கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2001.01

Page 1


Page 2
SA DIRWING SCHOOL
Experience Instructor s SA SCOOTRANSPORT SERVCE Experienced Driver
Your children are home on time after School
to Si from Homebush public school, Homebush boys school & Strathfield girls high school The transport services are from the following areas: Auburn, Lidcombe, Flemington, Homebush, Strathfield
and other nearest areas Contact: ANANDARAJAN(Raj)
Phone: 9763 7515 / 9763. 1620 Mobile: 0411 091 013 l-—
AARNAUKAASUJIRABES
ENOORDRBAR
(In a new Location) FO3 ALL KNDS OF SOUTH INDIAN & SK LANKAN FOOD & SNACKS
DINE IN, TAKE AWAY Or HOME DELIVErY
(Addl. Charges apply) CATE3NG AVAILAbLE FOR SFECIAL EVENTS
Tel:(02)97481841,97379884 (H)
164 Parramatta Road, Auburn N.S.W. 2144

களம் 7
リ
KALAPIPA| மனித மனத்தை உழுகின்ற αδρυύ ωου. உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் “கலீப்மை’, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
தனிப்பிரதி - Aus, $2.50 ஆண்ருச்சந்தா O L6TbT(6) :- Aus. Sl0.00 Q6J6îbsT(6) :- Aus. SS20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. Tele: (02)9896 6266
Email: kalappaiGDyahoo.com
"KALAPPA” Sydney University Tamil Society P.O. Box40, Wentworth Bldg., University of Sydney, NSW 2006 AUSTRALLA
Internet Web Site:
www.tamilaustralian.com/svdney/suts/ N yneyவது
ஏர் 3
ஆத்மீக இளைஞர். 2 இறைவன் சிந்தனை. 5 திருமுறைகள் விரும்பிய பயன் .
சேக்கிழார் பெருமான் பய.11
ஈழத்தில் இசை வளர்த்தோர். 15
யாழ்ப்பாணம் ஆறுமுக .16 அவன் அத்திசையை...10 சோதி அணைந்துவிட்டது. 23 வாயின் முக்கியத்துவம்...15 இந்து இளைஞர் மாநாடு. 32
காக்கைச் சிறகினிலே.15
Indian Civilization, Hinduism.....44
இரு மொழி பேசுதல் .4
தமிழ் இனத்தின் பரம்பலும். 53 வருவாய் இறைவா .81
இசைக்கலை . 64
Proudy sponsored by University of Sydney UNION

Page 3
αδρυύαου
துை 2001
ஆத்மீக இளைஞர்
இளைஞர் என்றால் யார்? இளம் வயது ஆண்களும்
பெண்களும். இதுவா இளைஞர்களுக்கு வரைவிலக்கணம்?
இளைஞர் என்றால் பொதுவாக
பலரும் நினைத்துப் பார்ப்பது: இளம் வயதுள்ள, துடுப்பான, அறிவு,
அனுபவம் குறைந்த, தலை முடி தானாக உதிராத, நரை தட்டாத, பிரமச்சாரி.
இவ்வளவு தனி மைகளும்
காணக்கூடிய வயது எல்லைதான் என்ன? அல்லது இளம் வயதின் வரம்புதான் என்ன?
20 ougaig, apst (teenagers)? அல்லது 25 வயதிற்கு உட்பட்டவர்களா?
அப்படி ஒரு வயது வரம்புதான் உண்டா? இதற்கு பதில் தேடலில் சளைத்த பலர், தமக்கேற்ற ஒரு வயது வரம்பை வைத்துக் கொள்கிறார்கள். அது பிழை என்பவர்களுக்குச் எது சரியான வயது என்பதற்கு விளக்கம் தெரிவதில்லை.
வேறு சிலரின் கருத்துப்படி:
இளைஞர்கள் என்றால் இளமைத் துடிப்பும், மனதில் இளமையான எணி னங்களும் உள்ளவர்கள்
என்பார்கள். அது எப்படி சரியாகும்?
குழந்தை பிறந்ததிலிருந்து அது வளர்ந்து ஆளாகும் வரை வெவ்வேறு பருவங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அந்த வயதில், அல்லது வயதுப் பருவத்தில் ஒரு குழந்தை எந்த அளவிற்கு உடல், உள, மன வளர்ச்சி பெறும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப் படுகின்றனர். அப்படியான வளர்ச்சியை
அடையும் சிறுவர்கள் - சராசரி சிறுவர்கள் என்றும், குறைவாக அடைபவர் களர் , கூடுதலாக அடைபவர் களர் என்றும்
வகைப்படுத்தப்படுகின்றனர்.
இப்படியாக வளரும் சிறார்கள், தாம் வாழும் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். இதன்போது பாரம்பரியமாகப் பெற்றோராலி பிள்ளைகளுக்குக் கடத்தப்படும் தன்மைகள், வாழும் ஆழலுக்கேற்ற மனிதராக அவர்கள் வளர உதவியாக அமைகின்றன.
எமது தாயகம் தான் அந்தச் சூழலாக இருந்தது எம்மில் பலருக்கு. அங்கு நாம் எமக்காக, எமது குடும்பத்திற்காக, நண்பர்களுக்காக,
2 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

GO)5 2001
கலப்பை
எமது சமுதாயத்திற்காய் வாழ்ந்து வந்தோம் . எமக்காக எம்மை மேம்படுத்துவதற்காகப் பலரதும் அறிவுரைகளைப் பின்பற்றினோம். சமய சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டது. கோயிலுக்கு போவது பரீட்சையில் சித்தியடையவும், நாமி வேணர் டியவற்றை அடைவதற்காகவும், பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல், எம் மனதைத் துTயப் மைப்படுத்தவும், தேவையான போது மனதைச் சா நீதிப் படுத்தவும் பழகிக் கொணர் டோமி . வாழி கையை மேம்படுத்த இவை உதவின.
