கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தணியாத தாகம்

Page 1


Page 2

சில்லையூர் செல்வராசனின்
தனியாத தாகம்
திரைப்படச் சுவடி
Thaniyaatha Thaaham (Thirst Unquenched)
A Film Script by Sillaiyoor Selvarajan
மீரா பதிப்பகம் வெளியீடு - 06

Page 3
THANIYATHATHAAHAM (AFilmScript)
Copyright
First Edition
Second Edition
Printers
Published by
Released by Cover Design
Price
தணியாத தாகம்
p fl6ошо
: Kamalini Selvarajan
9, Ransivi Lane, Colombo - 04, Sri Lanka. Tel : 586()ħ4
: 1971
: 14th October 1999
: Page Setters
72, Messenger Street, Colombo - 12, Sri Lanka. Tel : 330333
: Meera Pathippakam,
191723, Highlevel Road, Colombo - 05, Sri Lanka. Tel : 826336
: Athisayan Pathippakam : The Designer,
68, Maligakandha Road, Colombo – 10, Sri Lanka. Tel : 674646
: RS. 185f
(திரைப்படச் சுவடி)
கமலினி செல்வராசன்
9, றன்சிவி ஒழுங்கை, கொழும்பு - 04, இலங்கை,
முதற் பதிப்பு இரண்டாம் பதிப்பு: அச்சிட்டோர்
பதிப்பு
வெளியீடு
அட்டைப்படம்
விலை
தொ.பே 586054
: 1971
14 ஒக்டோபர் 1999
பேஜ் செற்றேர்ஸ்.
72, மெஸெஞ்சர் வீதி, கொழும்பு - 12, இலங்கை, தொ.பே 330333
: மீரா பதிப்பகம்.
191/23, ஹைலெவல் வீதி, கொழும்பு - 05, இலங்கை. தொ.பே 826336
; அதிசயன் பதப்பகம்.
: த டிசைனர்.
68, மாளிகாகந்த வீதி, கொழும்பு - 10, இலங்கை. தொ.பே 674646
: b. 185/-

i
5
எழுது வித்தவளுக்கு
மன்னி செகராச வல்லி என நாமத்தட் பின்னி உயிர்க் குள்ளும் பிணைப்பாகி - முன்னின்று எவள் எனை இக்காதை எழுதவித் தாளோ அவளுக் கிந் நால் அர்ப் பணம்
பொருள்: மூன்னி செகராசவல்லி என்ற கலைமகளின் பெயருக்குள்ளே செல்வராசன்'என்ற என் பெயரோடு பின்னி, என் உயிருக்குள்ளும் பிணைந்து, என்னை முனைப்படுத்திஇக்காதை ஆக்குவித்தவள்எேைளா அவளுக்கு இந்நூலை அர்ப்பணிக்கிறேன்.
(மன்னி செகராசவல்லி என்ற பெயரிலே கமலினி . செல்வராசன் என்ற பெயர்கள் இணைந்து வருவதை அவதானிக்க.)

Page 4
மீண்டும் படித்த தணியாத தாகம்
நானா எழுதினேன் என்று தடுமாறப் பேனாவுக் கெங்கிருந்திப் பெருவலிமை வந்ததென்றென் வலக்கை நடுங்கி வலித்துச் சிலிர்த்துதற - சிலிர்க்க மறுபடியும். மீண்டும் படித்தேன் தணியாத தாகம்!
சில்லையூர் செல்வராசன் - 1990

என் இதய நன்றி இவர்க்கு.
இச்சுவடியை எழுதி முடிப்பதற்கு உறு துணையாய் அமைந்து உதவிகள் பல புரிந்த தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், நடிக நண்பர் சி.எஸ்.பரராஜசிங்கம் தம்பதிகளுக்கும், இராப்பகலாகமுத்தினங்களில்தட்டச்சுப்பதிவு செய்து தந்த திரு.பரமகுரு, திரு.தனபாலசிங்கம் இருவருக்கும், இந்நூல் அச்சேறப் பெரிதும் உதவிய ஆர்.எம். நர்கலிங்கம் ஐயா, தோழர் கே. டானியல், அன்பன் ஆர். ஈ. தேவசகாயன், அட்டைப்படத்தை ஆக்கம்செய்த ஓவியச்சகா கவின் அசரப்பா,தம் சொந்த வேலைபோற்கருதி இதுஅச்சேறமுழுமனதோடுஉழைத்தராஜமணி அச்சக அதிபர், அச்சகத் தோழர்கள் அனை வருக்கும், பல்வேறு துறைகளிலும் எனக்குத் தினமும் தூண்டுகோலும், ஊன்றுகோலுமாய்த் துணைநின்று பலன் கருதாது தோள் கொடுத் துதவும் இனியவரான ஆர். கனகரத்தினம் அவர்களுக்கும் என்நெஞ்சம்நிரம்பியநன்றி.
1971 சில்லையூர் செல்வராசன்.
(v)

Page 5
முதற் பதிப்பின் முன்னுரை திரைக்குப் பின்னால்.
சிநியாயம் சொல்லக்கூடாது.எனக்குஞாபகசக்தி சற்றுஅதிகம்.
இருந்திருத்தாற்போல், மறைந்த பழங்கனவுநினைவிற்புணர்கோலம் கொண்ட மாதிரி, மிகப் பாலிய வயதுச் சம்பவங்கள், சினிமாப் பட மீஸ் - காட்சிப்பாணியில் மனத்திரையில் ஒடும்.அறுந்தறுந்துஒடும்ஆரியமாலா, காத்தவராயன் வகையறாக் காட்சிகள் சிலவற்றுக்கு அர்த்தத் தெளிவிருக்காது. அம்மாவிடம் விளக்கம் கேட்பேன். "அதுநடந்தபோது உனக்கு ஒரு வயதுதானே இருக்கும்! அதைக்கூட அப்படியே ஞாபகம் வைத்துச்சொல்கிறாயே!" என்றுஅம்மாவியப்பதுண்டு.
அநியாயம் சொல்லக்கூடாது.எனக்குஞாபக சக்தி அதிகம்தான். O
நல்ல ஞாபகம். வயது மூன்றிருக்கலாம். திருகோணமலையில் டொக்யாட்" எனப்படும் கடற்படைத்தளத்துள்எங்கள் குடும்பம் வசித்த காலம். பிறநாட்டுக்கப்பற்காரர்களின்நடமாட்டம்தாராளமாக இருக்கும். விநோதமான சாமான்களெல்லாம் கொண்டு வருவார்கள்; "சின்னஞ் சிறிசு"களுக்குச் சில விளையாட்டுப் பொருள்களைப் பரிசளிப்பார்கள். அப்படித்தான் அந்தச் சிறியவிளையாட்டுக்கருவியும் என்கைக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும்.
அநேகமாக இந்தப்புத்தகத்தின் அளவான ஒரு அட்டைப்பெட்டி, இதைநீள்சதுரப்பாங்கிற்சரித்து வைத்துக்கொண்டால்எப்படி இருக்கும்? -அப்படி! கரை கட்டிய இப்பெட்டியின் நடுப்பக்கம் ஒரு திரை. பெட்டியின் வலதுகரையில்ஒருநேர்க்கம்பி.கம்பியின்கீழ்முனைவளைந்து துறப்பண நெளிவு" கொண்டிருக்கும். பெட்டியை ஒரு கையாற்பிடித்துக் கொண்டு. கம்பி முனையை வலம் - இடமாகச் சுழற்ற, நடுப்புறத் திரையிற் பல படங்கள் அசைந்தோடிச்செல்லும், முதலில் ஒரு கோழிக்குஞ்சு சிறகை அடித்துக்கொண்டுவலப்புறமாக ஓடும்.அதைத்துரத்திக்கொண்டு ஒரு பூனை ஒடும்.பூனையை ஒருநாய்விரட்டும்.நாயைக் கலைத்தவண்ணம் ஓடுவான் ஒரு சிறுவன். சிறுவனை ஒட ஓட விரட்டிக்கொண்டு. அதுதான் வேடிக்கை! சிறுவன், கேவலம், ஒரு கோழிக் குஞ்சுக்கு அஞ்சி விழுந்தடித்துக் கொண்டு ஒடுவது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்!
(vi)

கம்பியைச்சுழற்றச்சுழற்ற, ஒரே "ஆடும்-புலியும்"விரட்டுத்தான்.புலியும் தலையாடும்கடையாடும் ஏது எதனைவிரட்டுகிறதென்றதெளிவில்லாமல் சிறுவர்விளையாட்டுநடக்குமே!அதுபோலவேஒரு சுழல்தொடர்ச்சலனப் படக்காட்சி அந்தப்பெட்டியில்நிகழும்.
Ο
சலனப் படத்துறை மீது எனக்குள்ள வசீகரம் அப்பொழுதே ஆரம்பமாகிவிட்டதென்று நினைக்கிறேன். பயந்தோடிய குஞ்சுக் கோழியின் சிறகடிப்பில் மொய்த்த பீதியின் நிழல், விரட்டிக்கொண்டும் விரட்டப்பட்டும் தாவிய பூனையின் பாய்ச்சலில் தெறித்த சுழிப்பு, குறிக்கோள் இல்லாமற்கோழிக்குத் தோழன் வேடம் போடுகிறநழுவல் நாயோட்டம், பின்னால் வருவதறியாது முன்னால் முனைப்புக் காட்டும் சின்னமனிதனின் செயலில் அடங்கியுள்ள அவல வேடிக்கை, இவற்றை யெல்லாம், இப்போது அறிவால் வாங்குவது போலில்லாவிட்டாலும், இயல்பூக்க உணர்வாற் கிரகித்துக்கொள்ள, அப்போது என்னால் முடிந்ததாகவேநினைக்கிறேன்.
ஆமாம்! "ஸ்நானப் பிராய்தி"கள் ஐந்தில் ஏற்பட்டு விடுகின்றன போலும். ஐம்பதில் நிகழ்வது அந்தப் பிராய்த விதைகளின் விசாலித்த விளைச்சலாகவே இருக்க வேண்டும். அன்று படங்களின் சலனத்தால் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சி, சலனப் படத்துறை ஆராய்ச்சியும் அறிவும் திறமையுமாக இன்றுவளர்ந்துவிட்டமைஇயல்பே அந்த விளையாட்டுக் கருவியின் கவர்ச்சி மட்டுமே அப்போது, அதன் சூட்சுமங்கள் எல்லாம் இப்போது வாலாயம்! Stroboscope என்றும் Phenakistiscope என்றும் பெயர்களுடன் உருவான அதுபோன்ற விளையாட்டுக் கருவிகளை ஆதிமூலமாகக்கொண்டுதொடங்கி,இன்றுதிரைப்படக்கருவிநுட்பங்கள், கலைநுட்பங்கள் அடைந்துள்ள வளர்ச்சியிற்பரிச்சயமோ எனக்குமிகத் தாராளம்!
Ο
பின்னோக்காகப்பார்க்கும்போதுஇத்துறையிற்பெற்றவளர்ச்சியின் கட்டங்கள் படிக்கட்டெழுச்சிகாட்டுகின்றன. எரிகொள்ளியைவேகமாய்ச் சுழற்றவிளைந்தசலனத்தீவட்டத்தின் லாவண்ணியத்திலும்,விரல்களைப் பின்னிக் கரங்களை நெளித்துவிளக்கெதிரே பிடித்துச் சுவரில் உயிர்ப் பித்த,நிழற்படப்பிராணிகளின்குதியாட்டத்திலும்வசமாகிப்போன, அந்த மயக்கம். முதிரா இளமைப்பருவத்தின் பள்ளிப் படிப்புக்கும் விடுதி
(νii)

Page 6
உணவுக்கும் வந்த உபகாரச் சம்பளப்பணத்தில் பட்டினி-மீதம் செய்து "பிறவுணிறிட்ய்ளெக்ஸ்" கமரா வாங்கிக் கண்ட நின்றவற்றிலெல்லாம் புகைப்படக் கலையழகு கண்ட வெறி. இவையெல்லாம் ஆரம்ப காலத்தில்!
Ο
1950ம் ஆண்டுவாக்கில்பத்திரிகைத்தொழில்வாய்த்தது.முதன் முதல் இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகளில் சினிமாப் பக்கங்கள்" ஒதுக்கி, அத்துறை பற்றிய விமர்சனம், ஆய்வு, விளக்கங்கள் செய்து அதைக் 'கனம்' பண்ணச் சந்தர்ப்பம் கிடைத்தது. தினகரனில் "திலோத்தமை" என்ற புனைபெயரில் "திரைவானம்" நடத்தியபோது என்னைச் சூழ்ந்துழைத்தவர்கள் பலர். மறைந்த நண்பர் றொசாரியோ பீரிஸ்குறிப்பிடத்தக்கவர்.அவரை"றொசி" என்றுவிளிப்பார்களே. அந்தப் பெயர் வரலாறேகவையானது. "றொசி" றொசாரியோவின்சுருக்கமன்று. தமிழ்,ஹிந்தி,ஆங்கில சினிமாப்படத்தகவல்களுக்கு அப்போதும் அவர் ஒரு களஞ்சியம் மாதிரி. நிறையத் தெரிந்து வைத்திருப்பார். ஆனால் வார்த்தைகளில் வடித்து எழுத்திற் சுத்தமாகப் பதிவு செய்வதற்குச் சிரமப்படுவார். கா. சிவத்தம்பி அவருக்கு நண்பர். இப்போது கலாநிதி யாயுள்ள சிவத்தம்பி, கைலாசபதி, கவிஞர் முருகையன், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் முதலியோர் அப்போது ஒருவரோடொருவர் தொடர்புகொண்டிருந்தமாணாக்கள்கள். றொசாரியோவுக்கு சிவத்தம்பி எழுத்தரானார். தகவல்களை அவர் சொல்ல இவர் எழுத வாராவாரம் கட்டுரைகள்எனக்குவரும்.எவர்பெயரைப்போட்டுப்பிரசுரிப்பது?இருவரின் தலையெழுத்துக்களையும் சேர்த்து விட்டேன். றொசாரியோ பெயரின் "றொ"வும்கிவத்தம்பி பெயரின் "சி"யும் சேர்ந்துஉருவான"றொசி" என்னும் பெயர் பிறகு, கட்டுரைக் கருத்துக்களுக்கு உரியவரான றொசாரியோ வுக்கேநிலைத்துவிட்டது.
இலங்கையில் ஆங்கில சினிமா எழுத்தைப் பொலிவு செய்த காலஞ்சென்ற ராஜா திலகரத்னா, சிங்கள சினிமா எழுத்துக்கு வலிவு ஏற்படுத்தியகாலஞ்சென்ற ஜெயவிலால்விலேகொடஇருவரும்என்னுடன் ஏககாலத்தில் இத்துறையில் இறங்கியவர்கள். முவரும் இத்துறைக் கருத்துக்களைக் கலந்துபகிர்ந்துகொள்வோம்.நம்நாட்டிற்கணிசமான தரமுயர்ந்த சினிமாரசனை உருப்பெறுவதற்கு எங்கள்முக்கூட்டுழைப்பு முன்னாயத்தம் செய்ததுஎன்று சினி-வட்டாரத்தில் ஒரு கருத்துண்டு.
(viii)

திரைப்படத்துறையில் நக்கிர விமரிசனம் செய்யப் போய், ஆரம்ப காலத்தில் சினிமாத்துறை அதிபர்களின் நெற்றிக்கண்பார்வைகளுக்கு இலக்கான பல சம்பவங்களுண்டு. "எவன் இப்படி எழுதியவன்?" என்று பத்திரிகைக்கந்தோருக்குத் தேடிவந்துசீறியஒருதியேட்டர் முதலாளி "நான்" என்றுகண்டதும்"நீர்என்ரைகுளோஸ்ட்யிரெண்டாயிருந்துகொண்டு இப்படி எழுதலாமோ?"என்றுநியாயம் கேட்டதுநினைவிருக்கிறது.
இத்தகைய திரைவனத்தில் நாங்கள் "காடு - கரம்பை" வெட்டி ஒதுக்கியபிறகும்,சிங்களத்திரைப்படத்துறையின்ஒருபின்னமளவேனும் தமிழ்த்திரைப் படத்துறை இலங்கையில் வளராதா என்ற தாகமே மிஞ்சியது.எஸ்.எம்.நாயகத்தின்"கடவுணபொருந்துவ"முதற்கொண்டு நேற்றுவரை வந்த சிங்கள சினிமாப்படங்களில் அநேகமாக அத்தனை யையும்பார்த்திருக்கிறேன். தொலைநோக்கில்துருவநட்சத்திரம் போல ஒரு லெஸ்டராவதுஅங்கே தெரிகிறது. தமிழ்த்திரைப்படத்துறையில்?
சிங்களப்படத்துறையில் தமிழரான நாயகம் போல, தமிழ்ப்படத் துறையில் சிங்களவரான ஹென்றி சந்திரவன்சா "பிள்ளையார் சுழி" யைப்போட்டார்.தமிழ்த்தொடர்புகொண்ட ஹென்றி"சமுதாயம்"படத்தைப் பிடிக்க முனைந்த போது அடிப்படை மனுத்தாள்கள் முதலாய் எழுதிக் கொடுத்து,"எவர்கழுத்தை அறுத்தேனும்"இத்துறையைஎழுப்பிவிட்டாற் போதுமென்று நினைத்து முயன்றமை நினைவுக்கு வருகிறது. அதில் தோன்றிய சந்திரபாபுவின் சகோதரி மகள் இப்போ வளர்ந்திருப்பாள். அவளுக்கில்லாவிட்டாலும், கதாநாயகன்எஸ்.என்.தனரத்தினம்.நடிகள் இரா. காசிநாதன் போன்றோர்க்காவது பட்ட பழம் பாடுகள் நினைவை விட்டுப்போகாதென்றுநினைக்கிறேன்.
பிறகு தோட்டக்காரி, டாக்சி ட்ரைவர், பாசநிலா, கடமையின் எல்லை, நிர்மலா, மஞ்சள் குங்குமம் ஆகிய படங்களிலெல்லாம் பணப் பலமற்ற கலையார்வலர்களே ஈடுபட்டார்கள். வெண்சங்கு மட்டும் தொழில்முறை முயற்சியாக அமைந்ததென்று கருதலாம். இவற்றில் நிர்மலாவுக்கும், மஞ்சள் குங்குமத்துக்கும் பாடல்கள் எழுத நேர்ந்தது. குறிப்பாக நிர்மலாவில் வரும் 'கண்மணி ஆடவா" பாடல் ஜனரஞ்சக மானதில்ஓரளவுதிருப்தி "மஞ்சள்குங்குமம்"பாலனுடன்பழையதொடர்பு சிங்களத் திரைப்படத்துறையில் சோமசேகரன் கொடிகட்டிப் பறந்த நாளில் அவரிடம் இவர் பணிசெய்தார்.சோமாவுக்குப்பிரதிகள்எழுதிய காலத்தில் அவற்றை எடுத்துச் செல்ல இவரே அவ்வப்போது வருவார்.
(χ)

Page 7
அந்தப் பழக்கத்தில் மஞ்சள் குங்குமத்துக்கும் என் பாடல்களை விழைந்தார் போலும்.
ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகத்தில் உள்நுழைந்துபார்த்ததில் மொத்தத்தில் ஏமாற்றமே கண்ட மிச்சம். பிரான்ஸ் தேசத்தில் தலைமை யகம் கொண்ட PIPRESS என்னும் சர்வதேசநிறுவனத்துடன்இணையும் விதத்தில் FCAC சங்கமான என்னும் பிரபல இலங்கைத் திரைப்பட விமரிசகள்,எழுத்தாளர் சங்கத்தை, சில சிங்களநண்பர்களுடன் சேர்ந்து நிறுவி அதன்இணைச் செயலாளராக இருந்துநான் பணியாற்றிவருவது இந்த ஏமாற்றத்தைக் கழிக்கும் முயற்சிகளில் ஒன்று. ஷெல் நிறுவனத் துக்கு, பல பல்சுவை விவரணத் திரைப்படங்களை நான் உருவாக்கிய போது பெற்ற அனுபவங்கள், இப்போதுபணம் ஈட்டும் விளம்பரத் துறைக் குத்தான்பயன்படுகின்றன.
"ஈழத்தின்தமிழ்த்திரைப்பட வளர்ச்சிக்குஏற்றவழி"பற்றிச்சாங்கோ பாங்கமாகச் சகலாம்ச ஆராய்ச்சி செய்து நீண்ட கோட்பாடு ஒன்றைத் தயாரித்து வெளியிட்டும் பார்த்திருக்கிறேன். ஆனால் திரைப்படத் துறையில்உள்நுழையாமல் வெளியேயிருந்துவிமரிசனம் மட்டும் செய்து என்ன பயன்? பெற்ற கற்றறிவும் உற்றறிவும் பயன்படச் சாதனா ரீதியில் எதுவும் செய்யவேண்டாமா..?
இத்தகையசிந்தனையின்பின்னணியில்இருந்தபோதுதான் 1969ம் ஆண்டில் பிற்பாதியில் ஒரு நாள் என் தொலைபேசி கிணுகினுத்தது. பேசியவர்காலஞ்சென்றநடிப்புச்செல்வியிலோமினா சொலமன்."எங்கள் பொஸ்" ஒரு தமிழ்ப் படம் தயாரிக்க விரும்புகிறாள். நீங்களே கதை, வசனம் எழுத வேண்டுமாம். சம்மதிப்பீர்களோ என்றுதயங்கினார்.நான் பேசி ஏற்பாடுசெய்வதாகச் சொன்னேன்.என் வாக்கைக் காப்பாற்றியாக வேண்டும்" என்றது.பிலோவின் குரல்.
வீஎஸ்.ரீபிலிம்ஸ்அலுவலகத்தில்பொஸ்ஸஜ"ம்நானும்சந்தித்துய் பேசினோம். வெறும் வியாபாரச் சரக்காக அன்றிநம்நாட்டு வாழ்க்கை மணம் கமழும் கலைத்தரமுள்ள படமாகத் தயாரிக்க வேண்டுமென்ற உடன்பாடுஏற்பட்டதால்சம்மதித்தேன். என்கதை, வசனம்,பாடல்களுடன் படம் தயாராவதாக விளம்பரங்களை வெளியிட்டது வீ. எஸ். ரீ. பட நிறுவனம்.
திரைப்படத்துக்கான ஆக்கப் பிரதியைத் தயாரிக்கத் தொடங் கினேன். இதற்கிடையில் பொஸ்ஸுக்கும் எனக்கும் சந்திப்புகள்
(x)

நிகழ்ந்தன. பல தேவைகளை அவர் முன்வைத்தார். சில குறிப்பிட் ர்ை களும் சில குறிப்பிட்ட பிற்புலங்களும் படத்தில் இடம் பெற வேண்டும் என்பது அவர் விருப்பாயிருந்தது. தங்கத்தில் மட்டுமா, களிமண்ணிலும் கூட எழில்தவழ்சிலைசெய்யவல்லவன்தானே கலைஞன் கோரிக்கைப் படி, ஆனால்கலையழகுகுன்றாமற்சுவடியைத் தயாரித்தேன்.
தேசியஇனங்களின் ஒற்றுமை, சாதிப்பிரச்சினை, படித்தவாலிபரின் வேலையில்லாத் திண்டாட்டம், யாழ்ப்பாணக் கமத்தொழில் விருத்தி இவற்றையெல்லாம் கதை தொட்டுச் செல்ல வேண்டும். எம். எஸ். பெர்னாண்டோவின் பைலாவும் இடம் பெறவேண்டும், என்பது போன்ற பல்கோணத் தேவைகளையும் சமன் செய்யவேண்டியதாயிற்று.
"கலைத்தரமுள்ள படமாகத் தயாரிக்க வேண்டும்" என்ற "ஒறிஜினல்" உடன்பாட்டுக்கு ஒரு "சலாம்"போட்டு, பைலாவுடன்நாட்டுக் கூத்து, மலைநாட்டுச் சிறப்புப்பாட்டு, வில்லிசைஎன்றுஎல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டேன். வர்த்தகத் தேவைக்கான எல்லாக் கலப்பட அம்சங்களையும் கூட முற்றிலும் யதார்த்தமாகவும் கலையழகுடனும் நயமான நுட்பத்துடனும் விரசமின்றிச் சேர்க்கை செய்வது தொழில் தெரிந்த கலைஞனுக்குமுடியுமானகாரியம்தானே!ஒருவிதத்திற்பார்க்கப் போனால்கலையென்பது செம்மையான சேர்க்கைமுறைதானே!
செய்துமுடித்தசெம்மையான சேர்க்கைமுறைப்பிரதியைவாசித்து விளக்கக்கேட்டபொஸ்ஸாம்வேறுபலரும்கூடக்கண்கலங்கிச்சிலிர்த்த சந்தர்ப்பங்கள் பசுமையாக நினைவிருக்கின்றன. ஆனாலும் என்ன? அடுத்தடுத்த சந்திப்புகளுக்கிடையில் ஆங்காங்கே ஆலோசகர்கள் சொன்ன ஆயிரம் யோசனைகளின்தலையீடு.
அங்கொருமாற்றம் செய், இங்கொருமாற்றம் வைஎன்பதெல்லாம், தகுந்த காரணஆதாரம் காட்டாதவரை,எனக்குஒத்துக்கொள்ளவில்லை, ஓர் உதாரணம் மட்டும் சொன்னேன், இப்படி.
"நான் சொன்மாடத்துக்கு உருவமைக்கும் ஒரு கலை நிபுணன், என்னிடம் மாதிரிப்படம் கேட்பவனுக்குத் தேவைப்பட்ட சகல அம்சங் களையும் உள்ளடக்கிப் படம் போட்டுக் கொடுத்து விட்டேன். அவன் அதைத்தன்கட்டிடக் கொந்திறாத்துக்காரனிடம் கொடுக்க, அவன்தன் மேசனிடம் கொடுத்தான். படத்தைப்பார்த்தசீமெந்துகுழைப்பவலும் கல் அரிப்பவனும் மண் எடுப்பவனும் கட்டிடப் பிளானை இப்படி பாய்றினால்
(χί)

Page 8
நல்லது' என்று அபிப்பிராயம் சொல்ல, அதை மேசன், கொந்திறாத்துக் காரன்வழியாகக்கேட்டுக்காவிவந்து,கட்டிடக்காரன்என்னிடம்படத்தை மாற்றென்றால் நான் என்ன செய்யவேண்டும்?"
இதன்பிறகு "பொஸ்"தொடர்புஏற்படவில்லை. பொதுவில் தமிழ்ப் படத்துறையினர் பின்பற்றாத முறையில், முழுமையான திரை ஆக்கத்துக்கான் நெறிமுறைப் பிரதியாக நான் தயாரித்த சுவடியின் கோவைகளை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவது பெரும்பாடாகி விட்டது.சிலமாதங்களின்பின், பலமுகமுறிவான சொல்லாட்டங்களின் பின், பிரதிகளைப் பெறமுடிந்தது.
என் சுவடியைத் திரைப்படக் கலையாக்க முடியாமற் போனாலும் தற்போதைக்கு இலக்கியமாகவேனும், அதுஇருந்துவிட்டுப்போகட்டுமே என்னும்நினைப்பில்அதை அச்சேற்றுகிறேன்.கலையறியார் கைப்பட்டுக் கதைகளும் கலைஞர்களும் இந்நாளில்திரைப்படங்களில்படும் அவலப் பாடுகளைப்பார்க்கையில், படமாகியிருந்தால் தந்திருக்கக் கூடியதை விடப்பன்மடங்கு கூடுதலான ரசனைத் திருப்தியை நூலுருவில் இந்தச் சுவடி தரக்கூடும் என்றேபடுகிறது.
ஏனெனில்"ஒடருக்குச்" செய்தசுவடியானாலும், செய்வனதிருந்தச் செய்யும் என்இயல்புப்படிநுணுக்கம்பார்த்தேஇதைச் செய்திருக்கிறேன். "தணியாததாகம்" என்ற சாதாரணதலைப்பைபாமரரஞ்சகமான அதன் எளிமைக்காகமட்டுமன்று, எதிலும்என்றும்தணிவுகாணாதவடபுலத்துத் தமிழ்மக்களுடையமனஅவசங்களின் குறிப்புணர்த்தக் கருதியும்தான் உபயோகித்திருக்கிறேன்.கதையில்வரும்பங்குக்கிணறுஅதேமக்களின் தண்ணித்தவிப்புக்குமட்டுமன்று,அவர்களின் மனவரட்சிக்கும்கிணற்றுத் தவளைப்பாங்கானமுழுச்சமூக வாழ்க்கைமுறைவரட்சிகளுக்கும்கூட ஒரு சுட்டுச் சின்னமாக அமைகிறது.
தீபா என்னும் சிங்களப் பெண்,முனியாண்டி என்னும் மலைநாட்டுப் பாட்டாளி, முருகன் என்னும் சீவல் தொழிலாளி, ஊரடிபட்ட பென்சனர் மணியத்தார் என்றபாத்திரங்கள்மூலமும் லடிஸ் வீரமணியைஉண்மைப் பாத்திரமாக்கி, பனைமரச்சிறப்புப் பற்றிவில்லுப்பாட்டிசைக்கச் செய்யும் உத்தேசம்மூலமும்ஆங்காங்கேஎன்கோட்பாடுகள்சிலவற்றையும்சோமு என்னும் பாத்திரத்தில் என் இயல்புகள் சிலவற்றையும் இனங்கான முடியலாம். பெரும்பாலும் என் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை இக்கதையினூடே இழையூடவும்காணலாம்.
(xiii)

பாடல்கள்வந்தாலும் அவற்றைப்பாத்திரங்கள்பாடாமல் தவிர்த் துள்ளயதார்த்த நுட்பமும் கவனிக்கத்தக்கது.
கட்புலனுக்குரிய திரைப்படத்துக்கான இச்சுவடியில் செவிப் புலனுக்கான பேச்சு மிகுந்துள்ளதென்று ஒரு பேச்சு வந்தது. ஊமைப் படக்காலத்துப்பழம்பாணிஅபிப்பிராயம்இது."பேசும்படம்"என்றபெயரைச் சற்றேனும்நியாயப்படுத்தவேண்டாமா?டெனசிவில்லியம்ஸ்போன்றாரின் படங்களைப்பார்த்தாற்புரியும்.
படமாக்கும் முறையிலும் புதிய உத்திகளிற் கவனஞ் செலுத்தி யிருக்கிறேன்.முதலாவதுஅங்கம்முடியும்வரைகதைத்தொகுப்பிலிருந்து கமரா வேற்றிடத்துக்குக் களம் மாறிச் செல்லாமல், கதையின் பிரதான பாத்திரங்களையெல்லாம்நிலைபரமாக அறிமுகப்படுத்திவிடுகிறது.
சம்பாஷணை தவிர, திரைப்பட நெறிமுறை, ஆக்கமுறைக்கான குறிப்புவிதிகள் அனைத்தும் மூலச்சுவடியில் விவரமாக ஆங்கிலத்தில் உள்ளது. நூலாக அச்சேற்றுகையில் அவற்றில் தேவையானவற்றை மட்டும் தமிழாக்கியிருக்கிறேன். அண்மைக்காட்சி, தொலைக்காட்சி, உறைகாட்சி, மீன்காட்சிபோன்றபரியக்கூடிய கலைநுட்பச்சொற்களை மட்டுமே வாசகள் வசதிக்காகக் கையாண்டிருக்கிறேன்.
எக்காரணம் கொண்டும்தமிழ்நாட்டிலிருந்துவரும் "திரைக்கதை வசனம்" புத்தகங்கள் போல் இதைக் கருதிவிடக் கூடாது. கொடார்ட் என்பார் போன்ற மிக நவீன திரைப்பட ஆக்குநர்களின் திரைப்படச் சுவடிகள் சிறந்த இலக்கியநூல்களாகக் கருதிவாசிக்கப்படுகின்றன.
அந்தப் பாங்கில், தமிழுக்கே புது முயற்சியாக நூலுருப்பெற்று வருகிறது"தணியாத தாகம்", அதில் வரும் ஒரு சில சம்பவங்களேனும் உங்களை உருக்கி, மறக்க முடியாதபடி மனதில் பதிந்து நெடுநாள் நிலைக்குமென்றேநம்புகிறேன்.
ஏன்?எனக்குப்போலவே, உங்களுக்கும் ஞாபக சக்தி அதிகமாக இருக்கக்கூடாதா என்ன?
சில்லையூர் செல்வராசன்
14, அல்பர்ட் கிறசன்ட், கொழும்பு-7
(xiii)

Page 9
இரண்டாம் பதிப்பின்
முகவுரை
இன்பை-அரவணைப்பைவேண்டி எங்களிடம் வருவோருக்கு, எம் நல்லன்பைக் கொடுப்பது போல ஆனந்தமும், பெரும் திருப்தியும் வேறெதிலும்இருப்பதில்லைஎன்றுநினைக்கிறேன்.அதுதான்உண்மையும் கூட. எனக்கு சில்லையூராரோடு 70ஆம்,71ஆம் ஆண்டுகளில் வளர்ந்த அன்பு அப்படிப்பட்டதுதான்.தன்னைப்புரிந்துகொண்டு அரவணைத்து, தன்விருப்புவெறுப்புகளை விளங்கிக்கொண்டு, அவரதுகலைத்தாகம், இலக்கியத்தாகம்,தமிழ்த்தாகம் என்பவற்றைஆத்மார்த்தமாகப்புரிந்து கொள்ளும் ஓர் உயிர் அவருக்குத்தேவைப்பட்டது. அவரைவிட வயதில் மிகவும் சிறியவளான என்னால் அதைக் கொடுக்க முடிந்ததையிட்டு பெருமையடைகிறேன். "கமலி கமலி" என்று எதற்கும் என்னையே அழைத்து, எப்போதும் தன்னோடேயே இழைத்து வைத்துக்கொள்ள விரும்பிய அவரை இன்னும் கொஞ்சநாள் இறைவன் என்னோடு விட்டு வைத்திருக்கலாம்.
அவள் கேட்டுநான் அவருக்கு எதையுமே கொடுக்காமல் இருந்த தில்லை. ஆனால் வைத்தியசாலையில் கடைசிநாளில் "கமலி ஒரு சிகரட்வாங்கித் தா" என்று கேட்டார். அவரைக் காப்பாற்றி என்னோடு வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்-வைத்தியர்கள் அவருக்கு சிகரட் கூடாதுஎன்று சொன்னதற்குக்கட்டுப்பட்டுஅதைநான்வாங்கிக் கொடுக்கவில்லை. மறுநாளே அவள்என்னைவிட்டுப்போய்விடுவார் என்று தெரிந்திருந்தால் நான் அதை எல்லோரையும் எதிர்த்து வாங்கிக் கொடுத்திருப்பேன். அதுநினைவுவரும்போதெல்லாம் அந்த ஆசையை நிறைவேற்றவில்லையே என்று பொங்கிப் பொங்கி அழுதிருக்கிறேன். இந்த ஆதங்கம் என்னைவிட்டுநீங்கப்போவதில்லை.
அவர்என்மேல்வைத்த அன்பைஇரைமீட்டிப்பார்க்கிறேன்.தணியாத தாகம் திரைப்படச் சுவடி எழுதிய காலத்தில்தான் "காதல்" என்று நாம் இணைந்தோம். அதனால் 'கமலி என்ற பாத்திரத்தில் என் இயல்பான குணங்களை அவர் அப்படியேகொண்டுவந்திருக்கிறார்.அந்த நூலையும் அவர் எனக்கே அர்ப்பணித்தும் இருக்கிறார். இப்படி ஒரு அன்பான காதலரையேகணவனாகவும் பெற்றநான்பாக்கியசாலிதான்.
(Χίν)

எதிர்ப்புகளைத் தாண்டிநாங்கள் இணைந்தபின்னர் 77,78 என்று நினைக்கிறேன், 1971இலேயே புத்தகமாய் வெளிவந்துவிட் தனது தணியாத தாகம் என்ற இந்தத் திரைப்படச் சுவடியை - மக்கள் வங்கி க்காக, அவர் தயாரித்த வானொலி வர்த்தக நிகழ்ச்சியில் வானொலி நாடகமாக்கினார். தனது திரைப்படச் சுவடியின் (Framework) கட்டுக் கோப்பு மாறிவிடக் கூடாதென்பதில் மிக அக்கறையாக இருந்து செயற்பட்டார். இலங்கை வானொலியில்நாடகப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தமாணிக்கவாசகள் (K. M. வாசகர்) யாழ்ப்பாணத்தவர் என்பதால் "தணியாத தாகம்" திரைப்படச்சுவடியின் ஆழம் கெடாமல் வானொலி நாடகமாக எழுதித்தயாரித்தார். சிலவேளைகளில்வாசகள்எழுதமுடியாத வாரங்களில்சில்லையூராரேவானொலிநாடக அங்கங்களில்சிலவற்றை எழுதினார்.
வாசகள் அவர்களின் நெறியாள்கையில்நாம்நடித்தமுதல் அங்கம் ஞாபகம் வருகின்றது. நான் (கதையில் கமலி) வளர்த்த ஆடு செத்து விட்டது.நான்கதறி அழ, என்அக்காயோகம்(விஜயாள்பீட்டர்)அழ,தாய் (சந்திரபிரபா மாதவன்) தகப்பன் (தர்மலிங்கம்) அழ. ஒத்திகையை நிறுத்திவிட்டுஅரைமணிநேரம் அழுது தீர்த்தோம். "பிளேன்டீ" குடித்துத் தேற்றிக் கொண்டு மீண்டும் நடித்தபோது தமிழ்மொழியே தெரியாமல் ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த ஒலிப்பதிவாளர் அழத் தொடங்க ஒலிப்பதிவை நிற்பாட்ட வேண்டியதாயிற்று. அரைமணிநேரம் கழித்தே அடுத்த காட்சியை நாம் நடித்தோம். நடித்தோமா? அந்தப் பாத்திரங் களாகவே வாழ்ந்தோம். அக்கா யோகத்திற்கும் (விஜயாள் பீட்டர்) அண்ணாவுக்கும் (கே. எஸ். பாலச்சந்திரன்) எனக்குமிடையே இன்றும் அந்தசகோதரபாசம்மிஞ்சிவழிவதுண்டு.விஜயாள் என்னை சில்லையூரா போலவே"கமலி" என்றே அழைப்பார்.அண்ணா(பாலச்சந்திரன் அன்ைனா) என்னை 'பிள்ளை-தங்கச்சி" என்று இன்னுமே அழைப்பார்கள். சில்லை யூரார் இறந்தபின் என்னைப்பார்க்கவந்த அம்மா (சந்திரபிரபா மாதவன்) என்னை முத்தமிட்டுக் கண்ணி சிந்தினார். யோகா தில்லைநாதன் (பிற்பகுதி அம்மா - விமல் சொக்கநாதனின் தமக்கையார்) இப்போதும் அன்புடன்"கமலி" என்பார்பாசத்துடன்.இவர்களைத்தவிர செல்வநாயகி தியாகராஜா,ஷாமினி,மார்க்கண்டு.வாசுதேவன்இப்படிப்பலர் நடித்தனர். அந்தக் காலங்களை என்னால்மறக்க முடியாது.
நாடகத்திலே வறுமையில் உழலும் "கமலி"யைத் தத்தெடுத்து வளர்க்கவென்று தென்னிந்தியாவிலிருந்து பிள்ளையில்லாத லக்ஷ்மி
(χν)

Page 10
நாராயணன் தம்பதி வந்ததும், நான் "திருமதி செல்வராசன்" என்று அறிந்ததும் மலைத்துப்போய் இன்றும்நட்புடன் இருப்பதும்நீண்ட கதை,
அப்போதுவந்தநேயர்கடிதங்கள்பெட்டிபெட்டியாகனங்கள்விட்டில் இருந்தன. யோகம் அக்காவைத் திருமணம் செய்ய வேண்டுமென்று எழுதியோர்பலர்.
இன்றும், புலம்பெயர்ந்துவாழும்பலர் என்னைச் சந்திக்கும் போது "தணியாததாகம்" பற்றிஞாபகப்படுத்தும்போது"தணியாததாகம்" என்ற சில்லையூராரின் இந்த ஆக்கத்தின்தாக்கம் எனக்குத் தெரிகிறது.
இவைஉணர்வுபூர்வமான எண்ணங்கள். அறிவுபூர்வமாக எண்ணிப் பார்த்தால்,நாம்பிறந்தநாடுநமதென்பதுஅறிந்தும்,புலம்பெயர்ந்துவிட்ட யாழ் மக்களின் பழமை வாழ்வின் மற்றொரு பதிவு "தணியாத தாகம்" என்பேன்.வானம்பார்த்தபூமி, விவசாயம் மூச்சு, அந்த மக்களின் இறுக்க மாணவாழ்வு, பங்குக்கிணறு, துலாமிதித்துநீர்பாய்ச்சல்,அவர்களுடைய ஆசாபாசங்கள், சீதனப்பிரச்சினை, மேற்படிப்புப்பிரச்சினை, பல்கலைக் கழக வாழ்வு, குடும்பத்தில் சகோதரிகளுக்காக சீதனம் சேர்க்கும் சகோதரர்கள், உணவுப்பழக்கங்கள், சாதிமுறை, பேதங்கள் இப்படிப்பல விஷயங்கள் தணியாத தாகத்தில் பிரிக்க முடியாத இழைகளாக ஊடுபாவாகநிற்கின்றன.
எழுதப்பட்ட காலத்திலேயே, தணியாததாகம் திரைப்படம் ஆகி யிருந்தால் இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையின் தலைவிதி மாறியிருக்கலாம். "பூனே"யில் படித்துவிட்டுவந்திருந்தபாலுமகேந்திரா (மகேந்திரன்)வையேஒளிப்பதிவுநெறியாள்கைக்குத்தீர்மானித்திருந்தார் சில்லையூரார்.அவர்களுக்கிடையே இருந்தநட்புத்தொடர்பைப் பேணுவ தற்காகவே - சில்லையூரார் பின்பு பாலு மகேந்திராவுக்கு எழுதிய கடிதத்தையும் இரண்டாம்பதிப்பில்இணைத்துள்ளேன்.
கலை இலக்கியத் துறையினருக்கு சில்லையூரார் எழுதிய கடிதங்கள் பல பதியப்படவேண்டிய சில இலக்கியத் தகவல்களையும் கொண்டிருப்பதுவழக்கம்.இந்தக்கடிதத்திலும் உள்ள குறிப்புகள்பதிவு செய்யப்பட வேண்டிய சில திரைப்பட, இலக்கிய குறிப்புகளாயிருக் கின்றன.தேனருவி" சஞ்சிகையோடு பாலு மகேந்திராவுக்கு உள்ள தொடர்பு குறிப்பிடப்படுகிறது. முதற்பதிப்பின் பின்னர் திரைப்படத் துறையில் சில்லையூராரின் பாதச்சுவடுகளின் விவரங்களையும்கூட
(Xνi)

