கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் 1

Page 1
நம்முன்ே அ ருஞ் ே
முதலா!
9ܬܐ ܛܠ ܝ
இலங்கைச் சரித்திரமு
500 g,
ஆக்கி ஜி. வலி. மெண்
கொழும்பு அப்போதிக்கர் 84, மெயின் விதி, பெட்ட
| ||
 
 

*னுரளித்த
b) gFai) 60 1 175
LI TIEG LTD
ம், உலக சரித்திரமும் ண்டுவரை
u
TLq sil), B.A.., Ph.D.
ஸ் கம்பெனி, லிமிற்றெட்
கொழும்பு இலங்கை
.17:4 59.
ருபாதி
“

Page 2

பா.நூ. பி. ஆ.ச./3/5 75
சான்றிதழ்
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
1952ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ந் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் உதவி நன்கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாஷைப் பாடசாலை க்ளுக்கும் ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19(ஏ)ம் பிரிவில் பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப்புத்தகம் ஆரும் வகுப்புக்கு படிப்பிப்பதற்கு ஒரு பாடப் புத்தகமாக 1972ம் ஆண்டு மார்கழி மாதம் 3 ந் திகதி வரை உபயோகித் தற்கு மகா வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(ஒப்பம்) சோமரத்ன விஜயசிங்க,
செயலாளர். பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை,
ம.சிசி,
பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை, மலாய் வீதி, கொழும்பு 2. 6.- 1970.
772-6

Page 3

நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
鄂772一6

Page 4
1954-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மறுமுறை அச்சிடப்
Ull-gil. 1954-ம் ஆண்டு ஏப்ரில் மாதத்தில் மறுமுறை அச்சிடப்
Lull-gil. 1958-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறுமுறை அச்சிடப்
பட்டது. 1962-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மறுமுறை அச்சிடப்
ill-gil. 1965-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறுமுறை அச்சிடப்
பட்டது. 1968-ம் ஆண்டு யூலை மாதத்தில் மறுமுறை அச்சிடப்
• التقى الا لا 1969-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறுமுறை அச்சிடப்
lull-gil.

நம்மு ன் ைேர விரித்த அருஞ் செல்வம்
முதலாம் பாகம்
இலங்கைச் சரித்திரமும், உலக சரித்திரமும் 1500 ஆண்டுவரை
ஆக்கியவர்: ஜி. வி. மெண்டிஸ், B.A., Ph.D.
பிரசுரிப்பாளர்: கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற்றெட் 84, மெயின் வீதி, பெட்டா, கொழும்பு, இலங்கை.
969

Page 5
இலங்கைக் கல்வி பிரசுர சபையினுல் அங்கீகரிக்கப் பெற்றது
கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற்றெட் அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப்பெற்றது

அணிந்துரை
இலங்கை மிகப்பழைய சரித்திரமுடைய ஒரு தேசம். அதன் புராதன சரிதம் ‘மகாவம்சம்’ என்ற பாளி நூலில் கூறப்பட்டிருக்கிறது. சம்பவங்கள் நடைபெற்று அநேக ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டதினல், அந்நூலில் கூறப் பட்டுள்ள விஷயங்களுள் சரித்திரப்பூர்வமானவை இவை, சம்பிரதாயத்தை ஒட்டிப் புனைந்து கூறப்பட்டவை இவை யென்று பிரித்துக் கூறுவது சுலபமல்ல. சில சந்தர்ப்பங் களில் அது முடியாத காரியமென்றுங் கூறலாம். இலங் கைச் சரித்திரத்தில் ஐரோப்பிய சரித்திர காலத்துக்கு முற்பட்ட சம்பவங்களை சரித்திர முறைப்படி ஆராய்ந்த ஆசிரியர் வெகு சிலரே. அவர்களுள் டாக்டர் மென் டிஸ் ஒருவராகும். கூடுமான இடங்களில் அவர் சரித் திரமிது, புனைந்துரை யிஃதென்று வெகு திறமையாய் ஆராய்ந்து கூறுவதுடன் பிரித்துக் கூறமுடியாத சில சரித்திரப்பிரச்சினைகளுக்கு நியாயமான விளக்கவுரைகளை பும் குறிப்பிடுகின்றர். இவரது சாதுரியமான ஆராய்ச்சி முறை வாசிப் போர்க்கு மிகப் பயனளிக்குமென 6 எண்ணுகிறேன்.
இதுகாறும் இலங்கையைப்பற்றி எழுதப்பட்ட சரித் தி நூல்கள் பலவற்றேடு இதனை ஒப்பிடும்போது இந் நூலாசிரியர் எவ்வெவ் விஷயங்களை நீக்கியுள்ளார், எவ் வெவ் விஷயங்களைப் புகுத்தியுள்ளார் என்பதை வாசகர் கள் விசேஷமாய்க் கவனிக்க வேண்டுகிறேன். சரித்திர வரலாற்றில் பிறப்புற்று விளங்காத அநேக அரசர்களின் பெயரும், அரசிகளின் பெயரும் நீக்கப்பட்டிருக்கின்றன. 11 ம்பரை யாகக் கொண்டாடப்பட்ட காரணத்தைக் கொண்டும், சில சந்தர்ப்பங்களில் அவர்களது துர்நடத் தையை வியாசமாகக்கொண்டு சில முக்கியமில்லாத பெயர்கள் ஒரளவுக்குச் சேர்க்கப்பட்டே யிருக்கின்றன. புராதன காலத்து மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்
V

Page 6
vi
தினர் எவ்வாறு ஆட்சி புரிந்தனர்; சிங்கள, தமிழ்ச் சாகியத்தவர்க்கு இன்றும் ஆதாரமாயுள்ள பொருளா தார நிலைமை எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்தது என்ற விஷயங்களை இவ்வாசிரியர் சேர்த்திருக்கின்ருர், இதனல் இக்காலத்துச் சிறந்த முறைப்படி இலங்கைச் சரித்திரத்தையும் கற்க அவகாசமேற்படுகிறது. இத் தகைய ஆராய்ச்சிமுறை இதுவரை எழுதப்பட்டுள்ள இலங்கைச் சரித்திர நூல்களிற் காணப்படாமையால், இப்புது முறையைப் பரப்ப முன்வந்ததற்காக இவ்வாசிரி யரை நான் பாராட்டுகிறேன்.
ஆசிரியர், மாணவர் ஆகிய இருபாலாரும் இந்நூலை ஊன்றிப்படிக்கத் தொடங்குமுன், கீழ்த்திசை உலக அரைக்கோளத்தின் தேசப்படத்தையும், பிரதானமாக கடற்பாதைகள் சம்பந்தப்பட்டமட்டில் இலங்கை எங் 1%னம் அமைந்துள்ளதென்பதையும் நன்கு நோக்குதல் வேண்டும். பல நாட்டுக் கப்பல்களும் வந்து தங்குவதற் கும், கீழ்த் திசை யிலிருந்தும் மேற்றிசையிலிருந்தும் கொண்டு வரும் வியாபாரப் பொருட்களைப் பண்டமாற்றுச் செய்வதற்கு ஒரு பr *திய பண்டகசாலைபோலவும் இலங்கை அக்காலத்தில் அமைத் திருந்ததெனலாம், மிகப் பழங்காலந் தொட்டே, கிழக்.ே சீன, மலாய தீபகற்பம், கிழக்கிந்திய தீவுகள் ஆகியவ, ருேடும், மேற்கே பார சீகம், அராபியா, கிழக்கா பிரிக்கா முதலிய தேசங்களோ டும், ஐரோப்பாவோடுங்கூட இலங்கை தொடர்பு பூண்டி ருந்தது. இவ்வாருண் தொடர்பைப்பற்றிக் கூறும் பழைய சரித்திரக் குறிப்புகளில்லாதது நமது துரதிஷ்டமே. * மகாவம்சம்' இவற்றைப்பற்றிக் கூரு ததற்குக் காரண முண்டு. அந்நூல், இலங்கையில் பெளத்த சமய வளர்ச் சியின் சரித்திரத்தையே பெரிதும் கூறுகின்றது. வியா பார விஷயங்களில் அதன் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வில்லை. பாஹியான், இபின் பட்டுட்டா போன்ற யாத் திரிகர்கள் தமது இலங்கை அனுபவத்தைப் பற்றி எழுதி யிருக்கிருர்கள்.

Wii
இவர்களைப்போல அநேக யாத்திரிகர்கள் இலங்கைக்கு வந்த போதிலும், அவர்கள் குறிப்புக்கள் கிடைக்க வில்லை. இலங்கைச் சிருர் இந்த யாத்திரிகர்களுடைய காய்நாடுகளைப் பற்றியும் அறிந்திருப்பது நல்லது. மேலும் இலங்கையுடன் என்றும் தொடர்பு கொண் டிருந்த இந்திய தேசத்தின் சரித்திரத்தை அறிவதும் இன்றியமையாததே. இந்நூலாசிரியர் இலங்கைச் சரித் திரத்தையே பிரதானமாகக் கூறினலும், இலங்கை சம்பந் தப்பட்ட வரையிலுள்ள உலக சரித்திரத்தையும் பிரதானமாக இந்திய சரித்திரத்தையும் கூறுவதினுல், வாசிப்போருடைய சரித்திரக் காட்சியை விசாலப்படுத்த முயன்றிருக்கிருர்.
இதனல், இந்நூல் வாசிப்போருக்கு உற்சாக மூட்டக் கூடியதாயிருப்பதுடன் நல்ல ஆராய்ச்சி முறையைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. இந்நூலை எல் லாரும் ஆதரிப்பார்களென நம்புகிறேன்.
எஸ். ஏ. பேக்மன், இலங்கை பல்கலைக்கழகப் பேராசிரியரி,

Page 7

இரண்டாம் பதிப்பின் முகவுரை
சென்ற வருடம் வித்தியா பகுதியாரால் விடுவிக்கப் பட்ட புதிய சரித்திரப் பாடத்திட்டத்துக்கிசைய இவ் விரண்டாம் பதிப்பில் சில மாற்றங்களை உண்டாக்கியிருக் கிறேன். பல பகுதிகளில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய காலத்து இங்கிலாந் தைப் பற்றியும் ஓர் அத்தியாயம் புதிதாய் எழுதப்பட்டி ருக்கிறது. மேலும், முதலாம் பதிப்பில் சேர்க்கப்படாத பல தேசப்படங்களும், சித்திரங்களும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்நூலின் இரண்டாம் பாகத்தை மிகச்சிறப்பாக மொழி பெயர்த்துதவிய, நவாலியூர், திரு. சோ. நடரா ஜன் இப்பகுதியையும் மொழிபெயர்த்திருக்கிருர்,
ஜி. வி. மெண்டிஸ். தெஹிவளை, 1939.
8772-1

Page 8

முதலாம் பதிப்பின் முகவுரை கி.பி. 1500 ஆண்டுவரையுள்ள இலங்கைச் சரித் திரத்தின் முக்கியமான சம்பவங்களை சிறுவர்க்கேற்ற முறையில் கூறி, உலக சரித்திரத்திலும் அவர்கள் சிரத்தை கொள்ளச்செய்வதே இச்சிறு நூலின் நோக்கமாகும். இலங்கை சம்பந்தப்பட்ட உலகின் ஏனைய தேசங்களின் சரித்திரங்களும், அத்தேசங்களின் நாகரிக வரலாறும் சுருக்கமாக இங்கு கூறப்படுகிறது. இலங்கையுடன் நேரான தொடர்பு பூண்டுள்ள தேசங்களின் சரித்திரங் களைப்பற்றி விசேஷ கவனஞ் செலுத்தியிருக்கிருேம். இந் நூல் எழுதப்பட்டது சிறுவர்க்காதலின் உலக சரித்திரத் தைப்பற்றிய ஒரு விசாலமான அறிவைக்கொடுப்பதற்கு இங்கு முயற்சி செய்யப்படவில்லை. காலக்கிரமத்தை யொட்டி அந்நிய தேசங்களின் சரித்திரம் புகுத்தப்பட வில்லை. இலங்கைச் சரித்திரத்தோடு மற்றத் தேசங்கள் சம்பந்தப்படும் காலத்தில் அவற்றின் சரித்திரத்தையும் விவரித்திருக்கிருேம்.
இயன்ற மட்டில் இந்நூலில் சரித்திரபூர்வமான விஷ யங்களே கொள்ளப்பட்டிருக்கின்றன. கர்ணபரம்பரை யான கதைகளும், புனைந்துரைகளும், அவை எவ்வளவு சுவாரசியமாயிருந்தபோதிலும் ஒதுக் கப்பட்டிருக்கின் றன. ஆனல், சில சரித்திர ரீதியான சம்பவங்களை விளக்குவதற்கும், சரித்திரத்தை தெளிவாய் விளங்கு வதற்கனுகூலமான சில விஷயங்களை மனதில் பதிப்பதற் குமான வில கதைகள் மாத்திரம் அனுசரிக்கப்பட்டிருக் கின்றன.
பலர் இந்நூலைப்பற்றி அரிய குறிப்புகளைக் கூறியதற் காக அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறேன். இவர்களுள் விசேஷமாக திரு. எல். மக், டி. ரொபிஸன், சங், டி.
ஜே. நிக்கலஸ் பெரேரா, சங். எப். கிங்ஸ்பெரி, புத்த
xi

Page 9
xii
தத்த தேரஸ்வாமி, திரு. சி. வி. பெரேரா, திரு. டி. பி. ஐயா, திரு. ஆர். ஜே. எப். மெண்டிஸ், பேராசிரியர் எஸ். ஏ. பேக்மன் ஆகியோருக்குக் கடமைப்பட்டிருக் கிறேன். இந்நூலுக்கு ஒர் அணிந்துரை உதவியதற்காக வும் பேராசிரியர் எஸ். ஏ. பேக்மனுக்கு மீண்டும் நன்றி யறிதலைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஜி. வR. மெண்டிஸ்.
* மரியன் குடிசை
தெஹிவளை,
1 - 7-35.

பொருளடக்கம்
அணிந்துரை e இரண்டாம் பதிப்பின் முகவுரை XA 3
முதலாம் பதிப்பின் முகவுரை . . ...
அத்தியாயம்
பூர்வகால மனிதனின் சரித்திரம்
1. வேடர். 2. கற்காலமும் உலோக காலமும், 3. பபிலோனியாவும் எகிப்
தும்.
ஆரியர் as ● 影 1. சிங்களர். 2. ஆரியர் புலம்பெயர் தல். 3. * மகாபாரதம்’-இராமா யணம்’. 4. சிங்களரின் செல்வாக்கு.
பெளத்த சமயம்
1. கெளதம புத்தர். 2. அசோகன். 3. இலங்கைக்குப் பெளத்த சமயம் வந்த வரலாறு. 4. பெளத்த சமயத் தினல் இலங்கையடைந்த நன்மை.
தமிழரின் படையெடுப்பு-பெளத்த
& Lou to பரவுதல் 1. துட்டகெமுனு. 2. வலகம்பா. 3. தென்னிந்தியா,
குளங்களையும் ஏரிகளையும் வெட்டுதல்; மகாயான பெளத்த சமயத்தின்
ருகை 1. வ ச பன் . 2. மகா சேனன், 3. நாகார்ச்சுனன் : மகாயான பெளத்த
சமயத்தினுல் இலங்கையிலேற்பட்ட tott gyá56v s6ír.
xiii
Χ
பக்கம்
4
99.

Page 10
xiv
அத்தியாயம் பக்கம்
VI. கிரீஸ், உரோம் ... 57 1. கிரேக்கர். 2. சோக்கிரதீஸ் . 3. மகா அலெக்சாந்தர். 4. தலமி. 5. உரோமர். 6. ஓகஸ்தசு சீசர். 7. ஜஸ்டினன்.
VII, இந்தியாவில் குப்தர் ஆட்சியும் இலங்கையில் அவர்கள் செல் வாக்கும் . . O 8.
1. கீர்த்தி பூரீ மேவன். 2. சமுத்திர குப்தன். 3. காளிதாசர். 4. புத்த கோசன். 5. தாதுசேனனும், காசி
யப்பனும்,
VII, மத்தியகால இலங்கை . . 9 ፀ
1. அரசியல் முறை. 2. மக்களின்
வாழ்க்கை.
X. சீனரும் பாரசீகரும் . ... 104
1. பாஹியான். 2. சீன. 3. ஜப்பானிய தேசோத்தாரண வீரன் ஷொட்டேகு. 4. LurgT83*5 ilir.
X. இந்து மதமும் இஸ்லாமும் ... l l 4 1. முகம்மது. 2. அரூன்-அல்-ராசிட். 3. நரசிங்கவர்மனும் இராசராசனும், 4. இந்து சமயம்.

XV
அத்தியாயம்
XI.
XII.
X.
XIV.
At ' '
பொலன்னறுவை ய ர சர்களும் அ வர் களி ன் அ ய ல் நாட்டுத்
தொடர்பும் 1. முதலாம் விஜயபாகு. 2. மகா பராக்கிரம பாகு, 3. நிஸங்கமல்ல
னும் களிங்கமாகனும். 4. பரதகண்
டமும் கிழக்கிந்தியத் தீவுகளும். 5. மூன்று பர்மிய அரசர்கள்.
சிங்கள இராச்சியத்தின் வீழ்ச்சி
1. இரண்டாவது பராக்கிரமபாகுவும் சந்திர பானு வின் படை யெடுப்பும். 2. பாண்டியர். 3. நான்காம் புவனேக பாகுவும் அளகக்கோஞராவும். 4. ஆருவது பராக்கிரமபாகு.
இரு பெரும் யாத்திரிகர்கள்
1. சிலுவை யுத்தங்கள். 2. மார்க்கோ போலோ. 3. குப்ளாகான். 4. இபின் பட்டுட்டா. 5. முகம்மது இபின் து க்ல க், 6. விஜயநகர இராச்சியம்.
மத்திய காலத்தில் இங்கிலாந்தின்
நிலைமை p * Ab 89 r. O 1. ஆரம்ப வரலாறு. 2. குறுநில மன்னராட்சி. வியாபார விருத்தி.
3. உரோமன் கத்தோலிக்க திருச் சபை. 4. மத்திய காலத்தில் ஆங் கிலர் நடத்திய சண்டைகள்.
அட்டவணை-கி.பி. 100 வரை
வி ஞ)க்க sfr 8 v& to
Lidast
126
4
157
17
8

Page 11

சித்திரப்படங்கள்
பக்கம் 1. வேடர்களின் குகை 2 2. சிப்பிகளும் கற்றுண்டுகளும் . . - 4. 3. படியகம்பளையிலுள்ள ஒரு கற்சமாதி . . 7 4. எகிப்திலுள்ள பிரமீதுக்கள் 1 0 5. பபிலோனியரின் களிமண் புத்தகம் 8 w 6. எகிப்தியரின் சித்திர ரூப லிபிகள் 7. இராவணன் 8 20 8. மத்திய இந்தியாவில் சாஞ்சி என்ற தேசத்தி
லுள்ள தாதுகோபத்து வாயில் 28 9. சிங்கள லிபி வளர்ச்சியுற்ற முறை 33 10. சசஜாதகக் கதை . is 35 11. மாயாதேவி கண்ட கனவு a s 37 12. அபயகிரி விகாரம், அனுராதபுரம் 45 13. ஏட்டுச் சுவடி - a 46 14. மின்னேரியாக் குளம் . 5 مد. 15. குஷ்டராஜனின் உருவம் 55 16. கிறீட்டரின் சிற்ப மண் பாத்திரம் a 57 17. புராதன கிரேக்க கட்டிடம் . . - 58 18. சோக்கிரதீஸ் w us - 65 19. மகா அலெக்சாந்தர் . . 68 20. சிரியாவில் உரோமரின் வீதி . . v 72 21. ஒர் உரோம போர் வீரன் p. 7 Ο 22. ஹனிபால் w 0 8 7A 23. ஒகஸ்தசு சீசர் w v a 76 24. யூதப் போதகர்கள் s o 77 25. சிங்களன் கப்பல்விட்டிறங்குதல் 28. அனுராதபுரம், இஸ்ருமுனியிற் காணப்படும்
ஆண், பெண் உருவங்கள் . . O 6 27. )6)furt h 9. 28, சிகிரியா குகைச் சித்திரங்கள் 94
χνίί

Page 12
29.
30.
31.
32.
33.
94.
35.
36.
37.
38.
89.
40,
41.
丝2。
43.
44。
《5。
46.
《7。
48。
玺9,
50.
5.
52.
சீனுவிலுள்ள பெருஞ் சுவர் . O-O தாய்சிங்-தாங் வமிசத்து சக்கரவர்த்தி பராஸிகரின் சிலுவை, அநுராதபுரம் balla
ஒரு மசூதி da) மனிதனின் தலையும் குதிரையின் தலையும்,
கெடிகே கட்டிடம், நாலந்தா an இரண்டாம் சிவாலயம், பொலன்னறுவை கந்தலாவிலுள்ள விஷ்ணு சிலை
6? GD5 L u Go L- d o On P. பராக்கிரமபாகுவின் பாழடைந்த மாளிகை இலங்காதிலக விகாரை, பொலன்னறுவை
கிரி விகாரை, பொலன்னறுவை و منسه
ஷிவேஸிகான் பகோடா யாப்பஹ"வா கற்பாறை da பொலன்னறுவையிலுள்ள முதலாவது
சிவாலயம் as 0. a wo கழ்பளைக்குச் சமீபத்திலுள்ள இலங்காதிலக
விகாரை O O. P. - A சிலுவை யுத்தத்தில் கிறிஸ்தவருக்கும் துருக் கியருக்குமிடையில் நடைபெறும் ஒரு சண்டை . . மார்க்கோ போலோவின் தந்தையும் மாமனும் போல்லின் சக்கரவர்த்தியைச் சந்திக்கும் காட்சி கடலதெனியா விகாரை மகா அல்பிரட் புராதன மானியகாலக் கோட்டை ஒர் ஆங்கிலேய வில்வீரன் மத்திய காலத்து ஒரு நகரம் மத்திய காலத்துச் சன்னியாச மடம்
53. பாப்பாண்டவர் 0 ed
பக்கம்
08
99
2
6
9
20
2.
24
27
H 3 Ι.
35.
五37
卫4&
46
1 5 Ꭴ
5.
59
Η 6
7
73
74
175
177
30
8

7
0.
1.
12.
தேசப்படங்கள்
இந்தியா en P ba
இலங்கை O oses Chris மத்தியதரைக் கடல் அலெக்சாந்தரின் பாதை a 0 bதலமியின் தேசப்படம் e - O O - is உரோம இராச்சியத்தின் விஸ்தீரணம் . சிகிரியாவின் அமைப்புப் படம் பாஹியானின் பாதை பொலன்னறுவையில் 'பராக்கிரமக் கடல்"
என்னும் பெருங்குளம் O • سه• தூர கீழ்த்திசை நாடுகள் யாப்பஹ"வா
கோட்டை -
மார்க்கோ போலோவின் பாதை x-r
Lu & 95 Lb
26
41
60
67
69
78
OO
OS
33
40
卫4&
154
16

Page 13

முதலாம் அத்தியாயம்
பூர்வகால மனிதனின் சரித்திரம்
1. வேடர்
இலங்கையில் வடமத்திய மாகாணத்திலும், கீழ் மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய பகுதிகளிலுமுள்ள காடுகளில், அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்கும் சிறுசிறு கிராமங்களில் வேடர் என்ற ஒரு வகைச் சாதியினர் வாழ்ந்து வகுகின்றனர். இவர்கள் கம்புகளாலும் மண்ணினுலும் கட்டப்பட்ட குடிசைகளில் வசிப்பர். நிலத்தைப் பண்செய்து நெல் முதலிய தானியங்களைப் பயிரிடுவர். கிராமங்களில் வசிக்கும் சிங்களரைப்போல வோ அல்லது தமிழரைப்போலவோ உடையணிந்து அவர்களது பாஷையையே பேசுகிருர்கள். தம்முள் விவாகஞ்செய்து இல்லறமும் நடத்தி வருகின்றனர். இவர்களிற் சிலர் கமஞ் செய்ய விரும்பாது வேட்டை யாடுவதையே தமது தொழிலாகக்கொண்டிருக்கின்ருர் கள். ஏனையோர், பெரும்பாலும் சிங்களர், தமிழரைப் போலவே சீவியம் நடத்தி வருகிறர்கள்.
ஆணுல், பண்டைக்காலத்தில், அதாவது சிங்களர் முதன்முதல் இலங்கைக்கு வந்த காலத்தில், இவ் வகுப் பார் வேட்டை யா டு தலையே தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மான், பன்றி முதலிய பெரிய மிருகங்களையும், முயல் முதலிய சிறு பிராணிகளையும் அம்பி ஞல் எய்து, அவற்றின் மாமிசத்தை உண்டு உயிர்வாழ்ந்த னர். வேட்டையாடுவதையே சீவனுேபாயமாகக் கொண் டிருந்ததால் அங்கு குடியேறிய சிங்களர் இவf களை வேடர் எனப் பெயரிட்டழைத்தார்கள். இவ்வேடர்
8772-2

Page 14
2 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தம்மை எப்பெயர் கொண்டழைத்தனரோ தெரிய வில்லை. ஆயின் சிங்களர் கொடுத்த பெயரே இதுவரை இவர்களுக்கு வழங்கி வரலாயிற்று.
இவ்வேடருக்கும் தங்களுக்குமிடையில் வேறு பல வித்தியாசமிருந்ததையும் புராதன சிங்களர் கவனித் தார்கள். இவ்வேடர்கள் உருவத்திற் சிறியராயும், குறுகிய தோற்றமுடையராயும், நீண்ட தலையும் சப்பை மூக்கும், சுருள் மயிரும் உடையராயும் காணப்பட்டார்
வேடர்களின் குகை
கள். ஐந்தடி வளர்ந்தவர்களை இவர்களிடை காண்ப தரிது. அன்றியும், இவர்கள் குடிசையில் வசியாது, குகைகளில் வாசஞ்செய்த னர். பஞ்சினல் நெய்த உடை யை அறியார். இலைகளையும் மரவுரிகளையும் அணிந்து வந்தனர். சிங்களரைப்போலப் புத்த சமயத்தை அனுட்டிக்காது, தென்புலத்தார் வழிபாட்டையே மேற்கொண்டிருந்தனர். இக்காரணங்களை முன்னிட்டு வேடர் என்ற சொல், தொழில்பற்றி எழுந்த பாகு
 

வேடர்
பாட்டைக் குறிக்காது, நாளடைவில் நடை, உடை, பாவனை, சமயானுட்டானம், பழக்கவழக்கம் முதலிய வற்றில் சிங்களரிலும் வேறுபட்ட இவ்வகுப்பாரையே குறிப்பிடுவதாயிற்று.
தமக்கும் வேடருக்குமிவ்வாறு வேற்றுமை இருப் பதற்குரிய காரணத்தை பண்டைய சிங்கள மக்கள் தங்கள் நூல்களில் தெளிவாக எடுத்துக் கூறவில்லை. விசயனும் அவனது கூட்டாளிகளுமே இலங்கைக்கு முதன்முதல் வந்த மனித ரென்றும், அவர்களது சந்ததி யாரே சிங்களராகிய தாமெனவும் கூறிக்கொண்டார் கள். அவ்வாருயின், இவ் வேடர் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. புராதன சிங்களரே விசய னின் சந்ததியாரென்றும், வேடர்கள், விசயன் மணஞ் செய்த இயக்கியாகிய குவேனிக்குப் பிறந்த இருவரின் வழித்தோன்றல்களென்றும் ஒரு சமாதானத்தைப் புரா தன சிங்களர் கூறினர். இக்கதை ஆராய்ச்சிக்கேற்ற தன்ருயினும் அக்காலத்துள்ளோர் இதை நம்பிவிட்டார் கள். ஆனல், இக்காலத்தில் மனித சாதியாரைப் பற்றி பலவிதமான ஆராய்ச்சிகள் மலிந்திருத்தலால் நம்மைப் போல அக்காலத்தவரும் ஆராய்ந்து உண்மையறியா திருக்க நேர்ந்தது வியப்பன்று. சிங்களர் ஒரு சாதியார், வேடர் அவரில் மாறுபட்ட பிறிதொரு சாதியாரென் பதையறிந்தால், இவ்வித்தியாசங்களுக்குரிய காரணம் புலனுகும்.
வேடர் என்னும் இச்சாதியார் மிகப்பழைய காலந் தொட்டே, தென்னிந்தியாவில் இருந்து வந்தார்கள் சிங்களர் இலங்கைக்கு வருதற்குப் பல்லாயிரம் ஆண்டு கட்கு முன்னரே அவர்கள் இலங்கையில் வந்து குடியேறி னர். இன்று நீரினல் சூழப்பட்ட தீவாய்க் காணப்படும் இலங்கை, அக்காலத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நிலப்பரப்பாயிருந்தது. இப்போது தனுஷ்கோ டி க்கும் தலைமன்னருக்குமிடையில் கடலில் பாறைத் தொ. (1 கக் தோன்றும் 'இராமர் அணை அக்காலத்தில் தரையாகவே யிருந்தது. ஆகவே, தோணி மரக்கலம் முதலிய

Page 15
4. நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வற்றின் துணையின்றியே தென்னிந்தியாவிலிருந்த வேடர் நிலப்பாதையாக இலங்கைக்கு நடந்து வந்து சேர்ந்தார் கள்.
இவ்வாறு இடம் பெயர்ந்த வேடர்கள், அம்பு வில்லின் துணைகொண்டு, மான், கரடி முதலிய மிருகங் களைக்கொன்று உயிர் வாழ்ந்தனர். அவர்களிடத்து துப்பாக்கி, கோடரி, கக்தி முதலிய இரும்பினலாகிய இக்காலக் கருவிகள் இருக்கவில்லை. கரடுமுரடான கற் களிஞலான சம்மட்டிகளையும், வெட்டுதற்கான கூரான
சிப்பிகளும் கற்றுண்டுகளும்
முனைகொண்ட கற்றுண்டுகளையும், துருவுதற்குதவியான சிப்பிகளையுமே அவர்கள் ஆயுதமாக உயயோகித்தனர்.
இவ்வாயுதங்களைக் கொண்டு,  ெப ரி ய மரங்களை வெட்டி வீழ்த்தவோ, நல்ல வீடுகளைக் கட்டிக் குடியிருக்க வோ இயலாது. எனவே, தக்க பாதுகாப்பின்றி புலி, கரடி முதலிய மிருகங்களின் தொந்தரவுக்காளாகிக் கஷ்ட சீவியம் நடத்தி வந்தார்கள்.
இவ்வேடரின் குழந்தைகளும் பெற்ருே ரைப்போலவே கல்வி கேள்வியறிவின்றி, குகைகளிற் காலங்கழித்தனர்.
 

கற்காலமும் உலோககாலமும்
படிப்பதற்கு இவர்கட்குப் பாடசாலையே கிடையாது. வயதான ஆண்பிள்ளைகள் ஏனையோருடன் கூடி வேட்டை யாடும் முறைகளைப் பயின்றர்கள். பெண்சிறர் குகை களிற் தங்கி கிழங்கு கல்லி எடுப்பதிலும், வேட்டை யாடப்பட்ட மிருகங்களின் மாமிசத்தைப் பக்குவம் பண்ணுவதிலும் தம் தாய்மார்க்கு உதவி புரிந்தனர்.
11. கற்காலமும் உலோககாலமும்
சரித்திரம் என்பது மனிதன் இவ்வுலகில் தோன்றி வாழ்ந்த கதையைக் கூறுவது. ஆதலால், மனிதனுடைய கதை நீண்ட கதையாகவேயிருக்கும். ஒரு 5iTԱ வருஷத்துக்கு ஒருவன் இப்பூமியில் வாழ்ந்து மடிந்து போஞல், அவன் நெடுநாள் வாழ்ந்துவிட்டானெனக் கூறுகிருேம், ஆனல், மனிதன் இந்தப்பூமியில் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடுவதற்கே பல ஆண்டுகள் செல்லும்.
மனிதனுடைய ஆதி வரலாற்றைப்பற்றி நாம் அறிந் திருப்பது மிகமிகச் சிறிது. ஆதியில் மனிதன் எங்கே தோன்றினுன், பின்னர் எங்கே புலம்பெயர்ந்து சென் ருன் என்னும் விஷயங்களைப்பற்றித் திட்டமாகக் கூறு வதற்கில்லை. மனிதனும் ஆதியில், காட்டு மிருகங்களைப் போலவே, வயிற்றுக்கு உணவு தேடி இங்கும் அங்கும் அலைந்திருக்கவேண்டும். வீடு என்பதே கிடையாது. குகைகளிலும், ஒதுக்கான பாறைகளின் கீழும் அவன் பதுங்கியிருந்திருப்பான். உ  ைட யி ன் றி, குளிரிஞல் நைந்து, தன்னைக்காப்பாற்ற ஆயுத மின்றிக் காட்டு மிரு கங்களுக்குப் பயந்துகொண்டே காலங்கழித்தான்.
சிறிது சிறிதாக மனிதனுடைய விவேகம் மலர்ந்தது. கொடிய மிருகங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற் குச் சில ஆயுதங்களை உபயோகித்தல் நலமென அவனுக் குத்தோன்றிற்று. இவ்வாறு ஆலோசனை செய்து வந்த நாளில், ஒரு யுக்தி உதயமாயிற்று. நகங்களையும் பற் களேயும் காட்டி எதிர்த்துவரும் ஒரு மிருகத்தின்மீது ஒரு தடியினுல் அடித்தோ, பெரிய கல்லால் எறிந்தோ அதைச் சுலபமாய் எதிர்த்துவிடலாமென அவன் எண்ணிஞன்.

Page 16
{6 · நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இப்புராதன மனிதன் முதன்முதல் கண்டுபிடித்த பெரிய காரியம் நெருப்பு உண்டாக்கும் முறையாகும். இதனை முதன்முதற் கண்டறிந்தவரை அவர்கள் ஒரு மேதாவியாகவே கருதியிருப்பார்கள். இஃதெவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தென்பதைப் பற்றிக் கூறமுடிய வில்லை. ஒரு வேளை, அவன் கற்களை ஒன்ருே டொன்று மோத, அதிலிருந்து கிளம்பிய பொறி பக்கத்தே உலர்ந்து கிடந்த சருகில் பற்றி நெருப்புண்டாயிருக்கலாம். அஃதெங்ங்னமாயினும், அவன் நெருப்பின் உதவியால் உணவு சமைக்கவும், காட்டு மிருகங்களைப் பயமுறுத்த வும் கூடியதாயிருந்தது.
பல்லாயிரமாண்டுகள் கழிந்த பின்னர், அவன் இன் ஞெரு விஷயத்தைக் கண்டுபிடித்தான். அதாவது, சக்கி முக்கிக் கற்களைக்கொண்டு ஆயுதங்களையும் கருவி சளையும் செய்யலாமென அவனுக்குத் தொற்றியது. எனவே, கல்லினுல் சம்மட்டிகளையும், கத்திகளையும், செய்தான். ஆணுல், இவ்வுபகரணங்களால் அதிக பயன் ஏற்படவில்லை. கற்களாலியன்ற இவ்வாயுதங்களையும் கருவிகளையும் மனிதன் உபயோகித்த காலத்தையே சரித் திரத்தில் பழைய கற்காலம் என வழங்குவர். இது நெடுங்காலம் நிலவி வந்தது.
இதற்கடுத்த சரித்திரகாலப் பகுதியை புதிய கற் காலம் எனக் கூறுவர். கற்கருவிகளும் ஆயுதங்களுமே இப்புதிய கற்காலத்திலும் உபயோகிக்கப்பட்டபோதி லும், ஒரு மாறுதல் காணப்பட்டது. புதிய கற்காலத் தில், கற்களை நன்ரு கச் செப்பனிட்டு, அழுத்தமான கோடரிகளையும், வாள் முதலிய வற்றையும் உண்டாக்கி னர். இத்தகை ஆயுதங்களைச் செய்யக் கூடியவர்கள், முன்னையோரிலும் சீர்திருத்தமுற்ருர்கள் என்பதில் ஐய மில்லை. புதிய கற்கால மனிதர், சில சமயங்களில், இறந் தாரைப் புதைப்பதற்கு கல்லறைகள் சமைத்தனர். அக் கல்லறைகள் மீது ஞாபகச்சின்னமாக கற்றுரண்களை தாட்டினர். அல்லது தூண்களை நாட்டித் தட்டையான நெடும் பாறைக் கல்லை அத்தூண்கள் மீது ஏற்றி, நினை வுக் குறிகளை உண்டாக்கினர்.

கற்காலமும் உலோக காலமும் 7
இதன் பின்னர் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதன்முதற் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு; கல்லினல் செய்வதைவிட செம்பினல் கூரிய ஆயுதங் களேச் செய்யலாமென்பதை மனிதன் அறிந்தான். ஆனல், செம்பு அவ்வளவு கடினமான உலோகமல்லாத படியால், அதனல் இயற்றப்படும் ஆயுதங்களால் வைர மானவற்றை வெட்டமுடியாமலிருந்தது. வெகு காலம் கழிந்த பின், செம்பையும் தகரத்தையும் கலந்து உருக்கு வதால், வெண்கல மென்னும் உலோகத்தைப் பெறலா
ళ్ల
படியகம்பளையிலுள்ள ஒரு கற்சமாதி
மெனவும், அதனல், முந்தியவற்றினும் பலமான ஆயுதங் களைச் செய்யக்கூடுமெனவும் அறிந்தான். ஆனல், இன் றும் பல காலத்துக்குப்பின் இரும்பின் உபயோகத்தை மானிடர் கண்ட பின்னரே சிறந்த ஆயுதங்கள் செய்யப் பட்டன. இரும்பைப்போலப் பலமான உலே காய் கிடையாதாதலின், இயந்திரங்களெல்லாம் இரும்பிருை லேயே செய்யப்பட்டு வருகின்றன.
ஆதியில் மனிதன் எவ்வாறு சீவியம் நடத்திகுறன் என் பதைப்பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆறல்,

Page 17
நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய தேசங்களில் இக்காலத்தில் கூட, பல புராதன சாதியார் வாழ்ந்து வருகின்ருர்கள். இவர்களுடைய பழக்கவழக் கங்களையும், வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்தால், ஒரளவுக்காவது ஆதி மனிதரைப்பற்றிய சில வரலாறு களைத் தெரிந்துகொள்ளலாம் கற்கால மனிதரைப்பற்றிக் கொஞ்சமாவது அறிந்துகொள்வதற்கு, நூதன சாலை களில், இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அக் காலத்து ஆயுதங்கள் துணைபுரிகின்றன.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கற்கருவி கள் மிகக் கரடுமுரடானவை. ஆதலின், அவை பழைய கற்காலத்தையே சேர்ந்தவையெனக் கூறவேண்டியிருக் கிறது. மேலும், இவ்வாயுதங்கள் வேடர் குடியிருந்த குகைகளின் பக்கத்தே காணப்பட்டபடியால், இவற்றை உபயோகித்த வேடர்கள், பழைய கற்காலத்திலேயே இலங்கைக்கு வந்தார்களென யூகித்துவிடலாம்.
புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஆயுதங்களொன்றும் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆணுல், ரம்புக்கனைக்கு மூன்று மைல் மேற்கேயுள்ள படியகம்பளை என்னுமிடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்சமாதி ஒன்று இருக்கிறது. இதை யார் கட்டினர்கள், எப்பொழுது கட்டினர்களென்பது இன் னும் ஐயத்துக்கிடமாகவே யிருக்கின்றது.
இலங்கையில் செம்பு ஆயுதங்களை உபயோகப்படுத் திய செம்பு காலமாவது, வெண்கலக் கருவிகளைப் பயன் படுத்திய வெண்கலக் காலமாவது இருந்திருக்கவில்லை. வேடர் இலங்கைக்கு வந்த பல காலத்துக்குப் பின் சிங்க ளர் குடியேறினர். இவர்கள், இரும்பினலேயே கருவி களையும், ஆயுதங்களையும் செய்யும் நாகரிக முற்போக் குடையவராயிருந்தனர்.
11. பபிலோனியாவும் எகிப்தும்
மனிதன் உபயோகித்த கருவிகளையும், ஆயுதங்களை யும் கொண்டு அவனது வரலாற்றை ஒருவாறு ஆராய்ந் தோம், அவனது தொழில் முறையைக்கொண்டும் இன்

பபிலோனியாவும் எகிப்தும்
னுெரு விதமாக ஆதி மனிதனின் வரலாற்றை ஆராய லாம். ஆதியில் மக்கள், வேடரைப்போல வேட்டை யாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இவ் வித வாழ்க்கையினுல் அவர்கள் துரிதமாக முன்னேற்ற மடைய முடியாமலிருந்தது. மிருகங்களை வேட்டையாட வேண்டியிருந்ததால், அவை செல்லும் இடங்களெல் லாம் அவர்களும் பெயர்ந்து பெயர்ந்து செல்லவேண்டிய தாயிற்று. அதனல், நிலையான சொத்தைப் பரிபாலிக் கும் வசதியை அவர்கள் பெறமுடியாமற் போயிற்று. மேலும், வேட்டையாடுவதிலே அவர்கள் அதிக நேரத் தைக் கழிக்கவேண்டியிருந்ததால், களைத்த உடலுக்கு ஆறுதல் கொடுப்பதன்றி வேறெதையும் செய்ய அவர் கட்கு அவகாசமிருக்கவில்லை.
காலகதியில், மிருகங்களை வளர்த்து அவற்றின் பாலை யும், மாமிசத்தையும் உண்டு சஞ்சல மின்றி வாழலா மென மனிதன் கண்டான். இதை முல்லைநில வாழ்க் கையென்று கூறலாம். பசுக்காத்து கோவலராய் மணி தன் வாழ்க்கைநடத்திய காலம் இதுவே. இக்காலத்தி லும் மனிதன் புலம்பெயர வேண்டியே ஏற்பட்டது. தமது மந்தைகட்கு புதிய பசும்புற்றரைகளைக் கண்டு பிடிப்பதற்காக, இக்கோவலர் ஓரிடத்திலிருந்து இன்னே ரிடத்துக்கு மாறிமாறிச் சென்றனர். அதனல், நிலை பேருன இருப்பிடமில்லாத நிலைமையிலிருந்தார்கள். ஆனல், இவ்வித வாழ்க்கையால் அநேக நன்மையுண்டா யிற்று. உணவுக்குச் சஞ்சல மில்லாதிருந்ததுடன், மணி தன், தனது தேச சஞ்சாரத்தினல், புதியபுதிய சாதியா ரைக்கண்டு அவர்களோடு சகவாசஞ்செய்து புதிய புதிய காரியங்களை அறிந்தான்.
முல்லைநில வாழ்க்கைக்கு அடுத்ததாக அவன் நில பேருய் ஓரிடத்திலிருந்து நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்யும் மருதநில வாழ்க்கயை மேம் கொண்டான். இவ்வாழ்க்கை, நாகரிகத்தில் பலபடி முன் னேற்ற முடையதாயிருந்தது. நிலத்தைச் சொந்கமாக்கி அதில் இல்லங்களையமைத்து பதிபெயராக நிலையான

Page 18

பபிலோனியாவும் எகிப்தும்
வாழ்க்கையை நடத்தினன். தனது ஓய்வு நேரங்களில் சமயனுட்டானஞ் செய்வதிலும், உள்ளத்தைப் பண் படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டான். இவ்வாறன வாழ்க்கை நடத்திய பண்டை மக்கள் பபிலோனியா, எகிப்து, சீன, வடமேற்கு இந்தியா ஆகிய தேசங்களில் ஏறக்குறைய கி. மு. 4,000 ஆண்டு வரையில் வாழ்ந்து வந்தனர்.
யூபரேத் திசு, தை கிரிசு என்ற இரு நதிகளின் பள்ளத்தாக்கில் திகழ்ந்த பபிலோன் என்ற பெரிய நகரத்தின் பெயரால் அ  ைழ க் க ப் பட்ட பபிலோனிய நாடு, சில சமயங்களில்  ெம ச ப்  ெபா த் தேமியா என்றும் வழங்க ப் படும். " ஆறுகளுக்கிடைப் பட்ட தேசம் • எ ன் ப து அதன் பொருள். ஒரு காலத் தில்இங்கே சால்தியர் என்ற சாதி யார் வாழ்ந்த காரணத் தால் இதை ‘சால் பபிலோனியரின் களிமண் புத்தகம் தியா' என்று அழைப் பது முண்டு. பபிலோனியாவில் குடியேறிய மிகப் புராதனமான சாதி யார் சுமேரியர் எனப்படுவர். இலங்கைத் தமிழரின் மூதாதைகள் இவர்களே யென்று சிலர் கருதுகின்றனர்.
இச் சுமேரியர் ஆறுகளிலிருந்து நீர்பாய்ச்சுவதற்கான பெரிய வாய்க்கால்களை வெட்டி, விவசாயஞ்செய்தார்கள். உலோகங்களினற் செய்த ஆயுதங்களே உபயோகித்து, பெரிய கோவில்கலைக் கட்டினர்கள். தெய்வங்களின் உருவங்களைச் செதுக்கினர்கள். * (9śwub 6746), mu

Page 19
2 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
முதன்முதல் விருத்தி பண்ணியவர்கள் சுமேரியரே. பூக்கள், பறவைகள் முதலிய சித்திர ரூபமான லிபிகளையே அவர்கள் மிருதுவான களிமண் தட்டைகள் மீது நெட்டி யிஞல் வரைந்தனர். ஒரு நாளை இருபத்துநான்கு மணித்தியாலமாகவும், ஒரு மணித்தியாலத்தை அறுபது நிமிஷமாகவும் முதன்முதல் பிரித்தவர்கள் சுமேரியரே. சோதிடத்தைக் கற்று, வருங்கால சமாச்சாரங்களையும் இவர்கள் கூறிவந்தனர். நைல் நதியானது ஆண்டுதோ றும் கரைபுரண்டோடுவதனல் செழிப்புற்ற எகிப்துப் பிர தேசத்திலேயும் வேளாண்மை கைக்கொள்ளப்பட்டது. கட்டிடங்களைக் கட்டு வதில் எ கிப் தி யர் மிகத் திறமை பெற் றிருந்தனர். இறந்த அரச  ைரப் புதைப் பதற்காக பிர மீதுக் களென்ற * பெய ருடன் பெரிய கல் லறை களைக் கட்டி ஞர்கள். அனுராத
புரியிலுள்ள தாது
ܔ݂ܛ QQA s
எகிப்தியரின் சித்திர ரூப லிபிகள் லும் இப்பிரமீதுக்கள்
மிக ப் பெரிய வை. ஆற்றங்கரையில் முளைக்கும் பப்பைரஸ் என்ற ஒருவித மஞ்சள் நிற நெட்டியைப் பிளந்து அதைக் கூராக்கி மை கொண்டு எழுதினர்கள். இந்நெட்டியின் பெயரி லிருந்தே பேப்பர் (காகிதம்) என்ற ஆங்கிலச் சொல்
உண்டானது.
O ANà
ஒரு ஆயிரம் ஆண்டுகட்குமுன், இலங்கையிலுள் ளோர் ஒரு மாசத்தை இருபத்தொன்பதரை நாளாக வும், ஒரு வருடத்தை முன்னூற்று ஐம்பத்து நான்கு
*Pyramids, பிணக் கோபுரங்கள் என்றும் சிலர் கூறுவர்.
 

பபிலோனியாவும் எகிப்தும்
நாட்களாகவும் பிரித்துக் கணக்கிட்டனர். இக்காரணத் தாற்ருன் பெளத்தர்களின் பெருநாளாகிய விசாகம் பிரதி ஆண்டும் ஒரே தினத்தில் நிகழ்வதில்லை. பின்னரே 365 நாள் கொண்ட ஆண்டை நாம் கணக்கில் எடுத் தோம். ஆனல், எகிப்தியர் 5000 ஆண்டுகட்கு முன் னரே இவ்வாறு கணக்கிட்டார்கள். எனவே, 365 நாட் கொண்ட வருடத்தை முதன்முதல் கைக்கொண்டவர் கள் எகிப்தியரெனவே கூறலாம்.

