கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுக்கவிதைகளும் கட்டுரைகளும்
Page 1
மு.தனபாக்கியம்
Page 2
புதுக்கவிதைகளும் கட்டுரைகளும்
மு.தனபாக்கியம்
ஜனனி பதிப்பகம் 10, 7-வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு, சென்னை-600 020. 密 418115
Page 3
முதற்பதிப்பு மார்ச் 1995 G) பதிப்பாசிரியருக்கே
விலை: ரூ. 20/- மலேசியா $5.00
லேசர் ஒளிஅச்சுக் கோர்வை: வள்ளிலேசர் கிராஃபிக்ஸ் 293/1, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18, 密 455564
1.
8.
1O.
11.
12.
13.
14.
15.
உள்ளுரை
வினாயகர் காப்பு
என்றும் என்னுடன் இருப்பாய்.
பத்துமலை வேலவா, வரம் அருளவா. அன்னையும் கவசமாய் இருப்பள் காண். கதிரவா, கருணையுடன் வருகை தா.
மனித இயக்கத்தின் தனி உலகம். கருமத்தில் கண்.
வாழிய நீடூழி (1984-ல் தமிழ் நேசமணி அறுபதாவது
அகவையையிட்டு வாழ்த்துக் கவிதை)
எழில் அன்னை மலேசியா,
... d 605 LomLD6ofsir.
குவலயம் மகிழவே வா. விண்ணுலகம் முந்தி நிற்கும்!
வழி சொல்வேன் கேளிர். - (மலைகளில்
வெளியான கவிதை)
உயிர் நிலையம்
விஞ்ஞான மனமும், மெய்ஞ்ஞான அறிவும்.
மனமே, இறைவனை நினை, விலகிடும் தீவினை.
(புதுக்கவிதைகள்)
Page 4
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
31.
32.
குழந்தைகளுக்கான கவிதைகள்
அஞ்ஞான காலம் மலை ஏறிடுச்சு! கருத்துடன் புத்தியாய் வாழ்ந்திடுவாய். கிரிக்கெட் வீரர்களும், கிழவரும் நலம்பெற வாழ்ந்திடுவீர். அன்புச் செல்வமே, ஆன்மஞானம் பெற்றிடுவாய். அன்பிற்கு அவனியெலாம் பணிந்து நிற்கும். டெலிவிஷனும், பையனும்!
சுத்தமே சுகம் தரும்.
ஒற்றுமையைப் பேணிக் காப்போம். வாரத்தில் ஏழு நாட்கள்.
அன்புத் தெய்வங்கள்.
குருவே சரணம்.
பிள்ளையார் அப்பனே.
நின்ை, தமிழ் எம்முயிருக்கு நேர்: ஒற்றுமை தமிழர்களே! ஒற்றுமை அற்றுப் போகாதீர். சமாந்தர நிலை; தொழில் வாழ்க்கை: ஒரு துளி.
என்னுரை
நீண்ட காலமாக என்னுள்ளத்தில் ஒர் ஆசை குடி கொண்டிருந்தது. அதை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாது, பற்பல குறுக்கீடுகள் அசம்பாவிதங்கள் என்று ஏற்பட்டு, என் ஆசைநிறைவேறாமலேயே இருந்தது. அண்மைக் காலத்தில் தான் அந்த ஆசை அதாவது என் சிறுகதைகள் கட்டுரைகள், புதுக்கவிதைகள், விகடத்து ணுக்குகள் என்று எல்லாம் நூல் வடிவில் தொகுப்பது என்பது ஈடேறியது.
ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன் மலேசியா, சிங்கப்பூரில் வெளியான, தமிழ்நேசன், மலைமகள், சங்க மணி, திருமுகம், புதுயுகம், மனோகரன் (சிங்கை) 'மாண வர் பூங்கா’ என்ற பத்திரிகைகள், மாத சஞ்சிகைகளில், எனது சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங் கள் அந்நாளிலேயே பிரசுரிக்கப்பட்டன, கட்டுரைகளில் சில 1987-ம் ஆண்டில் மலேசிய வானொலியில் ஒவ் வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்று ஒன்றரை மாதங்கள் ஒலிபரப்பப்பட்டன.
எனக்கு கவிதைகள் எழுதவேண்டுமென்ற ஆர்வம் நிறைய உண்டு. ஆனால், எனக்கு அதற்கான இலக்கண, இலக்கிய, எதுகை, மோனை, சந்தம் அது இது என்று இதற்கான மரபு எதுவும் தெரியாது. கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பதற்கேற்ப, குழந்தை தத்தித் தத்தி நடை பயிலுவது போல எனது சிந்தனையில் எழுந்த கருத்துக்களை, கற்பனையெனும் கலவையுடன் சேர்த்து புதுக்கவிதைகளாக எழுதியுள்ளேன். மரபுக் கவிதைகள், வெண்பாக்கள் போல் ஒரு சில கவிதைகள் தோற்றம் அளிக்கலாம் என நினைக்கிறேன். தமிழ் உலகின் நனி சிறந்த கவிஞர்கள் இந்தப் போலி தோற்றத்தை எளிதில் கண்டு கொள்வார்கள். ஆயினும் தமிழ்த்தாயின் பற்றுள்ள குழந்தையொன்று மழலை பேசுகிறது என்று கவிதைப் பிழைகளை பெருமனதுடன் பொறுத்தருள வேண்டுகி
5
Page 5
றேன். மரபுக் கவிதைகள் சரிவர எழுதத் தெரியாத காரணத்தினாலேயே எனது சிந்தனைச் சிதறல்களை, புதுக்கவிதைகள் என்ற பெயரில் அள்ளித் தெளித்துள் ளேன். கவிஞர் பெருந்தகைகள் குற்றங்களைக் களைந்து என் கவிதைகளில் குணம் காண்க, எனக்கேட்டுக் கொள்கி றேன்.
மலேசியாவில் எனது எட்டாவது வயதில் நான் தமிழில் ஐந்தாம் வகுப்பு சித்தியடைந்தேன், 1939-ம் ஆண்டில், அந்நாளில் அதுதான் தமிழில் உயர் வகுப்பு ஆகும். அந்தப் படிப்புத் தான் என்னை ஒரு எழுத்தாளர் ஆக்கியது. அதுவே எனக்கு தமிழ் தாயினால் அளிக்கப் பட்ட பேரருள். இருப்பினும் சில வருடங்களாக, நோய் தொல்லை தாங்க முடியாத நிலையில் புத்தகம் வெளியி டும் எண்ணம் ஈடேறுமோ என்ற ஐயத்தில் நிலைகு லைந்து போயிருந்தேன் என்றே கூறவேண்டும். 1990-ல் மலேசியா போயிருந்த போது அங்கேயே தொண்டை யில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. பின் 1993-ல் சென்னை சங்கர நேத்ராலயாவில் கண் அறுவை சிகிச்சை, அதன் பின் அதே ஆண்டு இறுதியில் 'அப்போலோ’வில் இருதய அறுவை சிகிச்சையென்று நடந்தேறியது. நீரிழிவு வியாதியின் தொல்லை வேறு. இப்படி இதற்கு எவ்வ ளவோ பணச்செலவாகிவிட்டது. இந்நிலையில் புத்தகம் வெளியிடுவது எப்படியென்று கலங்கினேன். என் இலட் சியத்தை நன்குணர்ந்த என்மக்கள், என் எழுத்துக்களை நூலாக வெளிவர பெரிதும் தைரியம் சொல்லி ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார்கள்.
மேலும் இந்நூல்கள் வெளிவர சில வருடங்களுக்கு முன்னர் மூல காரணமாயிருந்தவர் ஒருவர் இருந்தாரென் றால் அவர் தான் எனது உடன் பிறவாத அருமைச் சகோதரர், 'ஐந்தடித் தமிழன்’ என்று நூலின் ஆசிரியர், மலேசிய தமிழ் எழுத்துலகில் அன்றும் இன்றும் நல்ல புரட்சிகரமான கருத்துக்களை எழுதுபவருமான திரு. மா.சி.அண்ணாமலை அவர்கள். அவர்களுக்கு என் முதற்
As
கண் நன்றியைச் சமர்ப்பிக்க கடமைப் பட்டுள்ளேன். சிங்கையிலிருந்து சிரம்பான் வரை’ என்று 1957-ல் மலே சியாவின் மூலை மூடுக்கெல்லாம் சென்று, சிறந்து விளங் கிய அன்றைய தமிழ் எழுத்தாளர்களை பேட்டி கண்டு சிறப்பித்த 'மலைமகள்' ஆசிரியரும், துணை ஆசிரியரு
மான திரு. வி.க.முத்தையா அவர்கட்கும், சகோதரர் திரு. எஸ்.வி.சுப்ரமணியன் அவர்கட்கும் என் நன்றி. அவர்கள் என்னைபேட்டிக் கண்டது. கடைசிக் கட்டுரை யாக அமைந்ததை, எனது கட்டுரைப் பகுதியில் அப்ப டியே பிரசுரித்துள்ளேன்.
"சிரம்பான் தங்கையின் மதறாஸ் அண்ணன்' என்று பாசத்துடன் குறிப்பிட்டு எழுத்துலகில் ஊக்குவித்து, என்னை ஒரு தரமான எழுத்தாளராக்கிய 'தமிழ்நேசனின் அன்றைய ஆசிரியர் திரு. கு.அழகிரிசாமி அவர்களை நினைவு கூர்கிறேன். எனது ஆயுள் உள்ளளவும், அன் னாரை மறக்க முடியாது. . மேலும் என் எழுத்துலக நண்பராக அந்நாளில் இருந்தவரும், மலேசிய தமிழ் இலக்கிய எழுத்துலகின் 'ஜாம்பவானாகத் திகழ்ந்து வரும் இலக்கிய குரிசில் மா.இராமையா அவர்கட்கும், அணிந்துரை வழங்கி, எனது நூலைச் சிறப்பித்துள்ள மலேசிய தமிழ் சங்கத் தலைவர் திரு. எம்.துரைராஜ் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியை சமர்ப்பிக்கி றேன். எல்லாவற்றிற்கும் மேலாக 1987-ல் நான் மலேசி யாவுக்கு சென்றிருந்த போது, மாண்பு மிகு அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் இல்லத்திற்குச் சென்று, எனது அபிலாஷையை சொல்லியதுடன், அவர்களின் பாராட்டுரையும் எனது நூலுக்குத் தேவையெனக் கேட் டேன். மலேசிய மாதர் சங்கத்தின் தலைவியாகவும், தமிழ் நேசன் நிர்வாகியாகவும் இருக்கும் அமைச்சர் அவர்களின் அன்பு மனைவி இந்திராணி சாமிவேலு அவர்கள் இன்முகத்துடன் எனது எழுத்துக்கள் அனைத் தையும் வாசித்து, பாராட்டுரையும் தந்துள்ளார். மலேசி யாவில் எனது நூல்களை வெளியிடும் காலம் வரும்
7
Page 6
போது, 'வெளியீட்டு விழாவிற்கு, அமைச்சர் அவர்களே தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டேன். ஒர் அழகிய புன் சிரிப்புடன் இணக்கம் தெரிவித் தார் அமைச்சர். இந்த நூலே இவ்வளவு காலம் கடந்து வெளிவரும்போது, மலேசியாவில் இந்நூலை வெளியி டும் காலம் என்று வருமோ என்றே நினைக்கத் தோன்றுகி றது. என்னால் அதைச் சாதிக்க முடியுமோ முடியாதோ மாண்பு மிகு அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்களின் தலைமை தாங்க சம்மதம் என்ற சொற்களே இந்நூலின் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தாலும் சரி, நடக்காவிடினும் சரி, அன்னார் தலைமை தாங்கியதா கவே கருதுகிறேன். மாண்புமிகு அமைச்சர் சாமிவேலு அவர்களுக்கும் 'டத்தின் இந்திராணி சாமிவேலு அவர்க ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
தவிர தற்போது நான் வாழ்ந்து வரும் இந்த அழகி தமிழகத்தில் எனது எழுத்தோவியங்களுக்கு வாழ்த் துப்பா தந்தருளிய ஆன்மீக ஜோதி, அமரத்வம் அடைந்து விட்ட அருள் மிகு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு என் அன்பையும் நன்றியையும் அர்ப்பணம் செய்கிறேன். அடுத்து, பலவேலைகள் பிரயாணங்கள், தொல்லைகள் இவற்றினூடே, பொறுமையுடன் எனது எழுத்துக்களை படித்துப் பார்த்து, பெருமனதுடனும், பேரன்புடனும் வாழ்த்துரை அளித்த முனைவர் பெருங்க லிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
எனது இளவயது காலத்தில் நான் மலேசியாவில் வாழ்ந்தபோது, அந்நாளில் தமிழகத்திலிருந்து வரும் 'அமுத சுரபி' இதழை படிக்கத் தவறியதில்லை. அந்த 'அமுத சுரபியின் ஆசிரியரான திரு. விக்கிரமன் அவர் களை மாண்பு மிகு மந்திரி 'டத்தோ சாமிவேலு அவர் கள் இல்லத்தில் முதன் முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேச்சு வாக்கில் எனது எழுத்துக்களை நூல் வடிவில் கொணர இருப்பது பற்றிச் சொல்ல, உடனே
8
அவர் தன் முகவரியை தந்தார். இன்று அவரும் தன பற்பலவேலைத் தொல்லைகளினூடே எனது சிறுகதை கள், நாடகங்கள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் அனைத் திற்கும் ஓர் ஆய்வுரையே தந்துள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் டாக்டர் விக்கிரமன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன். மலேசியா வில் பிறந்து, வளர்ந்து, வயோதிபத்தையும் எட்டி விட் டாலும், எனது எழுத்தார்வத்தைக் கண்டு கவிதை வடி வில் பாராட்டுரை தந்துள்ள அன்புச்சகோதரர், புலவர் வெற்றியழகனுக்கும் என் அன்பு கனிந்த நன்றி.
இறுதியாக, படகுக்கு எப்படித் துடுப்புத் தேவையோ, அதுபோல எனது இம்முதல் முயற்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் நின்று வழிகாட்டி உதவிய என் அருமைத் தம்பி திரு. எம்.பி.மூர்த்தி அவர் கட்கும், “சரோஜ் சாய் மூர்’ பதிப்பாளருக்கும், எனது பற்பல சிரமங்கள், பணக்கஷ்டங்க்ள், நெருக்கடிகளுக்குக் கூடவே, என் உள்ளத்தைப் புரிந்து, என் இலட்சியம் நிறைவேற ஊக்கமும், ஆக்கமும் தந்து என் முயற்சி வெற்றி பெறச் செய்த என் மக்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
எனது கணவர் பெயர் வ.தவராஜா என்பதாகும். ஆனால் எனது திருமணத்திற்கு முன்பிருந்தே, என் தந்தை யார் முத்தையா அவர்கள் பெயரின் 'இனிஷியலையே போட்டுவந்து, பிரசித்தம் அடைந்ததால், அப்பெய ரையே எழுத்துலகில் மட்டும் இன்றும் உபயோகிக்கி றேன். எனது நூல்களை தமிழ் கூறும் நல்லுலகம் முழும னதுடன் வாழ்த்தி வரவேற்கும் என நம்புகிறேன். நன்றி. இப்படிக்கு, மு.தனபாக்கியம். சென்னை; தொலைபேசி எண் 418115.
Page 7
அனைத்து இந்தியர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் 'அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் விக்கிரமன் அவர்கள்
கட்டுரைகள், புதுக்கவிதைகளுக்காக,
தனபாக்கியம் அம்மையார் அவர்கள், சிறுகதைகள் மட்டுமல்ல சிறப்பான கட்டுரைகள் எழுதுவதிலும் வல் லவர். இவர் எழுதிய சில கட்டுரைகள் கோலாலம்பூர் வானொலியில் 1984-ல் ஞாயிறு தோறும் காலையில் அவரே உரையாற்றியிருக்கிறார் 6 வாரம் வரை. இவர் எழுதிய சிந்தனைச் செல்வம் எனும் கட்டுரை சிந்திக்க வைக்கும் விதத்தில் "சும்மா’ வெளுத்துக் கட்டியிருக்கி றார். சும்மா ஒரு கண்ணோட்டத்தில்.
இவர் புதுக்கவிதை எழுதவேண்டும் என்ற உந்தலில் சில புதுக்கவிதைகள் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. 'மனித இயக்கத்தின் தனி உலகம்’ ரசிக்கக்கூடிய தாயிக் கிறது. குழந்தைகளுக்கான சில கவிதைகள் பாராட்டும் படி உள்ளன. கிரிக்கட் என்ற கவிதை சிரிக்கவும், ரசிக்க வும் வைக்கும் கிரிக்கட் பிரியர்களை.
மொத்தத்தில் இவர் சிறுகதை, கட்டுரை, நாடகங் கள், புதுக்கவிதை, விகடத்துணுக்குகள், ஓவியம் வரை தல் என்று தன் அருமையான கை வண்ணங்களை எழுத்துலகிற்கு அர்ப்பணித்துள்ளது. பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும். இவர் தனக்கென அந்நாளி லேயே தனி முத்திரை. பதித்துள்ளதை காண முடிகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் எழுதியிருந்தாலும் அத்த னையும் நல்முத்துக்கள். அவர் மேன்மேலும் எழுத்துல கிற்கு சேவை செய்யவேண்டுமென வாழ்த்தி வரவேற் கின்றேன்.
வணக்கம்.
விக்ரமன்.
1O
அன்றும் இன்றும்
ஐ.நா.சபையின் முன்னாள் தலைவி விஜயலட்சுமி பண்டிட் பெரும்பாலான வர்களுக்கு நினைவிருக் காது. அவர்தான் இந்தியா வின் முன்னாள் பிரதமர் பண்டிட் நேருவின் சகோ தரி.
பெண்ணின் பெருமையும் கடமையும் என்னும் கட்டுரையில் 1955-ஆம் ஆண்டு குமாரி மு.தனபாக்கியம் முற்கால தற்காலப் பெண்களின் வாழ்க்கை முறைகள் பற்றி விவாதித்திருக்கிறார்.
சிந்தயை ஒரு ஒழுங்குக் கொண்டு வரமுடியாதவர் கள் தமக்குத் தாமே உதவிக்கொள்ள முடியாதவர்கள் என்று 'சிந்தனைச் செல்வம் மூலம் மு.தனபாக்கியம் கட்டுரை வடித்திருக்கிறார்.
இவரது கட்டுரைகள் சுமார் 35 ஆண்டு காலக்கட் டத்தை உள்ளடக்கியனவயாக அமைந்துள்ளன.
இவற்றை நான் படித்து பார்த்தபோது நான் சிறுமி யாக இருந்த காலத்தில் அப்போது அறிவார்ந்த மாதர்கள் பெண்கள் உரிமைக்காக எப்படியெல்லாம் எழுதினார் கள், பேசினார்கள் என்பதை இவரது கட்டுரைகள் மூலம் அறியமுடிகிறது.
நீங்கள் 'சும்மா’ இந்த புத்தகத்தை படிக்கவேண் டும் என்பதற்காகவே இவரும் 'சும்மா’ எழுதி வைத்தி ருப்பதாக நீங்கள் 'சும்மா’ நினைத்துவிடக் கூடாது.
நீங்களும் 'சும்மா’ படித்துத் தான் பாருங்களேன். இப்படி விகடமாகவும் இவருக்கு எழுதத் தெரியும் என்பதை நான் இங்கு "சும்மா’ சொல்லிவைத்தால் தவறில்லை என்று கருதுகிறேன்.
1
Page 8
தொடரட்டும் இலக்கியப் பணி
கவிதைக்கலை என்பது சாதாரண கலை அல்ல! மரபுக் கவிதை வேறு புதுக்கவிதை வேறு. புதுக்கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை தமிழ் கூறும் நல்லுலகில் அதிகரித்து வருகின்றன.
ஆனால் மரபுக்கவிதை எழுதுவதற்கு மொழி ஆற்ற லும் இலக்கணப் பயிற்சியும் தேவை.
திருமதி தனபாக்கியம் தனது உள்ளக் கருத்துக்களை புதுக்கவிதை வடிவில் கொணர்ந்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நாடகங்கள், சிறுக தைகள், கட்டுரைகள் எழுதியவர்.
இன்று தமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவ தற்கும் தமது உள்ளக் கருத்துக்களைத் தெளிவாகச் சொல் வதற்கும் புதுக்கவிதைகளை எழுதி வருவதுடன் அவற் றைத் தொகுத்து நூல்வடிவில் வெளியிடுவது பாராட்டத் தக்கது.
இவருடைய எழுத்துப் பணி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அன்புடன், டத்தின் இந்திராணி சாமிவேலு, தமிழ் நேசன், நிர்வாகக் குழு வாரியத் தலைவர். கோலாலம்பூர் மலேசியா.
12
திருமதி. மு.தனபாக்கியம் வெளியிடும் நூலுக்கு வாழ்த்துரை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு மயில் இறகு
எழுத்தாற்றல் நிறைந்த சிரம்பான் சகோதரி மு.தன பாக்கியம், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் ஐம்பதுக ளில், படைப்பு இலக்கியத்துறையில், உரத்த சிந்தனைக ளோடு எழுதிக் குவித்த நினைவுகள், நெஞ்சில் வந்து விழுகின்றன. சிறுகதையா, கவிதையா, பேட்டிக் கட்டு ரையா, வானொலி நாடகமா, இலக்கிய நாடகமா? அத்தனையையும் படித்து மகிழ்ந்தது, மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கியத்துறை. பரிசில்வழங்கி மகிழ மலேசி யத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஒரு சந்தர்ப்பத்தில் தேடியது. பிறகுதான் தெரிந்தது; சிரம்பான் ஆங்கிலப் பள்ளியில் ஒர் ஆசிரியையாகப் பணியாற்றினாலும் தாய்த் தமிழில் அவர் வடித்த துடிப்பான எழுத்துக்களின் நிழல் களை, தமது திருமணத்துக்குப் பின்னர் தம்மோடு, மலேசியாவை விட்டே எடுத்துச் சென்று விட்டார் சகோ தரி பாக்கியம்.
'மு.தனபாக்கியத்தின் படைப்பில், கருத்தமைதி, கட்டுக்கோப்பு முதலிய அம்சங்கள் நிறைந்து விளங்கும்’ இது, சிறுகதைவல்லரசு அமரர் கு.அழகிரி சாமியின் பாராட்டு, இதற்குமேல், சகோதரி பாக்கியத்தின் படைப் பாற்றலுக்கு, விமர்சனம் தேவையில்லை.
தமிழ்நேசன், சங்கமணி, திருமுகம், மலைமகள், மலேசிய வானொலி எல்லாவற்றிலும் இவரது மணி யான எழுத்துக்கள் மணம் பரப்பின. இப்போது, அவற் றையெல்லாம் நூல்வடிவில் கொண்டுவரும் அரிய முயற் சியில் சகோதரி தனபாக்கியம் இறங்கியுள்ளார்.
13
Page 9
தனது திருமணத்துக்குப் பின்னர் இலங்கையிலும், பின்னர் (இப்போது) தமிழகத்திலும் வாழ்க்கைப் பட கைச் செலுத்திக் கொண்டிருக்கும் இவருக்கு இந்த இலக் கிய ஒளிவிளக்கு, வெற்றிப்பாதையைக் காட்டும் என்று நம்புவோம்.
பழைய தலைமுறையைச் சார்ந்த மூத்த எழுத்தாளர் களின் ஆதரவையும் ஆசியையும் அமோகமாய்ப் பெற்ற வர் சிரம்பான் சகோதரி மு.தனபாக்கியம்; புதிய தலைமு றைக்கு, தமது எழுதுகோலுக்குப் பிரியாவிடை கொடுத்து விடாமல் புத்தகவடிவில் பரிசுதர முன்வரும் சகோதரிக்கு, நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். மலேசியத்தமிழ் இலக்கியத்துக்கு, இவரது நூலை, ஒரு மயில் இறகாக ஏற்று, மதிப்போம். போற்றுவோம்.
இங்ங்ணம்,
எம்.துரைராஜ், (தலைவர்)
14
ഉത്?.. : 565666
' வேலை வணங்குவதே வேலை "
கிருபானந்தவாரி 07, சிங்கண்ணசெட்டித் தெரு சிந்தாதிரிப்பேட்டை
சென்னை - 600 002 நாள்
Page 10
தமிழுள்ள நாள் வரைக்கும் தழைத்து வாழ்க!
தனபாக்யம் என்கின்ற அன்புத் தாயார்
தமிழ்மீது கொண்டிருக்கும் பற்றைக் கண்டால் மனமெல்லாம் சிலிர்க்கிறது; நெஞ்சங் கூட
மகிழ்வினிலே திளைக்கிறது! இவர்போன் றோரால் இனமானம் மொழிமானம் தழைத்தே ஓங்கும்;
எழுச்சி பெறும்; இனித்தமிழுஞ் சாகா தென்பேன்! தனபாக்யம் தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுள்ள நாள் வரைக்குந் தழைத்து வாழ்க!
அன்புள்ள, வெற்றியழகன்,
புலவர் வெற்றியழகன், 29, அபிபுல்லா குறுக்குத்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.
16
இலக்கியக் குரிசில் மா.இராமையா அவர்களின்
பண்புரை
தமிழ்ச் சிறுகதைத் துறை இந்நாட்டில் வளரத் தொடங்கி ஓர் அரை நூற் றாண்டு தான் ஆகிறது. இருப்பினும் கணிசமான அளவு வளர்ந்துள்ளது என் பதற்கான அடையாளங்க ளும் உள்ளன. ஒரு மொழி யின் வளர்ச்சிக்கு அந்த மொழியில் வெளிவந்திருக் கும் தரமான இலக்கியங் களே அடையாளங்களா கும்.
இது, தமிழ் பிறந்த நாடல்ல வளர்ந்தநாடு. இங்கே தமிழ் வளரத் தொடங்கி ஓர் அரை நூற்றாண்டேயானா லும் இலக்கியத்துறை எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது. அதிலும், சிறுகதைத் துறை சிறப்பாகவும் செழிப்பாகவும் வளர்ந்துள்ளது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இந்த வளர்ச்கிக்குக் கால்கோல் இட்டவர் கள் பாமேதைகளோ - பட்டதாரிகளோ அல்லர்; சாமானியர்களே இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்.
சிறுகதைத் துறை வளர்ச்சியின் முதல் கால
கட்டமான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது, ஐம்பது
களில் தமிழ் சின்னக் குழந்தையாகத் தத்தித் தவழ்ந்த
போது அதனை வாரியணைத்து வளமூட்டியவர்களின்
17
Page 11
ஆரம்ப காலப் படைப்புகளே இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தன.
