கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேராசிரியர் சு. வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன்

Page 1
- - ܊ *、 பேராசிரியர் சுப்பிர்மை
*。 'தன்னாத்மாவைதே
தயா சோமசுந்தர தலைவர் உள
மருத்து
g
 
 
 
 
 
 
 
 

ல்கலைக்கழகம்
 ̄ ,ܬܐ.
யான்ந்தன்
சியம்
■
-,
அலையும் மனிதன்'
嗣*”
கலாநிதி
* šBA, MBBS, MD (Psych) · ருத்துவத்துறை
வபீடம் * (
| .
லைக்கழகம் --
94。

Page 2

தன்
யானந
பிரமணியம் வித்தி
ர் சுப்
பேராசிரிய

Page 3

பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவுப் பேருரை
'தன்னாத்மாவை தேடி அலையும் மனிதன்’
தயா சோமசுந்தரம் தலைவர், உளமருத்துவத்துறை மருத்துவபீடம்
யாழ். பல்கலைக்கழகம் மனோவைத்திய நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலை தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை
கைலாசபதி கலை அரங்கம் யாழ். பல்கலைக்கழகம் வைகாசி.18.1994

Page 4

துணைவேந்தர் உரை
எமது பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் க. வித்தி யானந்தனின் நினைவாக நடைபெறும் இரண்டாவது பேருரையின் பொருட்டு இன்று நாம் கூடியுள்ளோம். இத்தருணத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் வாழ்க்கையையும் பணிகளையும் நினைவுகூருவது பொருத்தமானதாகும்.
சுப்பிரமணியம்-முத்தம்மாதம்பதியினர்க்கு இரண்டாவது மகனாக 1924ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் நாள் வித்தியானந்தன் பிறந்தார். அவர் தாம் பிறந்த ஊரான வீமன்காமத்திலுள்ள தமிழ்ப் பாடசாலையில் தொடக்கக்கல்வியினை யும், யூனியன் கல்லூரியிலே இடைநிலைக் கல்வியையும், யாழ். பரியோவான் கல்லூரியிலும், யாழ். இந்துக்கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியையும் பெற்ருர், 1941இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சேர்ந்து படித்து 1944இல் கலைமா ணிப்பட்டம் பெற்ருர்.பேராசிரியர் உயர்திரு சுவாமி விபுலானந்தர், கலாநிதி க. கணபதிப்பிள்ளை ஆகியோரின் வழிகாட்டலில் 1946ஆம் ஆண்டு தமிழில் முதுக லைமாணிப்பட்டம் பெற்ற இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி யில் ஈடுபட்டு 1950ஆம் ஆண்டு கலாநிதிப்பட்டம் பெற்றர்.
1946ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிசெய்யத் தொடங்கிய கலாநிதி வித்தியானந்தன், 1970ஆம் ஆண்டு பேராத னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்றார். இவரது மாணவர்கள் பலர் பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பணிபுரி கின்றனர்.
பேராசிரியர் வித்தியானந்தன் உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்ற இலங்கைக் கிளையின் தலைவராகவும், இலங்கைக் கலைக்கழக நாடகப் பிரிவின் தலைவராகவும் பணிசெய்துள்ளார். பத்திற்கு மேற்பட்ட நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் பெருந்தொகையான பொதுவான கட்டுரைகளையும் எழுதியதுடன், இவர் பல நாடகங்களையும் நாட்டுக்கூத்துக்களையும் நெறிப் படுத்தியுள்ளார்.
1977இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் தலை வராகப் பணியேற்ற பேராசிரியர் வித்தியானந்தன், 1979இல் அவ்வளாகம் பல்க லைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்ட பொழுது அதன்முதலாவது துணைவேந்த ராக நியமனம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில் பத்து வருடங்களுக்கு மேல் அதன் முதன்மை நிர்வாகியாகவிருந்த பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார். எமது மருத்துவபீ டம் இவரது காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயபீடம், எந்திரவியற்பி டம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கான பல ஏற்பாடுகளும் இவரது காலத்திற்றான் பூர்த்தி செய்யப்பட்டன. விஞ்ஞானபீடத்தின் இரசாயனத்துறை, கணிதத்துறைக் கட்டடங்களும், மருத்துவபீடக்கட்டடங்களும் இவரது சேவைக்காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டுப் பூர்த்திசெய்யப்பட்டன. மேலும் பல்கலைக்கழகத்தின் நூல

Page 5
கம், மாணவர் நிலையம், கலைப்பீடம் ஆகியவற்றிற்குரிய கட்டடங்கள் இவரது சேவைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுக் கணிசமான அளவிற்குப் பூர்த்திசெய்யப் பட்டன. கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்குப் பல தடவைகள் சென்று மேற்கூறிய கட்டடங்களை அமைப்பதற்குரிய அனுமதியி னையும் நிதியையும் பெற்றுக் கொடுப்பதில் பேராசிரியர் பெரும் பங்காற்றினார்.
பேராசிரியர் வித்தியானந்தன் 22.01.1989இல் அமரரானார். இவர் பல்கலைக் கழகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவுகூருமுகமாக எமது பல்க லைக்கழகம் அதன் நூலகத்திற்கு 'வித்தியானந்தன்நூலகம்’ எனப் பெயரிட்டுள் ளது. மேலும் இவரது பெயரில் பரிசில் வழங்குவதற்காக ஒரு அறக்கொடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வருடாந்த நினைவுப் பேருரைத்தொடர் பேராசிரி யரின் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நமது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் வித்தியானந்தன் நினைவாக இன்று பேருரை நிகழ்த்தவிருக்கும் வைத்திய கலாநிதி த.ஜே. சோமசுந்தரம் அவர்க ளைப் பல்கலைக்கழகச் சமூகமும் வெளி உலகமும் நன்கு அறியும். இவரது இடைநிலைக் கல்வி கொழும்பு றோயல் கல்லூரியிலும் தாய்லாந்திலுள்ள பாங் கொக் சர்வதேசப் பாடசாலையிலும் நடைபெற்றது. பின்பு இவர் 1967 முதல் 1972 வரை கலிபோனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயின்று உளவியல், இரசாய னவியல், உயிரியல் ஆகியவற்றைப் பிரதான பாடங்களாகக் கொண்ட கலைமா ணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பயின்று 1974இல் மருத்துவமாணி, சத்திரசிகிச்சைமாணி (MBBS) பட்டம் பெற் றுக்கொண்ட இவர் 1985ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்து GnuLu Lu'Lu'Luq'uu félgpy Gutsägs? Giv (Postgraduate Institute of Medicine) p GMTGg5rtus) யல் துறையில் எம்.டி. பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1985இல் எமது பல்க லைக்கழகத்தின் உளநோயியல் துறையின் விரிவுரையாளராகச் சேர்ந்த இவர் தற்பொழுது அத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் துறைத்தலைவராக வும் பணியாற்றுகின்றார்.
வைத்திய கலாநிதி சோமசுந்தரம் பல சர்வதேச மகாநாடுகளில் பங்கு பற்றி யுள்ளதோடு ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட் டுள்ளார். அவரால் அண்மையில் எழுதப்பட்டுப் பல்கலைக்கழகத்தால் வெளியி டப்பட்டுள்ள 'மனவடு’ எனப்படும் நூல் நெருக்கீட்டின் உளவிளைவுகளையும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளையும் விளக்கிக் கூறகின்றது. இன்று அவர் 'தன் ஆத்மாவைத் தேடி அலையும் மனிதன்” எனும் பொருள் பற்றிப் பேசவுள்
GTII.
கைலாசபதி கலையரங்கம் பேராசிரியர் சி. மகேஸ்வரன் வைகாசி.18.1994 பதில் துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களே, கலைப்பீடாதிபதி அவர் களே, பேராசிரியர் வித்தியானந்தன் குடும்பத்திவர்களே, பேராசிரியர்களே, விரிவு ரையாளர்களே, உத்தியோகத்தர்களே, மாணவர்களே, சமூகப்பெரியார்களே,
துணைவேந்தரும் பேராசிரியருமான கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களின் இரண்டாவது ஞாபகர்த்த உரையை இன்று கைலாசபதி கலை அரங் கில் நிகழ்த்த சந்தர்ப்பமும், வாய்ப்பும் அளித்தமைக்கு நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் சிறந்த கல்விமானாகவும், ஆசானாக வும், ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும், சமூக சமயத் தொண்டராகவும், நிர்வாகியாகவும் சேவையாற்றி, எமது நாட்டிற்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகத் திகழ்ந்தார். அவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கடமையாற்றும் காலப்பகுதியில் நான் இங்கு கடமையாற்ற வந்தபோது அவர் எனக்கு அறிமுகமாகினார். அவரின் அனுபவ முதிர்வு, அமைதியான பண்பு, மிதமான அஹிம்சைப் போக்கு, ஆழமான நட்புறவு, நிர்வாகத்திறமை முதலியன இக்கட்டான அக்காலப்பகுதியில் நன்கு வெளியாகின. பேராசிரியர் சிவஞானசுந் தரம், அவர் ஆற்றிய மிகக் கடினமான சேவையைக் கணிப்பிடும் பொழுது',
'குழப்பம், குறைபாடுகள் நிறைந்த காலத்தில்தான் பேராசிரியர்சு வித்தியா னந்தன் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏற்று நடத்துகிற7ர் காலத்தின் உறுதியின்மைய7ல் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் த7க்குப் பிடித்து, பல்கலைக்கழகம் சீர்குலைந்து போகாமல் தனித்துவத்துடனும் நிறுவனக் கட்டுக் கோப்புடனும் காப்பாற்றி வந்தது அவரது முதன்மையான பணியா கும்.” என்று குறிப்பிடுகிறார்.
அக் காலப்பகுதியில் நிலவிய அரசியற் குழப்பம், ஒரு புறம் அரசின் கட்டுப் பாடும், அதிகாரமும் சீர்குலைந்து போகும் நிலையில் எடுக்கப்பட்ட தீவிர இனப் பாகுபாடான அடக்கு முறைகள், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்க ளும்; இவற்றின் விளைவாகச் சமூகத்திலும், பல்கலைக் கழகத்துக்குள்ளும் பல முரண்பாடுகள், ஆபத்தான சிக்கல்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் என்று பலத ரப்பட்ட பிரச்சினைகள் நிலவின. இவற்றுக்கு மத்தியில், இவற்றுக்கெல்லர்ம் முகம் கொடுத்துப் பொறுமையுடன் நடுநிலைமை பேணி, இயைந்து, விட்டுக் கொடுத்து, பல்கலைக்கழக நலன்களைப் பாதுகாத்து, சாதுரியமாக வழிநடத்தி னார். இத்தருணத்தில் இவ்வரிய பணியை இவர் ஒருவராலேதான்நிறைவேற்றியி ருக்க முடியும். அவரின் ஆளுமை, பண்பு, அனுபவ நிர்வாகப் பக்குவம், கூர்மை யான சிந்தனைத் திறன், நடைமுறைச் சாத்தியச் செயற்பாடு, சமூக அரசியல் அறிவு, மற்றவருடன் பழகும் முறை ஆகிய யாவும், அவரை இப்பணிக்கு மிகத் தகுந்தவராக்கின. இவ்வகையில் அவரை அனுபவத்திறமை வாய்ந்த ஒரு பழுத்த கனி என்று கூறலாம். சிறந்த பேச்சாளராகிய பேராசிரியர் வித்தியானந்தன், தமது பேச்சைச் சுருக்கி மற்றவர்கள் பேசுவதைக் கேட்கப் பழகிவிட்டார். செவிமடுத் தல் என்ற இத்திறனாற்றல் உளவளத்துணையின் பிரதான முறை என்பது குறிப்பி டத்தக்கது. இவ்வளவு குழப்பங்களுக்கும் மத்தியில் முதல் துணைவேந்தரின்
3

Page 6
காலத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மிக உன்னத நிலையை அடைந் தது. இன்று வளாகத்தில் நாம் காணும் புதிய கட்டிடங்கள், பல்துறைசார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்று யாழ். பல்கலைக்கழகம் மலர்ந்த காலம் அது. குறிப்பாக மருத்துவபீடம் எல்லாத் துறைகளிலும் பூரணத்துவம் அடைய வழிவகை செய்தார். இவற்றை விட, தமிழ் இலக்கண, இலக்கிய, வல்லுநராக இங்கும் வெளிநாட்டிலும் பட்ட, பட்டப்பின் கற்கை நெறியினைக் கற்பித்தும் வந்தார். அத்தோடு ஆய்வுகள் நடத்தியும், நூல்கள், கட்டுரைகள் எழுதி வெளியிட்டும் வந்தார். பல மேடைகளிலும், அரங்குகளிலும் கல்விமான்களுக் கும், மற்றும் கலைஞர்களுக்கும் முக்கியமாக நாட்டார் பாடல், நாட்டுக் கூத்துத் துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, தமிழைப் பேணிவளர்த்த பெருமையும் அவரைச் சாரும்".
'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் விரிந்த நோக்கமும், திறந்த மனப்பான்மையும் உடையவராகத் திகழ்ந்தார். இஸ்லாமிய, கிறிஸ்தவ தமிழர்களின் பங்களிப்பைப் பாராட்டும் முயற்சிகள் மூலம் இது தெளிவாகின் றது. இவர் இஸ்லாமியரைப் பற்றி, குறிப்பாக ஈழத்துப் பழங்குடி இஸ்லாமிய தமிழர்களின் வரலாற்றையும், தமிழ்மொழியை வளம்படுத்திய பணியையும் விபரித்துள்ளார். மன்னார், யாழ்ப்பாணம் சார்ந்த கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்கள், அமெரிக்க மிஷனின் தமிழர் கல்வித் தொண்டு போன்றவற்றையும் மெச்சி வெளிப்படுத்தத் தவறவில்லை. அகில இலங்கை, உலக அரங்கு என்ற மட்டங்களில், உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுத் தலைவராகவும், ASSociation for Commonwealth Universities, Committee of Vice Chancellors and Directors போன்ற அமைப்புக்கள் மூலமும் ஈழத் தமிழர் புகழையும், யாழ். பல்கலைக்கழ கத்தின் தகுதிப்பாட்டடையும் நிலைநிறுத்தினார்.
இவ்வாறு அளப்பரிய பணியாற்றிய துணைவேந்தர் வித்தியானந்தனின் அந்திமக்காலம் துயர்தரும் முறையில் முடிந்தது. அவர் அழுத்தங்களுக்குள்ளா கிய பொழுது எங்கள் சமூகமும் யாழ். பல்கலைக்கழகமும் அவருக்காகக் குரல் எழுப்பி ஆதரவளிக்கத் தவறிவிட்டன. இவ்வாறு தமிழ் மண்ணை விட்டு வெளி யேற்றப்பட்டது அவருக்கு ஆழ்ந்த கவலையையும், ஏமாற்றத்தையும் கொடுத் தது என்பதில் ஐயமில்லை. எத்தனை சான்றோரை இவ்வாறு இழந்துள்ளோம். நாங்கள் பயத்தால் ஆளப்படும் ஒரு சமூகமாக மாறிவிட்டோம். ஆத்மீக பலத்தை இழந்த அடிமைகளாகி விட்டோம். ஆகவே பேராசிரியர் வித்தியானந்தனை நினைவு கூருமுகமாகவும், அவர் ஆற்றிய பணிக்குக் கைம்மாறாகவும், ஆத்மீகத் தைப் பற்றிச்சற்று ஆராய்வதும் இத்துறையை விளக்குவதற்கும் வளர்ப்பதற்கும், தமிழ்ப் பண்பாடு, சமயக்கோட்பாடுகள் முதலியனவற்றில் இருந்து தேர்ந்தெடுக் கக் கூடிய சிலவற்றைத் தொகுத்துக் கூறுவது பொருத்தமாகும்; இக்காலத்தின் தேவையென்றும் கூறலாம். பேராசிரியர் வித்தியானந்தன் ஒரு சமயவாதி அல் லது ஆத்மீக சாதகர் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவர் பிற்காலத்தில் சமூக சமய அங்கத்தவராகப் பல சமயக் கிரியைகளில் பங்குபற்றி, சமயத் தொண் டுகள் பல புரிந்தார்". யோகாசன முறைகளை சமூகத்தில் ஊக்குவித்தார். அதிலும் முக்கியமாக அவர் வலியுறுத்தி வாழ்ந்து காட்டிய தமிழர்சால்புகளாகிய அன்பும், விரிந்து வியாபித்த விழிப்புணர்வும்", அஹிம்சை முறையில் அமைதியும், நடு நிலை பேணும் சாத்வீகக் குணமும், சமயச் சார்பற்றவை; எல்லா மக்களுக்கும் பொதுவானவை. மேலும் சிறப்பாக, ஆத்மீக சாதனைக்கு இன்றியமையாதனை என்ற அடிப்படையில்; 'தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன்” என்ற இந் நினைவுரையை அவர் நேசித்த தமிழில் நிகழ்த்த முற்படுகின்றேன்.
4.