Page 20
இரண்டாம் அத்தியாயம்
ஆரியர்
1. சிங்களர்
வேடர்களைப் பற்றி ஏற்கெனவே நாம் அறிந்துகொண் டோம். இலங்கையில் முதன்முதற் குடியேறிய மக்கள் அவர்களே என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ஆனல், இலங்கையின் இக்கால நாகரிகத்திற்கு அவர்கள் எவ் விதத்திலாவது துணைபுரியவில்லை யென்பதும் ஒருதலை. சிங்களருடன் கலந்து விவாகஞ் செய்ததினல் சிங்களச் சாதியை உண்டாக்க வேடர் துணை புரிந்தார்களேயன்றி சமயம், பழக்கவழக்கம் கொள்கை முதலிய விஷயங்க ளில் சிங்களர் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டததிக மில்லை. சரித்திர மென்பது நாகரிகமுற்ற மனித வர்க்கத் தவரின் வரலாற்றையே பெரும்பாலும் குறிப்பிடுமாகை யால், இலங்கையின் சரித்திரத்தையும் முதன் முதல் குடியேறிய நாகரிகமான மக்களின் வரலாற்றிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். எனவே, இலங்கைச் சரித்திரமும் சிங்களருடனே ஆரம்பிக்கின்றது.
புராதன சிங்களரைப்பற்றிக் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த கதைகளையும், பாரம்பரியங்களையும் கூறும் மகாவம்சம் என்னும் நூலில் சிங்களரது ஆதிவரலாற் றைப் பற்றியும் அவர்களது வருகையைப்பற்றியும் நூதனமான ஒரு கதை கூறப்பட்டிருக்கிறது.
வங்கநாட்டு இளவரசி யொருத்தி, ஒருக்கால் யாரு மறியாது தன்னரண்மனையை விட்டு வெளியேறி மேற் றிசை நோக்கிச் சென்ற ஒரு வியாபாரக் கூட்டத்தாரு டன் செல்வா ளாயினள். அக்கூட்டம் ஒரு காட்டி னுாடாகச் செல்லும் பொழுது ஆண் சிங்கமொன்று
1 4

சிங்களர் 5
அவர்களை எதிர்த்து அரசிளங்குமரியைத் தனது குகைக்கு எடுத்துச் சென்றது. அங்கே அவ்வரியேரு அவளைக் கொல்வதற்குப் பதிலாக அவள்மீது காதலுற்று அவளே மணந்துகொண்டது. அதன் பயணுக அவ்விளவரசிக்கு சிங்கபாகு என்னும் ஆண் குழந்தையும், சிங்கசீவலி என்னுமோர் பெண் குழந்தையும் பிறந்தன. சிங்க பாகு வளர்ந்த பெரியவனனபோது குகையிலிருந்த தனது தாயையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு தன் தாயாரது நாட்டுக்கு ஓடிவிட்டான். தந்தையான சிங்கம் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, நாட்டினெல்லைக் கிராமங்களிலுள்ள குடிகளைத் துன்புறுத்தியது. சிங்க பாகு அதனைக் கொன்று, லாலா என்னும் நாட்டுக்கு மன் னனுக முடிசூடினன்.
சிங்கபாகுவுக்குப் பல புத்திரர்கள் பிறந்தனர். மூத் தவன் பெயர் விசயன். அவன் யெளவனதசை யடைந்த தும், பல துர்க்கிருத்தியங்களில் ஈடுபட்டான். தன்னைப் போலப் பல துட்டர்களுக்குத் தலைவனுகித் தந்தையின் இராச்சியத்துக் குடிகளைத் துன்புறுத்தினன். சிங்கபாகு அவனைப் பலமுறை கண்டித்தும் விசயன் தனது தீய செய் கைகளைத் தொடர்ந்து நடத்திவந்தபடியால், அரசன் தன் குடிகளுக்குத் திருப்தியுண்டாக்குவதற்காக விசயனை யும் அவன் தோழர்களையும், ஒரு கப்பலிலேற்றி எதேச் சையாகச் செல்ல விட்டுவிட்டான்.
இவ்வாறு சென்ற விசயனும் தோழர்களும் முதலில் இந் தி யா வி ன் கரையொன்றில் வந்திறங்கினர். அங் கிருந்து இலங்கைக்கு வந்து குடியேறினர். இலங்கையில் விசயன், குவேனி என்ற இயக்கியை மணந்தான். பின்னர் அவளைக் கைவிட்டு, தென்னிந்தியாவிலுள்ள பாண்டி நாட்டில் பாண்டிய இளவரசி யொருத்தியை விவாகஞ் செய்தான்.
இவ்வாறு இலங்கையின் முதல் அரசன் விசயனே. விசயனது தந்தை சிங்கபாகு என்றுஞ் சிங்கள 1ெ1 என்றும் வழங்கப்பட்டதால், அவனும் அவனது தோழர்களும் சிங்களர் எனப்பட்டனர். இலங்கையும் சிங்களத்துவிடம்

Page 21
6 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
எ ன் ற பெயரைப் பெற்றது. சிங்களத்துவீபமென்ற பெயரே பல மாறுதல்களை யடைந்து இப்பொழுது * சிலோன் " என ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது.
விசயனும் அவனது தோழரும் இலங்கைக்கு வந்த தாகக் கூறப்படும் கதை, சிங்களரின் இலங்கைக் குடியேற் றத்தைக் குறிக்கிறது. சிங்களர் என்ற பெயருக்கு கார ணம் கூறுவதற்காகவே சிங்கபாகுவின் நூதனமான கதை கற்பனை செய்யப்பட்டது. பண்டைக் காலத்தில் பல சாதியார், மிருகங்களின் உருவத்தையோ, பட்சிகளின் உருவத்தையோ கம்பங்பளின் நுனியில் செதுக்கி அவற்றை வழிபட்டு வந்தனர். ஆபிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் சில பகுதிகளில் வசிக்குஞ் சில சாதியார் இப்பொழுதும் இவ்வழக்கத்தைக் கையாண்டு வருவதைக் காணலாம். சிங்களரும் இத்தகைய வணக்கமுடைய ஒரு சாதியாராகவே யிருந்திருக்கவேண்டும். இவர்கள் ஒரு சிங்கத்தின் உருவத்தைக் கம்பத்திற் செதுக்கி வழிபட் டிருக்கலாம்.
சிங்களர் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்பதில் சிறிதும் ஐயமில்லை. பழைய சிங்களப் பாஷையானது இந்தியாவின் கிழக்குத்திசையிலும் மேற்குத்திசையிலும் பேசப்படும் பாஷைகளோடு மிகவும் ஒத்திருக்கின்றது. இக்காரணத்தைக் கொண்டு சிங்களர் இந்தியாவின் கிழக் குக் கரையிலிருந்தோ மேற்குக் கரையிலிருந்தேஈ அல்லது இரண்டு பகுதிகளிலுமிருந்தோ வந்திருக்கவேண்டுமென யூகிக்க இடமுண்டு. சிங்கள பாஷை யி ல் ஆரிய மொழிக்கலப்பு அதிகமிருக்கிறபடியால், அதை ஆரிய பாஷை னன்று கூறுகின்ருேம். எனவே அப்பாஷையைப் பேசும் சிங்களரும் ஆரிய வகுப் பை ச் சேர்ந்தவர் களென்றே கருதப்படுகின்றனர்.
இவ்வாரு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வ ந் த சிங்களர், இலங்கையின் வடபாகத்திலுள்ள ஆற்று வெளிகளில் குடியேறினர். இப்பகுதிகள் இப்போது வட மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகா ணம் என அழைக்கப்படுகின்றன. கீழ் மாகாணத்தின்

ஆரியர் புலம்பெயர்தல்
வட பகுதியிலும், தீவின் தென் கிழக்குப்பகுதிகளில் வளவை கங்கை, கிரிண்டி ஒயா, மாணிக்க கங்கை, குமுக்கன் ஒயா ஆகிய நதிகளின் கரையிலும் சிலர் குடியேறினர். சிலர் களனி கங்கைப்பகுதியில் குடியேறி, நாளடைவில் உள்நாட்டிலும் புகுந்தார்கள்.
11. ஆரியர் புலம்பெயர்தல் சிங்களம் ஆரிய பாஷையெனக் கூறினுேம். அஃதெவ் வாறென விளக்குவாம். h
சிங்களர் இலங்கைக்கு வருவதற்கு 2,000 ஆண்டு களுக்கு முன்னரே குதிரை, பசு, ஆடு முதலிய கால்நடை களைப் பரிபாலிக்கும் சாதியார் சிலர் இருந்தார்கள். இவர்கள் விவசாயஞ் செய்ய அறிந்திருந்தபோதிலும், தமது கால்நடைகள் மேய்வதற்குப் புற்றரைகளைத் தேடித் திரியவேண்டியிருந்ததால், பயிர் செய்வதை விடுத் துக் கன்றுகாலிகளையும் ஓம்பி அவற்றின் பால், மாமிசம் ஆகியவற்றை அருந்திக் காலங் கழித்தனர். இச்சாதியார் த ங் க ளே என்ன பெயர்கொண்டழைத்தார்களெனத் தெரியவில்லை. இவர்கள் நா ள  ைட வி ல் இந்தியா, ஐரோப்பா ஆகிய தேசங்களில் குடியேறியபடியால், நாம் இவர்களை இப்பொழுது இந்து-ஐரோப்பியர் எனக் கூறுகின்ருேம். பாரசீகத்திலும் இந்தியாவிலும் குடி யேறிய இச்சாதியார் தங்களை ஆரியர் என வழங்கினர். இதனல், இவ்வகுப்பார் எல்லாரையும் ஆரியர் எனவே வழங்கலாயிற்று. ஆரியர் என்ற சொல்லின் பொருள் உயர்ந்தோர் என்பது.
இவர்கள் முதன் முதல் எங்கே வாழ்ந்தனர் என்று கூறிக்கொள்ள முடியவில்லை. மத்திய ஆசியாவிலிருந்தே இவர்கள் வேறிடங்களுக்குப் பரந்திருக்கவேண்டுமெனச் சிலர் கூறுகின்றர்கள். சிலர் ஐரோப்பாவின் சில பகுதி, யிலிருந்துதான் இவர்கள் பிரிந்திருக்கவேண்டுமெனச் கூறுகின்றனர். இஃது எவ்வாருயினும், சில காலத்துக் குப் பின் இவர்கள் தமது சொந்த இடத்தை விட்டுக் கிளம்பி ஊரூராகத் திரியத் தொடங்கிஞர்கள்.

Page 22
8 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சில காலமாக இவ்வாறு சஞ்சாரஞ் செய்தபின் இவர் கள் இரண்டாகப் பிரிந்தார்கள். ஒரு பகுதியார் கிழக்கு நோக்கிச் சென்று பாரசீகத்திலும் இந்தியாவிலும் தங்கி னர் மற்றப் பகுதியார் மேற்கு நோக்கிச் சென்று கிரேக் கம், இத்தாலிபோன்ற நாடுகளிலும், ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிகளிலும் மேற்கிலும் குடியேறினர்.
இவ்வாறு இந்து-ஐரோப்பிய சாதியார் தாம் சென்ற சென்ற இடங்களில் குடியேறி அங்குள்ளாரோடு கலப்பு விவாகஞ் செய்தார்கள். பின்னே வந்த சிங்களரது பாஷையை வேடர் தமது பாஷையாகக் கொண்டது போல, இந்து-ஐரோப்பியரால் வெற்றிகொள்ளப்பட்ட சாதியாரும் அவர்களது பாஷையைப் பேசலாயினர். இங்ங்ணம் இந்து-ஐரோப்பிய பாஷையும் பரவ, புதிய பல சாதியார் அப்பாஷையைப் பேசலாயினர். இதன் பயணுக, அவர்களுடைய மூலபாஷையிலேயே பல மாறு தல்களுண்டாயின. புதிய சாதியார் பல பல புதிய சொற்களைப் புகுத்தி, சொற்களின் ஆதி இயல்பை மாற் றினர். எனவே, ஆங்கிலமும், சிங்களம்போலவே ஆரிய பாஷையாயிருந்தாலும், இவ்விரண்டு பாஷை களுக்குமிடையில் அநேக வித்தியாசமிருப்பதைக் காண லாம். எனினும் சிங்களம், ஆங்கிலம் முதலிய பல பாஷைகள் இந்து-ஐரோப்பிய பாஷையிலிருந்தே தோற் றின என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே விதமான முகச்சாயல் பெற்றிருப்பதுபோல, இவ்வாரிய பாஷைகளிடையிலும், ஓர் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். உதாரணமாக தாய், தந்தை, சகோதரன், மகள் ஆகியவற்றைக் குறிக் கும், சொற்கள் இப்பாஷைகளிலெல்லாம், ஒரளவுக்கு ஒத்து இருப்பதைக் கவனிக் கலாம். தகப்பனைக் குறிக்கும் பிய என்ற சிங்களச் சொல் சமஸ்கிருதத்தில் பிதிரு என்றும், பழைய பாரசீகத்தில் பிதர் என்றும், கிரேக்க லத்தீன் மொழிகளில் பேற்றர் என்றும், போர்த் துக்கீச பாஷையில் பாயி என்றும், ஜெர்மனியில் வாட்டர் என்றும், டச்சில் வாடர் என்றும், ஆங்கிலத்தில் பாதர் என்று மிருக்கின்றன.

மகாபாரதம்-இராமாயணம்
இவ்வாறு பல சாதியார் இந்து-ஐரோப்பிய பாஷை யாகிய ஆரிய பாஷையைப் பேசுகின்றனர். ஆரியர் என்று ஒரு சாதியாரை அழைக்கும்பொழுது அவர்கள் சாதியினுல் ஐக்கியப்பட்டவர்களெனக் கருதக்கூடாது. அவர்கள் ஐக்கியப்படாமலும் இருக்கலாம். ஆளுல் பேசும் பாஷை ஆரியமாக இருக்கவெண்டும். 6 skiss ளர், ஏனைய ஆரிய பாஷை பேசும் சாதியாராகிய ஆங்கி லேயர், டச்சுக்காரர் முதலியவரோடு சாதியாற் சம்பந் தப்படாதபோதிலும், அவர்கள் பேசும் பாஷை ஆ ரி ய மாதலால், அவர்களையும் ஆரியர் என்று கூறுகிருேம்.
11. மகாபாரதம்’-இராமாயணம்’
இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரத்து நானுாறு ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு.500) சிங்களர் இலங்கைக்கு வந்தனர். அதற்குக் குறைந்தது ஒர் ஆயிரம் வருடங் களுக்கு முன்னராவது ஆரியர் இந்தியாவிற் குடியேறி யிருக்கவேண்டும். முதன் முதல் ஆரியர் சிந்து நதிக் கரையில் குடியேறினர்கள். அதன் பின் வடஇந்தியா முழுவதும் பரந்து கி.மு. 600 வரையில் அதன் கிழக்குக் கோடிவரை வியாபித்திருந்தனர். இக்காலத்திலிருந்த புல வர் பாடிய பாடல்களைப் பிற்காலத்தார் "மகாபாரதம்', இராமாயணம்" என்ற இரு இதிகாசங்களாகத் தொகுத் தனர்.
பரத வம்சத்தைச் சேர்ந்த கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையே நடைபெற்ற பாரத யுத்தத் தைப் பற்றி ‘மகாபாரதம்" கூறுகிறது. இம்மகா யுக்தக் தில் இந்தியாவிலிருந்த ஆரிய சாதியாரெல்லாம் கலந்து கொண்டார்கள். போரில் பாண்டவருக்கே வெற்றி கிடைத்தது.
இப் போரில் சிறந்து விளங்கிய வீர t களுள் கிருஷ்ணன் பெயர் சிறப்பானது. கிருஷ்ணனே நாள ை. வில் இந்துக்கல் தெய்வமென மதித்துப் போற்றின. கிருஷ்ணனது பாலப்பருவத்தின் சரித்திரமானது சில வகைகளில் சிங்கள அரசருள் ஒரு வகிைய பந்துசுபாய

Page 23
20 நம்முன்னுேரலித்த அருஞ்செல்வம்
னுடைய சரித்திரத்தையொத்திருக்கிறது. கிருஷ்ணன் பந்துகபாயனைப்போலவே, சிறுவணுயிருக்கும்பொழுது, மாமனுல் துன்புறுத்தப்பட்டான். மாமனுக்கு ஒதுங்கி இடையர் குலத்திலே வசித்து வந்தான். கடைசியாக கிருஷ்ணனைக் கொல்ல வேறு வழியறியாது மாமன்,
அற்புதமான காரியங்களைச் செய்யும் சிருவர்களை எல் லாம் கொல்லுமாறு கட்டளையிட்டான்.
இராமாயணத்திலே இராமர், சீதை ஆகியோரின் கதை கூறப்படுகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களிற் சிலர் இராமரை வழிபடும் வைஷ்ணவ சம்பிரதாயமுடைய
 

மகாபாரதம்--இராமாயணம் 3.
வர்கள். அயோத்திக்கரசனன தசரதன், தனது அரசி யொருத்திக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டித் தன் விருப்பத்திற்கு மாருகவே பட்டத்துக் குரிய தன் மகனுன இராமனை வனவாசஞ் செய்ய அனுப் பினன். இராமனின் மாற்ருந் தாயான அவ்வரசிக்குப் பரதனென் ருெரு மகனிருந்தான். தசரதனுக்குப் பின் அவனுக்கே முடிசூடவேண்டுமென அவள் விரும்பியதால் தற்குணம் நிறைந்த இராமன் நாடு கடத்தப்பட்டான். விசயனைப்போலக் கெட்ட செய்கையினல் இராமருக்கு இக்க தி நேரவில்லை.
இராமருஞ் சீதையும் வனவாசஞ் செய்யும் நாட்களிற் த க் கி ண தேசத்திலுள்ள காடுகளில் சஞ்சரித்தனர். ஒரு நாள் சீதை தனிமையாக இருக்கையில், இலங்கை யிலுள்ள இராக்க தர்களுக்கர ச ஞ ண இராவணன் , அவளைக் கவர்ந்து கொண்டு தன்னகரஞ் சென்றன். சீதையை மீட்பதற்காகப் பெருஞ் சேனையுடனும் குரங்கு களுக்குத் தலைவனன* அனுமானுடனும் இராமர் இலங் கைக்கு வந்தார். பின்னர் இராவணனுக்கும் இராமருக்கும் மிடையில் பெரும்போர் மூண்டது. இராவணன் பக்கத் துள்ள இராக்கதர் அநேகர் அப்போரில் மடிந்தார்கள். ஈற்றில் இராவணனும் இறந்தான். பின்னர் இராமர் இராவணனின் தம்பியாகிய விபிஷணனை, இலங்கைக் கரசனுக்கி, சீதையுடன் இந்தியாவுக்குத் திரும்பினுர்,
இராமர் வனவாசஞ் சென்ற துக்கம் பொருமல் தசர தன் இறந்ததும், பரதன் முடிசூட மறுத்து இராமருக்கே கிரீடத்தை வழங்கினன். பின்னர், இராமர் தனது பட்டத்துத் தேவியான சீதையுடன் மகுடஞ் சூடி அர சாண்டார்.
*இப்போது "இராமர் அணை" என்று கூறப்படும் பாறைகளின் தொடர்ப்பு, இராமரின் சேனை இலங்கைக்கு வருவதற்காக அறுமா னும் ஏனைய வானரங்களும் கட்டியதெனக் கூறப்படுகிறது.

Page 24
22 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இக்காவியங்களை வாசிக்கும்பொழுது வடஇந்தியா வில் வாழ்ந்த ஆரிய மக்களின் தொழில் முறை, பழக்க வழக்கம், சமயாசாரம், கொள்கைகள் முதலியவற்றைப் பற்றி அதிகம் அறியக் கூடியதாயிருக்கிறது. மேலும், இந்தியரது வாழ்க்கையை உருப்படுத்திய நூல்களுள் 'இராமாயணமும்', "மகாபாரதமும் முன்னணியில் நிற் கின்றன*.
IV. சிங்களரின் செல்வாக்கு
ஆரியரான சிங்களர் இலங்கைக்கு வந்த சம்பவம் இலங்கைச் சரித்திரத்தில் மிக முக்கியமானது. அவர் கள் இந்நாட்டிற் குடியேறிய பின்னரே இத்தீவின் சரித் திரத்தில் பெரிய மாறுதல்களுண்டாயின. ஆதிச் சிங் களரின் சந்ததியாரே இலங்கையின் குடிசனத்தொகை யிற் பெரும்பகுதியினராவர். அவர்கள் நாளடைவில் ஏனைய சாதியாரோடு கலப்பு மணஞ்செய்து பெருகிய போதும், அவரது மூதாதையர் ஆதிச் சிங்களரேயென் பதில் ஐயமில்லை.
*இக்காவியங்களைச் சரித்திர நூல்களெனக் கூறிவிட முடியாது. ஆணுல், இவற்றில் சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளில்லாமலுமில்லை. கோசலை என்ருெரு இராச்சியம் பண்டைக்காலத்தில் நிலவியதுண் மையே. கெளரவருக்கும் பாண்டவருக்குமிடையில் யுத்தம் நிகழ்ந் திருக்கலாம். ஆஞல், எவ்வளவு தூரம் இக்கதைகள் உண்மையென்று கூறமுடியாது. ஆரம்பத்தில் இக்காவியங்கள் சிறு பாடல்களாயிருந் தன. பின்னர் காலகதியில் இச்சிறு கதைகளை விஸ்தரித்துப் புதுக் கதைகளுஞ் சேர்க்கப்பட்டன. இவ்வாறு கலந்துள்ள பழைய கதை களைப் புதுக்கச் சேர்க்கப்பட்டவற்றிலிருந்து பிரித்துக் கூறுவதற்கும், உண்மைச் சரித்திர சம்பந்தமுள்ளவை எவையென்பதையறிவதற்கும் ஆழ்ந்த ஆராய்ச்சியறிவு வேண்டும். இக்காவியங்களிலுள்ள கதை களும், "மகாவம்சத்தில் கூறப்பட்ட விசயன், வந்துகபாயன், اشا لكகெமுனு முதலியோரின் கதைகளை ஒத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களரின் செல்வாக்கு
இலங்கையின் பெரும்பகுதியினர் பேசும் பாஷையும் இவ்வாதிச் சிங்களர் பேசிவந்த சிங்கள பாஷையே. ஆனல், அன்னர் பேசிய பாஷை பல மாற்றங்களை இப் போத டைந்திருக்கிறது. பழைய சிங்களத்தை இப் பொழுது பேசினல் ஒருவரும் விளங்கிக்கொள்ளமாட் டார்கள். இக்காலத்துச் சிங்கள பாஷையில் சமஸ்கிரு தம், பாளி, தமிழ், போர்த்துக்கீசம், டச்சு, ஆங்கில மாகிய பல மொழிச்சொற்களுங் கலந்திருக்கின்றன. இருந்தும் இக்காலச் சிங்கள பாஷைக்கு மூலபாஷை பழைய சிங்கள பாஷையேயாகும்.
இலங்கையிற் கமத்தொழிலை முதன்முதலாகப் புகுத் தியவர் சிங்களரே. இதனுல் நிலைபேருன நாகரிகவாழ்வு இலங்கையில் ஏற்பட்டது. இப்பொழுது இலங்கைத் தீவின் பெரும் பகுதியினர் விவசாயத்திலே ஈடுபட்டிருக் கின்றனர். முதன்முதல் அவர்கள் நெல்லைப் பயிரிட் டார்கள். இன்றும் நெல்லே பிரதான உணவாக அதிக மாகப் பயிரிடப்பட்டு வருகிறது.
கிராமங்களின் ஆட்சிக்காக கிராமப் பஞ்சாயத்துக் களை முதன்முதலேற்படுத்தியவர் சிங்களரே. விவசாயஞ், செய்யும் பொருட்டு கிராமங்களில் குடியேறிய மக்கள் தம்முள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்காகவும், குளங்களுக்கு அணைகட்டுதற்காக ஒன்று சேர்வதற்காக வும், ஒருவித கிராமச் சபைகளை ஏற்படுத்தவேண்டியதா யிற்று. பண்டைக் காலத்தில் நிறுவப்பட்ட கிராமச் சபைகளின் திரிபே கன்சபா என்று சிங்களத்தில் அழைக்கப்படும் கிராம சபைகளாகும். அவற்றிலிருந்து சீர்திருத்தப்பட்டவையே இக்காலக் கிராமச் சங்கங்கள்.
இரும்பின் உபயோகத்தையும் சிங்களரே இலங்கைக்கு முதன் முதற் கொண்டு வந்த னர். இலங்கையிலிருந்து தான் இரும்பைக் கிண்டியெடுத்தனரோ அல்லது வெளி நாடுகளிலிருந்து பெற்றனரோ தெரியவில்லை. அஃதெய் வாருயினும், இரும்பாயுதங்களை நன்ற கப் பயன்படுக் .ெ பெரிய கட்டிடங்களைக் கட்டக்கூடியதாயும், பெரிய அணைகளையிட்டு நல்ல குளங்களைக் கட்டக்சு யக ம மிருந்தது.

Page 25
மூன்றம் அத்தியாயம்
பெளத்த சமயம்
1. கெளதம புத்தர்
இலங்கைச் சரித்திரத்தில், சிங்களர் வருகை மிக முக்கியமான ஒரு சம்பவம் என்பதில் ஐயமில்லை. அவர் கள் சிங்களம் என்ற பாஷையைக் கொண்டுவந்தது மல்லாமல், இலங்கையின் பிரதானமான தொழிலாகிய விவசாயத்தையும் பரப்பினர். யுத்தக் கருவிகளையும், விவசாய உபகரணங்களையும் செய்ய இரும்பின் உபயோ கத்தை இலங்கையில் புகுத்தினர். அவர்கள் ஏற்படுத் திய பஞ்சாயத்து இப்பொழுது சில மாறுதல்களுடன் கிராமச் சங்கமாக நிலவிவருகிறது. இவை யெல்லா வற்றிலும் மிக முக்கியமான சம்பவம், சிங்களர் வந்து 250 வருடங்களுக்குப் பின் பெளத்த சமயம் இலங்கையில் பரவியதாகும். இலங்கையில் பெளத்த சமயம் பரவியிரா விட்டால் அதன் சரித்திரம் வேருெரு வகையாயிருக்கு மென லாம்.
பெளத்த சமயத்தை உண்டாக்கியவர் கெளதம புத்தர். புத்தர் சிறுவனுயிருந்த காலத்தில் கெளதம புத்தர் என்ற பெயரைப் பெறவில்லை. பெற்ருேர் அவ ருக்கு ‘சித்தார்த்தர்" என்று நாமஞ்சூட்டினர். கெளதமர் என்பது அவரது கோத்திரப் பெயராகும். உலகத்திலே நிலவிவரும் துக்கத்துக்குக் காரணம் என்ன என்பதையும், அதை நிவர்த்திசெய்ய வழியாதென்பதையும் தெளிந்த பின்னர், ஞானே தயம் பெற்ருேன் என்று பொருள்படும் ‘புத்தர்" என்ற காரணப்பெயர் அவருக்கு வழங்கப்பட் டது. சாக்கிய குலத்தில் அவதரித்ததினுல் அவரைச் சாக்கியமுனி என்று வழங்குவதுமுண்டு.
24

கெளதம புத்தர் ፵ ዕ)
வட இந்தியாவிலுள்ள நேபாள இராச்சியத்தின் எல்லையிலுள்ள கபில வஸ்து என்னும் நகரில் வைகாசி மாசத்துப் பெளர்ணிமையில் கெளதம புத்தர் பிறந்தா ரென பெளத்தசமய நூல்கள் கூறும். கெளதமரின் பெற்றேர் மிக்க ஐஸ்வரியமுடையவர்களாயிருந்தபடி யால், அவர் இளமையில் எவ்வித குறைவு மின்றி வளர்ந்து வந்தார். அவருக்கு இருபத்தொன்பது வயதாயிருக்கும் பொழுது ஒருநாள் தமது இரதத்திலேறி நந்தவனத்தைச் சுற்றிவந்தார். அப்பொழுது நரைத்த தலையுடைய பல்லில்லாத கூனற்கிழவன் ஒருவன் த டியூன்றிச் செல்வ தைக் கண்டார். வேருெரு நாள் நோயுற்ற ஒரு மனி தனையும் பிறிதொரு நாள் ஒரு பிணத்தையுங்கண்டார். மனிதர் மூப்புப்பிணி சாக்கா டென்னும் துன்பத்திலழுந்தி வருந்தத் தாம் சகல போகங்களையும் அனுபவித்து உண்டு த்து வாழ்வது பயனற்றதென்று புத்தர் எண்ணலா யினர். இவ்வாறு இருக்கும் நாளில் ஒரு தினம், உலக வாழ்வைத் துறந்து சந்நியாசத்தை மேற்கொண்ட ஒரு தாபசரைச் சந்தித்தார். தாய் தந்தையர், பெண்டு பிள்ளையுடன் கூடி வாழும் இல்லற வாழ்வை விடுத்து துறவறத்தை மேற்கொள்ள வேண்டுமென கெளதமர் அன்றே முடிவுசெய்தார்.
ஒரு நாளிரவு கெளதமர் கந்தகன் என்ற தமது குதிரையிலேறிச் சென்று கபில வஸ்துவை நீங்கித் துற வொழுக்கம் மேற்கொண்டார். முதலில் அவர் இரண்டு துறவிகளிடம் உபதேசம் பெற்ற ஈர். அவர்களுடைய போதனை கெளதமருக்குத் திருப்தியளிக்காதபடியால் ஆறு வருஷமாக, கடுந்தவம் புரிந்தார். இதுவும் அவருக் குத் திருப்தியளிக்கவில்லை. பின்னர், காயா சேத்திரத் தில் வைகாசி மாசத்துப் பெளர்ணிமையிலே ஒர் அரச மரத்தினடியில் நிட்டைகூடியிருந்தபொழுது உலகத்தில் துன்பம் நிலவு தற்குக் காரணமும், அதினின்று தப்பு வதற்கு வழியும் அவருக்கு உதயமாயிற்று. 'ஆசையே துக்கத்துக்கு மூல காரணமென்றும், ஆசையை விட் 11 ல் ஆனந்தமுண்டாகுமென்றும் அவர் கண்டார். ,

Page 26

அசோகன் 27
*உயிர்க் கொலை கூடாதெனவும், மிருகங்களைக் கொன்று வேள்வி செய்வது பாவ மெனவும், பிறப்பினுல் உயர்வு தாழ்வு கூறிச் சாதி வித்தியாசம் பாராட்டக் கூடாதெனவும் புத்தர் போதனை செய்தார். இப்போ தனைகளைக்கேட்டு ஏராளமான சீடர்கள் புத்தரைப் பின்பற்றினர்கள். கி. மு. 483-ல் வைகாசி மாசத்து பெளர்ணிமையில் புத்தர் பரிநிர்வாணமடைந்த பின்னர் அவருடைய சீடர்கள் அவரின்போதனையை உலகெங்கும் பரப்பிவந்தார்கள். சில காலமாக இந்தியாவின் எல்லேக்குள் போதனைசெய்தார்கள். அசோக சக்கர வர்த்தி காலத்தில், புத்தரின் போதனை அயல்நாடுகளி லும் பரவியது. இரண்டொரு நூற்ருண்டுகளில் கிழக்கு. ஆசியாவில் பெளத்தசமயமே பிரதானமான சமயமா யிற்று.
1. அசோகன்
வட இந்தியாவில் ஆரியர் குடியேறிய பின்னர், கோசல இராச்சியம்போன்ற பல இராச்சியங்கள் தோன்றின. இவ்வாறு முளைத்த இராச்சியங்களையெல் லாம் கி. மு. 321-ல் சந்திரகுப்தமெளரியன் என்ற சக்கர வர்த்தி ஒன்று சேர்த்து வட இந்தியாவில் ஒரு பெரிய சாம்ராச்சியத்தை நிறுவினன். வட இந்தியாவில் தோன்றிய சக்கரவர்த்திகளுள் இவனே முதல் சக்கர வர்த்தியாவான்.
அசோகன் இவனது பேரன்; இவன் கி. மு. 274-ல் அரசு கட்டிலேறி இராச்சிய பரிபாலனஞ் செய்தான். பெரிய பாறைகளிலும் கற்றுாண்களிலும் அசோகன் செதுக்குவித்த சாசனங்களிலும் கல்வெட்டுகளிலுமிருந்து இம்மன்னனைப் பற்றியும் இவனது ஆட்சியைப் பற்றியும் பல விடயங்களை அறியக் கூடியதாயிருக்கிறது. சந்திர குப்தனைப்பற்றி அறிவதற்கு இவ்வளவு சான்றுகள் கிடைக்கவில்லை.
புராதன இந்தியாவில் ஆட்சி நடத்திய அரசர்களுள் மகிமை வாய்ந்தவன் அசோகன். இவன் இராச தர்மத்

Page 27
་་་་་་་་་་་་་་་ కనపడు: గష కృషనషs ※※×3 、薄ーぷ மத்திய இந்தியாவில் சாஞ்சி என்ற தேசத்திலுள்ள தாதுே
rー துர்காப ・=; حی அநுராதபுரியின் கிழக்கேயுள்ள ஜேத வன ராம ?????*#56 லுள்ள கிராதிகள் இப்படத்திலுள்ள)கிராதிகளைஒத்தன.
eyyhySySSeD DSeySDS SASASyS
 
 
 
 
 

அசோகன் 29
துக்கேற்ற முறைப்படி தனது கடமைகளைச் செய்து, தன் குடிகளின் நன்மையையே பெரிதும் பரிபாலித்து வந்தான். அசோக சாசனமொன்றில், பிரசைகளின் நன்மைக்காகச் செய்துவரும் பிரயத்தனங்களில் அரசன் ஒருபோதும் திருப்தி கொண்டிருப்பதில்லையெனக் கூறப் பட்டிருக்கிறது.
அசோகனது பன்னிரண்டாவது வருட ஆட்சியில் கலிங்க தேசத்தரசனுேடு அவன் யுத்தஞ்செய்ய நேர்ந் தது. மகா நதி தொட்டுக் கோதாவரிவரையும் பரந்த கலிங்க தேசத்தை அசோகன் அடிப்படுத்தித் தனது இராச்சியத்தினுடன் சேர்த்துக்கொண்டான். இப்போ ரில் மக்கள்பட்ட துன்பத்தைக் கண்ட அசோகன் மனங் கலங்கி, பூமியாசை கொண்டு இனி யுத்தஞ் செய்வதில்லை யெனத் தீர்மானித்தான்.
கொஞ்சக் காலத்திற்குப்பின் அசோகன் பெளத்த சம யத்தைத் தழுவி, அதை தன்னுட்டிலும் அயல்நாடுகளிலும் பரப்புவதற்குப் பெருமுயற்சி செய்துவந்தான். இலங் கையிற் பெளத்தசமயம் பரவியதும் இக்காலத்திற்றன்.
அசோகனது சமயப்பற்றை விளக்குமாறு ஒரு கர்ண பரம்பரையான கதையும் நிலவி வருகின்றது, அது பின்வருமாறு:-அசோகன் பெளத்தசமயியானபின், ஆயி ரக்கணக்கான அழகிய பெளத்த விகாரைகளைக் கட் வித்து விழாக்கொண்டாடினன். விழாத் தினத்தன்று அங்கு கூடிய பெளத்த பிக்குகளை விழித்து அசோகன் என் போலப் பெளத்த சமயத்துக்குத் தொண்டுசெய்தார் உல கில் உண்டோ?" என்று விஞவிஞன். அதற்கு பிக்குகளின் தலைவன், அசோகனைப்போன்ற தொண்டர்கள் இல்லை யென்று கூறிஞர். பின்னர், மன்னன் என்போலப் பெளத்த சமயத்துக்கு உறவு பூண்டவர்கள் உண்டோ சொல்லுமின்" என்ருன், அதற்கு அப்பிரதான பிக்கு *தானதருமஞ் செய்வதில் உமக்கு இணையாவார் இல்லை யெனினும், செல்வத்தை வழங்கியதால் நம்மதத்துக்கு உறவு பூண்டவராகமாட்டீர் பெளத்த சமயத்தின் ஞாதி

Page 28
O , நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
யாக நீர் விரும்பினுல் உமது மகனையோ, உமது மகளையோ பிக்கு சங்கத்தைச்சேர அனுமதிக்கவேண்டும்", என்ருர்,
உடனே அசோகன் தனது மகஞன மகிந்தனையும், Sகளான சங்கமித்தையையும் அழைத்து, சங்கத்திற் சேர விருப்பமுண்டோவெனக் கேட்டானென்றும், அதற்கு அவர்கள் உடனே சம்மதித்தனரென்றும், அவ்வாறே அசோகன் அனுமதிப்படி மகிந்தன் பிக்குவாகவும், சங்க மித்தை பிக்குணியாகவும் சேர்ந்தார்களெனவும் கதை கூறப்படுகிறது.
11. இலங்கைக்குப் பெளத்த சமயம் வந்த வரலாறு
இலங்கைக்குப் பெளத்தசமயம் வந்த வரலாற்றைப் பற்றிப் பல விதமான ஐதிகங்களுண்டு. இலங்கையிலே பெளத்த சமயம் நன்கு பரவுமென அறிந்து புத்தர் மூன்று முறையாக இலங்கைக்கு வந்து அதைப் பக்குவநிலைக்குக் கொண்டுவந்தாரென மகாவமிசத்தில் கூறப்பட்டிருக் கிறது. அசோக சக்கரவர்த்தியும் இலங்கையில் பெளத்த சமயத்தைப் பரப்புவதற்காக மகிந்தனையும், சங்கமித் தையையும் அனுப்பி, பிக்கு சங்கத்தையும் பிக்குணிகள் சங்கத்தையும் தாபித்தார். அக்காலத்தில் இலங்கைக் கரசனுன தேவநம்பியதீசன் அனுராதபுரியில் அரசு நடத்திஞன். இப்புதிய சமயத்தின் போதனை அவன் மனதைக் கவரவே அவனும் அவனது பிரசைகளும், பெளத்தசமயிகளாயினர்.
இலங்கைத் தீவின்மீது தனக்கிருந்த அபிமானத்தை அசோகன் மற்ருெருவிதத்திலும் தெரியப்படுத்தினன். காயா சேத்திரத்தில் புத்தர் ஞான ஒளி பெற்ற பொழுது அமர்ந்திருந்த அரச மரத்தின் ஒரு கிளையை இலங்கை யில் நாட்டும்படி தனது மகளான சங்கமித்தை மூலம் அனுப்பினன். அனுராதபுரத்திலுள்ள லோகமகாபாயா என்ற கட்டிடத்தினருகே, இக்கிளையிலிருந்து முளைத்த தெனக் கூறப்படும் அரச மரத்தை இன்றும் காணலாம். சரித்திரத்தில் கூறப்படும் மிகப் பழைய மரங்களுள் இதுவுமொன்ரு கும்.

இலங்கைக்குப் பெளத்த சமயம் வந்த வரலாறு 31
அசோகனிலும் சிறந்த ஒருவர் இலங்கை பெளத்த சமியிகட்குத் தொண்டுசெய்தாரெனக் கூறப்படுகிறது. அவரே சக்கரன்" என்ற தெய்வம். தேவநம்பியதீசன் தூபாராம தாதுகற்பத்தைக் கட்டியபொழுது, தாது நிதானத்தில் பிரதிட்டை செய்யுமாறு புத்தரின் நெஞ் செலும்பொன்றை அவர் கொடுத்துதவினரெனவும் கதை யுண்டு.
மகிந்தனும் அவனது சீடரும் வெகு சீக்கிரத்தில் இலங்கையில் பெளத்தசமயத்தைப் பரப்பினர். எனவே, இரண்டு நூற்ருண்டுகளுக்கிடையில் இலங்கையின் பல பாகத்திலும் பெளத்த சமயம் அனுட்டிக்கப்பட்டது.
இலங்கையில் பெளத்தசமயம் இவ்வளவு சீக்கிரம் பரவியதற்கு மூன்று காரணங்கள் கூறலாம். இலங்கை யிலே கிறித்து சமயத்துப் பாதிரிமார் வந்தபோது தங்க ளது பாஷைக்கு வேரு ன பிறிதொரு பாஷையைக் கற்றே இலங்கை மக்களுக்குப் போதிக்கவேண்டியிருந்தது. மகிந் தன் சிங்கள பாஷையோடு நெருங்கிய தொடர்புள்ள ஓர் ஆரியபாஷையைத் தாய்பாஷையாகக் கொண்டிருந்த தால் இவ்வாறன மொழிக்கஷ்டம் அவனுக்கு ஏற்பட வில்லை. அஃதொன்று. இன்னென்று, சிங்களர் பெரும் பாலும் விவசாயிகளாயிருந்த படியால் கிராமங்களில் வசித்தனர். பெளத்த பிக்குகளும் அக்கிராமங்களிலோ சமீபமாகவோ வசித்துத் தமது மத போதனையைச் செய்துவந்தார்கள். மேலும், பெளத்த பிக்குகள் இலங் கைக்கு வந்த காலத்தில் இலங்கையில் எவ்விதமான நிலையுள்ள சமயமுமிருக்கவில்லை. அதனல், சனங்களேப் பெளத்தசமயத்தில் சேர்த்துக்கொள்வது சுலபமாயிற்று.
*இந்து சமயக் கொள்கைப்படி ஏழு உலகங்களுண்டு. அவற்றில் இப்பூமிக்கு மேலுள்ள உலகத்துக்கதிபதி சக்கரன்.
இன்று நாம் அநுராதபுரத்தில் காணும் தூபாராம காது கோபம் சமீபகாலத்தில் கட்டப்பட்டது. தேவநம்பியதீசல்ை கட். பட்.து வேறு விதமான உருவத்தையுடையதாயிருந்தது. இப்போதுவான கrது கோபம் மணிவடிவமாயமைந்திருக்கிறது. பழையது நெற்போர் வடிவா கியிருந்தது.

Page 29
32 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
V. பெளத்த சமயத்தினுல் இலங்கையடைந்த
நன்மை
புராதன காலத்திலென்ன, மத்தியகாலத்திலென்ன, இலங்கைக்கு வந்த மற்றெவர்களைப் பார்க்கிலும் இந்தி யாவிலிருந்து வந்த பெளத்த பிக்குகளே சிங்களருக்கு அதிக விஷயங்களைக் கற்றுக்கொடுத்தனர். நூல்களை வரிவடி வில் எழுதும் வித்தையை பிக்குகள்தான் கற்பித்தார்கள். ஆஞல், அக்காலத்து எழுத்துக்கள் இக்காலத்துச் சிங்கள அட்ச ரங்களை ப் போல வட்டெழுத்தாயிருக்கவில்லை. அசோக சாசனங்களில் காணப்படுவதுபோலக் கோண முடையனவாயிருந்தன. உதாரணமாக,  ை(த) என்ற சிங்கள எழுத்து A என்று எழுதப்பட்டது. பின்னர், நாளடைவில் இக்கோணங்கள் திரிந்து வட்டமாயின. 1,500 வருடங்களின் பின்னரே இப்போதைய லிபி ஏற். * ليـا ما لا
பெளத்த சமய நூல்களை பெளத்த பிக்குகள் கொண்டு வந்தனர். அக்காலத்தில் இச்சமய நூல்களைவிட வேறு நூல்கள் கிடையா. கல்வியை விரும்பினுேர் இந்த நூல் களையே கற்றனர். புத்தர் போதிசத்துவராக இருந்த காலத்தில் நடத்திய கருமங்களைப்பற்றிக்கூறும் கதை வடிவான ஜாதகம் என்பதும் இவற்றிலொன்று. இந் நூலில் பல கதைகளடங்கியிருக்கின்றன. அவற்றில் ஒரு கதை, சந்திரனில் முயற்கறையிருப்பதற்குரிய காரணத் தைக் கூறுகிறது.
அக்கதை வறுமாறு:-வெகு காலத்துக்கு முன்னே, புத்தர் ஒரு முயலாகப் பிறந்து ஒரு காட்டில் வாழ்ந்து வந்தார். அம்முயலுக்கு ஒரு குரங்கும், நீரெலியும், நரியும் நட்பாயிருந்தன. சமயவிதி த வருமல் அம்முயல் ஒழுகி வருநாளில், சக்கரதேவன் அதைச் சோதிக்க விரும்பி, ஓர் ஏழைப் பிராமணன் வடிவங்கொண்டு அதன்முன் தோன்றிப் பிச்சை கேட்டான். தனது நண்பர்களைப்போல அம்முயலும் கணிகளையோ மாமிசத் தையோ உண்ணுதபடியால், பிராமணனுக்குக் கொடுப்

006A88A&s6.0) 00:41% @らóどC t d・スん、し○ frCrんパLいん
* A v , R H Ki' D. (39 u -r-
- A L A R + A* JÜ
>めLöU8いPASェんいいんあめ上じU Kv*(olu)vjHAKlm&aK35ruAMA
Ur ع) را که به A بلند ۵ < |x با یکی از 88 LjjčЈ I ELEC Lh je go u
V 8{84', 'J്രഗ്രau?{{8 ιο η και ια ω ο Φι υια, υ 7ουρ εί ή η «υ υδ'
V | Athm un UgటR 2 6°Can (h * 8) )).2 Սծ` Շ) Õ Û\ a 4 وع" وعلم منع ورعa U
5 * 2 68 s: 62,
சிங்கள லிபி வளர்ச்சியுற்றமுறை
3 مم۔8772

Page 30
34 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பதற்கு ஒன்றுமில்லையேயென வருந்திற்று. பின்னர், தன்னையே கொடுப்பதெனத் தீர்மானித்து, அக்கினி மூட்டும்படி பிராமணனைக்கேட்டது. அவன் அவ்வாறு செய்ததும் முயல் அத்தீயுட்பாய்ந்தது. ஆனல், சக்கரன் அது தீங்குருதவாறு காப்பாற்றினன். அன்றி யும், அம்முயலின் தன்னலமற்ற தியாகத்தை உலகோர்க்கு ஞாபகப்படுத்துவதற்காக, சந்திரனில் முயலின் வடிவ மொன்றையுங் வரைந்துவிட்டான்.*
பெளத்த பிக்குகள் பாளி என்ற ஒரு புதியபாஷையை யும் இலங்கைக்குக் கொண்டுவந்தனர். பெளத்த நூல்க ளெல்லாம் இப்பாஷையிற்ருன் எழுதப்பட்டிருக்கின்றன. இப்பாஷை சிங்களத்தை ஒத்திருக்கும். பிற்காலத்து இலங்கைப் பிக்குகளும் சமய நூற்களைக் கற்பதற்காகப் பாளி பாஷையைப் பயின்றனர். அதன்பின் பல நூல்களை யும் அப்பாஷையில் எழுதினர். " மகாவமிசம்" சிங்களத் திலல்ல, பாளி பாஷையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.
பாளி பாஷை சிங்கள பாஷையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாகவிருந்தது. இக்காலத்தில் சில ஆங் கிலச் சொற்களுக்குச் சரியான சிங்களச் சொற்களில்லா விட்டால், அவ்வாங்கில வார்த்தையையே நாம் உபயோ
*புராதன சிங்கள மக்கள் இக்கதையைக் கேட்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைவர். சிங்களத்தில் உள்ள மிகப்பழைய பாடலாகிய சசதாவத (சசஜாதக) என்பது இக்கதையையே கூறும். தம்மங்கடு வைப்பகுதியிலே மகாவலி கங்கையின் வலது கரையிலுள்ள திம்புலா கலைக் குகைகளிலொன்றில் இக்கதை சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண லாம். பொலன்னறுவைக்கு வடக்கேயுள்ள ஜேதவஞராம கட்டிடத் தின் சுவரிலும் இக்கதை படமாக வரையப்பட்டிருக்கிறது. இவற்றின் பிரதிகள் கொழும்பு நூதனசாலையில் இருக்கின்றன. இந்த ஜாதகக் கதைகளைக் கொண்டு பல சிங்களப் பாடல்களெழுதப்பட்டிருக்கின்றன; புத்தகமோ புதினப் பத்திரிகைகளோ இல்லாத அக்காலங்களில் இக் கதைகள் பெரிதும் பயன்பட்டன என்பதில் ஐயமில்லை.

os afg05īņas sê) orm «» , «oo ș șoljšo oo : q1.115$¢ £ € 09@ @ế3 1919 IĜse ugi 1/16Ðre osoɛ ɖɛ thre «o so se see un •
{ * 脚

Page 31
36 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கிப்பதுபோல அக்காலத்திலும், சிங்களத்தில் சொல்ல முடியாத சில விஷயங்கட்குப் பாளியிலிருந்து சொற் களைக் கடன் பெற்றனர்.
நமது பாஷையை அறியாத அயல்நாடுகளிலுள்ளா ருக்கு நாம் ஆங் லத்தில் கடிதம் எழுதுவதுபோல, அக் காலத்திலும் பெளத்த சமயம் நிலவிய தேசங்களுடன் பாளி பாஷையிலேயே கடிதப்போக்குவரத்துச் செய்யப் பட்டது. உதாரணமாக, இரண்டாவது விசயபாகு, பர்மிய அரசனுக்குக் கடிதம் எழுத விரும்பினர். ஆனல், ஒருவர் பாஷையை மற்றவர் அறிந்திருக்கவில்லை. பர்மிய அரசனுக்குச் சிங்களந்தெரியவில்லை. விசயபாகு பர்மிய பாஷையை அறியவில்லை. ஆணுல், இருவரும் பெளத்த சமயிகளானபடியால், பாளி பாஷை அறிந்திருந்தார்கள். எனவே, பாளி பாஷையில் கடிதப் போக்குவரத்து நடத் தப்பட்டது.
அக்காலத்தில் பெளத்த பிக்குகளே கல்வியறிவுடைய வர்களாயிருந்தார்கள். மற்றவர்களும் அவர்களிடமே கல்வி கற்கவேண்டியிருந்தது. இப்பொழுது இருப்பது போல பாடசாலைகள் அக்காலத்திலிருக்கவில்லை. விகா ரங்களே பாடசாலைகளாகவுமிருந்தன. பிக்குகளைவிட மதபோதனை செய்வதற்கு வேறு ஆசிரியர்கள் இருக்க வில்லை. பெளர்ணிமை முதலிய புண்ணிய தினங்களிலே அவர்கள், இப்பொழுது செய்வதுபோல மதபோதனை செய்து நன்மை தீமையிவையென எடுத்துக்காட்டி நல் வாழ்வு வாழ ஊக்கப்படுத்தினர். கிறிஸ்து சமயமாவது இஸ்லாமாவது அக்காலத்தில் இலங்கையில் தலைகாட்ட வில்லை. இந்துக்களும் வெகு சிலரேயிருந்தனர். அச்சு வித்தை ஏற்படாதபடியால் அச்சுப் புத்தகங்களோ புதினப் பத்திரிகைகளோ கிடையா. உலகத்தின் ஏனைய பாகங்களில் நடைபெறும் சம்பவங்களை அறிவதற்கு சினி மாப் படக்காட்சிகளும் கிடையா. ஏடுகளில் எழுதிய சுவடி களே பெரிய பெட்டகங்களில் இட்டு விகாரங்களில் வைக் கப்பட்டிருக்கும். எனவே, கல்வி கற்பதற்கு வேறுவித மான சாதனங்களில்லாதபடியால், புண்ணிய தினங்களில்

பெளத்த சமயத்தினுல் இலங்கை யடைந்த நன்மை 37
சனங்கள் விகாரங்கட்குச் சென்று பிக்குகள் செய்யும் போதனைகளையும், கூறும் ஜாதகக் கதைகளையும் கேட்டு வந்தார்கள்.
இலங்கையில் சிற்பம் சிறப்பெய்தியது பெளத்த சம யத்தின் வளர்ச்சி காரணமாகவே. நல்ல கட்டிடங்கள் அமைக்கவும் கற்களில் சிறந்த உருவங்களைச் செதுக்கவும், அழகிய ஓவியங்களைத் தீட்டவும் பழகினர்கள். புரா தன சிங்களர் குகைகளிலும், சிறிய குடிசைகளிலும்
கல்லிற்செதுக்கிய சித்திரங்கள்-மாயாதேவி கண்டகனவு
வாழ்ந்தனர். பிக்குகள்கூட முதலில் மிகிந்தலை, இஸ்ரு முனியா தம்புளை ஆகிய இடங்களிலுள்ளவைகஃாப் போன்ற குகைகளிலும், இலையினல் வேய்ந்த பiன ச1 ல களிலும் வாழ்ந்தனர். அரசர்கள் முதன்முதல் கட்டு விக்க பெரிய கட்டிடங்கள் தாதுகோபங்களாகும். பின் கவயே, பல கட்டிடங்களமைந்த விகாரங்கள் தோன்றின. அனுபாக புரியிலும் பொலன்னறுவையிலும் கிலமடைந்து கிடக்கும் பழைய கட்டிடங்களை ஆராய்ந்த லீ, அவற்றின்

Page 32
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பெரும் பா லா ன வை விகாரங்களும் அவற் ருே டு சம்பந்தப்பட்ட கட்டிடங்களுமாகவேயிருப்பதைக் காண லாம். கல்லிற் செதுக்கிய சித்திரங்கள் அநேகமாக புத்த ரின் உருவங்களாயிருக்கும். இல்லையேல், புத்தவிகாரை சம்பந்தப்பட்டவையாகவோ. பெளத்த சமய சம்பந்த மானவையாகவோ இருக்கும். பெளத்த சமய சம்பந்த மான கதைகளையும் வைபவங்களையும் ஒவியங்களிற் sonr 680T 6T lb.
இலங்கையில் பெளத்த சமயம் நிலவிவந்ததன் பய ஞக, ஏனைய பெளத்த தேசங்களான சீனு, பர்மா, சீயம், கம்போ டியா ஆகியவற்றுடன் இலங்கை தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடியதாயிற்று. சிங்களர் ஒரு தனிச் சாதியாயிருப்பதற்குப் பெளத்த சமயம் பெருந்துணை புரிந்தது. இந்தியாவில் பெளத்த சமயம் மறைந்த போதிலும், இலங்கை அதற்கு நிலைக்களஞயிற்று. இவ்வா ருக இலங்கை, இந்தியாவின் வேருண நாடாய்விளங்கியது.

