கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொழியும் மரபும்

Page 1

قام في ኃሣ”

Page 2

மொழியும் மரபும்

Page 3

(IDIui IDJI î.
செல்வராசக் 52/r; 力röm。 CrToLib
தென்புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
அருள் நிலையம்
12, உஸ்மான் ரோடு, சென்னை-17.

Page 4
முதற்பதிப்பு: 1967, பதிப்புரிமை பெற்றது.
விலை ரூபாய் இரண்டு
செளந்தரா பிரிண்டர்ஸ் , சென்னை-17.

பதிப்புரை
வரலாற்றுக்கு எட்டாத காலம் என இதுவரை பல ராலும் கருதப்பட்டுவந்த தொல் பழந்தமிழகத்தின் வரலாற்றினை நுணுகி ஆய்ந்து பிறர் எவரும் கண்டு கொள்ளாத தனிச் சான்றுகளைக் கண்டு தெளிந்து நிறு விய பெருமை பேரறிஞரும் பன்மொழிப் புலவருமான தென்புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை அவர்களையே சாரும்.
அவர்கள் ஆராயாத துறையே இல்லை எனலாம்.
மொழித்துறையில் அவர்கள் கண்ட பேருண்மை களையும் மொழியின் மரபினையும் அவர்கள் இந்நூலில் விளக்குகின்றர்கள்.
பயன் சிறந்த, இந்நூலினை காங்கள் மிகுந்த பெருமிதத்துடன் வெளியிடுகின்ருேம்.
ஈழத்துத் தமிழ் மக்களும், தமிழகத்துப் பெருமக் களும் இதற்குப் பேராதரவு தந்து பயன்பெறுவார்கள் என்ற கம்பிக்கை உடையோம் .
இங்ங்ணம்
அருள் நிலையத்தார்.

Page 5
கன்றே செய்க
இன்றே செய்க!

தனித்தமிழ் நடைக்கு அடிகோலி, தமிழின் தூய்மை நலத்தினைப் பேரைக் காத்த தவத்திரு. மறைமலையடிகளார்க்கு இந்நூல் காணிக்கை.

Page 6
உள்ளுறை
மொழியும் மரபும் தொல்காப்பியமும் அகத்தியமும் மரபு என்பது யாது ?
தனித்தமிழும் நடைமுறைத் தமிழ்
இயக்கமும்
புதிய இலக்கணம் வேண்டும் ! *செய்யும்’ எனும் கிளவி வரலாறு உலகம் அளங்த தமிழ் இஞ்சி மொழி மரபு விளக்கம்

மொழியும் மரபும்
மக்கள் தம் உள்ளக் கருத்தினைத் தெளிவாக வெளியிடுவதற்குக் கருவியாயமைந்த பேச்சொலித் தொகுதியே மொழி எனலாம். உள்ளத்தே எழுகின்ற சிந்தனைத் தொடர்களைப் பொருள் குறிக்கும் வகையில் ஒலித்தொடராகவோ சொற்றெடராகவோ உருவாக்கிப் பிறருக்குத் தெரிவிப்பதே மொழியாகும்.
உயிரினங்களுள்ளே ஆறறிவு படைத்தவனுன மனிதனே சிறப்பு வாய்ந்தவனுக விளங்குகின்றன். அவனுக்குப் பிற உயிர்களுக்கு இல்லாத பகுத்தறிவு இருக்கின்றது. அதன் பயகை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளாலும் வாழ்க்கையில் உணர்ந்து தெரிந்து கொண்டனவற்றை யெல்லாம் அவன் தனித்தனியாகப் பிரித் துணர்ந்து, மனத்திலே பதியவைத்தும், தொடர்புறுத்திச் சிந்தனை செய்தும், பேசுகின்ற தனி ஆற்றல் உடையவனுய்த் திகழுகின் ருன். அந்த ஆற்றல் பிற உயிரினங்களுக்கு இல்லை.

Page 7
O
மொழியும் சிந்தனையும்
பேச்சுக்கு - மொழிக்கு - சிக்தனையே அடிப்படை. யென்பது மறுக்கமுடியாத உண்மை. சிந்தனையும் மொழியும் எப்பொழுதும் இணைக்தே செல்லுகின்றன. மொழி தோன்றுவதற்குச் சிந்தனையே காரணம் எனக் கூறுவது தவற காது. உண்மையில், தோன்றிய சிந்தனை வளர்வதற்கும் மொழியே காரணமாக அமை கின்றது. ஆங்கிலக் கவிஞரான செல்லி என்பார், * கடவுள் மொழியை அளித்தார். மொழி சிக் த2னயை அளித்தது” என்று கூறுகிறர். எனினும், மொழி திடீரெனக் கடவுளாற் படைத்தளிக்கப்பட்டதொரு பொருளன்று. மொழி மனிதரின் படைப்பு என்பது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். பல நூற்றண்டு களாக மனிதன் சிந்தனை செய்து வந்ததால் ஏற்பட்ட வி2ளவு அது. செவி வாயிலாகக் கேட்ட ஒலிகளை யெல்லாம் பகுப்புணர்வுடன் பயின்று, வேண்டிய வேண்டிய வேளைகளில் அவற்றை அறிவோடு பயன் படுத்திக் கொள்ளும் தனி ஆற்றல் மனிதனுக்கு மட்டும் அமைந்துள்ளது. அந்தத் தனியாற்றலே அவன் மொழியினை ஆக்கி வளர்ப்பதற்குக் காரண மாக அமைவதாயிற்று.
கிரேக்க மொழியிலே, 'சிந்திக்க முடியாதவை" என்ற பொருளைத் தருகின்ற சொல்லொன்றே விலங்கு களுக்குப் பெயராய் அமைந்துள்ளது. சிந்தனை செ ய் யா ம ற் பேசமுடியாது. மன்னும் - சிந்திக்கும் திறகுகிய பகுத்தறிவுதான் மனிதனுக்குத் தனிச் சிறப்பு அளிக்கின்றது. விலங்குகளுக்கோ மக்களைப் போல் - மன்னும் - சிக்திக்கும் ஆற்றல் இல்லை. எனவே, அவைகள் உண்டாக்குன்ற ஒலிகளை மொழி எனக்

11
கொள்வதும் சாலாது. ஆகவே, அவைகளுக்கு மொழி யும் இல்லை எனலாம்.
விலங்கு மொழி
'உயிரினங்களுக்கும் ஒரு வகை மொழி உள்ளது" என்பது மேல்ாகாட்டு அறிஞர் சிலரது கருத்தாகும். அந்தக் கொள்கை முற்றிலும் தவறனதன்று. சில வகைப்பட்ட ஒலிவேறுபாடுகளால் உணர்ச்சிகளை வெளியிடுகின்ற மொழிதான் உயிரினங்களின் மொழி - விலங்கு மொழி - எனலாம். விலங்குகளும் தமக்கு உண்டாகின்ற - பசி, அச்சம், அன்பு, காதல் முதலாம் - உணர்ச்சிகளை ஒலி வாயிலாகவே வெளியிடுகின்ற மையை யாம் காண்கின்றேம். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணர்ச்சியொலி ஒ ன் று தா ன் தெரியும். அன்வைகள் எழுப்புகின்ற ஒலிகள் சிந்தனையின் பயணுக எழாதவையாதலின் மொழி எனச் சிறப்பித் துக் கூறுதல் பொருத்தமாகத் தோன்றவில்லை.
விலங்குகளுக்குச் சிந்திக்கும் ஆற்றல் சிறிதும் இல்லை யென்றும் கூறிவிட முடியாது. மக்களைப் போலச் சிந்திக்கும் ஆற்றல் இல்லை எனலாம். தொடர்ச்சியாகச் சிந்திக்கும் ஆற்றலும், சிந்தித்தன வற்றைத் தெளிவாக வெளியிடும் ஆற்றலும் அவை களுக்கு இல்லை என்பதே தகுதியாகும். அவை, தமக்கு இயற்கையாயமைந்த ஒருவகை உணர்ச்சியினுல் இத் தகைய உணர்ச்சிகள் சிலவற்றைவெளியிடுகின்றனவே யன்றி, தொடர்ந்தெழுந்த சித்தனையின் பயணுக அவ்வொலிகளை எழுப்பவில்லை. அல்லாமலும் விலங்கு களுக்குள்ளே எவ்வளவு சீர்மைநிலை அடைந்தவையா யினுஞ்சரி பேசும் ஆற்றல் அற்றனவாகவே உள்ளன.

Page 8
12
இக்காரணத்தினலேதான் அவைகளை 'வாயில்லாப் பிற வி” “ஊமைப் பிறவி" எனக் குறிப்பிடுகிருேம்,
விலங்கு மொழியானது என்றும் வேறுபாடு அடையாததாய் - பெருக்கமடையாததாய் - வளர்ச்சி யுறத தாய் - தோன்றிய நாளில் இருந்தது போலவே இன்னும் இருக்கக் காண்கின்றேம். மேலும், விலங்கு மொழியானது விலங்குகள் யாவற்றினுக்கும் தனித் தனியே இயற்கையாக அமைந்ததாகும். மக்கள் மொழியோ ஒரு வ ரிட மிரு ந் து மற்றவர் கற்க, கற்பதனுல் - படிப்படியாக - வளர்ந்து வருவதாகும். மனிதனுக்கு (விலங்குகள் பறவைகள் எழுப்புகின்ற உணர்ச்சியொலியுடன் மேலும் மூன்றுவகையான ஒலிகள் (போலி ஒலி, குறிப்பொலி, சுட்டொலி) கூடுதலாகத் தெரியும். அதனலேதான் மனிதனுடைய மொழி வெகு நாகரிகமாக வளர்ந்து செம்மை பெற்று வளர்கின்றது.
ஒலியும் பேச்சும்
காற்றின் இயக்கத்தாலும் பொருள்கள் ஒன்றுட
னென்று உராய்வதாலும் ஒலி பிறக்கின்றது. அவ் வொலிக்கு இயல்பாகப் பொருள் இல்லை. அவ்வொலி
யினைப் பொருள் உணர்த்துகின்ற அடையாளமாகக்
கொண்டதே மொ ழி யா கும். காற்றியக்கத்தினை
வெள்ளிடையியங்குவதெனவும், உயிரினங்களின் வாய்
வழியியங்குவ தனவும் இரு வகைப்படுத்திக் கூறுவ
தும் உண்டு. இவற்றுள், உயிரினங்களின் வாய் வழியியங்குவதால் எழுகின்ற ஒலிகளே பெரும்பாலும் மொழிக்குக் கருவியாய் அமைகின்றன.

13
பெயரீடெல்லாம் வாயினுற் பேசுவதாலாகிய ஒலியினுல் உண்டாவனவாகும். இந்தக் 'குரல்" ஒலியானது, வாயுவைத் தொண்டையின் நாளங்கள் வழியாகத் தொனித் தெழச்செய்வதனுலேயே பிறக் கின்றது. இங்ங்ணம் தெளிவுபடப் பிறக்கும் குரல் ஒலியே பேச்சு எனப்படும். தெளிவும் உறுதியுமற்ற முனகல் அலறல் ஆகிய ஒலிகள் பேச்சு வகையைச் சார்ந்தன வல்ல. அதனை உணர்ந்தே நன்னூலாசிரிய ரான பவணந்தி முனிவர்.
“மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி எழுத்து.” என்று கூறினர்.
"முற்கு வீளை முதலியவற்றிற்கு முதற்காரண மாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலி எழுத்தா காது. மொழிக்கு முதற் காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியே எழுத்தாகும்” என்பது அவர் கருத்தாகும்.
பேச்சுக்குக் காரணமாயிருப்பது "குரல்" ஒலி யென்று கண்டுகொண்டோம். ஒலி எனப் படுவது காற்றில் ஏற்படுகின்ற ஒரு வகைத் துடிப்பாகும். அதனைச் செவிவாயிலாகவே யாம் உணருதல் கூடும். *செவி தவிர்ந்த மற்றைய பொறிகளை அது தாக்குவதா காது. அதற்கு மணம், சுவை, நிறம், உருவம், பருமன் யாதுமில்லை; அது செவிக்காக மட்டும் அமைந்த தொன்று, மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள "கேட்கும் ஆற்றல்” தான் பேச்சின் தொடக்கம் எனலாம். செவிகள் இல்லாவிட்டால் பேச்சும் இல்லை. *செவிடர்களாய்ப் பிறந்த குழந்தைகள் சிறந்த முறை களைக் கையாண்டு கற்பிக்காவிட்டால், பேசமாட்டாக

Page 9
4
மனிதன் பேசுவதற்கென முன்னடியே ஒர் உறுப்பு அமைக்கப்பட்டிருக்கவேண்டுமேல், அது குரற் செப்பு (Larynx) மன்று; காக்கு மன்று; முக்கு மன்று: செவியேயாகும்.
ஒலிகளின் மூலமாய் எழுகின்ற பேச்சிலே சந்தம், இன்னிசை, விரைவு, எடுத்தல், படுத்தல் முதலிய பல காரியங்கள் அமைந்துள்ளன. பேச்சு மொழியில் உயிருண்டு; வீரமுண்டு; அபிநயமுண்டு; கடுமை யுண்டு; பரிகாசமுண்டு; கோபஞ் சார்ந்தமுண்டு; இவை போல்வன பல, எவர்க்கும் எளிதிற் புலனுகுமாறு, பேச்சில் அடங்கி வருவன. பேச்சே மனிதனின் உட்கருத்தையும் மனநிலையையும் துலக்கமாக எடுத் துக்காட்டுகின்ற கண்ணுடியாகும்.
பேச்சும் எழுத்தும்
மொழியின் தொடக்கம் பேச்சு என்பதில் ஐய மில்லை. பேச்சு, எழுத்துக்கு முந்தியது. மனிதன், களி மண்ணிலும் கற்களிலும், மரப்பட்டைகள் ஒலைகள் ஆகியவற்றிலும் கீடு நிலவும்படி எழுதிவைக்கும் தந்திரத்தைக் கற்றுக்கொள்ளுமுன், பேசுந்தொழிலில் வன்மையும் திருத்தமும் பெரிதும் பெற்று விட்டான்.
எழுத்து மொழி கண்ணுக் கென்றே அமைந்தது. க ண் ணி ல் லா த வர் க ரூ க்கு வேறு வகையான மொழியினை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். பேச்சு, கட்புலனுல் உணரப்படாததாலின், அதனைக். கட்புலனுக்கு அமையுமாறு செய்வதற்காயெழுந்த தந்திரமே எழுத்தாகும். இயற்கையன்னையின் ஆட்சி

15
யிலே கட்பார்வைக்கும் பேச்சுக்குமிடையிலே பெருந் தொடர்பு யாதும் இல்லை. பேச்சு மொழியானது வாய், உதடுகள், காக்கு, முக்கு ஆதியவற்றின் துணைகொண் டெழுந்து செவியினுல் உணரப்படுவது. எழுத்து மொழியோ கையினுல் ஆக்கப்பட்டுக் கண்ணினுற் காண்பதாய் அமைந்தது.
செவிப்புலமொழியாகிய பேச்சுமொழிக்கும், கட் பு ல மொ ழி யா கி ய எழுத்துமொழிக்கும்-விளக்க ஒற்றுமையுணர்ச்சியன்றி, வேறு எவ்விதத்திலும் - தொடர்பு கூறுவது சாலாது. ஒலிக்கும் ஒளிக்கும் - பேச்சுக்கும் எழுத்துக்கும்.செவிக்கும் கண்ணுக்கும் - பெரியதாய தொடர்புகள் எவையுமில. மனிதனின் மூளையானது இவ்விருவகை மொழிகளையும் இணைத்துக் கொண்டமையைப் போன்ற பெருஞ்சிறப்புவாய்ந்த தொரு செயலினை இதுகாறும் புரிந்ததில்லை எனலாம். இந்த இணைப்பினை இளமையில் யாம் பயின்று கொண்டோமாயின், பின் ஒருபொழுதும், அவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தனியாக - தெளிவாக-திட்டமாக - இதுதான் என்று பகுத்து உணர்ந்து கொள்வது இயலாத காரியமாகும் எழுத்துகளுக்கு ஒலிகளுண்டு என்று யாம் கம்புவதால் எழுத்துக்களை ஒலிகளின் துணையானன்றி நினைக்கமாட்டோம். அச்சிடப்பட்ட எழுத்துகளும், சொற்களும், வாக்கியங்களும் யாம் பேசுவனவற்றின் படங்களே என்று கருதுகின்றேம்.
பேச்சுமொழி
மொழியின் தொடக்கம் பேச்சு என்பதில் எவர்க்
கும் ஐயம் எழாது. உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சி களால் உந்தப்பட்டு இயல்பாகத் தோன்றுவதே பேச்சு

Page 10
6
மொழியாகும். அதனல், பேசப்படுவதும் கேட்கப் படுவதுமே உயிருள்ள உண்மை மொழி எனக் கருதப் படுகிறது. இலக்கியத்திலே காண்பற்கரியதொரு தனிவளம் அதற்கு உண்டு எனக் கூறுதல் பொருத்த மாகும். பேச்சு மொழியே - எழுத் தொலிக்கு - எழுத் திலக்கணத்துக்கு - ஆணி வேர் எனக் கூறுதல் வேண் டும். அப்பொழுது, எழுத்து வழக்கு எனக் கூறப்படு கின்ற செய்யுள் வழக்கே கிளை வேர் ஆகும். எழுத்து வழக்கினைக் கொண்டு எழுத்துகள் எவ்வாறு ஒலிக்கப் பட்டன என்று கண்டுகொள்ளுதல் இயலாது. பேச்சு வழக்கிலேயே - பேசப்படுகின்ற இடப் பகுதிகளிலேயே அவற்றை முற்றிலும் காணுதல் கூடும். இப் பேச்சு மொழியே "உலக வழக்கு” எனவும் குறிப்பிடப்படும்.
மக்கள் பேச்சில், ஒருவர் பேசும் பேச்சுக்கும் இன் னுெருவர் பேசும் பேச்சுக்கும் எப்பொழுதும் வேறுபாடு கள் உளவாகின்றன. அல்லாமலும், இடத்துக்கு இடம் இவ்வேறுபாடுகள் மிகுக் து காணப்படுகின்றன. எனினும், இவ்வகையாக ஏற்படுகின்ற வேறுபாடுகளை யெல்லாம் மிகுதியும் தடுத்து நிறுத்துவது எழுத்து மொழி எனப்படுகின்ற செய்யுள் - இலக்கிய - மொழி ஆகும். பேச்சு மொழியும் இலக்கிய மொழியும் தொடர்பு கொண்டு - வேறுபாடுகளைக் குறைத்து - உரிமை கெடாதவண்ணம் இயலுவதே மொழிக்கு ஆக்கம் தருவதாகும்.
பேசப்படுவதும் கேட்கப்படுவதுமாய் இயலு கின்ற பேச்சுமொழியே உண்மை மொழி எனக் கொள் ளப்பட்டாலும், மக்களுக்கு மிகுதியாகப் பயன்படும் வகையில், காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் வேறுபட்டு வழங்கும் பேச்சுமொழிகளுள்ளே - திசை

7
游
வழக்குகளுக்கிடையிலே - ஒற்றுமையுணர்வினை ஏற் படுத்திப் பேணிக்காப்பது எழுத்து (செய்யுள் வழக்கு) மொழியேயாகும். தலைமுறை தலைமுறையாக "அடிப் படை” மாற த வகையிற் கற்கப்பட்டு வந்த மொழி யானது - அறிவின் முயற்சியால் ஒழுங்கு செய்யப் பட்டு - உறுதியும் செம்மையும் வாய்ந்த எழுத்து மொழியாக அமைகின்றது.
பேச்சு மொழி இலக்கணம் அற்றதன்று; எழுத்து மொழி எனப்படும் இலக்கிய வழக்குடன் தொடர்பு பட்டதே யாகும். இவையிரண்டும் இலக்கண கெறிப் படியே இயங்குதல் வேண்டும். பேச்சு வழக்கானது செய்யுள் வழக்கினுற் செப்பமடைதல் வேண்டும். கற்றர் வழியே கல்லாதோர் ஒழுகுதல் வேண்டும்.

Page 11
தொல்காப்பியமும் அகத்தியமும்
"தொல்காப்பியம்" எனப்படும் நூல் தமிழ் மொழி
யின் பழைய இலக்கணம் எனப் போற்றப்படுகின்றது
தொல்காப்பியருடன் ஒருங்கே கல்வி பயின்று ஒரு
சாலை மானக்கராயிருந்த பனம்பாரனர், தொல்காப்பி
யத்துக்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்: அச்
சிறப்புப் பாயிரமானது, தொல்காப்பியர்,
* வடவேங்கடந் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச் செந்தமி பூழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலங் தொகுத் தோன்.”
என எடுத்துக் கூறுகின்றது.