இக்கடிதம் கொண்டிருக்கிறது. சில்லையூராருடையமனதின் தணியாத தாகத்தையும் கோடி காட்டுகின்றது. இதனால் இக்கடிதத்தை இணைத் தேன். பிரலமானவர்கள் எழுதிய கடிதங்களுக்கு எத்துணை மதிப்பு என்பதுஉங்களுக்குத்தெரிந்திருக்குமே.
உலகமெங்கும் பரந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் தாகத்தைத் "தணியாத தாகம்" தணிக்கும். உள்ளத்தை உருக்கி கண்களில் கண்ணிரை நிச்சயமாய் வரவழைக்கும். துலா மிதிப்பையும், பங்குக் கிணற்றையும் இனிப்பார்க்கத்தான் முடியுமா?தணியாததாகம் நூலையாவதுபடித்துப்பார்ப்போமே!
சில்லையூரார் சினிமாவுக்கு எழுதிய சுவடி, Film Script எழுதும் இலக்கணத்துக்கு ஏற்ப எழுதப்பட்டது. எம் வீட்டுச் சிறு நூலகத்தில் பத்திரமாக இருக்கின்றது. அந்த முழுமையான பிரதியை வைத்துக் கொண்டுதமிழ்மொழியே தெரியாத-ஆங்கிலம் அறிந்த ஒருவர் இதைத் திரைப்படமாக்கி விடலாம். (சிறு மாதிரி இதன் பின்னே சேர்க்கப் பட்டுள்ளது.)
அதை அப்படியேயுத்தகமாக்கினால்திரைப்படச்சுவடி எழுதுவது எப்படி என்பதுபலருக்குப்புரியும். "குத்துவிளக்கு"வரமுன்னரே அவசரப் பதிப்பாக வெளிவந்தது தணியாத தாகத்தின்" முதற்பதிப்பு. குத்து விளக்கைப்பார்த்தவர்கள்தணியாததாகத்தின் சில சாயல்கள் குத்து விளக்கில்இருப்பதை உணரக்கூடும்.
இந்த இரண்டாம்பதிப்பை வெளிக்கொண்டுவரமிகுந்த ஒத்துழைப் புடன் செயற்பட்ட புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்களுக்கும், எஸ். ரஞ்சகுமார் அவர்களுக்கும் மனதார்ந்தநன்றிகள்.
தணியாததாகத்தைஎனக்குப்பரிசாகத்தந்துசென்றனனதுகாதற் கணவர் இலங்கையின் நல்லதோர் கவிஞர்,நல்லதோர் மனிதர், மானிட நேயன், சமதர்மவாளன் சில்லையூராரின் நான்காவது சிரார்த்த தின ஞாபகமாக இந்த இரண்டாம்பதிப்பைஅவருக்கு-அவரின்ஒயாத கலைத் தாகம் கொண்ட ஆத்மாவுக்கு-நான் சமர்ப்பிக்கின்றேன்.
கமலினி செல்வராசன் 1999
(xvii)

Page 11
ஆங்கிலத்தில் படமாக்கற் குறிப்புகள் அடங்கிய தணியாத தாகம் திரைப்படச் சுவடியின் ஒரு பக்கம் உங்கள் பார்வைக்கு.
VIDEO AUDIO
Muruge sus home. The conpound swet with dr1zzie. He cones out to oompound with brass handpot of water, looks up at eley and says sotto
Woce முருகேசு
翰 வெற்றிதான் இந்த முறை வானம் ஒரு uortárflá ad
பார்த்துத்தான் இருக்கிது என்டாலும் பயிர்பச்சைக்கு
Kanggame hi a w1.fe :* தாகம் தனியப் போதாது. இதோடை J576 Ljčal
e heard frota citcheno She 1a preparing hoppers இறைக்கத்தான் வேறும் at fireansldee :
கனகம்
Murugesu washes ages piaces handot on verandshES
int, o room, faoes Lord Muras gan's portrait and daha oly ash on forelheade
இ&சேருங்கோ லாக்கோவன்-கோப்பி ஆறப்ே urtoso
முருகேசு Yogan the elder daughter @A5éf
soen sweeping ooiapound with pale-rib broom. Kanagam's voicesheard. Yosam atop aweeping, takes cogree to asan as alıb: somu the brother, a sleep on
chair with éè'ဒဇဒဇံ டியாகக, பிறகு கட்டலாம் பின்னே - முதல்லே அள்
be she puts out the ava u Tights கோப்பியைக் குடு
burning lamb, looke tenderl st ஃ இவக் கமலம் எங்கே? கமலம். கமலம்
table and returns to kitcher without Ploting hili upe
Kamalam the younger daugh Stoob ter, whala washing face near”
wel 1 divided by common boun- முகம் கழுவுறள் - வாறன் அம்மா dary exams.
Murugesu drinke offee
and steps 器 into compound gig Garia; ... to goto riod
o E. سبکدتs காகம் . . . வெப்பில் ஏறப்போகச சதுக்கு
வெளிக்கிட் d Gunrad Kanagama oalls out to hus- aaaaac ar 1, 2a-sará o urrød • band Murugesu from kitchen while arrangang hoppers in busket urugeau Paces back, collects praibasket களகம்
ambiootta rops and leave 8. luca, as rra wyð Qasimdb Guardioast -
நான் இந்த அப்பத்தைக் கடைக்குக் குருத்தரப்பிட்டு வத்திடரன்
(xviii)

பாலுமகேந்திராவுக்கு அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் எழுதிய கடிதம்
My dearest Bala,
It has been quite a long time since we have had contact with each other, but I do believe that neither time nor distance could ever keep men of similar moulds apart from their mutual feelings for each other.
With this fervent hope and feeling, I write this, dear Bala, to introduce my favourite and beloved son Bascaran to you, and to seek your benevolence to tutor him in the art and profession that you have so well mastered and made us all really proud.
Please do consider that this young lad is in many ways a minireplica of what yourgoodself and I were when we were young at heart and age - ebullient and full of enthusiasm for whatever we dreamt was aesthetic in life. Though in different lands, surroundings and backgrounds, we have lived through the beautiful sorrows or the sorrowful beauties of a glorious artistic existence - on the brink of which he is just stepping in. And so, he is a fresher.
Thoughts in my mind arefresh, as I hope they would be in yours, of the early youthful days we spent together, daydreaming of uplifting the standards of writing, of the arts, of the theatre, of the screen, striving to create what one could call something par-excellence'... days spent in pubs, print shops, rehearsal halls, theatres, ad-agency arches, embassy minicules, libraries and midnight streets, discussing, argueing andformulating themes and plots of unending consequences.
I vividly remember the days of "Thenaruvi", of the days with LesterJames Pieris, of the days of "Matha Mattam" and the subsequent short period you spent here after graduating from Poona. You were so enthusiastic of the future of the film industry here. But even our endeavour to make a start off with my "Thaniyatha Thaham" through V.S.T. didn's bear fruit. Though after much hesitation, you were wise
(χίΧ)

Page 12
in making the right decision to cross over to India and you have made it Time has proved that this country was far too small for your artistic talents.
I too have made a reasonable headway in my own sphere here, stray information of which you might have heard from mutual friends. My life pattern too has been in certain ways similar to yours. I have also undergone, as you have, the trials and tribulations of a life spent gloriously in the aesthetic solitude of an artiste in recluse as well as in merry company.
I am divorced but am married again, to Kamalini, who laterparstarred with me as heroine in the film 'Komaligal" based on my very popular radio play, which incidentally was the only financially successful Tamil film made in our country. Being a first class honours graduate in mass communication, fine arts and Tamil, she has also made quite a name for herself as a very popular radio and T. V. artiste. I have also acted in a couple of other films, one of which was a four hour English film made by B.B.C. on the life and times of Lord Mountbatten. The Latest was a Sinhalafilm "Athara Kathawa" which starred my eldest son Thileepan as the hero, Bascaran as his brother and me as their father. This film has been greatly acclaimed, may be for its theme which is based on the current problem of ethnic unity over here.
Information on your achievements and activities reaches us freely, whereas it is not so the other way round, and therefore I thought ofmentioning these, so that the gap in time between us may be bridged to some extent. Sopardon me if I have bored you with these details.
Reverting back to my son, Bascaran is almost fanatically adherent to the Arts. From his boyhood he has been on the stage, acting, singing and dancing. He is well versed in our traditional folk theatre, and has familiarised himself with the initial phases of Karnatic Music and Baratha Natyam. He has been a frequent broadcaster over the Radio and has also appeared in TV Commercials. He is an avid reader and seldom misses a good film, and is an admirer of yours. In
(XX)

fact he has discreetly taken and preserved a snapshot from me, in which you appear in a stage play in your youthful days. I could not in any way bridle his insistence to be in the film field and therefore let him seek his ambition, with my blessings.
He came over with the intention of joining the Film Institute but has not been successful. I am sure you will agree that it would be pathetic to let go his enthusiasm to waste. Therefore Bala, take him under your wings as an under-study and make him as one of your proudpupils. Financially he will not be a burden to you, I assure. Let him learn the trade and again his own footing under your able guidance. I beseech you to judge him on your own, advise and help him if he is worthy of course, without causing any encumberance to your goodself
Please spare a few minutes to write to me when you have the time.
Thank you so much in anticipation and very best wishes to you and your beloved ones.
Yours fraternally,
P.S.
I am sending a copy of "Thaniyatha Thahan" the very first filmscript published in book form in the Tamil Language itself, years before even Jayakanthan's film-script saw the dawn of print. Your opinion on my script, I shall velcome and cherish.
(xxi)

Page 13
பதிப்புரை
கவிஞன். கதாசிரியன், பத்திரிகையாளன், பாடகன், நடிகன், நாடகாசிரியன், திறனாய்வாளன், ஒலிபரப்பாளன், எனகலை இலக்கியத் துறையின்பல்வேறுபரிமாணங்களிலும்பிரபலம்பெற்றுவிளங்கி "பல்கலை வேந்தன்" என்ற பட்டத்தினைத் தனதாக்கிக் கொண்டவர் சில்லையூர் செல்வராசன்.
அவரது எழுத்துக்களில் இதுவரை நூலுருப்பெற்றிருப்பவை ஏழு மட்டுமே. கவிஞர் வாழ்ந்த காலங்களில் ஆறு நூல்களும், அன்னாரின் மறைவின் பின்னர் 1997ல் அவரின் துணைவியார் கமலினியின் முயற்சி யால் "சில்லையூர் செல்வராசன் கவிதைகள்" என்ற நூலும் வெளிக் கொணரப்பட்டுள்ளன. மேற்படி கவிதை நூல் அவ்வாண்டிற்கான அரச சாகித்யவிருதினைப் பெற்றுக் கொண்டதும் இங்கு குறிப்பிடற்பாலது.
"தான்தோன்றிக் கவிராயரின்" தனிக் கவிதைகள், அங்கதக் கவிதைகள், வில்லுப் பாட்டுகள், கவியரங்குக் கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், நாட்டிய நாடகங்கள் முதலானவற்றை யெல்லாம் அச்சில் வெளிக்கொணர வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயற்பட்டு வரும் கமலினி செல்வராசன்; தன் செயற்பாட்டிடையே தற்போது, ஏலவே வெளிவந்த "தணியாத தாகம்" நூலினையும் இரண்டாவது பதிப்பாக வெளியிடத்தீர்மானித்தது, புலம்பெயர்ந்த பலர் தமது இலக்கிய'சோட்டையினைத் தீர்த்துக் கொள்ள இந்நூல் பிரதியினை வேண்டிக் கொண்ட காரணத்தினாலாகும். எழுபதுகளின் பிற்கூற்றில் "தணியாத தாகம்" நாடகம் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் பிரதி ஞாயிறுகளிலும் தொடராக ஒலிபரப்பப்பட்டபோது ஏற்படுத்தியிருந்த அதிர்வின்வீச்சினையேஇந்நூலின்தேவைநீர்ப்பந்தம் இப்போநினைவுபடுத்திநிற்கிறது.
எதிர்காலமாணவர்களுக்கும்,நாடக ஆர்வலர்களுக்கும்,திரைப் படச் சுவடி எழுத விரும்புவோருக்கும் சிறந்ததோர் உசாத்துணை ஆவணமாகவும் திகழத்தக்கதனியாததாகம்’ என்ற இந்தத்திரைப்படச் சுவடி நூலினை மீரா பதிப்பகத்தின் ஆறாவது அறுவடையாக வெளிக் கொணர்வதில்பெருமையடைகிறோம்.
1999 எஸ். ரஞ்சகுமார் (மீரா பதிப்பகத்தினர் சார்பில்)
(xxii)

தனியாத தாகம்
அங்கம் 1
விடிகாலை, கமக்காரமுருகேசுவின்எளிமையானவீடு. சிறியமாடம், ஓரறை. விறாந்தை, குசினி இவ்வளவே வீடு. முற்றம் மழைத் தூறலில் நனைந்திருக்கிறது. கையிற்செம்பும்தண்ணிருமாகமுற்றத்தில்இறங்கும் முருகேசு, பாதத்தில் ஈரம்பட்ட புல்லரிப்பாற் சிலிர்த்துக் கொண்டு வானத்தைநிமிர்ந்துபார்க்கிறார். முருகேசு : வெற்றிதான். இந்த முறை வானம் ஒரு மாதிரிக் கண்பார்த்துத்தான் இருக்குது. எண்டாலும் பயிர் பச்சைக்குத் தாகம் தணியப் போதாது. இதோடை நாலுபட்டை இறைக்கத்தான் வேணும். குசினியிலிருந்துமனைவி கனகத்தின் குரல் கேட்கிறது. கனகம் : இஞ்சாருங்கோ; வாங்கோவன் - கோப்பி ஆறப்
போகுது. முருகேசுமுகம்கழுவிச்செம்பைவிறாந்தையில்வைத்து, அறையில் நுழைந்துமுருகன்படத்தின்முன் வணங்கித்திருநீறு தரிக்கிறார். முருகேசு : முருகா!
முருகேசு குசினி நோக்கிச் செல்கிறார். முற்றத்தில் மூத்த மகள் யோகம்தடி விளக்குமாற்றாற்கூட்டியவண்ணம்நிற்கிறாள்.தாயின் குரல் கேட்கிறது. கனகம் : யோகம், பிறகு கூட்டலாம் பிள்ளை. முதல்லை அண்ணையை எழுப்பிக் கோப்பியைக் குடு. யோகம் கூட்டுவதைநிறுத்திக்குசினிக்குள் நுழைந்துகோப்பை யிற் கோப்பி ஊற்றிக் கொள்கிறாள். தாய் அடுப்பில் அய்.1ம் சுட்டுக் கொண்டிருக்க,தந்தைகோப்பிஅருந்துகிறார். கனகம் : இவள் கமலம் எங்கே? கமலம். கமலம்.
இளையமகள் கமலத்தின் குரல்கிணற்றடியிலிருந்துகேட்கிறது

Page 14
சில்லையூர் செல்வராசன்
கமலம் : முகம் கழுவுறன் வாறன் அம்மா!
யோகம்மாடத்தைக் கோப்பியுடன் அடைகிறாள்.தமையன்சோமு மேசையில் விரித்த புத்தகங்களின் மீது தலை வைத்து இருந்தபடி துயில்கிறான். மேசையில் எரியும் லாந்தரை அணைத்து, மேசையில் கோப்பியையும் வைத்துமூடி, தமையனைக் கனிவாக நோக்கி விட்டு குசினிக்குத் திரும்புகிறாள். முருகேசு வயலுக்குப் புறப்பட முற்றத்தில் இறங்குகிறார். முருகேசு : கனகம். வெய்யில் ஏறப்போது. சுறுக்கு
வெளிக்கிட்டு வாணை - நான் போறன். குசினிக்குள்ளிருந்து பெட்டிக்குள் அப்பம் அடுக்கியபடி கனகம் : பட்டை, கொடியையும் கொண்டு போங்கோ - நான் இந்த அப்பத்தைக் கடைக்குக் குடுத்தனுப்பிட்டு வந்திடறன். குசினியை அடைந்த யோகம் கோப்பிகலக்கிறாள். யோகம் : நீங்கள் போங்கோம்மா - நான் குடுத்தனுப்புறன்.
கிணற்றடியிலிருந்துமுகம் துடைத்தபடிநுழைகிறாள்கமலம். கமலம் : எனக்குக் கோப்பியைத் தாவன் அக்கா.
கமலம் கோப்பிவாங்கிப்பருக கனகம் : உவன் சோமு எழும்பேல்லையே இன்னும்?
பள்ளிக்கல்லே நேரமாகப் போகுது. யோகம்தாய்க்குக்கோப்பிகொடுக்கிறாள். யோகம் : நான் நேரத்துக்கு எழுப்பி அனுப்புறன் அம்மா. இந்தாங்கோ. நீங்கள் கோப்பியைக் குடிச்சிட்டு வெளிக்கிடுங்கோ. கோப்பியைவாங்கிப்பருகியவண்ணம், கனகம் : ஒம் மேனை அங்கை அப்பரும் பேசப் போறார். கமலம் கோப்பி பருகியபின் மாடத்தை அடைந்து சோமுவை அன்பாய் உலுப்புகிறாள். கமலம் : அண்ணை அண்ணை எழும்புங்கோ அண்ணை!
எழும்பிக் கோப்பியைக் குடியுங்கோ.
2

தணியாத தாகம்
சோமு விழித்துத் தங்கையின் தலைமயிரைக் குறும்பாகக் குழப்பிவிட்டுக்கோப்பியை எடுத்துப்பருகக் குசினியிலிருந்து.
கனகம் : கமலம்.அவன் எழும்பட்டும். நீ நேரத்துக்கு அப்பத்தைக் குடுத்திட்டு வந்து பள்ளிக்கு வெளிக்கிடு நாச்சியார்.
கமலிகுசினிக்குட்சென்றுஒலைப்பெட்டியுடன்அய்யத்தைத்துக்கிப் புறப்பட்டுவர, அவளுடன் வெளியேவந்துதமையனைக் கண்டு. யோகம் : என்ன அண்ணர்! வாய் கூடக் கொப்புளியாமல்
கோப்பி குடிக்கிறீர் என்ன?
யோகத்தைக்குட்டுவதுபோற்பாவனை செய்து
சோமு : (செல்லமாக) போடி போடி. கள்ளி.
விலகியவண்ணம்
யோகம் : ஆளைப்பார்.
யோகம் முற்றத்துக்குச் சென்றுவிட்ட குறையைக் கூட்டுகிறாள். குசினியாற்புறப்பட்டு முற்றத்திலிறங்கிய கனகம் : அந்தக் கடகத்தைக் கொண்டா மேனே! வரேக்கை இரண்டு கிழங்கைக் கத்தரிக்காயைக் கொண்டு வரலாம் இன்டைக்குக் கறிக்கு. சோமுகுளிக்கத்தயாராகமுற்றத்தைத்தாண்டிக்கிணற்றடிக்குச் செல்கிறான். அடுத்த வீட்டுவளவின் இடைவேலிக்குச் சரிநடுவில் பாதி அப்புறமும் பாதி இப்புறமுமாகப் பங்குக் கிணறு அமைந்திருக்கிறது. அப்புறத்துக் கல் வீட்டின் பின் விறாந்தை கிணற்றுக்கு முகங் காட்டி யிருக்கிறது. கிணற்றின் மறுபுறம் முகம் கழுவிய வண்ணம் நிற்கும் கல் வீட்டுத்தம்பர், குளிக்க வரும் சோமுவைவரவேற்கும் குரலில்
தம்பர் : தம்பி சோமு!
சோமு : ஒ" தம்பர் ஐயாவோ!
சோமு குளிக்க, தம்பர்முகம் கழுவ, சம்பாஷணை தொடர்கிறது,
தம்பர் : எப்பிடித் தம்பி படிப்புகளெல்லாம் எப்பிடிப்
போகுது?

Page 15
சில்லையூர் செல்வராசன்
சோமு : பிழையில்லை ஐயா. தம்பர் : அடுத்தடுத்த கிழமை சோதனையும் வருகுதாக்கும். சோமு : ஒம். கடைசிச் சோதனை எப்படியும் பாஸ் பண்ணி
யுனிவர்சிற்றிக்குப் போகவேணும். அதுதான் இராத்திரி முழுக்க முழிச்சிருந்து படிச்சுக் கண்ணெல்லாம் எரியுது. தம்பர் : அது சரி தம்பி. ஏன், உவன் என்ரை மகனும் ஒரே இரா நித்திரை முழிப்புத்தானே! எண்டா நீ படிப்பு, அவன் படம் பாப்பு. சோமு : ஒ! அதுதான் இராத்திரிச் சாமத்திலே சைக்கிள்
சத்தம் கேட்டுது. தம்பர் : ஓமோம்! அவருக்கொரு சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்கிறா தாய் - கிழமைக்கு மூண்டு நாள் பட்டணம் போய் செக்கன் ஷோ படம் பார்த்திட்டுவர. சோமு : எண்டாலும் குமார் படிக்கிறார் தானே ஐயா. தம்பர் : ஒ1 படிக்கிறார் படிக்கிறார். அவற்றை வயசுக்குப்
படிக்க வேண்டியதெல்லாம் வடிவாய்ப் படிக்கிறார். கமரா, தம்பர் வீட்டின் பின் விறாந்தைக்கு ஒரு கணம் துரிதமாகத் தாவுகிறது. அங்கு சைக்கிளருகேநின்றபடி குமார் வேலியைத் தாண்டி, முருகேசுவீட்டின்முற்றத்தை நோக்கி, யோகத்தின் கவனத்தைச் "சூள்” கொட்டி ஈர்க்க முனைவதும் அவள் நிமிர்ந்து நோக்கிச் சட்டென்று நாணித் தலைகுனிந்து தொடர்ந்து கூட்டுவதும் தெரிகிறது. கமரா மீண்டு கிணற்றடிக்கு விரைவாக வெட்டித்திரும்பவும் தம்பர் தொடர்கிறார். தம்பர் : சோமு. அது கஷ்டப்பட்டவனுக்குத் தானடா தம்பி கல்வி வரும். இப்ப பார் நீயிருக்கிறாய். உண்ரை கொப்பர் முருகேசு நிலத்தைக் கொத்திப் புலத்தைக் கொத்தி நெஞ்சு முறியப் பாடுபடுகிறார். மனுசன் வருத்தக்காரன். இன்னும் எத்தனை வருஷமோ. உன்ரை கொம்மாவும், அநியாயம் சொல்லக்கூடாது. சீதேவி உங்களை ஆளாக்கிப்போட அப்பத்தைச் சுட்டு வெப்பத்தை திண்டு அது படுற பாடு.

தணியாத தாகம்
சோமு : என்ன இருந்தாலும் அயலட்டையிலே உங்கடை
உதவியும் தானே ஐயா. தம்பர் வீட்டுப்பக்கமிருந்து அவள் மனைவி குரல் கேட்கிறது. செல்லாச்சி : என்ன - கிணத்தடியை விட்டுக் கிளம்ப மன மில்லைப் போலையிருக்கு. கதை கண்ட இடம் கைலாசம் தானே உங்களுக்கு சோமுவுக்கு தாழ்ந்த குரலில் கூறிவிட்டு மனைவிக்கு உரத்துப் பதிலளிக்கிறார். ል தம்பர் : தம்பி - சோமு - அல்லி அரசாணி மாலை துவங் கீற்றுது - நான் வாறன். வந்திட்டன். வந்திட்டன். தம்பர் தன் வீட்டுப்பின் விறாந்தையில் ஏற. செல்லா : ஒ ஓ வந்தா வந்த இடம், போனாப் போன இடம் தானே துரைக்கு. அங்கை மேசையிலை கோப்பி போட்டு மூடி வைச்சிருக்கு எடுத்துக் குடியுங்கோ. குமார். நீ என்ன, பள்ளிக்குப் போறேல்லையோ இண்டைக்கு! குரலுக்குத்திடீரெனத்தடுமாறிப்போலிப்பாவனை செய்தபடி குமார் : இந்தச் சைக்கிளுக்குக் காத்தடிச்சிக் கொண்டு
6)JITO60ILDLDT. யோகத்தைஅவன்பார்த்துத்திரும்பகமராஅவளைத்தொடர்கிறது. கிணற்றடியால்திரும்பிய சோமு : யோகம்மா! யோகம். யோகம் : வந்திட்டன் அண்ணா.
கமலிவெறும் ஒலைப் பெட்டியுடன் படலையைத் திறந்து முற்றத் தில் வருவது தெரிகிறது. சோமு : இந்தா கமலியும் வந்திட்டாள். சாப்பாட்டைப் போடேனம்மா! பள்ளிக்கூடத்துக்கெல்லா நேரமாகுது. யோகம் குசினியிற்சாப்பாடு எடுத்துவைக்க, சோமுவும் கமலியும் உண்ண அமர்கிறார்கள். யோகம் உண்ணத்தயாராகவில்லை. அதைக் கண்டு,

Page 16
சில்லையூர் செல்வராசன்
சோமு : நீ சாப்பிடேல்லையா? யோகம் : நான் அம்மாவையோட சாப்பிடுறன்.
சோமுவும் கமலியும் உண்கிறார்கள்.சோமுவின்முகத்தைக்கமரா அண்மைக்காட்சியாகக்காட்டுகிறது.அதை தொடர்ந்து, சம்பாஷிக்கும் வேளையில் ஒவ்வொருவரையும் அண்மைக் காட்சியிலேயே கமரா காட்டுகிறது. யோகம் : விழுந்து விழுந்து ராத்திரி முழுக்கப் படிச்சாக்கும்.
கண்ரெண்டும் கொவ்வப் பழம் மாதிரிச் சிவந்திருக்கு.
சோமு : எல்லாம் உங்களுக்காகத்தானே அம்மா!
கமலி ; எங்களுக்காகவா?
சோமு : இல்லையா?
abDoS : எனக்காகவுமோ?
சோமு : ஏன்? நீ பெம்பிளை இல்லையா?
கமலி அதுக்கு?
சோமு : நீ வளர்ந்து வயசு வந்து கல்யாணம் பண்ணி
குழந்தை குட்டி பெற்று.
35LD65 : (சிணுங்கி) சும்மா போங்கண்ணை. பாருங்க அக்கா
இந்த அண்ணனை.
யோகம் : (கிண்டலாக) ஒம் கமலி! அண்ணன் படிக்கிறது அறிவுக்காக இல்லை. எனக்கும் உனக்கும் சீதனம் சம்பாதிக்க.
சோமு : அறிவுக்காகப் படிச்ச அந்தக் காலம் போயிட்டுது
யோகம். இப்ப படிப்பு உத்தியோகத்துக்காக. உத்தி யோகம் பணத்துக்காக. என்னைப் போல ஏழைகளுக்குப் u600TLD.... யோகம் : எங்களைப் போலச் சகோதரிகளுக்குச் சீதனத்
துக்காக. இல்லையா அண்ணா? மூவரும்நடுத்தர அண்மைக்காட்சியில்

தணியாத தாகம்
சோமு : என்னம்மா யோகம் செய்றது? உங்களைப் போன்ற செல்வங்களின் மதிப்பு எங்களைப் பெத்த இனத்தவங்களுக்குத் தெரியாது. பணம் பார்த்துப் பண்டம் கொள்ளிற சாதி. கமலியின் குரல் மட்டும் கேட்க, யோகத்தின் முகம் மட்டும் பல
கோணங்களில்சுழல் காட்சியாகத் தெரிகிறது.
கமலி : போங்கண்ணை அக்காவுக்கு அவ அழகும் குணமும் போதும். சீதனம். அவ யோகக்காரி. அதனால்தான் யோகம்மா என்று அவவுக்கு பேர் வைச்சதெண்டு அம்மா அடிக்கடி சொல்லுவா.
சோமு : (கண்கலங்கியபடி) ஆனால் அழகையும் குணத்தையும்
ஆரம்மா தேடுறான் இந்த நாளிலை? குமாரின்மெதுவான சீழ்க்கைஒலிஇருதடவைகேட்கிறது.யோகம்
வாளியைத்துக்கிக் கிணற்றடியை நோக்கிப்புறப்பட்டவண்ணம்.
யோகம் : இனிக் கதையை விட்டிட்டுச் சுறுக்குச் சாப்பிடு
ங்கோ. தமையன்முகத்தைக்கனிவாக நோக்கியகமலி, இடக்கையால்
அவன்கண்ணிரைத்துடைத்தவண்ணம்.
கமலி : பாருங்கோ ஆளை குழந்தைப் பிள்ளையஸ்மாதிரிக்
கண்ணும் கலங்கீட்டுது.
இருவரும் கைகழுவிப்பாடசாலைபுறப்படத்தயாராகின்றனர்.
சோமு : யோகம்.யோகம். ஏனம்மா நெடுக நிற்கிறாய்
கிணற்றடியிலே.
யோகம் : வாறேன்!
கமலி : வாங்கோவன். இந்த அக்காவுக்கு எப்பவும்
கிணறுதான் கதி. கிணற்றடியிலிருந்துநீர் வாளியுடன்திரும்பியபடி யோகம் : வந்திட்டேன் அண்ணா.

Page 17
சில்லையூர் செல்வராசன் சோமு : வயலுக்குச் சாப்பாடு கொண்டு போறேல்லையா?
எங்களோடேயே வாவன். அப்படியே போகலாம். யோகம் : சரி அண்ணா.
யோகம் சாப்பாட்டுப்பெட்டியுடனும் சகோதரர் புத்தகங்களுடனும் புறப்பட்டுப் படலையைத் தாண்டி ஒழுங்கையில் இறங்க, சைக்கிளில் அவர்களைத் தாண்டிச் செல்கிறான் குமார். கடைசியில் செல்லும் யோகத்துடன்புன்னகைபரிமாறிக்கொள்கிறான்.வீதியில்ஏறி, பள்ளிக்குப் பிரியும் முடக்கு வந்ததும், சோமு : கவனமாப் போ யோகம்.
அவர்கள்பிரியயோகம்நேரேசெல்கிறாள். துரத்தே சைக்கிளுடன் தரித்து நிற்கும் குமார், எதிர்ப்புறமிருந்து வரும் சீவல் தொழிலாளி முருகனைக்கண்டதும் உட்கார்ந்து, சைக்கிள்ச்சில்லைச்சுழற்றுகிறான். முருகன் : தம்பி சைக்கிளுக்குக் காத்துக் கீத்துப் போட்டுது
போலை.
குமார் : இல்லை, முருகன்! செயின் கழண்டு போச்சு. முருகன் : இஞ்சை விடன் தம்பி. நான் கொழுவி விடறன். குமார் : சீ வேண்டாம் வேண்டாம். நான் போடிறன். முருகன் : உடுப்பெல்லோ தம்பி ஊத்தையாப் போம்.
யோகம் அவர்களைத்தாண்டிச்செல்கிறாள். குமார் : இல்லை. அது நான் போடிறன். நீ போ. அங்கை
ஐயா பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்வைகள்பரிமாறுவதைமுருகன் கவனித்து முருகன் : கழண்டு தான் போச்சு! குமார் : (தடுமாறி) என்ன? முருகன் : செயின் குமார் : (கோபமாக) நீ போவேனப்பா. முருகன் : (கிண்டலாக) விட்டுப் போச்சு!
குமார் : என்னடாப்பா சொல்றாய்?

தணியாத தாகம்
முருகன் : இல்லை. அது பிறிவில் கம்பி விட்டுப் போச்சுப்
போலை. யோகம்வீதியிலிருந்துவயலுக்குத்திரும்பும்முடக்கில்இறங்குவது துரத்தே தெரிகிறது. குமார் : (சலித்துப் போய்) உன்னைப் போ எண்டல்லே
சொன்னனான். அது நான் போட்டிட்டேன் போ! குமார் சைக்கிளில் ஏறிச்சோர்ந்துபுறப்பட முருகன் : ஒருக்காச் சுழட்டிப் பாக்கவன் தம்பி செயின் சரியாய்க் கொழுவுப்பட்டுதோண்டு! (தனக்குள்) சரியாத் தான் கொழுவுப் பட்டிருக்கு அநியாயம் சொல்லக்கூடாது. தம்பி நல்ல ஒட்டம் ஓடுகிறார். கமரா முருகனைவிட்டு, குமாரைத் தொடர்ந்துமுடக்கில் அவனை நேரே செல்லவிட்டு,யோகத்தைத்தொடர்கிறது. அவள்வயல்எல்லையை அடையத் தூரத்தில், பாடிய வண்ணம் முருகேசு துலா மிதிக்க கனகம் இறைப்பதும் கூலியாள் முனியாண்டி தண்ணிர் மாறுவதும் தெரிகிறது. பாட்டும் முடியஅவளும் வயலை அடைகிறாள். முருகேசு பொன்னிற் சிறந்திடும் மின்னும் யாழ்ப்பாணமே
போக விரைந்தெழுவீர் இத சணம் போக விரைந் தெழுவீர். வான்நகரி என்னும் பூநகரி கண்டு மருவு பரந்தன் திருமாட்சியும் கொண்டு ஆனையிறவோடமிய புலோப்பளை ஆகும் மிகவில் சீர்வளமும் கண்டு - பொன்
மாசாலர் வாழும் எழுதுதல் மட்டுவாள் மங்களமாகும் கொடிகாமம் மற்றுயன் மீசாலை கண்டு மாதெண்பாற் கழனிசூழ் மேவும் நாவற்குழிதாண்டி நல்லு ரெனும் - பொன் யோகம் : என்ன முனியாண்டி பாட்டிலே மயங்கிப் போய்ப்
பாத்தி பெருக விட்டிட்டு நிற்கிறாய்.

Page 18
சில்லையூர் செல்வராசன்
முனியாண்டி : கூ! கூ! கூ! கனகம் : பாட்டை நிப்பாட்டிப் போட்டு இறங்குங்கோ. தண்ணி பாய்ஞ்சிட்டுதாக்கும். அங்கை பிள்ளையும் சாப்பாடு கொண்டந்திட்டாள். முருகேசு : வத்துத் தண்ணியாயும் போச்சு - அப்ப கொடியை விடு. ஊறினால் பிறகு அங்காலை குடக் குழிக்கு வேணும். முருகேசு துலாவைவிட்டிறங்கி,இருவரும் கைகால்வாய்அலம்பி, மரநிழலுக்கு வந்துயோகம்,முனியாண்டியுடன் அமர்கிறார்கள்.
கனகம் : நீ சாப்பிட்டியே யோகம்? யோகம் : நான் வீட்டை போய்ச் சாப்பிடுறன் அம்மா. கனகம் : வேண்டாம் - நீயும் எங்களோடையே சாப்பிடு.
அங்கையுமில்லை இங்கையுமில்லாமல் நீ சாப்பிடாமல் கிடந்துதான் உப்பிடியிருக்கிறாய். முருகேசு : சாப்பிடன் மேனே! யோகம் : எனக்கிப்ப பசிக்கேயில்லை அப்பு.
மூவரும் சாப்பிட யோகம் பார்த்திருக்கிறாள். முனியாண்டி : ஐயாவோட பாட்டைக் கேட்டுச் சின்னம்மாவுக்கு வயிறு ரொம்பிப் போயிடிச்சாக்கும். இல்லேம்மா? யோகம் : முனியாண்டி தானம்மா அப்புவின்ரை பாட்டைக் கேட்டு ஆவெண்டு அங்கை பாத்துக் கொண்டு நிக்க, இங்கை பாத்தியெல்லாம் உடைச்சுப் போட்டுது. முனியாண்டி: ஆமாங்கம்மா! உங்க ஊர் நாட்டுக் கூத்துப்பாட்டை ஜயா பாடறப்போ நம்ம மலைநாட்டுக் காமன் பண்டிகை ஞாபகம் வந்திடுதம்மா. தோட்டத்திலே தீவெட்டி வெளிச்சத்திலே சனங்க எல்லாம் சுத்திக் கூட்டமாய் இருக்க, காமன் கூத்து ஆடுவாங்கம்மா. (பாடுகிறான்)
10

தணியாத தாகம்
"மலைவளம் சிறந்த நாடு மாரி மழை கழுந் நாடு கலைவளம் நிறைந்த நாடு கார் முகில் தவழும் நாடு. அப்படின்னு நாட்டுச் சிறப்புப் பாடிக்கிட்டு ஆரம்பிப்பாங்க. எப்படியிருக்கும் தெரியுங்களா? சின்ன வயசிலே நான் கூட ஆடியிருக்கேங்க. முருகேசு : நீ இதைச் சொல்கிறாய் முனியாண்டி உனக்குத் தெரியாது. நான் இளந்தாரியாய் இருக்கேக்கை சங்கிலி இராசன் நாடகத்திலே சங்கிலியன் வேஷம் போட்டு வரவுத் தரு பாடிக் களரியிலே ஏறி, காப்பை சுழல ஒரு எட்டுப் போட்டுச் சுற்றி ஆடி வந்து நின்டால் கைதட்டிலே களரி அதிரும். முனி : ஐயா இப்போ பாடின பாட்டு அது தானுங்களா.
இல்லை? முருகேசு இல்லை. இல்லை. சங்கிலி, சோழன் மகளைக் கல்யாணம் செய்து கொண்டு மன்னாரிலையிருந்து வாறான். தன் ஆட்களோடை ஒவ்வொரு ஊராகப் பெண் சாதிக்கு வருணித்துக் கொண்டு. (பாடுகிறார்)
பொன்னிற் சிறந்திடு மின்னும் யாழ்ப்பாணமே போக விரைந்தெழுவீர். எண்டு பாடிற நேரம் - முனியாண்டி. கனகம் புன்னகைக்கிறாள். முனி அம்மாவுக்குச் சிரிப்பு வருதுங்கையா! ஏங்கம்மா?
ஐயா கூத்தாடறப்போ பார்த்திருக்கீங்களா? முருகேசு : அந்தக் கலியாணக் கோலத்திலை என்னைப் பார்த்திட்டுத்தானே முனியாண்டி, அம்மா கட்டினா கான் னைத்தான் கட்டிறதென்டு ஒத்தைக் காலிலே நின்ைடு. முனி அடடே அப்படீங்களா அம்மா?
11

Page 19
சில்லையூர் செல்வராசன்
நாணியவண்ணம்
கனகம் : (செல்லமாக) ஊம் போதும் போதும் யோகம்
போய்க் குடக்குழிக்கு வாய்க்காலைத் திருப்பி விடு. (யோகம் அப்பால் நகர) பக்கத்திலை குமர்ப்பிள்ளையையும் வைச்சுக்கொண்டு அவர் கதைக்கிற கதை.
முனி : ஏங்கம்மா? சின்னம்மாவுக்கும் கலியாணம் ஆகிற வயசு தானுங்களே! அதுவும் இதையெல்லாம் தெரிஞ்சுக் கிறதிலே என்னங்க தப்பு?
முருகேசு : ஒம் முனியாண்டி! அவளுக்கும் வயசு வந்திட்டுது.
கனகம் : சின்னவளுக்கும் இண்டைக்கோ நாளைக்கோ
எண்டு வயசாகிக் கொண்டு வருகுது. முனி அவங்க அவங்க காலத்திலே அம்மாவுக்கு ஐயா
வந்தமாதிரி யாராவது வராமலா போயிடப் போறாங்க?
முருகேசு : முனியாண்டி உனக்கு எங்கடை சாதி சனங் களின்ரை போக்கு வாக்குத் தெரியாது. எங்கடை காலம் மாதிரி இல்லை இப்போ. அந்த நாளிலை கலியாணம் எண்டா ஒண்டுக்கை ஒண்டு. உள்ள ஆதனம் பாதனம்தான் சீதனம். குடும்பத்துக்குள்ளே இருக்கிற சொத்துப் பிரிஞ்சு போகாமல், உறவுக்குள்ளே காரியம் முடிச்சிடும். இப்ப அரைக்காற் சட்டை போட்ட வனுக்கே ஆர் எவர் என்று பாராமல் ஐம்பதினாயிரம் ரூபாய் காசாய்க் கொடுத்தாத்தான் கன்னிப் பெண் கரை சேரும்.
கனகம் : உதைச் சொல்லிறியள். தோட்டம் துரவு செய்யி றவனே இப்ப சுளையாய்க் காசு கேக்கிறான் சீதனம். என்னவோ படைச்சவன் படியளப்பான். கதையை விட்டிட்டு வாருங்கோ. வெய்யிலும் உச்சிக்கு வந்திட்டுது.
முனி தண்ணி பாய்ச்சறதுக்கு நானும் நிக்கட்டுங்களா
இல்லே?