நான்காம் அத்தியாயம்
தமிழரின் படையெடுப்பு-பெளத்த சமயம் பரவுதல்
1. துட்டகெமுனு (IOI-77 கி.மு.)
மகிந்தன் இலங்கைக்கு வந்து பெளத்த சமயத்தைப் பரப்பிய காலத்திற் தேவநம்பிய தீசன் என்ற அரசன் இலங்கையை ஆண்டான் என்று கூறினுேம். அவனுக்குப் பின் ஆறு அரசர்கள் ஒருவர் பின் ஒருவராய் அரசாண்டார் கள். ஆருவது அரசனன அசேலனது ஆளுகையில் தென்னிந்தியாவிலிருந்து எல்லாளனென்ற அரசன் இலங் கைமீது படையெடுத்து வந்து அசேலனப் புறங்கண்டு, அவனது இராசதானியாகிய அனுராதபுரியைச் கைப் பற்றினன். அங்கிருந்து வடபகுதி இராச்சியத்தை ஆண் Les Gör.
இக்காலத்தில் இலங்கையின் தென்கிழக்குப் பகுதி யாகிய உ ரு குணை யி ல் க வந் தீ ச ன் என்ற சிங்கள மன்னன் ஆட்சி நடத்திவந்தான். இவனுக்கு துட்ட கெமுனு என்றும், சத்ததீசன் என்றும் இரண்டு மக்களிருந் தார்கள். எல்லாளனையும் தமிழரையும் இலங்கையி லிருந்து கலைப்பதற்குக் கிளம்பிய கூட்டத்திற்கு துட்ட கெமுனு தலைவனுஞன். இவனைப்பற்றிப் பல கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. தமிழர் ஆ ட் சி யி லி ரு ந் து சிங்களரைக் காப்பாற்றிய வீரனுக துட்டகெமுனு கதை களிற் பாராட்டப்படுகிருன்.
துட்டகெமுனு பன்னிரண்டு வயதாயிருந்தபொழுது தமிழரோடு சண்டையிடுவதில்லையென வாக்குறுதி செய்யு மாறு அவன் தந்தை அவனைக் கேட்டாரென்றும், துட்ட கெமுறு அதற்கு உடன்படாது மறுத்துத் தனது கால், ககையை முடக்கிக்கொண்டு படுக்கையிற் குடங்கிக் கிடந்
39

Page 33
40 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தானென்றும், அதையறிந்த அவனது தாயார், அவனைச் சீராட்டி, " மகனே, கால், கைகளை நீட்டிக்கொண்டு சுக மாக நித்திரைக்கொள்ளகூடாதா ? ? என்று கேட்டதற் குத் துட்டகெமுனு, “அதோ மகாவலி கங்கைக்கு அந்தப் புறத்தில் தமிழர், இதோ இந்தப் பக்கத்திற் சமுத்திரம்; இவற்றுக்கிடையே நீட்டி, நிமிர்ந்து படுத்துக்கொள்ள இடமெங்கே?' என்று கேட்டானெனவும், கதை யிருக் கிறது.
துட்டகெமுனு ப தி ன று வயதாயிருந்த பொழுது யுத்தத்தில் திறமையுள்ள பத்து வீரர்களைச் சேர்த்துக் கொண்டு தமிழரை எதிர்க்கச் சென்ருன். ஆனல், அவன் தந்தை இதை விரும்பவில்லை. உடனே துட்ட  ெக மு னு தந்தையுடன் கோபித்துக்கொண்டு மலை ப் பிரதேசமான மலையரட்டைக்குச் சென்றுவிட்டான்.
இவ்வாறு இவன் உருகுணை குத் தலைநகரான மாக மத்திலிருந்து வெகு தூரத்துக்கப்பாலுள்ள மலைய தேசத் தில் வசித்துவந்த காலத்தில், இவனுடைய தந்தை கால மாஞன். துட்டகெமுனு தலைநகருக்கு வருமுன்னர், அவன் தம்பியான சத்த தீசன் மாகமத்துக்குச் சென்று தந்தையின் அந்தியக்கிரியைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, தான் அரசனுயினன். இவ்வாறு இரண்டு சகோதருக்குமிடையில் போருண்டானது. ஈ ற் றி லே துட்டகெமுனு வெற்றியெய்தினன்.
இதன் பின்னர் துட்டகெமுனு தனது மனுேபீஷ் டத்தை நிறைவேற்ற எண்ணி, கந்துலன் என்ற தனது பிரியமான போர் யானைமீதேறிப் பெரியதொரு படைபின் தொடர்ந்துவர அனுராதபுரியை நோக்கி அதன் பழைய பாதை வழியாகச் சென்றன். வழியில் முதல் புத்தள என்னுமிடத்தில் தங்கிவிட்டு அங்கிருந்து மஹியங்கன என்ற இடத்தை அடைந்தான். அங்கே தமிழருக்குஞ் சிங்களருக்குமிடையில் முதல் யுத்தம் நடைபெற்றது. அதிலே தமிழரைத் தோற்கடித்த பின் மகாவலி கங்கைக் கரைவழியாகச் செல்லலாயினன். எதிர்ப்பட்ட தமிழ ரின் கிராமங்களை  ெயல் லாம் கைபற்றிக்கொண்டு சென்றன்.

-"Vìuerfu '
༈ཌ་
S

Page 34
42 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
மாகந்தோட்டை என்ற இடத்தை அடைந்ததும், அப்பாற் செல்லுதற்கு ஒர் ஆற்றைக் கடக்கவேண்டி யிருந்தது. ஆனல், எதிர்த்துவந்த தமிழர் படை, ஆற் றின் இடது தீரத்துக்கு அவனைச் செல்லவொட்டாது தடுத் தது. நான்கு மாதமாக, டிம்புலாகலை என்ற மலைப் பாறையின் சாரலிலே தங்கியபின், ஆற்றைக் கடந்தான். தப்பியோடிய தமிழரெல்லாம் விஜித நகரத்தில் ஒன்று கூடி, துட்டகெமுனுவின் செலவைத் தடுத்தனர். எதிரி யின் பலத்தை அறிந்த துட்டகெமுனு, பொலன்னறு வையிற் பாசறையடித்து அங்கிருந்துகொண்டே அந்தக ரைத் தாக்கினன். விஜித நகரம் செவ்வனே அரண் செய்யப்பட்டிருந்தபடியால் அதைக் கைப்பற்றுவதற்கு நான்கு மாதங்களெடுத்தன. அதன் பின்னர், கஹகல என்ற இடத்திலெதிர்த்த தமிழரோடுஞ் சண்டைசெய்து அனுராதபுரியை அணுகினன்.
இங்கே சில காலம் போர்செய்த பின், துட்டகெமுனு. வும் எல்லாளனும் நேரில் ஒருவரோடொருவர் சண்டை செய்து வெற்றியை நிச்சியிப்பதெனத் தீர்மானித்தனர். இந்த மல்லில் துட்டகெமுனு வெற்றி பெற்றன். இறந்த தனது எதிரியின் பிரேதத்துக்கு துட்டகெமுனு பெரிய மரியாதை காட்டி அவ்விடத்திலேயே அதற்கு அந்தியக் கிரிகைகளைச் செய்து, அதில் அவனுடைய அஸ்தியை யிட்டுச் சமாதியொன்று கட்டுவித்தான். சனங்களை அதற்கு முன் வழிபாடு செய்யும்படியும் கட்டலையிட்டான். பிற்காலத்திலிருந்த சிங்கள அரசர்கள் கூட அவ்வழியாகப் பவனி செய்யுங் காலங்களில் தமது வாத்திய கோஷங்களை நிறுத்தி மெளனமாய்ச் சென்றனர். கோவில்கல் முன் வாத்தியங்களை நிறுத்திச் செல்லும் வழக்கத்தை இன்றுங்
5IT get 6) TLs),
தமிழரை வெற்றி பெற்றது மாத்திரமன்றி, துட்ட கெமுனு, பெளத்த சமயத்தைப் பரப்புவதற்கு பெரும் பொருள் செலவுசெய்து மிக முயன்றும் வந்தான். அத லுைம் துட்டகெமுனுவுக்குக் கீர்த்தியுண்டாயிற்று.

61 as blurt 4.
துட்டகெமுனு கட்டுவித்த கட்டிடங்களுள் மிகப் பிரசித்தபெற்றவை ரூவான்வெலிசாயாவும், லே ரா வ மகாபாயா என்பதுமாகும். லோ வமகாபா யா ஒன்பது மாடிகளைக்கொண்டு பெ ரி ய மாளிகையாயிருந்தது. போய விரத தினங்களில் மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குகள் அங்கு கூடி உபோசாதவைபவத்தை நடத்து வார்கள். அதனல் இதற்கு உபோசா த வீடெனவும், போயகே எனவும் பெயருண்டு. அனுராதபுரியிலுள்ள தாதுகோபங்களுட் பெரியதும், மிகப் பிரசித்த வாய்ந்த தும் ரூவான்வெலிசாயாவாகும். இத்தாதுகோபம் மகா விகாரையைச் சேர்ந்தது. இது கட்டிமுடியுமுன்னர் துட்டகெமுனு இறந்துவிட்டான். அவனது தம்பியான சத்ததீசன் இதைக் கட்டி முடித்தான். துட்டகெமுனு இறந்ததும் லோவமகாபா யா தீக்கிரையாயிற்றென்றும், பின்னர் சத்த தீசன் அதை ஏழு நிலை மாடங்களோடு திருப் பிக் கட்டுவித்தானெனவும் ஐதிகம் உண்டு. மகாவிகாரை யிருந்த நிலத்தில் வேறும் பல கட்டிடங்கள் பின்னர் கட்டுவிக்கப்பட்டன. அவற்றுள் ஒரு வாசக சாலையும், வைத்திய சாலையும் குறிப்பிடத்தக்கவை.
புராதன சிங்கள அரசருள் துட்டகெமுனு மிகக் ர்ேத்திவாய்ந்தவன். அவனைப்பற்றி எண்ணிறந்த கதை கள் கூறப்பட்டிருக்கின்றன. எங்காவது ஒரு பழைய விகாரையையோ தாதுகோபத்தையோ கண்டுவிட்டால், அவற்றைக் கட்டுவித்தவரின் பெயர் தெரியாவிட்டால், அவை துட்டகெமுனுவினற் கட்டப்பட்டவையெனவே. கூறப்படுகிறது. அந்நியராட்சியிலிருந்து தன்னுட்டை விடுவித்த ஒரு வீரனெனத் துட்டகெமுனுவை கொண்டா டுவதுடன், பெளத்தசமயத்தின் பெரிய தாதா வென யும் இலங்கை பெளத்தர்கள் அவனைப் பாராட்டி வருவர்.
1. வலகம்பா (43.17 கி.மு.) சத்ததீசனுக்குப் பின் ஆட்சி நடத்திய மூன்று அரசர் காளைப் பற்றி அதிகம் சொல்லுவதற்கில்ல. நான்காவது அரசன் அவனுடைய நாலாவது மகளுறன வலகம்பா erru 6är.

Page 35
A 4 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இவன் சிங்காசனமேறிய சில மாதங்களுள் நாட்டில் பெரிய குழப்பமுண்டாயிற்று. பாண்டிய வமிசத்தைச் சேர்ந்த ஏழு குறுநில மன்னர்கள் இலங்கைக்கு வந்து, அனுராதபுரத்தைக் கைப்பற்றி வலகம்பாவை அரசிருக் கையிலிருந்து கலைத்துவிட்டார்கள். இவர்கள் மாந்தை யென்னும் மாதோட்டத்துக்குச் சமீபத்தில் இறங்கி, மல்வத்துஒயா மார்க்கமாக வந்திருக்கவேண்டும். இவர் களில் ஐவர் ஒருவர்க்குப்பின் ஒருவராய் இலங்கையை ஆண்டனர். கடைசியாய் ஆட்சி நடத்தியவனை வல கம்பா கொன்று, இராய்ச்சியத்தைக் கைப்பற்றிக்கொண் L. g.
தமிழர் அனுராதபுரியில் ஆட்சி நடத்திய காலத்தில்,
வலகம்பா, அனுராதபுரிக்குத் தெற்கேயுள்ள காடுகளி லும் மலையதேசத்திலும் சஞ்சரித்தான். அப்பொழுது அவன், தான் மீட்டும் அரசாங்கத்தைப் பெற்றுவிட்டால் தான் சஞ்சரித்த குகைகளையெல்லாம் விகாரங்களாக மாற்றிவிடுவதாய் விரதம் பூண்டானென ஒரு கதை யுண்டு. எனவே, மறுபடியும் வலகம்பா தனது இராச்சி யத்தைப் பெற்றதும், அக்குகைகளுள் மழைக் காலத்தில் தண்ணிர் செல்லாதபடி வாய்க்கால்களை வெட்டுவித்தான், எனவே, விக்கிரகங்கள் வைப்பதற்கு உபயோகப்படுத் தப்பட்டு வந்த வாய்க்கால்களையுடைய பழைய குகைக் கோவில்களெல்லாம், வலகம்பாவினுல் நிர்மாணிக்கப் பட்டனவெனக் கூறுகிருர்கள். ஆனல், இது உண்மை யன்று. உதாரணமாக, தம்புளைக் குகைகள் தீசன் என்ற மன்னனல் பிக்குகளுக்கு அளிக்கப்பட்டதாக ஒரு சாச னம் கூறுகிறது. இந்த தீசன் வலகம்பாவின் தந்தை யான சத்ததீசணுயிருக்கலாம்.
பெளத்த சமய வளர்ச்சிக்கு வலகம்பா பெரிதும் முயன்றன். அனுராதபுரிக்கு வடக்கேயுள்ள அபயகிரி விகாரையைக் கட்டுவித்தான். இவ்விகாரை மகாவிகா ரைக்குப் போட்டியாய் பிற்காலத்தில் மிகப் பிரசித்தி பெற்றது. அபயகிரி தாதுகோபத்தை கஜபாகு (174-196)

qi (1H F.1/11 s@s@ ‘quae uolgo į grm rīko

Page 36
46 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
என்ற அரசன் 450 அடிக்கு உயரக் கட்டுவித்தான். இதுவே இலங்கையிலுள்ள தாதுகோபங்களுட் பெரியது.
வலகம்பாவின் ஆட்சியில் பிறிதொரு விசேட சம்ப வம் நடைபெற்றது. இதுகாறும் கேள்வியில் மாத்திரம் (எழுதா மறையாக) இருந்துவந்த பெளத்தசமய நூல் களும் வியாக்கியா னங்களும் இவன் காலத்தில் எழுத் திற் பொறிக்கப் பட் டன . இ க் காலந் தொட்டுப் பெளத்த பிக்குகள்
- இலங்கையின் முக் ஏட்டுச் சுவடி கிய மா ன சம்ப வங்களை எழுதத் தொடங்கினர். புராதன அரசர்களைப்பற்றி நிலவிவந்த ஐதீகங்களையும் அவர்கள் கேட்டறிந்து எழுதினர். இது காரணமாகவே நாம், இன்று, தேவநம்பிய தீசன், மகிந் தன், துட்டகெமுனு, அவனது தம்பி சத்ததீசன் ஆகியோ ரைப்பற்றிக் கொஞ்சமாவது அறியக் கூடியதாயிருக் கிறது.
11. தென்னிந்தியா
அசோகன் ஆண்டதும், புத்தர் தமது போதனையை நடத்தியதுமான வட இந்தியாவைப்பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிருேம். இந்தியாவின் தென்கோடியிற் பண் டைக்காலந்தொட்டே மூன்று இராச்சியங்கள் நிலவி வந் தன. அவற்றுள் தென் பாரிசத்திலுள்ளது பாண்டி ராச்சியம். வலகம்பாவை அரசிருக்கையிலிருந்து கலைக்க வந்த ஏழு சிற்றரசர்கள் இங்கிருந்தே வந்தார்கள். பாண்டி நாட்டுக்கு வடகிழக்கேயுள்ளது சோழ ராச்சியம் வடமேற்கில் கேரளமென்ற சேர மண்டலம் விளங் கிற்று. சேர ராச்சியம் இக்காலத்துத் திருவாங்கூர் சமஸ்தானத்தையும் கொச்சி சமஸ்தானத்தையும்
 

தென்னிந்தியா
உளளடக்கியிருந்தது. இங்கிருந்தே மலையாளிகள் இலங் கைக்கு வருகின்றர்கள்.
இலங்கையின் தென்கிழக்கில் மாணிக்க கங்கைக் கரை யில் உள்ளது கதிர்காம ஷேத்திரம். இங்கே முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் புராதன ஆலயமிருக் கிறது. பத்தினிக் கடவுளை வழிபடுவதற்குப் பத்தினி தேவாலயமொன்று கண்டியிலிருக்கிறது. முருகன் வழி பாடும் பத்தினி வழிபாடும் முதல் தென்னிந்திய நாடுகளில் நடைபெற்றன. பின்னர், இலங்கைக்கு வந்த தமிழர் அவ்வழிப்பாட்டை இலங்கையிலும் கொண்டாடினர்.
பண்டைக் காலத்திலே தமிழகம் பிரசித்தியடைந் திருந்தது. முதலாவது நூற்றண்டில் இந்து ஐரோப்பிய வகுப்பைச் சேர்ந்த கிரேக்கர் தமிழகத்துடன் வியாபாரம் நடத்தினர். கறுவா, மிளகு, அரிசி, இஞ்சி முதலிய பண்டங்கள் தமிழ் நாட்டிலிருந்து மேல் நாட்டுக்கு ஏற்று மதி செய்யப்பட்டன. அதனற் கிரேக்கர் இப்பொருள் களைக் குறிப்பதற்குத் தமிழ்ச் சொற்களையே தமது நூல் களில் கையாண்டனர். இதனற்ருன் கிரேக்க மொழி யில் வழங்கப்படும் அரிசி என்ற சொல் தமிழை ஒத்திருக் கிறது. அரிசியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான "றைஸ்" என்பது கிரேக்கச் சொல்லின் திரிபாகும்.

Page 37
ஐந்தாம் அத்தியாயம்
குளங்களையும் ஏரிகளையும் வெட்டுதல்; மகாயான பெளத்த சமயத்தின் வருகை
1. வசபன் (127-17)
வலகம்பாவுக்குப்பின் அநேக அரசர்கள் ஆட்சி நடத் தினர். இலங்கையின் முற்போக்குக்கு அவர்களிற் பெரும்பாலார் எவ்வகையிலாவது முயற்சி செய்யாதபடி யால், அவர்களைப் பற்றிப் படிப்பதில் நாம் நேரம் செலவுசெய்ய வேண்டியதில்லை. ஆனல், கூடக்கன்ன தீசன் என்பவன் (கி.பி. 16-38) நாட்டில் ஒரு குழப் பத்தை யுண்டாக்கி, அனுலா என்ற மகாராணியைக் கொன்று, தானே அரசனனன். அனுராதபுரத்து நக ருக்கு அரணுக இவன் ஒரு மதில் கட்டுவித்தான். அந்நிய பகைவரும், கலகக்காரரும் தம்மைத் தாக்காது காப் பதற்பொருட்டு, அரசர்கள் அக்காலத்தில் நகரைச் சுற்றி மதில் கட்டுவது வழக்கமாயிருந்தது.
கூடக்கன்னதீசன் கட்டிய மதிலை வசபன் (கி.பி. 127-171) என்ற அரசன் இன்னும் உயர்த்திக் கட்டினன். வசபன் நாற்பத்துநான்கு வருடம் அரசாட்சி நடத்திய தால், அவ்வளவு நீண்டகாலத்தில் இலங்கையின் முற் போக்குக்கான பல காரியங்களைச் செய்யக்கூடியதாயிரு தது. சமய சம்பந்தமான பல கட்டிடங்களையும் கட்டு வித்ததோடு தனக்கென ஓர் இராசமாளிகையையும் அமைத்தான்.
மேலும், குடிகளுக்குப் பெரிதும் பயன்படத்தக்க வாறு பதினெரு குளங்களையும், பன்னிரண்டு கால்வாய் களையும் வெட்டுவித்தான். இதனுல் விவசாயம் விருத்தி
48

வசபன் 49
யடைந்தது. அனுராதபுரிக்குத் தென்கிழக்கேயுள்ள எருவேவ என்பது இவன் வெட்டுவித்த குளங்களில் ஒன்ரு கும்.
இக்காலம்போன்று அக்காலத்திலும் அரிசியே சிங்கள ரின் பிரதான உணவுப் பொருளாயிருந்தது. நெற்சஈகு படிக்கு ஏராளமான தண்ணீர் வேண்டும். வடபகுதி யிலும் தென்கிழக்குப் பகுதியிலுமே குடிசனம் அதிகமா யிருந்தது. இப்பகுதிகளில் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றின் பயனக அக்காலங்களில் மழை பெய்யும். ஆனல், வடமேற் பருவப் பெயர்ச்சிக்காற்று வீசுங்காலங் களிலேயே தீவின் மேற்குப் பகுதிகளில் அதிக மசிை வீழ்ச்சியுண்டாகும். ஆறுகளிலும், கிணறுகளிலுமிருந்து நீர்ப்பாய்ச்சி விவசாயஞ் செய்வதென்பது சிரமசாத்திய மானது. அதனுடன் அதிக நேரச்செலவையும் உண்டா கும். வயல்களில் குளங்களை வெட்டி நீர்ப்பாய்ச்சிச் சாகுபடி செய்வதும் அதிகம் பயன்தரமாட்டாது.
எனவே, சிங்களர் இரண்டுவிதமான நீர்ப்பாசன முறையைக் கைக்கொண்டனர். உயர்வான பூமியில் மூன்று பக்கத்திலும் குன்றுகள் சூழ்ந்திருந்தால், எஞ்சிய பாகத்தில் ஒரு சுவரை எழுப்பி, மதகுகளையோ பீலி களையோ அமைத்து, அவற்றின்மூலம் தண்ணிரை வெளியே பாயச் செய்து, வாய்க்கால்கள்மூலம் வயல் நிலங்கட்குத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். சில இடங் களில் இரண்டு குன்றுகட்கிடையில் கிடக்கும் பள்ளத் தாக்கை இவ்வாறு பயன்படுத்துவர்.*
வேருெரு முறை, ஆறுகளை அணையிட்டு மறித்து, கால் வாய் வழியாக ஆற்று நீரை வயல்களில் பாயச்செய்தல்,
*உதாரணமாக, கண்டிக் குளம் இரண்டு குன்றுகளிடையேயுள்ள பள்ளத்தாக்காகும். இவ்விரு மலைகளும் அம்பிட்டியாவில் சந்திக்கின் றன. இவ்விரு குன்றுகளையும் இணைக்கும் சுவர், ராணி ஹோட்ட லுக்கு அருகேயுள்ளது. போகம்பரை மறியற்சாலைக்கு மேலேயுள்ள ஒரு கோடியில் மதகு இருக்கிறது. கொழும்புக்கும் கண்டிக்கும் தண் ணிர் கொடுக்கும் தண்ணீர்த் தேக்கங்களும் இவ்வாறேயமைக்கப்பட் டிருக்கின்றன.

Page 38
50 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இவ்வாறு அணை கட்டவும் , கால் வாய்கள் வெட்ட வும் அநேக தொழிலாளர் நீண்ட காலம்வரை வேலைக் கமர்த்தப்பட்டார்கள். தங்கள் விவசாயத்துக்கு இவ் வித வேலைகள் பெரிதும் பயன்படுமெனக் கண்ட சனங் கள் விருப்பத்துடன் அவ்வேலைகளைச் செய்துவந்தார்கள்.
அனுராதபுரிக்குச் சமீபத்திலுள்ள அபயவாவி, திச வாவி, நுவரவாவி என்ற குளங்களெல்லாம் இவ்வாறே கட்டப்பட்டன. அனுராதபுரிக்கு வெளியே முதன் முதல் குளங் கட்டுவித்தவன் வசபன் என்றே கூற வேண்டும்.
11. மகாசேனன் (334-362)
குளங்கள் வெட்டுவதில் வசபணிலும் பார்க்கப் புகழ் பெற்றவன் மகாசேனன் (334-362) என்பவன். இவன் வசபனுக்கு இருநூறு ஆண்டுகட்குப்பின் அரசாண்டான். கெளதுலுவாவி, மின்னேரியாக்குளம் முதலிய 16 பெரிய குளங்களை இவன் வெட்டுவித்தான். இலங்கையிலுள்ள பெரிய குளங்களுள் மின்னேரியாக் குளமுமொன்ரு கும். இக்குளத்தில் தண்ணிர் நிறைந்து நிற்கும்பொழுது, 4,560 ஏக்கருக்கு வெள்ளப்பரப்புப் பரந்திருக்கும். இக் குளத்தில் இடையிரு மல் தண்ணிர் நிரம்பியிருப்பதற்காக இதை ஒரு கால்வாய் மூலம் அம்பன் கங்கையுடன் இணைத்துவிட்டான். மத்திய மலைப்பிரதேசத்திலிருந்து இந்த ஆரு னது உற்பத்தியாகி பெரிய நீர்ப்பெருக்குடன் பாய்ந்து கடலுட்போய் விழுகின்றது. மகாவலிகங்கை யிற் கலந்து கடலுள்விழும் இவ்வாற்றின் பெரும்பகுதி யான தண்ணீர், இக்கால்வாய் மூலம் மின்னேரியாக் குளத்திற்குப் பாய்கின்றது.
இவ்வாறு மகாசேனன் கட்டுவித்த குளங்கள் விவசா யத்தைப் பெரிதும் விருத்திசெய்தன. ஏராளமான குடிகள் நெற்சாகுபடிசெய்து வயிருர உண்டு வாழ்ந்த னர். மகாசேனன் இவ்வாறு தனது பிரசைகளுக்குச் செய்த பெருநன்றியை அவர்கள் மறவாது, அவன் இறந்த பின்னர் கூட அவனை ஒரு தெய்வமாக வழிபட்டு

(n.19%) șlırmų, toeg)1çosgi
淺逐

Page 39
52 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வந்தனர். ஹபரணையிலிருந்து பொலன்னறுவைக்குப் போகும் வீதியினருகே மின்னேரியாக் குளத்துக்குச் சமீபத்தில் இன்றும் இம்மன்னனை வழிபட்ட கோயிலைக் காணலாம்.
மகாசேனன் விவசாயத்தை விருத்திசெய்வதற்காக எடுத்த முயற்சிகளைக் குடிகள் பாராட்டியபோதிலும், அவன் செய்த பிறிதொரு காரியம் அவனைப் பழிக்காளாக் கிற்று. துட்டகெமுனுவும், சத்ததிசனும் இவர்களைத் தொடர்ந்து அரசாண்ட அரசர்களும், மகாவிகாரப் பிக்குக்களை ஆதரித்தனர். முன்கூறிய இரண்டு அரசர் களும் மகா விகாரத்துக்குச் செய்த தொண்டுகளைப் பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிருேம். மகா சேனன், இப்பிக்குகளை ஆதரியாமல் விட்டதோடு, குடி களும் இவர்களை ஆதரிக்கக் கூடாதெனக் கட்டளை யிட்டான். く
இவ்வாறு ஆதரவு குன்றியதும் மகாவிகாரப் பிக்கு கள் அனுராதபுரத்தை விட்டு, மலையநாட்டுக்கும் உரு குணைக்குஞ் சென்றனர். இதன் பின்னர், லோவமகாபாயா என்ற கட்டிடமும் மகா விகாரத்துக்குச் சொந்தமான ஏனைய கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இக் கட்டிடத்தின் தளபாடங்களைக்கொண்டு, மகாசேனன் அபயகிரி விகாரத்தில் சில கட்டிடங்களைக் கட்டுவித்தான். மகாசேனன் இவ்வாறு செய்ததற்குக் காரணம், தென்னிந் தியாவிற் சோழமண்டலத்திலிருந்து இலங்கைக்கு வந்த சங்கமித்தன் என்னும் பெளத்த பிக்குவின் தூண்டுத லாகும். மகாவிகாரத்தைச் சேர்ந்த பிக்குகள் புத்தபகவா னுடைய சில போதனைகளைப் பின்பற்றவில்லையென சங்கமித்தன் மகாசேனனுக்குக் கூறி, அதனல் அவர்களை ஆதரிப்பது நல்லதன்றெனவும் வற்புறுத்தினன்.
அக்காலத்திலே இலங்கையில் பெளத்தசமயத்தில் பல பிரிவுகளிருந்தன. ஆதலால், அவர்கள் தம்முட்டாம் பிணங்கிக்கொண்டார்கள். மகா விகாரப் பிக்குகள் தேரவாதக் கட்சியைச் சேர்ந்தவர்களாதலால், சங்கமித் தன் கைக்கொண்ட கொள்கைகள் பிழையானவையென்று

மகாயான பெளத்த சமயம் s
எண்ணினர். ஆனல், சங்கமித்தன் தன்னைப் பிழையான வழியில் கொண்டுசென்றனென மகாசேனன் அறிந்ததும் பழையபடி மகாவிகாரப் பிக்குகளை ஆதரித்தான்.
அனுராதபுரத்துக்குக் கிழக்கேயுள்ள ஜேதவனுராம என்ற விகாரத்தை ஸ்தாபித்தவனும் மகா சேனனே. ரூவான்வெலிசாய தாதுகோபத்திலும் பார்க்க இவ்விகா ரத்தின் தாதுகோபம் பெரியது. அபயகிரி தாதுகோ பத்தோடு ஏறக்குறையச் சமானமுடையது. மகாவிகா ரம், அபயகிரி விகாரங்களைப்போலவே ஜேதவனராம விகாரமும் அநேக கட்டிடங்களையுடையதாய், பெளத்த சமயத்துக்கொரு நிலைக்களஞயிருந்தது.
இலங்கையை ஆண்ட பெரிய வேந்தர்களுள் மகா சேனனும் ஒரு வன கும். மகாவிகாரத்துக்கெதிராக இவன் செய்த காரியங்களால் இவனது பெருமையைச் சிலவேளை மறப்பது முண்டு. பழைய விகாரங்களுள் மிகப்பெரிய விகாரமொன்றைத் தாபித்ததோடு, குளந் தொட்டு வளம்பெருக்கிய பண்டை மன்னரெல்லாருள் ளும் இவனே சிறந்தவன் என்பதும் ஒருதலை.
11. நாகார்ச்சுனன்; மகாயான பெளத்த சமயத்தினுல் இலங்கையிலேற்பட்ட மாறுதல்கள்
இந்தியாவில் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குத் தெற்கே கிருஷ்ணு நதிக்கரையில் நாகார்ச்சுனகொண்டா என்றேர் இடமிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னே அவ்விடத்தில் திட்டியாகக் காணப்பட்ட மண்மேடுகளே, புதை பொருளாராய்ச்சிக்காரர், அனுராதபுரத்தில் ஆராய்ச்சி நடத்தியதுபோல, கிண்டிப் பார்த்தபொழுது பாழடைந்து கிலமான பல பழைய கட்டிடங்களங்கே காணப்பட்டன. இவற்றில் ஒரு கட்டிடம் சிங்கள விகாரமென அழைக்கப்பட்டது. இங்கே பழங்க வம் தில் இலங்கையிலிருந்து சென்ற சிங்கள பிக்குகள் தங்கி, இந்தியாவின் பல பாகங்களிலும் பெளத்த சமயப் பிரசாரம் நடத்தி வந்தார்கள்.

Page 40
54 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இன்னெரு வகையில் இத்தலம் எங்கள் கவனத்துக் குரியதாய்விட்டது. கி.பி. இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்து வந்த, நாகார்ச்சுனன் என்னும் பெளத்த சமயப் பேராசிரியர் இவ்விடத்தில் வாழ்ந்தாரெனக் கூறப்படு கிறது. இவர் மகாவிகாரப் பிக்குகளைப்போலத் தேர வாதத்தைச் சேர்ந்தவரல்லர். அருகதக் கொள்கை யுடைய ஹினயானக் கட்சியையும் இவர் சாரவில்லை. மகா சேனனுக்கு ஆலோசனை கூறிய சங்கமித்தனைப்போல இவரும் மகாயான பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்.
நாகார்ச்சுனன் பிராமண குலத்திற் பிறந்தவர். மந்திரவித்தைகளிற் கைதேர்ந்தவரென்றும், தன்னைப் பிறர் கண்களுக்குத் தோற்ருமற் செய்துகொள்ளும் மந்திரச் சக்தி வாய்ந்தவரென்றும் பல கதைகள் வழங்கி வருகின்றன. பின்னர், இவர் மகாயான பெளத்தசமயத் தைத் தழுவி அதை விளக்கும் பல நூல்களை இயற்றினர். இவருடைய தொண்டுகள் பல. அதனுல் மகாயானக் கட்சியினர் இவரையே தமது மேலான ஆசிரியர் எனக் கொண்டாடுகின்றனர்.
ஹlனயானக் கட்சியினர் அடுத்த புத்தராய் அவதரிக் கும் மைத்திரேயரென்ற ஒரே ஒரு போதிசத்துவரையே கொள்ளுகின்றர்கள். ஆனல், மகாயானக் கட்சியாள் புத்தரோடு, புத்தத்துவத்தை அடையவிருக்கும் அநேக போதிசத்துவரையும் வணங்குகின்றனர். இப்போதி சத்துவருள் முதன்மை பெற்றவரை நாதர் என்றும் அவலோகிதேஸ்வரர் என்றும் கூறுவதுண்டு.
நாகார்ச்சுனன் இறந்தபின் சங்கமித்தன் போன்ற பிக்குகள் இலங்கைக்கு வந்து மகாயான பெளத்த சமயத் தைப் பரப்பினர்கள். அதன் பயணுக அவலோகிதேஸ் வரரின் உருவம் கற்களிற் செதுக்கப்பட்டு வழிபாடாற் றப்பட்டது. வெளிகமையில் இவ்வுருவமொன்று காணப் படுகிறது. ஆனற் சனங்கள் அதைப் பிழையாக குஷ்ட ராஜனின் உருவமெனக் கொண்டாடுகின்றனர். மகா யானச் சார்பான நூல்கள் ஆரிய பாஷையான சமஸ் கிருதத்திலேயே எழுதப்பட்டன. அதனுல் அந்நூல்களை

:::::
குஷ்டராஜனின் உருவ பெனக் .ெ புண் 11 டப்படும் அவலோகிதேஸ்வரின் உருவம்

Page 41
あ6 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வாசிக்க விரும்பினேர் சமஸ்கிருதத்தைக் கற்கவேண்டிய தாயிற்று. அதன் பயணுக சமஸ்கிருதத்திலுள்ள "இரா மாயணம்", "மகாபாரதம்" ஆகிய நூல்களையும் இவர்கள் கற்றனர்.
சிங்களத்திற் பொருள்களைக் குறிப்பதற்கில்லாத அநேக சொற்கள் சமஸ்கிருதத்தில் காணப்பட்டதால், சிங்களர் நூல் எழுதும்பொழுதோ, பேசும்பொழுதோ சிங்களத்தில் இல்லாத சொற்களுக்குச் சமஸ்கிருதச் சொற்களை உபயோகித்தனர்.

ஆறம் அத்தியாயம்
கிறீஸ், உரோம்
. இரேக்கர்
வியாபாரத்தின் பொருட்டுத் தென்னிந்தியாவிற்கு வந்த கிரேக்கர் என்ற ஒரு சாதியாரைப்பற்றி முன்னரே கூறியிருக்கிருேம். இதே சாதியார் கி.பி. இரண்டாவது
நூற்றண்டில் வசபன் என்ற அரசன் இலங்கையில் ஆட்சி நடத்திய காலத்தில், இலங்கை க்கு வந்து வாசனைத் திரவியங்களையும், விலை யுயர்ந்த இரத்தினக் கற்களையும், யானைகளையும் வாங்கிச் சென்றனர். இந்தியர் இவர்களை யவனர் என்று கூறிவந்தது போலவே சிங்களரும் இவர்களை யவனர் என அழைத் தார்கள். சின்ன ஆசியா வில் வாழ்ந்த அயோனியரே இந்தியரால் முதன் முதல் சந்திக் கப்பட்ட கிரேக்கராதலின் பின் வந்த கிரேக் கரெல்லோருக்கும் அயோனியர்' என்ற பெயரையே சூட்டினர். இப் பெயரே " யவனர்' என மருவிற்று.
மேலும், உலக நாகரிகத்திற்குப் பெரிதும் உதவிய புராதன மக்களுள் இவர்கள் மிகச் சிறந்தவர்கள். அதனுலும் இவர்களைப்பற்றி அறிய வேண்டியதவசியம்.
கிறீட்டரின் சிற்ப மண் பாத்திரம்
கிரேக்கர் தமது பிரயத்தனத்தினல் மாத்திரம் இவ் வளவு உன்னத நிலையை அடையவில்லை. கிரீசுக்குத் தெற்கே கிரீட் என்ருெரு தீவிருக்கிறது. இத்தீவு
57

Page 42
58 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வாசிகள், பபிலோனியா, எகிப்து ஆகிய தேசங்களுக்குச் சென்று அங்கு நிலவிய நாகரிக அம்சங்களையெல்லாம் கற்று வந்தனர். தாம் கற்றதுடன் அடங்கிவிடாமல், மேலும் அத்துறையில் முயன்று, சிற்பக் கலையில் விசேட முன்னேற்றமடைந்தார்கள்.
கிரேட்டியரின் நாகரிகம் ஏஜியன் தீவுகளிலும் கிறீசிலும் பரவலாயிற்று. எனவே, ஆரியர் கிறிசுக்கு
•x:సరపు
புராதன «55 t— t9l L — Lfo
வந்தபொழுது தாம் எங்கும் கண்டறியாத ஒர் உன்னத மான நாகரிகத்தை அங்கே கண்டார்கள்.
கிரேக்கர் கிரேட்டியரிடம் கற்றபின் அத்துறைகளில் மேலும் முயன்று பலவாறு முன்னேற்ற மடைந்தனர். சிற்பக்கலையிற் கிரேட்டியரையும் தோற்கடிக்கக்கூடிய கட்டிடங்களைக் கட்டினர். இலங்கையிற் கட்டப்பட்ட தாது கோபங்களைப்போன்ற கட்டிடங்களை அவர்கள்
 
 
 
 

கிரேக்கர் 59
கட்டவில்லை. ஆனல், அழகிய வீடுகளையும் நாடக அரங்கு களையும், கோவில்களையும் கட்டினர்கள். அனுராதபுரி யிலும் பொலன்னறுவையிலும் பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களைப்போல இவ்வழகிய கட்டிடங்கள் பாழ டைந்து கிடப்பதை இன்றும் கிறீஸிற் காணலாம். கிரேக் கருடைய கட்டிடங்கள் மிக அழகாயிருந்தபடியால், டச்சுச்காரர் ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பிய சாதி யார், அவற்றைப் பின்பற்றித் தாமும் வீடுவாசல்களைக் கட்டினுர்கள்.
மேலும், இவர்கள் கல்லிற் செதுக்கிய உருவங்களைப் போல வேறெந்த நாட்டிலுங் காணமுடியாது. இந்தியா கூட ஒருகாலத்திற் கிரேக்க சித்திரங்களைப் பின்பற்றி யது. அதனல் இந்தியாவைப் பின்பற்றிய இலங்கைச் சித் திர நீங்களிட் கூடக் கிரேக்க சித்திர அமைதியைக் காணலாம்.
நூல்கள் இயற்றுவதிலும் அவர்கள் இணையற்று விளங் கினர். கிரேக்க நூல்கள் இன்றும் விரும்பிக்கற்கப்படு கின்றன. இந்தியர்க்கு "மகாபாரதம்’, ‘இராமாயணம்" என்றிரு காவியங்களிருப்பதுபோலவே கிரேக்கருக்கும் 'இலியட்', 'ஒடிஸி’ என்ற இரு கிரேக்க இதிகாசங்களுண்டு. 'இலியட்' மகாபாரதத்தைப்போல ஒரு யுத்தத்தைப் பற்றிக்கூறுகிறது. சின்ன ஆசியாவில் திரோய் என் ருெ ரு நகர மிருந்தது. பாரிஸ் என்ற அந் நகரத்து இளவரசன், அக்காலத்து அழகு ராணியான கிரேக்க இளவரசி ஹெலன் என்பவளைக் கரந்து கொண்டுபோய் விட்டான். இதையறிந்த கிரேக்க சிற்றரசர்கள் ஆத்திரங் கொண்டு, பாரிஸ் இளவலைத் தண்டித்து, ஹெலனை மீட்பதற்காக ஏஜியன் கடலைத்தாண்டி திரோய் நகரத்தை முற்று கை யிட்டனர். பத்து வருடங்க ளா கச் சண்டை நடைபெற்றது. ஆனல் அந்நகரைப் பிடிக்க முடியாமற் போய்விட்டது. எனவே, கிரேக்கர் ஓர் உபாயத்தால் திரோய் நகரைப்பிடிக்க முயன்றனர். மரத்தினல் பிரமாண்டமான ஒரு குதிரையைச் செய்து அதன் வயிற்றுள் ஏராளமான போர் வீரரை அடைத்து

Page 43
%鹽監
• ×シ *シェ 短褶藏
秘
慈
ẹがな効?). ș、シ%
**
 
 

கிரேக்கர் 6
வைத்தார்கள். பின்னர், அக்குதிரையை விட்டுவிட்டு புறங்காட்டி யோடத் தலைப்பட்டனர். இதைக்கண்ட திரோய் நகரவாசிகள், அதனுள்ளிருப்பவர் தமது பகை வரென அறியாதாராய் அவ்வாகனத்தை நகருள் இழுத் துச் சென்றனர். நள்ளிரவில், நகர வாசிகள் நித்திரையா யிருக்கும்பொழுது, குதிரையின் வயிற்றிளிருந்த கிரேக் வீரர்கள் வெளியேவந்து அந்நகரத்து அரசனையும் குடி -களில் அநேகரையும் கொன்று, நகருக்குந் தீயிட்டார்கள்.
'இலியட்' என்ற கிரேக்க காவியத்தில் இப்போர் வருணிக்கப்பட்டிருக்கிறது. திரோய் நகரத்தை கிரேக்க பாஷையில் இலியம் என்று அழைப்பார்கள். அதனுல் தான் இந்நூலுக்கு 'இலியட்' என்ற பெயர் வரலாயிற்று. 'ஒடி' என்ற காவியம் யூலிஸெஸ் என்ற ஒரு கிரேக்க அரசனின் பெயரைக்கொண்டெழுந்தது. திரோய் நகரப்போரை முடித்துக்கொண்டு யூலிஸெஸ் கிரீஸ் திரும்பியபொழுது அவனுக்கு வழியில் நிகழ்ந்த அதிசயச் சம்பவங்களைப் பற்றி இக்காப்பியங் கூறுகிறது. இதில் திடுக்கிடக்கூடிய பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒரு பொழுது யுலிஸெஸ், சேர்ஸே என்னும் ஒரு அரக் கியைச் சந்திக்கின்றன். இச்சம்பவம் நமக்கு, விசயன் குவேனியை நினைப்பூட்டவில்லையா?
மந்திரவித்தையில் வல்ல சேர்ஸே என்னும் மோகினி வாழ்ந்த தீவுக்கு ஒரு முறை யூலிஸெஸும் அவனது வீரருஞ்சென்ருர்கள். யூலிஸெஸை விட்டு வீரர்கள் பிரிந்து அம்மாயக்காரி வசித்த அழகிய மாளிகைக்குச் சென்றனர். அங்கே அவள் அவர்களுக்கு உணவும் குடி வகைகளுங்கொடுத்து உபசரித்தாள். விருந்துண். பின் அவள் தனது மந்திரக்கோலால் அவர்களைத் தாக்கிப் பன்றி வடிவெடுக்கச்செய்து, பட்டிகளில் அடைத்து வைத்திருந்தாள். இதையறிந்த யூலிஸெஸ் தனது வீர ரைத் தேடிச்சென்ருன். வழியில் கிரேக்க தேவதையாககr ஹேர்மெஸ் யூலிஸெஸைச் சந்தித்து சேர்லேயின் மந்தி ரத்திலிருந்து தப்பிக்கொள்ளக்கூடிய ஒரு மூலிகையை அவனுக்குக் கொடுத்தது. யூலிஸெஸ் சேர் ஸேயின்

Page 44
岔2 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
மாளிகையுட் பிரவேசித்ததும், அம்மாயக்காரி அவனை வரவேற்றுபசரித்து உணவும் பானமுங்கொடுத்த பின் மந்திரக்கோலாலடித்தாள். யூலிஸெஸ் வாளை உருவி அவளை வெட்டப்போனன். உடனே அவள் உயிர்ப் பிச்சை கேட்கவே, அதற்கிணக்கிய யூலிஸெஸின் கட்ட ளைப்படி அவனது வீரர்களை மறுபடியும் மனித உருவாக்கி யூலிஸெஸிடம் அவள் ஒப்படைத்தாள்.
இக்காவியங்கள் கிரேக்க பாஷையில் எழுதப்பட்டி ருக்கின்றன. உலகிலுள்ள மிகச்சிறந்த பாஷைகளுள் கிரேக்க பாஷை யுமொன்று. சிங்களம், பாளி, சமஸ்கிரு தம், ஆங்கிலம்போலக் கிரேக்க பாஷையும் ஆரிய வகுப் பைச்சேர்ந்த பாஷையாகும். ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பிய சாதியார், சிங்களர் சமஸ்கிருதச் சொற். களைத் தமது பாஷையிற் கலந்துகொண்டதுபோல, கிரேக்க சொற்களைத் தமது பாஷைகளிற் கலந்துகொண் டனர்.
உலகத்திலே முதன்முதல் சரித்திரத்தை எழுதிய பெரிய சரித்திராசிரியர் கிரேக்கர் என்றே கூறலாம். அதனுல் ஏனைய பண்டை மக்களைப்பார்க்கிலும் கிரேக் கரைப்பற்றிய சரித்திரத்தை நாம் அதிகம் அறியக்கூடி யதாயிருக்கிறது.
தமது சரித்திரத்திலுள்ள அநேக சம்பவங்களைப் பற்றி அவர்கள் விளக்கமான விரிவுரை எழுதியிருக்கின் றனர். கிறீஸில் முடியாட்சி இருந்துவரவில்லை. அவர் கள் நகர ராச்சியங்களென்ற பெயரோடு (City States) சுதந்திரமுள்ள சிறுச்சிறு நகரங்களில் பெரும்பாலும் குடியாட்சியே நடத்திவந்தார்கள். இவ்வாறு விளங்கிய நகர ராச்சியங்களுள் அ தென்ஸ் மிகப் புகழ்வாய்ந். தது. இந்நகரத்திற்ருன் பழைய பல அழகிய சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டன. மற்ருெரு சிறந்த நகரம் ஸ்பாட்டா. பாரசீகரை தெர்மப்பைவீக் கனவாயில் எதிர்த்து நின்ற லியோனி தாசனைப் பற்றியும் அவனு: டைய முன்னூறு வீரரைப்பற்றியும் நீங்கள் அறிந் திருக்கலாம்.