அறிமுகம்
தாயுமானவர், மனிதனின் அஞ்ஞான நிலையினைக் கண்டு இரங்கி, தம்மை அந்தக்கீழ் மட்டத்திற்கு இறக்கிப் பாடுகின்றார்"
ஆணிலே பெண்ணிவே என்போல ஒரு பேதை அகிலத்தின் மிசையுள்ளதே72 ஆடிய கறங்குடே/7ல் ஓடியுழல் சிந்தையை அடக்கியொரு கணமேனும் யான் காணிலேன் திருவருளை, அல்லாது மெளனியாய்க் கண்மூடி யோடு மூச்சைக் கட்டிக்கல7மதியை முட்டவே மூலவெங் கனலினை எழுப்ப நினைவும் பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும் பேரக்கிலே பே7கவிட்டுப் பொய்யுலக ணாயினேன்நாயினுங் கடையான பு/ன்மையேன் இன்னம் இன்னம் விணவே அலையாமல் மலையிலக்காக நீர் வெளிப்படத் தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே"
என்றுதம் ஆத்மாவைத் தேடிச்சித்திஅடைந்தவர்களின் சாதனையை ஒரு முன்மா திரியாக எங்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்.
ஆத்மீகம் என்றால் என்ன? ஏன், அப்படி ஒன்று உள்ளதா? இறைவன் என்று ஒருவர் இருக்கின்றாரா? அல்லது இவை எல்லாம் மனிதனின் கற்பனையா? போன்ற கேள்விகளே தற்பொழுது மேலோங்கி நிற்கின்றன. பெரும்பாலா னோர் ஆத்மீகத்துறையை அற்புதங்கள், அதிசயங்கள், இந்திரசால வித்தைகள், குறிப்புப் பலன் பார்த்தல், சாதகம், கலை, உரு, பார்வை பார்த்தல், மருத்தீடு, செய்வினை, சூனியம், பேய் பிசாசுகள் மற்றும் சமயாசாரங்கள், சோதிடம் முதலி யவற்றுடன் தொடர்புபடுத்துகின்றனர். வேறு சிலர்ஆத்மீகத்தைப் பற்றிச்சிந்திப் பதேயில்லை. இவ்வாறான பல தப்பபிப்பிராயங்கள் நிலவும் இக்காலக் கட்டத் தில் மேலைத்தேயங்களில், குறிப்பாக விஞ்ஞான, மருத்துவ வட்டாரங்களில், ஆத்மீகத்தைப் பற்றி ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். ஆத்மீக நன்னிலை ஒரு மனிதனின் பூரண ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றது என்பது தெளிவாகி வருகின்றது. உலக சுகா தார நிறுவனம் ஆரோக்கியத்துக்குக் கொடுத்துள்ள வரைவிலக்கணத்தில் இந்த முன்னேற்றத்தைக் காணலாம்"
"ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலும் இருந்து விடுபட்ட நிலை மாத்திரமல்ல. ஒருவர்தம் உடல், உள, சமூக ஆத்மீக
5

Page 7
நன்னிலைகளில் அடையக் கூடிய அதி உயர்ந்த நிலையே ஆரோக்கியம் எனலாம். ஆரே7க்கியம் மனிதனின் அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்றாகும்’.
ஆத்மீக ஆரோக்கியம் இருக்கும் பட்சத்தில், அதாவது ஒரு மனிதனுக்கு உறுதியான இலட்சியம், பலமான நம்பிக்கை, மனஅமைதி ஆகியன கிடைக்கும் பொழுது மற்றைய உடல், உள, சமூக ஆரோக்கியக் கூறுகள்தாமாகவே சீராகின் றன. உதாரணமாக வவுனியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நடாத்தப்பட்ட ஆய்வில், ஒரு காரணமுமின்றித்தடுத்து வைக்கப்பட்ட இலட்சிய மற்ற அப்பாவி மக்களில் கூடுதலான உடல், உள, சமூக பாதிப்புக்கள் காணப் பட்டன".
மேலும் ஒரு தனி மனிதனின் ஆத்மீக நிலை மேம்படும் பொழுது அவனது குடும்பம், சமூகம், சூழல் முதலியன கூட ஆரோக்கியம் அடைகின்றன. அவனது செம்மையான தொழிற்பாடு, நடத்தை, அமைதி, முன்மாதிரி போன்றவற்றினூ டாக அவை சுகத்தைப் பெறுகின்றன. உதாரணமாக ஒரு சமூகத்தில் ஒரு சதவீதமா னோர் ஆழ் தியானத்தில் (Transcedental Meditation) ஒழுங்காக ஈடுபடும் பொழுது, அந்தச் சமூகத்தின் குற்றவியல் விகிதாசாரம் மற்றைய சாதாரண சமூகங் களுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி அடைவதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன." மேலைத்தேயக் கருத்துக்களைப் பெரும்பாலும் பிரதிபலிக்கும் உலக சுகாதார நிறுவனம் ஆத்மீகத்தைப் பற்றிக் கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்த எம்மவர்க்கு எடுத்துக்கூறுவது வியற்பிற்குரியது. நாங்களே மறந்த எங்கள் பின்னணியை மேலைத்தேயத்தவர் தட்டி எழுப்புவது போல் அது அமைகின்றது.
மேலைத்தேய கீழைத்தேய நிலை
ஆத்மீகம் சம்பந்தமாக மேலைத்தேயங்களின் மனமாற்றத்துக்கும் எங்களின் பின்னடைவுக்குமான காரணங்களைச் சுருக்கமாக ஆராய்வது இத் தருணத்தில் பொருத்தமாக அமையும். ஹெகல்(Hegel)', ஸ்பென்சர்(Spencer)" போன்றவர் களால் விளக்கப்பட்ட பெரும்பாலான மேலைத்தேய சமூகக் கோட்பாடுகளின் படி வரலாறானது நாகரிகத்தை நோக்கி வளர்ச்சி அடைகின்றது. அதாவது நேர் கோட்டு வடிவத்தில், மேல் நோக்கி, முன்னேறி, அபிவிருத்தி அடைகின்றது என்று நம்பப்படுகின்றது. ஆயினும், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர், தோயின்பி (Toynbee), நாகரிகங்களின் வரலாறுகள் சுழற்சிச் செயற்பாங்கில் நடைபெறுகின்றன என்ற முடிவுக்கு வந்து, மேலைத்தேய நாகரிகம் ஆத்மீக தத்துவங்களை உள்வாங்காவிட்டால், விரைவில் அழிந்து போகும் என்று எச்சரித் தும் உள்ளார்" தங்களது ஒரு சார்பான பொருளியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட பல விதமான வேண்டத்தகாத விளைவுகளுக்கு அவர்கள் தற்பொழுது முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. பலதரப்பட்ட உள, குடும்ப, சமூக நோய்கள், அணு சக்தி அபாயம், சூழல் மாசடைதல் போன்ற சீர்குலைவுகள் அங்கே தலை தூக்கத் தொடங்கிவிட்டன. இப் பெளதிக, உலகியல் நாட்டத்தால் தங்கள் ஆத் மாவை விற்று விட்டனர் என்று ஜுங் (Jung)", ஃபிரோம் (Fromm)" போன்ற
6

உளவியலாளர்கள் வருந்துகின்றனர். இந்த விழிப்புணர்வால், தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்து, கசப்படைந்து, தமது ஆத்மாவை மீளவும் தேடும் பய எணம் அங்கே தொடங்கிவிட்டது. இத்தேடல், பலரை ஆத்மீகக் கருத்துக்கள் செறிந்து காணப்படும் கீழைத்தேயக் கோட்பாடுகளை நுணுக்கமாக ஆராயவும், அவற்றில் விமோசனம் பெறவும் வழிசமைத்துள்ளது.
நவீன விஞ்ஞானிகள் தத்தம் விசேட துறைகளின் முதன்மை நிலையில் நடாத்தப்டும் ஆராய்ச்சிகளில் பல புதிய, புரட்சிகரநுட்பங்களை,அதியசங்களை அவதானிக்கின்றனர். பழைய, நியூற்றணின் (Newton) ஸ்திரமான உலகத் தோற் றம் அழிந்து, காண்போனின் காட்சியில் தங்கியிருக்கும் நிரந்தரமற்ற கால தேச வர்த்தமானத்தைக் கண்டு, திகைத்துப் போகின்றனர். மேலும், இயற்கை அன்னை யின் நியமங்கள், எவ்வாறு ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையனவாக, சுழற்சிச் செயற்பாங்கில் இயங்குகின்றன என்ற அறிவும் பிறந்துள்ளது. இவ்வா றான அனுபவத்தால் ஐன்ஸ்ற்றையின் (Einstein) தொடங்கி விண்வீரர் வரை, பலர் ஆத்மீகத்துறைக்குத் திரும்புவதைக் காணலாம். தாங்கள் நவீன விஞ்ஞானத் தின் எல்லைகளில் அவதானித்த அற்புதங்களின் விளக்கத்தை, பண்டைய ஆத்மீக சமயக் கூற்றுக்களிலும் தத்துவங்களிலும் இன்னொரு நோக்கில், சொற்பிரயோ கத்தில் கண்டு வியப்படைகின்றனர். பழைய ரிஷிகளினது நுட்ப அறிவாற்றலை யும் பரந்த ஞானத்தையும் விஞ்ஞானிகள் மெச்சத் தவறவில்லை. 5Ůgit (Capra)" என்ற அணுப் பெளதிகவியலாளர், அணுத்துகள்களின் (Subatomic particles) பாதைகளைக் காட்டும் கருவியில் நடக்கும் சிருஷ்டி, அழிவு நிகழ்வுகளை, ஆனந்த குமாரசாமி அவர்கள் நடராஜரின்தாண்டவத்திற்குக் கொடுத்த விளக்கத்து ன்" ஒப்பிடுகின்றார் (உரு. 1). முக்கியமாக, positron, electron போன்ற மறுத லைத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் அழிவு, உற்பத்தி, அவற்றின் பாதைகள், சக்தி சடப் பொருளாக மாறுதலும் சடப்பொருள் சக்தியாக மாறுதலும் கப்ராவுக்கு நடராஜரின் ஆட்டத்தைக் கண்முன் கொண்டுவந்தன." அதேபோல் பழைய சூத்திரங்களில், விஞ்ஞான, யதார்த்த தத்துவங்கள் புதைந்தி ருப்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆத்மீக அடிப்படையில் இருந்து நோக்கும் பொழுது, வரலாறு சக்கர வட்ட வடிவில், சுழற்சியாக நகர்ந்து செல்வதுதான் உண்மை நிலை. காலங்கள் மாறினா லும் மனிதனின் அடிபடைத் தேவைகள், போராட்டங்கள், அப்படியே இருக்கின் றன. உணவு, உடை, வதிவிடம், பாதுகாப்பு முதலிய தேவைகள் மாறுவதில்லை. மற்றும் மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: பிறப்பு, இறப்பு, நோய் பிணி, வயோதிபம், இழப்பு, திருமணம், நட்பு, கோபதாபங்கள் முதலி யன ஒருபான்மையில் நிகழ்கின்றன. கோலங்கள் மாறுகின்றன. ஆனால் வாழ்க்கை ஒரே மாதிரியில் அமைகின்றது. சைவசித்தாந்த தத்துவார்த்தங்களின் படி, ஆதி தொடக்கம் மூன்று நிரந்தரப் பொருள்கள் உள்ளன. அவையாவன பதி, பசு, பாசம். இவற்றை அறிந்து, பாசத்தில், அதாவது உலகியல் மலங்களில் இருந்து விலகி, பதியைச் சார்வதே பசு, அதாவது பந்திக்கப்பட்ட ஆன்மாவின், வாழ்க்கை இலட்சியம்" .

Page 8
உரு. நடராஜ தாண்டவம் FT HII i Cip.'''")
 

எமது முன்னோரின் பண்பாடு, முக்கியாக ஞானிகளின் வாழ்க்கை முறை, TT TTTTT TTtTMMS T KT TTT TT L TT TTT TTS TTT TTT kk kcTTTT TSTTTTTT டும் பொழுது, அவர்கள் அடைந்த உயர்ந்த நிலை புவப்படும். தற்பொழுது இவ்வாறானவர்கள் முழுதாக மறைந்து போக நி:யில், அவர்கள் உபதேசித்த சித்தாந்தங்களைக் கேட்டுத், தெளிந்து, விளங்கக் கூடிய சாதகர்கள் கூட இல்லாத நிலையில், எங்கள் சமூக வரலாறு ஒரு கீழ்ாட்டத்தை நோக்கிப் போவதை உய்த்தறியலாம். எங்கள் சமூகத்தில் ஆத்மீகத்துக்கு உகந்த சூழவே மாறி, ஆத்மீக சாதனையில், ஆராய்ச்சியில் ஈடுபடக் கடிய தகுந்த மரrவர்களே இல்லுபது போய்விட்டனர். சமூக மனப்பான்மை, எதிர்பார்ப்புக்கள், விழுமியங்கள் முதலி பன பொருளியல், உலகியல் இலக்குகளை நோக்கியே அமைந்திருக்கின்றன. ஆக்ாரீக நூல்கள், கோட்பாடுகள், தத்துவார்த்தங்கள் முதலியனவற்றுக்கும் மற் றும் துறவிகள், பெரிபோர்கள், அதுபவ முதிர்வு பெற்றவர்கள் போன்றோருக் கும் கிடைக்கும் தற்போதைய சமூக அந்தஸ்து, மதிப்பு போன்றவற்றில் இருந்து ஆத்மீகத் துறையின் வீழ்ச்சியை ஊகித்துக் கொள்ளலாம். அதே வேளையில் நவீன இயந்திர, ஆயுத நுட்பங்கள் உடனடியான வன்மையான தீர்ப்புக்கள் போன்றவற்றுக்கு சமூக முதன்மையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின் நன. ஏன், தமிழுக்கு அரும் பக்கதரியாற்றிய பேராசிரியர் வித்தியானந்தனை நாங் கள் இறுதியில் நடத்திய விதம் இதை நன்கு தெளிவாக்குகின்றது. இவ்வாறு மேலை நாடுகள் போன பாதையில் நாங்களும் சென்று, சமூக சீர்குலைவுக்குப் பிறது, திரும்பவும் வரலாற்றுச் சக்கரத்தின் மேல் வளைவில் ஏறத் தொடங்க வாம். நடுவழியில் பாதையைத் திருப்புவதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்றே கூறலாம். வரலாறு திரும்பவும் திரும்பவும் நிகழ்வதே அன்றி, வேறு ஒரு காலத்தில் அல்லது சமூகத்தினாற் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்க 1ளப் பயன்படுத்தித் தன் வழியைத் திருத்தி அமைக்கும் என்பது நடைபெறாத
காரியம் என்பது அனுபவ சித்தாந்தமாகும்.
மனிதனின் தேவைகள்
மனிதனின் உயிர்வாழ்வுக்கு நீர், உணவு, மற்றும் பிரசrவாயு என்பன அத்தியாவசியமானவை. மேலும் உடை, வதிவிடம், பாதுகாப்பு, தன்னினப் பெருக்கம் போன்ற அடிப்படைத் தேவைகள் உள்ளன. இவற்றைப் பூர்த்தி செய் வது வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது. இவற்றைப் பெறுவதற்கு ஒரு உந்து சக்தி காரியப்படுகின்றது.
சிலர் தம் அன்றாட வாழ்க்கையையே ஒரு போராட்டமாக, நிமிடத்துக்கு நிமிடம் ஏதோ ஒரு விதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தேவைகளை உடனே பூர்த்தி செய்வதில் அவர்களின் கவனமும், முயற்சியும் செலவிடப்படு கின்றன. பின்போட முடியாத நிலையில், திருப்தி உடன் கிடைக்காவிடில், அது