9
மக்களது மொழி வழக்கினை உலகியல் கெறிக் கேற்ற வகையில் வரையறுத்துக் காட்டும் இயனூல் ஒன்றினைத் தொல்காப்பியர் தொகுத்தார். அவர் அங்ங்னம் தொகுப்பதற்கு முன்னதாக, பேச்சு மொழி யிலும் எழுத்து மொழியிலும் அம்மொழி பயின்று வளருகின்ற திறத்தினை ஆராய்ந்தார்: அதாவது எழுத்தினையும், சொல்லி2னயும், பொருளினையும் -
படையில் - ஆராய்ந்தார். எழுத்து மொழியில் மட்டும். இவற்றை ஆராய்ந்துகொண்டு இயனூ2லத் தொகுத் திருப்பாராயின் தமிழ் மக்களிடத்தில் உயிரோடு உலவுகின்ற தமிழ்மொழி - பேச்சு மொழி - புறக்கணிக் கப்பட்டதாகும். எனவே, அவ் வியனூல் எழுத்து மொழிக்கு மட்டும் தொகுத்த - உயிரற்ற - இலக்கண மாய்விடும். தொல்காப்பியஞர் இந்த உண்மையினை நன்கு அறிந்திருந்தார். அதேைலதான், பேச்சு மொழி (ஒலி வடிவு)வுக்குத் தனிச் சிறப்பும் முதன்மையும் அளித்துத் தமது இலக்கண நூலினைத் தொகுத்தார் எனலாம்.
கட்புலனும் செவிப்புலனும்
பேச்சு மொழி பில் சொல்லி?னயும் பொருளிஜனயும் ஆராய்வது பொருர்துவதாகும்; பேச்சு மொழியில் எழுத்தினை ஆராய்வது எங்ங்னம் பொருந்தும் என ஒரு கேள்வி எழலாமல்லவா ? எழுத்தும் பேச்சு மொழியிலிருந்து எடுக்கப்பட்டதுதான் என்பதைத் தொல்காப்பியர் அறிந்திருந்ததார்; எழுத்து மொழி யினை மட்டும் கொண்டு எழுத்துக்கள் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்பதைக் கண்டறிந்து கொள்ளுதல் சாலாதென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஆதலி

Page 12
O
ஞலேதான் கட்புலணுகிய வரிவடிவினையும் செவிப் புலணுகிய ஒலிவடிவினையும் தொல்காப்பியர் ஆராய்க் தார் எனல் வேண்டும்.
இங்ங்னமாக, பண் டை த் த மி ழ் கா ட் டி ன் ஆராய்ச்சி - ஒலிவடிவம் பற்றிய ஆராய்ச்சி - இன்று மேலே நாட்டிலே துரிதமாக வளர்ந்து வரும் 'மொழி யியலாராய்ச்சி” கூட எட்டிப் பார்க்க முடியாத அள வுக்கு - சிறந்து முன்னேறியிருந்தது என்பதைத் தொல் காப்பியம் எடுத்துக் காட்டுகின்றது.
பனைநாட்டுப் புலவர்
பேச்சு மொழி எழுத்து மொழி ஆகிய இரண்டி2ன யும் அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் ஆராய்ச்சி காடாத்திய நிலப்பகுதியின் எல்லையிலேயே *வடவேங்கடங் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு கல்லுலகத்து” என்ற தனற் பனம்பாரனர் குறித்தார் எனக் கொள்ளலாம். பேச்சு வழக்கினை - ஒலிவடிவினை - கண்டறிவதற்காகத் தெற்கே குமரிமலை தொடங்கி வடக்கே வேங்கட மலைவரை (அவ்வெல்லைக்குட்பட்ட நிலப்பகுதி யெங்கும்) கல்ல தமிழ் வழங்குகின்ற இட மெங்கும் தொல்காப்பியர் சென் ருர், போக்கு வரத்துப் பொறிகளும் அறிவியற் சாதனங்களும் இல்லாத அப் பழங்காலத்திலே சென்றர். யாழ்ப்பாணத்தையும் மலையாள காட்டையும் சார்ந்திருந்ததொரு பிரதேசத் திலேயே தொல் காப்பியர் பிறந்து வாழ்ந்தவராதலின், தாம் வாழ்க்த பிரதேசத்துப் பேச்சுமொழி அவர் கன்கு அறிந்ததொன்றேயாகும். தலைச் சங்கம் நிறுவப்பட்ட தொல்காப்பியர் பிறந்து வாழ்ந்த-பழம் பாண்டிாகாட்டு நிலப்பகுதியே “செந்தமிழியற்கை சிவணிய" நிலமாக வும் “முந்து நூல்’களையுடையதாகவும் நிலவிய

2
தென்க. பனம்பாரனரும் தொல்காப்பியர் வாழ்ந்த அதே நிலப்பகுதியில் வாழ்ந்தவராதலின் இவற்றை யெல்லாம் தெளிவாக எடுத்தோதுகிறர். “பனம்
பாரனர்" (பணம் - பார் - ப2ன காடு) என்னும் பெயரோ அவர் பழைய பனைகாட்டுப் புலவர் என்பதைக் காட்டி
நிற்கின்றது.
பேச்சு மொழி பற்றிய ஆராய்ச்சி முடிவுற்றபின் தொல்காப்பியர் யாதுசெய்தார் என்பதன் விவரத்தினைத் தொல்காப்பியருடன் ஒரு சாலே மானக்கராய் விளங்: கிய பனம்பாரனரே கூறுகிறர்:- செந்தமிழ் நிலத் தில் முன்னதாக எழும் த பழைய இலக்கிய இலக்கண நூல்களையும் கற்றுணர்க்கு - யாவற்றிலும் அமைக் து: கிடந்த நுட்பங்களை யெ லாம் திரட்டி - முறைப்பட் ஆராய்ந்து இயனுலைத் தொகுத்தார்: அங்ங்னம் தொகுக் கப்பட்ட நூல் இன்று "தொல்காப்பியம்: (IGF வழங்குகின்றது.
தொல்காப்பியம்
தொல்காப்பியர் இயற்றிய நூல் “தொல்காப் பியம்’ எனப்பட்டது என்பர். *தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி' எனச் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது. அதற்கு, 'தொல்காப்பியன் என வழங்குக் தனது பெயரினையே தன்னல் இயற்றப் பெற்ற நூலுக்குந் தோற்றுவித்து" என்பது பொருள் என்பர். அங்ங் ன மாயின், நூற்பெயரும் “தொல்காப் பியன்’ என்றே இருத்தல் வேண்டும்; அதுவே முறையும் மரபும் ஆகும். 8ண்னும், அன்றும் இன்றும் புலவர்கள் "தொல் காப்பியம்?? என்றே வழங்குகின்றனர். BIT 632,07 இயற்றியவர் பெயரோடு அம்) என்னும் தத்தித

Page 13
22
விகுதி சேர்த்துப் பெயரமைத்துக்கொள்வது வட மொழி மரபாகும். வான்மீகம், பாணினியம், பதஞ் சலீயம் என்பவற்றை கோக்குக. தமிழ் மொழியிலே, புலவர்கள் இயற்றுகின்ற நூல்கள் அவ்வப் புலவர் பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்டு விளங்கு கின்றன.
அதுவே தமிழ் மரபாகவும் இயலுகின்றது; கபி லன், வள்ளுவன் இப் பெயர்கள் ரகர வொற்றுப்பெற் றுக் கபிலர், வள்ளுவர் எனவும் வழங்குகின்றன. எனவே, தொல்காப்பியர் இயற்றிய “இலக்கண” நூல் *தொல்காப்பியம்” என வழங்கப் பெறுவது, இக் காலத்தே ‘செந்தமிழ் மரபு” காண்போருக்கும் முறை யும் மரபும் அற்றதாகவே தோன்றும்.
அகத்தியம்
அகத்தியர் இயற்றிய நூல் “அகத்தியம்' எனப் பட்டது என்பர். அகத்தியர் இயற்றிய நூலினை “அகத் தியம்’ என வழங்குவதும் - “தொல்காப்பியம்’ என வழங்கு வதைப் போன்று - முறையும் மரபுமற்றதாகவே காணப்படும். தொல்காப்பியரை அகத்தியரின் மானக்கராக்கிக் கொண்டு, தொல்காப்பியத்துக்கு, அகத்தியர் இயற்றிய அகத்தியமே முதனு:ால் என்று சிலர் கூற முற்படுகிறர் கள் ! அகத்தியம் தப்பித் தவறி முதனூலாய் இருந் திருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம் என்றலும், அப்படி வைத்துக்கொள்வதற்கு அகத்தியச் சூத்திரமே இடங் தருவதாயில்லை.
* ஏழியன் முறைய கெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென்

23
ருேதிய புலவனு முளஞெரு வகையான் இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்”
என வருஞ் சூத்திரத்தில், தமக்கு முந்திய நூலாசிரியர் இருவரை அகத்தியரே எடுத்தோதுகிறர்.
அல்லாமலும், அகத்தியச் சூத்திரங்களென உரை யாசிரியர்கள் எடுத்துக் காட்டியவற்றுட் பல பிற்காலத் துச் சொல்வழக்கும் வடமொழிச் சொற்களும் மிகுக் தனவாய்க் காணப்படுகின்றன. அகத்திய முனிவருக்கு வழங்கிய 'குடமுனி” என்னும் பெயரைக் கூட 'கும்ப முனி" என மொழிபெயர்த்துக்கொண்டனர், பெயர்க் காரணம் அறியமாட்டாத வட நூலார். அதற்கியையவே அகத்தியர் கும்பத்திற் பிறந்தார் என்ற கதையும் கட்டப்படுவதாயிற்று.
பிந்திய காலத்தது
*ஏழியன் முறையது” எனத் தொடங்குஞ் சூத்தி ஏத்தில் அகத்தியர் எடுத்தோதியது பாணினியையும் இந்திரனையுமாமெனக் கொள்வர் பிரயோக விவேக நூலார். பாணினிக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு.வடமொழி ஆராய்ச்சி யாளரோ பாணினி கி. மு. கான்காம் நூற்றண்டினர் என நிறுவியுள்ளனர். எனவே, அகத்தியம் தொல் காப்பியத்துக்கு முற்பட்டதன்று என்பதுதானே போதரும். ஆகவே, அகத்தியம் முதனூலாகாது. இனி,
* இலக்கிய மின்றி யிலக்கண மின்றே எள்ளின் ருகில் எண்ணெயுமின்றே

Page 14
24
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின் றெடுபடு மிலக்கணம்”
என வரும் சூத்திரமும் அகத்தியரால் இயற்றப்பட்ட தெனக் காட்டுவர். இச் சூத்திரத்தில் வருங் கருத்து எழுத்தொலியியல் முறைக்கு முரண்பட்டதாகும். தொல்காப்பியர் ஒலி வடிவினையே முதன்மையாகக் கொண்டு இயனுால் தொகுத்தார்; “தமிழ் கூறு ஈல்லுக கத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி" - "முந்துநூல் கண்டு” - *முறைப்பட எண்ணி”த் தொகுத்தார். அகத்திய குரோ - மொழியின் பிறப்பு நுட்பங்களை அறியாமல் - பேச்சு மொழியைப் பற்றிப் பேசாமல் - "இலக்கியத் தினின்று எடுபடும் இலக்கணம்” என வாளா கூறி அமைகிறர். அல்லாமலும், இச் தத்திரத்தின் சொல் வழக்கும் பிந்திய காலத்ததாகக் காணப்படுகின்றது.
மொழிக்கு முதலாகாத எழுத்துக்களைக் கூற எடுத்துக் கொண்ட தொல்காப்பியர்.
*சகரக் கிளவியும் அவற்ருே ரற்றே
அஐஒளன்னும் மூன்றலங் கடையே’
(தொல், மொழி. 29)
எனச் சகரம் மொழிக்கு முதலாகா எழுத்தெனக் கூறுகின்றர். எனினும், இக்காலத்துத் தமிழ் எழுத் துலகத்திலே, கன்னி எழுத்தாக, *சதாசிவம்” முதலான பெயர்கள் பல சகரத்தை முதலாகக் கொண்டு இயங்குகின்றன.
ஆகவே, தொல்காப்பியர் காட்டிய "ஒலி மரபு” மொழியின் அடிப்படை மரபாக இருந்தபோதிலும்,

25
மாறுகின்றது. மாறிவிட்டது எனல் வேண்டும். எனவே “மாற்றங்களெல்லாம் சொன் மரபையும் பொருண் மரபையும் ஒட்டியே நிகழ்கின்றன; எழுத்து மரபு மாற்றத்தை ஏற்ப தில்லை ஏற்குமாயின் மொழி மாறிவிடும்’ என நிறுத்திப் பிடித்தல் சாலாது.
டகரம் மொழிக்கு முதலாகா எழுத்தென்பது மரபு. வடமொழியிலுள்ள “டாகினி" என்னும் பேயினை 'இடு பிணம் தின்னும் “இடாகினிப் பேய்’ எனத் தமிழோசை யும் உருவமும் அளித்து இளங்கோவடிகள் எடுத்தாண் டிருப்பவும், ஒட்டக்கூத்தர்,
“இடிபொரும லொரு பாலதிர்வர் சாகினிகளே
யெரிபொரும லொருபானகுவர் டாகினிகளே”
என வழங்குகிறர். 'டாகினி” வந்தமைபோல, இக் காலத்தில் "டாக்டர்’ புதுவதாக எழுத்துலகத்திலே புகுந்திருக்கிறது. இப்படியாக அணிமைக் காலத்தில் எழுத்துலகத்திலே புகுந்துகொண்டவை பல.
புல்லும் மரமும்
இனி, சொற்கள் மரபு மாறுவதைக் காண்போமாக: தொல்காப்பியத்தில்,
* புறக்காழனவே புல் என மொழிப? *அகக்காழனவே மரமெனமொழிய”
என இரண்டு தத்திரங்கள் உள்ளன. அவற்றின் படி “சுற்றிலும் வைரமுள்ளனவாய், உள்ளே ஒட்டையாகுந்
தன்மையான சோற்றியைக் கொண்டிருக்கும் தாவர
மொ. ம-2

Page 15
26
வகைகளைப் “புல்" எனல் வேண்டும்; வெளியிற் சோற்றியாய் உள் வயிரமாயிருப்பனவற்றை "மரம்” எனல் வேண்டும்; அதே மரபு. ஆயினும், புறத்துக் காழ்ப்பு (வைரம்) உள்ளனவாகிய பனை, தெங்கு, கமுகு ஆகியவற்றையும் இக் காலத்தில் “மரம்" எனவே குறிப்பதுண்டல்லவா? கெட்டையாய் வளர்ந் திருப்பவரை “பனை மரமே, பனைமரமே, ஏன் வளர்ர்க் தாய்? ப2ன மரமே!” என்பதும் காண்க. கெட்டையான இப் 'பனைமரம்” தானும் அணிமைக் காலத்திலேயே இலக்கிய உலகத்திலே புகுந்துகொண்டதாகும்.
*கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே கொள்வழியுடைய பலவறி சொற்கே?
(சொல்: 5-25)
என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படி உயர் திணைக்குக் 'கள்' என்னும் பன்மை விகுதி வராது; அஃறிணைக்கு மட்டுமே வரும். எனினும் தொல்காப் பியரே,
“உயர்திணை என்மனுர் மக்கட்சுட்டே
அஃறிணை என்மஞர் அவரல பிறவே.”
(சொல்: 1-) என 'மக்கள்" என்னும் சொல்லினை - எடுத்து - வழங் கியுள்ளார். அதுமட்டுமின்றி திருக்குறளில் "புரை யிலாப் பூரியர்கள் ஆழு மளறு’ (919) "மறந்தார் கொல் மற்றையவர்கள் தவம்’ (253) என்ற வழக்கு களைக் காண்கின்றேம்.
ஆனையும் அடிசறுக்கும்
மேலை காட்டிலே அணிமைக்காலத்தில் உருவாகிப் பரந்து வருகின்ற புதுக் கருத்துகளோடும் அறிவிய

27
லாராய்ச்சி முடிபுகளோடும் ஒத்து இயங்குகின்ற அரிய உ ண்  ைம க 2ள க் கொண்ட் தொல்காப்பியத்தி2ன இயற்றிய தொல்காப்பியரே - “ஆனையும் அடி சறுக்கும்” என்னும் பழமொழிக்கு ஒப்ப - தவறிய இடங்களும் உள்ளன.
“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்த பகரங் கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும்’
(தொல். குற்றிய, 40)
*ஒன்பது என்ற சொல்லின் ஒகரத்திற்கு முன் தகரவொற்றுத் தோன்றும். அதன் பின்னரிடத்துள்ள னகரவொற்று இரண்டு ணகரவொற்றக மாறும். நிலை மொழி வருமொழி இரண்டிலுள்ள பத்தென் கிளவி யின் பகரமும் ஆய்தமும் கெட அவ்விடத்து ஊகாரம் தோன்றும். வருமொழியிறுதிக் குற்றியலுகரத்து முன்னருள்ள தகர வொற்று றகர வொற்றகும்” என்பது பொருள்.
மேற்காட்டப்பட்ட சூத்திரத்தில், "ஒன்பது" என்னும் நிலை மொழியும் "பத்து” என்னும் வருமொழி யும் சேர்ந்து “தொண்ணுாறு’ என வருமெனத் தொல் காப்பியர் கூறுகிறரெனினும், அவர் கூறும் ஒலி மாறுதல்கள் சிறிதும் பொருந்தாதவையாய் உள்ளன.
தவறிவிட்டனர்!
பண்டைக் காலத்திலே, “ஒன்பது" என்பதைக் குறிப்பதற்குத் “தொண்டு” என்ற சொல் வழக்கிலிருந்

Page 16
28.
ததாகும். தொல்காப்பியர் தாமே “தொண்டு" என்னும் சொல்லினை,
*மெய்பெறு மரபிற் ருெடைவகை தாமே
ஐயீராயிரத் தாறைஞ் தூற்றெடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற் ருென்பஃதென்ப உணர்ந்திசி னுேரே”
(தொல். செய். 101)
என்ற சூத்திரத்தில் “9” என்னும் எண்ணினைக் குறிக்க
வழங்கியுள்ளார். அப்படியிருப்பவும், அவர் "ஒன்பது
பத்து - தொண்ணுாறு’ என (மறதியினுற் போலும்!) கூறியது தவறு. அப்புணர்ச்சிவகை ஒலிநூலுக்கும்
தருக்க நூலுக்கும் பொருந்தாத செயற்கைப் புணர்ச்சி
ஆகிவிடுகின்றது. தொல் காப்பியரைப் பின்பற்றி கன்னூலாரும் தவறிவிட்டார். இவ்வகைப் புணர்ச்சி களைக் கண்டதனுலே, 'தமிழர் எச்சொல்லிலிருந்தும்
எச்சொல்லையும் திரித்துக் காட்டுவர்” என மே8ல. காட்டறிஞர் கால்டுவேலர் கூறினர்.

மரபு என்பது யாது?
உலக வழக்கு நூல்வழக்கு ஆகிய இவைபற்றி முன்னதாகக் கண்டுகொண்டோம். அவை ஒவ்வொன் றிலும் ஒவ்வொரு தனித்தன்மை இருப்பக் காண்கின் றேம். அத்தனித் தன்மை மாறமல் வழக்கு இயல்வதே முறைமையNகும். அம் முறையானது-அடிப்படையான பழைய வழக்கத்திலிருந்து வழுவாமல் நிலைத்து விட்டால் - “மரபு” எனக் கொள்ளப்படுகின்றது. அதனுலேதான் “தொன்று தொட்டு வரும் முறைமையே மரபு” எனக் கொண்டனர். மரபு எனவே, எழுத்து, சொல், சொற்றெடர், பொருள், யாப்பு ஆகிய யாவும் அதனுள் அடங்குவன எனலாம். அம் மரபானது எழுத்து வழக்கில் எவ்வெவ்வகையில் வந்துள்ளது எனக் கKண்டு கூறுவதே இலக்கணம் ஆகும்.
தொல்காப்பியம், தொல்காப்பியர் வாழ்ந்த காலத்து மொழியின் நிலையையும், அதற்கு முற்பட்ட காலத்து நிலையையும் உணர்த்துகின்றது. தொல்காப்பியர் காலத்து வழக்குகளைச் செவ்விதின் அறியமுடியாமல்

Page 17
ድጛ6
தொல்காப்பியருக்குப் பன்னூறு ஆண்டுகள் காலத் தினுற் பிற்பட்ட உரையாசிரியர்கள் பல இடங்களிலே வழுவினர்கள். அவர்கள் தம்முடைய காலத்து வழக்கு களை எடுத்துக் காட்டித் தொல்காப்பியர் காட்டும் நுட் பங்கள் பலவற்றை மறைத்தும் விட்டனர். தொல் காப்பியத்தின் வழிநூல் எனப்படும் கன்னூலும், தொல்காப்பியத்தின் விளக்கத்தை உணராமலும், வட மொழி மரபோ டொட்டியும் பற்பல இடங்களில் தவறு புரிந்துவிட்டது.
“மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்ற எனவும், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” எனவும் தொல்காப்பியர் கூறியிருப்பவும், வடமொழி மரபுக் கிணங்கி "இடுகுறிப்பெயர்’ வகுத்துக் கொண் டதும் காண்க.
தமிழ் மொழியில் மட்டுமன்று - எர்ந்த ஒரு மொழி யிலும் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தால், அவையெல்லாம் பருப்பொருளில் ஒத்தவையாக அமைந்திருந்தாலும் நுண்பொருளில் ஒத்தவையாக அமைந்திருக்க மாட்டா. சில பொருள்கள் ஓரினம் அல்லது ஒத்த தன்மையுடையன என்பதை உணர்த்து வதற்காக, அவற்றின் பொதுப் பெயர் இனப்பொருள் களுக்கு வெவ்வேறு அடைகளைச் சேர்த்து வழங்குவ துண்டு; வேம்பு, கறிவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு என வரும் வழக்கினை கோக்குக.
செந்தமிழ், கொடுந்தமிழ், தண்டமிழ், தீங் தமிழ், பைந்தமிழ், கறுந்தமிழ், இந்தியத் தமிழ், யாழ்ப் பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், சிங்கப்பூர்த் தமிழ், தென்னபிரிக்கத் தமிழ் - என்றெல்லாம் தமிழி

31.
னைப் பாகுபடுத்திக் கொண்டால் - இனி வருங்காலத் தில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்பவை போல வேறு வேறு மொழிகளாய் அவை மாற, "தமிழ் கூறு நல்லுலகம்” மேலும் குறுகிவிடுவதாகும். *தமிழென்பது கொடுந் தமிழையும் உள்ளடக்குமாத லின் செந்தமிழ் என விதந்து கூறப்பட்டது” எனச் சொல்லி "இறுங்குப் பிடி’ பிடித்தால் உள்ளதும் இல்லாமற் போய்விடும் என்பதை - “செந்தமிழ் மரபு” காண விழைவோரும் 'சிருஷ்டி" வித்துவான்களும் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். முற்போக்கு எழுத் தாளர்களுக்கும் விளங்கும் வகையில் 'பழகு" தமிழில் எழுதிப் பயின்று, "பயிற்சித் தமிழ்” கைவரப் பெற்ற பின், “செந்தமிழ் மரபு” காட்ட (கற்பிக்க)ப் புகுவது பயன்தருவதாகும். ஒரு விடயத்தை எடுத்து விளக்கப் புகுவோர் முளையானது இவ்வகையான தடை விடை களாலே துலக்கமடைந்து தாம் சொல்வனவற்றைத் தெளிவும் திட்பமும் சார எடுத்துரைக்கக்கூடிய நிலை ஏற்படும்.
மலைப்பு ஏற்படுகிறது
மொழிக்கு இரு வடிவுகள் - செவிப்புலணுகிய ஒலி வடிவு, கட்புலணுகிய வரிவடிவு - உள்ளன என முன்ன தாகக் காட்டினேன். தொல்காப்பியர் ஒலி வடிவையே முதன்மையாகக்கொண்டு “இயனுால்” எழுதிஞர்; வரி வடிவுபற்றியும் ஒரளவு கூறியுள்ளார். ‘எழுத்து” என்னும் சொல்லானது தமிழ்மொழியில் வரி வடிவத் தையும் ஒலி வடிவத்தையும் குறிக்கின்றது. தொல் காப்பியர் இரு வடிவங்களைப் பற்றியும் எடுத்தோது கிறர். தொல்காப்பியர் காலத்தில், தமிழ் மொழி

Page 18
32
யானது முப்பத்து மூன்று ஒலி வடிவங்களை (உயிர் 12; மெய் 13 குற்றிலியகரம் 1; குற்றிய லுகரம் 1; ஆய்தம் 1.) உடையதாயிருந்தது. வரிவடி வில், னகரக்குறிலும் ஒகரக்குறிலும் மெய்யெழுத்தைப் போன்று புள்ளிபெற்றிருந்தன; மகரக்குறுக்கம் உட் புள்ளி பெற்றிருந்தது. எனவே, வரிவடிவ எழுத்து (31) ஆகும். தொல்காப்பியர் இவற்றையெல்லாம் தெளிவுபெறக் கூறியுள்ளார்.
தனித்தனி மொழிகள்
தமிழ் மொழிக்குத் தனிப்பட்டதொரு மரபு உள் ளது. அது தமிழகத்து எழுந்தது. வரலாற்றுக்கு எட்டாத காலம் தொடங்கியே உருவாகி - இன்னும் அழிந்தொழியாமல் வளர்ந்து வருகிறது. கொடிவழி போலக் கிளைத்துத் தொடர்ந்து வாழ்கின்றது. தம் அகம் விட்டுப் பிறர் அகம்புகுந்து கலந்து தழுவி வாழ் வோரை "மரபுகெட்டவர்” எனக் கொண்டு கடிந்து ஒதுக்குவதுபோல, மொழியிலும் தம் மரபு விட்டுப் பிற மொழி மரபுகளைத் தழுவிக்கொண்ட மொழி வழக்கு களையும் “மரபு கெட்டவை? எனக் கொள்வதுண்டு.
தமிழ் மரபு பேணுமல், சமக்கிருத மரபு மிகுதி யாகத் தழுவிய தமிழ்மொழி வழக்குகள், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு எனப்பிரிந்து மரபுகெட்டுத் தனித்தனி மொழிகளாக மாறிவிட்டன. அதனல், *தமிழ் கூறு கல்லுலகம்” நிலப்பரப்பிலும் பேசுவோர் தொகையிலும் கலிந்து குன்றிக் குறுகுவதாயிற்று.
காலச் செலவிலே மொழியில் இடையிடையே மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. அங்ங்ணம் ஏற்

33
படுகின்ற மாற்றங்களுக்குக்கூட இலகுவில் இடமளித் தற்கு இணங்காமல், பழமை மரபு பேணி, மரபு மாறு தல்கள் மிகுதியாக வராத வகையில் “வரம்பு' அமைத் துக் கொண்டமையினலேதான் “எங்கள் தமிழ்மொழி” என்றும் இனித்ததாய் "உயிர்மொழி"யாக இளமை
யுடன் நிலவுகின்றது,
தமிழ்மொழி இயற்கை மொழி, உயிர்ப்புடன் இயங்கும்மொழி; வாழும்மொழி. எத்தனையோ பல மொழிகளின் தலைமுறைகளைக் கண்டும், இன்னும் இளமை கலமோ உயிர்ப்பாற்றலோ குன்றப்பெறத தாய் - “முவா முதன் மொழி"யாகத் திகழ்கின்றது.
*O lului (35T i o u 1 IT iit ?
"தொன்று தொட்டு வரும் முறைமையே மரபு” எனவும் எழுத்து, சொல், சொற்றெடர், பொருள், யாப்பு ஆகிய யாவும் அதனுள் அடங்குவன” எனவும் முன்னதாகக் காட்டப்பட்டது.
"எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர், அப்படிச் செப்புதல் மரபே'
(நன்னுரல். பொது. 388)
எனப் பவணந்தி முனிவர், மரபிற்கு வரைவிலக்கணம் கூறுகின்றர். தொல்காப்பியனுரோ,
"வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாகலான்’
எனக் கூறியுள்ளார்.

