கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சில்லையூர் செல்வராசன் நினைவு மலர்

Page 1
பல்கலை
தான்தோன்
சில்லையூர் :
ས
நினை
19ー11

3 வேந்தர் றிக் கவிராயர் செல்வராசனர்
:17
வு மலர்
- 1995
ཛོད༽

Page 2

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
தோற்றம்
ஆங்கி ரசவருடம் தைத்திங்கள் சீர்பெற்றுத் தாங்குமீர் பத்தைந்தாந் தேதிபுதன் - ஓங்குபுகழ் பல்கலையின் வேந்துதிரு சில்லையூர் செல்வராசன் நல்லுலகு வந்தான் நலம்.
25 - O -1933
IDG))))
யுவவருடம் ஐப்பசியில் ஒன்றுபதி நான்காம்நாள் தவப்புதல்வன் சில்லையூச் செல்வன் - புவிவிடுத்துப்
போனான் இறையவன்தன் பொற்பதமே காணுதற்கு வானாள் குறுக்கியுயர் வான்
14 - 1)- 1995

Page 3

வாழ்வின் வரலாறு
"சின்னரோம்" என்றோர் சிறப்புடை நாமம் தன்னகங் கொண்டது சில்லாலையூர் எல்லோருங் கைவிடிலோ ஈற்றில் சில்லாலை தான் தஞ்சம் என்ப வைத்தியத் துறையின் வளமார் பேற்றின் கைத்திறன் கொண்ட வேளான் குலத்தினன் சூசைப் பிள்ளை அன்னம்மா வின் ஆசை மகனாய் அவனிக்(கு) உதித்தான் மரியதாஸ் என்னும் செல்வராசன் மறைவினை எண்ணி புலம்பினம் நாமே.
பிறந்தது உடனேர் ஐவர் நால்வர் இறந்தனர் குழந்தைப் பருவத் தேயோர் சகோதரி நற்குணம் என்பாள்வாழ்ந்தே அகாலத்தே இவர் போலவே மறைந்தார் மரியநாயகத்தை மணம்புரிந்தவர்வழி உரியதாம் அவர்க்கோர் ஐந்து குழந்தைகள்,
காவல்துறையில் கடமை புரிந்தார் சேவையின் திலகம் குசைப் பிள்ளை ஆறடி உயரி ஆஜானுபாகன் ஏறுபோல் நடைபயில் இணையிலா வீரர் அறிவும் அழகும் அமைந்தபெண்ணரசி நிறைமகள் அன்னம்மாதம் கணவர் திருகோணமலையிற் தொழில்செய் போழ்து அருமை மைந்தன் அவதரித்த தனனே.
இளமையிற் கல்வி கற்றது "சில்லை" இளவாலை சென் ஹென்றீஸ் தன்னில் யாழ்நகர் சென் பற்றிக்ஸ்சதனிலும் காவலுர் சென் அந்தனிஸ் தனிலும் பயிலுங் காலை படிப்பினில் முதலாய் செயம்பல கண்டான் திருநிறைச் செல்வன் ஒன்பது வயதில் உறவினர் மறுத்தும் தன்விருப்போடு துறவறம் பூனக் குருமடஞ் சேர்ந்தான் கொள்கை மறுத்தே திரும்பினன்,ஒன்பது மாதமவ் வாழ்வாம்