தணியாத தாகம்
முருகேசு : நீ போ முனியாண்டி. என்ன, ஒரு முந்நூறு கண்டுக் குத் தண்ணிர் வாக்கிறது தானே. நீ உன்ரை சோலி சுரட்டுக்கும் போக வேணுமல்லே.
முனி சரிங்க
கனகம் : பிள்ளை யோகம்! நீயும் முனியாண்டியோடை போவன் மேனை, அவ்வளவுக்கும் துணையாய் இருக்கும்.
முனி : வாங்க சின்னம்மா.
கனகம் : இந்தா பிள்ளை இந்தக் கத்தரிக்காயையும்
கொண்டு போ. போய் உலையை வைச்சு ஆயத்தப்படுத்து மேனை. நான் இப்ப வந்திடுறேன். யோகம் கடகத்தை வாங்கியதும்முனியாண்டியும் அவளும்பேசிய
வண்ணம் வரப்புவழியேநடக்கிறார்கள்.
யோகம் : கன நாளாய் நேரே கேட்க வேணுமெண்டு நினைச் சனான் முனியாண்டி - நீ அந்தக் கொட்டில்லை எப்படித் தனியச் சமைச்சுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்? உனக்குத் தாய் தகப்பன் பெண்சாதி பிள்ளையஸ் எண்டு ஒருத்தருமில்லையாம்!
முனி : நானே நினைச்சுக்க மறந்து போன விஷயமெல்லாம் ஞாபகப்படுத்திறீங்க சின்னம்மா. மலை நாட்டிலே பிறந் தவன். அப்பா யாரு? தெரியாது. அம்மா யாரு? தெரியாது. இந்தியாவிலே இருந்து வந்தவங்கன்னு கேள்வி. சித்தி சித்தப்பான்னு யாரோ வளத்தாங்க. அவங்க தயவிலே பதினைஞ்சு பதினாறு வருஷத்தை ஒட்டினேன். அவங்களுக்கு நான் பாரம்னு எப்ப தெரிஞ் சுதோ அப்பவே கிளம்பி இப்பிடி வந்துட்டேன்.
யோகம் : எங்கடை ஊருக்கு நீ வந்து இரண்டு வருசம் கூட
இல்லையே!
முனி : யாழ்ப்பாணத்திலேயே ஊர் ஊரா ஒரு பதினைஞ்சு
13

Page 20
சில்லையூர் செல்வராசன்
வருஷம் சுத்தியிருப்பேனுங்க. நினைப்பு வந்தா இரண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி மலைநாட்டுக்கு போயித் தெரிஞ்சவங்களைப் பாப்பேன். என்னமோ தண்ணிர்த் தாகம் மாதிரி இங்கேயே திரும்பி வந்திடணும்னு தோணும். வந்திடுவன். யோகம் : அங்கை போற நேரம் கலியாணம் காற்கட்டென்று
உன்ர ஆக்கள். முனி போட்டிடலாமின்னுதான் பாத்தாங்க, தனியாவே, பொறந்திட்டம். தனியாவே போகப் போறோம்.இடையிலை எதுக்குங்க இந்தப் பொறுப்பெல்லாம். யோகம் : தனிமையிலையும் நீ எப்படி இவ்வளவு கலகலப்பாய்ச்
சிரிச்சுப் பேசிச் சந்தோசமாய் இருக்கிறாய்? முனி : பொறக்கும் போதே அழுதுகிட்டுப் பொறந் துட்டோமுங்க. இருக்கும் போதாவது சிரிச்சுக்கிட்டு இருந்திட்டுப் போறது தானுங்களே நல்லது?
யோகம் : ஊம்.
வீதியில் ஏறிமுனியாண்டிபிரியும் இடம் வந்துவிடவே. முனி : நான் வர்ரேனுங்க சின்னம்மா
யோகம் : சரி.
முனியாண்டிபிரிய, யோகத்தைக் கமரா தொடர்கிறது.தூரத்தே வீதி மதகில் மூன்று இளைஞர் அமர்ந்திருப்பது தெரிகிறது. எதிர்ப் புறமிருந்துபென்சன்காரர் மணியம் வருகிறார். ரட்ணம் : அங்கை பார் கனகு! மணியத்தார் வெள்ளாப்பிலே
தண்ணி போட்டிட்டு நிறைகலையிலை வாறார். கனகு : ஒமடா ரட்ணம் இண்டைக்குத் தானே பென்சன்! ஆனந்தன்: ஒ! எடுத்துக்கொண்டு வாற வழியிலை வார்த்துக்
கொண்டு வாறார் போலை.
மணியத்தார்அருகே வந்ததும்
14

தணியாத தாகம்
ரட்ணம் : என்ன மணியத்தார்! பென்சன் எடுத்துக் கொண்டு
போல?
மணியம் : ஒமடா தம்பி.
கனகு தெரியுது
LDøof : ஊம். கனகு : வாற வரத்திலை தெரியுது шpєоої : ஆர்? எங்கடை சின்னத்தம்பியின்ரை மேன்
கனகுவோ. பகிடி விடுகிறீர் என்ன? ரட்ணம் : இல்லை மணியம் அம்மான். நீங்கள் போங்கோ. LDesaf ஒ ஓ ஒ! அம்மான் முறை கொண்டாடுறிரோ!
(பாடுகிறார்)
ஆசை மருமகன் மோசம் போனான் இதற் கையோ என்ன செய்வேன். ரட்ணம் : சூடேறுகிற நேரம் அம்மான். பார்த்துப் போங்கோ.
யோகம் அவர்களைத்தாண்டிச் செல்கிறாள் щраст : அடேய்! அவையின்ரை காவாலிக் கதையைப்பார். படிச்சுப் போட்டு ஒரு வேலைவெட்டி பார்க்கத் தெரியாது. சந்திக்குச் சந்தி மதகிலையிலிருந்து வாற போறவைக்கு நொட்டைக் கதை சொல்றியள் என்ன? (யோகத்துக்கு.) தங்கச்சி.நீ போ நாச்சியார். பெண் புரசு தெருவாலை மரியாதையாய்ப் போக வரக் கூட ஏலாது உங்காளாலை,
கனகு : உங்களாலையும் தான் மணியத்தார். நீங்கள்
போங்கோ.
மணியம் : ஊம் போறன். கனகு. கொப்பரைக் காணட்டும்.
மணியம் செல்ல
ஆனந் : நீங்களும் ஆக மோசமடாப்பா. ஏன் இப்ப அந்த
ஆளோடை கதை குடுத்தனிங்கள்.

Page 21
சில்லையூர் செல்வராசன்
ரட்ணம் : இருந்தாலும் மனிசன் சொல்லிட்டுப் போறதும்
உண்மைதான். ஆனந் : அந்தாள் படிச்சு உத்தியோகம் பார்த்துச் செய்ய வேண்டியதைச் செய்து பென்சன் எடுத்த காலத்திலே ஏதோ சந்தோஷத்துக்கு இப்படிச் செய்யுது மச்சான். நாங்கள் அரைகுறையெண்டாலும் படிச்சுப் போட்டு உத்தியோகமுமில்லை, ஊரிலை ஒரு தொழிலுமில்லை யெண்டு இப்பிடி இருக்கிறம். கனகு : அவற்றை காலம் வேறை எங்கடை காலம் வேறை யடாப்பா. இப்ப எங்களுக்கு வேலை கிடைச்சு வேணாம் எண்டிட்டு இருக்கிறோமே! ஆனந் : காணி பூமியும் இருக்கு - எங்களுக்குக் கைகாலும்
இருக்குத்தானேயடாப்பா? கனகு : சும்மா விழல் கதையை விடு ஆனந்தன். அடேய் ரட்ணம் - இப்ப இதாலை போன பெட்டை தானே
சோமுவின்றை தங்கச்சி.? ரட்ணம் : ஒம் மச்சான், ஊரிலையிருக்கிற மற்றப் பெட்டையள்
மாதிரியில்லை. நல்ல அடக்கமான பிள்ளை. ஆனந் : நானும் கவனிச்சிருக்கிறன், வீட்டுப் படி தாண்டினா
குனிஞ்ச தலை நிமிராது.
கனகு : எதிரிலே குமார் வந்தால் தவிர! ரட்ணம் : என்னடாப்பா சொல்றே? கனகு : பசுப்போலை இருக்கிற பொம்பிளையஸ் எல்லாரும்
அப்பாவிகள் இல்லையெண்டு சொல்றன். ஆனந் : அப்படியெண்டால் குமாருக்கும்.? கனகு : உம் குமாரே சொன்னான்! அக்கம் பக்கம்,
பஞ்சும் நெருப்பும் பத்திற்றுது. ரட்ணம் : சோமுவுக்குத் தெரியுமா?

தணியாத தாகம்
கனகு : இருக்காது. ஆனால் தெரிந்தாலும் என்ன செய்யிறது? ரட்ணம் : அவன் ஒரு மாதிரி ஆளப்பா. நேர்மையானவன்.
கண்டிப்பானவன். ஆனந் : படிப்பிலும் கெட்டிக்காரன். எப்பிடியும் இந்த முறை யுனிவர்சிட்டிக்குப் போவான். போயிட்டு வந்தாப் பிறகு அந்தக் குடும்பத்தைப் பிடிக்கேலாது. கனகு : என்ன பிடிக்கேலாது? தகப்பனிட்டை இருக்கிற
காசு குமாரின்ரை மூன்று தலைமுறைக்குக் காணும். ரட்ணம் : அவன் இப்பவே பண்ற சுதிக்கு அவன்ரை
கல்யாணத்துக்கே கடன்தான் படவேண்டியிருக்கும். ஆனந் : எப்பிடிப் பார்த்தாலும் அந்தப் பிள்ளையின்ரை குணத்துக்கும், அழகுக்கும் நீ சொல்றது உண்மை யென்றால் குமார் குடுத்து வச்சவன்தான். வயலிலிருந்துகனகம் வருவதுதுரத்தே தெரிகிறது. ரட்ணம் : அங்கை சொல்லி வச்ச மாதிரி சோமுவின்ரை தாய் வாறா. கதையை நிப்பாட்டிட்டு வாங்கோ போவோம். அவர்கள் மறைய கமரா, கனகத்தைத் தொடர்கிறது. கனகம் விட்டுப்படலையைஅடைய,முருகன்அடுத்த வீட்டுப்படலையைத்திறந்து உள்நுழைவது தெரிகிறது. கமரா அவனைத் தொடர்கிறது. செல்லாச்சி: என்ன முருகன் - இண்டைக்கு உன்ரை பிரவேசம் பிந்திப் போச்சு. ஐயா ஆளைக் காணேல்லையெண்டு ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். முருகன் : நாச்சியாருக்கு எப்பவும் பிரவேசப் பகிடிதான். செல் : இல்லை. இண்டைக்கு மாவிட்டபுரம் பிரவேசம் எண்டு பேப்பரிலை செய்தி போட்டிருக்கு. ஆள் பிந்தினாப் போலே அங்கை போட்டியோ எண்டு நினைச்சன். முருகன் கள் வார்த்து வைக்க சாய்மானக் கதிரையிலிருந்து நிமிர்ந்து.
17

Page 22
சில்லையூர் செல்வராசன்
தம்பர் : என்ன இண்டைக்கு கள்ளு ஒரு மங்கல் நிறமா
யிருக்கு. முருகன் : ராத்திரி மழை துமிச்சதல்லேய்யா. இண்டைக்கு ஐயாவுக்கு கொஞ்சம் இறங்கக் கஷ்டமாய்த்தானிருக்கும். செல் கஷ்ட நஷ்டத்தைப்பற்றி அவருக்கென்ன கவலை? அந்த யோசனை இருந்தால் அடுத்த வீட்டுக்குக் குடுத்த கடனைப் பற்றி இவ்வளவு காலமும் யோசியாம லிருப்பாரே! கமரா இப்புறம் தாவி, முருகேசு முற்றத்தில் பட்டை கொடி வைப்பதைக் கண்டு திரும்புகிறது.
அங்கே எட்டிப்பாருங்கோ. ஆளும் வந்தாச்சு. இண்டைக்கு இரண்டிலை ஒண்டு தெரிய வேணும். அடுத்தடுத்த மாசம் அவைக்கு அரிவு வெட்டு, இப்பவே சொல்லிக்கில்லி வைச்சாத் தானே சூடு அடிச்ச உடனே சூடு சுரணை யோடை குடுத்த காசு வரும். தம்பர் : ஏனப்பா சும்மா சத்தம் போடிறாய்? அங்காலை
கேட்கல்லே போகுது.
செல் : கேட்டா என்ன? ஒன்றில் நீங்கள் போய்க் கேட்க வேணும் இல்லாட்டி நான் போய்க் கேட்கவேணும். இப்பிடியே விட்டுக் கொண்டு போனால் எப்பிடி? ஒரு ஈடோ எழுத்தோ ஒண்டுமில்லாமல் காசைத் தூக்கிக் கொடுத்துப் போட்டுப் பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி இருக்கிறார். வட்டியும் வளருது. கமரா, முருகேசு வீட்டுக்கு வெட்டித் திரும்புகிறது. அவர்
விறாந்தையில்மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கனகம் : வட்டியும் வளருது இரண்டு வருஷமாச்சு போன முறைக்கு முந்தின விதைப்புக்கு வாங்கின காசு. போன விளைச்சல் கெட்டுப்போக இந்த வெள்ளாமையோட தாறம் எண்டதும் அவை ஒத்துக் கொண்டதே பெரிய காரியம்.
18

தணியாத தாகம்
முருகேசு : அதுதான் நானும் யோசிக்கிறன் கனகம். இந்த முறை வானமும் முகம் பார்த்திருக்கு. எப்படியும் இந்த வெள்ளாமையோடை குடுத்துப் போடலாம். ஆனாத் தம்பியையும் இந்தச் சோதனையோடை எப்படியும் மேற் படிப்புக்குக் கட்டாயம் அனுப்ப வேணும்.
கனகம் : அவன் படிச்சு உத்தியோகமானா எங்கடை பிச்சைப்பெட்டியைப் பறிச்செறிவான்தான். ஆனால் அது வரையும் கடன் காத்திருக்குமே? முருகன்படலையைத் திறந்துநூழைந்துமுற்றத்துக்குவருகிறான்.
முருகன் : பிள்ளை, கொஞ்சம் தண்ணி வார்க்க!
கனகம் : ஆர்? முருகனோ? யோகம் - முருகனுக்குக்
கொஞ்சம் தண்ணியாம் வார்த்துவிடு மேனை. முற்றத்துக்கு வந்து
யோகம் : வாவன் முருகன்.
கிணற்றடி. யோகம்நீர் மொண்டுதிரும்ப
முருகன் : வார்க்கப் பிள்ளை.
இருவரும் திரும்ப
கனகம் : போதுமே முருகன்? முற்றத்தில்வாய்துடைத்தபடி
முருகன் : பிள்ளையின்றை கையாலே கடல்த் தண்ணியை வார்த்தாலும் கடுந்தாகமும் தணியும். அங்காலில் ஐயாவுக்குத் தாகம் தணியக் கள்ளுத் தண்ணி குடுக்கிற நான் எனக்குத் தாகத்துக்குத் தண்ணி குடிக்க வேறே பின்னே ஏன் இங்கை வாறனான்? விறாந்தைக்கப்புடன் சாய்ந்திருக்கும்
யோகம் : (சிரித்தபடி) ஏன் முருகன்! இரண்டு விட்டுக்கும்
கிணறு ஒண்டு தானே!
19

Page 23
சில்லையூர் செல்வராசன் முருகன் : பிள்ளை அப்படி நினைக்குது. அவையும் அல்லோ
அப்படி நினைக்க வேணும். கனகம் : ஏன் முருகன் அப்படிச் சொல்றாய்? முருகன் : சொல்றனெண்டு பிழை விளங்கக்கூடாது பிள்ளை. அந்த அம்மாவுக்குத் தாகம் தணியத் தண்ணியும் வார்க்காத தரித்திர மனம், இப்பவும் உங்கடை கதை தான் கதைச்சா! கனகம் : கடன் காசைப்பற்றியதாக்கும். முருகன் : ஒம் பிள்ளை. வெற்றிலைநீட்டியபடி முருகேசு : வெற்றிலை போடன் முருகன்.
வாங்கி முருகன் : தர! இதைத்தான் பிள்ளை சொன்னனான். ஐயா வாய்க்கு வெத்திலை தருகுது. அந்தம்மா கோயில் பிரவேசம் பற்றி வாயிலை வந்தபடி பேசிறா. முருகேசு : எல்லாம் ஆளுக்கொத்த ஆசாரமும் ஊருக்கொத்த உபசாரமும் தானே முருகன். இப்ப பார். எங்கடை கோயில்லை தெய்வம் முருகமூர்த்தி, இந்த வீட்டுக்குத் தலைவன் நான் முருகேசு, ஊருக்கை தாகம் தீர்க்கிற நீ முருகன். ஒரே பெயர் - வித்தியாசம் எத்தினை பாக்கினம்? முருகன் : ஐயா மேலே பேச இடம் வைக்காமல் பொழிப்பாய்ச் சொல்லிப் போட்டுது. ஏற இன்னும் நாலு மரம் கிடக்கு. வரப் போறன். வாறன் பிள்ளை. முருகன்போவதைப்பார்த்தபடி கனகம் : விடிஞ்சாப் பொழுதுபட்டாக் கள்ளோடேயே காலம் தள்ளிறவன். தான் தொடமாட்டான். தாகத்துக்கு வெறும் தண்ணி குடிச்சிட்டுப் போறான். அவனல்லோ மனுசன்.
20

தணியாத தாகம்
யோகம் : அப்பு குறிப்பு விளங்குதோ?
முருகேசு : நானும் இப்ப மனுசனாய் விட்டன் தானே மேனை
கனகம் : பின்னைக் குமர் குட்டியுமான பிறகு நெடுகக் குடிச்சுக் குசால் பண்ணிக் கொண்டிருக்க முடியுமோ? பள்ளியால்திரும்பியகமலிவளவுமூலையில்நிற்கும் ஒரு மாட்டை
விரட்ட அது அடுத்த வளவுள் நுழைகிறது. அவ் வளவு வீட்டின்
முன்விறாந்தையில்நின்றபடி
செல்லாச்சி; ஏன் பிள்ளை, மாடு கலைக்க வேறே வளவு கிடைக்கேல்லையோ? வேலியை அடையுங்கோ அடை யுங்கோ எண்டு எத்தனை தரம் சொல்லியாச்சு. அதுக்கும் வழியில்லை. வாற மாடுகளையும் இஞ்சாலை பிடிச்சுக் கலைச்சு விடுறது. என்ன இதற்கொரு கேள்வி நியாயம் கிடையாதோ?
கமலியின்முதுகில் ஒருதடவைஆத்திரமாக அடித்து
கனகம் : ஏன்ரி கமலி! வா இஞ்சை! இத்தனை வயசாச்சு. உனக்கொரு புத்தி விவரம் தெரியாதோ! போ உள்ளை, போ.
முருகேசு : ஏனணை அடிக்கிறாய் பிள்ளையை - பள்ளியாலை
வந்ததும் வராததுமாய்?
கனகம் : இன்னும் என்ன சின்னப் பிள்ளையே! நடக்கிறது களைக் கவனிச்சு, ஒண்டும் யோசிச்சு நடக்கத் தெரியாது. போ போய்ச் சட்டையை மாற்றிற்றுச் சாப்பிடு.
முருகேசு : நீ போ நாச்சியார். போய்ச் சாப்பிடு. அவவுக்குப்
பல வேகமும்
உள்நுழைந்த கமலிபுத்தகங்களை மேசையில் வைத்துவிட்டு வீம்புடன் கதிரையில்இருக்கிறாள். அவளை நெருங்கி,
யோகம் : வாவன் கமலி சாப்பிட,
21

Page 24
சில்லையூர் செல்வராசன்
கமலி : எனக்குச் சாப்பாடு வேணாம் - போங்கோ யோகம் : சாப்பாட்டோடையும் கோபமா? கமலி : எனக்குப் பசிக்கேல்லை. வேணாம். யோகம் : அம்மா அவையின்ரை கடனை நினைச்சுக்
கவலையோடை இருந்தவ, அந்த நேரம் நீயும் இப்படிச் செய்ய.
கமலி ; அவையின்ரை வளவுக்கை போகச் சொல்லியே கலைச்சனான் மாட்டை? அது போனதுக்கு நான் என்ன செய்யிறது?
யோகம் : சரி சரி. நீ வா சாப்பிட
35D65 : எனக்கு வேணாம் எண்ணிறன்.
குமாரின்சைக்கிள்மணியொலிகேட்க,யோகம்அகன்றுவாளியுடன்
கிணற்றடிசெல்கிறாள். கமரா அவளைத்தொடர்ந்து, அவள்பார்வையுடன்
அடுத்தவீட்டுக்குத்தாவுகிறது.
செல் வந்திட்டியா குமார். வா, வந்து சாப்பிடு. குமார் : கால் முகம் கழுவிப் போட்டு வந்திடுறன் அம்மா. தம்பர் : சாப்பிட்டுட்டு எங்கேயோ வெளிக்கிடப் போறார்
போலே மாப்பிள்ளை.
செல் : ஏன் குமார்? குமார் : ஓம் அம்மா! கிரிக்கெட் மாட்ச் ஒண்டிருக்கு. போக
வேணும். அவன்கிணற்றடிக்குப்புறப்பட செல் : பள்ளிக்கூட மெச் ஆக்கும். அவன் போகட்டன்.
உங்களைப் போலை சாய்மானக் கதிரையே சதம் எண்டு இருக்கச் சொல்றியளோ. நீ சுறுக்கு வா ராசா. அவள்பார்வையுடன் கமராஅயல்வீட்டுக்குத்தாவுகிறது. சோமு பாடசாலையால்திரும்புவது தெரிகிறது. அவனைக் கண்டதும்,

தணியாத தாகம்
முருகேசு : கனகம்! இங்கே தம்பியும் வந்திட்டான் பள்ளியாலே.
சாப்பாட்டைக் குடுக்கச் சொல்லு.
கனகம் : நீங்களும் போங்கோவன் கையோட,
சோமுவிறாந்தையில் ஏறியபடி சோமு : கமலி வந்திட்டாளா?
முருகேசு அங்கை சாப்பிடமாட்டனெண்டு இருக்கிறாள் போலை. பார்த்து அவளையும் சாப்பிடப் பண்ணு தம்பி.
கமலியை அணுகி சோமு : ஏன்? . கமலி. கமலி. என்ன ராசாத்தி? கமலி ஒண்டுமில்லை. சோமு : அழுகிறியோ? aьшоө9 : இல்லை.
சோமு : அக்கா எங்கை? கமலி ; கிணத்தடியிலை தானாக்கும். வேறே என்ன கதி
அவவுக்கு?
உடுப்புமாற்றஅறைக்குள்நுழைந்தபடி (ểeFIrgp : (8u JT85[b! (8u JT85ưb!
கிணற்றடியிலிருந்து யோகம் : ஓம் வந்திட்டன் அண்ணா!
விறாந்தைக்குத்திரும்பி சோமு : கமலி! என்னம்மா முகத்தை உம்மெண்டு வைச்சுக் கொண்டிருக்கிறாய். அண்ணாவுக்குச் சொல்லன் கமலி : ஒண்டுமில்லை.
கிணற்றடியால்திரும்பி, யோகம் : வளவுக்கை வந்த மாட்டை அவள் கலைக்க
அங்காலை போட்டுது. அவ ஏசினாப்போலே அம்மா
23

Page 25
சில்லையூர் செல்வராசன்
கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினாவாக்கும். அதுதான்
ரோசம். சோமு : (கனிவாக) அதுதானோ! சீச்சீச்சி! பபா! ம்! எழும்பு
சாப்பிட
கமலி (வெம்பியபடி) போற மாட்டை நான் என்ன மறிச்சுப்
பிடிக்கிறதே. அதுக்கு எனக்கு அடிக்கிறா. சோமு : அது தானே! மாட்டுக்கல்லோ நல்ல அடி போட
வேணும். இந்த அம்மாவுக்கு ஒண்டுமே தெரியாது. சரி - அது நான் குடுக்கிறன் பூசை - நீ எழும்பு சாப்பிட!
மாறிமாறி அண்மைக்காட்சியில்
கமலி : (36603TLIT bl
சோமு : (மனத்தாங்கலாக) வேண்டாம்?
கமலி : (தயக்கமாக) வேண்டாம்.
சோமு : (கோபம் மேலிடப் பக்கத்துக் கதிரையில் அமர்ந்து) சரி!
யோகம்! எனக்கும் சாப்பாடு வேண்டாம். அப்பு அம்மாவுக்குச் சாப்பாட்டைக் குடுத்து நீயும் சாப்பிடு.
யோகம் : எனக்கு மட்டும் ஏனாக்கும் சாப்பாடு? எனக்கும்
வேண்டாம்.
சோமு : அப்ப இண்டைக்கு எல்லாரும் உண்ணாவிரதம்
இருப்பம். கமலிஎழுந்துதமையன்கையிற்பிடித்துஇழுத்தபடி,
35D65 : ஐயோ! இந்த அண்ணனோடை ஒண்டும்
செய்யேலாது. ம். வாங்கோ சாப்பிட,
சோமு : (பிகுவாக) ஊஹம்
கமலி : (பிடிவாதமாக இழுத்தபடி) வாங்கோ எண்டிறன்.
சோமு புன்னகைத்து எழ மூவரும் கலகலப்பாகச் சிரித்தபடி குசினியை நோக்கிப்புறப்படக்காட்சிகரைகிறது.

தணியாத தாகம்
அங்கம் 2
கிராமத்துக் கோயில், ஊரே திரண்டிருக்கிறது. கனகம், யோகம், கமலி அருகே நின்று வழிபட, முருகேசு கோயில் வாயிலில் நின்று கையெடுத்துக்கும்பிடுகிறார். முருகேசு : அப்பனே முருகா! என்ரை பிள்ளை சோதனையிலை
முதலாவதாய்ப் பாசு பண்ணிப் போடவேணும்.
சற்றுத் துர ரட்ணம், ஆனந்தன், கனகு, முனியாண்டி சகிதம் நிற்கும் குமாரைக்கண்டு அங்கேபார்வையைவிடுகிறாள் யோகம்.
கனகம் : யோகம்! அங்கையென்ன பாத்துக் கொண்டு நிற்கிறாய்? கும்பிடு! இந்த முறை வெள்ளாமை சரி வந்து எங்கடை கடனை அடைச்சுப் போட வேணும். கும்பிடு கமலி.
கமலி (யோகத்தைக் கிள்ளி) அண்ணன் பாஸ் பண்ண
வேணுமெண்டு கும்பிடக்கா.
சற்றே அப்பால்நின்றுகும்பிட்டுத்திரும்பியசோமு, முருகன்விலகி நிற்பதைக் காண்கிறான்.
சோமு : என்ன முருகன்? கும்பிட்டாச்சோ? முருகன் : ஒம் தம்பி வர! வர!
குமாரையும்நண்பர்களையும் கண்டுஅவர்களை அணுகி சோமு : எப்பிடிக் குமார் எக்சாம்? நல்லாச் செய்தீரா?
குழுவாகநின்றுசம்பாவழிக்கிறார்கள் குமார் : ஒரு மாதிரிப் பரவாயில்லை. சிலவேளை பாஸ்
பண்ணினாலும் பாஸ் பண்ணிடுவேன்! கனகு : எடுக்காத பாடமும் பாஸ் பண்ணிறாங்கள் சிலபேர்.
அது மாதிரி லக் அடிக்கும்.

Page 26
சில்லையூர் செல்வராசன்
சோமு : என்ன அப்படிக் கேலியாச் சொல்லிவிட்டீர். ஓரளவு
செய்திருந்தா பாஸ் பண்ணலாம் தானே! ஆனந் : என்னடாப்பா சோமு - நீ எல்லாரையும் உன்னைப் போல கெட்டிக்காரங்கள் எண்டு நினைச்சுக் கொண்டு கதைக்கிறாய். ரட்ணம் : சோமு எப்பிடியும் கிளாஸ் அடிப்பான் எண்டு தான்
ஊர் முழுக்கக் கதை. கனகு : பாசென்டா தொடர்ந்து யூனிவர்சிட்டி தானே. நாலு வருஷத்திலே சோமு பி. ஏ. பிறகு எங்களைத் திரும்பிப் பார்ப்பானோ தெரியாது. சோமு : நான் அப்பிடி இலேசிலே தடுமாற மாட்டன் கனகு. முனி : அப்படிச் சொல்லுங்க சின்னையா. பட்டம் பவிசிலே என்னங்க இருக்கு. பகுத்தறிவு வேணுமுங்க. எது சரி, எது தப்பு, எது நல்லது, எது கெட்டதுங்கறது தெரிஞ்சு நாணயமா நடக்கத் தெரியணுங்க. அது தாங்க அறிவாளிக்கழகு. படிப்பாளி வேறு, அறிவாளி வேறில் லிங்களா? குமார் : முனியாண்டி தத்துவம் பேசத் துவங்கீற்றான். இனி
விடமாட்டான். கனகு : அவனை நாங்கள் விட்டால்லோ, அவன் விட மாட்டான். முனியாண்டி உன்ரை வீட்டுப் பக்கம் தான் போறம், வாவன்.
முனி : glिÉlफ! குமார் : நாங்களும் கனகுவோடை ஒரு அலுவல்.
இதாலை போறோம். சோமு : சரி வாருங்கோ.
அவர்கள் பிரிய, தன் குடும்பத்தாருடன் சேர நிற்கிறான் சோமு. தம்பர், செல்லாச்சி, மணியம் ஆகியோரும் கோயிலை விட்டுப் புறப்படு
26

தணியாத தாகம்
கிறார்கள். யாவரும் ஒரே வழியில் வந்து இடையில்தத்தம் வீடுகளுக்குப் பிரிந்துசெல்லவேண்டியிருக்கிறது. தம்பரும் மணியமும் பேசியபடி முன் செல்ல, சற்றுப் பின்னால் முருகேசு தனித்து நடக்க, அவர் பின்னால் கனகமும்,பிள்ளைகளும்செல்லாச்சியும்பேசியவண்ணம்நடக்கிறார்கள். சோமுமரியாதையாகச் சற்றுப்பின்தங்கி தொடர்கிறான். மணியம் : பார்த்தீரா தம்பர் மகன் ஆரோடை போறார் எண்டு. சொன்னன், சின்னத்தம்பியின்ரை மகன் கனகுவோடை சேர்ந்து இவனும் நல்ல பழக்கங்கள் பழகி வருவான். பார்த்துக் கொண்டிரும். தம்பர் : என்ன மணியத்தார் செய்யிறது. தாய் அளவுக்கு மீறிச் செல்லத்தைக் குடுத்திட்டாள். தோளுக்கு மிஞ்சினாத் தோழன் என்று நானும் கண்டிக்க முடியாமற் கிடக்கு. மணியம் : ஒம். உம்மடை பணத்தை கரைக்கவும் குடும்பத் துக்கொண்டு வேணும் தானே! ஓ! முருகேசுவோ. அப்ப நடவுங்கோ வாறன். மணியம்பக்கத்துவீதியிற்பிரிந்துசெல்லத்தம்பர் முருகேசுவுடன் தொடர்கிறார். கமராபின்தங்குகிறது. -- செல்லாச்சி: என்ன கனகம்? முழுக் குடும்பத்தோட இண்டைக்கு கோயிலுக்கு. உங்கை யோகம் நல்ல சீலையொண்டு உடுத்தியிருக்கிறாள். கனகம் : இந்த முறை வெள்ளாமையோடை தம்பியின்ரை சோதனையும் சரி வரவேணுமெண்டு ஒரு அர்ச்சனை செய்ய நினைச்சாப் போல.
செல்லா : என்ன விலை தங்கச்சி உந்தச் சீலை? புதுசோ?
கனகம் : தீபாவளிக்கு உங்களட்டைக் கைமாத்தாய் வாங்கின
காசிலை வேண்டின சீலைதானே அக்கா.
செல்லா : நான் கூடத் தீபாவளிக்கு ஒரு சாதாச் சீலைதான் எடுத்தனான். எங்களுக்கும் கஷ்டம்தானே. கனகம் யோசித்துப் பார். அப்பவே கொஞ்சம் கட்டுமட்டாய்ச்
27

Page 27
சில்லையூர் செல்வராசன்
சீவிச்சதாலை ஏதோ கையிலை அஞ்சைப் பத்தை மிஞ்சிக் கிடக்கு - அதுவும் நிலம் புலமாய். மற்றும்படி இவற்றை பென்சனை வைச்சுத்தானே சமாளிக்க வேண்டி யிருக்கு. கனகம் : உண்மைதான் அக்கா. வீட்டுக்கு வீடு வாசற்படி தானே. ஆருக்குத்தான் இந்த நாளிலை கஷ்டமில்லை. முன்னாற் செல்லும் முருகேசுவையும் தம்பரையும் கமரா அணுகுகிறது. முருகேசு : ஐயா பிழை விளங்கக் கூடாது. கனகாலமாய் உங்கடை காசும் எங்களட்டைத் தங்கிப் போச்சு. இந்த முறை தம்பியும் மேற்படிப்புக்குப் போக விரும்பிறான். தம்பர் : அதுக்கென்ன முருகேசு. நீர் ஆறுதலாய்த் தாரும். என்னட்டை இருந்துந்தான் இப்ப என்னத்துக்கு? என்ரை செல்லச் சீரஞ்சீவி ஏதோ சீமைக்குப் போய் படிக்கப் போறானே. முருகேசு : இந்த முறை வெள்ளாமை பழுதில்லை. தந்திடலாம்
எண்டால், சோமுவின்ரை படிப்புத்தான். தம்பர் : கதையை விடும். உம்முடைய நாணயம் எனக்குத்
தெரியாதே? வீடும் வந்திட்டுது. சரி வாரும். முருகேசுவிடுவந்துவிட, இருகுடும்பத்தாரும்பிரிகிறார்கள். கமரா முருகேசுகுடும்பத்தை தொடர்கிறது. கமலி அப்பு முதல் வேலையாய் அக்காவுக்கு நாவூறுக்குப் பார்த்துப்போடச் சொல்லுங்கோ அம்மாவை. உந்த மனுசி அக்கா உடுத்திருக்கிற சீலையைப் பார்த்து வடிவான சீலை வடிவான சீலை எண்டு எத்தனைத் தரம் பொச்சடிச்சுப் போட்டுது. முருகேசு : அப்படிச் சொல்லாதை மேனை. அந்த மனுசன் அண்ணன்ரை படிப்புக் கதையைச் சொன்ன உடனே
28.

தணியாத தாகம்
கடன் காசுகூடப் பிறகு தந்தாப் போதும் எண்டு சொல்லிற்றுது. கனகம் : மனுசியும் நல்லது. ஆவேசத்திலே சும்மா நினைச்ச நினைச்ச நேரம் வள் வள் எண்டு விழுகிறதான். ஆனால் ஒரு ஆத்திரம் அவசரம் எண்டால் கை குடுக்கிறது அதுதானே. அப்போதுதான்வந்துசேர்ந்தசோமுவை நோக்கி,
கமலி : அண்ணை காசுக்காரரெண்டால் கரி நாக்கி
ல்லையோ? சோமு : சரி சரி! நீ இப்ப சண்டைக்கு நில்லாதை அவை
யும் நல்லவை. நாங்களும் நல்ல நாங்கள். உனக்கு இப்ப என்ன வேணும். கமலி : அக்காவுக்கு நாவூறு கழிக்க வேணும். சோமு : பறந்து போய்க் கொண்டு வா ஏழு மிளகாயும் உப்பும் மிளகும். நான் கழிக்கிறன் உன்ரை அக்காவுக்கு
bT6........ கமலி குசினிக்குள் விரைய, காட்சி கரைந்து மறுகாட்சியாக விரிகிறது. முனியாண்டியின் குடில், குமாரும் கனகுவும் முனியாண்டியும் இருக்கிறார்கள். குமார் : முனியாண்டி! நாங்கள் இஞ்சை உன்ரை விறாந்தை யிலை இருக்கிறம். பின்னாலை வளவுக் கொட்டில்லை முருகன் இருப்பான். நாலு போத்தல் கள்ளு வாங்கியா. முனி : சரிங்க. குமார் : இந்தா காசு! எங்களுக்கெண்டு தெரியக்கூடாது. முனியாண்டி போத்தல்களுடன் கொட்டிலை அடைகிறான். முருகன் : நீயே நாலு போத்தல் குடிக்கிற ஆள்? ஆரோ
வந்திருக்கினம் போலே? முனி பேசாதேப்பா. அந்தக் கனகையா வந்திருக்காரு. முருகன் : ஒகோ! அப்ப கூடக் குமாரையாவும் வந்திருப்பார்.
29

Page 28
சில்லையூர் செல்வராசன் கோயிலாலே வரேக்கை கண்டனான்தான். ம் - இந்தா. முனியாண்டிதிரும்பியதும் அவனிடம்ஒருபோத்தலைக்கொடுத்து அனுப்பிவிட்டு, தாங்கள் அமர்ந்துகுடித்தபடி உரையாடுகிறார்கள் கனகு : என்ன குமார்? இண்டைக்கு உன்ரை மச்சான் வலு
கரிசனையாய் விசாரிச்சார், எக்சாமைப் பற்றி. குமார் : அவனை விடு. பார்த்தியா மச்சான் யோகாவை இண்டைக்கு? தில்லானா மோகனாம்பாள்ல பத்மினியைப் பார்த்த மாதிரி இருந்துது. கனகு : உனக்குப் படப்பைத்தியம். இந்தா குடி. அதுசரி
எந்த மட்டிலே நிக்குது உன்ரை லவ். குமார் : பகிடியெண்டு நினைக்காதே மச்சான். உண்மை யாகத் தான் சொல்றன். என்ன வந்தாலும் நான் போகாவைத்தான் மறி பண்ணுவன். எனக்குத் தெரியும். அவளுக்கும் என்னிலை விருப்பம்.
கனகு : நல்ல பெட்டையெண்டுதான் கேள்வி. ஆளும் அழகு தான். ஆனா உன்ரை ஐயா அம்மா சம்மதிப்பினமே?
குமார் : அவை கிடந்தினம்!
கனகு : அவையின்ரை சொத்தும் கிடந்துது எண்டு
சொல்லன், சோதனை பாஸ் பண்றது உனக்கே சந்தே கம். பாஸ் பண்ணினவங்களே வேலையில்லாமல் திரி யிறாங்கள். என்னத்தை நம்பிக் கல்யாணம் செய்யப் போறாய்? அல்லது என்னத்தை நம்பிக் கல்யாணம் செய்து தரப்போறாங்கள்?
குமார் : காலம் வர எல்லாம் சரி வரும். பாப்பமே! கனகு : சரி. குடிச்சிட்டு வா, போவம். குமார் : முனியாண்டி! நாங்கள் வாறம் அப்ப. முனி : சரிங்க.

