கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வான்மீகியார் தமிழரே!

Page 1
தென்புலோஜியூர் மு.கணபதிப்பிள்
 


Page 2

வான்மீகியார் தமிழரே!
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
ஆசிரியர் தென்புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
விற்பனை உரிமை
Trff,26Ouro

Page 3
முதலாம் பதிப்பு: அக்டோபர், 1966." (C)
oí7&ads Lu TT. 1-75.
PAARI NILAYAM 59, BROADWAY : MADRAS-1.
செளந்தரா பிரிண்டர்ஸ், சென்னை-17

பதிப்புரை
வரலாற்றுக்கு எட்டாத காலம் என இதுவரை கருதப் பட்டு வந்த தொல் பழந்தமிழகத்து ஆதிகாலத்தின் வரலாற் றினை உருவாக்குவதற்குப் பிறர் எவரும் இதுவரை கண்டு கொள்ளாத தனிச் சான்றுகளை எடுத்து முதன் முதலாகக் காட்டி நிறுவிய பெருமை ஈழநாட்டின் பன்மொழிப் புலவர் தென்புலோலியூர், திரு. மு. கணபதிப்பிள்ளை அவர்களையே சாரும். இலக்கிய ஆராய்ச்சித்துறையில் மட்டுமன்றி, மொழியாராய்ச்சி, வரலாற்ருராய்ச்சி முதலிய துறைகளிலும் அவர்கள் இன்று முன்னணியில் விளங்குகின்ருர்கள். மொழி பெயர்ப்புத் துறையிலும் சொல்லாக்கத் துறையிலும் அவர் கள் புரிந்துவரும் பெரும் பணிகளையும் தமிழுலகம் நன்கு அறியும், அவர்கள் தமது செம்மைசான்ற ஆராய்ச்சிகளின் பயனகத் தாம் காணும் புத்துண்மைகளையும் அறிவுப் புதிர் களையும் பல ஆண்டுகளாகவே பத்திரிகைகள் வாயிலாகவும் வாஞெலி வாயிலாகவும் வெளியிட்டு வருகிருர்கள். அவை களுள்ளே சிலவற்றையாவது தொகுத்து நூல்வடிவில் வெளி -யிடுதல் வேண்டும் என யாம் கொண்டிருந்த எண்ணமானது இன்று நிறைவேறுவதை நிக்னந்து மகிழ்ச்சியடைகின்ருேம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சிக்குத் திசைகாட்டிகளாக விளங் கும் அவர்களது கருத்துக்கள் தமிழுலகுக்குப் பயன்படுதல் வேண்டுமென்னும் குறிக்கோளுடன் அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடுகின்ருேம். தமிழுலகு எமது பணிக்கு ஆதரவளிக்கும் என நம்புகின்ருேம்.
-பதிப்பாளர்,

Page 4
உள்ளுறை
வான்மீகியார் தமிழரே! ஆடலும் பாடலும் நெடுங்கணக்கின் கதை பழந் தமிழ்க் கடவுள் முருகன்
E uği85lbr
6O.
வள்ளுவர் கூறிய அறிவியல் ‘ஒப்புரவு” . 67
திருவள்ளுவர் “ககை” செய்கிருர்! மொழிபெயர்ப்பு - ஒரு கலை
7Ο.
73

வான்மீகியார் தமிழரே!
சமக்கிருதம் தமிழ்மொழியின் தாய் எனக் கருதப் பட்டு வந்தது ஒரு காலம். அந்தக் காலம் மாறி, தமிழ் மொழியின் தாய்மையை உணர்ந்துகொண்ட மே8ல காட்டு ஆராய்ச்சியாளர் பலர், இன்று தமிழின் தொன் மையையும் விழுப்பத்தையும் ஊன்றி ஊன்றி ஆராய்ந்து வருகிறர்கள். திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்று கூறிக்கொண்டிருந்த காலம் போய், சமக் கிருதத்தின் தாயைப் பெற்ற தாயும் தமிழே என்று கூறும் காலம் இன்று பிறந்திருக்கிறது. அவ்வளவில் அமையாமல், உலக மொழிகள் யாவற்றுக்கும் மூல முதற்றயும் தமிழ்மொழியே என்ற உண்மை புலனுகத் தக்கவகையில் இன்றைய ஆராய்ச்சி இயன்று வரு கின்றது.
மூலத் தாய்மொழி தன்னிகரில்லாத எங்கள் தமிழ்மொழி, சமக்கிரு தத்துக்கு மட்டுமன்றி, அதன் தாய்மூலங்களாயமைந்த பழைய பாளி, பிராகிருத மொழிகளுக்கும் முலத் தாய் மொழி என நிறுவுவதற்கான நற்சான்றுகள் பல

Page 5
6
ஆராய்ச்சிவாயிலாக இன்று கிடைத்து வருகின்றன. வட புலத்துத் தாய்மொழிகள் யாவும் திராவிடக் கலப் புள்ள பண்படா ஆரியக் கலவை மொழிகள் என்றே கருதுதல்வேண்டும். பாளி, பிராகிருதமொழிகள் எனப் படுபவையெல்லாம் திராவிடச் சொற்களையும் கருத்துக் களையும் கலந்து சமணர்களும் பெளத்தர்களும் வகுத் தமைத்த கலவை மொழிகளேயாகும். பாகதம் எனப் படும் பிராகிருதம் பாமரர் மொழி. அம்மொழியிலேயே சமணர்களும் பெளத்தர்களும் பேசியும் எழுதியும் வங் தார்கள். பிராகிருதம் எனப்படுவதும் ஒரு தனி மொழி யன்று. ஓரினத்தைச் சேர்ந்த பல மொழிகளை அது குறிப்பதாகும். பாளி, அர்த்தமாகதி ஆகிய மொழிகள் கூட அதனுள் அடங்கிவிடுகின்றன. அவற்றுள், மகா ராட்டிர காட்டில் வழங்கி வந்த மகாராட்டிரியும், தரசேன காட்டில் வழங்கிவந்த செளரசேனியும், மகத நாட்டில் வழங்கிவந்த மாகதியும் பிராகிருதத்துட் சிறப்புடையனவாகக் கருதப்படுகின்றன. சமக்கிருத ாகாடகங்களிலே விரவி வந்துள்ள பிராகிருதம் பெரும் பாலும் செளரசேனியேயாகும். கி. பி. பதினேழாம் நூற் றண்டு வரையில் வாழ்ந்த மார்க்கண்டேயர் என்பார், தாம் இயற்றிய பிராகிருத சருக வம் என்னும் நூலிலே பிராகிருதத்தினை, பாடை, விபாடை, அபப்பிரமிசம், பைசாசம் எனப் பகுத்துக் கூறுகின்றர்.
பைசாசம் என்பதை அங்ாவனம் பகுத்துக் கூறி யிருந்தாலும்-பிற பிராகிருத மொழிகளைப் போலக் கரு தப்படாமல்-தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு மொழியாக வும்-சமக்கிருதத்துக்கு ஒப்பான மொழியாகவும்-கரு தப்பட்டு வருவதை யாண்டும் காணலாம்.
கி. பி. மூன்றம் நூற்றண்டுவரையில், மிகுதியான தமிழ்ப்பண்பு மேலும் ஏற்றப்பட்டுப் புதிதாக அமைக்

7
கப்பட்ட திருந்திய மொழியே சமகதிருதம் ஆயிற்று. சமக்கிருதம் என்னும் சொல்லுக்கே 'திருந்தியது-ாகன் ருகச் செய்யப்பட்டது' என்பதே பொருளாகும். உருத் திரடர் என்பார் இயற்றிய காவியாலங்காரத்துக்கு உரை வகுத்த கமிசாது என் பார், 'பிராகிருதம்" எனும் சொல்லினுக்கு 'இலக்கண விதிகளின் கட்டுப்பாடற்ற இயற்கைமொழி” என்றும், "முன்னுளிற் செய்யப்பட் டது” என்றும் பொருள் கொள்ளுகின்றர். சமக் கிருதம் பிராகிருதத்தினையே தாய்மூலமாகக் கொண்டது என் பதையும், இலக்கியப் பண்பில்லாதது என்பதையும் ஆராய்ச்சியாளர் எல்லோரும் ஒப்புக் கொள்வர்.
பாணினியின் இலக்கணம்
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைச்சங்கமெலாங் தொழுதேற்றும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில் கடல்வரைப்பின் அதன்பெருமை யாவரே கணித்தறிவார்.
காஞ்சிப் புராணம் இங்ங்னமாக எடுத்தோதுகின்ற பாணினியே சமக்கிருதத்துக்கு முதன் முதலாக இலக் கணம் அமைத்தவர் எனக் கூறப்பட்டாலும், அவர் இயற்றிய பாணினியம் எட்டு அத்தியாயங்கள் கொண்டதாய் அமைந்திருந்ததால் அட்டாத்தியாயி எனப்பட்டது. பாணினி இயற்றிய இலக்கணமானது சமக்கிருத இலக்கணமாகப் பிற்றைக் காலத்திற் கொள்ளப்பட்டாலும், அது சமக்கிருத இலக்கணம் அன்று. சமக்கிருதம் என்ற பெயரே அவர் காலத்தில் வழங்கவில்லை. வேத மொழிக்குப் பிற்பட்டதும் சமக் கிருதத்துக்கு முற்பட்டதுமான ஒரு மொழியில் அம் மொழிக்கு ஓர் இலக்கணம் அவரால் அமைக்கப்பட்டது

Page 6
8
எனக் கூறுவது பொருத்தமாகும். தமது இலக்கணத் துக்குரிய மொழியினை அவர் 'பாடை"எனவே(“பாஷா" என) குறிப்பிடுகிறர். அவர் காலத்துக்கு முன் வேத மொழிக்குரிய இலக்கணமாகப் பிராதிசாக்கியங்கள் விளங்கிக்கொண்டிருந்தன. இந்தப் பாணினி காலத் திலே சமக்கிருதத்தில் இலக்கியம் எதுவும் இருக்க வில்லை. அப்படியிருப்பவும், இலக்கணம் தோன்றியது வியப்பாயிருக்கிறது. இப்படியிருக்க, இன்னேர் இலக் கணம் பாணினிக்கு முன்னதாக 'ஐந்திரம்” என்னும் பெயருடன் வழங்கியதென்ற மரபுரையும் உள்ளது. மொழியே கன்றகச் செய்யப்படுமுன் இலக்கணம் உரு வாகின்றது! சான்றுகள்தாம் எவையும் இல்லை.
எழுதா மொழி
ஆரியர்கள் தென்னுட்டுக்கு வந்து உலாவத் தொடங்குமுன், அவர்கள் மொழியானது ஏட்டில் எழு தப்படாத-எழுதா-மொழியாகவே இருந்தது. ஆரியர் கள் முதன்முதலாக வட இந்தியாவிற் புகுந்தபோதே அங்கு வழங்கிக்கொண்டிருந்த மொழி தமிழேயாகும். ஆரியர்களும் தமிழர்களும் கலந்து வாழ்ந்த காலத்தில் இரு சாரார் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் கலப்பு ஏற்படுவதாயிற்று. மொழித்துறையிலும் அப்படியே. எழுதப்படாத நிலையிலிருந்த ஆரியர் மொழி, அப் பழைய நாட்டிலிருந்த பழந்தமிழ் வரிவடிவை கோக் கியே, தனக்கென ஓர் எழுத்துமுறையையும் படைத் துக்கொள்வதாயிற்று, ஆரியக் குடும்பத்தினைச் சார்ந்த பிற மே8லயாரிய மொழிகளின் எழுத்தமைப்புக்கள் சமக்கிருதத்தின் எழுத்தமைப்பை ஒத்திராததொன்றே எனது கூற்றினை நிறுவுவதற்குப் போதுவதாகும். தமிழ் மொழியினை ஒரளவு பயின்றுகொண்ட ஆரியர்,

9.
தமிழ்மொழியின் போக்கினைத் தமது வன்மைக்கு ஏற் றளவில் நுனிந்தறிந்து, கமது மொழியினையும் பண் படுத்தி, எளிமையும் செம்மையும் வாய்ந்ததாக்க முயன்றர்கள். தமிழின் போக் கினைச் சார்ந்து எளிமையாக்கப்பட்ட மொழியில் ஒலியமைப்பு, தொட ரமைப்பு ஆகியனவும் தமிழினை முன்மாதிரியாகக் கொண்டே அமைக்கப்பட்டன. அக்காலத்திலேயே தமிழ் மொழியிலிருந்து பன்னூற்றுக் கணக்கான சொற் களையும் இந்த ஆரியம் எடுத்து வழங்கத் தொடங்கி விட்டது. படிப்படியாக, சமக்கிருதம் தெய்வமொழி யாகி, பிற மொழிகளையெல்லாம் "பேய் மொழிகள்” (பைசாச பாஷைகள்) ஆக்கிவிட்டது.
தெய்வ மொழி-தேவ பாடை
சிவபெருமானே பாணினிக்குச் சமக் கிருதத்தையும் அகத்தியனருக்குத் தமிழினையும் அருளினர் என்பர் கம்பாகாட்டாழ்வாரோ, சமக்கிருதத்தினைத் தேவபாடை யாக்கிக் கொண்டு தமிழினை வெறுங் தமிழாகக் குறிக் éმცmფft:
“தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவ ரானவர் தம்முளு முந்திய
காவி ஞருரை யின்படி நான்தமிழ்ப்
பாவி ஞலி துணர்த்திய பண்பரோ” என்பது இராமாயணத்துக்கு அவர் இடுகின்ற அத்தி பாரம். தமிழும் சமக்கிருதத்தைப் போலவே தெய்வ மொழியென்பதைக் கம்பர் மறந்து போனுரோ என் னவோ! இதைக் கண்டுதான் போலும் திருவிளையாடற் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவர் கொதிக்கிறர்; சீறுகிறர்:

Page 7
10
“கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுங் தமிழேனை மண்ணிடைச் சிலவிலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ” என்னும் பாடல் அவரது தமிழ் கனிந்த உள்ளத்தி லிருந்து ஆத்திரத்தோடு பிறக்கின்றது. தமிழ்ாகாட்டுப் புலவர்களையும் பிறமொழிப் புலவர்களையும் விளித்து விளம்புகின்றர்: 'சொல்லுங்கள் பார்க்கலாம்’ எனக் கூறி எ க்களிக்கின்றர். இவைகளையெல்லாம் மறந்து விட்டீர்களா? என்று அறைகின்றர். அவரது பாடலில் உணர்ச்சி ஒரு தனி வீறுகொண்டு உறுமுகின்றமையை யாம் காண்கின்றேம்.
“தொண்டர் காதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்” என்று இயம்புகின்றர். ஒப்பியன் முறையிற் பார்க்கும் போது வயதிவர் கோலங்கொண்ட சமக்கிருதம் விரை விலே இறந்துபடும் என்பதை உணர்ந்தாரோ என் னவோ அல்லது, அவர் ஏன் 'கன்னித் தண் தமிழ்” என நவிலவேண்டும்?
எப்படியோ, காலப்போக்கில் - இந்தத் தேவபாடை -தெய்வ மொழி-வழக்கொழிந்துவிட்டது. இறந்து விட்டது. தேவ பாடையாயின் இறந்துபடுவதெங் ங்னம்?
ஆரியர்
ஆரியர் இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிந்தவர் கள். நாடோடிகளாகத் திரிந்த அவர்களுக்கு நாடோ,

அரசோ அமையவில்லை. அந்த நிலையில் அவர்கள் திரிந்தபோது மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கட்டி நாகரிகத்துடன் வாழ்ந்த காடுகளைப் பற்றிப் பேசும்போது, காட்டைப்பற்றிப் பேசாமல்-மக்களையே பற்றிப் பேசுவார்கள். பாண்டியர், சோழர், கெளரவர் எனக் கூறுவார்கள். காலத்தினுல் முற்பட்ட அவர்கள் இலக்கியங்களிலே பாண்டி நாடு, சோழ நாடு, சேரநாடு என்ற பேச்சே இல்2ல.
ஆரியன் என்ற சொல்லும், உண்மையில், “ரு” என் னும் வினைப்பகுதியிலிருந்துதான் தோற்றியது எனக் கொள்ளுதல் வேண்டும். சமக்கிருதத்தில் வெவ்வேறு கணங்களில் வருகின்ற 'ரு' என்னும் தாதுவுக்குப் பெரும்பாலும் 'கடத்தல்” என்பதே பொருள். எனவே, ஆரியன் எனும் சொல்லுக்கு'ாகாடோடி-ஊரூராகத் திரி பவன்’ என்பதே பொருள் எனக் கொள்ளுதல் சிறப் புடையது. ஆரியர்கள் வருவதற்கு முன்னதாகத் தென் ணுட்டில் வடகாட்டிலெல்லாம் தாசர்களின் அரசு நில விக்கொண்டிருந்தது. 'தாசன்” என்னும் சொல்லுக்கு இக்காலத்திலே, 'அடிமை"என்ற பொருள் கூறப்பட்டா லும், 'தாஸ், தாச்” என்ற இரண்டு வினைப்பகுதிகளுக் கும் “கொடுத்தல்” என்ற பொருளே வழக்கிலிருந்திருக் கிறது. ஆகவே, "தாசன்” என்னும் சொல்லினுக்கு முத லிலே உண்டான பொருள் 'கொடைவள்ளல்,உயர்குடித் தோன்றல்’ என்பதேயாகும். மூலச் சொற்கள் சிலவற் றின் பொருள்கள் எப்படி மாறியுள்ளன என்பதற்கு, "வள்ளல்’ எனப் பொருள்கொண்ட சொல் 'அடிமை” என்ற பொருள் தருவதையும், “காடோடி" எனப்பொருள் கொண்ட சொல் இன்று "உயர்ந்தவன், பெருங்குடி மகன்" என்ற பொருள்களைத் தருவதையும் காட்ட
GD)

Page 8
12
ஆரியர்கள் தமிழ்ாகாட்டுக்கு வந்த காலத்தில், அவர்களை 'மிலேச்சர்” என்றே தமிழ்மக்கள் கொண்டார் கள் என்பதற்குத் தகுந்த சான்றுகள் உள்ளன. பிங் கலந்தை, திவாகரம்?ஆகிய நிகண்டுகள் இரண்டுமே, 'மிலேச்சர் ஆரியர்’ எனக் குறிப்பிடுகின்றன. சூடா மணி நிகண்டுகூட, "மி2லச்சரே யாரியர்க் காம் மிலேச் சரும் விதித்த பெயரே' எனக் குறிப்பிடுவதைக் காண 6Os TLD .
ஆரியர்கள் தென்னுட்டுக்கு வந்த காலத்திலே, தமிழினைச் செவ்வையாகப் பேச இயலாதவர்களா யிருந்தமையால், அவர்களின் பேச்சு மக்களுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று எனத் தெரிகின்றது. உச்சி மேற் புலவர் கொள் கச்சினர்க்கினியர், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் முதலாம் தத்திரத்தில்-தாம் எழுதிய உரையில் - ஆரியர் பேசுக் தமிழினை ககைச்சுவைக்கு எடுத்துக்காட்டாகக் குறித்துள்ளார்.
ஆரியர்கள் செல்வாக்கும் அறிவும் மிகுந்த பிற்றை நாளிலே "ஆரியர்’ என்ற சொல் 'உயர்ந்தவர்” என் னும் பொருளினைத் தரத் தொடங்கிவிட்டது.
சமக்கிருதத்திலே காணப்படுபவை யாவும் முதல் என்றும், தமிழ்மொழியில் உள்ளன யாவும் சமக் கிருதத்தின் மொழிபெயர்ப்பு அல்லது இரவல் என்றும் ஆராய்ச்சியின்றிக் கூறுகின்ற மனப்பான்மை பிற் காலத்திலே எமது நாட்டிலே எழுந்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது. கண் ட பாவனையிற் கொண்டை முடிப்போரும் ஆரியர்க்குக் காக்கை பிடிப் போரும் அதற்குத் தெம்பு அளித்து வருகின்றர்கள். அதனைக் கண்டு, தமிழாராய்ச்சியை மேற்கொண்ட பெரியோர்பலர் கவல்கின்றர்கள்.**ஆங்கிலக் கல்வியும்