கிரேக்கர்
அநேகமாகக் கிரேக்கர் ஐக்கியமற்றவர்களாயிருந்த
போதிலும், விறல்மிக்க பாரசீக மன்னர்கள் அவர்களே எதிர்த்த காலத்தில் ஒற்றுமைப்பட்டிருக்கின்ருர்கள்.
அதனல் பாரசீகர் அவர்களை வெற்றிபெற முடியாமல் அடிக்கடி தோல்வியுற்றனர். பாரசீக ருக்கெதிராக நடத்தப்பட்ட பல யுத்தங்களுள் மரதன் போர் சிறந் தது. இதில் பாரசீகர் மிக மோசமாகத் தோற்கடிக்கப் பட்டனர். இந்தப் போர் துவங்குவதற்குமுன் அதென்ஸ் நகரத்தார் ஸ்பாட்டா நகரத்தவரைத் துணை வேண்டி ஞர்கள். இச்சந்தர்ப்பத்தில்தான் மிக வேகமாய் ஓடக் கூடிய பீடிப்பிடெஸ் என்பவன் ஏதென்ஸ் நகரிலிருந்து ஒரு செய்தியைக்கொண்டு ஸ்பாட்டாவுக்கு ஓடினன்.
நூற்று நாற்பது "மைலே அவன் இரண்டு தினங்களில்
ஓடக்கூடியதாயிருந்தது. இக்காரணத்தைக்கொண்டே
இன்றும் நீண்டதூர ஓட்டப் பந்தயங்கட்கு மரதன்
பந்தயங்களெனப் பெயருண்டு.
தேகாப்பியாசம் சம்பந்தமான பெரிய விழாக்களை
முதன் முதற் கொண்டாடியவர்கள் கிரேக்கரே. நான்கு வருடத்துக்கொருமுறை ஒலிம்பியா என்னுமிடத்தில் இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டன. கிரேக்க தேசத்
தின் பல பாகங்களிலிருந்தும் சனங்கள் வந்து இவ்விழா வைக் கொண்டாடுவார்கள். ஆரம்பத்தில் ஒட்டப்பந்த
யம் மாத்திரம் நடைபெற்றது. பின்னர், பாய்தல், ஒடல்,
வளையமெறிதல், ஈட்டியெறிதல், மல்யுத்தம், தேர்ச்சவாரி
ஆகியவையும் நடைபெற்றன. இப்பந்தயங்களில் வெற்றி, பெற்ருேருக்கு காட்டு ஒலிவ் இலைகளாலான கிரீட மொன்று பரிசாக வழங்கப்பட்டது. இக்காலத்திற்
போலக் கிண்ணப்பரிசு வழங்கும் முறை அக்கா லத்தி
லிருக்கவில்லை. இவ்வாருேர் இலைக்கிரீடத்தைப் பெறு வது பெரும் பேருகவே கருதப்பட்டது.
இப்பந்தயங்கள் கி. மு. 776-ல் துவங்கியிருக்கலா மெனக்கூறப்படுகிறது. பெளத்தர்கள் தமது சகாப் தத்தை புத்தபகவான் நிர்வாண மெய்திய நாட்டுவங்கிக் கணிப்பதுபோலவும், கிறிஸ்கவர், கிறிஸ்துநாத பிறந்த

Page 45
64 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
நாளைக்கொண்டு கணிப்பதுபோலவும், கிரேக்கரும் இப் பந்தயங்கள் துவங்கிய நாளைக்கொண்டே தமது சகாப். தத்தைக் கணித்தார்கள். அதனல் இவ்விழா எவ்வளவு விசேஷமாகக் கிரேக்கராற் கொண்டாடப்பட்டதென்பது நன்கு தெரியவரும். ஒரு சம்பவம் நடந்த காலத்தைக் குறிக்கும்பொழுது கிரேக்கர், அது பத்தாம் பந்தயக் கொண்டாட்டத்தின் முதல் வருடத்தில் அல்லது இரண் டாம் வருடத்தில் எனக்கூறுவர், எதுபோ லெனின் கிறிஸ் தவர் கி.பி. முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என் முற்போல என்க.
பண்டைக் காலத்தில் வாழ்ந்த மக்கட்கூட்டத்தவ ரெல்லாரைப் பார்க்கிலும், புராதன கிரேக்கர் எதையும் உசாவி அறியும் விசித்திரமான உள்ளப்பாங்குடையவரா யிருந்தார்கள். நூல்களிற் கற்பதையும் ஆசிரியர்களி டம் கேட்பதையும் நம்பிக்கொண்டு சும்மா இராமல், தாங்களாக அவ்விஷயங்களை ஆராய்ந்துக்கொள்ளும் இயல்புடைய வராயிருந்தனர். மதபோதகர்களுடைய சொல்லினல் அவர்கள் கட்டுப்பட்டிராமல், சகல துறை யிலும் அறிவைப் பெறுதற்கு ஆர்வங் காட்டினர்.
பண்டைக்காலத்திற் கிரேக்கர் இக்காலத்தவரைப் போல இயந்திரங்களை உபயோகித்ததில்லை. ஆனல், கி.மு. மூன்ரும் நூற்றண்டில் ஆக்கிமிடிடஸ் என்ற ஒரு கிரேக்கன் துலாயந்திரத்தின் உபயோகத்தைக் கண்டு அறிந்தான். இக்கால ரயில் போக்குவரவுக்காதார மான நீராவியந்திரத்தை ஜேம்ஸ்வாட் என்பவர் கண்டு அறிவதற்கு 1,500 வருடங்கட்கு முன்னரே கி.பி. மூன் ருவது நூற்ருண்டில் ஹீரோ என்ற இன்னுெரு கிரேக்கர் நீராவி யந்திரமொன்றை இயற்றினர். பூமிசாத்திரத் திலும் கிரேக்கர் சிறந்த அறிவு பெற்றிருந்தார்கள். முதன்முதல் இலங்கைப் படத்தைக் கீறியவர் தலமி என்ற கிரேக்க அறிஞரே. கிரேக்கர் எழுதிய பூமிசாஸ் திரத்தின் துணைகொண்டே போர்த்துக்கீசர் ஐரோப்பாவி லிருந்து இந்தியா செல்வதற்கு வழியைக் கண்டு அறிந் 35 GornT.

சோக்கிரதீஸ் s
1. சோக்கிரதீஸ்
கிரேக்கருள் மிகச் சிறந்தோர் போர் வீரரல்லர்; பெரிய ஞானிகளும் நூலாசிரியர்களுமே. இவர்களுள் மிக்க புகழ்வாய்ந்தவர் சோக்கிரதீஸ். இவர் ஒரு கற்றச் சனுடைய மகன். கி.மு. 469-ல் புத்தர் பரிநிர்வாண மடைந்து 14 வருடங்களின் பின் இவர் பிறந்தார்.
அதென்ஸ் வீதிகளில் இவர் ஏழைகளோடும் செல்வ ரோடும், சிறியாரோடும் முதியவரோடும், பலவிதமான விஷயங்களைப் பற்றிப் பேசிவந்தார், சனங்கள் கொண் டுள்ள கொள்கைகளில் எவையாவது பிழையாயிருந் தால், அவற்றைப்பற்றி அவர்களுடன் ஆராய்வாய்ப் பேசி, பிழையைப் படிப்படியாய் உணரச்செய்வார்.
பழைய தெய்வங்களிலும் சம்பிரதாயங்களிலும் சிறுவர்கள் நம்பிக்கை இழக்கச் செய்கிறார் என எண்ணி அதென்ஸ் நகரத்துத் தலைவர்கள் அவரை விரும்பவில்லை. எனவே, சோக்கிரதீசர் எழுபது வயதாயிருக்கும்பொழுது அவரை விசாரணைசெய்து, மரண தண் டனை விதித்தார்கள். தகாத சில உபாயங்களைக் கையாண்டிருந் தால் சோக்கிரதீசர் உயிர்தப்பி யிருக்கலாமெனவும் அவ்வாறு செய்ய அவர் மறுத்து மரண முற்ரு ரெனவுங் கூறப்படுகிறது. தன்னை விசாரணை செய்த நீதி பதிகள் முன்னிலையில் சோக்கிர தீஸர், ஒரு கருமத்தைச் செய்யும் பொழுது அது சரியா, பிழையா எ ன் ட  ைத ஆராய்ந்து அறிய வேண்டுமேயல்லாமல், மரண த்
8772一4

Page 46
66 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தையோ உயிர்வாழ்வதையோ கவனிக்கக்கூடாதெனக் கூறினர்.
சோக்கிரதீஸரின் போதனைகளை அவரது மாணுக்களு கிய பிளேட்டோ என்பவர் நூலாக எழுதினர். ஐரோப் பாவின் இக்கால அறிவெல்லாம் பிளேட்டோ, அரிஸ் டோட்டில் ஆகியோரின் நூற்களையே அடிப்படையாகக் கொண்டன.
1. மகா அலெக்சாந்தர்
கிரேக்க நகர சமஸ்தானங்கட்கு வடக்கே மஸிடோன் என்ருேர் இராச்சியமுண்டு. இங்கேயும் ஆரிய வகுப் பாரே வாழ்ந்துவந்தனர். ஆனல், கிரேக்கரைப்போல இவர்கள் அத்துணை நாகரிகமுடையவர்களாயிருக்கவில்லை. கி.மு. 359-ல் பிலிப்பு என்ருெரு பெரிய அரசன் ஆட்சி நடத்தினன். இவன் மசிடோனிய நாகரிகத்தைச் சீர் திருத்துவதற்காக கிரேக்க ஆசிரியர்களையும், சிற்பிகளை யும், சித்திரக்காரரையும் தன்தேசத்துக்கு வரவழைத் தான். கடைசியாக கிரேக்கருடைய நகர சமஸ்தானங் களையும் வெற்றிகொண்டு கிரேக்கரைத் தன்னடிப்படுத் தினன்.
பிலிப்பின் மகஞன அலெக்சாந்தர் தனது தந்தை நிறுவிய ஏகாதிபத்தியத்தை மேலும் பெருக்கவிரும்பி கிரேக்கருடன் போர்புரிந்த பாரசீகருடைய பெரிய இராச்சியத்தையும் கைப்பற்றவிரும்பினன். இக்காலத் தில் பாரசீக இராச்சியம், எகிப்து, சின்ன ஆசியா, பபி லோனியா, பாரசிகம், ஆப்கானிஸ்தானம், பலுகிஸ்தா னம், வடமேற்கு இந்தியா ஆகிய தேசங்களைத் தன்னு னுள்ளடக்கியிருந்தது. சில வருடங்களில் அலெக் சாந்தர் இத்தேசங்களையெல்லாம் வென்று பெரிய போர் வீரனும், சக்கரவர்த்தியுமானன்.
அலெக்சாந்தர் சிறுவனுயிருந்த காலத்திற் புகழ் பெற்ற கிரேக்க ஆசிரியரான அரிஸ்டோட்டில் அவருக்கு ஆசிரியராயிருந்தாரென்றும் கூறப்படுகிறது. அதனல்

¿iri¿No=---
|q979 șoguro

Page 47
68 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கிரேக்க நாகரிகத்தை அவர் மிகவிரும்பித் தாம் சென்ற இடமெல்லாம் பரப்பினுர். கிரேக்க நகர சமஸ்தானங் கள் போல அரசாங்கங்களை அமைத்து கிரேக்க பாஷை யையும் கிரேக்க எண்ணங்களையும் பரப்பினர். கி.மு: 232-ல் தமது முப்பத்திரண்டாவது வயதில் அலெக் சாந்தர் இறந்தார். அவருக்குப்பின் அவரது பெரிய இராச்சியத்தை அவரின் சேனதிபதிகள் தம் முட் பங்கிட்டு ஆண்டனர். அவர்களும் கிரேக்க நாகரிகத் தைப் பரப்பி வந்தார்கள். இக் காரணத் தின ற் ரு ன் விவிலிய வேதத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப் பட்டது. இந்திய சிற்பமும் வான சாத்திர நூல்களும் கிரேக்க சார்புடையனவா யிருப்பது இக் கார ண ங் கொண்டேயெனலாம்.
V. g56)Lf5
மகா அலெக்சாந்தர்
தாபித்த நகரங்களுள் நைல்
மகா அலெக்சாந்தர் நதியின் சங்கமத்திலுள்ள
அலெக்சாந்திரியா மிகப்
புகழ் வாய்ந்தது. அலெக்சாந்தருக்குப் பின் அரசு
செலுத்தியவர் இந்நகரில் ஒரு சர்வகலாசாலையையும், நூல் நிலையத்தையும் தாபித்தார்.
கீழைத்தேசங்களிலிருந்து செங்கடல் வழியாகக் கொண்டுவரப்பட்ட பொருள்களெல்லாம் அலெக்சாந்தி ரியா வழியாகவே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. இதனல் அலெக்சாந்திரியா ஒரு பெரிய வர்த்தகதலமாயிருந்தது. அக்காலத்தில் சுவேஸ் கால்
 


Page 48
70 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வாய் வெட்டப்படவில்லை . செங்கடலிலிருந்துவந்த கப்பல்கள் ஒரு கால் வாய் வழியாக நைல் நதிக்குச் சென்று அங்கிருந்து மத்தியதரைக் கடலுக்குப்போயின. பிரித்தானியரைப்போலவே புராதன கிரேக்கரும், குடி யேற்றத்தில் அதிக ஊக்கமுடையவர்களாயிருந்த படி யால், மத்தியதரைக் கடலைச்சுற்றியுள்ள நாடுகளைப்பற்றி நன்கறிந்திருந்தார்கள். அலெக்சாந்தர் கீழைத்தேசங் களை வெற்றிகொண்ட பின்னர், அத்தேசங்களைப்பற்றி யவர்கள் அதிகம் அறியக்கூடியதாயிற்று. இவ்வாறு அறிந்தவற்றையெல்லாம் அலெக்சாந்திரியாவில் தலமி என்ற வான சாஸ்திரி பயன்படுத்தி, கி.பி. இரண்டாம் நூற்ருண்டில் உலகப் படமொன்றைக் கீறிஞர்.
ஆனல், தலமியின் படத்திற் பல பிழைகள் மலிந்திருக் கின்றன அவருடைய ஐரோப்பாப்படம் மேற்கே வெகு தூரம் பரந்திருக்கிறது. ஆபிரிக்கா மிக விசாலமாயிருக் கிறது. இந்தியாப்படம் தெற்கே முக்கோணமாக நீள வில்லை. சீன ஸ்பானியாவுக்கு மிக அண்மையிலுள்ள தென அவர் எண்ணினர். அவர் கீறிய இலங்கை மிகப் பெரிதாயிருப்பதுடன் சில இடங்கள் பிழையாகவும் குறிக் கப்பட்டிருக்கின்றன. ஆசியாவையும் ஆபிரிக்காவை யும் இணைக்கும் ஒரு பெரிய நிலப் பரப்பு இந்து சமுத்தி ரத்துக்குக் கிழக்கேயிருந்ததென அவர் எண்ணினர்.
இருந்தும், இத்தகைய ஒரு படத்தையாவது அக் காலத்திற் கீறியிருப்பது பெருமைக்குரியதே. இலங்கை யராவது இந்தியராவது அக்காலத்தில் உலகப்படங்கீறி யது கிடையாது. அவர்கள் உலகத்தைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவுமில்லை. உலகத்துக்கு மத்தியில் மகாமேரு என்ற மலை உண்டென்றும் நான்கு திசையிலும் நாலு கண்டங்களிருந்தன வென்றும் தக்கிணத்திலுள்ள கண் டம் சம்புத்துவீபமென்னும் இந்தியாவெனவும் அவர்கள் எண்ணினுர்கள்.

a Gogrrorř 7
V. p Gymrupň
இலங்கையின் வடமேற்குப் பகுதிகளிலும், அனுராத புரி, சிகிரியா முதலிய இடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட உரோமருடைய நாணயங்கள் பல, கொழும்பு நூதன சாலையிற்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நாண யங்களில் உரோம சக்கரவர்த்திகளின் தலைகள் அச்சிடப் பட்டிருக்கின்றன. கிரேக்க வியாபாரிகள் இலங்கையில் வியாபாரம் நடத்திய காலத்தில் இவை இலங்கையில் வழங்கப்பட்டன.
கிரேக்க வர்த்தகர்கள் உரோம நாணயங்களை ஏன் உபயோகித்தனர்? என நீங்கள் கேட்கலாம். கிரேக்கர் இலங்கைக்கு வந்த காலத்தில் அவர்கள் உரோம இராச்சி யத்தின் ஆட்சிக்குக்கீழிருந்தனர். அக்காலத்தில் மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள தேசங்களெல்லாம் உரோம இராச்சியத்திலடங்கியிருந்தன. உரோம சக்கரவர்த்தி யாகிய ஒகஸ்தசு காலந்தொட்டே (கி.மு. 31-கி.பி. 14) உரோமர் கீழைத்தேசங்களில் விளையும் வாசனைத்திர வியங்களையும், முத்து முதலியவற்றையும் விலையுயர்ந்த இரத் தினக் கற்களையும் வாங்கிவந்தார்கள். இவ்வியா பாரத்தில் ஈடுபட்டிருந்த கிரேக்கர் முதல் தென்மேற்கு இந்தியாவில் வியாபாரம் நடத்தியபின் இலங்கைக்கும் வந்து வியாபாரம் செய்தனர்.
கிரேக்கர் எவ்வாறு ஐரோப்பிய நாகரிகத்துக்குத் துணை புரிந்தார்களோ, அவ்வாறே உரோமரும் பெரிதும் சகாயஞ்செய்தனர். அ வ் வா றே இலங்கையிலும், உரோமருடைய நாகரிகம், போர்த்துக்கேயர் மூலமாக வும், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஏனைய ஐரோப்பிய சாதியார் மூலமாகவும் பரவிற்று. ஆதலின் இவர்களைப் பற்றிச் சிறிது அறிந்திருப்பது இன்றியமையாததே.
கொழும்பு நூதனசாலைக் கட்டிடம், இலங்கைத் தேசாதிபதியாகிய சேர். வில்லியம் கிரேகரி காலத்திற் கட்டப்பட்டபோதிலும், உரோமச் சிற்பங்களின் அம் சங்கள் பலவற்றை அதில் காணலாம். உரோமர் கட்டி

Page 49
怪、
i
 

2. G print Lori 7
டங்கள் கட்டுவதில் மிகத்திறமையுற்றிருந்ததுபோலவே, பொறிஇயலிலும் (இஞ்சினியர்த் தொழில்) திறமையும் பெற்றிருந்தார்கள். இத்தாலியில் அவர்கள் கட்டிய கட்டிடங்களையும் பாலங்களையும் இன்றுங் காணலாம்.
சிறந்த வீதிகள் அமைப்பதிலும் உரோமர் மிகத் திறமை பெற்றிருந்தார்கள். அவர்களே வீதியமைக்கும் முறையை முதன்முதற்கண்டு அறிந்தவர்களெனலாம். சிங்கள அரசர்கள் சமாதானகாலத்திற் தமது போர் வீரரையும் யுத்தக் கைதிகளை யுங் கொண்டு பெரிய தாது கோபங்களையும் விகாரங்களை யும் கட்டுவித்தார்கள். ஆனல், உரோமரோ தமது இராச்சியங் களின் பல்வேறு பகுதிகளுக்குத் தங்கள் போர்வீரர் விரைந்து செல்லக்கூடிய நல்ல வீதிகளை அமைப்பித்தார்கள்.
இப்பொழுது ஆங்கிலப் பாடசாலை களிற் கற்பிக்கப் பட்டு வரும் இலத்தீன் மொழி யே உரோமரின் மொழியா யி ரு ந் த து . மேலைத் தேச வைத்திய முறையைக் கையா ளும் வைத்தியர்கள், தமது ஓர் உரோம போர் வீரன் மருந்துகளின் பெயரை இலத் தீன் மொழியிலேயே வழங்கிவருகிருர்கள். தாவர சாத் திரம் கற்போர், மரங்களையும் பூக்களையும் இலத்தீன் பெயர்கொண்டே யழைப்பதாற் பேராதனைப் பூந்தோட் டத்திலும் மரப்பெயர்களும் பூக்களின் பெயர்களும் இலத்தீன் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன, மத் திய காலத்தில் பெளத்த பிக்குகள் தமது நூல் 1.* பாளி மொழியிலெழுதியதுபோலவே, கிறிஸ்தவ பட,பிமாரும், ஐரோப்பிய கல்விமான்களும் இலத்தீன் மொழியையே

Page 50
7委 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
வழங்கிவந்தார்கள். இன்றைக்குக்கூட உரோமாபுரியி லிருக்கும் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர், உலகத்துப் பல்வேறுபாகங் களிலுமுள்ள குருமாருக்கு இலத்தீன் மொழியிலேயே விண்ணப்பம் விடுத்துவருகிருர், உரோமன் கத்தோலிக்க குருமார் எல்லாரும் இலத்தீன் மொழியைப் படித் திருக்கவேண்டியதவசியம். சிங்கள மொழிக்கு அநேக வார்த்தைகளை உதவியுள்ள போர்த்துக்கீச மொழி, இலத் தீன் மொழியிலிருந்தே உ ற் ப த் தி யா ன து . மேலும் டச்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் இலத் தீனிலிருந்து ஏராளமான  ெசா ற் களை க் கடன் வாங்கியிருக்கின்றன.
இலங்கையில் நிலவி வரும் உரோம- டச்சு க் கட்டளைச் சட்டங்கள் கூட உரோமரின் டுசல் வாக்கைப்புலப்படுத்தும். நீதிச்சட்டங்களை இயற்று வதில் உரோமர், புராதன i,SSGaf. 0 0 s ff}
BELGIAŽTEZA ேேள:ே ஹனிபால் ஐரோப் பாவிலுள்ள தே ச ங் க ளின் நீ தி ச் சட்டங்கள் அநேகமாக உரோம நீதிச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும், அல்லது அச்சட்டங் களின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கும்.
リ多*イ釜
இத்தாலியின் ம த் தி ய பிரதேசத்தில் தைபர் என்னும் நதி பாய்கின்றது. அதன் கரையில் உரோமா புரி ஒரு சிறு கிராமமாயிருந்தது. உரோமியூலசு என்ப வனும் அவனது தம்பியும் சிறு பிள்ளைகளாயிருந்த காலத் தில் ஒரு பெண் ஒனய் அவர்களைக் கண்டெடுத்து வளர்த்து
 
 

ஒகஸ்தசு சீசர் 75
வந்த தென்றும் உரோமியூலஸே உரோமாபுரியை தாபித் தானெனவும் கதை கூறப்பட்டுவருகிறது.
உரோமாபுரி வாசிகள் படிப்படியாக இத்தாலி முழு வதற்குந் தலைவரானர்கள். பின்னர், சிசிலித்தீவுக்கு எதிரே ஆபிரிக்காக் கரையிலுள்ள கார்தேஜ் என்னும் வலிமை பொருந்திய நகரவாசிகளோடு போர் தொடுத் தனர். இந்நகரத்தவரே போனீசியர் என்ற புகழ் பெற்ற புராதன வர்த்தகர்களாகும். இவர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பிரயாணஞ்செய்து வர்த்தகம் நடத்தி வந்தார்கள். பெளத்தபிக்குகள் இலங்கைக்குக்கொண்டு வந்த லிபியை இவர்கள்தான் முதன்முதல் இந்தியாவில் புகுத்தியிருக்கவேண்டுமெனப் பல அறிஞர்கள் அபிப்பி ராயப்படுகின்றனர்.
உரோமருக்கும், போனிசியருக்கும் போர் நடந்த பொழுது ஹனிபால் என்ற பெரிய தளகர்த்தன் போனி சிய சேனைக்குத் தலைமை வகித்தான். ஹனிபால், தனது பெருஞ் சேனையுடன் முதல் ஸ்பானியாவைத் தாக்கி அதைக் கைப்பற்றியபின், பிரனிஸ் மலையைக் கடந்து பிரான்ஸுக்கூடாகப்போய் அல்ப்ஸ் மலையையுங் கடந் தான். கடந்து இத்தாலிக்குட் பிரவேசித்தான். முதற் பல சண்டைகளில் ஹனிபால் வெற்றியடைந்தபோதி லும், கார்தேஜிலிருந்து படைத்துணை வராதபடியால், ஈற்றில் இத்தாலியை விட்டுப் பின்வாங்கவேண்டியதா யிற்று. பின்னல் உரோமர் கார்தேஜ் நகரத்தின்மீது படையெடுத்து அந்நகரத்தைத் தரைமட்டமாக்கி மத்தியதரைக்கடல் நாடு முழுவதையும் ஆட்சி செய் தார்கள்.
V. ஒகஸ்தசு சீசர் கார்தேஜ் வீழ்ந்தபின்னர் உரோமர், மத்தியதரைக் கடலைச்சார்ந்த ஏனைய தேசங்களையும் அடிப்படுத்தினர். கிரீசையும், மசிடோனையும், சின்ன ஆசியாவையும், ஸ்பானியாவையும் அவர்கள் வென்றனர். இதன்பின் னர், உரோமருட்டலைசிறந்த வீரஞகிய ஜூலியஸ் சீசர்

Page 51
76 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
பிரான்சையும் பெல்ஜியத்தையும் வென்று, பிரித்தானி யாவுக்கும் எகிப்துக்கும் விசயஞ்செய்தான். பின்னர், உரோம ஏகாதிபத்தியத்தின் தலைவனஞன்.
ஜூலியஸ் சீசருக்குப்பின் அவனது மருமகனன ஓகஸ் தசு சீசர் முதல் உரோம சக்கிராதிபதியாக முடிசூட்டப் பெற்றன். இவன் மிகத்திறமையும் நுட்ப புத்தியும் வாய்ந்த வன். தன்து இராச்சியத்தின் எல்லையைப் பெருக்கியது மல்லாமல் அரசாங்க நிர்வாக முறை யையுஞ் சீர்திருத்தினன். r நாட் டி ல் ஒ மு ங்  ைக யுண் டாக்கித் தன்னட் சிக்குக் கீழ்ப்பட்ட தேசங் களிற் சமாதானத்தை நிலவச் செய்தான்.
இவனுடைய ஆட்சிக் காலத்திலேதான் கிரேக்கர் வியாபாரத்தின் பொருட்டு முதன் முதல் இந்தியா வுக்கு வந்தனர் என ஏற் i கெனவே கூறியுள்ளோம். இவன் காலத்தில் உலக /ா, சரித்திரத்தையே மாற்றக் கூடிய ஒரு பெரிய சம்பவம் Z நடைபெற்றது. அதாவது, ஒகஸ்தசு சீசர் யூதர் களின் நாடாகிய பலஸ்தீனத்தில், கிறிஸ்து சமயதாபகரான இயேசுக் கிறிஸ்துநாதர் அவதரித்தார். பலஸ்தீனம் அக்காலத்தில் உரோமர் ஆட்சியில் இருந்து வந்தது.
யூதர் என்று சொல்லப்படும் எபிரேய சாதியார் முதன்முதல் அராபியப் பாலைவனங்களில் விவசாயிக ளாய் வாழ்க்கை நடத்திவந்தனர். ஆபிரகாம் என்ற பூதத்தலைவர் அவர்களை அராபியாவிலிருந்து ஏகிப்துக்கு அழைத்துச்சென்ருர், எகிப்தில் ஆண்ட அரசர்கள்
 
 
 
 

ஒகஸ்தசு சீசர் 77
இவர்களில் ஒரு பகுதியாரை அடிமைகளாக்கினர். இவ் வாறு அடிமைப்பட்டவர்களிடையே மோசே என்ருெரு தீர்க்கதரிசி தோன்றி அவர்களது அடிமைத் தளையை நீக்கி எகிப்திலிருந்து அவர்களைப் பலஸ்தீனத்துக்கு இட் டுச்சென்ருர்,
கி.மு. ஆருவது நூற்ருண்டில் நெபுகட்னெஸர் என்ற அரசன் யூதர்களைக் கைதுசெய்து பபிலோனியாவுக்குக் கொண் டு போன ன் . ஆஞல், சில காலத்தின் பின்னர், பாரசீகர் பபி லோனியாவைக் கைப் பற்றியதும், யூதரைப் பல ஸ் தீனத் துக் கு ச் செல்ல அனுமதித்தனர். இதன் பின்னர், மகா அலெக்சாந்தர் கி.மு. நாலாவது நூற்ருண்டிற் பலஸ்தீனத்தைக் கைப் பற்றினர். அடுத்தாற் போல் அத்தேசம் உரோ மர் கைப்பட்டது.
யூதரின் வேதமாகிய "விவிலிய நூலில் அவர் 参
களைப்பற்றிய பல விஷ யங்களை அறியலாம் . யூதப் போதகர்கள் “விவிலிய நூல் இன்று உலகத்திலேயுள்ள முக்கியமான எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சிங் களரின் சரித் திரத்தை ‘மகாவமிச’மென்ற நூல் கூறுவதுபோலவே விவி லிய வேதத்தின் முதற்பாகமாகிய பழைய ஏற்பாட்டில் யூதருடைய சரித்திரம் கூறப்பட்டிருக்கிறது. புதிய காற் பாட்டிலே இயேசு கிறிஸ்துநாதரின் சரித்திரமும், .ெ.ெ முதலாம் நூற்றண்டில் கிறிஸ்து சமயம் பரவிய வரலா

Page 52
o
N
N.
VY N
ܕܒܣ=ܐ* ܒ محصے
v a N y NA 窥
'A\'\''', Ş, y ܠ ܢ
St.
y WY
N w
y N
W
w
 
 
 
 
 

ஒகஸ்தசு சீசர் 7 Ο
றும் கூறப்பட்டிருக்கிறது. இந்தியரைப்போலவே யூத ரும் கடவுள் பக்தியுள்ள ஒரு சாதியார். தந்தையைப் போல அன்பு காட்டும் ஒரு நீதியுள்ள கடவுள் இவ்வுலகை ஆட்சி செய்கிருர் என அவர்கள் கருதிவந்தனர். இக்கொள்கையானது பிற்காலத்திற் பல சாதியாரிடத்தி லும் பரவலாயிற்று.
பெளத்த சமயத்தைப்போலவே கிறிஸ்து சமயம் உலகின் பல பாகங்களிலும் பரவலாயிற்று. இலங்கையில் பெளத்த சமயம் மக்களை நாகரிகப்படுத்தியதுபோலவே கிறிஸ்து சமயமும் ஐரோப்பாவை நாகரிகப்படுத்திற்று. உரோமன் கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தியரும் தமது சமயத்தைப் பரப்புவதற்காகத் தேவாலயங்களைக் கட்டி யும் பாடசாலைகளை தாபித்தும் செய்துவரும் முயற்சிகளை நாம் இத்தீவின் பல பாகங்களிலும் பார்கலாம்.
மேலும், நாம் கிறிஸ்து சகாப்தத்தையே அநேக மாகக் கைக்கொள்ளுகின்ருேம். ஒரு சம்பவம் நடந்த ஆண்டைக் குறிப்பிடவேண்டுமானுல் கிறிஸ்து ஆப்தத் தையே பெரும்பாலும் கைக்கொள்ளுகிருேம். உதார ணமாக, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடும்பொழுது கி.மு. என்று அவ் வாண்டிற்கு முன் எழுதுகிருேம். அவ்வாறே கிறிஸ்து பிறந்தபின் நடந்த நிகழ்ச்சியைக் குறிக்குமிடத்து கி.பி. என்று எழுதுகிருேம்.
ஆரம்பத்தில் உரோம சக்கரவர்த்திகள் கிறிஸ்து சம யத் தவரை இம் சைப்படுத்தி வந்தார்கள். ஆனல், கொன்ஸ்தாந்தைன் என்ற உரோம சக்கரவர்த்தி கிறிஸ்து சமயத்தைத் தானே மேற்கொண்டதுமன்றித் தனது இராச்சியத்துப் பிரசைகளும் கைக்கொள்ளுமாறு செய் தான். ஞாயிற்றுக் கிழமைகளை ஒய்வு நாளாக் கிய முதற் சக்கரவர்த்தி இவனே. பைசாந்தியம் என்ற கிரேக்க குடியிருப்பில் இவ்வரசன் தனது பேurb கொன்ஸ்தாந்திநோபில் என்ற நகரையும் தாபித்தான். இந்நகர் இன்று இஸ்தான்புல் என அழைக்கப்படுகிறது.

Page 53
80 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
V. givLąGOT Gör
ஒகஸ்தசு சீசருக்குப் பின் வந்த அரசர்களுக்கு உரோம இராச்சியத்தை நிலைகுலையாமல் காப்பாற்றுவது கஷ்டமாயிற்று. இதற்குப் பல காரணங்களுண்டு. உரோம இராச்சியம் மிக விரிந்து பல தேசங்களையும் சாதியாரையும் கொண்டிருந்தது. அன்றியும், கி.பி. மூன் ருவது நூற்ருண்டில் வடக்கேயிருந்து சில ஜெர்மன் சாதியார் உரோம இராச்சியத்துட் பிரவேசித்து இத் தாலி, ஸ்பானியா, வட ஆபிரிக்கா, பிரான்ஸ், பெல்ஜி யம், பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அதன் பின்னர், மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஹஜூணர்கள் கிழக்கு ஐரோப்பா வைத் தொடர்ந்து சூறையாடினர். கிழக்கு எல்லேயில் வேருெரு தொல்லையுண்டாயிற்று. ஒரு வலிமைமிக்க பாரசீக இராச்சியம் கிழக்கே தாபிக்கப்பட்டது. இப் புதிய இராச்சியத்தினுல் உண்டாகும் கஷ்டங்களை ஒரளவுக் குக் குறைப்பதற்காகவே கொன்ஸ்தாந்தைன், கொன்ஸ் தாந்தினுேப்பிள் என்ற நகரத்தை தாபித்ததுடன் தனது இராச்சியத்தையும் கிழக்கு இராச்சியம், மேற்கு இராச்சி யம் என கி.பி. 364-ல் இரண்டாகப் பிரித்தான்.
கொன்ஸ்தாந்தைனுக்குப் பின் உரோம இராச்சி யத்தை நிலைகுலையாமற் பாதுகாப்பதற்கு முயன்ற பலருள் கி.பி. 527-ல் உரோம சக்கரவர்த்தியான ஜஸ்டினியன் மிகச் சிறப்புள்ளவன். கிழக்கேயுள்ள தனது இராச்சியப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு முயன்ற பாரசீகருடன் ஜஸ்டினியன் பல ஆண்டாகப் போர் தொடுத்தான். ஜெர் மன் சாதியாரால் சுவீகரிக்கப்பட்ட ஸ்பானியாவின் ஒரு பகுதியையும், வட ஆபிரிக்கா, இத்தாலி ஆகிய தேசங் களையும் அவன் வெற்றிபெற்றன். ஆனல், ஜஸ்டினிய னுடைய பெருமை இவ்வெற்றிப் பிரதாபங்களில் மாத் திரம் தங்கியிருக்கவில்லை. இவனுக்குப்பின் வந்த அரசர்கள் இவன் வெற்றிபெற்றவற்றையெல்லாம் இழந்தார்கள். ஆணுல், உரோம நீதிச் சட்டங்களை இயற் றியதால் ஜஸ்டினியன் பெரும் புகழுக்குரியவனுஞன்.

ஜஸ்டினன் 8.
புராதன உரோமர் நீதிச்சட்டங்களை இயற்றுவதில் மிகச்சிறந்தவர்களென முன்னேயே படித்திருக்கிருேம். தங்களுடைய இராச்சியங்களை விஸ்தரித்து வந்த காலத் திலே அவர்கள் புதுச்சட்டங்களையேற்படுத்தி நீதி வழங் கும் முறையைச் சீர்திருத்தினர். அக்காலத்தில் நிலவி வந்த உரோம நீதிச்சட்டங்களையெல்லாம் ஜஸ்டினியன் தொகுத்து ஒழுங்குபடுத்திச் சாதாரண விவகாரச்சட் டம்’ என்ற புகழ்பெற்ற சட்டநூலை உலகோர்க்களித் தான். ஜெர்மனி, பிரான்ஸ், ஒல்லாந்து முதலிய ஐரோப் பிய தேசங்களெல்லாம் தமது நீதிச்சட்டங்களுக்கு ஜஸ்டி னியனுடைய நீதி நூலையே முன்மாதிரியாகக் கொண்டன. ஒல்லாந்த தேசாதிபதியாகிய ஜோன் மட்ஸஅக்கர் என் பார் தமது சட்டமுறையை இலங்கையிற் புகுத்தினர். அதனுற்றன் இலங்கை நீதிச்சட்டங்கள் உரோம-டச்சு நீதிச் சட்டங்களென வழங்கப்படுகின்றன.
ஜஸ்டினியன் இறந்த பின்னர் உரோம இராச்சியத் தின் மேற்குப்பகுதி மறுபடியும் ஜெர்மன் சாதியாரின்  ைகயிற் சிக்கியது. பைஸாந்தைன் இராச்சியமென வழங்கப்பட்ட கிழக்குப்பகுதி 1453-ம் ஆண்டுவரை தன் னரசு நடத்தியபின் ஒட்டமன் துருக்கியராற் கைப்பற்றப் .[gj-سL-L لا
பைஸாந்தைன் இராச்சியம் பலவகையில் முக்கிய மான சரித்திர சம்பந்தமுடையது. அராபியர், துருக் கியர் முதலான ஆசிய சாதியார் மேலைத்தேசங்களில் படையெடுக்காமல் ஆயிரமாண்டாக இவ்விராச்சியம் காத்து வந்திருக்கிறது. உரோம இராச்சியம் வீழ்ந்த பின்னரும் மேலைத்தேசங்களில் உரோம நாகரிகம் இவ் விராச்சியத்தின் செல்வாக்கினல் நிலைத்திருந்தது. அலெக்ஸாந்திரியா என்ற நகரம் முஸ்லிம்களின் கைப் பட்டபின் பைஸான் ைதன் இராச்சியத்துத் தலே நக ரான கொன்ஸ்தாந்தினுேப்பிள் கீழைத்தேசங்களுடன் பெரிய வியாபாரத்தை நடத்திற்று.

Page 54
ஏழாம் அத்தியாயம் இந்தியாவிற் குப்தர் ஆட்சியும் இலங்கையில்
அவர்கள் செல்வாக்கும் 1. கீர்த்தி யூனி மேவன்
கி.பி. 362-ல் மகாசேனனுக்குப்பின் கீர்த்தி பூணூரீ மேவன் இலங்கை அரசனனன். தன் தந்தையைப் போலல்லாது இவன் மகாவிகாரத்தை ஆதரித்ததுமன்றி. தந்தையால் அழிக்கப்பட்ட லோவமகாபாய என்ற கட்டி டத்தையுந் திருப்பிக் கட்டுவித்தான்.
கலிங்கத்திற் பூசிக்கப்பட்டுவந்த புத்தருடைய தந்த தாது, இவன் காலத்திற்ருன் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. இவன் அதற்கெனப் புறம்பான ஓர் ஆல யத்தைக் கட்டுவித்து, அதை அங்கே பிரதிஷ்டை பண்ணி ஞன். பின்னர், அதை ஆண்டுதோறும் அபயகிரி விகாரத் துக்கு விழாவெடுத்துச் செல்லவேண்டுமெனவுங் கட்டளை
யிட்டான்.
கீர்த்தி பூரீ மேவனுக்குப்பின் அரசாண்ட சிங்கள மன்னர்கள், புத்தரின் தந்ததாதுவை மிகத் திவ்வியமான ஒரு சின்னமாகப் பாதுகாத்து வந்தனர். பிற்காலத்து அரசர் தமது தலைநகரத்தை மாற்றியபொழுதெல்லாம், இத் தந்ததாதுவையும் எடுத்துச்சென்று தமது அரண் மனேக்கருகே ஓர் ஆலயமமைத்து அதில் அதைப் பாது காத்தார்கள். இக்காரணத்தினற்ருன் கண்டிக் கடைசி யரசன் வசித்துவந்த அரண்மனைக் கணித்தாகத் தந்தக் கோவிலான தலதா மாளிகாவை இன்றும் காணுகின் ருேம். கீர்த்தி பூg மேவன் ஆரம்பித்த தந்த விழாவே இன்றுங் கண்டிப் பேரஹராவெனக் கொண்டாடப்படு கிறது.
82

சமுத்திரகுப்தன் 8 ኃ
கீர்த்தி பூg மேவன் இலங்கையை அரசாண்டபொழுது வட இந்தியாவிற் சமுத்திரகுப்தன் என்ற சக்கரவர்த்தி ஆட்சி நடத்தி வந்தான். இக்காலத்தில் இலங்கையி லிருந்து பல யாத்திரிகர்கள், பெளத்த கூேrத்திரமாகிய, புத்தகாயாவுக்குப்போய் வருவது வழக்கமாயிருந்தது. ஆஞல், அங்கே வசதியாய்த் தங்கியிருப்பதற்கு அவர்கட்கு செளகரியமில்லாதபடியாற், கீர்த்தி பூரீ மேவன் சமுத்திர குப்தனின் அனுமதிப்படி, புத்தகாயாவில் சிங்கள யாத் திரிகர்களுக்கென ஒரு விகாரத்தைக் கட்டுவித்தான்.
இவ்வாறு கீர்த்தி பூரீ மேவனுக்கும் சமுத்திரகுப்த னுக்குமிடையே ஏற்பட்ட தொடர்பினுலும், சிங்கள யாத்திரிகர்கள் இந்தியாவுக்குச்சென்று வந்ததினுலும் பல நன்மைகளுண்டாயின. சமுத்திரகுப்தன் காலத்தி லும் அவனுக்குப்பின் அரசாண்டோர் காலத்திலும் இந்தி யாவில் நடைபெற்ற பெரிய சீர்திருத்தங்களைச் சிங்களர் அறிந்து அவை போன்ற சீர்திருத்தங்களை இலங்கை யிலும் கொண்டுவரக் கூடியதாயிருந்தது.
1. சமுத்திரகுப்தன் (335-385)
மகா அலெக்சாந்தர் இந்தியா மீது படையெடுத்த பின்னர், அசோகனுடைய பாட்டஞன சந்திரகுப் தன் வட இந்திய இராச்சியங்களையெல்லாம் ஒன்று படுத்தினுன் என முன்னர் கூறினுேம். இவ்வரசன் மெளரிய வம்சத்தைச் சேர்ந்தபடியால், இவனுடைய இராச்சியமும் மெளரிய இராச்சியமென வழங்கப்பட் ti-glid.
அசோகனது ஆட்சியின் பின்னர், மெளரிய இராச் சியம் நிலைகுலையவே அதிலிருந்து பற்பல சிறு இராச்சியங் கள் உண்டாயின. கி.பி. நான்காவது நூற்ருண்டிற் சுமார் 335-ல், இலங்கையில் மகாசேனன் சிங்காசன மேறிய காலத்தில், வட இந்தியாவின் கிழக்குப்பகுதி கட்கு சமுத்திரகுப்தன் அரசனனுன். இவன் அரசஞன தும் தனது இராச்சியத்தை மேலும் பெருக்கவேண்டு

Page 55
84 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
மென ஆசை கொண்டு, முதல் தனது அயல் நாட்ட வருடன் போர் செய்தான். பின்னர், தக்கிணத்தில் தனது சேனைகளைச் செலுத்தி கிருஷ்ணு நதிவரையுள்ள நாடுகளை வென்றன். வெல்லப்பெருத பல நாடுகளும் இவனுக்குத் திறைசெலுத்தின. சிங்களத் துவீபமும் அந்த வகையில் தனக்கு மரியாதை புரிந்ததெனக் கூறியிருக்கிருன்.
சிங்களன் கப்பல் விட்டிறங்குதல் (அஜந்தாக் குகைச் சிற்பங்களில் ஒன்று)
நாடுகளை வெற்றி பெற்ற அளவில் மாத்திரம் சமுத் திரகுப்தனுடைய புகழ் நிற்கவில்லை. அவன் பெரிய சங்கீத வித்துவானுகவும், க வியாகவும் விளங்கினன். அவனுக்குப் பின்னரசுசெலுத்திய இராசாக்களின் காலத் தில் இந்தியாவில் பெரிய புலவரும், நூலாசிரியர்களும், சிறந்த ஒவியரும், சிற்பிகளும் விளங்கினர்கள். இக்கா ளங்களிற்ருன் புராணங்களும், "மகாபாரதம்", 'இராமாய
 

சமுத்திரகுப்தன் 85
ணம்" என்ற இதிகாசங்களும், இன்று நாம் அவற்றைக் காணும் முறையில் தொகுத்து எழுதப்பட்டன. மனு தர்ம சாஸ்திரமும் இக்காலத்திற்ருன் தொகுக்கப்பட்ட தெனக்கூறலாம். தற்காலத்து இந்திய நீதிச்சட்டங்க ளுக்கெல்லாம் இம்மனுதர்ம சாஸ்திரமே அடிப்படை யென்று கூறலாம். மேலும், இவற்றில் ஒவ்வொரு சாதி யாரும் அனுட்டிக்கவேண்டிய ஒழுங்குகளும் கூறப்பட்டி ருக்கிறது. பண்டைக்காலத்தில் இந்தியாவில் கல்விப் பயிற்சி எவ்வாறு நடைபெற்றதென்பதும் இதில் கூறப் பட்டிருக்கிறது. அக்காலத்தில், இப்பொழுதுள்ள மாதி ரிப் பாடசாலைகள் இருந்ததில்லை. எனவே கல்விகற் ருேர் மிகச்சிலரே. பெற்றேர் பிள்ளைகளுக்குக் கல்வி பயிற்றுவிக்க விரும்பினல், அறிவிற் சிறந்த அந்தணன் ஒருவரிடம் அனுப்புவார்கள். மாணவன் அவரை குரு வாகக்கொண்டு, பிரமசாரியாக அவருடனிருந்து கற்க வேண்டியதெல்லாம் கற்றபின் வீடு திரும்புவான்.
இக்காலத்திற் றீட்டப்பட்ட சிறந்த ஒவியங்களை மேற்கு இந்தியாவிலுள்ள அஜந்தா குகைகளில் இன்றுங் காணலாம். ஒரு படம் இலங்கையில் சிங்களன் வந் திறங்குவதைக் காட்டுகிறது. இலங்கைக்கு விஜயன் என்ருெருவன் முதன்முதல் வரவில்லையெனவும், இத் தீவில் வசித்துவந்த கொடிய இராக்கதரையும் இயக்கினி களையும் அழிக்கும் பொருட்டுச் சிங்களன் என்ருேர் அர சன் இங்கு குடியேறினன் என்றும் இந்திய வரலா ருென்று கூறுகிறது. அஜந்தாக் குகையில் காணப்படும் ஒவியங்கள், சிகிரியாவிலுள்ள குகை ச் வித்தியங்களே ஒத் திருக்கின்றன. எனவே, சிங்கள ஓவியர், மேற்கு இந்தி யாவிலேயே இக்கலையைக் கற்றிருக்கவேண்டும்.
குப்தர் காலத்துக் கற்பித்தியங்களும் மிக உயர்தர மானவை. இஸ்ருமுனியாவில் காணப்படும் ஆண், பெண் உருவமும், புத்தச் சிலைகளும், அலுபாதபுரியிலுள்ள இராணிமாளிகையென வழங்கும் கட்டிடத்திற் காணப் படுவனபோன்ற சந்திர வட்டக் கற்படி களும், குப்தர் காலத்துச் சிற்ப முறைப்படியே அமைந்திருக்கின்றன.

Page 56
3. *: - **' ' ';',': .०४:४*
அநுராதபுரம் இஸ்ருமு னியிற் காணப்ட
பெண் உருவங்கள்
 
 
 
 
 
 

astr65T se tř 8 7
11. காளிதாசர்
குப்தர் காலத்திருந்த மகா கவி, காளிதாசர் ஆவர். இவர் பிறந்த காலம் திட்டமாகத் தெரியவில்லை. ஆனல் ஐந்தாம் நூற்ருண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருக் கிருர் எனக் கூறலாம். இவரெழுதிய நூல்களிலிருந்து கிடைக்கும் சில விபரங்களைத் தவிர காளிதாசரைப்பற்றி அதிகம் தெரியவில்லை.
சாகுந்தலம் என்ற நாடகத்தின் ஆசிரியர் என இவர் புகழ் உலகெங்கும் பரந்திருக்கிறது. ஒரு முனிவரின் ஆச்சிரமத்தில் சகுந்தலை என்றேர் அழகிய மங்கை வசித்துவந்தாள். துஷ்யந்த மகாராசன் அவளைக் கண்டு காதல்கொண்டு மணந்தான். துஷ்யந்தன் சகுந்தலையை விரைவிற் பிரிந்தான். பின்னர், ஒரு சாபத்தின் பயணுக அவன் சகுந்தலையை மறந்து போனன். சில ஆண்டுகட்குப்பின் சகுந்தலை, துஷ்யந்தனுக்கு மகனய் உதித்த பரதனையும் அழைத்துக்கொண்டு அவ்வரசன் மூன் சென்ருள். அரசன் அவளை அறியாளுயிருக்க, அவ ளும் துஷ்யந்தனுற் கொடுக்கப்பட்ட மோதிரத்தை யிழந் தவிளாய் தனது உரிமையை அரசனுக்குப் புலப்படுத்த முடியாது மயங்கினுள். சில காலத்துக்குப்பின், இழந்த மோதிரம் கிடைக்கப்பெற்றதும் துஷ்யற்தனும் சகுந் தலையும் மறுபடியும் ஒற்றுமைப்பட்டனர். இதுவே சாகுந்தலத்திலுள்ள கதையாகும்.
காளிதாசர் இன்னும் பல நாடகங்களும், கவிகளும் இயற்றினுர். இவற்றுள் 'இருதுசங்கம்’, ‘இரகுவமிசம்" மேகதூதம்" என்பன சிறந்தவை. வட இந்தியாவில் ஒரு வருடத்தில் பல வகையான பருவங்களுண்டு. அவற்றை அவர்கள் ஆறுகாலமாகப் பாகுபடுத்தினர். இருது சங்காரத்தில் இவ்வாறு பருவங்களின் சுழற்சியைப் பற்றி யும், அதனுல் மக்கள் சீவியத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் காளிதாசர் கூறுகின்ருர். "இரகுவமிசத்தில் சூரியகுலத்தரசரின் வரலாறு கூறப்படுகிறது. இவர் களுள் இராமரும் ஒருவராதலின், இராமரைப் பற்றியும்

Page 57
88 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சீதையைப்பற்றியும் 'இராமாயணம்" கூறும் கதை இந்நூ லின் மூன்றிலொரு பாகத்தையடக்கியிருக்கிறது.
மேகதூதத்தில் இமாலயத்திலுள்ள தனது இல்லாளை யும் இல்லத்தையும் துறந்து தெற்கே இராமகிரியில் வசிக்கும் ஒரு இயக்கன், துன்பத்திலாழ்ந்திருக்கும் தனது மனைவிக்கு, ஒரு தூது சொல்லுமாறு மேகத்தை ஏவுகின் ருன். விந்திய மலையிலிருந்து இமாலயம்வரை அவனது தூதைக் கேட்டுச்செல்லும் மேகமானது போகவேண்டிய பாதையையும் அங்கு காணும் நகரங்களையும் பற்றியே இந்நூலில் முக்கியமாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்நூல்களைக் கற்கும்போது நமக்கு மிக ஆர்வமுண் டாகும். ஏனெனில், நம் நாட்டு இலக்கியத்திலும் காளிதாசருடைய செல்வாக்கைப் பரக்கக் காணலாம். சசதாவதம்போன்ற நூல்களில், பல சிங்கள ஆசிரியர் கள் இந்தப் பருவங்களைப் பற்றி வருணிக்கக் காண்கிருேம். மேலும், சந்தே சகாவியம் எல்லாம் மேகதூதத்தைப் பின்பற்றியே எழுதப்பட்டிருக்கின்றன.
இரகுவமிசத்துக்கு ஒப்பான ஒரு நூல் சிங்களத்தில் கிடையாது. ஆனல், இலங்கையிற் பிறந்த கவியான குமாரதாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய 'ஜானகிஹரண’ என்ற நூலில் இரகுவமிசக் கருத்துக்களை மிகுதியும் காணலாம். சபுமால் குமரையனுக்குப் பின் யாழ்ப்பான ராச்சியத்தையாண்ட பரராஜ சேகரனின் மருமகனன அரசகேசரி, காளிதாசரின் இரகுவமிசத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
சாகுந்தலத்தைப்போல நாடகங்கள் சிங்களத்தில் எழுதப்படவில்லை. இதற்கொரு காரணம் புராதன காலத்து நூலாசிரியரெல்லாம் அநேகமாக பெளத்த பிக்குகளாயிருந்தபடியால், அவர்களது ஆச்சிரம ஒழுங் கின்படி நாடகத்தைப் படிக்கவோ எழுதவோ முடியா திருந்தது. அன்றியும், சங்கீத வாத்தியங்களைக்கூட அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள்.