தணியாத தாகம்
காட்சி கரைந்து மறுகாட்சியாக விரிகிறது. குமார் தன் வீட்டிற் பிரவேசிக்கிறான். செல்லா : குமார்! என்ன நேரம் இப்ப? எப்பவும் இப்படிப் பிந்தி
வந்தா இதென்ன ராசா சாய்மானக்கதிரையில்நிமிர்ந்தபடி தம்பர் : ராசா ராசா வீடு கொழுத்திற ராசாவுக்கு நெருப் பெடுத்துக் குடுக்கிற மந்திரி, ராசா முறை கொண்டாடிறா |্যাণ্ডা! செல்லா : சரி சரி, பேசாமல் இருங்கோ நீங்கள். சோதனையும் முடிஞ்சுது - லீவு காலம் தானே! இளந்தாரிப்பிள்ளை நாலு சினேகிதரைக் கண்டு பேசி வர வேணாமே. நீ வந்து சாப்பிடு குமார். குமார் உணவுண்ட பின், படுக்கையில்பாதிப்போதையுடன் சாயும் காட்சியுடன் பிணைந்துகனவுக்காட்சிமலர்கிறது.பத்மினிநடனமாடும் தோற்றமும் அதேபத்மினியோகமாகத்தோற்றுவதும்கணத்துக்குகணம் மாறி, யோகத்தின் உருவமே காட்சியாக நிலைக்கிறது. கோவிலிற் குமாரைக் கண்டதை எண்ணி யோகம் குதுகலிப்பதான குமாரின் கற்பனையாசையேகனவாக அமைகிறது. யோகம்பாடி ஆடுகிறாள்.
UFIL6)
கோவிலிலே வந்தே - ஒருவன் குடிபுகுந்தான் - மனக் கோவிலிலே வந்தே - ஒருவன் குடிபுகுந்தான் என் ஆவியிலே கலந்தான் - முத்தங்கள் அள்ளி அள்ளிப் மொழிந்தான் - கோவிலிலே
31

Page 29
சில்லையூர் செல்வராசன்
தேவியென்றே அழைத்தான் - பருவத்
தித்திப்பிலே திளைத்தான் - தேன் பூவின் இதழ் விரித்தான் - பருகிப் பூரிப்பிலே சிரித்தான் - கோவிலிலே
பாவி அம்மன்மதன் ஏவிய பூங்கணை மேவி எண் ஆவியில் தாவிய தீயினைத்
தாவி அணைத்தென்னைத் தாவி அணைத்தின்ப
வாவியில் தோய்விக்க வந்தான் - கோவிலிலே.
காவியக் கந்தனைப் போல் அழகுள்ளான் ஓவியக் கண்ணனைப் போற் கலைவல்லான் தேவியர்க் கினித்திடும் ராமனின் சொல்லான்
மேவிய கோவிலை விட்டினிச் செல்லான் - கோவிலிலே.
(காட்சிகரைந்துமறுகாட்சியாக விரிகிறது)

தணியாத தாகம்
அங்கம் 3
நண்பகல். முருகேசுவின் வயலில் அறுவடை நடப்பது தொலைக் காட்சியாகத் தெரிகிறது. சோமு தவிர அவர்குடும்பமும்முனியாண்டியும் அங்கு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சோமு தூரத்திலிருந்து பத்திரிகையை ஆட்டிய வண்ணம் அவர்களை நோக்கி ஓடுகிறான். அவர்களை நெருங்கியவண்ணம் சோமு : கமலி. கமலி. நான் சோதனை பாஸ் - ஃபஸ்ட்
கிளாஸிலே பாஸ்!
азырө6 (குதித்த வண்ணம்) அப்பு! அண்ணன் சோதனை பாஸ். ஓராம் பிரிவிலை பாஸ் அக்கா, அம்மா, முனி யாண்டி. அண்ணன் பாஸ்.அண்ணன் பாஸ். முனியாண்டி சூட்டுக்களத்தைச் சுற்றிப் பொலியோ பொலி" கூறி மாடுகளை விரட்டுகிறான். வயல் வேலைக் காட்சிகள் துரிதகதியில் தொடர் காட்சியாக முடிந்து, வயலிலிருந்து வண்டியின் பின்னால் சோமுவும்,யோகமும்கமலியும்நடையில்தொடர்கிறார்கள், வீட்டுப்படலை நெருங்குகையில், யோகம் : (தயங்கி) குமார் பாசா அண்ணா?
கமலி ஒ ஓ காலைமையும் பின்நேரமும் படம் பார்த்துத்
திரிஞ்சவர் கட்டாயம் பாஸ் பண்ணுவார்.
சோமு : தெரியாது யோகம். நான் என்ரை முடிவு தெரிஞ்சதும்
வயலுக்கு உங்களட்டை ஓடி வந்திட்டன்.
அவர்கள்விட்டுக்குள்நுழையகமராஅயல்வீட்டுக்குத்தாவுகிறது. விறாந்தையில்தம்பரும் செல்லாச்சியும் காணப்படுகிறார்கள்.
தம்பர் : ஊரெல்லாம் இதே கதை. சோமு முதற் பிரிவிலை
பாஸ் பண்ணிவிட்டானாம்.
33

Page 30
சில்லையூர் செல்வராசன்
செல்லா : அதுக்கிப்ப வெடி கொழுத்தி, விருந்து வைச்சு,
விழாக் கொண்டாடப் போறியளே?
தம்பர் : ஏன் உன்ரை அருமந்த பிள்ளை குண்டடிச்சதை
அம்பலப்படுத்தவோ? செல்லா : ஒமோம்! உங்கடை புத்திதானே உங்கடை
பிள்ளைக்கும் இருக்கும்.
வீட்டிலிருந்து குமார் சைக்கிளுடன் வெளியேறுகிறான். தம்பர் : ஊம் வெற்றி ஊர்வலத்துக்கு வெளிக்கிட்டிட்டார்
உன்ரை வீரப்புதல்வர். பாத்தியே! செல்லா : பக்கத்து வீட்டுப் பயல் பட்டணம் போகப் போறாண் பட்டம் படிக்க. படிச்சு உத்தியோகம் தேடிப் பணம் சம்பா திச்சுக் கொண்டு வந்து தருமட்டும் பாத்துக் கொண்டி ருங்கோ கடனுக்கு.
கமரா முருகேசு வீட்டுக்குத் தாவி அவர்கள் செல்லாச்சி பேச்சைக் கேட்பதைக் காட்டுகிறது. சோமுவையும் கமலியையும்நிலைக்குத்தாக மாறி மாறி உறைகாட்சியாக்கி, விடுவித்துக் கமரா தம்பர் வீட்டுக்குத் திரும்புகிறது. தம்பர் : படிக்கக் கூடியவன் படிச்சு முன்னேறுகிறான்.
அதுக்கேனப்பா நீ பறந்தடிக்கிறாய் பொறாமைப்பட்டு. செல்லா : அவன் படிப்பான். பட்டம் வாங்குவான். பணம் சம்பாதிப்பான். என்ரை பிள்ளைக்குப் படிப்பில்லை. பட்ட மில்லை. பணமாவது மிஞ்சட்டும். குடுத்த கடன்களெல் லாம் வீடு தேடி வேண்டியாங்கோ. உவைக்கும் அரிவு வெட்டு முடிஞ்சுதாம். இந்த முறைப் போகத்துக்கும் அவை பணம் இல்லையெண்டால் உங்களுக்கும் எனக் கும் உறவும் இல்லை. போங்கோ. போய்க் கேளுங்கோ.
மீண்டும் கமரா முருகேசு வீடுதாவி, அவரையும் கனகத்தையும் யோகத்தையும் திகைத்தநிலையில் மாறிமாறி உறை காட்சிகளாகக் காட்டி, விடுவித்து, தம்பர் வீட்டுக்குத்திரும்புகிறது.
34

தணியாத தாகம்
தம்பர் : அந்தப் பெடியனை மேற்படிப்புக்கு அனுப்பண்டு அந்தாள் தவணை கேட்டுது. ஆறுதலாய்த் தாரும் எண்டு நானும் ஓம் சொல்லிப்போட்டேன். வாக்குநாணயம் (8660iiLT(3LD.
செல்லா : கையிலே நாலு நாணயம் இல்லாதவைக்கு வாயாலே குடுத்த நாணயந்தான் ஒரு கேடு. பொடியன் படிச்சா என்ன? படிக்காட்டி என்ன? எங்கடை காசை எடுத் தெறிஞ்சு போட்டல்லோ தங்கடை தேவையைப் பார்க்க வேணும்.
மீண்டும் கமரா முருகேசு வீடுதாவி, அவரைச் சற்று அதிக நேரம் சிந்தனை நிலையில் ஹீஉறைகாட்சியாக்கி விடுவித்து, அவருடன் தொடர்கிறது. அவர் புறப்பட்டுதம்பர் வீட்டுமுற்றம் வந்துசேர்கிறார்.
முருகேசு : தம்பர் ஐயா?
குரல் கேட்டுத்திரும்பி, தம்பர் : ஓ! முருகேசரோ? வாரும் உள்ளே வாரும்! முருகேசு : பரவாயில்லை. இந்தாருங்கோ,
முற்றத்தில்இறங்கி, தம்பர் : என்ன முருகேசர் இது?
பணக்கட்டை மடியிலிருந்துஎடுத்துக்கொடுத்தபடி, முருகேசு : எனக்கு வாக்கு நாணயம் இருக்கையா? தம்பர் : ஏனிப்ப நீர். சோமுவின்ரை.
முருகேசு : அதுகென்ன ஐயா! இருக்கட்டும் மொத்தமாய் நெல்லைச் சங்கத்துக்குக் கொடுக்கிறதாய்ப் பேசி இன்டைக்குத் தான் கிடைச்ச காசு. சரியாயிருக்கும். வட்டிக் கணக்கையும் பாத்து மீதி இருந்தா அனுப் புங்கோ.
தம்பர் : நீர் அவசரப்பட்டு.
35

Page 31
சில்லையூர் செல்வராசன்
முருகேசு : ஐயா! உங்கடை குணம் எனக்குத் தெரியும். நீங்கள் ஆத்திரம் அவசரத்துக்குச் செய்த உதவிக்கு உபகாரம். நான் வாறன். முருகேசு வெளியேறித் தன் வீட்டை அடைந்து விறாந்தையில் அமர்ந்திருக்க, அவரை நெருங்கி. கனகம் : ஒரு நிமிஷ நேரத்திலே இப்படிச் செய்திட்டு வந்து
நிக்கிறியள். முருகேசு : கனகம் கதையாதே காசு பெரிசில்லை. மானம்
தான் பெரிசு.
யோகம் கண்ணாடியின் முன் சென்று நின்று தன்னை ஒரு கணம் பார்த்துவிட்டு, தன்நகைகளைக் கழற்றி முன்றானையிலிட்டுத்தங்கை கமலியிடமும் தாய் கனகத்திடமும் சென்று நிற்க அவர்களதும் நகைகளைக் கழற்றிஇருக்கிறார்கள். அவற்றுடன்தனித்துக்கதிரையிற் சிந்தனையுடனிருக்கும்சோமுவைநெருங்கி,முன்றானையை அவன்முன் பிடித்தவண்ணம்.
யோகம் : அண்ணா!
சோமு (யோகத்தையும் கனகத்தையும்பார்த்து) ஆ என்னம்மா கோலம் இது. முடியாது! நான் வாங்கமாட்டன். என்னால (ԼՔԼԳԱ IITՖl.
யோகம் : அண்ணா! நீங்கள் படிச்சிட்டு வாங்கோ! எல்லாம்
திரும்பி வந்திடும்.
விறாந்தையிலிருந்துஇதைக் கவனித்து, முருகேசு : சோமு வாங்கு! இப்பிடிக் கொண்டா!
சோமு அவற்றைப் பெற்று மெளனமாக வந்து தந்தையிடம் கையளிக்க அதைத் தொடர்ந்து, துரிதமான மெளனக் காட்சிகளாக, முருகேசு வட்டிக்கடையில் அவற்றை வைத்துப் பணம் பெற்றுத் திரும்புவதும், சோமு பெட்டியுடன் சர்வகலாசாலை புறப்படுவதும், தொடர்கின்றன. சோமு முறையே தந்தை, தாயிடம் ஆசிர்வாதமும் சகோதரிகளிடம்பிரியாவிடையும்பெறுகிறான்.
36

தணியாத தாகம்
சோமு : (தங்கையிடம்) கமலி! அண்டைக்கு சாப்பிடேக்கை உங்களுக்காகத் தான் நான் எண்டன். இண்டைக்கு எனக்காகத் தான் நீங்கள் எண்டு ஆகிப்போச்சு.
சோமு : (தந்தையிடம்) அப்பு நான் போயிட்டுவாறன். அம்மா,
யோகம், கமலி.
கனகம் : உடம்பைக் கவனமாய்ப் பார்த்துக்கொள் ராசா.
முருகேசு : கவனமாய்ப் படி மேனே. உன்ரை கடமையள்
கனக்க. மறக்காதை.
சோமு : (முற்றத்தில் வந்து சேர்ந்த முருகனிடம்) முருகன்?
முருகன் : தம்பி! ஊரிலை எங்களுக்கும் பெருமைதான்.
சந்தோஷமாய்ப் போய் வர!
சோமு : (ஒரமாய் நிற்கும் முனியாண்டியிடம்) முனியாண்டி?
முனி : பஸ் ஸ்டாண்டு வரைக்கும் நானும் கூடவே
வர்ரேனுங்க. பெட்டியைக் குடுங்க இப்படி.
இருவரும் புறப்பட.
முருகேசு : சோமு! அங்காலையும் போய்ச் சொல்லிற்றுப்
போ.
சோமு : சரி அப்பு.
கமலி ; (தனக்குள்) எதுக்காக்கும்?
சோமுஅவளைஉறைப்பாகப்நோக்கஅவள்கண்தாழ்த்துகிறாள். அடுத்த வீட்டை அடைந்து, முற்றத்தில்நின்றபடி, சோமு : ஐயா, நான் கண்டிக்குப் போறன். தம்பர் : ஒம் தம்பி. நல்லாய்ப் படிச்சு எங்கடை ஊருக்கும்
உன்னாலே ஒரு கியாதி உண்டாக வேண்டும்.
அப்போதுதான் வெளியேவந்த செல்லாச்சியிடம்
சோமு : போய்ட்டு வாறன் அம்மா.
37

Page 32
சில்லையூர் செல்வராசன்
செல்லா : ஒம் ஓம்! வாரும்
குமார் வரவே
சோமு : குமார்
குமார் அவனுடன் வாசல் வரை வருகிறான். கேட் அருகில்,
குமார் : சோமு நடந்ததுகளை மறந்திடு. கேள்விப்பட்டேன். நான் தவிர்க்க முடியாத விஷயங்கள். பாராட்ட மாட்டா யெண்டு, நினைக்கிறன்.
சோமு : நோ நோ டோன் வொறி! வாறன்! குமார் : ஒல் த பெஸ்ற். சோமு : தாங் யூ வா முனியாண்டி.
ஒழுங்கையால் நிமிர்ந்து வீதியில் இருவரும் ஏற, எதிரில் மணியம் வருகிறார். மணியம் : ஒ சோமுவோ? தம்பி இண்டைக்கே பிரயாணமோ? சோமு : ஒம் ஐயா! மணியம் : நான் தான் முழுவியளம் போலை. எல்லாம் சரி வரும் தம்பி. முழுவியளத்துககு நிறை குடம் கிடைச் சிருக்கோ? என்னவோ நீ எண்டாலும் இந்த ஊரிலை ஒரு ஆளாகி வா. சோமு : அப்ப வாறன் ஐயா.

தணியாத தாகம்
அங்கம் 4
மாலை பஸ் தரிப்பை அடைந்து, சோமு பஸ்ஸில் புறப்பட, ஒடும் புகைவண்டிக் காட்சியாக அது மாறி, பேராதனைப் பல்கலைகழக மைதானத் தொலைகாட்சியாகி, மண்டபங்களைக் கமரா சுற்றி வந்து மெதுவாக விடுதி அறையொன்றில் வந்து நிற்கிறது. சோமு அறையில் மேசையில் படித்துக் கொண்டிருக்கிறான். விடுதி நண்பன், சந்திரன் மற்றொரு மாணவனுடன் அறைக்குள்நுழைகிறான். சந்திரன் : என்னைசே சோமு! ஒரே ஸ்ரடீஸ்தான் போலே. இந்தாரும் உமக்கொரு லெட்டர் வந்திருக்கு. எங்கை றும் மேற்றைக் காணோம். சோமு : வாரும் சந்திரன். அவங்கள் டவுனுக்குப் போயிட்
டாங்கள். கடிதத்தைப்பெற்றுஉடைக்க முன்பு சந்திரன் : இவரைத் தெரியாதுமக்கு என்ன? இவர்தான் சுகத். உம்மடை கிளாசிலே டமில் எடுக்கிற ஒரு சிங்கள கேள் தீபா எண்டு சொன்னீர். அவவடை பிறதர் இவர்தான். சோமு (கடிதத்தை மேசையில் வைத்துவிட்டு) ஒ! யூ ஆர் சுகத்?
கம் கம்! சம்பாஷணை தொடர்கிறது.கமராதனி.அண்மைக்காட்சியாகவும், குழுக்காட்சியாகவும் அவர்களைக் காட்டுகிறது.
சுகத் : எனக்கும் தமிழ் தெரியும். சோமு : ஆ. அப்படியா? நல்லதாப் போச்சு. சுகத் தீபா உங்களைப் பற்றி நிறையச் சொன்னது.
கிளாசிலே நீங்கதான் பெஸ்ற் ஸ்ருடன் என்டும் சொன்னது.
39

Page 33
சில்லையூர் செல்வராசன்
சோமு : ஆ? தீபா சும்மா பேச்சுக்குச் சொல்லியிருக்க
வேணும். சுகத் : நோ. நோ. நோ. தீபாவுக்கு உங்கல்லை மிச்சம்
விருப்பம். நோட்ஸ் உங்ககிட்டதான் வாங்கி எழுதுறதுன்னு சொன்னது.
சோமு : அது சரி. தீபா ஒரு கிழமையா கிளாஸ்க்கு
வரவில்லை. சுகத் மம்மிக்குச் சுகமில்லை. பார்க்கக் கொழும்பு போய்
இன்னிக்குத்தான் வந்தது. டே ஆப்ரர் ருமாறோ தீபா வுக்கு பேர்த் டே. கண்டி ரவுனிலை எங்க அங்கிள் வீட்டிலை ஒரு பாட்டி ஒகனைஸ் பண்ணி. போயா டே. வருவீங்க தானே.
சோமு : தீபா சொல்லல்லேயே!
சுகத் : ஓ நோ! உங்களுக்குத் தானே "பெஸ்ற் ஆக
இன்விற்றேசன்! கட்டாயம் வரவேணும்.
சோமு : இன்வைற் பண்ணினா கட்டாயம் வரத்தானே
வேணும்.
சுகத் : இன்வைற் பண்ணத்தானே நான் ஸ்பெஷல் ஆக
வந்தது. நாளன்னிக்கு ஈவினிங் 6 மணிக்கு. அட்றெஸ் தெரியும் தானே.
சோமு : இல்லையே.
சுகத் : நாங்க இருக்கிற அங்கிள் வீடுதான். இந்தாங்க
அட்றெஸ் மறக்காமல் வரணும்.
சோமு : தாங் யூ. கட்டாயம் வருவேன்.
சுகத் : வர்றேங்.
சோமு : சரி.
சந்திரன் : அனுப்பிற்று வாறன்.
40

தணியாத தாகம்
சோமு : உம்.
சந்திரனும் சுகத்தும் வெளியேற சோமு கடிதத்தை உடைத்துப் படிக்கிறான். யோகமே கடிதத்தை நேரில் சொல்வதுபோல் கடிதத்தில் அவள்முகம் தெரிகிறது.
யோகம் : அன்புள்ள அண்ணா,
நீங்கள் போன கிழமை அனுப்பின கடிதம் கிடைச்சுது! நீங்கள் கேட்டபடி இத்துடன் இந்த மாசக் காசுக்கு அப்பு மணியோடர் அனுப்புகிறார். முக்கியமான ஒரு விஷயம்
ள் கமலிபெரிசாகிவிட்டாள் நீங்கள்வரத்துடிக்கக்கூடும் என்றபடியால் இதை எழுத வேண்டாம் எண்டு அம்மா சொன்ன அவஷக்குத் தெரியாமல்தான்நான் இதை எழுதுறன் இஞ்சையும் கஷ்டம் தான் கமலி பெரிசாக அனுப்ப ஆளில்லாமல் அப்பச்சூடும் விட்டாச்சு செல்லாச்சிமாமியிட்டை இப்பவும் வெக்கத்தை விட்டு அம்மா கடன் வாங்கித்தான் இந்தக் காசு அனுப்பிறோம் விதைப்பும் துவங்கிற்று. அந்தச் செலவுக்கும் செல்லாச்சி மாமிக்குத் தெரியாமல் தம்பர் ஐயாவிட்டைத்தான் அப்பு காசு வாங்கினார். முனியாண்டி நல்ல உதவி அவன்ரை விதைப்பு வேலைக்கூலிகூட இன்னும் குடுக்கல்லை. கமலியின்ரை சடங்குச் செலவுக்கும் என்ன செய்யிறதெனிடு அம்மா ஒரே யோசனையிலை இருக்கிறா. அம்மா, எங்களைப்பற்றியோசியாமல் உடம்பை பார்த்துக் கொள்ளட்டாம் அப்பு எங்கடை நிலைமையை யோசிச்சுப் படிப்பிலை கவனத்தை வைக்கட்டாம் இன்னும் இரண்டு மாசம், இன்னும் ஒரு மாசம் எண்டு உங்கடை லிவுக்கு நாள் எண்ணிறதுதான் கமலிக்கு வேலை. எனக்கும் உங்களைப் பார்க்க ஆசையாயிருக்கு. சுகமாயிருக்கிறீங்களா?
எங்கள் அன்பான அண்ணனுக்கு எல்லாற்றை முத்தமும் தந்து முழக்கிறேன்.
இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
யோகம்
41

Page 34
சில்லையூர் செல்வராசன் சோமு கண் கலங்கிய வண்ணம் கடிதத்தை மடிக்க சந்திரன் உட்பிரவேசிக்கிறான்.
சந்திரன் : என்ன சோமு. கடிதத்தை வாசிச்சதும் கண்
கலங்கிப் போச்சு.
சோமு : ஒண்டுமில்லை. வீட்டிலையிருந்து வந்திருக்கு.
சந்திரன் : ஏதும் துக்கமான செய்தியோ?
சோமு : இல்லை. சந்தோஷமான செய்திதான்.
சந்திரன் : அப்ப ஆனந்தக் கண்ணிரோ?
சோமு (எங்கோ எண்ணமாய்எதையோ சிந்தித்துப்புன்னகைத்து)
ஆனந்தக் கண்ணிர். துயரச் சிரிப்பு.
சந்திரன் : என்னப்பா புலவன்மார் மாதிரிப் பொருள் பிரிச்சுப் பேசிறீர். உமக்கேதோ மூட் சரியில்லை. நானும் வந்து படிப்பைக் குழப்பிட்டன். சொறி வாறன்.
சோமு : இல்லை சந்திரன் மிஸ்அன்டர்ஸ்ரான்ட் பண்ணா தேயும். எனக்கு என்னெண்டு வெளியாலை சொல்லத் தெரியெல்லை.
சந்திரன் : சரி விளங்குது. வாரும் உப்பிடியே அருணாசலம்
ஹோல் பக்கம் போயிட்டு வருவம்.
சோமு : உம்? இனி எனக்குப் படிக்கவும் ஏலாது. சரி
வாரும். இருவரும் வெளியேறி மைதானம் வழியே செல்லதுாரத்திலிருந்து
தீபாவும் தோழிசித்ராவும் சமீபித்துவருகிறார்கள்.
தீபா ༦༽ (விரைந்து நெருங்கி) ஹலோ சோமு!
சோமு : (ஆர்வமாக) தீபா!
தீபா : உங்களைக் கண்டது எவ்வளவு சந்தோஷம்
தெரியுமா? அண்ணன் உங்களைச் சந்திச்சாங்களா?
சோமு : உம்
42

தணியாத தாகம்
திபா : ஊம்?(சோமுவின்மெளனத்தைக்கவனித்து) என்ன ஒரு
மாதிரி இருக்கிறீங்க இன்னிக்கு?
சோமு : ஒண்டுமில்லை. (9...... இவரைத் தெரியும் தானே! சந்திரன்! என்ரை ஹோல்லை தான் இருக்கிறார்.
திபா : கண்டிருக்கிறன். அறிமுகமில்லை! வணக்கம்.
சந்திரன் : வணக்கம்!
தீபா : இது என் பிறண்ட் சித்ரா. செக்கண்ட் இயர்
ஸ்ருடன்ற்.
சந்திரன் : ஆர்ட்ஸ் ஆ?
சித்ரா : ஒம்!
சந்திரன் : நானும் செக்கண்ட் இயர் தான். ஆனா சயன்ஸ்.
அதுதான் சந்திக்கவில்லை.
பேசியவண்ணம் அவர்கள் சற்றுவிலகிநகர
சோமு : ஒரு கிழமை கிளாஸ்லே காணெல்லையே.
தீபா அண்ணன் சொல்லல்லையா? மம்மிக்கு வருத்த
மென்று.
சோமு : சுகத் சொன்னார்.
தியா : காலையிலே தான் வந்தேன். சித்ராவை அவசரமாக
சந்திக்க வேண்டியிருந்திச்சு, வந்தேன்.
சோமு : உம்முடைய குளோஸ் பிறன்ட் சித்ரா எண்டு
சொல்லுவீரே இவதானே!
தியா ஒ! தமிழ்ச் சங்கத்திலே கூட கொமிட்டி மெம்பர்.
அது சரி நாளன்னிக்கு. சோமு என்ன ஒரு மாதிரி இருக்கீங்க! நான் சொல்றதை கவனிக்கலே இல்லியே!
இல்லை. இல்லை. கவனிச்சன். நாளையிண்டைக் (p @5
வருவேன்.
43

Page 35
சில்லையூர் செல்வராசன்
தீபா : ഖgഖjr? சோமு : கட்டாயம்?
திபா : போகவா?
(afs (p : D Lib
சித்ராவும் சந்திரனும் இவர்களுடன் சேர்கின்றனர். சித்திரா : இண்டைக்குத்தான் சந்திக்க முடிஞ்சது. தீபா உங்களைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறா? சோமு : என்ன சொல்லியிருக்கிறா? சித்திரா : தன் கிளாசிலே நீங்க தானாம் பிறையிட்
பாஷைக்கு கூட கையர்ஸ்ட் மார்க்ஸ் உங்களுக்குத் தானாம். Gafn (p : D b. சித்திரா : இந்த முறை தமிழ்ச்சங்க மகசினுக்கு நீங்கள்
கட்டாயம் எதாவது எழுத வேண்டும்.
தியா ஒ சோமு! உங்க திறமை எங்க வகுப்போடை
முடியக்கூடாது. சோமு : பார்ப்போம்!
சித்திரா வர்றோம்!
சந்திரன் சரி.
தீபாவும் சித்ராவும் பிரிய, சோமுவும் சந்திரனும் தங்கள் விடுதி
நோக்கித்திரும்பிமெளனமாகநடக்கிறார்கள்.சோமு சற்றுக்களிப்பான
மனோநிலையில் பாதையிலுள்ள நீண்ட புல்லிததழைப் பிடுங்கி,
உல்லாசப்பாங்கில்விசுக்கியவண்ணம்நடைபயில்வதுகண்டு,
சந்தி : என்ன சோமு, மூட் மாறிட்டுது; முகம் மலர்ந்திட்டுது.
எழுத்தாளனுமாகப் போறிர்.
சோமு : “காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம்
காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே”
44

தணியாத தாகம்
சந்திரன் : அடடே கவிதையே பிறந்திட்டுதே! சோமு : இது பாரதி பாடல் சந்திரன்.
சந்திரன் : தெரியுமப்பா ஆனால் நீரும் அந்தப் பாதையிலை
தான் போகப் போறிர் போலை.
(விடுதி வந்துவிடுகிறது. சந்திரன் பிரிந்து செல்ல, சோமு அறைக்குள்நுழைந்து, மின்விளக்கேற்றிமேசைமுன்அமர்கிறான்.தங்கை கடிதத்தை மீண்டும் விரிக்கிறான். பேனாவைஎடுத்துமேசையில் உள்ள வெற்றுக் காகிதங்களில் ஊமைக் கிறுக்கல் செய்கிறான். தன்னையறியாமல் 'ஆனந்தக் கண்ணிர். துயரச் சிரிப்பு" என்ற வார்த்தைகளை மீள் நினைவாக, எதேச்சையாகக் கிறுக்கியவன், சுதாரித்து. கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு மும்முரமாகத் தொடர்ந்துஎழுதுகிறான். எழுதும்கவிதையின்முதலடியைக்கமராகாட்ட அது ஒலியாக உயிர் பெற்றுப் பின்னணிப் பாடலாக இசைக்கிறது. அப்பாடலின்பிற்களத்தில், சோமு இடையிடையே எழுதுவதும், பாடலின் சிலேடைப்பொருளுக்கிசைய, கமலியின்பூப்புநீராட்டுவிழாவும், தீபாவின் பிறந்த நாள் விழாவும், தீபா - சோமு, யோகம்-குமார் ஆகியோரின் இணைவிழைச்சுக்காட்சிகளும்மாறிமாறிவருகின்றன.இக்காட்சிகளின் ஆனந்ததுயரக் கட்டங்கள்மாறுகாட்சிகளாகத் தெரிகின்றன)
U FTL 6ò
ஆனந்தக் கண்ணிரோ தயரச் சிரிப்போ
ஆவது தானேதோ ~ ஒவ்வொருவரும் சாவதன் முன்னாலே!
கமலியின்பூப்புநீராட்டு,தீபாவின்பிறந்தநாள்விழாப்பின்னணிகளில்
கமல மலர் சிரிக்கும்
பொய்கையில் நீர்த்துளிக்
கண்ணிர் இதழ்களில்
மின்னி மின்னி மினுக்க!
இரண்டிலும் சோமுவராமையால் இருவதும் துயருறும் பின்னணியில்
45

Page 36
சில்லையூர் செல்வராசன்
கதிரவன் வரவின்றி மலரிதழ் உதிர்கையில் கவலையின் புண்ணகை! இது நிகள் வாழ்க்கையில் ~ ஆனந்தக்
(தீபாவின் பிறந்தநாளில் இளைஞர்கள் பாடி ஆட)
கவலையேத கவலையேத காதலாடுவோம் காதல் எங்கள் வேதமென்று கவிதை பாடுவோம் கவிதை காதல் இன்பம் இன்றவற்றை நாடுவோம் கண் கலங்க நாளையுண்டு பிறகு வாடுவோம் - ஆனந்தக்
(சோமு-கமலிபள்ளிசெல்தல்,சோமுகவிதைஎழுதல்,கமலிநீராடல், சோமுதீபா உரையாடல்பின்னணியில்)
கல்வி ஒரு கமலம் கவிதை ஒரு கமலம் கன்னி ஒரு கமலம் காதல் ஒரு கமலம்
(யோகம்-குமார், வீட்டுக் கிணற்றடியில் எதிரெதிர்ப்புறம் நிற்கும் பின்னணியில்)
கல்வி கவிதை, கன்னி
காதல் இவை மலர்ந்து
காணும் முடிவெதவோ கண்ணிரோ சிரிப்போ - ஆனந்தக் (பாடல்முடிய,காட்சிகரைந்துகிணற்றடிக்காட்சியாகவிரிகிறது

தணியாத தாகம்
அங்கம் 5
பிற்காலை வேளை.
குமார் : (கிணற்றின் மறுபுறமிருந்து மெதுவாக) வீட்டிலை
யாருமில்லையா?
உடை தோய்த்தபடியிருக்கும் யோகம் மெளனமாக இல்லைஎனத் தலையசைக்கிறாள்.
குமார் : அப்பு அம்மா? யோகம் : (நிமிராமல்) வயலுக்கு குமார் : கமலி பள்ளிக்கூடத்தாலை வரல்லியா?
யோகா மீண்டும்'இல்லை" எனத் தலையசைக்கிறாள். குமார் : யோகம் நான் ஒண்டு தந்தா. வாங்குவீரா?
யோகம்நாணித்தலைகுனிந்திருக்கிறாள்
குமார் : (குமார் கடிதத்தை நீட்டியபடி) இந்தாரும் இந்தாரும். (அவள் வாங்கத் தயங்கவே) ஏன்? என்னிலே விருப்ப மில்லையா?
யோகம் துணுக்குற்று, சட்டென்று கைநீட்டிக் கடிதத்தை வாங்கு கிறாள். முற்றத்தில் பள்ளியால் வந்த கமலியின் குரல் கேட்கிறது.
கமலி : அக்கா! என்ன செய்யிறியள்?
யோகம் கடிதத்தை மார்புள் சொருகித் தடுமாறி, வீட்டுக்கு
ஒடுகிறாள்.
யோகம் : தண்ணிர். ஒண்டுமில்லை. பள்ளிக்கூடத்தாலை
இப்பதானா வந்தனி
கமலி : ஓம்.
47

Page 37
சில்லையூர் செல்வராசன்
யோகம் : நான் காணயில்லை.
கமலி : உம். வீட்டையும் திறந்தபடி விட்டுக் கிணறே கதி எண்டு அங்கை நிண்டா எப்பிடிக் காணலாம். அப்பு அம்மா எங்கே?
யோகம் : வயலுக்காலை வரல்லை.
கமலி : இன்னுமோ? யோகம் : ஒம்.
வாசலில் தபாற்காரன்சைக்கிள்மணிகேட்டு, ஒடுகிறாள் கமலி. கமலி கடிதம். அண்ணன்ரை தான். என்ன தம்பித்துரை
அண்ணை. கடிதம் இன்டைக்கு இவ்வளவு பிந்தி? தம்பித் : ஒம் தங்கச்சி! இன்டைக்குக் கோச்சி வவுனியாவிலை தண்டவாளத்தை விட்டு விலகியாம். நாலு மணித்தியாலம் பிந்திப் போச்சு. அதுதான்.
கமலிகடிதத்தைப்படித்தபடிதிரும்பிவர,
யோகம் : என்னவாம் அண்ணன்?
கமலி : முதல்வருசச் சோதனை வாற கிழமை முடியுதாம்.
அடுத்த திங்கட்கிழமை அண்ணன் இங்கே நிற்பார். யோகம் : அச்சா இஞ்சை தா. நான் வாசிக்க. நீ போய்
உடுப்பை மாத்திற்று வா சாப்பிட.
கமலிகடிதத்தைக்கொடுத்து,உடைமாற்றஉள்ளேசெல்ல,யோகம் அதைப்படித்தபடி குசினிக்குச் சென்றுபின்னர் குமாரின்கடிதத்தையும் எடுத்துஅதனோடுசேர்த்துப்படிக்கிறாள்.முருகேசுவும்கனகமும்வயலால் திரும்புகிறார்கள். உடைமாற்றி விறாந்தைக்கு வந்து அவர்களைக் கண்டதும்,
аырө9 : அம்மா. அண்ணன்ரை கடிதம் வந்திருக்கு.
குசினிக்குள் யோகத்திடம் கடிதம் பெற ஒடுகிறாள். யோகம் தடுமாறி, ஒரு கடிதத்தை அடுப்பிற் போட, மற்றதைப்பிடுங்கிக் கொண்டு விறாந்தைக்கு வருகிறாள், கமலி.
48

தணியாத தாகம் கனகம் : என்னவாம் மேனை அண்ணன்? வாசி கேட்போம்.
கமலி திகைத்துப் போய் குமாரின் கடிதத்தைப் பார்த்தபடி நிற்கிறாள். யோகம் குசினி வாசலில் வந்து தங்கையை கெஞ்சும் பாவனையில்நிற்கிறாள்.
கனகம் : வாசியன் மேனை.
கமலி (தமக்கையை ஒருகணம் வெடுக்கென்று பார்த்து விட்டு
குமாரின் கடிதத்தைப்பிடித்தபடி) அன்புள்ள அப்பு, அம்மா, யோகம், கமலிக்குட்டீ எல்லாருக்கும் அன்பாக எழுதிக்கொள்வது, நான் நல்ல சுகமேயிருக்கிறேன். நீங்களும் அப்படியேயிருக்க எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருள் புரிவானாக! எனக்கு வருகிறAழமை சோதனை முடிந்து விடும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிக்கிட்டு திங்கட்கிழமை காலைமை அங்கு வந்து சேருவேன் கமலியின் விசேஷத்தில்நான் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகவும் துக்கம் எங்கள் கஷ்டத்தை நினைத்து நான் கவனமாகப் படிக்கிறேன். அதே போல கமல்யும், முக்கியமாக யோகாவும் எங்கள் நிலைமைகளை நினைத்து அதற்குத்தகுந்தபடி நடக்க வேணும் இன்னும் முன்றே முன்று வருசத்தில் என் படிப்பு முடிந்து விடும் அதற்குப் பிறகு நிச்சயம் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் மற்றவை நேரில் என் அருமையான அப்பு அம்மாவுக்கும், யோகாவுக்கும், பெரிய மனுசி கமலிக் குட்டிக்கும் அன்பு
முதங்கள
இப்படிக்கு தங்கள் அன்புள்ள சோமசுந்தரம். கமலி (தமக்கை கையில் கடிதத்தைத்திணித்து) இந்தாங்கோ
அக்கா! இனி ஆறுதலாய் வைச்சு வாசியுங்கோ.
யோகம் கண்கலங்கிஅதைப்பெற்றுஅகல
49

Page 38
சில்லையூர் செல்வராசன் கனகம் : இஞ்சேருங்கோ. எங்கேயும் கொஞ்சம் காசு
மாறப் பாருங்கோ. முருகேசு : ஏனணை இப்ப காசு? கனகம் : வாற கிழமை பிள்ளை வந்திடுவான். இரண்டு கிழமை நிக்கிறானோ மூண்டு கிழமை நிக்கிறானோ தெரியாது. அங்கே பாணையும் சம்பலையும் திண்டு பசி தாகமாய்க் கிடந்து வாற பிள்ளை. ஆனபானதாய் ஏதும் வாங்கி அடுக்குப் பண்ண வேண்டாமே பிள்ளைக்கு? கனகம் குசினிக்குள் செல்ல, பின் தொடர்ந்தபடி முருகேசு : ஓமோம்! கண்ணுக்குக் கண்ணாய், இரண்டு பெண்ணுக்கு ஒண்ணாய், அவன்தானே! சரி சோத்தைப் போடு. சாப்பிட்டிட்டுப் போய் அங்காலை தம்பர் ஜயாவைக் கேட்டுப் பார்ப்போம். செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் எண்ட மாதிரி அந்த மனுசனும் இல்லாட்டி எங்கள் பாடும் எள் படாப்பாடுதான். குசினியிலிருந்துயோகம்கிணற்றடி சென்று, வட்டுமுகத்திலமர்ந்து கடிதம்படிக்க, அக்காட்சிபுகைவண்டி, பஸ்ஆகியனவரும்காட்சிகளுடன் கலந்து சோமு பெட்டியுடன் தன் கிராமத்து வீதியில் வீடு நோக்கிவரும் காலைக்காட்சியாக விரிகிறது. எதிரில்வரும்மணியம் அவனைநிறுத்தி உரையாடுகிறார்.
மணியம் : உதார்! எங்கடை சோமுவோ? பள்ளிக்கூடம்
லீவோ தம்பி? சோமு : ஒம் ஐயா!
மணியம் : நல்லாப் படிக்கிறியோ தம்பி?
சோமு : ஒம் ஐயா! முதல் வருஷச் சோதனை முடிஞ்சுது. இன்னும் மூண்டு வருஷம். பாஸ் பண்ணிப் போடுவன். D6so : எனக்குத் தெரியும் தம்பி! நீ வெளிக்கிட்ட வேளை நிறைகுடம் போலே நேரே வந்த முழுவியளம் நானல்லோ? உனக்குத் தெரியும் தம்பி! இந்தத் தண்ணி பாவிக்கிற
50

தணியாத தாகம்
ஒரு சின்னப் பழக்கம் தவிர, இந்த ஊர் ஆக்கள் மாதிரி எனக்கு மனசிலே வஞ்சகம், சூது கிடையாது. நாலு ஊர் அடிபட்டு நாகரிகம் தெரிஞ்ச நெஞ்சு தம்பி; நான் மனம் வைச்சுச் சொன்னால் மறுத்தான் கிடையாது. அது கட்டாயம் பலிக்கும். அது.
சோமு : கட்டாயம் பலிக்கும்! இப்ப துலைக்கோ ஐயா!
Doof : இண்டைக்கு 26ந் தேதி. பென்சன் தேதியல்லோ?
வரட்டோ?
சோமு : வாருங்கோ!
சோமுபுறப்பட,மணியம்சற்றுத்தரித்துஅவனைநோக்கித்தனக்குட் சொல்கிறார். Død : பணமில்லாட்டிலும் குணமான பிள்ளை! இருக்கிறானே உவன் சின்னத்தம்பியின்ரை கனகுவும். o Lib!
சோமுபடலையைத் திறந்துமுற்றத்திற்கு வருகிறான்.
சோமு : அம்மா!. கமலி.
கமலி (அவனை வரவேற்றபடி) அண்ணன் வந்திட்டார்.
960060600.......
யோகமும் வருவதுகண்டு.
சோமு : யோகம். அப்பு எங்கே?
குசினிக்குள்ளிருந்துசேலையிற்கைதுடைத்தவண்ணம்விரைந்து,
கனகம் : வா மேனை! என்ன ராசா உன்ரை கோலம்?
சோமு : அப்பு எங்கை?
யோகம் : அப்பு வயலுக்குப் போட்டார் அண்ணை இப்ப
வந்திடுவார்.
விறாந்தையில் ஏறி மேசையில் சூட்கேஸை வைத்துத் திறந்து, ஒரு சிறிய உறையிலிருந்து ஒரு சோடி தோடுகளை எடுத்துக் கம்லியின் காதில் சோமு அணிவிக்கிறான்.
5

Page 39
சில்லையூர் செல்வராசன் கமலி : என்னண்ணா இது?
கண்துளிர்க்க, கமலியின்முகத்தைக் கையில் ஏந்தியபடி சோமு : மொட்டவிழ்ந்து நிக்கிற உன்னை முதன் முதல்லை
நான் மூளியாகப் பார்க்கலாமா அம்மா? கமலியும் கண்பனித்துநிற்கிறாள் யோகம் : (மனங்கனிந்து) காதுத் தோடு செய்யக் காசெங்காலை
அண்ணை உங்களுக்கு? சோமு : எங்காலையோ எப்பிடியோ கிடைச்சுது! யோகா! உங்கடை காது, கழுத்துக் கைகளை மூளியாக்கி நீங்கள் என்னை கரிசனையோடை படிக்க அனுப்பினதை மறந்திட்டேனெண்டு நினைக்கிறியா? கமலி (தோடுகளைக் கழற்றும்பாவனையுடன்) அக்கா இருக்க எனக்கேன் அண்ணா இப்ப தோடு? இந்தாங்கோ அக்கா! நீங்கள் போடுங்க. யோகம் : கழற்றாதை கமலி! அண்ணன் தன் கையாலை
ஆசையோடு போட்டதைக் கழற்றாதை. சோமு : ஒம் கமலி! அடுத்தமுறை வரேக்கை அக்காவுக்குத்
தோட்டோடே வருவேன். கமலி (செல்லமாக) அப்ப அது மட்டும் ஆளுக்கொரு
தோடாய்ப் போடுவம்.
சோமு : ஒற்றைக் காதுக்கோ?
கமலி : ஓம்!
சோமு : அப்ப மற்றக் காதுக்கு?
கமலி ; மற்றக் காதுக்குக் குச்சி போடுவம். சோமு : இரண்டு காதுத் தோடும் இணைய வேண்டாமே?
ஆரெண்டாலும் ஒரு காதுக்கு வைரத்தோடும் ஒரு காதுக்குத் தங்கத்தோடும் கூடப் போடுவினமே?