Page 19
34
தொல்காப்பியனரும் கன்னூலாரும் கருதிய *உயர்ந்தோர்’, இக்காலத்திலே “தாழ்ந்தோர்’ (இழி? சனர்) ஆகவும் போயினர். மொழிக்கு உயிர் அளிக் கும் உலக வழக்கிற்குச் சிறந்தவர்கள், நகர்ப் புறங்களில் வாழ்வோரல்லர்; காட்டுப்புறங்களில் வாழ்வோரேயாவர். சமக்கிருதப்பற்றிலும், அயன் மொழித் தொடர்பிலும், மிகக்குறைந்த மக்கள் காட்டுப் புறங்களில் “தமிழ் மொழிக்கு உயிர்ப் பண்பு’ வழங்? கிக்கொண்டு வாழ்கிறர்கள். அவர்கள் வழங்குகின்ற பேச்சு கடையானது தனித்தமிழ் கடையாகவும், சங்க கால இலக்கிய கடைக்கு அணிமையான "கடையாகவும் விளங்கக் காண்கிறேம்,
மறைமுக முயற்சிகள்
ாககரப் புறங்களிலே, குலத்திமிரும் பதவித்திமிரும்” கொண்ட சிலர் - ஆங்கிலத்துடன், ாகாலடியாரிலே பத்துப் பாட்டுகளும், திருக்குறளிலே பத்துப் பாட்டு களும்” இராமாயணத்திலே பதினைந்து பாட்டுகளும் படித்துவிட்டுப் போலி வித்துவான்களாக வேடம் போட்டுக் கொண்டு கொக்கரிப்போராகவும் - குழி தோண்டுவோராகவும் விளங்குகின்றர்கள். ஒரு சிலர் தம்மை “உயர்ர்ந்தோர்” எனப் பட்டஞ்சூட்டிக்கொண்டு பிறரை “இழிசனர்” என்று குறிக்கின்றனர். தமிழிலே பிறமொழிச் சொற்களையும் கருத்துக்களையும் வலு வந்தமாகக் கலப்பவர்கள், தமிழ் மொழி மட்டுமன்றிப் பிறமொழிகளும் “அரைகுறையாக”க் கற்றுக்கொண்ட அவர்களேயாவர்.
சமக்கிருதத்தின் “மங்கும்’ புகழை மறைமுகமாக வளர்க்க முற்படுபவர்களும் அப்படிக் கொத்தவரே

35
யாவர். "வாழும்” மொழியாகிய தமிழில் “வாழா” மொழியாகிய சமக்கிருதத்தின் சாயலைப் படரச் செய்து, அதனையும் 'வாழா”மொழியாக்கிக் கெடுக்கச் செய்யும் செயற்றிட்டமோ என ஐயுறவேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

Page 20
தனித் தமிழும் நடைமுறைத் தமிழ் இயக்கமும்
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இன்று தமிழ்ப் பேராசிரியராக விளங்கும் திரு. வி. செல்வாகாயகம், எம். ஏ., அவர்கள் தமிழ் மொழியினை நன்கு பயின் றவர்கள். பிறமொழிகளும் அறிக் தவர்கள். வித்வ சிரோமணி சி. கணேசையர் அவர்களிடத்து இலக்கிய இலக்கணங்களைத் தெளிவு பெறக் கற்றுக்கொண் டவர்கள். பல்லாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தினை \யும், தமிழ் உரைகடையினையும் இடைவிடாது ஆராய்ந்து கற்பித்து வருபவர்கள். இலங்கைப் பல்க 2லக் கழகத்திலேயே நீண்ட காலமாக விரிவுரையாள ராகப் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பற்றியும் அவர்களது படிப்பிக்குக் திறனைப் பற்றியும் மனசாரப் புகழ்ந்து கூறுபவர்களேயன்றி, ஒரு குறை கூறியவர்களை இதுவரை யான் கண்டிலேன்.
தமிழ் இலக்கிய வரலாறு
இங்ங்ணம் புகழ்வாய்ந்த பேராசிரியர் திரு. செல்வ காயகம் அவர்கள் 1951ம் ஆண்டில் 'தமிழ் இலக்கிய

57
வரலாலு" என ஒரு நூலினை எழுதி வெளியிட்டிருக்க கிறர்கள். விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்” டிருந்தபோது அவர்கள் எழுதிய நூல், இப்பொழுது சில மாற்றங்களுடன் கான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
அந்நூலில், “பொதுசனம் ஏற்கக்கூடிய ஒரு மொழிநடைதான் இக்காலத்திற்கு உரியது என்பதை அறியாத எழுத்தாளர் பலர் தாம் தாம் விரும்பிய கடையினைக் கையாண்டு உரைாகடை நூல்களை இயற்றி யுள்ளனர். சிலர் வடமொழி கலவாத தனித்தமிழ் கடையொன்றை வளர்க்க முயன்றனர். வேறு சிலர் வடமொழிச் சொற்களை வேண்டாத அளவிற்குப் புகுத்தி மணிப்பிரவாள நடையையொத்த ஒரு புதிய நடையில் எழுத முற்பட்டனர். வடசொற் கலவாத தனித்தமிழ் கடையொன்றினைத் தொடக்கி வைத்த பெருமை மறைமலையடிகளுக்கே உரியது. அந் ஈடை தூய செர்கதமிழின் ஆற்றலைப் புலப்படுத்துவதாக அமைந்த போதும், அது காலத்தின் போக்கிற்கு இணங்கிய நடையன் றகலின், அது சிறிது சிறிதாகக் கைவிடப்படுகின்றது. எனினும், இந்நூற்றண்டில் வாழ்ந்த உரைகடை ஆசிரியர்களுள் அடிகளும் ஒருவ ராக மதிக்கப்படுவார் என்பதில் ஐயமில்லை." (பக்” 282-283) என அவர்கள் எழுதி இருப்பதால், "தூய செ ங் த மி பூழின் ஆற்றலைப் புலப்படுத்துவதாக அமைந்த” தனித்தமிழ் கடையொன்றினை மறைமலை யடிகள் தொடக்கி வைத்தார்கள் என்பதையும், இக் நூற்றண்டில் வாழ்ந்த உரைகடை ஆசிரியர்களுள் அடிகளும் ஒருவராக மதிக்கப்படுவார் என்பதையுமா” வது பேராசிரியர்கள் ஒப்புக்கொள்கிறர்கள் என்பது?

Page 21
38
புலனுகின்றது. அவர்கள், இடையிலே தமது கருத் தி?னச் சிறிது முனைப்புறச் செய்து, 'தனித்தமிழ் கடை. காலத்தின் போக்கிற்கு இணங்கிய கடை யன்ற கலின், அது சிறிது சிறிதாகக் கைவிடப்படுகின் றது" (பக்: 233) என முடிந்த முடிபாக - ஒரவாரமான போக்கில் - எழுதியிருக்கின்றமை எனக்குப் பெரும் வியப்பினை அளித்தது. எங்கள் இலங்கைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியரவர்கள் - தமிழ் இலக்கிய வர லாற்றிலேயே - இங்ங்னமாகத் துணிந்து எழுதியிருப்ப தனைப் பல்கலைக் கழகக் கல்வி பெறுவோரும் ஏற்றுப் போற்றுதல் கூடும் என்னும் அச்சத்தினுல், சிறிது கூர்ந்து ஆராயலாமெனக் கருதினேன்.
அண்மைக் காலம் வரை "சர்வகலாசாலை"யாக வும், "சருவகலாசாலை"யாகவும், 'ஸர்வகலாசா8ல? யாகவும் வழங்கப்பட்டு வந்த "University" இன்று - தனித் தமிழாக - “பல்கலைக் கழகம்” என மாறியிருக் கின்றது ‘உப அத்தியட்சர்” என வழங்கப்பெற்று வந்த “Vice-Chancellor" இன்று "துணைவேந்தர்” என மாறிவிட்டார் !! 'காலத்தின் போக்கு’ எது என்பத2ன *பல்கலைக் கழகம்", "துணைவேந்தர்” ஆகிய வழக்கு களே பறைசாற்றுகின்றன. சென்னைப் பல்கலைக்கழ கத்தின் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கிய திரு. எஸ். வையாபுரிப்பிள் 2ளயவர்கள், 'தமிழ்ச் சுடர் மணிகள்? என்னும் நூலின் முதற்பதிப்பு முன்னுரையில் (1948-ம் ஆண்டில்) 'எனக்கு உதவி புரிந்தவர்கள் சென்னை ஸர்வ கலாசாலையில் ஸினியர் லெக்சரராக இருந்து காலஞ்சென்ற டாக்டர் ரீ. ஆர். சிந்தாமணி’ என எழுதியிருந்தார்கள். இரண்டாம் பதிப்பு முன்னுரை யில் (திருவனந்தபுரம் ஸர்வகலாசாலை - 22-11-52) *வேண்டும் துணைபுரிந்தவர் சென்னை ஆர்ட்ஸ் காலேஜ்

39
தமிழாசிரியர் திரு. வித்துவான் எம். சண்முகம்பிள்ளை ஆவர்” என எழுதியிருக்கிறர்கள். பேராசிரியர் வையாபுரிப்பிள் 2ளயவர்கள் * ஸர்வகலாசாலையில் ஸினியர் லெக்சரர்" என எழுதிக்கொண்டிருக்கும் போதே, "தமிழ் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்” எனத் தனித் தமிழில் எழுதி வழிகாட்டியவர் (வேறு யாருமல்லர்) இன்று பேராசிரியராய் விளங்கும் திரு. செல்வநாயகம் அவர்களே ஆவர். தனித் தமிழ் வெள்ளம் தம்மையும் அள்ளிச் செல்லுகின்றமையை - உண்மையாகவே - பேராசிரியரவர்கள் உணரவில் 2லயோ?
இவ்வளவும் கடைபெற்றது பல்கலைக்கழகச் சூழலிலே! இனி, வெளிப்புறத்து நிகழ்ச்சிக2ள நோக் கலாம்; "வருஷம்” எப்போதோ “ஆண்டு’ ஆகிவிட் டது. “மாதம்” இன்று "திங்கள்” ஆகியுள்ளது. *தினம்’’ இப்போது “காள்” என வழங்குகின்றது. "மத்யானம், மத்தியானம்” மறைந்து “கண்பகல்* வந்திருக்கிறது. 'கமஸ்காரம்” மறைக் து, இன்று எங்கும் "வணக்கம்” மட்டும் வழங்கத் தலைப்பட்டு விட்டது.
பல ஆண்டுகளாக வழங்கிவந்த “இலாக்கா, இலாகா, பகுதி" ஆகியவை மறைந்து “திணைக்களம்” வழக்குக்கு வந்துள்ளது. “கந்தோர்” இன்று “அலுவ லகம்” என வழங்குகிறது. “கோடு” எப்போதோ நீதி மன்றம்" ஆகிவிட்டது. “சரித்திரம்” மாறி “வரலாறு" வழங்கத் தலைப்பட்டுவிட்டது. “அச்சியந்திரசாஜல9 கூட "அச்சகம்” ஆகிவிட்டது. இங்ங்னமாக மாறி வந்தவை எத்தனை எத்தனையோ! தனித் தமிழ் வழக்கே யாண்டும் பரவி வருகின்றமை இன்றைய போக்கா

Page 22
40
யிருப்பவும், பேராசிரியரவர்கள் "அது சிறிது சிறிதா கக் கைவிடப்படுகிறது” என எடுத்தோதுவது ஏற்றுக் கொள்ளத்தக்ச தாய் அமையவில்லை.
சாமிநாதையர்
மேலும், பேராசிரியரவர்கள், “பேச்சு வழக்கை ஒட்டியே எழுத்து வழக்கும் இருத்தல் வேண்டும் என் னும் உண்மையை உணர்ந்த எழுத்தாளர் பலர் இக் காலத்தின் போக்கிற்கு இணங்க, வேகமும் உயிர்ப் பண்பும் பொருந்தப்பெற்ற இலகுவான உரைாகடை யொன்றைக் கையாளத் தொடங்கினர். அவர்களுட் சாமிநாதையரும் கலியாணசுந்தர தலியாரும் சிறந் தவர்கள்” என (பக்: 234) கூறு க்ன் ருர்கள். பேச்சு வழக்கை ஒட்டியே எழுத்து வழக்கும் இருத்தல் வேண் என்னும் உண்மையை உணர்ந்த எழுத்தாளர் என்னும் போது "வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பதைப் பேராசிரியர் ஒருவேளை மறந்திருப்பார்” களோ
பேராசிரியர் அவர்கள், சாமிநாதையரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “தமிழ்த் தாயின் அருங் தவப் புதல் வருள் ஒருவராகிய ஐயரவர்கள் தம் வாழ்க்கை முழுவம் தையும் தமிழ் மொழிக்கு அர்ப்பணம் செய்து, ஏட்டு வடிவிற் கிடந்த பல நூல்களைத் திருந்திய முறையில் அச்சிட்டு உலகிற்கு அளித்த பேருதவிக்குத் தமிழ் மக்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனர். அவர்கள் ஏட்டு வடிவத்திற் கிடந்த நூல்களை ஆராய்வதிலும் அச்சிடுவதிலும் ஊக்கம் செலுத்தி வந்தமையால், காம் அவரை ஓர் ஆராய்ச்சியாளரெனக் கருதுகிருேமன்றி

41
சிறந்த உரைநடையாசிரியராக மதிப்பதில்லை” 6T6 (பக்: 284) உண்மையை ஒளியாமற் கூறுகின்றர்கள். அங்ாவனம் கூறிவிட்டு, “பேச்சு வழக்கிலுள்ள சொற் களை இனிமையும் எளிமையும் உள்ள வாக்கியங்களில் அமைத்து ஒரு தெளிவான நடையினை அந்நூல்களிற் கையாண்டிருக்கின்றனர். இப் புதிய கடையின் ஆற் ற8ல அவர்கள் கன்கு அறிக்தே பழைய கடையினைக் கைவிட்டனர் என நாம் கொள்ளவேண்டியிருக்கிறது. காலத்தின் போக்கு அவருடைய கடையை முற்றக மாற்றிவிட்டது" (பக்: 285) என-முக்கறையன் பிறரை யும் முக் கறுக்கச் சொல்வது போல்-ஒரு சமாதானம் கூறுகின்றர்கள். உண்மையில், காரணம் வேறு.
சாமிகாதையர் என்னும்போதே அவர்கள் பார்ப் பனர் என்பது தெளிவாகின்றது. பார்ப்பனர் தென் சொற்களை அறிந்திருந்தாலும், அவற்றிற்குப் பதிலாகச் சமக்கிருதச் சொற்களையே வழங்கி வருவதுண்டு. கல்லாத தமிழ் மக்கள் அவர்களை உயர்ந்தோராகக் கருதி மயங்கினமையால், அவர்கள் பேச்சினைப் பின் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பெருமையெனக் கொண்டனர். பார்ப்பனச் சேரிகளில் வழங்கும் பேச்சு வழக்குகளையே தமிழ் மரபு வழக்குகள் எனக் கொள் ளுதல் தகாது. பார்ப்பன மக்கள் கெடுங் காலமாகத் தனித்துத் தங்கள் சேரிகளிலே வாழ்ந்து வந்தமையால் தமிழ் மரபினை அவர்கள் நுனித்துணர இயலவில்லை. ஐயரவர்கள் மட்டும் விதிக்கு விலக்காவார்களா?
ஜயரவர்கள், "சங்கத் தமிழும் பிற்காலத் தமி ழும்” என்னும் பெயருடன் ஒரு நூலினை 1929-ம் ஆண்டில் வெளியிட்டார்கள். அந்நூலின் முகவுரை யிலிருந்து சில பகுதிகளை நோக்குவோம்:-
Ошот. ш0—3

Page 23
42
'சங்கநூல்கள் முகமாகத் தெரியக்கூடிய சில விஷயங்களைப்பற்றிப் பத்து உபந்யா சங்கள் செய்யவேண்டுமென்று சென் ஜூன ஸர்வகலா சங்கத்தார் 1926-ம் வருஷத்தில் எனக்குத் தெரிவித்தார்கள். தேக அஸெளக் யம் முதலிய காரணங்களால் அதனை ஏற்றுக் கொள்ள எனக்கு அப்போது தைரியம் உண் டாகவில்லை. ஆனல், அவர்கள் பேரன்புடன் வற்புறுத்தினமையால் மறுத்தற்கு அஞ்சித் தெரிந்த சில விஷயங்களைச் சொல்ல ஒப்புக் கொண்டேன். உபர்க்யசிக்கப்படும்போது உபந் யாசங்கள் பின்பு புத்தக ரூபமாக வெளிவரு மென்பது எனக்குத் தெரியாது. 6I sổi 26ör ஒரு பொருட்படுத்தி உபர்க்யசிக்கும்படி செய்த ஸர்வகலாசாலை உப அத்யகூடிகருக்கும் மற்ற அங்கத்தினர்களுக்கும் கான் உபக்யா சங்கள் செய்தபோது மிக்க பொறுமையோடும் அன்போடும் வங் திருந்து கேட்டு எனக்கு ஊக்கமளித்த கனவான்களுக்கும் பண்டிதர் களுக்கும் நன்றியைச் செலுத்துகின்றேன்.”
இப்படியாக ஐயரவர்கள் எழுதுவதையே “பேச்சு வழக்கிலுள்ள சொற்களை இனிமையும் எளிமையும் உள்ள வாக்கியங்களில் அமைத்து ஒரு தெளிவான கடையி2ன அந்நூல்களிற் கையாண்டிருக்கிறர்." எனப் பேராசிரியர் திரு. செல்வாகாயகம் அவர்கள் குறிப்பிட் டார்கள் போலும் ! பேராசிரியரவர்கள் கூறுவது ஒப்பத்தக்கதாயின், மேலே ஐயரவர்கள் எழுதிய வற்றைப் பின் வருமாறும் எழுதலாம். வேறுபாடு எதுவும் இருப்பதாகக் கூறமுடியாது.

43
*சங்கநூல்கள் முகமாகத் தெரியக்கூடிய சில Subjects களைப் பற்றிப் பத்து Lectures செய்ய வேண்டுமென்று சென்னை University க்காரர் 1926-ஆம் year இல் எனக் குத் தெரி வித்தார்கள். Body il health முதலிய காரணங் களால் அதனை ஏற்றுக்கொள்ள எனக்கு அப் போது Strength உண்டாகவில்லை. ஆனல், அவர்கள் பேரன்புடன் வற்புறுத்தியமையால் மறுத்தற்கு அஞ்சித் தெரிந்த சில Subjects க2ளச்சொல்ல ஒப்புக்கொண்டேன். Lecturing போது Lectures பின்பு புத்தக form இல் வெளி வருமென்பது எனக்குத் தெரியாது. என்னை ஒரு பொருட்படுத்தி 1ecture பண்ணும்படி 6ìơ uủ5 University Vice Chancellor ([bở&9ửb Dfb sp members 35 G5 jgib sibsT 6ö7 lecture u GaoT ணியபோது மிக்க பொறுமையோடும் அன் போடும் வர்ந்திருந்து கேட்டு எனக்கு ஊக்க மளித்த gentlemen களுக்கும் பண்டிதர்களுக் கும் நன்றியைச் செலுத்துகிறேன்."
ஐயரவர்கள் எழுதியவற்றை இனிவரும் காலத் தினர் விளங்கிக்கொள்ளத் தக்க வகையில் பின்வரு மாறு-தமிழில்-மொழிபெயர்க்கலாம்:
"சங்கநூல்கள் வாயிலாக அறிந்துகொள் ளக் கூடிய சில பொருள்களைப் பற்றிப் பத்து விரிவுரைகள் நிகழ்த்துதல் வேண்டுமெனச் சென் 2னப் பல்கலைக் கழகத்தினர் 1926-ஆம் ஆண்டில் எனக்குத் தெரிவித்தார்கள். உடல் கலமின்மை முதலிய காரணங்களால் அதனை ஏற்றுக்கொள்ள எனக்கு அப்போது துணிவு

Page 24
44
ஏற்படவில்லை. ஆனல், அவர்கள் பேரன்புட்ன்: வற்புறுத்தினமையால் மறுத்தற்கு அஞ்சித் தெரிந்த சில பொருள்களைச் சொல்ல ஒப்புக் கொண்டேன். விரிவுரையாற்றும்போது விரி வுரைகள் பின்பு புத்தக வடிவத்தில் வெளிவரு மென்பது எனக்குத் தெரியாது. என் 2னப் பொருட்படுத்தி விரிவுரையாற்ற வைத்த பல் கஜலக் கழகத் துணை வேந்தரவர்களுக்கும் பிற உறுப்பினர்க்கும் யான் விரிவுரையாற்றும் போது மிக்க பொறுமையுடனும் அன்புடனும் வந்திருந்து கேட்டு எனக்கு ஊக்கமளித்த பெருமக்களுக்கும் அறிஞர்களுக்கும். நன்றி செலுத்துகின்றேன்.”
ஐயரவர்கள் எழுதிய முகவுரையை மொழி பெயர்த்த பின் காணக் கூடிய இனிமையையும் எளிமையையும் இப்போது பேராசிரியரவர்கள் உணர்வார்கள் எனக் கருதுகின்றேன். ஐயர வர்கள் "புதியதும் பழையதும்" என்னும் நூலில் ஸ்வாமி இருக்கிருர்!’ என வரும் வர லாற்றிலிருந்தும் ஒரு பகுதியினை கோக்க லாம் :
ஏறக்குறைய காற்பத்தைந்து வருஷங் களுக்கு முன்பு கும்பகோணத்தில் அரசாங்கக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களும் மானக், கர்களும் தாகம் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் தீர்த்தம் கொடுக்க ஒரு பிரா மணர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காவிரி யில் ஜலம் உள்ள காலத்தில் அந்த ஜலத்தை எடுத்து வந்தும், ஜலம் இல்லாத காலத்தில்