Page 4
மதுரைச் சங்கம் மனமுவந் தேற்றே மதுரகவியெனப் போற்றிய பாட்டன் ஆசுகவி சுப வாக்கியம் பிள்ளை தேசுடைப் பேரன் தனக் கிலக்கணத்தைப் பால பண்டிதப் பரீட்சைக் கெனவே சாலவே புகட்டச் சிறந்தனன் அதனால் ஈராறு வயதில் எழுதினன் கவிதை பேரறிவாளன் பற்பல கற்றான்.
பயம்அறியாப்பதினைந்தாம் வயதில் சுயமரியாதை இயக்கத் தொண்டில் சேர்ந்தனன், பெரியார் அண்ணா மீதே ஆர்வமுங் கொண்டான், அதன் பயனாக பதினாறு வயதில் பள்ளி விடுத்து அதிதீவிரனாய் அரசியல் மேடை புகுந்தனன்,பேச்சிற் புலியென மிகைத்தான், மிகுபொருள் பொதிந்த சொல்லெடுத் (து) ஆண்டான் * பெறின் தமிழரசு இனில் பினமுரசு’ உறுமென ஓங்கி உரைத்தனன் அன்றே.
ஓர் சிறு காலம் ஒத்த வயதினர் சீர் பெறக் கல்வி சொல்லியுந் தந்தனன் தமிழரசு ஏடாம் சுதந்திரன் தன்னில் அமிழ்தாம் தமிழை அள்ளிச் சொரிந்தவன் சிவநாயகப் பெருமகனோடுகந்த சுவாமியுடன்தொடர்பு உற்றனன்.அந்நாள் அ. ந. கந்த சுவாமியின் தொடர்பால் மனம்ஈர்த்தது பொதுவுடமைக், கொள்கையில் எழுது வினைஞர்பரீட்சையில் வென்று தொழில் புரிந்தான்மலை நாட்டில் பின்னே வீரகேசரி நாளேட்டினிலும் சேர்ந்தனன் பின் தினகரன்தனிலும்தன் திறன் காட்டித் தொகை பெருக்கிடத் தமிழின் திறனைத் துணையாய்க் கொண்டுயர்ந்தனனே.
ஷெல் எனும் எண்ணெய்த் தொழில்தாபனத்தில் பலபட உழைத்துப் பெருமையும் சேர்த்தனன் விளம்பர விவரணப்படங்களும் படைத்து

களங்கண்டானத் துறைகளிற் "சில்லை" வானொலி திரைப்பட வாழ்வோ டன்னான் தேனாம் இனிய கிராமியக் கலைகள் ஊனமுற்றழியா (து) ஓங்கிடத் தன்னுயர் ஞானமும் கொண்டே வளர்த்திட முயன்றனன் கூத்தொடு வில்லுப்பாட்டொடு இசையும் சேர்த்துத் தமிழ்க்கலை சீர்பெறச் செய்தோன் அழகு தமிழில் விளம்பரக் கலையைப் பழக்கியே தொடர்ந்தான் பலர்கைக் கொண்டார். கவியரங்கு பல் கண்டே இளைஞர் கவி ஆர்வம் தனைத் துண்டிய வித்தகன் நாவளம் மிக்க நல்லறிவாளன் யாவையும் முழுமையாய்ச் செய்திடுற் திறனோன் "பாவளம்" எனுமோர் பகுதியை நடாத்தி பாவளம்பெற தன் பங்கினைச் செய்தோன்
"ஜெசி எனும் தன்னுடை உறவினப் பெண்ணை இசைந்து மனந்தே இல்லறம் இயற்றி திலீபன் பாஸ்க்கரன் முகுந்தனென்(று) ஆண்களும் யாழினி என்றொரு பெண்ணையும் பெற்றனன். தனக்கென எதுவுஞ் சேர்த்திடாப் பிறர்க்கே அனைத்தும் எனத்தன் உழைப்பினை ஈந்தான், உற்றார் உறவினர் தமக்கென முயற்சியால் பெற்றவை அனைத்தையும் பங்கிட்டளித்தனன்,
முதல் மணவாழ்வுமுறிந்திடத், தனது விதிப்பயனென்ன, மீண்டுமோர் வாழ்வினை கமலினியோடு கண்டனன் "சில்லை' அமைந்தது அது கலைக்கு உயர்துணையாக பல்கலைப்படிப்பும் பட்டமும் பெற்றவள் சொல்லில் இனிமை தோய்த்துத் தருபவள் தென்புலோலியூர் கணபதிப் பிள்ளை அன்பு மகளாம். அமுதத் தமிழால் இணைந்தனர் எனிலது இயல்பாம் என்றே எண்ணுதல் உவப்பாம்.இறைவிதிப் பயனே.
குழந்தைகள் நான்கும் சிறியதாய் இடத்தே இளமையில் இருந்தே இசைந்து வளர்ந்தனர். ஈரைந்து ஆண்டுகள் ஏகிய பின்னரே

