கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை 8

Page 1
கலாநிதி. எ
தலைவர் யாழ்ப்ப FOI I
 

எல். சிவலிங்கராசா ர், தமிழ்த்தறை
பல்கலைக் கழகம்.
மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை. 200.06.24

Page 2

பாவலரின் பெருமை
மொ. கந்தரலிங்கம் அதிபர், மகாஜனக் கல்லூரி
“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றயவை”
இது வள்ளுவர் வாய் மொழி இதனாலேதான் “எல்லாத் தானங்களிலும் வித்தியாதானமே சிறந்தது” என்ற கருத்து நாவலர் பெருமானின் உள்ளத்து உதித்தது. அதன் பயனாகப் பாடசாலைகள் அமைப்பதில் நாவலர்தான் ஒரு முன்னோடியாக விளங்கி ஏனையோருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். நாவலர் தொண்டின் வழித் தோன்றலாய் விளங்கிய LT616i துரையப்பாபிள்ளை தமிழும், 600Ꮡ6ᏂlᏬuptb தமிழின் இரு கண்களென்று அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்குக் கிடைப்பது போன்ற கல்வி வசதி சைவ மக்களுக்குங் கிடைக்க வேண்டுமென்ற தூய நோக்குடனும் மகாஜனக் கல்லூரியை 1910b sor(6 நிறுவினர். அவர் அம்பனையில் ஏற்றி வைத்த கல்வி விளக்கு எத்தனையோ இடர்களுக்கு முகங் கொடுத்தும் மங்காது இன்றும் தன் நல்லொளியைப் பரப்பிக் கொண்டே இருக்கிறது. சைவப் பிள்ளைகள் சைவப் பாடங்களில் உயர்தரக் கல்வியைப் பெற முடியாதிருந்த அக்காலத்தில் தனி ஒருவராய் எத்தனையோ எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இக்கல்வி நிலையத்தை நிறுவி சைவ மாணவர்கள் உயர் கல்வி பெற வழிவகைகள் செய்து கொடுத்தார். அன்னாரின் மகத்தான சேவையும் தியாக சிந்தையும் சைவத்தமிழ் மக்களால் என்றுமே மறக்க முடியாத வகையில் விளங்குகின்றன.

Page 3
அந்த வகையில் அவர் அமரராகிய இத்தினம் அன்று தொடக்கம் இன்று வரை நன்றிக்கடன் செலுத்தும் ஒரு நன்னாளாக, கல்லூரி வரலாற்றிலே பொறிக்கப்படும் ஒரு பொன்னாளாக மகாஜனன்களாகிய எம்மால் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இப்புனித தினத்துடன் பரிசளிப்பு வைபவத்தையும் இணைத்து ஆண்டு தோறும் பெரு விழாவாகக் கொண்டாடி வருகிறோம். இன்றைய மகத்தான நாளில் எம்மத்தியில் நினைவுப் பேருரை நிகழ்த்த வந்துள்ளவர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி சிவலிங்கராஜா அவர்களாவார். தமிழில் சிறந்த பாண்டித்தியமும் ஆர்வமும் மிக்க இவர் இவ் விழாவில் இப்பணியை ஆற்ற வந்துள்ளது மிகவும் பொருத்தமானதும் சிறப்பானதும் ஆகும். அவர் இவ்விழாவிலே "ஈழத்து நவீன தமிழ்க்கவிதை முன்னோடி பாவலர் துரையப்பாபிள்ளை” என்னும் தலைப்பிலே உரையாற்ற விருக்கின்றார். எனவே அவருக்கு எம் கல்லூரி சார்பில் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
 

ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடி
பாவலர் துரையப்பா பிள்ளை. (1872-1929)
யாழ்ப்பாணக் குடா நாட்டிலே கல்விப்பாரம்பரியம் மிக்க கிராமங்களில் தெல்லிப்பழையும் ஒன்று எனலாம். யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலேயே இப்பகுதியில் கலை இலக்கியப் பாரம்பரியம் ஒன்று செழிப்பான வகையிலே நிலவியது என்பதைப் போர்த்துக்கேயர் காலக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது." 1
“இலங்கா புரியிருக்கும் யாழ்ப்பாணராச்சியத்தில் துலங்குமெண்ணால் பதிக்கும் துங்கமுடி போலுயர்ந்த வல்லிக்கிராமத்தில் வளர்ந்த திருநகராம் தெல்லிக் கிராமமெனும் சீர்சிறந்த பேரூரில்”
(சந்தியோகு மாபோர் அம்மானை)
எனத் தெல்லிப்பழைப் பேதுருப் புலவர் தாம் எழுதிய அம்மானையிலே தெல்லிப்பழைக் கிராமத்தைக் குறிப்பிடுகின்றார். தெல்லிப்பழையைச் சேர்ந்த பேதுருப் புலவர் சைவராக இருந்து கிறிஸ்தவராக மனந் திரும்பியவர் என்று கூறுவர்*2 (பதிப்புரை) (சந்தியோகுமாயோர் அம்மானை).
தமிழினும் வடமொழியிலும் ஆற்றல் பெற்றிருந்த பேதுருப் புலவர் செழுந் தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்தவர் என்பதை இவரது பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது. போர்த்துக்கேயக் குருமாரும் தமது 3LDU, கல்வி முயற்சிகளுக்குரிய முக்கிய இடமாகத் தெல்லிப்பழையையே தெரிவு செய்திருந்தனர். 1647ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்த எல்லாக் கல்லூரிகளுக்கும் பொறுப்பாக இருந்த சுவாங் கறுசாலோ பாதிரியார் தெல்லிப்பழையிலேயே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாப்பறி புலவராகத் திகழும் பேதுருப் புலவருக்குத் தெல்லிப்பழையின் தமிழ்கல்விப் பாரம் பரியமே பின்னணியாக இருந்ததென்பதில் சந்தேகமில்லை.