13
அறிவியல் ஆராய்ச்சியும் "கம் காட்டிற் புகுந்து ஒன்றரை நூற்றண்டும், தமிழ் தனி வளமொழியெனக் கால்டுவெல் கண்காணியர் நாட்டி ஒரு நூற்றண்டும் ஆகியும், இன்றும் தமிழின் தனித்தன்மையைப்பற்றிப் பல பேராசிரியரும் ஐயுற்று வருவதால், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும், வேரும் ஆக்கமுங் காட்டி இன் னின்னது தென் சொல்லேயென நாட்டவேண்டிய நிலைமை நேர்ந்துள்ளது' என ஏங்குகின்றர்கள்.
எமது மொழியின் பெயர்
தொல் பழங்காலத்தில் எமது மொழிப் பெய்ர் “தமிழம்” எனவே இருந்ததால் வேண்டும். அக்காலத் திலே, மொழிப்பெயர்களும் காட்டுப்பெயர்களும்“அம்” ஈறு பெற்றே வழங்கி வந்துள்ளன. திவாகரத்திலே, பதினெண் பாடைகளின் பெயர்கள்,
*அங்கம் வங்கம் கலிங்கம் கெளசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம் துளுவம் சாவகம் சீனம் காம்போசம் பருணம் பப்பரமெனப் பதினெண் பாடை” என எடுத்தோதப்படுகின்றது.
“சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் (வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதினேழ் புவி தாமிவையே” என்னும் பழம் பாடல் காட்டுப் பெயர்களே எடுத் தோதுகின்றது. இவற்றிலெல்லாம் மிகுதியான பெயர் கள் “அம்” ஈறு பெற்றே வங்துள்ளன. இம் முறையாகப்

Page 9
14.
பார்த்தால் எமது தமிழ் மொழியும் “தமிழம்” எனவே இருந்திருத்தல் வேண்டும் என்பது வெறும் ஊகம் அன்று என்பது புலனுகும்.
தொல்காப்பியர் வழுவினுர்!
"தமிழம்” என்னும் சொல்லே, ஈறுகெட்ட மகர வீற்றுப் புணர்ச்சியாக, 'தமிழப் பிள்ளை, தமிழக் கூத்து, தமிழச் சேரி, தமிழத் தோட்டம், தமிழப் பள்ளி, தமிழ வரையன்' ஆகிய சொற்களையும் தோற்றுவித்தது. உலகத்தின் முதல் மொழியாராய்ச்சி நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப் பியனர், எழுத்ததிகாரத்திலே,
"தாழென் கிளவி தோலொடு புணரின் அக்கிடை வருதலுரித்துமாகும்.” எனக் கூறிவிட்டு, அடுத்த சூத்திரத்தில், "தமிழென் கிளவியு மதனே ரற்றே.” (385.) என அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததென்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. தொல்காப்பியனர் அவ்விடத்தில் வழுவினர் எனவே கொள்ளுதல் வேண்டும். தொல் காப்பியணுருக்குப் பல நூற்றண்டுகளுக்கு முன்ன தாகவே, “தமிழம்” என்ற வழக்கு நீங்கித் தமிழ் என்ற வழக்கு எழுந்திருத்தல் வேண்டும் என்பது இதனுற் புலனுகின்றது. பவணந்தி முனிவரும் தாம் இயற்றிய ாகன்னூலில், எழுத்தியலில்,
“தமிமிவ் வுறவும் பெரும்வேற்றுமைக்கே தாழுங் கோல்வங் துறுமே வற்றே.” (225.) எனக்கூறி, "த்மிழ்” என்னும்ாநி2லமொழு அகரச் சாரியை பெற்றுப் புணர்ந்ததாகக் காட்டுவர். இதுவும் பொருந்தாததேயாம். இவர்கள் கூற்றின்படியாயின்,

15
"கொங்க வண்ணன்" என்னும் புணர்மொழியினை"கொங்கு” என்னும் (நி2லமொழி அகரச் சாரியையோ அக்குச் சாரியையோ பெற்றுப் புணர்ந்ததாகக் கொள் ளூதல் வேண்டும். 'துளுவ வேளான்' என்னும் புணர் மொழியினைத் 'துளு' என்னும் நிஜலமொழி அகரச் சாரியையோ அக்குச் சாரியையோ பெற்றுப் புணர்ந்த தாகக் கொள்ளுதல் வேண்டும். அங்ாவனம் கொள்ளல் சாலாமையின் இவர்கள் கூற்றுப் பொருந்தாதென மறுத்தலே தருமமாகும்.
*வாழைப் பழம்?? படும்பாடு
இன்று,"வாழைப்பழம்” படுகின்றபாடு நாம் காண்" பது. பலருடைய வாய்களில் அது நுழையாமல் “வாள பளம், வாளப் பலம், வாயப் பளம், வாயப் பயம்” என் றெல்லாம் திரிவு பெற்றுக் கிடந்து உழல்வதைக் காண் கின்றேம். அதேபோல அக் காலத்தில் பழங் தமிழகத் துக்கு வந்த ஆரிய மக்களின் வாயிலும் “தமிழம்' நுழைய மறுத்தது. அதன் காரணமாக 'தமிழம்” எனும் சொல், "த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்-த்ராவிடம்” என் றெல்லாம்திரிந்து'திராவிடம்" என உருப்பெற்றுள்ளது* காரியம் இப்படியிருப்பவும், பிரயோக விவேக நூலார், 'திரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலுமது” எனத் தலைகீழாகக் குத்துக் கரணம் போடுகின்றர். ஏன்? இன்றும் சில வித்துவ மேதிகள், திராவிடமே தமிழ் எனத் திரிந்ததெனத் தமிழ் செய்கின்றர்கள்.
சமக்கிருதத்திலே "பழம்” இல்லை. எனவே, தமிழ்ச் சொல்லி2னக் கடனுகப் பெற்றர்கள். பெற்றபோதும், ழகரம் வாயில் நுழையவில்லை. எனவே, “பழம்' அவர் கள் பாடையில்"பலம்" என நிற்கிறது. கதலி பலம்" என

Page 10
16
வருகின்றது எங்கள் கதலி வாழைப் பழம். 'யானை
வாழைப் பழம்” எங்கள் காட்டில் வழங்கும் "சிங்களத் தில் ஆனை மாலு” ஆக நிற்பத2னயும் யாம் காண்கின் ருேம்.
தொல் பழங் காலத்து எல் நாடு
"எல்லே இலக்கம்” என்று கூறுகின்றது தொல்காப் பியம். எல்-இலக்கம்-ஒளி. "ஒளி நாடென்பது செங் தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தில் ஒன்று.” (தொல்காப் பியம் எச்ச. சூத். 6. உரை) என்பது யாம் அறிந்தது. “ஒளியராவார் பிற மண்டலங்களை அரசாளுதற்கு உரிய வேளாளர்". (கலித்தொகை உரை) என்பது நச்சினர்க்கினியர் கூற்றகும். 'பல் ஒளியர் பணிபு ஒடுங்க" (பட்டினப்பாலை 274) என்ற இடத்திலும் “ஒளியர்” ஒளிகாட்டவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
*செங்கோவே ஒளிச் செம்மல் திருக்கோவே மணிக்கோடு தங்குபெரு வள காட்டில் தமிழிருந்து புறங் காக்கும் தமிழ்நாடி யாங்கே” என்ற செய்யுட்பகுதி “செங்கோன் தரைச்செலவு” என் னும் பண்டைப் பழந் தமிழ் நூலிலே காணப்படுகின் றது. இச்செய்யுட் பகுதியினல் "செங்கோ” என்னும் மன்னன் "ஒளிச் செம்மல்" ஒளிநாட்டு மன்னன் எனப் படுவதால், அவனுல் ஆளப்பட்ட நாடு "ஒளி நாடு” என்பது புலனுகின்றது.
“ஒளி நாடு*தான் எல்லம்*
எல், ஒளி, இலக்கம் என்ற பொருளைத் தருவதே "இலங்கை” என்னும் தனித் தமிழ்ச் சொல்லுமாகும்.

17
*இலக்கம்” என்ற சொல், “லக, லக்திவ” என நின்று சிங்கள மொழியில் எங்கள் இலங்கையையே குறிக்கின் றது. "இலங்கை” என்னும் எமது காட்டின் பெயர்,சிங் களத்தில் "லங்கா’ என நிற்கும். மிகப் பழைய காலத். திலே காடுகளின் பெயர்களும் பெரும்பாலும் முன்ன
தாகக் காட்டப்பட்டது போல “அம்” என்ற ஈறு கொண்
டவைகளாகவே விளங்கின. எனவே, "எல் காடு-ஒளி' நாடு-எல்லம்-ஏழம்-ஈழம்' என வர்ந்தது எனலாம்.
தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றினைத் தமது கூர்ந்த மதித்திறத்தால் ஆராய்ந்து நிறுவிப் பெரும் புகழ் படைத்த வரலாற்றறிஞர் திரு. க. சி. கங்தையா" பிள்ளை அவர்கள் கூறுவன எமது முடிவினை மேலும் அரண் செய்கின்றன. 'ஈழம் என்னும் பெயர் எல் என் பதன் திரிபு. எல் என்று பெயர் கொடுக்கும் பெயரே" இலங்கையாகும்." (பழங் தமிழர். பக். 18-19) என்பது அவர்கள் கூற்றகும். (இவற்றினைப் பற்றி விரிவாக எனது 'தமிழன் எங்கே?' என்னும் நூலில் எழுதியுள் ளேன். ஆதலின் அதனை நோக்குக.)
66ஏழ்99 வாணனே இராவணன்
*எல்-எழு-ஏழ்" என நின்றதாகலாம். ஏழ் காட்டு மன்னன் 'ஏழ் வாணன்’ எனப்பட்டான். ஏழ் வாணன் என்பதற்கு ஏழ்ாகாட்டில் 'வதிங்தவன்” என்பதோடு “யாழில் வல்லவன்-யாழ் வாசிப்பவன்' எனவும் பொருள்கூறலாம். அகத்திய முனிவருடன் இசை பாடி கந்தருவத்தாற் பிணிக்கப்பட்ட கதையினையும் யாம் அறிவோம். இராவணன், கொடியிலே சின்னமாக, யாழைப் பொறித்து வைத்தான் என இராமாயணம் கூறுகின்றது. "கொடியின் மேலுறை வீணையும் எழுது

Page 11
18
வீணை கொடேந்து பதாகைமேல்” என்ற இராமாயணப் பகுதிகள் இதனை எடுத்தோதுகின்றன. யாழும் வீணையும் ஒரு பொருட் சொற்களாம்.
*எல்?? தான் 'இரா?? ஆயிற்று "ஈழம்" என்னும் சொல்லானது “எல்’ எனும் அடி யாகப் பிறந்தது என முன்னதாகக் காட்டினேன். எல் எனும் சொல்லுக்கு அமைந்த ஒளி, விளக்கம், இலக்கம், சூடு, கெருப்பு, வேட்கை பொருள்கள் சமக் கிருதத்தில் இராவுக்கும் உள்ளன. 'இலங்கை’ என்னும் பெயரையும் கோக்கலாம். ஈழம் என்னும் தமிழ்ச்சொல் லானது, பொன் என்னும் பொருள் மட்டுமின்றி கள் எனும் பொருளும் தருவதாகும். கள்ளின் பெயர் சிங்க ளத்தில் இரா”என வரும். பொன்னின் பெயரோ "இரன்? என வரும். எல்வாணர்களேயே-இராவணர்கள் எனக் கொண்டு-இரவில் சஞ்சரிப்பவர்கள் எனச் சமக்கிருத வாணர் பொருள் கொண்டனர் எனத் தோன்றுகிறது. கங்குல்வாணர் என்பதும் அவரையேயாம். சமக்கிருதத் தில் நிசாசரர் என்பதும் அவரையேயாம்.
*எழுவர்?? ஆட்சி
புறநானூற்றிலுள்ள பாடல் ஒன்று எழுவர் என்ற பெயரையே எடுத்துக் கூறுகின்றது.
“பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுங் தவமுங் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்ரு தாதலிற் கைவிட் டனரே காதல ரதஞல் விட் டோரை விடாஅ டிருவே விடா அ தோரிவள் விடப்பட்டோரே”
(புறநா. 358)

9
இந்தப் பாட2லப் பாடிய புலவர் பெயர் “வான் மீகியார்”என இப்போதுள்ள புறநானூற்றுப் பதிப்புக் களிற் குறிக்கப்பட்டுள்ளது. சிலர்,இவ்வாசிரியர் பெயர் “வான் மிகையார்’ மழையினும் மேம்பட வழங்கும் வண்கையுடையவர் எனவும் கொள்வர்.
இப்பாடலில் "எழுவர்” எனப்பட்டோர் "ஏழ்" என் னும் (எல் நாட்டவர்) எழு நாட்டவரே எனத் தெளிவாக விளங்கிக் கொண்டால்-வரலாற்றினை இணைக்கும் பல சான்றுகளை யாம் சுட்டிப்பாக உணர்ந்துகொள்ளுதல் கூடும். gap புறாநானுாற்றிலே வருகின்ற பின்வரும் பாடலில் “எழு களிறு’ கூறப்படுகிறது. இந்தப் பாடலில் எழு காட்டுக் களிற்று யானைகள் குறிப்பிடப்படுகின்றன. *எழு களிறு புரக்கும் நாடு” என்பதற்கு “எழு காட்டுக் களிற்று யானைகட்கு வேண்டும் உணவினை விளைவிக் கும் காடு” என்பதே பொருளாகும்.
*நீயே, பிறரோம்புறு மறமன்ணெயில்
ஒம்பாது கடக் தட்டவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழறைஇய வல்லாளன வயவேந்தே யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற இன்று கண்டாங்குக் காண்குவமென்றும் இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே’
(புறநா. 40)
"எழு நாடு"-"ஏழ் நாடு” எனவும் வழங்கும். ஏழ் ஏகாட்டு யானைகள் பிற காட்டு யானைகளிலும் பார்க்கச்

Page 12
20
சிறந்தனவாகவும்,உயர்ந்தனவாகவும் கருதப்பட்டன . அந்த யானைகளைப் பழைய சாசனங்களும் குறிப்பிடு கின்றன. தென்னிந்திய சாசனத் தொகுதியிலே, மூன்ற வது தொகுதியின் முதலாம் பகுதியில் 29-ம் இலக்கங் கொண்டதாய் அமைந்துள்ள அமண்பாக்கச் சாசனம்,
"இகல்விசயாலயனென்னும் புகர் முகத் தேழுயர் களிற்றுச் சோழகேரளன”
எனக் கூறுமிடத்தில், “புகர் முகத் தேழுயர் யானை' குறிப்பிடப்பட்டுள்ளது."புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட ஏழ் காட்டு உயர்ந்த யானை' என்பதே அதன் பொருளாகும். அதே தொகுதியில் வரும் பாக்கூர்ச் சாசனமும்,
*கங்கை கொண்ட சோழனை யேழுயரி யானைச் சேனைச் சோழ பாண்டியனென் றுண்டுயர் மணிமுடிப் பாண்டிமண் டலங்குடுத் தருளிய'
என வரும் பகு தி யி ல், *ஏழுயரி யானே" யைக் கொண்ட சே2னயைக் குறிப்பிடுகிறது. இங்கும் "ஏழ் நாட்டு உயர்ந்த யானை”களே கருதப்
60).) SFT 63095.
ஏழகம்
தமிழ்நாடு தமிழகம் என குறிப்பிடப்பட்டமை போல, ஏழ் காடும் "ஏழகம்” எனக் குறிக்கப்பட்டு வங், துள்ளது. பட்டினப் பாலையிலே, ஏழகத்துத் தகர்-'ஏழ கத் தகர்”- ஆட்டுக் கிடாய் குறிப்பிடப்படுகின்றது. மார்க்கோ போலோ என்பவர், உலகத்திலேயே மிகப் பெரிய ஆடுகள் எனக் குறிப்பிட்ட ஆட்டினம் இதுவே எனக் கொள்ளுதல் பொருத்தமாகும் இந்த ஏழகம் -தமிழகம், திரமிடமாகத் திரிந்தமை போல-சமக்,

2.
கிருதத்தில் "ஏடகம்” என நிற்கும். "ஏட" எனச் சமக் கிருதத்திற் காணப்படுவதும் இதுவேயாகும்.
ஏழகப் படை
கி. பி. பன்னிரண்டாம் நூற்றண்டின் இறுதிப் பகுதியிலே மதுரைப் பாண்டியர்களிடையே மிகப் பெரியதொரு போர் கடைபெற்று வந்தது. அந்தப் போர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வரை நீடித்து நடைபெற்றதாகத் தெரிகின்றது. இந்தப் போரிலே எங்கள் நாடும் பெருமைப்படத்தக்க அளவுக்குப் பங்கு கொண்டிருந்தது. அக் காலத்திலேதான் ஏழகம், ஏழகத் தகர், ஏழகப்படை முதலான புெயர்களை முதன் முதலாக அறிகின்றேம், இரண்டாம் இராசாதிராச னுடைய திருவாலங்காட்டுக் கல்வெட்டிலே,
"பாண்டியனர் குலசேகரர் தமக்கு முன்பு செய் நன்மைகளும் பாராதே ஈழத்தானுடனே சம்பந்தம் பண்ணவும் இவனும் இவருங்கூடாநின்று சோழராஜ் யத்துக்கு விரோதமாயிருப்பன செய்யவும் கடவதாக நிச்சயித்து இவருக்கு உறுப்பாகப் பாண்டிய நாட்டு ஏழகத்தாரிலும் மறச் சாமந்தரிலும் நமக்குச் சேர்வு பட்டுநின்று பணிசெய்கிற இராஜராஜக் கற்குடியரா யனும் இராஜ கம்பீர அஞ்சு கோட்டை நாடாழ் வானும் உள்ளிட்டாரை அத்துறைகளில் நின்றும் வெள்ளாற்றுக்கு வட கரையிலே போதப்பண்ணி’
என்ற பகுதி வருகின்றது. மேலும், மூன்றம் குலோத் துங்க சோழனுடைய ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு கொண்ட சிதம்பரம் கல்வெட்டிலே, மெய்க்சீர்த்திப் பகுதியில்,
aur。岛一&

Page 13
22
*விக்ரம பாண்டியன் வேண்ட விட்ட தண்டால், வீரபாண்டியன் மகன்பட ஏழகம் படமறப், படை படச் சிங்களப் படைமூக் கறுப்புண்டு, அலைகடல் புக வீரபாண்டியனை முதுகிடும்படி தாக்கி, மதுரையும் அரசுங் கொண்டு”
என்ற பகுதி வருகின்றது. மேலும், அந்தக் குலோத் துங்கன் ஆட்சியின் முப்பத்தோராம், முப்பத்து நான் காம் ஆண்டுகளைக் கொண்ட புதுக்கோட்டைச் சமத் தானத்தைச் சேர்ந்த சேரனுார், குடுமியா மலை ஆகிய ஊர்களிலே கிடைத்த கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த்தி யிலே,
"மறப் படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு விழத் தடிந்து' என வரும் பகுதியும் ஏழகத்தினைக் குறிப்பிடுவதாய்-*ஏழகப் படை” கொண்டதாயப் உள்ளது.
இந்த'ஏழகப்படை உண்மையில் பாண்டியாகாட்டுப் படையாகும். இந்த படையில் இரு வகை இருந்ததென ஊகிக்கலாம். ஒன்று, வெளியே பிற புலங்களுக்குச் சென்று தாக்குகின்ற படை. அது, மறப் படை அக் லது புறப்படை, மற்றையது, அகப்படை. அது, உள் காட்டிலிருந்துவெளிகாட்டார் தாக்குதல்களைத் தடுத்து நாட்டினைக் காப்பாற்றும் படை. இப் படையினரின் வழித் தோன்றல்களே மறவர் என்றும் அகம்படியர் எனவுங் குறிக்கப்பட்டனர் எனக் கொள்ளலாம். இந்த ஏழகத்தார், "பாண்டிாBாட்டு ஏழகத்தார்”என வுங் குறிப் பிடப்படுவதால், அவர்கள் பாண்டி காட்டில் மட்டு மன்றி வேறு இடத்திலும் இருந்து வந்தார்கள் என்பது தெரிகின்றது. எனவே, ஏழ் நாட்டின் படையே-ஏழகத் தின் படையே-ஏழகப் படை என்பது எனது தீர்க்க

