கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2000.10

Page 1
OQʻS)
l'illtir i Lor, itilis,
॥
 

به مرة بلدية * 4 مرة
:ேபு.

Page 2
SA DIRWING SCHOOL
Experience Instructor & SA SCOOTRANSPORT SERVCE Experienced Driver
Your children arc home on time after School
to Si from Homebush public school, Homebush boys school & Strathfield girls high school The transport services are from the following areas: Auburn, Lidcombe, Flemington, Homebush, Strathfield
and other nearest areas
Contact: ANANDAKAJAN(k'aj)
Phone: 9763 7515 / 9763 1620 Mobile: 04.1 1 091 013
டுடுDAR
(In a new I ocation) FOR ALI KINDG OF SOUTH INDIAN & SK LANK/\N FOOD & GNACKS
DINE IN, TAKE AWAY- OKL. HON/IE DELIVERSY
(/\c I, II. ( 11. и 4e: , , pplУ)
CATERING AVALABLE FOR 9PECIAL EVENT c3
Tel: (02) 9748 1841, 97379884 (Η)
l64 Parramatta Road, Auburn N.S.W. 244
 

களம் 7
மனித மனத்தை உழுகின்ற
“asasiapu உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் αδειςύ ωου , சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
b6fîiJNJgf6) :- Aus. S2.50 ஆண்ருச்சந்தா O 6řibsT(6) :- Aus. S10.00 Q6QJ6îb (G :- Aus. S20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பய் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. செளமியா சற்குருநாதன் Tele: (02)98962 116
"KALAPPA”
Sydney University Tamil Society P.O. Box40, Wentworth Bldg.,
University of Sydney, NSW 2006
AUSTRALIA
Email: kalappaiGDyahoo.com Internet Web Site:
ww.tamilaustralian.com sydneysuty
புதிய பாலம் . காணாமல் போனவன் ....... 6
அவுஸ்திரேலியாவின் ஆதிகுடிகள் . 8 எங்கள் சிந்தனைகள் உயிர்க்காதவரை11
நாவல் வெளியீடு .........11
ஈழத்தில் இசை வளர்த்தோர் . 2 சிறப்புமிக்க சிட்னி ஒலிம்பிக்ஸ் . 14 மலைகளும் மனிதர்களும் ......... 18 நாம் இருக்கும் நாடு நமது. 20 சமகால சதுரங்கம் ............ 26 சுகமான ரணங்கள் ........ 32 சிட்னி ஒலிம்பிக்ஸ் - ஓர் அனுபவம்.38 இந்த வாழ்க்கை ஆனந்தமாக ... 4{ சுவரொட்டி . 47 தமிழ் இனத்தின் பரம்பலும் ...48 மாமியார் - மருமகள் ........ SS சும்மா இருந்தால் சொகுசல்லவோ .8 சாதி . 60 குழலோசை . 64
Proudly sponsored by 49 University of Sydney
UNION

Page 3
abasaput
willાઈી 2000
எங்கு
உலகம் உருண்டையானது. போனாலும் திரும் பவும் பழைய இடத்திற்கு வந்து சேரமுடிகின்றது. அதேபோல, எந்தத் தேசத்திற்குச் சென் றாலும் சில அடிப் படைப் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. சிலவேளை அவை சிறிய அளவில் இருக்கலாம்; அல்லது இன்னும் பெரிய அளவில் கானப்படலாம். நாம் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகளை, இனி ன ல களை உலகில் பல பகுதிகளிலுள்ள மக்களும் அனுபவித்து வருகின்றனர். கடுகதி வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நாங்கள் எம்மைச் சுற்றி நடைபெறும் விடயங்கள் பலவற்றில் அலட்சியமாக இருந்துவிடுகின்றோம்.
எமது அலுவல்கள், வேலை, குடும்பம், வீடு என்று வாழ்ந்து வரும் எமக்கு,
எதுக்கெடுத்தாலும் "நேரமில்லை” என்ற
அங்கலாய்ப்பு. ஏன் இப்படி வாழ்க்கையை வெறுக்கும் வகையில் வாழ்ந்து வருகினி றோம் ? நாம் ஏணி புலம்பெயர்ந்தோம்? இங்கு வந்த நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? "அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுவிட்டுப் பண்டைய தமிழன் போல, திரைகடலோடித் திரவியம் தேடிக் கொண்டிருக்கின்றோம். பல இன்னல்கள், பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு இங்கு வந்த எமக்கு, எம்மை இந்தப் புதிய சூழலில் நிலைப் படுத்தி,
வலுப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. அதனால் பிறகு மற்றவற்றைக் கவனிப்போம் என்று இருந்து விடுகின்றோம். "பிறகு” என்பது பின்னரும் பிறகாகி நாம் வந்த பாதையை மறந்து விடுகின்றோம். நாம் எல்லோருமே ஒரு விதத்தில் “அகதிகள்” என்பது உண்மையான போதிலும், அதை எம்மில் பலர் ஏற்றுக் கொள்வதில் லை. “அகதிகள்” என்றால் இழிவு என்று கருதுகின்றோம். அதனால் அகதிகளாக இனி ன ல படும் மக்களை நாம் கவனிப்பதில்லை; மாறாக அவமதிக்கத் தலைப்படுகின்றோம்.
இங்கு எல்லாச் சிறுபான்மையினரையும் இந்த அரசாங்கம் கவனிக்கும் விதத்தில் பல ஒற்றுமைகள் உண்டு. குறிப்பாக அவுஸ்திரேலியா வாழ் பூர்வீகக்குடி மக்கள் நடாத்தப்படும் முறையைப் பலர் நன்கு அறிவீர்கள். பிரித்தானியக் குடியேற்ற வாசிகள், பூர்வீகக்குடிகள் வாழ்ந்து வந்த இந்தக் கண்டத்தை அபகரித்து, "தங்களது" என்று உரிமை கொண்டாடினர். இங்கு பூர்வீகக்குடிகள் எவரும் இருக்கவில்லை என்று கூடப் பொயப் பகர் நீதனர் . அத் துடனர் நின்றுவிடவில்லை. இந்தப் பழங்குடிகளை விலங்குகளை வேட்டையாடுவது போலத் துப்பாக்கி சகிதம் வேட்டையாடினர். இதனால் நிலைகுலைந்த ஆதிவாசிகள், மறைந்திருந்து வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தனர். தம்மைப் பாதுகாக்க வறண்ட காட்டுப் பகுதிகளுக்குச் செல்ல
2 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

ஐப்பசி 2000
assasiapu
வேண்டியதாயிற்று. வெள்ளையர்களுடன் வந்த தொற்று வியாதிகள் பல ஆதிவாசிகளின் உயிரை எடுத்தன. படிப்பறிவு, அனுபவம் குறைந்த இந்த ஆதிவாசிகள் மதுபானங்களில் தம்மை மூழ்கடித்துச் சமூக, சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகினார்கள். தமது வாழ்வின் பல வருடங்களை இழந்தனர் . இளமையில் வியாதிகளுக்கும், பின்னர் இறப்பிற்கும் ஆளாகினர். அன்றைய அரசாங்கங்கள், பொருளாதார, கல்வி, வாழ்க்கை நிலையில் பின்தங்கிய இந்த மக்களை எந்த விதத் திலும் முனி னேற்ற விரும்பவில்லை. ஆதிவாசிகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்களது
குழந்தைகளைப் பலவநீதமாக பெற்றோர்களிடமிருந்து பிரித்து ஆச்சிரமங்களிலும், மடங்களிலும்
கொண்டு போய்ச் சேர்த்தனர். அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நல ல வாழி கி கையை அமைத் துக் கொடுக்கின்றோம் என்று சொல்லியே அவர்கள் அப்படிச் செய்தனர் . பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட இந்தக் குழந்தைகள் அனுபவித்த உடல், உளவியல் ரீதியான கொடுமைகள் வெளிச் சத்திற்கு வரம் 6) ஆண்டுகளாயின. அவர்கள் குற்றம் இழைத் தாலி கடுமையாக தி தண்டிக்கப்பட்டனர். இன்று பெரிதாகப் பேசப்படும் விடயம் "குழந்தைகள் முறைகேடாக நடாத்தப்படுதல்" (Child abUSe).e.,(5ưố. குழந்தைகளாக இருந்த போது அவர்கள் மீது மேற் கொள்ளப் பட்ட 6) முறைகேடுகளுக்குப் பரிகாரம் தேடிப் பல ஆதிவாசிகள் தமது கதைகளை நீதிமன்றத்திலும், பொதுசனத் தொடர்புச் சாதனங்களிலும் கூறி வருவதை அறிகின்றோம்.
எழுபதாம் ஆண்டுகளில், அவுஸ்திரேலிய அரசாங் கம், பூர்வீகக் குடிகளின் உரிமைகளை மதிக்கத் தொடங்கியது. அத்துடன் வாக்குரிமையும் அளித்தது. அவர்கள் முன்னேற்றத்திற்கென ஒரு அமைச்சரவை நியமிக்கப்பட்டது. 2000ம் ஆண்டில் Reconciation (சமாளிப்பு) என்று ஆதிவாசிகளுக்கும் மற்றைய (குறிப் பாக வெளர்  ைளயர் களர் ) குடியேற்றவாசிகளுக்கும் இடையில் ஒரு புதிய நட்புறவு ஏற்படுத் தப் பட்டிருக்கின்றது. பல அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் , அவர்கள் அனுபவித்த இன்னல்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். பொது மக்கள் பலரும் இதனை உணர்ந்தவர்களாகவும், புதிய நட்புறவை வளர்க்கவும் விரும்புகின்றனர். இந்த வேளையில் தற்போதைய அவுஸ்திரேலியாவின் அரசாங்கமும், அதன் பிரதமரும் தாம் பூர்வீகக் குடிகளிடம் மன்னிப்புக் கோரமுடியாது என்று அடம்பிடித்து
வருகின்றனர். முன் னைய அரசாங்கங்களும் , மக்களும் ஆதவாசிகளை முறைகேடாக நடாத்தியதற்கு, இன்றைய பிரதமர் ஜோன் காவேட் தமது ஆழ்ந்த அனுதாபதி தை மட்டுமே தெரிவித்திருக்கின்றார்.
இதனால் ஆத்திரமும், கவலையும்
அடைந்த இந்தப் பூர்வீகக் குடிகள், தமக் கு இழைக் கப்பட்ட கொடுமைகளையும், முறைகேடுகளையும் உலக அரங்கில் தெரியப்படுத்த ஆயத்தமாயினர். சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விளைந்தனர். சிட்னிப் போட்டிகளின்போது இவர்கள் ஏதாவது
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 3

Page 4
abasapus
ஜiபசி 2000
அசம்பாவிதம் விளைவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கபட்ட போதிலும், அப்படி ஏதும் இடம்பெறவில்லை. இதற்கு போட்டி ஏற்பாட்டாளர்களின் சாதுரியமே) முக்கிய
காரணம் என்று சொல்ல வேணன்டும். போட்டிகளில் ஆர்ப்பாட்டம் செய்து குழப்பமி விளைவிக்க இருந்த ஆதிவாசிகளைச் சாந்தப்படுத்தி, அவர்களைச் சரியான முறையில்
கெளரவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக் கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
திறப்பு விழாவிலும், நிகழ்ச்சி முடிவிலும் அவர்களுக்குக் கொடுக் கப்பட்ட முக்கியத்துவம் மகத்தானது. பல நிகழ்ச்சிகளும், பாடல்களும், இங்குள்ள பூர்வீகக்குடிகளின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாகவும் காட்டி அவர்களில் பலர் பங்குகொள்ளச் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டதாகவும் அமைந்தன. கதி பிரீமனி எனற ஆதவாசியான விளையாட்டு வீராங் கனைக்கு ஒலிம்பிக்ஸ் தீபத்தை ஏற்றி வைக்க வழங்கப்பட்ட கெளரவம் எல்லா மக்களிடையேயும் ஒரு மனமாற்றம் ஏற்படவும், புதிய நட்புறவு ஏற்படவும் காரணமாக அமைந்து விட்டது. முடிவு 6gstojai (Surg, UITIqu Midnight Oil என்ற இசைக்குழு சொல்லிலும் (this is their land, give it back 616irp 6.1360Tib கொண்ட பாடலாலும்), செயலிலும் (தமது ஆடையில் "Sorry' என்று எழுதியிருந்தமையாலும்.) பிரதமர் கேட்கத்தவறிய அந்த "மன்னிப்பை" தாமே கேட்டுக் கொண்டனர்.
அண்மையில் இந்தோனேசியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு தீமோர் என்ற நாடு சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் முதல் முறையாகப்
பங்குபற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. இது அந்நாட்டு மக்களின் புதிய சுபீட்சமாக சுதந்திர வாழ்விற்கு இனிய நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்படியாகப் பூர்வீகக்குடிகளையும், புதியவர்களையும் அரவணைத்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒழுங்கு செய்த தன்மையையும், அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் போட்டிகளின் குவித்த பதக்கங்களையும் பார்த்து, அனுபவித்து மகிழ்ந்த மக்கள் மனதில் , நாம் எல்லோரும் அவுஸ்திரேலியர்கள் என்ற ஒரு தேசிய உணர்வை ஏற்படுத்தக் காரணங்களாக அமைந்தன. எங்கும், எப்பொழுதும்
"AuSSic„AuSSie,AuSSie. .......... Ohi... Ohi... Ohi.”
என ற வசனம் பலரையும் பரவசப் படுத் தியது. U6)
வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இன்று அவுஸ் திரேலியாவில வாழ்ந்துவரும் எம்மைப் போன்ற பல பல்லின மக்களுக்கும் இப்படியான உணர்வுகள் ஏற்பட்டன. அந்நிய நாட்டிலாவது நாம் மக்களாக, மனித நேயத்துடன் அரவணைக் கப்பட்ட உணர்வு பிறந்தது. அந்த வார்த்தைகள் ஏற்படுத்துகின்ற அந்தத் தேசிய உணர்வு இன்றும் எண் றும் இந் நாட்டு மக்களிடையே நிலைத்திருக்க வேண்டும். சிட்னி துறைமுகப் பாலம் (Sydney HabOur bridge) f6 isdi (gigah(65L6i நட்புறவைப் புதுப்பிக்க பயன்பட்டது. சிட்னி ஒலிம்பிக்ஸ் இங்கு வாழும் எல்லா இன மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் புதிய பாலமாகத் திகழ்ந்துள்ளது.
JeRófur
4 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000 Φαινυαου
THURA RAJAH LAWYERS
HE CHAMBERS
LEVEL 11,370 PITT STREET, SYDNEY NSW 2000
APPOINTMENTS CALL: (O2) 9267 8810
... Administrative Law : Immigration Problems ... Business Agreements : Public Liability Claims : Banking / Finance : Personal Injuries & : Bankruptcy Damage Claims : Commercial Leases : Power of Attorney ::: Crimina || MatterS : Real EState Sales & PurchaSes ... Corporation Law : Smal Business Advice -: Debts / Insolvency : Traffic Offences : Environment Law : Trade Practices Law : Family Law : Wi || Probates & Estate Claims : General Legal Advice : Workers Compensation
CONVEYANCNG
When it comes to buying Or Selling a property do not make a move Without a Solicitor. Conveyancing is much more than paper work!
| TGATION"
We advise we negotiate we prepare and arrange Court proceedings for all areas of litigation.
MMGRATION
We accept instructions and offer Complete migration service
APPOINTMENTS CALL: (02) 9634 1170 70 COUNTY DRIVE, CHERRYBROOK NSW 2126
LEELJSLSSLLLL SSYLJ LLLLLL S SLLLLLLSSL SLL SSSSSSSEESLE S S rSJSSS0SLLSSSS S SSS0SSSLLS0S SJJLSJS LLL S LLLLSLSLSS SSS 0SSSSJLLS 0LLSSSLLSSSS SSLLLL SLSJJSS LLLLLLLLYSLS0L S LGGL0aDSLLL S GLL SLLLL SSSLL SS SJLELDL 0L0L0L SSS LSLLLLJLLLL

Page 5
கலப்பை
illé 2000
காணாமல் போனவன்...!
* நிமிஷம் கலைகின்ற நீள வினாடிகளிலும், வருஷங்கள் பெயர்ந்து போன வாழ்வின்
இருண்ட பொழுதுகளிலும் இளமைபிரியும் எல்லாக் கணங்களிலும் இந்தக் கணம் பிரிந்து இறந்த வொரு நினைவின் இனிய லயிப்புத்தேடி இழந்து விடுகிறேன் எல்லாவற்றையுமே! வேலியோரத்து பூக்கள்நிமிண்டி வெட்கம் பிடுங்காமல் நிர்வாணச் சுதந்திரத்துள் நின்ற நிமிஷம் கடந்து: வழிப்பரப்பெல்லாம் கனவு பூக்க விடிகாலையொன்றில் பெரியவளான நினைவும் மறந்து. அகோர வெயில் வினாடியில் குளிர்பரப்பிய ஒரு சோடி விழிகள் தேடி ஓராயிரம் பார்வைகளிடமிருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன்! வர்த்தைமடங்கி
சுருங்கிய பேச்சின் வாழ்க்கை பற்றிய நம்பிக்கையினங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. உன்னால் தான் முடியும் அன்னை தவிர்த்து இன்னு மொரு தடவை
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
assitapu
என்னை ஜனிப்பிக்க ! உன்னைத் தேடியபடியே
விடியும்
எல்லா விடியலிலும்
B கிடைத்துவிக் கூடாததெனத்தான் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் அகழும் புதைகுழியுள் அடையாளம் தெரிகிற விதமாய்: விலங்குலாவும் தெருவுள் அழுகிப்பேன உடலாய்: கடைசியாய் அணிந்து சென்ற எந்தன் கண்ணிர் துடைத்த ஆடையின் கிழிந்த துண்டாய். எந்த விதமாயும் நீ கிடைத்து விடக் கூடாதெனும் பிரார்த்திப்புடன் எல்லாப் பொழுதினிலும் உன்னையே தேடுகிறேன்
இல்லாத நிஜம் தாங்க முடியாதது போலவே
நீ
இறந்து போன நிஜத்தையும் என்னால் தாங்கமுடியாது என்றென்றைக்குமே...!
நிலா 17ம் அணி மருத்துவபடம்யாழ்ப்பாணம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

Page 6
a5wsia about
ộạỉlt lớì 2000
அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள்
(ABORIGINES)
அபொறிஜின்கள், அவுஸ்திரேலியாவின் ஆதரிக் குடிகளெனி லும், அவர்கள் ஏறத்தாள 50,000 ஆண்டுகளுக்கு முன்னே இந்த நாட்டில் வாழ்ந்தார்களென்றும் சரித திர ஆயப் வாளர் கள் கருது கின்றார்கள். இந்த ஆதிக் குடிகள் ஆரம்பத் தில் தெற் காசிய நாடு களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களென்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இவர்கள் முதலில் அவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கரையோரங்களில் குடியேறி,
பிரசாந் குலராஜா -
பின் னர் படிப் படியாக மற் றைய கரையோரங்களிலேயே கூடுதலாகக் கூடியேறினார் கள் . எ ல லா அபொறிஜின்களும் ஒரே மாதிரியாக இல லா விட்டாலும் பிரதானமான பகுதிகளில் வாழுகினி றவர்களை "ஒஸ்ரொலொயிட்ஸ்" (Australoids) என அழைப்பர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலரிப்பினால் தஸ்மேனியா (Tasmania) அவுஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டபோது ஒரு சிறு பகுதி அபோறிஸின்கள் தஸ்மேனியாத் தீவில்
8 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க
வெளியீடு
 

ஐப்பசி 2000
a56aŭ apu
தனிமைப் படுதி தப் பட்டார் கள் . காலப் போக் கில இவர்கள் ஆதி அபோறிஜினி களிலிருநது வேறு
படுத்தப்பட்டு, புதிய ஒரு இனமாகக் கருதப் பட்டு, நெகுறோரொயிட் (Negrotoid) என அழைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உழவுத் தொழில் தெரியாததால், வேட்டையாடுவதன் மூலமே, இவர்கள் தமது உணவைப் பெற்றுக் கொணி டனர் . உணவுதி தேவைக்காக இவர்கள் இடம் பெயர்ந்து கூடாரங்களிலேயே வாழ்ந்து வந்தார்கள்: எனினும் சிலர் கற்குகைகளிலும் (caves) வசித்தார்கள்.
பிரித்தானியர்கள் இந்த நாட்டில் காலுTணிறிய காலமான 1788இல் , ஏறத்தாள 300,000 அபோறிஜின்கள் அவுஸ் திரேலியாவில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. தற்போது 140,000 அபொறிஜின்கள் மட்டும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஐம்பது சதவீதமான மக்கள் கலப்புத்திருமணம் செய்து இனம் மாறிவிட் டனர் . பிரித்தானியர்கள் தாஸ்மேனியாவில் காலெடுத்து வைத்தபோது, 5000 அபோறிஜின்கள் இருந்தார்களென்றும், கடைசி அபோறிஜினி 1876 ஆம் ஆண்டில் இறந்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
சில இன அபோறிஜின் மக்கள் இந்தியா, இலங்கை போனிற மக்களுடைய தோற்றத்தைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தெற்காசிய நாடுகளிலிருந்து வந்து குடியேறினார்கள் என்பதற்கு நியாயமான சான்றுகள் உணர் டு இதற்கு உதாரணமாக, புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கண்டெடுத்த எலும்புக்கூடுகளுக்கும், அவுஸ்திரேலியாவில் கணி டெடுத்த எலும்புக்கூடுகளுக்கும் இடையே ஒத்த
தன்மையைக் கண்டனர்.
பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவின் மீன் பிடி இடமான "கிம் பெளியில்" (KIM BERLY) மீனி பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உணர்டு. சீனர்கள் பதினாறாம் நுாற் றாணர் டில் அவுஸ் திரேலியாவின் கரை யோரங்களுக்கு வந்து போயிருப்பார்கள் எனவும் நம்பப்படுகின்றது.
பிரித்தானியர்கள், அபோறிஜின்களே இந்த நாட்டின் ஆதிக்குடிகள் என்பதை அங்கீகரிக்காததால், இவ்வாதிக்குடிகள் பிரித்தானியர்களை எதிரிகளாக எனினத தொடங்கினர் . பிரித்தானியர்களிடம், ஆட்பலமும் ஆயுதபலமும் இருந்தமையால், நாட்டை ஆக்கிரமித்து, அபோறிஜின் மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் குடியேறிய வெள்ளையர்களுக்கும், அபோறிஜின் களுக்கும் அதிகளவு முரண்பாடு இருக்கவில்லை. ஆனால், காலஞ் செல் லச் செல்ல முரணி பாடுகள் அதிகமாகிக் கொண்டே போயின. இம் முரணி பாடுகள் 1794 ஆம் ஆண்டிலிருந்து 1816ஆம் ஆண்டு வரை நீடித்தன.
பிரித்தானியர்களின் குடியேற்றம் இங்கு நடந்த கால கட்டங் களில் பல ஆதிவாசிகள் வேட்டையாடப்பட்டனர் தம்மையும், தமது இனத்தையும், பாதுகாக் க மறைந் திருந்து போராடினார்கள். பிரித்தானியர்களின் ஆயுதபலம் , ஈற்றில் l | 6uᎩ ஆதிவாசிகளைப் பலிகொண்டது. அத்துடன் சின்னமுத்து, அம்மை போன்ற கொடிய நோய்களை அவுஸ்திரேலியா என்ற புதிய மணி னில் பரப்பிய
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 9

Page 7
abastaput ஐப்பசி 2000
பிரித்தானியர், அந்த நோய்களுக்கு 1938ஆம் ஆணிடில் நடைபெற்ற எதிர்ப் புத் தனி மை குனி றிய பல அவுஸ் திரேலியா தினதி தனி நூறு, ஆதிவாசிகளின் இறப்புக்கு காரணமாய் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள், இருந்தனர் . இவ்வாறாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அவுஸ்திரேலியாவின் ஆதிவாசிகளின் சமஉரிமை கோரினர். 1967 ஆம்
எணர் னிக் கை குறைக்கப்பட்டது.
வெகுவாகக்
பிரித்தானியர்களுடன் இந்த ஆதிவாசிகள் போரில் ஈடுபட்டனர். தமது மிருக வேட் டைக்கு உபயோகப் படுத்தும் Se, ug5 shi 5 (6 L Goi “BOOMERANG” (பூமராங்) என்ற தனித்துவமான, இவர்களுக்கே உரிய ஆயுதங்களுடன், காட்டுக்குள் மறைந்தி ருந்து போர் புரிந்தனர். அத்துடன் பிரித்தானியர்கள் மதுபானங்களை இங்கு அறிமுகப்படுத்தி, ஆதிவாசிகளில் பலரை அவற்றுக்கு அடிமைகளாக்கினர். இதனால் பல ஆதிவாசிகளின் வாழ்க்கை சீரழிந்தது.
இன்று அவுஸ்திரேலியாவில் வாழும் அபோறிஜின்கள் தாங்கள் தங்கள் வாழி க் கைமுறையை அமைத்துக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு, பிரித்தானியர்களே, அபோறிஜின்களின் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். பிரித்தானியர்கள் இவர்களுக்காகக் கட்டி-வைதீத கூடாரங்களிலேயே இவர்கள் வசித்தார்கள். தாங்கள் தரும் உணவைத் தானி உணி ண வேணி டுமென கி கட்டாயப்படுத்தினார்கள். பிரித்தானியர்கள் அபோறிஜின்களின் பிள்ளைகளைக் களவாடி, அவர்களை பித்த்தானிய முறையில் வளர்த்தார்கள். இப்படிப் பல கொடுமைகளை பிரித்தானியர்கள் இவ்வாதிக்குடி மக்களுக்குச் செய்து கஷடம் விளைவித்தனர்.
ஆண்டில் அபோறி ஜினல் மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது. இக் கருத்துக் கணிப் பரில் , அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோறிஜின்களுக்கு வாக்குரிமை கொடுக் கப்பட்ட வேணி டுமென அவுஸ்திரேலியர்கள் வாக்களித்தார்கள். அபோறிஜினல்கள் இதை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சுதந்திரமாக எண்ணினார்கள்.
இன்று, இந்த ஆதிக் குடிகளுக்கு சமவுரிமை கொடுக்கப்பட்டுள்ளன. அபோறிஜின்களின் நிலங்கள் சில அவர்களுக் குதி தருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று பல அபோறிஜினிகள் தங்களுடைய கலாச்சார முறைப் படி வாழுகின்றார்கள். அவுஸ்திரேலிய அரசாங்கம் இவர்களுக்குப் பல உதவிகளைச் செய்கின்றது. தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் சீர்குழைக்கப்பட்ட இந்த இனம், தமது உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அண்மையில் 6) Gisul L. "RECONCILIATION” இந்த ஆதிக்குடியினரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் , ஆதிக்குடிகளுக்கு முற்காலத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு "மன்னிப்பு” கேட்காது அடம்பிடித்து நிற்பது. பலருக்கும் வேதனை அளிக்கின்றது.
O சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
a56aŭ apu
எங்கள சிந்தனை உயிர்க்காதவரை
அரசியல் வாதிகளின் போர்விளையாட்டால் எங்கள் அமைதி கல்லறைக்குள்.
கட்சி அரசியல் சாக்கடை ஆனதால் சனநாயகம் இங்கே சவக்குழிக்குள் கணவனை இழந்த மனைவிகளின, பெற்றோரை இழந்த பிள்ளைகளின, அங்கங்கள் இழந்த அப்பாவிகளின, அனைத்தையம் இழந்த அநாதைகளின் சந்தோஷமெல்லாம் கல்லறைக்குள்
நாங்கள் போற்றிய விழுமியங்கள் நாகரீகமான வாழ்க்கை முறைகள் எங்கள் எதிர்காலக் கனவுகள் எல்லாம் இடிந்து வீழ்ந்தன யுத்தம் என்பது அரசியல் நெறியானால் மொத்தமாய்க் கிடைப்பது புதைகுழிதானே !
அஞ்சலா ஞானரட்ணம்
நாவல் வெளியீடு
கலப்பையின் நீண்ட நாள் அபிமான எழுதி தாளர் திருமதி மனோ ஜெகேந்திரன் தனது "நல்லதோர் வீணை செய்தே" முதலாவது நாவலை நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெற்ற இன்பத்தமிழ் ஒலி வானொலியின் “முத்தமிழ்ச் சுவை” என்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார் . புகழி பெற்ற நாவலாசிரியர், அனுராதா ரமணன் அவர் களது முன் னுரையுடன் , ஆசிரியரே வரைந்த ஒவியங்களுடன் பெணி னினப் பின்னணியைகி கருவாகக் கொண்டு எழுந்துள்ள இந்த நாவல் பலரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.
அத்துடன் பிரபல எழுத்தாளர் , மாத்தளை சோமு எழுதி வீரகேசரியில் பிரபலமான பயணக் கட்டுரைகள் அடங்கிய இரு புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. “மாத்தளை முதல் மலேசியா வரை”, “லண்டன் முதல் கனடா வரை” என்ற இரு நூல்களை சிட்னி தமிழ்க் குரல் நிறுவனம் நவம்பர் மாதம் 12ம் திகதி வெளியிட்டுள்ளது.
இவற்றை "கலப்பை” நிர்வாகத்தினரிடம் அல்லது நுாாலாசிரியரிடம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றை வாங்கி வாசித்துப் பயன் பெறுவதன் மூலம் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் எழுத்தாளர்களது பங்களிப்புக்கு ஆதரவு தந்தவர்கள் ஆகின்றீர்கள்.
- ஆசிரியர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 1