Page 4
ஈழ நாட்டிற்கு வந்த அமெரிக்க மிஷனரிமாரும் தமது சமயப் பணியையும் கல்விப் பணியையும் முன்னெடுக்கும் முக்கியமான இடமாகத் தெல்லிப்பழையையே தெரிவு செய்தமையும் ஈண்டு மனங்கொள்ளத்தக்கது.
நீண்ட நெடுங் காலமாக நிலவி வந்த தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தினோடு மிஷனரிமார் இப்பகுதியில் நிறுவிய பாடசாலைகளும் இப்பகுதியின் கல்விப் பாரம்பரியத்திற்கு வலுச் சேர்ப்பவையாகவே அமைந்ததெனலாம். அமெரிக்க மிஷனரிமார் தெல்லிப்பழையில் ஆரம்பித்த சமயக் கல்விப் பணிகளைப் பின்னர் உடுவிலுக்கும், வட்டுக்கோட்டைக்கும் விஸ்த்தரித்தனர்.
இயற்கைச் செழிப்போடு கல்விப் பாரம்பரியமும் சிறந்து விளங்கிய தெல்லிப்பழைக் கிராமத்திலே வாழ்ந்த கதிர்காமச் சட்டம்பியார் வழியிலே தோன்றிய அருளம்பல முதலியார், சிற்பம், ஓவியம், நாடகம் முதலாம் கலைகளில் வல்லுனராகத் திகழ்ந்த காசிநாதர் கந்தப்பிள்ளையின் வழித்தோன்றலான தங்கம்மா என்பவரை மணந்தார்.
அருளம்பலம் தங்கம்மா தம்பதிகளுக்கு 1872ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 12ஆம் திகதி பாவலர் துரையப்பாபிள்ளை பிறந்தார். இதே ஆண்டு இதே மாதம் தான் ஆறுமுக நாவலரின் யாழ்ப்பாணச் சமய நிலை என்னும் பிரசுரமும் வெளி வந்தது.
ஆரம்பக் கல்வியைத் தெல்லிப்பழை ஆங்கில வித்தியாசாலையில் பெற்ற இவர் 1888ஆம் ஆண்டு மேற் படிப்புக்காக வட்டுக்கோட்டை செமினரியிலே (வட்டுக்கோட்டைச் சர்வசாத்திரக் கல்லூரி) சேர்ந்தார். (இவ்விடத்திலே வட்டுக்கோட்டைச் செமினறி பற்றி சிறிது சிந்திப்பதும் நல்லது)
19ஆம் நூற்றாண்டிலே உயர் நிலையில் ஆங்கிலக் கல்வியைப் புகட்டிய நிறுவனங்களில் வட்டுக்கோட்டைச் செமினறி முதன்மை வாய்ந்ததெனலாம். ஈழத்துப் புலமைப்

பாரம்பரியத்திற்கு ஒளி பாய்ச்சி ஓர் புதிய வீச்சினை ஏற்படுத்திய இந் நிறுவனத்திலே மாணக்கனாகச் சேர்ந்தமை அவரின் “நல்லூழ்” என்றே குறிப்பிடலாம். பிற் காலத்தில் பாவலர் துரையப்பாபிள்ளை அளப்பரிய சாதனைகளை ஆற்றுவதற்கான அத்திவாரம் இக் கல்லூரியிலேயே இடப்பட்டதெனலாம்.
அமெரிக்கா முதலிய தேசங்களில் பல்கலைக் கழகங்களில் உயர் பட்டம் பெற்ற ஆசிரியர் குழாமொன்று அக்காலத்திலே வட்டுக்கோட்டைச்செமினரியிலே பணியாற்றியது என்பதையும் மனங் கொள்ள வேண்டும்.
வைமன் கதிரைவேற்பிள்ளை, கரோல்விஸ்வநாதபிள்ளை, சி.வை. தாமோதரம்பிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை முதலியோரை உருவாக்கிய இக் கல்லூரியிலேயே துரையப்பா பிள்ளையும் கற்றார். ஆங்கிலம், ஆங்கிலஇலக்கியம், தமிழ்மொழி தமிழ் இலக்கியம், சமஸ்கிருதம், வரலாறு, வான சாஸ்த்திரம், தருக்கவியல் முதலானவை இக் கல்லூரிப் பாடத்திட்டத்திலே முக்கிய SLib பெற்றிருந்தன. கிறிஸ்த்தவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மிஷனரிமார் மிக உயர்ந்த நிலையில் முற் குறிப்பிட்ட பாடங்களையும் போதித்தனர். பிறப்பினாலே சைவரான துரையப்பாபிள்ளை இங்கு கல்வி கற்கும் காலத்திலேயே கிறிஸ்த்தவராகி தெயிலர் துரையப்பா பிள்ளையானார். இங்கு கல்வி கற்கும் பெரும்பாலானோர் கிறிஸ்த்தவத்தைத் தழுவியே தமது கல்வியைத் தொடர்ந்தனர். வட்டுக்கோட்டைச் செமினரியைப் பற்றி பாவலர் துரையப்பாபிள்ளை தமது யாழ்ப்பான சுதேசக் கும்மியிலே பின்வருமாறு கூறுகின்றார்.
யாழ்ப்பாணி கள்கல்வி தன்னிலோர் கால்மிக ஏற்ற மடைந் தாசி யாவார்க்குள் நாப்புக முமருங் கீர்த்திபெற் றகதை ஞால மறியாதோ சங்கமின்னே

