கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைவர்கள் வாழ்க மாதோ

Page 1


Page 2

தலைவர்கள் வாழ்க மாதோ
தான்தோன்றிக்கவிராயர்
ரஜனி பதிப்பகம் கொழும்பு - பாரிஸ்

Page 3
* தலைவர்கள் வாழ்க மாதோ
கவிதைகள், தான்தோன்றிக்கவிராயர் * (C) உரிமை நுாலாசிரியருக்கு * முதற்பதிப்பு: பெப்ரவரி 1992 * வெளியீடு : ரஜனி பதிப்பகம்,
கொழும்பு - பாரிஸ் * அச்சுப்பதிப்பு: ரஜனி பதிப்பகம்,
பாரிஸ் , போன்: 42 81 53 98
* THA LA VAR KAL VALGA MATH O
A Collection of poems in Tamil by THANTHON R KAVIRA Y A R * (C) : MR. M. SELVARA SAN * Published by Rajani Kuhanathan,
Rajani Publications, 11, rue Rodier, 75009 Paris, France,

ஓர் அறிமுகக் குறிப்பு
1959 - ம் ஆண்டில் 'தினகரன்' பத்திரிகையில் அமரர் க. கைலாசபதி ஆசிரியராக இருந்த காலம். பத்திரிகை விற்பனைப் பெருக்கத்துக்காக, பரபரப்பாக ஏதாவது செய்யவேண்டுமென்று துடித்துக்கொண்டிருப்பார். அத்தகைய படைப்பாக்கங்கள் தான்தோன்றிக் கவிரா யருக்கு அத்துபடி 1950 - ஆண்டுத் தொடரிலேயே வீரகேசரியில் கவிதை மூலம் அத்தகைய சாதனைக ளைச் செய்து அனுபவப்பட்டவர். தினகரனிலும் 1958 - ம் ஆண்டில் "பாரதி கவிதைச்சமர்" என்ற தொடர்

Page 4
மூலம் நாடு முழுவதிலும் மிகுந்த இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்தியவர். நண்பர் கைலாசபதி கேட்டுக்கொண்டதற்கிணங்க "தலைவர்கள் வாழ்க மாதோ" என்ற அரசியற் கிண்டற் கவிதைகளைத் தொடர்ந்து தினகரனில் எழுதத்தொ டங்கினார். இப்போது அத்தகைய கவிதைகளைத் தொடர்ந்து எழுத எவரும் துனிவரோ தெரியாது. அப்போது சிங்கள, ஆங்கிலக்கலை இலக்கியத் துறைகளோடு தமிழும் இணைந்து அணைந்து தழுவிச்சுடர் எழுப்பிய காலம். எழுத்துத் துறையின் எழுச்சிச் சுதந்திரத் தலைமுறைக்காலம். புதிதாக - விடுதலை பெற்ற இலங் கையின் கலை இலக்கியப் பொற்காலம், தமிழிலே ஆர். கே. சண்முகநாதன் 'குயுக்தியார்' கேள்வி பதில் மூலம் ஒரு புது அங்கதச்சுவையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். அமரர் அறிஞர் அ. ந. கந்தசாமி அந்தக் குயுக்தியார் அம்சத்தை ஞானச்செ ருக்கு மிளிரத் தொடர்ந்தார். எஸ்.ரீ. சிவநாயகம் அவர் கள் 'குயுக்தியார்' பகுதிக்கு வேறொரு பரிமாணத்தை வழங்கினார். ஒவியர் ரவிவர்மாவின் வழித்தோன்றல் ரத்னவர்மா, 'சவாரித்தம்பர் உருவாகக் காரணமான 'சிரித்திரன்' சிவாஜி சிவஞானசுந்தரம், தான்தோன்றிக்கவிராயர் ஆகியோர் தங்கள் அங்கதப் படைப்புகளால் தமிழ்க் கலைத்துறையில் பொறிப்பறத்திய காலம். சிங்களத்தில் ஜனா' தனபாலவும், விஜேசோமாவும் கிண்டற் கவிஞன் மீமனே பிரேமதிலகாவும், ஆங்கிலத் தில் "ஃப்ளைபைநைட்" தார்சி வித்தாச்சியும் ஆனந்த குமாரசாமியின் பேரன் "வல்றஸ்" என்ற பத்மநாபாவும் , கூடார்த்த கார்ட்டுன் சைத்திரிகன் ஒப்றே கொலெட் டும், ஜே குயில், தட்டி பண்டா போன்றோரும் தங் கள் இங்கிதமான கை வீச்சால் விட்டு விடுதலையாகிக்

கரணமடித்து, கலை, இலக்கியத்துறைகளில் ஆளுமை செய்த இலக்கிய ராஜாங்க காலம். கவர்னர் ஜெனரல் ஒலிவர் குணதிலகாவைத் திக்குவா யர் என்று அங்கதமாகத் திட்டவும், பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவை நரிப்பயல்’ என்று ஏளனம் செய்யவும் இடைக்காலப் பிரதமர் காலித் தகநாயக்காவை சாராய ரசாயன சாஸ்திரி என்று கேலி பண்ணவும், டட்லி சேனநாயக்கா மோதக வயிற்று வலிப்பிள்ளையார் என்று கிண்டல் செய்யவும் இலக்கியக்காரனுக்குப் பேச்சுச் சுதந்திரமும் இருந்தன. உண்மையில் இந்தப்படியே பகிடி பண்ணித்தான், தான்தோன்றிக் கவிராயர் "தலைவர்கள் வாழ்க மாதோ' என்ற வாராந்த கவிதைத் தொடரில் பென் னம் பெரிய நாட்டுத் தலைவர்களை எல்லாம் அகடம் பண்ணித் தினகரனில் அப்போது எழுதினார். சிரித்தி ரன் சிவா அந்த ஒவ்வொரு கவிதைக்கும் படம் வரைந்து, தன் கூடார்த்த சித்திரத் திறத்தால் அவர் களை விகடம் பண்ணினார். துரதிர்ஷ்டவசமாக, மொட்டைக் கடதாசிக் கலைஞர்க ளின் கைங்கரியத்தால், அரசியல் தலையீடு ஏரிக்கரைத் தலைவர்களுக்கு ஏற்பட, கைலாசபதிக்கும் சங்கடங்கள் ஏற்பட, 10 கவிதைகளுடன் அக்கவிதைத் தொடர் சமாப்தியாயிற்று. அவர் நினைத்திருந்த ஏனைய பல தலைவர்களும் தப்பிவிட்டார்கள். முப்பதாண்டுகளுக்கும் முற்பட்ட இந்தக் கவிதைகள், இப்போது, காலத்துக்கு முந்தியவை என்பதால், ஒரு பதிவேடாகப் பிரசுரித்து வைப்பது, எவரையும் இன் றைய நிலையில் பாதிக்காதெனக் கருதி, நுாலாக்க முனைகிறோம்.
4/7 வைவ் றோட், சில்லையூர் செல்வராசன் கொழும்பு - 5

Page 5
அவர் ஒரு இமயம்!
அரைக்காற்சட்டை பையனாக' இருந்தபோது அவரை முதன்முதலில் சந்தித்தேன்! அவரிடம் என்னை அழைத்துச் சென்ற எனது சகோதரர் காலஞ்சென்ற காவலுார் ஜெகநா தன், போகும் வழிநெடுகலும் அவரைப்பற்றிச் சொல்லிக் கொண்டே வந்ததில் அவர் எனக்கு
இமயமாகத் தெரிந்தார். " பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஏற்பாடு செய்து உதவுங்கள்" என்றார் எனது சகோதரர். அப்போது எனக்கு வேலைதான் தேவைப்பட் டதே தவிர, பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எதுவும் அப்போது எனக்கிருக்கவில்லை.

