோடு இந்த இரு வசந்தன் பாடல்களும் கிடைத்துள்ளன. மட்டக்களப்பில் வாழ்ந்து வறியோரை வளம்செய்த பெருங் கொடையாளிகளான செல்வர் சிலரும் வசந்தன் பாடல்களில் இடம்பெற்றுள்ள னர். நிலவளமும், அதனைப் பயன்கொள்ள மக்கள் கைக் கொண்ட வேறுவேறு தொழில்வளமும் தனித்தனியாக வசந்தனிற் காணப்படுகின்றன. வேளாண்மை வசந்த னிலே இங்குள்ள வயல்களில் விதைக்கப்படும் நெல்லின் பல இனங்கள் அழகுடன் கூறப்பட்டிருப்பதையும் காண் டல் கூடும்.
* பச்சைப் பெருமாள், கறுப்பன், பாளை, முகவன்,--செழும்
பன்றிக் கூரன், வெள்ளை வாலன், பச்சைச் சம்பா, மெச்சியே பலரும் விரும்பும் வெள்ளை வாணன்-இந்த மேதினி எல்லாம் புகழும் முத்துச் சம்பா. 5
* முத்துச்சம்பா நெல்முளையை முன்னே விதைப்போம்-நல்ல
முருங்கன் கறுப்பன்களை மேட்டில் விதைப்போம் சித்தியுடன் நெல்வயல் முற்றும் விதைத்தோம்-டயிர் செழித்தபின்பு வேலிகாவல் செப்ப னரிடுவோம். 7
அம்மன்பள்ளு என்னும் வசந்தனில் மாதவியி றுடைய நடன அரங்கேற்றம் பற்றியும் கூறப்படுகின்றது. அரச சபையிலே தோன்றிய மாதவிபுனைந்த கோலமானது வசந்தன் கவிவாணரது புலமை வாயிலிருந்து மிகுந்த நயத் துடன் புறப்படுவதை இப் பாடல்களிலே காணலாகும்.

கண்ணகி வழிபாடு 2O3
* வேளை யறிந்தே இனிய மாதவி-காற்சிலம்பிட்டு
வீரத் தண்டைபொற் பாடக மணிந்து வாளை யனையவிழிக்குமையெழுதிக்-குழைக்குத்தோடிட்டு மைக்குழல் வார்ந்து மலர்கள் சொருகியே.
-அம்மன் பள்ளு 6
* சொரிமுத்து மாலை பதக்கம் சவடியும்-மார்பிலனிந்து
துணைமு லேக்குப் பொற்கச்சுக ளிறுக்கியே பரிபுர சித்திரக் கடையம் பூட்டியே-விரல்கள் தோறும் பசும்பொன் மோதிரம் பரிந்தி ணக்கியே.
-அம்மன் பள்ளு 7
* இணக்கமான துகில்கள் புனைந்துதான்- வழுதிசபையில்
இரதி என்னவே வடிவ மிலங்கவே, மணக்கும் குங்குமக் களபம் பூசியே-இனியதோகை மயில்கள் போலவே மாதவி ஆடினுள்.
-அம்மன் பள்ளு 8
இனிய செஞ்சொற்பயின்று அந்தாதித் தொடையா னமைந்த இப் பாடல்களிலே மாதவி யணிந்திருந்த நகைகட்டுகளின் வனப்பெல்லாம் நன்கு காட்டப்பெற் றுள்ளன. இசைகொண்டமைந்த இத்தகைய பாடல்கள் மிளிரும் வசந்தன் கவிதைத் தொகுதியானது பொருள் வளம் நிறைந்து கற்போர் கருத்தைக் கவர்ந்து நிற்பது.
பழைமை செறிந்த இவ் வசந்தன் ஆடல் நலத்தினை 1925ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வந்திருந்த இலங் கைத் தேசாதிபதியாகிய உவில்லியம் மனிங்ஸ் என்பவர் நேரிற் கண்டு களிகூர்ந்து இதன் சிறப்பினை ஆங்கிலநாட் டுக்கும் பல கட்டுரைகள் மூலம் நன்கு விளக்கிக் காட்டி னர். இதனல், இக்கலையைப் போற்றிவளர்த்த மட்டக் களப்புக் காரைதீவுக்கும், வசந்தனுடற் சிறப்பினை அவ் ஆங்கிலேயர் முன்னிலையில் நிறுவி மட்டக்களப்புத் தமி ழகத்தின் புகழை மேற்குலகினுக்கும் விளக்கிவைத்த குஞ்சித்தம்பி ஆசிரியர் (படம் 36)-விபுலாநந்த அடிகளது நல்லாசிரியர்-அவர்களுக்கும் மேல்நாடுதந்த பெரும்புகழ் கிடைப்பதாயிற்று.

Page 127
204 மட்டக்களப்புத் தமிழகம்
கண்ணகி வழிபாட்டினை நன்கு விளக்குவதாய், அதனேடு பிணைந்து இன்றும் நடைபெற்றுவருவது வசந்த ஞடல். இக்கலேச்சிறப்பு மட்டக்களப்பு காட்டின் புகழை வளர்ப்பது. இசை நுணுக்கம் செறிந்த வசந்தன் பாடல் களை முறைப்படி பாடவல்லாரும் அவற்றின்வழி ஆடல் பயில்வாரும் மட்டக்களப்பின் கலைச் செல்வர்கள். இனிய சொற்கோப்புக்கொண்ட வரிப்பாடல்கள் வசந்தன் பாட் டுக்கள். இவற்றின் சொன்னயம், பொருள்நயம் என்பன வும், ஆடலின் சிறப்பும் அறிந்து பேணித் தம் பரம் பரைப் புகழை மட்டக்களப்புத் தமிழகத்தார் மேலும் வளர்ப்பாராக. இவ்வசக்தன் கூத்தின் ஆடல்பாடல்களில் வல்லுநரும், மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள், நாட் டுப் பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள், கண்ணகி வழக்குரை, குளுத்திப் பாடல் முதலான அம் மன் காவியங்கள் என்ற இத் தமிழகத்துக்கே சொந்த மான பல கலைப்பகுதிகளையும் துறைடோக நன்கு பயின் றுள்ளவருமான காரைதீவைச் சேர்ந்த கயிலாயபிள்ளை அண்ணுவியார் (படம் 34) அவர்களையும், அவர் போன்று அங்கங்கே மறைந்துவாழும் இந் நாட்டுக் கலைஞர் பலரை யும் அறிந்து வெளிக்கொணர்ந்து பேணி, அவர்களைக் கொண்டு நல்ல கலைக்கூடங்கள் நடைபெறச் செய்தலின் மூலம், இக்கலைச் சிறப்புகளை மற்றையோரும் பயன்கொள வைத்தலும், இச்சார்பில் வேண்டிய ஒன்ருகும்.

7. புலவர் பரம்பரை
* மட்டக்களப்பு’ என்ருல் அது என்ன, எங்கே உள்ளது என்று மற்றையோர் அறியாது மறந்தகாலம் ஒன்று இருந்தது. மட்டக்களப்பில் விளைந்த நெல்லும் தேங்காயும் தம்முணவிற் பங்கு கொள்ளப்பெற்ற ஈழத் தின் மற்றைய பகுதியினரும் இக்காட்டைப்பற்றி அறிந்து கலந்துவாழ முயலாதிருந்தனர். ஈழத்தின் ஏனைய பகுதியி னர் மட்டக்களப்பென்ருல் மந்திரமும் தந்திரமும் நிறைந்த ஒருகாடு; முரட்டுத்தனமும், மூடத்தனமும் அங்கு நிறைய உண்டு என்று கற்பனைக் கதைகளைக் கட்டிக்கொண் டிருந்தனர். அறிமுகம் குறித்தும், தொழில் முதலிய வேறு காரணம் பற்றியும் இங்கு வந்தோரிற் பெரும்பாலானேர் இந்நாட்டு மக்களின் விருந்தோம்பும் மனவளத்திலும், பொன் கொளிக்கும் நிலவளத்திலும் சொக்கி மகிழ்ந்து இங்கேயே குடியிருந்து விடுதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முற்பட்டபோது அதனை ஒராது, மந்திர சத்தியினல் மட்டக்களப்பார் தம்மிடம் வந்தோரை மடக்கி அவ்வாறு செய்துவிட்டனர் என்று மற்றையோர் கருதி னர். விருந்து புறந்தருதலின் ஈடிணையற்ற பண்புபடைத்த திருநாடு வேளாண் வாழ்க்கைகொண்ட பெருமக்கள் செறிந்துவாழும் இம் மட்டக்களப்புத் தமிழகம். இங்குள்

Page 128
206 மட்டக்களப்புத் தமிழகம்
ளோரை மடையர்கள் என்று கருதி, அவர்கள் காட் டும் அன்பினேக் கருவியாகக்கொண்டு அவர்களையே ஏமாற்றிவிட்டுச் ச்ெல்ல நினைந்த அயலார் சிலர் இந்நாட்டு மந்திரவலியின் சுவை தேர்ந்தனரன்றி, அன்பு கலந்த வேறெவரும் அவ்வின்னலே இங்குக் கண்டிரார் என்பதே பேருண்மையாகும்.
மலைத்தொடர்களும், பள்ளங்களும், நதிகளும், வாவி களும் இந்நாட்டினை ஈழத்தின் மற்றைய பகுதிகளுடன் தொடர்புகொள்ளவிடாது தடுத்திருந்தமையால், நாகரிக மென்று தற்காலத்தோர் கருதும் புறவாழ்வின் முன் னேற்றமானது இங்கு இலகுவிற் புகமுடியவில்லை. அரசிய லாரும் பிற்போக்கான5ாடு’ என்று இதனைக் குறிப் பிட்டு வைத்தார்கள். அதனல் இங்கு நிலவும் பண்டைய நாகரிகம் இக்காலத்துக்கு அநாகரிகமாகத் தெரிந்தது : மட்டக்களப்பாரின் பழந்தமிழ்ப் பேச்சும் கொச்சை மொழி யாகக் கருதப்பட்டது. இக்காட்டு வளங்களைச் சுரண்டிச் சென்று வாழும் தொடர்புபற்றியன்றி வேறு எந்த நன் மதிப்புக்கும் இந் நாட்டினரை மற்றவர் கருதாத அவல கிலே இருந்துவந்தது.
தமது மட்டக்களப்பினைப் புற உலகம் எப்படிக் கரு தினபோதிலும் இக்காட்டு மக்கள் அதனைப் பொருட் படுத்தினரில்லை. தாய்நாட்டுப் பற்றினை மறக்காத பழம் பண்புவாய்ந்த எத்தனையோ புலவர்களும், அண்ணுவி மாரும் முத்தமிழ்ச் செல்வங்களையும் அழியாது வளர்க் கும் தம் கடமையில் ஒருபோதும் தவறினரில்லை. உண்மை ஒளி, கிலேயாக மறைத்து வைக்கப்படக் கூடியதன் றென் பது அவர்களது கம்பிக்கையாயிருந்தது. இதனுற் குடத்து விளக்குப்போல் அடங்கியும், புறத்தொடர்பு இல்லாமை யாற் புதுவளர்ச்சி இன்றி மங்கியும் மட்டக்களப்புத் தமிழகம் கிடந்தது. இந்தச் சூழ்கிலேயிலேதான் வித்து வான் பூபாலபிள்ளை போன்ற புலவர் பலர் தோன்றி இத் தமிழகத்தின் கலைப்புகழை மலைவிளக்காக்கினர்.

I. வித்துவான் F. பூபாலபிள்ளை
ஏறக்குறைய நூறு ஆண்டுகளின் முன்னர் மட்டக் களப்பின் உதயவானிலே முளைத்த விடிவெள்ளிபோன்று தோன்றிய பேரறிஞரே வித்துவான் ச. பூபாலபிள்ளை அவர்கள் (படம் 31). மட்டக்களப்பு என் ருெரு நாடுண்டு ; உணர்ச்சியும் கலைப் பண்பும் நிறைந்த தமிழ்க் குடிகள் அங்கும் உள்ளனர் ; எவர் புறக்கணித்தாலும் மங்கி மறைந்துபோகாத பெரும்புகழ் ஒளி உடையது அந் நாடு என்று தமிழுலகுக்கு எடுத்துக்காட்டிய முதன் மணி யாக இந் நாட்டின் சரிதையில் இடம்பெற்ருர்கள். யாழ்ப் பாணத்துப் பேரறிஞர்களும், இந்தியத் தமிழகத்தாரும் ஒருமுகமாய் மதித்துப் போற்றிய மட்டக்களப்பின் முதற் புலவர் இவரேயென்று கொள்ளல் வேண்டும். வெளியுலகுடன் இப் பெரியார் இணைத்து வைத்த கலையுறவுப் பாலமானது மட்டக்களப்பிற்குப் பெரியதோர் உறுதுணையாயமைந்து இக்காட்டின் பெருஞ் சிறப்பை வளர்த்து வருகின்றதென்னலாம்.
புலவர் பரம்பரைக்குரிய இயல்பினை ஒட்டிப் பொருள் வளம் குறைந்திருந்த ஒரு செழுங்குடி முதல்வரான சதாசிவம்பிள்ளைக்கும்-வள்ளிப்பிள்ளைக்கும் புதல்வராக 1856இல், மட்டுநகரிற் பிறந்த பிள்ளையின் இளமைக் கல்வியினை அந்நகர்க் கிறித்தவ மத்தியகல்லூரி நல்கி வளர்த்தது. ஆங்கிலமொழி, தமிழ், கணிதம் என்ற பாடங் களில் மிக்க திறமையுற்று ** இவன் தந்தை என்னேற் ருன் கொல்’ என்ற பெருஞ் சொல்லேயும் தந்தைக்கு ஈட்டித்தந்து பிள்ளையவர்கள் கலைவளர்ச்சி பெறுவாராயி னர்; வயதும் உடன் வளர்ந்தது. மகனே உயர்தரப் படிப் புக்கு அனுப்புதல் வேண்டுமெனத் தந்தை விரும்பினர்; ஆயினும் வறுமைநிலை அரசினர் இலிகிதர் சேவைக்குத் தான் அவரைச் சேர்க்கலாயிற்று. உத்தியோகம், சொந்த ஊரில் நிலையாய் இருக்கும் தொடர்பையும் கலைத்துவிட் டது. பிள்ளையின் உள்ளமோ, தன்னுட்டின் நிலையையிட்டு உறுத்திக்கொண்டிருந்தது. கந்தப்புராணம், மகாபாரதம் முதலிய புராண இதிகாசங்களை யெல்லாம் வாய்ப்பாட

Page 129
208 மட்டக்களப்புத் தமிழகம்
மாகச் சொல்லவும் பொருள் கூறவும் வல்ல அறிஞர் பலர் அக்காலத்து இருந்தனர். திண்ணைப் பள்ளிக்கூடங் கள் வைத்து மாணவருக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத் தும் வந்தனர். எனினும், இலக்கண இலக்கியங்களைத் துறைபோகக் கற்ற பெருமக்கள் தொகை குறைவாகவே இருந்தது. இந்நிலையுயரவேண்டும் என்று உணர்ச்சிக் கண்ணுேடு தம் தாய்நாட்டை நோக்கினர்; இடைக்கிடை வந்து இளைஞர்க்கு ஊக்கமும் தந்தார் ; தாமும் ஓய்வு நேரம் முழுவதையும் தமிழ் கற்பதிற் செலவிட்டார்.
தருக்கம், நிகண்டு முதலான கருவி நூல்க்ளேயும், நன்னூல், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல் களையும், சங்க இலக்கியங்களையும், புராண இதிகாசங் களையும், சித்தாந்த சாத்திரங்களையும் முறையே கற்றுத் தேறினர். இயற்றமிழ்ப் பேராசிரியரான வல்வையூர்ச் ச. வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் இவருக்கு நல் லாசிரியராய் அமைந்தனர். சுன்னைக் குமாரசுவாமிப் புல வர், திருக்கோணமலே த. கனகசுந்தரம்பிள்ளை, அட்டாவ தானம், பூவை கலியாணசுந்தர முதலியார் முதலியோ ருடைய நட்பும் தொடர்பும் கிடைக்கப்பெற்றதனல் கலை, புகழ், மதிப்பு என்பவற்றில் மேலும் உயர்வு பெறுவா ராயினர்.
முப்பது வருடகால அரசாங்க சேவையின்போது உத்தியோகப் படிகள் பலவற்றில் உயர்ந்து ஈற்றிற் பகி ரங்க சேவைப்பகுதியில் முதல்வர் பதவியும் வகித்தார். தொழிற் திறமையும், கடமையுணர்ச்சியும்பற்றி இவரை அரசினர் பெரிதும் மதித்துப் பாராட்டினர். அரசினர் கடமையோடு தமிழன்னேயின் அடித்தொண்டினையும் மற வாது கருத்தோடு பணியாற்றி வந்தனர். இலக்கண இலக்கியத் துறையில் இவர் அக்காலங்களிற் செய்த ஆராய்ச்சிகளின் பயனுகப் பல கட்டுரைகளைத் தமிழகம் கண்டு போற்றியது. இவராலியற்றப்பட்ட தனிப் பாடல் களும், தோத்திர நூல்களும் பலவாகும். மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செக் தமிழ்ப் பத் திரிகை யில் இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல வெளிவந்தன. சங்கச்சான் ருேரும் இவர் பெருமையைப் போற்றி இவரை ஒரு

புலவர் பரம்பரை 209
கெளரவ ஆயுள் அங்கத்தவராகச் சேர்த்துக் கனம் பண்ணினர்கள். அது மட்டுமன்றி மதுரைத் தமிழ்ச் சங் கத்துப் பண்டித பரீட்சைக் குழுவிலும் இவரை ஒரு கிரந்தர அங்கத்தினராக்கினர்.
இவரடைந்த பெருஞ் சிறப்புக்களால் மட்டக்களப்பு நாட்டின் பெருமை மலைவிளக்காகி வளர்ந்து கலையுலகினை யும் கவர்ந்துகின்றது. பொதுமக்கள் ஆங்காங்கே சங் கங்கள் கூட்டி விழாவகுத்து வித்துவான் ’ என்ற கலைப் பட்டத்தினை இவருக்குச் சூட்டித் தம்மையும் மதிப்புக்குள் ளாக்கிக் கொண்டனர். வித்துவானுடைய நூல்கள் என்ற தும் அறிஞர்குழு அவற்றை உவந்தேற்றுக்கொள்ளத் தலைப் பட்டது. முதன் முதலாக 1882இல், இவருடைய *திருமுகர் பதிகம்’ என்ற தோத்திரநூல் ஒன்று வெளியிடப் பெற்றது. மட்டக்களப்புப் பெரியதுறை என்னும் இடத் தில் உள்ள முருகப் பெருமானது அருண்முகங்களைச் சிறப் பித்துப் பாடப்பெற்ற பக்திநூல் ஆதலால் இது ‘திருமுகர் பதிகம்’ என்றும் வழக்கேறலாயிற்று. இரண்டாண்டு களின் பின்னர் 800 விருத்தப் பாக்களைக் கொண்ட * சீமந்தனிபுராணம்’ என்னும் நூலை ஆக்கித் தந்தார். இந்நூலின் சிறப்பை வியந்து வல்வை வைத்தியலிங்க ணுரே அதனை அச்சிட்டு வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். அகவற்பாவால் இயன்ற * விநாயகர் மான்மியம் ' என் னும் ஒரு புராண நூலும், * புளியநகர் ஆனேப்பந்தி விக் னேசுவரர் பதிகமும் ' 1905ஆம் ஆண்டில் வெளிவந் தன. அடுத்த ஆண்டிலே கண்டிருகர்ச் சைவ மக்களின் விருப்பத்துக்கிணங்கி சிவதோத்திரம்’ ஒன்று செய் தார்கள். அக்காலத்துத் தமிழழிவு செய்துவந்த சில போலிப் பண்டிதர்களின் பேச்சுக்களை மறுத்து இவர் எழுதிய ஒரு கண்டனம்போன்ற உரைநடைநூல் * முப் பொருளாராய்ச்சிக் கட்டுரை ’ என்பதாகும். இக் கட் டுரையினை 1918ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தார் தமது ‘செந்தமிழ்’ இதழில் வெளியிட்டனர். யாழ்ப் பாணத்து அரசடி விநாயகர்மீது இவ்வாசிரியர் பாடிய அகவல் நூல் 1920ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. இரண்டாண்டுகளின் பின்னர்ப் பார்க்கவ புராணத்தில்
0 - 14

Page 130
210 மட்டக்களப்புத் தமிழகம்
கணேசசரிதம் பற்றியுள்ள பகுதியை இனிய தமிழிலே
கணேசர் கலிவெண்பா ’ என யாத்தளித்தார்கள்.
சமயச் சார்புபற்றிய இந்நூல்கள் நீங்கலாகத் தமி ழிலக்கிய உலகிலே ஒரு வரலாற்று நூலே நன்கு வகுத் தமைத்த நல்லாசிரியர் என்ற பெருமைக்கு, இவரியற் றிய தமிழ் வரலாறு’ என்னும் ஆராய்ச்சி உரைநடை நூல் இன்னுரை ஆளாக்கியது. பல அறிஞர்களின் பெரு மதிப்பை இந்நூல் பெற்றதாகும். சிறந்த சொற்பொழிவாள ராயும், கண்டன வீரராயும், சமயநூற் களஞ்சியமாயும், இன்கவிப் புலவராயும், ஆழ்ந்த ஆராய்ச்சியாளராயும் விளங்கிய வித்துவான் அவர்கள், அவைமட்டுமன்றித் தலை சிறந்த ஓர் உரையாசிரியருமாவர் என்ற மதிப்பினையும் பெற்றிருந்தார். மாவிட்டபுரத்து வெண்ணெய்க் கண்ண னர் எனப்படும் பெருங்கவிஞரான புலவர்மணி சு. நவநீத கிருஷ்ணபாரதியார் அவர்கள் இயற்றிய உலகியல் விளக்கம் ' என்னும் பொருள் நூலுக்கு அவ்வாசிரியரது உள்ளப்படியே யமைந்த உயர்ந்த உரையொன்றை நமது பிள்ளையவர்கள் எழுதினர்கள். நூற் சிறப்பினையும், இவ ரது உரை வளத்தினேயும் போற்றிப் பண்டித மயில் வாகனனர் எனப் பெயரிய உயர்திரு விபுலாநந்த அடிக ளார் தாமே அவற்றைப் பதித்து வெளியிடலாயினர். இத் தகைய அருஞ்சேவைகளாலே தம்மையும் தம் குலத்தை யும் தம் நாட்டையும் உயர்த்தித் * தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்ருமை நன்று ’ என்ற வள்ளுவப் பயனுக்கு வித்துவானவர்கள் இலக் கணமாயினர். 1915ஆம் ஆண்டில் அரசினர் பணியி லிருந்து இளைப்பாறிய பின்னரே தமது நாட்டுப் பொது மக்களிடை நிலையாகத் தங்கியிருந்து தமிழ்ப்பணியும் சைவப்பணியும் தாங்கும் மகிழ்வு இவர்க்குக் கிடைத்தது. அக்காலத்தில் இளைஞராயிருந்த வித்துவான் சரவண முத்து அவர்களைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் அவரை அங்கத்தவ ராக்கியவர் நமது பிள்ளையவர்களே. மட்டக்களப்பு நாட்டின் இளைஞர்குலம் பிள்ளையவர்களாற் கிளர்ந்து சங்கங்கள் கூட்டித் தமிழ் வளர்க்கத் தொடங்கிற்று.

புலவர் பரம்பரை 21
பிள்ளையவர்களின் ஓயாத உழைப்பினல், மலைபோன் றிருந்த அவரது உடலின் உள்ளுறுப்புகள் தளர்வடைந் தன. தோற்றப்பொலிவும், வாடாத நல்லெழிலும் குன்று மாறு நீரிழிவு நோய் அவரைக் கைதொட்டது. தொடர்ந்து எத்தனையோ பெரியோர்களையெல்லாம் சுவைகண்டும், பசி குன்ருத தொன்முதுகாடானது நமது வித்துவானவர்க ளது பொன்னுடலையும், 1921ஆம் ஆண்டில் அன்னரது 65ஆவது வயதிலே இரைதேர்ந்து பெருமைகொண்டது. அக்காலம், அவரது பெரும்பிரிவால் தமிழுலகு அடைந்த பெருந்து ய ர ம் சொல்லவொண்ணுததாகும். அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ !
சில காலம் கழிந்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தொடர்பு பூண்டவரும், சைவப் பேரறிஞருமாகிய சே, வை. ஜம்புலிங்கம்பிள்ளை என்பார், பிள்ளை அவர்க ளுடைய சமயநூல்கள் இருபதினையும் இரண்டு பாகங்க ளாகக் கோவைசெய்து 1923இல் முதலாம் பாகத்தினை வெளியிட்டனர்.
அத்தொகுப்பினுள் 1. கணேசர் கலிவெண்பா, 2. சிவதோத்திரம், 3. யாழ்ப்பாணத்து அரசடி விநாயக ரகவல், 4. சிவமாலை, 5. பெரியதுறைத் திருமுகர் பதிகம், 6. மட்டக்களப்பு ஆனேப்பந்தி-சித்திவிக்னேசுவரர் பதிகம், 7. கண்டிநகர்ச் செல்வவிநாயகர் பதிகம், 8. கண்டிநகர்க் கதிரேசன் பதிகம், 9. கொத்துக்குளத்து மகாமாரியம்மன் அந்தாதி, 10. நல்லிசைகாற்பது எனும் நூல்கள் அடங்கி யுள்ளன. நூற்தொகுப்பின் இரண்டாம் பாகம் வெளி வந்ததாகத் தெரியவில்லை. சிலேடைநயம் செறியப் பாடு வதிற் பிள்ளையவர்களுக் கிருந்த திறமையை இத்தோத்திர நூல்களுள் நாம் பரக்கக் காணலாகும்.
* ஒருமான் முடிமேல் ஒருமான் கரத்தில்
அரைமானும் பாகத் தமர்ந்தால்-பெருமான் வருமானங் காணுமோ மற்றவரைக் காக்க இரவாதென் செய்வா னிருந்து.”

Page 131
212 மட்டக்களப்புத் தமிழகம்
என்பது இவருடைய * நல்லிசை நாற்பதில் உள்ள ஒரு வெண்பா. மான் ’ கூடினபடியால் வருமானம் காணு மல் சிவன் பிச்சை கேட்டுத் திரிகின்றர் என்பது பொருள். கங்கையினையும், கலைமானையும், உமையாளையும் * மான்' என்ற சொல்லால் முறையே கவிஞர், இங்குக் குறித்த னர். இனிய செஞ்சொற்களாலமைந்த இவரது வெண் பாக்களெல்லாம் இதுபோலவே சுவை தேர்ந்து கற் போர்களது கருத்தைக் கவர்வனவாம்.
இத்தகைய புலவர் பெருந்தகையாருடைய பாடல் அனைத்தும் கிடையாத நிலை இன்றுளது. பெரியோர்கள் வாழ்ந்த அடிச்சுவட்டைப் பேணி, இயன்ற பணியை நாமும் செய்யவேண்டுமாயின், அவர்களது திருநூல் களை யெல்லாம் இறவாத புதுநூல்களாக வெளியிட்டு வழங்கச் செய்தல் வேண்டும். அந்நூல்கள் மூலம் அவர்க ளது உள்ளத்துடிப்பை உணர்ந்து, நமது நெஞ்சமும் உணர்ச்சி துலங்கக் கடமை செய்தல் வேண்டும். இத னேயே அவர்கள் தம் ஆவிவடிவில் நமது கைம்மாருகக் கொண்டு இன்பமுஞ் சாந்தியும் அடைந்து நிற்பார்கள்.

1. வித்துவான் அ. சரவணமுத்தன்
* சந்தக் கவிகளும், இசைப் பாடல்களும் எழுத வல்லவன் , தமிழ்க் கவிஞர்க் கரிதாக உள்ள எந்தக் கவிதையினையும் இனிதே யமைக்கும் கவிவாணன் ; துறைதேர்ந்த தமிழறிஞன் கற்ருேர் வியப்புறும் நந்தமிழ் * காவலன்' ஆக இதோ * எம்முளும் உளன் ஒரு பொரு நன்’ என்று முத்தமிழ் அடிகளான பண்டித மயில் வாகனனர் வியந்து பாடிய அறிஞர் ஒருவர் மட்டக்களப் புத் தமிழகத்தின் புலவர் பரம்பரையிலே தோன்றியிருக் கின்ருர்,
* சந்தப்பா விசைப்பாவும் தமிழ்ப்பாவில் விழுமிதென்னத்
தக்கோ ராய்ந்த எந்தப்பா வெனினுமிக வெளிதினமைத் திறமளிக்கு
மியற்பா வாணன் கந்தப்பா வெமையாளக் கடிதப்பா வருகவெனக்
கவிதை பாடித் தந்தப்பா சுரவிசையுந் தமிழிசையும் பிறவிசையுக்
தரித்த சீலன்.?
* அருணகிரி தவப்புதல்வன் இளமைமுதல் எனக்கன்பன்
அமுத மன்ன :
பொருளழகு திகழ்தமிழின் கலைபலவும் நனியாய்ந்தோன்
புலவர் நாப்பண்
மருளகல விடுத்துரைக்கும் வண்மையினன் ருென்மையினன்
மலரோ னன்னுன்
சரவணமுத் தெனும்புலவன் கவியுவகை புவியுவகை
தழைக்க மாதோ.”
என்று அடிகள் பாராட்டிய அப் பெரு ந் த கையாளர் * ஈழத்து நாணலம் நித்திலக் கிழார்' எனப் புகழ்பெற்ற வித்துவான் சரவணமுத்தன் அவர்களேயாவர் (படம் 32).
அறம் வளர்ந்த தமிழகத்திலே மறம் புகுந்து மக்கள் தம் பழம் பண்பு துறந்து, வாழ்வின் நெறியினை மறந்து செல்லுகையில் ஆங்காங்குப் பேரறிஞர்கள் தோன்றிச் செந்நெறி பரப்பி வந்துள்ளார்கள். அத்தகைய சீரிய

Page 132
214 மட்டக்களப்புத் தமிழகம்
ரெல்லாரும் தூய ஒழுக்கமும், தம் சமய நெறியிற் தவருத கட்டுப்பாடுங் கொண்டு விளங்கினர். ஒழுக்கமும், தவ மும், புலமையும் காத்துத் தொண்டு செய்யும் அன்ன ரைப் பொதுமக்கள் பெருஞானிகள் என்று கருதினர். மக்கட் குலத்துக்கு நல்வழிகாட்டும் அவர்கள் இறைவ னின் பிரதிநிதிகள் என்றே கொள்ளப்பெற்றனர். அத ணுல், ஒன்றிப் பிணைந்துகின்ற சமயமும் தமிழும் வளர்த்த பெரியோரெல்லாரும் அக்காலத்திற் சாமி’ என்னும் மதிப்புக் குரிய உயர்ந்த சொல்லால் வழங்கப்பெற்று வந்தனர்.
ஒல்லாந்தரது ஆட்சியைத் தொடர்ந்து இலங்கையில் நிலைபெற்ற புறச்சமயப் பிரிவுகள் மட்டக்களப்பிலும் மெல் லப் பரவி மக்களுடைய தமிழ்ப் பண்பினையும், ஒழுகலாற் றினையும் மாற்றி வரும்போது அந்நிலையை மாற்றி அனை வருக்கும் நல்லறிவு புகட்டிச் சைவசமய இயக்கம்’ என்ற பிரச்சார இயக்கத்தின் பேராற் தமிழ் மானங் காத்த ஒரு மட்டக்களப்பு நாவலர் நம் சரவணமுத்துச் சாமியார் அவர்கள்.
மட்டுநகரின் ஒருபால் உள்ள தாண்டவன்வெளி என் னும் ஊரில் வாழ்ந்துவந்த வேளாண் செல்வரான அருண கிரியாரும் அவர் மனைவியார் கந்தம்மையாரும் (1890இல்) விரோதி வருடம் பங்குனிமாதம் 27ஆந் திகதி செவ்வாய்க் கிழமையன்று இப் பெருந்தகையாரைத் தம் மகனுகப் பெற்றுப் பெரும்பேறு பெற்ருர்கள். மந்தமாகவே கழிந்த இவரது இளமைக்காலம், மட்டுநகர் அர்ச். மைக்கேல் கல்லூரியிற் பெற்ற ஆங்கில எட்டாம் வகுப்பு அறிவோடு உலகுக்கு இவரை அறிமுகம் செய்துவைத்தது. எவரும் எதிர்பாராதவகையிலே மட்டக்களப்பிற் சரவணமுத்தன் ஒரு குட்டி வில்லிபுத்தூராழ்வாராகித் தோன்றுவார் என் பதை அக்காலம் யாரும் உணர்ந்திலர். பிற்காலத்தே தமது எழுதுகோல் வன்மையால் எத்தகைய வலி படைத்த எதிரியையும் அடிபணியச் செய்த இவரது ஆற்றல்கூட எவ்வித குறிகளும் தோன்ருது அடங்கிக் கிடந்தே வெளிப்பட்டதெனலாம்.

புலவர் பரம்பரை 2 I 5
அக்காலத்து வயாவிளான், 8 சுதேச நாட்டியம் " என்ற வெளியீட்டுச் சொந்தக்காரராகவும் பெரிய கண்டனப்புலியாகவும் விளங்கிய கல்லடி வேலுப்பிள்ளை அவர்களுக்கும் இவருக்கும் பத்திரிகைகளிலே நடந்த சொற்போர்களையும், ச ரவ ண முத்த னின் கண்டன ஆற்றலையும் தமிழ்ப் புலமையினையும் வேற்பிள்ளையார் போற்றிய பெருமையினையும் தமிழுலகு நன்கறியும். சரவணமுத்தனின் செய்யுள் ஒன்றை நன்கு விளங் கிக் கொள்ளாது குறை கூறுதற்கு முனைந்த பண்டித ரொருவரைப் பழித்துப் “புழுகு கணபதி பெயர னறிவனே கழுகு மலையப்பன் கணக்கு ’ என்றும், * குண்டுச் சட்டிக்குள் கரணமடிக்கும் பண்டிதக்குஞ்சே ” என்றும் வேற்பிள்ளைக் கவிஞர் தமது 8 சுதேச நாட்டிய'த்திற் கண்டனந் தீட்டினர். வித்துவான் அவர்களை வெல்ல எண்ணி வேற்பிள்ளையவர்களின் துணையையும் அதற்கு வேண்டி நின்ற தீபம்’ ஆசிரியரான வேதநாயகம் பாதிரியாருக்கு, “சரவணமுத்தனைச் சொற் போரில் எதிர்க்கத் தகுந்த ஆற்றல் உம்மிடம் இல்லே ' என்று வேற்பிள்ளையவர்கள் பதில் கொடுத்தார்கள். இந்நிகழ்ச்சிக ளெல்லாம் வித்துவானவர்களுடைய கலேப் பெருமையை மலைவிளக்காக்கின. அப்பால் சரவணமுத்தனும், வேற் பிள்ளையும் அறிவுத்துறையில் மிக நெருங்கிக் கடும் நண் பர்களாயினர். வித்துவான் எழுதும் கட்டு  ைரகள் கவிதைகள் அனைத்தையும் பதிப்பித்து வெளியிடும் வேலையைக் கல்லடி நாவலர் தாமே மேற்கொண்டனர்.
கலாசாலைப் படிப்பின் பின்னர், மட்டக்களப்பு இந்து வாலிப சங்கத்தார் நடத்திவந்த நூல் நிலையத்திற்கு மேற் பார்வையாளராக அமர்ந்ததன் மூலம் வித்துவான் அவர் கள் தமிழ் கற்கும் காலவாய்ப்பினை நிறைய அடையப் பெற்ருர்கள். இலக்கண இலக்கியம், புராண இதிகாசம், சித்தாந்த சாத்திரம் அனைத்தையும் கற்றுத் தேர்தற்கேற்ற சூழ்நிலையை அளித்த இயற்கை, இவருக்கு ஒரு நல்லா சிரியரையும் பின்னர்க் கூட்டிவைத்தது. ஆங்கில ஆசிரி யரும் சிறந்த தமிழ் அறிஞருமாக விளங்கிய பண்டித மயில்வாகனனர் அக்காலத்தே இவரது வீட்டினருகில்

Page 133
216 மட்டக்களப்புத தமழகம்
குடியிருக்க வந்தமை, கலையும் புலமையும் நிறைத்துத் தமிழுலகு போற்றும் பேரறிஞராகச் சரவணமுத்தனை மாற்றிவிடக் கருவியாயிற்று. அஞ்சா நெஞ்சம், உறுதி, கடவுள் பக்தி, தூய உள்ளம், ஏழைகள்மாட்டன்பு, அடக்கம் என்னும் அருங்குணங்கள் யாவும் சரவண முத்தனிடம் மிளிரக் கண்ட மயில்வாகனனரும் அவரை வியந்து, மதித்துத் தமக்கு நன் மாணவராயும், உற்ற நண்பராயுங் கொண்டு போற்றுவாராயினர்.
அக்காலத்திலே பெருந் தமிழறிஞராய் விளங்கிய வித்துவானுகிய புலவர் போற்றும் பூபாலபிள்ளையவர்கள், வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களைத் துலக்கிக் காட்டும் அரிய இலக்கியம் போன்று அமைந்ததும், சரவணமுத்த னல் 1915ஆம் ஆண்டு பாடப்பெற்றதுமாகிய 'மாமாங்கப் பிள்ளையார் பதிகத்தின் சிறப்பினைக் கண்டு வியந்து மது ரைத் தமிழ்ச் சங்கத்தாருக்கு இவர் பெருமையைக் காட்டிவைத்தனர். சங்கம் நடத்திய வித்துவான் தேர்வி லும் சரவணமுத்தனர் 1916 மாசியில் தேறினர்; சங்கம் தன் கலைக்குழுவில் இவரை ஓர் அங்கத்தவராக்கிப் பெரு மைப்படுத்திற்று. அடுத்த மாதமே இலங்கை அரசாங்க எழுத்தாளர் சேவையிலும் தேறி மட்டக்களப்புக் காட் டுக் கந்தோரில் தொழில் நடத்தவும் தொடங்கினர்.
அரசினர் பணியிற் சேர்ந்தாராயினும் தமிழ் வளர்க் கும் பணியினையும் இவர் மறந்தாரல்லர். இயல், இசை, நாடகம் மூன்றையும் நன்கு கற்ருர் ; அவைதம்மைத் தன்னுட்டில் வளர்த்துவந்தார். இயற்றமிழ்ப் புலமை யோடு வீணை, வாய்ப்பாட்டு என்ற துறைகளைச் சார்ந்து இவரிடத்திருந்த இசைப் புலமையினையும், நடிக்கவும் பழக்கவும் வல்லரான நாடகப் புலமையினையும் அறிந்து மட்டக்களப்பிலே அந்நாளில் மிகப் பெயர்பெற்று நாடகம் வளர்த்து வந்த சுகிர்த விலாச நாடக சபையார் ? தமக்கு நாடகம் எழுதும் அறிவுப் பணியையும் இவருக் குப் பணிந்தளித்தார்கள். அதன் தொடர்புகொண்டிருந்த காலங்களிற் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியும், வசனங்கள் அமைத்தும், கொடுத்ததுமட்டுமன்றித் தாமே

புலவர் பரம்பரை e 17
அரங்கேறித் திறம்பட நடித்தும் வந்தார்கள். "பாதுகா பட்டாபிடேகம் ', ' இராமர் வனவாசம்’, இலங்கா தகனம் ' என்று இன்று இயலும் நாடகங்கள் மூன்றும் இவராலேயே முற்றும் எழுதப்பட்டனவாம். * கண்டி ராசன் நாடகம் ', 8 சீதா கல்யாணம்’ என்ற நாடகங் களிற் தாமே கதாநாயகனக நடித்துப் பெயர்பெற்றனர். * சரவண முத்தனெனும் மரகதத்தின் தாள் பணிந்து ’ என்று கண்டிராசன் நாடகத்திற் தன் வரவின்போது பாடு தற்குத் தன் பெயரமைந்த முருகனை வணங்கும் வரவுப் பாடலொன்றை அமைத்துக்கொண்டாராம். இராவணன் வேடம் இவருக்கு மிகுதியும் பொருத்தமாயிருந்ததென் றும், உவேல்ஸ் இளவரசர் கொழும்புக்கு வந்தகாலை இராம கதையில் ஒரு பகுதியை நாடகமாக்கித் தாமே இராவணனுகவும் நடித்துப் புகழும், பரிசிலும் பெற்ருர் என்றும் அறிகிருேம். இனிமையும் எடுப்புங் கொண்ட உரத்த குரலோடு, வேடப்பொலிவும் இவருக்கமைந்தது போல் இராவணனுக நடித்த வேறு யாருக்கும் அதுவரை பொருந்தியதில்லை என்றும் சொல்லப்படுகின்றது.
மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழாக்களிற் தவருது கலந்து சொற்பொழிவுகளாற்றும் வாய்ப்பு இவ ருக்குக் கிடைத்திருந்தது. ஒருமுறை மதுரை சென்றிருந்த போது இவருடைய உடுப்புப் பெட்டியும், பணப்பையும் திருட்டுப்போய்விட்டன. எவரிடமும் இரந்து உதவிபெற விரும்பாத கவிஞர், கைச் செலவுக்கும் வழியற்ற நிலை யில் அங்கே வைரவப்பிள்ளை என்பவரால் நடாத்தப் பெற்றுவந்த நாடகசபை ஒன்றுக்குச் சென்று நடிப்பதற் குத் தமக்கும் இடம் தருமாறு கேட்டனர். அவர்களோ இவரை அறிந்து மதித்துப் பேணுது நந்தன் சரிதையில் நந்தன் வீட்டுச் சேவகனகிய நாகனக வேடம் ஏற்று நடிக் கும்படி குறைந்த கூலிக்கு அமர்த்தினர்கள். திருமதி வைரவப்பிள்ளையே நந்தனின் மனைவியாக நடித்தார். மேடையிற் தோன்றியதும் அவர் சேவகனை அடிக்கடி * அடே' என்று அழைத்துக்கொண்டே இருந்தமை மனம் கொதித்திருந்த வித்துவானே மேலும் வருத்திற்று. ஒருமுறை மிகக் கடுமையான குரலில் * அடே நாகா ”

Page 134
218 மட்டக்களப்புத் தமிழகம்
என்று அந்த அம்மையார் கூப்பிட்டபோது சேவகர் அசைவற்று ஒரு தூணிற் சாய்ந்து நின்ருர். மேலும் மேலும் பலமுறை அதட்டி ** என்னடா தூங்குகின் ருயா?’ என்று கேட்டதும் இவர் பொறுமையோடு * இல்லையம்மா’ என்று சொல்லி * நீடாழி யுலகத்து மறைநாய் குலைக்கவே நெடுநாகன் பனையேறினன் ? என்று பாரதத்தின் காப்புச் செய்யுளைத் திரித்துப் படிக்கத் தொடங்கினர். தன்னை ? நாய்’ எனச் சேவகன் குறிப் பிடுவதை விளங்கிக்கொண்ட அவள் அவமானமடைந்து உள்ளே சென்றுவிட்டனளென்றும், பின்னர் நாடகசபை யார் இவருடைய திறமையைக் கேட்டறிந்து மன்னிப்புப் பெற்று, மறுநாள் நடந்த அல்லி-அரிச்சுனு நாடகத்தில் கதாநாயகனக இடமும், கூடிய சம்பளமுங் கொடுத்து இவருடைய சிறந்த நடிப்பைப் பெற்றதன் மூலம் தம் சபைக்குப் புகழையும் தமிழகத்தில் நன்கு வளர்த்துக் கொண்டனர் என்றும் அறியப்படுகிறது.
பிற்காலத்தே மட்டுநகர்ச் சுகிர்த விலாச சபையும் இவரைத் தலைவராகக்கொண்டு நெடுநாள் நாடகப்பணி செய்தது. மிகுந்த நகைச்சுவை வல்லவராகவும் விளங் கிய நமது வித்துவான் சில சமையங்களில் கோமாளி ? வேடம் தரித்துச் சபையை மகிழ்விப்பதும் உண்டென்பர்.
சிலேடைநயம் பொதிந்த இவரது சொற்சுவையினல், சொற்பொழிவுகளிலும், கண்டன உரைகளிலும் இவ ருக்கு எங்கும் பெரும் சிறப்புக் கிடைத்துவந்தது. ஒரு கால் தமிழறிஞரொருவருடன் சொற்போர் ஒன்று எழுந்த போது தருக்கமுறைகளைக் கைக்கொண்டு மரபு கடவாது வித்துவானவர்கள் வாதிட்டுக் காட்டிய நுண்கருத்துக் களை ஏற்றுக்கொள்ளவோ, விளங்கிக்கொள்ளவோ மறுத்து, மற்றவர் * விதண்டாவாதம் * செய்யலாயினர். அதனல் வித்துவானவர்களுஞ் சற்று எல்லேமீறி * ஒட்டி ஒரா திருக்கைதான் உமக்கு நன்ருமோ ’ என்று சிலேடை யாக மீனுணவு கொள்ளும் அப் பெருந்தகையாரைக் கூறினர். யான் கூறுவதைச் சார்ந்து உணராதிருப்பது உமக்கு நன்றமோ என வெளிப்படையாகவும், ஒட்டி,

புலவர் பரம்பரை 219
ஒரா, திருக்கை என்னும் மீன் விருந்தன்றி என்னறிவு விருந்து உமக்கு நன்றக இருக்குமோ என்று குறிப்பாக வும் கண்டிக்கப்பெற்றபோதுதான் அவர் அறிவு தெளிந்து முத்தனைப் பணிந்து போற்றினரென்பர்.
கள்ளருந்தும் பழக்கம் வித்துவானவர்களைத் தொட்டு வளர்ந்து வந்ததை அறிந்த விபுலாநந்த அடிகள் ஒரு முறை ** என்ன வித்துவான் நீங்கள் மதுபானம் அருந்து கின்றீர்களென்று கேள்விப்படுகிறேன்’ என்று கேட்டார். அதற்கு அவர் ** இல்லே சுவாமி, பழங்கள் மட்டுந்தான் சாப்பிடுகின்றேன்’ என்று நயமும், பயமும் தோன்றப் பதிலிறுத்தபோது சுவாமிகள் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும் நிலைமை ஏற்பட்டது. “சைவ உணவு கொள்ளும் நான் பழங்களையே உணவாகக் கொள்கிறேன் ’, என்று கூடியிருந்த மற்றையோருக்குச் சொல்வதுபோலக் காட்டி, பழைய கள்ளை மட்டும் தான் அருந்திவரும் பழக் கத்தையும் அவர் ஒப்புக்கொண்ட சொற்சாதுரியத்தை அடிகள் பாராட்டினர். இவ்வாறு சிலேடை அணியா னது சரவணமுத்தனின் கைப்பட்டதனல் ஒரு தனிச் சிறப்பைப் பெற்று கடந்ததை இவருடைய கண்டனக் கட்டுரைகளில் நாம் பரக்கக் காணலாம். அத்தகைய அறிவுக் கட்டுரைகளுக்குச் * சுதேசநாட்டியம்’, ‘தீபம்', * செந்தமிழ் ’ என்ற வெளியீடுகள் நன்மதிப்புக் கொடுத்து வெளியிடலாயின.
1910ஆம் ஆண்டிலே மட்டக்களப்பிற் தோன்றி நலிந்த நிலையில் இருந்த சைவப் பள்ளிக்கூட இயக்கத் திலே ' சரவணமுத்துச் சாமியார் ஒரு தலைமைத் தளபதி யாகச் சேர்ந்தார். தமிழ்நூல்களோடு, கிறித்தவ வேதங் களையும் நன்கு கற்று, ஆங்கில மொழியிலும் சொல்லாற்றல் படைத்திருந்த வித்துவானுடைய பேச்சினே எதிர்த்து வெல்லமுடியாது பாதிரிமார் பலர் திணறினர்கள். இவ ரது தெய்வத் தமிழ்ப் பெருக்கிற் சைவர் திளைத்துக் கிளர்ந்தனர். தேசிகமணியும், சைவப் புலவருமாகி இன்று விளங்கும் * அருணுசலம் சாமி 'யின் (படம் 42) துணையும் இவருக்கு அக்காலை கிடைக்கலாயிற்று. அவரையும்

Page 135
220 மட்டக்களப்புத் தமிழகம்
உடன்கொண்டு இடந்தொறுஞ் சென்று சொன்மாரி பெய்து சைவம் வளர்க்கும் பணியிலே அளப்பரிய வெற்றிகண்டார். தமிழ் வள்ளல்கள் பலருடைய ஒத் துழைப்பும் இவருக்குக் கிடைக்கவே எங்கும் பள்ளிக் கூடங்கள் பல அமைந்தன ; திண்ணைகள் வளர்ந்தன; நாடக அரங்குகளும் எழலாயின. இவருடைய பெரு முயற்சியால் நிறுவப்பட்ட கலாசாலைகளையே விபுலாநந்த அடிகளார், பிற்காலத்தில் இராமக்கிருட்டின சங்கத்திற் சேர்த்து வளர்த்தனர். சரவணமுத்து விதைத்த தமிழ் விதை, சைவ, வாலிப, தமிழ்க்கலை மன்ற ங் களாக முளைத்து வளர்ந்தது. அக்காலத்து இளைஞராயிருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் தமிழ் அறிவையும் ஆற்றலேயும் வியந்து பண்டிதர்' என்ற பாராட்டும், ஆசிரியத் தொழிலிலீடுபடுவதற்கு ஒரு மதிப்புப் பத்திரமும் வழங்கி 1922ஆம் ஆண்டிலேயே மட்டக்களப்பு நாட்டின் தமிழ்மரபு காக்கும் பெரும் பணியானது தொடர்ந்து வளர்ந்துவருதற்கும் வித்துவா னவர்கள் அடிகோலி வைத்தார்கள்.
பல துறைகளிலும் சிறந்து விளங்கும் சரவணமுத்த னருடைய சமயஞான முதிர்ச்சியையும், இசைப் புல மையையும் பயன்படுத்தி இசைப்பாடல் நூல் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னைநகர் அண்ணுவி யார் தா. ஆதிமூலம்பிள்ளை அவர்கள் விரும்பினர்கள். அதனையேற்று, அவரமைத்துக் கொடுத்த தாள, இராகங் களுக் கமைவாகக் கதிர்காம வேலவர் தோத்திரமஞ்சரி? எனும் ஒரு நூலே நமது வித்துவானவர்கள் யாத்தனர். 1927இல், 8 சுதேச நாட்டிய காரராற் பதிப்பிக்கப் பெற்ற இந்நூலின் சிறப்புரையிலேதான் விபுலாநந்த அடிகளார் நாம் முன்னர்க் காட்டிய புகழுரையை இவ ருக்கு வழங்கலாயினர். கீர்த்தனை என்று இக்காலத்தில் வழங்கப்படும் இசைப் பாடல்களமைந்த இந்நூலுள் :
* குறவர்மகள் தனகாடும் குமரன் றன்னைக் குன்ருடிக் குன்றுருவக் குறித்து மாநற் திறலுடனே வேல்விடுத்த மயிலோன் றன்னைத்
தேவர்சிறை மீட்கவரு திகழி னனை

புலவர் பரம்பரை 221
அறமுணர்த்து மம்மைமைந்த ஞனன் தன்னை
அடியவர்க்கே யருளமுத மளித்து மேழ்வெம் பிறவிநோய்க் கலிதீர்க்கும் பெம்மான் றன்னைப்
பேசுவார் மாசிலாப் பெரியோ ராமே..?? 39 என்பதுபோன்ற விருத்தமும், வெண்பா, கலித்துறை என் னும் மற்றைய இயற்றமிழ்ப் பாடல் சிலவும் இடம் பெற்றுள்ளன.
* மதிகுடி பெற்ற மகனே குறத்தி
மனைநாடு சித்ர - வடிவேலா.? என்று திருப்புகழ் போன்ற நடைபெற்றமைந்த 8 நவரத் தினச் சந்தக்கவி' களும், * வண்ணச் சந்தம் ' என்னும் வகை சார்ந்து, புன்னகவராளி ’, ‘நாதனுமக்கிரியை 2 முதலிய இராகங்களி னிசைவுக்கமைந்த சந்தப் புகழ்ப் பாடல் சிலவும் ஈற்றிலமைந்து அறுபது பாடல்களா னியலும் தோத்திர மஞ்சரி’ பல அறிஞர்களின் பாராட் டுரை பெற்ற ஒரு புகழ் நூலாகும்.
கணிதம், இலக்கியம் என்ற கலைத்துறைப் புலமை யில் இவர் பெற்றிருந்த ஆற்றல் சோதிடக் கலையையும், இவர்க்கு இலகுவில் ஊட்டிற்று. தமது நுண்மதியினுல் எத்தனையோ நிகழ்ச்சிகளை முன் கூட்டியே கணித்து அறிந்து கூறிச் சோதிட விற்பன்னர்’ என்ற பெருமைக்கும் இலக்காயினர். தமது கிரக நிலைப்படி பிற்காலத்தே சனி பகைகொள்ளப் பெற்றமையாற், தன்னுற்றலால் மேற்கொள்ளமுடியாத பல துன்பங்கள் வந்தன என்று நம்பினர். எடுத்த கருமங்கள் சிதைந்து பொருளழிவு கொண்டார் ; மூலநோய் தொட்டது; அதன் வெம்மை தணித்தற்காகக் கள்ளுண்ணும் பழக்கங் கொண்டார்; கீழ்மையானதென்று அவரே விரும்பாத அப் பழக்கம் பல்லோர் நகைப்புக்கும் தன்னை ஆளாக்கியதென்பார். அவற்ருல் உடலும், உளமும் கொந்து சனிபகவானை வேண்டி மனங்கசிந்து பாடினர் :
*நள்ளார் நகைக்கவைத்தாய் நானிலத்தோ ரேசவைத்தாய்
உள்ள மரியாதை யோட்டிவைத்தாய்-மெள்ளவே வந்தனுகாத் தீச்செயல்கள் வந்திடச்செய் தாய்கலியே எந்தையினி யென்மே லிரங்கு,’ 5

Page 136
992 மட்டக்களப்புத் தமிழகம்
* சொறியுனக்குச் சீதனமா சோம்பலுந் தன்பேரு
கிறிபெருக்க வோகிளர்வு கேள்வா-அறிவுடையார் வேண்டா தனவெல்லாம் வேண்ட வழிவைத்தாய் ஈண்டா திவைதீ ரினி.?? 22
* கிழங்கு வருத்தவே கீழ்மைப் படுத்தப்
பழங்களுண் ணச்செய்தல் பண்பா-வழங்கா வகைநீக்கு வாய்சனியே வையத் தவர் செய் நகைநீக்கி யாள்வாய் நயந்து.* 25
(கிழங்கு வருத்தவே-மூலநோய் துன்பஞ் செய்தலால்.)
இவ்வாறு சனியினத் துதித்துப் பாடிய 30 வெண் பாக்களும் * சனிவெண்பா ’ எனும் நூலுளமைந்தன. அந்நூலைச் செங்கலடி வன்னிமை முதலியார் திரு. கு. பொன்னேயா என்பார் 1927இல் பதிப்பித்தனர். கல்லடி வேற்பிள்ளையவர்கள் பாடிய அச்சிடுவித்தார் மான்மி யம்’ எனும் செய்யுள்கள், இந்நூலுக்கு முகவுரைபோ லமைந்துள்ளன. வேறு பல சிறப்புரைகளையும் இந்நூல் பெற்றுள்ளது.
இரத்தினபுரி, அப்புத்தளை திருகோணமலை என்ற இடங்களுக்குத் தொழில்நிலை மாறிச் சென்று சேவை செய்த காலங்களில் அங்குள்ள தல இறைவர்மீது இவர் பாடிய தோத்திரச் செய்யுள்கள் பலவாகும். அவ்வூர் களில் எல்லாம் தமிழ் வகுப்புக்கள் கடத்திப் பணிசெய்த னர். தமிழின் தனி இனிமையிற் றிளைத்துக் கலப்பற்ற தூயநடையிற் பல கட்டுரைகளேப் பிற்காலத்தே வித்து வான் அவர்கள் எழுதினர் என்பர். அதனல் சரவண முத்தன் என்னும் இவரியற் பெயரையும் அறிஞர் ஈழத்து நாணலம் நித்திலக்கிழார்' என்று தமிழ்செய்து வழங்குவாராயினர்.
வலிமைபெற்று உயர்ந்து பருத்த உடற்கட்டும், மேவி வளர்ந்த குடுமியும், முறுக்கிவிட்ட மீசையும், உருத்திராக்க மாலையும், வெண்ணிற்றின் பெருங் குறிகளும் கொண்டவ ராகி அஞ்சாத நெஞ்சமும், “ அவையஞ்சி மெய் விதிர்க் காத’ ஆண்மையும் படைத்திருந்த வித்துவான் வீர

புலவர் பரம்பரை 223
சரவணமுத்தனர் தமது நாற்பதாவது வயதில் (1930ஆம் ஆண்டு ஆடிமாதம் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை) விண் புகுதற்கு விடைபெற்றுவிட்டார். கலைமீது இவருக்கிருந்த கரைகாணுத காதலே கடைசியிற் காலனுக வந்து கை தொட்டது. சனி வெண்பாப் பாடிய சிறப்பாற்போலும் சொறி முதலிய நோய் நீங்கி, உளமகிழ்ச்சியும், புது மலர்ச்சியும் பெற்றுச் சிலகாலம் ஆறுதலடைந்திருந்த வித்து வானின் குடலிலே நச்சுநீர்த் தாக்கமொன்று உண்டா யிற்று. அதற்காகக் கொழும்பு சென்று சத்திர சிகிச்சை பெற்றனர். நோய்ப் படுக்கையிலிருக்கும்போது தாம் வீரராவணனுக முன்பு நடித்ததைக் கனவுக் காட்சியிற் கண்டு எழுந்தார். மற்றையோர் வந்து பிடித்துத் தடுத்தற் கிடையிலே தம்மையும் மறந்து இராவண வீரனுக நடிக்க லாயினர். வயிற்றிலே  ைத க்கப் பெற்றி ரு ந்த காயம் மீண்டு பிளவுற்றது ; குடல் வெளியே சரிந்து குருதி சொரிந்தது. சரவணமுத்தனின் உயிரும் உடனே பிரிந் தது. மிகக் குறைந்த ஆயுட்காலத்திலேயே எத்தனையோ பெருஞ் செயல்களை யெல்லாம் புகழுறப்புரிந்து தமிழ் வளர்த்த வள்ளலைக் காலம் நம்மிடை மீண்டநாள் விட்டு வைத்திலது. வெளிநாட்டாரின் முன்னர்த் தாழ்ந்து நில்லாது பண்டைக்காலம்போல மற்றவர் தனக்குத் தலை தாழ்ந்து செல்லவேண்டிய உயர் கிலேயைத் தமிழகம் மீண் டும் பெறுதல் வேண்டும் என்பது விண்புகுந்த வீரனது தீராத வேட்கை ; முத்தமிழரசு மீண்டும் பண்டுபோல் விளங்கவேண்டும் என்பது அவன் கண்ட கனவாகும். காலம் அவற்றை நிறைவேற்றிவைக்கும் என்று எதிர் பார்க்கின் ருேம்.

Page 137
II. குமாரசுவாமி ஐயர்
விபுலாநந்த நாவலருக்குச் சங்கதமொழிக்கல்வியைத் தொடங்கி வைத்த தமிழ்ப் புலவர் ஒருவர் நம்மிடை ஆடம்பரமின்றி வாழ்ந்து மறைந்துள்ளார். மட்டக்களப்புச் செங்குந்தர் மரபை அணி செய்த இப் புலவர் தமது சைவநெறி குன்ருத வைதிக வாழ்வினல் * ஐயர் ’ என்று குறிப்பிடப்பெற்ற சிறப்புடையவர் ஆவர் (படம் 33).
இவர், ஆரைப்பற்றை எனும் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியாரும் அவர் மனைவியாரான சின்னம்மையா ரும் தமது மூதாதையரின் இடமான கோட்டைக் கல்லா ற் றிற் குடிபுகுந்த காலத்திலே, வெகுதானியவருடம் மார்கழி மாதம் 22ஆந் திகதி (1879), தமிழும் சைவமும் வளர்த்தற் கென்றே பிறக்கலாயினர். நோய் நிறைந்தோய்ை மெலிந்த தேகியாய் இருந்த குமாரசுவாமிபிற்காலத்திற் பேரறிஞணுய் விளங்குவானென்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இளமையிலே தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை மூலபாடமாக இவர் கற்றபின்னர், யாழ்ப்பாணத்தில் பெருந் தமிழ் வித்துவானுய் விளங்கிய த. கைலாசபிள்ளை என்பவரின் மாணவ னுக இவருக்குக் கிடைத்த வாய்ப்பு மட்டக்களப்பு நாட்டுக்குப் பெரிதும் மதிப்பினை ஈட்டிக்கொடுப்பதாயிற்று.
ஆசிரியருடைய நன் மதிப்பைப் பெற்ற முதற்தர மான மாணவர் நமது ஐயர். இளமையிலேயே, சிவபக்தி யும் சிவநெறியில் வழுவாத ஒழுகலாறும் இன்னரது தமிழ் நெஞ்சோடு கலந்து பலருடைய மதிப்புக்கும் இவரை இலக்காக்கின. தமிழ்மொழியில் மட்டுமன்றி வடமொழியி லும் இராமோதந்தம் முதலான நல்லிலக்கியங்களையெல் லாம் கற்றுத் தம்மூர் திரும்பினர். நல்ல பண்பட்ட பாடல் களை ஆக்கும் புலமை இவரிடத்தில் இயல்பாயமைந் திருத்தலைக் கண்டு நண்பர் பலரும் வியந்தார்கள். தமி ழுக்கு இயல்பான இனிமையும் குழைவும் ஐயர் எழுதும் தமி ழுரைநடையிலே பொலிந்து தனியழகு பெற்றன. இவருடைய உரைகடைப் புலமையைச் சித்தவைத்தியப்

புலவர் பரம்பரை 2:25
பத்திரிகைகளிலும், செங்குந்தமித்திரன்’ முதலான வெளி யீடுகளிலுங் கண்டு பல அறிஞர் பாராட்டுவாராயினர். இப் பெரியார் சங்க இலக்கியங்களைத் தமது பழஞ் சொத்துக்கள் போலப் பேணிக் கற்றும் கற்பித்தும் வந் தார். மட்டுநகர்க் கோட்டைமுனையில் இவர் வசித்தகாலத் தில் தமிழிலும் சங்கதத்திலும் இவருக்கு மாணவராய் அமைந்து பயன்பெற்றேர் பலராவர். இந்தக் காலத்திலே தான் பண்டித மயில்வாகனனரது தமிழுறவு இவருக்கு ஏற்பட்டது. ஐயருடைய புலமையை வியந்து வடமொழிக் கல்வியில் அவருக்கு மாணவனுக அமைந்து, மயில்வாகன ஞரும் ஐயருடைய கலைப்புகழை மேலும் உயர்த்தினர். நாடகக் கொப்பிகள், காவடிச் சிந்துகள் முதலாகப் பல நூற்பிரதிகள் ஐயரவர்களுடைய திருத்தத்துக்கும் அங்கீ காரத்துக்குமாக பல இடங்களிலுமிருந்து வந்துபோகும்.
அரசடியில் இருந்த தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையிலே இவர் சிலகாலம் தனிப்பட்ட முறையில் அமைந்த ஓர் ஆசிரியராகப் பணிசெய்து மாணவர் பல ரைத் தமிழ்நூற்றுறைகளிற் கரைசேரச் செய்தனர்.
* நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாமல் வேறென் றறியேன் பராபரமே.”*
என்ற இவருடைய கடப்பாடு விபுலாநந்த அடிகள் வித்துவான் சரவணமுத்தன் முதலிய நல்லறிஞர்களது தொடர்பால் அக்காலத்தில் இனிது வளம்பெறலாயிற்று.
இந்நாட்களிலே தமது பரம்பரைக் கல்வியான வைத் தியத்துறையில் இவர் மனம் சென்றது. தமிழ், சங்கதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமையாளராய் இலக்கிய இலக்கணங்களிற் கை தேர்ந்தவராய் விளங்கிய இவருக் குத் தமிழ் வைத்தியக் கல்வி ஒரு பொறுப்பாகத் தோன்ற வில்லை. ஒரு சிறிதுகாலத்துள் அந்நூற் பரப்பினைச் சுவை தேர்ந்து முடித்தார். சித்த வைத்தியக் கலை இவரிடம் கை வந்ததொன்ருயிற்று. * நாடி பார்ப்பதில் ஐயர் பெயர் பெற்றவராயினர். நோய் இன்னது என்று அவர் நிதா னித்துக் கூறினல் அதிற் கடுகளவும் பிழையே இருக்
to - 15

Page 138
226 மட்டக்களப்புத் தமிழகம்
காது. இத்திறமை, குமாரசுவாமி வைத்தியர் புகழை எங்கும் பரப்பியது. உயரிய முறையில் ஆக்கப்பெற்ற நல்ல மருந்துகளைச் செய்யுந் திறமையாளராயும் இருந் ததனல் பலருடைய தீராத நோய்கள் எல்லாம் இவரைக் கண்டு ஒட்டம் பிடித்தன. திராட்சாரிட்டம், மிளகுசந்த ணுதித்தைலம், மயணத்தைலம் முதலான உயர்ந்த மருந்துகள் சிலவற்றிற்கு மக்கள் இவரை இன்றும் நினைத்துப் பேசுகின்றனர். இக் கலைப் பெருமையால் இந்தியாவிலுள்ள சித்தவைத்திய சங்கத்திலும் ஒரு உறுப் பினராக நீண்டகாலம் இருந்து தன் பங்கை நன்கு நிறை வேற்றிப் புகழ்கொண்டனர்.
இவரது வைத்தியக் கலைப் புலமையி னுெருபகுதி இவரியற்றிய ஆயுள்வேத வைத்தியக் கருவூலம் ' என் னும் நூலின் மூலமாக வெளிவந்திருக்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலித்துறை, கலிவெண்பா, விருத்தம் என்னும் யாப்புக்கள் கொண்ட 800 பாக்களால் அமைந்த வைத்தியக் கருவூலம் இவருடைய அநுபவ முதிர்ச்சியையும் சித்திவைத்தியக் கலைச் சிறப்பையும் நல்ல தமிழிற் காட்டி வைத்தியத்துறையை அழகுசெய்யும் சிறப் புடையதாயிருக்கின்றது.
* ஈச்சங் கொழுந்து நொச்சியிலை
இசங்கு மணித்தக் காளியிலை காய்ச்சுஞ் சங்கம் குப்பியிலை
கரிய சீரம் பீநாறி மூச்சை யழிக்கும் செஞ்சந்தம்
முதிய குப்பை வெண்காயம் பாச்சிக் கசாயம் பருக்கிவிட்டால்
பறக்கும் கரப்பன் பாலருக்கே ?? என்னும் பாடல் சொறி, சிரங்கு, கரப்பன் என்பன சிறுவருக்கு வந்தாற் போட்டுக் கொடுக்க வேண்டிய குடி நீரொன்றினைக் குறிப்பிடுவது. பறக்கும் கரப்பன் பால ருக்கே ’ என்று தமது திடமான கருத்தை வலியுறுத்தி நோய் பறக்கின்ற வேகத்தைக் காட்டுகின்றர்.

புலவர் பரம்பரை pe7
* போமென்ற கனமாந்தக் குளிகை யொன்று
புகலுகின்றேன் திரிகடுகு கரிய சீரம் ஆமென்ற வசம்புள்ளி யசம தாகம்
அப்பனே வகையொன்று வராக னென்று காமென்ற கல்வத்தில் மருந்தை வைத்து
நாட்டக்கேள் பிரண்டையொடு மாவி லங்கை தாமென்ற வேளை நொச்சி வேம்புவுஞ்
சங்குடனே பேய்மருட்டி சங்கக் தப்பி ?? என்ற குளகச் செய்யுளானது கணமாந்தக் குளிகையைப் பற்றிய முதற் பாடலாக அமைந்து அதன் விவரத்தைக் கூறுதற்கேற்ற இழுமென்னேசையோடு நடந்து ஐயரவர்க ளது வைத்தியப் புலமையும், தமிழ்ப்புலமையும் கலந்த ஒன்ருக மிளிர்வதைக் கண்டின்புறலாம்.
இத்தகைய பயன் நிறைந்த நூல் இன்னமும் அச் சேறி வெளிவராதிருப்பது வருந்தத்தக்கது. அரசடி ஆசிரிய கல்லூரி யதிபராயிருந்த திரு. தம்பு என்பவர் ஐயரவர்க ளுடைய வைத்தியப் புலமையையும் தமிழ்ப் புலமையை யும் வியந்து, மலேரியாக் காட்டுச்சுரத்தைப் பற்றிய பாடல் நூல் ஒன்று செய்து தரும்படி 'அவரை வேண்டினர். ஆங் கில வாடை மிகுந்து, மேனுட்டு வைத்திய முறைகளிலேயே பெரும் நம்பிக்கை கொண்டிருந்த சூழல் ஒன்று, இவர் மூலம் அவ்வாறு பணித்தமையை அறிந்த ஐயர் அவர்கள் மேலைத்தேச வைத்திய முறைகளையும் சிறிது அறிவாராத லால், தமிழ் வைத்திய வழிகள் கொஞ்சமும் கலவாத முறையில் ஐம்பத்தொரு பாடல்களைக் கொண்ட 8 மலே ரியா என்னும் காட்டுச் சுரம் ’ என்ற நூல் ஒன்றை ஆக்கி அளித்தார்கள். வெண்பா முதலாகக் கும்மி, கொண்டிச்சிந்து, ஆனந்தக்களிப்பு, குறம் (பள்ளு) என்ப வற்ருல் நடந்து, கலிவெண்பாக்களால் முடிவுறும் இந்நூல் 1931ல் திரு. டி. என். நல்லதம்பி ஆசிரியர் அவர்களால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது. இந்நூற் சிறப்பைப் பாராட்டிய வைத்தியர் குழு, மலேரியா வாரவிழா ஒன்றில் நூலை அரங்கேற்றி ஐயரவர்களுக்குப் புகழ் மாலையும் சூட்டிக் கெளரவித்தது.

Page 139
£98 மட்டக்களப்புத் தமிழகம்
* கொந்தலர் குழன் மடவாய்-யான்
கூறிடும் வாசகம் கேளனமே முந்தையர் மலைச் சுரத்தால்-உடல் முற்றிலும் குழைந்தனர் பற்றிலர்போல் ' என்று கும்மிப் பாடல்கள் இன்சொற்களாற் தொடங்கு கின்றன. ஈற்றி லமைந்து நிற்கும் கலிவெண்பாவின் கடைசிப்பகுதி :
* உற்ருர் முதலாய் ஒழிந்தோ ரையுமிழந்து
வற்ருத செல்வம் மனைமாடு-தற்போகம் விட்டுப் பிரிந்து விழற்கிறைத்த நீராகிக் கிட்டுவார் விண்ணைக் கிளர்ந்து’’ என்று, தகுந்தபடி தடுக்கப்படாவிடின் இச்சுரம் மனித குலத்தையே பூண்டோ டழிக்க வல்லது என்று வலியுறுத் திக் கூறுவதா யமைந்து நூல் நிறைவுறுத்தப்பட்டுள்ளது.
சிவ வழிபாட்டின் சின்னமான உருத்திராக்கத்தின் மீது பெருமதிப்புப் பூண்டு, அதனே என்றும் கழுத்தி லணிந்த பெருமைகொண்ட ஐயர் அவர்கள் உருத்தி ராக்க மான்மியம்’ என்னும் செய்யுள் நூல் ஒன்றையும் ஆக்கினர்கள். சிவ தத்துவத்தின் நுண்கருத்துக்களையும், உருத்திராக்க ம கி மை யையும் விளக்கும் இந்நூல் வெண்பா, ஆசிரியவிருத்தம், அகவல் என்பன கலந்து ஓர் இலக்கிய நூல் போன்று விளங்குகின்றது.
இவர் கோட்டைமுனையில் அமைந்துள்ள வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் பரிபாலகராய்ப் பல ஆண்டுகள் இருந்து அக் கோயிலைப் புதுக்கித் திருப்பணிகள் அனைத் தையும் பெருமைப்படுத்தியவர். அக்கோயிலிற் சிலகாலம் புராண வகுப்புகளையும் நடத்திச் சைவம் வளர்த்த இப் பெருமையாளரது உழைப்பும் செல்வமும் கோயிற் பணி களுக்கென்ருல் 8 கணக்கு வழக்கற்றுச் செலவழிக்கப் படும். அக்காலத்தில் மட்டக்களப்பில் நடந்த சைவசமயக் கிளர்ச்சியிலும் பங்குகொண்டு பல இடங்களிற் சைவப் பிரசங்கங்களும் ஆற்றியிருக்கின்றனர். சைவசித்தாந்தச்

புலவர் பரம்பரை 229
சிறப்புகள் இவர் வாயிலாய் நாடெங்கும் அப்போது பரப்பப்பட்டன. வயது முதிர்ந்து வெளிப் பணிகளில் ஈடுபாடு குறைந்து வீட்டில் இருந்த காலத்திலும் பல அறிஞர் இவரை நாடிச் சென்று புத்திமதிகளைப் பெற்றுச் செல்வாராயினர். இவருடன் சிறிது நேரம் பேசும் சந்தர்ப் பம் பெற்ற எவரும் சைவம், இலக்கியம், வைத்தியம் என்ற துறைகளில் ஓரளவாவது அறிவுபெற்றே மீளுவ தியல்பாயிற்று.
மூப்புக் காலத்தினைப் பொதுப்பணிகளின் ஈடுபாட்டி லிருந்து விலக்கித் தன்னில்லத்தையே கோயிலாக மாற் றிச் சிவபூசனைகளிற் கழித்துவந்து சர்வசித்து வருடம் சித்திரை மாதம் 20ஆந் திகதி (1947இல்) இவர் இறைவ னடி புகுந்தபோது மட்டக்களப்பு நாடு ஒரு தமிழ்ச் செல் வனே இழந்து தவித்தது. அவருடைய உறவினரும் நன் மாணவருள் ஒருவருமான பண்டிதர் சந்திரசேகரம் அவர் கள் கூறியதுபோன்று :
* பாட்டமைதி எங்கேகின் பண்பெங்கே சொற்பெருக்குக்
கேட்டமைத லெங்கேஎங் கேள்வனே-கூட்டுறுபொற் சீலக் குமார சுவாமிவிண் சேர்ந்தனையே ஞாலத் தியல்பிதுவோ நாட்டு ’
என்று, அவர்தம் மாணவர்களும் தமிழறிஞர்களும் இரங் கினர். மட்டக்களப்பின் புகழினை உயர்வுறுத்திச் சென்ற குமாரசுவாமி ஐயரவர்களது புகழ் என்றும் நிலைத்து நிற்பதொன்று. அவரியற்றிய * ஆயுள்வேத வைத்தியக் கருவூலம் முதலான நூல்களையெல்லாம் பதிப்பித்துப் பல்லோரும் பயன்பெறச் செய்வது நம் கடமை.

Page 140
IV. மொட்டை வேலாப்போடியார்
* கேள்விச் செவிடன் ஊரைக் கெடுத்தான்’ என் னும் முதுமொழிப்படி, தனிக் கேள்வியினை மட்டும் நம்ப லாகா தென்ற பொதுவிதி அறிவுத்துறையில் மட்டும் விலக்காயுள்ளது. கேள்வியறிவின் முதிர்ச்சியானது கற் றறிவாளரதைப்போல் உயர்ந்து பயன்தருதலை நாம் பெரு ஞானியர் வாழ்விலும், பண்பட்ட புலவர் பரம்பரையிலும் காண்டல் கூடும். அத்தகைய கேள்வி ஞானம் ஒன்றி ஞலே, உயர்ந்த கவிதைகளை ஆக்கித் தம் குல மக்களை மகிழ்வுறுத்திச் சென்ற மட்டக்களப்புக் கவிஞருள் ஒருவர் நமது வேலாப்போடியார்.
மதிய உணவின் பின்னர்க், கிராமப்புறங்களிலே யுள்ள பலர் மரழேல்களிற் கூடியிருந்து கதை பேசிக் காலங்கழித்தல் இன்றுமுள்ள வழக்கம். * கல்லாக்கழிப் பர் தலையாயர்’ என்றபடி நல்ல கலையாராய்ச்சிகளிலே சிலர் அவ்வேளைகளில் ஈடுபாடு கொள்ளுதலும் உண்டு. அவ்வாறு செய்வோருடைய சூழலில் ஒரு நாடோடிப் புலவர் அகப்பட்டுவிட்டால் அச் சூழ்நிலை புல வரை உயர்ந்த கவிதைகளை ஆக்கும் வேலையிற் சேர்த்துவிடு கின்றது. அவரைச் சூழ்ந்து பயன்கொள்ளும் மக்களும் கலைநலம் பெற்றுயர்கின்றர்கள். இவ்வாறு மரநிழல் களின்கீழ் வளர்ந்த புலவர் மன்றங்கள் பல புலவர்களை மட்டக்களப்புக் கிராமக்தோறும் தோற்றுவித்துள்ளன. அவ்வரிசையைச் சார்ந்த வேலாப்போடியாரது கேள்விப் புலமையை வளர்த்த புலவர்மன்றம் ம ட் டக் களப் பு நகருக்குத் தென்பாலமைந்த அக்கரைப்பற்றுக் கிராமப் புறத்தே ஒரு மருதமர நீழலிலிருந்தது.
போடியாருடைய கவிதையின் வலிமை வளர்ந்து ஈற்றில் மந்திர வலிமை பெற்றதுபோன்று பலிக்கத் தொடங்கியதை நாம் அறியலாகும். வசைக்கவி பாடுவ திற் பெயர்பெற்ற இவரால் எவருடைய நெறிதவறிய வாழ்க்கையையும் பொறுத்துக்கொள்ள முடிவ தி ல் லை. * ஒழுக்கம் உயர்குலமாக்கும் ' என்ற கொள்கையை,

புலவர் பரம்பரை 231
யுடையவராதலால் அதிற் தவறிய எவர்மீதும் வசைப் பிரபந்தம் பாட இவர் தவறுவதில்லை. இதனல் போடியா ருடைய செயலிற் கோபங்கொண்ட செல்வர் ஒருவர் இரகசியமாக ஒரு இடையன ஏவி இவருடைய மணல் மேடையை அணிசெய்யும் மருதமரத்தின் கிளைகளை வெட்டுவித்தார். அரிவெயில் பரந்து வெறிச்சென்றிருந்த தமது தமிழரங்கினைக் கண்டதும் உடனே போடியாரது வாயிலிருந்து :
* முத்தர், பாண்டியர், மூவர் இருக்கின்ற
மத்தி யான மருத நிழல்தனைக் கத்தி கொண்டதன் கந்தற வெட்டினன் சத்தி வேலவன் தலையற வெட்டுவாய்.”*
என்ற பாடல் பிறந்தது. மரத்தை வெட்டினவன் அவ் வேளையில், தன் மாடுகளை வீடு நோக்கி ஒட்டிச் சென்று கொண்டிருந்தவாறே மயங்கி வீழ்ந்திறந்தனனென்றும், கவிதைச் செல்வி இவரேவல் கேட்டுப் பணிபுரிவதை வியந்து எதிரிகள் மன்னிப்புப் பெற்றேகின ரென்றும் சொல்லப்படுகிறது. முத்தர், பாண்டியர் என்ற இருவரும் அம் மருத நீழலில் இவருடன் மூவராய்த் தமிழ்ச்சுவை தேர்வது வழக்கம். மத்தியான ’ என்னும் சொற் கோப்பு ஊருக்கு மத்தியான இடத்தில் உள்ள மருத மரம் என்றும், மதியவேளையில் பயன்தரும் மருதமரமீழல் என்றும் சிலேடைப் பொருள்பட அமைந்து கவிதையை அழகு செய்வதை இங்குக் காணலாம். "
络
தாளஓசை பிசகாது பாடப்படும் செய்யுள்களது கேள்வியாற் புலமையுள்ளம் படைத்து விளங்கிய பரம் பரையில் வந்தவர் அக்கரைப்பற்றுக் கோளாவில்லைச் சேர்ந்த சின்னத்தம்பிப் போடியார். கெங்காத்தை என் பது அவர் மனைவியாரின் பெயர். இவர்களுடைய குலம் விளங்க 1804ஆம் ஆண்டளவிற் பிறந்த வேலாப் போடி யாரது இயற்பெயர் வேலன் என்பதாகும். அதனேடு இவர் பிறந்த முக்குவர் குடிப்பெயராகிய போடி என் னும் சொல்லும் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதியும் வழக் காறு கொண்டன. பிற்காலத்தே தலைவழுக்கையாய் இருந்த

Page 141
232 மட்டக்களப்புத் தமிழகம்
காரணத்தால் இவரை மொட்டை வேலாப்போடியார் என்றே மக்கள் அழைப்பாராயினர். தனது வழுக்கைத் தலையில் இட்ட ‘ எண்ணெய் வழிந்தோடாதவாறு பனை யோலேயால் வட்டமான முடி ஒன்று செய்து அணிந் திருக்கும் வழக்கமும் உடையவராதலினல் மகிடவேலாப் போடியார் ' என்றும் இவர் அழைக்கப்பெறுவதுண்டு.
இளமையில், அந்தக்காலத்திலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களிற் பிள்ளைக் கல்வி பயின்றதோடு போடியாரது படிப்பு நின்றுவிட, தன் சூழலுக்கேற்றபடி வேளாண்மை செய்தலை, அப்பால் மேற்கொண்டார். அத்தொழில் சார்ந்து நாட்டில் வழங்கிவந்த பள்ளு, ஊஞ்சல், அம்மானை, கவி, காவியம், சிந்து என்னும் செய்யுள்வகை பலவற்றையுஞ் செவியேறலாகக் கேட் டுப் படிக்க நல்ல சந்தர்ப்பத்தை அதனல் இவர் பெற் ருர். ஒழிவு நேரமெல்லாம் அவற்றைப் படித்தின்புறுத லும், தாமும் அவைபோன்ற கவிகளைப் புனைதலுமே இவருக்கு வேலையாயிற்று. வசைக்காவியம் பாடுதலில் இவர் கண்ட இன்பம் அத்துறையில் இவரை இணை யற்று விளங்கச் செய்து 8 வசைபாடக் காளமேகம் ? என்ற பட்டத்தையும் இவருக்களிக்கலாயிற்று.
கோளாவில் என்ற கிராமத்துப் பறையர்சேரியில் இருந்த மூத்தி என்ற பெண்ணெருத்தியோடு சிங்கள நாட்டிலிருந்து வந்து குடியேறிய வலியன் ’ என்பா  ைெருவன் களவாக நட்புப் பூண்டிருந்ததை எப்படியோ போடியார் அறிந்துவிட்டார். வலியன் ஒரு மந்திரவாதி. மண்ணுருவங்கள் செய்து கிரகப் பகைகளுக்குக் கழிப்புச் செய்வதிற் பெயர் பெற்ற அவனைப்பற்றி வசையாக இவர் பாடிய பள்ளுப்பாடல்களில் ஒன்று இது :
* ஒன்பது கிரகங் கட்கும் மண்களா லுருவஞ் செய்யும் சிங்கள வலியன் அவன் எங்கடி தொட்டான்-மூத்திர வங்கடி தொட்டான்.” வலியன் சிங்களவன். ஆதலாலே ? வங்கடி என்ற சிங்களச் சொல்லையும் அவரது புலமை இங்குப் புகுத்

புலவர் பரம்பரை 233
திற்று. உரல் எனப் பொருள்படும் வங்கடி என்னும் சொல் இங்கே சிலேடையாயமைந்தது. மூத்திர ’ என் பது மூத்தியினுடைய ' என்னும் பொருளில் வழங்கும் கொச்சைச் சொல். அது சிறுநீர்ச் செலவையும் குறிக்கத் தக்க அமைவுபெற்றுச் சிலேடையாகிப் போடியார் குறிப் பிட விரும்பியதைத் தெளிவுறக் காட்டி வலியனை வசைப் படுத்தி ஊரை விட்டோடச் செய்ததென்பர். இவ்வாறு இவரது பள்ளுப் பாடல்கள் எல்லாம் நகைச்சுவை நிறைந்த சிலேடை மலிந்து விளங்குவன. இவைபோன்று, பொருளமைந்த ஊஞ்சற் பாட்டுகளும் நூற்றுக்கணக்காக இவர் பெயரால் மக்கள் வாயிற் கேள்வியாய்ப் படிக்கப் பட்டு வருவதை அறியலாம்.
தம்பிலுவில் என்ற ஊரில் இருந்த நீர்ப்பாசன அதி காரி (காடியர்) ஒருவருடைய பிழையான காதற் தொடர் புக்காக அவ்வதிகாரி காதறுக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை யும், காதலி மனம் வருந்தி அவருக்குப் பால் மாடுகளைக் கொடுத்தனுப்பியதையும் வரலாருகக்கொண்ட * தம்பிலு விற் பள்ளு ' என்ற ஒரு நூலே இவர் பாடியுள்ளார்.
* காதறுந்த வேதனைக்குப் பால்கறந்து உண்ணவென்று
காரிகையாள் மாடுகன்று தான் கொடுத் தாளாம் காதறுந்து நாவரண்டு காமவிடா யால்மெலிந்து காட்டகத்திற் பேயதுபோல் ஒடலுற் ருனம்.’ என்பது நூலின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பாடல்.
காலத்துக்குக்கால்ம் மக்களின் வேண்டுதற்படி இவ ரியற்றிக் கொடுத்த வேறு ஊஞ்சற் பாடல்களும் பல உள்ளன. அப் பாடல்களில் வரும் வர்ணனைகள் இவரது உயர்ந்த கவிதா சக்தியை நமக்குக் காட்டுவனவாகும்.
* தந்தன்ன தந்தன்ன தந்தன்ன தந்தன்ன
தந்தன்னத் தானுணு - தன " என்ற தரு. 1. * செம்பவ ளப்பொருள் திங்கள் முகத்துதி
தேன்மொழி யாளுடைய - நல்ல கும்பமு லேக்கிணை வெங்கட கக்கரிக்
கோடென ஓதிடலாம்:

Page 142
234 மட்டக்களப்புத் தமிழகம்
2. ஆசை மிகுந்தஎன் நேசஞ் சிறந்தபெண் ஆடர வப்பதுமை - நல்ல மோகந் தணிந்தஎன் நேசம் மிகுந்தநல்
முலையில் தேமலுமாம். 3. தங்கத் தகடும் குவளைக் குமையும்
சரிந்த இளமுலையாள் - அந்த மங்கைக் கொருவர் வடுவுகள் சொல்ல
மனதில் முடியாதாம். 4. மின்னற் கொடியிடை கன்னித் திருவுரு
மெல்லிகல் லாளுடைய - அந்த வண்ணத் தொடைக்கிணை கன்னிச் சினையின்
வராலென ஒப்பிடலாம். 5. பச்சை நரம்பும்வெண் பால்முலைக் கோடும் பசும்பொன் னரத்தொடையும் அச்சமில் லாததோர் நெஞ்சு முடைய
அரிவையும் வந்தனளாம்.
வேறு 6. பாலைப் பழித்தசொல் லாளேச் சிறந்த பதியில் மணம்முடித்து வேலப்பர் தன் திருக் கோயிலிற் பூசை
விரும்பி நடத்தினராம்.? என்ற இப் பாடல்கள் ஒரு பெண்ணின் அங்க நலன் களைச் சொல்லி அவளது காதல் வரலாறு கூறும் திருக் கோயில் ஊஞ்சல் ’ என்னும் தொகுதியுள் இடம்பெற் றுள்ளன. உடல்நல வர்ணனைக்கு இவர் கையாளும் உவமைகளும், அவைகளில் எடுத்தாண்ட செஞ்சொற் களும், பொருளுக்கேற்ற பாடற் சந்தமும் இப்பகுதி மக் களின் வழக்கிடை மலிந்து உவகை தருவனவாகும்.
போடியாருடைய வழித்தோன்றலானதாண்டவருடைய வேலர்
ஒருவனுடைய பரம்பரைச் சிறப்பை அவனது 8 கால் ' (பின் சந்ததி) காட்டும் என்ற பெரியோர் கருத்துப்படி, மொட்டைவேலாப்போடியாருடைய புலமையின் காலாக உள்ள பேரப்பிள்ளையாகிய “ தாண்டவர் ’ வேலன்

புலவர் பரம்பரை 235
என்பார் ஒரு நல்ல புலவராக விளங்குகின்ருர். இவ் வேலரும், தன் பாட்டனருடைய வழியைப் பின்பற்றிவந்த ஓர் இயற்கைக் கவிஞர். இவர், அகரமுதல் அஃகாரமீருக உள்ள பதின்மூன்றெழுத்துக்களையும் முறையே முதல் கொண்ட பாடல்களையணிந்த கதிர்காம விருத்தம்" என்ற நூலையும், 8 வேறு சந்தப் பாடல்களைக்கொண்ட * பிச்சைவேலைக்கும்மி " என்ற நூலையும், 73 சிந்துப்பாடல் கள் நிறைந்த பாணகை வழிநடைக் கும்மி' என்ற நூலையும் ஆக்கியுள்ளார்.
* ஊரில் உள்ள பேர்களெல்லாம் வளைத்தி ருக்க
ஒடுங்குகின்ற பிரண வந்தான் ஓங்கி நிற்கச், சாடுகின்ற எமதுரதர் தலைமேல் நிற்கத்
தனை மறந் தெனதுயிர்தான் சாகும் போது ஆதியென்ற அட்சரத்துள் அடங்கி கின்ற
அறுமுகனே வந்தெனக்கு அபயந் தாதா தேடிவந்துன் கதிரைமலை தன்னில் வாழும்
சுவாமிசிவன்மகனே உனை நாளும் தெரிசிப் பேனே.”
என்பது கதிர்காம விருத்தத்துள் ஒரு செய்யுள். தனது பாடல்களில் எதுகைத்தொடைச் சிறப்பைவிட மோனை யழகினையே பெரிதும் கையாளும் இவரது செய்யுள்கள் அவ்வெதுகை இல்லையே என்ற குறை தோன்ருதவாறு சிறந்த சொற்கோப்பினல் அமைந்திருக்கும் கவியழகினை இங்குக் காணலாகும்.
தன் முன்னரும், பின்னரும் இவ்வாறு கலைவளம் பட்ட பரம்பரையைச் சார்ந்து, இன்றும் புலவரென்ற பெயராலேயே மட்டக்களப்புத் தென்பகுதியினர் குறிப் பிடும் சிறப்புவாய்ந்த மொட்டைவேலாப்போடியார் சுமார் தனது 75ஆவது வயதில் (1880ஆம் ஆண்டளவில்) விண்ணுலகு புகுந்தனர். அக்காலம் இவரது தோழர் களும், மரத்தடி மன்றங்களும் வெறிச்சென்று பொலிவு குன்றிய தன்மையை, இன்னரது பாடல்கள் மாற்றித் தமிழ்வளம் ஊட்டிவருகின்றன. அப் பாடல்களிற் பல இன்னமும் அச்சேருது செவிஏறலாகவே வழங்கிவரு கின்றனவாதலால் காலமயக்கில் அவை மறைந்து போகாது பாதுகாத்துப் பயன்கொள்ளுதல் நம்மைச் சார்ந்த கடனுகும்.

Page 143
V. பண்டிதர் குஞ்சித்தம்பி
திருக்கோவில், தம்பிலுவில் என்னுமிடங்கள் இத் தமிழகத்தின் தென்கோடியை அணிசெய்து நிற்கும் வளம் செறிந்த பழம் பதிகளாகும். ஒன்றையொன்று அடுத்து உறவு, சமயம், கலை என்பனவற்றிற் பிரிக்க முடியாதுள்ள இவ்வூர்கள் பண்டுதொட்டே நாட்டுக்கூத்து, வசந்தன், கொம்புவிளையாட்டு என்னும் கலையாடல்களுக்குப் பெயர் பெற்றவை. பல நாடோடிக் கவிகளின் தந்தையார் இவ் வூர்களிற் தோன்றியுள்ளனர். நல்ல தமிழ்ப் பண்பு வளர்ந்த இக் கிராமங்களுள் தம்பிலுவில்லிலே காலத் துக்குக்காலம் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்திருக் கிருர்கள் என்று தெரிகிறது. பல தனிப்பாடல்களை நாட் டுக் கூத்துகளுக்கும், வசந்தன் கூத்துகளுக்கும் இடைக் கிடை ஆக்கியளித்த கலைஞர்களின் பிறப்பிடமாக இவ் வூர் மதிக்கப்பட்டு வந்தது. இத்தகைய கிராமத்திலே பிறந்த ஒருவர் மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலையிற் பயின்று தமது கல்வித் திறமையினல் மதிப்புப்பெற்று அக்கலாசாலையிலும், இந்தியாவில் வேறு இடங்களிலும் சிலகாலம் தமிழ் ஆசிரியராக இருந்தாரென்ருல் அதில் வியப்படைதற் கொன்றுமில்லை. அவ்வாறன புலமை யாளர்தான் நமது பண்டிதர் குஞ்சித்தம்பி அவர்கள்.
நல்ல ஒழுக்கமும், சைவசமய சீலமும் உடைய தமிழ்க் குடும்பம் ஒன்று இவரைத் தோற்றுவித்தது. காலநோக் கில் மட்டக்களப்பு நகரிலே உள்ள அர்ச். மிக்கேல் கல் லூரியினை அடைந்து ஆங்கிலமொழிக் கல்வியை எட்டா வது வகுப்பு வரை இவர் கற்றுத் தேறினர். அதன்பின் னர், தமிழ்த்தாக மிகுதியினல் தென்னடு சென்று மூன் ருண்டுகாலம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவரா யிருந்தனர். செய்யுள் செய்வதில் இயல்பாக வல்லமை படைத்திருந்த இவர் தொடக்கத்திலிருந்தே ஈழநாட்டின் பண்டைக் கலைப்பெருமையின் பிரதிநிதியாக அங்கு மதிக்கப்பட்டு வந்தனர். கால்வகைப் பாக்களும், காக

புலவர் பரம்பரை ქავ7
பந்தம் முதலிய சித்திரக் கவிகளும் இவரிடம் ஆற்றெழுக் குப்போல் அமைந்து விளங்கின. இசைக்கலையின் நுணுக்கமனைத்தையும் நன்கு கற்றுத்தெளிந்த இவர் தமது தமிழ்க் கல்வியின் பின்னர்த் தாய்நாட்டுக்கு வந்து பணி தொடங்கினர்.
மட்டக்களப்பெங்கும் சைவமும் தமிழும் முழங்கிய காலம் அது. புறமதங்களின் தொடர்பினல் பழைமையான சைவசமயம் சீர்குலைந்து மக்களும் தமது பண்டைய தமிழ் மரபு குன்றி ஒழியாது இளைஞர்பால் கிராமந்தோறும் சென்று சேவை செய்து வந்தனர். இந்தத் தொண்டர் படையின் தளகர்த்தராக விளங்கிய வித்துவான் சரவண முத்தன் அவர் களு  ைடய வசீகரமான தோற்றம், கவர்ச்சியும் உணர்ச்சியும் நிறைந்த பேச்சு, உருக்கமான எளிய தூயவாழ்வு என்பன இளைஞரான நமது பண்டி தர் அவர்களையும் இழுத்து அப் படையிற் சேர்ப்பித்தன. சமயப்பணி புரிதல் மட்டுமன்றித் தமிழ்ச்சுவை தேரும் நல்வாழ்க்கையும் இவ்விருவரையும் பிணைத்து நண்பர்க ளாக்கிற்று.
இயற் புலமையுடன் வித்துவான் நாடகப் புலமை யிலும், பண்டிதர் இசைப் புலமையிலும் மிக்கவர்கள். அதனல் இருவரதும் கூட்டுறவு பல புதுப்புது நாடகங் களும், டிராமாக்களும்’ எழுதற்கு வழி செய்தது. பண்டி தர் அவர்கள் பல நாடகங்களிற் தோன்றித் தாமும் திறம் பட நடித்துள்ளார். கதாநாயகன் வேடம் இவருக்கு நன்கு பொருந்தி மேடையை அலங்கரித்து கிற்கும் என்பர். இன்னரது தனித்திறமையினுற் சிறுத்தொண்டர் சரித மும் ', " அலாவுதீன் ' என்ற அராபியக் கதையும் நாடக ரூபமாக்கப்பட்டு அரங்கேறின. அவ்விரண்டுக்கும் இவர் எழுதியமைத்த பாடல், வசனம் என்பன முழுமையும் பெற்ற பெருமையில்ை கிழக்கிலங்கை முழுவதும் இவர்புகழ் பரவலாயிற்று. அப்பால் தமது பணிகளுக்கெல் லாம் உறுதுணையாயிருந்த வித்துவானவர்கள் பிரிவுற நேர்ந்தபோது பெரிதும் கலங்கிய பண்டிதர் தம்மூர்

Page 144
238 மட்டக்களப்புத் தமிழகம்
சென்று இறை பக்தியிலும், தமிழ்ச்சுவை தேர்தலிலு மாகக் காலத்தைக் கழித்துவரலாயினர்.
அப்போது, சிலகாலம் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலை இவரைத் தமிழ்ப் பண்டிதராகப் பெற்றுப் பெருஞ் சிறப்படைந்தது. பின்னர் இரண்டாவது யுத்தகாலத்துத் தேவை கண்டு திருக்கோணமலேக் கடற் படைச் சேவையிற் சேர்ந்து எழுத்தாளராகவும் சில காலம் பணியாற்றிவந்த இவர் தமது நாற்பதாவது வயதிலேயே இற்றைக்குச் சில ஆண்டுகளின் முன்னர்த் திடீரென்று விண்ணுலகு செல்லலானர்.
தமது ஊரில் இருந்த காலத்திற் பலர் இவரைப் பயன் கொண்டு தமிழ் கற்றுத் தேர்ந்தனர். புலமையாலும், கல்வித் திறமையாலும் தமது கிராமத்தின் பரம்பரைப் புக ழைப் பேணி வளர்த்த நல்லறிஞராக இவர் அக்காலம் மதித்துப் போற்றப்பட்டார். சீர்குலைந்த நிலையிலிருந்த திருக்கோயில் எனும் ஊர்த் திருக்கோவில் நிருவாகம் இன்னருடைய விடாமுயற்சியினலே ஒரு வழிக்குக் கொண்டு வரப்பட்டது. அது பற்றிய கோவில் வழக் கொன்றில் முக்கிய பங்கெடுத்து நின்று போராடிய தீரனுக மக்கள் இவரைப் போற்றினர்.
இவ்வறிஞருடைய தமிழ்ப் புலமையினலே திருக் கோவிலில் இடங்கொண்டிருக்கும் சிவசுப்பிரமணியக் கடவுள்மீது வருக்கமாலை' என்ருெரு பாடல்நூல் எழ லாயிற்று. பதின்மூன்று கழிநெடிலடி ஆசிரிய விருத்தங் களா லமைந்த இந்நூலில் உள்ள :
* கேளிருற வினர்கள்பகை கொண்டார் மற்றுக்
குணமிகுத்த வினியமனத் தீன்ருள் மாண்டாள் கோளில்வலி யன்பகைத்துக் கொண்டா னத்தாற்
குறுகுதுயர் தமையிசைக்கக் காலம் போதா மீளில் துயர் எனினுமுந்தன் முகைப்பூம் பாதம்
முன்னிடுவோர் தமக்கறுக்கும் மூர்த்தி வாவா ஊழிசுக மெனக்களிக்க ஒகை யோடே
இலங்கிலைவேல் பிடித்துவிளை யாடும் கோவே.?

புலவர் பரம்பரை ქბჭ9
என்பது முதலிய பாடல்களை மக்கள் பிரார்த்தனையின் போது இன்னமுந் திருக்கோவிலிற் படித்துவருகின்றர்கள். முருகனது வேல் அடியவர்களுக்கு நிரந்தரமான இன்ப மளித்தற்கே யமைந்ததாகும் என்ற உயர்ந்த கருத்து இச் செய்யுளின் ஈற்றடியில் நன்கமைந்திருப்பதைக் காணலாம்.
இதைத் தொடர்ந்து எழுந்தது தம்பிலுவில்லில் உள்ள கண்ணகையம்மன் பேரில் இவர் யாத்த பஜனுமிர்தம் ' என்னும் நூல். இசைப்புலமை நிறைந்த தமிழ் வளத்தி னலே பஜமிைர்தம் ஒரு சிறந்த இசைப்பாடல் நூலாக மிளிர்கிறது. நாட்டை, தன்னியாசி, பைரவி, தோடி என்பனவாக இறைவணக்கத்துக்கேற்ப மனம் குழை விக்கும் இராக வரிசைகளுக்கியைய அமைக்கப்பெற்ற இந் நூலில் இடைக்கிடை சில கட்டளைக் கலித்துறைகளும் இடம்பெற்றுள்ளன.
* சொல்லால் மனத்தால் தொடர்புறு கின்ற சடலமென்னும்
எல்லா விதத்தாலும் ஏத்தி யிறைஞ்சுத லிப்புவியில்
வல்லாள் மகேஸ்வரி மாதானு பங்கி மரகதங்கி
வில்லார் திருநுதல் மாநாய்கன் பெற்றிடு மாமகளே.' என்ற செய்யுளில் கண்ணகி தேவியின்மீது இவர் கொண் டிருந்த பேரன்பு வெளிப்படுகின்றது. அவளது நல்லரு ளால் இவர் கவலையொழிந்து வாழ்ந்ததாகவும் எந்த இன்னலையும் அவ்வன்னையை நினைந்து இலகுவாக நீக் கிக்கொள்ளும் வழக்கமுடையரென்றும் கூறுவர்.
பல்லவி
பூநீ நர்த்தனபுரம் தம்பிலுவில் தினம் தெய்வக் கண்ணகி வாழ் குணம். (பூநீ)
அனுபல்லவி
கிரியிற் புளிஞர்கள் கொண்டாடல் போலியம் கொட்டி முழக்கிக் குரவைஇட்டு வணங்குக் தலம். (பூரீ)

Page 145
240 மட்டக்களப்புத் தமிழகம்
சரணம்
வரைவிற் கையானெனும் வனிதையோர் பாகனும் வளரொளிக் கவுத்துவ மார்பகத் தேவனும் சதுர்முகப் பிரமனும் தளர்விலா தேவனும் தாங்குமுகத் தொழிற்குரிய ஓங்குகற்பின் மகத்துவம். (பூரீ)
என்ற இவரது இசைப் பாடலானது அமிர்தவாகினி" என்னும் இராக அமைவு பெற்றது. கண்ணகி வழிபாடு பற்றிய பகுதியுள் நாம் குறித்த தமிழ்க்குரவையையிட்ட குறிப்பு ஒன்றும் இப்பாடலுள் அமைந்திருப்பதைக் காண லாம். கண்ணகியின் திருத்தலமான தம்பிலுவில் தமிழ்க் கற்பின் மகத்துவத்தைக் காட்டும் ஒரு தெய்வப் பகுதி யாகும் ' என்ற கருத்தை இதில் அடக்கியுள்ளனர். அக் குறிப்பு இவரது தாயகத்தன்பும் தமிழ்த்தெய்வ வழிபாட் டுப் பெருக்கும் கலந்து மிளிர்வது. பஜனுமிர்தமும், வருக்கமாலையும் முறையே பருத்தித்துறை கலாநிதி, சரஸ்வதி அச்சியந்திரசாலைகளிற் பதிப்பிக்கப்பெற்று 1953இல் வெளிவந்துள்ளன. இத்தகைய நற்சேவை செய்து மறைந்த பண்டிதர் அவர்களது பரம்பரைத் தமிழ்ப்புகழ் வளர்வதாக.