Page 5
மிக்கநன் மைகள்வி ளங்கு மமெரிக்க மிஷன்முன்னர் தந்த செமினாரி தக்க வுயர்கல்வி நம்மவர்க் கீந்து தழைத்து வளர்ந்தது சங்கமின்னே.
ஆங்கிலஞ் செந்தமி ழாமிரு பாடையும் ஜயந்திரிபற ஆங்குனர்ந்து ஓங்கு புகழுறும் பண்டித ராப்ப்பலர் உச்ச நிலையுற்றார் சங்கமின்னே.
(சிந்தனைச்சோலை, பக்.32)
துரையப்பாபிள்ளையின் S.GibóOLD விருத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரியாக இக் காலத்தில் விளங்கும் வட்டுக்கோட்டைச் செமினரிக்கு முக்கியமானதோர் பங்குண்டு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளுவர், தான் கற்ற வட்டுக் கோட்டைச் செமினரி பற்றி அவர் கொண்டிருந்த கருத்தினை மேலே சுட்டிய பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.
இரண்டு ஆண்டுகள் வட்டுக்கோட்டைச் செமினறியிற் கல்வி கற்ற துரையப்பாபிள்ளை 1890ஆம் ஆண்டு கேம்பிரிஜ் உயர் நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் சித்தியெய்திய பின் சிறிது காலம் அரச சேவையிற் பணியாற்றி அதனைத் துறந்து பாணந்துறை தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் கல்விப் பின்னணியுடன் பாணந்துறைப் பாடசாலையில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியமையும் இவரது ஆளுமை விருத்திக்கு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டும் என்று கருதலாம். சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் விரவி வாழும் இப் பிரதேசத்திலே இவர் பணியாற்றியமையாற் குடா நாட்டுக்கு வெளியே உள்ள சமூகத்தினரின் செயற்பாடுகளையும் நன்கு கண்டறியும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்று எண்ணுவதில் தவறில்லை.

சிங்களவரோடு பறங்கியாம் வாலிபர் தேற அனந்தம் வசதியுள எங்களின் வாலிபர்க் கோவவ ரைப்போல இல்லை வசதிகள் சங்கமின்னே.
என்று பாட இவரது பாணந்துறை வாழ்க்கையும் உதவியிருக்கலாம்.
பாணந்துறையில் வகித்த ஆசிரியப் பணியைத் துறந்து t Jibus Tui மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியரானார், பாரதியின் ஆளுமையில் காசி வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கத்தினைப் போல கோலாப்பூர் வாழ்க்கையும் இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என நம்பலாம். இவரது நோக்கு நிலையில் பலவிதமான முற்போக்குச் சிந்தனைகளும் தோன்ற இவரது இந்திய வாழ்வு உதவியது என்பதைப்பேராசிரியர் க.கைலாசபதி உள்ளிட்ட பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். பாவலர் துரையப்பா பிள்ளையின் இந்திய வாழ்வு பற்றிப் பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடுவதை இங்கே சுட்டிக் காட்டுவது நலம்.
*பம்பாப் வாசம் அவருக்குப் பல வழிகளில் நன்மையாகவே அமைந்தது. இரு வருடங்கள் கோலாப்பூரில் பணியாற்றிய பின் பெல்காம் இங்கிலாந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு ஒரு வருடம் வசித்தார். தனது கல்வியை மேலும் விருத்தி செய்து கொண்ட அதேவேளையில் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாக பம்பாயிலும் அரசியல் - சமூக இலக்கியங்களில் உழைத்து வந்த பாலகங்காதர திலகர், கோபால்கிருஷ்ணகோகலே, தாதாபாய்நவரோஜி முதலியோரின் நடவடிக்கைகளைக் கவனித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாகக் கோலேயின் செல்வாக்கு அவர்மீது அதிகம் எனலாம்.”
(க. கைலாசபதி, ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ப.109)

Page 6
பிற்காலத்தில் பாவலர் துரையப்பாப்பிள்ளையின் சமூகச் சிந்தனை விரிவாக்கம் பெறவும், நாடளாவிய ரீதியிலே சீர்திருத்தத்தினை அவாவும் “இந்திய வாழ்வு” நிறைய உதவியிருக்கும் என்பதிற் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
தாயாரின் அழைப்பையேற்று 1898ம் ஆண்டு பம்பாயில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இவர் தெல்லிப்பழை ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அக்காலத்தில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்குக்கென விதிக்கப்பட்டிருந்த ஆசிரிய தராதரப் பரீட்சையிலே 1899ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். 1900s, b ஆண்டு தெல்லிப்பழை ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் அதிபராக நியமிக்கப்பட்டார்.
1901ஆம் ஆண்டு கீதரசமஞ்சரியை வெளியிட்டார். இக்காலத்திலேயே இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளியாகிய உதயதாரகைப் பத்திராதிபராக நியமிக்கப்பட்டார். சாதாரண பொதுமக்களை நோக்கி இலக்கியப் பணி ஆற்ற வேண்டும் என்ற உந்துதலை உதயதாரகைப் பத்திராதிபர் பதவியும் இவருக்கு வழங்கியிருக்கலாம்.
1909 இல் சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரியான தையல்நாயகியைத் திருமணஞ் செய்தார்.
1910 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரிமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தலைமையாசிரியர் பதவியைத் துறந்து அதே ஆண்டிலேயே மகாஜனக் 56ight flou ஸ்தாபிக்கின்றார்.
பாவலர் துரையப்பா பிள்ளையின் குன்றா உழைப்பாலும் குறையா ஊக்கத்தினாலும் மகாஜனக் கல்லூரி சிறப்புற வளர்ந்து உச்சநிலையை அடைந்தது.