Page 9
அவர்களுக்குத் தாங்க முடியாத துன்பமாக, கசப்பான விரக்தியாக அமைந்து விடுகின்றன. தேவைகள் கிடைக்குமிடத்து, தற்காலிக இன்ப மனநிறைவு பெறு கின்றனர். இந்நிலை, கூடுதலாக மிருக வர்க்கத்திலும், குழந்தைப் பருவத்திலும் காணப்படுகின்றது. இவ்வாறாக தேவைகள், போக நுகர்ச்சிகள், இன்ப துன்பங் கள் நிலைத்து நிற்காமல், மாறி மாறித் தோன்றி, மறைந்து, தெவிட்டி, சலித்து, வாழ்க்கை தொடர்கின்றது.
ஆயினும் பெரும்பாலான மக்கள் தம் தேவைகளை மையமாக வைத்து, இலக்குகளை அடைவதற்குத் திட்டம் தீட்டி, வாழ்க்கையை நடாத்துகின்றனர். இந்த உண்மையை நவீன விஞ்ஞானிகளும், எமது பழைய ஞானிகளும் உணர்ந்து, பல முறைகளில் ஒத்திசைவான கோட்பாடுகள் மூலம் மனிதனின்
நிலையை வகுத்துள்ளனர்.
ஆகவே, மேலைத்தேயத்தவர் ஆத்மீகத்தைப் பற்றித் தேடத் தொடங்கும் இக்கால கட்டத்தில், எங்கள் பழைய தமிழ், இந்து மதக் கோட்பாடுகளும் தத்துவக் கருத்துக்களும் மிகப் பயனுள்ள பங்களிப்பினை உலக சமூதாயத்திற்கு ஆற்றலாம். இதற்கமைய, தற்கால விஞ்ஞான, மருத்துவ, உளவியல் அறிவை அடிப்படையாக உபயோகித்து; தொன்மையாயினும் சநாதன தர்மம் என்று அழைக்கப்படும் எப்பொழுதும் புதுமையுடனும், நித்திய மெய்ப் பொருட் பான்மையோடும் திகழும் ஆத்மீகத் துறை பற்றிய கருத்துக்களை ஒப்பியல் நோக்கில் ஆராய்வதே இவ்வுரையின் நோக்கம்.
மேலைத்தேய உளவிலாளர் மாஸ்லோவ் (Maslow)", மனிதனின் தேவை கள் அவனின் நடத்தையை உந்துகின்றன என்றும், அவை படிநிலைகளில் அமைந்துள்ளன என்றும் விளக்கியுள்ளார் (உரு. 2). முதலில் வருவன அடிப் படை உடற் தேவைகளாகிய நீர், உணவு, பாலியல். அடுத்து பாதுகாப்புத் தேவை களாகிய அபாயமற்ற சூழல், நிம்மதி முதலியன. இவற்றைத் தொடர்ந்து அன்பு, உறவு, தொடர்பு, உரிமை கொண்டாடல், ஏற்கப்படல், ஏதோ ஒரு முழுமையின் அங்கத்தவர் என உணரும் உணர்வு முதலியன முதன்மை பெறுகின்றன. அதன் பின், தன்மானம், சுய கெளரவம், மதிப்பு, மரியாதை, ஆற்றல், அங்கீகாரம் போன்றவை முக்கியமாகின்றன. அடுத்து மனிதனின் உயர்ந்த தேவையாக அறி வாற்றல் தொகுதியில் ஏற்படும் விளங்கல், தெளிவு, புத்தாய்வு, ஞானமாகியவை அமைகின்றன. இதற்கு மேல் ரசனை, அதாவது கலை ஆக்கப்படைப்புக்களை ரசித்தல், உளம் பூரித்தல், அழகுணர்ச்சி, செவ்வொழுக்கங்களைக் கண்டு மகிழ் தல் போன்றவை அமைகின்றன. இறுதியாக, மிகச் சிறுபான்மையினர், தங்க ளால் அடையக்கூடிய உயர்ந்த ஆற்றலை நோக்கி முயற்சித்து மனநிறைவு பெறு வர். வாழ்க்கையின் உயர்ந்த பேறாக உள்ளார்ந்த ஆற்றலை அடைதலாகிய சுயதிற னடைவு (Self-Actualization) மிக அரிதாக நிறைவேறுகின்றது.
10

ad O _u്ക്രീ
மனநிறைவு, சமயதிறனடைவு, உள்ளார்ந்த ஆற்றலை -
அடைதல.
ലഗ്ഗമമ
% 

Page 10
இவ்வாறு மனிதர்கள் இந்த வெவ்வேறு படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவர். ஒரு மனிதன் எந்தப் படிநிலையில் இருக்கின்றானோ அந்தத் தேவைகளை மையமாக வைத்து அவனது வேட்கைகள், விருப்புவெறுப் புகள், தொடர்புகள், நடைமுறைகள், சிந்தனைகள், கருத்துலகம், பார்வை, நோக்கம், திருப்தி முதலியன அமைகின்றன. சுருக்கமாகச் சொல்வதாயின், ஒரு மனிதனின் சைதன்னியமும் புவனமும் அந்தப் படிநிலையினைப் பிரதிபலிக்கும். மேலும் மனிதன் முன்னேறி விருத்தி அடைவதற்கு, ஒவ்வொரு படிநிலைத் தேவைகளையும் பூர்த்தி செய்து, அடுத்த மட்டத்திற்கு உயர முயற்சிக்கின்றான். இவ்வாறு மேலேறி, பரிணாம வளர்ச்சியடைய மனிதனில் ஒரு உந்து சக்தி செயற்படுகின்றது. கார்ல் றோஜர்ஸ் (Carl Rogers)" என்ற உளவளத்துணையா ளர், மனிதனின் உள்ளார்ந்த சுபாவத்தை வெளிக் கொணர்ந்து, அவனின் சுயரூ பத்தை அறிந்து, அதன் அடிப்படையில் வாழ வைப்பதே எங்களின் குறிக்கோ ளாக வேண்டும் என்று கற்பித்தார்.
பிராங்கிள் (Frankl)* என்ற உளப்பகுப்பாய்வாளர், மனிதன் தனது வாழ்க் கையில் ஓர் அர்த்தம் காண்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இவர் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பல வருடமாக நாஸிச கூட்டு முகாம்களில் சிறைவைக்கப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தும், மற்றக் கைதிகளின் நிலையை அவதானித்தும், இந்த உண்மையை உணர்ந்தார். தமது அனுபவத்தின் அடிப்படையில் Logotherapy என்ற சிகிச்சை முறையை வையகத் துக்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
பிராங்கிளின் வாழ்க்கையின் அர்த்தம் என்று சொல்லாமல் சொல்வது ஆத்மீ கத் துறையையே என்று அவரின் எழுத்துக்களில் இருந்து ஊகித்துக் கொள்ள லாம். நவீன உளவியலாளர்களில் மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதியினர், மனிதனின் பல்வேறு தேவைகள், இலட்சியங்கள், கடும் முயற்சி போன்றவற்றின் உயர்ந்த பெறுபேறு ஆத்மீக மெய்ப்பொருள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். குறிப்பாக அஸ்ஸாஜியோலி (Assogioli)* என்ற இத்தாலிய உள மருத்துவர் விளக்கும் உள ஒன்றிணைப்பில் (Psychosynthesis), ஆத்மா, மனித வாழ்க்கையின் மையப் பொருளாகின்றது. இவ்வாறு உளவியலாளர்கள் மன உலகத்தை ஆராய்ந்து, அதன் முடிவில் மனிதாந்த உளவியல் (Transpersonal Psychology)" என்ற புதியதொரு அறிவுத் தொகுதியில் ஆத்மீகத்தை வந்தடைந் துள்ளனர்.
வரலாற்று ரீதியாகவும், எல்லாச் சமூகங்களும் சமயங்களும் மனித வாழ்க் கையின் அர்த்தத்தைத் தேடியுள்ளன. அன்றாட உலகியல் தோற்றத்துக்கு அப் பால், ஒரு கடந்த பொருள் (கடவுள்), இறைவன், மெய்ப்பொருள், ஆத்மா இருக்கின்றது என்று தத்தம் சூழல், காலத்துக்கு ஏற்றவாறு, ஆயினும் மனம் வாக்கு போன்றவற்றால் வர்ணிக்க முடியாத ஒன்றைப் பற்றி அறிந்து, அத்தாட்சி கள் தந்துள்ளனர்.
12

முறையியல்
கீழைத்தேயங்களில், குறிப்பாக இந்தியாவில், ஆத்மீகத்தைப் பற்றிய கருத் துக்கள் ஞான நூல்களில் தாராளமாகக் காணப்படுகின்றன. இவை மனிதர்களின் ஆத்மாவை நோக்கிய பயணத்தில் உள்ள பல்வேறு நிலைகளை வெவ்வேறு கோணங்களில் இருந்து விபரித்துள்ளன. மனிதனின் உணர்வு நிலை (State of (Onsciousness) சைதன்னியம் அல்லது பிரக்ஞை FIF என்று அழைக்கப் படுகின்றது. இந்நிலை கோசங்கள், அவஸ்தைகள், ஆதாரங்கள் என்று பல்வேறு கோட்பாடுகள் மூலம் விளக்கப்படுகின்றது. பெரும்பாலும் இவ்வகைப்படுத் தல்கள், 99.9 சத வீதமான பாமர மக்களைச் சகலர், அதாவது கீழ் அஞ்ஞான இருளில் மூழ்கி இருப்பவர்கள் என்று விலக்கி, மிகுதியான .1 சதவீதமானவர்கள் ஆத்மீகத்துறையில் உயர் ஸ்தானங்களை அடைந்தவர்கள் என்று கூறி, அந்த அரிய சாதகர்களைப் பற்றி மட்டும் விரித்துரைக்கின்றது. ஆயினும் இங்கே, மந்தர தரத்தில் உழலும் சாதாரண மக்களாகிய எங்களைப் பற்றி ஆராய்வதே பிரதான நோக்கமாகின்றது. இந்த முயற்சிக்குச் சில சாஸ்திர, சமயக் கருதுகோள்கள், கட்டமைப்புக்கள் உதவிக்கு வருகின்றன. உதாரணமாக ஆதாரம், சக்கரம், அவஸ்தை முதலிய, பெயரளவில், பாவனையிலுள்ள சொற்பதங்கள், கருத்து அமைப்புக்கள், தொகுதிகள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. மனிதனின் அடிப டைத் தேவைகளும், அவற்றால் உந்தப்படும் செயற்பாடுகளும், வாழ்க்கை இலக் குகளும், இவை எவ்வாறு இறுதியில் ஆத்மாவில் சென்று முடிகின்றன என்பதும் இக்கட்டுரையின் நுதல் பொருளாகும். இவற்றை விளக்குவதற்கு ஆதாரக் கட்ட மைப்பு பொருத்தமாக அமைகின்றது. தாந்திரீக (சாக்த) சாஸ்திரங்களில்” ஆறு சைதன்னிய நிலைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது (உரு. 3). கீழிருந்து மேலாக மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற சக்கரங்களும், அவற்றுக்கு உயர்ந்த நிலையாகசகஸ்ரார கமலமும் விளக்கப் பெற்றுள்ளன. சிலர் ஆதாரக் கோட்பாடுகளைத் தூல சரீரத்தில் முதுகுத் தண்டு டன் சார்ந்த நரம்புக் குவியல்கள் (Nerve plexus) அல்லது முண்ணாண் (Spinal cord) மையங்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்”. ஆயினும் இவை சூக்கும சரீரத்துடன் தொடர்புள்ளன அல்லது குறியீடாகத் தான் பாவனை பண்ணப்படு கின்றன என்று தோன்றுகின்றது. இக் கொள்கைகளின் உண்மை எவ்வாறு இருப் பினும், இங்கே கூறப்போகும் கருத்துக்கு உதவக்கூடிய ஒரு கட்டமைப்பாக, உபசார வழக்கில் மட்டுமே மூலாதாரம் முதல் சகஸ்ராரம் ஈறான பதங்கள் பயன்ப டுத்தப்படும். குறிப்பாக முதல் நான்கு ஆதாரங்களுக்கும் கொடுக்கப்படும் விளக் கங்கள் பழைய கருத்துப் படிவங்களுடன் சற்று வேறுபட்டனவாகத் தென்படும். பொதுவாக, ஆதாரச் சக்கரங்கள் ஆத்மீக சாதனையில் முன்னேறிச் செல்லும் பாதையில் உள்ள முக்கிய மையங்கள். ஆயினும் இங்கே, உலகியலில் மூழ்கி இருக்கும் எங்களின் நிலைகளே, முதல் மூன்று ஆதாரங்களுடன் தொடர்புபடுத் தப்படுகின்றன. இவ்வாறு செய்வதற்கு உளவியல் ஆதாரங்கள் உள்ளன. தாந்திரீக சாஸ்திரங்களை இறுக்கமாகப் பின்பற்றினால், இவ் உயிரியல், உளவியல் தேவை களின் சைதன்னிய விளக்கத்துக்கு மூலாதாரத்தின் கீழ் உள்ள பாதாள உலகங்க
13

Page 11
գցելադրք ուորք -
ஆஞ்ஞை
л (Тj- 3 ஆதாரங்கள் Fra III i III i el III)
1.
 

டிருக்குப் போக நேரிடும் சமய நாங்களிலும் ஆரக் கோட்பாட்டு விளக்கங்க டிவில் தேங்களைக் காகலாம். உதாரணமாக சிவஞானசித்திபாரில்", ಲ್ಹTÂà|h முதல் ஐந்து அவத்தைக்க ஆதாரங்களுடன் தொடர்புபடுத்தி, கீழாவைத்தை யில் துரியாதீதம் மு:ாதாரத்தில் வந்து முடிகின்றது. மேலும் ஒவ்வொரு ஆதாரத் துக்கும் உரிமான என்று சொல்லப்படும் அதிட்ட தெய்வம், வாகனம், தத்துவம், அக்ஷரங்கள், பீஜமந்திரம், வர்ணம் ஆகிய படி குணாதிசயங்களில் வேற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழ் மரபில், மூலாதார அதிட்ட தெய்வமாக விநாயகரும், சுவாதிட்டான அதி தெய்வமாக பிரம்மாவும், வாகனமாக அன்னமும் கூறப்படு கின்றன". ஆயினும் இங்கே, கூடுதலாக தாந்திரீக சாஸ்திரங்களைத் தழுவிய கருத்துக்கள் மூலமாக உபயோகிக்கப்படும், அவற்றில் கொடுக்கப்படும் விளக் கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பொருத்தமான சாராம்சம் ஒவ்வொரு ஆதாரப் பகுதியிலும் முதன் பந்தியாக வருகின்றது. அதன்பின் ஒவ்வொரு பகுதி யிலும் இவ்வாய்வின் உள ஆத்மீகக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
நாங்களுக்கு மரபு வழியாக வரும் சொத்துக்களை "சிதைத்து டேrள் உ'கீர் இத்துக் கொள்ளும் கட்தி சட்(திடன் பல புதி' துண்துகrர் காலத்தித் கேர் விதத்தி செய்தல் வேண்திச்" என்ற பேராசிரியர் வித்தியானந்தனின்" அறைகூவலைச் செவிமடுத்து, இன்வாய்வானது பழைய தாற்பாரிங்களைப் புதுப்பித்து, அவற்றில் புதைந்திருக்கும் நவீன விஞ்ஞான உளவியல் அர்த்தங் கவிளை, அடியேன் சொற்ப அறிவிற்கு எட்டியவாறும், கடலளவான அறியாமை யின் மட்டுப்பாடுகளுக்கு அமைவாகவும் காண்பதையே நோக்காய்க் கொண்
டது. பின்வரும் செய்யுள் இந் நோக்கத்தை வெளிக்கொணர்கின்றது:
'''ழை: இரத்த விரக்கை விதித்து துன சான்ற திரி:ைன் கொழிலி ஆர்வமிசத்து சுெப்பினனர் wெது எாழ்விலுக்கீட மேத்தலின் இதன் கெட"
பொருள் விளக்கம்
ஆதாரம் (உரு. 3, அட்டவணை 1)
ஆதாரங்கள் - சக்கரங்கன் மையம், ஸ்தானம், படிநிலை, கமலம் (பத்மம்) என்று அழைக்கப்படும். ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஏற்றவாறு ஒரு மனிதனின் சைதன்னியம், அதாவது உணர்வு நினவ, சித் அல்லது பிரக்ஞை |R அமையும். சமஸ்கிருதத்திலும்"சென்னிலும் (Zen)" பிரக்ஞைக்கு மிக ஆழமான கருத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரத்தின் தேவை அல்லது முதன்மைப் பொருளை (உ-ம். மூலாதாரத்தில் உணவு மையமாக வைத்து சிந்தனை, சுவ னிேப்பு. கருத்துலகம், காட்சி, பார்வை, நோக்கம் செயற்படும். இந்த ஆதாரப் பொருள் வாழ்க்கையின் இலக்கு அல்லது குறிக்கோளாகின்றது. அந்தப் பொருளை நினைத்து பேராசைகள், விருப்பு, வெறுப்புகள் அவற்றை அடைவதற்