23
மான முடிபு. அந்தப் படை இராவணன் காலங் தொடங்கி - “கற்றேன்றி மண்டோன் ருக் காலங் தொடங்கி” என்றே கூறிவிடலாம் - போர் புரிவதற் கெனச் சிறப்பாக அமைக்கப்பட்டு மரபு மரபாகத் தொடர்ந்திருந்ததுஎனலாம். இதனை அறியாமல்,பெயர் பெற்ற வரலாற்ற சிரியரான திரு. கே. நீலகண்ட சாத் திரியாரவர்கள், மதுரை மாவட்டத்தில் அமைந்த திரு வேடகம் ஏழகமோ என ஊகித்தார்கள். இவர்கள் ஐயங்களையெல்லாம், முதலாம் இராசாதிராசன் வெற்றி கொண்டதாக அவன் மெய்க்கீர்த்தியிலே,
“மூன்றனக் குடைந்த தென்றமிழ் முழுவது மிழந்து எழுகடல் ஈழம் புக்கவிலங் கேசணுகிய விக்கிரம பாண்டியன்’
என வரும் பகுதி தீர்த்து விளக்கம் தருவதாகும்.
பத்துத் தலை-இராவணன்
"என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
இராவணன் காண். அவன் நாமம் இவ்வுலகம் அறியும்” எனப் பாரதிதாசனர் பாராட்டிப் பரவுகின்ற இலங்கை மன்னனுகிய இராவணனைப் பத்துத் த8ல யுடையவனுக்கி-பலத்தினைமட்டுங் காட்டி-இன்புற்றுக் கொண்டிருக்கிறது இலக்கிய உலகம். கலித் தொகையே ஐ.பிரு தலையின் அரக்கர் கோமான்’ எனக் கூறுகின்றது. பத்துத் தலையுடையவனக அவன் உருவமும் யாண்டும் தீட்டப்படுகின்றது. ஆயின், காங்கள் தலைமேல் வைத்துப் போற்றுகின்றவரும், கம்பராமாயணக் கவிதை கயங் காட்டுவதிற் றன் னுெப்பார் பிறரில்லாதவருமான பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள், இராவணன் தமிழன

Page 14
24
யின் ப."றலைப் படான் என்று கூறுகிறர்கள், எனவே, இராவணன் ப."றலைப் பட்டதற்குக் காரணர் ஆரியர்சமக்கிருதவாணர்-என யான் கூற விழைகின்றேன்.
வான்மீகியார் தாம் இயற்றிய இராமாயணத்தில் இராவணனை ஒரு தலையும் இரண்டு கைகளும் உடைய வணுகத்தான் குறிக்கிறர். யாண்டும் பத்துத் தலையைக் குறிக்கக் காணுேம் *தசாஸ்ய, தசக்கிரீவ, தசாங்க" என வரும் சொற்களுக்கு உண்மையான பொருள் காணும் ஆற்றலற்றேர் வியாக்கியானங்களால், இராவண னுக்குப் பத்துத் தலைகள் முளைத்தன.
இராவணன் எனப்படும் இலங்கை மன்னன் 'தென் னவன்” எனப்படுவதை எடுத்துக் காட்டி, அவன் பாண்டியன் ஆவான் என 'தமிழன் எங்கே?' என்னும் எனது நூலில் வலிவுபெற நிறுவியுள்ளேன். இப்போது அப்பாண்டிய மன்னனுக்கு, அவன் ஆண்ட ஏழ் நாடு மு நாடுகளுக்குரிய இரு முடிகள்-எழு முடி (ஏழ்நாட்டு அரசுக்குரிய முடி) மும்முடி(மூாகாட்டு அரசுக்குரிய முடி) --இருந்தன என நிறுவுவேன். பிற்றைக் காலத்தில் சேரர் மரபு ஏற்பட்டபின் எழு முடியானது சேரர்க்குரித் தாயது. ‘எழுமுடி கெழி இய திருஞெமர் அகலத்து" (பதிற்றுப்பத்து. 16. நோக்குக) சோழர் மரபு ஏற்பட்ட பின் மும்முடியானது சோழர்க்குரித்தாயது. "மும்முடிச் சோழ மண்டலம்" என்ற வழக்கு கோக்குக.
இந்த உண்மையை நன்கு அறிந்த தமிழ்ப் புலவர் வான்மீகியார். சமக் கிருதம் வல்ல அவர், இராமா யணத்தைப் பாடியபோது இராவணனை-ப."றலைப்படுத் தாது-ஒரு தலையுடன் விட்டுவிட்டார். பின் வந்த சமக் கிருதவாணர் பொருளறியாமல் எழுமுடிக்கு ஏழு த2ல களும், மும்முடிக்கு மூன்று தலைகளும் முளைக்கச்

25
y
செய்து, இராவணனைப் 'பத்துத்தலை இராவணன் ஆக்கிவிட்டார்கள்.தமிழறிவில்லாத சமக்கிருதவாணர், *தேரையுண்ட தேங்காய்" (தேரைஎன்னும் நோய்பிடித்த தேங்காய்) என்பதைச் சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து நகை விருந்துக்கு இலக்கியமானதும் யாம் அறிந்ததேயல்லவா? இக் காரணங்களாலேதாம் ஆரி யர்க்கு மிலேச்சர்ப் பட்டம் கிடைத்தது எனலாம்.
தசாஸ்ய-தசக்ரீவ
'த சாஸ்ய" என்பது இராவணனைச் குறித்துச் சுட்டும் பேர் ஆகும். 'தச க்ரீவ தசாாநாக” என்பவையும் அவனையே குறிப்பனவாம். இராமாயணத்திலே இப் பெயர்கள் அவன் குணவியல்பினைக் குறிப்பனவாகவே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. 'இராவனே காம பத் ராக்தே தசக்ரீவஹ் பிரதாபவான் "சீதாயாஹ் வசாகம் ச்ருத்வா தசக்ரீவஹற்ற பிரதாபவான்’ என்னும் இடங் களில் 'பிரதாபவான்'என்பதன் வரத்து,"ராகூடிசேந்ரஹ்) பிரதாபவான்" என்னும் இடத்திலிருப்பதைப் போன்றே உள்ளது.
இம் மூவிடங்களிலும், 'பிரதாபவான்’ என்பதற்கு முன்னுள்ள சொற்கள் இராவணன் பெருமையையே-பிர தாபத்தையே-எடுத்தியம்புகின்றன. கடைசியாக வந்த எடுத்துக் காட்டிலே இராவணன் இராக்கதர் மன்னனுக விளங்கும் பெருமை-பிரதாபம்-தெளி வாகவே உள்ளது. அதற்கு முன்னதாக வந்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் "எல்லோரையும் வருத்தும்" (எல்லோரையும் துன்புறச்செய்யும்)பிரதாபம் கூறப்படு கின்றது. இராவணன் 'தசாஸி"-"எல்லோரையும் வருத்து பவன், துன்பங் தருபவன்" எனக் காட்டி நிறுவிய

Page 15
26
பெருமை சேய்ப்பூரைச் சார்ந்த திரு. இராமதாஸ் பந்துலு அவர்களைச் சாரும். அவர், இவ்வழக்கு பண் டைத் திராவிட மொழியான கூ இலும் உள்ளதெனக் காட்டுவர். எனவே, திராவிட வகுப்பினைச் சார்ந்த சமக்கிருதப் புலவராதலின் அவ் வழக்கினை எடுத் தாண்டார் எனக் கூறலாம்.
"ஈழவாணன் என்னும் பெயரையே-உரித்த வாழைப் பழமாக ஆரியர் வாயிற் புகச் செய்த பெருமை வாய்ந்த-வான்மீகியார்க்குத் தமது மொழியிலிருந்த பொருட்பேறு நன்கு தெரிந்திருந்தது எனத் துணிக் து கூறலாம். 'இராவண’ எனும் சொல்லினுக்குச் சமக் கிருதவாணர் 'அழச் செய், வருத்து' என்னும் அடிப் பொருள் கொள்வர். உண்மையில், இராவணன் ஆரி யர்களை அழச் செய்தான் என்றுதான் கூறுதல் வேண்டும். 'இராவணம்" என்ற சொல்லே அழுகையாக (திருப்புகழ். 330.) வந்துள்ளமையைக் காணலாம்.
அத் தொல் பழங்காலத்திலே-எழுத்தறியா நிலை யிலிருந்த-மிலேச்சர் எனக் கொள்ளப்பட்ட-ஆரியர், சமக்கிருதமெனப் புதுவதாகத் திருத்தியமைக்கப்பட்ட மொழியில்-முதன்முதலாக இராமாயணம் என விதங் தோதப்படும் பெருங்காவியத்தை இயற்றினர்கள் என்பது எவ்வகையிலும் பொருந்தாது. மிகப் பழைய காலத்திலேயே சமக்கிருதத்திலும் பாளியிலும் மிகுதி யான உரைகளையும் வியாக்கியானங்களையும் வகுத்த வர்கள் தமிழரே எனக் காட்டலாம். காளக்தாப் பல் கலைக் கழகத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய வரும் தமிழரேயல்லவா? திங்ாநாகரும் தரும பாலரும் அங்ங்னம் விளங்கியமைக்குக் காரணம் யாது?

எழுவரும் வான்மீகியாரும்
முன்னதாகக் காட்டப்பட்ட புறாகானுாற்றுப் பாடலை இப்போது கோக்குவோம்:
"பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவரெய்தி யற்றே.”
என வரும் பாடல் வான்மீகியாராற் பாடப்பட் டது-இராமயணத்தைப் பாடிய வான்மீகியாராற் பாடப் பட்டது-எனவே கொள்ளுதல் பொருத்தமாகத் தோன்று கிறது. ஏழ் காட்டவராகிய எழுவர் பற்றி இந்தப் பாடல் எடுத்தோதுகின்றது. ஆயினும், இற்றைவரை உரையாசிரியர்கள் வகுத்த உரைகளும் விளக்கங்களும் தவறக அமைந்துள்ளன. "பருதி சூழ்ந்த இப் பயங் கெழு மா நிலம்-ஞாயிற்றல் வலமாகச் சுற்றப்படும் இப் பயன்பொருந்திய பெரிய நிலவுலகம், ஒரு ப்கல் எழுவர் எய்தியற்று-ஒரு நாளில் எழுவரைத் தலைவ ராகக் கொண்டாற்போலுந் தன்மைத்து." என இவ் விரண்டடிகளுக்கும் உரை கூறுவர் சித்தார்ந்த கலாநிதி ஒளவை. சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள்."எழுவர் தலை வராகியவழி, அவர் கீழ் வாழ்வோருக்கு ஒருகாலும் இன்பமில்லையாம். இன்பம் போலத் தோன்றுவ தெல்லாம் துன்பமேயாதலின், ‘ஒருபகல் எழுவர் எய்தி யற்று”என்றர். எழுவர் என்பது பலர் என்னும் பொருள் பட நின்றது.’ என விளக்கம் கூறுவர். திரு, ரா. இராக வையங்கார் அவர்களோ, ஒரு பகலில் பலர் த2லவரா கியவழி அவர் தலைமையின் கீழ் எவர்க்கும் எத்துணை யும் இன்பமில்லையாம். எழுவரென்றது ஒரு பகலள வைக்குள் இறந்த அரசர் ஒருவர் பின் ஞெருவராக அர செய்திய எழுவரைக் குறித்தது. எழுவர், ஒரு குடியின

Page 16
28
ரல்லாத எழுவரெனினுமமையும்’-எனக் கூறுவர். இவ் விளக்கங்கள் சிறிதும் பொருந்தாதவை. ஆரியர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போர் புரிந்த ஏழ்வாணர் களையே - இராக்கதர்களையே-நிசாசரர்களையே -எழுவர் என வால்மீகியார் குறித்தார் என்பதே பொருத்த
DT(5 D.
தேவராசன் பிரதாபம்
தேவராசன் பிரதாபம் பற்றி வேதங்களே எடுத் தோதுகின்றன. புராணங்களின் படி தேவராசன் ஒர் ஈனப் பிறவி. பொருமையே உருவாகப் பிறந்தவன். தாம் முன்னேறவேண்டும் " என்ற குறிக்கோளுடன் முயல்வோரிடத்திலெல்லாம் சென்று-குறுக்காலேபோய் -அவர்கள் தவங்கள் வேள்விகள் எல்லாவற்றையும் குலேப்பவன், காமாந்தகன், கீழ்மகன். கோதம முனி வரின் மனைவியாகிய அகலிகையை வஞ்சத்தாற் கற் பழித்து, அதன் காரணமாக, ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி பெற்றவன். தாயைக் கொல்வது, தந்தையைக் கொல்வது, திருடுவது, கருவைச் சிதைப்பது முதலிய பாவங்களுக்கே அஞ்சாதவன், கெள வீதகி உபநிஷத் தில் இவையெல்லாம் விரிவாகக் கூறப்படுகின்றன்" இருக்கு வேதம் இவனைப் புரந்தரன்’(நகரங்களை அழிப் பவன்) எனக் கூறுகின்றது. ஈகுவடினை இந்திரனுக்கிய கதையினைப் புராணங்கள் கூறக் காண்கின்றேம். இருக்கு வேதத்தில் (இருக்கு. 10.49.8) ‘நான் எழுவரைக் கொன்ற ஈகுவடின்' என வரும் பகுதியும் ஏழ் காட்ட வரையே குறிப்பதெனக் கொள்ளுதல் பொருத்தமாகும். தேவராசனுக்குச் சக்கரன், இந்திரன், வேர்ந்தன் என்ற பெயர்களும் உண்டென்பதைத் ‘தமிழன் எங்கே? என்னும் எனது நூலுள் விளக்கிக் காட்டியுள்ளேன்.

இராமாயணம் கூறுவதென்ன?
யாகங்கள் புரிவதற்கு இராவணன் ஆட்சிக்குட் ஆபட்ட இராக்கதர்கள் தடையாக இருந்தார்கள் என்ப தும், யாகங்களே இராக் கதர்களிடமிருந்து காப் பாற்றும் நோக்கத்துடனே விசுவாமித்திர முனிவர் இராம லக்குமணரை அழைத்துச் சென்றர் என்பதும் வான்மீகியார் எடுத்துக் கூறுபவை. இராக்கதர்கள் அப்படிச் செய்ததற்குக் காரணம் யாதென யாண்டும் அவர் கூறவில்லை. தமிழர் மூதாதையான ஈழவாணன்இராவணன்-குலத்தவர்-எல்லோரும் கொல்லாமை கெறி யைக் கைப்பிடித்தவர்கள். ஆரியர்கள் யாகம் என்று சொல்லி விலங்குகளைக் கொன்று தின்பதைச் சிவநெறி பேணிய அம் மரபினராற் பொறுக்க முடியவில்லை. எனவே, ஏழ்காட்டுத் தமிழ் மக்கள் தமது மன்னனன தென்னவன் தலைமையிலே பெரியதொரு இயக்கம் தொடங்கி கடத்தி வந்தார்கள். அந்த இயக்கமே பின் விரிந்து, போராட்டமாகி-இராமாயணங் கூறும் பெரும் போராகிவிட்டது. அந்த இயக்கம் தொடங்கிய காலத் திலே பெண்டுகள் கூட முன்னணியில் நின்று போராட் டத்தை நடாத்தியிருக்கிறர்கள். அவர்களை வேட்டை யாடவே விசுவாமித்திரமுனிவர் இராம லக்குமணர்களை அழைத்துச் சென்றர் என்பது எமக்குத் தெளிவாக விளங்குகின்றதல்லவா?
யாகங்கள் புரிவதற்கு-விலங்குகளைக் கொல்வ தற்கு-ஈழவாணர்கள் தடை புரிந்தார்கள் என்பதைக் காரணம் தெளிவுபடாமலே கூறிச் செல்கின்றர், வான் மீகர் ஆரியரின் வேள்விப் பண்பாட்டினை ஏற்றுக் கொண்டவர்களில் வான்மீகரும் ஒருவரோ எனபு து ஆராயப்படவேண்டியது. தேவகி மைந்தனன கண்

Page 17
3O
ணன் ஆரியர் வேள்வி முறையி2ன ஏற்றுக்கொள்ளாத வருள் ஒருவன். அவனுக்காக ஆங்கிரச முனிவர் ஒர் எளிய வேள்வி முறையினைக் கற்பித்தார். அம்முறைக் குத் தவம், தானம், கேர்மை, அஹிம்சை, வாய்மை என் பவையே தட்சிணையாகக் குறிக்கப்பட்டன. (சாங் தோக்கிய உபநிஷத்து 3.17:4-6. ாேகாக்குக.)
பதும புராணம் அளிக்கும் விளக்கம்
"பதும புராணம்" எனப்படுவது ஒரு சைன இலக் கியம். பதுமன் என்பானின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுவது, அக் நூலுள் “மாருதன் வேள்விச் சிதைப்பு” என்னும் அத்தியாயத்தில் எடுத்தோதப்படு கின்றதொரு நிகழ்ச்சி பற்பல உண்மைகளை அறிவதற் கான வாயிலை அமைத்துத் தருகின்றது. மாருதன் எனப்பட்ட மன்னன் வடகாட்டில் ஒரு பெரிய வேள்வி செய்வதற்கான ஆயத்தங்கள் செய்துகொண்டிருந் தான். அவ்வேளையிலே காரதன் என்னும் வித்தியாதரன் வானத்திலே தனது விமானத்திலே சென்றுகொண் டிருந்தவன், பூமியிலே ஒர் இடத்தில் பலியிடுவதற் கான விலங்குகள் பல தூண்களிற் கட்டப்பட்டிருப் பதையும் வேதவிஜனஞர்கள் பலர் வேள்விக்கான காரியங்களைச் செய்துகொண்டிருப்பதையும் கண்டுகீழே இறங்கிவந்தான்.அவன் இடபதேவர் கூட்டத்தினரைச் சார்ந்தவனுதலின், வேள்வியை நடத்துகின்ற மன்ன ணுகிய மாருதனைக் கண்டு வேள்வியின் பொய்ம்மையை விளக்கி, விலங்குகளைக் கொல்வதால் ஏற்படுகின்ற பாவத்தையும் எடுத்துச் சொல்லி, வேள்வியைத் தடுக் கும்படி வேண்டினன். ஆனல், மாருத மன்னனும் அவனுடைய மதகுருமாரும் நாரதனைக் கண்டித்ததோட மையாமல் தமது காரியங்களில் அவன் தலையிட்டால்

3.
அவனைக் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தினர். இந்த நிகழ்ச்சி தென்னகத்தின் தலைவனன இராவண னுடைய அரசின் எல்லைப் புறத்தில் கடைபெற்றதால் அவனுக்கு இச் செய்தி தெரிவிக்கப்பட்டது. இரா வணன் இக் நிகழ்ச்சி கடந்த இடத்துக்கு உடனே எழுந்தருளி வந்து, மாருத மன்னனையும் மதகுருமா ரையும் அச்சுறுத்தி அங்கு கடக்க ஏற்பாடு செய்யப் பட்ட வேள்வியைத் தடுத்து நிறுத்தியதுமட்டுமின்றி, பலியிடுவதற்காகக் கட்டி வைத்திருந்த விலங்குகளை யும் காப்பாற்றினன். இர்ாவணனின் அறிவுரையால் மாருத மன்னன் மனம் மாறிக் கொல்லாமையின் பெரு மையை உணர்ந்து இடபதேவர் கூட்டத்திற் சேர்ந்து கொண்டான் என்பதுதான் அந் நிகழ்ச்சியாகும். இங். நிகழ்ச்சியால் இராவணனின் மாண்பு புலமாகின்றது.
அடிப்படை உண்மைகள்
"எழுவர்” எனப்பட்டவர்கள் பழந்தமிழ் மக்கள். அவர்களின் ஒப்பற்ற த8லவன் தென்னவன் எனப் பட்ட இராவணன். கொல்லாமை அறம் பூண்டு சிவ கெறியைக் கடைப்பிடித்து ஒழுகிய ஏழ்நாட்டு மக்கள் ஆரியர் வேள்வி முறையினை எதிர்த்தார்கள். அலக்கண் மறுப்பு- கொல்லாமை- பேணி அவர்கள் தொடக்கி ாகடாத்தி வந்த பேரியக்கம் ஆரியர்களுக்குப் பெரிய த2லயிடியாக இருந்தது. அவர்களின் கொள்கைகளே பிற்றைக் காலத்தில் புத்தர் போற்றிய நெறியாகவும்: வள்ளுவர் போதித்த அறமாகவும் மலர்ந்தன.
சுந்தர காண்ட வழக்கு
வான்மீகியார் தாம் இயற்றிய இராமாயணத்தில், ஒவ்வொரு காண்டத்திலும் எடுத்தியம்பப்படுகின்ற

