கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை

Page 1


Page 2

மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை
(ஆய்வியல்)
மணிப்புலவர் மருதூர். ஏ. மஜித், B. A. (Hons) Ceylon, Dip - in - Education (PG)
S. L. E. A. S.
வெளியீடு : மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி, சாய்ந்தமருது-3, கல்முனை. சிறிலங்கா,

Page 3
இது மருதூர் வெளியீட்டுப் பணிமனை வெளியீடு.
ஜுலை 1995. மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை (ஆய்வியல்)
உரிமை:
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் B. A. (Hons) Ceylon Dip-in-Education (P.G.) S. L. E. A. S, அவர்கட்கு பதிப்பு: குட்வின் ஒட்டோ அச்சகம், கல்முனை. விலை: நூறு ரூபா (100/-)
Maruthur Publication
1995 July Mathiya Kilakkil runthu Maddakalappu Varai (From Midde East to Maddakaappu) (Research) Copy Right:
Manippulavar Maruthur A. Majeed B. A. (Hons) Ceylon Dip-in-Education (P. G.) S. L. E. A. S. Printers: Goodwin Auto Press, Kamunai.
Prices: Hundred Rupees. (100/-)

சமர்ப்பணம்
இந்த ஆய்வினை நூலாக்கி மக்களின் சொத்தாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்கிய சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகரும் எனது அன்பிற்குரிய மாணவருமாகிய ஜனாப் ஏ. எல். எம். ஏ. நளிர் ஜே. பி. அவர்களின் அன்புத் தந்தை மர்ஹாம் அலியார் அகமதுலெப்பை அவர்களின் ஆத்ம சாந்திக்கு இந்நூல் சமர்ப்பணம்.

Page 4
உள்ளீடு
நூல் விபரம் I - 2
சமர்ப்பணம் 3
உள்ளிடு 4
66nu Gafotofu G36o7 5
ஆய்வின் அடித்தளங்கள் 6
காப்பு 7
மலர்கள் மொட்டுக்கள் 8
ஆய்வு 9 - 180

வெளியீட்டுரை
எமது மருதூர் வெளியீட்டுப் பணிமனை மத சம்பந்தமான ஒரு நூலையும்,
இலக்கிய சம்பந்தமான பல நூல்களையும், வெளியிட்டு வாசகர் மத்தியில் நல்ல பெயரையும் புகழையும் வரவேற்பையும் பெற்றுக் கொண்டதோடு நின்று கொள்ளாமல் ஆய்வு நூலொன்றினை வெளியிடக் கிடைத்தமை குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றது.
"மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை" எனும் இவ்வாய்வு நூலினைப் பொறுத்தவரை எம்முடன் ஒத்துழைப்பு நல்கிய உருவகக் கதையாசிரியர் ஜனாப் யூ. எல். ஆதம்பாவா அவர் களுக்குப் பெரிதும் கடமைப்பாடுடையோம்.
அதனால் அவருக்கும் எங்கள் சார்பிலும், மணிப்புலவர் அவர்கள் சார்பிலும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இஃதே போல இந்நூல் அச்சாகி வெளிவருவதற்கு எங்களுக்கு வலக்கரம் போன்று நின்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துதவிய சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஜனாப் ஏ. எல். எம் ஏ. நளிர் ஜே. பி. அவர்கட்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்தோடு
இந்நூலை அழகாக அச்சிட்டு உதவிய குட்வின் அச்சகத்தாருக்கும். எமது மனப்பூர்வமான நன்றிகள்.
மேலும்
எமது வெளியீட்டுப் பணிமனை வெளியிட்டுள்ள பல நூல்களுள் இது வித்தியாசமானதும் பெறுமதியானதுமான ஓர் ஆய்வு என்பத னாலும் வாசகர்களின் அமோக ஆதரவு இதற்குக் கிடைக்குமென்று எதிர் பார்த்து நன்றியறிதலோடு விடை பெறுகின்றோம்.
இஃது றிஸ்மி மஜித் பழைய சந்தை வீதி, மருதூர் வெளியீட்டுப் பணிமனை சாய்த்தமருது - 03 கல்முனை.

Page 5
0.
02.
03.
04.
05,
06.
O7.
08.
09.
ஆய்வின் அடித்தளங்கள்
உஷாத்துணையும் பீடிகையும்,
உலகின் தோற்றமும் அதில் மனித உற்பத்தியும் வளர்ச்சியும்.
பாவா ஆதம் மலையும் உலகளாவிய அதன் முக்கியத்துவமும்.
ஊரும் உறவும்.
வழியும் மொழியும்,
சரந்தீவில் நாங்கள்
மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரையுள்ள முஸ்லிங்களின் கலை, கலாசாரப்
பண்பாட்டுக் கோலங்கள்
தரவுகளும் தகவல்களும்.
மனவருத்தமானதும். மறக்க வேண்டியதுமான ஓர் அத்தியாயம்.
புதியதோர் அத்தியாயம் படைப்போம்.
16 ܆ -- .9
17 - 27
28 - 34
35 - 47
48 - 65
όό - 101
/02 - I 46
47 - 164
65 - 176
180 سم 77|

காப்பு
வானத்தின் நிலவு வண்ணமலர் ஏனத்தின் சாரம் இன்னமுது மோனத்தின் கனவு முகிழாது ஞானத்தின் ஒளியே அதுவாகும்,
ܠܳܛܵܐ
மறையில் இறையும் இறையின் மறையும் மறையா தகத்தில் ஒளிரும் ஒளியே ஞானத் தவனின் நல்வழி யென்பேன்.

Page 6
நூலாசிரியரின்
மலர்கள்
sitoff at fib பரவுகிறது. (சிறுகதை)
மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள் (கட்டுரை)
இஸ்லாத்தைப் பற்றி இதர மதத்தவர்கள். (தொகுப்பு)
பன்னிர்க் கூதலும் சந்தனப் போர்வையும். (கவிதை)
மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை.
(ஆய்வியல்)
மொட்டுக்கள்
* இளமையின்
இரகசியமும்,
நீடித்த ஆயுளும், (அறிவியல்)
கண் சிமிட்டிய நட்சத்திரங்கள். (தொகுப்பு)
* பனித்துளி பட்டுக்
கருகிய மொட்டு (சிறுகதைகள்)
* நீரழிவு வியாதியும்
இல
அனுபவக் குறிப்புக்களும். (அறிவியல்)
* தமிழ் மொழியும்
அதில் செய்ய வேண்டிய திருத்தங்களும்.

மருதூர் ஏ. மஜித் 09
உஷாத்துணையும் பீடிகையும்
'மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை’ எனும் இந்த ஆய்வு நூலினைப் பத்து அத்தியாயங்களாகப் பகுத்து அதில் முதலாவது அத்தியாயமான **உஷாத் துணையும் பீடிகையும்" எனும் இவ் அத்தியாயத்திலே இந்நூலில் இடம்பெறவுள்ள விடயங்களை பீடிகையாகக் கோடிட்டுக் காட்டி யுள்ளேன்.
அத்தோடு இந்நூலுக்கு உஷாத்துணையாக நின்ற நூல்களையும் பட்டியலாக்கித் தந்து ஸ் ள தோடு இந் நூல் எழுதுவதற்குக் கருதுகோலாகவிருந்த சம்பவத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இரண்டாவது அத்தியாயமான "உலகின் தோற்றமும் அதில் மனித உற்பத்தியும் வளர்ச்சியும்' எனும் அத்தியாயத்திலே உலகின் தோற்றம் பற்றிய கருத்துக்களையும் அதில் மனித உற்பத்தி பற்றிய விஞ்ஞான ரீதியான, மத ரீதியான கருத்துக்களையும் எடுத்துக்காட்டியுள்ளேன். அதிலும் குறிப்பாக மனித உற்பத்தி பற்றிக் குர்ஆன் கூறும் அடிப்படைக் கருத்துக்களை எடுத்துக்காட்டியுள்ளேன்.
மூன்றாவது அத்தியாயத்தில் **ஆதம் மலையும் அதன் உலகளாவிய முக்கியத்துவமும்' பற்றிக்கூறியுள்ளேன். ஆதிமனிதன் ஆதத்திற்கும் இலங்கையில் உள்ள ஆதம் மலைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் இந்த மலைக்கும் மத்தியகிழக்கு வாசிகளுக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
நான்காம் அத்தியாயமான 'ஊரும் உறவும்’ எனும் அத்தியாயத்திலே, * ஊர்” என்ற சொல் திராவிடச் சொல் அல்ல என்றும் இச்சொல் சுமேரிய மொழிச் சொல் என்றும் இந்த 'ஊர்' எனும் சொல் எவ்வாறு உலகெல்லாம் பரவியுள்ளது என்பது பற்றியும்; நபி இப்றாகீம்

Page 7
O மருதூர் ஏ. மஜீத்
(ஏப்ரகாம்) அவர்கள் பிறந்த ஊராகிய 'ஊருக்கும்” இன்றைய எமது சாய்ந்தமருதூருக்கும் உள்ள உறவு என்ன என்பதுபற்றியும் எடுத்துக் கூறியுள்ளேன்.
அடுத்த அத்தியாயமான ஐந்தாவது அத்தியாயத்தில் "வழியும் மொழியும்” எனும் தலைப்பிலே
எது சங்கத்தமிழ்? அது எங்கிருந்து வந்தது?
யார் உண்மைத் தமிழர்?
இன்று தங்களைத் தமிழர்கள் எனச் சொல்லிக்கொள்ள வெட்கப்படும் முஸ்லிங்களா தமிழர்கள், அல்லது
தங்களைத் தமிழர்கள் என அழைத்துக்கொள்வதில் பெருமைகொள்ளும் திராவிடர்களா? யார் உண்மைத் தமிழர்கள் என்பது பற்றியும் ,
தமிழ்மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியா? அல்லது செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியா? என்பது பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளேன். அத்தோடு,
ஆறாவது அத்தியாயமான 'சரன்தீவில் நாங்கள்” எனும் அத்தியா யத்திலே, சரன் தீவாகிய அன்றைய பூரீலங்காவிலே மத்திய கிழக்கு வாசிசளின் குடியேற்றம் முதலில் கிழக்கிலா - மேற்கிலா இடம்பெற்றது என்பது பற்றியும், அது எப்போது ஏற்பட்டது என்பது பற்றியும், மேற்கில் ஏற்பட்டது இரண்டாவது குடியேற்றமே என்பது பற்றியும் எடுத்துக் கூறியுள்ளதோடு, கிழக்கில் ஏற்பட்ட குடியேற்றம் இயக்கர், நாகர் காலத்தில் ஏற்பட்டது என்றும் , அதன் பின் விஜயனின் காலத்தில் இருந்து கடைசிச் சிங்கள அரசர்கள் வரை மத்திய கிழச்கு வாசிகளுக்கும், அதன் பின் முஸ்லிங்களுக்கும் இருந்த அபாரச் செல்வாக்குப் பற்றியும், அதன் பின்னர் போர்த்துக்கீசர்,
டச்சுக்காரர் (ஒல்லாந்தர்), ஆங்கிலேயர் (பிரிட்டிஷார்) போன்ற அந்நியராட்சியின் போது முஸ்லிங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளேன்.
அடுத்து,
ஏழாவது அத்தியாயத்திலே

மத்திய கிழக்கு வாசிகள் இலங்கையில் முதன் முதலில் குடியேறிய மட்டக்களப்பின் வரலாறு பற்றியும், உலக நாகரிகங்கள் பற்றியும், மட்டக்களப்பு முஸ்லிங்களின் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளேன். A
எட்டாவது அத்தியாயத்திலே,
**சில தகவல்களும் தரவுகளும் புள்ளி விபரங்களும்" கொடுக்கப் பட்டுள்ளன. இது உலக முஸ்லிங்கள், இலங்கை முஸ்லிங்கள் பற்றிய தகவல்களையும், தரவுகளைவும், புள்ளி விபரங்களையும் எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.
அடுத்த அத்தியாயமான ஒன்பதாம் அத்தியாயத்தில்,
'மனவருத்தமானதும் மறக்க வேண்டியதுமான ஓர் அத்தியாயம்’ எனத்தலைப்பிட்டு தமிழ்மொழியைப் பேசிக்கொண்டு ஒரே இனமாக ஒற்றுமையோடு வாழ்ந்த இரண்டு இனங்கள் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் செய்து வந்த இருட்டடிப்பு வேலைகள் நாளடைவில் முற்றி பெரும் பூகம்பமாகி வெடித்துச் சிதறி இன்று ஒட்டமுடியாதவாறு பிரிவுபட்டு நிற்கின்ற பரிதாப நிலை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
கடைசி அத்தியாயமான பத்தாவது அத்தியாயத்தில்,
"புதியதோர் அத்தியாயம் படைப்போம்” எனத் தலைப்பிட்டு பிளவுபட்ட இரு சமூகங்களையும் எவ்வாறு இணைக்கலாம் எனச்சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளேன். இந்த ஆலோசனைப்படி இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ முடியாவிட்டால் தனித்தனியான ஆட்சியமைப்புக்குள் வாழ்வதையே விரும்புகின்றோம், எனக் கூறியுள்ளேன்.
இஃது இவ்வாறிருக்க,
இந்த ஆய்வு நூலினை நான் எழுதுவதற்கு இறைவனின் நாட்டமும் காரணம் என நான் கருதுகின்றேன். இந்தக் கருதுகோளுக்குப் பின்வரும் சம்பவம் துணைபுரிந்தது எனலாம்.
அதாவது
நான் மாணவனாக இருந்தபோது "மாஸ்டர் மஜீத்’ எனும் பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். இளைஞனானதும் எனது பெயருக்கு

Page 8
2. மருதூர் ஏ. மஜித்
முன்னால் இருக்த 'மாஸ்டர்’ என்னும் சொல்லை எடுத்துவிட்டு "மருதூர்’ என்னும் சொல்லைச் சேர்த்துக் கொண்டேன்.
இதனை நான் ஆழமாகவோ, ஆரர்ய்ச்சியை மேற்கொண்டோ செய்ய வில்லை. மனமெழுந்த வாரியாகவே செய்தேன். ‘*சாய்ந்த மருதூர்” என்பதனையே **மருதூர்’ என என் பெயரோடு சேர்த்துக் கொண்டேன் எழுத்துலகில் இப்பெயர் பிரபலமடைந்ததும் மருதமுனையிலுள்ள எனது எழுத் தாள நண்பர்களில் சிலர் மரு துர ருக்கு உரிமை கொண்டாடினர். இது பற்றிப் பத்திரிகைகளிலும் எழுதினர். நானும் எனது செயலை நியாயப் படுத்த முனைந்தேன்.
இந்த முனைப்பு, நீண்ட ஆய்வாக மாறியது. பல உண்மைகள் வெளிப்பட ஆரம்பித்தன. 1979ஆம் ஆண்டு எனது பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் இம்முயற்சியில் முழு மூச்சாக ஈடுபடத் தொடங்கினேன். முடிவு,
**மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை”*
எனும் இந்நூல் மலர்ச்சி பெற்றது. இதனை இன்னும் சற்று விரிவாகக் கூறினால் இப்படியும் கூறலாம்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், தீபவம்சம், சூழவம்சம், ராஜாவலிய, பூஜாவலிய, கிரக சந்தே சய, கோலகில சந்தேசய, யாழ்ப்பாண வைபவ மாலை விட்டி டொத், கடம் பொத் போன்ற எல்லா நூல்களும் இலங்கையின் ஆரம்பகால வரலாற்றோடு தொடர்புடைய மத்திய கிழக்கு வாசிகளான இன்றைய இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றைக் கூற மறந்து விட்டன. அல்லது மறுத்து விட்டன என்றே கூறவேண்டும்.
இருந்த போதிலும் முஸ்லிங்களின் வரலாறுபற்றி அராபிய, பாரசீக, இந்திய வரலாற்று நூலகளில் இருந்தும்; மார்க் கோ போலோ, இப்னு பதூதா போன்ற தேச சஞ்சாரிகளின் வரலாற்றுக் குறிப்புக் களிலிருந்தும், இலங்கையில் கடமை புரிந்த குவைறோஸ் ரி பைரோ பரோஸ் போன்ற போர்த்துக்கீச எழுத்தாளர்களினதும், இராணுவ வீரர்களினதும் வரலாற்று ஏடுகளிலிருந்தும் சில தகவல்களை எம்மால் அறிய முடிகின்றன.
இவைகளை வைத்துக் கொண் டு ம் வேறு சில தகவல்களைத் தேடிக்கண்டு பிடித்தும் சிறியதொரு வரலாற்றினை முன்வைத்துள்ளேன் இது முற்று முழுக்க முடிந்த-பூரணத்துவமான முஸ்லிங்களின் வரலாறு என்றோ அதிலும் குறிப்பாக ஈழத்து முஸ்லிங்களின் வரலாறு என்றோ கூற முடியாது. என்றாலும் இதில் ஒன்றுமில்லை எனத்தள்ளவும்

மருதூர் ஏ. மஜித் 3
முடியாது. இதனைக் காய்தல் உவத்தலின்றி வரலாற்றுக் கண் கொண்டு பார்ப்போர் எவருமே ஒப்புக் கொள்வர். இது வரலாற்று மாணவன் ஒருவனுக்கு நுழை வாயிலைப் போன்றது எனவும் கூறலாம். மேலும்,
எனது இந்த நூலிலே "மத்திய கிழக்கு வாசிகள்’ எனும் ஒரு தொடரினை அடிக்கடி பயன்படுத்தியுள்ளேன்.
இத் தொடர் அராபிய, பாரசீக, எகிப்திய, துருக்கிய, ஆப்கானிஸ் தானிய மக்களைச் சுட்டிக் காட்டவே பயன்படுத்தியுள்ளேன்.
ஆப்கானிஸ்தான் வாசிகளை மத்திய கிழக்கு வாசிகள் எனக்கூறும் வழக்கு அவ்வளவு இல்லாவிட்டாலும், நான் சில வசதிகள் கருதி அவர்களையும் இங்கு மத்தியகிழக்கு வாசிகள் என்றே குறிப்பிட்டுள்ளேன் அத்தோடு,
*மூர்’ எனும் சொல் 'லெமூர்” எனும் சொல்லின் திரிபே என்றும் லெமூர் எனும் சொல் லெமூரியாக் கண்டத்தில் வசித்தவர்களையே குறித்து நிற்கின்றது என்றும் மூர் எனக் குறிக்கும் இன்றைய முஸ்லிங்கள் அன்றைய லெமூரியாக் கண்டத்தின் சொந்தக் காரர்கள் என்றும், இப்படிப் பழம் பெருமைக்குரிய மத்திய கிழக்கு வாசிகள் இலங்கையில் விஜயனுடைய வருகைக்கு முன்பே வந்து விட்டார்கள் என்றும் எடுத்துக்காட்டியுள்ளேன்.
அத்தோடு,
இந்த விடயங்களை அறுதியிட்டு உறுதியாகக் கூறுவதற்கு உதவி செய்த உஷாத்துணை நூல்களாக,
01 எப். எக்ஸ். சீ. நடராஜா அவர்கள் எழுதிய
"மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்’ 02 ஏ. ஐ. எல் மரிக்கார், ஏ. எச். மாக் கான் மாக்கார்,
ஏ. எல். எம். லாபீர் ஆகியோர் தொகுத்த, The Moors Association, Its Impact on the community
gr. Grub. gr. egy Gró'6ív gyalis 6ü76ör "Add 1 esses and Articles. Part I-II-III-- III”” 04 க. சுப்ரமணியம் அவர்களின் "இலங்கைச் சரித்திர வினா விடை’’ 05 ஜி. சி. மெண்டிஸ் எழுதிய‘நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வம்’ 06 வி. சி. கந்தையா எழுதிய 'மட்டக்களப்புத் தமிழகம்’
03

Page 9
4.
O7
08
09
O
2
3.
14
15
16
7
8
9
90
2
22
23
24
25
மருதூர் ஏ. மஜித்
7ஆம் வகுப்புச் சரித்திரம்.
எம் ரீ. எம். மக்கீன் எழுதிய
இரத்தினத் தீவின் இஸ்லாமியர் வரலாற்றுக் குறிப்புக்கள்" கல்வித் திணைக்களம் வெளியிட்ட "புதிய சமூகக் கல்வி' 7ஆம் ஆண்டு.
திண்டிவனம் (தமிழ் நாடு) விவிலிய மறைக்கல்வி திரு வழிபாட்டு
நடுநிலையம் வெளியிட்ட * தோழன்” மலர்: 24, இதழ் 7 வ. மகாலிங்கம் (B. A. Ceylon) அவர்கள் எழுதிய
ஆதிகால மத்திய கால இலங்கைச் சரித்திரம்”
முகம்மத் எம் சபர் (B. A Dip - in - Education) yari 36ft 6Topgu "சேர் றாசீக் பரீத் வழியும் நடையும்.” வேதநாயகம்பிள்ளை அவர்களின் “பிரதாப முதலியார் சரித்திரம்"
குல. சபாநாதன் அவர்கள் எழுதிய * யாழ்ப்பாண வைபவமாலை”
மு. தர்மலிங்கம் அவர்கள் எழுதிய
இலங்கையில் இனவாதமும் சாதிபேதமும்.” எப்.எக்ஸ். சீ. நடராஜா அவர்களின் “மட்டக்களப்பு மாண்மியம்’ கே. எம். எச். காலிதீன் அவர்களின் "ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை முஸ்லிங்களின் அரசியல் விழிப்புணர்ச்சி" Wilhelm Geiger, “(Heinz Bechert) Mahavamsa (English Translation) கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களின் "மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிங்களின் குடிமரபுகள்.”
முகம்மது ஸமீர் பின் ஷாஜி இஸ்மாயில் அவர்களின்
நம்முன்னோர்’
எம். ஐ. எம். ஏ. அஸிஸ் அவர்களின் "இலங்கைச் சோனகர் இன வரலாறு ஒரு திறனாய்வு.’ A. Ameer Ali. - 'A Short History of Saracen. ” அப்துல் ஹகீம் அவர்களின் "யாழ்ப்பாண முஸ்லிங்களின் வரலாறும் பண்பாடும்.” Dr. M. A. M. Shukri - “Muslim of Sri Lanka'. H. A. J. Hulugalla - “Ceylon of the Early Travellers.''

மருதூர் ஏ. மஜித் 5
26
27
28
30
3 I
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
A6
47
எம். ஐ. எம். முகைதீன் அவர்களின் "இலங்கை முஸ்லிங்களும் இனப்பிரச்சினைகளும்." எல். என். உசைன் முகம்மத் அவர்களின் 'நவ இரத்தினங்கள்’
அருள் செல்வநாயகம் அவர்களின் 'சீர் பாத குல வரலாறு’
9
எம். கே. ஈ. மெளலானா அவர்களின் வெளியீடான 'பசுங்கதிர்" ஹிஜ்ரி நூற்றாண்டு மலர்: 1980 - 1981. 'மருதாணி’ சஞ்சிகை - மலர் 5. இதழ் 1; ஆண்டு சிறப்பிதழ். அப்துல் றஹீம் அவர்களின் "நபிமார்கள் வரலாறு” 1ம் பாகம். டாக்டர் கே. கே. பிள்ளை "தமிழக வரலாறும் பண்பாடும்.”*
"மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு” 11 (பதினொன்று) பேராசிரியர் ராகுல சாக்கிருத்தியாயன் **வொல்காவிலிருந்து கங்கை வரை." இலங்கை அரசு வெளியீடு 'சமூகக் கல்வி’ 9ஆம் ஆண்டு “Fnglish Every Day Year 10. Ministry of Education, Sri Lanka — 1986. கா. அப்பாத்துரை எம். ஏ. எல். டி. அவர்களின் "குமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு,” ஹஸன் அவர்களின் ‘சிந்து நதிக்கரையிலே’ கலாநிதி எம். எம். உவைஸ், அஜ்மல்கான்' 'இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு” அல்ஹாஜ் கே. எம். எச். காலிதீன் 'இலங்கை முஸ்லிங்களின் வரலாறு’
டாக்டர். எம். எம். உவைஸ் "பிறைக்கொழுந்து? எஸ். எச். எம் ஜெமீல் *சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு’ * "சேது முதல் சிந்து வரை’ எம். கே. ஈ. மெளலானா “Whether'. George Beal “The Bible, The Quran and Science'' - Dr. Maurice Bucaille -
"எண் வரலாறு’ மஃறுரப் கரீம்.
"கல்விச் சிந்தனைகள்” எஸ். எச். எம். ஜெமீல்

Page 10
மருதூர் ஏ. மஜித்
48
49
50
5.
52
53
54
55
56
57
58
59
60
6.
62
63
64
65
66
67
68
"தமிழ் தந்த தாதாக்கள்’ க. இ. குணரெத்தினம். 'ஐந்தாம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலர்” **முகம்மத்’ மார்ட்டின் லிங்ஸ் “Kataragama Mosque and Shrine. - Al Haj. S. A. M Thauoos. * 'இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு’ மு. சாயிபு மரைக்கார் *" கருத்துக்கோவை’ ஐந்தாவது இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மகாநாடு வெளியீடு. ** அக்கரைப்பற்றின் வரலாறு’ ஏ. ஆர். எம். சலீம். * 'ஹிந்துமத சாஸ்திரம்” பாகம் 1 "சித்த மருத்துவ சிந்தாமணி’ சீதாராம் சுப்பிரமணியம். "இலங்கை முஸ்லிங்களின் மத்ஹப்” அல் - ஆலிம் எம். ஐ. அப்துல் சமத் மக்தூமி "ஈழத்தின் இன்னுமொரு மூலை’ சம்மாந்துறை வெளியீடு. “Seeing Ceylon - R. L. Brother 'நமது பாதை’ ஏ. எல். ஏ. மஜீத் "தேசிய மீலாத் விழா மலர்’ 1992 முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சு .
“Muslim of Kaluthara District.''
"அனுராதபுர மாவட்ட முஸ்லிங்கள்” - முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அலுவலக வெளியீடு. 'ஹாஜிகளின் தோழன்” - மெளலவி. ஏ. எஸ். எம். சம்சுதீன்
*அளிஸும் தமிழும்” - ஏ. எம் நஹியா **மனிதன் எப்படித் தோன்றினான்" - பி. ஆயிஷா லெமு. “அவளுக்காக ஒரு பாடல்" - கவிஞர் கண்ணதாசன்,
** கல்முனைக்குடி ஜ7ம்ஆப் பள்ளிவாசல் வரலாறு” ஹாஜி உஸ்மான் சாஹிப், எஸ். ஆதம்வாவா இஃதேபோல் முஸ்லிங்களின் வரலாறு பற்றி அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு முஸ்லிங்களின் வரலாறு பற்றி மட்டக்களப்பு மான்மியம், முக்குவரின் சாதி வழமை,
வீரமுனைச் செப்பேடு, சம்மாந்துறைச் செப்பேடு
சீர்பாதச் செப்பேடு, திருக்கோயில் கல்வெட்டு
Monograph of Batticaloa District. போன்றவைகளும் எமது இந்த ஆய்விற்கு உதவின எனக்கூறி *உஷாத்துணையும் பீடிகையும்’ எனும் இந்த அத்தியாயத்தை முடித்துள்ளேன்.

படிா, தூர் ஏ. மஜீத் 7.
உலகின் தோற்றமும், அதில் மனித உற்பத்தியும் வளர்ச்சியும்.
Ο 2 உலகின் தோற்றமும், அதில் மனித உற்பத்தியும், வளர்ச்சியும் எனும் விடயம் பற்றி எம்மிடையே இரண்டு வகையான கருத்து நிலவுவதை யாமறிவோம். ஒன்று மத சம்பந்தமான சருத்து. மற்றையது விஞ்ஞானம் சம்பந்தமான கருத்து. இரண்டு கருத்தினையும் நாம் காய்தல், உவத்தல் இ ன் றிச் சீர்தூக்கிப் பார்த்தால், இரண்டு கருத்துக்களும் அடிப்படையில் ஒற்றுமை யுடையனவாகத் தெரிவதை நாம் அவதானிக்க முடியும்.
இக்கருத்தின் ஒற்றுமை, தொடர் மதங்களிடையே அதிலும் குறிப்பாக தொடர் மதங்களின் கடைசி மதமான இஸ்லாத்தில் செறிந்து காணப்படுவதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது எனலாம்.
தொடர் மதமென்று நான் இங்கு குறிப்பிடுவது யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களையே. இஸ்லாத்தின் வேத நூலாகிய திருக்குர்ஆன் உலகின் தோற்றம் பற்றியும், அதில் மனித உற்பத்தி வளர்ச்சி பற்றியும் பின்வருமாறு கூறுகிறது.
1. உங்களுக்கு மேலேயிருக்கும் ஏழு வானங்களையும் நாமே
படைத்தோம்.
2. அதில், பிரகாசிக்கும் விளக்கினையும் நாமே அமைத்தோம்
3. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த வானங்களையும், பூமியையும்
நாமே பிரித்தமைத்தோம்.
1 அல் குர் ஆன் 21:30, 16:4, 4:1

Page 11
8 மருதூர் ஏ. மஜீத்
4. உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து படைத்தோம். 5. உலகின் முதல் மனிதன் ஆதத்தினை நாம் மண்ணில் இருந்து
படைத்தோம். அம்மண் சுட்ட களிமண்ணைப் போன்று தெறித்தால் சத்தம் கேட்கக் கூடியதாகும்.
படைக்கப்பட்ட ஆதத்தில் இருந்து அவ்வாவினையும் யாமே படைத்தோம்.
6. மனிதனை நாம் அருவருக்கத்தக்க விந்தில் இருந்து
உற்பத்தி செய்தோம்.
இதே போல பெருமானார் அவர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
"நாயகமே படைப்புக்கள் எதில் இருந்து படைக்கப்பட்டது’ என்று நான் கேட்டேன், அதற்குப் பெருமானார் அவர்கள் "தண்ணிரில் இருந்து’ எனப்பதில் கூறினார்கள் என அபூ குறைறா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இஃது இவ்வாறிருக்க விஞ்ஞானிகள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நட்சத்திரங்கள் உருவானது ஆயிரங் கோடி ஆண்டுகளுக்கு முன். சூரிய மண்டலம் அமையப் பெற்றது ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்கு முன். சூரியனில் இருந்து பூமி தனித்து இயங்க ஆரம்பித்தது 400 அல்லது 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம்.
உஷ்ண நிலையில் இருந்த இப்பூமி பனியாக மாறிய போது பூமியின் பெரும் பகுதி பணியுள் புதையுண்டு கிடந்தது. இவ்வாறு பணியுள் புதையுண்டு கிடந்த காலத்தை ‘பனியுகம்’ என அழைப்பர். இப்பனியுகத்தை மூன்றாக வகுத்து, முதலாவது பனியுகம் 10 கோடி ஆண்டுகளும்,
1 இரண்டாவது பனியுகம் 30 கோடி ஆண்டுகளாகவும், மூன்றா வது பனியுகம் 10 கோடி ஆண்டுகளாகவும் வகுத்துள்ளனர்.
பிரித்தானியத் தீவுகள் 10.000 ஆண்டு காலமாக பணியால் மூடப்பட்டே இருந்தது. இன்றும் உலகின் வடதுருவமும், தென் துரு வமும் பணியால் மூடப்பட்டேயுள்ளன.
1 த பைபிள் த குர் ஆன் அன்ட் சைன்ஸ்.

மருதூர் ஏ. மஜீத் 9
மேலும். 1970ம் ஆண்டளவில் செய்யப்பட்ட ஆய்வுகள் இந்த உலகம் 330 கோடி ஆண்டுகளுக்கு முன் உற்பத்தியானது என்று கூறுகிறது.
இஃதே வேளை மார்க்ஸ் பிளாங் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகம் தோன்றி விட்டது எனக் கூறுகின்றனர்.
தோன்றிய காலத்தில் வித்தியாசம் இருந்தாலும், தோற்றத்தில் வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை.
இந்த உலகம் பிரபஞ்சத்திலே மிக மிகச் சிறியதொரு புள்ளி போன்றதே. அதாவது, வெள்ளையடிக்கப்பட்டுள்ள பெரியதொரு வீட்டின் சுவரிலே எழுதும் பேனையால் இடப்பட்ட ஒரு புள்ளி போன்றது இந்தப் பூமியும் அதனோடு சேர்ந்த சூரியக் குடும்பமும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்தப் பிரபஞ்சத்தின் விட்டம் பற்றிக் கூற வந்த விஞ்ஞானிகள் 70 கோடி ஒளியாண்டுகள் என்கிறார்கள்.
1 குர்ஆனின் கருத்தினையே விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள் எனக் கொள்ள இடமுண்டு. இவ்வாறு தோன்றிய இப்பூமியில், இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தென்கோணத்தில் இருந்த பகுதியினை விஞ்ஞானிகள் "கோண்ட்வானா" எனப் பெயரிட்டழைத்தனர்.
கோண்ட்வானா என்ற இந்தத் தெற்குப் பகுதியில் இப்போதிருக்கின்ற தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, அண்டாட்டிக் போன்ற பகுதிகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரே கண்ட மாகவே, இருந்தன.
**கோண்ட்வானா' கண்டத்தின் ஒரு சில பகுதிகள் கடல் கொண்ட பின்பும், அவுஸ்த்திரேலியா, ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை என்பன ஒன்றாகவே இருந்தன. இக் கண்டத்தினை லெமூரியாக் கண்டம் என விஞ்ஞானிகள் அழைத்தனர்.
இந்த லெமூரியாக் கண்டமும் கடற் கோள்களால் அழிக்கப் படவே ஒன்றாக இருந்த அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா என்பன பிரிந்து விட்டன.
இச்சம்பவத்தினை நாம் தொடர் மதங்கள் கூறுகின்ற நூஹ" நபி அவர்களது காலத்தின் வெள்ளப் பெருக்கோடு சேர்த்து நோக்க
சேது முதல் சிந்து வரை.

Page 12
20 மருதூர் ஏ. மஜித்
முடியும். அதாவது, நூஹ" நபி அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது லெமூரியாக் கண்டம் கடலுள் மூழ்கிய தாகக் கொள்ள முடியும்.
இந்த வெள்ளம் கி. மு. 2384இல் ஏற்பட்டதாகச் சில வரலாறு கள் கூறுகின்றன. இதன் பின்பும் ஒரு கடல் கோள் எற்பட்டுள்ளது. இக்கடற் கோள் ஏற்பட்ட பின் எஞ்சிய பகுதி குமரிக் கண்டம் என அழைக்கப்பட்டது.
இக்குமரிக் கண்ட காலத்தின் போதுதான்-இந்தியாவும், இலங்கையும் பிரிவுண்டது எனலாம். ஆரம்பத்தில் இலங்கையையும், இந்தியாவை யும் பிரித்த ஆறு பகுறுளி ஆறு எனப்பட்டது.
இது நான்கைந்து அடி அகலம் கொண்டதாகவே இருந்தது. 1 இதனை வேறு வகையாகக் கூறுவதாயின் ஒருவர் பாய்ந்து கடக்கக்
கூடிய அளவாகவே இந்த ஆறு இருந்தது எனலாம்.
நாளடைவில் இது விரிவடைந்தது. இராமருடைய காலத்தில் இவ்வாற்றில் அணையிட்டுக் கடக்க வேண்டி ஏற்பட்டது. பின் இது தோணியில் கடக்க வேண்டிய துறையாகி, இன்று கப்பல் பிரயாணமாகியுள்ளது. அதாவது கடலாகி விட்டது.
இதனைப் பின்வரும் சம்பவங்களும் நிரூபிக்கின்றன. 2 திபேத் நாட்டில் திபேத்திய மலைத் தொடரின் நடுவில் 4580 மீற்றர் உயரத்தில் பிரமாண்டமான உப்பு நீர் ஏரியொன்று இருக்கிறது.
இந்த ஏரியில் ராட்சதத் திமிங்கிலம் வசிப்பதாகக் கருதப்படுகிறது. அந்தத் திமிங்கிலத்தின் உடல் ஒரு பெரிய வீட்டின் அளவு இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
ஒரு சமயம் அந்த ஏரியில் கட்டியிருந்த பசுவை அந்தத் திமிங்கிலம் இழுத்துச் சென்று விட்டதாம். இன்னொரு சமயம் ஒரு படகையும், அதில் இருந்த நபரையும் இழுத்துச் சென்று விட்டதாம்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி கடலாக இருந்தது. கடற் கோள்கள் ஏற்பட்ட போது இப்பகுதி மலையாகவும், நிலமா கவும் ஆனதாகவும், இப்பள்ளத்தாக்கில் கடல் நீர் தேங்கி, உப்பு நீராகவே நிலைத்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
தமிழக வரலாறும், மக்கள் பண்பாடும். 2 பீங்கிங் ஈவினிங் நியூஸ் செய்தி

மருதூர் ஏ. மஜீத் 2.
1 மேலும், லெமூரியாக் கண்டம் பற்றி சோவியத் புவியிய லாளர் பேராசிரியர் "ராவிச்" என்பவர் கூறும் போது ஒரே கண்ட மாகவிருந்த லெமூரியாக் கண்டம் கடற் கோள்களால் பிரிந்து தற்போது அவுஸ்திரேலியா, அண்டாடிக்கா, கென் அமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா, இந்தோனிசியா. சுமாத்ரா, ஜாவா எனப் பல பிரிவுகளாசப் பிரிந்துள்ளது எனக் கூறுகிறார்.
கடற் கோள்கள் ஏற்பட்டது பற்றி பைபிள், அல்குர்ஆன் கிரேக்கக் காவியம், மச்ச புராணம் என்பனவும் குறிப்பிடுகின்றன.
ஆபிரிக்காவில் வாழும் நீக்ரோக் களின் சாயலிலே உள்ளவர்களை அவுஸ்திரேலியா கண்டத்திலும், நியூகினியிலும் மலாக்கா தீபகற் பத்தின் காடுகளிலும் காணக்கூடியதாக உள்ளது.
இவைகளெல்லாம் லெமூரியாக் கண்டத்தில் ஒன்றாக இருந்த மைக்குச் சான்றாகக் கூறலாம்.
அக்கொள்கையைப் பேராசிரியர் கெஹல், சேர் ஜோன் ஈவான்ஸ், ஸ்கொட் எலியட், சேர். ஜே. டபிளியூ ஹோல்ட்டர்னஸ் போன்ற ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
1 குமரிக்கண்டம் தென்னிந்தியாவுடனும், தென்ஆபிரிக்கா தென் அமெரிக்கா என ஒரு பக்கமும், மலேசியா, அவுஸ்திரேலியா என இன் னொரு பக்கமுமாகப் பரந்து விரிந்து இருந்ததாக கெஹல்கூறுகின்றார்.
இவரின் கருத்துப்படி முதல் மனித உற்பத்தியும் இக் கண்டத் திலேயே என்கிறார். இக் குமரிக் சண்டத்திலே இலங்கையும் அடங்கி யிருந்தது. தமிழ் நாட்டின் புகழ் மிக்க வரலாற்று ஆசிரியர் ந. சி. கந் தையாப்பிள்ளை அவர்களின் கருத்துப்படியும் இலங்கைத்தீவு கடலால் கொள்ளப்பட்ட குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.
அது மட்டுமல்ல, இவரின் கூற்றுப்படி முதல் இரு தமிழ்ச் சங்கங்களும் இலங்கையிலேயே இருந்ததாகக் கூறுகின்றார்.
இதனாலேதான் இலங்கையில் பிராமி, வட்டெழுத்துக் கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன என்கின்றார்.
மேலும், ஒரு கருத்து. இரண்டாம் கடற்கோள் ஏற்படுவதற்கு (முன் இலங்கையும், சேர நாடும் ஒன்றாகவே இருந்தது. இலங்கையின் மேற்குப் பரப்புத்தான் இவ்வாறு ஒட்டி இருந்திருக்க வேண்டும். 1 சேது முதல் சிந்து வரை

Page 13
22 மருதூர் ஏ. மஜித்
1 வேறு ஒரு இடத்தில் இதற்கு முன் விந்திய மலைக்கு வடக் கேயுள்ள இப்போதைய நிலப் பரப்பு இமயமலை உட்பட்ட நீரில்
மூழ்கி இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
இமயமலையில் இன்று காணப்படும் கடல் விலங்குகளின் எலும்புக் கூடுகளின் கற்பதிவுகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
இவ்வாறு தோன்றிய புவியில் மனிதனின் தோற்றம்பற்றி இனி விஞ்ஞானிகளின் கருத்தினை எடுத்து நோக்குவோம்.
மனிதன் திடீரெனப் படைக்கப்படவில்லை.
2 உலகிலே, நீர் நிலைகொண்ட எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளின் பின்பே அந்த நீரில் இருந்து 'அமீபா" தோன்றி, அதன் பரிணாம வளர்ச்சியே இன்றைய மனிதனின் தோற்றம் எனக் கூறுகின்றார்கள் அந்த விஞ்ஞானிகள்.
3 அவர்கள் மேலும் கூறும் போது 40 முதல் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் "சிம்பன்சி' குரங்கினத்திலிருந்து அறிவு வளர்ச்சி கொண்ட ஒரு புதிய மனித இனம் தோன்றியது என்கி றார்கள். மேலும்,
30 முதல் 40 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனும், மிருகமுமற்ற ஓர் இனம் உலகில் உருப் பெற்றது.
இவ்வினத்தைச் சேர்ந்த பெண்ணின் எலும்புக் கூடு 1974ம் ஆண்டு எதியோப்பியாவில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இப்பெண்ணை "லூசி" என விஞ்ஞானிகள் பெயரிட்டழைத்தனர்.
லூசியின் காலத்திற்குப் பின்னர் வாழ்ந்த அதாவது, 50 இலட்சம் ஆண்டுகளுக்கும் 15 இலட்சம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்து மண்டையோடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இம்மண்டையோட்டு மனிதர்களை "ஹோமோ ஹெபிலிஸ்" எனப் பெயரிட்டழைத்தனர் விஞ்ஞானிகள்.
கருத்துக் கோவை. 2 சித்த மருத்துவ சிந்தாமணி. 3 தினகரன் ஞாயிறு மஞ்சரி வெளியீடு. 15-12-91

மருதூர் ஏ. மஜித் 23
இதற்குப் பிந்திய காலமான 15 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை இடைப்பட்ட கால மனிதரே ஜாவா பீங்கிங் மனிதர்கள்.
ஆர் காயிக ஹோமோ சேபியன் என்பது அடுத்த தலைமுறை யினரின் பெயராகும். 5 இலட்சக்கிற்கும் இரண்டரை (2) இலட்சத் திற்கும் இடைப்பட்டது இத்தலைமுறையினரின் காலம் எனலாம்.
இதற்கு அடுத்த தலை முறையினரே மிட்டோ கொன்றியா. இவர்கள் கொஞ்சம் முன்னேற்றமுடைய மனித இனத்தினர். காலம் 2 இலட்சத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.
இதன் பின்னர் "நிஹண்டர்ஹல்" மனித இனத்தைச் சேர்ந் தவர்கள் தோன்றினார்கள். இவர்கள் கபில நிறமுடையவர்களாக இருந்திருக்கவேண்டும்.
இதன் பின்னர் தோன்றியவர்கள் "குறோ மக்கள்" என அழைக்கப்படுகின்றனர்.
கடைசிப் பத்தாயிரம் ஆண்டுகளே விவசாயக் காலமாகும். மனிதர்கள் காடு, குகைகளை விட்டு ஆற்றுப் படுக்கையை அடைந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தது இக்காலத்திலேயே ஆகும். இதனை நவீன 'ஹோமோ சேபியன்’ காலமென அழைக்கலாம். பசு வணக்கம், சூரிய வணக்கம், நாக வணக்கம் போன்றவற்றுக்கு இச் சூழல் உதவியாக இருந்தது.
அடுத்த ஐயாயிரம் ஆண்டுகளில் மொழிகளும், எழுத்துக்களும் தோன்றின. கடவுள் நம்பிக்கையும், மதங்களும் தோன்றின.
இனி அடுத்த வேதக் கருத்தினை எடுத்து நோக்குவோம். ஆதத்தினையும், அவர் மனைவி அவ்வாவினையும் படைத்து (ஆதம், ஈவ்) இருவரையும் எங்கு மண் எடுத்துப் படைக்கப்பட்டதோ அதே பூமிக்கு அனுப்பி வைத்ததாகக் கூறுகிறது, அந்த வேதக் கருத்து. இரண்டு கருத்தினையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது பின்வ ருமாறு கருத இடமிருக்கிறது.
உலகிலே நீரிலேயிருந்து பரிணாமம் பெற்ற மனிதக் குரங்கினம் உற்பத்தியான கால கட்டத்தில் வேறு ஒரு கிரகத்தில் இருந்து அல்லது சொர்க்கத்தில் இருந்து இங்கு மனிதன் வந்து சேர்ந்ததாகக் கொள்ளலாம்.

Page 14
24 மருதூர் ஏ. மஜித்
பரிணாமம் பெற்ற மனிதக் குரங்கினத்திற்கு இராமாயணத்தில் வருகின்ற அனுமான், வாலி, சுக்ரீவன் போன்றவர்களைக் குறிப்பிட முடியும்.
அத்தோடு, இபுனு பதூதா இலங்கை வந்த போது-இலங்கை அரசருக்கு உதவி செய்து கொண்டிருந்த மனிதக் குரங்குகளையும், தனக்கு ஆதம்மலை செல்வதற்கு உதவி செய்த மனிதக் குரங்கினையும் கூற முடியும்.
இதே இன மனிதர்கள் இமயமலையில் பனி மனிதர்களாக உலாவுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும், சில புவியியலாளர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுதேசிகள் எனக் கூறக் கூடியவாறு இந்தக் குரங்கு மனித இனம் வாழ்வதாகக் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்து இங்கு எமக்கு முக்கியமானதல்ல என்பதனால் இதனை விடுத்து விடயத்திற்கு வருவோம்.
விஞ்ஞானிகள், மனித வளர்ச்சி 150 கோடி ஆண்டு சரித்திரத் தைக் கொண்டது எனக் கூறுகிறார்கள்.
1950 களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி மனித உற்பத்தி 400 கோடி ஆண்டு வரலாற்றைக் கொண்டது எனக் கூறுகின்றது.
1 1970 களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 330 கோடி ஆண்டுகளுக்கு முன்னுள்ள புவியியல் சரித்திரங்கள் மனித உற்பத்தியை எடுத்துக் காட்டுகின்றன.
இப்பொழுது 380 கோடி ஆண்டுகளுக்கு முந்திய காபன் சரட் பாறைகள் கண்டு பிடிக்கப்பட்டு, மனித உற்பத்தி 500 கோடி ஆண்டுகளுக்கு முன் தள்ளப்பட்டுள்ளது.
இதனை மார்க்ஸ் பிளாங் நிறுவன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு தொன்மை வாய்ந்த மனித உற்பத் தியின் ஆரம்பம் லெமூரியாக் கண்டமே என்பதில் மதவாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்குமிடையே எதுவித கருத்து வேறுபாடுகளும் இல்லா திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
சொர்க்கத்திலே படைக்கப்பட்ட ஆதமும், அவர் மனைவி அவ்வாவும் உலகிலே வீசப்பட்டார்கள். உலகிலே ஆதம் வீசப்பட்ட
சிந்தாமணி 12 - 08 - 79

மருதூர் ஏ. மஜித் 25
இடம் சரந்திப் எனவும், " அவ்வா வீசப்பட்ட இடம் ஜித்தா எனவும் இருவரும் சந்தித்த இடம் " " அறபா’ எனவும், வாழ்ந்த இடம் ஜெருசலம் எனவும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள்.
ஜித்தா எனும் சொல் மூ காட்டி எனும் பொருளினையும் "அறபாத்' எனும் சொல் சந்தித்தல் டினும் பொருளினையும் குறிப்பதிலிருந்தே நாம் இச் சம்பவம் உண்மை என்பதனை ஊகிக்க முடிகிறதல்லவா?
2 பலஸ்தீனம் என்னும் இடத்தில் வாழ்ந்த ஆதத்தின் குடும் பத்தினர் 40 தடவை, சுவர்க்கத்தில் இருந்து ஆதம் வீசப்பட்ட இடமான சரந்தீவிற்கு வந்து போனதாகச் சில வரலாறுகள் கூறுகின்றன
ஆதமும், அவ்வாவும் தோற்றுவித்த சந்ததியினரே லெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்து வந்தனர்.
* இவர்களது பரம்பரையிலே பத்தாவது தலைமுறையினரின் போதுதான் பெரு வெள்ளம் (நூஹ" நபி கால வெள்ளப் பெருக்கு) ஏற்பட்டு, உலகின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கின.
இது பற்றித் தொடர் மதங்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் கூறியுள்ளதை நாம் அவதானிக்க முடியும்.
நூஹ" நபி அவர்களின் பத்தாவது தலை (மறையில் அதாவது, ஆதம் நபியின் இருபதாவது தலைமுறையில் நபி இப்றாகீம் (ஏப்ரகாம்) அவர்கள் உலகை ஆட்சி செய்தார்.
4 நபி ஆதம் (அலை) அவர்கள் உலகில் 1000 வருடங்கள் உயிர் வாழ்ந்ததாகச் சில நூல்கள் கூறுகின்றன.
ஆதம் நபியின் வழித்தோற்றலே சீது என்பவர். சீதுவே, சேது மன ஆயிற்று. சீதுவின் வழித் தோன்றலே இராமர்.
இதனால்தான் இராமரைச் சீது இராமன் என அழைத்தனர். சீது இராமனே நாளடைவில் சேது இராமன் ஆயிற்று எனலாம்.
பிறைக் கொழுந்து நபிமார்கள் வரலாறு த பைபிள் த குர் ஆன் அன்ட் சைன்ஸ் நபிமார்கள் வரலாறு
:

Page 15
26 மருதூர் ஏ. மஜித்
1 இராமர் எனும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். ஏப்ரகாம் இராமருடைய பரம்பரையே. அபிராமு என்பது அபுராமு என ஹீப்ரு மொழியில் வழங்கியுள்ளது.
அபூ என்பது ஹீப்ரு மொழியில் தந்தை எனப் பொருள்படும்.
2 எனவேதான் இராமர் தந்தை எனப் பொருள்பட அபுராமன், எபுராமன் - ஏப்ராம் - இப்றாகீம் எனத் திரிந்து வந்துள்ளது எனலாம்.
சுமேரியர்கள் இராமரை வாயு பகவான் (AIR GOD ) என அழைத்துள்ளார்கள்.
3 நூஹ" நபியவர்களுக்கு ஹாம் எனும் ஒரு மகன் இருந்தார். இவருக்கு ஹிந்து, ஸிந்து, னஞ், நூபா, கன், ஆன் போன்ற ஒன்பது ஆண் மக்கள் இருந்தனர்.
இவர்கள் பதினெட்டு மொழி பேசக் கூடியவர்களாக விரிவடைந் தனர். இவர்கள் நூஹ" நபியவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் பின் வெவ்வேறு இடங்களில் போய்க் குடியேறினர்.
ஹாம் என்பவர் போய்க் குடியேறிய இடம் இன்றைய ஆப்கா னிஸ்தானாக அல்லது, எகிப்தாக இருக்கலாம்.
இவரின் பிள்ளைகளில் ஒருவரான சிந்து போய்க் குடியேறிய சிந்து என அழைக்கப்பட்ட சிந்து தேசமாக இருக்கலாம். (இன்றைய பாகிஸ்தான்)
ஹிந்து போய்க் குடியேறிய இடம் ஹிந்து என அழைக்கப்பட் டிருக்கலாம். இது இன்றைய இந்து தேசம் இந்தியாவாக இருக்கலாம்.
இதனை இவ்வாறும் கூறலாம். உலகின் மனித உற்பத்தியும், வளர்ச்சியும் லெமூரியாக் கண்டத்தில் ஆதத்தோடு ஆரம்பமாகி, நூஹ0 நபியவர்களின் காலத்தின் பின் (வெள்ளத்தின் பின்) குமரிக் கண்டத்திலே இப்றாகீம் நபியவர்களின் காலத்தில் எதி யோப்பிய நாகரிகமும், ஹாமுடைய காலத்தில் எகிப்திய நாகரிகமும், இவருடைய மக்களாகிய சிந்து, ஹிந்து ஆகியவர்களுடைய காலத்தில் சிந்து வெளி நாகரிகமும் உற்பத்தியாகியது எனலாம்.
1 Genasis Bible 17 | 5
2 The Island Editorial Page 29 - 3 - 1990 ? நபிமார்கள் வரலாறு

மருதூர் ஏ. மஜித் 27
இந்தியாவில் ஆதிச்ச நல்லூர் ஆய்வும் இதனை நிரூபிக்கின்றன. அத்தோடு பின்வரும் குறிப்புக்களும் இதை நிரூபிக்கின்றன.
பூர்வீக கிரேக் கரும், ரோமரும், ஜெர்மனியரும், ஆங்கிலேயரும் சிலாவான யரும் , தூத்தானியரும் ஐரோப்பிய இனங்களின் பூர்வீக பிதாக்களும், இந்திய ஆரியர்களுடைய பூர்வீக பிதாக்களும், பேர் சியர்களின் பூர்வீக பிதாக்களும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒன்றாய் வசித்தவர்களே,
இவர்கள் வாழ்ந்த இடம்பற்றி அபிப்பிராயபேதமுண்டு. ஆனால் இவர்களின் பூர்வீகம் உலகின் வடமேற்கு மூலைக்கு அருகாமை யிலேயே இருந்தது. இங்கிருந்து இவர் ளரில் ஒரு பகுதியினர் புறப்பட்டு மத்திய ஆசியாவிற்குள் வந்து, அங்கு அனேக காலம் தங்கிய பிறகு ஐரான் என்ற பேர்சிய தேசத்திற்கு இவர் சளில் ஒரு சிலர் வந்து குடியேற மற்றப்பகுதியினர் கிழக்கு முகமாசப் புறப்பட்டு ஆப்கா னிஸ்தான் வழியாகப் பாஞ்சாலம் என்ற பஞ்சாப் தேசத்திற்கு வந்து இந்தியாவிற்குள் பிரவேசித்து, இந்திய ஆரியர்களுக்குப் பூர்வீகப் பிதாக்கள் ஆகினர்.
பூர்வீக ஆரியர்களுடைய மதத்தின் முக்கிய அம்சம் யாதெனில் இயற்கை சத்துவ வணக்கமேயாகும்.
சூரியன், சந்திரன், அக்கினி, வாயு, ஜலம் இவைகளையே பூர்வீக ஆரியர் வணங்கினர்.
இவைகள் வானலோகத்தில் இருந்தமையால் இவற்றுக்கு வான ஜோதி என்று அர்த்தம் கொள்ளும் "தேவர்' எனும் பெயர் உண்டாயிற்று.
இந்திரன் (மழை) வர்ணன் (வானம் , அல்லது 1ெ யு,) சூரியன் அக்கினி என்ற பெயர்களும் இந்தப் பொருளிலேயே இடப்படடுள்ளன எனலாம். . மேற்கூறிய கருத்துக்கள் உலகம் எவ்வாறு தோன்றிற்று என்பதனையும், அதில் மக்கள் எவ்வாறு உற்பத்தியாகி, வளர்ச்சியுற்றுப் பரந்து வாழ்ந்தார்கள் என்பதனையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாறு பல்கிப் பெருகிய மனித இனம் உலகமெங்கனும் எவ்வாறு குடியேற்றங்களையும் நாகரிகத்தையும் தன்வயமாக்கிக் கொண்டன என நோக்குவதற்கு முன் சுவர்க் த்தில் இருந்து வீசப் பட்ட - அல்லது இறக்கி  ைவக் கப்பட்ட ஆதம் (அலை) எனும் முதல் மனிதன் வந்து தரித்த சரன் தீவின் மலையாகிய ஆதம் மலைபற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் சிறிது பின்னோக்கிப் பார்த்துச் செல் லுதல் பொருத்தமுடையதாகும்.
1 ஹிந்துமத சாஸ்திரம்- பாகம் 01

Page 16
28 மருதூர் ஏ. மஜித்
பாவா ஆதம் மலையும் உலகளாவிய அதன் முக்கியத்துவமும்.
33 சென்ற அத்தியாயத்திலே உலகின் முதன் மனிதன் ஆதம், சரன் தீவிலே உள்ள ஆதம் மலையிலே இறைவ னால் இறக்கி வைக்கப்பட்டதாகவும், அவர் மனைவி அவ்வா ஜித்தாவிலே இறக்கப் பட்டதாகவும் இருவரும் அறபாத் என்னுமிடத்திலே சந்தித்துப் பின் "ஜெருசலத்தில் வாழ்ந்ததாகவும், அங்கிருந்து 40 தடவைகளுக்கு மேல் சரன் தீவிலுள்ள ஆதம் மலைக்கு வந்து போனதாகவும்,
இதனைத் தொடர்ந்து அவரது பிற்சந்ததியினரும் இம் மலைக்குப் புனித யாத்திரை வந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
இனி இது பற்றி விரிவாக ஆராய்வோம்.
ஆதம் நபி வீசப்பட்ட சரன்தீவு எனும் இலங்கைத்தீவு, அத் தீவிலுள்ள ஆதத்தின் பாதம் பதிந்த மலையான ஆதம் மலை பற்றியும் உலகமெங்கும் வியாபித்த - பலராலும் அறியப்பட்ட ஒரு விடயமாக இருப்பதை நாமறிவோம். சரன்தீவிலுள்ள இந்த ஆதம் மலை 7360 அடி உயரமுள்ளது. சில இடங்களில் இதன் உயரம் 7420 அடியெனவும் குறிக்கப்பட்டுள்ளது. இது 74 அடி நீளமும், 24 அடி அகலமும் கொண்ட தள உச்சியை உடையதுமாகும்.
இத்தளத்திலே ஆதம் நபியவர்களின் பாதம் எனக் கருதப்படும் அடையாளம் ஒன்று காணப்படுகிறது. இது 5 அடி, 4 அங்குல நீளமும் 2 அடி 6 அங்குல அகலமுங் கொண்டதாகும்.
1 நபிமார் வரலாறு.