அத்தகைய நற்பணியினைச் செய்த எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர் மு.தனபாக்கியம் அவர்கள், எந்தக் கைம்மாறையும் எதிர்பார்க்காமல் தமிழ்ப்பணி ஒன்றே தலையாய கடமை எனக்கொண்டு உருவாக்கிப் படைப்பு களில் அன்பின் உணர்வுகளையும், பண்பின் நெளிவுக ளையும், சமூகச் சிந்தனைகளையும் நிரம்பக் காண முடியும்.
அவரின் படைப்புகள் என்றோ ஆரமாகத் தொகுக் கப் பெற்று தமிழுக்கு அணிசெய்திருக்க வேண்டும். காலங்கடந்து வெளிவருவதனாலும் அனைத்தும் காலத்தை வென்ற படைப்புகள்.
அவரின் இலக்கியப் பணி தொடர எனது மன நிறைந்த வாழ்த்துக்கள்.
தங்காக், ஜோகூர் அன்புடன்,
LDT. SITTGEditou jr.
தமிழ் வாழ்க! திருக்குறள் நம்மறை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
(தலைமையகம்) International Tamil Integration Society திருவள்ளுவர் இல்லம்' "THRUVALLUVAR ILLAM" 12, 4/1u 524/i gaocoontju, 12, SAI NAGAR ANNEXE, #: நகர், AYYAPPA NAGAR, சன்னை - 600 117 MADRAS - 6OOO 111. தொலைபேசி: 423375 Tel: 423375 தொலை நகல்; 91-44-588990 Fax: 91-4-56899 O As Toir.............. வாழததுரை
மு.தனபாக்கியம் அவர்கள் மலேசியா மண்ணிலே பிறந்து வளர்ந்து தன் இலக்கிய விழுதுகளை ஆங்கே ஊன்றி "பன்மீன் நடுவே பால்மதி போல' இலக்கிய வானில் ஒளிர்கிறார்.
இவருடைய பன்முக ஆற்றல் தமிழ் இலக்கியத் திற்கு பெரும் வரவாகும். சிறந்த நாடக ஆசிரியராகவும். சிறந்த சிறுகதை ஆசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதை இவர் படைப்பிலக்கியங்க ளின் மூலம் உணர முடிகிறது.
இவருடைய படைப்புகளில் தனி மனிதச் சிக்கலும், குடும்பசிக்கலும், இனச்சிக்கலும் வெளிப்படுகின்றன. தான் வாழும் காலத்தை ஒட்டியே பாடு பொருள்களை ஏற்படுத்திக் கொள்ளும் திறம், வாசகர்கள் மனத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிதயாகும். 'தன யனும் தந்தையும்’ ‘செந்தி தந்த நந்தி வர்மர்" என்ற
*ーr rて r
நாடகங்கள் வரலாற்றுணர்வின் அடிப்படையில் எழுந்த
19
Page 12
வையாகும். வரலாற்றுணர்வின் நாடகம் எழுதுவதில் இந்நூலாசிரியர் வல்லவராக திகழ்கிறார்.
இவரின் நாடகங்கள் அனைத்தும் மலேஷிய வானொலி - இதழ் மூலம் வெளியாகி பல நூறு வாசர் களை தன் பால் ஈர்த்தவை. அனைத்தும் முழு வடிவாகி நூல் வருவதென்பது தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய வரவாகும். சிறந்த சிறுகதையாசிரியரான கு.அழகிரி சாமி, அவர்களின் பாராட்டைப் பெற்று அவர் இதழான தமிழ் நேசனில் பல படைப்புக்களை வெளியிட்டுள்ளார் இந்நூலாசிரியர். சிறுகதை ஆசிரியர் கு.அழகிரிசாமியின் கதைகளில் பிறமொழிச் சொல் பெரிதும் கலவாமல், அதே சமயத்தில் வாசகர் அனைவருக்கும் புரியும் படி யாக, எளிய நடையில் தெளிவான கருத்து அமைந்திருக் கும். அப்பண்பு இந்நூலாசிரியரின் படைப்புக்களிலும் நன்கு வெளிப்படுகிறது.
இவ்வாசிரியரின் சிறுகதைகள் பலவிதமான சிக்கல் களின் எல்லைகளை தொட்டுக்காட்டி, அதற்கு தீர்வும் தருகின்றன. 'தணியாத தாகம்’ என்ற கதை இனப்பிரச்சி னையை மையமாக கொண்ட சிறந்த கதை. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கதை இது.
சிறந்த படைப்புக்களை வழங்கியுள்ள இந்நூலாசிரி யர் நாடகத் தொகுதியினையோ, சிறுகதைத் தொகுதியி னையோ பல்கலைக் கழகங்களில் பாடநூலாக இருப்ப தற்கும் பரிந்துரை செய்யலாம்.
படைப்புலகில் பல இலக்கிய வடிவங்களில் தன் முத்திரையைப் பதித்துள்ள இந்நூலாசிரியரின் தமிழ்த் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
அன்பன்,
(வா.மு.சேதுராமன்)
2O
வினாயகர் காப்பு
முக்கண்ணன் மைந்தா, முழுமுதல்வா, மூசிகவாகனா அங்கணியின் அருட்செல்வா, அறுமுகன் சோதரா இங்கண் எனக்கருள் கூர்ந்து இன்னமுதாம் - பைந்தமிழை Hந்திடுவாய் என் அறிவுச் கிசைவாய். அருள்புரிவாய் கஜமுகனே கணமுமுனை நினைக்க இருள் சூழ்ந்த என் உள்ளத்தில் ஒளியாய் நின்று மருள் நீக்கி எனையாட்கொள்வாய் மாசிலாமணியே -உன் கழல் போற்றிப் பணிந்திடவேயென்றும். சங்கத் தமிழ் மூன்றும் சடுதியில் எனக்களிக்க துங்கக் கரிமுகனே, தூயவனே, வந்தருள்வாய் - என்றும் தஞ்சமென நிற்கும் தமியேனை ஆட்கொண்டு பஞ்சமின்றி வாழ வகை செய்.
女
என்றும் என்னுடன் இருப்பாய்
என்னம்மா மனசுனக்கு இரும்போ கல்லோ சொல்லு? ஏழை என்னைக் காத்திடவே, விரும்பலையோ உன் மாசு?
காலமெல்லாம் உனைநினைத்து கதறியே அழுதிட்டாலும் காதில் விழாதாமோ, காதென்ன செவிடோ சொல்லு (என்னம்மா) கவிதை பாட விழைகின்றேன், கற்பனையோ வரவேயில்லை. கருணை நீ பொழிந்திடவே கணத்தினில் விலகும் தொல்லை. பொன்னாகப் போற்றி உன்னைப் புகழ்மாலை பாடிடவே. உன்னருள் வேண்டும் என்றும் என்னுடன் இருப்பாயம்மா.
女
21
Page 13
பத்துமலை வடிவேலா, வரம் அருள வா
பத்துமலை தன்னைப் பதியாக்கி அமர்ந்துள்ள பாவலா நம் வேலவா நித்தமும் நின் துதிபாடி நெக்குருகி நிற்கும் நிலை நிமலனே தந்தருளுவாய். எத்தனை துயர் வரினும் அத்தனையும் தாங்கிட இறைவனே சக்தியருளுவாய் பக்தர்களின் சித்தத்தில் பாங்குடனே யமர்ந்திருந்து பாலிப்பாய் பாவமகற்றுவாய் முத்தமிழின் வித்தே முழுமுதலோன் தம்பியே முக்கண் சிவனாரின் மைந்தனே வித்தகி பார்வதியின் சக்திமிக்க பாலனே விமலனே எமக்கருளுவாய் குவலய மீதுள்ள குன்றுகள் அனைத்திலும் கோலாகலமாய் நிற்கும் குமரனே கூப்பிட்ட குரலுக்கு நாட்டமுடன் ஓடிவந்து குறைதீர்ப்பாய், அருள் பாலிப்பாய்! வள்ளி தெய்வயானையுடன் மரகத மயிலேறி மாசில்லாக் காட்சி தந்தருளுவாய் அள்ளி யஸ்ளிப் பருகிட உன் ஆனந்தக் காட்சிதன்ன அருளியே எம்மை மகிழ்விப்பாய் தெள்ளு தமிழில் உந்தன் திருப்புகழைப் பாடிடவே தீட்சணிய புத்திதனை தருகுவாய் உள்ளம் உருகியே உன் உவப்பிலா அருள்தனையே உலகெலாம் பரவிடவே அருளுவாய் கள்ளமிலா நெஞ்சத்துடன், கந்தனே நின் கருணையை கரம் கூப்பி வேண்டுகின்றோம் ஐயனே தள்ளி வைக்காதே யெம்மை தடுத்தாட்கொள்ள வரவேண்டும் தரணியிலே உன் புகழ் பாடவே * சொல்லொணா மகிழ்ச்சியுடன் துதி பாடி நிற்பவர்க்கு வல்லவா, வடிவேலவா, வரம் அருளவா.
22
சிந்தனைச் சிதறல்
தமிழ் அன்னையும் கவசமாய் இருப்பள் காண்
கவிதை எழுதிடவே கட்டுக்கடங்கா ஆவலுடன் எழுதுகோலைக் கையில் எடுப்பாக எடுத்துக் கொண்டு அமர்த்திட்ட எந்தனுக்கு அமர்த்தலாய் கற்பனை இ.க்குச் செய்ததே ஈங்கு. கவிதை என்ன கவிதை கற்பனைக்கா பஞ்சமென்று இறுமாந்த எந்தனுக்கு இடித்தது காண் - சீரான வரமறுத்த கற்பனைகள் வரம்பற்ற எண்ணங்கள் சிதைந்தனவே சிந்தனையிலிருந்து.
சூல் கொண்ட மேகம் போல் சிந்தனை நிறைந்தாலும் காற்றின் அலைக்கழிப்பால் கார்மேகம் கலைவதுபோல் சிந்தனை ஆங்காங்கே சிதறிடவே - கற்பனை நிந்தனையுடன் முடங்கிற்றே காண்.
கம்பன் என்ற எண்ணமோ, கண்ணதாசனைப்போல் நீயும் கவிஞனாக முடியுமோவென்றெழுந்த கேலியால் இடிந்து நின்ற எந்தனுக்கு ஏகலைவன் எண்ணம்வர அடிபணித்தேன் சரணம் என்றமரரிடம். என்ன எழுத, எதை எழுத, எப்படி எழுதவென்று ஏங்கி நின்ற என்றனுக்கு அறிஞர்களின் அமுதவாக்கு அருளிற்று; ‘செந்தமிழும் நாப்பழக்கம் சிந்தித்தே வரும் நல்லவற்றையெழுதெனவே? சிந்தனையில் பிறந்த சீரிய கருத்துக்களை வந்தனையால் வரவேற்று வளமாய் வடித்திடுக - என்றும் கந்தனின் நற்றுணையிருப்பின் கவிதை என்ன - தமிழ் அன்னையும் கவசமாய் இருப்பள் காண்.
23
Page 14
கதிரவா கருணையுடன் வருகை தா
காகங்கள் கா.கா.கா.ர்.ர் எனக் காக்கும்படி கரைய கிள்ளை இனங்கள் கிக்கீ.கிக்கீ. எனக் கீதம் பாட குயில் இனங்கள் குக்கூ. குக்கூ. எனக் கூவியழைக்க குக்குடமோ கொக்கரக்கோ என வாழ்த்தொலிக்க காலைக் கதிரவன் தன் பொற்கதிர்க் கரங்களால் கமையை கட்டியணைக்க எழுந்திட்டான் காதலுடன். ஆதவனின் நல்வரவால் ஆவினங்கள் ஆர்ப்பரிக்க, பூதளத்தாய் விகCத்தாள் பொன்னவனின் அரவணைப்பில்! காதலனின் பிணைப்பினிலே கனத்த சுகம் கண்ட அவள் மாலைவரையாகியும் தன்மன்னவனை விட்டாளில்லை. 'நாளை வருவேன் மீண்டும், நம்பிடுக” என்று அவன் மெல்ல மறைந்திட்டான் மீண்டும் அடிவானத்தில்,
சூரியனின் அரவணைப்பில் சுகம் பெற்ற மேதினித்தாய் சூல் கொண்டு மினுமினுத்தாள் சூடான பிணைப்பினாலே மேனியெலாம் இயற்கை வளம் கொழித்து நிற்க, மேகம் மழை பொழிய உடல் செழித்து நின்றாள் பச்சை உடை உடுத்து பலவர்ணமாய் அலங்கரித்து, இச்சையுடன் ஈன்ற உயிர்களுக்கெல்லாமே ஈந்துநின்றாள். கண்கண்ட தெய்வமாம் கதிரவனின் ஒளிவீச்சால் என்னென்ன விந்தையெல்லாம் நிகழ்கிறது இப்புவியில் கோள்களின் தலைவனாய் குவலயத்தில் பொறுப்பேற்று அண்ட வெளியில் அமர்ந்திருந்த அரசோச்சும், ஆதவா! என்றென்றும் மேதினிவாழ் உயிரினங்களைக் காக்க கதிரவா, கருணையுடன் வருகை தா!
24
மனித இயக்கத்தின் தனி உலகம்
அரிது மானிடப் பிறவியென்று, அவனியில் தனித்த பெருமையுண்டு. பெரிது அவன் புகழ் உலகினிலே, பிற உயிர்ப் படைப்புடன் ஒப்பிடுகில். அண்டமெலாம் வியக்கும் அற்புதமாய் அவனியில் மனிதனைப் படைத்து விட்டான் எண்சாணுடம்பிற்கு சிரசே பிரதானம் என்றே உணரவும் வைத்துவிட்டான் மனிதனைப் படைத்த இறைவன் அவனுள். மர்மங்கள் பல வைத்து மகிழ்ச்சி கொண்டான். மாண்புடை சிருஷ்டியின் மாசற்ற பெருமையை மலரோன் உணர்ந்திடவே வைத்தான். மார்பெனும் கவசத்தில் வகையாய் இதயத்தை மாட்டிய மர்மம் தான் என்னவோ? மாசில்லா இறைவனின் மகத்தான படைப்பினில் மாசு காணவும் தான் இயலுமோ? கைப்பிடி அளவின் கலை நுண் இதயம், எப்படித்தான் இயங்கி உயிரோட்டம் பெற்றதோ? செப்படி வித்தையோ சிவனாரின் சிருஷ்டியில், அப்படியெலாம் நம்மை அயரவைத்து விடுமே காண் "பம்புசெட்” போன்றிறைக்கும் பாங்கான இதய ஏரி, அம்புபோல் உடல்முழுதும் அரைநொடியில் செந்நீர் பாய்ச்சும்! வம்புதான் சூழப்பார்க்கும் வழி மீறிச் செந்நீர் பாயின்,
அன்புடன் இறைவனை நாட அகன்றிடும் வினையதாமே. ஆழியின் ஆழத்தை அளந்திட்டாலும், இதய ஆழத்தை அளத்தல் அரிதே காண்பீர்! ஊழிற் பெருவலி யாவுள என்று உவமைக்காய் கூறுவர் உயிர்க்கிடர் நேரின். கண்களில் காந்த சக்தி உண்டு ஆங்கே, காதல் கனிவும் தெரிவதுண்டு. தகண்மதிக்குண்டான குளிர்ச்சி உண்டு; அதில் தகித்திடும் வெய்யோன் சூடுமுண்டு. வெஞ்சினம் கொண்ட கண்கள் ஆங்கே வெறுப்பிலெரிமலையாய் வெடிப்பதுண்டு. பொன்மனம் நொந்து விட்டாலோகண்கள் பொங்கி மழையாய் பொழிவதுண்டு.
ク 不
Page 15
நாசியின் பெருமையை எடுத்துச்சொல்லின் அது நாசுக்காய் பெருமூச்சு விடும் ஆசைக்கு ஏதேனும் பங்கம் வந்தால் அழி காற்றாய் மூச்சு சுழன்றடிக்கும், மொத்தத்தில் முகரும் தன்மையுடன் உயிர் மூச்சாய் வெளிப்படும் நாசியிலே, அத்தனை சக்தி நாசிச் சுரங்கத்தில் அடங்கி இருப்பதை அறிந்திடலாம்! வாயின் பெருமையைச் சொல்லப்போகின், அப்பா வம்பு வழக்கெல்லாம் அங்கே உண்டு. நாவும் அதனுள் அமர்ந்து கொண்டு, அங்கே நாட்டாண்மை செய்வதைக் கண்டிடலாம் தட்டு வீட்டினுள் முட்டுப்பலகை போல் தனியாக நாக்கு அமர்ந்திருந்து, அட்டகாசமாய் ஆட்சி செய்யும், அகப்பட்டுக் கொள்ளாமல் "பற்களிடம்" வன்மை பொருந்திய நாவினிற்கு, வகையாய் அறுசுவை ருசி தெரியும். மென்மையாய் தேன்சுவையாய்ப் பேசிடவும் வேண்டிய திறமை அதற்குண்டு, சட்டம் பேச நேர்ந்து விட்டால், அது சாட்டையாய் மாறி சுழன்றடிக்கும்! மட்டமாய் யாரும் மதித்து விட்டால் அது மருண்டு போய் வாயில் சுருண்டு விடும் நல்லதும் வல்லதும் பேசிடும் நாவே நல்ல மனிதர்க்கு நீதிபதி அல்லல் பட்டாலும் அவசரப்பட்டாலும் அதுவே கூறிடும் புத்திமதி முத்தனைய பற்கள் வர்ணிப்புக்குண்டு; ஆங்கு முப்பத்திரண்டென்ற எண்ணிக்கையில், அத்தனையும் சேர்ந்தால் அழகுக்கென்ன; ஆனால் ஆபத்து அங்குமதிகமுண்டு, முல்லைச் சிரிப்பால் பற்களின் வெண்ணொளி மூவுலகையுமே கிறங்க வைக்கும். எல்லை மீறிய சினத்தின் வயப்பட்டால் இடிமுழக்கம் போன்று நெறுநெறுக்கும்! செவிகளிரண்டையும் சேர்த்துக் கொண்டால் அதன் சிறப்பினை இயம்ப முடியுமோ காண்1
26
ஒலியலை அர்த்தத்தை உய்த்துணர்ந்து, உவப்பிலா ஆனந்தம் எய்திடலாம்! கண்குருடாயினென்; வாய்ஊமையாயினென்; காதுகள் மட்டும் கூர்மையானால் கவனமாய்க் கேட்டு உய்த்துணர்ந்து, தான் கற்றதை அறிஞன் உணர்ந்திடுவான் படைத்த பிரமனுக்கே நன்றி சொல்ல பணிவுடன் இருகரம் தூக்கியே காண், பத்து விரல்களும் ஒரு சேர பாங்குடன் தலைமேல் கூப்பிக் கொள்வான். அத்தனை சக்தியும் கைகளிலே,
அமைத்துக் கொடுத்த இறைவனுக்கே, எத்தனை நன்றி கூறிடினும் ஈடுண்டோ வையத்தில் இயம்பிடுவீர்? கால்கள் தான் எத்தனை பலத்துடனே சிரசின் கட்டளை தாங்கி நடக்கின்றன? மலரோன் படைப்பின் ரகசியமோ அது மனித இயக்கத்தின் தனி உலகம்
கருமத்தில் கண்
1. சேற்றில் செந்தாமரையும் சிப்பிக்குள் முத்துமென்று
சாற்றுவர் உவமானமாக மாந்தர்க்கு - தனித்த ஆற்றலால் செயற்கரிய செய்வார்க் கில்வுலகில் ஏற்றமே பேரெழில் தரும்.
2. தேனி தம் ராணிக்காய் சேவை செய்யும், துணிவாய் பணி செய்ய விழையும் நல் பிாந்தரும் - ஒற்றுமை யணியுடன் துணைசேரின் ஆங்கு துணிவே துணையாகி நிற்கும்.
3. அலைகளோயட்டும் அமிழ்ந்தெழுவோம் - என்றெவரும்
அயர்ந்திருப்பதில்லை காண்; ஆற்றலுடையோர்க்கு அறிவும்
துணைசேரின்
ஏற்றம் எழும் என்றெண்ணிடுக; காற்றுள்ளபோது துற்றிடுவர் கருமமே கண்ணாயினர்.
4. ஆத்திரமும் அவசரமும் அறிவுடையார்க் கென்றும்
ஏற்றமுடைத்தன்று; தருணம் வரும்பொதுறுமீன் வருகைக்காய் காத்திருக்கும் கொக்கேபோல், கடைப்பிடிப்பர்
27
Page 16
தத்தம் கருமத்தில் கண். முக்கண்ணுடைய சிலனார்க்கு முடியில் கங்கையுண்டு அங்கண் அவ்வாறாயின், நெடிதுயர் தென்னை தன்தெங்கிற்கும் முக்கண்ணுமுண்டு; வெண்சிரிப்பிலினிய கங்கையுமுண்டே காண்.
5.
'தமிழ் நேசனின் அறுபதாவது அகவையிட்டு 1984-ஆம் ஆண்டு பாடப்பெற்ற கவிதை.
வாழிய நீடூழி
ஆழ்கடலில் குளித்தெடுத்த அழகிய நல் முத்தும்; அரும்புவியில் அடித்தளத்தில் அகழ்ந்து பெற்ற வைரம்: மேல் மிகுந்த முயற்சியினால் விளைந்த நவமணிகள் மீளாத உழைப்பில் மண்ணில் தோண்டிப் பெற்ற தங்கம் ஏழ்திசையும் தேடி அலைந்தித்தனையும் சேர்த்து எழுத்தாக வடித்தீர் நல் அணிகலனாய் கோர்த்து; வாழ்த்துகின்றேன் தமிழ்நேசன் அகவை அறுபதினையே வளம் பெருகி என்றென்றும் வாழிய நீடுழி பீடு நடை போடும் உந்தன் பெருமைதனைச் சொல்ல இப்பிறவியிலே வாய்த்த பெரும் பேறேயென எண்ணி, பாடுகின்றேன் கவிதையாக பல்லாண்டு நீவாழ, பாங்காகப் பவித்திரமாய், பரிமளிக்க வேண்டி, நாடு நகரமல்லாமல் இந் நானிலமும் தாண்டி, நனி பெருமை சேர்த்து மேலும் நலத்துடன் நீ வாழி, பாடுபட்டுப் பலபுதினம் பரவலாகத் தேடும் ஏடே, தமிழ்நேசா! நீ என்றென்றும் வாழி!
28
எழில் அன்னை மலேசியா
தென் கிழக்காசியாவில் திரண்ட அழகுத் தீபகற்பம் என்றென்றும் வளங்கொழிக்கும் இதயமான மலேசியாவாம் மாநிலங்கள் பதின்மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, கூட்டரசு நாடாகக் குறைவின்றித் திகழ்கின்றதே! கிளாந்தன், கெடா, பெர்லிஸ், பஹாங் என்றமைந்து கிழக்கினிலே, கூடப் பினாங்(கு), திரங்கானுவும் சேர்ந்ததே அத்திசையினிலே மேற்குப் பக்க மலேசியாவில் பேராக், சிலாங்கூர், மலாக்காவும், கூட நெகிரி செம்பிலானும், தெற்கில் ஜோகூருமாக வடபோர்னியோவெனும் தீவின் சாபா, சாரவாக்கும் சேர்ந்து வகையான கூட்டரசு நாடாய் விளங்கும் மலேசியா காண். நெல்லென்ன, சோளமென்ன, நிறைந்தவகைப் பழந்தானென்ன? டொரியானும், மங்குஸ்தீனும், ரம்புத்தான் அதன் சிறப்பாமே. ரப்பர் என்ன, ஈயமென்ன, கொப்பரை செம்பனை தானென்ன, அத்தனையும் முதலீடாய் அகிலமெல்லாம் விற்பனைக்காய் எத்தனை நல்வருமானம் உவந்தேபெற வைத்திட்டாள் நற்றுணைசெய் நற்றாயாம் நற்சேவை செய்வோர்க் காங்கே.
அப்பப்பா, இந்நாட்டின் வளத்திற்கவனியில் தான் நிகருமுண்டோ? தப்பப்பா, அதன் தரமறியார் தரணியிலே தகுதியிலார். செப்புகில் இத்தேசம் உயிர் சிந்தியதே தமிழ் இரத்தம் சிறப்பப்பா, மலேசிய நாட்டின் செழுப்பான எழுச்சியின்று. சாத்வீகப் புரட்சி மூலம்; சுதந்திரத்தைக் கேட்டு வாங்கி, தந்தை துங்கு அப்துல் ரகிமான், சமத்தாகப் பெற்றுத் தந்தார் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழாம் ஆண்டில் ஆகஸ்டு முப்பத்தொன்றில் அடைந்ததே சுதந்திரம் காண் கோலாலம்பூர் தலைநகரம் கோலாகலமாய் நிமிர்ந்து நிற்க, வானளாவும் கட்டிடங்கள், மாளிகைகள் கோபுரங்கள், சாலைகளோ, பரந்து விரிந்து சமாந்தரமாய் நீண்டு செல்ல சாலங்காட்டும் மின் விளக்கு ஜகஜோதியாய் ஒளி வீசுமே சீனர், தமிழர், மலாயர் எல்லாம் சிறப்பான் அழகுடனே, ஓரினமாய், ஒற்றுமையாய், ஒருமைப்பாடாய் வாழ்வரிங்கே, தத்தம் மதம், தத்தம் சமயம், தத்தம் கொள்கை யாயிடினும் எத்தர் இடையில் கூறாக்கி ஒற்றுமையைக் குலைக்க விடார்? சிந்தனைகள் பலவென்றாலும் சிறப்பாக அதனைக் கட்டி வந்தனையாய் காத்தொருங்கே வாழும் சிறப்பைக் காண்பீரே.
29
Page 17
நிந்தனைக்கு இடமேயின்றி நினைப்பதெல்லாம் ஒருமைப்பாட்டில் தந்தனளே மலேசியவன்னை தானமாய்த் தன் மக்களுக்கே
அலைமகள் முத்திசையிலும் தன் அலைக்கரத்தால் அனைத்துநிற்க, மலைமகளாம் மலேசியவன்னை மாண்புடன் பச்சை உடைதரித்து கலைமகளும் பன்மொழியால் களிநடம் தான் புரிந்து நிற்க, எழில்மகள் அம்மலைமகளாள் இன்பமாகச் சிரித்து நின்றாள்!