Page 18
32
பொருளுக்கு ஏற்றபடியே ஒவ்வொரு காண்டத்துக்கும் பெயர் சூட்டியிருக்கிறர். ஆயின், "சுந்தர காண்டம்’ எனப் பெயர் சூட்டிய வேளையிலே, அவர் தம்மை அறி யாமலே தான் தமிழன் என்கின்ற உண்மையைக் காட்டிவிட்டார். “செளந்தரிய காண்டம்” என்பதற்கு பதிலாகச் "சுந்தர காண்டம்” எனப் பெயர் சூட்டிவிட் டார். வான்மீகியார் இங்ாவனம் சூட்டிவிட்ட பெயர் சமக் கிருத வழக்குக்குப் பொருத்தமின்றி இருப்பதால் சமக்கிருதவாணர் அதற்கு வேறு வேறு பொருள் கூறி வருகின்றனர். "சுந்தரம்” என்னும் சமக்கிருதச் சொல்லுக்கு "அழகு" எனபது பொருள். எனவே, "சுந்தர காண்டம்-அழகுடைய காண்டம்” எனவே பொருள் தருவதாதல் வேண்டும். அப்பொருட்பேறு அக் காண்டத்தின் அழகைக் குறித்துப் பெயரிட்டதென வருமன்றி அக் காண்டத்திலே பலவிடங்களில் எடுத் துக் கூறப்படுகின்ற இராம செளந்தரியத்தி2னக் குறித் துப் பெயரிட்டதாகப் பொருள் கொள்ள வராது. தமிழ் மொழி வழக்கிலோ அழகின் பரியாயமாகிய செளந்தரி யத்தினையும் "சுந்தரம்” என்னும் சொல்லாற் குறிப் பதுண்டு. சமக் கிருதக் குணிப்பெயர்களை யெல்லாம் குணப்பெயரால் வழங்குவதே பெரும்பான்மையான தமிழ்ப் புலவர் வழக்காவும் மரபாகவும் வந்துள்ளது. தாரித்ரியம் (வறுமை) தரித்திரம் எனவும், வீரியம் வீரம் எனவும், தமிழ் இலக்கியங்களிலே வழங்குகின் றமை காணலாம்.
*போம்பின் கால் பாம்பறியும்?? சீதையைத் தேடிச் சென்ற அனுமான், அரக்கியர் இல்லாத காலம் பார்த்து, சீதையுடன் உரையாடி அவளுக்கு ஆறுதல் அளிக்கின்றன். பண்பு மிகுந்த அரக்கர், சீதையுடன் அனுமான் உரையாடி

33
விட்டுச் சென்றபின், அவளை கோக்கி அனுமான் கூறிச் சென்றது யாதெனக் கேட்கிறர்கள். அதற்குச் சீதை. பதில் கூறுகிறள். அந்தப் பதிலிலும் வான்மீகியார் தாம் தமிழர் என்பதைக் காட்டி விடுகிறர்: "அரக்கர் கள் கொள்கின்ற வடிவங்கள் அச்சங் தருபவை. அவற்றை அறிவதற்கு எனக்கு எவ்வித வல்லமையும். இல்லை. அவன் யார் என்றும் யான் அறியேன். அவன் யார் என்பதை நீங்கள்தாம் அறிவீர்கள். பாம்பின் கால் பாம்பு அறியும்.” என்பதுதான் சீதை அளித்த பதில். "பாம்பின் கால் பாம்பறியும்” என்ற தமிழ்ப் பழ மொழியினை வால்மீகியார் மிக அழகாக மொழி பெயர்த்துச் சீதையின் பதிலிலே-'கஹிரெவஹ ஹெ. வா உரறு விஜாகாதி' என கூறியுள்ளார். ஆரியப் புல வராயின் அத் தமிழ்ப் பழமொழியினை மொழிபெயர்க், கும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டிராது “கை வல்லிய ாக வ ரீக் த ம்' என்னும் தமிழ் நூ லி 2ன ச் சமக்கிருதத்தில் மொழி பெயர்த்த ச ங் கு. கவி, உள்ளிருக்கும் ஆன்மாவினேக் குறிக்க எடுத் தாண்ட 'குகேசன்’ என்னும் சொல்லினை-பொருள் இன்னதென்றே அறிந்துகொள்ளும் ஆற்றலின்றி*வல்லீசன்" என மொழி பெயர்த்ததும் யாம் அறிந்த தேயல்லவா?
எப்படிப் பார்ப்பினும், இராமாயணம் போன்ற தொரு பெருங்காப்பியத்தினை இயற்றும் வன்மைஎழுதவேயறியாத நிலையில் காடோடிகளாகத் திரிந்த ஒர் இனத்தினருக்கு-அமைந்திருந்ததெனக் கூறுதல் பொருத்தமாக தோன்றவில்லை. இராமாயணம் எழுவ தற்கு முன் தொல்காப்பியம் என்ற தமிழிலக்கண நூல் இயற்றப்பட்டு விட்டது. தொல் காப்பியத்தைப் போன்ற விழுமிய இலக்கண நூலொன்று எழுவதற்கு

Page 19
34
முன்னதாகப் பரந்த இலக்கியம் தமிழ்மொழியில் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியத்திலேயே ள்த்தனையோ பல முந்துநூல்களைத் தொல்காப்பியனர் எடுத்தோதுகின்றர். அவற்றுக்கு முன்னதாகவே தமிழ்மொழி இலக்கியம் மிகச் செழுமை வாய்ந்ததாய் விளங்கியிருத்தல் வேண்டும் என்பது தானே போதரும். -
*மதுரம் வாக்யம்??
அனுமன் சீதையுடன் தமிழ்மொழியிலேயே பேசினன் எனக் காட்டுவதற்காக வான்மீகியார், “வைதேஹ்யா சம் ஸ்ரவே மதுரம் வாக்யம்" என"மதுர சப்த’ பரியாயமான தமிழ் என்னும் பெயரு டைய மொழியை-இனிய ஓசைாகயம்வாய்ந்த இனிமைப் பெயர் கொண்ட தமிழ்மொழியை-ஆசையுடன் குறிக் கிறர். ஆரியப் புலவராயின் அப்படிக் குறித்திருக்க மாட்டார்.
முடிபு என்ன?
மொழியில்லாதருக்கு மொழியையும், எழுத்தில் லாதவருக்கு எழுத்தையும்,காவியம் இல்லாதவருக்குக் காவியத்தையும் படைத்தளித்தவர்கள் தமிழ் மக்களே என்பதாகும். அந்த வகையிலேதான் இராமாயணமும் படைக்கப்பட்டது. படைத்தவர் தமிழர். தமிழர் கை பட்ட அடையாளம் இராமாயணம் முற்றிலும் காணப்படுகிறது. நுணுக்குக் காட்டி கொண்டு நுணுக் -கமாகப் பார்த்தால் - நுணுகியாராய்ந்தால்-உண்மை விளங்கும். இராமாயணத்தை முதல் முதலாக இயற் றிய வான்மீகியார் தமிழரே! ஆரிய்ந்து பாருங்கள்,

ஆடலும் பாடலும்
முன்னுரை
தமிழ் மொழியினை இயல், இசை, கூத்து என முவகையாக வகுத்து, அவற்றை 'முத்தமிழ்” எனப் போற்றி வளர்த்தனர் எம் முன்னேர். அவற்றை இயல், இசை, நாடகம் என்பதுமுண்டு. இந்த முத்தமிழ்ப் பாகு பாடு உலகிலுள்ள பிற மொழிகள் எவற்றிலும் காணு தற்கரிய தனி மரபும் தனிச் சிறப்பும் வாய்ந்ததாகும். தென்னடு எங்கணும் ஒரே தமிழாகப் பரக்துல விநின்ற பழம் பெருங் தமிழே இந்த "முத்தமிழ்' ஆகும்; அது, அக்காலத்தில், இன்றைய தமிழ் நாட்டுடன் ஈழ காட் டினையும், கன்னட நாட்டினையும், துளு நாட்டினையும், தெலுங்கு காட்டினையும் தன்னகத் தடக்கிப் பரந்து விரிந்து கிடந்த தொன்மைத் தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருந்த தனி மொழியாகும். இப்படிப் பரந்து விளங்கிய முத்தமிழ் இன்று பல வகையாகச் சிதறுற் றுத் தேய்ந்து, இன்றைய குறுகிய தமிழகத்தில் வழங்கி வருகின்றது எனக் கவல்வாரும் உளர். ஆயினும், தென்னுட்டு மொழிகளுள்ளே இன்று கடல்

Page 20
36
கடந்து தென் கிழக்காசியா முழுவதிலும் பெரும் பான்மையாகப் பேசப்படும் மொழி அதுவேயாகும். இடை அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, அத்திலாந்திக் தீவுகள், மலாயா, இந்து சீனு, பர்மா, பியூசி, கயான, சமாய்க்கா, மரீசியசு ஆகிய இடங்களிலும் இன்று பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்கள் குடியேறித் தமிழ் மொழியையும் பழந்தமிழ்க் கலைகளையும் பேணி வளர்த்து வருகின்றர்கள்.
இங்கே காட்டப்பட்ட முத்தமிழில் இயல்பாக. வுள்ளது இயற்றமிழ் ஆகும்; இயற்றமிழோடு அராகம் சேர்ந்தது இசைத்தமிழ் ஆகும். இசைத்தமிழோடு ஆடல் சேர்ந்தது கூத்து (நாடக)த் தமிழாகும். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இலக்கணங்களும் இலக்கியங்களும் அமைந்திருந்தன. தொல்காப்பியம் போன்றவை இயற்றமிழ் இ லக் க ண ங் க ள T ம் மணிமேகலை போன்றவை இற்றமிழ் இலக்கியங்களாம் இசை நுணுக்கம் போன்றவை இசைத்தமிழ் இலக். கணங்களாம்; தேவாரம் போன்றவை இசைத்தமிழ் இலக்கியங்களாம்; செயிற்றியம் போன்றவை நாடகத் தமிழ் இலக்கணங்களாம்; இராஜராஜேசுவர நாடகம் போன்றவை நாடக இலக்கியங்களாம்.
இயல், இசை, கூத்து என எடுத்தோதப்படும் முறைப்படி முதலாவதாக வரும் “இயற்றமிழ்’ தான் இவற்றுள் முந்தித் தோன்றியது எனக் கொள்ளுதல் பொருந்தாது. “காடகம்' எனப்படுகின்ற “கூத்து' காலத்தால் முந்தியது. காலச்செலவில் அதனேடு கலந்திருந்த 'இசை” தனியே பிரிந்துவிட்டது. மேலும் நெடுங்காலம் கழிந்தபின்னர், இசையிலிருந்து இயலும் தனியே பிரிந்துவிட்டத.

ஆடலும் பாடலும்
மிகப் பழங் காலங் தொடங்கியே ஆடலும் பாடலும் மக்களுக்கு இன்பமுட்டி வருகின்றன. உடலால் உழைக்கும் மனிதன் உழைப்பின் பின் ஒய்வு காணும் வேளைகளில் இன்ப நுகர்வுக்காகப் போற்றி வளர்த்துவந்த அசைவு ஆடல்மட்டும் கூத்து அல்லது கடம் எனப்படும் கலையாக உருப்பெற்று வளர்ந்து வந்துள்ளது. 'கூத்து” என்னும் சொல் முதலில் கடத்தையும் பின்பு கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. குதித்தாடுவது கூத்து. 'கட' எனும் சொல்லே 'அம்” ஈறு பெற்று ‘கடம்" ஆயிற்று. நடத்தல் காலால் நடத்தலைமட்டுமன்றி ஒழுகுதலையும் குறிப்பதாகும். கடக்கை, நடத்தை, நன்னடக்கை, கன்னடத்தை முதலான வழக்குகளை கோக்குக. தாண்டுதல் குதித்தல் எனப் பொருள்படும். தாண்டியாடுவது தாண்டவம். இந்தச் சொல் சமக்கிரு தத்திலிருந்து வந்ததெனக் கொள்வர் சிலர். அது பொருந்தாது. 'தாண்டு” எனும் சொல்லானது *குதி” என்னும் பொருளில் மலையாளம் கன்னடம் முதலான மொழிகளில் நிலவுகின்றது. தெலுங்கு மொழியில் சிறிது திரிந்து 'தாடு” என நிற்கின்றது. இதனை யொத்த வடிவம் எதுவும் பிற இந்து-ஐரோப்பிய மொழி களிற்காண முடியாமையாலும், தக்க அடிவேர்ப்பொருள் கூற இயலாதிருப்பதாலும், அதே வேளையில் மஜல யாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளி லிருந்து தக்க அடிவேர்ப் பொருள் கூறுதற்கு இயல் வதாலும் இச் சொல் தமிழிலிருந்து சமக்கிருதத்துக்குச் சென்றதென்பது தெளிவாகும். 'நாடகம்” என்னும் சொல்தானும், 'கடி' என்னும் பகுதியடியாய்,முதனி2ல திரிந்து ஈறுபெற்றுப்-பிறந்த தொழிற்பெயரேயாகும்.
வா. த-8

Page 21
38
*கட?” எனும் சொல்லின் திரிபே 'கடி' ஆயிற்றென
லாம். 'வட்டம்’ என்னும் தனித்தமிழ்ச் சொல் சமக்கிருதத்தில் "விருத்தம்' என நிற்பதுபோல 'ஈடம்” “கட்டம்” என வரும் தமிழ்ச் சொல்லும்
*நிருத்தம்” எனச் சமக்கிருதத்தில் நின்று வழங்கு கின்றது.
கூத்தும் கூத்தரும்
தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்திருக்கும் பழங் தமிழ் நூல்களுள்ளே தொன்மை சான்றது தொல்காப் பியம் எனலாம். அப் பழந்தமிழ் நூலிலே, அத் தொல் பழங் காலத்தில் தமிழ்மக்களிடையே வழக்கிலிருந்த கூத்து வகைகள் சில குறிக்கப்பட்டுள்ளன. அவற் றுள்ளே, வேலன் ஆடுகின்ற வெறிக் கூத்தும், வெற்றி யடைந்த வீரர்கள் தங்கள் தங்கள் அடையாளப் பூச் தடி ஆடுகின்ற கருங்கூத்தும், வெற்றியைப் பாராட்டி பெண்கள் ஆடுகின்ற வள்ளிக் கூத்தும், களத்தை விட்டு ஓடாத இளைய வீரனுக்குக் காலிலே கழ2லக் கட்டி இரு பாலாரும் ஆடுகின்ற கழனிலைக்கூத்தும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியனவாம். இக் கூத்து வகைகள் மிகுதியும் போர்த் தொடர்பானவை. இவையன்றி, குறிஞ்சிநிலக் கிழவனுகிய முருகக் கடவுளை வழிபட்டு ஆடுகின்ற குன்றக் குரவையும், முல்ஜிலாகிலக் கிழவனகிய மாயோனை வழிபட்டு ஆடுகின்ற ஆய்ச்சியர் குரவையும் அக் காலத்தில் இருந்தன. ஏழு, எட்டு அல்லது ஒன்பது மகளிர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுகின்ற மகளிர் கூத்து வகையே குரவைக் கூத்தாகும். முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கைக் கூத்தினையும் இங்கு

39
குறிப்பிடலாம். விழாக்காலங்களில் மகளிரால் ஆடப் படுகின்ற கூத்துவகைகளுள் இது ஒன்றகும்.
இக் கலையினைப் பண்டைக் காலத்திலே திறம் பெற வளர்த்த கலைஞர்கள் கூத்தர், பாணர், பொருங்ர், விறலியர் என விதந்தோதப்பெறும் நால்வகையினரா வர். எண்சுவையும் மனத்தின் கண் பொருந்திய குறிப் புக்களும் புறம்போர்ந்து வெளிப்படும்படி ஆட வல்லார் கூத்தர் எனப்பட்டனர். ஒருவரைப் போன்று கோலம் புனைந்துகொண்டு ஒப்ப நடிக்கவல்லார் பொருங்ர் எனப் பட்டனர். “பொருங்” என்னும் சொல் "ஒப்ப கடித் தல்” எனும் பொருள் தருவதாகும். இவர்களையொத்து விறல் பட ஆடவல்லாள் விறலி எனப்பட்டாள். பார்ப்போர் கண்ணுக்குத் தமது ஆடற்பொலிவு நிலை பெற்றுத் தோன்றும்படி நடித்துக் காட்டிய இக் கலை ஞர்களைக் கண்ணுளர் கண்ணுளாளர் என விதங் தோதினர் பழந்தமிழ் நூலோர்.
கூத்து நூல்கள்
சிலப்பதிகாரத்துக்கு உரை வகுத்த அடியார்க்கு ாகல் லார், தமக்குப் பல நூற்றண்டுகளுக்கு முன்னதாக வெழுந்த நூலினுக்கு உரையெழுகையில், கூத்து நூல் கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றர். அவை பின் வருமாறு:-1, பரதம், 2. அகத்தியம், 3. முறுவல், 4. சயந்தம், 5. குணநூல், 6. செயிற்றியம், 7, இசை நுணுக்கம், 8. இந்திர காளியம், 9. பஞ்ச மரபு, 10. பரத சேனபதீயம், 11. மதிவாணர் நாடகத் தமிழ் நூல், 12. கூத்த நூல். இவற்றுள்ளே முதலிரண்டு நூல்களும் அடியார்க்குங்ல்லார் காலத்திலேயே இறந்துபட்டன வாம். மற்றைய நூல்களிலிருந்து உரையாசிரியர்கள்

Page 22
4O
இடையிடை தத்திரங்களை எடுத்தாண்டிருப்பினும், அவை எவையேனும் கிடைத்தில.
கூத்து வகைகள்
பழந் தமிழர்கள் கூத்தினை, 1. வசைக் கூத்து, புகழ்க் கூத்து, 2. வேத்தியற் கூத்து, பொதுவியற் கூத்து, 3. வரிக் கூத்து, வரிச்சார்ந்திக் கூத்து, 4. சாங் திக் கூத்து, வினே தக் கூத்து, 5. ஆரியக் கூத்து, தமிழக் கூத்து, 6. இயல்புக் கூத்து, தேசிகக் கூத்து என இரண்டிரண்டு பகுதிகளாக வகைப்படுத்தினர் என்பது பண்டைத் தமிழ் நூல்களால் அறியலாம்?
“வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்து”
(அரங்கேற்று-39, 40) என்னும் சிலப்பதிகாரப் பகுதியாலும்,
'வேத்தியல் பொதுவியல் என்றிரு நிறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்”
(ஊரலர்-18, 19) என்னும் மணிமேகலைப் பகுதியாலும், இருவகைக் கூத்து என விதந்தோதப்பட்டவை வேத்தியற் கூத்து, பொதுவியற் கூத்து என்னும் இரண்டுமேயாம் என்பது புலனுகின்றது.
அறிவு சான்ற மக்கள் குழுமியிருக்கும் பேரவை யிலே மன்னர் முன்னிலையில் கடித்துக் காட்டுவதற் கேற்ற நுட்பமும் சிறப்பும் வாய்ந்தது 'வேத்தியற் கூத்து” எனப்படும். இதனை "அகக் கூத்து” எனவும் வழங்குவதுண்டு. கற்றேரும் கல்லாதாருமாகக் கூடி யிருக்கும். பேரவையிலே எல்லோரும் கண்டு களித்தற்