ዜp(ባነኀ›ዞሰ 6ቻ• “ጭg፬ቇ 29
1954ஆம் ஆண்டு நான் மாணவனாக இருந்த போது இம் மலையைத் தரிசித்தேன். இம்மலையின் உச்சியில் முஸ்லிம்களின் பள்ளி வாசலும், ஹிந்துக்களின் கோயிலும், பெளத்தர்களின் டரோபாவும் காணப்பட்டன. அப்போதெல்லாம் மும்ம தச் சமரசம் அங்கு நிலவியது. 1939ம் ஆண்டு கூட இந்நிலைமையே அங்கிருந்தது.
1975ம் ஆண்டு மூன்றாவது தடவையாக நானங்கு சென்ற போது பள்ளிவாசலையும், ஹிந்துக் கோயிலையும் காணமுடி யவில்லை. அத்தோடு பாதத்தினைத் தரிசிக்க முடியாதவாறு வளைத்து வேலி அடைத்திருந்தார்கள். பெளத்த மக்களின் ஏகபோ சுமே அங்கு நிலவியது.
முஸ்லிங்கள் இம்மலையினை இன்றும் பாவா ஆதம்மலையென்றே அழைக்கின்றனர். அறபியில் இதனை ஜபல் ஆதம் என்றும் அழைப் பதுண்டு. ஹிந்துக்கள் இதனைச் சிவனொளி பாத மலையென்றும், பெளத்தர்கள் இதனை சிறிபாத மலையென்றும், கிறிஸ்தவர்கள் ஆடம்ஸ்பீக் என்றும் அழைக்கிறார்கள்.
இம்மலையின் சமஸ்கிருதப் பெயர் "றோஹன' என்பதாகும். இம்மலையினைப் போர்த்துக்கேயர் பைக் கோடி ஆதம் என அழைக் கின்றனர். இம்மலை மஸ்கேலிய மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் ஏறுவதற்கு இரத்தினபுரியில் இருந்து ஒரு வழியும், மஸ்கேலியாவில் இருந்து ஒரு வழியும் கொண்டதாக அமைந்து காணப்படுகின்றது.
இம்மலையின் பண்டையத் தமிழ்ப் பெயர் சுவர்க்கா ரோக என்பதாகும். பண்டையக் கிறிஸ்தவர்கள் இம்மலையை வழிபட்டு வந்துள்ளனர்.
மத்திய கிழக்கு வாசிகளோடு இந்தியா, சீனா, ஜப்பான், பர்மா ஸ்பெயின், ஆபிரிக்கா, போன்ற நாடுகளில் இருந்தும் இம்மலையைத் தரிவிக்க மக்கள் வந்துள்ளனர்.
இப்னு பதூதா இங்கு வருவதற்கு சுமார் ஐம்பது ஆண்டு களுக்கு முன் மார்க்கோ போலோ இங்கு வந்து இம்மலையில் ஏறிய காக அறியக் கிடக்கின்றது. இப்னு பதூதா இம்மலையில் ஏறி இறங்கியது 1344ல் ஆகும்.
Tதினகரன் வாரவெளியீடு 09-02-1992

Page 17
30 மருதூர் ஏ. மஜித்
இம்மலையின் அடிவாரத்தில் "ஸ்கந்தர்?’ எனும் பெயர் கொண்ட குகையொன்றும், நீர் ஊற்றும் உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் கருங்கல்லில் - அரபு மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவ்வாசகம் 'முஹம்மதுவே மனிதனின் ஆதித் தந்தை அவரை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.’’ என்பதாகும்.
"பாவா ஆதம் மலை பற்றி பாரசீகக் கவிஞர் ஒருவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். மேலும்,
29ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் வாழ்ந்தவரான சுலைமான் எனும் தேசசஞ்சாரி இம்மலையைத் தரிசித்தது மட்டு மல்லாது, இம்மலை பற்றிய குறிப்புக்களையும் எழுதி வைத்துள்ளார். இவரது குறிப்புக்களின்படி இம்மலையில் சிவப்பு மாணிக்கம் கிடைத் ததாக அறியக் கிடக்கின்றது.
இவருக்கு 60 ஆண்டுகளுக்குப் பின் வந்த அபூ செய்யது என்ற எழுத்தாளரும் இம்மலையின் மாணிக்கக்கற்கள் பற்றியும், வாசனைத் திரவியங்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
மேலும், ஆயிரத்து ஒரு இரவுகள் கதையின் ( அல்பு லைலா வலைலா) ஆசிரியர், சிந்தாபாத் தனது எழாவது கடற்பிரயாணத்தின் போது இலங்கையை தரிசித்ததாகவும், அத்தரிசிப்பின் போது மிக உயர்ந்த சிகரத்தில் ஏறியதாகவும், அங்கு அவர் சிவப்பு மாணிக்கம், வாசனைத் திரவியங்களைக் கண்டதாகவும் எழுதியுள்ளார்.
உயர்ந்த சிகரமென இங்கு அவர் குறிப்பிடுவது ஆதம் மலை யையே. சீன வரலாறுகளிலும் ஆதம்மலை பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இம்மலையில் பதிந்துள்ள பாதத்தில் உள்ள பெருவிரலையும், அதற்குப் பக்கத்தில் உள்ள விரலையும் பெயர்த் தெடுத்துச் சென்று சீனாவில் உள்ள 'சைத்தூன்” எனும் நகரில் உள்ள கோயிலில் வைத்துப் பூசிக்கின்றார்கள்.
மஸ்ஜிதுல் நபவியில் ஒருநாள் நபியவர்கள் அமர்ந்திருந்து இந்தியாவின் தென் திசையில் இருந்து ஆதி இஸ்லாத்தின் தென்றலை
நான் உணருகின்றேன் எனக் கூறியுள்ளார்கள்.
இது சரன் தீவாகிய இலங்கையையும், ஆதம் நபியவர்களின் பாதம் பதிந்தமையையுமே சுட்டுகின்றது எனலாம்.
1 நபிமார்கள் வரலாறு. 2 இலங்கைச் சோனகர் பற்றிய கடந்தகால நினைவுகள்

மருதூர் ஏ. மஜீத் 3.
மேலும், இந்தியாவின் தேவ்பந் அரபுக் கல்லூரியின் முதல் அத்தியட்சகர் தனது "இஸ்லாம் அவ்ர் பிர்க்கா வாரியத்’ எனும் உர்து நூலில் பின்வருமாறு கூறுகின்றார்;
ஹசறத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், கலீபா அலி (ரலி) அவர்களும் ஆதம் நபி அவர்கள் முதன் முதல் இறங்கிய இடம் இலங்கையின் - சரன்தீவில்; ஆதம் மலையே எனக் கூறியுள்ளார்கள். இருவரும் சரன்தீப் எனும் சொல்லையே உபயோகித்துள்ளனர்.
"ஜித்தாவில் வீசப்பட்ட ஹவ்வா அவர்களைத் தேடி ஆதம் நபியவர்கள் தமிழகம் ஊடாக மத்திய கிழக்கிற்குச் சென்று ஜித்தாவில் ஹவ்வாவினைச் சந்தித்தார்கள். எனச் சில வரலாறுகள் கூறுகின்றன.
மேலும், கி. பி. 956ல் இலங்கை வந்த மஸ்ஊதி (ரஹ்) அவர்கள், ஆதம் நபியவர்கள் இலங்கையில் உள்ள 'பூஸ்” எனும் மலையிலேயே அடங்கியுள்ளார்கள் எனக் கூறியுள்ளார்கள்.
மேலும், சுலைமான் சைராபி என்ற அராபிய வியாபாரி கி. பி. 817ல் தான் எழுதிய பிரயாணக் குறிப்புகளில் இலங்கைத் தேங்காய் பற்றிக் கூறியுள்ளார்.
மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட **எரித் தியக் கடலின் பெரிப்ளுஸ்" எனும் நூலில் டபிள்யூ. எச். ஸ்காபி என்பவர் தன்னுரையில் பதிப்பித்துள்ளார். அதன் பதிப்புரையில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:
"பீசீனியர் எனப்படும் அராபியர் மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டு வந்த வாசனைத் திரவியங்களை எகிப்திலே இறக் கி வியாபாரம் செய்தனர். இது கி. மு. 1500 - 1300க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாண்ட எகிப்தின் பதினேழாம் தலை முறை அரசனின் காலத்திலாகும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானியக் கவிஞர் அஸ்ரப் மகா அலெக்சாந்தர் கி. மு. 300ல் பொலினஸ் என்ற தத்துவ ஞானியுடன் இம்மலையில் ஏறினார் என்றும், கனது கப்பலில் உள்ள பெரும் சங்கிலிகளைக் கொண்டு வந்து இம் மலையில் ஏறுவதற்கு உதவி செய்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கேள்வி அறிவால் தென்னிந்தியாவைப் பற்றி எழுதும்
பிறைக் கொழுந்து.

Page 18
32. மருதூர் ஏ. மஜித்
1" "மெக்கஸ் தெனிஸ்” என்ற கிரேக்க அறிஞர் இலங்கை யை "தப்ரபான்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
இஃது இந்தியாவில் இருந்து ஒர் ஆற்றினால்தான் பிரிக்கப்
பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஆதாரமற்ற ஒரு ஹதீஸ் ஆதம் (அலை) அவர்கள் ராகூனு எனுமிடத்தில் இறக்கப்பட்டார் எனக் கூறுகிறது. இந்த இடமாகிய ராகூனு - றுகுணுறட்டையாக இருக்கலாம்.
றுகுணுறட்டையிலேயே ஆதம் மலை இருக்கிறது.
மேலும், கி. பி. 833ல் வாழ்ந்த பைஹகீ (ரஹ்) அவர்களும் ஆதம் நபியவர்கள் சரந்தீவாகிய இலங்கையிலேயே தூக்கி வீசப்பட்டார் எனக் கூறுகிறார்.
கி. பி. 1332ம் ஆண்டளவில் இலங்கையைத் தரிசித்த தேசாந் திரி சேர் ஜோன் மாண்டர்வில் என்பவர் ஆதமும், ஏவாளும் இம் மலையிலேயே வாழ்ந்ததாகவும் ஏவாள் இறந்ததும், ஆதம் ஏவாளின் மரணத்தையிட்டுத் துக்கம் கொண்டதாகவும் கூறுகின்றார்.
மேலும், கி. பி. 838ல் பிறந்த தபரி என்னும் அராபியர் இலங்கையைப் பற்றிக் கூறும் போது ஆதம் மலை பற்றியும் கூறியுள்ளார் இவர் ஆதம் மலையை விட உயரமான மலை உலகிலேயே இல்லையென மிகைப்படுத்தியும் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வந்த தேசாந்திரிகளில் இப்னு பதூதா மிகவும் முக்கியமானவர். இவர் 1344ல் ஆபிரிக்காவின் தன்சீர் என்னுமிடத்தில் இருந்து இலங்கைக்கு வந்தார்.
இவர் கி. பி. 942ல் இந்தியாவில் இருந்து இங்கு வந்து ஆதம் மலையைத் தரிசித்து - இலங்கையிலேயே காலமான இமாம் அபூ அப்துல்லாஹ் என்பவருடைய சமாதியைத் தரிசித்த தாகவும் எழுதியுள்ளார்.
மேலும், "தப்லீர் பைஸாவி", "த ப்ஸிர் காஸின்' போன்ற எல்லா குர்ஆன் விளக்கவுரை நூல்களும் ஆதம் நபியவர்கள் சரன்தீப் என்னுமிடத்தில் அல்லது, "நூத்” என்னும் மலையின் மீது இறங்கி
* இலங்கைச் சரித்திர வினாவிடை.

மருதூர் ஏ. மஜித் 33
னார்கள் என்றும் ஹவ்வா அவர்கள் அரேபியாவில் உள்ள "ஜித்தா” என்னுமிடத்தில் இறங்கினார்கள் என்றும் கூறுகின்றது.
மேலும், இமாம் இப்னு ஹஜர் அவர்களின் "துஃபா” என்ற நூலில் ,ெ ரந்தீவில் இருந்து ஆதம் நபியவர்கள் ஹஜ்ஜுக்காக நாற்பது முறை திருமக்காவிற்கு நடந்து வந்ததாகக் கூறுகிறார். இப்பிரயாணத்தின் போதுதான் ஜித்தாவில் வைத்து ஹவ்வாவைச் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இப்னு பதூதா அவர்கள் புத்தளத்தில் இறங்கி ஆரியச் சக்கரவர்த்தியைச் சந்தித்த போது - சக்கரவர்த்தி **விரும்பியது வேண்டுமின்” என்று கேட்கையில் இப்னு பதூதா அவர்கள் நான் இத்தீவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆதம் அவர்களின் புனித பாத அடையாளத்தைத் தரிசிக்கும் அவாதவிர வேறு எதுவுமில்லை" என்று கூறியதிலிருந்து இலங்கையைத் தரிசித்த அனைத்து யாத்திரிகர்களினதும் நோக்கம் ஆதம் மலையைத் தரிசிப்ப தேயன்றி வேறில்லை எனப் புலப்படுகிறதல்லவா?
மேலும், வேறு ஒரு செய்தி. இம்மலையைத் தரிசிக்க பக் தாதிலிருந்து முகையதின் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் வந்ததாகவும் இவர் ஆதம் மலையைத் தரிசித்து விட்டு இப்போதுள்ள தஹ்தர் ஜெயிலானி மலையில் ஒய்வெடுத்ததாகவும் கூறுகிறது.
மேலும். மூன்று நாள் தொலைவால் கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் கூடத் தெளிவாக இம்மலையைக் காண முடியும் என அறியக் கிடக்கிறது.
2மேலும், பெருமானாருக்குப் பின் ஆட்சி செய்த நான்காவது கலீபா ஹசறத் அலி (ரலி) அவர்கள் ஒரு நாள் தோழர்களை நோக்கி இந்தியாவின் மண் நறுமணம் உள்ளதாக இருக்கிறதே இதற்குக் காரணம் என்ன? என்று வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள் தெரியாது என்று விடை பகர்ந்தனர். ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு எறியப்பட்ட போது அவர்களது உடலில் சுவர்க்கத்து இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவைகள்
இலங்கைச் சோனகர் கடந்த கால நினைவுகள். நபிமார்கள் வரலாறு.

Page 19
34 மருதூர் ஏ. மஜித்
காற்றினால் தள்ளப்பட்டு கீழே விழுந்தன. கீழே விழும் பொழுது அவை எந்த மரத்தில் போய்ப் பட்டனவோ அந்த மரங்கள் மணம் பெற்று விட்டன.
எனக்கூறி இலங்கையிலும், இந்தியாவிலும் விளைகிற வாசனைத் திரவியங்களையே சொல்லாமல் சொல்லியுள்ளார்கள் எனக் கொள்ள இடமிருக்கிறது எனலாம். ஆதம் மலையைத் தரிசித்த இப்னு பதூதா அவர்கள் காலியில் இப்றாஹீம் எனும் கப்பல் தலைவன் வீட்டில் விருந்து உண்டதாகக் கூறியுள்ளார்.
மேற்கூறிய பல சம்பவங்களில் இருந்து ஆதம் மலையின் முக்கியத்துவத்தை நாம் உணர முடிகிறதல்லவா?
றுஹ"ணு என்றால் கிழக்கு என்பது பொருளாகும். கிழக்கில் இம்மலை அமைந்துள்ளதால் இம்மலையும் றுஹ"ணு எனப் பெயர் பெற்றிருக்கலாம். இந்த ஆதம் மலைக்கு ‘சமணல" என்றும் பெயருண்டு.
இன்று இம்மலையைப் புத்த பிரானின் பாதம் பதிந்த மலை யெனப் பெளத்தர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் இம்மலை அன்றிலிருந்து இன்று வரை முக்கியத்துவம்பெற்றுவிளங்குவது பழைய நினைவுகளை இரை மீட்டுப் பார்த்து இன்புற உதவுகிறது எனலாம். இம்மலையின் உச்சியில் நின்று முகில்களோடு முகிலாகி, சூரிய உதயத்தைக் கண்டு இரசிப்பது மேலும் மனத்தை ரம்மியப்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.

மருதூர் ஏ. மஜீத் s
ஊரும், உறவும்
4. சென்ற அத்தியாயத்திலே ஆதம் மலை பற்றியும் அதன்
முக்கியத்துவம் பற்றியும் ஆராய்ந்தோம். t
மேற்குறித்த ஆதம் மலையின் முக்கியத்துவத்தினால் மத்திய கிழக்கு வாசிகள் புனித யாத்திரை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தனர்.
இப்புனித யாத்திரை நாட்கள் செல்லச் செல்ல வியாபார நோக்கமாகவும், வியாபாரமும் புனித யாத்திரையும் சேர்ந்த ஒரு வகைப் பிரயாணமாகவும் மூன்றாவது கட்டத்தில் குடியேற்ற நோக் கமாகவும் மேலும் காலம் செல்லச் செல்ல நாடு கடத்தப்படும் ஒரு இடமாகவும், தப்பி வருவோரின் புகலிடமாகவும் பரிணமித்தன எனலாம்.
"உலகில் 1000 வருடங்கள் உயிர் வாழ்ந்த ஆதம் நபியவர்களும், அவரது மனைவி ஹவ்வா (அலை) அவர்களும் இப்புவியிலே வாழ்ந்து மக்களைப் பெற்று மனித விருத்திக்கு உதவினர்.
ஆதம் நபியின் இருபதாவது வழித்தோன்றலான இப்றாகீம் நபியவர்களின் காலத்தின் பின்பே எழுதும் வழக்கம் ஏற்பட்டது எனலாம்.
நபி இப்றாகீம் (அலை) அவர்கள் 2யூப்றடிஸ், ரைக்கிறிஸ் நதி ஒரத்திலேயமைந்த 'ஊர்' எனும் இடத்தில் வாழ்ந்து ஆட்சி செய் தார்கள். இது இன்றைய ஈராக் பகுதியில் அமைந்துள்ளது. அதன் பின் பாரசீகம் எனவும் அழைக்கப்பட்டது. 'ஊர்' எனும் சொல் நாம் நினைப்பது போன்று திராவிட மொழிச் சொல் அல்ல. இது சுமேரிய மொழிச் சொல்லாகும்.
நபிமார் வரலாறு. 2 கிறிஸ்தவர் 9ம் ஆண்டு ஆதி வேதாகமம் 11:31
புதிய சமூகக் கல்வி 7ம் ஆண்டு.

Page 20
36 மருதூர் ஏ. மஜித்
'ஊர்' எனும் இச் சொல், மக்கள் நெருக்கமாக, அதாவது விவசாய நாகரிகத்தோடு வியாபாரமும் செய்த மக்கள் நெருக்க மாகக் குடியிருந்த இடங்களெல்லாம் 'ஊர்” என அழைக்கப்பட்டன.
இதனை இப்படியும் கூறமுடியும். சுமேரிய மக்கள் விவசாயத் திற்காக அல்லது வியாபாரத்திற்காக அல்லது குடியிருப்புகளுக்காக எங்கெங்கு போய்த் தங்கினார்களோ அந்த இடங்களெல்லாம் " " ஊர்” என அழைக்கப்பட்டன. உதாரணமாக மத்தியகிழக்கில் வாழ்ந்த மக்கள் புனித யாத்திரைக்காக அல்லது வியாபாரத்திற்காக பிரயாணம் புறப்பட்ட போது சில வேளைகளில் நிரந்தரமாகத் தங்கவும் ஏற்பட் டிருக்கலாம். இது இயற்கை. அப்படித் தங்க ஏற்பட்ட இடங்கள் குடியிருப்புக்களாகி 'ஊர்' என அழைக்கப்பட்டது.
உதாரணமாக ஈராக்கில் இப்றாகீம் நபியவர்கள் பிறந்த இடம் * ஊர்” என அழைக்கப்பட்டது போல.
ஈரானில் 'நிசாப்பூர்’ என ஒரு இடமிருக்கிறது. இங்குதான் உலகப் புகழ் பெற்ற கவிஞர் உமர்கையாம் அவர்கள் பிறந்தார்கள். இதே போல ஆப்கானிஸ்தானில் ஜோப்பூரினையும், வங்காளதேசத்தில் டினாஜ்பூரினையும், கோயம்புத்தூரினையும், காசிப் பூரி  ைனயும், இந்தியாவில் மைசூர், பெங்களூர், திருவிடைமருதூர், சீதல் பூர் என்பவற்றையும், துருக்கியில் ஷோக்பூரினையும், கம்போச்சியாவில் ஹங்கூரினையும், ரஷ்யாவில் பைலூரினையும், மலேசியாவில் சிலாங் கூரினையும், ஜெய்பூரினையும் பாகிஸ்தானில் லாகூர், பஹவல்பூர் என்பவற்றினையும் இலங்கையில் நல்லூர், மருதூர், மூதூர், ஏறாவூர் தோப்பூர் என்பவற்றையும் சிங்கப்பூரினையும் குறிப்பிடலாம்.
இந்த ஊர்களை நாம் விஷேடமாக எடுத்து நோக்கினால் இங்கு வியாபாரமும், முஸ்லிங்கள் பெரும்பான்மையினராகவும் அல்லது முஸ்லிம்களோடு இந்தஊர்கள் சம்பந்தமுடையதாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
உதாரணமாக இந்தியாவில் உள்ள லான்பூரினை எடுத்துக் கொண்டால் இங்கு அல்ஹாஜ் செய்து அப்துல் றஹ்மான் (ரஹ்) அவர்கள் அடங்கப்பட்டுள்ளார்கள். வேலூரை எடுத்துக் கொண்டால் இங்கு மிகப் பிரபலமான பாகியதுஸ்ஸாலிகாத் எனும் அறபுக் கல்லூரி அமைந்துள்ளதை அவதானிக்கமுடியும். ராவுத்தர் நல்லூரினை எடுத்துக் கொண்டால் ராவுத்தர் எனும் சொல்லே அரபிகளோடு வந்த குதிரை மேய்ப்பவர்களைக் குறிக்கும் சொல்லாகும்.

மருதூர் ஏ. மஜித் 37
மேலும், கொடுங்கலூரை எடுத்துக் கொண்டால் இந்த ஊரிலேயே அரபிகள் பிரயாணத்தின் போது தங்களுக்குத் தேவையான தண்ணிர், உணவுப் பொருட்கள் என்பவற்றைப் பெற்றுச் சென்றதாக சான்றுகள் கூறுகின்றன. மாணிக்கப்பூரிலேயே சாஹ"ல் ஹமீத் ஆண்டகையவர்கள் பிறந்துள்ளார்கள்.
பெரம்பூர் தென்இந்தியாவின் தலைநகரான சென்னைக்கு அருகாமையில் உள்ளது. இங்குதான் ஜமாலியாக்கல்லூரிஅமைந்துள்ளது நீடுரிலே மிஸ்பாஹ"ல் ஹ"தா அரபிக்கல்லூரியுண்டு. இஃதே போல "ஆலத்தூர்” என்பதை எடுத்துக்கொண்டால் இந்த ஊரின் பெயரிலேயே அரபு மொழி கலந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும்.
ஆலம் என்றால் உலகம் என்பது பொருளாகும். இங்கு தமீம் அச்சகமும் உண்டு. கேரளத்திலே கிரேங்கநூர் எனும் ஒரு ஊர் உண்டு. "இங்கு சேரமான் பெருமானுடைய ஆட்சியின் போது அவன் அரபிகள் குடியிருப்பொன்றை நிறுவினான். அத்தோடு கேரளப் பாரம்பரிய முறைப்படி பள்ளி வாசல் ஒன்றை நிறுவினான். இப்பள்ளிவாசல கட்டப்படுவதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பு இங்கு அரபிகள் வசித்து வந்துள்ளார்கள்.
இப்பள்ளி இன்னும் சேரமான் பள்ளியென்றே அழைக்கப்படு கின்றது. இப்பள்ளிவாசலிலே கேரள அடிப்படை அமைப்பைக் கொண்ட பித்தளை விளக்கொன்று இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இப்பள்ளி வாசல் கட்டிட அமைப்பு இஸ்லாமிய கட்டிடக் கலை அமைப்பை விட வித்தியாசமானதாகும். இப்பள்ளி வாசலில் 'மினாறா' கிடையாது. அத்தோடு மக்கத்தை நோக்கி மேற்குத் திசையில் இல்லாமல் கிழக்குத்திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
உல்லாசப் பிரயாணிகளையும் பிறநாட்டு முஸ்லிங்களையும் கவர்ந்து வரும் இப்பள்ளிவாசல் கேரள அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இஃதே போல தென்இந்தியாவின் ஆதிச்சநல்லூரும் மிக முக்கியமான ஒரு இடமாகும். இந்தியாவில் இங்குதான் மத்திய கிழக்கு வாசிகளின் ஆரம்பக் குடியேற்றமாக இருந்திருக்கலாம். என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவ்வூரின் "ஆதி" எனும் சொல்லே இதற்குச் சான்று பகர்கிறது. மொழியும் வழியும் எனும் அத்தியா பத்தில் இது பற்றிய விபரம் கூறப்பட்டுள்ளது.
மருதாணி - மலர் 5 இதழ் 1

Page 21
38 - மருதூர் ஏ. மஜீத்
இங்கு நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண் டெடுக்கப்பட்ட பொருட்கள் சைப்பிரஸ் தீவில் உள்ள எண்கோமி என்னுமிடத்திலும், பலஸ்தீனத்தில் உள்ள காஸா எனுமிடத்திலும், ஜெரார் எனுமிடத்திலும் கண்டெடுக்கப்பட்ட புதை பொருட்களைப் போலவே உள்ளன.
இதே தென்இந்தியாவின் "ஆம்பூர்’ எனுமிடத்திலேயே சைத்துரன் கிஸ்ஸா பாடிய அப்துல் காதிர் புலவர் அவர்கள் பிறந் தார்கள். கலிகட் ஜில்லாவிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடம்தான் "தானுார்”. இதனை கொளிக் கோடு எனவும் அழைப்பர். அதாவது காளிக்கோடு என்பதே திருந்தி கொளிக்கோடு என்றாகியிருக்கலாம்.
இங்கு கூரையோடு உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையும் ஒரு காலத்தில் இங்கிருந்தே இறக்குமதி செய்துள்ளது. இன்று எல்லாக் கூரையோடுகளும் கொளிக் கோடு என அழைக்கப்படுவதற்கு கொளி கோட்டூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதே காரணமாகும்.
வாஸ்கோடகாமா இங்குள்ள முஸ்லிம் கடலோடி ஒருவரின் உதவியோடுதான் நன்நம்பிக்கை முனையைத் தாண்டியுள்ளார். மலை யாளத்தில் உள்ள " கொடுங்கலூரில்’ மத்திய கிழக்கு வாசிகள் அதிகமாக வாழ்ந்ததாகச் சரித்திரச் சான்று கள் கூறுகின்றன. இவ்வூரினைக் 'கிராங்கனூர் என்றும் அழைப்பர். கேரளத்திலுள்ள **கண்ணணுரர்’ என்னுமிடத்தில் முஸ்லிம் அரசர்கள் இருந்து ஆட்சி செய்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இஃதே போல ‘* முசாபர்பூர்’ என்பது மத்திய கிழக்கு வாசிகள் தங்கிய இடம் எனப் பொருள் படவே இடப்பட்டுள்ளது. முசாபர் என்றால் பிரயாணி என்பது பொருளாகும். கேரள மானிலத்தில் "பேய்ப்பூர்’ பற்றிய ஒரு சரித்திரம் பின்வருமாறு கூறுகிறது. கி. பி. 844ல் மத்திய கிழக்கு வாசிகளின் கப்பலொன்று ஆற்றினை அண்டி உருவான திட்டியொன்றிலே பேய்க்காற்றினால் அள்ளுண்டு வந்து மோதிய போது அத்தீவிலே தரையிறங்கினார்கள். இவர்கள் அரசனால் ஆதரிக்கப்பட்டு பின் இங்கேயே தங்கி விட்டனர் எனக் கூறுகிறது.
1திருநெல் வேலிக் கோட்டத்தைச் சேர்ந்த தென் திருவாங்கூர் பகுதியிலே பெயர் தெரியாத மரமொன்றுள்ளது. இம்மரம் இந்தியாவின் எப்பகுதியிலும் கிடையாது என்று கோல்வெல்ட் ஐயர் கூறியுள்ளார்.
1 குமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு.

மருதூர் ஏ. மஜீத் 39
இம்மரம் ஊரில் இருப்பதால் இம்மரம் மத்திய கிழக்கு வாசிகளால் கொண்டுவரப்பட்டிருக்கலாம். இதே கிருநெல்வேலிக் கோட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரின் புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் உலகின் மிகத் தொன்மையானவை எனவும் இது மனித தோற்றத்தின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தது என்றும் கொள்ளப்படுகிறது.
தென்இந்தியாவில் உள்ள பிரபலமான ஊர்களில் நாகூரும் ஒன்று. இங்குதான் சாஹ"சல் ஹமீத் (ரலி) அவர்கள் அடங்கப்பட்டுள்ளார்கள். பிரபல பாடகர் ஈ. எம். ஹனீபா அவர்களும் இப்பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே குடியிருக்கிறார்கள். லாகூர் பாகிஸ்தானின்தலை நகர். கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகர். இஃதே போன்று பள்ளி, பட்டினம், பட்டணம், வாடி, ஆகிய சொற்களும் மத்திய கிழக்கு வாசிகளோடு சம்பந்தமுடையதே. உதாரணமாக அதிராம் பட்டினம், காயல்பட்டினம், நாகபட்டினம், சென்னைபட்டினம் என்பவற்றையும் மாவடிப்பள்ளி, திருச்சிராப்பள்ளி போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
இன்றைய திருச்சி ஆரம்பத்தில் 'ஊர்” என்றிருக்க வேண்டும். பின் இது பள்ளியூர்ஆகி அதன்பின் திருச்சிராப்பள்ளியூராகி. இன்று திருச்சியாகியுள்ளது. "வாடி” என்ற சொல்லும் மத்தியகிழக்கு வாசிகளோடு சம்பந்தமுடையதுவே. மத்திய கிழக்கு வாசிகள் மொன்சூன் காற்றினை எதிர்பார்த்து கடற்கரையோரத்திலே இருக்க கற்பட்டபோது தற்காலிகமாக அமைந்த வீடு அல்லது தங்குவதற்கான அமைந்த வீடு 'வாடி” எனப்பட்டது. இதனைக் குடிசை அல்லது காவல் நிலையம் எனக் கொள்ளவும் இடமுண்டு. கடற்கரைக்காவல் நிலையம் எனக் கொள்ளவும் இடமிருக்கிறது. இதன் தொடர்களே இன்றைய சோனகர்வாடி, ஏர்வாடி போன்ற ஊர்களின் பெயர் கானலாம்.
இலங்கையில் கரையூர், பாஷையூர் ஆகிய இரண்டு ஊர்களுமே யாழ்ப்பாணத்தின் ஆரம்ப ஊர்களாகும். இந்த இரண்டு ஊர்களையுமே தஜயதுங்க பரராஜசிங்க மன்னன் (இவன் மனைவியே சீர்பாததேவி சோழனின் மகள், வீரமுனை சிந்தாபாத் பிரயாணம் மேற்கொண்டு வந்தவள்) யாழ்ப்பாணனுக்கு பரிசாகக் கொடுத்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன.
ஆரம்பத்தில் இவ்விரு ஊர்களிலும் மத்திய கிழக்குவாசிகளும் மலாயருமே குடியிருந்தனர். இந்த ஆரம்ப வரலாறு மறைக்கப்படுவ கற்காக யாழ்வாசித்துப் பரிசு பெற்ற வரலாறு தோன்றியிருக்கவும் கூடும். எது எப்படி இருந்தாலும் யாழ்வாசித்துப் பரிசு பெற்றகதை

Page 22
40 மருதூர் ஏ. மஜீத்
மிகப் பிற்பட்ட காலத்ததே. மத்திய கிழக்குவாசிகள் வேறுபாஷை பேசிய படியால் இவ்வூர் பாஷையூர் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது திராவிட மொழியல்லாத ஆரம்பத் தமிழ் பாசையை - சுமேரிய மொழியைப் பேசியபடியால் இது பாசையூர் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் நல்லூரிலும் ஆரம்பத்தில் முஸ்லிங்களே வாழ்ந்தனர் என்பதை யாழ்ப்பாண வைபவமாலை ஏற்றுக்கொள் கின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு
வாசிகளின் முதல் குடியேற்றம் "மண்டூர்’ எனலாம். இதனை மத்தியகிழக்குவாசிகளின் இலங்கையின் முதல் குடியேற்றம் என்று கூடத் திட்டமாகக் கூற முடியும். "மண்டூர்’ என்பது கல்முனையில்
இருந்து சற்று வடமேற்கே அமைந்துள்ள ஊராகும். மண்டூர் ஆரம் பத்தில் ஊர் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மத்திய கிழக்கு வாசிகள் ஊரிலிருந்து அதாவது மண்டூரிலிருந்து பக்கத்து ஊருக்கு அதாவது மருதூருக்கு இடம் பெயர்ந்ததும் முதல் ஊர் பண்டுராகிவிட்டது. இது நாளடைவில் மண்டூராகியிருக்கவேண்டும்.
இஃதே போல்த்தான், இரண்டாவது குடியிருப்பு ஊர்என அழைக் கப்பட்டு பின் நாளடைவில் மருதூராகிப், பின் சார்ந்த மருதூராகி யிருக்க வேண்டும். இவ்வாறே மற்ற ஊர்களும் ஏற்பட்டிருக்க வேண்டும் உதாரணத்திற்கு மகிழுர், மூதூர், ஏறாவூர், நிந்தவூர் போன்றவற்றைக் கூற முடியும்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு, வடமேற்கு போன்ற திசைகளில் ஊர்கள் அமைந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும். அத்தோடு இந்த ஊர்களுக்கும் மத்திய கிழக்கு வாசிகளுக்கும் (இன்றைய முஸ்லிம்கள்) இடையே பிரிக்க முடியாத ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் அவதானிக்க முடியும். இதனை நாம் இன்னும் சற்று உன்னிப் பாகக் கவனித்தால் வடக்கிலும் கிழக்கிலுமே அதிகமான ஊர்கள் இடம் பெற்றுள்ளதை அவதானிக்க முடியும். வடமேல் மாகாணத்தில் ஒரேயொரு ஊர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதிலும் வடக்கை விடவும் கிழக்கிலேயே அதிக ஊர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே தான் இலங்கையில் கிழக்கிலேயே மத்திய கிழக்குவாசிகளின் தொடர்பு அதிகம் இருந்தது எனத் திட்டமாகக் கூற முடியும்.
இதனை வேறு ஒருவகையாகக் கூறுவதாயின் மேற்கில் மத்திய கிழக்குவாசிகளின் குடியேற்றம் கிறிஸ்துவுக்குப் பின் ஏற்பட்டது

மருதூர் ஏ. மஜீத் 4.
என்றும் கிழக்கிலே மத்திய கிழக்கு வாசிகளின் குடியேற்றம் கிறிஸ் துவுக்கு முன் ஏற்பட்டது என்றும் கூறமுடியும்.
இதனை இங்கு சற்று விரிவாக ஆராய்வோம்.
1இலங்கையில் கிழக்கிலும் வடக்கிலும் வடமேல் மாகாணத்தி லுமே ஊர்கள் உண்டு என்று குறிப்பிட்டேன். இதன்படி வடமேல் மாகாணத்தில் குறுந்தனுாரை மட்டுமே குறிப்பிட முடியும். குறுந்தனுார் பதவியாவிற்கு வடக்கே உள்ளன. வடமேல் மாகாணத்தின் துறைமுகப் பட்டினமாக மாந்தைமாந்தோட்டம் விளங்கியுள்ளது. இங்கு நடை பெற்ற அகழ்வாராய்ச்சிகள் இங்கு மத்தியகிழக்கு வாசிகளின் குடியி ருப்பை நன்கு புலப்படுத்துகின்றது.
அகழ்வாராய்ச்சியின் போது 5 இலட்சம் களிமண்பாத்திரங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவைகள் அரேபிய, பாரசீக மக்களின் பாவனைப் பொருட்கள் எனவும் இதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களும் இதனையே குறிக்கின்றன எனவும் நிரூபிக்கப்பட் டுள்ளன.
1மேலும் "பிளாஸ்’ என்பவர் மன்னார் பிரதேசத்தில் முத்துக் குளிக்கும் தொழிலில் பாரசீகர்களே ஈடுபட்டிருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து பலமிக்கவர்களாக விளங்கியமையால் சிங்கள அரசர்கள் இவர்களுக்கு தீங்கிழைத்த போது பாரசீக அரசன் இலங்கை மீது படையெடுத்தான் எனக் குறிப்பிடுகிறார்
2மேலும், தமிழ் நாட்டில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாராய்ச் வியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களைப் போல யாழ்ப் பாணத்தின் ஆனைக்கோட்டையிலும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் பத்திய கிழக்குவாசிகளின் கடற்பாதை மொன்சூன் காற்றின் உதவி யோடு பசறா, ஏடன் முதலிய பகுதிகளிலிருந்து குஜராத், மலபார் கொழும்பு, சித்தாகூன் முதலிய இடங்களுக்கும், கொழும்பிலிருந்து 11லாக்கா, சீனா முதலிய இடங்களுக்கும் சென்றுள்ளனர்.
மேலும், " ஜபலுல் பாஸ்’ என அழைக்கப்படும் கற்பிட்டிக்கு அண்மையில் உள்ள குதிரைமலைத்துறைமுகம் பிரதான துறைமுகமாக அராபிய வணிகர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் நாட்டில் உள்ள கரவன் முறைக்குப்பதிலாக இங்கு தவள முறை
1 தினகரன் கட்டுரை 04-07-1976
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு.

Page 23
42 மருதூர் ஏ. மஜித்
யைப்பயன் படுத்தினர் எனலாம். மேலும், மத்திய கிழக்கு வாசிகள் காலித்துறைமுகத்தை 'கலாஹ்' என அழைத்தனர். இதுவே காலப் போக்கில் கலிஹ் என்றாகி காலி என்றாகியிருக்க வேண்டும்.
"நபியும் மன்னருமான சுலைமான் அவர்களுடைய காலத்தில் **காலிஹ்” என்றழைக்கப்பட்ட துறைமுகத்தில் ട് ഞ് ബ LD IT ബr நபியுடைய மரக்கலங்கள் வந்து வெள்ளியும் பொன்னும் கொடுத்து விட்டு மயில், குரங்கு, யானை போன்ற உயிர்ப்பிராணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இத் துறைமுகமே காலித்துறைமுகம் என சிலர் கருதுகின்றனர். எனது கருத்துப்படி இத்துறைமுகம் இலங்கையின் கிழக்குக் கரைத்துறைமுகமாகவே இருக்க வேண்டும். மயிலும், குரங்கும், யானையும் கிழக்குக் கரைக் காட்டிலேயே சேக ரித்திருக்க வேண்டும். காலித்துறைமுகம் என்று எடுத்திருந்தாலும் கூட அதுவும் உறுகுணை எனும் கிழக்குப் பகுதியிலேயே அக்காலத்தில் அமைந்திருந்தது.
2இந்திய கடல் வணிக மேலாதிக்கம் தொன்று தொட்டு அரபி யர் வசம் இருந்ததாக அதாவது மத்திய கிழக்குவாசிகளிடம் இருந்த தாகச் சரித்திரம் சான்று பகர்கின்றது. இந்தியக் கடல் வழி மூலம் சீனாவரை வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த அராபியர் வழிதுறைப் பகுதிகளாக மூன்று இடங்களைத் தெரிவு செய்திருந்தனர்.
OG SA i ffG GOT
1) இந்திய மேற்குக் கடற்கரையோரத்தில் சிறந்து விளங்கிய கள்ளிக் கோட்டை போன்ற இடங்களை உள்ளடக்கிய மலபார் பிரதேசம். 2) இந்திய கிழக்குக் கடலோரத்தில் சிறந்து விளங்கிய கீழக்கரை போன்ற துறைமுகங்களை உள்ளடக்கிய மலபார் பிரதேசம், (மலபார் என்றால் தடுக்கும் வழி என்று பொருள்) 3) சரன்தீப் (வைரத்தீவு) என்று அரேபியரால் அழைக்கப்பட்ட இலங்கையின் ஆதிமுனை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களுமாகும்.
*சிந்தாபாத் இலங்கை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார். இலங்கையை நான் தரிசித்த போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக்
1 தமிழ்த் தாத்தாக்கள்.
2 சிந்து நதிக்கரையில்
* ஐந்தாம் உலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்
"திரைகடலோடும் மரைக்காயர்’ கட்டுரை

மருதுார் ஏ. மஜீத் 43
கொண்டிருந்தார். அவர் சரளமாக அரபு பேசினார். நான் அவருடன் அரபியிலேயே உரையாடினேன். இங்கு வாழ்ந்த மக்களை "மஃபார்’ என அழைத்தனர். சிந்தாபாத் கூறியுள்ள 'மஃபார்' என்ற சொல்லே நாளடைவில் திருந்தி 'மடஆபர்’ என்றும், மடக்களப்பர் என்றும் மட்டக்களப்பார் என்றும் ஆகியிருக்கலாம். மஃபார் என்பது சுமேரிய மொழியிலிருந்து வந்த அரபுச் சொல்லேயாகும். மஃபார் என்றால் தோணித்துறையென்பது பொருள் (அறபியில் . இலங்கையில் மட்டக் களப்பு முஸ்லிம்களே அன்றிலிருந்து இன்றுவரை வியாபாரத்தையும் விவசாயத்தையும் தொடர்ந்து செய்து வருபவர்கள் எனத் துணிந்து கூறமுடியும்.
2மேலும், மட்டக்களப்பின் ஊடாக வீரமுனையை அடைந்த் சோள அரசியின் கடற் பிரயாணமும் சிந்தாபாத் பிரயாணம் என்றே அழைக்கப்படுகின்றது. எனவே சிந்தாபாத்தின் ஆறாவது கடற் பிரயாணம் மட்டக்களப்பின் ஊடாகவே நடைபெற்றது எனக் கொள்ள முடியும்.
மேலும், மனித வரலாற்று ஆய்வாளர் ஹோவர் அவர் களின் ஆய்வு பின்வருமாறு கூறுகிறது.
3சுமேரியா, மொசப்பட்டோமியா போன்ற மேற் கா சிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து ஈரான் வழியாக வடமேற்குக் கண வாய்களின் மூலம் சிந்து வெளியில் இறங்கி குடியமர்ந்து அங்கு மாபெரும் நாகரிகத்தை வளர்த்து பின் எக்காரணத்தினாலோ சிந்து வெளியைக் கைவிட்டு தென்னிந்தியாப்பக்கம் குடியேறியிருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
*மேலும் இன்று அரேபியக்குடா என்றழைக்கப்படும் பிரதே சத்தில் இன்றைய சிரியா, லெபனான் பகுதிகளில், பீனிசியர்கள் என ஒரு வர்க்கத்தினர் வாழ்ந்தார்கள். இன்றைய அரேபியர்களின் மூதாதையர்கள் இவர்களே என சில ஆய்வுகள் கூறுகின்றன.
திறமை மிக்க மாலுமிகளான "பீனிசியர்’ மத்திய தரைக் கடலினுரடாகவும் செங்கடலினுாடாகவும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று வியாபாரம் செய்தது மட்டுமின்றி பெரும் அரசர்களுக்கு உதாரணமாக - மகா அலக்சாந்தர் போன்றோருக்கு ஐரோப்பியர்
2 சீர்பாதகுல வரலாறு. 9 தமிழக வரலாறு- மக்களும், பண்பாடும். * வழியும் நடையும், -

Page 24
44 மருதூர் ஏ. மஜித்
அறிந்திரா நாடுகளுக்கு வழிகாட்டிகளாகவும் சேவையாற்றினர். இவர்களின் இனத்தவர்களே முஸ்லிம்கள் எனக்கூறப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் ஆதிச்சரித்திரத்தை எடுத்துக் கூறும் நூலாகிய மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் பற்றிக் கூறும் போது தரச்சர், இலம்பகர்ணர், பலிபோசகர், மோரியர், கலிங்கர் என்று கூறுகின்றது. இங்கு மோரியர் எனக் கூறப்பட்டிருப்பது சுமேரியராக இருக்கலாம். அசோக சக்கரவர்த்தியின் மூதாதையரான மோரியரும் சுமேரியரே எனக் கொள்ளஇடமிருக்கிறது.
1மேலும், இமாம் சாபியி (ரஹ்) அவர்கள் பிறந்த இடமான புகராவில் இருந்து பல சூபிகள் ஆப்கானிஸ்தான் வந்து அங்கிருந்து லாகூருக்கு வந்து அங்கிருந்து லக்னோவுக்கு வந்து அங்கிருந்து டில்கி வந்து அங்கிருந்து தென் இந்தியா வந்து அங்கிருந்து இலங்கை வந்தார்கள் எனச் சில தகவல்கள் எடுத்துக் கூறுகின்றன.
இவர்கள் இலங்கையில் கதிர்காமம், ஜெய்லானி, பாவா ஆதம்மலை போன்றவற்றைத் தரிசிக்கவே வந்துள்ளார்கள். மேலும், இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்தும் பல சூபிகள் யாழ்ப்பாணத் துக்கு வந்து அங்கிருந்து முல்லைத்தீவு, திருகோணமலையூடாக மட்டக்களப்பையடைந்து மட்டக் களப் பிலிருந்து கல் முனை, பொத்துவில் ஊடாக கதிர்காமத்தையடைந்து அங்கு தங்கி அங்கிருந்து ஜெய்லானியை அடைந்து அங்கிருந்து இரத்தினபுரி சென்று பாவா ஆதம்மலையைத் தரிசித்துள்ளார்கள். இப்பாதை போர்த்துக்கீசர் காலத்தில் (1505-1602) தடுக்கப்பட்டது. காரணம் கண்டி மன்ன னுக்கும் போர்த்துக்கீசருக்குமிடையே யுத்தம் நடைபெற்றது. கண்டி பரசன் முஸ்லிம்களை சூபிகள் என்ற பெயரில் உளவாளிகளாகவும் படைவீரர்களாகவும் அனுப்புகிறானோ எனச் சந்தேகித்து இப்பாதை யால் வரும் சூபிகளைப் போர்த்துக்கீசர் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திவிட்டனர். முதலியார் சு. இராசநாயகம், ஜே. பி. அவர்கள் இது பற்றி தனது நூலில் கூறியுள்ளார்
மேலும், இந்தியாவின் வடமேற்கு எல்லையிலே சிந்து நதி பாயும் பள்ளத் தாக்கில் (இப்பொழுது பாகிஸ்தான்) இரு இடம் இருந்தது. இங்குதான் சிந்துவெளி நாகரிகம் உற்பத்தியானது. அந்த இரு இடங்களுமே ஹரப்பா, மொகஞ்சதாரோவாகும். இது கி. மு.
1. Kataragrama Mosque and Shrine. Al-Haj. Thauооз 2 Kataragama Mosque and Shrine. Al-Haj. Thauoos

மருதூர் ஏ. மஜீத் 45
3000 ஆண்டிற்கு முற்பட்டது. நன்கு திட்டமிட்டுக் கட்டப் பட்டவையே இந்த இரண்டு நகரங்களுமாகும். ஏறத்தாள 1000 மைல் இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு நகரங்களும் ஒரே வகையான அமைப்புடையன. அதனால் இதனை ஒரு இராச்சியத்தின் இரு தலை நகரங்கள் எனக் கொள்ள இடமிருக்கிறது.
மேலும், லெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் ஒட்டகம் போன்ற ஒரு பெரிய விலங்கின் மீது பிரயாணம் செய்துள்ளனர். இதனை இவர்கள் வரைந்த படங்களில் இருந்து அறியக்கிடக்கின்றது.
மத்திய கிழக்கிலிருந்து தரைமார்க்கமாக இலங்கை வந்தவர்கள் ஒட்டகத்தின் உதவியோடு தங்களின் பிரயாணத்தைச் செய்திருக்கலாம்.
சரன்தீப், இந்தியா போன்ற இடங்களில் ஒட்டகம் வாழப் போதிய சீதோஸ்ன நிலை இல்லாதபடியால் பாகிஸ்தானோடு ஒட்டகப்பயணத்தை நிறுத் தி யிருக் கலாம் எனக் கொள்ள இடமிருக்கிறது.
மன்னாரில் காணப்படும் "பேஒபப்” எனப்படும் ஒட்டகம் சாப் பிடும் மரத்தை 1 வந்து பின் நிறுத்திக்கொண்டமைக்கு உதாரணமாகக் கூற முடியும். மேலும், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தோணித் துறைகளுக்கு "மலிஃபர்' 'மஆபிர்” என்ற சொல்லே வழங்கப்பட் டுள்ளது. இது அறபிச் சொல்லே. தமிழில் இதன் பொருள் தோணித் துறை அல்லது படகுத்துறை என்பதாகும்.
1மேலும், பெருமானாரின் காலத்திலும் அதற்கு முன்னரும் அறபிகள் சரன்தீவின் கடற்கரையோரமாகிய மன்னார், கற்பிட்டி, புத் தளம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, பேருவளை, காலி, கல்முனை, மாத்தறை, ஹம்பாந்தோட்ட, மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய இடங்களில் குடியேறியும், விவசாயம் செய்தும் வந்துள்ளனர்.
மேலும், ஊர் என்ற சொல்லின் ஆதாரத்திற்காகவும், தகவலுக் காகவும் இன்னும் சில ஊர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவிலே - பெங்களூர், போடிநாயக்கநூர், சமத்தூர், சேற்றுார். புலியூர், திருவாரூர், சிறீவல்லிபுத்தூர், திருவிதாங்கூர், மைசூர், திருபட்டாணிச்சியூர், கோட்டையூர், நாகூர், திருச்செந்தூர், திருச்சூர், தஞ்சாவூர், உடைப்பூர், ஜொடப்பூர், மேய்ப்பூர், மங்களூர், திருப்பத்தூர், சான்பூர், நாப்பூர், ஜெயப்பூர், சாத்தனூர், களத்தூர், ஆதனூர், வண்டலூர், முதுகுளத்தூர்,
இலங்கை முஸ்லிம்களின் மத்ஹப்

Page 25
46 மருதூர் ஏ. மஜீத்
வழுத்தூர், கூத்தாநல்லூர், பேகம்பூர், லால்ப்பூர், திருவாங்கூர், எழும்பூர், பக்கூர், தானுார், கொடுங்கலூர், கண்ணணுரர், திருவிடை மருதூர், வடலூர், ஆரையநல்லூர், கீழுர், சீழாத்ததுார், மாணிக் கப்பூர், பெரம்பூர், நெல்லூர், கரூர், மாலையூர், கோயம்புத்தூர், பனையூர், வேலம்புத்தூர், வண்டியூர், மணலூர், செம்பனூர், அரியலூர், காட்டுப்புத்தூர், ஆரூர், புத்தூர், எருக்கூர், நீடூர், ஆலத்தூர், சாத்தூர், கிரேங்கனூர், ஆதிச்ச நல்லூர், சானூர், கொடும்பாளூர், குன்னூர், அம்பரேத்தூர், அரசூர், பாகூர், பஹவூர், பெரியமனுார், சின்னமனூர், புகளூர், திருவெற்றியூர், குண்டூர், வெள்ளூர், மயிலாப்பூர், சாத்தூர், முசாப்பூர், ஆம்பூர், துறையூர், பெரம்பூர், திருப்பூர், கடலூர், சோமனூர், முரஞ்சியூர், ராவுத்தர் நல்லூர் திருவிடை மருதூர், பாரியூர், பஞ்சூர், நாரான்பூர், பாலூர், வடலூர், திருப்பாரூர், கோட்டையூர், சிரயாநல்லூர், சில்லையம்பூர், மம்மியூர், விசாப்பூர், பற்றப்பூர்,
இலங்கையில் தோப்பூர், மூதூர், மருதூர், நல்லூர், சம்பூர், நிந்தவூர், கோயிலூர், பச்சனூர், மயிலங்கடலூர், ஏறாவூர், மகிளுர் என்ற ஊர்களையும் கூற முடியும்.
மேலும் சம்மான் எனும் சொல் மலாயரின் தோணியைக் குறிக்கும் சொல்லாகும். சம்மாந்துறை இச்சொல்லில் இருந்து வந்ததாக இருக்கலாம்.
மேலும், ஜெய்லான் என்னும் இடத்தில் ஹிஜ்ரி 470ல் பிறந்த ஹசரத் அப்துல் காதர் ஜிலானி அவர்களின் சீடர்களில் 100க்கு மேற்பட்டோர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களில் ஒருவர் திருக்கோயிலில் அடங்கப்பட்டுள்ளார். மற்றுமொருவர் மல் கம் பிட்டியிலும், மற்றுமொருவர் சேனைவட்டையிலும், (காட்டவுலியா) மற்றுமொருவர் கொண்டைவெட்டுவானிலும், (வீரயடியப்பா) மற்று மொருவர் கொடாவட்டையிலும், (குருந்தையடியப்பா) அடங்கப்பட்
டுள்ளார்கள்.
ஈழத்தின் இன்னொரு மூலையில்

மருதூர் ஏ. மஜீத் 47
மேலும், சிங்கள அரசனான இராஜசிங்கன் 16ம் நூற்றாண் டில் அழுத்துவரையில் இருந்து சம்மாந்துறைக்குப் பிரயாணம் செய்தான். அக்காலத்தில் சம்மாந்துறையே மட்டக்களப்பு என அழைக்கப்பட்டது. இன்றும் மட்டக்களப்புத் தரவையிென ஒரு இடம் சம்மாந்துறையில் உண்டு.
மேற்கூறியவற்றிலிருந்து எங்கெங்கு 'ஊர்” எனும் சொல் லோடு கூடிய ஊர் இருக்கிறதோ அங்கெல்லாம் மத்திய கிழக்கு வாசிகளின் குடியிருப்புகளும், ஆட்சியும் இருந்துள்ளது: என்பதுவே பொருளாகும் எனக் கொள்ளலாம்.
Seeing Ceylon - R. L. Brother

Page 26
A8 மகுதூர் ஏ. மஜித்
வழியும் மொழியும்
5 உலகின் முதல் மனிதன் ஆதம் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில கருத்துக்களைமுன் வைக்க விரும்புகின்றேன்.
உலகின் முதல் மனிதனாகிய ஆதம் பேசிய மொழியே உலகின் முதல் நாகரிகமாகிய எதியோப்பிய நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள் பேசிய மொழியாகும். இதற்கு ஆதாரமாகப் பல விடையங்களை இங்கு எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக
"ஆதி" என்ற சொல்லின் ஒரு வடிவமே ஆதம் எனலாம். ஆதி - ஆதம் ஆகியுள்ளது. ஆதம் என்றால் ஆதி என்பதுவே பொருள்.
ஆதி மனிதன் என்பதைக் குறிக்கவே ஆதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதத்தின் மனைவி "ஹவ்வா’ என்ற சொல் கூட இதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது எனலாம். ஹவ்வா - அவ்வா - அவ்வை என இது உரு மாற்றம் பெற்றுள்ளது. அவ்வை என்றால் தமிழில் மூதாட்டி என்பதுவே பொருள்.
தொடர் மதங்களில் ஒன்றான கிறிஸ்தவ மதம் ஹவ்வாவை "ஈவ்' என்றே அழைக்கின்றது. "ஈவ்" என்றால் தமிழில் மிச்சம் என்பது பொருள். ஆதத்தின் மிச்சமே ஹவ்வா எனப் பொருள்படும். (ஈவ்) அல்லது, ஆதி மனிதன் ஆதத்தில் இருந்து எடுத்துப் படைக் கப்பட்டவரே ஹவ்வா அல்லது, "ஈவ்" மூதாட்டி எனும் பொருள் படவே இச்சொல் அமைந்துள்ளது.
எதனை எப்படிப் பார்த்தாலும் ஆதமும், ஹவ்வாவும் பேசிய மொழி தமிழே எனப் புரிய முடிகிறது. இதனை இங்கு சற்று விரிவாக ஆராய்வோம்.
ஆதமும், அவர் மனைவி ஹவ்வாவும் பேசிய மொழி தமிழ் எனக் கொள்ளலாம். இஃது எவ்வாறு எனின் ஆதம் - ஹவ்வா ஆகிய இரண்டு சொற்களும் தமிழ்ச் சொற்கள் என்றால் அவர்கள் பேசிய

மருதூர் ஏ. மஜித் 49
மொழியும் தமிழாகவே இருக்கவேண்டும். இவர்கள் வாழ்ந்த காலம் சரியாகக் கூறமுடியாவிட்டாலும் கி. மு. 7000 ஆண்டுகளுக்கு முன்னாக இருக்கலாம்.
இவர்களின் பத்தாவது தலைமுறையிலேயே நூஃநபியவர்களும், அவர்களது சந்ததியினரும் உதித்தனர். நூஃ நபியவர்களின் பத்தாவது தலைமுறையிலேயே இப்றாகீம் நபியவர்கள் 'ஊர்' என்ற இடத்தி லிருந்து ஆட்சி செய்தார்.
இவர் பேசிய மொழியே சுமேரிய மொழியாகும். இம்மொழியே உலகில் முதன் முதல் எழுதப்பட்ட மொழியாகும். இங்குதான் உலகின் முதல் நாகரிகமும் உற்பத்தியானது. ஆதம் நபியவர்களின் இருபதாவது தலைமுறையில் பேசப்பட்ட மொழியே சுமேரியமொழி. இச் சுமேரிய மொழிக்கும் இன்றையத் தமிழ் மொழிக்குமிடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை மொழி ஆய்வாளர்கள் மறுக்க முடியாதுள்ளனர்.
ஊர்” என்ற சொல் திராவிட மொழிச் சொல்லல்ல என நான் முன் அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்தேன். இச் சொல் சுமேரிய மொழிச் சொல்லே.
ஒரு மொழியின் பெயர்ச் சொற்களாக அம்மொழியின் தொழிற் சொற்கள் விளங்குகின்றன. இந்த வகையில் எடுத்து நோக்கினாலும் சுமேரிய மொழியின் தொழிற் சொற்களும், இன்றைய தமிழ் மொழியின் தொழிற் சொற்களும் ஒன்றாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
எனவேதான் இரண்டு மொழியும் ஒரேமொழி அல்லது ஒரு குடும்பத்தில் பிறந்த மொழிகள் எனக் கூற முடியும். உதாரணமாக, உழவன், மேய்ப்பான், கொல்லன், கொத்தன், வணிகன், நெசவாளி, மீனவன், போன்ற தொழிற் சொற்கள் இரண்டு மொழிகளிலும் ஒன்றாகவே உள்ளன.
இஃதே போல ஈத்தம் பழம், பனை மரம் ஆகிய சொற்களும் ஒன்றாகவே உள்ளன. இந்த இடத்தில் வேறு ஒரு விடயத்தையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
பைபிள் த குர்ஆன் அன் சயன்ஸ்,