தணியாத தாகம் கமலி : முதல்லை நாங்கள் போடுவமண்ணை பிறகு இதுதான் புது பேஷன் எண்டு எல்லோரும் துவங்கு வினம். சோமு : கமலி கமலி! உன்ரை விளையாட்டுப் புத்தி
இன்னும் போகேல்லை. கனகம் : அது சரி சோமு! யோகம் கேட்ட கேள்விக்கு நீ
இன்னும் மறுமொழி சொல்லேல்லையே?
சோமு : என்ன கேள்வி?
கனகம் : மழுப்பாதை உது செய்யக் காசு உனக்கு
எங்காலை?
சோமு : அதனை அம்மா. அந்த.
சோமு பதில் கூறுவதைத் தவிர்க்க முனையும் மெளனத்தைக் கண்டு கனகம் : ஊம்? அந்த.? சோமு : அம்மா! நீங்கள் அனுப்பின காசிலை மாசம் மாசம்
பத்துப் பத்து ரூபா மிச்சம் பிடிச்சு. யோகம் முகத்தைத் திருப்பிக் கண்ணிரைத் துடைத்துக் கொள்கிறாள் கனகம்: (மகன் முகத்தைக் கையில் தாங்கி) உன்ரை கோலத் துக்குக் காரணம் இப்பல்லோ விளங்குது? ஏன் ராசா உனக்கு இந்த வேலை? வயித்தை வாயைக் கட்டி நீ தோடு செய்து அவளுக்குப் போட இப்ப என்ன அவசரம் வந்திட்டுது? இங்கை பார். எப்படிச் சிரிச்சுச் செழிச்ச முகம் செத்து வாடிப் போய்க் கிடக்கு. யோகம், கமலிஇருவ,ைரயும் இருகைப்புறமும் அணைத்தபடி
சோமு : என்ரை முகச் செழிப்புக்கெண்டுதான் இந்தா இரண்டு முத்துத் தோடுகளைப் பெத்துத் தந்திருக்கிறியளே Eg9itibLDT!

Page 40
சில்லையூர் செல்வராசன்
வயலால்திரும்பிமண்வெட்டியைவிறாந்தையில்வைத்தபடி
முருகேசு : பிள்ளை, என்ன தம்பி வந்திட்டானோ?
சோமு : ஓம் அப்பு
யோகம் குசினிக்குட் செல்கிறாள் கனகம் : (பெருமைக் கோபத்தோடு) இஞ்சை பாருங்கோவன்
இவன் செய்திருக்கிற வேலையை? தின்னாமல் குடியாமல் கிடந்து மாசம் மாசம் நீங்கள் அனுப்பின காசிலை மிச்சம் பிடிச்சுச் சின்னவளுக்கு ஒரு சோடி தோடு வாங்கி யந்திருக்கிறான். பாருங்கோவன். ஆளின்ரை கோலத்தை. முருகேசு : (பெருமிதத்தை அடக்கியபடி) ஏன் மேனை. ஊம். இன்னும் உடுப்புக் கூட மாத்தேல்லை. பிள்ளை வந்து களையாறக் கோப்பி தேத்தண்ணி கூடக் குடுக்கேல்லைப் போலே.
கனகம் : அட பார் நானும் கவனிக்கேல்லை. யோகம். யோகம் : இந்தாங்கோ அண்ணை, கோப்பியைக் குடியுங்கோ. சோமு : பொறு யோகம். பல்லு விளக்கிற்று வாறன். யோகம் : (அன்புக் கேலியாக) எடடே எப்ப துவக்கம் இந்தப் புதினம்? நாடுவிட்டு நாடு போனா நல்ல பழக்கம் தன்னாலே வருமாம்.
சோமு (யோகத்தைக் குட்டப்போகும் பாவனையில்) பழமொழி
சொல்றாய் என்ன?. வெளுத்துவிட்டால்.
யோகம் : (விலகிச் சிணுங்கியபடி) ஆ! பாரம்மா இந்த
அண்ணையை.
சோமு கிணற்றடிக்கு முகம் கழுவப் போக, மறுபுறம் அலுவலாய் இருக்கும், செல்லா : தம்பி வந்தாச்சோ? சோமு : ஓம் அம்மா. செல்லா : (இடக்காக) திரும்பவும் போறதோ?
54

தணியாத தாகம்
சோமு : இன்னும் மூண்டு வருசப் படிப்பு இருக்கு அம்மா!
போகத்தானே வேணும். செல்லா : இன்னும் மூண்டு வருசமோ? இந்த ஒரு வருசத்தை ஒட்டவே உன்ரை அப்பு அம்மா பாடு அக்கப்பாடாய் போச்சுத் தம்பி. இன்னும் மூண்டு வருசமெண்டால் அரும்பாடு பெரும்பாடாயல்லோ தம்பி இருக்கும் சோமு : அரும்பெரும் காரியத்துக்கு ஆயிரம் இக்கட்டு வரத்தான் செய்யும் அம்மா! திக்கற்றவையைத் தானே தெய்வமும் சோதிக்கிறது. இந்தச் சோதனையிலே தேறித்தானே அம்மா அந்த சோதனையிலேயும் தேறவேண்டும். செல்லா உங்கடை கஷ்ட நஷ்டங்களோடை நானும் சம்பந்தப்பட்டிருக்கிறதாலை சொன்னனான் தம்பி. நீ குறை விளங்காதை, சோமு : இல்லை அம்மா உதவி செய்யிற நீங்கள்தானே
உரிமையோடை புத்திமதியும் சொல்லலாம். செல்லா : (புறப்பட்டவண்ணம்) ஏதோ அதை மறக்காமலிருந்தால்
சரி. வாறன். சோமு : ஒம்.
கமரா செல்லாச்சியைத் தொடர்கிறது. முன் விறாந்தைக்குப் (SuTui, செல்லா : அங்காலைப் பொடியன் லீவிலை வந்திருக்
கிறான். தம்பர் : (சாய்மானக்கதிரையில்நிமிர்ந்தமர்ந்து) யார் சோமுவோ?
செல்லா : ஒம் வேறே யார், கண்டிக்குப் போய்க் கொஞ்சம்
படிச்சுத்தான் வந்திருக்கிறான்.
தம்பர் : அட! உங்கை உனக்கும் படிப்புகளைப் பற்றி
விளங்குது.

Page 41
சில்லையூர் செல்வராசன் செல்லா : உங்களுக்கல்லோ ஒண்டும் விளங்காது. வளைச்சு நெளிச்சு பிடி குடாமல் அவன் பேசிற பேச்சு. சுழியன் தான். தம்பர் : பின்னை உன்ரை மகன் மாதிரியே? முன்னேறப் பிறந்தவன் முன்னேறுகிறான் அப்பா. நீ ஏன் முனியிறாய்? செல்லா : ஒம் முறைக்கு முறை முன்னுாறு நானுாறு எண்டு
நீங்கள் தூக்கிக் குடுக்காட்டி முன்னேறுவான்தான். தம்பர் : சும்மாவே குடுக்குறோம் அப்பா. முறைக்கு முறை அந்த முருகேசர் முதலும் வட்டியுமாய்த் திருப்பித் தரேக்கை மட்டும் திருப்தியாய் வாங்குவாய்; செல்லா : வானம் பாத்த பூமியையும் மழையையும் நம்பி வாழுறவற்றை முறைக்கு முறை நாணயம் எப்போதும் சொல்லிக்கொண்டோ? தம்பர் : நாக்கு வளைச்சு நீ அண்டைக்கு நாலு வார்த்தை சொன்னவுடனே நறுக்கெண்டு மனுசன் நாணயமாய்க் காசைக் கொண்டந்து வாசல்லை தந்திட்டுப் போனதையும் மறந்து போய்ப் பேசுறாய் பேச்சு. போய் அலுவலைப்
Lists .....
செல்லா : (உள்ளே திரும்பியபடி) ஊம்! நானும் இருந்து பார்ப்போம். நடக்கிறதை. உவன் குமார் என்ன செய்றான். குமார்.
கமரா வெட்டித் திரும்பி, கிணற்றடியால் திரும்பும் சோமுவிற் பதிகிறது. சோமு : குமார் என்ன செய்கிறான் யோகம்? திரும்பவும்
சோதினை எழுதினவனோ? மாடத்துள் வந்து முகம் துவட்டும் அண்ணனைப் பார்த்து யோகத்தை நோட்டமிட்டு, கமலி (அழுத்தலாக) சோதினை எழுதல்லை அண்ணை.
அவர் இப்ப கடிதம் எழுதினபடி.
56

தணியாத தாகம்
யோகம்தடுமாறிப்போகிறாள். சோமு : கடிதமோ யாருக்கு?
சோமு கவனியாதபடி யோகத்தைப் பார்த்து, குரல் வராமல் உதட்டைக்குவித்து, கமலி சொல்லட்டே?
யோகம்கெஞ்சலாகநோக்க, கமலி : அதண்ணை அவர் இப்ப வேலைக்கு அப்ளிகேஷன்
கடிதங்கள் எழுதினபடி, யோகம் சுக மூச்செறிகிறாள். சோமு : அப்ப பள்ளிக்கூடம் விட்டாச்சு கமலி : காசிருக்கிறவைக்குப் படிப்பெதுக்கெண்டாக்கும். யோகம் : இல்லை அண்ணை. தாய் தகப்பன் வற்புறுத்தியும் அவருக்குப் படிக்க விருப்பமில்லையாம். ஏதாவது தொழிற்பயிற்சி இருந்தால் பிறகு சொந்தப் பணம் போட்டு அதே தொழிலைச் செய்யலாம் எண்டு தொழில் துறை ட்றெயினிங் குடுக்கிற இரண்டொரு இடங்களுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறாராம். கமலி : இதெல்லாம் இவவுக்கு எப்படித் தெரியும் எண்டு
கேளுங்கோ அண்ணை. யோகம் : அது. அதண்ணை செல்லாச்சி மாமி சொன்னவ.
முனியாண்டிவருகிறான் முனி : தம்பி வந்தாச்சுங்களா?
விறாந்தைக்குச் சென்றபடி
சோமு : முனியாண்டியா. 6) T..... 6) Is....... கமலி : (மெதுவாகத் தமக்கையிட்ம்) இப்பவே மாமி முறையோ
é9l8585ff.............
கோபிப்பது போல் யோகம் உதட்டைக் கடித்துக் காட்டி விட்டுக் குசினிக்குப்போக, கமலிவிறாந்தைக்குவருகிறாள்.
57

Page 42
சில்லையூர் செல்வராசன் முனி : ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க தம்பி. சோமு : இல்லையே! அப்படியேதானேயிருக்கிறேன். கனகம் : அவன்ரை கதையை ஏன் கேட்கிறாய் முனியாண்டி.
அங்கை பார் கமலியின்ரை காதை, முனி அடடே! சின்னத் தங்கச்சிக்குப் புதுசாக் கம்மல் செய்து போட்டிருக்கீங்களா? லட்சணமாயிருக்குங்க. கனகம் : (பெருமையாக) தம்பியின்ரை வேலை. நாங்கள் அனுப்பின பிச்சைக்காசிலும் வாயை வயித்தைக் கட்டி மிச்சம் பிடிச்சுத் தங்கச்சிக்கெண்டு செய்து கொண்டந் திருக்கிறான். முனி : அப்பிடிங்களா? தம்பிக்குச் சின்னத் தங்கச்சின்னா உசிருதானுங்களே? என்னமோ கடவுள் தம்பியை நல்லா வைக்கணுங்க. சோமு : அதிருக்கட்டும் முனியாண்டி! கடவுள் உன்னை
நல்லாய் வைச்சிருக்கிறாரோ? சுகமாயிருக்கிறியா? முனி : இருக்கேனுங்க. உங்க நிலபுலமும் ஐயா அம்மா வோடை ஆதரவும் இருக்கிறப்போ எனக்கென்னங்க குறைச்சல்? யோகம் : (குசினிக்குள்ளிருந்து) சாப்பிட வாங்கோவன்
960060)600...... சோமு : வாறன். முனியாண்டி, சாப்பிடேன். முனி வேணாமுங்க. சாப்பிட்டிட்டுத்தான் ஐயாவோடை
வயலுக்குப் போகலாமின்னு வந்தேனுங்க. சோமு : அப்ப சாப்பிட்டிட்டு வந்திடுறன். முனி : சரிங்க.
சோமு குசினிக்குச் செல்ல, காட்சி கரைந்து மறு காட்சியாக விரிகிறது.

அங்கம் 6
பகல். கிராமத்துக் கோயில், தேள்முட்டுப் படிகளில் அமர்ந்து ரட்ணம், கனகு, ஆனந்தன், குமார்,சோமு ஆகியோர்சம்பாஷிக்கிறார்கள். ஆனந் : சோமு! நீயும் ஊருக்கு வந்திருக்கிற நேரத்திலே இந்த இளங் கமக்காரர் சங்கத்தைத் துவக்கிப் போட வேணுமெண்டு எனக்காசை. அரைகுறையாய்ப் படிச்சுப் போட்டு வேலையில்லாமல் சும்மாயிருந்து இனிச் சரிவராது. கனகு கூடக் கடைசிலே இதுக்குச் சம்மதம். கனகு : ஒம் சோமு. ஆனந்தன்ரை அருவினைக்கு ஆத்தா
மல் நானும் ஓம் சொல்லிப் போட்டன். ரட்ணம் : இப்படி ஒரு காரியத்தைப் பிரயோசனம் தரக்கூடிய முறையிலே அமைச்சுக் கொண்டு நடத்திறதெண்டால் உன்ரை யோசனைப்படிதான் செய்யவேணுமெண்டு சொன்னது நான்.
குமார் : என்ன ரட்ணம் குழையடிக்கிறாய் சோமுவுக்கு!
சோமு : எல்லாம் சரி. நல்ல யோசனைதான்! ஆனால் சங்கத்தை அமைச்சு என்ன செய்யப் போறியள்?
ஆனந் : எங்கள் எல்லாருக்கும் கொஞ்ச நஞ்சமெண்டாலும்
நன்செய் புன்செய் இருக்கு. அங்கத்தவர்களெல்லாரும் ஆளுக்காள் தோட்டம் செய்ய உடலுதவி செய்ய வேணும்.
சோமு : அதாவது முந்தின காலத்திலே எங்கடை பழைய கமக்காரர் வாரத்துக்குப் பயிர் செய்த மாதிரி. இந்தக் காலத்துச் சிரமதானம் மாதிரி
ஆனந்தன் ஓம்! அப்ப கூலிக்காள் பிடிக்கிற பிரச்சினை இல்லை. அங்கத்தவர் சந்தாக் காசைத் திரட்டிப் பணம் தேவைப்படுகிற போது பாவிக்கலாம். ஊர் வாலிபரிலே கனபேர் சேருவாங்கள்.

Page 43
சோமு : வேறே?
ஆனந் : இப்போதைக்கு இவ்வளவுதான். பிறகு படிப்படியாய்
வளரும் தானே!
சோமு : படிப்படியாய்த் தான் வளரவேணும். எண்டாலும் இப்பவே எவ்வளவோ செய்யலாம். முதல்லை சங்கத்தை அமைச்சு அரசாங்கத்திலே பதியவேணும். நிதியுதவி, குறைந்த விலையிலே விதை பயிர். உரம் மாதிரியான சாமானெல்லாம் அரசாங்கத்திலே இருந்து கிடைக்கும். பயிர்ச் செய்கைக்கு மட்டுமில்லை. கோழிப்பண்ணை, கால் நடைப்பண்ணை மாதிரிக் கணக்க வளர்ப்பு வேலை களுக்கும் அரசாங்கச் சலுகைகள் கிடைக்கும். சங்கத் திலையிருந்து ஆட்களை தெரிவு செய்து பயிற்சி குடுப் பாங்கள் . ஆலோசனை சொல் லப் போதனாசியர்களை அனுப்புவாங்கள். விளை பொருள்களை நல்ல விலைக்கு அரசாங்கமே வாங்க ஏற்பாடு செய்யும். இப்படிப் பல லாபங்கள்.
ரட்ணம் : பாத்தியே? இதுக்குத் தானே சோமுவோடை
யோசிக்க வேணுமெண்டு நான் சொன்னது.
சோமு : அதோடை, எங்கள் எல்லாரட்டையும் இருக்கிற துண்டுக் காணியளிலை பயிர் செய்து என்னத்துக்குப் போதும்? ஊருக்குப் புறம்பிலே இருக்கிற கலட்டித் திட்டு பொட்டை நிலமாய்க் கிடக்குது. அரசாங்கக் காணி. எழுதிப் போட்டா சங்கத்துக்கே கிடைக்கும். பண்படுத்தினா நல்லாய் விளையும்.
கனகு : அருமையான யோசனை மச்சான். எழுது
இண்டைக்கே எல்லாம் எழுதிப் போடு. ரட்ணம் : பிறகென்ன? இப்பவே சங்கம் சரி. சோமு! நீ
தலைவர். ஆனந்தன் காரியதரிசி. குமார் - நீ தான் காசுக்காறன் நீ தனாதிகாரி.
குமார் : என்னை விடுங்கோடாப்பா. இதுகளிலே நான் கூட்டெண்டு தெரிஞ்சா அம்மா தும்புக்கட்டைதான் எடுத்துப் பிடிப்பா.

தணியாத தாகம்
ஆனந் : அப்ப நீ இதிலே சேர்த்தியில்லையோ?
குமார் : பேருக்குப் போட்டு வையுங்கோ. காசுதவி செய்யிறன். தோட்டம் செய்ய மட்டும் கூப்பிடாதேங்கோ.
கனகு : அவனுக்குக் கொக்குவில் டெக்கினிக்கல்
கொலிச்சிலை இடம் கிடைச்சிருக்கடாப்பா. இலக்ட்றிக்கல் வேலையிலை ட்றெயினிங் எடுக்கப் போறான். சோமு : அப்படியா குமார்? குமார் : உண்மைதான். சோமு : அது நல்லது. மற்றது, நீங்கள் அவசரப்படக் கூடாது. என்னைச் சாதாரண அங்கத்தவனாய் விட்டி டுங்கோ. கலட்டி விஷயத்தைப் பிறகு பார்க்கலாம். ஊர் வாலிபரையும் சேர்த்து இரண்டு மூண்டு நாளிலை ஒரு கூட்டத்தை வைச்சு முறையாய் உத்தியோகத்தர் தெரிவைச் செய்யலாம். ஆனந் : நீ தான் சோமு தலைவர் பதவி ஏற்க வேணும். கனகு : உனக்கு விளங்கேல்லை ஆனந்தன். சோமு படிக்கிறவன். மூண்டு வருசத்திலே பட்டதாரியாயிடுவான். பிறகு மண் கொத்த வாறானோ? கொழுத்ததாய் ஒரு உத்தியோகம் பாப்பான். பிறகு காற்சட்டை மைனரல்லோ? இன்னொரு விதத்திலே குமார் மாதிரித்தான் சோமுவும் பின்னிற்கிறான். சோமு : நான் ஒத்துழைக்கப் பின்னிற்கிறதாய் நினைக்க வேணாம். வருசம் முழுக்க ஊரிலை இருந்து உழைக்கக் கூடிய உம்மைப் போலே ஒரு ஆள் தலைவராய் இருக்கிறது நல்லது. ஆனந் : சரி! அப்ப கூட்டத்துக்கு நாள் குறிச்சுப்போட்டு
உன்னைக் காணுறன் சோமு. சோமு : சரி.
எல்லோரும் எழுந்துபிரிய, காட்சிமாறுகிறது.
61

Page 44
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 7
கண்டி. காலை, தீபா வீடு. கதவு மணி அடிக்கத் தீபா சென்று
திறக்கிறாள்
திபா : ஆ? சித்ராவா? வா வா! வா உள்ளே!
சித்ரா : (உள்ளே நுழைந்து சூட்கேசைவைத்தபடி) யுனிவர்சிற்றி திறக்க மூண்டு நாள் முந்தியே வந்திட்டனே எண்டு ஆச்சரியமாயிருக்கா தீபா?
உட்கார்ந்துஉரையாடுகிறார்கள்
தியா ; அதுதானே! (உட்புறம் நோக்கி) அன்ரி: மே பளன்
டகோ. கெளத அவில இன்னவ கியல
அன்ரி : (வந்த வண்ணம்) கெளத? ஆ! சித்ராத? இருங்க நான்
வர்றேன். குசினிக்குச்செல்கிறாள்.
சித்ரா வீட்டிலே எல்லாரும் கதிர்காமம் போகினம். நான் தனியாய் இருக்க முடியுமா? அவங்களோடையே வெளிக் கிட்டு நான் நேரே இங்கே வந்திட்டேன்.
தீபா நல்லதாய்ப் போச்சு. அண்ணாவும் கொழும்புக்குப் போயிட்டாங், தனியா இங்கே ஒரே டல். உனக்கு ஹொலி டேய்ஸ் எப்பிடிப் போச்சு சித்ரா?
சித்ரா போய் ஒரு பத்து நாள் ரொம்ப இன்டறெஸ்ரிங்.
பிறகு - ப்ச்.
திபா : எப்பிடி?
சித்ரா : மட்டக்களப்பிலே என்ர கசின் ஒருத்தர் வேலை
செய்கிறார் எண்டு சொன்னனில்லையா?
62

தணியாத தாகம்
தீபா : Se!uDT சித்ரா : அவர் பத்துநாள் லீவிலை வந்திருந்தார். தீபா ஒகோகோ! புரியுது புரியுது. கதாநாயகன் பத்தாம்
நாள் லீவு முடிஞ்சு புறப்பட்டதும் (பாடுகிறாள்) "பாலும் கசந்தபடி சகியே படுக்கை நொந்ததடி.” அப்பிடித்
தானே..? சித்ரா : பாரதியார் கவிதை இருக்கட்டும் உன்னுடைய
கவிஞர் கடிதம் எழுதினாரோ? தீபா : அங்கே போனால் தனக்குக் கடிதம் எழுதவே நேரமிருக்காதெண்ணு சோமு சொல்லிட்டுத்தான் போனார். சித்ரா : கவிதை எழுத மட்டும் நேரமிருக்குமாக்கும். தீபா எழுதியிருக்கிறாரா? சித்ரா : ஏன் நீ பார்க்கலியா? போன வாரமஞ்சரியிலே
சோமுவின்ரை கவிதை ஒன்று வந்திருக்கே? தீபா : பாக்கலியே! என்ன, காதல் கவிதையா? சித்ரா : உனக்கல்லோ காதல் கவிதை எழுதுவார்? இது
"இரு தோடுகள்” என்று ஒரு கவிதை. தீபா : எதைப்பற்றி? சித்ரா : கவிதை அப்பிடியே நினைவில்லை. வைரத்தில்
ஒன்றும் தங்கத்தில் ஒன்றும்போலே இணையாத சோடித் தோடுகளாய்ச் சூரியனையும் சந்திரனையும் வானப் பெண்ணுக்குப் பூட்டியிருக்கிறாராம் கடவுள். தீபா : கற்பனை நல்லாயிருக்கே! சித்ரா : அதைப் பார்த்து உலகப் பெண்ணுக்கும் இணையாத
சோடித் தோடுகளைப் பூட்டிவிட்டானாம் மனிதனும், தீபா : அதெப்படி?

Page 45
சில்லையூர் செல்வராசன்
சித்ரா : ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி, படித்தவன் படிக்காதவன், சாதிமான் தாழ்ந்தவன் என்று சோடியாய்ப் பிரிவினைத் தோடுகள் உலகத் தாயின் காதில் தொங்குதாம்.
தீபா : கருத்துள்ள கவிதை தான். இன வித்தியாசம், அந்தஸ்து வித்தியாசம்(பெருமூச்செறிந்து) ஒரு வகையிலே பாத்தா நானும் அவரும் கூட இணையாத இரு தோடு கள் தானே.
சித்ரா : தீபா. நீ எடுக்கிற கருத்திலே பார்த்தால் உனக்காக எழுதின காதல் கவிதைதான் இது என்று சொல்லிடுவாய் போலிருக்கு.
திபா : (சிரிக்கிறாள்) அன்ரி : (தேநீருடன் வந்து) தே குடியுங்கோ சித்ரா. திபா : நானும் பேச்சிலே இருந்திட்டேன். குடிச்சிட்டு வந்து
சேஞ் பண்ணு சித்ரா. சித்ரா : (எழுந்து தேநீரைப் பெற்றபடி) தாங்ஸ்
காட்சிமாற்றம்.

தணியாத தாகம்
அங்கம் 8
முருகேசுவீடு. பிற்பகல்.முருகன்வருவதைக் கண்டு,
யோகம் : என்ன முருகன்? தண்ணியோ?
முருகன் : ஒம் பிள்ளை! என்ன, தம்பி இண்டைக்குப்
uuu600108LDIT?
சோமு : (பெட்டி அடுக்கியபடி) ஓம் முருகன். நாளைக்குப்
படிப்புத் துவக்கம். முருகன் : தம்பி வந்து நிண்ட சோட்டை தீரேல்லை. ஒரு மாசம் ஒரு நாள் போனது மாதிரிப் போட்டுது..அப்ப தம்பி வெளிக்கிட. நான் தாகத்துக்குத் தண்ணி குடிச்சிட்டு வாறன். யோகத்தைத்தொடர்ந்துமுருகன் கிணற்றடி செல்லமுனியாண்டி கையிற்பெட்டியுடன்அவசரமாக நுழைகிறான். முனி : தம்பி புறப்பட்டாச்சுங்களா? முருகேசு : (முற்றத்தில் நின்று) வெளிக்கிடுறான். என்ன முனியாண்டி பெட்டி படுக்கையோடை வந்திருக்கிறாய்.
கனகம் : (உள்ளிருந்து வந்தபடி) நீயும் பயணம் போறவன்
மாதிரிக்கிடக்கு. முனி : ஆமாங்கம்மா! என் அத்தை மக முறையான
பொண்ணு ஒண்ணு என் சித்திக்கிட்டயே வளந்திச்சுன்னு சொன்னேன் இல்லிங்களா? யோகமும்முருகனும் கிணற்றடியால்திரும்புகிறார்கள்.
கனகம் : லட்சுமியோ என்னவோ பேரெண்டு சொன்னாய்,
ஏன் அவளுக்கென்ன?

Page 46
சில்லையூர் செல்வராசன் முனி அந்தப் பொண்ணுக்கு ஒண்ணுமில்லீங்க. கொழுந்து கிள்ளப் போகாமே, என்னமோ கொஞ்சம் படிச்சு தோட்டத்திலேயே கல்யாணம் பண்ணி நல்லா இருந்த பொண்ணு. முருகேசு : என்ன, புருசன் கிருசன் மோசம் போயிற்றானோ? முனி : (கண்ணிர்மல்கியபடி) ஆமாங்க! கைக்குழந்தையோடே அந்தப் பெண்ணைத் தவிக்கவிட்டுட்டு அவன் இறந்து போயிட்டான்னு கொஞ்சம் முன்னாடி தான் தந்தி
வந்ததுங்க. சோமு : (வெளியே இறங்கி) தந்தி எங்கை? இஞ்சை கொண்டா
LJITI ILILD.......................
தந்தியைக்கொடுத்து முனி : இந்தாங்க. தபால்காரத் தம்பித்துரை ஐயா
தான் வாசிச்சுச் சொன்னாருங்க.
சோமு : ஒம். நாளைக்குத் தான் ஈமக்கிரியை, சரி. அப்ப
வாறியோ என்னோடை?
முனி : ஆமாங்க.
முருகேசு : போகக் காசு கீசு இருக்கே முனியாண்டி? உன்ரை
இறைப்புக் காசுகளும் வரவிருக்கு
முனி டிக்கட்டுக்கு இருக்குங்க. அங்கே போய்ப்
பாத்துக்கலாம்.
முருகேசு : இஞ்சையும் இப்பிடி அப்பிடித்தான்.
கனகம் : ஆத்திரம் அவசரத்துக்குப் பார் இப்பிடியாய்க் கிடக்கு. பட்டதோடை பட்ட கடனாய் அங்காலை கேட்டுப் பாருங்கோவன்.
முனி எதுக்குங்க! உங்க கஷ்டத்தோடே எனக்காக
வேறே அவங்ககிட்டே கை நீட்டணுங்களா?
66

தணியாத தாகம்
முருகன் : நயினார் குறை விளங்கப்படாது. இதுக்காக அவையட்டை ஒரு வெஞ்சொல் கேக்கிறது நல்லதில்லை.
முருகேசு : (அயல் வீடு செல்ல எத்தனித்தபடி) ஆபத்துக்குப் பாவமில்லை முருகன். தம்பி சுறுக்கு வெளிக்கிடு. வந்திட்டன்.
முருகன் : (முருகேசுவைப்படலைநோக்கித்தொடர்ந்து) ஐயா! ஒரு விசளம்! என்னட்டை இஞ்சை ஒரு தொண்ணுாறு உறுவா கிடக்குது. ஒரு சீட்டுப் போட்ட காசு. இப்பதான் வாங்கிக் கொண்டு வாறன். வேணுமெண்டா எடுக்க. முருகேசு : நீ என்ன நல்ல காரியத்துக்கெண்டு நினைச்ச
காசோ முருகன்? முருகன் : நீத்தாருக்குச் செய்யிற கடமையை விட நல்ல
காரியம் வேறே என்ன நயினார். கனகம் : (மனஞ் சிலிர்த்து) இந்த நேரத்திலை முருகப்
பெருமானே வந்து குடுக்கிறான். வாங்குங்கோ.
முருகேசு மரியாதைக் கூச்சத்துடன் வாங்கி முனியாண்டியிடம் பவ்வியமாகக்கொடுக்க முனி (உருகிப்போய் முருகனுக்குக் கையெடுத்து) திக்கற்ற வங்களுக்குத் தெய்வம் துணையின்னு சொல்லுவாங்க. அந்தத் தெய்வங்கள் இந்த உருவங்களிலேதான் இருக்கு எங்கிறது எனக்கு இப்பதாங்க புரியுது.
சோமு : (புறப்பட்ட வண்ணம்) அம்மா! நான் போயிட்டு
வாறன். அப்பு.
கமலி (சஞ்சிகையை எடுத்துவந்து) இந்தாங்கோ உங்கடை
கவிதை வந்த தமிழ்ச்சங்க மகசீன்.
சோமு : (செல்லமாக அணைத்துக் கண்கலங்க) கமலிக் குஞ்சு
போயிற்று வரவா?
கமலி : ஒமண்ணை. என்ன உது? ஆனந்தக் கண்ணிரோ.
67

Page 47
சில்லையூர் செல்வராசன்
துயரச் சிரிப்போ?
சோமு : (கமலியின் தலையைக் குழப்பிக் கோதிவிட்டு) யோகம்
வாறன் அம்மா. போட்டு வாறன். முருகன்.
முருகன் : கவனமாப் போய் வரத் தம்பி. முனி எல்லாருக்கும் வணக்கம்! வரேனுங்க.
இருவரும் புறப்பட்டு வீதியில் ஏற குமார் சைக்கிளில் இருந்தபடி ரட்ணம், ஆனந்தன், கனகு ஆகியோருடன் பேசியபடிநிற்கிறான்
குமார் : ஆ! வெளிக்கிட்டாச்சோ சோமு!
சோமு : ஒம் குமார்!
கனகு : என்ன முனியாண்டியும் பயணமோ?
முனி : ஆமாங்க தோட்டத்திலே என் அத்தை மக புருஷன் இறந்திட்டதாத் தந்தி வந்துதுங்க. அது தான் போறேன்.
ரட்ணம் : அடடே பாவம். உம் சோமுவுக்குத் துணையாயும்
போச்சு, போயிட்டு வா.
சோமு : வாறோம்
මෙ5601 : சங்க விஷயங்களையும் மறந்திடாதே சோமு.
தேவைப்படுறபோது கடிதம் எழுதுவன்.
சோமு : சரி!
அவர்கள் சென்றுமறையகாட்சிமாறுகிறது.

தணியாத தாகம்
அங்கம் 9
நண்பகல்.திாவும்சோமுவும்மாணவமாணவிகளுடன்பல்கலைக் கழக விரிவுரை மண்டபத்திலிருந்துவெளிப்படுகிறார்கள்.
திபா : சோமு பின்னேரம் பெரதேனியா காடன்ஸ"க்குப்
G3urTC36um LDI?
இருவரும்பேசிக்கொண்டேநடக்கிறார்கள்
சோமு : சந்திரன் பின்னேரம் தன்னோடே படம் பார்க்க
வரச் சொன்னான். சம்மதிச்சிட்டேன்
தியா : வேணம் சோமு. உங்களோடே நிறையப் பேசனும். நீங்க உtருக்குப் போய் வந்தப்புறம் சந்திக் கவேயில்லை. இன்னொரு நாள் படத்துக்குப் போங்க.
சோமு : அப்போ சந்திரன்?
தீபா : அப்போ அவரையும் கூட்டிக்கிட்டு வாங்க. சோமு : நீர் என்னோடே பேச சந்திரன் என்ன செய்யிறது? தியா ; அப்போ சித்ராவையும் கூட்டிட்டு வர்றேன். சோமு : சரி.
தீபா : அப்போ ஈவினிங்?
கட்டாயம்.
சோமு
அவர்கள்பிரிய. காட்சி கரைந்துபிற்பகலில்பேராதனைப்பூங்காக்
காட்சியாகவிரிகிறது.சோமு, தீபா, சந்திரன். சித்ரா. துரத்தேசுகத்தையும்
அமராவையும் கண்டு. அவர்களை அணுகுகிறார்கள்.
தீபா அந்தா அண்ணா இருக்காங்க. அண்ணா
அமரா நீங்களும் இங்கேயே வந்திட்டீங்களா?

Page 48
சில்லையூர் செல்வராசன்
சுகத் (அமராவுடன் உட்கார்ந்தநிலையில் இருந்து எழுந்து) ஆ! ஹலோ சோமு சந்திரன்! இது என் பிரெண்ட், அமரா.
திபா : (அமராவுக்கு) மேயா தமாய் இசர மங் கியலா தியனவா சோமு. மேயா சித்ரா. சந்திரன்.
அமரா (எழுந்து) ஹலோ! ஹெள டு யூ டு?
சுகத் : தீபாவுடைய பேர்த்டே பாட்டிக்குப் பிறகு காணவே
இல்லையே சோமு. கவ் ஆர் யூ?
சோமு : பைன். உங்கடை பேச்சைத்தான் குழப்பிப் போட்டம்
(3LTC36)?
சுகத் : பரவாயில்லை.
தீபா : அண்ணா! நாங்க அப்பிடிச் சுத்திப் போயிட்டு
வர்றோம்.
சுகத் : (அமராவுடன் அமர்ந்தபடி) சரி!
திபா (புறப்பட்டபடி) அப்பி என்னங் அமரா?
நால்வரும் அப்பால்நகள்கிறார்கள்.
சோமு : அண்ணன்ரை கேள் அவதானா?
திபா : ஊம்!
சோமு : உம்முடைய பேர்த் டே பாட்டியிலே கண்ட
(6b TLJ35 p.
தீபா : ஆமா வந்திருந்தா.
சோமு : ஆனா இன்றடியூஸ் பண்ணல்லை.
தீபா இருக்கும். சோமு. நாம இங்கே
உட்காருவமா? அவங்க சுத்திப் பாத்திட்டு வரட்டும். சந்திரன் : ஓ. கே. வாரும் சித்ரா.
சந்திரன்-சித்ராஅகல,சோமுவும்தியாவும் அமர்கிறார்கள். மெளனம் தொடர அதைக்கலைத்து,

தணியாத தாகம்
திபா
சோமு
卷
இப்பிடியே பேசாம உட்கார்ந்திருந்தா?
நீர்தானே நிறையப் பேச வேணும் எண்டீர்.
பிற்பகலிலேயே, சூரியன் மறைய முன்பும் மங்கலாகத் தெரியும் சந்திரனைச்சோமுபார்த்தபடி இருக்க,
தீபா
சோமு
தீபா
சோழு
தீபா
GeForCp
gurT
சோமு
தியா
(p
திபா
சோமு
O O
:
நீங்க நிலவை வெறிச்சுப் பாத்திட்டிருந்தா?
பகல் நிலா! அதுதான் பார்க்கிறேன். கவிதை தோணிச்சாக்கும்?
slip
என்ன கவிதை?
பரிதியின் மீதும் அந்தப் பால் நிலாமீதும் தானே உறுதிகள் கோடி செய்தோம் உன்மத்தராயிருந்தோம்.
உங்க கவிதைதானே?
இல்லை.
அப்போ?
சோமு எழுதினது. (நகைத்து) நீங்க தானே சோமு? இது சோமு எண்டு தமிழ் நாட்டிலே இருக்கிற
வேறை ஒரு கவிஞர்.
திபா
சோமு
திபா
சோமு
அப்பிடியா? அந்தக் கவிதை இப்போ அதிகமாக விளங்குது எப்பிடி? இப்பிடி ஒரு பகல் நிலா மாலையிலே உட்கார்ந்து,
ஒரே சமயத்திலை சூரியனையும் சந்திரனையும் கூட்டுச் சாட்சியாக வைத்துச் சத்தியங்கள் செய்து காதற்
71.