Page 8
asasau
ஐப்பசி 2000
ஈழத்தில் இசை வளர்த்தோர்
வயலின் வித்துவான்
புத்துவாட்டி சோமசுந்தரம்
எழுதியவர் காலஞ்சென்ற கே.எஸ். பாலசுப்பிரமணிய ஐயர்
மேல்நாட்டு இசைக்கருவிகளுள் ஒன்றான வயலினைக் கர்நாடக சங்கீத வாத்தியமாக
முடியும் நிரூபித்துக்காட்டிய பெருமை தஞ்சாவூர் மகா வித்துவான் வடிவேல் அவர்களையே சாரும். 18ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்த வடிவேல், அங்குள்ள ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் இவ்விசைக் கருவியைக் கையாளும்
உபயோகிக்க எனபதை
முறையைக் கற்றுக் கொண்டர். பின்னர் அதில் பாண்டித்தியம் பெற்றுத் தனிக் கச்சேரிகளும் பக்கவாத்தியமாகப் பல கச்சேரிகளும் வாசித்து, மகாராஜாவினாலுமி மற்றைய வித்துவான்களினாலும் போற்றப்பட்டார். அன்னாரது திறமையைப் பாராட்டி யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட வயலின் ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார்கள். இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ருரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் பிரதம சீடர்களில் ஒருவர். மற்றையவர்கள் இவர் சகோதரர்களான சிவானந்தம்
பொன்னையா, சின்னையா,
ஆகியோராவர். வடிவேல் அவர்களுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் திருக்கோடிக்காவல் கிருஷணய்யர், மலைக் கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை போன்ற பெரிய வித்துவான்கள் வயலினை மிகவும் நுட்பமாகக் கையாண்டு பெரும் புகழ் ஈட்டினர்.
ஈழத்தில் வயலினைக் கையாணி ட வித்தவான்களில் முன்னணியில் வைக்கப்பட
வேண்டியவர் புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கள். புத்துவாட்டி குடும்பமே ஒரு சிறந்த சங்கீதக் குடும்பம். சோமசுந்தரம் அவர்களின் தந்தையார் நாகலிங்கம் தமிழ் நாட்டில் இசை பயின்று, வயலினி ஆகிய வாத்தியங்களைச் செவ்வனே கையாண்டு பல
சாரங்கி,
சமஸ்தானங்களிலும் மடாதிபதிகளாலும் கொரவிக்கப்பட்டவர்.
சோமசுந்தரம் தம் தந்தையாரிடம் முறையாகப் பாடம் கேட்டார். அபூர்வ ராகங்களையும் அவற்றில் அமைந்த உருப்படிகளையும் தெரிந்திருந்ததோடு இசை சம்பந்தமான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். அவரது காலத்தில் வாழி நீத வித்தவான்களுக்குப் பக்கவாத்தியம் வாசிதது அவர்களது பாரட்டுக்களையும் பெற்றார்.
அவர்களது காலத்தில் இப்போது நடைபெறுவது போல் அடிக்கடி சபா கச்சேரிகளோ, இசை விழாக்களோ
நடைபெறுவதில்லை. கோவில் திருவிழா, குருபூசை முதலிய விசேஷங்களில் இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க வித்துவான்
நடைபெறும்
சோமசுந்தரம் அழைக்கப்படுவார். அவரது வயலின் கச்சேரி பல ஆண்டுகட்கு முன் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாயிற்று.
சோமசுந்தரம் அவர்களிடம் பலர் வயலினும், வாய்ப்பாட்டும் கற்றார்கள். சிலர் இந்தியப்
2 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2} Lló 2000
abatapu
பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு தம் இசையறிவை விருத்தி செய்தனர். சிலர் வெளிநாட்டிற்குச் செல்லாது, சோமசுந்தரம் அவர்களிடமே கற்றுத் தேறினர். அவ்வாறு கற்றுத் தேறியவருள் அவரது ககோதரியின் புத்திரரான சண்முகானந்தன், புத்துவாட்டி இரத்தினத்தின் மகள் சீதா, வேலாயுதபிள்ளை, ஜகதாம்பிகை ஆனந்தநாயகம், பிச்சையப்பா, சாந்தநாயகி, நவராஜகுலம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
சோமசுந்தரம் அவர்கள் இளம் பராயத்திலே சொற்ப காலம் கொழும்பிலும் பின்னர் அவரது அந்நிய காலம்வரை வண்ணார்பண்ணையில் அவர் வீட்டிலும் வசித்து வந்தார். அதிகாலையிலிருந்து இரவு வெகுநேரம் வரை அவர் வசிக்கும் வீதிவழியே செல்பவர்கள் காதில் வயலின் இசை ஒலிக்கும். மாணவர்கள் யாவரும் அவரது வீட்டிலேயே போய்ப் பாடம் கற்றுக் கொள்வார்கள். மாணவர்களிடம் கண்டிப்பாகவும் அதேசமயம் அன்பாகவும் அவர் நடந்து கொள்வார். இலங்கையிலிருந்த வித்துவான்களும் இந்தியாவிலிருந்து வரும் வித்துவான்களும் யாழ்ப்பாணம் செல்லும்போது அவரைச் சநீதித்து உரையாடதி தவறுவதில்லை. சோமசுந்தரம் மிக அழகான தோற்றம் உடையவர். இசைத்திறமையோடு பேச்சுத்திறமையும் அவரிடம் இருந்தது. வயலின் வாசிப்பதோடு மட்டுமல்லாமல் உருப்படிகளை மிக அழகாகப் பாடியும் காட்டுவார். இலங்கையில் பிரபல்யமாக விளங்கிய வித்துவான்கள் பலர் புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்களிடம் இசை பயின்றவர்கள். ஈழத்தில் இருந்த புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கட்குத் தனியிடம் உண்டு.
இசை வளர உறுதுணையாக
வித்த வாணிகள் வரிசையில்
- - - - - - - - - - - - - கலப்பையின் | மின்அஞ்சல் தொடர்பு | கலப்பையின் புதிய மின்அஞ்சல் முகவரி kalappaisayahoo.com என்பதை அறியத் தருகின்றோம். கலப்பை சந்தாதாரர்கள், | வாசகர்கள் அனைவரதும் மின்அஞ்சல் | முகவரிகளை சேகரித்து வருகின்றோம். உங்கள் மின்அஞ்சல் முகவரிகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம், நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக்கலாம் . எதிர்காலத்தில் கலப்பை பற்றிய புதிய விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும். உங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும் (விமர்சிக்கவோ அல்லது விவாதிக்கவோ) இது மிகவும் உதவியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை.
- ஆசிரியர். ل- --- س----------------------------------------س- سا
கலப்பையை (சநீதா) உங்கள நனிபர்கள, உறவினர்களுக்கு பரிசுப் பொருளாக்குங்கள
வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக் கசினி ற தமழி
ഥ്ട്ര
பற்றுக்கொண்ட, உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக்குங்கள், வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது
பெயரில், அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற் கான வரினி ன ப் பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை
முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 13

Page 9
கலப்பை
ஐப்பசி 2000
காலஞ்சென்ற கலாநிதி வே. இ. பாக்கியநாதன் கடந்த ஆண்டுமலரில் எழுதிய சிட்னி ஒலிம்பிக்ஸ் 2000 போட்டிகளின் ஆழல், ஆயத்தங்கள் பற்றி வாசித்தறிந்திருப்பீர்கள். இப்போட்டிகள் நடந்தேறிய விதம், போட்டிகள் பற்றிய விபரங்களை இங்கு தரலாம் என்று நினைக்கின்றேன். 2000ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடாத்துவதற்கு "சிட்னியே வெற்றி பெற்றது' என்று 7 வருடங்களுக்கு முன் ஒலிம்பிக்ஸ் தலைவர், ஜூவான் அன்ரானியோ சமராஞ்ச், அறிவித்த வேளையில் ஏற்பட்ட மகிழ்ச்சியும் ஆர்ப்பரிப்பும் இன்றும் எம் மனதைவிட்டு நீங்காத பசுமை நினைவுகள். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நெருங்க நெருங்க அதற்கான நாட்களை எண்ணுவதிலேயே நாம் கரிசனை கொணி டோம் . சிட்னியில் ஒலிம்பிக்ஸ் கோலாகலமாக நடநீதேறியது. எம் மில் பலர் தொ  ைல க கா ட ச யபி லோ , வானொலியிலோ, அல்லது நேரில்
செனி றோ பார் த துக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம்.
சிட்னியரின் ஒலிம் மிக ஸ்
விளையாட்டுக் களினி நுளைவுச் சீட்டுக்களின் விற்பனையில் ஏற்பட்ட சில முறைகேடுகள், அதன் விற்பனையை மட்டுமல்ல, இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு
செய்யும் குழுவினருக்கு அவமானத்தையும், பல பாதகமாக விளைவுகளையும் ஏற்படுத் திய
போதிலும், இறுதிக்கட்ட விற்பனை என றுமே இல் லாத அளவிற்கு சாதனையைப் படைத்தது இங்கு
- சிபா. கேதீஸ்வரன் -
குறிப்பிடத்தக்கது. சிட்னி ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் கான நுளைவுச் சீட்டுக்களைப் பெற எம்மில் பலர் முண்டியடித்துக் கொண்டு, பெரியளவில் வரிசையாக பல மணிநேரம் காத்து நின்றதும் இங்கு ஒரு புதிய அனுபவமே. முன் கூட்டியே விற்பனையாகிவிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான நுளைவுச்சீட்டுக்களைப் சிலர் கறுப்புச் சந்தையில் விற்றதும், அவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்க முனைந்ததும், தாயகத்தில் பிரபல சினிமாப் படத்திற்கு நுளைவுச்சீட்டு பெறும்போது ஏற்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தின. ஆரம்பக் கணிப்புக்களின் படி, பொதுவாக நடுத்தர, வசதி குறைந்த மக்களுக்கு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நேரில் சென்று பார்க்க முடியாது என்று கருதப்பட்ட போதலும் , சில வபி  ைள யா டட் டு க களு க கான நுழைவுச்சீட்டுக்களின் விலை ஆகக் குறைவாக பத்து டொலர்களுக்கு விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. இந்த விலைக் குறைப்பு அனேக மக்களை பல விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்று பார்ப்பதற்கு உதவியது.
உலக மக்கள் பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு சிட்னி ஒலிம்பிக்ஸ் திறப்பு விழா அமைந்திருந்தது. இவ்விழாவின் சிறப்பம்சங்கள் பல. அவுஸ்திரேலிய பூர்வீகக்குடிகளான அபோரிஜினி மக்கள் வாழ்ந்து வந்த இந்த நாட்டில், இல்லை! இந்த அவுஸ்திரேலியாக் கணிடத்தில் , ஏறத்தாள 200 ஆண்டுகளுக்கு முன்
14 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 
 

ஐப்பசி 2000
asasitapu.
பிரித்தானியர்களது குடியேற்றமும், ஆக்கிரமிப்பும் நிகழ்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சரித்திர, கலாச்சார மாற்றங்களையும் , புவியியல தனித்துவங்கள், சிறப்புக்கள், பல்லின மக்களைக் கொணி ட இனி றைய அவுஸ்திரேலியாவின் உருவாக்கம் பற்றிய காட்சிகள் ஒரு 13-வயதுச் சிறுமி (நிக்கி வெப்ஸ்டர்) கனவு காண்பது போல அமைத்திருந்தமை, ஒரு தனிச் சிறப்பு என றே கூறலாம் . அவுஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளின் வரலாற்றையும், அவர்களது கலாசாரம், பழக்க வழக்கங்களையும் பின்னிப் பிணைந்து காட்சிகள் அமைந்திருந்தன. ஆனாலி இங்கு வாழும் பூர்வீகக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட பல சரித்திர முக் கரியத்துவமுள்ள கொடுமைகளையும் அநீதிகளையும் பற்றி எதுவுமே சேர்த்துக் கொள்ளப்படாமை கதையோட்டத்திற்கு (p(LR 60). LD அளிக்கவில்லை. இருந்தபோதிலும், அப்படியான பிழையான நிகழ்வுகள் நடைபெற்றதை ஏற்றுக் கொண்டு, மன்னிப்பு கோரும் தன்மை இந்த மக்கள் மனதில் ஏற்பட்ட இன்றைய நிலையில், அவற்றை மறந்து, இந்த பூர்வீகக்குடிகளுக்கு உலக அரங்கில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தமை அவர்களுக்கு கிடைத்த சிறப்பு என்றே கூறவேணி டும் . அத்துடன் பூர்வீகக்குடிகளில் சிறந்து விளங்கும் பல LITL85sí86IIT60I Gullgögði ullalg(YOthu Yindi), af6f6öLe6ör SD(Christian Anu) போன்றோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு தமது இனத்துக்கு கெளரவத்தை தேடித் தந்தனர். அத்துடன் அவர்களது பிரதான வாத்தியக் கருவியான "டிஜிறிடு" (Digerido) என்ற துளைக் கருவி பல உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
திறப்பு விழாவில் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது, ஒலிம்பிக் பந்தத்தினால்
ஒலிம் பிக் தபதி தை ஏற்றும் வைபவமாகும். . யாருக்கு அந்த சிறப்பு சென்றடையப் போகின்றது என்பது, கடைசி நிமிடம் வரை பரமரகசியமாகவே வைக் கப் பட்டிருந்தது. கரிரேக்க தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஜோதி அவுஸ்திரேலிய மண்ணை அடைந்ததும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் தான். “உலுரு" (Uluru) என்று அழைக்கப்படும் இந்த இடம் இங்கு வாழ் பூர்வீகக்குடிகளின் பாரம்பரியப் பிரதேசம் . இந்த இடத்திற்கான அடையாளம் அங்கிருக்கும் ஒரு சிவப்பு நிற மலை. அதற்கு அருகாமையில் விமானத்தில் கொண்டுவரப்பட்ட ஒலிப்பிக் பந்தம் பூர்வீகக் குடிப் பெண்ணும், கொக்கி (தங்கப்பதக்க) வீராங்கனையுமான நோவா பீரிஸ் நீபோனிடம் கொடுக்கப்பட்டதுவும் ஒரு சிறப்பே. இந்தப் பெண் தனது வெறுங் காலுடன் ஒலிம்பிக் பந்தத்தை ஏந்திய வணிணம் குளிர் நீத வீதிகளில் ஓடிவந்தார். இந்த நிகழ்வைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது, “எம்மின மக்கள் காலாகாலமாக காலுக்கு எதுவுமே அணியாமல் வாழ்ந்து வந்தனர். வெறுங் காலுடன் எனது மண்ணில் இப்பந்தத்தை ஏந்திச் செல்வது சிறப் பென்றே கருதுகின்றேன்” என்றார். இவ்வாறு கொண்டுவரப்பட்ட இந்தத் தீபம் அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான நகரங்களினூடாகச் உலாவந்து திறப்பு விழாவன்று இரவு பத்து மணியளவில் ஒலிம்பிக் விளையாட்டரங்குக்குள் கொண்டுவரப்பட்டது. இத்தீபம் பல பழைய ஒலிம்பிக் வீராங்கனைகளால் மைதானதி தைச் சுற்றிக் கொண்டுவரப்பட்டது. இறுதியில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்த ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது. கதி LDGoslib(Cathy Freeman) 9555 தீபம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட இந்தக் கெளரவம் பலவழிகளில் முக்கியத்துமானது. மைதானத்தை சுற்றி
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 5

Page 10
δούύ ωου
ஐப்பசி 2000
தீபத்தைக் கொணர்டு வந்தவர்கள் எல்லோருமே பழைய ஒலிம் பிக் போட்டிகளில தங் கப் பதக் கம் வென்றவர்கள். ஆனால் கதியோ பழைய ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றவர். ஆனால் கதி நிட்சயம் சிட்னியில் தங்கப்பதக்கம் பெறுவார் என்ற நம்பிக்கை போட்டி ஏற்பாட்டாளர்களிடம் இருந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு பின்னர் வலுப்பெற்று அவுஸ்திரேலிய மக்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வாக
அமைந்தது. கதி பிறீமன் பின்னர் 400 Lổ L || Lfĩ ஒட்டப் பந்தயத் தில் தங்கப்பதக்கத்தைப் பெற்று தனது
குறிக்கோளில் வெற்றி பெற்றதும், பல கோடிக் கணக்கான அபிமானிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் மாதம் 15ம் திகதியிலிருந்து பதினாறு நாட்கள் நடந்தேறிய சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியன்று நிறைவுற்றன. இந்தப் போட்டிகள் ஆண்கள், பெண்கள் எனவும், தனிப்பட்ட, குழுநிலைப் போட்டிகள் எனவும் வெவ்வேறாக நடாத்தப்பட்டன. நீச்சல், மெய்வல்லுனர் போட்டிகளும் , கூடைப் பந்து, வலைப் பந்து, மெனி பந்து, உதைபந்நதாட்டம், கைப்பந்தாட்டம், படகோட்டம், துவிச்சக்கர வண்டி ஓட்டம், குத்துச் சண்டை, பாரம் தூக்குதல், கொக்கி, மல் யுத்தம், வாட் சண்டை, வில விதி தை, துப் பாகி கியால குறிபார்த்துச் சுடுதல் போன்ற பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.
இப் போட்டிகளுக்கு மொத்தமாக வழங்கப்பட்ட 928 பதக்கங்களை 80 நாடுகள் மட்டும் வெற்றி கொண்டன. இவற்றில் 301 தங்கப்பதக்கங்கள் அடங்குகின்றன. இதில் அவுஸ்திரேலியா 58 (16 தங்கம்: 25 வெள்ளி: 17
வென கலம் ) பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டதுடன் நான்காவது இடத்தையும் பெற்றது. முதலாவது இடத்தை 97 பதக் கங்களை வெற்றிகொணி ட அமெரிக்காவும், இரணி டாவது இடதி தை 88 பதக்கங்களைப் பெற்ற ரஷ்யாவும், மூன்றாவதாக 59 பதக்கங்களைப் பெற்ற சீனாவும் தட்டிக் கொண்டன. பல உலக சாதனைகள் முறியடிக் கப்பட்டன. ஆபிரிக்க நாடொன்றிலிருந்து வந்து பங்குபற்றிய நீச்சல் வீரர், ஆகக்கூடிய நேரத்தில் 100 மீட்டர் தூரத்தை நீந்தி ஒலிம் பிக் ஸ் வரலாற்றில் தோல்வியடைந்தவர்களில் முதன்மை பெற்றார் . எனினும் அவர் பங்குபற்றுவதில் இருந்த ஆர்வத்தைப் பார்வையாளர்கள் மட்டுமல்ல, உலகமே பாராட்டியது.
இந்தியாவும் இலங்கையும் தலா ஒரு வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டன. அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் பெண்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 52 வருடகாலமாக ஒலிம்பிக்கில் ஏற்பட்ட வரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சுசாந்திகா ஜெயசிங். . இவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை வெற்றி கொண்டு வெண்கலப் பதக்க தி தை தனதாக கரினார் . இந்தியாவிற்காக 69 கிலோகிராம் பெண்கள் பிரிவில் பாரம் தூக்குதல் போட்டியில் பங்குகொண்ட கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஆண்கள் கொக்கி குழு அரையிறுதிப் போட்டிக்குக் கூட தகுதி பெறவில்லை.
அவுஸ்திரேலியாவின் சனத்தொகை, இலங்கையினி சனத்தைாகை கு
ஒப் பானது. இநீதியாவினி சனத் தொகையோ இவற்றைவிட பன்மடங்கு அதிகம். நாட்டின்
16 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

pij je 2000
&&úaou
சனத்தொகையோடு ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியா பெற்ற பதக்கங்கள் கூடவா? இல்லை மற்றைய நாடுகள் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடும் போது அவுஸ் திரேலியா வினி வெற்றி மகத்தானது. விளையாட்டுத் துறைக்கு அரசாங்கம் வழங்கிவரும் வசதிகளும், ஆதரவும், மக்கள் காட்டும் ஆர்வமும், விடாமுயற்சியும் இந்த வெற்றிக்கு காரணங்கள் . அவுஸ் திரேலியா ஒலிம்பிக்ஸில் மட்டுமல்ல, சகல துறை விளையாட்டுக்களிலும் உலக அளவில் பெற்ற வெற்றிகள் LI 5 U 6) . துடுப்பாட்டத்தில் (கிறிகட்) சேர். டொனால்ட் பிராட்மன் காலம் முதல் இன்றுவரை பல சிறப்புக்களையும் வெற்றிகளையும் குவித்து வருகின்றது. இரண்டு தடவைகள் மட்டுப்படுத்தப்பட்ட ஒவர் போட்டியில் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டனர். அண்மையில் நடைபெற்ற 5-நாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில வெற்றிபெற்று, தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வென்று உலக சாதனை யைப் படைத் து , Uffghfs; m. jyld; Rugby Union, Rugby League, (ou60656i (0.35|Tabs (ஒரு காலத்தில் ஆண்களும்), டேவிஸ் கிண்ணம்(டெனிஸ்), பெண்கள் Golf (Karry Webb), (yp6ðių 94,60ốTb6īlī Golf
(Greg Norman), G3 LJ IT 6oi p u 6uo விளையாட்டுக் களில உலகக் கிணி ன தி தைப் பெற்று
வபி  ைள யா ட டு த து  ைற யபி ல அவுஸ்திரேலியா முதன்மை பெறுகின்றது.
அத்துடன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒழுங்கு செய்த தண்மையும் மேற்கூறிய காரணங்களும் , (3Uu (T L Lq ஒழுங்கமைப்பாளர்களின் மீது மக்களுக்கு இருந்த கசப்பான உணர்வுகள் மறைந்ததுடன , அவுஸ் திரேலிய விளையாட்டு வீரர்கள் போட்டிகளின் குவித்த பதக்கங்களையும் பார்த்து, அனுபவித்து மகிழ்ந்த மக்கள், "நாம் எல்லோரும் அவுஸ்திரேலியர்கள்" என்ற ஒரு தேசிய உணர்வை ஏற்படுத்தக்
காரணங்களாக அமைந்தன.
இந்தப் போட்டிகளை ஒழுங்கு செய்ததன்மூலம் உலகெங்கும் வாழும் LI 6) கோடி மக் களுக்கு அவுஸ்திரேலியாவைப் பற்றி சற்று அறியக் கூடியதாக இருந்ததுடன் , அவுஸ்திரேலியாவைப் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இது சிட்னி மக்கள் மட்டுமல்ல, அவுஸ்திரேலிய மக்கள் அனைவரதும் கொண்டாட்டமாக திகழ் நீதது. எனவே சிட்னியின் ஒலிம் பரிக் ஸ் போட்டிகள் பல சிறப்புக்களைக் கொண்டதாகவும், பல புதிய வழிகளில் நன்மையாகவும் அமைந்திருந்தது என்றே சொல்லலாம். இவற்றிற்கு பினணனியில் இருந்து உழைத்த சிட்னி ஒலிம் பிக் ஸ் எற்பாட்டாளர் குழு தனது பணியை திறம்படச் செய்திருக்கின்றது என்பதை மக்களின் கணிப்புக்கள் மட்டுமல்ல, அவர்களது ஒருமித்த ஆதரவும் காட்டி நின்றது. குறிப்பாக இப் படியான நிகழ்வுகள் உலகெங்கும் வாழும் பல (8 е п д மக் களால் பார்த் து மகிழப் படுபவை. அவர் களினி அவதானிப்பும் கவனமும் சிட்னி மீது இருந்தபோது அதுவே ஒரு சிறந்த சந்தர்ப்பம், உலகமக்களுக்கு எம்மைப் பற்றி சொல்லவும், செயலில் காட்டவும். அந்த சநீ தர்ப்பம் திறம் படப் பயன்படுத்தப்பட்டது என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
உலக ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் மட்டுமல்ல, உலகமே போற்றிய சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் சிறப்புக்களில் சிறப்பு என்னவென்றால், தொண்டர்கள் சேவை. எங்குமில்லாத அளவில், என்றுமில்லாத உற்சாகத் தமனும், ஆர்வத்துடனும் அவர்கள் வழங்கிய சேவையே தனி. அந்த தி தொண்டர்களில் பல தமிழர்களும் இருந்தார்கள் என்பதில் எமக்கெல்லாம் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 7

Page 11
கால்களைத் தரையில் வைத்த
αδούύωυ ஐப்பசி 2000
"என் கவிதை பேசவிழைவத என்னையோ NA உன்னையோ பற்றியல்ல; சதா என் நினைவு தினம் அவனைப்பற்றியுமல்ல: அவர்களைப்பற்றி. 5fr உயர மனிதர்களைப் பற்றி.
R எண்ணால் உணரமுடிகிறத O S பள்ளங்களிலிருந்தபோத
அவர்கள் பட்ட வலிகளை 凯 ஏனெனில் S எண் இருப்பு ܒ
i
காத்திருக்கிறத உயர.
மலையுச்சிகள் புனிதமானதெனும் கருத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் சிகரமடைந்த மனிதர்கள்.
மலைகள் தான் எத்தனை வகைகளாய். அறிவாய்
பணமாய்
அழகாய்
அரசியலாய்.
எல்லா மலைகளிலும் ஏறிப் போனவர்களிடம் தேய்ந்த போயிருப்பத. பாதமல்ல :
மனத !
உயரத்திலிருப்பவர்கள் குனிந்த பார்ப்பார்களெனும் குதாகலக் கணவோடு காத்திருந்த போத.
குனிந்தார்கள், எச்சில தப்புவதற்கு மட்டுமே. இருப்பதை வைத்த திருப்தியடையாமல் இல்லாமல் போன மனதை இருக்கும் எம்மிடம்
18
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000 asasitats
சதா காயம் பண்ணுகிறார்கள் அகப்பட்டதையெல்லாம் கீழே எறிந்தது. பறவைகளுக்கு சுகமாயிருக்கிறத
குறுணி பொறுக்க தரைக்கு குதிக்கவும் முகிலோடு சரசம்பண்ண சிறகை விரிக்கவும்.
நிரந்தரமேயில்லாத
இருப்பை பத்திரப்படுத்த
இந்த மனிதர்களை
பைத்தியமாய் அலையவைக்கிறத உயரங்கள்.
உச்சியில் உருவான ஆறு வரைபுச் சிக்கலாய் வளைந்த திசையெலாம் பயணித்த வந்த சிரிக்கிறத உப்புக் கரிக்கிற கடலின் அலைக்கைகளின் தழுவலில்.
இறங்குதல் சுலபமாயில்லா விட்டாலும்
இன்று வரை 「一ーーーーーーー 一 எந்த ஆறும் கவிதையாக்கம் இறங்காமல் விட்டதில்லை நளாயினி இராஜரட்ணம் தரைமனிதர்கள் 17ம் அணி
மலையேறத் தடிப்பத போல் 漫
வபீடம், யாம். ஆறுகள் மருததுவமயாழ_
கரைசேரத் தடிக்கிறதோ.
L
0S S SLLS S SLLLSSG S Se ELL S SYS SzS SY A. பள்ளத்திலிருப்பவர்களுக்கு பரிணாமத்தின் கடைசிப்படியாய் V வியப்புத் தருகிறத
உயரங்கள் இன்னமும் 5fr படிப்பதம், பணம் சேர்ப்பதம்
அழகு பண்ணுவதமாய்
ஏதோவொரு
மலையின் உச்சியை அடையும் இலட்சியங்களுடன் எல்லா மனிதர்களும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதத்தை"
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 19

Page 12
கலப்பை
ஐப்பசி 2000
நாம் இருக்கும் நாடு நமது என்பதறிவோம் முதல்கடற்படைணிவரவும், வெள்ளையர்களின் குடியேற்றமும்
காலஞ்சென்ற காலநிதி வே. பாக்கியநாதன்
கலப்பையில் கல்லிலிருந்து கணனி வரை" என்ற தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து இன்று வரை பல சிறப்பான கட்டுரைகளை எழுதி வந்த கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களை நாம் இழந்து நிற்கின்றோம். அன்னார், அநியாயமாக அழித்தொழிக்கப்பட்ட எமது அறிவுக் களஞ்சியமான யாழ். பொது நூலகத்தின் பிரதம நூலகராக கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முன்னர் கலப்பைக்காக எழுதிய கட்டுரையை இங்கு தருகின்றோம். - ஆசிரியர் -
பெரிய பிரித்தானியா 1597 ஆம் ஆண்டில் இருந்தே ஆட்சியின் கீழுள்ள குடியேற்ற நாடுகளுக்கு குற்றவாளிகளை அனுப்புவது வழக்கமாய் இருந்து வந்தது. 200 வருடங்களாக வட அமெரிக்காவில் உள் ள பிரதேசங் களுக்கு குற்றவாளிகளை அனுப்பி வந்தனர். 25 பவுணுக்கு அவர் களை விற்றனர். அங்கு அனுப்பும் குற்றவாளிக்களைக் கொண்டு தமக்குத் தேவையான விளை பொருட்களை உற்பத்தி செய்தனர். கைத்தொழில் புரட்சி தொழிலாளர்களை வேலையில்லாமல் ஆக்கியது. இத்துடன் நிலப்பிரபுகள் பலர் பெரும் அளவிலான நிலங்களுக்குச் சொந்தக்காரர்களான படியினால் பெரும்பான்மையான மக்கள் நிலம் இல்லாது இருந்தனர். ஐரிஸ் மக்கள் பரித்தானியரின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர். இதனால் அவர்கள் பிரித்தானியர்களை அவர்களினது நிலங்களில் இருந்து விரட்டியடித்தனர். மேற்குறிப்பிட் காரணங்களினாலி வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. இதனால் குற்றங்களும் அதிகரித்தன. தணி டனை களம் கடினமாயின பல வாயின. 200 சிறிய குற்றங்களுக்காகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. 1 சில்லிங்குக்கு மேற்பட்ட களவுகளுக்காக குற்ற வாளிகள் நாடு கடத்தப்பட்டனர்.
மரணதண்டனை வழங்கியும் கூட குற்றங்கள் குறைந்தபாடில்லை. இவை யாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா சுதந்திரம் பெற முயன்று அதனை 1776 ஆம் ஆண்டு பெற்றதும் குற்றவாளி களை ஏற்க மறுத்தது. குற்றவாளிகளை வெளியில் அனுப்பி ஆறுதல் பெற்ற அரசு இவர்களைக் கப்பல்களிலும், மறியல் சாலைகளிலும் அடைத்து வைத் தது. கப்பல்களில் வேலைக்கமர்த்தி வேலை வாங்கியது. இதனைத் தொடர்ந்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. குற்றவாளிகளை எங்காவது அனுப்ப வேணி டும் அப் படி அனுப்பவதானால் அவர்களை எங்கு அனுப்புவது என்ற கேள்வி எழுந்தது. 20,000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் இதற்குப் பெருத்மென எண்ணினர். இங்கிருந்து குற்ற வாளிகள் எளிதில் தப்பமுடிய தெனவும் கருதினர். எனவே கப்டன் குக்குடன் அவுஸ்திரே லியாவுக்கு வந்த தாவரவியல் ஆய்வாளரான யேசேப் பங்ஸ் (Joseph Banks) என பவர் கூறிய ஆலோசனையின் படி குற்ற வாளிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவ தெனத் தீர்மானித்தனர். இதன்சார்பன பிரேரணை ஒன்று பொது மக்கள் சபையில் கொணி டுவரப் பட்டு உள்நாட்டு இலாகாவுக்குப் பொறுப்பாகவிருந்த
20 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
assitapus
d'afil igshalsT6) (LORD SYDNEY) ஏற்றுக் கொள்ளப்பட்டது. கப்டன் குக் என்பவரினால் 1786 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் குறி ற வாளிகளைக் குடியமர்த்தக் கூடிய இடமெனப் பிரகடனப்படுத்தபட்பட்டது. இதனையடுத்து கப்டன் ஆர்தர் பிலப் (CAPTAIN ARTHUR PHILLIP) GI Goi Lu6a Goog முதலாவது ஆளுநராக நியமித்தனர் பிலிப் என்பவர் பிறப்பினால் ஜேர்மனி யராக விருந்தாலும் பிரித்தானியாவில் வசித்து பிரித்தானிய, போர்த்துக்கீச கடல் படைகளில் சேவையாற்றியிருந்தார். 48 வயதுடையவராகவும், நல்ல ஆளுமை படைத்தவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில், விவசாயத்தில் ஈடுபட்டு உழைத்த அனுபவத்தையும் பெற்றிருந்த தனால் இவர் பெரிதும் விரும்பப்பட்டார்.
இவரது தலைமையின் கீழ் முதலாவது su6) LIGOLugo (FIRST FLEET) 1787 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி இங்கிலாந்திலுள்ள போட்ஸ் மவுத் (PORTS MOUTH)6I Gsi go Ló இடத்திலிருந்து அவுஸ்திரேலிய பயணத் தை ஆரம்பித்தது. இக் கப்பற் படையணியில் 11 கப்பல்கள் இருந்தன. சிறியஸ் (SIRIUS) என்னும் போர்க்கப்பல், சப்பிளை (SUPPLY) என்னும் எரிபொருள் தாங்கிக் கப்பல், 6 குற்ற வாளிகளைக் கொண்ட கப்பல்கள், 3 பொருள்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள், இவை யாகும். இதில் பயணம் செய்த 1475 பேர்களில் 500 ஆண் குற்றவாளிகளும் 250 பெண் குற்றவாளிகளும் 13 குழந்தை களும் ஆவர். ஏனையோர் இவர்களைப் பாதுகாப்பவர்களாகவும் கப் பல மாலுமிகளாகவும் இருந்தனர். 27 கிழமைகள் 15,000 மைல்களைக் கடந்து வந்த முதலாவது கப்பல் படையணி 1788 ஆம் ஆண்டு தைமாதம் 18 ஆம் திகதி பொட்டணிக் குடாவினை (BOTANY BAY) வந்தடைந்தது. கப்டன் பிலிப் இக் குடாவினைப் பார்வையிட்ட பொழுது
அது குடியேற்றத்துகுகந்து அல்ல என்பதனைக் கண்டு வடக்கு நோக்கிப் LJ u_i 6ööI Lö செய்து யாகி சனி g60p(p5560955 (PORT JACKSON) தெரிந்தெடுத்தார். நல்ல நீரும் , கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஏற்ற சூழலும் இங்கிருந்தபடியினால் இவ் விடம் முதனி முதலாக வெள்ளையர்களின் குடியேற்றத்திற்கு உட்பட்டது. பிரித்தானிய அரசின் உள்துறைச் செயலாளரான சிட்னிப் பிரபுவின் பெயரை இவ்விடத்திற்குச் சூட்டி சிட்னி (SYDNEY) என்னும் பெயரை நிலைநாட்டினர். அது அவுஸ் தி ரேலியாவுக்கு இனிறுமி பெரும் கீர்த்தியையும், பெருமையையும் தேடிக் கொண்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் காலடி பதித்த நாளை, அதாவது தைமாதம் 26 ஆம் திகதியை அவுஸ்திரேலிய நாள் (AUSTRALIA DAY) 6TGOTäs 5(bigkŝkapGOTT. BARWICK, JOHN. 1999: 11)
குற்றவாளிகளைக் குடியமர்த்தும் (CONVICTS SETTLEMENT) Mg(Bg5FIDITE நியூசவுதி வேல் ஸ் மாறியதும் இங்கிலாந்துக்குரிய கொடி இங்கு அதிகார பூர்வமாக ஏற்றிவைக்கப்பட்டது. பிரித்தானியா தொடர்ந்து 80 வருட காலமாக குற்றவாளிகளை இங்கே அனு பட் பபி  ைவ த த து , மே ற கு அவுஸ்திரேலியாவில் கடைசியாக இறக்கப்பட்ட 279 குற்றவாளிகள் உட்பட இக்கால கட்டத்தில் 159,000 பேர் இங்கு கொண்டுவரப்பட்டனர். இதில் 134,000 ஆண்களும், 25,000 பெண்களும் அடங்குவா. சணல் மரங்களை வெட்டிக் கப்பல் செய்யவும், மரங்களை வளர்க்க வும், கட்டடங்களைக் கட்டவும் குற்றவாளிகள் பயன் படுத்தபட்பட்டனர். முதன் முதலாக சிட்னியில் களஞ்சிய சாலையும், வைத்தியசாலையும், கவர்னர் பிலிப்புக்கு மரத்திலான வீடும் கட்டப் பட்டன. சிட்னி நகரசபை இருக்குமிடத்தில் இருந்து எடுக்கப் பட்ட
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 21