1921 ஆம் ஆண்டு இந்துசாதனப் பத்திரிகையின் ஆங்கில உதவிப்பத்திராதிபராக நியமிக்கப்பட்ட இவர் 1924 இல் பிரதம பத்திராதிபரானார். 1926இல் சரஸ்வதி தமிழ் வித்தியா சாலையை நிறுவி நல்ல முறையிலே வளர்த்தெடுத்தார். பல்வேறு சாதனைகளையும் செய்த பாவலர் துரையப்பாபிள்ளை 1929 இல் இயற்கையெய்தினார்.
பாவலர் துரையப்பாபிள்ளையின் இலக்கிய நோக்கு நிலையையும் அவர் எவ்வாறு ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடியாக விளங்குகின்றார். என்பதையும் சற்று விரிவாக (5Tib&B6).TLb. இனிவருமிடங்களில் LT66), துரையப்பாபிள்ளையைப் பாவலர் என்றே குறிப்பிடுவோம்,
பாவலரின் உருவாக்கத்திற்கு ஊற்றுக்கால்களாக அமைந்தவற்றை உணர்ந்து கொள்வதற்காகவே அவரின் வாழ்வுத்தடம் பற்றிய செய்திகள் 6 LULDITE pિ(86o குறிப்பிடப்பட்டன.
பொதுவாகக் கவிதையிலே நவீனத்துவம் என்ற கருத்துநிலை பாரதியுடனேயே ஆரம்பிக்கப்படுகின்றது. பாவலரைவிடப் பத்து ஆண்டுகள் இளையவரான பாரதியார்
“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை, யெந்நாளுமழியாத
LDI856léog5'
எனத் தன் கவிதையைக் குறிப்பிடுகின்றார். பாரதியார் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதிய முன்னுரையையும் நவீன கவிதை பற்றிப் பேசுமிவ்விடத்திலே குறிப்பிடுவது பொருத்தமான தாயிருக்கும்.

Page 7
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மொட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற் காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோ ருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன்”
இம் முகவுரை பாரதியின் கவிதைக் கொள்கைப் பிரகடனமாக அமைகின்றதெனலாம்.
Urg கருதியவற்றை அவருக்குப் பத்தாண்டுகள் மூத்தவரான பாவலர் அவருக்குமுன்னதாகவே பெருமளவுக்குச் சிந்தித்துள்ளார் எனக் குறிப்பிடலாம்.
சமூகப் பார்வை கவிதையின் பாடுபொருளாக இடம் பெற்று இலகுவான மொழியிலே அது உலாவரத் தொடங்கிய காலகட்டத்தோடொட்டியே நவீன கவிதைக் கோட்பாடு ஆரம்பிக்கின்றதெனலாம்.
ஈழத்தைப் பொறுத்த வரையில் 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின்னர் சமூகப் பார்வையுள்ள இலக்கியங்கள் சில தோன்றியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனினும் அவை புராதன வடிவத்தையும் நெகிழ்ச்சியற்ற மொழியமைப் பையும் கொண்டிருந்தன. உதாரணமாக கோட்டுப் புராணம், தலா புராணம், கனகிபுராணம் முதலானவற்றைச் சுட்டலாம். இவற்றிலே சமூகச் சீர்கேடுகள் ஒரளவுக்குச் சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் அவற்றிலே எளிய பதம், எளிய நடை முதலானவற்றைக் காண்பது கடினம். பாவலரின் வருகையுடனேயே பொருளும் நடையும் நவீன கவிதை ஈழ நாட்டிலே தோன்றுகின்றதெனலாம்.

இவ்விடத்திலே பேராசிரியர் சி. தில்லைநாதன் குறிப்பிடும் கருத்தைச் சுட்டிக் காட்டுவது நலம்.
“சம காலச்சமூகத் தேவைகளையும் பிரச்சினைகளையும் பொது மக்களுக்குப் பொருள் விளங்கத் தக்கவாறு எடுத்துக் கூறிய வகையில் பாவலர் துரையப்பா பிள்ளையை ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றின் மைற் கல்லெனக் கொள்ளல் கூடும்.”
(நான்காவது அனைத்துலக தமிழாராய்சி மாநாடு சிறப்பு மலர் 1974)
ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றிலே பாவலர் பெறும் இடத்தினை நன்கு மதிப்பீடு செய்வதாக மேற் காட்டிய மேற்கோள் அமைகின்றது. பேராசிரியர் அவர்கள் குறிப்பிடும் மைற்கல் என்பதை நாம் முன்னோடி என்றே கொள்ளுகின்றோம்.
பாவலர் துரையப்பாபிள்ளையின் கருத்து நிலையை அவரது கவிதைகளினூடு தெளிவாகக் கண்டு கொள்ளலாம். அவர் இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கருத்துநிலை அல்லது நோக்கு நிலையே அவரின் கவிதைகளின் பாடு பொருளையும் வடிவத்தையும் தீர்மானித்தது எனலாம். இதனை அவரது யாழ்ப்பான சுவதேசக் கும்மியின் அவையடக்கம் மூலம் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.
தேசோப காரங் கருதியிக் கும்மியைச் செப்புகின் றேனாத லாலெவரும் லேசாய் விளங்க இலகு தமிழில் இயம்புவ தேநலம் சங்கமின்னே.
மிக்க அரும்பதத் தோடு புணர்ச்சி மிகுந்திடிற் கும்மி பொதுச் சனங்கட்(கு) எக்கால மும்விளங் காதத னால்நலம் ஏது வருமடி சங்கமின்னே.