Page 5
சீரிளஞ் செல்வன் செகத்தினில் உதித்தான்.
அதிசயன் என்னும் அழகுறுநாமம் பதியவன் தனக்குப் பிறக்குமுன் இட்டனன்.
"போபால்" கவிப்பெருமாநாடில்தமிழ் பேராளன் இவன் தான் பிறரில்லை. பீ.பீ.சீ கவிப் போட்டியில் நடுவர் குழுவினில் ஒருவனாய் கெளரவம் கொண்டனன் யப்பான் நாட்டின் சக்கர வர்த்திதன்
"புங்கா "பரிசிலும் பெற்றவன் "சில்லை"
எண்ணிய தைத்தன் இதயம் பொருந்திடில் பின்னடை யான்அதைப் பொறுப்பொடு செய்வான் விளையாட்டினிலும் வீரனாம் "சில்லை" இளமையில் "புட்போல்" "டென்னிஸ்"சூரன் நேர்த்தியாய் உடைகள் உடுப்பதும் தன்னுடல் நேர்த்தியாய் இருக்க நினைந்ததும் செய்தலால் தோற்றத் தழகும் துணிவும் ஆண்மையும் போற்றத் தகுந்திறன் பற்பலவும்மொடு ஆங்கில மொழியில் ஆளுமை;தமிழில் ஓங்கு புலமையும் உரியனாய் வாழ்ந்தனன். "றோமியோ ஜூலியட்" தனைத்தமிழாக்கி "ஹேக்ஸ்பியர் ஒருஜீவநதி" எனும் தனது ஆக்கத்தோடே நூலுருக் கண்டான். "தலைவர்கள் வாழ்க மாதோ" என்றும் "ஊரடங்கப்பாடல்கள்" என்றும் சீர்பெறு கவிதைத் தொகுப்புகள் செய்தவன், பன்னுாறாகப் பாடிய பாடலும் இன்னும்உளபல்லாயிரம் படைப்புமாம்.
செந்நாப் போதன்திருநா வல்லோன் சிந்தனையாளன் சில்லையூர்ச் செல்வன் மனையாள் பிள்ளைகள் உற்றார் சுற்றம் தனைநேசிப்போர் தன்னுயர் நண்பர் அனாதையாய்த் தமிழ்த்தாய் அனைவரும் இருக்க தனைப்பிரித்தெடுத்தே தரணி விடுத்துச் சென்றதேன் ஐயா திருவே உன்னை எண்ணியே நாங்கள் ஏங்குகின்றனமே.

மனைவி கமலினி புலம்பல்
காலனுக் கென்ன தானோ கோபமென் வாழ்வு மீதே வேலொன்று நெஞ்சிற் பாய்ந்த வாறென மரணம் என்னும் ஆலத்தைப் புகட்டி என்றன் ஆயுளின் பொருளாய் நின்ற சீலனைப் பிரித்தான் என்னைத் துணையற்றுத் தவிக்க வைத்தான்.
கண்ணுக்கு ஒளியாய்; என்றன் கேள்விக்குத் தமிழாய்; நெஞ்சின் எண்ணத்தின் கருவாய்த்; தோன்றும் எழுத்துக்குப் பொருளாய்; பேசும் வண்ணத்தின் முதலாய்த்; தூய வாழ்வுக்கு விளக்க மானோன் மண்ணுக்கு இரையாய்ச் செய்தென் மதிசோர வைத்திட் டானே,
வாழ்வெதென் றறியாய் போழ்தில் வாழ்வினைப் புரிய வைத்தே வாழ்ந்திடப் பிணைந்தோன்; என்றன் வாழ்வையே வாழ்வாய்க் கொண்டோன் வாழ்வினில் முதன்மைப் பேற்றில் வாழ்ந்திடத் தோள்கோ டுத்தே வாழ்ந்தவன் என்றன் வாழ்வின் விளக்கமாய் வாழ்ந்தே சென்றான்,
ஏனெனைப் பிரிந்தாய் ஐயா! என்னைதான் பவம்நான் செய்தேன் தேனென வாழ்வைக் காட்டிச் சென்றதேன் பதியே உன்றன் ஊனளித் தென்னு ளத்தை ஊனமாய் முடக்கிச் சென்றாய் காணலோ வாழ்வு அன்றிக் கருகிய மலர தாமோ

Page 6
அதிசயன் அழைத்தல்
ஐயய்யா என்னைவிட்டு ஏன்போனிங்க அம்மாவும் நானுந்தனி யாகிப்போனோம் பொய்அய்யா இனியில்லை என்பதெல்லாம் பேசுபவர் தெரியாமல் பேசுகின்றார் மெய்யாக வரவேண்டும் வந்தெனக்கு முத்தங்கள் தந்துவிளை யாடவேண்டும் செய்யாமல் ஒளிந்திருக்க வேண்டாமய்யா சீக்கிரமாய் ஓஇேங்கே வாருங்கய்யா.
கடவுள்தனைக் காணவெனச் சென்றாரென்று கண்கலங்க அம்மாவுஞ் சொல்லுகின்றா விடாமலென்ன செய்கின்றார்? உங்களோடே விருப்பமென்றால் நல்லதுதான் என்றாலும்நான் உடனிருந்து படிக்கஅய்யா வேண்டும்; நீங்கள் ஒடியிங்கே வந்திடுங்கோ காத்துநிற்பேன் மடிமீதே உட்கார்ந்து பாட்டுச்சொல்ல
மறக்காது வரவேண்டும் வாருங்கஅய்யா!