45
ஊற்றுப் போட்டு இறைத்து ஜலம் கொணர்ந் தும் சால்களிற் கொட்டி விளாமிச்சைவேர் முதலியன போட்டு வைப்பார். தினங்தோறும் முதல் நாளில் எஞ்சியிருந்த தீர்த்தத்தை வெளியே கொட்டிப் பானைகளை கன்ருகக் கழுவி அலசிச் சுத்தம் செய்து அவற்றிலே புதிய தீர்த்தத்தை ஊற்றி வைப்பார்.”
இனிக்கும் தமிழில் "கீர், தண்ணிர், பச்சைத் தண்ணீர்" என வரவேண்டிய இடங்களில் அடிக்கடி "ஜலம்" வருகிறது. தீர்த்தத்தோடு கலந்து வருகிறது. அடிக்கடி ஜலம் வருவதுதான் இக் காலத்தில் எல்லோ ரையும் தாக்குகின்ற ஒரு நோய். அதைத் தான் பேரா சிரியரவர்களைப் போன்றேர் மாற்ற வழி காண வேண்டும்.
தமிழ் மரபு !
ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளின் முன், பெரும் பேராசிரியர், தெற்கத்திய கலைச் செல்வர். திரு. சாமிநாதையர் அவர்கள் 'தமிழ் மரபு” எனத் திருச்சி வானெலியிற் பேசிய பேச்சினைக் கண்டு துடித் தெழுந்து திருச்சி திரு. கி. ஆ. பெ. விசுவாநாதம் அவர் கள் எழுதிய கட்டுரை யொன்று 1941-ம் ஆண்டிலே "செந்தமிழ்ச் செல்வி'யில் வெளிவந்தது இன்றும் நினைவிலிருக்கின்றது. " சோறு தின் றயா ?” என்பது தமிழன்று என்றும், "போஜனம், நிவேதனம், பிகூைடி ஆயிற்ற ?” என்பதே தமிழ் மரபு என்றும் திரு. ஐயர வர்கள் கூறியவற்றைக் கண்டித்து எழுதியது அக் கட்டுரை. அக் கட்டுரையில் இந் நோய் தெளிவாக ஆராயப்பட்டுள்ளது. அதை கோக்கலாம்:

Page 25
46
* நவம்பர்த் திங்கள் முதல் நாளன்று வெளிவந்த “சிவி நேசன்’ திங்கள் வெளியீடு ஒன்று 6-11-41ல் எனது பார் வைக்கு வந்தது. அதில் “தமிழ் மரபு” என்று திரு உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் பெயரால் ஒரு கட்டுரை வெளி யிடப் பெற்றிருந்தது கண்டு திடுக்கிட்டேன். கட்டுரையின் அடியில் (திருச்சி வாஞெலி, 21-9-41) என்று குறிக்கப் பெற்றிருந்ததினுல், அது ஐயர் அவர்களால் எழுதப் பெற்று” வானெலியில் பேசப் பெற்றதாகக் கருதுகிறேன். இது உண்மையாக இருக்குமானுல் அக் கட்டுரையில் உள்ள சொற்ருெடர்களில் சிலவற்றை அவர் உடனே திரும்பப் பெற வேண்டுமென்பதும், அச்செயல்களுக்காக அவர் தமிழ், நாட்டுப் புலவர் பெருமக்களிடத்து வருந்தி மன்னிப்புப் பெற வேண்டுமென்பதும் எனது விருப்பமாகும். அவ்வாறு அவர் செய்து தமிழ் மக்களின் புண்பட்ட உள்ளத்தை ஆற்ற" வேண்டியது அவர் கடமை. இன்றேல் தமிழுக்குத் தீங்கு புரியும் சில பார்ப்பனப் புலவர்களோடு திரு. ஐயர் அவர் களையும் சேர்த்து எண்ண நேரும்.
திரு. ஐயர் அவர்களுடைய கட்டுரையில் கண்ட ஒரு சொற்ருெடரை மட்டும் தமிழ்ப் புலவர்கள், தமிழ் நாட்டு மக்கள் ஆகியவர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். சீது
“ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்துச் சோறு தின் முயா?’ என்று கேட்கலாம். ஒரு கனவானப் பார்த்து அப்படிக் கேட்கக்கூடாது. கேட்பதில் இலக்கணக் குற்றம் ஒன்றுமில்லை. அர்த்தமும் விளங்காமற் போகவில்லை. ஆனலும் அப்படிக் கேட்பது தமிழன்று; தமிழ் மரபன்று. "போஜனமாயிற்ற?’ ‘நிவேதனம் ஆயிற்ரு?" என்று கேட்ப தும், துறவிகளைப் 'பிகூைடி ஆயிற்ரு?’ என்று கேட்பதும் சம் பிரதாயங்கள்’ என்பதே. இச் சொற்ருெடர் திரு. உ. வே. சாமிநாத ஐயர் அவர்களுடையது. இது தமிழ் மரபாக இருக்க முடியாது என்பதைத் தமிழ்நாட்டிலுள்ள சிறு
பிள்ளை சளும் நன்சறிவர். தமிழ் மரபு அல்லாததும் கமிழ்

47
மரபுக்கே மாறுபட்டதுமான ஒன்றைத், தமிழ் மரபு என்று தமிழ் நாட்டு மக்களுக்குக் கூறி, அதை நிலைநிறுத்த எண் ணிய திரு. ஐயர் அவர்களின் பொருந்தாக் கூற்றைக் கண்டு தமிழ் தாட்டு அறிஞர் உலகம் எள்ளி நகையாடுமென்பது திண்ணம்.
“சோறு தின்ருயா?” என்பது தமிழன்று என்றும், *போஜனம், நிவேதனம், பிகூைடி ஆயிற்ரு?’ என்பதே தமிழ் மரபு என்றும் திரு. ஐயர் அவர்கள் கூறியது பெரு வியப்பைத் தருகிறது. திரு. ஐயர் அவர்களின் இக் கூற்றி லிருந்து தமிழ் மொழியில் அவருக்குப் பற்று இல்லையென்ப தும் வடமொழியில் பற்று மிக்குள தென்பதும் வெளிப்படை யாகப் புலப்படுகின்றன.
“சோறு தின்ருயா?* என்று கேட்கலாம். அதில் இலக் கணக் குற்றம் ஒன்றுமில்லையெனத் திரு. ஐயர் அவர்கள் கூறு கிருர்கள். இது தவறு. “சோறு தின்ருயா?" என்று கேட் பதே தவருகும். “சோறு உண்டாயா?’ என்று கேட்க வேண்டும். தமிழில் உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என நால் வகையுண்டு. இதில் உள்ள வேற்றுமைகளை ஐயர் அவர்கள் உணர்ந்தும், வேண்டுமென்றே, அல்லது வேறு காரணம் பற்றியோ அவ்வாறு கூறியிருப்பது வருந்தத் தக்க தாகும்.
திரு. ஐயர் அவர்கள் மரியாதை மரபு கருதுவதற்குக், கனவான்களை “உணவாயிற்ரு?’ என்று கேட்பது பொருந் தாதா!
இழிவழக்குச், செந்தமிழாகாது என்பதும், உலகம் என் பது உயர்ந்தோர் மேற்றே என்பதும் திரு. ஐயர் அவர்கள் உணர்ந்தவையேயாகும்.
“போஜனம், நிவேதனம், பிகூைடி ஆயிற்ரு?’ என்பதே
தமிழ் மரபு என்று திரு. ஐயர் அவர்கள் கூறுகிருர்கள். இதைத் திரு. ஐயர் அவர்களின் உள்ளம் ஏற்றுக்கொள்ளு

Page 26
48
கிறதா என்று அறிய விரும்புகிறேன். வட மொழிச் சொற் களைத் தமிழ் வழக்கில் நுழைத்து அதைத் தமிழ் மரபு என்று கூறத் திரு ஐயர் அவர்கள் துணிந்தது நகைக்கத் தக்கது. இது பார்ப்பனச் சேரிகளின் வழக்கு என்பதைத் திரு. ஐயர் அவர்களாலும் மறுக்க முடியாது.
திரு. ஐயர் அவர்கள் தமது கட்டுரையில் சில மொழி பெயர்ப்புச் சொற்களை எடுத்துக் காட்டி,
“இந்த மொழி பெயர்ப்பில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகமாக இருக்கின்றன” என்கிருர்,
இதிலேயே “சமஸ்கிருதம்', 'வார்த்தை” “அதிகம்” ஆகிய மூன்று வட மொழிச் சொற்கள் இருப்பதை அவர் அறியவில்லைப் போலும் இது ஒற்றைக் கண்ணன் ஒரக் கண்ணனைப் பழிப்பது போலத் தோன்றுகிறதன்றே?
நெடுங்காலமாகவே Luftriflu u Gor மக்கள் தனித்து வாழ்ந்து வந்ததாலேயே தமிழ் மக்களின் மரபை அவர்கள் அறிந்து கொள்ள முடியாமற் போயிற்று என்பதற்குத் திரு. ஐயர் அவர்களின் கூற்றே ஓர் எடுத்துக்காட்டாக இருக் கின்றது.
திரு ஐயர் அவர்கள் “தமிழ் மரபு' என்று எழுத வந்த கட்டுரையில் வடமொழிச் சொற்களை மிகையாகக் கலந்து எழுதியிருப்பது வருந்தத் தக்கது. '
1. மகாமகோபாத்தியாயர், 2. தாகூFணுத்திய, 3. கலாநிதி, 4. வாசனை, 5. சந்தோஷம், 6. சங்கீதம், 7, வித்வான். 8. சபை, 9, அமிர்தம், 10. சுருதி, 11. சந்தர்ப்பம் 12. தந்தி, 13. பக்க வாத்தியம், 14. சங்கீத வித்வான், 15. பூரணமான, 16. சங்கீதக் கச்சேரி, 17. வருஷம், 18.சாரீரம், 19. அபஸ்வரம், 20. சுத்தம், 21. சாதாரணம், 22. அங்கம், 28, மேகம், 24. இருதயம், 25. ஆதாரம், 26. பாஷை, 27. வசனம், 28. சமாச்சாரம், 29. கோபம், 30. துக்கம், 31. பரிகாசம், 32. சாதித்தல், 33. தந்திரம், 34. வார்த்தை, 85. வித்தியாசம், 36. அர்த்தம், 37, உபயோகம், 38. வாக்

49
கியம், 39. பிராணி, 40. அதிகம், 41. விஷயம், 42. விஷ்பம். 43. சமஸ்கிருதம், 44. ஆரம்பம், 45. சக்தி, 46, வாசித்தல், 47. நிர்வாகம், 48, போஜனம், 49. நிவேதனம், 50. பிசைடி, 51. துவிபாஷி, 52. சம்பாஷணை, 53. சுவாஸம், 54. ஜாதி.
என்ற வடமொழிச் சொற்கள் அவருடைய தமிழ் மரபு காட்ட வந்த தமிழ்க் கட்டுரையிலே காணப்படுகின்றன. மேலும், இந்த 54 வடமொழிச் சொற்களில் ஒவ்வொன்றும் பலமுறை கையாளப் பெற்று 158 சொற்களாக மிளிர் கின்றன.
ஏறக்குறைய 1400 சொற்களைக் கொண்ட ஒரு தமிழ்க் கட்டுரையில் இவ்வளவு வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பெரும் பேராசிரியர் என்னும் பட்டம் பெற்ற ஒரு வருக்கு ஏற்றதாகுமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். அச் சொற்களுக்கு நேராக:
1. பெரும் பேராசிரியர், 2. தெற்கத்திய, 3. கலைச்செல் வன், 4. மணம், 5. மகிழ்ச்சி, 6. இசை, 7. புலவன், 8, மன்றம், 9 அமுதம், 10. கேள்வி, 11. நேரம், 12. நரம்பு, 13. பக்க இயம், 14. இசைப் புலவன், 15. முழுநிறைவான, 16. இன்னிசை அரங்கு, 17. ஆண்டு, 18. குரல், 19. பகை இசை, 20. துப்புரவு, 21. பொதுவியல்பு, 22. உறுப்பு, 23. கார், 24. உள்ளம், 25. சான்று, 26. மொழி, 27. உரை நடை, 28. செய்தி, 29. சினம், 30. வருத்தம், 31. ஏளனம், 32. முடித்தல், 33. வலக்காரம், 34. சொல், 35. வேறுபாடு, 36. பொருள், 37. நடைமுறை, 38. சொற்ருெடர், 39. உயிரி, 40. மிகை, 41, செய்தி, 42. பொருள், 43 வடமொழி, 44. தொடக்கம், 45. ஆற்றல், 46. படித்தல், 47. ஆள்வினை, 48. உண்டி, 49. படையல், 50, ஐயம், 51. இருமொழி அாளன், 52. உரையாட்டு, 53, உயிர்ப்பு, 54. குலம்.
என்ற தூய தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். இச்சொற்களைத் **தென்

Page 27
5O
கலைச் செல்வன்’ என்ற பட்டம் பெற்ற திரு. ஐயர் அவர்கள் அறியாதிருக்க முடியாது, அறிந்தும் இவ்வாறு எழுதியிருப் பது அவருக்குள்ள வடமொழிப் பற்றையே மிகுதியாகக் காட்டுகிறது.
திரு. ஐயர் அவர்கள் தமது கட்டுரையின் ஓரிடத்தில் “இந்த மரபைத் தமிழிலே பிறந்து, தமிழிலே பழகினவர் களே நன்முக அறிந்து கொள்ள முடியு’மெனக் குறிப்பிட் டிருக்கிறர்கள். அச்சொற்ருெடரையே அவருக்கு இக்கட் டுரையின் வாயிலாகத் திரும்ப ஒப்புவிக்கிறேன். இனியும் இது போன்ற தவறன செயல்களில் இவர் தலையிடமாட்டா ரெனவும் நம்புகிறேன்.
திரு. ஐயர் அவர்களைக் குறைகூறுவதிற் பயனில்லை தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்கள் தங்களுக்கு இயற்கையாக வுள்ள அடக்கம், பொறுமை ஆகியவற்றை அளவுக்கு மீறிக் கையாண்டு வருவதணுலேயே, திரு. ஐயர் அவர்களும், அவர் களைப் போன்ற பிறரும், தமிழ் மொழியை-தமிழ் மரபைக் கொலை செய்ய வழி ஏற்பட்டு வருகிறது. நாட்டின் மொழிக்கு ஆக்கம் தேடும் உரிமை உடைய மக்கள் ஒதுங்கி நின்றல், பிற மக்கள் மொழியை வளர்ப்பதாகக் கூறி, அதனைப் பாழ்படுத் துவது எங்கும் இயல்பாகக் காணக்கூடியதேயாகும். ஆகவே, இனியேனும் தமிழ்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் கண்விழித்துத் தம் கடமையை உணர்வார்களென நம்புகிறேன்.
அரசியலாரால் நடத்தப்படுகிறது வானெலி நிலையத் தினர் திரு. ஐயர் அவர்களைப் போன்றவர்களுக்குக் கொடுக் கும் வாய்ப்புக்களை மற்றத் தமிழறிஞர்களுக்கும் கொடுத்து நடுநிலைமையைக் கையாள்வார்களென நம்புகிறேன்.’
புதுமைப்பித்தன் !
மேலும் பேராசிரியரவர்கள், 'தமிழிலுள்ள சிறு கதை எழுத்தாளர்களுள்ளே தன்னிகரில்லாத் தலைவ கை விளங்கிய புதுமைப்பித்தன் கையாண்ட உரை

51
கடை தமிழ் மொழியில் முன் காணப்படாத ஒரு புதிய ாகடையாகும். சாதாரண சொற்களேக் கொண்டு தம் முடைய விசித்திரமான மனுேபாவங்களையும் புதிய கருத்துக்களையும் இலகுவாகவும், படிப்போர் மனத்தில் தெளிவாகப் பதியக் கூடியதாகவும், கூறிவிடுகின் றனர். அவருடைய எண்ணக் கருத்துக்களுக்கு ஏற்பத் தமிழ் மொழி கெளிந்து வளைந்து கொடுப்பதைப் பார்க் கும்போது, தமிழ் மொழிக்கு உள்ள ஆற்றல் எத்தகை யது என்பதை நாம் காண முடிகிறது" என்று ஏற்றிப் போற்றிவிட்டு, "இப்பொழுது அதன் ஆற்றலைப் பயன்படுத்துவதற்குப் புதுமைப்பித்தன் போன்ற இலக்கிய கர்த்தாக்கள் இல்லாமையால், நாம் அதன் சிறப்பைக் கண்டு லின்புற முடியாதிருக்கின்றது” எனக் கவல்கின்றர்கள்
பேராசிரியர் கவற்சியுடன் புதுமைப்பித் தன் உரை கடைக் கவர்ச்சியும் சேர்ந்து, இன்று "புதுமைப் பித்தன் கதைகள்” இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பாட நூலாகவும் விதிக்கப்பட வாய்ப்பினை ஏற் படுத்திவிட்டன. பேராசிரியரவர்கள் , *புதுமைப் பித்தன் கட்டுரைகள்” என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியினை எடுத்து - சில திருத்தங்களுடன் - காட்டி, "அவர் கையாண்ட உரைாகடைக்கு மேல் வரும் உரைப் பகுதி ஒர் எடுத்துக் காட்டாகும்” எனக் கூறிச் சுவை காட்டுகின்றர்கள் 'நீ எடுத்தையா?” என்பதை *நீ எடுத்தாயா ?” எனவும், "மேஜை” என்பதை “மேசை” எனவும்-புதுமைப்பித்தன் இசை வினைப் பெருமலே-பேராசிரியரவர்கள் திருத்திக்கொள்கிறர் கள். யாம், “புதுமைப்பித்தன் கட்டுரைகள்” என்னும் நூலிலுள்ளபடியே அக்கட்டுரையினை கோக்கலாம்:

Page 28
52
'கவிதை, கவிதை என்று சொல்லுகிறர்களே அதைப்பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு காளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது.
*பேணு எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா? குரங்குகளா ஒன்றை மேஜைமேல் வைக்க விடாதீர்கள். அது பேனவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள் மழலையாம், குழலாம், யாழாம் ! அதைவிட ஒரு ஒட்டைக் கிராம போனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக்
கொள்ளலாம்."
குழந்தைகளால் என்ன பிரயோஜனம் ? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா ? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா ? இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா ?
எங்கள் விட்டு "ராஜா”வைப் பற்றி சொல்லவா ? சோற்றுக்குத் தாளம் போட்டாலும் வீட்டுக்கொரு ‘ராஜா' விற்குக் குறைவில்லை. அதில் மட்டும், பாரதி சொன்னதிற்கு ஒரு படி மேலாகவே யிருக்கிறேம். எல்லோரும் இன்னுட்டு மன்னர்களின் தகப்பன்மார்
எங்கள் வீட்டு "ராஜா' இருக்கானே அவன் பேச் செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக் கிறது ? அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது ? என்னுடைய கைத் தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரை யாம் ! குதிரைக்கும் தடிக் கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட் முடியும் ? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அது

53
தான் அவன் தாயார். குதிரை மட்டுமா ? காராக மாறுகிறது. மோட்டார் சைக்கில், இரட்டை மாட்டு வண்டி இன்னும் என்ன வேண்டும் ?
அதுதான் கிடக்கிறது, தமிழைத் தமிழாகப் பேசத் தெரிகிறதா ? இலக்கணம் தெரியுமா ? தொல்காப் பியம் படித்திருக்கிறதா ? இந்தக் குழந்தைகளினல் என்ன பிரயோஜனம் ? உங்களுக்குத் தெரியுமா அவை களிஞல் என்ன பிரயோஜனம் ?
. ஒஹோ ? கவிதையா ? இன்னுெரு தடவை: பார்த்துக்கொள்ளலாம்.”
இது ஒரு கையாண்டிக் கட்டுரை. கவிதையைப் பற்றி எழுதத் தொடங்கி, "தமிழைத் தமிழாகப் பேசத் தெரிகிறதா ? இலக்கணம் தெரியுமா ? தொல்காப் பியம் படித்திருக்கிறதா ?" என நையாண்டி செய்து அமைகின்றது. நையாண்டி கன்றக அமைந்துள்ளது தமிழ் மொழியினை மரபு சாரப் பேசாத ஒரு குடும்பத் தில் - தமிழைத் தமிழாகப் பேசாத குடும்பத்தில் - இலக்கணம் உலவாத ஒரு குடும்பத்தில் - தொல்காப் பியம் பயிலாத ஒருகுடும்பத்தில் - பிறந்து வாழ்கின்ற *ராஜா”வுக்கு இவை எப்படிக் கைவரப் போகின்றன ! இவை வழங்காத ஒரு குடும்பத்தில் வாழும் “ராஜா" வுடன் மழலையையும், குழலையும், யாழையும் எங்ங்னம் சார்த்துதல் கூடும் ? "ராஜா' குரங்குடனும், சனிய னுடனும் குரங்காகவும் சனியனுகவுந்தான் வாழ்வான். சோற்றுக்குத் தாளம் போடுவான். “இன்னுட்டு மன் னர்களின் தகப்பன் மார்” போலவே இருப்பான் !
"இந்த காட்டு மன்னர்கள்" என்பதனை "இன் ஞட்டு மன்னர்கள்” எனவோ "இந்ாகாட்டு மன்னர்கள்" எனவோ எழுதுதல் வேண்டும் என்பதனையே அறிந்து

Page 29
54
கொள்ளாத ஒரு வர் உரைகடையே - பேராசிரியர் போற்றுவதாய் - பல்கலைக் கழகப் பாட நூலாக உயர் கிறது தமிழ் மொழியினை முறையாகப் பயிலாமல் - இலக்கணத்தை அறியாமல் - மரபினையே நோக்கா மல் - வாலறுந்த கரி மற்றைய கரிகளையும் வாலறுக்கச் சொல்வதுபோல் - தமிழ்மொழி உரைகடைக்கு வரம்பு அமைக்கின்றர்கள் ! தமக்குத் தமிழ் மரபோ இலக் கணமோ தெரியாதமையை மறைப்பதற்காக - எல்லோ ருக்கும் விளங்கும் தமிழில் எழுதுகின்ருேம்!” என்று கூறி - காதாற் கேட்பதையெல்லாம் எழுத்தாக எழுதுகின்றர் கள். எழுதுபவர்கள் எழுத்துவனவற்றையெல்லாம் - பொறுமையே உருவான தமிழன்னை - பொறுத்துக் கொள்கின்றள்,
*தீபம்” என்னும் திங்கள் இதழினை வெளியிட்டு வரும் திரு. கா. பார்த்தசாரதி அவர்கள், இப்போது - காலத்துக்கேற்ற - புதுமைப் புரட்சித் தமிழ் - எழுதப் படுவதற்கான அடிப்படைக் காரணத்தைத் தெளிவாக எடுத்தோதுகிறர்கள்: “புதுமை, புரட்சி என்ற சொற் கள் இரண்டும் இல்லாமற் போயிருக்குமானல் மரபு தவறி எழுதுகின்றவர்கள் இறுக்கிப் பிடித்துக்கொண் டிருக்கும் இரண்டு பிடி கொம்புகளை இழந்துபோயிருப் பார்கள். பாட்டு. உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகிவிட்டது இப்போது" எனக் கூறிவிட்டு. "இன்னும் விளக்க மாகச் சொல்லப் புகுந்தால் அதில் பலருக்குத் தனிப் பட்ட ஓர் ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த நிலைக்கு யார் பொறுப்பு ? என்று சற்றே சிந்தித் துப் பார்த்தால், உணர்ச்சிப் பெருக்கே, முடிவான

55
காரணமாக முன் நிற்கிறது. "உணர்ச்சிகளைப் பேசியோ எழுதியோ வெளியிட வேண்டுமென்ற ஆசைத் துடிப் புப் பலரிடம் பற்றிக்கொண்டிருக்கின்ற அளவிற்கு உணர்ச்சிகளை வெளியிடும் அமைந்து அடங்கிய அறி வுத் திறன் சிறிதளவாவது சிலரிடம் கூடப் பெருக வில்லை. அடிப்படைக் காரணம் இவ்வளவினதே. அழகை உண்டாக்.க, தற்காக உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்த நிலைமா) உணர்ச்சிகளை உருவாக்குவதற் காக அழகைப் படைக்க முயலுகின்ற வற்புறுத்தும் முறை நிகழ்கால இலக்கிய உலகில் மிக வேகமாக முன்னேறி வருகின்றது. எதையும், எப்படியும், எங்கும் சொல்லலாம் - சொல்ல முடியும் - சொன் ஞல் என்ன ? என்று துணிந்தவர்கள் அந்த வழியை வகுத்துக் கொண்டிருக்கிறர்கள்” எனக் கவலுகின்றர்கள். எழுது வோரின் ஆற்றற் குறைபாடே இந்த நிலைக்குக் கார ணம் என்பது அவர்கள் கருத்தாகும்.
நடைமுறைத் தமிழ் இயக்கம்
இக் காலப் போக்கில், எழுதுவோரினும் பார்க்கப் படிப்போரின் அறிவு மிகுந்து காணப்படுகின்றது. உயரிய மரபுகள், இலக்கண விதிகள், உரைகடைச் செம்மை ஆகியனவற்றினை அளந்தறியும் திறன் பொதுமக்களிடையே மிகுந்து காணப்படுகின்றது "நாங்கள், எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக எழுது கின்றேம். இக் காலப்போக்கிற்கு ஏற்ப எழுதுகின் ருேம்" என்று கூறி - தமது இயலாமையை முடிமறைக் கும் கூட்டத்தினருக்கு அறிவுச் சுடர் கொளுத்த ஒரு இயக்கமே உருவாகிவிட்டது. தம்மைப் படித்தவர் களாகவோ - பண்டிதர்களாகவோ - வித்துவான்களா