Page 13
abastapus
ஐப்பசி 2000
களிமண்ணைக் கொண்டு ஆளுநரின்
இரண்டு அடுக்கு மாளிகை கட்டப்பட்டது.
அதன் பின்னரே சிட்னியில் உள்ள
ஏனைய கட்டடங்கள் நிர்மானிக் கப்பட்டன.
முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழப் புறப்பட்ட வெள்ளையர்களுக்குப் பல பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. மட்டுப்படுத்தப் பட்ட உணவுப் பங்கீட்டு முறை உணவைக் களவெடுக் கப் பலரைத் தூண்டியது. தாங்க முடியாத வெப்பநிலை, போதிய வதிவிடங்கள் இல்லாது பரந்த வெளிகளிலும், குகைகளிலும் மழைக் காலத்திலும் பனிக் காலத்திலும் வாழ வேண்டிய சூழ்நிலை, ஒய்வில்லாத ஊழியம் செய்யவேண்டிய நிலை, படை வீரர்களின் கண்காணிப்பில் வேலை செய்ய வேண்டிய தன்மை, படைவீரர்களால் வழங்கப்பட்ட தண்டனைகள் அவற்றுள் சிலவாகும். இதன் காரணமாகப்பலர் கடினமான முறையில் தண்டிக்கப்பட்டனர். கசையடி கொடுக்கப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர். இதைவிட குற்றவாளிகளாகக் கொண்டு வரப்பட்டவர்களில் பலருக்கு எதுவித தொழிலும் தெரிந்திருக்கவில்லை . வேலைக்குக் கூலியாக ரம் (RUM) என்னும் குடிவகையே கொடுக்கப்பட்டது. அதுவே பணத்துக்குப் பதிலாகக் கொடுக் கப்பட்ட வேதனம் . இது பலரையும் குடிப் பழக்கத்துக்கு ஆளாக்கியது. போதைதலைக் கேறிய நிலையில் தாம் என்ன செய்கின்றோ மென்று தெரியாமலே பல குற்றங்களைச் செய்தனர். கவர்னர் பிலிப்புக்கு இவை பெரும் சவாலாக விளங்கின. உணவுப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் தமது கப்பல்களில் ஒன்றைக் கேப்ரவுனுக்கு அனுப்பித் தேவையான பொருட்களைக் கொண்டுவர வழி செய்ய தார் . உணவில தனி னிறைவு பெறுவதற்கான முறைகளுணர் டா வெனவும் ஆராய்ந்தார். விவசாயம்
செய்வதற்கான காணிகளைக் காண முனைந்தார். இம் முயற்ச்சியின் காரணமாக பாம் கோவ் (PALMCOVE) என்னு மிடத்தில் பண்ணையொன்றை ஏற்படுத்தினர். ஆனால் அவ் விடத்தைப் பரிணி னர் கைவிட்டார் . இங்கு பண்ணையொன்று ஏற்படுத்தினாற் றான் பாம் கோவ் என்ற பெயர் உருவானது. பின்னர் பிலிப் மேற்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டார். ரோஸ்கில் (ROSEHILL) என்னும் இடத்தினை விவசாயம் செய்யப் பயன்படுத்தினார் இதன் பெறுபேறாக உருவானதே இங்கு ULDITILIT (PARRAMATTA) 6Giglid பட்டினம் இங்கு கட்டப் பட்ட ஆரசாங்க இல் லமி (GOUERNMENT) அவுஸ்திரேலியாவிலே உள்ள மிகப் பழமையான கட்டடமாகும். அது இன்றும் பண்டைய பொலிவுடன் திகழ்கிறது.
குற்றவாளிகளாகக் கொணி டு வரப் பட்டவர்களில் பலர் தமது தண்டனைக் காலம் முடிவுற்றதும் இலவசமாகக் காணிகளைக் பெற்று விவசாயிகள் ஆயினர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜோன் ஐவிங் (JOHN RVING) என்பவராவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வரும் பொழுது வைத்தியருக்கு உதவியாளராக இருந்து சேவையாற்றியதுடன் இங்கு வந்த பின்னர் நன்னடத்தை காரணமாக இவருக்கு பரமாட்டாவில் 30 ஏக்கர் விளை நிலம் நன்கொடையாகக் கொடுக்க ப்பட்டது. இவரே குற்றவாளி களில் இருந்து சுதந்திரப் பிரஜையான முதல்வர்.இவரையடுத்துப் பலர் சுதந்திரம் பெற்று இங்கு விவசாயத் துறையில் பிரபல யமானர்கள். இவர் களில் குறிப்பிடத்தக் கவர் ஜேம்ஸ் ரூஸ் (JAMES RUSE) 6T6öìLuJmr6nuń. ĝ6hl(5ä(g5 முதன் முதலாக சொந்தமாகக் காணிப் பத்திரம் வழங்கப்பட்டு தாமாகவே உழைத்து வாழலாம் என்பதை நிருபித்தவர். இவரது பெயரில் இன்றும்
22 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐய்பசி 2000
கலப்பை
பரமாட்டாவில் வீதியொன்றிருப்பது நினைவு கூரததக்கது. இவ்வாறு சுதந்தரம் பெற்ற இன்னொருவரை நாம் மறக்கலாகாது. அவரே கட்டட விற்பன்னரான பிரான்சிஸ் assai (36 (FRANCIS, GREENWAY) என்பவர். இவர் நியூ சவுத் வேல்சில் உள்ள 40க்கு, மேற்பட்ட கட்டடங்களின் மாதிரிப் படங்களை வரைந்து புகழ் பெற்றவர். இவர் வரைந்த மாதிரிப் படங்கள் பின்வருமாறு, அரச இல்லத்தில் உள்ள குதிரைத் தொழுவம்,பூங்காவில் உள்ள போர்வீரர்களின் குடியமைப்பு, சென் (8guó 6mö (8g56 T 6ou If ST JAMES CHURCH gdług976 (gii). (BARWICK, 199; 27)
இது காலவரை குற்றவாளிகளாக இருந்து சுதந்திரம் பெற்றவர்களுள் சுதந்திர வதிவிட on gha, 6mm as (FREE SETTLERS) இங்கிலாந்தில் இருந்து பலர் இங்கு வந்தனர். ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 1791 ஆம் ஆண்டு இங்கு வந்து பரமாட்டா நதிக்கரையோரத்தில் உவைன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யொன்றை உருவாக்கினார். 1792 இல் 14 சுதந்திர வதிவிடவாசிகள் இங்கு வந்து urtignoj661 (BANKS TOWN) g(Ibdisguib பரந்த வெளியில் ரிகப் பாரிய பண்ணைகளை உருவாக்கினர். 1806 ஆம் ஆண்டு நிதி வசதி படைத்தோர் இங்கு வரத தொடங்கியதை அடுத் து குற்றவாளிகளைக் கொண்டு பண்ணைகள் ஏற்படுத் தப்பட்டன. இவர்கள் இங்கிருக்கும் படையணியில் உள்ள பணக் கார வர்க் கத்தினருடன் சேர்ந்து தமது செல்வத்தைப் பெருக்கினர். இதில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர் கப்டன் (gTai Diassisir (JOHN MACARTHUR) என்பவர் நியூசவுத் வேல்ஸ்சில் நடைபெற்ற ரம் வியாபாரத்திலும், நிர்வாகத்திலும் இவரின் பங்கு முக்கிய மானதாகும். பல ஆளுநர்களுக்குத் தொந்தரவு செய்து பெரும் ரகளை செய்தவர் இவராவர். இவருடன் தொடர்பு கொண்டவர்கள் தான்
கிறெகறி, ஜோன் பிளாக்ஸ் லான்ட் 3 (3.5 Tg, Jria, 6i (GREGORY AND JOHN BLAXLAND) g56) epig56.jff நீலைமலைத் தொடரைக் (BLUE MOUNTANGS) a5 Lg5 g5 Typ 55 பிரதேசத்தைக் கண்டறிந்தவர்களில் ஒருவர்.
முதலாவது ஆளுநரான பிலிப்பின் பரந்த மனப் பாணி மை யையும் , ஆதிவாசிகளுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளையும், தனது ஆட்சியின் கீழுள்ளவர்களின் மேலுள்ள கரிசனையையும் குறிப் பிட்டாக வேண்டும். தனக்கென வைத்திருந்த உணவுப் பொருட்களைச் சகலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொணி டமை அவரது ம ன த நேய த து க குச சான றா குமி - ஆதரிவா சரி களி ன தலைவர்களில் ஒருவரான பென்னிலேங் (BENNE LONG) 616öLJ66)Jj 5lDgi மொழி பெயர்ப்பாளராக ஆக்கித் தம்முடன் இங்கிலாந்துக்கு அழை த்துச்சென்று, அரசருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒபரா ஹவுஸ் (OPERA HOUSE) AQ(bäs(gótið gög6l6ODGOT பென்னி லோஸ் முனை எனப்பெயர் சூட்டி அவர் இறக்கும் வரை அங்கு வாழ அனுமதித்தார் . "பெரிய பிரிதி தானியா வெனி றெடுதி த பொக்கிஷங்களில் நியூ சவுத் வேல்ஸ் தலைசிறந்ததாகும்" எனத் தீர்க்க தரிசனத்துடன் கூறியமை எவ்வளவு உண்மை என்பது இப்பொழுது விளங்கு கிறது. சு கயினம் காரணமாக இங்கிலாந்து சென்ற பிலிப் மீண்டும் திரும்பிவர முடிய வில்லை. ஆனால் அவர் செய்த அளப்பரிய சேவையை எவரும் மறக்க முடியாது.
பிலிப் இங்கிலாந்து சென்றதும் நியூசவுத் வேல்ஸ் படைக்கு முடிவுக்குப் (NSW CORPS) பொறுப்பாக விருந்த மேஜர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 23

Page 14
abastabu
ஐப்பசி 2000
(g(3prior) (MAJOR GROSE) LDITSlaj தினை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றார். உணவுற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன் காணிகளை இலவசமாகப் படையினருக்கும், விடுதலை பெற்றவர் கட்கும் வழங்கினார். இரண்டா வது படையணில் குறி றவாளிகளை மேற்பார்வை செயப்வதெற்கெனக் கொண்டு வரப்பட்ட விசேட அணிதான் நியூசவுத் வேல்ஸ் படையணி. இதனால் இப்படையினர் யாவரும் ஆளுநரிடம் இருந்து பெருமளவிலான காணிகளைப் பெற்று குற்றவாளிகளைக் கொண்டு விவசாயத்தைச் செய்வித்தனர். இத்துடன் ரம் (RUM) என்னும் குடிவகையைக் கொள்வனவு செய்து விற்கும் ஏகபோக உரிமையை இவர்கள் பெற்றனர். கப்பல்களிலிருந்து இதனைக் கொண்டு வரும் தனியுரிமையும் இவர்களுக்கா யிற்று, வேலை செய்வதற்கான கூலி ரம்மாகக் கொடுக்கப்பட்டது. இது பல வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. ரம் வியாபாரத்தில் ஈடுபட்ட படையினர் பொருள் ஈட்டுமுதலிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்தன. சகலரும் குடி போதையில் இருந்தனர். ரம்முக்காகவே தமது காணிகளை விற் போரும் உருவாகினர். வண. பிதா றிச்சாட் ஜோனி சனி (REV RICHARD JOHNSON) என்ற மத போதகர் கூட தமது தேவாலயத்தைக் கட்டக் கூலியாக ரம்மைப் பெற வேண்டியதாயிற்று, ரம்மின் விலை இறக்குமதி விலையிலும் அதிகளவாக விற்கப்பட்டது. மொத்தத்தில் இப்படையணியை ரம் படையணி (RUM COPS) 616i (3p J960) p535607 f. (WATSON, 1990:46)
unhqui f (RUM REBELLION)
உலகிலே பல புரட்சிகள் பல்வேறு
விடயங்களுக்காக நடைபெற்றுள்ளன. ஆனால் குடிவகையான ரம்முக்காகப்
புரட்சியொன்று நடைபெற்றதென்றால் அது நியூசவுத் வேலி சில தான் . பிரித்தானிய ஆட்சியினருக்கு இது ஒரு சோதனையாக மட்டும் இல்லாது ஒரு கறைபடிந்த சம்பவமாகவும் இருந்தது.
ரம் புரட்சியில் படையணியினைச் சேர்ந்த ஜோனி மக் காதரினி (JOHN MACARTHUR) LISG) (péeßu uoT60Igl. படையணியில் ஒருவராக வந்து குறோசின் மதிப்பை பெற்று கப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பொது மராமத்து இலாகாவுக்குப் பொறுப்பதி காரியாக்கப் பட்ட படியினால் அதிகாரங்கள் பல வற்றைப் பெற்று அவற்றினைத் தனது முன்னேற்றத்துக்காகப் பாவித்தார். பரமாட்டாவில் 200 ஏக்கர் நிலத்தினைப் பெற்று தமது மனைவியின் பெயரில் 665)sGLugi, 16016O)6OOT (ELIZABETH FARM) யை ஏற்படுத்தினார். 1800 ஆம் ஆண்டளவில ஏனையோரிணி காணிகளைக் கொள்வனவு செய்து 1610 ஏக்கருக்கு உரிமையாளரானார். 1810 இல் படைத்துறை நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டாரெனினும் குற்றங்கள் நிரூபிக் கப்பட வில் லை. அவுஸ்திரேலியாவுக்கு மெரினோ ஆடுகளைக் கொண்டு வந்து கம்பளி உற்பத்திக்கு அத்திவாரமிட்டார். காம்டன் Lily (LORD CAMDEN) gaugbdisg செம்மறியாடுகளை வளர்ப்பதற்கென 5000 ஏக்கரை வழங்கினார். இதனால் அதிகார பலமும் பணபலமும், ஆட்பலமும் கொண்ட காரணத்தினால் கவர்னர்களாக வந்த இங், பன்ஜர், பிளை ஆகியோர்
களுடன் மோதினார் . கருத்து வேறுபாடுகள் கொண்டார். இவர் களுக்குக் கெதராகப் 6)
குற்றச்சாட்டுக் களை ஏற்படுத்தி இங்கிலாந்து அரசுக்கு அனுப்பினார். இவரது கடுங் கோபமும் , அரச அதிகாரிகளுக்குக் கெதிராகக் செயற்பட்ட முறையும் இவரை இங்கிலாந்து நிதி மன்றத்தின் முன் கொண்டு போய்
24 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
கலப்பை
நிறுத்தியது. இதிலும் விடுதலையானார். ரம் படையினர் 1800 இல் திருப்பி அழைக்கப்பட்டிருந்தும் மக்கதெர் இங்கே தங்கிப் பிரச்சினைகளைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். 1806 ஆம் ஆண்டு ஆளுநர் பிளை (BLIGH) என்பவர் இங்கு வந்தார். சட்ட திட்டங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர் என்ற படியினால் ரம் வியாபாரம் சம்பந்தமாக நடைபெறும் கெடுபிடிகளைக் கண்டு பிடித்து ஆவன செய்யும் படிஅரசினால் பணிக்கப் பட்டிருந்தார் . அவரும் தமது அதிகாரங்களைப் பிரயோகித்தார் எனினும் தமக்கெனக் காணிகளைக் கொள்வனவு செய்தார். நியூசவுத் வேலி சில உள்ள படையணி இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சிபார்சு செய்தார். முன்னைய படையணியினால் கொடுக்கப்பட்ட காணிகளின் பத்திரங்களை ரத்துச் செய்ததுடன், கட்டடங்களை இடித்துத் தள்ளினார் . இவரது செயப் கை படையினருக்கும் ஏனைய காணி உரிமை யாளர்களுக்கும் ஆத்திரத்தை ஊட்டியது. தனக்கு எதிரானவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கமுற்பட்டார். முக்கிய மாக மக்களுக் எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றார். அவரது காணிகளை அபகரிப்பதற்கும் , அவருக்கு எதிரானவர்களை மக்காதருக்கு எதிராகத் தூண்டியும் செயல்பட்டார். மக்காதரின் கம் பலில உள்ள குற்றவாளி தப்பியோடியதையடுத்து நீதிபதி முன் இவர் கொண்டு வந்து நிறுத்த ப்பட்டார். நீதிபதியாகவிருந்தவர். கடனாளி என்பதனால் அவர் தம்மை விசாரிக்க முடியாது என மக்காதர் வாதாடினர். ஏனைய படையினர்கள் இவரது நண்பர் களான படியினால் அவர்களும் இதனை ஆதரித்தனர். ஆளுநர் பிளை அவர்களை தேசத் துரோக குற்றச்சாட்டடின் பேரில் கைது செய்வேன் எனக் கூறினார். மக்காதரைச் சிறையில் இட்டார். நியூசவுத் வேலி ஸ் படையணிக் குப் பொறுப்பாகவிருந்த மேஜர் ஜோன்ஸ்ரன்
(MAJOR JOHNSTON) gian Gogold மோசமடைவதைப் பார்த்த பின்னர் மக்காதெரை விடுதலை செய்வித்தார். இத்துடன் நில லாது ஆளுநர் பிளைத்தையே சிைைறக் கைதி யாக்கினார். இவர் ஒருவருட காலம் இப்படியாக வைக்கப் ப்பட்டிருந்தார். இந்தக் கால கட்டத்தில் படையணியினர் ஆட்சியை நடத்தினர். 1809 ஆம் ஆண்டு G885 ri 6OOT 6ð Luð (3gp 3F Goi (COLONEL PATERSON) குடியேற்ற நாட்டின் நிர்வாகத்தைப் பொறுப் பேற்றார். பிளை இங்கிலாந்து திரும்பினார். எனினும் யோன்ஸ்ரன் படைத்துறை முறைமன்றின் முண் நிறுத்தப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்டார். 1809 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கேர்னல் லாச்சன் Daigouf (COLONEL LACHLAN MACQUARIE) புதிய ஆளுநராக இங்கு வந்த பொழுது தம்முடன் புதுப் படையினரையும் கொண்டு வந்தார். இவரே ரம் வியாபா ரத்தைத் தடுத்து நிறுத்தினார். இதற்குப் பதிலாக நாணயங்களை அறிமுகப்பத்தி நாணயப் பரிவர்த்தனை மூலம் சம்பளம் கொடுக்கப்பட்டது. பிரச்சினைக்குரிய மக் காதர் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு 1817 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்டார்.மகாதர் கம்பளி உற்பத் தரிக்கு முனி னோடியாக விருந்ததுடன் இங்கிலந்தில் இருந்து திரும்பி வந்த பின்னர் இவரது ஆலோசனையின் பேரில் குற்றவியல் சட்டங்கள் மாற்றிய அமைக்கப்பட்டது. யூரிமார்களின் உதவியுடன் வழக்குகள் தீர்மானி க்கப்பட்டன.
ரம் படையில் பல்வேறு குற்றங்கள் புரிந்தவர்கள் யா பேரும் இங்கிலாந்துக்குத் திருப்பியழைக்கப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்டனா. இவர்கள் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தை விட்டகன்றதும் நாடு சுபீட்சமடைய ஆரம்பித்தது.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 25

Page 15
asasiapu
ஐப்பசி 2000
சமகால சதுரங்கம்
கலப்பையின் 25ஆவது இதழின் அட்டைப்பத்திற்கான விளக்கத்தை கேட்டிருந்தோம். அதற்கேட்ப எமக்கு கிடைத்த கருத்துக் களை இங்கு தருகின்றோம்.
கருத்து 1
கலப்பையின் ஆறாவது ஆணிடுமலர் அட்டைப் படத்தை உற்று நோக்கும்போது இன்றைய சமுதாயத்திலுள்ள தலைமுறை 360LQoliofilou (Generation Gap) 95. பிரதிபலிக கினிறது. இருவருக்கிடையில் சங்கமமாகும் நட்பினைப் பிரதிபலித்தாலும், இப்படம் எடுத்துச்சொல்ல வருவது, எப்படியான சூழ்நிலைகளிலிருந்து இருவரும் வருகினறனர் : அநீதச் சூழ்நிலைகளினால் எப்படி இருவரும் நடவடிக்கைகளில் வேறுபடுகின்றனர், என்பதேயாம்.
இன்று பொதுவாக பல இன மக்கள் சங்கமித்த நகரங்களையே பார்க்க முடிகின்றது. அத்துடன் நில்லாமல், தொடர்ந்தும் சங்கமித்துக் கொணிடுதான் உள்ளனர். இப்படியான இடங்களில் இருவேறு விதமான நடத்தை கொண ட மனிதர்களைக காண முடிகினிறது. பழைய பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கின்ற, மாறுதல்களை எதிர்க்கின்ற (conservative) குழுவாக ஒனறும் , மற்றொனிறு புதுமைகளைத் தேடி வரவேற்றுக் கலக்கின்ற, ஒன்று சேர்ந்து இணைகின்ற (integrative) குழுவாகவும் உள்ளன.
எனினதான
பழமைகளைப் பாதுகாக்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் மற்ற இனத்தவருடன் இணைந்து புது எண்ணங்கள் கொண்ட பிள்ளைகளுடன் இது
நான் நடைமுறையில் கண்ட ஒரு உண்மை!
நட்புக் கொள்வதை எதிர்க்கின்றனர்.
SN. ; 328-623
si
trga"2ooo
இயல்பு அவனது நடவடிக்கைகள்,
எண்னதான் ஒரு மனிதன் உ எனறாலும, கருத்துக்கள், செயற்பாடுகள், சிந்தனைகள் என்பன அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் பாதிக் கப்படுகினறன. வளருகின்ற குழந்தைகளைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நல்லதாக, முற்போக்குக் கருத்துக்கள் கொண்டதாக, அவர்களது மனவளர்ச்சியைத் துாணிடுபவை யாக இருக்கவேணடும். இல்லையேல் அவர்கள் குறுகிய மனப்பான்மை கொணர்டவர் களாகவும், எதிர்காலத்தைச் சிறுமைப் படுத்துபவர்களாகவும் தானி வளருவார்கள். அதைத் தடுக்க வேண்டுமானால், நாம் இன்று தோன்றியுள்ள தலைமுறை இடைவெளியை ஆழ அலசி ஆராய்ந்து, அவற்றை நிவர் திதி
26 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

ஐய்பசி 2000
abastabu
செய்யவேண்டும். குழுவினர் உணர்ந்து தங்களது கருத்தை முன்வைத்துள்ளனர். இதை இனி எமது சமுதாயத்தினர் கையேற்று, ஆராய்ச்சியில் இறங்கவேண்டும்.
இந்நிலையைக் கலப்பைக்
வி வி
கருத்து -2
கலப்பையின் ஆறாவது ஆண்டுமலரின் அட் டைப் படம் வழமையைவிட வித்தியாசமானதாக இருக்கின்றது. கலப்பை பொன் எழுத்துக்களில் மிளிர்வது ஒரு சிறப்பு. அட்டைப்படத்தை பார்க்கும்போது பல கருத்துக்கள் தென்பட்டாலும், கலப்பையின் ஆசிரியர் கருத்துடன் இந்தப்படத்தைப் பொருத்திப் பார்க்கலாம் என்று எண்ணுகின்றேன். இங்கு சொல்லப்பட்ட கருத்தில், அவுஸ்திரேலியா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் இளம் தமிழர்களிடையே (ஏறத்தாள ஒரே வயதுடையவர்கள்) இரு வேறு சந்ததிகள் இருப்பதாக ஆசிரியர்
கூறியிருந்தார். அதாவது அண்மையில் புலம்பெயர்ந்த இளம் தமிழர்கள், இங்கு பிறந்த, பல காலமாக வாழ்ந்து வருபவர்களிடம் இருந்து, அவர்களது போக்கு, நடத்தைகளில் வேறுபடுவதான கருத்து தொனித்தது. இந்தக் கருத்தை அட்டைப்பத்துடன் பொருத்திப் பார்த்தால், இரு வேறு பட்ட (தமிழ்?) இளைஞர்கள் இரு வேறுபட்ட பிண்ணனியில் (சூழலில்) இருப்பதாக அறிய முடிகின்றது. அதில் இடது பக்கத்தில் ஒரு (படிக்கின்ற, தமிழ்) இளைஞன் தனது தாயகப் பிண்ணனியில் காணப்படுவதும், வலது பக்கத்தில் இருக்கும் இளைஞன், புலம்பெயர்ந்த (மேலைத்தேய) நாட்டுப் பின்ணனியில், அந்நாட்டு இளம் சமுதாயப் போக்கில் வாழ்ந்துவரும் இளைஞர் போன்று காணப்படுகின்றார். சமகாலத்தில், இந்த இரு சந்ததியினரும் சந்திப்பதாக இந்தப் படம் வரையப்பட்டுள்ளது என்று தோன்றுகின்றது.
சிவம், ஸ்ரத்பீல்ட்
தமிழ்க் கையேடு 2001” TML (SUIDE 2001
தமிழ்க் கையேட்டின் 2001 ஆண்டுக்கான 3ம் பதிப்பு, மாசி மாதம் வெளிவரவிருக்கின்றது என்பதை சிட்னி வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இதுவே சிட்னித் தமிழருக்கென வெளிவரும் ஒரேயொரு சமூக, வர்த்தகக் கையேடு. இதனை தமிழ் வர்த்தக நிலையங்களில் இலவசமாகப்
Gls.TLsu: (02)9764 3413 or 0412 31 30 10 Email : sutsQpop.ihug.com.au Web Site: http://www.tamilaustraliam.com.au/suts/ இது சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் கலப்பை வெளியீடு A Publication of KALAPPA, Sydney University Tamil Society
பெறலாம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 27