V. வித்துவான், புலோலியூர் வைத்திலிங்க தேசிகர்
சமய சேவைக்கென மேனுட்டிலிருந்து தமிழகம் போந்த பாதிரிமார்களிற் சிலர் செந்தமிழ் மொழியின் சுவையிலீடுபட்டுத் தமிழகத்தினராகவே வாழ்ந்து மறைக் தனர் என்பதற்கு வீரமாமுனிவர், போப் ஐயர், கால்ட் வெல்ட் ஐயர் என்பாருடைய வரலாறுகள் சான்று பகரு கின்றன. அதுபோன்று நில அமைப்பினுற் பிரிவுற்றுக் கிடந்தபோதிலும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்ற ஈழத்துத் தமிழ்ப்பகுதிகள் பண்டுதொட்டே கலையுறவினல் ஒன்றுபட்டிருந்தன என்பதற்கும், இங்கு வந்த யாழ்ப் பாணத்தறிஞர் சிலர் இங்கேயே குடியேறி இங்கேயே வாழ்ந்து மறைந்தார்க ளென்பதற்கும் சான்றுகள் பல உளவாகின்றன. சைவமும் தமிழும் தழைத்திருந்த மட் டக்களப்பில், புறக்காரணங்கள் அவற்றுக்கு இடையூருக எழுந்த காலத்திலே யாழ்ப்பாணத்தறிஞருங் கூட வந்து இந்நாட்டறிஞருடன் தோளோடு தோள் கொடுத்து நின்று போராடிப் புறமதமும், மொழிச் செருக்கும் களைந்து புகழீட்டியிருக்கிருர்கள்.
அவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வந்து பெருந் தொண்டாற்றியோருள் முருகேசுவாத்தியார்’ (பண்டிதர் முருகேசபிள்ளை), சந்திரசேகர வாத்தியார் (வித்து வான் சந்திரசேகரம்பிள்ளை), வைத்திலிங்கசாமி (வித்து வான் வைத்திலிங்க தேசிகர்) ஆகிய மூவரும் முதல்வைத் தெண்ணத்தக்க பெருமையாளராவர். முன்னேய இருவரும் அங்கங்கே தெருப்பாடசாலைகளை நடத்திப் புராண இதி காசங்களை எங்கும் விதைத்துத் தமிழிலும் சைவசமயத்தி லும் மக்களுக்குப் பற்றினை வளர்த்துச் சிலகாலம் இங்கே வாழ்ந்து சென்றவர்கள். இவர்களுடைய நன் மாணவர்க ளான பெரியகல்லாற்றுப் பெரியதம்பி விதானே, கோட்டைக்கல்லாற்று வினுசித்தம்பி விதானே, மண்டூர் வினசித்தம்பி விதானே, கோணமலை உபாத்தியாயர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, எனது தந்தையார்,
ա) - 16

Page 146
242 மட்டக்களப்புத் தமிழகம்
நாவிதன் வெளித் தோம் புதோ ர் முதற் பலருடைய புலமை இவ்விருவருக்கு மமைந்த கலேவடிவான நினைவுச் சின்னங்களாக மிளிர்கின்றது. பின்னேயவரோ எனில் மட்டக்களப்பு மகனென்று உணர்ச்சி பொங்கத் தன் னைக் கூறிக்கொன்டு இங்கேயே கலந்து மறைந்த கலைப் பெருமையாளராவர்.
1910ஆம் ஆண்டில் மட்டக்களப்புக்கு வந்ததிலிருந்து இந்நாட்டின் தமிழ் வளர்ச்சிக்கும் சைவ வளர்ச்சிக்கும் இவர் செய்த தொண்டுகள் அளவிடுதற் கரியனவாகும். தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் மட்டக்களப்புத் தமிழகத்துக்கென்றே அடியுறை செய்து யாழ்ப்பாண காட் டினர் இந் நாட்டுக்குச் செய்துவரும் சேவைகளுக்கோர் எடுத்துக்காட்டாக விளங்கும் இந் நல்லறிஞருடைய வர லாறு பொறிக்கப்படாவிடின் இத் தமிழகப் புலவர் பரம் பரை வரலாற்றுத் தொடரும் நிறைவுடையதொன் ருகா தென்பதே எனது துணிந்த முடிபாகும். சைவம் மணக் கும் வேளாண் தமிழ்க் குடும்பத்திலே யாழ்ப்பாணத்துப் புலோலியூரில் வாழ்ந்த பொன்னேயா என்பாருக்கு மகனுக 1878ஆம் ஆண்டளவிற் பிறந்த வைத்திலிங்கம், தனது குலம் விளங்கும் கொழுந்தாய் வளர்ந்தவர். நாவ லர் பெருமானது சீடர் பரம்பரையைச் சேர்ந்த வேல் மயில்வாகனப் புலவரிடம் இளமைக் கல்வி பயின்ற இவ் வறிஞருக்கு வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை என்பார் நல்லாசிரியராகப் பின்னர் வாய்த்தமை நமது பெரும் பேருயிற்று. இலக்கண இலக்கியக் கல்வியினைத் துறைபோகக் கற்றபின்னர்ச் சைவசமய ஆசாரிய தீட்சை பெறுதற்குரிய படிகளையும் கடந்து, சீரிய ஒழுக்கமும், நீங் காது உருத்திராக்க மணியும், வெண்குறி மீறும் அணிகலம் போலப் பெற்று விளங்கிச் சைவக் குருக்களுமாயினர். அதனல் இளமையிலேயே தேசிகரான வைத்திலிங்கன ருக்கு, மேலும் தமிழும், சைவமும் கற்கவேண்டும் என் றிருந்த ஆசை வளரலாயிற்று. அவ்வாசையினல் சங்கம் வளர்த்த சான்றேர் காலத்தின் பின்னர் ஒருவாறு தமிழ் வளர்க்கும் பணிபூண்டு விளங்கும் சைவ மடங்கள் சில வற்றுள் ஒன்ருகிய திருவாவடுதுறை ஆதீனத்தைச் சென்

புலவர் பரம்பரை 243
றடைந்தார்கள். அவ்வறநிலையம் தேசிகருக்கு மூவாண்டு காலம் உண்டியும் உறையுளும் நல்கி அவரது சிறந்த புலமை வளர்தற்கான சூழ்நிலையையும் அமைத்துக் கொடுத்தது. அங்கு தமிழ்மொழிக் கல்வியிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் இணையற்றுத் தேர்ந்த இப் பெரியாரை வியந்து வித்துவான் என்ற புலமைப் பட்டத்தினுல் அவ் வாதீனம் இவரை வெளியுலகுக்கு அறிமுகஞ் செய்து பெருமைப்படுத்திற்று.
அப்பாற் சங்கம் நிலைத்த தமிழ் மதுரையும், சைவம் மணக்கும் தமிழ்த் தில்லையும் இன்னரது திருவாழ்விற் சில ஆண்டுகளிற் பங்குகொண்டன. சமய சாத்திரங்க ளனைத்திலும் சங்கத் தமிழ்மொழிக் கல்வியிலும் அக் காலத்தில் மேலும் புலமையுற்ற தேசிகருக்குச் சிதம்பரம் திருமண வாழ்வளித்துச் சிறப்பித்தது. அதன் பின்னர் ஈழநாடு திரும்பிய தேசிகரை மட்டக்களப்பு நாடு எப் படியோ அடையப்பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாணத்து மணமகனுக்கும் இந்திய மணமகளுக்கும் மட்டக்களப்பு அளித்த வரவேற்பினேடு தமிழகப் பகுதிகளெல்லாம் ஒன்றுபட்ட பெருகிலே இங்கும் பிறக்கலாயிற்று.
மட்டக்களப்பிலே தெருவெல்லாம் தமிழ்முழக்கம் கேட்கப்பட்ட காலம் அது. கிராமந்தோறும் அங்கங்கே புராணவகுப்புகள், இலக்கிய ஆய்கூடங்கள், நாடகசாலை கள், இதிகாச மன்றுகள், நிகண்டு முதலிய கருவிநூ லரங்குகள் எல்லாம் மிளிர்ந்தன. பாரதம் இராமாயணம் முதலான இதிகாசங்களை மனப்பாடமாகச் சொல்லவல்ல இலக்கிய நூலறிஞர்கள் அப்போது எங்கும் நிறைந் திருந்தார்கள். நடமாடும் பாரதம் ' என்று புகழ்பெற் றிருந்தவரான வித்துவான் சரவணமுத்தன் அவர்களும் அங்கங்கே வாழ்ந்த செல்வர்களின் வீடுகளைச் சிறிய பாடசாலைகளாக விளங்க வழிசெய்து வந்தனர். எழுத் தறிவித்தவன் இறைவனுகப் போற்றப்பட்ட பெருநிலை மக்கள் மனத்திடைத் திகழ்ந்தது. நல்லாசிரியர் ஒரு சிலர் இடந்தோறுஞ் சென்று மேற்தந்த தமிழ் நிலையங்களை நடத்திக் கலை வளர்த்தனர். அன்னருள் ஒரு நல்லிடம்

Page 147
44 மட்டக்களப்புத் தமிழகம்
பெற்று விளங்கிய தேசிகருக்கு நல்வரவேற்பும், உபசார மும் எங்கும் கிடைத்தன. தமிழ்ப்புலமையோடு நல்ல நாவன்மையும் பெற்றிருந்த தேசிகரவர்கள் தமது மெலிந்த தேகத்துக்கு மாறன வெண்கலத் தொண்டையினையு முடையவராயிருந்தார். மட்டக்களப்புத் தமிழகத்துச் சைவ சமயப் புரட்சி வீரர்களின் வரிசையில், முன்னணியிலே நின்று, சைவம் மறுத்த வல்லாளர்களுக் கெதிரான மத கண்டனங்களை மாரிபோலப் பேச்சினலும், எழுத்தின லும் சொரிந்துவந்தவராகையால் தேசிகரென் ருலே பிற மதத்தின ரெல்லாரும் நடுங்கியகலுவது வழக்கமாயிற்று.
இவரது சொற்பொழிவுகள் சித்தாந்த தத்துவங் கலந்த தமிழ் மழையாகப் பொழிந்தன. 8 சுதேசநாட்டியம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும், பெரிய கண்டன மாருத மாகவும் அக்காலத்திலே யாழ்ப்பாணத்தில் விளங்கிய கல்லடி-வேலுப்பிள்ளை அவர்களுடைய நண்பும், மதிப்பும் பெற்றிருந்த இவர், தீபம்’ பத்திராசிரியராக இங்கிருந்த வேதநாயகம் பா திரி யாருடன் மாறுகொண்டெழுதிய கண்டனங்களைச் * சுதேசநாட்டிய ’ இதழ்களிற் கண்டு புகழாதவரில்லையெனலாம்.
அக்காலக் தோன்றிய மட்டக்களப்புக் காரைதீவுச் சைவப் பாடசாலைக்கு இவரே சிலபோது தலைமை ஆசிரிய ராக இருந்தமை, சமய சேவைகளுக்கான நல்லதொரு சந்தர்ப்பத்தை இவருக்கு நல்கிற்று. முத்தமிழ் முனிவ ராகப் பிற்காலத்தே விளங்கிய மயில்வாகனனுரை அகர எழுத்தோடு தமிழுட்டிச் சைவம் மணக்கும் தமிழ்க் குழந்தையாக வளர்க்கும் பேற்றையும் அத் தொடர்பால் தேசிகர் எய்துவாராயினர். இளமையிற் தமக்கு நல்லா சிரியராக வாய்த்த இவரது அறிவுத்திறனை விபுலாநந்த அடிகள் அடிக்கடி பலவாறு வியந்து கூறுவதும், தமது பிறந்தகமாகிய காரைதீவுக்குச் செல்லும்போதெல்லாம் தேசிகரைச் சென்று கண்டு சிறிதுபொழுதாயினும் அள வளாவிச் செல்லுதலும் உண்டு.
மட்டக்களப்புக் காரைதீவினையே சொந்த ஊராகக் கருதி அங்கமைந்துள்ள பாலையடி வாலவிக்கினேசுவரர்

புலவர் பரம்பரை 245
ஆலயத்துக்கு அருச்சகராகவும் பெற்ற தேசிகரது மனைவி யார், சிலகாலவாழ்வின் பின்னர் அவரை விட்டுப் பெரும்பிரிவெய்துவாராயினர். அதற்காக மிகுதியும் மனம் வருந்தியிருந்த இவருக்கு இறைபணிக்கென்றே வாழ்ந்து வந்தவரும் அதே காரைதீவினைச் சேர்ந்தவருமான ஒரு அம்மையாரை மணங்கொண்டு வாழ்வதற்கான கியதி இறைவனுற் கிடைக்கலாயிற்று. அதனுற் காரைதீவுத் தேசிக ரென்றே வழங்கப்பெற்ற இப் பெரியாரது வீடும் ஒரு குருகுலமாக அமையப்பெற்றது. நன்னூல், நிகண்டு, தருக்கம் முதலான கலைநூல்களையும், சங்க இலக்கியங் களையும், கந்தபுராணம்போன்ற புராணங்களையும் முறை யாகப் பல மாணவர்கள் பாடங் கேட்க வழிபிறந்தது. அக் காலத்துக் கற்ற பேரிலக்கிய இலக்கணக் கல்வியின் சிறப்பே, மயில்வாகனனரை மதுரைத் தமிழ்ச் சங்கத்தி லிருந்து தோற்றிய ஈழத்தின் முதற் பண்டிதராகச் செய் தது எனலாம்.
இயல்பாகவே புலமை படைத்தவராகி, சித்திரகவி பாடுதலில் வல்லுனராய் விளங்கியவரும், வசந்தன்பாடல் கள் பலவற்றைத் தேவை கண்டு அவ்வப்போது ஆக்கி அளித்தவருமாகிய வசந்தராசபிள்ளை என்பார் தேசிகரது சிறந்த புலமைக்கு விளக்கமாக இருந்த இன்னெருவர். விதி அப் புலவர்பெருமகனே அவருடைய இருபதாவது வயதிலேயே பலிகொண்டுவிட்டமை நமது தவக்குறைவி னலேயே ஆயிற்று எனலாம். மேலும் காரைதீவில் இன்று விளங்கும் தமிழ்ப் புலமையாளருட் பலர் தேசிகரது நன் மாணவர்களாவர். குன்ருத சைவ ஒழுக்கங் கொண்டு, தேசிகரின் நினைவாகப் பல நற்பணிகளையும் செய்துவரும் திருவாளர் ச. வேலுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் தம் மைக் காணும் எவரும் தம்மாசிரியரை நினைந்துகொள் ளத்தக்க ஒரு சீடனக வாழ்ந்துவருகிருர், தேசிகரது தனிப் பாடல் சிலவற்றையும் வாழ்க்கைக் குறிப்புக்களையும் திரட்டி அவரது நினைவாக வெளியிட இவர் முயற்சி செய்துவருதல் போற்றத்தக்க ஒன்ருகும்.
தமக்குக் கலைவளமும் உயர்ந்த மனவளமும் வளர்க் கக் காரணமாய் இருந்தவர் காரைதீவுப் பாலையடி வால

Page 148
246 மட்டக்களப்புத் தமிழகம்
விக்கினேசுவரரே என்று தேசிகர் அடிக்கடி தெய்வ அன்பு சொட்டக் கூறுவார். அப் பெருமான்மீது கொண்ட நீங்காத அன்பினல் ஊஞ்சற் கவிதைநூல் ஒன்றைப் பாடி 1916ஆம் ஆண்டு இவர் வெளிப்படுத்தியபோது, தெய்வ நலங்கனிந்து, சமய தத்துவங் கலந்து விளங்கும் அந்நூற் பாடல்களால் தேசிகரது புலமையின் மதிப்பு உயரலா யிற்று :
* தத்துவங்கள் ஒருங்கமைந்து தம்ப மாகத் தாவிலுப நிடதமதில் விட்ட மாகச் சுத்தசதுர் மறைகளுமே கயிற தாகத்
தூயசிவா கமமதன்மீப் பலகை யாக அத்துவித முத்தியடி யவர்கள் காண
வமரர்தொழ வோங்கார பீட மேவி அத்திமுக வத்திமுக வாடீ ரூஞ்சல்
அருட்பாலை யடியிறையா டாமோ வூஞ்சல்.’ இறைவனுக்குச் சமைந்த சமய தத்துவ ஊஞ்சல் ஒன் றைப் படம்பிடித்துத் தரும் இவ் விருத்தம் முதலாய் இய லும் இந்நூற் செய்யுள்தோறும் இவரது சிவசமயப்பற்று மிளிருகின்றது. * அத்திமுக அத்திமுக ’ என்ற ஈற்றடி யினையேயுடைய எல்லாச் செய்யுள்களிலும் அதற்கேற்ற தகர எதுகை கொண்ட அடிகளை அமைத்துப் பாடுதற் கியன்ற சொல்லாட்சியும் புலமைப் பெருக்கும் உடையார் இவர் என்பதை இந்நூலில் நன்கு காணலாகும்.
இப் பெரியாரது பக்திக்குகந்த மற்ருெரு திருப்பதி மண்டூர் என்பது. ஞானவிளக்காகிய மண்டூர் முருகனது திருவருளொளியைக் கனவிலும் மறவாத தேசிகரே முதல் முதல் * மண்டூர்ப் பதிகம் ஒன்று பாடியவராவர் :
* உரைபூத்த கலைமங்கை கணவன்முத லேவரா
யுலகெலா மைந்தொழினடாத் தொருமுதற் கடவுளா நின்றிருப் புகழொன்று
மொன்றவுண ரேனதான்றுன்
* மண்டூர்ப் பதிகம் என்ற பெயரால் நூல் இயற்றினேர் முறையே வைத்திலிங்க தேசிகர், பண்டிதர் முருகேசபிள்ளை, புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகிய மூவராவர்.

புலவர் பரம்பரை 247
விரையூத்த நளினமல ரடியிணைக் காட்பட்ட
மெய்த்தொண்டர் தொண்டியற்றேன் வினையினே னெங்நனந் திருவருட் கருகனுய்
வெய்யபவம் வீட்டியுய்வேன் கிரைபூத்த மைக்கமஞ் சூன் மழை யுறங்குமணி
நீடிடுந் தொடியிஞ்சியு ணிலைவருங் கோபுரமு மாடமும் வானகரை
நின்றெதிர் சிரிப்பவாய்ந்து திரைபூத்த கடனிலச் செல்விக்கு முகமெனத் திகழ்கின்ற மண்டூரில்வாழ் தீரனே முத்துக்கு மாரனே சுத்தகித்
தியவகண் டாகாரனே.” என்பது முதலான பன்னிருசீர் விருத்தம் பதினென்று கொண்ட நூல் இது. தில்லை மண்டூரில் எழில்நலமும், அங்குறையும் தமிழ் முருகனது செவ்வி நலமும் சென் றடைவோர்க்கு அவன் செய்யும் அருள்வளமும் அடியவர் தம் பேரன்பின் மனவளமும் மிளிர அமைந்த இந்நூலினை யடுத்து அம் முருகன் மீது லீலாசங்கரமானவரூஞ்சல்* என்னும் பெயரால் ஊஞ்சற் கவிதைத் தொகுதி ஒன்றை யும் ஆக்கி அளித்தார்கள்.
தரு தனதன தந்தோம் தந்தைத்
தான தனந்தோம்-தந்தைத் தான தனதன தான தணுதன
தான தந்தோம் தனதான.
திருவளர் மண்டூர் என்னும்
பெருமெழில் கொண்டே மன்னும் தீதக லும்பதி யாமிதின் மேவிய
செய்ய முருகேசர் தம்மேல். (தனதன)
கருவளர் தந்தீ போலும்
ஒருமுக னருளைப் பெற்றுக்
கயல்விழி மாதர்கள் அணிமிகு கோயில்முன்
காதலுடன் ஊஞ்சல் செப்ப. (தனதன)

Page 149
248 மட்டக்களப்புத் தமிழகம்
என்று தொடங்கும் இந்நூல் ஐந்து வேறுவகையான சங் தக் குழிப்புகளைக்கொண்ட தொண்ணுாற்றுநாலு தனி இசை அடிகளால் அமைந்ததாகும். தமிழ் முருகனுக்கும் குறவள்ளிக்கும் நடந்த காதல் லீலைகளைப் பற்றிக் கூறும் பகுதி ஆதலால் நூல் பி லீலாசங்கரமானவரூஞ்சல்* என்று பெயர்பெற்றுள்ளது.
தரு தந்தனத்தோம் தானைத்தோம்-தன
மானினங்காள் மயிலினங்காள்-கிளி
வாரணங்காள் போய்வாருேம் தேனினங்காள் குயிலினங்காள்- எங்கள்
சேதிசொல்லும் வேலருக்கே. (தந்தனத்தோம்) என்னும் பாடல் இற்செறிக்கப்பட்டுத், தினைப்புனத்தை நீங்கிச் செல்ல நேரிடும்போது வள்ளி தன் ஆற்ருமை யைக் காதலனுகிய வேலனுக்குச் சொல்லுமாறு இயற் கையினிடம் வேண்டுவதாய் அமைந்துள்ளது. இதன் தொடர்பான ஊஞ்சற் கவிகளை மட்டக்களப்பு மக்கள் தம் ஊஞ்சலாட்டத்தின்போ தெல்லாம் இன்னமும் பாடிவரக் காணலாம். நாட்டுப்பாடல்களைப்போற் பரவியுள்ள இப் பாடல்கள் சில உணர்ச்சிக்கவிவளம்பற்றிய எமது கட் டுரையினுள்ளும் ஆராயப்பட்டுள்ளன.
* காட்டுக் குறத்திக்கு நல்லமு தேமெய்க் கருணைவிளை பாட்டுக்கு ளன்பரை யாக்கமண் டூரம ரற்புதனே வீட்டுக்கும் போகத்தும் நிற்குமொன் ருகிய மெய்ப்பொருளே பாட்டுக்குள் ளேநெகி ழாரிலே யேயிந்தப் பாரினிலே.?
என்ற இனிய கட்டளைக் கலித்துறையிலே, முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்’ ஆகிய தமிழ் முருகனுக்குத் தான் செய்யக்கூடிய சேவை தமிழ்ப் பாட் டிசைத்தலே யென்றும், அதற்கிரங்கி, அவன் அருள் செய்யவேண்டும் என்றும் தேசிகர் வேண்டுவதைக் காண் கின்ருேம். இதுவும், இதுபோன்ற கட்டளைக் கலித்துறை களும், வெண்பாக்களுமாக இருபது பாடல்களை க் கொண்ட 8 மண்டூர் இரட்டைமணிமாலே ' என்னும் ஒரு

புலவர் பரம்பரை 249
நூலையும் செய்து தம் ஆரா அன்புக் கடனை முருகனது பொன்னடிகளிற் சேர்த்த சைவமணியாக நம் தேசிகர் விளங்குகின்றர். பாலையடி வால விக்கினேசுவரரூஞ்சல், மண்டூர்க் கந்தசுவாமி லீலா சங்கரமானவரூஞ்சல், மண் டூர்ப்பதிகம், மண்டூர் இரட்டைமணிமாலை ஆகிய இந் நான்கு நூல்களும் ஆசிரியராலேயே முதன் முறை 1916ஆம் ஆண்டு பங்குனி மாதம் பருத்தித்துறைக் கலா நிதி அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்துள்ளன.
இவ்வாறு செய்யுள மைக்குக் திறமை ஒருபாலாக, பழைய ஏட்டுப் பிரதிகளை ஆராய்ந்து வேண்டுமிடத்து உரையமைத்து வெளிப்படுத்திய பதிப்பாசிரியராகவும் வித்துவானவர்கள் விளங்கினர் என்பதை இன்னுரது தவிணகைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, பிள்ளையார் புராணம், பிள்ளையார் கதை என்னும் பதிப்பு நூல்கள் சான்றுதந்து நிறுவுகின்றன. தஷிணகைலாச புராணப் பதிப்பிலே செய்யுள்களுக்கு எழுதியுள்ள அடிக் குறிப்புக்களும், முன்னுரையும் பதிப்பாசிரியரது புலமைப் பொன் னுக்கு உரைகல் போன்றுள்ளவை. நூன் முகவுரை யில் ஓரிடத்திலே * லக என்னும் வினையடியாகப் பிறந்த * லங்கா’ என்னும் பதம், இனிமையுடையது என்னும் பொருளுடைத்தாய்த், தமிழிலக்கண நயம்பற்றி இதர உயிரை முதலிற்கொண்டு இறுதி ஆகாரம் ஐகாரமாய் இலங்கை யென்ருயிற்று ’ எனவும், “ கைலாசம் என்பது கிலாச முனிவர் சிவபெருமான நோக்கித் தவங்கிடந்து அவரைத் தாங்குமாற்றலுற்று மலைவடிவாயினமையின் இப் பெயர்த்தாயிற்று ; பிரகிருதி தத்துவத்தின் மேலே அப் பிரகிருதி கைலாசமுள்ளது ; இது சிறந்த தீட்சாவான் களால் அடையத்தக்கது; இதுவே சிவலோகம் ? எனவும் பொறித்துள்ள பகுதிகள் தேசிகரது தமிழ்மொழி வட மொழிப் புலமைக்கும், இலக்கணநூற் பயிற்சிக்கும் சமய சாத்திர ஆராய்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக மிளிர்கின்றன. நூற் பதிப்பில் அங்கங்கே இடைச் செருகல் என்று கண்ட செய்யுள்களையும் தக்க காரணங்காட்டிக் களைந்துள்ளமை இன்னரது கலைத் துணிவைக் காட்டி நிற்பது. கோணேசர் கல்வெட்டுகளைப் படித்து ஆராய்ந்து பதிப்பித்தல் எத்

Page 150
250 மட்டக்களப்புத் தமிழகம்
தகைய பொறுப்பான வேலை என்பதை, அவற்றை நேரில் வாசித்துப் பார்த்தவர்களே உணருதல் கூடும். பிள்ளை யார் புராணத்துக் கெழுதி வெளியிட்ட உரைவளத்தி ல்ை இவரைச் சிறந்ததோர் உரையாசிரியர் என்று தமி ழுலகு கொண்டாடுவதாயிற்று.
* கற்றவத்தி னம்பலத்து நம்பனிடத் தம்பிகைமுன்
பெற்றெடுத்த தந்திமுகப் பிள்ளையே--குற்றமலி
வன்மாலை தீர்க்க மருந்தென் றினிதியம்பும்
நின் மாலைக் குக்காப்பு நீ.' என்னும் அந்தப் புராணக் காப்புச் செய்யுளுக்குப் பத வுரை கூறிவிட்டு, “ விராட்புருடனது இருதய ஸ்தான மாகிய சிதம்பரத்திலுள்ள கனகசபையிலே ஆன்மாக்க ளுய்யும்படி பஞ்சகிருத்திய நிருத்தம் செய்கின்ற நடேசப் பெருமானதும், சிவகாமியம்பிகையினதும் சிரேட்ட புத்திர ராதலின் (தந்தை தாயர்போன்று) என் சிந்தையிலிருந்து கவிவழுக் களை க என்பார், நற்றவத்தி னம்பலத்து நம்ப னிடத் தம்பிகைமுன், பெற்றெடுத்த தந்திமுகப் பிள்ளையே’ என்றும், ஆன்மாக்களை அநாதியே பந்தித்த அஞ்ஞான மயக்கத்தையோட்டி மெய்ஞ்ஞானத் தெளிவைப் பயக்கும் மருந் திந்நூல் என்பார், வன்மாலே தீர்க்க மருந்தென் றினிதியம்பும் நின்மாலே ' என்றும், முதற் செய்யுளி னிற் றுச் சொல்லையே பிற் செய்யுளின் முதலில் வைத்துப் பாடப்பட்ட தென் பார், மாலே ' என்றுங் கூறினர்’ என்று விரிவுரை செய்திருப்பது இவரது நல்லாசிரியரும், சிறந்த உரையாசிரியருமாகிய வித்துவசிரோமணி பொன் னம்பலபிள்ளை யென்பாரை ஒத்து விளங்கும் இன்னரது உரைப்புலமையை நமக்குக் காட்டி நிற்கின்றது. அக் காலத்து மட்டுமன்றி, இன்றும் புராண வகுப்புகளுக்கெல் லாம் பெரிதும் பயன்பட்டு, எங்கும் வரவேற்கப்பட்டு வரும் இந் நல்லுரையுடன் கூடிய நூலும், பிள்ளையார் கதை, பாலையடி வாலவிக்கினேசுவர ரூஞ்சல் என்பன வும் இரண்டாவது பதிப்பாக 1938ஆம் ஆண்டில், அவ் விக்கினேசுவரர் ஆலயத் திருப்பணி வெளியீடாய் வந்துள்ளன.

புலவர் பரம்பரை 251
* தண்ணழிகால் மாலேயோ தருமன் தனையனைப்போ
லெண்ண விருந்தனைகொல் லோவியமே-மண்ணதனில் வயிறலைத்துத் தாழ்ந்தமறல் மாண்டலைய பூவாயிற் கயிலைமலை மேவினையோ காண்.’
என்னும் நேரிசை வெண்பா இவர் பாடிய சித்திர கவிகளுள் ஒன்று. (இக் கவியின் சித்திர அமைப்பைக் கீழே காண்க.)
மா ல் ற | ம | த | க் ழ்
னி | த | ண | ண் | ம | மே ய | வி (லோ ல் கொ
போ லெ | ண் | ண | வி | ரு ந் த | ன
ப் னை | ய | ஃன | த | ன் un || DIT 3ణ) {Gur த ரு
ல் கா ழி
Y کا حالا-->Yء کا 一人二ノ / ̄ ܢܠ
தமது அன்பர் ஒருவர்மீது சரமகவியாகப் பாடிய இச் செய்யுளைத் தாம் எவ்வாறியற்றினரென்பதைக்காட்டி இதுபோன்ற சித்திர கவிகளை அமைக்குமாற்றையும் தம் மாணவர்க்குக் கற்றுக்கொடுத்தனரென்பர்.

Page 151
252 மட்டக்களப்புத் தமிழகம்
சிறந்த சைவக் குருக்களும், சமயப் பிரசங்கியும், தமிழ்ப் புலவருமாக விளங்கிய தேசிகர் ஐயந்திரிபறக் கற்ற அறிவாளர் ; நல்ல தருக்கமுறையான மைந்த பேச் சாளர் ; உயர்ந்த எழுத்தாளர். மேற்காட்டிய நூல்களிற் போந்தவற்றைவிட அவ்வப்போது இவர் பாடிய தனிச் செய்யுள்களும் பலவுள. சித்தாந்தப் பழமாக விளங்கிய இவர் வேதாந்தக் கொள்கைகளிலும் பெருமதிப்புடையர் என்பதை சுவாமி விவேகாநந்தரது அருட்சேவைகளைப் பற்றி இவர் பாடிய தனிப்பாடல்களிலே நாம் காண லாம். முன்னர்க் காட்டிய அறிஞர்களைவிடப் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, அருணசல தேசிகமணி, உயர் திருவாளர்கள் குமாரசுவாமி ஐயர், முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், வித்துவசிரோமணி கணேசையர், குமாரசுவாமிப் புலவர் ஆகியோரது நன் மதிப்பும், பெரு நட்பும் பெற்றுப் புகழ்பெற்று வாழ்ந்து, மட்டக்களப்பு மண்ணிலே இந் நாட்டு மகனகக் கலந்து இதன் செல்வத்திற் பெருமைகொண்ட இப் பெரியார் விய வருடம் வைகாசிமாதத்துத் தேய்பிறைச் சதுர்த்தியில் விண்ணுலகு புகுந்தனர். ஆயினும், இவர் விட்டுச்சென்ற கலைச் செல்வங்கள் அங்கங்கே ஒளிகுன்ருது புகழ் விளங்க மிளிர்கின்றன.
தேசிகர் வளர்த்த சைவப் பணியினைத் தழைக்கச் செய்வார் தொகை அருகி யுள் ள தெ னினும் அவர் விதைத்த தமிழ் விதைகள் நன்கு பயிரேறி வளர்கின்றன வெனலாம். தமிழுக்கென்றே தமிழ் கற்ற, தமிழ் கற்பித்த தேசிகரவர்கள் ஈழத்தின் தமிழகப் பகுதிகளெல்லாம் ஒன்றுகூடிய பெரு நிலையினையே கனவுகண்டு அதற்கென வாழ்ந்து காட்டியவர். எங்கிருந்தாலும் தமிழன் என்ற சொல்லொன்ருல் நாம் ஒன்றுபட்டுப் பெருமைகொள்ளு தல் வேண்டும் என்பதும், பரந்த தமிழரசு விளங்கு தற்கு வழி இதுவே என்பதும் அவர் கண்ட மன முடிபு. அது கைகூடுதற்கும் அரசியற் பிளவுகளால் இனப்பிரிவு கொள்ளாது நாம் ஒன்றுபடுதற்கும் இப் பெரியாரைப் போன்றவர்களது கலைவாழ்வின் சரிதை என்றும் பயன் தந்து நிற்குமாக,

V11. புலவர் வினுசித்தம்பி
மட்டக்களப்புத் தமிழ்வளத்திலே மண்டூர் என்னும் கிராமமும் பெரும் பங்குகொண்ட ஒன்ருகும். இவ்வூரிற் கோயில்கொண்டிருக்கும் தமிழ் முருகனது திருவருட் சிறப்புரை ஈழத்துச் சைவ உலகில் பண்டிருந்தே பெயர் பெற்றிருப்பது. முருகனது படைவீடுகளில் ஒன்ருக ஈழ நாட்டிலே உள்ள கதிர்காமத்தினை அடுத்து, சின்னக் கதிர் காமமெனப்படும் ஒரு முருகன் தலமாக மிகப் பழங்காலத் திருந்து புகழ்பெற்றுள்ள இவ்வூர், தமிழ்ப் புலமையாள ருக்கும் பிறப்பிடமாக இருந்துள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களின் வளப்பெருக் கும் ஒருங்கே உடையது. மட்டக்களப்புநாடு என்ற நம் அறிமுக உரையின் உண்மையினை இவ்வூரைச் சார்ந்த பகுதியில் நேரிற் காணலாகும். பரந்த மருதத் தண்பணை யும், முல்லையம்புறவமும், குறிஞ்சிப்புணங்களும் மட்டக் களப்பு வாவியின் நெடுநீர்நிலையும் சூழ்ந்த இப்பகுதியின் இயற்கையமைவு, வளச்சிறப்பு, செழுமை என்பன பண்டையிலிருந்தே தமிழ்ப் புலவர்கள் பலரைத் தோற்று வித்தற்குக் காரணமாக இருந்தனவென்னலாம்.
யாழ்ப்பாண நாட்டிலிருந்து மட்டக்களப்பை நோக் கிய தமிழ் அறிஞர்களெல்லாரும் முதலில் தமிழ் முருக னது திருப்பெயரால் இவ்வூருக்கு வந்து தங்கியிருந்து தம் கலைவகுப்புகளை நடத்தியுள்ளார்களென்று தெரிகிறது. புராண வகுப்புகளும் இலக்கண கூடங்களும் நாடக அரங்குகளும் எல்லாம் ஒரு காலத்திலே இவ்வூரிற் தலை சிறந்திருந்தன. அருள்வளமும், நிலவளமும், கலைவளமும் கிறைந்த இந்தச் சூழ்நிலையானது காலத்துக்குக்காலம் சிறந்த நல்ல தமிழறிஞர்கள் பலரையுந் தோற்றுவித் திருத்தல் வியப்பன்று.
இத்தகைய தில்லை மண்டூரிலேதான் நாம் இங்குக் குறிப்பிட விரும்பும் புலவர் வினசித்தம்பி என்பாரும் தோன்றித் தமிழ் வளர்த்து நின்ருர், வேளாண்மை இவ ரது குலத்திற்கேற்ற தொழிலாக மட்டுமன்றி இன்னரது

Page 152
254 மட்டக்களப்புத் தமிழகம்
மனப்பண்பாகவும் இருந்து விளங்கிற்று என்று இவரை நன்கறிந்த வித்துவான் வைத்திலிங்க தேசிகர் அவர்கள் குறிப்பிடுவதுண்டு. இயல்பாகவே தமிழின் இனிமை குழைந்தது, இவர் தோன்றிய குடும்பம். சேர்ந்தோரைக் கவரும் தனது இனிய தமிழ்ப் பேச்சினலும், சிலேடை நயம்பெறப் பேசும் புலமைச் சிறப்பினலும் பொதுமக்க ளிடமிருந்து ' சர்க்கரையர் ’ என்ற பாராட்டுப் பட்டம் பெற்ற செட்டியார் என்பவருக்கு 1887ஆம் ஆண்டிலே மகனகப் பிறந்த வினசித்தம்பி அவர்கள் இளமையி லேயே தந்தைக்கேற்ற மைந்தராக விளங்கினர். புலோலி யூர் பண்டிதர் சந்திரசேகரம் அவர்களிடமும், யாழ்ப் பாணத்து முருகேசு உபாத்தியாயர் அவர்களிடமும் இலக்கணம், தருக்கம் ஆகியவற்றையும், புராண இதி காசங்களையும் நன்கு கற்றுத் தேறினர். அக்காலையிலே தம்மாசிரியர் வராத வேளைகளிற் கலைவகுப்பைத் தாமே நடத்தும் நல்லாசிரியராகவும் பெற்ருர் என்பர். சிறிது காலம் இவருடன் கலைபயின்ற புலவர்மணி பெரியதம் பிப்பிள்ளை அவர்கள் இவரது மதிநுட்பத்தினையும் கருக லான செய்யுள்களுக்கும் இலகுவிலே உரை காணுங் திறமையினையும் அடிக்கடி வியந்து கூறக் கேட்டுள்ளேன்.
கல்முனைக்கணிமையிலுள்ள பாண்டிருப்பு என்னும் ஊரிலே இருக்கும் திரெளபதிஅம்மன் கோயிலில் ஆண்டு தோறும், புரட்டாதிமாதத் தேய்பிறை நாட்களிலே வில்லி பாரதம்படித்தலும், பாண்டவர் வனவாசம், அருச்சுனன் தவநிலை, திரெளபதி தீக்குளிப்பு என்பன நடத்தலும் இன்னும் மாருதுள்ள வழக்கங்கள். அங்கு பாரதப்பாடல் களை ஒருவர் படிக்க இன்னெருவர் பயன் (உரை) கூறக் கேட்டல் மிக இனிமையாய் இருக்கும். ஒருபோது வெளி யூரிலிருந்துவந்த சிறந்த உரைகாரர் ஒருவர் அங்குப் * பயன்’ கூற வந்தோரிடமெல்லாம் பிழைகண்டு சொற் போருக்கு அறைகூவி வாதிட்டு வென்று வருவாராயினர். அக்காலம் மட்டக்களப்பிலே சிறந்த புராண வகுப்பாசிரிய ராக விளங்கிய யாழ்ப்பாணத்து முருகேசு உபாத்தியார் அவர்கள், அவ்வறிஞரது செருக்கையும், அறைகூவலை யுங் கேட்டு மண்டூரிலிருந்து சில மாணவர்களோடு

புலவர் பரம்பரை 256
சென்ருர்கள். வாத்தியார் தமது மாணவனுகிய வின சித்தம்பியை அவருக்குக் காட்டி * எம்முளும் உளனெரு பொருநன்’ என்று அறிமுகஞ் செய்து பயன் கூறலைத் தொடங்குவித்தார். வாதுக்கழைத்த அவ்வறிஞரது வினக் களுக்கெல்லாம் இளைஞனன வினுசித்தம்பி தகுந்தபடி பதில் கூறியதோடு, அவர் அதிசயிக்கத்தக்கவாறு நுண் னிய தத்துவக் கருத்துக்களையுந் தெளிவுற எடுத்து அன்றைக்கிருந்த சகாதேவன் கிருஷ்ணரை மனதினற் பிணித்த பகுதிக்கு உரைவிளக்கமும் செய்தார்கள். இவ ரது அறிவுப் பெருமையைக் கண்டு வியந்த அப் போட்டி யாளர், முருகேசு உபாத்தியாரைப் பணிந்து இப்படி எத் தனை “ ‘கதிரைவேற்பிள்ளை ’களை மட்டக்களப்பிலே உண் டாக்கியிருக்கிறீர்’ என்று கேட்டுத் தலைவணங்கிச் சென்ற ரென்று அறிகின்றேம். (யாழ்ப்பாணத்து மகாவித்துவான் நா. கதிரைவேற்பிள்ளை என்பார் ஈடுஇணையற்ற உரை காரர் என்பது இங்குக் கருதத்தக்கது.) தனது ஆசிரிய ருக்கு மட்டுமேயன்றித் தான் பிறந்த நாட்டுக்கும் இவர் புகழ் ஈட்டித்தந்த நிகழ்ச்சிகள் மேலும் பல இவ்வாறு கூறப்படுகின்றன.
இவ்வாருன வினுசித்தம்பி அவர்கள் மண்டூர் முருகன் மீது கரைகடந்த அன்பு செலுத்துபவர். எப்போதும் அவன் தாள்களை வணங்கப்பெறுதலோடு தன் இன்னலின் போதெல்லாம் முருகனை ஏவல் கொண்டும் உள்ளார். தன் இல்லத்தையே ஒரு குருகுலமாக்கித் தம் ஒய்வு நேரமெல்லாம் புராண இதிகாச வகுப்புக்களை நடாத்திய வர். கந்தபுராணம், திருச்செந்தூர்ப்புராணம், மகாபாரதம் ஆகிய நூல்களிலே இவரிடம் * பயன் பழகிய நன்மாணவர் பலரை இன்னமுங் காணலாம். மண்டூர் முருகனது திருவருளிற்றிளைத்த இவர் செய்திருப்பதாக நாம் அறியும் பிரபந்தங்கள் ஐந்தனுள், நான்கு முருகன் திருவருளே வழுத்தியனவாயிருப்பதைக் காணுகின்ருேம். பன்னிரண்டு உயிரெழுத்துக்களையும் முறையே முதலாகக்கொண்ட பன்னிரண்டு ஆசிரிய விருத்தங்கள் நிறைந்தது இவர் முதன் முதலில் இயற்றிய ** மண்டூர் முருகன் காவடிப்
பாட்டு’ என்னும் பக்தி நூல்.

Page 153
ბ56 மட்டக்களப்புத் தமிழகம்
* அன் பென்னும் பிடியில்நின்று ஆடும் அப்பா
அரகரா வென்றுன்பொன் அடிகள் போற்றத்
துன் பென்னுந் தொடர்நீங்கித் துயரம் நீங்கித் தூயமறைத் தாள்கண்டு துவக்க றுத்தேன்
என்பெல்லாம் கரைந்தொன்ருய் இணங்கி நின்றேன்
இருகரமும் உனக்கென்றே இசைந்து கொண்டேன்
வன்பாவி மனமுனக்கே மண்டூர்க் கந்தா
வந்தென்னே எந்நாளும் ரெட்சிப் பாயே. ??
இப்பாடலின் முன்ரும் அடியிலே கூறியபடி இவர் * என்பெல்லாம் கரைந்தொன்ருய் இணங்கிநின்ற ’ தன்மையையும் ** இருகரமும் உனக்கென்றே இசைந்து கொண் ட’ தன்மையையும் இப் புலவரை நேரிற் கண்டோர் நன்கறிவார்கள். தனது பிறந்த பொன் நாடான மண்டூரின் வயல்வளத்தையும் ஆங்குறையும் முருகப்பெருமானது அருள் வளத்தையும் நன்குகாட்டுவது இவர் செய்த ** மண்டூர் வடிவேலவர் குறம் ' என்னும் நூல். சிந்துவகையிலமைந்த இதிலே நூற்றெட்டுப் பாடல்க ளுள்ளன.
* மலேயருவித் தேன் பரந்து வளங்கொளிக்கும் மண்டூர் வடிவேலன் அகனமர்ந்த வானகதி கண்டீர்
முலையூறு தாயாக முன்னேர்கள் போற்றும்
மூங்கில்ருதி ஆவணியில் முருகாடும் அமே s
* வள்ளிமண வாளன் மண்டூர் வடிவேலன் வந்து
வளையெறியும் அலைகள் வளர் வாவியரு கமர்வான் துள்ளிவிளை யாடுமயிற் தொடுபீலி மலியும்
தூயவயற் செந்தில்மடு நீராட அம்மே”
என்னும் பாடல்களிலே அன்னரது நிறைந்த இலக்கியப் புலமையைக் காணலாம். மண்டூர் வடிவேலனருக்கு ஆவணித்திங்கள்தொறும் உள்ள வளர்மதி நாட்களில் திருவிழாவும், நிறைமதி நாளன்று தீர்த்தமும் நடந்து வருதல் வழக்கம். இத் தீர்த்தம் மட்டக்களப்பு வாவியி லேயே இன்று ஆடப்படுகிறது. புலவரது மேற்கண்ட பாடற் குறிப்பினல் இது மூங்கில் நதியின் சங்கமத்தில் ஆடப்பெற்று வந்த வழக்கத்தை நாம் அறிகின்ருேம்,

புலவர் பரம்பரை 257
நதியின் சங்கமம் இன்று தீர்த்தமாடுமிடத்திற்குச் சற்றுத் தொலைவிலிருப்பதால் நதிப்படுக்கை இடம் மாறியிருத்தல் கூடுமென நாம் எண்ண இடம் உண்டாகின்றது. அத் தீர்த்தகதியின் சங்கமத்திலுள்ள வயல் இங்கு ‘செந்தில் மடு’, இன்று வழக்கில் செம்பரிபள்ளம் என்று குறிப் பிடப்படுகிறது. ** மயிற்றெடுபீலி மலியும் தூயவயற் செந்தில் மடு ’ என்னும் பகுதி * பழனநன் மஞ்ஞை உகுத்திடுபிலி கழனியில் உழவர் சூட்டுடன் தொகுக்கும் ?? என்ற சங்கச் செய்யுளடிகளையும், குறிஞ்சியும், முல்லையும், மருதமும் அருகருகேயுள்ள இவ்வூரின் நிலவளச் சிறப் பினேயும் கருத்திற்றருவதாகும்.
இக் கவிஞரது தாயார் ஒருமுறை கொடிய கண் நோயினல் நலிவுற்றுப் பார்வையினையும் இழந்துவிட்டார். எம்மருந்துக்கும் சுகம் பெருதநிலையிலே, தலயாத்திரை தொடங்கிய அவ்வன்னேயார் கதிரைமலை நோக்கிச் செல்லலானர். முருகனது திருவருளேக்காணும் அருட் கண்களே நமக்கு இன்றியமையாதன என்றும், இந்த ஊனக்கண்கள் அவனருட்பணிக்குப் பயன்படாவிடத்து அவற்றுக்காக வருந்தியலேதலாற் பெறக்கூடிய பயனில்லை யென்றும் புலவர் கருதினர். தம் அன்னயார் பொருட்டுக் கதிரையான் பேரில் இவர் பாடிய * கதிர்காமத்தந்தாதி ?? என்ற நூறு கட்டளைக்கலித்துறைகள் கொண்ட நூலிலே, இவரது அந்த அசையாத நம்பிக்கையினையும் பொறித்து வைத்துள்ளார்.
* காணும் அருட்கண் ணிருக்கக் கடல்கடந் தாங்கினிநாம்
வீனுக் கலைதல் கதிர்வேல் முருகன் அருள் ஒழுகு ஞானக் கருணை அறியாம லன்றே குவிலுதற்கிங்கு ஊனப் புறக்கண் இருந்தென் பயன்காண் ஒளியிலதேல்.’
“ஒளிவேல் முருகா உனகான் அறிந்து உளமுருகி அழுவேன் எனிலே அகலும் கவலை அதை மறந்து விழுவேன் உலகில் உளமே கனிந்து விரைந்து வந்து
மெலிவேன் துயரை விடுவாய் கதிரை வியன்மணியே.?
என்னும் இப்பாடல்கள் அக்கருத்தை வலியுறுத்துவதோடு முருகனிடத்தில் இவருக்கிருந்த மாருத பக்திச் சிறப்பினை
17 - מש

Page 154
258 மட்டக்களப்புத் தமிழகம்
யும் காட்டுகின்றன. இதன் பின்னர் அவரது அன்னே யார் சிறிது கண்ணுெளி பெற்று முருகன் கழலடி சேவித்து வாழ்ந்திருந்தமை நன்கு அறியப்பெற்றதொன்றகும்.
தமது பயன்’ வகுப்புகளிலே திருச்செந்தூர்ப் புரா ணத்துக்கு உரை பயிற்றுதலில் இணையற்று விளங்கிப் புகழ்கொண்ட இவர் திருச்செந்தூர் முருகன் மீதும் பத்து ஆசிரியவிருத்தம் பயின்ற ஒருபதிகம் பாடியிருக்கிருர்,
* அலையெறியும் சீரலைவாய் அமர்ந்துறையும் ஆண்டகையே
அடியவர்தம் துயரநீக்கும் விலையறியா மணிவிளக்கே வேல்முருகா வள்ளிகுறு
முறுவல் வேட்டோய் மலைகள்தொறும் ஆடல்புரி மதிக்கொழுந்தே உணதரிய
மறைசேர் பாதம் நிலைபெறுநன் மனத்தடிய்ார் பெயர்கேட்கத் துயர் உலகில்
நிற்ப தாமோ..?
இறைவனது திருப்பாத கினேவுகொண்ட மனத்தடி யார் பெயர்கேட்டால் துன்பமே தோற்ருேடிப்போம் என்ற இக் கவிஞருடைய சிறந்த கருத்தானது, எவரையும் அவன் மலர்ப்பதத்தே கருத்தூன்றச் செய்துவிடுகின்றது.
முருகனிடத்து மட்டுமன்றி நடராசரது திருப்பதியான சிதம்பரத்தின்மீதும் இவர் கொண்டிருந்த ஆராக்காதலை இப்புலவர் செய்த தில்லை நடராசர் பதிகம் ஒருவாறு காட்டுகின்றதென்னலாம்.
* காவிரிசூழ் பணைநாட்டுக் கரைவளரும் அருட்சோதி ! தேவர்குலக் கனகசபைத் திருமணியே! உனது நடம் பாவிப்பார்க் கினிப்பாவப் பங்குண்டா பற்றுளதோ தாவிப்போய் நின்னடியார் அவர்சரணஞ் சார்வாரன்றே.", என்ற திருப்பாடல் சிதம்பரஞ் செல்லாமலே தில்லையா னது அருட்சோதித் திருவடியை இவர் கண்ட சிறப்பினை எடுத்துவிளக்குவது.
* தோற்றந் துடியதனில் தோயுக் திதியமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதமுத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.”

புலவர் பரம்பரை 259
என்னும் இறைவனது ஐந்தொழில் வெண்பாவை அடிக் கடி மனமுருகி இவர் பாடுவதுண்டு. இவருக்கு உயிர் போன்றிருந்த சமயநூல் திருவாசகமாகும். தம் மக்களுக் கென இவரால் நடத்தப்பெற்ற தமிழ் வகுப்பிலே நிகண் டும், திருவாசகமும் முதன்மையான பாடங்களாயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பத்தி வெள்ளத்தில் மிதந்து அவ்வப்போது இவர் பாடிய தனி விருத்தங்களும் அகவல்களும் மிகப் பல உள. இயற்றமிழிலே வல்லுனராயிருந்த இவர் தமிழ் நாடகப் புலமையிலுஞ் சிறந்தவராக விளங்கினர் என்பதை நாம் அறியும்போது வியப்புண்டாகும். வடமோடி’, ‘தென் மோடி’ என்று நாம் கண்ட நாட்டுக்கூத்து வகைகளை முறைப்படி ஆடவும் வல்லவராக இருந்த இவர், தம் காலத்தே மண்டூரில் வளர்ந்த நாடகக்கலே அரங்குகளை யும் தாம் புனைந்து நடித்த கோலங்களால் அணிசெய்தார் என்பர். கூத்துகளுக்குரிய விருத்தங்கள் பலவற்றை இவர் அவ்வப்போது ஆக்கியளித்திருப்பதாகவும் கூறுகிருர்கள்.
கலைஞர்களையும் புலவர்களையும் நீண்டகாலத்துக்கு இறைவன் இந்த உலக ஊழல்களில் விட்டுவைப்பதில்லை என்பர். அக்கூற்று புலவர் வினுசித்தம்பி அவர்களைப் பொறுத்தவரையிலும் பொய்த்துவிடவில்லை. தமது நாற் பத்திமூன்றுவது வயதிலேயே இம் மண்ணுலக வகுப்பு களிலிருந்து கிலேயான ஒய்வினை இவர் பெற்றுக்கொண்ட போது அன்னரது மாணவர்குழு கிலேகலங்கிற்று. மண் டூரில் விளங்கிய பயன் பழகும் வகுப்புக்களுக்கும் ஈடு செய்யமுடியாத பெருகட்டம் உண்டாவதாயிற்று.
இப் பெருமகனர் எனது தந்தையார் ஆவர். என் இளமைக்காலத்து அவர் ஊட்டிய பிள்ளைப்பாடங்களே சிறிதளவு தமிழ்ப்பற்ருயினும் என்னிடம் உண்டாகக் காரணமாயின. அவரது புலமைப் பெருக்கினையிட்டு இங்கு நானே எழுதக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தமை நான் செய்த புண்ணியம். அதனை எண்ணும்போது எனக்குறும் பெருமகிழ்வு எல்லையற்றதாகும்.

Page 155
VIII. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
மட்டக்களப்புத் தமிழகத்தின் புலவர் பரம்பரையில், விபுலாநந்த அடிகளாரை அடுத்து எண்ணத்தக்க தமிழ்ப் பேரறிஞராய் இன்று விளங்குபவர் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை (படம் 35). பண்டிதர்களும், புலவர் களுமாகப் பலர் இத் தமிழகத்தினை அழகு செய்தபோதி லும் அச் சிறப்புப் பெயர்களாற் குறிக்கப்படும் பெருஞ் சிறப்பினைத் தமக்கே ஆக்கிக்கொண்ட புகழாளர். இந் நாட்டுத் தமிழ் அறிஞர்களின் சார்பாக ஒருவர் வெளி இடங்களுக்குச் செல்ல வேண்டிவரும் சந்தர்ப்பங்கள் கூட இவராலேயே அழகுறுத்தப்படுவனவாகும்.
இந்துமத பரம்பரையினராய்ப் பிறந்து, ஒரு சைவப் பெரியாராகவும் இன்று விளங்கும் பண்டிதமணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள் மண்டூர்க் கந்தசுவாமிகோயி லின் வண்ணக்கராய் இருந்து முப்பத்தீராண்டுகள் அதன் பணிகளைத் திறம்பட நடத்திய ஏகாம்பரபிள்ளை என்பாரின் மூத்த மகனுய் விளம்பிவருடம் மார்கழிமாதம் இருபத்தைந்தாந்தேதி (18-12-1899) பிறந்து, செல்வ மாக வளர்ந்து இளமையிலே குருகுல முறைப்படி தமிழ் இலக்கிய, இலக்கணம், நிகண்டு என்பவற்றைக் கற்றுச் கொண்டவர். கந்தபுராணம், திருச்செந்தூர்ப் புராணம், மகாபாரதம் என்பன மூலபாடமாக அக்காலத்தில் இவ ருளத்தைக் கலேவளம் செய்தன. இன்னரது இளமைக் கால ஆசிரியராக வாய்த்தோர் மட்டக்களப்பை கிரந்தர வாசமாகக் கொண்ட யாழ்ப்பாணத்துப் புலோலியூர்ச் சந்திரசேகரம்பிள்ளை என்பார் ஆவர். தம் அன்னையாரின் பிரிவு காரணமாகப் பெரியதம்பிப்பிள்ளையவர்களின் தமிழ்க்கல்வி இடையீடுபட்டமையால், சிலநாட்களின் பின் னர் ஆங்கிலம் படிப்பதற்காகக் கல்முனையிலுள்ள 'லீஸ் ? உயர்தரப்பாடசாலையிற் சேர்க்கப்பட்டார். அங்கு சேர்ந்த இரண்டாண்டுகளிலேயே எட்டாவது வகுப்புவரைதேறிய

புலவர் பரம்பரை 26 1
திறமையாளர் இவர். ஆயினும் ஆங்கிலக் கல்வியிலே கவர்ச்சியில்லாது, தமிழ் உயர்தரக் கல்வியிலேயே நாட்டங் கொண்டிருந்த இளைஞர் பெரியதம்பிப்பிள்ளை தனக் கொரு நல்லாசிரியர் வாய்க்கப்பெறுவாரோ என்று ஏக்கங் கொண்டிருந்தகாலம் அது.
அப்போதுதான் மண்டூர்க் கந்தசுவாமி கோயிற் (படம் 4) திருவிழாவுக்கென யாழ்ப்பாணத்திலிருந்து வந்து செல்லும் தமிழன்பரும் ஒரு புத்தக வியாபாரியுமான மட்டு வில், திரு. ச. தம்பிமுத்துப்பிள்ளை என்பாரது தொடர்பு இவருக்குக் கிடைக்கலாயிற்று. அன்னர் தொடர்பால் ஆங்கிலக் கல்லூரியை விடுத்து, யாழ்ப்பாணத்து காவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைக் காவிய பாடசாலையிற் சேர்ந்து கலைத் திறனுக்காக அளிக்கப்படும் கல்வி நன் கொடை பெற்றுச் சுன்னேக் குமாரசுவாமிப் புலவரதும், நாவலரது பெரிய தந்தையாரின் மகனுகிய தமிழ்ப் பேரறி ஞர் திரு. த. கயிலாயபிள்ளை ஆகியோரதும் அன்பின் மாணவனுகும் வாய்ப்பினையும், பண்டித மகாலிங்கசிவம், பண்டித மயில்வாகனனுர் என்பவரை உசாத்துணைவராகப் பெறும் பேற்றினையும் பெற்றர்கள். அக்காலம் யாழ்ப் பாணத்து, பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்பாருடன் கல்வி பயின்று அவரது பெரும் நண்பினனுகும் சிறப்பினை யும் அடையலானர். இரண்டாண்டுகளில் மற்றைய மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்த தமிழ், வடமொழி களில் இலக்கிய, இலக்கண பாடமன்னத்தையும் பத்து மாதங்களிலேயே கற்றுத் தேறிச் செந்தமிழ்ப்பரிபாலன சங்கத்தார் நடத்திய பரீட்சையில் விசேட சித்தியெய்தி அவர்களது பாராட்டும் பரிசும் பெறுவாராயினர். இச் சிறப்பினுல் குமாரசுவாமிப் புலவருடைய நல்லன்பும் மதிப்பும் இவர்பால் அதிகமாயின. பண்டிதர்' என்ற கலைச் சிறப்புப்பெயரால் நாடும் இவரைக் கொண்டாடுவ தாயிற்று.
அக்காலத்திலேயே, இவராக்கிய முதல் நூலாகிய மண்டூர்ப்பதிகம் எழுந்தது. பண்டிதர் மயில்வாகனனர் (விபுலாநந்த அடிகள்) அளித்த :

Page 156
262 மட்டக்களப்புத் தமிழகம்
“பண்டுரு முகிற்குலங்கள் எமதிறைவர் மருகர்திருப்
பதியீ தென்ன விண்டுர மழைபொழியுஞ் சிறப்பதனல் வளம்மலிந்து
மிகுந்து தோன்றும் மண்டூரில் உறைமுருகன் மலரடிக்கோர் திருப்பதிகம்
மரபிற் சொற்ருன் கண்டுரு மினியமொழிப் பெரியதம்பிப் பிள்ளையெனும்
கலைவல் லோனே.”
என்னும் அழகிய விருத்தப்பா ஒன்றின லமைந்த சிறப் புரை கொண்டு 1922ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்த போது அதன் பெருமையினல் அறிஞர் பலருடைய கன் மதிப்பு இவருக்குக் கிடைக்கலாயிற்று. அக்காலத்தில் பண்டித மயில்வாகனனர் யாழ்ப்பாணத்துச் சம்பத்திரிசி யார் கல்லூரியில் ஆசிரியராக வந்திருந்தபடியால் அவ ருடைய பழந்தொடர்பும் நீங்காமலிருந்து இவருடைய தமிழுளத்தை மேலும் வளஞ்செய்தது.
புலவர்மணியவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தகாலத் தில் இவரிடம் ஈடுபாடுகொண்டவரும், பள்ளர் குலத் தைச் சேர்ந்த அன்பருமான ஆறுமுகம் என்பார் அடிக்கடி வந்து இவருடன் பழகிப் போவதுண்டு. தாழ்த்தப் பட்ட குலத்தவரான ஆறுமுகத்தினுடன் பிள்ளையவர்கள் நெருங்கிப்பழகுதல் சரியன்று என்று மற்றையோர் தடுத் துக் கூறியபோதும், கல்வியறிவு, கடவுட்பக்தி, அன்பு, ஒழுக்கம் என்பவற்றிற் சிறந் திருந்த அன்னரது தொடர்பைவிட்டு நீங்குதல் இவரால் முடியவே இல்லை. அந்த ஆறுமுகம் இறந்தபோது இவர் மிகவும் வருந்திப் பிறப்பினுற் கற்பிக்கப்பட்ட குலநியதியை அவர் கடந்து சென்ற தன்மையைக் குறித்து :
* ஒழுக்கத் துயர்குலமாம் ஓங்கு புகழுண்டாம் இழுக்கத் திழிகுலமாம் என்றே-விழுப்பத்து நூற்குலத்தை எல்லாம் நுணுகியறிக் தாறுமுகன் மேற்குலத்த ஞனுன் விரைந்து.' என்று பாடி அமைதி பெற்ருர், உயர்குலம் பிறப்பானன்றி ஒழுக்கத்தினலேயே அளவிடப்படுவது என்பதை இப்

புலவர் பரம்பரை 263
பெரியார் இன்று சொல், செயல் இரண்டிலும் காட்டி
வருவதை அறிவோம். -
** மணத்தளவே யாகும் மலர்மாட்சி, மாந்தர்
குணத்தளவே யாகுங் குணம்.”
என்னும் இவரது செய்யுளும் இங்கே நினைவுகூரத்தக்கது.
கிறித்துமதக் கொள்கைகளிலே நல்ல பயிற்சியும் நம் பிக்கையுமுள்ள இவர் பின்னர், 1922இன் கடைசிப் பகுதியில் மதுரை சென்று பசுமலை வேதசாத்திர உயர் தரக் கல்லூரியில் ஈராண்டுகள் கிறித்துமதத் தத்துவங் களைப் பயின்ருர், அதன் பேருக இலங்கை, இந்தியா, பர்மா, மலாயா ஆகிய நாடுகளுக்கெல்லாம் பொதுவாக நடத்தப்பட்ட விவிலியநூல் விளக்கப் பரீட்சை ஒன்றில் முதல்வராகத் தேறி விசேட பரிசையும் கிறித்தவ உலகின் மதிப்பையும் ஒருங்கே பெற்ருர். அந்த நாட்களிலேதான் ஐம்பது விருத்தங்களாலான * கிறித்தவ சபைத் துயி லுணர்ச்சி’ என்னும் இவரது நூல் மதுரையில் அரங் கேற்றம் பெற்றது. மதவுணர்ச்சி குன்றித் தமிழ் மரபு கடந்து நடந்த கிறித்தவர்களது போக்கினைக் கண்டித்து மத ஒழுங்குகளாயினும் அவை நாட்டு மரபினே இகவாது கடத்தல் வேண்டும் என்று இடித்துக் கூறுவதாயமைந் தது இந்நூல்.
* ஆடும் பாம்பு செயலடங்க அடங்கா யானை மதமடங்கப்
பாடும் இனிய இந்தியசங் கீதம் பாடீர் புகழ்பாடீர் ஒடும் மனத்தை ஒருநிலையில் ஒடுக்கீர் கதியை உறுவதெங்கன் வீடும் கதிக்கே செல்லாது விரைந்து வாரும் சபையோரே.??
இந்திய நாட்டு இசைச் செல்வமானது பழங்காலந் தொட்டுப் பெற்றிருந்த வலிமையை நன்கு காட்டி, மேலைத் தேச இசைகளை விட்டு அந்தத் தமிழ் இசையை மீட்கு மாறு கிறித்தவ சபையோரை இச் செய்யுளிற் கேட்கிருர், இதனையொட்டி இவரால் * குருபர தரிசனத் திருவேட்கை ? என்ற நூலும் பத்து விருத்தங்களா லாக்கப்பட்டது. கட வுட் தாகம் செறிந்த இவருள்ளச் சிறப்பை :

Page 157
264 மட்டக்களப்புத் தமிழகம்
* தானன அன்பரும்பித் தருமம் பூத்துத்
தாவாத இனிமைதரும் பரமா னந்தத் தேனுறு பெருக்கெடுத்துக் கரைபு ரண்டே
திருவருளாந் தெள்ளமுதம் கொழித்து வீச கானுர்வ முடனள்ளி யுண்ண வூட்டி
நரகமதை நீக்கிநித்திய சீவ னியும் கோனுகும் ஒருசீவ விருட்சங் தன்னைக்
குருபரனைக் கண்டுகண்கள் குளிர்வ தென்றே.’ என்பதுபோன்ற அந்நூற் செய்யுள்தோறும் நன்கு காண லாகும். இவற்றின் சிறப்பினுற் தமிழகம் எங்கும் புலவர் புகழ் பரந்து சென்றது.
அந்த நாட்களில் பண்டித மயில்வாகனனர் துறவுப் பெருநிலை பெற்றுச் சுவாமி விபுலாநந்தராகி மதுரைக்கு வருகிருர் என்று கேள்வியுற்று அவரைத் தேடிக் காணச் சென்றனர். தன் அன்பின் * பெரியதம்பி’ ஈழந்துறந்து இந் திய மண்ணில் வந்துள்ள நிலைமையை அறிந்த சுவாமிக ளும் அவரை நேரிற் காண்பதற்குரிய நாளை எதிர்நோக்கி இருந்தார்கள். நீண்டநாட் பிரிந்திருந்த தனது தமிழ் நண்பரை அடிகள் ஒருநாள் மதுரையிலே மங்கம்மாள் சத்திரத்தில் தலைப்பெய்தபோது, நீங்கா அன்பினுல் முன் சென்று இறுகத் தழுவிக்கொண்டனர். இது தம் வாழ் வில் மறக்கமுடியாத ஓர் உருக்கமான நிகழ்ச்சியாகும் என்று புலவர்மணியவர்கள் கூறுவார்கள். மட்டக்களப்பு நாட்டிலே தமிழும், சைவமும் வளம்பெறுவதற்காய்ச் சுவாமிகள் செய்யப்புகுந்த சேவையில் பிள்ளையவர்கள் துணையாதற்கு அச் சந்திப்பு வழியாயிற்று. உடனே, மீண் டும், ஈழத்திற்கு வரவேண்டும் என அடிகள் தமிழ் மணியைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி திருக்கோண மலை இந்துக்கல்லூரியில் இவரது ஆசிரியப்பணி சுவாமிக ளுடன் தொடங்கலாயிற்று.
அந்தக்காலத்திலே, 1928இல் காந்தியடிகள் இலங் கைக்கு எழுந்தருளினர்கள். திருக்கோணமலை மக்களின் சார்பாகப் பிள்ளையவர்களே அம் மகானுக்கு வரவேற் புப் பத்திரம் படித்து அடியுறை செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டனர். அநுராதபுரத்துப் புகையிரத நிலையத்தில்

புலவர் பரம்பரை 265
வைத்து அவர் படித்துக்கொடுத்த உபசாரப் டத்திரத்தி லிருந்து ஒரு வெண்பாவினை இங்கே காணுதல் நன்ருகும் :
* தீண்டாமை நோயதனைத் தீர்க்கும்சஞ் சீவிபகை
வேண்டாமே சாத்விகப்போர் வேண்டினேன்-தூண்டாச் சுடர்விளக்கம் போல் நின்று தோற்றினன் மண்மேல் இடர்விளக்க மில்லை யினி.??
அறப்போர், தீண்டாமை எதிர்ப்பு என்பவற்றையே காந்தியடிகளின் நல்லுருவமாகக் காட்டி, அன்னரது உண்மையால் உலக இடர் இல்லையாகும் என்றமைந்த கற்பனையானது இவ் வெண்பாவினை அழகு செய்து கிற் பது நயக்கத்தக்கதாகும்.
1926ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு ஆண்டுக ளாகத் திருக்கோணமலையில் இருந்த காலத்தில் இவரிடம் தமிழ் பயின்ற மாணவர் பலராவர். புலவர்மணியவர்கள் சீவகன் சரித்திரத்தை பாலசரித நாடகம் ' என்னும் நாடக நூலாயமைத்து வெளியிட்ட காலமுமிதுவே. இவற் ருல் இன்னருடைய தமிழ்ப் புலமையை மெச்சி, மட்டக் களப்பு சென்ற் அகுஸ்தீன் ஆசிரியகலாசாலைக்குத் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையேற்க வருமாறு அதன் தலைவர் கள் அழைப்பு விடுத்தனர். இவரைத் தம்மிடத்திலிருந்து விடுக்க மனம் ஒவ்வாத விபுலாநந்த அடிகளார், தம் ஆசிரியரான வணக்கத்துக்குரிய பொணல் சுவாமி யாரும் பெரியதம்பி அவர்களை அங்கு அழைக்கவே விரும்புகிருர்கள் என்பதை அறிந்து எதிர்மொழி கூருது விடுத்தனர்.
அவ்வாசிரிய கலாசாலையிலிருந்த ஒன்பது ஆண்டு களிலும் கத்தோலிக்க குருமார்கள் பலர் புலவர்மணி யிடம் தமிழறிந்தின்புற்றனர். இவரிடத்திற் பயின்று நல் லாசிரியர்களாகியும், தமிழ்ப் பண்டிதர்களாகியும் இத் தமிழகத்தை அணிசெய்து வெளியேறினேர் பலராவார் கள். அக்காலத்தில் இவ்வறிஞரேருத இலக்கிய மேடையே இல்லை எனலாம். தமிழ் நல்லாள் இவர்காவில் மட்டக் களப்புத் தமிழகத்திலே இலக்கியகடம்புரிந்து நாட்டிற்குப்

Page 158
266 மட்டக்களப்புத் தமிழகம்
பெருஞ் சிறப்பை நல்கினள். எனினும், இயற்கை இன் பத்தில் திளைத்துநிற்கும் புலவர்மணி அவர்கள் இலங் கைக் கல்விப்பகுதியார் தமிழறிஞர்களை நன்கு மதியாமை குறித்து வெறுப்புற்று அவ் வேலையினின்றும் விலகி மண் டூர் சென்று அமைதியாக வாழ விரும்பினர். ஆயினும் அமைதியாக வாழ்வதென்பது அவரால் முடியவில்லை. முன்ருண்டுகாலத்துக்குக் கடமை என்னும் சுமை அவ் வூர்த் தபாற்கந்தோரதிகாரி என்ற பதவியாக இவர் தலைமேல் ஏறிற்று. இப்பணி கிடைத்தமை ஒன்றினலே, மண்டூர் மக்கள் அவரைக்கொண்டு தமிழ்ப் பயனும் பெற முடிந்தது. இக்காலத்திலே, எனக்கும் இப் பெரியாருக் கும் இருந்த இனஉறவு கலேயுறவாக மேலும் வலுப் பெறலாயிற்று. அவ்வுறவு, தொல்காப்பியத்து எழுத்து, சொல் அதிகாரங்களிலும், பொருளதிகாரத்துச் செய்யுள், அணி இயல்களிலும் யான் அறிவுவிளக்கம் பெறுதற்கு வழிகோலியது. ஆயினும், தொடர்ந்து அச் சூழ்நிலை நீடித்தற்கு இவரது அறிவுப்புகழ் இவரை விட்டுவைக்க வில்லை. மீண்டும் அதே ஆசிரிய கலாசாலேயினர் இவரை வருந்தி அழைத்துத் தமது நிலையத்தைச் சிறிதுகாலம் மேலும் அழகு செய்துகொள்வாராயினர்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் விளைவாக, இலங்கை தனது உணவுக்குத் தன் கையையே எதிர் பார்த்திருந்த காலம் அது. மட்டக்களப்பு 15ாடு இலங் கைக்கு நெற்களஞ்சியம்போன்ற தென்பதை அரசினரும் உணர்ந்து இப் பகுதியில் நெல் விளைவைப் பெருக்குவ தற்கும், கெல் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதற்குமாகக் கல்முனையில் ஒரு கச்சேரியை நிறுவினர். கொழும்புச் சகிராக் கல்லூரியின் தலைவராகவும், செனட் சபையின் அங்கத்தவராகவும் இருந்த திரு. ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்கள் அக் கச்சேரிக்கு உதவி மாகாண அதிபராக வந்தார். பெரியதம்பிப்பிள்ளை அவர்களது அறிவு, புலமை என்பவற்றை யாழ்ப்பாணத்திலேயே நன்கறிந்து பெரு மதிப்பும் நண்பும் கொண்டிருந்தவரான அஸிஸ், நல்ல தமிழ் ஆர்வமுடையவர். அதனல் புலவர்மணியைத் தம் பக்கத்திலேயே வைத்துப் பயனுற வேண்டும் என்று கருதி இவரது தமிழ்த்துணையை வேண்டினர். பிரியா

புலவர் பரம்பரை 267
அன்பினுல் அடிக்கடி அஸிஸ் அவர்களுடன் மட்டக்களப் பின் பல பகுதிகளுக்கும் செல்ல நேர்ந்த காரணத்தால் கிராமந்தோறுமுள்ள பொதுமக்களிடையே நெருங்கிப் பழகுதற்கும், நாட்டின் வயல்வளத்தை நன்கு கண்டு ரசித்தற்குமான பொன்னட்கள் சிலவற்றைப் புலவர் 1>னிகளாற் பெற முடிந்தது. மட்டக்களப்பின் இயற்கை வளமும், அழகும் இவர் புலமையில்ை அனிைபெறுதற் கும் அக்காலம் வாய்ப்பாயிற்று.
1943இல், கல்முனையில் நடைபெற்ற அகில இலங்கை விளைவு விழாக் காட்சியிலே இலங்கை முழுவதற்குமாக இரு பாடற் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் * புதுமைக் கமக்காரன்’ என்ற தமது இசைப்பாடல்களா லும், கிருஷிக ஆத்திசூடி ' என்ற தனிச் சூத்திரங்களா லும் புலவர்மணி அவர்களே முதற் பரிசுகளிரண்டை யும் பெற்று அரசினரின் பெருமதிப்பையுங் கவர்ந்து கொண்டனர். மட்டக்களப்பில் இருந்த வயல்வளத் தோடு இவ்வாறு தமிழ் வளத்தையும் வளர்த்த அளபீஸ் அவர்கள் இடமாறிச் செல்ல நேர்ந்தபோது இவர் பாடிய பாக்களுள் :
* புலத்துயர்ந்து வண்மைப் புகழ்க்கதிர்கள் வீசி
நிலத்ததிகா ரம்செய்து நின்று-பலத்தினிறை
நல்ல களம்பொலிந்து நாடு புரத்தலால்
நெல்லுமளிரீஸ் துரைக்கு நேர்.’ என்னும் இனிய வெண்பாவும் ஒன்ருகும். நெல்லேயும் அதன் விளைவினையும் இங்குப் பெருக்கவந்த அளிஸ் அவர்களையும் புலத்துயர்தல், புகழ்க்கதிர் வீசுதல், அதிகா ரம் செய்தல், களம் பொலிதல், நாடு புரத்தல் ஆகிய தொழில்களால் ஒன்றுபடுத்தியமைத்த சிலேடைநயம் இனிதே விளங்குவதை இதிற் காணலாம்.
ལ་ அவ்வாண்டிலே தமது மனைவியார் கொடிய நோய் வாய்ப்பட நேர்ந்தபோது, கொழும்பு அரசினர் வைத்திய சாலையில் அவரைச் சேர்த்துவிட்டுக் கொழும்பிலேயே ஒருமாதகாலம் இவர் தங்கியிருக்க நேர்ந்தது. அக்காலத் தில் இவர் மனச்சாந்தி பெறும்பொருட்டுப் பகவத்கீதை என்னும் சங்கத நூலைப் படித்துவந்தார். வட மொழிச்

Page 159
268 மட்டக்களப்புத் தமிழகம்
சுலோகங்களைப் படிக்கப்படிக்க அவை தமிழ் வெண் பாக்களாக அழகிய வடிவம் பெறலாயின. அவ்வாறு எழுந்த எழுநூறு வெண்பாக்களைக் கொண்ட பகவத் கீதை வெண்பா ? என்னும் சிறந்த நூலைக் காலம் நமக் களித்து இவரது புலமையினே மேலும் மலைவிளக்காக்கி யது. வெண்பாக்களா லமைந்த இவரது தனிச் செய் யுள்களின் சிறப்பினேடு, அவற்றின் சுவைநயத்தையும் கண்டு வியந்த அறிஞர்குழு ஒன்று இலங்கை வானெலிப் புத்திமண்டல நிகழ்ச்சியின்போது விபுலாநந்த அடிகள் தலைமையிற் கூடி, 8 வெண்பாவிற் பெரியதம்பி’ என்று புகழ்குட்டி இவரைக் கெளரவப்படுத்துவதாயிற்று.
* முன்னைப் பிறப்பில் முகிழ்புத்தி யோகத்தைப்
பின்னைப் பிறப்பிற் பெறுகின்றன்-முன்னேதான் விட்டகுறை தன்னை விடாது நிறைவுறவே தொட்டுமுயல் கின்றன் தொடர்ந்து.’
* அற்றது பற்றெனின் உற்றது வீடு ’ என்ற பழங் கருத்தை நன்கு வலியுறுத்திப் பிறவிக்கேதுவான அவ் வாசைத் தொடர்ச்சியின் வலியைத் தமிழ்மரபு கடவாது இவ் வெண்பாவில் கவிஞர் அமைத்துள்ள சிறப்பினை வடமொழிக் கீதையை நன்கு பயின்ருேர் அறியலாகும்.
கண்ணுக்குத் தெரியாது தொடரும் அந்த ஆசையின் அளவை :
* பொங்கொளிசேர் தீயைப் புகைபோர்த் தெனப்பளிங்கை
மங்கப் புழுதி மறைத்ததெனத்-தங்கும் கருவைக் கருப்பை கவிந்த தெனக்காமம் மருவிப் புகைபுதைக்கு மால்.’ என்னும் அழகிய உவமைகளா லமைந்த வெண்பாவும், ஆசையின் தொடர்பாற் கோபம் பிறத்தலை :
* உன்னும் விடயத்தா லுண்டாமே பற்றுள்ளம்
பின்னை விருப்பம் பிறக்குங்காண்-துன்னும் மனவிருப்பம் சித்திபெற வாய்த்திலதே லஃதாற் சினமுறுதல் மாந்தர் செயல்.’ என்னும் இனிய தீஞ்சொற்கள் செறிந்த வெண்பாவும் நன்கு காட்டுகின்றன. இத்தகைய உயரிய நடையும்

புலவர் பரம்பரை 269
இனிய சுவையும் படைத்த பகவத்கீதை வெண்பா எட் டாண்டு கழிந்தபின் 1-12-52இல் யாழ்ப்பாணத்து ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்து வெள்ளிவிழா வின்போது பேரறிஞர் குழுவிடை நல்லரங்கேற்றம் பெற் றது. இந்நூற் பெருமையினை வியந்து அச் சங்கத்தார் அந்நாளில் பண்டிதமணி ' என்னும் பட்டமும் வழங்கி இவரைக் கெளரவம் செய்தனர்.
புலவர்மணியவர்கள் மூன்று ஆண்டுகளை நிலவளச் சேவையில் இடைக்காலத்துத் கழித்த பின்னர் 1947இல் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலை வராய் அமர்ந்து, 1952 தொடக்கம் மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன்றத்திலும் தலைமைப் புலவராய் அமைந்து மட்டக்களப்புத் தமிழகத்தை அழகுசெய்து வந்தனர். கிழக்கிலங்கையில் தமிழ் வளர்க்கும் இக் கலைமன்றம் வெளிநாட்டாருக்கு முன்னரே 1950இல் இவரது புலமையை மதித்துப் ‘புலவர்மணி’ என்று புகழ் சூட்டி யதன்மூலம் தனது மதிப்பையும் உயர்த்திக்கொண்ட தெனலாம்.
தன் இளமைக் காலத்திலேயே கல்விச் சிறப்பினுல் * பண்டிதர் ' என்ற சிறப்புப் பெயரை வித்துவான் சரவணமுத்தணுல் முதலிற் சூட்டப்பெற்றிருந்து, மட்டக் களப்புத் தமிழ் இலக்கிய மன்றம், மட்டக்களப்புச் சிவா னந்த வாசிகசாலை என்பவற்றை யமைப்பதற்காக அவ ருடனும், விபுலாநந்த அடிகளுடனும் பங்குகொண் டுழைத்த இப்புலமையாளர் 1946இல் அடிகளார் நெருப் புக்காய்ச்சலால் வருந்தியபோது அந் நோயினின்றும் நீங் கித் தமிழகத்தைஅழகுசெய்தற்கான உடல்நலத்தினை அவர் மீண்டும் பெறுதல் வேண்டும் என்று பெரிதும் விழைந் தார். அந்த மன விழைவும், தமிழடிகளிடத்துக் கொண்ட பேரன்பும் கனிந்து 8 மீட்சிப்பத்து ’ என்னும் தலைப்பி லமைந்த பத்து நெடிலடி விருத்தங்களா யெழுந்தன. அவற் றிலே, திருவருளை வேண்டுதல் செய்து கூவுமாறு குயிலே விளித்து, அவ்வாறு வேண்டுதற்குக் காரணமான விபு லாநந்தரது புகழையும் அமைத்தனர். “ எனது செவிக்கு நல்லமுதூட்டும் இனிய தமிழ்க் குரவன், தமிழ் நாட்டுக்கு

Page 160
s70. மட்டக்களப்புத் தமிழகம்
மட்டுமன்றிப் பாரததேசம் முழுமைக்கும் பொதுவான பெருஞ் சொத்தானவன், அழகிய கருங்குயிலே ! அவன் புகழை நீ பாடிச் செல்லுவையேல் உனது பொன் வாயிலே தமிழமுதத்தை அவன் விருந்துசெய்வாணுதலால் நீ வீணே அலைந்து வறுந்தளிர் குடைந்து வருந்துதலே விட்டு அவனிடம் செல்லுதி. தமிழன்னை தன் துயர்நீங்கவும், தமிழகம் புகழ்மிக்கு ஓங்கவும், உலகறிந்த சமநிலையினே நோக்கித் தமிழ்மொழி உயரவும், அதனுற் பெருமை கொண்ட தமிழன் தலைநிமிர்ந்து தன் மானமுடன் நடக் கவும் காரணமான தமிழறிஞன் விபுலாநந்தன். அவ னுடைய பெருமை இடம்பெறுவதென்ருலே கவிகள் சிறப் படைந்து விளங்குவ, என்பன போன்ற உயர்ந்த பொரு ளமைதி பெற்றவை இச் செய்யுள்கள்.
*செவிக்கினி தாகச் செந்தமி ழுறுத்துமென் தேசிக மணிகண்டாய் சீரியல் ஈழத் திருமணி பாரத தேசப் பொதுமணிகாண் புவிக்கினி யலைந்து வறுந்தளிர் கோதி
வருந்தேல் போவாயேல் புத்தமு தளைந்த முத்தமி பூமிதழுன்
பொன்வாய் விருந்திடுவான் தவிப்பினி நீங்கித் தமிழ்மொழி யோங்கத்
தாய்நா டின்புறவே தமிழன் தன்றலை நிமிர்ந்தே உலக சமத்துவ மோங்கிடவே கவிக்கினி யான்சுக மீள்கென வினிதே
கூவாய் கவின்குயிலே கண்மணி விபுலா நந்தன் மீள்கெனக்
கூவாய் கவின்குயிலே "
எனக் கூறுவதாய் அமைந்த இத்தகைய செய்யுளனைத்தும் படிப்போரது தமிழ்நெஞ்சை யுருக்கி விபுலாநந்த அடி களாருக்காக இறைவனை நினைந்து வேண்டுமாறு நம்மை யழைத்து அவர் சுகத்தை மீட்டளித்த பொருள் நலம் கனிந்தவையாகும். இப் பாடல்கள் மட்டக்களப்புத் தமிழ்க் கலை மன்றத்தின் முதலாவது மலராக 1951 இல் வெளி வந்தன.

புலவர் பரம்பரை 27
இலங்கைக் கலைக்கழகம், இலங்கை வானெலிக் கல்விப்பகுதி ஆலோசனைச் சபை, கிழக்கிலங்கைச் சமா தான விசாரணைக்குழு, யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்துப் பரீட்சைக்குழு என்பவற்றின் உறுப்பினராகவும், அகில இலங்கை இந்துமாமன்றம், கிழக்கு மாகாணக் கூட்டுறவுச் சங்கப் பேரவை ஆகிய வற்றின் உதவித் தலைவராகவும் விளங்கும் இவ்வறிஞர் முதியோரிடத்தும் குழந்தைகளிடத்தும் அன்பொழுகப் பேசும் இயல்புடையவர். நகைச்சுவை ததும்பப் பேசும் வல்லமையும் நிறைந்த இவரை நாம் தலைக்கூடுதற்கு நேர்ந்தால் இலகுவாக அப் பிணிப்பை விட்டு நீங்குதல் ஒண்ணுதாகும்.
இயல்பாகவே கவிபாடுதலில் வல்ல இவர் ஒருமுறை * வஸ் வண்டி ஒன்றிற் பிரயாணஞ் செய்தபோது, ஆங் கிலம் சிறிது கற்றவராய் மேல்நாட்டுடை அணிந்து வந்து அதே வஸ்ஸில் ஏறிய ஒருவருக்குத் தமிழுடை யணிந்த பெரியார் ஒருவர் எழுந்து தம்மிடத்தைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே நமது புலவரது வாயிலிருந்து :
* முன்னை வடக்கால் முளைத்தநாற் சாதிபோய்ப்
பின்னையிரு சாதி பிறந்துளகாண்-அன்னியர்தம் ஆங்கிலத்தால் மேல்சாதி யாயிற்றே தாய்மொழிகற்று ஏங்கிநிற்கும் கீழ்சாதி யே? என்று அருமையான வெண்பா ஒன்றெழுந்து அந்நிலை யையே மாற்றிவிட்டது.
தமிழையும் தமிழ் கற்ருேரையும் தம்முயிராகக் கருது மிவர் ஒருபோது இலங்கைக் கல்விப்பகுதிக்குத் தலைவ ராக இருந்த தமிழறிஞராகிய அருணந்தி அவர்களை ஒருநாள் கண்டதும் தமிழ் கற்றேரின் அல்லல் நிலை களைத் தம்மீதுவைத்து :
* தாப்பிய லூசல் எனத்தடு மாறுந் தனித்துயர்யான்
நீப்பிய லாது தமிழா சிரிய நிலையிலிங்கே யாப்பியல் மெய்போல் மதிப்பில ஞகி இருத்தல்நன்ருே காப்பியம் வல்ல அருணந்தி செந்தமிழ்க் காவலனே ?

Page 161
272 மட்டக்களப்புத் தமிழகம்
என்று நயம்பட எடுத்துக் காட்டினர்கள். "யாப்பியல் மெய்போல்’ என்ற உவமானம் தமிழ்ப்புலவோர் நெஞ்சை யள்ளும் தன்மை வாய்ந்து விளங்குகின்றது.
* வண்மைத் தமிழ்க்கு வரம்பு, வடமொழியின்
உண்மைத் தெளிவுக் குரையாணி,-கண்மணியென்
சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி,
சென்னிக்கு யான்செய் சிறப்பு?? என்ற வெண்பா ஒன்றே தமது நல்லாசிரியரான குமார சுவாமிப் புலவரிடத்து, இவர் கொண்ட மதிப்பையும், பணிவு, அன்பு ஆகியவற்றையும் நன்கு புலப்படுத்து தற்குப் போதுமானதாகும்.
தமது அருமை நண்பராகிய பண்டித மகாலிங்க சிவம் அவர்கள் பூதவுடல்விட்டுப் புகழுடம்பு பெற்ற காலைப் பாடிய செய்யுள்கள் இவருடைய தமிழன்பின் பெருமையையும் நண்பு சிறந்த உளப்பண்பினையும் நன்கு காட்டுவனவாய் உள்ளன :
* மட்டுவிலாம் பூங்கொடியில் மலர்ந்தமலர் சாதிமலர் மலர்கள் தாழ மட்டவிழ்ந்து மணங்கமழ்ந்து வயங்குவார் மாணவராம் வண்டு சூழ்ந்து தொட்டருக்து மினியமலர் மகாலிங்க
சிவமலர்தன் தொடர்பாம் பாசக் கட்ட விழ்ந்து கருணைமலர் சிவபெருமான் கழல்மலர்க்கீழ்க் கலந்த தன்றே ’ என்ற இச்செய்யுளானது உயர்ந்த தத்துவப் பொருளை யும், இயற்கை நியதியையும் விளக்கி, மகாலிங்கசிவத் திடம் இவர் வைத்திருந்த பெருமதிப்பையும் காட்டிக் கற் போர் நெஞ்சைக் கவரும் செஞ்சொற்களால் அமைந்திருக் கின்றது. இவருடைய காவிலேறியதாற் சிலேடையணியே ஒரு சிறப்பைப் பெற்றுவிட்டதென்று கூறத்தக்க உயர்ந்த முறையில், அவ்வணி இவர் சொற்கேட்டு நடப்பதை மகாலிங்கசிவம், இராம5ாதன்துரை, சூரியோதய அத்த மனக் காட்சிகள் என்னும் பொருள்கள்பற்றி யமைந்த இவரது சிலேடைத் தனிப்பாக்களாலும் காமறியலாகும்.

புலவர் பரம்பரை 273
தண்டமிழோடு தாய்நாட்டினையும் மதித்துப் போற் றும் இவரது மனநிலை கனிந்து எழுந்த இலங்கை மணித் திருநாடு’ என்னும் இசைப் பாடலானது இலங்கையின் நிலவளம், கலைவளம் என்பன பொதியப்பெற்று, எல் லோரையுங் கவர்ந்து பெரும்புகழ் படைத்த ஒன்ருகும்.
* மாவலி கங்கைஎங்கள் வளருதியே-அருள் மன்னுசிவ னுெளிபாத மெங்கள் மலையே பூவலம் சேர்கதிரை எங்கள்தலமே-இதைப் போற்றிப் புகழ்ந்தால் வரும் பெருநலமே ’
என்பது முதலாக, இலங்கைக்கமைந்த ஒரு தமிழ்த் தேசியகீதம் என்று பாராட்டத்தக்கவாறமைந்த அப் பாடல்கள் மேற்கோளாகப் பல இடங்களிலும் எடுத் தாளப்பட்டுள்ள சிறப்பினையுடையன. மேலும் இலங்கை யின் எழிலேயும், வளத்தையும் குறித்து இவர் எழுதிய தனிப்பாடல்களோ மிகப் பல. ஈழநாட்டின் நெல் விளைவினைப் பெருக்குதற் கமைந்த கல்லோயாத் தேக்கத் தையும் அதனே ஆக்கிவைத்த அரசியற் சிற்பியான சேன நாயகா அவர்களையும் வியந்து இவர் பாடிய வாழி கல்லோயா நங்கை’ என்னும் பாடல்கள் இளங்கோ வடிகளின் கானல் வரிகளை நினைவூட்டி இன்பம் பயக்கும் அழகு வாய்ந்தன.
மானமழிந் தெய்தவரு வருமான மடையார் அலகில்புக ழாறுமுக நாவலனுங் கொடையார்
அவர் வாழும் யாழ்ப்பாணம் அனைவோர்க்கு மினிதே? என்று யாழ்ப்பாண கன்னட்டையும் ;
சுவாமிவிபு லாகந்தர் யாழிசைநூ லொலிக்கும் மஞ்சாரும் பொழில்மட்டு மா5ாட்டில் நிலைக்கும்
வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும்
இனிதே ? என்று மட்டக்களப்புத் தமிழகத்தையும்பற்றி இவர் பாடி யுள்ள தனிச் செய்யுள்கள் இரு நாட்டினிடத்தும் வேற் றுமையின்றி இவர் கொண்டுள்ள பேரன்பினைப் புலப்
18 - 0ו

Page 162
274 மட்டக்களப்புத் தமிழகம்
படுத்துவன. இவ்வாறு புலவர்மணி அவர்கள் செய்த தனிப்பாடல்கள் ஏறக்குறைய2500க்கு மேல் உளவாகும்.
இத்தகைய தமிழ்ப்பேரறிஞர் மட்டக்களப்பின் கடந்த காலப் புலவர் பரம்பரையின் வழித் தோன்றலாகவும், நிகழ்காலக் கவிஞர் குலத்தின் பேரெல்லையாளராகவும், வருங்காலக் கவிஞர்களுடைய மதிப்பினை அளவிடுதற் கோர் உரையாணியாகவும் நம்மிடை விளங்குகின்ருர், இனிய தன்மையும், உயர்ந்து நிமிர்ந்த தோற்றமும், அன் பொளிரும் கண்களும் அமைந்த இவர், 8 கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவ தாஞ் சொல் ’ என்ற வள்ளுவப் பயனுக்கு இலக்கியம் போன்றவர். ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய விரிவுரைகளைப் பல இடங்களிலும் நிகழ்த்திப் பெருமை கொண்டவர். இராமாயணம் இவருக்கு மிக வாய்ப்பான ஓர் இலக்கியமாகும். அதன் பொருளுணர்ச்சியில் இணை யற்று விளங்குபவரான இவ்வறிஞர் சில தொடர்களுக்கு எதிர்பாராதவண்ணம் நுண்ணிய உரையும் நயமும் கூறிக் கம்பநாடனது புலமையுள்ளத்தைத் தொட்டு நமக்கும் காட்டும் ஆற்றல் படைத்தவர். திருக்குறளும் இவர் உள்ளத்திலிருந்து வெளிவரும் சந்தர்ப்பங்களிலும் அத் தகைய உணர்ச்சியினை நாம் அடையலாகும். தமிழ் மொழியானது, பண்டுபோல் இன்றும் அரசியலரங்கில் முன்னிற்க வேண்டும் என்பது இவருடைய தீராத ஆசை. காலத்திற்கேற்ப அம்மொழி விரிந்து வளம்பெறுதல் வேண்டுமென்ற நற்கொள்கையுடையராய் இவர் இருத் தலை அன்னுரின் தமிழ் உரைகளில் நாம் பலகாலும் கேட் டுள்ளோம். இவ்வாறு தன் புகழால் தன்நாட்டின் புகழையே உயர்த்திய இப்புலவர் பெருமகனருக்கு மீண்ட ஆயுளை நல்கித் திருவருளானது தமிழ்மொழியினை மேலும் கவிதைச் செல்வத்தினல் நிறைக்குமாக.

IX. சின்ன ஆலிம் அப்பா
மட்டக்களப்பு நாட்டின் தமிழ் வளத்திற் பங்கு கொண்டு வாழும் சோனக சமுதாயத்தினரின் பிரதி நிதிகள் போன்று காலத்துக்குக் காலம் தோன்றிய முஸ்லீம் புலவர் பெருமக்களும் பலர் இங்கே இருக்கின் றனர். இலங்கை முஸ்லீம் மக்களுடைய தாய்மொழி தமிழா அன்றிச் சிங்களமா என்று அரசியல் அடிப்படை யிற் கேட்கப்படும் இந்நாளில், தமிழின் சார்பில் எழும் பெரும் குரலை மட்டக்களப்புத் தமிழகத்தின் இடந்தோறும் இம்மக்களிடை நாம் கேட்கலாகும். தமிழிலே பிறந்து, தமிழிலே வளர்ந்து, இன்பத் தமிழினையே பயின்று மகி ழும் தமிழ்ப் பெரும் குடியினர் இங்குள்ள சோனக மக்கள். மட்டக்களப்பில் வழங்கும் நாடோடிக் கவிகளிலே காதற்துறை சார்ந்த பாக்கள் பலவற்றை ஆக்கி யளித்த பெருமையாளர் இக்குழு மக்கள். * தமிழகம்’ என்பது முத்லாகத் தம் மனேக்குப் பெயர் கொடுத்து வாழும் உணர்ச்சியாளர் பலர் இக் குழுவினரிடை இன்று இருப்பது போன்று அன்றும் இருந்தனர் என்பதற்கு இவ ரிடையே தோன்றிய இனிய தமிழ்க் கவிதைகளைப் பொழிந்து சென்ற புலவர்கள் சான்ருக உள்ளனர்.
அவ்வாருன புலவர் பரம்பரையில் முதல் வைத்து எண்ணத்தக்க பெருமையாளர் இங்குக் குறிப்பிடப்பெறும் சின்ன ஆலிம் அப்பா என்பார். மருதமுனே என்ற பழம் பெரும் கிராமத்திலே ஏறக்குறைய நூறு ஆண்டுகளின் முன்னர் ஷெய்கு இப்ருகிம் லெவ்வை என்பாருக்கும் சூறைப்பாத்தும்மா என்பாருக்கும் பிள்ளையாகப் பிறந்த மீரா லெவ்வையே பிற்காலத்தில் ஆலிம் அப்பா என்று போற்றப்பட்ட பெருமையாளர் ஆவர். தமிழ் வளர்த்த குடும்பத்தில் தோன்றிய இவர், தமிழ்ப்பற்றும் திறமையும் உடன் வளர வளர்வாராயினர். அரபுமொழியும் உரிய காலத்தில் ஒதுவிக்கப்பெற்ற இளைஞர் மீரா லெவ்வை இஸ்லாமிய சன்மார்க்க நெறியிற் சிறந்து நின்றனர். அக்

Page 163
276. மட்டக்களப்புத் தமிழகம்
கலை ஆர்வம் இன்னரை இந்தியாவுக்கு அனுப்பி வைத் தது. சிலகாலம் அங்கு மதக்கல்வி பயின்றுவந்த திறமை யினலே இன்னரை ஆலிம் (மதஞானப் பேரறிஞர்) என்று இஸ்லாமிய உலகு போற்றுவதாயிற்று.
சில கவிஞர்களுக்கு மொழியியல், நடை என்பவற் றிற் பயிற்சி இராது; செவி கருவியாக ஓதி உணர்ந்த இத்தகையோர் ஒரு சாரான புலவர்கள். கலைநூல்களை முறையே கற்றுத் தேர்ந்து தம் அறிவிற்கேற்பப் புலமை யும் வாய்க்கப்பெற்ருேர் இன்னெரு சாரான புலவர்கள். சிலரிடம் மேற்காட்டிய இரண்டு இயல்புகளும் தாமே சரணடைவதுமுண்டு. அன்னர் அருட்கவிஞ ரெனப் படுவர். இவ்வாறன அருட்கவி வகையினைச் சேர்ந்த பெரியார் நமது ஆலிம் அப்பா அவர்கள். இறை பக்தி நிறைந்த இவரது அருட் கவிதைகளுக்கு ஆண்டவனும் அடிமைப்பட்டுப் பணி புரிந்தமைக்குச் சான்ருக மிளிர்வது இவர் செய்த மழைக் காவியம். வேளாண் வாழ்க்கை யையே உயிர்த் தொழிலாகக் கொண்ட இவர் ஒருபோது மழைமுகங் காணுது வாடிய தம் நெற்பயிர்களைச் சென்று கண்டு சகிக்க இயலாது ஆண்டவனே நினைந்து மழை வேண்டிப் பாடினரென்றும், உடனே மழை பொழிந்து வெள்ளம் பெருகிற்று என்றும் கூறப்படுகின்றது. அவ்வா றெழுந்த பாடல்கள் * மழைக் காவியம்’ என்ற பெயரால் தொகுத்து வழங்கப்பெறுகின்றன. தம்பிலுவில் என்ற ஊரில் எழுந்ததாக வழங்கப்பெறுகின்ற மழைக்காவியமும் இதுவும் ஒன்ருகா என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளல் நன்று.
மருதமுனை செய்த தவம் இவரைத் தோற்றுவித்தது என்று மக்கள் கொண்டாடினர். இன்னரது கரைகாணுத தெய்வ பக்தியும், இஸ்லாமிய தத்துவ ஞானப் பெருமை யும், அராபிய மொழி ஞானமும் கலந்து விளங்குஞ் சிறந்த பாடல்களை இம் மழைக்காவியத்தில் நாம் காணலாகும்.
கருணை நிறைந்த நெஞ்சினரான ஆலிம் அப்பா மக்க ளின் நல்வாழ்வுக்கான பொதுவேலைகள் பலவற்றைச்

புலவர் பரம்பரை 277
செய்தவர். பொதுமக்களோடு தொடர்பின்றி அலைந்து வாழ்ந்த பல்லோர் நிலைத்துவாழ இப்பெரியார் வழி வகுத்துக் கொடுத்துள்ளார். ஏழைகளுக்காக இவர் வடித்த கண்ணிர் கங்குகரையற்றது. இவ்வாறன பொது கலப்பண்பும் சீரிய ஒழுக்கமும் நிறைந்த இவருக்கு வறுமை தோன்றது நிற்கவேண்டுமென்று மக்கள் அவ்வப்போது நிலபுலங்களையும் ஆடுமாடுகளையும் நிதித்திரளையும் அன் பளிப்புச் செய்ததுண்டு. ஏழைகளின் இன்னல் தீர்க்கவே அவைகளை இப் பெரியார் பயன்படுத்துவாரெனினும் குன்ருத அச் செல்வப் பங்குகள் இன்னரின் பிற்சந்ததி யாருக்கு இன்றும் கிடைத்திருக்கின்றன என்பர்.
* ஆலிம் ' என்ற பெயருக்கேற்ற மதப்பெரியாராக வாழ்ந்து காட்டியவர் இவர். உண்மை பேசுதல் இவரது தனிப் பண்பு. இறைவனுக்குத் தொழுகை செலுத்த வேண்டிய நேரம் எதையும் இறுதிவரை இவர் தவறவிட் டது கிடையாது. தெய்வ அருளைப் பெருது உலகினரைச் சில சித்திகளால் மருட்டித் திரிந்த போலி ஞானியரெல் லாரும் இவரிடம் நல்ல சாட்டையடி பெற்றுள்ளனர் எனல் வேண்டும். அத்தகைய போலி ஞானிகளாய்த் தம் பொருட்டு மக்களை மயக்கி இஸ்லாமிய உண்மைத் தத்து வத்திற்கு இழுக்குத் தேடித் தந்தவர்களைக் கண்டிக்கும் முகமாக விருத்தப் பாக்களினல் இப் பெரியார் இயற் றிய நூலே ஞானரை வென்ருன் ' என்பது. மெய்ஞ் ஞானத்தின் வழி நின்று கேட்கப்படும் பல வினுக்களை இந் நூலிற் காணலாம்.
அவ்வினக்களுக்கு விடையாய் அமைந்துள்ள நன் முடிபுகளைக் கண்டோர் ஒருபோதும் மெய்ந்நெறியிலிருந்து வழுக்கிவிழமாட்டார் என்பது திண்ணம்.
* உனதாவி எதனுலே உடலான தெதனுலே
W உயிர்போற வகைகூறடா
கனலான தெதனலே கருவாகி வருகாலு கலிமாவை யுரையேடா

Page 164
278. மட்டக்களப்புத் தமிழகம்
பணரான ஹறுபாறு படராது திசைமீது பரிவாக வருமேதடா
மனுவாக உனேநாளை வரவாதி யுரைகூறு
மது5ாம மருணியடா.
வினுக்களாக உள்ளவை யெல்லாம் இறைவன் நாமத்தையும் அருளையுமே விடையாக உடையன. மனிதப் பிறவியின் இலக்கு இறைவனே அடைவதேயாகுமென்ற உயர்ந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட செய் யுள் இது.
ஞானவாழ்வின் உயர் படிகளிலே ஏறிச்செல்ல விரும்புவோர் இப்பெரியாரிடம் பாடங் கேட்டுக்கொள் ளுதல் வேண்டுமென்ற முடிவுக்கு வருவார், இந்நூலினை நன்கு கற்போர். இரண்டொரு குருன் சூரா "க் களை (வேத சூத்திரங்களை) மனனஞ் செய்திருத்தல்மூலம் தாம் பெரிய ஞானிகள் என்று தாடியுள் மறைந்து அக் காலம் திரிந்த போலி வேடதாரிகள் பலரை மடக்கி ஒட வைத்த பெருமை ஆலிம் அப்பாவைச் சேரும். இவ ருடைய ஞானரை வென்றன் ’ பாடல்கள் இன்னமும் அத்தகையோர்க்கு வாய்ப்பூட்டும், சாவுமனியும் கொடுப் பனவாக அமைந்துள்ளன.
* பயிரை முந்து மென்னடா
படப்பை முந்து மென்னடா உயிரை முந்து மென்னடா
உறுப்பை முந்து மென்னடா ஹயிறை முந்து மென்னடா
கருத்தை முந்து மென்னடா வயிர முற்ற நித்திலத்து
வாறு கூறு ஞானரே. இக் கவி போலிஞானியரின் தன்மை கூறுவது; ஆலிம் அப்பாவின் உண்மைக் கொள்கையையும் எதிரொலிப் பது. வெளியுலக வாழ்வில் மயங்கி நிற்போரது கருத்தை, உயரிய இறைவனடிகளை நோக்கித் திருப்பவல்ல இவர் பாடல்கள் எளிய கவிநடை பொருந்தியன. இடைக்

புலவர் பரம்பரை 279
காலத்துச் சித்தர்களின் பாடல்களை ஒட்டிய பெருமித மும் துடுக்குமுள்ளதான மதிப்புப் பெற்றவை. படிப் போரது மனங்கனிய வைக்கும் சொற்கோப்பும், ஊன்றி மனதிற் பதியும் பொருண் முடிவும் உடைய பாடல்கள் :
* தந்தையரி னுந்தியி லிருக்கு மதுபேரும்
தாயருடை கருப்பமீ திருக்கு மதுபேரும் வந்துகிழ மைந்துசென் றதின்பிறகு பேரும்
வாரிகுரு திக்குணிற மாமதனின் பேரும் சந்திரனை யொத்ததசை யாமதனின் பேரும்
சால்வரு றுTஹ்புகு தின்பிறகு பேரும் இந்த வகை யாயுலகில் வாழ்ந்ததன் பேரும் w யாவையுமின் னுமமு மியம்புமினி ஞானர்.” என்ற சிறந்த பாடலானது தந்தையாருந்தியிடைத் தோன் றிய கருவுயிர் முறையே வளர்ந்துவரும் படிகளையும், வேறுவேருன அக்காலங்களின் நிலையாமையையும், நினைத்த காலத்து ஆண்டவனுக்கே ஆளாக வேண்டிய அதன் நியதியையும் நன்கு காட்டுகிறது. கடைசியிலமைந் துள்ள பேரும் என்ற சொல் மக்களையும், மற்றையன, அசைவுறும் அல்லது அழிவுறும் என்ற நிலையாமைக் கருத்தினையுங் குறித்து நிற்பன.
இச் செய்யுட் சிறப்பெல்லாம் ஓர் அரபுமொழி ஆலி முடையது என்று எண்ணும்போது நாம் வியப்புக்குள் ளாகாம லிருக்க முடியாது. தமிழின் செய்யுளிலக்கணங் களை எல்லாம் நன்கு தெரிந்த இப் பாவலர் மட்டக்களப் புத் தமிழகத்து முஸ்லீம் புலவர் வரிசையை அழகு படுத்தும் ஒரு புலவராக விளங்குகின்ருர் என்பதை யறி யும்போது பெரிதும் மகிழ்ச்சி உண்டாகின்றது.
வாழ்வின் இறுதிக்காலமெல்லாம் அமைதியாக ஆண்டவனடிச் சரணத்திலேயே கழித்த இவர் திருக் கோணமலையிலுள்ள கவாட்டிக் குடாவினைத் தேர்ந்து உறைந்தனர். அங்கிருந்தே ஈசனடி சேரவேண்டிய நியதியும் இவருக்கு இருந்ததுபோலும். ஞான ஒளிபெற்ற

Page 165
280 மட்டக்களப்புத் தமிழகம்
பெருஞானியரது சமாதியும் அவ்வொளிக்குறைவிடமாக இருக்கும் என்பார்கள். இலங்கை அரசினர் திருக்கோண மலேக்குச் செல்லும் புகையிரதப்பாதையை அமைத்து வரும் நாட்களில் அவ் வேலைகளில் ஈடுபட்டிருந்தோர் இவரது சமாதியடியில் கண்ட அவ்வாறன அற்புதங்களை உடனே அரசினருக்கு அறிவித்தார்கள். இதல்ை இவரது கல்லறையை அரசாங்கமே பாரமெடுத்துப் பாதுகாத்து வர லாயிற்று. இன்றும் நாம் சீனன்வாடிப் புகையிரத நிலை யத்தை யொட்டிய இன்னரது திருவுடல் அடக்கத்தின் இடத்தையும் இவரது ஞான ஒளிக்கு எல்லாரும் வணக் கஞ் செய்து செல்லுதலையுங் காணலாகும். ஞானியர் வாழ்ந்தாலும் புகழ், மறைந்தாலும் புகழ் என்பர். இதனைப் பெற்ற ஓர் உலமா ? நமது ஆலிம் அப்பா. இன்னரது அறிவுக்களஞ்சியமான ஞானரை வென்ருன் பாடல் களைத் தொகுத்து வெளியிட்ட மருதமுனை ஆசிரியசங்கத் தின் நற்பணியும் இவர் தொடர்பாற் பெரும் புகழுற்ற தெனலாம்.