Page 12
கான முயற்சி, செயற்பாடு, நடத்தை, உத்துதல் அடைந்தால் இன்பம், திருப்தி: கிடைக்காது விட்டால் கசப்பு, துன்பம், அதிருப்தி; இவ்வாறு அந்த ஆதாரப் பொருளைப் பெறுவதற்குப்பாடுபட்டு, அதை துகர்ந்து, அனுபவித்து, இறுதியில் தெவிட்டி, சலிப்படைந்து, அப்பொருளில் பற்றற்ற நிலை ஏற்படுகின்றது. இந்த இருவினை ஒப்பு நிலையில், ஒருவன் அடுத்த ஆதாரத்துக்கு முன்னேறிச்செல்கின் றான். ஒவ்வொரு ஆதாரத்திலும் காணப்படும் சைதன்னிய நிலை, தேவைகள், குறிக்கோள்கள், தொழிற்பாடு முதலியவற்றை கூட்டுமொத்தமாக அந்த ஆதாரத் துக்கான புவனம், உலகம் (லோகம்), பிரபஞ்சம், அல்லது யதார்த்தம் என்று வர்ணிக்கலாம்.
இதை இன்னொரு வகையில் குறியீடாகக் கூறுவதாயின் ஒருவரின் குண்ட லினி சக்தி எந்தச் சக்கரத்தில் தங்குகின்றதோ, அந்தத் தங்கு நிலையைச் சார்ந்தன வாக அவனது சைதன்னியம், புவனம் முதலியன பிரதிபலிக்கும். அந்த ஆதாரப் பொருளாக, தேவைகளாக, இலட்சியமாக அதிட்ட தெய்வம், மனிதனை உந்தி, அவ்வுலகத்திற் செயற்பட வைக்கும். உளவியல் தத்துவங்களின்படி மனிதனின் உணர்வு வலயத்துக்குக் கீழ், நனவிலி (Unconscious) அல்லது ஆழ் மனப்பகுதி யில், லிபிடோ (Libidinous Energy)” எனப்படும் மாபெரும் உந்து சக்தி இருக் கின்றது. அது தேவை, அனுபவம், பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவச் சிக்கல்கள், மேலும் சந்தர்ப்பம், வாய்ப்பு போன்றவற்றைப் பொறுத்து, அகப் புறப் பொருள் களைப் பற்றி, மனிதனை அதிட்டித்து இயக்கும்.
இந்த மாபெரும் சக்தியை, உந்துதலை அகப், புற உலகியல் பொருள்களில் செலவிட விடாமல்; மெய்ப்பொருளை நோக்கித் திருப்புவதே ஆத்மீக சாதனை யின் குறிக்கோள். இத்திசை திருப்பல் மடைமாற்றம் (Sublimation) என்ற உளவி யல் பொறிமுறை மூலம் விளக்கப்படுகின்றது. குறியீடாக (உரு. 3), மூலாதாரத் தில் குண்டலினி சக்தியை எழுப்பி, வெவ்வேறு ஆதாரங்களினூடாக மேல் நோக்கிச் சென்று, இறுதியில் சகஸ்ரார பத்மத்தில் சிவத்துடன் ஒன்று சேர வைப் பதே ஆத்மீக சாதனை. ஒவ்வொரு ஆதாரத்திலும் (அட்டவணை 1) அதிட்ட தெய்வமாக அப்புவனப் பொருள்களில் மறைந்து ஆத்மா இருக்கும். சைதன்னிய மும் அந்த ஆதார எல்லைக்குள் கண்டப்படுத்தப்பட்டு, குறுகிய வட்டத்துள் செயற்படும். ஆதார புவன போகங்கள்நுகரப்பட்டு, தேவைகள் பூர்த்திசெய்யப்ப டும் பொழுது அந்த ஆதாரப் பொருள்களுக்கு விருப்பு வெறுப்பற்ற நிலை தோன்றுகின்றது. அந்த உலகத்தைப் பற்றிய ஞானம் பிறக்கின்றது. சைதன்னியம் சற்று விருத்திஅடைந்து விழிப்புணர்வு ஏற்படுகின்றது. ஆத்மாவை மறைத்த திரை சிறிது நீக்கப்படுகின்றது. அத்தருணத்தில் அந்த ஆதார தொழிற்பாடு பூரணத்துவம் எய்துகின்றது. குறியீடாக, அவ்வாதாரத் தாமரை இதழ்கள் விரிந்து மலர்கின்றன. இதேபோல் ஒவ்வொரு ஆதாரமாக, இறுதியில் சகஸ்ரார கமலத்தில் பரமாத் மாவை ஆத்மா சென்றடைகின்றது. தனது மறைப்பு நீக்கப்பட்ட சற்சொரூபத் தைத் தரிசிக்கின்றது. முழுதாக விழித்து, சைதன்னியம் தூய்மை பெற்று சித்தாகி றது. இதுவே விடுதலை அல்லது முக்தி என்று கூறப்படுகின்றது.
16

Ɛŋ@@@>/gšņ@g (Boyos@Hņựgere? Fısıfđìreto/fiņ@țeto #fff999-æ*髮 Qī£P£P£; tuoso.* içerea cos($quourīg)f@@/qaodaíaooový fesunge-a Longs- ogíaŭgegaqoaes@@@ęto Tuoquoao-æ 序K qarnegīnas (§owes-iasIsotoogsteqopuoig)qa@@yu@rn , @pao (ốqoaes@ąs-aqılosedoIsoortow» y unque@rınıfı@gopmışı Ipl'oogoo ĝ@@uraĝmotoIpoqørespo1.portogeog)quodø-a$wg qire polo -IzıghoIpory motos@@qılorushqımựeloopse |-ự 鲍 googidosoɛ wangs-弘 §§@₪elfiñorūmų991ņ9$øge% quous)鹰 Haņ6Isotoosse@@j丑 FoỌee/qe-NoregàsGÐ &Řsă>
tin飒9kP
gnospitelse údos, I tengre-rafo
quaequo a9ccogitan quiso usage qafngicos qıñoșe
quae uos,

Page 13
இவ்வாறு சோபான முறையில் வளரும் பொழுது, அந்தப் படிநிலைக்குத் தேவைப்படும் தனு, கரண, புவன, போகங்கள் அந்த உயிரின் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு பெறப்படும். அம் மனிதன் அனுபவிக்க வேண்டிய பிரச்சினைகள், சோதனைகள், சவால்கள் என்பன நிகழும் ஒரு பரீட்சைக்களமாக அவ்வாதார உலகம் அமைகின்றது. அவற்றைச் சமாளித்து, மேலாண்மை அடைந்து, கடந்து செல்ல வேண்டிய அளவிற்கானதாங்கும் சக்தி, மனப்பலம், ஆற்றல் முதலியவை யும் கொடுக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக் கும் சவால்கள், அவர்களின் ஆத்மீக ஈடேற்றத்திற்கு வாய்ப்புக்களாக அமைகின் றன. அதைக் கையாள வேண்டிய சக்தியும் அவர்களில் இருக்கின்றது.
இத்தருணத்தில் அப்பரீட்சையில் தோல்வியடைந்து சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், எங்கள் முன்னேற்றம், வளர்ச்சி என்பன தாமதமடைகின்றன. இதை விட, கர்மவினை விதிகளின் படி மற்ற உயிர்களுக்குத் தடைக்கல்லாக அல்லது ஹிம்சை, தீமை விளைவிப்பவர்களாகச் செயற்பட்டால் பின்னடைவு ஏற்பட லாம். அதாவது, ஏணிப்படியில் கீழே சறுக்க நேரிடும். இம்மையில் நமது பாவ புண்ணிய வினைகளில் ஈடுபடவைக்கும் மனநிலையும், அதனால் ஏற்படும் எதிர்விளைவு மாற்றங்களும், இன்ப துன்ப விளைவுகளை நுகர வைக்கின்றன (அட்டவணை 1). இவ்வாறு வினையினூடாகக் கிடைக்கும் தனு, கரண, புவன, போக நிலைகளே நரகம், சுவர்க்கம் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஆகவே இவ்வுலக வாழ்வில் எமக்கு நரகமோ, சுவர்க்கமோ கிடைப்பது எமது முயற்சி யில் தங்கியுள்ளது. 'திதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற புறநானூற்று வரி மனதிற்கு வருகின்றது.
இங்கே ஒவ்வொரு ஆதார தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு அப்புவனம் அனுபவிக்கப்பட்ட பிறகே அடுத்த படிக்கு முன்னேறலாம். அந்த ஆதாரப் பொருள்கள் மனதால் ஜீரணிக்கப்பட்டு, ஊடகப் படுத்தப்பட்ட பின், அவற்றைச் சாதகமாகக் கையாண்டு, மேலாண்மை பெற்ற நிலையிலே அடுத்த ஆதாரத்துக்கு உயரலாம். ஆயினும் ஆத்மீக முன்னேற்றம் ஒரு பிறப்பில் நிறைவு பெறவேண் டும் என்பதற்கும் இல்லை. முக்கியமாக ஒவ்வொரு ஆதாரத்தில் காணப்படும் மறுதலைப் பண்புகள் அனுபவிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படல் வேண்டும். இயற்கையில் தோற்றப்படும் உடன்பாடு எதிர்மறை நிலைகள் - பகல் இரவு, ஆண் பெண், விருப்பு வெறுப்பு, சுகம் துக்கம், நன்மை தீமை, சுவர்க்கம் நரகம் போன்ற இருமைத் தத்துவம் சீன தாஒ (TAO) கோட்பாடுகளில், யின் யாங் (Yin Yang) கருத்துப் படிவங்களால் விளக்கப்படுகின்றன". "ஒடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கிய” அப்பரின் இருவினை ஒப்பு நிலை"ஆத்மீக முன்னேற்றத் துக்குத் தேவைப்படுகின்றது.
இங்கே சுலபமாக விளக்குவதற்கு ஆதார குணங்கள் வெவ்வேறாக விபரிக் கப்பட்டிருந்தாலும், இயல்பு வாழ்க்கையில் இவை ஒவ்வொரு மனிதனிலும் வெவ்வேறு அளவில் கலந்தே காணப்படும். ஒரு மனிதனின் பயணம் சில
18

பொதுத் தன்மைகள் கொண்டிருப்பினும், உண்மையில் ஒவ்வொருவரின் பாதை யும், சாதனையும் சிறப்பம்சங்களும் தனித்துவம் வாய்ந்தவையாக அமையும். மேலும் ஒரு மனிதனின் பின்னணி, வரலாறு, வாசனைகள், குணம், ஆளுமை, மொழி, பண்பாடு, சூழல், சுற்றம் போன்றவை ஒரு புதிய, ஒப்பற்ற வாழ்க்கை நிலையை உருவாக்கும். ஆகவே ஒவ்வொருவருக்கும் உரிய புவனம் ஆளுக்காள் வேறுபடும். நாங்கள் ஒரு குறிப்பிட்ட கால தேச வர்த்தமானத்தில் இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொருவரும் வெவ்வேறு உலகங்களில் வாழ்கின் றோம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆயினும் இந்தத் தனி உலகங்கள் சில முக்கியமான பொதுத் தொகுதிகளில் சஞ்சரிக்கின்றன. இதனால் குடும்ப, இன, ஊர், குழு, சமூக, கலாசார மட்டங்களில் ஓர் ஒற்றுமை, பொதுத்தன்மை தோன்றுகின்றது.
மூலாதாரம் (உரு. 3)
உடலின் மத்தியஸ்தானத்தில் மூலத்திற்குச்சற்று மேலாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் மூலாதாரம் இருப்பதாக விளக்கப்படுகின்றது. இந்திரனின் வாகனமாகிய யானையின் மேல் இருக்கும் படைப்புக்கடவுள்ட்பிரம்மாவை அதிட்ட தெய்வமாகவும், பிருதிவியைத் தத்துவமாகவும் கொண்டுள்ளது. உலகத்தை மயக்கும் குண்டலினி சக்தி இச்சக்கரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ப7ம்பு/வடிவத்தில் சுருண்டு கிடக்கின்றாள். குண்டலினியை எழுப்பி, மேல் நோக்கி மற்ற ஆதாரங்களினூடாகச்செல்ல வைப்பதே ஆத்மீக சாதனையின் நோக்கம்.
மூலாதாரத்தில் மனிதனின் உயிர் வாழ்விற்கு மூலமாக அமையும் நீர், உணவு, உடல் ஆரோக்கியம், உடை, வதிவிடம் போன்ற அடிப்படைத் தேவை களை மையமாக இங்கே எடுத்தால் அது பொருத்தமாகும். இன்னொரு விதத்தில் விளக்குவதாயின், ஒருவரின் உணர்வுகள் அன்னமயகோசத்தில் நிலைபெற்றிருக் கும் பட்சத்தில், அவரின் தேவைகள், பேராசைகள், கவனிப்பு, திருப்தி, தூல சரீரத்தைச் சார்ந்தே செயற்படும்.
நீரும் உணவும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதன. தாகமும், பசியும் மிகக் கொடியன. உணவு, முக்கியமாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு, பிரதான தேவையாகின்றது. ஒரு பிடி அரிசிக்காகக் கஷ்டப்படுபவரின் அவலக் கதைகள் இவ்வுலக வரலாறும், நிகழ்கால யதார்த்த முமாகும். பசி எரியும் நெருப்பைப் போல் ஒருவரை வாட்டிப் படைக்கும். திருவள்ளுவர், "பசி என்னும் தீப்பிணிதீண்டல்..' என்று சுட்டுகின்றார். இவ்வு யிரியல் நிர்ப்பந்தத்தைச் சாடி, பட்டினத்தார்", "தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை’ என்றும், வயிற்றை நிரப்ப உணவு தேடி அங்கலாய்க்கின்ற மக்களுக்கு இரங்கி,
"செல்வரைப் பின் சென்றுபசாரம் பேசித்தினந்தினமும்
L/aủaý%37637ớ4/7/1/g/? / //í2z6)%//7upao” Graöpitb LJ8ñouỉ.
19