Page 27
50 ..., மருதூர் ஏ. மஜீத்
இன்று உலகில் பிரபலம் பெற்றுள்ள மொழிக் குடும்பங்களான 1. செமித்திய மொழிக் குடும்பம்.
இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம். ஆரிய மொழிக் குடும்பம்.
திராவிட மொழிக் குடும்பம். துரோனிய மொழிக் குடும்பம்.
:
என மொழியியலாளர்களால்
மொழிகளை குடும்பங்களாக வகைப்படுத்திக் காட்டியுள்ளார்கள். இம்மொழிக் குடும்பங்களில் ஒன்றான திராவிட மொழிக் குடும்பத்தி லுள்ள 23 மொழிகளுள் தமிழையும் மலையாளத்தையும் சேர்த்துள் ளார்கள். இந்த இரண்டு மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளல்ல.
இந்த இரண்டு மொழிகளையும் செமித்திய மொழிக் குடும்பத் தோடுதான் சேர்த்திருக்க வேண்டும். பாரசீக மொழி, உர்து மொழி, அரபு மொழி போன்ற மொழிகளின் மூல மொழி சுமேரிய மொழியே எனலாம். அதாவது, செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே எனலாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தெரிந்தோ தெரியாமலோபலஓற்றுமைகள் காணப்படுவது இயற்கையே.
தந்தையைப் போல் தனயன் கை வீசி நடப்பதுவும், தாயைப் போல பிள்ளை தலையை ஆட்டிக் கதைப்பதுவும் இயற்கையே. இஃதே போல தாத்தாவைப் போல் பேரன் காலை இழுத்து இழுத்து நடப்பதுவும் எம்மால் ஆராய்ச்சி இன்றி அவதானிக்கக் கூடியஒன்றாகும்.
இந்த வகையில் செமித்திய மொழிக் குடும்பத்தின் சாயல் அல்லது தன்மை தமிழ் மொழியிலும் காணப்படுவது இயற்கையே.
இன்று வழக்கிலேயுள்ள தமிழ் மொழியிலே இருநூற்றுக்கு மேற்பட்ட பாரசீகச் செர்ந்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்காக பின்வரும் சொற்களைக் கூற முடியும். "ஜாக்கீர், சர்க்கார், ஜமீன், ஜமீன்தார், கெஜம், கிஸ்மிஸ், பழம், குமாஸ்தா, குங்குமம், குஸ்தி லுங்கி, நவ்றோஜ் ( ஒரு இராகம், ) பஜார், பந்தோபஸ்து, பீங்கான், பரங்கி, பிராது, ரசீது, ரஸ் தா, தமாசா, தம்பூரா, தர்பார், தயா ரிப்பு, வாபஸ், கோன், புறியாணி, பந்தர், சமாந்தர் (அரசர்,) கந்தூரி,
1 நேபிள்ஸ் பல்கலைக்கழக பார் சீக மொழித்துறைத் தலைவர்கட்டுர்ை

மருதூர் ஏ. மஜித் 5,
சிப்பத்தி, சுமார், துப்பாக்கி, முலாம், ஜெமக்காளம், சால்வை, சராசரி, சவாரி, கீஷா, சீனி, தராசு, தயார்.
இஃதே போல 892 அரபுச் சொற்களும் தமிழ் மொழியிலே காணப்படுகின்றன. இதனைச் சென்னைத் தமிழ் அகராதியும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்குப் பின்வரும் சொற்களைக் கூற முடியும். சாத்தான், தகவல் , வசூல், கடதாஸ், அமானம், அய்ன, கசாப்புக் கடை, கப்பல், அமுல், கறார், பந்தர், அவா, குந்து, சந்தூக்கு, தரு, தகர்க்க, அலம், உம்மா, அக்கா, காக்கா, ஆம், இல்லை, அமூல், தராசு, அல் (பெண்குறி,) பெத்தா, டப்ளா, ஹால்,
இஃதே போல 967 உர்துச் சொற்கள் தமிழிலே காணப்படு கின்றன. இதனையும் சென்னைத் தமிழ் அகராதி ஏற்றுக் கொண் டுள்ளது. உதாரணமாக, பதில், பாலம், மகசூல், கிராக்கி, இராசி, வக்கீல், ஜப்தி, மாகாணம், ஜில்லா, குருமா, புறியாணி, ஊதுபத்தி, அத்தர், அண்டா, கூஜா, உஷார், ஜாக்கிரதை, பலே, சபாஷ், பேஷ், மச்சான், மச்சி, அச்சாறு, கைது, தண்டல், நாரிசா, அணா, அசல், அபினி, அலாதி, ஆசாமி, இராஜினாமா, இராட்டினம், இறாத்தல், லங்கோடு, இனம், ருஜ", ஊதா, கச்சேரி, கெடுபிடி, கப்பி, கம்பி, கைலி, காப்பிரி, காலி, குத்தகை. சந்தா, சப்ரம், சராசரி, சாமான் என்ற சொற்களைக் கூற முடியும்.
தக்க தாக்க
நத்தன் - நாத்தம்
திக்கல் - சிக்கல்
ஹிக்கி - சிக்கினான் போன்ற சொற்களையும்,
குல்லு - குழு போன்ற சொற்களையும்.
ஹல்லா அல்வா, கஃக் na கேக்
அத்தின் - அத்திப்பழம், கல் கள்.
இனா ஏனம், சக்ர சர்க்கரை.
6mpt சிறப்பு. உரிய - ஆடையை உரிய
•olወዘéች k அரிசி, போன்ற சொற்களையும்,
உறவு முறைச் சொற்களாக
ay! vsyiʼu Lumr alth -- உம்மா
«ANSIT ep sydiasm «ՓIւհ(լք lonrge
போன்ற சொற்களையும்,

Page 28
52. மருதூர் ஏ. மஜித்
கல்லுன் a) கல்லு ஹவா 6 ܐ9ܦܵܐ . . ܚff7 தக்வா e g5 5g உல்பத்து - உள்பத்து விர்க்கு செருக்கு ஹரம் அறம் தமாஷா - தமாஷா கலத்த - கலந்த கைத் ens கைறு-கயிறு தின் டின் 6g6jut - கீசா (புட்டில்) தரசு re- தரு-மரம் தாரிக் தாரகை கத்தீஃ - கத்தி
போன்ற சொற்களையும்,
வினைச் சொற்களாக
யர்ஹம் இரக்கம் யூகம் www. யூகம் மல் al மல்லு லபக்க சு லபக்கென்று பிடித்தான் போன்ற சொற்களையும் கூற முடியும்.
தனித்துவமான சில சொற்களாக
அல்லாஹ், அதயு, அமல், ஆலீம், உம்மத், தெளஹlத், சக்கறாத், மையத், ஜனாஷா, வலிமா, கபுறு, ஹறாம். ஹலால், காபீர், குத்பா, சுன்னத், திக்கிறு, துஆ, பயான், மஹர், மிம்பர், முஅத்தின் மீஸான், முஸிபத், ஸ்காத், றசூல், வாஹிட், போன்ற சொற்களையும் கூற முடியும் .
மேற்கூறப்பட்ட அரபு, உருது, பாரசீகச் சொற்கள் உருக் குலையாது இன்றும் மட்டக்களப்பிலே முஸ்லிம்களின் மத்தியில் வழக்கிலுள்ளதை எம்மால் அவதானிக்க முடியும்.
இது பற்றி மட்டக்களப்பின் "பண்பாட்டுக் கோலங்கள்” எனும் ஏழாம் அத்தியாயத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இஃதே போல ஜப்பான் மொழியிலே 500க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கலந் துள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ஆய்வுகளை மேற் கொண்டால் இதைவிடவும் கூடுதலான தகவல்களை எம்மால் பெறமுடியுமென நம்பலாம். நிற்க,
சங்கத் தமிழ், சங்கத்தமிழ் என்று நாம் அடிக்கடி கூறிக் கொள்கின்றோமே இந்தச் சங்கத் தமிழ் என்பது என்ன?
இது எங்கிருந்து வந்தது? உண்மையில் நாம் நினைப்பது
போன்று "சங்கம்’ எனும் சொல் ஒரு அமைப்பைக் குறிக்கப் பயன்படவில்லை. சங்கம் எனும் சொல் காலத்தைக் குறிக்கவே

மருதூர் ஏ. மஜீத் 53
பயன்பட்டுள்ளதை நாம் அவதானிக்க முடியும். அதாவது, கோடி கோடி ஆண்டுகள் என்பதைக் குறிக்கவே பயன்பட்டுள்ளது. என்பதை நாம் அவதானிக்க முடியும்,
உதாரணமாக, ஒன்று பத்து O 15JT Աl IOO ஆயிரம் 1000 பத்தாயிரம் I0000 இலட்சம் , 00000 பத்துலட்சம் I000000 கோடி 10000000 பத்துக்கோடி ] ዕ0000000 நூறு கோடி 1000000000
இதற்கு மேல் சங்கம் என்றும், விந்தம் என்றும் குமுதம் என்றும் பதுமம் என்றும், நாடு என்றும், சமுத்திரம் என்றும், வெள்ளம் என்றும் பெயரிட்டு பல பெயரெண்களை அழைத்துள்ளனர். சங்கத்தின் பன்மடங்கு கொண்டது விந்தம், விந்தத்தின் பன்மடங்கு கொண்டது குமுதம், குமுதத்தின் பன்மடங்கு கொண்டது பதுமம், பதுமத்தின் பன்மடங்கு கொண்டது நாடு; நாட்டின் பன்மடங்கு கொண்டது சமுத்திரம்; சமுத்திரத்தின் பன்மடங்கு கொண்டது வெள்ளம். இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் சங்கம் என்பது பதினைந்து தானத்தைக் கொண்டது எனலாம்.
எனவே, சங்கம் எனும் காலம் கோடி கோடி ஆண்டுகளைக் கொண்டதாகும். தமிழ் மொழி மிக மிகப் பழமையானது என்பதைக் குறிக்கவே 'சங்கம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்களே தவிர நாம் நினைப்பது போன்று ஒரு அமைப்பினைக் குறிக்க இது பயன்படவில்லை எனலாம்.
சங்கமாக இருந்து தமிழ் வளர்த்தார்கள் என்ற கருத்து மிகமிகப் பிற்பட்ட காலத்ததே. இதனை இவ்வாறும் கூறலாம். கி. பி. ஆண்டு களில் தமிழ் வளர்ச்சியை முதல், இடை, கடை என வகுத்து சங்க காலம், சங்கமருவியகாலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், தற்காலம் என வகுத்துக் கொண்டனர்.
எண் வரலாறு

Page 29
54 மருதூர் ஏ. மஜீத்
1சங்க காலத்தை கி. மு. மூன்று நூற்றாண்டுகள் உடையதா கவும், கி. பி. மூன்று நூற்றாண்டுகளை உடையதாகவும், சங்கமருவிய காலத்தை கி. பி. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையுள்ளகாலத்தை உடையதாகவும் அதற்கு ட் பிற்பட்ட காலத்தையும் இவ்வாறே வகுத்துக் கொண்டனர்.
2ஆதம் நபியும், அவரது மனைவியும் ஜெறுசலத்திலிருந்து நாற்பது தடவை சரன்தீவுக்கு வந்து சென்றதாகச் சில வரலாறுகள் கூறுகின்றன. இப்படித் தந்தையைப் பின்பற்றிப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பின்பற்றி அவர்களது பிள்ளைகளும் வழி வழியாக வந்து போன போது சில குடியேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா!
இன்றைய ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சிகள் இதனை நிரூபிக் கின்றது. தென்னிந்தியாவிலுள்ள இவ்வூரின் பெயரும் இதற்கு நல்ல சான்றாக அமைகின்றது.
ஆதியூர், ஆதிநல்லூர், ஆதிச்சநல்லூர் என்று வளர்ந்து வந்திருக்க வேண்டும். இவ்வூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி எமக்கு மேலும் பல தகவல்களை எடுத்துக் கூறுவதாக உள்ளன.
சேஸ் என்பவர் தனது ஹிப்பட்ஸ் சொற்பொழிவுகளிலே (1887)ல் கி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே சுமேரியர்கட்கும், தென்னிந்தி யர்கட்கும் இடையே வியாபாரத் தொடர்புகள் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் சுமேரிய மன்னரின் தலைநகரான "ஊர்” என்ற இடத்தில் சந்திர பகவானுக்கு கோயில் கட்டப்பட்டிருந்ததாகவும், அக்கோயிலின் கதவுகள் தேக்க மரத்தால் செய்யப்பட்டிருந்ததாகவும் அத்தேக்க மரம் இந்தியாவின் கேரளத்தில் இருந்து கொண்டு செல்லட் பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவர் இந்தியாவும், இலங்கையும் அக்கால கட்டத்தில் ஒன்றாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இஃது ஒரு புறமிருக்க இலங்கையில் இருந்து மத்திய கிழக்கிற்கு தேக்கமரம் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
* தமிழ் இலக்கிய வரலாறு, * நபிமார்கள் வரலாறு.

மருதூர் . ஏ. மஜத் 55
மேலும், ஆதிச்ச நல்லூரிலே மேற்கொள்ளப்பட்ட அகழ் வாராய்ச்சியிலே மனித எலும்புக் கூடுகள், உரல்கள் மெருகிடப் பட்ட மட்பாண்டங்கள், இரும்பினால் ஆன சில கருவிகள், பொன் னினாலும், வெண்கலத்தினாலும் ஆன அணி கலங்கள், சிறு வேல்கள் அடங்கிய சிறிய தாழிகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் போன்ற புதை பொருட்கள் சைபீரியாவில் எண்கோமி என்னும் இடத்திலும் காஸா, ஜெரார் எனும் இடங்களிலும் பலஸ்தீனத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இரும்பினால் ஆன பொருட்கள் ஆதிச்ச நல்லூரில் மட்டுமே கிடைத்துள்ளன.
இதிலிருந்து நாம் ஒன்றை உணர முடிகிறது. அதாவது, சுமேரிய எகிப்திய சிந்து வெளி போன்ற நாகரிகங்களின் பிந்திய தொடரே ஆதிச்ச நல்லூர் குடியேற்றம் என்பதாகும். எதுவித காரணம் கொண்டும் ஆதிச்ச நல்லூர் முந்தியதாக இருக்க முடியாதல்லவா? இக்கருத்து பிராங்போட், டாக்டர் ஹால், பேராசிரியர் சீனிவாச ஐயர் போன்றோரின் கருத்தான "இந்தியாவில் இருந்தே மத்திய கிழக்கிற்கு நாகரிகம் சென்றது" என்ற கருத்தினை செயலற்றுப் போசச் செய்து விடுகிறது அல்லவா? அதாவது, ஆதிச்ச நல்லூரில் இரும்பின் உபயோகம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டதோடு செயலற்று விடுகிறது.
மேலும், கோண்ட்வாணா கண்டம் பற்றிய செய்திகளோடு பின்வரும் செய்தியினையும் சேர்த்து நோக்க முடியும், அதாவது, கோண்ட்வாணாளன்னும் அக்கண்டத்திலே ஆபிரிக்கா தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா, இலங்கை, உள்ளிட்ட, இந்தியா, ஆசியா எல்லாமே ஒரே கண்டமாக இருந்ததாகப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சுமாத்திரா, போன்ற இன்றைய நாடுகளும், இந்த கோண்ட் வாணாக் கண்டத்துடனேயே இணைந்திருந்தன. இக் காலகட்டத்தில் ஆதமும், அவருடைய பிற் சந்ததியினராகிய சுமேரியர்களும் கோண்ட்வானாக் கண்டத்தின் நாலா திக்கிலும் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டிய ஒரு விடயமல்ல. இவர்கள் பேசிய மொழியாகிய சுமேரிய மொழி (இன்றைய தமிழ் மொழியின் தாய் மொழி) இக்கண்ட மெங்கும் பரவி ஆட்சி செய்தது எனலாம்.
* தமிழக வரலாறும், மக்கள் பண்பாடும்.

Page 30
56 - - - - - - - - - - - - - - மருதூர் ஏ. மஜித்
மேலும், இன்று உலகெங்கும் வழக்கிலுள்ள கணித முறை மத்திய கிழக்கு வாசிகளால் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நாமறிவோம். அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு வாசிகள் இதனை இந்தியாவில் முதன் முதல் அறிமுகம் செய்து வைத்தனர்.
அதனால்தான் இக்கணிதமுறை இருவரது உறவினையும் எடுத்துக் காட்டும் வண்ணம் அராபிய இந்து கணித முறை என அழைக்கப்படுகிறது.
இன்று உலகெங்கும் வழக்கிலுள்ள பூச்சியத்தை ( 0 ) "சைபர்”* எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு வாசிகளே.
மேலும்,சரன்தீவிலிருந்து புனிதயாத்திரையை முடித்துக்கொண்டு மத்திய கிழக்கிற்குச் சென்றவர்கள் தங்களோடு தேனையும், வாசனைத் திரவியங்சளையும், பாக்கு, ய்ானைத் தந்தம், தேக்கமரம், மாணிக்கம் போன்றவற்றையும் எடுத்துச் சென்றனர். இவைகளுக்கு மத்திய கிழக்கு மக்கள் மத்தியிலும், அரசர்கள் மத்தியிலும் நல்ல கிராக்கி இருந்த தினால் சரன்தீவிற்கு ஒரு தரம் வந்து சென்றால் மீண்டும் வரத் தேவையில்லாத அளவு செல்வத்தில் தன்னிறைவு பெற்றவராகக் காணப்பட்டனர். இதற்கு ஆதம் நபியவர்களின் பாதத் தரிசனம் ஒரு காரணம் எனவும் பரவலாக மக்கள் மத்தியிலே கருத்தும் இருந்தது. அதனால் எல்லா மத்திய கிழக்குவாசியுமே வாழ்க்கையில் ஒரு தரம் சரன்தீவையும், ஆதம் நபியவர்களின் பாதத்தையும் தரிசித்து வர விரும்பினர் எனலாம்.
ஆனால், அக்கால கட்டத்தில் பிரயாணம் என்பது சாதாரண காரியமல்ல. எல்லோராலும் முடியாத காரியமுமாகும். இதனால் வந்த ஒரு சிலர் போக முடியாது தங்கவும் ஏற்பட்டது. தரைமார்க்கமாக இருந்த பிரயாணம் கடல் மார்க்கப் பிரயாணமாகவும் மாற்றம் பெற்றது.
"ஆதம் நபியவர்களின் சந்ததிகளில் வரலாறு கூறும் ஒருவராக நூஃ நபியவர்கள் காணப்படுகிறார். நூஃ நபியவர்களின் பிற்சந்ததி யினர் பதினெட்டுப் பாசைகளைப் பேசக் கூடியவர்களாக விருத்திய டைந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பதினெட்டு மொழிகளுக்கும் தாய் சுமேரிய மொழியே. அதாவது, இப்பதினெட்டு மொழிகளும் செமித்திய மொழிக் குடும்ப மொழிகளே எனலாம்.
நபிமார்கள் வரலா ש( -

மருதூர் ஏ. மஜித்- S7
மேற்கூறிய சுமேரிய மொழி யூப்பிரட்டீஸ் டைக்கிறிஸ் நதிக் கரையில் இருந்து ஆட்சி செய்து அங்கிருந்து நைல் நதிக் கரைக்கு வந்து அங்கிருந்து ஆட்சி செய்து, பின் அங்கிருந்து நகர்ந்து - சிந்து நதிக்கரை வந்து ஹரப்பா மொகஞ்சதாரோவில் ஆட்சி செய்து, அங்கிருந்து ஆதிச்ச நல்லூரில் குடியேறியது எனலாம்.
மேலும், சுமேரியர்கள் தாயை 'உம்மா” என்றே அழைத்தனர். மட்டக்களப்பில் நாங்களும் அப்படியே அழைக்கின்றோம். அரேபிய மொழியில் 'உம்மா’ உம்மூ என்று அழைக்கப்படுகிறது. ஹிந்துக்கள் தெய்வத்தை "உமா’’ என அழைக்கின்றனர். ஹிந்துக்களுக்குத் தாயே தெய்வம். அதனால் அப்படி அழைக்கின்றார்கள்.
மேலும், பலூசிஸ்தானில் வாழும் பிராஹாலி மொழிக்கும் இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் தமிழ் மொழிக்குமி
டையே நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன.
ஆசிய மைனரைச் சேர்ந்தவர்களையும், அவர்களது கல்வெட்டுக் களையும் 'த்ரிம்ளை” ( Trimmai ) எனக் குறிக்கப்பட்டுள்ளது. இச்சொல்லின் ஒலி " "திரம்பளம்’ ‘தமிழம்’ ‘தமிழ்’ என ஒலிப்பதை நாம் அவதானிக்க முடியும்.
ஆசிய மைனரைச் சேர்ந்தவர்களும், மத்திய கிழக்குவாசிகளும் ஒரே இனத்தவரே எனும் ஒரு கருத்தும் உண்டு.
எனவே, அன்றைய ஆசிய மைனர்களின் மொழி தமிழாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனலாம்.
மேலும், தென்னிந்தியாவிற்கு வந்த மத்திய கிழக்கு வாசிகள் தமிழை 'அறவம்” என அழைத்ததாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலாசிரியர் கால் வெல்ட் ஐயர் குறிப்பிடுகின்றார்.
ஆனால், அறவம் என்ற சொல் தமிழுக்கு ஏன் வழங்கியது என்பன பற்றித் தனது நிச்சயமற்ற நிலையையும் எழுதியுள்ளார்.
ஆயினும் டாக்டர் குண்டட்டின் கருத்தையும் தனது நூலில் ஐயர் குறித்து வைத்துள்ளார்.
அறபுத் தமிழ் நூல்களை - அரபையும் தமிழையும் கொண்ட நூல்களை விஸானுல் "அறவிய்யா" என்று அழைப்பதுவும், அரபுத்
1 ათიომით-ოub தமிழும்.

Page 31
S8 மருதூர் ஏ. மஜீத்
தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழை "அறிவிய்யா” என இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் அழைப்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அறபு என்ற சொல் அறவிய்யா என்றும், அறவம் என்றும் மருவியிருக்கலாம். அல்லது, அறவம் என்ற சொல்லின் திரிபாக *அறபு" என்ற சொல் வந்திருக்கலாம். மேலும், கி. மு. 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் எழுந்ததெனக் கருதப்படும் சில பிராமியக் கல் வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருக்கக் காண்கின்றோம். ஆனால் அந்தத் தமிழ் இக்கால வேலையாட்கள் பேசிய ஆங்கிலம் போல் பிராகிரதச் சொற்கள் நிரம்பிக் காணப்படுகிறது. இதனை வேற்று மொழியினர் பேசிய தமிழ் எனக் கொள்ளலாம் எனத் தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகின்றது
இந்தியாவின் சமண நூல்கள் ஆதி காலத்தில் பதினெட்டு வகையான எழுத்து வரிவடிவங்கள் இருந்ததாகக் கூறுகின்றன. இஃது எமக்கு நூஃ நபியவர்களின் பிள்ளைகள் பதினெட்டுப் பாசை பேசக் கூடியவர்களாகப் பல பாகங்களிலும் சென்று வாழ்ந்த சம்பவத்தை ஞாபகமூட்டுகிறது. இஃதே வேளை இந்தப் பதினெட்டு எழுத்து வரிவடிவங்களுள் பம்பி எனப்படும் பிராமியும், தாமிலியும் அடங்கும் எனவும் அந்தச் சமண நூல்கள் கூறுகின்றன. இதே வேளை இந்தப் பிராமிய வரிவடிவம் இந்தியாவில் உள்ள எல்லா எழுத்து வரிவடிவங் களுக்கும் தாய் எனக் கொள்ள இடமிருக்கிறது எனச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழுக்கும் பிராமிய வரிவடிவத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு என்பதைப் பன்னீர்ச் செல்வம் ஆகியோரின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுக்கள் நிரூபித்து நிற்கின்றது. த. நா. சுப்ரமணியத்தின் கருத்துப்படி பிராமிய வரிவடிவம் தமிழ் மொழியை எழுதுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் கூறுகின்றார்.
மேலும், இந்துவெளி நாகரிகப் பகுதிகளான ஹரப்பா மொஹஞ்சதாரோ எழுத்துக்கள் இடமிருந்து வலமாகச் சென்று பின் அடுத்த வரி வலமிருந்து இடமாகச் செல்லும் வழக்கமுடையதாக இருந்துள்ளது.
சுமேரியர்கள் அதாவது, உலகிலேயே முதன்முதல் எழுதக் கற்றுக்கொண்டவர்கள் வலமிருந்து இடமாக எழுதினார்கள்.

மருதூர் ஏ. மஜித் e
வலமிருந்து இடமாக எழுதப்பட்ட சுமேரிய எழுத்துக்கள் சில வசதிகள் கருதி சிந்து வெளி நாகரிக காலத்தின் போது வலமிருந்து இடமாக வும் அதன் தொடர் அடுத்த வரியில் இடமிருந்து வலமாகவும் எழுதப் பட்டது எனலாம். பின் இதுவேறு சில காரணங்கள் கருதி வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தனித்தனியே பிரிந்திருக்கலாம்.
இன்றையத் தமிழ் இடமிருந்து வலமாக எழுதப்படுவதற்கு தனித்தனியே பிரிந்தது காரணமாக இருக்கலாம்.
"திரு. வி. கனகசபைப்பிள்ளை தமிழர்கள் சீன நாட்டில் இருந்து வந்தவர்கள் என்கிறார்.
பண்டிதர் சவயரும், வேறு சிலரும் மொசப்பட்டோமியா, சாலடியா ஆகிய மேலை ஆசிய நாடுகள் என்கிறார்கள். இதிலிருந்து நாம் ஒன்றை ஊகிக்கலாம். அதாவது, தமிழைப் டேசினாலும் திரா விடர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்பதாகும். இன்று தென்னிந் தியாவிலும், இலங்கையிலும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு வாசிகளின் வம்சா வழியினரே. இவர்களும் திராவிடர்களும் இனத்தால் வித்தியாசப்பட்டவர்களே. திராவிடர் வேறு ஆரியர் வேறு. தென்னிந்தியாவிலும், இலங்சையிலும் வாழ்கின்ற திராவிடர்களும், மத்திய கிழக்கு வாசிகளின் வழித்தோன் றல்களும் வேறு வேறானவர்கள் என இலேசாக எம்மால் இனங்காண (tpւգսյւb.
ஆதித் திராவிடர்கள் இன்றும் திராவிட மொழிக் குடும்ப மொழிகளான தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளையே பேசுகிறார்கள். தென்னிந்தியாவில் ஆதித்திராவிடர் தெரு என ஒரு தெரு இன்றும் உண்டு.
திராவிடர் கழகத் தலைவர் பெரியார் அவர்கள் ஆதித்திராவிடர் ஆதித்திராவிடர் என ஏன் அடிக்கடி பேச வேண்டும்.
மேலும், டாக்டர் சில்பெர்ட் சிலேட்டர் போன்றோர் இன்றையத் தமிழர்கள் எகிப்தில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கூற வேண்டும்.
இந்திய சரித்திர ஆசிரியர் அரங்கச் சாரியார் ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் நடுவில் உள்ள மத்திய தரைக் கடற் கரைப்பக்கம் வாழ்ந்த மக்களின் இனத்தவர்களே தமிழர்கள் என்று கூறுகின்றார்.
சீது முதல் சிந்து வரை.

Page 32
60 மருதூர் ஏ. மஜீத்
சுமேரிய மக்களுக்கும், தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இடையே உடல் ஒற்றுமை, மொழி ஒற்றுமை என்பன காணப்படுகின்றன. இஃதே போல நியூசிலாந்தில் வாழும் ஆதிக்குடிகளான மேலோஹி மக்களுக்கும், இத்தீவைச் சுற்றி சிறு சிறு தீவுகளில் வாழும் மக்களுக்கும் பேசும் மொழிக்கும், தமிழுக்கும் பொருத்தமான தொடர்புண்டு.
மேலும், இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கின் கடைசி மதமான இஸ்லாம் பரவிய பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டுத் தேசிய மொழிகளிலே செமித்திய மொழிக் குடும் பத்தின் ஒரு மொழியான அரபு மொழி தனது செல்வாக்கை ஆழப் பதித்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. உதாரணம், ஸ்வாஹிலி' சோமாலி, துருக்கி, பாரசீகம், மலாய், உருது போன்ற மொழிகள் அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டன.
மாலைதீவில் பேசப்படும் மொழி 'திவேஹறி' எனப்படும். இம்மொழியும் வலமிருந்து இடமாகவே எழுதப்படுகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில் வாழும் தமிழ்-மக்களை சிலப்பதிகார இளங்கோ அடிகள் "பதியெழு ஆரியப்பழங் குடியினர்’ எனக் கூறியுள்ளார்.
தமிழர்கள் ஆரியர்களே. அதாவது, மத்திய கிழக்கு வாசிகள். இவர்கள் திராவிடர்கள் அல்ல என்பதே இதன் பொருளாகும். உருது, பஞ்சாபி, இந்துஸ்தானி, மாலைதீவு மொழி, மலேயா, இந்தோனே சியா மொழி, பாரசீகம் எல்லாமே அரபு மொழியில் எழுதப்பட்டன.
*யூப்பிரட்டீஸ், டைக்கிறிஸ் நதிக்கரையில் முதன்முதல் எழுதப்பட்ட எழுத்து ஆப்பெழுத்து எனச் சிலர் கூறுகிறார்கள்.
வட்டெழுத்துக்கள் எனக் கூறப்படும் பண்டைய தமிழ் எழுத் துக்கள் கி. பி. 14ஆம் நூற்றாண்டில் வடமொழி எழுத்துக்களின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டுத்தான் இன்றைய எழுத்துக்கள் தோன்றின என மொழியியலாளர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி பார்த்தால் இன்றையத் தமிழ் எழுத்துக்கள் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையே எனக் கொள்ள முடியும்.
*வட்டெழுத்துக்கு முன்பிருந்த ஆப்பெழுத்து வழக்கொழிந்தது கி. பி. 9ஆம் நூற்றாண்டில் எனலாம்.
1 தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும்.
2 கலைக் களஞ்சியம். 3 தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும்

மருதூர் ஏ. மஜித்
மேலும், திராவிடர்கள் வேறு, தமிழர்கள் வேறு. உதாரணமாக இன்று யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு வாசி சளின் கலப்பினால் வந்தவர்கள். தென்னிந்தியாவிலும், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்பவர்கள் அதிகமாகத் திராவிடர்களே எனலாம்.
"தமிழர்கள் மத்திய கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு நல்லதொரு உதாரணம், அரபிகள் சந்திரனைக் கொண்டே மாதத்தைக் கணித்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பழந் தமிழ் இலக்கியங்களிலும் சந்திரக் கணக்கையே கையாண்டுள்ளார்கள் என்பது புலனாகின்றது.
2'முருகன்" என்ற சொல் கூடப் பாரசீகச் சொல்லே. பார சீகத்தில் முருகன் என்றால் சேவல் என்பது பொருளாகும். முருசன் என்ற சொல்லின் உண்மை வடிவம் ‘மூர்க்கா’ என்னும் பாரசீகச் சொல்லே. முருகி என்றால் வங்காளமொழியில் கோழி என்று பொருள்.
இனி இவ்வத்தியாயத்திலே இலங்கை முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படும் சொற்கள் சிலவற்றை எடுத்து நோக்குவோம். முதலில் சோனி அல்லது, சோனகர் எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். சோனி, சோனகர், யோனகர் எனும் மூன்று சொற்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. சோனி என்ற சொல் "அரபு’ என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. சோனி என்ற சொல்லில் இருந்தே சோனகர் என்ற சொல் வளர்ந்திருக்கலாம். சோனகர் என்றால் அராபியர் என்பது பொருளாகும். சோனகர் என்பதை பாளி மொழியிலே யோனகர் என அழைப்பதுண்டு. யோனகர் என்றாலும் அராபியர் என்பதே பொருள். சோனகம் 56 தேசங்களில் ஒன்று என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
மேலும், புறநானூற்றுப் பாடலொன்று பொன்னோடு வந்து கறியோடு பெயரும் எனக் குறிக்கின்றது. அதாவது சோனகர்கள் அராபியாவில் இருந்து பொன்னோடு வந்து கறியோடு - மிளகோடும். மணச்சாமான்களோடும் போகின்றார்கள் எனக் குறித்து பொன்னைத் தமிழில் சோண என்றும் கூறுவதுண்டு. சோணத்தைக் கொண்டு வந்தவர்களை மரியாதை விகுதியான "அர்” சேர்த்து சோனகர் என்றும் அழைத்திருக்கலாம்.
வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும், 2 **மங்கை” ஜுலை இதழ் 91.
அவளுக்காக ஒருபாடல்

Page 33
62 - - - - - மருதூர் ஏ. மஜித்
மேலும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டிலேயும் கி. பி. 1014ல் ராஜ ராஜ சோழன் கல்வெட்டிலேயும் தஞ்சைப்புறம் பாடி ராஜ வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாமூர் என வருகிறது, எனவே சோனகரையே மூர் என்ற சொல்லும் குறிக்கிறது எனலாம்.
உதாரணத்திற்கு இலங்கையிலே பின்வருவனவற்றைக்கூற முடியும்.
(1) யோனகர் வீதி - சோனகர் வீதி
(2) யொன்கல - சோனகர்மலை (3) யொன்பிசவ - சோனக இராணி
இச்சொற்களை சிங்களமக்களும் போத்துக்கீசருமே பாவித் துள்ளனர். சோனகர் என்ற சொல்லுக்கு 1834ல் தொகுக்கப்பட்ட ரொட்லரின் தமிழ், ஆங்கிலச் சொல் அகராதி பின்வருமாறு பொருள் கூறியுள்ளது.
புராதன ஹிந்து புவியியல் நூல்களில் அரேபியத்தீபகற்பம் சோனகம் என அழைக்கப்பட்டுள்ளது. எனவே சோனகர் என்போர் அராபியரைத் தவிர வேறில்லை எனக் கூறியுள்ளது.
மேலும், சோண என்ற அரபிச் சொல்லிற்கு யுத்தக்கப்பல் என்றும் பொருள் உண்டு
அடுத்ததாக,
மரக்கலமினுசு எனும் சொல்லை எடுத்துக்கொள்வோம்.
மரக்கலமினுசு என்ற சொல் மரினர் என்ற சொல்லின் திரிபே எனலாம். மரக்கல என்பதன் பொருள் படகோட்டி, கப்பலோட்டி என்பதாகும். எனவே மரக்கலமினுசு என்னும் சொல் கப்பலோட்டி களான அராபியரையே குறித்து நின்றது.
யவனர் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
யவனர் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லாகும். யவனர் என்றால் பாளிமொழியில் வெளிநாட்டவர் என்பது பொருள். ஆரம்பத்தில் இச்சொல் மத்திய கிழக்கு வாசிகளையே குறித்து நின்றது. பின் இது கிரேக்கரைக் குறித்தும் பாவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இச் சொல் வெளிநாட்டவர் எல்லோரையுமே குறித்து நின்றது.

மருதூர் ஏ. ம்ஜித் ቆ !
துலுக்கர் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
துருக்கியில் இருந்து வந்தவர்களை தென்இந்தியர்கள் துலுக்கர் என்று அழைத்தனர். இதனை இலங்கையிலுள்ள ஒருசிலரும் படவில் கப்பழகிக் கொண்டனர்.
உதாரணமாக சீர்பாதகுல வரலாறு என்ற நூலில் ஒரு பாடல் பின்வருமாறு கூறுகின்றது.
"தோணி கரயார்க்கு
தொப்பி துலுக்கருக்கு
காணியுழு மேழிகளிகாராளருக்கு" என வருகிறது தொப்பி இங்கு துருக்கித் தொப்பியையே குறித்து நிற்கின்றது எனலாம். இனிபபுரு என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். பபுரு என்ற இந்தச் சொல் அதிகம் வழக்கிலில்லை. பழைய சிங்கள இலக்கியங்களில் ஒரு சில இடங்களில் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தைச் சேர்ந்த "பரெலிசந்தேசய, "கிராசந்தேசய” என்ற தூதுப்பிரபந்தங்களும் பேருவலையை பபுரு மக்கள் வாழும் இடம் எனக் குறிக்கின்றது.
ஆனால் உண்மையில் இச் சொல் அரேபியரை அல்லது முஸ்லிம் களைக் குறித்து நின்றதா என்பது சந்தேகமே. அடுத்து ‘மூஅர்ஸ்” என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இச் சொல் ஸ்பெயின் தேசத்தை ஆண்டவர்களைப் போர்த்துக் கேயர் "மூஅர்ஸ்” என அழைத்தனர். இஃதேபோல இலங்கையிலும் போர்த்துக்கேயர் மத்திய கிழக்கு வாசிகளை "மூஅர்ஸ்” என்றே அழைத்தனர். இச் சொல் லெமூர்ஸ் என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்திருக்கலாம். லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் எனக் குறிக்க இச் சொல் பயன்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக சரசன் எனும் சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இச் சொல் இலங்கையில் மிகமிக அரிதாகவே பயன்பட்டுள்ளது
எனலாம். பிரிட்டிஸார் இலங்கையில் வாழ்ந்த மத்திய கிழக்கு 'வாசிகளைச் சரசன் என்றே அழைத்துள்ளனர்.
அடுத்ததாக ராவுத்தர் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
ராவுத்தர் என்ற சொல் மத்திய கிழக்கில் இருந்து குதிரை வியாபாரிகளோடு வந்த குதிரை பராமரிப்பவர்களைக் குறித்து நின்றது.

Page 34
64 *. ቆ.ኮy , மருதூர் ஏ. மஜித்
இச் சொல் இலங்கையில் மிக மிக அரிதாகவே பயன்பட்டுள்ளது. தென்இந்தியாவில் இச் சொல் சில இடங்களில் புத்தகத்தில் உண்டு.
அடுத்து "மாக்கார்” எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம்.
மாக்கார் எனும் சொல் மலையாள மொழியில் உள்ள சொல்லாகும். மலபாரில் முஸ்லிம் மார்க்க அறிஞர்களை 'மார்கர்" என அழைப்பதுண்டு. இச் சொல்லின் திரிபே, 'மாக்கார்” எனலாம். மார்க்கர் எனும் சொல்லின் திரிபே மாக்கார் என்பதாகும். இச் சொல் இலங்கைக்கு எவ்வாறு வந்தது எனின் இலங்கைக்கு போர்த்துக்கீசர் வந்திறங்கியதும் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்தார்கள் இந்த எதிர்ப்பினைச் சிங்கள மக்களும் அரசர்களும் ஆதரித்தனர், இதனால் முஸ்லிம்களின் ஆலோசனையுடன் சிங்கள அரசர்கள் போர்த்துக்கேயரை விரட்டியடிப்பதற்காக மலபார் அரசனின் உதவியை நாடினார்கள்.
இந்த உதவி கோரலுக்குக் தலைசாய்த்த மலபார் மன்னர் அலி இப்றாகிம் என்பவரின் தலைமையில் இலங்கைக்கு ஒரு படையை அனுப்பினான்.படைக்குத் தலைமைதாங்கி வந்த தளபதி அலி இப்றாகீம் மார்க்க அறிஞராக இருந்த படியால் இவரின் பெயரோடு மார்க்கர் எனும் சொல்லும் சேர்ந்து அலி இப்றாகீம் மார்க்கர் என வந்தது. இது இலங்கையில் மாக்கார் எனத் திரிபடைந்து விட்டது. இன்று இலங்கையில் புழக்கத்தில் உள்ள மாக்கார் போன்ற சொற்கள் இப்படி வந்தவைகளே.
அடுத்ததாக லெப்பை என்ற சொல் தென் இந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம் மார்க்க அறிஞர் களைக் குறித்து நின்றது. "லெப்பைக்க” என்பதால் இவர்கள் லெப்பை என அழைக்கப்பட்டி ருக்கலாம்.
மெளலானா என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இலங் கைக்கு வந்த மார்க்க பக்தியுள்ள அரேபியர்கள் பெருமானாரின் வழித்தோன்றல்கள் எனக்கூறிக் கொண்டனர். இவர்களை மெளலானா என்ற சொல் குறித்தது. மெளலானா என்ற அரபுச் சொல்லின் பொருள் தலைவன் என்பதாகும். இலங்கையில் வாழும் மெளலா னாக்கள் கி. பி. 8ம் நூற்றாண்டில் அரேபியாவை ஆட்சிசெய்த அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்பவரின் ஆட்சியின் போது அவரின் ஆட்சியிலிருந்து தப்பியோடி வந்தவர்கள் எனச் சரித்திரம் கூறுகின்றது. மலையாளத்தில் மெளலானாக்களைத் "தங்கள்’ என அழைப்பதுண்டு. பாட்டாணி - உர்து மொழியில் ஆப்கானிஸ்தான் வாசிகளை பட்டாணியென அழைப்பர். மரைக்காயர்; மரக்கல

மருதூர் ஏ. மஜீத் 65
ஆயர் என்பது திரிந்தே மரைக்காயர் என்றாகியிருக்கலாம். மரக்கல ஆயர் என்றால் மரக்கலங்களின் தலைவன் என்பது பொருளாகும். அல்லது "மரக்கலே எனும் சொல் என்னைக் காத்த இரத்தம்" எனப் பொருள் படும் படியாக "மரக்கலே’ எனும் சிங்களச் சொல்லாகவும் இருக்கலாம் இதற்கு இரண்டாம் இராஜ சிங்கன் கண்டியை ஆண்ட போது பிரிட்டிஸார் கையில் படாமல் தப்பியோடி மரப் பொந்தில் ஒளித்த கதையையும் அங்கே முஸ்லிம் பெண் ஒருத்தி தன்னைக்காத்த கதையையும் கூறுவார்கள். இது நடைபெற்ற து 1629 - 1687க்கும் இடையிலாகும்.
மேலும்,
மரைக்காயர் என்ற சொல்லுக்கு இருவேறு விளக்கம் தருவர். "மிகாப்" என்ற அரபுச் சொல் படகைக் குறிக்கும். அரேபியாவி லிருந்து இந்தியா, இலங்கை போன்ற இடங்களுக்கு வந்த இவர்கள் தங்களை மரகாப் என்று அழைத்துக்கொண்டனர். இந்த மரகாப்தான் பின்னர் மரக்காயர் ஆயிற்று என்பர்.
மேலும்,
"மரக்கலம்’ படகைக்குறிக்கும் சொல்லாகும். ராயர் என்பது அரசனைக் குறிக்கும் சொல்லாகும். 1கடல் வாணிபத்தில் மேலோங்கி அரசனைப் போன்று செல்வாக்குப் பெற்றிருந்ததால் முஸ்லிம்கள் மரக் காயர் என்றாகி இருக்கவேண்டும். 'மரைக்காயர்’ என்ற சொல்போர்த் துக்கீசரின் ஆவணங்களிலேயேதான் முதன் முதல் அறிமுகமானது.
கருத்துக் கோவை

Page 35
66 - மருதூர் ஏ. மஜித்
சரந்தீவில் நாங்கள்
(S இவ்வத்தியாயத்தினை பொருள் இலகுவாகப்
புலப்படும் பொருட்டு
(அ) இயக்கர் நாகர் ஆட்சியிலே (ஆ) விஜயனின் ஆட்சியிலே (இ) சிங்கள மன்னர்கள் ஆட்சியிலே (ஈ ) போர்த்துக்கீசர் ஆட்சியிலே (உ) டக்சுக்காரர் ஆட்சியிலே (ஊ) மக்கள் ஆட்சியிலே
எனப்பாகுபடுத்தி எழுதியுள்ளேன். முதலில்
இயக்கர் நாகர் ஆட்சியிலே
இலங்கையின் வரலாறு கூறும் நூல்களுள்ளே LD85manı Liby th மிகவும் முக்கியமான ஒரு நூலாகும். இருந்தும் இந்நூல் கூட சில சம்பவங்களைத் திரித்தே கூறியுள்ளது. எது எப்படியிருந்தாலும், இந்நூலினை அடியொற்றியே இந்த அத்தியாயத்தினை நடாத்திச் செல்ல விரும்புகிறேன்.
இலங்கையின் எழுதப்பட்ட வரலாறு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயன் வந்த கி. மு. 6ஆம் நூற்றாண்டோடுதான் ஆரம்பமாகின்றது, இதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் பிருந்தே இலங்கையில் இயக்கர் நாகர் என்ற இரு சாதியினர் ஆட்சி செய்து வந்துள்ளனர். "இயக்கர்களின் முதல் அரசன் வச்சிரவாணன் என்பவனாகும். இவனைக் குபேரன் என அழைப்பதுவும் உண்டு. வச்சிரவாணன் என்பவனின் தகப்பனின் பெயர் விச்சிரவாணன் என்பதுவாகும். விச்சிரவாணன் புலத்திய முனிவனின் மகனாவான். விச்சிரவாணனின் இரண்டாவது தாரத்தில் பிறந்த பிள்ளைகளே இராவணன், கும்பகர்ணன், விபூசணண், சூர்ப்பனகை என்பவர்கள். இராவணன் இலங்கையை ஆண்டது கி. மு. 2000 ஆண்டுகள் எனக்
1 சீர்பாத குல வரலாறு.

மருதூர் ஏ. மஜீத் 67
கொள்ள இடமிருக்கிறது. எவ்வாறெனின் இராமர் தனது தகப்பனின் பரம்பரையைச் சேர்ந்த உலகின் முதன் மனிதனான ஆதத்தின் பாதச்சு வட்டினை இலங்கையிலே தரிசிப்பதற்காக வந்த போது ஆரிய மன்னன் இராமன் திராவிட மன்னனாகிய (இராவணன்) தனது இராச்சியத்தைப் பிடிக்க வருகிறான் என எண்ணி அவனது மனைவி யாகிய சீதையைச் சிறைப்பிடித்து நிலைமையை திசைதிருப்புகிறான்.
"இராமர் ஆபிரகாம் என அழைக்கப்படும் இப்றாகீம் நபியவர் களின் வழித் தோன்றலே நெருப்பு வணக்கத்தையுடையவர்கள் இவர்கள். அபூ-ராம் என்பதன் திரிபே ஆபிராம், ஏப்ராம், ஏப்ரஹாம், இப்றாஹீம் என வந்துள்ளது.
அபூ என்பது தந்தை எனப் பொருளாகும். இது ஹீப்ரு மொழிச் சொல். இந்த இராமர் ஆகம் நபியின் மகன் சேதுவின் வழிவந்தவராகும். அதனால் தா ன் இவரை (சேது) சீது - சேதுராமன் என அழைப்பதுவும் வழக்கமாகும்.
ஏப்ரகாம் "ஊர்” என்ற இடத்தில் இருந்து ஆட்சி செய்தது கி. மு. 2000 ஆண்டுகள் எனக்கொள்ள முடியும். எனவேதான் இலங்கையில் இராவணனுடைய ஆட்சியை கி. மு. 2000 ஆண்டளவில் எனக் கொள்ள இடமிருக்கிறது. இந்த இராவணனின் ஆட்சிக்கு முன்பே இலங்கையில் மத்திய கிழக்கு வாசிகளின் நடமாட்டம் இருந் துள்ளது என்பதை ஆதாரபூர்வமாகக் கூறமுடியும். இராமர் இலங் கைக்கு வந்ததும் தனது மூதாதையான ஆதிமனிதன் ஆதத்தின் பாதத்தைத் தரிசிக்கவே எனலாம். பிற்காலத்தில் இச்சரித்திரம் திரிபுபடுத்திக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக வேறு ஒரு சம்பவத்தையும் இங்கு கூற முடியும் ***ஆன்" என்னும் இடத்தில் இருந்து நாற்பது நாள் பிரயாண தூரத்தில் அரேபியாவின் வரண்ட சமவெளியொன்றினை நோக்கி இப்றாகிம் நபியவர்களும், அவருடைய மனைவி ஹாஜறாவும் மகன் இஸ்மாயிலும் செல்லலாயினர். அந்த வெளி ' பக்கா " என அழைக்கப்பட்டது. பாலை வனத்தினூடே இவர்கள் சென்றபாதை "வாசனை மார்க்கம்” என சரித்திர ஆசிரியர்கள் குறித்தள்ளார்கள். எனவேதான் நபி இப்றாகீம் அவர்சளுக்கு முன்பே இந்தியாவில் அல்லது இலங்கையில் இருந்து வாசனைத் திரவியம் இவ்வழியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என ஊகிக்கலாம்.
த ஐலண்ட் பத்திரிகை. 2 "முகம்மத்” மாட்டின் லிங்ஸ்

Page 36
68 மருதூர் ஏ. மஜீத்
இராவணனுக்குப் பின் இலங்கையின் ஒரு பகுதியை விபூஷணன் ஆட்சி செய்தான். நாகர் இலங்கையின் வடபகுதியை ஆட்சி செய்தனர். இயக்கர்நாகர் ஆட்சிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கு வாசிகள் இலங்கையைத் தரிசித்த வண்ணமேயிருந்தனர், இத் தரிசிப்பு புனித மலையான ஆதம்மலையைத் தரிசிப்பதாகவே இருந்தது.
கி. மு. 6 ஆம் நூற்றாண்டளவில் விஜயன் 700 கடற்படை வீரர்களோடு வந்து இலங்கை யைக் கைப்பற்றியதாக இந்திய வரலாறுகள் கூறுகின்றன. மகாவம்சம் விஜயன் அகதியாக வந்த தாகக் கூறுகின்றது.
மகாவம்ச ஆராய்ச்சியாளரும் அறிஞருமான வில்ஹம் ஹைகர், இந்திரியஸ்றெஸ் போன்றோர் கி. பி. 377 ல் அனுராதபுரத்தில் அராபியர்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். "அராபியப் பெண்களின் நகைகள் இங்கு காணப்பட்டுள்ளன. கி. மு. 523 - 575ம் ஆண்டுவரை ஆட்சி செய்த சுலைமான் நபியவர்களின் ஆட்சியின் போது பலஸ் தினத்தில் பைத்துல் முகத்தஸ் பள்ளி வாயலில் இலங்கை மாணிக்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.
மேலும், இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் பின்வருமாறு கூறியுள்ளது. கி. மு. 407 வரை அரசாண்ட பந்துகாபயன் அனுராதபுரத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இங்கே சோனகர்கள் வாழ்வதற்கென தான் ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ளான்
மேலும், இத்ரீஸ் எனும் பிரபலமான புவியியல் நிபுணர் பின்வருமாறு கூறியுள்ளார்: இத்தீவில் உள்ள அ கா (Agha) (அனுராதபுரம்) எனும் நகரில் வாழ்ந்த அரசன் தனது மந்திரிசபையில் 16 மந்திரிமார்களை வைத்திருந்ததாகவும், இவர்களில் நால்வர் மத்திய கிழக்கு வாசிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2மேலும், கி. மு. 327ல் மகா அலக்சாந்தர் இந்தியாவின் வடபகுதிகளை ஆக்கிரமித்தபோது இந்நாட்டின் தெற்கே இரத்தி னக்கற்கள், யானைத்தந்தங்கள் போன்ற செல்வங்கள் நிறைந்த ஒர் தீவு உள்ளதாகவும் அதனைக் கைப்பற்றுவது மகா அலக்சாந்தருக்கு செல்வத்தையும் பெருமையையும் தேடித் தரும் என்றும் அரசனின்
இலங்கையின் சுருக்க வரலாறு. 2 அனுராதபுர மாவட்ட முஸ்லிங்கள்.

மருதூர் ஏ. மஜீத் 69
ஆலோசகர்கள் ஆலோசனை கூறினார்கள். என்றாலும் மகா அலக்சாந்தர் நோய்வாய்ப்பட்டிருந்த படியால் அவன் தாயகம் திரும்ப வேண்டியிருந்தது. அதனால், தனது கப்பல் தலைவனுக்கு, ஒரு கப்பலை எடுத்துச் சென்று அந்தத் தீவினை சுற்றிப்பார்த்து தனக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளை இட்டான். இக்கட்டளைப் படி தயாரிக்கப்பட்ட பூகோளப்படத்தில் எமது நாடு குறிக்கப்பட்டு அதில் சோனாள் ஆறும் குறிக்கப்பட்டுள்ளது.
மேலும், வத்திக்கான் ஏடு எனக் குறிக்கப்படும் தொலமியின் உலகப்படத்திலே குறிக்கப்படும், தப்ரபானா இலங்கையேயாகும். 9gio (gnólisul Gairam Araba ththa Civitas in Extremis 676 b பகுதி இன்று கல்முனை என அழைக்கப்படும் பகுதியையே காட்டுகிறது. கண்டியை ஆண்ட செனரத் மன்னன் 3000 முஸ்லிம்களை இப்பகுதியிலே குடியேற அனுமதித்தது அரபிகளின் தொன்மையான வதிவிடம் என்பதனாலேயே எனக்கொள்ளலாம்.
மேலும், தொலமி கி. பி. 150ல் இலங்கை பற்றிய பூகோளப் படத்தை வரைந்தான். 1இப்படத்தில் தொலமி மகாவலி நதியை ஃபாஸிஸ் ஃபலூஸியஸ் (பாரசீக நதி) என்றும் ஜின் கங்கையை அஸானக் ஃபலூஸியஸ் (எதியோப்பிய நதி) என்றும் தெதுறு ஓயாவை சோணாஃபாலூசியஸ் (அராபிய நதி) என்றும் குறிப்பிட்டுள்ளார் இப் பிரதேசங்களில் பாரசீக, அராபிய, எதியோப்பிய மக்களின் குடியிருப்புக்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2தொலமியின் உலகப்படம் கி. பி. 1477ல் வர்த்தமே பதிப்பாக புதுப்பிக்கப்பட்டது. வர்த்தமே மரபின்படி அக்காலத்தில் முடியுடை வேந்தர் நால்வர் அரசாண்டார்கள் என்றும் அவர்களுள் ஒருவர் முஸ்லிம் என்றும் கூறப்படுகிறது.
அவ்வறிக்கையிலே வரையப்பட்டுள்ள வரைபடத்தில் மல்வத்த ஒயாவுக்கும் தெதுறு ஓயாவுக்குமிடையே "சோனி பெர்டோமஸ்" எனும் ஒரு பகுதி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளான். “சோனி பெர்டோமஸ்’ என்ற கிரேக்க சொல்லின் பொருள் சோனியாறு என்பதாகும். இந்த ஆற்றுப் பள்ளத் தாக்கில் சோனி என்ற இனத் தவர்கள் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான். இந்தச் சோனி என்ற
" அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் 2 நமது பாதை.

Page 37
70 மருதூர் ஏ. மஜித்
இனத்தவர்கள் அரேபியாவில் இருந்து வந்த பீனிசிய இனத்தவர்களாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளான்.
மேலும், இலங்கையில் வாழும் தமிழர்கள் சுமேரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கருத்தை "நம் முன்னோர் அளித்த அரும் செல்வம்’ எனும் சரித்திர நூலில் ஜி. சி. மென்டிஸ் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார். இங்கு மென்டிஸ் அவர்கள் கூறும் தமிழர்கள் சோனி எனப்படும் சோனகர்களே எனக் கொள்ள இடமி
ருக்கிறது.
மேலும், புகழ்வாய்ந்த அரேபியக் கடலோடியான 'சிந்தாபாத்' இலங்கையை தரிசித்துள்ளதாகக் குறிப்புக்கள் கூறுகின்றன. இவர் இலங்கையைத் தரிசித்த போது இலங்கையிலே இருந்த ஒருவர் சரளமாக அரபு மொழி பேசியதாகவும் அவர் வயலுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இவர் நீர் பாய்ச்சிக் கொண்டி ருந்த இடத்தினை மஆபர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த இடமே நாளடைவில் மட்டக்களப்பு என திரிந்திருக்கலாம்.
மேலும் கி. பி. 23-79வரை பிளினி, மலபாரிலும், இலங்கையைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களிலும் அரபிகளின் செல்வாக்கு மிகை யாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கி. மு. எத்தனையோ நூற்றாண்டுகளாக மத்திய கிழக்குவாசிகள் இலங்கையோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது புலனாகின்றது.
விஜயனின் ஆட்சியிலே
வடஇந்திய மன்னனான விஜயன் கடற்படையோடு சென்று கி. மு. 543ல் இலங்கையைக் கைப்பற்றியதாக தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடான கலைக்களஞ்சியம் கூறுகிறது. இந்தியாவின் லாலா நாட்டில் இருந்து விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் அவனது தகப்பனால் துரத்தப்பட்டு இலங்கையின் மாந்தை எனுமிடத்தை வந்தடைந்ததாக இலங்கை வரலாறுகள் கூறுகின்றன. மாந்தை என்பது தற்போது மன்னார் என அழைக்கப்படும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஓர் இடமாகும். இதனை மாந்தோட்டம் என அழைப்பதும் உண்டு.
விஜயனின் வருகையோடு இலங்கையில் இயக்கரின் ஆட்சி மங்கத் தொடங்கியது. இயக்கரும் நாகரும் இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்று அங்கு வாழத் தலைப்பட்டனர்.

மருதூர் ஏ. மஜித் 7
விஜயனைத் திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த குவேனியும் தனது இரு பிள்ளைகளோடும் விஜயனை விட்டுப் பிரிந்து கிழக்கு வந்து தனது இனத்தவர்களோடு சேர்ந்து கொண்டாள். இன்றைய விந்தனையே அவர்களின் கிழக்கின் பிரதான இடமாக இருந்தது.
இன்றிருக்கின்ற வேடர்கள் இயக்கர்களின் வழித்தோன்றல்களே. விஜயன் தனக்குப்பின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள சந்ததியில்லாததை மனதில் கொண்டு மத்தியகிழக்குவாசிகளின் உதவியோடு இந்தியாவில் இருந்து தனது தம்பி சுமித்தனை இலங்கைக்கு வருமாறு அழைப்பு அனுப்பினான். "விஜயனின் தம்பி சுமித்தன் தங்களது தகப்பன் சிங்கபாகு இறந்துவிட்ட படியால் தான் ஆட்சியை ஏற்று நடாத்துவதாகவும் அதனால் தான் வரமுடியாதுள்ளதாகவும் கூறி விரும்பினால் தனது இளைய மகன் பந்து வாச  ைன இலங்கைக்கு அனுப்புவதாகவும் செய்தியனுப்பினான். இதனை விஜயன் ஏற்றுக் கொள்ளவே மத்திய கிழக்குவாசிகளின் உதவியோடு பந்து வாசன் இலங்கைக்கு வந்து ஆட்சியை ஏற்றுக்கொண்டான். மத்திய கிழக்குவாசிகளின் இந்த தூது முயற்சியினால் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அரசர்களினதும் நட்பு மத்திய கிழக்குவாசிகளுக்குக் கிடைத்தது. மத்திய கிழக்குவாசிகளுக்கு இந்தியாவினதும், இலங்கையினதும் கிழக்கு மேற்கு கரைகளும் அதன் வழிகளும்தண்ணிர் பட்ட பாடாக இருந்தது.
அதனால், இந்தியாவின் மேற்குக் கரையான பாகிஸ்தானிலிருந்து இராஜஸ்தான் வழியாக இந்தியாவின் கேரள இராட்சியத்துட் புகுந்து அங்கிருந்து இலங்கையின் மேற்குக்கரையான மன்னார், புத்தளம் வரவும் கேரளத்திலிருந்து கோயம் புத்தூர் வழியாக தஞ்சாவூரை அடைந்து அங்கிருந்து காயல்பட்டினத்துக்குச் சென்று அங்கிருந்து கப்பலேறி மட்டக்களப்பையடைந்து கண்டி சென்று பாவா ஆதம் மலையை தரிசித்தும் மீண்டனர்.
மத்திய கிழக்குவாசிகளைத் தொடர் ந் து சேர நாட்டில் வாழ்ந்த திராவிடர்கள் இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியிலே. குடியேறத் தலைப்பட்டனர். இக்குடியேற்றத்தினை விஜய- மன்னனும் வரவேற்றான், ஆரியரோ திராவிடரோ யாராக இருந்தாலும் இந்தியர் என்ற வகையில் இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறுவதை விஜயன் ஆதரித்தான்.
இலங்கையின் சுருக்க வரலாறு.