தலைமகன் திலீபன் புலம்பல்
முதற்கண்ட முத்தென்றே போற்றிப் போற்றி மார்மீதும் மடிமீதும் சுமந்தே என்னை மதிமிக்க செல்வமென வளர்க்க நீங்கள் மிகப்பாடு பட்டீர்கள் ஐயா! இன்று விதிசெய்த சதியாலே எம்மை விட்டு வழிமாற்றிப் பிரிந்திறைபால் சென்றீர் எங்கள் கதிஈதோ எனக்கலங்கி அழுகின் றோம்நாம் கடவுள்பதம் சீர்பெற்று வாழ்க அந்தோ!
மகன் பாஸ்கரன் புலம்பல்
நினைவெல்லாம் நீங்கள்தான் ஐயா! எம்மேல் நீங்காத பாசமிகு தருவே, என்ன நினைவாலே எமைப்பிரிந்தே சென்றீர் என்றும் நீங்காத வேதனையைப் பரிசாய்த் தந்தீர் நினையாத வேளைஎமைத் தவிக்க விட்டு நீங்கவொண்ணா வயதிலெமைப் பிரிந்தீர் காலன் நினையாத தேன்எங்கள் நிலைமை தன்னை நீக்கினன்ஏன் இன்னுயிரை நிறைவுற் றானோ,

Page 7
மகன் முகுந்தன் (தாஜுதீன்) புலம்பல்
புனிதஇஸ்லாம் தனைஏற்றேன் என்பதாலே புறக்கணித்தே எனையொதுக்க வில்லை ஐயா! இனியமுகம் காட்டியெனை ஏற்றே ”உன்றன் இட்டம்போல் வாழ்க” என்றே மனைவி மக்கள் தனையும் அர வணைத்தேதன் சுற்றத்தோடு சேர்த்திருந்தீர்; இனமதபே தங்களற்றே மனமுருகித் தொழுதிறையை வேண்டி னேன்என் மனத்தையிறை அறிந்தெது செய்திட் டானோ?
மகள் யாழினிபுலம்பல்
யாழிலினி தாம்குரலென் தந்தைக் கென்றோ “யாழினி என் றெனக்கழகாய் நாம மிட்டார், ஆழிகடந் தேதொலைவில் வாழ்ந்திட் டாலும் ஐயா! உன் உயிரையென்னுள் தாங்கி வாழ்வேன். ஏழுலகு தாண்டியேநீ சென்றிட் டாலும் எனக்குள்ளே புதைந்தஉன்றன் நினைவு என்றும் மாழாதே ஒருநாளும் மாழா தையா மகளெனநான் ஒருத்தியன்றோ ஆசைக் கென்றே

மருமக்கள் புலம்பல்
தாய்போல் எமைக்காத்தீள் இறுதி நாட்கள் தமில்உதவ முடியாத நிலைநாம் பெற்றோம், தாய்மாமன் இல்லையய்யா தந்தை போன்றே தேவையுணர்ந் தத்தனையும் செய்த தாலே தாய்தந்தை இரண்டுமேநீர் ஆனிர் எம்மைத் தவிக்கவிட்டே ஏன்பிரிந்தீர் தமிழின் வேந்தே தாயிழந்த கன்றெனநாம் ஆனோம் தெய்வத் தாழ்பணிந்தோம் நின்பிரிவால் வாடுகின்றோம்.
மைத்துனர் வடாக்டர். திருமாவளவன்புலம்பல்
இளமையிருந் தென்மேலே பாசங் கொண்டாய்; இமைக்குள்ளே வைத்தென்னைப் பாதுகாத்தாய்; வளமான வாழ்வுக்கு ஆசி சொன்னாய்; விருப்பம்போல் வாழ்கவென இசைவுந் தந்தாய்; களங்கமில்லா அன்பாலே தோழன் ஆனாய்; கண்கலங்க விட்டென்னைப் பிரிந்து செல்ல உளங்கொண்ட தேன்ஐயா! எம்மி னோடே
ஊரொன்றி அழுகிறதே காண்கி லாயோ.