Page 30
56
கவோ - பேராசிரியர்களாகவோ - எழுத்தாளர்களா கவோ கூறிக்கொள்ளாத ஒரு கூட்டத்தினர் இந்த இயக்கத்தினை அமைத்திருக்கிறர்கள். மக்களிடையே மக்களாகவே வாழ்கின்ற - பாமரர்களாகவே தம்மைக் கூறிக்கொள்கின்ற - ஒரு கூட்டத்தினரால் இக் த. இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உணர்ச்சியும். தாய்மொழிப் பற்றும், தனித் தமிழ் விருப்பம் கொண்ட இளைஞர்கள் உருவாக்கிய இயக்கம் இது. இயக்கம் உருவாகி ஓராண்டு இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆனல், காடெங்கும் இந்த இயக்கம் மக்களைஉணர்ச்சி மிக்க இளைஞர்களை - உளக்கிப் பணியாற்ற வைத்திருக்கின்றது.
*எல்லோருக்கும் விளங்கத்தக்க உரைாகடையினை எழுதுகின்றேம்” எனக் கூறி, "எதனையும் எப்படியும் எழுதிக்கொள்ளலாம்" எனக் கூறி - எவரும் வேண்டிக் கொள்ளாமலிருக்கவே எழுதி - பிழைக்கப் பார்க் கின்ற - எழுத்தாளர்களையும் - பண்டிதர்களையும் - வித்துவான்களையும் - விரிவுரையாளர்களையும் - பேரா சிரியர்களையும் - கோக்கி, 'தமிழ் எழுதிக் காட்டுகினற எழுத்தாளர்களே ! என்ன நினைக்கிறீர்கள் ? எங்க ளுக்கு மரபுக்கமைந்த தமிழ் விளங்காது என்று காட் டிக்கொண்டு உங்களை உயர்திக்காட்ட முயல்கின்றீர் களா ? எங்கே, ஒருமுறை நீங்கள் தமிழைத் தமிழாக-மரபு வழுக்கள் இல்லாமல்-எழுதிக் காட்டுங்கள்” என்றே கேட் கத் தலைப்பட்டுவிட்டார்கள் 1
கடைமுைைத் தமிழ் இயக்கத்தின் ஊற்றன திரு. க. இளையதம்பி அவர்கள் உணர்ச்சி மிக்க இளைஞர். தமிழை கன்கு கற்றவர். “எனக்கும் தமிழ் தெரியும்” எனக் கூடக் கூறிக்கொள்ளாதவர். வணிகத் துறை

57
யிலே ஈடுபட்டவர். வரவு செலவுக் கணக்கு அறிக் தவர். அவரிடத்திலே இன்றைய எழுத்தாளர்களின் மூடிமறைக்கும் முயற்சி வாலாட்ட முடியாது. “இதோ காங்கள் எங்கள் நடைமுறையில் தமிழ் மொழியினையே உயர்த்தப் போகின்றேம் 1 எழுத்தாளப் பெருமக்களே! எங்களுக்காகக் கருணை காட்டி எளிய கடையில் எழுதி எம்மைப் படிக்க வைக்கும் பெருந்தொண்டினைச் சற்றே நிறுத்தி வையுங்கள். காங்கள் நீங்கள் சொல்லும் பழர் தமிழ் இலக்கிய மரபு இருக்கும் இடத்துக்கே வருறேம்” எனக் கூறிக்கொண்டு நடைமுறைத் தமிழ் இயக்கத்தினை உருவாக்கியுள்ளார். அவருக்கு, *தாய் காடு" என்னும் திங்கள் இதழின் ஆசிரியரான திரு. “யாழ்தாசன்” (வேலணை வீரசிங்கம்) அவர்களும் துணைபுரிந்து ஊக்கம் அளிக்கின்றர்கள். அவர்களு டன் உணர்ச்சிமிக்க இளைஞர்களும் பலர் சேர்ந்து உழைக்கின்றர்கள். “நடைமுறையிலேயே காங்கள் தமிழ2ன உயர்த்தி உரிய இடத்தில் வைக்கின்றேம்” எனக் கங்கணம் கட்டி நிற்கிறர்கள். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" எனப் பாரதியுடன் பாடிக்கொண்டு, கடை முறைத் தமிழினைப் பரப்பும்படியும், தனித் தமிழ் எழுதும்படியும் மக்களை வேண்டித் துண்டுப் பிரசுரங் களை வெளியிட்டு வருகின்றது, இந்த இயக்கம்.
"ாகம் தாய் தங்தையர்கள், அயலார், உற வினர், கண்பர்கள் தமக்கு எழுதும் கடிதங் களுக்குத் தமிழில் முகவரியிடுங்கள். தமிழில் தர், திப் போக்குவரத்தை இடம்பெறச் செய் யுங்கள். தனிப்பட்ட நிறுவனங்களுடனும் அரசினருடனும் தொடர்புகொள்ளும் எந்தத் மொ, ம-4

Page 31
58
தொடர்புகளையும் கம் தாய் மொழியாம் தமிழ்
மொழியிலேயே செய்யுங்கள். மற்றவர்களை
யும் செய்யும் படி ஊக்கமளியுங்கள்" எனட கடைமுறைத் தமிழிற் செயலாற்றும்படி - மக்களை வேண்டுகின்றது.
*கடைமுறையில் வழங்கும் தமிழினை உயர்த்திப் பரப்பினுல், தமிழின் உரைகடை செம்மையுறும். பேச்சு கடையே தன்னை உயர்த்திக்கொள்ளும், மரபு வளரும்” என்பது இந்த கடைமுறைத் தமிழ் இயக்கத்தினரின் கருத்தாகும். அவர்கள் கருத்து நிறைவேறுமானல், இன்றைய எழுத்தாளர்களும், பண்டிதர்களும், வித்து வான்களும், விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும்மக்கள் மீது கருணை காட்டி-எல்லோருக்கும் விளங்கும் தமிழில் எழுதுவதற்காக - மரபு தவறிக் கீழே இறங்கி வரவேண்டிய நிலைமை ஏற்படாது தமிழ் தமிழாய் இருக்கும்.

புதிய இலக்கணம் வேண்டும்
சென்ற 22-4-62 'வீரசே சரி” இதழில், யான் எழு திய கட்டுரையொன்று “தமிழுக்குப் புதிய இலக்கணம் வேண்டும்" என்ற தலைப்புடன் வெளிவந்திருந்தது. அக் கட்டுரையிலே யான், மொழியினை ஒரு வயலுக்கு ஒப்பிட்டு, செம்மையான இலக்கணம் அமையப்பெருத மொழிகளை வரம்பில்லாத வயல்கள் எனக் குறித்துக் காட்டி , வரம்பில் உடைந்துபோகும் பகுதிகளைப் புதிய மண் கொண்டு செப்பஞ் செய்வதுபோல இலக்கண வரம்பிலும் செப் பங்கள் செய்துகொள்ளலாம் என்ப தைத் துலக்கமாக எடுத்து விளக்கியிருந்தேன். *உயிருள்ள மொழிகள் என்றென்றும் வளர்க் து கொண்டேயிருக்கும். காலச் செலவிலே மொழி மாற்ற மடைகின்றது; வளர்கின்றது. புதிய வழக்குகளையெல் லாம் திரட்டி ஆராய்ந்து பார்த்து இலக்கணம் அமைத் துக்கொள்ள வேண்டியது தமிழறிஞரும் மொழிநூலறி

Page 32
6O
ஞரும் உட்னிருந்து செய்து முடிக்கவேண்டியதொரு பணியாகும்.” என்பது எனது முடிபாகும்.
அதே இதழில், “புது இலக்கணம் வேண்டுமாம்" என்ற ாைகயாண்டித் தலைப்பினைக் கொண்டதாய் வித்துவான் F. X, C. நடராசா எழுதியுள்ள கட்டுரை ஒன்றும் வெளிவந்திருந்ததைக் கண்டேன். இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்களையும் பிறரையும் இழித் துரைத்து வெற்றரவாரம் செய்தமையன்றிக் கருதத் தக்கவை எவற்றையும் யான் அக் கட்டுரையிற் கண்டி லேன்.
இனி, கட்டுரையினைக் கவனிக்கலாம். கட்டுரை யாளர் தமது கட்டுரைத் தலைப்பினை 'புது இலக்கணம் வேண்டுமாம்” என அமைத்துள்ளார்கள். யாரோ அப்படி எழுத அல்லது சொல்லக் கண்டு கூறுவதாக வும், அக்கூற்றுக்குத் தாம் பொறுப்பு அல்லாமை உணர்த்துவதாகவும் தொனிக்க வைக் கிருர், சொல்லு கிற வகையில் அக் கூற்றினைத் தாம் ஏற்றுக்கொள்ள வில் 2ல என்னும் குறிப்பும் அதில் உள்ளது. "ஆம்" *சேர்த்து" "வேண்டுமாம்" எனக் கூறுவதற்கு, தொல்காப்பியத்திலோ, கன்னூலிலோ, வீரமாமுனிவர் இயற்றிய இலக்கணத்திலோ விதி காணப்படவில்லை. எனவே, அதற்காகவே ஒரு புதிய இலக்கணம் வகுக் கப்படவேண்டுமென்று கூறலாம். ஆயின், "இழிங் தோர் வழக்குக்கு இலக்கணம் வரைவதில்லை" எனக் கூறிவிட்டு மேற்செல்வோமாக. இலக்கணம் யாது என விளக்கப் புகுந்த கட்டுரையாளர், “பொது மக்கள் இலட்சணம் என்று சொல்வதை மொழி வல்லார் இலக் கணம் என்பர். அ."தாவது உலகியற்பொருள்களில் காம் கண்டு சுவைக்கும் அழகினை இலட்சணம் என்

6.
போம். மொழியில் அதனைச் சார்த்திக்கூறும்போது இலக்கணம் என்போம். ஆகவே, இலட்சணம் எனி னும் இலக்கணம் எனினும் ஒக்கும்" எனக் கூறு கின்றர்.
*"கீச்சுக் கீச்சென்னும் கிளிபோல, எத்தனையோ ஆண்டுகளாகக் கூறிவந்து இன்று வலுவற்றுப்போன தும் ஒதுங்கிப்போனதுமான ஒரு கொள்கையினை எடுத் தோதிப் பூசி மெழுகும்போதுதான் அது ககை விருந் தாகின்றது இவர் மட்டுமல்லர்; இவருக்கு முன்ன தாகவும், ‘இலக்கியம் இலக்கணம் என்ற சொற்கள் வடமொழிச் சொற்களாகிய லகூழியம், லகூடிணம் என்ப வற்றன் திரிபே" எனக் கூறி வந்தோர் பலர்.
அன்று ஒருகாலம். இன்று காலம் மாறிவிட்ட்து. பிற காட்டவர்களே தமிழ் மொழியினையும் பிற மொழி களையும் துருவி ஆராய்ந்துகொண்டு வருகின்றனர். ஒப்பியலாராய்ச்சி செய்கின்றனர். உண்மைகள் பல வற்றை நாளுக்கு நாள் கண்டு எழுதி வருகின்றனர். வடமொழியே தமிழ் மொழிக்குத் தாய் என்ற காலம் போய், ‘தமிழ், திராவிட மொழிகளின் தாய் மட்டு மன்று; சமஸ்கிருதத்தின் தாயைப் பெற்ற தாயும் அதுவே. உலக மொழிகளின் மூல முதல் தாயும் தமிழ் தான் என்பதை உலகம் அறியும் காள் தொலைவில் இல்லை. உலக ஆராய்ச்சியாளர் விரும்பினுலும் விரும்பாவிட்டாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர் விருப்பத்துக்கு எதிராகவே, ஆராய்ச்சி அத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது." என ஆராய்ச்சிப் பேரறி ஞர்கள் எடுத்துக் காட்டி வருகிறர்கள். "தமிழ்ச் சொற்கள் வடமொழியில் சென்று சேரமாட்டா" என (சொல்லதிகாரம் - எச்சவியல் - ஐந்தாம் சூத்திரத்தின்

Page 33
62
உரை கோக்குக.) சேனவரையர் கூறியிருப்பவும், ட்ாக் டர் கால்டுவேலர், டாக்டர் குண்டெர்டு, டாக்டர் பரோ ஆகிய பலர் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற பன்னுாற்றுக்கணக்கான சொற்களை எடுத்துக் காட்டு கின்றர்கள்.
*இலக்கணம்” என்ற சொல்லினை முதன் முதலில் வழங்கியவர் தொல்காப்பியர். இவரால் வழங்கப் பட்ட இச்சொல் “லகூடிண” என்னும் வடசொல்லின் திரிபு அன்று. "கொள்ளுமென்ப குறியறிந்தோரே” எனக் கூறியவிடத்து, “குறி” எனும் சொல்லானது *நூல்” எனும் பொருளில் வழங்கப்பட்டிருக்கின்றது. *ஒரு குறி கேட்பான் இருகாற் கேட்பின் பெருக நூலிற் பிழைபாடி லனே' என்ற விடத்து, இக் 'குறி” எனும் சொல் “நூல்’ எனும் பொருளே தர்ந்து நிற்பது: காண்க.
இக்'குறி” என்னும் சொல்லோ "ல கூடிண’ என்ற வட்மொழியின் பிராகிருதத் திரிபு எனக் கொண்டு, தொல்காப்பியர் பதஞ்சலி முனிவரின் கருத்துக்களே எடுத்தாண்டார் எனக் குறித்தவர் சிலர். பதஞ்சலி முனிவர் தொல்காப்பியத்திற்குக் காலத்தாற் பிற்பட் டவர். தொல் காப்பியர் காலத்தில் வடமொழி ஆதி காவியமென எடுத்தோதப்படும் வான்மீகி ராமா யணமே உருவாக வில்லை. இலக்கியமே செம்மையான தாய் அமையாத ஒரு மொழிக்கு இலக்கணம் உரு வாதல் சாலாது. தொல்காப்பியர் காலத்துக்கு முன்ன தாகவே தமிழ் மொழியில் இலக்கணங்களும், இலக் கியங்களும் பெருங் தொகையின வாய் இருந்தன என் பதைத் தொல்காப்பியர் எடுத்தோதுகிறர். காரியம் அப்படியிருக்க கம்மவருள்ளே சிலர் ஆராய்ச்சி

63
வளர்ச்சி நிலையி2ன கோக்காமல், பிறர் கூறுவனவற் றையே வேதவாக்காகக் கொண்டு, இலக்கணம் “ஒப் பிக் கிருர்’கள்.
இன்றைய தமிழாராய்ச்சியாளரில் தலைசிறந்த
ஒருவர் இது பற்றிக் கூறுவதை எடுத்துக்காட்டி விட்டு மேற்செல்வேன்.
"தமிழ்மொழியில் இலக்கியம் என்பது மொழியின் சிறந்த நூல்களின் தொகுதி என்ற பொருளிலும், இலக் கணம் என்பது மொழியின் அமைப்பு நூல், அமைப்புக் கூறும் நூல் என்றும் பொருள்பட வழங்குகின்றன. இப்பொருளில் இச்சொற்களுக்கு முலங்களாகக் கூறப் படும் இலகூடியம், இலகூடிணம் என்ற சொற்கள் எங்கே னும் வடமொழியில் வழங்குகின்றனவா ? இல்லை. வட மொழி இலக்கியம், இலக்கணம் என்ற இ2ணச் சொற் களும் ஒன்றுடனென்று பொருத்தமற்றதாகச் சாகித் யம் வியாகரணம் என்ற சொற்களே பயன்படுத்தப்படு கின்றன. இரண்டிலும் தமிழ்ச் சொற்களின் கயம் தென்படவில்லை’-தமிழ் முழக்கம். பக். 103.
தொல்காப்பியர், முக்காலமுணர்ந்த முனிவரேயான லும், “ஆனையும் அடி சறுக்கும்” என்ற பழமொழிக்கு ஒப்ப, தவறிய இடங்களும் உள்ளன. ஓர் சூத்திரத் தினை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுகிறேன் :
* ஒன்பரன் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபகரங் கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும்.”
-தொல்காப்பியம். குற்றிய. 39

Page 34
64
“ஒன்பது என்ற சொல்லின் ஒகரத்திற்கு முன் தகர வொற்றுத் தோன்றும். அதன் பின்னரிடத்துள்ள னகர வொற்று இரண்டு ணகர வொற்றக மாறும். நிலைமொழி வருமொழி இரண்டிலுமுள்ள பத்தென் கிளவியின் பகரமும் ஆய்தமும் கெட அவ்விடத்து ஊகாரம் தோன்றும். வருமொழியிறுதிக் குற்றியலுக ரத்து முன்னருள்ள தகரவொற்று றகர வொற்றகும்” என்பது பொருள்.
ஒன்பதுக்கு பண்டைக் காலத்தில் வழங்கிய பெயர் “தொண்டு” என்பதாகும். தொல்காப்பியரே இச் சொல்லினை,
* மெய்பெறு மரபிற் ருெடை வகை தாமே
ஐயீராயிரத் தாறைஞ் ஞாற்றெடு தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூற் ருென்பஃ தென்ப உணர்ந்திசி னுேரே.”
-செய். 101.
என்ற சூத்திரத்தில் வழங்கியுள்ளார். அப்படி யிருப்பவும், அவர் 'ஒன்பது + பத்து = தொண்ணுாறு” எனக் கூறியது தவறு. புணர்ச்சி மொழியென்று பாமரர் போற்றும் தமிழ்மொழிக்கு அது பெரும் இழுக் காகும். ஒலி நூலுக்கும் தருக்க நூலுக்கும் அமை யாத செயற்கைப் புணர்ச்சி ஆகிவிடுகின்றது. தொல் காப்பியரைப் பின்பற்றி நன்னூலாரும் தவறிவிட்டார். டாக்டர் கால்டுவெல் இந்த வகைப் புணர்ச்சியைக் கண்டு, “தமிழர் எச்சொல்லிலிருந்தும் எச்சொல்லை யும் திரித்துக் காட்டுவர்” எனக் கூறினர். எனவே, இப்படிக்கொத்த தவறுகளைக் கருத்திற்கொண்டு,புதிய இலக்கணம் அமைத்தல் வேண்டும்.

65
“புள்ளிவிட் டவ்வொடு முன்னுருவாகியும்
ஏனை உயிரோ டுருவு திரிந்தும் உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் பெயரொடும் ஒற்று முன்னுய்வரும் உயிர்மெய்”
-நன்னூல், எழுத். 19.
தமிழில் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி ஒலிக் கும் என்பதை மேலே காட்டியுள்ள சூத்திரத்தில் பவணந்தி முனிவர் எடுத்தோ துகிறர். மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலிக்கும் எனக் காட்டுகின்றர். இது ஒலி வடிவிற்குப் பொருக் துவதாயினும், இன்று அமைக் துள்ள வரிவடிவிலே ‘கி” என எழுதும்போது "க" என முதலில் மெய்யினை எழுதிவிட்டு, “கி” எனும் உயிருக்கான குறியினை அதன் பின் எழுதுகின்றேம். ஆயின், "கெ, கை' என்பனவற்றை எழுதும்போது உயிரினுக்குரிய குறியி?ன முதலில் எழுதிக்கொண்டு அதன்பின் மெய்யினை எழுதுகின்றேம். “கொ” என எழுதும்போது உயிரின் குறியினே முன்னுக்கும் பின் க்ைகும் பிரித்து எழுதுகின்றேம். இடைக்காலத்திற் குந்ததாகக் கருதப்படும் இக் குறைபாட்டினையும் நீக்கிப் புதிய இலக்கணம் அமைக்க வேண்டியது அவ சியம் என்பது எனது கருத்தாகும்.
இப்படியாக, தமிழறிஞரும் மொழிநூலறிஞரும் உடனிருந்து செய்து முடிக்க வேண்டிய பணிகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் இக்கட்டுரையில் விரி வாக 6ாடுத்தோ துதல் சாலாது. குறிப்பாக யான் கண்ட சிலவற்றை இங்கு எடுத்துக் கூறி எனது கட்டு ரையினை முடித்துக்கொள்கின்றேன்.
சிலர் தமது பெயர்களேயே தமிழ் மரபி னுக்கு அமைய எழுத முடியாமல் - தமது

Page 35
66
அறிவுக்குப் பட்டபடி - எழுதி வருகிறர்கள்.
சிலர் தமது பெயர்களுக்குமுன் ஆங்கில எழுத் துக்களைப் போட்டுக்கொள்ளுகிறர்கள்; ஆங்
கில எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களிலும் எழுதிக்கொள்ளுகிறர்கள். அல்லாமலும்ாகமது? காட்டில் தமிழ் பேசும் கத்தோலிக் கரும் முசி" லிம் மக்களும் இனித்த நறும் தமிழினையே? படிப்போம் எனக் கூறியும் எழுதியும் வரு
கின்றர்கள் இலக்கியங்களும் படைத்துள் ளார்கள். அவர்கள் பெயர்களை எடுத்து எழு
தும்போதும், (அப்போஸ்தலர், கிறிஸ்து, ஸ்பீ ரீத்து, சார்ந்து, தஸ்கே விசு, கதிஜா காயகி, முனுஜாத்து,கிஸ்ஸா,தெளஹறிதுப் பதம், ஷிபா மாலை ஆகியவற்றை) எழுதும்போதும் பல சொற்கள் தமிழ் மரபுக்கு அமையாதனவாய் வந்து சேருகின்றன. அங்ங்ணம் வந்து சேரு கின்ற சொற்களுக்கும் அவர்களது மனம் புண்படா வகையில் இலக்கணம் வகுக்க வேண்டும் என்பது கூருமலே அமையும்.
இங்ங்னமாக காளுக்கு நாள் நமது மொழியில் வந்தெய்துகின்ற வழக்குகளுக்கும் பிற மொழியின் ஆராய்ச்சி முடிபுகளுக்கும் ஒத்த வகையில் தமிழறிஞர் களும் மொழி நூலறிஞர்களும் உடனிருந்து ஒரு புதிய இலக்கணத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது எனது முடிபு. அதனை மீண்டும் எடுத்துக் கூறியிருக் கின்றேன்.