Page 8
இவ்வவையடக்கத்திலே காணப்படும் “தேசோபாரங்கருதி” எவரும்லேசாய்விளங்க “பொதுசனங்கட்கு” முதலான தொடர்கள் மிகுந்த கவனிப்புக்குரியவையாகின்றன. கவிதையின் நோக்கம் சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை இவர் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்திருந்தார் என்பதையே மேற்காட்டிய சொற்றொடர்கள் புலப்படுத்துகின்றன. இக்கருத்தினை இவரது பாடல்கள் பலவற்றிலும் காணலாம். பாரதிக்குப் பத்தொன்பது வயதாயிருக்கும் பொழுது பாவலர் எழுதி வெளியிட்ட கீதரச மஞ்சரியிலேயும் மேற் குறிப்பிட்ட பண்புகளைக் காணலாம்.
பாரதியும் பெண் விடுதலைக் கும்மி பாடினான். கும்மியென்ற வடிவம் “பொது சனங்கள் மத்தியில’ நீண்ட நெடுங் காலமாகவே செல்வாக்குச் செலுத்தி வருகின்றதெனலாம். முத்துக்குமார கவிராசரின் ஞானக்கும்மியை நாவலர் இரண்டு தடவை அச்சிட்டு வெளியிட்டமையையும் இவ்விடத்திலே நினைவு கூர வேண்டும். தமது கருத்தினைக் காவிச் செல்லக் கும்மியென்ற இலக்கிய வடிவம் உகந்தது என்பதைப் பாவலர் உணர்ந்திருந்தார். உதயதாரகைப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் இவர் இருந்தமையால் பொதுசனத்தை நோக்கிய இலக்கியம் கும்மி என்பதையும் உணர்ந்திருப்பார் என நம்பலாம். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே உதயதாரகைப் பத்திரிகையில் அவ்வப்போது வெவ்வேறு புலவர்களாற் பாடப்பட்ட கும்மிப்பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்மையையும் அவதானிக்கலாம். இக் கும்மிப்பாடல்கள் பொது மக்கள் மத்தியிற் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டும் கேட்டும் அறியும் வாய்ப்பும் பாவலருக்குக் கிட்டியிருக்கும். சமயச் சார்புடன் எழுதப்பட்ட கும்மிப் பாடல் வடிவத்தினைச் சமூகச் சார்புக்கு மடைமாற்றியே யாழ்ப்பான சுவதேசக் கும்மியைப் பாடினார். ஆடலும் பாடலும் இணைந்து வரும் கும்மிப்பாடல் சமூகத்தை மிக விரைவாகச் சென்றடையும் என்பதிற் கருத்து வேறுபாடிற்கு இடமில்லையெனலாம்.
10

பாவலர் கிறிஸ்தவராக இருந்த காலத்திலேயே கீதரச மஞ்சரி வெளியானது. ஏனினும் ஒரு மதத்தையோ, ஒரு கடவுளையோ சாராது பொதுநோக்கு நிலையினின்று பிறழாமல் இவர் கீதரச மஞ்சரியைத் தந்தார். இதன் காப்புச் செய்யுள் கூடப் பொதுவான கடவுட் காப்பாகவே அமைகின்றதெனலாம்,
வேத மருளும் விமலா அடியேனிக் கீதரச மஞ்சரியாங் கீர்த்தனத்தைப் - போதமுறப் பாடுதற்கென் னாவிற் பரிவா யெழுந்தருளி நீடுவரந் தாராய் நிலைத்து,
அழகான வெண்பாக்களும் அருமையான கட்டளைக் கலித்துறைகளும் பாடியுள்ள பாவலர் எல்லா வகையான பIட்புக்களிலும் பாடல் செய்யும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் என்பதில் ஐயமில்லை. எனினும் இவர் கீர்த்தனை யைத் தேர்ந்தெடுத்தமை பொதுமக்கட்சார்பு நோக்கியே எனலாம்.
கீதரச மஞ்சரியின் பொருட்பரப்பினை இரண்டு வகை யிலே பகுத்து நோக்கலாம்.
ஒன்று தனி மனிதனை நோக்கிப் பாடியவை, இரண்டு சமூகத்தை நோக்கிப் பாடியவை.
இந்த இரண்டு பகுப்பும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுக் காணப்படுகின்றபோதிலும், பாவலரின் நோக்கு நிலையைத் துல்லியமாகக் கண்டறிய இவ்வாறு பகுத்து நோக்குவது அவசியமாகின்றது.
உண்மை, பொறுமை, இன்சொல், தாழ்மை, வீண்செலவு முதலான கீர்த்தனைகள் பெருமளவுக்கு தனிமனிதனை நோக்கிச் சொல்லப்பட்டவையாகவே காணப்படுகின்றன. தனிமனிதனின் குணவியல்புகள் சமூகத்தைப் பாதிக்கும் வகையினை நன்குணர்ந்து போலும் இத்தகைய கீர்த்தனங்களைப் பாடினார்
11

Page 9
எனலாம், தனிமனித ஒழுகலாறு சமூக ஒழுகலாறாகப் பரிமாணம் பெறுவதைப் பாவலர் நன்குணர்ந்திருந்தார் எனலாம்.
சீதன வழக்கம், தொழிலின் மான்மியம், சூதாட்டம், ஜீவகாருண்யம், பெண்கல்வி, நகை போடுவதால் வரும் நஷ்டம், தமிழ் மாதின் பிரலாபம், தமிழ்ப்பாஷையின் மகத்துவம், ஆங்கிலக் கல்வி அவசியம் முதலானவை தமிழ்ச் சமுதாயத்தை நோக்கிப் பாடியவையாகக் கொள்ளக்கூடியவை.
அக்காலச் சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய செய்தி களைத் தொகுத்துக் கூறப் பாவலர் முயன்றார். அவரை அறியாமலே இத்தகையதொரு பகுப்பு அதனுள் அமைந்து விட்டதெனலாம்.
பாரம்பரியமாக நிலவி வந்த ஒழுக்கக் கோட்பாடுகளை இலகு தமிழில் கூறிய பாவலர் அக்காலச் J¢ህpå மாற்றத்தின்விளைவாக நிகழ்ந்த மாற்றங்களையும் அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் சுட்டிக் காட்டித் தனது கருத்து நிலையையும் முன் வைத்தமை அவரை ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றின் முன்னோடியாகக் ά5535 வைக்கின்றது எனலாம்.
கீதரச மஞ்சரியில் இடம்பெறும் தமிழ்மாதின் பிரலாபம்,
தமிழ்ப்பாஷையின் மகத்துவம் முதலான கீர்த்தனைகள் அவரின் நோக்கு நிலையை நன்கு புலப்படுத்துகின்றன. தாய்மொழியைப் புறக்கணித்து, அதில் என்ன இருக்கின்றது என்று இழித்து உரைத்து, ஆங்கில நாகரிகத்தின் பால் ஈர்க்கப்பட்ட ஒரு சமூகச்சூழலைக் கண்ணுற்றே மனம் நொந்து இக்கீர்த்தனை களை இவர் பாடினார் எனலாம். பாரதியாரின் தமிழ்த்தாய் என்னும் பகுதியில் வரும்
“மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமீசை யோங்கும்” என வரும் பாடல்களின் தொனிப் பொருளைப் பாரதிக்குமுன்னரே பாவலர் கையாண்டுள்ளார்.
12

தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் முதலானவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய பாவலர் ஆங்கிலக் கல்வி யின் அவசியத்தையும் கூறத் தவறவில்லை. தமிழைப் புறக்கணித்து, இகழ்ந்து ஆங்கிலத்தைப் புகழ்ந்து வரவேற்கும் தன்மையையே கண்டித்தார் என்பதையும் மனங் கொள்ள வேண்டும். தமிழ்ப் பாரம்பரிய உறவுகள்ோடும் உணர்வுகளோடும் ஆங்கிலக்கல்வியும் அவசியம் என்பதை உணர்ந்தமையின் வெளிப்பாடாகவே LD&BIT20Isis கல்லூரியின் தொடக்கமும் அமைகின்றது எனலாம்.
UIT6).j6t 5LD5) கவிதைக்குப் பாடுபொருளாகக் கொண்டவற்றைப் பின்வருமாறு பாகுபடுத்திக் கொள்ளலாம், கல்வி, தொழில், பண்பாடு, சுதேசியம், அரசியல் முதலானவை, இவை யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்திற்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதற்கும் ஏதோ 9 (5 வகையிற் பொருந்துவனவாக அமைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.
சாதி, சீதனம், சங்கீத மகத்துவம், தாய்தந்தை பேணல் முதலான விடயங்கள் யாழ்ப்பாணச் சமூகத்திற்கே சிறப்பாகப் பொருந்தக்கூடியவை.
பாவலர் கல்வி பற்றிக் கொண்டிருந்த கருத்தினை முன்னரும் குறிப்பிட்டோம். தமிழ் மக்கள் பண்டைய தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் ஆங்கிலத்தையும் கற்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகவே இருந்தார்.
பாவலரின் சக்கரவர்த்தி பாரிற் - கம்பரே பகரிராம காதை தன்னைப் பாடும் - நண்பரே மதுரநிறை வெண்பா தன்னில் மான்மிய - முற்றிடும் மாசில் புகழேந்தி பாடல் மனமாய்க் கற்றிடும் ஒளவையைப்போல் அன்பின் பாடல் ஆர்செய்தார் - பூவில் அத்தை நன்றாய்க் கற்றுவையும் அனுதினமும் - நாவில்
13

Page 10
இவ்வாறு தமிழ்க்கல்விக்கு ஊக்கம் கொடுத்த பாவலர் வட்டுக்கோட்டை செமினரி பற்றிப்பாடிய பாடல்களையும் இங்கே சுட்டிக் காட்டுவது அவரின் கல்விக் கொள்கையைக் கண்டு கொள்ள உதவும் எனலாம்.
யாழ்ப்பாணி கள்கல்வி தன்னிலோர் கால்மிக ஏற்ற மடைந்தாசி யாவர்க்குள் நாப்புக முமருங் கீர்த்திபெற் றகதை ஞால மறியாதோ சங்கமின்னே.
மிக்கநன் மைகள்வி ளங்கு மமெரிக்க மிஷன் முன்னர் வந்த செமினாரி தக்க வுயர்கல்வி நம்மவர்க் கீந்து தழைத்து வளர்ந்தது சங்கமின்னே.
வட்டு நகர்ச்செமி னாரி யிறந்தபின் வாகா முயர்கல்வி மாகழுதை கட்டெறும் பானது போல மிகவுங் கரைந்து குறைந்தது சங்கமின்னே,
ஆங்கிலஞ் செந்தமி ழாமிரு பாடையும் ஜயந் திரிபற ஆங்குனர்ந்து ஓங்கு புகழுறும் பண்டித ராய்ப்பலர் உச்ச நிலையுற்றார் சங்கமின்னே.
வட்டுக்கோட்டைச் செயினாரியினால் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வியும் ஆங்கிலக்கல்வியும் வளர்ச்சி கண்டது என்பதைப் பாவலர் திடமாக எடுத்துரைக்கின்றார். யாழ்ப்பாணத் தமிழ் அறிஞர்கள் உலகப்புகழ் பெறுவதற்கு வட்டுக்கோட்டைச் செமினரி உந்து விசையாக அமைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
14

தமிழையும் ஆங்கிலத்தையும் சமமாகக் கற்க வேண்டும் என்பதே பாவலரின் மொழிக்கல்வி பற்றிய கருத்தாக இருந்தது. தமிழைப்புறந்தள்ளி ஆங்கிலத்தைப் போற்றுவதையே அவர் வெறுத்தார். எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு இரண்டு மொழிகளையும் கற்றிருக்க வேண்டுமென்று எடுத்துரைத்த பாவலர் பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் வற்புறுத்தத் தவறவில்லை. எமது தேசத்திற்கு உயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழகமொன்று அமைய வேண்டுமென்று விரும்பினார். இலக்கிய இலக்கணக் கல்வியோடு தொழிற்கல்வி, விஞ்ஞானக்கல்வி முதலானவற்றின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். யாழ்ப்பான கவதேசக் கும்மியிலும், எங்கள் தேசறிலையிலும் இவரது கல்விக் கொள்கைகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எமது தேசத்தின் உயர் கல்வி பற்றித் துரநோக்கோடு முதன்முதலிற் சிந்தித்த ஈழத்துத் தமிழ்க் அவிஞர் பாவலர் அவர்களே எனலாம்.
யாழ்ப்பாணத்தவர்கள் கைத்தொழில், கமத்தொழில் முதலானவற்றிலே அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திய LJT66s சிற்பம், சித்திரம் ஆதியாம் கலைத்தொழில்களையும் பேணவேண்டுமென்று வலியுறுத்தினார். இவற்றோடு மேலைப்புலத்தவரின் தொழில் நுட்பங்களையும் அலர் நிந்து, கற்றுத்தேர்ந்து நம்மவர் சிறப்பெய்த வேண்டுமென்றும் அவாவினார்.
“சித்திர வேலைப் புகைப்படஞ் செய்தல் திகழ்ந்திடு மின்சார எஞ்சினியர் விந்தை யுடனிவை போன்ற கலைத் தொழில் வேண்டுமெமக்கடி சங்கமின்னே.
செல்வ மிடமேவல் சேர்ந்தவர் புத்திரர் சீமையப் பான்முத லாமிடங்கள் துல்லிய மாய்ச்சென்று வேலை பழகல் சுகிர்த மிகவடி சங்கமின்னே.
15