புத்தகோசன் 89
தமிழ் இலக்கியத்திற்கூட காளிதாசருடைய செல் வாக்கைக் காணலாம். இருதுசங்காரத்தைப் பின்பற்றிப் பல தமிழ் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மேக தூதத்தைப் பின்பற்றிப் பல தூத காவியங்கள் தமிழில் எழுந்தன. அரசகேசரி, இரகுவமிசத்தையே தமிழில் மொழிபெயர்த்தார் என்று கூறினுேம், சில நூற்ருண்டு களுக்குமுன் சென்னையிலிருந்த ஒரு தமிழறிஞர் சாகுந் தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
IV. புத்தகோசன்
இலக்கியத்துறையிலும் இந்தியாவில் ஏற்பட்ட மறு மலர்ச்சி இலங்கையிலும் எவ்வாறு மாறுதலைக் கொண்டு வந்ததென்பதைப்பற்றி முன்னரே கூரியிருக்கிருேம் புத்தகோசன் என்ற பெயருடைய இந்திய பிக்கு ஒருவர் இலங்கைக்கு வந்து, இலங்கை இலக்கியத்தைப் புனருத் தாரணஞ் செய்தார்.
கீர்த்தி பூg மேவனுக்குப் பின்னர் அவனது மகனன இரண்டாவது தே துதிசனும், அவன் மகன் புத்ததாச னும் இலங்கையை ஆண்டனர். புத்ததாசன் வைத்தி யத்திலும், சத்திர சிகிச்சையிலும் கைதேர்ந்தவன் எனப் போற்றப்படுகிருன். மேலும், இவன் பிராணிகளிடத்து மிகுந்த சீவகாருண்ணிய முடையவன். அவற்றின் துன் பத்தைக் கண்டு தானும் துன்புறும் இயல்பு ையவன். அற்புதமான சத்திர சிகிச் ைகஃச் 4ெ ப்த வென்றும், வியாதிகளைச் சுகப்படுத்திஞ)னென்றும் இவனப்பற்றிப் பல கதைகள் கூறப்படுகின்றன.
புத்ததாசனுக்குப்பின் அவன் மகe)ன முகவி' துை உபதிசன் அரசு கட்டிலேறிஞன். இவனே பொலன்னறு வையில் தோபவாவி என்ற குளக் தைக் கட்டுவித்தவன். இவனுக்குப்பின் இவனது தம்பிய என மகாநாமன் (409 431) அரசாண்டான். இவன் காலத்தில்முன் புத்த கோசர் இலங்கைக்குவந்தார்.

Page 58
90 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இந்தியாவிலுள்ள புத்தகாயா என்ற சேத்திரத்தில் பிராமண குலத்தில் புத்தகோசர் பிறந்தாரென்றும் பின் னர் அவர் பெளத்த சமயத்தைத் தழுவினரென்றும் ‘மகா வம்சம்’ கூறும். 'திரிபிடகமென்ற பாளி நூலுக்கு இலங் கையிலுள்ள மகாவிகாரத்தில் ஒரு வியாக்கியானமிருக் கிறதென அறிந்து புத்தகோசர் இலங்கைக்கு வந்தார்.
ஆஞல், இவ்வியாக்கியானம் சிங்கள மொழியில் இயற்றப்பட்டிருந்ததால், சிங்கள மறியாதவர் இதைப் படிக்க முடியாமலிருந்தது. புத்தகோசர் இலங்கைக்கு வந்ததும், ‘விசுத்திமார்க்கம்’ என்ற நூலைப் பாளி மொழி யில் எழுதிமுடித்த பின் மகாவிகாரத்துக்குப் பிக்குகளின் அனுமதிப்படி திரிபிடகத்துச் சிங்கள வியாக்கியானத் தைப் பாளி மொழியில் மொழி பெயர்த்துக்கொண்டு இந்தியா திரும்பினர்.
இந்நூல் பாளி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தால் இலங்கையில் பாளிமொழி ஞானம் அதிகரித்தது. இதன் பயனுக, ஒரு நூற்ருண்டுக்குப் பின்னர், ஒரு பெளத்த பிக்கு இந்தியாவில் எழுதப்பட்ட புராணங்களைப் பின்பற்றி பாளிமொழியில் இலங்கைச் சரித்திர சம்பந்த மான ‘மகாவமிசத்தை’இயற்றினர். இந்நூல் இலங்கைச் சரித்திரத்தை அறிந்துகொள்வதற்கு எத்துணை உபயோக மாயிற்றென்பதை நாம் ஏற்கெனவே அறிந்துள்ளோம்.
V. தாதுசேனனும், காசியப்பனும்
மகாநாமனுக்குச் சிறிது காலத்துக்குப்பின், பாண்டி நாட்டிலிருந்து சில தமிழர் இலங்கைக்கு வந்து, அக் காலத்தில் ஆட்சி நடத்திய சிங்கள அரசனைக்கொன்று, இலங்கையின் வடபகுதியாகிய இராசரட்டையை வேன் ரூர்கள். அங்கிருந்த சிங்களத் தலைவர்கள் உருகுணைக்கு ஒடிஞர்கள். தாதுசேனன் என்ற ஓர் இளவலின் தலை மையில் அவர்கள் திரும்பிவந்து தமிழரோடு போர் புரிந்தனர். மிகத்திறமையுள்ள போர்வீரனுன தாது சேனன் இழந்த சிங்கள இராச்சியத்தைப் பெறுவதற்கு

தாதுசேனனும் காசியப்பனும் 9.
முயன்று, ஈற்றில் துட்டகெமுனு, வலகம்பா ஆகிய அரச ரைப்போலத் தமிழரைக் கலைத்து இலங்கைக்கு அரசனு ஞன்.
தாதுசேனன் (460-478) ஒரு பெரிய அரசனென் பதைத் தனது செயல்களால் நன்கு விளங்கினன். தமிழ ரால் அழிக்கப்பட்ட பல கட்டிடங்களைப் புதுப்பித்தது மல்லாமல், பிக்குகளின் நன்மைக்காகப் பல புதிய கட்டி டங்களையும் அமைப்பித்தான். பல குளங்களைக் கட்டு வித்தான். அனுராதபுரத்துக்குத் தெற்கேயுள்ளதும், சுற்றுப்பிரதேசம் முழுவதற்கும் நீர்ப்பாய்ச்சுவதற்கு வசதியாயிருப்பதுமான காலவாவி என்ற பெரிய குளம், இவன் கட்டுவித்த குளங்களுள் முதன்மை வாய்ந்தது. காலஓயாவுக்கு குறுக்கே ஓர் அணைகட்டி அதன்மூலம் இக்குளம் உண்டாக்கப்பட்டதாற்ருன் இதற்கு ‘காை வாவி’ என்ற பெயர் வந்தது.
தாதுசேனன் ஒரு பெரிய அரசனுயிருந்தபோதிலும், மிகப் பரிதபிக்கத்தக்க முறையில் மரணமடைந்தான். தனது தாயாரைத் தீயிலிட்டுவிடவேண்டுமெனக் கட் டளையிட்டதினுல் அவனது சேனதிபதி அவன் மீது கோப முற்ருன். அக்காலத்தில் அரசர்கள் தமது படைத்துணை யின் வலிமைகொண்டே இராச்சியபரிபாலனஞ் செய்து வந்தார்கள். அதனுல் அரசனின் செல்வா க்கு க் குறைந்தால், சேனதிபதி அரசனைக்கொன்று தானே அரசாளக் கூடியதா யிருந்தது. ஆனல், தாதுசேனன் செல்வாக்குள்ள அரசனுயிருந்தபடியால், அவனது இளைய குமாரஞகிய காசியப்பனை, தந்தையைச் சிறையிலிட்டு சிங்காசனமேறும்படி, சேணுதிபதி தூண்டினன். பட் க் துக்குரியவனுன முகலன் என்பவன், தன் தம்பியாகிய காசியப்பணுேடு போர் செய்யத் துணையில்லாத வசூ)ம் இந்தியாவுக்கு ஓடிவிட்டான். காசியப்பன் தன் தந்தை வைத்திருந்த செல்வமனைத்தையும் தனக்குத் தரும்படி நெருக்கினன். தாதுசேனன் அவற்றைக்கொடுக்க மறுக் கவே அவனைக் கொலைசெய்யுமாறு கட்டளையிட்.ாள். தனது வன் மந் தீர்த்துக்கொள்வதற்கு இதுவே தருண

Page 59
92 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
மென எண்ணிய சேனதிபதி, தாதுசேனனை ஒரு கட்டிடச் சுவரில் வைத்து உயிரோடு புதைத்துவிட்டான்.
இக்கொடிய பாதகச்செயலைக்கேட்டு சனங்கள் காசி யப்பன் மீது வெறுப்புக் கொண்டனர். எந்நேரமாவது தனது தமையன் சேனையுடன் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து தன்னுடன் போர்புரிவானென்றும், தனது குடிகள் திரண்டெழுந்து தன்னை அரசை விட்டுக் கலைக்கக்கூடு
G) Gifu unr
மென்றும் காசியப்பன் பயந்திருந்தான். எனவே, தற் பாதுகாப்புடனிருக்கும் நோக்கமாக அனுராதபுரியை விட்டு நீங்கி சிகிரியாவை ராசதானியாக்கினன். இவ் வாறு பதினேழு வருடங்களாண்டபின், முகலன் தென் னிந்தியாவிலிருந்து படையெடுத்துவந்து காசியப்பனை வென்று, அனுராதபுரியில் இராசதானியமைத்து ஆட்சி நடத்தினன்.
 

தாதுசேனனும் காசியப்பனும் 93
காசியப்பன் (478-496) தந்தையைக்கொன்ற பாத கன் எனச் சரித்திரத்தில் பொதுவாகக் கூறப்பட்டு வருகிருன். தந்தைக்கு இவன் செய்த கொடுமையை எல் லோரும் நிந்திக்கவேண்டியதுண்மையே. ஆனல், அவன் இலங்கையை ஆண்ட அரசர்களுள் திறமைவாய்ந்தவ னென்பதும் மறக்கப் பாலதன்று. மனிதர் இலேசாக ஏறிக்கொள்ள முடியாத சிகிரியா என்ற மலையில் தனது அரண்மனையை அமைக்க முயன்றமை சாதாரண அரசர் களால் முடியாத ஒரு செய்கையாகும். சிகிரியாவுக்குச் சென்று பார்த்தால் இவ்வுண்மை புலனுகும். இம்மலை யில் அசைக்கமுடியாத ஒரு கோட்டையைதுக் கட்டுவித் தற்கு எவ்வளவு மன உறுதியும், அசாதாரணமான தைரியமும் வேண்டும்! இவன் செய்ததெல்லாம் திருந்தவே செய்திருக்கிருன். இம்மலைக்கோட்டையின் அமைப்பே இதற்குச் சான்று பகரும்.
மலையின் உச்சிக்கேறுவதற்காக அச்செங்குத்தான பாறையைச்சுற்றி வளைந்து வளைந்து ஒரு பாதை செல்லு கின்றது. இப் பாதையில் ஏறுவோர் வழிசறுக்கிக் கீழே விழுந்துபோகாமல் அணையாகக் கட்டப்பட்ட சுவரின் இடிந்த பகுதிகளை இன்றுங் காணலாம். அன்றியும் சிகிரி யாக் கோட்டை நகரைச் சுற்றி இரண்டு "மைல் சுற்றள வுள்ள மதிலும், அதைச் சுற்றியுள்ள அகழியின் சில பகுதிகளும் இன்றும் நிலவி அவ்வரசனது பெருமைக்குச் சான்று பகருகின்றன. இப்பாறையின் அடித்தளத்தில், நித்திரை செய்யும் சிங்கத்தின் பிரமாண்டமான ஓர் உரு வத்தை செங்கல்லினல் அமைத்தான். இக்காரணத்தி ணுலேதான் அம்மலைக்கோட்டை "சிகிரியா" அல்லது * சிங்ககிரி என்ற பெயரைப் பெற்றது. அக்க லத்தி லிருந்தோர் இதைப் பார்த்துப் பெரிதும் அதிசயமடைந் திருப்பார்களென்பதில் ஐயமில்லை. அழகியவற்றை ரசிப் பதில் காசியப்பனுக்கு ஒரு விசேஷ உற்சாகம் இருந்திருக் கிறது. இந்தச் சிங்க உருவத்தின் பிய மா பண்டய மன நகங் களே இன்று மிஞ்சிக் காட்சியளிக்கின்றன. இன்றும் ஏறுதற்கு கஷ்டமான அக்கோட்டை யின் குல்ைகளில்,

Page 60
భయ:
சிகிரியா குகை
 

தாதுசேனனும் காசியப்பனும் 9.
அப்சரஸ்திரீகளின் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருப் பதிலிருந்து, இம்மன்னனின் ரசிகத்தன்மை புலனுகிறது. இவ்வோவியங்கள் மேற்கூறியபடி அஜந்தாக் குகைச் சித்திரங்களை ஒத்திருப்பதுமல்லாமல், புராதன ஆசியா வில் வரையப்பட்ட ஒவியங்களுள் மிகச்சிறந்தவற்மூேடும் வைத்தெண்ணப்படுகின்றன.
காசியப்பனுக்குப்பின் பத்தாவது நூற்றண்டினிறுதி வரை அரசாண்ட மன்னர்கள் இலங்கையின் முன்னேற் றத்திற்கு எவ்விதத்திலும் துணைபுரியாதபடியால், அவர் களைப் பற்றி அதிகம் கவனஞ் செலுத்த வேண்டியதில்லை. இருந்தும் முதலாவது அக்கிர போதி, இரண்டாவது அக் கிரபோதி என்பவர்களைப் பற்றிச் சிறிது கவனிக்கவேண் டியது அவசியம்.
முதலாவது அக்கிரபோதி (568-601) மிகிந்தலையில் ஒரு குளத்தையும், குருந்து வாவியையும் கட்டினுன். குருந்துவாவி எது என்று தெரியவில்லை. சிலர் அதுவே பெருங்குளகென்றும் வேறுசிலர் அது அகத்திமுறிப்பென் றுஞ் சொல்லுவர். முதலாவது அக்கிர போதியின் மரு மகஞன இரண்டாவது அக்கிரபோதி, பதிஞன்கு குளங் களைக் கட்டினன். கந்தளாய்க் குளமும் மின்னேரியா வுக்கருகாமையிலுள்ள கிரித்தலேக் குளமும் அவற்று ளிரண்டு.
மின்னேரியா வாவியிலும் பெருங்குளம் பெரிதாவே இருந்திருக்கவேண்டும். கந்தளாய்க் குளத்தின் நீர் அணை ஏறக்குறைய ஒன்றேகால் மைல் நீளமும் ஐம்பதடிக்கு மேலுயரமுமிருக்கும். ஓராயிரம் தொழிலாளர் மூன்று வருடந்தொட்டு ஐந்து வருடம்வரையாவது முயன்றே இக்குளத்தைக் கட்டியிருக்கவேண்டுமெனலாம்.
தாது கோபங்களைக் கட்டுவித்த இராசாக்கள்தான், குளங்கட்டிய அரசரிலும் சிறந்தோரென நாம் எண்ணி விடக்கூடாது. குளங்கட்டிய அரசர்கள் விவசாயத் தைப் பெருக்கி, அதன் மூலம் நாட்டைச் செழிக்கச் செய்து, தாது கோபங்களையும் விகாரங்களையும் கட்டு வதற்குப் பொருள் உண்டாக்கினுர்கள்.

Page 61
எட்டாவது அத்தியாயம்
மத்தியகால இலங்கை
1. அரசியல் முறை
மத்தியகாலத்து இலங்கையின் அரசியல் முறை இக் காலத்து அரசியல் முறை போன்றதன்று. அக்காலத். தில் அரசாங்க சபையாவது தேர்தல் முறையாவது கிடை யாது. அரசன் தனக்கு ஆலோசனை கூறுவதற்கு ஒரு சபையை எற்படுத்தினன். ஆனல், அச்சபைக்கு சட்ட மியற்றும் உரிமை இருக்கவில்லை. அச்சபையில் அர சாங்க அலுவல்களைச் செய்யும் உயர்தர உத்தியோகத் தரே பெரும்பாலும் இருந்தார்கள். இவர்கள் அரசனு டைய கட்டளையை நிறைவேற்றுவதுடன், சில முக்கிய மான விஷயங்களைப்பற்றி அவனுக்கு ஆலோசனையுங் கூறிவந்தனர்.
இவ்வாலோசனைச் சபையின் சொற்படி நடக்க வேண்டுமென்ற நியதி அரசனுக்குக் கிடையாது. தான் நினைத்தபடி எதேச்சாதிகாரம் நடத்தக்கூட அவனுக் குரிமையிருந்தது. ஆனல், நாட்டில் குழப்பமுண்டாகி, சிங்காசனத்தையே இழக்கக்கூடிய நிலைமை சக சமா யிருந்ததால், புத்தியுள்ள அரசர்கள் குடிகளின் பழக்க வழக்கங்களுக்கு மாருகச்செல்லாது, அவர்களுடைய நன்மையைப்பேணி ஆட்சி நடத்தி வந்தார்கள்.
அரசன் படைத்துணைகொண்டு தனது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியதாயிருந்தது; இப்படையில் பெரும்: பகுதி இலங்கையிலோ இந்தியாவிலோ திரட்டப்பட்ட காலாட்படை வீரராகும். சேனதிபதியின் ஆதரவை அரசன் எந்நேரமும் எதிர்பார்த்திருந்தபடியால், தனது நெருங்கிய சுற்றத்தவரையே அப்பதவிக்கு நியமித்தான்.
96

அரசியல் முறை 97
அந்நியர் படையெடுப்பிலிருந்து தனது குடிகளைக் காப் பாற்றவும், தன் ஆட்சிக்கு எதிராய்க் கிளம்பும் உள்நாட் டுக் குழப்பங்களையடக்கவும், அரசன் தனது படையைப் பயன்படுத்தினன். போர்க் காலங்களிலும், குழப்பமுண் டாகும் காலங்களிலும், போர்வீரர் குடிகளின் பயிரை அழித்தும் விளைவைக் கொள்ளையடித்தும் விவசாயத்துக் குப் பங்கம் விளைவிப்பதைக் குடிகள் விரும்பாததால், சமாதானத்தை நிலைநிறுத்தும் வலிய அரசன் ஆட்சி செய்வதையே அவர்கள் விரும்பினர்கள்.
சிங்களக் குடும்ப முறையை அனுசரித்தே அரசாளும் உரிமையும் வழங்கப்பட்டது. அக்காலத்தில் ஒருவன் தனது குடும்பத்தாருடனும் தன் சகோதரர் குடும்பத்தா ருடனும் மக்களின் குடும்பத்தாருடனும் சிறிய குடிசை களில் ஒருவர்க்கொருவர் அண்மையில் வாழ்ந்துவந்தான். மூத்தவனயுள்ள ஆடவனே குடும்பத்துக்குத் தலைவனுகக் கருதப்பட்டான். இவன் இறந்தால் இவனது தம்பி குடும்பத்துக்குத் தலைவனுவான். அன்றி, இவனது மூத்த மகனுக்கு அந்தப் பதவி கிடையாது. இவ்வாறே பிங்கள அரசுரிமையும் வழங்கப்பட்டு வந்தது. ஒரு பிங்கள அரசன் இறந்தால், அவனது தம்பியே அடுத்த படி அரசுரிமைபெறுவான். தம்பிமாருக்குப் பின்னரே, மக்கட்கு அரசுரிமை வழங்கப்படும். இங்கிலாந்திலோ தந்தையின் பின் மூத்த மகனே அரசுரிமை பெறுவது வழக்கம். ஒருவகையில் பிங்கள அரசுரிமை சிறந்த கென லாம். 61 மென மனில், மக்கள் வயதிற் சிறியோராகவும் அனுபவமில்லாதவu w வுமிருக்கலாம். ஆல்ை, அயசு விென் T TTTTT LS LT 0 t LE tt tttt L S S SSTtt tt L L CL T அனுபவம் பெற்றவ1 கன யிருப்பா !கள்
அக்காலத்திலே போக்குவவுக்கேற்ற நல்ல தெருக் களும், வீதிகளும் இல்ல திருக 06) நல்ல நிர்வாகத்துக் குப் பெருந்தடையாயிருக்கது. ஆாக்கேயுள்ள ஒரு அர சாங்க உத்தியோகத்தருக்கு ஓர் அவசர சி செய்தியலுறுப்ப வேண்டுமானல், இக்காலத்தைப்போ லக் கந்தியில1 வது, தெலிபோனிலாவது, அறிவிக்க முடியாது. அன்றியும்
8772-5

Page 62
S8 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
விரைவாய் பிரயாணஞ் செய்வதற்கு ரயிலாவது, மோட்டாராவது இருக்கவில்லை. சில பகுதிகளில் மாத் திரம் நல்ல வீதிகள் அமைக்கப்பட்டன. அரசனும், அதி காரிகளும் யானையில் பிரயாணஞ் செய்வதுண்டு. அல் லது பல்லக்கில் போவார்கள். வள்ளங்களில் ஆற்று வழியாயும், பொதிமாடுகள் மூலமாகவும் சாமான்கள் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்துக்கு அனுப்பப்பட்டன. மாட்டு வண்டிகளிருந்தபோதிலும், பாதைகள் செவ் வனே யமைக்கப்படாதிருந்ததால், பார வண்டிகள் மண விலும் சேற்றிலும் அமிழ்ந்துவிடும். அதனல் விரை வாகப் பிரயாணஞ் செய்வது அசாத்தியமாயிற்று.
போக்குவரவுச் செளகரியங்கள் இவ்வாறு மோசமா யிருந்தபடியால், அரசன் தனது தலைநகரான அனுராத புரியிலிருந்து இலங்கை முழுவதையும் நேரே ஆட்சி செய்வது இயலா திருந்தது. இதனு ல் அரசன் வெவ்வேறு பகுதிகளில் அரசியல் நிர்வாகத்தை நடத்த வெவ்வேறு அரசப் பிரதிநிதிகளை ஏற்படுத்தினன். இராச ரட்டைக்கு தென்மேற்கிலுள்ள தக்கிணதேசமெனப்படும் மாயரட்டையை ஆட்சி செய்வதற்கு, தனக்குப்பின் பட் டம் வகிக்கும் உரிமையுடையவரை அனுப்புவது வழக் கம். உருகுணையையும் மலையரட்டையையும் ஆட்சிசெய்ய அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறிரு இளவரசர் நிய மிக்கப்படுவர். இவ்விராசப் பிரதிநிதிகள் தமது ஆட்சிக் குக்கீழுள்ள பல பகுதிகட்கும் பல அதிகாரிகளை நியமித்து அரசியல் நிர்வாகம் நடத்தி வந்தனர்.
1. மக்களின் வாழ்க்கை
அக்காலத்து மக்களின் வாழ்க்கைகூட பல விதத்தில் மாறுபட்டிருந்தது. வியாபாரம் நடத்துவதற்கான விசாலமான கட்டிடங்களையுடைய பெரிய நகரங்கள் அக்காலத்திற் கிடையா. தேயிலைத் தோட்டங்களாவது ரப்பர் தோட்டங்களாவதிருந்ததில்லை. அதனல் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர் இல்லை. விளைபொருள் களே எல்லாச் செல்வமுமாயிருந்தது. விளைபொருள்களே

மக்களின் வாழ்க்கை 99
அரசனுக்கு வரியாகக் கொடுக் கப்பட்டன. பணம் கொடுக்கப்படவில்லை. கமக்காரன் தனக்கொரு ஏர் செய் விக்க வேண்டுமானல், அதற்கான செலவைப் பெரும் பாலும் தானியமாகவே தச்சனுக்குக்கொடுப்பான். அர சன் தனது உத்தியோகத் தருக்கோ, இராணுவ அதிகாரி களுக்கோ பரிசு வழங்க விரும்பினுல் விளை நிலத்தையே கொடுப்பான். விகாரைக்கு உபமான்யம் உதவுவதான லும் நிலத்தையே கொடுப்பான். அதில் வரும் விளைவை அவர்கள் அனுபவிப்பர்.
நகர வாழ்க்கை அக்காலங்களில் அவ்வளவு முக்கிய மானதாயிருக்கவில்லை. வெகு சில நகரங்களேயிருந்தன. அவை மதிலால் அரண் செய்யப்பட்டு, செவ்வை யான பாதுகாப்புடனிருந்தன. ஆனல், அந்நகரங்களில் வெகு சிலரே வசித்துவந்தனர். இவ்வாறு அரண்செய்யப் பட்ட பழைய நகரத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் சிகிரி யா? வென்றே கூறலாம்.
அனுராதபுரம் அக்காலத்தில் பெரிய நகரமாக விளங்கியதாக பாஹியான் என்ற யாத்திரிகர் கூறியிருக் கிருர், இந்நகரில் வசித்துவந்த பெரிய வர்த்தகர்களின் வீடுகள் நன்கு அமைந்திருந்தனவென்றும், பெரிய தெருக்களும் சிறிய வீதிகளும் பள்ளந்திட்டில்லாமல் ஒப்புரவாயிருந்தனவென்றும், அவை செவ்வனே பார் வையிடப்பட்டு நல்ல நிலைமையிலிருந்தனவென்றும் தெரி கிறது. நாற்சந்திகளில் அறச்சாலைகளும் அம்பலங்களு மிருந்தன. இவ்வறச்சாலைகளில் போய தினங்களில் பெளத்த குருமார்கூடி அங்கு குழுமுஞ் சனங்களுக்குத் தகுமோபதேசஞ் செய்வார்கள்.
*சிகிரியாக் கோட்டையை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். முதலாவது பாகம் மலையின் சிகரம். அங்கேதான் பல அரண்ம&னக் கட்டிடங்களும் கட்டப்பட்டன. இரண்டாவது பகுதி பாறைக்குக் கீழே மேற்குப் பகுதியில் கற்குடைச் சிங்காசனத்தையும் ஏ&னய அரச கட்டிடங்களை கொண்டிருந்தது. மூன்ருவது பகுதி கொத்தனங்களா லும் அகழிகளாலும் சூழப்பட்ட இரண்டு நீண்ட வெளிகளாகும்.

Page 63
**シsay fg* 「シ転じ、 ここァ
*封淑 *费
*海星
q~~??? sfuggioso pogossigg
ess.
* 毛眺慈运刮
丝缕多
*院y?
*冷 戈
赌了女
web see
as
يخچه مي
尼时针引
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்களின் வாழ்க்கை 01
அநேகமாக சனங்கள் கிராமங்களிலேயே வசித்தார் கள். இக்கிராமங்கள் குளங்கட்குச் சமீபத்திலும், ஆற் ருேரங்களிலும் நீர்க்கால்வாய்க் கணித்தாகவுமே நிலவின. சனங்கள் முக்கியமாக விவசாயஞ்செய்தே வாழ்க்கை நடத்தினர். நன்செய் வயல்களில் நெல் விளைவித்தும், புன் செய் நிலங்களில் தானியங்களைப் பயிரிட்டும் வந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மந்தைகள் புல் மேய்வதற்காக ஒரு பகுதியைப் பயிரிடாமல் ஒதுக்கி வைத்தனர். கிளைகளையும் ஒலைகளையுங்கொண்டு வீடு கட்டினர்கள். வீட்டுச் சுவர்கள் கம்புகளினலும் மண்ணி ணு,லும் அமைக்கப்பட்டன.
சனங்களின் தேவைகள் மிக்க குறைவாயிருந்தபடி யால் ஒவ்வொரு கிராமமும் தனக்கு வேண்டியவற்றைத் தானே ஆக்கிக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும், தச்சரும், கொல்லரும், மட்பாண்டஞ் செய்யும் குயவரும் இருந்தார்கள். இவர்கள் ஒவ்வொரு வருஞ் செய்யும் வேலைக்குக் கூலியாக நிலம் வழங்கப் பட்டது. இல்லையேல், ஒவ்வொரு குடியான வருந் தமது விளைவில் ஒரு பகுதியை இவர்களுக்குக் கொடுத்து வந்த னர். கிராமங்களிற் கிடையாத சொற்ப பொருள்களை நாடோடி வியாபாரிகள் கொண்டுவந்து கொடுப்பார்கள். அக்காலத்தில் ஊர்ப்புதினங்கள்கூட இவர்கள் மூலமா கவே பரப்பப்பட்டு வந்தபடியாற் கிராமவாசிகள் இத் தகையோரை உவந்து வரவேற்ருர்கள். அக்காலங்களில் பிரயாணஞ்செய்வது மிகக் கஷ்டமாயிருந்ததனுல், த ல யாத்திரை செய்வதற்கண்றி சனங்கள் வேறெவ்விதத் திலும் தூரதேசப் பிரயாணஞ் செய்ததில்லை.
கிராமத்து முதியோரே கிராம ஆட்சியை நடத்தி வந்தார்கள். இவர்களுள் முதன்மையானவன் கிரா மணி என்ற தலைமைக்காரணுயிருந்தான். கன்சபா என இப்பொழுது வழங்கப்படும் கிராமச் சபை அக்காலத்தி லிருந்துவந்த இப்பஞ்சாயத்தின் திரிபெனவே கூறலாம். இப்பஞ்சாயத்துக்கள் கிராமவாசிகளிடையில் ஏற்படும்

Page 64
O2 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பிணக்குகளைத் தீர்த்தும், குற்றஞ் செய்வோரைத் தண் டித்தும், முக்கியமான விஷயங்களில் தீர்ப்புக்கொடுத்தும் வந்தன.
கிராமச் சபைகளின் தீர்ப்புக்கெதிராக அரசன் தலை யிடுவதில்லை. ஆனல், அரசனின் உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வருடமும் கிராமங்கட்குச் சென்று, குற்றஞ் செய்வோரைத் தண்டித்துவந்ததோடு, அரசனுக்குச் செல்லவேண்டிய திறையையும் சேகரித்து வந்தார்கள்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் உயிர் நாடியாயிருந்தது அவ்வக்கிராமத்து விகாரையாகும். இங்கே கிராமச் சனங்கள் போய தினம் போன்ற புண்ணிய தினங்களில் கூடி ஆராதனை நடத்தி, பெளத்த குருமார் செய்யும் போதனையைக் கேட்பார்கள்.
ஒரு விகாரையென்பது, ஒரு தாதுகோபத்தையும், விக்கிரகம் தாபிக்கப்பட்ட ஒரு ஆலயத்தையும், உபோ சாதமென்று சொல்லப்படும் போயகிருகத்தையும், பிக்கு கள் வசிக்கும் ஆச்சிரமத்தையுமடக்கியிருக்கும். அநேக மாக எல்லா விகாரைகளிலும் ஒரு அறச்சாலையுண்டு. அரச மரமொன்று விகாரைகளிற் காணப்படும். பெரிய விகாரைகளில் இவற்றேடு ஒரு வைத்தியசாலையும் புத்தக சாலையும் அமைந்திருக்கும்.
கிராமவாசிகள் கூடி வழிபாடாற்றுவது மாத்திர மன்றி இவ்விகாரைகளில் கல்வியும் கற்பிக்கப்பட்டது. அதஞல், இவை பெரிய கல்வி நிலையங்களாகவும் விளங் கின. சாதாரண சனங்கள் தமது பிள்ளைகட்கு எழுத வோ வாசிக்கவோ பயிற்றுவது பெருவழக்காயிருக்க வில்லை. இதனுல் பெளத்த பிக்குகளைத் தவிர வெகுசிலரே கல்வியறிவுடைய வராயிருந்தார்கள். பிக்குகளாக வர விருப்பமுடையவர்களுக்கு விகாரைகளில் சிறப்பாகக் கல்வி பயிற்றப்பட்டது. பெரிய விகாரைகளிலுள்ள பிக்குகள் தமது நேரத்தின் பெரும் பகுதியை நூல்களைப் பிரதி செய்வதிலும், புதிய நூல்களை எழுதுவதிலும் செலவு செய்தனர்.

மக்களின் வாழ்க்கை OS
விகாரைகளைக் கிராமவாசிகளே பரிபாலித்துவந்தார் கள். பிக்குகளுக்கு அவர்களே உணவளித்தனர். சில விகாரைகளுக்கு இராசாக்களும், தனவந்தர்களும் நிலங் களை உபமானியமாக வழங்கியிருந்தார்கள். இந்நிலங் களைக் கிராமத்தார் பயிரிட்டு அதன் விளைவின் ஒரு பகுதி யை அவ்விகாரைகட்குக் கொடுப்பார்கள். இல்லையேல், அதற்குப் பதிலாக வேறு தொண்டு செய்வார்கள். மலை நாட்டிலுள்ள விகாரைகள் பல இன்றும் ஏராளமான நிலம் உபமானியம் உடையனவாயிருக்கின்றன. இந் நிலங்களில் வசிப்போர் விளைவின் ஒரு பகுதியை அவ்வவ் விகாரைகட்குக் கொடுக்கிருர்கள். இல்லையேல், விகா ரைகளைப் பழுதுபார்த்தல் ஊர்வல விழாக்களில் பங்கு பற்றல், அல்லது மேளம் அடித்தல் முதலிய தொண்டு களைச் செய்கிருர்கள்.

Page 65
ஒன்பதாம் அத்தியாயம்
சீனரும் பாரசீகரும்
1. பாஹியான்
புத்தகோசன் இலங்கைக்கு வந்ததைப்பற்றி மேலே குறிப்பிட்டோம். கி.பி. 412-ல் சீனவிலிருந்து பாஹி யான் என் ருெரு பெளத்த பிக்கு இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள பெளத்த நூல்களைப் பிரதிசெய்வ
தற்காக வந்தார்.
இவர் தமது யாத்திரைகளைப்பற்றி உருசிகரமான சில குறிப்புக்களை எழுதி வைத்திருக்கிருர், அவற்றிலே அவருடைய யாத்திரைகளின் வரலாறு விவரமாகக் கூறப் பட்டுள்ளது. மத்திய சீனவிலிருந்து கோபி பாலைவனத் தூடாக நடந்துவந்து இந்துக்குஷ் மலைகளைத் தாண்டிய தும், அதன்பின் இந்தியப் பிரதேசத்துனுரடாகச் சென்று ஹஜூக்ளி தீரத்திலுள்ள தாமிரலிப்தி என்னும் (தம்லுக்) பட்டினத்தை அவர் அடைந்த வரலாறும், அங்கிருந்து கப்பலேறி பதினன்கு நாட்களில் இலங்கையை அடைந்த செய்தியும், பின்னர் சீனம் சென்ற ஒரு கப்பலில் அவர் இருநூற்றுக்கு மேற்பட்ட பிரயாணிகளுடன் தாய்நாடு திரும்பியபொழுது, இலங்கையிலிருந்து பல பெளத்த விக்கிரகங்களையும் சமய நூல்களையும் எடுத்துச்சென்ற விபரங்களும் கூறுகிருர், மத்திய இந்தியாவுக்கு வந்துசேர அவருக்கு ஆறுவருடம் சென்றது. இந்தியாவில் ஆறு வருடங்கழித்த பின் இரண்டு வருடம் இலங்கையிற்றங்கி ஞர். அடுத்த வருடத்தில் அவர் சீன சென்றடைந்தார்.
பல இடங்களில் அவர் மிகக் கஷ்டங்களை யனுபவிக்க வேண்டியிருந்தது. கோபி பாலைவனத்தில் தமது அனுப வங்களைக் கூறுமிடத்து பாஹியான் பின்வருமாறு குறிப்
104

@goluri 199ųoolim ÇİĞ uri

Page 66
06 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பிடுகிருர்-"இவ்வனுந்திரத்தில் பல துர்த்தேவதைக ளிருக்கின்றன. காற்று வெப்பமாயிருக்கிறது. இவற்ருல் தாக்கப்படுவோர் எவரும் உயிர் தப்புவதில்லை. வானத்தில் பறவைகளையாவது பூமியில் மிருகங்களை யாவது காண்பதரிது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை சுற்றிலும் பார்த்தால், ஒரு வழியையும் காணமுடியாது. இறந்த மனிதரின் எலும்புக்கூடுகள்தான் ஒரளவுக்கு வழிகாட்டுகின்றன".
இத்தகைய இன்னல் நிறைந்த யாத்திரையை மேற் கொண்ட பாஹியானின் சமயாபிமானத்தை நாம் மெச் சாமலிருக்க முடியுமா? பாஹியான் தரிசித்த ஏராளமான பெளத்த புண்ணியத் தலங்களை நோக்குமிடத்து அக்கா லத்தில் பெளத்த சமயம் சீனு, மத்திய ஆசியா, வட இந்தியா ஆகிய இடங்களில் எவ்வளவு தூரம் பரவியிருந்த தென்பதை ஒருவாறு அளவிட்டுக்கொள்ளலாம். தான் சென்ற இடங்களில் ஆங்காங்கு காணப்பட்ட எண்ணிறந்த விகாரைகளைப்பற்றி பாஹியான் குறிப்பிடுகின்ருர், அவ் விகாரைகள் பல வற்றில் ஆயிரக்கணக்கான பிக்குகள் வாழ்ந்தனரென்று குறிப்பிட்டு, அவ்விடங்களைப்பற்றிப் பல விநோதமான கதைகளையும் கூறுகிருர்,
பாஹியான் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்து இலங் கையைப் பற்றியும் பல விஷயங்களை அறியக்கூடியதா யிருக்கிறது. இலங்கையிலே சுமார் ஐம்பதாயிரம் தொடக் கம் அறுபதினுயிரம் பெளத்த பிக்குகள்வரை வாழ்ந்தன ரென்றும் அபயகிரி விகாரையில் மாத்திரம் ஐயாயிரம் பிக்குகளிருந்தார்களென்றும், அங்கே பச்சைக் கல்லினுல் செய்யப்பட்ட இருபதடிக்குமேலுயரமுள்ள ஒரு புத்த விக்கிரகமிருந்ததென்றும் தெரிகின்றன. அனுராதபுரியி லுள்ள வெள்ளரசைப்பற்றியும், தந்ததாது ஊர்வலத் தைப்பற்றியும் பாஹியான் குறிப்பிடுகின்ருர்.
11. சிணு
இந்தியாவுக்கு வட கிழக்காக, கிழக்கே பசிபிக் மகா சமுத்திரம்வரை பரந்துகிடக்கும் நிலப்பரப்பே

சீன 07
பாஹியானுடைய தாய் நாடாகிய சீனுவாகும். புரா தன காலத்தில் நாகரிகமடைந்திருந்த ஏனைய தேசங்க ளோடு சீனம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாவிட்டாலும், சீனர் தாமாகவே நாகரிகத்தில் முற்போக்கடைந்திருந் தஈர்கள். வெடிமருந்தை முதன் முதல் கண்டுபிடித்த வர்கள் சீனரே. அச்சுவித்தை அவர்களிடத்திருந்தே வந்தது. மாலுமிகளின் திசையறி கருவியையும் அவர் களே முதன்முதல் கண்டறிந்தார்கள். பட்டு உற்பத்தி செய்யும் முறை சீனராலேதான் முதன் முதல் தொடங்கப் பட்டது. சீனப்பட்டை இன்றும் நாம் அவர்களிட மிருந்து வாங்குகிருேம்.
புராதன சீனருள் மிகப் புகழ்வாய்ந்தவர் கொன்பி யூஸியஸ் என ஐரோப்பியரால் கொண்டாடப்படும் குங். புட்சி என்பவர். இவர் வாழ்ந்த காலத்திலேயே (கி.மு. 551-478) கிறீஸில் சோக்கிரதீசும் இந்தியாவில் புத்த ரும் வாழ்ந்தார்கள். கொன்பியூஸியஸ் வறுமைப்பட்ட ஓர் உயர்ந்த குலத்தில் பிறந்தார். இளமையிலே இவரது பெற்றேர் இவருக்கு செவ்வனே கல்வி கற்பித்தார்கள். இருபத்திரண்டாவது வயதில் இவர் தம்மை ஒரு பொது ஆசிரியராகத் தாமே நியமித்துக்கொண்டு புராதன சீன நூற்களை ஆராய்ந்து வெளியிடுவதில் தமது நேரத்திற் பெரும் பகுதியைச் செலவுசெய்தார். இவர் காலத்தில் இவரை ஒரு பெரிய ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ ஒருவரும் மதிக்கவில்லை. ஆனல் இவர் இறந்த பின்னர் சீனர் இவரது பெருமையை அறிந்து இவரை ஒரு தெய்வ மாக மதித்து ஆலயங்கூட இவர் பேரால் நிறுவினர்கள்.
மக்கள் நல்வாழ்வு நடத்தவேண்டுமெனக் கொன்பி யூலியஸ் பிரதானமாகப் போதித்துவந்தார். பெற்முே ருக்குக் கீழ்ப்படிந்து, சுற்றத்தவரைத் தழுவி, பிதிரர் கட்கு பக்தி செலுத்திக் கல்வியைப் போற்றி வாழவேண்டு மென்பதே இவருடைய போதனையின் சாரம்,
வடமேற்கிலிருந்து வந்த நாடோடிக் கூட்டத்தினர் னேரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாயிருந்தார்

Page 67
器
 

சீனு 09
கள். இவர்களுள் பிரதானமானவர்கள் ஹஜூனர் என்ற சாதியார். இவர்கள் பின்னர் இந்தியா மீதும் ஐரோப் பாமீதும் படையெடுத்தார்கள். கி.மு. மூன்ருவது நூற் ருண்டிலே இந்த ஹ"ணைரின் படையெடுப்பிலிருந்து சீன வைக் காப்பாற்றுவதற்காக ரிசின்-ஷி என்ற சீனச் சக்கர வர்த்தி ஆயிரத்தெண்ணுாறு மைல் நீளமுள்ள பெருஞ் சுவரைக் கட்டுவித்தான். கி.பி. முதலாவது நூற்ருண்டிலே பெளத்த சமயம் சீனவில் பரவிச் சீன நாக ரி க த்  ைத ப் பாதி த் த து . இதன் பயனகவே பாஹியான் போன்ற அநேக சீன யாத்திரிகர்கள் இந்தியா வுக்கு வந்து புத்த க்ஷேத் திரங்கள் பலவற்றைத் தரிசித்ததுமன்றி, அவர் களிற் சிலர் இலங்கைக் கும் வ ர க் கூ டி யதா யிருந்தது. பெளத்த சமயத்தில் இலங்கைக் கும் சீனவுக்குமிருந்த அபி மானத்தினலே இவ்விரு தே ச அ ர ச ர் க ஞ ம் தாய்சிங் ஒரு வர் க் கொரு வ ர் தாங் வமிசத்து சக்கரவர்த்தி கடிதப் போக்குவரத்து நடத்தினர்கள்.
சீனுவில் முதல் பெளத்த பிக்குகள் மாத்திரமே யிருந் தார்களென்றும், பின்னர் சில சீனப் பெண்கள், பிக்குணி களாய்ச்சேர விருப்பமுற்றதால், இலங்கையிலிருந்து சில பிக்குணிகள் சீனசென்று அவர்களைச் சங்கத்தில் சேர்த் தார்களென்றும் சீன நூல்கள் கூறுகின்றன.
அக்காலங்களில் சீனுவுக்குப் பிரயாணஞ் செய்வது மிகக் கஷ்டமானது மன்றி, அபாயம் நிறைந்ததாகவு

Page 68
I I. Ο நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
மிருந்தது. இக்காலத்தைப்போல செளகரியமாய் சில நாட்களில் போய்ச் சேரக்கூடிய நீராவிக் கப்பல்களக்கா லத்திலில்லை. மேலும், கடற் கொள்ளைக்காரர் எங்கும் நடமாடினர்கள். அவர்கள் கையில் அகப்பட்டால் இயமனுலகம் போகவேண்டியதே. அன்றியும், கடலில் வழியறிவதற்குத் திசையறி கருவிகள் கிடையா. சந்தி ரன், சூரியன், நட்சத்திரமென்பவற்றின் நிலையைப் பார்த்தே பாதையை நிச்சயிக்கக் கூடியதாயிருந்தது. புயல் கிளம்பினுல் கப்பல் காற்றினுல் எற்றுண்டு மறைந்து கிடக்கும் பாறைகளில் மோதி உடையவேண்டியதே.
இத்தகைய கஷ்டமான பிரயாணத்தில் முனைந்த அச்சிங்கள பிக்குணிகளின் மனேதைரியமும் சமயாபி மானமும் என்னே! தாங்வமிச அரசர்கள் ஆட்சி நடத் திய கி.பி. ஏழாம், எட்டாம், ஒன்பதாம் நூற்றுண்டு களில் சீன உன்னத நிலையை அடைந்திருந்தது. இந்தி யாவில் குப்த வமிசத்தவரைப்போல தாங் வமிசத்தார் சீனுவை உன்னத நிலையடையச் செய்தார்கள். இக்காலத் தில் சீன இராச்சியம் வடக்கே சைபீரியா தொட்டு தெற்கே இமாலயம் வரையும், கிழக்கே கோரியா தொட்டு மேற்கே காஸ்பியன் கடல்வரையும் பரந்திருந்தது.
11. ஜப்பானிய தேசோத்தாரண வீரன் ஷொட்டோகு (543-622)
ஆசிய நாடுகளுள் ஜப்பான் இன்று முன்னணியில் நின்ருலும், பழங்காலத்தில் சீனவையே பின்பற்றி வந்தது. நாகரிக அம்சங்களையெல்லாம் சீனவிடமிருந்தே கற்றுக்கொண்டது. கொன் பியூஸியஸின் போதனைகளைச் சீனவிடமிருந்து கற்றது மன்றிச் சீனவில் பெளத்த சமயம் பரவியதும் ஜப்பானும் அதைப் பின்பற்றியது.
கி.பி. ஆருவது நூற்றண்டின் ஆரம்பத்தில் ஜப்பா னைப் பற்றி வெளிநாடுகள் அறிந்திருக்கவில்லை. இலங் கையிலும் இந்தியாவிலும் சாதிப் பாகுபாடிருப்பது

பாரளிகர்
போலவே, ஜப்பானியரும் அக்காலத்தில் குலத்தை யொட்டிப் பல கூட்டத்தாராய்ப் பிரிந்திருந்தார்கள். ஆரம்பத்தில் சில குலக்குழுவினர் பெளத்த சமயத்தை எதிர்த்தார்கள். ஆனல், ஆருவது நூற்ருண்டில் ஜப் பானிய சக்கரவர்த்தினியும் அவரது பிரதிநிதியான ஷொட்டோகு இளவரசரும் பெளத்த சமயத்தைத் தழுவியதினுல் ஜப்பானில் பெளத்த சமயம் பரவிற்று.
அழகான எல்லாவற்றையும் ரசிக்கும் ஒரு தன்மை ஷொட்டோகுவிடம் காணப்பட்டது. இவரது தியான மண்டபத்தில் காணப்பட்ட அழகிய விக்கிரகம் உலகத்தி லுள்ள சமய சம்பந்தமான விக்கிரகங்களெல்லாவற்றி லும் மிக அழகியதெனச் சிலர் கருதுகின்றர்கள். சுகூஜி என்ற விகாரையிற் காணப்படும் மைத்திரீய புத்தரின் அழகிய உருவம் ஷொட்டோகுவினல் இயற்றப்பட்ட தெனச் சிலர் கூறுகின்றனர்.
ஷொட்டோகு ஜப்பானைப் புனர் நிர்மாணஞ்செய்த வீரனெனக் கொண்டாடப்படுகிருர். இவருக்கு முன்னி ருந்த பல அரசரிலும் பார்க்க இவர் ஜப்பானுக்குச் செய்த தொண்டு பெரிதாகும். ஒருவருக்கொருவர் மாறுபட்டுக் கலகம் விளைத் திருந்த ஜப்பானிய குலக்கூட் டத்தவரைச் சக்கரவர்த்தினியின் ஆட்சிக்குக் கீழ்ப்படியச் செய்ததுடன், இவர் அன்பு மார்க்கமான பெளத்த சமயத் தைப் பரப்பிச் சனங்கள் சமாதான வாழ்வு நடத்து மாறும் தூண்டினர். அதனுடன் கோரியா, சீனு ஆகிய தேசங்களின் நாகரிகத்தை ஜப்பானுக்கு ஏற்றளவுக்கு கைக்கொண்டு, ஜப்பானின் நாகரிக வாழ்வுக்கு அடிகோ லிஞர்.
IV. LurrysmwCassir
உரோம இராச்சியத்தின் பிரசைகளாயிருந்த காலத் தில் கிரேக்கர் இலங்கைக்கு வந்து வாசஃனத் தி விங்,%ள Lt TT rrTTT T LL TTT TT TTt LLLL LaL tLTttttLL LLL LLLLLL

Page 69
12 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
அத்தியாயங்களில் கூறினேம். கி.பி. ஐந்தாம் நூற்றண்டு வரையில் கிரேக்கர் இலங்கைக்கு வருவதை நிறுத்திவிட் டார்கள். அவர்களுக்குப் பதிலாகப் பாரஸிகர் இலங் கைக்கு வரத் தொடங்கினர்கள்.
TT
இப்பாரஸிகர் என்பவர் யார்? அவர்கள்தான் இக்கால ஆப்கானிஸ்தானத்துக்கும் இராக்குக்குமிடையிலுள்ள பிரதேசத்தில் வசித்து வந்தோர். இப்பிரதேசத்தில் ஆதியில் குடியேறிய ஆரியரின் வழித்தோன்றல்களே
 

பாரஸிகர் 13
இவர்கள். கி.மு. ஐந்தாவது நூற்ருண்டு வரையில் அவர்கள் பெரிய இராச்சியத்தை நிறுவினர்கள். மகா அலெக்சாந்தர் அவர்களை வெற்றி பெறும்வரை அவர்களின் ஆதிக்கம் குன்றவில்லை. கி.பி. ஐந்தாவது நூற்ருண்டில் மறுபடியும் பாரஸிகர் ஆதிக்கமடைந்தனர். அடைந்து கொன்ஸ்தாந்தினேப்பிளில் ஆட்சி செய்த உரோமச் சக்கரவர்த்திகளோடு சச்சரவிட்டார்கள். இக் காலத்திற்ருன் வியாபாரத்தின் பொருட்டு அவர்கள் இலங்கைக்கு வந்தனர்.
புராதன பாரஸிகர், ஸோருஸ்டர் என்ற ஒரு சமயா சாரியாரின் மதபோதனையைப் பின்பற்றி வந்தார்கள். இவரை ஸ்ரதுஸ்ரா என்று சொல்லுவதுமுண்டு. இவர் புத்தருக்கு சற்றுமுன் (கி.மு. 660-583) வாழ்ந்து வந் தார். ஆரியர் இந்தியாவுள் நுழைந்தபொழுது அனுட் டித்த சமயத்தைப்போன்ற ஒரு சமயத்தையே இவர் போதித்துவந்தார். இந்தியாவிலும் இலங்கையிலும் வசிக்கும் பார்ஸி வகுப்பார் இன்றும் இப்போதனைகளையே பின்பற்றி வருகின்றனர்.
இலங்கைக்கு அக்காலத்தில் வந்த பாரஸிகர் நெஸ் டோரியர் என்ற ஒரு வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர் களாகும். இவர்கள் ஸோருஸ்டரைப் பின்பற்றியவர் களல்ல. சில வருடங்கட்குமுன் அனுராதபுரியிற் புதை பொருளாராய்ச்சியாளர் அசாதாரணமான உருவத்தை யுடைய ஒரு சிலுவையைக் கண்டெடுத்தார்கள். அதை ஆராய்ச்சி செய்தபொழுது அது இந்த நெஸ்டோரிய வகுப் புக் கிறிஸ்தவர்க்குரிய சிலுவையாகக் காணப்பட்டது.