Page 38
72 மருதூர் ஏ. மஜீத்
அதனால் கேரளத்திலிருந்து இலங்கையில் குடியேறுவதை உற்சாகப் படுத்தினான். இதனை இங்கு வாழ்ந்த இயக்கரும், நாகரும் விரும் பவில்லை. நாகர் வெறுப்போடு இப்பகுதியை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறினர். குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் போய்க்குடியேறினர். கேரளத்திலிருந்து குடியேறியவர்க ளோடு இயக்கர் போராடினர்.
இப்போராட்டத்துக்கு விஜய னு க் குப் பின் ஆட்சி செய்த பந்துவாசன் கேரளவாசிகளுக்கு உதவிசெய்தான். அத்தோடு மத்திய கிழக்குவாசிகளும் கேரளவாசிகளுக்கு உதவி செய்தனர்.
மத்திய கிழக்குவாசிகள் கேரளவாசிகளுக்கு உதவி செய்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான காரணம் கேரள வாசிகள் மத்திய கிழக்குவாசிகளின் கலப்பினத்தவரே என்பதாகும். சிங்கள மன்னர்கள் ஆட்சியிலே
1(கி. மு. 491 - கி. பி. 400 வரை) அனுராதபுரத்தில் பந்துகாபயன் கி. மு. 491 ல் ஆட்சி செய்தான். இவனுடைய ஆட்சியின் போது யவனர்கள் வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பந்துகாபயனுக்கு முன் இலங்கையை அபயனும், அபயனுக்கு முன் பந்துவாசனும் ஆட்சி செய்தனர். பந்துவாசன் விஜயனின் தம்பி மகனாவான். பந்துகாபயனின் ஆட்சியின் போது அனுராதபுரத்தின் மேற்கு வாயலில் அதாவது புத்தளத்துக்கு அருகாமையில் மத்திய கிழக்குவாசிகளுக்கென ஓர் இடம் ஒதுக்கியிருந்தான். தேவநம்பியதீசன் இலங்கையை ஆட்சி செய்தது கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலாகும். இவன் காலத்திலேயே இங்கு புத்த சமயம் கொண்டுவரப்பட்டது. இவ்வரசன் காலத்தில் மத்திய கிழக்குவாசிகள் அரசர்களின் நன் மதிப்பைப் பெறத் தொடங்கினர்.
2மேலும் துட்டகாமினியின் ஆட்சியின்போது கிழக்கில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. இவனது கிழக்குப்புற வாயிலாக 'இறகம” தற்போதைய இறக்காமம் பிரசித்தி பெற்று விளங்கியது. பொத்துவில் துட்டகாமினியின் துறைமுகமாக விளங்கியது. இவனது காலத்தில் அறுகம்பைக்குடா விரிவாக்கப்பட்டு கடலோடு சேர்க்கப் பட்டது. துட்டகாமினி பொத்துவிலிலே கரந்து வாழ்ந்த போது அவனது தாய் விகாரமாதேவி கடற்பிரயாணத்தின் மூலம் அறுகம் பைக்குடாவிற்குள் வந்து பொத்துவிலில் மகனைத்தரிசித்ததற்கான ஆதாரங்கள் பல இருக்கின்றன. இன்றும் பொத்துவிலில் இவை காணப்
இரத்தினத்தீவில் இஸ்லாமியர் வரலாறு, 2 7ம் வகுப்பு சரித்திரம்.

மருதூர் ஏ. மஜீத் 7.
படுகின்றன. அறுகம்பைக்குடா விரிவாக்கப்பட்டு கடலோடு Of th கப்பட்டபோது கரையிலே குவிக்கப்பட்ட மண்குவியலை இன்றும் அங்கு காணக்கூடியதாக உள்ளது.
இவனைப் போன்றுதான் 1ம், 2ம், கஜபாகு மன்னர்களும் கிழக்கிலே கூடிய கவனம் செலுத்தினர். இன்று கரைவாகுபற்று என்று அழைக்கப்படும் பகுதியாகிய ஆதியூர் கஜபாகு மன்னன் ஞாபகார்த்தமாகவே கஜபாகுப் பற்றாக மாறியது. பிரிட் டிஸ் ஆட்சியின் போதுதான் கரைவாகுப் பற்றாகியது.
அரசர்களோடு மட்டுமிருந்த மத்திய கிழக் குவா சி க ளின் தொடர்பு தேவநம்பியதீசனின் காலத்தில் பொது மக்களோடும் ஏற்பட்டது எனலாம். அதனால் சிங்கள மக்களோடு மக்களாக கலந்து வாழத் தலைப்பட்டனர். அரசர்கள் கொடுத்த கெளரவப் பட்டப் பெயர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்த போது அவைகள் அவர்களின் குடும்பப் பெயர்களாக மாற்றம் பெற்றன.
உதாரணமாக அடலப்பலாகேகெதர முகாந்திரம்லாகே கெதர, வைத்தியலாகேகெதர போன்றவற்றைக் குறிப்பிடலாம். இஃதே போன்று "மடிகே” என்ற சொல்லையும் குறிப்பிட முடியும்.
மேலும், இலங்கையின் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியாகக் கடமையாற்றிய சரித்திர ஆசிரியர் சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் என்பவர் மத்திய கிழக்குவாசிகள் ஜுலிய சீசரின் காலத்தில் இலங் கையில் நிரந்தரமாக வாழ்ந்ததாகக் கூறியுள்ளது மேலே கூறியுள்ளதை நிரூபிப்பதாகக் கூற முடியும்.
கி. பி. 400 - 500 (கி. பி. 4 - 5) வரை இலங்கையின் சுருக்க வரலாற்றிலே எச். டி. கொடி றின்றன் எனும் சரித்திர ஆசிரியர் கிபி 500 ம் ஆண்டளவில் சிங்கள மன்னர்கள் அனுராதபுரத்தை ஆட்சி செய்தபோது அனுராதபுரத்தின் வர்த்தகமும் பிறநாட்டு வர்த்தகமும் பாரசீகர் வசமே இருந்ததாகக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும் போது இந்தப் பாரசீகர்களுக்கு அனுராதபுரத்தில் ஒரு இடம் ஒதுக் கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றார்.
மேலும் கி. பி. 5 ம் நூற்றாண்டளவில் காணப்பட்ட கல்வெட் டுக்கள் செமித்திய மொழி வரி வடிவத்தை ஒத்திருந்ததாக கல்வெட்டு ஆய்வாளர்களின் ஏகோபித்த முடிவாகும். அதாவது இக்கல் வெட் டுக்கள் வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் வரை எழுதும் முறையைக்

Page 39
74 மருதூர் ஏ. மஜித்
கொண்டதாக இருந்தது. இந்தியாவின் அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்கள்கூட இந்த அனுராதபுர கல்வெட்டுக்களையே ஒத்திருந்தன.
வடஇந்தியாவின் அசோகச்சக்கரவர்த்தியின் மெளரிய வம்சம் "சுமேரிய’ எனும் சொல்லின் திரிந்தியவடிவமாக இருக்கலாம் என ஊகிக்கவும் இடமிருக்கிறது. கி. பி. 180 ல் மனுதேய கஜபாகு மன்னன் ஆட்சி செய்தான்.
இ. பி. 500 - 700 வரை (கி பி 5 - 7) 7 ம் நூற்றாண்டிலே ஐரோப்பாவில் அரபி ஒருவரிடம் இரத்தினக்கல் ஒன்று காட்டப் பட்ட போது இது நிச்சயமாக இலங்கையைச் சேர்ந்தது அல்ல என்று கூறும் அளவிற்கு அரபிகள் இலங்கையைப்பற்றியும், இலங் கையின் மாண்க்ககற்கள் பற்றியும் திட்டமாக அறிந்திருந்தார்கள் என்பது புலனாகின்றது.
மேலும், இதே நூற்றாண்டில், அதாவது இலங்கையில் வாழ்ந்த மத்திய கிழக்குவாசிகள் தங்களின் மூதாதையர்கள் இஸ்லாம் என்ற மதத்தைத் தழுவி விட்டதாகவும், இம்மார்க்கமே தங்களுக்கு பரலோகபாக்கியத்தை அளிக்கக்கூடியது என்றும் அறிந்து இம் மதத்தைப்பற்றி அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் வழிதேடி மதீனாவுக்கு ஒருதூதுகோஷ்டியினரை அனுப்பினர். இத்துது கோஷ்டி மதீனாவைப் போய்ச் சேர்ந்தபோது பெருமானார் அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள் என்பதோடு அவரது தோழர் முதலாவது கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களும் இறையடி சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்து உமர் (ரலி) அவர்களிடம் இஸ்லாத் தைப்பற்றி அறிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இலங்கையில் இஸ் லா த்  ைத ப் பரவச் செய்யவும் இஸ்லாமிய முறைப்படி சுன்னத் செய்வதற்கு ஒஸ்தாது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு இலங்கை வந்தார்கள். (இக்குடும்பமே பெருமானாருக்கு முதலில் தலை முடியிறக்கிய அபீசீனிய அடிமைக் குடும்பமாகும்) இக் குடும்பம் பற்றிவேறு ஒரு அத்தியாயத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
மதீனாவுக்குச் சென்ற தூது கோஷ்டி இலங்கை திரும்பும் வழியில் "மக்றம்’ எனும் இடத்தில் (இவ்விடம் பாகிஸ்தானில் உண்டு) இக்கோஷ்டியின் தலைவர் காலமானார். இவரது அடக்கஸ் தலம் இன்றும் பா கி ஸ் த ரா னி ல் 'மக்றம்' என்னுமிடத்தில் காணப்படுகிறது.

மருதூர் ஏ. மஜித் 75
இஸ்லாம் இலங்கைக்கு வந்த போது இலங்கையை இரண்டாம் அக்கபோதி மன்னன் (கி. பி. 608 - 618) ஆட்சி செய்ததாகவும், வேறு சில நூல்கள் முதலாம் மாணவர்மன் (கி. பி. 684 - 718) ஆட்சி செய்ததாகவும் கூறுகின்றன.
மேலும் கி. பி. 685 - 705 வரை அரேபியாவில் அப்துல் மாலிக் பின் மர்வானுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹாசிம் குலத்தார் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டன. வெளியேற்றப்பட்ட இந்த ஹாசிம் குலத்தார் இலங்கையின் வடக்கு கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் குடியேறி வாழ்ந்தனர். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க இவர்கள் ஏன் இங்கு வந்து குடியேற வேண்டும். இங்கு இவர்களின் மூதாதையர்கள் இருந்ததே காரணம் srsarovnrb.
* மேலும் முஸ்லிம்களின் வருகை பற்றி கி. பி. 9ம் நூற்றா ண்டில் வாழ்ந்த அல் - பலதூரி என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
இந் நாட்டில் குடியேறி வாழ்ந்து மரணித்த அரேபியர்களின் மனைவிமார் சிலரை அன்றைய மன்னன் தைக்கிறிஸ் நதிப்பள்ளத் தாக்கில் உள்ள அவர்களது பூர்வீக நாட்டிற்கு அனுப்பிய வேளையில் கடற் கொள்ளையரினால் அவர்கள் தாக்கப்பட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
கி. பி. 700 - 800 வரை (கி. பி. 7 - 8) கி. பி. 770 - 800 வரை பக்தாதில் அரசாட்சி செய்த ஹாறுான் அல் றசிட் என்ப வருடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பக்தாதின் தூதுவராக 'ஹப்பாஹ்" என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் இலங்கையில் இருந்த காலத்தில் இரத்தினக்கற்கள் பற்றிப்படித்ததாகவும் கூறப்படுகின்றது. இக்கால கட்டத்தில் இலங்கையை முதலாம் உதய மன்னன் இரண்டாம் மஹிந்த மன்னன் ஆகியோர் ஆட்சி செய்ததாக அறியக்கிடக்கின்றது.
மேலும் டமஸ்கஸ்ஸில் உமயாக்களின் ஆட்சி நடந்த போது இலங்கை அரசன் முஸ்லிம் வர்த்தகர்களோடு அனுப்பிய அனாதை முஸ்லீம் பெண்களை கராச்சிக்கண்மையில் சிந்து கொள்ளைக்காரர்கள் கடற் கொள்ளையிட்ட போது இதனைக் கண்டிக்கும் முகமாகவே உமையாக்களால் உமயாக்களின் பிரதி நிதியாக கிழக்கில் இருந்த
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு. 2 அனுராதபுர மாவட்ட முஸ்லீம்கள்.

Page 40
76 மருதூர் ஏ. மஜிக்,
ஹஜ்ஜாஜ் மூலம் கி. பி. 715 ல் சிந்து கைப்பற்றப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவும் சிந்து எனக் குறிக்கப்படும் பாக்கிஸ் தானும் ஒன்றாக - இருந்தது குறிப்பிடத்தக்கது. நிற்க.
கி. மு. மத்திய கிழக்குவாசிகள் சேரநாட்டின் ஊடாக இலங்கையைத் தரிசித்துப் பெறுமதி வாய்ந்த பொக்கி சங்க  ைள எடுத்துச் செல்வதை அவதானித்த சேரநாட்டுத் திராவிட மக்கள் மத்திய கிழக்குவாசிகளின் உதவியோடு இலங்கை சென்று பொருள் தேட நினைத்துச் சென்றபோது இயக்கர் நாகர்களோடு போர் செய்ய வேண்டியேற்பட்டது. இப்போரிலே மத்திய கிழக்குவாசிகளின் உதவியை நாடி வெற்றியும் பெற்று இலங்கையின் கிழக்கிலே குடி யேற்றங்களையும் அமைத்துக் கொண்டனர். இதுவே இலங்கையில் சேர நாட்டுத் திராவிடர்களின் முதற் குடியேற்றம் எனலாம். இக் குடியேற்றத்தை விரும்பாத நாகர் இலங்கை யின் வடபகுதியில் போய்க் குடியேறினர். இதன் பின் அதாவது நீண்ட இடைவெளிக்குப் பின் கி. பி. 8ம் நூற்றாண்டளவில் சேரநாட்டுத் திராவிடர்களின் இரண்டாவது குடியேற்றம் மட்டக்களப்பில் வீரமுனையில் இடம் பெற்றது. இது பற்றி வேறு ஓர் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இக்குடியேற்றம் சோழ பாண்டிய நாட்டுத் திராவிடர்களின் கலப்புக் குடியேற்றம் எனலாம். மேலும், இதே ஆண்டுப் பகுதியில் அதாவது கி. பி. 800ம் ஆண்டளவில் கெனியாவில் இருந்து வந்து வேருவலையில் குடியேறிய இளவரசர் ஜமாலுத்தீன் வைத்தியராக இருந்தார். இவரின் வழி வந்த பெரிய முதலி மரைக்கார் கி. பி. 1061ல் இந்தியாவில் இருந்து புடவை நெய்வோரை இங்கு அழைத்து வந்து நெசவுத் தொழிலை இலங்கையில் முதன் முதல் அறிமுகம் செய்து வைத்தார். இதனால் சந்தோஷமடைந்த அரசன் செப்புப் பட்டையம் ஒன்றை அன்பளிப்புச் செய்தான். இலங்கையின் முன்னை நாள் நீதியரசரும் பிரிட்டிஷ் மன்னரின் ஆள்சபைத் தலைவருமான சேர் அலச்சாந்தர் ஜோன் ஸ்ட்ன் இப்பட்டையத்தை தான் கண்ட தாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 8ம் நூற்றாண்டில் மன்னார் குதிரை மலையில் முஸ் லிம்கள் முத்துக் குளித்தலிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
கி. பி. 800 - 900 வரை; மேலும், பக்தாத் அரச சபையின் அரபு வரலாற்று ஆசிரியரான அல் - பலகுரி என்பவர் கி. பி. 875 ல் தனது 'புத்ஹ7ல் புல்தான்’ எனும் காலக் கிரம ப் பதிவில்
அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்.

மருதூர் ஏ. மஜித் לל
'சரன்தீப்” எனும் தீவைப்பற்றி எழுதியுள்ளார். இந்தத் தீவானது இங்குள்ள அழகு மங்கையரின் அழகு முகம் காரணமாக இத்தீவினை நபித்தீவு எனவும் அழைக்கின்றனர் என எழுதியுள்ளார்.
மேலும், கி. பி. 844ல் இலங்கைக்கு வந்த அரேபியக் கப்பல் ஒன்று மலையாளத்தில் ஒரு தீவில் மோதி உடைந்த போது அதில் இருந்த 13 அராபியக் குடும் பங்கள் காப்பாற்றப்பட்டு அரசனால் ஆதரிக்கப்பட்டு நிலமும் வழங்கப்பட்டு அங்கேயே குடி யிருந்தனர். அவர்கள் குடியிருந்தவூர் பேய்ப்பூர் என அழைக்கப்பட்டது.
மேலும் இலங்கையின் வர்த்தகம் பற்றி சிந்தாபாத் பின்வரு மாறு கூறுகிறார்: அவரது பிரயாணக் குறிப்பிலே தனது அடுத்த கடற் பிரயாணத்தின்போது கலீபாவிடம் இருந்து சரன்தீப் அரசனுக்கு கடிதம் ஒன்றினையும் அன்பளிப்பொன்றினையும் எடுத்துச் செல்ல வேண்டுமென்று குறித்துள்ளார் இவர் 9ம் நூற்றாண்டில் பசராவில் இருந்து கப்பலேறியுள்ளார். இவரது கப்பலில் அனேக வர்த்தகர்களும் இருந்தனர். மேலும் இவரது குறிப்பிலே ஆதம் எறியப்பட்ட தீவுக்குச் சென்று அங்குள்ள ம  ைல யு ச் சிக் கும் நான் சென்றேன் என எழுதியுள்ளார் (அவருடைய நூல் அறபியன் நைட்ஸ் என்பதாகும்)
" மேலும் சீ. ஆர். பொக்சர் என்பவரின் கூற்றுப்படி இலங்கை யிலே அராபியர்களின் குடியிருப்புக்கள் எவ்வாறு ஏற்பட்டது எனின் அரேபியர் அடுத்த மொன்சூன் காற்று ஏற்படும் வரை இத்தீவிலேயே தங்கியிருக்க வேண்டியேற்பட்டது. இக்காலத்தில் இவர்கள் இத்தீவிலே தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மனைவியரை எடுப்பர். இவர் கட்குப் பிறக்கும் குழந்தைகள் இஸ்லாத்தில் சேர்க்கப்படுவர். இவர்களின் வளர்ப்புச் செலவினையும் போகும்போது கொடுத்துவிட்டுச் செல்வர். அல்லது சில வேளைகளில் இங்கேயே தங்கியும் விடுவர்.
இப்பிள்ளைகள் இஸ்லாத்தையும் தனது குடும்பத்தையும் இத் தீவிலே வளர உதவிசெய்தனர். இவ்வாறான குடியிருப்புக்கள் கி. பி. 9ம் நூற்றாண்டளவில் அனேகம் காணப்பட்டன எனக்கூறியுள்ளார்.
மேலும் இன்று மன்னார் என கூறப்படும் அன்றைய மாந்தையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் 9ம் நூற்றாண்டளவில் பாரசீகத்தில் அரசோச்சிய "சளானித்’ சாம்ராஜ்யத்தின் "'சூரப்’ என்ற துறைமுகத்தில் இருந்து வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
* முஸ்லிம் ஒப் சிறிலங்கா,

Page 41
78 மருது ஏ. மஜித்
10 ஆம் நூற்றாண்டு:
"10ஆம் நூற்றாண்டளவில் பக்தாத் கலீபாவினால் மதப் பிரச்சாரத்துக்காக இலங்கைக்கு ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார். இவர் பெயர் காலித் இப்னு அபூ புகாயா என்பதாகும் இவர் கொழும்புக் கோட்டையிலே ஒரு பள்ளி வாயலைக்கட்டினார். இவர் இறைவனடி சேர்ந்ததும் இப்பள்ளி வாயலிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரது அடக்கஸ்தலத்துக்கு மேலே பக்தாத் கலீபாவினால் அனுப்பப்பட்ட கல்வெட்டொன்று வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசல் போர்த்துக் கீசரினால் அழிக்கப்பட்ட போதும் 600 வருடங்கள் இக்கல்வெட்டு அப்படியே இருந்தது.
ஒல்லாந்தர் காலத்தில் கொழும்பு தி சா  ைவ யி ன் வீட்டுப் படிக்கட்டுக் கல்லாக இக்கல் வெட்டு பாவிக்கப்பட்டது. பிரித்தானி யரின் ஆட்சியின் போது இக்கல் வெட்டின் முக்கியத்துவம் உணரப் பட்டு பிரிட்டிஸ் அதிகாரி அதன் எழுத்துப் பிரதியை இங்கிலாந்தின் கேம்பிறிஜ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு அனுப்பி அதன் மொழி பெயர்ப்பைப் பெற்றுக் கொண்டார்.
அபூபக்கயாவின் ஆத்ம சா ந் தி க் கா ன பிரார்த்தனையைக் கொண்டது இது. இக் கல்வெட்டு இன்று இலங்கையின் நூதன சாலையிலே உள்ளது.
*மேலும், கி. பி. 911 ம் ஆண்டு அபூசஹித் எனும் அராபிய எழுத்தாளர் இலங்கையைத் தரிசித்து இ ல ங்  ைக  ைய ப் பற்றியும் இலங்கையின் அரசியல் நிலை பற்றியும் அழகாக விபரித்துளார். இவர் இலங்கையிலே இஸ்லாம் அழகாக வேர் ஊன்றியுள்ளது என்றும், இலங்கையை ஆட்சிசெய்யும் சிங்கள அரசனின் அரச சபையில் 16 மந்திரிகள் உள்ளனர் என்றும், 16 மந்திரிகளிலே நால்வர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
11ஆம் நூற்றாண்டில் 1001-1100
3கி. பி. 1016ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி எழுதப்பட்ட சிங்கள அரசனின் சாசனம் ஒன்று பின்வருமாறு கூறுகின்றது. பெரிய
முதலியார் மரைக்காயரும், அவரது சந்ததியினரும் சிறை வாசம், மரண தண்டனை ஆகியவைகளிலிருந்து இத்தால் விலக்கப்படுறார்கள்
1 வழியும் நடையும் - சேர் ராசிக் பரீத். 2 வழியும் நடையும் - சேர் ராசிக் பரீத். 3 வழியும் நடையும் சேர் ராசிக் பரீத்.

மருதூர் ஏ. மஜீத் 79
இவர்கள் அரசனுக்குச் செய்த சேவையினையிட்டு மாட்சிமை தங்கிய அரசன் சந்தோசமடைந்திருப்பதால் இவ்வாறு இவர்களைக் கெளரவிக்கவும் கண்ணியப்படுத்தவும் அரசன் விரும்பினான்.
மேலும், எல்லா வேலைகளிலிருந்தும், எல்லா இன்னல் சளிலி ருந்தும், கஷ்டங்களிலிருந்தும் அரசாங்கம் இவர்களைப் பாதுகாக்கும். இவர்கள் தங்கள் மதத்தைப் பின் பற்றவும் அவர்கள் தெரிவு செய்யும் எந்த நிலப்பரப்பிலும் பள்ளிவாசல்களையும் அஃதேபோல வணக் கஸ்தலங்களைக் கட்டுவதற்கும் சுதந்திரம் உள்ளவர்களாக இருப் பார்கள். கப்பல் கட்டவும் அவைகளைக் கொண்டு ஏனைய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கால கட்டத்தில்தான் சோழர்கள் (கி. பி. 1017 - 1070ல்) இலங்கையைக் கைப்பற்றி தலைநகரை பொலநறுவைக்கு மாற்றிக் கொண்டனர். இக்காலத்தில் எகிப்திய அரசனாக இருந்த 'மாமலுக்’ என்பவனது நாணயங்கள் பொலனறுவையிலிருந்தும் புத்தளத்தில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1ம் விஜயபாகு இலங்கை முழுவதையும் ஆட்சி செய்யும் காலத்தில் (1059-1114) அரசனது படையில் ஜாவா தேசத்துப் படைவீரர்கள் இருந்ததாகச் சரித்திரம் கூறுகின்றது. இந்தப் படை வீரர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறினர். இவர்கள் குடியேறிய இடம் *ஜாவாச்சேரி” என அழைக்கப்பட்டது. தற்போது சாவகச்சேரி என அழைக்கப்படுகிறது. இக்குடியேற்றத்தினைத் தொடர்ந்தும் பல குடி யேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இதற்கு உதாரணமாக
சோனகர்வடலி, சோனகவெளி, சோனகவாடி, பள்ளிக்குடா, சோனகஅடி சோனகரடப்பு, சோனகன் புலவி, என்பவற்றைக் குறிப்பிடலாம்.
12ஆம் நூற்றாண்டில் 1101-1200
இலங்கையைத் தரிசித்த யாத்திரிகர்களில் மார்க்கபோலோ
மிகவும் பிரபலமானவர்.
"இவர் தனது பிரயாணக் குறிப்புக்களிலே12ம் நூற்றாண்டுகளில் இலங்கை அரசர்களின் படைகளில் அதிகமானோர் முஸ்லிம்களாகவே இருந்தனர் எனக் கூறியுள்ளார்.
இலங்கையின் சுருக்க வரலாறு.

Page 42
80 மருதூர் ஏ. மஜித்
மேலும், இந்தியாவின் காயல்பட்டினத்திலிருந்து யாழ்ப்பா ணத்தின் ஊறாதுறைக்கு 12ம் நூற்றாண்டில் அரேபியர் குதிரைகளைக் கொண்டுவந்து சேர்த்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
மேலும், இந்நூற்றாண்டில் எகிப்திய நாணயங்கள் இந்நாட்டில் காணப்பட்டதாக ?இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. மேலும், 12ம் நூற்றாண்டின் பிரபல விரிவுரையாளர் இத்ரீஸ் (1100-1166) ஸ்பெயினில் உருவாக்கிய உலகப் படத்தில் இலங்கையும் குறிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது இலங்கையின் அரச சபையில் நான்கு பெளத்தர்களும், நான்கு முசல் மான்களும் நான்கு கிறிஸ்தவர்களும், நான்கு யூதர்களும், ஆலோசனை கூறுபவர்களாக இருந்ததாககுறிப்பிட்டுள்ளார்.
ேேமலும், 12ம், 13ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அராபிய எழுத்துக்கள் உள்ள இரு கல்வெட்டுக்கள் மன்னார் மாவட்ட புளியந்தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
13ஆம் நூற்றாண்டில் 1201-1300
4கி. பி. 1238ம் ஆண்டு 1ம் புவனேக பாகு எகிப்திய சுல்தானுடன்
வர்த்தக ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டான் என்றும், அதன்படி இலங்கையிலிருந்து கறுவா, இரத்தினக் கற்கள், யானை முதலியவற்றை ஏற்றுமதி செய்தான் என்றும் மேலும் எகிப்திய அரசன் இந்தியாவின் பாண்டியர்களை எதிர்ப்பதற்கு உதவ வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டானென்றும் தெரியவருகிறது. இவனுடைய ஆட்சிக்காலத்திலே இவன் தனது இரண்டாவது மனைவியாக குருநாகல் கிராமத்துக்கு அருகாமையிலுள்ள "மெதகெட்டிய’ கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பிரபுத்துவப் பெண்ணைத் திருமணம் செய்தான். இத்திரும ணத்தால் கிடைத்த மகனே வஸ்துகிமி குமாரய என்று குருநாகல் விஸ்தரய கூறுகின்றது. இந் க, முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்த உரிமையோடுதான் எகிப்திய சுல்தானோடு வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான் என எண்ணத் தோன்றுகிறது.
எகிப்திய சுல்தானுக்கு 1ம் புவனேகபாகு எழுதிய நிருபம் கூட இதனை நிரூபிக்கத்தக்க சான்றாக உள்ளது. அந்நிருபத்தில் 1ம்
The Naina Tivu Tamil Inscription of Parakrama Baku - 1 இலங்கையின் சுருக்க வரலாறு. அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள். ஆதிகால மத்தியகால இலங்கைச் சரித்திரம். -2
:

மருதூர் ஏ. மஜித் 8
புவனேகபாகு தனது பெயரை 'அபூ நிக்பாலி பாதஸ்’ என எழுதி யிருந்தான். இதன் பொருள் என்னவெனில் நான் ஒரு முஸ்லிம் இளவரசனின் தந்தை என்பதாகும். இந்த அரசன் அனுப்பிய தூதுக் குழுவினர் தங்களுடன் எகிப்திய அரசனுக்கு அன்பளிப்புப் பொருட் களையும் கொண்டு சென்றனர். இந்த அன்பளிப்புப் பொருட்களிலே ஒரு தங்கப் பேளையும் அடங்கியிருந்தது. அதில் எழுத்துககள் பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வெழுத்துக்கள் எகிப்திய மன்னனுக்கு முகமன் கூறியும் புகழ்ந்தும் எழுதப்பட்டிருந்தது.
1ம் புவனேகபாகுவினால் எகிப்துக்கு அனுப்பப்பட்ட தூதுக் குழுவிற்கு அல் ஹாஜ் அபூ உதுமான் என்பவர் தலைமை தாங்கிச் சென்றுள்ளார்.
மேலும், இந்த நூற்றாண்டிலே கி. பி. 1244-1245 வரையுள்ள காலப்பகுதியில் 1ம் விஜயபாகு மன்னன் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் ஒரு குடியேற்றம் நடைபெற்றுள்ளது. கி. பி. 1236 - 1270 வரையிலான காலப்பகுதியில் ஆட்சி செய்த தம்பதெனிய அரசன் 2ம் பராக்கிரமபாகு அரசன் காலத்தில் ஜாவா தேசத்து மன்னன் சந்திரபாணு இலங்கைக்கு வந்துள்ளான் என சில நூல்கள் கூறுகின்றன. சந்திரபாணுவுக்குப் பின் அவனது மகன் ஜாவா மைந்தன் இலங்கையின் வடபகுதியை அரசாண்டான். இவன் அரசாண்ட பகுதி 'ஜாவாப்னா” என அழைக்கப்பட்டது. இது நாளடைவில் திரிபடைந்து 'ஜாப்பனா” என்றாகி "ஜப்னா” என்றாகியிருக்க வேண்டும்.
3 சீனர்கள் இலங்கையின் மாணிக்கக் கற்களை "முகம்மதியன் ஸ்ரோன்’ என்றே அழைத்தனர் என ரோமானியன் சரித்திர ஆசிரியர் பிளினி குறிப்பிட்டுள்ளார்.
14ஆம் நூற்றாண்டில் 1301-1400
4இந்நூற்றாண்டில்தான் பிரபல யாத்திரிகர் இப்னு பதூதா (கி. பி. 1344ல்) இலங்கைக்கு விஜயம் செய்தார். இவர் இத்தீவிற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண இராட்சியம் என்றொரு இராட்சியம் இருந்ததாகவும் இந்த இராச்சியத்திற்கு புத்தளமே தலைநகராக இருந்ததாகவும் கூறியுள்ளார். அத்தோடு அரசனுக்குப்
1 இலங்கையின் சுருக்க வரலாறு. 2 1 இராஜாவலி காவியம் 2 3 முஸ்லிம் ஒப் சிறிலங்கா. 4 நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வம் 1ம் பாகம்.

Page 43
82. மருதூர் ஏ. மஜீத்
பாரசீகமொழி நன்கு தெரிந்திருந்தது என்றும், தான் அரசனோடு பாரசீக மொழியிலேயே பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் கூறும்போது இத்தீவின் மேற்குப் பகுதியில் அதாவது கொழும்பிலே "ஜலாஸ்தி” எனும் ஒரு முஸ்லிம் ஆட்சிநடாத்தினான் எனவும் அவன் படையிலே ஐந்நூறு (500) அபிசீனியர்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்குவாசிகள் 14ம் 15ம் நூற்றாண்டுகளில் ஆசியாவின் வியாபாரத் தளங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். குஜராத் முஸ்லிங்கள் இந்த வியாபாரத்தில் மிகப் பெரிய பங்கை வகித்தனர். குறிப்பாக கம்பேகுடா (Gulf of Cambay) இவர்கள் கைவசம் இருந்தது. குஜராத் வியாபாரிகள் அவர்களது பருத்திப்புடவைகளை பல இடங்களிலும் விற்பனை செய்தனர். பருத்தி ஆடைகளை இன்றுவரை கம்பாயம் என்று வழங்குவதன் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம். குஜராத் வியாபாரிகள் கம்பாயத்தைக் கொடுத்து மிளகை வாங்கி அம்மிளகை செங்கடல் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இப்னு பதூதா அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது யாழ்ப்பாணம் தனியே ஒரு இராச்சியமாக இருந்ததாகவும் அதற்கு புத்தளம் தலைநகராகவும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
2இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு அதனை பின்வருமாறு கூறுகின்றது.
கி. பி. 1284ல் 1ம் மாறவர்மன் குலசேகரன் பாண்டியன், இலங்கைக்குப் \படையை அனுப்பி 3ம்பராக்கிரமபாகுவை தோற்கடித்து இலங்கையைக் கைப்பற்றினான். இந்தப் பாண்டிய நாட்டு படைக்குத் தலைமைத் தளபதியாக வந்தவர் தக்யுத்தீன் அப்துல் றஹ்மான் என்பவராகும். இவர் இலங்கை மன்னன் 3ம் பராக்கிரமபாகுவை வென்று ஆரியச்சக் கரவர்த்தி என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை அரச கட்டில் ஏற்றி ஆளும்படி கூறிவிட்டுச் சென்றதாக வரலாறு கூறுகின்றது.
இதனை திரு. வி. கே. சுப்பிரமணியம் அவர்கள் தனது "பழங்கால தக்கணம்’ எனும் நூலிலும் கூறியுள்ளார், இந்த ஆரியச்சக்கரவர்த்தி **சோனகசாமந்தன்” என்று அழைக்கப்பட்டான் என்றும் ஆரியச்சக் கரவர்த்தி என்பது அரசனுக்கு வீர விருதாக வழங்கப்பட்ட பட்டம்
1 முஸ்லிம் ஒப் சிறிலங்கா. 2 பிறைக் கொழுந்து.

மருதுநூர் ஏ. மஜீத் 83
என்றும், தமிழ்ச் சமுகத்தில் அரபிகள் எனும் கட்டுரையில் முஸ்தபா கமால் கூறியுள்ளார்.
மேலும், கி. பி. 1340ல் இத்தாலியிலிருந்து சீனா சென்று கொண்டிருந்த ஜோன் டி பரிநொல்லி என்பவர் இலங்கையில் பேர்விலிஸ் (பேர்வலை) என்ற துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், இப்பிரதேசம் முழுவதும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்த தாகவும் கூறியுள்ளார்.
மேலும், 14ம் நூற்றாண்டில் தம்பெதெனியாவின் அரசன் 3ம் விஜயபாகுவின் வேண்டுதலின் பிரகாரம் பேருவலையைச் சேர்ந்த மீராலெப்பை எனும் முஸ்லிம் தென்இந்தியாவிலிருந்து நெசவுத் தொழில் செய்வதற்காக சில தொழிலாளர்களை இங்கு கொண்டுவந்து அறிமுகம் செய்தார்.
2மேலும், 1411ல் கோட்டை இராஜதானியின் மன்னனாக இருந்த 5ம் விஜயபாகுவைச் சிறைப்பிடித்து சீனாவுக்கு எடுத்துச் சென்றவர் அட்மிரல் ஹோ என்பவர் மங்கோலியாவைச் சேர்ந்த முஸ்லிமாவார். அட்மிரல் ஹோ பணிபுரிந்த சீன அரச பரம்பரை மிங் பரம்பரையாகும். மிங்பரம்பரை ஹ"ய் இனத்தைச் சேர்ந்ததாகும். கான் அல்லது ஹான் என்றழைக்கப்படும் சீனர்கள் வேறு. ஹாய் இனத்தவர்கள் வேறு. ஹ"ய் இனத்தவர்கள் முஸ்லிம்களாவர்.
சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மன்னன் மன்னிக்கப்பட்டுப் பின் இலங்கைக்கு அனுப்பப்பட்டான் இம்மன்னிப்பு சீனாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக உறுதியளித்த பின்னரே வழங்கப்பட்டது.
15ஆம் நூற்றாண்டில் 14-15
இலங்கையைத் தரிசித்த யாத்திரிகர்களில் தொலமியும் குறிப் பிடக்கூடிய முக்கியமானவர்களில் ஒருவராவர். இவர் வரைந்த இலங் கைப் படத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் கல்முனையோடு பொருந்துகின்ற ஒரு இடத்தில் ஒர் அறபு அரசு அல்லது ஒர் அறபுக் காவல் நிலையம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் கலாநிதி கே. டப்ளியு. குணவர்த்தன அவர்கள் 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இலங்கையில் பெருந்தொகையான முஸ்லிம்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
Muslim of Kaluthara District 2 தினகரன் 1991 செப்டம்பர். 22.

Page 44
84 மருதூர் ஏ. மஜீத்
மேலும், சிங்கள மன்னன் 'நரேந்திர சிங்ஹ” என்பவன் தனது பாரம்பரிய வழக்கப்படி தனது முடிசூட்டு விழாவின் இறுதி வைப வத்திற்காக புத்தளம் நோக்கி (ஞவகடுவ) புறப்பட்டான். செல்லும் வழியில் நகருக்குச் சமீபமாக உள்ள செல்லன் கந்தன் எனும் இடத்தில் தங்க நேரிட்டது. சடுதியாக ஒரு அபாய நிகழ்ச்சி அங்கு நேரிட்டது. அரசபதவியைப் பலாத்காரமாக கைப்பற்ற எண்ணிக் கொண்டிருந்த ஒருவனால் அனுப்பப்பட்ட ஆட்கள் மன்னனை மறைவில் இருந்து கொல்ல எத்தனித்தனர். அப்பொழுது மன்னனுக்கு மரியாதை செலுத்த வந்த ஒரு முஸ்லிம் இதனைக் கண்டு அப்பகைவர்களோடு தனித்து நின்று போராடித் துரத்தியடித்தார். இது கண்டு மனமகிழ்ந்த மன்னர் அவரது வீரத்தை மெச்சும் முகமாக கண்டியச் சின்னம் பொறிக்கப்பட்ட தனது சொந்தக் கொடியையும் அரச பவனியில் பாவிக்கப்படும் பல விதப் பொருட்களையும் 18 வெள்ளிக்குஞ்சரங்க ளையும் வழங்கி கெளரவித்தான்.
அவைகள் இன்றும் பள்ளிவாயலிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன புத்தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவெனில் மன்னன் வாழ்ந்த நகருக்கு புத்தளத்தின் வீதிகள் எல்லாமே இட்டுச் செல்கின்றன
உதாரணமாக, வடக்கே பொம்பரிப்பு மன்னார் வழியாக யாழ்ப்பாணத்துக்கும், வடக்கே அனுராதபுரத்துக்கும், பொலன்னறு வைக்கும் தென்கிழக்கே யாப்பஹ"வ குருநாகல் கண்டி ஆகிய இடங்களுக்கும் தெற்கே சிலாபம், கொழும்பு நீர்கொழும்பு வழியாக கோட்டைக்கும் இட்டுச் செல்கின்றன.
இவ்வாறு கி. மு. அதாவது விஜயனுக்கு முன் இயக்கர் நாகர் ஆட்சியிலிருந்து கி. பி. 1500 வரை அதாவது சிங்கள மன்னர்களின் ஆட்சி வரை மத்திய கிழக்க வாசிகளின் மதிப்பும் மரியாதையும் என்றும் குறைவில்லா வண்ணம் சுடர்விட்டுப் பரகாசித்த வண்ணமே இருந்தது. கி. பி. 1460ல் 2ம் கஜபாகு மன்னன் ( தூலசிங்கன் ) மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்தான். இவன் பெயராலேயே மருதூருக்கு கஜபாகுப்பற்று எனும்பெயர் ஏற்பட்டது.
இன்னுமொரு சம்பவம், 1877ம் ஆண்டு பிறந்து 1908ம் ஆண்டு வரை வாழ்ந்த எம். அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள் கண்டி முஸ்லிம் களின் வரலாறு பற்றி எழுதிய போது பின்வருமாறு கூறுகின்றார். கீழே குறிக்கப்படும் கதை பரம்பரையாக கண்டி முஸ்லிம்களின் மத்தியிலே உள்ள கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மருதூர் ஏ. மஜீத் 85
அதாவது நான்கு வியாபாரிகள் (அரபியர்கள்) கண்டிக்கு வியாபாரத்திற்காக வந்ததாகவும் அவர்கள் நீண்ட காலமாக அங்கிருந்து வியாபாரம் செய்ததாகவும் பின் அவர்கள் அரேபியாவிற்குச் செல்ல ஆயத்தமான போது சிங்கள அரசன் 'ஏன் போகப் போகின் நீர்கள்" என்று கேட்ட போது அரேபியாவிற்குச் சென்று கல்யாணம் முடித்து மனைவிமாரையும் அழைத்துக் கொண்டு வருவதாகவும் கூறக் கேட்ட அரசன், நீங்கள் சிங்களப் பெண்களை இங்கு விரும்பிய மாதிரி திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி, சிங்களப் பெண்கள் மத்தியிலே இதனைக் கூறியதாகவும் அக்கணமே ஆயிரக்கணக்கில் சிங்களக் கன்னிப் பெண்கள் அங்கு வந்து கூடிவிட்டதாகவும் அவர்களில் நால்வரைத் தெரிந்து அரபிகள் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களின் பிற்சந்ததியினரே கண்டிய முஸ்லிங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் முஸ்லிம்களின் அல்லது மத்திய கிழக்கு வாசிகளின் தொடர்புகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துக் கூறக்கூடிய இருபத்தாறு அரபு சிலாசனங்கள் உண்டு என கலாநிதி சுக்ரி அவர்கள் கூறியுள்ளார்கள்.
போர்த்துக்கீசர் ஆட்சியிலே 1505-1655
துருக்கியர் இஸ்லாத்தைத் தழுவியதும் ஐரோப்பியர் தரைமார்க் கமாக கீழை நாடுகளுக்கு வியாபாரத்திற்கு வருவது தடையேற் பட்டது. அவர்கள் கடல் மார்க்கமொன்றினை கண்டு பிடிக்க முனைந் தனர். இதற்கு போர்த்துக்கீச அரசன் உறுதுணையாக இருந்தான்.
மத்திய கிழக்குவாசிகளின் கடல் மார்க்கத்தைப் பின்பற்றி கீழைத்தேச நாடுகளுக்குச் செல்வது இலகுவான கருமம் எனவும் அவர்களுக்குப்பட்டது. இதனால் அப்துல் மஜீத் எனும் மத்திய கிழக்கு மாலுமியைப் பிடித்து அச்சுறுத்திப் பின் அன்போடு வழி காட்டுமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்துல் மஜீத் மாலுமியின் உதவியோடு 1498ம் ஆண்டு வாஸ் கொடகாமா நன்நம்பிக்கை முனையைக் கடந்தான். பின் சிறிது காலத்துக்குள் ஆபிரிக்காவின் கிழக்குக் கரைகளான டர்பன், மெள சாம்பி, மொம்பாசா முதலிய துறைமுகங்களைத் தாண்டி இந்தியாவின் கள்ளிக்கோட்டைவரை வருவதற்கு வழிகண்டு கொண்டனர். இதன் பின் ஏறிய ஏணியை உதைத்துத் தள்ள முற்பட்டனர். அதாவது எந்த மத்திய கிழக்குவாசி வழிகாட்டினானோ அதே மத்திய கிழக்கு வாசி யின் வியாபாரக் கப்பல்களை கைப்பற்ற முனைந்தனர்.

Page 45
86 மருதூர் ஏ. மஜீத்
பிரான்ஸிஸ் அல்மெயிடா முஸ்லிம்களின் வியாபாரக் கப்பல் களைக் கைப்பற்றுமாறு கட்டளையிட்டான். அல்மெயிடாவின் மகன் தொன்லோறன்ஸோ முஸ்லிம் வியாபாரக் கப்பல் ஒன்றை துரத்தி வந்த போது காலியை வந்தடைந்தான். தான் வந்து சேர்ந்த இடம் இலங்கை எனக் கண்டதும் தொன்லோறன்ஸோ கொழும்புக்குக் கப்பலைச் செலுத்தினான்.
1505ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி கொழும்பை வந்தடைந்த போது கோட்டை அரசனாக 8வது வீரபராக்கிரமபாகு இருந்தான். போர்த்துக்கீசரினால் கொலம்பா என அழைக்கப்பட்ட கொழும்பிலே முஸ்லிம் வியாபாரிகள் கறுவா, தேங்காய், யானை முதலிய பொருட்களை ஏற்றுமதி செய்த வண்ணம் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் 'நிறைந்த குடிபதிகளாகவும் காணப்பட்டது கண்டு வியப்படைந்தனர். முஸ்லிம்களுக்கென்று இங்கே தொழுகை நடாத்துவதற்கான இரண்டு வெள்ளையடிக்கப்பட்ட மசூதிகளையும் அவர்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இருப்பதைக் கண்டு மேலும் ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்தனர்.
போர்த்துக்கீசர் வஞ்சகமனம் படைத்தவர்கள் என்ற எண்ணம் ஏலவே முஸ்லிம்கள் மத்தியில் இருந்த படியால் இலங்கையில் அவர்கள் வரவு தங்களுக்குப் பாதகமாக அமையும் என முஸ்லிம்கள் நினைத் ததில் ஆச்சரியம் இல்லைதான். அதனால் இருபகுதியினருக்கும் இடையே உரசல் ஏற்படத் தொடங்கின.
இஃதே வேளை இலங்கையின் அரசியல் போர்த்துக்கீசருக்குச் சாதகமாக அமைந்தது. அதாவது இலங்கையை ஆட்சி செய்த சிங்கள அரசர்களுக்கிடையே போட்டியும் பொறாமையும் நிலவியது. இதனைப் போர்த்துக்கீசர் பயன்படுத்தினர். இப்போட்டி பொறாமையினை வளர்த்து தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்ள போர்த்துக் கீசர் விரும்பினர்.
சிங்கள அரசர்களில் சிலர் போர்த்துக்கேயரின் படைப்பல்த்தைப் பயன்படுத்தி தங்களின் எதிரியான சிங்கள அரசர்களைப் பணியவைக்க இது நல்ல சந்தர்ப்பம் என எண்ணினர். இலங்கை வாழ் முஸ்லிங்களோ யார் தங்களின் எதிரியான போர்த்துக்கீசரை எதிர்க்கிறார்களோ
புது முறைச் சரித்திரம். 2 சேர் ராசிக் பரீத் வழியும் நடையும்.

மருதூர் ஏ. மஜித் 87
அவர்களுக்கு உதவ முனைந்தனர். இதனால் 1505க்குப் பின் இலங் கையிலே போர்த்துக்கீசரின் வருகையால் அமைதியில் சீர்குலைவு ஏற்பட்டதை நாம் மறுக்க முடியாது.
போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த போது 8ஆம் விக்கிரமபாகு ஆட்சி செய்தான். இவன் தனி மன்னனாக 1484-1509 வரை ஆட்சி செய்தான். கி. பி. 1509-1521 வரை ஆட்சி செய்த 7ம் விஜயபாகு முஸ்லிம்களின் உதவியோடு அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்ததோடு மட்டுமல்லாமல் போர்த்துக் கீசரையும் எதிர்த்துப் போராடினான்.
இதனோடு இலங்கையில் ஆரம்பமாகிய போர்த்துக்கீசர் முஸ்லிம்கள் போராட்டம் போர்த்துக்கீசர் இலங்கையை விட்டுத் துரத்தப்படும் வரை ஒயவேயில்லை. 1522ம் ஆண்டு கோட்டை ராட்சியம் மூன்று உடன் பிறந்தாரிடையே பிரிக்கப்பட்டது. மாயாதுன்னை சப்பிரகமுவா பகுதியையும் சீதாவாக்கை (தலைநகர் அவிசாவலை யையும்) றைகம் பண்டாரன் காலி களுத்துறை மாவட்டங்களில் உள்ள வளலவிதி பந்துன் இறைகம் கோறளைப் பகுதிகளைப் பெற்றுக் கொண்டான். :
புவனேகபாகு கடல் துறைமுகப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டான். மலைநாட்டு அரசனாக வேறொருவன் விளங்கினான். இவன் இயலு மானவரையில் தனது நாட்டின் சுதந்திரத்தைப் பேண விரும்பினான். ஆனால் மாயாதுன்னை தீவு முழுவதையும் ஆட்சி செய்ய அவாவினான். இதனால் மாயாதுன்னை, றைகம்பண்டாரன், புவனேகபாகு ஆகிய மூவருக்குமிடையே 1521க்குப் பின் சண்டை நடைபெற்றுக் கொண் டேயிருந்தது. அதிலும் குறிப்பாக போர்த்துக்கீசர் உதவியைப் பெற்ற புவனேகபாகுவுக்கும், மாயாதுன்னைக்குமிடையே சண்டை நடை பெற்றுக் கொண்டேயிருந்தது. இஃதே வேளை 1527ம் ஆண்டு அல் போன்சோ டி சொய்சா என்ற போர்த்துக்கீசத் தளபதி மலாக்காவைக் கைப்பற்றி அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொன் றொழித்தான், சிலரைச் சிறைப்பிடித்து ஒரு போர்த்துக்கீசருக்கு ஆறு மலாக்கா வீரர் என்ற விகிதத்தில் மலாக்கா வீரர்களைச் சிறைப்பிடித்து இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இப்படி அனுப்பப்பட்டவர்களுள் மலாக்கா முஸ்லிம்களும் அடங்கி இருந்தனர். இதனால்தான் போலும் இலங்கையில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு முஸ்லிம்கள் இருவருக் கிடையே சண்டைகள் ஏதும் ஏற்பட்டால் 'மண்டையை உடைத்து மலாக்காவுக்கு அனுப்புவேன்’ என்பார்கள்.

Page 46
88 மருதூர் ஏ. மஜித்
இன்றும் இந்த வழக்குண்டு இது மலாக்காவில் இருந்து வந்ததைச் சுட்டி நிற்கிறது. நீ எங்கிருந்து வந்தாயோ அங்கு உன்னை அனுப்புவேன் என்பதுதான் பொருள்.
இஃது இவ்வாறு இருக்க 1614ல் புத்தளத்திற்கும், முல்லைத் தீவுக்கும் இடைப்பட்ட "பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வன்னியனாராக இருந்துள்ளார். இவரிடமிருந்து போர்த்துக்கீசர் வரியாக ஒரு வருடத் துக்கு ஏழு யானைகள் பெற்றதாக அறியக் கிடைக்கிறது.
2மேலும் போர்த்துக்கீசரினால் அனாதரவாக்கப்பட்ட 400 முஸ் லிம்கள் 1604-1635க்குமிடையில் ஆட்சி செய்த செனரத் மன்னனால் ஆதரிக்கப்பட்டு மட்டக்களப்பிலே குடியேற்றப்பட்டனர். இக் குடியேற்றப் பிரதேசத்தினை திராவிடர்கள் காத்தான்குடி என அழைத்தனர். செனரத் மன்னன் இவர்களைக் காத்து இங்கு அனுப் பியதால் காத்தான்குடிகள் என இவர்கள் அழைக்கப்பட்டு இந்த இடமும் காத்தான்குடி என அழைக்கப்பட்டது. இது மட்டக்களப்பில் முஸ்லிம்களின் மூன்றாவது குடியேற்றமாகும்.
கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, சிலாபம், புத்தளம் கண்டி போன்ற இடங்களில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களே இங்கு குடியேற்றப்பட்டனர். செனரதன் இவர்களுக்கு வியாபாரத்தைக் கைவிட்டு வந்த படியினால் விவசாயம் செய்து வாழும் பொருட்டு காணிகளை அன்பளிப்புச் செய்து ஆதரித்தான்.
இருந்தும் அவர்களுக்கு வியாபாரம் போல் விவசாயம் வாய்ப் பளிக்கவில்லை. அவர்கள் வியாபாரத்திலேயே நாட்டம் உள்ளவர்களாக இருந்தனர். இன்றும் காத்தான்குடி முஸ்லிம்களில் பெரும் பாலானோர் வியாபாரிகளாகவே உள்ளனர்.
செனரதன் மேற்கிலும், மத்தியிலும் வாழ்ந்த முஸ்லிங்களை போர்த்துக்கீசரின் தொல்லையிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டக் களப்பில் குடியேற்ற நினைத்தது மனம் எழுந்த வாரியாகக் செய்யப் பட்ட ஒரு காரியமாகக் கொள்ள முடியாது. முஸ்லிம்களின் ஆதிக் குடியேற்றமும், முதலாவது முடியேற்றமும் மட்டக்களப்பு என்பத னாலும், போர்த்துக்கீசர் வருகையின்போது மட்டக்களப்பிலே முஸ்லிம்கள் கூடுதலாக வாழ்ந்தார்கள் என்பதினாலும் அங்கு அவர் களை குடியேற்றுவதே சிறந்தது எனக் கருதியமையினாலுமாகும்.
1 முஸ்லிம் ஒப் சிறிலங்கா. 2 குவைறோஸ் சுவாமிகள் நூல்.

மருதூர் ஏ. மஜித் 89
"இஃதேவேளை இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சியின் போது (1635-1687) அரேபியாவில் இருந்துவந்த முஸ்லிம் வியாபாரிகள் சிலரை தாங்கள் விரும்பியவாறு சிங்களப் பெண்கள் சிலரைத் திருமணம் செய்து அக்குறணைப் பகுதியில் குடியமர்த்தினான் என்பதற்கும் பல சான்றுகள் உண்டு.
1518ல் 7ம் விஜயபாகுவின் காலத்தில் மலையாளத்தில் போர்த்
துக்கீசருக் கெதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 7ம்
விஜயபாகு மலையாளத்துக்குச் சென்று தானும் போர்த்துக் கீசரை
எதிர்த்துப் போராடுவதாகவும் அதற்குத் தனக்கு உதவியளிக்க வேண்டு
மென்று கொளிக்கோட்டு சமோரினிடம் உதவி வேண்டினான். உதவி
கிடைத்ததும் 7ம் விஜயபாகு போர்த்துக்கீசரின் கோட்டையைக்
கைப்பற்றினான்.இப்போராட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் 7ம் விஜய பாகுவிற்கு பூரண ஒத்துழைப்பை அளித்தனர்.
மேலும், இக்காலத்தில் முஸ்லிங்கள் சிங்கள மன்னர்களின் படைகளிலே விஷேட பிரிவாக இருந்து போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர்.
உதாரணமாக 17ம் நூற்றாண்டில் நடைபெற்ற வெல்லவாயா கணவாய்ப் பகுதியில் நடைபெற்ற போரில் முஸ்லிம்களின் ஒட்டகைப் படை விசேட இடத்தைப் பெற்றது. இரண்டாவது இராஜசிங்க மன்னன் கி. பி. 1634-1684 தனது அர்ச. கள் னிக்கைச் சீலையில் இந்தப் படையை வரைந்து அங்குரான் க்த்த மகா தேவாலயத்திற்கு அர்ப்பணம் செய்தான். இவ்வாறு இவன் செய்ததற்கு காரணம் போரிலே முஸ்லிம் படைகள் தனக்குச் செய்த பேருதவியை ஞாப கப்படுத்தவும் பிற்சந்ததியினர் அதனை நினைவு கூரவுமேயாகும்.
மேலும், கண்டி மன்னனான இரண்டாம் இராஜசிங்கன் ஊவா பிரதேசத்தில் போர்த்துக் கீசருடனான சமரில் தோல்வியுற்று தன் உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டி தப்பி ஓடிக்கொண்டு இருந்தான். அப்போது பங்கரகம எனும் இடத்தை அடைந்து பெரிய பலாமரப் பொந்து ஒன்றில் ஒளித்துக் கொண்டான். அவனைத் துரத்தி வந்த ப்ேர்த்துக்கீச வீர்ர்க்ள் திடீரென மறைந்து விட்ட இராஜசிங்கனை மாட்டுத் தொழுவத்துள் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லிம் பெண்மணியை உசாவினர். இரண்டாம் இராஜசிங்கன் பலாமரப் பொந்துள் மறைந்து கொண்டிருப்பதை கண்டும் போர்த்துக்கீசரிடம்
முஸ்லிம் ஒப் சிறிலங்கா,

Page 47
90 மருதுர் ஏ. மஜித்
அரசனைக் காட்டிக் கொடுக்கவிரும்பாத அந்த முஸ்லிம் பெண்மணி போர்த்துக்கீசரின் இம்சைக்குள்ளாகி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாள்.
இவற்றையெல்லாம் மரப் பொந்திலே இருந்து அரசன் பார்த்துக் கொண்டே இருந்தான். தனக்காக உயிர்தந்த அந்த வீரப் பெண் மணியின் ஞாபகார்த்தமாக அக்கிராம மக்களுக்கும் அவளது குடும்பத் தினருக்கும் ஏராளமான விவசாயக் காணிகளை அன்பளிப்புச்செய்தான்.
இஃது இவ்வாறிருக்க 1521ம் ஆண்டு போர்த்துக்கீசரிடம் அடைக்கலம் புகுந்த ஏழாம் புவனேகபாகு போர்த்துக்கீசரின் பேச்சைக் கேட்டு தனது இராச்சியத்திலே உள்ள சகல முஸ்லிம்களும் மூன்று நாட்களுக்குள் தனது இராட்சியத்தை விட்டு வெளியேற வேண்டுமென கட்டளை இட்டான். இக்கட்டளையின்படி சகல முஸ்லிம் களும் மாயதுன்னையின் சீதவாக்கைப் பிரதேசத்தில் குடியேறினர். கோட்டை இராச்சியம் புவனேகபாகு இறந்த பின் மீண்டும் மயாதுன் னையின் கொடியின் கீழ் வந்து சேர்ந்தது.
இதனால் உள்நாட்டுக்கு பெயர்ந்துபோன முஸ்லிம்கள் மீண்டும் கரையோரப்பகுதியான மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு களுத்துறை, வேருவலை, அழுத்துகம. வெந்தோட்டை, காலி, வெலிகாமம் ஆகிய இடங்களில் குடியேறினர். இது நடைபெற்றது 1560ல் ஆகும். கொழும்பில் மட்டும் முஸ்லிம்கள் மீண்டும் குடியே ) முடியவில்லை. காரணம் கொழும்பு போர்த்துக்கீசரின் ஆட்சியிலேயே
இருந்தது.
1575ம் ஆண்டு நடைபெற்ற போர்த்துக்கீசரின் கரையோரத் தாக்குதலின் போது வெலிகாமத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் அனேகம் பேர் மிருகத்தனமான முறையில் போர்த்துக்கீசரால் கொல்லப்பட்டனர். போர்த்துக்கீசர் ஆட்சியிலே மட்டக்களப்பு முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தனர். இதற்குக் காரணம் மட்டக்களப்பு முஸ்லிம்கள் கண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தமையேயாகும்.
போர்த்துக்கேயரின் ஆட்சியின் போது முஸ்லிம்கள் அதாவது 16ம், 17ம் நூற்றாண்டுகளில் இலங்கையின் மேற்குக் கரைகளில் புத்தளம், சிலாபம், மாதம்பை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை பேருவலை, மக்கோனை, பயாகலை, அளுத்கம, பென்தோட்டை, காலி, வெலிகம, மாத்தறை போன்ற இடங்களில் வாழ்ந்ததாக போர்த்துக் கீசரின் தொம்பேயில் எழுதப்பட்டுள்ளது.