Page 16
abastabu
ஐப்பசி 2000
கருத்து-3 (சமகால சதுரங்கம்)
(கலப்பை ஆடி இதழின் முகப்புப் படத்தைப் பாாத்தவுடன் பல விடயங்கள் என் மனதில் எழுந்தன. அவற்றைச் சுருக்கமாக எழுத விரும்புகின்றேன்)
புலம்பெயர்வும் பரம்பரையும் பொருந்தி வருமா?
எமது மண்ணில் நாம் பிறந்து, வளர்ந்து, தவழி நீ து விளையாடிக் களித்தும், பொறுப்பாக
கல்வி, தொழில், உத்தியோகம், கலியாணம் , வரவுசெலவுக் கணக் குவழக்கு, கோவில் கள், சமயச்சடங்குகள், ஆரோக்கியம்,
இல்லற வைபவங்கள், முதலிய பல அம்சங்களில் கவனம் செலுத்தியும் வாழ்ந்திருந்த நாட்கள் போய்விட்டன. இங்கு வந்துவிட்டோம். நாம் விரும்பியே இம்மாற்றத்தைத் தேடிக்கொண்டபடியால் வளர்ந்தவர்களாகிய நாங்கள் இந்நாட்டு வாழ்க்கைமுறையோடு ஒத்துஒடியே ஆகவேண்டும். அதனால் இந்நாட்டு வழக்கங்களை நாமும் கையாண்டு, பிறருடன் சேர்ந்துவாழப் பழகிக் கொணர் டோம் . எங்கள் பிள்ளைகளும் எங்களுடன் வந்துவிட்டார்கள் அல்லவா! அவர்கள் இந்நாட்டுப் பழக்கவழக்கங்கள், கலவிமுறை, வாழ்க்கை நடை முறைகள் முதலியவற்றிற்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கசப்பாக இருந்தாலும் நாம் குடியேறி வந் திருக்கும் இந்த நாட்டுக் கலவிமுறையை அவர்களும் கடைப் பிடித்தே ஆகவேணி டும். தொடக்கத்தில் சில சங்கடங்கள் ஏறி பட்டாலும் , பெற்றோரினி விடாமுயற்சியினாலும், தங்கள் பெருமுயற்சியினாலும் ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக் கல்வியில் உரிய தேர்ச்சியைப் பெற்று உயர்வடைகிறார்கள்.
அதேவேளை, இங்கு பிறந்து வளரும் பிள்ளைகள் ஓரளவுக்கு இந்நாட்டுப் பழக்கவழக்கங்கள்,
கொண்டு,
கல விமுறை, உணவுவகை, தேகாரோக்கியம் முதலியவற்றில் அதிக சிரமமின்றி ஒட்டிக்கொள்ளுகிறார்கள். இவ் விரு வகைப் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் சென்று கல்வி பயின்று, பின்பு பல்கலைக்கழகம் புகுந்து அங்கும் படிப்பை முடிக்கும்வரை அவர்களின் பெற்றோர்கள் DTLT uū உழைக க வேண டியரிரு க கரிறது. அவர்களுக்கு இப்படியொரு நிலை அங்கு ஊரில் இருந்ததில்லை. அங்கு இருந்த நிலைமைகள் வேறு. இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த அரசாங்கத்தின் சட்டத் தின் படி பிள்ளைகளைக் கண்டிக்கக்கூடாது, தண்டிக்கக்கூடாது, அதட்டக் கூடாது, அவர்கள் மேல் வன சொல் பாவிக்கக் கூடாது, அவர்களின் விரும் பங்களைப் பூர்தி திசெய்ய விட வேணும் , அல்லாவிட்டால் அதற்குக் காரணம் சொல்லவேணும்.
இத்தனை கட்டுப்பாடுகளையும் சமாளித்துக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிப்பித்து முனனுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், அது மிகவும் போற்றத்தக்கதொரு சாதனையாகும், மெச்சவேண்டியது. பிள்ளைகளும் (சில புறநடைகளைத் தவிர) தாம் வாழும் நாட்டுப் பழக்கவழக்கங்களையும் பெற்றோரின் இடர்பாடுகளையும் ஒரு மரித்துக் கருத்திலெடுத்து, அலசி ஆராய்ந்தபின் இருபக்கத்தாரையும் சமாளிக்கும் விதமாக
28 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
கலப்பை
நடந்து முன்னேற்றம் அடைகிறார்கள். இதுவரை நாம் ஆராய்ந்த கல்வி பயிலும் விடயமானது இந்நாட்டில் பரந்து வாழும் பல்லினமக்கள் யாவருக்கும் பொதுவான ஆநர் கபிலக கலவரியைப்
பற்றியதேயாகும்.
மனிதனி தனி வாழ்க் கையில் (உத்தியோக நோக்குடன்) கல்வி பயின்று, பின்
உத்தியோகமாகி, குடும்பம் அமைத்து, பிள்ளைகளைப் பெற்று, அவர்களை முன்னேற்றிவிட்டோமென்ற திருப்தியுடன் தனது வாழி க் கையை முடித்துக்கொண்டால், அவ்வாழ்வில் அவனுக்கு ஏதாவது பயனுண்ைடா? தான் வாழ்ந்துகொள்ளும் அதே நேரத்தில் தனது சமூகத்தைப்பற்றியும் சற்றாவது சிந்திக்கவேண்டாமா? நமது சமுதாயம், நமது தாய்மொழி, நமது பரம்பரை கைக்கொண்ட நல்ல பழக்கவழக்கங்கள் முதலியவற்றை நாமும் கடைப்பிடித்து, நம் பிள்ளைகளும் அவற்றைத் தொடர்ந்து நடைமுறையில் பாவிக்க வழிகள் செய்யவேண்டாமா? அவசியம் செய்தே ஆகவேண்டும்! அதை எப்படி நடைமுறையில் செய்வது?
முதலில் பிள்ளைகளின் மனதில் தேசப்பற்றை உண்டாக்க வேண்டும். அடுத்து, நாமிருந்துவந்த மண்ணின் மகிமை, தமிழ் மொழியின் சிறப்பும் தொண்மையும் அதன் வளமும், தமிழ்ச் சமுதாயத்தின் பெருமை, அவர்கள் விட்டுச் சென்ற கல்விப் பொக்கிசங்கள் முதலியவைபற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேணி டும். இங்குள்ள பெற்றோர்களில் பெரும்பாலோருக்கு இது செய்யக்கூடிய விடயம். அவற்றில் ஈடுபாடில்லாத பெற்றோர்கள்கூட தம் பிள்ளைகளைத் தமிழ் வகுப்புகளுக்கு அனுப்பியும், அவர்களைத் தமிழ்ப் புத் தகங்களை வாசிக்க ஊக் கப்படுத் தரியும் , தமிழ் கி கலாசாரங்களைக் கையாளும்
கழகங்கள். ஸ் தாபனங் களில அவர்களைச் சேர்த்துவிட்டும், தமிழ் நிகழ்ச்சிகளில் பங்குபற்றவைத்தும், இப்படி எத்தனை தமிழ் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பிள்ளைகளை ஈடுபடுத்திவிடலாம்!
இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு எங்கள் நாடுபற்றித் தெரியாது. அவர்களுக்குத் தேசப்படத்தைக் காட்டி விளக்கி, எமக்கு ஒரு தாய்நாடு இருக்கிறது என்றதை அறிவுறுத்தி, இப்போது நாமிருக்கும் நாடு நமதல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, தாய் மணி னில் பற் றை உணர் டாக்கவேணும் . இயற்கை வளங்கள், அங்குள்ள நிம்மதி, கோவில் கள், சமயாசார நிகழ்ச்சிகள், முதலியவற்றைப் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். அத்துடன், அங்கு பேசும் மொழி தமிழ் மொழி என்பதை உணரவைக்க வேணும். தமிழர் பரம்பரையில், சரித்திரத்தில் காணும் வீரர்கள், புலவர்கள், புத்திமான்கள், நீதியுடன் ஆண்ட தமிழரசர்கள் வரலாறு, தமிழரின் காதல் கதைகள், அவர்களின் குடும்ப அமைப்பு முறைகளும் அவற்றுக்குள்ள கட்டுப்பாடுகளும் இவ்வாறான பல அம்சங்களையும் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டவேண்டும். நமது நாட்டிலுள்ள கருவிகள், சாதனங்கள்பற்றி இங்கு பிறந்த பிள்ளைகளுக்குத் தெரியவே தெரியாது. தெரிய நியாமுமில்லை! உதாரணமாக, கிணறு, துலா, கலப்பை, உரல் உலக்கை, சுளகு, அம்மி, ஆட்டுக்கல், கொக்கைத்தடி, பனைமரமும் அதனி 6) பிரயோசனங்களும், உடம்பில் எண்ணை தேயப்த்து முழுகுதல் , விரதம் , உபவாசமிருத்தல், ஊறுகாய், வடகம், வடை முறுக்கு, பணிகாரம் போன்ற உணவுகள், கோவில் திருவிழாக்கள்,
காவடி வகைகள், முதலியவற்றை விபரிதி து அவர்களை 6TD தாயப் மணி னுக்கு இழுத்துச்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 29

Page 17
கலப்பை
ஐப்பசி 2000
செல்லவேண்டும்.
நாமிங்கு எவ்வளவு வசதியாக வாழ்க்கை நடத்தினாலும் எமது அடி வேர் எமது தாயகத்தில் இருக்கிறது. அதை நாம் பலப்படுத்த வேண்டும். அந்தப் பாரிய விருட்சத்தின் செறிந்து பரந்து புலம்பெயர் மண்ணில் ஊன்றி நிந்கும் விழுதுகள்தான் நாம், நாங்கள் உறுதியாக நின று கிளைகளைத் தாங்கினால் தான் அடிமரம் உரமாக நின்று மேலும் பயன் தரும்.
மேற்குலகம் பழக்கவழக்கங்கள் கூடஇருப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். அவற்றைப் பழகிகொள்ளுதலும் வெகு சுலபம். ஆனால் பழகிக் கொணி டால விட்டுவிலக்க முடியாது. முக்கியமாக, துர்ப்பழக்கங்கள் நல்லவைபோலத் தோன்றி எம்மைச் சிரமத்துக்குள்ளும் சிக்கலுக்குள்ளும் அமிழ்த்திவிடும். அதன் தீமைகளை உணரும்போது காலம் கடந்துவிடும் . பிறகு மாற்றமுடியாது. அழிந்துபோவதுதான்! ஆதலால் , நமது பிள்ளைகள் இந் நாட்டுப் பிள்ளைகளிடையே நண்பரைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும். இது மிக மிக அவசியம்.
"Tell me your Friend; and I'll tell you who you are." என்று அருமையாகச் சொல்லி வைத்தார்கள்.
பிள்ளைகளுக்குப் 18 வயதானதும் இந்நாட்டுச் சட்டப்படி அவர்கள் மேஜர் ஆகிவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் தன்னிஷ்டத்துக்கு எதையும் செய்யலாம். அவர்களைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியாது. மேஜர் பிள்ளைகள் எடுக்கும் எந்தத் தீர்மானத்துக்கும், எந்தச் செயலுக்கும் அவர்களேதான் பொறுப்பாளிகள், பெற்றோர்களல்ல! ஆகவே, அவர்கள் தங்கள் பகுத்தறிவைப் பாவித்து நல ல படி நடந்து கொணி டால வாழ்க்கையில் உய்வார்கள். அன்றேல்
அதோகதிதான்!
எமது நாட்டில் யார் எது செய்தாலும் அதில் வாழ்க்கைக்கு ஒரு பிரயோசன மிருக்கும். அவற்றில் சிக்கனமிருக்கும், கேளிக்கைளில் கண்ணியமிருக்கும், பெண்களின் நடை உடை பாவனைகள் மான தி தை மதிப்பவையாக இருக்கும். மாறாக, மேற்குலகக் பெண்களின் உடைகளும் பழக்கவழக்கங்களும் ஆண்களைத் துர்வழிக்கு ஈர்க்கத் துணை போகின்றன. அவர்கள் இயற்கை உந்துதலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்நாட்டில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி காரணமாக மாற்றங்கள் வரத்தான் செய்கின்றன, ஆனால் மெதுவாகத் தானி வருகின்றன. அம்மாற்றத்தை மேலும் விருத்திபண்ணப் பல அமைப்புகள் முயற்சிகள் மேற்கொள்ளுகின்றன. அவற்றுள் முன்னோடியாக நின்று அரிய சேவைகள் செய்யும் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கங்களை நாம் போற்றியே தீருவோம்.
நமது பாரம்பரியமான தமிழ் மொழியும் தமிழ்க் கலாச்சாரமும் நம்மைவிட்டுக் கைநழுவி விட்டால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே அந்த அனர்தி தத்துக் குக் காரணமாயிருந்தவர்கள் என்று எமது வருங்காலச் சந்ததியினர் குறை கூறுவார்கள். இது கற்பனையல்ல, நடக்கக்கூடியது. ஆதலால் நாமே விழிப்பாக இருந்து செயலாற்றக் கடமைப் பட் டவர் களாகறோம் . புலம்பெயர்ந்தோரும் பரம்பரையைக் கடைப்பிடிப்போரும் ஒன்றிணைந்து செயற்பட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க புலம்பெயர்ந்து வெளி நாடுகளுக்குக் குடிவந்தவர்கள்தாம் முயற்சி எடுக்கவேண்டும். தாய்மண்ணில் மீதியாக இருப்பவர்கள் இவ்விடயத்தில் ஒன்றுமே செய்ய முடியாது!
சிசு. நாகேந்திரன்
3O சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000 abastaput
-------------------------- சமகால சதுரங்கம (அடுத்த இதழுக்குரிய விடயம்) காலம் மாறுகிறது. நாமும் மாறுகின்றோம். இந்த மாற்றம் அவசியமானது.
அல்லாவிட்டால் புலம்பெயர்ந்த நாடுகளில் இன்றைய கால ஓட்டத்துடன் எமது வாழ்க்கையை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் இந்த
மாற்றங்கள் அனைத்தும் எமக்குச் சாதகமாக அமைந்து விடுவனவல்ல. பல
விடயங்களில் நாம் எம்மை, எம்மைச் சார்ந்த விடயங்களை விட்டுக் கொடுக்க ! | வேண்டியவர்கள் ஆகின்றோம். இவற்றை நாம் விரும்பியோ, விரும்பாமலோ 1 ஏற்றுக் கொள்கின்றோம். ದ್ವಿರಾ இங்கு நிகழும் பல #ಗಾ। விளைவுகளில் | ஒனறு, அதிகரித்து வரும் விவாகரத்து. இது கணவன்-மனைவியை மட்டுமல்ல அவர்களது குழந்தைகளையும், பெற்றோர்களையும், சுற்றத்தினரையும் வெகுவாகப் பாதிக்கின்றது. தாயகத்தில் காணாத அளவிற்கு, புலம்பெயர்ந்த நாடுகளில்
தமிழர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதை நீங்க்ள் அறிந்திருப்பீர்கள். இதற்குக் காரணங்கள் பல. இருப்பினும், அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்கு
ಹಗ್ಗರಾಯ್ಕೆ எமது தமிழ்க் கலாச்சாரப் பண்பாடுகளை முறையாகப் ಝೇಃ | தன்மையினாலா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த விடயத்தை உங்களிடமே
விட்டுவிடுகின்றோம். உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகின்றோம். கருத்துக்கள் அடுத்த இதழில் பிரசுரமாகும்.
- ஆசிரியர்.
-- --- -- ܚ- -- -- -- -- -- -ܗ ܗ-- -- ܚܐ
சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் 10ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், ஈழத்தில் அல்லலுரும் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கு நிதி சேகரிக்கும் பணிக்காக வருடந்தோறும் நடைபெறுகின்ற
UNIFUND
கலைக்கதம்பம் 2001 வெகு சிறப்பாக இடம்பெற விருக்கின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். Saturday 28 April 2000 at the Ukranian Hall, Lidcombe
HINDU Tradition o Religion o Aspiration o Culture (TRAC)
National Hindu Conference 2001
Dates: Friday 26th Jan 2001 (9am-5pm) Saturday 27 Jan 2001 (9am-5pm) Sunday 28 Jan 2001 (9am-12pm) Venue: lan & Nancy Turbott Auditorium University of Western Sydney Parramatta Campus, Victoria Rd (cnrJames Ruse Drive) Parramatta, Sydney. Topic: Aspiration
Everyone is welcome.
Attendance is free of charge.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 31

Page 18
asAsiapu ஐப்பசி 2000
சுகமான ரணங்கள்
முன் கதைச் சுருக்கம்
பல்கலைக்கழகச் சட்ட விரிவுரையாளரான சுமனஸா நூல் நிலையத்தில் திவாகரைச் சந்தித்து உதவுகின்றாள். திவாகர் புலமைப் பரிசிலில் வர்த்தகவியல் படிப்பதற்காக இலங்கையிலிருந்து வந்திருப்பதாகத் தன்னை அறிமுகம் செய்கின்றான். அவர்கள் நட்புத் தொடர்கிறது. திவாகரின் அண்மையில் சுமா என்றும் மகிழ்கின்றாள். அவனைக் காண்பதற்கும் பேசுவதற்கும் அவள் மனம் என்றும் விழைகின்றது. ஆனால் காதல் என்ற பதத்திற்கு பரம எதிரியான சுமாவிற்கு தன் உள்ளத்து உணர்வுகளின் அர்த்தம் புரியவில்லை. அதைப் புரிய வைக்க முயன்ற மனோ தத்துவவியல் மாணவியான தன் தங்கையைக் கோபிக்கிறாள். ஆனால் தங்கையின் அதிர்ச்சி வைத்தியத்தினால் தன் நிலை புரிந்த சுமா செய்வதறியாது கலங்குகின்றாள். அவள் சொன்னவை அனைத்தையும் செவிமடுத்த செளம்யா இந்த உறவு சுகமானதாகத் தெரியவில்லை. இதை மறந்துவிடு என்கிறாள். அதிர்ந்த சுமா தோழியிடம் காரணம் கேட்கின்றாள். செளம்யா எடுத்தியம்பிய
காரணங்களளைச் சுமா ஒவ்வொன்றாக மறுக்கின்றாள்.
இனி மேலே படிக்கவும்.
Un &EGD 3
கைகளைக் கலகலவெனத் தட்டிச் சிரித்தவள் மிகவும் நலி லது வகிக” லி அம்மா எல்லாவற்றிற்கும் ஆயத்தமாகப் பதில் வைத்திருக்கிறாய். அதென்னமோ சுமா இந்த நோயின் தன்மையே அதுதான, வந்துவிட்டால் எந்த மருந்தாலும் குணப்படுத்தவே முடியாது. ஆனால் ஒருவேளை திவாகர் எனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை வெறும் நட்புத்தான் என்றால் என்றவளின் கைகளை அவசரமாகப் பற்றி அவராகச் சொல்லும்வரை நாமாக
எதுவும் நினைக்க வேணிடாமே எனக் கெஞ்சினாள்.
சௌமியா எழுந்து அவளை இறுக
அணைத்துக் கொண்டாள். அப்படி எதுவும் உனக்கு ஆகாது சுமா எல்லாம் உன் மனம் போலவே நடக்கும் என்றவள் எனக்கு அந்த மன்மதன் மேல் கோபமாக இருக்கிறது எப்படி உறுதியாக இருந்த எண் சுமா மேல் மலர்க் கணையை ஏவி அவளை இந்த அவதிக்குள்ளாக்கி விட்டானே என்றாள்.
நீதான் அது ஒரு சுகமான ரணம் என்றாயே சௌமி, நிஜமாகவே அப்படித்தான் இருக்கிறது என்றாள் நாணத்துடன்.
ஆப்பா, அம்மா அதை அனுபவிக்கின்றாயா என்றாள்.
நானும் ஒரு பெண் தானே சௌமி, எந்தப் பருவத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கத் தானே செய்யும். அரும்பெடுத்த செடியருகே சென்று மலராதே எனத் தடுத்தால் கேட்குமா? மலையருகே சென்று எத்தனை தடை விதித்தாலும் சூல் கொண்ட மேகங்கள் பொழியும் ந”ர் அருவியாக இறங்காமல் நிற்குமா? அதைப் போல என் மனத்திலும் அன்பு மலரவும், ஆசையின் கரு உயிர்க்கவும் இடம் இருக்கத்தானே செய்யும். அவற்றிற்கு நான் எப்படி விதி விலக்காக முடியும் எனக் கேட்டாள்.
சபாஷ் உவமைகளை அடுக்கிக் கொண்டே போகிறாய் சுமா. ந” பேசாமல் கதை எழுதலாம் என்றவள் அவர் விருப்பத்தை எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறாய் நான் ஏதாவது செய்யவா எனக் கேட்டாள்.
32 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐய்பசி 2000
கலப்பை
அவன் எதுவோ பேச வேண்டும் என்றதைச் சொன்னாள். அப்படியானால் ஒன்று செய்யேன். சனிக்கிழமை எங்கள் இருவருக்கும் வேலை எங்கள் வீட்டுக்கு வாங்களேன். நீங்கள் இருவரும் ஆறுதலாகப் பேசலாம் என்றாள்.
அவளைப் பாாத்துப் புனினகைதீத வள் உனக்குத் தெரியுமா பெரியவர்கள் சொல்வார்கள் நெருப்பும் பஞ்சும் கிட்ட இருக்கக் கூடாதென்று. படித்த நாங்களே அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாமா? அதற்கு ஏதாவது பொது இடம் தான் நல்லது
என்றாள்.
தோழியைப் பெருமையுடன் பார்த்தாள். பின் நீ எதிலும் பிழை விட மாட்டாய் சுமா நிச்சயமாக எல்லாம் சரிவரும். எப்பொழுது, என்ன உதவி வேணி டுமானாலும் நான் இருக்கிறேன் மறக்காதே என்றாள்.
அவளுக்கு நன்றி கூறி விடை பெற்றாள். இப்பொழுது மனம் மிகப் பாரமாக இருந்தது. திவாகர் என்ன சொல் வானோ என்று
அவளுக்குப் பயமாக இருந்தது.
அன்று இரவு உமாவிடம் திவாகர் கேட்டதைச் சொல்லிப் போகவா என்றாள். வழக்கம் போலவே கவனமாகப் போய் வா என்றவள் இதுபற்றி நீ ஒரு முடிவுக்கு வர வேண்டும் மகள் என்றாள்.
தாயை அன்புடன் அணைத்தவள் என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா அம்மா. அவருடன் கதைத்தபின் எல்லாம் சொல்கிறேன் என்றாள்.
மகளின் மாற்றத்தை உமா கவனிக்கத் தவறவில்லை. திவாகரை அவர்களுக்குப் பிடித்திருந்தது அவனது குடும்பமும் தெரிந்தது என்றதால் கடவுளே எல்லாம் நல்லபடியாக நடக்க வேணடுமெனப் பிரார்த்தித்தாள்.
மறுநாள் திவாகரிடம் சம்மதம் சொல்லி எங்கே போவது என தீ தீர்மானித்த போது இன்னொன்று செய்வாயா சுமா என்றவன் புடவையுடன் வருகிறாயா என்றான். குப் என்று முகம் சிவக்க நாணித் தலை குனிந்தவள் ம் என்று முனகினாள்.
சனிக்கிழமை திவாகர் குறித்த அந்த பூங்காவில் அவனைச் சந்தித்தாள். புடவையுடன் அவளைப் பார்த்தவன் மிகவும் புழகித்தான். மிகவும் அழகாக இருக்கிறாய் இந்த அழகு வேறு எந்த உடையிலுமே வராது உனக்குத் தெரியுமா சுமா என்றான்.
அவனது முகத்துக்கு நேரான புகழ்ச்சியால் பேச்சு வராமல் திக்குமுக்காடிப் போய் நின்றவள் கணிகளில் நாணம் மீதுார அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது வெட்கத்தை ரசித்தவன் மீண்டும் அவளைச் சீண்டாமல் நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா என்றான்.
அது அவள் வெட்கத்தை மேலும் மெருகூட்ட நிலம் நோக்கினாள்.
அவன் குறும்பு தலை காட்டப் புடவை உடுத்ததும் வீரமிகு சட்டவல்லுனர் பெணிணாகி விட்டாரே! பெணிமையும, நாணமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றனவே, நம் பெணிமையின் நாணத்தின் ரகசியம் இப்பொழுது தானே புரிகிறது என்றான்.
சுமா தன்னிலைக்கு வந்தாள். விட்டால் ஒரேயடியாக ஏதேதோ சொல்கிறானே என நினைத்தவள் போதும் என்றாள் வார்த்தையைக் கடுமையாக்க முனைந்து தோற்றாள். பின் என்ன சந்தோஷம் எனக் கேட்டாள்.
அம்மா, அப்பா வருகின்றார்கள் என மிகவும் ஆனந்தமாகக் கூறினான்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 33

Page 19
கலப்பை
ஐப்பசி 2000
நல்ல பாப்பா தான் பெற்றோர் வருகிறார்கள் என்றால் இப்படியா கூத்தாடுவது என நினைத்தவள் விடுதலையில் வருகின்றார்களா என வினவினாள்.
இல்லை நாங்கள் குடிபுகல்வு அனுமதி கோரி என்றோ விண்ணப்பித்தது இப்பொழுது தான் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அது தான் மிக மகிழ்சியான விஷயம். ஏனென்றால் என்னை இனி யாரும் இங்கிருந்து துரத்த முடியாது தெரியுமா?
அவள் உள்ளம் மகிழ்ச்சிப் பிரவாகமாகிக் கரை கடந்து ஆர்ப்பரித்தது.
அவனே தொடர்ந்தான், ஸ்கொலர்ஷிப்லி வந்துவிட்டுப் போகாமல் விடுவது சரியில்லைத் தானி ஆனாலி என மனமீ இங்கு பதிந்துவிட்டதே என்ன செய்யலாம் எனக் குறைப்பட்டுக் கொண்டான்.
விழிகள் மலர அவனை நோக்கியவள் எங்கே பதிந்தது என்றாள்.
அதை அங்கே தான் கேட்டுச் சொல்ல வேணும் எனப் புதிர் போட்டவன், அம்மா அப்பாவுடன் என் அத்தை மகளும் வருகிறாள் என்ற குண்டைத் துாக்கிப் போட்டான்
சுமா மின்சாரம் தாக்கினாற் போல் அதிர்ந்தாள். அவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லைத் தடுமாறியவள் அருகிலிருந்த ஆசனத்தில் தொப்பென இருந்துவிட்டாள்.
திவாகர் பயந்து போய் என்ன சுமா என்ன செய்கிறது என்றான். குடிக்க ஏதாவது வேண்டுமென்று சைகையால் காட்டினாள். அவன் போனதும் கணிணிர் அணையை உடைத்துத் தன்வழியே ஓடியது. செயலற்றுப் போய் இருந்தாள். சௌமி சொன்னது போல் போயும் போயும் இப்படியா ஆக வேண்டும்.
எவ்வளவு தெம்பும், திடமுமாக இருந்தாள், ஒரு நொடியில் உடல், உள்ளம் இரண்டுமே செயலிழந்தாற் போல் தோன்றியது.
தொலைவில் அவன் ஒரு குளிர் பானப் போத்தலுடன் மிக அவசரமாக வருவது கணிடு விழிப்புணலைத் தடுக்க முயன்றாள்.
அவன் கொண்டு வந்த பானத்தை ஒப்புக்குக் குடித்து வைத்தாள் விழிகள் கொப்பளித்துக் கொண்டே இருந்தன. சுமா! உனக்கு இது நன்றாக வேண்டும். உன்னை எத்தனை பேர் விரும்பினார்கள் அவர்களிடம் இல்லாத எந்த அதிசயத்தை இவனிடம் கணிடு உண் மனத்தைப் பறி கொடுத்தாய் என்று தன்னைத் தானே சபித்தும் கொண்டாள். மலர்க் கணை என்று சௌமி சொன்னாளே அது ஏன் தவறான ஓரிடத்தில் ஏவப்பட வேண்டும். காலமெல்லாம் வேதனைப்படவா என
நினைத்து மெளனமான அழுதாள்.
திவாகர் என்ன நடந்தது சுமா இப்பொழுது எப்படி இருக்கிறது எனக் கேட்டான்.
ஒன்றுமில்லை எல்லாம் சரி வீட்டுக்குப் போவோமா என்றாள். இனி இருப்பதில் என்ன லாபம் எல்லாம் தான் முடிந்துவிட்டனவே என நினைத்தவளாக. அத்தை மகளை மனத்தில் வைத்துக் கொண்டு என்னிடம் புடவையில் என்ன சொல்ல அழைத்தார் என ஆத்திரமாகவும் இருந்தது. ஆனால் அவனை அவளால் கோபிக்கவும் முடியவில்லை. இப்போ தானே வந்தோம் அதற்கிடையில் போவதா என்றான் ஏக்கமாக.
அத்தை மகளை நினைத்துக் கொணர்டு எண்னைப் பார்க்கிறாயா என நிதிைதாள். என்றுமில்லாமல் சிறு பொறாமையும் தலை காட்டியது. எதுவுமே சொல்லாமலி மெளனமான இருந்தாள்.
உனக்குக் கஷ்டமாக இருந்தால் போவோம்
34 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
கலப்பை
சுமா என்றவன் உனக்கு வசதிப்படும் போது என்னுடன் ஒருக்கால் கடைக்கு வர முடியுமா ஒரு பத்து வயதுப் பிள்ளைக்குச் சில உடைகள் வாங்க உதவி செய்வாயா என்றான்.
அந்த வேணர்டுகோளை அவளால் மறுக்க முடியவில்லை. சரி என்றவள் யார் அது என வினவினாள்.
அது தான் அத்தை மகள் வருகிறாள் என்றேனே என்றான்
இதயம் இயங்க மறந்தது. உடலெங்கும் இன்ப ஊற்றுப் பாய்வது போல் இருந்தது. மீண்டும் விழிகள் மழைக்காலத்து ஏரிகளாகி உடைப்பெடுத்தன. ஆனந்தக் கணிணிரா? முகத்தை மறுபக்கம் திருப்பி சத்தமின்றித் துடைத்துக் கொண்டாள்.
அதையெல்லாம் கவனிக்காமல் அவன் தொடர்ந்தான். பாவம் சுமா அவள் நம் நாட்டுக் கலவரத்தில் பெற்றோரை இழந்துவிட்டாள் . நல்ல வேளையாகச் சம்பவம் நடந்த நேரம் அவள் எங்கள் வீட்டில் நின்றதால் தப்பினாள். எங்களுக் கெல்லாம் அவள் செல்லம் அது தான் வரும்போது ஏதாவது வாங்கி வைத்து அவளை மகிழ்விக்க வேண்டும் என்றான்.
அவனைப் பார்ததுப் புன்னகை மலர கட்டாயம் வருகிறேன் என்றான்.
சரி வா போவோம் என்று எழுந்தான் . இல்லை வேணடாம் எல்லாம் சரியாகிவிட்டது ஆறதலாகப் போவோம் என்றவளுக்குப் பத்து வயதுப் பிள்ளையின் மேல் தனக்கேற்பட் பொறமையை நிதிைதுச் சிரிப்பு வந்தது.
அதைக் கவனித்தவன் என்ன சுமா என்றான்.
ஒன்றுமில்லை என்றாள் முறுவலுடன்.
என்னவோ கடந்த சில நாட்களாக நீ சரியாகவே இல்லைச் சுமா என்றான்.
காதல் வயப் பட்டவர்களும் ஏறத்தாழ பைத்தியங்கள் போலத்தானி தாமாகவே சிரிப்பார்கள் அழுவார்கள் என எங்கோ வாசித்தது நிவுைக்கு வர என்னை நானே காட்டிக் கொள்கின்றேனா என நினைத்து இயல்பாக இருக்க முயன்றாள்.
பின் ஏதாவது சாப்பிடுவோமா என்றாள்.
அதற்கு முதல் நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் சுமா என்றான்.
விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள். பின் உங்கள் மனத்தில் இருப்பதைச் சொல்லி விடுங்களேன் எனப் பாவையால் அவனிடம் மன்றாடினாள்.
அவள் அருகே இருந்த வன நான சொல்வதைக் கேட்டுவிட்டு நீ என்ன நில்ைகிறாய் என்று சொல் சுமா இதை நீ ஏற்க வேணர்டுமென்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றான்.
அவள் உள்ளம் ஆனந்தித்தது. என்ன பீடிகை பலமாக இருக்கிறது என்னிடம் சொல்வதற்கு என்ன தயக்கம்? எதுவானாலும் சொல்லுங்கள் என அவனை ஊக்கினாள். என்னால் சொல்ல முடியாது கண்ணா பெண்மையின் பணிபு என்னைத் தடுக்கிறது. தயவு செய்து உன் மனத்தை என்னிடம் திறந்து காட்டி எனது இந்த அவதியைப் போக்கி விடேன் என மனதார வேண்டினாள்.
பின்னரும் சிறிது மெளனமாக இருந்தவன். இந்த ஒரு விஷயத்தை மட்டும் எந்தக் கொம்பனாலும் தடுமாறாமல் சொல்ல முடியாது. நான் எப்படி இதற்கு விலக்காக முடியும் என்றான்.
அவள் இதயம் படபடத்தது. இதயமே தயவு செய்து நின்றுவிடாதே அவர் சொல்வதைக்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 35