உலக மாமனிதர்
1. மலேசியா ஈன்றெடுத்த மாமணிகள் பலருள், ஆங்கு மாமனிதராய் விளங்கும் மாண்புமிகு அமைச்சர். சாமிவேலு என்ற தமிழர் தலைமைத்துவத்தில் ஆங்கே சாதனைகள் புரிந்து தமிழ் சமுதாயத்தை ஏற்ற பாடுபட்டே பொதுப்பணிப் பயனீட்டுத் துறையில் பாங்குடனே பவித்திரமாய் பணிகள் புரிகின்றார். சொல்லும் செயலும் இணையவெதையும் துல்லியமாய் சீர்தூக்கி அல்லும் பகலும் நாடு உயர அயராத பாடுபடுகின்றார். 2. எளிமையான குடும்பத்தில் மிகவேழமை நிலையில் பிறந்தும், எதிர்நீச்சல் போட்டே வாழ்வில் ஏற்றங்காணத் துணிந்தார். துணிச்சல்மிக்க அவர் முயற்சி சோடை போனதில்லை. துண்டாமணி விளக்காய் மக்கள் துயர் துடைக்க நின்றார் சொல்லொணாத துன்பங்களை சிறுவயதில் அடைந்தும் கல்வியொன்றை நினைவில் கொண்டு கடுமையாக உழைத்தார். உழைத்த பலன் என்றுமவர்க்கு ஊனம் போனதில்லை; உயர்வொன்றே குறிக்கோளாய் ஊக்கமுடன் நின்றார். 3. நாடகக்கலைப்பிரியன் நாட்டில் நற்பணிசெய்யும் தீரன்
நனிசிறந்த பேச்சாளன், நாட்டின் நன்மைக்காய் வாழும்
தலைவன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டில், நாட்டின், அரசியல் களத்தினில், காலடியைப் பதித்து நின்றார், ஏட்டினில் அவர்தம் புகழ் என்றும் நிலைத்திருக்கும், குன்றில் ஏற்றிய தீபமதாய் ஒளிவீசியே நிற்கும்! நாட்டின் மாட்சிமைக்கோர் எடுத்துக்காட்டாய் ஆங்கே நானிலம் போற்றிடவாழும் சிறப்பதனைக் காண்பீர்! 4. நாடாளுமன்றத்தில் பலநன்மை தரும்திட்டம் அதனை நாட்டின் நல்ல எழுச்சிக்காய் தீட்டுகின்றார் காணிர் தீர்க்க தரிசியான அவர் தீட்டும் தீட்டம் யாவும்
3O
திக்கெல்லாம் புகழ்சேர்த்துத் திகழ்வதைக் காண்பீரே! கட்டிடக் கலையதனில் வல்லவராம் அமைச்சர், கதை, கவிதை புனைவதிலும் விற்பன்னராம் காண்பீர், திட்டவட்டமாய் பேசும் திறன் கொண்ட வீரர் திறமைமிக்க தமிழ்மகனாம் தமிழ்த்தலைவன் அறிவீர்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டில் அகிலம் வியக்கும் வண்ணம் அமெரிக்காவெனும் நாடாம் ஏற்றம் தரும் 'மாமனிதர் விருதினையாம் ஆங்கே ஏற்றிப்போற்றி வழங்கிற்றே அமைச்சர் வேலுவுக்கே! இத்தாலி கொரியாவென்று எண்ணற்ற தேசம் இனிதே உவந்தளித்தாரே விருதுகளை அவர்க்காய் அப்பப்பா நாட்டிற்காய் அமைச்சர் செய்யும் பணிகள் அனந்தம், அனந்தம் சொல்ல இடமேயில்லை ஈங்கு.
இந்திராணி அம்மையாரை இனிய துணைவியாகப் பெற்று மங்கையர்க்கு அரசியையும் வள்ளல் நிகர் பாரியையும் மக்களாகப் பெற்ற 'டத்தோ, மாசில் செளபாக்கியம் பெற்று எக்காலத்தும் மலைநாட்டின் இடர்களைய முன்னின்று, நாட்டின் மக்களை, தன்மக்களாய், நல்லவிதமா யாதரித்து, ஏட்டினில் என்றென்றைக்கும் உன்னத இடத்தைப் பெற்று, தப்பாமல் சமுதாயம், தமிழ்த் தாய்க்கும் தொண்டு செய்து, ஒப்பில்லா மாமணியாக உலகம் போற்ற நீடு வாழி!
31
Page 18
குவலயம் மகிழவே வா
கண்ணா நீ வருவாயோ, கவலையைத் தீர்ப்பாயோ காருண்ய வள்ளலே வா, கண்ணா! காத்திட ஒடியே வா! என்னைக் காத்திட ஒடியே வா! கிருஷ்ணா நீ வருவாயோ, கிருபை நீ புரியாயோ, கீர்த்தனை பாடவே நான் - கிருஷ்ணா கிருபையைத் தந்திடுவாய்! உந்தன் கிருபையைத் தந்திடுவாய்! மாதவா வருவாயோ, மகிழ்ச்சியை அளிப்பாயோ மாநிலம் போற்றும் மன்னா - மணிவண்ணா மக்களைக் காத்திடுவாய்! கண்ணா மக்களைக் காத்திடுவாய்!
முகுந்தா வருவாயோ, முக்தியைத் தருவாயோ, முன்னின்று நல்லருள் தா, கோவிந்தா! முக்கண்ணன் மைத்துனா வா! முகுந்தா முக்கண்ணன் மைத்துனா வா கோபாலா வருவாயோ, கொடுந்துயர் தீர்ப்பாயோ கோகுலம் ஆள்பவனே - கோபாலா குவலயம் மகிழவே வா! நீயும் குவலயம் மகிழவே வா
32
அன்னை இந்திரா அம்மையாரின் அதிர்ச்சி தரும் மரணத் தையிட்டு இயற்றப்பட்ட கவிதை 1984-ல்
விண்ணுலகம் முந்தி நிற்கும்
1. இந்தியா ஈன்றெடுத்த இணையற்ற தவப்புதல்வி,
தந்தையார் 'ஜவகர்’ தந்த தரணி புகழ் தலைச்செல்வி, ஆண்டமுறைதான் என்னே? அவனியெலாம் வியக்கும்
வண்ணம் நீண்ட புகழோடென்றும் நிலைத்திருப்பார் சரித்திரத்தில் பார் புகழும் வித்தகியாம்; பாரதத்தின் தனிபழகி பேர் விளங்க அவதரித்தார், பீடு பெற வாழ்ந்திங்கு, இந்திரா என்றாலே இமயம் என்று உவமை சொல்ல வந்தனைக் குரியவராய் வாழ்ந்திட்டார் வையகத்தில்.
2. நீதி நெறியுடனே நீண்டகாலம் அரசியலில்
மோதும் நிலைவரினும், மோதிட்டார் திறமையுடன் அஞ்சாத மங்கையவர் அவனியிலே சிறந்த நங்கை, துஞ்சாமல் பெருநேரம் துடிப்புடனே கடமை செய்தார். நாடி நரம்பெல்லாம் நாட்டைப் பற்றி சிந்தனையால், ஒடியோடி உழைத்திட்டார் ஒருமைப்பாடு காத்திடவே, ஈடு இணையில்லாத இணையற்ற பெண்சிங்கமவர் நாடு வலிமை பெற நாளெல்லாம் பாடுபட்டார்.
3. அரசியல் சதுரங்கத்தில் அனைத்து திறன் மிக்க அன்னை,
நிகரற்ற திறமுடையார் நெஞ்சில் வீரக் கனலுடையார், எண்ணற்ற விருதுகளை எளிதாகப் பெற்ற அந்த அன்னை இந்திராவின் அகராதியிலே பஞ்சமில்லை, 'பாரத ரத்னா’ விருதை பாங்குடனே பங்களாதேஷ் சீரிய விடுதலைக்காய், சிறப்பாய் மக்கள் தந்திட்டார். அமெரிக்கா விருதான 'அன்னையர்கள்’ எழுபத்தாறில் சிறப்புடனே அளித்திட்டாய் சுதந்திரத்தாய் காந்திக்கே.
4. ஈழத் தமிழர்களின் எண்ணற்ற இன்னல் தீர்க்க,
எழில் மிக்க அன்னையவர் எடுத்திட்டார் பலமுயற்சி, ஆயிற்று ‘இதோ, அதோ, என்று அந்த அரசாங்கம் அரற்றிற்றே யொழிய தமிழன் அமைதி காக்க முனைவில்லை, கூட்டு சேரா நாடுகளின் குணமிக்க நம்தலைவி, காட்டிய பொறுமைக்கோ, களங்கமில்லை, எல்லையில்லை. கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலமது கனியும் வரை,
33
Page 19
தட்டிக் கேட்போம் அதன் பின்னர் தமிழ்மக்க்ாள் பொறுமை
காப்பீர்.
ஐயையோ இந்தியாவா அவல மிக்க நாடன்றோ? என்றெல்லாம் ஒரு காலம் இகழ்ந்த நிலையிருந்த துண்டு இந்திராவின் ஆட்சியில் இவ்விழிந்த நிலை அழிந்தது காண். யந்திரமாய் உழைத்து நாட்டின் நலனை மேம்படுத்தி நின்றார். அணுகுண்டா, ஆயுதமா, அகிலம் சுற்றும் விண்கலமா? குணமுடனே பெருக்கிவிட்டார். குவலயமே வியக்கும்
ッ வண்ணம் உலக அமைதிக் கிடர் என்றால் ஒலிக்கும் குரல் அங்கெல்லாம் வலிமை மிக்க எதிர்ப்பாக, வன்மையான கண்டனமே! ஐயகோ அடடாவோ அவனி போற்றும் அன்னை எங்கே? பொய்யான இவ்வுலகை விட்டுப்போய்விட்டாரோ, நம்மை
விட்டு? நம்பவோ முடியவில்லை, நாட்டின் செல்வி மறைந்தாரென்று, நெஞ்சுரம் மிக்க அவர் நமனுக்கடி பணிந்தார் இன்று; வஞ்சகரால் வஞ்சகமாய் வன்முறையில் கொல்லப்பட்டு சஞ்சலத்தில் தவிக்கவிட்டுத் தன்பாட்டில் சென்றுவிட்டார், ஆளாத்துயரத்தில் ஆழ்த்தி நம்மை ஏங்க வைத்து, மீளாத இடத்திற்கே மிகவிரைவில் சென்றுவிட்டார். வீராங்கனையாம் அந்த வீறுகொண்ட சிங்கத்தை நேராகத் தாக்க நெஞ்சில் நேர்மையில்லை, வீரமில்லை. கோழைகளாம் காவலர்கள் கூற்றுவராய் அன்னை தம்மை ஆழத் துளைத்துவிட்டார் அழிகுண்டால் சல்லடையாய், பாவிகளே, துரோகிகளே, பாரதத்தின் தாய் தன்னை, காவலராய் காப்பதுபோல் காவியத்தை அழித்தீரே? நாட்டிலே எட்டப்பராம் நஞ்சு நிறை வஞ்சகரே! ஏட்டினிலே என்றென்றும் இழிவான நிலை உமதே
யமுனை நதிக்கரையில் ஜனவெள்ளம் கண்கலங்க, மகனான ராஜீவ் காந்தி மாதாவிற்குக் கொள்ளி வைக்க, சந்தனக் கட்டைகள் மேல் சாந்திபவன் மயானத்தில் தந்தை நேரு பக்கத்திலும் தனயன் சஞ்சை துணையிருக்க, சாவிலும் நீ ஜெயித்துவிட்டாய் சரித்திரம் படைத்துவிட்டாய் பூவுலகில் உந்தன் பெயர் பொன்றாத புகழுடனே நீடு நிலைத்திருக்கும் நினைவெல்லாம் புகழ் மணக்கும் வீடு பெற்றுத் தரவேண்டி விண்ணுலகம் முந்தி நிற்கும்.
34
மலேஷியாவில் மலைமகளில் வெளியாகிய "வழியைச்
சொல்வீர் என்ற கவிதைக்குப் பதில் கூறுகின்றது இக்க விதை.
கவிதை வழி சொல்வேன் கேளிர் (மு.தனபாக்கியம், சிரம்பான்)
மதியழகா மணிமொழியே உங்கள் காதல் வளர்ந்திட்ட விதம் நன்கு அறிந்துகொண்டேன். புதிதல்ல நான் புகலும் உண்மையொன்றைப் பொறுமையுடன் கேட்டிடுவீர் நீவீர் தானே! சதிபதியாய் நீர் நினைத்தீர் அழியும் அழகைச் சத்தியமாய் ஏற்கவில்லை, என்று உரைத்தீர் மதிப்புள்ள எம் காதல் மட்டம் அல்ல வையத்தில் உயர்ந்ததென்(று) உரைத்திட்டீரே! 'மழலை மொழி பேசுகையில் மலர்ந்த அன்பு மாறாமல் கனிவான காதல்’ என்றீர் குல மக்கள் மதியழகா மணி மொழியே! குதித்தாடும் பணம் விலகும், குணம் நிலைக்கும் குழைவான அன்பினிலே உருவான காதல் குவலயத்தே நீடுழி வாழவேண்டும் பழந்தமிழர் வளர்த்தகாதல் படித்திருப்பீர் பட்சமுடன் உம் காதல் வளரச் செய்வீர்! பணம் என்னும் பரிசு பெற்ற மாமன் மாமி பகுத்தறிவை இழந்தும்மை வேண்டாம் என்றார் மனமொழிந்து மதியிழந்து மயங்கி நின்றாள்
nாயையெனும் போர்வைக்குள் மணிமொழியாள் மனமிரங்கி அவள் குற்றம் பொறுத்தல் வேண்டும்
கண்ணிதனில் நடப்பதிது வழக்கம் அன்றே? குணமிழந்தால் அறியாமை என்னும் ஆமை குழிதன்னில் புதைத்துவிடும் அறிவீர் காணிர்! மனம் மறுக்கும் மதியழகா உமக்கோர்வார்த்தை மதித்தே நீர் சிந்தித்தால் விளங்கிவிடுமே மணப்பெண்ணாள் மதி திருந்தி வந்தமை கண்டு
35
Page 20
மனமகிழ்தல் வேண்டும் நீர் வாழ்விலென்றும் பணமென்னும் பொருள்மேல் தான் இச்சைவைத்து பண்பிழந்த தன்பிழையைப் பொறுத்தல் வேண்டும் எனக்கூறித் தன்குற்றம் உணர்ந்த அந்த ஏந்திழையைக் காத்தல் உம் கடமையன்றோ? அறிவுடைமை எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை! அதையிழந்து அலைபவர்கள் அனந்தமாவர்; ஒருவருடைய அறிவெவர்க்கும் பயன்படாது ஒஃகுதலும் அதையிட்டு மடமைதானே. அறிவுக்கண் பெற்றிடுவார் எவருமுலகில் அநுபவமெனும் ஆசானும் வந்தபோதே மறுப்பின்றி மணிமொழியை மணக்க இசைவீர், மங்கைதனைக் காதலித்த துண்மையானால்
மணிமொழியே உனக்கொன்று கூறுகின்றேன், மங்கையர்கள் திலகமதாய் வாழவேண்டும் அணிமணிதாம் பெரிதெனவே நினைத்து நீயும் அறிவிழந்து நிற்காதே அருமைப் பெண்ணே! பணிபுரிவாய் இணையற்ற அன்பு கொண்டு பாங்குடனே பெண்மைக்குப் புகழே ஓங்க இனிதாகும் இல்வாழ்வு இதிலுன் கடமை இன்னதென்று தெரிந்து நீயும் செய்தல் வேண்டும். சூரியனும் சந்திரனும் ஒளியிழக் கின்றார், சுற்றிவரும் இப்பூமியின் செய்கைதன்னால் காரிருளில் இவ்வுலகம் மூழ்கும் போது கருநாகம் விழுங்கியதே என்போமன்றோ! பாரினிலே துன்பம் பல தோன்றும் போது பகுத்தறிவால் ஆர்ாய்ந்து பார்த்தல் வேண்டும் காரறிவு கிரகணம் போல் மறைக்கப் பார்க்கும் களைத்திட்டால் கவலையில்லை காணிர் நீவிர்!
36
புதுக்கவிதைகள் உயிர் நிலையம்
புதுக்கவிதை பாட விழைகின்றேன் எதுகை மோனை எதுவுமின்றி உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு உருக்கொடுப்பதுதான் புதுக்கவிதையென்றால், இதோ, என் எண்ணச் சிதறல்களை அள்ளித் தெளிக்கின்றேன். உலகின் முக்கால் பங்கு கடல் நீராய் இருந்தும் நம் தாகத்தைத் தணிக்க உதவாதாமே! அதோ, அங்கே நிலத்தில் தெரியும் சிறு குளத்து நீரை அள்ளி வா! அது, நம் தாகத்தைத் தணிக்கும் அரு மருந்தாயிருக்கும் அடடா கடலை உடலுக்கு உவமையாய் வைத்து உயிரை சிறு குளத்திற்கு உவமையாய் வைத்தானோ இறைவன் ஆம், உயிரும் மெய்யும்போல, தலையும் உடலும்போல குளமும் கடலும் விளங்குகின்றது. அடிப்படையான நிலம் தான் உயிர் நிலையம். அஃதேபோல் ஆத்மா, உடலழிந்தாலும் நிரந்தரமாய், உயிராய்
அழியாது நிற்கும்!
Page 21
விஞ்ஞான மனமும் மெஞ்ஞான அறிவும்
எண்ணச் சுழல்களில் சிக்கியிருந்தது அறிவு வானத்துச் சந்திரனை எட்டிப்பிடிக்க நினைத்தது மனம். அடேயப்பா, அத்தனை தூரத்துக்கா போய்விட்டாய் என இடித்தது அறிவு. இந்த விஞ்ஞான காலத்தில் எதுதான் சாத்தியமில்லை? இன்னும் ஐம்பது வருடங்கள் போகட்டும், கோள்கள், அத்தனையிலும் குடியிருக்க வைப்பான் விஞ்ஞானி! அஞ்ஞானத்தில் இன்னும் மூழ்கியிருக்கும் மக்கள் விஞ்ஞானத்தின் வேகத்தையறிவரோ என தத்துவம் பேசிற்று மனம். மூட மனமே, சற்றுப் பொறு! அஞ்ஞானிகளென்ன, விஞ்ஞானிகளென்ன, மெய்ஞ்ஞானிகளின் சிறப்பான அறிவுக்கு ஈடு சொல்வரோ? ஆதிநாளில் புலவர் ஒளவையார் அணுவைப் பற்றிச்
சொல்லவில்லையோ? ஏழ் கடலையும் எந்தக் கப்பலில் சென்று பார்த்தார்? அணுவையே துளைத்து ஏழ்கடலையும் புகுத்திய
மெய்ஞ்ஞானியல்லவோ அவர்? விஞ்ஞானியின் வேகம் ஒரு வேகமா? அது ஒரு மெய்ஞ்ஞானியின் சிந்தனையின் வேகத்திற்கு நிகராகுமா? ஒரு நொடிக்கு அண்டசராசரங்களையே ஆட்டுவிக்கும் ஆனந்தக் கூத்தனின் அடிகளையே பணிந்து விட்டு, ஆனந்த மயமாய் வரக்கூடிய வேகமன்றோ அது, எனக் கூறிப் பரவசப்பட்டது அறிவு
38
மனமே! இறைவனை நினை;
விலகிடும் தீவினை!
ஐயகோ மனதில் நிம்மதியில்லையே! அமைதியை இழந்து தவிக்கிறதே மனம், அதைப் பெற எங்கே போவது? இப்படி அலைபாய்ந்து அழுகிறது மனம். வேதாந்தத்தை ஐயம் திரிபுறக் கற்ற மெய்ஞ்ஞானியின் தத்துவங்களைக் கேட்கையில் இருள் சூழ்ந்த உள்ளத்தில் சிறிது ஒளி பிறக்கிறது. ஆம், இந்த மனம் தானே எல்லாவற்றிற்கும் காரணம்? அமைதியை நாடி இமயத்திற்குப் போனால் மட்டும் அமைதி கிட்டிவிடுமா என்ன? இயற்கையில் தோன்றும் சக்திகளைப் போன்று இந்த உடலினுள்ளும் சக்திகள் உள்ளனவே,
ஒன்றைத் தவிர அதுதான் மனிதனுக்கு வரப்பிரசாதமாயுள்ள ஆறறிவு! அத்தகைய ஆறறிவைப் பெற்ற மனிதன் எத்தகைய சாதனைகளையெல்லாம் சாதிக்கிறான் இவ்வுலகில்! கடலில் மையம் கொள்ளுமாம் புயல்! உடலில் உள்ள மனதிலும் மையம் கொள்ளுகிறதே புயல் அளவுக்கு மீறி எரிமலையாய் மனதில் சினம் கொந்தளிக்கையில் வெறி கொண்டு அறம் மீறி நிற்கும் மனதை ஆறறிவின் துணை கொண்டு தான் அடக்க இயலும். நிலம் கால், நீர் முக்கால் என்பது உலகின் அமைப்பு. உடலிலும் நீர் முக்கால் பங்குள்ளதென்பதில் என்ன வியப்பு? கண்ணிராய், வியர்வையாய் கடல் நீருக்குரிய கரிப்புடன் வெளியேறி கொதியுறும் மனதை குளிர்விக்கும் சாதனமாகிறதோ? மின்சார சக்தி உடலுக்குண்டு. கண்களின் மூலம் காந்தமாய் காதலில் கட்டுண்டவர்க்கு பாயும். கடும் சினம் கொண்டுவிட்டால் பார்வையால் சுட்டெரிக்கும். அன்பு, அறம், சினம், சீற்றம், பண்பு, பயம் என்று அத்தனைக்கும் மையமாய் இருப்பது மனம். ஆகவே மனமே, இறைவனை நினை, விலகிடும் தீவினை.
39
Page 22
குழந்தைகளுக்கான கவிதைகள் அஞ்ஞான காலம் மலை ஏறிடிச்சு
&
தாய்: பால் சர்க்கரை நிறையப்போட்டு,
பாப்பாக்கண்ணு சோறுட்டிட வா! அம்புலிமாமா காட்டுவேன் வா! அழகான மான் அதிலிருக்கும் பார் சின்ன முயல் கூட அம்புலியில் சிறப்பாய் தெரியும் பார்ப்பதற்கே ஒளவைப் பாட்டி பொல்லுடனே அழகாய் தெரிவாள் நிலவினிலே பாப்பா: போம்மா நீ ரொம்பப் புளுகுகிறாய்.
பொல்லாத பொய்யெல்லாம் சொல்லுகிறாய்! ஐயோ, உனக்கு அம்புலியைப் பற்றி அப்பா கூடச் சொல்லலையா? சின்ன முயல் ஒண்ணும் நிலவிலில்லை. சிங்கார “லைக்கா நாய் அங்கிருக்காம்! அம்புலி மாமா ஒன்றும் அங்கில்லை, ஆம்ஸ்ட்ராங் மாமா தான் அங்கிருக்கார். தாய்: அடியே என்னுடைய சின்ன பாப்பா,
அறிவுக் குட்டி, கண்ணுப் பாப்பா யார் சொல்லித் தந்தார் இத்தனையும்? ஆச்சரியப்படுகிறேன் அத்தனைக்கும்! நாலு வயசு கூட நிரம்பவில்லை அதற்குள், நாட்டின் நடப்புத் தெரிகிறதே!
4O
பாப்பா:
தாய்:
பாப்பா:
என் கண்ணே பட்டிடப் போகிறதே. உடனே திருஷ்டி சுற்றணும் வா. ஐயே! இந்த அம்மா ஒண்ணு அசடா நின்று பேசுது பார்! டி.வி.யில் நீ யொண்ணும் பார்ப்பதில்லை, அதனால் தெரிஞ்சுக்க நியாயமில்லை அப்பா மடியில் அமர்ந்து கொண்டொருநாள் அத்தனையும் பார்த்தேன் ரசித்துக் கொண்டு; விஞ்ஞான காலமதில் திருஷ்டி எதற்கு? அஞ்ஞான காலம் மலை ஏறிடிச்சு. சரி சரி சமர்த்துக் கண்ணே சாதமூட்ட வா சந்திரனை எப்படியும் பிடித்துத் தரேன் பார்! ஆம்ஸ்ட்ராங்கும் லைக்காவும் அம்புலியிலா? ஒளவைப் பாட்டியம்மா பின்னே எங்கு போயிட்டா? சரி, அந்தப் பாட்டி! வேணா எங்கோ போகட்டும்! சட்டென்று நீ சமர்த்துப் பெண்ணாய் சாப்பிடவே வா! அழகு நிலா ஊர்வலமாய் போவதைப் பாரேன்! அலட்டிக்காமல் நீ அதனைப் பார்த்தே உண்ண வா!
அப்பப்பா இந்தம்மாக்கு ஒண்ணும் தெரியலை, அம்புலிக்கு ஒளவைப்பாட்டி போகவேயில்லை. பொல்லை ஊன்றி நடந்து பாட்டி போகமுடியுமா? நிலவில், பொல்லாத குன்றும் குழியும்
V நிறைந்திருக்குதாம். ஆம்ஸ்ட்ராங்கும், லைக்காவும் அம்புலியில் தான், அமெரிக்கா ராக்கெட்டில் அனுப்பி வைச்சுதாம்! ஏமாற்றாதே இனியும் என்னை நிலவைக் காட்டி நீ! இடக்கின்றி சமர்த்துப் பெண்ணாய் சாப்பிடுவேன் பார்!
0x8 0x0
4
Page 23
கருத்துடன் புத்தியாய் வாழ்ந்திடுவாய்
பாப்பா பாப்பா ஓடி வா. பாடம் படிக்க ஓடி வா! காக்கா கதையொன்று சொல்லிடுவேன் கவனமாய் அதனைக் கேட்டிடுவாய்! தாகம் கொண்ட காக்கா ஒருநாள், தவித்தே தண்ணீர் தேடிற்றாம். எங்கும் தண்ணீர் கிடைக்காமல் ஏங்கியே காக்கா அலைந்ததாம்! ஏமாற்றத்துடன் அது திரிந்திட்ட போது எட்டத்தில் ஒரு கூஜா தெரிந்ததாம்; எள்ளத்தனை தண்ணீர் அதனுள்ளிருப்பதை, எவ்வாறோ காக்கா கண்டதாம். தாவிப் பறந்தது தண்ணீருக்காய், ஆனால், தண்ணீர் அதன் வாய்க்கு எட்டவில்லை. ஏமாற்றம் கொண்ட காக்கா உடனே என்ன செய்வதென்று சிந்திக்கவே, ஆஹா, அதற்கு யோசனை தோன்றிட அவசரமாய் அது பறந்ததாம், பக்கத்தில் சிறு கற்கள் இருக்கக் கண்டு, பாங்காய் அவற்றைப் பொறுக்கி வந்து, ஒவ்வொன்றாய் அதனைக் கூஜாவில் போட, உயர்ந்தது மேலே நீர்மட்டம், தாகம் தீர நீரைக் குடித்த பின் சந்தோஷமாய் காகம் பறந்ததாம்! காக்காவின் திறமையைப் பார்த்திடுவாய், கருத்துடன் புத்தியாய் வாழ்ந்திடுவாய்.