மருதூர் ஏ. மஜித் 9 ܖ
வெலிகாமத்திலும், நீர்கொழும்பிலும் முஸ்லிம்களின் பெயரால் தெருக்களே இருந்தன.
" மேலும் , 1614ல் முஸ்லிம் வன்னியர் ஒருவரால் புத்தளத் திற்கும் முல்லைத்தீவிற்கும் இடைப்பட்ட பகுதி ஆளப்பட்டுள்ளது. அக்குறனை கூட இரண்டாம் இராஜசிங்க மன்னனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கிராமமாகும். 1500க்கும் 1655க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் சிங்கள மன்னர் களால் ஆதரிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களும் தங்களால் இயன்ற வரை சிங்கள மன்னர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்த வண்ணமே இருந்தனர். இக்கால கட்டத்தில் சுல்தான் குதியர் செனரத் மன்னனின் இராஜதானி வைத்தியராக இருந்தார்.
இவருக்கு அரசன் கம்பளைக்கு அருகாமையில் அறன் கந்த (கஹட்டோவிட்ட) எனும் இடத்தில் நிலம் வழங்கினான் எனச் சான்றுகள் கூறுகின்றன.
2இக்காலகட்டத்தில் இலங்கையின் கொட்டப்பாக்கு ஏற்றுமதி முஸ்லிம்களின் கைகளிலேயே இருந்தது. இந்த ஏற்றுமதி மூலம் போர்த்துக்கீசருக்குக் கிடைத்த வரி கி. பி. 1679ல் அவர்களது இராணுவச் செலவை ஈடு செய்வதற்குப் போதுமானதாக இருந்தது என அறியக் கிடக்கின்றது. 1603ல் போர்த்துக்கீசத் தேசாதிபதி அசவிடோ முஸ்லிம்களைத் துரத்தினான்.
ஒல்லாந்தர் ஆட்சியிலே 1656-1796
இலங்கையிலே போர்த்துக்கீசரைத் தொடர்ந்து ஒல்லாந்தர் நடமாடத் தொடங்கியது மட்டுமல்லாமல்,
போர்த்துக்கீசரைப் போன்றே ஒல்லாந்தர்களும் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களைத் தொந்தரவு செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு மட்டும் நின்று கொள்ளாமல் கிறிஸ்தவ சமயத்தின் பிரதான எதிரி முஸ்லிம்கள்தான் என அறிக்கைகள் விடவும் தலைப்பட்டனர்.
முஸ்லிம் ஒப் சிறிலங்கா ? கருத்துக் கோவை.

Page 48
92. மருதூர் ஏ. மஜீத்
இதனால் விளைந்த கேடுகள் அனர்த்தம் எனலாம்.
1716-1723 வரை அதாவது "ஆள்வான் உறும்பு’ என்பவனின் காலத்தில் கரை நாட்டில் இருந்த முஸ்லிம்கள் புத்தளத்திற்கு வடக்கே ஒரு துறைமுகத்தை நிறுவ முயன்றனர். இந்த இடம் ஒல்லாந்தர் ஆட்சியிலே இருந்த படியா ல் இம் முயற்சி முஸ்லிம்களுக்கு கைகூடவில்லை.
மேலும், முஸ்லிம்கள் இந்நாட்டில் குடியேறுவதைத் தடுக்கவும் சட்டம் போட்டனர் ஒல்லாந்தர். 1670ம் ஆண்டு கொழும் பிலும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்து வெளியேறி அளுத்கமைக்கும், காலிக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியேற வேண்டும் என முஸ்லிம்கள் பணிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பல விடயத்தையும் யோசித்து கொழும்பிலே 1789ல் முஸ்லிம்கள் தங்களுக் கென ஒருபடையை ஸ்தாபித்துக் கொண்டனர்.
மேலும், இலங்கைக்கு மென் மேலும் மத்திய கிழக்கில் இருந்து முஸ்லிம்கள் வருவதைத் தடுக்கப்பல முயற்சிகளை மேற்கொண்டனா ஒல்லாந்தர். அவற்றில் ஒன்றுதான் வருடாவருடம் குடிசன மதிப்பு கணக்கெடுப்பு நடைபெற வேண்டும் எனச் சட்டம் போட்டனர். இதனால் புதிதாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் குடியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முஸ்லிம் கள் காணிகள் வாங்குவது சட்டரீதியாகத் தடுக்கப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் தொகை ஐம்பதினாயிரம் எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.
இஃது இவ்வாறிருக்க சண்டிச் சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களையும் அவர்களது இறமை களையும் பயன்படுத்தத் தவறவுமில்லை.
உதாரணமாக கண்டிய மன்னர்கள் வெளிநாடுகளோடு இராஜ
தத்திர உறவுகளை ஏற்படுத்த முஸ்லிம்களையே பயன் படுத்தினர். இதற்கான காரணங்களுள் மிக முக்கியமானது இரண்டாகும்.
1. முஸ்லிம்களின் பலமொழியாற்றல்.
2. நம்பிக்கை, உண்மை, நேர்மை என்பனவாகும்.
ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்கள் தாடிவளர்ப்பதற்கும் பாதணி அணிவதற்கும் வரி செலுத்த வேண்டியிருந்தது.

மருதூர் ஏ. மஜீத் 93
1762ம் ஆண்டு ஆங்கில நாட்டிலிருந்து இலங்கையைத் தரிசித்த யாத்திரிகர் யோன் பைபஸ் பின் வருமாறு கூறுகிறார்.
டச்சுக் கம்பனிக்கு கண்டியரசனின் பிரதிநிதியாக கொழும்புக்கு அடிக்கடி முல்லா முகாந்திரம் அல்லது அவரது மகன் உதுமாலெப்பை என்பவரே வருவார். இதுபற்றி டச்சுக் கவர்ணர் யோன் சரிடர் என்பவர் கண்டி மன்னனுக்கு பின்வருமாறு முறைப்பாடு செய்தார். இனிமேல் முஸ்லிம்களை அனுப்ப வேண்டாம். ஏனெனில் முஸ்லிம்கள் டச்சுக்காரரின் எதிரிகளாக இருப்பதால் கம்பனிகளின் நடவடிக் கைகளை அழித்தும் திருத்தியும் விடுவார்கள் என்று அறிவுறுத்தல் வழங்கினார்.
இதற்குக் கண்டிய அரசன் மறுமொழியாக, அனுப்பப்படும் முஸ்லிம்கள் நம்பிக்கையாளர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டே அனுப்பப்படுவதாகவும் இவர்களே இலங்கையில் பல மொழிகளையும் "பேசக்கூடியவர்களாகவும் வெளிநாட்டுத் தொடர்புடையவர்களாகவும் கடற்பிரயாண அனுபவம் உடையவர்களாகவும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கண்டியரசர்களின் அரச வைத்தியர்களாக முஸ்லிம் வைத்தி யர்களே கடமை செய்துள்ளார்கள். உதாரணமாக 1762ம் ஆண்டு டச்சுக்காரர்களின் மொழி பெயர்ப்பாளரான செட்டி முதலியாரின் அறிக்கையில் காசிம்லெப்பை என்பவர் அரச வைத்தியராக இருந்த தாகக் கூறப்படுகிறது.
*மேலும், முஸ்லிம் வைத்தியரான மீராலெப்பை மோஸ்தியார் சேகாதி மரைக்கார் ஒல்லாந்தரின் கரந்தடிப்படையினரின் காவல் துறை மருத்துவராக நியமிக்கப்பட்டார். இவரின் சேவையைக் கண்டு வியந்த அப்போதைய ஒல்லாந்த மன்னனின் நீதியாட்சி சபையின் ஆட்சியாளரும் பிரதம நீதியரசருமான சேர் அலக்சாந்தர் ஜோன்சன் மேற்படி வைத்தியரை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக நியமித்தார். இவரின் முயற்சியாலேயே கண்டி பேராதனைப் பூங்கா உருவானது.
" முஸ்லிம் ஒப் சிறிலங்கா. 2 தேசிய மீலாத்விழா மலர் - 1992

Page 49
94. மருதூர் ஏ. மஜீத்
மேலும், சிறீசங்கபோ சிறீ பராக்கிரமபாகு போன்ற அரசர் களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மருத்துவர்கள் மிகப் பிரபல்யம் பெற்று விளங்கியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. முகம்மது முகாந்திரம் உடையார் அரசர்களின் மருத்துவ நலன்களுக்குப் பொறுப்பாக இருந்தார் என வரலாறுகள் கூறுகின்றன.
மேலும், 1663ம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தைச் சுற்றி பதினாறு முஸ்லிம் தையல்காரர்கள் இருந்ததாக வென்கொனிஸ் எழுதியுள்ளார். மேலும், பல போராட்டங்களின் பின் முஸ்லிங்களிடம் இருந்து வரி அறவிடவும் அவர்களது நலனைக் கவனிக்க எனவும் ஒல்லாந்தரினால் 1762ம் ஆண்டு ஐதுருஸ்லெப்பை மரைக்கார் என்பவர் நியமனம் பெற்றார். 1659ல் காலி, மாத்தறை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் காணி வீடு என்பன வாங்குவது ஒல்லாந் தரினால் சட்டம் போட்டுத் தடுக்கப்பட்டது.
மேலும், 1747ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஒல்லாந்தர் ஒரு சட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுகப் பகுதியிலே முஸ்லிம்கள் காணி வீடு வாங்குவதை தடை செய்தனர். 1723ல் ஒல்லாந்தர் தங்களுக்கு எதிராகப் புரட்சி செய்த மலாய் நாட்டு இளவரசர் ஒரு வரையும் அவரது சகாக்களையும் இலங்கைக்கு நாடு கடத்தினர். இவர்கள் இலங்கை வந்து சேர்ந்ததும் இங்குள்ள ஒல்லாந்தர்களும் அவர்களுக்குத் தொந்தரவு செய்யத் தலைப்பட்டனர்.
மேலும், இஃதேபோல 1706ல் ஜாவாவில் இருந்து நாடுகடத் தப்பட்ட முன்னைநாள் மன்னன் சுசூனாமான் குராத்மாஸ் என்பவரும் இலங்கைக்கே வந்து சேர்ந்தார்.
மேலும், 1734ல் ஜாவாவின் முதல் மந்திரியாக இருந்த தானுரேஜ் என்பவரும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டார். இவை யெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்கே சொந்தமான நாடு என்ப தனையே குறித்து நிற்கிறது எனலாம்.
மேலும், டச்சுக்காரர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் படையொன்று மலேயாவில் இருந்து இலங்கை வந்தது. 18ம் நூற்றாண்டில் மலாய இராணுவ வீரர்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் போது இலங்கையிலே சேவை செய்தனர். 1873ம் ஆண்டு அப்படை கலைக்கப்பட்டதும் வேறு சில இராணுவப்பிரிவுகளில் அவர்கள் சேர்ந்து கொண்டார்கள்.

மருதூர் ஏ. மஜீத் 95
பிரிட்டிஷார் ஆட்சியிலே 1796-1948
ஒல்லாந்தரின் ஆட்சிக்குட்பட்டிருந்த இலங்கையை 1796ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி பிரிட்டிஸார் கைப்பற்றினர். இலங்கை முஸ்லிம்கள் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சியின் போது பட்ட துயரும் துன்பமும் போல பிரிட்டிஸாரின் ஆட்சியின் போது துன்பப்படவில்லையென்றே கூற வேண்டும். இஃதே வேளை மேற் சொன்ன போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகிய இருவரது ஆட்சியின் போது இழந்திருந்த சில உரிமைகளையும் பிரிட்டிஸ் ஆட்சியின் போது பெற்றுக்கொண்டார்கள் எனலாம்.
1802ம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பிரிட் டிஸாரின் குடியேற்றப் பிரதேசங்களாகவும் 1815ம் ஆண்டு கண்டி உள்ளிட்ட இலங்கை முழுவதும் பிரிட்டிஸாரின் ஆட்சியின் கீழும் வந்தது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெறும் வரை கிட்டத் தட்ட 150 வருடங்கள் பிரிட்டிஸாரின் ஆட்சியிலேயே இலங்கை இருந்தது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன் இலங்கையிலே பெளத்தம் ஹிந்து, இஸ்லாம் ஆகிய மூன்று மதங்கள் மட்டுமே இருந்தது. அதனால் இலங்கையின் பெளத்தர்களாகிய சிங்களவர்கள் மத வேறு பாடின்றிமுஸ்லிம்களை ஆதரித்தனர். முஸ்லிம்கள் வலோற்காரமாக மத மாற்றத்தில் ஈடுபடாமையும் இந்த ஒற்றுமைக்கு ஒரு காரணம் எனலாம். வெல்லசையில் இருந்த முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு முஹாந்தி ரத்தையமைத்துத் தருமாறு 1816ல் வேண்டிக் கொள்ளவே பிரிட்டி ஸாரும் அதனை ஏற்று முஹாந்திரம் ஒருவரை நியமித்தனர். இவரே இலங்கையின் முதன் முஸ்லிம் முஹாந்திரமாவார். பிரிட்டிஸாருக்கு எதிரான கிளர்ச்சி முதன் முதலாக இங்கேயே ஆரம்பமானது எனலாம்.
1 1840ம் ஆண்டு மத்தியதரைக் கடல் மீண்டும் போக்கு வரத்துக்கு திறந்து விடப்பட்ட போது காலித்துறைமுகம் மீண்டும் பிரபல்யம் அடையத் தொடங்கியது.
* 1802ம் ஆண்டு புத்தளத்தில் வாழ்ந்த 50 முஸ்லிம் குடும் பங்கள் ஒரு சில தான்தோன்றித்தனமான பிரிட்டிஸ் அதிகாரிகளின்
வழியும் நடையும் ? இலங்கையின் சுருக்க வரலாறு.

Page 50
96. R மருதூர் ஏ. மஜீத்
தூண்டுதலினால் கொள்ளையடிக்கிப்பட்டார்கள். 1889ம் ஆண்டு எம். ஸி. அப்துல் றகுமான் என்பவர் சட்ட ஆக்க சபைக்கு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். தென்மாகாணத்தில் வாழ்ந்த இவருடைய "றகுமானியா’ எனும் கப்பல் உலக வர்த்த கத்தில் ஈடுபட்டிருந்தது. 1899ம் ஆண்டும் இப்பதவியை இவரே வகித்து வநதாா.
இலங்கையின் அரசியல் தலமைத்துவம் உலக முஸ்லிம் நாடுக ளுடன் தொடர்புடையதாக இருந்தது என்பதற்கு இலங்கையில் ஏற்பட்ட துருக்கித் தொப்பிப் போராட்டம் நல்லதொரு சான்று எனலாம். இஃதே போல எகிப்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் இலங்கை முஸ்லிம்கள் தங்களால் ஆன உதவிகளையும், ஆதரவுகளையும் அளித்து வந்தார்கள்.
உதாரணமாக சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடிய அஹமத் அறாபி அல்மிஸ்ரி (அறாபி பாஷா) என்பவரையும் அவரது சகாக்களான ஏழு புரட்சியாளர்களையும் எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்திய போது இலங்கை முஸ்லிம்கள் இவர்களுக்கு வரவேற் பளித்து கெளரவித்தனர். அப்போது இலங்கையிலும் பிரிட்டிஸ் ஆட்சியென்பது குறிப்பிடத்தக்கது. 1833ம் ஆண்டிற்குப் பிறகுதான் முஸ்லிம்களும் கொழும்பிலே காணி வாங்கலாம் என்ற சட்டத்தை பிரிட்டிஸார் கொண்டு வந்தனர். (ஒல்லாந்தர் காலத்தில் இது மறுக்கப்பட்டிருந்தது.)
1810ம் ஆண்டு மாட்சிமை தங்கிய பிரிட்டிஸ் மன்னர் சேர் அலக்சாந்தர் ஜோன்ஸ்டன் அவர்களின் ஆலோசனையின் பேரில் இலங்கையிலே ஒரு அரச தாவரத் தோட்டத்தை அமைத்து, இத்தோட்டத்திலே மருத்துவச் செடிகளையும் உணவுக்காகவோ அல்லது வர்த்தக நோக்கங்களுக்காகவோ உபயோகிக்கக் கூடிய தீவின் மற்றும் எல்லாச் செடியினங்களையும் மரக்கறி வகைகளையும் பயிரிடவும் விருத்தி செய்யவும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இதற்கு இந்தப் பாரிய பணிக்கு முஸ்லிம்கள் பேருதவிசெய்தனர் எனக் கூறுகின்றார் சேர் அலக்ஸாந்தர் ஜோன்ஸ்டன் . மேலும் அவர் கூறும்போது இலங்கையிலே முஸ்லிம்கள் அறிமுகப்படுத்திய மருத்துவம் பற்றிய பிரதான நூல்களில் ஒன்று அவிசன்னாவின் நூலாகும்.
அரிஸ்டோட்டில், பிளட்டோ, யூக்கிளிட், கலென், தொலமி ஆகியோரின் நூல்களின் மொழி பெயர்ப்புக்களையும் முஸ்லிம்கள்

மருதூர் ஏ. மஜீத் 97
இங்கு அறிமுகப்படுத்தினர். நான் இலங்கையில் இருந்தபோது அபூசீனாவின் மருத்துவ நூலிலிருந்து ஒரு சில பகுதிகளை முஸ்லிம்கள் என்னிடம் காட்டினர். இந்நூல் தங்களது மூதாதையர்களால் பக்தாதில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.
மேலும், அலக்சாந்தர் ஜோன்ஸன் என்பவர் பின்வரும் செய் தியையும் குறிப்பிட்டுள்ளார். பேருவலையில் வாழ்ந்த முஸ்லிம் வணிகர் ஒருவருக்கும் அவருடைய பிற்சந்ததியினருக்கும் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் சிங்கள அரசர்களில் ஒருவன் வழங்கிய செம்பாலான பட்டயம் ஒன்றின் நகல் ஒன்றினைக் கண்டேன். அதில் புடவை நெய்வோரை முதன் முதலாக அந்த வணிகர் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக சில உரிமைகளையும் சில சலுகைகளையும் இந்தப் பட்டயம் மூலம் அளிக்கிறது. சிங்கள அரசனின் அந்தப் பட்டயத்தின் உரிமையினால் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழும் அந்தப் பரம்பரையினர் அந்த உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். இவை போர்த்துக்கீச டச்சுக்காரர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தக் குடும்பத்தின் தலைவர் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1806ம் ஆண்டு மருத்து வத்திணைக்களத்தின் சுதேசவைத்திய அத்தியட்சகராக என்னால் நியமிக்கப்பட்டார்.
இத்தீவில் உள்ள சுதேச வைத்தியர்களில் மிக்க அறிவுள்ள ஒருவர் என இந்நாட்டு மக்களால் அவர் கருதப்பட்ட தோடு சுதேச வைத்திய நூல்களில் ஒரு பகுதியை தன்னிடம் கொண்டவராகவும் அவர்விளங்கினார். அந்தக் காலத்தில் அந்தக் குடும்பத்தில் இருந்த யாராயினும் ஒருவர் வைத்தியராகத் தொழில் செய்தேயாக வேண்டும். என்ற கட்டுப்பாடு அவர்களின் சம்பிரதாயமாக இருந்தது. அதனால் இந்த வைத்தியப் பரம்பரை நீண்டு கொண்டே வந்தது.
இலங்கை முஸ்லிம் வைத்தியர்களால் மருத்துவ நோக்கங் களுக்காக மிகப் பழங்காலம் தொட்டு பாவிக்கப்பட்ட இத்தீவின் எல்லா மூலிகைகளும் பற்றிய மிக விபரமான ஓர் அறிக்கையை அவர் எனக்குச் சமர்ப்பித்தார். 1884ம் ஆண்டு ஒறாபிபாஷாவும் அறிஞர் சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார் போன்றோர் கொழும் பில் ஒரு பாடசாலை நிறுவினர். இப்பாடசாலைக்கு வாப்பிச்சி மரைக்கார் அவர்களே நிலம் கொடுத்து உதவினார். (வாப்பிச்சி மரைக்கார் சேர் ராசீக் பரீத் அவர்களின் தகப்பனார்) இப்பாடசாலை 1802ம் ஆண்டு ஸாத்றிரா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Page 51
98. மருதூர் ஏ. மஜித்
"இஃதேவேளை அறிஞர் சித்திலெவ்வை அவர்கள் கண்டியிலே முஸ்லிம் பெண்களுக்கென ஒரு பாடசாலையை அமைத்தார். 1834ம் ஆண்டு சேர் றொபட் வில்மட் ஹோல்டன் என்பவரால் கிழக்கு மாகாணத்தின் முழு ஆட்சிக்குமாக முகம்மதுகாசிம் மரைக்காயர் எனும் முஸ்லிம் நியமிக்கப்பட்டார்.
மேலும், இவரின் நேர்மை காரணமாக இவர் 1855ம் ஆண்டு
கொழும்பு கச்சேரியில் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1892ம் ஆண்டு ஐ. எல். எம். அஸிஸ் அவர்கள் கொழும்பிலே முஸ்லிம்களின் நலன் கருதும் இயக்கமொன்றை ஆரம்பித்தார். 1882ம் ஆண்டு அறபிபாஷா அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதில் இருந்து இலங்கை முஸ்லிம்கள் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினர். 1900 ஆண்டளவில் பிரிட்டிஸ் அரசாங்கம் இலங்கை யெங்கனும் பெளத்தர்களுக்கென்று 142 பாடசாலைகளையும் ஹிந்துக்களுக்கென்று 45 பாடசாலைகளையும் முஸ்லிம்களுக்கென்று ஆக நான்கே நான்கு பாடசாலைகளுக்கு மட்டும் நிதி உதவி செய்தது. 1882ம் ஆண்டு இலங்கை முஸ்லிம்கள் தங்களின் கலை கலாச்சார இலக்கிய முயற்சிகளுக்காக முஸ்லிம் நேசன் என ஒரு பத்திரிகையையும் 1914ல் சிலோன் முகம்மதியன், சிலோன் முஸ்லிம் றிவியு என்ற பத்திரிகைகளையும் 1915ம் ஆண்டு கிறசன் இஸ்லாம் என்ற பத்திரிகைகளையும் நடத்தினர். 1815ம் ஆண்டு இலங்கை முஸ்லிம் களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே இனக்கலவரம் மூண்டது. எத்த னையோ நூற்றாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த இரு சமூகங் களுக்குமிடையேயும் இந்த இனக்கலவரம் மூண்டது துர்அதிஸ்டம் என்றே கூறவேண்டும். இந்த இனக்கலவரத்திற்கு கண்டி மாநகரில் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருந்த இந்திய முஸ்லிம் வர்த்தகர் களே காரணம் எனச் சில அரசியல்வாதிகள் காரணம் கூறியுள்ளார்கள். இக்கலவரத்தை இலங்கைத் திராவிடர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சிங்கள மக்களின் அனுதாபத்தைப் பெற முயன்றனர். இதனால் கலவரம் மேலும் மோசமடைந்தது.
பிரித்தானிய மன்னரை சேர் பொன்னம்பலம் அருணாசலம் தலமையில் ஒரு குழு சந்தித்து இலங்கையில் ஏற்பட்ட இக்கலவரத் துக்கு முஸ்லிம்களே காரணம் என எடுத்துரைத்து பிரிட்டிஸ் மன்னருக்கு இலங்கை முஸ்லிம்கள் பற்றித் தப்பான அபிப்பிராயத்தை ஏற்ப டுத்தினர். இதே சேர், பொன்னம்பலம் அருணாசலம்தான் இலங்கை
1 தேசிய மீலாத் விழா மலர் 1992.

மருதூர் C. மஜித் 99
வாழ் முஸ்லிம்களை அங்காடி வியாபாரிகள் என்றும், தலையிலே சாமான்களைச் சுமந்து தெருத்தெருவாய் அலைந்து விற்றுத் திரிப வர்கள் என்றும் நூல் எழுதியவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது. இது பற்றிய விரிவாக 8ஆம் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இலங்கையிலே பிரிட்டிஸாரின் ஆட்சி ஆரம்பமான காலத்தில் முஸ்லிம்களுக்கு என்று எதுவித இயக்கமும் இருக்கவில்லை. பிற்காலத் தில் பல இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று 22-07-44ல் ஆரம்பிக்கப்பட்ட சோனக கலாசார மன்றம் எனலாம். பிரிட்டிஸாரின் ஆட்சியின் போது அறிஞர் சித்திலெப்பை ஒறாபிபா ஷா இருவரும் சேர்ந்து இலங்கை முஸ்லிம்களின் கல்விக்காகவும் முன்னேற் றத்திற்காகவும் அரும்பாடுபட்டனர். இவ்விருவரின் முயற்சியினால் மருதானையிலே அல்-மதுரசதுல் கைரியதுல் இஸ்லாமியா என்ற பெயரில் 1884ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கல்விக் கூடம் ஆரம் பிக்கப்பட்டது. கால ஓட்டத்தின் போது பிரிட்டிஸாரின் ஆக்ரமிப்புக் கெதிராக சிங்களவர்களோடு சேர்ந்து முஸ்லிம்களும் குரல் கொடுத் தனர். அதனால் பிரிட்டிஸ் அரசு 1804ம் ஆண்டு கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்களைப் பிரித்தானியர்களின் பகைவர்கள் என பிரகடனம் வெளியிட்டு ஒதுக்கி வைத்தனர்.
பிரிட்டிஸ் ஆட்சியின் போது மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று, மண்முனைப்பற்று, எருவில் ப்பற்று, போரதீவுப்பற்று கரவாகுப்பற்று, சம்மாந்துறைப்பற்று, அக்கரைப்பற்று, பாணமைப் பற்று, விந்தனைப்பற்று எனப் பல பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டன.
மேலும், 1873ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி பிரிட்டிஸ் ஒரு சட்டத்தின் மூலம் மருதானைப்பள்ளி வாசலின் ஒரு பக்கத்தே யுள்ள மையவாடியில் மையத் அடக்குவதைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வந்தது.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முஸ்லிம்களின் அரசியல் எழுச்சிக்கு அறிஞர் சித்திலெப்பை, ஐ. எல். அப்துல் அஸிஸ், வாப்பிச்சி மரைக்கார் போன்றோர் அளப் பெரிய சேவை செய்துள் ளனர். இதன் விளைவாக 1889ல் எம். சி. அப்துல் றஹ"மான் என்பவர் இலங்கை முஸ்லிம்களின் முதலாவது பிரதிநிதியாக சட்ட ஆக்க சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

Page 52
00 மருதூர் ஏ. மஜீத்
மேலும், 1905ம் ஆண்டு மே மாதம் இரண்டாந் திகதி அப்துல் றகுமான் பிரிட்டிஸாரின் துருக்குத் தொப்பிச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினார். 1924ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
1. மாக்கான் மாக்கார்
2. என். எச். எம். அப்துல் காதர்.
3. ரி. பி. ஜாயா என்பவர்களே அவர்களாவர்.
1928ம் ஆண்டு முஸ்லிம் லீக்கின் கிளைகள் இலங்கை எங்கும் அமைக்கப்பட்டன. 1923ம் ஆண்டு இன அடிப்படையில் பரிபாலன சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரில் மூவர் முஸ்லிம்களாக இருந்தனர். இச்சபை 1929ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலே முஸ்லிம் லீக் போன்று சோனகர் சங்கமும் அரசியல் ஈடுபாடு காட்டத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் முஸ்லிம்களின் கைவண்ணத்தால் கொழும்பு நகரமே அழகு பெற்றது எனலாம்.
உதாரணத்துக்கு கொழும்பு நூதனசாலை. பிரதம தபாற்கந் தோர், சுங்கப்பகுதிக் கட்டடம் புறக்கோட்டையில் உள்ள பழைய நகர மண்டபம் கோல்பேஸ் ஹோட்டல், மணிக்கூட்டுக் கோபுரம், மாளிகாவத்தை நீர்த் தேக்கம், என்பவற்றைக் குறிப்பிடலாம்.
1817ம் ஆண்டு பிரிட்டிஸ் ஆட்சியின் போது துெல்லச முஸ் லிம்கள் ஹஜ்ஜி மரைக்காயரைத் தங்கள் கிராம அதிகாரியாக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மேலும், பிரிட்டிஸாரின் ஆட்சியின் போது மலாயரைச் சேர்ந்த பொலிஸ் படையொன்று இலங்கைக்கு வந்து நெருப்பணைக்கும் படை யாகச் செயல்பட்டது.
மேலும், 1907ம் ஆண்டு வீசிய சூறாவளியால் 'அப்துல் ஹமீத்” எனும் பாய்மரக் கப்பல் கற்குடாத்துறை முகத்தில் வந்து சேதமடைந்தது. அதில் 14 மாலுமிகள் இருந்தனர் என அறியக் கிடக்கிறது. இதே புயலின் போது முகம்மது சவுந்தரி எனும் பாய் மரக்கப்பல் கிரான் குளத்துக்கருகே உடைந்தது. இதில் நெல் ஏற்றப் பட்டிருந்ததாக அறியக் கிடக்கின்றது.
கல்விச் சிந்தனைகள்.

மருதூர் ஏ. மஜித் O
சுதந்திரத்துக்குப் பின் உமக்கள் ஆட்சியிலே:
1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி பிரிட்டிஸார் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கினர். சுதந்திர இலங்கையின் ஆட்சிப் பொறுப்பினை ஐ. தே. க. ஏற்றுக் கொண்டது. இக் கட்சியின் தலைவர் திரு. டீ. எஸ். சேனநாயக்கா அவர்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றத்தின் முஸ்லிம் பிரதிநிதிகளாக
1. ரி. பி. ஜாயா, கொழும்பு மத்தி,
2. ஏ. ஆர். எம். எம். அபூபக்கர், மூதூர்,
3. ஏ. சின்னலெப்பை, மட்டக்களப்பு.
4. எம். எஸ். காரியப்பர், கல்முனை.
5. எச். எஸ். இஸ்ம்ாயில், புத்தளம். ஆகியோர் தெரிவு செய் யப்பட்டனர்.
ஜனாப் ரி. பி. ஜாயா அவர்கள் தொழில் மந்திரியாகவும், சமூக சேவைகள் மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பின்னும் சுதந்திரத்துக்கு முன்னும் மட்டக் களப்பு, கல்முனை, புத்தளம் மூதூர், கொழும்பு, ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துள்ளார்கள் என்பது புலனாகிறது.
1950ம் ஆண்டு 6 முஸ்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றார்கள். இவர்களில் இருவர் கொழும்பிலிருந்து தெரிவு செய்யப் பட்டவர்களாகும். V
1976ம் ஆண்டு புத்தளத்தில் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டது. (இது பற்றி மறக்க வேண்டியதும் மனவருத்தமானதுமான ஓர் அத்தியா யத்தில் விபரம் கூறப்பட்டுள்ளது)
1981ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியாக ஒருவரே (எம். எச். எம். ஜஃபர்) பிரதேச அபிவிருத்தி சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Page 53
O2 மருதூர் ஏ. மஜித்
மத்தியகிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரையுள்ள முஸ்லிம்களின் கலை கலாசார பண்பாட்டுக் கோலங்கள்
உலக நாகரிகத்திற்கு வித்திட்டவர்களும், அதனை வளர்த்தவர்களும் மத்திய கிழக்கு வாசிகளே என முன் அத்தியாயங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், சில தகவல்களை எடுத்துக்காட்டும் நோக்கோடு இவ்வத்தியாயத்திலும் அது சம்பந்தப்பட்ட பல விடயங் களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நதிக்கரை நாகரிகங்கள்.
நதிக்கரை நாகரிகங்களான எதியோப்பிய, எகிப்திய, ஹரப்பா மொகஞ்சதாரோ ஆகிய மூன்று நாகரிகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புற்றிருப்பதை எம்மால் உணர முடிகின்றது.
முதலில் எதியோப்பிய நாகரிகமான பூப்பிாட்டிஸ் ரைக்கிறீஸ் நாகரிகத்தை எடுத்து நோக்குவோம்,
இந்த நாகரிகம் கி. மு. 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த நாகரிகத்திற்குரிய மக்கள் பயிர் செய்து வாழ்க்கை நடத்தியது மட்டுமல்லாமல் பிற்காலத்தில் வியாபாரத்தையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். இவர்களைச் சுமேரியர் என அழைப்பதுண்டு, இவர்கள் செம்பையும், தகரத்தையும் பயன்படுத்தியதோடு மட்டுமல் லாமல், இரண்டையும் கலந்து வெண்கலத்தையும் உண்டாக்கி அதனைப் பயன்படுத்தியும் உள்ளனர்.
மேலும், இவர்களுடைய வணக்கம் சூரிய சந்திர நெருப்பு வணக்கமாகவே இருந்தது, அதாவது ஒளிதரக்கூடிய அல்லது சக்தியான ஒன்றை வணங்கினர். இதனை சக்தி வழிபாடு எனவும் கூறலாம். பேய்க்கும் நோய்க்குமிடையே தொடர்பு இருப்பதாகவும் இவர்கள் நம்பினர்.

மருதூர் ஏ. மஜித் 'O3
நைல் நதிக்கரை நாகரிகம்.
சுமேரியர்களைப் போன்று இவர்களும் நைல்நதிக்கரையிலே வாழ்ந்து பயிர் செய்ததோடு வியாபாரத்தையும் மேற்கொண்டனர்.
இவர்கள் கி. மு. 4000-4200 ஆண்டுகளுக்கு முன் வான இயலையும், மருத்துவத்தையும் கலையையும், அறிவியலையும், அறிந்து வளர்த்தும் வந்துள்ளார்கள்,
பாரோ, பிர் அவுன் போன்ற அரச பரம்பரையினர் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அரசர்களாக இருந்து ஆட்சியும் செய்துள்ளனர் இம் மன்னர்கள் காலத்திலேயே பிரமாண்டமான பிரமிட்டுக்கள் கணித நுட்பத்தோடு கட்டப்பட்டுள்ளன. இதேபோல உயிர் உள்ளது போன்று ஆச்சரியப்படத்தக்க கலைகளையும், சிற்பங்களையும் இவர்கள் செதுக்கியுள்ளனர்.
இவர்களும் எழுதும் கலையை அறிந்திருந்தார்கள்.
இவர்களது காலத்தில் ஒரு உயர்குடிப் பண்பு வளர்ச்சி பெற்றி ருந்தது எனலாம்.
சிந்துவெளி நாகரிகம்.
சிந்துவெளி நாகரிகம் முந்திய இரண்டு நாகரிகங்களான சுமேரிய எகிப்திய நாகரிகங்களின் தொடரே என ஊகிக்க இடமிருக்கிறது. அதாவது மேற்கூறிய இரண்டு நாகரிகத்திற்குமுரிய மக்கள் ஆப்கானிஸ் தான் ஊடாக சிந்துவெளியாகிய இன்றைய பாகிஸ்தானில் அதாவது ஹரபா மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் குடியேறி இந்நாகரிகத் திற்கு வித்திட்டிருக்கலாம். இது இடம்பெற்றது கி. மு. 4000 ஆண் டளவில் என சில குறிப்புக்கள் கூறுகின்றன. இவர்களிடையே பல தரப்பட்ட கடவுள் வழிபாடு இருந்தாலும் ஒரிறை வழிபாடே மேலோங்கி இருந்தது. அகழ்வாராய்ச்சிகள் இதனை நிரூபிக்கின்றன.
சிந்துவெளி மக்கள் கி. மு. 4000 ஆண்டளவில் மொசப்பட்டோ மியாவில் ஆட்சி செய்த "சார்க்கன்’ மன்னனோடு வியாபாரத் தொடர்பு வைத்திருந்ததாக அறியக் கிடக்கிறது. இது இரு நாகரி கங்களின் தொடர்பை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
மேலும், சிந்துவெளி எழுத்துக் க ைள ஆய்வு செய்த ஜி. ஆர். ஹண்டர் என்பவர் இந்த எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டதாகக் கூறியுள்ளார்.

Page 54
|04 |- மருதூர் ஏ. மஜீத்
மேற்கூறிய மூன்று நாகரிகங்களின் ஊடாக மத்தியகிழக்கு வாசிகள் வடஇந்தியாவரை வந்து அங்கிருந்து தென் இந்தியாவின் ஆதிச்ச நல்லூரில் தங்கி அங்கிருந்து இலங்கையில் கிழக்குக் கரை யையும் அடைந்தனர்.
இப்படிப்பட்ட கி. மு. 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் நாகரிகத்தைக் கண்ட மத்திய கிழக்கு வாசிகளின் வழித்தோன்றல் களாகிய இன்றைய முஸ்லிங்களாகிய நாம் இலங்கையிலும், இந்தி யாவிலும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இலக்கியங் களையும் நாகரிகத்தையும் கண்டு வாய்பிளந்து நிற்பதுவும், அதற்குத் தலைசாய்த்து நிற்பதுவும் வெட்கத்திற்குரிய விடயமாகும் பெருமைப் படவேண்டிய தமிழர்கள் நாங்கள், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறோம். பகரமாகத் திராவிடர்கள் தங்களைத் தமிழர்கள் என அழைத்துப் பெருமைப்படுகிறார்கள்.
மேற்கூறிய பெருமைக்குரிய மத்தியகிழக்கு வாசிகள் மிகப் பழங்காலந்தொட்டே உலகின் பல பாகங்களிலும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் ஆட்சியாளர்கள் அறவழி ஆட்சியை நடத்துவதற்கும் இவர்கள் கருவாக இருந்துள்ளார்கள். இதற்கு பஞ்சபாண்டவர்களின் ஆட்சியை எடுத்துக்கூறலாம். "மகாபாரதம்” என்னும் நூல் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என "கீறீனில்” என்பவர் கருதுகிறார்.
இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என டாக்டர் ராதாகிருஷ்ணன் கருதுகிறார். லோகமான் யதிலகர் அவர்கள் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ள முடியும் எனக் கூறுகின்றார். வேறு சிலர் இது ஆறாம் நூற்றாண்டு
எனக் கூறியுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும் போது மகாபாரதம் கி. மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமிருக்கிறது. இந்த நூல் எழுதுவதற்கு எத்தனையோ வருடங் களுக்கு முன் பஞ்சபாண்டவர் ஆட்சி நடந்திருக்க வேண்டும். இந்த ஆட்சியின் போது "தர்மரிட வாசலிலே பட்டாணி தலை தொட்ட மந்திரியாம்” என ஒரு பாடல் பகுதி வருகிறது. பட்டாணி என்பது ஆப்கானிஸ்தான் மக்களை குறிக்கும் சொல்லாகும்.

மருதுர் ஏ. மஜீத் OS
எனவே தர்மருடைய ஆட்சியிலே பட்டாணியான ஆப்கான் வாசி ஒருவர் முதல் மந்திரியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகின்றது.
அவரிடம் ஆலோசனை கேட்டே தர்மராஜா தனது ஆட்சியை நடத்தியுள்ளார். தர்மராட்சி தர்ம ஆட்சியாக இருந்ததற்கு ஆப்கான் பிரதம மந்திரி காரணமாக இருந்திருக்கிறார்.
இதிலிருந்து நாம் விளங்குவது என்னவெனில் மத்தியகிழக்கு வாசிகளே நாகரிகமான அரசியல் தீட்சணியம் உடையவர்களாக இருந்தார்கள் என்பது நிரூபணமாகின்றது.
இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் கி. மு. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டளவில் அல்லது அதற்கு முன் மத்திய கிழக்கு வாசிகளின் செல்வாக்கு இந்தியாவில் நிலைபெற்று இருந்தது என்பது பொருளாகும். இச்செல்வாக்கு இலங்கையிலும் பரவியே காணப்பட்டது.
உதாரணத்திற்கு மட்டக்களப்பில் உள்ள மருதூரில் இடம் பெற்றுள்ள பாண்டிருப்பு என்னும் கிராமத்திலும் மகாபாரதத்தோடு சம்பந்தமுடைய திரெளபதி அம்மன் கோயில் உண்டு. இக்கோயில் 1 பட்டாணி மேடை என தர்மரின் ஆசனத்திற்குப் பக்கத்திலே அமைந்துள்ளதை ?நாம் காண முடியும்.
மேலும், திருவாசகத்திலே அரபு நாட்டில் இருந்து வந்த முஸ்லிம்களைப்பற்றி மாணிக்கவாசகர் எழுதியுள்ளார்.
கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாணிக்கவாசகர் பின்வருமாறு கூறியுள்ளார்.
சிவபெருமான் முஸ்லிம் குதிரை வியாபாரி உருவில் பாண்டிய மன்னனின் முன் தோன்றியதாக 7வது செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
பாடல் வருமாறு. வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல் கொண்டு என் உள்ளம் கவர்வரால்
அன்னை என்னும்
பாகவதம். * இஸ்லாமிய கலைக் களஞ்சியம்

Page 55
O6 மருதூர் ஏ. மஜித்
"ள்ன்று அப்பாடல் வருகிறது
மேலும், சிலப்பதிகாரத்திலே சில பாடல்களில் "பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்" என்பன
போன்ற கருத்துக்கள் கையாளப்பட்டுள்ளன.
பந்தர் என்பது துறைமுகத்தைக் குறிக்கும் அரபுச் சொல்லாகும். பாரசீக மொழியிலும் இச் சொல்லே துறைமுகத்தைக் குறிக்கிறது. இன்றும் தென்இந்தியாவில் மஃமூது பந்தர் சஹீது பந்தர் என்னும் பட்டினங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.
மத்திய கிழக்கிலே இஸ்லாம் தோற்றம் பெற்றதோடு ஒரே இறைவன் வழிபாட்டுக் கொள்கை ஆரம்பமானதும் பல இறைவன் வழிபாட்டுக் கொள்கை மறையத் தொடங்கிற்று. இதனால் சிலை வணக்கமும் சிலைகளும் அழியத்தொடங்கியது மட்டுமல்லாமல் அவை பழமையை எடுத்துக்காட்டும் சின்னங்களாகவும் மாறத் தொடங்கின. கி. பி. 7ம் நூற்றாண்டிற்குப் பின் கலை கலாசாரம், இலக்கியம், மதம், நடை உடை பாவனை எனப் பல அம்சங்களிலும் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
இம் மாற்றம் இஸ்லாம் உலகின் எங்கெல்லாம் பரவியதோ அங்கங்கெல்லாம் இம் மாற்றமும் பரவியது எனலாம். இஸ்லாத்தின் தோற்றத்தோடு மத்திய கிழக்கின் கேந்திரஸ்தானமாக மக்கா மதீனா என்பன விளங்கின.
இங்கு பேசப்பட்ட மொழி உலகெங்கும் மீண்டும் பரவத் தொடங்கியது. இங்கு பேசப்பட்டது செமத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அரபு மொழியாகும். செமத்திய மொழிக் குடும்பத்தின் தாய் மொழியே தமிழ்தான். எனவே, அரபு மொழியின் ஆதியும் தமிழ் மொழியே எனத்துணிந்து கூறமுடியும்.
இஃது இவ்வாறிருக்க இஸ்லாம் பரவத் தொடங்கிய நாடுகளில் இஸ்லாத்திற்கு முரணான கலை கலாசாரங்கள் மெல்ல மெல்ல மறையத் தொடக்கின. இஸ்லாத்திற்கு இடைஞ்சல் இல்லாத கலை கலாசாரங்கள் வளராவிட்டாலும் அழியாது அப்படியே இருந்தன.
மேலும், இந்தியாவில் முகலாயரின் ஆட்சியின் போது வங்காளி மொழி அரபு மொழியில் எழுதப்பட்டது.
1 தமிழ் இலக்கிய வரலாறு

aggaf as. tegis 07
தென்இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ், அரபு மொழி கிளினால் எழுதப்பட்டது. கிழக்கு ஆபிரிக்காவில் இப்படி எழுதப் பட்ட மொழி "சுவாஹிலி" என அழைக்கப்பட்டது.
இச் சொல் கிழக்கு ஆபிரிக்காவைக் குறிக்கும் அரபிச் சொல்லாகும்.
(பி) எழுத்துச் சத்தம் அரபு மொழியில் இல்லையென்பதனால் பாரசீக மொழியில் உள்ள (ப) என்னும் எழுத்தை சுவாஹிலியிலும் இலங்கையின் அரபுத் தமிழிலும் சேர்த்துக் கொண்டனர்.
இங்கு ஏன் இதனைக் குறிப்பிடுகின்றேன் எனில் மொழி கலாசாரம் என்பன எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும் என்பதை எடுத்துக் காட்டவேயாகும். மேலும் துவா, குத்பா, மெளத், ஹயாத் என்ற சொற்கள் சுவாஹிலி மொழியிலும், அரபுத் தமிழ் மொழியிலும் ஒன்றே
இஃதே போல வேறுபல கலை கலாசாரம் பரிவர்த்தனைகளும் இருமொழியிலும் இடம் பெற்றன. உதாரணமாக இந்தியாவில் சேரளப் பிரதேசத்திலே அரபிகள் கேரளப் பெண்களை திருமணம் செய்து கொண்டபோது அரபிகளை கேரள மக்கள் மாப்பிள்ளை என அழைத்தனர். இதனால் நாளடைவில் எல்லா அரபிகளுமே இங்கு மாப்பிள்ளை என அழைக்கப்பட்டனர்.
இந்தியாவிலே கேரள நாடு மத்தியகிழக்கு வாசிகளின் விருப் பத்திற்குரிய நாடாக இருந்தது. கேரள வாசிகள் மத்திய கிழக்கு வாசிகளை விரும்பினார்கள். 2இதனால் சமோரின் எனும் அரசனும் இஸ்லாத்தைத் தழுவினான். இதற்கு இன்னுமொரு அடிப்படைக் காரணமும் மறைபொருளாக இருந்தது.
அதாவது கேரளவாசிகள் மத்திய கிழக்கு வாசிகளின் பூர்வீக குடிகளே என்பது ஆய்வுகள் நிருபிக்கின்றன. இந்த பூர்வீக உறவு இலங்கையிலே மட்டக்களப்புவரை பரந்து நிற்கிறது எனலாம். மத்திய கிழக்கு வாசிகளோடு சேர்த்து சேரநாட்டு வாசிகளையும் மட்டக்களப் பிலேகுடியேற ஏதுவாகவும் இது இருந்தது எனலாம்.
முஸ்லிம் ஒவ் சிறி லங்கா ? இலங்கை முஸ்லிம் வரலாறு.

Page 56
i08
மருதூர் sس. மஜீத்
இவ்வாறு உலகெங்கிலும் மத்தியகிழக்கு விாசிகளும் 7ஆம் நூற்றாண்டின் பின் முஸ்லிம்களும் பல பண்பாட்டுக் கோலங்களைப் பரப்ப ஏதுவாயிருந்தனர்.
உதாரணமாக,
1.
கடற்பரப்பைப் பொறுத்தவரை (அ) கப்பல் கட்டுதல் (ஆ) கப்பலோட்டுதல் (இ) தோணி தோண்டுதல் (ஈ) மீன் பிடித்தல் (உ) முத்துக் குளித்தல் (ஊ) சங்கு சேகரித்தல்
போன்றவற்றையும்
வீர விளையாட்டும், வியாபாரமும் என்ற வகையில் (அ) யானை பிடித்தல்
(ஆ) குதிரையேற்றம் (இ) தவள முறை கரவன் என்பவற்றையும்
வரசனைத் திரவியப் பாவனை என்ற வகையில் (அ) வாசனைத் திரவியம் தயாரித்தல்: என்பதனையும்
கட்டிடக்கலை என்ற வகையில் (அ) பள்ளிகள் கட்டுதல் (ஆ) வீடுகள், பொது இடங்கள் கட்டுதல் (இ) இவற்றோடு சம்பந்தப்பட்ட மரவேலைகள் செய்தல் (ஈ) வண்டில்கள் செய்தல்
என்பதனைiம்
ஆடை ஆபரணம் செய்தல் என்றவகையில் (அ) பாய் பின்னுதல் (ஆ) கூடை பின்னுதல் (ஆ) பெட்டி இழைத்தல் (ஈ) நெசவு செய்தல்
(உ) சாயமூட்டுதல் (ஊ) தோல் பதனிடல்
இலங்கை முஸ்லிம் வரலாறு.

மருதூர் ஏ. மஜீத் 09
(எ) தையற்கலை
(ஏ) சிலுகு கட்டுதல் (புத்தகம் கட்டுதல்)
(ஐ) பிரம்பு வேலை (சந்தூக்குச் செய்தல்)
போன்றவற்ற்ையும்
6. யூனாணி வைத்திய முறையினையும் உலகெங்கும் பரவச் செய்து வளர்த்தவர்கள் இந்த முஸ்லிம்களே.
மேலும், கல்வியறிவு என்ற வகையில் பட்டப்படிப்பினை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம் களே எனத் துணிந்து கூறமுடியும், இதற்கு உதாரணமாக பல்கலைக் கழகங்களை அமைத்து அதிலே பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு பட்டம் சூட்டும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்களே என்பதற்கு நல்லதொரு சான்று பட்டம் சூட்டும் போது அணியும் தொப்பியினைக் குறிப்பிட முடியும்,
இன்றும் பல பல்கலைக் கழகங்கள் இதனைப் பின்பற்றுவதை நாம் அவதானிக்க முடியும்.
மேலும், (1) அரபு எழுத்துக்கலை என்ற வகையில் கண்ணாடியில்
சித்திரம் வரைதல் (2) போத்தலில் சிறு கப்பல் போன்றவற்றை இடுதல், (3) மாணிக்கவியல்
என்பவற்றையும் குறிப்பிடலாம்.
மேலும், இன்று உலக நாடுகளிடையே வீடுகளில் பின்னல் சட்டம் இடப்பட்ட ஜன்னல்கள் வழக்கில் உள்ளதை நாமறிவோம். இவைமத்தியகிழக்கு நாடுகளில் காணப்பட்ட யன்னல்களைஅடியொற்றி எழுந்தவைகளே, கவன்கல்லை உபயோகித்து தடித்த சுவர்களை அமைத்து அதிலே யன்னல்களை அமைத்தல் எகிப்திய நாட்டின் வழக்கமாகும், இதனையும் இன்று உலகின் பல நாடுகளிலும் காண முடிகிறது. இதனை லீவான் கட்டிடக்கலையெனவும் அழைப்பர்.
இஃதே போல இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் முஸ்லிம்கள் படைத்த இலக்கியங்கள் பிறமதக் கண்டனங்கள் அற்றவை பிறரைத் தன்மயப்படுத்தும் பிரச்சாரத் தன்மை இல்லாதவை எனலாம்.
மேலும், குதிரையோட்டுதல், குதிரைகளை யுத்தங்களில் பாவித்தல், குதிரைகளைப் பந்தயங்களில் பாவித்தல், குதிரை வியாபாரம் என்பவற்றில் முஸ்லிம்களே கைதேர்ந்தவர்களாக

Page 57
O - - - - - - - - - - மருதூர் ஏ. மஜீத்
இருந்தனர். "குதிரைகள் விலையுயர்ந்த அன்பளிப்புப் பொருட்களாக உலகமெங்கும் அறியப்பட்டிருந்தது. இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம். சிங்கள மன்னனிடம் கைதியாகப்பிடிபட்டிருந்த நொக்ஸ் தேசாதிபதியை மீட்பதற்காக பிரித்தானிய அரசு கொடுத்த பொருட்களுள் அரேபியக் குதிரையும் அடங்கியிருந்தது.
இஃதே போல இராஜசிங்கனுக்கு ஒல்லாந்தர் அளித்த பரிசுப் பொருட்களுள் மூன்று குதிரைகளும் அடங்கியிருந்தன, இவ்வாறு உலகளாவிய கலை கலாசார பண்பாட்டுக் கோலங்களையுடையவர் கள் மத்தியகிழக்கு வாசிகள், இஸ்லாத்தின் பின் இவர்கள் முஸ்லிம் கள் எனவும் அறியப்பட்டு உலகப் பண்பாட்டுக் கோலங்களுக்கும் உரிமைக்காரர்களாயினர். இனி இலங்கை முஸ்லிம்களின் கலை, கலாசார, பண்பாட்டுக் கோலங்களை எடுத்து நோக்குவோம்.
இலங்கையில் முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந் தாலும் இடத்திற்கிடம் சில கலை கலாசாரப் பண்பாடுகள் வேறு படுவதாலும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என திசை வாரியாகப் பிரித்து நோக்குதல் சிறப்புடைத்தாகும். வடக்கு என்ற பிரிவிலே யாழ்ப்பாணம், மன்னார் எனும் பகுதிகளையும், இழக்கு என்ற பிரிவிலே மட்டக்களப்பினையும், மேற்கு என்ற பிரிவிலே கொழும்பு, களுத்துறை, பாணந்துறை, வேருவலை, நீர் கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளையும், மத்தி என்ற பிரிவிலே கண்டியையும், அதைச் சூழ்ந்துள்ள பகுதியையும் கொள்ள முடியும், இனி இவற்றினை தனித்தனியே எடுத்து நோக்குவோம்.
இலங்கையில் கிழக்கிலே முஸ்லிம்கள் செறிந்தும், கூடுதலாகவும் வாழ்கிறார்கள். இங்கு வாழும் முஸ்லிம்களை மட்டக்களப்பு முஸ்லிம்கள் என அழைப்பதுண்டு. 'மட்டக்களப்பு’ எனும் சொல் இன்று நாம் நினைப்பது போன்று கல்முனைக்கு வடக்கே இருபத் தைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள மட்டக்களப்பைக் குறித்து நிற்கவில்லை, இன்றைய கல்முனையை அதாவது பண்டைய ஊரையே குறித்து நின்றது. இன்று சம்மாந்துறையின் ஒரு பகுதி மட்டக்களப்புத் தரவை என அழைக்கப்படுவது இதற்கு நல்லதொரு சான்றாகும். சிங்கள மன்னர்கள் காலத்தில் மட்டக்களப்பு உறுகுணையோடு சேர்ந்து இருந்தது. **றுஹ"ணு" என்றால் கிழக்கு என்பதே பொருளாகும்.
1. பிறைக் கொழுந்து.