Page 20
கலப்பை
ஐப்பசி 2000
கேட்கும் வரை எண் உயிர் உடலில்
இருக்கட்டும் எனப் பிரார்த்தித்தாள்.
அவள் விழிகள் நாணத்துடன் நிலத்தைத் தழுவக் கடைக் கணிகளால் மெதுவாக அவன் வதனம் நோக்கினாள்.
நமது முதலி சநீதிப்பு உனக்கு நினைவிருக்கிறதா சுமா எனக் கேட்டான்.
புத்தகங்களின் நடுவே நீட்டோலை வாசியாய்
அவன் நின்ற நிலை நினைந்து இதழ்கள் குறும்பில் குவிய மறக்குமா என்றாள்.
அன்று உன்னிடம் பேசுவதா வேண்டாமா என்று பல தடவை யோசித்துவிட்டுத்தான் பேசினேன் ஏனென்றால் இங்கு வந்ததும் எனக்கேற்பட்ட ஓர் அனுபவம். ந” சொன்னது போல நாம் எவ்வளவு வளர்ந்திருந்தும் நம் பெற்றோரின் பார்வையில் நாம் இன்னும் குழந்தைகள் தான். என் அம்மாவும் பிள்ளை பல ஆயிரம் மைல்களுக்கப்பால் போகப் போகின்றானி துணை வேண்டுமென்று இங்குள்ள துாரத்துச் சொந்தம் ஒருவரைத் தேடிப் பிடித்துப் பிள்ளையைப் பார்த்துக் கொள்ளும்படி பணித்தார். அம்மாவின் கட்டளைப்படி நானும் அவருடன் அவர் வட்டுக்கே போனேன். அங்கே அவரது வளர்ந்த பிள்ளைகள் என்னை ஒரு காட்டு வாசியைப் போல் பாத்தார்கள். அது எத்தனை நாள் இங்கே இருக்கும் என்று என் பின்னால் பேசினார்கள். எனக்கு மிகவுமீ அவமானமாகிவிட்டது. மறு நாளே வெளி நாட்டு மாணவர்கள் விடுதிக்குப் போய் விட்டேன்.அங்கு செலவு அதிகம் என்றதால் தான் இப்போ இருக்கும் அறைக்கு மாறினேன் என்றான்.
அவள் அவனைக் கருணையுடன் பார்த்தாள் பின் ஏன் அவர்கள் உங்களை அப்படிப் பார்க்க வேணடும் ந~ங்கள் அவர்களைவிட எதில் குறைந்து விட்டீர்கள் எனக் கேட்டாள்.
எனக்கும் புரியவில்லைச் சுமா சிலர் மனத்தில் நாகர”கமெல்லாம் மேலைத் தேசத்தில் தான் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலிருப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாது
என்ற ஓர் எண்ணம் என்றான்.
அப்படி இல்லையே நீங்கள் பாடங்கள் எல்லாம் மிகவும் திறமையாகத் தானே செய்கின்றர்கள. அதற்கு அதி திவாரம் அங்கு தானே போடப்பட்டது பின்னர் எப்படி அவர்கள் அப்படி நினைக்கலாம் என்றாள்.
அதெண்னவோ அவர்கள் நினைப்பு அப்படி, அதனால் ந”யும் என்னை அவமதிப்பாயோ எனப் பயந்து உன்னிடம் பேசத் தயங்கினேன். ஆனால் நான் கேட்டதும் ந” தயங்காமல் உதவியது, மறுநாள் என்னைத் தேடி வந்து கதைத்தது எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன. படிப்படியாக நான் எண்னை உன்னிடம் இழந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும் எனக் கூறி அவளைக் கண்களில் கணிவைக் குழைத்து நோக்கினான்.
படிப்படியாகத் தானா நான் பார்த்த அந்த நிமிஷமே எண் மனத்தைத் தொலைத்து விட்டேனே என நினைத்தவள் விழிகள் மலர அவனை நோக்கினாள்.
அவள் கையை மெதுவாகப் பற்றியவன் நான் சொல்வது உனக்குப் புரிகிறதா சுமா எனக் கேட்டான்.
மெளனித்துத் தலை குனிந்தாளர். பற்றிய கைகளை என்றும் விடாதே என மனத்தால் இறைஞ்சினாள்.
திவாகர் வார்த்தைகள் என்றுமில்லாமல் மிருதுவாக இருந்தன. ஆமாம் சுமா இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை என்னுள் ஏற்படாத ஓர் உணர்வு உன்னைப் பாாத்ததும் என்னுள் ஏற்பட்டது. எனக்கே சில சமயம் வேடிக்கையாக இருக்கும்
தொடர்ந்தானி அவன
36 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

giILાટી 2000
a56Aů apu
இத்தனை மைல்களுக்கப்பால் வந்தா என் வருங்காலத்தைக் காணவேணிடுமென்று. ஆனால் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் உன்னை மனப்பூர்வமாக விரும்புகின்றேன். அது எனக்கு நன்கு தெரிகின்றது. நீயும் விரும்பி உன் பெற்றோரும் சம்மதித்தால் நாம் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றும் அவசரமில்லை நீ யோசித்து முடிவெடு சுமா என மூச்சு விடாமல் பேசிவிட்டு அமைதியானான்.
அந்த வார்த்தைகள் அவள் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. இது வரை மனத்தில் இருந்த சுமை ந”ங்கி மனமெங்கும் மந்தமாருதம் வசியது. கண்கள் ஆனந்த புளப்பங்களை வர்ஷித்தன. அந்த சுகானுபவத்தில் பேச்சற்று ஆடாமல் அசையாமல் சிலையெனச் சில நொடிகள் அமர்ந்திருந்தாள். அந்த சில வினாடிகள் திவாகருக்கு ஒரு சில யுகங்களாகத் தோன்றின, இருப்பினும் பொறுமையுடன் காத்திருந்தான்.
சுமாவுக்கத் தனி விருப்பை எப்படித் தெரிவிப்பது எனத் தெரியவில்லை. வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது. பின் உங்கள் பெற்றோர் வந்த பின் என் அம்மா, அப்பாவுடன் பேசச் சொல்லுங்கள் எனக் குனிந்த தலை நிமிராமல் ஒருவாறு சொல்லி முடித்தாள்.
சுமா எனத் துள்ளி எழுந்தான். பின் அப்படியானால் உனக்குச் சம்மதமா சுமா எனக் கேட்டான்.
சம்மதமில்லாமலா பெரியவர்களைச் சந்திக்கச் சொன்னேன் என மெதுவாகக் கேட்டாள்.
என்ன சுமா கேள்வியாகவே கேட்கிறாய் என்றான். அவளும் விடாமல் கேள்விக்குள்ளேயே பதிலிருந்தால் என இழுத்தாளர்.
இன்னொரு வினாவா? என அலுத்தவன்
அலி லவா வினாக்களாகவே தொடுக்கின்றாய் என்றான்.
வக கீலி
கணிகளில் குறும்பு மின்ன அவனை நோக்கியவள் வாழ்க்கை முழுவதும் இந்தச் சட்டவல்லுனரின் வினாக்களுக்கு விடையளிக்க நீங்கள் தயாரா என்றாள்.
இன்னொரு கேள்வியா என நிதிைதான் ஆனால் அதில் அவளது முழுச் சம்மதமும் தொக்கி நிற்கக் கண்டு சுமா என அவள் கைகளை அன்புடன் பற்றிக்கொண்டான்.
அவன் கைக்குள் தன் கைகளை அடைக்கல மாக்கியவள் சேலை கட்டிய பெணிமை வேறப்படிப் பதில் சொல்லுமாம். அச்சமி, மடம்
நாணம், பயிர்ப்பு எல்லாம் நம்முடன்
பிறந்தனவாயிற்றே என்றாள் செல்லச்
சிணுங்கலுடன்.
போதுமே வினாக்கள் என்றான்.
இருவரும் ஒரே சமயம் கல கல வென நகைத்தனர்.
திவாகரின் பெற்றோர் வந்தபின்னர் ஒரு நல்ல நாளில் பெரியவர்கள் ஒன்று கூடி அவர்கள் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
அன்று, என்றுமே பிள்ளைகளிடம் அதிகம் பேசாத எல்லாவற்யுைம் மனைவியிடமே கூறும் அவள் தந்தை ஜெகநாதன் மகளிடம்,கமா நீ எங்களைப் பெருமைப் படுத்திவிட்டாய் கணிணம்மா என்று கணிகலங்கக் கூறி அவளை அன்புடன் அணைத்துக் கொண்டார்.
சுமாவின் கணிகள் கலங்கின ஆனால் அவள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திழைத்தாள். அவள் கணிகளுக்குள் திவாகருடனான மிகப் பிரகாசமான ஓர் எதிர்காலம் தெரியக்கண்டு பரவசமுற்றாள்.
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவண் அன்று
என்ற பாடல் வரிகள் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து அவள் செவிகளில் தேனாகப் பாய்ந்தது.
முற்றுற்று
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 37

Page 21
கலப்பை
ஐப்பசி 2000
சிட்னி ஒலிம்பிக் அரங்கில் ஓர் அனுபவம்
அண்மையில் உலகப்பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் 27வது போட்டி தொடர் சிட்னி மாநகரத்தில் கோலாகலமாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே. சிட்னி மாநகரம் இப் போட்டிகளை சர்வதேச மக்கள் போற்றும் இப் போட்டிகளை சர்வதேச மக்கள் போற்றுமளவுக்கு மிகச்சிறப்பாக நடாத்தியமை, சிட்னி வாசிகளாசிய எமக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. பல சிரமங்களுக்கு மத்தியில் ஒலிம்பிக்ஸ் 2000 விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தி சிட்னி நகரம் சர்வதேச அந்தஸ்தை தட்டிக் கொண்டமை, பல அரசியல்வாதிகள் தொடக்கம், தொழிலாளிகள், கலைஞர்கள் என்ற வரிசையில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் (Volunteers) ஆற்றிய அளப்பரிய சேவையே காரணமாகும்.
ஒலிம்பிக் சரித்திரத்திலே தொணிடர்கள் பாரம்பரியமாக பங்களிப்பது நாம் அறிந்ததே. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 50 தொணிடர்கள் கடமை புரிந்துள்ளார்கள். கடந்த சிட்னி ஒலிம்பிக்ஸ், பரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் போது 50,000 இற்கு மேற்பட்ட தொண்டர்கள் கடமை புரிந்து, ஒலிம்பிக் சரித்திரத்திலேயே அதி உயர்வான எணணிக்கையாக திகழ வைத்துள்ளனர். இவர்கள் பல் வேறுபட்ட கடமைகளில் ஈடுபட்டார்கள். விளையாட்டு போட்டிகளைக் காண்பதற்கு சென்ற உங்களிற் பலர் இவர்களை கண்டிருக்கலாம். இவர்கள் வேறுபட்ட நிறங்களில் அமைக்கப்பட்ட மேலாடை(Shirt) மற்றும் போர்வையாடை (Jacket) fisi shogi 605uji (Sleeve) Collar உமீ அணிந்திருந்தார்கள். உதாரணமாக பார்வையாளர் சேவை Orange நிறத்தினாலும், போக்குவரத்து சேவை Purple நிறத்தினாலும், மருத்துவச் சேவை சிவப்பு நிறத்தினாலும் ஆடைகள்
செய்யப்பட்டிருந்தன. இவற்றுள் பார்வையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளோர் (spectator care service) L6), முக்கிய கடமைகளில் ஈடுபட்டதுமின்றி சர்வதேச பார்வையாளர்கள் பாராட்டுமளவுக்கு தமது சேவையை சிறப்பாக வழங்கியிருந்தனர்.
இவ்வாண டு சிட்னி ஒலிம்பிக்ஸ போட்டிகளின்போது மருத்துவச் சேவைத் தொணி டனாக கடமைபுரிய எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. பிரதான போட்டி 960 Loss Lorio Homebush Park gos நான் கடைமை புரிந்த வேளையில் பல சர்வதேச பார்வையாளர்கள், மற்றைய தொண்டர்கள் ஆகியவர்களுக்கு சிகிச்சை வழங்கினேன். பலவிதமான விபத்துக்கள் உட்பட, இயற்கை நோய்களான, தொய்வு, மாரடைப்பு, வாந்தி, வயிற்றோட்டம் என்பன பரவலாகக் காணப்பட்டன. விபத்துக்களில் பொதுவாக விழுதல், எலும்பு முறிவு, சுழுக்கு, 26 GOOT Lduus 5 Ló (Heat stroke) போன்றன அடங்கின. வயதில் முதிர்ந்த ஒரு மூதாட்டி தனது 89 வயதில் தொண்டர் சேவையில் ஈடுபட்டபொழுது விழுந்து காயப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கியபோது அவர், தான் இங்கு கடமை புரிவதையிட்டு பெருமையடைவதாகக் கூறினார். இன்னொரு நிறைமாதக் கற்பிணிப் பெண், போட்டிகளைக் கண்டுகளிக்கும்போது மகப்பேற்று நிலைமையை அடைந்தார். இன்னொரு மத்திய வயது மதிக்கத்தக்க ஒரு பார்வையாளர் கடுமையான மாரடைப்பினால் மரணமடைந்தது, கவலைக்குரிய சம்பவமாக
அமைந்துவிட்டது.
ஒலிம்பிக்கில் எமது நேரத்தைச் செலவு செய்து தொண்டராக வேலை செய்தபோதிலும், அந்த கடமை புரிந்த சூழ்நிலை பிரத்தியேகமானது. மகிழ்ச்சி பொங்கும் முகங்களுடன் கடமை
38 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
கலப்பை
புரியும் தொண்டர்கள், உல்லாசமாக நடமாடும் மக்கள் தொகை, சமூகமாக நடைபெறும்
விளையாட்டுப் போட்டிகள், ஆர்வத்துடன் பங்குபற்றும் விளையாட்டு வீரர்கள், பலநிறமயமான வீதி, அரங்க அலங்காரங்கள்,
மக்கள் நிரம்பி வழியும் வியாபார தாபனங்கள், வீதியெங்கும் ஒலியலைகளை வடிக்கும் ஒலிபெருக்கிகள், இவற்றையெல்லாம் அவுஸ்திரேலிய நாடு முதற்தடவையாக சந்தித்திருக்கின்றது என்றே சொல்லவேண்டும். இவ்வாறாக மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் தொண்டர்களாக கடமை புரியும் வாய்ப்பு ஏற்படாதா? என பெரும்பாணிமையான தொணர்டர்கள் அங்கலாய்க்கும் வகையில் சிட்னி ஒலிம்பிக்ஸ் அனுபவம் எமது உள்ளங்களில் சிறப்பாக நிலைத்துவிட்டது.
சிட்னியின சிறப்பான ஒலிம்பிக்ஸ அரங்கேற்றத்திற்கு இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், முதல்முதலாக ஒரு L16ó56VIFTu(multi-cultural) losip sý (சிட்னி) இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடாத்தியமை. அவுஸ்திரேலியாவில் பல கொந்தளிக்கும் அரசியல் சமூகப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், இந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கு செய்ததன் மூலம், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டைப் பெற்றுக் கொண்டதுடன், இந்த 27ஆவது ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடாத்திச் சாதனையும் புரிந்திருக்கின்றது.
டாக்டர். தவசீலன் Parkview Medical Toongabie
Centre,
பாக்டர் தவசீலன் சக தொண்டர்களுடன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேவையில் இருந்தபோது
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 39

Page 22
கலப்மை
ஐப்பசி 2000
இந்த வாழ்க்கை ஆனந்தமாக வாழ்வதற்கே !
நான் யார்?
- ஆனந்தன் -
- அந்த மூன்று மாதங்கள் -
அத்தியாயம் 4
கடந்த மூன்று தொடர்களிலும் ஆராயப்பட்ட “நான் யார்?’ என்ற அடையாளம் இம் முறை சற்று வித் தியாசமாக வெளிவருகின்றது. உண்மையாக இந்தத் தொடரில் நான் யார், எனது குலம், கோத்திரம் பற்றித்தான் ஆராய்வதாக இருந்தேன். ஆனால், இந்தப் புத்தாயிரம் ஆண்டில் அவுஸ்திரேலிய மண்ணில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வும் அதனுடன் பின்னிப்பிணைந்த சில நிகழ்வுகளும் எனது மனதில் மேகக் கூட்டங்கள் போல பவனி வருகின்றன. அவற்றை இப்பொழுது ஒரு தொகுப்பாகப் படைக்கிறேன். குலம், கோத்திரத்தை இன்னொரு தொடரில் காணலாம்.
அதுதான் 27வது ஒலிம்பிக் நிகழ்ச்சி. கடந்த செப்ரெம்பர் மாதம் 15ந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 1ம் திகதிவரை கோலாகலமாக நடந்த நிகழ்ச்சி அது. அதனைத் தொடர்ந்து பராலிம்பிக்ஸ் ஒக்டோபர் 18லிருந்து 29ம் திகதிவரை நடைபெற்றது. இந்தப் போட்டிகள் பற்றிப் பல தகவல்களைக் கடந்த பல கலப்பை இதழ்களில் அமரர் கலாநிதி பாக்கியநாதன் அவர்கள் எழுதியிருந்தார்.
அவுஸ்திரேலியா, குறிப்பாக சிட்னி, ஒலிம்பிக் விழாவை நடாத்தத் தயாரா? என்ற கேள்வி எம்மில் பலரிடையே இருந்தது. காரணம், அவுஸ்திரேலிய மக்கள் எதையும் இலேசாகத் தான் எடுப்பவர்கள். ஆனால் இறுதியில் முழு உலகமுமே வியக்கும் வண்ணம் சிறப்பாக இதனை நடாத்தி முடித்துள்ளனர். 47,000 தொண்டர்களும் ஆட் பலமும் சேர்ந்து இதனை ஒரு சவாலாக ஏற்று நடாத்தினார்கள். சர்வதேச
ஒலிம்பிக்ஸ~ம் நானும்
ஒலிம்பிக் விழாக்குழுத் தலைவர் வான் அன்ரனியோ சமராஞ்ச் தமது இறுதி உரையில் இந்த மாதிரியொரு ஒலிம்பிக் விழாவைத் தான் காணவில்லை என்றும், இந்தப் பெருமை இங்கு அயராது பணியாற்றிய தொண்டார் களையே சேரவேண்டும் என்றும் கூறியிருந்தார். ஒளி நீச்சல் வீராங்கனை குளி ஓ நீலி கூறும்போது அவுஸ்திரேலியாவினதும் ஏனைய நாடுகளினதும் வீரர்கள் பெற்ற வெற்றிகள் எல்லாம் தன்னலம் பாராது கடமை புரிந்த எமது தொண்டர்களையே சாரும் எனக் கூறியிருந்தார். அது உண்மைதான்!
எமது தொண்டர்கள் பல விதமாகத் தமது கடமைகளைப் புரிந்தனர். குறிப்பாக, ஊடகங்கள், போக்குவரத்துச் சேவை, உணவுச் சேவை, துப்புரவாக்குதல் , பொதுமக்கள் சேவை, வழிகாட்டல், தள முகாமைத்துவம், பாதுகாப்பு, இன்னும் பலவிதமான சேவைகளில் ஈடுபட்டனர். இப்படியான ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில், இராமர் அணைகட்டும்போது ஒரு அணில் தனது பங்களிப்பைச் செய்தமைபோல எனக்கும் சிட்னி 2000 ஒலிம்பிக்ஸில் பணியாற்ற ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிகவும் புளகாங்கிதம் அடைகிறேன். அந்தச் சுவையான அனுபவங்களை கலப்பை வாசகள்களாகிய உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய ரீதியில் நிலவிய இன ஒடுக்கல்கள், அடக்குமுறைகள், சர்வாதிகாரம் என்பன தகர்த்தெறியப்பட்டு, ஒடுக்கப்பட்ட, அழிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மக்களும் ஒன்றுகூடி, கைகோத்து
40 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
கலப்பை
விளையாடி வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால் அது ஒலிம்பிக் ஸில் தான் சாத்தியமாகியிருக்கிறது எனலாம். இனவெறிபிடித்து வெள்ளை இனம் மட்டுமே என்று அறைகூவிய தென்ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது ஆதிக்கக் கொள்கைளையெல்லாம் எறிந்துவிட்டு, அடக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்ததும் , இனஒடுக்கலுக்கு எதிர்ப்புக் காட்டுவதும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். இதனை இம்முறை சிட்னி 2000 ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளில் கண் கூடாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. பல ஆயிரக்கணக்கான கறுப்பு இன வீரர்கள் பதக்கங்கள் பெற்றமையும், ஆரம்ப நிகழ்ச்சிகளில் அவுஸ்திரேலியாவின் ji 6.5i (519. LD56ITT 601 Cathy Freeman ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைத்த நிகழ்வும் எல்லோருடைய நெஞ்சங்களையும் நெகிழ வைத்தன.
முக்கியமாக, அவுஸ்திரேலியப் பூர்வீகக் (ölpLDä556TsI60T Cathy Freeman, Perus Neebon, Kayle Vanderkayup (GLJIT6ögp வீரர்களை ஒவ்வொரு அவுஸ்திரேலியனும் தனது மகளாகவோ மகனாகவோ உறவு காட்டி, நேசித்து, அவர்களுடைய வெற்றியைத் தமது வெற்றியாகப் பாராட்டிக் கொண்டாடினர்கள். Cathy 400 மீ ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது ஏதோ எமது உறவு ஒன்று போட்டியில் பங்கு கொள்கிறது, அது நிச்சயமாக வெற்றி பெறவேண்டும் என்று நாம் எல்லோருமே துடிப்புடன் அங்கலாய்த்த வண்ணம் இருந்தமையும் இந்த ஒலிம்பிக்ஸில்தான் சாத்தியமாகியது. பல்லின, பல்கலாச்சார, பல மொழி பேசும் மக்கள் எல்லோரும் சமமே என்று, யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரின் கருத்துப்படி, ஒன்றுகூடுவது ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் மட்டுந்தான். இதன் காரணமாகத்தான் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை நினைத்து, நானும் ஏதாவது பங்களிப்பினைச் செய்யவேண்டும் என்ற உந்தலினால் அதில் கடமையாற்றப் பல முயற்சிகள் செய்தேன். எனது தனிப்பட்ட
அலுவல்கள் காரணமாகப் பல தடவைகள் சிட்னியில் நின்று அதனைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தொண்டராகச் சேவைசெய்யும் சந்தர்ப்பங்கள் பலவற்றை ஆரம்பத்தில் இழந்தேன். பல அருமையான சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட கவலையில் இருக்கும்போது ஒரு இறுதியான சந்தர்ப்பம் வாயததது.
அது என்னவென்றால், சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் ஆதாரமாக, முதகெலும்பாக, இதயமாக, Fij6ust b 9(bsbgbg. Regent Park (S6) அமைந்திருந்த 4 O he Cta Crẻ விஸ்தீரணமான இடத்தில் அமைந்துள்ள நிகழ்வு உதவுதளம் தான் என்றால் அது மிகையாகாது. இந்தத் தளத்தில்தான் (Venue Support) o 661 ab 66O)6TLUT (Gi போட்டிகளுக்கான - அதாவது, ஜூடோ, கராட்டே, பாரந்தூக்குதல், ஏய்ரோபிக்ஸ் (Aerobics), p Lib Jubjeb6fi (Gymnastics) ஆகிய போட்டிகளுக்கான - பயிற்சிகள் எல்லாம் நடந்தன. மற்றும், போட்டி வீரர்கள் பயணம் செய்த வாகனங்கள், பேருந்துகள், எல்லாமே இங்கிருந்துதான் அனுப்பப்பட்டன. பாதுகாப்புச் சோதனைச் சாலைகள், அலங்கார வளைவுகள், சைகைப் பலகைகள், பதாதைகள் எல்லாம் இங்குதான் தயாரிக்கப்பட்டன. இந்தத் தளத்தை நிர்மாணித்து, பராமரித்து, நிர்வகிக்கும் பொறுப்பை ஒலிப்பிக் இணைப்பு -9,5570 &6OL (O.C.A.) Carsons 6Tsöp தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இதனை நிர்வகிக்கத் தொண்டர்கள் தேவை
என்றதை அறிந்த நான் , (U.N.S.W.) S6) பகுதிநேர விரிவுரையாளாாகப் பணிபுரிந்து
கொண்டிருந்த எனது வேலையையும் இரண்டரை மாதத்துக்கு உதறிவிட்டு, மனித நேயத்திற்காக, அவுஸ்திரேலியாவின் ஒரு மகன் என்ற ரீதியில் என்னையும் இணைத்து ஈடு படுத் திக் கொள்ள ஓடினேன். பெருமையுடன் எங்களுக்குரிய பாதுகாப்புச் சோதனைகளையும் அத்தாட்சிகளையும் முடித்துக்கொண்டு, மற்றும் சீருடைகள் முதலியவற்றையும் பெற்றுக் கொண்டதும் எமது பணிக்குத் தயாரானோம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 41

Page 23
கலப்பை
ஐப்பசி 2000
எங்களில் பெரும்பாலோர் இலங்கையில் பிறந்து வளர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் குடி புகுந்துள்ளோம். இன்னமும் எங்களுக்கு அவுஸ்திரேலிய மண்மீது பற்று அதிகம் வரவில்லை போல் தெரிகிறது. இங்கு குடியேறிய ஈழத்தமிழர்கள் பலர் ஒலிம்பிக்ஸில் அதிகம் நாட்டம் செலுத்தித் தமது பங்களிப்பைச் செய்யவில்லை என்பது ஒரு பொதுவான குறையாக இருந்தது. பலர் விடுமுறையில் வெளியேறினார்கள். மேலும் சிலர் என்னதான் நடக்கிறது என்று விடுப்புப் பார்க்கும் நோக்கில் இருந்தனர். இன்னும் சிலர் நிகழ்ச்சிகளை ரசித்து மகிழ்ந்தனர். கைவிரல்களில் என்னும் அளவிற்குத்தான் எமது தமிழ் மக்கள் தொண்டர்களாகக் கடமையாற்றினார்கள். அவர்களையெல்லம் பாராட்டாமலிருக்க
முடியாது. இவர் கள் பலவிதமாக ஒலிம்பிக்ஸில் தம்மை இணைத்துக் கொண்டனர். அவர் களிற் சிலரின்
அனுபவங்களையும், ஏன் அவர்கள் இதிற் பங்காற்ற நேர்ந்தது என்பதனையும் அவர்களின் சொந்த வாய்மொழியிலிருந்தே சுருக்கமாகத் தருகிறேன். இதில் பங்குகொண்ட அனைவ ரையும் என்னால் பேட் டி காண முடியவில்லை. ஒரு சிலருடைய அனுபவங்களை மட்டும் தருகிறேன். ஏனையவர்கள், முடிந்தால் உங்கள் அனுபவங்களைப்பற்றி அடுத்த இதழுக்கு எழுதி அனுப்புங்கள்.
ஒலிம்பிக்ஸின் ஆரம்பநாள் நிகழ்வுகளை யாராலும மறகக முடியாது. அததனை சிறப்பாக, விதம் விதமாக நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார்கள். அந்த நிகழ்வுகளில் ஒவ்வொரு நாட்டு, இன மக்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு, அவர்கள் தமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக்கூடியவாறு நடனங்கள், நாட்டியங்களைக் காண்பிக்க வழிவகைகள் செய்யப்பட்டன. இப்படியாக எமது இலங்கைத் தமிழ்க் குழந்தைகள் பலர் ஆசியாவை, இந்தியக் கலாச்சாரத் தைப் பிரதிபலிக்கும் வகையில் நடமமாடினார்கள். இவர்களில் இரு சிறுமியர்கள் முன்னணியில் நடனமாடி
வலம் வந்து பலரது கவனத்தையும் ஈள்த்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எல்லோருக்கும் பரீச்சியமான செல்விகள் சாம்பவி பரிமளநாதன், வைஷ்ணவி பரிமளநாதன் சகோதரிகள். இவர்களில் மூத்தவரான சாம்பவி H.S.C. பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையிலும், மனத்துணிச்சலுடன் தைரியமாக, 3, 4 மாதங்களாக, பல தொடர்ப்பயிற்சிகளிலும் பங்குபற்றி, அதேநேரத்தில் படிப்பையும் தளர விடாமல் , பங்கு பற்றினமை LIII U II u L II LO6) இருக்கமுடியாது. இவர்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர்கள் போல இன்னும் பல பெற்றோர்களும் முன்வரவேண்டும். இவர்களது செவ்வியை இன்பத்தமிழ் வானொலி நேரடிெயாக ஒலிம்பிக் பார்க்கிலிருந்து ஒலிபரப்பியதும் குறிப்பிடத்தக்கது.
சாம்பவி, வைஷ்ணவி சகோதரிகள் தங்கள் அனுபவங்களைப் பின் வருமாறு கூறுகின்றனர் - அவுஸ்திரேலியாவின் ஈழத்துத் தமிழ்ப் பெண்களாகத் தாங்கள் கற்ற பரத நாட்டியத்தையும் தமது தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகளாவிய ரீதியில் நிகழும் ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பல கோடி மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டுமென்ற அவாவினால்தான் தாங்கள் இதில் பங்குபற்றினார்கள் என்கிறார்கள். மேலும், 16,000 குழந்தைகளிலிருந்து ஏறத்தாழ 600 பேரைத் தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத் திருக்கிறார் கள். விகிதாசாரப்படி, ஈழ, இந்தியத் தமிழ்ப் பிள்ளைகளின் தொகை அதிகமாகவே இருந்தது. இது எமது தமிழ் ச் சமுதாயத்துக்குக் கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாகும் . இதனை நினைக்கும்போது பெருமையாக உள்ளது என்கிறார்கள். இவர்கள் பயிற்சியின் போது பல இன மக்களைச் சந்திக்க, பேச, பல நாட்டு விளையாட்டு வீரர் கள் , வீராங்கனைகளுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களை நினைத்து நினைத்து மகிழ்கிறார்கள். அத்துடன், பல புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ளக் கூடிய இருந்தது என்று தமது அரிய
42 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
asasiapu
ஞாபகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுகிறார்கள் . சாம்பவியும் வைஷ்ணவியும் வள்ளுவரின் வாக்கையே மாற்றி, "இவள் தந்தை என் நோற்றான்’ என்று பாராட்டுகள் பல பெற்றார்கள். சிட்னியில் நடைபெற்ற இந்த அரிய ஒலிம்பிக்ஸில், தனது H.S.C. பரீட்சை காரணமாகத் தான் தொண்டராகப் பணியாற்ற முடியவில்லையே என்றும், இப்படியான அருமையான சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் கிடைப்பதற்கு எவ்வளவு காலத்துக்குப் பொறுத்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் சாம்பவிக்கு அவளது அந்த ஆவல் ஒன்றே போதுமல்லவா, வாசகர்களே! இவள்போல் இன்னும் பலர் இப்புவியில் வேண்டும் வாசகர்களின் வாழ்த்துக்களும் பாராட் டுக் களும் அவர்களுக்கு உரித்தாகட்டும் !
மற்றும், முழுநேரத் தொண்டராகத் தம்மை அர்ப்பணித்தவர்களில் ஒருவர் உணவு, ஊட்டச் சத்து நிபுணர் சிவராஜா காயத்ரி அவர்கள். இப்படியான ஒரு மாபெரும் வரலாற்று முக்கியமான நிழ்ச்சியில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் தான் சேர்ந்து கொண்டதாகச் சொல்லுகிறார் அவர். அத்துடன் இதனை விட்டால் வேறொரு பெரிய நிகழ்வுக்கான சந்தார்ப்பம் கிடைக் காது, இதனைத் தவற விட்டுவிட்டுப் பின்னர் அட என்று வருந்த வேண்டியிருக்குமல்லவா? இதன்போது பல வீரர்களையும், வீராங்கனைகளையும் காணும் சந்தர்ப்பம் கிட்டுமல்லவா? உண்மையில் ஒலிம்பிக்ஸானது ஒரு உலக சமாதான விளையாட்டு நிகழ்வு. இது முழு உலகையுமே ஒரே குடைக்கீழ் கொண்டு வருகின்றதொன் றாகும் என்கிறார் காயத்ரி. அவர் முதலில் பாதுகாப்புப் பதிவாளர் (Accreditation Officer), b, ஒலிம்பிக் ஸில் கடமையாற்றுகின்ற அனைவருக்கும் பாதுகாப்புப் பதிவினை மேற் கொள்ளும் அலுவலராகக் bLGO)DuFID 560III fi. அவரது அனுபவங்களை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன் -
"Basically I volunteered because I wanted to be part of this great time in the history of Sydney. I knew that there would not be any other opportunity like this, and I would regret if I didn't try. I was overjoyed when I got accepted. Initially, I thought it would be fun to meet the famous athletes and be involved in the games. I am not a great sports fan, but I have alw;ays loved the Olympics. It is a peace event, bringing together the whole world in harmony, Oh! What an experience to be part of thatll
My role was as an Accreditation Officer. So I was responsible for printing and issuing passes to all athletes, officials, coaches, delegates, volunteers, support personnel, work-force, etc. You know those huge passes people were wearing around their necks during the Olympics, we provided them. Then, once the games started I was deployed to do the spectator services at various venues in the Olympic Park. That is, basically ushering, checking tickets, crowd managing and monitering, etc. Has anyone seen me there?'ll
What an experience I had lll
Well, there are so many experiences that I am sure I cannot fit in this page. Mostly, it was meeting all the athletes from the dif: ferent countries. I have learnt interesting things from them about their respective countries But also meeting the very general public of Australia who were very nice too. The whole atmosphere was wonderful, so much joy and spirit, it was very moving at times. வாழ்த்துக்கள் காயத்ரி !
இவர்களைப் போலவே கலாநிதி விக்டர் இராஜகுலேந்திரன், திருவாளர்கள்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 43