42
கிரிக்கெட் வீரரும், கிழவரும்
அக்கம் பக்கச் சிறுவர்கள் ஒருநாள் ஆரவாரமாய்க் கூடினராம். அடுத்த வீட்டுக் காம்பவுண்டில் நுழைந்து அத்தனை பேரும் பதுங்கினராம். ஈரைந்து வயதே நிரம்பிய சிறுவர் பின் இரைந்து விரைந்தே
ஓடினராம். சற்று நேரம் கழிந்த பின் ஆங்கே சரமாரியாய் பந்து வீசினராம். 'கவாஸ்கர் அங்கிள்’ நான் தான் என்று கையில் “பேட்டைத்’ தூக்கியே கணேசன் என்ற சின்னப் பையன் கடாசினான் கிரிக்கெட் பந்தையே! 'அங்கிள் பூரீகாந்த், நான்’ என்று சொல்லியே அடித்தான் பந்தை இன்னொருவன்; அட்டகாசமான பந்து வீச்சினால் அடுத்த வீட்டுக் கண்ணாடி நொறுங்கியதே! யாரடா பந்தை என் வீட்டிலெறிந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தது? பாரடா இப்போதே போலீஸில் கொடுத்து படிப்பிக்கிறேன் நல்ல பாடமதை ஒடடா, ஒடடா, கிழவர் விரட்டுகிறார் ஓடாவிட்டால் நாம் பிடிபடுவோம் கவாஸ்கராகட்டும், கபில்தேவாகட்டும் கைகொடுக்க நமக்கு வரமாட்டார். பேட் ஒரு பக்கம், பந்தொரு பக்கமாய் பிள்ளைகளும் சிதறிப் பறந்தனரே! "தாட்டு பூட்டென்று வந்த கிழவரும் தப்பிப் போகட்டுமெனத் திரும்பினாரே!
43
Page 24
நலம் பெற வாழ்ந்திடுவீர்
சின்னக் குழந்தைகளே, சிங்காரக் குழந்தைகளே! வண்ண வண்ண உடையுடுத்தி வகை வகையாய்ச் சிங்காரித்து நல்ல பிள்ளைகளாய், நானிலமும் போற்றும் வண்ணம் எல்லா உயர் பழக்கம்; உயர் படிப்பும் பெற்றிடவே அம்மா அப்பா சொற்கேட்டு, அறிவுரைகள் பின்பற்றி அக்கா அண்ணா, தம்பி தங்கை அனைவரிடமும் அன்பாக பேரும் புகழுமாய் பெருமையுடன் தான் வாழ ஊர் உலகம் போற்றிடவே உத்தமராய் வாழ்ந்திடுவீர்!
அப்பாவும் அம்மாவும் அன்றாடம் காணும் தெய்வம்; ஒப்பில்லா அவர்கள் அன்பு உலகத்திலே உயர்ந்தது பார்! தப்பாமல் அவர்கள் சொல்லைத் தலைமேலே ஏற்றிடுவீர்! எப்போதும் உங்களுக்காய் ஓடாய் உழைத்திடுவார்! நன்றியுடன் பெற்றோரை நாளெல்லாம் நினைத்திடுவீர்! என்றும் அவர் சொல்கேட்டு உள்ளத்தால் உயர்ந்திடுவீர்! காலமெல்லாம் அவர்களுக்கு கடமை செய்யக் கற்றிடுவீர்! ஞாலம் போற்றும் நன் மக்களாய் நலம் பெற வாழ்ந்திடுவீர்!
அன்புச் செல்வமே, ஆன்ம ஞானம் பெற்றிடுவாய்!
அன்புச் செல்வமே, உனக்கென்று ஆசையுடன் அறிவுரை சொல்கிறேன் கேள், இன் முகத்துடன் நீ இன்சொல் பேசிடு, ஈஸ்வரனை என்றும் தியானித்திடு. உண்மையே என்றும் பேசிப் பழகிடு, ஊர் வம்பை நீ தவறாது விலக்கிடு. என்றும் உள்ளன்புடன் நல்லதைச் செய்திட, ஏற்றமுடன் உலகில் வாழ்ந்திடலாம்! ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வாய் ஆண்டவன் உன்னில் அமர்ந்திருப்பான், ஒற்றுமையை உலகில் வளர்த்திடுவாய்; ஓங்கும் புகழைப் பெற்றிடுவாய். ஒளவியம் பேசி அறிவை அழிக்காமல் ஆன்ம ஞானம் பெற்றிடுவாய்!
44
அன்பிற்கு அவனியெலாம் பணிந்து நிற்கும்!
வம்பு பேசி வீணாய் வாழ்நாளைக் கழித்திடாமல், அன்பை அகத்தில் கொண்டு அவனியில் சிறப்புறுவாய்! துன்பம் தனைக் களைய துணிவுடன் முற்படுவாய்; இன்பம் இனிதே சேரும் உள்ளம் குளிர்ந்திடவே. வாய்மை தனைக் காக்க வன்மையாய்ப் பாடுபடு, தூய்மையான சிந்தனையால் தீமையெலாம் அகற்றிவிடு, அன்பென்ற சொல்லுக்கு அவனியெலாம் பணிந்து நிற்கும், என்றென்றும் இதையுணர்ந்து இன்பமாய் வாழ்ந்திடுவாய். 'அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்’ என்று சொல்லி அன்பின் வலிமையை விளக்கினார் வள்ளுவனார். தெள்ளு தமிழில் இன்பம் திகட்டாது நிற்பதைக் காண், அள்ளியள்ளிப் பருகி ஆனந்தம் அடைந்திடுவாய்.
டெலிவிஷனும், பையனும்
பையன்: அம்மா,*அம்மா, அப்பாவிடம் சொல்லி
அழகான டெலிவிஷன் வாங்கித் தா. அறிவு வளர்ந்திட அழகான நிகழ்ச்சிகள் அருமையாய் நித்தமும் பார்த்திடலாம், எத்தனை நாளாய் அப்பாவைக் கேட்டும் இன்றுவரை ஒண்ணும் வாங்கவில்லை. பக்கத்து வீட்டில் எத்தனை நாள்தான் பரிகாசத்துக் கிடமாய் பார்க்கிறதாம்? அம்மா: அப்பாவின் கையில் இப்போ காசில்லை,
அவசரப்பட்டால் ஆயிடுமா? அடுத்த மாதம் வரை பொறுத்திரு அம்பி, அப்பா கட்டாயம் வாங்கிடுவார், அது சரி, கண்ணா டி.வி.யில் என்ன அதிசயமாகக் காட்டப் போறார்? அறிவின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்திடா திருந்தால் போதும் கண்ணா. பையன்: ஐயோ,அம்மா, நம் அறிவுக் கண் திறக்க
அற்புதமாய் டி.வி. இயங்கிடுதே. எல்லா வகையிலும் நம்மறிவை வளர்த்திட
45
Page 25
9|thudst:
பையன்:
பையன்:
இயங்கிக் காட்டுதே இலக்கணமாய்! குழந்தைகள் காட்டுகிறார் தம்திறமை, 'கண்மணிப் பூங்கா"வில் கதை கதையாக கருத்துக்கினியதாய் வழங்கிடுறார். அப்படியா அம்பி, எனக்குத் தெரியாதே அப்பாவிடம் சொல்லிக் கேட்டிடலாம். ஆனாலும், எனக்கு அச்சமாய் இருக்கு, அப்புறம் வாங்கலாம் என்று விட்டால் போகட்டும் அம்பி, வேறென்ன புதினம் புதிதாய் டி.வி.யில் காட்டுகிறார்? ஆனாலும், உந்தன் படிப்பிற் கிடைஞ்சலாய் அமையாதிருக்க வேண்டும் கண்ணா. அம்மா அச்சம் வேண்டாமுனக்கு; அறிவை வளர்த்திடும் டி.வி. நமக்கு உலகெங்கும் நடக்கும் புதினமெல்லாம் உவப்புடன் எமக்கு அளித்திடுமே. இதயத்தை மகிழ்விக்க, நடனமும் தேமும் இனிமையாய் அடிக்கடி நடந்திடுமே, பாட்டென்ன, கதையென்ன பகுத்தறிவுக்கான பல்சுவை நிகழ்ச்சிகள் பார்த்தி.லாம் 'குவிஸ்" என்னும் நிகழ்ச்சியை பார்த்திட்டாே குறைவிலா அறிவை பெற்றிடலாம். பூரீனிவாசனின் மாண்ட லின் இசையொன்றே தெவிட்டாத இசைச்செல்வமன்றோ டி.வி.யில் அவர் திறன் பார்த்திடும்போது துள்ளிடுமே மனம் பரவசத்தால் ஆகட்டும், என்றோ ஒரு நாள், அவர்போல் அறிஞனாய் நானும் வந்திடுவேன்.
46
தாய்:
பாப்பா:
தாய்:
பாப்பா:
சுத்தமே சுகம் தரும்
பாப்பாக்கண்ணு எந்தன் செல்லக் கண்ணு! படுத்தது போதும் எழுந்திடுவாய் காலைக்கடன்களை முடித்துவிட்டு, கடவுளைத் தொழுதிடு நிம்மதியாய். வேலைகள் நிறைய எனக்கிருக்கு. விரைவாய் உன் பணி கவனித்திடு, கோலம் போடணும் வாசலிலே, கூட்டி நீர் தெளித்திட்டு வருகிறேன் நான்.
ஆகட்டும் அம்மா, நீ போய் பெருக்கிடு, அழகாய் கோலமும் போட்டுவிடு, ஆனால், தெருவின் இரு பக்கமும் அக்கம் பக்கக் குழந்தைகள் செய்வதைப் பார் சீ, சீ, வரிசையாய் மலங்கழித்தே செய்கிறார் அசிங்கமாய் அலங்கோலம்! ஐயே, இப்படி நான் மட்டும் அலங்கோலம் செய்யேன் கடைசி மட்டும். அதுதான் நல்ல பழக்கம் கண்ணே! அசிங்கமாய் இருக்காதே எப்போதுமே நல்ல பழக்கங்கள் கடைப்பிடித்தே நாகரிகமாக என்றும் வாழ்ந்திடுவாய்! வீட்டினைச் சுத்தமாய் வைத்திருப்பாய், நோய் நொடி அணுகாது பாதுகாப்பாய், மலஜலத்தினால் தெருவில் துர்நாற்றம், சுத்தமின்றேல் எங்கே முன்னேற்றம்?
அம்மா, உனக்கொன்று சொல்வேன் கேள்; ஆசிரியரும் நல்லதையே சொல்லித் தந்தார். சுத்தமாயிருந்தால் சுகம் வருமாம். சுகாதாரம் கடைப்பிடித்தல் அவசியமாம். நித்தமும் குளித்து, துணி துவைத்து, நித்திரையும் அளவாய் கொள்ளட்டுமாம். சோறும் கீரையும் உண்டாலும், சுவையாய் சமைத்தே உண்ணட்டுமாம்.
47
Page 26
ஒற்றுமையைப் பேணிக் காப்போம்
கண்ணே, உனக்கொரு கதை சொல்வேன், கவனமாய் கேட்டு கருத்தினில் கொள், நல்லதை என்றுமே செய்திடப்பார், நாளை செய்வோமென்று ஒய்ந்திடாதே! நாய் வால் நிமிர்த்திட யாராலாகும், என்று நாய் வாலின் உவமையாய் வாழ்ந்திடாதே; கழுதைக்குத் தெரியுமோ கற்பூர வாசனை! கண்டாயோ கழுதையாய், அறிவிலியாய் என்றே இளப்பமாய் யாரும் பேசாது நன்றே கற்று நீ நலம் பெறுவாய்! பன்றிக்குத் தெரியுமோ முத்தினருமையென பழித்திடுவர் வையத்தின் பண்பில்லாரை காக்கையின் சிறப்பைக் கண்டனையோ அவை 'கா காவெனக் கத்தியே கூடி வாழும் நாட்டில் காக்கையினம் போலவே நாமென்றும் நன்றாய் ஒற்றுமையைப் பேணிக் காப்போம்.
வாரத்தில் ஏழு நாட்கள்
வாரத்திலே ஏழு நாட்களாம் அதை வகைப்படுத்தி தெரிந்து கொள்ளுவோம். திங்கட்கிழமை முதல் நாளாகவே வாரத்தின் அங்கமாக அலங்கரிக்குமே! செவ்வாய்க் கிழமை இரண்டாம் நாள் வரும் அதனை சிறப்பாய் நாமும் வரவேற்றிடுவோமே. புதன் கிழமை போன்றதொரு நாள் பொன்போல் பொருத்தமாக அமைந்திடுமாமே, வியாழக் கிழமை குருபகவானின் நாள் - அதனை வாயாரத் துதித்து வாழ்த்துவோம்! வெள்ளிக் கிழமை இந்து முஸ்லிம்கள் எல்லோரும் விரும்பியே பணித்திடும் நாளாம். சனிக்கிழமை வந்துவிட்டாலோ - குழந்தைகள் சந்தோஷமாய் ஆர்ப்பரிப்பரே, ஞாயிற்றுக் கிழமை அதனுடன் சேர, வாரக் கடைசியென்றே கொண்டாடி மகிழ்வார்!
48
அன்புத் தெய்வங்கள்
அம்மா அப்பா நம் அன்புத் தெய்வங்கள், அருமருந்தாய் வந்த அருந்தவச் செல்வங்கள். கண்ணால் பார்த்தும், பேசியும் மகிழ கடவுளர் தந்த கண்கண்ட தெய்வங்கள்; அப்பா அம்மா இல்லையேல் நாம் அவனியில் பிறந்துதான் என்ன பலன்? அரிய பெற்றோரைத் தந்த இறைவனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம் - எம் அறிவுக்கண் திறக்க வருபவரே அ, ஆ, இ, ஈ, உ, ஊ என்றே ஆனந்தமாய் சொல்லித் தருபவரே. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒளவென்றே உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டாம் அகேனம் என்ற ஆயுத எழுத்தும் அதனுடன் சேர்ந்தே இருக்கின்றதாம்!
பிள்ளையார் - அப்பன்
பிள்ளையார் அப்பனே, பெருமை மிக்க தெய்வமே பிள்ளைகளாம் எமைக்காக்க பிரியமுடன் வருகவே! கள்ளங்கபடமில்லாமல் கனிவான உள்ளத்துடன் அல்லும் பகலும் ஆனந்தமாய் அயராது உழைக்கவே, தெள்ளு தமிழில் பேசியபடி தினமும் உன்னைப் போற்றிட நல்லருள் புரிந்தெமக்கு நன்றாய் வாழ வைப்பீரே?
A9
Page 27
நினை, தமிழ் எம்முயிருக்கு நேர்
வீரத்தின் விளைநிலமே, விண்ணுயர்ந்த தமிழகமே, பாரனைத்தும் உன் பெருமை பரிமளிக்க - தீந்தமிழில் யார்தான் கவிபாட விழையாதிருக்கின்றார் சீரான தமிழதனைப் புனைந்து.
அப்பாவித் தமிழா? உன் அமைதியை மதியாது எக்காள மிடுபவர் எவராயிருப்பினும், குமுறி எழுந்திடுக குவலயமெல்லாம் வியக்க, பொறுமைக்கும், அப்போதான் பெருமை. பார் எல்லாம் தமிழர் பாவிய நிலைபார் - உலகில் போர் வெறியால் இனச்சிதைப்பு ஏற்பட்டுத் தவிப்போர்
யார் இந்த அழிவினைத் தடுப்பnோ அறியார் நேர் நின்றெதிர்க்கின் நினை, தமிழ் எம்முயிருக்கு நேர்?
ஒற்றுமை அணி
தனிமரம் தோப்பாகாது, தலையின்றி உடலசையாது பணி செய்யேல், நலம் விழையாது - நாட்டில் பிணியுண்டேல் வாழ்க்கை கொடிது, ஒற்றுமை அணியின்றேல் அமைதிதானேது?
50
சமாந்தர நிலை
சுட்ட மண் ஒட்டுமோ, வட, தென் துருவ மொன்றாகுமோ? வட்ட மதி தட்டையாகுமோ, வானம் பார் பால் அணையுமோ பட்ட மரம் துளிர்க்குமோ, படர் கடல் அலைதான் ஒயுமோ? எட்டா இவையனைத்தும் ஒட்டாத சமாந்தர நிலை காண்?
தொழில்
தனக்கென்று அந்நாளில் ஒரு தொழிலைக் கொண்டான் தன்னையே அதற்கென்று அர்ப்பணித்தான், திறமை மேம்பாட்டால் தன் தொழிலில் உயர்ந்தான். செய்யும் தொழிலே தெய்வம் எனப் போற்றி மகிழ்ந்தான் செய்த தொழிலையோ விட்டவன் கெட்டான் செய்யாத தொழிலையோ தொட்டவன் கெட்டான் பட்டுணர்ந்தவனோ நல்லபாடம் படித்து விட்டேன், விட்டேன் இனி அந்த வேண்டாத தொழிலையென்றான்
51
Page 28
வாழ்க்கை
அலை உயர, அதனுடன் எழும் நாம் அமிழ்ந்து விடுவதில்லை, மலையோ அது என நினைத்து மருளுவதுமில்லை, அதே அலை பள்ளத்தில் தள்ளும் போது, ஆஹா, நாம் மீண்டும் உயரே எழுந்து எப்படியும் கரை சேரப்போகிறோம் என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன், மேடு, பள்ளங்களில், விழுந்து எழுந்து மீள்வதுதான் வாழ்க்கை.
தமிழர்களே, ஒற்றுமை அற்றுப் போகாதீர்?
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே உமக்குள் ஒரம் ஏனோ வரவேண்டும்? ஒற்றுமை பலமெனப் படிக்கலையோ, அதற்கு ஊறு விளையின் சீரழிவல்லவோ? வீறுடன் சாதனை நாடிச் செய்யாவிடில் வேறாகிப் போகும் உம் முயற்சியெல்லாம். சீ, சீ உமக்குள் ஏன் பிளவு, இனிச் சிரிப்புக் கிடமின்றிச் சேர்வீரொன்று, பஞ்ச தந்திரக்கதை யறியீரோ? - அதில் வஞ்சத்தின் சூழ்ச்சிகள் அழியலையோ? மிருகம் பறவைகளே கதாபாத்திரம் - எனின் மருவும் மனிதர் நாம் எம்மாத்திரம்? முட்டை அளவான நாட்டினிலே தலைக்கு முப்பது கட்சிகள் தேவைதானா? வெட்டிச் சாய்க்கிறார் தமக்குள்ளே, இவரா வெட்டிக் கிழித்திடப் போகின்றார் என்று வட்ட இவ்வுலகினில் வசை கேட்க மட்டற்ற வெட்கம் வருகுதையோ, ஒற்றுமையாய் நீவிர் இருந்திருந்தால் வெற்றி என்றோ பெற்று உயர்ந்திருப்பீர்? கட்சிகள் பற்பல ஏற்பட்டதால்
சக்தி கரைந்தே வீணாகப் போயிற்றே காண்
52
இப்பவும் ஒன்றும் நட்டமில்லை - இதை உணர்ந்தே ஓரணியாகி விட்டால்? வெற்றிமெயதே என மார்தட்டி நீவிர் வென்றிடுவீர் எதிலும் வெற்றியினை
ஒரு துளி
பிறந்த மண் எங்கோ, புகுந்த மண் எங்கோ இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணோ இங்கு.
ஆக,
இம்மண்ணில் இருந்தாலும், ஒருநாள் மறைந்தாலும் நானும் இந்த மண்ணில் ஒரு துளியாவேன்,
காரணம்,
இம்மண்ணோடு என்னுயிரும் சங்கமிக்கும்? இம்மண்ணைச் சூழ்ந்துள்ள நீர் இயக்கத்தில் நானும் ஒரு துளி.
காரணம,
நான் விடும் மூச்சு, காற்றில் கலந்து வானத்தில் மிதந்து, ஆவியாகி மீண்டும் நீரில் சங்கமிக்கிறது.
ஆக, எங்கோ ஓர் அணுத்துளியாக, மண்ணிலும், நீரிலும், காற்றிலும், விண்ணிலும், கலந்து சுழன்று சங்கமம் ஆவேன்.
53
Page 29
கட்டுரைகள்
13.
பொருளடக்கம்
. ஓர் உறவு, ஒரு பிரிவு
யாரை நம்பி அவர் பிறந்தார்?
பேதமையற்ற செல்வம்
சிந்தனைச் செல்வம்
. பெண்ணின் பெருமையும்
கடமையும் வந்து. சும்மா. ஒரு நோட்டம். தமிழர் திருநாள்
சமய அறிவும் குழந்தைகளும்
உள்ளத்தனையது உயர்வு . பொது அறிவை வளர்ப்பீர்,
பொறுப்புணர்ச்சி பெறுவீர்
பெண்களே சற்றுப்
பொறுங்கள்.
. அகப்பை பிடிக்கும் கை,
அகிலத்தை ஆளுமா? சிங்கையிலிருந்து சிரம்பான் வரை.
女 女
(31.10.1986ல் சங்கமணியில் வெளியானது) (11.11.1986ல் சங்கமணியில் வெளியானது) (மார்ச் 1957 ‘மலைமகளில் வெளியானது) (1955ல் சிங்கப்பூர் மனோகரன் ஆண்டு மலரில் வெளியானது) (19566) "Lose oup,66)' வெளியானது.
(சிறப்பு மலர் 'திருமுகம்’ சிறப்பு மலரில் 14.1.1955ல் வெளியானது.
(மலேஷிய வானொலியில் 1986ம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன)
sy
(மலேஷிய வானொலியில் 1986ம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன)
99
54
ஒர் உறவு ஒரு பிரிவு
நீண்டகால இடைவெளிக்குப் பின், இடமாற்றத்துக் குப் பின் ஏதோ ஒரு சக்தி என்னை எழுத வைக்கிறது. ஆம், ஏறக்குறைய 35 வருட இடைவெளி, 1953ம் ஆண் டில் தான் நான் எழுத்துலகில் நுழைந்தேன். 1957 வரை பல பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு சிறுகதைகள், கட்டு ரைகள் எழுதினேன். பின் திருமணமாகி இலங்கை சென்ற பின் ஒய்ந்து போயிருந்தேன். இடமாற்றத்தினா லும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும், எழுதும் மனோ நிலை ஏற்படவில்லை. அங்கிருந்தவரை, ஒரிரு வானொலி நாடகங்கள் எழுதியவுடன் சரி, இப்போ சென்னையில் வசித்து வரும் நான் என் பிறந்த நாடாகிய இம்மலை நாட்டிற்கு இடையிடையே வந்து போவ துண்டு. ஆனால், எழுதும் வாய்ப்பை மீண்டும் 1984ம் ஆண்டில் தான் என்னால் ஏற்படுத்த முடிந்தது.
அந்த நாளிலும் இன்று போலவே ஆங்கில மோகத் தால், ஏழு வயதிலேயே பிள்ளைகளைப் பெரும்பாலான வர்கள் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே சேர்த்து விடு வார்கள். தவிர, போதிய ஆங்கில அறிவு இருப்பவர்க ளுக்கே வேலை வாய்ப்பு உண்டு என்பதும் ஒரு காரணம். உலக பாஷையாகிவிட்ட ஆங்கிலத்தைக் கற்காமல் இருப் பது நமக்கே நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இழப்பு. அதற்காக, நம் தாய்மொழியை அறவே புறக்கணிப்பதும் இழி நிலையைப் போன்றதாகும். இதனாலேயே அந்நா ளிலும் பெரும்பாலான பிள்ளைகள் முறையான தமிழ றிவு பெற வாய்ப்பின்றி இருந்தார்கள். தமிழில் எழு தவோ, சரியாகப் பேசவோ வராதவர்கள் எத்தனையோ பேர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். பஜனைகள் பாடுபவர்கள் பெரும்பாலும் ரோமனைஸ். தமிழில்
55
Page 30
படிப்பதைக் காணலாம் அன்றும் இன்றும். நல்லவேளை யாக, இத்தகைய பாதிப்பு தோட்டப் புறங்களில் படிக் கும் பிள்ளைகளுக்கு ஏற்படவில்லை. காரணம் அவர்கள் நகரத்தில் வசிக்கும் பிள்ளைகளைப் போல் ஆங்கிலத் தைப் பிரதான பாடமாக எடுக்காததே. விரும்பியவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இக்காலத்தில்தான் விடி வெள்ளி தோன்றித் திசை காட்டுவது போல், தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது எனலாம். எழுத்துலகில் பல சிறந்த எழுத்தாளர்கள் தோன்றலானார் கள்.
அடக்கமான அகல் விளக்கில் எண்ணையும் திரியும் இருந்தாலும், அது ஏற்றப்பட்டு, ஒளிவிட்டுப் பிரகாசிக்க வும், அணைந்து விடாமல் அவ்வப்போது திரியைத் தூண்டி விடவும். ஒருவர் வேண்டுமே. ஆம். அதற்கும் அன்று 'தமிழ் நேசனில் ஆசிரியராகவும், அணையா விளக்குமாக விளங்கிய அமரர் கு.அழகிரிசாமி அவர்கள், என் நினைவில் இன்றும் பசுமையாக நின்கின்றார். 'நேசனில் தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதவும், கட்டுரைகள், கவிதை, நாடகம் என்று பலவாறு எழுத வும் தூண்டுகோலாக அமைந்தவர் அமரர் கு.அ.அவர்கள் என்பதை நன்றியுணர்ச்சியுடனும் பெருமையுடனும் நினைவு கூர்கிறேன். அமரர் கு.அ.அவர்கள் அன்றைய எழுத்தாளர்களை ஒவ்வொரு மாதமும் கோலாலம்பூ ருக்கு வருவித்து இன்று அமரராகிவிட்ட திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயர் அவர்கள் இல்லத்தில் கூட்டி கற்பனைத் திறனையும், கருத்துப் பரிவர்த்தனைகளை செய்யும் திற னையும் வளர்க்க தூண்டுகோலாயிருந்து ஊக்கமளித்தார். அன்னாருடைய இந்த அருமையான ஊக்குவிப்பே என்னை ஒரு தரமான எழுத்தாளர் என்று உருவாக்கியது டன் மேலும், சங்கமணி புதுயுகம், திருமுகம், மனோக ரன் மலைமகள் இந்தியன் மூவி நியூஸ், மாணவர் பூங்கா ஆகிய பத்திரிகை, மாத சஞ்சிகைகளுக்கு நல்ல பல
56
சிறுகதைகளும், கட்டுரை, கவிதை, நாடகம், ஓவியம் என்று எழுதி அர்ப்பணிக்க வைத்தது.
மலைமகள் ஆசிரியராயிருந்த திரு.வி.ச. முத்தையா அவர்களையும் நான் நினைவு கூர்கிறேன். அவர் அன்று பிரபலமாயிருந்த எழுத்தாளர் வி.எஸ்.மணியன் என்பாரு டன் சிங்கையிலிருந்து சிரம்பான்வரை நேரில் சென்று சிறந்த எழுத்தாளர் என்று அந்நாளில் கருதப்பட்ட அத் தனை பேரையும் பேட்டி கண்டு மலைமகளில் 1957 இல் சிங்கையிலிருந்து சிரம்பான் வரை என்ற தலைப்பி லேயே எழுதி ஊக்குவித்ததை என்றும் மறக்க முடியாது.