மருதூர் ஏ. மஜீத்
மத்தியகிழக்கு வாசிகள் சைலானை கிழக்குக் கதவினூடாகவே தரிசித்தனர். கல்முனையில் ஒரு வீதி இன்றும் சைலான் வீதி என்றே அழைக்கப்படுகின்றது.
கி. மு. 327ல் தொலமியால் கீறப்பட்ட உலகப்படத்தில் “ARAB ATHTHA CIVITAC IN EXTREMS' 667 "குறிக்கப்பட்டுள்ள பகுதி இன்றைய கல்முனையைக் குறிக்கின்றது. அதாவது ஊரையே குறிக்கின்றது எனலாம். மேலும் தொலமி இது பற்றிக் கூறும் போது இப்பகுதியில் அரபிகள் குடியிருந்தார்கள், அல்லது அரபிகளின் கடற்காவல் நிலையம் அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார். கி. பி. 953ல் இபின் சஹ்ரியார் தனது அஜாப் அல் ஹிந்து என்னும் நூலில் இலங்கையிலிருந்து அரபியா சென்று இஸ்லாத்தை அறிந்த சம்பவம் பற்றிக் கூறியுள்ளார்.
இபின் சஹ்ரியார் கூறும் சம்பவம் மட்டக்களப்பிலிருந்து அரேபியா சென்று இஸ்லாத்தை அறிந்து வந்த குழுவையே குறிக் கின்றது எனலாம். இதற்குச் சான்றாக மக்காவில் இருந்து இலங்கைக் குழுவோடு வந்த பெருமானாருக்கு திருமுடி இறக்கிய அபிஸினிய அடிமைக் குடும்பம் இஸ்லாத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காகவும், சுன்னத்துச் சடங்கினைச் செய்வதற்காகவும் இங்கு வந்து மட்டக் களப்பு ஊரிலேயே தங்கினர்.
இன்றும் இவர்கள் பரம்பரை இங்கு இருக்கிறார்கள். ஒஸ்தாதுக்கள் என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் செய்த கத்னாச் சடங்கினை இன்றும் இந்த ஒஸ்தாதுக் குடும்பமே செய்து வருகின்றது. இவர்கள் எங்கிருந்தாலும் அதாவது இலங்கையில் எங்கிருந்தாலும் இவர்களின் மூ தா  ைத ய  ைர விசாரித்தால் மருதூர் என அறிய முடிகிறது.
இலங்கையிலிருந்து சென்ற அந்தத் தூதுக்கோஷ்டியின் தலைவர் பாகிஷ்தானில் வைத்து அதாவது 'மக்றுான்' என்னும் பகுதியில் காலமானார் எனவும் அவரின் அடக்கஸ்தலம் இன்றும் அப்பகுதியில் உண்டு எனவும் அறியமுடிகின்றது.
புகழ்வாய்ந்த அரேபியக் கடலோடியான 'சிந்தாபாத்’ இலங்கையைத் தரிசித்துள்ளார். இவர் இலங்கையை தரிசித்தபோது
பிறைக் கொழுந்து,

Page 58
12 மருதுர் ஏ. மஜித்
ஒருவரைச் சந்தித்துக் கதைத்ததாகவும், அவர் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்ததாகவும், அவர் சரளமாக அரபு பேசியதாகவும் குறிப் பிட்டுள்ளார்.
சிந்தாபாத் குறிப்பிடும் இந்த இடம் மட்டக்களப்பாகவே இருக்க முடியும். "மசூபார்” என இது குறிக்கப்படுகிறது, இதற்கு இரண்டு
காரணங்களை ஆதாரமாகக் கூறலாம்.
ஒன்று மேற்குப் பகுதியிலே வாழ்ந்தவர்கள் விவசாயத்தை மேற்கொள்ளவில்லை. வியாபாரத்தையே கைக்கொண்டிருந்தனர். இரண்டாவது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த சோழ நாட்டரசி மட்டக்களப்பு வாவியில் தெற்கு அந்தமாகிய வீரமுனையை அடைந்து அங்கு கோயில் கட்டி அதனைக் கவனிக்க ஒரு குடியேற்றத் தையும் அமைத்தார். இந்த கப்பல் பிரயாணம் சிந்தாபாத்யாத்திரை என்றே அழைக்கப்படுகிறது.
சிந்தாபாத் வந்தவழியைத் தொடர்ந்து வந்த பிரயாணம் எனப் பொருள்படவே அரசியின் பிரயாணமும் சிந்தாபாத்யாத்திரை என அழைக்கப்பட்டது எனலாம்.
மேலும்,
ஒரு வரலாறு கி. (In. 301ல் மட்டக்களப்பை வந்தடைந்த 2"பரிகுலமகிபர்கள்' களப்புமுனை எனும் இடத்தை வந்தடைந்
தார்கள் எனக் கூறுகிறது. இங்கு குறிப்பிடும் களப்புமுனையே கல்முனை என்றாகியிருக்கலாம்.
சிந்தாபாத் இலங்கையைத் தரிசித்த போது மகிபர்களைச் சந்தித்ததாகவும் அவர்கள் அரபுமொழியைச் சரளமாகப் பேசிய தாகவும், அவர்கள் விவசாயத்திற்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந் ததாகவும் கூறியுள்ளார்.
மேற்கண்ட விடயங்களை வைத்து நோக்கும் போது மத்திய கிழக்கு வாசிகளின் ஆரம்பக் குடியேற்றம் இலங்கையில் மட்டக்களப்பே என்பது புலனாகின்றது.
1 சீர்பாதகுல வரலாறு. 2 அக்கரைப்பற்று வரலாறு.

மருதூர் ஏ. மஜீத் -- 3
மேலும்,
வரலாற்று ஆய்வாளர் பொலினஸ்தம்பிமுத்து அவர்களின் கூற்று இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சோனக மக்கள் சந்தேகமின்றி தங்களின் உடம்பில் அரபு உதிரம் ஒடுபவர்களே இதனை அவர்களது நீண்ட உயர்ந்த செமிட்டிக் நாசியைக் கொண்டே அவதானிக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பின் துறையாக சம்மாந்துறையே அன்று அமைந்திருந்தது. சம்மாந்துறை என்ற சொல் "ஹம்பன்’ என்ற சொல்லின் திரிபேயாகும். ஹம்பன் என்றால் சுமேரியர்களின் மொழியில் அதாவது மத்திய கிழக்கு வாசிகளின் மொழியில் கப்பல் கட்டுமிடம் என்பது பொருளாகும்.
"இந்த "ஹம்பன்’ என்ற சொல் சீன மொழிக்குள் புகுந்து ஹம்பன் என்றால் துறைமுகம் என்றே வழங்குகிறது. ஹம்பாந் தோட்டையும் இந்த சொல்லின் திரிபு என்றே கொள்ள வேண்டும்.
மேலும் சுமாத்திராவில் உள்ள பாலபாங் எனுமிடத்தில் இருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த ஆனந்த தேரோவின் கூற்றுப்படி காசியப்ப மன்னன் வடக்கு கிழக்கு மேற்கு ஆகிய பகுதிகளில் துறைமுகங்களை வைத்திருந்தான் அவை வல்லிபுரம் களனி சம்மாந்துறையென அறியக் கிடக்கின்றது. எனக் கூறியுள்ளார் மேலும் சம்மாந்துறையில் வீர முனைக்குப் பக்கத்தில் உள்ள பாரிய கிணறுகள் ஆறினையும் இதற்கு சான்றாகக் கூறமுடியும்.
இனி மட்டக்களப்பின் குடியேற்றம்பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.
நாம் ஆரம்பத்தில் சொன்னது போல ஆதிமனிதன் ஆதம் எமது இலங்கையாகிய சரன்தீவில் இறக்கிவைக்கப்பட்டார்.
இங்கிருந்து இவர் தனது மனைவியைத் தேடி மத்தியகிழக்கான ஜித்தாவிற்குச் சென்று அங்கிருந்து அறபாவிற்குச் சென்று மனைவியைச் சந்தித்து ஜெருசலேத்தில் இருவரும் வாழ்ந்துள்ளார்கள். இப்படி இவர்கள் வாழும் காலத்தில் 2நாற்பது தடவைகளுக்கு மேல் சரன் தீவாகியஇலங்கைக்கு வந்து சென்றதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு. ? நபிமார்கள் வரலாறு.

Page 59
114 மருதூர் ஏ. மஜீத்
இவர்கள் தரைமார்க்கமாகவே வந்து போயிருக்க வேண்டும். இவர்களின் இந்தப் பிரயாணம் இவர்களின் பிற் சந்ததியினருக்குப் புனித யாத்தி ரையாக வழக்கத்தில் வந்துள்ளது எனலாம்.
ஆதம் மலையை வாழ்வில் ஒருதரம் தரிசித்தால் வாழ்நாள் முழுவதும் கஸ்டமின்றி வாழலாம் என்ற கருத்து மேலோங்கி இருந்திருக்க வேண்டும்.
இதனை கருத்தில்லாத கருத்தாகவும் கொள்ளமுடியாது. உதாரணமாக மத்தியகிழக்கில் இருந்து ஒருவரோ அல்லது ஒரு கூட்டமோ ஆதம் மலையை தரிசிக்க சரன் தீவாகிய இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிப் போகும் போது கொண்டு செல்லும் சிவப்பு மாணிக்கம் காட்டிலே கிடைக்கும் வாசனைத் திரவியங்கள், தேன், யானைத் தந்தம் என்பன மத்திய கிழக்கிலே பெறுமதியான பொருட்களாகக் கணிக்கப்பட்டன.
இப் பொருட்களை வைத்திருப்பவர்கள் ஐஸ்வரியம் நிறைந்த வர்களாகவும் கருதப்பட்டார்கள், இதனால் இப் புனித யாத்திரை நாட் செல்லச் செல்ல வியாபார நோக்கமும் கலந்த ஒரு பிரயாண மாக மாற்றம் பெற்றது எனலாம். இதனால் சுருக்க வழிகளைக் கண்டு பிடிக்கும் முயற்சியும் ஏற்பட்டிருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல அதாவது பல நூற்றாண்டுகளுக்குப் பின் இலங்கையில் கிடைத்த பொருட்கள் அரசர்களுக்குரிய பொருட்களாக மாற்றம் பெற்றது எனலாம்.
உதாரணமாக சிவப்பு மாணிக்கம் விலை மதிக்க முடியாத பொருளாகி அரசர்களின் ஆபரணப் பொருளாகியது. தேன் மனிதனின் ஒளசதமாகக் கருதப்பட்டது, மட்டுமல்லாமல் பொருட்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் ஒரு மருந்தாகவும் கருதப்பட்டது.
வாசனைத் திரவியமான ஏலம், கராம்பு, கறுவா என்பனவற் றோடு தேனும் சேர்த்து மிளகும் மன்னர்களின் பூத உடலை அழியாது பாதுகாக்கும் ஒர் ஒளசதமாகவும் கருதப்பட்டது. இதனால் இலங்கை யிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இப் பொருட்கள் விலைமதிப்புள்ள தாகக் கொள்ளப்பட்டது. இதனால் பிரயாணக் கஸ்டத்தையும் பொருட்படுத்தாது மத்தியகிழக்கு வாசிகள் கூட்டம் கூட்டமாக இலங்கை வரத் தலைப்பட்டார்கள். பிரயாணம் முற்றுமுழுக்க வியாபா ரமாகவே மாற்றம் பெற்றது எனலாம்.

மருதூர் ஏ. மஜித் 5
தரைமார்க்கமாக வந்தவர்கள் அதாவது மத்திய கிழக்கிலிருந்து ஆப்கானிஸ்தான் வந்து பின் பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்குள் புகுந்து அங்கிருந்து மன்னார், யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு வந்து இரத்தினபுரியை அடைந்து ஆதம்மலையைத் தரிசித்துச் சென் றனர். பின் இப் பிரயாணம் சிரமத்தைக் குறைக்கும் நோக்கோடு அரைவாசி தரை மார்க்கமாகவும், அரைவாசி கடல் மார்க்கமாகவும் மாறியது எனலாம். மத்திய கிழக்கிலிருந்து தரைமார்க்கமாக ஆப் கானிஸ்தான் வந்து அங்கிருந்து பாக்கிஸ்தான் ஊடாக பங்களாதேஸ் வந்து அங்கிருந்து பாய்க் கப்பல் மூலம் வடகீழ் பருவக்காற்றின் உதவியோடு மட்டக்களப்பு வாவிக்குள் வந்து சம்மாந்துறையில் கப்பலைக் கட்டிவிட்டு அங்கிருந்து தரைமார்க்கமாக இரத்தினபுரியை அடைந்து ஆதம்மலையைத் தரிசித்து தேவையான வியாபாரப் பொருட் களையும் சேர்த்துக்கொண்டு மீண்டும் மத்திய கிழக்கை அடைந்தனர்.
இப் பிரயாணம் காலஞ் செல்லச் செல்ல முற்றாகக் கடல் பிரயாணமாகி இலங்கையின் மேற்குக் கரையை அடைந்து அங்கிருந்து இரத்தினபுரியை அடைந்து ஆதம்மலையைத் தரிசித்து பொருட்களைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் மத்தியகிழக்கை அடைந்தனர். இவர்களின் இக்கடற் பிரயாணத்தைத் தொடர்ந்து போர்த்துக் கீசரும் இலங்கை வரத் தொடங்கினர் எனலாம். முன்சொன்ன சுருக்கமான விபரங்சளை அடியொற்றிப் போர்த்துக் கீசரின் வருகைக்கு முன் உள்ள மட்டக் களப்பின் வரலாற்றினை விரிவாக எடுத்து நோக்குவோம்.
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காற்றின் உதவியோடு மட்டக் களப்பின் வாவிக்குள் வந்த மத்திய கிழக்கு வாசிகள் கல்லாறு வழியாக மண்டூரை அடைந்து அங்கு தரித்து நின்றனர். இங்கிருந்து தரைமார்க் கமாக உன்னஸ்கிரியை அடைந்து கண்டிக்குச் சென்று அங்கிருந்து இரத்தினபுரியை அடைந்து ஆதமலையைத் தரிசித்தனர்.
மத்தியகிழக்கு வாசிகள் மட்டக்களப்பினுாடாக ஆதம்மலையை தரிசித்த அக்காலகட்டத்தில் மட்டக்களப்பிலே இயக்கர், நாகர் என்ற இரண்டு சாதி மக்களே வாழ்ந்து வந்தனர். மத்தியகிழக்கு வாசிகள் இவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான தேன், யானைத் தந்தம், வாசனைத் திரவியம், மாணிக்கம் என்பவற்றைப் பெற்றுக் கொண்டு தங்களிடமிருந்த உணவுப் பொருட்கள், ஆபரணங்கள் என்பவற்றை அவர்களுக்குக் கொடுத்துச் சென்றனர். சிந்துவெளி நாகரிக இடங்களான மொகஞ்சதாரோவின் (இன்றைய பாக்கிஸ்தான்) கிழக்குக் கரையில்

Page 60
6 மருதூர் ஏ. மஜீத்
இருந்தே (இன்றைய பங்களாதேஸ்) வடகிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றின் உதவியோடு பாய்மரக்கப்பலில் மட்டக்களப்பை வந்தடைந் தனர் எனலாம்.
மட்டக்களப்பில் மண்டூரில் தரித்த இவர்கள் காலம் செல்லச் செல்ல மண்டூரிலிருந்து தமது தரிப்பிடத்தை பக்கத்திலே இருந்த மருதூருக்கு மாற்றிக்கொண்டனர். ஆரம்பத்தில் "மண்டூர்” ஊர் என்றே அழைக்கப்பட்டது. மருதூருக்கு இடமாறியதும் ஊர் பண்டூர் என அழைக்கப்பட்டு நாளடைவில் மண்டூராகி விட்டது, இன்றைய சாய்ந்தமருதூரும் ஒரு காலத்தில் ஆரம்பத்தில் ஊர் என்றே அழைக் கப்பட்டது. மண்டூரில் மத்திய கிழக்கு வாசிகள் தரித்து இருந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்களைக் கூற முடியும்.
இவற்றிலே ஒன்று மண்டூரில் யாரும் இறந்துவிட்டால் அச் சடலத்தை எரிப்பதற்கு முன் அந்த எரிக்கும் இடத்திற்குக் கோயிலுக்குப் பணம் செலுத்தியாக வேண்டும். அப்படிச் செய்யப்படும் பணம் இன்றும் "திறசால்” என்றே அழைக்கப்படுகிறது. திறசாலே இன்றைய ஹியா லாகும். மத்தியகிழக்கு வாசிகளின் நாணயப் பரிவர்த்தனைச் சொல்லே திறசால் என்பதாகும். மேலும் மட்டக்களப்பிலே பூர்வீக குடிகளாக இருந்த இயக்கரும் நாகரும் பிற்காலத்தில் அறபிகளோடு சேர்ந்து வந்த சேரநாட்டவர்களையும் அவர்களது குடியேற்றத்தையும் விரும் பவில்லை, இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று இயக்கர்களின் இராணியான குவேனியை விஜயன் மணந்து பின் துரத்தி விட்டது முக்கிய காரணமாகும். விஜயனும் சேரநாட்டவர்களும் இந்தியர்களே என்ற வெறுப்பில் சேரநாட்டவர்களின் குடியேற்றத்தைப் போராடித் தடுக்க முற்பட்டனர். இயக்கரும், நாகரும் சண்டையிலே தோல்வி காணவே நாகர் வடக்கே சென்று குடியேறினர். இன்று இலங்கையின் வடக்கிலே "நாகர் கோயிலும், நாகராஜா, நாகலிங்கம் நாகநாதன், நாகையா, நாகமணி, நாகலெட்சுமி போன்ற பெயர்கள் நிலைத்து நிற்பதற்கு இதுவே காரணம் எனலாம். நாகர்கள் பாம்பை வணங்கும் பழக்கத்தை உடையவர்கள்.
நாகரைத் துரத்தியது போன்று இலகுவாக இயக்கரைத் துரத்த முடியவில்லை, இயக்கர் தொடர்ந்து சேரநாட்டவர்களோடு சண்டை செய்து கொண்டே இருந்தனர். இச் சண்டை பற்றி மத்தியகிழக்கு வாசிகள் சேரநாட்டு மன்னனுக்கு எடுத்துக் கூறினர். சேரநாட்டு மன்னனும் மத்தியகிழக்கு வாசிகளிடம் தனது நாட்டு மக்களுக்கு உதவுமாறும், அப்படி உதவினால் தனது நாட்டில் தங்களின்
* மட்டக்களப்பு மான்மியம்.

மருதூர் ஏ. மஜித் 7
வியாபாரத்திற்கு ஏகபோக உரிமை தருவதாகவும் கூறினான். இதன் பின் இயக்கரோடு மத்தியகிழக்கு வாசிகள் சேரநாட்டு மக்க ளுக்காகப் போராடினர். இந்தச் சண்டை நடந்த இடம் சத்துருக் கொண்டான் என்னும் பெயரோடு இன்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் சத்துருக்களைக் கொன்று குவித்த இடம் எனப் பொருள் பட சேரநாட்டு மக்கள் இவ் விடத்திற்கு இப் பெயரை இட்டு அழைத்தனர். இதன் பின் மத்தியகிழக்கு வாசிகள் நிரந்தரமான பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கோடு ஊர் அமைத்து அதிலே பாது காப்புக்காக மத்தியகிழக்கு வாசிகளின் படைகளை நிரந்தரமாகத் தங்கச் செய்தனர். இன்றும் இவ்வூர் ஏறாவூர் என்றே அழைக்கப் படுகிறது. இயக்கர்கள் தாண்டிவர முடியாது தடுத்தவூர் எனப் பொருள்படவே ஏறாவூர் என அழைத்தனர். தெற்கிலே மருதூருக்கும் வடக்கிலே ஏறாவூருக்கும் இடையே சேரநாட்டு மக்கள் குடியமர்த்தப் பட்டனர்.
குடியமர்த்தப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்து மத்தியகிழக்கு வாசிகள் ஏறாவூரிலும், மருதூரிலும் குடியிருந்து பாதுகாத்தனர். இதனால் சேரநாட்டு மக்கள் அளவிலா ஆனந்தம் கொண்டனர். இந்த ஆனந்தத்தின் நிமிர்த்தம் மத்திய கிழக்கு வாசிகளுக்கு நிரந்தரமான அன்பளிப்பைச் செய்யவும். நிரந்தரமாக அவர்களோடு உறவாடி மகிழவும் நினைத்து தங்களின் ஏழு குடிகளில் ஏழு அழகான பெண்களைத் தெரிந்து மத்தியகிழக்கு வாசிகளின் ஏழு கப்பல் தலைவர்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தனர். அத்தோடு இந்த ஏழு பெண்களுக்கும் சேவகம் செய்ய தங்களின் பதினெட்டுச் சாதியிலும் இருந்து பதினெட்டுக் குடும்பங் களையும் அன்பளிப்பாகக் கொடுத்தனர். இவர்களே பள்ளன் பறையன் எனும் பதினெட்டுச் சாதியுமாகும். மத்தியகிழக்கு வாசிகள் தங்களுக்கு திருமணம் செய்து கொடுத்த ஏழு சேரநாட்டுப் பெண்க ளையும் தங்களின் பெண்களோடு சேர்த்து ஊரிலே (இன்றைய மருதூரிலே) குடிபதியாக்கினர்.
இந்த ஏழு குடிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஏழு பெண்களும் வீரமும், செல்வமும், அழகும் மிக்க கப்பல் தலைவர் களான மத்தியகிழக்கு வாசிகளோடு வாழ்வதைப் பெருமையாகவும், பேறாகவும் கருதினர். இப் பெண்களுக்குச் சேவகம் செய்வதற்காக திராவிடர்களின் பதினெட்டுச் சாதிகளில் இருந்தும் பதினெட்டுக் குடும்பங்களை இவர்களுக்கு அன்பளிப்பாகவும் கொடுத்தது மத்திய கிழக்கு வாசிகளை கண்ணியப்படுத்தவே இந்தப் பதினெட்டுச் சாதி களான பள்ளன், பறையன், தட்டான், வண்ணான், அம்பட்டன்

Page 61
8 மருதூர் ஏ. மஜீத்
குயவன், நளவன் போன்றோர் ஊரில் ஒரு அந்தத்தில் குடியமர்த் தப்பட்டனர். மத்தியகிழக்கு வாசிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக் கப்பட்ட ஏழு குடிப் பெண்கள் பற்றி குடிமரபு என்னும் சிறு தலைப் பிலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தோடு 'ஊர்' மருதுராகி மத்தியகிழக்கு வாசிகளின் குடியிருப்பாகவும் இலங்கையின் முதல் குடியேற்றமாகவும் அடித்தள மிடப்பட்டது எனலாம். இந்த (ஊரின்) எல்லை நிந்தவூரை உள்ள டக்கியதாக அதாவது களியோடைவரை ஊர் என அழைக்கப்பட்டது. களியோடைக்கு அப்பால் உள்ள பகுதி அக்கரை ஊர் என அழைக் கப்பட்டது.
காரைதீவு ஆரம்பத்தில் ஊரில் இடம்பெற்றிருக்கவில்லை கஜபாகு மன்னன் காலத்திலேயே இக் குடியேற்றம் ஏற்பட்டது. சம் மாந்துறை ஊரின் துறைமுகமாக இருந்தது இந்த ஊருக்கு பிற் காலத்தில் ஐந்து முனைகள் வீரமுனை, சொறிக்கல்முனை, நற்பிட்டி முனை, கல்முனை, மருதமுனை என்பன அந்த முனைகளாகும், மருதூர் முனைக்கும் அதாவது மருதமுனைக்கும் ஊருக்கும் இடையே உள்ள பாண்டிருப்பு ஆரம்பத்தில் இருக்கவில்லை. பிற்காலத்தில் மத்தியகிழக்கு வாசிகளுக்கும், சேரநாட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலப்புத் திருமணத்தின் பின்னர் ஏற்பட்ட குடியிருப்பே இது எனலாம்.
பாண்டிய மன்னர் காலத்தில் மகாபாரத காலத்தை நினைவூட்டி மத்தியகிழக்கு வாசிகளின் அருகே ஏற்பட்ட ஐக்கிய குடியேற்றமே பாண்டிருப்பு எனலாம். ஊரின் தெற்கு எல்லை சம்மாந்துறை வடக்கு எல்லை மருதூர்முனை, மருதூரின் கிழக்கு எல்லை வங்காள விரிகுடா எனலாம், கஜபாகு மன்னனின் ஆட்சிக் காலத்திலே மன்னன் உன்னஸ் கிரியில் இருந்து ஆட்சி செய்யும் காலத்திலே சேரநாட்டு மன்ன னின் அழைப்பை ஏற்று சேரநாட்டிற்கு கண்ணகி விழாவிற்குச் சென்றி ருந்தான். அங்கு சேரநாட்டு மன்னன் கஜபாகு மன்னனுக்கு கண்ணகி சிலை ஒன்றை அன்பளிப்புச் செய்தான், அச் சிலையை கஜபாகு மன்னன் தனது ஆட்சிக்குட்பட்ட எத்தனையோ இடங்களிருக்க ஊருக்குப் பக்கத்திலேயே வைக்க விரும்பி கோயில் கட்டி கண்ணகி சிலையை வைத்து அதனைப் பராமரிக்க பூசை செய்ய இரண்டொரு குடிகளையும் அக்கோயிலுக்குப் பக்கத்திலேயே அமர்த்தி அதன் வருவாய்க்காகப் பல நெற்காணிகளையும் வழங்கினான். கஜபாகு மன்னன் மத்தியகிழக்கு வாசிகளின் ஊர் மீது கொண்ட பற்றினால் அவ்வூர் மக்கள் அவ்வூரினை கஜபாகுப் பற்று என அழைக்கலாயினர்.

மருதூர் ஏ. மஜித் 19
கஜபாகு மன்னன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று இவ்வூரில் வாழ்ந்த மத்திய கிழக்கு வாசிகள் சேரநாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்,
இரண்டாவது கஜபாகு ம ன் ன  ைன் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்கும் உரிய மக்கள், எனவேதான் மருதூரில் உள்ள தீவில் (இன்று காரைதீவு என அழைக்கப்படுகிறது.) கோயிலமைத்து கண்ணகி சிலையை அங்கு வைத்தான். இதனைப் பராமரிக்க ஆட்க ளையும் நியமித்தான்.
இத்தீவு காரைமரங்கள் நிரம்பப் பெற்றிருந்த தீவானதால் பிற் காலத்தில் காரைதீவு என அழைக்கப்பட்டது. கஜபாகு மன்னன் கோயில் கட்டி கண்ணகி சிலையை வைத்துப் பெருவிழா எடுத்தான். அரசனே முன்னின்று இதனைச் செய்வித்தான், ஊர் மக்களை நன்கு கண்ணியப்படுத்தினான் என்பதனால் ஊரின் பெயர் கஜபாகுப் பற்று அதாவது கஜபாகு மன்னனின் பற்றுக்குரிய இடம் எனும் பொருள் பட கஜபாகுப்பற்றாக அழைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊர் நிந்தவூர்பற்று, சம்மாந் துறைப்பற்று, கரைவாகுப்பற்று என மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஊரின் அடுத்த கரை அக்கரைப்பற்றாகியது. துட்டகைமுனு மன்னன் தனது ஆட்சியிலே கிழக்குப் புறத்தின் வாயிலாக இறகம (தற்போதைய இறக்காமம்) விளங்க வேண்டுமென விரும்பினான். இறகம என்றால் சூரியன் உதிக்கும் ஊர் என்பதுதான் பொருள். பொத்துவிலைத் தனது துறைமுகமாகப் பிரகடனப்படுத்தினான். துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி வந்து இறங்குவதற்கு இத்துறைமுகத்தை வெட்டி விசாலமாக்கினான் எனப் பூர்வீகக் கதையும் உண்டு. இந்த இரண்டு ஊர்களும் கி. மு. 161-183ல் நடைபெற்ற குடியேற்றமாகும். பின் இறக்காமத்தில் இருந்து வெல்லச என்ற இடத்திலும் போய்க் குடியேறினர்.
மேலும் சிந்தாபாத் தனது ஏழாவது கடற்பிரயாணத்தின் போது இலங்கையைத் தரிசித்ததாகச் சொல்லுகிறார். இவருடைய அந்தக் கடற் பிரயாணம் மட்டக்களப்புவரை வந்துள்ளது என்பதை நாம் ஊகித்து உணர முடிகின்றது, எவ்வாறு எனின் சேரநாட்டு இளவரசி (சீர்பாத அரசி) தனது கடற்பிரயாணம் சம்மாந்துறையிலே வந்து தரை தட்டியபோது இப்பிரயாணத்திற்கு சிந்தாபாத் கடற்பிரயாணம் என்றே அழைத்துள்ளாள், அது மட்டுமல்லாமல் தரைதட்டிய இடமாகிய

Page 62
20 மருதூர் ஏ. மஜீத்
வீரமுனையில் கோயில் கட்டி அதனைக் கவனிக்க "கலப்புத் திராவி டர்களை அங்கு குடியமர்த்தினாள் அரசி,
வீரமுனையில் குடியேற்றம் ஏற்பட்டது கி. பி. 8ம் நூற்றாண் டிலேயே ஆகும். மட்டக்களப்பிலேயுள்ள காத்தான்குடி குடியேற்றம் செனரதமன்னன் காலத்தில் நடந்ததாகும், அதாவது (கி. பி. 1605-1635க்கும் இடைப்பட்ட காலத்திலாகும்) போர்த்துக்கேயரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து மேற்கிலும், மத்திய பகுதியிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்த முஸ்லிம்களே இங்கு குடியேற்றப்பட்டனர். மட்டக்களப்பிலே குடியேறிய இவர்களால் வியாபாரம் செய்வது கஷ்டம் எனக் கண்ட செனரத் மன்னன் இவர்களுக்கு விவசாயம் செய்ய காணிகளைக் கொடுத்து உதவினான்.
செனரதனால் காக்கப்பட்ட குடிகள் வாழுமிடம் எனப் பொருள், பட காத்தான்குடி என இது அழைக்கப்பட்டது. மேற்கிலும் மத்திய மலைநாட்டிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு இஸ்லாம் பரவத்தொடங்கிய காலகட்டத்தில் இலங்கைக்கு மார்க்கப் பிரச்சாரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் வந்தவர்களே.
மேலும், மத்தியகிழக்கு வாசிகள் கடலோடிகளாக பெயர் பெற்று உலக நாடுகள் அனைத்திலும் சுற்றித்திரிந்தார்கள். இவர்கள் ஒரு நாட்டிலிருந்து இந்னொரு நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தால் பருவக் காற்று வரும்வரை அங்கேயே தங்குவர், இப்படித் தங்கும்போது அவர்களுக்கு பெண்களினது துணை தேவைப்படுவது இயற்கையே, இதனால் ஒவ்வொரு துறைமுகத்திலும் பெண்களைத் திருமணம் செய்தோ செய்யாமலோ வைத்துக்கொள்வது அவசியமாயிற்று.
இதன்படி மத்தியகிழக்கு வாசிகளின் பெண்கள் இலங்கையிலும் இருந்தார்கள் என்பதைச் சந்தேகம் அறக் கூறலாம். தேசாந்திரி இபுனுபதுதாவின் குறிப்பு இதற்குச் சான்று பகர்கின்றது. இபுனுபதுதா தான் போய்ச்சேரும் ஒவ்வொரு துறைமுகத்திலும் ஒவ்வொரு பெண் ணைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சிரமமாக இல்லை என்று எழுதியுள்ளார்.
1 சீர்பாதகுல வரலாறு.

மருதூர் ஏ. மஜீத் r 2.
இனி மட்டக்களப்பு முஸ்லிம்களின் கலை கலாசாரங்களை எடுத்து நோக்குவோம்: .
மட்டக்களப்பு முஸ்லிம்களின் கலை கலாசாரங்கள் நேரடியாக மத்தியகிழக்கு வாசிகளின் கலை கலாசாரங்களோடு தொடர்புடையதாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
உதாரணமாக:
மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள பண்பாட்டுக் கோலங்களாகப் பின்வருவனவற்றைக் கூற முடியும்.
01 குரவை 02 நாட்டார் பாடல் 03 யூனாணி வைத்தியம் 04 மட்டக்களப்பு மந்திரமும், யந்திரமும் 05 மருதோன்றி இடுதல் 06 ஒஸ்தாதுப் பரம்பரையினர் 07 பொல்லடி, சிலம்படி வாள் விளையாட்டு 08 பக்கீர்மாரும், றபானும் 09 யானை கட்டும் தொழில் 10 ஆடை அணிகலன்கள்
11 கலியாணச் சம்பிரதாயங்கள் 12 சொல்லும் பொருளும் 13 பழமொழிகள் 14 தொழில்களும் ஏற்றுமதிப் பொருள்களும் 15 அழிந்து கொண்டிருக்கும் போதை வஸ்துச் சம்பிரதாயங்கள்
16 தவழ முறை 17 குடிவழி மரபுகள்
இந்தத் தலைப்போடு கூடிய விடயங்களில் அனேகமானவை இலங்கையில் வேறு எங்கும் காணமுடியாத மட்டக்களப்பு மக்களுக்கு மட்டுமே சொந்தமுடையதாக இருப்பதையும் நாம் அவதானிக்க முடியும், முதலில் குரவையை எடுத்து நோக்குவோம்.

Page 63
22. மருதூர் ஏ. மஜீத்
(1) குரவையிடுதல் மத்தியகிழக்கு வாசிகளோடு மட்டக்களப் பிற்கு வந்து சேர்ந்த பூர்வீகச் சொத்து எனலாம்.
மத்தியகிழக்கிலே வெற்றியோடு திரும்பி வருபவர்களை *குரவையிட்டு" வரவேற்றல் ஒரு சம்பிரதாயப் பழக்கமாக இருந் துள்ளதை நாம் சரித்திரங்களைப் படிக்கும் போது அறிய முடிகின்றது, இன்றும் எகிப்திலே குரவையிடும் பழக்கம் இருப்பதை அங்கு சென்று திரும்புவோர் கூறக்கேட்டு மகிழ்கின்றோம்.
இஃதே வேளை எமது தமிழ் இலக்கியங்களிலே குரவை சிலப் பதிகாரத்திற்குப் பின்பே இடம்பெற்றுள்ளதையும் நாம் அவதானிக்க முடியும்.
சங்க இலக்கியங்களில் ஒரு சில பாடல்களில் கூத்துக் குரவை பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
மட்டக்களப்பிலே முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள குரவைக்கும் சங்க நூல்களில் காணப்படும் கூத்துக் குரவைக்குமிடையே நிரம்ப வேறுபாடுகள் உண்டு. குரவைக் கூத்தென்பது ஆண்களும் பெண்களும் சேர்ந்து சத்தமிட்டு ஆடும் ஒருவகை ஆட்டத்தைக் குறிக்கின்றது. ஆனால் மத்தியகிழக்குப் பெண்களால் மட்டக்களப்பிற்குக் கொண்டு வரப்பட்ட குரவை பெண்கள் மட்டுமே வாயில் கையை வைத்து சத்தமிட்டுச் சந்தோசத்தைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. இப்ப டிப்பட்ட குரவை சிலப்பதிகாரத்தில் ஆச்சியர் குரவைக்குப் பின்பே இடம்பெறுவது அவதானிக்கக்கூடிய ஒன்றாகும். மட்டக்களப்பு முஸ்லிம் பெண்களிடையே வழக்கிலுள்ள குரவை மத்தியகிழக்கிலும், மலையா ளத்திலும், மட்டுமே கா 000 ப்படுகின்றன. மலையாளத்திற்கும், மட்டக்களப்பிற்கும் மத்தியகிழக்கு வாசிகளின் நேரடித் தொடர்பு இருந்தது என்பதையே இது காட்டுகிறது எனலாம்.
திராவிடர்கள் மத்தியிலே உள்ள குரவைக் கூத்துங் பற்றிப் பழைய தமிழ் நூல்கள் பின்வருமாறு இலக்கணம் கூறியுள்ளன.
குரவை வரிக்கூத்தின் ஒரு உறுப்பு என்றும், ஆச்சியர் ஆடுவது ஆச்சியர் குரவையென்றும் குறவர் ஆடுவது குன்றக் குறவர் குரவை என்றும் கூறுகின்றது. மேலும் "குரவை தழிஇயாமாடக் குரவை உட்கொண்டு நிலைபாடிக் காண்”

மருதூர் ஏ. மஜீத் S ' S 23
எனினும் கலித் தொகை 39ம் செய்யுளின்படி குரவையெனும் சொல் குரவைச் செய்யுளையும், குரவைக் கூத்தினையும் ஒருங்கே குறித்து நிற்கின்றது. மேலும் சிலப்பதிகார உரையில் பின்வருமாறு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
**குரவையென்பதெழுவர் மங்கையர் சென்நிலை மண்டிக் கடகக் கைகோர்த்து அந்நிலைக்கொப்ப நின்றாடலாகும்’
அதாவது ஏழு மங்கையர் கைகோர்த்து நின்று குரவைக் கூத்தினை ஆடுவர், மேலும் மலைபடுகடாம் என்னும் நூலில் 318-322 வரையான பாடல்களும் நற்றிணை என்னும் நூலில் 276வது பாடலும், திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் 194-197 வரையிலான பாடல் களும் குரவை பற்றிக் குறிப்பிட்டுள்ளன.
எனவேதான் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள குரவையும், மட்டக்களப்பு முஸ்லிம் பெண்கள் மத்தியில் உள்ள குரவையும் வேறு வேறானது, என்று கூற முடியும், மட்டக்களப்பு முஸ்லிம் பெண்கள் மத்தியிலே உள்ள குரவையை ஒத்த குரவையை எகிப்து, சிரியா, அரேபியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளிலும் ஆபிரிக்காவின் ஒரு சில நாடுகளிலும் இன்றும் நாம் கேட்கக்கூடியதாக உள்ளன, எனவேதான் மட்டக்களப்பு முஸ்லிம் பெண்கள் மத்தியிலே உள்ள குரவை தனித்துவமான மத்தியகிழக்கு வாசிகளின் பூர்வீகச் சொத்தாக இங்கு வாழ்பவர்களிடமும் வழக்கிலுள்ளது எனலாம்.
இன்றும் இக்குரவை கலியாண வீடுகளிலும், வரவேற்பு விழாக்களிலும் சாகா வரம்பெற்று ஒலித்தவண்ணமே உள்ளன,
(2) அடுத்து மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியிலே தனித்து வமாக உள்ள நாட்டார் பாடலை எடுத்து நோக்குவோம்.
உலகெங்கிலும் நாட்டார் பாடலைக் கேட்க முடிகிறது, ஆனால் மட்டக்களப்பிலே உள்ள நாட்டார் பாடல்கள் தனித்துவமாக எமது மூதாதையரான மத்தியகிழக்கு வாசிகளின் ஞாபகச் சின்னமாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும், இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைக் கூறி வைத்தல் பொருத்தமுடைத்து எனக் கருது கிறேன். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்

Page 64
24 மருதூர் ஏ. மஜித்
சிக்குப் பொறுப்பாக இருந்த காலஞ்சென்ற எனது நண்பர் எஸ். சிவஞானம் அவர்கள் 1972ம் ஆண்டு புலமைப்பரிசில் பெற்று எகிப்திற்கு சென்று நாட்டார் பாடல் பற்றியும், கிராமியத் தன்மைகள் பற்றியும் அறிந்து பயிற்சி பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பியதும் நண்பன் என்ற வகையில் அவர் என்னிடம் எகிப்தினை பற்றியும், எகிப்தின் கலை கலாசாரம் பற்றியும், மதம் பற்றியும், எகிப்தியக் கிராமங்கள் பற்றியும் எனக்கு அருமையான பல தகவல்களைக் கூறினார், அத்தோடு எகிப்தின் கிராமியப் பாடல்கள் பற்றியும் அருமையானதும், பெறுமதியானதுமாகிய ஒரு தகவலையும் கூறி வைத்தார்.
எகிப்தின் நாட்டார் until-6) di(5th, மட்டக் களப் பு நாட்டார் பாடலுக்கும் இடையே நெருக்கமான ஒரு தொடர்பு இருப்பதாகவும் எடுத்துக் கூறிய அவர் தான் வைத்திருந்த ஒலிப்பதிவு நாடா ஒன்றினைப் போட்டுக்காட்டினார்.
அதில் பதியப்பட்டுள்ள நாட்டார் பாடல்கள் சரியாக எங்களூர்ப் பெண்கள் கவி பாடுவது போன்று ஒலித்தது, அதே இராகம், அதே சாயல், நண்பர் சிவஞானம் அவர்கள் என்னைப் பார்த்து உங்களூர்ப் பெண்கள் எகிப்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம், உங்களுக்கும் எகிப்திற்குமிடையே நல்ல தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது எனக் கூறினார்.
இவர் கருத்தில் உண்மையில்லாமல் இல்லை, இன்று மட்டக் களப்பிலே வழக்கிலே உள்ள நாட்டார் பாடல் மத்தியகிழக்கு வாசிகளோடு வந்த பூர்வீசச் சொத்துக்களில் ஒன்று எனலாம், எமது நாட்டார் பாடல் டியூனும் (இராகம்) எகிப்திய நாட்டார் பாடல் டியூனும் ஒன்றாக இருந்தன, மட்டக்களப்பு முஸ்லிம் பெண் ஒருவர் பாடுவதைக் கேட்பது போன்று இருந்தது அந்த நாட்டார் பாடல்
மட்டக்களப்பிலே திராவிடர்கள் பாடும் நாட்டார் பாடல் சாயல் வேறு, டியூனும் வேறு முஸ்லிம்கள் பாடும் நாட்டார் பாடல் சாயல் வேறு, டியூனும் வேறு என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும், இலங்கையில் மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத் தியிலே நாட்டார் பாடல் விசேட இடத்தைப் பெற்றிருப்பதும் குறிப்பிடக்கூடிய ஒரு அம்சமாகும்.

மருதூர் ஏ. மஜீத் 25
இனி மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள வைத்திய முறையான யூனானி வைத்திய முறையை எடுத்து நோக்குவோம்.
யூனாணி வைத்திய முறை இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களால் கையாளப்பட்டாலும் மட்டக்களப்பிலேயே அதன் ஆட்சி நன்கு வேரூன்றி பரம்பரை பரம்பரையாக மேற் கொள்ளப்பட்டு வருவதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
யூனானி வைத்தியம் கி. மு. 460ல் ஹிப்போ கிரேட்டஸ் என்பவரால் கிரேக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டு சீனாவிற்குள் சென்று "யூன்னானி” எனும் பெயரோடு வளர்ச்சி பெற்று பக்தாதிற்குள் சென்று ஆட்சி செய்து அங்கிருந்து இங்கு வந்தது என்ற கருத்தும் "வேறு ஒரு கருத்து 'Koriya in Asia Minor’’ இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறுகிறது,
இந்த யூனானி வைத்திய முறை இலங்கையில் கி. பி. 8ம் 9ம் நூற்றாண்டுகளில் அராபியர்களால் இங்கு கொண்டுவரப்பட்டு 10ம் நூற்றாண்டளவில் இங்கு மிகப் பிரபலம் பெற்றது எனலாம். இது அபூ - சினாவின் வைத்தியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது எனலாம். இது "AKLATH’ (HUMOURS) எனப்படும். இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் BALANCE OF HUMOURS CAUSES I LL HEALTH OR D1SEASE" எனக் கூறப்படுகிறது
இம்முறை அதாவது இந்த யூனானி வைத்திய முறை இலங்கையில் பந்துகாபயன் காலத்தில் மிகப் பிரபலம் பெற்று இருந்தது எனலாம். யூனாணி வைத்தியர்களை ஹக்கிம் என்று இலங்கையில் அழைப்பர். 1924ம் ஆண்டு சித்த, ஆயுள், யூனானி வைத்தியம் கற்பதற்காக ஒரு வைத்தியக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த யூனானி வைத்திய முறைபற்றி சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் பின்வருமாறு கூறுகிறார்.
இலங்கையில் அராபியர் அறிமுகப்படுத்திய அரபு மருத்துவ நூல் களில் பிரதானமானது அவிசன்னா அவர்களின்(அபூ-அலி இப்னுளினா) நூலாகும்.
நான் இலங்கையில் இருந்த வேளையில் முஸ்லிம் மதக் குருக்களும் வர்த்தகர்களும் அடிக்கடி இந்நூலின் பகுதிகளை என்னிடம் கொண்டு வந்தனர். இந்நூல் பகுதாதில் இருந்து இவர்களது மூதாதையர்களால்
Muslim of Kalu thara District

Page 65
இங்கு கொண்டுவரப்பட்டு பல்நூறு வருடங்களாக குடும்பம் குடும் பமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார். எனதூரில் ஒரு வைத்தியப் பரம்பரை பாச்சாப் பரியாரி பரம்பரை என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.
**பாச்சா' என்ற சொல் பக்தாத்தில் பாத்துசா என அழைக் கப்பட்ட சொல்லாகும். பாதுசா என்பது அரசரைக் குறிக்க உபயோ இக்கப்பட்ட சொல்லாகும். அது இங்கு பாச்சா எனத் திரித்து வழக்கில் இருக்கின்றது எனலாம். எனவேதான் இந்த யூனாணி வைத்திய முறை முதன் முதலில் மட்டக்களப்பிலேயே குடியேறியது எனலாம், மூன்று யூனானி வைத்திய பரம்பரை இங்கே வாழ்கிறார்கள். யூனாணி வைத்தியம் எண்ணெய் வைத்தியமாகும்.
இனி மட்டக்களப்பு மாந்தரீகம் என்பது பற்றி எடுத்து நோக்குவோம். மட்டக்களப்பு மாந்தரீகத்தைப்பற்றி தெரியாதார், கேள்விப்
படாதார் இல்லை என்றே கூறவேண்டும். இந்தியாவிலும் கூட
மட்டக்களப்பு மாந்தரீகம் பற்றிப் பரவலான கதை உண்டு.
**மட்டக்களப்பார் பாய் ஒட்ட வைப்பார்கள்'" என்ற கருத்து இலங்கையெங்கனும் பரவலாக அடிபடுகின்ற ஒரு கருத் தாகும். மட்டக்களப்பு மாந்தரீகத்தை அடிப்படையாக வைத்து எழுந்த கருத்தே இது எனலாம்.
மட்டக்களப்பு மாந்தரீகம் அல்லது வைத்தியம்.
மடைவைத்துப் பேயோட்டுதல். சேர்த்தி மாத்தி எனும் வசிய வைத்தியம். சூனியம் செய்தலும் எடுத்தலும். மந்திரமும், யந்கிரமும் எனும் நான்கு பகுதிகளைக் கொண்டதாகும்.
;
இந்த வைத்திய முறையை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இது மனோவியாதி மருத்துவமாக இருப்பதை அவதானிக்க முடியும் இந்த வைத்திய முறை மத்திய கிழக்கில் அதுவும் குறிப்பாக எகிப்தில் இருந்து இந்தியாவின் மலையாளத்திற்கும் அங்கிருந்து அல்லது சம காலத்தில் இலங்கையில் மட்டக்களப்பிற்கும் பரவியது எனலாம்.
முகம்மதுநபி அவர்களுக்குக் கூடச் சூனியம் செய்யப்பட்டதாகச் சரித்திரம் சான்று பகர்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் இந்த வைத்திய முறையைப்பற்றி அதிகம் எடுத்துக் கூறியதாக அறியமுடியவில்லை. இந்த வைத்திய

மருதூர் ர. மஜித்* 127
முறையில் உள்ள "மந்திரமும் யந்திரமும்” எனும் பகுதியில் ஒதி ஊதுதல் ஒரு அம்சமாகும். அப்படி ஓதி ஊதும்போது "சுபஹா என்று சொல்லி ஊதுவதுண்டு இந்தச் சொல் மூசாநபியவர்களுடைய காலத்தில் பாவனையில் இருந்த சொல்லாகும்.
அந்தச்சொல் இங்கும் பாவனையில் உள்ளது, இது மத்தியகிழக்கு தொடர்பை நன்கு எடுத்துக் காட்டுகின்றது எனலாம். மட்டக்களப்பு மாந்தரீக வைத்திய முறையிலே "பேய்" என்னும் ஒரு சொல் மிக மிகப் பிரபலமான ஒரு சொல்லாகும். "பேய்" என்னும் இச் சொல் இனம் தெரியாத நோய்களைக் குறிக்க, அல்லது மனோவியாதிகளைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது என்பதை ஆய்வுகள் மூலம் எம்மால் அறியமுடிகின்றது. எது எப்படியிருந்தாலும் இந்த வைத்திய முறையின் பிறப்பிடம் மத்தியகிழக்கு என்பதுவும் அதன் வளர்ப்பிடங்களாக மட்டக்களப்பையும், மலையாளத்தையும் கொள்ளமுடியும்.
மத்தியகிழக்கு நாடுகளிலே இன்றும் "நோய்கும் பேய்க்கும் சம்பந்தமுண்டு” என்ற நம்பிக்கை பரவலாக உள்ளதை நாம் அறிவோம்.
எதியோப்பிய நாகரிககால மக்களின் நம்பிக்கையும் இதுவாகவே இருந்தது.
இனி மருதோன்றி இடுதல் பற்றி எடுத்து நோக்குவோம்.
உஷ்ணவலயப் பிரதேசத்தின் ஒரு செடியே மருதோன்றி என அறியக்கிடக்கிறது. இச்செடியின் இலையினை ஆய்ந்தெடுத்து அரைத்து கைகளிலும் கால்களிலும் அழகான கோலமிட்டு அப்பிக் கொள்வதால் சிவப்பு நிற அடையாளங்கள் தோன்றி அழகை உமிழ்கின்றன.
ஆரம்பத்தில் இது அழகிற்கு மட்டுமல்லாமல் உஷ்ணத்தைத் தணிக்கவும் கிருமிகளைக் கொல்லவும் மருந்தாகப் பயன்பட்டது. 2பெண்கள் மருதோன்றி இடும் வழக்கம் மத்தியகிழக்குப் பெண்களின் சர்வ சாதாரண வழக்கமாகும். இன்றும் இதனை அங்கு காணலாம்.
நபிமார்கள் வரலாறு * கல்கண்டு 22-11-90

Page 66
28 மருதூர் ஏ. மஜீத்
முகம்மதுநபி (ஸல்) அவர்கள் பெண்கள் மருதோன்றி இடுவதை அனுமதித்துள்ளார்கள். ஆண்கள் தங்களின் தாடியிலும், நரைத்த தலையிலும் பூசுவதற்கும் அனுமதித்துள்ளார்கள். மரு தோன்றி மரத்தின் பூக்களை பிடவைப் பெட்டியில் இட்டு வைக்கும் வழக்கம் இன்றும் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே உண்டு. அரபு நாடுகளில் இன்றும் இது பெருவழக்காக உள்ளது. மருதோன்றி கேசத்திற்குப் பூசினால் கேசத்தைப் பலப்படுத்தி கேசம் உதிர்வதைத் தடுக்கின்றது.
மத்தியகிழக்கிலே பெண்கள் தங்கள் கால்களிலும் மருதோன் றியைப் பூசிக்கொள்வார்கள். இதனால் உஷ்ணம் மட்டுப்படுத்தப் படுகிறது. மருதோன்றிச் செடி இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலே காணப்படுவதற்கு மத்தியகிழக்கு வாசிகளே காரணம் எனலாம். இதனை ஆங்கிலத்தில் ஹென்னா என அழைக்கிறார்கள்.
லோசோனியா இனர்மின் இதன் தாவரஇயல் பெயராகும். ஹென்னா என்பது பாரசீகச் சொல்லாகும். எகிப்தியர்களும் ஹென்னா என்றே அழைக்கிறார்கள்.
அல்-ஹென்னா என்பது அரபு மொழிச் சொல்லாகும். விவிலிய நூலில் சுலைமான் நபியின் சங்கீதத்தில் மருதோன்றி பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது, மட்டக்களப்பு முஸ்லிம் பெண்கள் மத்தியிலே இன்றும் அழிந்தொழியாது இது பாதுகாக்கப்பட்டே வருகின்றது.
கலியாணச் சம்பிரதாயங்களில் முஸ்லிம் பெண்கள் மத்தியிலே மருதோன்றி இடுதல் மட்டக்களப்பில் அசைக்க முடியாத ஒரு சம்பி ரதாயமாக இன்றும் நிலவி வருகின்றது.
பெருநாட்காலங்களில் பெண்களையும், ஆண் பெண் என்று பாராது பிள்ளைகள் எல்லோரும் மருதோன்றி இடும் வழக்கத்தை யுடையவர்களாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இப்பழக் கம் மட்டக்களப்பிலே வாழ்கின்ற திராவிடப் பெண்கள் மத்தியிலும் பரவியுள்ளது. இருபகுதியினரதும் கலாசாரப் பாரம்பரியத்தை நன்கு எடுத்துக்காட்டுகின்றது இது எனலாம்.
ஒஸ்தாதுகளின் பரம்பல்.
இலங்கையில் "ஒஸ்தாது” எனும் சொல் 'கதனா" எனும் சடங்கைச் செய்கின்ற ஒரு பரம்பரையினரைக் குறிக்கப்பயன்பட்டு வருகிறது. "ஒஸ்தாது” என்ற சொல் இன்று "ஒஸ்தா" என்று திரிந்து வழங்குகிறது.