Page 24
abasapus
ஐப்பசி 2000
கனகராஜன், ஜெயரட்ணம், பாரதி, திருவரங்கன் என்று இன்னும் பலர் தங்களது வேலைகளை விட்டுவிட்டுத் தொண்டர்களாகப் பங்களிப்பினை ஆற்றினார் கள். அவர்களுடைய அனுபவங்களையும் முடியுமானால் பின்னர் தர முயற்சிக்கிறேன்.
மீண்டும் எனது சொந்த அநுபவங்களுக்கு வருகிறேன். செப்டெம்பர் 3ம் திகதியிலிருந்து ஆரம்பமாகியது எமது கடமைகள். ஏற்கனவே தயாராக இருந்த தளத்தின் நிர்வாகம், மற்றும் பராமரிப்பு வேலைகளைக் கவனித்துக்கொண்டோம். காலை 6-30 முதல் மதியம் 2-30 வரையும் பின்னர் 2-30 முதல் இரவு 10-30 வரையும் மூவர் அடங்கிய குழுக்களாகவும், மற்றும் இரவு 10-30 முதல் காலை 6-30 வரை இருவர் கொண்ட குழுக்களாகவும் தளத்தை நிர்வகித்தோம். இந்தத் தளத்தில் நான் மட்டும் தான் ஒரேயொரு இந்திய உபகண்டத்தவனாக, ஈழத் தமிழனாக இருந்தமை குறித்து எனக்கும் எனது தமிழ்ச் சமுதாயத்துக்கும் பெருமையாகவிருக்கும் என நம்புகிறேன்.
Regents Park SQ26ň 6T 6 Jag glab6ň எல்லாம் அவுஸ்திரேலிய கட்டிட நிர்மாண 6î6p6Oopbbčij (Building Code of Australia - B.C.A) அமையப்பெற்றிருந்தாலும், நிகழ்வின்போதுகூட அவை எல்லாம் அவற்றின்படி சரியாக இயங்கவேண்டும். அத்துடன், வேலைசார் சுகாதார பாதுகாப்பு (O H & S) நியதிகளுக்கேற்பவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய சகலதும் இயங்குகின்றன என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அங்கு பல எண்ணெய்க் கிடங்குகள் இருந்தன. கிட்டத்தட்ட 3000 பேருந்து வண்டிகளுக்கு உரிய சகல தேவைகளும் அங்கு தயராக இருந்தன. இவற்றிலிருந்து சிந்துகிற எண்ணெய்த் துளிகள் நிலத்திலோ அல்லது மழை நீர் க் கால் வாயிலோ (3ծ (J II Լ06Ù சுத் திகரிக்கப்பட்டு வேறு வழியால் அனுப்பப்பட்டன. இவற்றையெல்லம்
மேற்பார்வை செய்து அத்தாட்சி பண்ண வேண்டியிருந்தது. சில அவசர சந்தர்ப்பங்களில் எமது குத்தகைக்காரர்கள் (Sub-Contractors) 6 JIJ Tg5 LIL 5 iglesið நாங்கள் மூவரும் , மற்றைய முகாமையாளருமாகச் சேர்ந்து பல பழுவான வேலைகளையும் செய்துள்ளோம். உதாரணமாக, உடைந்த விதிகளைச் செப்பனிட்டுள்ளோம். ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் ஆத்திரமாகத்தானிருந்தது. என்னடா, இவர்கள் எங்களைக் கூலியாட்களாகப் பர்க்கிறார்களோ என்று மனதில் பட்டது. ஆனால், மற்ற வெள்ளையின நண்பர்களும், ஏன், முகாமையாளர்களும் கூட சாதாரணமாக எந்த வித வித்தியாசமும் பாராது, தங்கள் கைகளினால் மண்வெட்டி பிடித்து வேலை செய்ததைப் பார்த்தபோது என்னுடைய அந்தச் சிறிய புத் தி கூனிக்குறுகியது. நானும் உடம்பை வளைத்து, குனிந்து வேலைசெய்யக் கற்றுக்கொண்டேன்!
உண்மையில், தளமுகாமைத்துவத்தின் கடமைகளுக்கு எல்லையே கிடையாது.
ஆங்கிலத்தில் சொல்வதாயின், Anything under the Sun is our responsibility. அதன் படி, எந்தவொரு அவசர, நெருக்கடி நிலமையிலும், தளம் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். நானும் சில நெருக்கடியான வேளைகளில் பல வேலைகளைப் பொறுப்பாகச் செய்தமை இப்பொழுதும் எனது மனதில் பசுமையாக இருக்கிறது. அன்றொருநாள், சனி காலை, சர்வதேச ஒலிம்பிக் குழுத்தலைவர் வரவேண்டிய வேளை, ஒரு பேரூந்து ஒட்டுநர் தளத்தினுள் அதிவேகமாக வண்டியைச் செலுத்தி U-திருப்பம் செய்ய முயற்சித்தபோது அந்த வண்டி அங்கிருந்த பெரிய வெள்ளவாய்க்காலினுள் பாய்ந்து தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒட்டுநருக்குச் சிறிதளவு மாரடைப்பு. அந்த விபத்தினால் தளத்தின் போக்குவரத்து நிலைமை முற்றாகச் சீர்குலைந்து, தடைப்பட்டிருந்தது. தளமுகாமையாளர் தடுமாறிக்கொண்டிருந்தார். இவற்றைச்
44 f6
பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
asasiapu
சீர்செய்ய என்னால் முடியும் என்று நான் கூறி, எமது (அவசர) வாகனத்தில் ஏறி இன்னொரு நண்பருடன், வானொலிக் கருவிகளையும் சில வழிகாட் டல் உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, ஒருவழித் தடங்களை இருவழிகளாகவும், இருவழித்தடங்களை ஒருவழியாகவும், தற்காலிக அவசரச் சைகைகள் மூலம் மாற்றி, தளத்தின் போக்குவரத்தைச் சுமார் 4 மணித்தியாலங்கள் விடாது தொடர்ந்து மழையிலும் குளிர்காற்றிலும் தனியாக நின்று சமாளித்துப் போக்குவரத்தைச் சீரமைத்து, தடம்புரண்ட வாகனத்தினால் ஏற்பட்ட தடையை நீக்கிவிட்டு, அப்பாடா என்று வரும்போது, அந்த வலி கலந்த இன்ப d 600i 6) 60s b is b, O.C.A. ungo பாராட்டுக்களும் கிடைக்கும்போது வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லையெனலாம். அத்துடன் அன்று கடமையிலிருந்த 91gebris Don Coleman, D.S.P.W. 6) இருந்து ஓய்வுபெற்று அந்தத் தளத்தின் 0.C.A. யாகப் பணிபுரிபவர். நானும் அவரைப்போல் ஒரு கட்டிடக் கலைஞன் என்பதால் அவரது அன்புக்கு நான் மிகவும் பாத்திரமானவன். நான் அன்று அவசர பணியின்போது அவரை வானொலியில் தொடர்பு கொண்டபோது “Yes, Buddy what can I do for you? 6T66 (D ஆதங்கத்துடனும் நட்புடனும் அளவளாவினார்.
குறிப்பாக அந்தத் தளத்தின் பாதுகாப்புக் கென ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கீழ் பல பாதுகாப்பு அதிகாரிகள் கடமை புரிந்தனர். அந்த அதிகாரி வந்து, “நீ எமது காவல் துறைக்கு நல்ல ஒரு உபயோகமானவன்” என்று சொல்லும் பொழுது வந்த உள்ளத்து நெகிழ்ச்கியை எனது சிறு வயது குருளைச் சாரண, முதலுதவி ஆசிரியர்களுக்கு, குறிப்பாக அமரர் றோகினி இரத்தினவேல் அவர்களுக்கு நெஞ்சில் நன்றியுடன் ஆத்மார்த்தமாகச் சமர்ப்பித்தேன். அவர்களது வழிகாட்டல்களும் எனது இளமைக்கால, அவசரகால, நெருக் கடி காலப் பயிற்சிகளும் அனுபவங்களும் அவ்வளவிற்கு உதவியாக இருந்தன.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் Regents Park இல் எனக்கு தனிமரியாதை. அத்துடன், இன்னுமொரு தலையிடியும் வந்தது. என்னவென்று கேட்கிறிர்களா? சிலர் சரியாக அனுமானித்திருப்பிகள் ஆம், நான் ஈழத்தமிழனல்லவா! அதனால் எனக்கு பெரிசுகளுடன் நல்ல அனுபவமுள்ளதால் தான் இப் படித் துணிந்து சிந்தித்து செயல்பட முடிந்தது என்று அவர்கள் நினைத்தார்கள். இந்தத் தளத்தில் ஒரு வாரத்தில் 350 பேரூந்துகள் கட்டாய வெடிகுண்டு, மற்றும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன் சில வாகனங்களை மட்டும் தெரிவுசெய்தும் சோதித்தார்கள். 250 வாகனங்கள் பராமரிப்புக்காகவும் body Works க்காகவும் கொண்டுவரப்பட்டன. ஒரு நாளைக்கு 200 வாகனங்கள் கழுவிச் சுத்தமாக்கப்பட்டன.
எனது அவுஸ்திரேலிய வாழ்க்கை அனுபவத்தில் பல்கலைக்கழக நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களை அதிகமாக எமது தமிழ்ச் சமுதாயத்துடனேயே செலவு செய்வேன். அதனால் இங்குள்ள அவுஸ்திரேலிய நாட்டு வெள்ளையின மக்களுடனான தொடர்பு மிகக் குறைவாகவேயிருந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு. இந்த வரிகளை எழுதும் போதுகூட என்னுடன் கடமைபுரிந்த Jason என்ற வெள்ளை இன நண்பன் ஒருவன் என்னைக் குசலம் விசாரித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருக்கிறான். அதனை அப்பிடியே உங்களுக்குத் தருகிறேன்.--
From: Jason Buchanan < lason
pV(a)hotmail.com To: anandans(a)yahoo.com
Subject:- Bunting down at Mercedes Drive Date:- Sun. 19 Nov.2000:21:47:47EST Anand Hellow my fellow FO. Could you pleasefix some bunting at Mercedes Drive, then fill those pot holes with hot mix. Thank you Squire.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 45

Page 25
கலப்பை
ஐப்பசி 2000
How have you been? How's the job hunting going? I got a job as an Estimator/Contracts Administrator with a medium size residential & commercial building Co. In Vogue Projects Group at Sutherland. Have you received any correspondence from Carson's? reference BBQ, Bonus etc. We'll have to catch up soon. I'd like to come to the Temple on a Friday like we dis cussed. It will have to be after the 15 December. Do you have Martin’s E Mail address? Hope everything is well. Speak to you soon.
Jason Buchanan, Field Officer.
ஒலிம்பிக் காலத்தில் நான் அவர்களுக்கு எமது கலாச்சாரத்தைப் பற்றியும், குறிப்பாக சிட்னி முருகன் ஆலயத்தைப் பற்றியும், எமது உணவு வகைகளைப் பற்றியும் பெருமையாக எடுத்துரைத்ததுண்டு. அவன் மிக விரைவில் வைகாசிக் குன்றானைக் கண்டு அவரது மசாலைத் தோசையைச் சாப்பிட வேணுமென்றும் கூறியுள்ளான். இது மட்டுமல்ல. இந்த நண்பர்களுடன் பல் கலைக் கழகப் பாடங்கள் சம்பந்தமாகவும் இன்னமும் ஒருவருடன் ஒருவர் Ꭷ 60ᎧDj யாடுவதுண்டு. பல் கலைக் கழக assigments ஒருவருக்கொருவர் உதவியாகச் செய்திப் பரிமாற்றமும் செய்து ஆளுக்காள் ஒத்தாசை செய்தவண்ணமுள்ளோம்.
ஒலிம்பிக் முடிந்துவிட்டது. ஆனால் இன்னமும் எமது நட்பு பலமாகத் தொடர்கிறது. சாம்பவிக்கும் இதே அனுபவம். லெபனான் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றொர்கள் அண்மையில் தன்னைக் கடைத்தெருச் சந்தையில் கண்டு அடையாளம் பிடித்து, நீண்டநேரம் உரையாடி மகிழ்ந்தார்கள் என்று அகமகிழ்ந்தார். அதுபோல் தான் காயத்ரியும் தனது புதிய நண்பர்களைப்பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறார்.
இந்த ஒலிம்பிக்ஸ் தொண்டர் சேவை அனுபவத்தின்போது நான் புதிதாக அறிந்த விஷயங்கள் பல. வெள்ளையின மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள், சொல் அகராதிகள், நடைமுறைப் பழக்கங்கள், இத்தியாதி, இத்தியாதி. வெள்ளையின மக்களிடமுள்ள பல நல்ல விடயங்கள் எனனவென்றால் பாகுபாடில்லாமல் பல வேலைகளைச் செய்யும் குணம். மக்கள், வயது, பால், வேறுபாடில்லாத எத்தனை ஆண், பெண் நண்பர்கள், பாட்டிகள், தாத்தாக்கள், ஒரு சில தாதாக்கள், குண்டர்கள, அடாவடித்தனமுள்ள நபர்கள், அப்பாடா! எத்தனை அனுபவங்கள்! அந்த மாதங்களில் அனுபவித்ததை இன்னும் 3 மாதம் உட் கார்ந்தாலும் என்னால் முழதாக எழுதிமுடிக்க இயலாது.
இது மகத்தானதல்லவா, வாசகள்களே!
இந்த வாழ்க்கையே ஒரு பயணம். அதில் பலரைச் சந்திக்கிறோம். [ 16u 60Ꭰ Ꭰ]
மறக் கிறோம். சிலரை ஞாபத்தில் வைத்திருக்கிறோம். எங்கோ படித்த ஞாபகம் -
"வாழ்க்கையென்பது என்னவென்றால், எண்ணங்களினதும் அனுபவங்களினதும் ஒரு தொகுப்பேயாகும்." இந்த வாழ்க்கை நாம் ஆனந்தமாக வாழ்வதற்கே!
கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இதனை ஆனந்தமாக்குவோம். நாமும் ஆனந்தமாக வாழ்ந்து, மற்றவர்களையும் ஆனந்திக்க வைப்போம். மீண்டும் இன்னுமொரு ஆனந்தமான வாழ்க்கைத் தொடரில் சந்திக்கலாம், வாசகர்களே!
உங்களிற் பலர் ஒலிம்பிக்ஸின்போது அவுஸ்திரேலிய வீரர் களை உற்சாகப்படுத்தக் கூறியவைகளை எமது ஒஸித் தொண்டர்களுக்காக இப்பொழுது கூறுங்களேன்! Aussie! Aussie!! Aussie!!! Ohi! Ohi!! Ohi!!!
46 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000 கலப்பை
தெருவோரத்துச் சுவரே இக் கரிய இருளில்
உன்னில் கரித்துண்டு ஒன்றின் கிறுக்கலில் கோணலாய் என் கவிதை
நாளைய விடியலில் இதைப் பார்த்து நாணி நடக்கும் சகோதரி நம்பிக்கையாய் நிமிர்ந்து நடப்பாள்
ஊரெங்கும் உறங்கிக் கிடக்கும் கோழை உணர்விற்கு தீ வைப்பதற்கு
திரியாய் எரியட்டும்
சிறைப்பட்டு வாழும் ஒவ்வொரு பெண்ணின் விலங்கை உடைக்க இரும்பாய் மாறட்டும்
சகதிக்குள் அழுகிய எமது மக்களின் வரலாற்றை வடிக்க மையாய்க் கசியட்டும்
霍
இங்கு குழிதோண்டிப் புதைக்கப்படும் மனிதத்தை நோக்கி கேள்விகள் முளைக்க விதைகள் துவட்டும்
அதுவரை மழையிலும் வெய்யிலிலும் அழிந்து போகாது சுவரொட்டியில் கரித்துண்டொன்றின்
கிறுக்கலாய்
ஒரு கவிஞயின் படைப்புக்களின் எதிர்பார்ப்பு நம்பிக்கை. எளிமையான ஒரு சுவரொட்டியின் போராட்ட அறைகூவல் சக்திவாய்ந்தது, நிலையானது.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 47

Page 26
assitaput
ஐப்பசி 2000
தமிழ் இனத்தின் பரம்பலும் பிரச்சினைகளும்
- கலாகிர்த்தி பேராசிரியர், டாக்டர் பொன். பூலோகசிங்கம் -
தமிழ்மொழி பேசும் இனத்தவர் உலகின் இன்று வாழ்ந்து வருகின்றனர்: நாற்றிசையின் எல்லைகளுக்கே
பல்வேறு நாடுகளிலே
அவர்கள் சென்றுவிட்டனர். இவ்வின மக்களின் தாயகமாக இன்று நம்பப்படுவது, இந்திய உபகண்டத்தின் தென்றிசை. இப்பிரதேசம் இன்று இந்திய குடியரசின் அங்கமாக விளங்கும் தமிழ்நாடாகவும், அதன் தென் கிழக்கே அமையும் இலங்கைக் குடியரசு நாடாகவும் அறியப்படுகின்றன.
இந்திய உபகண்டத்தின் பூர்வீகக் குடிமக்கள் இன்னவர்தாம் என்று துணிய எடுத்துக் கொள்ளப்பெற்ற முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. ஆயினும், இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய இனத்தவர் வடமேற்குக் கணவாய்கள் ஊடாக அல்லது மேற்றிசை வழியாக இந்திய உபக ண டத்துள் நுழைந்தபோது, இந்து (சிந்து)நதி தீரத்திலே உயர்ந்த பணிபாடு நிலவிக்கொண்டிருந்ததாகத் தொல்லியலாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். இப்பணி பாட்டுக் களங்களிலே கணிடு எடுக்கப் பெற்ற வரிவடிவ அச்சுக்கள், இப்பணிபாடு கல்வியறிவு முக்கியத்துவம் பெற்றதொன்றாகவும் விளங்கிற்று என்ற கருதி தினை ஆதரிப்பன. இநீதிய உபகண்டத்திலே அன்று காணப்பெற்ற ஆதி இனங்களிலே திராவிட இனத்தவருக்கு இப்பணிபாடு உரியதாக வற்புறுத்தப்படுவது பொருத்தமாகவே தெரிகின்றது.
இந்திய உபகண்டத்திலே இந்தோ-ஐரோப்பிய மொழியாளரின் ஊடுருவல் பரவியபோது, அதனை எதிர் தீது அரண அமைக்கக்கூடியவர்களாகச் சுதேசிகள் அன்று இருக்கவில்லை. இந்தோ-ஐரோப்பிய பரம்பலின் முன்னே திராவிட இனம் தென்றிசை நோக்கிப்
பின்வாங்கியது. பாகிஸ்தான் நாட்டுப்
பலுசிஸ்தான் மலைப்பிரதேசத்தில் வழங்கும் பிராகூய் (BRAIU) மொழியும், நேபாளத்திலே காணும் தங்கர் (DHANGAR) மொழியும், வடஇந்திய மலைப்பிரதேசங்களிலே அறியப்படும் (35(bê, LOIT6ö(35 IT (KURUKH, MALTO) 61g)Juñ மொழிகளும் மத்திய இந்திய மேட்டு நிலங்களிலே நடைமுறையிலுள்ள கோலாமி, நாய்கி, பர்ஜி, கதபா, கூயி, கூவி, பெங்கோ, p6i II, 6560i (KOLAMI, NAIKI, PARJ, GADBA, KUI, KUVI PENGO, MANDA, GOND) முதலாம் பல்வேறு மொழிகளும் திராவிட விட்டம் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பரம்பலுக்கு முன்னே சுருங்கி ஒதுங்கிக்கொண்ட நிலையை உணர்த்தி நிற்கின்றன.
“தென னாடுடைய சிவன” இந்திய வடமுனையில் செல்வாக்குடன் காஷ்மீரிய சைவ பாரம்பரியத்துக்கும் உரியவனாகக் காணப்படுவதும் மனங்கொளத்தக்கது.
பேராசிரியர் சுநிதிகுமார் சட்டர்ஜி (1890-19 77) அவர்கள் வங்காளமொழியின் வரலாறுபற்றி நிகழ்த்திய தலைசிறந்த ஆய்விலே (The Origin and Development of the Bengali Language. 1926) வங்காளமொழி பேகம் மக்களுக்கும் திராவிடமொழி பேகம் மக்களுக்குமிடையே காணப்படுமீ ஒற்றுமைகளைத் திறம்பட எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கமொழி நவீனங்களும், சிறுகதைகளும், நாடகங்களும் தமிழ்நாட்டிலும் ஏனைய திராவிடப் பிரதேசங்களிலும் செல்வாக்குப் பெற்றமைக்கான காரணங்களைப் போராசிரியர் சட்டர்ஜியின் ஆய்வுநூல் தரும் ஒப்புமைகள் எடுத்துணர்த்துவன. வங்காளப் பிரதேசத்திலே முன்னர் நிலவிய திராவிடத் தொடர்பினை அல்லது திராவிடத்தன்மை அடைந்த
48 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

23ii Jő 200G
δου.ύ ωου.
மாற்றத்தினை ஒப்புமைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இன்று இந்தியாவின் தென்றிசையிலே சிறப்புற்று விளங்கும் தமிழ், தெலுங்கு, கண்னடம், மலையாளம் உட்பட்ட திராவிடமொழிகள் பேசும் இனத்தவர், முன்பு இந்திய உபகணடத்தின் பெருமி பகுதியிலே நிலை கொணர் டு வாழ்ந்தவர்கள் என்பதையும், அவர்கள் இந்தோஐரோப்பிய மொழி பேசிய இனத்தவரின் எதிரணியின் முன்னே தென்றிசை நோக்கிப் புலம் பெயர்ந்தவர்கள் என்பதையும் இந்தோஐரோப்பிய மொழி அடைந்த கலப்பாலும் உணர முடியும். திராவிடர்தம் மொழிச்சொற்கள் 27இனை பேராசிரியர் பறோ அவர்கள் (THOMAS BURROW, BODEN PROFESSOR OF SANSKRIT OXFORD UNIVERSITY) `இருக்கு வேதத்திலே கணிடுபிடித்து 1946இலே வெளியிட்டனர். திராவிட ஆய்வுகளில் இந்நிகழ்ச்சி ஒரு மைல்கல்லாகும். ஆரியருக்கும் திராவிடருக்கும் இடையே எவ்விதமான கலப்பும் இருக்கவில்லை என்ற அபிமானிகளினி கருத்து அணறு அடிபட்டுப்போனது.
- II -
இன்று திராவிடமொழிகள் என்று செல்வாக்குப் பெற்றுள்ள மொழிக்குடும்பத்தினை, கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான குமாரில பட்டர், “ஆந்திர திராவிட பாஷா” என்று அழைக்கிறார்.
ஆந்திர பிரதேச மாநிலத்திலே வழங்கும் தெலுங்குமொழி பூர்வீக தமிழிலிருந்து எப்பொழுது தனிமொழியாகக் கிளைத்தது என பது தெளிவாக விலலை. கிறிஸ்தாப்தத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அவ்வாறு நடந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும் இன்று கிடைக்கும் மிகப்பழைய தெலுங்கு சாசனம் கி.பி. 833க்குப் உரியதாகும். நன்னயர் கி.பி. 1020இல் மொழிபெயர்த்த மகாபாரதத்தின் முதன் மூன்று பிரிவுகளே மிகப் பழைய
தெலுங்குமொழி இலக்கியமாகும். சுயமான தெலுங்கு இலக்கியம் கி.பி. பதிநான்காம்
நூற்றாண்டிலேதான் எழுகின்றது.
தெலுங்கு மொழிக்குப் பின்னே பூர்வீக தமிழ்மொழியிலிருந்து கண்டம் கிளைத்தது என்பதை அனுமானிக்க முடியுமாயினும் காலவரையறை செய்வது அரிதாகும். கன்னடத்தின் ஆகப்பழைய சாசனம் கி.பி. 450க்கு உரியதென்றும். ஆகப்பழைய நூல் கி.பி. 850லே எழுந்த “கவிராஜ மார்க்க ’ எனும் இலக்கண நூல் என்றும், ஆகப்பழைய செய்யுள் கவிஞர் பம்பா முதலாகப் பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கின்றது என்றும் கூறி அமைதி கொள்ளலாம்.
தமிழிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டிலே கிளைத்த மொழி மலையாளம். அம்மொழியின் ஆகப்பழைய இலக்கியமாகக் கருதப்படுமி 'ராமசரிதமீதமிழ்மொழிச் செல்வாக்கு மிக்கது. மலையாளத்தின் தாயகமான கேரளத்திலே நாஞ்சில்நாடு இன்றும் தமிழ் மணம் வீசுவது.
பூர்வீகத் தமிழ் தன் யாத்திரையிலே இந்திய உபகணர்டத்திலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட்ட, இருபதிற்கு மேற்பட்ட மொழிகளை இனமொழிகளாகக் கொணர்டு சிறந்து நிற்கின்றது.
- III -
தென்னகத்தினைத் தமிழ்கூறு நல்லுலகமாகக் கணிட தமிழ்மக்கள், அப்பிரதேசத்திலேயே புலம்பெயர்ந்த கதையுமுண்டு. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைப் பாகுபாடு தமிழ்நாட்டில் நிலவிய புவியியல் அடிப்படையில் அமைந்தது. குறிஞ்சி - மலைநாடு முல்லை - காட்டுநிலம் : மருதம் - வயல்வெளி : நெய்தல் - கடல்சார்ந்த நிலம் : பாலை - வனாந்தரம் அல்லது சுரம், வறள்வலயம் எனப் புவியியலாளர் கூறும் நில
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 49