4丑,
கேற்ற எளிமைாநி2ல வாய்ந்தது 'பொதுவியற் கூத்து" எனப்படும். இதனைப் 'புறக் கூத்து” எனவும் வழங்கு வதுண்டு.
சாந்திக் கூத்து எனப்படுவது த2லவன் சாந்தமாக இன்பமேந்தி நின்று ஆடிய கூத்து எனவும்; அது, 1. சொக்கம், 2. மெய்க் கூத்து, 3. அவிநயம், 4. காடகம் என வகைப்படுத்தப்படும் எனவும், கூறுவர்.
1. சொக்கம்: தனி கடம் ஆகும்; இது 108 கரணம் உடையதென்பர்.
11. மெய்க் கூத்து: உடம்பாகிய மெய்யின் தொழில் கலம் விளங்க நடிக்கப் பெறுவதாகும். இது மெய்த் தொழிற் கூத்து எனவும்படும். உள்ளத்தே தோன்றும் இராசதம், தாமதம், சாத்துவிகம் என்னும் அகச்சுவை பற்றித்தோற்றுவதாதலின் அகமார்க்கம் எனவும்படும். இது, தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இன்று சிங்கள மக்களிடையே வழங்கிவருகின்ற **கண்டியர் கடனம்" இவ்வகைக்குள் அடங்கியதே & JT65b.
III. அவிநயம் கதை தழுவாது பாட்டினது பொரு ளுக்கேற்பக் கை காட்டி வல்லபம் செய்வதாகும். வெகுண்டோன், ஐயமுற்றேன், சோம்பினேன், களித் தோன், உவங்தோன், அழுக்காறுடையோன், இன்ப முற்றேன், தெய்வமுற்றேன், ஞஞ்ஞையுற்றேன், உடன்பட்டோன், உறங்கினேன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழை பெய்யப்பட்டோன், பனித்தலைப் பட்டோன், வெயிற்றலைப்பட்டோன், நாணமுற்றேன், வருத்தமுற்றேன், கண்ணுேவுற்றேன், தலைகோவுற்

Page 23
42
றேன், அழற்றிறப்பட்டோன், சீதமுற்றேன், வெப்ப முற்றேன், கஞ்சுண்டோன் என 24 வகைகளையுடைய தாகும்.
IV. நாடகம்: கதை தழுவி வரும் கூத்தாகும். காடகம் என்பது தனித்தமிழ்ச் சொல்லென்பது முன்ன தாகக் காட்டப்பட்டது.
வினேதக் கூத்து எனப்படுவது, மக்கள் உள்ளத் துக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்த கூத்து வகையாகும். குரவைக் கூத்து, கழாய்க் கூத்து, குடக் கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவைக் கூத்து முத லியனவாகும். காமமும் வீரமும் பொருளாக வரக் குரவைச் செய்யுள் பாட்டாகச் சேர, ஏழு, எட்டு அல்லது ஒன்பது மகளிர் கைகோத்து ஆடும் கூத்தே குரவையாகும். மூங்கிலைக் காலாக நிறுத்தி அதன் மேற் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மீது ஏறியாடுவது கழாய்க் கூத்தாகும். குடக் கூத்தோ, தெய்வத்திறம் பற்றிய பதினேராடல்களுள் ஒன்றகும். நிலத்தின் மேற் பதிந்தாடும் ஆடல் கரணம் ஆகும் பாரமும், நுண்மையும், LDITu (plb சேர்ந்துவர - காண்போர் கண்களை மறைக்கும் தந்திரச் செயல்களுடன்-அமைய ஆடப்படுவது நோக்கு ஆகும். தோலாற் பாவைசெய்து ஆட்டுவிப்பது தோற்பாவைக் கூத்தாகும்.
இவற்றையெல்லாம் விட, பண்டைக் காலந் தொடங்கியே தெய்வத்திறம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டு, நம் காட்டில் வழங்கிவந்த ஆடல்களும் பதினென்று உள்ளன. அல்லியம், கொடுகட்டி,குடைக் கூத்து, குடக்கூத்து, பாண்டரங்கம், மல்லாடல், துடி பாடல், கடையம், பேடு, மரக்காலாடல், பாவையுாடல் எனப்படும் இவை, உலகிற்கு இடர் விளைவித்துவந்த

43
அசுரர்களை அழிப்பதற்காக அமரர்களால் நிகழ்த்தப் பெற்றவை என்பர். இவற்றைத் தெய்வ விருத்தி என் பதுமுண்டு. இவ் வாடல்களின் சிறப்பினைச் சிலப்பதி காரத்தில் இளங்கோவடிகள் தெளிவாக விளக்கியுள் ளார்கள்.
பரத நாட்டியம்
தென்னுட்டிலே பழங்காலங் தொடங்கியே பல நாட்டியக் கஜலகள் வழங்கி வருகின்றன. அவை களுள்ளே பரத நாட்டியம், கதக், கதகளி, மணிப்புரி முதலானவை மக்களாற் பெரிதும் விரும்பப்படுபவை எனினும், பரத நாட்டியம் மட்டும் அவை யாவற்றிலும் தலை சிறந்ததாகப் போற்றப்பட்டு வருகின்றது. காய் தலுவத்தலின்றிக் கஜலகளை ஆராய்பவர்கள் கூட "இந்திய கடனங்கள் யாவற்றுள்ளும் பெருமிதமுடை யது பரத நாட்டியமேயாகும்” என்று போற்றிப் புகழு கின்றர்கள்.
*ாகாடகத்தமிழ் நூலாகிய பரதம்” எனக் குறிப்பர் அடியார்க்கு கல்லார். பரதராற் செய்யப்பட்டதாதலிற் பரதம் எனப்பட்டது எனலாம். கோடகத்தின் இலக் கணத்தை விளக்குவதற்காகப் பரத முனிவர் இயற்றிய நாடகத் தமிழ் நூல் அதுவென்க. இன்றே, அது அந் நூலிற் சொல்லப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த காட்டிய மாகிய கலைத் திறத்தினைக் குறிக்கும் பெயராகவும் வழங்கப் பெறுகின்றது. பரதர் கூறியவண்ணம் ஆடல் பாடல் அழகு என்னும் மூவகை கலங்களையும் ஒருங்கே பெற்ற நாடக மகளிரால், தமது உள்ளக் குறிப்பு உடம்பிலே தோன்றும் மெய்ப்பாடுகளால் வெளிப்படும்படி சுவைபெற கடிக்கப்பெறுவதே பரத நாட்டியம் ஆகும்.

Page 24
44
தென்னுட்டுத் தமிழரே பரத காட்டியத்தை உரு வாக்கி வளர்த்துப் பேணிப் பாதுகாத்து வருகின்றர் கன். இதன் க2லச் சிறப்பினைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்த பிறரும் தென்னிந்தியாவின் பல பகுதி களிலும் இதனை விரும்பிப் பயில்கின்றர்கள். இப் பொழுதும், கட்டுவர் எனப்படும் துலைக்கோல் ஆசான் கள் இதனைக் கற்றும் கற்பித்தும் வருகின்றர்கள். அவர்களுக்கெல்லாம் தேவையான விளக்கங்களை வழங்குவதற்குத் தமிழிலும் சமக்கிருதத்திலும் நூல் கள் உள்ளன.
பரத நாட்டியமாவது, பாடப்பெறும் இசைப் பாட்டிற்கு ஏற்ப அவிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடிக்காட்டுதல் ஆகும். மகளிர் மட்டும் ஆடிக்காட் தற்கென அமைந்த நாட்டியம் இது. முத்திரைகள் எனப்படும் கைக்குறியீடுகள் இதற்கு இன்றியமையா தன. அவிாகயத்திற்குரிய கை இணையா வினைக்கை பிண்டி, ஒற்றைக் கை, இணைக் கை, இரட்டைக் கை. பிணையல் என இரு வகைப்படும். இணையா வினைக்கை எனப்படும் ஒற்றைக் கை முத்திரைகள் 33 விதத்தின வாகும். இணைக் கை எனப்படும் இரட்டைக் கை முத் திரைகள் 15 விதத்தினவாகும்.
பரத நாட்டியத்துக்கு உயிரளிப்பவை இங்கே காட்டப்பட்ட இம் முத்திரைகளேயாம். இம் முத்திரை களைப் போலவே, முகத்தினுலும், கண்ணினலும், புரு வத்தாலும், காலாலும் குறிப்புகளைக் காட்டுவது உண்டு. முகத்தின் குறிப்பு வெளியீட்டு வகைகள் 14 எனப்படுகின்றன.

கதக்
வடஇந்தியாவிலே பிரதானமானவை எனக் கருதப் படும் சிறந்த கடனவகைகளில் கதக் எனப்படுவதும் ஒன்றகும். மொகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் இவ்வகையினைச் சார்ந்த நட னங்கள் மிகவும் பிரசித்திபெற்றனவாய் விளங்கிக் கொண்டிருந்தன. இந்த கடன வகைக்கு அவர்கள் காட்டிவர்ந்த மதிப்பின் காரணமாக அவை மேன்மேலும் ஓங்கி வளர்ந்து வந்தன. பரத நாட்டியம் கதைக்களி (கதகளி) ஆகியவற்றில் வருவனவற்றைப் போன்ற வேகமான ஜதிகள் கதக் கடனத்திலும் உண்டு. இந்த ாகடன வகையில், சிறப்பாகத் திருமால், சிவபெருமான், பார்வதி ஆகிய கடவுளரின் திருவிளையாடல்களையே நடனமாடி வருகின்றர்கள். நடிகர்கள் சிவபெருமானைப் போலவும் பார்வதியைப் போலவும் கோலம் போட்டுக் கொண்டு கடனம் ஆடுவார்கள்.
கதகளி
ம8லயாள காட்டிலே வழங்குகின்ற கடனங்களுக் குள்ளே மிகச் சிறப்புடன் விளங்குவது கதகளி எனப் படும் கதைக்களி கடனமாகும். கதை நிகழ்ச்சியினைக் கை கால்களின் இயக்கங்களால் வெளிப்படுத்துவதே இது. கதகளியில், 1. சாத்துவிக அவிநயம், 2. வசிக அவிநயம், 3. அங்கிக அவிநயம் என மூன்றுவித அவி கயங்கள் கலந்துள்ளன. எனவே, கடிப்பு, பாட்டு, அவி கயம் ஆகிய மூன்றும் கலந்த கவின் கலையே கதகளி எனலாம். கதகளிக்குத் தனியான மேடைகள் அமைப்ப தில்லை. அது திறந்த வெளி நாடகமாகவே நடைபெறுவ துண்டு. சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஒரு

Page 25
46
துணியே திரையாக உபயோகிக்கப்படும். கதகளி தொடங்கும்போதும் முடிவடையும் போதும் திரையினை இருவர் பிடித்துத்தொங்கவிட்டுக்கொண்டிருப்டார்கள். கதகளி நடனத்தில் செண்டை, மத்தளம், தாளம், புல் லாங் குழல், தோலக்கு, கன்சார் முதலான வாத்தியங் க2ளப் பின்னணியில் வாசிப்பார்கள். தேர்ச்சி பெற்ற கதகளி நடிகர்கள் தங்கள் கண், உதடு, புருவங்களின் வேறுபாடுகளால் கவரசங்களையும் வெளிப்படுத்துவர் கள். இன்று, கதகளியில் 600 முத்திரைகளுக்கு மேல் வழங்குகின்றன என்பர்.கதகளியோ மிகவும் வேகமான ஜதிகளையுடைய தாண்டவ முறையைச் சேர்ந்த கடன மாகும். இந்த கடனத்தில் ஒருவர் பூரணமான தேர்ச்சி பெற்றுக் கொள்வதற்கு ஏறக்குறைய 6 ஆண்டுகள் வரை செல்லுமாம். கதகளியில் நடிப்பிற்காக எடுக்கப் பட்ட கதைப்போக்குகளிலே நாடக விறுவிறுப்பும் சுவையும் மிளிரும். சீதா கல்யாணம், வாலி வாதம், சேது பந்தனம், த்ோரண யுத்தம் ஆகியன மிகவும் பிர சித்தமான கதைகளாகும். உண்ணுயிவாரியார், வயஸ் கர முஸ் ஆகிய காவிய கர்த்தாக்களும் பல கதைகளை எழுதியுள்ளனர், இங்ங்னமாக, தமிழர்களிடையே பிறந்த கலையானது, பலராற் பேணிப் போற்றப்பட்டு, பல பெயர்களில் நிலவி, இறுதியாகக் கதகளி என்ற டெயருடன் க2லகளுக்கெல்லாம் உச்சமானதொரு நிலைமையையடைந்தது மிளிர்கின்றது.
மணிப்புரி
இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அசாம் மாகாணத் தில் மணிப்புரிச் சமத்தான மக்கள் ஆடுகின்ற கடனம் மணிப்புரி நடனம் எனப்படுகின்றது. பிற நடனங்கள் யாவற்றிலும் பார்க்க அழகான அங்க அசைவுகளை

47
இந்த கடனத்திற் காணலாம். விசேட சிருங்காரம், லலிதம், ரசஞானம் முதலியவைகள் நிரம்பியது இந்த நடனமாகும். ஜதிகளும் பரத நாட்டியம் கதகளி ஆகிய வற்றிலுள்ளவற்றைப்போல வேகமானவையல்ல. ஆடு வோர் துள்ளிக் குதித்து உட்கார்ந்து தொடர்ச்சி இல்லாத ஜதிகளுடன் ஆடும் அடைவு வரிசைகள் மிக்க கவர்ச்சி பொருந்தியவை. அசம்பாவிதமான அபி கயத்தையோ வார்த்தையையோ இந்த நடனத்திற் காணவியலாது.
மணிப்புரி நடனம், கிருஷ்ணன் யமுனைக் கரையில் கோப கோபிகைகளுடள் ராதையும் சேர்ந்து நிற்ப விளையாடிய ராஜ லீலைகளைக் குறிப்பதாகவே இருக்கும். இந்த நடனத்தை இரவில் மலர்களாலும் இலைகளா லும் அலங்கரிக்கப்பட்ட குடிசையில் ஆடுவார்கள். இவர்கள் ஆடும் பலவகை கடனங்களில் ராதாகிருஷ்ண கடனம் சிறப்புடையதாகும். இந்த கடனத்தில் நடி கர்கள் கிருஷ்ண2னப் போலவும் கோப கோபிகளைப் போலவும் நேர்த்தியான ஆடையாபரணங்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ளுவார்கள்.
இங்ங்னமாக, பழங் தமிழ் காட்டிலே பிறந்து வளர்ந்த கவின் கலைப் பகுதிகள் பல உலகத்தின் பல பகுதிகளுக்கும் பரவி, சிற்சில மாற்றங்களுடன், மக்க ளுக் கெல்லாம் மிகுந்த இன்பமளித்து வருவதைக் காண்கின்றேம்.பழங்காலத்தில் எமதுநாட்டில் வழங்கி வந்த நடன நாடகங்களும், நிழலாட்டம், பொம்ம லாட்டம் முதலியவைகளும் பிற நாடுகளுக்குப் பரவி, சிறு சிறு மாற்றங்களுடன் இயங்கி வருகின்றன. இந்து பெளத்த சமயங்கள் உலகத்தின் பல பாகங் களுக்கும் பரவி வளர்ந்ததுபோல இன் க2லகளும் பரவி நிலைபெற்று வாழ்கின்றன. இவற்றின் ஒற்றுமை வேற்.

Page 26
48
றுமைகளையும் வரலாற்றையும் ஆராய்ந்து காண வேண்டியது எங்கள்மேற் பொறுத்த கடனுகும்.
இசை
இசை என்பது ஒசை. அது பாட்டிற்குரிய இன் னிசையைச் சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது. இதனையே சங்கீதம் என்பர். மரம் செடி முதலிய ஒரறி -வுயிர் தொடங்கி மக்கள் என்னும் ஆறறிவுயிர் வரை எல்லா உயிர்களையும் இசை தன்வயப்படுத்தவல்லது* இசை,வாழ்க்கையில் இன்பத்தை அளிப்பதாகும். இசை யின் அருமையையும் பெருமையையும் தமிழ்மக்கள் மிக நன்கு உணர்ந்திருந்தனர். இயற்றமிழைப் பாடு வதற்கு இசை இன்றியமையாதது. நாடகத் தமிழுக்கும் இசை உயிர் போன்றது.
தமிழன் தன் குழவிப் பருவத்திலிருந்தே இசை கேட்டு இன்புற்றவன். குழவிப் பருவத்திலிருந்தே தாலாட்டு, உளசற் பாட்டுக்களையும், விளையாட்டுப் பருவத்தில் கந்துக வரியையும் கேட்டான். பெண்கள் விளையாட்டுக்களாகிய அம்மானை, பொற்சுண்ணம், சாழல், தெள்ளேணம், உந்திபறத்தல், தோள் நோக்கம் முதலியவற்றுக்கும் பாடல்கள் இருந்தன. திருமணத் துக்கு மங்கல வாழ்த்துப் டாடல் உரியது. வள்ளைப் பாட்டு உலக்கை குற்றும் தொழிலுக்குரியது. போர் முதலிய சிறப்புச் செயல்களுக்கும் ஒவ்வொரு வகை யான பாட்டுக்கள் இருந்தன. இழவுவிட்டிலும் அழுதல் தமிழ்ப் பெண்களின் வழக்கம் என்பது தமிழர்க்கு இசையிலுள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தும்.

இசை நூல்கள்
சிலப்பதிகார உரையிலிருந்து பண்டைக் காலத் தில் இசை நூல்கள் மிகுந்திருந்தன என அறியலாம். பெருங்ாரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், பஞ்ச பாரதீயம்,பஞ்சமரபு,தாளசமுத்திம்,கச்சபுடவெண்பா, இந்திரகாளியம் முதலியன இசைத்தமிழ் இலக்கணங் களாம். இசைத்தமிழ்ச் செய்யுள் நூல்கள் சிலப்பதி காரம், பரிபாடல், கலித்தொகை என்பனவாம். சைவ சமயாசாரியர்கள் ஆழ்வாராதியர் பாடிய நூல்களும் இசைத்தமிழ் நூல்களாம். பிற்காலத்திற் செய்யப்பட்ட குறவஞ்சி, பள்ளு, சிந்து முதலிய நூல்களும், 19-ம் 20-ம் நூற்றண்டுகளிற் செய்யப்பட்ட கீர்த்தனை நூல் களும் அண்ணுமலைப் பல்கலைக்கழக இசைத்தமிழ் வெளியீடுகளும் இசைத்தமிழ் இலக்கிய நூல்களேயாம்.
இசைக் கருவிகள்
தமிழர் இசைகளைக் குரலாலும் கருவிகளாலும் இசைத்தனர். குரல்வழியே கருவிகள் நிகழும். இசைக் கருவிகள் பயன்ப்டும் முறையால் மூவகைப்படும். அவை, பாட்டுறுப்பு, கூத்துறுப்பு, பொது உறுப்பு என்பன. இசைக் கருவிகள், தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என ாநால்வகைப்படும். இக்கருவிகள் ஒவ்வொன்றும் பலப் பல வகைப்படும்.
உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிட்டு மகிழ்வது இயல்பு; ஆசைகூட. எண்ணத்தின் இனி மையை இலக்கிய வாயிலாகவும், உணர்வின் இனிமை யிஜன இசையின் வாயிலாகவும், மெய்க்குரிய செயலின்

Page 27
5O
இனிமையைக் கூத்தின் வாயிலாகவும் பண்டைத் தமிழர் புலப்படுத்தினர்.
பிற காட்டுப் படையெடுப்புகளின் காரணமாகவும், புகுந்த சமயங்களின் காரணமாகவும், பழைய தென் னட்டின் பண்பாடும் நாகரிகமும் மாறுபட்டும், மொழி கலை ஆகியவற்றிற் கலப்பும் சிதைவும் ஏற்பட்டு விட்டன.