சகோதரர் பொய்தான் சொல்கிறார் என்பது தெரிந்திருந்தபோதும் அவரது கூற்றுக்கு நானும் ஆமாப்போட்டேன். " தம்பி. பத்திரிகைத்துறை என்பது ஒரு காடு. அதுக்குள்ள போனால் நீர் பிறகு வெளியே வரமுடியாது. பட்டினித்துறை அது." ஆலோ சனை கூறினார் அவர், நான் மெளனமாகவே இருந்தேன். உடனே ஒரு கடிதத்தை எழுதி ' என்வலப் ஒன்றில் போட்டுத் தந்தார். அவர் தந்த அந்தக் கடிதத்துடன் யாழ்ப்பாணம் ஈழநாடு அலுவலகத்துக்குள் நுழைந்தபோது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. ஈழநாடுவின் ஆசிரியராக இருந்த திரு. கோபாலரத்தினம் என்ற கோபு'விடம் கடி தத்தை கொடுத்தேன். வாங்கிப்படித்தவர் என் னைப் பார்த்து சிரித்தவாறு " சில்லையூர் எப் படி இருக்கிறான்?" என்றார். அடுத்த நாளே என்னை வேலைக்கு வருமாறு அவர் கூறியபோது என்னால் நம்பமுடிய வில்லை. சில்லையூரின் கடிதத்துக்கு இப்படி யொரு மரியாதையா என்று என்னுள் வியந்து கொண்டேன். அவருடன் எனக்கு ஏற்பட்ட உறவு மிகக்குறுகிய காலத்தில் விரிந்து, சடைத்து, பரந்து , கிளைப ரப்பி குடும்ப உறவுபோலாகிவிட்டது. அவர் எனக்கு நல்லதொரு குருவாய், உற்ற சகோத ரனாய் , நெருக்கமான நண்பனாய் மாறிவிட் ι πήτ.
፴፰(፴ தலைசிறந்த கவிஞன், திரைப்பட மொன்றை கலைத்துவத்தோடும் மிக நேர்த்தி

Page 6
யோடும் வெற்றிகரமாகவும் இயக்கக்கூடிய கலைஞன், நல்ல நடிகன், அற்புதமான பாட கன், விளம்பரத்துறையில் விழுந்துவிட்ட ஒரு பல்கலைவேந்தன்' பேர்விளங்க ஒரு புத்தி ரன்' என்பார்களே அது போல தனது தனித் துவத் திறமை அனைத்தையும் முனைப்படுத்தி ஒரு ஆக்கமும் இதுவரை வெளிவரவில்லை என்ற குறை நீண்டகாலமாகவே இருந்து வரு கின்றது. தான் ஒரு தலைசிறந்த கவிஞன் என் பதை நிறுவ ஒரு கவிதைத் தொகுதியையாவது வெளியிடாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. அவரது கவிதைகளை நுாலாக்கப்புறப் பட்டால் இருபத்திஐந்து தொகுதிகளுக்கு வேண்டிய கவிதைகள் மிக நேர்த்தியாக அவ ரது அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப் பதை காணலாம். இன்று நுாலுருப்பெறும் தலைவர்கள் வாழ்க மாதோ' என்ற நுால் , அவரை ஒரு விளம்பர தாரராக மாத்திரமே அறிந்து வைத்திருக்கும் இன்றைய சந்ததிக்கு தான்தோன்றிக் கவிராயர் என்ற சில்லையூர் செல்வராசனை இனம் காட்ட உதவும் என்று நம்பலாம்.
எஸ். எஸ். குகநாதன்
ஆசிரியர், 'பாரிஸ் ஈழநாடு' 11, RUE RODIER, 75009 PARIS, FRANCE.

தான்தோன்றிக்கவிராயர் 0
தோற்றுவாய்
நீலத் திரைக் கடலில்
நித்திலம் போற் கண்வளரும், ஈழ மணித் தீவின்
ஏறுகட்டில் வீற்றிருந்து கோலோச்சும் வீரர்களை.
கூசா தரசியலில், வாலாட்டி நின்றெமது
வாழ்வின் தலைவிதியை,
மேலாக்கப் பாடுபடும்
மேதாவிக் குஞ்சுகளை. நாளாய்ப் பொழுதாக,
நமது திருநாடு பாழாகிப் போகாமல்,
பல்துறையில், சேவைகளை, ஆலாய்ப் பறந்தடித்து
ஆற்றும் தலைவர்களை.
சாதி, இனம், சமயம்,
சமூகம், கலாசாரம் ஆதியன ஓங்கவென
ஆயுளையே அர்ப்பணித்து, ஊதியமும் பெற்று
உழைக்கும் பெரியோரை பூ துதிக்கு மாறு,
புகழ் பாடி அஞ்சலிக்க,
0.

Page 7
o தலைவர்கள் வாழ்க மாதோ
எத்தனித்தேன், தான் தோன்றி!
எனது திருப்பணியை முற்றுவித்து, நாயேனின் முயற்சி, குறையின்றிச் சித்தி பெற, கொக்கட்டிச்
சோலையிலே வந்து, குடி இட்டிருக்கும் தான்தோன்றி ஈஸ்வரனே, நீ சரணம் !
வாரந் தவறாமல்,
வரிசையாய், அந்தந்த நேரத்துச் செய்தியிலே
நிலவும் தலைவர்களை, சீரொழுகும் பாடல்களில்
சித்திரங்களாக்கி, அதைப் பாரறியச் செய்கின்ற
பாங்கில், தினகரனில், **
வாசகர்க்கு நான் தரவே
வரம் ஈந்தால், ஈஸ்வரனே பூசனைகள் செய்திடுவேன்; பூவுலக மெங்கணுணுமே, யாசகங்கள் பெற்று வரும்
ஸ்டான்லி சொய்ஸாவின் காசில், சிறிது னக்குக்
காணிக்கை வைத்திடுவேன்;
O2

தான்தோன்றிக்கவிராயர் O
காலித் தஹா விடத்தில்,
கடனாய், கெயர் 'மாவின் பாலிரந்து, உன்னுடைய
பாதத்தில் வார்த்திடுவேன்; வேலணையூர் பெற்றெடுத்த வே. அ. கந் தையா, உன் ஆலயத்தையே புனருத்
தாரணங்கள் செய்துதவ,
ஏற்பாடு செய்திடுவேன்; ஈழத் தமிழினத்தின் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாத் தனித் தலைவர், பொற்பார் ஜூஆழி, தனக்குப்
பூமாலை வாங்கவெனக் கப்பம் தருவார், அக்
காசில் சிறிதொதுக்கி,
வாடகைக்கு, தேமிஸின்
வான்கார்டு டாக்ஸி ஒன்று, தேடிப் பிடித்துனது
திருச் சந்நிதியடைந்து, மேடைப் பொடி ஆழ்வார்'
usrsg/60)u 67th unti, வாடை ஒலிபெருக்கி
வைக்காமல், உன் கதையை,
O3

Page 8
0 தலைவர்கள் வாழ்க மாதோ
கத்தாப்பிரசங்கம்'
கனஜோராய்ச் செய்திடவே வைத்து, வலம் சுற்றி
வந்து வணங்கிடுவேன் ! பற்றாதோ ?மரிக்கார், யப்
பான் சென்று , எம் செலவில் கொத்தாய்ச் செரிப் பூக்கள்
கொண்டு வருவார், அதிலே,
பாதி பறித்தெடுத் துன்
பாத கமலத்தில், ஆதியிலாத் தான்தோன்றி
ஆண்டவனே, நான் சொரிவேன்; சோதியொளிர் கொக்கட்டிச் சோலை வதி நாயகனே! பேதையேன் பாடல்களில்
பிழை அகல, நீ காப்பு !
1959 QBLo 10
04