Page 27
abérsůapu
ஐப்பசி 2000
அமைப்பினானயே இலக்கியம் பாலை எனக் குறித்தது. சகாரா பாலைவனம போன்றவற்றை அன்று. இக்கருத்தினை உணராது நானிலப்பகுப்பே பழையது என்றும் பருவமாற்றத்தினாலே உருவாகும் திரிநிலம் பாலை என்றும் பிற்காலத்தவர் கருதினர். (சிலப்பதிகாரம் I : 2ே-65; இளம்பூரணர் தொல் பொருள் அகத். 5 : அடியார்க்குநல்லார் சிலப் I : 2-66 : பேராசிரியர் திருக்கோவை um 194) "முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலரும் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே” எனிறு தொல் காப்பியர் களவியலிலே சூத்திரித்திருக்கிறார்.
“இது புலன் நெறி அன்றி உலகியல் ஆகலின் உலகியலால் பாலை நிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளது ஆகலின் பாலையும் கூறினார். என்று நச்சினார்க்கினியார் கூறியிருப்பது மனங்கொளத்தக்கது.
ஐவகை நிலத்திலும் மக்கள் வாழ்ந்ததால் அவ்வவி நிலத்திற்குப் பொருத்தமான ஒழுக்கத்தினை உரியாக வைத்துத் தமிழ் இலக்கியம் ஐந்திணை மரபு கணிடது. ஆனால் வறள்வலயமான பாலையில் வாழ்ந்த மக்கள் தொல்காப்பியர் காலத்திலே புலம் பெயரத் தொடங்கிவிட்டனர். பாலைக்குரிய கொற்றவை நிலையையும் துடிநிலையையும் தொல்காப்பியர் குறிஞ்சிக்குக் கூறுவதன்மூலம் (தொலி, பொருள். புறத். 4) அப்புலப் பெயர்ச்சியை எடுக்துக் காட்டுகின்றார். அவர் பாலைக்குக் கூறவேண்டிய வாகைத்திணை யைப் பொதுவான புறத்திணையாக்கிப் பல்வேறு வழிகளிலே சிறப்புறுவதைக் கூறுவதாக அமைத்துக் காட்டுவதும் (தொலி.பொருள்.புறத, 18) பாலைநிலம் சஞ்சாரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதைக் காட்டுகின்றது. பாலை நிலத்திற்கு இயல்பான பிரிவுநிலை - காதலரிடையே குடும்ப வாழிவுக்கு வேணடிய பொருளைத் தேடுவதற்காக ஏற்படும் பிரிவுநிலை - பாலைப் பாடல்களிலே பாலைநிலத்தின் ஊடாக ஏனைய
நிலத்தோர் செல்வதாகவும், அந்நிலத்தின் ஊடாகக் காதலர் பெற்றோர் அறியாது செல்லும் உடன்போக்கினைக் கூறுவதாகவும் மாற்றம் பெற்றுள்ளது. இலக்கியமும் இலக்கணமும் உணர்த்தும் இப் புலப்பெயர்வு, சீவனத்திற்கு வேணடிய வளம் அற்ற தன்மையால் ஏற்பட்டதாகும்.
- IV —
பழந்தமிழ்ப் பாடல்களிலே தமிழ்மக்கள் வெளிநாட்டு வாணிபத்தில் ஈடுபட்டிருந்த செய்திகளும் காணப்படுகினறன. மரக்கலங்களைப் பருவப்பெயர்ச்சிக் காற்றினை உணர்ந்து செலுத்தும் ஆற்றல் மிக்கவராகத் தமிழர் பண்டைய புறப்பாடலிலே (புற. 86) போற்றப்படுவதாலி கரையோரமாக மரக்கலங்களைச் செலுத்துபவர்களாகமட்டும் அல்லாது, கடல்களை ஊடறுத்துத் தத்தம் மரக்கலைங்களைத் தூரதேசங்களுக்குச் செலுத்தும் திறன் உடையவர்களாகவும் விளங்கியவராதல் வேண்டும். அவர்தம் சிறு மரக்கலங்கள் பறி, தோணி, அம்பி என வழங்க, பெரு மரக்கலங்கள் நாவாய், வங்கம் என வேறுபடுத்தப் பட்டன. காவிரிப்பூம் பட்டினம், முசிறி, கொற்கை முதலிய துறைமுகங்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் மட்டுமன்றி மேனாட்டர் எழுத்துகளிலும் கட்டப்பெற்றிருக்கின்றன. கடல்மேற் செல்லும் கலங்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம் கூட பணிடைய தமிழர் அறிந்திருந்ததாகும் (பெரும்பாண 349-51). அக்காலத்திலே மிளகு, முத்து, பவளம், சந்தனம், அகில், யானை, உப்பு, புளி, கருவாடு முதலிய பொருள்களை ஏற்றுமதி செய்து அந்நிய நாட்டவரிடமிருந்து குதிரை, குடிவகை , அணிகலனிகள், பொன முதலியனவற்றை தமிழர் இறக்குமதி செய்தனர்.
இலக்கியம் தந்த செய்திகள் மேனாட்டார் எழுத்துகளால் மட்டுமன்றி அண்மைக்காலத்து அகழ்வுகளினாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவ்விலக்கியப் பாடல்களின் காலம் கி.பி.
50 சிட்னி
பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
கலப்பை
மூன்றாம் நூற்றாணர்டிற்கு முற்பட்டது என்பதை நோக்கும்போது, பணிடைக்காலம் முதலாகத் தமிழ்மக்கள் வெளிநாட்டார் தொடர்புகளை ஏற்படுத்திக்கொணர்டதோடு, வெளி நாடுகளைக் கணிடறிந்தவராகவும் திகழ்ந்தனர் என்று கொள்ளலாம்.
தமிழரின் வெளிநாட்டு வாணிபம் மேலைநாடுகளோடு மட்டமனறிக கீழைத்தேயங்களோடும் நடைபெற்றதாதல் வேண்டும். மேலைத்தேய வாணிபம்பற்றிய எழுத்துகள் பெறப்பட்டபோதும், அங்கு தமிழர் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்ததையோ அல்லது தமது பண்பாட்டின் செல்வாக்கினைச் செலுத்தியதையோ அறியத்தரும் ஆதாரங்கள், தரவுகள் கிடைக்கவில்லை. ஆயினும் கீழைத்தேயங்களிலே கிறிஸ்தாப்தம் முதலாக அத்தகைய தரவுகள் - செய்திகள் - பெறப்படுகின்றன.
கி.பி. முதலாம் நூற்றாண டிலிருந்து இந்தோசீனப் பிரதேசத்திலே இந்திய செல்வாக்கு - தமிழ்நாட்டுடன் தொடர்புடைய இந்திய செல்வாக்கு - இடம்பெறத் தொடங்குகிறது. இதற்கு வர்த்தகத்தோடு ஆரம்பித்த கலாசார பரிவர்த்தனை, தொடக்கத்திலே முக்கிய காரணமாகியது. பல்லவர், பாண்டியர், சோழர் சாம்ராஜ்ய விளப்தரிப்பு செய்த காலத்திலே நெருக்கமான அரசியற் தொடர்புகளும் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலே முடிவுறும் தமிழரசுகளின் ஆட்சியை அடுத்துக் களப்பிரர் எனும் இனத்தவர் தமிழ் மணிடலங்களிலே ஆதிக்கம் செலுத்தினர். இவர்களை அடுத்துப் பலர்லவரும, பாணடியரும் தென்னாட்டிலே முதன்முதலாகப் பேரரசுகளை நிறுவினர். அப்பொழுது வெளிநாடுகளுடனும் தொடர்புகளை விருத்தி செய்து கொண்டனர்.
பல்லவர் 7-9
ஆட்சியின்போது (கி.பி.
நூற்றாண்டுகள்) இலங்கை, மலாயாவோடு மட்டு மன்றித் தென்கிழக்கு ஆசியாவோடும் வர்த்தகம், கலாசாரம், அரசியல் தொடர்புகள் தமிழர்களுக்கு இருந்தன. சமகாலத்திலே உயர்ச்சிகண்ட பாண்டிய அரசும் வெளிநாட்டுத் தொடர்புகளிலே முக்கிய கவனம் செலுத்தியது. பல லவர் - பாணி டியர் முரண்பாடுகளினால் பலவீனம் அடைந்தபோது, எழுச்சிகண்ட சோழசாம்ராஜ்யம் (கி.பி. 10-13 நூற்றாண்டுகள்) முன்னர் எப்போதும் காணாத மகோன்னதத்தைத் தமிழருக்கு வழங்கியது. அக்காலத்திலே கங்கை முதல் கடாரம் வரை செலுத்தும் ஆற்றல் மிக்கவராக விளங்கிய சோழப்பெருமன்னர், வர்த்தகம், கலாசாரம், சமயம் முதலாம் பரிவர்த்தனை களைத் தென் கிழக்கு ஆசியாவுக்கு அப்பாலும் கொண்டு சென்றனர். இலங்கை சோழமண்டலத்தின் ஒரு பகுதியாகப் பதினோராம் நூற்றாண்டிலே இருந்திருக்கிறது. சோழத் தூதுவர் சீனச்சக்கரவர்த்தியின் அரச சபைக்கு கி.பி. 1015இலே சென்றிருந்த செய்தி சீன நூல்களிலே இடம்பெறுகின்றது.
சமயம்,
தம்மாணையைச்
இநீ தோசீனத்திலே கமீ புச் சியா (KAMPUCHEA) வழங்கும் கம்போடியா அல்லது கம்போஜம், தாய்லாந்து (THAILAND) என வழங்கும் சீயம், கீழைக்கரையில் நிலவிய சம்பா (CHAMPA) எனும் பிரதேசங்களுடன் தமிழகத்திற்கு நெருங்கிய தொடர்புகள் இருந்திருக் கின்றன. கிபி. முதலாம் நூற்றாண்டிலே, கம்புச்சியாவிலே புநாணி (FUNAN) அரசு தோன்றிய போதே அதற்குத் தமிழகம் உட்பட்ட இந்திய தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வரசின் காலத்திலே, இன்றைய மத்திய வியட்நாம் பிரதேசத்திலே, நிலவிய சம்பா அரசிலும் இந்திய செல்வாக்குக் காணப்படுகின்றது. இங்கு வோக்கானி (VOCANH) எனும் கரையோர இடத்திலே கிபி. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிற்குரியதாகச் சங்கதக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இப்பிரதேசத்திலே காணப்பெற்ற மிகப்பழைய இந்திய சாசனமாகிய
660
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 51

Page 28
இக்கல்வெட்டினை எடுத்தவன் பூரிமாறன். இப்பெயர் பாண்டியர்க்கு உரியது. சங்கதம் “தேவபாடையாக மட்டுமன்றி, ஐரோப்பாவிலே இலத்தீன் போன்று, கற்றோரின் மொழியாகவும் போற்றப்பட்டதாலே தமிழர் தம் கொடிநாட்டிய இடங்களிலே சங்கதமொழியிலே எடுத்துள்ளனர். இன்று துவான ஹை (THUAN HAI) Lomé, 16007if)oö Gingin சாம் (CHAM) மக்களிலே நான்கில் மூன்று பங்கினர் இந்துக்களாகவோ அல்லது பாணி இஸ்லாமியராகவோ வாழ்கிறார்கள்.
ᎭᎥᎢᏧ60Ꮃ ᏞᏲ
கம்புச்சியாவிலே ஆங்கர் அரசு (ANGKOR KINGDOM - df5).G,802—1432) -9ijij5ITLʼuq. 6öi, பொறி காலதி தினைச் கடடுவதாக கி கருதப்படுவது. அக்காலத்திலே இந்தியத் தொடர்புகள் சிறப்பாகப் பேணப்பட்டிருக்கின்றன. இரணடாம் ஜெயவர்மன் (802-850) தோற்றுவித்த தேவராஜ வழிபாடு, சிவலிங்க வழிபாடு அடைந்த மாற்றத்தையும் காட்டுகின்றது. சிவபிரானை மயேந்திரமலையில் வீற்றிருந்து சோபிதம் திரு வாசகம் தந்த ஜெயவர்மன்
செய்யவைக்கிறார் மாணிக்கவாசக சுவாமிகள்: மகேந்திர பர்வதத்திலே தேவராஜனை நிறுவி விழா எடுக்கிறான். கம் போடியாவில் எழுப்பப் பெற்ற ஆங்கர் வாட எனும் மகோன்னதமான திருமால்கோயில் பல்லவர்சோழர் கலைவணிணங்களைப் புலப்படுத்தி நிற்பதாகக் கருதப் படுகிறது. இந்துமதத்தின் கூறாக பெளதீதம் கம் போடியாவிலி இடம்பெறத்தொடங்கி கி.பி. பதினான்காம் நுாற்றாண டிலே உரிமை பெற்றபோதும் இந்துமதத்தின் தாக்கம் கம்போடிய மதவழிபாடுகளில் அதிகமாகவேயுள.
ஏகபோக
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்பு தனிநாடாக விளங்கிய சீயம் (தாய்லாந்து) தமிழகத்தின் செல்வாக்கினை அதிகமாக எடுத்துக் காட்டுவதாகும். இரரமாயணத்திற்குப் பல்வேறு வகையிலும் சிறப்பளிக்கும் சீயம் கம்பராமாயணத்திற்கு
முக கியத்துவம் த நீ திருப்பது
குறிப்பிடத்தக்கது.
இராமன் விழிகளும் சீதையின் கணிகளும் திருமணத்திற்கு முன்பு சந்தித்தமை: சிறு வயதிலே இராமன் செய்த குறும்பினால் ஆத்திரம் கொண்டிருந்த கூனி அவனை அரச னாக்காமல் தடுத்தமை: தசரதன் பரதனையும் கைகேயியையும் தனது ஈமக்கிரியைகளிலே பங்கு கொள்ளக்கூடாது என்று கட்டளை செய்திருந்தமை: சூர்ப்பனகை அழகிய வடிவில் இராமனை வஞ்சிக்க முயன்றமை அனுமன் இராமனுக்கு வாலி-சுக்கிரீவன் பகைமை கூறல்: அனுமனுக்குக் கூறிவிட்ட இரகசிய நிகழ்ச்சிகள் - தமிழ் இராமாயணத திலேயே முதனி முதலாக
இராமணி அடையாளமாக
இடம்பெறுகின்றன. இவை தாய்லாந்து இராமாயணமான 'இராமகீர்ததி’யிலும் இடம்பெறுகின்றன.
சம்பந்தரின் தோடுடைய செவியன் பதிகமும், சுந்தரின் பித்தா பிறைகுடி பதிகமும், அப்பரின் கூற்றாயினவாறு பதிகமும், திருப்பாவை, திருவெம்பாவையும், இன்றும் தாய்லாந்து மக்கள் சமயச் சடங்குகளிலே சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றைப் பரம்பரை பரம்பரையாக மனனம் செய்து வழங்கிவரும் பிராமண மரபொன்று இன்றும் அங்கு தொடர்ந்து வருகின்றது.
கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டிலிருந்து தெற்கே சிறப்புறத் தொடங்கிய பூரீவிஜயம், சைலேந்திர அரசு, ஜாவா அரசுகள் உள்ளிட்ட இன்றைய இந்தோனேசியாவுடன் இந்தியா
சிறப்பாகத் தமிழ்நாடு - வர்த்தகத்தோடு  6) II «9f JI J பரிவர் திதனையிலேயுமி ஈடுபட்டிருக்கிறது. சுமார் ஈராயிரம்
தீவுகளையுடைய இந்தோனேசியாவிலே பாலித்தீவிலே இன்று ஆகம தீர்த்த என்ற பெயரிலே சைவமதம் வழங்குகிறது. ஜாவா, சுமாத்ரா, கலிமந்தான் முதலிய தீவுகளிலே இந்துசமயச் செல்வாக்கு நிலவியிருந்தமை

அழிபாடுகளால் ஊர்ஜிதமாகின்றது. ருரீவிஜய அரசுக் குமி சைலேந்திர அரசுக்கும் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புகள் நிலவியிருக்கின்றன. முதலாம் இராசராச சோழனி காலத்திலே (985 - 1016) யூரீவிஜயமன்னன் நாகபட்டினத்திலே தன் தந்தை பெயராற் சூளாமணி விகாரை ஒன்றினை அமைத்துப் பெளத்தர்களுக்கு வழங்கினான். முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1025இலே யூரீவிஜயத்தின் மீது படையெடுத்தான்.
கி.பி. 13ஆம் நூற்றாண்டின் கடைக்கூறிலே வாழ்ந்த மார்க்கோ போலோ (MARCO POLO) எனும் யாத்திரிகர் தென்சீனாவில் சேய்ததனி (ZAYTON) எனும் நகரிலே வாழ்ந்த வர்த்தகப் பிரிவுகளிலே இந்திய வர்த்தகக் குழு ஒன்றும் மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருந்ததைக் கூறியிருக்கிறார். கியி. பதினைந்தாம் நூற்றாண்டிலே இந்த நகரத்தினைச் சுற்றிச் சுவர் எழுப்பப்பெற்றபோது, பழைய கட்டிடங்களின் அழிபாடுகளும் பயன்படுத்தப் பெற்றன. கடந்த சீன-யப்பானிய யுத்தத்திலே இச்சுவரின் ஒரு பகுதி சீர் குலைந்தது. சீர்குலைந்த பகுதியிலே இருந்து பணிடைய கலைச்சின்னங்கள் பல வெளிப் போந்தன. சீனத்தொல்லியலாளர் ஒருவர் அவற்றினைப் படமெடுத்துக் குறிப்புகளுடன் வெளியிட்டார். இவற்றிலே தென்னகத்துக் கட்டிடக்கலைப்பாணியில் அமைந்த பாரிய கோயிலின் சிதைவுகள் சில காணப்படுகினறன. மேலும் இரு தமிழ்ச்சாசனங்கள் அடங்கிய இரு தகடுகளும் கணிடெடுக்கப்பெற்றன.
தமிழ்மக்கள் கீழைத்தேயத் தொடர்புகள் ஏற்பட்ட இடங்களிலே தங்கி வாழிந்திருக்கிறார்கள். இல்லாவிடினி அவர்களுடைய கலாசாரத் தாக்கங்கள் அப்பகுதிகளிலே நிலைத்திருக்க முடியாது. இன்று சமயாசாரங்கள், வழிபாட்டுத் தலங்களின் அழிபாடுகள், இலக்கியச் செல்வாக்கு, கலைகளின் தாக்கம், சாசனங்கள் என்பனவே
அவற்றிற்குச் சான்றாக அமைந்து கிடக்கின்றன.
— V —
பர்மாவிலே பன்னெடுங்காலமாக நிலைத்திருந்த தமிழ்ச்சமூகம் மூர்க்கமாக 1960களிலே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 1968இலே அங்கு இரண்டு லட்சம் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி யாழ்ப்பாணத் தமிழரும் பர்மாவிலே வாழ்ந்து வந்துள்ளனர். யாழ்ப்பாண வடகரையிலுள்ள துறைமுகங்கள் பர்மாவுடன் வர்தீத கதீ தொடர்புகள் அதிகரிதி திருநீத காலங்களிலே சிறப்படைந்திருந்தன.
மலாயா குடாநாட்டுடன் தமிழகமீ பண்டைக்காலத்திலிருந்தே வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது. பூம்புகார்த் துறைமுகத்திற்கு இறக்குமதியான பொருள்களிலே “கழகத்து ஆக்கமுமீ’ (பட்டினப்பாலை 191) ஒன்றாகும். இங்கு சுட்டப்படும் காழகம் மலாயா என்பர். கி.பி. ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டில் எழுந்த பெருங்கதையிலே கடாரத்து இரும்பு கூறப்படுகிறது (15839). தமிழகத்துடன் இரும்பு வர்த்தகம் செய்த கடாரம், மலாயாக் குடாநாட்டின் மேலைப்பிரதேசமான கெடா (KEDAH) என்பர் பேராசிரியர் தனிநாயக அடிகள். கடாரம் பின்பு இராஜேந்திரசோழன் (1012-1044) சாசனங்களிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பல்லவர் ஆட்சியில் இருந்த காலத்தில் (கி.பி. 7-9 நூற் றாண்டுகள்) மலாயாவின் மேலைக்கரைப் பிரதேசத்திலே தமிழ் வர்த்தகர் குடியிருப்புகள் நிலவியிருந்தன என்று கருதச் சாசனமும் அழிபாடுகளும் இடம் தருவன. புக்கெட் (PHUKET) தீவுக்கு எதிரே குடாநாட்டின் மேலைக்கரையிலே தகுவய (TAKUAPA) எனுமிடத்தில் காணப்பெற்ற தமிழ்ச்சாசனத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கூறும் போராசிரியர் கே.ஏநீலகண்ட சாஸ்திரி, இங்கு மணிக்கிராமம் போன்ற தமிழ் வர்த்தகக்

Page 29
கலப்பை
ஐப்பசி 2000
குடியேற்றம் நிலவியிருக்கவேண்டும் என்று கருதுகிறார். இக்காலத்திற்குப் பின்பு போர்த்துக்கேயர் (1511-164), ஒல்லாந்தர் (16411824) காலனித்துவ ஆட்சிகளின் போது மலாக்காப் பிரதேசத்திலே வாழ்ந்த தமிழ்க் குடிகள்பற்றியும் அவர்தம் குடியிருப்புகள் பற்றியும் அவர்களுடைய குறிப்புகள்மூலம் அறியலாம். இவர்களுடைய காலத்திற்கு முன்பு தமிழ்க்குடியிருப்புகள் மலாக்காவிலோ அலி லது வேறு பிரதேசங்களிலோ இருந்தமைபற்றிய செய்திகள் வெளிப்போந்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. ஆயினும் தமிழிநாடு தென்கிழக்காசியாவுடன் பூண்டிருந்த வர்த்தக, கலாசார, சமயத்தொடர்புகளிலே முக்கிய கேந்திரமாக விளங்கியமையால், பல்லவர்காலத்
தொடர்புகள் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.
LfD 6U) i III
தமிழர் இலங்கையின் பூர்வீகக் குடியினரா? அல்லது தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வநீத வரா? என பதிலே கருத்தொற்றுமையில்லை. ஆயினும் இலங்கையிற் காணப்பெறும் பெருங்கற் பணிபாட்டுத் தடையங்கள் இலங்கையின் பூர்வீக வரலாற்றிலே தமிழருக்கு முக்கிய இடமுணி டு எனற கருதீதினை வற்புறுத்துவன. எனினும் காலத்திற்குக் காலம் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. புவியியல் நெருக்கமும் இனஒற்றுமையும் கலாசாரத் தொடர்புகளும் மட்டுமன்றி காலாகாலமாக நிகழ்ந்த தமிழ்நாட்டு அரசியல் கொந்தளிப்பும் சாம்ராஜ்ய ஆசைகள் துாண டிவிட்ட படையெடுப்புக்களும் கூலிப்படைகளும் இந்நிலைக்குக் காரண மாயிருந்துள்ளன.
பாண்டிய அரசப்பிரதிநிதிகள் தோற்றுவித்த ஆரியச்சக்கரவர்த்திகள் அரசொன்று 14ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்கள் வரை யாழ்ப்பாணப் பிரதேசத்திலே நிலவியுள்ளது. இலங்கையின்
வன்னி நாட்டினை கி.பி. 13ஆம் நூற்றாண்டிலே ஆட்சிப் பிரிவுகளாக ஆரம்பித்துவைத்து, காலனித்துவ காலத்திலே அடங்காப் பற்று எனச் சிறக்க வைத்தவர்களும் தமிழ்நாட்டில் இருந்து வந்த வன்னியரே என்று வையாபாடல் கூறும்.
இந்து சமுத்திரத்திலுள்ள தீவுகள் பிற்காலச் சோழர் கி.பி. 10ஆம், 11ஆம் நூற்றாண்டு களிலே சாமி ராஜயம் கணிடபோது, அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அந்தமான் தீவுகள், லட்ச தீவுகள், நிகோபார் தீவுகள், மாலை தீவுகள் என்பன அக்காலத்திலே சோழப்பேரரசின் ஆணைக்கீழ் கொண்டுவரப் பெற்றிருந்தன. இந்தியா 1947இலே விடுதலை பெற்றபோது, இவற்றிலே மாலைதீவுகள் ஒழிந்தவை, தமிழரும் ஏனைய இந்திய இனத்தவரும் வாழிடமாகத் தொடர்ந்து நிலைத்தன.
- VI -
கி.பி. பதினாறாம் நூற்றாணிடு முதலாக மேலைத்திசையிலிருந்து ஐரோப்பியர் - சிறப்பாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரஞ்சியர், ஆங்கிலேயர் - கீழைத்தேயங்களோடு வர்த்தகம் செய்வதற்காக மரக்கலங்களிலே புறப்பட்டுச் சென்றனர். கீழைத்தேய மக்களைக் கிறித்தவ ராக்கும் நோக்கம் பின்பு ஒட்டிக்கொண்டது. வர்த்தகம் செய்ய வந்த பிரதேசங்களிலே நிலவிய பூசல்களும் பொறாமையும் அரசியல் கொந்தளிப்புகளும் அவர்களுக்கு மண்ணாசை உண டுபடக் காலாயின. இநீதிய உபகண்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் வலிய வந்து சேர்ந்தது.
- தொடரும் -
54 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
asAsiapu
-த மி ழ்
மாமியார் மருமகள் பந்தம் எப்படி அமையவேண்டும் என்ற இந்த ஆய்வுக் கட்டுரையில் மாமியார் பக்கத்தைக் கடந்த
இதழில் சந்தித்தீர்கள்.
நணர்பியும் கூட / சரி, இந்தத் தடவை மருமகள் வீதிச்சுற்றுலா வருவோமா ?
மருமகள் மகளுக்குச் சமம் என்பதுபோல், மாமியாரும் தாய்க்குச் சமமே. இங்கே இந்தத் தாய் எனும் பந்தம் அல்லது பிணைப்பு மருமகளின் மனதில் தோன்றிவிட்டால், அங்கு சச்சரவிற்கு இடமேயில்லை. ஆயினும் பொதுவான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஏதோ ஒருவகையில் எதிரியாகக் காட்சியளிக்கின்றனர். இந்த மாயையை விலக்கிவிட்டுப் பார்த்தால் எல்லா மாமியார்-மருமகள் பந்தமும் நிச்சயமாக கபீட்சமானதொரு சொந்தமாக அமையும் என்பது திண்ணம்.
எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும், படிப்படியாகத் தானி முன்னேறலாமீ. முன்னேறவும் வேண்டும். மருமகளின் வயதிற்கும் மாமியாரின் வயதிற்கும் இடையே ஏற்பட்ட கால மாற்றங்கள், நாகரீகமாறறங்கள், பழக்கவழக்கங்கள் போன்ற பல காரணிகள் இவர்களிடையே வேற்றுமையை உருவாக்கக் கருவாகி விடுகின்றன. ஆயினும்
s9I Lq 60)Lô
வேற்றுமையிலும் ஒற்றுமை காணலாம். புதியதொரு சுற்றாடலுக்கு வந்து குடியிருக்கும்போது எமக்குப் பழக்கமில்லாத காரணிகள் பற்பல பழகிய வாழ்க்கையின் சமநிலையைச் சீர்குலைக்கும். ஆயினும் இவை அனைத்தையும் தாக்குப்பிடித்து வாழ்வதே வாழ்க்கை.
Survival of the fittest l
எப்பொழுதும் ஒரு நபரை ஓரளவு அறியும்வரை அவரிடம் அதிகபட்சமான உரிமை காட்டுதல் வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பலாம். எவ்வாறு புது மருமகளிடம் அதிக உரிமை மாமியார் காட்டுதல் சிறந்ததல்லவோ, அதேபோல் மருமகளும் அந்த மரியாதையையும் அன்பினையும் திரும்ப வழங்கவேண்டும்.
விட்டுக் கொடுத்தல் : இயற்கைச் சூழலில்கூட இச்சொல் மிகமுக்கிய இடம் வகிக்கின்றது. விஞ்ஞானத்தின் அடிப்படையிலே, புதிய சூழலில் வாழ்ந்து முன்னேற வேண்டுமெனில் விட்டுக்கொடுத்தல் மிகமிக அவசியம் என்று கட்டிக்காட்டப்படுகின்றது. ஆயினும் விட்டுக் கொடுத்தல் என்பதை அடிமை என்று தவறாக எடைபோட்டு விடாதீர்கள் யாரும் யாருக்கும் அடிமையில்லை எவ்வாறு அன்பும் பாசமும் எம்மைச் சீரான வழியில் இட்டுச் செல்கின்றனவோ, அதேபோல் தேவையான சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுத்தலும்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 55

Page 30
856Aů apu
ஐப்பசி 2000
வாழ்க்கைக்குக் கைதந்து உதவும்.
மாமியார்கூட ஒரு காலத்தில் மருமகளாக இருந்து பல சவால்களையும் குடும்பப் பொறுப்புகளையும் எதிர்நோக்கியவர்தான். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் பலருக்கு (மாமிக்கும் மருமகளுக்கும்) இது மறந்துபோய் விடுகின்றது. அநேகமான சந்தர்ப்பங்களில் பணம்தான் பிரச்சினைகளைத் தொடக்கி விடுகின்றது.
நான் ஒணடும் சும்மா வரேல்லை. .
50 லட்சம் காசோடைதாணி வந்தனானி / அவவொனர்டும் எனக்கு அட்வைஸர் பணணத் தேவையில்லை/
தானி கொணி டுவருகிற சீதனத்தை வைத்துக்கொண்டு, தாம் சொல்வது, செய்வது எல்லாமே சரி என்று எண்ணும் சில மருமகள்கள் இருக்கிறார்கள். மாமியார் தனது வாழ்க்கைக் காலத்தில் அடைந்த அனுபவங்களை வைத்து அறிவுரை கூறமுற்படும்போது அங்கே மனிதனின் அடிப்படை எதிரியான கர்வம் தலை தூக்குகின்றது. ஆயினும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அறிவுரை, அரியண்டமாக மாறிவிடக்கூடாது.
திருமணபந்தத்தில் கணவன் மனைவி என்ற பந்தம் மட்டும் உருவாக வில்லை. பெண்ணின் குடும்பம் மாப்பிள்ளையின் குடும்பமாகவும், மாப்பிள்ளையின் குடும்பம் பெண னினி குடும்பமாகவும் மாறி அமைகின்றன. ஆகையால் கணவனின் தாய் மருமகளுக்கும் தாயாகின்றாள். அங்கே அவர் அவளின் பெற்ற தாயாக இருந்து அறிவுரை கூறியிருப்பின் மருமகள் சிடுசிடுத்தும் இருக்கமாட்டாள்.
கறிநண்ல வாசமாய் இருக்குது مد.س........... té" (கவைத்துப் பார்த்துவிட்டு).
அடுத்தமுறை மிளகாய்த் தூளைக் கொஞ்சம் குறைச்சுப் போட்டுப்பாரும். .
இந்தத் தூளிலை எண்ண, பெரிசாய 62O5 சத்தும் @kapo)ogo, பிறகு, கம்ம7 தேைைமில்லாத வருத்தமெல்ல7ம் வரும்”
இங்கே மாமியின் வார்த்தையின் முதற்பகுதி மருமகளுக்கு இனிக்கும். ஆயினும் பின்வந்தது சிறிது கசந்திருக்கவே செய்யும். ஆகவே மனதில் ஒரு சிறு நெருடல் ஏற்பட்டு விடுகின்றது.
எண்ணப்ப7. . . கறி இனிக்குது? (கணவன்) ஏண், உங்கடை அம்மாதாணி மிளகாய்த் தூள் கணக்கப் போட வேணடாம் எனடவ/
இங்கே, முதலில் ஏற்பட்ட மனநெருடல் இப்போ வார்த்தைவழியாக வெளியில் வருகின்றது எப்பொழுது “உங்கடை அமீமா/” என்று மருமகள் கூறத் தொடங்குகின்றாரோ அன்றே பிரச்சினையின் அறிகுறி தோன்றிவிடுகிறது என்பதே அர்த்தம். பின் இதேபோல் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு பிரச்சினையை வளர்த்து விடுகின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் மாமியார் கூறியதன் ஆழ்ந்த கருத்தை மூன்றாவது நபர் ஸ்தானத் திலிருந்து நோக்கின் நிச்சயமாக நற்கருத்து என்பது விளங்கினும் இதை நடைமுறைப் படுத்துவது கடினமே. மூன்றாவது நபரிடம் கேட்கும் அறிவுரைகளை மகிழ்வுடன் முகம் கோணாது ஏற்றுக்கொள்ளுதலும், அதே அறிவுரையை மாமியார் கூறும்போது முகம் கோணுதலும் இயற்கை. ஆயினும் வார்த்தைக்கு வார்த்தை அளந்து பேசாது சற்று சிந்தித்தால் அவர் கூறிய கருத்தை ஆமோதிப்பதா அல்லது விடுவதா என்பது தெளிவாகும்.
யாரும் யாரையும் வேணடுமென்று வெறுப்பதுமில்லை, வஞ்சிப்பதுமில்லை.
56
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