Page 14
இவற்றிற்கு எதிர்மாறாக, சிலர் பலவிதமானசுவைமிக்க உணவுப் பண்டங்க ளில் ஆசைப்பட்டு, அதற்கான பொருள்களையும், பாகமுறைகளையும் தேடி அலைந்து, பெற்று, பலகாலம் சிரமப்பட்டு, தயாரித்து, எச்சில் ஊற ரசித்து, அவற்றை வயிறு நிரம்ப உண்பர். இந்நிலையை பட்டினத்தார்,
"பருத்திப் பொதியினைப் போல் வயிறு பருக்கத்தங்கள்
துருத்திக் கறுசுவை போடுகின்ற7ர்.
என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்"
உண்பதற்கே வாழ்வர் சிலர்; மற்றுஞ் சிலர், வாழ்வதற்கே உண்பர், என்ற இரு நிலைகளையும், அதற்கு இடையிலானவற்றையும் காண்கின்றோம். உண விற்காக வாழும் பெரும்பாலோரிடம் தமோ குணம் மேலோங்கிப் பிரதிபலிக் கும். வயிறு நிரம்பப் புசித்து, உறங்கி, மந்தர தரத்தில் அழுந்திக் காணப்படுவர். அளவுக்குக் கூடுதலாக உண்பவரின் உடம்பு பருத்து, அதுவே நோயாகின்றது.
சிலர் உணவை விட, மது, போதைவஸ்து, மருந்துத் துர்ப்பாவனையில் இன்பம் பெற்று, காலப்போக்கில் அப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இவற்றின் பிடியில் சிக்குண்டவர் அப்பொருளின் போதையின்றி வாழ முடியா மல், அதைப் பெறுவதற்கான பொருட்செலவு காரணமாக, மிகக் கீழான அடிமட் டத்திற்குத் தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் விற்று, கடன்பட்டு, இரங்கி, கெஞ்சி, அல்லது களவெடுத்து, தம் அடக்க முடியாத தேவையை அவ்வப்போது பூர்த்தி செய்கின்றனர். அவர்களின் முழு வாழ்க்கையும் அந்த வஸ்துவை மைய மாக்கி நடத்தப்படுகின்றது.
சிலர் தங்கள் உடலைப் பேணி வளர்ப்பதிலும், நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்துவர். வேறு சிலர், தங்களைப் பலவிதமானநோய்கள்பீடித்திருப்பதாகக் கற்பனை செய்து, வருந்தி, பல மருத்து வரை நாடி, சிகிச்சை பெற்றும், விலையான மருந்துகளை வாங்கி விழுங்கியும், நிம்மதி பெறாமல் தவிக்கின்றனர். மற்றும் ஒரு பகுதியினர் தங்கள் தேகத்தைப் பலவிதமான நவீனபாணியில், உடைகளால் அலங்கரித்தும், முடியைச்சிங்காரித் தும், வடிவொப்பனைப் பொருள்கள், வாசனைத்திரவியங்கள் முதலியவற்றைப் பூசியும், தம் வெளி அழகை அதிகரிக்கத் தெண்டிப்பர். இதைவிட, சிலர் செளகரி யமான ஆடம்பர வாழ்வு வாழ்வதற்கான வசதியுள்ள வதிவிடங்கள், மென்மை யான படுக்கைகள், வீட்டு உபகரணங்கள் போன்றவற்றைத் தேடித் திரிவர். ஒரு சாரார் உணவு, உடை, வதிவிடம், பொருள்கள் முதலியவற்றை அனுபவிப்பதற் குத் தேவை என்று கருதப்படும் பணச் செல்வத்தை ஈட்டப் பாடுபடுவர். சிலர் பணத்தைச் சேமித்து, செலவிடாமல் பெருக்கி, லோபிகளாகத் திகழ்வர். அல்லது சொந்துக்களுக்காக, அதாவது காணி, பூமி, வளவுகள், மண் போன்றவற்றுக்கு உரிமையாளராக வரப்போராடுவர். இவ்வகையான தேவைகளைப் பூர்த்தி செய்
20

வதற்கு எம்மவரில் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வதை அவதானிக்கின்றோம். உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை உடலியல் தேவைகளையும், அவற்றைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் பொருளியல், பொருண்மியச் செல் வங்கள் ஈட்டுவதற்கு நடைபெறும் தொழில் முயற்சிகளையும் ஆராய்ந்து, மார்க்ஸ் (Marx), லெனின் (Lenin), மாவோ (Mao) போன்றவர்கள் உலக, சமூக, வர்க்க இயக்கப்பாட்டை விமர்சித்தனர்"
அடிபடைத் தேவைகளைப் பூர்த்தி செய்தே மனிதன் தன்னாத்மாவைப் பற்றிச் சிந்திக்க தொடங்கலாம் என்று கருதப்படுகின்றது. இவ்வகையில், அபிவி ருத்தி அடைந்த மேலை நாடுகள் ஆத்மீக ஆராய்ச்சிகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆயினும் எங்களைப் போன்ற மூன்றாம் உலக வறிய நாடுகளில், வாழ்வதற்கே போராடும் நிலையில், ஆத்மாவைத் தேடும் களத்தை எட்டுவதற்கு இன்னும் காலமுண்டு என்று வாதிடலாம். எனினும் இயேசுநாதர் அறிவுறுத்தி யது போல், 'மனிதன் உணவால் மட்டும் வாழ்வதில்லை’. பலர் ஒரு மேலான குறிக்கோளுக்காக அடிப்டைத் தேவைகளைப் புறக்கணிக்கின்றனர். இக்கால கட்டத்தில் இளைஞர்கள் பலர் உணவு, உடை, உயிர் முதலியவற்றைத் தியாகம் செய்து ஒர் இலட்சியத்திற்காகப் போராடுவதை நாம் காண்கின்றோம். சிலர் சமயரீதியாக நோன்பு, விரதம், நேர்த்திக் கடன், தவம் ஆகியவற்றை மேற் கொண்டு, தங்கள் உடலை வருத்தி, வாட்டி பரிகாரம், விமோசனம் அல்லது தாம் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுகின்றனர். இது மனிதன் உண வின் நிர்ப்பந்தத்தை, உயிரியல் உந்துதலை வென்று அதைத் தன் கட்டுப்பாட்டுக் குள் கொணர்ந்து, மேலாண்மை செலுத்தக்கூடிய விடுதலை நிலையை அடைய லாம் என்பதை நிரூபிக்கின்றது.
இது எவ்வாறாயினும், மருத்துவரீதியாக ஆரோக்கியத்தைப் பேணுவோரா யினும் சரி, ஆத்மீக சாதனையில் ஈடுபடுவோராயினும் சரி, எல்லாவற்றிலும் நடுநிலைமை பேணும்படி, அதாவது கூட அல்லது குறைவாக அருந்தாமல், தேகத்தின் தேவைக்கு அளவாக உண்ணும் பூடி மருத்துவ விஞ்ஞானமும், சமய நூல்களும் ஆலோசனை கூறகின்றன. "மிகினும், குறையினும் நோய் செய்யும்" என்பது குறள்"
இந்த மூலாதாரத்தைக் கடப்பதாயின் அடிபடைத் தேவைகளில் விருப்பு வெறுப்பற்ற இருவினை ஒப்புநிலை ஏற்படவேண்டும். இவ்வாறான அகப்புறத் துறவு நிலைக்கு, பட்டினத்தார் நல்ல எடுத்துக்காட்டு";
"மாத்தானவத்தையு மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார்தமக்கொரு நிட்டையுண்டோ, நித்தனன்பு கொண்டு வேர்த்த7ற் குளித்துப், பசித்தாற் புசித்து, விழிதுயின்று பார்த்தாலுலகத்தவர்போ லிருப்பர்பற்றற்றவரே"
21

Page 15
சுவாதிட்டானம் (உரு. 3)
மூலாதாரத்துக்குச் சற்று மேலாக, //ாலுறுப்பின் மூலப்பகுதியில் இம் மையம் அமைந்துள்ளது. கிருஷ்ணர் அதிட் தெய்வமாக விளங்குகின்ற7ர். காமம், மோகம் முதலிய உட்பகைகளை வென்று கடக்கும் சக்கரமும் இதுவாகும்.
ஆகவே இவ் ஆதாரத்தில் செயற்படுபவர், ஒரு முக்கிய இலக்காக பாலியல் இன்பத்தைத் தேடி ரசிக்க முயல்வர் என்றால் அது பொருத்தமாகும். தொடுகை, பார்வை, கற்பனை, தொடக்கம் உடல் உறவு, புணர்ச்சிஈறாக, சிற்றின்பநுகர்ச்சிக் காக வாழ்நாளையும், செயற்பாட்டையும், சிந்தனையையும் செலவிடுவர். எதிர்ப்பாலாரின் உடல் அசைவுகள், கண்ணோட்டம், துகில்கள் மறைப்பதையும் காட்டுவதையும் ரசிப்பர். இதற்கு ஈடாக எதிர்ப்பாலினர் கடைக்கண் வீச்சு, அசைவு, உடை, எடுப்புச் சாய்ப்பு, நடை முதலியவற்றால் இச்சையைத் தூண்டு வர். இதைவிட சம்பந்தப்பட்ட நூல்களை வாசித்தும், சஞ்சிகைகள், சினிமா, வீடியோப்படங்களைப் பார்த்தும், பாடல்களைக் கேட்டும் பாலுணர்ச்சியைப்
போகிப்பர்.
இவ்வாறு காம மோக இச்சைகள் தூண்டப்பட்டு, பாலியல் புவனத்தில் வாழ்பவர்கள் பார்வையும் சைதன்னியமும் அதிலே மூழ்கி இருக்கும். பட்டினத் தார் இம் மயங்கிய பார்வையைத் தெளிவுற விபரித்துள்ளார்"
'மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்
மானுடர்க் கெல்லாம் யானெடுத்துரைப்பேன் விழிவெளி ம7க்கள் தெளிவுறக் கேன்மின் முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும் தசையும் எலும்பு/ம் தக்க புன் குறங்கை இசையும் கதலித் தண்டென இயம்பியும் நெடுமுடைதாங்கி நின்றிடு மிடையைத் துடியிடை யென்று சொல்லித்துதித்தும் மலமுஞ் சலமும் வழும்புந்திரையும் அலையும் வயிற்றை ஆலிலை யென்றும் நகுவார்க் கிடமாய் ந7ன்று வற்றும் ഗ്രസ്മെഥ7//്ള്യു ഗുണിഥ//' 6ി ബ്രb குவையுங் காமக் குருடர்க் குரைப்பேன்" என்றும்,
'நீருஞ் சளியும் நின்று நின்றொழுகும் கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும் கண்ணர் பிளை தவிர7தொழுகும் கண்ணினைப் ப7ர்த்துக் கழுநீரென்றும்."
என்று ஒவ்வொரு உறுப்பாக திரிவுபட்ட காட்சியை விளக்கி இப்பாட்டுத் தொடர்கிறது.
22

மோக உணர்ச்சிக்குச் செலவிடப்படும் நேரம், சிந்தனை, முயற்சி, திட்டம் தீட்டுதல், பார்த்தல், கதைத்தல் முதலிய செயற்பாடுகளை உற்று ஆராயும் போது, மனித குலம் எந்தளவிற்குக் காம நுகர்வில் சிக்குண்டு கிடக்கின்றது என்பது புலனாகும். இதே முடிவிற்கு உளப்பகுப்பாய்வாளர் சிக்மண்ட் ஃபிரைட் (Sigmund Freud) வந்தார்”. அவரின் கணிப்பின்படி எங்களின் எல்லா (கணிசமான) செயற்பாடுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பின்னணியில் மறைமுகமாகவோ, அல் லது சிலவேளைகளில் நேரடியாகவோ, பாலியல் காரணகாரணிகள் இயங்குகின் றன.
ஆத்மீக சாதனையில் அல்லது வேறு காரணங்களுக்காக (உ-ம். மாணவன் ஒருவன் தனது படிப்புக்காக) பிரமசரிய விரதத்தைக் காத்து, இந்த மாபெரும் சக்தியை அடக்கி, ஒரு நல்ல நோக்கத்துக்காகத் திசைதிருப்ப முயல்கின்றான். உளவியல் பொறிமுறைகளில் இத் திசைதிருப்பல் மடைமாற்றம் என்று அழைக் கப்படும். ஆயினும் பாலியல் சக்தியை வலோற்காரமாக ஒடுக்குதல் ஆபத்தா னது; அது எப்படியாயினும் வெவ்வேறு கோலங்களில் வெளிவரத்தான் செய்யும் என்று ஃபிரைட் வலியுறுத்தினார். பல விதமான உணர்ச்சிக் கோளாறுகளுக்கு (Neurosis), குறிப்பாக இசிவு நோய்க்கு (Hysteria), இவ்வாறு அடக்கப்படும் அல்லது மறுக்கப்படும் பாலியல் உணர்ச்சி தான் காரணம் என்று விளக்கினார்". இதனாலே போலும் அப்போஸ்தலராகிய பவுல், பால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்தக் கஷ்டப்படுகின்ற ஒருவர், "வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் செய்வது நலம்’ என்று ஆலோசனை கூறினார்".
பாலின் கவர்ச்சி வலிமையை நன்கறிந்த மாணிக்கவாசகர், சிற்றின்ப இச்சை யைச் சாதுர்யமாகப் பேரின்பத்தை நோக்கித் திருப்பி, ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்துவதைத் திருக்கோவையாரில் காணலாம்". இதேபோல், ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாளும், கண்ணன் மேல் ஏற்பட்ட காதலுக்குத் தெய்வீக உரு மாற்றம் கொடுத்து, புருஷோத்தமனை அடைந்து ஒன்று சேரும் உத்தியாகப் பயன்படுத்துகின்றார்". காஜுரகோ (Khajuraho) போன்ற கோயில்களில் காணப் படும் பாலியல் சிற்பச் சிலைகளும் (உரு. 4) ஓவியப்படைப்புகளும் சிற்றின்ப எழுச்சியைப் பேரின்பத் துறைக்கு ஈர்க்கும் தெய்வீக ஆற்றலுடையன.
மணிபூரகம் (உரு. 3)
தெ7ப்பூமுக்கு நேராக ந7பி பத்மம் வருகின்றது. பல மணிகள் போல் 4பிரகாசிக்கும் தேஜே7 மயமானது. அக்கினிதத்துவம் முக்கோண வடிவில் மூன்று சுவாஸ்திக அடையாளங்களைக் கொண்டுள்ளது. உருத்திரன் அதிட்ட தெய்வமாகவும் பீடுநடை போடும் எருது/அவருடைய வாகனமாக வும் காணப்படும். அவருடைய துணைவியார் வாகினி சக்தி மாமிசத்தை விரும்பி அருந்துவாள். அவளின் இரண்டு கொம்பு பல்லுடைய வாயில் இருந்து வடியும் இரத்தத்தாலும், கொழுப்பாலும் ம7ர்பு இரத்த மயமாகக் காணப்படும். இச்சக்கரத்தை முறைப்படி தியானிப்பதால், உலகத்தைப் படைத்து அழிக்கும் அதிகார சக்தி கைகூடும்.
23

Page 16
காஜுரகோ கோயில் சிற்பம்
| Fr III Capra'')
24
 

இங்கே மணிபூர4ஆதாரம், அதிகார சக்தியை மயமாகக் கொண்டது என்று எடுத்துக் கொள்ளலாம். இச்சக்கரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடிமைப் டுத்த முயல்வர் இவ்வாறான மேலாதிக்க நிலை ஏற்படும் பொழுது திருப்தி அடைவர் முன் குறிப்பிட் மூலாதார, சுவாதிட்டான மக்களின் தேவைகள், அபிலாசைகள் ெ ான்றவற்றை தங்கள் சூழ்ச்சித் திறனால் கையாண்டு, அவர்களைத் தமது கட்டுப் ாட்டுக்குள் கொண்டு வருவர். சில வேளைகளில்,அதிகார வெறியால் சுற்றத்தாரைத்தியாகம் செய்து, சதி அல்லது கொலையும் செய்யத் தயங்கமாட்டார்கள். தங்கள் நேரத்தை யும், சிரமத்தையும் இவ்வாறு தந்திரங்கள், வஞ்சனைகள், சதித்திட்டங்கள் போன்றவற்றை வகுப்பதில் செலவிடுவர். உலகத்தை அரசியல் மயமாக, அதி கார போட்டிக்களமாகக் காண்பர். ஒரு சர்வதிகாரப் போக்கும் அராஜகத் தன்மை யும் அதிகாரம் பயிலுபவரில் மிகச் சுலபமாக தோன்றும்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் இவ்வாதாரத் தன்மையரே, பரெற்றோ (Paret)" என்ற சமூகவியலாளர், இவ்வாறு அரசியல் ஆசனங்களுக்கு நடைபெ றும் போட்டியை, சிங்கங்களுக்கும் நரிகளுக்கும் இடையிலான போராட்டமாக, உவமை மூலம் மிகப் பொருத்தமாக விளக்கியுள்ளார். நாடுகள், தேசங்கள், இனங்கள், சமூகங்கள் நிறுவனங்கள், ஸ்தாபனங்கள், சங்கங்கள் குழுக்கள் மட்டுமன்றி ஊர் குடும்ப, தனிமனித உறவு மட்டங்களிலும் இந்த அதிகார வல்லுநர் போட்டியைக் காணலாம். மக்களின் சைதன்னியம் அதாவது கருத்துல கம், எதிர்பார்ப்பு, பயவுணர்ச்சி போன்றவற்றைத் தமது பேச்சுத் திறன், கவர்ச்சி, ஆளுமை, வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் உபயோகம் முதலியவற்றால் மூளைச்சலவை செய்து, தம்வசமாக்கும் ஆற்றல் இவர்களில் காணப்படும். இவ் வாறு சமூக யதார்த்தத்தை மீளாக்கம் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஹிட்லர்(Hitler), ஜெர்மனிய மக்களின் சைதன்னியத்தை, நாஸிப் பேரினவாதமா கிய குறுகிய வட்டத்திற்குள் கண்டப்படுத்தி, அதனால் தூண்டப்பட்ட எழுச்சி யைத் தனது மேலாதிக்க வேட்கைக்குப் பயன்படுத்தினார். எங்கள்நாட்டு நிலைக் கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இச்சக்கரத்தில் இயங்குபவர்களில் அதிகார ஆளுமையை (Authoritanian Personality) பெரும்பாலும் அவதானிக்கலாம். இவர்கள் தங்களுக்கு மேல் இருப்பவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று, அதற்கு அடிபணிந்து வாழும் அதே வேளையில் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்துவர். பொதுவாக ரஜோ குணத்தைப் பிரதிபலித்து, வீரத்துடன், தீவிரமா கச் செயற்பட்டு, மற்றவர்களை ஆண்டு, தலைமை தாங்கி வழி நடத்துவர்.
சற்று மிதமாக, மற்றவர்களினதும் சமுதாயத்தினதும் மதிப்பு, அந்தஸ்து, பெயர் புகழ் போன்றவற்றிற்கு ஏங்கி முயற்சிப்பதும், இவ்வாதார குணமாகும். பரீட்சைப் பெறுபேறுகளை இலக்காக்கி, அதற்குத் தயாராகுவதற்குத் தமது ԼէբԱք நேரத்தைச் செலவிடுபவரும், குறிப்பிட்ட உத்தியோகங்களுக்குப் பாடுபடுபவ ரும், உயர்ந்த விவாகத்துக்காக ஈடுபடுபவரும், இவற்றை ஊக்குவிப்பவரும் இதில் அடங்குவர். சற்றுச் சிந்தித்தால் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பெரும்பா லான அங்கத்தவர், ஏதோ ஒரு வகையில், அதிகாரச் சக்கரத்துள் வசிக்கின்றனர் என்பது புலனாகும்.
5