Page 8
மைத்துனர் நம்பியாருரன்
மைத்துணி தமிழின்பம் புலம்பல்
தந்தைக்குப் பின்தந்தை எனநாம் எண்ணித் தானிருந்தோம்! தமிழ்வளர்த்துக் காத்த எம்மின் தந்தைக்கு விழாவெடுத்துத் தரணி போற்றுந் தகைசெய்தீர்,தமிழ்த்தாயே பெருமை கொண்டாள் சிந்தையெல்லாம் நிறைந்தவர்நீர் சீர்மை யாலே செகம்போற்றும் பெருமகனாய்த் திகழ்ந்தீர் ஐயா! சொந்தமெனச் சொல்லியேநாம் பெருமை கொள்ள செகம்விடுத்துப் போனதென்ன செயலாம் அந்தோ!
மருமகள்மார் கெளரி, நாளிரா புலம்பல்
எம்மதமும் சம்மதமென் றெண்ணங் கொண்டே எமையுமுண்மை அன்போடே சேர்த்த ணைத்துத் தம்மினன்பு மருமக்க ளாகக் கொண்டிர்; தனிமனித உரிமைக்கும் உருவந் தந்தீர் . இம்மியுமே வேற்றுமையைக் காட்டா தெம்மை ஏற்றதனைக் கண்டுமனம் பூரித் தோம்நாம் விம்மியழ வைத்தெம்மைச் சென்றீர் எங்கள் விதியெண்ணிப் புலம்புகின்றோம் அன்பு நெஞ்சே.

01.
பொதுவிலோர் புலம்பல் கட்டளைக் கலித்துறை அந்தாதி
பல்கலை வேந்தன் பெரும்புல வன்தமிழ்ப் பேரறிஞன் சில்லையூர் பெற்றநற் செல்வன் தமிழாற் சிறந்தமகன் வல்லவன் யாரும் விரும்பிடு வாறே வளம்மிகுந்த சொல்லெடுத் தாளும் திறன்மிகு மேலோன் மறைந்தனனே.
மறைந்தனன் என்றால் மனமொப் பிடுமோ மனங்களெலாம் நிறைந்தே இருந்தனன் நல்லறி வாளர் நினைவுகளில் மறைந்திடான் என்றும் மிகுஅறி வாலவன் பல்கலையும் அறிந்தே இயற்றிய ஆய்வலன் ஆதிபாற் சென்றனனே.
சென்றனன் என்றுமே செப்புதல் வேண்டுமோ செல்வராசன் என்றுமே வாழ்பவன் ஈடிலாத் தாய்மொழி ஏற்றமுற நன்றே உழைத்தவன் நம்நா டுடின்பிற நாட்டினிலும் சென்றே இலங்கைத் திருநா டுயர்வுறச் செய்தவனே.
செய்வதைச் செய்தான் திருந்தவே தன்னொரு செய்கையிலும் வையத்தெவரும் வடுசொலா வாறுமே வித்துவத்தால் மெய்யாம் புகழை வரித்தனன் மற்றோர் மனமுருகி ஐயோ! எனஅழ வைத்துமே இப்பூ அகன்றனனே.
அகலா துளத்தே அவன்தமிழ்த் தாய்க்கென ஆக்கியநற் புகழ்சேர் அணிகளைப் பூவுல கேற்றிப் பெருமைபெறும் நிகருளார் யாரவன் நீங்கலால் கண்ட நெடுவெளியை வகையாய் நிரப்பிடும் வல்லமை கொண்டவர் வேறிலையே.

Page 9
10.
வேறிலை யாம்தமிழ் போலோர் மொழியிப் புவியினிலே கூறிடில் மிகையோ கூற்றுவன் சில்லையூர் கொண்டவுடல் வேறென வாக்கியே வாங்கினான் இன்னுயிர் வண்டமிழைக் கூறிடு வாறிக் குவலயம் ஏங்கிக் கலங்கியதே.
கலங்கிரு வாள்தமிழ்க் காரிகை தன்னுயிர் காந்தியதாய் கலங்கிடு வாள்கலைக் கன்னிதன் ஆவி கருகியதாய் கலங்கிடு நெஞ்சங் கனத்திட நண்பருங் கண்கசிவார்
கலங்கித் தொழுவாள் கமலினி நின்மனைக் கொற்றவையே.
கொற்றவன் நீகவிக் கோன்மையில் மூத்தோன் கவியரசன் சொற்பெரு வள்ளல் திரைப்படம் வானொலி சீர்பெறச்சீர் அற்புதங் காட்டிய அற்புதன் ஐந்தாய் அருள்தழைக்கும் பொற்புறு பிள்ளைகள் பெற்றனன் பேர்நிலை பெற்றிடவே.
பெற்றதன் ஊரும் -Quujiroup நாடும் பெருமையுற பெற்றனன் பொன்றாய் புகழ்பல வாறெனப் பொன்மனத்தால் மற்றவர் தாமும் மதிப்புறத் தந்திறன் முற்றிலுமே சற்றே குறையா தளித்தே மகிழ்ந்தான் தனித்துவனே.
தனித்துவ மானவன் "தான்தோன் றியகவி ராய" ரென தனக்குடன் இல்லாத் தலைவரைச் சாடித் தமிழ்படைத்தான் மனுக்குலம் வாழும் வரையவன் வாழ்வான் வடித்தவவன் பனிப்பகை போல்நற் பனுவலால் வாழ்ந்திடும் பல்கலையே.