Page 49
சில்லையூர் செல்வராசன் பைத்தியத்தால் வாடின இரண்டுபேரைக் கண்டுதான் சோமு அப்பிடிப் பாடியிருக்க வேணும். gurT ; அந்தக் கவிதையை இன்னொருக்காச் சொல்லுங்க, சோமு : பரிதியின் மீதும் அந்தப் பால் நிலாமீதும் தானே உறுதிகள் கோடி செய்தோம்
உன்மத்தராயிருந்தோம். திபா : நாங்களும் உன்மத்தர்தான். இல்லையா சோமு? சோமு : உம் ஒருவிதத்திலே தியா எனக்கு உங்க மேலே பைத்தியம். உங்க தமிழ்
மேலே பைத்தியம். உங்க கவிதையிலே வாற மாதிரி சூரியனும் சந்திரனும் வானப் பொண்ணுக்கு இணையாத இரு தோடுகள்தான். எங்க மாதிரி. சோமு : என் கவிதை படிச்சீரா? திபா : ஆமா! சித்ராக்கிட்டே வாங்கிப் படிச்சேன். இதோ
பிரதி கூட என்கிட்டே இருக்கு. சோமு பிரதியை வாங்கிப்பார்க்கிறான். பார்த்தவண்ணமிருக்கப் பின்னணியில் இசையுடன் பாடலாக அது ஒலிக்கிறது. பொருத்தமான் காட்சிகளுடன் இடைவெட்டாகப்பாடல் வருகிறது.
U TIL 6ò
சூரியன் ஒன்று சந்திரன் ஒன்று சுடரும் தோடுகள் இரண்டு நேரிழை வானின் முகத்தக்கென்று நிமலன் செய்தான் அன்று - சூரியன்.
எரிசுடர் ஒன்று குளிர் சுடர் ஒன்று இணையாச் சோடிகள் இரண்டும் சரி பிழை போலே எதிரெதிர் என்று கண்டான் மனிதன் இன்று - சூரியன்.
72

தணியாத தாகம்
ஆண்டவன் செய்த பிழையினைக் கண்டான் அதை முன் மாதிரி கொண்டான் ஆண்டான் அடிமை தீண்டான் மேலோன் ஏழை செல்வன் என்றாயிரம் வேண்டாச் சோடிப் பிளவுத் தோடுகள் விற்றுலகம்மை செவிகளில் பூண்டு பிழைக்கும் வழியைக் கண்டான் போலியும் அசலும் ஒன்றென்றான் - சூரியன்.
ஒரு புறம் உயர்வோ மறுபுறம் இழிவோ உலகம் இரண்டோ ஒன்றோ? இரு தோடுகளும் ஒரு தோடாகி இணையும் நாகர் வரும் என்றோ..?
திபா : சோமு மங்க திறமைக்கு நீங்கள் ஸ்பெஷல்
ஒனர்ஸ் செய்யவேணும்.
சோமு மொத்தம் நாலு வருசம் ஆகுமெண்டாலும் அப்பிடித்தான் நினைச்சிருந்தேன். இப்போ மூணு வருசத் துக்குள்ளே சாதாரண பீ. ஏ. பட்டதாரியாகப் படிப்பை முடிக்க வேண்டியிருக்கு.
திபா : ஏன் சோமு?
சாய்ந்துவரும்,ஆதிக்கதிரவனைப்பார்த்தபடி, சோமு : எல்லாம் பணப்பிரச்சினைதான். கூடுதல் ஒரு வருஷத்துக்குப் பணமாவது மிஞ்சுமல்லவா? நிறைவேற முடியாத எத்தனை ஆசைகளை மனதிலை சுமந்து கொண்டு மனிதன் சங்கடப்படுகிறான்.
தீபா : எத்தனை ஆசைகள் என்றால்?
யோகம் முன்றானையில் நகைகளையிட்டுத்தனக்கு ஒப்புவித்த சம்பவம்மீள்காட்சியாகச் சோமுவுக்குத்தெரிகிறது.
73

Page 50
சில்லையூர் செல்வராசன்
சோமு : (கண் கலங்கி) என் தங்கை கமலிக்குத் தோடு வாங்க நீரும் கூட வந்தீர்தானே. அதைக் கொண்டு போய்ப் போட்ட நேரம் அவள் சொன்ன ஒரு குறிப்புத்தான் "இருதோடுகள்” கவிதையாச்சு. என் தங்கைமாரைப் பொன்னாலே பூட்டிப்பார்க்க ஆசை. ப்ச்.
திபா : சோமு. அழறீங்களா? உங்க மூட்ஸே இப்படித்தான். இதென்ன சோமு சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டிடுவீங்க. எதிர்காலம் முழுவதுமே எங்க முன்னாலே காத்திருக்கு. எல்லாம் பிறகு பாத்துக்கலாம். எழுந்திருங்க போவோம். தீபாகனிவாக அவன்விழிநீரைத்துடைக்கவும்,அக்கையை அவன் மெதுவாய்ப் பற்றி, விழிகளை மூடி, தன் இதழ்களிற் பதிக்கிறான். தீபா அவனை எழச் செய்துகையிற்பற்றியபடி சந்திரன்-சித்ரா உள்ள திசை நோக்கிச் செல்லமாலைக்காட்சிகரைகிறது.
74

தணியாத தாகம்
அங்கம் 10
கரைந்தமாலை,காலையாக மலர, யோகம் வீட்டுவிறாந்தையில் நிற்பதும், குமார் அவள் கவனத்தைப் பாட்டின் ஒருவரியால் கவர்ந்து கிணற்றடிக்குவருமாறுசைகை செய்வதும் தெரிகிறது. குமார் : என் கேள்விக்கென்ன பதில்? (யோகம் நிமிர) உன் பார்வைக் கென்ன பொருள்?. (கிணற்றடியில் மெதுவாக) என் கேள்விக் கென்ன பதில்?. கடைசியிலே பாட்டிலைகூடக் கேட்டுப் பாத்தாச்சு தமிழ்ப் படங்களிலே மாதிரி. யோகம் : நான் எங்கடை அண்ணனாயிருந்தா பாட்டிலேயே பதிலும் சொல்லியிருப்பேன். உங்கடை படப் பைத்தியம் தெளிய. கிணற்றடியின் இருபுறமும் நின்று சம்பாஷணையைத் தொடர் கிறார்கள் குமார் : விட்டிலை ஒருத்தரும் இல்லைத்தானே? யோகம் : இல்லை; உங்கடை வீட்டிலை. குமார் : அம்மா அன்ரி வீட்டை போயிற்றா. ஐயா வழக்கம் போல சாய்மானக் கதிரையிலை சயன யோகம், யோகம் : சொல்லுங்கோ! குமார் : அண்டைக்கு நான் கடிதம் தந்த பிறகு எத்தனை
தரம் உம்மட்டைச் சம்மதம் கேட்டிட்டேன். யோகம் : யோசிச்சுச் சொல்றன். குமார் : யோசிச்சுச் சொல்றன் யோசிச்சுச் சொல்றன் எண்டு எப்ப பார்த்தாலும் தட்டிக் கழிக்கிறீர். விருப்பமில்லை.
75

Page 51
சில்லையூர் செல்வராசன்
யெண்டு முகத்திலை அடிச்சாப் போலை சொல்லக் கஷ்டமென்டால் ஒரு கடிதமாவது எழுதலாமே? யோகம் : அப்படியெல்லாம் எழுதுற பழக்கமில்லை.
குமார் : யோகம் இஷ்டமோ இஷ்டமில்லையோ, இரண்டிலை ஒண்டு இண்டைக்குக் கட்டாயம் சொல்லத்தான் வேணும்.
யோகம் : நான் என்னத்தைச் சொல்ல?
குமார் : எது உம்முடைய முடிவோ அதைச் சொல்லும்,
யோகம் : ஒண்டும் உங்களுக்குத் தெரியாதா?
குமார் : என்ரை யோகத்தின்ர பதிலிலைதான் என்ரை யோகமும் தங்கியிருக்கு எண்ட ஒண்டு மட்டும்தான் தெரியும்.
யோகம் : சரி சொல்றன். சின்ன வயசிலையிருந்து இந்த ஒரே கிணத்துத் தண்ணியைத்தான் குடிச்சு வளர்ந்தம். உங்களுக்கு ஞாபகமிருக்கா . ? அப்ப இந்த வேலி யில்லை.
குமார் : ஒம் யோகம். ஒரு வேலி நிலம். ஒரே எல்லைக்
காணிதானே இரண்டும். யோகம் : உண்மைதான். ஆனா நீங்க சொல்லிறதுக்கு இப்ப கருத்து வேறை. இடையிலை ஒரு வேலி வளர்ந்திட்டுது. நாங்கள் பழகிறதுக்கும் ஒரு எல்லையைப் போட்டிட்டிது. குமார் : ஏன் அப்பிடிச் சொல்லிறீர் யோகம்? யோகம் : எங்களை நாங்களே ஏமாத்திக் கொள்ளிறதிலை பலனில்லை குமார். வேலி வளர்ந்திட்டுது. பணம் என்ற வேலி. நீங்கள் காசுக்காரர். உங்களட்டைக் கை நீட்டிக் கடன் வாங்கிக் காலந் தள்ளிறவை நாங்கள். குமார் : நான் அப்பிடி நினைக்கவேயில்லை யோகம்.
யோகம் : நீங்கள் நினைக்காம விடலாம். உங்கடை அம்மாவை நினையுங்கோ. ஊரை நினையுங்கோ,
76

தணியாத தாகம்
பணம், படிப்பு, சீர், சீதனம் எண்டே சிந்திச்சுப் பழகின எங்கடை சாதி சனத்தை நினையுங்கோ. இவையின்ரை நினைப்பை மீறி நிக்க முடியுமோ எண்டு நினையுங்கோ. நாங்கள் நினைக்கிறபடி எல்லாம் நடக்க முடியுமோண்டு நினையுங்கோ, குமார் : நாங்கள் நினைச்சா இதையெல்லாம் தாண்டி
எங்கடை காதல் நிறைவேறும். யோகம் : நீங்கள் கூரை குமார். நான் தரை. கூரையும்
தரையும் காதலிச்சால் கைகூடுமோ?
குமார் : சுவர்களை இடிச்சு விட்டால் கைகூடும் யோகம்.
மிக அண்மைக்காட்சியில்
யோகம் : (உணர்ச்சி கொப்பளிக்கும் குரலில்) அப்பிடி இடிக்கிற
உறுதி உங்களுக்கு நிச்சயமாக இருக்குமெண்டால் குமார் - (உணர்ச்சி மிகுந்து) நான் உங்கள் சொத்து.
குமார் : யோகம்.
யோகம் : தீர்த்தம் தந்து தாகம் தீர்க்கிற இந்தக் கிண
சாட்சி.
குமார் : (மெய் மறந்து) யோகம் உண்மையிலே நான்
யோகசாலிதான்.
யோகம் : ஆனால் ஒண்டு. அவசரம் வேண்டாம். அண்ணன்ரை படிப்பு முடிய வேணும். உங்களுக்கு எங்கடை கடன் திர வேணும். உங்கடை ட்றெயினிங் முடிஞ்சு உத்தியோகத்தை" உழைப்பைத் தேடி, உங்கடை காலிலேயே நீங்கள் ஊன்றி நிக்கிற உறுதி வரவேனும் இல்லாட்டி உங்கடை அம்மாவை மீறாமல் எதுவும் நடக்கும் எண்டு எனக்கு நம்பிக்கையில்லை.
முனியாண்டி, புதுமனைவி இலட்சுமியுடனும் குழந்தை வனஜா வுடனும்முற்றத்தில்பிரவேசிக்கிறான்.
77

Page 52
சில்லையூர் செல்வராசன்
முனி : அம்மா! அம்மா! யாருமில்லீங்களா? யோகம் : (கிணற்றடியிலிருந்து) யார்? (குமாரிடம்) முனியாண்டி
வரறான். (முற்றத்தையடைந்து) முனியாண்டி. முனி சின்னம்மாவுங்களா? முனியாண்டியா பெண்டாட்டியும் பிள்ளையுமாக் குடும்பக் கோலத்திலே வந்திருக்கான்னு ஆச்சரியப்படுறீங்களா?
யோகம் : இது.
முனி : ஆமாங்க! லட்சுமிதான். விதவையாப் போன
என் அத்தை மவ.
யோகம் : வாங்கோ. உள்ளே வாங்கோம்மா! இருங்கோ.
உள்ளேஅவர்கள்வந்தமர்கிறார்கள்.
முனி : ஐயா அம்மா வயலுக்குங்களா? யோகம் : ஒம். முனி : தனியாகவே பிறந்தோம், தனியாகவே போகப்
போறோம்னு அன்னிக்குத் தத்துவம் பேசின முனியாண்டி இப்படிப் பண்ணியிருக்கானேன்னு உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் சின்னம்மா. என்னங்க பண்றது? நாம நினைச்சபடி எதுதாங்க நடக்குது?
யோகம் : (குழந்தையை வாங்கி வண்ணம்) வடிவான குழந்தை?
பெயரென்ன லெட்சுமி?
லட்சுமி : வனஜாவுங்க?
யோகம் : (குழந்தையுடன் கொஞ்சலாக) வனஜா. ஹோய் வனஜா. (குழந்தையைத் தாயிடம் கொடுத்து) இந்தா அம்மாட்டைப் போ. நான் கோப்பி போட்டுக் கொண்டு வாறன்.
யோகம் உட்செல்ல, கனகமும்முருகேசுவும்வயலிலிருந்துவீட்டை அடைகிறார்கள்.

தணியாத தாகம்
முனி அந்தா அம்மா, ஐயா அவங்களும் வந்திட்டாங்க.
sublDIT
கனகம் : யார் முனியாண்டியோ? கூட உதார்.
முனி : இதுதாங்க லட்சுமி. அம்மாவைக் கும்பிடு
லட்சுமி,
கனகம் : (லட்சுமியைக் கையமர்த்தி) இரு பிள்ளை, அப்ப
அத்தை மகளையும் கூட்டிக்கொண்டு வந்திட்டாய்?
முனி : ஆமாங்க எங்களுக்குக் கல்யாணப் ஆயிடிச்சுங்க!
கனகம் : ஆமோ?
முருகேசு : போயும் மூன்று நாலு மாசமாய்ப் போச்சு. அரிவு வெட்டுக்கும் ஆள் வரேல்லை. ஒரு கடிதமாவது போடல்லை. நாங்களும் என்னவோ ஏதோ எண்டு நினைச்சோம்.(மரியாதையாகஎழுந்தலட்சுமியைக்கையமர்த்தி) நீ இரு மகளே!
முனி ஒண்ணும் பண்ணிக்க முடியல்லீங்க. எல்லாம் திடீர்னு ஆகிப்போச்சு. நடுத்தெருவிலே விட்ட மாதிரி நாதியற்றுப் போச்சு இந்தப் பொண்ணு. சித்தப்பா சித்தியும் இந்தப் பாரத்தையும் ஏத்துக்கிட்டுச் சமாளிக்கிற நிலையிலே இல்லை. எப்பிடியாவது போன்னு விட்டிட முடியுங்களா? கையேத்துக்க வேண்டியது என் கடமை யாயிடிச்சு. கல்யாணத்தைப் பண்ணி அறியாத ஊருக்கு அழைச்சுக்கிட்டு வந்திட்டன். இனி உங்க வீடு தாங்க இவளுக்குப் புகலிடம்.
கனகம் : என்ன முனியாண்டி இப்பிடிச் சொல்லிப் போட்டாய். நாங்கள் குடிக்கிற கஞ்சியைப் பகிர்ந்து கொண்டு எவ்வளவு காலமெண்டாலும் இஞ்சையே இருக்கட்டும்.
முருகேசு : எங்கடை குடும்பத்திலே நீயும் ஒருத்தன் மாதிரித்
தானே முனியாண்டி?

Page 53
சில்லையூர் செல்வராசன்
முனி : அதுக்குச் சொல்லலிங்க! என் குடிசையிலேயே நாங்க குடும்பம் நடத்திக்கலாம். ஆனா ஊர் உலகம் அறியாத புதுசு. உங்க கண்காணிப்பு வேணுங்கறதுக்காகச் சொன்னேன். முருகேசு : ஏதோ உன்ரை விருப்பம் போலே செய். எண்டாலும் அங்கை குடும்பம் நடக்கிறதெண்டா நீயும் வேண்டிய அடுக்குப் பண்ணவேணுமல்லே. கனகம் : அதுமட்டும் இரண்டொரு கிழமைக்கெண்டாலும்
லட்சுமி இஞ்சை இருக்கட்டும். முனி : நீங்க சொன்னா சரிங்க! யோகம் : (கோப்பியுடன் திரும்பி) முனியாண்டி. கனகம் : பிள்ளையை இஞ்சை தந்திட்டுக் கோப்பியை
வாங்கிக் குடி பிள்ளை. லட்சுமி : உங்க சின்னப் பொண்ணு ஒண்ணும் இருக்கிறதா
அத்தான் சொன்னாங்களே அம்மா. எங்கேங்க? கனகம் : பள்ளிக்கூடத்துக்குப் போட்டாள். இப்ப மத்தியானம் வந்திடுவாள். பிறகு பாரேன். உன்ரை குழந்தையை நிலத்திலை விடமாட்டாள். முருகேசு : பிள்ளை நீ கோப்பியைக் குடிச்சிட்டுப் போய்ப் பெட்டி படுக்கையை வைச்சுச் கால் முகத்தைக் கழுவு. யோகம் அவைக்குச் சாப்பாடேதும் ஆயத்தப்படுத்தன் மேனை
யோகம் : சரி அப்பு
(காட்சிகரைகிறது)

தணியாத தாகம்
அங்கம் 1
கால ஓட்டத்தைக் குறிப்பனவாகப் பின்வரும் காட்சிகள் துரித
மெளனக் கலப்படPகழ்ச்சிக்கோர்வையாகத்திரையில்நிகழ்கின்றன.
.
முருகேசு குடும்பமும்முனியாண்டிதம்பதிகளும்வயலில்விதைத்து நீர்பாய்ச்சி அறுவடை செய்யும் காட்சிகள் பல்கலைக்கழக விரிவுரை மண்டபத்தால் மாணவருடன் சோமு, தீபா வெளியே மாலையில் கைகோத்துலாவிப் பல இடங்களிலும் உரையாடிச்சுற்றிவருவதான மெளனக் காட்சிகள்.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் குமார் படிப்பதும், கிணற்றடி, வயல்வெளி, தோட்டம் முதலாம் இடங்களில் அவன் யோகத்தைத் தனியாகச் சந்தித்து உரையாடுவதும் போன்ற காட்சிகள்.
கமலி பள்ளியிற் பயில்தல், முருகேசு சிறுமி வனஜாவுடன் விளையாடுதல், புகை வண்டியில் சோமு ஊர் வருதல், விடுமுறை காலத்தில் கமலி, வனஜா, யோகம், ஆகியோருடன் சல்லாபித்தல், ஊர்நண்பருடன் இளங்கமக்காரர்கழகத்தில்உரையாடல்,கண்டி திரும்பல் ஆகிய காட்சிகள். இளங்கமக்காரர் வயலில் வேலை செய்யும் காட்சியுடன் கலந்து முருகேசுபாடியவண்ணம்துலாமிதிக்கும் காட்சி.
சட்டென்று கமரா முருகேசுவை அண்மைக் காட்சியிற் பற்றிக் கொள்கிறது. அவர் கால் தடுமாறித் துலாவிலிருந்து விழுந்து விடுகிறார். கமரா விலகி, கனகம், யோகம் கூச்சலிடுவதையும், இளைஞர் ஓடிவந்து அவரைத்துக்கிச்சுtந்துவிடுதிரும்புவதையும் தொடர்புறுத்திக் காட்டுகிறது. இக்காட் சித் தொடர் முற்றிவந்து நிலைக்கும்போதுவிட்டின் அறையில்முருகேசு கட்டிலிற்கிடப்பதும் அயலோர், உறவினர் சூழ்ந்திருப்பதும் தெரிகிறது.
தம்பர் : அந்தாளுக்குக் கொஞ்சம் காத்துப் பிடிக்கட்டும்.
உதுக்கை சுத்தி வளைச்சு நிக்காமல் இஞ்சாலை
81

Page 54
சில்லையூர் செல்வராசன்
வாருங்கோ. கனகம் : (செல்லாச்சியிடம்) அருமந்தாப்போலே பாட்டும்
பாடிக்கொண்டு பதமையாய்த் துலாமிதிச்ச மனுசன் எப்பிடிக் கால் வழுக்கிச்சுதோ தெரியாது. செல்லா : பின்னை இந்த வயசிலையும் இளந்தாரியள் மாதிரி நாட்டுக் கூத்துப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு துலா உழக்க வெளிக்கிட்டால் முடியுமே? கனகம் : என்னக்கா செய்யிறது? அந்த மனுசனும் இப்பிடி ஆலாய்ப் பறக்காட்டி எங்கடை அடுப்பு நெருப்பு எரியுமோ, பிள்ளையின்ரை படிப்பும் தான் நடக்குமோ? செல்லா : சொன்னாப்போலை மகனுக்கு அறிவிக்கிற
தில்லையே? கனகம் : அவனுக்கும் கடைசிச் சோதனை நடக்கிற நேரம். முனி : வேணுமின்னா நான் போய்த் தந்தி குடுத்திட்டு
வரட்டுங்களாம்மா?
வேண்டாம் என்கிறபாவனையில்முருகேசு முனகுகிறார்
கனகம் : வேண்டாம். அவனை இந்த நேரம் குழப்பக்கூடாது. சோதினை முடிஞ்சு இன்னும் இரண்டு நாளிலை வந்திடுவான் தானே! செல்லா : இப்ப இதை விடப் பெரிய சோதினை என்ன சோதினை? தகப்பனுக்கு உயிராபத்தான நேரத்திலை பெத்த பிள்ளை பக்கத்திலை இல்லாமல்ப் போனா வேறை எப்ப இருக்கிறது?
முருகேசு : (முனகலாக) வே.ணா.ம். தந்தி.
வே. ணாம். فا........
தம்பர் : (குமாரின் சைக்கிள் ஒலிகேட்டு) சும்மா பேசாமலிரப்பா நீ. அங்கே உன்ரை மகன் வந்திட்டான் போலை
யிருக்கு. நீ வீட்டை போ.
82

தணியாத தாகம்
செல்லா : (கணவரை முறைத்துவிட்டு) அப்ப நான் வாறன் கனகம். அங்கை குமாரும் வந்திட்டான் போலை.
கனகம் : ஓம் அக்கா.
செல்லா : (கணவரிடம்) வாங்கோவன்.
தம்பர் : ஊம்!
இருவரும்வெளியேற, வெளியேஇருந்து மருந்துடன்திரும்புகிறாள்
கமலி.
கமலி : இந்தாங்கோ அம்மா மருந்து.
கனகம் : டாக்குத்தரட்டை எப்பிடிக் குடுக்கிறதெண்டு
வடிவாய்க் கேட்டியே மேனை.
85D65 ஓம். இப்ப குடுக்கிற மருந்து இது. இதை.
கனகம் : அங்கை அக்காவட்டைத்தான் விளங்கப்படுத்திக்
குடு, குடுத்திட்டு அங்காலை வந்திருக்கிறவைக்கு வெத்திலை பாக்கை எடுத்து வை.
லட்சுமி : (கமலியிடம் தட்டத்தைப் பெற்று) தாங்க கமலி! நான்
குடுக்கிறன்.
கனகம் : (கணவனிடம் ஆதரவாக) இஞ்சேரும் எவடத்திலை யணை நோகுது? பட்டணம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்டுவமே.
முருகேசு மறுப்பாகத் தலையசைக்கக் காட்சி கரைந்து பேராதனைப்பூங்காக்காட்சியாக மலர்கிறது.

Page 55
சில்லையூர் செல்வராசன்
* ;
அங்கம் 12
அந்தி மயங்கும் வேளை. சோமுவும், தீபாவும் பூங்காவில் அமர்ந்திருக்கிறார்கள்.
தீபா : சோமு பேசாம இருக்கிறீங்களே!
சோமுநெடுமூச்செறிகிறான்
தியா : இன்னிக்குத்தான் கடைசி நாள். இனி எப்போ பார்ப்போமோ? எப்போ பேசுவோமோ? பேசுங்களேன்.
சோமு : நாளைக்கின்னேரம் நான் யாழ்ப்பாணத்திலே. நீர்
கொழும்பிலே.
திபா : கண்டோம். காதலிச்சோம். பிரிஞ்சோம். மூன்று
வார்த்தையிலை எங்க முழு உறவும் முடிஞ்சிடும்.
குறுக்கும்மறுக்குமாக எதிரெதிர்த்திசையில்இருந்துபறந்துவந்து கணவேளை குறுக்கிட்டுப் பிரிந்த இரு குருவிகளை வானத்திற் சுட்டிக்காட்டி, சோமு : அங்கே பார்த்தீரா தீபா? எதிரும் புதிருமாய்ப் பறக்கிற இரண்டு பறவைகளின்ரை அந்தக் கண நேரச் சந்திப்புத்தான் மனித உறவுகளும்,
திபா : இருக்கலாம். ஆனால் எங்க உறவைப் பொறுத்த வரையிலே எனக்கு அந்தக் கண நேரம் என் முழு வாழ்க்கையையும் விட முக்கியமாக இருக்கும் சோமு.
சோமு : எனக்கும் அப்பிடிச் சொல்ல விருப்பம்தான் தீபா
ஆனா நடைமுறைக்கு ஒத்துவருமா? தியா ஒத்துவராதெங்கிறது எனக்குத் தெரியும். உங்க
கடமை தெரியும். பொறுப்புத் தெரியும். எங்க உறவிலே

தணியாத தாகம்
யிருக்கிற இன அந்தஸ்துப் பிரச்சினை தெரியும், அதனாலே தானே உங்க வாழ்க்கையிலேயிருந்து விலக ஒப்பிக் கிட்டேன்.
சோமு : உம்முடைய கசின் இங்கிலண்டிலே இருந்து எப்ப
வாறார் தீபா?
SurT : அடுத்த வாரம். வந்த உடனேயே அவங்க எஸ்டேட் நிர்வாகப் பொறுப்பு அவருக்கு வந்திடும். கல்யாணத்துக்கு எங்க அப்பா அம்மா, அவங்க அப்பா அம்மா எல்லாரும் சம்மதம், என் சம்மதம் மட்டும்தான் தேவை.
சோமு : நீர் சம்மதிச்சா.
தீபா ; அடுத்த மாசமே கல்யாணத்துக்கு ஏற்பாடாயிடும். எங்க எக்சாம் றிசல்ட் வர்றதுக்கு முந்தியே கூட ஆயிடலாம். சோமு : உம்முடைய கசின் குடுத்து வைச்சவன் தீபா. தியா : நான் தான் கொடுத்து வைக்காதவள். பச் சோமு இந்தாங்க.(ஆட்டோகிராப் அல்பத்தைக் கொடுத்து) உங்க ஞாபகத்துக்கு. எழுதிக் கொடுங்க. சோமு சற்றுத்தயங்கிவிட்டுஅதில்ஒரு கவிதை அடியைனழுதிக் கொடுக்கிறான். திபா உங்க வாயாலேயே ஒரு தடவை படிச்சுக்
காட்டுங்க. சோமு : சோலையிலும் சாலையிலும் சுற்றிக் களித்துலவி
வாலை மிடுக்கில் மயக்கடைந்து மாலையிலே ஆழியருகில் அமர்ந் தண்பாய் இடைதழுவி நாழிக் கணக்காக நன்னிலவிற் கண் செலுத்திக் கரைகழுவும் கடலருகின் கடுகு மணல் மீதினிலே கை விரல்கள் கீறியதைக் காதலென ஏமாந்தோம்!

Page 56
சில்லையூர் செல்வராசன்
தீபா :(கலங்கியகண்களைவெட்டிச்சிலிர்த்துக்கொண்டு) சோமு
போகலாமா?
சோமு : சரி.
திபா : எழுந்திருங்க!
சோமுஎழவேதிபாசட்டென்றுகுனிந்துஅவன்பாதத்தைப்பணிந்து பற்றிக்கொள்ள, அவன்விலக முயன்று சோமு : தீபா என்ன இது? தீபா : (அப்படியே இருந்தபடி தலையை மட்டும் நிமிர்த்தி) திபா என்கிற ஒரு தமிழ்ப் பெண் தன் தெய்வத்துக்குச் செய்கிற கடைசி ஆராதனை!
தீபா எழுந்துவிருட்டென்றுநடந்துதுரத்தே சென்றுமறைவதைச் சோமுபார்த்துநிற்கக்காட்சிகரைகிறது.

தணியாத தாகம்
அங்கம் 13
மறைந்த மாலைக்காட்சி காலையாக மலர, கிணற்றடியில் குமாரும்,யோகமும்எதிரெதிராகநின்றுசாம்பாஷிப்பதுதெரிகிறது.
குமார் : அப்புவுக்கு வருத்தம் இன்னும் கடுமையா
(Buuresub?
யோகம் : கொஞ்சம் கடுமைதான். குமார் : சோமுவுக்கு அறிவிக்கவில்லையாமே?
யோகம் : இண்டைக்கு வந்திடுவார் தானே! குமார் : வித்தியாசமாய் நினைக்க வேண்டாம். காசேதும்
G95606 unt
யோகம் : முந்தநாள் தானே உங்கடை ஐயாவட்டை அம்மா
கடன் வேண்டினவ. பிறகும்.
குமார் : அவரட்டை வேண்டாம். வேணுமெண்டா நான்
தாறன். யோகம் : நீங்களே ஐயா அம்மாவேயின்ரை காசைப்
போட்டுத்தான் ரேடியோக் கடை நடத்திறியள். பிறகு அந்த இலாபத்திலே நீங்கள் காசை எடுத்தால் அம்மாவுக்குக் கணக்குக் காட்ட வேண்டாமே?
குமார் : அது நான் சமாளிச்சுக் கொள்ளுவன். யோகம் : அண்ணன் வந்த பிறகு பார்த்துச் செய்யட்டும்.
செல்லா : (விறாந்தையில் நின்று) குமார். குமார்.
குமார் அவளைச்சமீபிக்க

Page 57
சில்லையூர் செல்வராசன்
செல்லா : குமர்ப்பெட்டையோடை உனக்கென்ன கதை
கிணத்தடியிலை.
குமார் : இல்லை அம்மா! தகப்பனுக்கு எப்பிடி எண்டு
சும்மா விசாரிச்சனான்.
செல்லா : என்னவாம்?
குமார் : கடுமைதானாம்!
செல்லா : ஏதோ பிழைப்படுத்தத்தான் போகுது போலை, இந்த முறை அவைக்கு நல்ல விளைச்சலுமாம். சா வேளாண்மை எண்டு தான் ஊரெல்லாம் கதையாய்க் கிடக்கு.
தம்பர் : (முன் விறாந்தையிலிருந்து) தூத் தூ! இந்த மனுசி! நீ வாயோரியாய் ஒண்டும் சொல்லாமல் போய் அலுவலைப் பாரப்பா.
செல்லா : ஊக்கும். அதுக்கு உங்களுக்கேன் இப்ப
உடம்பெல்லாம் வலிக்குது.
காட்சிமாற்றம்.

தணியாத தாகம்
அங்கம் 14
புகைவண்டித்தரிப்பும் சோமுபெட்டியுடன் இறங்கி வீடு நோக்கிச் செல்வதுமான காட்சி. அவனை வீட்டொழுங்கையிற்கண்டு, முருகன் : தம்பி வர! உங்கை கொப்புவைத்தானாக்கும்
நானும் பார்க்கப் போற்ன். சோமு : (பரபரப்பு ன்) அப்புவுக்கென்ன முருகன்?
முருகன் : தம்பிக்குச் சோதினை எண்டு அவை அறிவிக் கேல்லைப் போலை. முந்தநாத்து நயினார் துலாவாலை விழுந்தல்லேயாக்கும் கடும் வருத்தமாக்கிப் போட்டுது.
சோமு ஆ.
வீட்டுக்கு விரைகிறான்.முற்றத்தில் அவனைக்கண்டதும், வனஜா : சோமு மாமா வந்தாச்சு, சோமு மாமா வந்தாச்சு. அவளைத்தடவிக்கொடுத்து,விரைந்துவிறாந்தையில்ஏறுகிறான். மணியத்தார்: வா தம்பி. சோமு : (அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து) அப்பு.
391 . . . . . . . . கமலி (அருகிற் சென்றமர்ந்து) அண்ணை! சோமு : (அவளை அணைத்துவிட்டு) அப்பு. அப்பு.(ஆதரவாக) என்னப்பு செய்யுது?(தாயிடம்) எனக்கேன் அறிவிக்கேல்லை யம்மா?. ஒருத்தரையும் கூப்பிட்டுக் காட்டல்லையா?
கனகம் பேசமுடியாமல்தேம்ப, யோகம் : (தழுதழுத்தபடி) காட்டினதண்ணை கனகம் : இன்னும் கண்டம் தாண்டேல்லை எண்டு
சொல்லிப்போட்டுப் போறார் ராசா.
89

Page 58
சில்லையூர் செல்வராசன்
சோமு : பட்டணத்துக்குக் கொண்டு போவம். முனி போறத்துக்கு ஐயா மறுத்திட்டாருங்க. சோமு : அவர் சொன்னாப்போலே விடுறதே?
முருகேசு முனகிமறுப்புக் காட்ட முனைகிறார். மணியத் : இல்லைத் தம்பி. இப்ப இருக்கிற நிலைமையிலை
அவரை ஆட்டி அசைக்கக் கூடாது. முருகேசுஉதடசைவதைக் கவனித்து சோமு : என்னப்பு.?
அப்போதுதான்,வாசலில் வந்ததம்பரிற்கண்சென்றுதரிக்க, முருகேசு : (முனகலாக) குடுத்துப் போடு.விளைச்சல். தாராளம். கடனுக்குப். போதும். குமர்ப் பிள்ளை யள். நீதான். ஆறுதல். தண்ணி. கனகம் : நெடுகத் தண்ணிதான் கேட்கிறார். தாகம்
தணியுதில்லைப் போலை. யோகம்தண்ணிகையளிக்க,சோமு அதைவாங்கிப்புகட்டியதும், முருகேசு முருகா. முருகன். தம்பர் : அந்த முருகன் படத்தைக் கொண்டந்து இஞ்சை முன்னாலை மாட்டுங்கோ. அவருக்குத் தெரியத் தக்கதாய். முருகேசு : (வாசலூடே வெளியே நிற்கும் முருகன் மீது கண்பதித்து) ஊகும். இல்லை. முருகன். முருகன்ரை.
85.60.......
மணியத் (திரும்பி முருகனைக் கவனித்து) இவன் எங்கடை முருகனைக் கூப்பிடறார் போலை. அடே முருகன். இஞ்சாலை வா. தெரியத்தக்கதாய் வா! தம்பர் : (தயங்கும் முருகனிடம்) அதுக்கென்ன வா!
முருகன் கதவருகே வந்து கண்பனிக்க முருகேசுவை நோக்கிக் கைகூப்பிநிற்கிறான்

தணியாத தாகம்
முருகேசு ஊம். முருகன். தொண்ணுறு. ரூபா.
குடு. முனியா : (தழுதழுத்த குரலில்) இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வாங்கின கடனையும் ஞாபகம் வைச்சுச் சொல்றாருங்க. முருகேசு : முனியாண்டி. கூத்து. பொன்னிற். சிறந்திடு.
Lunt(G6..... லட்சுமி : வனஜா. பாடம்மா. தாத்தா கத்துக் கொடுத்த
பாட்டைப் பாடம்மா - பொன்னிற் சிறந்திடு. வனஜா (பாடுகிறாள்)
பொன்னிற் சிறந்திரு மின்னும் யாழ்ப்பாணமே போக விரைந்தெழுவி - இத சணம் வனஜா பாட வயலில் தான் அதே பாட்டைப் பாடியபோது கனகம் நாணித் தலை குனிந்த நிலை முருகேசுவுக்கு மீள் காட்சியாகத் தெரிகிறது. இதழில் புன்னகை படர, கண்கள் கால் மாட்டில் நிற்கும் கனகத்திற்சென்றுநிலைக்கின்றன வனஜா : போக விரைந்தெழுவீர் - இது கணம். 65
தட்டுங்களேன் தாத்தா. ஹோய். கைதட்டியவண்ணம், அவள் சிரிக்க, காவோலை ஒன்றுமுற்றத்துப் பனையிலிருந்துகூரை மீது ஒலியுடன் விழும் காட்சியைக் கமரா காட்டித் திரும்புகிறது. மணியத்தார்முருகேசுவின் குத்தியகண்களை மூடவே. சோமு : (தந்தை மீது வீழ்ந்து கதறி) அப்பு
காட்சி மாற்றம்,
9.

Page 59
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 15
தம்பர் வீடு செல்லாச்சி: இஞ்சேருங்கோ! சாய்மானக் கதிரையே சதம்
எண்டு நெடுகச் சாய்ஞ்சிருந்தா என்ன செய்யிறது? தம்பர் : புதுசாய் இப்ப என்னப்பா பிரச்சினை? செல்லா : குமார் தனக்குக் காசு கொஞ்சும் தேவையெண்டு காலைமை ஒருப்பிடியாய்ப் பிடிச்சிட்டுப் போறான். தம்பர் : சினேகிதரோடை சேர்ந்து குடிச்சழிக்கவாக்கும். அவனுக்குத்தான் தன் செலவைப் பார்க்க எண்டு பட்டணத்திலே கடை போட்டுக் குடுத்திருக்கே! செல்லா : பேருக்கொரு ரேடியோக் கடையைப் போட்டுக் குடுத்திட்டா முடிஞ்சுதே? முறையாய் எலக்ட்ரிக் வேலையள் அது இது எண்டு படிச்சிட்டு வந்தவன், உந்தப் பாட்டுப் பெட்டியளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தால் போதுமே? தன்ரை படிப்புக்குத் தக்கதாய் அவன் கடையைப் பெருப்பிச்சு எலக்ட்ரிக் வேலையளோடை சம்பந்தப்பட்ட எல்லா விசினசுகளும் பெரிசாய்ச் செய்யப் போறானாம். வேலை செய்யிறவன் களைக்கு ஒரு போத்தல் கள்ளைக் குடிச்சா உங்களுக்குக் குடி அழிஞ்சமாதிரி. தம்பர் : என்னட்டை எங்காலையப்பா இப்ப காசு?
செல்லா : அது தானே சொல்லிறன். தரவேண்டிய அக்கம் பக்கத்தாரைத் தட்டிக் கேட்டால்லோ கடன் திரும்பும்?
92

தணியாத தாகம்
தம்பர் : வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சாதேயப்பா. அதுகள் செத்த வீடும் செலவுமாய் இருக்கிற நேரம்.
செல்லா : கிழவனும் செத்து நாலு மாசத்துக்கு மேலையாய்ப் போச்சு. சா வேளாண்மை வந்தும் அவைக்குச் சரிக்கட்ட ஏலேல்லை. அரிவி வெட்டி அந்திரட்டிச் செலவும் பார்த்து, ஆளான ஆம்பிளையும் வேளா வேளைக்கு வேலை வெட்டியில்லாமல் வீட்டோடேயிருந்து விழுங்கக் கணக்குச்சரி.
தம்பர் : அவன் பொடியனுக்கும் இன்னும் சோதனை மறுமொழி வரல்லை. இளைய பெட்டையின்ரை படிப்பையும் ஏலாதெண்டு நிறுத்திப் போட்டுதுகள். அன்றாடத் தீனுக்கே திண்டாடிறதாலை தானே அந்த மனுசி பாவம் பழையபடி கடைக்கு அப்பம் சுடவும் துவங்கியிருக்கு.
செல்லா : அவ அப்பம் சுட்டுக் கப்பம் கட்டுவா. குமாரன் கோறணமேந்திலே கோட்டுப் போட்டு வேலை பார்த்து நோட்டு நோட்டாய் உழைச்சுக் கொண்டந்து நீட்டி விடுவார் உங்கடை கடனை. அது மட்டும் காத்துக் கொண்டிருப்போம். கடல் வத்தும் வத்துமெண்டு காத்தி ருந்து கொக்குக் குடல் வத்திச் செத்த கதையாய்த் தான் முடியும்.
தம்பர் : என்னாலே ஏலாது. மனச்சாட்சியில்லாத நீ.
வேணுமெண்டாப் போய்க் கேள்.
செல்லா : கேக்கத்தான் போறேன். பார்த்துக் கொண்டிருங்கோ.
கமரா சோமு விட்டுக்கு வெட்டித் திரும்புகிறது. முனியாண்டி, லட்சுமி, யோகம் முற்றத்திற் கிடுகு பின்ன, கனகம் குசினியில் அப்பம் சுட, சோமு சில்லையூர் செல்வராசன் கவிதைகள் என்ற நூலுடன் விறாந்தையில் அமர்ந்திருக்கிறான்.
லட்சுமி : ஏங்க? மத்தப் பாதியை நீங்க பின்னிடறிங்களா?
முனி : ஏன்? நீ என்ன செய்யப் போறே?
93

Page 60
சில்லையூர் செல்வராசன்
லட்சுமி : அங்கே அம்மா தனியா அப்பம் சுட்டுக்
கிட்டிருக்காங்க. நான் போய் ஒத்தாசை பண்றேன்.
முனி : சரி போ.
ஒருபுறம் கமலியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வனஜா : கமலிக்கா! புதுசா ஒரு பாட்டுக் கத்துக்கிட்டேன்.
கமலி ; எங்கே கேட்டாய் பாட்டு?
வனஜா : மணியந் தாத்தா வீடு எங்க வீட்டுக்குப்
பக்கத்திலே! அங்கே, ரேடியோவிலே.
கமலி : சரி பாடு.
வனஜா : ஆடிக்கிட்டுத்தான் பாடுவேன்.
கமலி : இல்லை. பாடிக்கொண்டுதான் ஆடவேணும்.
வனஜா : மாமாவைப் பார்க்கச் சொல்லுங்க. கமலி : நீ சொல்லு!
SISO12gst LDTLDT....... G8FFT(p LDT DIT......
சோமு : உம்
வனஜா : பாருங்க!
சோமு : (நூலை விட்டுக் கண் எடுக்காமல்) உம்
வனஜா : பாருங்கண்ணா! செல்லக்கட்டி மாமா. பாருங்க சோமு : சரி சரி. பார்க்கிறேன் பாடு.
வனஜா : பாடிறது கேக்கணும். ஆடிறதைத் தான் பார்க்க
வேணும்.
சோமு : (நிமிர்ந்து) ஆ. சரி. சரி.
வனஜாமழலையாகப்பாடிமுடிக்க,சோமுவும்கமலியும்"அச்சா. அச்சா." எனக் கைதட்டுகிறார்கள்.
சோமு : (சட்டென்றுகமலியைக் கவனித்து) கமலி! தோடெங்கே?
94

தணியாத தாகம்
கமலி : குளிக்கேக்கை கழட்டி வைச்சிட்டு போட மறந்
திட்டன்.
சோமு : உள்ளது அதொண்டுதான். அதுகுமில்லாமல் ஏன்
மூளியாய் நிற்கிறாய்? எடுத்துப் போடு.
லட்சுமி : (குசினிக்குள்ளிருந்து பரபரப்பாக) சோமுத்தம்பி!
இங்கே ஓடி வாங்களேன்.
சோமு : (விரைந்த வண்ணம்) என்ன?
எல்லோரும் குசினிக்குவிரைகிறார்கள். லட்சுமி : இருந்தாப்பலே மயக்கம் போட்டிட்டாங்க தம்பி.
சோமு : (தாயை விறாந்தைக்கு இட்டு வந்து) யோகம் ஓடிப்
போய்க் கொஞ்சம் தண்ணி அள்ளியா!
கிணற்றடி சென்றயோகத்திடம்மறுபுறமிருந்து,
செல்லா : என்ன பிள்ளை யோகம். கொண்ணன்
இருக்கிறாரே. யோகம் : ஒம்.
செல்லா : அவரும் கூட இப்பிடி ஒண்டையும் யோசியாமல். சோமு : (சூழலை அவதானித்து சினந்து) உவள் என்ன செய் யிறாள் அங்கே? கமலி ஓடிப்போய்த் தூக்கியா வாளியை (கமலிகொண்டுவந்தவாளித்தண்ணிற்சொற்பம்தாய்முகத்தில் தெளித்து) உப்பிடிக் கொஞ்சம் சாஞ்சிருங்கோ. சொல்லச் சொல்லக் கேளாமல் நெடுக உப்பிடி நெருப்பைத் திண்டு கொண்டிருங்கோ. கமலி தாய்க்கு விசிறுகிறாள். தன் வீடு நோக்கிக் கிணற்றடி யிலிருந்துதிரும்பியபடி, செல்லா : மிடிமை பிடிச்ச உங்களுக்கு எப்பதான் விடியப்
போகுதோ தெரியாது. தரித்திரியம் பிடிச்சதுகள். வாசலிருந்து தபால் மணி கேட்டு, கமலி சென்று தபால் பெற்றுத் திரும்புகிறாள்.