* செய்யும்’ எனும் கிளவி வரலாறு
*ஆகும் ‘ஆம் ஆகும்
அண்மையில் 13-4-64 ல் வெளிவந்த "வீரகேசரி" இதழில் “ஓம், ஆம் என்ற பதங்களின் உபயோகம்” பற்றியதொரு க ட் டு  ைர வெளிவந்திருப்பதைக் கண்டேன்.
கட்டுரையாளர் "சூரியன் காலேயில் உதிக்கும் கோழி கூவும்’ என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி, கிராமப்புறத்து உபாத்திமார் மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் எளிய முறையினை அடியொற்றி எழுதத் தொடங்கியது நல்லதொரு முயற்சியாகும்.
அந்த அரியமுயற்சிக்கு தெ. பொ. மீ. மணிமலரில் டாக்டர் மு. வரதராசனர், "ஆம்” என்னும் தலையங் கத்துடன் எழுதிய பழங்கட்டுரை யொன்று பெரிதும்

Page 36
6S
பயன்பட்டிருக்கிறது. எனினும், அக் கட்டுரையில் *போகும்-போம்; வேகும்-வேம்; வாவும்-வாம்” என் ணும் உதாரணங்களுடன், டாக்டர் வரதராசனர் காட்டி யுள்ள பிற உதாரணங்களையும், விளக்கங்களையும், முடிபுகளையும் அப்படியே எடுத்துக் காட்டியிருந்தால் கட்டுரை மேலும் விளக்கம் மிகுந்ததாயிருக்கும்.
அவற்றுடன் "ஆம்" என்னும் சொல் மேலும் மேலும் வேறு வேறு பொருள்களைத் தருகின்ற" வகை யினே எடுத்து கிரைப்படுத்திக் காட்டிய கட்டுரையாசிரி -யர் அச்சொல்லானது “நம்பிக்கையில்லாக் குறிப்பினை யும் மறுப்புக் குறிப்பினையும் காட்டுகின்ற பெற்றி யினை எடுத்துக் காட்டி விளக்காமல் அமைந்துவிட் டார். எடுத்துக்காட்டாக, "அவர் வித்துவானம்" என்று கூறும்போது 'அவர் வித்துவான் தானுே” என்ற நம்பிக்கையில்லாக் குறிப்பு உணர்த்தப்படுவது மட்டுமன்றி, "அவர் வித்துவான் அல்லர்” என்ற மறுத் தற் குறிப்பும் வெகு அழகாக உணர்த்தப்படுகின்றமை யைக் காணலாம்.
கட்டுரையாசிரியர், தமது கட்டுரையில் "ஆகும் எனனும் செய்யுமென் முற்று ஆம் என்று திரிய மாட்டாது” எனக் கூறிப் பலவிடங்களில் வழுவியு மிருப்பதனல், பாராயணர்கள் உண்மையை உணரு மாறு "செய்யும் என்னும் கிளவி’ பற்றி நடுநின்று ஆராய்ந்து நுட்பங்களை விளக்கி எழுதுதல் இன்றி யமையாதது எனக் கருதினேன்.
தனித்த தமிழ்க் கருத்துக்களையே முற்றிலும் தழுவிய முழு நிறைவான தமிழ் இலக்கணமோ, இலக்கண உரையோ அறிவியல் முறையில் இதுவரை எழவில்லை எனலாம். எனவே, உண்மையான தமிழிலக்

69
கணத்தை தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு மொழி நூலைத் துணையாகக் கொண்ட தமிழ் முறையான கடு நி2லயாராய்ச்சியும், பன்மொழி யொப்பியலாராய்ச்சி யும் இன்றியமையாதன ஆகும்.
ஆராய்ச்சி ாேக r க் கி ன் றித் தொல்காப்பியத் தினையோ கன்னுT&லயோ மட்டும் துணையாகக் கொள் வோர்-பழைய உரையாசிரியர்களின் உரைகளை விளக்க மின்றிப் படித்துப் பாடம் ஒப்பிப்போர்-தமிழ் மொழி யின் உண்மை இயல்பினையும் விழுப்ப நுட்பங்களை யும் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளுதல் சாலாது.
ஒரு சொல்லினைச் செவ்வையாக ஆராய்ந்தறிந்து துணிவதற்குத் தருக்கம் இலக்கணம் முதலியவற்றை மட்டும் துணையாகக் கொள்ளுதல் போதாது. அம் மொழியிலே பழகிப்பயின்று தேர்ந்த செவியினைக் கேட்டுப் பார்த்தல் வேண்டும். மக்களின் பேச்சுவழக்கி லிருந்தும் அத்தகைய உண்மைகளைக் கண்டு கவனித்து ஆராய்ந்து பார்த்தல் இ ன் றிய  ைம யா த தா கும். மொழிக்கு உயிர் அளிக்கும் உலக வழக்கிற்குச் சிறந்த வர்கள்-ாகமது மொழிக்கு காடோறும் உயிர்ப் பண்பு வழங்குபவர்கள் - நாட்டுப் புறங்களில் வாழும் கன் மக்களாவர் என்பதை காம் மறந்து விடுத லாகாது.
“பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா”
எனத் (தொல்,சொல். 227) தொல்காப்பியர் கூறுகிறர்.
ாகிகழ்காலத்தில் மட்டும் வரக்கூடியதான செய்யும்’ என்னும் முற்றுச்சொல்லானது, பலர்பால், முன்னிலை

Page 37
7Ο
தன்மை என்ற மூன்றிலும் வரமாட்டாது என்பது கருத்து. கன்னூல் ஆசிரியரான பவணந்தியாரும் தொல்காப்பியரைப் பின்பற்றி,
“பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில்
செல்லா தாகும் செய்யுமென் முற்றே??
எனக் (கன். 348) கூறுகிறர். ஆயின் அவர் அதை நிகழ்காலத்துக்கு மட்டும் உரியதாகக் கூறமல்,
*செய்யும் நிகழ்பு எதிர்வும்” என (கன். 145) நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய இரண் .டினுக்கும் உரியதாகக் கூறுகிறர்.
வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரர்,
கும் உம்மோடும் மஃகான் . . . . . . ؟“
பேதமலியும் எதிரின்கண் ணுகும்.
9.
என (விர. பொது 7.) கும் உம் என்பனவும் மகரவொற் றும் எதிர்காலத்தில் வரும் எனக் கூறுகிறர்.
உண்மையில், “கிகழுங்காலத்துச் செய்யும் என்னும் கிளவி எனத் தொல்காப்பியஞர் கூறியுள்ளாரெனினும், அக் நிகழ்காலத்துடன் எதிர் காலமும் உணர்த்தும் எனக் கொள்வதே பொருத்தமாகும். தொல்காப்பிய உரையா சிரியர்கள் எல்லோருமே அது நிகழ்காலம் உணர்த் தும் எனக் கூறியுள்ளனரெனினும், தெய்வச் சிலையார் மட்டும் உண்மையை ஒரளவு நுனித்துணர்ந்து, "ஈண்டு நிகழ்காலம் குறித்தது என்னே, எதிர்காலம் குறித்து வராதோ எனின் எதிர்காலத்துக் கண் வருவது கால மயக்கமாகக் கொள்க’ எனக் (தொல்,சொல். 220-உரை) கூறியுள்ளார்.

7.
கி. பி. பத்தாம் நூற்றண்டு வரை செந்தமிழ் மன் னரும், கற்றமிழ் புலவரும் வாழ்ந்த மலையாள காட் டில், “செய்யும்’ எனும் முற்று, என்றும் எதிர்காலமே உணர்த்திவர வழங்கப் பெறுவது இக் கொள்கைக்கு வலிவுதரும் இன்னெரு சான்று எனலாம்.
இனி, ‘செய்யும்" என்னும் வினைமுற்று-தொல் காப்பியரும் நன்னூலாரும் கூறுகின்றபடி-படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால், பலவின் பால் ஆகிய நான்கு பால்களையும் உணர்த்துவதாதல் வேண்டும். ஆயின் இங்குக் குறிப்பிட்ட கட்டுரை ஆசிரி யரோ, “குதிரை ஓடும்; மரங்கள் வளரும்” என ஒன்றன் பால் பலவின் பால் இவற்றை அடுத்தே வருகின்றது எனக் காட்டிவிட்டு, "ஆனல், இன்று ஆண்பால் பெண்பாலில் வருவதாகயில்லை" என முடிவுகட்டி யிருப்பது கனி இரங்குதற்குரியது.
"அது இங்கே வரும்; அவை இங்கே வரும்:
அண்ணன் இங்கே வரும்; அக்காள் இங்கே வரும்; என்பன போன்ற வழக்குகளைப் பேச்சு மொழியில் இன்றும் காண்கின்றேம். தொல்காப்பிய வழக்குகள் இலங்கையிலேயே சிறப்பாகவும், பிற இடங்களிலே பொதுவாகவும் அமைந்துள்ள நிலை இதை முழுவதாக அரண் செய்தல் கூடும். ‘அண்ணன் இங்கே வரும்: அக் காள் இங்கே வரும்"என வரும் வழக்குகள் பண்டு தொட்டுத் தூய தமிழ் வழங்கும் இலங்கையின் வட பாகத்திலே-சிறப்பாக யாழ்ப்பாணப் பகு தி யி லேஇன்றும் வழங்கி வருவதைக் காணலாம். இவ்வழக்கு களில் மரியாதையுடன் அன்பும் கலந்து மிளிர்கின்றமை ஒரு தனி அழகாகும். தொல்காப்பியர் யாழ்ப்பாணத் தையடுத்த பகுதியிலே தான் வாழ்ந்தார் என்னும்

Page 38
፲2
எனது கொள்கையினை (தமிழன் எங்கே” என்னும் எனது நூல் கோக்குக.) இவ்வழக்கு அரண் செய்வதா கும்.
"சேர்ப்பன் வரும்” (அகநானூறு 50), "ஐயை சொல்லும்” (சிலப்பதிகாரம் 11-151), “நம்பி. வரும்” (சிந்தாமணி 1909) என்றெல்லாம் இலக்கியத்திற் பயின்று-வழக்கில் இருந்தும் வருவதொன்றனை *இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறுதல் பழையன திரட்டிப் பாடம் ஒப்பிக்கும் பான்மையைக் காட்டுவதா கும். "குருடும் செவிடும் கூத்துப் பார்த்தது போலவே" முடியும் என்க.
இனி "செய்யுமென் முற்றும் "ஆம்" என மாறது” என்னும் கூற்றினே ஆராயலாம்:
*செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யாடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் அவ்விடன் அறிதல் என்மஞர் புலவர்'
எனத் (தொல். சொல். 238) தொல்காப்பியர் “செய்யும்” என்னும் பெயரெச்சத்துக்கே விதி கூறியுள்ளார். எனினும், இளம்பூரணர் தம் கூர்த்த மதித்திறத்தால், *அம்பலூரு மவனேடு மொழிமே" என் புழி, மொழியும் என்பது மொழிம் என்றயிற்று. மெய்யொழிந்து, கெடுதலும் உடைத்து. அது "சாரனட என் தோழியும் கலுழ்மே” என்புழிக் கலுழும் என்பது கலுழ்ம் என்ற யிற்று” என விளக்கம் எழுதினர். இதனல், “செய்யும்” என்னும் கிளவி முற்ருக வரினும் எச்சமாம் வரினும் திரியும் என்பது தெளிவாகும். மேலும், செய்யுமென்னும் வாய்ப் பாட்டுக்குச் சிறப்பு விதி கூறிய பவணந்தியார்,

73
*செய்யுமெ னெச்சவீற் றுயிர் மெய் சேறலும்
செய்யுளு ஞம்முந் தாகலும் முற்றேல் உயிரு முயிர்மெய்யு மேகலுமுளவே"
என (கன். 341) விதி செய்துள்ளமையும் காணலாம்: “சாரனட வென் றேNயுங் கலும்மே','அம்பலூருமவ னெடு மொழிமே” என்பன எடுத்துக்காட்டுகளாம். இவற்றல், “ஆகும்” என்னும் "செய்யுமென் மூற்று” **ஆம்” எனத் திரியும் என்பது தெளிவாகும்.
"ஆகும்" என்னும் கிளவி, 'ஆம்” எனத் (செய்யு மென்முற்று) திரிவதினைக் கண்டறிவதற்கு நன்னூலில் வரும் பன்னூற்றுக் கணக்கான சூத்திரங்கள் உள்ளன. இவைகளைக் காண வலியற்றவர்கள் ஆராய்ச்சி செய் வோம் என எழுவது வான்கோழியாட்டமாக முடியும்.
தனித்தியங்குகின்ற ஆற்றல் இல்லாமல், பெயரை யும் வினையையும் சார்ந்து வருகின்ற இயல்பினை யுடைய இடைச் சொற்கள் போலத் தாமாக எழுதும் வன்மை கைவரப்பெருமல் பழங் கிடையன்களைக் கல்லிக் கல்லி-பிறர் எழுதுவனவற்றையே திருப்பி எழுதுவதனல் எமது கறுக் தமிழ் மொழிக்கு எவ்வித ஆக்கமும் ஏற்படாது.
மொ, ம-5

Page 39
O O உலகம் அளந்த
O () தமிழ் இஞ்சி
உலகத்தில் முன் தோன்றி முத்த மொழி தமிழ் அதன் தொன்மையையும் முன்மையையும் அறியா தோரும், அறிந்தும் ஒப்புக்கொள்ளக் கூசுவோரும், அறியாமற் பிறர் அடிச்சு வட்டிற் சென்று ஆராய்ச்சி புரிய முயல்வோரும் உணர்ந்துகொள்ள வேண்டுவது இது. காலத்தால் முற்பட்ட தமிழ் மொழியினை, பிற் பட்டுத் தோன்றிய கலவை மொழியாகிய சமக் கிருதத் தின் வழிவந்ததாகக்கொள்ளும் தவறன ஆராய்ச்சிப் போக்கு உலகத் தமிழராய்ச்சியினையே திசை மாற்றி விட்டது. சென்னைப் பல்கலைக் கழத்தினர் வெளி யிட்ட Tamil Lexicon என்னும் தமிழ்ப் பேரகராதியே, தன் வாலினை விழுங்கத் தொடங்கிய பாம்புபோல, பல்லாயிரக் கணக்கான அருஞ் சொற்களைச் சேர்த்துக் கொள்ளாது விடுத்தும், தமிழ்மொழியின் அடிப்படைச் சொற்களையே வடசொற்களெனக் காட்டிப் பொருக். தப் புளுகு முறையிற் சொற்பிறப்புக் காட்டியுமிருப்ப தால், அதனை அடியொற்றி எழுகின்ற மேலை நாட்டவர் ஆராய்ச்சிகளும் கோணிவருகின்றன.

75
பொருந்தாப் போக்கு
தென்னிந்தியப் பல்கலைக் கழகத்திலும் மலாயாப் பல்கலைக் கழகத்திலும் மட்டுமன்றி, இலங்கைப் பல்கலைக் கழகத்திலும்-வையாபுரிப்பிள்ளை அவர் களின் வலிவற்ற கொள்கைகளையும் கண்ணினை முடிக் கொண்டு ஏற்றுப் போற்றும்-பொருந்தாப் போக்கு இன்று புகுந்துள்ளமை கண்டு ஆற்றது இக் கட்டுரை யினை எழுதுகின்றேன். ஆங்கிலக் கல்வியும் அறிவியல் வழிப்பட்ட ஆராய்ச்சியும் தென்னுட்டிற் புகுந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழ் மொழியின் தனித்தன்மை பற்றிக் கால்டுவேலர் முதலான மேலைநாட்டறிஞர்கன் சுட்டிப்பாக எடுத்துக் கூறி நூறண்டுகளுக்கு மேலாகியும், தமிழ்ப் பேராசிரி யர்களும், விரிவுரையாளர்களும், தமிழறிஞர்களும் சிற் சிலர் இன்னும் ஐயுறவு மண்டலத்திலிருக்து பழைய பல்லவி பாடி வருகின்றர்கள். அவர்களிடத்திற் கல்வி பயில்வோரும் பிறரும் உண்மையை உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழ்ச் சொற்களை ஒவ் வொன்றக எடுத்து, வேரும் ஆக்கமும் காட்டி எழுத வேண்டியதொரு நிலை இப்போது பிறந்திருக்கின்றது.
பழந் தமிழர் வாணிகம்
பழந் தமிழர் வாணிகம் வரலாற்றுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்பினையுடையது. கிறித்து பிறப்பு தற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, கி. பி. பதினுன்காம் நூற்றண்டுவரை தொடர்ச்சிபெற்று நடைபெற்று வந்திருக்கிறது. அக்த வாணிகம் பற்றி யாம் காண விழையும் கற்சாசனங் களும் செப்புப் பட்டயங்களுந்தான் மிகுதியாகக்

Page 40
76
கிடையாவிட்டாலும், பழ ங் த மிழ் இலக்கியங் கள் சுட்டிப்பாக எடுத்துக் கூறுகின்றன. அவை கள்தாம் கூறவிட்டாலும், தமிழர் சென்று வாணிகம் கடாத்திய கிலப்பகுதிகளில் வழங்கும் மொழிகளிலே ஏறிக் குடியுரிமை பெற்று வாழும் தனித் தமிழ்ச் சொற் கள் கூறுகின்றன. தமிழ்க் கோலம் மாறி வேற்று உடையுடன் காணப்படும் அச் சொற்களை யாம் கண்ட் தும், அடையாளம் கண்டு கொள்கிறேம். அவை, தாம் வந்த வரலாற்றைக் கூறுகின்றன. பெற்ற தாய் காணுமற் போன தனது குழந்தையை அடையாளங் கண்டுகொள்வதுபோல - மொழியில் வழங்கிய சொல் லினை யாம் எளிதாகக் கண்டுகொள்ளுகின்றேம். எனவே, சாசனங்களைப்போல வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் சொற்களும் பயன்படுகின்றன. இஞ்சி, ஏலம், மிளகு, தேக்கு முதலான எத்தனையோ பொருள்கள் வாணிகத்தின்போது மேல் காடுகளுக்குச் சென்றன. அவை, மேலே காட்டில் எத்தனையோ பல மொழிகளில் ஏறி வழங்கி வருகின்றன. அவையே ஆராய்ச்சியாளருக்கு வழிகாட்டி கெறிப் படுத்தப் போதுமானவை.
இஞ்சி x
இஞ்சியின் தாயகம் தென்னுடு. தென்னுட்டி லிருந்து சீனம், யப்பான், கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் இது பரந்து பயிர் செய்யப்பட்டு வருகின்றது. பண் டைக் காலம் தொடங்கியே ஈறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக் கிறது. தென்னுட்டில் மட்டுமன்றிப் பிற கீழ்த்திசை காடுகளிலும் மக்கள் இதனை மருந்தாகப் பயன்படுத்தி

77
வந்தமையை அந் நாடுகளிலெழுந்த நூல்கள் எடுத் தோதுகின்றன.
கி. மு. 538 வரையில் கிரேக்கர்கள் பாபிலோனிய நகரினை வெற்றிகொண்டு, பாரசீக வளைகுடா வழியாக கடந்து வந்த தமிழர் பாபிலோனியர் - வாணிகத்தைத் தடை செய்து, செங்கடல் வழியாக வாணிகம் கடை பெறுவதற்கான வழிவகைகளைச் செய்தமைத்தார்கள். கிரேக்க வீரஞன அலெக்சாந்தர் எகிப்து காட்டினை வெற்றிகொண்டு, தனது வெற்றியின் நினைவுச் சின்ன மாக அலெக்சாந்திரியா என்னும் நகரினை அமைத்துக் கொண்டபின்,அங்ாககரே வாணிக நிலையமாய் மாறிவிட் டது. இஞ்சி, மிளகு, ஏலம் முதலானவை மருந்தாக வும் நறுமணப் பொருள்களாகவும் பெயர் பெற்று விளங்கியதால், அவற்றின் விற்பனவும் தேவையும் தமிழர் வாணிகத்துக்கு ஒரு தனிச் செல்வாக்கினை உண்டாக்கின. அகில், சந்தனம், தேன், வெல்லம், அரிசி, சோளம், வெற்றி2ல, பாக்கு, தேங்காயெண் ணெய் முதலான பொருள்கள் மட்டுமன்று, மாணிக் கம், மரகதம், நீலம், வைடுரியம் முதலான பொருள் கள், பஞ்சு, சேலை வகைகள் ஆகியனவும் கிரேக்கர்கள் விரும்பி வாங்கியவையாம். அவர்கள் அப்பொருள் களே வாங்கும்போது அவற்றின் தமிழ்ப் பெயர்களை யும் - கடஞக வாங்கி - வழங்கத் தொடங்கிஞர்கள். அவர்கள் அப்படியாக வழங்கத் தொடங்கிய சொற் களுள்ளே "இஞ்சி' என்ற சொல்லும் ஒன்றகும். அது அக்காலத்திலே "இஞ்சி வேர்” என வழங்கப்பட்டு வந்திருக்கிறது. அக்காலத்தில் வழங்கிய இஞ்சிவேர் இத்தனை நூற்றண்டுகளாகியும் - பற்பல மேலைாகாட்டு மொழிகளில் சிறிது திரிபு பெற்றனவாய் வழங்கி வரு கின்றன.

Page 41
78
மேலை நாட்டில் இஞ்சி
1. தமிழ் மொழி - inchi ver 2. பேர்சிய titka zanjabil 3. சுவாகிலி 罗多 - tangawizi 4. அரபு zanjabil 5. எபிரேய y9 — zenghebil 5. கபில் y - skenjebbir 7. கிரேக்க yy -- zingiberis 8. யோச்சிய g ακα janjapili 9. துருக்கி s re zencefil 10. அல்பேனியா , - zenxhefil 11. இத்தாலிய ensas ZCZeTO 2. இசுப்பானிய , jengibre 13. போர்த்துக்கேய, w gengivre 14. உரோமானிய , ghimber 15. அங்கேரிய #o ga gyomber 16. பிரஞ்சிய த9 — gingembre 17. போலிசு 细* imbier 18. செருமானிய , ingwer 19. இடச்சு s gember 20. ஆங்கில * ginger 21. ஐரிசு gingsear 22. உருசிய yo και ο inbir 23. சுவீடிசு ss smpa ingefara 24. பின்னிசு s - inkivaari
இங்ங்ணமாக, பல மொழிகளில் ஏறிப் பரந்து வழங்கப்பட்டு வரும் சொல்லினை மொழியியலார் “Wander word'' 67 a Tó, gp5 hurt. f. 9. முதலாம் நூற்

79
றண்டளவிலே ஒரு தனித் தமிழ்ச் சொல் - தமிழ் காட் டவர் ஒட்டிச் சென்ற கப்பல்களிலே ஏறி - தனியாகச் சென்று, இத்தனை மொழிகளிலும் இடம்பெற்று வாழ் கின்றது. இப்படியாகத் தெள்ளத் தெளியக் கிடக்கும் ஒரு சொல்லினை - முழுப் பூசனிக்காயைச் சோற்றுள் மறைப்பதுபோல - சிலர், சமக்கிருதச் சொல் எனக் காட்டி உலக வரலாறலுக்கான அடிப்படை உண்மை யி2னயே த2லகீழ் செய்ய முயல்கின்றர்கள். கி. பி. முதலாம் நூற்றண்டிலே "துன்னுங் கருப்பையிலே கூடத் தோன்றத" மொழியாகிய மலையாள மொழி யிலேயே தோன்றியது "இஞ்சிவேர்” எனக் காட்ட முயல்கின்றர்கள். தமிழிலே தோன்றதது எனக் கூறி விடுவதில் அவர்களுக்குள்ள மனநிறைவு, எப்படிக் கொத்ததெனக் காட்டுவதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். இதை எனக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னதாகக் காட்டியவர் திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்கள்.
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி
இஞ்சி :
inei, Noun. Compare srngavera. Malayalam; inji. Latin: gingiber. 1. Ginger-plant, medium shrub; Zingiber Oflicicinale, one of the important drugs used in almost all Tamil medicine;
பூடு வகை. "இஞ்சீவி விராய பைந்தார் பூட்டி” (பதிற்றுப். 42, 10.) என எடுத்துக் கூறுகிறது. தென் னிந்தியாவிலிருந்து - சென்னைப் பல்கஜலக் கழகத் தாரால் - தொகுத்து வெளியிட்ப்பட்ட பேரகராதி கூறு

Page 42
8O
வதை, தமிழ் வழங்கும் புலங்களில் வாழ்கின்ற மக்கள் மட்டுமன்றி, உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேரறிஞர்களும் ஏற்றுப் போற்றுவார்கள் என் பதில் ஐயமில்லை. அங்ங்னம் போற்றும் அறிஞர்கள் யாராவது இதுவரை இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மலையாள மொழியே கருக்கொள்ளாத மிகப் பழைய காலத்திலேயே பிற மொழிகளுக்குச் சென்று வழங்கத் தொடங்கிய தனித் தமிழ்ச் சொல் லினை - மலையாளம் எனவோ, சமக்கிருதம் எனவோ காட்ட முயல்வதை - பிறகாட்டுப் பேரறிஞர்கள் யாராவது கண்டால் கைகொட்டிச் சிரியாரா ? கட்டா யம் சிரிப்பர். ஆயின் இன்று கடந்ததென்ன ? மேலே காட்டினர் எல்லாரும் உண்மையைச் சிறிதும் நோக் காமல், "இஞ்சி வேர்” மலையாளச் சொல் எனக் கொண்டிருக்கிறர்கள். அவர்களுள் ஒருவர் மட்டும் - தற்செயலாக, அரைகுறையாக இந்த உண்மையைக் கண்டிருக்கிறர். அவரும், அது தமிழ்ச் சொல் எனக் காட்டாமல் திராவிடச் சொல் எனக் கூறுகிறர். அவ் வறிஞரின் பெயர் யூல் என்பதாகும். மேலே காட்டறி ஞர் - சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வெளி வந்த பின் - எழுதிய நூல்களில் எல்லாம் அப் பேரக ராதி காட்டிய உண்மைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தே உண்மைக் கருத்தாக வெளிவந்திருக்கிறது. இப்படிக் கொத்த தவறன முடிவுகளைக் காட்டுகின்ற அகராதிகளால் மட்டுமன்றி, தமிழின் பழைமையை மறைக்க விரும்பும் அறிஞர்களின் கட்டுரை நூல் களாலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி கோணி வருகின் றது. அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் மேலே ாநாட்டில் - சென்னைப் பல்கலைக் கழக அகராதியும் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் இயற்றிய

8.
History of Tamil Language & Literature GT Gör gpJv இலக்கிய வரலாறும் வெளிவந்த பின் - உருவாக்கப் பட்ட நூல்களிலிருந்து சிற்சில பகுதிகளை கோக்குவது ாகன் றகும்.
1. An Etymological Dictionary of the English
Language-Rev. Walter, W. Skeat., 1953.
கீற்று என் பார் இயற்றியதும் மேற்காட்டப்பட் டதுமான ஆங்கிலச் சொற்பிறப்பகராதியில், 'ச்ருங்க வேர” எனச் சமக்கிருதத்திலிருப்பதே (ச்ருங்க - கொம்பு: வேர - வடிவம் - மான் கொம்பு போன்றது) ஆங்கிலத்தில் "ஜிஞ்சர்” எனத் திரிக் து வந்தது எனக் காட்டப்பட்டுள்ளது. "இஞ்சிவேர்” என்பது மிகத் தெளிவாயிருப்பவும், 'மான் கொம்பு போன்றது”எனக் கூறி, தமிழ் மக்களையும் மேலைாநாட்டு அறிஞர்களையும் ஒருங்கே ஏமாற்றியவர்களின் திறமையை உண்மை யில் மெச்சவே வேண்டும் !
2. New Practical Standard Dictionary of the English Language-Funk and Wagnalls, NewYork, 1956.
மேலே காட்டிய அகராதி, இஞ்சி மருந்தாகப் பயன்படுவது மட்டுமன்றி, சமையலுக்கும் பயன்படுவ தெனக் கூறி அதன் குணகலங்களை எடுத்தோது கின்றது. இறுதியில், சொல்லின் வரலாற்றினைக் கூறும்போது, அது சமக்கிருதத்திலுள்ள 'ச்ருங்க வேர" என்னும் சொல்லிலிருந்தே வந்ததென எடுத் தோதுகின்றது.
3. The Oxford English Dictionary - Volume IV
Oxford University Press, 1961.