X. சேகுமதாறு சாகிப் புலவர்
மட்டக்களப்பு நகரின் தென்பால் நாற்பது மைல் எல்லையில் உள்ள வளமார்ந்த செழும்பதி அக்கரைப்பற்று. தமிழர், சோனகர், சிங்களவர் என்ற ஈழத்தின் முப் பெருங்குழு மக்களும் வேறுவேருண மதத்தவர் பலருங் கலந்து மன வேறுபாடின்றி இவ்வூரில் வாழுகின்றனர். கிழக்கே நீண்ட கடலெல்லை சார்ந்த தென்னந்தோட்டங் களும், மேற்கே உள்ள வள வயற்பரப்பும் ஊரை அழகு செய்வன. வேளாண்மை செய்தல் மக்களின் முதன்மை யான தொழில். அதனல் ஓய்வுநேரம் நிறையப் பெறுவா ராதலினல் அவரிடைக் கலைவளம் பெருகுதற்கும் இயன்ற இடமாக அக்கரைப்பற்று அமைந்துள்ளது.
பெயர் தெரிந்தோரும், தெரியாதோருமாகத் தமிழ்ப் புலவர் பலர் தோன்றுதற்குக் களமான ஊர் இது. நல்ல கவிஞரான மொட்டை வேலாப்போடியாரும், அவர் பரம் பரையினரும் இங்குத் தமிழ்க்கவிதைபரப்பிய வரலாற்றினை முன்னர்க் கண்டோம். தமிழ்ப்பெருங் குடிகளாய் இங்கு வாழும் சோனகமக்களும் புலமையிற் சிறந்தவர்களே என்பதை அன்னரின் புலவர் பரம்பரைக் குறிப்புக்களைக் கொண்டு நாம் நன்கு காணலாகும். அவர்களது புலவர் வரிசையினை உயர்த்திகிற்கும் ஆற்றல்வாய்ந்த தமிழ்ப் பாவலர் பலர் இவ்வூர் முஸ்லீம்களிடைத் தோன்றி யிருக்கின்றனர். அந்தப் பரம்பரையினை அழகுசெய்து 19ஆம் நூற்ருண்டின் இறுதிக்காலத்தில் விளங்கிய பெரும்புலவரே நமது சேகுமதாறு சாகிப் அவர்கள்.
கமக்காரரான மீரான்குட்டி யவர்களின் புதல்வன் நமது புலவர் பெருமகன். உறுதியான உடற்கட்டு இல் லாத காரணத்தினுல் இளமையிலே தந்தையின்தொழிலை வளர்த்துச்செல்லாது சில்லறை வாணிகத்தில் ஈடுபட்ட சேகு, காலமுதிர்ச்சியின் போது குர்ஆன் முதலான கிதாபு (நூல்) வியாபாரம் நடத்தத் தலைப்பட்டனர். இத்தொழில்,

Page 166
282 மட்டக்களப்புத் தமிழகம்
கலைவளர்ச்சியிற் தொடர்புகொள்ளுதற்கு இவரை வழிப் படுத்துவதாயிற்று. எனினும் நூற்படிப்பினை இயற்கை யன்னை நெடுநாளைக்கு விட்டுவைக்க விரும்பாதவள் போல் கண் பார்வையை, இவரிடமிருந்து நீக்கிவிடலாயினள். அதனுற் பெரிதும்வருந்தி ஆண்டவன்மீது பல வேண்டுதற் செய்யுள்களைப் பாடத் தொடங்கியபோதுதான், இவரது புலமையின் சிறப்பினை மக்கள் அறிந்து போற்றத் தொடங்கினர்கள். கட்புலன் இழந்தமை அருள்வெள்ளம் பொங்கப்பெறுதற்கு ஒரு வாய்ப்பினை இவருக்கு நல்க லாயிற்று என அனைவரும் கருதினர். வாயை இவர் திறப்பாராயின் பிறப்பன அளவிறந்த இனிய பக்திப் பாடல்களாகவே இருந்தன.
இவரது இத்தகைய பாடல்களை, ‘இறைவன் பேரில் வேண்டுதல்’, ‘முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்’ முதலாகப் பல தலைப்புக்களிற் தொகுத்துப் பல பாமாலை " என்ற நூலாக அக்காலம் அச்சேற்றினர்கள். அறுசீர் விருத்தங்களானியன்ற அந்நூல் முற்றும் இன்று கிடைத் தில தெனினும், நோன்புக்காலங்களிலே பள்ளிவாசல் தோறும் அதில் உள்ள பாடல்கள் பல எழுதாமறையாகப் பாடப்பெற்றுவருகின்றன. முஸ்லீம் மக்களுடைய நாவானது, சேகுமதாறு சாகிபுவின் பல பாமாலைச் செய்யுள்களிற் சிலவற்றையாவது மறவாது வைத்திருத்தல் தம் கடமை எனக் கருதும் சிறப்பினை இப்பாடல்கள் பெற்றனவாகும்.
* மாண்ட பிணத்தை எழுப்பிவிட்டு
மானைப் பிணைநின் றவிழ்த்துவிட்டு வேண்டு மடியார் பவந்தீர்த்து
மேன்மை புரிந்த முகுத்தாறே ஆண்டோ னெமக்கு விதித்தமறை அதில்கா னடக்கச் செயுமுலக மூன்று மதித்துப் புகழ்ந்தேத்து முகம திறகுல் நயினரே * என்னும் இச் செய்யுளானது நபிநாயகத்தின் சீரிய அருட்செயல்களையும், மாண்பினையும் நயம்படக் கூறுவது.

புலவர் பரம்பரை w 283
? ஈரா ருண்டோர் நிலையினில்நின்
றிறையைப் புகழ்ந்தே யரியபல
மாரா யங்கள் மிகப்படைத்தீர்
மன்னர் அபுசாலிபுகு தவப்பேறே
சீரார் பாத்தி மாவீன்ற
செல்வக் கனியே யென்வறுமை
சாரா தகற்றிதும் மருட்கருணை
தாரும் முகைய தீனெலியே ’
என்பது முகையதினண்டவர்மீது இவர் மனம் உருக வேண்டுதல் செய்த ஒரு பாடலாகும். * சீரார் பாத்திமா வீன்ற செல்வக் கனியே ’ என்ற தொடரிற் புலவனது உள்ளத்தின் கனிவு வெளிப்படுவதை நன்கு காணலாகும்.
புலவர்பெருமக்களை அண்டிவாழும் பழந் தெய்வ மான வறுமைத்தேவி இன்னரையும் தவறவிடாது சேர்ந் திருந்தாள் ; உடலுமோ நோய்கொண்ட ஒன்று. ஆண்ட வனேயன்றி இவற்றைப்போக்க வேறு யாரை வரகவிகள் வேண்டுவார்கள் ! அதற்கமையப் புலவரது உள்ளம், வறுமையிற் கனிந்து இறைவனுடைய அருள்வெள்ளத் தினை நோக்கி இரங்குவதையும் இச்செய்யுள் காட்டிநிற் கின்றது.
இவையன்றி நாகூர் சாகுல் ஹமீது ஆண்ட கை பேரில் இவர் பாடிய ஒருபா ஒருபஃது என்னும் நூற் செய்யுள்களின் இறுதியடிகளும் புலவரது வறுமை, பிணி என்பனவற்றின் விலக்கினே வேண்டியனவாய் அமைந் திருப்பதை நாம் அறிதல் கூடும்.
* பகரரிய தாய்தந்தை மனையிலெழி லாகவே
பதினெட்டு வயதுறைந்தீர் பரிசுதரு குருவுறு குவாலிறெனும் நகரினிற்
பத்துவரு டம்தரித்தீர் அகரமுத லவனருள் வளர்ந்திடப் பன்னிரண்
டாண்டுதே சந்திரிந்தீர் அற்புதம் மிகுந்தநா கூரதனி லெழுநான்
காண்டுசீ வித்திருந்தீர்

Page 167
284 மட்டக்களப்பு த் தமிழகம்
இகபர மதிக்குநபி ஹிஜிரிதொள் ளாயிரத்
தெழுபத்தி யெட்டாண்டுமாதம் இயம்பிடு ஜெமாதுலா கிறு "தெய்தி ஈரைக்தி னில்வெள்ளி ஹஜ்ஜத் தொகுத்திற் தகைமைபெறு பொத்தாகி யருள் வளரு நாகூரு
தறுகாவில் வாழுமரசே தமியனென் மிடிமைபிணி போக்கிநல மாக்குவீர்
சாகமீ தெந்தமொலியே ??
இச்செய்யுள், சாகமீது ஆண்டகையாரது வாழ்க்கைக் கழிவின் காலப்பகுப்பினையும், நாகூரில் ஒளிவடிவாய் அவர்கள் அமைந்த காலத்தினையும் முஸ்லீம் திகதி அட்டவணைப்படி அழகுறக் குறித்துநிற்பது. இதனிற்றடி யினைப் போலவே எல்லாப் பாடல்களும் * சாகமீ தெந்த மொலியே ' என முடிதல் நூலின் போக்காகும்.
நாகூரடைந்து அத்திருப்பதியின் ஆண்டவனைச் சாகிப் அவர்கள் சரணுகப் பெற்றிருந்த காலத்தில் இந்நூல் எழுந்ததாகும். ஈழத்தோடு மட்டும் நின்றுவிடாது தென் னிந்தியத் தமிழகத்திலும் சென்றிருந்து இன்னர் தமிழ் நலம் தேர்ந்தனரென்பதற்கு இந்த ஒருபா ஒருபஃது ’ என்னும் நூல் சான்ரு யுள்ளது. நாகூரில் இருந்த காலத் திற் பல புலவர்களோடு கவிப்போரில் ஈடுபட்டு அவர் களை வென்றனரென்றும், அதல்ை ஈழத்து முஸ்லீம்களின் புகழ்பெருக்கிய பெருமகனுக இவரை அங்கிருந்த மக்கள் மதித்துப் போற்றினரென்றும் கூறப்படுகிறது.
இனிமை செறிந்த சொற்கள் பலவற்றைக், குறைந்த எழுத்துக்களாற் படைத்துக் கவிதையுலகுக்கோர் சிறப் பினை ஆக்கித்தந்த பெருமை பழங்காலத்துப் புலவர் பெருமக்களுடையது. தமிழின் இனிமையினேக் காட்டும் அவ்வாறன சொற்கள் பயின்ற செய்யுள்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் வேண்டின், நாம் பண்டைய இலக்கியங் களைத் தேடிநிற்றல் பெருவழக்கம். இந்நிலையில் சேகு மதாறு சாகிப் புலவர் அவர்களுடைய ஒருபா ஒருபஃது ' என்னும் நூல் உருதுமொழி கலந்த மதப்பண்புரைப்ப தாயினும் இனிய தமிழ்க்கவிதை நிறைந்த ஒன்ருய் இருப் பதை அறியும்போது அனைவரும் வியப்படைதல் கூடும்.

புலவர் பரம்பரை 285
* முண்டகத்தின் பூவே முழுமதியே முச்சுடரே அண்டர் கருவே யருமருந்தே ஆணிமுத்தே மண்டலிகர் போற்றும் மருக்கொழுந்தே என்னுடைய கண்டமதின் நோய்துடைப்பீர் காதிர் கமீதொலியே.”*
என்பது அந்நூலிலுள்ள இனியபாடல் பலவற்றுளொன்று. கமீதொலியினுடைய பேரருளை நோக்கிய புலவரது வேண்டு கோள், அன்புப்பெருக்கு என்பவற்றின் உயர்நிலையினை நன்குகாட்டுவது இச்செய்யுள். முண்டகத்தின் பூவே என்று ஒப்புவமையில்லாத சிறு மலரொன்றுக்கு அருளடி களை ஒப்பிடுதல் மூலம், புதியதொரு உவமையைக் கவி யுலகிற்கு ப் புகுத்தும் சாகிப் அவர்களது புலமை போற்றத்தக்கதாகும். இனிய நல்ல செஞ்சொற்களாலே இலகுவான உவமைகளையும் சேர்த்தமைத்துத் தமிழ்க் கவிதையினையும், தமது புலமை நலத்தினையும் சாகிப் அவர்கள் இந்நூலில் வளம்செய்துள்ளார்கள். இத்தகைய உயர்ந்த கவிதைகளைப் படைக்கும் ஆற்றல் அருட்கவிஞர் களையன்றி மற்றையோரிடம் இலகுவில் அடைதல்கூடுமா!
தமிழ்க்கவிகள், நிறைந்த நன்றிஉள்ளம் படைத் தவர்கள். தம்மை ஆதரித்த புரவலர்பால் நன்றிமறவாது, தருணம் கிடைத்தபோதெல்லாம் அன்னருடைய புகழை யும், பெயரையும் அழியாத கவிதைவடிவிற் பொறித்து வைத்தல் கவிஞர்களுடைய தமிழுள்ளம் செய்யும் கைம்மா ருகும். இந்தச் சிறந்த வழக்காற்றினைச் சேகுமதாறு சாகிப் அவர்களும் மறவாது கடைப்பிடித்துள்ளார்கள். வறுமைநிலையில் வாடிய இவரைத் தளராநிலைகூட்டிய கலந்தரு மரைக்காரும், காதிர்முகைதீன் சாகிபு மரைக்கா ரும் இவரர்ற் பெரிதும் புகழ்ந்தேத்தப்பட்டுள்ளனர். அச் செல்வர்களுடைய பெயர் வாழும் பல தனிப்பாடல்களும் இப் புலவர்வாயினின் றெழுந்து இங்கு நிலவுகின்றன.
* அனம்பயில் வாவி வளம்பல சூழும் அக்கரைப் பற்றெனும் நகரிற் கனகநிகர் கரத்திற் கலந்தரு மரைக்கார் காதிர் முகியித்தீ னுடனே

Page 168
垒86 மட்டக்களப்புத் தமிழகம்
தனமிகப் பெருகும் சாகிபு மரைக்கார்
தனக்குமன் னேன்மனை யார்க்கும் தினமருட் பதமிங் தென்னை ரட்சிக்கும்
திருநபி ஜகத்தில் வந் தனரே.? என்பது அவ்வாருண பாடல்களுள் ஒன்ருகும்.
இவற்றைவிட புசற்காவியம் , * பிள்ளைக்காவியம்’ என்னும் தொகுதிகளாயமைந்த பாடல்கள் பலவும் இவர் காவினின்றெழுந்துள்ளன. 1907ஆம் ஆண்டு பங்குனி மாதம் கிழக்கிலங்கை என்றுமே கண்டிராத பெரும்புய லொன்று இங்கு வீசிற்று. அதனேடு பெருமழை, கரை கடந்தவெள்ளம் என்பவற்றல் நாடு அடைந்த சேதமும், மக்கள் அடைந்த துன்பமும் எல்லேயிறந்தன. இவைகளை விவரித்த சொல்லோவியம் நிறைந்தது " புசற்காவியம்’. பிள்ளைப்பேறு கிடையாத மங்கை ஒருத்தி ஆண்டவனருளை அதற்கு வேண்டுவதாய் அமைந்தநூல் பிள்ளைக்காவியம்’ ஆகும். இவ்விரண்டு காவியங்களும், மக்கள் காவில் அழியாது நிலவுவன. பின்னேயது கிறைந்த சொல்நயம், பொருள் நயம் உடையது. சங்கிலிக்கோவையாய் அமைந்த இதன் பாடல்களை இசையுடன் ஒருவர் பாடும்போது பக்கம்நின்று கேட்டோருக்கும் மனம் உருகிவிடும். அந்த உயரியதன்மையினேடு நிறைந்த பொருட்பயனையும் அப் பாடல்கள் தருதலினுற்போலும் * பிள்ளைக்காவியம் ? பொதுமக்களிடைப் பெரிதும் பரவியிருக்கும் ஒரு நூலா யிருக்கின்றது.
தாம் மறைந்துவிட்டாலும், தமது புலமைப்புகழ் முஸ்லீம்மக்களிடையிருந்து மறைந்தொழியாது தாழச்செய் யும் வல்லமைவாய்ந்த உயிர்க் கவிதைகளைப் படைத் தளித்த பெருமையாளர் சேகு மதாறு சாகிப் அவர்கள். அன்னரது கவிதைக ளனைத்தினையும் தொகுத்து வெளியீடு செய்யின், அது ஒரு சிறந்த தமிழ்ப்பணியாக நிலவுவ தாகும்.

XI. முகம்மது ருபிப் புலவர்
பெரும் புலவராகிய சேகுமதாறு சாகிப்பின் அரும் புதல்வர் முகம்மது ருபி அவர்கள். இவருடைய புலமை பரம்பரைச் சொத்துப்போல் வந்ததொன்று. * புலிக்குப் பிறந்தது பூனேயாகுமா என்ற பழமொழிக்கிணங்க வந்த ருபி அவர்கள் இளமையிலேயே "இவன் தந்தை என்நோற்ருன் கொல் ’ என்னும் சொல்லைத் தந்தைக் கீட்டித் தந்தவர். * கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’, ஆதலால் சாகிப்பினுடைய புதல்வனது புலமை யைப்பற்றி வியப்படைதற் கென்ன இருக்கிறதென்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.
இயற்கை அழகிலே தன்னை மறந்து நிற்கும் இவர், வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்தவர். அத னல் வயற்களம் இவரது புலமையினை வளர்த்துச் செய் யுள் அரங்கேற்றத்துக்கும் இடமாகி நின்றது. மட்டக் களப்பில் வழங்கும் நாடோடிக் கவிதைகள் இவருக்கு இளமையில் உயிராய் இருந்தன. தந்தை செய்த பாடல் களையும் பொன்னெனப் போற்றிக் கற்றிருந்த இவரிடம் அரபுமொழி யறிவும் வளர்ந்து வரலாயிற்று. மத ஆசா ரங்களிலே சிறிதும் வழுவாது ஒழுகிய ருபி அவர்களுக்குத் தெய்வ அருளும் நன்கு கிடைத்திருந்த தெனலாம். செல் வம், கல்வி ஆகிய இரண்டையும் இந்துக்களைப்போலவே திருமாது, கலைமாது என்று தெய்வமாக மதித்துப் போற் றியவர். வயலின் நல்விளைவு திருமாதின் அருளாலாவது என அங்கங்குப் பாடியுமிருக்கின்ருர்.
இளைஞராயிருக்கும்பொழுதே கவி பாடும் வல்லமை யினை இயற்கைச் சூழ்நிலையும் இவர்பால் வளர்க்கத் தக்கதாக அமைந்திருந்தது. செவி கருவியாக அமைந்த இவரது பாடல்களில் இசை பொருந்திய இன்பச் செறி வினை மிகுதியும் காணலாம். மோனே, எதுகை அழகுகள் மிகுதி உடைய இலக்கியச் செய்யுள் வகைகளைவிட, தாள அமைவுடைய இசைப் பாடல்களே இவரால் அதிகம்

Page 169
988. மட்டக்களப்புத் தமிழகம்
பாடப்பெற்றுள்ளன. ஒருமுறை பொத்துவில் என்ற ஊருக்குச் சென்றிருந்த தமது தந்தையாருக்குச் செய்யுள் வடிவிலே கடிதம் ஒன்றனுப்பினரென்றும், தம்மிற்தம் மக்க ளறிவுடைமை மானிலத்து, மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்று அப்பாடல் புலவராகிய தந்தையை மகிழச் செய்ததென்றும் கூறுவர். பின்வரும் அச் செய்யுளானது கடிதப் பொருளோடு இவரது நிறைந்த தெய்வ பக்தி, தந்தை பக்தி, அரபுமொழி ஞானம், பணிந்த மனப் பான்மை, தமிழ்ப் புலமைச் சிறப்பு என்பவற்றையும் நன்கு காட்டி நிற்பது.
* திருவளரு வானறுசு குறுசோடு லெளகு
பொன்னு லகையும் தீமையில் லாமலே சிருட்டித்த இறையாதி
தினமுனது றகு மத்தெனும் அருள் வளரு மறுசோடு சிரசுடைய நபியினது
சபா அத்தி லுைம் அன்பியா அவுலியா சுகதாக்கள் சாலிகீன்
அனைவர் துவாப் போற்றினலும், திருபனே என்னுடைய தந்தையை அனுதினமும்
நீதியிற் சேர்த்தருளுவாய் நீதியுண ராதசிறி யேன்முகம் மதுருபி என்னுடைய துவாசலாம்பின் அருள் கணக் காயிரத் துத்தொள்ளா யிரத்துமூன்
ருண்டுசித் திரைமாதமது பொத்துவில்லி லிருக்கும் எனது தந்தையர்க்
கெழுதிய கிருபமே.”*
* திகிலறவே திருமாது உகந்துதனை நோக்குதலில்
செல்வமுறு பட்டிமேடு சீராகக் கதிர்டறிந்தன அமுதேறித் தேவனை
வணங்கு கின்றதே மயிலாடு சோலையும் குயில்பாடு சோலையும்
மலரழகு வனசமதமும் மாரிஒ யாதபடி பாய்கின்ற சாலிகள்
வளஞ்செறி கருங்கொடியிலே

புலவர் பரம்பர்ை έξ9
இஃதுறு குடாக்கரை எனும் வட்டை மீதிலே
இது மாதம் இருபத்தியா றில் இயைபாய் விதைக்கவும் ஏற்பாடு பண்ணியே
எத்தனத்தோ டிருக்கின்ருேம் சுகிதமுறு நமதுடைய வீட்டிலனை பேர்களும்
சுகமா யிருக்கின்ருர் துங்கமுறு தாங்களிதை ஆங்கறிய எழுதினேன்
சுதன்முக மதுருபியே.”
(அறுசு - ஆண்டவனது சிங்காதனம் ; குறுசு - ஆசனம் ; லெளகு - பாவ புண்ணியக் கணக்கெழுதும் பலகை ; றகுமத் - அருள் : சபா அத் - சிபாரிசு; துவா - பிரார்த்தனை; துவாசலாம் - பிரார்த் தனச் சாந்தி.)
முதற் செய்யுள் அரபு மொழிப் படி யான இறை வணக்கமும், கடிதம் எழுதிய ஆண்டு முதலியனவும் குறிப்பது. இரண்டாவது செய்யுளின் முடிபு, கடிதத்துக் கேற்ற பொருள் நிறைவினையுடையதாய்ச் சுகநலங் கூறி அமைகின்றது. பட்டிமேட்டுவயல் விளைந்து கிடப்பதையும், குடாக்கரை வயல் விதைப்புக்கு ஏற்பாடுகள் ஆகியிருப் பதையுங் காட்டுவது இரண்டாம் செய்யுளின் முதற் பகுதி. கருங்கொடித்தீவு என்பது அக்கரைப்பற்றிலே புலவர் வாழ்ந்த பகுதியைக் குறிப்பிடும் ஊர்ப்பெயராகும். அவ்விடத்தின் இனிய இயற்கையழகு, தாய்நாட்டன்பு மிகுந்த புலவரது பாவினே அணிசெய்து நிற்கக் காணலாம்.
இவரோடிணைந்த பெரு நண்பராகவும், பண்பட்ட செல்வராகவும் இருந்தவர் இசுமாலெவ்வை முகையதின் என்னும் போடியார். சிறந்த இஸ்லாமிய அறிஞராயும் புலவர்பாலும், தமிழ்மொழியின் பாலும் நிறைந்த மதிப் புடையராயும் வாழ்ந்த போடியார் இவ்வுலகை விட்டுச் சென்றநாளில், ருபிப் புலவர் புத்தளத்துக்குச் சென் றிருந்தனர். தன்னரிய நண்பரது பெரும் பிரிவினல் ஏற் பட்ட துன்பமும், அக்காலத்தே தான் அருகில் இல்லா மற் போனமையால் உண்டான வருத்தமும் இவரது உள் ளத்தை மிகுதியும் உருக்கின. உடனே அப் பொருள்மீது
19 - מש

Page 170
290 மட்டக்களப்புத் தமிழகம்
ஒப்பாரி வடிவிலே கவிதைத் தேவியும் புலவர் நாவில் உதயமாயினள்.
*புத்தளத்தில் நானிருந்தேன் நீரிந்தப்
புவியளந்து போனதினம் புரவதிகரரும் வருதிருதரமும் குருகின மெவையும் படுத்துறங்கும் நடுமத்தியில் நடுமத்திய சாமம்
என்னுடைய நன்று பல்லிலொன்று
நண்பொடு எனதுடை கொம்புடை முடியினுமோர்
பங்கதுகாணு தொருவம்புர வரசும் கன
அன்றிரவு கண்டனல்லோ.??
நண்பரது பிரிவு நடந்த அன்றிரவு வந்த பொல்லாக் கனவிடை வீழ்ந்த கொடுப்புப் பல்லும், தலையின் அரை வாசி மயிரும், அச் சாக்கேட்டிற்கு ஆன கெட்ட சகுனமே என்பதை உருக்கமாய்க் குறிப்பிட்டு, இவருடைய கவிதை யுள்ளம் புலம்புவதை நாம் காணலாகும். இப் பாடல்க ளெல்லாம் முகையதின் ஒப்பாரி' என்ற தலைப்புடன் நடந்தாலும், அவையனைத்தும் தொகுக்கப்பெற்ற நூல் வடிவு இன்னும் கிடைத்திலது. இதனைவிட, வயல் வரு ணனை முதலாக இவராற் பாடப்பெற்றனவாக வழங்கும் தனிப் பாடல்களும் பல கேட்கப்படுகின்றன.
கவிதையுருவில் இன்று வாழ்பவர்களும், தமிழ் வளர்த்த முஸ்லீம் பாவலர் வரிசையினை அழகுறுத்தி ஈழத்துக்குப் பெருமை தந்து நிற்பவர்களுமான இவர்கள் புகழ் எங்கும் சென்று விளங்குதல் வேண்டும்.

XII. அப்துற் றஹ"மான் ஆலிம் புலவர்
அட்டாளைச்சேனை என்பது நாம் முன்னர்க் கண்ட வளமார்ந்த அக்கரைப்பற்றினை யடுத்த ஓர் ஊர். முஸ் லீம் மக்கள் பெரும்பான்மையினராய்க் குடியேறியிருக் கும் இவ்வூர் பண்டுதொட்டே அமைதிக்குப் பெயர் போனதொன்ருய் இருந்திருக்கிறது. முஸ்லீம் மதப் பெரி யார் பலரின் தோற்றத்திற்கிடமாகி மட்டக்களப்பு முஸ். லீம் மக்களுடைய மதிப்பினையும் கவர்ந்து விளங்கிய ஊர் இது. இங்குள்ள மக்கள் வயல்வளம் செய்யும் நல்லுழ வர். நாடோடிக் கவிதைகள் பலவற்றுக்கு இவ்வூர் பிறப் பிடமானது. மக்களெல்லாரும் பண்பட்ட நன்மனமுடைய வர்கள். தமிழ்மொழியினையே உயிராகக் கருதிவாழ்ந்த முஸ்லீம் அறிஞரின் பிறப்பிடமான இவ்வூரிலேதான் மட்டக்களப்பு முஸ்லீம் ஆசிரியர்களுக்கான அரசினர் பயிற்சிக் கலாசாலையும் இன்று அமைந்து ஊரின் சிறப் பினே மேலும் மிகுத்துள்ளது.
இத்தகைய வளம்பதியிலேயே நாம் இங்கு குறிப் பிட விரும்பும் புலவரும் பிறந்தவர். ஆலிம்களெல்லாம் அரபுமொழியில் மட்டுந்தான் புலமையாளர் என்னும் விதிக்கு விலக்காயுள்ளவர்கள் மட்டக்களப்பு முஸ்லீம் பரம்பரையினர். எவ்வளவுக்கு அன்னருடைய மதஞானம் கூடுகின்றதோ அவ்வளவுக்குத் தமிழ்மொழிப் புலமை யும் அவரிடை மிக்கிருந்ததென்பதை இங்கு வாழ்ந்த அறி ஞர் பலர் காட்டிச் சென்றிருக்கிருர்கள்.
நாம், கருத்திற் பொறித்துக் காக்கவேண்டிய சிறப்பு மிக்க எத்தனையோ நிகழ்காலப் புலமையாளர்களை மறந்து விடுவதிற் பெயர்பெற்றவர்கள். இந்தச் சிறப்பினையே ? புலவர் பெருமகளுன அப்துற் றஹ"மான் ஆலிம் அவர் களும் பொதுமக்களிடத்திலிருந்து அக்காலம் பெற்றிருந் தார்கள். அதனற்போலும் இன்னருடைய வாழ்க்கைக் குறிப்புக்களெதுவும் திட்டமாக இன்று கிடைப்பதாயில்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஆலிம் அவர்களுடைய பிறப்பு கி. பி. 1850ஆம் ஆண்டளவில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
** மணமங்கலமாலை பாடிய ஆலிம் அப்பா " என்று சொன்னவுடனே மக்கள் அப்துற் றஹ"மான் புலவர்

Page 171
292 மட்டக்களப்புத் தமிழகம்
அவர்களை நினைந்துகொள்ளத்தக்க சிறப்பினை இவர் பெற் றிருக்கின்றர் என்பது தெளிவு.
நபிநாயகம் (ஸல்) அவர்களின் புதல்வியான பீவி பாத்திம்மாவுக்கும் அலி (றலி) அவர்களுக்கும் நடந்த திருமணச் சிறப்பினைப்பற்றிய 8 மணமங்கலமாலை" என் னும் பெருநூல் ஒன்றுக்கும், தனிப்பாடல் பலவற்றுக்கும் ஆசிரியராகிய ஆலிம் அவர்கள் சிறந்த தமிழறிஞர். தமிழ் வளர்க்கும் ஆசையினுல் இளமையிலே சிலருக்குத் தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியை இவர் மேற் கொண்டிருந்தார் எனத் தெரிகின்றது. ஆண்டவனே அணையும் பெருவிருப்பும் இளமையிலேயே வாய்க்கப் பெற்றிருந்த இவர் குர்ஆன் ஓதுதலில் சற்றுக் தவருத கருத்துடையவராய் இருந்தனர். அதனலே அரபுமொழி அறிவும் நிரம்பப்பெற்றிருந்ததோடு குர்ஆன் ஓதுவிக்கும் ஆர்வமும் மேற்கொள்ளப் பெற்றிருந்த இப் பெரியார் தம் வாழ்நாட்களில் முஸ்லீம் மதஞானிகளுக்கெல்லாம் பொதுவான ஆலிம் ' என்ற திருப்பெயரைத் தமக்கே சிறப்பாக்கிக்கொண்டவர். ஆலிமுடைய பாட்டு என்று இன்று மக்கள் வழங்கும் பாடல்கள் பல இப் பெரியா ருடையனவென்றே அறிகின்ருேம்.
* வண்ணத் தரள மணிதானே
வயங்கும் மலேமா மலர்தானே விண்ணுற் ருெளிர்வெண் மதிதானே
விரும்பும் கனக மணிதானே எண்ணற் றிலங்கும் இரத்தினமோ
எழில்சேர் கிளியோ மயிலதுவோ கண்ணுெற் றிடுதற் கரசான . . . காட்சி தரும்பாத் திம்மாவே.? என்னும் விருத்தச் செய்யுளானது மணமங்கலமாலே " யிலே பாத்திம்மா நாயகியாரின் எழிலினைக் கூறுவதா யுள்ளது. இயற்கையிலமைந்த பல உவமைகளை அச் செல்வியாரின் நல்லழகுக்கு இணையாகக் கூறியும் அமை யாத புலவருடைய உள்ளச் சிறப்பினை வினவடிவிற் கோக்கப்பட்டுள்ள முடிபுச் சொற்கள் புலங்கொள வைக் கக் காணலாகும்.

புலவர் பரம்பரை 293
இளமையின் அழகும் உருவும் பொலிந்து தோன்றிய நபி(ஸல்) மகளார் திருமணக்கோலம் புனையப்பெற்றிருந்த நல்லழகு புலவர் வாயிலாகப் பின்வரும் பாடல்களில் மேலும் இடம்பெற்று விளங்குகின்றது:
* கோடிக் கதிரிறைக்கும் கோதையினை அம்மடவார்
சோடித் தலங்கரித்துத் துய்ய பணிபூட்டி ஆடிக் குலவிவரு மன்னமென்றே முத்தமிட்டு நாடிக் கரமனைத்து நாரியர்கள் போற்றுவரே.’
* போற்றுவார் புகழ்வார் தங்கப்
பொருளிதோ விலையோ வென்பார் கீற்றிளம் பிறையோ தங்கக்
கிரிடமோ வலது வெய்யோன் மாற்றிய சுடரோ பஞ்ச
வண்ணநற் * சுகமோ யாவுந் தோற்றிடும் அனமோ யாதோ
சொல்லுவீர் எமக்கென் பாரே.” * கோடிக் கதிரிறைக்கும் கோதை’ என்ற தொடர் அம் மெல்லியலுடைய இயற்கை அழகினை உயர்வின் எல்லையில் நின்று விளக்குவது. திருமணக்கோலம் புனை யப்பெற்ற அன்னருடைய நல்லெழிலைக் கண்டு பெண் களே கூறும் வியப்பு மொழிகள் கொண்டவை மற்றைய தொடர்கள். இவ்வாருண பாடல்கள் நிறைந்த இந் நூலிலே சீருப் புராணத்தில் உள்ள பாத்திம்மா நாயகியா ரது திருமணப்படலத்தின் சாயை படரப்பெற்றிருத்தல் புலப்படுகின்றது.
தூய மனவெழுச்சியினையும் பக்தி நினை வினையும் எழுப்பவல்ல இந்நூல் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் என்பவற்ருேடு பலவகைச் சிந்துகளும், கீர்த்தனை வகை களும் விரவப்பெற்றுள்ளது. மட்டக்களப்பெங்கும் நாட் டுக் கூத்திசை ஒலித்தகாலம் புலவர் வாழப்பெற்றது. இராக தாளத்தோடமைந்த கூத்துப் பாடல்களையும் அவை போன்றவற்றையும் முஸ்லீம்களும் விரும்பிப் படிப்ப துண்டு. மக்களின் அந்த இசை விருப்பினை ப் பயன் கொண்டு அவர்களின் நல்வரவேற்பினேடு புலவர் இந்
* சுகம் - கிளி.

Page 172
294 மட்டக்களப்புத் தமிழகம்
நூலை ஆக்கி அளித்தார் எனல் வேண்டும். பாத்திம்மா நாயகியின் திருமணத்திற்காக முஹாஜிரீன் என்னும் அரசன் தன் நகரினை அலங்கரிக்கச் சொல்வதா யமைந்த சிந்துப் பாடலொன்றின் அடிகள் இவை :
* வச்சிரத் தோரணம் நாட்டுங்கோ-நல்ல
வாழை மரக்குலை தூக்குங்கோ மெச்சுகல் வீதி இலங்கிட-நீங்கள் மேன்மை யணிபந்தல் போடுங்கோ.?? * ஏழை*எத் தீம்களைக் கூட்டுங்கோ-நல்ல
இயல்பான பால்தயி ரூட்டுங்கோ வாழைக் கனியுடன் மாதுளை-இன்ப வருக்கைப் பலாக்கனி ஊட்டுங்கோ.’ இத்தகைய இனிய சிந்துகள் பலவும், ஆனந்தபைரவி முதலான இராகங்களோடு பாடுதற் கமைந்தனவுமான பல பாட்டுகள் நூலினே நிரப்பி அழகு செய்வன.
இந்நூல் இனிது நிறைவுறுதற்கு வேண்டிய பொருள் வளஞ் செய்து, புலவரது கவிதைச் சிறப்பு மங்காது அவரைப் பேணிய பெருந்தகையாளர் அக்கரைப்பற்று மகுமூதுப் போடி என்பார். புலவரது கவிதைப் பண் புள்ளமும் அப்பெரியார் செய்த நன்றியை மறந்திலது. இதனுல் மகுமூதுப் போடியினுடைய பெயரும் செய்யுள் களில் அங்கங்கே நிலையாகப் பொறிக்கப்படலாயிற்று.
* வண்டாடு மார்பன் மகுமூதுப் போடி வள்ளல்.?
என்பது முதலாகப் பல இடங்களிலே ஆலிம் அவர்கள் இக் கொடையாளியின் பெயரைத் தம் நூலிற் பாடிப் போற்றியுள்ளார். சிறந்த இந்நூலும் அன்னர் முயற்சியி னல் அக்கரைப்பற்றிலே நல்லரங்கேற்றம் பெறுவதா யிற்று. எனினும் இன்றுவரை அச்சேறப்பெருது கிடப்ப தாற் பிழைகள் மலிந்த கையெழுத்துப் பிரதிகளே அங் கங்குக் கிடைக்கின்றன. மக்கள் நாவிலே கேள்வி வாயி லாகப் படிந்து பரந்து வாழுகின்றன இப் பாக்கள். இவைகளை அச்சேறச் செய்து பயன்கொள்வது தமிழ் மக்களினது பெருங் கடமையாகும்.
* எத்தீம்கள் - அனதைகள்.

XII. ஹாஷிம் ஆலிம் பாவலர்
* மாங்கனியில் அமுதுமிஞ்சி மதர்ப்புண் டாகி
மகிமைசெறி தேறல்கரும் புக்கா சென்று
பூங்கரும்பின் கணுக்களினுட் புகுந்து மீறிப்
புறப்படுதற் கிருதரமும் புளகித் தேகித்
தேன் கதலி எனும் வாழைத் தோட்டம் புக்குச்
சுரந்தமுதம் ஒன்றகிச் சேர்ந்து செந்நெல்
பாங்கருட னகமகிழ்ந்து குருவின் பாதம்
பணிவதுபோல் செந்நெல்வளம் பணியும் நாடே.’
தான் பிறந்த திருநாட்டின் செழிப்பினையும் எழிலினை யும் பற்றி மட்டக்களப்பு முஸ்லீம் புலவர் ஒருவர் பாடிய கற்பனை வளமும், கவிதையழகும் செறிந்த பாடல் இது.
நிகழ்காலத்து மக்களால் மட்டக்களப்பிலே * முஸ்லீம் புலவர் ' என்ற சிறப்பினுற் குறிப்பிடப்படும் மதிப்புவாய்ந்த பெருமையாளர் ஹாஷிம் ஆலிம் பாவலர் அவர்கள். இவர்களை ஆலிம் பரம்பரையினர் என்றே மக்கள் கருது கின்றனர். சென்ற நூற்ருண்டிற் சிறப்புற்று விளங்கிய முகம்மது அபூபக்கர் லெவ்வை ஆலிம் அவர்களுடைய முதல் மகனுக 1887ஆம் ஆண்டளவிலே பிறந்த ஆலிம் ஆகிய இவ்வறிஞர் அக்கரைப்பற்றின் பழங்காலப் புலவர் பரம்பரையின் பிரதிநிதியாக விளங்குபவர். பிறப்பாலமை கின்றதும், எவர்க்கும் பொதுவானதுமான மதப்பற்று இவருடைய பரம்ப  ைரக் கே சொந்தமானது போன்று இவர் குடும்பமே ஆலிம்களால் நிரப்பப்பட்டுவிட்டது. இவருடன் பிறந்த ஆண்கள் மூவரும் ஆலிம்களானதோடு ஒரே தங்கையின் மகனும் ஆலிம் ஆகி அன்னேக்குப் பதி லாகத் தமது பரம்பரை இடத்தைப் பெற்றுக்கொண்டமை இவர்களுடைய குடும்பத்திற்குப் பெரும் மதிப்பையும் புகழையும் ஊட்டுவதாயுளது. இதுமட்டுமன்றி இந்த ஆலிம்களெல்லோரும் நிறைந்த தமிழ்ப்புலமை யுடைய வர்களா யிருக்கிறர்கள் என்பதும் இங்கே நாம் பெருமை யோடு குறிப்பிடக்கூடிய ஒன்ருகும்.
ஆலிம் சகோதரர்களுள் முத்தவரானபடியால் மூத்த ஆலிம்’ என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்படும்

Page 173
296 மட்டக்களப்புத் தமிழகம்
ஹாஷிம் பாவலர் தமிழில் மட்டுமன்றி ஹிந்தி, உருது என்ற மொழிகளிலும் நிறைந்த புலமையுடையவர். எனி னுந் தாய்மொழியான தமிழைப் பெரிதும் மதித்துப் போற்றும் உணர்ச்சியாளர். சாதாரணமாக இவர் பேசும் போது தமிழ் மொழியானது தனக்குரிய இயல்பின் மேலால் இன்னும் குழைந்து இனிமையூட்டும். நிறைந்த நகைச்சுவை யூட்டும் பேச்சாளராக எல்லாராலும் மதிக் கப்படும் இப் பெரியார் வல்லெழுத்துக்கள் பயின்ற எதுகைச் சொற்களை அடுக்கி அடுக்கிச் சொற்கோப்புச் செய்து பேசுவதில் மிக வல்லுநர். மத சம்பந்தமான கூட்டங்களிலாயினும் அல்லது வேறு கூட்டங்களிலாயி னும் மூத்த ஆலிம் அவர்கள் பேசினல் அங்கே சிரிப்புக் குக் குறைவே இருக்காது. பேச்சிலே உயர்ந்த இலக்கிய நடையினை இவரிடம் நாம் எ தி ர் பார்த் த ல் இயலா தாயினும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோன்று மக்கள் உள்ளத்திலே பெரிய உண்மைகளும் இலகு விற் பதியத்தக்கவிதமான இனிய முறையிலே நகைச் சுவை கலந்து உயர்ந்த கருத்துக்களை மக்களிடையே அள்ளி வழங்குவதை நாம் இவருடைய சொற்பெருக்கிலே காணலாம்.
இப் பாவலர், அக்கரைப்பற்றிலே முஸ்லீம் மக்கள். நடத்தும் எத்தகைய கூட்டத்திலும் தலைவராகவோ பேச் சாளராகவோ கலந்து மேடையை அணிசெய்துகொண் டிருப்பார். ஆலிம்களுக்கென உள்ள தனி உடையினே இவர் அணிவதில்லை. சாதாரண சாரம், சட்டை, சால்வை, கறுத்தத் தொப்பி, உலாவுதடி என்பன பாவலரின் உட லுக்குப் புறவழகு பூட்ட முயன்று அவருடைய புகழால் தாமே அழகுபெறுவன. தாய்நாட்டன்பு மாருத தனி உள்ளம் படைத்த இப் பாவலர் பாடிய பாட்டுக்களுக் குக் கணக்கில்லை. மட்டக்களப்புநாட்டின் நிலவள மே மக்களுக்கு நிறைந்த மனவளத்தையும், கலைவளத்தை யுஞ் சேர்த்தது என்பது புலவரின் கருத்தாகும். கருங் கொடித்தீவு என வழங்கப்படுவதும் தமது பிறந்த பதியு

புலவர் பரம்பரை 297
மாகிய அக்கரைப்பற்றினை இன்னரின் புலமை மொழி யிற் கேட்கும்போது நாம் இக் கருத்தினை அறியலாகும்.
* புண்டரிய மலர்த்தடத்தின் வாவி நீளப்
புதுவரிக ளதிலுறைந்து இராகம் பாட
வண்டுமிழ்ந்த அமுதமொரு வாவி யாக
வனிதையர்கள் நீராட வமுதுள் ளேகத்
தண்டமிழோ ருவமையுரை குய்யம் விம்மச்
சகிக்கவொண்ணு மதப்புறையச் சிசுக்கள் தாவி
அண்டியிரு இதழதனுல் உறிஞ்சி வாழும்
அருள்மதலைக் குடிகொள்கருங் கொடியூ ராமே.”*
வண்டுகள் உண்டு உமிழ்ந்த தேனுறு பெருகிப் பெரிய வாவியாயிற்றென்றும், அவ் வாவியில் நீராடித் திளைத்ததினுல் உடல் மதர்த்து மக்களுக்குப் பாலமுதத்தை யூட்டி உளம் மலர்ந்து மகளிர் இங்கே கவி பாடுகின்றன ரென்றும் தொடர்ந்து செல்லுங் கற்பனையானது சிந்த னைக்கு நல்விருந்தாகி இன்னர் பாடல்களைக் கேட்போருக் கெல்லாம் நிறைந்த மனமகிழ்வை ஊட்டுகின்றது.
இத்தகைய பெருஞ் சிறப்பினுற்போலும் அப்பகுதி மக்கள் பாடல் புனேயவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ தெல்லாம் மூத்த ஆலிம் அவர்களிடமே செல்கின்றனர். புலவரும் மறுப்புக்கூருது மனப்பாடமாக இருந்தவற்றை எழுதுவதுபோன்று வேண்டிய பாடல்களை உடனே எழு திக் கொடுக்கும் ஆற்றலும் பெற்று, நடமாடும் ஒரு கவி தைக் களஞ்சியமாக விளங்குவாராயினர். இறைவன் மேற் புனைந்தனவும், தமது நாட்டினேப் பற்றியும் வேறு நிகழ்ச்சிகளின்மீதும் இவர் இயற்றியனவுமான தனிப் பாடல்கள் நூல் வடிவமாக இன்னமும் வெளிவந்தில வாயினும், அவை ஆயிரத்துக்கு மேற்பட உள்ளன என்று அறிந்தோர் கூறுகின்றனர்.
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அழப்பத்தை’ என் னும் ஊர் முஸ்லீம் மக்களுக்குச் சிறந்த ஒரு யாத்திரைத்

Page 174
298 மட்டக்களப்புத் தமிழகம்
தலம் போல்வது. அங்கு அடங்கப்பெற்றுள்ள அவுலியா வின் பேரில் கந்தூரி ஒன்று வருடந்தோறும் நடைபெறும் போது முஸ்லீம்கள் இலங்கையின் பல பாகங்களிலு மிருந்து ஒன்றுகூடுதல் வழக்கம். இதன் சிறப்பை உன் னிப் பெண்களும் அழப்பத்தைக் கந்தூரிக்கு விரும்பிச் செல்வதுண்டு. அத்துறையின்மீது பாடிச் செல்லுதற் கான வழிநடைப் பாடல்கள் சிலவற்றை நமது பாவலர் பாடியபோதுதான் இவரது பெருமையினே வெளியூர வரும் அறிந்து கொண்டாட இயல்வதாயிற்று.
* வாலை இளங்குயி லேஅளி யாடும் வரிக்குயிலே
வேல்விழி யாளேநின் தோழியும் நீயும் விடியமுதல் காலைக் கடன்களை நன்ருய் முடித்துக் கருத்துடனே *ஆலம் புகழும் அழப்பத்தைக்குப் போவோம் ஆயத்தமோ.’ என்பன போன்று மகளிரை விளித்தமைத்த இசைப் பாடல்கள் அக்காலம் அச்சிட்டு வழங்கப்பெற்றன எனி னும் இன்று அச்சிதழ் ஒன்றேனும் நமக்குக் கிடைத்திலது. அழப்பத்தை வழிநடைப் பாடல்களும் ஒரு சிலவே மக்கள் நாவில் அழியாது இன்று வழங்குகின்றன.
இசையமைவு பெற்ற பாடல்கள் பொதுமக்களின் உள்ளத்தை இலகுவிற் கவரும் என்ற கால இயைபின்னப் பயன்கொண்டு வேறு பல இசைப் பாடல்களையும் புலவர் இயற்றியுள்ளனர்.
* மாதே நிறைமதியே, நபி மலரடிதனைத் துதியே
செந்தா மரைமல ரமுதுறை மக்கா தேசத்தில் உறைநாதர், கலந்தர் அப்துல்லா மகவெனும் கருணைசெய் மஹ்மூதர், திரு
செந்தா மரைமல ரிணையைத் தந்தெனை யாளும்
அந்தக் கந்தம் கமழும் நபிக்கெந்தன் சலாம் உரைத்து.”* (மாதே)
* ஆலம் - உலகம்,

புலவர் பரம்பரை 299
இவ்வாறு அமைந்து செல்லும் இசைப் பாடல்களின் ஈற்றுச் சரணத் தொடர்களெல்லாம் புலவரது சொந்தப் பெயரால் நிறைவுறுத்தப் பெற்றுள்ளன. அக் கீர்த்தனை களில் பல வேண்டிய சந்தர்ப்பங்களில் அங்கங்கு ஒலித்து வருதலே நாம் இன்று கேட்டல் கூடும்.
இவ்வாறு எல்லாத் தரத்தினர்க்கும் கவிதை விருந் தளித்த ஹாஷிம் ஆலிம் பாவலர் மக்களின் பொதுநல னுக்கான பணிகளில் எல்லாம் ஈடுபடுபவர்.
* பஞ்சாமிர்தக் கீர்த்தனம் முதலிய நூல்கள் சில வற்றுக் காசிரியராயுள்ள இவரது சகோதரர் அப்துல் ரஜீத் ஆலிம் அவர்களுக்கும் புலமை வழிகாட்டியான இப் பெரியார், தமது பகுதி மக்களுக்கெல்லாம் குடித்தலைமை பூண்டவர். தமது எதிரிகளையும் இனிய கிண்டலாலும் குத்துக் கதைகளாலும் வசங்கொள்ளும் ஆற்றலரான இவர் அக்கரைப்பற்றுக் கிராம முன்னேற்றச் சங்கங் களின் சமாசத்துக்கும் தலைவராகி யுள்ளதில் வியப் படைதற்கில்லே. இன்னுருடைய புலமைவளம் மக்களுக்கு கல்விருந்தாயமைவது.

Page 175
XIV. விபுலாநந்த அடிகளார்
மட்டக்களப்புத் தமிழகத்தின் புலவர் வரிசையிற் சுவாமி விபுலாநந்தருடைய (படம் 19) சரிதம் உயர்நிலை யிற் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. தமிழிசையின் சரிதை, அடிகளாரின் சரிதையாகும் என்று சொல்லத் தக்கவாறு விளங்கும் இன்னருடைய வரலாறு, தொடர் பான கட்டுரைகள் சிலவற்றின் மூலம் அல்லது தனியாக அதற்கென எழுதப்படும் நூல் ஒன்றன் மூலம் ஆராயப் படவேண்டிய விரிவானதாகும்.
புறச்சமயங்கள் ஒருபுறமும், புறமொழித்தாக்கம் மற் ருெருபுறமும் நின்று பெரும்புயற் காற்ருகச் சுழற்றிய காலத்தில், மட்டக்களப்பு நாட்டின் பழம் பண்புகளையும், மக்களின் மொழிச் சிறப்பையும் அக் கொடும் குருவளியி னின்றும் காப்பாற்றித் தந்த பேராசிரியர் அடிகளார். மட்டக்களப்பின் ஆறுமுகநாவலர் என்று போற்றத்தக்கவ ரான இவ்வடிகளாருடைய நினைவுச் சின்னம் இங்குள்ள இராமகிருஷ்ண சங்கத்தைச் சேர்ந்த சிவாநந்த வித்தி யாலயம். இந் நிலையத்தின் தாகூர் ஆகிய அடிகளார் தமது கலைத்தொண்டிலே சில ஆண்டுகளை, இக் குரு குலத்தின் தந்தையாக உடன் வதிந்து மாணவரை வழிப் படுத்துவதிற் செலவு செய்த பெருந்தகையாளர்.
1892ஆம் ஆண்டு மார்ச்மாதம் 27ஆந் திகதி (கர வருடம் பங்குனி மாதம் 16ஆம் நாள்) மட்டக்களப்புக் காரைதீவுச் சாமிநாதப் பெரியார், ஒரு மயில்வாகன ஞரைப் பெற்றெடுத்துத் தமிழன்னையின் தலைமகனன விபுலாநந்தராகத் திகழ வழிசெய்தார்கள். தமிழும், சைவமும் விளங்கும் இவர் குடும்பம் தமிழ்க் கலையும், பண்பும் மிளிர இன்றும் வளர்வது. ஆங்கிலம், தமிழ், கணிதம் என்பவற்றுக்கு அறிவாசானக அப்போதே மயில்வாகனம் பெற்ற நல்லாசிரியராகிய குஞ்சித்தம்பி அவர்கள் (படம் : சமர்ப்பணம்) விதைத்த கலைவிதைகள் அடிகள்பால் வளர்ந்து, தமிழகத்தையே நலம் செய்வன வாயின.

புலவர் பரம்பரை ĝÓ !
* அம்புவியிற் செந்தமிழு மாங்கிலமும் எனக்குணர்த்தி
அறிவு தீட்டி வம்புசெறி வெண்கலச வல்லியருள் கூட்டிவைத்த
வள்ளல் குஞ்சித் தம்பியெனும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்ட
தகைமை யோன்றன் செம்பதும மலர்ப்பதத்தைச் சிரத்திருத்தி எஞ்ஞான்றும்
சிந்திப் பேனே.” என்னும் குருவணக்கப் பாடல், என்றும் அழியாத அடி களாரது குருபக்திக்குச் சான்ருக நிற்பது. இப் பாடலை அடிகள் யாத்தது 1915ஆம் ஆண்டிலேயாகும். அக் காலத்தில் மயில்வாகனனர் எழுதிய பாடல் நூல்கள் நான்குள்ளன. கணேச தோத்திர பஞ்சகம், கதிரையம் பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டைமணிமாலை, சுப்பிர மணியசுவாமிகள் இரட்டைமணிமாலை, குமரவேள் நவ மணிமாலை என்னும் அவற்றை யாழ்ப்பாணத்து வட்டுக் கோட்டை க. சிதம்பரநாதபிள்ளை யவர்கள், வித்துவான் சரவணமுத்தனது சிறப்புரையோடு பதிப்பித்தபோது எழுதப்பெற்ற முன்னுரையுள்ளேதான் அடிகள் இப் பாடலே இடம்பெறச் செய்துள்ளனர். தமிழ் பயிலும் ஓர் ஆங்கில ஆசிரியராயிருந்த சாமிதாச மயில்வாகன னர், தமது 23ஆவது வயதிலேயே புனைந்த இந்நூல் களிலுள்ள செய்யுள்களின் சிறப்பினைக் கண்டவர்கள் அவற்றின் சுவைகொண்டு அவரது வருங்காலப் புகழ் நிலையை உணர்ந்திருப்பார்கள். இவ்வாறு இளமைக் காலத்திலே அடிகள் செய்த பாடல்கள் பல பல்லோ ரறியாது கிடப்பனவாகும்.
யாழ்நூல் இப் பெரியாரை இளங்கோவின் அவதார மாகக் கருதவைப்பது. ஆங்கிலப் புலவரான செகசிற்பி யாரை மதங்க சூளாமணியாக்கிய அடிகளார், தாமே தமிழரின் மதங்க சூளாமணியாகிவிட்டார். தில்லைத் திரு நடனம் உயர்ந்த தத்துவங்கள் செறிந்த அவரது நாட கக் கலைநூல்.
அடிகளார் செய்துள்ள மொழிபெயர்ப்புக்களோ என் ருல் அவை சங்கதத்திலிருந்தாயினும் சரி, ஆங்கிலத்திலிருந்

Page 176
3O2 மட்டக்களப்புத் தமிழகம்
தாயினும் சரி மூலப்பகுதியையும் விஞ்சிய சிறப்புடையன வாய் விளங்குதலை அறிஞர்குழு அறியும். அவர் புனே யும் கவிதைகளிலே மெல்லிய இன்சொற்கள் செறிந்து தமிழ் நயம் சொட்டும். தமது புலமைக்கு விளக்கம் வேண் டாத கலைவிளக்கம் விபுலாநந்த அடிகள்.
அண்ணுமலைப் பல்கலைக்கழகமும், இலங்கைப் பல் கலைக்கழகமும் தமது முதற் தமிழ்ப் பேராசானக இவ ரைக்கொண்டு சிறப்படைந்தவை. பிர புத் த பாரதம், வேதாந்த கேசரி, இராமக்கிருஷ்ண விஜயம் என்னும் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் அடிகள் இருந்துள்ளார் என்பது அச் சஞ்சிகைகளுக்கே சிறப்புத் தருவதாகும்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியும், மட்டக்களப்புச் சிவா நந்த வித்தியாலயமும், திருக்கோணமலை இந்துக்கல்லூரி யும் இன்னுரைத் தலைமையாசிரியராகக்கொண்டு புகழ் கொண்ட நிலையங்கள். இவரைத் தம் நல்லாசிரியராகப் பெற்றுச் சிறப்படைந்த மாணவர் பல்லோர் இக் கல்லூரி களிலும், மேற்தந்த பல்கலைக்கழகங்களிலும் இருந்து வெளிப்பட்டிருக்கிருர்கள். இன்னும், தனிப்பட்ட வகுப்புக் களிற் பயின் ருேரும் பலர் இன்று தமிழகத்தை அலங் கரித்து நிற்கின்றனர்.
* ஈழத்திருமணி, பாரத தேசப் பொதுமணிகாண் ’ என்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களாற் போற்றப்பட்டிருக்கும் அடிகளார், மட்டக்களப்புத் தமிழ கம் தந்த சிறந்த தமிழ்மணியாகித், தன் புகழ்வளத்தினுல், தான் பிறந்த பொன்னுட்டின் புகழையே மிகுத்துள்ளார் கள். இப் பகுதிக்கு அவர் செய்துபோந்த தொண்டுகள் ஈடிணையற்றனவாகும். அங்கங்கே பண்டித வகுப்புக்கள், புலவர் மன்றங்கள், நூல் கிலேயங்கள், தமிழ்க் கழகங்கள் என்பவற்றை நிறுவி மட்டக்களப்பைத் தமிழ் கொழிக்கச் செய்த பெருந்திருவாளர். இன்னருடைய பெருமுயற்சி யினலே இந்நாட்டிலும், பரப்பப்பெற்ற இராமக்கிருஷ்ண இயக்கமானது, இந்துமதத்தை வளர்த்துப் புகழ்கொண்டு மட்டக்களப்பு மக்களின் சமூகத்துக்கேற்ற ஒரு சங்க மாக இருப்பதோடு, மத சமரசத்தையும் தீண்டர்மை விலக்கினையும் தந்து சாதிப் பூசல்களை அகற்றி, காட்டினை

புலவர் பரம்பரை 803
உயர்த்திவைத்த பெருமையுமுடையது. மட்டக்களப்பின் மூலை முடுக்குகளி லெல்லாம் தமிழாசிரியர்கள் தோன்று தற்கும், ஏழைக் குடும்பங்களிலிருந்தும் ஆங்கிலப் பட்ட தாரிகள் முளைத்தற்கும் இங்குக் காரணராக இருந்த அடி களாரது பெரும்பணி கைம்மாறுகொள்ளாக் கடப்பா டுடையது.
இத்தகைய திருவாளர் மட்டக்களப்புக் காரைதீவி லேயே தோன்றினரெனினும், தமிழகமெங்கும் ஈழத்தின் பிரதிநிதியாகவே தமது காலமுற்றும் கருதிப் போற்றப் பெற்றவர். அதனுல் தமிழுலகு இவரை “ ஈழத்தடிகள் என்று கொண்டாடுகின்றது. அன்னரது அறிவொளிவீசும் வெளியீடுகளும், மாணவர் திலகங்களும் பெயரா நினைவுச் சின்னங்கள். 1947ஆம் ஆண்டு ஆடிமாதம் 19ஆந் திகதி மண்மகள் அவரது பொன்னுடலைத் தன்னகங்கொண்டு பெருமிதமடைந்த திருதாள். அந்நாள், இன்று அடி களாரை நினைவிற்கொண்டு விழாவெடுக்குந் திருநா ளாகத் தமிழ் மக்களிடையே நிலைப்பட்டு விளங்குகின்றது.
குறைந்த கால எல்லேயுள் - தமது 55 வயதுள் - அடி களார் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமயத் தொண்டும் அளப்பிலவாய் மிளிர்கின்றன. ஆறுமுகநாவலர் பெரு மானுக்குப் பின்னர் இந்திய நாட்டிலே, ஈழமானது விபு லாநந்தரது பெயராலே விளங்கப்படக் காரணமான பேரறிஞர் திலகமாக விளங்கிய அடிகளாலேதான், மட் டக்களப்புத் தமிழகத்தின் புகழ் மலைவிளக்காயிற்று. பொது நோக்கிலே, இன்னரது தமிழ்த்தொண்டு ஒரு புறமிருக்க, * பெற்றதாயும் பிறந்தபொன் டுைம் கற்றவ வானினும் நனிசிறந் தனவே ' என்ற கடப்பாட்டினேடு மட்டக்களப்பில் வாழ்ந்து இந் நாட்டின் கலைநிலையினையும், பண்பாட்டுப் புகழினையும் உயர்த்திய திருவுடையாளர் அவர். அரசியற் படத்தில் மட்டுமன்றி அறிவுலகப் படத்தி லுங் கூடத் தாம் பிறந்த மட்டக்களப்புத் தமிழகமாகிய பொன்னட்டைச் சிறப்புறப் பொறித்துச் சென்ற அடி களாருக்கு இந்நாட்டு மக்கள்" செய்து நிறைக்கக்கூடிய கைம்மாறே இல்லை எனலாம்."

Page 177
ჭ04 மட்டக்களப்புத் தமிழகம்
இருபதாம் நூற்றண்டு கண்ட ஈடிணையற்ற தமிழறி ஞராய் வாழ்ந்து மறைந்த ஈழமணி, நமது விபுலாநந்த முத்தமிழ்மணி. சங்கமிருந்து கவியரங்கேற்றிய புலவர் களும், உரைவகுத்த பேராசிரியர்களும் ஒருபாலாக, அவர்போலன்றிப் பிறிதோர் துறையிலே தமிழன்னேக்கு அழியாத சிறந்த தொண்டு செய்து சென்ற நாவலர் விபுலாநந்தர். ஆங்கில மொழிப் புலமையாலே தமிழைப் புதுமுறையில் வளம்படுத்திய கணித மேதை. தமது நுண்மாண் நுழைபுலனுற் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த பழந்தமிழிசைப் பரப்பினே எல்லேகண்டு *யாழ்நூல் யாத்த புலமையாளர். அவரியற்றிய பல நூல்க ளுள்ளே தலைசிறந்து மிளிர்வது அந்த “யாழ்நூல்'. அது இசைத்தமிழ், இயற்றமிழ், விஞ்ஞானம், கணிதம் ஆகிய அறிவுத் துறைகளெல்லாம் கலந்து குழைந்து எழுந்த தமிழமுதம் போன்றது. விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக அரிதின் முயன்று பெரிய ஆராய்ச்சிகளைச் செய்து சிறந்த உண்மைகளைக் கண்டு பிடிக்கின்ருர்கள். அடிகளாரும் அத்தகைய பேராராய்ச்சி ஒன்றினேப் பதினன்கு ஆண்டு களாகச் செய்து கண்டெடுத்த பெரும்பொருள்தான் *யாழ்நூல் வடிவிலே தமிழர் கையில் கிடைத்திருக்கின் றது. ஆழ் தமிழ்க் கடலிலே வாழ்வெல்லாம் நீந்தி, யாழ் நூலினைக் கொண்டுவந்த அடிகளாரது பேரறிவு தமி ழினத்தின் நுண்ணறிவினை மதிப்பிடுதற்கோர் பேரெல் லைக் கல்லுப் போன்றதாய்விட்டது.
அடிகளாரது இலக்கியப் புலமை மற்றையோர் விரும்பிப் படிக்கமுடியாதவாறு கருகலாகக் கிடந்த சிலப் பதிகார அரங்கேற்று காதைக்கு விளக்கம் தந்தது. பழந் தமிழிசைக் கருவிகள் அப் பகுதியுள் மறைந்து மிளிர்வதை அடிகள் கண்டனர். பழந்தமிழரது பரம்பரைச் சொத் தான சகோடயாழ், பேரியாழ், சிறியாழ், மகரயாழ் என்னும் இசைக் கருவிகளெல்லாம் அடிகளாரது அகச் செவியில் இன்னிசை பொழிந்து நின்றன. சிலப்பதிகாரம் என்னும் இலக்கியம் தந்த அந்தப் பழம்பெரும் செல் வத்தை அடிகளார் விஞ்ஞானக் கண்கொண்டு நோக்கி னர். அவரது கணிதப் பெரும் புலமையும் அதற்குத்

புலவர் பரம்பரை 805
துணைசெய்து நின்றது. தமிழிசைக்குரிய சுர அமைப்புக்கள் Lusibstul u fể6õST LI GJITLÜL UIT (95@ir (Tables of Logarithms) எல்லாம் அவருள்ளத்தே தோன்றலாயின. யாழ்நூல் ' ஆக்கத்துக்கான அடிப்படை இவ்வாறு கிடைத்ததோடு மட்டக்களப்பு வாவியில் இருந்தெழும் ஊரிப்பாடலும் (Singing Fish) அந்த இசை ஆராய்ச்சி வளரத் துணை செய்யலாயிற்று. நீருள்ளிருந் தெழுந்த எழுவர் மடதல்லா ராக ', ஏழிசைகளையுங் கற்பனை சேர்த்துப், பாயிரம் செய்து யாழ்நூல் எழுதத் தொடங்கினர். பாயிரவியல், யாழுறுப்பியல், இசைநரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டுப் பழந்தமிழிசைச் செல்வமும் * யாழ்நூல் ’ என்னும் பெயரோடு தமிழன்னையின் கரத் தேறலாயிற்று.
* யாழ்நூலி’னே நன்கு கற்றுத் தெளிவதற்கு நிறைந்த கணிதப் பேரறிவும், இலக்கியப்புலமையும் வேண்டுவன வாகும் என்பதை அந்நூலின் பெற்றியினே நன்கறிந்த யாவரும் உணர்வர். பண்டைய யாழ்களைப்பற்றிய இலக் கியக் கூற்ருன விளக்கப்பகுதி மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து பெளதிக நோக்கோடு அமைந்த (Sonometer, Tuning forks, Air pumps (p.5a).T007 35(55,556IT g) விளக்கம், ஒலி அல்களின் கூறுபாடுகள், அவற்றின் நீளம் என்பன பற்றிய தெளிவுரை இவை எல்லாம் பழந்தமிழிசை விளக்கத்துக்கு இன்றியமையாதனவாக அடிகளாராற் காட்டப்பட்டிருக்கக் காண்போம். இவ்வா ருன பெருநூல் ஒன்று தமிழில் இதுவரை எழுந்ததில்லை என்றே கூறலாம். முத்தமிழின் நடுநாயகமான இசைத் தமிழ்ச் சிறப்பினைக் காட்டும் இத்தகைய யாழ்நூலானது, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தப் பெருமானரது திருநாளன்று (5-6-1947), திருக் கொளம்பூதூர்த் திருக்கோயில் முன்றிலிலே, ஆளுடைய பிள்ளையாராகிய அத் திருஞானசம்பந்தப் பெருமானது திருமுன்னிலையில், 5ற்றமிழ்ப் புலவர்கள் குழுமிய பேரவை யிலே அரங்கேற்றம் பெறலாயிற்று. முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும், தமிழ் வள்ளல்களும் போற்றி வளர்த்
tD – 20

Page 178
306 மட்டக்களப்புத் தமிழகம்
ததும், தண்தமிழ்ப் புலவர்களாலும், பாணர், கூத்தர், விறலியர் என்போராலும் இயலிசை நாடகமாக முத் துறைப்பட்டு வளர்ந்து வந்ததுமான தமிழ்மொழியின் சிறந்த பகுதிகளெல்லாம் இடைக்காலத்தே பேணுதுவிடப் பட்டுப்போன காரணத்தால் நம்மைவிட்டு வெகுதூரம் அகன்று செல்வனவாயின. அந்நிலையிலே, நமது அருங்கலே நிதியமான இசைத்தமிழ், அடிகளாரது பெரு முயற்சியி ஞலே யாழ்நூலாக மீட்கப்பட்டுத் தமிழினத்தின் சிறப்பை எடுத்து நிறுத்த வந்தமை, தமிழர் தவப்பயனல் நடந்த தென்றே கூறுதல் வேண்டும். அடிகளாரது தவவாழ்விலே * விட்டகுறை இதனேடு நிறைவேறிற்றுப் போலும்! “யாழ் நூல்' அரங்கேறிய சில நாட்களுள் (19-7-1947 அன்று) விண்ணவர்க்கும் தமிழமுதம் ஊட்ட விழைந்தவர்போன்று அடிகளார் விரைந்து நம்மை விட்டுச்சென்றுவிட்டார்.
அடிகளாரது புலமைப் பெருஞ் சிறப்புக்கு வேண்டிய அடிப்படையை, அவரது இளமைக்காலத்தே ஊட்டிய கல்வி நிலையங்கள் முறையே : காரைதீவிலுள்ள சைவப் பாடசாலை, கல்முனை - லீஸ் உயர்தர ஆங்கிலப் பாடசாலை, மட்டக்களப்பு அர்ச். மிக்கேல் கல்லூரி (படம் 44) என்பன. அவருக்கு உயர்தரக் கல்வியூட்டிப் பெரும்புகழ்கொண் டவை ; கொழும்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலேயும், பொறி யியற்கல்லூரி (Technical College)யும் ஆகும். பயிற்றப் பட்ட ஆங்கில ஆசிரியரும், விஞ்ஞான டிப்ளோமா', இலண்டன் பல்கலைக்கழக பி. எஸ்ஸி. (B. Sc.) என் னும் பட்டங்களைப் பெற்றவருமாகிய அடிகளார்தான், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்பெற்ற தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் தேறிய முதலாவது இலங்கை மகனுவர். நிறைந்த குருபக்தி பூண்ட அடிகளாரது உள் ளத்திற் குடிகொண்ட ஆசிரியர்கள் மூவரும் மூன்று வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மெதடிஸ்த கிறித்தவ ராக இருந்துகொண்டே சமய சமரச நிறைவுடன் வாழ்ந்துவந்த குஞ்சித்தம்பி உபாத்தியாயரும், சைவப் பழமான வைத்திலிங்க தேசிகரும், கத்தோலிக்க சமயத் துறவியான பொனல் (Fr. Bonnel) சுவாமியாருமாகிய அம் மூன்று பெரியோரதும் தொடர்புதான் சிறந்த சமய

புலவர் பரம்பர்ை 807
சமரச ஞானியாக அடிகளாரை வளர்த்து வைத்ததெனல் வேண்டும். இராமக்கிருஷ்ண சங்கத்தைச் சார்ந்து சமய சமரச வாழ்வு கொண்டபோதும், தமது பிறந்த பதியில் உள்ள கண்ணகியம்மன் பேரில் நீங்காத பக்திகொண் டிருந்தவர் அடிகளார். தேவார திருவாசகங்களை உயி ராகக் கொண்டு போற்றிப் படிப்பவர். சிவநெறியில் வில காத செந்தமிழ்ச் செல்வர்.
சுப்பிரமணிய பாரதியாரது பாடல்களில் ஈடுபாடு கொண்ட அடிகளார்தான் கற்றவர் மத்தியிலே பாரதி பாடல்களுக்கு நல் மதிப்பினை முதல் முதல் ஊட்டிவைத்த வர். பாரதியைப்போன்று சுதந்திர வீரமகனக வாழ்ந்த அடிகளார், முதலாவது உலக மகா யுத்தத்தின் போது பட் டாளத்திற் சேர்ந்து போர்ப்பயிற்சியும் பெற்றிருந்தார். * பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ; மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை’ என்ற பாரதி யாரது வாக்கை மனத்திற்கொண்டு இவர் புரிந்த தமிழ்ப் பணிகள் மேலும் பலவாகும். வடகாட்டிலே அடிகள் வாழ்ந்தகாலத்தில் * தமிழின் ஒலிமரபு” (Phonetics in Tamil) (pg5a) it is GLDIT GLiair flagu, (Modern Review) என்ற ஆங்கில சஞ்சிகையில் அரிய கட்டுரைகளை எழுதி மேல்புற அறிஞர்களுக்குத் தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தினர். பண்டிதமணி கதிரேசச் செட்டியாரது அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவின்போது தமிழறிஞர் கள் அவருக்குக் கையுறை செய்த 8 மணிமலர்’ என்ற நூலினுள்ளே அடிகளார் எழுதிய ஆங்கிலவாணி’ என் னும் கட்டுரை கற்ருேர் உள்ளத்தைப் பெரிதுங் கவர்ந்த தொன்ருகும். தமிழ் கற்ற பலரும் தமிழ்மொழியின் பெரு மையைமட்டுமே போற்றிப் பேசித்திரியும் மரபுக்கு மாருக, வடமொழிக் கடலையும் தென்தமிழ்க் கடலையும் கரை கண்டுணர்ந்த பண்டிதமணியாருக்கு, ஆங்கில மொழி இலக்கியங்களின் சிறப்பைக் கூறுமுகத்தான் அடிகள் எழுதிய அந்த உரைத்தொடர் தமிழுலகத்துக்கே புதுவதா யிருந்தது. இதனை வியந்தே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் தமது மீட்சிப்பத்துள் சீரேறுந் தமி

Page 179
308 மட்டக்களப்புத் தமிழகம்
ழறிவர்க்கு ஆங்கிலநூற் சுவை நிலைகூட்டித் தெருட்டும் புதுமைக் கபிலன் ’ என்றும், 'கலியுக தெய்வ அகத்தி யன்’ என்றும் அடிகளாரைப் புகழ்வாராயினர்.
இவ்வகையைச் சார்ந்த இன்னெரு பெரிய தமிழ்ப் பணிதான் அடிகளாரது மதங்க சூளாமணி’ என்னும் நாடகத் தமிழ் நூற் படைப்பு. நாடக இலக்கணங்கள் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலெல் லாம் ஒரே தன்மையதாக இருக்குஞ் சிறப்பைக் காட்டுவ தாய்த், தமிழ் நாடக இலக்கண அமைதிகளைச் செகசிற்பி யாரது (Shakespeare) ஆங்கில நாடகங்களுங் கொண்டு விளங்கும் பொருத்தத்தினை எடுத்து விளக்குவதாய், வடமொழி நாடக இலக்கண ஆசிரியரான தனஞ்சயனு ரது தசரூபகத்தைத் தமிழர்க்கு விளக்கிக் காட்டுவதாய் அமைந்த மதங்க சூளாமணி’ மதுரைச் தமிழ்ச் சங்கத் தாரால் 1926இல் வெளியிடப்பெற்றபோது, தமிழிலே நாடகத் தமிழ் இலக்கண நூல் ஒன்று இல்லையே என்ற பெருங்குறை நீங்கலாயிற்று. -
இராமக்கிருஷ்ண சங்கத்தின்மூலம் அடிகளார் ஆக்கி வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் மிகப் பலவாகும். விவேகாநந்த சுவாமிகளது ஆங்கிலக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் யாவும் அடிகளாராலே தமிழ்க்குழைவு பெற்று வெளி வந்த ன. ஞானயோகம், கர்மயோகம், விவேகாநந்த ஞானதீபம், நம்மவர் காட்டு ஞான வாழ்க்கை, விவேகாநந்த சம்பாஷணைகள் முதலியன வாகத் தமிழிற் படைக்கப்பட்ட நூல்களெல்லாம் அடிகளா ரது இனிய மொழிபெயர்ப்பா லமைந்தவையேயாம்.
இவைபோக, *தில்லைத் திருகடனம் அல்லது நட ராசர் திருவடிவம்’ என்று அடிகளார் எழுதியுள்ள நூல் சிவபிரானது திருவருள் வடிவாகிய ஐந்தொழில் நடனத் தைத் தத்துவப் பொருளோடு விளக்குவதாயமைந்தது. மாதொரு பாகனக இறைவன் எழுந்தருளியுள்ள நுட்பத் தினை விளக்க வந்ததுதான் உமா மகேசுவரம் ’ என்ற சிறிய நூல். சென்னையிற் கூடிய கலைச் சங்கத்தாரால் தமி ழிலே கலைச்சொற்களே ஆக்குதற்கென்று அமைக்கப்

புலவர் பரம்பரை 309
பெற்ற குழுவிலே அடிகளாரும் ஓர் உறுப்பினராகப் பங்குகொண்டு பெளதிகம் பற்றிய பகுதிக்கு வேண்டிய மிகச் சிறந்த கலைச் சொற்களை ஆக்கிக் கொடுத்தனர். இது கலைச் சொல்லகராதியின் ஒரு பகுதியாக வெளிவந் துள்ளது. * ஆங்கில வாணி', ' மேற்றிசைச் செல்வம் , * தமிழில் எழுத்துக்குறை’, ‘சோழமண்டலத்துத் தமிழும் ஈழமண்டலத்துத் தமிழும் ’ என்பனவாக அடிகளார் எழுதிய கட்டுரை கள் நூற்றுக்கணக்கானவையாகும். *மகாலட்சுமிதோத்திரம்’, ‘குருதேவர் வாக்கியம் முதலிய நூல் வடிவான மைந்த செய்யுள்களும், ஈசனுவக்கும் இன் மலர் மூன்று ’, ‘ ஆறுமுககாவலனுர்’, ‘தில்லிமாநகர்த் திரு மார்பன் திருக்கோவிற் காட்சி', ' கங்கையில் விடுத்த ஒலை ’, ‘ உகுப்தர்', ' தேவபாணி', 'மலர்மாலை', 'விவே காநந்த பஞ்சகம் , * பெருந்தேவபாணி முதலான பல தலைப்புக்களில் அமைந்த பலநூறு தனிச் செய்யுள்களும் அடிகளாரது கவிதைப் படைப்புக்கள். இவைகளுள் வெளி வராது கிடந்த தனிக் கட்டுரைகளும், கவிதைகளும் இன்று விபுலாநந்தத்தேன், வெள்ளம், அமுதம் என்பனவாக வெளிவந்து தமிழகத்திற் பயனுறுத்தக் காண்கின் ருேம்.
ஆங்கில இலக்கியங்களிலே நல்ல பயிற்சியும் தேர்ச்சி யுங் கொண்ட அடிகளார், செகசிற்பியார் கூறும் மானி டப் பருவங்கள் ஏழனேயும், யூலியஸ் சீசர், வேனிச வாணி கன், இரம்மியன், சுசீலை சரிதை முதலான நாடகங்களின் பகுதிகள் சிலவற்றையும் இனிய தமிழ்ச் செய்யுள் வடி வில் யாத்துள்ளார்கள்.
* அங்கணுல கனத்தினையும் ஆடரங்க மெனலாகும்
அவனி வாழும் மங்கையரை ஆடவரை நடம்புரியு மக்களென
மதித்தல் வேண்டும் இங்கிவர்கள் பலகோல மெய்திகின்ற நாடகத்தி
னியல்பு கூறிற் பொங்குமங்க மேழாகிப் போக்குவர விருக்கையொடு
பொருந்து மன்றே.”*
என்பது மனிதர்களது ஏழு பருவங்களையும் பற்றிய முதற் பாடல். யூலியஸ் சீசர் என்ற நாடகத்திலே, சீசரின்

Page 180
31 O மட்டக்களப்புத் தமிழகம்
மனைவியான கல்பூர்ணியா தனது கணவருக்கு நேர விருக்கும் பெருந்துன்பத்திற்கு அறிகுறியாகத் தீக்கன வொன்று காணுகின்ருள் ; மறுநாள் சீசருக்கு அந்தக் கனவைக் கூறி வேத்தவைக்கு அன்று செல்லவேண்டா மென்று இரந்து கேட்கின்ருள். அஞ்சாத நெஞ்சினனும், சுத்த வீரனுமான சீசர் அவளது வேண்டுகோளை மறுத் துக் கூறும் பகுதி அடிகளாரது இனிய தமிழ் வாயில்ை நல்லதோர் கவிதையாக 8 ம தங்க சூளாமணி’ யு ள் அமைந்து விளங்கக் காண்கின்ருேம்.
* அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து
ஆடவனுக் கொருமரணம் அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குக்
துன்மதிமு டரைக்கண்டாற் புன்னகைசெய் பவன்யான் இன்னலும்யா னும்பிறந்த தொருதினத்தி லறியாய்
இளஞ்சிங்கக் குருளைகள் யாம், யான் மூத்தோன் எனது பின்வருவ தின்னலெனப் பகைமன்ன ரறிவார்
பேதுறல்பெண் ணணங்கேயான் போய்வருதல் வேண்டும்."
மூலப்பகுதியை அப்படியே விளக்கும் நயம்பொருந்திய ஒன்ருக இச் செய்யுள் அமைந்திருப்பதைக் கற்ருேரறிவர். தெனிசனரது * யூலிசஸ் ' என்னும் நூலின் பகுதி ஒன் றும் இனிய தமிழ்ச் செய்யுளாக அடிகளாரால் யாக்கப் பட்டுள்ளது. இவ்வாறு மிகப் பலவாக உள்ள மொழி பெயர்ப்புக் கவிதைகள் யாவும் அடிகளாரது இருமொழிப் புலமைக்கும் சான்ருக மிளிர்வன.
தற்காலத்தே விருத்தமும் அகவலும் வெண்பாவும் முதலானவகைகளைச் சார்ந்தே பல புலவரும் கவிதை செய்கிருர்கள். கலிப்பாவினை அமைக்கவல்ல கவிஞரைக் காண்பதளிதாக உள்ள இந்நாளிலே அதற்கு விலக்காக வாழ்ந்த பெரும் கவிஞராக அடிகளார் விளங்கினர். கலிப்பாவின்வகை முழுவதும் அவர் வாக்கிலிருந்து புதிய ஒளியோடு வெளிப்படலாயின. * யாழ்நூலின் பாயிரவிய லுள்ளே * தண்ணளி செங்கோலாய். ’ என்று அடி களார் புனைந்தமைத்த கலிப்பாவின் சிறப்பினை 'நீரர மகளிரும் யாழ்நூல் ஆசிரியரும்' என்ற தலைப்பிலமைந்த

புலவர் பரம்பரை 31
இந்நூற் கட்டுரையுள் (பக். 71) கண்டு தெளியலாகும். கலிப்பாவையே சார்ந்த மகாலட்சுமி தோத்திரமானது நிறைந்த கவிதை இன்பமும், பொருள் நயமும் பொதிந்து விளங்குவது. அவரது தமிழ்க் கவிதைக்கு மகிழ்ந்து அருள் தரவந்த மகாலட்சுமியிடம் அடிகளாரான தமிழ்க் கவிஞர் தமக்கு வேண்டியவற்றைக் கேட்கும் அழகைக் கீழ்வருந் தாழிசைகளிற் காணலாம்:
* கூழுடையார் கூழவரிப்பர் கோமக்கள் பொன்னளிப்பார்
ஆழிமணி முடிவேந்தர் அகனிலத்தை எமக்களிப்பர் கீழ்மக்கள் வசையளிப்பார் கேள்வியிலார் நகையளிப்பார் வாழ்வளிப்பர் மாமுனிவர் மறைமுதல்வன் வீடளிப்பான் ;
* நீயளிப்ப தெதுவம்மா நித்திலமும் பொற்குவையும்
சேயொளிசேர் மலர்ப்பதத்தின் சிறுபூழி யாகாவோ ? வாசவனும் வடதிசையின் மரகதனும் பெறுநிதியம் தேசுசெறி கால்விரல்சேர் சிறுபீலிக் கிணையாமோ.
* கங்கைநீர்க் கரையடைந்தோர் கங்கையாள் தனை நோக்கி
அங்கைநீர்க் கிரந்துநிற்ற லறிவின்பாற் படுவதோ ? சங்குசேர் திருக்கரத்தாய் தமியனேன் இதயமெனும் பங்கயத்துள் நீஉறையின் பாரிலொரு குறைஉளதோ..?
* இறைவனது திருவருள் கிடைக்கப்பெற்றுவிட்டால் வேறு செல்வம் எதற்கும் குறைவுவராது ' என்ற பெரிய தத்துவத்தை எடுத்துக்காட்டிநிற்பது முன்ருவது செய் யுளின் இறுதியடி :
* வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவும் அல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனுர் வேண்டுவது;
* காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ, காப்பவிழ்ந்த் மலருமல்லக் கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளடி கோமகனர் வேண்டுவது;

Page 181
812 மட்டக்களப்புத் தமிழகம்
* பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலிலாக் கற்பகமோ
வாட்ட முருதவர்க்கு வாய்த்த மலரெதுவோ, பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலிலாப் பூவுமல்ல நாட்டவிழி நெய்தலடி நாயகனர் வேண்டுவது.
* ஈசனுவக்கும் இன்மலர் மூன்று ’ என்னும் தலைப்பி லமைந்த இப் பாடல்கள் அடி கள 7 ர து புகழோடு இணைந்து வாழ்வன. அடிகளாருடைய கல்லறையின் மீது (படம் 87) பதித்த பளிங்குக் கற்களில் இந்த இனிய பாடல்களே, அடிகளார் நமக்குக் கூறும் புத்திமதிகளாக இன்று பொறிக்கப்பட்டு விளங்குகின்றன.
அடிகள் மட்டக்களப்பில் அமைத்த உயர்தர ஆங்கி லக் கலாசாலை அவர்களது அருட்குரவரின் பெயரினைக் கொண்டு விளங்குவதான சிவாநந்த வித்தியாலயமாகும் (படம் 39). 1929ஆம் ஆண்டு வைகாசி மாதத்திலே இக் கலைநிலையம் தொடங்கப்பெற்றதோடு, மட்டக்கள்ப்புச் சைவ நன்மக்களது கல்வி, கலாசாரங்களுக்கென்று தனியான ஒரு கல்லூரி இல்லாதிருந்த பெருங்குறை நீங்குவதாயிற்று. சுடலை வனமாகக் கடுவயிற்பாங்குடைய தாய்க், * காலையும், நண்பக லன்ன கடுமைத்தாய்ப், புள் ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடைப், பள்ளியு மின் சுவைப் பழமரச் சோலையும், தெள்ளுநீர் நிலையும் திகழ்ந்திட அமைத்து மட்டக்களப்பு மக்களின் கலையிருளை நீக்கிய பெருவிளக்கானர் விபுலாநந்த அடிகளார். சிலகாலம் இக் கல்லூரித் தலைமையையும் தாமே ஏற்றுச் சகல துறை களையும் திறம்பட நடத்தினர். சமய வாழ்வு கனிந்து, தமிழ் மணம் கமழ்ந்து இவ்வித்தியாலயக் குருகுலத்தே மாணவர் வளரலாயினர். தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை எல்லாம் அடிகளாரே சிலகாலம் கற் பித்துவந்தனர். சிறந்த கல்லூரிகளை அமைத்தலின்மூலம் வருங்காலத்துப் பெருமக்களே ஆக்கியளிக்கும் நிகரற்ற இவரது சேவைக்கு சிவாநந்த வித்தியாலயமும், வண்ணை வைத்தீசுவர வித்தியாலயம், திருக்கோணமலை இந்துக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், மட்டக் களப்பு விவேகாநந்த மகளிர்பாடசாலை முதலிய கல்வி

புலவர் பரம்பரை 313
நிலையங்கள் பலவும் சான்ருக விளங்குகின்றன. தொடர்ந்து மட்டக்களப்புக் கிராமங்களிலெல்லாம் சைவப் பாடசாலேகளே எழுப்பி அக்காலம் நாட்டிற்கிருந்த பெரும் தேவையினை அடிகள் நிறைவுபடுத்தலாயினர். மட்டக் களப்பு மக்களை மதமாற்றம் செய்து வந்த புறமதத்தவரை இவ்வாருண் தொண்டுகளால் வென்று, இத் தமிழகத்தா ருக்குச் சொந்தமான பழம் பண்பாடு, கலாச்சாரம் என்ப வற்றை அழியாது நிறுவுதற்கு அக்காலம் அடிகளாரோடு தோள்கொடுத்து உழைத்த வீரத் தளபதிகளாக வித்து வான் சரவணமுத்தன் (படம் 32), அருணுசல தேசிகமணி (படம் 42) ஆகிய இருவரும் விளங்கினர்கள்.
* இமையத்தலையிற் தமிழ் முத்திரை பொறித்த ஈழக் கரிகாலன் ' என்று போற்றப்படத்தக்க அடிகளார் தமது ஆயுட்காலம் முழுவதும் தமிழுலகு எங்கணும் பரந்த புகழ்கொண்டு விளங்கிய பேரறிஞர். அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புக்களைத் தொடர்பான ஒன்ருக அறிய விரும்புவாருக்குக் கீழ்க்காணும் காலக் குறிப்புக்கள் பயன் படுவனவாகலாம் : 27-3-1892 (கர வருடம்-பங்குனி 16)இல் அடிகளார் மட்டக்களப்புக் காரை தீவிலே சாமித்தம்பியார்க்கும், கண்ணம்மையார்க்கும் மகனுகப் பிறந்தார். இவரது பிள்ளைத் திருநாமம் மயில்வாகனன் என்பது. 1897இல் பிள்ளைப்படிப்பு காரைதீவுத் தமிழ்ப் பாடசாலையிற் தொடங்கிற்று. 1902இல் கல்முனை மெத டிஸ்த பாடசாலையிற் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து ஆங் கிலம், தமிழ், கணிதம் என்பவற்றிற்குக் குஞ்சித்தம்பி உபாத்தியாயரே அவ்வாண்டிலிருந்து ஆசிரியரானர். 1906இல் அர்ச். மிக்கேல் கல்லூரிப் படிப்பும், பொனல் (Fr. Bonnel) சுவாமியாரது அன்புப் பிணைப்பும் தொடங் கின. 1908இல் கேம் பிரிஜ் சர்வகலாசாலையாரது சீனியர் " பரீட்சை சித்தி. 1911 - 1913 கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் படிப்பு ; 1913-1914 அர்ச், மிக்கேல் கல்லூரியின் ஆசிரியர் ; 1914-1916 கொழும்புப் பொறியியற் கல்லூரி (Technical College) படிப்பும் முடிவில் விஞ்ஞான டிப்புளோமா பெறலும்.

Page 182
314 மட்டக்களப்புத் தமிழகம்
1916இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டிதராதல். 1917இல் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகல், 1920இல் இலண்டன் மாநகரத் துப் பல்கலைக்கழக பி. எஸ்ஸி. (B. Sc.) பரீட்சையிற்தேறுத லும், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராதலும். 1922இல் சுவாமி சர்வாநந்தரது தொடர்பும், இராம கிருஷ்ண சங்கத்தைச் சார்ந்து பிரபோதசைதன்யராதலும், 1924இல் சித்திரை நிறைமதி நாளன்று சுவாமி சிவாநந்த ரது சீடராகித், துறவற தீட்சை பெற்று சுவாமி விபுலா நந்தர் என்னுந் துறவுப் பெயர் பெறல். 1925-காரை தீவுச் சாரதா வித்தியாலயத்திற்கும், 1926 நவம்பர் 6இல் சிவாநந்த வித்தியாலயத்திற்கும் அடிக்கல் இடப்பெற்றது. 1929 சிவாநந்த வித்தியாலயத் திறப்பு. 1930 இல் இலங் கையிலுள்ள இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமைக்காரர் (Manager) ஆதல். 1931இல் அண்ணு மலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி ஏற்றல். அக்காலத்திலிருந்து தமிழ்இசை ஆராய்ச்சி தொடங்கிற்று. 1933இல் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தி னின்று நீங்கி மீண்டும் ஈழம் வரல். அதே ஆண்டில் கரந் தைத் தமிழ்ச் சங்கத்து 22ஆவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கலும், அச் சங்கத்து இதழான ‘தமிழ்ப் பொழில் ' மூலம் இசை ஆராய்ச்சி மேலும் வளர்ந்து பரவத் தொடங்குதலும். 1935இல் திருவண்ணுமலையில் நடந்த சைவ சித்தாந்த மகாநாட்டுக்குத் தலைமை தாங்குதல். 1936இல் பச்சையப்பன் கல்லூரியிலே சொல்லாக்க மாநாடு அடிகளார் தலைமையிற் கூடுதல். 1937இல் திருக் கைலாய யாத்திரை. 1939இல் மட்டக்களப்புத் தமிழ்க் கலைமன்றத்தை அமைத்தல். 1939-1941 பிரபுத்த பாரத ஆசிரியராக மாயாவதித் தவப்பள்ளியிற் பணிபுரிதல். 1942இல் மதுரை முத்தமிழ்மாநாட்டுத்தலைமை. 1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதற்றமிழ்ப் பேராசிரிய ராதல். 1947 ஜூன் 5இல் திருக்கொளம்பூதூரில் * யாழ்நூல்' அரங்கேற்றம். 1947 ஜூலை 19இல் கொழும் பிலே அடிகளார் இறைவனடி சேர்தல். ஜூலை 21இல் மட்டக்களப்புச் சிவாநந்த வித்தியாலய எல்லேயுள் அடிக ளாரது பூதவுடல் கல்லறை சேர்க்கப்படல்,

புலவர் பரம்பரை 315
* சரிகமவும் பதகிசவும் தனித்தனியே வடித்தெடுத்துப்
புரிவுறநல் லிசையமுதாய்ப் புவிக்களித்தாய் புலவோர்கள் பரிவுற இங் கழுதரற்றிப் படுதுயரம் தனிலாழப் பிரிவுறவு செய்தனையே பெருமுனிவ வருவாயோ.”
- வீ. சீ. க.
என்பனவாகப் பல இரங்கற் கவிதைகள் அடிகளாரது பெரும்பிரிவு குறித்து எழலாயின. அவரது கல்லறைக் குப் பக்கத்தே அடிகளாரது நினைவாய் ஒரு மணிமண்டப மும் (படம் 38) இன்று எழுந்து நிற்கின்றது.
அடிகளாரைத் தோற்றுவித்தது மட்டக்களப்புக் காரை தீவு ; பேரறிஞனக்கியது பாரதநாடு ; அவர்களது சேவை யைப் பெற்றுப் பயன் அடைந்தது தமிழ் கூறும் கல்லுலகம். அவர்களது பூதவுடல் இன்று கல்லடி உப்போடை மண் னுள் மறைந்து கிடக்கின்றது. அவ்வுடல் மறைந்தாலும் அடிகளாரது புகழுடல் தமிழ்மொழி உள்ளவரை அழிய முடியாதவாறு சாகாவரம் பெற்று என்றும் நிலவும் ஒன் ருய்விட்டது.
* புத்தகா சிரிய ஞகிப் புகழ்பெறு யாழ்நூல் ஆக்கிப்
பத்திரா சிரிய ஞயும் பல்கலைக் கழகந் தன்னில் வித்தகா சிரிய னயும் விளங்கிய விபுலா நந்தன் செத்திலன் அமர ணுகி நித்தியம் வாழ்கின் ருனே.
-தியாகி
* முத்தமிழின் வடிவமெனத் தோன்றி மேற்கு
மொழிக்கடலும் வடகடலும் முறையி னடித்
தத்துவதன் னெறியுணர்ந்து சாந்தி கண்ட
தவமுனியை இசைத்தமிழின் தந்தை தன்னை,
வித்தகயாழ் நூலருளும் விபுலா நந்த
வியன்மணியை ஈழமணி விளக்கை நாளும்
சித்தமதில் மகிழ்ந்தேத்திப் பத்தி செய்து
புத்திதெளிக் துண்மைவழிப் புகுவோம் யாமே..?
-புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

Page 183
XV. தமிழ் மணிகள்
மேலே பெயர் குறித்து எழுதிய புலவர் பரம்பரை யினரை விட இன்னும் புலவர்கள் பலர் பெயர் தெரிந் தும் வாழ்க்கைக் குறிப்புக்கள் அறியப்படாதோராய் மட்டக்களப்பு மண்ணை அழகுறுத்தி மறைந்து சென் றுள்ளனர். இன்னும் சிலர் புகழொளி பரப்பி இன்று வாழ்ந்துவருகின்றனர். இத்தகையோரைப் பற்றித் தனித் தனி விரித்து எழுதுதல் சாலாமையால் இயன்ற குறிப் புக்கள் சிலவற்றை மட்டும் கீழே தந்து இக் கட்டுரைத் தொடரினை நிறைவுறுத்தலாமென்று எண்ணுகின்றேன். மட்டக்களப்பு நாடு கவிஞர் பரம்பரைக்குப் பெயர்போன தென்று வெளியுலகத்தவ ரெல்லோரும் புகழத்தக்க வகை யில் தமது தாய்நாட்டுக்குப் புகழ் ஊட்டி வாழும் இளங் கவிஞரும் எழுத்தாளருமாகப் பலர் இன்று நம்மிடை வாழ்ந்துவருகின்ருர்கள். காலம் அவர் பெருமையினை மேலும் வளர்த்துப் புகழினை நிறைக்குமாக.
சோமசுந்தர தேசிகர் :
கிறித்தவமதத்து உபதேசியாராக இருந்தபோதும் மட்டக்களப்புத் தமிழகத்தாரது பழம்பெருமை குன்ருத சைவமதம், பண்பாடு என்பவற்றினை நன்கறிந்த கார ணத்தினுல் ஒரு இந்துமதத் துறவிபோன்று சமய சமரச நோக்குடன் வாழ்ந்து சைவசமய புராண இதிகாசங்களில் ஈடுபாடுகொண்டு பொதுநலப் பணிசெய்து நாட்டுக் கேற்ற வகையிலே தமிழ்ப்புலமை வளர்த்த பெருந் திருவாளர் குறுமண்வெளியினை வசிப்பிடமாகக்கொண்டவ ரான சோமசுந்தர உபதேசியார் என்பார். இவரியற்றிய சைவசமய நூல்களின் பெருஞ் சிறப்பினை நோக்கிய பொது மக்கள், இவரைச் சோமசுந்தர தேசிகரென்றே அழைப்பா ராயினர். சம்மாந்துறைக்கு அருகே உள்ள பழம் பெருந் தமிழ்க் கிராமமாகிய வீரமுனை 11-8-1885இல் (பார்த்திய ஆடி 26) தோற்றுவித்த தமிழறிஞர் நமது சோமசுந்தர ர்ை. வீரமுனைக் கோவிற் பூசகராக அக்காலத்தே விளங் கிய தமிழறிஞரான சோமசுந்தரக் குருக்களிடம் இராப்பாட

புலவர் பரம்பரை 317
மாக இளமைக் கல்வியனைத்தையும் கற்றபின்னர்த் தொடர்ந்து நிகண்டு, மகாபாரதம், நைடதம் முதலியவற்றி லும் பயின்று தேறிய சோமசுந்தரம் அவர்கள் பயிற்றப் பட்ட தமிழாசிரியராக ஆறு ஆண்டுகள் பணி செய்தவர். பின்னர், பொதுநலத் தொண்டுகளில் விருப்புற்று மெதொ டிஸ்த சுவிசேட ஊழியரானர். 1913-1952வரை புரிந்து வந்த அச் சேவைக்காலத்தில் மட்டக்களப்பின் பல கிரா மப்புற மக்களோடும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆசிரிய பயிற்சியின்போது அப் பாப்பிள்ளைப் போதகரிடம் சிவஞான சித்தியார், கந்த புராணம் என்பவற்றையும், அக்காலத்தே சிறந்த தமி ழறிஞராக விளங்கிய யாழ்ப்பாணத்து முருகேசுப் போத கரிடம் சைவ வேதாகமங்களையும் கிறித்தவ வேதசாத் திரங்களையும் ஒழுங்காகக் கற்றதனுல் சைவ-கிறித்தவ மதங்களை நன்கறிந்த ஒரு சமய சமரச ஞானிபோன்று விளங்கிய இவர் பொதுமக்களிடை நல்ல வரவேற்பைப் பெறலாயினர். சமரச மனப்பாங்குகொண்ட காரணத்தி ஞற்போலும் கிறித்தவ வேத உபதேசங்களைச் செய்யும் வேளைகளிலே, மரபு கடந்த வகையில் மற்றைய சமயங் களைக் கண்டிக்கும் மனப்பாங்கு இவரிடம் சிறிதும் தோன்றதாயிற்று. அதனல், சோமசுந்தர உபதேசியார் சொற்பொழிவு செய்கின்ருர் என்ருலே அதனைக் கேட்கச் சமய வேறுபாடின்றி எவரும் கூடுவது வழக்கமாயிற்று.
நாடுலங்கனிந்த சோமசுந்தர தேசிகரவர்கள், தமிழிற் கவிதை புனேயும் ஆற்றலும் இயற்கையாகவே கைவரப் பெற்றிருந்தவர். இவரை ஒரு முத்தமிழ் வல்ல முதுபெரும் புலவரென்னிலாம். ' தேவதோத்திர சங்கிரகம்’ என்பது இவரது இசைப் பாடல்கள் அமைந்த ஒரு பக்தி நூல். *மனேன்மணி’, ‘கிருபாம்பாள் ' என்னும் இரண்டும் இவ ரது நாடகப் புலமையை விளக்கும் நூல்கள். மட்டக்களப் புக் கிராமங்தோறும் நாட்டுக் கூத்துகள் பெருவரவிற்ருக ஆடப்பெற்றுவந்த காலத்தே உபதேசியாருக்குப் பொது மக்களிடை இருந்த பெருமதிப்பு மேலும் பல நாடகங்களை இன்னுர் ஆக்கி மட்டக்களப்புத் தமிழ்ப் புலமையை

Page 184
3.18 மட்டக்களப்புத் தமிழகம்
வளர்க்க வழிசெய்யலாயிற்று. இவரியற்றிய கிருஷ்ணன் தூது நாடகம், பக்தகுசேலநாடகம், சந்தனுகாடகம், சராசக் தன் 15ாடகம், புலந்திரன் தூது (5ாடகம், கம்சன்வத நாட கம் என்பவை இப்பகுதிக் கிராமந்தோறும் அரங்கேறிச் சிறப்புப் பெற்றுப் பொதுமக்கள் நாவில் நீங்காது வாழ்ந்து வருவன. இந்நூல்களிலமைந்துள்ள விருத்தம், கலித் துறை, வெண்பா, அகவல், சிந்து, கொச்சகத்தரு, திருப்புகழ் வண்ணத்தரு என்பன எல்லாம் இசைவளம் கனிந்து பலவகைச் சுவைகளையும் ஊட்டி அனைவரையும் மகிழ்விக்க வல்லன. இந் நூல்களை அச்சேற்றி வெளிக் கொணரச் செய்தல் நல்லதோர் தமிழ்ப்பணியாகும்.
புராணவகையைச் சேர்ந்ததும், அண்மையில் அச் சேற்றி வெளியிடப்பெற்றதுமான சிவராத்திரி அம்மானை என்னும் நூல் இவரது புலமைப் புகழை மேலும் உயர்த்துவதாயிற்று. அம்மானே என்பது வரிப்பாடல் வகையைச் சார்ந்த செய்யுள் நூல். கல்வியறிவு குறைந்த பொதுமக்களும் இலகுவாகக் கற்றுப் பயன்கொள்ளும் வகையிற் பெரிய தத்துவப் பொருள்களே இந்நூல் வடிவில் ஆக்கியளித்த தேசிகரது சிறப்பு இதனுல் மேலும் கொண் டாடப்படுவதாயிற்று.இந்நூல் முகவுரையினைப் படிப்போர்,
* வானகத் தெழும் வான் கதி ரோன்புடை
மீனிமைப்ப விரும்பிய போலும் ?
s
எனது துணிவு எனக்கே நகை விளைக்கிறது ’ என்பது முதலாக இவர் கூறும் அவையடக்க மொழிகளிலிருந்து, இன்னரது ‘பணியுமா மென்றும் பெருமை’ என்னும் பெருஞ் சிறப்பினைக் காணலாகும். w
* முன்னமொரு கற்பமதில் முழுதுலகும்
மாயைதனில் ஒடுங்க எந்தை துன்னியநற் சுடலைதனிற் சுயம்புஎனச்
சூலமொடு தோன்றுங் காலை மன்னுசிவன் மாகிசியை மனமுவந்து
மயக்கமற மகிழ்ந்து தோற்ற கன்னியுமை கமலமலர்க் கழலணிந்த
கழலிணைகள் கருதி வாழ்வாம்.