யாரை நம்பி அவர் பிறந்தார்?
ஒரு மரத்தை உண்டாக்குவதற்கு நாம் முதலில் வளமான மண்ணைத் தேர்ந்தெடுத்து அதனைப் பண்ப டுத்தி எரு கலந்து பின் உரிய விதையை இட்டு, நீரூற்றி வளர்க்கிறோம். நல்ல முறையில் கவனம் செலுத்தி வளர்க்கும்போது இடையில் அச்செடிக்கு, பூச்சி புழு போன்றவற்றினால் பாதிப்பு ஏற்படாமல் அவ்வப்போது மருந்து தெளித்து நல்ல முறையில் பார்த்துக் கொள்கி றோம். அதுவும் செழித்து வளர்ந்து காலக் கிரமத்தில் நல்ல பலனைக் கொடுக்கிறது. ஒரு குழந்தையை நல்ல முறையில் கவனித்து ஆளாக்க விரும்பும் பெற்றோர், குழந்தையை தகுந்த தீர்க்காலோசனையுடன் முறையாக வளர்க்க வேண்டும். உலகத்தில் பெரும்பாலான குடும் பங்களில் பலவித அசெளகரியங்கள் இருப்பது கண்கூடு. உதாரணமாக, குடிகாரக் கணவன்மார்கள், அப்பாவி மனைவிகள், வாயாடி மனைவிக்கு அப்பாவிக் கணவன்,
57
Page 31
சில வேளைகளில் வறுமையிலேயே வாடி உழலும் தம்பதிகள், நடுத்தர வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள், இவற்றைவிட அளவுக்கதிகமான செளகரியங்கள், ஆடம் பர வசதிகள் படைத்த செல்வச் செழிப்புள்ள குடும்பங் கள் இருப்பதைக் காண்கின்றோம்.
ஒரு குடிகாரத் தந்தையுள்ள குடும்பத்தில் பிறக்கும் சில பிள்ளைகள் தந்தையைப் பின்பற்றித் தம் வாழ்க் கையை கெடுத்துக் கொள்வதுண்டு. தந்தை குடித்துவிட் டுச் செய்யும் அக்கிரமங்களில், பிள்ளைகளின் நற்பண்பு கள், வெறுப்பு, விரக்தியால் மற்றவர்களைப் போல் தாமும் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தினால் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆவலோ, முயற்சியோ இன்றி, நாசமாக்கப்படுகிறது. நல்ல நுண்ணிய உணர்வுகள், ஆற்றல், அறிவு முளையி லேயே நசுக்கப்பட்டு விடுகின்றன. பலன், வெறுப்பின் எல்லையில், ஏன் பிறந்தோம் இருந்தோம் வாழ்ந்தோம் என்ற நிலையாகி விடுகிறது.
அப்பாவி தம்பதிகளுக்கு அதுவும் நடுத்தர குடும்பத் தில் பிறக்கும் பிள்ளைகள், கைக்கும் வாய்க்கும் கணக் காக வரும் வருவாயில் புத்திசாலித்தனமாக இருந்து விட்டாலும் கூட போதிய வசதி வாய்ப்பில்லாமல் ஏதோ அரைகுறைப் படிப்பு படித்தோம், உழைத்தோம், வாழ்ந் தோம் என்ற ரீதியில் யந்திரம் போல் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வறுமையிலேயே வாடி உழலும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் நிலை பற்றி சொல்ல வேண்டி யதே இல்லை. 'ஏன்தான் பூமிக்குப் பாரமாய் பிறந்தோம்’ என்று வெறுப்புற்ற நிலையில் உயிரை உடலில் தங்க வைக்க கூலி வேலை செய்தோ, திருடியோ, பிச்சை எடுத்தோ, வாழ வேண்டிய இழி நிலைக்கு உள்ளாகி விடுகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே பூமிக்குப் பார மாகத் தம்மைப் பெற்றுப் போட்டுவிட்ட அவ்வறிய
58
பெற்றோரையே அவர்கள் நிந்திக்கும் நிலை கூட ஏற் பட்டு விடுகிறது. ஜனத்தொகை நிறைந்த இந்தியாவில் இந்த நிலை சர்வ சாதாரணமாகக் காணக்கூடியதாய் இருக்கிறது.
பெரும் செல்வந்தர்களின் குழந்தைகளை எடுத்துக் கொண்டால் தந்தை எவ்வழியோ, மைந்தன் அவ்வழி' என்ற ரீதியில் சுக போகங்களை ஆடம்பரத்தை மிகவும் விரும்பி பலவித கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை போக்குபவர்களும் உளர். அதே வேளையில் உயர்ந்த நற்பண்புகளைக் கொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகள், ஒழுக்க சீலராய், அறிவாளிகளாய், படிப்பா ளிகளாய் திகழ்வதும் உண்டு. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள். நான் குறிப்பிட்ட பிரிவுகளில் அத்தி பூத்த மாதிரி, சிப்பியிலே விலை மதிப்பற்ற முத்து உண்டாவது போல, நல்ல பிள்ளைகள் தோன்றி, பெற்றோரின் கண்களையே திறக்க வைப்பதும் உண்டு. மொத்தத்தில் பிள்ளைகளின் நல் வளர்ச்சியில் பெற்றோருக்கு நிறையப் பங்குண்டு என்பது மட்டுமல் லாமல் அவர்கள் ஒழுக்க சீலராய் உருவாகுவதற்கும் அஸ்திவாரமாய் இருப்பவர்கள் அவர்களே என்று உறுதி யாய் சொல்ல முடியும்.
59
Page 32
பேதமையற்ற வையம்
‘நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். - அதாவது
நாணவேண்டு மவற்றுக்கு நாணாமையும், நாட வேண்டுமவற்றை நாடாமையும், யாவர் மாட்டும் முறிந்த சொல் செயலுடைமையும், பேண வேண்டுமவற் றுள் யாதொன்றினையும் பேணாமையும், பேதையது தொழில் என்கிறார் வள்ளுவர். இத்தகைய தொழிலைத் தான் இன்றைய உலகம் செய்து வருகிறது என்று கூறி னால் தவறாகாது. அறியாமை, அதனால் ஏற்படும் பொறாமை, ஒற்றுமையின்மை, இனவேற்றுமை பாராட் டுதல் பேராசை இத்தியாதிகள்தாம் மிகுந்து காணப்படு கின்றன.
பேதமையை அகற்றி இவ்வையம் வாழ்வாங்கு வாழ்வதற்கு குறிப்பாக மூன்று விஷயங்கள் அவசியமா னவை. அம்மூன்று விஷயங்கள் முறையே செயல்மூலம் சாதித்தால் நானிலம் பேதமையற்று விளங்க முடியும். எனவே, வையம் உய்ய மூன்று விஷயங்கள் எனக் குறிப்பிடப்பட்ட, மூன்று முக்கியமான படிகளைக் கடக்க வேண்டும்.
இந்தியாவில் கட்டப்பட்டுள்ள செய்குளங்களைப் படங்கள் மூலம் பார்த்திருக்கின்றேன். அக்குளங்களின் அமைப்பைக் குறித்து நான் நமது வாழ்க்கையில் கொண் டுள்ள குறிக்கோளுடன் இணைத்துச் சிந்திப்பதுண்டு. பொதுவாக, இச் செய்குளங்கள் சதுர வடிவில் கட்டப்பட் டிருக்கின்றன. அச்சதுரத்தின் நான்கு பக்கங்களிலுமிருந்து படிகள் கட்டப்பட்டு நடுவில் உள்ள குளத்து நீரையனுக
6O
வழி விடுகின்றன. அப்படி களைக் கடந்தால்தான் உடம் பின் அழுக்கைப் போக்கவல்ல தண்ணிரையணுக முடி யும். தண்ணிரையடைந்த பின்னரே புறம் தூய்மை பெறும். அப்போதுதான் உள்ளத்திலும் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். எனவே, மேலே அகன்று கீழே குறுகிவரும் படிகளைக் கடந்து வந்தால் தான், ஜாதி, மத, இன வேற்றுமை பாராது எந்த உயிரின் உடம்பிலுள்ள அழுக் கையும் போக்கவல்ல நீர் நிலையை அப்படிகளின் மத்தி யிலே அடைய முடியும். அங்கு தான் "யாவரும் சமம்’ என்ற எண்ணத்துடன் அவர்கள் உள்ளங்கள் சங்கமிக்கின் றன. ஏற்றத் தாழ்வு, ஜாதி, மத, சமய இன வேற்றுமைகள் பாராட்ட முடியாது. காரணம் குறிக்கோள் எல்லோருக் கும் அச்சமயம் ஒன்றாயிருப்பதே. எனவே, அங்கு ஒற்று மைக்கு இடமுண்டு; அன்பு வளர வழியுண்டு; இன்ப மும் பெருக ஏதுவாகும், அஃதே போன்று, உலகின் நாற்றிசைகளிலும் வாழும் மனித சமுதாயம், 'ஒற்றுமை’ என்ற ஒரே குறிக்கோளை நாடி வருமாயின்.?
குளத்து நீரையடைய எத்தனை படிகளை கடக்க வேண்டியிருக்கிறதோ, அதேபோல் நானிலம் பேதமை யற்றுச் சிறந்தோங்க, முதன் முதலில் 'நான்’ என்ற சுயநலப்படியான, அகன்று நிற்கும் முதற்படியைக் கடந்து 'நாம் என்ற பொதுநலப் படிக்கு வரவேண்டும். எந்த மனிதனும் தனியாகச் சுகமடைய முடியாது. சமூகம் செழித்தால்தான், தன் குடும்பம் செழிக்கும். ஆகவே, பிறர் சுகத்தையும், கவனித்து வாழ வேண்டும். நாடு நன்றாகவிருந்தால் எல்லோருக்கும் நல்லதன்றோ? எனவே, ‘நான்’ என்ற ஒருமையிலிருந்து ‘நாம் என்ற பன்மைக்கு மாறிய பின், குடும்பத்துக்கு உழைப்பது போல் நாட்டுக்கு உழைக்க வேண்டும். இவ்வாறு நாற்தி சையிலுமுள்ள மனித சமுதாயம் ஒரு நாட்டைப் போல பல நாடுகளிலும் பாடுபட்டு, ஆண் பெண் என்ற பேத மின்றி பரந்த மனப்பான்மையுடன் 'யாதும் ஊரே யாவ
6 f
Page 33
ரும் கேளிர்" என்ற சமரச உணர்ச்சியை வளரச் செய்தால், நானிலம் பேதமையற்று வாழ்வாங்கு வாழும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, ‘நான்’ என்ற நம்பிக்கை நாமாகி 'நாம்’ நாடாகி' 'நாடு’ ‘நானிலமாக வேண்டும்.
இதைச் செயல்முறை காட்ட வழி..?
வீட்டுக்கு வீடும், நாட்டுக்கு நாடும் வேறுபாடு இல்லாது ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக இணைந்து ஒத்துழைப்பின் பேதமையகலும், 'ஆண்களு டன் பெண்கள் சரிநிகர் சமானமாக மதிக்கப்பட்டு தகுந்த துறைகளில் ஆண்களுடன் பங்குபற்றி நடப்பது தவறு என்று நினைக்கும் தவறான எண்ணத்தை ஆண்களும் ஏன் பெண்களுங்கூட அகற்ற வேண்டும். 'தொட்டிலை ஆட் டும் கை தான் செங்கோலை ஆளும் கை’ என்பதை நன்கு சிந்திக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் உயர்ச்சி பெற வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஒவ்வொரு உள்ளத்திலும் எழும்.
"பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமையற் றிடுங் காணிர்’ என்று வீர முரசொலித்த மகாகவி பாரதியா ரின் சிந்தனையைக் கிளறி உந்திவிடும் மொழிகளைச் சற்றே சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். ஆம், உலக மாதர்களாகிய பெண்கள் தம் அறிவு வளரின் உலகம் சேமமுறும், சிருஷ்டித் தாய்களின் ஒத்துழைப்பி னால், ஒழுக்கத்தினால், ஒருமுகப்பட்ட முற்போக்கான நல்லெண்ணங்களினால்தான் இவ்வையகம் பேதமை யற்று வாழ்வாங்கு வாழ முடியும். 'மாதர்க்குரிய மதிப்பை அளிப்பதன் மூலமே எல்லாத் தேசத்தாரும் சிறப்பெய்தியிருக்கிறார்கள். பெண்களைச் சரியாக மதிக் காத நாடு எக்காலத்திலும் சிறப்பெய்தியதில்லை. இனி யும் சிறப்படைய முடியாது’ என வலியுறுத்தியுள்ளார் விவேகானந்தர்.
அமெரிக்க தேசத்து மக்கள் பெண்களை மிகவும்
62
போற்றுபவர்கள், எனவே அவர்கள் செல்வத்திலும் கல் வியிலும் சிறந்து, சக்தி மிகுந்து சுதந்திரமாக வாழ்கிறார் கள். “பெண்களைப் போற்றி வளர்க்க வேண்டும்’ என ஒளவைப் பிராட்டியாரும் கூறியுள்ளார். பெண்களைத் துயரத்தில் வைத்து ஆட்டிப்படைக்கும் குடும்பமோ அன்றி தேசமோ என்றும் மேன்மையடையாது.
ஆண்களுடன் பெண்களும் இணையாக நின்று ஒத்து ழைத்து சரிநிகர் சமானமாக வாழ்ந்தால் அறிவு ஒங்கும். அறிவு ஓங்க அன்பு பெருகும். அன்பு பெருக அறம் தழைக்கும். அறம் தழைக்க அருள் பெருகி இவ்வுலகம் பேதமையகலப் பெற்றுச் சிறப்புறும்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என உணர்த்துகின்றார் புரட்சிக்கவி பாரதியார். அறிவிற் சிறந்த ஒளவையார், வீரத்திற் சிறந்த ஜான்ஸிராணி, கடமையிற் சிறந்த கஸ்தூரிபாய், அரசியல் மேதை விஜய லட்சுமி, ஜோன் ஆஃப் ஆர்க், ஃப்ளோரென்ஸ் நைட்டிங் கேல், ஆகியோர் பெண்களின் பெருமையை விளக்க சிறந்த எடுத்துக் காட்டாயுளர். அன்பிலும் அறிவிலும் பொறுமையிலும் மேம்பட்டவர்களல்லவா பெண்கள்! அன்று மட்டுமா பெண்கள் வீரத்திலும் அறிவிலும் மேலோங்கி நின்றார்கள்? அவர்கள் வழித் தோன்றல்க ளாகிய இன்றைய பெண்களும் சகல அம்சங்களிலும் சிறந்தே விளங்குகிறார்கள் என்று கூறுவது மிகையாகாது.
‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா பங்கயக் கை நலம் பார்த்தல்லவோ - இந்தப் பாரில் அறங்கள் வளருதம்மா - எனப் பாடினார் தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய பெண்களால் தான் இவ்வையகம் சிறப்பெய்துவதற்கான வழியிருக்கின்றது. அவர்கள் மூலமாகவே கல்வி,
63
Page 34
ஞானம், பக்தி, நாகரிகம் அனைத்தும் சிறப்புற்று வள ரும். வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துக்களைப் பெற்று உயர்ந்த காரியங்களையும் செய்ய முடியும். ஆகவே, 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை அகற்றி, ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்ந்து இவ்வையத்தைப் 'பேதமையற்ற வையமாகத் திகழச் செய்வோம்!
சிந்தனைச் செல்வம்
“நாடோடி போன்று ஒரு நிலையின்றி ஒடித்திரியும் மனம் நங்கூரமில்லாத கப்பலுக்கு சமானமாகும்.
‘சிந்தனை எனப்பட்ட செல்வம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அழிப்பதோ பெருக்குவதோ, எல்லாம் அவனு டைய கையில்தான்.
சிந்திக்கத் தெரிந்தவனாயிருந்தால் ஏன் எதற்கு, எப் படி, என்ன? என்ற கேள்விகளைக் கேட்டு அவைகட்குச் சரியான விடை எழுப்பி, காரண காரியம் காட்டி தனது சிந்தனா சக்தியைப் பெருக்கி சிறப்புற்றுத் திகழ்கிறான். சிந்திக்கத் தெரியாதவனோ, சிந்தித்துச் சிந்தித்து மூளை கெட்டு விடும். எனக்கேன் இந்த வேலை, என்று நினைத்து அளிக்கப்பட்ட செல்வத்தை அழித்து விடுகி றான்.
ஒருவனது ஐந்து விரல்களும் ஒன்றுபோலிருக்கி றதா? கையில் இந்த ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்தால் தானே எழுதவோ, தூக்கவோ வேலை செய்யவோ முடிகிறது. அதேபோல் சிந்தனை சிறந்து இயங்குவதற்கு ஐம்புலன்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாததாயிருக்
64
கிறது.
'சித்து’ என்றால் அறிவு; ‘சித்தம்’ என்றால் மனம். இந்த மனம் இருக்கிறதே, அது ஒரு நேரம் ஒரு நிலையில் நிற்காத குரங்கு. அதிலும் அவிழ்த்து விடப்பட்ட குரங்கு சேஷ்டைகள் செய்வதில் பெயர் போனது. அது அங்கு தாவும், அதில் பாயும், இங்கு குதிக்கும், இதில் ஏறும். கண்டிப்பு இல்லாவிட்டால் இந்த சேஷ்டைகளின் மூலம் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும். எனவே, இந்த "மனம் என்ற குரங்கை ‘அறிவு என்ற குரங்காட்டியைக் கொண்டு அடக்கியாள வேண்டும்.
ஆத்துமதத்துவ முறைப்படி பார்க்கின் சிந்தனையை ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர முடியாதவர்கள் தமக்குத் தாமே உதவாதவர்கள் ஆகி விடுகிறார்கள். ஒருகாரியத் தைச் செய்வதில் தொடர்ந்து உறுதியான அக்கரை காட்டி வருவதின் மூலம் மனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.
‘ஒரு காரியத்தில் தமது மனோசக்தியை நேர்மையாக வும், சிதறாமலும் செலுத்துவதின் மூலம்தான் உண்மை யான, உறுதியான சிறந்த ஞானம் ஏற்பட முடியும்’ என செஸ்டர் ஃபீல்ட் (Chesterfield) என்னும் ஆங்கிலப் பெரி யார் வலியுறுத்தியுள்ளார்.
‘சென்ற இடத்தாற் செலவிடா தீது ஒரீஇ
நன்றி பால் உய்ப்பது அறிவு' என்கிறார் வள்ளுவர். அதாவது தீய காரியங்களில் இயல் பாகச் செல்லும் மனத்தை செல்லவிடாது தடுத்து நற்காரி யங்களில் செல்லும்படி தூண்டுவதே அறிவு என்பதாகும். எனவே, எக்காரியத்திலும் மனம் ஒன்றிப்போக அறிவால் ஆராய்தலே சிந்தனையாகும்.
எந்த ஒரு விஷயத்திலும் சிந்தையைச் செலுத்துவ தற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது ஆர்வம். ஆர்வம் இன்றேல் எடுத்த காரியம் சிறப்பாயிராது.
65
Page 35
ஆனால் இந்த ஆர்வம் எங்கிருந்து வரும்? நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்வதாக வைப்போம், அத னைச் செய்ய ஆர்வம் வருமா? அப்படியானால் எங்கி ருந்து வரும்? இதற்கெல்லாம் பதில் 'மனத்திலிருந்து தான்’ என்பதாகும். ஆர்வம் வராவிட்டால், அதனை வரும்படி செய்ய வேண்டும்.
பொழுதுபோக்குக்கு அந்த இந்த நாவல்களைப் படிப்பதை விட, அரை மணிவரை நாம் தொட்டுப் பார்க்கவும் விரும்பாத சரித்திர நூல்களையோ, குடும்ப நிர்வாகத்தை விளக்கும் நூல்களையோ, அன்றி அரசியல் பற்றிய நூல்களையோ ஆராய்ந்து படித்தோமானால் அறிவு வளர்ச்சி பெற ஓரளவு உதவுவதாயிருக்கும். ஒவ் வொரு நாளும் அரைமணி நேரம், அதற்கென ஒதுக்கி வைத்து, படிப்பதைப் பழக்கத்துக்குக் கொணர்ந்தால், நாளடைவில் ஒரு சிரமமும் இருக்காது சிந்தையை அதில் செலுத்துவதற்கு.
நோயாளியானவன் மருந்து சாப்பிட்டால் தான் குண மடைவான் அவனுக்கோ மருந்து சாப்பிடுவதென்றால் விஷம் சாப்பிடுவது மாதிரி. ஆனால் அதற்காக அவன் 'எனக்கு மருந்து சாப்பிட மனமில்லை; விருப்பமில்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நோய்மாற வேண்டுமென்றால் மருந்தைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்?
ஆகவே, சிந்தனை சிறந்து ஒளிவீச வேண்டுமாயின் சிந்தையின் ஒத்துழைப்பும், மனப்பயிற்சியும், முயற்சி யும் மிகவும் அவசியம். அறிவுக் கண் கொண்டு எதையும் ஆராய்ந்தால் சிந்தனை சிறந்து விளங்கும்.
சிந்தனையென்பது ஒர் அற்புத விளக்கு, அலாவுதீ னும் அவனுடைய அற்புத விளக்கு மாதிரியும் என்றுதான் 6061 upils, G36Tait. (Aladdin and his Wonderful lamp) gi தனை ஆகாயம் முதல் பாதாளம் வரை ஆராய்ச்சி செய்
66
யும். இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாத தாகவும் உரைக்க வல்லது. செயல்முறையில் சாதிக்க முடியாததைச் சிந்தனையின் மூலம் சாதிக்க முடியும். சிந்தனையை வளர்க்க, சிறப்பிக்க புத்தக அறிவு மட்டும் போதாது. நிறையப் பொது அறிவும், பகுத்தறிவும் வேண் டும்.
அறியாமை, பொறாமை, மனக்கவலை, கோபம் ஆகிய மனநிலைக் குட்பட்டவர்கள், வறுமை, குடும்பக்க வலை, பிணி ஆகிய தொல்லைகட் குட்பட்டவர்களால் சிந்திக்க முடியாது. ஒரு விதத்தில் 'சிந்தனை” என்பதற் குப் பொருள், கையிலிருக்கும் காரியம் ஒன்றைத் தவிர வேறு விஷயங்களில் அவ்வமயம் மனதைச் சிதறவிடா மல் தடுக்கும் திறமை இருக்க வேண்டும் என்பதுதான். ‘எந்த ஒரு பொருளைக் குறித்தும் சிந்திக்கத் தொடங் கும் போது இருட்குகையில் நுழைபவன் கையின்கண் விளக்குப் போல ஒருவனது ‘பொது அறிவும் அவனது அஞ்சாமைபோல் 'உள்ளத்து ஊக்கமும் துணையாக வேண்டும்’ என்கிறார் பேராசிரியர் ஒருவர்.
"சிந்தனை சிறக்க அதற்குத் தக்க சூழ்நிலையும், காலமும் நல்வாழ்வும், மன அமைதியும் ஊக்கமும், முயற்சியும், நல்லெண்ணமும் பேரறிவும் தேவை” என்கி றார் மேற்குறிப்பிட்ட அதே பேராசிரியர். அது மட்டுமா? அறிவுக் கண் கொண்டு
“தானே சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள் அறிந்தும் சிந்திக்காமலிருப்பவன் ஊன்பொதி சிந்தித்ததை வெளியிட அஞ்சுபவன் கோழை சிந்தித்ததை திரித்து வெளியிடுபவன் நயவஞ்சகன் சிந்தித்ததை சிந்தித்தபடி வெளியிடுபவன் வீரன் சிந்தித்ததைப் பிறர் சிந்தை கொள்ளக் கூறுபவன் அறிஞன்.
என்னும் கூற்று எவ்வளவு தெளிவாக, அழகாக
67
Page 36
சிந்தனையின் மகத்துவத்தை விளக்குகிறது. சிந்தனைச் செல்வம் அனைவருக்கும் பயன்பட்டு நன்மைபயக்க, நல்லமுறையில் சிந்திக்கப் பழகுவோமாக!
மாதர் பகுதி
பெண்ணின் பெருமையும் கடமையும்
குமாரி மு.தனபாக்கியம், சிரம்பான்
‘தொட்டிலை ஆட்டும் கைதான் செங்சோலை ஆளும் கை’ என ஒர் ஆங்கிலப் பெரியார் கூறி பெண் ளிைன் மகத்துவத்தை நமக்கு விளங்க வைக்கிறார். நமது ஒளவை மூதாட்டியாரும் 'தாயிற் சிறந்ததொரு கோவி லில்லை’ என்ற வாக்கின் மூலம் பெண்ணின் போற்றுதற் கரிய, மேன்மை பொருந்திய நிலையைத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.
குடும்பத்தின் குல விளக்கும், தாயுமான பெண், குழந்தைகளை வளர்த்து நல்லறிவு புகட்டி, நல்வழியில் ஈடுபடச் செய்து, தேசத்துக்குச் சேவை செய்ய உதவச் செய்பவள் ஆகிறாள். உலகம் முன்னேறுவதற்கோ, அன்றி பின்னடையச் செய்து அதல பாதாளத்தில் அமிழ்த்தி விடுவதற்கோ வேண்டிய மந்திரம் பெண்ணின் கையில்தான் இருக்கிறதென்றால் மிகையாகாது.
முக்கியமாக முற்காலத்துப் பெண்களின் பெருமை யைப்பற்றி எழுதப் புகின் ஏடு கொள்ளாது. அவர்களு டைய கீர்த்தியும் புகழும் குன்றின் மேலிட்ட தீபம்போல் பிரகாசிக்கின்றது. அன்பு, ஈகை, திருப்தி, சாந்தம் இரக் கம் என்னும் சற்குணங்களுடன், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய அரியப் பண்புகளை அணிகலனாகக்
68
கொண்டு பிரகாசித்தார்கள். வீரத் தாய்மார்களாக விளங்கி னார்கள்.
அன்றென்ன, இன்றென்ன, என்றென்றும் பெண்கள் வீரத் தாய்மார்களாகத் திகழ வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள். வருங்காலச் சிறார்களுக்கு, நல்வழி வகுத்தும், இல்லறத்தைக் குறையின்றி நடத்திக் கணவன் மனம் கோணாது நடக்க வேண்டியவள் பெண்.
நம் பழந்தமிழ் ஒளவை மூதாட்டியார் பெண்ணின் மகத்துவத்தை - குறிப்பாக மனைவியின் மகத்துவத்தை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டுகிறார் என்பதைப் பாருங்கள்:
“மாதா மரிக்கின் மகனாவினற்சுவை போம் தாதா வெனில் கல்விதானகலும் - ஓதினுடன் வந்தோன் மரித்து விடில் வாகுவலிபோமனையேகில் அந்தோ இவை யாவும் போம். கற்புக் கரசிகளான கண்ணகி, சாவித்திரி, நளாயினி, வாசுகி அம்மையார், அன்னை கஸ்தூரிபாய் இன்னும் அநேக நாரிமணிகளின் பெருமைகளைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். அவர்கள் அறிவிலும், கல்வியிலும், குணத்திலும் மேம்பட்டவர்கள்.