புலம்பெயர்ந்து வந்துவிட்ட நாமும், இங்கு பிறந்து, வளர்ந்து வருகின்ற இளைய சமுதாயம் வளம் பெற பலவற்றை செய்து வருகின்றோம். சமய வழியில் ஈடுபடச் G8Fuj u கோயிலி களைக் கட்டுகினிறோம் . பூசைகளை வைக் கரிணி றோம் . அவர்களை அழைத்துச் செல்கின்றோம். தமிழ்ச் கிறிஸ்தவ, கத்தோலிக்க மக்களும் தமிழ் ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகினி றன. இவ்வளவு இருந்தும் இங்கு வாழும் இளைஞர்களுக்கு இந்தச் சமய வழிபாடுகளிலி , அலி லது கொள்கைகளில் எவ்வளவு தூரம் ஈடுபாடு ஏற்படுகின்றது? மொழி, கலாசாரத்தில் ஏற்படாத விருப்பம் எப்படிச் சமயத்தில் ஏற்படும்? TRAC (Tradition Relegion Aspiration and Culture)
அவுஸ்திரேலியாவில் வாழும் மக்களில் (எல்லா இன மக்களையும்
உள்ளடக்கிய) எத்தனை சதவீதமான கிறீஸ்தவ, கத்தோலிக்க மக்கள் தத் தமது தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்?
ஏறக்குறைய 25 சதவீத மக்களே என்று ஒரு என்ற கணிப்பீடு கூறுகின்றது. அதிலும் அவர்களின் எத்தனை சதவீதமான இளைஞர்கள் அடங்குகின்றனர்? மிகவும் குறைவே. இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தேவாலயங்களுக்கு சென்று வழிபடும் தமிழ் இளைஞர்களும் , கோயில்களுக்குச் செல்லும் சைவ மக்களின்(குறிப்பாக இளைஞர்களின்) எணர்னிக் கையுமி , சதவீதமும் கணிசமானது என்றே கூறலாம். தமிழ் இளைஞர்களிடையே கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம், சமய கொள்கைளைப் பின் பற்றுதலி (உதாரணமாக மச்சமாமிசம் தவிர்த்தல், விரதமிருத்தல்) போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இவற்றுக்கான புள்ளிவிபரங்கள் எதுவும் எம்மிடம் இல்லை என்பது ஒரு குறையே.
இன்று கோயிலி களர் மட்டுமல்லாது, பகவான் சத்திய சாய் பாபா, சுவாமி ராமகிருஸ்னர், கிருஸ்ணமூர் திதி, மாதாச்சி போன்றோர் வழியில் தமது வாழ்க்கை மேம்படுத்திச் செல்லும் மக்களும் கணிசமாக உள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்தே தமது சமய வழிபாட்டுக்களில் ஈடுபடுபவர்களும் இருக் கதி தானி செய் கினி றனர். இத்துடன் யோகாப்பியாசம், தியானம் (meditation), மனதைக்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 3

Page 4
கலப்பை
கட்டுப் படுத்தும் மற்ற செயலி முறைகளினாலும் இன்று குறிப்பாக இளைஞர்கள் பலர் பயன் பெற்று வருகின்றனர்.
இப்படியெல்லாம் பார்க்கும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இளைஞர்கள் கூடிய(சதவீத) அளவில் சமய, தியான, செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தோன்றுகின்றது. பொதுவாக மக்கள் தமிமை இப் படியான சமயத்திலி சம்பந்தமாக்கிக் கொள்வது, எமது வாழிக் கையின் பிற் காலப் பகுதியிலேயே. அல்லது எமக்கு ஒரு கஸ்டம் ஏற்படும் போது தான் கடவுளே! கண்திறக்க மாட்டாயா? என்று வேணி டுகினி றோம் . அப்பொழுதுகூட பலரது அகக்கண்கள் திறக்க மறுக்கின்றன.
அணி மைக் காலத்தில் சில இளைஞர்கள் ğb LDğ5 5F 85 இளைஞர்களை சமய வழியிலி நல வழிகாட்ட முனைந்து வருகின்றனர். அதில் சிட்னியில் TRAC (Tradition Religion Aspiration and Culture) என்ற அமைப்பும், இன்று சிட்னி முருகன் கோயிலைச் சார்ந்த இளைஞர் வட்டமும் குறிப்பிடத்தக்கன. இளைஞர்களே எமது நாளைய சமுதாயம் . அவர்களை ஊக்கப்படுத்தி, சமய கொள்கைகளில் தெளிவுபடுத்தி, எமது சமயத்தின்
தை 2001
சிறப்புக்களைத் தெரியப்படுத்தி, ஒரு வளமான சமுதாயத்துக்கு வித்திட வேணி டியது மூத்த தமிழ் ச் சமுதாயத்தின் முக்கிய கடமையாகும்.
இப்படி முன்னிற்கும் இளைஞர்கள் வெறுமனே கோயில், குளம் என்று தமது நேரத்தையும் சிரத்தையையும் ஒதுக் கிவிடாமலி , எமது சமுதாயத்திற்கு வழிகாட்டக்கூடிய பல முயற்சிகளிலி ஈடுபடவேணி டும் . கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் ஒழுங்கு செய்வதிலி மட்டுமி நின்றுவிடாது, தாம் கற்ற துறைகளில் பெற்ற அனுபவங்களையும் எமது சமய, ஆத்மீக வாழ்விற்கு பயன்தரும் வழியில் பயன்படுத்தவேண்டும். எமது மொழி, சமய விடயங்களை மற்றை
மொழி, சமயங்களினி புள்ளி விபரங்கங்களுடன் ஒப்பீடு செயப் யக் கூடிய வகையில
ஆராய்ச்சிகள், கணிப்பீடுகள் செய்து புள்ளி விபரங்களைத் திரட்டவேண்டும். அவ்வாறு பெறப்படும் புள்ளி விபரங்களே எமது மொழி, சமய, கலாசாரத்தின் எதிர் காலதி தை காட்டக்கூடிய கண்ணாடி மட்டுமல்ல, அவற்றை அடிப்படையாகக் கொண்டே வருங்கால சந்ததியினருக்கு எமது மொழி, மதம், கலாசாரம் என்பவற்றில் நல்ல அடித்தளத்தை அமைக்கலாம் என்பதும் எமது கருத்து.
- ஆசிரியர்
One's religion is whatever he is most interested in.
James M. Barrie
4. சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
கிதாகரன்
இை றவன சிந்தனை இனிமையானது. ஒரு காதலன்/ காதலி தன் காதலியை / காதலனை நினைவு செய்யும்போது ஒருவித மகிழ்ச்சியை அனுபவிக்கின்றான் /ள். இது ஒரு எல்லைக்கு உட்பட்டது. அதாவது. இது சிற்றின்பம். அதேபோல், ஒரு பக்தன் இறைவளை நினைவு செய்யும் போது ஒருவித இனிமையை, மகிழ்ச்சியை அனுபவிக்கின்றான். இதுவே பேரானந்தம் - பேரின்பம். இது எல்லையற்றது.