Page 17
இவ்வாறாக அதிகாரத்துக்காகத் தம் முழுப்பலத்தையும் செலவிட்டு, உழைக்கும் உந்துதலை, மேலாண்மைக்கான சங்கற்பம் (Wil to Power) என்று நெயிற்சே (Nietzsche)" என்ற மெய்யியலாளரும், அட்லர் (Ader)" என்ற உளவி யலாளரும் வர்ணித்துள்ளனர். இவர்களின் கூற்றின்படி, மனிதர்களிடையே மற்ற வர்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்வதற்கு ஓர் அடிப்படை உள் அவா, உந்து தல் இருக்கின்றது. வாழ்க்கையில், முக்கியமாக சிறுபிள்ளை வளர்ச்சிப் பருவங்க ளில், மற்றவர்களால் ஏற்படும் ஏமாற்றங்கள், கசப்பான அனுபவங்கள், தோல்வி கள், வெற்றிகள் போன்றவற்றால் உயர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மைகள் (Superiority and Inferiority Complexes)"a counsai past.Jiggattai) பிற்காலத்து சிநேக, சமூக உறவுகள் முந்தி நடந்தவற்றை நிவர்த்தி செய்யும் மேலாதிக்கத்திற் கான போராட்டமாக மாறுகின்றன.
மேலே கூறப்படும் மூன்று ஆதாரங்களும் கூட்டாக "தீ மண்டலம்" என்று கூறப்படும்; கீழாலவத்தை என்றும் குறிப்பிடலாம். அவை அடிப்படைப் பெள திக பந்த பாசங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அவ்வவ்வாதார மயமாக எங்கள் சைதன்னியமும் உலகமும் அமையும். அந்த ஆதாரப் பொருளை அடைவதில் கண்ணும் கருத்துமாகக் காரியப்படுவோம். ஆயினும் நாங்கள் எங் கள் நிலையை உணர்வதில்லை. எங்கள் சைதன்னியம் மாயா சக்தியால் மறைக் கப்பட்டு அந்த புவன போக நுகர்சியில் அழுந்த வைக்கும். அந்த ஆணவ மயக்கத் தைத் திருவருட்பயன்",
"ஒரு பொருளுங் காட்டாதிருளுருவங் காட்டும்,
இரு பொருளுரங் காட்டாதிது’.
என்று உணர்த்துகின்றது.
உதாரணமாக அதிகார சக்கரத்தில் இருப்பவர், எல்லாவற்றையும் அரசியல் அடிப்படையில் கணிப்பிட்டு, தான் மற்றவர்களின், சமுதாயத்தின் நன்மைக்காகச் செயற்படுவதாக எண்ணி, அதிகார உந்துதலால் பல தீமைகள் விளைவிப்பவராக லாம். இவ்வகையான தப்பான போக்கினல், போர்கள் மூள்வதற்கும் அதனுல் மக்கள் படும் சொல்லொணாத் துயரங்களுக்கும் கருத்தாவகலாம். இம் மூன்று ஆதாரங்களைக் கடந்தே, அதாவது பற்றுக்களை நீக்கியே ஆத்மீக மார்க்கம், சாதனை ஆரம்பமாகின்றது. இதனை நின்மலாவத்தை அல்லது மேலாலவத்தை என்று குறிப்பிடலாம்.
அனாகதம் (உரு. 3)
அடுத்ததாக இருதய ஸ்தானம் சிவப்புத் தாமரை போன்றது. தத்துவமாக வாயுவையும் வேண்டியதைத் தந்தருளும் கற்பகதருவையும் கொண்டுள் ளது. இங்கே நாதத்தில் இருந்து பிறக்கும் சப்த பிரமம் (Logos) கேட்கப்ப டும். ஜூவாத்மா விளக்கின் அசைவற்ற சுடர்போல் காணப்படும். இஷ்ட தெய்வமும், அமிர்தம் பருகியதால் நெகிழ்ந்தஇருதயத்தை உடைய வாகினி சக்தியும் மாணத பூசைக்கு உரித்தானவர்கள்.

அன்பு, கருணை, இரக்கம், கரிசனை, தொண்டு செய்தல் போன்றவை பிர தான பண்புகளாக அமைந்து இம் மையத்தைப் பிரதிபலிக்கின்றன. அன்பு நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. தாய் தன் குழந்தையில் காட்டும் அன்பு, பிள்ளை பெற்றோரில் செலுத்தும் அன்பு, தோழமை அன்பு, காதலன் காதலிக்கி டையில் தோன்றும் அன்பு என்பனவே அவையாகும். உண்மையான அன்பு மற்றவர்களைச் சிறைப்பிடித்துத் தன் வசமாக்கும் தன்மையன்று. சுயநலம் கரு தாது மற்றவர்களை மதித்து, சுதந்திரமாக வாழவைக்கும் சக்தியாக அன்புகாரியப் படும். தான் செலுத்தும் அன்பினால் பெறப்படும் மனநிறைவே போதும் என்று, பிரதிஉபகாரம் எதிர்பாராது விரிந்த நோக்கத்துடன் இவ்வன்பு மேற்கொள்ளப்ப டுகின்றது. அன்புக்குரியவர் "நல்லாய் இருக்க வேண்டும்; நன்றாக வாழ வேண் டும்" என்று தங்களை மறந்து, தியாகம் செய்பவரே மெய் அன்பர். அன்புக்குரிய வரே அவர்களின் முழு உலகமாக, வாழ்க்கையின் அர்த்தமாகிவிடுகின்றனர்.
இசை, கலை, இலக்கிய ஆக்கங்கள் போன்றவற்றை, தங்களை மறந்து படைப்பவர்கள், குறிப்பாக கீழைத்தேய மரபு வழியில் தன்முனைப்பின்றி, தம் ஆக்கங்களை இறைவனடியில் சமர்ப்பிப்பவர்கள், ஓர் உயர்ந்த மனிதாந்த நிலையை அடைகின்றனர். இதேபோல் ஒரு நிறுவனத்திற்கு, சமூகத்திற்கு அல் லது இலட்சியத்திற்குத் தங்களை அர்ப்பணித்து, தொண்டாற்றி, தன்னலம் பாராது உழைத்து மனநிறைவு பெறுவதையும் சிலரில் காணலாம்.
அன்பின் உச்சநிலையில் பக்திகணிகின்றது. முற்கூறிய நான்கு வகை அன்பும் பக்தியில் ஒன்று சேருகின்றது. மாணிக்கவாசகர்", "என்/நைந்துருகி நெக்கு நெக்கு ஏங்கி
அன்பு/ எனும் ஆறு கரையது புரள7 நன்புலன் ஒன்றிநாதவென்று அரற்றி உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலர கண்களிகூரநுண்துளி அரும்பச் சாயாஅன்டபினைநாள் தொறுந்தழைப்பவர்’
என்று ஒதியுள்ளார்.
இறைவன் பால் தோன்றும் அன்பு, முழு அர்ப்பணத்துடன் பணிபுரிந்து போற்றிப்பாடும் பான்மை கொண்டது. இப்பரவச நிலையில் சிலர் தங்களை மறந்து குழந்தைகள் போலவும், பித்துப்பிடித்த அடியார்களாகவும் கூத்தாடுவர். இறைவன் மேல் செலுத்தும் அன்பே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக, பயனாகக் கொண்டு மனநிறைவு பெறுவர். காரைக்கால் அம்மையார், முதல்வர மாக, எல்லாவற்றுக்கும் மேலாக, 'இறைவனிடம் இறவாத அன்/ வேண்டியதா கச் சேக்கிழார் வெளிப்படுத்துகின்றார்".
மற்றைய மார்க்கங்கள் இவ்யுகத்தில் கடினமாக இருந்தாலும் பக்தி இறை
வனை அடையும் சுலபமான வழியாக, ஏன் வசப்படுத்தும் வலையாக மாறுகின் றது. மாணிக்கவாசகர்" இதை,
27

Page 18
'சொற்பதம் கடந்த தொல்லே7ன் க/எண்க ég3(youh (627aivav/7ë GFL 69uv6ð7 35/7soáveis A vai3 6/626v47ai / /O)6/76i, 3/76,3745'
என்று பாடியுள்ளார்.
அன்புக்கும், கடவுளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இயேசுநாதர்",
'கடவுள் அன்பாகவே இருக்கிற7ர்?
என நினைவூட்டி, "உனது முதன்மையான கட்டளைய7க,
கடவுளை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்ம7வோடும், உன் முழு மனத்தோடும் அன்பு கூருவாயாக’
என்றும், இரண்டாவதாக
'நீஉன்னிடத்தில் அன்பு/கூருவது போல பிறரிடத்திலும் அன்பு/கூருவாயாக’ என்றும் வழிகாட்டியுள்ளார்
இஸ்லாமிய சுவி மார்க்கமும் அன்பை மையமாகக் கொண்டுள்ளது".
லர் அன்பிலே கடவுளைக் காண்கின்றார்" (05(gp புெ !מ
"அன்பும் சிவமும் இரண்டென்பர் - அறிவில7ர்
அன்பே சிவம7வத7ரும் அறிகில7ர் அன்பே சிவம7வதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'.
இந்தப் படியை அடைவதே வாழ்க்கையின் உயர்ந்த பயன் என்று பலர் கருதுகின்றார்கள். புத்தர்" உயிர்கள் மேல் கருணை காட்டுவதே மேலான பண்பு என்று, இதற்கு மேலுள்ள படிகளைப்பற்றி மெளனம் சாதித்தார். ஏனெனில், சகலராகிய நாங்கள் கீழ் ஸ்தானங்களில் (கீழாலவத்தை) நிகழும் உலக ஆசா பாசங்களைக் கட்டுப்படுத்தி, அதனால் இன்பதுன்பங்களில் இருந்து விடுபட்டு; மேல் நோக்கி, மேலாலவத்தைக்கு அடி எடுத்து வைப்பதே பெரிய சாதனையாக அமைகின்றது. இதற்கு அவர் நடுநிலை ஒழுக்கத்தையும் பஞ்சசீலங்களையும் வகுத்துள்ளார். இவ்வாறின்றி, எங்கள் சொற்ப அறிவுக்கு அப்பாற்பட்ட ஆத்மா, பிரம்மம் என்பவை பற்றித் தர்க்க வாதங்களில் ஈடுபடுவது வீண் விரயம் என்று கருதினார்.
ஆயினும் சித்தர்களும், ஞானிகளும் தாங்கள் இருதயகமலத்துக்கு மேலாகச் சென்ற பாதையில் அனுபவித்த நிலைகளை விளக்க முற்பட்டனர். ஆத்ம தரிச னம், விடுதலை, முக்தி, ஞானம் அடைவதுடன், பிரமம் அல்லது சிவஅநுபூதிக்கு இட்டுச் செல்லும் படிமுறைகளே இவை. உலக பந்த பாசங்களில் சிக்குண்டு உழலும் மனிதன் இவ்வாறான மேல் நிலைகளைப் பற்றிச் சந்தேகம் கொள்வது இயற்கையே. 'ஆத்மா என்று ஒன்று உள்ளதா?’ என்ற வினா எழுகின்றது. ஆயினும் அனுபூதிமான்கள் ஆத்மாவைப் பிரத்தியட்சமாகக் கண்டு, உறுதியான சாட்சி அளித்துள்ளனர். உபநிஷத்தில்,
28

मादित्यवर्णं तमसः परस्तात् । तमेव विदित्वातिमृत्युमेति
नान्यः पन्था विद्यतेऽयनाय॥ 'நான் இருளுக்கு அப்பால் ஆதித்தனைப் போல் பிரகாசிக்கும் அந்த மஹா புருவுரனைக் கண்டேன். அவனை அறிந்தால் ஒழிய இறப்பைக் கடக்க முடியாது. விடுதலை அடைவதற்கு வேறு வழி இல்லை’.
என்று தியான நிலையில் கண்ட காட்சியை சுவேதாசுவதர ரிஷி இமாலய உச்சியில் இருந்து வெளிப்படுத்தியுள்ளார்". தேவாரத் திருமுறையில் அப்பர்” இச் சாதாரண தரை உலகிலே தாம் கண்ட காட்சியை,
'Zo/3/i77 Z 733,273 (560376237///76267 Adapawu//767 lods6767762 b / //7Zy
போதொடு நீர் சுமந் தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன் யாதும் சுவடு பட7மல், ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்’
என்று பாடியுள்ளார்.
இந்தச் சொற்பதங்கள், பாட்டின் அமைப்பு என்பவை நம்பிக்கையூட்டும் வகையில், மிக உறுதியான தன்மை கொண்டவை. பிரம, ஆத்ம உண்மை இப் பாட்டில் மிகத் தெளிவாகப் பிரகாசிக்கின்றது.
இவ்வாறு மேலாலவத்தையில் கடைத்தேறுபவர்களில் சாத்வீக குணம் மேலோங்கி இருப்பது வழக்கம். அவர்கள் மனச் சமநிலையுடன், அமைதியாக, அஹிம்சை வழியில், ஆத்மீக முன்னேற்றத்திற்குப் பாடுபடுவர்.
சைவசித்தாந்தம் ஆத்மீக சாதனையைசரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகைப் படிமுறைகள் மூலம் விளக்குகின்றது. மேலும் ஞானப் படியில் மெய்ப் பொருளின் உபதேசங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்ற சன்மார்க்க வழி கூறப்படுகின்றது. தமிழ் மரபில் பக்தி வேறாகக் கணிக்கப்படுவதில்லை. மற்ற மார்க்கங்களுக்குப் பொது, அல்லது அடிப்படை யாகக் கொள்ளப்படலாம். சிலர் பக்தியை ஞானத்துடன் சேர்க்கின்றனர். வட இந்திய மரபின்படி சரியையும், கிரியையும் கர்ம யோகத்தில் சேர்க்கப்பட்டு, ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என நான்காகப் பிரிக்கப்படுகின்றது. விவேகானந்தரின்" கூற்றுப்படி, ராஜயோகத்தில் பதஞ்சலி முனிவரால் வகுக்கப் பட்ட அட்டாங்க உறுப்புக்கள், ஆத்மாவை அடைவதற்கான மிகச் சுலபமான, நேரான, மேலும் விஞ்ஞான ரீதியான, வழி முறையாக உள்ளன. அரவிந்தர் எல்லா மார்க்கங்களையும் ஒன்றிணைத்த சாதனையை உபதேசித்தார்”.
29