தற்காலப் பெண்கள் நிலை
தற்காலப் பெண்கள் நிலையைப் பற்றிக் கவனிப் போம். தற்கால பெண்களின் நிலை முற்காலப் பெண்க ளின் நிலையைவிட மேம்பட்டிருக்கின்றதா? அன்றித் தாழ்வடைந்திருக்கின்றதா? இக்கேள்விக்குப் பதில் அளிப்பது சிறிது சிரமந்தான். காரணம் நிறையும் குறை யும் நாம் கண்கூடாகக் காண்பதால், முற்காலத்துப் பெண் களுடன் ஒப்பிட்டுச் சொல்லவோ, தராதரத்தை எடுத்துப் பேசவோ வகை தெரியாதிருக்கிறது. அன்னை கஸ்தூரி
69
Page 37
பாய், திருமதி விஜயலட்சுமி பண்டிட் பரமானந்த சரசு வதி இன்னும் அநேக பெண் இரத்தினங்களைப் பற்றி எடுத்துப் பேசுகையில் நிறைவாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் வெளிப்படை நாகரிகத்தில் பெரும்பா லான பெண்கள் தற்போது மயங்கித் தவிப்பதை காணு கையில் குறையும் தெள்ளெனத் தோன்றுகிறது. இருப்பி னும், தற்காலப் பெண்களின் நிலை மேம்பட்டிருக்கிற தென்று ஐயமின்றிச் சொல்லலாம். அவர்களுக்கு அளிக் கப்பட்டிருக்கும் சுதந்திரம் உரிமை, சமத்துவம் ஆகிய வைகளைக் கொண்டு இதில் நம் பெண்மணிகள் உரிமை -சம உரிமைக்காக தீவிரமாகப் பாடுபட்டு வருகிறார்க ளென்றால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
உரிமையும் கடமையும்
ஒவ்வொரு பெண்ணும் சரி, ஆணும் சரி முதலில் செய்ய வேண்டிய தலையாய கடமை தன்னை ஒழுங்காக நிர்வகித்து தன்னுடைய குடும்பத்தையோ, தன்னை சார்ந் தவர்களையோ கெளரவமாக நடத்த அல்லும் பகலும் அயராது உழைப்பதுதான். அதன்பின் நாட்டு நலனுக்கும் உலக நன்மைக்கும் பாடுபட வேண்டியது கடமையாகி றது. நல்லவைகளைச் செய்வதுடன் கெட்டவைகளை எதிர்த்துப் போராடுவதும் கடமைதான். குப்பைகளைப் பெருக்கினால்தானே வீடு தூய்மையாய் இருக்க முடியும் என்கிறார் ஒரு அறிஞர். கடமைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வ துதான் நாகரிக வாழ்வின் சிகரமாகும்.
'உரிமையோ கடமையோயின்றி ஒளிவிட முடியாது. உரிமையை அனுபவிக்க வேண்டுமானால் கடமையைச் செய்தாக வேண்டும். கடமையின்றேல் உரிமையில்லை. உரிமையின்றேல் கடமையில்லை. உரிமை ஆண், கடமை பெண், இரண்டும் சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை தான் மேலான வாழ்க்கை’ என்கிறார் மேற்குறிப்பிட்ட
7Ο
அதே அறிஞர்.
இன்னொரு அறிஞர் கூறுகிறார், ‘கடமையைச் செய் யாது உரிமையைக் கோருவது கலகம்; உரிமையின்றிக் கடமையைச் செய்வது அடிமைத்தனம்’ என்று.
ஆனால் பெரும்பாலான ஆண்களும் சரி, பெண்க ளும் சரி, என்ன செய்கிறார்கள்? கடமையைச் செய்யாது உரிமையை மட்டும் கோருகின்றார்கள்; உரிமையின்றிக் கடமையையும் செய்கின்றார்கள். இது தவறு.
நாம் உன்னதமான உயரிய வாழ்க்கை வாழ வேண்டு மாயின் - நம்முடைய வாழ்வால் உலகம் வாழ வேண்டு மாயின் பெண்களாகிய நாம் - உலக மாதாக்களெனக் கருதப்பட்டு வரும் நாம், நம் கடமையை முதலில் சரிவரச் செய்ய வேண்டும். அதன்பின் உரிமை தானாக வரும்.
இக்கட்டுரையை முடிக்குமுன் ஒரு முக்கிய செய் தியை இங்கு குறிப்பிட வேண்டிளது. அதாவது இம் மலை நாட்டில் வசித்துவரும் இன்றையச் சகோதரிகளில் பெரும்பாலோர் தமது தாய் மொழியாகிய தமிழைத் தம் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலேயே போதித்து வருவ தில்லை. 5, 6 வயதிலேயே ஆங்கிலம் கற்கும் பொருட்டு 'கிண்டர் கார்ட்டன்’ (Kindergarden) வகுப்பில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். தோற்றத்தில் தமிழர்களாயிருக் கும் குழந்தைகள் என்ன செய்யும்? 'மம்மி, டாடி" என்று நாகரிகத் தாயாரின் போதனைப்படி அழைப்பதுடன், ஆங்கிலத்திலேயே பேசச் செய்கிறது? இது யார் குற்றம்? உலகமறியாக் குழந்தையின் குற்றமா? முறை தெரியாது வளர்க்கும் பெற்றோரின் குற்றமா அன்றித் தமிழராகப் பிறந்ததே குற்றமா?
தனது'தாய் மொழியைப் புறக்கணிப்பவர்கள் தம் தாயையே புறக்கணிப்பவர்களாவதுடன் தம் இனத்தை யும் அவமதிக்கிறவர்களாகிறார்கள்.
71
Page 38
எனவே, உலக மாதாக்களெனக் கருதப்படும் நம் சகோதரிகள் மேன்மேலும் தவறு செய்வதை விட்டு, தமிழைப் பேணி வளர்க்கும் தாய்மார்களாக வேண்டும். இதுவே முதலில் ஆற்ற வேண்டிய தலையாய கடமை.
முதலில் தனது சொந்த மொழிக்கே மதிப்புக் கொடுக்க வேண்டும். தமிழ்தான் நம் தாய்; தாய்தான் நம் தமிழ். தமிழறம் பேணும் தகைமையாளர்களாக வாழப் பாடு படுவோம், வாழ்க தமிழ் வளர்க பெண் னின் பெருமை!!
“வந்து - சும்மா' - ஒரு நோட்டம்
‘என்ன வேணும்? யாரைப் பார்க்கணும் நீங்க?" - அந்த காரியாலயத்தில் காலையிலேயே தலை நிறைய வேலையை கட்டிக் கொண்டு, அழுத அந்த ஆபீஸர், தயக்கத்துடன் அங்குமிங்கும் பார்த்தவாறு ஆடு திருடிய கள்ளனைப் போல் நின்ற ஒரு மனிதரைப் பார்த்து கேள்விகளைத் த்ொடுக்கிறார்.
'ஒண்ணுமில்லைங்க? வந்து - சும்மா- வந்த மனிதர் தயங்குகிறார், மேலும்.
கேள்வி தொடுத்தவர், கொதி எண்ணையில் போட்ட கடுகு போல் வெடிக்கிறார். 'என்னய்யா, வந்து, போயி’ என்றுகிட்டு. 'சும்மா சொல்லித் தொலையு மய்யா. பதில் மேலும் தயங்கித் தயங்கி வெளிப்படுகிறது * இல்லிங்க, வந்து வேலை ஏதாச்சும் கிடைக்குமான்னு "சும்மா’ கேட்டுப் போகலாம்னு வந்தேன்.
கடுகு மீண்டும் காரசாரமாய் வெடிக்கிறது. இதோ
72
பாருமய்யா? அதோ, அந்தக் குப்பைக் கூடைக்குள்ளார நிறையவே வேலை கிடக்குது. "சும்மா’வே வாரிக்கிட் டுப் போமய்யா. காலங்காத்தாலை கழுத்தறுக்க வந்திட் டான் ’
‘சும்மா சொல்லப்படாது, பாருங்க. இந்த 'வந்து' "சும்மா’ என்கிற சொற்களுக்கு நம் தமிழ் பேச்சு அகராதி யிலேயே ரொம்ப முக்கியத்துவம் உண்டு. அதிலும் "சும்மா’ என்ற சொல் இருக்கே, அது சந்தர்ப்பத்திற்கேற்ற படி "சும்மா’வே பல அர்த்தங்களைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது.
'அட நீங்க ஒண்ணு! 'சும்மா" கதை அளக்கறீங்களே. விஷயத்தை "சும்மா’ சொல்லித் தொலைப்பது தானே! - என்ற முணுமுணுப்பு என் காதில் "சும்மாவே விழுகி [Dჭნl.
நேற்றுப் பாருங்கள், என் வீட்டுக்கு ரொம்ப நாளாய் வராத ஒரு மாமி வந்தார்கள். 'அடே, சரோ மாமியா? வாருங்கள், வாருங்கள். ஏது காற்றடிச்ச மாதிரி இந்தப்பக் கம்? என்று வரவேற்றேன்.
அவர்கள், “ரொம்பக் காலமாச்சு உங்களைப் பார்த்து, அதான் "சும்மா’ பார்த்து விட்டுப் போகலா மென்று வந்தேன்’ என்றார்கள்.
'உங்கள் பிள்ளைகள் எல்லாரும் என்ன செய்கிறார் கள், படிக்கிறார்களா வேலை செய்கிறார்களா? - இது கேள்வி.
'பெரியவன் வீட்டில் 'சும்மா' இருக்கிறான். மற்ற வர்கள் ஏதோ படிக்கிறார்கள் - இது பதில். சரோ மாமி பதிலுக்கு கேள்விகளைத் தொடுக்கிறார்கள். 'அது சரி, மாமி, உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? மாமா என்ன செய்கிறார்?"
'அதையேன் கேட்கிறீர்கள். மாமா 'பென்ஷன்”
73
Page 39
எடுத்துவிட்டு 'சும்மா பொழுது போக்காக சிறு புத்தகக் கடை நடத்துகிறார். என் மகள் பார்த்து வந்த நர்ஸ்’ வேலையையும் விட்டுவிட்டு, வீட்டில் 'சும்மா’ தான் இருக்கிறாள். நடுவில் மகன் டாக்டருக்குப் படிக்கிறான். கடைசி மகனுக்கு தகப்பன் அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததால், அவன் தகப்பனிடம் 'சும்மா’ பணத்தை, அதுக்கு இதுக்கு என்று சாட்டுச் சொல்லி வாங்கி, ‘சும்மா, சும்மா’ அங்கும் இங்குமென்று ஊரெல்லாம் அலைகிறான். சொல்லிக் கண்டித்தால் தகப்பனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. 'நீ வாயை மூடிக் கொண்டு 'சும்மா’யிரு. ஊர் தேசம் தானே என் பிள்ளை பார்க்கப் போறான். 'சும்மா, சும்மா’ அவனை திட்டிக் கொட்டாதே என்ற "சும்மா’ துள்ளிக் குதிக்கிறார்.
'அதையேன் சொல்லுகிறீர்கள். வீட்டுக்கு வீடு வாசல்படிதான். நானும் இப்படித்தான் 'சும்மா’ இருக்க முடியாமல், வீட்டோடு என் மூத்த மகன் 'சும்மா’ குந்தியிருக்கிறானே என்று, எங்காவது ஒரு சின்ன கம்பெ னியிலாவது வேலை கேட்டுப்பார் தம்பி’ என்றேன். அதற்கு அவன், 'ஆமாமாம், வேலை கேட்டுப் போன தும் கம்பெனிக்காரன், 'வாடா மச்சான் வேலை தாரேன்’ என்று 'சும்மா’ தூக்கித் தந்திடப் போறான். உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு 'சும்மா’ இருங்களேன் என்றான்.
"அது சரிதான், இந்தக் காலத்தில் எதையும் கண்டித் துச் சொல்ல முடியாது. சொன்னாலும் குற்றம், "சும்மா’, எதுவும் சொல்லாமல் இருந்தாலும் குற்றம். சரி, மாமி, நேரம் இருக்கிறபோது 'சும்மா’ இப்படி வந்து போங்கள் என்று சொல்லி வழியனுப்பினேன்.
அவர்களும், சிரித்துக் கொண்டே, 'ஆமாம். நீங்கள் என்னிடம் அடிக்கடி வந்தபோற, லட்சணத்திலே, நானும் ‘சும்மா சும்மா’ வந்து கொண்டிருப்பேனாக்கும் என்று கூற, 'என்ன மாமி அப்படிச் சொல்லி விட்டீர்கள்?’
74
என்று என் கேள்விக்கு "சேசே, அப்படியொன்றும் இல்லை. 'JilbLDT’ தமாசுக்குச் சொன்னேன்." என்றார்கள்.
அவர்கள் போன பின், அடேயப்பா, லேசுப்பட்ட மாமியா இவர்கள்? 'சும்மா’ தொணதொணன்னு கொஞ்ச நேரங்கூட வாய் ஒயவில்லையே? என்று நான் "சும்மா’ இருக்க முடியாமல் வாய்விட்டு உள்ளத்தை திறந்து சொல்ல, அதைக் கேட்டு விட்ட என் கணவர், நீ மட்டும் 'சும்மா’ வா, வாயை வைத்துக் கொண்டு இருந்தாய்? வெட்டிப் பேச்சாய் பிள்ளைகளைப் பற்றி "சும்மா’ கொட்டித் தள்ளினாயே. இருந்தாலும் 'சும்மா’ சொல்லக்கூடாது. நீ கெட்டிக்காரிதான் என்றார்" ஏதோ 'சும்மா’ பொழுதைக் கழிக்காமல் இப்படி ஏதோ எழுதி யாவது என் நேரத்தைச் செலவழித்தேனே என்ற திருப்தி யுடன் 'சும்மா’, அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட ஆரம்பித்தேன்.
ア5
Page 40
சமய அறிவும் குழந்தைகளும்
ஓர் உறுதியான அழகான கலை கட்டிடம் அமைப்ப தற்கு நாம் முதலில் பெரிய பாறாங்கற்களையும் சீமேந் தையும் கலந்து போட்டு பலமான உறுதியான அத்திவா ரம் போடுகிறோம். பின்னர் அந்த பலமான அஸ்திவாரத் தின் மேலே தான் நாம் விரும்பியபடி கட்டிடத்தை அழகான நாகரிகமான முறையில் கட்டுகிறோம். பல மான அஸ்திவாரம் இல்லாவிட்டால் காலக்கிரமத்தில் கட்டிடத்தின் நிலை என்னவாகும். எத்தனை உலகப் புகழ் வாய்ந்த கட்டிடங்கள் எண்ணற்ற நூற்றாண்டுகளைக் கண்டு இன்னும் இனிமேலும் நிற்கப்போகின்றன? கார ணம் பலம் வாய்ந்த உறுதிமிக்க அஸ்திவாரமே. அதே போலத்தான் அன்றைய ஞானிகளோ, நம் சமயக் குரவர் களோ, குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையோ, ஒளவையோ நம்மாழ்வார்களோ எத்தனையோ நூற்றாண் டுகளுக்குப் பின்னும் அன்றும் வாழ்ந்தவர்கள் இன்றும் புகழுடம் போடு வாழ்கிறார்கள். இன்னும் இருக்கப் போகிறார்கள். காரணம் அவர்களிடம் இருந்த ‘சக்தியின், சமய அறிவின் தெய்வ பக்தியின் அத்திவாரம் அசைக்க முடியாததாயிருந்ததே, அவர்கள் தங்கள் அறிவுப்பாதை யில் இருந்து தவறித்தடுமாறி நம்மைப்போல் உபா தைக்கு உள்ளாகவில்லை நாம் மனத்தின் வழியே செல் லப் பார்க்கிறோம். அவர்களோ மனத்தைத் தம்வழிக்குக் கொணர்ந்து அதனைக் கடிவாளமிட்டு நடத்தி வாழ் வாங்கு வாழ்ந்து காட்டினார்கள்.
இன்று நம் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்க ளும் கூடி நற்பண்புகளுடனும் நல்லொழுக்கத்துடனும் வளர்ந்து வாழ உறுதுணையாக இருக்கக் கூடியது, சமயக் கல்வியாகும். 'கற்றதனாலாய பயனென்கொல்வாலறி
76
வன் - நற்றாள் தொழாரெனின்’ என்பது வள்ளுவர் வாக்கு. ஞானப் பாலை அருந்திய மூன்றுவயது பாலக னான 'திருஞான சம்பந்தர்’ தோடுடைய செவியன்’ தேவாரத்தைப் பாடி இறைவனின் அடையாளத்தை சைவப் பற்றுடைய தந்தையான சிவபாதவிருதயருக்கு உணர்த்தினான். அந்தப்பால் மணம் மாறாத வயதிலேயே அவருக்கு அத்தகைய அருட்பேறு கிடைத்தது. இறைவ னைக் கண்டு புகழ்ந்து பாடுவதற்கு அந்தக் குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தந்தையார் சீர்காழியில் யாகஞ் செய்ய வேண்டி ஞானசம்பந்தரை பொன் பெற் றுத் தருமாறு கேட்க, அவரும் ஆவடுதுறை மேவிய ஈசனிடம் "உனது திருவடியைத் தொழு தத் தவிர வேறெதுவும் அறியேன். என்னிடம் செல்வம் இல்லை. நீயே அருள் புரியவேண்டும். என்று இறைவனை இறைஞ்சி இடரினும் தளரினும் என்ற பதிகத்தைப் பாடி அருளினார். இறைவனும் வேண்டியது வேண்டியபடியே கொடுத்தருளினார். நமது சமயம் ஆன்மவளர்ச்சிக்காக கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை உணர்த்துவதுடன் ஆன்றோர்களின் அமுதவாக்குகள், அருள்வாக்குகளாக ஒலித்து தியானம், ஜப, தபம், நல்ல, பழக்கவழங்கங்கள், ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகும்படியும், செம்மையான வாழ்க்கை நடத்தவும், வழி வகுத்துக் கொடுக்கிறது. நமது, சமயம் குவளையில் அடங்கிய தண்ணிரைப் போன்றதல்ல. இந்தக் குவலயத்தையே மூடிமறைக்கக் கூடிய தெய்வீகக்கடல். அதனைச் சிறுக சிறுக நம் பிள்ளைகளுக்கு ஊட்டி வர முயற்சித்து பயன்பெற வேண்டுமென ஆசைப்படுகிறேன். இப்பொ ழுதெல்லாம் நம்மலைத் திருநாட்டில் ஆங்காங்கு தமிழா சிரியர்கள் சமய கலாசார மன்றங்கள் அமைத்து சமயப்ப ணிகள் செய்து வருவதையறிந்தும் நம்குழந்தைகளுக்கு இளமையிலேயே சமயத்தையும், கலாச்சாரத்தையும் போதித்து நல்லொழுக்கமும், நல்லபண்பாடும், தெய்வ
77
Page 41
பக்தியும் நிறைந்த நல்ல குடிமக்களாக உருவாக்குவதைக் காணப் பேருவகை ஏற்படுகிறது. 'அரிது அரிது மானிட ராதல் அரிது’ என்று நம் மூதாட்டி ஒளவைப்பிராட்டி கூறியுள்ளார். இவ்வரிய பிறவியை நல்லமுறையில், நல் லவழியில் நடத்தி சமய வழியைப் பின்பற்றிச் சென்றால் நாம் வாழ்க்கையில் தூய இன்பத்தைப் பெற முடியும், நல்லொழுக்கம், நல்லபண்பாடு, தெய்வபக்தி, சமயக் கல்வி, ஆகியவற்றை ஊட்டிவளர்த்தால், நாளடைவில் அப்பிள்ளை நல்ல சமுதாயத்தை வாழையடி வாழையாக உருவாக்கி அதனைக்கட்டிக் காத்து மக்களை பேரின்பத் தில் திளைக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
உள்ளத்தனையது உயர்வு
‘மாமியார் வீடு மகாசெளக்கியம்; நாலுநாள் சென்றால் நாய்படாப்பாடு’ என்று புகுந்தவீட்டில் காலடி எடுத்து வைத்த புதுமணப்பெண்கள் குறைப்பட் டுக்கொள்வது புதுமையல்ல. ஒவ்வொருமாமியாரும் ஒருவீட்டுமருமகளாக இருந்து நாய்படாப்பாடு பட்டவ ராகவும் இருந்திருப்பார். எனவே, இந்தக் குறையைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பது தவறு.
அன்பும், இரக்கமும், அறப்பண்பும், பேணும் தன் மையும் பெண்ணிடத்தில் மிகுந்து இருப்பதாலேயே குழந்தைப்பேற்றை பெண்ணுக்கே அளித்தான் இறைவன்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ என்கிறார் வள்ளுவர் -
78
மாமியார், மைத்துனர், நாத்தனார், என்பவர்களுக்கிடை யில் பலதரப்பட்ட பிரச்சனைகள் எழலாம். மாமியாரைத் தன் தாயாராக நினைத்து, அன்புசெலுத்தி, அவர் "எள்’ எனும் முன்னே எண்ணையாக நின்றால், குறை ஏன் வரப்போகிறது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனைய (து) உயர்வு - வெள்ளம் உயர உயர மலரின் நீளம் உயர்வதுபோல், உள்ளம் உயர உயர, நமது உயர்வும் உயரும் என்கிறார் வள்ளுவர். புகுந்தவீட்டில் உள்ளவர்களை நாம் சுமையாகக்கருதி நடக்கக்கூடாது. நம்வீட்டில் நாம் பெற்றோர், அண்ணன், தம்பி, அக்காள் தங்கையுடன் வாழவில்லையா? ஒற்றுமையாய் இருக்க வில்லையா? அதேபோல் பெண்கள் தாங்கள் புகுந்தவீட் டிலும், அன்புடனும், அடக்கத்துடனும், பண்புடனும் பழகல் அவசியம். தன்கடமைகளைச் செய்வதில் சோம் பலோ, விருப்புவெறுப்போ, இருக்கக்கூடாது. முப்பத்தி ரண்டு பற்களுக்கிடையே சுழன்றுவரும் நாவானது எவ்வ ளவு சாமர்த்தியமாக, தன்னைச்சுற்றியுள்ள பற்களால் கடிபடாது, சமாளிக்கிறதோ, அந்தமுறையில் பெண்ணா னவளும் சாமர்த்தியமாகவும், சமயோசிதமாகவும், இருத் தல் அவசியம். தூற்றும் பெண்டீர் கூற்றெனத்தகும். என்று, புகுந்தவீட்டாரையோ, கணவனையோ, தூற்றித்தி ரியும் பெண்களை யமனுக்கு ஒப்பிடுவதன் மூலம், குடும்பத்திற்கு ஒவ்வாதவளை இழிவுபடுத்துவதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். எனவே அத்தகைய இழிவுப டுத்தும் பெயருக்கு ஆளாகாமல் தத்தம் குடும்பக்கடமை களை ஒழுங்காக, செவ்வனே செய்துவரின் மாமியார் மெச்சும் மருமகளாக முடியும். அண்ணியாக முடியும். கணவனுக்கேற்ப நல்ல மனைவியாகவும் அமைய முடி யும். குழந்தைகளுக்கு அன்பான நல்ல தாயாக முடியும்.
79
Page 42
பொது அறிவை வளர்ப்பீர், பொறுப்புணர்ச்சி பெறுவீர்.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள், தன்னம்பிக்கை, பயமின்மை, இவ்விரண்டும் ஒருவ னுக்கு இருந்தால்தான் அவன் உயர்வடையவோ, வழி காட்டியாய் அமையவோ முடியும். இது விஞ்ஞானயுகம் மட்டுமல்ல, அளவுக்கு மீறிய நவநாகரிகயுகம்.ராக்கெட் வேகத்தில் இந்த மோகம் மேலோங்கியுள்ள காலம். இதில் நம் குழந்தைகளோ, பெண்களோ எக்காரணம் கொண்டும் இத்தகைய நாகரிகச்சுழலில் சிக்கிச் சீரழியா மல் தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். "கானமயி லாடக் கண்டிருந்த வான்கோழி’ போல் நம்பிள்ளைகள், பெண்களின், நாகரிகம் வந்துவிடக்கூடாது. நாகரிகம் என்பது அழகிய பங்களா, கார் நவநாகரீக உடைகள், ஆபரணங்களில் அடங்கியிருக்கவில்லை. மக்களுக் குள்ளே சிறந்த நற்குணங்கள், பரோபகார சிந்தை, உயர்ந்த கல்வி ஞானம், தெய்வநம்பிக்கை, ஆகியவையே உயர்ந்த நாகரிகச் சின்னங்களாகும். இவைகளை நம்குழந் தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் வளர்த்துக் கொள் ளல் அவசியம். குறிப்பாக சமயக்கல்வியைப் புகட்டுவத னால் பிள்ளைகளுக்கு தெய்வபக்தியும், தன்னம்பிக்கை யும் ஏற்படும். தன்னம்பிக்கை ஏற்படும்போது தன்னால் நல்லசாதனைகள் புரியமுடியும் என்ற எண்ணம் ஏற்படுகி றது. அது பரந்து விரிந்து செயல்படும்போது, நாட்டுப்பற் றும் ஏற்பட ஏதுவாகிறது. இதனால் நான், நாமாகி, நாம், நாடாகி நாடு நானிலமாக மாறவும், நம் கொள்கைகள் செயல்படுத்தவும் வழி ஏற்படுகிறது. சிறுவர்கள் பொது அறிவை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற இன்று
8O
எத்தனையோ மார்க்கங்கள் இருக்கின்றன. விளையாட் டுத்துறை, தொழிற்கல்வித்துறை, பொறியியல்துறை, வைத்தியத்துறை, சுகாதாரத்துறை, ஆசிரியத்துறை, சங்கி தத்துறை, நாட்டியத்துறை பெண்களுக்கும் மேற்குறிப் பிட்ட துறைகளிள் ஈடுபட்டு தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. தையல், சமையல், வீட்டை அலங்கரித்தல், கைத்தொழில் செய்தல் என்று எத்த னையோ விஷயங்களில் கவனம் செலுத்தியும் முன்னேற லாம். பொதுவாகப் பெண்களுக்கு மனோபலம் அதிகம். இமயச் சிகரத்தையே ஓர் இந்தியப் பெண் ஏறி வெற்றி வாகை சூடியுள்ளார். பாரதப்பிரதமர் இந்திரா காந்தி உலகின் சிறந்த பிரமுகராக வெளிநாட்டுப் பத்திரிகைகள் தேர்வு செய்துள்ளன. இப்படி எத்தனையோ கணக்கில டங்காத பெண்மணிகள் அதுவும் தமிழ்ப்பெண்மணிகள் பலவிதமான துறைகளில் ஈடுபட்டு புகழ்ஏணியில் உச்சி யில் இருப்பதைக்காண முடிகிறது. அறிவு இயற்கையா கவே பெண்களிடத்தில் மிகவும் கூர்மையாக அமைந்துள் ளது. சமயோசித புத்தியுடன் நடக்கக்கூடிய திறமையும் சமயத்தில் உண்டு பெண்களிடம் . பெண்ணிற்கு தமிழகம் கொடுத்துள்ள பெருமை, கெளரவம், மதிப்பு, சிறப்பு, வேறு எந்தநாட்டிலும் தரப்படவில்லையென்றே சொல் லலாம். நீதி நெறிகளைப் புகட்டிய ஒளவையார், சைவச மயத்தைப் பேணிக்காத்து உயிர் கொடுத்த திலகவதியார், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் வைண வத்தின் மகிமையை உணர்த்திய ஆண்டாளம்மையார், சங்ககாலத்துப் புலவர்களாகியல் காக்கைப்பாடினியார், நச்சென்னையார், சாவித்திரி, நளாயினி, தமயந்தி, வாசுகி, கண்ணகி, இன்னும் கணக்கற்ற பெண்மணிகள் பெண்ணுலகிற்கே என்றென்றும் அழியாப்புகழைத் தேடி வைத்தார்கள். இப்படிப் புகழ்வாய்ந்த கற்புக்கரசிகள் சரிதைகளைப் படித்து உய்த்து உணர இந்நாட்டில் வதி யும் ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணும் முன்வரல்வேண்டும்,
81
Page 43
இந்த இன்பத்திற்கு காரணம் அறிவு.