தேற்றம்
இறப்பது உறுதியில் உலகினில் லனைவரும்
இறைபதம் சேர்வ துண்மை சிறப்பொடு வாழுவார் சென்றாலும் அன்னவர்
செயல்களால் இறந்தும் இறவார் மறுப்பிலை "சில்லையூர்” அவ்வழி ஒருவரே மரணத்தை வென்ற அறிஞன் இறப்பிலை என்றுமவ் இணையிலாப் புலவனை
இழந்தோமென் றெண்ணல் மறப்போம்.
புத்தரும் யேசுவும் காந்தியு மேஇந்தப்
பூமியில் நிலைத்த தில்லை அத்தனை படைப்புமிவ் வுலகத்தில் இறைபதம்
அடைந்திடா தொழிவ தில்லை சத்தியம் ஈதெனில் சிற்றெறும் பாகிலும் தப்பிட முடிவ தில்லை நித்தியம் அற்றவிவ் வாழ்வுக்குச் ”சில்லை” யும்
ஒத்தனன் எனத்தே னுவோம்.
வாழுவான் என்றுமெம் மோடுநற் புகழொடு வரலாறு கொண்ட கவிஞன் வாழுவான் தான்செய்த தமிழினால் வரையிலா விளம்பரத் தொடர்பு நெறியால் வாழுவான் தன்னொடு வாழ்ந்தவர் தமக்கவன்
வழங்கிய ஞான மதனால் வாழுவான் அவனுயர் வித்துவத் தாலெமை
வீட்டகன் றனனோ இலையே.
யாப்பு - ஜின்னாஃ ஷெரிப்புத்தீன்

Page 10
උතුරු - නැගෙනහිර පළාතේ ආණඩුකාරවරයා வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் Governor, Northern & Eastern Provinces
Gannini Fonsek
SILLAIYOOR SELVARAJAN - POET G DRAMATIST Using thy stylus
As sword and syringe Neither to kill nor inflict pain But merely to dissect The self-inflicted cankers of the human mind
NAnd hea . the Chr. Sed so re F3 Of malice and ha tred
You walked ahead of most men
There always were a few of your kind
Far too few
Too small an army To carry the heavy crusade through
One mighty pen now stands still The ink drained to iets final drop
GAMIINJI FONSEKA
 
 

6ᎯᎶᏫ6giᏬ ᎧᎧᎧᎠ
නූඹ මිය ගියා.
නුඹ දිනුම්.
නුඹේ වියෝවෙන්
අපේ ආත්මයන් තුළ
මහා විශාල හිස්ත(නක් ඇතිවෙලා. ඒ හිස් තැන පුරවන්නට නුඹත් සමග මතකය හාරා අවුස්සනෙකාට අපි මැරී මැරී උපදිනවා.
හරියටම හීනයක් වර්ග්. නුඹ මැරුණ කියලා හිතාගන්නවත් බැහැ, රැට නිදාගන්න ගිහින් පැදුරෝ ඇලවෙලා ඇස් පියාගත්තම නුඹත් ඇවිත් පැත්තකින් ඇලවෙනවා. අර මට එකසිය එකට උණ ගැනුනු දවසේ වාගේ නුඹ මගේ හිස පිරීමදිමින් කවි කියනවා.
මතකද එදා. මට අසනීප වෙලා ඉන්නවා වාචාගන්න බැහැ කියලා නුඹ ඇඬුවා....
නුඹ නම් හරීම සංවේදියෙක් තමයි. දුකේදීත් ඇඬුවා - සතුටෙදීත් ඇඬුවා. භාරතයට යන්නට ශිෂ්‍යත්වයක් ලැබුණු වේලේ, මගේ හිස සිපගෙන, නුඹ ඇඬුවේලේ වැටුනු කඳුළු වලින් තවමත් මගේ හිස් මුදුන තෙත් වෙලා සිල්ලයියූර් මාමා. අනේ නුඹට අපි ආදරේ කළ තරමක්. නුඹේ කකුල කපාපු දවසේ, අපිට දැනුනේ, හරියටම අපේ ආත්මයෙන් කොටසක් කඩා වැටුනා වගේ. මතකද., නුඹ අප්පා හම්බවෙන්ට අපේ ගෙදර ආ හැම දවසකම මං ඒ අවලංගු කකුලට සපත්තුව දාලා බකල්එක තද කරනවා.