Page 70
பத்தாம் அத்தியாயம்
இந்து மதமும் இஸ்லாமும்
1. முகம்மது (571-632)
பாரளீகருக்குப்பின் அராபியர் இலங்கையோடு வர்த் தகஞ் செய்தார்கள். இவர்கள் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையிலே இன்று நான்கு லட்சம் முஸ்லிம்கள் வரை யிருக்கிருர்கள். ஆதலின், இவர்க ளது சமயத்தைப் பற்றி அறிவதும் இன்றியமையாதது. உரோமரைப்போலவே அராபியரும் ஒரு பெரிய சாம் பிராச்சியத்தை தாபித்து, உலகெங்கும் தமது செல்வாக் கைப் பரப்பியிருக்கிருர்கள். ஆகவே, அராபியருடைய சரித்திரத்தை அறிந்துகொள்வதும் அவசியம்.
தாடோடிகளான சாதியார் வாழும் அராபியப் பாலை வனத்தில் முகம்மது நபி பிறந்தார். செங்கடலிலிருந்து ஐம்பது மைலுக்கு அப்பாலுள்ள மெக்கா என்னும் சிறிய வியாபாரப் பட்டினமொன்றில் வறுமைப்பட்ட ஒர் உயர்ந்த குடியில் அவர் அவதரித்தார். நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னரே அவரது தந்தையார் தேக வியோகமானர். சிறுவனயிருக்கும்பொழுதே அவரது தாயாரும் இறந்துபோனர். அவரது பாட்டனரும் மாமனுரும் அவரை வளர்த்து வந்தார்கள். முகம்மது நபி இருபத்தைந்து வயதாயிருக்கும்பொழுது ஒரு வித வையான சீமாட்டியின் கீழ் வியாபாரம் நடத்தும் அலுவ லாளாக அமர்ந்து சாமான் கொண்டுசெல்லும் வியா பாரக் கூட்டங்களை வெவ்வேறு தேசங்களுக்குக் கூட்டிச் சென்று அவ்வியாபாரக் கூட்டத்தவர்க்குத் தலைவனுக இருந்துவந்தார். அவர் சீரியாவுக்குச் சென்று நல்ல
14

முகம்மது
வியாபாரம் நடத்தி வீடுவந்து சேர்ந்ததும், அவரது அருங்குணங்களைக் கண்டு மகிழ்ந்த அவ்விதவை அவரை மணந்துகொண்டாள்.
நாற்பது வயதானதும், முகம்மது நபி தாம் ஒரு மதபோதகராக வேண்டுமெனச் சித்தங்கொண்டார். யூதர்கள் போதித்து வந்ததுபோல இவரும், ஒன்றே கட வுள் என்ற உண்மையைப் போதித்துவந்தார். முகம் மது குடும்பத்தார் அவரது போதனையைப் பின்பற்றிய போதிலும், விக்கிரகாராதனை நடத்திவந்த மெக்கா வாசி கள் அவரைப் பகைத்துக் கொலை செய்யவும் தீர்மானித் தார்கள். உடனே முகம்மதுநபி 622-ல் மெக்காவை விட்டு மெதீனுவுக்கு ஓடினர். மெதீனுவுக்கு ஒடிய தின மாகிய ஹிஜ்ராவைக்கொண்டே முஸ்லிம்கள் தமது வரு டத்தைக் கணக்கிடுகின்றர்கள். கிறிஸ்தவர் இயேசு நாதரின் பிறந்த தினத்தைக்கொண்டு தமது வருடங் களைக் கணிக்கின்றனர். சில வருடங்களின் பின்னல் முகம்மது நபி, மெதீனுவிலிருந்து மெக்காவுக்கு வந்து விக் கிரகங்களையெல்லாம் உடைக்கும்படி போதனை செய்தார். அவர் இறக்கும் காலத்தில் அரேபியா முழுவதும் அவரு டைய போதனையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
முகம்மது நபி இறந்து இரண்டு வருடங்களுக்குப்பின் அவருடைய போதனைகளை ‘குர்ஆன்’ என்ற வேதமாகத் தொகுத்தார்கள். இது அராபிய பாஷையில் எழுதப் பட்டிருக்கிறது. இவ்வேதம் விவிலிய வேதத்திலும், பெளத்த சமய நூலாகிய 'திரிபிடகத்திலும் அளவிற் சிறியதாகும். கடவுள் ஒருவரென்றும் அவர் அனுப்பிய தூதன் முகம்மது நபி யென்றும் “குர்ஆன்’ கூறுகிறது. ஒருநாளைக்கு ஐந்து முறை தொழுகை நடத்தவேண்டு மென்றும், வெறியுள்ள மதுவை அருந்தக்கூடாதென்றும், பன்றி இறைச்சியைச் சாப்பிடக் கூடாதென்றும் ரம்லான் மாசத்தில் நோன்பிருக்க வேண்டுமென்றும், வறியவர்க்குப் பிச்சை கொடுக்க வேண்டுமென்றும், கூடுமானுல் மெக்காவுக்கு யாத்திரை செய்யவேண்டு மென்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

Page 71
s a»^*è é{ S जून् =
潔 an
 
 
 

அரூன்-அல்-ராசிட் 1 7
இந்துககளைப்போலவாவது கிறிஸ்தவரைப் போலவா வது இஸ்லாம் மார்க்கத்தில் மதகுருக்கள் தொழுகையைத் தொடக்கவேண்டிய அவசியமில்லை. யாரும் அவர்களது தொழுகையைத் தொடக்கலாம். அவர்கள் தொழுகை நடத்துமிடத்தை மசூதி அல்லது பள்ளிவாசல் என்று கூறுகிருேம். அங்கே எவ்வகையான படங்களாவது விக்கிரகங்களாவது கிடையாது. வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மத்தியானத்திலும் விசேஷ தொழுகை நடத்தப்படும். அப்பொழுது மசூதியைச் சேர்ந்த மெளல்வி போதனை செய்வார்.
11. அரூன்-அல்-ராசிட்
முகம்மது நபி கி.பி. 632-ல் இறந்தார். இறப்பதற்கு முன் அவர் அரேபியா முழுவதற்கும் தலைவராய் ஆட்சி நடத்தினர். முகம்மது நபிக்குப்பின் ஆட்சி நடத்திய கலீபாக்கள், தம்முள்தாமே சண்டையிட்டுக் களைத்துப் போயிருந்த பாரஸிக ராச்சியத்தையும் பைஸாண்டிய ராச்சியத்தையும் தோற்கடித்தனர். இவ்வெற்றியின் பயனக பைசாண்டிய ராச்சியத்தின் ஒரு பகுதியாகிய, சீரியா, பலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளும், கிழக்கே யுள்ள பபிலோனியா, பாரஸிகம் ஆகிய நாடுகளும், அவர்களது ஆட்சிக்குட்பட்டது. பின்னர், முஸ்லிம் படைகள் மேற்கு நோக்கிச்சென்று வட ஆபிரிக்காவின் முழுப்பகுதியையும், மொறக்கோ, ஸ்பானியாவரை கைப்பற்றியதோடு, பிரான்ஸ் தேசத்தின் தென்பகத் தையும் வென்றர்கள். கிழக்கே இந்தியாவைக் கைப் பற்றியதுடன் கிழக்கிந்தியத் தீவுகள் சிலவற்றையும் கைப்பற்றினுர்கள்.
கலீபாக்களுள் மிகப் பிரசித்திபெற்றவன் கி.பி. 786 தொடக்கம் 809 வரை ஆண்ட அரூன்-அல்-I விட் ( 1Ꭼ6Ꭷ கண்ட அரூன்) என்பவனே. இவனது ரா ச் வியம் மேற்கே ஸ்பானியாவிலுள்ள ஜிப்ரோல்டர் தொடக்கம் இந்திய சீன எல்லைவரையும் பரந்திருந்தது. இவனைப்பற்றிக்

Page 72
| 1 8 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கூறப்பட்டுவந்த கதைகளே அராபியக் கதைகள் என்ற பெயருடன் தொகுக்கப்பட்டன. இந்நூல் மிகப் புகழ் பெற்றது.
அரூன்-அல்-ராசிட் வித்தியா வினேதணுயிருந்தபடி யால் பாக்தாத்திலிருந்த அவனது அவைக்களத்தில் பல பண்டிதர்களும் புலவர்களும் கூடியிருந்தார்கள். பெளத்த நூல்களே இந்தியர் புறக்கணித்த காலத்தில் அவற்றைச் சீனர் எவ்வாறு பாதுகாத்து வந்தார்களோ அதேபோல ஐரோப்பியர் கிரேக்க நூல்களைப் படியாது புறக்கணித்த பொழுது அரூன்-அல்-ராசிட் அவற்றை அராபிய மொழி யில் மொழிபெயர்த்துக் காப்பாற்றினன்.
அராபிய நாகரிகத்துக்கு இக்கால உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. வைத்தியம், கணிதம் ஆகிய கலைகளில் அவர்கள் மிக முன்னேறியிருந்தார்கள். அட் சரகணிதத்தை அவர்களே கண்டறிந்தார்கள். வைசூரி சின்னமுத்து முதலிய வியாதிகளை மாற்றுவதற்குரிய முறைகளை உலகுக்கு அறிவித்தார்கள். சிற்பக் கலையி லும் சிறந்து விளங்கினர்கள். அவர்களது கட்டிடங்கள் விருத்தமான வில் மாடங்களையும், உயர்ந்த கூர்நுனி யுடைய கோபுரங்களையும் உடையனவாயிருக்கும். முஸ்லிம் மசூதிகளில் இவ்வமைப்பை இன்றும் காணலாம்.
11. நரசிங்கவர்மனும் இராசராசனும் தென்னிந்தியாவில் பழங்காலந்தொட்டே சேர, சோழ, பாண்டியமென மூன்று இராச்சியங்கள் நிலவி வந்தனவென்றும், சோழரும், பாண்டியரும் அடிக்கடி இலங்கைமீது படையெடுத்து வந்தனரென்றும் முன்னரே கூறியிருக்கிருேம். கி.பி. ஆருவது நூற்றண்டினிறுதியில் பல்லவரென்ருெரு சாதியார் சோழராச்சியத்தைக் கைப்
பற்றி இருநூறு வருடமாக ஆண்டுவந்தார்கள்.
பல்லவர்களுள் பெரிய அரசன் நரசிங்கவர்மன் என் பவன் (635-668). இந்திய அரச ஞெருவனேடு போர் செய்த காலத்தில் தனக்கு உதவிபுரிந்த மானவர் மனை

நரசிங்கவர்மனும் இராசராசனும் 19
இவன் இலங்கை யரசனக்கினன். மகாபலிபுரத்தில் ஏழு பெரும் பாறைகளைக்குடைந்து கோயில்களாயமைத்த பெருமை இவனைச் சார்ந்ததே. இக்குடைவரைக் கோயில் களின் அழகிய சிற்பங்களை இன்றும் நாம் அதிசயத்துடன் போற்றுகின்ருேம்.
இலங்கைச் சிற்பமும் பல்லவமுறையையே பின்பற்றி யிருக்கின்றது. அனுராதபுரியை சேர்ந்த இஸ்ருமுனியி
லுள்ள கற்சிற்பங்கள் மகாபலிபுரத்தையே பின்பற்றிச் செதுக்கப்பட்டிருக்கின்றன. மனிதனின் தலையும் குதிரை யின் தலையும் செதுக்கப்பட்ட சிற்பங்களை ஆராயின் இவ்வுண்மை புலணுகும். மேலும் இலங்கையில் நாலந் தாவென்ற இடத்தில் பாழடைந்துகிடக்கும் கெடிகே கட்டிடம் மகாபலிபுரத்துக் குடைவரைக் கோவில்களை யொத்திருக்கின்றது.

Page 73
澳
臀
慈
 

stososĩ kɛ 1335 LITĘ "¡irmae aertog법」「T는長林七용
『!』
『Tr:#
!)

Page 74
. நம்முன்னுேரளித்த அருஞ்சேல்வம்
கி. பி. எட்டாவது நூற்gண்டு வரையில் பல்லவ ரTச் சியம் நிஃப் குஃபவே சோழர் ஆதிக்கம் பரவியது. 'நாள் Eடவில் சோழ மன்னரே, தென்னிந்தியாவில் பிரதான 10:ன்னராக விளைங்கினர். சோழ மன்னணுன முதலாவது டராத்தகன் :( ?-318), டாண்டி மன்னருக்கெதிராகப் டோர்செய்து அவர்களேத் தோற்கடித்து, அவர்களுக்குப் ப3டத்துஃன செய்த ஐந்தாவது காசியப்பனூேடும் (912923), மூன்று வது உதயஜேடும் '945-953) சண்டை பிட்ட இன்.
சோழருள் பேரும் புகழ்படைத் தவன் gift first
சோழன். இவன் கி.பி. 983-ல், அரசு கட்டிவேறினுன்
தக் கிணத்தில் சில பகுதிகளேயும், சேர, பாண்டிய ராச் சியங்களே பும், புவிங்கத்தையும் வென்று வெற்றிக்கொ
եւ 芭°西山 I),
நாட் குறன். தனது பெரிய கடற்படையின் துண்
கொண்டு இ ைஇன் இட்ைசத் தீவுகளே பும் பாஃப்த் நீவையும் .т) гг - - - - ! إن أول
கைப்பற்றினுன்
இவன் Ar 3:த்தில் இலங்கையில் ஐந்தாவது மிகுந்து ஆட்சிசேய்தான். இம் மன்னன் திறமையற்றபினுயிருந்த படிபரன் இவன் கீழ் சேனரைக்கிருந்த சேர வீரர்கள் குழப் பஞ்செய்து இவனுக்கெதிராய் எழுந்ததும், இவன் உருகுனேக்கு ஒடிஞன். இக்குதுப்பத்தைய நிந்த இராச ராசன் இலங்கை மீது படையெடுத்து வந்தான். இம்மன்ன னின் கிலும் முதலாவது இராசேந்திரன், ஐந்தாவது மிகுந்துவைக் கைதுசெய்து தென்னிந்தியாவுக்கணுப் பிஞன். இதன் ! ନିର୍ବ୍ବା" &&r if . பொலன்னறுவையை இராச தானியாகக்கொண்டு 1070 வரை சோழர் இலங்கையை ஆண்டார்கள்.
இராசிராபி ஒன டய கீர்த்தி அவனது வெற்றிகளோடு பாத்திரம் நிற்கவில்ஃ. தஞ்சாவூரில் இாைன் ஒரு பெரிய கோவிஃக் கட்டுவித்தான். இதன் கோபுரம் மிகச் சிறப் புடையது. இலங்கையிலுள்ள இக்காலத்துக் கோவிற்

இந்து சமயம் I 3
கோபுரங்களெல்லாம் இக்கோபுரத்தைப் பின்பற்றியே கட்டப்பட்டிருக்கின்றன. பொலன்னறுவையிலுள்ள இரண்டாம் சிவாலயம் சோழரின் சிற்பமுறைப்படியே அமைந்திருப்பதால், சோழர் காலத்திற் கட்டப்பட்ட தெனக் கூறலாம். தோபவாளிக்கருகேயுள்ள பாறை யில் செதுக்கப்பட்டிருக்கும் இரு விதியின் உருவமும் இக் காலத்தே யென்று கூறலாம்.
W. ShEI FLIDLIứ.
சோழர் இந்துக்களாதலால், இலங்கையில் அவர்கள் ஆட்சி நடத்தியதன் பானுக இலங்கையில் இந்து சமயம் பரவிற்று. இவர்கள் வருவதற்குப் பல காலத்துக்கு முன் னேரே இலங்கையில் இந்து சமயமிருந்தபோதிலும், அவ் வளவு ஆதிக்கம் பெறவில்ஃப். சோழர் படையெடுப்பின் பின்னர் பெளத்த சமயிகள் கூட இந்து மத அனுஷ்டானங் சுளேப் பின்பற்றினர். இதன் பயணுக பெளத்த விகாரை களுக்குச் சமீபத்தில் இந்து தேவாலயங்களும் கட்டப்
If... - ar.
இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் ஆராதிக்கப்படு கின்றன. லக்மி சமேதரான விஷ்ணுவின் {rடர்த்தத் தேசம், பார்வதி சமேதரா 3 சிவபெருமானின் & !!. ಹೌ# தையும், துர்க்கை, காளி ஆகிய முகூர்த்தங்களே பும் இந்து ஆலயங்களில் வழிபடுகின்றனர். விஷ்ணுவின் அவதாரமாக பூஜிரா மரையும், கிருஷ்ணனேயும், முருகன், கணேசர், பத்தினி ஆகிய கடவுளரையும் இந்துக்கள் வழிபடுவர். விஷ்ணு பக்தர் கண் வைஷ்ணவரென்றும், சிவபக்தர்களேச் சைவர் என்றும் கூறுவது வழக்கம்.
இந்து + மியக் குரு மார் பெளத்த குருமாரைப்போலப் பிரமசிரிய மனுட்டித்து வறிய வாழ்க்கை நடத்தவேண் புயதில்ஃ. அவர்கள் பிரான குலத்தவராகவுமிருப் பார்கள்.

Page 75
ممن به د: از بود . "مأسل، فليمية مبغيكيون . .
ప్లో###*
கந்தலாவிலுள்ள விஷ்ணு சிலை
 
 
 
 
 

இந்து சமயம் 25
பெளத்த சமயநூற்கள் பாளிபாஷையில் எழுதப்பட்டி ருப்பதுபோல, இந்து சமய நூற்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கையில் இந்து சமயம் பரவத் தலைப்பட்டதும், சமஸ்கிருத நூற்களைச் சனங்கள் படித்தார்கள். இந்து மதக்கொள்கையின் பயனுகவே சிங்கள பெளத்த பிக்குகளும் இந்தியாவிலனுசரிக்கப்படும் சாதியனுஷ்டானங்களைப் பி ன் ப ற் ற முற்பட்டார் களெனலாம்.

Page 76
பதினுேராம் அத்தியாயம்
பொலன்னறுவை யரசர்களும் அவர்களின் அயல் நாட்டுத் தொடர்பும்
1. முதலாம் விஜயபாகு (1059-1114)
இலங்கையிற் சோழர் ஆட்சி நடைபெறும் காலத்தில் லோகேஸ்வரன் (1055-1059) என்ற பெயருடைய ஒரு சிங்களத் தளபதி உருகுணையில் அரசனுஞன். குடிகளிற் சில வகுப்பார் இவனை வெறுத்தனர். எனவே, இவனை அரசிருக்கையிலிருந்து கலைத்துவிட்டு, மலைய நாட்டில்" வாழ்ந்துவந்த இளம்பிராயத்தணுன கீர்த்தி என்பவனுக்கு. முடிசூட்டவேண்டுமென இவனது பகைவர்கள் சூழ்ச்சி செய்தனர். கீர்த்தி பதினைந்தாண்டைப் பராயத்தவ ணுதலால், அவன் அரசியல் விஷயங்களில் வழிகாட்டு” வானென அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் அரசிளங்குமரன் என்ற காரணத்தால் அவனைப் பலர் விரும்பக் கூடுமென அவர்கள் நினைத்தார்கள்.
இவ்வாறு லோகேஸ்வரனுக்கெதிராக நடத்திய சண்டையில் கீர்த்திக்கு மிகுந்த வெற்றி கிடைத்தது. ஒரு வருடத்துள் அவன் மலையநாட்டுக்குத் தலைவனனன். 1059-ல் உருகுணே முழுவதையும் வென்று, விஜயபாகு என்ற பெயருடன் கதிர்காமத்தில் இராசதானியமைத்து அவன் ஆட்சி நடத்தினன்.
இந்த இளவரசனின்  ெவ ற் றி ப் பிரதாபத்தைக் கண்ட சோழர் திகிலடைந்தனர். தங்களுடைய எல்லைமீதும் படையெடுத்து வருவானே என்று பயந் தனர். இப்பயத்தினல் விஜயபாகுவின் பலத்தை நசுக்கு. வதற்காக அடிக்கடி அவன்மீது படையெடுத்தனர். ஒவ் வொரு முறையும் அவன் நிலைமையைச் சமாளித்துக்
26

முதலாம் விஜயபாகு 27
கொண்டான். ஒருமுறை எதிர்க்க வேறு வழியில்லாத படியால் மலை நாட்டிற்கோடி ஒளித்துக்கொண்டான். சில சமயங்களில் அவன் மலைக்கோட்டைகளில் சரண் புகுந்தான். வேறு சில சமயங்களில் சோழர் தன்னை
ஒரு படை
இலகுவில் எதிர்க்கமுடியாத இடங்களில் தலை மறைவா யிருந்துவந்தான். ஒருமுறை விஜயபாகு தன்னை எதிர்த்து வந்த சோழர் படையைப் பின்வாங்கச்செய்து இரா சரட்டைவரை கலைத்துச் சென்ருன், சோழர் படைக்குத்

Page 77
28 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தான் எதிர்நிற்க முடியாதென்பதைக் கண்டதும், விஜய பாகு கடுகளுவைக்குச் சில மைல் தூரத்திலிருக்கும் பைபிள் பாறைக்குச் சமீபத்திலுள்ள வக்கிகலை மலைக் கோட்டைக் குச் சென்ருன். பின்னர் அங்கிருந்து உருகுனேயில் நடைபெற்ற ஒரு குழப்பத்தை யடக்க அவன் அங்கு செல்லவேண்டியதாயிற்று.
சோழர் தன்னைத் தோல்வியுறச் செய்ததைக் கண்டதும், தனது எதிர்கால வேலை எவ்வளவு கஷட மானதென்பதை உணர்ந்தான். தனது பகைவரின் சேனை மிகுந்த வலிமையுடையதென்றும், இலங்கையை சோழர் ஆட்சியிலிருந்து விடுவிப்பதானல் அந்நியர் படைத்துணை அவசியம் என்பதையும் அறிந்தான். இவ் வளவு கஷ்டங்களிருந்தபோதிலும், தனது முயற்சியைச் செவ்வனே நடத்துவதற்கேற்ற நல்ல சந்தர்ப்பம் வரும் வரை மகாநாக குல என்ற இடத்தில் தங்கியிருந்தான்.
அங்கே அவன் வெகு காலம் தங்கவில்லை. 1069-ல் சோழ சக்கரவர்த்தி இறந்தான். சோழ சிங்காசனத். துக்கு இரண்டுபேர் போட்டியிட்டார்கள். இவ்வாறு சோழ நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டதும், விஜயபாகு மறுபடியும் ராஜரட்டையைத் தாக்கினன். அவனது சேனையின் ஒரு பகுதி மாயரட்டை வழியாகச் சென்று அனுராதபுரத்தைக் கைப்பற்றியது. இன்னெரு பகுதி மகாவலி கங்கைப் பக்கமாகப் பழைய பாதை வழி யாய்ச் சென்று பொலன்னறுவையைக் கைப்பற்றியது. இத்தலைநகரங்கள் விஜயபா குவின் கைப்பட்டதும், சோழரை இலேசாகக் கலைத்துவிட்டு இலங்கைக்கு, அவனே அரசனனன்.
சோழநாட்டுக் குழப்பங்கள் தீர்ந்த பின் சோழர் இலங்கையை மறுபடியும் திருப்பிப் பிடிக்கக்கூடுமென்ற பயம் விஜயபாகுவுக்கிருந்ததால், தனது இராசதானி யாகிய பொலன்னறுவை நகரத்தைச் சுற்றி மதில் கட்டி அரண்செய்தான். பின்னர் சோழருக்கு விரோதிகளான

முதலாம் விஜயபாகு 교 2
பாண்டியருடனும், கலிங்கருடனும், மேலைச்சளுக்கிய அரசனன ஆரும் விக்கிரமாதித்தனுடனும் (1078- 1126) நட்புடன் படிக்கை செய்துகொண்டான்.
இவ்வாறு சோழர் படையெடாதவாறு தன்னைக் காவல் செய்துகொண்ட பின் நாட்டின் வளத்தைப் பெருக்குவதில் கருத்தூன்றினன். சோழராட்சியில் பெளத்த சமயம் சீரழிந்து போனதையும், விரும்பி னுேர்க்கு தீட்சை செய்து சங்கத்தில் சேர்த்துக்கொள்ளக் கூடிய தகுதிவாய்ந்த பெளத்த பிக்குகள் அநேகர் இலங்கையில் இல்லாததையும் விஜயபாகு கண்டு வருந் தினன். இக் குறையை எவ்வாறு நிவிர்த்தி செய்வது? பர்மாவில் தகுதிவாய்ந்த ஏராளமான பிக்குகளிருந் தார்கள். பர்மிய அரசனன அனேரதன் என்பவன் தனது சிறந்த நண்பனுயிருந்து, சோழருக்கெதிராகப் படைத் துணை உதவியுமிருக்கிறன். அவனிடம் ஒரு தூதனுப் பினலென்ன என்று விஜயபாகு எண்ணி, ஒரு தூதுகோஷ் டியை அனுப்பி பர்மிய பிக்குகள் பலரை வரவழைத்து, அவர்களைப் பரிபாலித்தான்.
வேறும் பலவிதத்தில் இவன் பெளத்த சமயத்துக்குத் தொண்டு புரிந்தான். பல விகாரைகளைக் கட்டுவித் தான். பொலன் னறு  ைவ யில் தந்த தாது வைப் பிரதிஷ்டை செய்வதற்காக ஒரு கோவில் கட்டுவித்தான். அழிந்துபோன பல கட்டிடங்களைப் புதுப்பித்தான். சோழர் அழித்த பல கட்டிடங்களை மறுபடியும் நிர்மா ணித்தான். சிவனெளிபாதத்துக்கு அக்காலத்தில் யாத் திரை செய்தோர் பல கஷ்டங்களை அனுபவிக்கவேண்டி யிருந்தது. விஜயபாகு சாலை தோறும் தர்மசாலைகளையும் அம்பலங்களையும் கட்டுவித்ததோடு இரத்தினபுரிப் பகுதி யிலுள்ள 'கிரிமலை’ என்ற கிராமத்தை யாத்திரிகருக்கு உணவளிப்பதற்காக உப மானியமாக விட்டான்.
விஜயபாகு விவசாயத்தில் மிகச்சிரத்தையெடுத்தான். உடைந்த அணைகளைக் கட்டுவித்து, குளங்களைச் சீர்ப் படுத்தினன். அதன் பயனக நெல் விளைவை அதிகரிக்கச் செய்தான்.
872-5

Page 78
30 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இவன் காலத்தில் குழப்பமும் போருமில்லாதிருந்தால் இவன் பெளத்த சமயத்தை வளர்ப்பதற்கும் விவ சாயத்தை முன்னேற்றமடையச் செய்வதற்கும் இன்னும் அதிகம் முயன்றிருப்பான் எனக்கூறுவது மிகையாகாது. சோழரை முறியடித்த பின்னர் நாட்டில் உள்ளூர்க் குழப்பங்களுண்டாயின. மாயரட்டை, ராஜரட்டை, உருகுணை, மலையரட்டை, ஆகிய பகுதிகளில் புரட்சிக ளுண்டாயின. அது மாத்திர மன்றி கடைசி காலத்தில், இவ ஞல் கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்தியப் படையாட்சிகள் கலகஞ் செய்ததால் விஜயபாகு பொலன்னறுவையை விட்டுஓடி, வக்கிர் கலையிற் போயிருக்கவேண்டியதாயிற்று.
இலங்கையில் ஆட்சிசெய்த பெரிய அரசர்களுள் முத லாம் விஜயபாகுவும் ஒருவன் எனலாம். இவன் ஆட்சி தொடங்கிய காலத்தில் ஒரு சிறிய பிரதேசத்தையே ஆண்டு வந்தான். 1114-ல் இவன் இறக்கும் பொழுது இலங்கை முழுவதற்கும் தனி அரசனுகவே இறந்தான். இவனை ஞாபகமூட்டுவதற்குப் பெரிய குளங்களாவது பாரிய கட்டிடங்களாவது இல்லை. ஆனல், பெரிய சோழ சக்கிராதிபத்தியத்துடன் இளையாமற் சண்டையிட்டு இலங்கையை சோழ ராட்சியிலிருந்து மீட்டு ஒரு தனி அரசாக்கிய பெருமை இவனுக்கே உரியது.
1. மகா பராக்கிரமபாகு
முதலாம் விஜயபாகுவின் பின் அவன் தம்பியான ஜய பாகு அரசனஞன். இவனுக்குப்பின் அரசுரிமையுடைய வன் முதலாம் விஜயபாகுவின் மகஞன விக்கிரமபாகு வாகும். அந்த உரிமைபற்றி இவனே மாயரட்டை யில் ஆட்சி நடத்தவேண்டும். ஆனல், விஜயபாகுவின் சகோதரி மகனுன மானுபரணன், கீர்த்தி பூரீ மேகன், யூனி வல்லபன் என்ற தனது இரு சகோதரரின் துணை யோடும், ஜயபாகுவின் துணையோடும் மாயரட்டையைக் கைப்பற்றி ஆட்சி நடத்தினுன்.
ஆனல் தனது உரிமையை விக்கிரமபாகு இலேசாக விட்டுக் கொடுக்கவில்லை. எனவே மானபரணனுக்கும்


Page 79
132 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
விக்கிரமபாகுவுக்குமிடையில் போர் மூண்டது. முதல் விக்கிரமபாகு மானபரணனைத் தோற்கடித்தான். பின் னர் ஜயபாகுவை மாயரட்டையிலிருந்து கலைத்துவிட்டுத் தானே ஆட்சி நடத்தினன். ஆனல், மானபரணன் மாயரட்டையில் தொடர்ந்து அரசியல் நடத்தியே வந்தான். அவன் இறந்ததும் அவனது தம்பியான கீர்த்தி பூரீ மேகன் அதனை ஆண்டான். 1137-ல் விக்கிரமபாகு வும் இறக்க அவனது மகனன இரண்டாவது கஜபாகு ராஜரட்டைக்கு அரசனனு ன்.
மா ஞ பர ண னு க்கு பராக்கிரமபாகு என்றெரு மகனிருந்தான். தனது தந்தை யிறந்ததும் பராக்கிரம பாகு சில காலமாக உருகுணையில் தனது சிறிய தந்தை யான பூரீ வல்லபனுடன் இருந்தான். பின்னர், மாயரட் டைக்கு வந்து கீர்த்தி பூரீ மேகனுடன் வாழ்ந்தான். இங்கே தனது சிறிய தந்தையாரின் அரசாட்சிக்குத் துணை புரிவதற்குப் பதிலாய் அரசைக் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளைச் செய்து வந்தான். ஆனல், அது பலிக் காமற்போகவே ராஜரட்டைக்கு ஓடிச்சென்று தனது மைத்துனனன இரண்டாவது கஜபாகுவுடன் வாழ்ந்து வந்தான். பின்னர், சில நாட்செல்ல, மறுபடியும் சிறிய தந்தையான கீர்த்தி பூg மேகனிடஞ்சென்று அவனிறந்த பின், மாயரட்டைக்கு அரசனனன்.
பராக்கிரமபாகு ஒரு சிறிய ராச்சியத்துக் கரசன யிருப்பதோடு திருப்தி கொள்ளக் கூடியவனல்ல. மாய ரட்டைக்கு அரசனன காலந்தொட்டு அவன் இலங்கை முழுவதற்குமே அரசனுகவேண்டுமெனச் சூழ்ச்சி நடத்தி னன். சேனையும் பொருளும் சேகரித்து எல்லாவற்றுக் கும் தயாரானவுடன் கஜபாகுவுக்கெதிராகப் படை யெடுத்தான். ஒரு பக்கத்துக்கும் வெற்றியில்லாமலே சண்டை நடைபெற்றதைக் கண்டு பராக்கிரமபாகுவும் கஜபாகுவும் சந்துசெய்துகொண்டனர். யார் முதல் இறக் கி ரு ரோ அவருடைய ரா ச் சி ய பாகத்தை உயிரோடிருப்பவர் பெற்றுக் கொள்வதென உடன் படிக்கை செய்யப்பட்டது.

GడవిFgణQ}డు
a» VQW)
*:சேமக் கடல் என்னும் பேருங்குளம்
SMML MMTTM LATTMAAAATTS AA0LLL LLLLMSttt kLLL LLLLLL GL

Page 80
34 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
1153-ல் கஜபாகு இறந்தான். ஆனல், உருகுணை யில் தன் தந்தையான பூீரீ வல்லபனுக்குப்பின் ஆட்சி நடத்திய மானுபரணனேடு பராக்கிரமபாகு சண்டை செய்யவேண்டி நேர்ந்தது. இப்போர் சில காலமாக நடைபெற்றது. ஈற்றில், பராக்கிரமபாகு அவனை உரு குணைக்குப் புறங்காட்டி ஒடச் செய்தான். அங்கே அவன் சில நாட்களில் இறந்துபோனன்.
இலங்கையில் தனியரசனுவதற்கு உருகுணையைப் பராக்கிரமபாகு வெற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. இங்கே மானபரணனின் தாயான சுகல ராணியின் தலை மையில் சிங்கள அதிகாரிகள் பராக்கிரமபாகுவுடன் நெடுங்காலம் சண்டையிட்டு வந்தனர். பராக்கிரமபாகு கிழக்குப் பாதையாக முதல் ஒரு சேனையை அனுப்பினுன். புத்தல என்ற இடத்தில் இச்சேனை தடைப்பட்டது. உடனே மேற்கிலிருந்து இரண்டு படைகளை அனுப்பினன். ஒரு சேனை கரையோரமாகச் சென்றது. மற்றது புலுத் தோட்டைக்கூடாப் பெல் மதுளையைத் தாண்டிச் சென் றது. சில காலஞ் சண்டைசெய்த பின் பராக்கிரமபாகு வின் சேனை உடுண்டொர வென்ற இடத்தைக் கைப் பற்றி, சுகல வைத் தோற்கடித்தது.
பராக்கிரமபாகு இலங்கைக்குத் தனியரசனன பின் னரும் இரண்டு பெரிய யுத்தங்களில் ஈடுபட்டான். முதலாவது பர்மிய அரசனுன அலாங்சிது என்பவனுேடு போர் செய்ய நேர்ந்தது. முதலாம் விஜயபாகுவின் நண்பனுன அனேரதனைப்பற்றி ஏற்கெனவே கூறியுள் ளோம். அனுேரதனுக்குப்பின் அரசாண்டவர்கள் பலர் இலங்கையோடு நட்புக்கொண்டாடினர்கள். ஆணுல், அலாங்சிது என்ற தற்பெருமைவாய்ந்த மன்னன் இலங் கையோடு எவ்விதத் தொடர்பும் வைத்திருப்பதில்லை யென மறுத்துவிட்டான். இலங்கையோடு நடத்தி வந்த யானை வர்த்தகத்தை நிறுத்தினன். சிங்களத் தூதுவர் களைத் துன்புறுத்தினன். கம்போடியாவுக்குச் சென்ற சிங்கள இளவரசியைக் கைதுசெய்தான். இத்தகைய கொடுஞ் செயல்களைக் கண்ட பராக்கிரமபாகு ஒரு கடற்

- ::غنية :
မွိုစွဲပ်ဖွဖာ®တွေရော:ပ္ဂt:%%xစ္ဖ္ရစ္ဆိမ့်စို့၇:ဂဲ
。為義:※.i達通
×४'०***
இலங்கா தி M ; : இ திலக விகாரை, பொலன்  ைநுவை
--

Page 81
136 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
படையை ஏற்படுத்தி பர்மாவுடன் சண்டைக்குக் கிளம் பினுன், போரில் அலாங்சிதுவை பராக்கிரமபாகுவென்று மறுபடியும் யானை வியாபாரத்தை நடத்த அவனை இசை யச் செய்தானென மகாவம்சம் கூறுகிறது.
பராக்கிரமபாகுவின் இரண்டாவது யுத்தம் இன் ணுெரு காரணத்தைக்கொண்டது. 1167-ல் பராக்கிரம பாண்டியனது அரசைக் கைப்பற்றக் குலசேகரன் என்ற மன்னன் முயன்றன். பராக்கிரம பாண்டியன் இலங்கை வேந்தனன பராக்கிரமபாகுவின் உதவியை வேண்ட, அதற்கு பராக்கிரமபாகு உடன்பட்டான். இந்த யுத்தம் பல வருடங்களாக நடைபெற்றது. இரண்டு முறை யாகச் சிங்களப் படை வெற்றிபெற்று போர் முடிந்த தென்று இருக்குந்தறுவாயில் முலசேகரன் சோழர் துணை யுடன் சிங்களப் படையைப் பின்வாங்கச் செய்தான். இப்படைத் துணையில் பராக்கிரமபாகு அநேக போர் வீரரையும் பெரும் பொருளையும் இழக்க நேரிட்டது. இவற்றுக்கெல்லாம் ஈடாக இராமேஸ்வரம் என்ற தீவே பராக்கிரமபாகுவுக்குக் கிடைத்தது.
பராக்கிரமபாகு ஒரு சிறந்த போர்வீரன் மாத்திர மல்ல; ஒர் அறிவுமிக்க அரசனுங்கூட. விவசாய விருத் தியிலேயே தனது நாட்டின் செல்வ விருத்தி தங்கியிருப்ப தென்பதை நன்குணர்ந்திருந்தான். மாயரட்டைக் கரச ஞயிருந்த காலத்தில் இவன் தெதுரு ஒயாவின் நீரை விவசாயிகள் பயன்படுத்துவதற்காக வாய்க்கால்களை வெட்டுவித்தான். பின்னர் இலங்கை க்க ரசனனதும் குளந்தொட்டு வளம் பெருக்கிஞன். தோப்பவாவியை தம்புத்தலுவாவியுடன் இணைத்து பராக்கிரமக் கடல் என்ற பெரிய குளத்தைக் கட்டுவித்தான். அம்பன் கங்கை, மகாவலி கங்கை ஆகிய ஆறுகளை கால்வாய்கள் மூலம் இக்குளங்களோடு தொடுத்தான். இவ்வாறு தொடுக்கும் ஒரு கால்வாயே அங்கமேடில்ல எல என்ப தாகும். இங்ங்ணம் நாடெங்கும் விவசாயத்தை விருத்தி செய்யப் பெரிதும் முயற்சியெடுத்து வந்தான்.

-:

Page 82
38 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதில் பராக்கிரம பாகு பெரும் பொருள் செலவு செய்தான். பொலன்னறு வையில் இவன் கட்டுவித்த அரச மாலிகையின் சிதைவை இன்றும் அங்கே காணலாம். இவ்வரண்மனை அநேக மாடங்களையும், கட்டிடங்களையும் உடையதாய் செங் கல்லால் கட்டப்பட்டது. நகரின் வடபாகத்தில் மிக விஸ்தாரமாகக் கட்டப்பட்ட ஜேதவன விகாரையின் விக்கிரக மண்டபத்தின் சுவர்களில் பல சித்திரங்கள் வரை யப்பட்டன. இங்கே சசஜாதகத்தைக் குறிக்கும் ஒரு படமும் வரையப்பட்டிருக்கிறது. இங்கு கட்டப்பட்ட தெமலமகாசேய என்ற தாதுகோபமே இலங்கையிற் பெரியது. இலங்காதிலக விகாரை, கிரி விகாரை ஆகிய கட்டிடங்களும் இவன் காலத்தெழுந்தனவே. கல் விகா ரையில் குடையப்பட்டிருக்கும் பெளத்த விக்கிரகங் களும் இவன் காலத்திலேயே இயற்றப்பட்டன.
வேறு பல விதத்திலும் இவன் பெளத்த சமயத்தை வளர்த்து வந்தான். இலக்கிய விருத்தியை ஊக்கப் படுத்தியதால் அநேக நூல்கள் எழுதப்பட்டன. பெளத்த பிக்குகள் அக்காலத்தில் மூன்று பிரிவாகப் பிரிந்திருந் தார்கள். பராக்கிரமபாகு அவர்களை ஒற்றுமைப்படுத்
இலங்கையை ஆண்ட பெரிய அரசர்களுள் பராக் கிரமபாகு ஒருவன். மற்றவன் துட்டகெமுனு. பராக் கிரமபாகு ஒரு சிறந்த அரசன் என்பதில் ஐயமில்லை. பெளத்த சமய வளர்ச்சிக்கும், விவசாய விருத்திக்கும் இவனைப்போல முயற்சிசெய்தோரில்லையெனலாம். அயல் நாடுகள் மீது படையெடுத்துப் போர் என்று சொல்லக் கூடிய முறையில் யுத்தம் நடத்திய இலங்கையரசன் இவன் ஒருவனே. சிறந்த முறையில் அரசியல் நிர்வா கத்தை இவன் அமைத்தான் என்பதற்குப் பல சான்றுக ளுண்டு. பின், இவன் திறமையுடன் செய்த வேலைகளை மேலுந் தொடர்ந்து நடத்தி, அன்னியரின் எதிர்ப்பை நிர்வகிக்கக்கூடிய ஒரு அரசியல் முறையை உண்டாக் காததால், இவன் செய்த வேலையெல்லாம் வீணுயின.

பரத கண்டமும் கிழக்கிந்தியத் தீவுகளும் 139
11. நிஸங்கமல்லனும் கலிங்கமாகனும் பொலன்னறுவையில் ஆட்சிசெய்த மற்றுமிரு அரசர் கரைப் பற்றி மாத்திரமே ஈண்டுக் குறிப்பிடுவோம். இவர்களில் ஒருவன் நிஸங்கமல்லன் (1187-1196). இவ னிருந்த அரியாசனத்தை இப்பொழுது கொழும்பு நூதன சாலையிற் காணலாம். இவன் கலிங்கதேசத்து இளவர சன். பராக்கிரமபாகுவுக்கு மருமகன் முறையானவன். இவ்வரசன் தனது காரியங்களைப் புகழ்ந்து எழுதியுள்ள அநேக சாசனங்களிருக்கின்றன. அவற்றைக்கொண்டு இவனைப்பற்றி யதிகம் அறியக் கூடியதாயிருக்கிறது. இவன் பொலன்னறுவையில் வட்டதாகே, ஹட்டதா கே, நிஸங்கலதா மண்டபம், இரங்கோட் விகாரை ஆகிய கட்டிடங்களைக் கட்டுவித்தான்.
மற்ற அரசன் மாகன் (1214-1235). பொலன்னறுவை காலத்துக் கடைசி அரசன் இவனே. இலங்கையில் குழப்பம் இருப்பதை யறிந்த இவன் 1214-ல் இந்தியா விலிருந்து ஒரு படையோடுவந்து ராஜரட்டையை வென்று அரசன ஞன். தனது இருபத்தொரு வருட ஆட்சியில் இவன் பெளத்த சமயிகளைத் துன்புறுத்திக் குடிகளை வருத்தி அவர்களது செல்வத்தையும் அப கரித்துக்கொண்டான்.
இவன் இறந்ததும் பொலன்னறுவையின் புகழ் மங் கிற்று. இலங்கை க் குத் தலைநகராயிருந்த பொலன் னறுவை இவனட்சியின் பின் அப்பெருமையை இழந்தது. இடையிடையே நாலாவது விஜயபாகு, மூன்ரு வது பராக் கிரமபாகு ஆகியோரும், சொற்ப காலத்துக்கு இரண் டாவது பராக்கிரமபாகுவும் பொலன்னறுவையில் ஆட்சி நடத்தினர்கள்.
IV. பரதகண்டமும் கிழக்கிந்தியத் தீவுகளும் இந்தியாவின் செல்வாக்குப் பரவியிருந்த தூர கீழ்த் திசை நாடுகளின் படத்தை நோக்குமிடத்து, சீனுவுக்குத் தெற்கேயுள்ள பிரதேசம் நான்கு பெரிய பகுதிகளை உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். மேற்கே ஐராவதி, சல்வீன் என்ற ஆறுகள் பாய்ந்து வளம்படுத்தும் பர்மா

Page 83
தூர கீழ்த்திசை நாடுகள்
 

பரத கண்டமும் கிழக்கிந்திய தீவுகளும் 1 4
தேசம் அதற்குத் தெற்கே சயாமும், மலாய தீபகற் பமுள. இவற்றுக்குக் கிழக்கே அன்னம், கம்போடியா ஆகிய தேசங்களை யடக்கிய பிரெஞ்சு இந்து-சீன மிருக்கிறது. நான்காவதாக, சுமாத்திரா, ஜாவா, போர்ணியோ ஆகிய பெரிய தீவுகளிருக்கின்றன.
பழங்காலத்தில் இப்பிரதேசங்களில் சீர்திருத்தமற்ற புராதன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். பின்னர், அங்கு வந்த சீனர் இவர்களோடு விவாகஞ் செய்துகொண்டார் கள். எனவே, இப்பிரதேசங்களில் வகிப்போர் மங்கோ லியக் கலப்பினல் தொடர்புள்ள சாதியாரெனக் கூறலாம்.
பர்மா, சயாம், கம்போடியா ஆகிய தேசங்களில் ஹீணயான பெளத்த சமயமே பெரும்பாலும் அனுஷ்டிக் கப்பட்டு வருவதாலும் இந்நாடுகளிடையே சகய ஒற்றுமை யுண்டு. மலாய தீபகற்பத்திலும், சுமாத்திரா, ஜாவா, போர்ணியோ ஆகிய தேசங்களிலும் இன்று இஸ்லாம் மார்க்கமே முக்கியமாக அனுசரிக்கப்பட்டு வந்தபோதி லும், ஒரு காலத்தில் பெளத்த சமயம் இத்தேசங்களில் பரவியிருந்தது. அதற் கறிகுறியாக ஜாவாவிலுள்ள பொரோபதுார் என்னும் பிரமாண்டமான தாதுகோபம் விளங்குகிறது. இதற்குப் போகும் வீதியின் இரு மருங்கும் எண்ணிறந்த சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.
தூர கீழ்த்திசை நாடுகளில் பெளத்த சமயம் எவ்வளவு தூரம் பெருகியிருந்த தென்பதற்கு இலங்கையிலுள்ள பலவிதமான பெளத்த சமயப் பிரிவுகளே சான்ரு கும். இலங்கையிலுள்ள பிக்குகளிற் பெரும்பாலோர் சயாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். ராமன்னப் பிரிவெனவும் அமர புரப் பிரிவெனவும் வேறு இரு பிரிவுகளையும் காணலாம். ராமன்ன என்பது பர்மாவுக்குரிய பழைய பெயர். மேலைப் பர்மாவிலுள்ள ஒரு நகரமே அமரபுரமாகும்.
வியாபார நோக்கமாகச் சென்ற இந்திய வியாபாரி களே பர்மா, சயாம், கம்போடியா ஆகிய தேசங்களில் இந்திய நாகரிகத்தைப் பரப்பினர்கள். ஐராவதி,

Page 84
互42 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
அயோத்தியா முதலிய பரிமியப் பெயர்கள் இந்தியப் பெயர்களாகவே யிருக்கின்றன. மேலும், பர்மிய எழுத் துக்களும், பாஷை யும் சிற்ப முறையும், இலக்கியப் போக்கும் இந்தியச் செல்வாக்குடையதாகவே காணப்படு கிறது. சிங்களப் பாஷையைப் போலல்லாது அவர்களு டைய பாஷை மங்கோலிய பாஷையிலிருந்து பிறந்ததா யிருந்த போதிலும், நாளடைவில் பல சமஸ்கிருதச் சொற்களும் பாளிச் சொற்களும் அதில் புகுந்துவிட்டன. சீனுவுக்குச் சமீபத்திலுள்ளபடியால் அவர்களுடைய சிற்பமுறை சீனவைச் சில வகையில் பின்பற்றியிருக் கிறது. ஆயின், அவர்கள் கட்டிய பகோடா என்னும் தாதுகோபங்கள் இந்தியாவை அனுசரித்தெழுந்தன வென்பதை அறியலாம்.
தூர கீழ்த்திசையில் முதன் முதல் கிறிஸ்து பிறந்து சில நூற்ருண்டுகட்குப்பின், இந்து சமயம் பரவலா யிற்று. பின்னர், தென்னிந்தியாவிலிருந்து பெளத்த சமயம் பீகுவில் முதல் பரவி, பின்னர் கரையோரமெங்கும் பர விற்று. கி.பி. பத்தாம் நூற்றண்டின் பின்னரே பெளத்த சமயம் இந்நாடுகளில் பெரிதும் அனுட்டிக்கப்பட்டது.
V. மூன்று பர்மிய அரசர்கள் பர்மாவின் முதற்பேரரசன் அனேரதன் (10441077) என்பவன். இவனே முதலாம் விஜயபாகுவுடன் நட்புரிமை பூண்டிருந்தான் என முன்னர் கூறினுேம், இவன் ஆரம்பத்தில் மேலைப் பர்மாவில் பாகன் அல்லது அரிமத்தனமென்ற நகரை ராசதானியாகக் கொண்டு ஒரு சிறிய பகுதியை ஆண்டுவந்தான்.
முதலாம் விஜயபாகு உருகுணைக்கு அரசனன 1059-ம் ஆண்டில் தேரவாதப் பிரிவினையைச் சேர்ந்த ஒரு பெளத்த பிக்கு பாகனுக்கு வந்து அனேரதன ஹீனயான பெளத்த சமயியாக்கினன். இக்காலத்திலே மேலைப் பர்மாவில் மகாயான பெளத்த சமயத்தைச் சேர்ந்த சீர்கேடான ஒரு வகைச் சமயம் அனுட்டிக்கப்பட்டு வந்தது. அனுேர தன் ஹீனயான சமயத்தைப் பரப்பினன்.