“தொட்டனைத் தூறும் மணற்கேனி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்கிறார் வள்ளுவர். ஆதலால் ஒவ்வொரு குழந்தையும் சரி, பெண்களும் சரி, அறிவு நூல்களையே விரும்பிப் படித்து முன்னேற வேண்டும். அறிவுநிறைந்த ஆன்றோர் பேச்சைக் கேட்கவேண்டும். 'இனிது இனிது அறிவுள் ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே’ என்று ஒளவைப்பிராட்டியார் பாடியுள்ளார்.
எனவே இந்நாட்டுப் பெண்மணிகளும் கிடைக்கும் ஒய்வு நேரங்களில் அறிவு நூல்களைப் படித்தும், படிக்கா தவர்க்குப் படித்துக்காட்டியும் செய்து வந்தால் பொது அறிவும் தானாகவே வளர்ந்து நற்பயனைத்தரும் என்ப தில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.
பெண்களே சற்றுப் பொறுங்கள்.?
இன்றைய இள்ம்பெண்களே நாளைய தாய்மார்கள் ஆகலாம். பருவவயதில் நிற்கும் இளம்பெண்களுக்கு நாகரீகம் என்ற போலிப் போர்வையில் எத்தனையோவி தக் கோளாறுகள், குறைபாடுகள், இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. கடலின் அலைகளானது எப்படி ஒருகணமும் ஓயாது உயர எழுந்து கீழேயிறங்கி, மீண்டும் மேலெழுந்து, அப்படியே மீண்டும் இறங்கித் தன்தொழி லைச் செய்து கொண்டிருக்கிறது. அது ஒயட்டும், அப் போது குளித்துக் கொள்வோம். என்று நாம் சொல்லிக் காத்திருக்க முடியுமா? அலைகள் ஓயாது ஒழியாது தன்க டமையைச் செய்து கொண்டேதான் இருக்கும். குளிக்க விரும்பும் நாமும் நம் வேலையைச் செய்யத்தான் செய் வோம். அமுக்கவரும் அலைகளைக்கண்டு குளிக்கச் செல்
82
பவன் பின்வாங்குவதில்லை. இதேபோல இளம்பெண் கள் தம்வாழ்வில் குறுக்கிடப்போகும் குறைபாடுகள், இடையூறுகளைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பாரத நாட்டில் கற்புடைமையைப் பேணிக்காத்தவர்கள் பெண்கள். எப்படிப்பட்ட துன்பமோ, தீமையோ நாட் டிற்கு வந்தாலும், தம் கற்புக்கு இழுக்கு வராது காத்துக் கொண்டார்கள். அந்தப் பாரம்பரியத்தில் தோன்றிய வாரி சுகள்தான் நாம், என்று இங்குள்ள ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் நினைத்துக் கொண்டாலே போதும். அவர்க ளுள் உணர்ச்சிகளைத் தூண்டும் பருவக்கோளாறு நீரில் பட்டதணல் எப்படி அணைந்து அடங்குமோ, அப்படி அழிந்து விடும்.
நல்ல அறிவுபுகட்டும் நூல்களைப்படித்து அறிவை விருத்தி செய்தல் ரொம்ப ரொம்ப அவசியம். காம உணர்ச்சிகளைத்தூண்டும் நூல்களை ஒதுக்கிவிடல் வேண்டும். வேலைபார்க்கும் இளம் பெண்கள் ஆண்களு டன் சரி சமமாக வேலை பார்க்கிறார்கள். வருவாய்க்காக வேலை செய்தே ஆக வேண்டிய நிலையில், பெண்கள் ஆண்களுடன் கலந்தே பழகவேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. வீண்பேச்சுக்கள், விளக்கங்களைத் தவிர்த்து ஆண் களுடன் அளவுடன் பழகினால் பிரச்சினைகள் ஏற்ப டாது, மனக்கட்டுப்பாடு அத்தியாவசியமான ஒன்று. பெண்கள் பாதை தவறினால் நிச்சயமாக உபாதைக்குள் ளாக வேண்டி நேரிடும். எனவே ஒழுக்கம், அடக்கம், நாணம் ஆகியவற்றை கவசங்களாக அமைத்துப் பண் போடு பழகல் வேண்டும். 'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் - என்கிறார் வள்ளுவர். வீட்டுக்கு உரியவளே பெண்தான். பெண் இல்லாமல் வாழ்வேயில்லை. குடும்பநிர்வாகமே ஒரு பெண்ணின் கையில்தான் இருக்கின்றது என்றால் மிகையாகாது. ஆண் உழைத்துத்தர பெண் அதனைச் சிக்கனமாய், செலவு செய்து, வீட்டுக்குவேண்டியவற்றை அளவோடு வாங்கிச்
83
Page 44
சமைத்துப் போடுவாள். திட்டமிட்டுச் செலவு செய்வதில் திறமைமிக்கவள் பெண்தான் என்று சொன்னால் மிகை யாகாது. வரவுக்கு மிஞ்சிச் செலவளிக்கின்ற மனை யாளை 'அட்டமத்துச்சனி’ என்று ஒளவையார் கூறுகி றார்.
“காலையிலே பல்கலைநூல் கல்லாத் தலைமகனும் ஆலையெரி போன்ற அயலானும் - சால மனைக்கட்டழிக்கு மனையாளும் இம்மூவர் தனக்கட்டமத்துச்சனி,’ - என்கிறார்
எனவே, நாளைய தாய்மார்களாகத் திகழவிருக்கும் இன்றைய இளம் பெண்கள், கருத்துக்களைச் சிதறவி டாது, கண்ணியமாய், கட்டுப்பாட்டுடன் வாழப்பழகல் வேண்டும். நற்பலனை அடையவும் வேண்டும் என்று விழைகிறேன்.
அகப்பை பிடிக்கும் கை
அகிலத்தை ஆளுமா?
மிகக் கருமையான நிலக்கரியிலிருந்துதான் விலை மதிப்பற்ற வைரமே கிடைக்கின்றது, என்பது தெரிந்த விஷயம், அப்படிக் கிடைக்கும் போது அதுதான் பின், கண்களைப் பறிக்கும் வகையில் மின்னப்போகும் விலை யுயர்ந்த வைரம் என்பதை நாம் முதலில் கண்டுகொள்ள முடியாது. அதை முறையாகப் பட்டைதீட்டத் தெரிந்த ஒருவனிடம் கொடுத்தால் அவன் சரியான முறையில் அதனைப் பட்டைதீட்டி, பல வர்ணங்களை ஒருங்கே
84
ஜொலித்துக் காட்டும் வகையில் விலையுயர்ந்த வைர மாக்கி விடுவான். பெண்ணானவள் விலையுயர்ந்த வைரத்தைப் போன்றவள் அழகின் பொக்-கி ஷம். வைரத்தை வைரத்தால் தான் வெட்டமுடியும். அதே போல் சிறந்த நலன்களையுடைய ஒரு பெண்ணை, இன்னொரு பெண்ணால் உணரமுடியும். வைரம் கொல்ல வல்லது. கற்புக்கரசியான பத்தினியும் தனது கற்புக்குப் பங்கம் வருமானால், தன்னையோ காரணகர்த் தனையோ கொல்லவல்லவளே.
“கற்றும் தெளியார் காடேகதியாய் கண்மூடி
நெடுங்கானவான தவம் பெற்றும் தெளியார் நினையென்னில அவழ்
பெருகும் பிழையேல் பேசத்தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வைரப் பகைவர்
கெமனாய் எடுத்தவளே வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே என்று நவமணிகளில் வைரத்தையே முதன்மையாய் வைத்து அம்பிகைக்கு ஆயுதமாய் பாடியுள்ளார். எனவே, வைரத்தைப் பெண்ணுக்கு உவமை கூறுவதில் தவ றில்லை என நினைக்கிறேன்.
'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய் திட வேண்டுமம்மா என்று பாரதியார் பாடியிருக்கிறார். ஆனால், பெண்களாகிய நாம் அந்த அளவுக்குப் பெரு மைப்பட்டுக் கொள்வதில்லை. ஒரு சிறு துன்பம் வந்துவி டினும் 'பெண்ணாயே பிறக்கலாகாது’ என்று சலித்துக் கொள்கிறோம். ஒரு குடிகாரக் கணவனுக்கோ, சூதாட்டக் கணவனுக்கோ வாழ்க்கைப்பட்ட பெண் வாழ்க்கையில்ப டும் சீரழிவை நாம் அறியாமலிருக்க முடியாது. அடித்துப் பிடித்துச் சண்டைபோட்டு தாலியிலிருந்து அவளுடைய தன்னம்பிக்கையையே சிதைத்துச் சீரழிக்கும். கணவன்மா ரைக் கண்டிருக்கிறோம். 'கொண்டவன் தூற்றினால் கண்
85
Page 45
டவனும் தூற்றுவான்’ என்று சொல்வதுண்டு. கணவன் மனைவிகளுக்கிடையே குடும்பப்பிரச்சினைகளாகவோ அல்லது வேறுகாரணங்களினாலோ, கருத்து வேறுபாடு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். கொண்டவன் மனைவியைப் பற்றிப் பிறரிடம் குறைகூறினால் என்னா கும்? குடும்பத்தில் நிம்மதி ஏற்படாது.
சுற்றுப்புறத்திலுள்ளவர்கள் சரியாக எதையும் புரிந்து கொள்ளாது ஆளுக்கொரு நீதிபதியாக மாறி, விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனாலும் பாதிக்கப்பட்ட பெண்க ளின் மனோநிலை கவலைக்குரியதாகிறது. அவ்வேளை யில் தத்தமக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்யமுடி யாது. தமது கணவனையோ, பிள்ளைகளையோ கவனிக் கத் தவறுகிறார்கள். ஒருசிலர் வாழ அஞ்சித் தற்கொலைக் குக் கூடத்துணிகின்றனர். 'மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம்’ என்று பாரதியார் குமு றிப் பாடுகிறார். இப்படியான சூழ்நிலைகளுக்குத் தள் ளப்படும் பெண்களைப் பார்த்து. ஆண்கள் குணமழிந்து போய்விட்டாலும் எப்படியோ கடைத்தேற வழியோ வாய்ப்போ உண்டு. பெண்கள் குணமழிந்து போய்விட் டால் அதன்பின் மீட்சியே கிடையாது. எனவே ஒரு பெண்ணை மனைவியாய் ஏற்ற கணவன் வைரத்திற்குப் பட்டை தீட்டுபவன் போலிருந்தால், அந்தப்பெண் விலைமதிப்பற்றவளாய் சுடர்விட்டு ஒளிர்வாள். 'இல் லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை’ என்பார்கள். எனவே குடும்ப சூழ்நிலையை நல்லமுறையில் சமா ளிக்க ஒரு பெண்ணே திறவுகோலாயும், அளவு கோலா யும் இருக்க வேண்டும்.
'ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவரச்செய்வதே வாழ்க் கையின் மிகஉயர்ந்த தர்மம் என்ற கொள்கையைக் கீதை அழகாக, அமுதமாக உபதேசிக்கிறது. 'நெஞ்சம் வேண்டும் அதனூடே தெளிந்த நல்லறிவும் வேண்டும்’
86
என்கிறார் பாரதி. பெண்களே நாட்டில் மாமேதைகளை உண்டாக்கியவர்களும், எந்தக்காலத்திலும் உண்டாக்கப் போகிறவர்களும், ஆவார்கள். அதற்கேற்றபடி அவர்க ளுக்கு நல்ல கல்வியறிவு கிடைக்கச் செய்ய வேண்டும். நம்மவர்கள் தாமாகவே இவ்விஷயத்தில் பிரயத்தனம் செய்து பெண்களின் அறிவை சகலதுறைகளிலும் வளரச் செய்ய ஊக்கமும், ஆக்கமும் அளிக்க முன்வரவேண்டும். ஒருநாட்டின் எந்தவிதமான பெருங்காரியமும் கைகூடி வரவேண்டுமானால் அதற்குப் பெண்களின் ஒத்துழைப் பும் மனோபலமும் இன்றியமயைாதது என்று நான் சொல்லத் தேவையில்லை. ஈஸ்வரனுக்கே தேவிதான் -சக்தி, பெண்கள் எத்தனையோ துறைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தி வாழ்க்கையை மேம்படையச் செய் யமுடியும். வீரம் நிறைந்த பெண்மணிகளின் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்து அறியலாம். சமயத்தொண்டு, பொதுத்தொண்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பெண்மணிகளின் சிறப்பை அறிந்து அதன் வழி நடக்க லாம். 'தொட்டிலை ஆட்டும் கையால் செங்கோலையும் பிடிக்க முடியும்’ என்பது உண்மையே.
87
Page 46
விகடத் துணுக்குகள்:
ஒருவர்: ‘'என்னப்பா இது? உன் உடம்பிலே வரி வரியா சூடுவ்ைச்ச தழும்பாயிருக்கு?* மற்றவர்: "அதை ஏன் கேக்கிறீங்க? நம்ம அரசாங்கம் போடற வரிகளை தாக்குப் பிடிக்க மனசிலே தைரியம் இருக்காண்ணு பாக்கிரதுக்காக என் மச்சான் கிட்டே, கம்பியை நெருப்பிலே காய்ச்சி என் உடம்பிலே ஒரு வரி இழுடான்னேன். என்ன வஞ்சம் வச்சிருந்தானோ படு பாவி, பட படன்னு வரியா இழுத்திட்டான்!”
மோகன்: 'சாயிபாபா முடியாட்டமா நெறைய முடி வைச்சிருந்தியே, இப்போ என்ன, மொட்டையிலே முட்டை முட்டையா வீக்கத்துடன் நிக்கறே?’ சேகர்: "அந்தக் கண்றாவியை ஏம்பா கேக்கறே? போலீஸ் இன்ஸ்பெக்டரான என் மனைவி, முடியைப் பிடிச்சு முகத்திலே லாகவமா அறையறாளேன்னு மொட்டைய டிச்சேன், இப்போ என்னடான்னா லத்தியாலே என் மொட்டையைத் தட்டி முட்டை முட்டையா வீங்க
வைக்கிறா ராட்சஸி"
Ο Ο -X- -X-
கணவன் கொசு (மனைவியிடம்) 'இந்தா, உன்னைத் தான்? தட்டினா வந்திடுவேன், தடவினா போயிடுவேன் என்ன, புறப்படவா?” மனைவிகொசு: ‘'என்னங்க! நேரகாலமில்லாம தட்டவும் தடவவும் சொல்றீங்க!” க.கொசு: "அட நீ ஒண்ணு! உன்னைத் தட்டவோ தட வவோ சொல்லலை. நான் மனுஷாளைக் கடிச்சு இரத்தம்
88
உறிஞ்சிறப்போ தட்டுவாங்க பாரு! அப்போ, கை இடுக்கு வழியா எப்படியும் தப்பிச்சுக்குவேன். ஆனா, தட்டாம தடவித் தேய்த்தாங்களோ, அவ்வளவுதான். உருத்தெரியாம செத்திடுவேன். அதைத்தான் அப்படிச் சொன்னேன்!’
மனைவி கொசு: ????
سحمد -حX۔ கணவன்: "ஏய் காவேரி நாக்கு வரட்சியா இருக்கு கொஞ்சம் தண்ணி கொண்டாயேன். மனைவி: 'கொஞ்சம் பொறுங்கோன்னா. கர்நாடகத்துக் காவேரி ஆத்திலேருந்து தண்ணி கேட்டிருக்காளோல் லியோ நம்ம மந்திரிமார். அதுவரட்டும் தர்றேன்." கணவன்: '(மகனிடம் தொண்டை கிழியக் கத்தி) டேய் கிருஷ்ணா? நீயாச்சும் தண்ணி கொண்டாடா.’ மகன்: 'நான் என்னப்பா செய்ய? ஆந்திரா முதல்வர் NTR. கிட்டே தண்ணி கேட்டிருக்காளே. அது வரும்வரை பொறுப்பா."
மகன்: 'அப்பா தெருவிலே பெட்ரோல் லாரி குடை சாய்ஞ்சிருக்காம். இருட்டாயிருக்கு, கை விளக்கை எடுத் துக்கினு வாப்பா சீக்கிரம் விளக்கு வெளிச்சத்திலே சிந்தாமே நெறையப் பிடிச்சிக்கலாம் பெட்ரோலை!’ அப்பா: "சரித்தாண்டா மவனே. நீ நல்லாப் பொழச்சிக் குவே. த்தா! அப்படியே நம்ம குடிசைக்கு ஒடிப்போயி என்னொட பாயிக்கி கீழே பீடி வெச்சிருக்கேன். அத்தெ யும் எடுத்துக்கிணு ஒடி வருவியாம். மத்தவங்களுக்கு முன்னாடி நாம நெறைய பிடிச்சுடலாம்!”
ஆசிரியர்: “டேய் கோபு சொல்லாமல் செய்வர் பெரியர். உதாரணம் காட்டி விளக்கம் கூறு'
89
Page 47
கோபு: 'உதாரணம், நம்ப கிளாஸ் ரவி, 'பெரியர் சார்! பரீட்சையின் போதுநான் சொல்லாமலே காப்பியடிச் சான் என் பரீட்சைத் தாளைப் பார்த்து’! ஆசிரியர்: ????
d 8 -X- -- --
ஒருத்தி: 'முன்பெல்லாம் வீட்டுக்காவலுக்குன்னு நாய் கட்டி வெச்சிருப்பாயே, அதை எங்கே காணோம்? செத் துக் கித்துப் போயிடுச்சா?* மற்றொருத்தி: "சே, சே, அப்படியொண்ணுமில்லே, வித்துப்புட்டேன்." ஒருத்தி: "அப்போ, உங்க வீட்டுக்காவலுக்கு இனி?’ மற்றொருத்தி: 'இவர் ‘ரிடையர்' ஆகிவிட்டாரே. வீட் டோடு தானே இருக்கப்போறார்?"
ஒருத்தி: ??? -X- م۔Xح-
மகன்: 'அப்பா (City) 'சிட்டியிலே பெரிய சிட்டி எதுப்பா?*
தந்தை: "நியுயார்க் சிட்டி?’ மகன்; 'போப்பா, நீ சுத்த மக்கு பெரிய "சிட்டி எலெக்ட்ரிசிட்டி யாக்கும்? நாம் அதைத் தொட்டாலே போதும். நேரே யமனுடைய "சிட்டிக்கே கொண்டு போயிடுமே. அதனாலே அதுதான் பெரிய 'சிட்டி இந்த உலகத்திலே!"
தந்தை: !!! ' &ح -Xح~ -
ஒருவன்: ‘'நீ எந்த "சிட்டி" (City) யிலே இருந்து வருகி றாய்???
மற்றவன்: 'யூனிவர்சிட்டியிலேருந்து!’
Φ 一※一 -حxم۔- -حمت۔
9 O
கடைக்காரர்: “டேய் பையா? நீ பக்கத்துக்கடையிலே வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, அதோ ஒருத்தர் சைக் கிள்ளே போய்கிட்டிருக்கிறாரே, ஒடிப்போய் அவரைக் கையோட கூட்டியா. ஒடு சீக்கிரம்!”
பையன்: 'சரி சார்!’
கடைக்காரர்: "(2 மணிநேரம் கழித்து வந்து பையனைப் பார்த்து) எங்கேடா ஆள்? ஏண்டா இம்பிட்டு நேரம்?’ பையன்: 'நான் என்ன செய்யறது சார் சைக்கிளை உருட்டிக்கிட்டே ஓடறத்துக்குள்ளாற அவர் மறைஞ்சிட் ι Γτ(I5. கடைக்காரர்: 'ஏண்டா? ஏறி ஓடாமே உருட்டிக்கிட்டுப் போனே??? பையன்: ‘'எனக்கு சைக்கிள் ஏறி ஒட்டத் தெரியாதே
- gFTIT --8حمامه -ح
d جمہ۔
சேகர்: ‘'என்னடா, தலை தெறிக்க இப்படி ஒடறே!”
கோபு: 'கிறேட் எஸ்கேப் "புடா?
சேகர்: "ஒஹோ! 'கிறேட் எஸ்கேப் படம் பார்க்க இப்படி ஒடுறியா?* கோபு: '(ஒடிக்கொண்டே) போடா, மடையா? பின்
னாலே பாருடா டைப்பிஸ்ட் லதா விரட்டிக்கிட்டு வர்றா, அந்தப் படத்துக்கு தன்னையும் கூட்டிப் போகட் டாம் என் கிட்டக் காசில்லேடா!'
(X' X. வண்ணான்: ‘'(மகனிடம்) யாரோ இப்படி வராங்க. பார்த்து அடிடா துணியை. s பையன்: '(வந்தவரை துவைத்த துணியால் அடித்து) அடிச்சது போதுமாப்பா?’
வண்ணான்: 'அட மடையா! வருகிறவங்க மேலே
9
Page 48
தண்ணி தெறிச்சிடாமேப் பார்த்துக் கல்லிலே அடி டான்னா, அந்த ஆளுமேலே துணியாலே அடிச்சிக்கிட்டு நிக்கிறியேடா??? பையன்: ‘'நீ தானே சொன்னே, யாரோ வாராங்க பார்த்து அடிடான்னு'
வண்ணான்: ???
ஆசிரியர்: '(மாணவனிடம்) பெஞ்சை விட்டு எழுந்தி ருடா. ’’ ஆசிரியர்: "(பெஞ்சிலிருந்து எழுந்துவிட்டு மீண்டும் உட்கார்ந்த மாணவனிடம்) டேய், பெஞ்சிலிருந்து எழுந் திருக்கச் சொன்னால், மீண்டும் உட்காருகிறாயே!” மாணவன்: 'சார், நீங்கள் தானே எழுந்து "இரு என்றீர்கள். அதனால் தான் எழுந்துவிட்டு மீண்டும் அமர்ந்தேன்!’ - 1957 ம் ஆண்டில் மலைமகளுக்காக எஸ்.வி.சுப்ரமணி யன் அவர்கள் அன்றைய எழுத்தாளர்களைப் பேட்டி கண்டது பற்றியது.
சிங்கை முதல் சிரம்பான் வரை
எஸ்.வி.எஸ் (சென்ற மாதத் தொடர்ச்சி)
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பலவீனம் உண்டு. அதைக்குறை என்று சொல்லக் கூடாவிட்டாலும், வேண்டாத ஒரு இயல்பு என்று சொல்லலாம், என்னிட மும் அத்தகைய 'தவிர்க்கமுடியாத இயல்பு', 'இருக்கக்
92
கூடாத ஒரு பண்பு இருந்தது. அதுதான் இயற்கையா கவே, பிற மனிதர்களுடன் சரியாகப் பேசிபழகத் தெரி யாத முறை.
சிறுவயது முதலே நான் மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவன் என்று, என் வீட்டிலேயே என் பெற்றோர்கள் கூறி வந்திருக்கிறார்கள். நான் உண்டு, என் காரியம் உண்டு என்ற தோரணையில், எனக்குள்ளாகவே ஒரு பெரிய சுவரை எழுப்பி நான் அதிலே வாழ்ந்து வந்தேன் என்று கூறுவது கூட மிகவும் பொருத்தமாக இருக்கும் வயது அதிகமாக, அதிகமாக, என் கூச்சம் வளர்ந்தது. நான்கு பேர்கள் மத்தியில் போய் ஒரு வார்த்தை பேசவே நான் நடுங்குவேன், பேசவேண்டாம், பேசக் கூடாது என்பதால் அல்ல, என்னையறியாமல் ஏதோ ஒன்று என்னைத் தடுத்து வந்தது.
மலாயா நாட்டிற்கு வந்த பிறகும் என்னுடைய இந்த இயல்பு மறைந்து விடவில்லை, ஆரம்பத்தில் என்னு டைய இந்த ‘ஒதுங்கிப்போகும் தன்மையைக் கண்டு பல அன்பர்கள் என்னைத் தவறாகக் கூட எண்ணியிருக்கிறார் கள். நான் மிகவும் கர்வி, மற்றவர்களுடன் பேசுவதைக் கூட கெளரவக்குறைவு என்று எண்ணும் அகம்பாவி, என்றெல்லாம் கூட என்னைப்பற்றி பலர் பேசியது என் காதுகளிலும் விழுந்தது. அதனால் தான் என்னுடைய இந்த பலவீனத்தைப்பற்றி சற்று விரிவாகவே இந்த இடத்தில், அவசியமில்லாததுபோல வாசகர்களுக்குத் தோன்றினாலும், குறிப்பிடுகிறேன்.
எழுத்துத்துறையில் நான் புகுந்த பிறகு, நண்பர்க ளின் பழக்கங்கள் அதிகரித்த பிறகு, முன்மாதிரி நான் விரும்பினால் கூட என்னால் ஒதுங்கி இருக்க முடிய வில்லை. திரு.கு.அழகிரிசாமி திரு.கி.மூர்த்தி போன்ற அன்பர்களின் தொடர்பினால் என் கூச்சம் ஒரளவு மறைந்து நான்கு பேர்கள் மத்தியில் 'அன்னியனாக' நடந்து கொள்ளாத அளவிற்கு நான் திருந்தியிருந்தேன்.