Page 11
ஒதும் நெருப்புக்குச் சாணி சவர்க்காரம் ஊசி கண் ணாடியி வைகள்செயும் மாதிரியைக் கற்றிங் கேதொழிற் சாலைகள் வந்து திறவடி சங்கமின்னே.”
என்பன முதலான பல கவிதைகளைப் பாவலர் பாடியுள்ளார். சுதேசியப் பொருட்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று குரல் கொடுத்த பாவலர் நமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு நவீன தொழில் நுட்பஞ் சார்ந்த துறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவாவினார் என்பதை மேற் காட்டிய கவிதைகளினூடு கண்டு கொள்ளலாம். அக்காலத்து ஈழத்துக் கவிஞர்கள் சிந்திக்காத 6) விடயங்களைப் பாவலர் சிந்தித்தமை அவரை ஈழத்துத் தமிழ்க் கவிதை முன்னோடியாகக் காட்டி நிற்கின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்திலே புரையோடிப் போயிருந்த சாதிப் பிரச்சினை, சீதனப் பிரச்சினை முதலானவற்றைக் கவிதையின் பாடுபொருளாகக் கொண்ட ஈழத்து முதற் கவிஞர் இவரேயெனலாம். சமூகச் சீர்திருத்தத்திற்கு, மாற்றத்திற்கு கவிதையே சிறந்த ஊடகம் என்பதைப் பாவலர் முழுமையாக நம்பினார் என்பதைப் பின்வரும் கவிதைகளினூடு காணலாம்.
தாயினும் புத்திரன் தான்சாதி மானெனச் சாற்றிப் பெருமைகொள் எரிந்நாட்டில் நேயம் பெருகிநம் சாதியின் ஐக்கியம் நீடுதல் கூடுமோ சங்கமின்னே.
மிக்க பெருந்தொகைச் சீதன மில்லாது மேதினி யில்மண வாழ்விலராய்த் துக்க முறும் பெண்கள் யாழ்ப்பாண நாட்டிற் றொகையா யிருக்கிறார் சங்கமின்னே.
16

யாழ்ப்பாணச் சமூகத்தில் வேரோடி விழுது விட்டுப் பலமாகப் படர்ந்திருந்த சாதி, சீதனம் முதலானவற்றைக் கண்டித்தது போலவே மதுப்பாவனையையும் வன்மையாகக் கண்டித்தார். மதுவிலக்குப் பற்றி பாவலர் அவர்கள் எழுதியமை பற்றிப் பேராசிரியர் க.கைலாசபதி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“பலவழிகளில் நாவலர் இலட்சியங்களைப் பின்பற்றியவர் எனத்தகும் பாவலரவர்கள் பலவாண்டுகளாகவே மதுவிலக்குப் பிரசாரத்தில் முன்னின்றுழைத்தார். வசனத்திலும் பாட்டிலும் மதுவிலக்கு சம்பந்தமாக நிறைய எழுதினார். . 1907 ஆம் வருடம் CeylonNationalReview என்னும் சஞ்சிகையில் Jafna PastandPresent Gaigi sapals Gogu gai கட்டுரையிலும் மேற்கு நாட்டு மதுபானங்களும் சாராயமும் ஏனைய குடிவகைகளும் எமது சமுதாயத்தில் வந்து புகுந்துள்ளமையைப் பற்றிக் கடிந்துரைக்கின்றார்.”
நாவலரவர்கள் சமய நோக்கிலே மதுப்பழக்கத்தைக் கண்டிக்கப் பாவலரவர்கள் சமூகநோக்கிலே கண்டிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இலங்கை முழுவதும் தீவிரமாகப் பிரசாரஞ் செய்யப்பட்ட மது ஒழிப்பினை யாழ்ப்பாணத்தில் பாவலர் கவிதையினூடு செய்தமை விதந்து குறிப்பிடவேண்டியது
எங்கள்தே சத்திற் குடியால் வருந்தீமை
யிம்மட் டென்னவிங் கியலாது
சங்கங்கள் நாட்டியித் தீமையை முற்றும்
தடுத்திடு வாயடி சங்கமின்னே.
மதுவிலக்கினைத் தனித்து நின்று ஒழிப்பதிலும் பார்க்கச் சங்கம் அமைத்து நிறுவனமயப்படுத்திச் செயற்படவேண்டும் எனப்பாவலர் குறிப்பிடுவது மிகுந்த கவனிப்புக்குரியதாகின்றது. பொதுவான சில காரியங்களைச் செய்வதற்கு நிறுவனமயப் பட்ட செயற்பாட்டின் அவசியத்தைப் பாவலர் நன்குணர்ந்திருந்தார். ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வென்றெடுக்க உபாத்திமார் சங்கம் நிறுவவேண்டுமென்று கூறி,
17