Page 19
இந்த நான்கு மார்க்கங்களையும் வைத்து எமது சமூகத்தினரை மதிப்பீடு செய்தால், சிறுபான்மையினர் சரியை, கிரியை ஆகிய படிநிலைகளை எட்டியுள் ளதை அவதானிக்கலாம். ஆயினும் பெரும்பான்மையினர் இவ்விரு படிநிலைக ளையும் அடையாமல் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் ஆகிய முதல் மூன்று ஆதாரங்களிலும் மூழ்கி உழல்வதைக் காணலாம். இவ் ஆதாரங்களின் இலக்கினை அடைவதற்கு, சமயாசாரங்கள் மூலம் இறைவனைப் பிரார்த்திப்பர், அல்லது பேரம் பேசி வியாபார ஹோதாவில் அல்லது ஒப்பாசாரத்துக்காகக் கிரியைகளை மேற்கொள்வர். கீழ் நிலைகளில் ஆத்மா அழுந்தி, மூழ்கி மயங்கி இருப்பது இயற்கை. மனிதன் தன்னாத்மாவை இவ்வாறு வெளி உலகில் தேடிய பிறகே, அவன் அந்தர் முகமாகத் தன்னுள் இருக்கும் ஆத்மாவைக் கண்டு கொள் வான் என்று சொல்லப்படுகின்றது. சிவவாக்கியர்",
'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே
சுற்றிவந்து மொண மொணென்று சொல்லு மந்திரமேதட7 நட்ட கல்லும் பேசுமேரநாதனுள்ள7ருக்கையில் cae / 4 - #/ 4.g. #/ 6062//æ/ awgŴ#ae 622 62/, //gî7eg/Gai o/7”. என்று நகைச்சுவையுடன் விகடமாகப் பாடியிருப்பினும், மாக்ஸிய வாதிகள் சமயத்தைப் பாமர மக்களின் போதைவஸ்து என்று இழிவுபடுத்தியிருப்பினும், சமயக் கிரியைகள், முதல் மூன்று படிகளில் இருப்பவர்களுக்கு, வெளியில் திரியும் தம் மனத்தை இறைவன்பால் வெலுத்துவதற்கும், பதியைச் சார்ந்து, சார்ந்ததன் வண்ணமாக வருவதற்கும் இன்றியமையாதன. எல்லாவற்றிலும் ஒரு பயனும், அர்த்தமும் இருக்கின்றது. யோக சுவாமிகள் 'முழுதும் உண்மை’ என்ற மகா வாக்கியத்தை உபதேசித்துள்ளார்"
விசுத்தம் (உரு .3)
இருதயகமலத்துக்கு மேலாக, கண்டஸ்தானம் வருகின்றது. இதன் தத்துவ ம7க வெட்ட வெளிய7கிய ஆகாயம் திகழ்கின்றது. சிதம்பர ரகசியம் என் றும் குறிப்பிடப்படும். அர்த்தந7ரீஸ்வரர்அதிட்ட தெய்வமாக விளங்குகின் ற7ர். இங்கேயே ஜூவாத்மா சுத்தமடைந்து (ஆத்ம சுத்தி), புத்தி மூன்று காலங்களையும் அறிந்து, முக்திக்கு வழி திறக்கப்படுகின்றது.
பக்திக்கு ஒரு மெலிந்த அகங்காரம் தேவை என்று ராமகிருஷ்ணர் விளக்குவார்". அதாவது நான் அடியேன், உன்னை அன்போடு போற்றி வணங் குவதற்கு நான் வேறான ஒருவன்’ என்ற உணர்வுடன், 'நான் உன்னைச் சொந்தம் கொண்டாடக் கூடியபக்தன்' என்ற உரிமை காணப்படுகின்றது. ஆயினும் விசுத் தியில் இவ்வாறான ஆணவ உணர்வு முழுமையாக அற்றுப் போகின்றது. தேசாபி மானம், இனம், ஊர், சாதி, குலம், குடும்பம், பால், உடல் முதலிய மாய உணர்வுப் போர்வைகளைப் கடந்து, தனி ஆத்மாவை, எல்லாவற்றிலும் உயிருக்கு உயிராக இருக்கும் உட்பொருளை அனுபவிக்கின்றான். ஹாவர்ட் (Harvard) பல்கலைக்க ழக உளவியல் பேராசிரியர் அல்போர்ற் (Alpor)", இவ்வாறு வியாபிக்கும் மனிதனின் அடையாளத் தன்மையை, விரிவடையும் வட்டங்கள் மூலம் நன்கு விபரித்துள்ளார் (உரு. 5). நடுவில், அடிப்படையாக, சுயநலம் அல்லது
30

பரமாதிழா (சிவம்,பின்மம்)
(O/76W (A འོ།། །། ഗ്രക്രി)
N ܠ ܠ YN N ஆ ജീ0്
།《།།NNN,7,
சாதிதஐம்
കെ-♔@ം്ല
2 മീ e്കരക്രUp,
NY \ \\ \
உரு. 5 விரிவடையும் மனித அடையாளத்தன்மை (Modified from Allport')
31

Page 20
அகங்காரம் இயங்குகின்றது. சற்று உயர்ந்து குடும் அங்க நார்வும் அததுடன் அடையாளம் காணுதலும்; கூட்டுக் குடும் அடுத்ததாக எருகின்றது. அதற்கு மேவாக சாதி, குலம் முதலியவற்றுடன் சொந்தம் கொண்டாடல் பிரதானமாகின் றது; அடுத்தபடியாக உார், சமூகம் முதன்மை பெறுகின்றது சற்று விரிந்து பிரதே சம், தாயகம், மண்பற்று போன்றவை மேலோங்குகின்றன. அடுத்து மொழி, இனம், கலாசாரம், பண்பாடு முதலியவற்றின் உறுப்பினராகி உணர்தல். பெரும் பாலும் நாங்கள் இந்த வட்டத்தை வந்தடைந்துள்ளோம், அதுவும் இனத்துவே ஷம் என்ற குறுகிய சைதன்னியத்துக்குள் சிக்குண்டுள்ளோம். இவற்றைளி
உயர்ந்து தேசாபிமானமும்; அடுத்து, சமயத் தோழமையும் வருகின்றன. இவற்றை எல்லாம் கடந்து 'தும் உரே "சிதம் wேrFர்" என்ற பண்டைய தமிழ்ப் பண்பில் மனித குலத்துடன் தன்னை இணைத்து அடையாளம் காணுதல். இறுதியாக உள்ளது எல்லா உயிர்களையும், ஏன் சராசரிப் படைப்புக்கள் அனைத் தையும் பரப்பிரமத்தின் படிவங்களாகக் கண்டு, பரமாத்மாவின் வியாபகத் தன்
மையை, விஸ்வரூபத்தை உணர்தல்.
விசுத்தியின் அதிட்ட தெய்வமாகிய அர்த்தநாரீஸ்வரர் ஒரு முக்கிம உளவி பல் தத்துவத்தை விளக்கி நிற்கின்றார் (உரு. )ே. மனிதனின் இயல்பு நிலையில், ஆண், பெண் குணங்கள் வெவ்வேறு விகிதாசாரத்தில் கலந்து காணப்படும். இந்த நிதர்சன உண்மையை ஜுங் (Jung)" இருபால் கூறுகளுடைய (Andrgynus) கோட்பாட்டைக் கொண்டு விளக்குகின்றார். ஆத்மாவுக்குப் r r i Mig-37 GT3. ஆயி னும் ஆணவத்தின் மயக்கம் பால் உணர்வைத் தோற்றுவிக்கின்றது. இதைக் கடப்பதே விசுத்தியின் கர்மசுதி. இறுதியாக 'நான் இந்த உடம்' என்ற தேக் உணர்வைத் தாண்டும் பொழுது ஆத்ம சுத்தி நிகழ்கின்றது.
ஆக்ஞேயம் (உரு 3)
இச் சக்கரம் /கு ைதநிவில், சத்திரனைப் போன் வெள்ளை எர்ணத்தின் கானர் திம். கழிமுனை விழி:னதீண்ட yw rs J Jwr i'r gr?? -- #æä ?àಸಿà:೬! ஆடன் சேர்த்து முத்துப்பெலும். இதன் ஜூ மீக்கி'கி' 'சிரலை ஒன்மீ உச்சாடனம் செப்து, சூக்குமதித்துரைாகிய மினக்சீைக்கி' ஈர்கிஸ்திyத்தி,
சித்த சுத்தர் சாப்தி, ஆத்தரத்ாைன ைஜோதி இரவில் ரிசிஃ'ேம்.
ஆத்ம சாதனை பல படிகள் மூலம், சோபான முறையில் முன்னேறி, இந்த ஆதாரத்தை வந்தடைகின்றது. இந்தப் பரிமாணத்தின் முதிர்வை, ஞானக் கண் திறக்கப்பட்டு, விழிக்கின்றது என்று உபசார வழக்கிலும், பூரணத்துவம் அடைந்த சுத்த சைதன்னியம் அல்லது பிரக்ஞையின் உதயம் என்றும் விளக்குவர். இந்த ஜீவன்முக்தி நிலையில் ஒருவரின் பார்வை, காட்சி, முழுதாக முன்னைய நிலையி னின்றும் மாறுபடும். உதாரணமாக, முற்குறிப்பிட்ட சுவாதிட்டாளத்தில், காதல் உணர்ச்சியில் சிக்குண்டவரின் காட்சி, காதலிக்கப்படுபவரைக் குற்றமில்லாத
32

உரு. நீ அர்த்தநாரீஸ்வரர்
33

Page 21
தேவதையாகக் காட்டும். புற உலகமும் அழகான உருமாற்றம் பெற்றுப்பிரகாசிக் கும். ஆயினும் ஆக்ஞேய நிலையில் பார்வை, உணர்வு முதலியவற்றின் திரிவுப டுத்தும், மயக்கும் தன்மை நீக்கப்பட்டு, தெளிவான யதார்த்தம் புலப்படும். இவர்களை ஏதமில் காட்சியினர் என்று ஞான நூல்கள் குறிப்பிடும். உலகியல் தோற்றங்களை கண்டவர், அதற்குள் சூக்குமமாக அந்தர்யாமியாக, உள் நின்று எல்லாவற்றையும் அதிட்டித்து இயக்கும் அந்தராத்மாவைத் தரிசிப்பர். திருமூலர் இந் நிலையை உவமை மூலம் அழகாக வர்ணித்துள்ளார்"
“மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது ம7மதயானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே”
சகஸ்ரார கமலம் (உரு. 3)
எல்ல7ஆதாரங்களுக்கும் மேல7க, சிரசில், ஆயிரம் இதமுடைய வெண்ட7 மரை, பரமசிவனின் உறைவிடமாக, கைலாசமாகத் திகழ்கின்றது. மூலாத7 ரத்தில் உறங்கியிருக்கும் குண்டலினி சக்தி விழித்தெழுந்து, மேல்நோக்கி ബ6ിഖ/ഗ്ര ஆதாரத்தினூட ாகவும் ஊடுருவிச் சென்று, இறுதியில் சகஸ்ரார சக்கரத்தில் சிவத்துடன் அந்நியோன்னியம7க இரண்டறக் கலக்கின்றது (உரு. 3). ஜவாத்மா, பரமாத்மாவை இங்கேயே அடைந்து அத்துவித நிலை யைப் பெறுகின்றது. 'நீ அதுவாய் இருக்கின்றாய்' / तत्वमसेि e) என்ற விழிப்புணர்வுடன் சச்சிதானந்தமாய் நிலைத்திருப்பது முக்தி, விடு தலை, மோட்சம் என்று அழைக்கப்படுகின்றது. சத்தியம், மெய்ப்பொருள்,
சிவானுபூதி என்று பல விதமாக இறைவனை ஞான வடிவில் அனுபவித்து, ஞானமயமாகிறதே பேரானந்தப் பேறு. பரவிந்துவாகிய குனியம் அல்லது நிர்வாண நிலையும் இதுவே. மனிதனின் சைதன்னியம் விருத்தி அடைந்து, தூய்மையான சித்தாகி, பரிபூரணத்துவம் எய்தியதுரியாதிதம் அல்லது நிர்வி கல்ப சமாதியும் இதுவே. சிவனின் தாண்டவ நடனத்தையும் இங்கேயே .(/Z .27ھ / اثرa)/7Zتی تھی7ھگ7/ی
மனம் வாக்குக் கடந்த நிலையிது.
'கண்டவரும் விண்டதில்லை
விண்டவரும் கண்டதில்லைத் -தங்கம் வேறுபொருளில்லையெடி’
என்று யோக சுவாமி "பட்டது பட்டேற்றும்’ என்ற பாட்டில் அறிவூட்டு
கின்றார்". இதற்கு மேல் இந்நிலையைப் பற்றிச் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.
34

முடிவுரை மனிதன் அறியாமலே தன்னாத்மாவைத் தேடி நீண்ட, தில்லு முல்லு நிறைந்த, பல திருப்பங்கள் உடைய பயணத்தில் ஈடுபடுகின்றான். முதலில் புறத்தில், வெளி உலகத்தில் இன்பத்தைத் தேடி அலைகின்றான். இன்ப துன்பங் களை நுகர்ந்து அவஸ்தைப்படுகின்றான். இவ்வனுபவங்களுடாக நன்மை, தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றல் பிறக்கின்றது. தீயனவற்றை விலக்கி நல்லன வற்றைச் செய்ய முற்படுகின்றான். இறுதியில் இவ்விரண்டையும் சமமாக நோக் கும் இருவினை ஒப்பு நிலையை எய்துகின்றான். உலக பந்த பாசங்களிலிருந்து விடுதலை பெறுகின்றான். மெய்ப்பொருளை அறிய நாட்டம் கொள்கின்றான். தன்னாத்மாவை உள்ளே அகத்தில் தேட அருள்வழிகாட்டுகின்றது. இந்த உன்னத மான யாத்திரையை, குறியீடாக, குண்டலினி சுழுமுனை வழியாக ஆறு ஆதாரங் கள் ஊடாக, சகஸ்ரார கமலத்தைச் சென்று அடைவதுடன் ஒப்பிட்டோம்
(உரு. 3).
ஒவ்வொரு ஆதாரத்தையும் இப்பயணத்தில் காணப்படும் தங்கு மடங்களாக விளக்கி, அவற்றின் பொதுத் தன்மைகளையும், குணாதிசயங்களையும், இலட்ச ணங்களையும், சைதன்னிய நிலைகளையும் விபரித்தோம் (அட்டவணை 1). ஆயினும் ஒவ்வொரு மனிதனின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது. பாதைகள் வேறுபடும், ஆதார சைதன்னிய அம்சங்கள் வித்தியாசமான அளவிலும் தன்மை யிலும் கலந்து காணப்படும் என்று வலியுறுத்தினோம்.
உலக வாழ்க்கையில், ஒவ்வொரு ஆதாரத்திலும், பள்ளிக்கூட வகுப்புகள் போல், அத் தரத்துக்கான பாடப் படிப்பு முடிந்து, தேர்ந்த பிறகு, அடுத்த வகுப் புக்கு, ஆதாரத்துக்கு மனிதன் உயர்த்தப்படுகின்றான். இன்னொரு விதத்தில் கூறும் பொழுது, குண்டலினி எந்த ஆதாரத்தில் நிலைகொள்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு அந்த மனிதனின் தனு, கரண, புவன, போகங்கள் அமைகின்றன. அந்தச் சைதன்னிய நிலைக்குப் பொருத்தமாக நனவிலும், கனவிலும் உலகத் தோற்றங்கள், பார்வை, வேட்கைகள், உந்துதல், திருப்தி எல்லாமே குறிப்பிட்ட அந்த ஆதாரமயமாக அமையும். அப்புவனத்தில் மனிதனின் இச்சா, கிரியா, ஞான சக்திகள் செயற்படும். அதாவது, இச்சாசக்தி குறிப்பிட்ட ஆதாரப் பொருள்களில் ஆசைப்பட அவற்றைப் பெற கிரியா சக்திகாரியப்படும். அவ்வுலகத்திற்கு ஏற்ற ஞானம் பட்டறிவால் பிறக்கும். மனிதன் அந்த ஆதார போகங்களை நுகர்ந்து, சலித்து, விருப்பு வெறுப்பற்ற நிலையில் அடுத்தபடியை அடைகின்றான்.
அக, புற பிரபஞ்ச விஷயங்களில் அவாப்படும் மனத்தைக் கட்டுப்படுத்தி, வெளி உலகில் செலவிடப்படும் சக்தியை அந்தர் முகமாகத் திருப்பி, தன்னாத்ம விசாரணையில் ஈடுபடுத்துவதே சாதனை எனலாம். மனிதனின் பக்குவத்துக்கு ஏற்றவாறு ஆதார, புவன அனுபவங்களை உடம்புடன் சேர்ப்பதே கர்மவினை.
35