புலவர் பரம்பரை 319
என்பது சிவராத்திரி அம்மானையுள் சிவகாமி அம்மை மீது இவர் பாடியமைத்த கடவுள் வாழ்த்துப் பாடல். கிறித்தவ மதப் பெரியாராய் விளங்கிய ஒருவர் சைவசமய தத்துவங்களை விளக்கிச் செய்த இப்பாடலின் சிறப்பு ஒன்றே இவரது சமரச நோக்கிற்கும், சைவசமயப் பேரறி வுக்கும் தமிழ்ப் புலமைக்கும் சான்றுபகரப் போதிய தென்னலாம். −
* ஞானகுருபதிகம்' என்பது யேசுபிரான்மீது இவர் பாடிய பன்னிருசீர் விருத்தங்களா லமைந்த விருத்த நூலாகும்.
* எளியவர்க் கெளியனே ஏழைபங் காளனே
யேசுபர ஞான குருவே.’
என ஈற்றடிகொண்டு முடிவுறும் இப் பதிகப் பாடல்கள் பக்திச்சுவை சொட்டுவன. வீரமுனையிலுறையும் கண் ணகி தேவிமீது இவர் செய்த கண்ணகி அம்மன் காவி யம்’ என்பது விருத்த யாப்பாலமைந்த இன்னெரு நூல். இவைபோக, இவர் யாத்த திருப்புகழ், விருத்தம், கொச்ச கம், கலித்துறை என்பனவாக உள்ள தனிப்பாடல்களும் மிகப் பலவாகும். நிறைந்த தன்னடக்கமும், அமைதி தவ ழும் இன்முகமுங்கொண்டு எவருடனும் இனிமை ஒழு கப் பேசுபவரான சோமசுந்தர தேசிகரது தமிழ்ப்புலமை பொதுமக்களிடை மிகுந்த மதிப்பைப் பெற்ற ஒன்ருகும்.
உவில்லியம்பிள்ளை
தம்பிலுவில்லைச் சேர்ந்த நாடகப் புலவரான இப் பெரியார் முத்ததம்பி என்ற இளமைப் பெயரை உடைய வர். அதே ஊரில் தமிழும் சைவமும் வளர்த்த பெருங் குடியில் 1891ஆம் ஆண்டிலே பிறந்தவர். இளமையி லேயே தமிழிற் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்த மூத்த தம்பி ஆங்கிலமும் நன்கு தெரிந்தோராதற்குரிய சூழ்நிலை ஒன்றை இயல்பாகவே பெற்றனர். மட்டக்களப்புத் தமிழகத்தைத் தென்னை வளர்த்தற்கு உகந்த இடமாகக் கண்டு பெரிய தென்னந்தோட்டங்கள் பலவற்றைத் தென்பகுதி முழுவதும் ஆக்கிச் சென்ற ஆங்கிலப் பெரு

Page 185
320 மட்டக்களப்புத் தமிழகம்
மகனகிய கிறீன் துரை என்பாரது திருக்கோயிற் தோட்டத்து மேற்பார்வையாளராகச் (Conductor) சேர்ந்த பின்னர் உவில்லியம் என்னும் பெயர் அவருக்குக் கிடைத்தது. ஆங்கிலமொழிக் கல்வியும் நன்கு பெற வாய்ப்பளித்த அப் பதினெட்டாண்டு வாழ்க்கை, ஆங் கிலப் பெருமக்கள் பலரோடு நெருங்கிப் பழகவும் நல்ல சந்தர்ப்பத்தை அவருக்கு அளித்த காரணத்தினுல் காலம் தவருமை முதலான பல கட்டுப்பாடுகளும் இவரிடை வளரலாயின. அச் சிறப்புப் பின்னர் பதினைந்து ஆண்டு கள் தொடர்ந்து தம்பிலுவில் கிராமத் தலைமை அதிகாரி யாக இருக்கும் வசதியை இவருக்கு ஆக்கிவைத்தது. அதனுல் நாட்டுக்கூத்து, வசந்தன்கூத்து (படம் 26) முத லான பழைய கலைகள் செறிந்து விளங்கிய அவ்வூர்ப் பொதுமக்களோடு உண்டான தொடர்ப்பாடு உவில்லி யம்பிள்ளை அவர்களே நாடகப் புலவனுகவும், கூத்தாட வும், பழக்கவும் வல்ல அண்ணுவியாராகவும் பிற் காலத்தே திகழவைத்தது. கிராமாதிகாரியாக இருந்த காலத்தில் தம்மூரில் அடிக்கடி ஆடப்பெற்றுவந்த நாடகங் கள் பலவற்றுக்குத் தனித்தனி விருத்தங்களை ஆக்கிக் கொடுக்கத் தொடங்கியதோடு, இவரது நாடகப்புலமை வளரலாயிற்று. 1912இல் இவர் எழுதிய கண்டிராசன் சரிதை என்னும் வடமோடி நாடகமே இவர் முதன் முதலாகப் பாடிய முழு 5ாட்டுக்கூத்தாகும். அடுத்த ஆண்டில், தானும் அவ்வூர் மக்களோடு சேர்ந்து ஆடி அந் நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். அப்போது தான் உவில்லியம்பிள்ளை அவர்களது நாடகப் புலமை யின் சிறப்பினைப் பலரும் அறிய க் கூடி யதா யிற் று. தொடர்ந்து, தென்மோடியில் பவளேந்திரன்’ நாடகம், விலாசமெட்டில் * புவனேந்திரன் விலாசம்', வடமோடி யில் நச்சுப்பொய்கைச் சருக்கம்' என்னும் நாடகங் களைப் பாடினர். இவை அவ்வக்காலத்தே அரங்கேற்ற மும் செய்யப்பெற்றன. -
நச்சுப்பொய்கைச் சருக்க நாடகத்திலே, தம்பியர் நால்வரும் நச்சுப்பொய்கையின் நீரைக் குடித்து மரண மானபோது தருமராசன் பெரிதும் மனக்கவலைகொண்டு,

புலவர் பரம்பர்ை. 321
கண்ணபிரானைத் துதிக்கும் பகுதியும், தருமனது பக்தி யிற் கட்டுண்ட மாயன் விரைந்தோடி வருதலையும் பற்றிய விருத்தங்களை இவர் சாதாரண வேளைகளிலும் படித்துப் பக்தி பரவசப்பட்டு நிற்பாரென்பர்.
* தருமபதி மனதில்கினை வுற்ற காலைத்
தாரணியைத் திருவடிகொண் டளந்த மாயன்
பெருமையுடன் கொண்டஒட்ட வடிவம் நீங்கிப்
பேசரிய களத்துவா பரணம் பூண்டு
திருமேனி தனிற்துளப மாலை மின்னத்
திருச்செவியிற் குண்டலங்கள் தாள ஆங்கே
கரியனழிற் காயாம்பூ வண்ணன் கானில்:
கடிதாக வேஒடி வருகின் ருனே.?
இது அவ்விருத்தங்களுள் ஒன்று.
ஆங்கில நாவல்களையும் நன்கு படித்திருந்த உவில்லி யம்பிள்ளை அவர்கள் தமிழிலும் அவைபோன்று எழுதல் வேண்டும் என அடிக்கடி சொல்வார். தாமே இரு நாவல்களைத் தமிழில் எழுதியும் புகழ்கொண்டார். அவர் எழுதிய இந்திராபுரி இரகசியம்’, ‘ மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் ” என்னும் அவ்விரண்டுமே மட்டக் களப்பு ஆசிரியர்களால் எழுதப்பெற்ற முதற் தமிழ் நாவல் கள் எனலாம். 3ஆம் ஜோர்ஜ் அரசர்காலத்து நிகழ்ச்சி ஒன்றை வைத்துக்கொண்டு எழுதப்பட்டதான முன்னே யது, ஆங்கிலநாட்டுப் பழக்கவழக்கங்கள் வாழ்க்கைமுறை என்பவற்றைப் படம்பிடித்துக் காட்டுவது. ஆசிரியர் இந் திராபுரி என்று இலண்டன் மாநகரத்தையே அங்குக் குறிப் பிடுகின்றர். பின்னையது மந்திர தந்திரங்கள் நிறைந்த கிழக்குலக வாழ்வுக் கற்பனே கொண்டது. இரண்டும் அச் சில் வெளியிடப்பட வேண்டிய சிறப்புடையவையாகும்.
இவையன்றி ஆங்கிலமுறை தழுவிய *டிருமா (Drama) வகையினைச் சேர்ந்த  ைவயா ன * சுந்தர விலாசம் , * மதுரை வீரன்’ என்னும் சிறு நாடகங்கள் இரண்டை யும் எழுதியுள்ளனர். இவையும் அவ்வூர் மக்களால் அரங் கிடப்பெற்றவையாகும். இவர் பாடிய ஊஞ்சற் பாட்டுகள், காவியங்கள் முதலிய தனிப்பாடல்களும் பல உள.
to - 21

Page 186
322 மட்டக்களப்புத் தமிழகம்
ஆங்கிலேயர் தொடர்பால் நாட்குறிப்பு எழுதும் பழக்கங்கொண்ட இவரது குறிப்புக்களில் சரித்திரத் தொடர்பான சில செய்திகளையும் நாம் காணலாம். தமது ஊர்ப்பெயர் * தம்பவில’ என்பதிலிருந்து °தம்பவில் ' என்றும், “ தம்பலவில் ’ என்றும் முறையே திரிபுபெற்றுத் தற்போதைய உருவமான தம்பிலுவில் என்ருயிற்று என் றும், வாஸ்கொடிகாமா திருக்கோயிலுக்குப் பக்கமாகக் கட லிற் செல்லும்போது கண்டதாகத் தன் சரிதையிற் குறிப் பிட்டிருக்கும் இடம் சங்கமாங்கண்டிமலையும் கோயிலுமே யாகும் என்று கிறீன்துரை தம்மிடம் கூறியதாகவும், இவ ரது நாட்குறிப்புக்களிற் காணப்படுகின்றது. திருக்கோவில் (படம் 2) வரலாறு, அக்கோவில்பற்றிய கல்வெட்டுகள் (படம் 10) என்பவற்றை நன்கு அறிந்தவர். பாண்டிய மன் னர்களின் தொடர்புபெற்ற அக்கோவில் வரலாறு ஒன் றையும் பாடி வெளியிடவேண்டுமென்று விரும்பியிருந்த இவ்வறிஞர் மிக அண்மையில் (1961இல்) காலமானுர், மட்டக்களப்பு வரலாறு, 5ாட்டுக்கூத்துச் சிறப்பு என்ப வற்றைப் பற்றி அடிக்கடி மகிழ்ந்து கூறும் இவரது கலைச் செல்வம் அனைத்தும் வெளிவரல், இக்காட்டின் சிறப்பை மேலும் மிகுவிப்பதாகும். வேதநாயகம் போதகர் :
யாழ்ப்பாணத்துக் கற்கோவளம் என்னும் ஊரில் ஏறக்குறைய 1865இல் பிறந்து தமது இருபதாவது வய திலே மட்டக்களப்பிற்கு வந்த இவர், இறுதிக்காலம் மட்டும் மட்டக்களப்புத் தமிழ் மகனுகவே வாழ்ந்து மறைந்தவர். தமிழும் ஆங்கிலமும் நன்கு கற்ற புலமையாளரான வேத நாயகம், அரசடி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போத சிைரியராக இருந்தகாலத்தில் பல தனிப் பாடல்களை மட்டக்களப்பு வளமும், தேவைகளும் பற்றித் தமிழிற் பாடினரென்பர். சிறிதுகாலத்தால் ஆசிரியத் தொழிலை விட்டுக் கிறித்தவமதப் போதகராகி அக்காலம் மட்டக் களப்புக் கிராமங்களிலே பாடசாலை எதுவும் இல்லாதிருந்த பெருங்குறையை நீக்கினர். கிறித்துமதப் போதனை என்ற காரணத்தினேடு, நாட்டிலே ஒழுக்கக் கல்வியை ஊட்டி யவர். மட்டக்களப்பு நாட்டின் பழம் பண்பாடு, கலைகள்

புலவர் பரம்பரை 3:23
என்பவற்றில் ஈடுபாடுகொண்ட போதகர் 8 தீபம்’ என்ற பத்திரிகையை அதன் ஆசிரியராக இருந்து திறம்பட நடத்தி இக் காட்டின் புகழைப் பல்லோர் அறியச் செய்த வர். ‘தீபம்’ பத்திரிகையிலே மட்டக்களப்புத் துறைமுகத் தின் பகுதி கற்பார்கள் நிறைந்ததாயிருப்பதைப் பற்றி அடிக்கடி எழுதி இங்குப் புதுமுறையில் அமைந்த ஒரு கலங்கரை விளக்கம் இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கினர். அதுபோன்று எழுவான் கரையையும், படு வான் கரையையும் இணைத்து மட்டக்களப்பு வாவிக்கு மேலாக ஒரு பாலம் அமைத்தல் வேண்டும் எனவும், மட்டக்களப்பின் தென்கோடிவரை புகையிரதப் பாதை யினை நீட்டுதல் வேண்டும் எனவும் தீபத்திலே தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதலானர். அந்த முயற்சியும் சேர்ந்து தான் மட்டக்களப்புக் கலங்கரை விளக்கமும் (படம் 15), கல்லடிப்பாலமும் (படம் 14) அமைக்கப்படலாயின என்பர்.
இவர் ‘தீபம்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்த காலத்தில் 'சுதேசகாட்டியம்’, ‘தீபம்’ ஆகிய பத்திரிகைகள் வாயிலாக வித்துவான் சரவணமுத்தன் அவர்களுக்கும், இவருக்கும் மதப்போர் ஒன்று தொடங்கிற்றென்றும், * சுதேசநாட்டிய ’ ஆசிரியரும், சிறந்த கண்டனப் புலவரு மான கல்லடி வேற்பிள்ளையும் வித்துவான் சரவணமுத்த னுடன் சேர்ந்துகொண்ட அப்போரானது பின்பு கவி தைப் போராக மாறிற்றென்றும், மூவரும் நல்ல கவிஞர்க ளாக இருந்த காரணத்தினுல் இறுதியில் அவர்களது கற்பனைக் கவிதைகள் பகைமையை மாற்றி நட்பாக்கி வைத்ததென்றும் கூறுவர். ‘தீபம்’ பத்திரிகையை விட்டு விலகி லங்கா வர்த்தமானி’ என்ற கிழமை இதழுக்கு ஆசிரியராக இவர் வந்த பின்னர், எழுதிய இலக்கியக் கட்டுரைகளும், நகைச்சுவை நிறைந்த தனிப் பாடல்களும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன என்பர். இவர் செய் தனவாகக் கூறப்படும் * மலேரியாக் கும்மி , * உழவர் சிறப்பு’ என்னும் பாடல்களிற் சில, மக்களிடை இன்றும் வழக்கிடை இருந்துவருகின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் தன்னை ஒரு மட்டக் களப் பான் ? என்றே சொல்லிக்கொண்டு இக்காட்டின் நிலவளம்,

Page 187
324 மட்டக்களப்புத் தமிழகம்
கலைவளம், மக்களின் மனவளம் என்பனவற்றிற் பெரிதும் ஈடுபாடுகொண்டு வாழ்ந்து மறைந்த தமிழ்ப் புலவரும்,
தமிழ் உரைநடை ஆசிரியருமாகிய வேதநாயகம்போதகர்,
நல்ல எழுத்தாளர் தோன்றுவதற்கு முன்னேடியாக இந்
நாட்டில் வாழ்ந்தவரென்று கொள்ளத்தக்கவராவர்.
கணபதிப்பிள்ளைப் புலவர் :
சிறிய கிராமமாயினும், செட்டிபாளையம் பரம்பரை பரம்பரையாக நல்ல தமிழ்மொழி வளர்ந்துவருதற்கிட மான ஒரு பதியாக இருந்துவருகின்றது. குருக்கள் மடத் தினை அடுத்துத் தென்பாலுள்ள இவ்வூரிலே பழைமை யான கண்ணகியம்மன் கோயில் ஒன்று உண்டு. மேனுட் டார் காலத்திற்கு முன்பிருந்தே நல்ல இளைப்பாறு நிலைய மாகக் குளிர்மரச் சோலேயால் நிறைந்து இவ்வூர் விளங்கி யிருந்தது. அதனல் பழங்காலத்தில் வழிநடையாகச் சென்ற செட்டிமாரும் மற்ருேரும் இங்குப் பாளையம் இட்டு(தங்கி)ச் செல்லுதல் வழக்கம் என்பர்.
இவ்வூர்க் கடற்கரையிலே 1866ஆம் ஆண்டில் ஒரு கப்பல் தரைதட்டி உடைந்து போயிற்று என்றும் அதனை வருணித்துப் பாடி அப்பகுதி வன்னிமையிடம், கந்தப் புலவர் என்பாரொருவர் பரிசு பெற்றனரென்றும் அறி கின்ருேம். கந்தப் புலவருடைய தம்பியார்தான் நாம் இங் குக் குறிப்பிடும் கணபதிப்பிள்ளைப் புலவரின் தந்தையா ராகிய இளையதம்பி யவர்கள். இளைய தம் பியா ரின் தந்தையாரும் ஒரு தமிழ்ப் புலவராக விளங்கினவர். இவர்களின் முன்னேரே மட்டக்களப்பின் வரலாறு போன்றுள்ளதாகிய மட்டக்களப்பு மான்மியம்’ என்னும் நூலை ஆக்கினரென்பர். இவ்வாறன தமிழ்ப்புலவர் பரம் பரையில் தோன்றிய கணபதிப்பிள்ளைப் புலவர் (படம் 40) தம் இளமைக் காலத்திலேயே நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் முதலான நூல்களை அதே ஊரில் இருந்த இன்னெரு தமிழ்ப் புலவரான சின்னவர் கணபதிப் பிள்ளை என்பாரிடம் நன்கு பயின்றர். அக் கல்விச் சிறப்பு, தமிழ் இலக்கியங்களிற் பெரிதும் ஈடுபாட்டை உண்டாக் கியபோது, தமிழ்ப் பாடல்களால் நிறைந்த வைத்திய

புலவர் பரம்பரை 325
ஏடுகள் கணபதிப்பிள்ளை அவர்களைக் கவர்ந்து நின்றன. * கிணியா’ எனும் ஊரிலிருந்த கொம்பன் பரிகாரியார் இவருக்கு நாட்டு வைத்திய ஆசிரியராக வாய்க்கவே புலவர் கணபதிப்பிள்ளையும் தம் தொழிலால் வைத்திய ராகும் வாய்ப்பினேயும் பெற்றர். சோதிட நூல்களும் அக்காலம் இவர் உள்ளத்தைக் கவரலாயின. அதனல் களுதாவளையில் சோதிட வல்லுனராகப் பிரசித்தி பெற் றிருந்த மூத்ததம்பிச் சாத்திரியாரை அணுகிய புலவர் நல்ல சோதிடருமானர். இக் கல்விப் பயிற்சிகளால் கண பதிப்பிள்ளைப் புலவர் அவர்களுடைய தமிழ்ப் புலமை மேலும் மேலும் வளர்ந்து செல்வதாயிற்று.
பெரிய தந்தையாராகிய கந்தப் புலவரைப் போன்று, 1918இல் தம்மூர்க் கடற்கரையிலே உடைந்த கப்ப லொன்றைப் பற்றிப் பாடி அரசினரிடம் மதிப்புப் பெறக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இவருக்குங் கிடைத்தது. அதனல் சிலகாலம் அரசாங்கத்துப் புலவரைப்போலவே எங்கும் மதிப்புப் பெற்றிருந்த இவர் 1920இல் பிறைன்துரை என்ற ஆங்கிலேயர் மீது பாடிய தமிழ்ப் பாடற் சிறப்பு இவருக்கு மேலும் பரிசையும், புகழையும் ஈட்டித்தந்தது. கதிர்காமம் இவரது பக்திக்குகந்த ஒரு பதி. அதனற் கதிரை முருகன் மீது 8 கதிர்காமத்தம்மானை', 101 விருத் தப் பாடல்களைக்கொண்ட * கதிர்காம சதகம்’, விருத்த மாகவே எழுந்த 8 மாணிக்க கங்கைக் காவியம்’ என்னும் மூன்று நூல்களே முறையே பாடியிருக்கின்றர். இவற்றுள், முதலது அச்சாகி வெளிவந்துள்ளது. கதிர்காம யாத்திரி கர்களது காவிடை இம்முன்று நூல்களிலும் உள்ள பாடல்கள் நிலவிவரக் கேட்கின்ருேம். திருக்கோவிலுக் குப் பக்கத்தில் இருக்கும் சங்கமாங்கண்டிக் குன்றினிடை யமர்ந்துள்ள விநாயகர்மீதும் இவருக்கு ஈடுபாடு அதிக மாதலால், “ சங்கமாங்கண்டிப் பதிகம்’ என்ற பெயரால் கழிநெடிலடி விருத்தங்களா னமைந்த ஒரு பக்திப்பாடல் நூலும் யாத்துள்ளனர். இவர் இயற்றிய தனிப்பாடல் களும் மிகப் பலவாய் மக்களிடை வாழ்கின்றன. இன் னர் தமது புலமையால் மட்டக்களப்புத் தமிழகத்தின் ஒரு பெரிய செல்வம்போன்று விளங்குபவராவர்.

Page 188
326 மட்டக்களப்புத் தமிழகம்
சின்னவப் புலவர் :
கல்வி உலகம் அறியாதபடி இலைமறை காய்போன்று பெரும் புலவர் பலர் மட்டக்களப்புத் தமிழகத்தில் வாழ் கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள இன்னெரு செட்டிபாளையத்துப் புலவர் * வெத்திலைக்காரப் புலவர் " என்று பொது மக்க ளா ற் குறிப்பிடப்படும் சின்னவப் புலவர் (படம் 41) அவர்கள். கல்வி உலகு நன்கு அறியாதாயினும் கிராமந்தோறும் உள்ள பொது மக்கள் பலரும் போற்றுகின்ற சிறப்பு இவரைப்போன் ருருக்குண்டு. இன்னருடைய இலகுவான மொழிநடை, எல்லாருக்கும் விளங்கத்தக்க உவமைப்புணர்ப்புகள், தேவையறிந்துபாடும் நற்பண்பு ஆகியவைகளே இவரை மக்கள் மிகுதியும் போற்றற்குக் காரணமாய் இருந்தன. வேளைக்கேற்ப உடனுக்குடன் கும்மீகள், காவியங்கள், அம்மானே, அகவல், பதிகம், ஊஞ்சற்பாட்டுக்கள், வசைப் பாட்டுக்கள், சீட்டுக்கவிதைகள், தோத்திரப்பாடல்கள் என்பவற்றை இயற்றி, மக்கள்மதிப்பைக்கவர்ந்து வாழ்ந்த இத்தகையபுலவர், பொருட்செல்வம் குறைந்தோராயினும் நிறைந்த அருட்செல்வம் உடையவராய் இருந்தமையாலே சென்ற இடமெல்லாம் சிறப்புப்பெற்று வாழ்ந்திருக்கின் றனர். தெரு, திண்ணை, கோயில், கடைத்தெரு, மாளிகை, குடிசை என்ற பேதமின்றி எங்கும் பாடி அனைவரையும் இன்பத்துள் ஆழ்த்தி வாழ்ந்த பெருங்கவிஞர்வரிசையைச் சேர்ந்தவர் சின்னவப் புலவர் அவர்கள்.
ஏறக்குறைய 1877ஆம் ஆண்டிலே செட்டிபாளையம் என்னும் பழந்தமிழ்க்கிராமத்தில் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர் போன்றிருந்த கணபதிப்பிள்ளைச் சட்டம்பியா ருக்கு மகனக இவர் பிறந்தார். * திருவிலைக்குத்தி வாத்தி யார்’ என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவரும் சம்மாந்துறையைச் சேர்ந்தவருமான கணபதிப்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கியங்களை ஒரளவு கற்ருர், பள்ளிப்படிப்பிலே இளமையில் ஊக்கம் இல்லாதவராக இருந்த சின்னவனுக்குச் சிட்டுக்குருவிபோற் சுதந்திர மாகத் திரிவதிலும், காடு, வயல் முதலிய இயற்கைச் சூழ லிற் தனித்துத் திரிவதிலுமே விருப்பம் அதிகமாக இருந்

புலவர் பரம்பரை 327
தது. பாடசாலையினை விட்டபின் சிலகாலம் கமத்தொழில் செய்தவர், அதுவும் பிடிக் காது போகவே பின்னர் வெற்றிலே வியாபாரத்தைத் தொழிலாகக்கொண்டார். தம்மூரிலிருந்து வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்தி லுள்ள மட்டக்களப்புப் பட்டினமாகிய புளியந்தீவுக்கு மாட்டுவண்டியில் வெற்றிலை வியாபாரத்துக்காகச் செல் லும்போது வழியிடைச் சேர்ந்துகொள்ளும் யாரும் இவரைவிட்டுப் பிரியமுடியாதவாறு இனிய கவிதைகளால் அ வருள் ளத் தை மகிழ்வூட்டிக்கொண்டே செல்வா ரென்பர்.
தேர்தல் காலங்களிலே மக்களை உரியவழியில் நிறுத் துதற்காகப் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். திருக் கோணமலையிற் புதைபொருளாகக் கண்டெடுக்கப்பெற்ற கோணேசர் விக்கிரகங்கள் மட்டக்களப்புக்குக் கொண்டு வரப்பட்டபோதும், பத்திமாநாயகியின் (Lady of Faima) * சுருவம் அவ்வாறு கொண்டுவரப்பட்டபோதும் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் நிறைந்த பத்திரசம் சொட்டு வன. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டா ரென்பதைக் கேள்வியுற்று இவராற் பாடப்பட்டவை மிக்க உருக்கமான இரங்கற் பாடல்கள். இவ்வாறு கினேத்தமாத்திரத்தே எப்பொருள்மீதும் எவ்விதக் கவிதையும் ஆக்கவல்ல சின்னவப் புலவர் தெய்வ அருள் கைவரப்பெற்றவர். சிற்றண்டிக்கோயிலில் (படம் 55) உறையும் கந்தசுவாமி இவரது கவிதைக்குப் பணிகேட்டு, இவருடைய விருப்பப் படி பெருமழை பொழியச்செய்த நிகழ்ச்சி 1954ஆம் ஆண் டிலே நேரில் இதனைப் பார்த்திருந்த மக்கள் அனைவரையும் வியப்புளாழ்த்துவதாயிற்று. மீண்ட நாட்களாக மழை முகங் காணுது வாடிக்கிடந்த பயிர்கள் மழைவேண்டிக் கந்தையன்பேரில் பாடிய காவடிப்பாட்டு’ என்ற தலைப்பில் இவர் பாடிய பாடல்களைக் கேட்டுப் பொழிந்த மழை யால் உயிர்பெற்றுச் செழித்து வளரலாயின.
* இல்லையோ இவ்வாண்டில் மழைநீர் இங்கு
ஏனையா புரட்டாதிஐப் பசியு மாச்சே கல்லையோ விழுங்குவது சோற்றுக் கப்பா கண்கண்ட தெய்வமென நீயி ருக்கப்

Page 189
&28 மட்டக்களப்புத் தமிழகம்
புல்லையே மேய்கின்ற மாடு தானும்
புழுதியதைக் குடித்தெங்கும் துடிக்கு தையோ தொல்லைமிகப் படுகின்ருர் மக்க ளையா
தோகைமயில் ஏறிவந்து மழைதா ராயோ ? இந்த உருக்கமான செய்யுளுக்கு இரங்காத தெய்வமும் உண்டா ! இதுபோன்ற பதினன்கு விருத்தப்பாடல்களும் உடனே ஒரு நூலாக வெளிப்படுத்தப்படலாயின. கொக் கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் கோயில் (படம் 5) மீது பதிகம் என்னும் பெயரால் இவர் பாடியுள்ளவை பதினன்கு இனிய விருத்தங்களாகும்.
தமிழர், சிங்களவர் ஆகிய இரு சமூகத்தினரும் ஈழத் திலே தம்முள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற இவரது கருத்தை அம்பாரைக் கொலனி’ என்ற தலைப் பின் கீழ்ப் பாடப்பெற்ற இருபது கும்மிப் பாடல்கள் காட்டுகின்றன. அதே பொருளையே மிகுதியுங்கொண்ட
* நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால்
நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே.” என்பது முதலான 30 சிந்துப் பாடல்கள் சேர்ந்தெழுந் தது ? இலங்கைச் சுதந்திரம் ’ என்ற பாட்டு. மிக்க அவசியம் என்று கருதியவற்றைத் தாமே துண்டுப் பிர சுரங்களாக அச்சிடுவித்து மக்களிடையே பரப்பித் தமிழ் வளர்த்து, ஏறக்குறைய 85 வயதுவரை வாழ்ந்த சின்ன வப்புலவர் சென்ற ஆண்டு சிவபதமடைந்தார்.
கார்த்திகேசு (பொலிய விதானை):
கோட்டைக்கல்லாற்றிலே சுமார் 165 வருடங்களுக்கு முன்பு பிறந்த கார்த்திகேசு என்பார் நல்ல தமிழ்ப் புலமை நிறைந்து தம் காலத்தில் மிக்க மதிப்போடு * பொலிய விதான ’ என்னும் பட்டப் பெயருடன் வாழ்ந்தவர். மட்டக்களப்பு நகருக்குத் தெற்கே கல்முனைவரையும் உள்ள பெரியநிலப் பகுதிக்குத் தாம் ஒருவரே பெரிய விதானே? என்னும் அரசாங்க உத்தியோகம் வகித்தவர். கொழும்பிலிருந்து வதுளை, முப்பனே வழியாக வந்த ஆங்கி லேய தேசாதிபதிக்குத் தாமே தமிழில் வரவேற்புப் பாடல் செய்து அளித்ததோடு, சிறந்த விருந்தொன்றுங்

புலவர் பரம்பரை 329
கொடுத்து அரசினரிடத்தே நல்ல மதிப்பையும் பெற்ருர், பொலிய விதானையின் தமிழ்க் கவிதைச் சிறப்பை அறி யாதவர் அக்காலத்தில் இல்லை என்பர். இவர் இலக்கி யம், வைத்தியம், சோதிடம் ஆகியவற்றில் நிறைந்த பயிற்சி பெற்றிருந்தார். இராமாயணம், பாரதம், கந்த புராணம் என்பவற்றில் நல்ல ஈடுபாடுடையவர். அந் நூல்களிற் சில பகுதிகளைத் தனித்தனி கும்மிகளாகப் பாடிப் பொதுமக்களுக்கு அந்நூலறிவைப் பரப்பினர் என்பர். விநாயகர் மீது நிறைந்த பக்திகொண்ட இவர் அவ்வூர்ப் பிள்ளையார்கோயில் அமைப்பாளருள் ஒருவரு மாவர். இறுதிக் காலத்தில் மட்டக்களப்புக் கோட்டை. முனையில் வந்திருந்து வைத்தியம், மாந்திரீகம், சோதிடம் என்பவற்றைத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கற்பித் துத் தமது 95ஆவது வயதிற் சிவபதம் எய்தினர். இவர் செய்த இலக்கண விளக்கக் குறிப்புக்கள் ' என் னும் நூற்பிரதி ஒன்று இவரது கையெழுத்தால் அமைந்த படியே இன்னரது உறவினர் ஒருவரிடம் இன்றும் உள் ளது. இவரது தனிப்பாடல்கள் சிலவும் இன்று பொது மக்களிடை அங்கங்கே நிலவக் காணலாம்.
வேடப்பிள்ளை :
மட்டக்களப்புக் கோட்டைமுனையிலே ஏறக்குறைய 1836இல் செங்குந்தர் மரபிலே பிறந்தவர். வேலாயுதர் மூத்ததம்பி என்னும் இவரது இயற்பெயர், பொதுமக்க ளால் மேலே குறிப்பிட்டபடியே வழங்கப்பெறலாயிற்று முற்கூறிய பொலிய விதானேக்கு இவர் உறவினராவர். நாட்டு வைத்தியக் கலையை நன்கு கற்று அத் தொழிலில் மிக்க புகழ்கொண்டிருந்தவர். பல தனிப் பாடல்களையும் சிறிய நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். * வள்ளியம் மன் ஊஞ்சல் ', ' கண்டிராசன் ஊஞ்சல் ’ என்னும் பாடல் கள் சிறுவர்க்கென இவராற் பாடப்பட்டவை. கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம்’, ‘தாமரைக்கேணி மாரியம் மன் பதிகம் ', ' கோட்டைமுனே வைரவன் காவியம் , * ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்', 'விஷ்ணு பதிகம்’ என்பன இவர் பாடிய பக்தி நூல்கள். இந் நூல்

Page 190
330 மட்டக்களப்புத் தமிழகம்
களில் எதுவும் அச்சேறி இன்னும் வெளிவராமலே கிடக்கின்றன. சந்தப் பாடல் செய்வதிலும் வல்லவராக விளங்கிய இவர் யாத்த தனிப் பாடல்களான சந்தக் கவிதைகள் பலவும் வாய்மொழி இலக்கியங்களாக இந் 5ாட்டில் வழங்குகின்றன. மாரியம்மன் வரலாறு, மாரி யம்மன் சடங்கு என்பவற்றை விளக்குமுகமாக இவ ராற் பாடப்பட்ட நூலே 8 மாரியம்மன் குளுத்தி’ என்பது. மட்டக்களப்பு மக்களின் குடியேற்ற வரலாற்றிலும் இவருக்குச் சிறிது ஆர்வம் இருந்துள்ளமை தெரிகின் றது. எல்லாளனது படையெழுச்சியின்போது சோழ நாட்டிலிருந்து அம் மன்னனுடன் வந்த கைக்கோளப் படையினரே கோட்டைக்கல்லாறு, தாமரைக்கேணி களில் இன்று வாழுகின்ற செங்குந்தரின் முற்சந்ததியார் என்பது இவருடைய கருத்துக்களில் ஒன்று. இத்தகைய சரித்திரக் குறிப்புக்களையும், இன்னர் செய்த நூல்களையும் திரட்டிப் பதிப்பது மிக்க பயன்தரும் ஒரு தமிழ்ப் பணி யாகும். இவர் காலம் எய்தியது 1906இல் என்பர்.
சண்முகச் சட்டம்பியார் :
1831ஆம்ஆண்டு மட்டக்களப்புக் கோட்டைமுனையில் உள்ள தாமரைக்கேணி என்னும் பகுதியிற் பிறந்தார். வல்லிபுரம் என்பது இவர் தந்தையார் பெயர். இளமை யிலே தமிழையும் ஆங்கிலத்தையும் பயின்றவர். கல்லாற் றுக் கார்த்திகேசு (பொலிய விதானை) என்பாரிடம் நன்கு தமிழ் கற்றுச் சிறிய வயதிலேயே தமிழிற் பாடும் வல்லமை யும் பெற்றிருந்த சண்முகம் விரைவிலே மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி (படம் 56), வின்சன்ற் மகளிர் கல்லூரி (படம் 45) ஆகியவற்றின் தமிழ்ப் பண்டிதரானர். கந்தபுராணம், இராமாயணம், பாரதம், நைடதம் என் னும் இலக்கியங்களிலும் தமிழ் இலக்கணத்திலும் வல்லுரு ரான சண்முகச் சட்டம்பியாரிடம் ஆங்கில உத்தியோகத் தர் பலர் தமிழ் படிக்கலாயினர். தம்மிடம் தமிழ் கற்க வந்த ஆங்கிலேயரைக்கூட மிகக்குறைந்த காலத்துள் இவர் தமிழிற் கவிதைகள் எழுத வல்லவராக்கினர் எனக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பு காட்டின் புகழைத்

புலவர் பரம்பரை 33
தமது ஆங்கிலக் கட்டுரைகளால் மேற்புலத்தவர்களுக்கும் அறிவுறுத்தியவர்களான ஆர். டபிள்யு. சேதுகாவலர், சோமநாதமுதலியார் என்போர்களின் தமிழ் ஆசிரியர் இவரே.
கந்தபுராண விருத்தியுரை ஒன்றெழுத இவர் தொடங்கினர். இவர் எழுதிய உரைப்பகுதியுட் சில ஐந்தடி நீளமான தலைப்பற்ருேலேயிற் காணப்படுகின்றன. நைடதத்திற்கும் ஒரு உரை எழுதிவைத்திருந்தார். தன்மானம் மிக்க இவர் ஆங்கில நாகரிகப்புயல் வீசிய அக் காலத்தே ஆங்கிலேயர் பலரிடைத் தமிழின் சிறப்பை உணர்த்தி வாழ்ந்தார் என்பர். 1885ஆம் ஆண்டில் தமது 54ஆவது வயதிலே இவர் இயற்கை எய்தினர்.
வீரபத்திரச் செட்டி-நாகமணி :
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் இவர் வீர முனேயிற் பிறந்து, தமிழும் ஆங்கிலமும் நன்கு கற்ருர் ; தமிழிலே புலமைத் தன்மையும் பெற்ருர், வன்னிமைமார் பலரின் கீழ் 8 கிளார்க் ஆகக் கடமை பார்த்தவர். அக்காலத்தில் தன் அலுவலக நிகழ்ச்சிகளைப் பல தனிப் பாடல்களாகப் பாடியுள்ளார்.
சம்மான்துறையினைச் சேர்ந்த எதிர்மன்னசிங்க வன் னியனரிடம் இவர் உத்தியோகம் பார்க்குங் காலத்தில், ஒருகாளிரவு சுங்கத்துறை என்னுமிடத்தில் வன்னியன ருடன் தங்கவேண்டி வந்தது. அங்கு நுளம்புக்கடியால் மிக்க தொல்லேயுற்ற நாகமணி அதிகாலையில் எழுந்ததும்,
* சுங்கத் துறை என்னும் நாடு-அதிற்
சொல்லில் இரண்டொரு வீடு,
பங்கப்படும் நுளம் பாலே-இரவு
பட்டதுயர் பெரும் பாடு.’ என்று தம்மை மறந்து பாடலானர். கேட்டுக்கொண்டே படுத்திருந்த வன்னியனருக்குத் தமது 8 கிளார்க் ஒரு தமிழ்ப் புலவர் என்பது அப்பொழுதுதான் தெரியவந்தது. தமிழ்நாட்டுக் கூத்துக்களிலே பெரிதும் விருப்பமுள்ளவ ரான வன்னியனர் ஒரு நாடகம் பாடும்படி நாகமணி

Page 191
332 மட்டக்களப்புத் தமிழகம்
ஃயைக் கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் பாரதக் கதையில் உள்ள சாரங்கதரனின் சரிதையைத் தென் மோடி நாடகமாகப் பாடியளித்துப் பரிசில் பெறலாயினர். அந்நாடகத்தில் ஒரு பெண்ணின் கண்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, * நீலமோ வேலோ நெடுங்கடலோ பாற்கடலின்
ஆலமோ மாவடுவோ அந்தகனே அம்பதுவோ கோலமுடன் என் மனதைக் கொள்ளைகொள்ளும் கண்ணிரண்டும்??
என்று ஒரு கொச்சகத்தில் இனிமையுற வர்ணித்துள்ளார்.
இவர் பாடிய இன்னெரு நூல் கதிர்காமக் காதல்’ என்பது. நூல் முடிவில் வரும் வாழ்த்துப் பாடலில் தனது பெயரையும் நன்கு அமைத்துள்ளனர்.
* நாகமணி யாக நாகமணி தாவும்
நாகமணி குழ்கயிலை நாகமதில் மேவும் நாகமணி ஈசன்மகன் ஆறுமுகம் வாழி நாகமணி பாடவருள் நாமகளும் வாழி.’
நாகமணி என்னும் சொல் சிலேடையாயமைந்து செய்யுளை இனிமை செய்து நிற்கின்றது. தன் காலத்திலே எல்லோராலும் நன்கு மதிக்கப்பெற்றவரும், இன்று பல ரும் நினைத்துப் போற்றும் புகழுடையவருமாக விளங்கிய வர் இந் நாகமணிக் கிளாக்கர் ’ அவர்கள்.
அருணுசல தேசிகமணி :
சைவசமயப் பெரியாராகச், சமய நூல்கள் பலவற் றுக்கு ஆசிரியராக விளங்குங் தேசிகமணி அருணசலம் (படம் 42) அவர்கள் சமயத்தின் பேரால் இந் நாட்டிலே மொழியும் கலாசாரமும் வளர்த்த ஒரு தமிழ்மணி. வித்து வான் சரவணமுத்தனேடும், விபுலாநந்த அடிகளா ரோடும் இத் தமிழகத்தை அணி செய்யும் கிராமந்தோறும் சென்று தமது * பிரசங்கமாரி யால் மக்களுக்கு உணர்ச்சி யூட்டி அவர்கள் தங்கள் பண்டைய மத கலாச்சாரங்களை மறந்துவிடாது காத்து இக்காட்டின் புகழை எடுத்து நிறுத்தியவர். காசிநாத சாத்திரியாரும், சின்னப்பிள்ளை அம்மையாரும் 1888இல் பெற்றெடுத்த அருணுசலத்தின்

புலவர் பரம்பரை 333
இளமைக் கல்வியை ஊட்டியவை கிறித்தவமத பாட சாலைகளே எனினும், இந்நாட்டின் பழைமையில் ஊறிய, சிவமணங் குன்ருத உள்ளத்தோடு வளர்ந்தவர். மட்டக் களப்பு நகரில் சைவ நன்மக்களுக்கென அமைந்த மிகப் பழைய தமிழ்ப் பாடசாலையாயுள்ளதும், சிவாநந்த வித்தி யாலயம் தோன்றுமுன்னர் இராமகிருஷ்ண சங்கத் துறவி களின் இருப்பிடமாக அமைந்திருந்ததுமான ஆனேப்பந்தி (இன்றைய ஆண்கள்) பாடசாலையில் இவர் ஆசிரியராக இருந்தகாலை இன்னுரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழாசிரி யர் மிகப் பலர். நாற்பத்தோராண்டுக்கு மேற்பட்ட ஆசிரிய சேவைக்காலம், கிராமந்தோறுஞ் சென்று நல்ல சைவப் பிர சங்கங்களைச் செய்யவும் அக்காலத்தில் இவருக்கு வாய்ப் பளித்தது. கவிதை பாடியோ, உரைநடை ஆக்கியோ தமிழை வளம்படுத்தத் தோன்றுவதுபோலச் சமயப்பணி செய்தற்குப் பலர் முன்வராது இருப்பதை உணர்ந்த அருணுசல வாத்தியார் அவர்கள், இந்நாட்டிற் பல சைவத் தமிழ்ப் பாடசாலைகளை விபுலாநந்த அடிகள் தோற்றுவித் தற்கும் காரணமாக இருந்தவர். சிவப்பொலிவுகொண்ட தோற்றத்தினராக இருந்த காரணத்தினுல் அருணுசல சாமி யென்று புகழ்ப் பெயர் கொண்ட வாத்தியார், * தேசிகர்’ என்ற சமயப் பட்டத்தையும் இராமகிருஷ்ண சங்கத் துறவியான அவினுசாகந்த சுவாமிகளாற் சூட் டப்பெறலாயினர். தேசிகருடைய சமய சேவைதான், பாரத5ாட்டின் பழம்பண்பாட்டினதும், சைவசமயத்தி னதும் சிறப்புக்களை எடுத்து விளக்குவதான கந்தபுராணம் முதலான புராணங்களையும், பாரதம், 5ைடதம்போன்ற இதிகாசங்களையும் இந்நாட்டு மக்கள் விரும்பிக் கற்கத் தூண்டிற்று. "தமது சைவசமயச் சொன்மாரியால் தமிழ் மொழியின் சிறப்பினையும் பரப்பிய காரணத்தினுல் 1952இல் மட்டக்களப்புத் தமிழ்க்கலேமன்றம் இவரைத் * தேசிகமணி ' என்ற பட்டத்தையளித்துக் கெளரவித்தது. இவருடைய சீடர்கள் போன்று நாடெங்கும் சமயப் பேச் சாளர் பலர் தோன்றியபின்னர்த், " தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கோடு, பல்லோர் அறியமுடியாது. கிடப்பதும் முடிந்த முடிபுகளைக்கொண்டு

Page 192
334 மட்டக்களப்புத் தமிழகம்
விளங்குந் தனி நெறியுமாகிய சித்தாந்தச் சிவநெறியினைப் பற்றித் தமக்குத் தெரிந்த பேருண்மைகளை எல்லாம் திரட்டி சைவக்களஞ்சியம்’ என்ற பெயரால் ஆறுபாகங் களைக் கொண்டதொரு நூலாக எழுதலானுர். இப் பாகங் களுள் 4ஆவதான சைவசமய இளைஞர் போதினி மட்டக்களப்பு இந்துபரிபாலன சபையால் 1958இல் வெளியிடப்பட்டதும் தேசிகரது புகழ் எங்கும் பரவத் தொடங்கிற்று. அதன்பின்னர் 6ஆம் பாகம் சைவசமய சிந்தாமணி’ என்னும் பெயரோடு 1960இல் வெளிவந்த போது ஈழநாடு மட்டுமன்றி இந்தியத் தமிழகமும் தேசிக மணியின் புகழை அறிந்து வியந்தது. நாடெங்கும் உள்ள மன்றங்களெல்லாம் தேசிகமணிக்குப் பொ ன் ஞ  ைட போர்த்துக் கெளரவிக்கலாயின. உரைநடையிலமைந்து சிறிதே தமிழ் கற்றேரும் இலகுவில் அறிந்துகொள்ளத் தக்க வகையி லெழுந்த *சிந்தாமணி’ சைவசமய சாத்தி ரங்களென்ற பெருங்கடலேத் கடத்தற்குத் துணைசெய்யுங் தோணிபோன்று விளங்குகின்றது. களஞ்சியத்தின் 4ஆம் பாகம் * இந்துசமய மாத மகத்துவ மான்மியம்’ என்னும் பெயரையுடையது. அதனே 1961இல் மட்டக்களப்பு இந்துமகளிர் மன்றத்தார் அச்சேற்றி வெளியிட்டார்கள். மற்றைய பாகங்கள் விரைந்து வெளிவந்து சைவத்தை யும் தமிழையும் மேலும் வளம்படுத்தும் என்று நம்பு கின்ருேம்.
போக்குவரத்து வசதிகள் இல்லாது புறத்தொடர்புக ளற்று மட்டக்களப்பிற் பரந்துகிடந்த கிராமங்கள் தோறும் உளமும் உடலும் சளேக்காது கடந்து சென்று பணிசெய்த தேசிகமணிகளுடன் சிநேகிதராக இருந்த தமிழ்ப் புலவர் பலரைப்பற்றிய சுவையான செய்திகளை யெல்லாம் அவர் சுவைபடக் கூறுவார். அக்காலங்களிலே தாம் பெற்ற வாழ்க்கை அனுபவங்களே அவர் கூறுதல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தக் குறிப் புக் களை யுங் கொண்ட தமது சுயசரிதை நூல் ஒன்றையும் தேசிகர் எழுதி வெளியிட முனைந்திருக்கின்றர் என்றறிகின்ருேம். தள்ளாத வயதிற்கூட தமிழும், சைவமும் என்ருல் உணர்ச்சி பெற்றெழும் தேசிகமணி அவர்கள் இத்

புலவர் பரம்பரை 335
தகைய அரும்பணிகளைச் செய்து இன்னும் பல்லாண்டு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனே வேண்டுகின்ருேம்.
பெயர் குறிப்பிட்ட இவர்களைவிடப், பெயர் நன்கு தெரியாத புலவர்களாற் பாடப்பெற்ற பாடல்களும் பல இங்கு உள. அவ்வகையைச் சார்ந்தனவாய்க் கல் லாற்று ஒப்பாரி' என்றும், பறையன் ஒப்பாரி', ' கண்டி ஒப்பாரி' என்றும் வழங்கப்பெறும் ஒப்பாரிப் பாடல் களின் பெருவழக்கை இங்குக் காண்கின்ருேம். இவற் றுள் முதலதைப் பாடியவராகப் பல்வேறு பெயர் கேட் கப்படினும் சிறந்த புலமையாளரான கல்லாற்றுப் புல வர் ஒருவரே இதைப் பாடினர் என்னலே பொருத்த மாகத் தெரிகின்றது. கண்டி ஒப்பாரி'யைப் பாடிய வரின் பெயர் அலித்தம்பி என்பதாகும். 'பறையன் ஒப்பாரி'யைப் பாடியவர் பெயர் தெரிந்திலது.
நாடோடிப்பாடற் கவிஞரான உமறுப் புலவர், புயற்பாட்டு, நாட்டுவளம் முதலிய பாடல்களை அளித்த சேகுமாதார்ப் புலவர், நாடோடிக் கவிதைகள் போன்ற பாடல்களை உடனுக்குடன் இயற்றுதலில் வல்லவரான அசன் புலவர், மெ ழு கன்’ என்றழைக்கப்படும் உதுமாலெவ்வைப் புலவர், நபிகள் நாயகத்தின் (ஸல்) சீவியவரலாற்றினை விருத்தப்பாக்கள் சிலவற்றுள் அடக்கி எழுதியிருக்கும் மீராலெவ்வை முகமதுத்தம்பி, தனிப் பாடல் பலவற்றின் ஆசிரியரான நெடியவன் என் றழைக்கப்படும் கந்தையா ஒடாவியார், புயல் வெள்ளக் காவிய ஆசிரியரான ஒலுவில் முகையதின் பிச்சைப் புலவர், சின்னலெவ்வை வன்னியன் என்பார் யாவ ரும் அக்கரைப்பற்றுப் பகுதியை இனிய தமிழ்க் கவிதை யால் வளம்படுத்திய பெருமக்களாவர். சிலுவர் ? என்ற பட்டப்பெயருடன் அக்கரைப்பற்றில் வாழ்ந்த இளையாப் போடியார் என்பார் மந்திரவித்தைகளில் வல்லவராய்த் தாமே சில தமிழ் மந்திரங்களை ஆக்கியும் வைத்துள்ளார் என்பர். மந்திரசக்தி உடையன போன்று, பாடிய உடனே மழையைப் பெய்வித்த ‘மழைக் காவியம்’

Page 193
336 மட்டக்களப்புத் தமிழகம்
என்னும் பாடல்களே (கண்ணகி வழிபாட்டுள் பார்க்க) பாடிய தம்பிலுவில் பிராமணப் பொடியன் என்று கூறப்படுவார் தம்பிலுவில்லைச் சேர்ந்த கட்டாடி கண்ணப்பராகலாம். வசந்தன் பாடல் , * நாட்டுக்கூத்து ’ என்பவற்றின் ஆசிரியராகப் பெயர் குறிப்பிடப்படும் கண பதி ஐயர் என்பாரும் தம்பிலுவில்லைச் சேர்ந்தவரே ஆவர்.
முகம்மதலியார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் மருதமுனேயில் வாழ்ந்திருப்பதாகத் தெரிகின்றது. மன்னுரா ருடைய மகன் என்றழைக்கப்பட்ட முஸ்லீம் புலவர் ஒருவர் 'காத்தான் குடியில் வாழ்ந்ததாகக் கேள்விப்படு கின்ருேம். களுதாவளையில் சின்னத்தம்பி என்னும் குருடரான புலவர் ஒருவர் வாழ்ந்தார் என்றும் அங்கிருந்த வன்னியனரின் யானே அவரைக்கண்டால் துதிக்கையை உயர்த்தி வணங்கிச்செல்லும் வழக்கம் உடையதென்றும் தெரிகின்றது. குட்டிப் புலவன் என்று பட்டப்பெயர் கொண்ட அந்தோனி என்பவர் கோட்டைமுனையில் உள்ள புளியடிக்குடாவைச் சேர்ந்தவராவர். கோட்டை முனையைச் சேர்ந்த சபாரத்தினசாமி நொத்தாரிஸ் என் பாரும், குமாரசாமி ஐயரின் தந்தையாரான சின்னத் தம்பிச் சாத்திரியார் என்பாரும் நல்ல தமிழறிஞராக வாழ்ந்தவர்கள். அமிர்தகளியில் வாழ்ந்து நாடகசபைகளை அமைத்துத், தமிழ்நாடகங்களுக்கான (Tamil Dramas) பாடல்களை எழுதித், தமிழ் நாடகக்கலையினை வளர்த்த முத்துக்குமாரு அண்ணுவியார், சண்முகம் அண்ணுவி யார் என்பாருடைய தமிழ்ச்சேவை மிகுதியும் போற்றத் தக்கது.
கத்தோலிக்க சமயத்து ஞானச் சகோதரரான பிலிப் அவர்கள் கத்தோலிக்க வாசகங்கள் பலவற்றை எழுதி நல்ல உரைநடையினை வளர்த்துச் சிறுவர்களிடைத் தமிழ் இலக்கண மரபு தவருது காத்தவர். ஆங்கிலத்திலே மட்டக்களப்புத் தமிழகத்தைப்பற்றிக் கட்டுரைகள் பல எழுதியதன் மூலம் இத் தமிழகத்துப் புகழை வெளி யுலகுக்கும் எடுத்துக்காட்டியோர் ஆர். டபிள்யு. சேது காவலர், ஈ. எல். தம்பிமுத்து, எஸ். ஒ. கனகரத்தினம்

புலவர் பரம்பரை ჭვ7
என்பார். அவர்களது தமிழ்த் தொண்டு விலைமதிக்க முடியாத ஒன்ருகும். திருவாளர் ஈ. எல். தம்பிமுத்து அவர் கள் மிகப் புராதன காலத்திலிருந்து கி. பி. 1800ஆம் ஆண்டுவரை வாழ்ந்த தமிழரின் வரலாற்றை (DravidaA History of the Tamils from Pre-historic Times to A, D. 1800) ஒரு ஆங்கில நூலாக எழுதியவர். சென் னைப் பல்கலைக்கழகத்துச் சரித்திரப் பேராசிரியராக இருந்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் இவரை மிகுதி யும் பாராட்டி அளித்துள்ள அணிந்துரையிலிருந்தே இன் ஞரின் சரித்திரப் புலமையை நாம் அறியலாம். பின்னேயவ ரான எஸ். ஒ. கனகரத்தின முதலியார் அவர்கள் மட்டக்களப்பின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் நூலாக (Monograph of Batticaloa) 6T (p5 giš(5.TL14.637 up,65 சிறப்புக்கள் பலவற்றை மறைந்துவிடாது பாதுகாத்துப் பெரும்புகழ் கொண்டவர்.
இவர்களெல்லாரும் நன்கு ஆராயப்பெற்றுத் தனி நூல் ஒன்றில் வெளிவரவேண்டிய மட்டக்களப்புத் தமிழ் மணிகள். இவர்கள் மட்டுமன்றி காரைதீவு, மண்டூர், கல்லாறு, வந்தாறுமூலை, ஏருவூர், சிற்றண்டி என்னும் ஊர்களில் மேலும் தமிழறிஞர் பல்லோர் பெயர் தெரிந் தும் தெரியாதும் வாழ்ந்துள்ளனர். அவரது புகழ் வெளிக் கொணரப்படும்போது மட்டக்களப்புத் தமிழகத்தின் தமிழ்ப் புலமைப் புகழ் மேலும் உயர்ந்து கிற்கும்.
if - 22

Page 194
8. மருந்தும் மந்திரமும்
1. மந்திர வழக்கு
தமிழ்ப் புலமையோடு கலைவளங்களும் நிறைந்து விளங்கும் இம் மட்டக்களப்புத் தமிழகம் பண்டைநாளி லிருந்து மந்திரப் பயிற்சிகளாலேயே ஈழத்தின் மற்றைய பகுதிகளிற் கருதப்பெற்று வந்த ஒருநாடு. மட்டக்களப் பாரின் மந்திர ஆற்றல் புகழ்பெற்ற ஒன்ருக விளங்கத் தக்கவாறு மந்திர வழக்கும், மந்திரம் கலந்த மருந்துப் ’ பயிற்சிகளும் இங்குள்ளாரின் நாளாந்த வாழ்விலே ஒரு போது பின்னிப் பிணைந்திருந்ததாக அறிகின்ருேம். அத ஞலே இந் நாட்டின் பழங்கலைகள் போன்றிருந்த அம் மந்திரம், மருந்து முதலானவற்றைப் பற்றித் தனிப்பட நாம் இங்குக் காட்டலும் வேண்டியதாயிற்று. இங்குமட்டுமன்றி, கல்வியறிவு பரவாத ஆதிகாலத்தில் மந்திரங்களினுட்சி உலகமுற்றும் பரவியிருந்திருக்கின்றதாகத் தெரிகின்றது. மக்கள் அவ்வாறு மந்திரங்களிற் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையானது கல்வியறிவு, நாகரிகம் என்பவற்றில் மிகுதியும் முன்னேற்றம் அடைந்துள்ள இக்காலத்திற்கூட இலகுவிற் துடைக்கப்பட ஒண்ணுத தொன்ருய்விட்டது. இதனலே எங்கும் நிலவிவரும் மந்திரப் பயிற்சிகள், மக்களிடை அச்சம் கலந்த ஒரு நம்பிக்கையின் தொடர் பாக இன்றும் வழங்கக் காண்கின்ருேம்.
மனவளத்தின் முன்னேற்றத்தினற் சமய உணர்ச்சி யும், கடவுட்பற்றுந் தோன்றுவதற்கு முன்னரே மக்க

மருந்தும் மந்திரமும் 339
ளிடை இந்த மந்திர வழக்கம் இடம்பெற்றிருந்ததென்பதை மனிதனின் நாகரிக வளர்ச்சி வரலாறுகள் தெரிவிக்கின் றன. மந்திரம் உலகம் அனைத்துக்கும் பொதுவானதாயிருத் தலால் எந்த ஒரு மொழியினருக்கும் நாம் அதனே உரிமைப் படுத்திக் கூறுதல் இயலாததாகும். ஆதிகாலத்து மக்கள் கருத்துக்களைத் தம்முள் மாறி வழங்குதற்குப் பயன்பட்ட மொழிகளைத் தெய்வத்தினலே அருளப்பட்டவை என்று கருதினர்கள். கடவுளின் மொழியே மக்களுக்கும் வழங் கப்பட்டதென்ற அவர் கருத்தினல் மொழியின் பண்டைய உருவமும் மிகுந்த வல்லமை வாய்ந்ததென்ற நம்பிக்கை யுடன் வளர்வதாயிற்று. இதனலேதான் வழக்கொழிந்து விட்டபோதிலும் பழைய மொழிகளான எபிரேயம், லத்தீன், சங்கதம் போன்றவை யெல்லாம் தூய்மை கொண்ட சமய மொழிகளாக மதிக்கப்பெற்று வருகின் றன. பண்டைச் சுமேரிய மொழியானது இன்று வழக்கி லிருந்து இறந்துபோயிருப்பினும், ஆசிய மக்களும், பாபி லோனியரும் அதனைத் தெய்வமொழி என்று கருதுகின் ருர்களெனவும் அம்மொழியை நன்கு அறிந்துகொள்ளு தற்காக நிகண்டு முதலியவற்றை வேருக அமைத்துப் பாதுகாத்து வருகின்ருர்களெனவும் அறிகின்ருேம். இவை யெல்லாம் தனி மொழிகளுக்கே பண்டைய மக்கள் மந்திர வன்மை ஊட்டியிருப்பதை விளக்குகின்றன.
எல்லாச் சொற்களுக்கும் ஆற்றல் உண்டென்பதும், சரியான சொல்லை வேண்டியபடி அறிந்து, உச்சரிப்பு வேருகாது சொன்னல் தாம் கருதும் பலனே அது தவ ருது தரும் என்பதும், அதனுல் அவையெல்லாம் மந்திரங் களே என்பதும் மிகப் பழங்காலத்து மக்களுடைய கருத் தாகும். அக் காரணத்தினற் பழஞ் சொற்களின் உச்ச ரிப்பு முறைகளையெல்லாம் அவர்கள் பெரிதும் போற்றிக் காத்தனர் என்றும், மொழிநடையிலோ உச்சரிப்பு முறை யிலோ எவ்வித புதுமாற்றத்தினேயும் எளிதில் ஏற்றுக் கொள்ள மறுத்தனரென்றும், அத்தகைய கொள்கையின் நீடிப்பு, காலச் செலவில் பழம்பெரும் மொழிகளெல்லாம் வழக்கொழிந்து போதற்கு இலகுவாக இடமளிக்கலா யிற்று என்றும் மொழி வரலாறுகள் தெரிவிக்கின்றன.

Page 195
34O மட்டக்களப்புத் தமிழகம்
இந்த உச்சரிப்பு வகையின் வலிமைபற்றிய குறிப்புக்க ளெல்லாம் மந்திரசக்தியின் மீது மக்களுக்கிருந்த நம்பிக்கை யின் அளவினை நமக்குத் தெளிவுறக் காட்டுவனவாகும்.
சொற்களின் ஆற்றலானது மந்திர சக்தியாய் விளங்கினமையைச் சாபமிடுதல் ’ என்னும் சொல்வாயி லாகப் புராணங்கள் விளக்கம் செய்கின்றன. மந்திர ஆற்றல் உள்ள சொற்களை வழங்குவோன் மக்களிடைப் பெரு மதிப்புடையவனுக இருந்திருக்கின்றன். * சாரணர் ’ என்ற சாதியார் வாழ்ந்த மலேப்புறத்து ஒதுக்கிலே கலங் கவிழ்ந்து அடைகரைப்பட்டுச் சென்ற சாதுவனுக்குக் காட்டப்பெற்ற அரசன், அக்குழு மக்களின் தலைவனன * குருமகனே' என்று மணிமேகலை கூறுவதனலும், நாகரிக முதிர்ச்சிபெருத மக்களிடை, மந்திரங்களில் வல்லவர் களே தலைமைபூண்டு அரசுரிமை பெற்று விளங்கும் பெருமதிப்பினைப் பெற்று விளங்கினர் என அறிகின்ருேம். இன்றும் ஆபிரிக்காக் கண்டத்தின் காடுகளிலே வாழும் மக்களிடை, மந்திர வித்தையில் அதிகம் வல்லமையுடை யோனே அதிகாரம் பெற்று விளங்குகின்றன். அவ்வாறே கிழக்கு நாடுகளெங்கணும் மந்திர வித்தைக்காரர்களுக்கு மக்கள் பயந்து மரியாதை செலுத்தி வாழ்கின்றதை நாம் அறியலாகும்.
மந்திரம் என்பது மறைத்துச் சொல்லப்படுவது. ஆற்றல் வாய்ந்த சொற்களின் கோப்பினைப் பல தடவை * உருப்படுத்துதல் ' (திருப்பித் திருப்பிச் சொல்லுதல்) மூலம் மந்திரவாதி தான் நினைத்தவற்றைச் செய்து முடிக் கிருன் என்பர். தனது எதிரியின் பெயரைப் பயன் படுத்தி அவனுக்கு மாந்திரிகன் கெடுதல் * செய்கின் ருன் என்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இதனுற்போலும் * ஊரைச் சொன்னலும் பேரைச் சொல்லாதே’ என்ற பழமொழியும் உண்டாவதாயிற்று. சிலர் தமது பெயரை மட்டுமன்றித் திட்டமான வயது முதலியவற்றையும் நன்கு பழகாதவருக்குச் சொல்லமாட்டார்கள். தீய விலங்குகள், கொடுநோய்கள் என்பவற்றின் பெயர்களைக்கூட மக்கள் மந்திரம்போலக் கருதினர். இரவிலே ' பாம்பு’ என்று

மருந்தும் மந்திரமும் 341
சொல்வதற்குப் பயங்கொள்வர். அப்படிச் சொன்னல், அச் சொல்லானது பலித்து உண்மையாகவே பாம்பு வந்து ஊறு செய்துவிடும் என்ற அச்சம் அவருக்குண்டு. நாட்டுப்புறங்களிலே பெரும்பாலும் கொடிய நோய்களின் பெயர்களைக்கூடக் குழந்தைகள் உள்ள இடங்களிற் சொல்லுதற்கு அஞ்சுவர். அதுபோலப் பேய்களின் பெயர்களும் வீடுகளிலே சொல்லப்பெரு. இதனுல், பேய் களை மந்திரங்களால் அழைத்து ஏவல்கொள்ளும் திறமை வாய்ந்தோர் மக்களிடையே அச்சத்தோடு மதிக்கப்படுவா ராயினர். அவர் கூறும் பாடல்களும் மந்திரங்களாக மதிப்புப் பெற்றன.
மந்திரப் பாடல்களை ஆக்கும் வல்லமைகொண்ட புலவர்களும் முற்காலத்தே இருந்துள்ளனர். ஆநந்தக் குற்றம், மங்கல எழுத்து, நச்செழுத்து முதலியன பற்றிய கருத்துக்களெல்லாம் இவர்களின் தொடர்பினவாய் மந் திரப்புலமை பற்றி வந்தனவேயாகும். காலவழக்கிலே செய்யுள் வகையில் மந்திரம் எனவும் ஒன்று இடம்பெற லாயிற்று. இதனைப் ‘பாட்டுரை நூலே அங்கதம் பிசியே ? என்னும் பழஞ் சூத்திரத்தினுலறியலாகும். * அறம் பொரு ளின்பம் வீடு பெறுமாறு சொன்ன நூல்களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும், சொகினமும், வக்கின கிரந்த மந்திரவாதமும், மருத்துவ நூலும், சாமுத்திரிய மும், நிலைத்து நூலும், ஆயுதநூலும், பத்து விச்சையும், ஆடைநூலும், அணிகல நூலும், அருங்கல நூலும் முத லாயவற்றுள்ள மறைப் பொருளும் உபதேசமும் வல்லா ராயும், கவிப்பெருமையும் சாவவும் கெடவும் பாடுமாறும், பாடப்படுவோருக்கு நன்மையும் தீமையும் அறியுமாறும் வ ல் ல ள ர் வாய்க் கேட்டுணர்ந்துகொள்க’ எனவும், * இவைகளெல்லாம் இருடிகளல்லா ஏனையோராகி மனத் தது ஆகவும் கெடவும் பாடவல்ல கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச் சாத்தனர் இத் தொடக் கத்தாராலும். ’ எனவும் வரும் யாப்பருங்கல உரைப் பகுதிகளாலும் இது மேலும் விளங்குகின்றது. புட்கரனர் என்பவர் செய்த மந்திரநூல்’ ஒன்றுகூடப் பழந்தமிழ ரிடை வழங்கியிருக்கின்றது.

Page 196
342 மட்டக்களப்புத் தமிழகம்
* வச்சிர வாவி நிறைமதி முக்குடை
நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல் உட்சக்கர வட்டத்துட் புள்ளி என்பதே புட்கரனர் கண்ட புணர்ப்பு.’ என்னும் பாடலொன்றின்படி பழங்காலத்திலேயும் மந்தி ரங்களுக்கேற்றபடி கீறப்படும் சக்கரங்கள் வழங்கி வந் தன என்று தெரிகின்றது. முக்கோணம், ஐங்கோணம், ஆறுகோணம் முதலியனவாக இருந்த இச் சக்கரங்களை மட்டக்களப்பு நாட்டினர், யந்திரங்கள் ' என்றும், அச் சிரங்கள் (அட்சரங்கள்) என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாருன அடிப்படையிலமைந்த மந்திரப் பயிற்சி இன்று கிழக்குலகிலேயே அதிகம் வழக்கில் உள்ளதெனி னும் மேலைநாடுகளும் ஒருகாலத்தில் இவற்றினடிப்பட்டுக் கிடந்திருக்கின்றன என்பதை நாம் அறிதல் வேண்டும். மந்திர சக்திகளின் பெயரால் மனேவசியங்கள் பல எங் கும் நடந்துள்ளன. மந்திரம் தெரியாத இடத்து அதன் பெயராற் பல தந்திரங்கள் செய்துள்ளார்கள். அதற்கு மருந்துகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதல்ை மருத்துவக்கலையும், இரசாயன அறிவும் நிலைத்து வளர்ந்து வந்துள்ளன. கிரேக்கநாட்டுக் குருமார் காசை உள்ளே இடுதலால் மந்திர நீரை வெளியிலூற்றும் பொறியையும் நிலவறைக் கொப்பரையிலுள்ள நீரினவி ஒரு குழாய் வழிச்சென்று தாளிட்ட கோயிற் கதவினைத் தானே திறக் கும் தந்திரங்களையும் மந்திரத்தின் பெயராலே கைக் கொண்ட கதைகள் அந்த நாடுகளில் வழங்குகின்றன. நீலநதி பெருகுதலும், சூரிய சந்திரர்களது கிரகண கால மும், எகிப்திய குருமாரின் பூகோள அறிவினலே தவ ருது வெளிப்பட்டபோது மக்கள் அவர்களை மந்திரவாதி கள் என்றே கருதினர்கள். மந்திரம் ஒன்றே எவற்றை யும் தவருது பலிக்கச் செய்ய வல்லது; அற்புதமான எதை யும் சாதிக்க வல்லது; தீரா நோயைத் தீர்க்க வல்லது ; என்ற நம்பிக்கை இப்படி மக்களுள்ளத்தே ஊன்றி வளர்வ தாயிற்று. அந்த அசையாத சக்தியினுல் மழையினைப் பெய்விக்க வல்ல பெரிய மாந்திரிகனே அரசன் என்ற கருத்தினையே வெண்கொற்றக்குடை முதலில் மக்களுக்குக்

மருந்தும் மந்திரமும் 343
கற்பிக்க எழுந்ததென்பதும் இக் கருத்தினைத் தழுவியதே யாகும்.
மந்திர வித்தைக்காரர் பஞ்சம், புயற்காற்று, பெரு மழை என்பவற்றை ஆக்குவர் என்பது மக்கள் கருத்து. இதற்குச் சான்றன கதைகள் எல்லா மொழிகளிலும், எல்லா மதநூல்களிலும் உண்டென்பர். தேவதைகள் தமது மந்திரக்கோல்களைச் சுழற்றுவதனலே பல அற்பு தங்கள் நிகழ்ந்தன என்பர். பழைய ஏற்பாடு என்ற கிறித்தவ வேத நூலிலும் இது பற்றிய கதைகள் பல உள்ளன. மந்திரத்தில் மக்கள் கொண்டிருந்த நம்பிக் கையை அடிப்படையாகக்கொண்ட நிகழ்ச்சிகள் பல வற்றை நாம் அங்கும் காணலாகும். எகிப்திய அரசனது முன்னிலையிலே மந்திரவாதிகள் தம் கைப்பிரம்பை நிலத் தில் எறிந்து பாம்புகளையும், தவளைகளையும் அழைத்தார்க ளெனவும் சவுல் என்னும் அரசன் எண்டோர்’ என் னும் இடத்தில் வாழ்ந்த ஒரு மந்திர வித்தைக்காரியின் துணையால் சாமுவேலின் ஆவியை அழைத்துத் தனக்கு நேரவிருந்தவற்றை அறிந்துகொண்டனனெனவும் அங்கு வரும் குறிப்புக்களெல்லாம் ஆதியிலே மந்திரம் மக்க ளிடைப் பெற்றிருந்த செல்வாக்கை நன்கு காட்டுகின்றன. கிரேக்கநாட்டிலே ஒலிம்பஸ் மலையில் உள்ள சீயஸ் என் னும் கடவுளின் கோவிலிலும், இடெல்லி என்னும் இடத் தில் உள்ள கோவிலிலும் இருந்த பூசாரிமாரான மந்திர வாதிகள் மீது தெய்வம் ஏறி வெளிப்பாடு கூறிற்று என் பர் கிரேக்கர். வஞ்சிநகரத் திருச்செங்குன்றிலே குட்டு வன் சமைத்த கண்ணகி கோவிலில் நடந்த தெய்வ வெளிப்பாடுபற்றிய இவ்வாறன நிகழ்ச்சிகளைச் சிலப்பதி காரம் கூறுகின்றது. " சன்னதம் கொண்டு அல்லது * ஆவேசம்’ வந்து தெய்வம் ஒருவர்மீது வெளிப்பட்டு நின்று பேசுதல் என்பது இவ்வழக்கின் கருத்தாகும். இவ்வாறன தெய்வ வெளிப்பாட்டுக் கூற்றுக்களை கட்டுச் செர்ல்லுதல்’ என்று மட்டக்களப்புத் தமிழகத்தார் கூறு வர். தெய்வம் ஏறியோரைப் பூமரம் ’ என்றும், தெய்வத் தினை வரவழைத்த பூசாரியை "ஆசான்' என்றும் குறிப் பிடுதல் இங்குள்ள வழக்கம்.

Page 197
344 மட்டக்களப்புத் தமிழகம்
இவ்வாறு மக்கள் வாழ்விற் படிந்து ஊறிப்போன மந்திரப் பயிற்சிகள் காலமயக்கில் விஞ்ஞானக் கலைத் தொடர்பினலே படிப்படியாக மறைந்து வந்தாலும் மட் டக்களப்பிலே அவற்றின் சுவடுகள் அழிந்துபோகாது பதிந்துகிடக்கின்றன. இத் தமிழகத்தின் கிராமப்புறங் களிலே மந்திரவித்தை செலுத்துகின்ற ஆட்சியின்பிடி இன்றும் இருக்கின்றது. பேய்கள் அல்லது கெட்ட ஆவி கள் பிடிப்பதனுலே பெருநோய்கள் உண்டாகின்றன என்ற நம்பிக்கை உயிர்வாழ்கின்றது. அப்படிப்பட்ட நோய்களை நீக்குதற்கு மருத்துவச்சாலைகளை விட மந்திர ஓலேகளையே மக்கள் நாடுகின்ருர்கள். தமது தகுதிக்கேற்ற நல்ல மந்திரவாதிகளைக்கொண்டு இன்ன பேயினுல் இந்த நோய் வந்திருக்கிறது என்று கண்டு அதற்கு மடைபோட் டும், பேயாட்டிக் கழிப்புச் செய்தும் பேயை ஒட்டிக் குணப்படுத்துகின்றனர். இவ்வாருன மந்திரச் சடங்கிற்கு * தொழில்’ என்ற சிறப்புப்பெயர் மட்டக்களப்பில் வழங்கு கின்றது. * தொழிலாளி' என்ற சொல்லும் இங்கே மக் திரவாதிகளையே குறிப்பிடுவதொன்று. மாலைக் காய்ச்சல் போன்றவையோ அல்லது கைப் பரிகாரமுறைகளுக்கு மாருத வேறு நோய்களோ வந்தால் மக்கள் மந்திரவாதி யைக்கொண்டு மந்திரஞ் சொல்லி, நாற்சந்தியிலே வைத்து மாலைவேளையில் *திருநீறு போடுவார்கள். மந் திரவாதி நோயாளிக்குத் திருநீற்றை ஓதி ' (மந்திரித்து) நெற்றியிற் பூசுவது *திருநீறு போடுதல் ’ என்று வழங் கப்பெறும். அத்தோடு மந்திரித்த தண் ணிரைக் குடிக்க வும், குளிக்கவும் கொடுத்தலும் உண்டு. இவ் வழக்கம் * தண்ணிர் ஓதுதல்’ எனப்படும். இவைகளாலும் தீராத போது மந்திரவாதி, குறித்த நோய்க்குரிய காரணத்தை அறிய, குறி பார்ப்பான். வாழை இலை ஒன்றில் நெல்லே அல்லது பச்சையரிசியைப் பரப்பி, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், எலுமிச்சம்பழம் என்பவற்றைக் கொண்ட 8 மடை’ (படைப்பு) ஒன்றினை அதன்மேல் வைப்பான். சிறிய வில்லொன்றை அம் மடைக்குமேல் ஏந்தியவண்ணம் பிடித்துக் கொண் டு அவ்வில்லின் நாணில் பாக்குவெட்டி ஒன்றைக் கொழுவியபடி மக்

மருந்தும் மந்திரமும் 345
திரத்தைத் தொழிலாளி முணுமுணுத்துக்கொண்டே இருப்பான் (படம் 27). அந்த வில்லிலே, குறித்த பேயா னது வெளிப்பட்டு நின்று நோயாளியை வருத்துவது என்ன என்று அவனுக்குக் குறிப்பிடும் என்பர். இரு ளன், மருளன், காடேறி, கரையாக்கன், குறும்பறை யன், சுடலை வைரவன், கங்கை வைரவன், கலியான வைரவன், மோகினி, பிடாரி, பேச்சி, பிச்சி, பிணந்தின்னி, பிள்ளை கொல்லி முதலிய பல பேய்களுள் எது நோயா ளியை வருத்துகிறது என்பதைத் தெரியப்படுத்துவதோடு, பேயினுலன்றி விதிவசமான நோயினலேயே துன்பம் நேர்ந்துள்ளதாயின் அதனையும் குறி தெரியப்படுத்தும் என்பார்கள். இவ்வாருன மந்திரக் குறி பார்க்கப்பட்ட பின்னரே நாம் முன்னர்க் காட்டியபடி பேய்க்குச்செய்து கழிக்கும் * தொழில் பெரும்பாலும் இங்கு நடக்கும்.
மட்டக்களப்பு நாட்டு மந்திரங்களுள்ளே பெயர் பெற்று விளங்குவது 8 சூனியம்’ செய்யும் மந்திரம். ஒரு வன் தன் எதிரியினை நோய்ப் படுக்கையிலோ, அன்றி மரணக் குழியிலோ வீழ்த்தும் மந்திரச் செய்கையே சூனியம் எனப்படுவது. சூனியம் செய்தலை, * செய்கை என்ற சொல்லாலேயே இங்குக் குறிப்பிடுதல் வழக்கு. ஆட்டுச்செய்கை, படுசூனியம், சூனியம், ஏவல் என மேலும் பலவகைப்படுவது இச் செய்கை, எதிராளியின் நகம், தலைமயிர் முதலியவற்றைக் கொண்டன்றி வெறும் பெயரை மட்டுமே பயன்படுத்தித் தாம் நினைத்தவற்றை அவன்மீது சாதிக்கவும் வல்ல மந்திரவாதிகளுக்கு மட் டக்களப்பு:நாடு பெயர்பெற்றது. தான் குறித்தவனது காலடிமண் சூனியச் செய்கைக்காக எடுத்துக்கொள்ளப் படும். அம் மண்ணைக்கொண்டு செய்யப்படும் படுகுனி யம் முதலியவற்றில் மட்டுமன்றி, அம் மண்ணை ஒரு பெட்டியிலடைத்து நீண்ட கயிறென்றில் தொங்கவிட்டு மந்திரவலியினுல் அப் பெட்டியினே ஆடச் செய்யும்போ தெல்லாம் எதிரியையும் பெருந் துன்பங்களில் மூழ்கி ஆட வைக்கும் ஆட்டுச் செய்கையிலும் இம் மந்திரவாதிகள் மிக வல்லுநராவர். காலடி மண் முதலியவற்றில் மந்திர வலியினை ஏற்றி, இறந்த உடும்பு, ஆமை முதலியவற்றின்

Page 198
346 மட்டக்களப்புத் தமிழகம்
மீது அவற்றுடன் மடைவைத்து நீர்க்கரையிலோ, அன்றிச் சுடலையிலோ, எதிரியின் வீட்டுவாசலிலோ இரகசிய மாகப் புதைத்து வைத்து அவனே மாருத பெருநோய்க்குள் ஆழ்ந்தச் செய்வது படுகுனியம் ஆகும். இச் செய்கைக்கு ஆளானவனது எலும்புகள்கூடப் பூட்டு நெகிழ்ந்து தீராத இன்னலுக்குள் அவன் அழுந்துதல் உண்டு. கோழி, பன்றி என்பவற்றின் மீது மந்திரவலியூட்டி எதிரியை நோக்கி அவற்றை ஏவிவிட, அவை சென்று குறித்தவனைத் தாக்கிக் கொல்லவும், கொடிய பேய்களை அவ்வாறு ஏவி அவனைத் துன்புறுத்தவும் வல்ல ஏவற் குனிய காரர் மிகமிக அச்சத்தை விளைவிப்பவர்கள். ஒருவன் செலுத்திய இத்தகைய சூனியப் பேய்களை இன்னுெரு மந்திரவாதி அறிந்து தடுத்தலுங்கூடும். இச் சந்தர்ப்பங் களில் மந்திரவாதிகளிடையே பெரிய போட்டிகள் ஏற் படும். தம்முயிர் போனுலும் சரி என்று இருவரும் போட்டி யிற் சளையாது எதிர்த்து மந்திரப்போர் இடுதலைக் காணும் போது நமக்கு மயிர்க்கூச்செறியும்,
வேட்டையாடும்போது மந்திரவலிகொண்டு வேண் டிய விலங்குகளை மந்திரவாதி காட்டிடைச் சந்திக்கிருன், தன் எதிரி சுடும் வெடி குறிதவறிப் போவதற்கும், வெடிபட்டு வீழ்ந்த விலங்குகள் உயிர்பெற்றேடுவதற்கும் செய்ய வல்ல மந்திரவாதிகள் இங்கே உள்ளனர். காடு களிற் செல்லும்போது கொடுவிலங்குகளால் தமக்கு ஊறு வராது காத்துக்கொள்ளவும் மந்திரங்கள் உண்டு. இவை உடற்கட்டு மந்திரங்கள் எனப்படுவ, கொலை குறித்து வந்த யானைகள் மந்திரவலியாற் கட்டுண்டு வலியிழந்துபோகும் நிகழ்ச்சிகள் மட்டக்களப்பிலே இன்றும் நடைபெறுகின் றன. சண்டையிலே எதிர்த்தவனுக்கு மந்திரம் சொல்லி அறைதலினல் அவனை இரத்தம் கக்கிச் சாகவைக்கும், * நெட்டை மந்திரங்கள் தனி வழிக்குத் துணை செய்வன, மந்திரம் வல்ல வலைஞர், ஆறுகளிற் செல்லும்போது முதலைகளாற் தீங்குருதிருக்கவும், போதிய மீன்கள் தம் வலைகளிற் சிக்கவும் செய்கிருர்கள். பாம்புகள் மந்திர வலிக்கு அஞ்சி அகல்கின்றன. கடிக்கவரும் நாயினைக் கூட வாயைப் பிளந்தபடியே திரும்பிச் செல்ல வைக்க

மருந்தும் மந்திரமும் 347
வல்ல உறுக்கும் மந்திரங்கள் இந்நாட்டிற் சாதாரண மானவை. சில ஊர்களில் இன்னும் மந்திரத்தால் மாடு மேய்க்கிறர்கள். மந்திர ஏவுதற்படி எந்த விலங்கின் தீங் கும் உருது மாடுகள் காட்டிற் சென்று மேயவும், மந்தி ரம் சொல்லி அழைத்தவுடன் பட்டி ' (மாட்டுத்தொழு வம்) நோக்கி அவை மீண்டுவரவும் செய்யவல்ல மந்திர வல்லுநர்களான உழவர்களும், இடையர்களும் இன்ன மும் மட்டக்களப்பில் உள்ளனர்.
பயிர்களைப் பூச்சி புழுக்கள் அழிவு செய்யாமலும், நெல் நிறைந்த பொலிகளங்களை, மழைபெய்து சேதம் செய்யாமலும், நெற்குவைகளைப் பூதங்கள் அள்ளிக் குறைவுபடுத்தாமலும் திருநீறு ஓதி நாற்புறமும் வீசுகிருர் கள். மந்திரம் ஒதிய திருநீற்றை எறிதலால் நெற்பயிர்கள் நோய் நீங்கப் பெறுதலோடு * வாரியும் பெருக்குகின் றன என்பர். காளி, பேச்சி, வீரபத்திரன் என்ற தேவதை களுக்குரிய கோவில்களில் மந்திரப் பயிற்சியே நிறைந் துள்ளது. உயிர்ப்பலி இடும் வழக்கம் இல்லாத மட்டக் களப்பின் இத்தகைய மந்திரக் கோவில்களிலே பூசினிக் காய் வெட்டுதலே பலிச் சடங்காக நடக்கின்றது. பெரிய மீற்றுப்பூசினிக்காயொன்றை மந்திரித்து இரண்டாக வெட்டி இரத்தப் பலிபோலத் தன் திறமையால் மந்திரவாதி ஆக்குகின்றன். இதுவரை கூறிய யாவும் ஆக்கத்துக்கும், அழிவைத் தடுப்பதற்கும் மந்திரவித்தை பயன்படுமாற்றை முறையே காட்டுகின்றனவெனினும் மந்திரம் என்ற சொல் பெரும்பாலும் அழிவையும் அச்சத்தையுமே எங்கும் குறிப்பதாயுள்ளது.
. இந்தப் பேரச்சத்தின் தொடர்பு மட்டக்களப்பினை நோக்கும் அயலவர்பால் அங்கங்கே இன்னமும் இருந்து வருகின்றது. மட்டக்களப்பு என்றதுமே " மந்திரம் நிறைந்த நாடு * அது என்று பயப்படுவோர் இல்லாமலில்லை. உட் குடைவுகொண்ட நீளமான மரக்குற்றியினை நிலத்துட் பதித்தலாற் கற்கிணறுபோலப் பயன்கொள்ளப்படும் மட்டக்களப்புக் கொட்டுக்கிணறு களையும், இங்குள்ளா ரின் விருந்து புறந்தரும் பெருஞ் சிறப்பில் மயங்கிய

Page 199
348 மட்டக்களப்புத் தமிழகம்
அயலவர் பலர் இந் நாட்டிலேயே தங்கியிருந்து விடுதலை யுங் கண்ட வெளியோர் மட்டக்களப்பு மக்கள் மந்திர வலியினலேயே இவற்றைச் சாதித்துவருகிருர்களென்று நம்பினர். மட்டக்களப்பான் வலுபுரவியல்லே, மரத் தைக் குடைந்து தண்ணிரெடுக்கிருன் ; குண்டியோடு பாயையல்லே ஒட்டவைக்கிருன் ; பொல்லாத மந்திர வாதிகாணும் ' என்பதுபோல யாழ்ப்பாணப்பகுதிகளில் நாடோடியாக வழங்கப்பெறும் கூற்றுகள் இதற்குச் சான்ருக உள்ளன.
ஒருவன் தன் எதிரிகளுக்கு மட்டுமே மந்திரவலியினற் தீமை செய்கின்ற னெனினும், பொதுவாக, மந்திரம் பயின்றேன் தீமைகளுக்கு உடையவன் என்றே கருதப் படுகின்றன். முன்னுட்களிலே வெளியூரவர்கள் மட்டக் களப்பாரோடு உறவுகொண்ட காலத்திலும் மந்திரங் காரணமாக அச்சங்கலந்த ஒன்றகவே அந் நட்பினை வளர்த்திருக்கிருர்கள். ஆயினும் மந்திரந் தெரிந்த இந் நாட்டு மக்களுங்கூட, தம்மோடு இளங்கலந்து உறவு பூண்டவர்களுக்கு அதன் தீயவலியினைச் செலுத்தாது, தாமும் அவரோடு நிறைந்த நட்புரிமை பாராட்டி விருந்து புறந்தருதலிலேயே சிறந்து 8 வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பு’ என்னும் பழமொழிக்கு காட்டை இலக் காக்கிப் பெருமை படைத்திருக்கிருர்கள். காலாகாலத் தில் தமக்கு ஊறு செய்ய முயன்றேர்க்கு மட்டக்களப்பார் மந்திரங்களின் சுவையினை ஊட்டியிருத்தலும் உண்மையே யாகும்.
முன்னர் நாம் கண்ட கொடுவழிகளைவிட, வெறும் சீலை நூல் ஒன்றை ஓதி ஒருவன் செல்லும் வழியின் குறுக்கே போடுதல் ; எலுமிச்சம்பழம் முதலியவற்றை ஓதி அவனது வீட்டின்மேற் செல்ல எறிதல் ; ஒருபிடி மண்ணே ஓதி அவன்மீது எறிதல் என்பவற்றல் ஒரு எதிரியைச் சாதாரணமாகவே துன்பங்களுக்குள் ஆக்கு கின்ருர்கள். பெரும் பணம் படைத்தோரும் உடல்வலி
நிறைந்தோருங்கூட இதன் சக்திக்குப் பயந்து கட்டுப்
பட்டுப் பொதுமக்களுடன் சேர்ந்து நடப்பாராயினர்.

மருந்தும் மந்திரமும் 349
முறைதவறித் தம்மைத் தீண்டவந்த ஆடவரை அப் படியே கில் ’ என்று 8 நெட்டை’ சொல்லி மணிக் கணக்காக ஒரே இடத்தில் உணர்விழந்து நிற்கவைத்த மந்திரவாதிகளான பெண்களைப்பற்றிய உண் மைக் கதைகள் பல இங்கே வழங்குகின்றன. கள்வர்கள் வீட் டெல்லேயுள் வந்தால் அப்படியே திகைத்து நிற்கச் செய் யும் மந்திரங்களின் வலியினல் இன்னும் சில கிராமங் களில் வீடுகள் காவல் செய்யப்படுகின்றன. கள்வனும் சிறந்த மந்திரவாதியானல் அந்தக் காவல் மந்திரத்தை வென்று வீட்டில் உள்ளவரையும், காவல் நாய்களையும் * மூதேவி அழைப்பு மந்திரத்தினுற் துயிலுறுத்திக் கள வெடுத்துச் செல்கின்றன். மந்திரங்களால் எத்தகைய பலம் வாய்ந்த கதவுப் பூட்டுகளையும் திறக்கவல்ல மந்திரவாதி கள் சிலர் இன்றும் உயிர் வாழ்தலறிவோம். கதவினைத் திறப்பதற்கு மந்திரவேர், மந்திர எண்ணெய் என்பனவும் பயன்படுத்தப்படுதல் உண்டு. இவை பட்ட மாத்திரத்தே கதவுப் பூட்டுகள் தெறித்துத் தாமே திறந்து வழிவிடுதலைக் காணலாம். இவ்வாறு கள்வர்கள் பணப் பெட்டிகளைத் திறப்பதுண்டு. நீதிமன்றங்களில் வழக்குகளை வெல்ல வைக்கவும் மந்திரங்கள் உள்ளன. கூத்துக்களரிகளில் மத்தளம் அடிக்கும்போது, மந்திரம் சொல்லி அதன் ஓசையை ஒரு நூலினல் முடிந்துவிடின், உடனே மத்தளம் உடைந்துபோதல் நடக்கின்றது. மந்திர உச்சரிப்பினுல் ஒருவன் விரும்பும் பெண்ணையும் தன்னிடம் அழைப் பித்துக்கொள்ளுகின்றன்.
நோய்கொண்ட ஒருவரிடமிருந்து பேயை விலக்கும் மந்திரவாதி நடு இரவிலே குறித்தவரது வீட்டிலிருந்து பேயைத் துரத்திக்கொண்டுபோய்க் காட்டிலே மந்திரத் தால் கட்டிவிட்டு வருதல் ‘கழிப்புச்செய்கையாகும். அவ் வேளையில் வழிநெடுக எலுமிச்சங்காய்களை ஒதிப்போட்டு இரண்டாக வெட்டிக்கொண்டே செல்லுவர். பேயானது அக் காய்களைக் கடந்து மீண்டு வராமல் வழிமறிப்புச் செய்யும் இச்செயலுக்குக் காய் வெட்டுதல்’ என்றுபெயர். காய் வெட்டும்போது மந்திர உச்சரிப்பின் வலிமையால் மடையிலிருக்கும் முதற்காய் அந்தரத்தில் தானே எழுந்து

Page 200
.350 மட்டக்களப்புத் தமிழகம்
செல்லுதலும், சிலவேளைகளில் நடக்கின்றது. * மந்திரம் சொன்னல் மாங்காய் விழுமா ’ என்று ஒரு பழமொழி யிற் கேட்கிருர்கள். மட்டக்களப்பிலே அப்படி மாங் காயை மட்டுமன்றித் தேங்காய், பலாக்காய்களையும் விழச்செய்த எத்தனையோ மந்திரவாதிகள் வாழ்ந்திருக் கிருர்கள் என்பது உண்மையாகும்.
இந்த மந்திரத்தோடு தொடர்புபூண்ட சோதிடம் போன்ற இன்னென்று அஞ்சனம் போடுதல்’ ஆகும், ஒரு களவு நடந்துவிட்டால், அதைக் கண்டுபிடிக்கவோ, அன்றிச் சூனியச் செய்கை ஒன்றுபற்றி ஐயம் பிறந்தால் அதனைத் தெளிவு செய்துகொள்ளவோ அஞ்சனம்’ என்ற ஒருவகைக் குறி’ பார்க்கப்படுகின்றது. வெற்றிலையில் தடவப்படும் ஒருவகை மையினுள் மந்திரவாதி அநுமனே அழைத்துத் தன் குலதேவதையை அவ்வதுமன்மூலம் கொண்டுவரச்செய்து வேண்டியதை உள்ளபடி அறிந்து கூறுகின்றன். வெற்றிலேயிற் தடவிய மையினே வேருெருவர் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்க மந்திரவாதி பக்கத்தி லிருந்து மந்திரங்களை முறைப்படி உச்சரிக்கின்றன். மந் திரங்களின் வலி கூடக்கூட வெற்றிலையில் உள்ள சிறிய அளவான அஞ்சனத்தினுள்ளே தாம் அறிய நினைந்ததின் உண்மை நிகழ்ச்சி எல்லாம் நிழற்படம் போற் காட்டப் பெறும் என்று கண்டோர் கூறுகிருர்கள். இதற்குப் பயன் படும் மை, தேவாங்கின் எலும்பும், இறந்த கன்னிப் பெண்ணின் மண்டைஓடும், பச்சைக் கற்பூரம் முதலான சில மூலிகைகளும் சேர்த்துச் சுட்டு அரைத்துக்கொள் ளப்படுகின்றது என்று அறிகின்ருேம்.
மந்திரவித்தைக்காரர்களுக்குத் தேவாங்கு என்னும் விலங்கு மிக இன்றியமையாததொன்ருகும். தேய்ந்து போன வாலில்லாக் குரங்கு போன்றதும், பார்வைக்கு அருவருக்கத்தக்கதுமான இவ்விலங்கினை மங்கலமாகத் * தேவாரம்’ என்று இங்கே குறிப்பிடுவர். இதன் கண் ணrர், சிறுநீர், எலும்பு என்பன எல்லாம் தமக்கு மிகமிக உபயோகமானவை என்றும் * குறளி' என்னும் பேயினை அடிமை கொள்ளுதற்கு இந்தத் தேவாரத்தின் துணை

மருந்தும் மந்திரமும் 3.5
மிகுதியும் இன்றியமையாததென்றும் மந் திர வாதிகள் சொல்வர். தேவாங்கின் கண்ணிரை மந்திரவாதி தன் கண்களில் மந்திரித்துத் தடவுதலினலே குறளிப் பேயினை நேரிற் காணப்பெறுகிருன். பல மாயவித்தைகளைச் செய் தற்குத் துணைபுரியும் குறளிக்கோலினை அத் தேவாங்கின் துணையினுற் குறளிப் பேயிடமிருந்து பின்னர்க் கவர்ந்து கொள்ளுகின்றன் எனவும் அறிகின்ருேம். குறளிமந்திரம் தெரிந்த மந்திரவாதிகள் பெரும்பாலும் மற்றையோருக் குத் தீங்குசெய்வதில் ஈடுபடாது கண்கட்டு வித்தைகள் என்று கூறப்படும் அற்புதங்களையே செய்துவரக் காண் கின்ருேம். இக் குறளிவித்தைக்காரர்களைப்பற்றிய வியப் பூட்டக்கூடிய எத்தனையோ கதைகளை மட்டக்களப்புக் கிராமங்களிற் கேட்டல்கூடும்.
மட்டக்களப்பு நாட்டு மந்திரங்களைப் பற்றிக் குறிப் பிடும்போது அவற்றேடு தொடர்பு பூண்டு இங்கு வழங் குவதான மருந்து ’ நம் கருத்தில் வருகின்றது. மருந்து என்ற சொல் பொதுவாக நோய்க்குரிய எல்லா மருந்து களையும் கருதுவதாயினும், மட்டக்களப்பு நாட்டிலே தனிப் பட்ட வேருெரு குறிப்புப் பொருளையும் அது கொண்டிருக் கின்றது. நோயாளரைக் குணப்படுத்துவதற்கண்றிச் சாதா ரண நிலையில் உள்ள இருவரது மனநிலையினை ஒன்று படுத்துவதற்காய் இரகசியமாக இடப்படும் மருந்து வகைகளே பெரும்பாலும் இச்சொல்லா ற் கருதப்படுவன.
காதல் கைகூடுவதற்காக மருந்து ஒன்றை இரகசிய மாகத் தாம் காதலித்தவர்பால் ஒருவர் சேர்ப்பித்தல் உண்டு. இதனுல் மருந்து என்று சொல்லும்போது இங் குள்ள கிராமப் புறங்களில் பெரும்பாலும் மேற்காட்டிய செயலின் தொடர்பினையே மக்கள் கருத்திற் கொள்ளு கின்ருர்கள். மருந்து எண்ணெய் வடிவமாகவும், தூள் வடிவமாகவும், குளிகை வடிவமாகவும் பெறப்படுகின் .றது. தம்மால் விரும்பப்படுவோர் ஆடவராயினுஞ்சரி மகளிராயினுஞ்சரி அன்னரின் மனக்குறிப்பை உடன் படுத்துவதற்கான வெவ்வேறு அமைப்பு வகையினை இம்மருந்துகள் கொண்டுள்ளன.

Page 201
8ქ52 மட்டக்களப்புத் தமிழகம்
தனது காதலை ஒருத்தி வரவேற்காதவிடத்து அவ ளுடைய உணவிலே தான் விரும்பியவாருன மருந்தைக் கலந்துவிடச் செய்தலின்மூலம் காதல் கைகூடுகின்றது. இந்த இடத்திலே, குறித்த பெண்ணின் தலைமயிர், நகம், ஆடை அணிகலன்களின் துண்டுகள் என்பவற்றுட் சிலவும் மருந்தோடு சேர்த்துப் பயன்படுத்தப்படுதல் இயல்பு. இவ்வாறின்றி, அவள் உடன்பாடு கொண்ட போதும் அவளது தாய்தந்தையர் அக்காதற் தொடர்பை மறுத்து எதிர்த்து நிற்பின், அவர்களை உடன்படுத்துவதற் காகவும் மருந்திடுதல் நடக்கும். அதற்கு அன்னரின் தொடர்பானவற்றேடு காதலர் இருவரது மேற்கூறப்பட்ட பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வேறு சிலர் எதிரிகளைத் தம் அடிபணிவித்தற்காக மருந்துகளைச் சேர்ப்பிக்கின்றனர். அம் மருந்துகள் நன்கு செலுத்தப்பட்டோர், அவற்றைக் கொடுத்தவர் இருக்கு மிடத்தைத் தேடிச்சென்று அவர்களைப் பணிந்து ஏவல் கேட்டு கிற்கச்செய்யும் பெரிய வல்லமை வாய்ந்த மருந்து களும் மட்டக்களப்பு காட்டிலே உள்ளன.
சில மருந்துகள் மனம் வேறுபட்ட சகோதரர்களை உடன்படுத்துகின்றன. சில, கணவன் மனைவியரை மனம் மாறுபாடின்றி ஒன்றுசேர்ப்பிக்கும். இவ்வாறு சேர்க் கைக்குப் பயன்படும் இம்மருந்துகளெல்லாம் சேர்த்தி மருந்து ’ எனப்படுதல் இக்காட்டு வழக்காகும். சேர்த்தி மருந்துகளால் இன்னெரு விபரீத பலன் விளைந்துவிடு தலும் உண்டு. மருந்து உட்கொள்ளப்பட்டோர் மனம் மாறு பட்டு மூளைப்பேதங்கொண்டு பைத்தியம் பிடித்தோராத லும், சேர்த்தி மருந்துகள் பிரிவு மருந்துகளாக எதிர்ப் பலனைத் தருதலும் சிலவேளைகளில் நடக்கின்றன. இவ் வாருன மாற்றம், வேண்டும் என்ற செய்கையாலும் எதிர்பாராத மருந்துக்கலப்புப் பிழைகளாலும் நடந்து விடுகின்றன. இதற்கான மருந்துச் சரக்குகளில் மதுமத் தம் பருப்பும் ஒன்ருக இடம்பெறுதலால், அதன் சேர்க் கையின் அளவுவகையைப் பொறுத்துப் பலாபலன் மாறுபடுகின்றது எனச் சொல்கின்றர்கள்.

மருந்தும் மந்திரமும் 353
இவையெல்லாம் மருந்துகளே யெனினும், பொது வான வைத்தியர்களன்றி மந்திரவாதிகளே இவற்றைச் செய்துவைத்துக்கொள்கின்றனர். வீடுகளிலோ, மருந்துக் கடைகளிலோ இவை வைத்து விற்கப்படுதலில்லை. காடுக ளிலே நிற்கும் காஞ்சூரை போன்ற மரங்களின் பொந்து களில் வைத்து மந்திரக்காவலோடு பத்திரப்படுத்தப்படு கின்றன. வீடுகளிலே, நாளாந்தச் செயல்களினல் ஏற் படும் அமங்கலத்தன்மை இவற்றின் வலியைக் குறைத்துப் பலிக்காமற் செய்துவிடுகின்றன என்று அதற்குக் காரணங் கூறுகின்றர்கள்.
எண்ணெய் வடிவான மருந்து, வேண்டியோரின் உடலில் இரகசியமாகத் தடவியோ, தலையில் ஊற்றியோ பயன் கொள்ளப்படும். சிலர் தம் கண்களில் அல்லது நெற்றியில் அவற்றைத் தடவிக்கொண்டு வெளிப்பட் டால் எதிரிகள் அடிபணிதலும், காதலர் கூடப்பெறு தலும் இன்றும் நடக்கின்றன. தூள் வடிவமான மருந்து களைத் தேநீர், பால், சோறு முதலிய உணவுகளிற் கலந்து ஊட்டுதல் உண்டு. குளிகைகளும் அப்படிப்பட் டனவே. இம்மருந்துகளெல்லாம் மந்திரத்தின் தொடர்பு கொண்டு கூடிய பலனேச் செய்தல் காணப்படுகின்றது.
தனி மந்திரத்தால் சேர்த்தி மருந்துகளை உடனுக் குடன் ஆக்கிக் கொடுப்போரும் இக்காட்டில் உள்ளனர். குறிப்பிட்டோரது பெயரையும் மந்திரத்திற் கொண்டு, சீனியை அல்லது உப்பினே ஓதி உணவிற் கலந்துவிட அவை உடனே வேலை செய்ய ஆரம்பிக்கின்றன என்பர். அவ்வாறு ஒதின திருநீற்றை அணிவதனலும் ஒருவன் தான் விரும்பும் பலனே அடைதல் உண்டு.
உணவுடன் செலுத்தப்பட்ட மருந்து எதிர்பார்த்த பலனைச் செய்தாலும் இறுதியில் அது கொள்ளப்பெற்ருே ருக்குத் தீராத நோயொன்றைத் தருகின்றது. அந்நோ யுடையோர் வயிறு பெருத்து வயிற்றுக் கட்டியுடையோ ராய்த் துன்புறுவர். இந்த மருந்துக் கட்டி எந்த மருந்தி னுக்கும் தீருவதில்லையெனினும், நல்ல மந்திரவாதிகள் இந்தக் கட்டியினை வெளிவரச்செய்யும் ஆற்றல் உடையவு ராக இருக்கின்றர்கள்.
up - 23

Page 202
354 மட்டக்களப்புத் தமிழகம்
இந்த இறுதிக்காலப் பலனை நோக்கிப் பெரும்பாலும் சேர்த்தி மருந்தினை மிக இன்றியமையாதபோதன்றிக் காதலர் தம்முள் உபயோகிக்க இசைவதில்லை. எதிரி களுக்கு அதைச் செலுத்துவதனலே தாம் விரும்பியதை அவரைக்கொண்டு செய்வித்தலோடு இறுதிக்காலத்தில் அன்னருக்கு நோயையும் கொடுத்தலால் இம் மருந்தினை அவர்பாற் செலுத்துதற்கு யாரும் கூசுவதில்லை எனலாம்.
இவ்வாறு நன்மை கண்டாலும் இயற்கைக்கு மாறுபட்ட ஒன்ருதலால், மருந்தின் வலியைக் கல்வி முன்னேற்றம் பெற்ற இக்கால மக்கள் கடைப்பிடிப்பதில்லை. எனவே, இன்று மருந்து போடும் வழக்கம் மிக அருகியுள்ள தென்னலாம். இத் தொழிலில் வல்ல மந்திரவாதிகள் கோளாவில், தம்பிலுவில், லெளகலை முதலான சில கிராமங்களிலே வாழ்ந்து இதன் தேவை யேற்படும் போது இன்னமும் கைதந்து நிற்கிருர்கள். இத்தகைய சேர்த்தி மருந்துகளில் வல்ல மந்திரவாதிகள் சில சந் தர்ப்பங்களில் மிக இன்றியமையாத நற்பயனை ஊட்டி நாட்டிலே ஒற்றுமையும், அன்பின் பிணைப்பும் வளர வழி செய்திருக்கின்றனர். இத் தொழிலில் உயிர்ப்பலி கொள்ளும் பேய்களுக்குப் பதிலாக மோகினி, கலியான வயிரவன் முதலான தேவதைகளே அழைக்கப்பட்டு மந்திரங்களால் ஏவல் பெறுகின்றன என்று அறிகின்ருேம்.
மந்திரவாதிகளுக்குப் பேயோடு பழக்கம் அதிகம் என்பார்கள். இறுதியிலே அம் மந்திரவாதிகளுக்குப் பேயினலேயே சாவு நேரிட்ட கதைகளும் உள்ளன. அதனுற்போலும் பேயொடு பழகேல்’ என்ற பழமொழி வழங்குகின்றது. பேய்களைக் கட்டித் தமக்கு அவற்றை அடிமைகொண்ட மந்திரவாதிகள் அப்பேய்களுக்கு உரிய போது கொடுக்கவேண்டிய பலிகளிற் சிறிதேனும் குறைவு ஏற்படும்போது தாமே அவற்றுக்குப் பலியாகி உயிரிழந்திருக்கிருர்கள். சூனியப் பேய்கள், ஏவற் பேய்கள் என்பன ஒரு மந்திரவாதியின் கட்டளையினை நிறைவேற்றிய பின்னர்த் தமக்கு அவன் கொடுக்கவேண் டிய ‘மடை' (உயிர்ப்பலி, அவியுணவு முதலியவை)களிற்

மருந்தும் மந்திரமும் ೨೦ರಿ
சிறிது குறையுமிடத்தும், தாம் அனுப்பப்பட்ட எதிரியின் மந்திரத்தால் தோற்கடிக்கப்பெற்று மீண்டுவர ஏற்பட்ட விடத்தும் தவருது அம் மந்திரவாதியின் உயிரையே பலி கொண்டு விடுகின்றன. அதனல் மனத்துணிவு நிறையப் பெருத மந்திரவாதிகள் அவ்வித இக்கட்டான செயல் களில் இறங்குவதில்லை என்பர். அவ்வாறு பேயா லறை யப்பட்டு மந்திரவாதிகள் இறந்த கதைகள் பல மட்டக் களப்பிற் கேட்கப்படுகின்றன. ஆலமரச் சோலைகள் பேய்களுக்குறைவிடம் என்பார்கள். நடு இரவில் செல்ல நேரிடும் வழிப்போக்கர்கள், தம் வழியில் உள்ள ஆல மரங்கள் பேயின் செயலால் தலைகீழாக நிற்பதையும் மரங்களிலிருந்து மண், கல் என்பன விழுதலேயுங் கண் டிருக்கிருர்கள். சில இடங்களில் உள்ள வீடுகளிலே இரவில் பேயின் நடமாட்டம் இருக்கின்றது. அருவருக்கத் தக்க பொருள்கள் வீட்டினுள் வீசப்படுதல், மணி, சதங்கை என்பவற்றின் ஓசைகள் கேட்டல், வீட்டுக் கூரைகள் பிரிக்கப்படுதல் என்பன எத்தகைய ஆராய்ச்சி யாலுங் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் நடைபெறு வதை இன்றுஞ் சில இடங்களிற் காணலாம். மட்டக் களப்புநகரின் நடுவில் உள்ள வீடொன்றிலே அண்மை யில் இவ்வாறு நடைபெற்ற பேய் நிகழ்ச்சிகளை நேரிற் கண்டவர் பலர் இருக்கிறர்கள். இவ்வாறன பேய்க் கதைகள் மிகப்பல இக்காட்டில் வழங்கப்பெறுகின்றன. புதுயுகத்திலே பேய் பொய் என்று சொல்கிருர்கள். மனிதர்களிடத்திலுள்ள கெட்ட குணங்களே தனித்தனி ஒவ்வொரு பேயாக உருவகிக்கப்பட்டுள்ளன வென்று தத்துவ முறையாகச் சிலர் விளக்கந் தருகிருர்கள். மந்திர வித்தைக்காரரும் மந்திரங்களில் நம்பிக்கை உடையோ ரும் பேயின் உண்மையை நம்புகின்றனர். மேனடுகளிலே பேயைப்பற்றியனவாக வழங்கும் கதைகளைப் பார்க்கு மிடத்து மந்திரங்களுக்கு மன நம்பிக்கையினலே ஊட்டப் பெற்றிருந்த வலிமையே இவைகளனைத்துக்குங்கால் என்று தெரிகின்றது. ஆக்கத்துக்கும் அழிவிற்கும் மந்திரங்கள்
பயன்படுத்தப்பட்டாலும், மந்திரவாதிகளாற் பல ஆக்க வேலைகள் செய்யப்பட்டாலும், பொதுவாக, மந்திரம்

Page 203
356 மட்டக்களப்புத் தமிழகம்
மந்திரவாதி என்றதுமே எல்லோரும் பயப்படக் காரணம் பேய்களோடு மந்திரங்களுக்குத் தொடர்பு ஊட்டப்பட் டிருப்பதேயாகும் என அறியலாம்.
பண்டைக்காலத்திலே மக்களுக்கு மந்திரவாதிகளிட மிருந்த அச்சத்தினை நீக்கி நாட்டைக் காப்பதற்காக அர சினரும் சமய குருமாரும் கடிய நடைமுறைகளைக் கை யாண்டிருக்கிருர்கள். கி. பி. 4ஆம் நூற்ருண்டிலே உரோமி லிருந்த கொன்ஸ்தந்தின் என்னும் சக்கரவர்த்தி மந்திர வித்தைக்காரர் எல்லோரையும் உயிரோடு கொளுத்தும் படி சட்டம் பிறப்பித்திருக்கிருர், கி. பி. 15ஆம் நூற்ருண் டிலே மந்திரவித்தைக்காரர்களைத் தண்டிக்கும் பல சட்டங் களைப் பாப்பாண்டவர் அவர்கள் வெளிப்படுத்தினர்கள். முதலாம் ஜேம்ஸ் என்ற அரசன் 1589ஆம் ஆண்டிலே டென்மார்க்கிலிருந்து கடற்பயணம் செய்தபோது பெரும் புயலில் அகப்பட்டுத் துன்பம் அடைந்தானென்றும், அதற் குப் பரிகாரமாக மந்திரவாதி ஒருவர் கடுந் துன்புறுத்த லின்பின் உயிரோடு தீயிலிடப்பட்டாரென்றும் அறிகின் ருேம். இச் செயலால் கெட்ட ஆவி அல்லது கொடிய பேய் விலகி ஓடிவிடுகின்றது என்ற நம்பிக்கை இருக் திருக்கிறது. யோன் ஒவ் ஆர்க் என்ற பிரான்சிய நாட்டு வீரப்பெண்மணி ஒரு கடவுட் த ன் மை பெற்றவளாக இன்று மதிக்கப்பட்டு வந்தாலும் அக்காலத்திலே ஒரு மாயவித்தைக்காரி எனச் சாட்டப்பட்ட குற்றத்தின்மீது விசாரணை பெற்று உயிரோடு கொளுத்தப்பட்டாளென அறிகின்ருேம். மேனுட்டுக் கதைகளிலே மந்திரவாதிகள் என்றும், மாயவித்தைக்காரர் என்றும் கருதப்பட்டோர் பெரும்பாலும் பெண்களே என்று தெரிகிறது. கடவுளை நம்பாதவர்களும் (பலர் பெண்கள்) மந்திரவாதிகளாகவே அங்குக் கருதப்பெற்றுத் தீக்கொளுத்தப்பெற்றிருத்தலை அறிகின் ருேம். நமது காட்டு வீர பத்தினியான கண்ணகி தேவியினையும் மதுரையை எரித்த ஒரு மந்திரக்காரி என்று கருதும் எண்ணம் மேல்நாடுகளிலே சில பகுதிகளில் நிலவுகிறதென்பர்.