Page 12
நிறுவிச் செயற்பட்டவர் என்பதும் இவ்விடத்திலே நினைவு &ng 3LT6)gs.
பாவலரின் கவிதைகள் பற்றிப் பேராசிரியர் கா, சிவத்தம்பி குறிப்பிடுவதை இவ்விடத்திலே சுட்டுவது நலம்
*இவரது பாடல்கள் பெரும்பாலும் சமூகக் குறைபாடுகளை அகற்றுவதற்கான இலக்கிய முயற்சிகளகவே உள்ளன. சிந்தனைச் சோலையில் இடம்பெறும் இவரது கவிதைகளுள் சிவமணிமாலை தவிர்ந்த மற்றயவை யாவுமே மேலே குறிப்பிடப்பட்டது போன்று சமூகசீர்திருத்தம் சம்பந்தப்பட்டவையே”
வெகுசன நிலையில் மக்கள் பாடல்களை இசைத்துப் பாட வேண்டும் என்பதற்காகவே இவர் தமது ஆக்கங்களைக் “கீதங்களாக" இயற்றினார். இலக்கியத்தைக் கற்றறிந்தோரது ஆர்வ ஈடுபாடாக மாத்திரம் கொள்ளாது சாதாரண மக்களது பாடற் பொருளாகவும் கொள்ள இவர் முனைந்தமை இவரை இக்காலப் புலவர்கள் uGodfafasipuid வேறுபடுத்திக் காட்டுகின்றது.
(பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு மலர் ப-48)
பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களின் மேற்காட்டிய மேற்கோள் பாவலரை ஈழத்துத் தமிழ்க் கவிதை முன்னோடி என்ற கருத்தினை அரண் செய்வதாக அமைகின்றது.
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றிலே பாவலர் நிறுவிய மகாஜனக் கல்லூரி மாணக்கர் பரம்பரைக்கு அழியாததோர் இடமுண்டு. பாரதியின் நவகவிதைக் கனவினை நனவாக்கிய LD5IT856 உருத்திரமூர்த்தி முதல் 6issiputtg6) T60p. JT85 வந்துகொண்டிருக்கும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் பலர் மகாஜனாவினூடு உருவாகியவர்கள் என்பதையும் இவ்விடத்திற் குறிப்பிட்டேயாக வேண்டும். சேரன், ஆதவன், புராந்தகன்,
18

இளவாலை விஜேந்திரன், மாவை நித்தியானந்தன், அரவி, பாலசூரியன், ஊர்வசி, ஒளவை முதலான பல கவிஞர்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். (நமக்குத் தெரிய வந்த பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்)
பாவலரின் பன்முகப் பணிகளிற் தலையாயதாகத் தலை நிமிர்ந்து நிற்கும் மகாஜனக் கல்லூரி தந்த கவிஞர் பரம்பரை தனித்த ஓர் ஆய்வுக்குரியது.
ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதை முன்னோடியாகத் திகழ்ந்த பாவலரின் ஊற்று மகாஜனக் கல்லூரியினூடு பெருகிப் பாய்ந்த தன்மையை முற்சுட்டிய கவிஞர்களினூடு கண்டு கொள்ளலாம்.
மகாஜனக் கல்லூரி தந்த மானுடநேயக் கவிஞன் கலாநிதி சண்முகலிங்கனின் கூற்றுடன் எனது நினைவுரையை நிறைவு செய்யலாம் என்று எண்ணுறுகின்றேன்.
*சொல்லோடு மட்டும் நின்றுவிடாது செயல் வடிவம் பெற்ற பாவலரின் சிந்தனைகளில் முக்கியமானது மகாஜனக் கல்லூரி. அவர் நிறுவிய மகாஜனக் கல்லூரியின் வழியாக அவரது சிந்தனையும் செயலும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்வது” மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் -1998)
19

Page 13
துணைநால்கள்
1) துரையப்பாபிள்ளை தெ.அ. பாவலர் சிந்தனைச் சோலை மகாஜனக் கல்லூரி வெளியீடு 1960
2) கைலாசபதி க. ஈழத்து இலக்கிய முன்னோடிகள் மக்கள் வெளியீடு 1986
3) சிவநேசச் செல்வன் அ. (மலராசிரியர்) பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டுவிழா மலர் - மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை 1972
4) சண்முகலிங்கன் நா. மகாஜனக்கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் (நினைவுப் பேருரை) மகாஜனக் கல்லூரி 1988
5) பூலோகசிங்கம் பொ. (பதி) அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர் 1974
6) ஜெபநேசன் எஸ். இலங்கையிலே பத்தொன்பதாம்
நூற்றாண்டு தமிழர் சிந்தனை வளர்ச்சி யாழ்ப்பாணக் கல்லூரி. வட்டுக்கோட்டை 1992
20


Page 14
8Lஜய மாஜன ஜயசுப ஐயஜய மாஜன ஐயகே
கல்லூரித் தாபகர் கல்வி துரையப் பாபுகழ் துதிப்ே மாண்புறு மகனாம் மகாஜி ஜயரத் தினம் பணி நிை
வில்லுறு விளக்கு வியன் விவாங்கிடு தாமரை புடை உனைநீ அறியென் றுணு நினைவுறு தொண்டிற் கம் L60)ETLD6) JITEs86u (LLC3
வெல்லுக வெல்லுக மாஜி வெல்லுக மாஜன தலை6 நல்காய் நல்காப் நல்காய நல்லறம் பொருளின்பம் ர வெல்லுக மாஜன மாதா
டென்ரா கொம்பியூட்டர் பிறிண்ட்

க் கீதம்
என்ற மெட்டு)
LDTTEIT
க் கலைஞன் போம் ஜன சிற்பி னவோம்.
மறை எழுத்து போம்
JË5)LLI
2ண்டு
வாம்.
ஜன மாதா
ħjili
புலவர் நா. சிவபாதசுந்தரனார்
, மயிலனி, சுன்னாகம்