93
Page 49
ஆண்கள் மத்தியிலேயே இப்படி 'பயந்து சாகும்’ எனக்கு பெண்களிடம் இயற்கையாகவே கூச்சமும், பய மும் ஏற்பட்டிருந்ததில் வியப்பில்லை. ஒருவேளை இந்த குறையை வேறுவிதத்தில் ஈடு செய்யத்தான் நான் கதைக ளில் பெண்களைப்பற்றி எல்லாம் தெரிந்த மேதாவி போல வெளுத்து வாங்குகிறேனோ என்னவோ?
மு.தனபாக்கியம் வீட்டிற்குப் போக நான் இவ்வ ளவு 'முரண்டு செய்ததன் காரணம் வாசகர்களுக்கு இப்பொழுது நன்றாக விளங்கியிருக்கும்.
ஒரு வயதான அம்மாள் எங்களை வரவேற்று உபச ரித்தார்கள்.
‘நேற்று நீங்கள் வருவீர்களென்று எதிர்பார்த்தோம் ’ என்றார் தனபாக்கியம்.
'மழையினால் ஒருநாள் பிந்திவிட்டோம்’ என்றுப தில் சொன்னார் முத்தய்யா.
'ஒரு வேடிக்கையான சம்பவம் நேற்று நடந்தது. நேற்றுமாலை நீங்கள் வருவீர்களென்று நானும் அம்மா வும் காத்திருந்தபொழுது, தூரத்தில் இந்த வழியாக இருவர் வருவது தெரிந்தது. அதில் ஒருவர் கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தார். நான் இதற்கு முன் எஸ்.வி. எஸ்.ஸைப் பார்த்திராததால், அவரும் நீங்களும் தான் வருவதாக எண்ணினேன். வந்த இருவரும் நம்வீட்டைத் தாண்டி போனபிறகுதான் என்தவறு தெரிந்தது. எங்கள் ஆர்வத்தில் நீங்கள் இதற்குமுன் நம் வீட்டிற்க வந்திருக்கி றிர்கள் என்பது கூட மறந்துவிட்டது’ என்றார் தனபாக்கி யம்.
எல்லாரும் சிரித்தோம், சிறிது சிறிதாக என் கூச்சம் மறைய ஆரம்பித்தது. சோம. இராமசாமியும் சிறிது நேரத்தில் வந்து விட்டார்.
தனபாக்கியத்தின் அன்னையார் தான் என்மனதைப்
94
பல விதங்களில் கவர்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகம்; வந்திருக்கும் மனிதர்களின் மனநிலை தெரிந்து அவர்களுக்கேற்றபடி பேசும் சுபாவம்; இம்மலை நாட்டு சூழ்நிலையில் கூட தமிழர்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் தன் குடும்பத்தில் கடைப்பி டித்து வரும் சீரிய பண்பு; எல்லாவற்றிற்கும் மேலாக தெய்வபக்தி - சுருங்கக் கூறின் அவ்வம்மையாரை நான் கண்டு பேசியபொழுது, சிவப்பழமான, அனுபவம் நிறைந்த ஒரு பெரியவரிடம் ஏற்படும் உணர்ச்சி எனக்குத் தோன்றியது. தனபாக்கியத்தின் சகோதரர், சகோதரிகள், அத்தனை பேரும் எங்களிடம் சகஜமாகப் பேசினார்கள். நேரம் போனதே தெரியாமல் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
'நம் வீட்டில் நீங்கள் நாளை சாப்பிட வேண்டும்’ என்றார் தனபாக்கியத்தின் அன்னை, நாங்கள் விடை பெற்றுக்கொண்ட சமயத்தில்.
'நம் எஸ்.வி.எஸ். எந்த இடத்திலும் சாப்பாடை மட்டும் விட மாட்டார். அதுவும் விருந்தென்றால் அவ ருக்குப்போதும். நாங்கள் அவருக்கு சாப்பாட்டு ராமன் என்று பெயர் வைத்திருக்கிறோம்’ என்றார் முத்தைய்யா. அவர் சொன்ன பொய்யைக்கண்டு எனக்கு மிகுந்த கோபம் வந்தது. ஆனால் நல்ல வேளையாக அந்த அம்மையாரே எனக்கு ஆதரவாக பதிலளித்தார்.
'தம்பியைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரிய வில்லை. நீங்கள் எதையாவது சொல்லி, அவர் அப்புறம் நாளை ஒன்றுமே சாப்பிடாமல் இருந்துவிடப்போகிறார்
இரவு எங்கள் நண்பர் வீட்டில் உணவருந்திய பிறகு மறுநாள் காலை என்ன செய்யவேண்டும் என்பது பற்றித் திட்டமிட்டோம். நான் சொன்னேன்:
95
Page 50
'இதுவரை நீங்களே ஒவ்வொரு அன்பரையும் எனக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நாளை நான் உங்களுக்கு ஒரு நண்பரை."
'அது யாரய்யா எனக்குத் தெரியாத நண்பர்??? என்று இடைமறித்தார் முத்தய்யா.
'லாபுவிற்குப் போய் சி.வடிவேலு அவர்களைப் பார்க்கவேண்டும்’ என்றேன்.
'சரி போவோம்’
சிரம்பானிலிருந்து லாபு 12 மைல்கள். நாங்கள் காலை 10 மணிக்கு புறப்பட்டு லாபு போனோம். லாபு வில் இறங்கி ஒரு பள்ளியில் வடிவேலுவைப் பற்றி விசாரித்தோம். அவர் உள்ளே கிட்டத்தட்ட 2 மைல்கள் தள்ளியிருக்கும் எஸ்டேட்டில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. எங்களுக்குப் பெரிய ஏமாற்றம். ஏற்கெனவே அவர் இடத்தைத் தேடி அலைந்து விட்டோம். மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. மறுபடியும் எஸ்டேட்டிற் குள் போக நடக்கவேண்டும். பிற்பகல் உணவருந்த தனபாக்கியம் வீட்டிற்கும் திரும்பியாகவேண்டும். எங்க ளுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்.
'சரி. நாம் திரும்பவேண்டியதுதான். இன்னொரு முறை வரும்போது அவரைப் பார்த்துக் கொள்வோம்’ சிரம்பானுக்கு சரியா 1 மணிக்கு திரும்பினோம். அருமையான விருந்து தயார் செய்திருந்தார்கள் தனபாக்கி யத்தின் வீட்டில். இவ்வளவு பிரமாதமாக இருக்கு மென்று நான் எதிர்பார்க்கவில்லை.
தனபாக்கியத்தைத் தெரியாத வாசர்கர்கள் இருக்க முடியாதென்று நினைக்கிறேன். சிறு கதை எழுதி வரும் ஒரு சில பெண்மணிகளில் அவர் முதன்மையானவர். நிறைய கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியிருக் கிறார். சிரம்பான் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாகப்
96
பணியாற்றி வருகிறார். அத்துடன் சிறந்த சித்திரக்காரரும் கூட. அவர் வரைந்த சித்திரங்கள் சமீபத்தில் கூட ‘இந்தி யன் மூவி நியூஸ்" சஞ்சிகையில் வெளிவந்தன.
நல்ல சமயத்தில்தான் நமது கட்டுரை முடிகிறது. தனபாக்கியத்தைப் பற்றி எழுதும் பொழுது, அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் பற்றி எழுதும் வாய்ப்பு எனக்கு இந்த இடத்தில் கிடைத்திருப் பது எவ்வளவு பொருத்தம்.
சென்ற ஜூன் மாதம் 9ம் தேதி அவருக்கு சிரம்பா னில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தது. அவருக்கும் அவர் கணவருக்கும் என் சார்பிலும் மலைமகள் சார்பி லும், வாசக அன்பர்கள் சார்பிலும் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், அவர் இலங்கைக்கு சீக்கிரத்தில் சென் றாலும், இங்கு தன் எழுத்துத் திறமையால் நம் எல்லாரை யும் மகிழ்வித்ததுபோல, அங்குள்ள விஷயங்களை நமக்கு எழுதி, நமக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை மென்மேலும் பலப்படுத்துவாரென்ற நம்பிக்கை தெரி வித்துக் கொள்கிறேன்.
கடைசியாக ஒரு சில வர்த்தைகள்: இந்தக் கட்டு ரையை நான் தொடங்கிய காலத்தில் உண்மையிலேயே எனக்கு பயங்கலந்த உணர்ச்சி ஏற்பட்டது. அதற்கேற்ற படி என் ஆருயிர் நண்பர் ஒருவர் 'உமக்குச் சிறு கதை தவிர வேறு ஒன்றும் எழுதவராது. ஏன் வீணாக கண்டதை யெல்லாம் எழுதி ஒரளவு இருக்கும் நல்ல பெயரையும் கெடுத்துக்கொள்கிறீர்!’ என்று சொல்லிவைத்தார்.
பிறகு திரு.முத்தய்யாவின் வற்புறுத்தலின் பேரில் முதல் பகுதியை எழுதி முடித்தேன்.
வாசகர்கள் அதற்கு அளித்த அமோக வரவேற்பு எனக்கே திகைப்பையும், மகிழ்ச்சியையும், கொடுத்தன, நேராகவும், கடிதங்கள் மூலமாகவும் அவர்கள் என்னைப் பாராட்டி, இன்னும் சுவையுடன் எழுத உறுதியையும்
97
Page 51
உற்சாகத்தையும் கொடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால், என் சிறு கதைகளைவிட இந்தப் பிரயாணக் கட்டுரைதான் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தி ருக்கிறது என்று கூடச் செல்லலாம்.
வாசகர்கள் என்பால் காட்டிய அன்பிற்கும், பாராட் டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையின் மூலம், எங்கள் சிங்கை விஜயத்தின் போது எங்களை உபசரித்து, அன்பு செய்து, எங்களுக்குப் பல நண்பர்களை பழக்கம் செய்து வைத்த எழுத்தாள அன்பர்களையும் மற்றவர்களையும் ‘மலைமகள்’ மூலம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற எங்கள் எண்ணம் பூர்த்தியடைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
(b.الUpbgD))
98
'திருமுகம்" சஞ்சிகையில் வெளியானது. 14.1.1955.
தமிழர் திருநாள்.
மு.தனபாக்கியம் தமிழர் திருநாள்
கொண்டாடப்படுவது உண்மையில் நமது தொன்மை வாய்ந்த கொள் கைகளுள் ஒன்றாகிய 'தைப்பொங்கல்’ என்ற திருகாளை முன்னிட்டே. தமிழர் திருநாளை எவரும் கொண்டாடலாம். இந்நன் னாளைக் கொண்டாடுவ தற்கு ஜாதி, மத, பேதம் முட்டுக்கட்டை போடாது. கிறிஸ்துவம், இஸ்லாமியர், தமிழர், சீனர், மலாய்க்காரர் - விரும்பும் எவரும், எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இப்புனித நாளா கிய தமிழர் திருநாளை பூரண உரிமையுடன், பாகு பாடின்றிக் கொண்டாடலாம். தமிழர் திருநாள், தமிழருக் காக மட்டும் பிரத்தியேகமாக உள்ள் நாள் எனக் கருதுவது தவறு. உழவுத் தொழிலைக் கொண்டு நாட்டை உய்ய வைக்கும் எந்நாட்டைச் சேர்ந்தவரும் உரிமையுடனும், பெருமையுடனும் கொண்டாட வேண்டிய நன்னாள் இந்நாள்.
இன்று, தமிழர் திருநாளை ஒவ்வொரு தை மாதத்தி லும், தமிழர் சிறப்பாகக் கொண்டாடத் தவறுவதில்லை. வீட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் இன்னும் தைப்பூ சம் போன்ற தொன்மை வாய்ந்த கொள்கைகள் இன்றை
99
Page 52
யத் தமிழருடைய எண்ணத்திலிருந்து விடுபடாதிருத்தல் விந்தையிலும் விந்தையே! காரணம், தமிழனின் கொள் கைள் இனிமையான, உறுதியான, ஆழ்ந்த கருத்தைப் பயக்குவன வாதலால், அவைகளை எக்காலத்திலும் தகர்க்க முடியாது. மேலும், 'பொங்கல்’ என்றவுடன் நமக்குத் தயக்கமில்லாமல் பால், நெய், சர்க்கரை, பழம் இவைகளெல்லாம் கலந்த அன்னம் என்ற எண்ணம் உடனே உதிக்கிறது. 'தமிழ்’ என்ற சொல்லுக்கே, இன்பம் ‘இனிமை’ என்பது பொருள். ஆகவே, தமிழ் நாட்டிலி ருந்து வரும் எவ்விதப் பழமை வாய்ந்த கொள்கைகளாயி னும் அவை இனிமை வாய்ந்தவையே, கரும்பில் எப்பக் கம் இனிக்கிறது என்று யாராவது கேட்பார்களா, என்ன?
பொங்களுக்குத் தலைநாள் போகிப்பண்டிகை. பண் டையத் தமிழர் போகி எனப்பட்ட இந்திரனை, மேகங் களை இயக்குபவனாகவும், விளைநிலங்களின் இறைவ னாகவும், வைத்து வழிபட்டார்கள்.
“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க” - வேண்டும் என்று அவ்வானவனைத் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். அந்நாளில் சிறப்பாக நடத்தப்பட்ட
அத்திருநாள், இப்பொழுது நடைபெறுவதே அருமையி
லும் அருமையாகி விட்டது. ஆனால் போகிப் பண்டி கையை அடுத்துவரும் பொங்கற் புதுநாள் அன்றும், இன்றும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின் றது. அன்று 'புதியன புகுதலும், பழயன கழிதலும்’ நிகழும். சூரியோதயத்தில் புதுப்பானைகளில் பெண்கள் பொங்கும் உள்ளத்துடன் பொங்கல் பொங்குவார்கள். பால் பொங்குகையில் 'பொங்கலோ பொங்கல்’ என்ற மங்கல ஒலியை எழுப்புவர். பின்பு, 'பூவும், புகையும் பொங்கலும் கொண்டு இல்லுறை தெய்வத்தை வணங்கி வயிறார உண்டு மகிழ்வர்.
1 OO
பொங்கலுக்கு அடுத்து நிகழ்வது மாட்டுப் பொங்க லாகும். நாட்டுப் புறங்களில்தான் மாட்டுப் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். உழவருக்குக் கழனியிற் பணிசெய்யும் காளை மாடுக ளும், காலையும், மாலையும் பாலளிக்கும் கறவை மாடுக ளும் ஜீவநாடி போன்றவை. மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்று பொருள் சொல்வார். விளை நிலத்தில் ஏர் இழுப்பது மாடு; மரம் அடிப்பது மாடு; அறுவடைக் காலத்தில் சூடடித்துக் களத்து நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பதுவும் மாடு. இதுவன்றி பாலும், நெய்யும் தந்து மாந்தர் உடலைப் பாதுகாப்பதும் மாடன்றோ? மேலும் சாந்தமே உருவான பசுவானது, தன் கன்றுக்கு உரிய பாலைக் கவர்ந்து கொள்ளும்; கல்நெஞ்சருக்கும் கரவாது பால் கொடுக்கும் கருணை வாய்ந்தது 'அறகதரு நெஞ் சோடு அருள் சுரந்து பால் ஊட்டும், பசுக்களை ஆதரித்தல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை.
'தமிழர் திருநாள் கொண்டாடுவதற்குக் காரணகர்த் தாக்கள் யார் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்; நன்கு புரியவும் வேண்டும்.
‘மேழி பிடிக்கும் கை, வேல்வேந்தர் நோக்கும் கை, ஆதி திரிந்தே அருளும் கை - சூழ்வினையை நீக்கும் கை என்றும் நிலைக்கும் நீடுழி காக்கும் கை காரளர் கை, - என்ற பாட்டின் மூலம் உழவன் கையைப் புகழ்ந்து பாடினார் கவிஞர். பயிர்த்தொழிலே நாட்டின் ஜீவநாடி. இத்தொழில்தான் மக்களின் பொல்லாப்பசியைப் போக்கி, நல்லறத்தை நிலைநாட்டுவது.
இத்தகைய சிறந்த தொழிலைச் செய்யும் உழவனின் பெருமையெல்லாம் அவன் உழைப்பின் பெருமையேயா கும். உழவன் எந்நாளும் உழைப்பாளன்; நெற்றி வியர்வை நிலத்தில் விழ வஞ்சகமின்றிப் பாடுபடுபவன்
1 O1
Page 53
விளை நிலத்தை உழுது பண்படுத்தி, பருவத்தே பயிர் செய்து, கண்ணுங் கருத்துமாகக் களையறித்து நீர் பாய்ச்சி, பயன் விளைவிப்பது உழவன் புரியும் பணி.
'சீரைத் தேடின் ஏரைத்தேடு" என்று ஏரின் மகி மையை வானளாவப் புகழ்வதற்கு, பணிவதற்கு, வாழ்த் துவதற்கு இந்த அரிய திருநாள் தான் உகந்தது, ஆம்! ஏரே நிலத்தைச் சீர்படுத்துவது; ஏரே பசிப்பிணியை வேரறுப்பது; ஏரே இனிமை தருவது; இன்பம் பயப்பது. உழவுத் தொழிலுக்கு வேறிரண்டு பெயர்கள்; வேளாண்மை, விவசாயம் என்பனவாகும். வேளாண்மை செய்பவர் வேளாளர்; அதாவது உழவர். இந்தியாவில் வேளாளருக்கு அன்றும் இன்றும் தனிச்சிறப்புண்டு. இவர்கள் நம் நிலத்தை உழுது பயன்படுத்தினார்கள். தமது உழைப்பின் பலனால் கிடைத்த உணவுப் பொருள் களை எல்லோர்க்கும் தந்தார்கள். அற்றாரையும், அலந்தா ரையும் ஆதரித்தார்கள். இன் முகத்துடன் பசித்தோர் முகம் கூர்ந்து பரிவுடன் உபசரித்தார்கள். அதனால் வேளாண்மை என்ற சொல்லுக்கே உபகாரம் என்னும் பொருள் வந்தது. திருக்குறளிலும் திருவள்ளுவநாயனார், இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" -
என்று வேளாண்மைக்குப் 'பரோபகாரம்’ என்ற பொரு
ளைக் காணவைக்கிறார்.
இத்தகைய வேளாளர் பிடிக்கும் ஏரடிக்கும் சிறு கோலை அழகிய பொருளாக அன்றும் இன்றும் நம் தமிழ் மக்கள் கருதி வந்திருக்கின்றனர். கோணல் மாணலாக வும், கட்டை நெட்டையாகவும், கரடு முரடாகவும் இந்தக் கருவியில் நம் மக்கள் அழகைக் காண்பதில்தான், தமிழ் மக்களின் பெருமையும், பண்பாடும் நன்கு தெளி வாகிறது.
பயிர்த்தொழில் செய்வதற்கு ஏர் இன்றியமையாதது.
1 O2
ஏர் இல்லாக் குடியானவனுக்கு ஏற்றமில்லை.
“ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச் சென்றுவர அணிந்தாய்ச் செய்வாரும் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறமும் நாட்டில் நிலைபெறுவதற்க வேளாண்மை முட்டின்றி நடைபெறல் வேண்டும் என்பது தமிழ்நாட்டார் கண்ட உண்மை. அந்நாளில் வேளாளர் சிறந்த குடிகளாகக் கருதப்பட்டார்கள். அறத்தையும் அறிவையும் வளர்ப்ப தற்க இன்றியமையாத வளத்தை நாட்டிலே பெருக்கிய வர்கள் அவர்களே. இத்தகைய பெருமக்கள் இருத்தலா லேயே உலகம் நிலைபெற்றிருக்கிறதென்று இளம் பெரு வழுதி என்னும் பாண்டியன் பாடினான்.
முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே ஒரு திரும ணம் நடந்தது மன்னன் மகனுக்கு. மன்னரும், முனிவ ரும், குடிகளும், படைகளும் மற்றும் பாவலரும், நாவல ரும் திருமண வைபவத்தைக் கண்டு களிக்க கூடியிருந்த னர் ஒளவையாரும் அங்கே வந்திருந்தார் திருமணம் இனிது முடிவுற்றது. மங்கல வாழ்த்து தொடங்கிற்று. முனிவர் ஒருவர் எழுந்து 'மணமக்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்தினார். மற் றொரு முனிவர், 'இளவரசு வாழையடி வாழையென வையகத்தில் வாழ்க, என்று வாழ்த்தினார். ஒளவையார் எழுந்தார் ‘அரசே, உன் நாட்டில் வரம்புயர்க’ என்று வாழ்த்தினார். அவ்வாழ்த்துரையின் பொருளும் பொருத் தமும் அறியாத சபையோர் ஒருவரை ஒருவர் வியப்புட னும் திகைப்புடனும் நோக்கினர். அது கண்ட ஒளவைப் பிராட்டியார் வாழ்த்துரையின் கருத்தை விளக்கினார். 'சபையோர்களே! வரப்பு உயர்க என்று இளவரசை நான் வாழ்த்தினேன். நிலத்தில் வரப்பு உயர நீர் உயரும், நீர்
1 O3
Page 54
உயர, நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயர்வான்’ என்று தமிழ்நாட்டின் கொள் கையை இவ்வாறு சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். உழவனே நாட்டின் உயிர் நாடி. 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி என்றார் வள்ளுவர். "அரச னது செங்கோலை நடத்தும் கோல் உழவன் ஏரடிக்கும் சிறுகோலே என்றார் கம்பர்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லார் தொழுதுண்டு பின் செல்பவர் - என்பது எத்தகைய உண்மையைப் பயக்குவதாய் இருக்கி Digil.
வையத்தை வாழவைக்கும் - சுயநலமின்றிப் பொது நல சேவை செய்யும் உழவனின் பெருமையை, தியாக உணர்ச்சியை நாம் ஏட்டில் எழுதுவதற்கே கொள்ளாது. உழவன் தனது உண்டியைச் சுருக்கி, அல்லும் பகலும் அயராதுழைத்து அண்டத்தை வாழ வைக்கிறான். அவனு டைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் வகையி லும், ஒவ்வோராண்டிலும் தை மாதத்தில் ஒருநாள் ஒற்று மையுடன் நாமும் உழவன் பாடுபட்டதின் பலனை அநுபவித்து இன்புறுவதற்காக தைப்பொங்கல் இருக்கி றது. இவ்வுயர் தனித் தமிழர் திருநாளென்னும் பொங்கல் திருநாளை, தமிழர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் தமிழர் திருநாளை, தமிழர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் தமிழர் திருநாள் இக்கட்டுரைகள் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு தைப்பொங்கலை விமரிசையாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாயிருக்கிறது. ஏன், தமிழர் திருநாளும், தைப்பொங்கலும் ஒன்றுதானே? ஆனால் இவ்விரண்டு பெயர்கள் இருப்பினும், தமிழர் திருநாள் தைப்பொங்கலின் பெருமையையும், கீர்த்தியையும் குன் றின் மேலிட்ட விளக்கப் போல் மேலும் பிரகாசிக்க செய்கிறது எப்படி என்று கேட்டால், தமிழர் திருநா ளன்று நாம் வயிறார உண்ணுவதுடன் நில்லாமல், செவிக்
1 O4
கும், கருத்துக்கும் இனிய உரைகளை இப்புனித நாளன்று கேட்டுச் சிந்தை குளிர்கிறோம் அல்லவா? அதுவன்றி, இந்நன்னாளில், இசை, இயல், நாடகம், ஆட்டம் போட் டிகள் ஆகிய பிறவும் இடம்பெற்றும் நமது அறிவுக்கு உணவு அளிப்பதாய் இருக்கிறது.
இவ்வாறு உண்டிக்கும் உணவளித்து, அறிவுக்கும் உணவளிக்கும் இப்புனித நாளாகிய தமிழர் திருநாளை வையகத்தில் வாழி, வாழி, என்று வாழ்த்துவோமாக.
1 O5
Page 55
தவறியதில்லை, அப்படியொ வருட நீண்ட இடைவெளிக்கு சகோதரர் 'ஐந்தடித் தமிழன் அவர்கள் நான் வந்திருப்பதை டாலிங் ஜெயா"வில் பார்க்க அணையும் தறுவாயில் இருந் செய்வது போல அறவே ஒய்ந் திறமையை, மீண்டும் புத்தக மென மிகவும் வற்புறுத்திக்
தாங்காக்" சென்று எனது எழு வரும் - மலேசிய தமிழ் இல் திகழ்ந்து வரும் 'இலக்கியக் கு சந்தித்தேன். அவரும் எனது கொண்டு வரவேண்டுமென இல்லாமல், அவர் கைவச தந்துதவினார். அதன் பின்ன தேதிகளைக் கொண்டு, கோ வாசக சாலைக்குச் சென்று 6 எனது தந்தையார் பெயர் எனது கணவர் பெயர் பூரி வ ருந்தே எனது தந்தையாரின் இன்று வரை எழுத்துலகில் பு
நான் பிறந்து வளர்ந்து பானைவி, பின் பள்ளி ஆசிரியை, அதன் பின் எழுத்தாளர் என்று 26 வருடங்கள் வரை மலேசிய வாழ்க்கை. பின் குடும்பத் தலை வியாகி 18 வருடங்கள் இலங் கையில் வாழ்க்கை. அதன் பின் கடந்த 19 ஆண்டுகளாக, தமிழ கத்தில் ஒய்வு பெற்ற வாழ்க்கை. ஆக மொத்தம் 3ே ஆண்டுகள் இப்படி ஓடிவிட்டன? இந்நி லையில் 1976-ம் ஆண்டிலிருந்து நான் பிறந்து வளர்ந்த மலாய் நாட்டுக்கு வருடா வருடம் சென்னையிலிருந்து போய் வரத் ாரு சமயத்தில்தான் ஏறக்குறைய ே ப் பின் எனது உடன்பிறவா அருமைச் நூலாசிரியர் மாசி அண்ணாமலை நிக் கேள்விப்பட்டு என்னைப் "பெyட் வந்தார். அப்போது தான் அவர் த திரியை தூண்டி மீண்டும் ஒளிவிடச் து விட்டிருந்த எனது எழுத்தாற்றவை, வடிவில் வெளிக்கொணர வேண்டு கூறினார். அதன்பின் அன்னாருடன் ஒத்துலக நண்பராக அந்நாளில் இருந்த வக்கிய எழுத்துலகின் ஜாம்பவனாகத் ரிசில்" மா.இராமையா அவர்களையும் எழுத்தோவியங்களை நூல் வடிவில் வற்புறுத்திக் கூறியதுடன் என்னிடம் ருெந்த எனது சிறுகதைகள் சிலவும் ரே, நான் குறிப்பிட்டு வைத்திருந்த லாலம்பூர் National Library (தேசிய ானது கதைகளைத் தேடி எடுத்தேன்.
நுமான் WT முத்தையா என்பதாகும். தவராஜா, திருமணமாவதற்கு முன்பி இனிஷியலையே வைத்து வருவதால் இதனையே கடைபிடிக்கிறேன்.
இங்ங்னம், மு.தனபாக்கியம்.