மருதூர் ஏ. மஜித் 129
ஒஸ்தாது என்றால் கல்வி புகட்டுபவர் என்ற பொருளில் அல்லது இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்து சுன்னத் என்னும் சடங்கைச் செய்து இஸ்லாத்தில் சேர்த்துக் கொள்ளுதல் எனும் பொருளை குறிக்கின்றது. இத் தொழிலைச் செய்கின்றவர்கள் மத்தியகிழக்கிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்களாகும். அதாவது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில்இஸ்லாம் பரவத் தொடங்கியதும் இதுபற்றி ஊரில் வாழ்ந்த மத்தியகிழக்கு வாசிகளுக்கு அங்கிருந்து வந்த வர்கள் மூலம் எத்திவைக் கப்படுகிறது. இதுபற்றிப் பூரண விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து குறிப்பாக மட்டக்களப்பின் ஊரில் இருந்து ஒரு கோஷ்டியினர் மத்திய கிழக்கின் மதீனாவிற்கு பிரயாணம் புறப்பட் டார்கள். இவர்களுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் பாக்கிஸ்தா னில் இறந்துவிடவே அங்கு அவரை அடக்கம் செய்துவிட்டு மற்றவர் கள் மதீனா போய்ச் சேர்ந்தபோது உமர் (ரலி) அவர்களின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
உமர் (ரலி) அவர்கள் மூலம் இஸ்லாத்தைக் கேட்டறிந்து கொண்டு திரும்பும்போது இஸ்லாத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதற்காகவும் 'ஒஸ்தாது” என அழைக்கப்படும் ஒரு குடும் பத்தினரையும் தங்களுடன் அழைத்து வந்தனர். இந்த ஒஸ்தாதுப் பரம்பரையினர் பெருமானாருக்குத் திருமுடி இறக்கிய அபிஸினிய அடிமைகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாகும். இன்றும் அவர்களு டைய பரம்பரையினர் அபிஸினியர்களின் தோற்றத்தோடு காட்சி யளிப்பதை அவதானிக்க முடியும் .
ஊரில் இருந்தே, இன்றைய மருதூரில் இருந்தே அகில இலங்கைக்கும் இவர்கள் பிரிந்து சென்று இஸ்லாமியக் கடமைகளைச் செய்து வந்தனர்.
இவர்கள் அங்கிருந்து இங்கு வரும்பொழுது "குங்பூ' போன்ற ஒரு தற்காப்பு விளையாட்டு முறையையும் கற்று வந்தனர். இன்றும் அந்த தற்காப்பு விளையாட்டுமுறை பரம்பரை பரம்பரை யாக அவர்கள் கற்று வருவதையும் எம்மால் இன்றும் அவதானிக்க (plg. u Lib .
பொல்லடி, சிலம்படி, வாள் விளையாட்டு,
இது எங்கிருந்து வந்தது என்று திட்டமாகக் கூறமுடியாவிட் டாலும் இந்தோனேசியாவில் இருந்து வந்திருக்கலாம் என ஊகிக்க

Page 67
30 மருதூர் ஏ. மஜித்
முடிகிறது. ஒரு காலத்தில் என்ன, இன்றும் கூட மட்டக்கள்ப்பு முஸ் லிங்கள் மத்தியிலே இது பிரபலம்பெற்று விளங்குகின்றது. பொல்லடி, என்னும் இந்தக் கோலாட்டம் திராவிடர்கள் மத்தியிலே உள்ள கோலாட்டம் போன்றதல்ல. இது பதினாறுவகை ஆட்டங்களைத் தன்னகத்தே கொண்டது. பாட்டும் பாட்டிற்கேற்ற தாளமும் கொண்டு ஆண்களால் ஆடப்படுவது இந்தப் பொல்லடி யாகும். இதனை ஒரு ஊடகமாகப் பாவித்து முஸ்லிம்களுக்கே சொந்தமான *"அப்பாஸ்' நாடகம், அலிபாதுஷா நாடகம், தையார் சுல்தான் நாடகம் போன்ற நாடகங்களை இசைப்பாக்களால் ஆக்கி ஆடினர்.
உதாரணமாக அலிபர் துஷா நாடகம் எங்களூரில் அரங்கேற்றப் பட்டபோது நான் சிறுவனாக இருந்தேன். இந்த நாடகம் பொல் லடியை ஊடகமாக்கி ஆடப்பட்டது. இரவு சுமார் 10 00 மணிக்கு ஆரம்பமாகிய நாடகம் இரவு இரண்டு மணிக்கே முடிவடைந்தது. இஃது அன்றைய திராவிடர்களின் கூத்தினை ஒத்திருக்கலாம். இரண்டும் அடிப்படையில் பல வித்தியாசங்களையுடையதாகும். பொல்லடியில் ஆடிக் காட்டப்பட்ட நாடகக் கதைகள் அனைத்தும் மத்திய கிழக்கின் அரச பெயர்களோடு இருப்பது நோக்கற்பாலது.
உதாரணமாக,
அலிபாதுஷா , தையார் சுல்தான் அப்பாஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பக்கீர் பரம்பரையும் றானும்
இனி பக்கீர் பரம்பரையினரை எடுத்து நோக்குவோம்.
ஊரில் வாழும் பக்கீர் பரம்பரையினரின் ஆரம்பம் பக்தாத் என லாம். முகைய தீன் அப்துல் காதர் ஜிலானி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காதரியாத் தரீக் காவின் பிரச்சாரர்களே இவர்கள். இசைமூலம் மார்க்கத்தை வீட்டிற்கு வீடு எடுத்துச் சென்று ஒதுவது இவர்களின் வேலையாக இருந்தது. இஸ்லாத்தில் இருபக்கத் தோல் கொண்ட வாத்தியம் தடைசெய்யப்பட்டது என்பதனால் ஒருபக்கத் தோல் கொண்ட றபான் இவர்களின் வாத்தியக் கருவியாகப் பயன்பட்டது. முகைய தீன் அப்துல்காதர் ஜீலானி அவர்களின் சிஸ்யர் களான இவர்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்காக இந்தியா, மலேசியர், சிங்கப்பூர், மாலைதீவு போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டது போன்று இலங்கைக்கும் அனுப்பப்பட்டார்கள்.
இலங்கைக்கு வந்த இவர்கள் இலங்கையின் ஆதி முஸ்லிம்கள் வாழும் மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்ததில் ஆச்சரியப்படுவதற்கு

3
ஒன்றுமில்லையெனலாம். இந்தப் பக்கீர்மார் மார்க்கப் பிரச்சாரத் திற்காக முறையாகப் பயிற்றப்பட்டவர்களாவர். இன்று இவர்கள் பிரச்சார முறையின் ஒரு சில முக்கியமான பகுதிகளைக் கைவிட்டு மனம் எழுந்த வாரியாகத் திரிந்தாலும் கூட அடிப்படைப் பயிற்சி களை பெறத் தவறுவதில்லை. இதற்கென்றே 'முர்ஸித்’ எனும் தலைவர் ஒருவர் மூலம் கட்டாயப் பயிற்சியைப் பெற்ற பின்பே பக்கீர் என்ற பட்டத்திற்குரியவராகின்றார். இந்தப் பயிற்சி சாமானியன் ஒருவனால் இலேசில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பயிற்சியாகும். மன ஒருமையுள்ள ஒருவரால் மட்டுமே இதனைச் சரியாகப் பெற முடியும், இன்று சிங்களப் பெண்கள் மத்தியில் உள்ள றாபன் தட்டும் விளையாட்டு இங்கிருந்து சென்றதுவே.
யானை கட்டும் தொழில்
யானை கட்டுதலை அல்லது பிடித்தலைக் கைக்கொள்ளுப வர்களை ' பணிக்கர்’ என அழைப்பதுண்டு. இத்தொழிலைச் செய் பவர்கள் மட்டக்களப்பில் இறக்காமம் என்ற இடத்திலேயே கூடுதலாக வாழ்கிறார்கள், இக் கிராமத்தின் பிரதான தொழிலே யானை கட்டுதல் எனக் கூறினாலும் மிகையாகாது.
'இறக்காமம் துட்டகாமினி அரசனுடைய காலத்தில் பிரதான நகராகக் கணிக்கப்பட்டது. "இறகம' - சூரியன் உதிக்கும் இடமென துட்டகாமினி இதனை அழைத்துப் பெருமைப் பட்டான். இங்கு வாழும் பணிக்கர்கள் இந்தோனேசியாவில் இருந்து இங்கு வந்து யானை பிடித்து ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்தார்கள் எனச் சில வரலாறுகள் கூறுகின்றன.
பயிற்றப்பட்ட யானைகளின் உதவியின்றி தனியெர்ருவர் காட்டு யானையின் காலில் கண்ணியிட்டுப் பிடிக்கும் முறையைக் கையாளும் ஒரேயொரு நாடு இலங்கை மட்டுமே எனப் பெருமையோடு கூறிக் கொள்ள முடியும்.
ஆண்டில் ஜுன் மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரை யுள்ள கோடைகாலப் பகுதியே யானை பிடிக்கச் சிறந்த காலப் பகுதியாகும் ,
ஆடை அணிகள்.
மட்டக்களப்பிலே வாழும் முஸ்லிம்களின் ஆடை அணிகளைப் பற்றி எழுதுவதாயின் பெரியதொரு நூலையே எழுதிவிடலாம். விரிவஞ்சிச் சுருக்கமாக விசேடமாக ஒரு சில விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

Page 68
32. மருதூர் ஏ. மஜித்
தி. பி. 7ம் நூற்றாண்டிற்கு பின் இஸ்லாம் இங்கு பரவியதன் பிற்பாடு நிலவிய ஆடை அணிகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது பொருத்தமுடையது. இங்கு வாழ்ந்த முஸ்லிம் ஆண்கள் சாறன் அணிந்து 'சிறுவால்’’ எனும் உள்ளாடையையும் அணிந்து தொப் யும், தொப்பியைச் சுற்றி ஒரு சால்வையையும் அணிந்திருந்தனர். தொப்பியைச் சுற்றி அணிந்திருந்த சால்வை சிவப்பு நிறத்தில் வெள் ளைக்கோடுகள் கொண்டதாக இருந்தன. இதனை "முண்டாசிக்கட்டு?? என அழைப்பதுண்டு. இந்த சிவப்புநிறச் சால்வையை தொப்பியை வளைத்துச் சுற்றிக் கொண்டவர்களில் அதிகமானோர் பட்டாணிகள் என அழைக்கப்பட்டபடியாலும் இவர்கள் அன்றைய ஆப்கா னிஸ்தானில் இருந்து வந்தவர்களாகக் கொள்ள முடியும். "சிர்வால்’’ என்பது உள்ளாடை இது உர்துச் சொல்லாகும். இது முழங்கால் மறைய கணுக்காலை மறைக்காவண்ணம் அணிந்து கொள்ளும் ஒருவகை உள்ளாடையாகும்.
முழங்கால் தெரியக் கூடாது. கணுக்கால் மறையக் கூடாது எனும் இஸ்லாமிய சட்டத்தின் அடியொற்றியே இதனை அணிந்துள் ளார்கள் எனக் கொள்ளலாம் . "சிர்வால்' எனும் சொல் உர்துச் சொல்லாக இருப்பதால் இது பாக்கிஸ்தான் பகுதியில் இருந்து வந்த வர்கள் மூலம் இங்கு வந்திருக்கலாம். சட்டையை மூடித் தோள்களில் முக்கோணச் சால்வையை அணியும் வழக்கமும் அன்றிலிருந்து இன்று வரை உள்ளது.
இது பலஸ்தீனத்தவர்களின் வழக்கமாக இருப்பதால் இங்கு அங்கிருந்து வந்தவர்கள் மூலம் இது வந்து சேர்ந்த வழக்கமாக இருக் கவும் கூடும். காலிலே ஆரம்பத்தில் மிதியடிக்கட்டை என மரத்தினால் ஆன பாதணியை அணிந்து வந்துள்ளார்கள். இது தற்சமயம் றப்பர் தோல் என்பவற்றால் ஆன பாதணியாக மாறியுள்ளது.
பாதணி அணியும் வழக்கினை இந் நாட்டிற்கு அறிமுகப்படுத் தியவர்களே மத்தியகிழக்கு வாசிகள் தாம் என்பதை எம்மால் உறுதி யாகக் கூறமுடியும். 'காலில் பாதணி அணியாதவனுடைய சாட்சியத் தைத்சுட ஏற்கவேண்டாம்' எனப் பெருமானார் அவர்கள் மொழிந் துள்ளார்கள்.
அத்தோடு இடுப்பிலே 'பெல்ட்' எனும் பட்டி அணியும் வழக்கமும் இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியிலே இருந்தது. இது "இரட் டைப்பக்கட்வார். ஒற்றைப்பக்கட்வார்’ என இரண்டு வகைவார்களை இவர்கள் அணிந்து வந்தார்கள், இலங்கையில் இன்றும் இது முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மருதூர் ஏ. மஜித் 33
இந்த வாரிலே ஒரு கொழுக்கியிலேசிறுகத்தியொன்றும்தொங்கும் "மல்லாலஹ ரசிக்கூனுள் பஹ"வ மிஸ்கீனுன்’ கையில் கத்தி இல்லாதவன் மிஸ்கீனுக் (ஒன்றுமில்லாதவன்) குச் சமமானவன் என்பது அரேபிய பழமொழி. அதனால் இந்த வார் அணியும் பழக்கம் அரே பியாவில் இருந்து வந்திருக்கலாம் எனக்கொள்ள இடமிருக்கிறது.
இனிப் பெண்களின் ஆடை அணிகளை எடுத்துநோக்குவோம்.
இங்குள்ள முஸ்லிம் பெண்கள் சாறி உடுத்து முக்காடிட்டுக் கொள்வார்கள். முக்காடிடும் வழக்கு கேரளப் பெண்களினூடாக அல்லது பங்காளதேஷ் பெண்களின் தொடர்பினால் ஏற்பட்டதாக இருக்கலாம். கைம்பெண்கள் வெண்ணிற ஆடை அணியும் வழக்கு இன்றும் இருக்கிறது.
கலியான சம்பிரதாயங்கள்.
மட்டக்களப்பு முஸ்லிம் பெண்களின் கலியாணச் சம்பிரதா யங்களில் அதிகமானவை திராவிடக் கலாசாரத்தோடு கூடியவையாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இதற்கு மத்தியகிழக்கு வாசிகள் மட்டக்களப்பிலே நிரந்தரக் குடிகளாகத் தங்க ஏற்பட்ட போது கிடைத்த அன்பளிப்புப் பெண்களான திராவிடப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டபோது கூடவே வந்தவை காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்குத் தாலி, கூறை, சீதனம் என்பவற்றைப் பிரதானமாகக் கூறமுடியும். அத்தோடு மோதிரம் இடுதல் என்பவற் றையும் கூறமுடியும் .
அத்தோடு திருமணம் செய்த பின் பெண் வீட்டிலேயே வசிப்ப துவும் இப்படி வந்த சம்பிரதாயங்களில் ஒன்றாகும். மாப்பிள்ளையை அழைத்துச் செல்லும்போது பொல்லடித்தல், குரவையிடல், வாள் வீசுதல், பைத்துச் சொல்லுதல் போன்றவைகள் மத்தியகிழக்கு, இந்தோனேசியா, மலேசியா போன்ற இடங்களில் இருந்து வந்தவை யாகக் கொள்ள முடியும்,
மட்டக்களப்பு முஸ்லிம்களின் வழக்கிலே உள்ள சில சொற்களும் வழக்கிழந்த சொற்களும்
(1) பெத்தா:- பெத்தா என்றால் மூதாட்டி என்பது பொருள். இது ஜித்தா எனும் சொல்லிலிருந்து வந்த சொல்லாகும். ஜித்தா என்றால் மூதாட்டி என்பது பொருள். ஜித்தாவில் இருந்து வந்த பெண்ணை, மூதாட்டியை அவரது பிள்ளைகள் சந்ததியினர் ஜித்தா என அழைத்து அது நாளடைவில் பெத்தாலாக ஆகியிருக்க வேண்டும்.

Page 69
34 மருதூர் ஏ. மஜித்
(2) வாப்பா:- பாவா என்ற சொல் நாளடைவில் வாவா வாப்பா ஆகியிருக்கலாம்.
(3) காக்கா:- காஹா எனும் அரபுச் சொல் காக்கா என்றாகி விட்டது. திராவிட மொழிகளிலே 'ஹா” சத்தம் இல்லாததால் கா என்னும் எழுத்து வந்து காக்கா என்றாகியிருக்கிறது.
(4) சாச்சா:- இது உருதுச் சொல். உருதிலே இது மாமா என்னும் பொருளில் கையாளப்படுகின்றது. இங்கு தங்களின் தகப் பனின் தம்பியைச் சாச்சா என அழைக்கிறார்கள். அல்லது உம்மா வின் தங்கையின் கணவனைச் சாச்சா என அழைப்பதுண்டு.
(5) சாச்சி:- உம்மாவின் தங்கையை சாச்சி என அழைப்பர்.
(6) உம்மா:- உம்மு என்னும் அரபுச் சொல்வின் திரிபே உம்மா. தாயை உம்மா என அழைப்பர்.
(7) அப்பச்சி:- மிக வயது போனவர்களை அப்பச்சி என அழைப்பதுண்டு. அதாவது தகப்பனின் தகப்பனின் தகப்பனை அல்லது வயது போன யாராக இருந்தாலும் மரியாதையாக அப்பச்சியென அழைப்பதுண்டு. சிங்களவர்கள் தகப்பனை இச் சொல்லால் அழைப் பதும் உண்டு.
(8) ஆணம்:- ஆணம் என்பதை யாழ்ப்பாணத்தவர்கள் குளம்பு என்பார்கள். ஆணம் என்ற சொல்லே மலையாளத்திலும் வழக்கில் உண்டு.
(9) அச்சறுக்கை:- அச்சறுக்கையாக இருந்துகொள் என குமர்ப் பிள்ளைகளைப் பார்த்து மூதாட்டிகள் சொல்வதுண்டு. இது அச்ச மூட்டி எச்சரிக்கை செய்கின்ற ஒரு சொல்லாக இருக்கலாம். யாழ்ப் பாணத்து முஸ்லிம்கள் மத்தியிலும் இச் சொல் உண்டு.
(10) மரைக்கால்:- மட்டக்களப்பு முஸ்லிம்கள் நெல் அளக்கும் போது மரைக்காலாலும், கொத்தாலுமே அளப்பார்கள். மரைக்கால் எனும் சொல் மரக்கால் எனும் சொல்லின் திரிபாகும். மரக் எனும் சொல் 'பரக்” என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். பரக் என்றால் அரபுமொழியில் அளத்தல் என்பது பொருளாகும். அதர்வ்து மூன்று ஸாஃ கொண்டது "ஒரு பரக் ஒரு ஸாஃ இரண்டு சேர்களைக்

மருதூர் ஏ. மஜித் 3S
கொண்டது. எனவே பரக் என்பது ஆறுசேர்களைக் கொண்டது. மட்டக்களப்பிலும் ஆறு சேர்களைக் கொண்டது ஒரு மரைக்கால். **கொத்துக்கணக்கில் கொடுத்து மரைக்கால் கணக்கில் வாங்க வேண் டுமென்பது இங்கு பழமொழி”.
(11) சப்ஜி:- (Sabji) ஜாவாவின் மறுபெயர் சப்ஜி.
மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியிலே வழக்கில் இருந்த ஒரு குடிபானத்தின் பெயர் சப்ஜி என்பதாகும். இந்தப் பானம் ஜாவாவில் இருந்து வந்த மக்களால் இங்கு அறிமுக ப்படுத்தப்பட்டிருக்கலாம். அதனால் இந்த பானத்திற்குப் பெயர் சப்ஜி என வந்திருக்கும். தேனும், கோழிக்கூட்டு வாழைப்பழமும் இந்தப் பானத்தின் முக்கிய கூட்டுப்பொருட்களில் இரண்டாகும். பலகூட்டுப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதுவே **சப்ஜி”
(12) ஊமைக்கோழி:- பேசத் தெரிந்தும் பேசாமல் இருப்ப வனை அல்லது பேசவேண்டிய இடத்தில் பேசாதிருப்பவனை ஊமைக்கோழி என அழைப்பதுண்டு.
(13) பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில்:- மாலை வெய் யிலை இப்படிக் கூறுவதுண்டு. இந்த வெய்யிலிலே மனிதர்கள் நெல் லைக் காயவைக்க முடியாது, சூடு இல்லை என்பதே இதன் பொருள்.
(14) காத்துக்கட்டி:- பாரம் இல்லாத பொருட்களைக் காத் துக் கட்டி எனச் சொல்வதுண்டு.
(15) சாட்டு:- ஏதேனும் ஒரு போலிக் காரணத்தைக் காட்டி தப்பித்துக் கொள்வதை சாட்டுச் சொல்லுதல் என்பார்கள் . சாட்டுக் காரன் என்றால் முடிந்தும் முடியாதது போல் நடிப்பவனைச் சாட் டுக்காரன் என்பதுண்டு.
(16) விசகளம்:- இச் சொல் விசளம் என்னும் சொல்லின் திரிபே. செய்தி சொல்லுதல் என்பது இதன் பொருள்.
(17) திறயம்: கிரயம் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் திற யம். சொந்தம் இல்லாது கிடப்பதை உரிமையில்லாது இருப்பதை திறயம் என அழைப்பார்கள்.
(18) அயக்க:- உன்னை என்னால் ஒரு நாளும் அயக்க ஒண்ணா என்பார்கள். அயக்க என்றால் மறக்க என்பது பொருள்.
(19) ஒண்ணா:- ஒண்ணா என்றால் முடியாது என்ற பொருள்.

Page 70
36 மருதூர் ஏ. மஜித்
(20) அய்ன- அவ்விடத்தில் என்பது பொருள். இது அறபுச் சொல்லாகும்.
(21) ஈன:- 'ஈன வாற கூதலுக்கு சொந்தப் புரிஷன் என் றால் சுணங்குவாரோ உம்மாரியில்” என்பது நாட்டார் பாடல். ஈன என்பது இவ்விடத்தில், இந்தக்கணம் என்பது பொருள். அய்ன என்பதன் எதிர்ப்பதமே ஈன என்பதாகும்.
(22) வட்டுறுப்பு:- வட்டுறுப்பாக என்னிடம் ஒரு சதமும் இல்லை என்பார்கள். இச்சொல் தூய தமிழ்ச் சொல்லாகும். வட்டு என்பது மரத்தின் நுனிப்பகுதியில் உள்ள காய்பிஞ்சி உற்பத்தியா கும் பகுதி. அதாவது இருப்பிற்குரிய இடம். இருப்பிற்குரிய இடத் தில் ஒன்றுமில்லை என்பது பொருளாகும்.
(23) கத்தற:- இது கேதர என்னும் சிங்களச் சொல்லோடு சம்பந்தமுடைய சொல்லாகும். கத்தற என்றால் குழு, கூட்டம்என் பது பொருள். மட்டக்களப்பிலே திராவிடர்கள் மத்தியில் உள்ள குடிவழி, பெண்வழியையும் கத்தற ஆண்வழியையும் குறிக்கும். அல் லது குடியின் ஒரு கூட்டத்தைக் குறிக்கவும் இச் சொல் பயன்படும். மீராண்ட கத்தற, வெள்ளையண்ட கத்தற போன்றவை.
(24) தத்தி:- தத்தி என்பதுவும் கத்தற போன்ற ஒரு கருத் திலேயே இங்கு பயன்படுகிறது. கத்திக்காரண்ட தத்தி, கம்புக் காரண்ட தத்தி போன்று இவை வழக்கில் உண்டு.
(25) செப்பம்:- இது தூய தமிழ்ச் சொல்லாகும். சொத்தட செப்பத்தப் பார். என்று பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகள் ஒருவரைப்பார்த்து ஒருவர் கூறிக்கொள்வர். செப்பம் என்பது அழகு எனப் பொருள்படும் சொல்லாகும்.
(26) முசுப்பாத்தி:- இச் சொல் சிங்க ளத்திலும் உண்டு. முசுப்பை ஆத்தி என எடுக்கலாம். முசுப்பு என்றால் சோம்பல், ஆத்தி அல்லது ஆற்றி என்பது குறைத்தல்" அல்லது இல்லாமல் செய்தல் என்பது பொருள். முசுப்பாத்திக்கு விளையாடுவோம் வா? எனப் பிள்ளைகள் அழைப்பார்கள்.
(27) ஆத்தி. அல்லது ஆற்றி:- தேநீர் சுடுகிறது ஆத்தித்தா? என்பார்கள் ஆத்தி-அல்லது ஆற்றி என்றால் சூட்டைக் குறைத்து அல்லது இல்லாமல் செய்து என்பது பொருள்.

மருதூர் ஏ. மஜீத் 37
(28) நாரிசா:- இது உர்து மொழியில் சோறு என்னும் பொருளில் உண்டு. இங்கு மதச் சடங்கு முடிந்து மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படும் எல்லாப் பண்டங்களையும் பொருளையும் குறித்து நிற்கிறது. இச் சொல் பள்ளியில் நாரிசாக் கொடுக்கிறார்களாம் வா போய் வாங்கி வருவோம் என்று ஒருவரை ஒருவர் அழைப்பதுண்டு
(29) சப்ரம்:- முடியவில்லை என்னும் பொருளில் இச் சொல் இங்கு பாவனையில் உண்டு. சப்ரம் பறியவில்லை என்பார்கள்.
(30) பறிஞ்ச:- இது மலையாளச் சொல். சொன் ன என்பது பொருள். பாங்கு பறிஞ்சிட்டா எனக் கேட்பார்கள். அதாவது தொழுகைக்கான அதான் அழைப்பு முடிந்துவிட்டதா? எனப் பொருள்.
(31) கிஸ்மிஸ்பழம்:- திராட்சைப்பழத்தை இங்கு கிஸ்மிஸ் பழமென்றே அழைப்பர்.
(32) கக்கா:- கக்கா என்ற இந்தச் சொல் போர்த்துக்கீசர் சொல். கக்கா என்றால் மலம் என்பது பொருள். பிள்ளை கக்கா போயிருக்கு எனக் கூறுவார்கள். சில வேளைகளில் சிறு பிள்ளைகளைப் பார்த்து கக்காப்பிள்ளை என்பார்கள்.
(33) தர்பார்:- ஆதத்தினுடைய தர்பார் பெரியதர்பாராக் கிடக்கு என்பார்கள். தர்பார் என்பது பாரசீகச் சொல். ஆட்சி அல்லது அடக்கு முறை, அதிகாரம் என்பவற்றைக் குறிக்கும்.
(34) கறி:- மலையாளம். மிளகைக் கறியென அழைப்பர்.
(35) உரியான்:- அவன் உரியானோடு ஓடினான் என்றால் நிர்வாணமாக என்பது பொருள். இது அரபுச் சொல்
(36) கணகாட்டு:- இச் சொல் சிங்களத்திலும் உண்டு. கரச்சல், கஷ்டம் என்பதைக் குறிக்க இங்கு பாவனையில் உண்டு.
(37) போட்டா;~ வயலில் ஒரு பகுதியைக் குறிக்க போட்டா என்பார்கள். போட்டா வரம்பால போகும் போது எனக் கூறினால் வயலின் குறிப்பிட்ட பகுதியால் போகும் போது என்பது பொருள். இச் சொல் சிங்களத்திலும் உண்டு.
(38) கோப்பத்த:- கமுகு மரத்தின் (பாக்கு மரத்தின்) பட்டை யைக் கோப்பத்தப்பட்ட என்பார்கள். சிங்களத்திலும் இச் சொல் உண்டு.

Page 71
38 மருதூர் ஏ. மஜீத்
(39) காரியம்:- கார்யம் இது கராமி வியாபாரிகளால் இங்கு கொண்டுவரப்பட்ட சொல்லாக இருக்கலாம். இராஜகாரியம் என்ற சொல்லில் இருந்து இது பெறப்பட்டது. ஒரு கார்யம் செய், காரிய மில்லையோ என்பவற்றை உதாரணமாகக் கூறமுடியும்.
(40) கடதாசி:- கடதாஸ் என்னும் அரபுச் சொல்லின் திரிபு. பேப்பரை இது குறிக்க இங்கு பயன்படுகிறது.
(41) ஹவால்:- இது ஹவால் எனவும் இங்கு பயன்படுகிறது. மேலதிக ஆசையை, பேராசையை குறிக்க இது பயன்படுகிறது.
(42) அறிசி - அர்ஸ் எனும் அரபுச் சொல்லின் திரிபு அறிசி. அறிசி குறிசி ஆலம் ஐம்பத்தாறு மண்டலமும் என இங்கு ஒரு பழமொழியும் உண்டு.
(43) மகசூல்:- இது உர்துச் சொல்லாகும். அந்தப் பெண் மகசூலாகியுள்ளாள் என்றால் கருவுற்றுள்ளாள் என்பது பொருள்
(44) ஊதுபத்தி:- இது உர்துச் சொல்லாகும். பற்றவைக்கும் வாசனைக் குச்சியைக் குறிக்கும்.
(45) அண்டா:- இதுவும் உர்துச் சொல்லே. பெரிய பானையை இது குறிக்கிறது.
(46) மச்சான்:- இது உர்துச் சொல்லாகும். இந்தோனேசிய மச்சி:- மொழியிலும் இது வழக்கில் உண்டு.
(47) தண்டயல்:- தண்டல் எனும் சொல்லின் திரிபு.
(48) ஜமக்காளர் - பெரிய போர்வையை இங்கு ஜமக்காளம் என்பார்கள். இது உர்துச் சொல்லாகும்.
(49) சால்வை:- இது பாரசீகச் சொல்லாகும்.
(50) லங்கோடு:- ஆண்களின் உள்ளாடையை லங்கோடு என அழைப்பர். இச் சொல் உர்துச் சொல்லாகும்.
(51) குத்தகை:- இது உர்துச் சொல்லாகும்.
(52) குஸ்தி:- மல்யுத்தத்தை இங்கு குஸ்தியென்றே அழைப்பர். இது பாரசிகச் சொல்லாகும்.

மருதூர் ஏ. மஜீத் -- 39 ܗܘ ܗ ܕ
(53) சாறன்:- இது மலாயச் சொல் ஆகும்.
(54) கோலம்:- இது மலையாளச் சொல்லாகும்.
(55) சிக்கு:- பெரிய சிக்காயிருக்கு என்பார்கள். சிக்கு என்ற சொல் அரபுச் சொல் ஆகும்.
(56) ஊடு:- ஊடு என்ற சொல் ஆபிரிக்கஸுலு மொழியிலே வீட்டைக் குறிக்கும். இங்கும் மக்கள் ஊடு என வீட்டை அழைக்கின்றனர்
(57) கமிச:- இது அரபுச் சொல். இச் சொல் இன்று சிங்களத் திலும் வழங்குகின்றது.
(58) சிறுவால்:- இது உருதுச் சொல்லாகும். ஆண்கள் வேலை செய்யும் போது பெரும்பாலும் இதனை அணிவர். இதனை உள்ளா டையாகவும் பாவிப்பர்.
(59) கலம்:- இற்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தளப்பத்து ஈர்க்கினால் வெட்டி கூராக்கப்பட்ட ஒரு கருவியை பேனையாகப் பாவித்தனர். சாயம் என்ற மையில் தொட்டு கலத்தால் மரப்பலகையில் எழுதினர். இது பெரும்பாலும் சிறு பிள்ளைகள் ஒதும் மதரசாக்களிலேயே பாவனையில் இருந்தது.
(60) சாயம்:- அரிசைப் பற்றவைத்து நீரூற்றி எடுக்கப்பட்ட ஒருவகை மையைச் சாயம் என அழைத்தனர். பாயிழைக்கும் பன் எனும் புல்லினத்தை நிறமூட்டப் பாவித்த நிறக் கட்டிகளையும் சாயம் என்றே அழைத்தனர்.
(61) குப்பி:- இன்று வழக்கில் உள்ள "போத்தல்’ எனும் ஆங்கிலச் சொல் குறிக்கும் அனைத்தையும் 'குப்பி’ என்ற சொல் குறித்து நின்றது.
(62) றாஹத் - இந்த வெய்யிலுக்கு கடற்கரையில நல்ல றாஹத்தாக இருக்கும் என்பார்கள்.
மேற்கூறப்பட்ட சொற்களைப்போன்று பல்லாயிரக்கணக்கான சொற்கள் மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியிலே வழக்கில் உள்ளன. இச் சொற்கள் திராவிடர்கள் மத்தியில் மிக அரிதாகவே பாவனையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Page 72
40 மருதூர் ஏ. மஜித்
பழமொழிகள்.
இனி மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள பழமொழிகள் சிலபற்றி எடுத்து நோக்குவோம்.
01. 'ஆலம் ஐம்பத்தாறு மண்டலமும் எமதுரரே" எனும் பழமொழியில் 'ஆலம்’ எனும் சொல் அரபுச் சொல்லாகும். உலகம் என்பது இதன் பொருளாகும். உலகம் அனைத்தும் எங்களுடையதே. என்பது இதில் தேங்கி நிற்கின்றது. திரு. றொட்லர் தனது தமிழ் ஆங்கில அகராதியில் மண்டலம் என்பது 56 நாடுகளில் அரேபியாவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
02. 'மண்டையை உடைத்து மலாக்காவுக்கு அனுப்புவேன்?? எனும் பழமொழியில் மலாக்கா குறிக்கப்படுவது ஏனெனில் மலாக்க மலபார் கொரமர் ஆகிய மூன்று துறைமுகங்களும் மத்தியகிழக்கு வாசிகளின் முக்கிய துறைமுகங்களாகும். எனவேதான் நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே உன்னை அனுப்புவேன் என்னும் பொருளில் இது பாவிக்கப்பட்டிருக்கலாம்.
03: "அரபிக் குதிரையானாலும் பிறவிக்குணம் போகாது."
04. "மக்கம் தப்பினா மருதமுனை” என்றொரு பழமொழியும் வழக்கில் உண்டு. மருதமுனை மருதூரின் ஒரு முனைப்பக்கம் மக்கா மத்தியகிழக்கு வாசிகளின் முக்கிய தலம் மட்டுமல்ல, முஸ்லிம்களின் புனிதத் தலமுமாகும்.
05. "ஊரிலுள்ளது உதுமாலெப்டைக்கும்’ என்பதிலுள்ள உதுமாலெப்பை என்பது நான்கு கலீபாவில் ஒருவரான உதுமான் (ரலி) அவர்களைக் குறிக்கலாம்.
06. 'பஹிலன் காசு வைத்தியனின் கையில்’ என்பதிலுள்ள பஹிலன் எனும் அரபுச் சொல் நப்பி என்பதைக்குறிக்கும்.
07. "வாயைப் பொத்தினால் சலாமத்” என்பதில் சலாமத் என்றால் சாந்தி சமாதானம் என்பதைக் குறிக்கிறது. பொதுவாக நன்மை என்பதை சுட்டி நிற்கிறது.
08. "பாதுஷா கொக்காய்ப் பறக்கும் போது குதிரைக்கு றொட் டியா’? என்பதில் உள்ள பாதுஷா என்பது அரசனையும், அவன் கஷ்டத்தையும் குறித்து நிற்கிறது.

மருதூர் ஏ. மஜீத் 4.
09. "குஞ்சிக்கோழி என்றாலும் குனிந்துதான் அறுக்க வேண்டும்” என்பதில் சிறிதோ பெரிதோ எதுவானாலும் மார்க்கக் கடமை முக்கியம் என்பது புலனாகிறது.
10. "ஊரார்கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தமா? என்பதில் கத்தம் என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வைக் குறிக்கின்றது. அல்லது இறந்தோர் பெயரில் தானம் செய்தலைக் குறிக்கும்.
11. "வாயிருந்தால் வங்காளம் போகலாம்" என்பதில் வங்காளம் என்பது இன்றைய வங்காளதேசம்.
12. " பாக்ஸிலான்' என அரேபியாவிலே ஒரு பழமொழி வழங்குகின்றது. " "பாக்ஸிலான்’ என்றால் இலங்கையின் மின்னல் அல்லது ஆதமலையில் மின்னல் என்பது நேரடிப் பொருளாக இருந்தாலும் இதன் உட்பொருள் பொய் மின்னல் என்பதாகும். அதாவது ஆதம் மலையில் மின்னுகின்ற மின்னல் மழையைக் கொண்டு வரும் மின்னல் அல்ல. பொய்யான மின்னல் என்பது பொருளாகும். அதாவது இது மத்தியகிழக்கு வாசிக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பை நன்கு வலியுறுத்துகிறது.
13. ‘கையிலே கத்தி இல்லாதவன் மிஸ்சீனுக்குச் சமமானவன்’ என்ற பழமொழியிலே அரபிகளின் வழக்கமான வாள், கத்தி என்பன பாவிப்பதன் முக்கியத்துவத்தையும் சம்பிரதாயத்தையும் தொடர் பையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
14. 'கையிலே காசி இருந்தால் பாதுஷா இல்லாட்டி பக்கிரி? இவைபோன்ற பல பழமொழிகளை மட்டக்களப்பிலே காணமுடி கிறது. இவைகள் எமது மத்தியகிழக்குப் பண்பாட்டுக் கோலத்தை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
அழிந்தும் அழியாதுள்ள போதைவஸ்துப் பழக்கம்.
01. சப்ஜி 02. பங்கு 03. கஞ்சா 04. தூள் 05. gyrar
தவள முறை.
மத்தியகிழக்கிலே இந்த தவளமுறை அதாவது ஒட்டகத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் முறையை இங்கு நடைமுறைப்படுத்த முடியாதிருந்தது. காரணம் இங்கு ஒட்டகம் சீவிக்கக்கூடிய சீதோஷ்ண

Page 73
42 மருதூர் ஏ. மஜித்
நிலை இல்லாதது ப்ாரிய காரணமாகும். அதனால் இங்கு"மாடுகளில் சாமான்களை ஏற்றிச் செல்லும் வழக்கினை மத்தியகிழக்கு வாசிகள் இங்கு நடைமுறைப்படுத்தினர்.
மத்தியகிழக்கு வாசிகளின் வியாபாரம் இரண்டுவகையாக நடைபெற்றது.
1" உள்நாட்டு வர்த்தகம். 2. வெளிநாட்டு வர்த்தகம்.
இவர்களின் உள்நாட்டு வர்த்தகம் கல்முனையில் இருந்து ஒக்காஸ்பிட்டி, வெல்லச, பிபிலை வழியாக கண்டியை அடைந்தது. இப்பிரயாணத்தின் போது வெற்றிலை, புகையிலை சுண்ணாம்பு, கருவாடு, உடுதுணி என்பவற்றைக் கொண்டு சென்று அங்கிருந்து சோளம், குரக்கன், இறுங்கு, தினை, மிளகு, வாசனைத் திரவியம் பழவகை என்பவற்றை இங்கு கொண்டுவந்தனர்.
இனி கடைசியாக மட்டக்களப்பு முஸ்லிம்களிடையே உள்ள குடி மரபு பற்றி ஆராய்வோம்.
குடிமரபுகள் அனைத்தும் சமூக அமைப்புக்களுடன் இணைந்த ஒரு தன்மை கொண்டதாகும். உலக சமூதாய அமைப்புக்கள் யாவும் பண்டைக்காலம் முதலாக தாய்வழிச் சமுகம் தந்தை வழிச் சமூகம் என்று இரு அமைப்புக்களுக்கேற்ப இயங்கி வந்துள்ளது. இவற் றுள் திராவிட சமூக அமைப்பு தாய்வழி மரபினைத் தழுவியதே. தாய்வழி மரபு பெண்களுக்கு மக்கியத்துவமும், முதன்மையையும் அளிக்கின்றது. அதனால் குடிவழிகள் தாய்வழியாகவே பெறப்படு கின்றது. "வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது" என்பது தமிழ்ப் பழமொழி.
இக்குடிவழி மரபு மட்டக்களப்பு முஸ்லிம்களிடம் மட்டுமே இலங்கையில் காணப்படுகின்றது. அதாவது மட்டக்களப்பில் வாழுகின்ற முஸ்லிம்களிடமும், திராவிடர்களிடமுமே இங்கு காணப்படுகின்றது.
சிலவேளைகளில் முஸ்லிம்கள் மத்தியில் 'தத்தி யார்” *கத்தறயார்” என்ற சொற்களால் தந்தை வழியையும், தாய் தந்தை இருவரது வழியையும் குறித்து நிற்பதாகவும் இது புழக்கத்தில் உள்ளது.
உதாரணமாக "கம்புக்காரண்ட தத்தி' அறவியாருடைய தத்தி அண்ணாவியாருடைய த த் தி என த கப்பன் வழியையும் வங்காளியருடைய கத்தற, இசுமாண்ட கத்தர, பொன்னியுடைய கத்தர என தாய் தந்தை இருபாலாரையும் குறிப்பதாக கத்தறையும்

மருதூர் ஏ. மஜீத் 43
வழக்கில் இருக்கின்றன. கத்தற என்பது வீட்டில் உள்ள ஆண் பெண் இரு சாராரையும் குறிக்கப் பயன்பட்டுள்ளதை நாம் அறியலாம். கத்தற என்ற சொல் சிங்களத்தில் "கெதற" எனத் திரிந்துள்ளது. அல்லது கெதர எனும் சொல் இங்கு கத்தற எனத் திரிந்துள்ளது எனக் கொள்ள முடியும்.
எது எப்படி இருந்தாலும் சேரநாட்டுப் பெண்களை அன்பளிப் பாகப் பெற்ற போது இந்தக் குடிமரபும் மத்தியகிழக்கு வாசிகளிடம் வந்து சேர்ந்தது எனலாம். மத்தியகிழக்கு வாசிகளான ஏழு கப்பல் தலைவனுக்கும் ஏழு திராவிடப் பெண்கள் அன்பளிப்பாகக் கொடுக் கப்பட்டசம்பவம் ஊரும் உறவும் எனும் அத்தியாயத்திலே விளக்கப் பட்டுள்ளது. அப்படி அன்பளிப்புச் செய்யப்பட்ட முதலாவது திராவி டப்பெண் மூத்தனாச்சி குடியைச் சேர்ந்தவள். அதனால் அவளுக்கும் மத்தியகிழக்கு வாசிகளுக்கும் பிறந்த பிள்ளைகள் மூத்தனாச்சி குடியென அழைக்கப்பட்டார்கள்.
இரண்டாவது அன்பளிப்புச் செய்யப்பட்ட பெண் இளையநாச்சி குடி என அழைக்கப்பட்டாள். இவளுக்குப் பிறந்த பிள்ளைகளையும் இவ்வாறே அழைத்தனர்.
மூன்றாவது அம்மனாச்சி குடிப் பெண்ணும், நான்காவது ஐந்தாவது ஆறாவது ஏழாவது குடிப் பெண்கள் பொன்னாச்சி குடி, வரிசை நாச்சி குடி, முகாந்திரநாச்சி குடி, மாலைகட்டுக் குடி என அழைக்கப்பட்டார்கள்.
இந்த ஏழு குடிகளில் இன்று மூத்தனாச்சி குடி, மட்டுமே வழக்கில் உண்டு எனலாம். இன்று மட்டக்களப்பிலே நாற்பதிற்கு மேற்பட்ட குடிகளுக்குமேல் வழக்கில் உள்ளது. இவையனைத்தும் பெண்வழிக்குடி மரபாக வந்ததாலும் முஸ்லிம்கள் மத்தியிலே ஆண்கள் பெயரைக் கொண்டவையாக இருப்பதையும் நாம் அவதானிக்க முடியும்.
எனவேதான் இக்குடி மரபு திராவிடர்களைப் பின், பற்றி பெண்வழி வந்தாலும் மத்தியகிழக்கு வாசிகளான ஆண்களைக் குறித்து அவர்களோடு வந்த மத்தியகிழக்குப் பெண்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் வழங்குவதாக அமைந்திருக்கலாம்.
உதாரணமாக பின்வரும் குடிகளைக் கூறமுடியும் .
01. இராசாம்பிள்ளை குடி 02. வடக்கனார்குடி 03. வெள்ளரசன் குடி 04, ஓடாவி குடி 05. ஆலங்குடி 06. மணலைப்போடி குடி

Page 74
44 மருதூர் ஏ. மஜித்
07. தச்சனார் குடி 08. ஆலிம் குடி 09. தொட்டிற்பிள்ளை குடி 10. லெப்பைக் குடி 11. Titulid Suntri (5 g. 12. உலுவாக் குடி 13. சம்மான் ஒட்டி குடி 14. மோதின் குடி 15. சுல்தான்பிள்ளை குடி 16. களனி குடி 17. சங்கதி குடி 18. காம்பிராச்சி குடி 19. கட்டடி குடி 20. சாயக்காரன் குடி 21. கன்னாரங் குடி 22. வட்டுக்கத்தற குடி 23. Leo) Lunresort- e.g. 24. வம்மிக்கத்தற குடி 25. மாமன்னாப்புள்ள குடி 26. மாந்தறா குடி 27. சங்கரப்பத்தான் குடி 28. தவிட்டுக் குடி 29. சேனைக் குடி 30. ஆதம்பட்டாணி குடி, 31. மளுஅரசன் குடி 32. ஜாவக் குடி 33. குருக்கன் குடி 34. காலிங்காக் குடி 35. மரைக்காண்ட குடி 36. ஊத்துப்பிள்ளை குடி 37. பனிக்கனார் குடி 38. Golf5 uiùGymrtir ஓடாவி குடி 39. சின்னக்கதிரன் குடி 40. கொசுக்கட்டங் குடி
போன்ற குடிகளை கூற முடியும். குல விருதுகள்.
ஒவ்வொரு குடியினரும் தங்கள் தங்கள் மாடு, ஆடு, குதிரை என்பவைகளை இனம் சண்டு கொள்வதற்கும், வேறு சில பிரயோச னங்களுக்குமாக குடிவிருதுகளைப் பயன்படுத்தினர்.
இக்குடிவிருதுகள் பெரும்பாலும் கால்நடைகளை இனங்கண்டு கொள்ள மிகவும் பயன்பட்டது எனலாம். உதாரணமாக கால்நடை களின் சந்துப் பட்டையில் தங்கள் குடிச் சின்னத்தை - விருதை - குறி யீட்டை சுட்டுவந்தனர்.
இவ்வழக்கு இன்று அருகித் தங்களின் பெயரின் முதலெழுத்தை மட்டும் குறிசுட்டு இனங்காட்டி வருகின்றனர்.

ag is
குறுகலும் சில்னங்களும்
ག།
醬
m: a ۔۔۔۔۔۔ ܠ  ܼz
i
y
மரைக்கண்டகுடி 2த்ழ்கை
வெண்றசங்குடி
பொண்ணாச்சி குடி காமர்கர் இடி
இலவசூழ

Page 75

e as e ao * * * * *
குடிகளும் சின்னங்களும்
s AA2
மாந்தறாகுடி 9 (
محصےجھ؟ ܐܝܓܠ
မြို့ AY
606(16â565eu குடி ശ്ചിത്രg

Page 76

மருதூர் ஏ. மஜீத் 45
மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள கைத்தொழில்கள்.
இங்கு விவசாயம், வியாபாரம், மீன் பிடித்தொழில், குடிசைக் கைத்தொழில்களான நெசவு, பாய் பெட்டி இளைத்தல், என்பவற்றைப் பிரதான தொழில்களாகக் கொள்ள முடியும் .
முதலில் விவசாயத்தை எடுத்து நோக்குவோம்.
இன்று நெற்செய்கை என்பது இங்குள்ளோரின் பெரும்பான்மைத் தொழிலாக இருந்தாலும் ஆரம்பத்தில் விவசாயம் இங்கு பிரதான தொழிலாக இருக்கவில்லை. ஏற்றுமதி வியாபார மே இங்கு ஆரம்ப காலத் தொழிலாக இருந்தது எனலாம்.
தங்களின் உணவுத் தேவைக்குப் போதுமான நெற்செய்கையே இங்கு ஆரம்பத்தில் இருந்தது. மட்டக்களப்பின் இரண்டாவது குடி யேற்றமான காத்தான்குடியில் குடியேற்றப்பட்ட பின்னே இங்கு நெற்செய்கை பிரதான தொழிலாக மாற்றம் பெற்றது எனலாம்.
மட்டக்களப்பும் ஏற்றுமதிப் பொருட்களும்.
மருதமுனையில் உள்ள எனது நண்பர் ஒருவர் தனது பாட்டன் (தகப்பனின் தகப்பன்) கப்பலிலே ஏற்றுமதி செய்த கதை சொன்னார். அதாவது அவர் சிறுவனாக இருந்தபோது தகப்பனின் த கப்பன் கடைக்கு தகப்பனோடு அடிக்கடி போவதாகவும், அங்கு திட்டங்கி ஆற்றிற்கு கப்பல் வந்துவிட்டதை அறிவிக்க சங்கு போன்ற பெரியதொரு ஒலி எழுப்பப்பட்டது கேட்டு நாங்கள் கடையிலிருந்து மாட்டு வண்டிகளிலே மான் கொம்பு, மான் தோல், புலித் தோல், பாம்புத் தோல், யானைத் தந்தம், சித்தாமட்டி பேரமட்டி, பேய்ப் படல, பற்பாடகம், அணுங்கு ஒடு, இத்தாக்கடர் (முள்ளம் பன்றி முள்) என்பன ஏற்றிச் சென்று அக் கப்பலில் ஏற்றுவதாகவும் கூறினார்.
இப்பொருட்களை ஏற்றுவதற்காக மாதம் இருமுறை கப்பல் வருவதாகவும் கூறினார். இப் பொருட்களை தனது தகப்பனின் தகப்பன் முள்ளாகம, உகண போன்ற இடங்களில் இருந்தும் வேறுபல ஊர்களில் இருந்தும் கொண்டு வந்து சேர்த்து வைத்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதில் இருந்து என்ன விளங்குகின்றது எனின் அண்மைக்காலம் வரை கப்பலில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.

Page 77
46 மருதூர் ஏ. மஜித்
மதுரையிலே போடினாயக்கனூர் என்னும் ஓர் ஊர் உண்டு. 18ம் நூற்றாண்டில் இங்கு மலையாளத்தில் இருந்து வந்த போடிநாயக்கர் என்பவர் இந்த வூரில் இருந்து தலைமைப் பதவி வகித்ததாக இந்தியச் சரித்திரங்கள் கூறுகின்றன. மட்டக்களப்பிலும், ஒல்லாந்தர் காலத்தில் இருவர் போடியாராக நியமிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் அதிக நிலபுலன் உள்ளவர்கள் இன்றும் போடியார் என்றே அழைக்கப்படுகின்றனர்.
இலங்கையில் மட்டக்களப்பில் மட்டும்தான் **போடி’ என அழைக்கும் ஒரு வழக்கம் உண்டு. "வேலிக்கட்டைக்குப் பிறந்தாலும் போடிப் பட்டம் போகாது’ என்பது மட்டக்களப்பு மக்களிடையே வழங்கும் ஒரு பிரபலமான பழமொழியாகும். இதில் இருந்து நாம் போடி என்பது ஒரு பட்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
வன்னியனார், போடியார், எனும் இரு சொற்களும் மட்டக் களப்பிலே தலைமைப் பதவிப் பட்டங்களைக் குறிக்கப் பயன்பட் டுள்ளது. போடி என்னும் இப்பட்டம் மலையாளத்தில் ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது. அது அங்கிருந்து வந்தவர்களோடு இங்கு வந்திருக்க வேண்டும்.

மருதூர் ஏ. மஜீத் 47
தரவுகளும்
தகவல்களும்
S இந்த அத்தியாயத்திலே உலக முஸ்லிங்கள் பற்றிய
சில தரவுகள், தகவல்கள், புள்ளி விபரங்களையும்,
அஃதேபோல இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் தரவுகள், தகவல்கள், புள்ளி விபரங்களைப்பற்றியும்,
கிழக்குமாகாணத்தில் (மட்டக்களப்பில்) வாழ்கின்ற முஸ்லிம் களின் தரவுகள், தகவல்கள், புள்ளிவிபரங்கள் பற்றியும் இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இன்று உலகில் சில நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராகவும், சில நாடுகளில் சிறுபான்மையினராகவும், சில நாடுகளில் ஒன்றிரெண்டு வீதம் மட்டுமே வாழ்பவராயும் உள்ளனர்.
1 உலகின் சனத்தொகையில் இரண்டாவது இடத்தை இஸ்லாம்
மதம் பெற்றுக்கொள்கிறது.
2 தென்கிழக்காசியாவில் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள்
முஸ்லிம் நாடுகளாகும்.
அவையாவன: பாகிஷ்தான், பங்காளதேஷ், மாலைதீவு.
3 1987ம் ஆண்டு கணக்கீட்டின்படி ஆசியாக் கண்டத்தில்,
சீனாவில் 1100000000 முஸ்லிம்களும். பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5000000 9 p. தாய்லாந்தில் 10000000 pp. பர்மாவில் 18000) ()0 is இந்தியாவில் 1000000000 கஸ் மீரில் 750 0000 ரஸ்யாவில் 5 0000000 y இலங்கையில் 1200 000 *
திபேத்தில் ጃ200000 , 剔 款

Page 78
48 மருதூர் ஏ. மஜித்
அவுஸ்திரேலியா 250000 முஸ்லிம்கள் நியுசிலாந்து 3000 பிஜித் தீவு 80000 ஜப்பான் 14311 is P தென்கொரியா 19550 கம்பூச்சியா 60000 நேபாளம் 800000 to சைப்பிரஸ் 1 18900 சிங்கப்பூர் 400000 p ஹொங்கொங் 20000 தாய்வான் 50000
4 ஆபிரிக்காக் கண்டத்தில்
፴Fuuዛተ 6000000 p ஐவரிகோட் 350000 கென்யா 6000000 லைபீரியா 1500000 P மலாவி 1000000 9 p தென் ஆபிரிக்கா 500000) sp ருவண்டr ዷ80000 9 p. ஸம்பியா 7:5000 y
6ር}ህ{}ር)
5. ஐரோப்பாக் கண்டத்தில்
யூகோஸ்லேவேகியா 430 0000 و «و மேற்கு ஜேர்மன் 2500000 P SM ஹோலாந்து 500000 op ஸ்பெயின் 150000 p. சுவீடன் 60000 se நோர்வே 1960 0 பெல்ஜியம் I9 0000 9 சுவிட்சலாந்து 10 0000 p. பல்கேரியா 150 0000 2 p. போலாந்து 20 000 p P
ரூமேனியா 67000

மருதூர் ஏ. மஜித் 49
6 அமெரிக்காக் கண்டத்தில்
வடஅமெரிக்கா 4000000 முஸ்லிம்களும்.
56. 150 000 மத்திய அமெரிக்கா IOOOOOO 源 缘 ஆர்ஜன்டைனா 7500 OO s
SGprS6) 450 000 பென்சில்வேனியா 4OOOO 8 p.
வாழ்கின்றனர்.
7 இலங்கையில் காணப்படும் அரபுத் தமிழ் நூல்கள்.
லுகத் மீசான்மாலை துஹபத்ஸமதிய்யா தர்ஜீமது கவாகித்வ அகாயித் தப்ளிர் சைல்லாரித் பத்ஹ சத்கரீம் ஹஜர்காளி ஹதீஸ் பத்ஹால் மஜீத் பிக்ஹ"ஸாபியீ தர்ஜிமதுஸ் ஸ்வாஹிர் பவாரிகுல் ஹிதாயா தஜ்வீதுல் குர்ஆன் பத்ஹ7ஸ் ஸ்லாம் ஸியா (வரலாறுகள்) து ஹபதுல் கிராம் றஸ"0ல் மாலை துஹபதுல் தாலிபீன் முபாறக் மாலை பத்ஹ"த்தயான் ளிறாப்புராணம் பத்ஹ"ல் இக்வான் தஸவ்வும் மகானி
அக்லாத் உம்ததுஸ்ஸிப்யான் ஹசிய்யாமாலை தக்கஹாத்மாலை அதயுமாலை மின்ஹதுல் அத்பால் அகீதா தொழுகை அடவு
இதுபோன்று இன்னும் பலநூல்களும் உண்டு.
8 ஆதம் நபியவர்கள் நாற்பது தடவை சைலானில் இருந்து மக்கா
சென்று திரும்பியதாக பின்வரும் நூல்கள் கூறுகின்றன
இலங்கை முஸ்லிம்களின் மத்ஹப்
(ஹிஜ்ரி 310)
(ஹிஜ்ரி 606)
தப்லீருல்ராவி
1 அல் ராபிதா ஒக்டோபர் 1987.

Page 79
50
மருதூர் ஏ. மஜித்
9
O
1.
12
13
14
பிதாயது வரிஹாயது
(ஹிஜ்ரி 744) ஹயாத்து ஹயவாணித்தமிர்
(ஹிஜ்ரி 780) காமூகுறைறுர சாபாதீ
(ஹிஜ்ரி 817) தாஜ" அறுாசி முகம்மது முர்தளாஸபீதி
(ஹிஜ்ரி 1205) இலங்கையில் 1910 ம் ஆண்டு எழுதப் படிக்கத் தெரிந்தோர் தொகை 65 விகிதமே.
இவர்களில் 19 விகிதம் மட்டுமே முஸ்லிம் பெண்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.
1981 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 79 மூஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்தனர். இது கிட்டத்தட்ட எட்டுச் சதவிகிதம் .
பின்வருவோர் இலங்கையைத் தரிசித்த மத்திய கிழக்கு யாத்திரிகர்களாகும்.
சிந்தாபாத்
இபுனு பதூதா 1346, S. l. சுலைமான் 851, · A அபூசெய்து 950, மஸ்ஊதி 955, 3 o அல் - பிறுானி 937, J அல் - இத்ரீஸ் கஸ்வீனி 1203, J. P. அல் - அஹ்மத் பல்தூரி 892. அல் - இத்ரீஸ் 11 ம் நூற்றாண்டு இப்னு சஹரயார் 9 Lib அல் - வாஹிட் அல் - மாலிக் (705-715) யாகூத் (1174 - 1229)
இலங்கையைப் பற்றி எழுதிய முதல் மத்திய கிழக்கு எழுத்தாளர் தபரி என்பவராகும். கி. பி. 838 ல் பிறந்த இவர், பூகோள விரிவுரையாளராகும்.
1936 - 1945 ம் ஆண்டு வரையுள்ள பத்து ஆண்டுகளில் இலங் கையில் பல கலப்புத் திருமணங்கள் நடைபெற்றன.

மருதூர் ஏ. மஜீத்
15
16
உதாரணமாக,
சிங்களவர் திராவிடர் இடையே 500-1221 திருமணங்களும். சிங்களவர் ஐரோப்பியரிடையே 725 - 1492 திருமணங்களும். திராவிடர் பறங்கியர் இடையே 109 - 243 திருமணங்களும். திராவிடர் ஐரோப்பியரிடையே 05 - 15 திருமணங்களும். பறங்கியர் ஐரோப்பியரிடையே 75 - 170 திருமணங்களும்.
நடைபெற்றுள்ளன.
ஆனால் முஸ்லிம்களிடையே எதுவித கலப்புத்
குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களின் தொகை,
1814 6) AW
1824 g) am
827 (6) m
1881 6) ----- 1901 6)
1946 di) ---
1975 g) ص
1981 (6) HY. M
1990 ai)
3.68
5827O
7 OOOO
195775
228 034
436.556
828,304
1046927
1600 000
திருமணமும் மேற்குறிப்பிட்ட பத்து ஆண்டுகளில் நடைபெறவில்லையென்பது
1981ம் ஆண்டுகுடிசனத் தொகை கணக்கெடுப்பின்படி,
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள்
வவுனியாவில் மன்னார் முல்லை - கிளிநொச்சி அனுராதபுரம் 1ெ1 லநறுவை குருநாகல்
புத்தளம்
கண்டி
மாத்தளை
கேகாலை
இரத்தினபுரி
1
Ceylon Ferguson Directory.
469 683 30079 386 4380 762 642 3 50244 25646 26603 36543 544
பேரும்
影外

Page 80
52 மருதூர் ஏ. மஜீத்
நுவரெலியா முஸ்லிம்க்ள் 1579 பேரும்
Luar 60) po p p. 28759 s மொனறாகலை P. p. 5750 கொழும்பு s 68956 3 o கம்பஹா 47850 o கழுத்துறை P 6278 go V காலி 3 y 26359 மாத்தறை o 6853 ஹம்பாந்தோட்டை , , 9333 திருகோணமலை 9 9 7576 p மட்டக்களப்பு ao » 79662 V அம்பாறை so p 6754
வசித்தனர்.
17 இலங்கையின் நாமாவலி
சரண்தீப் மந்துதீப சிங்களத்துவீபம் பெரிப்புளூசுவில் நாகதுவீபம் சீவகதீப தாமரைதுவீபம் சீகன் பலேசிமுண்டு சிங்கள தப்ரபான் லங்கா சைலான் இலங்கை FIT 6069 சிலோன் தாம் பிராபர்ணி பூரீலங்கா ஒசதீப ஈழம் வரதீப ஜசீரதுல் யாகூத்
இந்த இருபத்திரெண்டு நாமங்களுள் சரண்தீப், தப்ரபான், சைலான், ஜசீரதுல் யாகூத், ஆகிய நான்கு பெயர்களும் மத்தியகிழக்கு
வாசிகளால் அழைக்கப்பட்ட பெயர்களாகும்.
*சிலோன்’ என்ற
பெயர் சைல்ான் என்பதின்திரிபே. சரண்தீப் என்ற சொல் சரசன்தீப் என்ற சொல்லின் திரிபு. அல்லது சரசன் தீவில் இருந்தவர்கள் சரசன் (அரபிகள்) என்றும் வந்திருக்கலாம்.
18 அரபிகள் இலங்கை இந்தியா போன்ற இடங்களுக்கு வந்த
போது நன்ன்ர் மீன்களையும் இ
உண்ணவேண்டியிருந்தது.
ங்குள்ளவர்கள் போன்று தேர்ந்து

மருதூர் ஏ. மஜித் A AAALLA qqSSASASA S A qqqS SqSAA S SSSAAA S S S 53
அதனால் பெரிய மீன்களான கெழுத்தி (18 அங்குலம்), வாளை (25 அங்குலம்) போன்றவற்றை உண்டனர். அதனால் இந்த இரண்டு மீன்களும் சோனகக்கெழுத்தி, சோனக வாளை என அழைக்கப்பட்டது. அல்லது நன்னீர் மீன்களில் இவையிரண்டும் பெரிதாக இருந்ததால் (அரபிகளைப் போன்று) சோனக என்ற சொல்லை அதற்கு வழங்கியிருக்கலாம்.
19 05-08-1960ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதி 1ம் பிரதிநிதியாக சேர் றாசீக்பரீத் அவர்கள் தெரிவு
செய்யப்பட்டார்.
எடுத்த வாக்குகளின் விபரம் வருமாறு:-
சேர் றாசீக் பரீத் 45, 342 கெனமன் பீட்டர் 38, 663 கலீல் 37, 483 ஆர். பிரேமதாச 35, 035 தம்பு 6, 406 தேமிஸ் 3, 64
20 இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு வாசிகளால் கொண்டு
செல்லப்பட்ட பொருட்கள்:-
அம்பர் முத்து தேங்காய் தேன் கறுவா ஏலம் கராம்பு மாணிக்கம் மிளகு யானைத் தந்தம் fo
trou Lid 6rsiw t-taw Gurruh.
21 மட்டக்களப்பிலே
1845ம் ஆண்டு ஒரு சூறாவளியும் 189 1 tᎥy s
1907 9
1921 lb , , p 9 I978፡ iነ , 暴 多 , , வீசியது.
1891ம் ஆண்டு வீசிய சூறாவளியை சிறிய புயல் என்றும், 1907ம் ஆண்டு வீசிய சூறாவளியை பெரிய புயல் என்றும் மக்கள் அழைத்தனர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு.