தான்தோன்றிக்கவிராயர் 0
05

Page 9
0 தலைவர்கள் வாழ்க மாதோ
மேன்மை மிகத் தங்கிய மகா தேசாதிபதி சர், ஒலிவர் ஏர்ணஸ்ட் குணதிலகா ஜி.ஸி.எம்ஆழி, கே.ஸி.வி.ஒ. கேபிஈ, கே.சென்.ஜே. எல். எல். டி. இலங்கை), பி.ஏ.(லண்டன்), அவர்களுக்கு, வாசித்தளிக்க உகந்த வாழ்த்துப்பா !
மக்கிய வெல்லி என்னும்
மாபெரும் மெ-ம்-மெ-ம்- மேதை, அக்கரை சீமை தன்னில்,
அரசியற் துறையில், மிம்-மிம்மிக்கவும் சாதித் தந்த
மேலை நாட்டவர்கள், போற்றத் தக்கவனாக வாழ்ந்த
தகைமையும் , இந்திந்திந்திந்:
திந்திய நாடு கண்ட
இணையிலா ரா.ரராஜ தந்திரியான சாணக்
கியன் எனும் வி. வி-வி-வ்-வீர மந்திரிக் கிருந்த சூழ்ச்சி
மம்மதிக் கூர்மை யாவும், இந்த மண்ணுலகைத்தன் கை
இடுக்கினில் நெரித்த, நாஜி
O6

தான்தோன்றிக்கவிராயர் 0
ஹிட்லரின் கருணையற்ற dõš3u 2. mu//š/- நுட்பமும், கிரேக்க தேச
நிபுணரின் ராஜரீகத் திட்பமும் , ல-ல்-ல-லங்காத்
தீவினை ஆளுகின்ற விற்பனன் ஒலிவர் என்ற
வீர ! நின் காலிற் துாசு !
தலையினில் வழுக்கை வீழ்ந்தால்,
தந்திரம், புத்திக்கூர்மை, உலை வெ-வெ-வ் வெ-வ்-வெ-வ்-வைத்து
உறுபகை வீழ்த்துகின்ற கலை, இவை ய-ய்-ய-ய்யாவும் கை கு-குக் கூடுமென்று, பலர் சொலக் கேள்வி, அந்தப் பழமொழிச் சாட்சி நீயே !
உருசிய முதலமைச்சர்,
உலகினைக் கெடி கலக்கும் குருச்-செ-ச்-செச் செச்-சேவ் என்ற
குறுமுனி, பூமி மெச்சும் அரசியல் மேதை என்று
அறிகிறோம்; ஆயின், அன்னார் சிரசினுக் குன்னை வெல்லும்
சீர் சிறப்புண்டு கொல்லோ 7

Page 10
o தலைவர்கள் வாழ்க மாதோ
ஹாலிவூட் நடிகர் ge l/
ரூனர், தன் தலை வழித்த தாலிளம் மாதர், அந்த
டொன்ஜுவான்' மீது குன்றா மாலுறுவாராம்; அந்த
மகிமையில், அவரை விஞ்சும் மேலவா ! மாயா ஜால
கோகியா பாஷா வாழி !
கிண்டி, பம் பாய், பூனாவில், டர்பியில், பூசா, ராவல் பிண்டியில், ஜிம்கானாவில், பிறிதுள குதிரை ரேஸில், கண்டுள வெற்றி நீயும்,
கணக்கில வலையை, என்றும், வென்றிடும் குதிரை மீதே
வீசிடும் நிபுணனாம் நீ !
அந்த உன் திறமை தன்னை
அரசியல் தனிலும் கண்டோம் ! முந்த உன் சிந்தை மும் மு-ம்-
முற்றிலும், விடுதலைக்குத் தந்தையாம் டீ.எஸ். சேன
நாயகன் மீது வைத்தாய் பிந்தியோர் குதிரை அந்தப்
பெரியவர் ஆவி போக்க,
跨
08

தான்தோன்றிக்கவிராயர் 0
மைந்தனாம் டட்லி மீது
வைத்தனை பணயம், பின்னர் வந்தது கொத்த லா-வ-வ்.
வலையெனும் அசுவம், மாறி தந்தனை அதற்கு உந்தன்
தாபரம், அதையும் முந்தி வந்ததும் குதிரை பண்டா,
வழங்கினை அபயம் ஆகா!
ஒலிவரே ! மயிர் வளர்க்க
ஒயில் எதும் தடவ வேண்டாம்! தலையிலே வழுக்கை நிற்குந்
தனையும் , உன் ஆட்சி நிற்கும் ! தலைவர்கள் வருவர் ; போவர்;
தத்தளிப் புனக்கு இல்லை ! அலை எழும் வீழும்; ஆயின்
ஆழியும் அழிவதுண்டோ?
1959 G3 1.7

Page 11
0 தலைவர்கள் வாழ்க மாதோ
பண்டார ராமாயணம்
10
 

தான்தோன்றிக்கவிராயர் O
வால்மீகி, கம்பன்
வழி வந்து, ராமனுக்கு நுால் செய்தார், நுண்மாண்
நுழை புலத்தார்; ராமபிரான் போல் நீ உளதால், உன் புகழ் பாடிட , நானும் மாலுற்றேன்; தேவ
மகனே, தியசேனா!
go பூவில் அதர்மம்
பொசுக்க, உளங்கொண்டார் தேவர் , மிதிலை எனும்
தேசத்து மன்னவனும், காவி தரித்த
வசிட்டர், தனை யடைந்து சேவித்திட அன்னார்
சித்தமிரங்கி, உடன்,
புத்திர காமேட்டி
யாகம் ' புரிந்திட அச் சித்தர் உதவியினால்,
பூரிராமனாய், இறைவன் இத்தரையில் வந்துதித்தான்;
இவ்விதமாய்த் தானே. வெள் ரிட்ஜ்வே எனும் பெயரால், தியசேன ! புத்த மதம்
11

Page 12
0 தலைவர்கள் வாழ்க மாதோ
வாழப் பிறந்தாய் ! விஸ் வாமித்திரர் குடிலில், பாலகனாய், ராமன்
படித்தான், உடனிருந்து; ஈழத்து ராமா ! நீ
இவ்வாறே, சென் தோமஸ் பாளையத்தார் வீட்டில், இளம்
பருவத்தில் தங்கியிருந்
தெல்லா நரிக்கலையும்
இலகு வாய்க் கற்றாய் ! பின் பிள்ளாய் ! வளர்ந்தாய்!
பிறநாடு போய் வந்து, குல்லாவைப் போட்டுக் குழப்பும் அரசியலின் தில்லுமுல்லுப் பேச் செழுத்தில்
தேறி, அரசோச்சும்,
சந்தர்ப்பம் பெற்றாய்
சகுனி இனவெறியின் தந்திரமும், கேகேயித்
தனிச் சிங்கள விதியும், முந்திக் கலவரத்தை
மூட்ட , குணதிலகர் அந்தப் புரத்தினிலே,
அஞ்ஞாத வாசம் போய்,
1う

தான்தோன்றிக்கவிராயர் 0
ஈரேழு நாட்கள்
இருந்தாய் ! பிலிப்பென்னும் பேரோனை, ஒட்டியொட்டிப் பின்னிருந்து, வாலிவதம் சீராகச் செய்தாய் !
சீதை 'இலங்கையினை, கூறாக்கித் தம் பொருளாய்க்
கொள்ள முனைந்து வரும்,
சண்டாள ராவணனின் சாதித் தமிழர்களைத் துண்டாட வாரும் "எனத்
துாண்டுகிற மஞ்சள் உடைப் பண்டார சுவாமிகளின்
பாதம் வருடுகிற பண்டார நாயகனே !
பல்லாண்டு வாழியவே !
சென்ற கிழமையில், உன்
செருப்பை, ஒரு கோவில் முன்றலிலே, வைத்து விட்டு,
மூலக் கிருகத்துள் சென்று திரும்பியகால்,
செருப்பைக் களவாடிக் கொண்டெவனோ போன
குறிப்பறிந்து வாடினையாம் !
13