இறைவன் சிந்தனையின் முக்கியத்துவத்தைப்பற்றி பலர் பலவகையில் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், இது நமது வாழ்க்கையில் இன்றியமையாதது ஒன்றாகும். நமக்கு ஏதாவதொன்று நடந்து விட்டால் நாம் உடனே கடவுளே! என அவரை அழைக்கின்றோம். ஏனெனில், நாம் எந்த நிலையில் இருப்பினும், எங்கு இருப்பினும் இறுதியாக எமக்கு உதவக்கூடியவர் கடவுள் ஒருவரே. தெய்வ சிந்தனையானது ஆத்மாக்களாகிய எங்களையும், எங்கள் எண்ணம், சொல், செயல் போன்றவற்றைத் தூய்மைப்படுத்த வல்லது. இதன்மூலம் நாம் பிறவி பிறவியாக எம்மையறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டு மிகவும் இலேசாக, தூய்மையாக ஆகின்றோம். இதன்மூலம் எமது மனோபலம் மற்றும் வாக்குப்பலம் என்பனவும் அதிகரிக்கின்றன. சிலர் கூறுவதுண்டு, நாம் எதைக் கூட நினைக் கிறோமோ அவ்வாறே நாம் ஆகிவிடுவோம் என்று. அதேபோல், எல்லாம் வல்ல
Bastaf
இறைவனை நினைக்க நினைக்க அவரின் தெய்வீக குணங்கள் எங்கள் குணங்களாகின்றன. இறைவனின் தெய்வீக குணங்கள் எண்ணில் அடங்காதவை. அவர் அன்புக் கடல்: அறிவுக் கடல்: அமைதிக் கடல்: ஆனந்தக் கடல் என இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். இத்தகைய குணங்களை ஒரு மனிதன் கொணடிருப்பானாயினி அவனினி பேரானந்தத்திற்கு அளவேயில்லை. அப்போது அவன் ஒரு தேவனாகப் போற்றப்
படுவானி , இதையே திருமூலர் குறிப்பிடுகிறார்:-
சிவ சிவ எண்கிலர் தீவினையானர்
சிவ சிவ ിഖ
சிவ சிவ சிவ
என்றிடத் தீவினை மாளும்
எண்றிடத் தேவருமாவர் என்றிடச் சிவகதிதானே /
சிவனின் நினைவால் நமது தீவினைகளான பாவங்களிருந்து விலக்கு அளிக்கப்படுவது மட்டுமல்லாமல் நாம் சிவகதியைப்பெற்றுத்தேவனாகும் பாக்கியமும் எமக்குக் கிடைக் குமென அவர் குறிப்பிடுகின்றார். இறைவனே கீதையில் கூறுகிறார், “என்னையே நினைவு கொள்ளுங்கள். உங்கள் சகல பாவங்களிருநீதுமீ விடுதலை அளிக்கிறேன்” என்று. பலர் காசி, இராமேஸ்வரம் போன்ற புணிணிய ஸ்தலங்களுக்குச் செல்வதாலும், புனித நதியாகக் கருதப்படும் கங்கையில் நீராடுவதாலும், தான தருமங்களைச் செய்வதாலும் தமது பாவங்கள் தீருமெனக்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 5

Page 5
தை 2001
கலப்பை
கருதுகின்றனர். ஆனால் உண்மையில் சிவன் என்பதேயாகும். இவர் சகல இவற்றைச் செய்வதால் எமது அண்டங்களையும் கடந்துள்ள பரலோகத்தில் கர்மவினைகள் சற்றும் வசிக்கின்றார். இதனையே பெளத்தர்கள் குறைவடைந்துவிடா. ஆனாலும், நிர்வாண உலகம் என அழைப்பர்.
தானதருமங்கள் செய்வதால் அதற்கேற்ப நற்பலன்களை இப்பிறவியிலோ அல்லது அடுத்த பிறவிகளிலோ கணிடிப்பாகப் பெறுவீர்கள்: இது உறுதி! எனவே இறைவன் சிந்தனை ஒன்றே எமது பாவ, கர்ம வினைகளைத் தீர்க்கும் ஒரே கருவியாகும்.
எனவே, நாம் இப்போது எவ்வாறு இறைவனை நினைவு செய்யலாம் எனப் பார்ப்போம். இதற்கு முதலில் கடவுள் யார் என நாம் தெளிவுபெறவேண்டும். பலர் கடவுளை சிவன், அல்லா. ஜெகோவா, பரமபிதா, எனப் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றார்கள். பெயர்கள் பலவாக இருந்தாலும் இறைவன் ஒருவரே! உதாரணமாக, ஒரு குடும்பத்தலைவன் தன் மனைவிக்குக் கணவனாகவுமி, பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், தன் பெற்றாருக்கு மகனாகவும், தனது சகோதரங்களுக்கு சகோதரனாகவும், நண பர்களுக்கு சிநேகிதனாகவும் இருக்கின்றான். இருந்தும் அவன் ஒருவனே இத்தகைய உறவுமுறைகளைக் கொண்டிருக்கிறான். அதேபோல, கடவுள் பல பெயர்களைக் கொண்டிருந்தாலும் அவர் ஒருவரேயாவர். அவர் உடலற்றவர், ஏனெனில் மனிதரைப்போன்று அவர் பிறப்பு, இறப்பு எனும் சுற்றுவட்டத்தில் சுழல்வதில்லை. அவரின் ஒரே உருவம் பிரகாசமான ஒரு சோதிவடிவமே. இதனாலேயே இறைவனைப் பரம்சோதி, அருட்பெரும் சோதி என அழைப்பர். அவருக்குப் பல பெயர்கள் வழங்கப்படினும் அவரின் ஒரு நிஜப்பெயர் பரம்பொருள்
ஏனெனில் அங்கே ஒன்றுமே இல்லை. வெறும் பிரகாசமான, ஒளிநிறைந்த, அமைதிநிறைந்த உலகம். இதையே ஆத்மலோகம் எனவும் அழைப்பர். இங்கிருந்தே ஆத்மாக்களாகிய நாம் இவ்வுலகம் எனும் நாடகமேடையில் எமது பாவங்களை நடிப்பதற்காக வந்துள்ளோம். இறுதியாக நாம் செல்லவேண்டிய இடமும் இதுதான். இதுவே எமது உண்மையான ഖ് . இவர் ஒருவரே எமது உண்மையான தந்தை. இதனாலேயே நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என அழைக்கப்படுகிறோம்.