Page 43
82
இவ்வகராதி மட்டும், *ச்ருங்க - கொம்பு; வேர - வடிவம் - ச்ருங்க வேர” எனக் கொள்வதை பூல் என் னும் அறிஞர் “சொற்பிறப்புப் புரட்டுவிளக்கம்’ எனக் கருதுவர் என்பதை எடுத்துக்காட்டி, மலையாளத்தில் காணப்படும் "இஞ்சி வேர்” என்பதைக் குறிக்க வழங் கப்பெற்ற ஒரு பொருட் பன்மொழிச் சொற்களுள் ஒன்றன திராவிடச் சொல் எனக் குறிப்பிட்டுள்ளது.
4. A short Etymological Dictionary of Modern
English - Origins - Eric Partridge. 1963.
இவ்வகராதி, *ச்ருங்க வேர” என்னும் சமக்கிரு தச் சொல்லின் பாளி வடிவமாகிய “சிங்கவேர"விலி ருந்து ஆங்கிலத்துக்கு வந்ததெனக் காட்டி, அது திராவிட மொழி வாயிலாக வந்ததாகலாமோ என ஐயுறவு காட்டுகின்றது.
5. Encyolopaedia Britannica - Volume 10-1964.
மிகப் பழங்காலர்க் தொடங்கியே இந்தியாவிலும் சீனுவிலும் இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்துள்ள தெனக் கூறி, கி. பி. முதலாம் நூற்றண்டளவில் கடு நிலக் கடற் பகுதிகளிலும், 11-ம் நூற்றண்டளவில் இங்கிலாந்திலும் வாணிகத்தால் வந்தடைந்தது எனக் கூறி, கிரேக்க மொழியின் "ஜிஞ்ஜிபெர்”யே ஆங்கிலத் தில், “ஜிஞ்சர்” என வந்ததெனக் காட்டி, அது சமக் கிருதத்துச் “சிங்க பேர” என்னும் சொல்லிலிருந்து வந்ததெனக் குறித்துள்ளது.
«6. A Dravidian Etymologieal Dictionary - Burrow
and Emeneau - Oxford, 1961.

83
பரோ - எமேனே இயற்றிய திராவிடச் சொற் பிறப்பு அகராதியில், "இஞ்சி" என்னும் சொல்லினை 363-ம் தொகுதியாக அமைத்து - "தமிழ்” எனக் காட்டி பிற திராவிட மொழிகளாகிய மலையாளம், கோட்ா, கோட்கு மொழிகளில் முறையே "இஞ்சி, இஞ், இஞ்ஜி என உள்ளனவெனவும் எடுத்தோதப்பட்டுள்ளது. ஒப் பிட்டு நோக்குவதற்கென, பாளி "சிஞ்ஜி” - சமக்கிருத *ச்ருங்க வேர” ஆகிய உருவங்களும் கொடுக்கப்பட் டுள்ளன.
இங்கே கூட, தெள்ளத் தெளிவாக, 364-ம் தொகுதி யாக அமைத்த "இஞ்சு (இஞ்சி)” என வரும் தமிழ் வினையடியின் கீழ் - இஞ்சிச் சொல்லின் பொருள் தெளிவு காட்டப்படவும், அதைப் பொருட்படுத்தாமல், சொல்லடி காட்டி விளக்காமல், அமைவதன் காரணம் யாது ? மேலெழுந்த வாரியாக - சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியிலுள்ள சொற்களை - அப்படியே தொகுத்து - அவ்வகராதி காட்டும் தவறன சொற் பிறப்புத் திரிப்புகளையே அடியொற்றி - தொகுக்கப் பட்டமையேயாம்.
பேரறிஞர் தேவநேயப் பாவாணர் தரும் விளக்கம்
இன்றைய மொழி ஆராய்ச்சித் துறையில் ஓர் உறுதியான வழியினை வகுத்து, ஒரு தனி நெறியினை அமைத்து வரும் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் மட்டும், இந்த அரிய உண்மையை உணர்ந்து, “பண் டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்” எனத் தாம் அண் மையில் எழுதி வெளியிட்டுள்ள அரிய நூலிற் பின்வரு மாறு கூறுகிறர்கள்.

Page 44
84
*இஞ்சி வேர் என்பது தெளிவாயிருக்கவும், வடி மொழியாளர் "ச்ருங்க - கொம்பு வேர - வடிவம் - மான் கொம்பு போன்றது" என்று தமிழரை ஏமாற்றி யதுமன்றி, மேலையரையும் மயக்கியிருப்பது வியக்கத் தக்கதே. இஞ்சுதல் - நீரை உள்ளிழுத்தல்.”
uds. 127

மொழி மரபு விளக்கம்
ஒலி மரபு மொழிக்கு மொழி ஒலிகளில் வேறுபாடுகள் அமைந்துள்ளன. தனிப்பட்ட மொழி ஒவ்வொன்
றிலும் தனித்தனியான வகையைச் சார்ந்த மெய்யொலி களும் உயிரொலிகளும் அமைந்திருப்பக் காண் கின்றேம். அவை ஒன்றினையொன்று தொடர்ந்து இயல்வதிலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியான இயல்பு அமைந்திருக்கக் காணலாம். அவ்வொலி களின் அமைப்பே அவ்வம் மொழிகளின் ஒலி இசைத் தனித்தன்மைப் போக்குக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனித் தனித் தன்மை வாய்ந்த மரபு ஒன்றினை அவை நிறுவி விடுன்றன. எனவே ஒவ்வொரு மொழிக்கும் தனிப் பட்ட ஒவ்வொரு அடிப்படை ஒலி மரபு உண்ட்எகி விடுகின்றது. அங்ங்னம் அமையும் ஒலி மரபு மிகுதி யும் மாறுபடுவதில்லை. பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் வந்து புகுகின்றபோது சில மாறுதல்கள் ஏற்படுவதுண்டு. அக்காரணத்தினலேதான் பிறமொழி ஒலிகள் ஒரு மொழியிற் புகுவதற்கு மொழிமரபு இட மளிப்பதில்லை. புகுகின்ற ஒலிகள், அம்மொழியின்

Page 45
86
ஒலியமைப்புக்கு ஏற்றவகையில்-மெய்களுக்கிடையே உயிரினைப் புகுத்தியோ, மெய்களுன் ஒன்றனே வேறென்றகத் திரிபுபடுத்தியோ-மாற்றி ஒலிக்கப் படுதல் வேண்டும்.
சில மொழிகளில், சொற்களின் முதலில் எவ்வெவ் வொலிகள் வரலாம் எனவும், இடையில் எவ்வெவ் வொலிகள் வரலாம் எனவும், இறுதியில் எவ்வெவ் வொலிகள் வரலாம் எனவும் திட்டமான வரையறைகள் உள்ளன. சில மொழிகளில் எவ்வெவ்வொலிகள் கூடி வருதலாகாது என்ற வரையறை கூட உள்ளது. சிற் சில மொழிகளில் அப்படிக்கொத்க வரையறைகள் இல்லை. இங்ங்ணமாக, குறித்த குறித்த ஒலிகளை ஏற்றுப் போற்றுவதிலும் தள்ளிக் கழித்துவிடு வதிலுமே மொழிகளுக்கிடையில் வேறுபாடுகள் மிகுதி யாகக் காணப்படுகின்றன. அவ்வேறுபாடுகளை யாம் நுனித்துணர்ந்துகொண்டால், மொழிகளின் உண்மை. யியல்புகளை உணர்ந்துகொண்டவர் ஆவோம்.
தாய்மொழியின் சிறப்பியல்பு
தமிழ் மொழியோ உலகத்துப் பழம்பெரும் மொழி களுளெல்லாம் முந்தித் தோன்றிய இயன் மொழி யாகும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறு போல எழுத்துக்கள் எல்லாம் சொற்களின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரையறை இல்லாமல் வருவதில்லை. உலகத்திலுள்ள மொழிகளிலெல்லாம் உயிர்களும் மெய்களும் கலந்தே ஒலிக்கப்படுகின்ற வெனினும், அவற்றுக்கெல்லாம் முதன் முதலாகக் கூட்டு வடிவம் அமைத்துக்கொண்டவர் தமிழரே எனக் கொள்ளுதல் வேண்டும். தமிழ் மொழியினைப் பின்பற்றியே சமக்கிருதத்திலும் பிற இந்திய மொழி

87
களிலும் உயிர்மெய்க் கூட்டு வடிவங்கள் அமைக்கப் பட்டன என்பதே பொருத்தமாகும். மேலோகாட்டு: மொழிகள் பலவற்றிலும் தனி எழுத்துகளாக உயிர் களும் மெய்களும் தனித்தனியாக இயல்வதையே காண்கின்றேம். ஆயின், அவை ஒலிக்கப்படும்போது உயிர்களும் மெய்களும் கலந்தே ஒலிக்கப்படுகின்றன. முதல் நிலை எழுத்துக்கள்
தமிழ் மொழியில் எல்லா எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரமாட்டா. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும் எனத் தொல் காப்பியர்,
"பன்னிருயிரும் மொழி முதலாகும்’ (சூ. 59.) என்னும் சூத்திரத்தாற் குறித்துக் காட்டுகின்றர்.
மெய்யெழுத்துக்கள் பதினெட்டும், க், ங், ச், ஞ், ட், ண், த், ங்.என்ற உருவத்தில் ஒருபோதும் மொழிக்கு முதலாக வரமாட்டா. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களின் துணைகொண்டே மொழிக்கு முதலாக வரும். மெய்யெழுத்து வக்தால் அதனை அடுத்து வேறு ஒரு மெய்யெழுத்துத் தொடர்ந்து வராது; உயிரெழுத்தே தொடர்ந்து வரும். க,த,ாக,ப,ம என்னும் ஐந்து எழுத்துக்களும் எல்லா உயிரெழுத்துக் களோடும் சேர்ந்து வரும். ச, வ, ஞ, ய என்னும் கான்கு எழுத்துக்களும் சிற்சில உயிர்களோடு மட்டும் வரும். பிற எழுத்துக்கள் முதலில் ஒலித்ததற்கு அரிய ஒலிகளாய் இருப்பதனல் மொழி முதலாக வருவதில்லை.
மொழிக்கு முதலாக வரும் எழுத்துக்களில் ங்கர மும் ஒன்றெனத் தொல்காப்பியர் கூற திருப்பவும், பவணந்தி முனிவர் தாம் இயற்றிய நன்னூலில்,

Page 46
88
“சுட்டியா எகர விஞவழி அவ்வை ஒட்டி ங்விவும் முதலாகும்மே”
என ங்கரத்தையும் சேர்த்துக் கூறியுள்ளார். கனம், ஈங்கனம்” என வரும் சொற்களின்
(எழுத் 106,
Jخfi ریچھے “۶ 5ffGu
"அங்ாவனம் , இங்ாவனம்” எனக் கண்டறியும் ஆற்ற லின்றி “ங்னம்’ என்பதனை ஒரு சொல்லாகப் பவணந் தியார் கொண்டமை தவறகும்.
மொழிக்கு முதலில் வருகின்ற பின்வருமாறு தெளிவாக உணர்ந்துகொள்ளுதல் பயன்
தருவதாகும்.
எழுத்துக்களைப்
மொழிக்கு முதலில் வரும் எழுக்துக்கள்
அ ஆ இ
5 SAT கி
nama Hai
F Fr 6
. 655 €95AT ...
த தா தி
帮
历
f
4/
T
夺
2E"
dia
ᎧᎫ"
கெ கே
Gyr G86F
ஞெ .
தெ தே
நெ நே
&?
6.5
6)
தை
edits
6dd
8
Gosir
Qogor
ஞொ
தொ
(с)вят
QLuft
זו מQu
g
கோ
Gar it
தோ
GLir
(3 upr
זו א3)
ad av Gaur (Bawar
ஒள
கெள
செள
தெள
நெள
பெள
மெள
யெள
வெள

89
தமிழ் மரபின்படி மேலே காட்டப்பட்டிருக்கும் எழுத்துக்களே மொழிக்கு முதலில் வருவனவாகும். மொழிக்கு முதலிலே வரா எனக் காட்டப்பட்ட எழுத் துக்களை முதலிலே கொண்டனவாய் வரும் சொற்க எால்ல என்பதை யாம் கண்டறிந்துகொள்ளலாம். எனவே, யாம் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழு தும்போது தமிழின் ஒலிமுறை மரபுக்கேற்பத் திரித்து அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மொழிக்கு முதலாய் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
அணி, அரசன், அழை. ஆட்ை, ஆண்மை, ஆய்ச்சி. இலை, இருள், இணக்கம். ஈகை, ஈடு, ஈரம். உலகம், உண்மை, உட்ை. ஊடீல், ஊண், ஊக்கம். எடை, எண்ணம், எழுச்சி. ஏக்கம், ஏடு, ஏமாப்பு. ஐயர், &多j, ஐயம். ஒன்று, ஒப்பு, ஒலி. ஒட்டம், ஒசை, ஒரம். ஒள - ஒளவை, ஒளவியம், ஒளட்தம். ஆய்தமும் தனி மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலாக வரமாட்டா. மொழிக்கு முதலில் ஒலிப்ப தற்கு அரிய ஒலிகளாய் இருப்பதால் இவை மொழி முதலாக வருவதில்லை. மேலைாகாட்டு மொழிகள் சில வற்றிலும் சிறப்பாக ஆங்கிலத்திலும் மொழி முதலில் ஒரு மெய்மாத்திரமன்றி இரண்டுமுன்று மெய்களும் தொடர்ந்து நிற்பதுண்டு.
மொ. ம-6
t

Page 47
90
Sparrow - இரண்டு மெய்கள் முதலில். StraW - மூன்று மெய்கள், முதலில். இங்ங்னமாக இயலும் ஆங்கில மொழியிற் கூட, ஒலித்தற்கு அரிய ஒலிகள் வந்தால், அவற்றை ஒலிக் காமால் விட்டுவிடுவது வழக்கமாக உள்ளது. Knife - K ஒலிக்கப்படுவதில்லை. Pneumonia - P ஒலிக்கப்படுவதில்லை. Gnat - G ஒலிக்கப்படுவதில்லை. மெய்யெழுத்துக்கள் இரண்டு மூன்றக வரும் போது அவற்றைச் சேர்த்து ஒலிக்க முயலும்வேளையில் மூச்சுத் தடை மிகுகின்றது. அதனுல், ஒலிப்பு முயற்சி அரிதாகின்றது. எனவே, ஆங்கிலேயர்கூட அவற்றை ஒலிக்காமல் விட்டுவிடுகின்றனர்; எழுதும்போது பழைய வழக்கப்படியே எழுதுவர்.
முன் காட்டப்பட்ட மெய்யெழுத்துக்கள் உயி ரோடு சேர்ந்து மொழிக்கு முதலாய் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு: ககரம்:
- கண், கன்று, கலை, - கால், காட்ை, காலை, - கிளி, கிழமை, கிழியல். கீ - கீரை, கீறு, கீச்சி.
- குஞ்சி, குடம், குமரி. - கூகை, கூடு, கூலம் கெ - கெடுதி, கெழுமை, கெம்பு. கே - கேணி, கேரளம், கேளிர். கை - கைகோள், கைமாற்று, கைப்பு
T

கொ - தோ - கெள - சகரம்:
~
9; [T =
明 学
母所 Kinio
துரு w செ awa
சே -
ബ് - சொ - சோ - செள -
தகரம்:
9.
கொக்கி, கொச்சை, கொடை. கோடி, கோட்டை, கோமாளி.
கெளரவம், கெளவை, கெளஸ்ரீ,
சகட்ம், சகதி, சண்டை. சாக்காடு, சாயல், சால்பு. சிக்கல், சிங்கம், சிமிழ். சீட்டு, சீர், சீழ். சுடர், சுணை, சுருக்கு. தடை, சூழ்ச்சி, சூறை. செண்டு, செம்மை, செல்வம். சேட்டை, சேய், சேர்க்கை. சைகை, சைவம், சைனர். சொக்கன், சொல், சொறி. சோடு, சோர்வு, சோறு. செளரியம், செளந்தரியம், செளளம்.
- தகுதி, தங்கை, தலைமை. - தாடி, தாமரை, தாழ்மை. - திடர், திமிங்கலம், திரிகை. ρωα தீங்கு, தீர்வை, தீவு. - துடுக்கு, துணிவு, துயில். - தூக்கு, தூய்மை, தூறு.
தெய்வம், தெளிவு, தென்புலம்,
கே - தேக்கு, தேமா, தேவர்.
தையல், தைரியம், தைலம்.
- தொங்கல், தொடை, தொட்டில்,
தோகை, தோப்பு, தோழன்.
- தெளவல், தெளவை, தெளகித்திரன்,

Page 48
Lusyib:
it as
esse
t
남 ❤s: GL — G3 -
60 -
GT suum
போ -
GL GMT -
币5阿ü:
仔 ~
币打 一
só o 吊
நூ - ിൻ - (815 - ഞ - கொ - 86 - கெளா
மகரம்:
Lð asias
LDsf Saxo
92
பகடி, பச்சை, பற்று. பாகு, பாடி, பாரம். பிணை, பிடி, பின்னல். பீடு, பீரங்கி, பீர்க்கு. புகழ், புணர்ச்சி, புலவர். பூங்கா, பூச்சி, பூண்டு. பெண், பெயர், பெருக்கம். பேச்சு, பேரின்பம், பேறு. பைங்கூழ், பையல், பையுள். பொகுட்டு, பொங்கல், பொத்தி. போக்கிலி, போது, போற்றி. பெளத்திரன், பெளர்ணமி, பெளவம்
நகர், கடனம், நஞ்சு. நாடு, காண்மலர், காள். நிகழ்ச்சி, நியதி, நிறை. நீர்மை, நீலம், கீறு. நுங்கு, நுதல், நுரை.
நூபுரம், நூல், நூறு.
கெடில், கெருக்கம், கெல். கேயம், கேர்மை, நேற்று. ாைகதல், கையாண்டி, கைவேத்தியம், கொடி, கொச்சி, கெய்ம்மை. நோக்கம், கோய், கோன்பு. கெள (மரக்கலம்), கெளவி (மான்)
மணம், மணி, மயில். மாடு, மாத்திரை, மாற்றம்.