Page 13
o தலைவர்கள் வாழ்க மாதோ
ஹோர கொல்லை ஆவி வந்து,
கொண்டதுவோ ? உன் ஆசான் நேரு கொண்டு போனாரோ ?
தேவர் கவர்ந்தனரோ? ஆரு கொண்டு போனாலும்,
அஞ்சேல் ! உன் பாதுகைக்கு, சீருடனே, பட்டாபி
ஷேகம் புரிந்திடுவார் !
1959 GB o 24
14

தான்தோன்றிக்கவிராயர் 0
, ~ . ཀ ། I - NXA * / \ - ”وہی އި * - - - - PC N.
K一エ • -ܚ --------حنیفہ ۔ سہی ーニや「一ー مسا
பிலிப்ஸ் மில்க் ஒப் - என்னமோ.
வாங்குங்கள்" என்று, அலப்புகிற வானொலியின் அறிவித்தல் கேட்டுச் சலிப்புற்றோர், கவலை விடும்!
சாப்பிடுவீர், இனிமேல், பிலிப்ஸ் பேதி மருந்தென்னும் பெயர் பெற்ற குளிகை!
SSS SSKSA SAASaSJSG S ASAhzJJSiSqiehAYS 鬚鯊賽 %ණ> నే
மாற்றிழந்த மருந்தின் மதிப்புயர்த்தும் விளம்பரம்
15

Page 14
0 தலைவர்கள் வாழ்க மாதோ
பொறலுகொடை ரலஹாமி
புத்திரனாய் வந்த பொறலுகொடைச் சிங்கம்;
புரட்சிக்குத் தந்தை, துறைமுக ரா வணன் , வெள்ளைம்
துரைமாரின் இயமன் ; சிறையுடைத்த பிலிப் என்னும்
சீமானின் குளிகை ! உல கெல்லாம் சுற்றியவன்; பொதுவுடமை கண்ட தலை மகவு முதல் உலக
யுத்த கா லத்தில், தலை மறைவாய், கால்நடையில்,
தனியாக குளிரில், தொலை தேசம் பிரான்சுக்கு,
அல்ப்ஸ் மலையைத் தாண்டி, இத்தாலிப் பொலிசாரை
ஏமாற்றிச் சென்றோன்; அத்தாலே, ஆஸ்த்மாவில்
அகப்பட்டு, ஊசி நித்தமுமே போடுகிற
நிலைக் காளாய்ப் போன வித் தகன் , பிலிப், செய்து,
விற்கின்ற குளிகை !
s

தான்தோன்றிக்கவிராயர் 0
அந்நாளில் குணசிங்கா
கோஷ்டியினர் தாமும் சின்னாட்கள், நவலங்கா
சம சமாஜிகளும்; முன் , சேனநாயக்கா
குடும்பத்தார் பலரும்; பின்னர், டீ சில்வா ச
கோததரரும் உணவு அமைச்சில் உள ஊழியரும்;
நெற்காணிச் சட்ட நமைச்சலினால் உழன்றோரும்;
தொழிற்சங்க விதிக்கு, அமைச்சலினால் கட்டுண்டு வேலை நிறுத் தத்தில் தமைச் செலுத்தி நின்றோரும்;
கூட்டுறவு வங்கிச் சட்டத்தை எண்ணி மனஞ்
சலித்தோரும், சிகப்புச் சட்டைக்குப் பயந்தோரும்; சம அந்தஸ் தென்று, பெட்டைக் கோழிகள் போலக்
கூவுகிற பலரும்,
உட் கொண்டு, பய பேதிக் குள்ளான குளிகை !
17

Page 15
0 தலைவர்கள் வாழ்க மாதோ
பண்டாவும், மந்திரிகள்
பத்துப் பேர் தாமும் மூண்றாண்டு காலத்தின்
முன், ஒரு நாள் தின்று, அன்று முதல், நேற்றுவரை,
பீதியெனும் பேதி கண்டுழல, அடித்துக்
கலக்கியதிக் குளிகை ! பண்டாவின் தந்தையார்,
வெள்ளையரின் பாதம் கொண்டாடி மகிழுகையில்,
தன் தந்தை சிறையில் திண்டாட, பதினான்கு வயதில், அரசியலில், குண்டோதரன் பிலிப்,
குதித்ததுவும் பின்னர் வெள்ளையரின் பேதியாய்
விளங்கியதும் , சிறையில் தள்ள அவர், ஜெயில் மீறித் தலைமறைவாய் ஒடி, கொள்ளிடத்துக் கள்வன் போல்
வாழ்ந்ததுவும் , பிறவும் உள்ளியாகுதல், அவரின்
குளிகையினை உண்பர் !
1959 QBud 31
8

தான்தோன்றிக்கவிராயர் O
ఆe
er.
سےنی حج
புதுமுறைப் பாலர் பாடல்
ஆசிரியர் : பஞ்சலிங் கங்கள் என்னும் பாண்டவர் ஐவர் தம்மில், நெஞ்சுரம் மிக்க வீமன் !
நிழலையும் , பகைவனென்றால், வெஞ்சமர் செய்தே வீழ்த்த
வேண்டு மென் றுரைக்கும், வீரக் குஞ்சு ! தன் குரலால், கூற்றைக்
கொல்லவும் வல்லார் ! - யாரோ ? மாணவர் : சுந்தரலிங்கத் தார் ! - நாம்
சொன்னது சரியா மாஸ்டர் ?
19

Page 16
0 தலைவர்கள் வாழ்க மாதோ
ஆசிரியர் :
மாணவர் :
ஆசிரியர் :
மாணவர் :
ஆசிரியர் :
மாணவர் :
சொன்னது சரிதான் ! - ஈடு
சொல்லரும் கணித மேதை ! என்னையே போல, முன்பு
எழுத்தறி வித்த ஆசான் ! கன்னங்க ரேலாய், இந்தக்
கரும்பல கையிலே, உங்கள் முன்னருள்ளவர் ! யார் ? மின்னி
முழங்குவர் பொய்யார் ! - யாரோ? சுந்தரலிங்கத்தார் ! - நாம் சொன்னது சரியா மாஸ்டர் ? சரி, சரி ! - ஐஸி.எஸ். ஸி.
ஸி.எஸ். என் றிவ்வாறான, பெரியதாம் விருதெலாம், "வேஸ்ட்
பேப்பர் பாஸ்கெட்"டில் வீசி, அரசியல் தனில் நுழைந்து, ஆரம்ப ஒத்துழைப்புத் துரைமகனாக, டி.எஸ்.
தோழனாய் வாழ்ந்தார்! - யாரோ ? சுந்தரலிங்கத்தார் !. நாம் சொன்னது சரியா மாஸ்டர் ?
மிகச்சரி! - டி.எஸ். சேன
நாயகர் மூளையாக உகப்புடன் மிளிருங்காலை, உரிமைகள் தமிழருக்கு மிகத் தர வேண்டுமென்று மிண்டிய ஜி.ஜி தன்னை, சிகைப்பிடி பிடித்து வீழ்த்த,
செயல்முறை வகுத்தார் ! யாரோ ? சுந்தரலிங்கத்தார் !. நாம் சொன்னது சரியா மாஸ்டர்
20