மருந்தும் மந்திரமும் ვენ7
இவ்வாறு பண்டையிலிருந்தே தோன்றி மக்கள் வாழ் வோடு பின்னி வளர்ந்து வந்துள்ள மந்திர வழக்கானது மட்டக்களப்பு நாட்டிலே இன்றும் மங்காதிருக்கின்றது. ஆயினும் இந்நாட்டு மக்கள் மந்திரவாதிகளுக்கு அதிகம் பயங்கொள்ளுவதில்லே. மந்திரங்களும் அவற்றிற்கான விலக்குகளும் பெரும்பாலோர்க்குத் தெரிந்திருப்பதனுற் போலும் அச்சங்கலந்த ஒன்ருக அன்றி, நாட்டின் ஒரு பொதுக் கலையாகவே மந்திரம் மட்டக்களப்பு மக்களிடை மதிக்கப்பெற்று உயிர்வாழ்கின்றது. தீயவழிகளிலன்றிக், கொடிய நோய்களைத் தீர்க்கும் வழிகளிலும், பாம்புகளின் கொடிய நஞ்சுக்கடிகளிலிருந்து மக்களைக் காக்கும் வகை யிலும், கோயிற் சடங்குபோன்றவற்றிலும் மந்திரம் இன்று பயன்கொள்ளப்படுதலை அதிகம் காணலாம். மட்டக் களப்பு மக்கள் மந்திரங்களை ஆக்க வேலைகளுக்கே அதிகம் பயன்படுத்திவந்திருக்கிருர்கள் என இந்நாட்டு மந்திர வழக்க வரலாறுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான மந்திரங்களெல்லாம் தமிழிலேயே அமைந்து வலிவுபெற் றிருத்தல் இந்நாட்டு மந்திரங்களுக்குரிய ஒரு தனிச் சிறப் பாகும். இவ்வாறன மந்திரங்களின் தனி இயல்புகளெல் லாம் இங்குள்ள பல ஏடுகளிற் காணப்படுகின்றன. விஞ் ஞான வளர்ச்சியினல், மனித இயல்பினைக் கடந்த சக்தி களிலே கொள்ளும் நம்பிக்கை குறைவடைந்து வருதலே ஒட்டி எங்கணும் மந்திரப் பயிற்சி குறைந்து வந்தாலும் மட்டக்களப்பு நாட்டின் கலைச் செல்வங்களுள் ஒன்ருக இத்துறை மதித்துக் காக்கப்படவேண்டியதாகும். பயிற் சிக்காக அன்றேனும், நமது கலைச் சிறப்பின் காட்சிக்காக வேனும் இம் மந்திர ஏடுகளைத் தொகுத்துப் பேணுதல் வேண்டியதாகும். யாழ்ப்பாணநாட்டிலே புதிதாக அமைக் கப்பெற்று வருவதும் கிழக்குலகக் கலைகளையெல்லாம் சிறப்புறக் காட்டப்போவதுமான பெரிய நூல் நிலையத் திலே இம் மந்திர ஏட்டுச் சுவடிகளுக்கான தனிப்பகுதி ஒன்று வகுக்கப்பட்டிருத்தலோடு, அவற்றைத் தொகுத்தற் கென ஒரு கலேக் குழுவும் இடம்பெற்றிருத்தல் இத்துறை யினைப் போற்றிக்காத்தற்கு மிகுதியும் பயன்படுவதாகும்.

Page 204
358 மட்டக்களப்புத் தமிழகம்
11. பாம்புக்கடி
* பாம்பு என்ருல் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. மட்டக்களப்புத் தமிழகத்திலும் இம்மொழி வழக்கில் பயின்றுள்ள தெனினும் "பாம்பு’ என்ருல் இங் குள்ளாரிற் பலர் பயம்கொள்வதில்லை. நச்சுப் பாம்பு களின் இயல்புகளையும், அவற்றின் கடியினல் ஏற்படும் நஞ்சு எவ்வளவு கொடியதாயினும் அதன் துன்பத்தி லிருந்து காப்பாற்றவல்ல சிறந்த மந்திரங்களையும் அறிந் துள்ள மந்திரவாதிகளும், * பாம்புப் பரிகாரிகள் (விடவைத்தியர்) பலரும் இந்நாட்டுக் கிராமந்தோறும் வாழ்வதே இதற்குக் காரணமாகும். ஈழநாட்டிலே கொடிய விடப்பாம்புகள் மிகுந்துள்ள பகுதி மட்டக் களப்புநாடு. பாம்புகள் குடியிருக்குஞ் சூழலே இங் குள்ள மக்களிற் பெரும்பான்மையினரான உழவர்களது தொழிற்களமாக இருக்கின்றது. எனினும் விடக் தீண்டு தலினல் இலங்கை முழுவதும் ஏற்படும் மரணத்தை ஆராயும்போது மட்டக்களப்பில் அவ்வாருன மரணவீதம் மிகக் குறைவாகவே இருப்பதை நாம் காணலாம்.
* பாம்புப் பரிகாரம்' என்பது இந்நாட்டு மக்களின் பழங்கலைகளில் ஒன்றுபோல, வாழ்வோடு பிணைந்து வளர்ந்து வந்துள்ளது. பாம்புகளினதும் மற்றும் விடப் பிராணிகளினதும் இயல்புகளை எல்லாம் நன்கறிந்திருந்த னர் இத் தமிழகத்துப் பொதுமக்கள். இன்றும், இங்குள்ள கிராமப்புறங்களுக்கு நாம் சென்ருல், கொடிய நாகபாம் பின் வகைகளையும், அவை இரைதேடி வெளிச்செல்லும் நாட்கள், நேரம், கருத்தரிக்கும் காலம் என்பவற்றையும் பற்றிய தெளிவான அறிவை அங்குள்ள மக்கள் பெற் றிருக்கக் காண்போம். விடவைத்திய 8 வாகடங்கள் ' (மருத்துவ ஏடுகள்) பல பெரும்பாலான கிராமங்களிற் கிடைப்பனவாயுள. பாம்பு ஒருவனுக்குத் தீண்டிவிட்டது என்ற செய்தியைக் கொண்டுவரும் தூதனைக் கண்ட மாத் திரத்தில் மட்டுமன்றி, அவன் சொல்லும் முதல் வச னத்தைக் கொண்டும் தீண்டியது விடப்பாம்புதான என்ப தனையும், அவ்வாறெனின் கடியுண்டவர்பால் ஏறியுள்ள

பாம்புக்கடி 359
விடத்தின் அளவு என்ன என்பதையும், குறித்த நோயாளிக்கு அது காலக்கடியா (மரணத்தை உண்டாக்க வல்லதும், விடகோயிலிருந்து மீட்க முடியாததுமான பாம் புக்கடி), அல்லது சுகப்படுத்தக்கூடியதுதான என்பதை யும், தீண்டிய விடப்பாம்பு என்ன இனத்தைச் சேர்ந்தது என்பதையும் இலகுவிற் தீர்மானிக்கவல்ல பாம்புப் பரிகாரிமார் மட்டக்களப்புத் தமிழகத்தில் உள்ளனர்.
* தூதன் சொன்ன சொல்லதனைத்
துணிந்து மூன்று கூருக்கி ஆயு மளவோர் பங்காகில்
ஆமோர் விடமும் அங்கில்லை, போயங் கெழுத்தில் இரண்டாகில்
பொன்று த லில்லை விடமுண்டு, ஆயு மோரா மெழுத்தானுல்
மாண்டா னென்று மதித்திடுமே.”* என்பது முதலான பாடல்கள், அவ்வாறு தூதன் வரவு சொல் என்பவற்றைகொண்டு பாம்புக்கடி பற்றித் தீர்மா னிக்க உதவுவனவாய் வைத்திய வாகடங்களில் உள்ளன.
பாம்பின் இனம் பலவாக இருப்பதனல் பாம்புக் கடியினை மாற்றும் மருந்துகளும் பலவேறுவகைப்பட்டுள் ளன. பாம்புதோறும் விடத்தின் தன்மை மாறுபடுவது. நாகந்தான் தீண்டியது என்று வைத்தியன் தீர்மானித்துக் கொண்டாலும் எந்தச் சாதியைச் சேர்ந்த நாகம் அது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்வதே விடத்தை மாற்றுதலில் அவன் பெறும் வெற்றிக்கு முதற்படியாக அமைகின்றது எனலாம். ஒரே இனத்தைச் சேர்ந்ததான லும் அதன் உட்பிரிவு தோறும் விடத்தின் அளவு, தன்மை, அவ்விடத்தின் ஆற்றல், அதனை மாற்றவல்ல மருந்து என்பனவெல்லாம் நுணுக்கமான வேறுபாடு களைக் கொண்டவையாகும். அதனல் பாம்பு வைத்தியர் தமது வைத்தியக் கல்வியின் முதற்படியாகப் பாம்புகளைப் பற்றிய பொது அறிவினையே முதலிற் பெறுவர். இவற்றை நன்கு விளக்கும் சித்தர் ஆரூட நொண்டிச்சிந்து முதலான நூல்கள் சில இங்கே உள்ளன,

Page 205
360 மட்டக்களப்புத் தமிழகம்
தற்போது கிடைக்கும் ஏடுகளையும், முதியோர் வாயி லாகக் கேட்கப்படும் பழம் பாடல்களையும் ஆராய்ந்து பார்க்கும்போது இந்நாட்டு மக்கள் பாம்புகளின் சிறப் பிலக்கணம் அனைத்தையும், அவற்றின் கடியினல் ஏற் படும் விடநோய்களுக்குரிய மருத்துவ முறைகளையும் நன்கு அறிந்திருந்தனர் என்று தெரிகின்றது. விடவைத்தி யத்தை நம் முன்னேர் மிக விரிவாக ஆராய்ந்து, பாம்பு கடித்தால் அதன் விடம் உடலிற் பாய்வதைத் தடுக்கவும், அல்லது விடத்தை உடலோடு இரேகிதம் (immune) ஆகி விடச் செய்யவும், அல்லது விடத்தை வெளியேற்றிவிடவும் வல்லமுறைகளை வகுத்துவைத்துச் சென்றிருக்கின்றனர். இம் முறைகளும் பாம்பின் சாதியினைப் பொறுத்து வேறு பட்டுச் செல்வன ஆதலால் பாம்பின் இனங்களில் உள்ள மிக நுணுக்கமான வேறுபாடுகளையும் அவர்கள் நன்கு ஆராய்ந்தார்கள். -
பாம்புகளின் இனத்தைக் கிழக்குலகினர் வகுத்துக் கண்டதுபோலவே மேனுட்டாரும் ஆராய்ந்து பார்த்திருக் கின்றனர். அவருள் பிரான்சு தேசத்தைச் சேர்ந்த பவு லாங்கர் ’ (Boulangers) என்பவரும், ஆங்கிலேயரான * கேணல் வால் ’ (Col. Wall) என்பாரும் மிகப் பிரசித்த மானவர்கள். பாம்பின் வகைபற்றிய அவர்களது முடிவுகள் கிழக்குநாட்டாருடைய பண்டைய முடிவுகளை அப்படியே ஒத்திருத்தலை நாம் கண்டு வியப்புறலாகும். உலகின் பல பாகங்களிலும் சுமார் மூவாயிரம் வகைப் பாம்புகள் வசிக் கின்றன என்றும், அவற்றுள் சுமார் நூறுவகை மட்டுமே விடம் உடையன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறு கின்றனர். அவற்றுள்ளும் கடற் பாம்புகள் நீங்கலாக, விடம் உடையனவாய் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ளவை ஏறக்குறைய முப்பதுவகைப் பாம்புகளே என்று அறியப்படுகின்றது. பாம்பினத்துக்கு விடம் ஒரு இயற்கைக் கொடை. ஆகையால் எல்லாச் சாதிப் பாம்புகளுக்கும் விடசாரம் வாயில் உண்டென்றும், அந்த விடத்தின் அளவு மனிதனைப் பொறுத்தவரையில் கிர்விடம், அற்ப விடம், எரிவிடம் என மூவகைப்படும் என்றும், அவ்

பாம்புக்கடி 361
வேறுபாடு பாம்பின் சாதி, வயது, கடிக்கும் சந்தர்ப்பம், கடித்தநேரம் (காலை, மாலே, மதியம்) என்பவற்றைப் பொறுத்துக் கடிபட்ட மனிதனுக்கு முறையே வலி, நோ, மயக்கம், மரணம் என்பவற்றைக் கொடுக்கும் என்றும் விடவைத்திய நூலார் கூறுகின்றர்கள்.
மட்டக்களப்பு நாட்டில் உள்ள கொடிய விடப் பாம்பு களைப் பொதுவாக நான்கு சாதிகளாக வகைப்படுத்துவர். நாகசாதி, புடையன்சாதி, வழலைச்சாதி, சுருட்டைச்சாதி என அவைகளைச் சொல்லலாம். நிறம், குணம் முதலிய தன்மைகளே கோக்கி அவை மேலும் சில உட்பிரிவுகளைக் கொள்வனவாகும். அவற்றுள் நாகசாதிப் பாம்புகளை மட்டும் எட்டுவகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவ் வெட்டுவகையும் நான்கு குலப் பகுப்புகளுள் அடங்குவ. முதலாவதான பிராமண சாதியில் அருந்தன், குளிகன் என்னும் இருவகை நாகமும், இரண்டாவதான அரச சாதியில் வாசுகி, சங்குபாலகன் என்னும் இரண்டும், மூன்ருவதான செட்டிநாகத்தில் தக்கனும், மகாபதும னும், நான்காவதான சூத்திரசாதி நாகத்தில் பதுமனும், கார்க்கோடகனும் சேர்வனவாகும். பாம்பு வைத்திய வாகடங்களிலே இக் நாகங்கள் வாழும் இடம், உணவு கொள்ளும் காலம் முதலியவற்றின் வேறுபாடுகள் விரி வாகக் கூறப்படுகின்றன. அநந்தன், குளிகன் என்னும் அந்தண சர்ப்பங்கள் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் மாலை நேரத்தில் வெளிவந்து, பூஞ்சோலைகளில் இரை தேடித்திரிந்து தம் இருப்பிடமான தேவாலயங்க ளுக்குச் சுமார் ஆறரை மணிக்குள் திரும்பிவிடும். பழவகை களையும், பூங்காற்றையும் உட்கொள்வதில் பெருவிருப் புடையன. இச் சாதியைச் சேர்ந்த பாம்புகள் இரண்டும் மிகக் கொடிய விடம் உடையவையாயினும் மனிதருக்குத் தீங்கு நினையாதவை என்பர். அந்தணர் நாகம் படம் விரித்து அண்ணுந்து பார்த்து ஆடும் ; தலையை அண்டிய பகுதியிலும் விலாப்பகுதியிலும் மெல்லிய செந்நிறம்படர்ந்த உடலையுடையது. இவ்வகைப் பாம்பு செல்லும் இடம் எங்கும் நாவி (புனுகு) மணம் வீசும், காய்ச்சிய பாலாவி

Page 206
362 மட்டக்களப்புத் தமிழகம்
யின் மணமும் இதற்குண்டென்பர். இதன் படத்தின் இரு பகுதிகளிலும் சங்குபோன்ற வடிவுடைய நீளமான அடை யாளம் ஒவ்வொன்று அழகும் தெளிவும் உடையதாக இருக்கக் காணலாம். இரண்டாவதான அரசர் சாதியைச் சேர்ந்த வாசுகி, சங்குபாலகன் என்ற நாகங்கள் பெரிய காடுகளிலே உயர்ந்த மரங்களின் மீதுள்ள பொந்துகளை இருப்பிடமாகக் கொள்வன. திங்களும், சனியுமே இவை வெளிச்செல்லும் நாட்கள். பகலில் மதிய நேரத்துக்குப் பின் இரைதேடப் புறப்பட்டு மாலை மூன்று மணிக்குள் இவை தமதிருப்பிடம் சென்றுவிடும் என்பர். கிழங்கும், வண்டுகளும் இவற்றிற்குப் பிரியமான உணவுகள். இவற்றின் உடம்பெங்கும் மெல்லிய பொன் னிறம் மினுமினுக்கக் காணலாம். இப் பாம்புகளிலிருந்து அகில், தாளம்பூ என்பவற்றின் மணம் வீசும், அரசசாதிப் பாம்புகளின் படத்திற் சக்கரம்போன்ற வட்டவடிவமான அடையாளம் விளங்கும். படம்விரித்து எதிர்நோக்கிய படியே ஆடுவது. இவ்வினப் பாம்பு இலகுவில் கோபங் கொள்ளாது என்றுந் தனக்குத் தீங்கு செய்தாரையும் மன்னித்துவிடும் பெருந் தன்மை யுடையது என்றுங் கூறுவர். செட்டி நாகங்களான தக்கனும், மகாபதுமனும் பாழ்மனைகளில் வாழ்வன. செவ்வாயும், வெள்ளியும் அவை வெளிப்படும் நாட்கள். இரவானதும் புறப் பட்டுச் சுமார் ஒன்பதுமணிவரை பூச்சி, பல்லி என்ப வற்றை விருப்பத்தோடு வேட்டையாடித் தம் இருப்பிடம் செல்லும் வழக்கங்கொண்டன. வெண்மை நிறம் பரந்த இவற்றின் உடலிலிருந்து பாதிரிப்பூ மணம் வீசும். படத்தை விரித்து நான்கு திசைகளையுந் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஆடுகின்ற இவற்றின் அழகிய படத்தில் வில்போன்ற அடையாளம் உண்டு. சூத்திரர் சாதிப் பாம்புகளான பதுமனும், கார்க்கோடகனும் புற்றுகளில் உறைவன. புதன், வியாழன் ஆகிய நாட்களில் தாம் விரும்பிய நேரம் வெளிக்கிளம்பிவந்து மீன், தவளை முதலியவற்றைப் பிடித்துண்ணுவன. ஆயினும் இச்சாதிப் பாம்புகள் பெரும்பாலும் காலை ஆறுமணிக்கும் பத்து மணிக்கும் இடைப்பட்ட நேரங்களிலேயே வெளித் திரிவ

பாம்புக்கடி 363
தாகக் கண்டோர் பலர் கூறுகின்ருர்கள். நிலத்தை நோக்கியபடியே ஆடுகிற இச்சாதியின் படத்தில் புள்ளடி போன்ற அடையாளம் இருக்கக் காணலாம். இதன் உடலின் பெரும்பங்கு கருநிறமாயிருக்கும். இவ்வினம் இலுப்பைப்பூ வாசனையுடையது. நாகங்களைப் பற்றிய இவ்வாறன விபரங்களை எல்லாம் கூறும் பின்வரும் ஆரூடச் சிந்துப் பாடல்களை இங்குள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிருர்கள்:
* பூசுரர் ரெத்தநிறம் புரவலர் பொன்னிறம் வைசியர் மதிநிறம் குத்திரர் கருநிறமாம் ; * அந்தண விைமணம் இறையவன் தாழைமணம்
வந்திடுசெட்டி பாதிரிப்பூ, சூத்திரர் இலுப்பையின் பூவாகும்; * பார்ப்பார் படத்திற் சங்கு, இறையவன் படத்திற் சக்கரம், காப்பானே வணிகன் வில்லு, புள்ள டி சூத்திரனுக் காகும் ;
* அந்தணன் அண்ணுந்து பார்த்தாடுவான்,
இறையவன் எதிர்த்தாடுவான், வைசியன் வடக்குத் தெற்கெனத் திசைகளைக் காட்டியாடும், வேளாளன் பூமிதனைப் பார்த்தே யாடும்.’ மேலும் இந்தப் பாம்புகளின் வெவ்வேருன வாழ்க்கை முறைகளை நன்கு விரித்துக் கூறும் பாடல்கள் பலவும் இங்கே வழக்கிலுள்ளன. அவற்றுள் பாம்பு முட்டை யிட்டுக் குஞ்சு பொரித்தலைப் பற்றிக் கூறும் பாடல்களுள் ஒன்று :
* காற்றுறுமாடிமாதம்ஆணும்பெண்ணும்கலந்துகெர்ப்பமுற்று,
கார்த்திகையிற் கருமுற்றிச் சூல் உளைந்து ஒருநூற்றி இருபத்து நான்கு முட்டை ஈனும் ; எழுநாளும் ஒருநூற்றிகாலு முட்டையைத் தாய்பருகும் ; நான்கு முட்டை கூழாகும் ; பதினறு முட்டை பக்குவத்திற் பொரித்து ஊர்ந்து திரியும் ; கருவரிகால் நாலாறு, கண்செவியான் பிறர்காண அரிதாயிருக்கும் ; தோன்றிய நாலேழிற் தோலுரிக்கும்; மேலேறும் ஆதித்தனைப் பார்த்தாட அலகுதனிற் கொடுவிடம் வந்து பிறக்கும் : பல் நான்கிலும் ஊசிபோற் துளைவுண்டாகும்.”

Page 207
864 மட்டக்களப்புத் தமிழகம்
இப் பாட்டின் பொருண் முடிவை விலங்குநூலார் ஆராய்ந்து கண்ட ஒன்றுபோல் எடுத்துக்கொள்ள முடி யாவிட்டாலும், சிறிய உயிரினங்களதும் சூழல், வாழ்க்கை முறை என்பன பற்றியும் நம்மவருக்குப் பண்டிருந்தே அறிவும், ஆராய்ச்சியும் வளர்ந்துவந்திருக்கின்ற சிறப்பினை இதுபோன்றவற்ருல் நாம் அறியலாகும்.
பாம்பின் பற்கள் முப்பத்திரண்டுள் மேல்வாயிலும் கீழ்வாயிலும் முன்புறமாக முறையே பக்கத்திற்கொன்ருய் நான்கு நச்சுப்பற்கள் நீண்டு உள்வளைந்து இருக்கும் என்பர். கீழ்த் தந்தத்தின் வலப்புறப் பல்லைக் காளி' யென்றும், இடப்புறமுள்ளதைக் காளாத்திரி யென்றுங் கூறுப. அவ்வாறு மேற் தந்தத்திலுள்ளவை * யமனென் றும்’, ‘ யமதூதி யென்றும் முறையே பெயர்பெறுவன. அவ்வாறன்றி, விடப்பற்கள் நான்கும் மேற் தந்தத் திலேயே பக்கத்திற்கு இரண்டாக இருக்கும் என்று சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பற்களிலிருந்து பாயும் விடத்தின் அளவு தன்மை என்பவற்றைப் பொறுத்தே அவற்றின் பெயர்கள் வழங்கியிருக்கின்றன என்பர். விடப் பற்களுக்குப் பின்புறமுள்ள விடச்சுரப்பிகளுடன் அவற் றிற்குத் தொடர்புண்டு. பாம்புகள் கடிக்கும்போது அப் பற்கள் மூலம் கடிவாயில் விடம் பாயும். பாம்பின் விடம் பொதுவாக நீலகிற முடையதென்று கருதப்பட்டபோ திலும், அது வெண்குருதி (Albumin) கலந்த மெல்லிய மஞ்சள் நிறமான ஒரு நீர்போன்றிருப்பதை உற்று நோக்கி அறியலாம். மேனுட்டு விஞ்ஞானிகள் நாகபாம்பின் விடத்தை மின்சார அடுப்பில்வைத்து அதிலுள்ள நீரை ஆவியாக்கி அகற்றிய பின்னர்ச், சதுரமான பளிங்குத் துகள் (Crystal) போன்ற ஒரு பொருளும், மண்டலிச் சாதிப் பாம்பின் விடத்தில் அவ்வாறே நீண்ட ஊசிபோன்ற பளிங்குத்துகள்களும், மற்றைய சாதிகளின் விடத்தில் நீள் சதுரமான பளிங்குத் துகள்களும் மீந்திருக்கக் கண்டனர். பழுதுபடாமல் வைத்திருந்தால் நீண்ட நாட்களுக்கு அவற்றின் நச்சுத் தன்மை குன்றது இருத்தலையுங் கண் டனர், பாம்பின் விடமானது பாம்பினுடைய ஒரு சீரண

பாம்புக்கடி 365
நீரேயென்றும் மனிதருட்பட எல்லாப் பிராணிகளின் சீரணக் கருவிகளிலும் அளவறிந்து அதைச் சேர்க்க முடிந்தால் அவ்வுறுப்புகளுக்குப் புத்துயிர் அளிப்பதாகவே இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆயினும் அதுபற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவு பெறவில்லை. கிழக்குலகத்தைப் பொறுத்த வரையில் பாம்பின் விடம் மக்களின் உயிரை உண்ணும் ஒன்ருகவே கருதப்படுகின்றது.
பாம்பு கடிக்கும்போது மேலே காட்டிய நான்கு விடப் பற்களும் ஒருமித்துப் பதிவதில்லை. அது கடிக்கும் வேகம், அதன் வாய் கடிக்கப்பெறும் இடத்துடன் பொருந்திய நிலை என்பவற்றுக் கேற்றவாறு பதியும் விடப் பல்லின் எண்ணிக்கையும் வேறுபடும். பதிந்த விடப் பற்களின் தொகைக்கேற்பக் கடிபட்ட உடலிற் பாய்ந்த விடத்தின் அளவும் வேறுபடுமாதலால் விட வைத்தியர் முதலில் அதனை நன்கு ஆராய்ந்து அறிந்துகொள்வார்.
* தந்தமொன் ருகில் நஞ்சு சிறிதென்பர் இரண்டாங் தந்தம்
மந்திரம் உரைக்கத் தீரும் மருந்தினில் மூன்றந் தந்தம்
இந்திரன் முதலாக் தேவர் யாவரும் முனிவர் தாமும்
வந்த போதும் தீராது வடிவுறு நாலாம் பல்லே.’
இச் செய்யுள் பற்களின் தொகைக்கேற்ப விடத்தின்
வலிவு அமைவதைக் காட்டுகின்றது. * இரண்டாக் தந்தம்’ என்பது கடிவாயில் அழுந்தியது ? இருபற்களேயானல் என்று பொருள்படும். அவ்வாறே முன்ரும் ', ' நாலாம் " என்னும் சொற்களுக்கும் பொருள் கொளல் வேண்டும். நான்கு பற்களும் பதிந்திருப்பின் கடிபட்டவனைப் பிழைப் பித்தல் அரிதென்று பாடல் கூறினலும் சிறந்த வைத்தி யர்கள் தமது மணி, மந்திரம், மருந்து என்பவைகளின் வலிமையால் இலகுவில் எவரும் இறந்துபோகாதவாறு காப்பாற்றிவிடுகிறர்கள்.
காளி, காளாத்திரி, யமன், யமதூதி என்னும் பற் களின் பெயர்களுள் பின்னைய இரண்டும் முறையே நீலி ", நீலகண்டி’ எனவும் இங்குச் சில பகுதிகளில் வழங்கப்பெறுவதுண்டு. இன்னெருவருக்குப் பாம்பு

Page 208
366 மட்டக்களப்புத் தமிழகம்
கடித்ததென்ற செய்தியைக்கொண்டு, தன்னிடம் வந்த வரைக் கருவியாகக்கொண்டு அறிவதாகிய தூதன் குறி * யால் விடக் கடியைப் பற்றித் தீர்மானித்த பின், விடத்தின் தன்மையையும் அளவையும் அறிந்துகொள்ளு தற்காக எந்த எந்தப் பற்களின் மூலம் விடம் செலுத்தப் பட்டுள்ள தென்பதைப் பாம்புப் பரிகாரியார் ஆராய்வார். தூய வெள்ளைத் துணி ஒன்றினல் கடிவாயைத் துடைத்து விட்டு, அந்த இடங்களிலே உள்ள அடையாளங்களை நன்கு கவனித்து அவற்றின் மூலம் அழுந்திய பற்கள் எவை என்பது தீர்மானிக்கப்படும் ; காளி, காளாத்திரி, யமன், யமதூதன் என்னும் பற்கள் பதிந்த இடங்களின் வெளிப் புறம் தோன்றும் அடையாளங்கள் முறையே காகத்தின் பாதம், முக்கோணம், தொட்டி, வில் என்பவற்றின் வடி வினவாய் இருக்கும் என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம் :
* காளியே காக பாதம் காளாத் திரியே முக்கோணம்
நாளுடை இயமன் தொட்டி நல்கிய தூதன் வில்லாம் வாளினை வென்ற கண்ணுய் வையகத் தோர்கள் மெய்யில் கோளர வுற்ற காலைக் கொண்டவாய் வடிவின் கோலம்.” இவற்றுள் ஒரு பல்லின் விடமாயின் தோலையும், இரண்டாயின் தசையையும், மூன்ருயின் நரம்பு மண்ட லத்தையும், நான்குமாயின் அனைத்தையும் முறையே தாக்கும் என்று பாம்பு வைத்திய ஆரூடம் கூறும். இப் பற்களின் பெயர், அவற்றின்மூலம் பாயும் விடத்தின் வலிமை என்பன நாகசாதிக்கு மட்டுமன்றி எல்லாவகை விடப் பாம்புகளுக்கும் பொதுவானவை என்று தெரி கின்றது. நாகபாம்புகளனைத்தையும் மட்டக்களப்பார் *நல்லபாம்பு’ என்றே பெரும்பாலும் குறிப்பிடுவர். பெயருக் கேற்ற நல்ல குணம் உடையது இச் சாதி, மனிதரை நல்ல பாம்பு இலகுவிற் கடிப்பதில்லை. கடித்தாலும் அதன் விடம் மணி மந்திர மருந்துகளுக்குக் கட்டுப்பட்டுக் குண மடையக்கூடிய நல்லொழுங்கினையுடையது என்பர். மனிதர் தனக்கும், தான் மனிதருக்கும் தீங்குசெய்யாதவாறு கூடிய வரை மனித சஞ்சாரமற்ற இடங்களிலேயே மறைந்து

பாம்புக்கடி 367
வாழும் இயல்புடையது நல்லபாம்பு. “நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் ' என்று அவ்வாருன சிறப்புத் தமிழ் இலக்கியங்களிற் கூறப்படுவதை நாம் அறிவோம். மேலும் நாகசாதியிற் பல சிறப்புக்க ளாலும் மிக உயர்ந்ததான இராசநாகம் (King Cobra படம் 28) அல்லது நாகராசா என்னும் பாம்பு பொதுவாக யாரையுமே கடிப்பதில்லை என்பர். தவறுதலாக யாரும் தன்னை மிதித்த காலத்தும் இராச நாகமானது பேரிரைச்ச லோடு சீறி நிலத்திலே தன் தலையினை அடித்துப் படத்தை விரித்து மிக உயரமாக எழுப்பிப் பயமுறுத்தித் தன்னே விடுவித்துக்கொள்ளும் என்றும், வேண்டு மென்று அதற்கு யாரும் தீங்குசெய்ய நினைத்தால்மட்டும் அவரை விடாது துரத்திக் கடிக்கும் என்றும், இராச நாகத்தினுல் அவ்வாறு கடியுண்டவர் தப்பியதே இல்லை என்றும் அனுபவவாயிலாகக் கூறுகின்றர்கள். இந்த நாக ராசாவையே மனத்தில் பக்தியுடன் நினைந்து இங் குள்ளார் நாகவழிபாடும் பூசனையுஞ் செய்கிருர்கள். பெயர் போன நாகதம்பிரான் கோவில்கள் சில மட்டக்களப்பில் ஆங்காங்கேயுள்ளன. கொக்கட்டிச்சோலேத் தான் தோன் றிஸ்வரர் கோவிலுக்குச் சிறிது தூரத்தில் உள்ள நாக தம்பிரான் கோவிலொன்றில் இத்தகைய நாகங்கள் பல வாழ்கின்றன. அவ்விடமும் இச்சிறப்பினுல் நாகர் கட்டு’ என வழங்கப்பட்டுவருகின்றது. வருடம் ஒரு முறை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடிப் பொங்க லிட்டுத் தம் வணக்கத்தை அங்குள்ள நாகதம்பிரானுக்குச் செலுத்திச் செல்கின்றனர். இத்தகைய வழிபாடு பாம்புக் கடியிலிருந்து மட்டுமன்றி வேறு எவ்வகையான விடத்தின் கொடுமையிலிருந்தும் தம்மைத் தப்புவிக்க வல்லது என்று மட்டக்களப்புத் தமிழகத்தார் கம்புகிறர்கள்.
இராசநாகத்திற்கு நேர்மாருண குணம் உடைய பாம்பு பறநாகம். அது நாகபாம்புகளுள் மிகவும் கீழான சாதிப் பாம்பு எனக் கருதப்படுகின்றது. கொடிய விடங்கொண்ட இப் பாம்பு மனிதரையும் விலங்குகளையும் வலிந்து துரத்திக் கடிக்கும் தன்மையுடையது என்பர். படம் விரித்

Page 209
368 மட்டக்களப்புத் தமிழகம்
தாடும்போது மிகப் பெரிய சத்தமிட்டுச் சீறிக்கொண்டே ஆடும் பழக்கம் உடையது. தனக்கென கிரந்தரமான வசிப்பிடம் இதற்கில்லே. வழியிற் காணும் எலிவளே, கறையான் புற்று, பாழ்ங்கிணறு, வீட்டுக்கூரை என்ப வற்றில் நுழைந்து வாழும் இயல்பு இதற்கு உண்டு. இது வெளிச் செல்லும் நேரத்துக்கு வரையறை இல்லை. இப் பாம்பின் கடியிற் சிக்குண்ட மக்கள் உடனே மயங்கி விழுதலோடு மிகுந்த வேதனேப்பட்டு மரணமடைதலும் உடையார். பறகாகத்தின் விடம் மருந்து முதலியவற்றிற்கு இலகுவிலே கட்டுப்படுவதில்லை என்று விட வைத்தியர்
கூறுவர்.
பாம்பின் விடத்தில் மூன்றுவிதமான நச்சுப்பொருள்கள் கலந்திருக்கின்றன. ஒன்று முளேயையும், நரம்பு மண்ட லத்தையும் பாதிக்கவல்லது. மற்றது இரத்த அணுக்கள் (Corpuscles), 3) Tëj5ë Gjypti 356ir (Capillaries) 6T6Tu வற்றை அரிக்கும். இன்னென்று இரத்தோட்டத்தின் வேகத்தைக் குறைப்பதோடு இரத்தத்தை உறையச் செய்துவிடவும் வல்லது. இம் மூன்றுவித நச்சுப் பொருள்களும் எல்லாவிதப் பாம்புகளின் விடத்திலும், கலந்திருப்பினும் அவற்றின் அளவுமட்டும் இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படும். நாகத்தின் விடத்தில் மூளையினையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் சத்தி அதிகமாக இருக்கும். அதனலே காகத்தினுற் கடி யுண்டவன் கைகால் சோர்ந்து விரைவில் மயக்கம் அடை கின்றன். கடிபட்ட இடம் வலியின்றி மரத்துப்போவதோடு விரைந்து உடல் முழுவதிலும் அதே குணத்தையும் உணரப் பெறுகின்றனன். நரம்புத்தளர்ச்சி நீண்ட நித்திரைக்கு அவனை அழைக்கும். நாடித்துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டே சென்று மெல்லக் குறைவடையும் ; 5ாக்குத் தடிப்பாகும் ; வாயிலிருந்து 8 வினு ச ல் ’ (மெல்லிய சளி) வடியும் ; பல் கிட்டிவிடும் ; விக்கலும் கக்கலும் தொடரும் ; சுவாசப்பையும் தன் வேலையைக் குறைத்துக்கொள்ள முயல்வதை நாம் உணரலாம். கடற் பாம்புகளின்விடமும் இத்தகைய குணங்களையே கொண்ட

பாம்புக்கடி 369
தெனினும், அது நாகபாம்பின் விடத்தினும் ஏறக்குறைய எண் மடங்கு கொடியது ; கடியுண்டவன் நீருள் அமிழ்ந்தி யிருக்கும்வரை அதன் விடம் அதிகம் வலிவு செய்யாது என்று கூறுகின்றனர்.
புடையன் (படம் 29) பாம்பின் விடத்தில் இரண் டாவது தன்மை கொண்ட நஞ்சு மிகுந்திருக்கும். விரியன் என்றும் அழைக்கப்படும் புடையன்சாதி : பெரும் புடையன், இரத்தப்புடையன், கண்ணுடிப்புடையன், எரிபுடையன், தண்ணிர்ப்புடையன், புல்லுப்புடையன் என அறுவகைப்படுவது. அவற்றுள் முதல் நான்குமே கொடிய விடம் உடையவை. அப் பாம்புகளின் விடத்தில், இரத்த அணுக்களைச் சிதைத்து, இரத்த தந்துகிகளையும் அரித்து இரத்தத்தை வெளியே பீறிடச் செய்யும் ஆற்றல் அதிகமாக இருக்கும். குழாய்கள் அரிபட்டுப் போவதால் இரத்தமானது தோலுக்கடியில் வந்து, மயிர்க்கால்கள் வழியாகவும், வாய், மூக்கு முதலான பொறிகள் வாயிலாகவும் வெளியே பாயும், கடி வாயின் மூலமும் இரத்தம் பீறிட்டு ஓடிக்கொண்டே இருக்கும். கடித்தது இரத்தப்புடையனனல் மட்டுமே மேற்சொல்லப்பட்ட எல்லா இடங்களி லுமிருந்து இரத்தம் ஒருமித்து வெளிவருமென்றும், மற்றைய சாதிப் புடையன்களாயின் கடிவாய், மலசலவாசல்கள் என்ப வற்ருல் மட்டுமே இரத்தம் பொதுவாக ஓடும் என்றும் கூறப்படுகின்றது. புடையன் பாம்பின் விடம், செலுத்தப் பட்ட உடனேயே கடிவாயில் உண்டாகும் வேதனை மிகக் கொடியதாக இருக்கும். கடிவாயைச்சுற்றிச் சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் முறையே தோன்றுவதோடு பெரு வீக்கமும் உண்டாகும். இதைத் தொடர்ந்தே இரத்தப் பெருக்கும் காணும். கடியுண்டோனது கண்கள் சிவப் பூரத் தொடங்கும். தண்ணிர்விடாய், வாந்தி, மயக்கம் என்பன முறையே காணப்படுவ, நாடித்துடிப்பு மிக வேகமாக இருக்கும். மெல்லமெல்ல முச்சுவிட முடியாமை அதிகரித்துக்கொண்டே சென்று இறுதியில் இருதயம் அப் படியே நின்றுவிடுதலும் உண்டாகின்றது. நல்ல பாம்பின்
24 - מן

Page 210
370 மட்டக்களப்புத் தமிழகம்
விடம் மணி, மந்திரம், மருந்துகளுக்குக் கட்டுப்பட்டு நீங்குவதுபோன்று புடையனின் விடம் அடங்குவதில்லை என்று அனுபவம் வாய்ந்த பாம்பு வைத்தியர் கூறுவர். மட்டக்களப்பிலே நாகபாம்பினுற் தீண்டப்பட்டோருள் பெரும்பாலானேர் பிழைத்து விடுதலும், புடையன் தீண்டி யோருள் பலர் இறந்துபோதலும் இதற்குச் சான்ருக உள்ளன.
வழலை, சுருட்டைச் சாதிப் பாம்புகளின் விடத்தில், இரத்தோட்டத்தின் வேகத்தைக் குறைக்கவும் இரத் தத்தை உறையச் செய்யவும் வல்ல விடப் பொருள் அதிக மாக உண்டு. வழலைச் சாதியில் கருவழலை, வெள்வழலை, சங்குவழலை, கண்டங்கருவழலை, நெடுவழலை, நக்கு வழலை எனப் பல இனங்கள் உள்ளன. சுருட்டைச் சாதியிலும் அப்படியே. இவ்வினப் பாம்புகளாற் கடி யுண்டோரிடம் காணப்படும் குணங் குறிகள் நல்ல பாம்புக் கடியால் உண்டாவதைப் போன்றனவாகவே தோன்றும். எனினும் வழலேயின் நஞ்சு நாகத்தின் நஞ்சிலும் பார்க்க நான்குமடங்கு வேகங்கூடிய தென்று பாம்புக் கலைஞர் கூறுகின்றனர். படுக்கையைத் தேடி இரவிலே வீட்டுள் நுழையும் வழலைப் பாம்பின் கடி மனித உயிருக்கு உலைவைத்த நிகழ்ச்சிகள் பல இங்குக் கேட்கப் படுகின்றன. நக்குவழலைக்கு நச்சுப்பல் இல்லை என்றும், நாவினல் அது நக்குவதனலேயே விடம் மயிர்க்கால்களின் ஊடு சென்று இரத்தத்தைத் தாக்கும் என்றும் நம்பப்படு கின்றது. இவ்வழலேயால் உயிர்ச்சேதம் உடனே ஏற்படுவ தில்லை. சுருட்டைகளுள் அழுகற்சுருட்டை என்று ஓரினம் இங்கு காணப்படுகின்றது. அது மனிதரைக் கடிக்கு மாயின் கடிபட்ட இடத்தில் இருந்து உடலின் பகுதிகள் அழுகிவிடுகின்ற கொடிய நிகழ்ச்சி சில காலங்களுக்குத் தொடர்ந்து நடத்தலும், தகுந்த சிகிச்சை செய்யாவிடின் அதனுல் இரத்தம் நச்சுத்தன்மை (Blood Poisoning) அடைந்து மரணம் உண்டாதலும் அறியப்படுகின்றது.
நோயாளியின் உடலில் ஊசிமூலம் மருந்துகளை உட் செலுத்தி அம் மருந்துகளின் பலனே உடனுக்குடன் நாம் இன்று காணுகின்ருேம். அவ்வாறு பாய்ச்சப்படும் ஊசி

பாம்புக்கடி · ვ71
மருந்தினைப் போன்றுதான் பாம்பின் பல்மூலம் உடலில் செலுத்தப்பெறும் நஞ்சும் உடனுக்குடன் பலனை அளிக் கின்றது. கடிவாயிற் பாய்ந்த விடமானது தொண்ணுாற் றெட்டு வினடிகளில் இரத்தச் சுற்ருேட்டத்திலே கலந்து, உடம்பெங்கும் பரந்து உள் ளு றுப்புக்க ளே த் தாக்கத் தொடங்கும். உடலிற் கலந்த பின்னர் அது, ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின்படி தோற்படை, இரத்தம், தசை, நரம்பு, எலும்பு, மச்சை, சுக்கிலம், ஆகிய ஏழு தாதுக்களையும் முறையே வலி இழக்கச் செய்யும். இரத்தச் சுற்ருேட்டம் ஒவ்வொன்றின் போதும் ஒவ்வொரு தாது தாக்கப் படுகிறது என்று கூறுவர். இவ்வாருன இரத்தச் சுற்ருேட் டத்தின் விளைவே வேகம்போடுதல்’ என்று கூறப்படு கின்றது. உட்சென்ற விடத்தின் அளவையும் தன்மை யையும் பொறுத்து ஏறக்குறைய இருபது நிமிடத்திற்கொரு முறை தோன்றுவதான இந்த விடவேகம் தனது ஏழாவது சுற்றேட்டத்தில் மூளையைத் தாக்கி, உயிர் நிலைகளையும் (Medula) உருக்குலைத்துவிடும் என்றும், எட்டாம் சுற் ருேட்டத்தின்போது உயிரின அடங்கச் செய்துவிடும் என்றும் அறிகின்ருேம். பாம்பின் விடம் தொடர்ந்து ஏழு வேகமும் போடுவதற்கிடையில் அதன் வலியைக் குறைத்து, அல்லது நீக்கிவிடுதற்குரிய வழிகளைக் கை யாளுதல் மிக அவசியமாகும் என்பதைப் பொதுமக்கள் நன்கறிவர். அதனுற்போலும் இங்கு எட்டாம் வேகத்திற் பட்டான் ’ என்ற பாம்புக்கடிப் பழமொழியும் பயின்று வழங்குவதாயிற்று.
பாம்புக்கடி, விடத்தின் அளவு, தன்மை முதலானவை இனத்துக்கினம் வேறுபடுவதற்கேற்ப விட நீக்கத்துக்கான வழிகளும் வேறு வேருக உள்ளன என்று அறிந்தோம். விடக்கடியினை அறிந்ததும் உடனே மந்திரத்தின் வலியால் விடம் உடலில் ஏறதவாறும், ஏறிய விடத்தை இறக்கு தற்கும் முயலுவர். கடித்த இடத்திலிருந்து கீழ்நோக்கி உருவிக்கொண்டே மந்திரங்களை உச்சரித்தலால் விடம் கீழே இறக்கப்படும். கடிவாயின் மேற்பகுதியில் (பெரும் பாலும் இரத்தக் குழாய்கள் கூடும் இடத்தில்) கயிற்றினுற்

Page 211
372 மட்டக்களப்புத் தமிழகம்
கட்டுதல்போன்று சுண்ணும்பு, வேப்பிலை, வெற்றிலைக் காம்பு என்பவற்றுள் ஒன்றினைக்கொண்டு மந்திர உச் சரிப்பினேடு அவ்வுறுப்பைச் சுற்றிவரக் கோடு கீறி விடுதலால் விடம் மேலே ஏருதவாறு தடுக்கப்படும். இப்படி மந்திரத்தால் கோடு கீறுதலைத் தவணை போடுதல்’ என்று இங்கே குறிப்பிடுவர். "தவணை மந்திரங்கள் வலுவுடையனவாயின் குறித்த தவணைக் கப்பால் விடம் ஏறது கட்டுப்பட்டு கிற்றலே அதன் கீழ்ப் பகுதியில் மட்டும் விட இரத்தம் சுரந்து வீங்கி நிற்பதன் மூலம் நாம் கண்ணுரக் காணலாம். கடுமையான விட மாயின் மந்திரத்தால் மட்டும் முற்றிலும் தீராதென்பதை மந்திர வைத்தியர் அறிந்து மேற்கொண்டு செய்ய வேண்டிய மருந்துகளின் துணேயினையும் நாடுவர். நஞ்சு குறைந்ததான முதலாம் இரண்டாம் பற்களின் விடத்தை மாற்றுதற்கு நல்ல மந்திரங்களே போதுமானவை எனத் தெரிகின்றது. பாம்புக்கடிக்காய அவ்வாருன மந்திரங் களின் வல்லமையை வைத்திய நூலாரும் ஏற்றுக்கொண் டுள்ளனர்.
“. . . . . . . . . . மருந்தால் மந்திரத்தால் கெருட தியானத்தால்
தெய்வச் செயலால் தீர்க்கும் செயல் தன்னைக்
குருமல ரடிவணங்கிக் கூறுவேனிக் குவல யத்தில்.’ என்ற பாம்பு வைத்திய வாகடத்துத் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றும் இதனை வலியுறுத்தக் காணலாம். சில மந்திரங்களின் வலிமையால் விடம் இறங்கிவிடுவது மட்டு மன்றி, கடித்தபாம்பும் உடனே துடிதுடித்துச் சாவதாகவும் அறிகின்ருேம். உச்சரித்துக்கொண்டு போவோருக்கு அஞ்சி நச்சுப்பாம்புகள் வழிவிலகிச் செல்லத்தக்க மந் திரங்களும் சில உள. மந்திரவாதிகளான பாம்புவைத்தியர் தமது மந்திர சக்தியால் கடித்த பாம்பை வரவழைத்து அப் பாம்பையே கொண்டு கடிவாயிலிருந்து விடத்தை எடுத்துவிடுகின்றர்கள். அதேபோன்று பாம்பின் எதிரிக ளான கருடன், கீரி என்பவற்றை அழைத்து விடத்தை இறக்குகிற நிகழ்ச்சிகளைத் தற்காலத்திலும் (5 stub காணுகின்ருேம். பாம்புக் கடியினல் இறந்தவரைக் கூட இத்தகைய அழைப்பு மந்திரங்களின் வலியால் எழுப்பி

பாம்புக்கடி 373
விடுகிறர்கள். கடித்த பாம்பு, கருடன், கீரி என்பவற்றி லொன்றை அழைத்து அதனைக்கொண்டு விடத்தை நீக்கு வித்து இறந்தவர்போற் கிடந்த விட நோயாளியை எழுப்பும் இச் செயலுக்கு அடக்கம் எழுப்புதல்’ என்று பெயராகும். அவ்வாறன்றி மந்திரவாதி தன்னையே மயில், கருடன், கீரி, பாம்பு என்பவற்றிலொன்ருகப் பாவித்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே நோயாளியை உற்றுப் பார்த்தல் மூலம் நோயாளியை எழுப்பிவிடுதலும் உண்டு. அச்செயல் பார்வையால் அடக்க மெழுப்புதல் ’ என்று குறிப்பிடப்படுகிறது. அடக்கம் எழுப்பும் இம்முறைகள் மிகவுங் கடினமானவையாதலால், மருந்துகளின் மூலம் அடக்கம் எழுப்பும் இலகுவான வழிகளை முதலிற் கையாண்டு பார்த்தலே வழக்கமாகும்.
* பச்சைப் பாம்பு மூஞ்சூறு
படரும் கடலா மணக்கமிலே
மெச்சத் தாயைக் கொன்ருனும்
மிகுந்த இலுப்பைப் பழக்கோதும்
இச்சைப் படியே தானுலர்த்தி
இடித்த தூளை மூக்கதனில்
அச்சுக் குழலால் ஊதிவிடல்
அடக்கம் எழுப்பும் மருந்தாமே.”
என்பது முதலியனவாக அடக்கம் எழுப்பும் மருந்தைக் கூறும் பாடல்கள் பல மட்டக்களப்பிலுள்ள பாம்பு வாகடங்களிற் காணப்படுகின்றன. இது போன்ற வேருெரு மருந்தை உயிரற்றவர்போன்று கிடக்கும் விட நோயாளியின் கண்களினுள் தீற்றிவிடுதலுக்கு, * கலிங்கம் போடுதல் ’ என்று பெயர். * கலிங்கம் போடுதலும் அடக்கம் எழுப்புதல் போன்ற ஒரு நிகழ்ச்சியேயாகும்.
பாம்பு கடித்தாரது உயிர் பிரிந்ததுபோற் தோன்றி லுைம் உயிர் வெளிச் செல்லாது சிலபோது அடங்கிக் கிடக்கும் என்பதையே, அடக்கம் எழுப்புதல் என்னும் தொடர் காட்டுகிறது. அப்படி உயிர் அடங்கிக் கிடப்ப தனற்தான் வைத்தியர் திறனுடையவராயின் அடங்கிக் கிடக்கும் நிலையிலிருந்து அவ்வுயிரை எழுப்பிவிடக் கூடியவ ராகின்றர். பாம்பினுற் கடியுண்ட தேவதாசனது மரணச்

Page 212
874. மட்டக்களப்புத் தமிழகம்
செய்தியை வருணிக்க வந்த புலவர் விட்டுயிர் அடங் கிற்றன்றே என்று பாடியிருப்பதும் இந்த உயிர் அடங்கு தலையே குறிப்பிடுகின்றது. சீவகசிந்தாமணி, பெரிய புராணம் என்னும் பேரிலக்கியங்களிலும் இந்த விட நோய்பற்றி வரும் இடங்களில் உயிர் பிரிகிறது என்னது, அது அடங்குகிறது என்றே கூறப்பட்டிருக்கக் காணலாம். எனினும் உயிர் அடங்குதல் மரணத்திற்குமுன் நிகழ் வதாய் மரணம்போன்ற வெளிக் காட்சியையே நல்கு வதாய் இருப்பதாதலின் பாம்புக்கடியால் உயிர் அடங்கப் பெற்றவனும் இறந்தவனென்றே கருதப்படுதல் இயல்பா கின்றது. அவ்வாறு பாம்பின் கொடிய விடம் மீதுTர்ந்து உயிர் அடங்கப்பெற்றவரை எழுப்பவல்ல சிறந்த பாம்பு வைத்தியர்கள் மருதமுனை, அக்கரைப்பற்று, கோளாவில், தம்பிலுவில், காரைதீவு, மண்டூர், சிற்ருண்டி, கதிரை வெளி முதலான பல கிராமங்களிலும் பெரும் புகழுடன் வாழ்ந்திருக்கின்ருர்கள்.
மந்திரத் தொழிலைவிட நஞ்சை இறக்கும் வேருெரு வழியும் நடைமுறையில் இருக்கின்றது. டாம்புக் கல்லு என்ற பெயரால் வழங்கப்படும் கற்கள், சில வகையான வேர்கள், மரத்துண்டுகள் என்பனவற்றுள் ஒன்றைக் கடிவாயில் வைப்பதால் உட்சென்ற விடம் உறிஞ்சி வெளியில் எடுக்கப்படுதலைக் காணலாம். திருக்கோயில் என்னும் ஊரில் இவ்வாறு விடத்தை உறிஞ்சி எடுப்பதிற் பெயர்போன பாம்புக்கல் (படம் 30) ஒன்று இருக்கின்றது. எத்தகைய கொடிய விடம் தீண்டப்பெற்ருேரும் அக்கல் லருகே வந்து பயபக்தியோடு, கடிவாயினை அக் கல்லிற் பொருத்தி வைக்கின்றனர். விடம் முழுவதும் உறிஞ்சி எடுக்கப்படும்வரை கடிவாயை அக்கல் இழுத்துப் பிடித்துக்கொண்டே இருந்து பின் தானுகக் கடிவாயை விட்டுவிடுகிறது. பொதுமக்கள், அற்புதமான சக்தி வாய்ந்த இப் பாம்புக் கல்லைப் பயபக்தியுடன் காவல் செய்து வைத்திருப்பதோடு அதற்கு வழிபாடும் செலுத்து கின்றர்கள். இதுபோன்ற ஒரு பாம்புக் கல்லு மட்டக் களப்பின் வடக்கெல்லையில் உள்ளதாகிய கதிரைவெளி என்னும் கிராமத்திலும் இருந்ததாகத் தெரிகின்றது.

பாம்புக்கடி 375
ஏருவூரில் வாழ்ந்த முஸ்லீம் வள்ளல் ஒருவரது உடல் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள இடத்தில் நடப்பெற்றிருக்கும் மரக்கட்டை ஒன்றும் பாம்புக்கல் போன்ற மருந்தாகி அப் பகுதியில் விடம் தீண்டிய மக்களைக் காப்பாற்றுகின்றது. பாம்புக்கல் என்ற பெயருடைய சிறுசிறு கற்களையும், அதே பயனை ஊட்டவல்ல மருந்து வேர்களையும் மட்டக் களப்புக் காடுகளில் வாழும் குறவர்களிடத்தில் இருந்து பெற்றும் மக்கள் பயனடைகிருர்கள்.
மந்திரம், பாம்புக்கல் என்பவற்ருல் கீழிறக்கப்பட்டது போக உடலில் மீந்திருக்கும் நஞ்சின் வலியை ஒழித்து உடலைப் பழையபடி உறுதிப்படுத்துதற்கேற்ற மருந்துகளை உள்ளும் புறமும் செய்தல் முறை. அம் மருந்துகளும், குளிகை, ஏனதி, குழம்பு (லேகியம்), மை, துவாலை (மெல்லிய பூச்சு மருந்து), ஒத்தணம், ஊறல் (குடிநீர் அல்லது கசாயம்), தைலம், தூள் (சூரணம்), நசியம் (முக்கினுள் விடும் மருந்துப்புகை), கலிங்கம் (கண்ணுள் போடும் மருந்து), அஞ்சனம் (கண்ணில் வெளிப்புறமாகப் பூசும் மருந்து) எனப் பலவகையாகப் பெறப்படுவ. பாம்பு கடிக்கப்பெருமலே, சிலர் தம்மீது பாம்பு பட்டாலும், பாம்பின் வாலா லடிக்கப்பெற்ருலும் பாம்பு கடியுற்ற வரைப்போல மயக்கங்கொள்ளுதல் முதலான குறிகளைப் பெறுவர். அப்படிப் பயத்தால் நோயுற்றவர்களை அறிவ தற்காக உடனே சில மிளகுகளை மென்று பார்க்குமாறு கொடுத்து அம் மிளகின் உறைப்பினே உணரக்கூடிய தன்மை உடையாராயின் விடம் பெற்றிலர் என்றுங் கண்டுகொள்கிருர்கள். விடந்தீண்டப் பெருதோர் அதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளாது விட வைத்தியம் செய்யப் புகுந்து மேற்கொண்ட மருந்துகளின் வேகரத் ’தால் மரணம் அடைதலும் உண்டாகின்றது. இத்தகையோரைக் குறித்துத்தான் கண்டது பாம்பு, கடித்தது கருக்கு, தின்றது மருந்து, கொன்றது வைத்தியம்’ என்ற பழ மொழித் தொடரும் வழங்கப்பெறுவதாயிற்று. பாம்பு கடிக்கப்பெருதோரிடத்துக் காணப்படும் மாருன, குணங் குறிகள் வெறும் அச்சத்தால் எழுந்தவை என்பதைத்

Page 213
376 மட்டக்களப்புத் தமிழகம்
தெளிவாய் அறிந்துகொண்டால், அவர்கள் தேறுத லடைந்து உறுதிகொள்வதற்கேற்ற தந்திரமுறைகளைக் கையாண்டு அன்னரைக் குணமடையச் செய்கின்றனர்.
இதனல், பாம்புக் கடியைப் பற்றிக் கூறப்படின், கடித்தது பாம்புதான அல்லது பாம்பின் தொடர்பினல் ஏற்பட்ட வெறும் பயமா என்பதை நாம் பின்வருங் குணங்குறிகளால் உடனே தெரிந்துகொள்வது நல்ல தாகும் என்று இங்குள்ள வைத்தியர்கள் அநுபவவாயி லாகக் கூறுகின்றனர்.
விடக் கோளாறு எனின், கடியுற்றவருக்குச் சோர்வு படிப்படியாக உண்டாகும்; தன்னறிவு இருந்து சிறிது தூரம் கடக்கவும் அவரால் முடியும் ; முகம் படிப்படியாக நீலநிறமாகிவரும் ; உடம்பின் வெப்ப நிலையில் மாற்றம் தோன்ருது. கைகாடி தெளிவாக இருக்கும் ; வரவர மூச்சுவிடுவது பொறுப்பாகிக்கொண்டு போகும். கடித்தது விடப் பாம்புதான் எனின் கடிவாயில் ஒன்று அல்லது அதற்குமேல் நான்குவரை பற் குறிகள் தெரியும் ; பற் குறிகள் இரண்டுக்கு இடைத்தூரம் கால் அல்லது அரை அங்குலம்வரை இருக்கும். கடித்தது 5ாகபாம்பு எனின் கடிவாயில் எரிவும் விறைப்புத்தன்மையும் உண்டாகும். புடையன் பாம்பு எனின் கடிவாயில் ஓயாத வலியும், விடாத இரத்தோட்டமும் இருப்பதோடு கடிவாயைச் சுற்றியுள்ள சதை வீங்கி நீல நிறமும் படரப்பெறும். பொதுவாக, உறைப்பு, கசப்பு உள்ள மிளகு முதலான பொருள்களைச் சுவைக்குமாறு கொடுத்தால், அவற்றின் சுவை மாறுபட்டிருக்கக் கூறுவாராயின் விடக்கடியே என்பதோடு விடந் தலைவரைக்கும் பரந்துவிட்ட தென்றும் அறியலாம். கண் சிவந்திருத்தல், கடிவாய் நிறபேதம், மயக்கம், வாந்தி, வீக்கம், தலையிடி, அடிவயிற்றுகோ முதலிய குணங்கள் காணப்படின் விடம் உடம்பெங்கும் பரவிவிட்டதென்றும் அறியலாம்.
பயத்தினல் ஏற்பட்ட கோளாறு எனின் சோர்வு திடீர் என்று தோன்றும்; தன் அறிவு இழந்து, நடை தளர்ந்து கிற்கவும் முடியாதுபோகும்; முகம் திடீரென்று

பாம்புக்கடி ვ77
வெளுப்பாகிவிடும் ; தேகம் குளர்ச்சியடைந்துபோகும்; நாடி தெளிவாக இருக்காது ; சாதாரணமாக மூச்சு வந்து கொண்டிருக்கும். விடம் இல்லாத பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் குதிரை இலாடம்போன்ற வடிவில் நுண்ணிய பற்கள் பல பதிந்திருக்கும். அவற்றில் சிறிது இரத்தக் கசிவும், சிலவேளையில் உடைந்த பல் நுனிகளும் காணப்படலாம். சிறிதாக எரிவு தோன்றி விரைவில் குறைந்துபோம் ; நரம்பு, இருதயம், இரத்தம் என்ப வற்றின் தொடர்பான குணங்குறிகள் தோன்ரு. மிளகு முதலியவற்றின் சுவை மாறுபடாதிருத்தலும், விடங்கொண் டார்க்குடையனவாக மேலே காட்டிய ஏனைய சிறப்பான உடற்குறிகளில் எதுவும் இல்லாது இருத்தலும் விடக் தீண்டிய நோயன்று என்பதைத் தீர்மானிக்க உதவு வனவாம். கிழக்குநாட்டவர் தெளிவாகக் கூறியிருக்கும் இதே குணங்குறிகளையே, பல்லாண்டுகளாகப் பாம்புக் கடிபற்றி ஆராய்ந்த கேணல் வால் என்னும் மேனுட் டறிஞரும் ஏற்றுக்கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கதாகும்.
பாம்புகள் வலிந்து மனிதனேக் கடிப்பதில்லை என்றும் தற்பாதுகாப்புக்காகவே அவ்வாறு செய்கின்றன என்றும் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் கிழக்குலகுப் பாம்பு வைத்தியர்கள், பாம்பு மனிதரைக் கடிப்பதற்கு எட்டுக் காரணங்களைக் கூறுகின்ருர்கள். அதிகமாகச் சுரந்த நஞ்சை வெளிப்படுத்திவிடவும், பயங் கொண்ட இடத்தும், இரை பிடிக்கவும், கோபங்கொண்ட போதும், போகத்திலிருக்கும்போது பிறர் குறுக்கிடுவத னலும், மனமகிழ்ச்சிகொண்டு படம் விரித்தாடல் முதலி யனவற்றில் ஈடுபட்டுள்ளபோது யாரும் எதிர்ப்படினும், இக்காரணமெதுவும் இல்லாதே பாம்பினல் மரணம் நேர வேண்டிய இயற்கை நியதியினுல் ஒருவர் சென்றடை வதனலும், தன்னை மற்றவர் ஊறுசெய்தவிடத்தும் விட அரவு தீண்டும் என்று கூறுகின்றன வைத்தியவாகடங்கள். ஏறக்குறைய பத்து நூற்ருண்டுகளுக்கு முன் எழுந்ததாகக் கருதப்படும் சீவகசிந்தாமணி’ எனும் தமிழ் இலக்கிய நூலில் உள்ள பாடலொன்றும் இந்த நம்பிக்கையை வலி யுறுத்துகின்றது.

Page 214
878 மட்டக்களப்புத் தமிழகம்
* பொழிந்துநஞ் சுகுத்தல், அச்சம்,
இரை,பெரு வெகுளி, போகம் கழிந்துமீ தாடல், காலம்,
பிழைப்புஎன் றெட்டி ஞகும் பிழிந்துயி ருண்ணுக் தட்டம்
அதட்டமாம் பிளிற்றி னும்பர் ஒழிந்தெயி றுானம் செய்யும்
கோளென மற்றும் சொன்னன்.” (சீவக. 1286) என்னும் பாடலில் அந்த எட்டுக் காரணங்களும் காட்டப் பட்டுள்ளன. இவற்றுள் காலக்கடி என்பதொன்றில்லை என்றும், தனக்குத் தீங்கு செய்தாரை மனத்தில் வைத் திருந்து அவரைத் தேடிக் கடிக்கவல்ல நினைப்பாற்றல் பாம்புக்கில்லையாதலால் பிழைப்பு காரணமாகப் பாம்பு கடிக்கும் என்பதும் பொருந்தாது என்றும் இக்கால ஆராய்ச்சியாளர் கூறுகின்ருர்கள்.
பாம்பின் விடம் இரத்தச் சுற்றேட்டத்துள் கலந்து முறையே ஏழு வேகம் போடும் என்பது பற்றித் தமிழ் வாகடங்கள் கூறும் உண்மை, கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகின்ற அப்பூதியடிகள் காலத் திலேகூட மிகப் பிரபலமாக இருந்ததென்றும், சேக்கிழார் சுவாமிகள் முதலான பெரும் புலவர்களும் அவ் விட வேகங்களை விரித்துப் பாடத்தக்க அளவு பாம்புக்கடி பற்றி யறிந்திருந்தனர் என்றும்,
* எரிவிடம் முறையே ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீய்ந்து விரியுரை குழறி ஆவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்.” (அப்பூதியடிகள் புராணம் 27)
என்பது முதலான பெரியபுராணச் செய்யுள்களால் அறி கின்ருேம். மந்திரப் பார்வையாலும், மந்திர உச்சரிப்டி லுைம் விடத்தை நீக்கும் ஆற்றல் பழந் தமிழரிடமிருந்து நமக்குக் கிடைத்த ஒன்றே என்பதற்கும் தமிழ் இலக்கி யங்கள் சான்று பகருகின்றன. விடக் கொடுமையால் மரண முற்றவர் போற் கிடந்த “பது  ைம’ என்னும் பெண்ணைப் பார்வையால், சீவகனும், அவ்வாறு கிடந்த

பாம்புக்கடி 379
அப்பூதி அடிகளின் மகனைத் தேவாரத் திருப்பதிகமாகிய மந்திர உச்சரிப்பினுல் திருநாவுக்கரசரும் * அடக்கம் எழுப்பிய வரலாறுகள் நாம் நன்கறிந்தனவே. விடநாகம் தீண்டினுேருக்கு எட்டு வேகமும் போட்டு மூச்சு நின்ற பின்னரும் ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களுக்கு இதயத் துடிப்பு மெல்லியதாக இருக்குமாதலால் அவரை அடக்கம் எழுப்பும் முறைகளால் மீட்டல்கூடும் என்ற நம் நாட்டுப் பாம்புக்கடி வைத்தியநூற் கூற்றுக்களை இச் செயல்கள் மெய்ப்பிக்கின்றன. புடையன் பாம்பின் வாய் விடத்துக்காளானேருக்கு அவ்வாருன, இதயத் துடிப்பு பதினேந்து நிமிடங்களுக்குமேல் இருப்பதில்லை என்பது விடநூற் துணிபு. அதனுற்போலும் அச் சாதிப் பாம்பினல் கடியுண்டவர்களை எந்த வைத்தியனே, மந்திரவாதியோ அடக்க நிலையிலிருந்து எழுப்பியதாகத் தெரியவில்லை.
பாம்புக்குக் கண், காது என்னும் உறுப்புக்கள் வெவ் வேருக உள்ளனவா என்று கேட்கின்ருர்கள். கண்ணே பாம்புக்குச் செவியாகவும் பயன்படுவதாதலாற்தான் * கட்செவி ’ என்று தமிழர் பாம்பை அழைக்கின்றன ரென்றும் கூறப்படுகின்றது. பாம்புக்குப் புறச்செவி இல்லே அன்றிக் கேட்குக் தன்மை நிறைந்த உட்செவி அதன் கண்களுக்கருகில் உண்டென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. காற்றின்மூலம் வரும் ஒலி அலைகளை விட நிலத்தின் மூலம் பரவும் ஒலி அதிர்வுகளைப் பாம்புகள் தெளிவாகவும், விரைவாகவும், கேட்கக்கூடியனவாம் என்பதையுந் தமிழர் நன்கு அறிந்துள்ளனர். கேர்னல் வால் என்பவர் செய்த ஆராய்ச்சிகளும் இவ்வுண்மையைப் பலப்படுத்துவனவாய் உள்ளன. பாம்பு வெறும் ஒலிகளைக் கேட்பது மட்டுமன்றி, இனிய இசையினைக் கேட்டு மயங்கவும் வல்லது என்பது தமிழர் கண்ட முடிவு. குறவர்கள் தமது 8 மகுடி’ இசையால் பாம்புகளே ஆடவைக்கின்றனர் (படம் 25 A). இசைக்குப் பாம்பு கட்டுப்படும் என்ற நமது பழங்கால நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த மேட்ைடறிஞர் சிலர் பாம்பாட்டியின் கையிலுள்ள மகுடி இசையைக் கேட்டன்றி, அம்மகுடியின் அசைவைக் கண்டே நாகங்கள் படம் விரித்தாடுகின்றன என்கிருர்கள். அதனல், இதைப்

Page 215
380 மட்டக்களப்புத் தமிழகம்
பற்றிய ஆராய்ச்சிகளும் பல தொடர்ந்து எழலாயின. கேர்ணல் வால் என்பவர் தாம் செய்த ஆராய்ச்சிகளின் படி நாகபாம்புகள் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் கண்டு, ஆபத்துவரும் திசையை நோக்கி அதனை எதிர்ப் பதற்காகப் படம் விரித்தாடுகின்றன அன்றி மகுடி இசைக்குக் கட்டுப்பட்டன்று என்கிறார். கேர்னல் வால் ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்துப் பரிசோதனை செய்த ஒரு வைத்திய நிபுணர். கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியார் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கில வைத்தியருள் சிறந்த ஒருவர் ; இந்தியாவில் பாம்புக் கலேயை வளர்த்தவரும் அவரே எனலாம் ; ஆயினும், எந்த ஆபத்துக்களையும் அறியாது புற்றினுள் அடங்கிக் கிடக்கும் பாம்புகளும் குறவரது மகுடி இசை கேட்டுப் புறப்பட்டு வந்து ஆடத் தொடங்குகின்ற நிகழ்ச்சிகளை (படம் 25 B) மறுக்கக்கூடிய அளவுக்கு அதுபற்றிய அவருடைய ஆராய்ச்சி வலுவுடையதாகவில்லை என்றே சொல்லுதல் வேண்டும்.
ஆனல், எச். ஒ. பர்னட் என்பார் இலங்கையில் பாம்பு ஆடுதல் பற்றித் தாம் கண்ட அனுபவத்தை ஸ்போலியோ செய்லானிக்கா " என்ற விஞ்ஞானப் பத் Sifada, 6265 figa (Spolio Zeylanica-The Ceylon Journal of Science; Published by The Royal Asiatic SocietyCeylon Branch) 1910-2, b -2,3037 (2si) (5 it'll gll கருத்துகள் மகுடி இசைக்குப் பாம்பு கட்டுவது பற்றிய நமது அறிவுக்குச் சாதகமாக உள்ளன. அவரும் அவரது கூட்டத்தாரும், வயலொன்றினை அளக்கும் போது, அளவைச் சங்கிலியிலிருந்து எழுந்த மணிஒலி போன்ற மெல்லிசையினைக் கேட்டுப் புற்றுளிருந்த கருநாகங்கள் வெளிவந்து அவ்வொலி எழுந்த திசையைக் கூர்ந்து அவதானித்துக் கேட்டுக் கொண் டி ருந்த ண எனவும், ஒலியின் தன்மையையும், அளவையும் மாற்றி மாற்றி எழுப்பியபோது படத்தை விரிக்கும் அளவுக்குப் பாம்புகள் தலையை உயர நிமிர்த்தத்தொடங்கின என்றும் அவர் கூறுகிருர்,

பாம்புக்கடி 381
1955ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மருத்துவக் as passigaOTTg5 F(653,605 (The Journal of the American Medical Association) இதழ் ஒன்றிலே, பாம்பின் செவிப்
பாம்புகளோடு நெருங்கிப் பழகிப் பல ஆராய்ச்சிகளைச் செய்தவரான டக்டர் மாக்ட் (Doctor Macht) என்பவர் * பாம்பாட்டியின் கையில் உள்ள மகுடியின் அசைவைப் பார்த்தே பாம்புகிள் ஆடுகின்றன’ என்ற கருத்துத் தவருனதென்று அக் கட்டுரையினுள் மறுத்துக் கூறிய தோடு, இசையில் மயங்கியே அவை ஆடுகின்றன என்றும் வலியுறுத்தியிருக்கின்ருர். மேலும், * பாம்புகள் செவிடுகள் ’ என்னுங் கருத்தினே அடிப்படையாகக் கொண்டு, * பாம்பினைப்போன்று முழுச் செவிடாகிவிட் LžOTGшт” (“What, art thou like the adder waxen deaf P’ King Henry-Part 2. Act 3, Scene 2) 6Taito கூறும் செகசிற்பியார், தம் காலத்து வழங்கிய தவருன கருத்தொன்றனேயே திருப்பிக் கூறுகின்றர் எனவும் தமது முடிவைத் திடமாகத் தெரியப்படுத்தியிருக்கின் ருர். பழந் தமிழரது நுண்ணறிவின் சிறப்புக்கு இன்னுரது ஆராய்ச்சி முடிபுகள் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளன.
ஒலி மாறுபாட்டின்போதுண்டாகும் உச்ச ஒலியே நாகபாம்பினேக் கவர்ந்து ஆடவைப்பது என்றும், நாக பாம்பு மட்டுமே இவ்வாறு இன்னிசையை அவதானிக்க வல்லது என்றும் நாம் கூறலாம். இராவேளைகளில் பெரிய காடுகளிலே உயர்ந்த பரண்களிலிருந்து புல்லாங்குழல், ஆர்மோனியம் என்பவற்றை வாசித்துப் பார்த்தபோது நாகங்கள் படம் விரித்தாடியபடியே வந்து குழ்ந்து கொண்ட நிகழ்ச்சிகளையும் நாமறிவோம். குறவரது மகுடி இசைக்கு மட்டுமன்றி, இனிமையான குரலிலே இசைக் கலைஞர் பாடும் * 15ாகவராளி' என்ற இராக அமைப் பினைக்கொண்ட பாடல்களுக்கும் நாகங்கள் வசப்பட்டுப் பூடங்காட்டி ஆடுகின்ற நிகழ்ச்சிகளுங் கேட்கப்படு கின்றன. இப்படிப்பட்ட நாகங்களுக்குப் பேர்போனதா யிருப்பதனுற்போலும் மட்டக்களப்புக்கு வரும் வெளி நாட்டவர்கள் ஊரி (பாடும் மீன்) இசையைக் கேட்க

Page 216
ჭ832 : மட்டக்களப்புத் தமிழகம்
விரும்புவதுபோல், மகுடி இசையில் மயங்கிப் பாம்புகள் ஆடும் அழகையும் அனுபவிக்க விரும்பிக் குறவர் குழு வினரைத் தேடிச் செல்கின்ருர்கள்.
* பாம்பொடு பழகேல் ’ என்னும் பழமொழி, பாம்புக ளோடு நெருங்கிப் பழகுதல் வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கின்றது. எனினும் பாம்புகளைச் சிநேகிதமாகக் கொண்டிருந்த பலரைப்பற்றிய கதைகள் இங்கு வழங்கு கின்றன. சில மந்திரவாதிகளும், பாம்பு வைத்தியர்களும் செல்லும் தூரவழிக்கு விடப் பாம்புகள் துணேயாகச் செல்கின்றன. சிலருடைய வீடுகளுக்குக் கள்வர் வராதபடி கடிநாய்கள் போன்று நாகங்கள் காவல் செய்கின்றன. மண்டூரில் வாழ்ந்த பெயர்பெற்ற பாம்பு வைத்தியரான தியாகப்பர் என்பவர், கண்ணுக்குத் தெரியாதபடி எந்தப் புற்றுள் எந்த நாகம் மறைந்திருந்தாலும் அறிந்து, உடனே அதன் இனப் பெயரைச் சொல்லி அழைப்பாரென்றும் அப் பாம்பும் உடனே ஓடிவந்து அவரை வலம் வந்து மீண்டு தன் இருப்பிடஞ் செல்லும் என்றும் கண்ணுரக் கண்டோர் கூறுகிருர்கள். பாம்பால் கடியுண்டு அவரிடம் சிகிச்சைக்கு வந்த எவரும் பூரண சுகம்பெறத் தவறிய தில்லை. காரைதீவில் வாழ்ந்து மறைந்த கயிலாயபிள்ளை என்பாருந் தம் காலத்திலே அப்பகுதி மக்களால் தெய்வ மென்று புகழப்பெற்ற சிறந்த பாம்பு வைத்தியர். இவ்வாறு இடங்தொறும் வாழ்ந்த பாம்புப் பரிகாரிமாரின் சொல் லுக்குப் பாம்பின் விடம் மட்டுமன்றி, விடப் பாம்புகளும் கட்டுண்டு அடங்கி நடந்தமை வியக்கத்தக்கதாக இருக் கின்றது. பாம்பைக் கூவி அழைத்தலும், பாம்போடு பழகுதலும், மந்திரம் மருந்துகளாலன்றிச் சில பழக்கங் களுக்குப் பாம்புகளை அடிமையாக்குதலாலும் முடியும் என்று மேனுட்டாருடைய கருத்துகளால் தெரிகின்றது. இலங்கைக்குக் குடியேற்றநாட்டுக் காரியதரிசியாக 1847இல் இங்கு வந்தவரும், சிலகாலம் இலங்கைத் தேசாதிபதியாக இருந்த வருமான சேர் ஜேம்ஸ் 6TGLDți af Gör GT GOTL (Sir James Emerson Tennet) என்னும் ஆங்கிலேயர், தாம் எழுதிய "இலங்கை ? (Ceylon) என்னும் நூலில் ஈழத்து மக்கள் பாம்புகளை

பாம்புக்கடி 383
வீட்டில் வளர்ப்பது பற்றிச் சில சுவையான செய்திகளைக் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையைப் பற்றிப் பல துறை களிலும் ஆராய்ச்சி செய்த இவர், மட்டக்களப்பின் " ஊரி (பாடும்மீன்-Singing fish) இசையைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி முடிபுகளை நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும் என்ற கட்டுரையுள் (பக். 82) கண்டிருக்கின்ருேம். தம் வீட்டில் இலங்கை மக்கள் பாம்பு வளர்த்தலேப் பற்றி, * நாங்கள் சிங்கள நண்பர் ஒருவருடைய வீட்டினுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டு அங்குச் சென் ருேம். அவ் வீட்டில் இரு நாகங்கள் உலாவிக்கொண்டு வருவதைக் கண்டு அஞ்சினுேம். ஆனல் அவை அவ்வீட்டாரை நன்கு அறிந்திருந்தன. வீட்டுக் காவலுக்கு நாம் நாய்களை வளர்ப்பதுபோல் அவர்கள் நாகங்களை வளர்க்கின் ருர்கள். அன்னியர்கள் அங்கே செல்வதற்கு அஞ்சுவர் ’ என்று தாம் நேரிற் கண்டவற்றை எழுதியுள்ளார். * உல்ப்” என்பவர் அவரது சிங்கள நண்பரின் வீட்டு விருந்து ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அவ் வீட்டுப் பிள்ளை போல் வளர்க்கப்பட்ட பாம்பொன்றும் தம்மோடு வந்திருந்து விருந்துண்ட நிகழ்ச்சியையும், ஸ்கின்னஸ் ’ என்பவர், நீர்கொழும்புச் செல்வந்தர் ஒருவருடைய வீட்டில் காவல் நாய் கள் போன்று விட நாகங்கள் வளர்க்கப்பட்டதைப் பற்றிக் கூறியவற்றையும் குறிப்பிட்டு * டெனட்’ அவர்கள், நமது ஈழநாட்டிலே பாம்புகளுக்கும் மக்களுக்கும் இருந்த நல்ல தொடர்புகளை வியப்புடன் எடுத்துக் காட்டுகின்ருர்,
குளிர் நிறைந்த மேனடுகளில் உள்ள பாம்புகளிற் பெரும்பாலானவை மனிதருக்குத் தீங்கு செய்யக்கூடிய அளவு விடம் இல்லாதன. அதனுற்போலும் கிழக்கு நாட்டு வைத்திய நூல்களிற் காணப்படும் அளவு விரிவான முறையில் விட வைத்திய முறைகள் மேனுட்டில் விரிவாக விளக்கம்பெறவில்லை. எனினும், தற்காலத்திலே பாம்புக் கடிபற்றிய அறிவு விஞ்ஞான முறைப்படி ஓரளவு ஆராயப் பட்டு வருவதோடு, பாம்பின் விடத்திற்கு மாற்று மருந்துகள் சிலவும் தயாரிக் கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டதான ‘அன்டி

Page 217
384 மட்டக்களப்புத் தமிழகம்
வெனின் ' (Antivenin) என்னும் ஊசி மருந்துதான் தற்போது விடக் கடிக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பொது வான ஒரு மருந்து. நாகபாம்பின் விடத்தை இலகுவாக முறித்து அதன் வேகத்தையும் குறைக்கவல்லதான இம் மருந்து பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் கிடைக் கின்றது. ஐந்து முதல் பதினைந்துவரை தொடர்ந்து சில தினங்களுக்கு இம் மருந்தூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிருர்கள். பாம்புகளைக் கடிக்கவிட்ட குதிரைகளிலிருந்து இந்த ஊசி மருந்து தயாரிக்கப்படு கின்றது. “ ரையாக் (Triaq) என்னும் ஒரு விடக்கடித் தைலத்தை இந்தியாவில் உள்ள 8 ஹோமியோபதி ’ வைத்தியர்கள் கையாளுகின்றனர். பல ஏழை மக்களும் பெற்றுப் பயனடையக்கூடியதாக இருக்கும் இம் மருந்தை முல்லர்’ என்னும் கிறித்தவப் பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்தார். மருந்து மூலிகைகளின் வலியை உறுதிப்படுத்தும் இன்னெரு விடக்கடித் தைலம் * எக்னசின் ’ என்பது. ஹோமியோபதி வகையினையே சேர்ந்த இம் மருந்தினை ஜேர்மன் தேசத்தைச் சேர்ந்தவ ரான டாக்டர் மடோ ’ என்பவர் நமக்களித்துள்ளார். எனினும் 5ம் நாட்டுக் கொடிய விடக்கடிகளுக்கு இது அதிகம் வெற்றிதருவதாயில்லை என்று தெரிகின்றது. இதைவிட மதர் ரிங்சர்’ (Mother Tincture) என்னும் தைலம் கூடிய சுகத்தை அளிக்கிறதென்பர். புதுமுறையில் ஆக்கப்பட்டனவாயுள்ள கிரின்டீலியா ருெபொஸ்ரா ? (Grindelia Robosta), “ 65l-Liċ ” (Ledum), “ Ghotjiet56m96ju ” (Lachesis), “ (35 GJ ITL L-Gy Giv' ” (Crotalus), “ (5 T LLUIT ’ (Naja) என்பவையும் தற்போது கிடைக்கின்ற விடமாற்று மருந்து களாம். இவற்றுள் முதலிரண்டும் பொதுவானவை என்றும், லாக்கஸிஸ்’ என்பது புல்விரியன் பாம்பினது விடத்திற்கும், * குரோட்டலுஸ் ' என்பது குழிவிரியன் வகைப் பாம்புகளின் விடத்திற்கும், நாகபாம்பின் விடத்தி லிருந்து தயாரிக்கப்பட்டதான ‘நாயா ’ என்னும் மருந்து நாகசாதிகளின் விடத்திற்கும் மாற்று மருந்துகளாக ஹோமியோபதி வைத்தியர்களாற் பயன்படுத்தப்படு கின்றன.

பாம்புக்கடி 385
ஆயினும் புதிய மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமப்புறங்களிலே வாழும் மக்கள் இத்தகைய மருந்துகளை உடனுக்குடன் பெறத்தக்க வசதியைப் பெற் றிருப்பாரென்று நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. விடப்பாம்பு களும் கிராமப்புறங்களையும், காட்டுப்பகுதிகளையுமே தமக்கு வசிப்பிடமாகக்கொள்வன. அதனுல், மட்டக் களப்பு நாட்டைப் பொறுத்தவரையில் எல்லா ஊர்களிலும் பழைய வைத்தியமுறைகளே இன்றும் பாம்புக்கடிக்கு நற்பயனுரட்டி வரக் காண்கின் ருேம். மணி, மருந்து, மந்திர வசதிகளைத் தேடிச் செல்லுமுன், கடிவாயின் மேற்பகு திக்கு விட இரத்தம் விரைந்து ஏருதவாறு இறுகக் கட்டி விடுதல், கடிவாயைக் கீறி இரத்தத்தை வெளியேற்றல், வாயிற் புண் இல்லாதோர்மூலம் விட இரத்தத்தைக் கடிவாயிலிருந்து உறிஞ்சி எடுத்தல் என்பவற்றை முத லுதவியாகச் செய்யலாம். மயக்கம், சோர்வு என்பன காணப்படின் சூடான கோப்பி, தேநீர், கொக்கோ முதலியவற்றைக் குடிக்கக் கொடுக்கலாம். வெறியூட்ட வல்ல குடிவகை எதனையுங் கொடுக்கவே கூடாது. நோயாளியைக் கூடியவரை படுக்கவைத்தலும், அவரை மனப்பயங் கொள்ள விடாது தைரியம் ஊட்டுதலும் நல்லது. இரண்டவுன்சு வேப்பெண்ணெய் அல்லது பசு நெய், காற்படி எலுமிச்சம் புளி அல்லது மனிதர் சலம் என்பவற்றுளொன்றைப் பாம்பு தீண்டப்பெற்ருேர் உட் கொள்வதால் மேலேறிய விடமும் திரும்பிக் கடிவாய்க்கே வருமென்று அனுபவ வாயிலாகக் கூறுகின்றனர்.
கொம்பேறிமுர்க்கன் என்னும் பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டு உடனே போய் மரத்தில் ஏறிக்கொள்ளும் என்றும், கடியுண்டவர் இறந்துபட்டாலன்றி அது கீழே இறங்கி வருவதில்லை என்றும், பாம்பைக் கீழே இறக்க முடிந்தாற்தான் விடத்தையும் கீழே இறக்க முடியும் என்றும் இங்குக் கூறப்படுகின்றது. அதற்காகக் கடி யுண்டவரைப்போல் வைக்கோற் பொம்மையொன்றைச் செய்து அதனைப் பாடையில் வைத்துப் பலர் காணும்படி யாகத் தூக்கிக் கொண்டுபோய், அடுக்கிய கட்டை களின் மீது கிடத்தி எரித்தல் வேண்டுமென்றும், கடித்த
D - 25

Page 218
386 மட்டக்களப்புத் தமிழகம்
கொம்பேறிமூர்க்கன் பாம்பு இந்த நிகழ்ச்சிகளால் மரத்தி லிருந்து கீழே இறங்கிவரும் என்றும், அதன் பின்னரே மந்திரமும் மருந்துகளும் பலிக்கப்பெற்று விட நோயாளியும் குணப்படுவான் என்றுங் கூறுவர். இதுபற்றி,
* மங்கைபங்கன் மணியணி மார்பன்
மணிமணி மாராப்பில் ஆரமே பொங்கு கடலுற்ற போதகமே அங்கையற்றுக் கொப்பா லிறங்கு ??
என்பது முதலான மந்திரங்கள் சிலவற்றைத் தொடர்ந்து உச்சரிப்பதனுல் மந்திரவாதிகள் அப் பாம்புகளைக் கீழிறக்கி அவற்றின் விடத்தினை நீக்கிவிடுகிற நிகழ்ச்சியும் இன்றுங் காணக்கூடிய உண்மையாக உள்ளது.
பாம்புகளின் எண்ணிக்கையில், விடமில்லாதன வற்றின் தொகையே அதிகமாக இருப்பதாகத் தெரி கின்றது. விட மில்லாத பாம்புகளால் மக்களினத்திற்குத் தீமை விளையாதது மாத்திரமல்லாமல், பெரும்பாலான நன்மைகளும் கிடைக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பாம்புகளை முற்ருக அழித்துவிட்டால், பாம்புக் கடியால் இறந்தவர்களைக் காட்டிலும் வேறு நோய்கள் பரவப்பெறுதலால் இறக்க நேரிடும் மக்களின் தொகை அதிகமாய்விடுமென்றும் அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். நீண்ட நாக்குகளால் விடங்கொண்ட நோய்க் கிருமிகளைப் பாம்புகள் பிடித்து உண்கின்றன; வயல்களிலே பயிருக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய பூச்சி புழுக்கள் பாம்புக்கு உணவாய் விடுதலால் உழவன் பாம்புகளால் நன்மைபெறுகின்றன். இவை போ கப் பாம்பின் விடங்கூடச் சில நோய்களுக்கு மருந்தாகின்றது. பாம்பின் விடத்தை அளவறிந்து உட்செலுத்திவிடுவதனல், அளவுக்குமிஞ்சிய வேகமான இரத்த ஓட்டம் சமப்படுத்தப் படுகின்றது ; மதுபானத்தால் ஏற்படும் நரம்புத் தளர்ச் சிக்கு அது மருந்தாகின்றது; சீரண உறுப்புகளுக்குப் புத்துயிரூட்டுகின்றது. சாரைப்பாம்பு கடித்தால் தலை நடுக்கம் உண்டாகுமென்று நம்மவர் கூறிச் சாரைப் பாம்பையும் வெறுக்கின்றர்கள். ஆனல் விஞ்ஞான

பாம்புக்கடி ’ ვ87
முறைப்படி ஆராய்ந்து பார்த்தபோது சாரைப்பாம்பின் விடத்தைக், காக்கை வலிப்புக்கு மாற்று மருந்தாகப் பயன் படுத்தலாம் என்று கண்டிருக்கிருர்கள்.
பாம்புகளின் நச்சுத்தன்மை, தெய்வத்தன்மை, விடக்கடி விளக்கம், விடத்தின் மாற்றுமருந்து என்ப வற்றை எல்லாம் விரிவாகக் கூறுவனவாய் மட்டக்களப்பில் வழங்குகின்ற பாம்புக்கடி வாகடங்கள் தவத்திற் சிறந் தோராய் வாழ்ந்து, எல்லாக் கலைகளையும் நன்கு கற் றுணர்ந்து, இருவினை ஒப்பினைப் பெற்றுகின்று, சிந்தித்துச் சிந்தித்துச் சிவமானேரான சித்தர்களால் ’ ஆக்கப்பட்டன. பாம்புக்கடி நூல்கள், நாகாரூடம், சிவனராரூடம், கெருட பஞ்சாட்சரம், தேவியாரூடம், சர்ப்பாரூடம், அமீர்தசாகரம், கெருடாரூடம், சந்திரா ரூடம், சித்தியாரூடம், பஞ்சாட்ச ராரூடம், வயிரநால், மணிசேகர நூல் எனப் பன்னிருவகை யாக உள்ளன. விட வைத்திய முறைகளையும், மணி, மந்திரச் சிறப்புகளையும் நன்கு விளக்கும் அற்புதமான வைத்தியக் கருவூலங்களாகிய இவ் வாகடங்களிற் பல இன்று இலகுவிற் கிடைப்பனவாக இல்லை. செல்லரித் தனவாய் அழிந்துபோனவை சில ; எஞ்சியவற்றைக், கையில் வைத்திருப்போரும் அவற்றைப் பிறரிடங் கொடுக்கத் தயங்குகின்ருர்கள். தமது பரம்பரை தோறும் அக்கலை வளர்தல் வேண்டும் என்பதும், மறைவாக ஒதவேண்டிய மருந்து, மந்திரங்களைப் பலரறியச் செய்யின் அவை பலிக்கமாட்டாதனவாய்விடும் என்பதும் ஏடுகளை வெளிப்படுத்த மறுப்பார் கூறுங் காரணங்கள். தெய்வத் தன்மை வாய்ந்த ஒன்ருக, விட வைத்தியக் கலையை இங்கு அனைவருங் கருதுகின்றனர். விட வைத்தியர் தமது வைத்தியத்துக்குக் கூலியாக எதையும் நோயாளரிடமிருந்து ஏற்றுக்கொள்ளமாட்டார். அப்படி ஏற்றுக்கொள்வது பாவம் என்றும், வியாபார நோக்கிலே பாம்பு வைத்தி யம் செய்யப் புகுந்தால் அவ் வைத்தியம் பலிக்காமற் போகும் என்றுங் கூறுகின்றர்கள். மேனுட்டு ஊசி மருந்து களைப் பெற விரும்புவோர், தம்மைக் கடித்த பாம்பு எது என்பதைத் தெளிவாக வைத்தியரிடங் கூறினலன்றி நற்பயன் பெறுதல் முடியாது. ஆனல், நமது காட்டு வைத்

Page 219
388 மட்டக்களப்புத் தமிழகம்
தியர்களோ பாம்புக்கடியை அறிவித்த தூதன் கூறிய சொற்களைக்கொண்டு கணிக்கப்பெறும் தூதன் குறியா லும், அத்துTதன் வரும்போது வைத்தியனுக்கிருந்த சர ஓட்டத்தின் (இடது, வலது முக்குகளுள் ஒன்ருற் சுவா சம் கூடியோ, அன்றி இரண்டாலும் சமமாகவோ செல்லு கின்றதாகிய இடகலை, பிங்கலே, சுழுமுனை என்ற) தன்மை களைக் கொண்டும் தூதன் வரும்போது வைத்தியன் தான் இருந்த கிலேமை (நெடுந்துயில், அறிதுயில், சும்மா படுத்திருத்தல், நிற்றல், கடத்தல் என்பன) கொண்டும் கணிக்கப்பெறும் சரக்குறிகளாலும், நோயாளியின் குணங்குறிகளாலும், கடித்த பாம்பின் இனம், விடத்தின் அளவு, தன்மை என்பவற்றை அறிந்து தமது வைத்தி யத்தை வெற்றிகரமாக்கி மனித குலத்திற்கு வாழ்வளிக் கின்றர்கள். இவ்வாறு சிறந்த நன்மையைச் செய்வன வாய் உள்ள பாம்புக்கடி பற்றிய கலேயினை அனைவரும் நன்கு அறிந்து பயன்கொள்ளத் தக்கதாக இது வளர்க்கப் படல் வேண்டும். வைத்தியாருடங்கள் யாவும் வெளி வருதலினுல் இந்தப் பெரு நன்மை யாவருக்கும் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
எந்த மருந்துக்கும் தீராத பெரிய விடத்தையும் மாற்ற வல்லது காக்கணங்கொவ்வைக் குளிகை’ என்னும் மருந்தென்பர். சிறந்த வைத்தியர் பரம்பரையினர் ஏழு தலை முறைகளாகக் கையாண்டு வெற்றிப்புகழை ஈட்டிய அம் மருந்தை விளக்கும் பாடல்களை மட்டக்களப்பு வைத்திய வாகடமொன்றிற் கண்டபடி இங்குத் தருகின்ருேம்.
காக்கணங்கொவ்வைக் குளிகை
1. * உரைதருகாக் கணங்கொவ்வை கிழங்கிலைகாய்
கொடிகொட்டை உள்ளி துத்தம்
விரைதருநற் பெருங்காயம் வசம்பிரதம்
கோந்தாளம் விரைவெண் காரம்
தரைபடுநேர் வாளமொடு துரிசியுமோர்
நிறைகூட்டிச் சம்பிரத்தின் சாற்றலாட்டி
நிறைபடுதூ தளங்காயின் அளவுருட்டி
இளவென்னீரில் உேட் கொள்ளே.