Page 61
சில்லையூர் செல்வராசன்
கமலி தந்தி அண்ணை. ஒரு கடிதமும் வந்திருக்கு.
சோமு : (தந்தியைத் திறந்துவாசித்துவிட்டு) ஆ பாஸ் அம்மா!
சோதினை பாஸ் எண்டு தந்தி வந்திருக்கு.
கனகம்: (ஆனந்தக் கண்ணிரோ என்ற பாட்டின் இசைப் பின்னணியில் முருகன் படத்தை நோக்கத் தழுதழுத்து) ஆ! என்ரை அப்பனே. (ԼՔ(Ե&T......
முனி : சின்னையா. உங்க கஷ்டமெல்லாம் இனிப்
பஞ்சாப் பறந்திடுங்க.
யோகம் : (அடக்கிய துயர் பீறி ஆத்திரமாக, வெம்பி, விம்மியபடி) அண்ணை கடவுள் கண் திறந்திட்டார். ஒரு நிமிஷம் தாமதிக்கக் கூடாது. இண்டைக்கே கொழும்புக்கு வெளிக்கிடுங்கோ அண்ணை. எப்பிடியும் ஒரு வேலை தேடிப் போடுங்கோ. இனித் தாங்க ஏலாது. 66)sTg5.....
(பொருமி அழுகிறாள்) சோமு : நீ கவலைப்படாதையம்மா! இன்டைக்கே வெளிக்
கிடுறன். 5 DeS : சேட்டிபிக்கெற் வரமுந்தி என்னண்டண்ணை?
சோமு ஆதாரம் இருந்தாப் போதும் ராசாத்தி.
கனகம் : முன்பின் தெரியாத ஊருக்குப் போய் ஆரோடை
மேனை நிப்பாய்?
சோமு : பாப்பம்.
லட்சுமி - ஏங்க! நம்ம ராமநாதன் அங்கே தானுங்களே டீ கம்பனியிலே வேலை பார்க்கிறான். அவன் விலாசம் எங்கிட்டே இருக்கு. அங்கே வேணுமின்னா.
முனி : ஆமாங்க! நல்ல யோசனை. கனகம் : யார் முனியாண்டி, ராமநாதன்? முனி : மோசம் போன இவ முதற் புருஷனோடை
தம்பிங்க.செயலா இல்லியே தவிர தங்கமான பையனுங்க.
96

தணியாத தாகம்
லட்சுமியோடை அண்ணி அண்ணின்னு உசிருங்க. அவனுக்கு விவரமாகத் தந்தி குடுங்க சின்னையா. ஸ்டேஷனுக்கே வந்திடுவான்.
சோமு : ஆளை அடையாளம் தெரியாமல் எப்பிடி?
முனி : ஏன் லட்சுமி! உங்கிட்டே அவன் போட்டோ படம்
கூட இருந்திச்சில்லே?
லட்சமி : ஆமாங்க! பெட்டியிலே இருக்கு.
முனி ; அதைக் குடுத்திடு. அதெல்லாம் சுலபமா முடிஞ்
சிடுங்க
கனகம் : சோமு எல்லாம் முருகமூர்த்தியின்ரை அருள் தான். நீ முதல்லே கோயில்லை போய்க் கும்பிட்டு வா. போறதுக்குக் காசு, அப்பத்தைக் கடையில் குடுத்திட்டு அங்கேயே மாறிக் கொண்டு வாறன்.
சோமு : சரி அம்மா.
5D65 ! (புறப்படும் சோமுவிடம்) அண்ணை அந்தக் கடிதம்
பார்க்கேல்லை.
சோமு உறையைப்பிரிக்கிறான். அதுதீபாவின்திருமண அழைப்பு. அதில் கையால்எழுதியிருக்கும் வரியைப்படிக்கிறான் சோமு : (ஆனந்தக் கண்ணி - என்றபாடலின் இசைப்பின்னணியில்) பரிதியின் மீதும் அந்தப் பால் நிலா மீதும் தானே உறுதிகள் கோடி செய்தோம் உன்மத்தராயிருந்தோம் கமலி என்னண்ணா அது கண் கலங்குது? சோமு : ஒண்டுமில்லை கண்டியிலே கண்டு பழகின என்
சினேகிதன் ஒருத்தனுக்குக் கல்யாணம்! முற்றத்திலிறங்கிப்படலையைத் திறந்து ஒழுங்கையிலேறி மீண்டும் அழைப்பிதழை எடுத்து நோக்கிவிட்டு, அதைச் சிறுதுகள்களாகக் கிழித்துவிசிறியபடிநடந்துதூரத்தே சென்றுமறைய, காட்சிமாறுகிறது.

Page 62
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 16
கோட்டை ரயில் நிலையம். அதிகாலை, ரயிலால் இறங்கி அனை வரும் கலைய, சோமு தனித்து நிற்கிறான். ராமு அவனை நெருங்கி விசாரிக்கிறான்.
ՄTԱp : சோமு எங்கிறது. சோமு : நான் தான்! (முகத்தைக் கூர்ந்து நோக்கி) ராமநாதன்
நீங்கள் தானே?
ՄTԱp : ஆமா! வாங்க! லட்சுமி அண்ணி.
இருவரும் வெளியேறியபடி
சோமு : சுகமாயிருக்கினம். உங்களுக்கு அவை தந்த
கடிதம்.
கடிதத்தை வாங்கி நோட்டமிட்டபடி டாக்சியில் ஏறி இருவரும் புறப்பட்டு ஒருசேரித்தோட்ட முன்றலை அடைகிறார்கள்.
ராமு : இது தாங்க இந்த ராமன் வாசம் பண்ற அயோத்தி மாநகரத்து அரண்மனை. உள்ளே வாங்க பெட்டியைக் குடுங்க.
அறையை அடைந்துபேசியபடி உடை மாற்றியதும் சோமு : ராமு, பாத்ரூம் எங்கேயிருக்கு? ராமு : நல்ல கேள்வி கேட்டீங்க போங்க! ஆனானப்பட்ட
அயோத்தி மாநகரத்திலே அதுக்கென்ன குறைச்சல் கொடுப்பாருமில்லே, எடுப்பாருமில்லாத இந்த ராம ராஜ்யத்திலே அது கூடப் பொதுவுடைமைதான். வாங்க (வெளியேறுகையில் கதவில்லாத திரை மட்டும் உள்ள வாயிலைக்

தணியாத தாகம்
காட்டி) பார்த்தீங்களா? அடையா நெடுங்கதவு வீட்டுக் கதவுக்குப் பூட்டே போடறதில்லை. ஏன்னா, கதவே கிடையாது. (பொது நீர்க்குழாயில் பெண்கள் குளிப்பதைக் காட்டி) தண்ணிர் கூடப் பொதுவுடைமை - அயோத்தி நகரத்து அழகுசுந்தரிகள் பொதுநீர்த் துறையிலே ஜலக் கிரீடை செய்றாங்க பாருங்க.
வீட்டுக்கிணற்றில்முருகனுக்குயோகம்தண்ணீர்வார்க்கும்தோற்றம்
சோமுவுக்கு மீள்காட்சியாகத் தெரிகிறது
சோமு : (புன்னகைத்து) உம்! ராமு என்ன சிபிக்கிறீங்க? சோமு : எங்கடை ஊரை நினைச்சன் ராமு. அங்கை
தண்ணிர் கூடப் பொதுவுடைமையில்லை. தாகம் தணியப் பொதுக் கிணற்றிலை தண்ணியள்ளிக் குடிக்கக் கூடச் சில பேருக்கு உரிமையில்லை.
பொதுக் கழிசுடத்தைத் துரத்தேசுட்டிக்காட்டிவிட்டு
ராமு : ஆமாங்க! இந்தச் சேரியைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்கக் கம்பன் கண்ட சமுதாயம்தான் ஞாபகம் வரும். உம். போகப் போக அதெல்லாம் புரியும். நீங்க போயிற்று வாங்க.
சோமு சென்று திரும்பி அறையை அடைந்த பின் சம்பாஷணை
தொடர்கிறது.
சோமு : ராமு! உங்களுக்கு என்னாலை கொஞ்ச நாளைக்குக் கரைச்சலாய்த் தானிருக்கும். வேலை தேடுறது இந்த நாளிலை வில்லங்கம் தான் எண்டு எனக்குத் தெரியும். வேறே ஆரின்ரையும் உதவி யில்லாமல்தான் உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டி யிருக்கு.
ராமு : அதெல்லாம் எனக்கு ஒன்றும் சிரமமில்லை சோமு. அண்ணி கடிதத்திலே அத்தனையும் எழுதி
99

Page 63
சில்லையூர் செல்வராசன்
யிருக்கா. பி. ஏ. படிச்சிருக்கீங்க முடிஞ்சளவு முயற்சி
செய்து பார்ப்போம். கிளம்புங்க. சோமு : எங்கே போக? ராமு : வனவாசத்துக்குத்தான். வேறே எங்கே? சோமு : வனவாசத்துக்கா? WITԱp : ஆமா! வேலை வேட்டைக்கு வேறெங்கே போக
முடியும். காட்டுக்குத்தான்! இந்த அயோத்தி நகரத் திலேயே ஆரணியக் காடும் இருக்கு. இந்த மாநகரக் காட்டிலே எத்தனை விதமான மனித விலங்குகள் இருக்கு எங்கிறது போய்ப் பார்த்தாத் தெரியும். முதல்லே நான் வேலை பார்க்கிற இடத்திலேயே வேட்டையை ஆரம்பிக்கலாம் - புறப்படுங்க.
காட்சிமாற்றம்.
100

தணியாத தாகம்
அங்கம் 17
கனகம் வீட்டு முற்றத்தில் கிடுகு பின்னிக்கொண்டும், யோகம் முற்றம் பெருக்கிக்கொண்டுமிருக்க, கமலிதாய்க்குக்கோப்பிகொண்டு வந்துகொடுக்கிறாள். கமலி : அண்ணன்ரை கடிதம் வந்தும் இரண்டு கிழமையாச்சு. ஏன் எழுதாமலிருக்கிறாரோ தெரியாது. போயும் இரண்டு மாசத்துக்கு மேலெயாய்ப் போச்சு. இன்னும் வேலை கிடைச்சிருக்காதே அம்மா? கனகம் : கிடைச்சிருக்கும். அதைக் கவனிக்கிற தொல்லை களிலே நேரம் இல்லாமலிருக்கும். இல்லாட்டிப் பிள்ளை எழுதாமல் விடமாட்டான்.
யோகம் : ஏதும் வருத்தம் கிருத்தமோ தெரியாது.
கமலி (கோபமாக) ஏனக்கா அபசகுனம் மாதிரி அப்பிடி
சொல்லிறியள். கனகம் : முருகன் காக்க நாங்கள் படற இக்கட்டுக்கை
என்ரை பிள்ளைக்கும் ஒண்டெண்டால் பிறகு இருந்தென்ன?
கமலி : சும்மாயிருங்கோம்மா! இந்த அக்காவுக்கு எப்ப என்ன கதைக்கிறதெண்டு தெரியாது. அப்பிடி எது மென்டால் லட்சுமி அக்காவுக்கு இராமநாதன் எழுதி யிருப்பார் தானே! கடிதம் வந்ததோ எண்டு போய்க் கேட்டரட்டே?
கனகம் : ஒம் மேனை.
கமலி அங்கையும் கடிதம் வரல்லையெண்டால், நான் அண்ணைக்கு இன்னொரு கடிதம் எழுதப் போறன்.
O

Page 64
சில்லையூர் செல்வராசன்
யோகம் : எப்பிடி? 35D65 எனக்கு அண்ணையைப் பார்க்க ஆசையாயிருக்கு. வேலை கிடைக்காட்டிலும் காரியமில்லை. உடனை வாருங்கோ எண்டு எழுதப்போறன். யோகம் : அதில்லைக் கமலி! முத்திரைக்குக் கூட காசில்லாமல் எப்பிடிக் கடிதம் எழுதப் போறாய்? எழுதினாலும் திரும்பி வர அண்ணனட்டையும் காசிருக்குதோ இல்லையோ. கனகம் : உம் அந்த மனிசன் இருந்து துலாக்கட்டை அடிச்செண்டாலும் அடுப்பெரிஞ்சுது. பட்டம் படிச்ச பெத்த மகனிருந்தும் “ஊரோச்சம் வீடு பட்டினி”
கமலி (கண்கலங்கித்தன் இருதோடுகளையும் கழற்றித்தாயிடம்
கொடுத்து) அம்மா இந்தாங்கோ!
கனகம் : என்னது?
கமலி அண்ணன் பட்டினி கிடந்து வாங்கித் தந்த தோடு! வீடு பட்டினி கிடக்க எனக்கேனம்மா! வித்தோ ஈடு வச்சோ வேனுமானதை வாங்குங்கோ - ஆனா
அண்ணனை மட்டும் குறை சொல்லாதேங்கோ. யோகம் : (கூட்டுவதை நிறுத்திவிறாந்தையிற் சென்று தேம்பியபடி) எல்லாம் என்னாலேதானே வந்தது. அண்ணணுக்குக் கடிதம் கூட எழுத முடியேல்லையென்று எனக்குத் துக்கமில்லையே. அந்தக் துக்கத்திலைதானே நானும் சொன்னனான். அதுக்காக இப்ப இவளேன் இப்பிடிச் செய்ய வேணும். கனகம் : மனம் பொறாமல் நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு நீங்களேன் மக்கள் ஆளுக்காள் மனம் நோகிறியள்.? தோட்டைப் போடு கமலி. நான் எங்கையன் போய்க் காசு மாறிக் கொண்டு வாறன்.
காட்சிமாற்றம்.
102

தணியாத தாகம்
அங்கம் 18
சோமு வேலை தேடிக் கொழும்பு நகரிற் பல இடங்களில் ஏறி இறங்குவதும் அலைவதுமான மெளனக்காட்சிகளின்ாற்றில்மாலையில் ராமு சகிதம் காலிமுகத்திடலில் ஓரிடத்தில் அமர்ந்து சம்பாவிக்கும் காட்சிநிலைக்கிறது.
ராமு : சோமு! அப்ப உங்க தீர்மானத்தை நீங்க மாத்திக்
கவே போறதில்லையா?
சோமு இல்லை ராமு. மூன்று மாதமாச்சு. கொழும்பிலே வேலை தேடாத இடமில்லை. என்ரை குடும்பத்துக்கு மட்டுமில்லை. உங்களுக்கும் கூட நான் பாரமாய்ப் போயிட்டன்.
சோமு : இன்னும் இரண்டொரு வாரமின்னாலும் இருந்து
பார்த்திட்டுப் போறது நல்லதின்னு நினைக்கிறேன்.
சோமு : வேண்டாம் ராமு. நாளைக் காலமை யாழ் தேவியிலேயே நான் போக வேணும். நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். நீங்கள் சொல்ற மாதிரி இங்கை வனவாசம் இருந்து, ஒருத்தன் மற்றவன்ரை கண்ணைக் குத்திப் பிழைக்கிறதை விட ஊரிலை மண்ணைக் கொத்திப் பிழைக்கிறது மேல். போறதுக்கு மட்டும் ஒரு பதினைஞ்சு ரூபாய் காசு மாறித் தந்திடுங்கோ. போனதும் எப்பிடியும் அனுப்பி வைப்பேன்.
ராமு மூணு மாசத்திலே என்னமோ முற்பிறவித் தொடர்புள்ளவங்க மாதிரிப் பழகிட்டோம். சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. கவிதைகளைப் படிச்சிட்டு
103

Page 65
சில்லையூர் செல்வராசன்
பாசம், மானம், பண்பாடு, இலட்சியம் என்று கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக்கிறீங்கன்னு எனக்குப்படுது.
சோமு : ஏன் அப்பிடிச் சொல்றீங்கள்?
ராமு : உங்களோடை பிரியமாயிருந்த அந்த தீபா எங்கிற பெண்ணைப்பற்றி சொன்னிங்க. செயலா இருக்காங்களே. விலாசமும் உங்ககிட்டே இருக்கு. உத்தியோகம் தேட ஒத்தாசை செய்வாங்களே! போகவே மாட்டேன்னு பிடிவாதமாக இருக்கிறீங்களே.
சோமு : ராமு என்னையும் தீபாவையும் பற்றிய கதை முழுதுமே உங்களுக்குச் சொல்லியிருக்கிறன். அது முடிஞ்சு போச்சு. முடிஞ்ச கதை தொடருறதில்லை எண்டு சொல்லுவாங்க. எக்காரணத்தைக் கொண்டும் மறுபடி நான் தீபாவின் வாழ்க்கையிலே குறிக்கிடுறதில்லை யெண்டு விரதம் பூண்டிருக்கிறன்.
ராமு உங்க வாழ்க்கைக்கு வழி தேடிறது அவங்க
வாழ்க்கையிலே குறுக்கிடறதா எப்படி ஆகும்?
சோமு : ராமு! போற பாதையிலே பூனை குறுக்கே வந்தாலே பொல்லாத காலம் என்று பொச்சரிக்கிறது மனித சுபாவம். ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலே பூனைகளை விட மனிதர்தான் அதிகம் குறுக்கே வருகினம் என்றது என் சின்ன வயசுக்குள்ளை நான் கண்ட அனுபவம். தீபாவின் வாழ்க்கைப் பாதையிலை நான் பூனையாக விரும்பேல்லை.
அவ்வழியே வந்த சுகத், சோமுவைக் கண்டு அருகே நெருங்கி,
சுகத் : யாரு ஹலோ! நீங்க சோமுதானே?
சோமு : ஆ! சுகத் மை கோட்!
சுகத் : ஐ ஆம் சோ கிளாட் சோமு எப்ப வந்தது
கொழும்புக்கு?
O4

தணியாத தாகம்
சோமு : மூண்டு மாசமாகுது சுகத்.
சுகத் : திறீ மந்த்ஸ்! ஏனப்பா! எங்களை எல்லாம் ஞாபகமில்லையா? எங்க அட்றஸ் கூட மறந்து போச்சா? சோமு : அடடே! இவரை அறிமுகப்படுத்த மறந்திட்டன்.
இவர் மிஸ்டர் ராமநாதன். ஒரு டீ கம்பெனியிலே வேலை பார்க்கிறார். ராமு! இதுதான் சுகத்.
ՄnԱp : ஹலோ. கும்பிடப்போன பூனை குறுக்கே. 89 ஆம் சொறி. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, உங்களைப்பற்றிப் பேசிக்கிட்டிருக்கிற நேரம் தான் நீங்களும் சந்திச்சிருக்கிறீங்க.
சுகத் : அப்பிடியா? என்னைப் பற்றிப் பேசுகிற அளவுக்கு ஞாபகம் இருக்கா இவருக்கு. அது போதும். சோமு, உம்மைப்பற்றி பேசனும் நிறைய. வாருங்க மூணுபேருமா எங்காவது ஹோட்டல்லே போய்ச் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.
சோமுவைசுகத், கையைப்பற்றிஅழைக்கிறான்.
GafTup : UTCup.......
JTCup : சொறி என்னை மன்னிக்கணும் சுகத் சோமு! உங்க விஷயத்திலே நான் பூனையாக மாறக் கூடாதில்லே?
சுகத் : பரவாயில்லை.வாங்க
UnTyp : நோ நோ! நான் அவசரமாப் போகணும் சோமு!
நீங்க போயிற்று விட்டுக்கு வந்திடுங்க. திடலில்நிறுத்தியுள்ளதன் காரை அணுகியதும், சுகத் ; அப்படீன்னா உங்களைப் ட்றொப் பண்ணிட்டு. ராமு : வேணாம் வேணாம் நான் போயிடறேன். சோமு : நான் சுறுக்கு வந்திடுவன் ராமு. ծ այ!
ராமு விலக, சோமுவும் சுகத்தும் காரில் ஏறிச் சம்பாவழித்தபடி செல்வதைக் கமரா தொடர்கிறது. மவுன்ட் லவீனியா ஹோட்டலில்
105

Page 66
சில்லையூர் செல்வராசன்
அவர்கள் சிற்றுண்டிச்சாலையினுள் நுழைகிறார்கள். எம். எஸ்.
பெர்னாண்டோவின் இசைநிகழ்ச்சியும் காபரே"நடனமும்பின்னணியில்
நிகழஉணவருந்தியபடிசம்பாவழிக்கிறார்கள்.
சுகத் சோமு! உம்முடைய அப்பா இறந்தது பற்றிக் கூட அறிவிக்கல்லியே! வெடிங்குக்கு நீர் வரக்கூடும் என்னு தீபா எதிர்பார்த்தாள். அப்பா இறந்தது அவளுக்குக் கூடத் தெரியாது.
சோமு : தீபா சுகமா..?
சுகத் ஒ யெஸ்! புருஷனோடே எஸ்டேட்டிலே சுக மாயிருக்கிறாள். குழந்தை ஒண்ணு கிடைக்கப் போறதாப் போன வாரம் தான் கடிதம் எழுதியிருந்தாள். உம்மைப் பற்றிக் கூட நியூஸ் ஏதும் தெரியுமான்னு விசாரிச்சு
எழுதியிருந்தான். சோமு : என்ன மறுமொழி எழுதினிர்?
சுகத் தெரிஞ்சாத்தானே எழுத ஏலும்! சோமு : தெரியாம இருக்கிறதே நல்லது! என்னை
இண்டைக்குக் கண்டதைக் கூட எழுதாமல் விட்டால் பெரிய உதவியாயிருக்கும்.
சுகத் செயர் அப் சோமு!
GIFTyp : d LLib!....... உம்முடைய அமரா விஷயம் என்னாச்சு
சுகத்?
சுகத் எனக்கு உத்தியோகம் இப்பதானே ஆகியிருக்கு சோமு. இரண்டொரு வருஷம் போக வேணாமா?
சோமு அதுவும் சரிதான். நேரமாகுது. போகலாமா
சுகத்?
சுகத் : சோமு நாளைக்கு கண்டிப்பாய் போய்த்தான் ஆக வேணுமா? நீர் ஆட்ஸ் டிகிறி என்கிறதாலைதான் கஷ்டம். தீபா எஸ்டேட்லே விருப்பமான போஸ்டிலே
106

தணியாத தாகம்
வேலை பார்க்கலாம். அதுக்கும் சம்மதிக்க மாட்டேங்கிறீர். சரி இரண்டொரு மாசம் என்கூடவே தங்கலாம். எப்படியும் ட்ரை பண்ணி ஏதாவது ஏற்பாடு செய்வேன். ஆனா
சோமு வற்புறுத்த வேண்டாம் சுகத். நல்லாயப் யோசித்துத்தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன். என்னைத் தயவு செய்து தடுக்க வேண்டாம்.
சுகத் : இதற்கு மேலே உமக்கு எப்பிடிச் சொல்றதின்னே புரியல்லே. சரி. நாளைக்கு நீர் போயிட்டாலும் எங்களை ஞாபகமிருக்கட்டும். எப்போ என்ன உதவி முடியுமோ அதைச் செய்ய நாங்க காத்துக்கிட்டிருப்போம்.
சோமு : தாங்ஸ். போகலாமா?
சுகத் ரைட். (சமிக்ஞை செய்து) வெயிட்டர்.
பில்லுக்குப்பணம் கட்டி அவர்கள்புறப்படக்காட்சிகரைகிறது.
107

Page 67
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 19
சோமுவை ஏற்றிய வண்ணம் சுகத்தின் கார், பின்னர் யாழ்தேவி, பஸ் ஆகியவைஒன்றுடன் ஒன்றுபின்னிக்கரைந்து, மாறிஅவன்வீட்டை அடையும் காட்சியாகநிலைக்கிறது.
கமலி : அண்ணா! அக்கா - அண்ணா வந்திட்டார்!
யோகம் : வந்திட்டீங்களாண்ணா. வாங்கோ. 686
காலைக் கழுவிற்று வாங்கோ சாப்பிட.
சோமு : அம்மா எங்க கமலி?
as D65 முனியாண்டி, லட்சமி அக்காவையோடை அப்போதை
போனவ வயலுக்கு. இன்னும் காணேல்லை. வரட்டும். நீங்கள் சாப்பிடுங்கோ. யோகம் : (உணவுண்ணும் சோமுவுக்கு மேலும் பரிமாறி) உம்
சாப்பிடுங்கோ. அங்கையும் உப்பிடிச் சாப்பிடாமல் கிடந்து தானாக்கும் உந்தக் கோலம். கமலி : அண்ணை எத்தனை நாள் லீவிலை வந்தனிங்க..? சோமு : (அசட்டுச் சிரிப்புடன்) உம். லிவோ? அது கன
நாள். யோகம் : வேலையைப் பற்றியே விசாரிக்கேல்லை. அதுக்
கிடையிலே லீவைப் பற்றிக் கேட்கிறா. கனகம் : (முற்றத்தில் நுழைகையில் சோமு கை கழுவிவருவதைக் கண்டு) யோகம் ஆர்? தம்பி வந்திட்டானோ?. உதென்ன மேனை உன்ரை கோலம்? என்ன ராசா? வேலை சரியாய்ப் போச்சே?
சோமு : உம். ஓம் அம்மா! வேலை கிடைச்சிட்டுது?
108

தணியாத தாகம்
கனகம் : என்ன வேலை மேனை? நல்ல வேலையே?
சோமு : (விறாந்தைக்குச சென்று மண் வெட்டியைத் தூக்கி தோளில் வைத்தபடி) ஓம் அம்மா ஆருக்கும் கைகட்டிக் கணக்குக் குடுக்காத வேலை. அப்புவும் அப்புவின்ரை அப்புவும் அவரின்ரை முன் பரம்பரை முழுதும் பாத்த முதல் தரமான வேலை.
கனகம் : என்ன மேனை சொல்றாய்?
சோமு : (அண்மைக் காட்சியில்) ஓம் அம்மா! ஆருக்கும் அடிமைச் சேவகம் பண்ணாமல் ஊருக்கும் உலகத்துக்கும் உணவு குடுத்து உயிர் குடுத்துக் காப்பாத்துற ஒரே ஒரு தொழில் இதுதான். உழவுத் தொழில், உயர்ந்த தொழில், உன்னதமான தொழில்!
கனகம் : (துரித கதிப் பலவெட்டான அண்மைக் காட்சியில்) இதுக்குத்தானா ராசா நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைச்சோம்? பக்கத்துவீடு அக்கத்து வீடெல்லாம் பல்லுக்குப் பதம் பாத்துச் சொல்லுக்கு சொல்லு சொட்டை சொல்லக் கடன் பட்டு ஒண்டுக்கு இரண்டு குமர் ஒண்டுக்கும் வழியில்லாமல் கண்டு கழுத்தானைக் கழட்டி வித்துக் காசு தேடி, நாளுக்கு நாள் கோழிக் குரலோட எழும்பி, “நல்ல காலம் வரும், நல்ல காலம் வரும்” எண்டு நம்பி நம்பி, நெருப்புத் திண்டு நான் அப்பம் சுட்டு வித்து, விழுந்து படுக்கிற வயசிலே விடியக்காலைத் தண்ணி பாய்ச்சி, விலா முறியத் துலா உழக்கி, அப்பர் வேர்த்துக் களைச்சுச் சில்லறை சேர்த்துச் சேர்த்தனுப்பி, இதுக்குத்தானா ராசா நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைச்சோம்? இதுக்குத்தானா ராசா? இதுக்குத்தானா?
வெம்பிவெடித்துப்புலம்புகிறாள்.
அதே பலவெட்டான அண்மைக்காட்சியில்,
109

Page 68
சில்லையூர் செல்வராசன்
சோமு : அம்மா! எதுக்கு நான் படிச்சேன்? அதிகாலை அஞ்சு மணியிலே இருந்து மதியம் இரண்டு மணி மட்டும் ஆலாய்ப் பறந்துழைச்ச அப்பர் ஏலாப் பருவத்திலை “வேலா கந்தா துணை"யெண்டு ஒரு மூலையிலே நிம்மதியாய் மூச்சுவிட வேணுமெண்டதுக்கில்லையா? நீங்கள் பெத்துத் தந்த இந்த இரத்தினங்களை இரண்டு முத்துத்தோடுகள் மாதிரி வைத்துக் காப்பாத்த வேணு மெண்டதுக்கில்லையா? நான் சின்னவனாய் இருந்த போது பொன்னிறமாய் இருந்த உங்கடை முகம் தன் நிறமிழந்து, தணல் குடிச்சு உப்பிடிக் கறுத்துக் கருகிக் கிடக்குதே அம்மா. அந்தத் தாய் வயிற்றிலே பால் வார்த்துத் தாபரிக்க வேணுமெண்டதுக்கில்லையா? இதை யெல்லாம் யோசிச்சு நடக்கிற புத்தியை எனக்குத் தந்தது என்ரை படிப்பில்லையாம்மா? யோகம் : படிப்புக்குரிய உத்தியோகம் பார்க்க வேண்டிய நீங்கள் இப்பிடிப் பச்சை மண் கொத்திப் பிழைக்க வேனுமா அண்ணை? சோமு உனக்கு ஞாபகம் இருக்கா யோகம்?
அண்டைக்கொரு நாள்.
கதை ஆரம்பத்து முதல் அங்கத்துக் குசினிச் சம்பாஷணை மீள் காட்சியாகவருகிறது.
யோகம் : ஒம் கமலி! அண்ணன் படிக்கிறது அறிவுக்காக
இல்லை. எனக்கும் உனக்கும் சீதனம் சம்பாதிக்க. சோமு அறிவுக்காகப் படிச்ச அந்தக்காலம் போயிட்டுது யோகம். இப்ப படிப்பு உத்தியோகத்துக்காக. உத்தி யோகம் பணத்துக்காக, என்னைப் போல ஏழைகளுக்குப் பணம்.
யோகம் : எங்களைப் போலச் சகோதரிகளுக்குச் சீதனத்
துக்காக இல்லையா அண்ணா?
110

தணியாத தாகம்
மீள்காட்சிமுடிந்துஸ்தல காட்சியாகத்திரும்ப,
சோமு : ஒம் யோகம்! நீ அப்ப நினைச்சமாதிரி, நான் இப்ப நினைக்கிறன். அறிவுக்காகத்தான் படிப்பு வேணும். தொழிலுக்காக இல்லை.
aьшрөб) : அண்ணை அதுவும் பி. ஏ. படிச்சிட்டு வந்தா
தோட்டம் செய்யப் போறிங்கள்?
சோமு : கமலி! பி. ஏ. எண்டால் என்ன கருத்துச் சொல்லு பார்ப்போம். “பிடி ஏரை” எண்டதைத்தான் அப்பிடிச் சுருக்கி பி. ஏ. எண்டு சொல்றது. ஏர் பிடிக்கிறதிலே நான் பி. ஏ. பட்டதாரி விளங்கிச்சுதோ?
கமலி : அண்ணை அண்ணை பேச்சிலே நீங்கள் பெரிய
பி. ஏ. தான்.
சோமு : உம் செயலிலும் பெரிய பி. ஏ. தான். சொல்லு
S. 6.2
6LD65 : பிடி - ஏரை!
காட்சிமாற்றம்.
111

Page 69
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 20
சோமு, தன் குடும்பம், முனியாண்டி குடும்பம், இளங் கமக்காரர் கழக அங்கத்தவர் சகிதம் தோட்டத்தில் உழவு இயந்திரக் கருவிகள் துணையுடன் கமம் செய்துசெழிப்படைவதும்,கடன்களை அடைப்பதும், அவன் குடும்பத்தலைவர் தோற்றத்தில் செழிப்பின் கோலம் புலப்படுவதுமான காட்சிகள் கோவையாக மலர்ந்து காலநகர்வையும் குடும்பச்சிறப்புவளர்ச்சியையும்குறித்துச்சென்று,ஈற்றில்இளங்கமக்காரர் கழக அலுவலக காட்சியாகநிலைக்கிறது.ரட்ணம், ஆனந்தன், கனகு, சோமு ஆகியோர் அங்கு உரையாடுகிறார்கள். ரட்ணம் : சோமு கலட்டிக் காணியை இளங் கமக்காரர் சங்கத்தார் எப்பிடிப் பொன்விளையிற பூமியாக்கியிருக் கிறோம். பாத்தியே? ஆனந் : எல்லாம் சோமுவின்ரை முயற்சிதான் காரணம். இந்த வருசம் உன்னைச் சங்கத் தலைவராக்கினதாலை தான் நாங்கள் இவ்வளவு வேலையும் செய்ய முடிஞ்சுது சோமு. கனகு : அப்ப எங்கடை உழைப்பொண்டும் இதிலை
சேத்தியில்லையோ மச்சான்? ஆனந் : உடலுழைப்பாலை மட்டும் காணி விளையிற கால மில்லைக் கனகு இப்ப, மூளை உழைப்பும் இதிலை சேந்தாத்தான் ஏழை உழவன் எண்டு ஏளனம் பண்ற நிலை மாறும். சோமு : ஏனப்பா இதுக்குத் தர்க்கம்? இரண்டும் தேவைதான். பாடுபட்டால் காடும் விளையும். படிப்பறிவு சேர்ந்தால் பலனும் கூடும்.
12

தணியாத தாகம்
ஆனந் : அதைத்தானே நானும் சொல்றன். ஏ. பி. எண்டு எழுத்துக் கூட்டத் தெரிஞ்சவனே ஏர்பிடிக்கத் தயங்கிற நாளிலே பி. ஏ. படிச்சிட்டு நீ பிறந்த ஊரை மறந்து போகாமல் வந்து தோட்டம் செய்யிறது சிறந்த சேவையில்லையோ?
கனகு : அதை யார் இப்ப இல்லையெண்டது? ஆனால் தனி மரம் தோப்பாகாது எண்டதைத்தான் நான் சொல்றன். ரட்ணம் : ஆனால் தோப்பாகிறதுக்குத் தனி மரங்கள்தான் முக்கிய துணையாகுது. நாங்களும் முந்திச் சங்கம் நடத்தின நாங்கள்தான். ஆனால் இவ்வளவு முன்னேற்றம் எப்ப வந்தது? சோமு வந்த உடனை சங்கத் தலைவ ராக்கினோம். அதுக்குப் பிறகு எவ்வளவு செய்து போட்டான். அரசாங்கத்துக்கு எழுதிக் கலட்டிக் காணியைச் சங்கத்துக்கு எடுத்தார்? கோழிப்பண்ணை, கால்நடைப் பண்ணை துவக்கினததார்? கிழங்கும் புகையிலையும் வெங்காயமும் எண்டு கிளிநொச்சிக்கு அங்காலை லொறி லொறியாய் எங்கடை சங்கம் எப்ப அனுப்பத் துவங்கினது? ஆனந் : கணக்க வேண்டாம். சங்கத்துக்கெண்டு இந்தக் கட்டிடமே சோமு தலைவரான பிறகுதானே கனகு உருப்பட்டுது. இந்த ஒரு வருஷத்துக்குள்ளே ஊருக்கே ஒரு செழிப்பு வரத் துவங்கிருக்கு. ரட்ணம் : கொஞ்ச நஞ்சம் படிச்ச கிறுக்கிலை உத்தியோகம் தேடி, வேலை வெட்டி பாராமலிருந்த எங்களுக்கும் இப்ப செழிப்புத்தான். கனகு : ஏன்ராப்பா? சோமுவுக்கும் இப்ப செழிப்புத்தானே! ஆனந் : அதுக்கேன் மச்சான் உனக்கு மனஞ் சுழிப்பு.
சோமு : சரி போதும் நிறுத்துங்கோ. இப்ப என்னைக் காரணமாய் வைச்சு நீங்கள் பேச்சுப்படுறதெண்டால்
113

Page 70
சில்லையூர் செல்வராசன்
நான் போறன். சங்கத்துக்கு பொதுவிலை பிரயோசனமான ஏதும் பேசிறதெண்டால் பேசுங்கோ. கனகு உவன் ரட்ணம் எப்பவும் உப்படித்தான் சோமு கொழுவுறது. பேச்சுக்கு ஒண்டு சொல்லவிடமாட்டான். ரட்ணம் : சரி இனித் தர்க்கத்தை விடடாப்பா. ஆனந்தன், நீ சொல்லு. எங்கடை சங்கத்தின்ரை ஆண்டு விழாவும் 6) Ob(35g. ஆனந் அதுதான் ஆண்டு விழாவை இம்முறை வலு சிறப்பாய்க் கொண்டாட வேணும். பிரமுகர்களை அழைச்சு, கலை நிகழ்ச்சிகளெல்லாம் வைச்சு வடிவாய் நடத்த வேணும். சோமு என்ன சொல்லிறாய்? சோமு : செய்வோம். பிரமுகர்களை அழைக்கிறது கவனம். அரசியல், கட்சி, அது இதெண்டு தங்களுக்குத் தம்பட்ட மடிக்கிற தலைவர்கள் வேணாம். பிரபலமான பொதுக் கலைஞர் இரண்டொரு பேர் வந்து எங்கடை ஊர்ச் சனங்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு நல்ல கலை நிகழ்ச்சியை நடத்தினாக் கூடப்போதும். ரட்ணம் : ஒரு யோசனை! இப்ப எல்லா இடமும் வில்லுப் பாட்டுக் கச்சேரிகள் பிரசித்தமாய் நடக்குது. எங்கடை விழாவிலும். ஆனந் : நல்ல யோசனை! ஆனால் ஆரை. சோமு : வில்லுக் கச்சேரி என்றால் வீரமணி தான். ரட்ணம்: ஆர்? நடிகவேள் லடிஸ் வீரமணிதானே. சோமு : ஓமோம்! விநயமாய்ச் சபைக்கு ஒரு கும்பிடு போட்டிட்டு வில்லிலே கோலை வீசி அந்தாள் பாடத் துவங்கினால், பிறகு தேன்மழைதான். கனகு : சோமு சொன்னாப் பிறகு என்ன அட்டி? சோமு : கொழும்பிலே அவரை நேரிலை சந்திச்சுப் பழகிற
வாய்ப்பும் கிடைச்சுது.
114

தணியாத தாகம்
ரட்ணம் : அப்ப வசதியாய்ப் போச்சு. அவரையே ஏற்பாடு
செய்திடலாம். ஆனந் : ஒண்டு சொல்றன். சோமு - நீதான் கவிதை
எழுதிறவனாச்சே. எங்கடை சனங்களுக்குப் பொருத்தமாய் நீயே புதுசாய் ஒரு வில்லுப்பாட்டெழுதி அவரைக் கொண்டு பாடுவிச்சால்? ரட்ணம் : ஒம் சோமு அருமையான யோசனை. சோமு : உம். நாள் போதுமோ தெரியாது. எதுக்கும் அவருக்கு எழுதிக் கேட்டு ஏற்பாடு செய்வம். என்ரை கொழும்பு பிரென்ட் ராமநாதனுக்கும் அவரைத் தெரியும். சந்திச்சுப் பேசி ஏற்பாடு செய்யச் சொல்லி அவனுக்கும் எழுதுவம்.
காட்சிகரைகிறது.
115

Page 71
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 21
யோகம் பனங்கூடலில் விறகு பொறுக்க வந்த இடத்தில் குமார் சைக்கிளில்வந்துசந்தித்துஇரகசியமாக உரையாடுகிறார்கள். குமார் : உம்முடைய அம்மா, அண்ணன் என்னுடைய ஐயா எல்லாரும் சம்மதிப்பினம். ஆனா அம்மாவட்டை எப்பிடி இதைப் பற்றிப் பேசிறதெண்டு தான் பயமாயிருக்கு. யோகம் : நான் அண்டைக்கே சொன்னன் குமார். நீங்கள் கூரை நான் தரை, இரண்டும் காதலிச்சால் கை கூடா தெண்டு. சுவர்களை இடிச்சுவிட்டால் கைகூடும் எண்டு சொன்னிங்கள். அந்த உறுதி உங்களுக்கு இருக்கும் எண்ட நம்பிக்கை எனக்கு வர வரக் குறைஞ்சு போச்சு. குமார் : இன்னும் கொஞ்ச நாள் பொறும் யோகம். நீர் அண்டைக்குச் சொன்னமாதிரி என் காலிலேயே நான் ஊன்றி நிக்கிற உறுதி எனக்கு இன்னும் வரேல்லை. பேருக்கு ரேடியோக் கடை என் பேரிலையிருந்தாலும் பிடி இன்னும் அம்மாவட்டைத்தான். அவவை மீறி நான் ஏதும் செய்தா நானும் நீரும் நடுத்தெருவிலை தான் நிக்க வேணும். யோகம் : மீறியென்றாலும் நீங்கள் ஒரு வழி செய்யாவிட்டால் நடுத்தெருவிலை நிக்கிற நாதிகூட எனக்கில்லை குமார். அண்ணன் உத்தியோகமில்லாவிட்டாலும் உழுது விதை ச்சு உழைச்சு ஒரு படியாய் உங்கடை கடனை அடைச் சுப் போட்டார். எப்பிடியும் என்ரை கல்யாணப் பிரச்சினை சீக்கிரம் தலை தூக்கும். தங்கச்சியும் காத்திருக்கிறாள். அண்ணன் எடுப்புப் பார்க்காதவர். எங்கடை எளிமைக்குத் தகுந்த எது வந்தாலும் பார்த்துச் சம்மதம் கேட்பார்.
116

தணியாத தாகம்
குமார் : நீர் என்ன பதில் சொல்லுவீர்..?
யோகம் : குழந்தை மாதிரி என்னட்டையே இந்தக் கேள்வி யைக் கேட்கிறீங்களே குமார். பொறுப்பில்லாத செல்லக் குழந்தை. இன்னும் அம்மாவிடமே பணம் வாங்கிப் படம் பார்த்து, நண்பரோடு கள்ளுக்கொட்டிலில் கதையளந்து ஊர் சுற்றும் உல்லாசக் குழந்தை. அந்தக் குழந்தைக்கு என்னை விளையாட்டுப் பாவையாகக் குடுங்கோ எண்டு
சொல்லுவன். குமார் : ஏன் யோகம் இப்பிடி என்னை உதாசீனமாய்ப்
பேசிறீர்? யோகம் : உதாசீனத்துக்கில்லை. மனத்திலை உண்மை
நிலை உறுத்தட்டு மெண்டு பேசிறன். உயர உயரப்
பறக்காமல் நீங்கள் உலகத்திற்கு இறங்கி வந்து ஒழுங்
காகச் செய்ய வேண்டியதைச் செய்ய வைக்க வேணு
மெண்ட உணர்ச்சியிலே பேசிறன். என் பேச்சையும்
கொஞ்சம் யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கோ..? குமார் : யோகம்.
யோகம் : விறகுக்குப் போனவளைக் காணேல்லையெண்டு
வீட்டிலை தேடுவினம். நான் வாறன்.
அவள் விருட்டென்று புறப்பட்டுச் செல்ல, குமார் திகைப்புற்று
அவள் சென்று மறைவதைப் பார்த்து நிற்கக் காட்சி கரைந்து
மறுகாட்சியாக மலர்கிறது.
117