தான்தோன்றிக்கவிராயர் o
ஆசிரியர் :
மானவர் :
ஆசிரியர் :
மாணவர் :
ஆசிரியர் :
மாணவர் :
விடை சரி - தமிழ் நாடின்று
வேண்டுமென்றுரைப்பார்! எங்கள் மிடிமைகள் தீர்வதுண்ணா விரதத்தா லல்ல, வீரப் படையினால், என்பார் ! காலிப் பாட்டை, எம் பாளிமேந்து நடைவழி, இரண்டும் கண்ட
சத்தியாக்கிரகி 1. யாரோ? சுந்தரலிங்கத்தார் ! - நாம் சொன்னது சரியா மாஸ்டர் ! அதுசரி ! தமிழருக் கோர் ஐக்கிய அணி அமைத்த முதுபெரும் தலைவர் ! தானே,
தன்னுடன் இணைந்து போகார்! 'அது, இது என்று சொட்டை
ஆயிரம் கூறி, மற்றோர் பொதுவழி இணையார் - வெற்றுப்
புத்தகப் பூச்சி! யாரோ? சுந்தரலிங்கத்தார் ! - நாம் சொன்னது சரியா மாஸ்டர் ! அற்புதம் ! - அடங்காப் பற்றின்
நகர்சபைத் தேர்தல் ஆற்றில், முப்படகேறிச் சென்று.
முடை படர்கின்ற சேற்றில், தொப்பென வீழ்ந்தார் ! என்றும்
துருதுருத்தோடித் தாவும், பப்படச் சிலுசி லுப்பால்
பரதவித்திடுவார் . யாரோ சுந்தரலிங்கத்தார் !. நாம் சொன்னது சரியா மாஸ்டர்!
21.

Page 17
O தலைவர்கள் வாழ்க மாதோ
ஆசிரியர் :
யாவரும் :
சிந்தித்துச் சரியாய்ச் சொன்னிர் 1. சீர்மிகும் அறிக்கை வீரர் முந்தவே விபரம், புள்ளிக்
கணக்கெலாம் தெரிந்த ராஜ தந்திரி ! மனமாறாட்டத்
தகைமையில் தலைவன் 1 மாஜி மந்திரி வாழ்க மாதோ!
கலியுக திரிசங்கான, அந்தர லிங்கத்தாரின் அடியினை தொழுவோம் நாமே !
1959 sਗ 7
22

தான்தோன்றிக்கவிராயர் 0
v 8-m in اه
Š
స్ట్
3
(
w
r &威茲
s
டட்லிப் பிள்ளையார் பதிகம்
பிள்ளையார் சுழியைப் போட்டுப்
பேனையை நகர்த்தி, டட்லிப் பிள்ளையார் பதிகம் பாடப்
பிரியமுற்ற மர்ந்தேன் ! பேதை, விள்ளுவதெல்லாம், ஈழ
விநாயக, செவியில் ஏற்றுக் கொள்ளுக ! கோடி, கோடி
கும்பிடு, முதலில் ! உந்தன்
23

Page 18
0 தலைவர்கள் வாழ்க மாதோ
தொந்தியும் , முகமும், மூக்கும்
தோதுதான், நாங்கள் போற்றும் அந்தமில் கந்தவேளின்
அண்ணனுக் குவமை சொல்ல! சந்ததம், கமெரா, மாதர்
சாயலைப் படமாய் மாற்றி, இந்த நாள் வரை, உன் கையில் இருக்கவும், பாவம் நீயோ
கணபதி போல, இன்னும்
கடிமணம் இன்றி வாடி, மனமது சலித்ததாலோ,
அரசியல் மேடை யெங்கும் தொண தொணக்கின்றாய் ? உன்னைத்
தொலைத்திட, அன்று வந்த வினைகளில் தோற்றாய்; இன்றெம் வினையகற்றிடவும், உன்னால்
எப்படி முடியும் ஐயா ?
ஏன் உனக்கிந்தச் சோலி 7 தொப்பையில் வலியை மாற்றிச் சுகம் பெற வழியைத் தேடு ! எப்பவோ சில நாள், இந்த
இலங்கையின் முதலமைச்சர் தொப்பியை அணிந்திருந்த
சுவையிலே மீண்டும் , ஆட்சி
24

தான்தோன்றிக்கவிராயர் O
கைப்படுமென நீ காணும்
கனவுகள் கலைந்து போகும்!
முப்புரமெரித்தான் வைத்த
போட்டியில், முருகன் தோற்க
வைப்பதற் கன்று, சூழ்ச்சி
கணபதி செய்தாற்போல், உன்
அப்பரைச் சுற்றி வந்து
அடி பணிந்தத னாலன்றோ
கொத்தலாவலையை மிஞ்சிப் பிரமரானாய் ? ஜே.ஆர். வர்த்தனா கையில் பொம்மை
யாக நீ வாழ்தல் போதும்! சத்தியம் ஐயா சாது !
சாது நீ சாது ! காவி வஸ்திரம் அணிந்தா யானால்,
வணங்குவர் பலரும் உன்னை !
t அப்பரும் இல்லை! இன்றுன்
அரசியல் கட்சி, உன்னைத் தொப்பென வீழ்த்தும்; அந்தச் சுண்டெலி வாகனத்தில் எப்படிச் சவாரி செய்வாய் 7 இனி வழி, பண்டாவோடு ஒப்பியே நடத்தல், அங்கும்
உடன்பட மறுத்தாய்! அப்போ,
跨
25

Page 19
O தலைவர்கள் வாழ்க மாதோ
நல்வழி சொல்லவா நான் ?
நடுவழி தனிலோர் சின்னப் புல்தடுக்கியதால் முன் குப் புற விழுந்தலறி, ஆட்சிப் பொல்லினை எறிந்து, ஒடிப்
போன உன் திறமைக் கிந்நாட் தொல்லைகள் பெரிது; விணே
தொந்தர வெதற்கு? மேலும்,
தான் தனியாகப் போகத்
தவிக்கிற மூஞ்சூ றெங்கே தானுமோர் விளக்குமாற்றைக் காவியே செல்வதுண்டோ? வீண் மனக்கோட்டை கட்டி, விடியவே விடியக் காத்து, ஊண் மறந்திருத்தல் தீது !
உனக்கு முன் படைத்திருக்கும்,
மோதகக் குளிகை உண்டு
முடிவு காண் வயிற்று நோய்க்கு ! சாதுவாய்ப் போனால் , ஈதைச்
சாப்பிட முடியாதையா, ஆதலால், ஒய்வு காண,
உழவு மந்திரியாய் வாழ்ந்த போது, நீநிறுவி வைத்த
குண்டசாலைக்குப் போவாய்
1959 ஜுன் 14
26

தான்தோன்றிக்கவிராயர் O
محمے
&FTJ TuU JöFTuUGST சாஸ்திரி தகநாயகா
ஐயா, பணிஸ் 'மாமா!
அஞ்சலித்தேன் ! இப்பொழுது பையன்கள் காலையிலே
பள்ளி செலக் காரணமே, மெய்யாகச் சொல்லுகிறேன்,
மேதகையே ! நீ எங்கோ கையேந்திப் பெற்றளிக்கும்
கடன் மா, பணிஸ்' இரண்டும் !
h
EggEs;
کی حیححتسجیق
\
ܕܪ

Page 20
0 தலைவர்கள் வாழ்க மாதோ
இப்படியாய், ஈழத்தில்
எழுத்தறிவை ஊக்குகிற செப்படியில் மாத்திரமா,
சீமானே !! வல்லவன் நீ ? எப்படி நான் உன் திறமை
எல்லாம் எடுத்துரைப்பேன் ? ஒப்பனைக்கு ஒன்றிரண்டை
ஓதி முடிப்பேன் ! நீ
சேராத கட்சி,
செய்யாத மூடுவிழா, ஏறாத மேடை,
எதிராத நற்பணிகள், பாராக் குடிச் சாலை,
பகராத ஆணைமொழி, மீறாத வாக்குறதி,
மேதினியில் ஏதுளது ?
எல். எஸ்.எஸ்.பியில்
இருந்த ததற்குச் சின்னாட்கள் தொல்லை தந்து, மாறிப் பாய்ந்
தோடி, கெனமன், முன் செல்ல, அடி தொடர்ந்து,
செருக்குற் றதை விட்டு, இல்லாத கட்சியிலே
இருந்து சில நாள் , பின்
28