કૃgાંII Iતી 2000)
கலப்பை
மாமியென்று கூறும்போது இங்கே அன்பு கலந்த மரியாதையும் அத்தோடு நட்பும் கூடியிருக்கவேண்டும். இயன்றவரை வயது பந்தத்தையும் தாண்டிவந்து இருபாலாரும் ஒருவருடன் ஒருவர் கருத்தும் அணி பும் பரிமாறுவார்களாயின், அங்கு அந்த உறவு பல்லாண்டுகாலம் நீடித்து நிற்கும்.
எனிற எல்லையையும்
அடுத்து, இருபகுதிப் பெண்களும் விடும் பெரும்பிழை, ஒருவரைப்பற்றி ஒருவர் பிறரிடம் புறங்கூறுதல். குடும்பம் என்று வரும்போது அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அந்தக் குடும்ப வட்டத்தைத் தாண்டாதவரைதான் அங்கு மரியாதை. என்றைக்கு அது பொது இடமாக மாறுகின்றதோ அன்றுதொட்டு அங்கே குடும்பம் எனும் சொல்லிற்கு அர்த்தம் அற்றுவிடுகிறது.
எண்ரை மாமிக்குக் கறிக்குள்ளை கணக்கத் தூள் போடுறது பிடிக்காது. இங்கு, மருமகள் பேச்சுவாக்கில் கூறிய சிறுவிடயம் பலரால் திரிபுபடுத்தப்பட்டு பெரு விடயமாக மாறி, மாமியாரின் காதிற்கு வேறுவிதமாகப் போய்ச் சேரக்கூடும்.
எண்ண. நீங்கள் உங்கடை மருமகளுககுச் சரியான கடடுப்பாடு போடுறீங்கள் போல இருக்குது? கற7யிலை போடுக7ற ம7ள காயத' துரளிலைமிருந்து எல்லாத்துக்கும் கொண்றோலி 6/60dou?/
இங்கு, மருமகளின்பேரில் தவறில்லையெனினும் பிறர் வாயால் விடயங்கள் எவ்வாறு திரிபடைந்து சச்சரவுகளை ஏற்படுத்தலாம் என்பது தெளிவாகின்றது. (இது மருமகளுக்கு மட்டுமல்லாது, மாமியாருக்கும் பொருந்தும்).
மனதில் தோன்றும் எணணங்களை
உள்ளவாறு நேரடியாக எடுத்துரைப்பதன்மூலம் பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்துவிடலாம். மாமியர் கூறியதைக் கணவனிடம் ஒப்புவித்து நியாயம் கேட்பது சிறுபிள்ளைத் தனம். கணவனின் முன்னிலையில் மாமியர் ஏதாயினும் கூறினாலும், அவ்விடயத்தில் கணவனைத் தலையிடாது பர்த்துக்கொள்ளுதலே மருமகள் மாமியார் எனும் பந்தத்திற்குத் தரக்கூடிய மரியாதை.
வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் பிறகு அள்ளமுடியாது. ஆகையால் ஒருவர் அவசரத்தில் பிழைவிடினும் மற்றவர் சற்று நிதானித்து பொறுத்து நடந்தால் நிச்சயமாக பிரச்சினை எனும் சொல்லிற்கே இடமிருக்காது.
மாமியாரென்பவர் பிள்ளையைப் பெற்று இத்துணைகாலம் வளர்த்து ஆளாக்கியவர். பெண்ணைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் பிரிவுத்துயரம் என்று இல்லை. பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் அந்த ஏக்கமும் துயரமும் இருக்கத்தான் செய்யும். இதைப் பல மருமகள்கள் உணரத் தவறிவிடுகின்றனர். தானி பெற்ற மகனைவிட வந்திருக்கும் மருமகளின்மேல் அதிக பாசம் ஒரு மாமியார் வைக்கின்றாரெனில் அங்கு அந்த மாமியார் மருமகள் பந்தம் ஒரு தாய் கி குமி மகளுக்குமிடையே இருக்கும் பந்தத்திற்குச் சமனாகிறது.
மனைவி என்பவள் கணவனின் நலனைமட்டும் கவனிப்பவளல்ல. குடும்ப நலனையும் பொறுப்பெடுப்பவளே! இங்கு
மாமியார், மாமனார் ஆகியோரும் அடங்குவர். ஆதலால், மாமியாரை, அவரின் மனதை, ஆயுள் எனும் பூட்டிட்டுப் பூட்டும்படி செய்யாதீர்கள். மனம் திறந்திருந்தால் விலத்தி நில்லாதீர்கள், உள்ளே சென்று இடம்பிடிக்கப் பாருங்கள். திறக்காத கதவுகளை அன்பு, பொறுமை எனும் திறப்புக்கொண்டு திறந்துபாருங்கள். நிச்சயமாக கதவு திறக்கும் பாசம் மலரும் ! பிரச்சினைகள் விலகி ஓடும் !!!
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 57

Page 31
கலப்பை ஐப்பசி 2000
சும்மா இருந்தால் சொகுசல்லலோ. மனோ ஜெகேந்திரன்
மலர்தொடு சரமும், மாவிலையொடு ஆரமும் நிதமிடு கோலமும், நுதலிடு திலகமும் களிகொடு மஞ்சளும், விழிதொடு அஞ்சனமும் தாழ்தொடு பட்டும், காலிடு மெட்டியொடு முறையொடு முன்னோர், நிறையொடு வாழ்ந்த வழியொடு போகா, பழியொடு வேகிடவே சும்மா இருந்தால் சொகுசல்லோ - அட பெண்குலமே சொகுசல்லோ, சொகுசல்லோ சோலியில்லாச் சொகுசல்லோ!
நாலுதட்டு வீட்டுடன், நாலெட்டு லட்சமும் மாநட்ட தோட்டமும், கூதலூட்டு மோட்டாரும் கால்கட்டுப் போட்டிட, நீளெட்டுப் பட்டியலில் பாலூட்டி வளர்த்ததற்கும், கூடவொட்டி வாழ்ந்ததற்கும் மட்டமாக விலைபோட்டு, புட்டுப் புட்டுக் கேட்டிடும் சீர்கெட்ட செயலதனை, மார்தட்டிக் கேட்காமல் சும்மா இருந்தால் சொகுசல்லோ - அட ஆணினமே சொகுசல்லோ, சொகுசல்லோ சோலியில்லாச் சொகுசல்லோ!
குடிப்பதற்குக் கஞ்சியில்லை, உடுப்பதற்குப் பஞ்சமேதான் எடுப்பதுவும் மிஞ்சவில்லை, படுப்பதுவும் அஞ்சியேதான் மடிவதுவோ பிஞ்சுஇனம், துடிப்பதுவோ வஞ்சியினம் முடியாதோ சஞ்சலமும், விடியாதோ கொஞ்சமேனும் அஞ்சியே துஞ்சாது, ஈழநெஞ்சமே கெஞ்சிடினும் காஞ்சனத்தின் வாஞ்சையினால், கஞ்சரையும் மிஞ்சிடவே சும்மா இருந்தால் சொகுசல்லோ - அட தமிழினமே சொகுசல்லோ, சொகுசல்லோ, சோலியில்லாச் சொகுசல்லோ!
58 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

giILાઈી 2000 கலப்பை
பவுசுக்குக் குறைவில்லை, காசுக்கோ ராசியில்லை பசித்திடச் சுவையுண்டு, கார்ப்பினால் ருசிக்கவில்லை புசித்திடப் பசுவில்லை, புல்வெட்ட ரசிக்கவில்லை பதவிசாய் வீடுண்டு, ஈடுகட்ட சுகிக்கவில்லை விசித்திடும் சிசுவுண்டு, சகித்திட ஒசியில்லை வசித்திடும் தினுசினில், மிதிபட்டு நசியாமல் சும்மா இருந்தால் சொகுசல்லோ - அட மானிடமே சொகுசல்லோ, சொகுசல்லோ, சோலியில்லாச் சொகுசல்லோ!
தாலாட்டும் பெண்ணிற்கும், காலாட்டும் ஆணிற்கும் ஊரெட்டும் சுழல்வோர்க்கும், உயிரற்று மாழ்வோர்க்கும் கோலூன்றும் முதியோர்க்கும், நலமற்று வதிவோர்க்கும் நூலேடு பயில்வோர்க்கும், வான்தட்டில் வாழ்வோர்க்கும் ஊர்திட்டும் வரியாலே, பாராட்டும் ஆட்சியாளர் சீர்கொட்டும் நதியாலே, போராடி உழைக்காது சும்மா இருந்தால் சொகுசல்லோ - அட சமுதாயமே சொகுசல்லோ, சொகுசல்லோ, சோலியில்லாச் சொகுசல்லோ!
மொட்டுக்கள் கட்டிப், பட்டுடைகள் போட்டுச் சட்டுப் புட்டென, வீட்டிடுக்களும் பூட்டி மெட்டுப் போகாக், கவிக்கட்டுக்கள் கேட்டிடவெனச் சட்டென வந்தோரைப், பட்டெனக் கொட்டிடவே முட்டாள் கவிகளெனக், கொட்டாவி விட்டுத் திட்டிய திட்டில், சுட்டுமனம் விட்டுப்போகாது சும்மா இருந்தால் சொகுசல்லோ - அட கவிமணமே சொகுசல்லோ, சொகுசல்லோ, சோலியில்லாச் சொகுசல்லோ!
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 59

Page 32
assistapu
ஐப்பசி 2000
சாதி
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மு னினர் வாழிந்த திருவள்ளுவரும், அவருடைய காலத்திலோ அல்லது அதற்குப் பிந்திய காலத்திலோ வாழ்ந்தவர் என்று கருதப்படும் ஒளவையாரும், இவர்களுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்த பாரதியாரும், இன்னும் பல சமுதாயச் சீர்திருத்த வாதிகளும் சாதி என்னும் பொருள் பற்றி பலவாறாக விரித்து உரைத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சாதிவேற்றுமை த காது எண் றே கூறியிருககிறார்கள் . இருப்பினும் தமிழர்களிடையே இந்தச் சாதி வேற்றுமை இன்னும் தொலைந்த பாடில்லை. சாதியின் பெயரால் நடைபெறுகின்ற கொடுமைகளும் வன்முறைகளும் கணக்கில் அடங்கா. சாதிப் பாகுபாட்டை அனுசரிக்காத மேலைத் தேய நாடுகளிலே புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள்கூட இன்றுவரை இந்தச் சாதிப் பாகுபாட்டிலிருந்து விடுபட்டதாக தீ தெரியவில்லை. வெளியே காட்டிக கொள்ளாவிட்டாலும், திருமணங்களின் போது உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி எனக் குசுகுசுப்பது அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இப்படிப்பட்ட சாதிப்பாகுபாடு ஆதிகாலத் தமிழர்களிடையே இருந்ததா என்ற கேள்வி பலதடவைகளில் எழுவது உண்டு. சாதி என்ற சொல்லே ஒரு தமிழ்ச் சொல் அல்ல என்று அறிஞர்கள் கூறுவர். ஜாதி என்ற வடசொல்லே தமிழில் திரிந்து சாதி என்று வழங்கலாயிற்று என்பர். இதிலிருந்து சாதிப் பாகுபாடு வடக்கே இருந்துவந்து தமிழ் நாட்டில் புகுந்த ஆரியர்களிடமிருந்தே தொடங்கியது என்று பரவலாக எண்ணப்படுகிறது.
ஆனால் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையான
- நா. மகேசன்
மறைமலை அடிகளார் இதற்குச் சற்று மாறான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துகளை நேரடியாகவே இங்கு தருவது நன்றெனக் கருதுகிறேன்.
“..ஆகவே, காசுமீரதேயத்தின்கணி வந்து குடியேறிய ஒரு சிறு தொகுதியினரான ஆரியரைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் இவ்விந்திய தேயத்தில் இலரென்பதும், காசுமீரம், இராசபுதனம் முதலான சில இடங்களில் தங்கிய ஆரியரைத் தவிர இமயமலைக் குமி விந்தியமலைக்கும் இடையேயுள்ள நாட்டிற் குடிபுகுந்த ஆரியர் அனைவரும் , அவர்களுக்கு முன்னமே அங்கெல்லாம் நாகரிகத்திற் சிறந்தாராய் விழிங்கிய திராவிடமகி களிற் கலந்து திராவிட ஆரியராயினரென்பதும், இங்ங்ணம் திராவிட ஆரியக் கலவையிற்றோனிறிய மக்கள் ஆரியருடைய தீய பழக்க வழக்கங்களைப் பெரும்பாலுங் கைவிட்டுத் தமிழருடைய அருளொழுக்க முறைகளைச் சிறிது சிறிதாக் கைக்கொண்டு ஒழுகத் துவங்கினமையின், தவ வொழுக்கத்தின் மேம்பட்ட தமிழ் மன்னனாகிய மநுவெண்பான், அவரைப் பார்ப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினாகப் பிரித்து, அவர்களுக்குரிய ஒழுக்கலாறுகளை முறை செய்து நூல் இயற்றலாயினன் என்பதும் மனதிற் பதித்தல் வேண்டும். இந்நால் வகைச் சாதி வகுப்பு திராவிட ஆரியர்க்காக வகுக்கப்பட்டதேயன்றி, அது தமிழ் மக்கட்கும் உரியதாக வகுக்கப்பட்டது அன்று. ஏனென்றால், ஆரியர் இங்கு வருவதற்கு முன்னமே, அந்தணரும், அரசரும் வேளாளரும் பதினெண்டொழிலாளரும் பண்டைத் தமிழ் மக்களுள் இருந்தமை இப்போதிருப்பனவற்றுள் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தின் புறத்திணையியலிற் போந்த, அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்னும்
60 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

giILાઈી 2000
கலப்பை
சூத்திரத்தாலும், அங்கனங் கூறப்பட்ட அந்தணர் முதலாயினார் கீ குரிய உரிமைகளைக் கிளந்தெடுத்துரைக்கும்,
நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்றற் றொடக்கத்தனவாக வரூஉம் மரபியற் சூத்திரங்களாலும் நன்குணரப்படுகின்றது.”
இவ்வாறு எழுதியுள்ள மறைமலை அடிகளார் மேலும் இருக்குவேத முதல் ஒன்பது மண டிலங்களிலும் நால வேறு வகைச் சாதிப்பகுப்பு காணப்படவில்லை என்றும், பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்ட பத்தாம் மணர்டிலத்தின் தொணர்ணுாறாம் பதிகத்தின் பன்னிரண்டாஞ் செய்யுளில்மட்டுமே நால்வகைச் சாதிப்பகுப்பு நவிலப்பட்டிருக்கின்றது என்றும் கூறியுள்ளார். அடிகளாரின் ஆராய்ச்சியின்படி ஆரியர் வருவதற்கு முன்னமே தமிழர்க்குத் தொழில் வேற்றுமைபற்றி இயற்கையாயிருந்த அந்தணர், அரசர், வணிகர், பதினெணி தொழிலாளர் என்னும் பாகுபாடு, மநுவினாலோ அல்லது அவன் வழிவந்த வேறு எவராலோ நாற் சாதியாக மாற்றப்பட்டு, இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தில் நுழைக்கப்பட்டது என்று தெரியவருகிறது. மேலும் இருக்கு வேதப் புருட சூத்திரத்தில், தொழிலால் மட்டுமன்றிப் பிறப்பினாலும் பார்ப்பனர்க்கு ஏனைய எல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குமிடத்து, அப்பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரேயாவர்
என்றும் அடிகளார் கருதுகின்றார். மேற்கண்டவற்ரை நோக்குமிடத்து, ஆரியர், திராவிட நாட்டிற் புகுந்து திராவிட மக்களுடன் கலப்புற்றுவதற்கு முனினரே தமிழி மக்களிடையே தொழில் அடிப்படையில் பாகுபாடு இருந்தது என்றும், ஆரியக் கலப்பு ஏற்பட்ட பின்னரே பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு தொடங்கியிருக்கிறது என்றும் அறியக் கிடக்கிறது. இந்த பின்னணியைத்தானி
நாலி வகைச்
ஒளவையாரின் பின்வரும் மூதுரைப் பாடலும் எடுத்துக் காட்டுகின்றது.
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு . மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம்.
இப்பாடலைப் படிக்கும் பலர் ஒவவையார் சாதிபாகுபாட்டை ஆதரித்துத் தானி இப்பாடலைப் பாடியுள்ளார் எனறு கருதுவதுணர்டு. பாடலின் கடைசி அடி ஆகிய குலத்தளவே ஆகும் குணம் என்பதை வைத்தே சாதிப் பாகுபாடு என்று கருதுவர். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் என்று ஒளவையார் சொன்னார் என்று தற்காலத்தில் சாதிவேற்றுமையில் அகப்பட்டு உழல்வோர் உயர்ந்த சாதிக்கு உயர்ந்த குணமும், தாழ்ந்த சாதிக்குத் தாழ்ந்த குணமும் உணர்டு என்று சாற்றுவார், மாற்றுவார். ஒளவையார் மககளை இழிவுபடுத்தும் சாதிப் பாகுபாட்டை ஆதரித்தவர் அல்லர் என்பதற்குச் சான்றாக அவரது நல்வழிப் பாடலையே எடுத்காட்டலாம்.
சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் . மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி.
ஒளவையார் கொள்கையின்படி இரப்போர்க்கு ஈய்வோர் உயர்ந்த சாதியினர், அப்படி ஈயாதவர்கள் தாழ்ந்த சாதியினர் என்பதே. இந்த இரண்டு சாதியினரைத் தவிர வேறு சாதியினர் உலகில் இல்லை என்பதே தமிழ் மூதாட்டியின் அசைக்க முடியாத அறிவுரை. அப்படியாயின் - குலத்தளவே யாகுங் குணம் - என்ற மூதுரைப் பாடலடியின் பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது.
மேலே மறைமலை அடிகளார் எடுத்துக் காட்டியது போலத் தமிழர்களிடையே பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு இருக்கவே
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு w 61

Page 33
asasiapu
giILાઈી 2000
இல்லை. ஆனால் தொழில் அடிப்படையில் பாகுபாடு இருந்து வந்திருக்கிறது. தற்காலத்திற் கூட மேலை நாடுகளிலும் இத்தகைய பாகுபாடு இருப்பதை நாம் காணலாம். வழக்கறிஞர்க்ள், கணக்காளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள், கம்மாளர்கள், கலைஞர்கள் என்று தொழில் அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அதுபோலவே பழந்தமிழர்களிடையே தொழிலி அடிப்படையில் பாகுபாடு இருந்துவந்திருக்கிறது. ஆனால் தற்காலதில் சாதி வேற்றுமை காட்டுவதுபோல வேற்றுமை காட்டித் தமிழர்கள் வாழவில்லை. அப்படியாயின் ஒளவையார் கூறியுள்ள குலத்தின் பொருள் என்ன, குணத்தின் பொருள் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.
குலம் என்பது தொழில் அடிப்படையில் வந்த பரம்பரை என்பதுதான் பொருள். முற்காலத்தில் தந்தை செய்த தொழிலை மகனும் செய்தான், பேரனும் செய்தான், பீட்டனும் செய்தான். எனவே அத்தொழிலோடு ஒரு குலமே தோன்றியது. அவி வாறு தோனிறிய வெவி வேறு குலங்களுக்கு அந்ந அந்தத் தொழிலின் காரணமாக தனிப்பட்ட குணங்களும் இயற்கையாகவே அமையலாயின. அக்குணங்கள் மரபு வழியாக பின்வந்த பரம்பரைகளிலே தொடர்வுபெற்று வருதாயின. இது விஞ்ஞான முறையிலும் தற்காலத்தில் உண்மை என்று கருதப்பட்டு வருகிறது. குலத்துக்கு எப்படித் தனிப்பட்ட குணம் அமைகிறது என்பதைச் சற்றுச் சிந்திப்போம். உதாரணத்துக்கு ஓரிரு முறி காலத் தொழில்களை எடுத்துக்கொள்வோம். கமத்தொழில் புரிகின்ற குலத்தில் வந்த ஒருவன் தனது தொழில் சம்பந்தமாகக் கடுமையான விபாமுயற்சியுடன் பயிர் செய்யவேண்டியவனாக இருக்கிறான். தனக்கு உதவியாயத் தனது அயலவர்களளையும் தனினைச் சூழ்ந்திருப்பவர்களையும் எதிர்பர்த்திருக்கிறான்.
இயற்கையின் தயவிலே அதிகமாக நம்பியிருந்து ஒரு நெல்மணியை ஓராயிரமாகத் திரும்ப விளைவாகப் பெற்றுக்கொள்கிறான். தாண்பெற்ற விளைச்சல் தனக்குமட்டும் சொந்தமல்ல, தனக்கு உதவிய அனைவருக்கும் சொந்தம் எனற எணணமி அவனி மனதிலே தலைதூக்திநிற்கின்றது. அப்படி அவன் நினைக்காவிட்டால் மேற்கொண்டு அவனுக்கு உதவி கிடைக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். இநீதகீ குணாதிசயங்களை வளர்த்துக் கொண்ட கமத்தொழிற் பரம்பரைகளிலே, தாராளமான மனப்பான்மையையும், விடாமுயற்சியும், இன்சொல்லும், பொருள் நட்டம் போகிறதே என்ற ஏக்கம் இன்மையையும், பசித்தோர் முகம் பார்த்தபடி தான் உண்ணாமை, விளை பொருட்களை அளவை குறைத்து விற்காமை, மிருகங்களிடதிற் கருணை போணிற குணங்கள் காணப்படுகின்றன.
கடற்தொழிலும், மாலுமித் தொழிலும் புரிகின்ற பரம்பரையினரை எடுத்துக் கொண்டால், கடலின் அமைதி
யானசூழ்நிலைகளையும், கொந்தளிப்பான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு உண்டு. திடீர், திடீர் என்று தீர்மானங்களை எடுப்பதும், சாவுக்கு அஞ்சாது மோதுகின்ற அலைகளைச் சமாளிப்பதும், கடலிலே ஆபத்து நிறைய இருக்கின்றது என்பதை முன்கூட்டியே தெரிர்திருந்தும் வாழ வேணிடும் என்ற வீறாப்பு உணர்ச்சியுடன் மீண்டும் மீண்டும் கடல்மேற் சென்று தொழில் புரிய வேண்டிய நிலை அவர்களுக்கு உண்டு. இந்தக் குலத்தின் பரம்பரையினருக்குத், தன்மானம், வீரம், முகாமைத்துவம், உறுதியான தீர்மானங்களை எடுக்கும் சக்தி, பேச்சு நறுக்கு முதலிய குணங்கள் இருப்பதைக் காணலாம்.
அடுத்துக் கம்மாளர்களாகத் தொழில் புரிவேரின் பரம்பரைகளை நோக்கினால், அவர்கள் கணக்கோடு சீவிக்க வேண்டியவர்களாக
62 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஐப்பசி 2000
asaülapu
இருக்கிறார்கள். அளவு முறைகள் தவறாது செய்யப்படும் பொருட்களைச் செவ்வனே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உண்டு. கைத்திறன், கலைத்திறன், ஆழ்ந்து அமர்ந்து சிந்தித்து, முன்கூட்டியே திட்டமிட்டு. பொருட் சேதத்ததைத் தவிர்த்துச் சிக்கனமான முறையிலே 5 s),35. தொழிலைச் செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள். இக்குலத்தின் பரம்பரையினருக்கு, ஒழுங்கு, திட்டமிடல், அளவைகளில் இம்மியளவும் விட்டுக் கொடாமை, கற்பனைத் திறன், எதையும் கலைக் கணினோடு பார்த்தல் முதலிய குணங்கள் இருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வாறு பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். இந்த வகையிற்தான் ஒவவையார் குலத்தளவே யாகுங் குணம் என்ற உண்மையை வெளியிட்டிருக்கிறாரே தவிரச் சாதி வேற்றுமை என்ற பிற்கால மாயையில் அகப்பட்டு உரைத்தார் அல்லர். பிறப்பால் வேற்றுமைப்படுத்தி இனத்தைப் பிரிப்பது சாதி. தொழில் அடிப்படையில் விஞ்ஞானத்துக்கு அமைய குணங்கள் வேறுபடும் என்று உணர்மை விளம்பிப் பெருமைப்படுத்தி இனத்தை ஒற்றுமைப்படுத்துவது குலம்.
இந்தக் கருதி தை வள்ளுவப் பெருந்தகையாரும்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
எனிறு, பெருமை எனினும் அதிகாரத்திலே கூறிப் போந்தார். பிறவியினாலே மக்களிடத்திலே வேற்றுமை இல்லை. ஆனால் அவர்கள் செய்கின்ற தொழிலிகளினி அடிப்படையிலே அவர்களிடத்தில் உள்ள சிறப்புகள் வேறுபடும் என்பது இந்தக் குறளின் பொருள். ஒளவையார் கையாண்ட குணம் என்ற சொல்லும், வள்ளுவனார் கையாண்ட சிறப்பு என்ற சொல்லும் ஒரே பொருளைத் தருவதை நாம் அவதானிக்க வேண்டும்.
மக்கள் தாம் செய்யும் தொழில்களிலும் அவற்றால் இயற்கையாக ஏற்படுகின்ற குணங்களிலும் பெருமை கொள்ள வேண்டுமே தவிரத் தாழ்வாக எண்ணலாகாது என்பதையே நமது தமிழிச் சான ரோர் எமக்கு எடுத்துக்காட்டினர். அதனாற்தான் போலும் வள்ளுவப் பொருந்தகையார் பெருமை என்ற தமது அதிகாரத்திலே இரண்டாவது குறளாக இக்குறளை வைத்தார்.
அணிமைக் காலக் கவிஞர் பாரதியாரும் “சாதிகள் இலையடி பாப்பா” என்று சொல்வதற்கு முன்னரே தனது சாதியைத் துறந்து, வாழ்ந்துகாட்டிக் “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றார். அவர் கூற்றிலிருந்தும், குலம் என்பது இருந்துவந்தது என்றும், ஆனால் அந்தக் குலங்களிடையே உயர்ச்சி தாழ்ச்சி சொல்லிப் பாகுபடுத்துவது தகாது என பதும் புலனாகிறது.
எனவே, பழந்தமிழ் மக்கள் பிறப்பின் அடிப்படையில் சாதி வேற்றுமை பேசி, உயர்ச்சி தாழ்ச்சி பார்த்து வாழ்ந்தவர்கள் அல்லர். பிற்காலக்கலப்பு மாறுபாடுகளினாற்தான் சாதி என்னும் கொடிய வியாதி தொடங்கியது. அதை அடியோடு நீக்கப் பலர் பல மருந்துகள் தந்திருக்கிறார்கள். இருந்தாலும் நோய் தீர்ந்த பாடில்லை. தமிழர் ஒவ்வொருவரும் இந்தவியாதிக்கு மருந்து உண்ண வேண்டும். அப்போதுதான் இந்த வியாதி தீரும். ஏனென்றால் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்கின்ற பழக்கம், சாதி என்ற வியாதியிலிருந்து தமிழர்களுக்குத் தொற்றி விட்டது. அந்தத் தொற்று நோய் இரத்தத்திலே ஊறி மரபணுக்களையும் தாக்கி விட்டது. ஆகையினாற் தானி அதை மாற்றுவது கடினமாக இருக்கிறது. ஓரிரு சந்ததிகள் அழிந்தபின்தான் மாறும் போல்தோன்றுகிறது. அதற்கிடையில், விஞ்ஞான முறையில் இந்தச் சாதி வியாதிக்கு ஏதாவது மருந்து கண்டுபிடித்தால்தான் தமிழர்களுக்கு விடிவு ஏற்படும் போல் தோன்றுகிறது.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 63

Page 34
கலப்பை giILાટી 2000
குழலோசை
இது ஒரு சாதாரண இசையல்ல. இறைவன் மீட்ட ஓர் இனிய பகவத்கீதம். இந்த இனிய கீதத்தை சிந்தையில் மலரவிட்டு செயலில் ஈடுபடுத்துங்கள். உங்கள் வாழ்விலும் இனிய வசந்தம் வீச ஆரம்பிக்கும்.
* நடந்தவை எல்லாம் நன்மைக்கே நடப்பவை அதைவிட நல்லதிற்கே நடக்கப் போவதெல்லாம் மிக மிக நல்லதிற்கே.
*மற்றவர்கள் முகத்தில் உள்ள அழுக்கைத் தெரியமுன் உங்களுடைய முகத்தில் உள்ள அழுக்கைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
* உங்களுடைய மிகச் சிறந்த நண்பன் நீங்களே தான். அவனிடம் மனம் விட்டு உரையாடுங்கள். அதனால் நீங்கள் மகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
* நேர்முக சிந்தனையை (positive thoughts) எப்பொழுதும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கை நேர்வழியில் செல்லும்.
* துன்பங்கள், தோல்விகளைக் கண்டு கலலைப்படாதீர்கள். அவை கசப்பு மிக்க விட்டமின்(Vitamins) மாத்திரைகள். அவை உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும்.
* உங்களை நீங்களே அறியுங்கள். உலக அறிவு தானாகவே வரும்.
* உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சகல மூலவளங்களும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. உங்களை நீங்களே அறிவதன் மூலம் அவற்றை நீங்கள் பய்னபடுத்திக் கொள்ளலாம்.
"நீங்கள் உங்களை அறிய அறிய எல்லாவற்றிற்கும் மூலமான இறைவனை அறிவீர்கள்.
* எனவே உங்களை நீங்களே அறிவதே உங்கள் வெற்றிக்கு முதற்படி,
உணர்வு; கீதாகரன் நடராஜா
64 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

PARK WEW MEDICAL CENTRE
26/12-16 lony'; bie Road TO()N(AIRIE
DR JEY CHANDRAN | DIR THAVA SEELAN
OPEN 7 DAYS
Monday licly 8, 8 pm Saturday - Sunday I'ulli Ilolicl:vs 9am - 4pm
BULK BILLING
* Emergency * ( ( * Women's Health * ( || || Ieith * Antenatal Care "Innuivation * Minor Surgery * Sti ess Management * Pathology Blood tests * Alley less
* Workers Compensation * In-House Physiotherapy * X-Ray Services Open 7Days next door
For Appointments Call
9636 7757
Carpark spaces available at REAR

Page 35
آoPہے
weddings, birth and other ܧܓܠ
Չ5 We specialise in O wegetarian &nc பலரும் பாராட்டும் 7ܓܗ ;
CD உண்டு மகிழ தெ
GLOBAL Shop 2, 32-50 Rooty Hill YParking
Next to the Roofy
PObe: 9753!
Fax :
mmmmmmmmmmmm
GLOBAL
For all your Indian Best Quality Tamil,
Моп – М.
Thur" -
Sunda
Ope
GLOBAL Shop 2,32-50 Rooty Hill
(Parkir
Next to the Root,
Phill Tilt: 9.675
Printed bou. Print G R LUG"
 

BES မွိုမျိုးမျိုး367بر^
special events ΚΚΣ
| Indian, Sri Lankan ^ in-vegetarian foods. ܐ } , SHDIChé006)J 9-801506) プC ாடர்பு கொள்ளுங்கள் C)
SHOPBEST |Rd North, Rooty Hill, 2766
g Available,
Hill Railway Station)
954 " 019 3665 301
9675 204
[ଳ Ρ SHOPBEST
Sri Lankan food items Hindi Movies for Rent
Wed: 9-7 pm Sat: 9-8 pm ys: 9-6 pm
п 7 Days N SHOPBEST
North, Rooty Hill, NSW 2766 g Available,
Il RailwayStation)
954
PP243459). OO111