பாம்புக்கடி 889
2. 1 கொண்டவிடம் தீர்ந்ததற்பின் தயிரும்சோறும்
கொடுத்திடும் இக் குளிகை தன்னை
மண்டைஎருக் கலம்பாலிற் புடோரியாடி
மத்தியின்பின் மற்றதற்கும் மாருதாகில்
விண்டமுரு கம்புளியில் தயிரின் வேளே
மேனி விளங்கிய சாற்றில்
கண்தனில் அஞ் சனம்ஆட்டித் தீட்டு ;
விடம்கடிவாய் வரும்வாதை கண்ணிலுற்ருல்.
3. " உற்றிடுமா தளங்கொட்டை யின்சாறு
பிளிந்துகண்ணில் ஒழுக்கிய பின்னர்
சொற்றிடுமா தளம்பூவும் நற்ருெண்டை
இலையும் அரைத்து விழிகுழப்பூசில்
மற்றிதுபோல் மருந்துளதோ மண்டலி,நாகம்,
புடையன், வழலை, மூர்க்கன்
புற்றிலுள்ள கட்செவிகள் மாற்று தற்குப்
பொதுவான மருந்தாக நிற்குந்தானே.
4. “இந்த மருந் தின் பெருமை இருபிறப்பும்
ஒருபிறப்பாய் எய்தா நிற்கும் ;
அந்தணர்தம் குலத்துதித்த செகநாதன் ;
அருளரங்க நாதன், அவன்பால்
வந்திடும் அச்சுதன், வரதபண்டிதன்
எழுமுறையும் செய்துகை கண்டு
வந்த மருந்திது காலு
மாநாகம் கடித்திடினும் மாறிடுமே.”
இத்தகைய அற்புதமான மருந்துகளைத் தெரிவிக்கும் பாம்புக்கடி வாகடங்கள் மட்டக்களப்புத் தமிழகத்தா ரிடைக் கலந்து, மறைந்து வாழ்கின்றன. அவை முன் னேரால் அளிக்கப்பட்டுப் பரம்பரை பரம்பரையாகப் பயபக்தியோடு போற்றிப் பாதுகாத்துவரப்படும் தமிழ்ச் செல்வங்கள் அவை. தமிழினத்திற்கே பெரும் புகழைத் தேடித்தரவல்ல அக் கலைச் செல்வம் நம்மிடையே இருந்து மறைந்தொழிந்து போகாது பார்த்தல் நம் கடன்,

Page 220
9. வரலாறு
1. அரசியலும் தமிழர் குடியேற்றமும்
கிழக்கிலங்கையினை, வடபால் திருக்கோணமலைப் பகுதி என்றும், தென்பால் மட்டக்களப்புப் பகுதி என்றும் இரு பெரும் கூறுகளாக்கிக் கடலுட் பாய்வது மகாவலி கங்கையின் ஒரு கிளையான, வெருகல் கங்கைப் பேரியாறு. அவ்வாற்றின் தென்முகமாய்க் குமுக்கன் ஆறு வரையும் பரந்து நீண்டு கிடக்கும் வளமார்ந்த செழுநிலப்பகுதி முழுமையும் மட்டக்களப்பு என்று அழைக்கப்பெறும். அப்பெரு நிலப்பரப்பு முழுவதற்குமான ஆட்சி, நீதிபரி பாலனம் முதலியவற்றிற்குரிய சிறப்பிடமாயமைந்த தலை நகரமும் அதனல் மட்டக்களப்பு (Batticaloa) என்னும் பெயரால் வழங்கப்பெறுகின்றது.
மட்டக்களப்பு நகரமானது மட்டக்களப்பு வாவி கடலொடு கலக்கும் பகுதியின அண்டி அதனுள் ஏறக் குறைய நான்குமைல் சுற்றளவுடையதாய்க் காவிரி நடுவண் அமைந்த திருவரங்கம் போன்று விளங்குகின்ற புளியந்தீவு என்னும் தீவகத்தே அமைக்கப்பெற்றுள்ளது. அதனுல் மட்டக்களப்பு நகரத்தைப் பொது மக்கள் * புளியந்தீவு’ என்றே இங்கு வழங்குகின்ருர்கள். புலியன்

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 391
என்னும் வேட்ர்குலத் தலைவன் ஆண்ட காரணத்தினலே புளியந்தீவு என இத் தீவகம் பெயர் பெறுவதாயிற்று என்று விபுலாநந்த அடிகள் கூறுகின்றனர். இலங்கையின் பூர்வீகக் குடிகளுள் புளிந்தர் (Pulindas) என்ற ஒரு சாதியாரும் இருந்ததாக மகாவமிசம் கூறுதல் அடிகளார் கூற்றினுக்கு ஆதாரமாயிருக்கலாம். * மட்டக்களப்புத் தமிழகத்தின் ஊர்ப்பெயர்களுட் பெரும்பாலானவை இங் குள்ள மரம், குளம், காடு, முனே முதலான இயற்கைப் பொருள்களோ டொட்டியனவாகக் காணப்படுதலால், புளியமரங்கள் நிறைந்திருந்த இத் தீவும் அம்மரப் பெயரின் தொடர்பினலேயே புளியந்தீவு எனப் பெற்றிருக்கு மென்பதே பொருத்த மா கும் ' என்று இன்னெரு காரணமும் கூறப்படுகின்றது. மிகப் பழைமையான புளிய மரங்கள் பல இன்றும் புளியந்தீவிற் காணப்படுதல் அக் கூற்றிற்குச் சான்ருக உள்ளது.
மட்டக்களப்பு என்னும் பெயர் கிழக்கிலங்கைப் பகு திக்கு ஏற்பட்ட காரணம் பற்றிப் பலவேறு கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை அறிமுகவுரையுள் (பக். 2) கண்டோம். ஆயினும், அப் பெயர் எக்காலத்தில் ஏற் பட்டது என்பதற்குச் சான்று கிடைப்பதாயில்லே. சில பழைய குறிப்புக்களிலும், கேள்வி வரலாறுகளிலு மிருந்து மட்டக்களப்பு வாவியின் தென்கோடிக்கப்பால் உள்ள பகுதியே ஒல்லாந்தர்காலம் வரைக்கும் இப் பெயரால் அழைக்கப்பெற்ற தென்றும், ஒல்லாந்தர் தமது கப்பற் பிரயாண வசதிக்கேற்றதாக, வாவியின் வடக்கே உள்ள கடல் வாயினைத் தெரிந்து அவ்விடத்தி லிருந்த புளியந்தீவிலே கோட்டையினை (1684இல்) அமைத்த பின்னரே மட்டக்களப்பென்ற பெயர் வாவியின் வடபகுதிக்கும் சென்றதென்று அறிகின் ருேம். இலங்கையின் சிறப்பைக் கேள்வியுற்று வட இந்தியாவிலிருந்து திரண்டுவந்த முற்குகர் கூட்டத்தினர் ஈழத்தின் கிழக்குக் கடல் வழியாக வந்து உப்புநீர் ஏரி ஒன்றன் ஊடே நாட்டினுட் புகுந்து தம் ஒடங்களைச் செலுத்திச் சென்றனரென்றும், தெற்கு நோக்கி நீண்ட

Page 221
392 மட்டக்களப்புத் தமிழகம்
தூரம் சென்ற அவரது ஒடங்கள் தரை தட்டியதும் அவ்வேரியின் எல்லைக்குத் தாம் வந்துவிட்டதை அறிந்து அந்தப் பகுதிக்கு மட்டக் களப் பு’ (களப்புமட்டம்வாவியின் எல்லை) என்று பெயர் நிறுவினர் என்றும் வழங்குகின்ற ஒரு கேள்விச் செய்தி இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.
காடுகெடுத்து நாடாக்கி, ஏழு கிராமங்களை வெவ் வேறு இடங்களில் அமைத்துத் தம்மூரிலிருந்து மக்களைத் தொடர்ந்து குடியேற்றிச் சிற்றரசுகளை இந்நாட்டிற் கோலிய முற்குகரே மட்டக்களப்பு மண்ணை வளம் கொழிக்கச் செய்த முதல் மக்கள் என்று தெரிகின்றது. அவர்கள் இங்கு வரும்போது களப்பின் (மட்டக்களப்பு வாவியின்) கரை ஓரங்களிற் திமிலர் என்ற மீன்பிடி வகுப்பினர் குடியேறி வாழ்ந்தனரென்றும் அவர்களுடன் முற்குகருக்கு அடிக்கடி கலகங்கள் நிகழ்ந்தனவென்றும் தெரியவருகிறது. திமிலர் மட்டக்களப்பிற் தமக்கென முதலில் அரண் செய்துகொண்ட இடமே திமிலதீவு ? என்றும், அவர்கள் வலைகளைப் கட்டிப் பெருமீன்களை அகப்படுத்திய இடமே வலைகட்டிறவு’ என்றும் இக் காலம் வழங்கப்பெறும் இடங்களாம் என்பர். முற்குக ருக்கும் திமிலருக்கும் ஏற்பட்ட கலகங்கள் வளர்ந்து பெரும் போராயின. அக்காலம் இந்திய T விலிருந்து இலங்கைக்கு வந்து வியாபாரஞ் செய்துகொண்டிருந்தவ ரான பட்டாணியர்களின் உதவியையும் பெற்றுக் கொண்ட முற்குகர், திமிலரை வென்று அவர்களே வடக்கே வெருகல் கங்கைக்கு அப்பால் துரத்திவிட் டார்கள். இந்தப் போரின் சின்னங்கள் போன்று இன்னும் சில ஊர்ப் பெயர்கள் காணப்படுகின்றன. முற்குகர் பதுங்கியிருந்த தம் பகைவரைத் தாக்கிக்கொன்ற இடம் * சத்துரு கொன்ருன் ' எனவும், பகைவரை நாற்புறமும் துரத்திச் சென்ற படைகள் வெற்றியுடன் மீண்டு வந்து சந்தித்த பெருவெளி சந்திவெளி’ எனவும், அப் படை யினர் வந்து ஆறியிருந்து மகிழ்ச்சி கொண்டாடிய இடம் வந்தாறுமூலை’ எனவும், தமது சத்துருக்களைக் கொல்ல

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 393
உதவிபுரிந்த பட்டாணியரைக் குடியேற்றியதோடு, பகைவ ரான திமிலர் மீண்டுவந்து தம்மூர்களுட் குடிஏழு வகையிலும் அரண் செய்த ஊர் ஏருவூர்’ எனவும் இன்னமும் பெயர் மாருது வழங்கப்படுகின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்து கேள்வி வாயிலாக அறியப் பெற்றுவரும் இச் சாதியினரின் தொடர்பாக உள்ள இடப் பெயர் முதலியனவெல்லாம் தமிழிலேயே இருப் பதால் இவர்களது மொழி தமிழே என்றும் இவர்களது குடியேற்றம் தமிழ்க் குடியேற்றமே என்றும் இங்குக் கொள்ளப்படுகின்றன.
திமிலர், முற்குகர், பட்டாணியர் என்பாருக்கு முற் பட்டுக் கிழக்கிலங்கையில் மக்கள் வாழ்ந்தனரா என் பதும், அவர்களுக்குப் பின்னருங் குடியேற்றங்கள் இங்கு நடந்திருக்கின்றனவா என்பதும், கடந்திருப்பின் அவ்வாறு குடிபுகுந்தோர் யாவர் என்பதும் எல்லாம் இன்னும் ஆராய்ச்சிக் குரியவையே. இலங்கையினேடு தொடர் புடைய மிகப் பழங்காலத்து நிகழ்ச்சியினைக் கூறும் இராமா யணத்தின்படி இத் தீவின் தென்பால் இருந்த இலங்கா புரியைத் தலைநகராகக்கொண்டு இராவணன் என்பான் அரசியற்றியுள்ளான். அவன் அரக்கர் எனப்படும் அசுரர் வமிசத்தைச் சேர்ந்தவனென்று அந்நூல் கூறும். அசுரர் என் போர் அவறி (பாம்பு, நாகம்) என்னும் சாதியைச் சேர்ந்தவரென நாம் துணிவுறத்தக்க சான்று இருக்கு (36) u 35-ig, ' 3T GOOTLÜL UGD3F93ör spága (Rig. Veda. I 32:5,8etc.). அசுரர் என்று வழங்கப்பெற்றவர் திராவிடரே என்ற முடிபுக்கு இன்றைய ஆராய்ச்சியாளர் வந்துள்ளனர். இம் முடிபுகள், பலம் வாய்ந்த ஒரு தமிழ் மன்னனே இராவணன் என்றுகொள்ள வைத்துள்ளன. சைவ நாயன்மாரும் போற்றிப் பாடியிருக்குமளவுக்குச் சிறப்பு வாய்ந்த சிவபக்தனுக விளங்கிய இராவணன் வழிபா டாற்றிய திருக்கோணமலையும், திருக்கோயிலுங் கிழக் கிலங்கையில் இன்றும் விளங்குகின்ற பழம்பதிகள், இராவணன் வீற்றிருந்து ஆட்சி செய்ததாகக் கூறப்படும் இலங்காபுரியின் அழிந்துபோன சின்னங்கள் கடலுள் அமிழ்ந்திய நிலையில் திருக்கோயிலுக்குத் தென்கிழக்கே

Page 222
394 8 மட்டக்களப்புத் தமிழகம்
இன்னமுங் காணப்படுகின்றன. இவற்றை ஆதாரங்க ளாகக் கொண்டால் * நாகர்’ என்று அழைக்கப்பெற்ற தமிழ்க் குடிகள் ஈழத்தில் மிகப் பண்டுதொட்டே வாழ்ந் திருக்கின்றனர் என்று நாம் ஊகிக்கலாம். 'இழந்துபோன லெமூரியா’ எனப்படும் குமரிக் கண்டத்திலேயே ஏழ் தெங்கநாடு, ஏழ்பனைநாடு முதலிய நாற்பத்தொன்பது பழந்தமிழ் நாடுகளும் செழிப் புற் ருேங்கியிருந்தன வென்றும், அப்பெரு நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே இலங்கையும் இருந்திருக்கின்றது என்றும் நிலநூல் வல்லார் கூறுகின்றனர். அதன்படி பார்க்கின் இன்றைய தென் இந்தியத் தமிழர்க்குப் பிற்படாத பழமையாளர், அதன் தென்பால் இருந்ததாய்க், கடல் கொள்ளப்பட்டுப்போன செழுந்தமிழகத்தார் என்பது தெரியவரும். டஃறுளி ஆற்றுப் படுக்கையினையும், வளம் கொழித்த குமரிமலை யடுக்கங் களையுங் கொடுங் கடல் கொண்டபோது அதற்கு ஈடாக வடதிசைக் கங்கையையும், யமுனேயையுங்கொண்டு தமிழ் மன்னன் ஒருவன் ஆண்டானென்பர் இளங் கோவடிகள். இவைகொண்டு, ஈழநாட்டுப் பழங்குடியான தமிழினம் வடக்கே இந்தியாவிலிருந்து வந்துதான் இங்குக் குடியேறி இருத்தல் கூடும் என்பதற்கு மாருக இந்தியா விற்குத் தெற்கிலுள்ள ஈழப்பகுதிகளிலிருந்த தமிழர் இந்திய நாட்டிற்குக்கூடப் பரவி இருக்கின்றனர் என்று கொள்ளுதலுங்கூடும்.
இராவணனுடைய காலத்திலேதான் இலங்கையை நோக்கிய முதலாவது இந்தியப் படையெடுப்பு, இராமனது தலைமையில் வந்திருக்கின்றதென்பது இன்றுவரை தெளிந்த உண்மை. இராவணனுக்குப் பின்பு அவன் தம்பி விபீ டணன் இலங்கையை ஆண்டான் எனினும் அவனது பரம்பரைத் தொடர்ச்சி பற்றிய செய்தி எதுவும் நமக்குக் கிடைப்பதாயில்லை. இலங்கையின் பண்டைய வரலாற்றை ஒரளவு அறிவதற்குக் கருவியாக இன்று கிடைப்பது மகா வமிசம் என்னும் பாளிநூல். இலங்கையின் பூர்வீகப் பெருங்குடி மக்கள் இயக்கரும் நாகருமேயாவர் என அந் நூல் கூறும். கி. மு. 345ஆம் ஆண்டளவில் இலங்கை

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 395
வந்தடைந்த விசயனும் தோழர்களும் ஈழத்துப் பழங் குடிகளோடு கலந்தமையாற் தோன்றிய புதிய இனத் தவரே இன்றையச் சிங்களவராவர். விசயனுடைய பரம் பரையில் வந்த இலங்கை மன்னனுகிய சூரத்தீசன் காலத் திலே சேனன், கூத்திகன் என்னும் சேரநாட்டு வீரர் இருவர் பெரிய தமிழ்ப் படைகளோடு வந்து ஈழத்தைக் கைப்பற்றி ஏறக்குறைய இருபத்தீராண்டு ஆட்சி செலுத்தி யிருக்கின்றனர். அக்காலத்தே சேரநாட்டுத் தமிழ்க்குடிகள் பல ஈழத்திற் குடியேற்றப்படலாயின. உலகெங்கணும் நதிக்கரைகளிலேயே நாகரிகமும் பண்பாடும் பிறந்து வளர்ந்து மறைந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மை. ஈழநாட்டைப் பொறுத்தவரையிலும் அவ்வாறே கதம்பைநதி, களனிநதி, மாணிக்ககங்கை ஆகிய நதிக ளின் படுக்கைகளே முதலில் மக்கள் குடியேறி வாழ்ந்த இடங்களாக அறியப்படுகின்றன. ஆதியில் மக்கட் பெருக் கம் இலங்கையில் வளர்ந்திருந்த இடங்கள் தீவின் வடமேல் பகுதியும், மேல்பகுதியும், தென்கிழக்குப் பகுதியுமே யாகும். இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு வாயில்களால் அநுரதபுரியை அடைந்த வெளிநாட்டா ருக்கு, மலைப்பிரதேசங்களுக்கூடாகத் தெற்கு நோக்கிச் செல்லுதலிலும் பார்க்கச் சமவெளிகளின் வழியாகப், பரந்த சமவெளியாகக் கிடந்த கிழக்குப்பகுதிகளுக்குச் செல்லுதல் இலகுவானதாய் இருந்தது. அப்படி ஈழத்தின் கிழக்கு, தென்கிழக்குப் பாகங்களிலுள்ள நதிக்கரைகளிற் குடிபுகுந்த மக்கள் அங்குப் பல கிராமங்களை அமைத்து, வயல் நிலங்களை வகுத்து ஒழுங்குற வாழத் தலைப்பட்டனர் எனலாம். இவ்வாறு சேனன், கூத்திகன் காலத்திற் கொண்டுவரப்பட்ட சேரநாட்டுத் தமிழ்க் குடிகள் கிழக் கிலங்கையின் தென்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்க ளோடுங் குடியேறி வாழலாயினர் என்பதற்கு மட்டக் களப்பில் அவர்கள் தொடர்பால் எழுந் தன வாய் இன்றும் நிலவுகின்ற சேரநாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆதாரமாயுள்ளன. ஈழத்தின் மற்றைய பகுதிகளிற் காணப்படாத அளவிற்கு இங்கு நிலவும் அப்பெரு வழக்கங்களிற் சிலவற்றை இந்நூலின் அறிமுகவுரையுள் (பக். 8) காட்டியுள்ளோம்.

Page 223
396 மட்டக்களப்புத் தமிழகம்
அப்பால் அசேல மன்னன் காலத்தில் இந்தியாவி லிருந்து எல்லாளன் என்னுஞ் சோழ இளவரசன் தலைமையில் வந்த தமிழ்ப் படைஎழுச்சியினைத் தொடர்ந்து அடுத்த தமிழ்க் குடியேற்றம் இலங்கையில் நடைபெற்றது. அ ப்ப  ைடயெழுச்சி யின் போது வந்த சேர, சோழ, தேசத்து வீரர்கள் பலர் ஈழத்தின் பல பகுதிகளிலும் தங்கிவிட்டார்கள் என அறிகின்ருேம். நீதி நெறி தவருத முறையில் எல்லாள மன்னன் நாற்பத்தினன்கு ஆண்டுகள் இலங்கையை ஆண்டிருக்கின்றன். அவனது மீண்டகால நல்லாட்சி தமிழ்க் குடிகள் பலர் இலங்கை எங்கணும் குடியேற்றப்படுதற்குக் கூடிய வசதியை அளித்திருக்கிறது. பின்னர் கி. மு. 103இல், வத்த காமினி என்றழைக்கப் படும் வாலகம்பாகு இலங்கையில் ஆட்சி செலுத்திய போது தென்னிந்தியாவிலிருந்து தமிழ் வீரர் எழுவர் பெரும்படையுடன் வந்து ஈழத்தைக் கைப்பற்றி இருக் கின்றர்கள். அவர்கள் காலத்தில் நடந்த தமிழ்க் குடி யேற்றத்திலே பங்குகொண்டோரிற் பலர் பாண்டிய நாட்டு மக்களே என்று தெரியவருகின்றது. அதன் பிறகு வங்கநாசிகதீசன் ஆண்டகாலத்திலே இந்தியாவிலிருந்து வந்த தமிழ்ப் படையெடுப்பும், அதனேத் தொடர்ந்து இந்தியா சென்ற கயபாகுவினல் அங்கிருந்து தமிழ்க் குடிகள் பலரோடு பத்தினி வழிபாடு ஈழத்திற்குக் கொண்டு வரப்பட்டமையும் ஈழத்தில் நடந்த தமிழ்க் குடி யேற்றம் பலவற்றுள் முக்கியமான நிகழ்ச்சிகளாகும். வங்கநாசிகதீசன் காலத்தே (ஏறக்குறைய கி. பி. 1 10இல்) படையெடுத்து வந்த சோழ அரசன் கரிகாலன் ஆவான் என எண்ண இடமுண்டு. அவனே ஈழத்துச் சிறைப்பட்டோரையும் வேறு நாட்டுக் கைதிகளையுங் கொண்டு காவிரியாற்றுக்குக் கரைகட்டுவித்தவன் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுவ. இந்தப் படைஎடுப்பின் தொடர்பான செய்திகளைக் கூறும் சிங்கள நூல்களான இராசாவளிய, பூசாவளிய என்பவற்றுள் அம் மன்ன னது பெயர் காணப்படாவிடினும் குறிப்பிட்ட அக் காலத்திற் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட இலங்கையர், காவிரிக்கரையில் வைக்கப்பட்டார்கள் என்று அவை

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 397
தெளிவாகக் கூறுகின்றன. மிகுந்த பலம் வாய்ந்தவ னென்று பெரும் புகழுடன் வாழ்ந்த கரிகாற் சோழனையோ அவன் பின் வந்தோனேயோ இங்கிருந்து சென்ற கய வாகு வேந்தன் போரில் வென்று சிறைப்பட்டோரை மீட்கவும், மேலும் பன்னிராயிரவரான தமிழரைச் சிறைப்பிடித்துவரவும் வல்லவனுய் இருந்திருப்பான் என் பதற்கில்லை. சிலப்பதிகாரம் என்ற தமிழ் இலக்கியத் தின்படி கயவாகு மன்னன் தமிழ் வேந்தர்களுக்கு நண்ப ஞகவே இந்தியா சென்றிருக்கின்ருன் என அறிகின் ருேம். அந் நட்புத் தொடர்பினுல் தன்னுட்டிலிருந்து சிறைப்பட்டுச் சென்ருேரை மீட்கவும் ஈழத்திற் குடி யேற்றுதற்கென்று மேலும் பலரைப் பெறுதற்கும் முடிந்தவ னை கயவாகு அனைவரையும் இலங்கைக்குக் கொண்டு வந்திருக்கலாம். தலைவனுக்குத் தம் உயிரையுங் கொடுக்க வல்ல உண்மையான போர் வீரர்களாகவும், சிறந்த உழவர்களாகவும் விளங்கிய தமிழினத்தாருக்கு, நல்ல போர்ப் பயிற்சி பெற்ற அதிகமான வீரரை இல்லா தோரும், கமத்தொழிலை வளர்ப்பதிற் கருத்தூன்றியோரு மான சிங்கள மன்னரிடை நன்மதிப்பு மிகுதியும் இருந்ததில் வியப்பொன்றுமில்லை. கயவாகு ஈழத்துக்குக் கொண்டுவந்த தமிழ்க் குடிகளை அரிஸ்பற்று, தும்பறை, அழுத்துக்கோறளை என்னும் பகுதிகளிற் குடியேற்றின னென்று இலங்கை அரசியற் குறிப்புக்களா லறிகின் ருேம் அழுத்துக்கோறளையிற் குடியேற்றப்பட்ட மக்கள் மட்டக் களப்பு நதிக்கரைகளிலும், கிழக்குக் கடற்கரைப்பகுதி யிலும் வாழ்ந்த தமிழினத் தா ரோ டு கலத்தற்கு வாய்ப்புகள் பலவற்றை உடையவராயினர். கயவாகு கொண்டுவந்தோருள் இப் பகுதியிற் குடியேற்றப்பெற் ருேரும், சேரநாட்டவரே என்று தெரிகின்றது. ஈழத்திற் புகுத்தப்பட்ட கண்ணகி வழிபாடு மட்டக்களப்புத் தமிழ கத்திலேதான் அன்றுதொட்டு இன்றுவரை மிகச் சிறப் புடன் இருந்து வருகிறதென்பதைக் கண்ணகி வழிபாடு பற்றிய இந் நூற் பகுதிகளுட் கண்டு தெளியலாம்,

Page 224
398 மட்டக்களப்புத் தமிழகம்
சோழராட்சி தென்னிந்தியாவில் வலுவடைந்திருந்த காலத்திலும், முதலாம் இரண்டாம் பாண்டிய வம்ச ஆட்சிக்காலத்திலும் இலங்கைச் சிங்கள அரசருக்கும் இந்தியத் தமிழ் மன்னர்களுக்கும் இடையில் கட்பும், பகையும் காலத்திற்குக் காலம் வளர்ந்திருக்கின்றன. போரும் வியாபாரமுமாகிய தொடர்புகளினல் தமிழகமும் ஈழநாடும் மேலும் அதிக நெருக்கம் உற்றன. கடல் வாணிகமும் கடற்போர்களும் ஈழத்துக் கடற்துறைகளுக்கு முதன்மை கொடுத்தன. இவை காரணமாகக் கப்பற் போக்குவரத்திற்கு மிகுந்த வசதியாயிருந்த கிழக்கிலங்கைத் துறைகள் மிகுந்த செல்வாக்கடையலாயின. அதனல் திருகோணமலை, இலம்பித்துறை எனப்படும் ஈழம்துறை, கற்குடா, மட்டக்களப்பு, கண்டபாணத்துறை, கோமாரி என்னும் துறைமுகங்களை அடுத்து மக்கட் குடியேற்றமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தியத் தமிழ் மன்ன ருக்கும் ஈழத்துச் சிங்கள மன்னர்களுக்கும் இணைப்பினை ஆக்கி வளர்த்த இத்துறைமுகங்களே பிற்காலத்தில், அராபியா, பே ா ர் த் து க் க ல், ஒல்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாட்டாருடைய உறவையும் அவர்களிற் பலருடைய குடியேற்றத்தையும் மட்டக்களப்புக்கு அளிக்க லாயின.
திகவாபி (படம் 57)
ஏறக்குறைய 2500 ஆண்டுப் பழமைவாய்ந்து திகவாப் பியா, திகவாபி (DigaYapi), தீர்க்கவாவி என்னும் பெயர்க ளால் இன்று அழைக்கப்படுவதாய் இங்குள்ள இடமொன் றைப் பற்றிய குறிப்புக்கள் மட்டக்களப்பின் பழந்தமிழரது வரலாற்றேடு மிகுதியும் இணைந்திருக்கக் காண்கின்ருேம். இத் தீர்க்கவாவியினே மகாகந்தக்குளம் என்பர் மட்டக் களப்புத் தமிழகத்தார். புளியந்தீவின் (மட்டு நகரின்) தென்பால் நாற்பது மைல் தூரத்திலே உள்ள அக்கரைப் பற்றினுக்கு மேற்கில், ஏறக்குறையப் பதினைந்து மைலுக்கப் பால், கல்லோயாப்பள்ளத்தாக்கில் (Gal.oya-Walley)இருக் கின்ற மிகப் பழைமையான நகரமாகிய திகவாபி என்ற இந்த இடம் மட்டக்களப்பு எல்லேயினுள்ளேயே இன்றும்

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 399
காணப்படுகின்றது. கிறித்து பிறப்பதற்குச் சற்று ஏறக் குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்க கங்கைக் கரையினை அடுத்த மாகம என்ற நகரிலிருந்து உருகுணை நாட்டை ஆண்டவன் காவந்தீசன் எனப்படும் காகவன்னதீசனுகிய சிங்கள மன்னன். இலங்கைச் சரித் திரம் புகழுகின்ற துட்டகைமுனுவும் சதாதீசனும் அவ னுடைய இரு மக்களுமாவர். அவருள் இளையவனன சதா தீசன் திகவாபியைத் தலைநகரமாகக் கொண்டு உருகுண ரட்டையின் கிழக்கு, வடக்குப் பகுதிகளை ஆண்டான் என்பதும், திகவாபியைச் சூழ்ந்த பகுதிகளெல்லாம் பரந்த கெற்கழனிகளாயிருந்தன என்பதும் வரலாற்று உண்மைகள்.
கடந்த சில வருடங்களாகத் தொல் பொருளாராய்ச்சி யாளரது கவனத்தை மிகுதியும் ஈர்த்துள்ள இடம் இந்தத் திகவாபி. புத்தபெருமான் இலங்கைக்கு மூன்று முறை எழுந்தருளினரென்றும் அவ் வருகைகளின்போது திகவாபி உட்படப் பதினன்கு இடங்களுக்குச் சென்று அவற்றைப் புனித பதிகளாக்கினரென்றும் சமய அடிப்படையில் எழுந்த வரலாற்று நூலான மகாவமிசம் கூறுகின்றது. திகவாபிக்குப் புத்தபெருமான் வந்தார் என்பது பற்றிய குறிப் பின் உண்மை ஆராயப்படவேண்டிய ஒன்று. ஆயினும் கிறித்து பிறப்பதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே திகவாபி ஒரு புனித தலமாக இருந்ததென்று கி.பி. 5ஆம்நூற்ருண்டில் மகாவமிசத்தை எழுதிய ஆசிரியர் கொண்டுள்ளார். எவ்வாருயினும் கி. மு. இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவனுன காவந்தீசன் காலத்திலே திகவாபி மிக்க சரித்திரப்புகழ் வாய்ந்த இடமாக இருந் திருக்கிறதென்பதை நாம் ஏற்றுக்கொள்ளுதல் வேண் டும். இன்று திகவாபிப் பகுதியிற் காணப்படும் தாது கோபங்கள் எக்காலத்தவை என்று அறியமுடியவில்லை. அங்கிருந்து ஆட்சிசெய்த சதாதீசனும் அவனுக்குப்பின் வந்த சிங்கள மன்னரும் எகுல (EBULE) என்னும் இடம் வரைக்கும் உள்ள பகுதியை ஆண்டார்கள் என்று மகா வமிசக் குறிப்புக்களாற் கொள்ளக் கிடக்கின்றது. மட்டக் களப்பு நகரின் வடபால் எட்டுமைல் தூரத்தே உள்ள ஏருவூர் என்னும் சிறிய நகரம் இருக்கும் பகுதி இன்றும்

Page 225
4 OO . மட்டக்களப்புத் தமிழகம்
எகுலப்பற்று எனவே அழைக்கப்படக் காண்கின்ருேம். பண்டு முற்குகர், திமிலர் என்பாருக்கிடையில் நடந்த கலகங்களின் போது ஏற்படுத்தப்பட்ட ஏருவூர் என்னும் கிழக்கிலங்கைப் பகுதியே எகுலப்பற்று என்று சிங்கள மன்னராற் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, என்று கொள் வதிற் தவறில்லை. இக்குறிப்பினுலும் மேலும் பல சான்று களினலும் மட்டக்களப்பின் பெரும்பகுதி உருகுணை ரட்டையினைச் சேர்ந்திருந்ததென்றும், பண்டைக்காலத் திருந்தே மக்கட்குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் அது உடையதாக இருந்திருக்கிறதென்றும் அறிகின் ருேம், அம்பாரைப்பகுதியிலுள்ள கொண்டவட்டவான் என்னும் குளக்கரையிலே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்று அப்பகுதியின் பழங்கால வயல் வளம், நீர்ப்பாசனத் திட்டம் என்பவற்றைப்பற்றித் தெளிவாகக் கூறுகின்றது. தப்புலா மன்னன் காலத்தது என்று கருதப்படுவதான அக் கூற்றுக்கள் பொறிக்கப்பட்ட கற்றுாணே (படம் 10) அம்பாரையில் உள்ள புதிய அரசாங்க அலுவலகத்தின் முன்றிலிற் தக்க பாதுகாப்புடன் நிறுவியிருக்கின்றர்கள். இதற்கு உடைய சிங்களமன்னன் 5ஆம் தப்புலனுக இருக்கலாம்.
சதாதீசன் காலத்திலே வட உருகுணப் பகுதியிற் தமிழ் மக்கள் பலர் குடியேறியிருந்தனர் என்பது வேறு பல குறிப்புக்களாலும் நன்கு அறியப்படுகின்றது. அநுரத புரியில் இருந்து அரசாண்ட எல்லாளமன்னன் குடிமக்க ளாற் பெரிதும் போற்றப்பட்ட நல்லாட்சியினைச் செய்த ஒரு தமிழனகவே இருந்தபோதிலும், ஈழநாட்டைக் கைப் பற்றவந்த ஒரு அன்னியனென்றே கொண்டு அவனை எதிர்த்துத் துரத்துவதே முறையானது என்ற தாய் நாட்டுப் பற்றேடு சதாதீசனது ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதி களில் வாழ்ந்த தமிழ் மக்களும், கைமுனுவின் படையிற் சேர்ந்திருக்கிருர்கள் என்பதை, கைமுனுவின் படை வீரரிற் தமிழரும் பலர் இருந்தார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பு உறுதிப்படுத்துகின்றது. மாகமம் என்னும் இடத்திலிருந்து எல்லாளனுக் கெதிராகக் கைமுனுவின்

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 401
தலைமையிற் புறப்பட்ட பெரும் படை வடக்கு நோக்கி மகாவலி கங்கையின் கிழக்குக் கரைவழியே சென்றது. அக்காலத்தே பொலநறுவைக்கு விஜிதபுரம் என் ருெரு பெயர் வழங்கப்பட்டிருக்கக் காண்கின்ருேம். விஜிதபுரத் திற்கு அணித்தாய் மகாவலிகங்கையின் கிழக்குக்கரையில் கச்சகாதீத்த (Kachchahatitha) என் ருேர் ஊர் இருந்தது. கைமுனுவின்படை மகியங்கனையிலிருந்து கச்சகாதீத்த வுக்கு வரும்வழி எல்லாம் தமிழர் குடியேறி இருந்தனர் என்பதும், அவருட் பலர் கைமுனுவின் படைகளோடு சேர்ந்தனர் என்பதும் வரலாற்று உண்மைகள். இதனல் கி. மு. இரண்டாம் நூற்றண்டிலே மகாவலிகங்கையின் கிழக்கில் கச்சகாதீத்த என்னுமிடத்திலிருந்து தீகவா வி வரையிலுமிருந்த பெரு நிலப்பரப்பு முழுவதிலும் பெரும் பாலுந் தமிழ்மக்களே குடியிருந்தார்கள் என்று திட்டமாக நாம் கொள்ளலாம்.
தீகவாவியினைத் தலைநகராகக் கொண்டிருந்த கிழக்கு, வடக்கு உருகுணை இராச்சியப்பகுதியாகவே கிழக்கிலங் கையின் தென்பகுதியான மட்டக்களப்பு நெடுங்காலம் இருந்திருக்கின்றது. ஏறக்குறைய கி. மு. 2ஆம் நூற்ருண்டு முதல் கி. பி. 8ஆம் நூற்ருண்டுவரையுமுள்ள ஒராயிரம் ஆண்டு காலத்துக்கு இக்கிலையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நீண்டகாலப்பகுதியில் தமிழ்ச் சிற் றரசரும் பிரதானிகளுமான பலர் சிங்கள மன்னரின் கீழ்க் குறுநில மன்னராயிருந்து மட்டக்களப்பினை ஏறக்குறைய ஏழு உட்பிரிவுகளாகக் கொண்டு வேறு வேறு இடங்களி லிருந்து ஆண்டிருத்தல் கூடும் என்று காரைதீவு, தம் பிலுவில், வீரமுனை என்னும் ஊர்களில் உள்ள கண் ணகையம்மன் கோயில்களையும், கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் கோவில், திருக்கோவிற் சித்திர வேலாயுத சுவாமி கோயில் ஆகியவற்றையும் பற்றிக் கூறு வனவாய் அங்கங்குள்ள பட்டயங்களாற் தெரிகின்றது.
கி. பி. 8ஆம் நூற்ருண்டிலே தீகவாவி 2ஆம் மகிந்
தனல் அநுரதபுர ஆட்சியின்கீழ்க் கொண்டுவரப்பட்ட
பின்னர்த், தொடர்ந்து இரண்டு நூற்றண்டுகளுக்கு அந்
մ) - 26

Page 226
402 மட்டக்களப்புத் தமிழகம்
நகரம் அநுரதபுரியிலிருந்தாண்ட மன்னரின் கீழ்ப்பட் டிருந்தது. அநுரதபுரி இராசரட்டையின் தலைநகரமான படியால் தீகவாவி கைப்பற்றப்பட்டதோடு இராசரட்டைப் பகுதியின் எல்லேயும் விரிவடையலாயிற்று. அப்போது உருகுணேயின் வடக்கு இராச்சியம் முற்றும் இராசரட் டையின் எல்லேக்குள்ளான தோடு, இராசரட்டையின் தெற்கெல்லே கல்லோயா நதிப்படுக்கையாகவும் மாறிற்று. இராசரட்டையில் இருந்த தலைநகரங்களான அநுரதபுரி, பொலனறுவை என்னுமிடங்கள் அடிக்கடி இந்தியத் தமிழ் மன்னரின் நேரடிப் படைஎடுப்புகளுக்கு உள் ளானவை யாதலால் அவற்றேடு சேர்க்கப்பட்ட மட்டக் களப்புத் தமிழகத்தாரது வாழ்வில் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் சாயல்கள் அதிகமாகப் படியத் தொடங்கின. கி. பி. 10ஆம், 11ஆம் நூற்ருண்டுகளிலே ஈழத்தை நோக்கிய சோழரது படையெடுப்புக்கள் தீக வாவியையும் நேரடியாகத் தாக்கினமையாற் சிங்களமன் னர் அந் நகரை முற்றிலும் விட்டுச்செல்லவேண்டியவ ராயினர். இலங்கையிற் சோழராட்சி நிலவிய (கி. பி. 1017 - 1070) காலத்திற் கிழக்குக் கடலாதிக்கம் முற்றும் அவர் கைப்பட்டிருந்தமையால், மட்டக்களப்புத் துறை முகங்கள் அக்காலத்தே பெரிதுஞ் சிறப்புற்ருேங்கின. சோழ தேசத்தார்க்கு மட்டக்களப்புத் துறைமுகங்களின் வழியாக ஈழத்தின் கிழக்குப் பகுதியினருடன் நடந்த வாணிகமும் வளர்ந்து சென்றது. அவ்வுறவினுற் தமிழ் மொழியும், சைவமும், சிற்பம் முதலான கலேகளும் புதிய பொலிவுபெற்று மட்டக்களப்பெங்கும் ஓங்கின. அக்காலச் சோழநாட்டுச் சித்திரசிற்ப வேலைப்பாடுகளைக் கொக் கட்டிச்சோலைத் தான் தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள பழமையான தேர்களில் நாம் இன்றும் காணலாம். மட்டக் களப்பை கலி. 4 1 15-இருந்து (கி.பி. 1013 தொடக்கம்) ஆண்ட மன்னனன கதிர்சுதன் என்பான் சோழராட்சி யின் கீழ் மட்டக்களப்பினே ஏற்றுக்கொண்டிருக்கின்ருன். சோழப் பேரரசின் பிரதிநிதியாக அவன் இங்கு வைக்கப் பட்ட பின்னர் இராசராசசோழப் பெருமன்னனைப் போன்று, குடிகளின் நலனைப் பெரிதும் பேணி, பெளத்

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 403
தாலயங்களையும், சிவாலயங்களையும் மன வேறுபாடின்றி நன்கு செப்பனிட்டு நாட்டின் நீர்ப்பாசனம், சமயவாழ்வு என்பவற்றிற் கருத்தூன்றிச் செங்கோல் செலுத்தி வக் தனன். இச் சிறப்புகளால் கதிர்சுதனையும் ** இராசராசன் என்றே வடநாட்டுப் புலவர்கள் பாடினர் ’ என்று இங் குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இம் மன்னனதும், பின்னர் அரசுகட்டிலேறிய அவனது மகனதும் காலத்தில் மட்டக்களப்பு நாடு தெற்கே மாணிக்ககங்கைவரை பரந்து, சோழப் பேரரசின் கீழ்ப்பட்ட தனித்தமிழ் இராச் சியமாக விளங்கியிருக்கிறது. இதனல், தமிழர் கைப் பட்டுவிட்ட தீகவாவியானது தொடர்ந்து சிங்கள அரசரின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாவதாயிற்று. அப்பால், 11ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் 1ஆம் விஜயபாகு என்னும் சிங்கள மன்னன் தீகவாவியினையும் அதனைச் சேர்ந்த பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டான். அதன் பின்னர்ச், சிங்கள மன்னரின் கையிலே தீகவாவி இருந்த சிறிய காலப்பகுதியிலே, 12ஆம் நூற்றண்டில் மகா பராக் கிரமவாகுவினல் அது ஆளப்பட்டிருக்கின்றது. மட்டக் களப்பில் இன்று காணப்படும் குளங்களிற் பல மகா பராக்கிரமவாகுவினல் அக் காலத் தே நன்முறையிற் திருத்தி அமைக்கப்பட்டிருத்தல் கூடும்.
பிற்காலம்
கி. பி. 13ஆம் நூற்றண்டிலே கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்குப் படை எடுத்துவந்த மாகன் காலத்தோடு மட்டக்களப்புத் தமிழ் வரலாற்றிலே பெரிய மாறுதல்கள் தோன்றலாயின. கலிங்க மாகனுடன் சோழ தேசத்தி லிருந்தும் பாண்டிநாட்டிலிருந்தும் வந்து கிழக்கிலங்கைத் துறைமுகங்களால் உட்புகுந்த தமிழ்ப் படைகளுக்கு மட் டக்களப்புத் தமிழகத்திலே மிகுந்த உற்சாகமான வர வேற்புக் கிடைக்கப்பெற்றது. கலிங்க மாகனை, ஒரு தமிழ் மன்னன் என்றே மட்டக்களப்புக் கோவில்களில் இருக்கும் பட்டயங்கள் கூறுகின்றன. அம்மன்னனே 8 மா கோன் ’ என்ற பெயரால் இங்குள்ளோராற் தற்போது குறிக்கப்படு பவனுவான். பட்டிருப்பிற்கருகாமையிலுள்ள போரைதீவுச்

Page 227
404 மட்டக்களப்புத் தமிழகம்
சித்திர வேலாயுதசுவாமி கோவிலை இவனே புதுக்கியிருக் கின்றன். அக்கோவிலுக்கும் கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றிச்சுவரர் கோவிலுக்கும் நெல்வயல்கள் பல வற்றை மானியமாக வழங்கிய இம்மன்னனது பிரதான அரசிருக்கை பழுகாமம் என்னும் ஊராகும். மத்திய மலை நாடுகளிலிருந்து பழுகாமத்துக்கு வந்த நீண்ட வழியான கண்டி அதர் (இந்நூற் பக்கம் 17, 157), இவன் காலத் திலே பெரிதும் புழக்கம் உறலாயிற்று. சிங்களச் சிற் றரசர்களிடம் இருந்து மலைநாட்டுப் பொருள்கள் பல இவ்வழி மூலமாக வந்து அவனது அரண்மனைக் களஞ்சி யங்களை நிறைத்தனவாம். பாண்டிய மன்னர்களது பெரு நட்பினைப் பெற்றிருந்தவனுன மாகோனுடைய ஆட்சிக் காலத்திலே, தென்னிந்தியாவில் இரண்டாம் பாண்டிய சாம்ராச்சியம் வலுவுடன் இருந்தமையால், கிழக்கிலங் கைத் தமிழகத்தில் நடந்த அவனுடைய தமிழரசாட்சியை எதிர்க்கச் சிங்கள மன்னருக்குத் துணிவு உண்டாகவில்லை. தென்னிந்தியாவில் அக் காலத்தைத் தொடர்ந்தெழுந்த நாயக்கர் ஆட்சியும் சிங்கள மன்னரை ஈழத்தின் வடக்குப் பகுதியில் தலைஎடுக்க முடியாமற் செய்தது. சிங்கள அரசர் மெல்ல மெல்ல மலையரட்டைக்குச் சென்ற காரணமும் இதுவே ஆகலாம்.
கிழக்கிலங்கையின் பெரும்பகுதி முற்காலத்தில் உருகுணரட்டையிலும், இலங்கையிற் சோழர் ஆட்சி நடைபெற்றபோது (கி. பி. 10 17 - 1070) பெரும் அளவுக்குச் சோழர் செல்வாக்கிலும் அடங்கிக்கிடந்தது. 1215இல் நடந்த கலிங்க மாகனது படையெடுப்பின் பின்னர் கிழக்கிலங்கையின் தலைநகரங்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டாலும் சிலகாலம் மீண்டும் தனித் தமிழரசு மட்டக்களப்பில் அக்காலே விளங்கி இருக்கின்றது. 13ஆம் நூற்ருண்டுக்குப் பின்னர் அது பழையபடி சிங்களவரின் ஆட்சியின்கீழ்க் கொண்டுவரப் பட்டிருக்கிறது எனினும், தீகவாவி இடைக்காலத்தே பாது காவல் குறைந்து கைவிடப்பெற்றிருந்தபடியால் கண்டியி லிருந்துகொண்டே சிங்கள மன்னர் மட்டக்களப்பினை ஆட்சி செய்தனர். அப்பால் கோட்டை இராச்சியத்தின்

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 405
பிரிவு (1521) வரை கோட்டை மன்னனே இலங்கை முழுவதிற்கும் சக்கரவர்த்தி போன்று கணிக்கப்பெற்று வந்ததனல், சிங்களவரின் ஆட்சியே இங்கும் நிலவி இருக்கலாகும். எனினும் 13ஆம் நூற்றண்டுக்கும் 15ஆம் நூற்ருண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டக்க ளப்பிலே மிகுதியும் பலம்குன்றியே அவராட்சி இருந்த தாகத் தெரிகின்றது.
16ஆம் நூற்ருண்டுக்குப் பின்னர் இப்பகுதி முற்றும் மீண்டும் கண்டி அரசனின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. அதன்பின், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயராகிய மேலே நாட்டினர் தொடர்ந்து ஈழத்திற் கால்வைக்கத் தொடங்கிய பிற்கால வரலாறுகள் பலரு மறிந்தவையே. அவ்வேற்றவர் கிழக்குக் கடல்வழியாக வந்தபோது மட்டக்களப்புத் துறைமுகங்களை நன்கு பயன்படுத்தி அவற்றினை இந் நாட்டினுட் புகுதற்கு வழிக ளர்கக் கொண்டனர். மட்டக்களப்பு முதலான கிழக் கிலங்கைத் துறைமுகங்களுக்கு வரும் அன்னியர்களைத் துறைமுகங்தோறும் அங்கங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவற் படையினர் கண்டி மன்னனிடம் இட்டுச் சென்ற நிகழ்ச்சிகளை நாம் தெளிவாக அறிந்துகொள்ளப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவைகளை மட்டக்களப்புத் துறைமுகங்களைப்பற்றி இந்நூலில் வேருகவுள்ள பகுதி யினுள் ஒரளவு விரிவாகக் காண்போம்.
திருக்கோவில்
மட்டக்களப்பின் அரசியலைப் பொறுத்தமட்டில் யாழ்ப் பாணத் தமிழரசிற் காணப்படுவதுபோன்ற திட்டமான அரசியலாதிக்கம் இங்குள்ளாருக்கு இருந்ததாகக் கூறுதல் முடியாது. குறிப்பிடத்தக்க ஆற்றல் வாய்ந்த தமிழ் மன்னர் பரம்பரை ஒன்று மட்டக்களப்புக்கெனத் தனி யாக இல்லாமற் போனமையே அதற்குக் காரணமா யிருந்திருக்கலாம். எனினும் பழந்தமிழ்க்குடிகளாய் இங்கு வாழ்ந்த மக்களும் தமிழ்ச் சிற்றரசர்களும் தமிழ்க் கலைத்தொடர்பு, பண்பாட்டுத் தொடர்பு முதலானவை தம் காட்டைவிட்டு நீங்காதவாறு பாதுகாத்து வந்திருக்

Page 228
4O6 மட்டக்களப்புத் தமிழகம்
கின்றனர். சமயம், சிற்பம், இசை, நடனம் என்ற கலை களில் மக்கள் நல்ல ஆர்வங்கொண்டிருந்தனர். அதற் கேற்ப மன்னரும் தேவை ஏற்பட்டபோது இந்தியா முதலான நாடுகளிலிருந்து வல்லோரை வரவழைத்து இக்கலைகளை வளர்த்துள்ளனர். மட்டக்களப்புத் தமிழரது சிற்பக்கலை ஆர்வத்துக்குத் திருக்கோவிலில் அமைந்த மிகப் பழங்காலத்து இந்தியச் சிற்ப வேலைப்பாடுகள் ஒரு காட்டாக இருந்திருக்கின்றன. சோழர்களால் ஆதியில் இருமுறைகளும், பின்னர்ப் பாண்டியரால் ஒரு முறையும் அக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கி. பி. 1315க்குப் பிறகு பாண்டிய நாட்டினர்க்கும் மட்டக்களப்புத் திருக் கோயிலுக்கும் கலையுறவு பற்றிய நேரடித் தொடர்புகள் ஏற்பட்டமைக்குச் சான்றுகள் இருக்கின்றன. திருக் கோவிலை அடுத்துத் தம்பிலுவில்லில் உள்ள கண்ணகி யம்மன் கோவிலுடனும் அத் தொடர்பினைப் பாண்டியர் கொண்டிருந்தமை சாத்தியமான ஒன்றேயாகும். திருக் கோயில் ஆலய அமைப்புப் பற்றிய வரலாற்று வருண னைகளை மட்டக்களப்பு மான்மியம் என்னும் ஒரு நூலுள் விரிவாகக் காணலாம். இந்நாட்டின் அரசியல் ஒழுங்கினை ஒருவாறு தொகுத்துக் கதைபோற் கூறும் பழமையான, மட்டக்களப்பு வரலாற்று நூல் மட்டக்களப்பு மான்மியம். அந்நூற் சிறப்புக்களையும் அதனுட் காணப்படும் அரசியற் குறிப்புக்கள் முதலியவற்றையும்பற்றிப் பின்னர்க் காண் போமாயினும், திருக்கோயிற் பணிகள் பற்றிய பகுதியை மட்டும் சந்தர்ப்பம் நோக்கி இங்கு எடுத்துக் காட்டல் பொருத்தமானதாகும் என்று எண்ணுகிறேன்.
மட்டக்களப்பிலுள்ள முருகன் ஆலயங்களைப்பற்றிய குறிப்புகளிற் காணப்படும் செய்தி ஒன்றை முதலில் அறிதல் இங்குப் பயன் தருவது. சுப்பிரமணியருடைய ஆணைப்படி சூரனைக் கொன்று வெற்றியுடன் மீண்ட வேலானது உக்கிரத்தோடு வரும் வழியில் எதிர்ப்பட்ட வாகூர மலையை இரு கூறுகளாய்ப் பிளந்தெறிந்து, கடலில் மூழ்கியபின் மூன்று கதிர்களைச் சிந்திச் சென்றதென்றும்
வேலுருக் கொண்ட அக்கதிர்கள் மூன்றும் முறையே
உகந்த மலை உச்சியிலும், திருக்கோவிலில் ஒரு வெள்ளை

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 4O7
நாவல் மரத்தின் மீதும், மண்டூரில் ஒரு தில்லை மரத்தின் மீதும் தங்கி இருந்தன என்றும் அவ்வவ்விடங்களில் வாழ்ந்த மக்கள் (யாவரும் வேடரே என்பது கதை) வியப் புடன் நோக்கிக் கொத்துப் பந்தர்களால் ஆலயம் அமைத்து வழிபட்டனர் என்றும் கூறப்படுகின்றது. உகந்தமலே உச்சியில் அந்த இடத்தை அடுத்து உண்டான தீர்த்தக் கிணறும் (படம் 60), கோயிலும் பத்திக்குரிய பழம் பெருஞ் சின்னங்களாக இன்றும் இப்பகுதி மக்களாற் போற்றப் பட்டுவருகின்றன. மண்டூர்க் கந்தசாமி கோவிலும் (படம் 4) அத்தகையதே. இவ்விரண்டிடத்துக் கோவில் களையும் பார்க்க வரலாற்ருேடு தொடர்புடைய செய்தி களே அதிகம் கொண்டிருப்பது திருக்கோயிலாகும். திருக் கோவிலில் வேடர்களால் இலை குழைகளைக் கொண்டு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலைத் தமிழரின் இரண்டாம் படை எழுச்சியின்போது வந்த சோழநாட்டு மன்னர் எழுவர் கல்லின ற் கட்டி முடித்தனரென்றும், வேடரது பந்தருக்குள் வடக்கு முகமாக வீற்றிருந்த வேலா னது புதிய கற்கோயிலுட் கிழக்கு முகமாகத் திரும்பிவிட்ட காரணத்தினுல் திருக்கோவில் (திரும்பிய கோவில்) என்று பெயரிட்டாரெனவும் திருக்கோவில்பற்றிய பதிகம் ஒன்று கூறும். இங்குத் தமிழரின் இரண்டாம் படை எழுச்சி என்றது வாலகம்பாகு காலத்தே (கி.மு. 103இல்) தமிழர் எழுவர் இலங்கைக்குப் படை எடுத்துவந்த செய்தியைக் குறிப்பிடுவதாகலாம்.
மட்டக்களப்பு மான்மியத்தின்படி திருக்கோவிலின் பழைய பெயர் நாகர் முனை என்றும், கோவில் அமைக்கப் பட்ட பின்னர் அக் கோவிற் சிறப்பால் இடப்பெயரும் திருக்கோயில் என மாறிற்று என்றும் அறிகின்ருேம். மட்டக்களப்பினைப் பிரசன்னசித்து என்பான் ஆண்ட காலத்தில் கலிங்க குமரனுன புவனேய கயபாகு தன் மனைவியுடன், மக்கட்பேறில்லாக் கவலையால் வாடித் தலுயாத்திரை மேற்கொண்டு இராமேச்சுவரம், திருக் கேதீச்சரம், திருக்கோணமலை என்னும் புண்ணியப் பழம் பதிகளைத் தரிசித்துக்கொண்டு நாகர்முனையில் உள்ள வேற்பெருமானின் சிறப்பினைக் கேள்வியுற்று மட்டக்

Page 229
408 மட்டக்களப்புத் தமிழகம்
களப்புக்கு வந்தான். அவனது மனைவியாகிய தம்பதி நல்லாள் ஒரு சோழ அரசன் மகளாவாள். நாகர்முனைச் சுப்பிரமணியர் ஆலயத்தை நல்லமுறையில் அமைத்தற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை அவர்கள் வரவாற்பெற்ற மட்டக்களப்பு மன்னனும், புவனேய கயவாகுவுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து அவன் துணையை வேண்டி ஞன். அதற்கிணங்கித், தம்பதிநல்லாளின் தந்தையான திருச்சோழனுக்குப் புவனேய கயவாகு நல்ல சிற்பியர் முதலானேரை அனுப்பிவைக்குமாறு விட்ட ஓலையின்படி கைதேர்ந்த சிற்பநூல் வல்லார் பலர் நாகர்முனைத் துறை முகத்தில் வந்திறங்கினர். சிற்பக் கலை யின் சிறப்பை எடுத்து விளக்குவதான திருக்கோவிலின் திருப்பணியும் நன்முறையில் விரைவிலே நிறைவேறலாயிற்று. மட்டக் களப்பிற் சிறப்புற எழுந்த முதலாவது பெருங்கோயி லாதலால் திருக்கோவில் என மன்னன் அதற்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தான். இத் திருப்பணியைச் செய்வித்துக் கொடுத்த புவனேய கயவாகுவுக்குக் கைம்மாறு செய்ய விரும்பிய மட்டக்களப்பு மன்னன் தனது நாட்டின் தென் பகுதியைத் தனி அரசாக்கி அவனுக்கு அளித்தனன். * தெற்கு மாணிக்க கங்கையும், வடக்கு மக்கனல் வெட்டு வாய்க்காலும், மேற்குக் கடவத்தையும், கிழக்குச் சமுத் திரமுமாய்க் கொண்ட ஒரு கில ப் பகுதி  ைய வகுத் தமைத்துக் கவடாமலேயில் மாளிகையுங் கோட்டையுங் கட்டிக்கொடுத்துப் புவனேக கயவாகுவை அங்கிருந்து அரசாள வைத்தான். புதுவதாய் அமைக்கப்பெற்ற நகருக்குப் புன்னரசி' என்று பெயரும் இடலாயினன். இது நடந்தது கலிபிறந்து 3130ஆம் ஆண்டில் (கி. பி. 28இல்) என்றும், இந் நிகழ்ச்சிகள் யாவும் கல்வெட்டில் அம் மன்னனற் பொறிக்கப்பெற்றன வென்றும், மட்டக் களப்பு மான்மியம் கூறும். புன்னரசி என்ற பெயர் பின்னர் உன்னரசுகிரி என்ருயிற்று. மட்டக்களப்பு மான்மியத்தின் இக் கூற்றுப்படி கிறித்து பிறந்த காலத் திலேயே திருக்கோவில் நன்முறையில் அமைக்கப்பட் டிருக்கின்றது. கோவிற்பதிகம் ஒன்றிற் கண்டதாக நாம் முற்கூறிய செய்தியின்படி கிறித்து பிறந்ததற்கு முந்திய

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 4O9
முதல் நூற்ருண்டிற் கோவில் எழுந்திருத்தல் வேண்டும். இரண்டிற்கு மிடையில் உள்ள காலவேறுபாடு ஏறக் குறைய நூறு ஆண்டுகளாயினும் இரு கூற்றுக்களின்படியும் இந்தியச் சிற்பியரால் அமைக்கப்பெற்ற திருக்கோவிலின் ஈராயிரம் ஆண்டுப் பழைமை உறுதிபெறுகின்றது.
புவனேய கயவாகுவுக்குத் திருக்கோவிற் சித்திர வேலாயுத சுவாமியின் அருளாற் பிறந்த மகனன மேக வருணன், தந்தைக்குப்பின் கலி. 3150இல் (கி. பி. 48இல்) மனுநேய கயவாகு என்னும் பெயரோடு உன்னரசுகிரி இராச்சியத்தின் பட்டத்திற்கு வந்தான். தந்தை செய்த திருக்கோவிற்பணியை மேலுஞ் சிறப்பித்துச் செப்பனிட எண்ணங்கொண்டனன். செப்பனிடக் கருதிச் சோழ காட்டுச் சிற்பிகளை அழைத்து ஏழு தட்டுத் தூபியும், மதில் மண்டபங்கள், மாதர்சாலை, வாகனவீடு, கோபுர வாசல், தங்கத்தகடு பூட்டிய கொடித்தம்பம் என்பவற்றை அமைத்து தூபியின் மேலே ஏழு தங்கக் குடமும் நிரைத்து ஆறு வீதியும் அலங்கரித்து அந்தணர்களால் அபிடே கங்கள் செய்வித்து , வங்கம், கலிங்கம், சிங்கம், சோழ, பாண்டிநாட்டு மன்னர்களுக்கெல்லாந் தான் செய்த திருப் பணிச் சிறப்பினையும் அறிவித்தான். அவர்களும் மகிழ்ந்து விலை உயர்ந்த பல பொருள்களை ஏழு இராசாக்களிடம் (இது ஏழு பிரதானிகளாக இருக்கலாம்) கொடுத்து நாற்பது தி  ைற க் குடி களை யும் உடன் அனுப்பினர். யாவரும் இந்தியாவிலிருந்து கப்பலேறித் திருக்கோயிலுக் கருகே உள்ள களப்பில் (இக் களப்பு இன்றும் உள்ளது) இறங்கினர். கோவில் விழாவினைச் செவ்வனே நடத்தி வருதல் வேண்டுமெனத் தம்மை எ தி ர் கொண் டு வாழ்த்திய அந்தணர்களைத் தம்பட்டர்’ என ஏழு அரசரும் போற்றினர். * தம்பட்டர்’ என்பது அக்காலத்தே சோழமன்னர்களாற் கொடுக்கப்படும் உயர்ந்த ஒரு கெளரவப் பட்டமாக இருந்திருக்கலாம். திருக்கோவிற் பணியைச் செய்த மனுகேய கயவாகு காலத்திலிருந்த மட்டக்களப்பு மன்னன் நாம் முன்பு கண்ட பிரசன்ன சித்துவின் மகனை தாசகன் ஆவான். மட்டக்களப்பு மன்னனுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியிலேயே திருக்

Page 230
4 10 மட்டக்களப்புத் தமிழகம்
கோயில் இருந்தபடியால் அத்தாசகனுடைய அனுமதியும், ஒத்துழைப்புங்கொண்டே மனு நேய கயவாகு திருக் கோயிலைப் புதுப்பித்திருக்கின்றன். ‘மனுநேய கயவாகுவும் இந்தியாவிலிருந்து வந்தவர்களை ஆசீர்வதித்து அறுசுவை யுடன் அமுதளிப்பித்து, அபிஷேகம் செய்து ஆறுகாலம் பூசை நடக்கும்படி ஏழு இராசர்களையும், படையாட்சி குலத்தில் மூன்று வன்னியர்களையும் வகுத்து, இருபாகை முதன்மையாகக் கலிங்க குலத்துப் பிரசன்னசித்துவி னுடைய சந்ததிகளே வரவேண்டுமென்றும், ஐந்து பண் டாரங்களும், அந்தணர், முதன்மை இராசர் இவர்க ளுடைய ஊழியர் என்றும் மனுநேய கயவாகுவும் தாசக னும் கற்பித்தனர் ’ என்று திருக்கோவில் நிருவாகத் திட்டம் அம் மன்னரிருவராலும் வகுத்தமைக்கப்பட்ட வற்றையும் மட்டக்களப்பு மான்மியம் கூறும். மேலும் கோவிலின் திருப்பணி வளர்ச்சிக்காகப் பல ஏக்கர் வயல்களைக் கொடுத்ததோடு நீர்ப் பாய்ச்சுதற்காக ஒரு பெரிய குளத்தையும் சங்குமண் கண்டி (சங்கமான் கண்டி) மலைக்குக் கீழ்பால் அவர்கள் அமைத்துக் கொடுத்தனர். தம்பட்டர்களாகிய அந்தணர்களை, அவர்கள் குடி இருத் திய இடத்திற்குத் தம்பட்டார் ஊர் ' (இன்றுள்ள தம் பட்டைஊர்) என்று பெயர் சூட்டினர். மனுநேய கயவாகு திருக்கோயிலுக்குப் பக்கத்தில் மேலும் ஒரு வாவியினைத் தன் தாயாகிய தம்பதிநல்லாள் நினைவாய் அமைத்து அதற்குத் தம்பதிவில் ’ என்று பெயரிட்டனன். வில் ? என்னுஞ் சொல் மட்டக்களப்பிலே குளத்தைக் குறிக்க வழங்குவதாகும். இக் குளத்தைச் சார்ந்த பகுதியில் அமைந்த ஊரும் தம்பதிவில் என இருந்து இன்று தம் பிலுவில் என்று மருவி வழங்கப்பெறுகின்றது.
அழகிய சிற்ப வேலைப்பாடு முதலியவற்றற் சிறந்து மட்டக்களப்பில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் புகழ் பரந்து விளங்கிய திருக்கோவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்படலாயிற்று. இலங்கையில் போர்த்துக்கீசர் அழிவுசெய்த பல நூற்றுக்கணக்கான கோயில்களைப் usbsi) (56)|G TT6h) 9 19.56it (Conguesta or The Historic Tragedy of the Island of Ceilao By Rev. Fr. Queroz)

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 41 1
குறிப்பிடுகின்ருர். தன் மத ஆர்வத்தாலும், பிறமதக் குரோத உணர்ச்சியினலும் போர்த்துக்கேய தேசாதிபதி யாகிய அசவிடோ தகர்த்தெறிந்த சைவக் கோயில்களுள் திருக்கோவிலும் ஒன்று. குவரோஸ் அடிகள் திருக் கோவிலைப் பற்றித் தரும் குறிப்புகளிலிருந்து அங்கு மூன்று கோபுரங்கள் (Pagodas) இருந்தன என்றும், அவை மூன்றும் அசவீடோவினல் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறியலாகும். கடற்கரைகளில் இருந்த கோவில்களே புற மதத்தினரால் இவ்வாறு அழிக்கப்பட்டன என்றும், மட்டக் களப்பின் உட்பகுதியில் விளங்கிய கோவில்களை அன்னர் எக் காரணத்தாலோ அழிக்க முடிந்திலர் என்றும் தெரி கின்றது. கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீச்சுவரர் கோயிலைத் தகர்த்தெறியும் நோக்கத்தோடு சென்ற போர்த்துக்கீசர், அங்கிருந்த கருங்கல்லாலான நந்தி கோயிற் பூசகரின் ஏவற்படி புல்தின்றதைக் கண்டு வியந்த வராய்த் தாங்கள் கருதியபடி அழிவு செய்யத் துணிவு பெருது மீண்டனர் என்று ஒரு கதை வழங்குகின்றது. அவ்வாறே மண்டூர்க் கந்தசுவாமி கோவிலை நோக்கிச் சென்றவர் கோவில் வீதியை அடைந்ததும் கருங்குளவி களாற் கொட்டப்பெற்றுப் பதைபதைத்து உயிருக்கஞ்சி ஓடினரென்பர். ஒடும் அவசரத்திலே போர்த்துக்கீச வீரர்கள் விட்டுச் சென்றனவாகக் கூறப்படும் துப்பாக்கி, வாள், ஈட்டி என்னும் ஆயுதங்கள் சில இன்னும் மண் டூர்க் கந்தசுவாமி கோவிலுள் வைக்கப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம், தட்சிண கைலாசபுரா ணம், குளக்கோட்டன் கல்வெட்டு, திருக்கோவிற் சித்திர வேலாயுத சுவாமி கோவிலிலுள்ள கல்வெட்டுகளும், பட்டயங்களும், போரைதீவுச் சித்திரவேலாயுத சுவாமி கோயில், கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றிச்சுவரர் கோவில் என்பவற்றிற் கிடைக்கும் பட்டயங்கள் முத லாயின மட்டக்களப்புத் தமிழகத்தின் வரலாற்றை ஒரு வாறு அறிவதற்கு மேலும் ஆதாரமாயுள்ளன. தமிழறிவும் வரலாற்று ஆராய்ச்சித் திறனும் உடைய மட்டக்களப்பு முன்னேரால் தொடர்ந்து எழுதிவரப்பட்டதென்று கருதக் கூடிய ஒரு நூல் மட்டக்களப்பு மான்மியம், விசயன்

Page 231
4 12 மட்டக்களப்புத் தமிழகம்
இலங்கைக்கு வந்ததுமுதல் ஒல்லாந்தர்காலம் வரைக்கு முள்ள காலப்பகுதியிலுள்ள கிழக்கிலங்கையின் வர லாற்றைக் கொண்டுள்ள இந்நூல், மகாவமிசத்திற் கூறப்படும் நிகழ்ச்சிகள் பலவற்றையுங் குறிப்பிடுவது. அதன்படி விசயன் இலங்கையின் ஒரு பகுதியான மலை நாட்டையே விசயதுவீபம் எனப் பெயர் கொடுத்து ஆண் டிருக்கின்றன். சிங்கர், கலிங்கர், வங்கர் ஆகிய முக் குலத்தவரும் திருமணத் தொடர்புகளால் மிக்க நெருக்க முற்றிருந்தோராதலினல் அம் மூவர் பரம்பரையினருக்கும் இலங்கை ஆட்சியிற் பங்கிருக்க வேண்டும் என்ற விசயனின் விருப்பப்படி, அவனுக்குப்பின் ஆண்ட சிறிகுல சேனன் இலங்கையை மூன்று பங்காக்கி வடமேற்கி லிருந்து வடகிழக்கு வரையுமுள்ள இலங்கையின் வட பங்கை வங்கர் குல எல்லாளனுக்கும், தென்மேல் பகுதியும் மலைநாடும் சார்ந்த பெரிய பங்காகிய விசய துவீபத்தை வங்கர் குலத்தவனும் விசயனின் தம்பியின் மைந்தனுமான பந்துவாசனுக்கும், விசயதுவீபத்திலிருந்து வடகிழக்கு வரையிலுமுள்ள கிழக்குச் சமவெளியினைக் கலிங்கர் குலத்தவனன தனது மகன் கூத்திகனுக்குங் கொடுத்தான். இலங்கையின் கிழக்குப்பகுதியான அதன் எல்லே காலத்துக்குக்காலம் மாறு பட்ட போதிலும், * தட்சணுபதி (திருக்கோணமலை), அதன் வடக்கு உறவுப் பெற்ருனை (ஹொரவப்பொத்தான்ன-வடகாட்டிலிருந்து படையெடுத்துவந்த ஆரிய அரசர்களை மட்டக்களப்பு மன்னனுகிய சிங்க குமாரன்-கலி, 3370இல்-எதிர்த்து வடக்கே தட்சணுபதிக்கப்பாற் துரத்தி எல்லைக் கல்லிட்ட இடத்தில் அவர்கள் இவனிடம் சமாதானங் கோரி இவனுறவைப் பெற்றதால் அவ்விடத்திற்கு உறவுப் பெற்றன எனப் பெயர் சூட்டினன்) ; தெற்கு மந்தங் கடவத்தனநாடு’ (மருதங்கடவலவரையும் உள்ள பகுதி); * மேற்குக் கவடாவை மன்னம்பிட்டியும் மகாவலி கங்கைக் கரைவரையும் உள்ள மன்னம்பிட்டிப் பகுதி) ; விண்டு அணை (விந்தனை); மண்முனை வடக்கு
(புளியந்தீவுப்பகுதி முழுவதும்), மண்முனை, போர் முடைநாடு’ (போரைதீவுவரை உள்ள வாவியின் மேற்குக்

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 413
கரைப்பகுதி யாவும்) ; மட்டக்களப்பு, (தெற்கே திருக் கோயிலைச் சார்ந்தபகுதிவரையும் உள்ள பகுதி) ; உன் னரசுகிரிநாடு (பாணமையிலிருந்து தெற்கே மாணிக்க கங்கைவரையும்,மேற்கில் லகுகலையுட்படவும் உள்ளபகுதி) ஆகிய பகுதிகளுட் பலவும், சிலவேளைகளில் முழுமையும் மட்டக்களப்பு இராச்சியத்தில் அடங்கிக் கிடந்திருக் கின்றன. உன்னரசுகிரி நாடும், உன்னரசுகிரி நகரமும் அமைக்கப்பட்ட வரலாற்றை மேலே திருக்கோவிலைப் பற்றிக் குறிப்பிட்ட பகுதியுட் கண்டோம். உன்னரசு கிரி நகரம், திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தமலைக்கும், * பாலர்நகை நாடு’ (பாணமை) என்ற பண்டைய துறை முகத்துக்கு மிடையில் இருந்திருக்கின்றது. அதனுலும் வேறு சான்றுகளாலும் தற்காலம் 8 சன்னுசிமலே ' என்ற பெயருடன் வழங்கும் மலைப்பகுதியே உன்னரசுகிரியாக இருக்கலாம் என்று தெரிகின்றது. சிறிகுல சேனனுடைய மகனன கூத்திகனே கலிவருடம் 2800 இல் (கி. மு. 302 ஆக இருக்கலாம்) களப்பின் (மட்டக்களப்பு வாவியின்) மட்டமான பகுதியாகிய தென்கோடியினை மூடுவித்து மட்டக்களப்பு என்ற ஊரை ஆக்கினுன். அதன் மேற்கே அவனது போர்வீரர்கள் இருத்தப்படுவதற்காக அவ னமைத்த இடமே வீரர்முனை ’ (தற்போதைய வீரமுனை) என்று நாமம் சூட்டப்பட்டிருக்கிறது. களப்பை முடுவதற்கு கல்லும் மண்ணும் எடுத்தபுட்டி (உயரமான பகுதிக்கு) * மண்கல் புட்டி ’ (தற்காலம் மலுக்கம்புட்டி) எனப் பெயரும் எழுந்தது. மாட்புட்டி, மணற்புட்டி, காப்புட்டி, மலகவத்தை (மல்வத்தை), உன்னஞ்சை (உன்னிச்சை), தம்புட்டி, பங்கிடான் வெளி, அம்பிலான்துறை, கொங்கு காசி (கொக்கட்டிச்சோலையாக இருக்கலாம்), அப்பன் புட்டி, உன்னரசுகிரி, அறுகமுனை (அறுகம்பை), பூமுனை குமுக்கழ்ைறுக் கடல்வாயிலுள்ள (குமுண என்னும்) ஊர் முதலான இடங்கள் மட்டக் களப் பின் அரச விசாரணை மன்றுகள் இருந்த இடங்களாம். மட்டக் களப்புக் கிராமங்களின் பெயர்களிற் சில அவற்றை அமைத்து ஆண்ட தலைவர் பெயர்களாலும், குடியேற்றப் பட்ட மக்களதும், கடந்த போர் நிகழ்ச்சிகளதும் பெயர்

Page 232
4 14 மட்டக்களப்புத் தமிழகம்
களேக் கொண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றன. வாகூர வெளி (வாகூரன்-கலி. 3070இல் இருந்து ஆண்ட இடம்) ; மண்டு நாகன்சாலை (மண்டு நாகன் என்பான் கலி. 4209இல் ஏறக்குறைய கி. பி. 1107இல் இருந்து ஆண்ட இடம்; இன்று மண்டூர் என்றும் நாகஞ்சோலை என்றும் அடுத்தடுத்துக் காணப்படும் ஊர்ப்பகுதிகள்); * நாதனனை ' (இன்று நாதனை என்று மண்டூரின் வடக்கே வழங்கப்படும் பகுதி ; 5ாதன் என்னும் அர சிளங்குமரன் பெயரால் அவன் தந்தை மதிசுதன் என்பான் கட்டுவித்த அணை ; போரதீவுச் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்கு அவன் மானியமாக அளித்த வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக மேட்டுநீரைத் தகைக்க அம் மன்னனல் கலி. 4209இல் இது கட்டப் பட்டது) எனும் இடப்பெயர்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். அமரசேனன் (கலி. 3466) காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து ஏழு மறவர்குலப் பெண்கள் இலங்கையின் தலங்களைத் தரிசிக்க வந்தோர், அம் மன்னனுல் மானியமாகக் கொடுக்கப்பெற்ற ஏழு ஊர் களிலும் குடியேறினர்கள். அவர்களின் பெயர் அந்த ஊர் களுக்குமாயின என்று தெரிகிறது. அம் மங்கைநல்லா ராகிய கலைவஞ்சி' (களுவாஞ்சிக் குடியிருப்பு), செட் டிச்சி (செட்டிபாளையம்), "மகிழரசி (மகிழடித்தீவு), மங்கி அம்மை, இராசம்மை, வீரமுத்து, பாலம்மை என் பாரது சந்ததியினர் மட்டக்களப்புப் பகுதிகளிற் கிளைத்து வாழ்ந்து வருகின்றனர். சோழப் பேரரசின் கீழ் மட்டக் களப்பை ஆண்ட மன்னனென்று நாம் முன்பு குறிப் பிட்டோனகிய கதிர்சுதன் காலத்து (கலி. 41 15இல்) அவன் கீழிருந்த வவுணசிங்கம்’ (வவுணதீவு என்னு மிடத்தில்), “ புளியமாறன்’ (புளியந்தீவில்), 8 சத்து வண்டன்’ (சத்துரு கொன்ருன் என்ற ஊரில்), “கொட்டக கச்சன் (கொட்டுக்கல்லில்), நீலவண்ணன் (நீலா வணையில்), 8 அகுராகு', ' கட்டகமன் ’ என்னும் ஏழு மந்திரிகளும் மன்னது உத்தரவுபெற்று ஏழு கிராமங்களை அரண் செய்து சிற்றரசர்களாயிருந்தனர். அக் கதிர்சுதன் காலத்திலேதான் வடமதுரையிலிருந்து மகமது சூசினி

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 415
(இவன் காலம் கி. பி. 11ஆம் நூற்ருண்டு)யினுற் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று படகுக் குகக் குடிகள் மட்டக்களப்புக் கடற்கரையில் வந்திறங்கினர். அவர்க ளிறங்கிய இடம் கண்டுமுனை என்றும், அதனை வியா பாரத் துறைமுகமாக அரசன் அமைத்தபின் அது கல் லேறுமுனைத்துறை (தற்காலம் கல்முனை) என்றும் பெயர் பெற்றது. ஆடகசவுந்தரி என்னும் அழகிய மங்கையால் *காசி அவிமுத்தி தீர்த்தம் கலந்துள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்ட குளம் * மாமங்கைநதி’ (தற்காலத்து மாமாங்கம் என்றழைக்கப்பெறும் அமிர் த களி ஊர்) எனப் பெயர்பெற்றிருக்கின்றது. ஆடகசவுந்தரி உன்னரசு கிரியிலிருந்து மட்டக்களப்பு நாடு முழுவதையும் கலி. 3180 (கி. பி. 78) தொடக்கம் ஏறக்குறைய 1 13 வருடம் வரை ஆண்டாளென்றும் நீண்ட காலமாகியும் இளமைப் பொலிவு குன்ருதவளாயிருந்த அவளது பெருமையைக் கேள்வியுற்ற மகாசேனன் என்பான் அவளை அடைந்து உறவுகொண்டு அவளை மணஞ்செய்து மீனேரி " (மின்னேரி)யையுங் கட்டி, தட்சணுபதி ' (திருக்கோண மலே)க் கோவிலையுஞ் செப்பமுற அமைத்து, அக் கோயி லுக்கு மானியமாக நெல் வயல் பலவற்றை அளித்து அவ் வயல் நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்சுவதற் கென்று * காந்தளை ஏரி ' (கந்தளாய்க்குளம்) என்னும் பெரிய குளத்தை ஆடகசவுந்தரியின் வசத்திலிருந்த பூதப் படைகளின் துணையால் கட்டியும் முடித்து நாடெங்கும் வைதூலிய சைவம் வளர்த்துச் சிறப்புற ஆண்டான். அவனே குளக்கோட்டு மன்னனுக இருக்கலாம் என்று தெரிகின்றது. அவர்களிருவருக்கும் பிறந்த மகனே சிங்க குமாரனவான். இராவணன் வழிபட்ட இரு தலங்களுள் ஒன்ருன தட்சணுபதியைத் (திருக்கோணேச்சரம்) தந்தை கட்டி முடித்தது போல், மைந்தனும் இராவணனது மற்றைய வழிபாட்டுத் தலமான உகந்தமலைக் கோயிலை வடகாட்டிலிருந்து நல்ல சிற்பியர்களை வரவழைத்துச் சிறப்புறக் கட்டி முடித்தான். மலை உச்சியில் அமைந்த கோயிலைச் சுற்றி எட்டுத் திக்கிலும் எட்டுத் தீர்த்தக் கிணறுகளையும் அமைத்தனன். அப் பழங்கோயில் தற்

Page 233
416 மட்டக்களப்புத் தமிழகம்
காலம் அழிந்துவிட்டாலும் மலேயிற் பொழியப்பட்ட தீர்த்தக் கிணறுகளிற் சில அங்குள்ளன (படம் 60). அவன் மகன் அமரசேனன் காலத்திலேயே களுவாஞ்சி முத லான ஊர்கள் குடியேற்றம் பெற்றன என முன்னர்க் கண்டோம். அமரசேனனது மகனுன குணசிங்கன் காலத்தில் (கலி. 3500இல்-கி. பி. 398) ஒரிசாவிலிருந்து வந்து மண்ணேறு முனையைப் பெற்று வளஞ் செய்து, மண்முனை என்று பெயர் சூட்டி, காப்பு முனைக் காட்டில் (தற்கால முனைக்காட்டில்) இருந்து களப்பின் மேற்கு நிலப்பரப்பிற் பெரும்பகுதிக்குச் சிற்றரசியாக அவன் கீழ் விளங்கிய கலிங்க குமாரிதான் உலகநாச்சி என்பாள். கொக்குநெட்டி மரத்தடியிற் சிவலிங்கமொன்று தானே தோன்றி இருப்பதையும் அதனைப் பெயர்த் தெடுக்க முயற்சிக்கையில் அதிலிருந்து இரத்தம் வடி வதையுங் கண்ட உலகநாச்சி அவ்விடத்திற் பெருங் கோயிலொன்றை ஆக்கினுள். அதுவே தற்காலம் கொக் கட்டிச் சோலேத் தான் தோன்றிச்சுரம் (படம் 5) என்று விளங்கப்படுவது. இவ்வாறு தொடர்புபட்ட வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுவன வாயுள்ள மேற்காட்டப்பட்ட பட்டயம் முதலான சான்றுகள் மட்டக்களப்புப் பழங் கோயில்தொறும் காணப்படுகின்றன.
இவை ஒருபாலாக, போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலத்திலே ஈழத்தின் தென்மேல் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அவர்களாற் பெரிதும் துன் புறுத்தப்பட்டார்கள் என அறிகின்ருேம், அவர்களுக்கு அபயம் அளித்த கண்டி மன்னர்கள் மட்டக்களப்புக் கடற்கரையோரங்களில் அவர்களைக் குடியேற்றினர். செனரதன் காலத்தில் (கி. பி. 1605 - 1635க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில்) ஏறக்குறைய நாலாயிரம் முஸ்லீம் மக்கள் மட்டக்களப்புப் பகுதிகளில் குடியேற்றப் பட்டார்கள் என்று வரலாற்றுக் குறிப்புகளிற் தெரி கின்றது. 1815ஆம், 1818 ஆம் ஆண்டுகளில் முறையே கண்டிக் கலவரமும், கண்டிக் கிளர்ச்சியும் நடைபெற்ற போது சிங்கள மக்கள் பலர் அகதிகளாக மட்டக்களப் புக்கும், திருக்கோணமலைக்கும் ஓடிச்சென்று அங்கங்கே

அரசியலும் தமிழர் குடியேற்றமும் 417
குடியேறி வாழத் தொடங்கினர். அவருட் பெரும்பாலா னேர் திருக்கோணமலைக்குத்தான் சென்றிருக்கிருர்கள். வேற்று நாட்டவர் ஈழத்திற்கு வந்து கலக்கு முன்னர்ச் சிங்களவர், தமிழர், முஸ்லீம் ஆகிய மூன்று வகுப்பினரும் மதம், மொழி என்ற வேறுபாடின்றி ஒன்றுபட்டு வாழ்ந் திருக்கின்றனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உட்ள்ளன. மொழிவாரியாக ஒன்றுபடுத்தப்பட்ட மாகாண ஆட்சி,முதன்முதல் ஒல்லாந்தர் காலத்திலேதான் ஈழத்தில் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் மக்களே வாழும் பகுதி களாயிருந்தபோதிலும், எவ்விதத் தொடர்பினைப் பெறு தற்கும் சந்தர்ப்பமற்றுக் கிடந்த யாழ்ப்பாணமும் மட்டக் களப்பும் ஆட்சிக்காக ஒன்றுபடுத்தப்பட்டது அவர் காலத்திலேயேயாகும்.
கிழக்கிலங்கையின் பழம்பொருள்கள் புதைந்துகிடப் பனவாக அறியப்பட்டுள்ள இடங்கள் கந்தளாய், திரியாய், திகவாவி, லகுகல முதலியனவாகும். இவற்றுள் லகுகல என்னுமிடம் மட்டக்களப்பின் தென்மேற்கு எல்லேயில் அடர்ந்த காடுகளின் மத்தியில் உள்ளது. பழைமையான தாதுகோபங்கள் (படம் 58) பல அங்குச் சிதைந்த நிலையில் இன்று கிடக்கின்றன. சைவ மக்களும், பெளத்த மதத்தினரும் ஒன்றுபட்டு அப்பகுதியில் வாழ்ந் தனரென்பதற்கான சான்றுகள் பலவற்றை லகுகலையிற் காண்கின்ருேம். தாதுகோபங்களுக்கு நடுவிலே தரை மட்டமாக இடிந்து அழிவுற்ற நிலையில், அழகிய சிற்ப உருவங்களுடன் அங்குக் காணப்படும் ஒரு கட்டிடத்தைச் சைவக் கோயிலொன்றினது எனக் கூறுகின்ருர்கள் (படம் 59). அக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் நாய் ஊர்தி யுடன் காணப்படும் வைரவர் (படம் 59 A) சிலை ஒன்றும் இக் கருத்தை வலியுறுத்துகின்றது. ஆயிரமாண்டுகளுக்கு மேற்பட்டது என்று சொல்லப்பெறுகின்றதும், எழுத் துக்கள் மிகவும் உருக்குலைந்த நிலையிற் காணப்படுவது மான வடமொழிக் கல்வெட்டுக்கள் சில அவற்றினிடைக் காணப்படுகின்றன. சிதைந்த நிலையில் உள்ள தமிழெழுத் துக்களிலுஞ் சில கல்வெட்டுக்களைக் காண்கின்ருேம். இவைகளை ஆராயும்போது மட்டக்களப்பின் ஏழு சிறு
ա) - 27

Page 234
4 18 மட்டக்களப்புத் தமிழகம்
இராச்சியங்களுள் லகுகலையும் ஒன்ருக இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. லகுகலையில் மட்டுமன்றி மேற் குறிப்பிட்ட மற்றைய இடங்களிற் கிடைக்கிற புதை பொருள் ஆதாரங்களையும், வேறு வரலாற்றுக் குறிப்புக் களையுங் கொண்டு பார்க்கும்போது, தொன்றுதொட்டு மட்டக்களப்புத் தமிழகத்திலே புத்தமும், சைவமும் மிகவும் நெருக்கமான முறையில் 5ட்புறவு கொண்டிருக்கின்றன என்பதும், சிங்கள மக்களோடு பழங்காலத்திலிருந்தே உறவினர்போன்றும், மதி மந்திரிகள் போன்றும், உற்ற 5ண்பினர்போன்றும் வாழ்ந்த இப்பகுதித் தமிழ் மக்களது நெருங்கிய தொடர்பினல், உருகுணை, மலயரட்டை முத லான பேரரசுகளில் ஆணை செலுத்திய சிங்கள மன் னரும், அவரின் கீழ் வாழ்ந்த சிங்கள மக்களும் தமிழ் மொழியை நன்கு கற்றுத் தம் மொழிபோல் அதனைப் பேணி வளர்த்துள்ளன. ரென்பதும் நன்கு விளங்கக் கிடக்கின்றன.
11. மட்டக்களப்புத் துறைமுகங்கள்
கிழக்குலகின் இங்கிலாந்து என்று மேலைநாடுகளிலே புகழ்பெற்ற இலங்கை, நீர்வளம், நிலவளம் சான்று கண்டோர் மனத்தைக் கவரும் வனப்புடன் விளங்கு கின்றது. ஈழத்துக்கு இன்று வந்து செல்லும் வெளி நாட்டவருள்ளே இக் காட்டின் இயற்கை அழகையும், மக்களின் பண்பாட்டை யும் புகழாதவர் இல் யெனலாம். மேல்புல உலகினர் இவ்வழகிய இலங்கை யினைப்பற்றிக் கேள்வியுறத் தொடங்கியபோது இதன் விளைபொருள்களுக்கு இருந்த புகழ் அன்னரைப் பெரிதும் ஈர்த்தது. இலங்கைத் தீவிலிருந்து பெறப்படும் மிளகும், கறுவாவும் உலகிலே மிகச் சிறந்தனவென்று அவர்கள் கருதத் தொடங்கின போது தா ன் வர்த்தகம் என்ற பெயரால் ஈழநாட்டின் தொடர்பினை ஐரோப்பியர் நன்கு நினைவுறத் தொடங்கினர்.
இது இருக்க, இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், நாட்டின் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கு

மட்டக்களப்புத் துறைமுகங்கள் 4 19
வதில் மிகுதியும் ஈடுபட்டிருந்த காரணத்தினல் “ ஈழத் துணவு ’ என்று தமிழ்நாட்டிலே பாராட்டத்தக்க அள வுக்கு இலங்கையில் விளைந்த நெல் முதலான உணவுப் பொருள்களின் சிறப்புப் பரந்திருந்தது. வெளிநாடுகளுக்கு ஈழம் தனது விளைபொருள்களுள்ளே சிறந்திருந்த உணவுப்பொருள்களை மிகுதியாக ஏற்றிப் பொருள் வளமும், புகழ் வளமும் பெறுவதாயிற்று. இந்தியா, இத்தாலி, கிரேக்கு, பாரசீகம் என்ற நாடுகளுக்கு இலங்கையிலிருந்து அரிசி, மிளகு, யானைத்தந்தம், முத்து என்பன ஏற்றுமதியாக்கப்பட்டமைக்கு வரலாறுகள் சான்ருக உள்ளன். இந்த ஏற்றுமதித் தொடர்பினேப் பெரிதும் வளர்த்து நின்ற ஈழத்துக் கடல்வாய் மாதோட்டமே என்பது நன்கு அறியப்பெற்ற ஒன்ருகும். கிரேக்கு, இத்தாலி என்ற நாடுகளில் இருந்து மற்றைய இடங்களுக்கு இவ்வழகிய இலங்கையின் புகழ் பரவப் பெற்றபோதே போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், பிரான் சியரும், ஆங்கிலேயரும் ஐரோப்பாவிலிருந்து முறையே இக்காட்டை நோக்கினர்கள் என்று பண்டைய வர லாற்றுக் குறிப்புக்களால் நாம் அறிகின்ருேம். இந்தப் பிற நாடுகளின் தொடர்பினுல் இலங்கையின் கடற்துறைகள் விரித்து அ ைமக்கப் பெற லாயின. போர்த்துக்கீசர் இலங்கையை அடைந்தபோது மன்னர், அரிப்பு, களிப் till புத்தளம், சிலாபம், கைமல், நீர்கொழும்பு, முகத்துவாரம், கொழும்பு, பாணந்துறை, களுத்துறை, மாக்கம், வேருவலை, ஆளிக்கோ, மாதம்பை, றைகோ, கித்துள்துறை, காலி, பெலிகோ, மாத்தறை, கல்கெதற, பாணம, திருக்கோவில், அறுகம்பை, கற்குடா, மட்டக் களப்பு, ஆப்புளேத்து, கொட்டியாரம், திருக்கோணமலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய முப்பத்தொரு கடற்றுறைகள் கன்னிலையில் இருந்தன என அவர்கள் எழுதிவைத்த துறைமுகக் குறிப்புக்களால் அறிகின் ருேம்: அவற்றுள் பாணம, அறுகம்பை, திருக்கோயில், மட்டக் களப்பு, கற்குடா என்னுந் துறைமுகங்கள் கிழக்கிலங் கையைச் சார்ந்தனவாய் உள்ளன. இலங்கையைப் பற்றிப் போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் கூறும் குறிப்புக்

Page 235
420 மட்டக்களப்புத் தமிழகம்
களால் இத்துறைகள் அக்காலத்தில் மிகுதியும் பேர் போனவையாய் இருந்திருத்தல் வேண்டுமென நாம் அறியலாகும்.
இம் மேல்நாட்டார் வருமுன்னர் இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள் தமது கீழைக் கடல்வாயாக மட்டக்களப்பினேயே கொண்டிருக்கிருர்கள் என்று அறி கின்ருேம். சீனவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் கடல் மார்க்கமாக வந்த தூதுவர்கள் இலங்கையின் கிழக்கி லிருந்த கடற்றுறைகளில் இறங்கி உள்நாடு சென்றனர் என்று தெரிகிறது. கண்டியைத் தலைநகரமாக்கிக்கொண்ட சிங்கள மன்னர்கள் காலத்திலே அவர்களால் நியமிக்கப் பெற்ற சிற்றரசர்கள் மட்டக்களப்பை ஆட்சி செய் திருக்கின்ருர்கள். அவர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்ருக இக்கடற்றுறைகளைப் பாதுகாத்தல் இருந்திருக் கின்றது. இலங்கையின் கிழக்குக் கரையில் இறங்கும் வெளிநாட்டாரையும், தூதுவர்களையும், வியாபாரிகளையும் தக்க பாதுகாவலோடு மட்டக்களப்புச் சிற்றரசன் கண்டியக்கட்டு (இன்றைய கல்லோயா அணைக்கட்டு இருக்கும்பகுதி) வழியாக மலைநாட்டுக்கு அனுப்பியிருக் கிருன், போர்த்துக்கீசர் இலங்கையை அடிப்படுத்தும் முன்னரே 1602இல், ஒரு ஒல்லாந்தத் தளபதி இலங் கையின் மட்டக்களப்புத் துறைக்கு வந்தான் என்றும் அவனைச் சிங்கள மன்னனிடம் கடல் மார்க்கமாகத் கொழும்புத் துறைமுகத்துக்கு மட்டக்களப்பு மன்னன் அனுப்பினன் என்றும் ஒல்லாந்தர் சரித்திரக்குறிப் பொன்று கூறுகின்றது. இவற்ருல் கிழக்கிலே மட்டக்களப்பு முதலான துறைமுகங்கள் பண்டைநாளிலிருந்தே நன்கு புழக்கத்திலிருந்தன என்பதை நாம் அறியலாம்.
இலங்கைத்தீவில் எத்தனையோ வேறு துறைமுகங்கள் இருந்தபோதிலும் திருக்கோணமலையே அவற்றுள் தலை சிறந்த அமைப்பினை உடையதென்பது எல்லார் கருத்து மாகும். இயற்கையாக நன்கு அமைந்த அக்கடற்றுறை பல கப்பல்கள் பெரும் புயல்களுக்கும் ஒதுக்கிடமாகத் தங்கத்தக்க நிலைய அமைப்பினை உடையதாக இருக்

மட்டக்களப்புத் துறைமுகங்கள் 421
கின்றது. எனினும், நாட்டின் விளைபொருள்கள் இத் துறைமுகத்திற்கு வெகுதொலைவில் இருப்பதால், தெருக் களின் வசதி குன்றிக்கிடந்த அக்காலத்தில் ஒரு சிறந்த வியாபாரத்துறையாக அது பயன்படுத்தப்படவில்லை" போர்த்துக்கீசரை வெல்லுவதற்கு ஏற்ற முக்கிய தளமாக முதன் முதல் ஒல்லாந்தரே அதனைப் பயன்படுத்தியிருக் கின்றர்கள். அவ்வாறு பிறநாட்டாருக்குத் திருக்கோணமலை ஒதுக்கிடம் கொடுத்த சிறப்பே பழைமையான கோணேச் சுரர் கோயிலை இலகுவாக அவர்கள் தகர்த்துக் கொள்ளை கொள்ளக் கா லுமாயிற்று. பரந்து பட்ட குறிப்புக்கள் கொண்ட இத்துறை பற்றிய சுவையான வரலாறுகள் ஒரு தனிப்பகுதியாக எடுத்து விளக்கத்தக்கனவாகும்.
ஈழத்தின் மத்தியிலிருந்து ஊற்றெடுக்கும் நதிகளிலே பல தெற்கிலும், கிழக்கிலும் பாய்ந்து செல்வன. தெற்கே நிலம் சரிவுற்றுச்செல்ல, கிழக்கிலங்கையோ அதற்கு மாறனதாய்ச், சமதரையாகப் பரந்து கிடப்பதாயிற்று. இதனுல், இலங்கையின் நதிவளம் பயன்படும் சிறந்த நாடு கிழக்கிலங்கையேயாகி, நிலவளமும் மிகுந்து அதிகமான நெல் விளைவினுக்கும் நிலைக்களமாயிற்று. இந்தியாவுக்கு ஏற்றுமதியாக்கப்பட்ட நெல் எல்லாம் கிழக்கிலங்கையின் துறைமுகங்கள் வழியாகவே சென் றுள்ளனவென்று தெரிகின்றது. இத்தகைய துறைமுகங்க ளுள்ளே மட்டக்களப்புப் பட்டினத் துறைமுகமே இயற்கை அமைப்பினலுஞ் சிறந்த ஒன்ருயிருந்தது. மட்டக் களப்பு நாட்டினுாடே மீண்டு கிடக்கும் வாவியானது கடலோடு கலக்குமிடத்து அமைந்த புளியந்தீவில் மட்டக் களப்பு நகரம் அமைந்துள்ளது. இத்தீவினைச் சேர்ந்த பகுதியும், களிமுகமும் மிக்க ஆழமுடையனவாய் இருப் பதனுற் பழங்காலத்திலேயே வழக்கத்திலிருந்த பெரிய கப்பல்களும் மட்டக்களப்புத் துறைமுகத்தின் வழியாக உள்ளே பயமின்றி வந்து தங்கி, ஏற்றுமதி செய்துள்ளன. எனினும், போர்த்துக்கீசர் தம் காலத்திலே “தட்டைப் படகுகள் (Flat Boats) என்று அழைக்கப்பட்ட நடுத்தரப் படகுகளைத் தவிர்ந்த மற்றையவற்றின் மூலம் உட்புகுந்தார்

Page 236
422 மட்டக்களப்புத் தமிழகம்
இல்லை. இத்துறைமுகத்தினை வியாபாரம், படையெடுப்பு என்பவற்றுக்கெல்லாம் நன்கு பயன்படுத்தியவர்கள் டச்சுக்காரர்களே. அவர்கள் யானைத்தந்தம், மிளகு, எலு மிச்சம்பழம், தோடம்பழம், நெல், உப்பு என்பனவற்றை மிகுதியாய் ஏற்றுமதி செய்துள்ளனர் என்ற இக்குறிப் புக்களை ஒல்லாந்தரது கடல்வழிப் படத்திலே (Hollanders Hydraulic Map) é5T 6OOTa) tub.
டச்சுக்காரரது ஆட்சி இலங்கையில் நிலவியவரை மட்டக்களப்புத் துறைமுகம் மிகுதியும் பெயர்பெற்ற ஒன்ருகவே இருந்திருக்கின்றது. பின்னர்க் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட நீர்நிலை மாற்றங்களால் மட்டக்களப்பு வாவியின் கடல்வாய் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து விட்டது. இதனுல் ஏற்பட்ட வளைந்த பகுதியானது கடல் அலைகளால் எற்றுண்டு ஆண்டுதோறும் சில மாதங்களில் அடைபட்டுப்போதல் இயல்பாயிற்று. அக்காலங்களில் மட்டக்களப்புக்கு வரும் கப்பல்கள் கடலுள் வெகுதூரம் தள்ளிகின்று நங்கூரம் பாய்ச்சவேண்டியிருந்தது. ஆங்கி லேயர் காலத்திலே, 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு மாலுமி இவ்வாறு நடுக்கடலிலே நங் கூரம் பாய்ச்சவேண்டிய கணக்கின, இருளில் ஏற்பட்ட பெரும் காற்றினுற் தவறவிட்டதினலே, மணற்றிட்டில் ஏறிய அவனது கப்பல் பெரும் சேதமடைந்ததென்று அறி கின் ருேம். இன்று பண்டையத் துறைமுகத்தினை மூடிக் கடலுக்கும் வாவிக்கும் இடையிலே ஏறக்குறைய 250 அடி தூரத்திற்கு வார்க்கப்பட்டிருக்கும் மணல் மேட்டினே வெட்டிநீக்கிவிட்டால் மட்டக்களப்புக் களிமுகம் மிகச்சிறந்த ஒரு துறைமுகமாகுமென்றும், ஒருபோதும் அடைபடாது துலங்கி நிற்குமென்றும், வருடம் முற்றும் கன்கு பயன் படத்தக்க பாதுகாப்புள்ள துறைமுகமாக மட்டக்களப்பு இருக்குமென்றும் அறிந்தோர் கூறுகின்றனர். ஒல்லாந்த ருக்குப் பெரிதும் பயன்பட்ட இத்துறைமுக வாயில் இன்றும் டச்சு பார் (Dutch Bar) என்றே அழைக்கப் படுகிறது.
மட்டக்களப்புக்கு வடபால் 20 மைல் தூரத்தில் இருக்கும் கற்குடா என்னும் இடமும் நல்ல இயற்கை

மட்டக்களப்புத் துறைமுகங்கள் 423
அமைப்புடைய துறைமுகமாகும். எனினும், கற்குடா நிலப்பகுதி மணற் பாங்கானதாய் நெல் வயல்களுக்குத் தூரத்தே இருப்பதால் ஈழத்தைச் சுரண்டுவதிலே கருத் தூன்றிவந்த வெளிநாட்டாருக்கு அத்துறை அதிகம் பயன் பட்டதாக இல்லை. தேனும், காட்டுமரங்களும் அத்துறை வழியாக வேற்று இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தெனச் சிங்களவர் காலக்குறிப்புக்களால் அறிகின்ருேம். ஆங்கிலேயர் இலங்கையை அடிப்படுத்திய பின்னரே கிழக்கிலங்கையிற் தென்னைப்பயிர் நன்கு வளர்க்கப் பெற்றிருக்கின்றது. மணல் நிலமும் அவர்களால் வளங் கொழிக்கலாயிற்று. அதனுற் பெற்ற பயன்களை வெளி 5ாடுகளுக்கு அனுப்பிவைத்தற்கு ஏற்ற சிறந்த துறை முகங்களாகத் தெற்கே திருக்கோயிலையும், வடக்கே கற்குடாவையும் நன்முறையில் ஆங்கிலேயர் அமைத் தனர். அவர்களது நற்செயலின் சின்னங்களாகக் கற் குடாவிலே அமைந்த கடற்பாலம் முதலியவற்றை, சிதை வுற்ற நிலையிலே (படம் 54) நாம் இன்றும் காணலாம். ஐப்பசி தொடக்கமுள்ள ஆறுமாத காலமும் இத்துறை பெரிதும் பயன்பட்ட வர்த்தகத்துறைமுகமாக விளங் கிற்று. 1890 ஆம் ஆண்டிலேதான் முதன் முதலாகத் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்காற்றுக் காலத்திலும் அது பயன்படத்தக்க துறையென அறியப்பெற்றது. இன்று யாழ்ப்பாணத்திற்கு நெல்லும், தேங்காயும் அனுப்பி வைக்கும் பிரதான கடல்வாயிலாகக் கற்குடா இருக்கின் றது. சங்கு, சிப்பி, சுண்ணும்பு என்பனவும் இங்கிருந்து ஈழத்தின் மற்றைய இடங்களுக்கு இவ்வாயிலாகச் செல்லுகின்றன. இந்தியாவிலிருந்து ஒடு, 1 சீமேந்து என்பன இதன் வழியாக இறக்குமதி செய்யப்படு வதையும், தேங்காய் இங்கிருந்து ஏராளமாக இந்தியா வுக்கு ஏற்றுமதியாவதையும் இன்றும் காம் காணலாகும்.
அடுத்து, நாம் காணும் கடற்றுறை திருக்கோயிலாகும். இப்பெயரைக் குறிப்பிடும்போது அங்குள்ள பழைமை யான கோயிலை நாம் நினைவுகூருகின்ருேம். அக் கோயிலின் கர்ப்பக்கிருகத்தின் மேல் அமைந்துள்ள சிற்பவேலையானது

Page 237
424 மட்டக்களப்புத் தமிழகம்
மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததாகுமென்று அறிந்தோம். அக்கோயிலை நிருமாணம் செய்வதற்கு வந்த சிற்பியர்க ளெல்லோரும் இந்தியாவில் இருந்து திருக்கோயிற் றுறை முகத்திலேயே வந்திறங்கியதாகச் சொல்லப்படுகின்றது. திருக்கோயில் என்ற சொல் சிங்களத்திலே துங்கோள என்று சொல்லப்படுகின்றது. மூன்று அடுக்குக் கோபுரம் என்றும், மூன்று திசைகளிலே வாயில்களைக்கொண்ட கோபுரம் என்றும் இச்சொல் பொருள்படுகின்றது. " திரி என்று அடைமொழி பெற்றவையான “ ரைகேதீச்ச', * ரைக்கொணுமல’, ‘ ரைக்கோவில ” என்னும் மூன்று பழம்பெருங் கோயில்கள் முறையே ஈழநாட்டின் மேல், கீழ், தென்திசைக் கடற்றுறைகளிற் காவலாக அமைந் துள்ளனவென்று போர்த்துக்கீச சரித்திர நூற் குறிப் பொன்றிற் காணப்படுவதை நாம் இங்கு நோக்குதல் வேண்டும்.
ஜெருேனிமோடி அசவேடா என்ற போர்த்துக்கீச தளபதி இத்துறை வழியே இறங்கி இங்குள்ள கோயிலை அழித்துக் கொள்ளை கொண்டு இங்கிருந்த கணேசர் விக்கிரகங்களையும் உடைத்து மீண்ட வரலாறு ஒன்று இருக்கின்றது. இத் துறைமுகத்தின் பழைமையான வெளிச்சவீட்டுத் தொடர்பு பற்றிய கதைகளும் பல இங்கு வழங்குகின்றன. பெரிய தென்னந்தோட்டங்கள் திருக் கோயிலைச்சுற்றி எழுந்த பிற்காலத்தே, கொப்பரு ஏற்று மதிக்குப் பெயர்போன பெரிய துறைமுகமாக இது விளங்கலாயிற்று. இத் துறைமுகத்தினை வளஞ் செய்த சிறப்பு அக்காலை ஆங்கிலேயரையே சார்ந்ததாகும்.
இதனை அடுத்து, தென்பால் உள்ளது கோமாரி என்னும் ஊர். அதுவும் பழங்காலத்தில் ஒரு துறைமுக மாக இருந்துள்ளதென அறிகின் ருேம். வாஸ்கொடிகாமா என்னும் போர்த்துக்கீச யாத்திரிகனைப் பின்பற்றி இந்தியா சென்றேர் இலங்கையின் கிழக்குக் கரையிலே இருந்த நீண்ட முனையில் அமைந்ததாகிய * குமரிமுனை’ என்னுந் துறையினைக் கடந்து சென்றதாகக் குறிப்பிட்டுள்

மட்டக்களப்புத் துறைமுகங்கள் 42.5
ளார்கள். இந்தியாவிலிருந்து வந்து உடைகரைப்பட்ட கப்பல் ஒன்றிலிருந்து இவ்விடத்துக் கரையை அடைந்த இராசகுமாரி ஒருத்தி, தன் பரிவாரங்களோடு தங்கி இப் பகுதியை ஆண்டாள் என்றும், அவளது தலைநகரமான காரணத்தால் இவ்விடம் குமரிமுனே என்று பெயர்பெற்றுப், பின்பு கோமாரி என்ற வடிவில் மருவலாயிற்று என்றும் கேள்விக்கதை வழங்குகின்றது. ஏற்றிறக்குமதிகளை விட, பெரும் புயற்காலங்களுக்கு ஏற்ற ஒதுக்கிடமாகவே இத்துறை அதிகம் பயன்பட்டுள்ளது என்பது தகும். இதன் தென்பால் உள்ளதும், மிகப் பிரசித்தமாக இருந் ததுமான துறைமுகம் * அறுகம்பை என்பதாகும். மட்டக் களப்பு நிலப்பரப்பு முழுமையும் வாவியும் சுனேகளும், வளைந்துகிடக்கப் பெறுவதாற் போக்குவரத்துக்கு ஏற்ற நல்ல தெருக்களின் வசதியற்றிருந்த பழங்காலத்தில், நீர் வழிகளே வர்த்தகம், படையெடுப்பு, பிரயாணம் முத லான எல்லாவற்றிற்கும் பயன்பட்டுள்ளன. உறுகுணை நாட்டுச் சிங்கள ர்களோடு மட்டக்களப்பு மக்கள் பெரிதும் தொடர்புகொண்டிருந்தனர் என்பதும், சிற்றரசர்களாகத் தமிழ் வன்னிமைகள் காலத்துக்குக்காலம் இருந்தனர் என்பதும் நாம் அறிந்த உண்மை வரலாறுகள்.
உறுகுணைப் பகுதியைக் காவல் செய்யுங் கடல் நாவாய்கள் மட்டக்களப்பு, திருக்கோயில், அறுகம்பே, பாணம முதலான துறைமுகங்களை அடிக்கடி தரிசித்துச் சென்றன. எனினும், பெரிய போர்ச்சாதனங்கள் இல்லாத அந்நாவாய்கள், போர்த்துக்கீசர் முதலான வெளிநாட்டாரது கப்பல்களைக் கண்டு வழிவிலகிவிட்டதில் வியப்பொன்றுமில்லை. இத்தகைய காவல் நாவாய்களின் தங்கிடம் அறுகம்பையாக இருந்ததென்று கூறப்படுகின் றது. வியாபாரமுறையிலே, இத்துறை வருடத்தில் எட்டு மாத காலத்திற்குப் பயன்பட்டிருக்கின்றது. 1605இல், ப்ோர்த்துக்கீசரது படையொன்றைச் சேர்ந்தோர் இத் துறைமுக வழியாக உட்புகுந்து, உறுகுணைக் காடுகளில் இருந்து பொதி எருதுகளில் வணிகர் கொண்டுவந்த பல பொருள்களையும் சூறையாடிச் சென்றிருக்கிறர்கள்.