அடுத்து, நாம் இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் எனக் கூறுகின்றோம். இதுவே நாம் செய்யும் மிகப்பெரிய தவறு இறைவனி எலி ல உயிர்களிலும் இருப்பாராயின் எல்லா உயிரினங்களும் தெய்வீகத் தனிமை வாய் நீததாக இருக்க வேணடும். ஆனால் பெரும் பாண்மையான உயிரினங்கள் வணி முறையிலி ஈடுபட்டுக் கொணடிருக்கின்றன. இதிலிருந்து இறைவன் எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்து இல்லை என்பது தெளிவாகின்றது. அப்படியாயினி, இறைவனி எங்கும் நிறைந்துள்ளார் எனும் கருத்து ஏன் இங்கு நிலைபெற்றிருக்கின்றது? கீதையில், இறைவன் கூறுகிறார், அதாவது, நாம் இறைவனில தீராத அனி பைக் கொண்டிருந்தாலும் அவர் நினைவில் தினமும் திளைத்திருந்தாலும் பின் நாம் பார்க்கும் இடமெல்லாம் இறைவன்
தென்படுவார். இந்த நிலையிலிருப்பனிடம்
6 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
aѣжійари
சென்று கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால், அவன் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்றுதான் பதில் கூறுவான். அவனைப் பொறுத்தவரை அது உண்மை. ஏனெனில், அது அவனின் தெய்வத்தின் மீதான அன்பின் அடையாளம். இவ்வாறு சிவயோகிகள் தங்கள் இறையனுபவத்தை வெளியே கூற, அப்பாவி மக்கள் உண்மையிலேயே கடவுள் எங்கும் நிறைந்துள்ளார் என நம்பிவிட்டனர். உண்மையில் இறைவன் ஒருவரே அவர் எங்கும் வசிப்பதில்லை. அவரின் ஒரே உறைவிடம் பரந்தாமமே அவரை அன்போடு நினைப்பவர்களுக்கு அவர் எங்கும் எந்த நிலையிலும் காட்சியளிப்பார். அதுமட்டுமன்றி, அவர்களின் தீவினைகள் முற்றாக நீங்கி பேரானந்த நிலையையும் அனுபவிப்பர்.
இத்தகைய இனிமை நிறைந்த இறைவனின் தொடர்பை நாம் எவ்வாறு பெறுவது? அதற்கு மிக இலகுவான வழி, அவர் நினைவில் ஆழ்ந்திருப்பதே அதற்கு முதலில் நாம் எம்மைத் தயார்செய்து கொள்ளவேண்டும். உதாரணமாக, இரு காந்தங்கள் ஒன்றிணைய வேண்டுமாயின் அவை இரண்டும் கவரும் சக்தி கொண்ட பக்கம் திருப்பப்படவேண்டும். அதேபோல் நாமும் இறைவனாலி கவரப்பட வேணி டுமாயினி அந்த கவரப்படும் தன்மைக்கு நாம் வரவேண்டும். அதாவது, இறைவன் ஒளிரூபம் கொண்டவரென நாம் முன்பு பார்தீ தோம். அதேபோல், இறைவனால் ஈர்க்கப்படுவதற்கு நாமும் எமது ஒளிநிலைக்கு வரவேண்டும். அதாவது, எமது உண்மையான நிலையான ஆத மந7லைக'கு (ஒளிநிலைக்கு) வரவேணடும். நாம் அனைவரும் ஆத்மாக்கள். (இதுபற்றிய விளக்கம்
முன்னைய இதழில் தியானமும் பயனும் என்ற ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
எவ்வாறு இந்த நிலைக்கு வருவது? இந்த உடம்புபற்றிய எண்ணத்தை ஒரு சில நிமி த்திற்கு மறந்துவிடுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாக, ஒளியாக, உங்கள் நெற்றியின் நடுவில் பிரகாசிப்பதாக மனதில் எண்ணுங்கள். இந்த நினைவில் இருக்கும்போது ஒரு அமைதியை, ஆனந்த தீதை, ஒரு இலகுதன்மையை உணர்வீர்கள். இதே நேரத்தில் இறைவனையும் ஓர் புள்ளிவடிவமாக உங்கள் முன் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்நிலையில், இறைவனின் தெய்வீக குணங்களையும், சிறப்பியல்புகளையும் நினைவில் கொண்டு அவற்றில் நீங்கள் மெய்மறந்து இருப்பதாக உணருங்கள். உதாரணமாக இறைவன் அண்பே உருவானவர் அவரின் அண்னுெம் ஜோதிக்கதிர் என்னுள் விழுகின்றது. நான் எலலையற்ற ஆனந்தததை அனுபவிக்கின்றேன் என்று நினையுங்கள். இதுபோல், பல நேர்முக சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டு அந்தச் சிந்தனையில் மூழ்கியிருங்கள். குறைந்தது ஒரு 10 நிமிடமாவது இந்த நிலையில் நீங்கள் இருந்தாலே எல்லையற்ற ஆனந்தத்தை, இனிமையை, இலகுதன்மையை நீங்கள் அனுபவிப்பீர்கள். இதற்கு ஊக்கமும், JEthios4th HikiLupth (courage, faith and determination) 9 outful DIT5Lis. மிகமுக்கியமாக, தொடர்ச்சியான பயிற்சி சிறந்த பலனைக் கொடுக்கும். இத்தகைய இறை
நட்பை இலகுவில் பெற்றுத் தருவதில் இராஜயோக தியானம் முதனிமை வகிக்கின்றது.
5; u is !
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 7

Page 6
abastapu. GOD 2001
திருமுறைகள விரும்பரிய பலனி தரும்
(திருச்சிற்றம்பலம் கேதீஸ்வரன் )
முன்னோர் மொழிந்த திருமுறைகளை பொன்னாகப் போற்றி ஓதி வருவோர்க்கு தண்ணாலே தொலையும் தீவினை யாவும்
இனினே இயம்புவர் ஈசனடியார்கள்
தீராப்பிணிகளும் தீவினைகளும் தீரவேண்டுமா? தரித்திரம் நீங்கித் தனமுடன் வாழவேண்டுமா? நாளும் கோளும் நல்லனவாக இருக்கவேணடுமா? அடுத்துவரும் ஆபத்துக்கள் அகலவேண்டும7? எடுத்த காரியம் நிறைவுபெற வேண்டுமா? விபூதி மந்திரங்கள் மகிமை அறியவேண்டுமா? பிறப்பு இறப்பு இனிமேல் அற்றுப்போக வேணடுமா?