மூன்று பர்மிய அரசர்கள் 1 4 3
புதிதாகத் தான் மேற்கொண்ட சமயத்தில் அனுேர தன் மிக ஊக்கங்கொண்டவனப் திரிபீடகத்தைப் பெற்று வருமாறு கீழைப் பர்மாவுக்குத் தூதனுப்பினன். ஆனல் கீழைப் பர்மியர் அந்நூல்களைக் கொடுக்க மறுக்கவே அனுேரதன் தண்டெடுத்துச் சென்று அந்நாட்டை வென்று வேண்டிய நூல்களையெல்லாம் பெற்றுக்கொண்டு தன்னடு திரும் பினன். இதன் பின்னர் 'திரிபிடகம்’
ஷிவேஸிகான் பகோடா
பாளி பாஷையிலேயே எழுதப்படலாயிற்று. இந்திய லிபியையும் மேலைப் பர்மாவில் உபயோகித்தனர்.
அனேரதன் அநேக பெளத்த கோவில்களையும் விகா ை களையும் கட்டுவித்தான். இவற்றுள் அதிக புகழ்பெற்றது ஷிவேஸிகான் பகோடா. இது 1059-ல் ஆரம்பிக் கப்பட்டது. இத் தாதுகோபத்தில் புத்தருடைய தக்க தாதுவும், நெஞ்செலும்பும் சேமிக்கப்பட்டி (ருப்பதாகக் கூறி, பர்மியர் இதனை ஒரு திவ்விய க்ஷேத்திரமாகப்

Page 85
44 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பாராட்டுவர். இலங்கையில் பெளத்த பிக்கு பரம் பரையைப் புனருத்தாரணஞ் செய்வதற்காக அனுேரதள் பர்மிய பிக்குகளை அனுப்பியபொழுது அதற்குப் பிரதியுப காரமாக புத்தரின் தந்ததாதுவை அனுப்புமாறு வேண்டி யிருந்தானென்றும் விஜயபாகு அவ்வாறு கொடுக்க மறுக் கவே பெளத்த சமய வளர்ச்சிக்கு ஏற்றவாறு பெருகும் தெய்வீக சக்திவாய்ந்த அத்தந்தம் இன்னென்ரு கப் பெரு கவே அதை அனேரதனின் தூதர்கள் எடுத்துச் சென்ருர்க ளென்றும் பர்மாவில் கதை வழங்கி வருகிறது.
தான் இறப்பதற்கு முன்னர், அனேரதன் பர்மா முழுவதையும் வெற்றிபெற்றுத் தனியரசனுஞன். பர் மாவின் முதல் அரசன் எனவும், ஹரீனயான சமயத்தைப் பரப்பியவனெனவும் இவ் வர சன் பாராட்டப்பட்டு வருகிறன்.
அலங்கசிது வென்ற (1112-1167) பர்மிய அரசனைப் பற்றி நாம் ஏற்கெனவே கூறியிருக்கிருேம். இவன் புவன தித்தியனென்ற பெயர் பூண்டு ஆட்சி நடத்தி வந்தான். இவனுக்கெதிராகவே பராக்கிரமபாகு போருக்கெழுந் தான். இதைப்பற்றி பர்மிய சரித்திரங்கள் கூறவில்லை. அலங்கசிது யானை வேட்டையில் கைதேர்ந்தவனென்றும் பல குழப்பங்களை அடக்கியவனென்றும், பர்மிய சரித் திரங்கள் குறிப்பிடுகின்றன.
இன்னெரு பர்மிய அரசன் தம்மசேதி (1472-1492) என்பவன். இவன் சிறந்த ஒரு நீதிமானகவும், விகாரை களைக் கட்டுவித்தலிற் புகழ்பெற்றவனுகவும் விளங்கு கிமு ன். இவன் காலத்தில் பர்மிய பெளத்த பிக்குகள் பல கட்சியாகப் பிரிந்து ஒவ்வொரு விதமான சம்பிரதாயங் களைக் கொண்டிருந்தனர். சாத்திர சம்பந்தமான பிக்கு அபிஷேக முறையைப் பயின்று வருவதற்குத் தம்மசேதி தனது பிக்குகள் சிலரை இலங்கைக்கு அனுப்பினன். அவர் கள் திரும்பிவந்து அங்கு பயின்ற அபிஷேக முறைப்படி பர்மிய பெளத்த பிக்குகளை அபிஷேகஞ் செய்வித்தனர். இதன் பயனுக பர்மிய பெளத்த சமயப் பிரிவுகள் பலவற் றைத் தம் மசேதி ஒற்றுமைப்படுத்தி வைத்தான்.

பன்னிரண்டாம் அத்தியாயம்
சிங்கள இராச்சியத்தின் வீழ்ச்சி
1. இரண்டாவது பராக்கிரமபாகுவும் சந்திரபானுவின் படையெடுப்பும்
இராஜரட்டையில் மாகன் இவ்வாறு ஆட்சி நடத்த ஏனைய பகுதிகளிலுள்ள சிங்கள அதிகாரிகள் தனித்தனி தமது எல்லையுள் அதிகாரஞ்செலுத்தி வந்தார்கள். தமிழர் தம்மை எதிர்த்துக் கொள்ளாதவாறு மலைக் கோட்டைகளில் வசித்தும் வந்தனர். இவ்வாறு தம்பதேனியாக் கோட்டையில் இருந்துவந்த மூன்ருவது விஜயபாகு (1232-1234) என்னும் சிங்கள அதிகாரி, மாயரட்டையிலிருந்து தமிழரைக் கலைத்துவிட்டு பிரதான சிங்கள அரசனனன்.
இவனது மகனே இரண்டாவது பராக்கிரமபாகு (1236- 1271). இவன் முப்பத்தைந்து வருடம் ஆட்சி நடத்திஞன். இவன் கல்வியிற் சிறந்து விளங்கினபடி யால் சனங்களிவனை எல்லாமறிந்த பண்டிதன் " என அழைத்தனர். குசஜாதகத்தை இவன் கவி சிலுமின என்ற காவிய ரூபமாகச் செய்தான்.
இலங்கையில் தமிழராட்சியை நீக்குவதற்காக, அக் காலத்துப் பல சிங்கள அரசர்கள் முயன்றதைப்போலவே, இவனும் விரும்பி, தமிழரோடு சில காலமாகச் சண்டை நடத்தினன். யாழ்ப்பாண ராச்சியத்தைக் கைப் பற்ற இவனல் முடியாமற் போனபோதிலும், அனுராத புரியையும், பொலன்னறுவையையும் வெற்றிபெற்ருன், அதன் பின்னர் தம்பதேனியாவைக் கைவிட்டு விட்டு பொலன்னறுவையை இராசதானியாகக் கொண்டான், அங்கு சில காலமாக வாழ்ந்து வந்தான்.
45

Page 86

இரண்டாவது பராக்கிரமபாகு 47
இரண்டாவது பராக்கிரமபாகு பெளத்த சமயத்தில் மிகுந்த பற்றுடையவன். த மி ழ ர் க ள் ஆங்காங்கு சிதைத்த பெளத்த விகாரைகளையும் கட்டிடங்களையும் இவன் புதுப்பித்தான். அநேக பெளத்த கட்டிடங்களைத் தமிழர்கள் அழித்துவிட்டபடியால், இவன் இவ்வகையில் அதிக வேலை செய்யவேண்டியிருந்தது. மாகன் பெளத்த பிக்குகளைத் துன்புறுத்திய காலத்தில், பலர் இலங்கையை விட்டுத் தென்னிந்தியாவுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களை பராக்கிரமபாகு மறுபடியும் திரும்பி வரச் சொல்லியழைத்தது மன்றி, சங்கத்தில் முறை கேடான வாழ்க்கை நடத்தியவர்களை அதிலிருந்து கலைத்தும் விட்டான்.
இரண்டாவது பராக்கிரமபாகு தனது நாட்டின் நன் மையைக் கருதிப் பலபட முயன்றபோதிலும், அவன் ஆட்சிக் காலத்தில் அன்னியர் படையெடுப்பினுல் குழப்ப முண்டாயிற்று. பாண்டிய மன்னர் இரு முறை இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கை யரசர்களிடம் திறைபெற்றுச் சென்றனர் எனக் கூறப்படுகிறது.
மலாய தீபகற்பத்திலே பாண்டன் குடாக்கடலுக் கருகாமையில் தாம்ர லிங்க மென்ருெரு சமஸ்தான முண்டு. இதன் அரசனுன சந்திரபானு என்பவன், இரண்டாவது பராக்கிரமபாகு காலத்தில் இலங்கை மீது படையெடுத்து வந்தான். சந்திர பானு பெளத்த சமயத் தவன். அதிசயமான அற்புதங்களைச் செய்யும் சக்தி வாய்ந்த ஒரு புத்த விக்கிரகம் இலங்கையிலிருக்கிற தெனக் கேள்விப்பட்டு, அதை அபகரிப்பதற்காக வந் தான். சிங்களர் அதனைக் கொடுக்க மாட்டார்களென அறிந்துகொண்ட அம்மன்னன் போர் தொடுத்தான். பராக்கிரமபாகு இவனது சேனையை வெற்றிகரமாக மேற்செல்லாதவாறு தடுக்கவே, சந்திரபானுவின் சே%ன பின்வாங்கித் தென்னிந்தியாவுக்குச் சென்றது. அங்கே பெரிய சேனையைத் திரட்டிக்கொண்டு மறுபடியும் ஒரு முறை இலங்கை மீது சந்திர பானு படையெடுத்தான். இம்முறை சந்திரபானு புத்தரின் தந்தத துவையும்,

Page 87
யாப்பஹவோ
மலைக்கோட்டை
யாப்பஹ"வா
 

Lurr6öoT Lq-u urif 49
பிச்சைப் பாத்திரத்தையும் கேட்டான். சிங்களர் கொ டுக்க மறுக்கவே, யாப்பஹ"வா வரை சந்திரபானு சேனை யைச் செலுத்திச் சென்ருன். இவ்விடத்தில் சிங்களச் சேனை எதிர்த்து அவனைத் தோர் கடித்தது.
11. பாண்டியர்
இரண்டாவது பராக்கிரமபாகு இறந்தபின்னர், நான்காவது விஜயபாகு அரசனஞன். இவனை இவன் தளபதி கொன்றுவிட்டான். அதன் பின்னர், இவனது தம்பியான முதலாம் புவனேகபாகு (1273-1284) அர சாட்சி செய்தான். இவன் தம்பதேனியாவை ராஜதானி யாக்கி அங்கிருந்து அரசாண்டான். பின்னர், தமிழர் படையெடுப்பைத் தடுப்பதற்கு யாப்பாஹ"வாவே சிறந்த இடமெனக்கருதி அங்கு சென்றன்.
இக்காலத்தில் பாண்டியர் சேனை இலங்கை மீது படை யெடுத்து வந்தது. புவனேகபாகு இவர்களுடைய முதற் படையெடுப்பைத் தடுத்தபோதிலும், இரண்டாவது படை யெடுப்பில் பாண்டிய மன்னனுன குலசேகரனல் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய சேனைத் தலைவனும் குலசேகரனின் மந்திரியுமாகிய ஆரி யச் சக்கரவர்த்தி யாப்பஹ"வாவைக் கைப்பற்றினன். அன்றியும், புத்த தந்ததாதுவையும் எடுத்துப் பாண்டிய நாட்டுக்குக் கொண்டுசென்றன்.
இதன் பின்னர், ஏறக்குறைய இருபது வருடமாக பாண்டியர் இலங்கையில் அரசு நடத்தினர். பாண்டிய ராட்சியில் இலங்கையில் இந்து சமயம் பரவி பெளத்த சமயத்தையும் பாதித்தது. பொலன்னறுவையிலுள்ள முதலாவது சிவாலயம் இக்காலத்திற்ருன் கட்டப்பட்ட தெனலாம். இக்கோவிலின் அமைப்பு, பதின்மூன்ரும் நூற்றண்டுப் பாண்டிய சிற்பமுறையையே அனுசரித் திருக்கிறது.
அடுத்தாப்போல், இலங்கையை அரசாண்ட மூன்ரு வது பராக்கிரமபாகு (1302-1310) பாண்டிய ஃணயின் கீழ் ஆட்சி நடத்தினன். பாண்டியரது துணையிருந்த

Page 88
qirmao urteto sorte uno ofi) 1919 IĜIsmrts & No 1991ço de urie)
 

புவனேகபாகுவும் அளகக்கோளுராவும் I 5
படியாற்ருன் இவன் பொலன்னறுவையை இராசதானி யாக்கினன். குலசேகர பாண்டியன் இவனிடம் சென்று, நட்புரிமை பாராட்டி, புத்த தந்ததாதுவைப் பெற்றன்.
இக்காலத்தில் தென்னிந்தியாவில் பாண்டியர் ஆதிக் கம் பெருகியிருந்ததாலேயே சிங்களர் பாண்டியரை எதிர்க்க முடியாமலிருந்தது. பதின் மூன்ரும் நூற்ருண் டின் முற்பகுதியில் சோழராதிக்கம் குன்றவே, பாண்டி யர் வலிமைபெற்றுச் சோழ மண்டலத்தைக்கூட ஆண்டு வந்தார்கள். சோழர் ஆதிக்கம் நீடித்ததுபோலப் பாண் டியராதிக்கம் அவ்வளவு காலம் நீடிக்கவில்லை. குல சேகரபாண்டியன் இறந்ததும், அவன் மைந்தரிருவர் பிணக்குற்றனர். இக்காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தம்மானைக் குட்படுத்தியிருந்த முஸ்லிம்கள், இத்தருணத்தில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். இவ்வாறு பாண்டியர் செல்வாக்குக் குறைந்த காரணத் திணுற்ருன், அவர்களது துணையுடன் அரசாண்டு வந்த மூன்ரு வது பராக்கிரமபாகு விடமிருந்து, இரண்டாவது புவனேகபாகு (1210-1225) அரசைக் கைப்பற்றி இலங் கைக்கு அரசனனுன்
II. நான்காம் புவனேகபாகுவும் அளகக்கோனுராவும்
இரண்டாவது புவனேகபாகுவும் (1310-1325), அவனுக்கு அடுத்தாப்போல் அரசாண்ட மன்னனும் குரு ணுக்கல் என்ற மலைக் கோட்டையிலிருந்து அரசாண்டார் கள். உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பயந்தோ அன்னியர் படையெழுச்சிக்கு அஞ்சியோ இவ்விரு அரசர்களும் இம்மலைக் கோட்டையையே தமது அரணுகக் கொண் டிருந்தனரென்பது புலனுகின்றது.
1346-ல் நாலாவது புவனேகபாகு அரசனைன். இவன் கம்பளையில் இராசதானியமைத்து ஆட்சி நடத்தி ஞன். இலங்காதிலக விகாரையும், கடலதெனியா விகா ரையும் இவனுற் கட்டப்பெற்ற பெரிய விகாரைகள்.

Page 89
1109 uoso spao (5 usorgloosố 1191,9 RĒĢ ĢĒrīgi o ț¢ © ollegra quo 江〜 く、!〜〜〜-o-~~~~,~~~繆~~~~.~~~~---- - - - ----溪
 

புவனேகபாகுவும் அளகக்கோஞராவும் 153
இவை கம்பளைக்குச் சமீபத்திலுள்ளன. இக்காலத்தில் இந்து சமயம் எவ்வளவு தூரம் பெளத்த சமயத்தைப் பாதித்ததென்பதற்கு இவ்விரு விகாரைகளுமே சான்ரு கும். இலங்காதிலக விகாரையின் உற்புறம் பொலன் னறுவைக் கட்டிடங்களைப்போலவே அமைந்திருக்கிறது. உள்ளே ஒரு புத்த விக்கிரகம் தாபிக்கப்பட்டிருக்கிறது இலங்காதிலக விகாரையின் உட்சுவருக்கும் வெளிச்சுவ ருக்குமிடையேயுள்ள வாசலில் இந்து தெய்வங்களின் விக்கிரகங்கள் பல இருக்கின்றன. கடலதெனிய விகாரை இந்து தேவாலயங்களைப்போல் முற்றிலும் கல்லினல் அமைக்கப்பட்டிருக்கிறது. சிற்பமுறை விஜயநகர மன் னர் காலத்து இந்து ஆலயங்களை ஒத்ததாயிருக்கிறது.
தமிழர் குடியிருந்த யாழ்ப்பாணத் தீபகற்பத்தை இரண்டாவது பராக்கிரமபாகு கைப்பற்ற முடியா மற் போய்விட்டதென மேலே கூறினுேம். கம்பளையில் நாலா வது புவனேகபாகுவும் அவன் பின்வந்தோரும் ஆட்சி நடத்திய காலத்தில், யாழ்ப்பாண அரசர் தமது அதிகா ரத்தை தெற்கேயும் செ லு த் தி சிங்கள அரசரிடம் திறையும் பெற்று வந்தார்கள்.
மூன்ரு வது விக்கிரமபாகு (1360-1374) வின் சேனைத் தலைவனுன அளகக்கோனுரா என்பவன், இவ்வாறு தமிழரின் செல்வாக்கு பெருகுவதைத் தடைசெய்ய உறுதிகொண்டான். கோட்டையிலும், பாணந்துறைக்கு கிழக்கே சில மைல்களுக்கப்பாலுள்ள ரயிகம என்னு மிடத்திலும் கோட்டைகளைக் கட்டுவித்தான். சேனை யைத் திரட்டிவந்தான். தமிழரை எதிர்க்கக்கூடிய வலிமை பெற்றதும் யாழ்ப்பாண மன்னன் மீது தனக் குள்ள அவமதிப்பைக் காட்டுவதற்காக அவன் அனுப்பிய திறை சேர்க்கும் உத்தியோகத் தரைத் தூக்கிலிட்டான்.
இதைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண மன்னன் தன்ன இவ்வாறு அவமதித்தமை போருக்கறிகுறியென எண்ணி ஒரு கடற்படையையும் ஒரு தரைப்படையையும் அனுப் பினுன். இவ்வாறு சென்ற தமிழ்ப் ப.ை கஃா அளகக்

Page 90
2)
கோட்டை
 
 

ஆருவது பராக்கிரமபாகு I 55。
கோஞரன் தோல்வியுறச் செய்து, வடக்கே சிலாபம் வரையிருந்த தமிழரின் பாடிவீடுகளைக் கைப்பற்றினன்.
V. ஆறவது பராக்கிரமபாகு (1412-1374)
இக்காலத்தில் அரசாண்ட சி ங் க ள மன்னருட் டலைசிறந்தோன் ஆருவது பராக்கிரமபாகு. இ வ ன் அரசேற்ற காலத்தில் அவ்வளவு வலிமையுள்ளவனுயிராத தால், சதுப்பு நிலங்களால் அரண் செய்யப்பட்டிருந்த கோட்டையையே ராசதானியாக க் கொண்டான். ஆனல், இவன் இறக்கும்பொழுது மாறுபட்ட அரசரை யெல்லாம் வென்று இலங்கைக்குத் தனி மன்னணுயிருந்தே யிறந்தான்.
மூன்று பகுதிகள் இவனது ஆணையை ஏற்கவில்லை, ஒன்று மலையநாடு; கம்பளை சிங்களரின் ராசதானியா யிருந்த காலத்தில் இப்பகுதி பிரசித்திபெற்றது. இதில் அரசாண்ட ஜோதிய சிதன என்ற அரசன் ஆருவது பராக் கிரமபாகுவுக்குத் திறை கொடுக்க மறுத்துக் குழப்பஞ் செய்தான். உடனே பராக்கிரமபாகு தண்டெடுத்துச் சென்று அவனை வெற்றி கொண்டான்.
மற்றநாடு வன்னி. இது யாழ்ப்பாண ராச்சியத் துக்கும் சிங்கள ராச்சியத்துக்குமிடையேயுள்ள பிர தேசம். இங்குள்ள வன்னியர் என்ற அதிகாரிகள் சிங்கள அரசரது ஆணையையோ யாழ்ப்பாண அ ர ச ர் களின் ஆணையையோ ஏற்றுக்கொண்டு வந்தனர். ஆரு வது பராக்கிரமபாகு அரசுக்கு வந்ததும், வன்னியர் அவனது ஆணைக்கு அடங்க மறுத்தனர். பராக்கிரமபாகு அவர்களுடன் போர்செய்து அவர்களையடக்கினன்.
இருநூருண்டாக தனியரசாய் விளங்கி வந்த யாழ்ப் பாண ராச்சியத்தை வெல்ல முற்பட்டதே பராக்கிரம பாகுவின் கஷ்டசாத்தியமான ஒர் அலுவலாயிற்று. இவ் வேலையைச் செய்துமுடிக்குமாறு இவன் தனது மகஞ) என சபுமால் குமரய்யாவிடம் ஒப்படைத்தான். குமரய்யா 1450-ல் முதன் முதல் பிரயத்தனப்பட்டுத் தோல் வி

Page 91
56 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
யுற்ரு ன். பின்னர், இன்னுெரு முறை முயன்று வெற்றி பெற்று அவனே அதற்கு அரசனுகி ஆட்சி செய்தான். பின்னர், கோட்டையரசை அவன் ஏற்றதும், யாழ்ப் பாண ராச்சியம் மறுபடியும் தனியரசாகி, கடைசியாக ஆண்ட தமிழ் மன்னனின் மகன் சிங்காசன மேறிஞன்.
யாழ்ப்பாண ராச்சியம் இவ்வாறு வெற்றிகொள் ளப்பட்ட சில தினங்களில், கறுவா ஏற்றிச்சென்ற ஒரு சிங்களக் கப்பலை விஜயநகர ராச்சியக் குடிகள் கைப் பற்றிக்கொண்டார்கள். உடனே பராக்கிரமபாகு ஒரு படையை அனுப்பி அதிராம் பட்டினத்தைத் தாக்கினுன்.
நிசங்கமல்லன் காலத்தின் பின்னர் சிங்களர் அதி காரம் குன்றிக்கொண்டு வந்தபோதிலும், தம்பதேனியா, குருனுக்கள், கம்பளை, கோட்டை ஆகிய இடங்களில் ஆண்ட சிங்கள மன்னரின் ஆதரவால் சிங்கள இலக்கியம் பெரிதும் முற்போக்குற்றது. ஆருவது பராக்கிரமபாகு காலத்திற்ருன் தொட்கமுவா பூரீ ராகுல என்ற புகழ் பெற்ற சிங்களக் கவி திகழ்ந்தார். இவர் ஒரு பெளத்த பிக்கு. ஆறு பாஷைகளில் தேர்ச்சியடைந்திருந்தார். இவரியற்றிய நூல்களுட் சிறந்தது சேனகஜாதகத்தைப் பாட்டாகச் செய்த காவியசேகர மென்பதே. வேறு பல சந்தேச காவியங்களையும் இவரியற்றினர்.
இலங்கையின் பெரிய அரசருள் ஆருவது பராக்கிரம பாகுவும் ஒருவன். சிங்கள ராதிக்கம் குன்றிய காலத் திலும், இவன் தனியரசனக இலங்கை முழுவதும் தனது ஆணையைச் செலுத்தினுன். அன்றியும், தென்னிந்தியப் பகைவரை வலிதொலேயவுஞ் செய்தான். இவனுக்குப் பின் வந்த அரசர்கள் தென்னிந்தியாவிலிருந்து எவ்வித தொல்லையும் இன்றி அரசாட்சி செய்தனர். ஆனல், சிங்களராதிக்கம் நாளுக்கு நாள் பலமிழப்பதைத் தடுக்க அ வ ர் க ள |ா ல் முடியவில்லை. ஏனெனில், 1505-ல் ஐரோப்பாவிலிருந்து போர்த்துக்கீசர் என்ற புதிய சாதி யார் இலங்கைக்கு வந்து கரையோரப் பகுதிகளையெல் லாம் சிறிது சிறிதாகக் கைப்பற்றத் தலைப்பட்டனர்.

பதின்மூன்றம் அத்தியாயம்
இரு பெரும் யாத்திரிகர்கள்
1. சிலுவை யுத்தங்கள்
இலங்கைக்கு யாத்திரை செய்து, அவ்வியாத்திரை யைப் பற்றிச் சில குறிப்புக்களையும் எழுதிவைத்த பாஹி யான் என்ற யாத்திரிகரைப்பற்றி முன்னே கூறியிருக் கிருேம். பதின்மூன்ரும், பதினன்காம் நூற்றண்டுகளில் இரு சிறந்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு வந்தார்கள். இவர்களெழுதிய குறிப்புக்களைக்கொண்டு, அக்காலத்து உலகத்து நிலைமையை அறியக்கூடியதாயிருக்கிறது. இந்த யாத்திரிகர்களில் ஒருவர் வெனிஸ் நகரத்தைச்சேர்ந்த மார்க்கோ போலோ; மற்றவர் டங்கியர் என்ற நகரத்து இபின் பட்டுட்டா என்னும் இஸ்லாமியர்.
முகம்மது நபியைப் பின்பற்றிய இஸ்லாமியர் பார ஸ்ரீகம் தொட்டு எகிப்துவரையுள்ள நாடுகளை எவ்வாறு வெற்றி பெற்றனரென்றும், அவர்கள் பின்னர், ஸ்பானி யாவரை எங்கனம் தமது ஆட்சியைப் பெருக்கி, ஐரோப் பாவை கிழக்குத் தேசங்களிலிருந்து துண்டித்துவிட்டார் கள் என்பதைப்பற்றியும் முன்னெரு அத்தியாயத்தில் கூறினுேம். பதினேராம் நூற்ருண்டில் இஸ்லாம் மார்க் கத்தைச் சேர்ந்த துருக்கியரென்ருெரு சாதியா ரை, தார்த் தனியர் எ ன் ற சாதியார் துருக்கித்தானத்திலிருந்து கலைத்து விட்டனர். இவர்கள் மேற்கு நோக்கிச் சென்று பலஸ்தீனத்தில் கு டி யே நி ன ர். கிறிஸ்தவர்களால் புண்ணிய ஷேத்திரமாகக் கருதப்பட்ட பல இடங்கள் இப் பிரதேசத்திலிருந்தன. இங்கு யாத்திரைக்கு வந்த கிறிஸ்த வருக்கு முன் ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் கொடுத்து வந்த பல வசதிகளைத் துருக்கியர் செய்ய மறுத்தார்கள்.
57

Page 92
8 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
உரோம இராச்சியம் விழுந்த பின், ஐரோப்பாவில் குடியேறிய புதிய சாதியாரிடையே சிறிஸ்து சமயம் பரவுவதாயிற்று. இச்சாதியாரை யாண்ட சக்கரவர்த்தி
*சிலுவை யுத்தத்தில் கிறிஸ்தவருக்கும் துருக்கியருக்கு மிடையில் நடைபெறும் ஒரு சண்டை
களுட் டலைசிறந்தவனுன சாளிமேன் (768-814) என்பவன் ஐரோப்பாவின் பெரும் பகுதியை ஆண்டான். கிறிஸ்துவ திருச்சபையின் தலைவரான பாப்பாண்டவர் இவனுக்கு
* பன்னிரண்டாம் நூற்ருண்டில் ஒரு சன்னலில் தீட்டப்பட்ட படம். இப்படம் சிலுவை யுத்தம் நடைபெற்ற காலத்திலேயே வரையப்பட்ட தாதலின் ஆராய்ச்சியாளர்க்குப் பயனுடையது. அக்காலத்து யுத்தக் கருவிகளே இப்படத்திற் காணலாம்.
 

சிலுவை யுத்தங்கள் 59
மகுடஞ்சூட்டு வைபவத்தைச் செய்தார். உரோம ஏகாதி பத்தியத்தை நிர்வகித்த முறையில், கிறிஸ்துவ திருச்சபை யும் பாப்பாண்டவரைத் தலைவராகக் கொண்டு நிறுவப் பட்டதால், ஆசியாவில் பெளத்த சமயம் பரவியதைவிட அதிகமாக ஐரோப்பியாவில் கிறிஸ்து சமயம் பரவலா யிற்று. கிறிஸ்தவ யாத் தி ரிகர்கள் பலஸ்தீனத்தில் துருக்கியரால் துன்புறுத்தப்பட்ட காலத்தில், கிறிஸ்துவ திருச்சபைக்கு ஏர்பன் பாப்பாண்டவர் தலைவராயிருந்து வந்தார். ஐரோப்பிய அ ர ச ர் க ள் பலஸ்தீனத்தைத் தி ரு ம் ப வு ம் துருக்கியரிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுமாறு அவர் உற்சாகமூட்டினர். துருக்கி யருக்கெதிராகப் பல ஐரோப்பிய வேந்தர் அவ்வப் போது போருக்கெழுந்தனர். இவ்வாறு நிகழ்ந்த யுத் தங்களே சிலுவை யுத்தமென வழங்கப்படுகின்றன.
சிலுவை யுத்தங்கள் சில காலமாக நடைபெற்றன. ஆனல், கிறிஸ்தவர்களுடைய நோக்கம் நிறைவேற வில்லை. முதலாவது சிலுவை யுத்தத்தில் அவர்கள் பலஸ்தீனத்தைக் கைப்பற்றினர்கள். ஆனல், சுல்தான் சலாஹ"த்தீனின் தலைமையில் முஸ்லிம்கள் போர்செய்து அதை மீண்டும் திரும்பப் பிடித்துவிட்டனர். சிலுவை யுத்தத்தின் விளைவாக ஐரோப்பியர் மறுபடியும் கீழைத் தேசங்களோடு நெருங்கிய தொடர்ப்பைப் பெற்ருர்கள். மேலைத் தேசங்கட்கும் கீழைத் தேசங்கட்குமிடையில் வியாபாரம் செழிப்புற்றது.
பலஸ்தீனத்துக்குப் போகும் வழியில் சிலுவை யுத்த வீரர் கொன் ஸ்தாந்தினுேப்பிளைக் கைப்பற்றிக்கொண்ட தால், கீழைத்தேச வியாபாரம், வெனீஸ், ஜேனேவா ஆகிய தேசங்களின் வர்த்தகர்கள் கையில் சிக்கியது. இவர்களிடம் அநேக வர்த்தகக் கப்பல்களிருந்தன. வெனிஸ், கடலின் மத்தியில் கட்டப்பட்ட நீர்சூழ்ந்த ஓர் அழகிய நகரம். இந்நகரத்து விதிகளெல்லாம் வெட்டுக் கால்வாய்களாகவேயிருக்கும். அ தி ல் சி றி ய சிறிய அழகிய வள்ளங்களில் சனங்கள் பிரயாணஞ் செய்வர். இந்நகரத்தில் 1254-ல் மார்க்கோ போலோ என்ற

Page 93
60 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பெரிய யாத்திரிகர் பிறந்தார். இவர் கீழைத்தேசங் கட்கு யாத்திரை செய்து அந்நாடுகளைப்பற்றி எழுதிய குறிப்புகளே அந்நாடுகளைப்பற்றி அறியவேண்டுமென்ற மனக்கிளர்ச்சியை ஐரோப்பியரிடை உண்டாக்கின.
1. மார்க்கோ போலோ
மார்க்கோ போலோ பிறந்த சில காலத்தில் அவனது" தந்தையான நிக்கோலோ போலோவும் மாமனும் வியாபாரத்தின் பொருட்டு கீழைத்தேசங்கட்குப் பிர யாணமாயினர். கடைசியாக அவர்கள் சீனுவுக்குச் சென்று, சீனச் சக்கரவர்த்தி, தனது குடி க ளை க் கிறிஸ்து சமயத்துக்கு மாற்றி, கிறிஸ்துவ சமயத்தை அவர்கட்குப் போதிப்பதற்காக ஒரு நூறு பாதிரிகளை அனுப்புமாறு பாப்பாண்டவருக்கு விண்ணப்பஞ்செய்து நிருபங்களை அவர்கள் மூலம் அனுப்பினன். ow.
இவ்வாறு தம் தாய்நாடு திரும்பிய இவ்விரு யாத்திரி கர்களும் 1271-ல் மறுபடியும் சீனுவுக்குப் பிரயாண மானுர்கள். அப்பொழுது பதினேழு வயதாயிருந்த மார்க்கோவும் அவர்களுடன் சென்ருன், அயாஸ் என்ற இடம்வரை கடல் மார்க்கமாகச் சென்றனர். அங்கிருந்து பாரசீகக் குடாக்கடலிலுள்ள ஒர் மஸ்வரை தரை மார்க்க மாகச் சென் (mர்கள். ஒர்மஸிலிருந்து, பாரசீகத்துக் கூடாகப் போய் , ஆப்கானிஸ்தானத்தைக் கடந்து சீனத் துருக்கித்தானத்தை யடைந்தனர். அவ்வழியாய் சீன தேசத்துள் நுழைந்தார்கள். எல்லாமாக மூன்றரை வருடமாய்ப் பிரயான ஞ் செய்தார்கள். இக்காலத் திலோ வெனின், மூன்றரை வn 1ங்களிலேயே இவ்வளவு தூரத்தையும் கடந்துவிடலாம். ஆனல், அக்காலத்தில் பிரயாணஞ்செய்வது மி க க் கஷ்டசாத்தியமானதா யிருந்தது. நேர்மார்க்கமாகச் செல்வதற்கு யுத்தங்கள் பெருந்தடையாயிருந்தன. அன்றியும், குளிர் காலத்தில் பனி உறைவதினல் வாகனமூர்ந்து செல்வது கஷ்டமா யிருந்தது. மழையும் புயலும், பெரிய ஆறுகளும் பல கஷ்டங்களை யுண்டாக்கின.

தந்தையும் மாமனும் கொன்ஸ்தாந்தினேப்
மார்க்கோ போலோவின் பிளில் போல்லின் சக்கரவர்த்தியைச் சத்திக்கும் காட்சி முதலாம் படம், கீழேயுள்ள படம் அவர்கள் கருங்கடலுக்குச் செல்லுவதைக் காட்டும். இப்படங்கள் ஒரு பழைய பிரெஞ்சு ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப்
பட்டன.

Page 94
62 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
மார்க்கோ போலோ பதினேழு வருடமாகச் சீன அரசவையிலிருந்தான். அக்காலத்தில் அர சா ன் ட சீனச் சக்கரவர்த்தியான குப்ளாகான் என்பவன் மார்க் கோவின் மதிவன்மையையும் பலமொழிப் பயிற்சியை யும் கண்டு வியந்து, அவனை அந்நிய நாடுகளுக்குப் பல தூதுகளில் அனுப்பினன். இச்சந்தர்ப்பங்களில் மார்க்கோ தான் சென்ற சென்ற இடங்களிலுள்ள மக்களின் பழக்க வழக்கங்களை நுணுக்கமாகப் படித்து வந்தான்.
மார்க்கோ போலோ சீனுவிலிருந்து புறப்பட்டு மூன்று வ ரு ட ப் பிரயாணத்தின் பின் த ன து தாய்நாடான வெ னி ஸ் போ ய் ச் சேர்ந்தான். இ வ ன் க ட ல் மார்க்கமாகப் பிரயாணஞ்செய்தபொழுது வழியில் நமது சிறிய தீவாகிய இலங்கைக்கும் வந்து, அங்கிருந்தாரைப் பற்றிச் சில குறிப்புகளுமெழுதியிருக்கிருன்.
கீழ்நாடு வந்து இருபத்தைந்து வருடங்களின் பின் னரே மார்க்கோ தன் தாய்நாடு போய்ச் சேர்ந்தான். அத்துணையும் வராதிருந்தால் அவனது சுற்றத்தார் அவன் இறந்துபோனன் எனவே கருதியிருந்தனர். மேலும், அவன் பலவிதமாய் மாற்றமுற்றிருந்தபடியால் அவனை இன்னனெனக் கண்டுபிடிப்பதே யவர்கட்குக் கஷ்டமாயிருந்தது. இ வ ன் வெனிசுக்கு வந்திறங்கிய தும் ஜேனுேவாவுக்கும் வெனிசுக்குமிடையில் ஒரு போர் உண்டானது. இப்போரில் மார்க்கோ  ைக தி யா க ஜெனேவாவுக்கிட்டுச் செல்லப்பட்டான். சிறைச்சாலை யில் அவனுடன் சிறைத்தண்டனை அனுபவித்து ஒருவன் மார்க்கோ கூறிய யாத்திரை வரலாறுகளையும் அற்புதங் களையும் எழுதிவைத்தான். இ வ ன து முயற்சியினு லேயே இன்று நாம் மார்க்கோவைப் பற்றி இவ்வள வாவது அறியக்கூடியதாயிருக்கிறது.
. குப்ளாகான் ( 266-1294)
மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி சீனு, இந்தியா முதலிய தேசங்கள்மீதும், மேற்கே ஐரோப்பாவையும் படையெடுத்துச் சென்ற ஹஅணர் என்ற சாதியாரைப்

■影如
和的히원병원RRR1--------- 的司判司헌¿sosnowsaeuaw--毒-
uogų.57,1%?>

Page 95
64 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பற்றி முன்னரே கூறினேம். பன்னிரண்டாவது நூற் முண்டிலே ஜெங்கிஸ்கான் (1162-1227) என்ற மொங் கோலிய வீரன் ஒருவனின் தலைமையில், மொங்கோலி யரின் படையெடுப்புக்களாரம்பமாயின. இவன் படிப் படியாக கிழக்கே சீன தொட்டு மேற்கே ருஷ்யா வரை இடையிட்ட தேசங்களைக் கைப்பற்றினன். இவ்வாறேற் பட்ட மொங்கோலிய ராச்சியம், ஐரோப்பா தனது வியாபாரத்தைக் கீழைத் தேசங்களில் பரப்புவதற்குத் துணை புரிந்ததோடு சீனவுடன் தொடர்பு பெறவுஞ் செய் தது. இதன் பயணுக கீழைத் தேசங்களிலிருந்து ஐரோபா பல சா மான் களைப் பெற்ற தோடு வெடிமருந்து உபயோகிக்கும் முறையையும், திசையறி கருவியின் உப யோகத்தையும், அச்சு வித்தையையும் சீனவிடமிருந்து கற்றது.
இங்கு கூறப்பட்ட ஜெங்கிஸ் கானுடைய பேரனே முன்னே நாம் சொல்லிய குப்ளாகான். இவனது அவைக் களத்திற்ருன் மார்க்கோ போலோ பதினேழு வருடமிருந் தான். குப்ளாகான் தனது பேரன் வென்ற நாடுகளெல் லாவற்றையும் ஆண்டான்.
குப்ளாகான் நடுத்தர உயர முடையவனென்றும், வெண்மை நிறமுடையவனென்றும், நன்கு அமைந்த நாசியும், அழகான கரிய விழிகளும் உடையவனென்றும் மார்க்கோ போலோ கூறியிருக்கிருர், அவன் தானே நிறுவிய பீக்கின் என்ற நகரில் இருந்தான். இந்நகர் செவ்வனே அமைக்கப்பட்டது. வீதிகள் நேராகவும் அகலமாகவுமிருந்தன. ஆங்காங்கு மாளிகைகளும் வீடு களும் காணப்பட்டன.
மத்திய கால அரசரைப்போல குப்ளாகானும் பெரிய விருந்துகள் கொண்டாடினன். பெரிய நிலப்பரப்புக் கரசனயிருந்தபடியால் இவ்விருந்துக் கொண்டாட்டங் களில் நாற்பதினயிரத்துக்கு மேற்பட்ட சனங்கள் கலந்துகொண்டனர். எல்லாருக்கும் உயர்வான இடத் தில் அரசனின் மேசையிருக்கும். அவனது கால், மக்களின்

குப்ளாகான் 65
தலைமேல் ஒரு மட்டத்திலிருக்கக் கூடியதாக, இடங் கள் அமைக்கப்பட்டிருக்கும். அரசனது பிள்ளைகளுக் குக் கீழே நாட்டுக் குறுநில மன்னர்களிருப்பார்கள். ஏனையோர் கம்பளங்களிலிருந்து உணவருந்துவார்கள்.
தமது ராச்சியத்திலுள்ள பல்வேறு மாகாணங்க ளோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதே மத்தியகாலத்தில் அரசாண்ட மன்னருக்குப் பெரிய தொரு பிரச்சினையாயிருந்தது. எனவே, பெரியதொரு இராச்சியத்தைப் பரிபாலித்து வந்த குப்ளாகானுக்கு இது மிகவும் கஷ்டசாத்தியமாயிற்று. இருந்தும் அவன் ஒரு வகையில் ஒரு தபால் போக்குவரத்து முறையை ஏற்படுத்தினன். மூன்று மைல்களுக்கொரு கிராமமா கப் பல கிராமங்களை நிறுவி, அங்கே நாற்பது வீடுகள் வரையில் குடியிருப்பதற்கு அமைத்தான். இவ்வீடுகளில் அரசனின் ஒலை நிருபம் முதலியவற்றைக்கொண்டு செல் லும் ஒற்றர்கள் குடியிருப்பர். ஒரு கிராமத்திலிருந்து ஒற்றன் அரச நிருபங்களைக் கொண்டு ஒடிச் சென்று மூன்று மைலுக்கப்பாலுள்ள மற்றக் கிராமத்தில் உள்ள ஒற்ற னிடம் கொடுப்பான். அவனும் அவ்வாறே ஒடிச்சென்று அடுத்த கிராமத்திலுள்ளவனிடம் கொடுப்பான். இவ் வாறு அந்நிருபங்கள் ஈற்றில் சேரவேண்டிய இடத்தைச் சென்றடையும். இந்த ஒற்றர்கள் ஒலிக்கும் மணிகள் பூட்டப்பட்ட பெரிய வளையங்களை அணிந்திருப்பார்கள். அதனல் இவரது வரவை வெகுதூரத்திலிருந்தே அறிந்து கொள்ளக் கூடியதா யிருக்கும். இத்தகைய த11ால் போக்குவரத்து முறையினல், குப்ளாகான் தனது 11 ச் சியத்தின் பல ப்ாகங்களிலும் நடைபெறும் காரியங்க%ள அறிந்து, ஆங்காங்குள்ள நிர்வாக அதிகாரிகள் நிலை வேற்றவேண்டிய கட்டளைகளைப் பிறப்பித்தான்.
குப்ளாகான் சமயங்களில் சிரத்தையுள்ள வனெ பல்ப தும் புலணுகின்றது. கிறிஸ்துவ பாதிரிமாரைச் சிறுவுக் கணுப்புமாறு பாப்பாண்டவருக்கு இவன் விண்மணப் மனுப்பினுன் என முன்கூறினுேம். பெளத்தகாது பெற்று வருமாறு இவன் இலங்கைக்கு தூதர்களே அலுப்பிஞ

Page 96
Η 6 6. நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
னென்றும், அவர்கள் கொணர்ந்த தாதுகளை மிக விந யத்துடன் அரசனும் குடிகளும் ஏற்றுக்கொண்டன்ரென வும் மார்க்கோ போலோவின் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.
V. இபின் பட்டுட்டா
இபின் பட்டுட்டா என்பவர் மொரக்கோவிலுள்ள தாங்கியர் என்னும் இடத்தில் 1304-ல் பிறந்தார். மார்க் கோ போலோவைப்போல் இவரும் வர்த்தகர் குலத்தைச் சேர்ந்தவரல்ல. இவருடைய முன்னேர் நீதிபதிகளா யிருந்தார்கள். இளமையில் இவர் கல்வி கேள்விகளிற் சிறந்து, இஸ்லாமிய சமயசாத்திரங்களில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
இருபத்தோராவது வயதில் இபின் பட்டூட்டா தங்கி யரிலிருந்து மக்கத்துக்கு யாத்திரையாய்ப் புறப்பட்டார். அக்காலத்தில் பிரயாணஞ் செய்வதற்கு நீண்ட கால மெடுத்ததுமல்லாமல் வழியில் பல கஷ்டங்களையு மனுப விக்க வேண்டியிருந்தது. ஆனல், இஸ்லாமிய தேசங்களி லிருந்து ஆண்டுதோறும் ஏராளமான யாத்திரிகர்கள் மக்கத்துக்கு யாத்திரை சென்றபடியால், அதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யாத்திரிகர்கள் ஒரு கூட்டமாகவே சென்ருர்கள். போகப் போக மேலும் அநேக யாத்திரிகர்கள் இவர்களோடு சேரவே கூட்டம் பெருகிவிடும். அபாயம் நிறைந்த தேசங்களுக் கூடாகச் செல்லுங்காலத்தில் போர்வீரர் அவர்களுக்குத் துணையாகச் சென்ருர்கள். பாதைகளில் ஆங்காங்கு யாத்திரீகர் தங்குதற்கு விடுதிகளமைக்கப்பட்டிருந்தன. இவ்விடுதிகளில் அவர்கட்கு இலவசமாக உணவு முதலி யன வழங்கப்பட்டன. இதற்குரிய செலவுகளைத் தன வந்தார்கள் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் தமது சமயத்தைச் சேர்ந்தவர்களிடையே சாதி வித்தியாசம் பாராட்டுவது கிடையாது. எல்லோரும் சகோதரராகவே கருதப்படுவார்கள் ஆதலால், யாத்திரிகரெல்லாம் ஒரே விதமாகவே உபசரிக்கப்பட்டனர். மேலும், அக்காலத்

இபின் பட்டுட்டா 167
திலிருந்த பிரதானமான வியாபாரப் பாதைகளெல்லாம் முஸ்லிம்கள் கையிலே இருந்தபடியால் முஸ்லிம் யாத்திரி கர்கள் ஏனைய சமயத்தோரின் துன்புறுத்தல்களுக்காளாக வில்லை.
இபின் பட்டுட்டாவும் இத்தகைய ஒரு வியாபாரக் கூட்டத்தைச் சேர்ந்து எகிப்து, சீரியா முதலிய தேசங் களுக்கூடாக மக்கத்துக்குச் சென்ருர். சென்றவர் பின்னர் தமது தாய்நாடு திரும்பவில்லை. அப்படியே சென்று, முஸ்லிம்கள் வசிக்கும் தேசங்களான ஆசியா மைனர் (சின்ன ஆசியா), தெற்கு ருஷ்யா, கொரோசன், இந்தியா, மாலைத் தீவுகள், மேற்கு ஆபிரிக்கா, ஸ்பானியா முதலிய நாடுகளுக்கு விசயஞ்செய்தார். பின்னர், சீன, இலங்கை முதலிய முஸ்லிம்களுக்குச் சொந்தமில்லாத நாடுகளுக்குச் சென்ருர். இவர் மொத்தம் எழுபத்தையாயிரம் மைல் யாத்திரை செய்திருக்கிரு ரென்றும், பத்தொன்பதாம் நூற்றண்டுவரை இவரைப்போல இவ்வளவு தூரம் யாத்திரை செய்தவர்களில்லை யெனவும் கருதப்படுகிறது.
சமணலகந்த எனச் சிங்களத்தில் வளங்கப்படும் சமணுெளிபாத மலையைத் தரிசிப்பதற்காக இபின் பட்டுட்டா இலங்கைக்கு வந்தார். இம்மலைச் சிகரத்தி லுள்ள பாதச் சுவடு ஆதாமுடையதென முஸ்லிம்கள் கருதுவதால், அம்மலை அவர்களாலும் திவ்வியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பின் பட் டூட்டா யாழ்ப்பாண இராச்சியத்தில் முதல் வந்திரங்கினரென்றும், அப்பொழுது புத்தளமே யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகராயிருந்ததென்றும், யாழ்ப்பாண அரசனுக்குப் பார ஸிக பாஷை தெரிந்திருந்த தெனவும், இபின் பட்டூட்டா அவருடன் அப்பாஷையில் சம்பாஷித்ததாகவும், தனது நோக்கத்தை அரசனுக்கு, அறிவித்ததும், அவன் அவருக்கு ஒரு பல்லக்கையும் சிவிகைகாவுவோரையும் கொடுத்து, துணையாகச் சிலரை யும் சிவணுெளிபாதத்துக்கு அனுப்பினுனெனவும் இபின் பட்டுட்டா கூறியிருக்கிருர்,

Page 97
68 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இபின் பட்டுட்டாவின் குறிப்புகளின் அக்காலத்தில் இத்தீவின் மேற்குப் பகுதிகளில் கறுவா பயிரிடப்பட்டது. இரத்தினங்கள் ஏராளமாக இங்கே கிடைத்தன. சிவ ணுெளிபாதத்திற்குச் செல்ல இரண்டு பாதைகளிருந்தன வென்றும், ஒன்று ஒரு சிறிய படிக்கட்டை உடையதா யிருந்ததென்றும், அப்படிக்கட்டில் ஏறுவோர் கெட்டி யாகப் பிடித்துக்கொள்ளுவதற்காக இரும்புச் சங்கிலி கள் மாட்டப்பட்டிருந்தனவென்றும் அவர் கூறுகிருர்.
தேவிநுவரை, காலி, கொழும்பு ஆகிய இடங்களுக்கும் அவர் சென்றிருக்கிருர், தேவிநுவரையில் தங்க விக்கிரகங் கொண்ட ஒரு பெரிய இந்து தேவாலயமிருந்ததெனவும் அக்காலத்தில் கொழும்பில் கடல் கொண்ட ஜலாஸ்தி என்னும் ஒரு முஸ்லிம் ஆட்சி நடத்தினுனெனவும், அவனிடத்து காவலராக ஐந்நூறு அபிஸினியர்களிருந் தார்களென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிருர்.
V. முகம்மது இபின் துக்லக் (1325-1351) அராபியாவின் மேற்கேயும் கிழக்கேயும் தமது எல்லையை விஸ்தரித்த ஆதி முஸ்லிம் இராசாக்கள் இந்தியாவில் சிந்து மாகாணமொன்றையே வெற்றிகொண்டனர். பன்னிரண்டாவது நூற்றண்டிலேயே வட இந்தியாவை முஸ்லிம்கள் கைப்பற்றத் தொடங்கினர். நாகரிகமுற்ற அராபியர் இவ்வேலையிலீடுபடவில்லை. தாங்கள் சுதந் திரமாக ஆட்சி நடத்தவும் போர்செய்து கூடிய அளவு செல்வந் திரட்டவும் ஆசைப்பட்ட துருக்கிய சேனதிபதி களே வட இந்திய வைக் கைப்பற்றினர்கள்.
இவர்களில் ஒருவனே அலாவுதீன் (1296-1316). வட இந்தியாவில் ஆட்சிசெய்வதோடு திருப்தியுரு மல் இவன் தெற்குப் பகுதியை வெல்வதற்குத் தனது சேனதி பதியான மல்லிக் கபூரை அனுப்பினன். இவன் முதல் தக்கிணத்திற் பிரவேசித்து அங்கிருந்து தமிழ் நாடுகள் மீது படையெடுத்தான். பாண்டியராட்சிக்கு முடிவு கட்டியவனும் இவனே. இதன் பயனக இலங்கைமீது பாண்டியர் படையெடுப்பு நின்றுவிட்டது.