நெடுங்கணக்கின் கதை
இன்றைய மனிதன் இரு வகையான மொழிகளை ஆக்கி, வளர்த்துக் கொண்டிருக்கிறன். ஒன்று, சரித் திரத்துக்கு எத்தனையோ நூறயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த பேச்சு மொழியாகும். மற்றையது கண்ணுக்கென அமைந்த எழுத்து மொழி.
மனிதன், எப்போது-எங்ங்னம்-பேச்சு மொழி யினைக் கண்டு பிடித்து, விருத்திசெய்து, திருத்தம் பெறச் செய்தனனென யாம் அறியோம். ஆயின், எவ்வளவு பூர்வீக நிலையிலுள்ளாணுயினுஞ்சரி, மனிதன் உள்ள இடங்களிலெல்லாம் மொழியும் உண்டு என்பது யாம் திடமாக அறிந்ததொன்று. எனினும், மொழி இன்ன இடத்திற்றன் முதன் முதலாகத் தோன்றிற்று என்று கூறுமாறில்லை. உலகத்தின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேருக-தனித்த தன்மையிலேயே பேச்சுத் தந்திரம் எழுந்ததென்று ஊகிக்கலாம்.
எங்கு வாழ்ந்தாலென், எவ்வகை விருத்திபெற்று யர்ந்த சூழ்நிலையிலிருந்தாலென், மனிதன் மனிதனே. உலகத்தில்-எங்கும்-ஒரே வித மா ன கருவியின்

Page 28
52
துணையைக் கொண்டுதான் மனிதன் பேசுகிறன்; பேசுந் தொழிலினையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றன்.
மொழியின் தொடக்கம் பேச்சு என்பதில் எவர்க், கும் ஐயம் எழாது. பேச்சு எழுத்துக்கு முந்தியது. மனிதன் களி மண்ணிலும், மணலிலும், மரப்பட்டை கள் கற்களிலும் தான் நிரந்தரமாக எழுதி வைக்கும். தந்திரத்தைக் கற்றுக்கொள்ளு முன், பேசுக்தொழிலில் வன்மையும் திருத்தமும் பெற்றுவிட்டான். பேச்சு, வெவ்வேறிடங்களிலே தனித்தனியாக எழுந்ததென்று யாம் கம்புவதுபோல, எழுத்துமுறையும் பல்வேறிடங் களிலே தனித்தனியாக எழுந்ததென்று கூறலாம்.
பேச்சுக்குக் காரணமாயிருப்பது ஒலி. ஒலியோ செவிவாயிலாக உணர்ந்து கொள்ளக்கூடியதாய மைந்ததொரு இயற்கை நிலையாகும். செவி தொழிற் படுதலில்லாதவர்கள்-கண்ணினற் பார்த்தறிய வேண் டியவர்களுக்கென ஒலியைச் சாராததாய் ஒரு மொழி வேண்டும் அல்லவா? அதுதான் எழுத்து மொழி யென்று இலகுவாகக் கூறிவிடலாம்.
எழுத்து மொழி கையினலெழுதப்பட்டு அல்லது அச்சிடப்பட்டு, க ன் னி ஞ ற் காணப்படுவதாய் அமைந்தது. அவ் வெழுத்து மொழியானது-அது எப் பொருளின் மேற் பொறிக்கப்பட்டிருக்கின்றதோ, அப் பொருள் நிலைத்திருக்கும் வரையும்-நின்று நிலவுவ தாகும். அதனை உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கும் அனுப்பலாம்.
இந்த எழுத்துமொழி பிறந்த ஆர்ம்ப காலத்திலே, பல இடர்ப்பாடுகளுக்கு உட்படுவதாயிற்று. எனினும், அதன் வளர்ச்சிக்குப் பலமான பங்கங்களின்றியிருந்த

53
மையால், அது,படிப்படியாக வளர்ந்துகொண்டு வருவ தாயிற்று. எழுதப்படும் முறையிலிருந்த குறைகள், எழுதுதற்கு உபயோகிக்கப்பட்ட கருவிகளிலிருந்த குறைகள், எழுதப்பட்ட எழுத்துக்கள் பரவுகின்ற வகையிலிருந்த குறைகள் எல்லாமாய் எத்தனையோ பல குறைகள் இருந்தன. இவைகளையெல்லாம் மனிதனே ஒவ்வொன்றக நீக்கிக் கொண்டான். எழுத் துக்கள் திருத்தமும் ஒழுங்கும் பெற்று காகிதம்-அச்சி யர்ந்திரம்-ஆகிய சாதனங்களும் . வந்து பொலிந்த பின்னர் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த எழுத்து மொழியின் வரலாற்றி2ண-நெடுங்கணக்கின் கதையினையே-இங்கு எடுத்துக் கூறப் போகின்றேன். மனிதர்களுடைய சரித்திரங்களிலும் பார்க்க 'கெடுங் கணக்கின் கதை' - சரித்திரம் - எவர்க்கும் அறிவதற் குரியவற்றுள் ஒன்றகும்.
ஆதிகாலத்தில் மக்கள் தங்கள் எண்ணங்களை  ெய ல் லா ம் சித்திர வாயிலாகவே எழுதினர்கள். மனிதனைக் குறிப்பதற்கு மனிதனைச் சித்திரமாக எழுதினர்கள். மலையைக் குறிக்க மலையின் உருவத் தைச் சித்திரமாக எழுதினர்கள்; பிற பொருள்களையும் அவ்வவற்றின் வடிவங்களையே சித்திரங்களாக எழுதித் தமது கருத்தை வெளியிட்டார்கள். அமெரிக்காவிலும் அவுத்திரேலியாவிலுமுள்ள பழங்குடி மக்கள் எழுத்து களையெல்லாம் இவ்வாறு எழுதும் நிலையிலேயே இப் போது முள்ளனர் எனக் கூறப்படுகின்றது. சீன மொழியானது எழுத்துக்கள் தோன்றிய வரலாற்றினை ஓரளவுக்கு எடுத்துக் காட்டக் கூடியதாய் இன்று முள்ளது. இப்படியாக வரையப்பட்ட சித்திர எழுத் துக்கள் நாற்பதினயிரம் வரை கொண்டதாய்ச் சீன மொழி விளங்குகின்றதென அறிஞர்கள் கூறுகின்றர்
வா. த-4

Page 29
54
கள். அம்மொழியிற் பேசப்படும் சொற்கள் பிறமொழி களிலும் பார்க்கக் குறை வென்றும், எழுதப்படும் சொற்கள் பிறமொழிகளிலும் பார்க்க அதிக மென்றும் கூறப்படுகின்றது.
இங்ங்னமாக எழுதப்பட்ட சித்திர வெழுத்துக்கள் எண்ணங்களை வெளியிடுவதற்குப் பயன்பட்டனவே யன்றி, ஒலி முறையாகப் பேசப்படும் மொழிக்கு கேர்வடிவான எழுத்துக்களாக எழுதிக் கொள்வதற்குப் பயன்படவில்லை. எனவே, பேச்சில் வழங்கப்படுகின்ற சொற்களின் உச்சரிப்புத் தோன்றக் கூடிய வகையில் மனிதன் எழுத்துக்களை ஆக்கிக்கொண்டான். பொருள் களின் சித்திரங்களாக அமைந்திருந்த எழுத்துக்கூட் டங்கள், படிப்படியாக விடுதலையடைந்து, தனித்தனி ஒலிகளைக் குறிக்கின்ற குறியீடுகளாக மாறின. அவையே - எழுத்துக்கள்.
மொழியானது நன்கு வளர்ச்சியடைந்த பின்அம்மொழியில் வழங்கப்படும் சொற்களை யெல்லாம் உச்சரித்துப் பார்த்து-தனித் தனியாக-புறம்பானவை யாய்த் தோற்றமளித்த ஒலிகளே யெல்லாம் தொகுத்து இத்தனை யென்று கணக்கிட்டு-தனிப்பட்ட ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குறியீட்டை வழங்கி கொண்டனர்.
தமிழிலுள்ள எழுத்துக்களை "கெடுங் கணக்கு" என்று கூறுவண்டு. அவ்வெழுத்துக்களைக் கற்பிக் கின்ற ஆசிரியரைக் "கணக்காயர்’ என்பர். யாம் இப் போது எழுதிப் படிக்கின்ற தமிழ் நெடுங்கணக்கு ஆதி காலந்தொட்டு, மாற்றமின்றி இப்படியே இருந்ததல்ல. கி. மு. 2000 ஆண்டுவரையில் முற்றிலும் மாறுபட்ட தாயிருந்த தென்று இப்போதைய ஆராய்ச்சியின் பயனகத் தெளிவாகின்றது.

55
தொன்மை சான்ற தமிழகத்தில் இயற்றப்பட்ட நூல்களுள்ளே பல அழிந்தொழிந்தன. இன்று, எமது கைக்கு எட்டியுள்ள நூல்களுள்ளே மிக பழையது தொல் காப்பியமாகும். அந்தத் தொன்மை சான்ற நூல்-மிகப்பழைய தமிழ் எழுத்தான-வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த தென்று தெரிய வருகின்றது, வட்ட வடிவாய் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் "வட்டெழுத்து' எனப்பட்டன.
தொல்காப்பியம் எழுந்த பழைய காலத்திலே சமக்கிருதத்தின் முதற்பெருங் காப்பியம் எனப்படும் வான்மீகி இராமாயணம் இயற்றப்படவில்2ல. சமக் கிருதத்தில் ஒரு வேதம்மாத்திரம் இருப்பதாயிற்று. ஆரியர் இந்திய காட்டுக்கு வந்தபொழுது எழுத் தெழுதும் முறையை அறியாதிருந்தார்கள். அதன் காரணமாக, அவர்கள் தம் முன்னேர் இபற்றிய வேதப்பாடல்களை - எழுத வழியறியாதவர்களாய் கெட்டுருச் செய்து பாதுகாத்து வந்தார்கள். அதனுலே தான், வேதம் "எழுதா மறை' ஆயிற்று.
தமிழருடன் ஆரியர் உறவு கொண்டு, தமிழறி ஞரின் உதவியைக் கொண்டே, வடமொழி ஒலிகளுக்கு வரி வடிவாகிய எழுத்துக்களை வகுத்துக் கொண்டார் கள். "தேவநாகரி, பிராமியிலிருந்து நமது தமிழ் மொழியின் வட்டெழுத்து முறை அமைக்கப்படுவதா யிற்று' என்று சிலர் கூறுவர். அது பொருந்தாத கூற் றகும். வடமொழியிலிருந்து அல்லது பிராமியிலி ருந்து தமிழ் எழுத்துக்கள் அமைக்கப்பட்டனவாயின், ம8லயாளம் முதலிய மொழிகளில் உள்ளவாறு போல தமிழிலும் எல்லா வடமொழி யெழுத்துக்களும் இருத் தல் வேண்டுமல்லவா? தமிழில் எழுத்துக்கள் ஆக

Page 30
56
முப்பதேயாகும். அம்மொழிகளிலோ ஐம்பத்தாறு. நன்னூலாசிரியரான பவணந்தியார் எழுத்து 'ஒன் றெழி முன்னுாற்றெழுபான்' என்று ஏதோ கூறி விட் டார். கல்லூர் ஆறுமுக காவலரவர்களின் இலக் கணச் சுருக்கத்தில் தமிழில் "எழுத்துக்கள் முப்பதே' யெனத் தெள்ளத் தெளியக் கூறப்பட்டிருக்கின்றமை, காண்க.
வடமொழியைப் போல் தமிழிலும் எ, ஒ என்ப வற்றிற்குத் தனி எழுத்துக்கள் இல்லையாதலின் வட மொழியையொட்டியே தமிழ் எழுத்துக்கள் ஏற்பட் டன” என்று கால்டுவெல் என்னும் ஆங்கில அறிஞர் கூறிப்போந்தார். தொல்காப்பியனர், மெய்யெழுத்து களுக்கு இருப்பது போலவே-எகர ஒகரக்குற்றெழுத்து களுக்குப் புள்ளியிருந்ததைக் குறிப்பிடுவதனல், அவர் காலத்துக்கு முன்னதாகவே எகர ஒகரங்களுக்குத் தனி எழுத்து வடிவம் இருந்தமை புலனகின்றது. குறிலின் புள்ளியை நீக்கி விட்டு, ஏ ஒ என உருவ மாற்றம் செய்தவர் வீரமாமுனிவராவார்.
அசோக மன்னன் அனுப்பிய பெளத்த சமயத் துறவிகள் தமிழ்ாநாட்டுக்கு வந்து பிராமியைப் பரப் பிய காலம் கி. மு. 250 வரையிலாததால், தொல் காப் பியர் கூறும் எழுத்து வடிவங்களைப் பற்றியன வல்ல என்பது தெளிவாகும்.
இப்போதைய ஆராய்ச்சியின்படி கிரந்தமும் பிரா மியிலிருந்து பிறந்ததென அறிகிறேம். எனவே, தொல் காப்பியர் காலத்துனெட்டிய காலத்தில், பிராமியோ கிரந்தமோ தமிழை எழுதுவதற்குப் பயன்படுத்தப் படுத்தப்படவில்லை யென்பது தெளிவாகின்றது. அக் காலத்தில் எழுதப்பட்ட எழுத்து "வட்டெழுத்து"

57
என்பதும், அவ்வட்டெழுத்தையே "கோலெழுத்து” எனவும் "கண்ணெழுத்து' எனவும் பண்டைத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
இங்கு யான் கூறியதான "வட்டெழுத்து” கி. பி. எட்டாம் நூற்றண்டுக் கல்வெட்டு வரையிலும் காணப் படுகின்றது. எங்ங்ணம் பார்ப்பினும் தமிழின் பழைய 'வட்டெழுத்து’ தமிழரே தமது மொழியினை எழுது வதற்காகக் கையாண்ட எழுத்து என்பதில் ஐய மில்லை.
காலத்தினுல் எவ்வளவோ பிற்பட்ட ஆரியர்கள் தமது நூல்களையும், எழுத்தாதியவற்றையும் பழைய னவாகக் காட்ட முற்பட்டதனல் - கெடுங்கணக்கின் வரலாறு கூறுவதில் மாத்திரமல்ல உண்மைகளை உள்ளவாறு அறிவதிற் கூட எவ்வளவோ கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
இவ்வளவும் கெடுங்கணக்கின் கதை. இனி, எழுத்துகளின் குறியீடு பெயர். ஆதியவற்றைப் பற்றி நோக்குவோம்.
உயிரெழுத்து மெய்யெழுத்து என்னும் குறியீடு கள் தமிழிலக்கண நூல்களில் வழங்குகின்றன. தனித் தியங்குகின்ற ஆற்றலை உயிர் என்ற பெயரும், உயிருடன் கூடி நின்றியங்குகின்ற தன்மையூை மெய் (அதாவதுஉடம்பு) என்ற பெயரும் குறிக்கின்றன. உடலும் உயிரும்போல இரண்டும் கூடியியங்குதலின் உயிர் மெய்யென்றும் பெயர் அமைவதாயிற்று. ஆய்தம் என்பதை நுண்ணிது எனலாம். தொல் காப்பியனர் ஆய்தத்தைச் சார்பெழுத்தாகக் கூறியுள் ளார். இது புள்ளி வடிவிற்று எனயாம் கூறுவோம்.

Page 31
58
இலக்கிய இலக்கணங்களுள் யாண்டும் காணப்படுத லால் இது தமிழுக்கே சிறப்பாக உரிய ஒலியாகும்.
ஸ, ஷ, ஹ ஆதியிலே தமிழில் இல்லை. திராவிட முதல் மொழியிலும் இவை இருந்ததில்லை யெனப்படு கின்றது. வடமொழிகளில் இவை வழங்குகின்றன? "ஷ” என்பதற்கு ‘ட’ "ச" என்பனவற்றுள் ஒன்றை யும் ஸ்" என் எதற்குப் பதியாக 'த'ச' என்பவற் றுள் ஒன்றையும் எழுதுவதுண்டு. “ஹ” என்பதற்கும் திராவிடத்துக்கும் தொடர்பில்லை. ஏனெனில், தமிழில் அது ஒலித்தற்கு எளியதல்ல.
பிறமொழிகளிலிருந்து பெறப்படுகின்ற சொற் க2ளத் தமிழில் எழுதும்போது அங்கு வருகின்ற ஒலிகள் தமிழுக்குப் புதியனவாய் இருந்தால், தமிழ் முறைக்கேற்ப அவை மாற்றிக் கொள்ளப்படுவதுண்டு. பிறமொழிச் சொற்கள் தமிழிற் புகும்போது, மெய் களுக்குக்கிடையில் உயிரைப் புகுத்தியோ, மெய்களில் ஒன்றை மற்ருென்றகத் திரித்தோ-ஒலிப்பதற்கு எளி யன ஆக்குவதுண்டு. உதாரணமாக ‘தத்வ-தத்துவ” என உயிர் புகுந்தும் 'அக்ஞானம்-அஞ்ஞானம்' என மய் திரிந்தும் வருத2ல நீங்களும் கவனித்திருப்பீர் கள். ஆங்கிலச் சொற்கள் தமிழிற் புகுத்தப்படும் பொழுதும் இவ்விதமான மாறுதல் ஏற்படுகின்றன. "இங்கிலாந்த் - இங்கிலாந்து” எனவும் "க்றைஸ்ட்கிறிஸ்து, கிறித்து’ எனவும் வருகின்றது.
தமிழில் இவ்விதிகள் போற்றப்படுமளவில், பிற திராவிட மொழிகளிற் போற்றப்படவில்லை. எனினும், தமிழையும் தமிழிலக்கணங்களையும் நன்கு பயின்று கொள்ளாதோர்-ஒரு எல்2லயில்லாமற் பிற மொழிச் சொற்களைப் புகுத்தியும்-தமிழ் மரபினையும் ஒலிய

59
மைப்பினையும் மாற்றிக் கொண்டு வருகிறர்கள். இத னல், பக்தியும்-தத்துவமும்-யுக்தியும் எங்கள் மொழி யில் வந்து விட்டன. "Tumier”-ரம்ளர்-என்ற ஆங்கி லச் சொல்லானது 'தமிழர்” என, சென் ஜனப் பல்கலை கழகப் பேரகராதியிலும் புகுந்து விட்டது
இப்பொழுது, தமிழ் கெடுங்கணக்கிலே சில புதிய எழுத்துக்களையும் "F-Z' ஆகிய சிலவற்றையும் புகுத்த ஒரு கிளர்ச்சி கடைபெறுகின்றது. இம்முயற்சி தமிழுக்கு-அதன் ஒலியமைப்புக்கு-கன்றே தீதோ, தெரியவில்லை. அறிஞர்களே தீர்மானிகக வேண்டும். எனவே, கெடுங் கணக்கின் கதை இன்னும் முடிய வில்லை. தொடர்ந்து வருமென்று புலனுகின்றது அல் லவா?

Page 32
பழந்தமிழ்க் கடவுள் முருகன்
தென்னுட்டின் தொன்மை
தென்னுடு உலகத்தின் பழம்பெரு காடுகளில் ஒன்று என்பதை எவராவது மறுத்தல் சாலாது. அதுவே தமிழினத்தின் தாயகம் எனவும், மக்களினத் தின் பிறப்பிடம் எனவும் இப்போதைய ஆராய்ச்சிகள் நிறுவி வருகின்றன; அத் தென்னுட்டின் பெரும்பகுதி தென்னிந்தியாவையும் இலங்கையையும் உள்ளடக்கிய பிரதேசமே எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். *உண்மையில் தமிழரின் மூலத் தாயகப்பகுதி என்ற பெய்ருக்குத் துணைக்கண்டப் பகுதியைவிட மிகப் பழமை வாய்ந்த உரிமையுடையது இலங்கையே யாகும்.” என இன்றைய ஆராய்ச்சிப் பேரறிஞர்கள் எடுத்தோதுகின்றர்கள். புவியியல் ஆராய்ச்சியாளர் களோ,தென்னிந்தியாவையும் இலங்கையையும் சார்ந்த பிரதேசத்திலுள்ள கற்பாறைகள் உலகத்திலே பழைமை வாய்ந்தவை என்றும், அவை ஒருபோதும் நீருள் மூழ்கிக் கிடைக்கவில்லை என்றும் ஆராய்ந்து கூறுகின்றர்கள். "இமயம் உண்டாவதற்கு நூறயிரக்

6.
கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும், சிந்து கங்கை ஆறுகளும் அவற்றின் சமவெளிகளும் தோன்றுவதற்கு பன்னுாறயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் தென்னடு ஒரு முழு மாநிலமாகவே இருந்தது. இம் மாபெரு நிலப் பகுதியைத் தமிழ் மரபு குமரிக் கண்டம் என்று வழங்குகின்றது.’ எனப் பன்மொழிப் புலவர் கள் நிறுவுகின்றர்கள்.
இங்ங்னமாகத் தொன்மை சான்ற பழந் தமிழகத் திலே, தோன்றிய மலையையும் அதைச் சார்ந்த நிலத் தையும் குறிஞ்சி நிலம் என வகுத்துக்கொண்டார்கள். அந்தக் குறிஞ்சி நிலத்துக்கு முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள். "சேயோன் மேய மை வரை உலகம்” எனத் தொல்காப்பியம் இதனை எடுத் தோதுகின்றது. "சேயோன்’ என்னும் சொல்லுக்கு “சிவந்த நிறமுடையவன்' என்பதே பொருளாகும். “செங்கேழ் முருகன்” என உரை வகுப்பர், கச்சினர்க் கினியர். "கேழ்” என்பது "நிறம்" ஆகும். 'சிவந்த நிறமுடைய முருகன்’ என்பதே கச்சினர்க்கினியர் கருத்துமாகும்.
முருகன்
ஒரு காமம் ஒருருவம் இல்லாத இறைவனை-பேரும் உருவம் கொடுத்து வழிபடும் மக்கள்-கண்கவர் வனப் புடையவனுகவும், செவிக்கினிய தேன் போன்ற இன் சொல்லினையுடையவனுகவும், மூக்கிற்கு இனிமை பயக்கும்ாகறுமணத்தினையுடையவனுகவும்,மெய்க்ாயங் தெரிவிக்கும் இளமையுடையவனுகவும், உள்ளத்திற் பதித்து மதித்து வாயாராப் புகழ்வதற்குரிய கடவுட் டன்மையும் ஒருங்கே அமையப்பெற்றவனுகவும்