Page 11
වෙන් වන හතුරෙකුටවත් දුකක් කරදරයක් නොවේවා කියා ප්‍රාර්ථනා කළ නුඹට අත්වෙච්ච ඉරණමක මහත, නුඹ නුඹේ මරණය දැන සිටියාද කොහෙදෝ. අර කැසට් කවරේ පින්තූර ගන්න ආ දවසේ නුඹ මට කිව්වා මතකද. “ලස්සනට ගනින්. මේ මගේ අන්තිම පින්තුර ගැනිල්ලද කවීද දන්නේ” කියලා. නුඹ දුටුවද...? ලස්සනයි කියලා නුඹ තෝරපු ඒ පින්තුරෙම තමයි නුඹෙ අවමගුල් දැන්වීමට පාවිච්චි කරලා තිබුනේ. ඒක දුටුව වෙලේ නමී මං මහා හයියෙන් හඩා වැලපුනා සිල්ලයියුර් මාමා මගේ හර්දය චාවන්නේ නැතිව ගියා. නුඹ අපිට කව් - ගී විදින හැටි කියල දිලා තිබුනට, මරණය විඳින හැටි කියලා දුන්නේ නැහැනේ. නුඹ අදිශයන්ට නම් කියලා තිබීබල නොද? “අඬන්න පුරුදු වෙන්ට එපා’ කියලා. නුඹේ දෙන ඉස්සරහා හඩා වැටන ෙකාට අදිශයන් කමලිනීට ඒ බව කිවිවල. අනේ මෙග් සිල්ලයියූර් මාමා.
· අපටත් නොකියා නුඹ කොහෙද හැoගුනේ. ඉන්න තැනකින් කථා කරපන් සිල්ලයියුර් මාමා නුඹ නැතිව පීවිතේට මහා පාළුවක් දැනෙනවා. පීවිතේට මහා පාළුවක් දැනෙනවා. ජේන්ට එන්ට බැරීනම් හීනෙන් ඇවිත්, මගේ හිස පිරිමැදපන් දෙයියො). කවියක් කියලා මගේ ආත්මයට වැස්සක් වස්සාපන් රත්තරය, මස උඹට ආදරෙයි මගේ අප්පෝ. මං උඹට ආදරෙයි. (Sofío.
Krishn

சில்லையூர் f) Ts) T.......
நீ இறந்து விடடாய், வெற்றி உனதே.
உன் மறைவால் எங்கள் ஆத்மாவினுள்ளே பெரிய சூனியமே தெரிகிறது. அந்தச் சூனியத்தை நிரப்பவென்று உன்னோடு கழித்த கணங்களை மீள நினைக்கும் போதெல்லாம். ஆம்! அந்தக் கணங்களெல்லாம் செத்துப் பிழைக்கின்றோம். நீ இறந்து விட்டாயென்று நினைக்கவே முடியவில்லை. படுக்கையில் படுத்து மெல்லக் கண்களை மூடிக் கொண்டால் நீயும் வந்தென்னருகே நீட்டடிப் படுக்கின்றாய்.
அன்றொரு நாள். நூற்றியொன்றில் உடற் காய்ச்சல் நுடங்கிப் போய் நானிருக்க நீ வந்தாய், வந்திருந்து தலைதடவி கவிதை சொல்லி ஆற்றியது போலவே கவிதை மொழிகின்றாய். உனக்கு அந்தநாள் ஞாபகமா? எனக்குச் சுகமில்லை என்பதனால் உன்மனது தாங்கவில்லை என்றழுதாய். எத்துணை பிஞ்சுமனம் உந்தனுக்கு. துக்கத்திலும் கண்பனிப்பாய் மனச் சந்தோசத்திலும் நீ அழுதாய். பாரததேசம் சென்று நான் தாள லயம் படிக்க, எந்தனுக்குப் புலமைப்பரிசில் கிடைத்த தினம் என் தலை வருடிக்கண்ணிர் விடடாய் அன்று சிந்திய கண்ணிர்த்துளிகளினால்