தான்தோன்றிக்கவிராயர் 0
பாஷா பெரமுனையைப்
பாலித்துச் சோர்வுற்று, கூசாமல் பின்னர்
குதித்தாய் எம்ஈ பீயில் ! ஆஷாடபூதி
யாகி, அரசியலின் பூசாரி வேடம்
புனைதல், உனது தொழில்!
ஆசிரிய ரோடே போ
ராடுவதும், கங்கையிலே வீசுங்கள் என்னை" என
வீறாப்புப் பேசுவதும், கூசாது போலிக்
குறைக்கவிதை பாடுவதும், ஏசி, உனைக் காண வரும் எல்லோரையும் துரத்தி
ஒட்டுவதும், இற்றை வரை
ஒண்டியாய் வாழ்வதுவும், வெட்டி, தமிழ் - முஸ்லிம்
வேற்றுமையைக் கூட்டுவதும், புட்டிக்குள்ளே இருந்து
புகுந்துனது சித்தத்தைக் கட்டிச் சிறை வைக்கும்
கறுப்பன் செய் காரியமாம் !
29

Page 21
O தலைவர்கள் வாழ்க மாதோ
சாராயம் காய்ச்சும் ர
சாயனத்தின் சாஸ்திரத்தை ஆராய, உன் போல
ஆருளரோ ? தண்ணி அடித் தோராமற் பேசி,
உளறி, அரசியலைச் சேறாடும் உன்னை,
சிலோன் அரக் குச் செய்கின்ற
சாலைக் கதிபதி யாய்ச்
சாத்தாமல், மந்திரியாய் வேலைக்கு வைத்திருக்கும்
வித்தகரை என்னென்பேன் ? பாலகரை நீயே மேற்
பார்வை யிடுங் காலவர்க்குச் சூழும் வினைகளை, அச்
துரர் உணராதது மேன் ?
காலித் தகநாய
கா ! உன்னை , என்னுடைய கேலிக் கவிதையினால்
கிண்டல் சில செய்தேன் ! வாலிவதம், சூட்டி
பண்டாவை" , நீ செய்தாற் போலெனையும் செய்யாமல்
பொறுத்தருளக் கோருகிறேன் !
1959 ஜூன் 21
30

தான்தோன்றிக்கவிராயர் 0
பாரதத்து நற்றலைவன் பாபு பிரசாத் வாழ்க!
வானுலகில் ஆதித்தன்
வந்திருந்த போதினிலே, கூனிக் குறுகிய நம்
கூடா அரசியல் விண் மீனினத்தைப் பாடுவதோ?
மேன் மகனை, ராஜேந்திர பானுவை, விட் டெம்மவரைப்
பாடுவதோ ? ஆதலினால்,
3.

Page 22
0 தலைவர்கள் வாழ்க மாதோ
அன்புள்ள வாசகரே !
அடியேன், இவ் வாரத்தில், என் புதுமைப் பேனாவால் ஈழத் தலைவர்களாம் எண்புகளைக் கீறாமல்,
இந்தியத் தாய் மூத்த மகன் தன் புகழுக் கோர் தடவை
தலை வணங்க ஆசித்தேன் ! மாயூர வம்சத்து
மன்னன் அசோகனுடன், தேயமெலாம் கட்டித்
திரைகடலுக் கப்பாலும் ஆய தனது அர
சாட்சியினை விஸ்தரித்த நாயகனாம் சந்ர குப்த
நல்ல ரசன் வாழ்ந்த நகர் ; பிளினி, மெகஸ் தெனிஸும் பேரறிவின் நற்சோதி ஒளிரச் சபை நடுவில்
உட்காந் திருந்த நகர் ; இழியும் மனித குல
இரட்சணியம் காண ஒரு வழிகண்ட புத்த பிரான் வாசம் புரிந்த நகர்,
32

நான்தோன்றிக்கவிராயர் O
பீகாரில் நாலந்தை,
பாட்டாளி புத்ர எனும், பீகாரில் - வந்து
பிறந் தின்று பாரதத்தின் மீகாம னாய்மிளிரும்
மேலவனே ! என் கவிதைப் பூ காவி வந்துனது
பொன்னடியில் நான் சொரிவேன் ! முப்பத்து முப் பருவம்
முதலாக, பாரதத் தாய், அப்பிப் பிடித்திருந்த
அந்நியரின் கைப்பிடியால், தப்பிப் பிழைத் தெழ, ஓர்
தார்மீகப் போர் புரிந்து, செப்பரிய இன்னலுற்று,
சென்று சிறையினில், நீ செய்த தவங்கள்
சிலவோ ? தளை அறுத்து, வையகத்தில் பாரதத் தாய் வாழ, தியாகமெனும் நெய்யை, மகாத்மா
நெருப்பிட்ட ஆகுதியில் பெய்து, பிறருன்னைப்
பின்பற்றச் செய்தவனே!
33

Page 23
O தலைவர்கள் வாழ்க மாதோ
யுத்தம் ஒழிந்த
யுகம் உலகில் காணுகிற சித்தமென்னும் அசோ கன் சிறப்பியல்பும், மா சந்ர குப் தனது நெஞ்சுரமும்,
கொள் கருணைச் சீலமெனும் புத்தர் நெறியும்,
பிளினி, மெகஸ் தெனிஸின், நல்லறிவும், சேர்ந்து,
நரனாய் உருவெடுத் தித் தொல்லுலகில், ராஜேந்திர
பிரசாத் தாய் வந்ததெனச் சொல்லும் வகையில், உனைச்
சூலுற்றுப் பெற்றெடுத்த நல்லவளும் வாழ்க ! அவள் நாடும் நிதம் வாழ்க ! உன் வரவால், ஈழம்
உயர்வுறுக! நீ உரைத்த பொன் னுபதே சங்களெல்லாம்
புரிந் தெமது தேசத்துப் புன் தலைவர், பாஷை, இனப் பூசல் ஒழித் துன் போலப் பண்படுக ! நம் நாடும்
பாரதம் போல வாழியவே!
1959 ஜூன் 28
34

தான்தோன்றிக்கவிராயர் 0
முன்னாள் களனியிலே முடி சூடி வீற்றிருந்த மன்னன் களனிதிஸ்ஸ மகளாய் அவதரித்த கன்னிப் பெண் விகாரம காதேவி, ஈழத்தை உண்ணப் பெருக்கெடுத்து
ஓடி வந்த வெங்கடலின்
35

Page 24
0 தலைவர்கள் வாழ்க மாதோ
தேவர்களை ஆற்றி, மனந் தேற்றிடவே, தன்னரிய ஆவியையும் அர்ப்பணிக்க
அஞ்சாது, ஒர் படகில் தாவியமர்ந்தே, களனித் தண்ணீர்ப் பலியாகப் போவதற்குச் சம்மதித்துப்
புகழுற்றாள்; பின்னர், அவள்,
மன்னன் கவந்தீசன்
மாலையிட்ட நாயகியாய், அந்நியன் எல்லாளனது
ஆட்சியினை முற்றுவித்த தன்னிகரில் கைமுனுவின் தாயாய், நெறி வளர்த்த புண்ணியளாய், வாழ்ந்த கதை
புகலும் மகாவமிசம் !
அமிழாது அன்றெமெது
அரும் நாட்டைக் காத்தாங்கே தமிழாட்சி ஓங்காது
தடுத்தாண்ட நாயகி போல், அமிழ்தாக இற்றை
அரசியலில் வாழுகிற விமலா !களனி
விகாரை மகா தேவி!
建
36