Page 33
62
காட்டுகின்ற பெற்றிவாய்ந்ததொரு தனித் தமிழ்ச் சொல்லினல் 'முருகு” எனக் குறித்தமை போற் றமலிருக்க முடியாது. அச் சொல்லினுக்கு, அழகு, தேன், மணம், இளமை, கடவுட்டன்மை என்னும் பொருள்கள் உண்டு. திருமுருகாற்றுப்படை என்னும் நூலின் பெயரிலேகூட 'முருகு” என்ற சொல்லே முருகனைக் குறிப்பதாய் வந்துள்ளது. "வாழிய முருகே’’என கற்றிணைகூறும். 'முருகன்' என்பதற்கு, "முருகை உடையவன்' என்பது பொருள்.
கதிர்காமம்
முருகன் விரும்பி மேவியதும், மிகப் பழைமை வாய்ந்ததுமான திருத்தலம் கதிர்காமம் எனக் கூறுதல் பொருத்தமானது என்பது எமது கருத்து. கடல் கொண்ட தென்னட்டின் தென்கோடிப் பகுதி யுடன் இணைந்ததாயிருந்து கடலுள் மூழ்காமற்றப்பிக் கிடந்த இலங்கையின் தென்பாலுள்ள இத்திருக்கோ யில் பழைமை வாய்ந்தது எனக் கொள்வதில் எவருக் கும் ஐயம் ஏற்படாது. சிங்கள வரலாற்றின் ஆதி பிதா வான விசயன் இந் காட்டில் அடி வைப்பதற்கு முன்ன தாகவே இத் திருத்தலம் இலங்கையில் அமைந் திருந்தது. கி. மு. 500-ம் ஆண்டளவில், விசயன் இத் திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்வித்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறும்.
இத் தலத்தின் பெயர்க் காரண வாராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. எனக் காட்டி, திரு. குல. சபாநாதன் அவர்கள் தமது "திருக்கதிர் காமம்” என்னும் நூலில் பின்வருமாறு கூறுகின்றர்கள் *கதிர்காமம் என்னுஞ் சொல் கார்த்திகேய கிராம என்

63
பதன் மருஉவெனவும், யானை வாழ் கிராமமெனப் பொருள்படும் "கஜரகம" என்பதன் சிதைவெனவும் கதிரு (கச்சு) மரம் நிறைந்த கிராமம் *கதிருகொட" என்பதுபோல எனப் பொருள்படும் கதிருகிராம” என்பதன் சிதைவென வுங் கொள்வர் சிலர். இன்னும் சிலர் இதனைத் தமிழ்ச் சொல்லெனவே கொண்டு கதிர்காமம் என்பது கடவுள் தன்மையுடைய ஒளியும் அன்பும் (கதிர்-ஒளி, காமம்-அன்பு) கலந்து விளங்கு மிடம் எனவும், ஆறு கதிர்ப் பொறிகளாற் பிறந்த ஆறுமுகன் வள்ளிகாச்சியார்மேற் காதல் கொண்டு மணம் புரிந்த இடமாதலிற் கதிர்காமம் ஆயிற்று எனவுங் கூறுவர். இன்னுஞ் சிலர் 'கதிரங் கருங்காலி" யெனும் பிங்கல நிகண்டுச் சூத்திரத்தை எடுத்துக் காட்டித் கதிரமரம் (கருங்காலி மரம்) நிறைந்த கிராம மாதலால், இப்பெயர் ஏற்பட்டதென்பர். "கதிரகாமம்" என்பது சிங்கள மொழிச் சொல்லின் மரூஉவாய்த் தமிழ்மொழியின் கண் திசைச்சொல்லாய்ப் பிற்காலத்து வழக்கில் வந்ததென்பதே எமது கொள்கை. அக் கொள்கைக்கேற்பக் கதிரு மரங்களையுடைய ஊர் எனப் பெயர்க் காரணம் கூறுதலே பொருத்தமாகத் தோற்றுகின்றது.’ (பக்கம்-5.)
தெல்லிப்பழை, திரு. வ. குமாரசுவாமி அவர்கள்
*கதிரைமலைப் பள்ளு” நூலின் முகவுரையில், “கதிர் என்னும் பதம் ஒளி என்னும் ப்ொருள் கொண்டு, கதிர் காமம் கதிரைமலை என்பவன முருகவேள் ஒளியாய் விளங்கி வீற்றிருக்கும் கிராமம், கிரியெனப் பொருள் படும். ‘ஒவற விமைக்கும் சேண் விளங்கவிர் ஒளி" என நக்கீரரும், சோதிப் பிழம்பதோர் மேனியாகி” எனக் கச்சியப்ப சிவாசாரியரும் ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேலளியில் விளைங்

Page 34
64
ததோ ரானந்தத் தேன்’ என அருணகிரிநாதரும் இன்னும் இவர்களைப் போலக் காட்சியனுபவமுள்ள வேறு மகான்களும் முருகவேள் ஒளியாய் விளங்கு வதைக் கூறியுள்ளார்கள். இனி,
“கொடிநிலை கந்தழி வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலனமூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
என்னுந் தொல்காப்பியப் புறத்திணையியற் சூத்திரத்து உரையில், நச்சினர்க்கினியர், "கொடி நி2ல வெங்கதிர் தரியன் எனவும், வள்ளி தண்கதிர் சந்திரன் எனவும், இடைநின்ற கந்தழி, ஒரு பற்றுக்கோடுமின்றி அரு வாகித் தானே நிற்குர்க் தத்துவங் கடந்த பொருள் எனவும் விளக்கி உரை கூறியுள்ளார். இவ்வாறு, ஒளி யுருவாகியும் அருவாகி தத் துவங் கடந்த கர்ந்தழியாகி யும்ாகின்ற நிலையினராக முருகவேள் வணங்கப்படுவதே கதிர்காம கூேடித்திரத்திலுள்ள பெரிய அற்புதமாகும்.” எனக் கூறுகின்றர்கள்.
ஒளிநாடு
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தில் ஒன்றகிய 'ஒளி நாடு" தான் "எல்லம்’ எனலாம். "எல்லே இலக்கம்” என்றது தொல்காப்பியம். 'எல், ஒளி, இலக்கம்” என்ற பொருளைத் தருவதே இலங்கை மாகும். ' இ ல க் க ம் ” என்ற சொல், 'லக,
ல க்திவ” என நின்று சிங்கள மொழியில் இலங்கை யையே குறிப்பதாகும். 'எல் காடு (ஒளி காடு)- எல்லம்எழு (ஏழ்) கோடு-ஏழம்-ஈழம்" என ஆயிற்றென்பது யான் ஆராய்ந்து கண்ட முடிபு. (தமிழன் எங்கே? எனும் எனது நூல் கோக்குக.) குமரி காட்டிலே குமரி

65
மலையாயதுபோல, ஒளி காட்டிலிருந்த மலே 'ஒளி' மலை" யாய் இருந்திருத்தல் வேண்டும். அந்த 'ஒளி' ம8ல"யே-எல் (எழு) மலேயே-'ஏழு ம2ல” ஆயிற்று: 66ÖT 6) TLD
எல்லப்பனும் ஏழுமலையானும்
*எல்லப்பன்" என்னும் பெயர்க்கோ, "செல்லப் பன்’ என்னும் பெயர்க்கோ "செல்லையன்" என்னும் பெயர்க்கோ, 'ஏழும2லயான்” என்னும் பெயர்க்கோ இதுவரை யாராவது காரண விளக்கம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆயின், கதிர்காமம், கதிர்காமமூர்த்தி, கதிர்காமாாதன் ஆகிய பெயர்களின் காரண விளக் கமோ அவசியமில்லை. எல் காடும் எல் மலேயும் மறக் கப்பட்ட இக்காலத்தில் "எல்லப்பன்" இன்னதென விளக்குதல் இன்றியமையாதது. எல்ாகாட்டின்-எல்ம2ல: யின்-மேவிய கடவுள் 'எல்லப்பன்' எனப்பட்டான். இந்த எல்லப்பனே - 'செல்லப்பன்' ஆயினன். செல்லேயனும் அப்படியே. "எல்லப்ப நாவலர், எல்லப்ப கயினர்” என்ற பெயர்கள் யாம் அடிக்கடி கேள்விப்படுவையே. எல்லப்ப நயினர், திருவண்ணு மலை எல்லப்ப பூபதி என்றும் வழங்கப்பெறுவர். சாசனப் பாடல்களால் இவர் பெயர் எல்லன், எல்லான், எல்லப்ப கயினர், காலிங்கன் எனப் பலவாறு வழங், கப்பட்டமை தெரிகின்றது. "எல்லப்பன்" என்ற சொல்லின் கருத்தி2னக் கொண்டதே "ஏழுமலையான்” என்பதாகும். "எல் ம8ல”யே நாளடைவில் 'ஏழ்ம2ல” ‘ஏழு மலை’ ஆயிற்று. உண்மையில் 'ஏழு மலையான்” எனப்பட்டவன் கதிர்காமத்தில் மேவிய முருகனேயா வன். எனவே, "ஏழு மலையானுக்கு அரோகரா’ எனக் கூறி ஆனந்தக் கூத்தாடுவோமாக.

Page 35
எல்லக் கதிர்காமம்
"செல்லக் கதிர்காமம்’ என யாம் அடிக்கடி கூறி வருகின்றேம். ஆயின், அப்பெயரின் உண்மைக் கருத் தினை நாம் உணர்ந்து கொண்டோமில்லை. "எல்லம்’ என்னும் நாட்டிலுள்ள கதிர்காமத்தினையே "எல்லக் கதிர்காமம்’ என நமது முன்னேர்கள் கூறியிருத்தல் வேண்டும். காங்கள் இன்று "செல்லக் கதிர்காமம்’ எனக் கூறி வருகிருேம். 'எட்டி' என்னும் சொல் *செட்டி” எனத் திரிந்து வழங்குவது போல, எல்லக் கதிர்காமமும் செல்லக் கதிர்காமமாகத் திரிந்து விட்டது. இப்படி ஒரு சொல் திரிவு பெறுவதற்கு எத்தனை நூற்றண்டுகள் செல்லும் என்பதை காங்கள் ஊகித்துப் பார்த்தால் கதிர்காமத்தின் பழமை ஓரள வுக்கு விளங்கும்.
வடமொழிக்கு ஏறியது
பழந் தமிழ் காட்டிலுள்ள திருக்கோயில்களின் பெயர்களையெல்லாம்வடமொழியில் மொழிபெயர்த்துத் தமதுடைமைபோலக் காட்டிக் கொண்ட வடமொழி யாளர், திருக்கதிர்காமத்திலும் கை வைத்துவிட்டார் கள் என்பது துலக்கமாகத் தெரிகின்றது. “முதுகுன் றம்-விருத்தாசலம்’ எனவும், 'மறைக் காடு-வேதார ணியம்’ எனவும், 'மயிலாடு துறை-மயூரபுரம்" எனவும் மொழி பெயர்க்கப்பட்டமைபோல, திருக்கதிர்காமப் பெயரும் மொழிபெயர்க்கப்பட்டு “ஜோதிஷ் காமகிரி" எனப்படுவதாயிற்று. தகூழிண கைலாய மான்மியம்? அப் பெயரினையே எடுத்தோதக் காண்கின்றேம்.

வள்ளுவர் கூறிய அறிவியல் ‘ஒப்புரவு
திருக்குறளுக்குப் பதின்மர் உரை கண்டனர்; எனினும், பலரும் போற்றுவது பரிமேலழகர் உரை யினையேயாகும். அவரது உரையின் கண் அறிவின் நுண்மையும், ஆழ்ந்து நோக்கும் மதிவன்மையும், வட மொழி யறிவும், பல பொருள்களையும் சீர்தூக்கி ஆயும் பண்பும் காணலாகும். எனினும் “ஆனையும் அடி சறுக்கும்” என்பதுபோல அவர் தவறிய இடங்களு முண்டு.
பரிமேலழகர் கூறுவது
"ஒப்புரவறிதல்" என்னும் அதிகாரத்து அவதாரி கையில், "உலக கடையினே அறிந்து செய்தல், உலக ாகடை வேத கடைபோல அறநூல்களுட் கூறப்படுவ தன்றித் தாமே அறிந்து செய்யுங் தன்மைத்தாதலின் "ஒப்புரவறிதல்" என்றர்” எனப் பரிமேலழகர் கூறு கின்றர்.

Page 36
68
*ஊருணி நீர் நிறைந்தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு” என்னும் குறளினுக்குப் பரிமேலழகர் 'உலகு அவாம் - உலக கடையை விரும்பிச் செய்யும், பேர் அறிவு ஆளன் பெரிய அறிவினையுடைவனது, திரு-செல்வம், ஊருணி - ஊரின் வாழ்வார் தண்ணிருண்ணுங்குளம், நீர் நிறைந்து அற்று - நீர் நிறைந்தாற் போலும்,” என உரை எழுதுகின்றவர், அடிக்குறிப்பில், “நிறைத லென்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத் தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ்போகாது கெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவு மென்பதாம்’ என்று எழுதியுள்ளார்.
*ஒப்புரவு” என்னும் சொல்லினது உண்மைப் பொருளானது இக்குறளின் கண்ணே அடக்கப் பட்டுள்ள தாகும். இக்குறளினுக்கு விளக்கமாகப் பொருள் கொள்ளா தொழிவமேல் அச் சொல்லினது பொருளிட்டம் பயனற்றதாயொழியும்.
ஊருணிநீர் நிறைந்திருக்கும் ஊரில் வாழ்வோர் எல்லோரும் சென்று முகக்க முகக்க நீர் குறைவுபடு மல்லவா? அங்ங்ணம் குறைபட்ட பொழுதினும் ஒப்புர வுக்குக் குறைவு ஏற்படுவதில்லை. நீர் பெரிதுமில்லாக். காலத்தினும் ஒப்புரவுக்குக் குறைவு வராததுபோலச் செல்வம் சுருங்கிய காலத்தும் அறிவுடையோர் இடத் துக்குத் தக்கவாறு ஒப்புரவு செய்வதிற் குறையா ரென் க.
மறந்த பொருள்
ஊருணியில் நீர் குறையும்போது சுவை காற்றம் முதலியன மாறுபடினும் ஒப்புரவுக்குக் குறை ஏற். படாது. இவ்வொப்புரவே “நீர்மை" எனவும் பட்டது.

69
"நீர்மை"ச்ே சொல் "நீரின் தன்மை” எனப் பொருள் படுவது. "நீர்மை"ச் சொல்லின்-பொருளின்-உண்மைப் பிறப்புக் காரணத்தினை பிற்காலத்தவர் தெரிந்து கொள் ளாமையிஞல் "ஒப்புரவு'ப் பொருளினையும் அதன் தொடர்பினையும் அறவே மறந்தவரானர்.
"நீர்மை"ச் சொல்லினுக்குப் பரிமேலழகர் "நீர்மைநீரின் தன்மை' (இனிமையுடைமை) என்பதையே பொருளாகக் கொண்டார்.
"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில்
sstsoud unLuumff Glsmadeiro என்னும் குறளினுக்கு எழுதிய உரையில், "நீர்மை உடையார்-இனிய நீர்மையுடையார்” என்றும், அடிக் குறிப்பில் 'நீர்மை-நீரின் தன்மை” என்றும் கூறியுள் ளார்.
கிறித்துவுக்கு முன்னரே சொன்னுர்
"தாழ்ந்தது, சொற்படு சீதத்தொடு சுவையுடைத் தாய், இழி நிலஞ்சேர்ந்தாழ்வது நீர்” என்று மணி மேகலையிலும், "தீ முரணிய நீரும் என்றங், கைம் பெரும் பூதத்தியற்கை போல . . அளியுமுடை யோய்” எனப் புறாகானுாற்றிலும் கூறப்படுகின்றது.
தண்மைக்கும், இனிமைக்கும், மிகவுதவுதற்கும் நீர் எடுத்துக்காட்டாகும் என மட்டும் இது கால வரை யும் உரையாசிரியர்கள் கூறி வந்தார்கள். அல்லாமல், நீரின் முக்கியமான ஒப்புரவு (நீர்மை)த் தன்மை (Water seeks its own level) 6T Görgh (2 GooTGOLD) uS260T யாரும் புறம்பாக எடுத்துக் கூறவில்லை. வள்ளுவர் மட்டும் கூறியுள்ளார். கிறித்து பிறப்பதற்கு முன்பே கூறினர். அதுவே, வள்ளுவர் கண்ட அறிவியல் "ஒப்புரவு ஆகும்.
sum。á一5

Page 37
திருவள்ளுவர் *நகை?? செய்கிருர்
உண்மைதான?.'திருக்குறளை இயற்றியருளிய கிருவள்ளுவர் இப்பொழுது நகைசெய்யத் தொடங்கி யுள்ளாரா?” என்றும், நூல் வாங்கி ஆடை கெய்த திருவள்ளுவர் இப்பொழுது பொன் வாங்கி நகை செய்யத் தொடங்கியுள்ளாரா?” என்றும் ஐயம் கொள் ளுதல் வேண்டாமென முதலிற் கூறிவிடுகிறேன். இங்கே நான் கூறவந்தது 'திருவள்ளுவர் சிரிக்கிறர்!” என்றும் "சிரிக்க வைக்கிறர்" 'சிரிக்கச் சொல்லுகிருர்’ என்றுமேயல்லாமல் வேறென்று மில்லை.
சிரியாதவன் எதுவும் புரியாதவன். இன் பத்தின் வெளித்தோற்றம் சிரிப்பு. இதுதான் நகையெனவும் படுகிறது. சிரித்த முகத்தினைக் கண்டதும் நமக் குள்ளும் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது. காம் சிரிக்கிறேம். நகையெனப்படும் இந்தச் சிரிப்பு, இளமை, பேதைமை, மடன், எள்ளல் ஆகிய நான்கினுள் ஏதோ-ஒன்றன் காரணமாகப் பிறக்கும் என்றும் கூறுவார்கள். கடைசி யாகக் கூறப்பட்ட எள்ளல் நகைதான் ஒருவருடையப்

71
மனத்தை கோக்கச்செய்யும் விதத்தில்-கிண்டலாகஇருக்கும். இந்த எள்ளல் நகைதான் "பரிகாசம்” **நையாண்டி" எனப்படுகிறது. இந்த வகையில்-பிறர் மனம் புண்படும்படி இகழ்ச்சி சொல்லி,சிரிக்கவைப்பது கூடாதது என்று கூறுகிறர் திருவள்ளுவர்.
*நகையுள்ளும் இன்னுது இகழ்ச்சி” என்கிறர். பெரியவர்கள் சிரிக்கமாட்டார்கள். ஒருவேளை சிரித்தாலும் அடக்கமாகத்தான் சிரிப்பார்கள். நகைச் சுவை விளைவிப்பதற்காக, இன்று சில பத்திரிகைகள் 'தயவுசெய்து சிரியுங்கள்” என்று தலையங்கம் அமைத்துச் சிரிக்கச் சொல்லுவதுபோல் - திருவள்ளு வரும் எங்களைச் சிரிக்கச் சொல்லுகிறர், 'இடுக்கண் வருங்கால் ஈகுக” என்கிறர். இதைத்தான் திருவள்ளு வர் சிரிக்கச் சொல்கிறர் என்று காட்டினேன்.
இனி, திருவள்ளுவர் எப்படிச் சிரிக்கவைக்கிருர் என்று பார்ப்போம். கல்வி வாசனை இல்லாதவர்கள், சில வேளைகளில் கற்றவர்கள் கூட்டத்திலே வந்து சேர்ந்திருப்பதுமுண்டு. அப்படி அவர்கள் சேர்க் திருந்தாலும் - வாய் பேசாதிருக்துவிட்டார்களானல் - அதிட்டவசமாக, படித்தவர்கள் என்று கருதப்படவும் கூடும். வாய் திறந்து ஏதாவது பேசிவிட்டால் காரி யம் மோசமாகப் போய்விடும். பொள்ளல் தெரிந்து விடும். ஆதலால், அப்படிப்பட்டவர்கள் பேசாமல் இருந்துவிடுவது உலகத்துக்கு மாத்திரமன்றி அவர் களுக்கும் எவ்வளவோ கன்று. இதைத் திருவள்ளுவர்,
*கல்லாதவரும் நனிகல்லர் கற்ருர்முன்
சொல்லா திருக்கப் பெறின்!” என்று - நகைச்சுவை ததும்பக் கூறுகிறர். கல்வி கற்றுக்கொள்ளாத பொல்லாதாரை அவர், சாகனி

Page 38
72
கல்லர்’ எனும் போது, கமக்கு அதிசயம் தோன்று கிறது. அடுத்தபடியாக, அவர் தொடர்ந்து 'கற்றர் முன் சொல்லாதிருக்கப்பெறின்” என்று கூறும் வேளையில் எமக்குச் சிரிப்பு வருகிறது. சிரிக்கிறேம். இப்படியாகத் திருவள்ளுவர் எத்தனையோ இடங் களிலே சிரிக்கவைக்கிறர்.
இப்படியாகச் சிரிக்கச் சொல்லியும், சிரிக்க வைத்தும் மகிழுகின்ற திருவள்ளுவர் நன்கு சிரிக்கத் தெரிந்தவராகத்தான் இருத்தல் வேண்டும். உண்மை யில் திருவள்ளுவர் சிரிக்கிறர். அவர் அப்படிச் சிரியா விட்டால் மற்றவர்களிடமிருந்து சிரிப்பி2ன எதிர்பார்க் கலாமா? அவர் சிரிக்கிறர். சிரியாவிட்டால்.
*தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என்று கூறுவாரா? ஒருபொழுதும் கூறமாட் டார்.
"நகை, நகைத்திறம் பற்றி ஒருவன் ஒரு நூல் எழுத முனைவதானல், அதனை ஓர் இலக்கிய கோயின் முன்னறிவிப்பு என்றே கருதலாம். ஏனெனில் இம் முயற்சியே அதன் ஆசிரியரிடம் அவ்விரு திறங்களும் இல்லையென்பதற்கான அறிகுறி ஆகும்” என்று டெர்னுட்ஷா கூறுகிறர். ஆகவே, ககையைப்பற்றியோ ாககைத்திறம்பற்றியோ எழுத எவரும் முனையக் கூடாது. முனைந்தால் நகைதான் பிறக்கும்!