முகம்மது இபின் துக்லக் 69
இந்தத் துருக்கிய அரசருள் கடைசியரசன் முகம்மது இபின் துக்லக் (1825-1351) என்பவன். இவனே தக்கி ணத்தை முற்ருக அடிப்படுத்தினன். கல்வியிற்சிறந்த வனுன போதிலும் பைத்தியக்காரத்தனமாக சில திட்டங் களை நாட்டில் புகுத்திச் சனங்களை வறுமையிலாழ்த்தி ஞன். இவனது ஆட்சியைக் குடிகள் வெறுத்தலால், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் குழப்பங்க ளுண்டாகி இவனது ராச்சியம் நிலைகுலைய ஆரம் பித்தது.
முகம்மது இபின் துக்லக்கைச் சந்தித்த இபின் பட் டுட்டா பின்வருமாறு எழுதியிருக்கிருர் :- கொடையி லும், மனிதரை வதைப்பதிலும், இவனைப்போல விருப்ப முடையவர்கள் கிடையாது. இவனது வாசலில் எப் பொழுதும் இரப்போரையும் இறப்போரையும் காண லாம்; வறியார் பெருஞ் செல்வம் பெறுகிருர்கள், உயிருடன் வந்தவர் தலையிழக்கிருர் ".
சுல்தான் முகம்மதுவைப் புகழ்ந்து ஒரு கவி இருபத் தேழு சுலோகங்களைப் பாடி வந்தான் ; ஒரு சுலோகத் துக்கு ஆயிரம் வெள்ளி நாணயமாக இருபத்தேழாயிரம் வெள்ளி நாணயம் அவனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தென இபின் பட்டூட்டா இன்னுெரு இடத்தில் குறிப் பிட்டிருக்கிருர்,
இரவலர்க்கு எவ்வளவு தயாள சிந்தையுடன் கொடுப் பானே அவ்வளவுக்கு அவன் கொடுமையுமுடையவன். ஒரு முறை மசூத் என்ற தன்னுடைய சகோதரன் தனக் கெதிராய்ச் சூழ்ச்சி செய்தானெனச் சந்தேகப்பட்டு, அவனை அழைத்து விசாரித்தான். அரசனுல் இவ்வாறு குற்றஞ் சாட்டப்பட்ட எவரும் அக்குற்றத்தை மறுத் துக் கூறினல், மரணத்திலும் கொடிய பலவித துன்பு றுத்தல்களுக் காளாவார்களாதலின் அவன் குற்றக்கதை ஒப்புக்கொண்டான். உடனே அவனை அங்காடிக்குக் கொண்டுசென்று சிரச்சேதஞ்செய்து, பிரேதத்தை வழக் கப்படி மூன்று நாளைக்கங்கு விடுமாறு அரசன் கட்ட இன யிட்டானென இபின் பட்டூட்டா குறிப்பிடுகிருர்,

Page 98
70 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
V. விஜயநகர இராச்சியம்
முகம்மது இபின் துக்லக்கின் காலத்தில் வட இந்தி யாவிலும் தென்னிந்தியாவிலும் குழப்பங்களுண்டாயிற் றெனவும் அரசனது புத்திக் குறைவான ஆட்சியால் ஏகாதிபத்தியம் நிலைகுலைய வாரம்பித்ததெனவும் மேலே கூறினுேம். இதன் காரணமாக தென்னிந்தியாவில் இந்து சாம்ராச்சியமான விஜயநகர சாம்ராச்சியம் தாபிக்கப்பட் டது.இச்சாம்ராச்சியம் 1565-வரை நிலவியபின்மறுபடியும் முஸ்லிம்கள் ஆதிக்கம் பெற்றனர். 1377-ல் விஜயநகரத் தில் அரசாண்ட மன்னன் 1310-ல் பாண்டி நாட்டைக் கைப்பற்றியிருந்துவந்த முஸ்லிம்களோடு போர்செய்து வென்று தென்னிந்தியா முழுவதற்கும் அரசனனன்.
இவ்வெற்றியின் பின் விஜயநகரில் ஆட்சி செலுத்திய இராசாக்களுள் முதல் சிறப்புவாய்ந்தவன் இரண்டாவது ஹரிஹரன் (1379-1406). இவனது ஆட்சிக் காலத்தில் இவன் மகனன விரூபாட்சன் இலங்கை மீது படை யெடுத்து வந்து யாழ்ப்பாண ராச்சியத்தைக் கைப்பற்றி னன். இக்காலந்தொட்டு யாழ்ப்பாண ராச்சியம் விஜய நகர அரசர்களுக்குத் திறைசெலுத்தி வந்தது.
அடுத்த பெரிய விஜயநகர மன்னன் இரண்டாவது தேவராயன் (1421-1448). இவன் 1438-ல் இலங்கை மீது படையெடுத்து வந்தானெனக் கூறப்படுகிறது. யாழ்ப்பாண ராச்சியம் இவனது ஆஞ்ஞையை ஏற்றுத் திறைகொடுத்து வந்தது. சிங்கள அரசனன ஆருவது பராக்கிரமபாகுவின் படையெடுப்பினின்று யாழ்ப் பாணத்தைக் காப்பாற்ற விஜயநகர மன்னன் ஒருப் பட்டிருக்கவேண்டும். தேவராயன் இறந்ததும், சில காலமாக விஜயநகர சாம்ராச்சியத்தில் குழப்பமும் சச் சரவுமிருந்தது. இதனுல் யாழ்ப்பாண ராச்சியம் விஜய நகர அரசரது துணையைப்பெற முடியாதிருந்ததால், ஆருவது பராக்கிரமபாகு தனது மகனு ன சபுமால் குமரையனை அனுப்பி உள்நாடுவரை சென்று போர் புரிந்து வெற்றிபெறக் கூடியதாயிருந்தது.

விஜயநகர இராச்சியம் 17 Ι
விஜயநகர மன்னர்கள் சிற்பக் கலையில் சிறந்து விளங்கி ஞர்கள். பெரிய குளங்களையும், நீர்ப்பாச னத்துக்குரிய கால்வாய்களையும், அரண்மனைகளையும், ஒவியத்தினுலும் சிற்பத்தினுலும் சிறந்து விளங்கும்
கடலதெனியா விகாரை
கோவில்களையும் கட்டினர்கள். கம்பளைக் கருகாமையி லுள்ள கடலதெனியா விகாரையின் சிற்பமுறை விஜய நகர முறையையே அனுசரித்திருக்கிறதென முன் குே ரிடத்தில் கூறியிருக்கிருேம்.

Page 99
பதினுன்காம் அத்தியாயம்
மத்திய காலத்தில் இங்கிலாந்தின் நிலைமை
1. ஆரம்ப வரலாறு
மத்திய காலத்து இங்கிலாந்தின் சரித்திரமும் இலங் கையின் சரித்திரத்தை ஒரளவுக் கொத்திருந்தபோதிலும் பல வகையில் வித்தியாசப்பட்டுமிருக்கிறது. இலங்கை பெரும்பாலும் இந்தியாவிடமிருந்தே தனது அறிவைப் பெற்று வந்தது. ஆனல், ஐரோப்பா, இத்தாலி முதலிய ஐரோப்பிய தேசங்களிலிருந்து தனது கலா ஞானத்தைப் பெற்றது.
இலங்கையில் ஆதியில் வேடர் குடியேறியதுபோல இங்கிலாந்திலும் குறுகிய தோற்றமும் கறுத்த மயிரு முள்ள ஒரு சாதியார் ஆதியில் குடியேறினர். அதன் பின்னர், இந்து-ஐரோப்பிய வகுப்பைச் சேர்ந்த கெல்ட்ஸ் என்ற சாதியாரங்கு குடியேறினர். இவரில் ஒரு வகுப்பார் பிரித்தானியர் என வழங்கப்படுவர். இவர்களே இங்கிலாந்து, ஸ்கொத்லாந்து, வேல்ஸ் ஆகிய தேசமெல்லாவற்றுக்குஞ் சேர்ந்து பிரித்தானியா என்ற பெயரைக் கொடுக்தார்கள். இலங்கைக்கு வந்த ஆரி யரைப்போல கெல்ட்ஸ் சாதியாரும் விவசாயம் அறிந்திருந்தனர். இவர்கள் இங்கிலாந்தின் கீழ்ப்பாரி சத்திலுள்ள சமபூமியில் தானியங்களைப் பயிரிட்டார்கள்.
கி.பி. முதலாம் நூற்ருண்டில் உரோமர் கெல்ட்ஸை
வென்று, இங்கிலாந்தை உரோம ராச்சியத்தின் ஒரு
மாகாணமாக்கினர். நாலாவது நூற்ருண்டு முடியும் வரை
இந்நிலையிலேயே இங்கிலாந்திருந்தது. ஐந்தாவது நூற்
ருண்டின் ஆரம்பத்தில் ஜெர்மெனியர் உரோமாபுரியைக்
72

ஆரம்ப வரலாறு 17.3
கொள்ளையடித்த பொழுது தி மிதி தாய்நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு இங்கிலாந்தை விட்டு உரோமர்
இக்காலத்தில் ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் பல ஜெர்மன் சாதியார் வசித்து வந்தனர். இங்கிலாந் தில் உரோமர் இல்லாததைக் கண்ட இச்சாதியார் அங்கே சென்று கெல்ட்ஸுடன் போர்செய்து அவர் களை வென்றனர். இவர்களுக்கும் வேளாண்மை செய்யத் தெரிந் திருந்த படி யால், தானியங்களைப் பயிரிடுவதே பிரதான தொழி லாயிற்று. இச்சாதியாரிடை ஆங்கி லர் என்ற சாதியாரும் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் பெயரையே அந் நாட்டுக்கு இட்டு வழங்கினர்கள்.
இதன் பின்னர், நோர்வே, சுவீடன், டென்மார்க்கு ஆகிய தேசங்களிலிருந்து  ைவ க் இ ங் ஸ் அல்லது தேனியர் என்ற சாதியார் இங்கிலாந்துக்கு வந்தனர். மகா அல்பிரட் என்ற ஆங்கில அரசன் இவர் களது படையெடுப்பைத் தடுத்தான். ஆனல், இவன் இறந்து நூறு வருடங்களுக்குப் பின் (கி.பி. பிகா அல்பிரட் 900-ல்) இங்கிலாந்து முழுவதும் தே னி ய ரு  ைட ய ஆ ட் சி யி ல் அ ட ங் கி ற் று. கடைசியாக பிரான்ஸிலிருந்து நோர்மானியர் என்ற சாதியார் வெற்றி வில்லியத்தின் தலைமையில் 1066-ல் இங்கிலாந்துக்குப் படையெடுத்துச் சென்று அந்நாட்.ை வெற்றிபெற்றனர்.

Page 100
H 74 தம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
11. குறுநில மன்னராட்சி, வியாபார விருத்தி
மத்திய காலத்தில் இலங்கையில் நடைபெற்ற ஆட்சி யைப்பற்றி முன் அத்தியாயமொன்றில் கூறியிருக்கிருேம். நல்ல வீதிகளும் போக்குவரத்துக்குரிய சாதனங்களு மில்லாத படியால், தொந்தரவான காலங்களில் குடிகளுக்கு உதவிசெய்ய அரசன் விரைந்துசெல்ல முடியாதிருந்தது. கிராமவாசிகள், கிராமச் சங்கங்கள் மூலம் தமது ஆட்சியை நடத்தி வந்தார்கள்.
تیمیہ بیٹی۔ یتیمصلى الله عليه وسلم جمعیت جغرافتمند و ۱۰ ژانونی، نداj. ؟ قا) •
புராதன மானியகாலக் கோட்டையொன்று
இங்கிலாந்திலும் இவ்வாறே நடைபெற்றது. கிராம வாசிகள் தத்தம் கிராமங்களின் நிர்வாகங்களைத் தாமே நடத்தி வந்தனர். ஆனல் அடிக்கடி ஏற்பட்ட படை யெழுச்சிகளினுலும் உள்நாட்டுக் குழப்பங்களினுலும் குடிகள் சஞ்சலமுற்றதால், தங்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு வலிமையுள்ள அதிகாரியின் பாதுகாப்பை விரும்பி ணுர்கள். இவ்வாறு தான் உதவும் பாதுகாப்புக்குப் பதி லாக குடிகள் தனக்கு ஊழியஞ் செய்வதுடன் சண்டை
 
 

குறுநில மன்னராட்சி-வியாபார விருத்தி I 75
வருங் காலங்களில் படைத் துணை செய்வதையும் அவ்வதி காரி அவர்களிடம் எதிர் நோக்கினன் இதற்கு அக் குடிகள் மறுத்தால் அவர்களைக் கலைத்துவிட்டு அவர்கள் குடி யிருந்த நிலங்களை வேறு பேருக்குக் கொடுப்பான். இம் முறை நாளடைவில் வலுப் பெற்றது. குடிகள், தமது அதிகாரியே தாம் குடியிருக்கும் நிலத்துக்குச் சொந்தக்காரன் என மதித்து, அதற்குக் குடிக் கூலியாக அதிகாரிக்கு ஊழியஞ் செய்து அவன் வேண்டியநேரம் படைத்துணை உதவி, விளைவில் ஒரு பகுதியையும் கொடுத்து ஓர் ஆங்கிலேய வில் வந்தார்கள். இவ்வாறு மானிய வீரன் மாக நிலத்தைப் பெற்று வாழ்ந்த முறை ஐரோப்பாவில் மானியமுறை என வழங்கலாயிற்று.
சிங்கள அரசர்கள் தமது இராசதானியைச் சுற்றி மதில் கட்டினர்களெனவும், ஆபத்துக் காலங்களில் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிகிரியா போன்ற மலைக் கோட்டைகளில் தங்கினர்களெனவும் கூறியிருக் கிருேம். அதுபோலவே ஆங்கிலக் குறுநில வேந்தரும் காவலுக்காக கோட்டைகளைக் கட்டி அவற்றில் வசித் தார்கள். இக்கோட்டைகள் அநேகமாக மலைகளிலேயே கட்டப்பட்டிருக்கும். கோட்டையின் பிரதான கட்டிடம் காவல் எனப்படும். இது மலையுச்சியில் கட்டப்படும். சிங்களக் கோட்டைகளில் இப்பகுதியே பாறையாக இருக் கும். இக்காவலைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பப்படும். அதைச்சுற்றி இன்னெரு சுவர் ஒடும். இது மலையடி வாரத்தில் இருக்கும். இந்த வெளிச் சுவரை ச் சுற்றி சிகிரியாவிலுள்ளதுபோல் ஒர் அகழியிருக்கும்.

Page 101
76 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஆங்கிலேயக் குறுநில மன்னர்கள் இவ்வாறு மலை களில் ஏன் கோட்டைகளைக் கட்டினர்கள்? முதலாவது காசியப்பன் என்ன காரணத்தைக்கொண்டு சிகிரியா மலையில் கோட்டை கட்டினனே அதுபோன்ற காரணத் தினுற்ருன் அவர்களும் மலைச்சிகரகங்களைத் தேர்ந்தெடுத் தார்கள். அந்நாட்களில் துப்பாக்கி கிடையாது. வீரர் கள் அம்பினுல் எய்தோ, பெரிய கற்களை வீசியோ எதிரி களைத் தாக்கினர். இதனுல் உயரத்துள்ளவர்களை இலேசாகத் தாக்கிவிட முடியாது.
இக்கோட்டைகள் வெகு பலமாகக் கட்டப்பட்டன. அக்காரணத்தினல் இவற்றைத் தகர்க்கமுடியாதிருந்தது. உள்ளே இருப்போரை வெளியே போகவிடாது தடுத்து, அவர்கள் சேமித்து வைத்திருக்கும் உணவு, தண்ணிர் முதலியன முடியும்வரை கோட்டையைச் சுற்றி முற்றுகை யிடுவதனுற்ருன் அக்கோட்டையைக் கைப்பற்றக் கூடிய தாயிருக்கும். உள்ளே யிருப்போர் நிர்வகிக்க முடியா விட்டால் எதிரிகளிடம் தஞ்சம் புகுவார். இதனல் %ჯა(!) கோட்டையைக் கைப்பற்றுவதானுல் அநேக நாளெடுக்கும். எனவே, பழைய காலத்துப் போரெல் லாம் கோட்டைகளைக் கைப்பற்றுவதிலேயே தங்கியிருந் ததால் அநேக காலம் நீடித்தன.
கோட்டைகளன்றி, சொந்த நிலத்தில் குடியிருப் போரின் படைத் துணையுமிருந்தபடியால் இக் குறுநில மன்னரை அடக்குவதற்கு அரசர்கள் வெகு கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆளுனல், இலங்கையில் இத்தகைய குறுநில மன்னரில்லாதபடியால் சனங்கள் அரசனுக் கெதிராய் எழுவதற்கு அவ்வளவு வசதியிருக்கவில்லை. அவ்வாறு இருந்தாலும், அரசனிடம் நிலைபேருன ஒரு படையிருந்தபடியால், புரட்சியை இலேசாய் அடக்கி விட முடியும். இங்கிலாந்திலுள்ள வலிமிக்க குறுநில மன்னர்கள் அடிக்கடி அரசனுக்கெதிராய்க் கிளம்பியது மன்றி, தமது விருப்பத்துக்கு மாருக நடந்தோருக் கெதிராய்க் கிளம்புமாறும் தூண்டினர்கள்.

gi udosso uso qo&& afgeqorterm goof) 1996) se* 1,9 sorgimas urbog) ‘loogoon listo o 1,9 ± 495 qi (0 og I · T · § p ugi ae) qi się go @ėgsẽ șae uso m 5 șan

Page 102
78 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
உதாரணமாக, ஜோன் என்ற அரசன் (1199-1216) தனது செய்கைகளால் குறுநில மன்னரை அதிருப்திப் படுத்தினன். அதனுல் 1215-ல் அவர்களெல்லாம் திரண்டெழுந்து தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மன்னனை நிர்ப்பந்தப்படுத்தி மகா உரிமை உறுதி என்ற பெயருடன் ஒர் உடன்படிக்கையில் கையொப்ப மிடப் பண்ணினர்கள். இவ்வரசனது மகஞன மூன்ரு வது ஹென்றியும் (1216-1272) இவ்வுரிமை யுறுதியின் படியே ஒழுகுவதாக வாக்களித்தான். ஆனல், அவ்வாக் குறுதியை அவன் நிறைவேற்ற வில்லை. பின்னர் சைமன் டி மொன்போட் என்ற ஒரு பெரிய குறுநில மன்னன் ஹென்ரிக்கெதிராகச் சண்டைசெய்து அவ்வரசனைக் கைதியாக்கினன்.
அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்காக ஏற்பட்ட குறுநில மன்னரைக்கொண்ட பெரிய ஆலோசனைச் சபை யில், முதன் முதல் நகர மக்களின் பிரதிநிதிகளும் இடம் பெற முயன்ற பெருமையும் சைமன் டி மொன் போட்டைச் சார்ந்ததே.
இக்காலத்தில் இங்கிலாந்தில் அரசனது இராச தானியை விட பல பட்டினங்கள் இருந்தன. ஆனல், இலங்கையில் இவ்வாறிருக்கவில்லை. இதற்குக் காரணம் இங்கிலாந்தில் இலங்கையிலும்பார்க்க அதிக வியாபாரம் நடைபெற்றமையே. இந்நகரங்களில் வசித்தோர் ஆரம் பத்தில் பிஷப்பின் பரிபாலனத்திலோ குறுநில மன்னரின் பாதுகாப்பிலோ இருந்து வந்தார்கள். இவர்கள் குடிகளிட மிருந்து சில வரிகளைப் பெற்ருர்கள். ஆனல், சிலுவை யுத்தங்களின் பின்னர், நகரங்களில் வியாபாரம் விருத்தி யடையவே, நகர வாசிகள் தம்மைப் பரிபாலிக்கும் அதிகாரியிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றர்கள். அதா வது, ஒரு குறித்த தொகையை அவ்வதிகாரிக்கு கொடுத்து நகரத்து ஆட்சி விஷயங்களைத் தாமே நடத்திக்கொள்வ தாக வாக்குப் பெற்றனர். இவ்வதிகாரி எப்பொழுதும் ஒரேமாதிரி அந்நகர வாசிகளைக் காப்பாற்றி வரவில்லை. சில வேளைகளில் அவனே தன்னகரைத் தாக்குவான்.

உரோமன் கத்தோலிக்க திருச்சபை I 7Ο
ஆதலால், நகரவாசிகள் எதிரிகளிடமிருந்தும் இக்குறுநிை மன்னரிடமிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளு வதற்காக தமது பட்டணத்தைச் சுற்றி ஒரு மதில் கட்டினர்கள்.
அரசனின் ஆலோசனைச் சபையில் நகரத்துப் பிரதி நிதிகளுமிடம் பெறுமாறு சைமன் டி மொன்போட் செய்த முயற்சி பலித்ததென்ருல், நகரங்கள் எவ்வளவு செல்வ முடையனவாகவும் ஆதிக்கமுடையனவாகவும் மிருந் திருக்கவேண்டும். வியாபாரம் விருத்தியடையவே அர சர்கள், செல்வத்திலும் செல்வாக்கிலும் முன்னேறிய வர்த்தகர்களின் உதவியைக் கொண்டு, குறுநில மன்னரின் ஆதிக்கத்தை அடக்கினர்கள்.
11. உரோமன் கத்தோலிக்க திருச்சபை
மத்திய காலத்தில் இன்னெரு முக்கியமான அம்சம், கத்தோலிக்க திருச்சபை செலுத்திவந்த ஆதிக்கமாகும். பெளத்த சமயத்தைப்பற்றியும், விகாரங்களில் வசித்துக் கொண்டு பெளத்த பிக்குகள் நடத்தி வந்த வாழ்க்கை யைப்பற்றியும், அவர்கள் சனங்களின் வாழ்வை எவ்வாறு நல்வாழ்வாக்கினர்களென்பதைப் பற்றியும் படித்திருக் கிருேம். பெளத்த பிக்குகள் சொந்தச் சொத்தில்லாதவர் களாகவும், பிரமசாரிகளாகவும் வாழ்க்கை நடத்தினர். சாதி பேதம், உயர்வு தாழ்வு என்ற வித்தியாசம் காட் டாமல், வறியராயிருந்தாலென்ன செல்வராயிருந்தா லென்ன, வேற்றுமையின்றி அவர்களைப் பிக்குகள் தமது சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்கள். இப்பெளத்த பிக்கு கள் உலகைத் துறந்து சமயானுஷ்டானங்களிலேயே தமது நேரத்தைக் கழித்தனர். சில வேளைகளில் நூல்களைப் பிரதி செய்வதிலும், புதிய நூல்களை ஆக்குவதிலும், உப தேசஞ் செய்வதிலும் காலத்தைக் கழித்தனர்.
கிறிஸ்தவத் திருச்சபையிலும், இவ்வாறு வாழ்க்கை நடத்திக்கொண்டு சன்னியாசிகளும், சன்னியாவினிகளும் இருந்து வந்தார்கள். ஆனல், பிக்குகளைப்போல இவர் கள் தமது உணவுக்குப் பிச்சையெடுக்கச் செல்லவில்லை.

Page 103
SO நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தமக்குத் தேவையான உணவுப் பயிர்களைத் தாமே பயி ரிட்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், அரசர்களும், பெரிய பிரபுக்களும், சன்னியாசி மடங்களுக்கு நிலங்களை மானியமாக எழுதினர்கள். இலங்கையிலும் விகாரை களுக்கு இவ்வாறே மா னி யங் கள் விட ப் பட் டிருந்தன. பிக்குகள் இந் நிலங்களைப் பரிபாலிக்கு மாறு குடிகளிடம் ஒப்படைத்தார்கள். ஞல், திருச் சபைச் சன்னியாசிகள் தாமே அந்நிலங்களிற் பயிரிட்ட Of IT
கிறிஸ்தவ திருச்சபையில் சன்னியாசிகள், சன்னி யாசினிகள் மாத்திர மன்றி, கிராமங்கள் தோறும் மத
மத்திய காலத்துச் சன்னியாச மடம்
போதனை செய்து, குடிகளின் ஆத்மார்த்தமான வளர்ச் சியைக் கவனிப்பதற்காக போதகர்களுமிருந்தார்கள். இப்போதகர்கள் பிக்குகளைப் போலில்லாமல் பிராமண புரோகிதர்போல கிராம வாழ்க்கையில் ஈடுபட்டிருந் தனர்.
பெளத்த சமயத்துக்கும், உரோமன் கத்தோலிக்க சமயத்துக்குமிடையே வேறும் பல வித்தியாசங்களைக் கவனிக்கலாம். பெளத்த சமயப் பிக்குகள் வேருெருவரின் கீழ் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனல், D Gunt மன் கத்தோலிக்க திருச்சபை பாப்பாண்டவரைத் தலை வராகக்கொண்ட ஒரு பெரிய சமய சாம்ராச்சியமாகும்.
 

உரோமன் கத்தோலிக்க திருச்சபை 8.
சன்னியாசிகள், சன்னியாசினிகள், போதகர்கள் எல்லா ரும் பாப்பாண்டவருக்குக் கட்டுப்பட்டவர்களாகும். திருச்சபையானது பல இடங்களிலும் பரந்திருப்பதால் ஒவ்வொரு கோவிற் பற்றுக்கும் ஒரு பிஷப்பாண்டவர் அல்லது மேற்றிராணியார் நியமிக்கப்பட்டார். இவர்கள் போதகர்களின் வேலையை மேற்பார்வை செய்து வந்தனர். இவ்வாறு கிராமங்களும் தேசங்களும் சாதி ஆட்சிமுறை முதலியவற் றில் மாறுபட்டாலும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையென்ற சமய ஆதிக்கத்தில் ஒன்றுபட வேண்டியிருந்தது.
உரோமன் கத்தோ லிக்க திருச்சபை சமய விஷயமாக மாத்திர மன்றி, அரசியல் விஷயங் களி லு ம் ஆ தி க் க ஞ் செலுத்தியது. அரசர் கள் பிழை செய்தால் பாப் பாண்ட வர் அப் பிழை யை எடுத்துக் கா ட் டி அ த ற் குத் தண்டனையும் விதித்து வந்தார். இன்று தேசங் களிடையே பிணக்கு - ஏற்பட்டால், ஐ க் கிய w பாப்பாண்டவர் நாட்டுத் தாபனத்துக்கு முறையிட்டு பிணக்கைத் தீர்க்குமாறு கேட்பார்கள். ஆனல், அக்காலத்தில் அரசர்கள் தம்முட் பிணங்கிரு)ைல் பாப் பாண்டவரிடம் விண்ணப்பஞ் செய்வர். புதிய உலகமாகிய அமெரிக்காக் கண்டங்கள் கண்டுபிடிக்கப் பட்டபொழுது போர்த்துக்கீசருக்கும் ஸ்பானியருக்கு மிடையில், பாப்பாண்டவரே மத்தியஸ் தஞ்செய்து அந் நாடுகளைப் பிரித்துக் கொடுத்தார்.

Page 104
82 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இவ்வாறே பிஷப்பாண்டவர்களும், போதகர்களுங் கூட இலெளகீக கருமங்களையும் செய்து வந்தனர். விவா கம், மரண சாசனம் ஆகியவை சம்பந்தப்பட்ட வழக்கு களில் அவர்கள் மத்தியஸ்தஞ் செய்து தீர்ப்புக்கொடுத் தார்கள். திருச்சபை நீதிமன்றங்களில் சனங்களின் நடத்தையைப்பற்றி விசாரணை நடத்தினர். பாவஞ் செய்தவர்களைப் பிராயச்சித்தஞ் செய்யுமாறு ஊக்கப் படுத்தினர். குற்றவாளிகளுக்குத் தண்டனை விதித்தார் கள். கள்ள அளவை உபயோகிக்கும் வியாபாரிகளுக்கும், வாக்குறுதியை மீறினோர்க்கும், மனைவியரை இம்சைப் படுத்தினுேர்க்கும், ஆராதனைக்குச் செல்லாதோர்க்கும் பணத் தண்டமோ, சிறைத்தண்டனையோ, சவுக்கடித் தண்டனையோ விதித்தார்கள். ي"
இங்கிலாந்திலிருந்த பிஷப்பாண்டவர்களும், பாதிரி மாரும் பாப்பாண்டவருக்கு மாத்திரமன்றி இங்கிலா ந்து அரசனுக்கும் அடங்கி நடக்க வேண்டியிருந்தது. சில பிஷப்பாண்டவர்கள் நிலம் படைத்தவர்களாயிருந்தபடி யால், அரசர்கள் தம்மையே தலைவராகக் கருதுமாறு அவர்களை வற்புறுத்தினர்கள்.
இரண்டு எசமானர்களுக்கு ஒரேவிதமான பணிவு காட்டுதல் முடியாதாதலின், அரசனுக்கும், பாப்பாண்ட வர், பிஷப்பாண்டவருக்குமிடையில் அடிக்கடி பிணக்கேற் பட்டது. இரண்டாவது ஹென்றி (1154-1189)க்கும் அதி மேற் றிராணி யார் பெக்கெட்டுக்குமிடையில் ஒரு முறை முரண்பாடுண்டாயிற்று. இங்கிலாந்தில் சனங்கள் செய்யும் குற்றத்தை விசாரித்துத் தண்டனை விதிக்கும் முறையில் ஹென்றி பல மாறுதல்களைக் கொண்டுவந்தான். திருச்சபையோடு சம்பந்தமில்லாத நீதி மன்றங்களைத் தாபித்து குற்றவாளிகளை அங்கே விசாரணை செய்வித் தான். அன்றியும், சன்னியாசிகளும் மதகுருமாருங்கூட இங்கேயே விசாரிக்கப்படவேண்டுமெனக் கட்டளையிட் டான். பெக்கெட் இதற்கு உடன்படாது மதகுருமாரைத் திருச்சபை நீதி மன்றங்களிலேயே விசாரனை செய்ய வேண்டுமென வாதாடினன். இதன் விளைவாக

ஆங்கிலர் நடத்திய சண்டைகள் 夏8@
ஹென்றியின் தோழர்கள் காந்தபரி தேவாலயத்தில் ஒரு நாள் பெக்கேட்டைக் கொலை செய்தார்கள். ஈற்றில் ஹென்றி பாப்பாண்டவரின் விருப்பத்திற்கிணங்க வேண்டியதாயிற்று.
V. மத்திய காலத்தில் ஆங்கிலர் நடத்திய
சண்டைகள்
மத்திய காலத்தில் போர் மலிந்திருந்தது. குறுநில மன்னரும் பிரபுக்களும் சண்டைசெய்வதையே தமது முக்கிய தொழிலாகக் கருதிவந்தனர். பாப்பாண்டவரின் வேண்டுகோளுக்கிணங்கி, ஐரோப்பிய அரசர்கள் நடத்திய சிலுவை யுத்தங்களைப்பற்றி கூறினுேம். இரண்டாவது ஹென்றியின் மகனன முதலாவது ரிச்சாட் (1189-1199) என்பவன் மூன்ருவது சிலுவை யுத்தத்தில் பங்கு பற்றினன். இவன் ஒரு சேனையோடு பலஸ்தீனத்துக்குச் சென்று துருக்கியருடன் சண்டைசெய்தான். மூன்ரு வது ஹென்ரியின் மகனன முதலாவது எட்வர்ட் (12721307) வேல்ஸ் காரருக்கெதிராகவும் ஸ்கொத்லாந்துக் கெதிராகவும் போர்செய்தான். இவன் வேல்ஸ் தேசத்தை வென்று தனது மகனன இரண்டாவது எட்வர்ட்டுக்கு (1307-1827) முதன் முதல் வேல்ஸ் இளவரசன் என்ற பட்டத்தை வழங்கினன். ஸ்கொத்லாந்தில் வில்லியம் வலஸ், ரொபட் புறுாஸ் என்போருடைய எதிர்ப்பினுல் முதலாவது எட்வர்ட் அதிக வெற்றியடைய முடியவில்லை. தந்தையின் மரணத்துக்குப் பின் இரண் டாவது எட்வர்ட், அவர் வெற்றிபெற்ற நாடுகளைக்கூட இழக்க நேர்ந்தது.
அக்காலத்தில் நடைபெற்ற ஒரு பெரிய யுத்தம் நூருண்டு யுத்தமென வழங்கப்படும். இங்கிலாந்தில் அரசாண்ட நோர்மன் அரசர்கள், பிரான்ஸிலுள்ள தமது நிலங்களையிட்டு பிரான்சு அரசனுடன் அடிக்கடி சண்டை. செய்தனர். இவ்வாறு மூன் ரு வது எட்வர் ட் (1327-1377)1327-ல் தொடங்கிய போர் 1453-ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது. இகளுறல் இதை நூருண்டு யுத்தமெனக்கூறுப. ஆரம்பத்தில் இப்போரில்

Page 105
84 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ஆங்கிலர் வெற்றியடைந்தபோதிலும் ஈற்றில் பிரெஞ் சுக்காரர் தமது நிலங்களை மீட்டுக்கொண்டார்கள். ஆர்க் நாட்டு ஜோன் என்ற ஒரு பெண் மணியின் வீரச்செய லாற்ற ன் ஆங்கில ர் இச்சண்டையிற் ருே ல் வியுற நேர்ந்தது.
இந்நூற்றண்டு யுத்தத்தின் பின் இங்கிலாந்திலேயே உள்நாட்டுச் சண்டை யுண்டாயிற்று. யோர்க் நகரிலும் லங்காஷயரிலும் உள்ள இரண்டு குடும்பங்களிடையே இந்தப் போர் உண்டாயிற்று. யோர்க் வாசிகள் வெண் ரோசாச் சூடியும் லங்காஷயர் வாசிகள் சிவப்பு ரோசாச் சூடியுஞ் சண்டை செய்ததால் இப்போருக்கு ரோசாச் சண்டை எனப் பெயர் வழங்குகிறது.
இச்சண்டையில் குறுநில மன்னர்கள், தம்முள் யுத்தஞ் செய்து தமது அதிகாரமெல்லாவற்றையும் இழந்த னர். 1485-ல் ஏழாவது ஹென்ரி இங்கிலாந்துக்கு அரச ஞகி, மேலும் அவர்களுடைய அதிகாரங்களைக் குறைத்து அரசர்க்கெதிராய் எழாதபடி அவர்களின் உரிமைகளைப் பறிமுதல் செய்தான். இவனது மகனன எட்டாவது ஹென்ரி தன்னையே ஆங்கிலத்திருச்சபையின் தலைவனுக் கிக்கொண்டதன் பயனப் பாப்பாண்டவருக்கும் ஆங்கில அரசருக்கு மிருந்து வந்த ஓயாத சச்சரவுக்கு முடிவு கட்டி னன். உரோம ராச்சியத்தின் வீழ்ச்சியோடு ஆரம்பமான மத்திய காலம் இவ்வளவு மாற்றங்களையும் கண்டபின் முடிவுற்றது. இப்பெரிய மாற்றங்களே நமது நவயுகத் திற்கு அறிகுறியாதலின் அவற்றைப்பற்றி விரிவாக இந் நூலின் அடுத்த பாகத்திற் கூறுவோம்.

H 8 5,
கால அட்டவணை
1고하고 IT ? (99 4107qi 11 UT7 UTT. Uyo 4p*T Fe&gampé*遜----00 I- I · 57°e ự911@@ų Ūūド 七95997999图(§§jųoo 1995 (g)# Liriqi so ao fuo I@fi)o(o)-1-..TIẾ (TI 109 r. 11@qørıųno aĚ(qī 1993) esto 1996T&9岭LFg/?锈邮(JI ----415 @ uzo(qa 1,9 g) (6TH-IĘio-q_/因哈心5I ’57 · 3 *聽spao 01@|qīm (5 £1] [13] £ 311 LITTkooss@ngo essessore -000 I - (f) og į Los ao lo电朗45哈LPD4, 6–7 agos@11 UQ19415 @ F,Im gì ? @ § 119 r. (g) § 49 @flo 1ņogļrmųfặ* -4ırmų, sẽ4ırmųff-Įrnų sẽ----00၇႔ျဖွ0 * 41 1993|- 41m (£ 1.709 19-Įrm goo ugog)57 uri4/TO형84/4834s-i feg)000;ọgos -→4ırmųj Jig)?கு L*P5劑Lirisi II (1963 um goàourm @@@o gorgiao (ốqa qoluso
sus rus 001 ');', '&g-lessorts-ızıło as Los

Page 106
வினுக்கள்
1.
ஒரு வேடனின் தோற்றத்தை, நீர் நேரில் ஒருவனைக் கண்டதிலிருந்தாவது படத்திற் கண்டதிலிருந் தாவது, விவரிக்க. புதிய கற்காலத்துக் கல்லா யுதங்கள் சிலவற்றைக் கூறுக. முல்லைநில மக்கள், வேட்டுவராகியோரிலும் பார்க்க விவசாயிகள் எவ்வாறு சிறந்தவர்கள்.
2
மகாவம்சத்தின் 6-ம் 7-ம் அத்தியாயங்களிற் கூறப்பட்ட விசயனுடைய சரிதையை வாசித்து அதனை நடித்துக் காட்டுக.
இந்தியா, இலங்கை இவற்றின் தேசப்படம் வரைந்து, இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட இடங் களைக் குறிக்க. ஒரு சாரணப் படைவகுப்பினரின் பெயர்களைக் கூறுக. இப்பெயர்களை யிடுவதின் காரணமென்ன ?
ஆரியர் " யாவர் ? சிங்களரை ஆரியர் என்ப தேன் ? இலங்கையிற் சீதையுடன் சம்பந்தப்பட்ட இடங்க ளெவை? இராவணனுடைய படத்தைக் கவனித்து அவனுருவம், தோற்றம் ஆகியவற்றை விவரிக்க. * கன் சபை " அல்லது " கிராமச் சங்கம் இக் காலத்திற் புரியும் தொழில்களென்ன ?
86

0.
ll.
2.
13.
I 4.
6,
I 7.
8.
9.
2O,
விஞக்கள் 187
3.
ஒரு ஜாதகக் கதையைக் கூறுக.
நீர் வரைந்த இந்தியா-இலங்கை தேச படத்திலே இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட இடங்களைக் குறிக்க.
4
அசோகன ஒரு பெரும் அரசனுக நாம் கருதுவ தேன்? ஒரு தாதுகோபத்தின் படம் வரைக; அல்லது களிமண்ணிஞல் அத்தகையை உருவம் செய்க. சசஜாதகக் கதையை விவரிக்கும் படத்தின் பிரதி யொன்று வரைக. துட்டகெமுனு வைப் பற்றி " மகா வம்சத்திற் கூறப்பட்ட கதையை வாசித்து, அக்கதையை நடித்துக் காட்டுக. இலங்கைப் படமொன்றில் துட்டகெமுனு, மாக மாவிலிருந்து அனுராதபுரத்துக்குச் சென்ற பாதையைக் குறிக்க. விக்கிரகம் அல்லது பிரதி மை வைத்தற் குப யோகப்படும் ஒரு மலைக்குகையின் பெயரைக். கூறுக. அதனைப் பற்றிய ஐதீகங்களுண்டெனின் அவற்றைக் கூறுக. தென்னிந்தியாவின் படம் ஒன்று வரைந்து, சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் குறிக்க,
5
ஒரு குளம் அல்லது தேக்கம் அமைக்கப்படும் விதத்தை விவரிக் க. களிமண்ணில் ஒரு மாதிரி செய்க.
" போதிசத்துவர் ' என்பவர் யார்? அவருடைய உருவத்தையோ அல்லது படத்தையோ விவரிக்க.

Page 107
88
21.
22.
23.
24.
-25.
26.
27.
28.
29。
30.
3.
32.
-33.
34.
நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
6
இவ் வதி கா ர த் திற் கூறப்பட்ட இடங்களின் தானங்களை விவரிக்க. கிரேக் கரையும், உரோமர்களையும் பிரதான சாதியாரென நாம் கருதுவதேன்? அவர்களுடைய கட்டிடங்களைக் காட்டும் படங்களைச் சேர்க்க. குவேனி, சேர்சே இவர்களின் சரிதைகளை ஒப்பிடுக. மாசிடோனியாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்ல அலக்சாந்தர் பின்பற்றிய பாதையைக் குறிக்க. அலக்சாந்தரை அசோகனுடன் ஒப்பிடுக. த லமியின் தேசப் படத்தை விவரிக்க. அதே பிரதேசங்களைக் காட்டும் தற்கால தேசப் பட மொன்றுடன் அதனை ஒப்பிடுக. ஒகஸ்த சுசீசரின் ஆட்சிக் காலத்திலே நடந்த சில முக்கியமான சம்பவங்களென்ன ?
ஜோன் மட்சூக்கர் என்பவர் யார் ?
7
இவ் வத்தியாயத்திற் கூறப்பட்ட இடங்களின்
தானங்களைக் காண்க. சகுந்தலையின் கதையைக் கூறுக. சில பாளி நூல்களின் பெயர்களைக் கூறுக. சந்தேசக் கவியொன்றின் பொருளைக் கூறுக.
சிகிரியாவின் சித்திரப் படமொன்று வரைக. காசியப்பனின் கதையைக் கூறுக.
8
அனுராதபுர நகரத்தின் அமைப்புப் படமொன்று பெற்று, அதன் பிரதியொன்று வரைக. ஒரு பெளத்த விகாரையை விவரிக்க.

邻5.
36.
37.
3 3.
39.
40.
41.
42.
尘3。
44.
45。
46。
47。
விஞக்கள் 89
9
பாஹியானின் பிரயாணங்களைக் கூறுக. உனது விடையை ஒரு புறப்பட வுருவங்கூறி விளக்குக.
சீனரிடமிருந்து உலகத்தினர் கற்றதென்ன ?
10 ஒரு பள்ளிவாசலின் அமைப்பைப்பற்றிய விவ ரங்களை அறிந்து கூறுக. அராபியக் கதைகளிலொன்றைக் கூறுக. கி.பி. ஒன்ரும் ஆண்டு முதல், கி.பி. 1000-ம் ஆண்டு வரையில் நிகழ்ச்சி யட்டவணையைத் தயாரிக்க. ஒர் இந்து ஆலயத்தை விவரிக்க. இந்து தெய்வங்களின் படங்களைச் சேகரிக்க. ஒரு தெய்வத்தின் உருவத்தை விவரிக்க. இலங்கையிலே கொண்டாடப்படும் இந்துத்திரு விழா க்க ளெ வை ? பிரசித் தி பெற்ற இந்து ஆலயங்களெவை ?
11
முதலாம் விசயபாகு முதலாம் பராக்கிரமபாகு, இவர் களிற் சிறந்த வர் யார் ? வகுப்பிலுள்ள பிள்ளைகளை இரு கட்சியினராகப் பிரித்து இவ்விஷ யத்தைப் பற்றிக் கலந்து பேசச்செய்க. இவ்வத் தி யாயத்திற் கூறப்பட்ட பெயர்களை இலங்கை தேசப்படமொன்றிற் குறிக்க, பொலன்னறுவையின் அமைப்புப் படம் பெற்று அதன் பிரதியொன்று வரைக. இலங்கையிலுள்ள பெளத்த சமயப் பிரிவுகளெவை? ஒவ்வொரு பிரிவும் பெற்ற பெயருக்குக் காரண மென்ன ? அனுேரதனைப்பற்றி ஒரு சொற்பொழிவை உமது வகுப்பிலுள்ளவர்களுக்குச் செய்க.

Page 108
90
48.
49.
50.
5.
52.
53.
54。
55.
56.
57.
58,
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
12
இரண்டாம் பராக்கிரமபாகுவை ஆரும் பராக்கிரம பாகுவுடன் ஒப்பிடுக. சந்திரபானு, அளகக்கோனரன் இவர்களைப் பற்றிச் சுருக்கமான குறிப்புகள் வரைக.
யாப்பஹ"வா படமொன்று கீறுக.
13
ஐரோப்பா ஆசியா என்பவற்றின் தேசப் படத் திலே மார்க்கோ போலோவின் பாதையைக்குறிக்க.
இபின் பட்டுட்டா தரிசித்த இடங்களைக் கூறுக. குப்ளாகான், முகம்மது இபின் துக்லக், இவர்களைப் பற்றிச் சுருக்கமான குறிப்புகள் வரைக. கி.பி. 1000 முதல் கி.பி. 1500-ம் ஆண்டுவரையில் நடந்த நிகழ்ச்சிகளின் அட்டவணை வரைக. பாஹியான், மார்க்கோ போலோ, இபின் பட்டூட்டா. ஆகியோர் இலங்கை யைப் பற்றிக் கூறியிருப்ப வற்றை வாசி. இவற்றின் நீர் விரும்புவதெது? ஏன் ? மத்திய காலத்தில் இலங்கையில் நடைபெற்ற அரசியல் முறையை அக்காலத்து இங்கிலாந்தின் முறையோடு ஒப்பிடுக.
கோட்டை, மடம் என்பவற்றின் படத்தை வரு ணித்துக் கூறுக. கோட்டையொன்றைச் சிகிரியா மலைக் கோட்டையோடும், சன்னியாசிகள் மட மொன்றைப் பெளத்த விகாரையுடனும் ஒப்பிடுக.
(அ) பெளத்தபிக்கு, (ஆ) உரோமன் கத்தோலிக்க குரு ஆகியோர் இன்று செய்துவரும் முக்கிய மான கடமைகளென்ன ?


Page 109

880