தான்தோன்றிக்கவிராயர் O
களனித் தொகுதியில் உன்
காணிகளோ பற்பல ஒர்! களனித் துரை மகனைக்
கடி மணமும் செய்தனை , நீ களனி மகா உபாசி
காவ' அதனாலே, களனி விகாரை மகா
தேவி' என, உந்தனுக்குப்
பட்டமளிப்பு விழா
பண்ணுவதில் யாது பிழை ? கட்டழகி !ராசாத்தி !
கடல் கடந்த யப்பானில் வட்டமிட்டும் , பல் தேசம்
வலம் வந்தும், எங்கெங்கோ சிட்டாய்ச் சிறகடித்துத்
திரிந்து வரும் சீமாட்டி !
ஈண்டு வயதானாலும்
இளமைத் துடிப்புடலில்
மண்டிட நீ வாழ்வதினால், சுகாதார மந்திரியாய்
தொண்டாற்ற உன் போலத்
தோதெவரும் இல்லையென்று
குண்டு 'மரிக்கார் உரைத்த கூற்றின் குறிப்பெதுவோ?
37

Page 25
O தலைவர்கள் வாழ்க மாதோ
வெள்ளம் வருங்கால்,
விகார மகாதேவியைப் போல், வள்ளத்தில் உந்தனை நாம்
வைத்துப் பலியிட்டால், உள்ளம் மகிழ்ந்திடுவார்
தேவர்! அதனாலே, வெள்ளம் வடியும் ; நீ
வீழ்வாய் ; நாம் வாழ்வோமே!
அக்கா விமலா! நீ,
அநேக கமக் காரர், கற்காவி, கோர்டன்
கார்டின்ஸ்' எனுங் காவில், நெற்காணிச் சட்டத்தை நிர்மூலமாக்கி விட, ஒக்கக் குழுமி வந்து
ஓங்கி எழச் செய்ததனால்,
அக் காவிற் குன் பெயரை அளித்து, இனிமேலே எக்காலமும் விமலா
பார்க்' என்ற ழைத்திடுவோம் விக்டோரியா பார்க்கில்
விகார மகாதேவி சிலை நிற்க வைத்த பான்மையிலே
நிறுத்திடுவோம் உன் சிலையை !
1959 ஆகஸ்ட் 2
38

தான்தோன்றிக்கவிராயர் 0
என். எம். பெருமையினை என்னென்றியம்பிடுவேன்
தன்னேரிலாத
தமிழும், சம உரிமை, இந்நாட்டில் சிங்களத்தோ டெய்திடவே பாடுபடும் என்.எம்.பெ ரேராவே!
எதிர்க்கட்சி யின் முதல்வ! என்னென் றடியேன்
இயம்புவேன் உன் பெருமை?
冲
39

Page 26
0 தலைவர்கள் வாழ்க மாதோ
உன் காரை, நாள் தோறும், உன் கையால் நீரூற்றி, பொன் போல் துலக்கி,
புழுதி துடைத்தலம்பும் பண்புடையோய் ! அஃதே போல்,
பாழடைந்த உன் தேசப் புண்களையும், நீ கழுவிப்
போக்க விரும்புகிறாய்!
வெள்ளையரின் ஆட்சி
விலங்கில், எமது நிலம் கொள்ளை போங்காலத்தில்,
குடிபுகுந்து வெஞ்சிறையில், தொல்லைகள் நீ பட்டதுவும்,
தோழருடன் வெளியேறி, கள்ளமாய், பாரத்துக்
கரை சேர்ந்து, தப்பியதும்;
நாடு திரும்பியபின்,
நாலாம் அகிலத்தை, கூடி பிலிப்புடனே,
கொள்கை அடிப்படையில் பீடு பெற வளர்த்துப்
பேணியதும்; அன்றாடம் பாடுபடும் பாட்டாளி
பலம் ஓங்கத் தொழிற்சங்க
40

தான்தோன்றிக்கவிராயர் 0
சம்மேளனம் அமைத்துச் சலியா துழைத்ததுவும்: இம்மாதிரிப் பணிகள்
எத்தனையோ ஆற்றியதும், நம் நாட்டுயர்வினை, நீ
நாடியதாற் தான்! எனினும் பம்மாத்துத் தேசமிதில்
பயனேது உன் பணியால்?
நல்லது செய்தாய், கொழும்பு
நகர் மேய ராயிருந்து; கொள்ளுவன கொள்ளாதார்
குடை சாய்த்தார் உந்தனையே! கொள்கையென்று சாவதுவும்;
கொடுப்பாய், தகுதிமுறை உள்ளவர்கள் யாவர்க்கும்,
உரிமை" எனக் கோருவதும்;
வேலை நிறுத்தம்
விளைத்து நிழல்களுடன் கோலெடுத்துப் போரிட்டுக் குன்றுவதும், வீணான வேலை; மினக் கேடு
விழல்! உன் உபதேசம், பாலை வனத்தில்,
பயனேதும் காணாத
41

Page 27
O தலைவர்கள் வாழ்க மாதோ
ஒலமாய்ப் போகும்! உற்ற அரசியலின் ஜாலங்கள் எல்லாமே,
சாஸ்திரத்திற் கற்றபடி, ஞாலத்திருக்குமென
நம்புகிறாய் நீ! ஆனால் ஈழத்து நடைமுறைக்கு
இந்த வழி சாலாது!
ஆதலினால், டிட்டோவின்
அந்தரங்க நண்பா! நீ சாதனையில் நாடாளல்
சாத்தியமாய்க் காணோம்! வீண் சோதனைகள் செய்து, கரம் சுட்டுப் பொசுக்கியபின், வேதனைப்பட் டோயாமல்,
வேளைக் கொதுங்கிப் போய்,
மாக்மிலனின் அச்சகத்தார் மன்றாடிக் கேட்டபடி, தாக்குப் பிடித்திருக்கத்
தக்கனவாய், அரசியலின் நோக்கம், பொருள் வளத்தின்
நுண்மை பற்றி, நுால் பலவும் ஆக்கி, உனதாசான்
றெரல்ட் லாஸ்கி போல் வாழ்வாய்!
1959 ஆகஸ்ட் 16
42

தான்தோன்றிக்கவிராயர் O
ஈழத்துக் காந்தித் தாத்தா
ஈழத்துக் காந்தி என
எல்லோரும் போற்றிடவே வாழுகிற செல்வா ! என்
வாயாலும் உன் பெருமை நீள வுரைக்க
நினைத்தேன்; என் கூற்றெதுவும் தாளா விடின் கூட,
தவறைப் பொறுத்தாண்டு,
43

Page 28
0 தலைவர்கள் வாழ்க மாதோ
உன்னுடைய பண்புக்கு
ஒப்ப நடந் துனது கண்ணியத்தைக் காப்பாய் நீ கட்டாயம் என்பதனை எண்ணிடவும், நீ, அந்த
இந்தியத் தாய் பெற்ற பெரும் புண்ணியனாம் காந்தியுடன்
பொருந்துவது காண்கிறேன் ! காந்தியைப் போல், நீயும்
கடல் கடந்து மேனாட்டில் சேர்ந்து, வழக்கு ரைக்கும்
சட்டக் கலைக் கடலை நீந்திக் கடந்து வந்தாய் !
நீ அவரைப் போல், என்றும் சாந்தி வயப்பட டுயர்ந்த
சாத்வீகம் பேசுகிறாய் ! தன்னவரின் வாழ்வு
தளிர்க்க, மகாத்மாவும் அந்நியரின் ஆடை
அகற்றி , தொழில் உதறி, சென்னியிலே தன் தேசச்
சேமஞ் சுமந்தது போல், உன்னவராம் எங்களுக்காய்,
உத்தமனே ! மேலோனே!
44