உங்களுக்கு என்னதான் வேண்டுமோ, அவையெல்லாம் தரவல்ல கற்பக தருபோன்ற பொக்கிஷம் திருமுறைகள், தோத்திரங்கள், மந்திரங்களாகும். தமிழிலும் மந்திரங்கள் உண்டா என்று ஐயம் எழுந்தால், கலப்பையின் ஈராண்டுச் சிறப்பிதழைப் பாருங்கள். அதில் விளக்கம் தந்துள்ளோம். எமது நாயனமார்கள் அருளிய தேவாரங்கள், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் அருளிய தோத்திரங்கள், ஆண்டவனுக்கும் அம்பாளுக்குமுரிய ஆயிரமாயிரம் நாமங்கள் அனைத்தும் மிகுந்த மந்திரசக்தி உள்ளன என்பது சான்றோர் வாக்கு. பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.
இவையெல்லாம் ஆண்டவன் உள்நின்று உணர்த்த, அவனருள் வழிபட்டுப் பாடப்பெற்ற அருட்பாக்களாதலால் இவற்றிற்கு ஒரு தனிச் சக்தியுண்டு. எமது சமய குரவர்களும் இன்னும் அநேக மகான்களும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு தனித் திருப்பதிகத்தைப் பாடி, இறையருள் பெற்று, நிறைய அற்புதங்கள் ஆற்றியுள்ளனர். இவர்களது மகிமையையும் பக்தி வலிமையையும் உலகினருக்குக் காட்ட, உருத்திரனும் உமையாளும் மனித உருவம் தாங்கிவந்து பல அதிசயங்கள் காட்டியுள்ளனர்.
இத்திருமுறைகளையோ வேறு அருட்பாக்களையோ பாடமுன்னர், அவற்றின் பதிக வரலாறு, பாட்டின் கருத்து, உரிய பண் முதலியவற்றைச் சிறிதளவாவது தெரிந்துகொண்டு பாடினால், இப்பாடல்களில் ஒரு தனி ஈடுபாடு வரும், பக்தியும் நம்பிக்கையும் வளரும், கைமேற் பலனும் கண்டிப்பாகக் கிடைக்கும்.
இப்போது மேலே கூறப்பட்ட "தீராப் பிணிகளும் தீவினைகளும் தீரும்" வகையைப்
பார்ப்போம். இப்பாடல் முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தரால் வியாழக்குறிஞ்சி
எனும் பண்ணில் பாடப் பட்டது.
அவிவினைக் கிவ்வினையாம் என்று சொல்லு ம.தறிவீர் உய்வினை நாடாதிருப்புது உந்தமக்கு ஊனமணிறே7
8 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001 bøRSUMaDUM
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்து எம்மைத் தீணடப் பெற7 திருநீலகண்டம்
இப்பாடலால் நடந்த அற்புதத்தைக் காட்டிலும் இதில் பொதிந்து கிடக்கும் தத்துவத்தை நாம் அவசியம் ஊன்றிக் கவனிக்கவேணடும்.
பதிக வரலாறு: இந்தியாவில் சேலம் மாவட்டத்திற்கு அருகில், இன்று திருச்செங்காடு என்று அழைக்கப்படும், செங்குன்றுாருக்கு சம்பந்த சுவாமிகள் சென்றபோது ஒரு கடும் குளிர்ச்சுரம் அவ்வூர் மக்களை வாட்டி வருத்தியது. உடனே சம்பந்தர் இப்பாடலைக்கொண்ட திருநீலகண்ட திருப்பதிகம் பாடினார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அவர் திருநீலகண்டத்தின்மீது ஆணையிட்டபடியால் அவரது பக்தி வலிமையையும் பாடலின் சக்தி வலிமையையும் கண்ட பரம்பொருள் உடனே அச்சுரம் நீங்குமாறு அருள்புரிந்தார். இதையறிந்த அநேகள் இன்றும் இத்திருப்பதிகத்தைப் பாடிக் கொடிய நோய்களினின்றும் விடுபட்டு, தம் அனுபவத்தைக் கூறியுமுள்ளனர்.
L്ക് ഉ. 600 அவிவினைக்கு:- நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கு ஏற்ப, இவ்வினையாம் - இப்பிறவியில் நடக்கும் இன்பதுன்பமாகிய வினைப்பயன்கள் கிடைக்கின்றன. என்று சொல்லும் அதறிவீர் - என்பதைமட்டும் அறிந்துகொண்டிருக்கிறீர்கள். உவ்வினை நாடாதிருப்பது - அவ்வினையிலிருந்து உய்யும் வழியைத் தொடாதிருப்பது. உணர்தமக்கு ஊனமணிறே7 - உங்களுக்குக் குற்றம் அல்லவா? கைவினை செய்து -அடியார்களாகிய நாம் கையினாற் செய்யும் தொண்டுகளைச் செய்து எம்பிராணி கழல் போற்றுதும் - எம்பிரானுடைய திருவடிகளை வணங்குங்கள். செவ்வினை வந்து - முற்பிறவிகளிற் செய்த தீவினைகள் வந்து எமைத் தீணடப்பெற7 - எம்மைத் தீண்டமாட்டா. திருநீலகணிடம் - இதற்குத் திருநீலகண்டத்தின்மீது ஆணை
என்று திட்டவட்டமாகச் சத்தியம்பண்ணிக் கூறுகிறார்.