93
மி - மிகுதி, மிதியடி, மிளகு.
tổ - மீகாமன், மீட்சி, மீனம் மு - முகில், முடி, முதுமை. மூ - முக்கு, மூட்டு, முதுரை. மெ - மெய், மெலிவு, மென்மை. மே - மேடு, மேய்ச்சல், மேற்கு மை - மைந்தன், மையல், மைத்துனன். மொ - மொக்குள், மொட்டு, மொழி. மோ - மோடு, மோப்பம், மோனம், மெள - மெளட்டியம், மெளலி, மெளனம்.
இனி, மெல்லினத்தைச் சேர்ந்த ங் கர ஞகர மெய் களும், இடையினத்தைச் சேர்ந்த யகர வகர மெய் களும் குறிப்பிட்ட சில உயிர்களோடு சேர்ந்து மொழிக்கு முதலாய் வரும் என்பதற்கு எடுத்துக் காட்டு: V.
ங்கரம்:
அங்ங்ணம் - அ-ங்னம் இங்ங்ணம் - இ-ங்னம் உங்ங்ணம் - உ-ாங்னம் எங்ாவனம் - எ-ாங்னம் யாங்ாங்னம் - யா-ாவனம்
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களுள் ஈங்கரத்தை ஒன்றெனத் தொல்காப்பியர் குறித்திலர். நன்னூலாசிரியரான பவணந்தி முனிவர் *ங்னம்?? என்பது ஒரு சொல்லெனக் கொண்டு ங்கரமும் வரு மென்பர். உண்மையில் பழைய இலக்கியங்களில் ஈங்கனம், யாங்கனம் " என்ற வழக்குகள் மட்டும் காணப்படுவதால், “ங்ணம்” என்பதை ஒரு சொல்

Page 49
94
லெனக் கொள்ளுதலாக்ாது என்பதே அறிஞர் முடி பாகும்.
ஞகர மெப், பன்னிரண்டு உயிர்களுள் அ, ஆ, எ, ஒ என்ற நான்கு உயிர்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு:
655JLib:
ஞ - ஞண்டு, ஞமலி, ளுமன். ஞா - ஞாங்கர், ஞாயிறு, ஞானம்.
ஞெ - ஞெகிழி, ஞெண்டு, ஞெள்ளே. ஞொ - ஞொள்கல்.
“மிஞறு” என்னும் சொல் எழுத்து நிலைமாறிய இலக்கணப் போலியாய் “ஞமிறு" எனவும் நிற்ப துண்டு. "ஞமிறு" என்னும் சொல் “மிஞறு” என்பதன் போலியாதலால், அது இயற்கை மொழி ஆகாது.
யகர மெய், பன்னிரண்டு உயிர்களுள் அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள ஆகிய ஆறு உயிர்களுட்ன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என்பதற்கு எடுத்துக் காட்டு:
யகரம்:
- யமன், யவனர், யவை. யா - யாண்டு, யாமம், யாழ். UL - யுகம், யுத்தம், யுவன்.
- யூகம், யூதம். யூடம். யோ - யோகம், யோசனை, யோனி.
யெள - யெளவனம், யெளவனிகை.
தொல்காப்பியர் "ஆவோடல்லது யகரம் முத லாது” என எடித்தோதியிருப்பவும், ப, யு, யூ, யோ,

95
யெள என்னும் எழுத்துக்களை மொழிக்கு முதலில் வருமென பவணந்தி முனிவர் கூறுகிறர்.
வகர மெய், பன்னிரண்டு உயிர்களுள்ளும் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டு உயிர்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என்பதற்கு எடுத் துக்காட்டு:
618 yü:
GOJ - வசை, வஞ்சி, வண்ணம். 6)jT - வாட்டம், வாய்மை, வாழ்க்கை. 69 - விடியல், விடுதலை, விம்மல். Gif - வீக்கம், வீடு, வீ2ண. வெ - வெகுளி, வெட்கம், வெம்மை. வே - வேட்டை, வேந்தன், வேளாண்மை. வை - வைகறை, வைப்பு, வையம். வெள - வெளவால், வெளவுதல்.
பிறமொழிச் சொற்கள்
டப்பி, ரவை, லட்டு, லக்ஷ மணன், ரத்னம், ரங்க காதன் ஆகிய சொற்கள் பிறமொழிகளிலிருந்து வந்த சொற்களாகும். “ற”கரம் தமிழ் மொழிக்கே சிறப்பாக வுரிய எழுத்தாகலின் பிறமொழிச் சொற்களிலே வரு பவை "ர"கரமே எனக் கொள்ளுதல் வேண்டும். பிற மொழிச் சொற்கள் "ட"கரத்தை முதலிலேயுடிையன வாயிருந்தால் அச்சொற்களைத் “த”கரம் முதலாகவோ *இ’கரம் அல்லது 'அ'கரம் முன்னதாக இட்டோ எழுதுவதுண்டு. “ர” “ல” ஆகியவற்றை முதலிலே கொண்ட பிறமொழிச் சொற்களுக்கு "அ, இ, உ” ஆகிய உயிர்களுள் ஒன்றினை முன்னதாக இட்டு எழுதுவதுண்டு. அவற்றுக்கான எடுத்துக்காட்டு.

Page 50
96
டமருகம் - தமருகம்
டம்பம் - தம்பம், இடம்பம்
லாபம் - இலாபம்
G69. - இலிபி
லோகம் - உலோகம்.
மொழிக்கு முதலாக வராத எழுத்தினை முதலில் கொண்ட பிறமொழிச் சொற்கள் தமிழில் எழுதப்படும்
போது, அவற்றின் மாற்றப் பெறுவதும்
முதலெழுத்து நீக்கப்படுவதும், உண்டு. சிலவேளைகளில்-அதை
மாற்றியும், மாற்றமலும் - அதன் முன் ஒர் உயிர்க்
குறில் இயைவதாய்ச்
சேர்க்கப்படுவதுண்டு. அவற்றுக்
கான எடுத்துக்காட்டு :
ரஷ்யா ems ஸ்பெயின் - ஸ்க்ாங் தம் - லண்டன் dixit


Page 51
98
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ ஆகிய உயிரெழுத்துக்கள்ஒர் எழுத்தே ஒரு சொல்லாய் நின்று பொருள் தரும்ஒரெழுத்தொரு மொழிகளாக வந்தன. ஒரெழுத்தொரு மொழிகளுக்கு முதலும் ஈறும் அவ்வெழுத்துக்களே யாகும். கா, தீ, பூ, தே, தை, போ ஆகிய உயிர் மெய் கெட்டெழுத்துக்களைப் பிரித்தால், க் + ஆ, த்+ஈ, ப் + ஊ, த் + ஏ, த் + ஐ, ப்+ஓ எனப் பிரிபடுகின்றன. அங்ாவனம் பிரிக்கப்பட்ட சொற்களின் முதல் எழுத்துக் களாக உள்ளவை முறையே ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ என் பனவாகும். அவையே அச்சொற்களுக்கு ஈற்றெழுத் துக்களாக வந்தன.
ஒள என்னும் உயிர் கெட்டெழுத்து க், வ் என்ற மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து மொழிக்கு ஈற்றில் வரும்; தனி உயிராக மொழிக்கு ஈற்றில் வராது.
GT-G) :
கெள (க்+ ஒள) - வாயினுற் பற்று வெள (வ்+ஒள) - கொள்ளையிடு ஒ என்னும் உயிர்க்குறில் நகரமெய்யோடு சேர்ந்தே மொழிக்கு ஈற்றில் வரும்; பிற மெய்களுடன் சேர்ந்து மொழிக்கு ஈற்றில் வருவதில்2ல. 6r–(6) :
கொ (க்+ஓ) - துன்பப்படு *எ” என்னும் உயிர்க்குறில், மெய்களோடு சேர்ந்து மொழிக்கு ஈற்றில் வராது. அளபெடையின் அடை யாளமாக நிற்கும் நிலை மட்டும் அதற்கு உண்டு.
மெய்யெழுத்துக்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினெரு மெய்யெழுத்துக்களும் மொழிக்கு ஈற்றில் வரும். க, ச, ட, த, ப, ற என்னும்:

99
ஆறு மெய்களும் மொழிக்கு ஈருய் வரமாட்ட்ா. இவை ஆறும் குற்றியலுகரத்தின் துணைகொண்டு மொழியின் ஈற்றில் வரும் என்பர் தொல்காப்பியர்.
எ-டு :
உரிஞ் - உரிஞ்சுதல்
மண் - நிலம்
பொருங் - பொருந்துதல்
கரம் - கை
பொன் - உலோக வகை
வேய் - மூங்கில்
வேர் - மரத்தின் உறுப்பு
வேல் - ஆயுத வகை
தெவ் - பகை
காழ் - வைரம்
வாள் - ஆயுத வகை
மெல்லினத்துள் ‘ங்’கரம், ஈற்றில் ஒலித்தல் அரு மையாதலால், மொழியின் ஈற்றில் வருவதில்லை.
குற்றியலுகரமும் மொழியின் ஈற்றில் வருவ துண்டு :
Gr-G :
(b)חfb நெல், கல், கள் முதலான சில சொற்கள்-ஒலித் தற்குச் சிறிது அருமையாக இருப்பதால்-குற்றிய லுகர ஈறு பெற்று ஒலிக்கப்படுகின்றன :
GT-() :
கெல் - நெல்லு கல் - கல்லு கள் - கள்ளு

Page 52
OO
புல் - புல்லு சில் - சில்லு பல் - பல்லு
பிறமொழிச் சொற்கள்
வல்லின மெய்க2ளயும் மொழிக்கு ஈருய்த் தமிழில் வராத ஒலிகளையும் ஈற்றில் கொண்ட சொல்லாயிருப் பின், அதற்குப்பின் ஓர் உயிர் அல்லது உயிர்மெய் சேர்க்கப்படுவதுண்டு; அல்லது அதன் இறுதி எழுத்து மாற்றப்படுவதுண்டு :
எ - டு : England - இங்கிலாந்த் - இங்கிலாந்து Newyork - fy(3ujTřáš - நியூயோர்க்கு
Europe - யூரோப் - ஐரோப்பா. Danish - தானிஷ் - தேனியம் Portuguese - போத்துக்கீஸ் - போத்துக்கீசர் Sinhala - சிங்கள - சிங்களம்
Kathigama - கதிர்காம - கதிர்காமம் Mr. Cook - திரு. குக் - திரு. குக்கு (குக்கர்) Christ - கிறிஸ்த் - கிறித்து, கிறிசித்து August - ஒகஸ்ட் - ஒகத்து
மொழிக்கு இடையில் வரும் எழுத்துக்கள்
மொழிக்கு இடையில் மெய்யெழுத்துகள் ஒன்றுட் னென்று பொருந்தக் கூடுவதை இலக்கண நூல்கள் “மயக்கம்” எனக் கூறும். "மயக்கம்’ என்பது ‘கூட் ட்ம், சேர்க்கை" எனப் பொருள்படும். "மெய்ம் மயக் கம்" எனப்படுவது "மெய்யெழுத்துகள் ஒன்றனேடு மற்றென்று கூடுதல் ஆகும்.

O
மொழிக்கு இடையிலே, உயிருடன் மெய்யும், மெய்யுடன் உயிரும் கூடுகின்ற கூட்ட்த்துக்கு ஓர் எல்லை கிடையாது. எனவே, மொழிக்கு இடையில் வருகின்ற உயிர்மெய்யெழுக்களின் சேர்க்கை பற்றி மட்டும் இங்கு ஆராய்வோம். மெய்யெழுத்துகளில் க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்கள் கான்கும் தம் மொடு தாம் மயங்குவன. இதனைதிலக்கண நூல்கள் “உடனிலை மெய்ம்மயக்கம்" எனக் கூறும் :
எ - டு
சுக்கு, முக்கு, கொக்கு பச்சை, மூச்சு, பூச்சி சித்தம், முத்து, கொத்து உப்பு, முப்பு, துப்பு. (இவ்வெடுத்துக்காட்டுகளில் ககர மெய், கு என்னும் உயிர் மெய்யின் முதல் ඉ6ණි) யான ககர மெய்யோடும், சகரம் அவ் வாறே சை, சு என்பனவற்றிலுள்ள சகர மெய்யோடும், தகரம் தகர மெய்யோடும், பகரம் பகர மெய்யோடும் மயங்கி கிற் பதைக் காண்க.)
இடையினத்தைச் சேர்ந்த ரகர ழிகர மெய்கள் (ர், ழ்), தம்மொடு தாம் மயங்காமல், பிற மெய்க ளோடு மட்டும் மயங்கு வனவாம்.
6t-G:
மார்பு, சார்பு, ஊர்தி. வாழ்வு, வாழ்க, தாழ்வு. (இவ்வெடுத்துக்காட்டுகளில் ரகர மெய்-பகரமெய் தகரமெய்களோ டும், ழகரமெய்-வகரமெய் ககர

Page 53
O2
மெய்க ளோடும் மயங்கி நிற்பதைக் காண்க.)
முன் காட்டப்பட்ட க், ச், த், ப், ர், ழ் ஒழிந்த ங், ஞ், ட், ண், ங், ம், ய், ல், வ், ள், ற், ன் ஆகிய மெய்கள் பன்னிரண்டும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவும் மயங்குவனவாம்.
arー@:
ங்:
எ-டு:
வெட்டு, வெட்கம் சுண்ணம், சுண்டு (இவ் வெடுத்துக் காட்டுகளில் வெட்டு, வெட்கம் என்பவை தம் மொடு தாம் மயங்கியமைக்கும் சுண்ணம், சுண்டு என்பவை தம் மொடு பிற மயங்கியமைக்கும் காட் டப்பட்டுள்ளன.)
வேற்றுநிலை மயக்கச் சிறப்பு விதிகள்
‘ங்’ என்னும் மெய்யெழுத்தின் பின் சிக்” என் னும் மெய்யெழுத்து வந்து கூடும்.
பங்கு. (பங்கு என்னும் சொல்லின் நடுவி லுள்ள ‘ங்’ என்னும் மெய்யெழுத் துக்குப் பின் "கு" (க்+ உ) என்னும் உயிர் மெய்யிலுள்ள "க்" வந்து கூடியது.)
"வ்’ என்னும் மெய்யெழுத்தின் பின் ‘ய்‘ என் னும் மெய்யெழுத்து வந்து கூடும்.

gr-G:
ஞ்:
6t-G:
103
தெவ்யாது. "ஞ்" என்னும் மெய்யெழுத்தின் பின் ‘ச்?
என்னும் மெய்யெழுத்தும், ‘ய்‘ என்னும் மெய் யெழுத்தும் வந்து கூடும்.
மஞ்சம். உரிஞ்யாது. "க்" என்னும் மெய்யெழுத்தின் பின் ‘த் என்னும் மெய்யெழுத்தும், 'ய்' என்னும் மெய் யெழுத்தும் வந்து கூடும்.
சந்து, பொருக்யாது.
‘ட்‘ என்னும் மெய்யெழுத்தின் பின் க்,ச், ப்
என்னும் மெய்யெழுத்துக்கள் மூன்றும் வந்து கூடும்.
வெட்கம், மாட்சி, நட்பு. ‘ற்‘ என்னும் மெய்யெழுத்தின் பின் 'க், ச், ப் என்னும் மெய்யெழுத்துக்கள் மூன்றும் வந்து கூடும்.
கற்கை, கவற்சி, பொற்பு. ‘ண்‘ என்னும் மெய்யெழுத்தின் பின் "ட், க்" ச், ஞ், ப், ம், ய், வ்" என்னும் மெய்யெழுத்துக் கள் எட்டும் வந்து கூடும்.
கண்ட்னர், வெண்கலம், வெண்
சோறு, பண்ஞானம், காண்பர், வெண்மலர், மண்யாது, மண்வலிது

Page 54
104
ன் 'ன்' என்னும் மெய்யெழுத்தின் பின் 'ற், க்,
ச், ஞ், ப், ம், ய், வ் என்னும் மெய்யெழுத்துக் கள் எட்டும் வக்து கூடும்.
கன்று, புன்கு, புன்செய், பொன் ஞாண், புன் பயிர். பொன்மலர், பொன்யாது, பொன்வலிது. ம்: "ம்" என்னும் மெய்யெழுத்தின் பின் “ப்,ய்,வ்’ என்னும் மெய்யெழுத்துக்கள் மூன்றும் வந்து. கூடும். ଗT-(ତ:
கம்பன், கலம்யாது, கலம்வலிது. ய், ர், ழ்: “ய், ர், ழ்” என்னும் மெய்யெழுத்துக் களின் பின் க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ், ங், என்னும் மெய்யெழுத்துக்கள் பத்தும் வந்து கூடும்.
வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது. வ், ள்: “ல், ள்’ என்னும் மெய்யெழுத்துக்களின் பின் க், ச், ப், வ், ய் என்னும் மெய் யெழுத்துக்கள் ஐந்தும் வந்து கூடும். 6T-G:
வேல்கடிது, வாள் கடிது.
உடனிலை மெய்ம்மயக்கச் சிறப்பு விதி
தம்மொடு தாமே மயங்குவன எனக் காட்டப்பட்ட
க், ச், த், ப் என்னும் மெய்யெழுத்துக்கள் கான்கும்ங், )Gbو تا و ண், is, ம் ய், ல், வ், ள், ற். ன் ஆகிய மெய்.

O5
யெழுத்துக்கள் பன்னிரண்டுடனும் உடனிலை மெய்ம்
மயக்கத்துக்கு உரியன.
●Tー@;
கொக்கு, அச்சம், நித்தம், செப்பு, அங்ங்னம், அஞ்ஞானம், கட்டு, அண்ணன், செந்நீர், அம்மை, அய் யன், எல்லை, அவ்வை, கொள்ளை, முற்றம், அன்னை.
மொழிக்கு இடையில் மெய்யெழுத்துகள் இரண்டு சேர்ந்து வருபவை
ய், ர், ழ், என்னும் மெய்யெழுத்துக்களுக்குப் பின் க், ச், த், ப், ங், ஞ், ங், ம் என்னும் மெய்யெழுத்துக்கள் எட்டும் இரண்டு மெய்யெழுத்துகளாகச் சேர்ந்து வரும். ர், ழ் என்னும் மெய்யெழுத்துகள் இரண்டும் ஒரு குற்றெழுத்துக்குப் பின் வந்து மயங்க மாட்டா. 6T-G:
ய் காய்க்க, பாய்ச்சல், துய்த்தல், காய்ப்பு,
வேய்ங்குழல், தேய்ஞ் சது, வேய்ம் புறம். ர்: ஈர்க்கு, தேர்ச்சி, போர்த்தல், பார்ப்பார், ஆர்ங்.
கோடு, சேர்ந்தது, ஈர்ம்புனல். ழ்: வாழ்க்கை, சூழ்ச்சி, வாழ்த்தல், காழ்ப்பு,
பாழ்ங்கிணறு, வாழ்ந்தனம், பாழ்ம்பதி.
போன்ம், மருண்ம். செய்யுளில் வரும்போது, “போலும்’ என்பது (போல் +ம்) "போன்ம்' எனவும், "மருளும்’ என்பது (மருள் +ம்) "மருண்ம்" எனவும் வரும்.
மொ. ம-7

Page 55
1 O6
இவ்வளவும் இங்கே காட்ட்ப்பட்ட் ஒலிமுறை களுக்கு வேறன ஒலிமுறைகள் சமக்கிருதம், ஆங் கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் அமைந்திருக் கின்றன. எனவே, அம்மொழிச் சொற்க2ளத் தமிழில் எழுதும்போது, மெய்யொலிகளுக்கிடையில் உயிரொலி புகுத்தியோ, மெய்யொலிகளுள் ஒன்றனை வேறென் றகத் திரித்தோ-தமிழ் மொழியின் தனித்தன்மைக்கும் மரபுக்கும் ஏற்றவாறு-எழுதுதல் வேண்டும்.
"தமிழில் எச்சொல்லிலும் எவ்விடத்திலும் பிற மொழி யெழுத்தும் எழுத்து முறையும் வருதல் கூடாது. பிறமொழிச் சொல் இன்றியமையாததும் மொழி பெயர்க்க முடியாததுமாயின், தமிழ்முறைக் கேற்பத் திரித்தெழுதப்பெறும், இங்ாவனம் வரம்பீடு செய்யாக்கால், தமிழ் நாளடைவில் வேறு மொழியாய் மாறிவிடும்.” என்பர் மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர்.
தமிழ் மொழி இளமை கலங் குன்றது கீடு நின்று வளர்ச்சி பெறுதல் வேண்டும் என்னும் ஆவலுடையோ ரெல்லோரும் தமிழின் பழைய மரபுகளை நுனித் துணர்ந்து பேணிக் காக்காவிடின், எமது இனித்த கறுந் தமிழ் மொழி-முன்னைக் காலத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு திரிக் து மாறியமைபோலமாறி வேற்று மொழியாய் விடுதல் கூடும்.
மரபுச் சொற்கள்
4. உயிரினங்களின் ஒலி வகைகள்
அணில் - கீச்சிடும் ஆடு - கத்தும்

O7
ஆக்தை - அலறும்
எருது - முக்காரம்போடும் 5. - கத்தும்
கழுதை - கத்தும், கூவும் காகம் - கரையும்
digs - கொஞ்சும், பேசும் குதிரை - கனைக்கும்
குயில்  ைகூவும்
குருவி - கீச்சிடும்
கோழி - கொக்கரிக்கும் சிங்கம் - கர்ச்சிக்கும் சேவல் - கூவும்
தவளே - கத்தும்
தேனி - இரீங்காரஞ் செய்யும்
- உள8ளயிடும்
ாகாய் - குரைக்கும்
፪ !ፈ9ቻች - கதறும்
LuGს G5) - சொல்லும்
பன்றி - உறுமும்
பாம்பு, - இரையும் சீறும் цс6) - உறுமும்
t-I(Ծ3 - குறுகுறுக்கும் பூனை - உறுமும், சீறும் மயில் - அகவும்
LDTCS) -ண கத்தும்
uj T260T - பிளிறும்


Page 56
O8
2. அஃறிணைப் பெயர்கள்
உயிரினம் ஆண் பெண் ஆடு தகர் மறி
5 L எருமை :: 朽T
கண்டி ᏯᏄᏣu fi குதிரை குண்டு 66COG
பெட்டை குரங்கு கடுவன் மந்தி
திம்மன் கோழி சேவல் பேடு
அளகு ாகண்டு அலவன் பெடை fibriu கடுவன் பெட்டை பன்றி கேழல் பின புலி போத்து பினு பூனை கடுவன் பெட்டை மயில் போத்து அளகு ερπ(δ ஏறு {్వలి
{: 6T (55) கலை 26oor ז&6 חמL முசு கலே 2600T um2or களிறு பிடி பறவைகள் சேவல் பெடை
(LG
3. இளமைப் பெயர்கள்
6, 2F
ஆடு وكان كــد

109
எருமை - கன்று
எலி - குஞ்சு, குட்டி கமுகு - கன்று, பிள்ளை 5広lq- - குட்டி, குடாவடி காக்கை - குஞ்சு, பிள்ளை கிளி - குஞ்சு, பிள்ளை 虏命 - குட்டி, பிள்ளை குதிரை - குட்டி
குரங்கு -و وا-ازت --س பறழ் கோழி - குஞ்சு
தவளை - குஞ்சு, பேத்தை தென்னை - கன்று, பிள்ளை காய் زنی) سس Lعا{, குருளே (ә)Ђбіо - காற்று பயிர்கள் - காற்று
G - கன்று
u26T - வடலி
பாம்பு - குட்டி
புலி - குட்டி, குருளே பூனை - குட்டி, பறழ்
D 6560 --سسT p[
மான் - கன்று, குட்டி மீன் - குஞ்சு
யானே ட களபம், கன்று, போதகம் வாழை - குட்டி
வேம்பு =8566 ܤܗff0

Page 57
10
கூட்டத்தைக் குறிக்கும் பெயர்கள்
راگے
ஆடு ஒளி
கல்
கள்ளர்
5İTGurt Gir
சனம்
சுருட்டு GF260T தானியம் திறப்பு தென்னை காற்று நூல்
கெல்
பல்
பழம் புகையிலை புல்
பேய்
osoof
மரம்
ഥ
நிரை
மந்தை
கற்றை குவியல், கும்பி கூட்டம்
60
கும்பல், கூட்ட்ம் கட்டு
திரள்
கதிர்
கோவை தோப்பு பிடி, முடி பந்து
குவியல் வரிசை
g Bດ) முடிச்சு, சிப்பம் கற்றை கொத்து கணம்
LoTBຄນ Gart 2a), sit மாலை, செண்டு தொட்ர்

{{fbf
ust 2at
5. இலைப் பெயர்கள்
முதற் பெயர் தென்னை
Lu got கெல் புல் வாழை
T
6. பிஞ்சுப் பெயர்கள்
முதற் பெயர்
தென்னே
זo%נL
GT
வாழை
7. வித்துப் பெயர்கள்
முதற் பெயர் மிளகாய் கத்தரி கெல் சோளம்
Ds
s
ஆமணக்கு வேம்பு
- Gynt 2)
சினைப் பெயர்
g&ు
சினைப் பெயர்
குரும்பை
வடு
முசு கச்சல்
சினைப் பெயர்
விதை
ഥ ഞി
கொட்டை
முத்து

Page 58
12
8, பிற மரபுச் சொற்கள்
ஆடு மேய்ப்பவன்
மாடு மேய்ப்பவன் இட்ையன்
தேர் செலுத்துபவன் பாகன், வலவன் யானை செலுத்துபவன் பாகன் குதிரை செலுத்துபவன் தோட்டி, பாகன் மாடு, எருமை என்பவற்றின் மலம் - சாணம் ஆட்டு மலம் - பிழுக்கை. கழுதை மலம் - விட்டை. காகம் குருவி என்பவற்றின் மலம் - எச்சம்
இவ்வளவும் காட்டப்பட்டவை மொழியின் அடிப் படையாக நிலவுகின்ற மரபுகளாம். இவற்றையும் இவ்வகையில் இவற்றேடு தொடர்புபட்ட பிறவற்றை யும் தமிழ் எழுதுவோர் கன்கு அறிந்திருத்தல் இன்றி யமையாதது


Page 59