Page 238
426 மட்டக்களப்புத் தமிழகம்
அவர்கள் மட்டக்களப்பு வழியாக வெளிச்சென்றனர் என்றும் 1609இல், மட்டக்களப்புத் துறைமுக வழியே மீண்டும் உட்புகுந்தனர் என்றும் தெரிகின்றது. டச்சுக் காரர் தம் காலமுற்றும் இலங்கையின் தென்கிழக்கிலே அதனை ஒரு பிரதான துறைமுகமாக வைத்திருந்தனர். உப்பு, தேன், மிளகு, யானைத் தந்தம் என்பனவும், முதிரை, கருங்காலி முதலிய மரங்களும் அவர்கள் காலத்தே இத் துறைமுக வழியாக ஏற்றுமதி செய்யப் பட்டன. பொத்துவில் என்னும் இடத்திலிருந்து மொனரகலை வரையும் ஒரு நல்ல வீதி திறக்கப்பட்ட பின்னர் மொனரகலைப்பகுதியிலிருந்து தேயிலையும், கருங்காலி முதலான காட்டு மரங்களும் இத்துறைமுகத் திற்கு வந்து இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இன்றும் காட்டுமரங்களும், கெல், கொப்பரா என்பனவும் யாழ்ப்பாணம், கொழும்பு, இந்தியா ஆகிய இடங் களுக்கு இத்துறைமுக வழியாக வெளிச்சென்றுகொண் டிருக்கக் காணலாம்.
இதன் தெற்கே உள்ளதுதான் பாணமை என்னும் துறைமுகம். மலைக்குன்றுகளே அடுத்து, காடு சூழ்ந்த இவ்விடம் வரண்ட பிரதேசத்திலுள்ளதாகும். படைகளை இறக்கிப் பாடிவீடு போடுதற்கே மிகுதியும் சிறந்த இடமாக இதனைப் போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் கருதினர். இப்பகுதியை ஆண்ட சிற்றரசர்கள், காடுபடுதிரவியங்க ளான தேன், யானைத்தந்தம் என்பவற்றையே திறையாக வழங்கியுள்ளார்கள். அப்பொருள்கள் சிங்கள மன்னர்களுக்கும் கப்பல்கள் மூலமாகவே அனுப்பப் பட்டுள்ளன. உகந்த ’ மலையினை அடுத்துள்ள துறை முகத்தினைச் சைவர்கள் தங்கள் சமயச்சார்பு தொடுத்துக் கூறுவர். முருகக்கடவுள் சூரனே வெற்றிகொண்ட பின்னர் மனமுவந்து வந்திருந்த துறை இதுவாகும் என்பது அவர் கூற்று. கருங்கல்லால் ஆன பெரிய கடற்தோணி, சவள் (துடுப்பு) என்பவை இங்கே கிடக்க நாம் இன்றும் காணலாம். அக்கரைப்பற்றைச் சார்ந்த கருங்கொடித் தீவிலிருந்து தெற்கே இருக்கும் 12 களிமுகங்களும் காலா

மட்டக்களப்புத் துறைமுகங்கள் 427
காலங்களிற் சிறு துறைமுகங்களாகப் பயன்பட்டன வென்றும், பெரிய வெள்ள காலங்களில் அக்களிமுகங்கள் போக்குவரத்துச் செய்தற்குத் தடையாக இருந்தன வென்றும் தெரிகின்றது.
பொதுவாக, மட்டக்களப்புக் கடற் றுறைமுகங்க ளெல்லாம் ஐரோப்பியரது தொடர்பின் பின்னரே அதிகம் வெளியுறவுகொண்டிருக்கின்றன. ஈழநாட்டினேப் போர்த்துக்கீசர் அடிப்படுத்தியிருந்த காலத்தில், மட்டக் களப்புப்பகுதித் துறைமுகங்களிலே சில அவர்களது ஆதிக் கத்தில் இருந்தனவெனினும் அடிக்கடி நிகழ்ந்த ஒல்லாந்தர் களது தலையீடு விரைவிலே மட்டக்களப்புக் கடற் றுறைகளை விட்டோடுமாறு அவர்களைச் செய்தது. படைகளை இறக்கவுங் கொள்ளைப்பண்டங்களைச் சேக ரிக்கவும், விக்ள பொருள்களையும், திறைகளையும் ஏற்றுமதி செய்யவும், வியாபாரப் பொருள்களை இறக்கவும் தக்க வசதிகளை உடையனவாக மட்டக்களப்புத் துறைமுகங்களை ஒல்லாந்தர் ஆக்கினர்கள். சிறந்த கடற்றுறைக்கோட்டை ஒன்றினே அவர்கள் கோட்டைக் கல்லாற்றிலே அமைத் தற்கு அத்திவாரமும் இட்டிருக்கிருர்கள். அந்த அத்தி வாரமும் ஒரு கிணறும் இன்றும் சிதைந்த நிலையில் அங் குள்ளன. போர்த்துக்கீசர் மட்டக்களப்புத் துறைகளை 1622 - 1639 வரையுள்ள பதினேழு ஆண்டுகளும், ஒல்லாந்தர் 1639 - 1672 வரையுள்ள முப்பத்துமூன்று ஆண்டுகளும் தம் அடிப்படுத்தி வைத்திருந்தனர். 1672இல், பிரான்சியருடைய தலையீட்டினல் ஒல்லாந்தர் அத் துறைமுகங்களை விட்டுச்சென்றனரெனினும், பிரான் சியர் மட்டக்களப்புத் துறைமுக விருத்தியில் எவ்வித கவ னமுஞ் செலுத்தினர் இல்லை. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னரே மட்டக்களப்புக் களிமுகத்துறை யில் ஒரு புதிய கலங்கரை விளக்கம் (படம் 15) அமைக் கப்படலாயிற்று. கற்குடாத் துறைமுகமும் புதிய கடற்பால அமைப்புகளைப் பெற்றது. ஆங்கிலேயரது கடல் வியா

Page 239
428 மட்டக்களப்புத் தமிழகம்
பாரச் சிறப்பினலேயே நாட்டின் முக்கிய விளைபொருள்க ளான தேங்காயும், நெல்லும் பிற இடங்களில் நல்ல மதிப்பினைப் பெறலாயின.
இக் கடற்றுறைச் சிறப்புக்கள் ஒருபாலாக, கிழக் கிலங்கையிலே துறைமுகங்களென்று பெரும் புகழ்பெற்று விளங்குவனவான மட்டக்களப்புவாவித் துறைகளையும் நாம் இங்கு நினைவு கூருவது அவசியமாகின்றது. மட்டக் களப்பினுTடே வடக்குத் தெற்காக சுமார் 30 மைல் நீண்டு கிடக்கும் வாவியானது காட்டை எழுவான்கரை, படுவான்கரை என்று பகுத்திருப்பதை அறிமுக உரையிற் கண்டிருக்கிறுேம். தெங்கின் செல்வத்தை மிகுதியாய் எழுவான்கரையும், செந்நெல் வளத்தை மிகுதியாகப் படுவான்கரையும் கொண்டு விளங்குவன. மட்டக்களப்பு நாட்டின் இருகரையினரும் பண்டமாற்றுச்செய்து வாழ்ந்த சிறப்பினை இன்றும் நாம் இவ்வாவிக்கரை மருங்கிலுள்ள ஊர்களிலே காணலாம்.
மட்டக்களப்பு நகரினை அடுத்துள்ள பெரிய துறை முதலாக, வலேகட்டிறவுத்துறை, கன்னன்குடாத்துறை, மண்முனைத்துறை, அம்பிளாந்துறை, களுதாவளைத்துறை, பட்டிருப்புத்துறை, குறுமண்வெளித்துறை, நீலாவணைத் துறை, கிட்டங்கித்துறை என்பனவாக உள்ள துறைக ளெல்லாஞ் சிறு வள்ளங்களால் மக்கள் தொடர்பை வாவியின் இருகரைக்குஞ் சேர்க்கின்றன. மேற்குக் கரையில் இருந்து செந்நெல், தேன், காட்டுமரங்கள், காய் கறிகள், கிழங்குகள், விறகு முதலியன எழுவான்கரைக் கும், வெற்றிலை, மீன், தேங்காய், முதலியன அங்கிருந்து படுவான்கரைக்கும் இத்துறைகளின் வழியாகக்கொண்டு செல்லப்படுகின்றன. மட்டக்களப்பு வாவி ஒரு காலத்தே கிட்டங்கித்துறைக்கு அப்பால் நீண்டு கிடந்ததென்றும், அதன் தென்கோடியிலேதான் சம்பாந்துறை என்னும் துறைமுகம் அமைந்து பெரிய வியாபாரத்தலமாக விளங் கிற்றென்றும் தெரிகின்றது. இந்திய வியாபாரிகளாற்

மட்டக்களப்புத் துறைமுகங்கள் 429
கொண்டுவரப்பட்டு நின்ற * சம்பான் ’ என்னும் வள்ளங் களின் பெயரே அவ்விடத்திற்கும் வழங்கப்பெற்றதென்ற குறிப்பு இத்துறைமுகச் சிறப்பினை நன்கு காட்டுகின்றது. கல்முனைப் பகுதியைச் சார்ந்த வயல்களில் இருந்து பெறப்பட்ட நெல் எல்லாம் சேமிக்கப்பட்ட கிட்டங்கிகள் (நெற்குதங்கள்) நிறைந்தஇடம் கிட்டங்கித்துறையாயிற்று. இவ்விடத்திற்கும் மட்டக்களப்பு நகரத்துக்குமாக ஆங்கி லேயர் காலத்திலே பெரிய மோட்டார் வள்ளங்கள் சென்றுவந்தன. இவை மக்களின் போக்குவரத்துக்கும், ஏற்று இறக்குமதி என்பனவற்றிற்கும் நல்ல சாதனங்க ளாக விளங்கின. கொப்பரு, நெல் என்பன இவற்றற் பெரிதும் ஏற்றிறக்குமதி செய்யப்பட்டன. இதுபற்றிய விபரமான செய்திகளையெல்லாம் * அரசாங்க ஏசன்டர் கள் காலத்திற்குக்காலம் வெளிப்படுத்திய ஆட்சிக்குறிப்பு களில் இருந்து பெறலாகும். இன்று புகையிரதம், மோட்டார்வண்டி முதலியவற்றின் தொடர்பினு லே பழைய துறைமுகங்களெல்லாம் கைவிடப்பட்டுப்போயின எனினும் அவை புதுக்கி அமைக்கப்பெற்ருல் செலவும் காலமும் சுருங்கி, வளமும் நிதியும் நமக்கு மிகுந்து வருதல் கூடும்.

Page 240
10. ஒழிபு
கிலேவளமும், நிலவளமும் நிறைந்த மட்டுநன் னுட்டின் சிறப்புக்கள் முற்றக் கூறமுடியாத பெரும்பரப்பின. அவற் றுள், முதன்மையானவை என்று கருதப்பட்டவற்றை ஒருவாறு சில இயல்களில் மேலே ஆராய்ந்தோம். அங்குச் சேராது விடப்பட்டவற்றுட் சிலவற்றையாவது தொகுத்து இந்த இயலுட் காணலாமென்று எண்ணுகின்றேன்.
இந்துசமயம் (பொதுக்குறிப்பு):
தொல்காப்பியர் காலத்திற்கு முன்புதொட்டே தமிழ கத்திலிருந்ததாகக் கருதப்படுகின்ற குடிப்பிரிவு மட்டக் களப்புத் தமிழகத்தில் இன்றும் அழியாது விளங்குகின்றது என்று அறிமுகவுரையுட் குறிப்பிட்டோம். இந்நாட்டு மக்களிடை வழங்கும் சாதிப்பகுப்புகளின் உட்பிரிவுகளே தனித்தனி * குடியெனப்படுவது. மட்டக்களப்புச் சாதிப் பிரிவுகள் உயர்வுதாழ்வுகளைக் குறிப்பதற்காகவன்றிப் பெரும்பாலும் அங்கங்குள்ள கோயில் கிருவாகங்களுக் கென்று எழுந்தன எனக் கொள்ள லே பொருத்தமாகும். மட்டக்களப்புத் தமிழகத்திலிருந்த சிற்றரசரும், பெரு நிலக்கிழவரும் எல்லாம் பெரும்பாலும் சமயம், விவசாயம் என்பவற்றிலேயே ஈடுபாடுகொண்டிருந்திருக்கின்றனர். கிழக்கிலங்கையினர் பண்டையிலிருந்து போர்த்துக்கீசர் வரவுவரைக்கும் வேற்றுமதக் கலப்பின்றித் தூய சிவநெறி

ஒழிபு 431
யினராகவே வாழ்ந்திருக்கின்றர்கள். வைணவத்தைப் பரப்புவதற்கென்று கி. பி. 11ஆம் நூற்ருண்டில் இங்கே வந்த குழுவைச் சேர்ந்தோர் இங்குள்ளோராற் தோற்கடிக் கப்பட்டாரென்று மட்டக்களப்பு மான்மிய ஏடுகள் கூறு கின்றன. விட்டுணு பக்தர்களால் அமைக்கப்பட்ட ஒரு சில கிட்டினன் கோயில்களும் சைவக் கோயில்களாகவே வளர்ந்துள்ளன. அதனல் விட்டுணு சமயம் என்று வேருக ஒன்று எழ இடமில்லாமற் போனதோடு விட்டுணுவை வழிபடுவாரும் சிவசமயத்தாராகவே இன்றும் வாழ்கின்ற சிறந்த சமய சமரசத்தை மட்டக்களப்பிற் காணக்கூடியதா யுள்ளது.
மட்டக்களப்புத் தமிழகத்து முலை முடுக்குகளில் எல்லாம் பல முருகன் கோயில்களும், பிள்ளையார் கோயில்களுமே முதன்மையாய் உள்ளன. அங்கங்கே அம்மன் கோயில்களும் பல காணப்படுவ. பத்திரகாளி, பேச்சி, மாரி, கண்ணகி, திரெளபதி, கடலாட்சி என்ற பெயர்களானமைந்த அம்மன் கோயில்கள் அவற்றுட் குறிப்பிடத்தக்கன. மட்டக்களப்புத் தமிழகமெங்கும் பெருஞ் சிறப்புடன் பரந்து விளங்கும் கண்ணகியம்மன் வழிபாடுபற்றித் தனி இயல் ஒன்றில் விரிவாகக் கண் டிருக்கின் ருேம். கண்ணகி, திரெளபதி அம்மன் கோயில் களிலே உயிர்ப்பலி கொடுக்கப்படுவதில்லை. மற்றைய அம்மன் கோயில்களில் இருந்த அவ்வழக்கமும் இப்போது நீக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்புக் களிமுகத்தருகில் உள்ள நாவலடி என்னும் ஊர்க் கடற்கரையிலே இக் நாட்டில் உள்ள சிறந்ததொரு கடலாட்சி அம்மன் கோயில் இருக்கின்றது. தீப்பள்ள்யம்:
மட்டக்களப்பின் பழைமையான திரெளபதி யம்மன் கோவில் கல்முனே க்கருகிலே பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு நடக்கும் வருடாந்த விழா மட்டக்களப்புத் தமிழில் ‘தீப்பள்ளயம்’ என்றழைக் கப்படுவது. பள்ளயம்’ என்ருல் பெருவேள்வி என இங்குப் பொருளாகும். எனவே திரெளபதி அம்மனுக்

Page 241
482 மட்டக்களப்புத் தமிழகம்
கெடுக்கும் பெருந் தீ வேள்வியே தீப்பள்ள யழாகும் என்பது பெறப்படும். பாண்டிருப்புக் கோவிலும், திரெள பதியம்மன் வழிபாடும் கண்டி மன்னனன விமலதரும சூரியன் (கி. பி 1594 - 1604) காலத்தில் இங்கு நிறுவப்பட்டன என்று தெரிகின்றது. அக்காலத்திலே வட் இந்தியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த தாதன் என்பான், இங்கிருந்த சிற்றரசனன எதிர்மன்னசிங் கனின் உதவியோடு இக்கோயிலை அமைத்தனன் என்று பாண்டிருப்புக் கோயில் பற்றிய பட்டயங்கள் கூறு கின்றன.
66
பார்த்திடர்கள் கொண்டாடப் பாரதத்திற் சொன்னபடி கம்பம், வனவாசம், கடல்குளிப்புத், தீப்பாய்தல், அம்புவில்லுத் தண்டுடனே ஐவர்கொலு வாக்கிவைத்து, ஆடலொடு பாடி, ஆதி துரோபதைக்கு மாடமுயர் கோவில் வரிசையுட னியற்றிக், கும்பிட்டார் தெண்டனிட்டார் குவலயத்தைக் காருமென்ருர்: தம்பட்டை, சல்லாரி, தாரை, சின்னஞ், சங்குதொனி உடுக்கு ச், சிலம்பு, மணி, ஒளிதங்கு தீபமெழ, அடுக்கு முறையோ டராவான் களப்பலியும், பத்தகி போற்காட்டிப் பணிக்கன் குலத்தோர்க்கு உற்ற புகழ்மேவ உங்களுக்கே முன்னிடு ஈந்தே னிலங்கை எங்குமுயர்ந் தோங்கவென
SS SSSSS S S S L S S S 0LL S SL S S LSL SLL LL 0 SS S LSL LSL SL SL LS L LS LS S S S S S S SL S LS SLLL L S SLL 0 S S SL LSL LSL S S S SL LS SL L SL S S S SS S LSL S LSLSLS
விமல தருமனெனும் வேந்த னகமகிழ்ந்து கமல விழிக்கண்ணன் கருணேதங்கு மிப்பதிக்கு வேண்டும் வயல்கிலமும் வெள்ளிக் களஞ்சியமும் தூண்டு திகிரிதந்தம் சோதியெழ வீக் துமன்னன் கண்டி நகர் சென்றன் . . . . . . . . . . . என்ற பட்டயக்கூற்று பாண்டிருப்புத் துரோபதையம்மன் கோயில் விழா, ஒழுங்கு முதலானவற்றை அமைப்புக் கால முறைப்படியே கூறுவது. பாண்டிருப்பினைத் தொடர்ந்து பழுகாமத்திலும், பின்னர்ப் புளியந்தீவு, மட்டிக்களி என்னும் இரு இடங்களிலும் திரெளபதி யம்மன் கோயில்கள் எழலாயின. தீப்பள்ளயச்

ஒழிபு 483
சடங்குக் கால முற்றும் கோயிலில் பாண்டவர் வனவாசம் முதலியவற்றைக் கூறும் பாரதக்கதை படிக்கப்பெறும், சடங்கின் இறுதிநாளன்று நடைபெறுவதான தீப்பாயும் நிகழ்ச்சியே இவ்விழாவில் மிக முக்கியமானதாகும். கோயில் முன்றிலில் ஏறக்குறைய இருபது அடி நீளமும் கான்கு அல்லது ஐந்து அடி அகலமும் மூன்று அடி ஆழமு முள்ள குழி ஒன்று தோண்டப்பெற்று முதிர்ந்த வீரைமர விறகுகளால் நிறைக்கப்படும். நெருப்பூட்டப்பெற்று அனல் கக்கும் ‘தணல்களாக விறகஃனத்தும் மாறிய பின் னர்க் கோயிற்பூசகருள் முதல்வரும், ஐவர் ஐந்து பேரும்' (ஐவர் - பாண்டவர், பாண்டுவின் புத்திரர்), துரோபதை அம்மனும், தீப்பாய்ந்து தம் நேர்த்திக்கடன்களைச் செலுத்தவந்த பக்தர்களும் தீக்குழியினே வலம்வந்து, அதன் நடுவழியாக மெல்ல மெல்லக் கோயிலின் எதிர்ப் புறத்திலிருந்து கோயிலை நோக்கி நடந்து செல்வர். தீயின் வெப்பம் பக்கத்தில் வெகு தூரத்தே நிற்போரையும் தகிக்கத்தக்கதாக இருக்கும்போதும், தீப்பாயும் எவ ருக்கும் அப்பேரழல் ஊறு செய்யாது காக்கும் அம்மனது தெய்வப் பெருஞ்சிறப்பை அனைவரும் வியந்து கொண் டாடுவர். தீப்பாயு முன்னர்ப் பூசகர் அக்குழியின் மீது மந்திரித்த தீர்த்தத்தோடு வீசும் பூக்களும், இலைகளும் நீண்டநேரம் சென்றும் வாடாது கிடக்கும் சிறப்பு அனே வரையும் பக்தி பரவசத்துள் ஆழ்த்துவது.
திருப்படைக்கோவிலும் குடிப்பிரிவும்:
மட்டக்களப்பு நாட்டுப் பெருவழக்காக விளங்கிய சமயம் சைவமே என்று முன்பு கண்டோம். சைவருட் பெரும்பால்ான மக்கள் முருகவழிபாடே கொண்டவரா யுள்ளனர். கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் கோயிலே (படம் 5) மட்டக்களப்பு முழுவதிலுமுள்ள ஒரே ஒரு சிவன்கோவிலாகும். முருகவழிபாட்டினேச் சார்ந்தது போலவே அங்கு கடக்கும் சிவபூசனேகளும் உள்ளன. மட்டக்களப்பிலே பழமையும் பிரசித்தமுமுடையவான முருகன் கோயில்களைத் திருப்படைக்கோயில்கள் என்று கூறுவர். பண்டைய அரசரின் மதிப்பும், மானியமும்,
ህፅ – 28

Page 242
434 மட்டக்களப்புத் தமிழகம்
சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாம். திருக்கோவில் என்னும் ஊரில் உள்ள சித்திரவேலாயுத சுவாமி கோவிலே மட்டக்களப்பில் உள்ள முதலாவது திருப்படைக் கோயிலாகும். இதனைத் தேசத்துக் கோவில் ' என்று பொதுவாகக் கூறுவர். மட்டக்களப்பாகிய தேசம் முழுவதற்கும் சொந்தமானது மட்டுமன்றி, கோயில் ' என்ற பெயரால் இங்கு அழைக் கப்படும் ஒரேஒரு கோயிலாயுள்ளதும் இதுவே யாதலால் இச் சிறப்புப் பெயர் இக் கோயிலுக்கு உரியதாயிற்று. மற்றைய திருப்படைக் கோயில்களாக முறையே எழுந்தவை ; கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீஸ் வரர் கோயில், பெரிய போரைதீவுச் சித்திரவேலாயுத சுவாமி கோயில், வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில், மண்டூர்க் கந்தசுவாமிகோயில் என்பவையாகும். உகந்தமலை(படம் 60)யிலுள்ள கந்தசுவாமி கோவிலும் பழைமையான ஒன்ருய்த் திருக்கோயிலை அடுத்த திருப் படைக்கோயிலெனப் பெருமை பெற்றிருந்ததென்று கூறப் படுவதெனினும், அதுபற்றிய தெளிவான குறிப்புகள் இன்று இலகுவிற் கிடைப்பதாயில்லை. அடுத்ததாகத் திருப்படைக்கோயிலென்று கொள்ளத்தக்க சிறப்புடைய இன்னெருகோயில் சிற்றண்டிக் கந்தசுவாமிகோயில் (படம் 55) ஆகும்.
திருப்படைக் கோயில்களின் நிருவாகம், பராமரிப்பு, மற்றும் தொண்டுகள் என்பவற்றைச் செய்யும் சாதி யார்களை வகுத்து நியமித்து, அக்கோயில்களில் நடக்க வேண்டிய விழாக்கள் முதலியவற்றையும் ஒழுங்குற அமைத்து, மட்டக்களப்புச் சிற்றரசரும், கண்டிச் சிங்கள மன்னரும் அவற்றுக்கான மானியங்களையும் அவ்வப் போது வழங்கியுள்ளனர். பெரும்பாலான திருப்படைக் கோயில்களின் நிருவாகத் தலைமைக்கு எனக் கலிங்க வெள்ளாளர் ' என்னும் சாதியார் நியமிக்கப்பட்டுள் ளனர். இலங்கையைத் திரிசிங்கள தீவாக்கித் தீவின் முப்பகுதியையும் முறையே ஆண்ட, வங்கர் (தெற்கும் மேற்கும்), சிங்கர் (வடக்கு), கலிங்கர் (கிழக்கு) என் பாருள், கலிங்கராலே தம் காட்டிலிருந்து கொண்டுவரப் பெற்று அங்கங்கே பிரதானிகளாக வைக்கப்பட்டிருந்

ஒழிபு 435
தோர் * கலிங்க வெள்ளாளர் ஆவர். அதனற் பூபால கோத்திரம் ’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். பூமியை ஆள்பவரது குலம் என்பது இத் தொடர்க்குப் பொருளாகும். கொக்கட்டிச் சோலையிற் 8 குடுக்கை கூறும் " விபரம் கூறுகின்ற பட்டயத்திலே * பூபாலகோத்திர மென் பது கலிங்க வெள்ளாளர் ' என்ற ஒரு குறிப்புக் காணப் படுகின்றது. * முற்காலத்தில், சேரன், சோழன், பாண்டி யன் இவர்களை முறையே நாயர்குலமென்றும், பிள்ளைக் குலமென்றும், காராளர் வமிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர் ’ என்று திருப்படைக்களஞ்சியம்’ என்ற திருக் கோவிற் பட்டயமும் இவரைப்பற்றிக் கூறக் காணலாம். இவர்கள் திருக்கோயிற் பணிக்கென்றே முதலிற் கொண்டு வரப்பெற்று அப்பகுதியிற் குடியேற்றப்பட்டனர். அவர்கள் குடி யேற்றப் பட் டி ருந்த இடம் கோரைக் களப்பாகும் என்றும் கூறுவர். இலங்கைக்கு மாகோன் வந்தபோது, இவர்களது பணிமுறையும் மற்றும் ஒழுங்கு களும் சீர்கெட்டு மாறியிருந்தமையைக் கண்டனன். கோவசியர் (பூபாலகோத்திரத்தார்) என்று அழைக் கப்பட்ட இவரை ஏழுகுடிகளாக மீண்டும் அம் மன்னன் வகுத்து நிறுத்தி அவரவர் பணிகளைத் திட்ட மிட்டானென்று * குளிக்கல் வெட்டுமுறைப் பட்டயம் ? குறிப்பிடுகின்றது :
* கண்டனுெடு சருகுபில்லி, கட்டப் பத்தன், கருதரிய கவுத் தனு, மத்தி யாயன், மண்டலத்தில் பொன்னுச்சி, வயித்தி யென்று
கோவசியர் மக்களிலே வருண மாக்கி பண்டுமுறை தவருமல் எழுகுடி யாய்ப்
பகுத்தீசர் பணிபுரியப் பரவணி யாய் அண்டர்தமைச் சாட்சிவைத்துத் தத்தம் செய்தான்.”* என்ற அப் பாடற் பகுதியால் கண்டன்குடி, சருகுபில்லி குடி, கட்டப்பத்தன்குடி, கவுத்தன்குடி, அத்தியாயன்குடி, பொன்னச்சிகுடி, வயித்திகுடி என்று ஏழு குடிப் பிரிவினை யுடையர் பூபாலகோத்திரத்தார் என்று அறிகின்ருேம். இக் குடிகள் இன்று முறையே கண்டங்குடி, சருவிலிகுடி, கட்டப்பத்தாங்குடி அல்லது சங்கரப்பத்தாங்குடி, கவுத்தங் குடி, அத்தியாகுடி, பொன்னச்சிகுடி, வச்சினகுடி என்று

Page 243
436 . மட்டக்களப்புத் தமிழகம
வழங்கப்பெறுவ. இக்குடிக ளொவ்வொன்றினும் உள்ள உட்பிரிவுகளையே வகுத்துவார்’ (குறிப்பிட்ட ஒருவரது வயிற்றிற் பிறந்த வழிமரபினர்) என்றழைப்பர். உதாரண மாக மண்டூரில் உள்ள பெரிய கவுத்தன் குடியாரைப் * பழுகாமத்து வகுத்துவார்’ என்றும், மண்டூர் வகுத்து வார்’ என்றும் அவரைப் பெற்ற இரு சகோதரியரின் கணவரது ஊர்ப்பெயரால் அழைப்பதைக் கொள்ளலாம். இந்த ஏழு குடியினருள், முதல் மூவரும் திருக்கோவிற் சித்திரவேலாயுத சுவாமி கோயில், தம்பிலுவிற் கண்ணகி யம்மன் கோயில் என்பவற்றிற்குடையோராய் அங்கே தங்கிவிட்டனர். கவுத்தன்குடியா ருள் மண்டூர்க் கந்த சுவாமி கோயிலுக்குரியோர் மண்டூரிலும், பெரிய போரை தீவுச் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்குரியோர் களு வாஞ்சிக்குடியிலும் குடியேறலாயினர். இவர்கள் பின் னர்ப் பரந்து பழுகாமத்திலும் குடியேறி வாழ்வாராயினர். மண்டூரிலிருந்த மண்டுநாகன் என்னும் அரசன், சால சேனனுடன் கலிவருடம் 4209இல் செய்த போரிலே மடிந்தபின்னர்ப் போரைதீவு, மண் டு ர் ப் பகுதிகள் பாழடைந்துபோயின என்றும், அவனுக்குப் பின்னர் அங்கு பட்டத்துக்குவந்த மதிசுதன் (கலி 4209 - 4220 ஏறக்குறைய கி. பி. 1107-1118) என்பான் அவ்வூர்க் கோயில்களையும், அவற்றின் நிருவாகம் பூசனை ஒழுங்கு கள் என்பவற்றையும், வெள்ளாளர்க்குரிய சீர்வரிசை களையும் பழையமுறைப்படி திட்டம் செய்தான் ’ என்றும், * போர்முடைநாடு’’ (போரைதீவு) சித்திரவேலாயுத சுவாமி கோவில் பற்றிய திருப்படைக்கூற்றுகளிற் காணப் படுகின்றன. இவ்வரலாறு மட்டக்களப்பு மான்மிய ஏடுக ளாலும் உறுதிபெறுவது. பொன்னுச்சிகுடி, வயித்திகுடி, அத்தியாகுடி என்ற முக்குடியினரும் கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றிஸ்வரர் கோவிலுடன் தொடர்புடையோ ராயினர். அவர்கள் இன்று பழுகாமத்தில் வதியக் காணலாம். முதலியார் திரு. எஸ். ஓ. கனகரத்தினம் அவர்கள் மட்டக்களப்புச் சரித்திரத்தைக் கூறும் தமது ஆங்கில நூலில், வேளாளர் என்ற வகுப்பினரது குடிப் பிரிவுகளை பெரிய கவுத்தன்குடி, சின்னக் கவுத்தன்குடி,

ஒழிபு 437
அத்தியாகுடி, வயித்தியனுகுடி, கோப்பிகுடி, சங்கரப் பத்தான்குடி, போக்கன்குடி என்று ஏழாகக் குறிப்பிட் டுள்ளார்கள். பெரியகவுத்தன் குடி, சின்னக்கவுத்தன்குடி என்ற இரண்டும் கவுத்தங்குடி என்ற ஒன்றில் அடங்குவ தாகச், செட்டிகுடி என்ற இன்னெருகுடி சேர்க்கப்பட்டு எழுகுடியாய் வழங்கவும் பெறுகின்றது. செட்டிகுடி வெள்ளாளர் பெரும்பாலும் குருக்கள் மடம் என்னும் ஊரில் வாழ்கின்றனர்.
முதலியார் அவர்களுடைய குறிப்புப்படி மட்டக் களப்பில் உள்ள முக்குக வகுப்பினரின் குடிப்பிரிவுகள் உலகிப்போடிகுடி, காலிங்காகுடி, படையாண்டகுடி, பெத்தாண்டகுடி, பணிக்கனகுடி, கச்சிலாகுடி, பெத் தாண்டபடையாண்டகுடி எனும் ஏழு ஆகும். மட்டக் களப்புக் கோவில்களிலே காணப்படும் முக்குகர் வன்னி மைக் கல்வெட்டு', 'சாதித்தெய்வக் கல்வெட்டு', 'திருப் படைக்களஞ்சியக் கல்வெட்டு ' என்ற பட்டயங்களிற் காணுகின்றபடி இம் முக்குக குலத்தாரை வடநாட்டி லிருந்து மட்டக்களப்புக்கு நேரே வந்தவர்களின் சந்ததி யினரென்று கொள்ள லேயன்றி, யாழ்ப்பாணத்திலிருந்து கி. பி. 5ஆம் நூற்றண்டிற் துரத்தப்பட்டோராய் இங்கு வந் தோரென்று கொள்ளுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முக்குகர், மீன்பிடி வம்சத்தவரென்று அறிகின்ருேம். மட்டக்களப்பு முக்குகரது பண்டைய வரலாறுகளில் எங்கேனும் அவர் அத்தொழில் செய்ததாகத் தெரியவில்லை. காடுகெடுத்து நாடாக்கி வயல்வளம்படுத்திய அம்மக்கள் அன்றும் இன் றும் செய்தொழிலால் உழவரே என்றும், காட்டு நிருவா கத்திலும் கோயில் நிருவாகத்திலும் கலிங்க மன்னரால் அவர்க்குப் பங்கு கொடுக்கப்பட்டிருந்ததென்றும் தெளி வாகின்றது. கலிங்க மன்னருக்கு மிக நெருங்கியோராய்ப் பணிபுரிந்தோரின் சந்ததியினர் பிற்காலத்தே காலிங்கா குடி முக்குகரென்றும், படைத்தலைவர் போன்று பணி புரிந்தோரின் சந்ததியார் படையாட்சிகுடி அல்லது படை யாண்டகுடி முக்குகர் என்றும் வழங்கப்பெற்ருரென்று கொள்ளலாம், மண்முனை என்ற சிற்றரசினை அமைத்து

Page 244
438 மட்டக்களப்புத் தமிழகம்
ஆண்ட உலகநாச்சி என்பாளால் ஒரிசாவிலிருந்து கொண்டுவரப்பெற்ருேரே பிற்காலம் உலகநாச்சிகுடி அல்லது உலகிப்போடிகுடி என்று வழங்கப்பெற்றிருத் தல் கூடும். உலகநாச்சியின் மட்டக்களப்பு வரவு மட்டக் களப்பிற் காணப்படும் சரித்திரச் சான்றுகளால் மட்டு மன்றி மகாவமிசத்துக் குறிப்புக்களாலும் உறுதிபெறு வது. இந்த வரலாற்றுக் குறிப்புக்களால், * கலிங்க, ஒரிசா தேசத்தையாண்ட குலசேனனுடைய புத்திரி உலக நாச்சி என்பாள் கெளதம புத்தரது தசனத்தைத் தன் நெடுங் கூந்தலுள் மறைத்துக்கொண்டு, சகோதரனன உலகநாதனுடன் இலங்கைக்கு வந்து மேகவண்ணனிடம் (கி. பி. 30 1-382) அவற்றைக் கொடுத்தாளென்றும், மகிழ்ந்த மேகவண்ணன் அவள் விருப்பப்படி மக்கட் குடியேற்றம் பெருத நிலப்பகுதி ஒன்றை அவளுக்கு கிந்த மாகக் கொடுக்குமாறு தனது நண்பனும் மட்டக்களப்பை அக்காலம் ஆண்டிருந்தோனுமான குணசிங்கன் (கலிவரு டம் ஏறக்குறைய 3500) என்பானிடம் அனுப்பினன் ' என்றும் அறிகின்ருேம். உலகநாச்சியினது வரலாற்றின் மற்றைய தொடர்புகளை இந்நூலுள்ளே (பக். 416இல்) காணலாகும். சிங்கள மேகவண்ணன் காலமும், மட்டக் களப்புக் குணசிங்கன் காலமும் கிட்டத்தட்ட ஒன்ரு யிருத்தலை இங்கு நோக்குக. முக்குக வகுப்பாரது குடி களுள் காலிங்காகுடி, படையாண்டகுடி, உலகிப்போடி குடி என்ற மூன்றும், இச் சிறப்பினுற்போலும், கொக் கட்டிச்சோலைக் கோயிற் தொடர்புகள் முதலியவற்றிலே கூடிய பங்கு கொள்ளும் முதன்மைக் குடிகளாயிருத்தலை இன்று நாம் காண்கின்ருேம். 毒
மட்டக்களப்புத் தமிழகத்தின் பெருவளத்திலே பல துறைகளிலும் பங்குகொண்டோராய் இக் காட்டிலுள்ள தமிழினத்தாரோடு ஆங்காங்கு வாழும் பெருங்குடி மக்க ளான சோனகரிடையிலும் இத்தகைய குடிவகுப்புக்கள் காணப்படுகின்றன. அவையும் பொன்னுச்சிகுடி, உசவிடு மீராலெப்பைகுடி, வரிசைநாச்சிகுடி, பூமாலைகட்டிகுடி, கினிக்கருடன்குடி, பண்ணையவீடுகுடி, முகாந்திரம் நாச்சி குடி என ஏமே என்று முதலியார் கனகரத்தினம்

ஒழிபு 439
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வேளாளர், முக்குகர் என்பாரோடு இந்நாட்டிலுள்ள மற்றைய எல்லாச் சாதி யாருடைய பெயர்களையும் முதலியார் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். எனினும், * சீர்பாதக்காரர் என்பார் பெயர் அவர் நூலுள் விடுபட்டிருத்தல்வேண்டும். அவ்வகுப்பார், சிறியாததேவியின் பரம்பரையினர் என்று கூறப்படுபவரும், மண்டூர் முதலான பழைய ஆலயங்கள் சிலவற்றின் பணிகளோடு தொடர்புடையவரும், மண்டூர்க் கோட்டை முனை, துறைகீலாவணை, குறுமண்வெளி முத லான இடங்களில் நிறைந்து வாழ்வோருமாவர். இவ் வாருன பல சாதி மக்களும் தமது பழமையான குடி வழியால் இன்றும் அழைக்கப்பட்டுவருதல் மட்டக்களப்பி னுக்கே உரிய பெருஞ்சிறப்பாகும்.
குலவிருதுகள் : '
மேற்கண்ட திருப்படைக் குடியினர் பணிசெய்யும் கோயில்களின் விழாநாட்களிலே சீர்வரிசைகள் சில தவருது இடம்பெறுவதைக் காணலாம். கொக்கட்டிச் சோலைத் தான் தோன்றீஸ்வரர் கோயிலிற் தேர்விழா முடிவுறும் போதும், மண்டூர்க் கந்தசுவாமியார் தீர்த்த மாடிய உடனேயும் முறையே * குடுக்கை கூறுதல்’, ‘மாலை கூறுதல்' என்ற குலவிருது நிகழ்ச்சிகள் நடைபெறுகின் றன. * குடுக்கை ’ என்பது அமுது முட்டியைக் குறிக்குஞ் சொல். திருஅமுது நிறைந்த சிறிய மண்குடம் என்று * அமுதுமுட்டி ' என்னுஞ்சொல் பொருள்படும். தேர்விழா முடிவின்போது கோயிற்பணிகளில் ஈடுபட்டோர்க்கும், விழாப் பொறுப்பாளராய் இருந்த பெருமக்களுக்கும் ஆண்டவனுல் அருளப்பெறும் திருவருட் பிரசாதத்தைக் கொண்ட திருமுட்டியே குடுக்கை என்று பக்தியுடன் கருதப்படுவது. திருவமுதுக் குடுக்கை ஒவ்வொன்றையும் காராளர் தம் கையில் எடுத்து முறையே வரிசைப்படி அதற்குரிய குலத்தார் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும். உரியவர் அன்றி வேறு எவரும் அதனை வாங்குவதற்கு முன்வரின் வந்தவரது குலம் கோத்திரங் களைக் கேட்டு மற்றையோர் எதிர்ப்புக் காட்டுவர். அதனல், குடுக்கை வாங்கவருவோர் தம்மைப் பற்றிய

Page 245
440 மட்டக்களப்புத் தமிழகம்
ஐயத்தை நீக்கி வாதிடத் தக்கவரா யிருந்தாலன்றி மானத் தோடு மீளுதல் முடியாதவராவர். குடுக்கை கூறுவோர் வேளாளராகவே இருத்தல் வேண்டுமென்பது கலிங்க மன்னனல் நியமிக்கப்பெற்ற பழைய கட்டுப்பாடாகும்.
* அமுதுகள் படைத்து அந்தணர் அளிக்கத் தமதுபிற் சூத்திர சாதிகள் எழுந்து 4 மன்ன ! மகிபா 1 மானிலத் தரசே அன்ன ளந்தணன் அறம்பறித் திடுவோன் சாதம் புசிக்கில் தனித்துண் டிருப்போன் ஈயாக் குலத்தோன் அவனிடத் தருந்தில் தீராத் தோஷம் தொடருமென் ருேதி
வெறுப்புறச் சூத்திரர் வேந்தனும் வினவ மாசற்ற குலத்தார் மாமிச மருந்தர் தேசத்தி லுயர்வோர் சிவனடி தொழுவோர் உடலழுக் கறுப்போர் உழுது னின் தருவோர் நடைதனி லழகர் நல்லற மீவோர் தன்னுயிர் போலத் தரணியி லனேத்தும் மன்னுயிர் எல்லாம் வணங்கவே வழங்கும்
வேளாளர் என்று விருதுகள் பெற்றுழும் ஏழா லடியார் இருகரம் அதனல் தந்தா லுண்டு தருமம் வளர்ப்போம் கந்தர் குலத்தாய் ! உன் கட்டளை தருகென
மன்னவர் மகிழ்ந்து' அப்படியேயாகுக என்ருன்
என்பது குடுக்கைகூறும் கல்வெட்டுப் பகுதியாகும். அந் தணரிலும் பார்க்க அறம் வளர்க்கும் பெருங்குடியார் உழவரே என்று தேசத்தார் ? ஒப்பியபடி * மன்னவனும் அதனை ஏற்று முட்டிகளின் மேற் பட்டுச்சீலை போட்டு வரிசைப்படியே ஒவ்வொருவருக்கும் வேளாளரே குடுக்கை கூறி அளிப்பாராக’ என்றனன். திருவமுதுக் குடுக்கைகளை யாவருக்கு முதலிற் கொடுக்கவேண்டும் என்பதும், முறையே பின்னர் அது பெறும் வரிசை யாளர் யாவர் என்பதும் மிக முக்கியமாக இந் நாட்டில் கவனிக்கப்பெறும் ஒன்று. அம்முறை மாறுதல், பெருத்த

ஒழிபு 441
சண்டைகள் ஏற்படுவதற்குக் காலாதலும் உண்டு. கலிங்க மன்னன், கோயில்களிலே இவ்விருதுகளைப் பெறுவா ரது வரிசை முறைகளை வகுத்த மைத்த வாற்றையும் இக் கல்வெட்டுத் தொடர்ந்து கூறுகின்றது.
“. . . . . . . . . . . . . . . பெரிய திருப்பதி வாசல்
அறமுயிர் வேதம், நம்பியரி, திருப்பாட்டு, சரிகை சன்னசம், தார் வளர் தேசம், வன்னிமை, வரிசையால் உலக குருநாத்ர், பூபாலர் கோத்திரம், பூவசியன், பாவலர் புகழும் பகுதி புன்னுலே, மண்முனை, மட்ட வாழ்வுறு களப்பு, பெண்பெறு நாடு, பேர்பெறு நகரம், கண்டி, கதிரை, காந்தளை, மாவலி, பண்டுமுன் னயோத்தி, பங்குகள் முதல் கூறெனக் கொற்றவன் கூறிட உழவர் கூறிய பின்பு . . . w a v v
என்பது அக்கல்வெட்டுப் பகுதி.
இப்பாடலில் உள்ள சொற்கள் குறிப்பவை:
பெரிய திருவாசல் - கைலயங்கிரி, வேதம் - பிரமன், நம்பி . விட்டுணு, திருப்பாட்டு - சிவன், சரிகைசன் னுசம் - படையாட்சி, தேசம் - தேசத்தரசன் (கலிங்க மன்னன்), வன்னிமை - தேசத் தரசனின் கீழ்த்தலைவன், (தற்காலத்தே தேசம் வன்னிமை என்ற இரண்டு சொற்களும் ஒன்ருகித் தேசத்து வன்னிமை என வழங்கும்). உலக குருநாதர் - குருக்கள், பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர், பூவசியன் - வணிகன், புன்னுலே என்பது பணிக்கன் வன்னிச்சி, பண்முனை என்பது - உலகிப் போடி குலம், மட்டக்களப்பு - தனஞ்செனன்குடி, நாடு - இராமநாட்டு வேடன், நகரம் -வவுணிய வெள்ளாளர், கண்டி என்பது கிலேமை (கண்டித் தலதா மாளிகைத் தலைவர் ஆக இருக்கலாம்), கதிரை - (கதிர் காமத்து) வேட்டுவப்பெண், காந்தளை - மலையாள முக்குவர், மாவலி - இடையர், அயோத்தி - மறவர்.
* இதுவே எங்கள் கலிங்கராசன் இட்ட முறைமை என்று வன்னியர்கள் (தேசத்து உட்தலைவர்கள்) கலி வருடம் 4708இல் (கி. பி. 1604) விமலதருமனிடம் (கி. பி. 1594 - 1604) கூறி முகமனும் பெற்றனர் ?? என்று மேற்காட்டிய பட்டயத்திலுள்ள பிற் குறிப்

Page 246
442 மட்டக்களப்புத் தமிழகம்
பொன்றும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றது. காலமயக்கில் இவற்றுட் சில பெயர்கள் தற்போது தேவையற்றுப் போய்விட்டன. மண்டூர்க் கந்தசுவாமி ஆவணிப்பூரணை நாளன்று தீர்த்தமாடி நதிக்கரைக்கு வந்ததும் அவர் சூடிச்சென்ற பூமாலைகளை இவ்வொழுங் கினேடு வேறுசில வரிசைப் பெயர்களையும் சேர்த்துக் கூறி வழங்குவர். இவ்வாருண் கோவில் விருதைப் பெறத் தவ றுதல் தமக்கும் தம் குலத்துக்கும் இழுக்கென மேற்படி குடியார் கருதத்தக்க சிறப்பு இவ் வரிசைகளுக்குண்டு.
வெள்ளாளரும் அவருடைய பதினேழு சிறைக்குடி களும் மட்டக்களப்பு இராச்சியத்திலேயே (திருக்கோவி லுக்கும் இன்றைய மண்முனை வடபகுதிக்கும் இடைப் பட்ட பகுதியிலே) * குடிபதி' (குடியேற்றம்) பெற்றனர் என்று அறிகின்ருேம். பதினேழு சிறைக்குடிகளும் வேளா ளரது நன்மை தீமை அல்லது வாழ்வு சாவு காலங் களிலே தொண்டு செய்துவரக் கடமைப்பட்டவரென்றும், வெள்ளாளர் மற்றைய குடிகளோடு, பரிதிகுல கலிங்க மன்னனுக்கு மட்டும் பணி செய்தல் வேண்டும் எனவும் மன்னவன் திட்டமிட்டானென்பது சாதித் தெய்வக் கல் வெட்டுகளாலறியப்படுகின்றது. சிறைக்குடிகளென்பார் : மாதுலர், கோயிலார், பண்டாரம், பண்டாரப்பிள்ளை, குசவர், கொல்லர், முதலிகள், (எண்ணை) வாணிபன், நம்பிகள், வண்ணுர், அம்பட்டர், சாணர், பள்ளர், பறையர், கோவியர், தவசிகள், கடையர் என்பராவர். மேலே காட்டப்பட்டபடி கலிங்கர், வெள்ளாளர் என் பாரோடு * கலிங்ககுடி படையாட்சிகுலம், பணிக்கனூர் குலம், உலகிப்போ டி குலம் இவர்களுக்கும் இந்தச் சிறைகள் ஊழியஞ் செய்வதேயொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபால வன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைக்குடிகளுக்கும் கட்டளை பண் ணியது ’ என்ற குறிப்பு இவர்தம் ஊழிய இடங்களை வகுத்து அறுதியிடுவதாகும்.
மட்டக்களப்புக் கிராமங்களிலே கலியாணம், பெண்கள் புத்தியறிதல் முதலான சடங்குகள் கடை

ஒழிபு 443
பெறுங் காலத்து இன்னெரு முக்கியமான குலவிருதாகிய * கூரை முடி வைக்கும் வழக்கம் இன்றும் பழமை குன்ருத கிராமப்புறங்களில் உளது. குறித்த சடங்கு நடை பெறும் வீட்டின் முன் கதவுக்குமேல் உள்ள கூரையில் நிறைகுடங்களைக் குலவிருதுப்படி வைத்து, கதவின் இரு புறமாகவும் நெடிய சீலைகளைக் கொய்துவிட்டு அவற்றுக்கு நேரே நிலத்திலும் நிறைகுடமும் குத்துவிளக்கும் வைப்பது வழக்கம். கூரை முடிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு குலத்தாருக்கும் குறிக்கப்பட்டபடியே இருத்தல் மிக இன்றி யமையாததொன்றகும். குலவிருதுப்படி கூரைமுடிகள் வைக்கப்பெருது நடக்கும் சடங்குகளுடையாரைப் பொது மக்கள் மதிக்கமாட்டார். கூரைமுடி வைத்தல்’ என்னும் குலவிருது பின்வருமாறு அறியப்படுகின்றது :
கலிங்க குலத்தார்க்கு : பதின் முன்று கூரை முடி, மேற்கட்டி, கில்பாவாடை, தென்னம்பாளை, பதினெட்டு வரிசை மேளவகை, வெள்ளாளர்க்கீந்த சிறைமுற்றும் ஊழியஞ் செய்யவும் வேண்டும்.
படையாட்சி குலத்தார்க்கு : ஒன்பது கூரைமுடி, ஒன்பது சீலை கொய்து வளையவும், தென்னம்பாளை, நிலபாவாடை, வெள்ளாளர்க்கீந்த சிறைகளுள் ஒன்பது ஊழியஞ் செய்யவும், இரண்டு பந்தல் இடவும், பணிக் கனர் குலத்தாரும், படையாண்ட குலத்தாரும் வரிசை செய்யவும் வேண்டும்.
உலகிப்போடி குலத்தார்க்கு : பதினெரு கூரை முடியும், ஏழு சீலை கொய்து கும்பம் வளையவும், தேங்கு மலர் (தென்னம்பாளை), மேற்கட்டி, கிலபாவாடை, மேள வகைகள், வெள்ளாளர்க்கீந்த சிறை பன்னிரண்டும் ஊழியஞ் செய்யவும் வேண்டும்.
கலிங்க குலத்தார் பெண் கொள்ளும் சந்ததியினராகிய உலகநாச்சி குலத்தாரும் கலிங்கரைப்போன்று இராச குலத்தாரேயாவர்.
* வெள்ளாளர்க்கு ஏழு கூரை முடியும், ஏழு சீலை கொய்து கும்பம் வளையவும், பலவிதமான மேள வகை

Page 247
444 மட்டக்களப்புத் தமிழகம்
மேற்கட்டி, நிலபாவாடை, தென்னம்பாளை, பதினேழு சிறைக் குடிகளும் ஊழியஞ் செய்யவும் வேண்டும்.’
* பதினேழு சிறைக்குடிகளுக்கும் முறையே முன்று கூரைமுடி, மூன்று சீலை கொய்து கும்பம் வளையவும். மேற்கட்டி மேளவகை இல்லை. பூக்களில் கமலமலரும் இவர்க்கில்லை. ஊழியமும் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்வாராக,
இன்னெருவகையான குலவிருதும் மட்டக்களப்புத் தமிழகத்துப் பழங்குடியாரிடை வழங்கிவரக் காண்போம். முல்லேயும், மருதமும் சான்ற நிலவளம் பொருந்திய இந் நாட்டினரிடை மந்தைச் செல்வம் முன்பிருந்தே பெரிதும் போற்றிவரப்பட்டுள்ளது. பசு, எருமை மாடுகள் உழவர் செல்வங்களாதலால் அவைகளை மிகுதியும் பேணிக் காத்தல் மன்னர்க்கும் நிலைமைப் போடிகளுக்கும் கடமை யாயிற்று. அதனுல் மேலே கண்ட குடிமரபினர் ஒவ் வொருவரும் தமக்கென வழங்கப்பெற்ற குலவிருதுகளை மாடுகளுக்குக் குறியாகச் சுட்டுக்கொள்ளுவாராயினர். குறித்த விலங்கின் இடதுபுற உடற்பகுதியிலே, தோற் படையில் மட்டும் பதியுமாறு பின், முன் காற்சந்துகள், கன்னம், முதுகை ஒட்டிய விலாப்புறம் முதலான இடங் களிலே பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலாற் தத்தமக் குரிய அடையாளங்களை எழுதுவது * குறிசுடுதல் ’ எனப் படும். இந்நாட்டு மக்களிடை மந்தைகளைப் பாதுகாப்ப தற்காக இருந்த இவ்வழக்கினை முறைப்படி பதிவுசெய்து பாதுகாத்த ஒல்லாந்தர், தமது பதிவுக்கு மாட்டுத் தோம்பு’ என்று பெயரும், அமைப்புச் சட்டமும் வேருக வகுத்து வைப்பாராயினர். குலவிருதுகளின்படியான அவ் வடையாளங்களிற் சிலவற்றை,
* தோணி ரையார்க்குத், தொப்பி துலுக்கருக்கு, காணியுழு மேழிசுளி காராளர்க்கு,-நாணுடைய வில்லம்பு நாட்டிலுள்ள வேடர்க், கெழுத்தானி குகர்க்குக், "கமல மலர் கோயிலர்க்கு. என்பது முதலான பட்டயப் பாடல்கள் சிலவற்ருல் அறியலாம். இப் பாட்டிலுள்ளதுபோலன்றி, காராளர்க்கு

ஒழிபு 445
கமலமலர், சுளி, மேழி என்பனவும், கோயிலார்க்குச் சங்கும் விருதும் குறிகளாய்த் தற்போது நடைமுறையில் அமைந்திருக்கக் காண்கின் ருேம். சுளி என்பதே இன்று சக்கரம் என்று மொழி வழக்குப்பெற்றுள்ள சொல்லாகும். இந்த அடையாளங்களோடு, மாட்டுக்குரியவரது பெயரின் முதலெழுத்தும், அவர் வாழும் ஊர்ப்பகுதியின் பெயரின் முதலெழுத்தும் எழுதப்படுவதால் எந்த ஒரு மாட்டை எங்கே கண்டாலும் அது யாருக்குடையதென்பதை மக்கள் இலகுவாக அறிந்துகொள்ளக்கூடியவராயினர்.
பழக்கவழக்கங்கள் சில மட்டக்களப்பு காட்டுத் தமிழ்த்திருமண நிகழ்ச்சிகள் பற்றியும், மருமக்கட் தாய முறை முதலாகச் சேரநாட்டினர்க்குரியவை போன்ற வழக்கங்கள் சிலபற்றியும் * அறிமுகம் ' என்ற கட்டுரை யுள் (பக். 8) கண்டுள்ளோம். இங்குள்ளாரது பேச்சின் ஒலிவகையும், மலையாளத்தில் உள்ளாரது பேச்சில் உள்ள தைப் போன்றதேயாகுமென இந்தியத் தமிழகத்து அறிஞர் பலர் கூறக் கேட்டுள்ளேன். பழமையான செழுங் தமிழ்ச் சொற்கள் பல மலையாள மொழியில் இருப்ப தாகத் தமிழறிஞர் கூறுகின்றனர். அதே சொற்கள் மட்டக் களப்புத் தமிழகத்தாரது பேச்சுத் தமிழிலும் காணப் படுகின்றன என்று இங்கு வந்து சென்ற மலையாளநாட்டு அறிஞர் பலர் எடுத்துக்காட்டி யுள்ளார்கள். காட்டி னமைப்பும் சேரர் தமிழகத்து (இன்றைய மலையாளத்து) நிலப்பாங்கினேயே ஒத்திருப்பதை இரு நாட்டை யும் நோக்கும் எவரும் அறியலாம்.
இன்றும் சில கிராமங்களிலே உள்ளாரிடை நடை பெறும் விருந்து வைபவம், திருமணம், பிள்ளைப்பேறு, புத்தியறிதல், மரணச்சடங்கு முதலானவற்றின்போது மற்றையோர்க்குப் புதியனவாகத் தோன்றுகின்ற சில பழைய வழக்கங்களை நாம் காணக்கூடியதாக விருக் கின்றது. விருந்தாக வந்தோர்க்கு அவரவர் குலம், கோத்திரம், வயது, செல்வாக்கு முதலானவற்றுக்கேற்ற படி, வெண்மையான சீலைத்துண்டால் முடியும், முடாமலும் தண்ணிர்ச் செம்பினே, வரிசைப்படி முதலிற் கொடுத்துச்

Page 248
446 மட்டக்களப்புத் தமிழகம்
சாப்பிடுதற் கெழுமாறு அழைத்தல் மிக முக்கியமாகச் செய்யவேண்டிய ஒரு வரிசையாகும்.
திருமண நிகழ்ச்சியை மற்றையோர்க்கு அறிவித்து அவரை அழைத்தலை வெற்றிலே பாக்கு வைத்தல் ’ என்று இங்குக் குறிப்பிடுவர். திருமணச் செய்தியை அறிவிக்கச் செல்வோர் வெண்கல வட்டா " (உயர்ந்த காலுள்ள வெண்கலத்தட்டு) ஒன்றில் வெற்றிலே பாக்கு இரண் டையும் வைத்துச் செய்தி சொல்லப்படுவோர்க்குக் கொடுத்தலும், அம்மங்கலச் செய்தியைப் பெற்றுக்கொண் டதற் கடையாளமாக வெற்றிலே பாக்கை அவர் எடுத்துக் கொள்ளுதலும் வழக்கமாதலின் இப்பெயரும் அதற்குப் பொருந்துவதாயிற்று. திருமணமான முதல் முன்று நாட் களுக்கு மணமகன், பெண் வீட்டினை விட்டு வெளிச் செல்லுதல் கூடாது என்பர். மணமக்கள் இருவம் ஆறுமாத காலத்துக்கு எந்தக் கோவிலுக்குச் செல்லுதலும் இங்கே விலக்கப்பட்டுள்ள ஒன்று. முதல் ஆறுமாத காலத்துக்கு, அல்லது பெண்ணின் பெற்ருேர் தம் பொருள் வசதிக் கேற்ப அதிலும் குறைந்த காலத்துக்கு, மணமக்கள் எந்த வெளிஉலக இன்னல்களையும் உணராது இன் புற்றிருத்தற்காக உணவு முதலான எல்லாவற்றையும் தாமே கவனித்துக் கொடுத்தல் வழக்கம். இந் நடை முறைக்கு ‘ ஆறுமாதச் சோறு கொடுத்தல்’ என்று பெயர்.
ஒரு டெண் கருப்பவதியானுல் அக்காலத்தில் அவளது கணவன், வீடுகட்டுதல், தென்னே, மா முதலான மரங்களை நடுதல் செய்யக்கூடா தென்பர். அப்பெண் தனது கையால் யாருக்கும் உப்பு, சுண்ணும்பு என்பனவற்றைக் கொடுத்தலுமாகாது. பிள்ளை பிறந்தவுடனே, பெண் குழந்தையானல் விளக்குமாருென்றையும், ஆண்குழந்தை யானுல் உலக்கை ஒன்றையும், குழந்தை பிறந்த வீட்டு முன்கூரையின் மீது கையால் தட்டிக்கொண்டு கூரைக்கு மேலால், அது சென்று மறுபுறம் விழத்தக்கதாக எறிதல் வழக்கம். பிறந்தது ஆண்குழந்தையாயின் அக்குழந்தை யின் மாமனும், பெண்ணுனல் மாமியுமே முறைப்படி

ஒழிபு 4 47
அவற்றை எறிதல் வேண்டும்.இச்செயல் குழந்தைக்குநல்ல வலுவூட்டி வளர்ப்பதாகும் என்ற நம்பிக்கை உண்டு. வாக்குவாதங்களின் போது ' என்னை நீ வெல்ல முடியு மானுற்தான் உனக்கு எறிந்தது பாலை (மர) உலக்கையாகும்’ என்பதுபோன்று சிலர் அறை கூவி உரைக்கும் தொடர் களால் இதனையறியலாம். பிள்ளே பிறந்த முப்பத்தொரு நாட்களுக்கு, குழந்தையும் தாயும் தங்கியிருக்கும் அறை வாசலில் வேப்பமரக் குற்றிகளைப்போட்டு, இடையீடின்றி எரிந்துகொண்டிருக்குமாறு அவற்றில் நெருப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுதல் வழக்கம், அந் நெருப்புக்கட்டைகள் *காவற்கட்டைகள்’ என்று பெயர் பெறுவ. குழந்தை பிறந்த முப்பத்தோராம்நாள் அதன் தலைமயிர் வழிக்கப்படும். அன்று உற்ருர் உறவினர் யாவருக்கும் குழந்தை பிறந்ததற்கான விருந்து அளிக்கப்படுவதுண்டு. அவ்விருந்து இங்கே * மருங்கை ’ என்று சொல்லப்படும். அமுது, விருந்து, பரத்தை, மருங்கை என்ற வேறு வகைப்பட்ட உணவுக் கொண்டாட்டங்களின் விளக்கத்தைச் செந்தமிழ்ச் சொல் வளம் பற்றிய அதிகாரத்துள் (பக். 95) காட்டியுள்ளேன். அந்த * முப்பத்தொன்றிலன்று ’ அல்லது பின் வேறு ஒரு மங்கலநாளிற் குழந்தையின் சாதகம் (வாழ்க்கையில் நடக்கப்போகும் அனைத்தையும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணித்து எழுதுகிற சோதிட விளக்கம்) அவ் வீட்டுக்குரிய சோதிடரால் வாசிக்கப்பெறுவதுண்டு. அன்றும் உறவினர் கலந்துகொள்ளும் ஒரு விருந்துக் கொண்டாட்ட நாளாகவே கருதப்படும்.
பெண் குழந்தைகள் வளர்ந்து பூப்பு எய்தலை இங்கு * புத்தியறிதல்' என்று குறிப்பிடுவர்.
* முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னெள் வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே.” என்ற சங்கச் செய்யுளிலுள்ள “முதுக்குறைதல்' என்பதன் தொடர்பு, இச் சொல்லிலே விளங்குகின்றது : “ சாமர்த் தியப்படுதல்’ (சாமர்த்தியம் உண்டாதல்), பெரிய பிள்ளையாதல் என்பனவாகிய சொற்களும் இந்நிகழ்ச்சி

Page 249
448 மட்டக்களப்புத் தழிழகம்
யைக் குறிப்பிட வழங்குவன. உறவினரான பெண்கள் மத்தியில் இது ஒரு மஞ்சள் விளையாட்டு தன்னிகழ்ச்சி யாகக் கொண்டாடப்படும். பூனூல் அறியப்பெறுவதால் இரண்டாம் பிறப்பினைப் பெறும் பார்ப்பனர்போலப் புத்தியறிதல் பெண்களுடைய இரண்டாவது முறையான பிறப்பாகக் கருதப்படுவதாதலால், ஒரு பெண் புத்தி யறிந்த வேளையைக்கொண்டு விளக்கமான சோதிடக் கணிப்பினைப் பெற்று அதன் மூலம் அப் பெண்ணுக்குக் கிடைக்கவிருக்கும் கணவன், இல்லற வாழ்க்கைப் பெறு பேறுகள் என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்வர். புத்தியறிந்த பெண்ணைப் * பெரியபிள்ளை (மங்கைப் பருவமடைந்தவள்) எ ன க் குறிப் பி டு த ல் வழக்கம். திருமணப் பருவமடைந்த ஆண்களுக்கு முதன் முதலில் அம்பட்டரைக்கொண்டு 'முகத்துமயிர் ' (மீசை, தாடி) களைக் களைதலும், அதற்கு அறிகுறியாகக் கடுக்கன் ’ என்னும் காதணி (படம் 12) பூணுவித்தலும் ஆண்கள் பால் நடக்கும் இத்தகைய ஒரு பெருவிழாவாகும்.
மட்டக்களப்புச் சாவீடுகளிலே தனிப்பட்டுக் காணப் படும் சில வழக்கங்களும் உள்ளன. மட்டக்களப்புப் பழம் பரம்பரையினரான இந்துக்கள் சவத்தைப் பெட்டி யில் வைக்கும் வழக்கம் உடையார் அல்லர். சவத்தை எடுத்துச் செல்வதற்கென்று அமைக்கப்பெறும் 8 பாடை யின் மீதுள்ள தட்டிலே அது வைக்கப்பெறுதலும், எரியூட்டாது அதனைப் பு ைத குழி யிற் சேர்ப்பதுமே பழமையான வழக்கங்களாக இருப்பதைப் பெரும்பாலும் இன்னமும் காணலாம். சவம் தூக்கப் பயன்படும் அவ்வா ருண பாடைகளும் குலவிருதிற்கேற்ப மாடித்தட்டுகளையும், வேறுவேருண எண்ணிக்கைகளைக் கொண்ட கும்பம் எனப் படும் வாழைத்தண்டு, தென்னங்குருத்துகளாலான முடி களையும் கொண்டமைக்கப்படுவது. சாவிட்டார் தம் அடுப்பு களிலே முதல் எட்டுநாட்களுக்கு நெருப்புப் பற்றவைக்கக் கூடாது என்பது முறை. அக்காலத்துள் அவர்களது உற வினர் தனித்தனி முறை வைத்துக்கொண்டு அன்னருக்கு உணவு முதலியவற்றைத் தம் வீடுகளிற் சமைத்துக் கொண்டுவந்து கொடுப்பர். எட்டாம்நாள் உறவினர்

ஒழிபு 449
அனேவரும் ஒருங்குகூடி, ‘முழுகி’, ‘மாத்துப்போட்டு ' (வண்ணுனிடம் வெளுத்த சீலை பெற்றுடுத்து), * எட்டுச் சோறு ' (சாவீட்டில் எட்டாம்நாள் சமைக்கப்படும் பெரிய அமுது) உண்டு உறவு கலந்து செல்லுவது வழக்கம். அது * எட்டுக்கு முழுகுதல் ’ என்று சொல்லப்படும்.
ஒரு சாவீட்டு நிகழ்ச்சிகளைச் சரிவரக் கவனித்துக் கொள்ளும் வேலையை அவ்வீட்டிலிருந்து மாப்பிள்ளை (மணமகன்) எடுத்தாரும், எடுத்தற்குரியாருமே பொறுப் பெடுத்துக்கொள்ளுதல் பண்டுதொட்ட வழக்கமாகும். சவம் எடுக்கப்பட்டதும் சா வீட் டி னே ச் சாணத்தால் மெழுகுதலும், முற்றத்தைக் கூட்டிச் சுத்தம் செய்தலும் முதலான வேலைகளை அந்த வீட்டுக்குரிய மச்சினமைக் குடியார் ’ (மைத்துனர் கோத்திரத்தார்; சிறப்பாக மாப் பிள்ளை எடுத்தோர்) செய்தல் வேண்டுமென்பது பழமை யான கட்டுப்பாடாகும். இவ்வாருக இக்காட்டில் வழங் கும் பழமையான கட்டுப்பாடுகள் யாவும் குலவிருது களின் தொடர்பானவையே என்பதை அறியலாகும்.
மேனுட்டார் வரவு : மேற்கண்ட குலவிருது சாதிக் கட்டுப்பாடு முதலியனவெல்லாம் இக் காட்டின் பழமை யான சைவ மதத்தினுேடும் சைவக்கோயில்களோடும் பின்னிப் பிணைந்து வளர்ந்து வந்தவை. ஆதலால் கிறித்தவ மதத்தினையுடையாரான மேலைநாட்டார் வந்து அடிப்படுத்திய இடங்களிலெல்லாம் அவற்றின் தளர்ச் சிக்கும் வழியுண்டாவதாயிற்று. அம்மேனுட்டார், இங்கு வாழ்ந்த சைவ நன்மக்களைத் தம் மதத்திற்கு மாற்றம் செய்தும், சைவர்களுக்கு இன்னல் விளைத்தும் வந்தா ரென்று அக்காலை வெறுக்கப்பட்டன ரெனினும், முக்கிய மாக கத்தோலிக்கர், மெதொடிஸ்தசபையார் ஆகிய இரு பெரும் கிறித்தவப் பிரிவினரும் மட்டக்களப்புத் தமிழகத் திலே கால் வைத்தமையால் நற்பலன்களும் பல இங்கே விளையலாயின. மேனுட்டு மொழிக் கல்வி, விஞ்ஞானக் கல்வி என்பவற்றினையூட்டிய புதிய முறையான பாடசாலை களின் தோற்றம், விவசாயம், நீர்ப்பாசனம், வைத்தியம், சுகாதாரம், போக்குவரத்து முதலியவற்றின் சீர்திருத்தம் என்பனவாகப் பல துறைகளிலும் எழுந்த நன்மைகளை முதன்மையாகக் குறிப்பிடலாகும். இவ் வெளிநாட்டா
29 - פL

Page 250
450 மட்டக்களப்புத் தமிழகம
ருடைய வரவின் பின்னரே 1855இல் பொது நூல் கிலேய மொன்று மட்டக்களப்பில் நிறுவப்பட்டது. மட்டக்களப்பி லிருந்து கொந்தராத்துக்காரரொருவரால் (Contractor) மாட்டுவண்டிகளின் மூலம் பதுளைக்குத் தபாலனுப்பும் சேவையும் 1876 இலே முதன்முதலிற் தொடங்கப்பெறலா யிற்று. இத் தமிழகத்தை இருபெரும் கூறுகளாக்கி நீண்டு கிடக்கும் மட்டக்களப்பு வாவியினூடு ஒரு போக்கு வரத்துச் சேவையினைத் தெற்கே கிட்டங்கித்துறைக்கும், வடக்கே புளியந்தீவுக்குமிடையே நடைபெறத்தக்கதாக ʻ 6)q, Tub GGO?dii ʼ (S}ham Rock) 6T6öT 69)/ub fiög T 6)ʻ9ôuʼiLuLâßaöT மூலம் ஓ. எஸ். டீ. ஓ’கிரேடி (O.S. de O' Grady) என்பவர் 1891இல் ஆரம்பித்துவைத்தனர். இச் சேவையினேயே 1907 g6id Giv'T IT Görőộ 3B siðaör (Mr. Stanley Green) 6T Göt பவர் * அலிஸ் , * பிரைல் ’ (Alice, Bryle) என்னும் இரு மோட்டோர் வள்ளங்களினலும் நிரந்தர பயணச் சேவையாக்கினர். இந்நாட்டு வியாபாரம், போக்குவரத்து என்பவற்றை மிக இலகுவாக்கிய இச் சேவை நீண்ட காலத் துயரொன்றைத் துடைத்து மக்களுக்கு ஆறுதலை அளித்ததெனலாம். அச்சுக்கூட அமைப்பு, மின்சார வசதி களின் அறிமுகம், காணித்தோம்பு எனப்படும் வயல் இடாப்புமுறை, தென்னந்தோட்டங்களின் பெருவிருத்தி என்பனவெல்லாம் மேனுட்டினரது வரவினல் நாம் பெற்ற நற்பயன்களேயாகும்.
இவ்வாறு மட்டக்களப்பு மண்ணகத்துக்கு வந்த மேனுட்டாரது அடிச்சுவடுகள் இந்நாட்டுக்குப் பெரும் பயனேயும் புகழையும் ஊட்டி வைத்ததைப் போன்று, மட்டக்களப்புக் கடற்பரப்பிற்கு அவர்கள் வந்தமையும் அகில உலகப் பெரும் புகழை மட்டக்களப்புத் தமிழகத் துக்கு ஈட்டித் தந்துள்ளதை இன்று காம் காண்கின் ருேம். கடல்வள ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்ட அமெரிக்க 15 TLG is distill fig5(up 62657 ) (Expedition by Ship Pioneer of U.S. A.) இந்துமகாசமுத்திரத்துள் தற்போது ஆராய்ச் சிகள் செய்து வருவதைப் பலரும் அறிவர். இதுவரை, அமெரிக்க நாட்டுக் கலருடோ' என்னுமிடத்துக்கருகி லுள்ள கடலின் நீர்வீழ்ச்சிப் பள்ளம் (Grand Canyon of Caler ado in U. S. A.) 517 Gör MGM GG36v GLJ Lộ 5ù

ջthւ 451
பெரியதும் ஆழமானதுமான கடற் பெரும் பள்ளம் என்று புகழப்பெற்று வந்தது. கடலுக்கடியில் சுமார் 5000 அடி ஆழமும், 500அடி அகலமும் உடைய கடற்பெரும் பள்ளம் அது. ஆனல் இன்றைய இந்துசமுத்திரக் கடலாராய்ச்சி யாளர், மட்டக்களப்புக் கரைக்கு அணிமையாகக் கிழக்கே உள்ள கடலின் அடியில் சுமார் 7500 அடி ஆழமும், திருக்கோணமலைக்குக் கிழக்குப்பகுதியில் உள்ள கடலி னடியில் சுமார் 1 100 அடி ஆழமுமான கடல்நீர் வீழ்ச் சிப் பள்ளங்களிரண்டைக் கண்டுபிடித்திருக்கிருர்கள். இவற்றுள் மட்டக்களப்புக் கடற்பெரும் பள்ளமானது உலகிலேயே இன்றுவரை அறிந்தவற்றுள் மிகப் பெரிய தாகுமென்ற அகில உலகப் பெரும்புகழைத் தனதாக்கிக் கொண்டது. மேலும் மட்டக்களப்பிலிருந்து கடலின் அடித்தளம் கிழக்கு நோக்கிப் பலநூறு மைல் தூரம்வரை சரிந்துகொண்டே செல்கின்ற பெரிய பாறை ஒன்றை உடையதாய், அவுஸ்திரேலியா (Australia)வுக்கு இப்பால், இமயமலையிலும் மிக்க உயரமுடைய பெரியதொரு மலை யாக மாறுவதாகவும் அவர்களது ஆராய்ச்சி கூறுகின் றது. கடல்கொண்ட பண்டைய குமரிக்கண்டம், குமரி மலை, பஃறுளியாற்றிலிருந்த பெரிய நீர்வீழ்ச்சிகள் என்ப வற்றைப்பற்றிய நல்வெளிச்சத்தினை நாம் பெறுதற்கு மட்டக்களப்புக் கடற்கரைப் பகுதிகள் தொடர்ந்து சான்று களைத் தந்துகொண்டிருக்கப்போகின்றன என்பதை இவற்ருல் நாம் ஊகித்துக்கொள்ளலாகும்.
கத்தோலிக்க மதம் : மட்டக்களப்பிற் கிடைக்கும் கத்தோலிக்கமதப் பழையசாசனங்களின்படி (Documents Found in the Archives of the R. C. M. Batticaloa) gub மதம்-புனித சவேரியாரின் (Francis Xaviour) காலத்திற் குச் சற்றுமுன்பே ஏறக்குறைய கி. பி. 1550இல் மட்டக் களப்பிற்கு வந்துள்ளதென்று தெரிகிறது. இது இலங் கைக்கு அம்மதம் வந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக் குள்ளாக இருக்கலாம். வணக்கத்துக்குரிய றுTவியாக் egy 2 367 Ti (Rev. Fr, A. M. Rouffiac, O. M. I.) egy6.Jiatait 1868 மாசி மாதம் எழுதி வைத்துள்ள குறிப்பின்படி 1624இலே மட்டக்களப்பின் முதலாவது கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது என அறிகிருேம். அது

Page 251
452 மட்டக்களப்புத் தமிழகம்
தான் தாண்டவன் வெளியில் அமைந்துள்ள கோயில் என்கிருர்கள். பின்னர் இக்காட்டுக்கு வந்த ஒல்லாந்தர் அக்கோயிலையும், அங்கிருந்த சுருவங்களையும் அழித் தொழித்தனர். எப்படியோ அக் கொடூரத்தினின்றும் தப்பியது அங்கிருந்த காஒணிக்கை மாதாவின் திருச் சுருவம்’ ஒன்றுதான். இன்று மாசி இரண்டாந் திகதி (Feb, 2nd) தோறும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சுருவம் அதுவேயாகும். ஒல்லாந்தரால் இடித்தழிக்கப் பெற்ற அக்கோயில் பின்னர்க் கண்டி மன்னரின் அனு மதியுடன் 1660இல் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் னரே புளியந்தீவில் உள்ள அர்ச், மரியநாயகி தேவாலயம் (St. Mary's Church) 6Typa) Tu9ögy. egygy 361 5gből. JT op,5! 1 மரியநாயகி தேவாலயத்தின் சக்கிறிஸ்தி ' (Sacristy) யாக உள்ளது. அதைத் தொடர்ந்துதான் புளியந்திவில் உள்ள அந்தோனியார் கோவிலும், இன்றைய மரியமாதா கோவிலும் அமைக்கப்பெற்றன. அடுத்த பழமை யானது கல்முனேக்கு மேற்கே உள்ள சொறிக் கல்முனே என்னும் கிராமத்தில் (1807இல்) பாச்சல் முதலியாராற் கட்டப்பெற்ற திருச்சிலுவைக் கோவில், அதன் பின், தன்னு முனையில் அர்ச். சூசையப்பர் கோவிலே கபிரியன் விதானே என்பார் கட்டிக்கொடுத்தார். கடற் பிரயாணிகளுக்கு வரும் இன்னல்களைத் தீர்க்கும் அன்னையின் பேரால் * கப்பலேந்தி மாதா ' கோவில் ஒன்று மட்டக்களப்புத் துறைமுகத்திற் கணிமையாக உள்ள அமிர்தகழியிலே 1822இல் எழலாயிற்று. அப்பால், கத்தோலிக்க மதத் தின் வேகமான பரவுதலுக்கேற்பத் தேவை நோக்கிப் பல கோவில்கள் பல இடங்களிலும் எழலாயின. மட்டக் களப்பு முழுவதிலுமுள்ள இயேசுசபை அர்ச்சியஸ்டவர் கோவில்கள் இரண்டேயாகும். அவற்றுள் முதலாவ தாக அமைந்தது, கல்லடி முகத்துவாரப் (Dutch Bar) பகுதியில் உள்ள புனித இஞ்ஞாசியார் கோவில், மற்றையது கல்லாற்றில் 1894ஆம் ஆண்டு திருஇருதயர் (Sacred Heart) கோவில் என்னும் பெயராற் கட்டப் பெற்றதும், இன்று புனித அருளாநந்தர் கோவில் என வழங்கப்படுவதுமான கோவிலாகும். உன்னிச்சைப் பகுதி யிலே ஆயித்திய மலேயில் உள்ள சதாசகாயமாதா கோவில் அப்பகுதி மக்கள் பயபக்தியுடன் செய்யும்

ஒழிபு 453
வேண்டுதலனைத்தையும் நிறைவேற்றும் பெருஞ் சிறப்புக் கொண்டதென்று கூறப்படுகின்றது. இப்படியான சிறந்தகத்தோலிக்க கோவில்கள் இன்னும் பல இடங்களில் உள்ளன என்பர்.
மட்டக்களப்பு நாட்டிலே கத்தோலிக்க மதம் பரவிய விரைவினைப் பின்வரும் குறிப்பினல் நாம் ஊகிக்கலாகும். 1851 இல் ஒரே ஒரு கத்தோலிக்க பாடசாலையும், ஏழு கோவில்களுமே மட்டக்களப்புப் பகுதியில் இருந்தன என்றும், அவ்வாண்டில் இருந்த கத்தோலிக்கர் தொகை ஆயிரத்தைஞ்னுநாறுதான் என்றும் அறிகின் ருேம். கத் தோலிக்கரின் இத்தொகை 1911இல் ஐயாயிரத்து அறு நூற்றுமுன்ருக உயரலாயிற்று. 19 15ஆம் ஆண்டுக் கணக் கின்படி மட்டக்களப்பில் இருந்த கத்தோலிக்க பாட சாலைகள் முப்பத்தாறு ; கோவில்கள் இருபது ; கத் தோலிக்கர் தொகை ஏழாயிரத்து எண்ணுற்று எட்டு. இன்று இவையனைத்தின் தொகையும் பெரிதும் வளர்ந் திருக்கக் காணலாம்.
கத்தோலிக்க மத பாடசாலைகளில் முதலாவதாக அமைந்தது அர்ச். மிக்கேல் தமிழ்ப் பாடசாலையாகும். அதுவே பின்னர் அர்ச். மரியநாயகி தமிழ்ப் பாடசாலையா யிற்று. அத் தமிழ்ப் பாடசாலையோடு தொடர்ந்தெழுந்த சிறிய ஆங்கிலப் பாடசாலேதான் இன்று நகர மத்தியில் அழ குற விளங்கும் அர்ச் மிக்கேல் (படம் 44) கல்லூரியாகும், மட்டக்களப்பில் இன்றுள்ள பேரறிஞர்கள், அரசியற் தலைவர்கள், கல்லூரி அதிபர்கள் ஆகிய பலரைத் தோற்று வித்த பெருமையுடையது இக்கல்லூரி. வணக்கத்திற்குரிய சேவியர் அடிகளாரால் (Rew Fr. Xaviour) அர்ச். மிக்கேல் பாடசாலை (1872இல்) ஆரம்பிக்கப்பட்டது. அக்காலம் இது 57 மாணவர்களையும் 3 ஆசிரியர்களையும் மட்டுமே கொண்டிருந்ததென்று அறிகின் ருேம். அர்ச். மிக்கேல் கல்லூரியின் தற்போதைய கட்டிடத்தை ஆக்கியவர் வணக்கத்திற்குரிய பொண ல் சுவாமியார் (Rev. Fr. Ferdinand Bonnel - LILLb 44A) egy 6)Jia (36IT eg,6), i. (g)di கல்லூரியில் விபுலாநந்த அடிகளார் பயின்ற கால முற்றும், அவருக்கு நல்லாசிரியராய் வாய்க்கப்பெற்றவராய் அடி களாரது பெரு மதிப்பிற்குரியோராய் வாழ்ந்த பொணல்

Page 252
454 மட்டக்களப்புத் தமிழகம்
சுவாமியாரை ஒரு மட்டக்களப்புப் பெரியார் என்றே நாம் கூறத்தக்கவாறு இந்நாட்டு நலனுக்காகவே உழைத்த பெருமகனுக அவர் விளங்கினர். 31 - 8 - 1865இல் பிரான்சிய நாட்டு று பே (Roubaix) என்னும் கிராமத்திற் பிறந்த அவர் மட்டக்களப்பினையே பின்னர்த் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து 7-5-1945இல் இங்கிருந்தே விண் ணுலகுபுக்க பெருமகனுரானுர். அவருடைய பெருமுயற்சி யால் 3-5-1915இல் இன்றைய அர்ச். மிக்கேல் கல்லூரிக் கட்டிடங்கள் அ  ைமக்கப் பெற்ற ன. இக்கிலேயத்துப் பெரும் தலைவராக (Rector) இருதடவை (1917-30, 1932-38) அவர் பணியாற்றியுள்ளார். அக்காலத்தே வணக்கத்திற்குரிய றைட் (Rev. Br, Wright) என்பவர் இக்கல்லூரியில் ஒரு காகிதத் தொழிற்சாலையை (Paper Factory) நிறுவித் திறம்பட நடத்தினர். வணக்கத்துக் குரிய றைட் சகோதரர் அவர்கள் அர்ச். மிக்கேல் கல்லூரி நிருமானத்திற்கான முக்கிய சிற்பியும் (Engineer. ing Architect) ஆயதோடு, கல்லடிப் பால அமைப்புக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இருந்து பாலத்து வேலைகள் (படம் 14 A) விரைந்து திறம்பட நிறைவேறவும் காரணமானவர். அர்ச். மிக்கேல் கல்லூரியிற்தான் மட்டக் களப்பின் முதலாவது மின்விளக்கு யந்திரம் நிறுவப்பட் டது. அங்கிருந்து பக்கத்து வீடுகள் சிலவற்றிற்கும் முதன் முதலில் விளக்கெரிப்பதற்காக மின்சாரத்தைக் கொடுத்து உதவினேர் கத்தோலிக்க குருவானவர்களேயாவர்.
கத்தோலிக்க குருமாரால் (ஏறக்குறைய 1916இல்) நிறுவப்பெற்றதுதான் மட்டக்களப்பின் முதலாவது அச்சு யந்திரசாலையாகும். அவர்களின் ஆக்கமான ° சென்ற். அகுஸ்தின் ஆசிரிய காலாசாலேயே மட்டக்களப்பில் எழுந்த முதலாவது ஆசிரிய பயிற்சிக்கலாசாலையுமாகும். மேனுட்டுச் சங்கீதக் கலையை (Band) நன்முறையில் மட்டக் களப்பிலே அறிமுகம் செய்து அதனைப் பயிற்றி வருபவரும் அவரே. இப்போது, முதியோர்களுக்கான விடுதிகளை அமைத்து அவர் செய்யும் பணிகளும், மாந்தீவு தொழு நோயாளர் நடுவில் அவர் புரியும் அன்புத் தொண்டுகளும் விலைமதிக்க முடியாதனவாம். மட்டக்களப்பு நாட்டின் புகழ், பாடும்மீன்களது புகழொலியோடு கலந்தொலிப்

ஒழிபு 455
பது. நீரினுள் இருந்து எழும் அவ்வொலியின் பேதங்களை எல்லாம் விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து ஒலிப்பதிவு செய்து (இந்நூல் பக். 80-81) மேனடுகளுக்கும் நம் புகழை நேரில் எடுத்துக்காட்டிய பெருமையாளருமாக விளங்கும் கத்தோலிக்க சமயத் துறவிகள் இந் நாட்டுக்குச் செய்துவரும் தொண்டுகளுக்கு ஈடெதுவுமில்லை எனலாம்.
மெதொ டி ஸ்த திருச்சபை : 1814ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12ஆக் திகதியன்று வணக்கத்துக்குரிய 6í?6ü96u Jub 6ọ6ệt ” (Reverend William Ault) 61 GöI t_J6)Jg gỹ வரவோடுதான் மட்டக்களப்பு நாட்டில் இச் சமயத்தின் வரலாறும் ஆரம்பமாகிறதெனலாம். இங்கிலாந்திலிருந்து வணக்கத்துக்குரிய கலாநிதி தோமஸ் குக் (Reverend Dr. Thomas Cooke)என்பாருடைய தூண்டுதலால், அப்பெரியா ருடைய தலைமையில் மெதொடிஸ்த சமயத் தூதுவராக, வணக்கத்துக்குரியோரான கிளவ், ஹாவார்ட், ஒல்ட், Gösörg, 6) i 6iv Pår, 6svg50Jøör 6v (Reverends: Benjamin Clough, Dr. W. M. Harward, William Ault, James Lynch, George Erskine, T. H. Squance) 6T 6ör 6.)/Lb gygy6)Ji இந்தியாவையும் இலங்கையையும் நோக்கி 31-12-1813ல் புறப்பட்டனர். அவருள் இலங்கையிலே மட்டக்களப்பு நாட்டுப் பணியினை மேற்கொண்டு மட்டக்களப்புத் துறை முக வழியாக இயற்கையின் பேரின்னல்களுக்கிடையில் இறங்கிய “ஓல்ட்' என்னும் பெரியாருடைய பெயர் இந் நாட்டிலே எவராலும் மறக்க முடி யாத ஒன்றெனல் வேண்டும். அப் பெரியார் மட்டக்களப்பின் முதலாவது ஆங்கிலப் பாடசாலையான புளியந்தீவு மெதொடிஸ்த மத்திய கல்லூரியினை (படம் 56) 1814இல் நிறுவி அதன் வளர்ச்சிக்கும், இந்நாட்டின் மெதொடிஸ்த திருச்சபை யின் நிலைபேற்றுக்குமாகத் தன்னையே அர்ப்பணித்து 1-4-1815இல் (தான் வந்து ஏறக்குறைய எட்டு மாதங்களில்) பரகதியடைந்தார்கள். மெதொடிஸ்த மத்திய கல்லூ ரியா ன து முதலில் ஐந்து மாணவர்களோடு, வாவிக்கரையில் இருந்த சுங்கக் கட்டுப்பாட்டு அறை ஒ ன்றில் அவரால் ஆரம்பிக்கப்பட்டது. 1823இல் ஒரு ஆசிரியரையும், 23 மாணவர்களையும் கொண்ட அப் பாட சாலை 1833இல் ஒரு ஆங்கிலக் கலவன் பாடசாலையாக

Page 253
456 மட்டக்களப்புத் தமிழகம்
மாற்றப்பட்டது. அக்காலே, இக் கல்லூரி மெதொடிஸ்த தேவாலயத்து அப்போதைய கட்டிடத்தின் விருந்தை ஒன்றில் நடைபெறலாயிற்றென்பர். அதற்குச் சில ஆண்டு களின் பின்னரே குறித்த கல்லூரி இன்றைய நிலைக் கட்டிடங்களை உடையதாயிற்று.
புளியந்தீவு மெதொடிஸ்த தேவாலயமே இந் நாட்டின் பழமையான கிறித்தவ தேவாலயமாக இருப்பதாகும். இது 1838ஆம் ஆண்டுதான் இன்றுள்ள கட்டிடத்தினை உடையதாயிற் றெனினும், மெதொடிஸ்த திருச்சபைச் சேவைகளின் ஆரம்பகாலம் 1814ஆம் ஆண்டாகு மென்றே கொள்ளுதல் வேண்டும். இத் திருச்சபையா ரின் தொண்டுகளுள், மட்டக்களப்புப் பெண்களுக்கும், நாகரிகமும் கல்விவாசனையுமற்றவர்களாக வாழ்ந்த வேடர் களுக்கும் அவர் செய்தவை மிகமிகப் போற்றத்தக்கன வாகும். மெதொடிஸ்த திருச்சபையினராலேயே இந் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் பாடசாலை புளியந் தீவு முதலியார் தெருவில் ( 1838இல்) ஆரம்பிக்கப் பெற்றிருக்கின்றது. இங்குள்ள பெண்கள், (சிறப்பாக முஸ்லீம் பெண்கள்) நல்ல வைத்திய வசதிகளைப் பெருது உற்ற துன்ப நிலையை இன்னர் பெரிதும் உணர்ந்து வருந்தினர். மெதொடிஸ்த மத்திய கல்லூரியில் ஆண்க ளுக்கென ஒரு வைத்தியசாலையை நடாத்திவந்த இவர்கள், அக் கல்லூரியின் இன்றைய விடுதிச்சாலை உள்ள இடத் திலே பெண்களுக்கெனவும் ஒரு வைத்தியசாலையை நிறுவிப் பணிபுரியலாயினர். ஜேவான்ஸ் மருந்துச்சாலை (Jevons Dispensary) 6T Q/Lb GULJ(5L-6ör 67 (1pö5 g/i நிலையத்தினுற் பயன்பெற்ற பெண்களின் தொகை மிக மிகப் பலவாகும். இதனை நடத்திவந்த மெதொடிஸ்த வைத்திய சங்கத்தின் தொண்டு பின்னர்க் கல்முனை, விந்தனை ஆகிய பகுதிகளுக்கும் பரவலாயிற்று.
ஆங்கிலக் கல்வியினைப் பெண்களும் தங்களுக்கேற்ற சூழ்நிலையிலிருந்து பெறுதல் வேண்டும் என்ற நன்னுேக் கத்தோடு மெதொடிஸ்த திருச்சபையார் பெண்களுக்கென முதன் முதல் (1845இல்) ஆரம்பித்த பாடசாலையே இன்று வின் சன்ற் மகளிர் கல்லூரி (படம் 45) யாக வளர்ந் துள்ளது. அக் கல்லூரியின் ஆரம்ப காலத்திலே அதன் வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்த கல்லூரித் தலைவி

ஒழிபு 457
I It f 52(56) Jfl6öt (Miss Alicia Vincent) QLJu 1607 i HT Blå யுள்ள இந்நிலையத்திலிருந்து வெளியேறிய மாணவியர் இல்லாத ஊரே மட்டக்களப்பில் இல்லையெனலாம். பல் லாண்டுகளாகச் சாதி சமய வேறுபாடற்ற தனது ஈடிணையில்லாச் சேவையினல் உயர்தரக்கல்வி, ஒழுக்கம், நாகரிகம் என்பன விளங்கும் அன்னையர் பலரை ஆக்கி யளித்துக்கொண்டிருக்கும் இக் கழகத்தின் புகழொலியை மட்டக்களப்புத் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கேட்கலாகும். திருச்சபையின் கருத்தினையறிந்து, நாட்டுமக் களின் பண்பினையும் ஒட்டி, இந் நிலையத்தின் நலனுக்காகத் தன் நலத்தையே துறந்த கடைசி ஆங்கிலப் பெண்மணி யான ஒரு கல்லூரித் தலைவி, குருெவ்ற் (Miss Croft) அம்மையாராவர். ஆங்கில நாட்டிலிருந்து வந்து சமயப் பணிக்கும் கலைப்பணிக்கும் என்றே தன்னைத் தியாகம் செய்து மட்டக்களப்புத் தமிழ்ப் பெண்களேப்போலவே தானும் ஒரு தமிழ்ப் பெண்ணுக உடை, நடை, பாவனைகளி லெல்லாம் மாறிவாழ்ந்த தமிழன்னை (படம் 47) அவர். அன் னரது அருஞ்சேவைகளைப் போன்று வின்சன்ற் மகளிர் கல்லூரியிற் பணி வளர்த்த இன்னுெரு வெளிநாட்டு அன்னை, இந்தியாவில் உள்ள மலையாளத்தைச் சேர்ந்த செல்வி அ. பத்மன் அவர்கள். இக் கல்லூரியின் உப அதிபராகவும், செல்வி குருெவ்ற் அவர்களைத் தொடர்ந்து அதிபராகவும் தன் வாழ்வின் அரிய பகுதியாகிய சுமார் முப்பது ஆண்டு காலத்தை மட்டக்களப்புப் பெண் குலத் தின் வளர்ச்சிக்கென்றே செலவிட்ட பெருமாட்டி அவர். வின்சன்ற் அன்னையின் பெயரான மைந்த மகளிர் கல் லூரியும், செல்வி குருெவ்ற் அவர்களின் நினைவாக அங்கு எழுந்துள்ள * குருெவ்ற் மண்டபமும் (Croft Hall), செல்வி பத்மன் அவர்களது நினைவால் * பத்மன் மனே ' (Padman Block - படம் 45இல் காணப்படுவது.) என அங்கு அமைக்கப்பெற்றுள்ள மாடி மனேயும் மெதொடிஸ்த திருச்சபையார் மட்டக்களப்புப் பெண்குலத்துக்காற்றிய பெருந் தொண்டுகளின் நினைவாக என்றும் விளங்கு ,வனவாம்.
தொடர்ந்து மெதொடிஸ்த சபையார் புளியந்தீவிற் சிங்களவாடியிலே ஒரு தமிழ்ப் பாடசாலையையும், கல்முனை யில் லீஸ் உயர்தர ஆங்கிலப் பாடசாலையையும் (Leese

Page 254
458 மட்டக்களப்புத் தமிழகம்
High School), அதன் பக்கத்தே மகளிர் கல்லூரி ஒன்றை யும் முறையே அமைத்தனர். அவற்றேடு நில்லாது பல தமிழ்ப் பாடசாலைகளைக் கிராமந்தோறும் இன்னர் வகுத்தமைத்துக் * கிறிஸ்தவ மதக் கல்வி’, தையல், வீட்டுப்பணி, சுகாதார சேவை, பொதுநலப்பணி என் பவற்றிலே மக்களைப் பெரிதும் ஈடுபடுத்தினர்கள். இத்துறைகளிற் பெரிதும் பங்குகொண்டுழைத்தோர் ஆங் கிலநாட்டுப் பெண்மணிகளே என்பது குறிப்பிடத்தக்கது. மேனுட்டுப் பெரியோரது பெருமுயற்சியினல் அரசடியிலே ஒர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலேயும் நிறுவப்பெற்றதோடு, நல்லாசிரியர் பலரை இந்நாட்டிற்களிக்கும் பெரும் பணிை யினையும் திருச்சபையினர் மேற்கொள்ளுவாராயினர்.
இவர்களது இன்னெரு முக்கியமான சேவை, விந் தனைக் காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளான வேடர் குலத்தாரிடைக் கல்வி விளக்கினே ஏற்றிவைத்தமையாகும். மற்றைய இனத்தாரோடு சேருதற்குப் பயந்து காடுகளில் மறைந்து திரிந்த அரை நிருவாணிகளான வேடர் (படம் 53) களுக் கென்று பாடசாலை, கோவில், கைத் தொழிற்சாலை என்பவற்றை ஆக்கி அன்னுர்தம் வாழ் வைச் சீர்திருத்தமும், நாகரிகமும் கொண்டதாக்கி வளம் படுத்தினர்கள். பெரு நோய்களுக்குத் தக்க வைத்தியம் செய்ய வசதியற்று, மூடநம்பிக்கைகளுள் மூழ்கிக்கிடந்த விந்தனைப்பற்று வேடர்களுக்கு, ஆங்கிலேயரது விஞ்ஞான முறைப்படியான மருந்துகள் பெரும் பயனளிக்கலாயின. நாடன் குடுகுகளில் (படம் 52) தண்ணர் குடித்த வேடர் களுக்கு ஆங்கிலநாட்டுக் கண்ணுடிக் கூசாக்களால் மேல்புல நாகரிகம் ஒருவாறு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. வேட்டைக்காக நாள் முழுவதும் அலேக் து திரிந்த இக்காட்டு வாசிகளுக்கு ஆங்கிலப் பாதிரிமார் தச் சுத் தொழிற்சாலை ஒன்றைத் தனிப்பட நிறுவிக்கொடுத்ததன் மூலம் அவரைப் பெரிய தொழில் வல்லுநரு மாக்கினர் எனலாம். 1898 இல் வெளியான மட்டக்களப்பு அர சாங்க அதிபரின் அறிக்கை ஒன்றிற் கண்டபடி விந்தனையில் மட்டுமன்றிக், கோட்டைமுனைப் பகுதியிலும் மெதொடிஸ்த திருச்சபைப் பாதிரிமாரால் ஆக்கப்பெற்ற தச்சுத்தொழிற்
சாலை ஒன்றும் இருந்தமை பெறப்படுகின்றது.