கர்மாவின் தத்துவத்தையும் (Theory of Kama), கீதையின் சாரத்தையும் ஒருங்கே சேர்த்து, வினை என முடியும் ஐந்து சொற்களைப் பாவித்து மிகச் சுருக்கமாகத் தந்திருக்கும் இப்பாடலைச் சிறிது ஊன்றிக் கவனிப்போமாக. இதிற் பொதிந்து கிடக்கும் கோட்பாடுகளை நாம் அறிந்துகொள்வது அவசியம். சாதாரணமாக நாம் கர்மா அல்லது கர்மம் என்ற பதம் தீவினைப்பயனை மட்டும்தான் குறிக்கிறது என்று கருதுகிறோம். அதுவுமன்றி, ஒருவன் கஷ்டங்கள் துன்பங்களை அனுபவிக்கும்போது அதன் காரணம் தெரியாது, அது அவனுடைய தலைவிதி அல்லது தலை எழுத்து என்கிறோம். இதே போன்று, நல்ல நிலையில் இருந்தால், அல்லது ஏதும் நன்மை வந்து சேரும்போது, அது அவனுடைய அதிர்ஷ்டம் என்கிறோம். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் வினைப்பயன் என ஒன்றுண்டு என்பதைத் தெரியாமல், அறியாமையால் இப்பிழையை விடுகிறோம். எந்தப் பிறவியிலும் நன்மை செய்தவன் அதன் பயனை அனுபவிக்கிறான். தீமை செய்தவன் தீவினைப்பயனை அனுபவிக்கிறான். இதை நாம் நன்றாக அறிந்துகொண்டோமாகில் வாழ்வில் எவ்வளவோ முன்னேற்றம் அடையலாம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 9

Page 7
கலப்பை தை 2001
கடவுள்தான் தண்டனை விதிக்கிறார் என்று கூறி ஆண்டவன்மீது பழி சுமத்தும் மடைமைத்தனம் எம்மைவிட்டு ஓடிவிடும். நாம் கஷ்டப்படும்போது வீனில் துயரப்படாது, இது எம் முன்னைய தீவினையின் பயன் என அறிந்து, ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தனை செய்து நல்ல வழியில் செயற்பட்டு நன்மைகளைத் தேட முயல்வோம். பயனை எதிர்பாராது தொண்டுகளைச் செய்வதே நல்ல வழியாகும். ஒரு விதையை எடுத்து ஒரு பானை மணிணால் மூடிவிட்டால் அது முளைக்கமுடியாது இருப்பதைப்போன்று நல்ல கர்மபலன்களை நிறையச் செய்து, தீய கர்மபலன்களின் விளைவைக் குறைக்கவும், சிலவேளைகளில் முற்றாக நீக்கவும் முடியும். இதையே சம்பந்தர் கைவினைசெய்து எம்பிரான் கழல் போற்றுதும் என்று கூறி, அப்படிச் செய்தால் கட்டாயம் செய்வினை வந்து எம்மைத் தீண்டமாட்டாது என்று உறுதி கூறுகிறார்.
இனிமேல், இரண்டாவதாகத் தரப்பட்ட தரித்திரம் நீங்கித் தனமுடன் வாழும் வழியைப்பற்றிச் சிந்திப்போம். ஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறையில், காந்தாரபஞ்சம பண்ணில், பாடிய இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உனதடி தொழுதெழுவேன் என்று துவங்கும் பாடலை எடுப்போம். இப்பாடல் அநேகருக்குத் தெரிந்திருக்குமாதலால் பாடலின் விபரம் பதவுரையையும் தவிர்த்து, பதிக வரலாற்றைமட்டும்
பார்ப்போம்.
சம்பந்தநாயனாரின் தந்தை ஒரு வேள்வி செய்யப் பணம் இல்லையே என்று கவலைப்பட்டபோது, சம்பந்தர் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் கடவுளைப் பிராத்தித்து, பக்தியுடன் ஆவடுதுறை அரனே! நிதி வேண்டுவோர்க்குக் கொடுப்பதற்சு ஒன்றுமில்லையேல், நீர் எம்மை ஆளும் வகை இதுதானோ? உமது அருள் இதுதானோ என்று வினாவி இப்பாடலை முதலாகக் கொண்ட விலையுடை அருந்தமிழ் மாலை எனப் போற்றப்பட்ட திருப்பதிகம் பாடி அருளினார். உடனே இறையருளால் ஆயிரம் பசும்பொற் காசுகள் கொண்ட பொற்கிழி கிடைக்கப்பெற்றார். அதைத் தந்தையிடம் கொடுத்து, உமது வேள்விக்கு மட்டுமல்லாது சீர்காழியில் வாழும் வேதியர் அனைவ ருக்கும் வேள்வி செய்யவும், வளரும் என்றார். எடுக்க எடுக்கக் குறையாத உலாவாகக் கிழியைத் தந்த இப்பதிகத்தை இன்னும் பலர் பாராயணம் செய்து அதற்குரிய பலனைப்பெற்று வருகின்றார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
இதற்குச் சான்றாக இருபதாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு தருகிறோம். இதன் முழு விபரம் கலப்பையின் ஆறாவது ஆண்டு மலரில் திரு பாலசுப்பிரமணிய ஐயர் நாகலிங்கப் பரதேகியா ரைப்பற்றி எழுதிய கட்டுரையில் காணலாம். பாசுரங்களைப் பண்ணோடு பக்தியைக் கலந்து பாடும் பரதேசி நாகலிங்கம் என்பவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானகுரவர். இவர் யோகசுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார். உடனே சுவாமிகள் எழுந்துவந்து இவரை வரவேற்று, தன்னுடைய இருக்கையிலே இருத்தி, இடரினும் தளரினும் எனும் பாடலைப் பாடும்படி பணித்தார். பாடல் முடிந்தவுடன், குருநாதர் யோகசுவாமி, தன்னைத் தரிசிக்க வந்த ஒரு தம்பதிகளின் தாம்பாளத்திலிருந்த ஒரு பட்டுப் பையை எடுத்துப் பரதேசியாரிடம் கொடுத்து, அன்று சம்பந்த சுவாமிகள்
10 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001
கலப்பை
இதே பாடலைப் பாடிப் பொற்கிழி பெற்றார்.
இன்று உமது பாடலைக் கேட்ட
தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்து பெற்கிழி அளித்துள்ளார்கள் எனக்கூறி அந்தப் பையைக்
கவிழ்த்துக் கொட்டினார். இதுவே அக்கட்டுரையின் சுருக்கம்.
அதிலிருந்து நூறு தங்க நாணயங்கள் சிந்திப் பறந்தன.
குருநாதர் பையுறை கொட்டிப் பொன் மழை பொழிந்தார் பரதேசியார் பணனுடன் பாடிக் கனமழை பொழிந்தார்: அருமறை கேட்ட அனைவரும் ஆனந்தமடைந்து திருமுறை தித்திக்க ஓதிய எவரும் திவ்விய பயனடைவர்/
திருவருள் கைகூட்டும்போது வேறு சில தேவாரங்களைப் பற்றிய விபரங்கள் தொடரும். 3 Lu Liñ !