தான்தோன்றிக்கவிராயர் 0
காற்சட்டை தன்னைக்
கழற்றமல் விட்டாலும் கோட்டடிக்குப் போய் வந்து
கொண்டிருந்த போதினிலும், நாட்டில் நமதுரிமை
நாட்டுவதற்காக, ஒரு பாட்டி 'அமைத்தெமக்காய்ப்
பாடுபடும் பான்மையினால், மோகனதாஸ் காந்திக்கு
முற்றும் நிகர் நீயே ! சாகும் வரை சத்தி
யாக்கிரகம் செய்வதிலும், பாகு படுத்துகிற
சாதிப் பிரிவினைகள் போக உழைப்பதிலும்,
பொன்றும் உனது இனம் வாழ வழி உரைக்கும்
வாயாகப் பத்திரிகை மூலம் சுதந்திரத்தின்
முழக்கமிடுவதிலும், ஈழத்துக் காந்தி மகான்
என்றுன்னைக் கூப்பிடுதல் சாலும் ! எனினும் ஒரு
சங்கதியும் சொல்லுகிறேன்!
45

Page 29
0 தலைவர்கள் வாழ்க மாதோ
வேலிக்குள் நின்று
விலாப்புடைக்கக் கத்திடவும் காலியிலே தமிழர்க்குக்
கல்லெறிந்தால், கச்சைகட்டி அராலியிலே தடி பிடுங்கி ஆர்ப்பரித்துப் பேசிடவும், தாலியறுத்தாலும்,
தம் கணவர் சிங்களரின் தோலை உரிக்கத்
துணிந்து செல வேண்டுமென, சேலை இழுத்துச்
செருகி இடுப்பினிலே, வாலை மகளிர் சிலர்
வாய் களைக்கப் பேசிடவும், சால ஒரு கேடயமாய்ச் சான்ற தமிழரசுக் கட்சி, செயற்திட்டம்
காணாத கட்சி எனத் திட்டுகிறார் பலர்; இதையும்
சிந்திப்பாய் ! இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காய்க் காந்தி மகான்
உண்ணாவிரதமிட்டார்; வெட்ட இலங்கையை, நீ விரதமிடல் சரியா 7
1959 ஆகஸ்ட் 30
46

தான்தோன்றிக்கவிராயர் O
W N/مای
SR , இன்பநாயகனே, ஹண்டி இக்கதி உனக்கு ஆமோ?
பண்டைய வழக்கை, பண்பை, பகுத்தறிவதனால் ஆய்ந்து கொண் டவற்றினிலே, தக்க
கொள்கையில் புதுமை ஏற்றி, அண்டிய மாணவர்க்கு
அதன்படி அறிவை ஈயும் ஹண்டி பேரின்ப நாய
கா ! உனைத் தமியன், அந்த
47

Page 30
o தலைவர்கள் வாழ்க மாதோ
நாள் முதல் அறிவேன் ; காந்தி
நாமமே மூச்சாய்க் கொண்டு, வாலிபர் இயக்கந் தன்னை
வடக்கினில் தோற்றுவித்து; தழ்கடற் கப்பா லுள்ளோர்
சுதந்திரக் கனலிற் தோய்ந்து, வாழ்ந்த நாள் தொட்டு, இந்நாள்
வரையும், உன் வளர்ச்சி, தேய்வு, இரண்டையும் கண்டு, ஆய்ந்து, எந்தமிழ் இனத்திற்குந்தன் தொண்டினை, கொள்கை சார்ந்த
துாய்மையை , மதிக்கும் ஆற்றல் உண்டுமோ என்று ஐயம்
உற்றவன் ; அதனால், புத்தி விண்டிட விழைகிறேன்; நீ
விரும்பினால், செவிமடுப்பாய் ! காந்தியின் மறைவுச் செய்தி
கண்டதும், வதனம் வாடிக் காய்ந்து போய், பராயம் பத்துக் கடந்தவ னானாய் என்று, பாந்தமாய்க் கல்கி சொல்லும்
படிக்கு, நீ, பக்தி கொண்டச் சாந்தியின் மூர்த்தி மீது
சார்ந்தனை கண்டதென்ன ?
48

தான்தோன்றிக்கவிராயர் 0
நேர்மையும், கொள்கைப் பற்றும், நெஞ்சினில் உறுதி சார்ந்த கூர்மையின் மதியும் கொண்டு குதித்தனை, பாளி மேந்துத் தேர்தலில் பலகால், கையைச்
சின்னமாய் வைத்து ஈற்றில் ஒர்ந்தது யாது ? என். எம்.
உரைப்பதில் நலமுண்டென்று எண்ணி, நீ தமிழினத்தின்
என். எம். முமாகி நின்று, நண்ணிய நலங்கள் ஏது 7
நடைமுறை ஆட்சி மன்ற நுண்ணிய ஜால வித்தை,
நொடிக்கொரு கொள்கை, துழ்ச்சி பண்ணியே பதவி தேடும்
பண்பு, மற் றிவைகற் காது, இலட்சிய வாதியாக
இருந்து நீ என்ன கண்டாய் ? அலட்சியம் செய்து, உந்தன் ஆயுளின் காலம் முற்றும் விலக்கினர் உன்னை ; இந்த
விளைவுகள் எதனால் ? வெற்று இலட்சியம் வெல்லுமென்றால், இக்கதி உனக்கு ஆமோ ?
49

Page 31
O தலைவர்கள் வாழ்க மாதோ
யாக்கையே முதிர்ந்த இன்றும்
யெளவனச் சிந்தையோடு, நோக்கினில் விரிவும், நுண்மாண் நுழைபுலத்தறிவும், பண்டைப் போக்கினை மடக்கி ஏற்றும்
புதிய சிந்தனையும் உற்றும், போக்கிடமின்றி நிற்கும்
பொதுமையின் கொள்கையாள !
கைத்தடி மீது சாய்ந்து,
கழுத்தினில் சால்வை சுற்றி, சுத்தமாய் வெள்ளை வேட்டி,
சொலித்திடும் சொக்காயோடு, சத்துடன், மேடையேறிச்
சாற்றிடும் உரைகள் பற்றிப் பத்திராதிபர் குறிப்பில்
படிக்கிற போதும் இப்போ, அடிக்கடி நீ விடுக்கும்
அறிக்கைகள் காணும் போதும், துடிக்கும் என்னுள் இவ்வெண்ணம் , துடிப்புறும் இளைஞர், பொங்கி வெடித்திடும் இந்த நாளில்
இளைஞனாய்ப் பிறந் தன்னாரைப் பிடித்திடாதன்று வந்து
பிறந்த துன் அதிர்ஷ்டக் கேடு !
1959 செப்டம்பர் 13
50

ரஜனியின் நுால்கள்
எஸ். அகஸ்தியர்
கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்
ரஜனி குகநாதன்
" தவறுகள்" - குறுநாவல்
வி. ரி. இளங்கோவன்
" கரும்பனைகள் " . கவிதைத் தொகுதி
தான்தோன்றிக்கவிராயர்
" ஊரடங்குப் பாடல்கள்"

Page 32
لیں۔
لارنے لبلبہ 黑T Jo ل h r* : s。 । (*
》 شمہ
"
ஒகு தலைசிறந்த கவி திரைப்படமொன்றை மிக நேர்த்தியாகவும், இயக்கக்கூடிய கலைகு
தல்ல் தடிகள் sJAWAbyAsARADrTa7 Lunr7a. lasGir, மொத்தத்தில் ஒரு பன்