Page 12
என் உச்சித் தலை நனைந்து. இன்னும் ஈரமாயிருக்கிறது. என் சில்லையூர் மாமா. ஐயோ! உன்னில் நாம் எத்துணை அன்புதான் வைத்திருந்தோம் ஐயாவே உன் காற்பாகம் நீ இழந்த நாளில் எம் ஆத்மாவின் ஒரு பாகம் உடைந்ததாய் உணர்ந்திடடோம்.
நினைவில் இருக்கிறதா! பரா அப்பாவைப் பார்க்க நீ வீடடுக்கு வரும்போது தினமும் வலமற்ற அந்தக் கால்களிலே 'சப்பாத்துப் போடடு, பக்கிள் கொழுவி, நேர்செய்து விடுவேனே. எதிரிக்குக்கூட வேதனை ஏதும் ஏற்படக் கூடாதென்று மனதார பிரார்த்தனை செய்யும் நல்ல மனதுடைய உந்தனுக்கு நேர்ந்த கதி. உன் மரணத்தை நீ உணர்ந்திருந்தாயோ! ஒலிநாடா கவிதைச் சிமிழின் அடடைக்குப் படமெடுக்க உன்வீடு வந்தபோது. நினைவில் இருக்கிறதா?. நீ சொன்னது. “அழகாக எடடா! இதுவே என் கடைசிப் புகைப்படமோ கண்டதார்" என்று நீ பார்த்தாயா? அழகானது என்று நீ தேர்ந்தெடுத்த புகைப்படம்தான் உன் அஞ்சலிப் போஸ்டரிலே அச்சடித்திருந்தார்கள் பார்த்தேனோ நான், என் நிலை மறந்து அலறினேன். சில்லையூர் மாமா! என்னால் சீரணிக்க முடியவில்லை.
நீ.எமக்கு

கவிதை - சிந்து - பாடடுகள் பாடி அதன் ரசத்தை அனுபவிக்கக் கற்றுத் தந்தாய். ஆனாலும். மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விடடுவிடடாய்! நீ அதிசயனுக்குச் சொன்னாயாம். “என்றும் - அழவே கூடாது" என்று. அதனை அவன். உனக்கு முன்னால் நெட்டடுயிர்த்துக் கமலினி நெகிழ்ந்தழுத போது. கமலினிக்குச் சொன்னானாம். ஐயோ ! சில்லையூர் மாமா ! நீ எங்களுக்குச் சொல்லாமல் எங்கே ஒளிந்து கொண்டாய்? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டேனும் எம்மோடு நீ கதை சில்லையூர் மாமா..! நீ இல்லாமல் எம் வாழ்வு வெறுமையாய்த் தெரிகிறது. தெரியும்படியாய் வரமுடியாவிடின் கனவில் வந்து, என் சிரம் தனையே வருடிக் கொடு என் தெய்வமே ! கவி ஒன்று கூறி, என் ஆத்மாவின் மேலே புதுமழையாகப் பொழிந்திடென் தங்கமே !
நேசம் நிறைய வைத்தேன் உன் மேல் நான். நெஞ்சு பொறுக்குதில்லை. என்ரை அப்பு ! நெஞ்சு பொறுக்குதில்லை.
கிருஷ்ணாவின் சிங்களக் கவிதையின் தமிழாக்கம்

Page 13
நன்றி
உடல்விடுத்தே உயிர்பி உடன்இல்லம் வ உடன்பிறந்த பாங்காய் உடன்மயான பூமி குடல்வாயில் சனத்தின் கருணைமிக்க ம திடம்கூறி மனச்சோர்ை
தெய்வஅருள் sே
கமலினி
PRINTED BY UNIE ARTS (PWT) LTD. NO, 48 B, B

நவிலல்
ரிந்த சேதி கேட்டு ந்தெம்மை தேற்றி னோர்கள் நற் கடமை செய்தோர் வரை வந்திருந்தோர் 51ỉT&ải ceu.Jeo euroải தகுருமார் பெரியோர் நண்பர் >வத்தனித்தோர்க் கெல்லாம் பண்டிநன்றி தெரிவித் தோமே.
திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி, அதிசயன்
OMNoHAL ROAD, ColoMBO-13, TEL:33015