சேக்கிழார் பெருமான்
இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரும் பெரியபுராணத்தை நமக்கு அருஞ்செல்வமாகத் தந்த தெய்வப்புலவர் அருணி மொழித் தேவர்தானி, சேக் கிழார் பெருமாணி. குன்றத்துTர் எனும் பதியில் உழவர் உலகத்திற்கு ஆணி. “உழுதுணிடு வாழ்வாரே வாழ்வார்’ என்ற பொய்யாமொழிப் புலவரின் வாய்மொழிக் கேற்ப வாழ்ந்துகாட்டும் வேளாளளர் குலத்தில் தெய்வபக்தி நிறைந்த பெற்றோர் செய்த அருந்தவப் பயனால் அவதரித்தவர்தான் சேக்கிழார். இவருடைய இயற்பெயர் அருணி மொழி இராமதேவர் என்பதாம். சேக் கிழார் குடிவிளங்க, குலம் விளங்க வாழ்ந்தபடியால் அவரைச் சேக்கிழார் என்ற குடிப்பெயரால் அழைத்தனர்.
அநபாய குலேத்துங்கசோழன் அறிவு, வீரம், பண்பு, பாசம் கொண்டவனாக நல்ல முறையில் சோழநாட்டை ஆணிடுவந்தான். மக்கள் நிறைவுடன் வாழ்ந்தனர். இம்மன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழாரின் தந்தையார் அரசவைக்குச் செல்லும் போதெல்லாம் மகனையும் கூட்டிச்செல்வார். சேக்கிழார் இளமை அழகுடன் நல்லொழுக்கம், சிறந்த அரசியல் ஆற்றல், செந்தமிழ் புலமை, நாவன்மை பெற்று விளங்கினார். அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான் என்ற மூதுரைக்கு ஏற்ப மன்னனி அநபாயண்
சகலகலாவல்லவரான சேக்கிழாரைத் தன் முதலமைச்சராக ஆக்கிக்கொண்டான்.
அரசன் அளித்த பொறுப்பினை ஆட்சிநெறி தவறாது திறம்படச் செயலாற்றினார். அவரின் திறமையைப் புகழ்ந்த மன்னன் செங்கோல் ஒச்சும் தலைமையையும் உத்தமசோழ புலவர் என்ற பட்டத்தையும் அளித்து அவரைக் கெளரவித்தான்.
சேக்கிழார் மருளெல்லாம்கொண்ட மனதை மாற்றி அருளெல்லாம் திரண்டெழச்செய்யும் சிவபிரானிடம் எல்லையில்லா அன்புகொண்டு சித்தத்தைச் சிவன் சேவடிக்கே அர்ப்பணித்து ஆலயத் திருப்பணிகள் பல புரிந்து சைவ சன்மார்க்க பாதையில் மேம்பட்டுவிளங்க, நேர்மாறாக, சிங்காசனத்தில் கொலு இருந்த மணி னணி அநபாயனோ சிற்றினி பத்தில் காலத்தைக் கழித்தான். திருத்தக்கதேவர் எழுதிய காமச் சுவை நிரம்பிய சீவகசிந்தாமணியைக் கற்றும் கேட்டும் தேன் குடித்த வண்டுபோலானான். வாள் எடுத்துப் போர் புரிந்த வீரன் சதா இண்பப் போதையில் கோழையாகிக் கிடந்தான். மன்னனின் நிலைகண்டு மனம் கலங்கினார் மந்திரியார்.
சமண நூலிகளும் கொள்கைகளும்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 11

Page 8
கலப்பை
தமிழ்நாட்டில் வேரூன்றிவிடுமோ என அச்சம் கொண்டார். சீவக சிந்தாமணி தமிழ் நூல், இன்பச்சுவை மிக்க காவியம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் எனினும் இம்மைக்கும் மறுமைக்கும் வீடுபேற்றுக்கும் ஒவ்வாத ஒரு கதையாகும் என்பதைச் சேக்கிழார் நன்கு அறிந்திருந்தார். அமைச்சரின் கடமையைக் கடைப்பித்தார்.
சிவநெறியின் கோட்பாடுகளையும் சமணத்தின் குறைபாடுகளையும் மன்னனிடம் எடுத்துக்கூறி நல்வழிப் படுத்த எண்ணியவர், “வேந்தே/ சைவம் தழைக்கச் சிவநூலிகளைக் கற்றும் கேட்டும் சண்மார்க்க நெறிவழுவது வழிந்து வந்தீர். இப்போது சில நாட்களாக உணமைக்குப் புறம்பான நூலிகளைப் படித்து வீணாகக் காலத்தைக் கழிப்பது ஏனோ? நல்ல கறவைப்பசு இருக்க மலட்டுப்பகவினிடம் பாலை எதிர்பார்ப்பது போலலிலவா இருக்கிறது உந/கன செயல’ எனக் கேட்டார். ‘அமைச்சரே/ எதறகு உவமான உவமேயங்கள்?’ என மன்னன் கேட்டதற்கு, “அரசே! இம்மை, மறுமை, வீடு ஆகிய மும்மைக்கும் நணர்மை பயக்கும் சிவ கதைகளைப் படியுங்கள். சீவகசிந்தாமணி போனற காமஇச்சை கொணட சமணக் கதைகளைப் படிப்பதால் கேட்பதால் ஒருவித பயனுமில்லை’ எனப் பதில் தந்தார்.
“அப்படியா அமைச்சரே மும்மைக்கும் பயணி தரக்கூடிய சிவகதைகள் எண்பது எண்ன? அத்தகைய நூலிகளைக் கற்றறிந்தவர் யார்? தொணறுதொட'டுச் சொலீலப்பட்டதா? அப்பெருமைமிக்க கதைகளுக்கு நூலிகள் உணடா? அவற்றை ஆக்கித் தந்தவர்கள் யார்? விளக்கம் தரமுடியுமா?’ என, பெருமதிப்பும் அன்பும் தான்வைத்திருந்த, சேக்கிழாரிடம் தனது பிழையை ஒருவாறு உணர்ந்து, திருந்திய உள்ளத்துடன், கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் அரசன்.