Page 72
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 22
திறந்தவெளியான ஊர்க்கலட்டி வெளியிற்சோடித்த கொட்டகை மேடைக்கு முன்னால் ஊரே திரண்டு அமர்ந்திருக்கிறது. மேடையில் வில்லுப்பாட்டுக்குழுவினர்நிகழ்ச்சிக்குத்தயாராக இருக்க அறிவிப்புக் கேட்கிறது. ஆனந் : இனி நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வில்லுப்பாட்டுக் கச்சேரி நடைபெறும். வில்லிசை வேந்தர் நடிகவேள் லடிஸ் வீரமணி குழுவினர் வழங்கும் “கற்பக விருட்சக் காதை" இதை எழுதியவர் எங்கள் இளங் கமக்காரர் சங்கத் தலைவர், கவிஞர் சோமசேகரம்.
கச்சேரிநிகழ்ந்துமுடியகாட்சிமாறுகிறது.
118

தணியாத தாகம்
அங்கம் 23
பிற்பகல். தம்பர் வீடு தம்பர் : முருகனை இப்ப கொஞ்ச நாளாய் இந்தப் பக்கமும் காணேல்லை. பனை பாளை தள்ளினால் ஒழிய ஆள் இந்தப் பக்கமும் எட்டிப் பாக்கிறதில்லை. செல்லா : அவனுக்கும் இப்ப புதுசாய்ப் பெருமை வந்திட்டுது. தம்பர் : புதுசாய் அதென்ன பெருமை? செல்லா : “கற்பக விருட்சம்” எண்டு அங்காலைப் பொடியன் பெரிசாய்ப் பனையை உயர்த்து உயர்த்தெண்டு உயர்த்தி வில்லுப்பாட்டுக் கச்சேரியொண்டை நடத்தப்போய்த் தான். தம்பர் : உன்ரை குறுக்கு மூளையும் ஒரு மூளைதானப்பா. எப்பிடியும் அதுகளை எந்தக் கதைக்கையும் இழுத்து வளைச்சு மொட்டத் தலை முழங்கால் முடிச்சுப் போட்டிடுவாய். செல்லா : ஒமோம்! எங்கடை கடனையும் அவை முடிச்சுப் போட்டினம் தானே. ஒரு மாதிரி இழுத்துப் பறிச்சுக் கடன் தீர்த்துக் கையிலை நாலு சதத்தைக் கண்ட உடனை அவைக்குக் கண் மண் தெரியேல்லை. அப்பச் சூடு கூட விட்டாச்சல்லே.
தம்பர் : முந்திக் கடன் காசு தரேல்லை தரேல்லை எண்டு திட்டினாய். இப்ப தந்திட்டினமெண்டு திட்டிறாய். வேண்டாப் பெண்டாட்டி கை பட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம் எண்ட நியாயம் தான் உனக்கு.
119

Page 73
சில்லையூர் செல்வராசன்
செல்லா : எட்டிப்பாருங்கோவன். வேலியுமல்லே நாளைக்கு
அடைக்க அடுக்குப் பண்ணியிருக்கினம்.
தம்பர் : அந்தச் சின்னப்பிள்ளை கலைச்ச மாடு இஞ்சாலை
வர அதுக்கும் முந்தி நீ முனிஞ்சனி தானேயப்பா. செல்லா : சின்னப்பிள்ளை. . . . . . . . . . அதுதான் ஆக
எடுபாடு. ஒரு சோடித் தோட்டோடை திரிஞ்ச பெட்டை. அண்டைக்குக் கிணத்தடியிலே நிற்கிறன். கண்டிட்டு, அங்காலை நிண்ட தமக்கையைக் கூப்பிட்டு, “கழுத்துச் சங்கிலியை ஏன் கழற்றி வைச்சிட்டு நிக்கிறியள் அக்கா கிணத்தடியிலே?” எண்டு கேக்குது அந்த நுள்ளான் பெட்டை எனக்கு விடுகுது நொட்டை, தம்பர் : நீ அதுகளைத் திட்டுற திட்டைக் கேட்டால்
நொட்டை பேசுங்கள் தானேயப்பா. செல்லா : உங்களட்டைச் சொல்ல வந்தன் நான். இவன்
குமார் நிண்டான் எங்கை? குமார். கூப்பிட்ட வண்ணம் பின் விறாந்தைக்கு வந்த செல்லாச்சி கிணற்றடியைப் பார்க்கிறாள். அங்கு இருபுறமும் குமாரும் யோகமும் நிற்கிறார்கள். r செல்லா : அடே குமார்! என்னடா அது கையிலே? ஆ?
கடிதமா? வாடா இங்கே. யோகத்திடம் கடிதத்தை நீட்டிய குமார் தாயின் குரல் கேட்டுத் தடுமாறிஅதைக் கிணற்றுள்நழுவவிடுகிறான்.உடன்பயந்துவிட்டுக்கு விரைந்துசைக்கிளை எடுத்துக்கொண்டுவெளியேறுகிறான்.திகைத்து நிற்கும்யோகத்தை நெருங்கித்தொடருகிறாள் செல்லாச்சி செல்லா : ஏன் மேனை? கடிதமோ குடுக்கிறாய் நீ? பூனை போலை பொசுக்கிடாமல் பதுங்கிப் பதுங்கிக் கிணத் தடிக்கும் வீட்டுக்குமாய் நீ நூறு தரம் திரிஞ்சது இதுக்குத்தானோ? நல்லாயிருக்கு நாச்சியார். நல்லாயிருக்கு.
120

தணியாத தாகம் யோகம் : இல்லை மாமி. நானில்லை.
செல்லா : ஆஹா மாமி. மாமி முறை கொண்டாடி ராசாத்தி - என்ரை ஆசை மருமகளே? (குரல் கேட்டுக் கிணற்றடிக்கு வரும் கனகத்தைவிளித்து) வாருங்கோ மச்சாள். உங்கடை செல்லமகள் யோகம்மா செவ்வையான யோகம் கொண்டந்து சேர்க்கப் பார்க்கிறாள் உங்கடை குடும்பத் துக்கு. வந்து பாருங்கோ.
கனகம் : என்னக்கா அது?
செல்லா : ஐயோ. அக்கா எண்டு கூப்பிடாதேயுங்கோ,
சம்பந்தி எண்டு கூப்பிடுங்கோ.
கனகம் : என்ன நடந்தது யோகம்?
யோகம் : (அழுதபடி) நானொண்டுமில்லையம்மா.
செல்லாச்சி: அழு மேனை அழு அழுகள்ளி தொழுகள்ளி ஆசாரக்கள்ளி அவளிலை இவளும் ஒரு கள்ளி எண்டானாம். கடிதம் குடுக்கிறாய் - என்ன? அவன் கொஞ்சம் கண்ணுக்கும் குளிர்ச்சியாய் கையிலை மடியிலே காசுமுள்ளவனாய் இருந்தவுடன தங்கச்சிக்குக் காதல் வந்திட்டுதாக்கும். பிடிச்சாலும் பிடிச்சாய் பிள்ளை புளியங் கொப்பாய்ப் பிடிச்சாய்.
தம்பர் : (விறாந்தையில் வந்து நின்று) செல்லாச்சி. செல்லா : சாயும் போய் நீர் சாய்மானக் கதிரையிலை.
கனகம் : யோகம், உண்மையைச் சொல்லு. குமாருக்குக்
கடிதம் குடுத்தியா?
யோகம் : இல்லையம்மா?
செல்லா : அவளை என்ன கேக்கிறாய்? எட்டிப் பார் கிணத்துக்கை. பிள்ளை தெரியாத்தனமாய்க் கைநீட்டி வாங்கினதை நான் கண்டாப் போலை கை நடுங்கித் தடுமாறிக் கடிதம் கிணத்துக்கை விழப், பெம்பிளையஸ்
121

Page 74
சில்லையூர் செல்வராசன் மாதிரி வெட்கத்திலே வெளிக்கிட்டு ஓடிறான். வெட்க துக்கமில்லாமல் இன்னும் வீறாப்போடை நிக்கிறாள் உன்ரை மகள். வெட்க துக்கம் எப்படி வரும்? ஆக வேண்டிய வயதிலே ஆக வேண்டியதைச் செய்யாமல் குமர்ப் பழியைத் தீராமல் வைச்சுக் கொண்டிருந்தால், அது என்ன செய்யும்?. கனகம்: யோகம் வாடி இஞ்சை வா.
கனகம் யோகத்தைத் தலைமயிர்ப் பிடியாக இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளிக் கதவை உள்ளிருந்து அடைத்துக்கொள்கிறாள். யோகத்துக்குப் பலத்த அடி விழும் ஒலி மட்டும் வெளியே கேட்கிறது. பூட்டியகதவில்கமலிஓங்கித்தொடர்ந்துஅறைந்தவண்ணம்இருப்பதை மட்டுமே கமரா காட்டுகிறது. கமலி : அம்மா - கதவைத் திறவுங்கோ அம்மா.
அக்காவை அடியாதையுங்கோம்மா. கமலி கதவைத் தட்டித் தட்டிச் சோர்ந்து கால் மடித்து கதவடி யிலேயே அமர்ந்துவிடுகிறாள். யோகத்தை அடித்துக்களைத்தகனகம் கதவைத் திறந்து தலைநிமிர முற்றத்தில் வரும் சோமுவுக்கு உள்ளே கட்டிலில் வீழ்ந்துபடுத்துவிம்மும் யோகமும் வாசலில் களைத்தமர்ந்த கமலியும் தெரிகிறார்கள். சோமு : என்னம்மா கமலி? யோகம்! என்னம்மா நடந்தது.
(கோபமாக) அம்மா! என்ன நடந்தது இங்கை? விறாந்தையிற் சென்று கப்போடு சாய்ந்து தலையை இருகைகளாலும்தாங்கிஅமர்ந்திருந்தபடி,
கனகம் : உன்ரை இரண்டு முத்துத் தோடுகளையும் தான்
கேள்.
சோமு : யோகம் என்னது? என்ன முகமெல்லாம்? அம்மா!
அடிச்சீங்களா? ஏனம்மா? அம்மா எதுக்கு அடிச்சா?
யோகம் : ஒண்டுமில்லையண்ணா!
22

தணியாத தாகம்
சோமு : அம்மா கை நீட்டி - அதுவும், யோகம் உன்னை அடிக்கிறதெண்டால் என்னவோ பாரதூரமான விஷயம் நடந்திருக்க வேணும். யோகம். கமலி! நீயாவது சொல்லு. சொல்லு.!
துரித வெட்டாக மாறி மாறிக் கமலியும் சோமுவும் அண்மைக் காட்சிகளில்,
கமலி : அக்கா.
சோமு : அக்கா?
கமலி அடுத்த வீட்டுக் குமாருக்கு. சோமு : அடுத்த வீட்டுக் குமாருக்கு?
as D65 கடிதம்.
சோமு : கடிதம்?
கமலி கடிதம் குடுத்ததாக அம்மா அடிச்சாண்ணா? சோமு : ஆ?. யோகம். (3urasb... » -60õ60)LDuT?
யோகம் கெஞ்சும் பாவனையில் இல்லை" எனத் தலையசைக் கிறாள்விம்மியபடி.
கனகம் : (புலம்பலாக) என்னையேன் அந்த மனுசன் இப்பிடித் தவிக்க விட்டுப் போச்சுதோ? புண்ணியவானே! உன்ரை புத்திர பாக்கியங்கள் எனக்குச் செய்யிற சீர் வரிசையைப் பாரப்பு.
சோமு : யோகம். உண்மையைச் சொல்லு. ஏம்மா..?
உன்ரை அண்ணனுக்குச் சொல்லு. யோகம் சோமுவின் காலடியில் முழந்தாளில் வீழ்ந்து "இல்லை
யில்லை"என்றபாவனையில்தலையசைத்துவெம்பியழுகிறாள்.
கமலி : உண்மையை நான் சொல்லிறன் அண்ணா!
யோகம் : (கெஞ்சலாக) வேண்டாம் கமலி!
123

Page 75
சில்லையூர் செல்வராசன்
கமலி (தீர்மானமான குரலில் கட்டளை இடுவதுபோல்) கடிதங் களைக் குடுங்கோ அக்கா, அப்புவுக்கு அப்புவாயிருக்கிற எங்கடை அண்ணனட்டை குமார் எழுதிய அத்தனை கடிதங்களையும் குடுங்கோ. யோகம் : வேண்டாம் கமலி. கமலி : அப்ப நான் எடுத்துக் குடுக்கிறேன். யோகம் : (கையெடுத்துக் கெஞ்சி) என்ரை கமலிக் குஞ்சல்லே, வேண்டாம். அவரைக் காட்டிக் குடுக்க வேண்டாம். யோகத்தின் சூட்கேசிலிருந்து கட்டாகக் குமாரின் கடிதங்களை எடுத்துசோமுவிடம் கொடுக்கிறாள் கமலி. கமலி : அக்கா அவரிலை விருப்பம் எண்டது உண்மை. ஆனால் அந்தாள் மூண்டு மூண்டரை வருஷமாய் எழுதின இத்தனை கடிதத்துக்கும் அக்கா ஒரு பதில் எழுதினதில்லை. இது சத்தியம். சோமு கடிதங்களுடன் மெளனமாக விறாந்தைக் கதிரையிற் சென்றமர்கிறான்.இரவுபடர்கிறது.அவனருகில்விளக்கேறுகிறது.அதில் ஒவ்வொன்றாக இராமுழுவதும் அவன்கடிதங்களைப்படிக்கிறான். அவன் காலடியில் அமர்ந்து கமலி அப்படியே தூங்கி விடுகிறாள். காட்சி கரைகிறது.
124

தணியாத தாகம்
அங்கம் 24
காலை புலர்கிறது. சோமு வீட்டில் எல்லாம் மெளனமாக வழமைபோல்நடக்கிறது. சோமு முருகன்படத்தின்முன் வேண்டி, தேநீர் பருகி, கடிதக் கட்டுடன் அடுத்த வீட்டு முற்றத்தில் நுழைகிறான். தம்பர் : (சோமுவை முற்றத்திற் கண்டு) வா தம்பி! இஞ்சாலை
மேலே வா. சோமு : அம்மா இல்லையா ஐயா? தம்பர் : இருக்கிறா, இருக்கிறா! அவ இல்லாமல் எங்கை
போறா? இந்தா. 6,60600....... சோமுவிறாந்தையில் ஏறிக்கதிரையில் அமர்கிறான். செல்லா : (வெளியே வந்தபடி) பார் தம்பி உன்ரை தங்கச்சி
செய்திருக்கிற வேலையை. சோமு தெரியும். செல்லா : (சேலைத் தலைப்பாற் கண்ணீரைத் துடைத்த வண்ணம்) அந்தக் கையோடை நேற்று வீட்டை விட்டு வெளிக்கிட்ட குமார், இன்னும் இல்லை. ஆள்விட்டு எல்லா இடமும் தேடியாச்சு. கடையிலையும் இல்லை. வெட்கக்கேடு தாங்காமல் என்னென்ன செய்தானோ. எந்தக் குளம்
குட்டையிலை. சோமு : அப்பிடியொண்டும் நடந்திராதம்மா. செல்லா : இராதுதான். குமார் புத்தியுள்ளவன். சோமு : இல்லையம்மா, துணிச்சல் இல்லாதவன்.
செல்லா : என்ன தம்பி சொல்றாய்?
125

Page 76
சில்லையூர் செல்வராசன்
சோமு : கேவலம், ஒரு பெணபிள்ளை - அதுவும் தன்னாலே வீண் பழிச் சொல் கேட்டுப் பரதவிச்சு நிக்கிற நேரம் - தன்னைப் பெத்த தாயையே நிமிர்ந்து பார்த்து உண்மையைச் சொல்லத் துணிச்சல் இல்லாமல் ஓடிப் போன ஒருத்தனுக்கு உயிரை விடுறதுக்கு ஒருபோதும் துணிச்சல் வராதம்மா! அவன் நல்லவன்தான். ஆனா வல்லவனில்லையம்மா?
செல்லா : நான் கண்ணாலே கண்ட உண்மைக்கு மேலே.
சோமு : கண்டீங்களா? யோகம் கடிதம் குடுத்ததைக்
கண்ணாலே கண்டீங்களா?
செல்லா இல்லை. ஆனா அவள் குடுத்த கடிதத்தை அவன்
கையிலை கண்டன்.
சோமு அவள் குடுத்த கடிதத்தையா? அவன் குடுக்க
நினைச்ச கடிதத்தையா? எங்கே அது? செல்லா : கிணத்துக்கை நழுவி விழுந்திட்டுது. சோமு: (மேசையிற் கடிதக் கட்டை வீசி) இந்தாங்கோ! நழுவி விழாமல் தப்பின இவ்வளவு கடிதத்தையும் பாருங்கோ. இத்தனைக்கும் பதிலாய் என்ரை தங்கச்சி எழுதின ஒரு கடிதத்தைத் தூக்கி என் முன்னாலே வீசுங்கோ. நான் எழும்பிப் போயிடறன்.
செல்லா : (கடிதங்களிற் கண்ணோட்டம் விட்டு) இந்த அநியாயத் தைப் பாருங்கோவன். இப்பிடிச் செய்திருக்கிறானே போய்.
தம்பர் : உம் உம். இப்ப மட்டும் என்னை என்ன பார்க்கச் சொல்கிறாய்? இவ்வளவு காலமும் எல்லாத்தையும் நான் பார்த்துப் பார்த்துப் பேசாமலிருந்துதானே இப்பிடி ஆகியிருக்கு.
செல்லா வரட்டும் அவர்.
126

தணியாத தாகம்
சோமு : அம்மா! ஆத்திரப்பட்டு ஆகிறதொண்டுமில்லை. குமாரும் இப்பிடி ஒளிஞ்சு மறைஞ்சிருக்க ஒன்றிரண்டு நாளிலை ஊரறிஞ்சு அவமானமாய்ப் போயிடும். செல்லா : அவமானமென்ன இதிலே? அவன் ஆம்பிளை, சேறு கண்ட இடத்தை மிதிச்சுத் தண்ணி கண்ட இடத்தை கழுவிற்றுப் போவான். சோமு : அப்பிடிச் சொல்லாதேயுங்கோ. வாழநாள் முழுக்க ஒரு பெண்ணை வாழாவெட்டியாக்கின பாவம் உங்களைச் சூழும். செல்லா : அப்ப பின்னை என்ன தம்பி - இரண்டு பேருக்கும் கல்யாணத்தைக் கட்டி வைக்கச் சொல்லப் போறாய் போலை. சோமு : அதை விட வேறெதெண்டாலும் சொல்லக்கூடிய நிலை எனக்கிருந்தா நீங்கள் யோசிச்சுச் சொல்லுங்கோ. செல்லா : என்ன கதை தம்பி நீ சொல்ற கதை? உங்களுக்கும்
எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டுமே? சோமு : (கடிதங்களைத் திருப்பி எடுத்து) நிலைமை தெரியாமற் கதைக்கிறியள் அம்மா! இந்தக் கடிதங்களை வைச்சு நான் உங்களை வற்புறுத்த முடியும். வழக்குக் கூடத் தொடரலாம் விரும்பினால். ஆனா அதை நான் விரும்பேல்லை. செல்லா : என்ன தம்பி வெருட்டிறியா?
சோமு : இல்லையம்மா! துணிச்சல் இல்லாதவன் தானம்மா வெருட்டிறதுக்காக வெறும் வார்த்தை பேசுவான் அல்லது வெளிக்கிட்டு ஓடுவான். நான் அப்படிச் செய்யிறவனில்லை. உங்களட்டைக் காசிருக்கு. வழக்குப் போட்டால், வக்கீல் வச்சு வாதாடுவீங்கள். ஆனால் (கடிதங்களைக் காட்டி) இதுக்கு முன்னாலே தோற்பீங்கள்.
127

Page 77
சில்லையூர் செல்வராசன்
உங்கடை மகன் சூதாடிற்றான். சூதாடித் தோற்றத்தை வாதாடி வெல்ல முடியுமாம்மா? சோமு : அம்மா அம்மா! இன்னுமா உங்களுக்கு நிலைமை விளங்காமலிருக்கு? சரி. பணத்தை கொண்டே மனிசரை அளவிட்டுப் பழகீற்றியள். அந்தப் பாஷையிலே பேசினால் தான் உங்களுக்கு விளங்கும். நான் நம்பிக்கை முறிவு வழக்கு வைச்சால் நீங்கள் நஷ்டஈடு கொடுக்க வேணும் அல்லது வாழ்நாள் முழுக்க என்ரை தங்கச்சிக்கு மாதப் படி கட்ட வேணும். அப்பிடிச் செய்யச் சொல்றீங்களா?
செல்லா : வேண்டாம் வேண்டாம்! (தம்பரிடம்) பேசாம
லிருக்கிறியளே. ஏதும் சொல்லுங்களன்.
தம்பர் : செல்லாச்சி! நீயே உன்ரை முடிவைச் சொல்லாச்சி!
சோமு : நான் சொல்றன். நீங்கள் எங்களுக்குக் காசு
கட்டிற தொல்லை வேண்டாம். நான் உங்களுக்குக் காசு கட்டிறன். செல்லா : என்ன தம்பி - நொடி போடுறாய்? சோமு : (கோபமாக, விவகார தோரணையில்) அம்மா! என்ரை தங்கச்சி யோகம்மாவுக்கு உங்கடை மகன் குமாரைக் கல்யாணம் பேசி வந்திருக்கிறன். எவ்வளவு சீதனம்
கேட்கிறியள்? செல்லா : . சரி! நானும் ஒரு முடிவுக்கு வந்திட்டன். எங் கடை அந்தஸ்துக் கும் பணத்துக் கும்
மாப்பிள்ளையின்ரை தொழிலுக்கும் படிப்புக்கும் வடிவுக்கும் ஏற்றதாய்ச் சீதனம் பொருந்தினால் நாளைக்கே கல்யாணம்?
சோமு : எவ்வளவு?
செல்லா : மொத்தம் ஐம்பதினாயிரம் பெறுமதிக்குச் சீதனம்
குடுக்க முடிஞ்சா, கதை.
சோமு : (சினம் மேலிட) அம்மா! என்னை அளவு மீறி
நெருக்காதீங்க.
128

தணியாத தாகம் செல்லா : சரி எல்லாமாய் நாற்பதாயிரம்.
சோமு : அம்மா! நீங்கள் இந்தளவு வற்புறுத்துகிறபடியால் கடைசியாய்ச் சொல்றேன். முப்பதாயிரம் பெறுமதிக்குக் காசோ பொருளோ பிச்சை எடுத்தெண்டாலும் தருவன். சம்மதமா?
செல்லா : முப்பத்தைஞ்சு.
சோமு : ஊகும் கூட ஒரு சதம் கிடையாது.
செல்லா : சரி! பொருளாய் வேண்டாம். காசாய் முப்பதாயிரம்
தர வேணும்.
சோமு : சரி! எப்ப முகூர்த்தம் வைக்கலாம்?
செல்லா : எப்ப காசு ஆயத்தமோ அப்ப
சோமு : அப்ப மகனைச் சுறுக்குக் கண்டுபிடிச்சு வீட்டுக்குக்
கொண்டாங்கோ. நான் வர்றன்.
துரித வெட்டாகக் காட்சிமாறுகிறது.
129

Page 78
சில்லையூர் செல்வராசன்
அங்கம் 25
சோமு முனியாண்டி வீட்டுக்கும் முருகன் வீட்டுக்கும் சென்று அவர்களுடன்உரையாடும் துரித மெளனக் காட்சிகள் கோர்வையாய்த் தொடர்ந்து நண்பகலில் அவன் வீடு திரும்பி விறாந்தையில் ஏறும் காட்சியாகநிலைக்கிறது.
சோமு : கமலி! அந்தக் காணி உறுதிகளை எல்லாம்
எடுத்திட்டு வா. கனகம் : ஏன் மேனை உறுதியள்? சோமு : வாற கிழமை யோகத்துக்கும் குமாருக்கும்
கல்யாணம் அம்மா!
கனகம் : தம்பி என்ன சொல்றாய்? சோமு : செல்லாச்சி மாமி சம்மதிச்சாச்சு. முப்பதினாயிரம்
ரூபாய் காசாய்ச் சீதனம் கொடுக்க வேணும்.
கனகம் : அதுக்கு? சோமு : விடுவளவு, வயல், பனை வளவு, தோட்டக்காணி எல்லாம் ஈடு வைக்கப் போறன். போதாட்டி விக்கப் போறன்,
கனகம் : எங்கை? ஆருக்கு? சோமு : தீவிலே முருகனுக்குத் தெரிஞ்ச ஈடுபிடிக்கிற
ஓராள் இருக்காம். முருகனையும் கூட்டிக் கொண்டு போறன். பிந்தினா நாளைக் காலைமைதான் வருவன். கமலி! எங்கை உறுதியள். கனகம் : ராசா! ஒண்டையும் முன்பின் யோசியாமல் இதென்ன மேனை.? எல்லாத்தையும் வித்துச் சுட்டுப்போட்டு
130

தணியாத தாகம்
நாங்கள் எங்கை போறது? சின்னவளை என்ன செய்யிறது? அவள் உனக்குத் தங்கச்சியில்லையே!
சோமு : அம்மா! என்னோடை ஒருத்தரும் ஒண்டும் இப்ப பேசக்கூடாது. தயவு செய்து நான் சொல்றபடி நடவுங்க.
கனகம் : முருகா! நீ விட்ட வழி! தகப்பனைப் போல இவனும் இப்பிடி ரோசம் பிடிச்சவனாய் வந்து சேர்ந் திருக்கிறான்.
கமலி : (உறுதிகளை சோமுவிடம் கையளித்த பின் தயங்கி)
அண்ணை.
சோமு : என்ன?.
கமலி : குமாரைக் காணேல்லையாம்.
சோமு : உம் அவன் அங்கை கனகுவோடை குடிச்சுப்
போட்டு முனியாண்டி வீட்டிலை கிடக்கிறானாம். வீட்டை ராவைக்கு வந்திடுவான், முனியாண்டி எல்லாம் கவனிப் பான். (கமலியை உற்றுப் பார்த்து) ஆ? கமலி. உன்ரை ஒரு காதுத் தோடெங்கே?
as D65 (காதைத் தடவி) ஆ? ஐயோ? சுரை இளகிக்
கிடந்தது - எங்கேயோ விழுந்து போச்சாக்கும்.
சோமு : உம்! தேடிப்பார்.
&ւD6ծ : ஐயோ! பொறுங்கோண்ணை. போகாதையுங்கோ.
சோமு : ஏன்?
аьрө9 (பதகளித்தபடி) எனக்கு மனதுக்கை ஏதோ செய்யுது.
நீங்கள் வெளிக்கிடற நேரம் பார்த்து அபசகுனம் மாதிரி ஒத்தைத் தோடு காணாமல் போச்சு. ஐயோ தேடி எடுக்குமட்டும் கொஞ்சம் பொறுங்கோண்ணை. சோமு : உஸ்! இந்தச் சகுனம் அபசகுனம் எல்லாம் பார்க் காதே எண்டு எத்தனை தரம் சொல்றது. உம்?
13

Page 79
சில்லையூர் செல்வராசன் ஆத்திரத்துக்குச் சாத்திரம் இல்லை. பேசாமப் போய்த் தேடி எடு, உம் போ. தயங்கித்தயங்கிக்குசினிவாசலில்நின்றபடிசோகமே உருவாக
யோகம் : அண்ணை!
சோமு : என்னம்மா? யோகம் : நாளைக்குத்தான் வருவீங்களா? சோமு : உம்
யோகம் : அப்ப சாப்பிட்டிட்டு. சோமு : அங்கை முருகன் காத்துக் கொண்டிருப்பான்.
யோகம் : (குரல்தழுதழுக்க) என்ரை கையாலை சாப்பிட்டிட்டுப்
போங்கோ அண்ணை.
சோமு : (தேறுதலாக) கரைச்சல் படுத்தாதே ராசாத்தி. நேரம் போச்சு. உனக்காகத்தானே போறன். எங்கே? சிரிச்சுக் கொண்டு போயிட்டு வாங்கோ அண்ணை எ டு சொல்லு!
யோகம் : (சாந்தமாக சோகப் புன்னகை படர்த்தி) போயிட்டு
வாங்க அண்ணை.
சோமு : எடி வடிவாய்ச் சிரியடி. வாற கிழமை வயிறு முட்ட உன்ரை கல்யாணச் சோறு சாப்பிடப் போறேன்ரி உன்ரை அண்ணன். கமலி. அம்மா. நான் போட்டு வாறன்.
அவன் புறப்பட ம லை மயங்கி இரவு புலர்ந்து சென்று காட்சி தேய்கிறது.
132

தணியாத தாகம்
அங்கம் 26
ஏறத்தாழநள்ளிரவு, ஊர் உறங்குகிறது.நாய் ஒன்று ஊளையிட, குமார்சற்றுத்தடுமாறியவண்ணம் விடுதிரும்பிவிறாந்தையில்ஏறுகிறான். காத்திருந்துவாசற்படியில்துங்கிவிழுந்திருந்த செல்லாச்சி விழித்துக் கொண்டுவிளக்கை ஏற்றுகிறாள்.
செல் : என்ரை ராசா! எங்கேயடா போனனி? நேற்றுப் பின்னேரம் துவக்கம் இந்தச் சாமம் மட்டும் நான் பட்டயாடு.
குமார் : அம்மா! அதேயளவு நேரம், அதை விடக் கூட
நான் பட்டபாடு.
செல் : ஏன் குமார்? நீ எங்கை போனணி?
குமார் : முனியாண்டி வீட்டிலை இருந்தன். எனக்கெல்லாம்
தெரியும். சோமு முனியாண்டிக்குச் சொல்லி, முனியாண்டி எனக்கெல்லாம் சொன்னான்.
செல் : என்னடா? குடிச்சியா? நீ நல்லாய்க் குடிச்சிருக்கிறாய்.
எப்படா இந்தப் பழக்கம் எல்லாம் பழகினாய்?
குமார் : அது கன காலம்! அம்மா! நீங்கள் தான்
எலலாததுககும காரணம.
செல் : நானா?
குமார் : ஓம்! நீங்கள் என்னைக் கோழையாக்கிட்டீங்கள்.
செல்லம் தந்து தந்தும், சின்னப்பிள்ளை மாதிரி நடத்தியும் என்னைக் கோழையாக்கிட்டீங்க! செல் : பிதற்றாதயடா? சாப்பிட வா! குமார் : சாப்பாட்டைத் தந்து உடம்பைத் தானம்மா வளத்தீங்க. உணர்ச்சியைத் தந்து உள்ளத்தை வளக்கேல்லை. இப்ப நான் எல்லாம் உணர்ந்திட்டன். உங்கடை கட்டுப்பாட்டை விட்டுப் போன இருபத்தினாலு
133

Page 80
சில்லையூர் செல்வராசன்
மணித்தியாலத்திலே நான் எல்லாம் உணர்ந்திட்டன். செல் : நீ சொல்லுற ஒண்டும் எனக்கு விளங்கேல்லேயடா
குமார். குமார் : உங்களுக்கு இது விளங்காதம்மா! விளங்கியிருந்தா இவ்வளவு தூரம் என்னை ஒரு குழந்தை மாதிரியே வளர்த்திருக்க மாட்டீங்கள். விளங்கியிருந்தா ஒரு பெண்ணை முப்பதாயிரம் ரூபாய்க்கு விலை பேசியிருக்கமாட்டீங்கள். விளங்கியிருந்தா என்ரை ஐயாவை நீங்கள் எனக்கு அம்மாவாக்கியிருக்க மாட்டீங்கள். செல் : குமார்! ஆசைக்கொரு பிள்ளையாய்ப் பிறந்த உன்னைத் தவிர உலகத்திலே எனக்கு ஒரு பற்றுப் பாசம் எதுவும் கிடையாதடா. நீயே கண்டபடி வாய்க்கு வந்தமாதிரி என்னை ஏதேதோ சொல்லிறியே! நான் என்னடா செய்ய? குமார் : ஒண்டும் செய்ய வேணாம் அம்மா. நீங்கள் சொன்னபடி நான் நடந்த காலம் முடிஞ்சுது. நான் நடக்கிறபடி நீங்கள் கண்டு கொள்ள வேண்டிய காலம் வந்தாச்சு. நாளைக் காலையிலேயெ நான் யோகத்தைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். எந்தவித நிபந்தனையும் நீங்கள் போட முடியாது. சீதனம், பாதனம், அது, இது ஹங் மூச்! யோகம் எனக்குத் தெய்வம் மாதிரி அம்மா! நீங்களென்ன? உலகமே அவளுக்கு முன்னாலே எனக்கு ஒரு தூசு. தூசம்மா! செல் : சரி. சரி உன்ரை விருப்பம்! நீ இனி என்ன சொல்றியோ அப்படியே செய்யிறன். இப்ப வா. சாப்பிட் டிட்டுப் படு. காலைமை உன்ரை விருப்பம் போல செய். குமார் : உம் நாளைக் காலைமை! நாளைக் காலைமை எல்லாம் முடிஞ்சிரும். எல்லாம் முடிஞ்சிரும். அவன் உண்ணாமலே அறைக்குட் சென்று கட்டிலில் சாய காட்சி கரைகிறது.
134

தணியாத தாகம்
அங்கம் 27
காலைபுலர்கிறது. சோமுவும்முருகனும் சோமுவிட்டை அடையும் முடக்கைச்சமீபிக்கிறார்கள்.வீட்டுத்திக்கிலிருந்துஅழுகுரல்கேட்கிறது. அவர்கள் எட்டிநடந்துஒழுங்கையில் இறங்க முனியாண்டி கண்டுவிட்டு அவர்களை நோக்கிப்புலம்பியபடி விரைகிறான்.
முனி : சின்னையா. மோசம் பண்ணிட்டாங்களே!
சின்னம்மா மோசம் பண்ணிட்டாங்களே.
சோமு படலையைத் திறந்து உள்ளே ஓடுகிறான். கிணற்றடியில் யோகத்தின் பிரேதம் துணியால் முடி வைக்கப்பட்டிருக்கிறது. ஊர் மக்கள் சுற்றிநிற்கிறார்கள். சோமு : (பிரேதத்தை அணுகிக்கதறலாக) யோகம். யோகம்.
'ஆனந்தக் கண்ணிரோ" என்ற பாடலின் இசை காட்சி முற்றிலும் பின்னணியில் கேட்கிறது.
கமலி ஓடிச் சென்று தமையனைக் கட்டிக் கதறிய வண்ணம், யோகத்தின் கடிதம் ஒன்றை அவனிடம் கொடுக்கிறாள். அவன் அதை விரிக்க, யோகத்தின் குரலிற் கடிதம் படிக்கப்படுகிறது. அக்குரலின் பின்னணியில் ஈமச் சடங்குகள் ஊர்ச் சம்பிரதாய முறைப்படி நடந்து முடிகின்றன.ஒன்றின்மீதொன்றுபதிவுக்காட்சிகளாகமயானத்தில்தகனம் வரை காட்சிகள் தொடர்கின்றன. இறுதியில் சிதை எரியும் காட்சிக் கலப்புடன் திரை இரு பிரிவாகத் தோற்றம் தருகிறது. ஒரு பாதியில் சிதைக்கு நடுத் தொலைக்காட்சியாக, சோமு கமலியைத் தன் இரு கரங்களாலும் நெஞ்சோடணைத்துப்பாதுகாப்பாக இறுகத்தழுவிக்கண் மூடி நிற்கிறான். மறு பாதியில் சிதைக்கு நடுத் தொலைக்காட்சியாக, குமார் முழங்காலைக் கட்டிய வண்ணம் தலையைக் கால்களிடை புதைத்துத் திகைத்திருக்கிறான். இரு பாதிக் காட்சிகளும் ஈற்றில் உறைந்துஅசைவின்றித்தரித்துநிலைக்க, படம் முற்றுகிறது.
135

Page 81
சில்லையூர் செல்வராசன்
யோகம்: (குரல் மட்டும் கேட்கிறது)
என்ரை உயிரான அண்ணா! போக முதல் கடைசியாக உங்கடை பாதத்தைத் தொட்டு வணங்கிற பாக்கியம் கூட எனக்குக் கிடைக்கேல்லை. கடைசியாப் போற நேரம் என்ரை கையால உங்களுக்குச் சாப்பாடு போட மாட்டேனோ எண்டு ஏங்கினேன். அதுவும் எனக்குக் கிடைக்கேல்லை. எங்கடை கமலிக்குஞ்சு வயசிலை சின்னவள் எண்டாலும் அறிவிலை என்னை விடப் பெரியவள் என்னைவிட உலகத்தை அதிகம் அறிஞ்சு கொண்டு எவ்வளவோ செய்தாள் அவள்தான் அடிக்கடி சொல்லுவாள். இந்த அக்காவுக்கு எப்பவும் கிணறுதான் கதி எண்டு சாத்திரம் சொன்ன மாதிரி அவள் வாக்குப் பலிச்சிட்டுது. கிணறே எனக்குக் கடைசிக் கதியாய்ப் போச்சு/நீங்கள் ஆசையாய் அவளுக்கு வாங்கிப்போட்ட தோட்டிலே ஒண்டுதுலைஞ்ச நேரமே எனக்குத் தெரியும் உங்கடை முத்துத் தோடுகளிலை ஒனடை நீங்கள் இழக்கப் போறியள் எண்டு, அப்பவேநான்தீர்மானிச்சிட்டன் அம்மா சொல்றது நினைவிருக்கா அண்ணை? யோகக்காரி எண்டுதான் யோகம்மா எண்டு எனக்குப் பேர் வச்சினமாமம் நான் யோகக்காரிதானே அண்ணை?உங்களைப்போலே ஒரு உயிரான அண்ணனை, கமலி போலே உருகிற நெஞ்சுள்ள அருமைத் தங்கச்சியை, அம்மாவைப் போலே தியாகமே உருவான தாயை, அப்புவைப் போலே ஒரு பாசக்கடலை, பெற்றிருந்த நான் ஒரு யோகக்காரிதானே? உங்கள் மட்டிலே ஒரு பிழை செய்திட்டன் உங்கள் எல்லோரையும் விடக் கூடுதலாய் வேறொருத்தரை நேசிச்சிட்டன் நான் பெம்பிளை அண்ணா. ஆனபடியால் அது இயல்பு தானாக்கும் அவர் இனித் திரும்பி வந்தாலும் அவரோடை நான் இனையிறது சரிப்படாது. ஆனாலும் நான் அவற்றை சொத்தெண்டு ஒரு நாள் நொடி மயக்கத்திலே வாக்குக் குடுத்திட்டன் தாகம் தீர்க்கிறதண்ணிதாற எங்கடை கிணறு சாட்சியாய் வாக்குக் குடுத்திட்டன் அந்தக் கிணத்துக்கே என்னைப் பலியிடுறதுக்கு அதுவும் ஒரு காரணம் குடுத்த வாக்கைக் காப்பாத்தத் தானே வேணும்? அவற்றை கடைசிக்கடிதத்தைநான் வாசிக்கேல்லை. அது இந்தக்கினppேெல
136

தணியாத தாகம்
தான் இணைஞ்சு போச்சு அந்தக் கடிதத்தோடைநான் இணைஞ்சு போவன்
இணையாத தோடுகளைப் பற்றி அண்ணை எழுதின பாட்டு ஞாபகமிருக்கு. நானும் அவரும் கூட இணையாத தோடுகளாய் போயிட்டம் அண்ணை. உங்கடை பாட்டு இண்ைடைக்குக் கூட விளங்குது உலகத்திலே எல்லாமே இணையாத தோடுகளட்த்தான் கிடக்கு. அன்னை, முப்பதினாயிரம் ருபாயோடை வந்துதான் இந்தக் கடிதத்தை வாசிப்பியள் தணியாததாகத்தாலைதவிக்கிற உலகம் இது பணத்தாகம். பதவித்தாகம் கல்வித்தாகம், காதற் தாகம். எத்தனை எத்தனையோ தாகங்கள். இந்தத் தாகம் தனியாத உலகத்திலை எங்கடை கமலிக்குஞ்சு தடுமாறிப் போவாள். எனக்கெண்டுநீங்கள் வாங்கிவற சீதனம் கமலியை எண்டாலும் வாழ்விக்கட்டும் அவருக்கு. குமாருக்கு. என்ன சொல்ல-? தேறுதல் சொல்லுங்கோ. அண்ணா. அம்மா. கமலி. நீங்கள் மட்டுமா? செல்லாச்சி மாமி, மாமா, முனியாண்டி, லட்சுமி, முருகன், சிறுமிவனஜா. எத்தனை பேர் எல்லோருக்கும் இறுதி வணக்கம்.
மீண்டும் மீண்டும் உங்களுக்கே தங்கையாய்ப் பிறக்க வேண்டு மெண்ட ஒரே தனியாததாகத்தோடு போகிறேன் போய் வருகிறேன்
9600600IIIf
வணக்கம்!
உங்கள் யோகம்
137

Page 82
நூலாசிரியரின் பிற நூல்கள்
உரை நூல்
ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி
கவிதை நூல்கள்
ஔரடங்கப் பாடல்கள் சேக்ஸ்பியர் ஒரு ஜீவநதி - ரோமியோ ஜூலியற் தலைவர்கள் வாழ்க மாதோ சில்லையூர் செல்வராசன் கவிதைகள் - தொகுதி 1
(1997 ஆம் ஆண்டிற்கான அரச சாகித்திய விருது பெற்றது)


Page 83
க்கி n -
- தெ *町 କେଁଶ୍
தினகரன், வீர
1950ம் ஆண்டு