Page 81
56 மருதூர் ஏ. மஜித்
22 1891ம் ஆண்டு ஒகிரேடி என்பவர் கல்முனையில் இருந்து அதாவது கிட்டங்கித் துறையில் இருந்து தற்போதைய மட்டக்களப்பிற்கு ஒரு படகுச் சேவையை ஆரம்பித்தார்.
23 1984ம் ஆண்டையக் கணிப்பின்படி
உலக நாடுகளில் 50%க்கு மேற்பட்ட முஸ்லிம்களையுடைய நாடுகளும், முஸ்லிம்களின் விகிதாசாரமும்,
ஆப்கானிஸ்தான் 99 வீதமும் அல்பேனியா 89 is அல்ஜீரியா 98 பஹ்ரைன் 96 A பங்காளதேஷ் 86 8 p.
i5 O p. கமறுான் 50 app மத்திய ஆபிரிக்கா 50 A Gaf (Chad) 52 , ' கொமொறொ 81 q-g6? (Digibouti) 97 எகிப்து 92 எதியோப்பியா 50 ğ V கம்பியா h 85 9 gië6oftuur (Geeinea) 75 U U ஜீனியா பிஸ்ஸாயூ 50 9 இந்தோனேசியா 94 ஈரான் 98 p > ஈராக் 95 ஐவரிக்கோஸ்ட் 50 , , ஜோர்தான் 95 As 2 குவைத் 99 லெபனான் 50 லிபியா 97 55 חש98ע$6}מt மாலைதீவு 8.
ᎠᎯᎠlᎢ ᎧᎧ ᎧᏫ 9. so

மருதூர் ஏ. ':്ളട്ട - i
மர்தானியா 95 விகிதம் மொறொக்கோ 98 முசாம்பிக் 莎2 参亨 நைஜீர் 85 音参 நைஜீரியா 75 9 ஒமான் 95 هو பாக்கிஸ்தான் 97 p is பலஸ்தீன் -50 குவாட்டர் 98 சவூதி அரேபியா 99 多 蔷 செனிகால் -95
சிறாலேணி 75 s சோமாலியா 99 9 சூடான் 8 I 姆斜 சிறியா 86 مه و தன்சீனியா あ0 9 தாகோ 50 a p தனிசீனியா 91 ... துருக்கி 98 ஐக்கிய அரபு குடியரசு 99 ..., யெமன் 99 p
24 உலக நாடுகளில் ஐம்பது விகிதத்திற்குக் குறைவாக முஸ்லிம்கள்
வாழும் நாடுகள்.
அவுஸ்திரேலியா 01 விகிதம் பெல்ஜியம் l 9 s
புட்ஸ்வான 12 is p t?Gfrg)Gð O4. * 剑 1-jcb(3ésfutr Í I y Li rift DIT 11 9 9 புறுண்டி O6 கம்போடியா 20 சைனா 06 9 p.
கொங்கோ II

Page 82
156 மருதூர் ஏ. மஜித்
கொஸ் தாரிகா 2த் விகிதம் சைப்பிரஸ் 22 P. p. டென்மார்க் 0. SPM, கெனியா 20 sp புஜி 12 ı?prmeirahe, 04 9 p. காபொன் 30 ஜேர்மன் 01 A 55 fT657 25 9 ஹிறீஸ் 02 , , Suit Giff 09 p ஹங்கேரி 0. y @söSurr 02 , , இத்தாலி 0. கெனியா 21 P லாஒஸ் 15 P லெசோத்தோ 04 லைபீரியா 25 9.
p6QJmtas5mrSa 19 y மாலாவி 3. p மோல்டா 22 第? மயூரிரீஸ் 45 y 9 மங்கோலியா 06 5V » நாமிபியா 07 நேபோல் 07 5 s நெதர்லாந்து Ol 9 நோர்வே 04 sp நியூகினியா Ol 多》 பிலிப்பைன்ஸ் போலந்து 01 றுவண்டா O6 சிங்கப்பூர் 27 சொலமன் ஐலண்ட் 06 9 தென்ஆபிரிக்கா 1. s is

மருதூர் ஏ மஜித் e 7
சிறிலங்கா 07 விகிதம் சுவிச்சலாந்து 04 S தாய்வான் 06 st தாய்லாந்து l J ஐக்கியராட்சியம் Ο Ι. B Ꮥ 鸟 , எஸ். ஏ 04 S é Df67) isT 罗5 P யூகோஸ்லாவியா I 2 3 ў சம்பிழா Glid LfrG. l4
இலங்கையில் வாழும் இஸ்லாமியரை பின்வருமாறு வகைப்படுத்த (ւՔւգ պւք. 25 (1) இலங்கைச் சோனகர் அல்லது மூஅாஸ்
(2) இந்தியச் சோனகர் (3) மலாயர் 74) போறாக்கள் (5) மேமன்
இலங்கைச் சோனகர்:-
இவர்கள் இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு கண்டி, காலி, களுத்துறை, திருகோணமலை, எனப் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கிறார்கள். பொதுவாக இவர்களின் பூர்வீகம் மத்தியகிழக்கு என்றே கருதப்படுகின்றது. சோனகர் என்ற சொற்பிரயோகத்தின் நேரடித் தொடர்புடையதே மூஅர்ஸ் (Moors) எனும் சொல்லாகும்.
இந்தியச் சோனகர்:-
இலங்கையில் வாழும் இந்திய முஸ்லிம்களை இந்திய சோனகர்
என அழைப்பதுண்டு. இவர்கள் கொழும்பிலேயே -95) suprg,
வாழ்கிறார்கள்.
ldsurui si:-
1971ம் ஆண்டு குடிசன கணக்கெடுப்பின்படி இலங்கையில்
மலாயர் 43459 இருந்ததாகவும், இவர்கள் அதிகமாக கொழும்பு,
ஹம்பாந்தோட்டை, கண்டி, பதுளை, குருநாகல், ஆகிய இடங்களில்
வசிப்பதாகவும் கணிப்பீடுகள் காட்டின.
1981ம் ஆண்டு குடிசன கணக்கெடுப்பின்படி 29 சதவிகிதமே
மலாயர் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

Page 83
S8 மருதூர் ஏ. மஜீத்
1527ம் ஆண்டு அல்போன்சோ - டி சொய்சா மலாக்காவைத் தாக்கி ஆயிரக்கணக்கான வீரர்களை அழித்தான். சரணடைந்தோரைப் பிடித்து இலங்கைக்கு அனுப்பினான். இவர்கள் சிலேவைலன் என்னும் இடத்தில் சிறை வைக்கப்பட்டனர். (இதற்கு ஆதாரம் குறைவு)
இலங்கையுடனான வர்த்தகத் தொடர்பில் யானை வர்த்தகம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. யானை பிடிப்பதில் கைதேர்ந்த வர்களாக இந்தோனேசிய முஸ்லிம்கள் விளங்கு கி ன் றார்கள். இலங்கைக்கும் இவர்கள் வந்து யானை பிடிப்பதில் ஈடுபட்டனர். இலங்கையிலே யானை பிடிப்பதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இறக்காமம் என்ற கிராமத்து முஸ்லிம்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்களை யானைப் பணிக்கர் என்றே இன்றும் அழைப்பது வழக்கம். ஈழத்து முஸ்லிம் கிராமங்களில் சாய்ந்தமருதூருக்கு அடுத்த படியாக பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றாக இறக்காமம் கருதப்படுவது இங்கு நோக்கற்பாலது.
மலாயர் இந்தோனேசியாவில் உள்ள மலாய்த்தீவில் இருந்து இங்கு வந்தவர்களாவர். இவர்கள் இலங்கையில் பல பாகங்களிலும் குடியேறி வாழ்கின்றனர். குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் இவர்கள் குடியிருப்புக்களைத் தனியாக அமைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் சிங்கள மக்களோடும் கலந்தும் வாழ்ந்துள்ளனர். உதாரணமாக மலலகே, மலலசேகர, மலலகொட போன்ற பெயர்களையும், குடும்பப் பெயர்களையும் குறிப்பிடலாம் .
இவர்கள் தங்கள் வீடுகளில் மலாய் மொழியைப் பேசுகின்றனர். இலங்கையிலே பேசுகின்ற மலாய் மொழி எழுத்து வழக்கற்றதாக உள்ளது. இலங்கையில் வாழும் மலாய், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு பாஷைகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள் இந்த uD6QJfTMurfaS6ír.
ஆரம்பத்தில் வாழ்ந்த இந்த மலாயர் இஸ்லாமியர்களாக இருக்கவில்லை. மலேயாவில் இஸ்லாம் பரவியதோடுதான் இங்கும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இலங்கையில் வாழ்ந்த அரேபியர் எவ்வாறு அரேபியாவில் இஸ்லாம் பரவியதும் இங்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்களோ அஃதேபோல இவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மருதுர் ஏ. மஜித் 59
இவர்கள் இலங்கையின் பொலிஸ் படையிலும் சிறைச்சாலைச் சேவையிலும், கொழும்பு தீயணைக்கும் படையிலும், பெருந்தோட் டங்களிலும், உப்பளங்களிலும் தொழில் வாய்ப்புப் பெற்றனர்.
18ம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து இங்கு நாடு கடத்தப்பட்ட மலாயரும் இங்கு உண்டு. இவர்கள் தங்கள் மனைவி மக்களுடனேயே இங்கு வந்த னர். முகம் மது சகாப்தீன் என்பவரும், மற்றும் இளவரசர்களும், உயர்குடி மக்களும் அவர்களது மனைவி மக்களும் இங்கு 1723ம் ஆண்டு வந்து சேர்ந்தனர்.
மேலும் கி. மு. 1000 ஆண்டளவில் கடலோடிகளான ஆதி மலாயர்கள் திராவிடர் கலாசாரத்திற்கு முற்பட்ட கலாசாரம் ஒன்றை இந்தியாவிற்கு அளித்தனர். எனவும் இதனை இடப்பெயர் களிலிருந்தும் குல்லாப் படகுகளில் இருந்தும் இன்னும் தேடிக் கண்டு பிடிக்கவேண்டியுள்ளது என பேராசிரியர் ** சில்வேன்டுலெவி?? கூறுகின்றார்.
ஹம்பாந்தோட்ட, மாந்தோட்ட எனும் இடப் பெயர்களும் மலல எனும் வார்த்தையின் பகுதியோ, விகுதியோ கொண்ட வார்த் தைகளும், அண்மைக்காலத்தவை போன்று தோன்றவில்லை என கலாநிதி பரணவிதான கூறுகின்றார்.
மேலும் இலங்கையின் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கலாநிதி கே. டபிள்யூ. குணவர்த்தனா என்பவர் அரச ஆசிய கழக பருவ ஏட்டில் பின்வருமாறு கூறுகின்றார். எத்தனையோ சிங்களக் குடும்பப் பெயர்கள் மலாயர் தொடர்புகளை எடுத்துக் காட்டுகின்றன. அத்தோடு மலாயர் இலங்கையில் "அலாமத் லங்காபுரி" என்னும் பத்திரிகையை 1869-1878 வரை நடாத்தியுள்ளனர். இது மாதம் இரு தடவை வெளிவந்துள்ளது.
போறாக்கள்,
இலங்கையில் போறாக்களும் வாழ்கின்றனர். போறாக்களை சீயாக்கள் என அழைப்பதும் உண்டு. போறா என்பது "வோகறா" (Vohra) என்ற சொல்லின் திரிபாகும். போகறா என்றால் வியா பாரிகள் என்பது பொருளாகும். போறாக்களின் பரம்பரை குஜராத்தி மாகாணத்தில் வாழ்ந்த நாக பிராமணர்களாகும். இவர்களை 11ம் நூற்றாண்டில் எமனில் இருந்து வந்த ஒருவர் இஸ்லாத்திற்கு uortib maaarrrrř.

Page 84
60 மருதூர்" ஏ. மஜித்
இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவிர்கள்’இவர்கள். தங்களின் இமாம்களிடத்தில் சகல அறிவும் இருக்கிறது என்பது இவர்களது நம்பிக்கை.
தேமன்.
* மேமன்' என்னும் சொல் மூஃமின் எனும் சொல்லின் திரியே யாகும். இந்தியாவின் சிந்து மாகாணத்தில் செளராட்ரா பிரதேசத்தில் அமைந்துள்ள குத்தியானா, ஜ"னாகட்பாட்வா. ஆகிய இடங்களில் இருந்து இலங்கையில் குடியேறியவர்களே இந்த மேமன் இனத்தவர்கள்.
ஆரம்பத்தில் 1870ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த மேமன் அப்துல் றகுமான் என்பவராகும். இவர் யாழ்ப்பாணத்தில் சீலை வியாபாரத்தை ஆரம்பித்தார்.
மேமன் இனத்தவர்கள் மேமன் மொழியைப் பேசினாலும் இவர்களின் மொழி இங்கு வரிவடிவமற்ற பேச்சு மொழியாக மட்டுமே வழக்கில் உள்ளது. இலங்கையில் மேமன் சமூகத்தின் சனத்தொகை சுமார் ஐயாயிரமாகும். மேமன் சமூகத்தினரை ஒரு வர்த்தக சமூகம் என்றே குறிப்பிடலாம்.
முகலாயர்.
வடஇந்தியாவில் ஆட்சி செய்த பாரசீக ஆட்சியாளர்களான முஸ்லிம்களை இச் சொல் குறிக்கின்றது. இலங்கையுடனான வர்த்தகத் தொடர்பில் முகலாயர் சம்பந்தமுடையவர்களாயும் இருந்தனர்.
26 இன்று முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகிலே 1.225 பில்லியனைத் தாண்டிவிட்டது. இதில் 80கோடிப் பேர் ஆசியா கண்டத்திலும் 31கோடிப்பேர் அவுஸ்திரேலியாக் கண்டத்திலும் வசிக்கின்றனர். மிகுதியானோர் ஐரோப்பாக் கண்டத்திலும், அமெரிக்காக் கண்டத் திலும் வசிக்கின்றனர். இதனை வேறு வகையாகக் கூறுவதாயின் 1உலகில் மக்கள் தொகையில் நால்வரில் ஒருவர் முஸ்லிமாக உள்ளனர் ஏறத்தாள 120 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
27 நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அரும். பொருட்காட்சிச் சாலை யிலுள்ள ?கப்பல் மணி ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது * கல்கண்டு.
2 இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு.

மருதூர் ஏ. மஜீத் 6
அது "முகையதின் அடிமை” என எழுதப்பட்டுள்ளது. அது அக் கப்பலுக்குச் சொந்தமானவர் பெயரெனக் கொள்ளப்படுகிறது.
28 1990ம் ஆண்டின் கணக்கீட்டின்படி உலக மக்கட் தொகை ஐநூற்றுப் பத்துக் கோடியாகும். இதில் முஸ்லிம்கள் தொகை 125 கோடியை விடச் சற்றுக் கூடுதலாகும். இவர்களில் 800 மில்லியன்பேர் ஆசியாவிலும், 309 மில்லியன் பேர் ஆபிரிக்காவிலும், 1.5மில்லியன்பேர் அவுஸ்திரேலியாவிலும்,95 மில்லியன்பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்
இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள்.
29 1, 28னா,
2. சோவியத்யூனியன் 3. இந்தியா
30 இலங்கையில் முதலாவது முஸ்லிம் பெண் ஆசிரியை திருமதி பாத்து முத்து ஹலால்டீன் என்பவரே. இவர் ஊரில் பிறந்தவரே. (தற்போதைய சாய்ந்தமருதூர்)
31 உலகில் மனிதர்களிடையே "முகம்மத்” என்ற பெயர்தான் கூடுதலாக வழக்கில் உள்ள பெயராகும்.
32 இதற்கு அடுத்து வழங்கப்படும் பெயர் "சாங்க்” எனும் சீனப் பெயராகும்.
33 அமெரிக்காவிலே இஸ்லாம் இரண்டாவது 4மதமாகக் கருதப் படுகிறது. இன்று அமெரிக்காவிலே 40 இலட்சத்திற்கு மேலாக முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் 10 இலட்சம் பேர் நீக்கிரோ இன முஸ்லிம்களாவர். இவர்களை பிளக் முஸ்லிம் என அமெரிக்கர் அழைக்கின்றனர்.
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன் அமெரிக் காவில் ஸ்பெயின் தேசத்து முஸ்லிம்கள் அங்கு குடியேறி இருந்தனர்.
* கருத்துக் கோவை.
கல் கண்டு,
கல்கண்டு. தாருல்குர்ஆன் சஞ்சிகை.

Page 85
162 மருதூர் ஏ. மஜீத்
34 1942-1965ம் ஆண்டு வரையிலான பல்கலைக்கழக மாணவர் அனுமதிப் பட்டியலும் இலங்கை முஸ்லிம் மாணவர்கள் அனுமதிப் பட்டியலும்.
வருடம் மாணவர் தொகை முஸ்லிம் மாணவர்கள்
942 904 25-2.7% 1943 904 2-2.3% 9.44 996 29-2.9% 945 365 28-2.6% 946 302 37-2.8% 947 554 45-29% 948 589 40-25% 949 84.4 40-2-3%. 1950 2030 46-2-3% 95 22 O 46-2: . 1952 2202 39-4.8% 953 2392. 2 - 7%. 1954 2434 42-1.7% 955 243 54-2.8% 956 2534 57-2.3% 1957 2728 54-2% 958 2.950 72-2.6% 959 3177 66-7. 18% 1960 3684 87-1.8% 96. 465 84-'7% 1962 537 39-5% 1963 5706 51-2%. 965 O723 2.8%
1 நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்.

மருதூர் ஏ. மஜித் 63
35 பொறியியல்துறை.
1969, 1971, 1974 பல்கலைக்கழக அனுமதி.
சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள்
1969 5-7 48.3
97 624 34-7 8
974 78.8 63 4.9
மருத்துவம்
969 48.9 48.9 0.9 97 56. 39.3 23 974 70 25.9 3
ஆதாரம் 1971ம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை சென்ட் மன்றம் இலங்கைப் பல்கலைக்கழகம். 36 இலங்கையில் ஏறக்குறைய 1600 பதியப்பட்ட பள்ளிவாயல்கள் உண்டு.
37 உலகில் மிகப் பெரிய முஸ்லிம் நாடு இந்தோனேசியா, 38 21927ம் ஆண்டு முதன் முதலாக தற்போதைய மட்டுநகருக்கு நீராவியால் இயங்கும் புகையிரதம் வந்து சேர்ந்தது.
39 1935ம் ஆண்டுதான் மட்டக்களப்பு மக்களால் ஆகாய விமானத்தின் சத்தத்தைக் கேட்க முடிந்தது.
40 மட்டக்களப்பு கொழும்பு கடற் கப்பல் பயணம் முதன் முதலாக 1888ம் ஆண்டு பிரிட்டிசாரால் ஆரம்பிக்கப்பட்டது.
இக் கப்பல் பயணம் திருகோணமலையில் இருந்து ஆரம்பிக்கப் பட்டு கல்குடா, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி, ஆகிய துறைமுகங்களில் தரித்துச் சென்று கொழும்பை அடைந்தது. இப்பயணம் மட்டக்களப்பில் இருந்து கொழும்பை அடைய ஆறு தினங்கள் எடுத்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த முதலாவது கப்பலின் பெயர் "லேடி கோர்ட்டன்’ என்பதாகும்.
41 1924ம் ஆண்டு இலங்கையில் சித்த ஆயுள்வேத யூனாணி வைத் தியம் கற்பதற்காக ஒரு வைத்தியக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி மத்திய தீபம் 175வது ஆண்டு LDøvri.

Page 86
64 - மருதூர் ஏ. மஜீத்
42 1900ம் ஆண்டளவில் பிரிட்டிஸ் அரசாங்கம் இலங்கையில் பெளத் தர்களுக்கென்று 142பாடசாலைகளையும் ஹிந்துக்களுக் கென்று 45பாடசாலைகளையும் முஸ்லிங்களுக்கென்று ஆக 4பாடசாலைகளுக்கு மட்டுமே நிதி உதவி செய்தது.
43 இலங்கை முஸ்லிங்கள் தங்களுக்கென 1882ம் ஆண்டு முஸ்லிம் நேசன் பத்திரிகையையும் 1914ம் ஆண்டு சிலோன் முகம்மதியன் சிலோன் முஸ்லிம்றிவியூ என்ற பத்திரிகைகளையும் 1915ம் ஆண்டு கிறசன், இஸ்லாம் என்ற பத்திரிகையையும் நடத்தினர்.
44 1889ம் ஆண்டு எம். ஸி. அப்துல் றகுமான் என்பவர் இலங்கை முஸ்லிங்களின் முதலாவது பிரதிநிதியாக சட்ட ஆக்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
45 10-05-1995ல் பகல் 11.15 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, அட்டாளச்சேனை, மருதமுனை சம்மாந்துறை, காரைதீவு போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மூன்று வினாடிகள் நீடித்தன.
இது போன்ற ஒரு நில நடுக்கம் இப்பகுதியில் சில காலத்திற்கு முன்பும் இரவில் ஏற்பட்டுள்ளது.
46 1அங்டாட் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 1985ம் ஆண்டிற் கான புள்ளிவிபரத் தரவுகளின்படி 1982ம் ஆண்டு உலக மொத்த சனத்தொகையில் முஸ்லிங்கள் பதினைந்து விகிதத்தைக் கொண் டிருந்தது. அதாவது எழுபது கோடியாகும். இன்று 123 கோடியாக உள்ளனர்.
* தூது 1994 - ஜனவரி - மார்ச் இதழ்

மருதூர் ஏ. மஜீத் 65
மனவருத்தமானதும் மறக்க வேண்டியதுமான ஒர் அத்தியாயம்
9) உலக நாகரிகங்களான க (அ) யூப்பிரட்டீஸ் டைக்கிறீஸ் நாகரிகம்
(ஆ) நைல் நதிக்கரை நாகரிகம் (இ) சிந்து வெளி நாகரிகம்
ஆகிய மூன்று நாகரிகங்களின் தோற்றுவாய் நாங்களே என உரிமை கொண்டாட உரிமை உள்ளவர்களான மத்தியகிழக்கு வாசிகளின் நேரடி வழித்தொடர்களான இலங்கை முஸ்லிங்களின் சரித்திரம் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் இருட்டடிப்புச் செய்யப்பட்டும் திருத்தப்பட்டும் இருப்பது கண்டு மனவருத்தம் அடைய வேண்டியவர் களாய் உள்ளோம்.
உதாரணத்திற்காக முன் அத்தியாயங்களில் எடுத்துக் காட்டியது போல இங்கும் ஒரு சில விடயங்களை எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
மட்டக்களப்பு சோனகக் குடிகள் பற்றி **நாடுகாட்டுக் கல் வெட்டுப் பரணி பின்வருமாறு கூறுவதாக திரு எப். எக்ஸ் , நடராஜா அவர்கள் தனது மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்’ எனும் நூலில் எழுதியுள்ளார்.
"இப்படி இவர்கள் காடு வெட்டித் திருத்தி குடியிருக்கும் நாளில் இந்த நாளில் அந்த வெளிக்கு அந்தச் சனங்கள் சகலரும் நின்று விரைந்து ஆண்டனுபவிக்கும் வேளையில் இவர்கள் ஒக்கிலாக வந்த ஆரென்றால் பொன்னாச்சி குடியான் அவக்கனும் அவனுடைய சனங்களும் வந்தார்கள்,
அதன் பிறகு வரிசை நாச்சி குடியார், அதன் பிறகு முகாந்திர நாச்சி குடியார், அதன் பிறகு மாலை “ட்டுக் குடியார், அதன் பிறகு பணிய வீட்டுக் குடியார், அதன் பிறகு கிணிக் கருத்தன் குடியார், இப்ப டியான ஏழு குடிகளுக்கும் முன்னீடு பொன்னாச்சி குடியான் இந்த ஏழு

Page 87
66 மருதூர் ஏ. மஜீத்
குடியும் வந்து சொற் கீழமைந்து நடந்து வருகிற காலத்தில் க்ண்டியில் மகாராசா மட்டகளப்பில் நாடு காடு பார்க்கவும் விகாரைகள் பார்க் கவும் எழுந்தருளி வருகிற காலத்தில் முதலிமாரும் கூட வந்தார்கள். சோனகரும் போய் விண்ணப்பம் செய்தார்கள் அப்போது ராசா குதிரைக்கு முன்னே ஒடத் தக்கவர்கள் ஆரென்று கேட்டார். எல்லோரும் பேசாமலிருந்தார்கள். அப்போ அவக்கன் நான் ஒடுவேனென்றான் ஒடச் சொல்லி, ஒடினவிடத்து குதிரைக்கு முன்னாக விழுந்து விட்டான் அப்போ முகத்திலே துவாய்ச் சீலையைப் போட்டு சிரித்து உனக்கென்ன வேணுமென்று கேட்டார் அப்போ அவக்கன் நாயடியேனுக்கு பிழைப் புக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல சுங்கத் துறை முத்தெட்டு ஒன்றுக்கு சீட்டுத் திருமுகம் எழுதிக் கொடுத்தார்.
அவக்கன் சிங்காரவத்தை வன்னியன் அதன் பிறகு அவன் பட்டிப் பளைக்குப் போய் பருத்திக்காலில் இரும்பு ஒழிச்சுக் கொண்டு வந்து சிங்காரவத்தையில் இருக்கிற ஏழு வன்னிய இராசாக்களிடத்திலும் வெளிப்பட்டான். மகாராசா
அப்போ அவக்கன்தான் பொன்னாயமும் கொடுத்து அவக் கனுக்கு அணுக்கன் வெளியும் கொடுத்து இந்த எழு குடிகளுக்கும் முன்னீடு கொடுத்தார்கள். அதன் பிறகு கண்டி மகாராசா நகர சோதனைக்கு பக்கிரிக் கோலமாக புறப்பட்டு பக்கிரிச் சேனைப் பள்ளியில் வந்திருந்தார். அப்போ அந்தப் பள்ளியில் மோதின் அவர்களுக்கு உபகாரம் கொடுத்தான். அவன் மெத்த வழிப்பட்ட படியால் மாயக் காலி மலையில் பெருகிளாக் கொடியை மந்திர வாளால் வெட்டிப் போட்டு நகரிக்குப் போய் வட்டே றெழுதி வர விடுத்தார்.
வரிப்பத்தன் சேனைப் பள்ளிக்கு பத்திப் போடி வெளியாலே ஓர் இலவசம் கொடுக்கச் சொல்லிப் போட இராசபக்கி ருடி முதலியார் கொடுத்துப் போட்டார் என எழுதப்பட்டுள்ளது. இதே வித்துவான் அவர்கள் தனது 'மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலிலே மட்டக்களப்புக் குடியேற்றம் எவ்வாறு நடந்தது எனக் கூறும் போது ‘அரபிகளின் ஒத்தாசையோடு சேர நாட்டார் மட்டக்களப்பிலே வந்து குடியேறியதாகக் கூறியுள்ளார்.
செய்திகள் இரண்டும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன.
எது எப்படி இருந்தாலும் மேற் கூறிய கல் வெட்டுப் பரணிச் செய்தியை சற்று கூர்மையாகப் பார்ப்போமாப்பின் இந்தக் கல்வெட்டுப் பரணி திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது,

மருதூர் ஏ. மஜீத் 0SSLS SLLLSL SLS 67
அதாவது மட்டக்களப்பிலே மத்தியகிழக்கு வாசிகளின் ஒத்தா சையோடு வந்து குடியேறியவர்களல்ல திராவிடர்கள் என்று எடுத்துக் காட்டுவதற்கும்,
மட்டக்களப்பிலே முஸ்லிம்கள் வசம் இருக்கின்ற காணிகள் திராவிடர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டவை என எடுத்துக் காட்டுவதற்கும் மேற் கொண்ட முயற்சியெனலாம். மீண்டுமொரு முறை இதே கல் வெட்டை வாசித்துப் பாருங்கள் உண்மை புலனாகும். அதிலே இடம் பெற்றுள்ள சொற்களான "ஒக்கீலாக வந்த’ அவக்கன் சொற்கீழமைந்து, குதிரைக்கு முன்னால் ஒடக் கூடியவர்கள் யார் எனக் கேட்டது. அவக்கன் நான் ஒடுவேன் எனச் சொன்னது, அவக்கன் ஓடி விழுந்தது அரசன் துவாய்ச் சீலையை முகத்திலே போட்டுச் சிரித்தது, அவக்கன் நாயடியேனுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஒன்றுமில்லை என்று அரசனிடம் விண்ணப்பித்தது பிறகு ராசா பக்கரிக் கோலம் போட்டு பக்கிரிச் சேனைப்பள்ளிக்குப் போனது போன்ற வற்றைச் சீர்தூக்கிப் பாருங்கள் பல உண்மைகள் புலனாகும்.
ஒக்கீலாக வந்த என்ற வசனத்தின் மூலம் முஸ்லிங்கள் திராவிடர்களின் ஒத்தாசையோடு வந்தவர்கள் எனக் காட்ட ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மட்டக்களப்பு மான்மியச் செய்தியை மாற்ற எடுக்கும் ஒரு முயற்சி எனலாம். -
"அவக்கன்' என்று மரியாதையில்லாமல் குறிக்கப் பட்டவர் சாதாரண ஒரு குடி மகனல்ல "ஒரு வன்னியன்’ அவர் தனக்கு அதாவது நாயடியேனுக்கு வயிற்றுப் பிழைப்பிற்கு ஒன்றுமில்லை எனக் கூறுவது உண்மைக்கு முரணான ஒரு செய்தி ஒரு வன்னியன் தனக்கு சாப்பிடுவதற்கும் ஒன்றுமில்லை என்று சொல்லுவானா?
நிற்க.
குதிரைக்கு முன்னால் ஓடக் கூடியவர்கள் யார் என அரசன் கேட்டான் அதாவது குதிரையை விட வேகமாக ஓடக் கூடியவர்கள் Lurrri 6T Gör my அரசன் கேட்டான் அப்படிக் கேட்பானா? அரசன் மடையனா? அல்லது அரசனையும் மடையனாகக் காட்டும் முயற்சியா? அல்லது அவக்கன் அதாவது சோனகர்கள் மடையர்கள் எனக் காட்டும் முயற்சியா? குதிரையை விட வேகமாக யாராலும் ஒட முடியுமா? அடுத்து அரசன் துவாய்ச் சீலையை முகத்தில் போட்டுச் சிரித்தான் என வருகிறது.

Page 88
68 மருதூர் ஏ. மஜித்
அரசன் துவாய்ச் சீலையை தனது கையிலேயே வைத்திருக்கும் பழக்கமுள்ளவனாக்கும் பாவம் துவாய்ச்சீலை எனும் சொற் பிரயோகம் கல் வெட்டு திட்டமிட்டு பிற்காலத்தில் எழுதப்பட்டது என்பதை எமக்கு நன்கு காட்டுகிறது அல்லவா?
மேலும்,
அவக்கன் தனக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஒன்றுமில்லை என்றதும் அரசன் தன்னிடம் இல்லாமலா இன்னொரு அவக்கனைப் போன்ற ஒரு வன்னியனைப் பார்த்து உன்னிடம் இருப்பதில் அவனுக்கும் கொடு என்று சொல்லுவானா? அரசர்கள் அப்படிச் சொல்லும் வழக்கமுள்ளவர்களா?
இவையெல்லாம் எதற்காகக் கூறப்பட்டுள்ளது என்று புரிகிற தல்லவா?
மேலும், இதே நாடு காடு கல் வெட்டுப் பரணியிலே திராவிடர்கள் தளவில்லை விட்டு இறக்காமம் போதல் என்ற தலைப்பில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.
அது வருமாறு
"பாலும் கொடுத்துப் போட்டு வருகிற நேர மந்தப்பிள்ளையை அடியாள் தொடாமல் விட்ட படியால் அழுதழுதிருந்தது.
அதை போவத்தை முகாந்திரம் கண்டு அந்தப் பிள்ளைக்கு வெள்ளிக் கரண்டகத்தைக் கொடுத்து பழக் காட்டினான். அத அவ கண்டு சோனகன் என் பிள்ளையைத் தொடலாமோ வென்று அந்தப் பிள்ளையை எடுத்தெறிந்து கொன்று போட்டு அந்தக் கோபத்தோட புறப்பட்டுத்தான் நாடு காடு இறக்காமத்துக்கு வந்தது எனக் கூறுகிறது.
அதாவது மேற்கூறிய வசனத்தை திருத்தமாகக் கூறுவதாயின் பிள்ளை அழுவதைக் கண்ட யோவத்தை முகாந்திரம் யார் பிள்ளை யானாலும் அழக் கூடாது எனும் பெரு நோக்கோடு பிள்ளையைத் தொட்டு தாலாட்டி பக்கத்திலே இருந்த பாலை எடுத்து வெள்ளிக் கரண்டியால் ஊட்டினான் திரும்பி வந்த தாய் இதனைக் கண்டு சோனகன் ஒருவன் தனது பிள்ளையைத் தொட்டு விட்டான். பிள்ளை தீட்டாகி விட்டது எனக் கருதி பிள்ளையை எடுத்தெறிந்து கொன்று விட்டு அவ்விடத்திலேயே இருப்பதற்கும் விரும்பாமல் குடி பெயர்ந்து இறக்காமம் வந்து சேர்ந்தாள்.

மருதுர் ஏ. மஜீத் 69
என்பதுவே மேற் சொன்ன் கல் வெட்டுப் பரணியின் பொருளாகும்.
மிக மிக அதீதக் கற்பனையல்லவா?
மேலும், இங்கு இன்னுமொரு சம்பவத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். தமிழிலக்கிய உலகிலே முதல் நாவல் என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கூறிக் கொள்ளும் வேதநாயகம் பிள்ளை அவர்களின் "பிரதாப முதலியார் சரித்திரம்” எனும் நூலில் 1ம் பக்கத்திலே பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
'துலுக்கன் ஒருவன் குதிரையில் ஏறிக் கொண்டு வீதியால் வரும் பொழுது குதிரை விரண்டு வீதியிலே அவன் தூக்கியெறியப்பட்டு மயங்கிக் கிடந்தான். அப்பொழுது அவ்வழியால் சென்றயாரும் இவனுக்குஉதவி செய்யப் போகவில்லை. காரணம் அவன் யாரோ பக்கிரி அவனைத் தொட்டால் நம் குலத்திற்கு அழிவுண்டாகும்" என எழுதப்பட்டுள்ளது.
"மூர்ஸ்" என எழுதியிருக்க வேண்டும்.
லெமூரியாக் கண்டத்திற்கே சொந்தமானவர்கள் இந்த மூர்ஸ். இவர்களை சோனகர் என அழைப்பதற்குக் கூடவேதநாயகம் பிள்ளை. விரும்பவில்லை.
*" துலுக்கன் என அழைக்கிறார். துலுக்கர் என்றாலும் நாம், கோபப்பட முடியாது. துருக்கியில் இருந்து வந்தவர்களை துலுக்கர், என அழைத்துள்ளார்கள். துருக்கியர் என அழைப்பதை விடுத்து கேலி செய்யும் பாணியில் துலுக்கன் என அழைத்துள்ளார்.
இதைக் கூட மன்னிக்கலாம் ஆனால் யாரோ பக்கிரி என எழுதியிருப்பது அவரின் அடிமனத்தினை நன்கு எடுத்துக் காட்டுகிறது அல்லவா?
மேலும், மிக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எடுத்துக் காட்ட முடியும்.
இலங்கைப் பல்கலைக்கழக கட்டுப் பொத்த வளாகத் தமிழ்
மன்றம் வெளியிட்ட "நுட்பம்" சஞ்சிகையின் (1975) அட்டைப் படத்தைப் பாருங்கள்.

Page 89
4孕0 - மருதூர் ஏ. மஜீத்
முஸ்லிம் தலைவர் ஒருவரையும் முஸ்லிங்களையும் கேலி செய்யும் நோக்கோடு அந்த அட்டைப் படம் கீறப்பட்டுள்ளதை அவதானிக் Փpւգսկմ).
இலங்கையின் கல்வி வரலாற்றை எடுத்து நோக்கினால் எந்த வொரு பெரும்பான்மைச் சமுகத்தைச் சேர்ந்த கல்வி மந்திரியும் செய்யாத துணிச்சலான பல காரியங்களை வெற்றிகரமாகச் சட்ட மாக்கி வெற்றி கண்டு கல்வி வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவராகத் திகழும் இவரை யாழ்ப்பாணத்து மாணவர்களுக்கு மட்டும் சாதகமில்லாத தரப்படுத்தல் முறையைக் கொண்டு வந்தமைக்காகத் துணிந்து ஒரு சமுகத்தின் தலைவரைக் கிண்டல் செய்து இருப்பது அதுவும் அசிங்கமாகக் கேலி செய்து இருப்பது மிக மிக மனவேதனையைத் தரக்கூடிய விடயமாகும்.
சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் எழுதிய தனது நூலிலும், 1885ம் ஆண்டு சட்ட சபையிலும் 1888ம் ஆண்டு இலங்கை அரசு ஆசியக் கழகத்திலும் எடுத்துரைத்த சில கருத்துக்கள் எமது மனத்தை மிக மிகப் புண்படுத்தக் கூடியதாக உள்ளது.
முஸ்லிங்கள் தெருத் தெருவாய் அலைந்து தலையில் சாமான் களைச் சுமந்து கூறித்திரிந்து வியாபாரம் செய்யும் அங்காடி வியாபா ரிகள் என்று கூறியது மட்டுமல்லாமல், இவர்கள் தனியொரு இனமல்ல, என்றும் கூறியுள்ளார். சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர் களுக்கு எங்களை பெரிய வியாபாரிகள் என்று ஏற்றுக் கொள்ளுவது கஷ்டமாக இருந்திருக்கலாம். காரணம் அவருடைய நண்பர் அப்துல் றகுமானுக்கு கப்பல் இருந்ததுவும் அக் கப்பலில் வியாபாரப் பொருட் களை ஏற்றி இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததையும் அவரால் தாங்கிக்கொண்டிருப்பது கஷ்டமாக இருந்திருக்கும். அதனால் அவர் அங்காடி வியாபாரிகள் எனக் கூறியிருப்பார்.
ஆனால் தனியொரு இனமில்லை என எழுதியிருப்பது மிக மிக மன வேதனைக்குரிய விடயமாகும்.
இஃது ஒரு புறமிருக்க இதே சேர் அவர்கள் 1915ம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது இங்கிலாந்து சென்று கலவரத் திற்குக் காரணம் முஸ்லிம்களே சிங்களவர்கள் அல்ல எனக் கூறியதோடு, அழிவெல்லாம் சிங்களவர்கட்கே எனவும் கூறிப் பக்கச் சார்பாக நடந்து Q&m soort-mri.

மருதூர் ஏ. மஜீத் 17
இக் கலவரம் பற்றி அப்போது இலங்கையில் தேசாதிபதியாக இருந்த சேர் றொபேட் சார்ஸ் மார்ஸ் (1915 - 1916) தனது அறிக் கையிலே பின்வருமாறு கூறுகின்றார்.
இலங்கைப் பிரஜைகளில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரைத் தாக்கினர். தாக்குதலை நடத்தியவர்கள் பெளத்தர்களாகிய சிங்கள வர்களே. இதற்குப் பலியானவர்கள் அமைதியான முஸ்லிங்களே.
ஐந்து மாகாணங்களில் முஸ்லிங்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவர் களின் சொத்துக்கள் சிங்களவர்களால் சூறையாடப்பட்டன.
கடைகளும் வீடுகளும் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கப் பட்டன. அவர்களது பள்ளி வாசல்கள் உடைத்தெறியப்பட்டன.
அத்தோடு முஸ்லிங்கள் காயப்படுத்தப்பட்டும் மானபங்கப் படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளார்கள்.
இதுவே அனைவரும் அறிந்த உண்மை.
இதனை ஒழிவு மறைவின்றி மனத்தில் இருத்துவதுடன் பாதிக்கப் பட்டவர்களுக்கான உதவிகளைச் செய்வது எமது பொறுப்பாகவும் உள்ளது. முதலில் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
அஃதே வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்கவும் வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இருவரது கருத்திற்குமிடையே எவ்வளவு பாரதூரமான கருத்து வேறுபாடு உள்ளது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.
இஃதே வேளை நான் முன் சுட்டிக் காட்டிய நாடு காடு கல் வெட்டுப் பரணியிலே கண்டியரசன் துவாய்ச் சீலையைப் போட்டுச் சிரித்த சம்பவமும், நாயடியேனுக்கு வயிற்றுப் பிழைப்பிற்கு ஒன்று மில்லை என்ற கதையும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட கண்டியரசன் யார் என்று குறிப்பிடப் படவில்லை. ஆனால் கி. பி. 10ம் நூற்றாண்டளவில் ஒரு கண்டி யரசன் பின்வருமாறு சாசனம் எழுதியுள்ளார். இச்சாசனம் 1016ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி எழுதப்பட்டுள்ளது.

Page 90
மருதூர் ஏ. மஜீத் 72ו
அதில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.
1பெரிய முதலியார் மரைக்காயரும் அவரது சந்ததியினரும் சிறைவாசம் மரண தண்டனை ஆகியவற்றில் இருந்தும் இத்தால் விலக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அரசருக்குச் செய்த சேவையினையிட்டு மாட்சிமை தங்கிய அரசன் சந்தோசமடைந்திருப்பதால் இவர்களை இவ்வாறு கெளரவிக்கவும் கண்ணியப்படுத்தப்படுகிறார்கள்.
இன்னும் எல்லா வேலைகளிலும் எல்லா இன்னல்களிலும் எல்லாக் கஸ்டங்களில் இருந்தும் அரசாங்கம் இவர்களைப் பாதுகாக்கும்.
இவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவும்.
அஃதே போல மரியாதைக்குரிய தலங்களைப் பேணிப்பாதுகாக் கவும் சுதந்திரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
கப்பல் கட்டவும், அவைகளைக் கொண்டு ஏனைய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என துல்லிதமாகக் கூறுகிறது அச்சாசனம்.
ஆனால் துல்லிதமில்லாது மனச் சாட்சியில்லாது பல கல் வெட்டுக்கள் எம்மையும் எமது சமுகத்தையும் இருட்டடிப்புச் செய்து மூடி மறைக்கப் பார்க்கிறது.
1982ம் ஆண்டு வெளியான 258 பக்கங்களைக் கொண்ட "கண்டதும் கேட்டதும்” எனும் நூலின் கடைசி அத்தியாயத்தில் கடைசிப்பக்கத்தில் கடைசிப் பந்தியில் நூலாசிரியர் கூறும் கருத்தினைப் படித்துப் பாருங்கள்.
**காரைதீவு என்றால் அது சாதாரணமான ஓர் ஊரன்று : மட்டக்களப்புத் தமிழ் சமுகம் முழுவதையுமே தோள் கொடுத்துத் தாங்கக் கூடிய சக்தி அதற்கு உண்டு. அது சரியான முறையிலே ஒரு முகப்பட்டுத்திடமாகச் செயல் படுமானால் மட்டக்களப்பு தமிழ் மக்களின் தலை விதியையே நிர்ணயித்து விடக் கூடிய பழவிறற் பெரும் பேறாகும். காரைதீவே நீ எங்கே சென்று கொண்டிருக்கிறாய் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறாய் இடுக்கிப் பாய்ச்சலுக்குள் அகப்படாதே வடக்கையும் தெற்கையும் திரும்பிப்பார் நிலைத்து நில்’ எனக் கூறுகிறது அக் கருத்து.
சேர் றாசீக் பரீத் வழியும் நடையும்

மருதூர் ஏ. மஜீத் 73
ந்தக் கருத்தினை நான் பிழையென்று சொல்ல மாட்டேன். நத P Dl
ஆனால் வடக்கினையும் தெற்கினையும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை.
காரணம்
வடக்கிலும் தெற்கிலும் உள்ள ஊர்களான சாய்ந்தமருது, நிந்தவூர் மக்கள் எதுவித இருட்டடிப்போ அல்லது ஊர் பிடிக்கும் நோக்கமோ இல்லாது சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போய்ச் சந்தேகிப்பது அல்லது சாதாரண மக்களை சந்தேகிக்க வைக்கத் தூண்டி எழுதுவது மாபெரிய பாவமாகும்.
எமது அண்டை நாடான இந்தியாவில் இதைவிட மோசமாக எமது சமுகத்தை வலுச் சண்டைக்கு இழுக்கிறார்கள்.
உதாரணத்திற்கு அயோத்தி பாபர் பள்ளிவாயல் சம்பவத்தைக் குறிப்பிட முடியும்.
இஃதே போல இன்னும் ஆயிரம் சம்பவங்களைக் கூற முடியும்.
இவற்றிற்கெல்லாம் காரணமாய்க் கருவாய் இருப்பவர்கள்
படித்தவர்கள். தங்களைத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் என்பதை எம்மால் திட்டமாகக் கூற முடியும்.
இவற்றையெல்லாம் நாம் மறக்க நினைக்கின்றோம்.
கண்ணகி அம்மன் கோயிலில் இருந்து பக்கீர்ச் சேனை வரை பாருங்கள், அழிபாடுகளை அவதானியுங்கள்
கண்ணகி காவியம் என்ன கூறுகிறது.
அல்லவை செய்தோர்க்கு அறம் கூற்றாம் ஊழ்வினை வந்துறுத்தும் உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்
என்றல்லவா கூறுகிறது. நாங்கள் கண்ணகி கோயிலைத் தொட் டிருக்கவும் கூடாது நீங்கள் மரியாதைக்குரிய அடக்கஸ்தலங்களை அழித்திருக்கவும் கூடாது.

Page 91
74 மருதூர் ஏ. மஜீத்
நீதி தவறிய மன்னனின் ஊரை நெருப்பால் அழித்தவளல்லவா கண்ணகி.
கண்ணகியைக் கண்ணியப்படுத்தி இருக்க வேண்டும் நாங்கள்.
கஜபாகு மன்னன் அவனது ஆட்சிக் குட்பட்ட எத்தனையோ இடங்களிருக்க சேர நாட்டில் இருந்து பரிசாகப் பெற்று வந்த தெய்வச் சிலையை இங்கு கோயில் கட்டி கண்ணகி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ததேன்.
காரணம் என்ன?
ஊர் மக்கள்தான், சேர நாட்டு மக்களை ஆதரித்தவர்கள் அவர்களிடம் சேர நாட்டு மன்னனின் அன்பளிப்பைக் கொடுத்து வைப்போம் என்ற எண்ணமே கஜபாகு மன்னனின் உள்ளத்தில் மேலோங்கியிருந்தது எனலாம்.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளின் பின் ஒன்றாய் இருந்த எமது சமுகம் எவ்வாறு பிரிந்துள்ளது என நினைக்க வேத னையாக இருக்கிறது.
அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டுள் ளார்கள் உதாரணமாக 1980க்குப் பின் குறிப்பாக 1989 மே 17ம் திகதிக்குப் பின்னும் 1991ஜ"லை 23லும் நடந்த அட்டூழியங்களை எப்படிச் சொல்வது.
1990ல் முஸ்லிம் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் சிங்களப் பொலிசார் படுகொலை செய்யப்பட்டனர்.
இஃதே போல சம்மாந்துறை, காத்தான்குடி, சாய்ந்தமருது போன்ற ஊர்களில் இருந்த பள்ளிகளுள் சென்று இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொது மக்களை துவக்கு முனையில் சுட்டுக் கொலை செய்தார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களுக்குப் பின்வரும் புள்ளி விபரத்தை சான்றாக எடுத்துக் காட்ட முடியும்.
1987ல் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் அப்பாவிகள்
யாழ்ப்பாணம் 3. சாவகச்சேரி 03 முல்லைத்தீவு 03

மருதூர் ஏ. tog's
1மூதூர்
இண்ணியா
ஒட்டமாவடி 1988ல் காத்தான்குடி 1988-89 கல்முனை
சம்மாந்துறை சாய்ந்த மருது மாளிகைக்காடு
ஏறாவூர்
2அகில இலங்கையிலும் அகதிகளானோர்
அனுராதபுரம் திருகோணமலை அம்பாரை கொழும்பு புத்தளம் மட்டக்களப்பு கம்பஹா களுத்துறை காலி
குருநாகல் பொலநறுவை மாத்தளை
கேகாலை
52
38
88
67
50
21
17
05
25000
0479
960
3641
19608
10855
7690
470
209
107 1
6718
3190
2350
1990ல் கொலை செய்யப்பட்டோர்.
காத்தான்குடி அக்கரைப்பற்று குருக்கள் மடம் (ஹஜ்ஜாஜிகள்)
%JՈ)n Ձեfr சம்மாந்துறை
ஈழத்தின் இன்னுமொரு மூலை
2 முஸ்லிம் அகதிகள் சிறிலங்கா
126
50
68
173
7
75

Page 92
76 மருதூர் ஏ. மஜீத்
தனி நாடு என்பது முஸ்லிங்கள் இல்லாத தனி நாடா என நாங்கள் அவர்களைக் கேட்கின்றோம். ஒற்றுமையாக இருந்த இரண்டு சமுகம் குறிப்பாக கிழக்கிலே ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய முடியாது இருந்த இரண்டு சமுகங்களை ஏன் இப்படிப் பிரிக்க நினைத்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
1990ல் ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிங்கள் அனைவரும் துரத்தப்பட்டார்கள்.
1989 - 05 - 04ல் சம்மாந்துறையில் இருந்துசென்ற மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், அவர்களுடன் சென்ற காரைதீவைச் சேர்ந்த ஒருவர் கொல்லாது விடுவிக்கப்பட்டார்.
இவற்றையெல்லாம் நான் இங்கு ஏன் எடுத்துக் கூறினேன் எனில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதனாலேயே பக்கத்தில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு எங்களால் வாழ முடியாது அப்படி நாங்கள் வாழவும் இல்லை. எனவே தயவு செய்து நடந்த வைகளை மறந்து நாம் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும். ஒற்றுமையைப் பலப்படுத்த பல திட்டங்களை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமது எதிர் காலச் சந்ததியினர் சந்தோ சமாக வாழ முடியும்.
அண்மைக் காலமாக முஸ்லிம் காங்கிரசும் அதன் தேசியத் தலைவர் அல்ஹாஜ் எம். எச். எம். அஸ்ரப், அவர்களும் இன ஒற்று மைக்காகக் குரல் கொடுப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இது ஒரு வழிப்பாதையாக இல்லாது மறுபக்கத்தில் இருந்தும் ஒற்றுமைக் கான குரல் ஒலிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் இங்கு ஏன் குறித்துக் காட்டுகிறேன் என்றால் ஒன்றாக இருந்த ஒற்றுமையோடு பிரிக்க முடியாத பிணைப் போடு சகோதரர்கள் போன்று வாழ்ந்த இரு சமுகத்தினரை படித்தவர் களே திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாகநாளடைவில் இருபகுதியினர் மத்தியிலும் பிரிவினையெனும் நச்சு விதையினை புத்தகங்கள் வாயிலாகத் தூவி கடைசியில் வெற்றியும் கண்டு விட்டனர் எனலாம்.
பழைய நிலைக்கு மீண்டும் இரு சமுகத்தினரையும் ஒற்றுமை யோடு வாழச் செய்வதென்பது மிகமிகச் சிரமமான காரியம் என்றாலும் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கொப்ப நாம் ஒன்றுபட விடா முயற்சி செய்வோமாக.

மருதூர் ஏ. மஜீத் 77ן
புதியதோர் அத்தியாயம்
படைப்போம்
O)
genomik தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் உலகின் எந்த மூலை முடிக்கில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரே கொடியின் கீழ் ஒற்றுமையாக வாழவேண்டிய கடமைப்பாடுடையவர்களாக உள்ளார்கள்.
அதிலும் குறிப்பாக இலங்கையிலே வாழ்கின்ற தமிழர்களிடையே இது கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதிலும் மிக மிகக் கண்டிப்பாக கிழக்கிழங்கையில் வாழ்கின்ற தமிழர்களிடையே இது அவசியமாகப் பேணப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
தமிழர் வேறு தமிழ்ப் பேசும் இனம் வேறு என்ற பாகுபாடே தலை தூக்கவிடக் கூடாது
தமிழைப் பேசுகின்றவர்கள் எல்லோரும் தமிழர்களே.
மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்று பட்டவர்களே
அண்மைக் காலங்களில் கிழக்கிலங்கையில் வாழ்கின்ற தமிழ்ப் பேசும் இரு சமுகத்தவர்களிடையேயும் நடந்து முடிந்து விட்ட பல சம்பவங்களை எடுத்து நோக்கினால் வேதனைக்கு விடிவே இராது.
ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்.
இத்தனைக்கும் காரணமாக இருந்தவர்கள் பொது மக்களல்ல என்பதை நான் துல்லியமாக முன் அத்தியாயங்களில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
இந்த அனுபவங்கள் எங்களுக்கு எதிர்காலத்தில் நல்லதொரு Lunt Ludfr&5 e969) Loulu G6nu6öwGSth.
நாம் எதிர்காலத்தில் எதைப் பேச வேண்டுமாயிருந்தாலும் சரி, எதை எழுத வேண்டுமாயிருந்தாலும் சரி, மிக மிகக் கவனமாக ஒற்றுமை யென்ற கோட்டினை இம்மியேனும் தாண்டிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும் .

Page 93
78 மருதூர் ஏ. மஜித்
கிழக்கிலங்கையிலே ஏறாவூர் வாழைச்சேனை தொடக்கம் பொத்துவில் பாணமை ஈறாக வாழ்கின்ற மக்களைக் குறிக்கும் மட்டக்களப்பார் எனும் ஹிந்துக்கள் அல்லது முஸ்லிங்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யாராய் இருந்தாலும் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை அவர்கள் கூறியது போல இங்கு வாழ் கின்ற தமிழ்ப் பேசும் மக்கள் பிட்டும், அதன் இடையிடையேயுள்ள தேங்காய்ப் பூவும் போல வாழ்கிறார்கள் இவர்களைப் பிரிப்பது அல்லது பிரிக்க நினைப்பது பாவச் செயலாகும். -
அண்மைக் காலமாக எம்மிடையே பிரிவினைக் கொள்கையும் அது பற்றிய செயல்களும் பரந்து விரிந்து வியாபித்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.
உதாரணமாக,
கல்முனையிலே இரண்டு பிரதேச சபை அலுவலரும் இரண்டு பிரதேச சபை அலுவலகங்களும் தேவைதானா?
கல்முனையிலே இரண்டு கோட்டக் கல்வி அலுவலகங்கள்
கல்முனையிலே இரண்டு மாவட்டக் கல்விக் காரியாலயங்கள் ஒன்று முஸ்லிங்களுக்கு மற்றது மற்ற மதத்தவர்களுக்கு என்ற கொள் கையை முன் வைக்கலாமா?
இவ்வாறு நாம் பிரிந்து கொண்டே போனால் தனித்தனியான பாடசாலைகள் இருப்பதுபோல,
தனித்தனியான ஆஸ்பத்திரி,
தனித்தனியான பொலிஸ் நிலையம்,
தனித்தனியான சந்தை,
தனித்தனியான கடைகள்,
தனித்தனியான் உணவகங்கள், தேனீர்க் கடைகள்,
தனித்தனியான புத்தகக் கடைகள்,
தனித்தனியான நகைக்கடைகள்,
தனித்தனியான நூல் நிலையங்கள்
வாசிகசாலைகள்,

மருதூர் ஏ. மஜித் 79
என்றாகிப் போய்க்கொண்டிருந்தால் கடைசியில் தனித்தனிப்பாதைகள் என்றாகி ஓர் ஊரில் இருந்து பக்கத்து ஊருக்குள் போவதற்கு பாஸ் போட்டும் விசாவும் தேவைப்படும். அத்தோடு ஒரு சமுகத்தை மற்றச் சமுகம் பார்க்க முடியாத அளவு மறைப்புச் சுவர்களும் தேவைப்படும். இந்த நிலைமை நீடித்தால் உலகில் பசுமை அற்றுக் கருகி விடாதா? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.
இஃதே வேளை எனது சமுகத்தவர்களைப் பார்த்து நான் ஒன்று கூறவிரும்புகின்றேன். சும்மா தந்தாலும் கூட அடுத்த சமுகத்த வர்களின் வீடு, காணி வளவு கடை என்பவற்றை வாங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் விற்க விரும்புகிறார்கள் நீங்கள் பணத்தைக் கொடுத்து வாங்க விரும்புகிறீர்கள். ஆனால் பிரிவினைவாதிகள் இதனை முறுக்கித் திரித்து வேறாக்கி பிழையாகப் படம் பிடித்துக் காட்டித் தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள்.
முஸ்லிங்கள் தங்களின் கலாச்சாரத்தைப் பேணுவதற்காகவும் சம்பிரதாயங்களை விழுமியங்களைப் பின்பற்றுவதற்கும் வசதியாக தங்களின் பள்ளிவாயலைச் சுற்றிக் குடியிருக்க விரும்புகிறார்கள். அத்தோடு பாங்கின் ஒசை (அதான்) கேட்காத இடத்தில் குடியிருக் காதீர்கள் என்ற பெருமானாரின், பொன் மொழியைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் பக்கத்திலே குடியிருக்க விரும்புகிறார்கள்.
அதனால், பக்கத்திலே குடியிருக்கும் அன்னிய சமுகத்தவர் ஒருவர் தான் குடியிருக்கும் வீடு வளவை விற்றுவிட நினைக்கும் போது அவற்றை பக்கத்திலே குடியிருக்கும் முஸ்லிம் ஒருவர் வாங்க நினைப்பது குற்றமில்லைதான்.
"உடுத்த பிடவையை விற்றாயினும் அடுத்த வளவு விற்கவரும் போது வாங்கிக் கொள்' என்று பழமொழி உண்டல்லவா? அதனால் நல்ல விலைகொடுத்து அதனை வாங்கிக் கொள்கிறார்கள்.
விற்பவரும் தனது சமூகத்தவருக்கு இதனை விற்றால் இவ்வளவு பெறுமதிக்கு அதனை விற்க முடியாது என்பதை அறிந்தவராகவே முஸ்லிம் ஒருவருக்கு மனம் விரும்பி விற்கிறார்.
விற்ற பணத்தைக் கொண்டு தனது சமுகம் பெரும் பான்மையாக வாழும் ஒரு ஊரில் வளவு ஒன்றினை வாங்கி நல்லதொரு வீடும் கட்டி, மீதிப் பணத்தை விவசாயம் செய்வதற்கோ அல்லது வியாபாரம் செய்வ தற்கோ கையில் மூலதனமாக வைத்துக்கொள்ளலாம் இப்படியான பல நன்மைகள் கருதியே அவர் விற்கிறார். இவர் வாங்குகிறார்.

Page 94
180 மருதூர் ஏ. மஜித்
ஆனால் சம்பவம் வேறு வகையாகத் திரிக்கப்படுகிறது. அடித்துப் பறிக்கிறார்கள், வலோற்காரமாகக் குடியேறுகிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்களை முஸ்லிங்கள் மேல் சுமத்துகிறார்கள். எனவேதான் சும்மா தந்தாலும் வாங்க வேண்டாம் என்று கூறினேன். முஸ்லிங்களைப் பொறுத்தவரை இட நெருக்கடி ஏற்படும் போது தொடர் மாடித் திட்டங்களைத் தீட்டி அமுலாக்கலாம்.
சந்தை கடை போன்ற வியாபாரத் தலங்களை அமைக்கும் போது அவர்களுக்கும் இடமளித்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புங்கள். கல்முனைச் சந்தையும், கல்முனை கடைத் தெருக்களையும் மனத்தில் கொண்டே இதனை இங்கு கூறியுள்ளேன். அவர்களுடைய கோயிலை நாங்களும் எங்களுடைய பள்ளிவாயலை அவர்களும் பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது
மட்டக்களப்பிலே (பழைய) குடியிருப்புக்களை அமைக்க நினைத் தபோது எவ்வாறு ஒருவர்க் கொருவர் ஒற்றுமையாகச் செயல் பட்டோமோ அஃதேபோல எதிர்காலத்திலும் ஒற்றுமையாக வாழ வழி அமைக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் அரசியல்வாதிகளும் மிக மிகக் கவனமாக இருந்து ஒற்றுமைக்கு வித்திடவேண்டும்.
இதனை மனத்தில் கொண்டுதான் எதிர்காலத்தில் இப்படி யெல்லாம் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒன் பதாவது அத்தியாயமான "மனவருத்தமானதும் மறக்க வேண்டியது மான ஒரு அத்தியாயத்தை" எழுதினேன்.
எமது நாட்டில் கண்டியில் ஒரேயொரு புல்கலைக் கழகம் இருந்த போது இருந்த ஒற்றுமையும் செளஜன்யமும் இன்று பல பல்கலைக் கழகங்கள்- சமுகப் பல்கலைக் கழகங்கள் ஏற்பட்ட பின் இல்லாமல் போனதை எம்மால் உணர முடிகிறதல்லவா? உலகம் சுருங்கி வரும் இக்கால கட்டத்தில் சிறியதொரு நாட்டில் வாழும் எம்மிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் உலகமே எம்மைப் பார்த்துச் சிரிக்க வழியேற்பட்டு விடும்.
நடந்தவை நடத்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்,
நன்றி.


Page 95
மணிப்புவர் மருதூா