Page 22
இவ்வாறு சோபான முறையில் சகலரும் தங்கள் ஆத்மாவை நோக்கிய பயணத் தில் பிறந்திறந்து அலைந்து அல்லற்படுகின்றனர். பந்த பாசங்களில் சிக்குண்டு சம்சார சக்கரத்தில் சுழல்கின்றனர். மாணிக்க வாசகர்,
"எல்ல7ப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்’
என்று, அறாப்பிறவிப் பிணியை இட்டு வருந்துகின்றார்"
ஆயினும், ஒவ்வொரு அனுபவமும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக அமைகின்றது. பின்னடைவுக்குச் சந்தர்ப்பமாகவும் அமையலாம். உதாரணமாக அன்பு அல்லது ஞான நிலையைக் கிட்டியவர், பாலியல் இச்சைக்கு ஆளாகும் பொழுது, மேல் நிலையில் இருந்து சுவாதிட்டான மையத்திற்குத் திடீர்ச் சறுக்கல் ஏற்படுகின்றது (உரு. 3). இக் கீழிறங்கலை, எங்கள் சைதன்னியம் முழுதாக கர்ம மோகத்தில் அழுந்தாமல் சற்று விழிப்பாக இருந்தால், உடலில் உணர்ச்சிபூர்வமாக உணரலாம். மறுதலை யாக, சுடலை ஞானம் போல் எங்கள் துன்பங்களின் மூலம் பெற்ற பட்டறிவு, எங்களைச் சிலவேளை தூண்டி, கணப் பொழுதாவது, உலக நாடகத்தின் நிரந்தர மற்ற தன்மையையும் சூக்குமமாக மறைந்திருக்கும் ஆத்மாவையும் காண வைக் கின்றது. சைவசித்தாந்தக் கருத்துப்படி, திரோதான சக்தி ஒரு சிறிது நேரத்திற்குத் திரை நீக்கம் செய்து, மெய்ப் பொருளைக் காட்டி, ஒரு சடுதியான விழிப்பை அளித்து, மறைக்கின்றாள்". இவ்வாறான அனுபவங்கள், தக்க தருணத்தில் மனி தனை ஆத்மீகத்தில் நாட்டம் கொள்ள, தெரிந்தோ, தெரியாமலோ தம் பயணத் தைத் தொடர வழிவகுக்கின்றன. படிப்படியாக அறிவு விருத்தியடைந்து ஞானம் பிறக்கின்றது. இறுதியில் தன்னாத்மாவை வந்தடைகின்றான். அநுபூதி கைகூடு கின்றது. இதுவே தற்சொரூப, ஆத்ம தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.
ஆயினும், நாங்கள் எமது ஆத்மாவைத் தெரியாமல், தேடி அலையும் பய ணத்தில் இவ்வாத்ம தரிசனத்தை வந்தடைவதற்கு இருக்கும் தூரத்தை, வந்தடை வதற்கான பாதையை,
'உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டோரடி நீங்கா தொருவனை உள்ளமும் அவனும் ஒன்ற7யிருந்தும் உள்ளம் அவனை உருவறியாதே."
என்று திருமூலர்”மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்.
36

நன்றி
உரையின் பிரதியை வாசித்து பிழை பார்த்து ஆலோசனை வழங்கியமைக்கு தாதிய பரிபாலகர் ந. கனகரத்தினம், உளவளத் துணையாளர் பிதா, எஸ். டேமியன், வைத்திய கலாநிதிகள் இ. சிவசங்கர், எஸ். சிவயோகன்; பண்டிதர் வ. கந்தையா, கல்வி மான் க. சோமசுந்தரம், யோகாசன நிபுணர் ராஜன், அதிபர் அ. சபாரத்தினம், கவிஞன் இ. முருகையன், நாடக ஆசிரியர் குழந்தை சண்முகலிங்கம், திருமதி. தங்கமலர் சோமசுந்தரம் ஆகி யோருக்கும்; தயாரிப்பில் உதவிய எமது பிரிவைச் சேர்ந்த செல்வி எஸ். கலைவாணி, படங்களை வரைந்து இங்கே படம் எறி கருவி யில் காட்டிய திருமதி சா. ரவிச்சந்திரன், தாதிய உத்தியோகத்தார் செ. தர்மராஜா, வைத்திய கலாநிதி லலித்தா வைத்திலிங்கம், வி. சந்திரவிஜயகுமார், த. பாஸ்கரலிங்கம் மற்றும் கல்விக்கிளை யில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகின்றது.
兼并兼养米米米米米米米米并
37

Page 23
10.
1.
12.
3.
15.
16.
17.
18.
19.
20.
38
உசாத்துணை நூல்கள்
சிவஞானசுந்தரம் செ. யாழ்ப்பாணத்தில்., பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா மலர் கலை இலக்கிய பத்திரிகைகள் நண்பர்கள், கொழும்பு, 11-13, 1984.
சண்முகதாஸ் அ. துணைவேந்தர் வித்தியானந்தன், தமிழ் மன்றம், கண்டி, 1989.
பிறை அன்பன், கலையும் பண்பும், கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், 1963.
வித்தியானந்தன் சு. ஞானசவுந்தரி நாடகம், கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், 1967
வித்தியானந்தன் சு. கிறிஸ்தவரும் ஈழத்திலே தமிழ் வளர்ச்சியும், மலர்; 15, 1962-63.
சொக்கன். சமய ஆர்வலர7க பேர7சிரியர்வித்தியானந்தன் மணிவிழ7 மலர் கலை இலக்கியப் பத்திரிகைகள் நண்பர்கள், கொழும்பு, ப.24-26, 1984,
வித்தியானந்தன் சு. தமிழர்சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1971.
தாயுமானவர் திருப்பாடல்கள், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல் வேலி, 1975,
Department of Community Medicine. WHO Definition of Health, Faculty of Medicine, University of Jaffna, 1994. See also World Health Assembly Resolution (37.13), 1984.
Puvinathan, S.A., Shanmugarajah, H., Lakshman, M., & Doney. A. Study of Ex-detainees in Vavuniya, Jaffna Medical Journal, 24:94, 1989.
Borland, C., & Landrith, G. Improved Quality of City Life, Decreased Crime Rate. Scientific Research on the Transcedental Meditation programme, Collected papers, Vol 1, MERU Press, West Germany, 1976.
Hegel, G.W.F. The Philosophy of History, Dover publications, New York, 1956.
Spencer, H. Synthetic Philosophy, discussed in Encyclopaedia Brittannica, William Benton, Chicago, 1964.
Toynbee, A.J. A Study of History, abridged by S.C. Somerwell, Dell publishing Co. New York 1969. See also other works: Civilization on Trial, Oxford University Press, London, 1948. An Historian's approach to Religion, Oxford University Press, London, 1956.
Jung, C.G. Modern Man in Search of his Soul (1933) and Integration of personalities (1939), In Collected Works of C.G. Jung, Bolling Foundation, United States.
Fromm, E. The Sane Society. Routedge, London, 1971. also sce Fromm, E. Escape from Freedom, Holt, Rinchart & Winston, New York, 1941.
Capra, F. The Tao of Physics, Fontana, Great Britain, 1980,
Coomarasawamy, A.K. The Dance of Shiva, The Noonday Press, New York, 1969.
உமாபதிசிவாசாரியார். சிவப்பிரகாசம், யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்ப னைக் கழகம், யாழ்ப்பாணம், 1974,
Maslow, A.H. Motivation and Personality, Harper and Row, New York, 1970.

21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
Rogers,C.R. Carl Rogers on Personal Power, I belticorte prenN New York, 1977, Nec also On Becoming a Person, Honghton Mifflin, Boston, 1961.
Frankl. V.E. Man's Search for Meaning, Bcacon press, Boston, 1959.
Assogioli, R., Psychosynthesis, Penguin Books, New York, 1982.
Tort, C. ed. Transpersonal Psychologies, Harper & Row, New York, 1975.
Avalon, A., (Woodroffe, J.) The Serpent Power, Ganesh & Co, Madras, 1953. See also Woodroffe J. Introduction to Tantra Sastras, Ganesh & Co, Madras, 1980.
Seat, B. Appendix to: Sarkar, B.K., Positive Background of Hindu Sociology quoted in 25 above.
அருணந்திசிவாசாரியார். சிவஞானசித்தியார் சுபக்கம், யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம், 1971.
சிவத்தொண்டன் நிலையம், குண்டலினிசக்தி அ. செல்லத்துரை, செங்கலடி, 1987
வித்தியானந்தன், சு. மணிவிழாமலர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள், கொழும்பு, ப.26, 1984.
Mandukya Upanishads in Eight Upanishads, Trans. Swami Gambhirananda, Advaita Ashrama, Calcutta 1958.
Hu Neng, The Sutra. Translated by Wrong Mou-Lam, in The Diamond Sutra. Shambhala Boulder, Colorado, 1969.
Sigmund, F. Complete Psychological Works of Sigmund Freud, ed.J. Strachey; Hogarth press, London, 1939.
புறநானூறு, ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரை, உ.வே. சுவாமிநாதையர்பதிப்பு, சென்னை, 192: 1-6, 1957.
Watts, A. Tao - The Watercourse Way, Penguin Books, England, 1986.
சேக்கிழார். திருத்தொண்டர் ம7க்கதை, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திரு நெல்வேலி, இந்தியா, 1977
பட்டினத்துப் பிள்ளையார்திருப்பாடல்கள், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
திருநெல்வேலி, இந்தியா 1977
Marx, K. Capital, Vol 1, Foreign Languages Publishing House, Moscow, 1954. see also Contribution to the Critique of Political Economy, Charless H. Kerr & Co, Chicago, 1904.
பரிசுத்த வேதாகமம், இந்திய, இலங்கை வேதாகமச் சங்கம், பெங்களுர், 1959.
திருவள்ளுவர், திருக்குறள் (பரிமேலழகர் உரை), பூம்புகார் பிரசுரம், சென்னை, 1983
மாணிக்கவாசகர். திருக்கோவையார் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திரு நெல்வேலி, இந்தியா, 1978
39

Page 24
4.
42.
43.
45.
46.
47.
48.
54.
55.
56.
57.
58.
59.
40
ஆழ்வார்கள். நாலாயிர திவ்விய பிரபந்தம், தி லிட்டில் பிளவர்கம்பெனி, சென்னை, 1984
Zeitlin, I.N. Wilfred Pareto in Ideology and the Development of Sociological Theory, Prentice-Hall, New Jersey, 1968.
Frenkel-Brunswilk, E. & Sanford, R.N. Some Personality Factors in Anti-Semitism, Journal of Psychology. 20: 271-91, 1945.
Kennedy, J.M. The Quintessence of Nietzsche. Twerner Laure, London, 1928.
Mairet, P. ABC of Adler's Psychology, Kegan Paul, London, 1928. உமாபதி சிவாசாரியார். திருவருட்பயன், பொற்றிடங்கண்ண், சிதம்பரம், 1976. மாணிக்கவாசகர். திருவாசகம், இலங்கை மணி சைவதூற்பதிப்பகம், யாழ்ப்பாணம், 976.
சேக்கிழார். திருத்தெ7ண்டர் ம7க்கதை, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திரு நெல்வேலி, இந்தியா, 1977
Shah, I. The Way of the Sufi, E.P. Dutton, United Kingdom, 1968.
திருமூலர் திருமந்திரம், மெளனாச்சிரமம், கொழும்பு, 1993.
Burtt, E.A. The Compassionate Buddha, Mentor books, New York, 1955. also see Conze, E. Budhist Scriptures, Penquin books, London, 1959.
Thyogisananda, Swami. Svetasvatara Upanishad, Sri Ramakrishna Math, Madras, 1937.
திருநாவுக்கரசர், திருவையாறு, மூவர் தேவாரத்திரட்டு, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப் புக் கழகம், திருநெல்வேலி, இந்தியா, 1980,
Vivekananda, Swami. Raja Yoga, Advaita Ashrama, Himalayas, India, 1973. Aurobindo, Sri. The Synthesis of Yoga, Sri Aurobindo Ashrama, Pondicherry, 1980.
சிவவாக்கியர் பாடல், இரத்தின நாயகர், சென்னை, 1953. யோகசுவாமி. நற்சிந்தனை, சிவதொண்டன் நிலையம், யாழ்ப்பாணம், 1974
Mahendra Nath Gupta. The Gospel of Sri Ramakrishna, Trans. Swami Nikhilananda, Sri Ramakrishna Math, Madras, 1974.
Allport, G.W. The Nature of Prejudice, Anchor books, U.S.A., 1958.
Swahananda, Swami. Chandogya Upanisad, Sri Ramakrishna Math, Madras, 1956.


Page 25
தா சோமசுந்தரம் அவர்கள் 1951இல் இவர் தனது ஆரம்பக் கல்வியினை கொள் இடைநிலைப் படிப்பினை கொழும்பு றோய நிலைக் கல்வியினை பாங்கொக், தாய்லாந்த் கொண்டார்.1972இல்அமெரிக்கவிபோர்ன தமது சீனலமாணிப் பட்டப்படிப்பினை முய இனன இந்தியாவில் உள்ள மணிப்பூரில் பூர்த் நுறை மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட யில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் சுட மருத்துவ பட்ட்ப்படிப்பு நிறுவனத்தின் உள தினைச் பெற்றுக் கொண்டார். 1988இல் டெ பெற்று லண்டனில் உள்ள விட்ஸ் பல்கலைச் யாற்றினார். தற்சமயம் இவர் யாழ், பல்கை முதல்வராகவும், யாழ். பொது வைத்தியமன வின் உளமருத்துவ நிபுணராகவும் பணியாற்
உள்மருத்துவ துறையில் இவரது ஆராய் ஊவு நோய், நெருக்கீட்டின் உளத்தாக்கம் ஆச் துப்படைப்புக்கள் இங்கும், சர்வதேச ரீதியப் புத்தகங்களிலும், ஆராய்ச்சிச் சஞ்சிகைகளி சூழ்நிலையால் ஏற்படும் உளப் பாதிப்புகை நூல் யாழ். பல்கலைக்கழகத்தால் அண்மையி
ஆத்மீக சம்பந்தமான இவரின் நாட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உருவாகி 1978இல் இவர் இங்கிலாந்தில் இருந்து இல கொண்ட பயணம், ஆத்மீகத்தின் தேடலுக்கு யாவின் இமயம் முதல் குமரி வரையான ப; தரிசித்தும் அநுபூதி மகான்களை அணுகியும் வளர்ச்சிக்கு உரமிட்டார். இவர் யோக வழிமு மீள் அறிமுகம் செய்து வருகின்றார்.'
 

யாழ். பொது மருத்துவமனையில் பிறந்தார். ரூப்பிட்டி சென் தோமஸ் பாடசாலையிலும், ால் கல்லூரியிலும், அதனைத் தொடர்ந்து உயர் நில் உள்ள சர்வதேச பாடசாலையிலும் சுற்றுக் சியா பல்கலைக்கழகத்தில் உள்வியல்துறையில் த்துக் கொண்டார். தமது மருத்துவப் பட்டத் இசெய்தார். இலங்கைக்குத் திரும்பி ஊர்காவற் வைத்திய அதிகாரியாகவும்,திருகோணம: உமையாற்றியபின், கொழும்பு பல்கலைக்கழக நோய் நிபுணத்துவ மருத்துவ கலாநிதிப் பட்டத் ாது நலவாய நாடுகளின் புலனமப் பரிசிலைப் கழகத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணி ங்க் கழக மருத்துவபீடத்தில் உளவியல் துறை ஈ. தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலைக றுகின்றார். ச்சிப் பணிகள், விவேகக் குறைபாடு, உளப்பி கியவற்றை உள்ளடக்குகின்றன. இவரது எழுத் லும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் லும் வெளிவந்துள்ளன. தற்போதைய யுத்த ன விளக்கும் "மனவடு" என்ற இவரது ஆய்வு வ வெளியிடப்பட்டுள்ளது.
மும், தேடலும் அறுபதுகளின் பிற்பகுதியில் ய கலாசார மறுமலர்ச்சியுடன் ஆரம்பமானது. ங்கைவரை கிழக்கை நோக்கி தரைவழி மேற் ம் தாகத்துக்கும் மேலும் வலுவூட்டியது. இந்தி துதிகளில் புனித ஸ்தலங்கள் ஆலயங்களைத்
ஞான நூல்களை ஆராய்ந்தும் தமது ஆத்மீசு 1றைகள், தியானம் போன்றவற்றை சமூகத்தில்