மொழிபெயர்ப்பு- ஒரு கலை
வாழ்க்கைக்கு முயற்சி கட்டாயம் என்பது எல் லோரும் அறிந்தது. முயற்சி இரண்டு வகையாகப் பகுக்கப்படும். ஒன்று உடம்பு முயற்சி; மற்றென்று அறிவு முயற்சி. உடம்பு முயற்சியைத் "தொழில்” என்றும், அறிவு முயற்சியைக் "கலை" என்றும் சொல் லலாம். இப்படியான கஜலகள் எத்தனையோ பல உள்ளன. கமது முன்னேர்கள், கலைகளை அறுபத்து கான்காகப் பாகுபடுத்திக் கலைமகளைக் க2லகட்குத் தலைவி ஆக்கியும் வைத்தனர். "ஆயகலைக ளறுபத்து ாகான் கினேயும் ஏய உணர்விக்கும் என்னம்மை" என்றர் கவிவல்ல கம்பரும். ஆணுல், இன்றே கலைகள் மேலும் பெருகிவிட்டன.
“எடுத்துக்கொண்ட பொருளின் கருத்தும் நுட் பமும் நயமுங் தோன்ற ஏற்றவாறு கூட்டியுங் குறைத் தும், சுருக்கியும் விரித்தும் பெயர்த்தமைப்பதே" மொழிபெயர்ப்பு எனலாம். அங்கும் எடுத்துக்கொண்ட பொருளின் தன்மைக்கும் அளவுக்கும் ஏற்றபடி அணி யும் ஆற்றலும் செறிந்து விளங்க, மொழியினது

Page 39
74
பெருமையானது சிறிதும் நலிவுறதபடி இரு மொழி களின் பெருகலங்களும் தோன்றத்தக்கபடி பெயர்த் துரைத்தலே சிறப்புடையதாகும். அல்லாமலும் இரு மொழிகளிலும் ஆன்றேர் வாக்குகளின் கருத்தொப் புமை காணப்படுமிடங்களிலெல்லாம் அவற்றை எடுத் துக்காட்டியும் படிப்பவர்களின் மனத்துக்கு இன்பங் தரத்தக்கவாறு பழமொழிகளுள் இயையத்தக் கபடி பொருத்தி மேற்கோள்களுடன் மொழிபெயர்ப்பதே விரும்பத்தக்கது.
மொழிபெயர்ப்பு எமக்கோ எமது காட்டுக்கோ புதியதல்ல. பண்டைக்காலங் தொடங்கியே மொழி பெயர்ப்புகள் நமது நாட்டில் உலவின. பழம் பெரும் இலக்கண நூலாகிய 'தொல்காப்பியத்'திலே கூடநூல் வகையிலே-மொழிபெயர்ப்பும் ஒ ன் ற க க் கூறப்படுகின்றது:-
“தொகுத்தல் விரித்த ருெகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே” என்பது தொல்காப்பியச் சூத்திரம். “மொழிபெயர்ப் பென்பது, பிற பாடையாற் செய்யப்பட்ட பொரு ளினைத் தமிழ் நூலாகச் செய்வது” என்பது உரை.
ாகமது காட்டிலே பழைய காலத்திலே வழங்கிவந்த இரு மொழிகள், தென் மொழி, வட மொழி என்பன வாம். "தென் மொழி” என்றல் 'தமிழ்”. 'வடமொழி” என்றல் 'சமஸ்கிருதம்'. பழைய காலத்திலேயே பல நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழிலும், தமிழிலி ருந்துசமஸ்கிருதத்திலுமாக மொழிபெயர்க்கப்பட்டன. கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இயற்றிய கர்ந்தபுராணம் என்னும் காப்பிய நூல், வட மொழிக் காந்தப்புராணத்திலிருந்து மொழி பெயர்க்கப்படுவ

75
தாயிற்று. கம்பாநாட்டாழ்வார் இயற்றிய கம்பராமா யணமும் மொழிபெயர்ப்பேயாகும். "பொருளாலும் அக லத்தாலும் தமிழ் நூல்களை யாவற்றிலும் சிறந்ததும்’- 'பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவும் பொருந்திய தும்-"தேவார திருவாசகங்களைப் போல அரிய அருட்பாக்கள் நிறைந்துள்ளதும் திருக்கோவையார் போலப் பொருளிலக்கணத்துக்கு இலக்கியமாக ஆன்ம ஈடேற்ற முறையை ஒருங்கே கூறுவதுமாகிய கந்த புராணத்தினை-மொழிபெயர்ப்பு என்ற எண்ணத். துக்கே இடம் வையாமல்-இயற்றியளித்த கச்சியப் பரை எவராவது போற்றமலிருக்க முடியாது. கச்சியப் பர் காட்டிய வழியைப் பின்பற்றியே கம்பர் முதலாய புலவர்களும் தமது நூல்களை ஆக்கிக் கொண் டனர்.
பிற மொழிகளை அறியாத கம்மில் அநேகர் காளி தாசன், சேக்ஸ்பியர், தாகூர் மகாகவிகள் என்று கூற காமும் ஒப்புக்கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றேம். படத்திலே கூட அஜந்தாச் சித்திரத்தைக் காணுமல்,
*அவை எவ்வளவு அழகுடையன' என்று எப்படிச் சொல்லுகினருேமோ-அது போலத்தான், காளிதாசனை யும், சேக்ஸ்பியரையும், தாகூரையும் சொன்னேம்.
இன்னும், சொல்லுகிறேம். மொழியினலே துண்டிக் கப்பட்டு - ஓர் ஆற்றின் இரு கரைகளிலும் நின்று
கொண்டு து டி த் துத் தவித்துக்கொண்டிருக்கும்
ஊமைக் காதலர் இருவர்போல-இக் கவிஞர்களை யெல்
லாம் நாம் கண்பர்களாக்க முயன்றபோதிலும் நமக்கு முன்னே ‘மொழி'என்னும் சுவர் எழுந்து நிற்கின்றது. அச் சுவரினைத் தகர்த்து வீழ்த்தி-அப் புலவர்களையும். நம்மையும் உறவாடிச் சிரிக்கவும் மகிழவும் வைப்ப
வன்தான் மொழிபெயர்ப்பாளன்.

Page 40
76
இங்ங்னமாக மொழி பெயர்ப்பாளன் செய்துவைக் கின்ற உறவிலே, பெரியதொரு ஆபத்தும் கிடக்கின் றது. மொழிபெயர்க்கப் புகுந்த மொழியின் தூய்மை அழிந்தொழிந்து விடாதபடி காப்பது அவசியமாகும். அதுவுமன்றி ஒவ்வொரு விதமான மரபு உள்ளதென் பதை எவரும் மறுக்கமுடியாது. அந்த மரபினைத் தழுவி எழுதப்படுகின்ற எழுத்துத்தான் சோபை அடைகின்றது; நிலைபெற்றும் நிற்கின்றது. வேறெரு மொழியின் இ லக் கண விதிகளையும் இலக்கிய அமைப்புக்களையும் அப்படியே எங்கள் தாய்மொழி யிலும் புகுத்தப் பார்ப்பது சிறந்த முறையாகாது. காலத்திற்கேற்றபடியும் நம்முடைய மொழியின் வளர்ச்சியை கோக்கியும் சில புதிய சொற்களை ஆக்கிக் கையாள வேண்டியிருக்கலாம். அப்படிச் செய்வதை விட்டு-பழமையை அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட்டு -புதுமையாகவே எல்லாம் அமைதல் வேண்டும் என்ற தனி உற்சாகத்தினல் ஒரு மொழிக்கென்று தனியாக வுள்ள ஒழுங்கினையே மாற்றி அமைத்துவிட முயலு தலாகாது.
பிற மொழிகளிலுள்ள கருத்துக்களையும், அந்தக் கருத்துக்களையெல்லாம் அந்த மொழிப் பண்டி தர்கள் படிப்பவர் கருத்திலே பதியுமாறு எங்ங்னம் வெளியிட்டிருக்கிறர்கள் என்ற நுணுக்கத்தையும், ாகாங்கள் அவசியம் அறிந்துகொள்ளுதல்வேண்டும். அந்தக் கருத்துக்களையெல்லாம் நாம் எமது மொழியில் மொழிபெயர்த்து இயற்றிக் கொள்ளுதலும் முக்கியமா னதேயாகும். அப்படி மொழிபெயர்த்தியற்றும்போது கமது மொழியின் உடைகளை அந்தக் கருத்துக்களுக்கு அணிவிக்கவேண்டும். அவற்றை யெல்லாம் நமது மொழிக்கே யுரியனவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

77
அன்னியரின் உடையுடன் காங்கள் தோன்றிக் காட்சி யளிப்பது எமக்கே பெரிய இழுக்காகும்.
மொழிபெயர்ப்பு விருத்தி பெறுவதற்குப் போதிய கலைச் சொற்கள் - ஏற்றனவாய் - இயற்றப்படாமையும் ஒரு காரணமாகத் தெரிகின்றது. சோம்பல் காரணமாக, வும், சிலர் பிறமொழிச் சொற்களை அளவின்றிக் கலந்து மொழிபெயர்ப்பதனை மேற்கொள்வாராயினர். அவர்கள் செயலினுல் கம்முடைய 'இனித்த கறுந்தமிழ் மொழி” யின் செம்மை குறைவுபடுவதாயிற்று. சிலர், சொற்களே மாத்திரம் ஒரு வரையறையின்றிக் கடன் கொண்டதோ' டமையாது, பிறமொழிகளுக்குரிய மரபுகளையும் வசன அமைப்புக்களையுங்கூட எடுத்துக் கையாளத்தொடங்கி விட்டார்கள்.இவைகள் யாவும் தவிர்க்கப்படவேண்டிய வைகள். வசன அமைப்பிலே ஏற்படுகின்ற குறைகளுக் குக் காரணம் - ஆங்கிலத்தைப் பயின்று - ஆங்கிலத்தி லேயே நினைத்து - அதனையே, பின் தமிழில் மொழி பெயர்த்தியற்ற முயல்வதே என்பதில் ஐயமில்லை.
ஆங்கிலச் சொற்களையும் பிற மொழிகளிலுள்ள சொற்களையும் தேவையானபோது எடுத்தாளலாம் என்பர் சிலர். இப்போது ஆளுவதிலே-பார தூரமான” குறை வராவிட்டாலும்-இனி வருங்காலத்தில் - ஆங்கி லத்துடனிணைந்த பிற மொழிகளும் நமது நாட்டில் செல்வாக்குக் காட்டாத காலத்தில் - அப்படிப்பட்ட சொற்களின் வரலாறு இன்னதென்று கூடத் தெரி யாமல் உயிரற்ற வெறுஞ் சடலங்களாகவே அவை உலவுவனவாம். எனவே, இவற்றையெல்லாம் காங்கள் சிறிது கவனிக்கவேண்டும். 'Botany" எனப்படும். பயிரியலில் எத்தனை பிறமொழிச் சொற்களை மனனஞ் செய்து அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்.

Page 41
78
றுக்கெல்லாம் தமிழிலே சொல்லாக்கம் செய்துகொள்ள முடியாதா? என்பதை நாங்கள் சிறிது சிந்திக்க வேண்டும்.
யப்பானியர் அறிவியற் கலையில் முன்னேற்றம் பெற்றுக்கொண்டமை, அறிவியலிற் கையாளப்படும் *க2லச்சொற்கள்' எல்லாவற்றிக்கும் தமது மொழி யிலேயே ஏற்ற சொற்களை அமைத்துக் கொண்டதினல் தான் என்று திடமாகக் கூறலாம். Asbestos" என்ப தற்கு 'Seki-men" என்பர்; ‘கல்-பஞ்சு" என்பதே அதன் பொருள். ’Barometer என்பதற்கு Seiu-kei என்பர்; வெயில்-மழை-அளப்பான் என்பதே அதன் பொருள். *Battery" என்பதற்கு "Den-chi என்பர்; ‘மின்சாரக் குளம்" என்பதே அதன் பொருள். ‘Railway" என்பதற்கு *Tetsu-do” என்பர்; 'இருப்புப் பாதை’ என்பதே அதன் பொருள்.
இப்படியாகச் சொல்லாக்கம் செய்து கொள்ளுவது எமக்கும் எமது மொழிக்கும் பெரும் பயன் தருவ தாகும்.
*புத்தம் புதிய கலைகள்-பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருவது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’ என்று வரகவி பாரதியாரின் மனம் துடித்தது. இன்று மொழி பெயர்ப்பாளர்கள் பலர் தோன்றி-பற்பல அறிவியல் நூல்களைத் தமிழிலே மொழி பெயர்த்தியற்றியுள்ளார் கள். 'மறைவாக கமக்குள்ளே பழங்கதைகள் சொல் வதிலோர் மகிமையில்லை-திறமான, புலமையெனிற் பிறநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என்று பாரதியார் பாடியபோது தமிழ் நூல்களைப் பிற மொழிகளிலே மொழி பெயர்த்தியற்றல் வேண்டும்.

79
பிற நாட்டார் அவற்றைக் காணுதல் வேண்டும்என்றே அவர் கருதினர் என்பது எமது கருத்து.
இலக்கியத்தை மொழிபெயர்க்கக் கூடாதென்றும், மொழி பெயர்த்தால்-உணர்ச்சியோ-உயிர் காதமோ - கிடவாது என்றும் எம்போலியருள்ளே பலர் கருதி யிருந்தார்கள. வல்லவனெருவனல்-வல்லவனுக்குப் புல்லு மாயுதம்" என்றபடி-இயலும் என்பதற்கு ஒர் உதாரணம் காட்டுகிறேன்.
விபுலாாகந்த அடிகள் சேக்ஸ்பியர் இயற்றிய *யூலியஸ் சீசர்' என்னும் காடகத்திற் சில பகுதிகளை ஆங்கிலத்திலிருந்து நமது மொழியில் மொழிபெயர்த் திருக்கிறர். மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே எழாது, அதனைப் படிக்கும்போது:
யூலியஸ் சீசரின் மனைவி கல்பூர்ணியா தீக்கனக் கண்டு அச்சமுற்றெழுந்து புறத்தே நிகழுகின்ற உற் பாதங்களில்ை உள்ளம் அவலித்துத் துயிலொழித் திருந்து, காலைப்பொழுது வந்ததும் கணவன் முன் னிலையை யடைந்து,
"பேரிரவில் நடந்தவெலாம்
பீழையினை விளைக்கப் பேதலிக்கும் உளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள் ஆருயிர்க்குத் தலைவ! கிணதருட்
செவியில் வீழ்க, அகத்திடையின் றிருந்திடுக
அவைபுகுத லொழிக’
எனக் குறையிரங் து வேண்டி நின்றனள். அத2னக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,

Page 42
8O
*அஞ்சினர்க்குச் சதமரணம்,
அஞ்சாத நெஞ்சத்(து) ஆடவனுக்(கு) ஒரு மரணம்
அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவர், என்றறிந்திருந்தும் சாதலுக்கு கடுங்கும் துன்மதிமூடரைக்கண்டாற்
புன்னகைசெய் பவன்யான்' “இன்னலும் யானும் பிறந்த
தொருதினத்தில் அறிவாய் இளஞ் சிங்கக் குருளைகள்யாம்:
யான்மூத்தோன் எனது பின்வருவதின்னல்எனப்
பகை மன்னர் அறிவார், பேதுறல் பெண்ணணங்கே யான்
போய் வருதல் வேண்டும்” எனக் கூறினர்.
இவைகளைக் கண்ட பின்புதான் மொழி பெயர்ப் புக்கு, மொழி வன்மை வேண்டும்-அனுபவம் வேண்டும். - ஆற்றலும் வேண்டும் - இவையெல்லாம் ஒருங்கே சேரவேண்டும் என்று கண்டுகொண்டேன். உண்மை யிலே, “மொழிபெயர்ப்பு ஒரு கலை’தான்.


Page 43
ஆசிரியர், உயர்திரு. தென்பு அவர்கள் ஒரு தக்லசிறந்த பு புதிய எழுத்தாளரிடையேயும் ( தக்கவர் என்பதை இவ்வேடு காட்டுகிறது. அவரது ஆராய் தமிழின ஆராய்ச்சிப் படைப்ட வைத்தாற் போன்றது. அத்து புதுத் திசைகாட்டித் திரும்பு அதே சமயம் ஆராய்ச்சிகள் தெளிவும் கவர்ச்சியும் ஏட்டி அதன் முதற்பக்கம் முதல் வி கடைசிப் பக்கம் கடைசி வரி தையும் கருத்தோட்டத்தையும் புனேகதைக்கே யுரிய உயிரோ போக்குக்கு அளித்து, அதை பெற்ற பொன் மலரோ என்னு யுள்ளார்.
- பன்மெ
திரு. கா. "தமிழன்
LLLLSLLL0LLLL0LLL0LL0LL0LL0LL0LLLL0LSLLL0LLL0LLL0LLe
JA KET PER INTED AT TE
 

కccc-******
லோலியூர், மு. கணபதிப்பிள்ளே ஆராய்ச்சியாளர் மட்டுமல்லர் : முன் வரிசையில் இடம் பெறத் தெள்ளத் தெளிய எடுத்துக் |ச்சி இருபதாம் நூற்ருண்டின் க்களுக்கெல்லாம் ஒரு சிகரம் துறையில் புரட்சிகரமான ஒரு முகமாயும் அமைந்துள்ளது. சில் எளிதில் காணமுடியாத ன் கடையில் மிளிர்கின்றன. ரியில் கண்ணுேட விடுப்வர். செல்லும்வரை கண்ணுேட்டத் ம் இடையே நிறுத்த முடியாது. ட்டத்தை அவர் தம் ஆராய்ச்சிப்
மணமும் உயிர் வளர்ச்சியும் பம்படி ஓர் அரும் படைப்பாக்கி
ாழிப்புலவர், அப்பாத்துரை, எம்.ஏ.எல்.டி. ாங்கே " நூலின் சால்புரையில்)
CKICKICKICKICKSKICKXKYK
ASIAN PRINTER5, MADRAS-5