ஒழிபு 459
இவர்களைத் தொடர்ந்து இந் நாட்டுக்குத் தம் சமயப் பணியின் பெயராற் சிறந்த கலைப்பணியும் புரிந்தோரான ஆங்கிலநாட்டுக் கிறிஸ்தவ சபையார் (Church of England) கோட்டைமுனையில் அமைத்து நடத்திய பழமையான ஆங்கிலப்பாடசாலேயும் மட்டக்களப்பிற் கல்விமான்கள் பலரை ஆக்கியளிப்பதிலே பங்குகொண்டிருக்கின்றது. இவ்வாறு தம் சமய வளர்ச்சிப் பணிக்கென்று இங்கு வந்த மேனுட்டாரால், மட்டக்களப்புத் தமிழகம் காலத்திற்கேற்ற வகையிற் புதியனவான கலே, நாகரீகம், தொழில் என்ற துறைகள் பலவற்றிலும் முன்னேறலாயிற்று எனலாம்.
சுகாத்தியம் : மட்டக்களப்பிற்கே இயற்கையாயுள்ள கொடிய வெப்பமான காலநிலையையும் பொறுத்துக் கொண்டு மேனுட்டார் பலர் இங்கு வந்து ஆற்றிய தொண்டுகளை நினைக்கும்போது அன்னரது பெருமையை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. பருவமழை ஏறக் குறைய 75 அங்குலத்திற்கே ஒருவருடத்தில் உடையதா யினும், காலம் தவருது வடகீழ்ப் பருவக் காற்றிற்ை பெறும் அம் மழையும், ஈழத்தின் மத்திய மக்லநாடுகளி லிருந்து ஊற்றெடுத்துக் கீழைக் கடல்நோக்கிப் பாயும் பேராறுகளும் மட்டக்களப்பை நெல்வயல் நிறைந்த பூமி யாக்கி வளம் செய்கின்றன எனல் வேண்டும். வருடந் தோறும் ஆனி முதல் புரட்டாதி வரையுமுள்ள நான்கு மாதங்களிலும் மேற்குத் திசையிலிருந்து மட்டக்களப்புப் பகுதியில் வீசும் * கச்சான் ’ என்ற நெருப்புக்காற்று இங் குள்ள பயிர்பச்சைகளையும், விலங்கினங்களையும் வாட்டி வதைப்பது. * கச்சான் ’ என்ற தமிழ்ச்சொல் f கச்சாஸ் 2 என்ற போர்த்துக்கீச மொழிச் சொல்லிலிருந்து (Cachas is the Portuguese term for the South West Monsoon) வந்ததென்பர். இக் கா ற் றுக் காலத் தி லே கொடிய நோய்கள், பறவை விலங்குகளின் மரணம் என்பவற் றின் பெருவரவைக் காணலாம். இக்கால இறுதியில், வரையாது கொடுக்கும் வள்ள லேப்போன்று தொடர்ந்து பெய்யும் பருவமழையாற் பெருவெள்ளங்கள் வருதலும் உண்டு. அரசாங்க அதிபர்கள் காலாகாலங்களில் வெளிப் படுத்தியுள்ள அறிக்கைகளின்படி 1845, 1878, 1907, 1913 ஆகிய ஆண்டுகளிலே பெரிய புயலும், பெரு

Page 255
460 மட்டக்களப்புத் தமிழகம்
வெள்ளமும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளன. இவை, ஒன்றை விட ஒன்று கூடிய கோரமான வடிவிலே தோன்றி நாட் டைப் பலிகொண்டிருக்கின்றன என்று தெரிகின்றது. 1913ஆம் ஆண்டு நேரிட்ட வெள்ளம், புயல் என்ப வற்றைப்பற்றிக் கூறும் அரசாங்க அறிக்கையின்படி மட்டக் களப்பு, கற்குடா ஆகிய துறைமுகங்களுக்கு வந்த அநேக பாய்க்கப்பல்களும், வள்ளங்களும் பெரும்புயல் காரண மாகக் கடலுள் மூழ்கின வென்றும், அக்காலை மட்டக் களப்பு நாட்டில் இருந்த வளமான தென்னக் தோட் டங்கள் பல, பெற்ற பேரழிவு எடுத்துக்கூற முடியாத அள வுக்கு இருந்ததென்றும் அறிகின்ருேம். மட்டக்களப்பு வாவியில் வந்து சேர்ந்த மழை நீரானது கடல் மட்டத் தினும் 6 9/ உயரத்துக்கு மேற்பட்டுக் கடலுட் பாய்ந்த தாம் ! இதிலும் கூடிய பயங்கரமானதாக அண்மையிலே (1957ஆம் ஆண்டு) வந்த பெரிய வெள்ளத்தின் அழிவு விளையாட்டை நம்மிற் பலர் நேரிலே கண்டிருக்கின் ருேம். இவ்வாறு கடும் வெயில், கடும் மழை இரண்டும் சில போது நாட்டைத் தாக்கிலுைம் பெரிய தென்னந்தோட் டங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை கிடக்கும் பசிய நெல்வயற்பரப்பு, காய்கறித் தோட்டங்கள், மா, பலா, வாழை, கரும்புகள் நிறைந்த ஊர்மனைகளின் சிறப்பு என்பவற்ருல் அழகும் திருவும் பூத்துக் குலுங்கும் மருதத் தண்பணே நாடாகவே விளங்கி, வந்தோருக்கெல்லாம் வாரி வாரி வழங்கி, விருந்தோம்பி வாழ்வளிக்கும் செழு நிலமாக விளங்குகின்றது இம் மட்டக்களப்புத் தமிழகம்.
கைத்தொழில்கள் : சிறந்த இந்த மருத வளங்களும்,
* தேமல் முதிரைகருங் காலிகளுண்டு-வளர்
தேக்குண்டு வனத்தினிற் தேனுமுண்டு, பால்மலி பகவுண்டு மேதிகளுண்டு-தமிழ்ப் பாட்டிற்கு நல்ல யானைப் பரிசுமுண்டு ’ என்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் புகழ்ந்து பாடிய குறிஞ்சி, முல்லை நிலங்களின் இயற்கையான செல் வப் பெருக்கும், மட்டக்களப்பு மக்கள் நிறைந்த உழைப் பாளிகளாகாமைக்கு ஒருவாறு காரணமாயினவெனலாம். ஆயினும், பரம்பரை பரம்பரையாகக் கைத்தொழில்களா லும் இந்நாட்டினை வளம்பெருக்கும் மக்கள் கூட்டத்தினரும்

ஒழிபு 46
அங்கங்கே இருந்துவருகின்றர்கள். மட்டக்களப்பின் மிக முக்கியமான கைத்தொழில் நெசவு செய்தல் என்றே சொல்லலாம். மருதமுனே, காத்தான்குடி, ஆரப்பற்றை, கோட்டைமுனை, ஏருவூர் முதலான சில கிராமங்களிலே மட்டும் பண்டு வாழ்ந்த இத்தொழில், இன்று காட்டின் பல இடங்களுக்கும் பரந்து வளர்ந்துள்ளது. கொழும்பு, காலி என்ற பெரிய நகரங்களின் சந்தைகளுக்கெல்லாம் மட்டக் களப்புச் சீஃலகள் முன்னர்ச் சென்றுள்ளன. 1907ஆம் ஆண்டிலே லண்டன் சாம்பிராச்சிய கலேக்கூடத்தில் (Imperial Institute gaid) (5 iš 45 GODS5 gij G35 Tófið GJIT (5U காட்சியில் மட்டக்களப்பு நெசவுத்துணிகள் பெரிதும் புகழ் பெற்றனவென்று அரசாங்க அறிக்கையொன்று கூறுகின் றது. இன்று, காத்தான்குடியில் நெசவு செய்யப்படும் சேலேகளுக்கு இலங்கைமுழுவதிலுமுள்ள நாகரிக நங்கைய ரிடிையே ஏற்பட்டுள்ள மதிப்பை யாவரும் அறிவோம். புதுக்குடியிருப்பு முதலான இடங்களில் உள்ள பிரம்புக் கைத்தொழில் (படம் 51), ஆரைப்பற்றையில் வளரும் தும்புக்கைத்தொழில் (படம் 50), ஓந்தாச்சிமடம், போரை தீவு, ஏருவூர் முதலான இடங்களிற் கானப்படும் வெண் கலக் கைத்தொழில், காத்தான்குடி, மருதமுனையெனும் இடங்களிலே பன்னுற் செய்யப்படும் பாய், பெட்டி, இழைப்பு வேலைகள் ஆதியனவெல்லாம், மட்டக்களப்புத் தமிழகத்துக்கு நிறைந்தபொருளையும், வெளியுலகப் புகழை யும் ஈட்டித்தருவனவாகும்.
* குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் ??
என்று பாரதியார் குறிப்பிட்ட கைத்தொழில்களெல்லாம் மட்டக்களப்பிற் செயல்முறையிலே கடந்துவருகின்றன.
பொது : நாம் முன்பு கண்டபடியான சாதிப் பிரிவு களும் குடிவகுப்புகளும் இங்கு வழக்கத்திலிருந்தாலும், குலவிருதுகள் முதலான பல சீர்வரிசைகள் குடிதோறும் வரையறுக்கப்பட்டனவாய் வழங்கினுலும், தீண்டாமை என்னும் கொடுநோய் தீண்டப்பெருத திருநாடாகவே மட்டக்களப்புத் தமிழகம் விளங்கிவந்திருக்கின்றது. தத்தம் தொழில்களை எவ்விதத் தங்குதடையுமின்றி மக்களனைவரும் செய்தற்கான பழம் பண்பாடு கலந்த

Page 256
462 மட்டக்களப்புத் தமிழகம்
சட்ட திட்டங்களே இந்த இனப் பிரிப்பு முதலானவை யன்றி வேறில்லை எனலாம். முன்பிருந்தே, மதவெறி சிறிதுமில்லாதோராகவே இந்நாட்டு மக்கள் விளங்கியிருக் கின்ருர்கள். அந்நிலைமையை, விபுலாநந்த அடிகளாரால் இங்கு அறிமுகஞ் செய்துவைக்கப்பெற்ற அகில உலக இந்துமத சபையான இராமக்கிருட்டின சங்கம் மேலும் வளர்த்து வைப்பதாயிற்று. பெரும்பான்மையினரான சைவ நன்மக்கள் மற்றைய மதத்தினரை வெறுக்காதே தம் மதத்தை வளர்த்து வந்துள்ளார்கள். மதமாற்றம் என்ற ஒன்று தலைநீட்டியதை, இங்கே விளங்கிய சமய சங்கங்களும், வித்துவான் சரவணமுத்தன் (படம் 32), விபுலாநந்த நாவலர் (படம் 19), அருணுசலதேசிகமணி (படம் 42) முதலான சைவத் தளபதிகளும் எதிர்த்து நின்று வெற்றியீட்டியுள்ளபோதிலும், மட்டக்களப்புத் தமிழகத் தார் தம்மிடைப் புதியனவாகப் புகுந்த புறச் சமயங்களை அழித்தொழிக்க முயன்றதாகவோ, அப் புறச்சமயத் தார்க்கு எவ்வித தீங்கும் இழைத்ததாகவோ கேட்கப்பட வில்லை. சமபந்திபோசனம்’ மறுக்கப்பட்ட கதைகளையும் மட்டக்களப்புத் தமிழகத்தாரிடைக் கேட்டல் முடியாது.
இங்கு நிறைந்துள்ள கோவில்களிலெல்லாம் பூசகர் களாகச் சைவக்குருக்கள் மாரும், அதற்குரிய குடிவழி வந்தோரான ‘கப்புகளுர்’களுமன்றிப், பார்ப்பனகுலத்தார் யாரேனும் பண்டு இருந்ததாகத் தெரியவில்லை. தற்காலத் திலேதான், ஒரு சில கோவில்களில் மட்டும் பார்ப்பனக் குருக்களை நாம் பூசகர்களாகக் காண்கின்ருேம். தமிழ் மந் திர பூசையும், மந்திரம் சொல்லாது கதிர்காமத்தில் நடப் பதுபோன்று வாயிற் சிலை கட்டிச் செய்யும் மெளன பூசை யுமே இங்குள்ள கோயில்களில் கடந்துவந்த நீண்ட நாளையப் பூசனை வழக்கங்களென்று தெரிகின்றது. ஆதியி லிருந்தே மண்டூர், சிற்ருண்டி, உகந்தை, திருக்கோயில் முதலிய பழமையான முருகன் ஆலயங்களுக்கெல்லாம் சிங்கள மக்களும் திரளாக வந்து பூசனை, திருவிழாக்கள் என்பன ஆற்றிச் செல்லும் வழக்கமுடையராயிருந்திருக் இன்றர்கள், முருகனைத் தமிழர் தெய்வமென்றும், வள்ளி நாயகியைச் சிங்களவர்குல மங்கை யென்றும் மட்டக்களப் பைச் சார்ந்த பகுதிகளில் வாழும் சிங்கள மக்கள் இன்ன மும் கூறக் கேட்கின்ருேம். இதிலிருந்து, மொழி வேறு

ஒழிபு 463
பாடு அற்ற ஒற்றுமையானது இறைவழிபாடு, சமயச் சடங்கு என்பவற்றிலெல்லாம் மட்டக்களப்புத் தமிழகத்தா ரிடைப் பரந்து வழங்கியிருக்கக் காண்கின் ருேம்,
இந்நாட்டு மக்களது மனவளம்போன்று செழிப் புடையவையான குறிஞ்சி, முல்லை, மருதம் என்ற பெரு நிலப்பரப்புகளும், கிழக்குப் புறமாக வங்காளக் குடாக் கடலையண்டிக் கிடக்கும் நெடுநில நெய்தல் வரைப்பும் தத்தம் பயனை ஒழியாது ஊட்டுவன. குறவர் குழாமும், இடையர் குழாமும், உழவர் குழாமும் துவன்றிய முதன் மூன்று நிலங்களும் கண்ணுக்கும் கருத்துக்கும் உவகை தந்து நிற்றல்போன்று, யானே, பன்றி, காட்டெருமை முதலான காட்டு மந்தைகளாலும், காளேப் பசுக்களும், மோளே எருமைகளும் முதலான மாட்டு மக்தைகளாலும், தெளிந்த நீர்ச்சுனைகளாலும், பலவினப் பறவைகளாலும் அழகும் திருவும் பூத்துக் குலுங்குவனவாம். தேமல், முதிரை, கருங்காலி, இருணே, சமண்டலே, விளினே, பாலே முதலான அழகிய வைர மரங்கள் நிறைந்த முல்லை நிலத்தின் இன்னுெரு செல்வமான தேனின் நிறைவும் பெருக்கமும்பற்றி அங்கங்குக் கண்டுள்ளோம். இந்த இயற்கைச் செல்வமானது, மட்டக்களப்புத் தமிழ் மூதா தையரின் உயர்ந்த பண்பாட்டுச் செல்வமனைத்திற்குமே காரணமாகத் திகழ்ந்தவைகளாம்.
மட்டக்களப்புக் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட் டுள்ள ஊர்க் குளங்கள் பலவும் நாடு முழுவதையுமே செந்நெல் கொழிக்கச் செய்துவந்திருக்கின்றன. அவை, பெரிய நீர்ப்பாய்ச்சற் திட்டங்களின் கீழமைந்த குளங் களைப் பார்க்கிலும் மிகப் பெரிதும் பயன் தந்துள்ளன எனலாம். ஊர்க் கிணறுகளில் உண்ணிர் வற்ருதிருக்கவும், காய்கறித் தோட்டங்கள் செழிக்கவும், மந்தைகள் வாழ வும் வழிவகுத்து, ஊர்தோறுமுள்ள சிறு நிலமெனினும் நல்வளம் கொழிக்கும் நெல்வயலாகச் செய்த சிறப்பு எல்லாம் அக்குளங்களை அமைத்துத் தந்த ஊர்ச் சபை களுக்கே உரியதாக இருக்கின்றது. கிராமந்தோறுமுள்ள இத்தகைய குளங்கள், கோயில்கள் முதலான பொது இடங்கள் பலவும் அறப்பணி நிலையங்களாகக் கருதப் பட்டு, ஊர் மக்களுடைய இக்காலச் சிரமதானமுறை

Page 257
464 மட்டக்களப்புத் தமிழகம்
போன்ற கூட்டு முயற்சியினல் வளர்த்துக் காக்கப்பட்டு வந்திருக்கின்றன.
மட்டக்களப்புத் தமிழகமெங்கும் பரந்துபட்டுள்ள ஊர்ப் பெயர்களை நோக்குங்கால், பெரும்பாலானவை தூய தமிழ்ச் சொற்களாலேயே அமைந்திருக்கக் காண் போம். சில இடங்கள் சிங்கள மொழிப் பெயர் கொண் டுள்ளன எனினும், அவையும் பழந்தமிழ்ப் பெயர்களுடை யனவாகவே இருந்து, சிங்கள மன்னரின் கைப்பட்ட போது அத்தகைய மாற்றத்தைப் பின்னர்ப் பெற்றன வென்று அறியலாம். நாடகக்கலை மன்றங்கள், புராண வகுப்பறைகள், இலக்கிய இலக்கணத் திண்ணைகள் ஆகியவை காலமெல்லாம் ஊர் தோறும் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. மட்டக்களப்புத் தமிழகத்தாரது வசந்த ஞடல், நாட்டுக்கூத்து முதலானவை, காலந்தோறும் சிங்கள மன்னர்கள் கண்டியில் கடத்திவந்த பெரிய விழாக்களை அழகும், பயனும் ஊட்டிச் சிறப்பித்துள்ள மைக்குச் சான்றுகள் உள, சிங்கள மன்னர் சிலர் அக்கலை ஆடல்களைக் காணுவதற்குத் தாமே மட்டக்களப்பிற்கு டுேரில் வந்து சென்ற வரலாற்றுக் குறிப்புக்களையும் இங்கு வழங்கும் வசந்தன் பாடல்கள் சிலவற்ருல் அறிகின் ருேம்.
மட்டக்களப்புத் தமிழகத்தின் இத்தனை பெருஞ் சிறப்பு களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது, இங்கே உள்ள இடந்தொறுங் கலந்து வாழும் பழங்குடிகளான தமிழர், சோனகர் முதலான பெரும் இன மக்களிடை நிலவும் கட்டுப்பாடான ஒற்றுமையும் அவர்களது நாட்டுப் பற்றுமேயாகும் எனலாம். தமது சமயக்கொள்கை களினுல் வேறுபட்டோ ராயினும், மொழி யுணர்வினல் ஒன்றுபட்டோராய்க் கிறித்தவர், முகம்மதியர், இந்துக்கள் என்ற வேறுபாட்டினே மறந்து மட்டக்களப்பன்னையின் பெரும் புகழைக் காத்து நிற்கும் இன்னரது ஒன்றுபட்ட தமிழுள்ளங்களின் சிறப்பு என்றும் வாழ்வதாக, மட்டக் களப்புத் தமிழகத்தின் பழம் பெரும் புகழானது இவ்வாறு மேலும் மேலும் வளர்ந்துகொண்டே செல்லத் தமிழன்னை யின் திருவருள் என்றும் சொரியுமாக,
நூல் கிறைவுறும்

t 6 சொல் அட்டவணை
(எண் - பக்க எண்)
{چ அகத்தினே 27, 49, 5 1 அகத்தினேக்கூத்து 5 ! அகநானூறு 28 அகம் 51 அகவல் 17, 259, 326 அகில உலகப்புகழ் 451 அகுஸ்தீன், சென்ற் 265 அக்கரைப்பற்று 16, 65, 230, 23 1, 28 II, 289, P9 Li, 294。295。 296。 297。 299, 336, 374, 389, 426 அங்களுமைக்கடவை 155 அசமதாகம் 1 18 அசவு 113 அசவேடா, ஜெருேனிமோடி
424 அசறு 112, 113 அசுப்பு 1 13 அச்சம் 5 ! அச்சிரங்கள் 342 அச்சுயந்திரசாலே 454 அஞ்சனம் போடுதல் 350 *அஞ்சினர்க்குச் ... oo 3 1 0 அட 91 அடக்கம் எழுப்புதல் 373, 379 அடா 91 அடி 91 அடிச்சுவடு 450 ** அடியவர் பாங்கினும் .' 36 அடீ 9 ! அடுக்கலாக்குதல் 102 அடுக்குப் பார்த்தல் 95, 113 அடே 91, 92, 217 அடைக்கலச்சல்லி 1 13 அடையவளேந்தான் 106 அடையாவளஞ்சான் 106 அட்சரங்கள் 342 அட்டாதுப்டி 113 அட்டாளேக்காலி 36
அட்டாளைச்சேனை 238, 29 1
30 - מש
அட்டுவம் 113 அட்டைகடி 17 அண்ணுவிமார் 60, 64, 206,
319 அண்ணுவியார் 52, 55, 56,
3O4, 22O அதர் 98 அதிசயநிலை 51 * அதிர்வில் ...... ** 90 அத்தாங்கு 109 அத்தியாகுடி 436, 437 அத்தியாயன்குடி 435 அருந்தன் 361 அநாகரீகர் 86 அகிருத்தநாடகம் 12, 49, 61,
62, 64 அகிருத்தன் 62, 63, 64 அநுபவம் 51 அநுமான் வசந்தன் 11 அந்தணர் 440 * அந்தணனுவிமணம் . ’ 363 * அந்தணன் அண்ணுந்து. s
363 அந்தோனியார்கோயில் 452 அப்பன்புட்டி 413 அப்புதல் 19 அமிர்தகழி 3, 452 அமிர்தவாகினி 240 அமுது 95, 450 அமுதுகள் படைத்து 440 அமுதுமுட்டி 439 அமெரிக்க நாடு 450 அமெரிக்க நாட்டுக் கப்பற்குழு
45 O
அமைப்புச் சட்டம் 44 அம்பட்டர் 442 அம்பாரை 400 அம்பிளான் துறை 428 * அம்புவியிற். SO 1 அம்மன் காவியங்கள் 204 அம்மன் கோயில் 43 1 அம்மன் பள்ளு 198, 199,
200, 202

Page 258
466 மட்டக்களப்புத் தமிழகம்
அயல் நாட்டவர் 79 அரக்கன் 10 அரக்குக்கிளப்புதல் 10 அரக்குப் புதைத்தல் 10 அரங்கக்கூடம் 52 அரங்கு 50, 54, 220, 259 அரங்கேற்றம் 52, 64, 95 அரச கன்னியர் வரவு 53 அரசகுமாரன் 60 அரசகுமாரி 60 அரசகுமாரி வரவு 53 அரசடி ஆசிரிய பயிற்சிக் கலா
ց TóÙ 458 அரசன் கண்டகாதல் 28 அரசன் கொலு வரவு 53 அரசாங்க அதிபரின் அறிக்கை
458 அரசாங்க அதிபர் 459 அரசாங்க ஏசண்டர் 429 *அரமகளிர். '' 81 அரா 91 அராபியா 15 அரி 100 அரிக்குமில 11 1 அரிசி 4 19 அரிச்சந்திர விலாசம் 50 அரிந்தோடுதல் 100 அரிப்பு 182, 4 19 அரிவெய்யில் 100, 281 *அருங்குறும்புடுத்த. ' 195 அருச்சுனன் தவகிலை 254 *அருணகிரி. '' 2 13 அருவி வெட்டுதல் 45 அரே 92 அரை நிருவாணிகள் 458 அர்ச்சிய சிஸ்டவர் கோயில்
452 அர்ச் சூசையப்பர் கோயில் 452 அர்ச் மரியநாயகி தமிழ்ப்பாட
Fit &) 453 அர்ச் மிக்கேல் கல்லூரி 80,
453。454 அர்ச் மிக்கேல் தமிழ்ப் பாட
firéal) 453 அலங்காரரூப நாடகம் 49, 61,
64
அலங்கார ரூபன் 11 அலமந்து கிற்றல் 84
அலவாங்கு 20
9636) (Alice) 450 அலுமாரி 20 *அஃலயெறியும். ی ووg58 அல்லி 87
அவக 97
அவகள் 97 அவங்கள் 96, 97 அவச்சுரம் 75, 81 அவணம் 9
அவலம் 51
அவளவை 97 அவளுகள் 97 அவனுகள் 97 அவன்கள் 96 அவா 96, 97 அவாள் 96, 97 அவிநயச் செயல் 51 அவிநயம் 48, 53, 56, 61 அவிநயம் பிடித்தல் 58 அவுரி 107 அவுரி திரித்தல் 107 அவுலியா 298 அவுஸ்திரேலியா 451 அவையள் 97 அழிந்தொழிந்தன 48 அழுகற் சுருட்டை 370 அளவு கணக்கு 5 * அறநிழலென. 88 அறப்பணி நிலையங்கள் 463 அறிமுகவுரை 43, 157, 430 அறிவியற் கல்வி 18 அறிவுப் புலமை 27 அறுகம் குடா 21 அறுகம்பை 4 19, 425
அறுகமுனை 413
அற்பவிடம் 360
அற்புதம் 51
* அனம் பயில். 22 2 85ع
* அன்பென்னும்.’ 256
བཅས་
ஆக்கத்து 103, 104
*ஆக்காண்டி ஆக்காண்டி’ 43
ஆக்கொத்து 104
ஆங்கிலக் கலவன் பாடசாலை
455

சொல் அட்டவணை 467
ஆங்கிலக் கல்வி 454 ஆங்கில நாடகங்கள் 48 ஆங்கில நாடு 321 ஆங்கிலப் பாடசாலை 457 ஆங்கிலப் பாதிரிமார் 458 ஆங்கிலப் பெண்மணி 458 ஆங்கில முறை 321 ஆங்கிலவாணி 307, 309 ஆங்கிலேயர் 79, 4 19, 422,
423, 424, 427 ஆசான் 343 ஆடல் 49, 53, 61 ஆடல் இன்பம் 53 ஆடல் வகை 49 ஆட்சிக் குறி 94 ஆட்சிச் சிறப்பு 29 ஆட்டம் 58, 55 ஆட்டுச் செய்கை 345 ஆண் நிழல் 8 ஆப்புளேத்து 419 ஆயித்தியமலை 452 ஆய்ச்சியர் குரவை 195 ஆரப்பற்றை 65, 158, 224,
461 ஆரம் விழுந்த கிளி 34 ஆரியக் கூத்து 49 ஆரிய நாடு 87 ஆரியப்பூமாலே 49 ஆரியர் 2, 50 * ஆரியர் போற்றும். 2 ஆர்ப்பு 102 ஆலத்தி 168 * ஆலையிலே சோலையிலே. s
44 ஆவரம்பூ 87 w ஆவேசம் 343 ஆளரவம் 30 ஆளிக்கோ 4 19 * ஆருயம் வெள்ளி. ’ 37 ஆறுமாதச் சோறுகொடுத்தல்
446 ஆணி 459 ஆனைப்பந்தி 333 ஆன்மபலி 168
இ இங்கிதம் 63 இங்கிலாந்து 455 இசை 61
சை உணர்ச்சி 80 சைக் கச்சேரி 79 இசைத் தமிழ் 48 இசை நுணுக்கம் 67 இசை நூற் புலமை 78 இசைப் பிறப்புமுறை 74, 76,
78
இசைப் பிறப்புவரலாறு 76 இசை மரபு 74 இசையாராய்ச்சி 78 இஞ்ஞாசியார் கோவில் 452 இடம்மாறியாடுதல் 56 இடைக் காலக் கவிஞர் 28 இடைத் தூதர் 29 இடைப்போகம் 5 இடையர் குழாம் 463
டையன் கண்டகாதல் 28 இடையீடு 32 இணை 91 இத்தாலி 4 19 * இந்த நடை நடந்தே. ” 42 * இந்த மருந்தின் பெருமை. 多多
389
* இந்த மழைக்கும். 39 இந்தி மொழி 92 இந்தியத் தமிழன் 23 இந்திய வியாபாரிகள் 428 இந்தியா 1, 2, 396, 4 19,
420, 424, 455, 457 இந்திரன் மகன் 62 இந்திராபுரி இரகசியம் 321 இந்துக்கள் 464 இந்துசமயம் 430 இந்துமகா சமுத்திரம் 450 இமயமலை 45 இம்பீரியல் இன்ஸ்ரிரியூட் 461 இயந்திரப் படகு 83 இயற்கைச் செல்வம் 463 இயற்றமிழ் இரண்டாம் பிறப்பு 448 இரத்தப்புடையன் 369 இராச ராசன் 161 இராச ராசேசுவரப்
பெரும் பள்ளி 161

Page 259
468 மட்டக்களப்புத் தமிழகம்
இராசாவளி 154 இராம கிருட்டிண சங்கம் 462 இராம கிருஷ்ண இயக்கம் 18 இராம நாடகம் 12, 42, 49,
61, 64 இராமர்கொலு 53 இராமர் வனவாசம் 217 இராவணன் கோட்டை 7 இருளன் 345 இல 89, 9 1, 92, இலக்கண வரம்பு 25 *இலக்கா 88, 89, 92 இலக்கா ஆராய்ச்சி 19 இலக்கிய இலக்கணத் திண்ணே
464 இலக்கிய மலர் 23 இலக்கு 108 இலங்கக் கூடம் 52 இலங்கா தகனம் 217 இலங்கை 1, 2, 159, 393, 394。 S95。 996。397。 398, 410, 412, 416, 4 l 8、4 l9 420。455. இலங்கைத் தமிழன் 23 இலங்கைத் தீவு 418 இலங்கை மணித்திருநாடு 20,
273
இலண்டன் 321 இலம்பித்துறை 398 இலம்பை 108 இலவிசம் 105 இலாச்சி 20 இல்லகா 89 இழந்த செல்வம் 321 இழிப்பு 51 இழுத்துப் பாடுதல் 54 இழை 110 இளங்கலை 87 இளி 73, 77 * இளுத்திற்றுப். 96 * இறங்குகதிரலமருகழனி. 8 இருணை 463 இறைவழிபாடு 403 இற்செறிப்பு 32 இனப்பிரிப்பு 462 இன்பச் சுவை 63 இன்பம் 51 * (3.air uai) (pL4 L (Comedy) 49 இன்னெலி 79
* ஈச்சங்கொழுந்து . 22 ქ3ჭა 6 * ஈடெதுவும் காணுத இன்ப
கிலே. 22 80 * ஈராருண்டோர். 286 ஈழத்துணவு 22, 419 ஈழநாடு 70 ஈழமணி 304 ஈழம் 24, 79, 423 ஈழம்துறை 398
坐一
உகந்தமலை 426, 434 உகந்தை 462 உசவிடு மீராலெப்பைகுடி 438 உடுகுச்சிந்து 155, 158, 163, 168, 178, 183. உடுக்கு 168 உடுக்கை 189 p. 60) i 6 1 உடைகரைப்படல் 425 உடையார் 105 உணர்ச்சி 48 உணர்ச்சிக் கவிஞர்கள் 29 உணர்ச்சி கடந்த ஆட்டம் 50 உணர்ச்சிப் பெருக்கு 26
உண்ணிர் 463 உப்பட்டி 11, 201 *உப்பின்று. 98
உப்பு 422, 426 உயர்தரக் கல்வி 457 உயிர்ப்பலி 431 உரற்கடை 10 1, 102 உரு 109 உருகுணை 404, 418, 425 உருதுமொழி 92 உருத்திராக்க மான்மியம் 228 உருப்படுத்துதல் 340 **உருவில்லாத.' 178, 200 'உரைதரு காக்கணம்.’’ 388 உரையாடல் 57 உலகநாச்சி 488 உலகநாச்சிகுடி 438, 448 உலகநாதன் 438 உலகப் பேரதிசயம் 79 உலகியல் விளக்கம் 20, 210 உலகியற் கல்வி 182,

சொல் அட்டவணை 469
உலகிப்போடிகுடி 437, 438,
442, 443 உலக்கை 446, 447 உலக்கை எறியும் வழக்கம் 446 உலமா 280 உவகை 51 உவட்டு 19, 110 உழவர் குழாம் 463 உழவர் சிறப்பு 323 உழவர் செல்வம் 444 உழவருழாதன நான்கு பயன்
19 உழவன் கண்ட காதல் 28 உழை 77 உறுக்கும் மந்திரங்கள் 347 * உற்றிடுமா தளங். 22 ვ89 *உற்ருர் . . . 223 *உனதாவி... 277 உன்னரசுகிரி 408, 4 18, 415 உன்னஞ்சை 413 உன்னிச்சை 452 *உன்னுங்கடி. 41 *உன்னும் . . 268
Φά.
ஊஞ்சற் கவிதை 245, 247,
248 ஊஞ்சற் பாடல்கள் 12,
ஊஞ்சற் பாட்டு 17, 41, 42,
233, 321
ஊஞ்சல் 232
ஊஞ்சல் வசந்தன் 11
ஊடு 89
ஊரி 4, 81, 82, 381, 383 ஊரிகளது இசைக்கச்சேரி 80 ஊரிபாடுதல் 75 ஊரிப்பாடல் 78, 305 ஊரியிசை 78, 79 * ஊரில் உள்ள...... 285 ஊர்க்குளம் 463 ஊர்க்கோயில் வீதி 52 ஊர்ச்சபைகள் 463 ஊர்சுற்றுக்காவியம் 155 ஊர்ப் பெயர்கள் 464 ஊர்மக்கள் 463
s
6
எசலா 156 எச்சரிக்கை 52 எடி 9 1
எட்டுக்கு முழுகுதல் 449 எட்டுப்போடுதல் 56 எனே 91 எண்ணெய்ச் சிந்து 16 எதிர்மன் ன சிங்கன் 432 எரிபுடையன் 369 எரிவிடம் 360, 378, எல 9 1
எலா 91 எலுமிச்சம்பழம் 422 எலுவல் 9 1
எலுவன் 9 !
எலுவி 91
எலுவை 91
எலே 9 1
எல்ல 9 1
எல்லா 90
எல்லே 9 1
எல்லேக்கல் 87 எழுத்தறியாக் கவிவாணா 46 எழுவர் அரமகளிர் 74 எழுவான் கரை 4, 31, 428 எறி கயிறு 109 s “என்றபொழுதே. oo 40)
ஏ
ஏட 91 ஏடகக் கொம்பு 182, 183,
186 ஏடகமரங்கள் 183 ஏடகம் 183 6TLT 9 l, 92 ஏடி 91 ஏடே 9 1 ஏமம் 19 ஏர்க்களம் 102 ஏர்ப்பாட்டு 12, 42 ஏல 91 ஏலம் கராம்பு 31 ஏலா 9 1 ஏலாது 98 ஏலாள் 9 !

Page 260
470 மட்டக்களப்புத் தமிழகம்
ஏலேல சிங்கன் 7 ஏவல் 345, 346 ஏவற்பேய் 354 ஏழா 91 ஏழு இசை 77 ஏழு கூரை முடி 448 ஏழு சிறுராச்சியம் 417 ஏழு சுரங்கள் 75, 77 ஏழு மரக்கறி 9 * ஏழை எத்தீம்களை. oo 294 ஏருவூர் 19, 337, 393,
399, 4 OO, 461
ஐது 100 ஐந்தாம் மகிந்தன் 161 ஐமை 100
ஐரோப்பா 4 19 ஐரோப்பியர் 427
ஒ
ஒட்டங்குத்தி 109 ஒட்டி ஒரா திருக்கை 218 ஒண்ணு 19, 98 ஒண்ணும் 98 ஒப்பியபடி 440 ஒப்பினை 19 ஒரிசா 438 ஒருபா ஒருபஃது . . . . . 283,
284 * ஒருமாபத்தினி. 187 * ஒருமான் ..... '' 211 ஒலிக் குறிப்பு 80 ஒலி பெருக்கி 80 ஒல்லா 98 ஒல்லாந்தர் 417, 4 19, 420,
421, 422, 426, 427, 444 ஒல்லும் 98 ஒழுகலாறு 92 * ஒழுகு நீராரல். 2-2 ვვ “ஒழுக்கத்து. 262 ஒழுக்கம் 457 ஒன்பது சுவை 74
g 'golg. 5 L di56ööT Q3L— . . . . . . . . . oo 42 ஒடு 423 ஒட்டமாவடிப் பாலம் 21
ஒதி 344 ஒத்தாச்சிமடம் 461
கங்குல் 63 * கங்கை நீர்க். وو g 1 | கங்கை வைரவன் 345 * கச்சான டிக்க... ... 22 ვე,
கச் சான் 459 கச்சான் காற்று 35 sgf GF TGŕv (Cachas) 459 கச்சிலாகுடி 437
கச்சு 109 கயவாகு 154, 155, 156, 160 கஜபாகு 7,
கடப்படி 30 * கடம்பின் . . . 196
கடலாட்சி அம்மன் 43 !
கடலின் அடித்தளம் 451
கடல் ஆராய்ச்சியாளர் 451
கடல் நாவாய் 425
கடல்நீர் வீழ்ச்சிப் பள்ளம் 450,
451
கடல்மார்க்கம் 420
கடல்வழிப்படம் 422
கடல்வள ஆராய்ச்சித் துறை
450
கடல் வாய் 420
கடற் கரும்பு 10
கடற் துறைகள் 419, 424,
42&3
கடற் பரப்பு 450
கடற் பாலம் 423
கடற் பிரயாணிகள் 452 கடற் பெரும் பள்ளம் 451 கடற்றுறை 427 கடற்றுறைக் கோட்டை 427 கடுக்கண்டாப்போடி 41 99 கடுக்கன் 15, 99, 448 கடுக்கன் கொல்லே 41 கடுக்கென்றவர் 15, 99 கடுத்தல் 15, 99 கடையர் 442

சொல் அட்டவணை 471
கட்டப்பத்தன் குடி 485 கட்டப்பத்தாங்குடி 435 கட்டமிலாறு 108 கட்டாடி 169, 189 கட்டியகாரன் 52 கட்டியங் கூறுதல் 52 கட்டு 10 கட்டுச் சொல்லுதல் 343 கட்டை இடறுதல் 17 கனகாட்டு 19 கணக்கன் 10 கணக்கு வழக்கற்று 228 கணத்தை 19 கணேசர் விக்கிரகம் 424 கண்டங் கருவழலே 370 கண்டங் குடி 435 கண்டபாணத்துறை 398 * கண்டனளே. ?? 179 * கண்டனெடு. oo 435 கண்டன் குடி 435 கண்டி 17, 420, 441, 464 கண்டி அதர் 157 கண்டிச் சிங்கள அரசன் 7 கண்டி நகர் 17 கண்டி நடனம் 66 கண்டி மன்னர் 17 கண்டியக்கட்டு 17, 157,
42O கண்டிராசன் ஊஞ்சல் 329 * கண்டுப் பனையோ லே. 9.
11 கண்ணகி (கண்ணகை) 156, 157, 158, 159, 160, 162, 163, 164, 165, 170, 171, 172, 174, 176, 177, 178, 179, 181, 188, 189, 190, 193, 194, 197, 200, 201, 204, 240, 343, 356, 897, 431, 436 கண்ணகி அம்மன் பத்ததி 201 கண்ணகி கதை 13 சுண்ணகியம்மன் வழக்குரை
I3; 24。 I95。200。204 கண்ணகி வழிபாடு 7, 12,
24。I53 கண்ணகை அம்மன் 」 53。 157, 158, 164, 167,
169, 198, 289, 307, 819, 824, 401, 406 கண்ணகையம்மன் குளுத்தி
13, 187 கண்ணுடிக் கூசா 458 கண்ணுடிப் புடையன் 369 கண்ணுாறு கழித்தல் 8 கதவு திறத்தல் 168 கதாநாயகன கதிரகாலமலை 6, 7 கதிரை 20, 149 கதிரைமலை 287 கதிரைவெளி 374 கதிர்காமத்தெய்யோ 156 கதிர்காமம் 253, 462 * கதிர்காம வேலவர் தோத்திர
மஞ்சரி’ . 22O கதிர் துவைத்தல் 45 கதிர் வாங்குதல் 101 கதைப்போக்கு 61 கத்தலை 82 கத்தாக்கு 61 கத்தை 1 10 கத்தோலிக்க குருமார் 454 கத்தோலிக்க கோயில்கள் 453 கத்தோலிக்க தேவாலயம் 451 கத்தோலிக்க மதப் பழைய சா
dF63Tub 451 கத்தோலிக்க மதம் 451, 452,
453 கத்தோலிக்கர் 449 கந்தளாய் 417 கபிரியன் விதானே 452 கப்பலேந்தி மாதா கோயில் 452 கப்பல்கள் 421, 422, 425,
426 கப்புகளுர் 462 கமல மலர் 444, 445 கம்பான் 109 கம்பை 109 கரணம் 19 1 கரப்பு 109 கரப்புடுப்புகள் 61 கரவாகுப் பகுதி 16 கருக்கொண்டமகளிர் 99 கருங்கற் கட்டில் 15 கருங்கற்தோணி 426 கருங்காய் 10

Page 261
472
கருங்காலி 426, 463
கருங்கொடித் தீவு 289, 296,
426
கருநாகம் 380
கருநெல் 87
கருப்பவதி 446
கருவழலை 370 கருவீரம் 181 கரைஞ்சான் 9 கரையாக்கன் 345 கரையாக்கு 181 கர்ப்பக்கிருகம் 423 கலங்கரைவிளக்கம் 323, 327 கலங்கல் 9 கலத்தில் போடுதல் 9 56.cm (3LT (Calerado) 450 கலிங்க குடி 442 கலிங்க குலம் 448 கலிங்க மன்னன் 437,
442 கலிங்கம் போடுதல் 373 கலிங்க ராசன் 441 கலிங்கர் 434, 442 கலிங்க வெள்ளாளர் 434, 435 கலிநடம் 191 கலிபோர்ணியாக் கடற்கரை 79 கலிப்பா 78 கலியாணக்கால் 168 கலியாணப் படிப்பு 194 கலியாண வைரவன் 345 s& 11, 45, 459 கலைச் சிறப்பு 47 கலைப்பிணிகள் 23 கலேவளம் 22, 324 கல்கெதற 419
44 1,
கல்டெற 82
கல்முனை 254, 260, 267, 328, 415, 429, 431, 452、457
கல்லடி 69, 79
கல்லடி-உப்போடை 315
கல்லடி நாவலர் 215
கல்லடிப்பாலம் 21, 83, 323,
452。453
6 கல்லாக்கழிப்பர் தலையாயர்’
23O
கல்லாறு 337, 452
மட்டக்களப்புத் தமிழகம்
கல்லூடு 89
கல்லோயா அணை 420
கல்லோயா அணைக்கட்டு 22
கல்லோயாத் திட்டம் 22
கல்லோயா நீர்த்தேக்கம் 278,
298
கல்வி விளக்கு 458
கல்வெட்டு 14, 22, 441
கவடா தீவு 83
கவி 16, 28, 89, 92, 190,
232, 287 கவிகற்பனை 71 கவிதா சக்தி 78 கவிதை 24 கவிதைச் செல்வம் 46 கவிநலன் 89 கவிப்புலவர்கள் 29, 46 கவிர் 1 10 கவுத்தன்குடி 435, 436, 485,
437
கழிப்பு 344, 349 களம் பொலிதல் 10 みarf 52。55。56 களவட்டி 108 களவுக் காதலர் 29 களவெட்டி 108 களவொழுக்கம் 34 களிப்பிட்டி 4 19
களிமுகம் 421, 422, 426,
427, 431 களுதாவளை 13, 65, I D8 و
190, 325
களுதாவளைத்துறை 428, களுத்துறை 4 19 களுவாஞ்சி 155, 414, 410 களுவாஞ்சிக்குடி 158, 436 களை பிடுங்கல் 11, 45
கற்குடா 398, 419, 422
423, 427, 459
கன்னட்டி 105
கன்னன் குடாத்துறை, 428
* கன்னி விராலே. 22 ვ7
* கன்னிக்கிரான் குருவி . s
39, 40

சொல் அட்டவணை
as it 88, 89 * காக்காய்க்கும். 4 1 காகிதத் தொழிற்சாலை 453 காடேறி 345 காட்சிச்சாலைகள் 23, 188,
189, 232, 321 326
* காட்டுக் குறத்தி. oo 248 காட்டுமந்தை 463 காட்டு மரம் 423, 426, 428 காணிக்கை மாதா 452 காணித்தோம்பு 450 * காணும் அருட்கண்.’ 257 காண்டி 88 காதலிலக்கியம் 27 காதல் கைகூடுவதில் முடிவன
காதல் வெற்றிபெறும் முடிவு 49 **காதறுந்த . oo 233 காதற் கவிகள் 12, 30 காதற் சுவை 49 காதுப்பூ 15 காத்தலையன் 82 காத்தான் குடி 16, 336, 40 ! * காத்திடுவாய். 4 1 காந்தாரம் 76 *காப்பவிழ்க் த. وو g 1 1 **காமனகர். 155 காய்கறிகள் 428 காய்கறித் தோட்டம் 463 காய்வெட்டுதல் 349 *காரணியுங்கொடை." 170
காரா ளர் 435, 444
காரைதீவு 65, 155, 157, 159, 190, 200 201, 2O3, 204, 244, 245, 800, 803, 837, 374, 382, 401
கார்காலம் 36, 39 கார்க்கோடகன் 361 362 கார்த்திகைப் பறைப்பாட்டு 12 காலக்கடி 878 காலுசேனன் 436 காலபோகம் 10 காலமேற்றுதல் 55 காலவெள்ளம் 67 காலி 4 19
473
காலிங்காகுடி 437, 438 காலிவிளே பாக்கு 31 கால் 10 1, 234 கால்மாறிச் செல்லுதல் 10 கால்வாங்குதல் 101 காவடிப்பாட்டு 327 * காவலரணுேமச்சான்.” 38 காவற்கட்டைகள் 447 காவியம் 17, 168,
172, 178, 183 * காவிரிசூழ் பணை நாட்டு.
258 காளாத்திரி 364, 365, 366 காளி 162, 165, 347, 364,
365, 366 *காளியே காகபாதம் .’ 366 5ir IT 30 காவோப்பசு 463 காளையர் 65 * காற்றுறுமாடி மாதம்..” 363 கான் முளை 101
171,
99
தி
ĝu'll trij ĝis 429 கிட்டங்கித்துறை 428, 450 கிட்டிணன் கோயில் 431 கிணுட்டை 19 6630fu it 325 கித்துள்துறை 4 19 கிராமப்புறம் 47 கிராமம் 463 கிராமியக் கவிதை 27 கிரான் குருவி 39
கிரேக்கு 419 கிலாச முனிவர் 249 கிலுக்குதல் 168 கிழக்கிலங்கை 390, 391, 393, 408, 417, 4 19, 421, 428, 430
கிழக்கிலங்கைத் தமிழகம் 47 கிழங்கு 197 கிழங்குகள் 428 கிறித்தவ மதக்கல்வி 458 கிறித்தவர் 464 கிறித்துவ சபையார் 18 கிறிஸ்தவ சபையார் 459 கிறுகு 19 கினிக்கருடன் குடி 438

Page 262
474 மட்டக்களப்புத் தமிழகம்
g
கீர்த்தனைகள் 55 கீற்ருெலி 80
கு
குசலவநாடகம் 49 குசவர் 442 குச்சு 181, 182 * குஞ்சுமுகமும். oo 3 l : குஞ்சுவாயன் 10 குடக்கூத்து 191 குடாக்கரை வயல் 289 குடி 430 குடிப்பிரிவு 433 * குடிப்பிறந்தார். 101 குடிப்பெயர் 15 குடி மரபினர் 444 குடிவகுப்பு 461 குடிவழிவந்தோர் 462 குடுக்கை 439, 440 குடுக்கைகூறும் கல்வெட்டு 440 குடுக்கை கூறுதல் 435, 439 குணசிங்கன் 438 குண்டு 87 குதிநடை 58, 60 குத்தல் 87 குத்துதல் 102 குந்துதல் 58 குமரிக்கண்டம் 451 குமரிமலை 451 குமரிமுனை 424, 425 குமுக்களுறுை 2, 390 குமைத்தல் 102 கும்பம் 448 கும்மிகள் 326 குயில் வசந்தன் 11 குரல் 77 குரல் காட்டுதல் 11 (JJT GDG) u 168, 19 l, 1932,
193, 194, 195, 196 குரவை அயர்தல் 8 குரவைக் கூத்து 192 குரவைத் திருநாள் 194 குரவையாடல் 24, 195 * குரவையென்பது. 192 குருக்கள் மடம் 324, 437
குருக்கேத்திரன் போர் 49 குருபரதரிசனத் திருவேட்கை
263
குருமகன் 340 குருவிக்காரன் 105 குருவிமூலை 105 குர்ஆன் 281 குலசேனன் 438 குலவிருது 439, 443, 444,
448, 46 குலவை 112, 192 குழிவிரியன் 384 குழு உக்குறிச் சொற்கள் 9,
108
குளக்கோடன் 7 குளக்கோட்டு மன்னன் 415 குளகச் செய்யுள் 227 குளிக் கல்வெட்டு முறைப் பட்
டயம் 435 குளுத்தி 12, 13, 17, 106, 169, 177, 179, 187 குளுத்தி ஆடுதல் 187 குளுத்திப் பாட்டு 12, 24,
170, 178, 204 குளுந்தருள்வாய் 170 குறத்தி ஊஞ்சல் 42 குறவர் குழாம் 463 * குறவர்மகள்தன. 22O குறவன் கண்டகாதல் 28 குறளி 350, 35 ! குறி 350 குறிசுடுதல் 444 குறிஞ்சி 460, 463 குறி பார்த்தல் 345 குறியிடம 28 குறுணல் 102 குறுமகள் 92 - - - குறுமண்வெளி 316, 439 குறுமண்வெளித்துறை 428 குறும் பறையன் 345 குருெவ்ற் அம்மையார் 456 குருெவ்ற் மண்டபம் 457 তেলুগু குரவை 19 1, 194,
95
குன்றவர் 191

சொல் அட்டவணை
éfin.
கூடாரக் கொம்பு 182 கூட்டு முயற்சி 464 கூதிர் காலம் 36 கூத்தர் 54, 55, 60,
306 கூத்தாடுதல் 65 கூத்தியலிலக்கணம் 19 ! கூத்து 95, 19 1, 192, கூத்து ஏட்டுப் பிரதி 53 கூத்துக்கள் 11, 48, 191, 198, 331 கூத்துக் களரி 349 கூத்துக்காரர் 52, 54 கூத்துப் பழக்கல் 65 கூத்துப் பாடல்கள் 293 கூரைக்கோடு 10 கூரைமுடி 443, 444 கூவாய் குயில் 201 **கூழுடையார். oo 3 1 1 கூளக்கையன் 10 கூறைதாலிகட்டுதல் 9
66,
198
66,
கெ
கெடுதல் 340 கெருடம் 61 கெழுதகை 90 கெளிறு 81
স) &&
கைக்கட்டு 15 கைத்தொழில் 460, கைமல் 4 19
46 1
கொ
கொக்கட்டிச்சோலை 14, 328,
367, 401, 404, 4 1 1, 4 l6。433、434。435, 439
கொக்கு நெட்டி மரம் 416 "கொங்குகாசி 413
கொச்சை 92, 96 கொடுங்கோளுர் 163 கொடுந்தொழில் 196 கொட்டியாரம் 4 19
கோணேச்சுரர்
475
கொட்டுக்கிணறு 347 கொண்டடி 109 கொண்டவட்டவான் 399
*கொண்டவிடம். oo 388 கொண்டை 41 கொந்தராத்துக்காரர் 450
**கொந்தலர். 228 கொப்பரு 426, 429 கொமெடி 50 கொம்பு 181, 182, 195 கொம்புச் சந்தி 13, 190 கொம்புத்தட்டுக் கொம்பு 182 கொம்பு முறித்தல் 106 கொம்பு வம்மியடி 190 கொம்பு விளையாட்டு 12, 24, 44, 98, 177, 179, 18O, 184, 187, 188, 190, 2O4, 236 கொம்பேறிமூர்க்கன்
386 கொய்லா 165 கொலு 53 கொலுத் தாளம் கொல்லர் 442 கொல்லா 109 கொழுக்கொம்பு 182 கொழும்பு 4 19, 406 கொள்ளைப் பண்டம் 427 கொற்றவை 162
385,
6O
Gas if
*கோடிக் கதிரிறைக்கும்,.
293
கோட்டை 108
கோட்டைக்கல்லாறு
828, 330
கோட்டைமுனை 225, 228, 329, 330, 386, 458, 459, 461
241,
421 கோத்திரம் 445 கோபம் 51 கோப்பிகுடி 437 கோமாரி 398, (85ir LDIT 6ifil 2 18 கோயில்கள் 463 கோயில் காத்தல் 168
426

Page 263
476 மட்டக்களப்புத் தமிழகம்
கோயிலார் 442, 445 கோயிற் பூசகர் 433 * கோலப்பணிச் சேலை. 184 கோலம் 103 கோலாட்டம் 198 கோவசியர் 435 கோவியர் 442 கோவில் விருது 442 கோவை நூல்கள் 31 கோவைநூற் காதல் 28 கோளாவில் 232, 354, 374 கோருவெளி 158
F
சகோடயாழ் 304 சக்கரம் 445 சக்கரங்கள் 342 சக்கிறிஸ்தி 452 சங்க இலக்கியங்கள் 28 சங்கச் சான் ருேர் 22, 27 சங்கத மொழி 224, 30 1 சங்கமாங்கண்டிக் குன்று 325
சங்கமாங்கண்டிப் பதிகம் 325
சங்கமாங்கண்டிமலே 322 சங்கரப்பத்தாங்குடி 435,437 சங்கின் முரற்சி 74 'சங்கீன்றமுத்தோ...' 11 சங்கு 423, 445 சங்கு பாலகன் 361, 362 சங்குமண்கண்டி (சங்கமான்
கண்டி) 410 * சங்குமுழங்குதல்லோ ...' 11 சங்குவழலை 370 சடங்கு 158, 188, 192,
330, 357, 433, 442 சட்டதிட்டங்கள் 462 dfl LLb 76 சதாசகாயமாதா கோயில் 452 சத்துரு கொன்ருன் 392 சந்தக் கவி 213 ar ii; 51 i Litir 2 18 சந்தன மரம் 30 affi BTT 165 சந்திவெளி நி92 சபையோர் 53, 54
F upo GðôTL &ao 463 சமதரை 420
சமபந்தி போசனம் 462 சமயச் சடங்கு 463 &լDկ 1ւb 480 aftbLIT 87 சம்பாந்துறை 17, 157, 316,
33 1, 428 சம்பான் 429 சம்புகோளா 155 சம்புத் துறைமுகம் 155 சயத்தம் 67 சரக்குறி 388 *சரிகமவும். oo 3 1 5 சரிகைசன் னுசம் 441 சருகுபில்லிகுடி 435 சருவிலிகுடி 435 சர்க்கரையர் 254 சல்லரி 58 சவணிக் கைப்பாட்டு 12 சவள் 426 சன்னதம் 343 சன்னியாசிகள் 61
Fl
சாகமீது ஆண்டகையார் 284 சாகமீதெந்தமொலியே 284 சாகுல்ஹமீது ஆண்டகை 283 சாணர் 442 சாதகம் 447 சாதித் தெய்வக் கல்வெட்டு
437, 442 சாதிப் பிரிவு 461 சாபமிடுதல் 340 சாமர்த்தியப்படுதல் 447
Fifi Lf6 214 சாம்பிராச்சியக் கலைக்கூடம் (Imperial Institute) 46 Ι *சாயக் கொண்டை.”* 37 சாரணர் 340 சாரைப் பாம்பு 386 (FIT616) 112 Ꮡ Ir ᎧjᎶ 448
ஒ
சிங்கர் 434
சிங்கள ஆட்சி 17 சிங்களக் கூத்து 65

சொல் அட்டவணை 477
சிங்களநாச்சி 161, 162 சிங்கள மக்கள் 462 சிங்கள மன்னர் 4 18, 420,
426 464 சிங்களமொழிப் பெயர் 464 சிங்களவர் 17, 417, 418 சிங்கள வாடி 457 சிதைத்தல் 101 சித்திர கவிகள் 251 சித்திரவேலாயுதசுவாமி 436 சிந்து 172, 232, 256 guit; 423 சிரமதான முறை 423 சிரைத்தல் 101 சிலப்பதிகார உரை 52, 67 சிலம்ப கதா 166 சிலாபம் 4 19 சிவசமயம் 431 சிவபூசனை 433 சிவவேடன் 62 சிவாநந்த வித்தியாலயம் 68, 800, 302, 314, 333 சிள்வண்டு 5 சிறப்புவரவு 53 சிறியாததேவி 439 சிறுமணி 87 சிறுவடம் 182 சிறைக் குடிகள் 442 சிறை பன்னிரண்டு 448 சிற்ப உருவம் 417 சிற்ப வேலை 423 சிற்பியர் 424 சிற்றரசன் 420, 425, 426,
430 சிற்றண்டி 837, 336, 374,
434, 462 சின்னக் கதிர்காமம் 182 சின்னக் கவுத்தன் குடி 436,
437 சின்னவண்டு 35
呜 g
சீமேந்து 423 சீர்பாதக்காரர் 439 சீர் வரிசை 434, 439, 461 சீனு 420
சுகாதாரம் 449 சுகாதார சேவை 458 சுகிர்தவிலாச நாடகசபை 216,
218 சுங்கக் கட்டுப்பாட்டறை 455 சுங்கத் துறை 331 *சுட்ட கட்டைபோல.’ 37 “சுட்ட கருவாட்ாம்.' 11 சுடலே வைரவன் 345 சுண்ணும்பு 423
சுந்தர விலாசம் 321
சுரவரிசை 54 சுருட்டை 370 சுருட்டைச் சாதி 361 சுருவம் 452 சுரைக்காய் 95 சுரைக்குடுகு 95 சுவாத்தியம் 459 சுவை 51, 61 சுவைகளொன்பது 78 சுழல் ஆட்டங்கள் 56 சுளகு 102 சுளி 445 சுள்ளானி 42 * சுற்றிவரவேலி... . 38
சுனை 425
கு சூடு 9, 107, 108 குடுமிதிப்பு 11 சூரசம்மா ரம் 49 சூரன் 426 சூரன் போர் 193, 194 * சூரா 278 சூழியம் 109 குறைப்பாத்தும்மா 275 சூனியகாரர் 343 சூனியப்பேய் 354 சூனியம் 345, 350
செங்கலடி 222
செங்களாச்சி 162
செட்டிகுடி 437
செட்டிபாளையம் 155, 324,
326

Page 264
478.
செந்தமிழ்ச் சொல்வளம் 84 செந்தில்மடு 257 செந்நெல் 87, 463 செந்நெல்வளம் 428 செந்நெற் செல்வம் 87 செப்பு நாணயங்கள் 15 செம்பரி பள்ளம் 257 “செம்பவளப் பொருள். .
233 செம்பூதுதல் 197 செயிற்றியம் 67 செய்கை 105, 345 செய்யுட்சுவை 64 செல்வாக்கு 445 செல்வி-குருெவ்ற் 457 செல்வி-பத்மன் 457 *செவிக்கினிதாக. 270 செவியேறல் 42, 46 செவ்வாய் வசந்தன் 11 சென்ற் அகுஸ்தீன் ஆசிரிய
கலாசாலை 454
9.
சே
சேமக்கலக்கால் 9 சேர்த்தி மருந்து 352, 353,
354
சேரநாடு 7 சேரர் 445 சேரன் செங்குட்டுவன் 154,
160, 162, 163 சேரியார் 185, 190 சேரிவாரம் 180 சேனதிபதியுடைய ஆட்டம் 58 சேனதிபதி வரவு 53
6 F
சைவக்குருக்கள் 462 சைவசமயம் 13 சைவமக்கள் 417 சைவம் 4 18 சைவத் தளபதிகள் 402
G3. T
சொகினம் 341 சொல்நிறைவு 83 *சொல்லால் .. 239
மட்டக்களப்புத் தமிழகம்
சொல்வளம் 85, 87 சொறிக்கல்முனை 452
Gagar
சோடிகள் 15 சோதிட விற்பன்னர் 221 *சோதிமதிபானு. 189 சோழமண்டலத் தமிழும்
ஈழமண்டலத் தமிழும் 809 சோனகர் 15, 438, 461,
464
-
டச்சுக்காரர் 422, 426
Ljö LT fo (Durch Bar) 422
ty
L90 LDT (Drama) 50, 821
b
தகததிங்கிணதோம் 57 தகதிகதாதெய்யத்தெய் 57,
58
தக்கன் 361, 362 **தங்கக் கிளியே. 31 “தங்கத் தகடோ . 32 *தங்கமுலேக்கோட்டை.* 37 தட்சணுபதி 412 *தட்டான் பொடியாக..
17O தட்டை 5 தட்டைப்படகு 421 **தண்ணளிசெங்கோலாய்.”
73 "தண்ணழிகால் . 251 தண்ணிர் ஓதுதல் 344 தண்ணிர்க்கொம்பு 182, 186 தண்ணிர்ப் புடையன் 369 “தத்துவங்கள்.’’ 245 “தந்தமொன் ருகில். oo 865 தந்திக் கம்பி 80 **தந்தையரினுந்தியில்.’’ 275 தமிழ் இசை 314 தமிழ்க் கலை மன்றம் 814 தமிழ்க் களஞ்சியம் 68
9s

சொல் அட்டவணை 479
தமிழ்க் கூத்துக்கள் 65 தமிழ்நாடக இலக்கணங்கள் 48 தமிழ் நாடு 419 தமிழ்ப் பொழில் 314 தமிழ்மொழி 315 தமிழ் வரலாறு 210 தமிழ்வளர்ச்சிக் கழகம் 28 தமிழ் விழா 28 தமிழகம் 47, 480 தமிழர் 417, 461, 464 தமிழர்தம் பண்பாடு 48 தமிழர் வரலாறு 20 தமிழில் எழுத்துக்குறை 309 தம்பட்டர் 409 தம்பட்டார் ஊர் 410 தம்பட்டை 410 தம்பதிவில் 410 தம்பிலுவில் 14, 85, 157, 158, 188, 189, 190, 200, 20 1, 288, 286, 289, 240,
276, 8 19, 822, 886, 854,
874, 401, 406, 486. தம்பிலுவிற்பள்ளு 288 தம்புட்டி 418 தரு 54, 55, 198 *தருமபதி மனதில் 321. s தருமபுத்திர நாடகம் 12, 49,
61, 64 தருமர் கொலு 58 தலைப்பு 102 தலைமகள் 92 தலையாரி 60 தலைவன் நயப்புரைத்தல் 85 தவசிகள் 442 தவணை போடுதல் 372 தவணை மந்திரங்கள் 372 தவளைகளின் ஒலி 80
தறியாமல் விட்டு வன வேடர்.
40 *தனியே இருக்கின்ற தங்கச்சி
யார்க்கு. oo 40 தன்னுமுனே 452
தா
தாண்டவர் 234 தாண்டவன் வெளி 158, 452 தாதன் 432
தாதுகோபம் 417 தாத்துதல் 102 தாத்தெய்யத் தெய் 58 *தாப்பியலூசல்... * 27I தாமரைக்கேணி 330 தாய்துயிலாமை 32 *தாயே பொலி. 10 தாரம் 77 *தாலிக்கொடியே. 7ږه وو தாள அமைதி 47 தாள அறுதி 53 தாள ஒழுங்கு 53 தாளக்கட்டு 49, 53, 55,
56, 57 தாளங்கள் 65 தாளம் தீர்தல் 57 தான் தோன் றிச்சுரம் 416 தான் தோன்றிச்சுரர் கோயில்
4 11 தான் தோன்றிச்சுவரர் 14 தான் தோன்றீஸ்வரர் கோயில்
436, 489
தி
திகவாபி 898, 399 திகவாவி 4 17 *திடுதிடென்று மழை. 34 திராட்சாரிட்டம் 226 திமிலதீவு 392 திமிலர் 392, 393, 400 திம், தக, திமி 65 திராவிடமொழிகள் 84 * திரி 424 திரியாய் 417 திரு இருதயர் கோயில் 452 திருக்கோணமலை 159, 238, 265, 279, 280, 890 393, 398, 407, 415, 416, 417, 419, 420, 421, 451 திருக்கோணமலை இந்துக் கல்
லூரி 264 திருக்கோணமலைக் கோட்டை
திருக்கோவில் 7, 14, 18, 236, 238, 239, 319, 322, 325, 874, 898,

Page 265
480
401, 405, 406, 407, 408, 409, 410, 4 1 1, 415, 419, 428, 424, 425, 434, 436, 462,
திருக்கோவிலூஞ்சல் 42, 234
திருச்சிலுவைக் கோயில் 452 திருத்தக்கல் 87 திருநீறு போடுதல் 344 திருப்படைக் களஞ்சியக் கல்
வெட்டு 437 திருப்படைக் களஞ்சியம் 435 திருப்படைக்குடி 439 திருப்படைக் கோயில் 433,
434 திருமணம் 445 திருமண நிகழ்ச்சி 446 திருமா பத்தினி 160, திருமுகர் பதிகம் 209 திருவடிகிலே 155 திருவட்டம் 1 10 திருவரங்கம்போல 3 “திருவளர் தாமரை.’ 5,
247 "திருவளருவானறுசு.’ 288 திரெளபதி 431 திரெளபதி அம்மன் 254,
163
431, 432, 433
தீ | தீகவாவி 401, 402, 403,
4O4. தீக்குழி 433 தீக்குளிப்பு 254 தீட்டுதல் 102
தீண்டாமை 265, 46 ! தீந்தாரத்தில்லான 58 தீப்பள்ளயம் 431, 432 தீப்பாய்தல் 433 தீரை 109 தீர்த்தமாடும் பாட்டு 12 தீவேள்வி 432
Sjl
424
‘துங்கோள’ துத்தம் 77
தும்புத் தொழில் 40
மட்டக்களப்புத் தமிழகம்
துரிதம் 60 துரிதமான ஆட்டம் 55, 58 துர்க்கை 162, 163, 164,
I65 துவர்ப்போடல் 1 10 துளும்புதல் 65 துறைநீலாவனே 158, 439
துன்பியல் முடிவு 49
து
தூண்கள் 52
தூதன் 388 தூதன் குறி 366 “தூதன் சொன்ன. 359 துTதுணம்பறவை 99 தூதுவர் 420 தூதுவழுதுணே 99 தூதுவளே 99
தெ
தெங்கு 4
"தெந்தனதென. 41 தெருப்பாடல்கள் 12
தெள்ளுதல் 102
தென் சேரி 12, 98, 180, 181, 182, 183, 185, 186, 187
தென்முகமாக 4
தென் மோடி 11, 48, 49, 50 5P 53 54, 60, ό1, 198, 259, 819, 332
தென்மோடி உடைகள் 61
தென்மோடிக் கூத்தர் 54
தென்மோடி நாடகங்கள்
50, 5 I
தென்னந்தோட்டங்கள் 18,
46O
oಷ್ಟ್ರಿ(೨/೩6ು கிலவிய கூத்து
தென்னே
49,
23ے 4
தே
423, 440
42&3
தேங்காய்
தேசத்தார்

சொல் அட்டவணை
தேசத்துக்கோயில் 484 தேசத்து வன்னிமை 441 தேசவழக்கம் 9 “தேமல் முதிரை. o 46 O தேமல் முதிரை 468 தேயிலை 426 தேர்ப்புரை 183 தேர்விழா 439 தேவாரம் 350 தேனுறு 5 தேன் 423, 426, 428,
463 தேன் வெள்ளம் 2
தை
தையல் 458 தைவதம் 76
தொ
தொடுத்தல் 109 தொழிலாளி 344, 345 தொழில் 344, 345, 459
தோ
தோடம்பழம் 422 தோடர் 164
தோணி 79 " தோணிகரை யார்க்கு.’ 444 தோணிப்பாட்டுகள் 12 தோம்புதோர் 24 1 தோற்பாவை 191 * தோற்றந் துடியதனில்.’258
ககை 51 நக்கு வழலே 370 நங்கூரம் 422 நசிச்சான் 97 நசித்தல் 102
நச்சுப்பொய்கைச் சருக்கம் 819
5 LGOT És&aứ 5 8 நடிகர் 52 நடிகர்தம்வரவு 55 நடு அரங்கு 56 நடுத்தரப்படகு 417 5டுகின்லமை 51
ld - 31
நடை 1ே நடைசாரி 172 (5 Gigiru 15th 282 நம்பிகள் 442 நரேந்திரநாடகம் 49 நரை மூதாளர் 4 நலம்புனேந்துரைத்தல் 31 நல்லபாம்பு 366 நல்லிசை நாற்பது 212 நல்வெளிச்சம் 451 >ペ *நள்ளார் நகைக்க... ... oo - 221 நறண 97 நறனை 19, 97 குறுநெய் 97 நறுவிசை 135 “கற்றவத்தி. 250 கன்னித்தீன் 135
நா
நாகசாதி 361 நாகஞ்சோலை 414 நாகதம்பிரான் 367 நாகதெய்யோ 156 நாகபடம் 15 * நாகமணியாக. ”2ے 33 شہ நாகராசா 367 நாகரிகம் 457, 49 நாகரிக வாழ்வு 86 நாகர் கட்டு 367 நாகர் முனே 407, 408 நாகு 30 gost ijit G 162 நாடக இலக்கணம் 11, 12 நாடகக் கலை 67 நாடகக் கலைமன்றம் 464 நாடகத் தமிழ் வழக்கு 48 நாடகப் பேராசிரியர் 48 நாடங்காய் 95 5ாடங்குடுகு 95 5ாடன் குடுகு 458 நாடி 225 காடை 94 நாடோடி இலக்கியம் 22 15ாட்டுக்கூத்து 8, 11, 24, 47, 48, 52, 65, 184, 204, 236, 259, 317, 319, 322, 336, 464

Page 266
4852.
காட்டுப்பற்று 461, 464 நாட்டுப்பாடல்கள் 16, 24, 27,
28, 45 நாதனனே 414 காப்புட்டி 413
நாயர் குலம் 435 நாய் ஊர்தி 417 நாரை 33 “நாலுசாதி. 328 நாவலடி 431 காவலன் 213 நாவல்கள் 321 15ாவாய் 425 நாவிதன் வெளி 242 காற்காற் செல்வம் 42 5ானூறு துறை 28
நி கிஷாதம் 76 "நித்திரைக் கண்ணிலயும். 99.
32
கிந்தவூர் 16 நியதி 55 ίδι ωθι μό 360 நிலக்கிழவர் 430 நிலபாவாடை 443, 444 நிலவளம் 323 நிலைமைப்போடி 444 நிறைகுடம் 443 நின் சிறிய பர்தம் 92 நினைவுச் சின்னங்கள் 18
f
'ਸੰ613 ....... '' 76 "நீயளிப்ப. oo 3 1 1 நீரரமகளிர் 69, 74 நீரரமகளிர் இன்னிசைப் பாடல்
68, 70, 83 நீர்கொழும்பு 419
நீர்ச்சுனே 463 *நீர்ச்சேர்ப்பு. 5 நீர்திருத்தக்°. 87
நீர்ப்பாசனம் 418, 449 நீர்ப்பாய்ச்சற் திட்டம் 463 நீர்வீழ்ச்சிகள் 451 நீலகண்டி 365 *நீலமோ..? 332
மட்டக்களப்புத் தமிழகம்
நீலவண்டார் 35 'நீலவானிலே. 70 நீலாவணே 155, 414 நீலாவணேத்துறை 428 நீலி 365
நி நுங்கு 102 நுண்கணிதப் பேரறிவு 78 நுணுக்கங்கள் 55, 60
list நூல் தீற்றுதல் 110
தெ நெசவு 460 “நெஞ்சம் சடுத்தது . oo 15 நெடுமின்னி 10 நெடுமுழவன் 10 நெடுவழலே 370 நெட்டை 349 கெட்டை மந்திரங்கள் 346 நெய்தல் வரைப்பு 463 நெல் 422, 423, 426, 428,
429 *நெல்லிருக்கு. oo 89 நெல்வயல் 463 கெற்குதம் 429
நெற்கூடு 108
நொ நொத்தாரிஸ் 20
நோ நோக்கு
பஃறுளியாறு 451 * பகரரிய. 283 பகவதி 164 பக்கப்பாட்டு 53 பக்கப் பாட்டுக்காரர் 54, 56 பங்கிடான் வெளி 413 பச்சைப் பாம்பு 373 பச்சைப்பெருமாள் 202 பஜனுமிர்தம் 239, 240

சொல் அட்டவணை
பஞ்சமம் 76 படி கொடுத்தல் 108 படிமங்கள் 161, 162, 164 படுகுனியம் 345 படுவான்கரை 4, 196, 428
படையாட்சிகுடி 437, 442, 443 படையாண்டகுடி 437, 438 படையெடுப்பு 422, 425 பட்டயக் கூற்று 432 பட்டயங்கள் 403, 432 பட்டயப் பாடல் 444 பட்டறை 108 பட்டாணியர் 393 பட்டி 347 *பட்டிருகர். 158 பட்டி மேட்டுவயல் 289 பட்டிருப்பு 18, 83, 403 பட்டிருப்புத்துறை 428 பட்டை 108 பணிக்கனகுடி 437 பணிக்கனர் குலம் 442, பண்டமாற்று 428 பண்டாரப்பிள்ளை 442 பண்டாரம் 442 பண்டி 111 *பண்டுரு. 262 பண்ணைய வீடுகுடி 438 பண்பட்டமொழி 86 பண்பாடு 86, 322, 418, 461 பண்பாட்டுச்செல்வம் 463 பண்பாட்டு வளர்ச்சி 86 பதர்க்கடை 107 பதினெட்டாம்போர் 49 பதினெட்டுவரிசை 442 பதினெண்குடி வேளாளர் 15 பதினேழு சிறைக்குடிகள் 442,
444 - பதுமன் 361, 362
443
பதைனிதேவி 165 பத்தவளையம் 110 பத்திரகாளி 431
:? 155, 162, 163, 165,
171, 172, 179, 396 பத்தினித் தெய்யோ 153 பத்தினித் தெய்வம் 153, 154
156, 177,
161,
166, 167, 173 178
483
பத்தினி படிமா 166 பத்தினி விழா 157 பத்துவகை நாதம் 74 பத்மன் மனை 457
!ப்பிரவாகன் நாடகம் 1 uuu Gör 2 * 5, 258 பயன் கூறல் 254 பயிரேற்றப்படுதல் 45 *பயிரை முந்து. 278 وو பரத்தை 95, 447 பரமன் 109 Լյց լիլ 1600 460 பராசர முனிவர் பராயரிப்பு 105 பரிகலங்கள் 166 பரிகாசப்பாடல் 12 பரிகாரியார் 325
பருத்தித்துறை 419
49
173
பருவக்காற்று 423
பருவமழை 458, 459 ւյaւyւյTւDT ձl) 282 பலவினப் பறவை 463 பலிகொடுத்துச் சடங்கு செய்
தல் 13
பல்லவி 56
பல்வாய் 182 பவள வல்லி நாடகம் 49 பவளேந்திரன் நாடகம் 319 பழக்க வழக்கம் 445 பழங்குடியார் 444, 464 பழந்தமிழர் 464 பழந்தமிழர் நாடக அரங்கு 52 பழந்தமிழர் நாடக இலக்கணம்
பழம்பண்பாடு 461 பழம்பொருள் 417 பழுகாமத்து வகுத்துவார் பழுகாமம் 157, 404,
436 பள்ளயம் 431 பள்ளர் 442 பள்ளர் குலம் 262 பள்ளு 232 பள்ளுப்பாட்டு பறநாகம் 367 பறையர் 442 பற்று 103
436 432
17, 233

Page 267
at 84
பணிச்சங்காய் 181 பன் இழைப்பு வேலை 461 பன்றி 111, 463 பன்னி 111
பாங்கன் 345 பாச்சல் முதலியார் பாடுபார்த்தல் 10 1 பாடும் மீனின் இன்னெலி 80
452
பாடும்மீன் 71, 74, 79, 80, 81, 82, 83, 455 பாடை 448 “பாட்டமைதி. oo 229 *பாட்டளிசேர். 312
பாட்டு 55, 61 பாணகை வழிநடைக் கும்மி
235 பாணக்கம் 169 பாணந்துறை 4 19 பாணம் 4 19, 425, t.jT6Off SO6 பாண்டவர் வனவாசம்
254, 488 பாண்டிருப்பு
442 பாம்புக்கல் 374, 375 பாம்புப் பரிகாரி 358,
366 பாரசீகம் 4 19 பாரதக் கதை 438 பாரதி கூற்று 22 பாரதியார் 461 *பார்த்திபர்கள் கொண்டாட
8 & 8 s 432 பார்ப்பன குலத்தார் 462 *பார்ப்பார். 363 பாலசரித நாடகம் 265 பாலே 463 பாலே உலக்கை 447 பாலையடி 244, 245, 249,
25O “பால்பெருகும். 6 *பால்போல் ...”* 185
426
49,
254, 481,
395
மட்டக்களப்புத் தமிழகம்
பிச்சி 345 பிச்சை வேலைக்கும்மி 235
பினந்தின் ரிை 345 பிரகதீசுவரர் 161 பிரம்புக் கைத்தொழில் 461 பிரயாணம் 425 பிராஹாரம் 156 பிரான்சியர் 427 பிரைல் (Bryle) 450 பில்லி 181, 182 பிள்ளைகொல்லி 345 பிள்ளைக்காவியம் 286 பிள்ளைக்குலம் 435 பிள்ளைப்பேறு 445 பிழைப்பு 378 பிற்பாட்டுக்காரர் 54
பீரங்கிவெடி 17
t
புகழ்ச்சிப்பாடல் 54 புகழ்ந்துகூறும் பண்பு 54 புகழ்வளம் 419 புகைஞ்சான் 10 புகையிரதம் 429 புக்கை 98 புசற்காவியம் 286 புடைத்தல் 102 புடையன் 369, 379 புடையன் சாதி 361 * புண்டரிய. 297 وه புதிதுண்ணும் வழக்கம் 6 புதுக்குடியிருப்பு 461 புதுமைக் கமக்காரன் 267 புதைகுழி 448 புதைபொருள் 418 “புத்தகாசிரியணுகிப். oo 315 புத்தமும் சைவமும் 418 * புத்தளத்தில். 290 புத்தளம் 419 புத்தியறிதல் 36, 442,
447, 448 ւյlւ 6Ù 420, 459
445,

சொல் அட்டவணை 485
புயல்வெள்ளக்காவியம் 325 புயற்பாட்டு 325 புரட்டாதி 459 புரை 187 * புலத்துயர்ந்து. oo 267 புலமக்கள் 42 புலனெறிவழக்கம் 28 புலியன் 3, 390 புல்லாந்தி 186 புல்லுப்புடையன் 369 புல்விரியன் 384 புவனேந்திரன் விலாசம் 319 * புவியிலெனைத். 78 புளிந்தர் 391 புளியடிக்குடா 336 புளிய நகர் 209 புளியந்தீவு 3, 79, 327, 390, 391, 398, 414, 421, 432, 450, 452, 455, 457 * புள்ள லெக்கா ... 89, 92 புள்ளை 89 புறச்சமயம் 462 புறத்தினை 49, 51 புறத்திணைக்கூத்து 51 புன வர் 5
புனித அருளானந்தர் கோவில்
452 புனிததந்தம் 156 புனுகு 87 புனைந்துரை வகை 28 * புன்னேமரம். oo 6
பூங்காரமான நிலா 31 tléfasi 46 பூசனிக்காய் 95 பூசனை 158, 183 * பூசுரர். oo 363 பூனுரல் 448 பூதங்கள் 347 பூதத்தம்பி விலாசம் 50 பூபாலகோத்திரம் 435, 441 பூபாலவன் னிமை 442 பூப்பு அறிவித்தல் 38 பூப்பு எய்துதல் 447 பூமரம் 343 பூமாலை கட்டிகுடி 438
பூமுனை 413 பூரணை நிலா நாள் 75 பூருவச்சக்கரவர்த்திநாடகம் 42 * பூவலைக்கிண்டி.’ 34
பெ
பெட்டகம் 201 பெண்கள் வரவு 53 பெண்ணடிமுதிசம் 8 பெண் நிழல் 8 பெத்தாண்டகுடி 437 பெத்தாண்ட படையாண்டகுடி
437 பெரியகல்லாறு 241 பெரியகவுத்தன் குடி 436, 437 பெரிய தம்பி விதானே 241 * பெரிய திருப்பதி. 441 பெரிய துறை 209, 428 பெரியபிள்ளையாதல் 447, 448 பெரியபோரைதீவு 434, 436 பெருக்கம் 10 பெருங்குடியார் 440 பெருந்தலைவர் (Rector) 454 பெருகிலப்பரப்பு 463 பெருமாள் 10 பெருவாயன் 10 பெருவெள்ளம் 459 பெருவேள்வி 431 பெலிகோ 4 19
Gl
பேச்சி 345, 347, 43
பேதம் 60
பேய் 344, 345, 349, 35O 354。355。356
பேயாட்டம் 344
பேரரசு 4 18 பேராறு 459 பேரியாழ் 304
(Guar
** பொங்கொளிசேர். 268
பொனல் சுவாமியார் 453,
454
டொதி எருது 425
பொது 46 !

Page 268
486
பொதுநலப்பணி 458 பொத்துவில் 426 பொய்கையார் 5 பொருள்வளம் 4 19 GLT 66 9, 43 பொலிக்கொடி 10 பொலிப்பாடல் 43
பொலிப்பாட்டு 10, 11, 12,
17 V *பொழிந்து நஞ்சுகுத்தல்’ 378 பொறுப்பு 95 பொன்னம்பலபிள்ளை 242,
250 பொன்னுச்சிகுடி 435, 436,
488 GT 657 %oru T 242
3 tu T
போக்கன்குடி 437 போக்குவரத்து 449 போஷி 103 (3.JTLạt 17 tỉ 7, 99, 102, 108, 104, 105, 108, 231, 232, 233, 234 (3UT () 1 l 2 (3LJT || LT 19, 105 *போமென்ற . 227 போரை தீவு 403, 412,
4 14, 461 Guit if 9 போர்ச்சாதனம் 425 போர்த்துக்கீசர் 17, 19, 421, 424, 425, 426, 427, 430
போர்த்துக்கீசமொழி 459 போர்த் தேங்காய் 181, போர்முடை நாடு 436 *போற்றுவார். 293 **போனதைக் கண்டு. 47
182
பெள
பெளத்த மதத்தினர் 417
மகர யாழ்
மகளிர் கல்லூரி 457, 458
மட்டக்களப்புத் தமிழகம்
மகாகந்தக்குளம் 398 மகாபதுமன் 361, 362 மகாவம்சம் 438 மகுடி 379, 380,
382 மங்கு 102 - *மங்கைபங்கன் . 22 386 மசக்கை 100 மச்சினமைக் குடியார்
pjdi 3)JT tij. 109 மஞ்சள்விளையாட்டு 448 ԼDւ հյ35 110 மடித்துக் கட்டுகல் 109 மடை 344, 346,
354 மட்டக்களப்பன்னே 461, 464 மட்டக்களப்பான் 323 மட்டக்களப்பு 21, 47, 48, 50, 52 55.、78。79, 80, 87, 89, 258, 822, 390, 417, 4 19, 421, 425, 426, 427, 464 மட்டக்களப்பு இந்துமகளிர் மன்
றம் 334 மட்டக்களப்புக் கரை 451 மட்டக்களப்புச் சிவாநந்தவாசிக
if T & 269 மட்டக்களப்புச்
224 மட்டக்களப்புத் தமிழன் 23 மட்டக்களப்புத் தமிழ் இலக்கிய
மன்றம் 269 மட்டக்களப்புத் தமிழ்க்கலே மன்
றம் 269, 270 மட்டக்களப்புத் துறைமுகங்கள்
4 18, 423 மட்டக்களப்பு நகர் 429 மட்டக்களப்பு நன்னடு 480 மட்டக்களப்பு நாட்டுக் கூத்து
51 “மட்டக்களப்பு நீள். '' 5 மட்டக்களப்பு மான்மியம் 431,
436 மட்டக்களப்புவ 2 மட்டக் களப்பு வணிகர் மட்டக்களப்பு வாவி 2,
69, 460
381,
449
349,
செங்குந்தர்
17
68, 422, 428, 450,

சொல் அட்டவணை 487
மட்டிக்களி 43 2 மட்டுக்கலப்பு 2 மட்டுநகர் 207, 214, 218,
225
மட்டுநீர் கிலே 68 “மட்டுவிலாம். 272 மணமுறை 8 மணற் புட்டி 418 மணற்றிட்டு 422 மண்கல்புட்டி 418 மண்குடம் 439 மண்டா 109 மண்டுநாகன் 436 மண்டூர் 3, 14, 17, 65, 83, 157, 190, 201, 24, 245, 247, 258, 254, 255, 256, 259, 337, 374, 882, 407, 41 , 414, 434, 486, 489, 442, 462 மண்டூர்க் கந்தசுவாமி 249, 260, 26 1, 439, 442 மண்டூர்க் கோட்டைமுனை 439 மண்டூர் வகுத்துவார் 436 மண்முனை 83, 412, 416,
437, 442 மண்முனைத்துறை 428 மதமாற்றம் 462 மதவெறி 462 மதிசுதன் 436 “மதிசூடி. 221 மதிமந்திரி 418 மதியாணி 42 மதுரை எரிதல் 13 மதுரை வீரன் 321 மத்தளம் 53, 56, 57, 198 மத்திமம் 76 மத்தியமலைநாடு 459. மந்திரக்கோல் 343 மந்திரப் பயிற்சி 8 மந்திரம் 338, 339, 340, 841, 342, 343, 344, 345, 347, 348, 350, 35 1, 855, 356, 357, 358, 975。382、386 மந்திரவாதம் 341 மந்திரவாதி 340, 342 மந்திரி 52
மந்தைகள் 463 மந்தைச் செல்வம் 444 மயணத்தைலம் 226 மரணச் சடங்கு 445 மரபு 52
மரவுரி 61 மரியநாயகி தேவாலயம் 452 மரியமாதா கோயில் 452 மருங்கை 95, 447 மருதமுனே 275, 276, 280,
461
மருதம் 444, 463 மருதவளம் 87 *மருந்தால் மந்திரத்தால் .. s
372 மருந்து 338, 351, 352,
853, 354, 885, 386 மருமக்கட் தாயமுறை 445 மருமக்கட் தாயம் 8, 89 மருளன் 345 மரூஉ வழக்கு 95 மலகவத்தை 413 மலே நாடு 420 மலையமான் 442 மலையரட்டை 418 மலையாளக்கரை 8, 48 மலையாளம் 445, 457 *மலேயோரம். 186 12 1 öhrפL
Do Ti 2O I
மழை 112 m மழைக்காவியம் 276, 235 மறுகா 19 “மறைவாக நமக்குள்ளே ...”*
22 மனக் கருத்தை வெளிப்படுத்து
தல் 48 மனமகிழ்வு 51 மனவளம் 273, 403 மன்றம் 4
மன்னர் 4 19
மாகமம் 400 மாகாண ஆட்சி 447 மாக்கம் 4 19 *மாங்கனியில்.. ** 295

Page 269
488
மாசாத்துவான் 174 uDIT LņuD&OT 457 மாட்டுத்தோம்பு 444 மாட்டுமக்தை 468 மாட்புட்டி 413 “மாண்டபினத்தை... oo 28 2 மாதகல் 155 மாதம்பை 4 19 மாதவி நடனம் 11 மாதுலர் 442 “மாதே நிறைமதியே. s
298 மாத்தறை 4 19 மாத்துப் போடுதல் 449 மாந்திரிகனே அரசன் 342 மாந்தீவு 454
மாமாங்கப்பிள்ளையார் மாமாங்கம் 415 լOT th 4:3 1 மாலே கூறுதல் 439 மாவலிகங்கை 2 *மாவலிகங்கை. '' 273 “மாவிலுப்பைத் தோணி.’
11
216
மாளுவ வேந்தன் 165 “மானமகிழ்ந்து. oo 273 மானியம் 433 “மானினங்காள். 248 மானுவாரி 9 “மானே ... ” 186 “மான் போல்நடை5டந்து . s
34
i lá,
மிலாறு 108 மிளகு 419, 422, 426
மிளகு சந்தனதித் தைலம் 226 மின்சார வசதி 450 மின்மினிப் பூச்சி 39 மின்விளக்கு 454 மின்னி கட்டுதல் 10 * மின்னி மின்னிப் பூச்சாலே "
39
மட்டக்களப்புத் தமிழகம்
மீட்சிப்பத்து 269 மீரா லெவ்வை 275 மீரான் குட்டி 281
Lfair 109, 11 O, 428
(p. முகத்து மயிர் 448
முகத்துவாரம் 4 19 முகம்மதியர் 464 முகாந்திரம் நாச்சிகுடி 438
முக்குகர் 437, 438, 439 முக்குகர் வன்னிமைக் கல்
வெட்டு 437
முஸ்லிம் 417
முஸ்லிம் பெண்கள் 456
முட்டி 440
முதலாவது கத்தோலிக்க தேவா
6) b 45
முதலிகள் 442 முதலியார் 437, 438 முதியோர் விடுதி 454 முதிரை 426
முதுக்குறைதல் 447
முப்பத்தொன்று 447
முருகக் கடவுள் 426
முருகன் 462
முருகன் கோயில் 431
முல்லே 5, 194, 444, 460,
463
முறைமாறுதல் 440
மூ
மு. 5ம்பிக்கை 458 மூதேவி அழைப்பு 349 மூன்று கூரை மூடி 444
மெ
மெதொடிஸ்த சபை 449
மெதொடிஸ்த திருச்சபையார்
{ 45 457 و 6 5 4 و 2 45
மெதொடிஸ்த தேவாலயம் 456
மெதொடிஸ்த மத்திய கல்லூரி
455、456

சொல் அட்டவணை 489
மெதொடிஸ்த வைத்திய சங்கம்
456
மெய்ப்பாடு 51
மென்பட்டுத்தாள் 80
G3td
மேகவண்ணன் 438 மேசை 20 மேலீடு 15
மேல் நாட்டார் 420, 449,
450, 459 மேல்புல உலகு 49 மேழி 445 மேற்கட்டி 52, 444 மேற்றிசைச் செல்வம் 309 மேனுட்டாரது நாடக அமைப்பு
49 மேனுட்டார் 75 மேனுட்டார் வரவு 449 மேனுட்டுச் சங்கீதம் 454 மேனுட்டு மொழிக் கல்வி 449
மைத்துனர் குடி 29
GADAF
மொழிச் செல்வம் 85 மொழியுணர்வு 464 மொழிவளம் 19 மொழிவாரி 417 மொழி வேறுபாடு 462 மொனரகலை 426
G3.Dr
Сирт86of 845 மோடி 50 *மோட்டெருமை. 6 மோளை எருமை 463
32 - מו
மெள
மெளலீ 165 மெளன பூசை 462
யந்திரங்கள் 342 யமதூதி 364, 865, * եւյաeծr 364, 665, 866
| unr 99
՞ւմ, &T......... oo 88 யாப்பருவம் 100, 107
யாப்பியல் 272 “யாரை எலுவயாரே. oo 9 1 யாழ் நூற் பாயிரவியல் 74 யாழ்ப்பாண நாடு 88 யாழ்ப்பாணம் 4 17, 419,
426 LT or 468 யானைக்கால் 79 யானைத் தந்தம் 4 19, 420
f
ரிஷபம் 76
tipGgglg (Tragedy) 50, 51
ரை *ரைக்கேதீச்ச’ 424 *ரைக்கொணுமல’ 424 *ரைக்கோவில’ 424
ᎧᎧ
லகுகல 417, 418 லங்கா 249 ; லண்டன் 314, 46
லாங் அடிகளார் 80
லீ
லீஸ் உயர்தர பாடசாலை 260,
457

Page 270
490 மட்டக்களப்புத் தமிழகம்
லே
லேகியம் 375
6.
வகுத்துவார் 436 வங்கடி 232, 233 வங்கச்சாது 74 வங்கர் 634 வங்காளக் குடாக்கடல் 463 வசந்தராசபிள்ளை 245 வசந்தனுடல் 464 வசந்தன் 286 வசந்தன் ஆடல் 159, 177,
178, 184, 204 வசந்தன் கவிகள் 12, 199,
336 வசந்தன் கவித்திரட்டு 11, 199 வசந்தன் கூத்து 24, 158, 183, 198, 236, 319 வசந்தன் பாடல் 464 வசைக்கவிகள் 12, 185 வசைபாடல் 184 * வச்சிரத்தோரணம்.” 294 * வச்சிர வாவி. oo 342 வச்சினுகுடி 435 வடகீழ்பருவக்காற்று 459 6) u Gaff 1 2 வடமொழிக்கல்வெட்டு 417 வடமோடி 11, 48, 49, 50, 5 l。 52, 53。 54、57。 61, 98, 18O, 182, 188, 185, 186, 198, 259, 319 வடமோடியார் 54, 55 வடம் 183 வடவேங்கடம் 48 வடிகதிர் 110 வடிகால் 4 வட்டபுரியம்மன் 165 வட்டா 446
வட்டுடைகள் 6 1 * வட்டும். oo 99 வட்டை 106, 11 1 வண்ணக்கர் 19, 260 * வண்ணத்தரள. oo 292
வந்தாறுமூலை 155, 190,
2O 1, 337, 392 வம்பரைத்தேன் 2 வயந்தசுந்தரி 62 6նվ.162 99 வயவுறுமகளிர் 99 6Nju Jnr 99 வயாவிளான் 215 வயித்திகுடி 435, 436, 437 * வர கரிசிச்சோறும். 99 * வரம்போதலகாணி. oo 492 வரவு 52, 53, 57 வரவுப்பாட்டு 53, 54 வரவை 105 வரிக்கூத்து 194 வரிசை 440, 441 வரிசைநாச்சிகுடி 438 வரிப்பாடல் 204 வருக்கமாலை 238, 240 வருணனை 78 வருணன் 10 வர்த்தகம் 425 “ வலமுற. oo 1 5 4 வலிச் சான் 10 வலித்தல் 109 வலைகட்டிறவு 419 வலைகட்டிறவுத்துறை 428 வலைஞன் கண்ட காதல் 28 ** வல்வினை. 98 வவுணசிங்கம் 414 வவுணதீவு 414 வழக்கு 183
வழக்குரை 17, 166, 17 1,
172, 78 வழலை 370 வழலைச்சாதி 361 வழு 90

சொல் அட்டவணை 49 |
வழுதுணங்காய் 99 வழுவமைதி 90 வளுதிலங்காய் 98 வள்ளிருாயகி 462 *வள்ளி மணவாளன் ...
256 வள்ளியம்மன் ஊஞ்சல் 329 வள்ளியம்மை திருமணம் 41 வற்ருப்பழை 157, 159 வன்னிமை 222 வன்னியர்கள் 441 வன்னியனர் ஊஞ்சல் 42
s
óf
வாகடங்கள் 358, 359, 872, 873, 377, 378, 387, 388
வாகா 89 வாகூரவெளி 414 வாங்குதல் 100 வாசுகி 361, 362 வாஸ்கொடிகாமா 424
வாட்டி 59 வாட்டி கட்டுதல் 10 *வாட்டிவலமாக... 11
வாணன் 63 வாணுசுரன் 62 6 mr GOGOf_i Gör 4 4 2
வாயப் பயம் 96 வாய்க்கால் 4 வாரத்தார் 181 வாரப்பாடு 98 வாரம் 12, 180, 181 * வாரம்பட்டுழித்... 53 9 ده 6unT ff? 1 1 , 1 O7, 347 வாரிக்காலன் 9 “வாலே இளங் குயிலே.9.
298 வாவி 425 வாழி 169 வாழைச்சேனை 21 வாழைப்பழம் 112 வாழ்க்கை மரபு 45 வாளபிமன் 64 வாளபிமன் நாடகம் 49, 61
வாளப்பளம் 96 வாளைப் பளம் 112 *வானகத் தெழும். oo 318
வி
விஜயன் 67
விசாதி 112 விஞ்ஞானக் கலை வளர்ச்சி 80 விஞ்ஞானக் கல்வி 449 விஞ்ஞானமுறை 455 விஞ்ஞானம் 47 விட்டகுறை 306 விட்டுணு சமயம் 431 விட்டுணு தெய்யோ 156 விணுசல் 368 விதண்டாவாதம் 218 *வித்துவான் புலோலி.’ 241 விநாயகப்பானை 169 விநாயகர் மான் மியம் 209 விந்தனே 456, 458 விமல தருமன் 432, 441 வியப்பு 51 வியாபாரத்துறை 421, 423 விரசு 19
6 fu u Gör 369 விருது 441, 445 விருத்தங்கள் 54 விருந்து 95, 445, 447 விருந்தோம்பல் 460 விலாசம் 11, 48, 50 வில்லங்கம் 95 “வில்லுக்குவத்து. ge விவசாயம் 430, 449 விளக்குமாறு 446
699it fi 77
விறகு 428
விறலியர் 306
வின்சன் ற் அன்னை 457
வின்சன்ற் மகளிர் கல்லூரி
456。457
ഖ് வீசாணம் போடுதல் 56, 58 வீட்டுப்பணி 457 வீனேகரம்பு 80 வீரகுமார நாடகம் 49, 61, 64

Page 271
492 மட்டக்களப்புத் தமிழகம்
வீரச்சுவை பி3 வே வீரபத்திரன் 347 II. ii வீரமாமுனிவர் 241, ಟ್ವಿಟಿ 7 ಪೌನ್ಡಾ"**7: 158; | ಡಾ:" :
3 ()
്y | fj |
சீரான்கள் 57
நிவ
வெக்கை 34 ன்ே 'சி 8 வெண்கலத்தொழில் 461 வெண்ைெரப' 87 வெண்பாவிற் பெரியதம்பி 388 வெத்திலேக்காரப்புலவர் 338 வெருகல் 438 வெருகல்கங்கை 390, 392 ୍ଶନ.jäft | 08 வெளிநாட்டார் 448 வெளிநாட்டு அன்னே 457 ፴sኔሆ67Wr 'rJáEJ ' [፵ Sኛ (5 வெள்ளம் 4f) வெள்ளாளர் 486, 437, 442,
"வெள்ளேக்கிடா காம்பன்."
3. "வெள்ளேநிற .' 31 "வெள்ளே மாட்டுவண்டி.
星岛 வெள்ளேயாக்குதல் 102 "வெள்னேயினுற் சுள்ளானர்."
வெறியாடல் 191 வெற்றிலே 128 வெற்றிலே பாக்கு வைத்தல் 448 வெற்றிஐேயக் கைப்பிடித்து ......' 38 " வெற்றிவேற்.' 102
வேத்தியல் 51 வேருவலே 4 19 வேலுப்பிள்ளே ஆசிரியர் 245 வேலேக்காரன் :) வேல்மயில்வாகனம் 23 வேளாண்மை வெட்டுவசக் தன்
II வேளாளர் 15, 433, 439,
() வேறு வேருன ஆட்டம் 53 வேனிற்காலம் 36
2) of .
n1 51:r Elյի 43 / வைத்தியம் 44) வைரமரங்கள் 433 வைரவர் சி: 17
gIT Slu (Roubaire) M : 4
பிற ரைகோ 19
ಕೌ?
fi TuñGray-ii ( Shamrock) - 5oC,
3ಣೈ ஜேவான்ஸ் மருந்துச்சாஃ து
நெரா ஹொரவப்பொத்தான் 112

லே
星
iன்னஞ்ே
எழுவான்கரை - ெ
= تعلي
திக்ருகோவில் - சித்திரவேலா புதசுவாமி கோவில்

Page 272
4. மண்ர்ேக் கந்தசுவாமி கோவில்
 

த் தான்தோன்றிஸ்வரர் கோவில்
கொக்கட்டிச்சோ
5.

Page 273
Τη"
புதிர் காவுதல்
 

பொலி தூற்றுதல் (அவுரி திரித்தல்)

Page 274
9. சேவரக்கால், வட்டி - தனித்தனி
 

10. கொண்டவட்டவான் குளத்திற் கண்டெடுக்கப்பட்டு இன்று அம்பாரையில் உள்ள அரசாங்கக் காரியாலயத்தின் முன் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுத் தூண் (பக். 400)

Page 275
WIIL
டுகள்
காவிலிற் கிடைக்கும்
i, கல்வெ
ரு
தி:
10(A)
 

ii
10(B) திருக்கோவிலிற் கிடைக்கும் கல்வெட்டுகள்

Page 276
12. கடுக்கெண்டாப் போடியார் ஒருவரின் தோற்றம். இவரது காதிற் கடுக்கன் கொல்லே ' என்னும் காதணி தொங்குவதைக் காணலாம்
 

ழயகாலத்துப்
வினுல் அமைக்கப்பெற்ற பை பெரிய கட்டிலொன்றின் படம்
கருங்கல்
| –
கல்லடிப் шп пЈїх
4.
1

Page 277
14(A) கல்லடிப் பாலம் - 1923. ,
வேலகள் நிறைவுறும் நிலே
TLC.
 
 

NI
லு
தர் கொ
தன்மோடிக் கூத்
(ք՝
1.
s. | |-
T_E==

Page 278
ή I M
18. கத்தாக்கு என்னும் உடையில் இரு போர்வீரர்
 
 

MW
- 그─────--------------------T------------ 그 =T디니 -------------------------- -
விபுலாநந்த அடிகளார்
9.

Page 279
WWI
20. " பாடும் மீன் " என்று அழைக்கப்பெறும்
ஊரியின் தோற்றம்
21. காரைதீவுக் கண்ணகை அம்மன் கோவில்
 
 

22
iii
பத்தினித் தெய்வம் - லண்டனில் உள்ள பிரிட்டிஷ்
மியூசியத்திற் காணப்படுவதும், மட்டக்களப்புப் பகுதியி லிருந்து கொண்டுசெல்லப்பட்டதுமான கண்ணகி சிலே
XW

Page 280
N, VIII
முதுகு மரம்
23. தென்சேரிக் கொம்பு
23(A) வடசேரிக் கொம்பு
பில்லி என்றும் சொல்லப்பெறும் பீலிக் கம்புகள்
கொம்புகள் ஒன்றுேடொன்று கொழுவப்படும் இடம்
பில்வி என்றும் சொல்லுப்பெறும் பீலிக் கம்புகள்
23(B) பிலிபில்வியுடன் வைத்துக் கட்டப்பட்டுள்ள
கொம்பின் தோற்றம்
 
 
 
 
 

24.
குரவை போடும் நிலயில் பெண்கள் மூவர்
WN

Page 281
25. மட்டக்களப்புக் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குறவர் குடிசை - குறப்பெண்கள் இருவரும், ஒரு கைக் குழந்தையும்
 

25(A) பழக்கப்பட்ட நாகபாம்பொன்றைக் குறவன் தன்
மகுடி இசையினுல் ஆடச்செய்தல்
25(B) காட்டு வழியிற் சந்தித்த நாகபாம்பு ஒன்றைப் பிடித்தற்காகக் குறவன் தன் மகுடி இசையில்
மயங்கி - அதை ஆடச்செய்தல்

Page 282
27. விற்குறி பார்த்தல்
 


Page 283
", "' "
29. கண்ணுடிப் புடையன் பாம்பு
 
 

ல் உள்ள பாம்புக்கல்
திருக்கோவிலி
3.

Page 284
NN
பாலபிள்ளே
துவான் பூ
 
 

=
---- 戈 气
:: - ( ) . . . , !|-
- sae)
■

Page 285
குமாரசுவாமி ஐயர்
3.
"கயிலாப அழைக்கப்
என்றும்
லாயபிள்ளக் கப்புகனுர்,
கரைதீவு பிள்ளே அண்
ணுவியார்"
i. :ീ
莒县,
பெறுவார்
 
 
 

N. N. Τη.
பெரியதம்பிப்பிள்ளே
புலவர்மணி
35.

Page 286
NNK
36. குஞ்சித்தம்பி உபாத்தியாயர்
'சமர்ப்பணப் படம் பார்க்க)
37. விபுலாநந்த அடிகளாரது கல்லறை
(முன்னேய தோற்றம்)
 
 

'NNXII
37(A) விபுலாநந்த அடிகளாரது கல்லறை (கினேவுக் கல்வெட்டுகளுடன் இன்றைய தோற்றம்)
El YEINE
I
38. விபுலாநந்த மணிமண்டபம்

Page 287
FINNAT
39. சிவாநந்த வித்தியாலயம்
 
 

சின்னவப் புலவர்
41.
ப் புலவர்
திப்பிள்
L
சாமசுந்தர தேசிகர் (பக். 316)
13.
■
தேசிகமணி
அருணுசல
42.
SLLLLLSLLL

Page 288
MXXI'W
44(A) ords. மிக்கேல் கல்லூரியின் தந்தையான பொனல் சுவாமியார்
 
 

46.
மட்டக்களப்புக் கோட்டை
(கச்சேரி எனப்படுவது)

Page 289
XXXVI
G
ஃகாக்கட்
கல்லோயா அ
48.
 
 
 
 
 
 

- -
E. 구 .1:11 臀
- .
*
= त_ ܐ ܐ ܕ ܐ 三。
TT-FT
*T
49. சம்மாந்துறைப் பள்ளிவாசல்
50. தும்புவேலே - ஆரம்பற்றைக் கிராமத்தில்

Page 290
52. நாடன் குடுகு --குறவரது தண்ணீர்ப்பாத்திரம்
 

XXXIX
53. வேடர் கூட்டம் ஒன்று
54. கற்குடாத் துறைமுகப் பாலம் (சிதைந்த நிலேயில்)

Page 291
"NT
55.
 

wi
5.
திகவாபி - புதிய கிராமத்துக் கோவில்

Page 292
MLT
58. லவுகலேக் காட்டினுள், சிதைந்த நிலேயிற் கிடக்கும்
பழமையான தாதுகோபம் ஒன்று
59. லவுகலேக் காட்டிலுள்ள அழிந்துபோன நிலேயிற் காணப்படும் பழமையான சைவக்கோயில் என்று கூறப்படுகிற கட்டிடம் ஒன்றினது அடிப்பாகத்தில் உள்ள அழகிய சிற்பங்கள்
 
 
 

* Ι., III
ரு பகுதியில்
னுெ உள்ள ஒரு வைரவர் சில
அக்கோவிலின் இன்
59(A)

Page 293
'ILIT
ந்திருக்கும் ந்திற் பழமை இருக்கின்றது
IDהלגיוני.
ரத
இம்மலே அடிவா
உகந்தமலே உச்சியில் பாதுகாப்புடன்
முருகன் ஆலயம் ஒன்றும்
ஒரு நீர்த்தக்கிணறு. வாய்ந்த
B[]-
 

61. பழமையான பூமுடி முதலிய உடைகளுடன் காணப்படும் (பக். 61) தென்மோடிக்கூத்தர் கொலு ஒன்று. படம் 1ல்ே காணப்படுவது இக்கால உடையில் உள்ள அதே கொலு வாகும்.
wii

Page 294
நூலாசிரியர்
பண்டித வி. சீ. கந்தையா அவர்கள்
 

நூலாசிரியரைப்ப ற்றிச் சில
மட்டுநகரின் தென்பால் ஏறக்குறைய இருபதுமைல் தொலே விலே, மட்டக்களப்பு வாவியின் மேல்கரையில் உள்ள மண்டூர் என்னும் புண்ணியப் பழம்பதி' யில், புலவர் வினுசித்தம்பி அவர்களுக்கும் சின்னுத்தை அம்மையாருக்கும் பிள்ளேயாக ரெளத்திரி வருடம் ஆடிமாதம் ஒன்பதாங் திகதி சனிக்கிழமை (ஆங்கிலப் பதிவு 29-7-1920) திரு. கங்தையா அவர்கள் பிறந்தனர். இவரது இளமைக்கால ஆசிரியர் அதே ஊரைச் சேர்ந்தவரும், இவரின் மாமன் முறையினருமான திரு. வ. பத் தக்குட்டி உபாத்தியாயர் அவர்கள். தொடர்ந்து தமது தந்தையா ரிடமும், மைத்துனரான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளே அவர்களிடமும் தமிழ் இலக்கிய இலக்கணங்களேச் சிலகாலம் பயின்றனர். இவருக்கு ஆங்கிலக் கல்வியை ஊட்டிவைத்தவர், விபுலாநந்த அடிகளாரின் ஆசிரியரும், இவரது பெரியதந்தை முறையினருமாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயர் அவர்களாவர். அன்னுரது தொடர்புதான் தம்மை விபுலாநந்த அடிகளாருக்கு மாணவனுக்கித் தமிழ்நல மூட்டி வைத்தது என ஆசிரியரே இக் நூற் சமர்ப்பண உரையுட் கூறுகின்ருர்,
பின்னர், விபுலாநந்த அடிகளாரிடம் சங்க இலக்கியங் களேயும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலான காப்பியங்களேயும், பழந்தமிழ் இலக்கணங்களேயும் முறைப்படி பயின்ற இவருக்கு, அடிகளாரே வடமொழிக் கல்வி யைத் தொடங்கி வைத்த ஆசிரியருமானுர்,
திரு. கங்தையா அவர்கள், யாழ்ப்பாணத்து ஆரிய திரா விட பாஷாபிவிருத்திச் சங்கம் (1943), மதுரைத் தமிழ்ச்சங்கம் (1944) ஆகிய தமிழ்ச் சங்கங்களின் பண்டிதர் ; இலங்கைப் பல்கலேக் கழகத்தின் (1952) தமிழ் வித்துவான் ; அண்ணு மலேப் பல்கலேக் கழகத்து (1982) B, O, L. பட்டதாரி.
மட்டக்களப்பு நகர்ப்புறத்தே, விபுலாநந்த அடிகளாரது தாபனமாக உள்ள சிவாநந்த வித்தியாலயம் என்னும் உயர் தரக் கல்லூரியில், தமிழ்ப் பேராசானுய் மீண்ட காலமாகப் பணியாற்றி வருகின் ருர், 1940ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய
W II

Page 295
XLVIII மட்டக்களப்புத் தமிழகம்
25 ஆண்டுகளாக மட்டக்களப்பின் பல பகுதிகளிலுமிருந்து சிறந்த தமிழ் மாணவர் பலரைத் தோற்றுவித்துத் தமது காட் டின் புகழைப் பெரிதும் வளர்த்துவரும் பெரியார் இவர்.
மட்டக்களப்புத் தமிழ்க் கலைமன்றத்தின் செயலாளராக இருந்து, இவர் 1952இல் எடுத்த தமிழ் விழாவின் பின்பு மட் டக்களப்புத் தமிழகத்தின் புகழொலியானது தமிழினம் வாழும் தேயமெங்கணும் நன்கு பரவலாயிற்று.
மட்டக்களப்பில் வழங்கும் கவி' எனப்படும் நாட்டுப் பாடல்கள், நாட்டுக் கூத்துகள் என்பவற்றிற் பெரிதும் ஈடுபா டுடைய இவர் இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழு வில் ஓர் உறுப்பினர். அக்குழுவின் மூலம் * மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் , * அலங்கார ரூபன் நாடகம் ' என்ற இரு நூல்கள் இவரது முயற்சியால் வெளிவரலாயின. காட்டுக் கூத்துகளில் வல்லுநராய் மட்டக்களப்புக் கிராமங்களில் வாழும் அண்ணுவிமாரின் வாய்மொழி இலக்கணமாக மட்டும் உலவி வருகின்ற தாளக்கட்டுகள் ” எனப்படும் வடமோடி, தென்மோடி, விலாசம் என்ற நாட்டுக் கூத்துகளுக்கு முறையே உரியனவான தாள ஒழுங்குகளையும் இலங்கைக் கலைக் கழக நாடகக் குழுவின்மூலம் ஒலிப்பதிவு செய்வித்து அவை மறைந்து போகாது பாதுகாப்புச் செய்துள்ளனர். மேலும், அக்குழுவி னது உதவியின்மூலம் மட்டக்களப்பிலே மறைந்துகொண் டிருந்த நாட்டுக்கூத்துகள் பல, கிராமத்தோறும் புத்துயிர் பெற்று மீண்டும் மேடையேறச் செய்தவர்.
மட்டக்களப்புக் கிராமமெங்கணும் பெருவழக்காய்ப் பரந்து வழங்குகின்ற கண்ணகி வழிபாடு, அதன் தொடர்பான இலக் கியங்கள் என்பவற்றின் பெருஞ் சிறப்பினை மற்றையோரும் அறிதல் வேண்டும் என்று முயன்று, கண்ணகி இலக்கியங்கள் பொறிக்கப்பெற்றனவாய் மறைந்து கிடந்த ஒலைச் சுவடிகள் பலவற்றைத் தேடிப் பெற்று ஆராய்ச்சிகள் நடத்தினர். அவற் றின் பயனக முதலிற் கண்ணகியம்மன் குளுத்திப்பாடல் முத லிய நான்கு நூல் களின் தொகுப்பு அச்சேறி வெளிவர லாயிற்று. அடுத்ததாக இவர் அவ்வாறு பரிசோதித்துத் தூய்மை செய்து எடுத்த கண்ணகி வழக்குரை " என்ற மட்டக்களப் பின் இடைக்காலக் காப்பியமொன்றை, பூரீலங்கா சாகித்திய மண்டலத்தினர் பதிப்பித்து வெளியிட முன்வந்துள்ளார்கள் என்று அறிகின் ருேம். இவ்வாறன பெருக் தொண்டுகளால்

நூலாசிரியரைப்பற்றிச் சில XII, IX
மட்டக்களப்புத் தமிழகத்தின் இலக்கிய, கலாச்சார மறுமலர்ச் சியை அண்மையிற் தோற்றுவித்தவர் பண்டிதர் கந்தையா அவர்கள் என்னலாம்.
மேலும், இன்னரது படைப்புகளாக வெளிவந்த * கட்டுரை இயல்’, ‘பாரதியாரின் பாஞ்சாலி சபதம் - விளக்க உரையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும்”, “கம்ப. அயோத்தி. மந்தரை சூழ்ச் சிப் படலமும், கைகேயி சூழ்வினைப் படலமும் - உரை வளம்? என்ற நூல்கள் தமிழ் எழுத்தாளர், மாணவர் ஆகிய பலரைப் பெரிதும் பயனுாட்டி மகிழ்வித்தன. அவற்றுள் “ பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ? என்னும் நூலானது, மேனுட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றின் பாராட்டுகளோடு பெரும் புகழையும் இவர்க்கு ஈட்டிக்கொடுத்த ஒன்ருகும். ஈழத்திலும் தமிழகத் திலு மிருந்து வெளிவருகின்ற சிறந்த மலர்களிலெல்லாம் பண் டிதர் கந்தையா அவர்களது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இலங்கையிலும், இந்தியாவிலும் கூடிய இலக்கிய, சமய அரங் குகள் பலவற்றிலே கலந்து சிறந்த சொற்பொழிவுகளை ஆற் றித் தாய்நாட்டின் புகழை மேலும் மேலும் வளர்த்து வரு கின்றவர்.
இன்னுருடைய இல்லறம் துலங்குமாறு வாய்த்த மனைவியா ராகிய திருமதி கங்கேஸ்வரி - கந்தையா அவர்களும் சிறந்த ஒரு தமிழ்ப் புலமையாளர். மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையிற் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இவர்க ளுடைய தமிழ் வாழ்வில் மலர்ந்த கன்கலமாக நான்கு ஆண் மக்கள் உள்ளனர். சைவம் கமழும் இந்தச் செந்தமிழ்க் குடும் பத்தி லிருந்துதான் மட்டக்களப்புத் தமிழகம் மலருதல்கூடும் ? என்று குன்றக்குடி அடிகளார் தமது அணிந்துரையுட் குறிப் பிட்டிருப்பதை நாம் இங்கு நோக்கலாகும்.
இத்தகைய பண்டிதர் கந்தையா அவர்களது பல்லாண்டு அருமுயற்சியின் பயனுக இம் மட்டக்களப்புத் தமிழகம்” என்ற ஆராய்ச்சி நூல் மலர்கின்றது. இந்நூலின் பெருஞ் சிறப்பும் இவ் வாசிரியருக்கு உலகறிந்த தமிழ்ப் புகழை மேலும் ஊட்டிப் பெரும் பயன் அளிக்குமென்று நாம் திடமாக நம்பலாம்.
வெளியீட்டு மன்றத்தார்

Page 296
வாழ த து
--13s be N
தேன்பாய இசைபரந்து
சிறந்துபல கலையரங்கு மீன்பாடு நீர்நிலைகள்
வியன்பொழில்கள் வயல்நிலங்கள் மான்தாவும் எழில்வனங்கள்
மலரணங்கு களிறிறைந்து தான்வாழு மட்டுவளர்
தமிழனங்கே நீவாழ்க,
- வி. சீ. க.

ஈழகேசரிப் பொன்னயா நினவு வெளியீட்டு மன்றம்
நோக்கங்கள்
ஈழநாட்டில் கால் நூற்ருண்டாகத் தமிழ் வளர்ச்சிக்கும் கலாசார முன்னேற்றத்துக்கும், அரசியற் சுதந்திரத்துக்கும் தொண்டாற்றிய பெரு மக்களில், “ ஈழகேசரி ? அதிபர் திரு. நா. பொன்னையா, J. P., அவர்கள் முன்னணியில் வைத்தெண்ணப் படத்தக் கவர் என்பது தமிழகம் அறிக்த ஒன்று.
* கற்றலிற் கற்ருரை வழிபடல் சிறந்தன்று " என்பதற் கிணங்க திரு. நா. பொன்னையா அவர்கள் தமிழ்ப்புலவர் பலரை ஆதரித்தும் புதிய முறையில் உயரிய தமிழ் நூல்கள் பல வெளிவர முயற்சி செய்தும் மொழி, கலை ஆகிய பயிர்களை வளர்க்கும் பருவக் கார்மேகம்போலப் பயன்கருதாது செய்த பணிகள் என்றென்றும் நினைவு கூரற்குரியன. இதல்ை தமிழ்ப்பயிரும் கலைப்பயிரும் ஈழத் தமிழகத்தில் செழித்து வளர்ந்தன. ஆயின் 30-3-51இல் திரு. நா. பொன்னையா அவர்கள் இவ்வுலக வாழ்வை ஒருவியபின் தமிழுலகுக்கு முதுவேனிற் பருவம் தோன்றிற் றெனில் மிகையாகாது.
* வாழையின் கீழ்க் கன்றும் கனிஉதவும் 2 அன்றே ! திரு. நா. பொன்னையா அவர்களது பத்தினியும், புத்திரி யும், நண்பர்களும் பொன்னையா அவர்களின் பிரிவால் ஈழத் தமிழகத்து ஏற்பட்ட முதுவேனிலை இளவேனிலா யாவது ஆக்க முயன்று 27-3-54 இல் “ ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் ? என்னும் பெயருடைய கழகமொன்றினை ஆரம்பித்து அதன்மூலம் அப்பெரியாரது தொண்டினத் தம்மாலியன்ற அளவு தொடர்ந்து நடாத்த விரும்பினர்,

Page 297
அக்கழக நோக்கங்கள் :
(1) இக்கால ஆராய்ச்சி முறைகளைத் தழுவித் தமிழிற் புதிய நூல்களும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் களும் வெளிவர முயலுதல்.
(2) சிறந்த நூல்களை எழுதி உதவும் அறிஞர்களை இயன்ற பொருளுதவி புரிந்து கெளரவித்தல்.
(3) மன்ற வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் ஊதி பத்தைத் தமிழில் உயர்தர ஆராய்ச்சி முறைகளிற் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவி இலங்கைப் பல் கலைக் கழகம், இந்திய பல்கலைக் கழகங்களிற் கல்விபெற இயன்ற அளவு உபயோகித்தல் என்பனவாம்.
தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, கலை, சமயம், சாத்திரம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் நூல்கள் எழுதும் விருப்பமுடைய அன்பர்களது ஒத்துழைப்பை இம்மன்றம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.
இம்மன்றத் தமிழ்ப்பணியைத் தமிழகம் ஏற்று ஆதரிக்க வேண்டு மென்பது நமது பெரு விருப்பங்களுள் ஒன்று.
வணக்கம்
குரும்பசிட்டி, ஈழகேசரிப் பொன்னையா தெல்லிப்பழை, நினைவு வெளியீட்டு மன்றத்தார்
இலங்கை.


Page 298


Page 299