மன்னனின் கேள்விகள் மந்திரியாரின் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கியது: உடல் புல்லரித்தது. “அரசே! திருவாரூரிலே நடனம்
செய்யும் தியாகேசப்பெருமான சைவசமயக்
0, 2001
குரவர்களில் ஒருவரான சுந்தரருககு திலி லைவாழி அந்தணர் தமி எனறு அடியெடுத்துக் கொடுக்க, அவர் பதினொரு பாக்களால் திருத்தொணடர் தொகையைப் பாடியுருவினார். இதை ஆதாரமாகக்கொணடு பொல லாடர்பினனையார் பொருள கூற, நமீபியாணடார் நமீபி திருத தொணடர் தொகையை முதலீநூ7லாக ககொணடு திருததொணடர்களினி தொணடுகளையும்
அவர்கள பெற்ற பேறுகளையும் திருஅந்தாதியாலி வெளிப்படுத்தி விரித்தரு வினார். அத'த7ரு வநதாத7யைச்
செப்பேடுசெய்து திருக்கோயிலில் பத்திரப்படுத்தி 60 & 6/4 Louisala 2 - 60760 Lo Greafoodu உலகத்திற்கு உணர்த்தினான இராசராச சேமுண். அம்மணிண்ணி வழிவந்த தாங்கள் அச்சிவகதைகளை எப்படியும் உலகோர் அறியச்செய்து சமயத்தை நிலைபெறச் செய்ய வேணடும” என விநயமாக வேண்டிக்கொண்டார்.
மனனனுக்கோ அக் கணமே அத்திருக்கதைகளைக் கேட்கவேண்டுமென்ற பேரவா எழுந்தது. சேக்கிழாரிடம் அவற்றை உடனேயே விளக்கமாகவும் விரிவாகவும் கூறும்படி கேட்டான். ஆனந்தத்தில் திளைத்தவர், தில்லைவாழ் அந்தணர் முதல் திருநீலகணிட யாழ்ப்பாணர் வரையுள்ள திருத்தொண்டர் வரலாற்றை விரித்துரைத்தார். அவற்றைப் பொறுமையுடன் கேட்ட மன்னன் தன்னை மறந்தான். சிறப்பான சிவசமயம் இருக்க சமணத்தை நாட இருந்தோமே எனக் கலங்கினான். சிற்றின்பத்தைத் துறந்தான். பேரின்பத்தை நாடினான். “அமைச்சர் பெருமானே! மும்மைக்கும் பயணிதரும் திருத்தொணடர்களின் தூய சரிதங்களைக் காவியமாக்கித் தந்தருளவேணடும்” என வேண்டினான்.
அநபாய சோழனி மனங் குளிரப் பணித்ததைக் கேட்ட சேக்கிழார்பெருமான் ஈடுஇணையிலா இன்பம் கொணி டார். உணர்ச்சிப் பெருக்கால் பக்திப் பரவசமாகி நின்றார். இம்மகாகாவியத்தைப் பாடித் தந்தருளத் தேவையான பொன்னையும், பொருளையும், வசதிகளையும் அவருக்கு அளித்தான் மன்னன். சேக்கிழார் அவற்றுடன்
12 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
arbøMütapu
தில்லையை அடைந்தார்.
பாடுகின்ற சிவகணங்கள் எல்லாம் சுற்றி வலம்வந்து ஆட, நடுவில் ஆடுகின்ற அமீ பல தீத ரசனான ஆரா அமுதை , கோமேதகமணியைக் கோயிலினுள் கண்டார். வீழ்ந்து வணங்கினார். பக்திமேலிட, “ஜயனே! உமது திரு வடிநிழலிலே ஒனறிவிட்ட த7ருத'தொணடர்களது, பகத7மிகும வரலாற்றினைப் பாடிமுடிக்க அடியேனுக்கு அடியெடுத்துத் தந்தருள்வதுடன் காவியம் பாடும் த7றமையையும் சகதரியையும் தந்தருளவேணடும்” என இறைஞ்சினார். அப்பொழுது அங்கே ஒரு பேரொளி பிறந்தது. விண்வழியே உலகெலாம் என்ற அருள்ஞான அடியை யாவரும் கேட்கும் வணிணம் அடியார்க்கு முதலடியாக எடுத்துக் கொடுத்தார் தில்லையம்பலத்து ஆடலரசர் அரனார். இவ்வைந்தெழுத்து மந்திரத்தைக் கேட்ட சேக்கிழார்பெருமானின் அகமும் முகமும் மலர்ந்தன. பணிந்து வீழ்ந்து வணங்கினார்.
இறைவனருள் பெற்ற சேக் கிழார் பெருமானை திலி லைவாழி அந்தணர்கள் பரிவட்டமும், திருமாலையும், திருவெணிணிறும் அளித்து வாழ்த்திக் கெளரவித்தனர். சேக்கிழார் சமயகுரவர்களை மனதார வழிபட்டுத் திருத்தொணிடர் வரலாற்றினைப் பாட ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்தார்.
இறைவனார் எடுத்துக் கொடுத்த உலகெலாம் என்ற அடியை முதலாக வைத்து நம்பியாணி டார் நம்பி களின் திருத்தொணர்டுகளை திருவந்தாதியைக் கடைப்பிடித்து, தித்திக்கும் தேனமுதம்போல் பக்திச்சுவைப் பெருக்கோடு சுந்தரத் தமிழில் அடியார்களின் வரலாற்றினை நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்து மூன்று (4253)
திருப்பாடலிகளில் பாடினார். திருத தொண டர் புராண மீ எனினும் இப்பெரியபுராண காவியத்தைப் பக்திப் பெருக் கோடு பாடி முடித்தார்.
தில்லைக்கூத்தனின் திருக்கமலமலர்ப் பாதங்களில் சமர்ப்பித்து வழிபட்டு மகிழ்ந்தார். பிறவிப் பயனைப் பெற்றதாகப் பூரித்தார்.
தில்லையில் புராணத்தை இனிதே எழுதி முடித்தார் என்பதைக் கேள்வியுற்ற சோழமன்னணி தனி பரிவாரங்களுடன் தில்லைக்குப் புறப்பட்டான். மனினர் வருகையை முன்னதாகவே அறிந்த சேச்கிழார் அந்தணர்கள், மடத் தலைவர்களுடன் மணி னனை நகரின எலி லையிலேயே மரியாதையுடன் வரவேற்றார். சிவப்பழமாகத் தன்முன் நின்றவரை தன் அமைச்சராகவே கருதவில்லை: அருள்பெற்ற சிவனடியாராகவே நினைத்து வணங்கினான் அநபாய மன்னன். அனைவரும் ஆலயத்துள் வந்தனர்.
“அநபாயச் சோழ7/ உலகெலாம் என்று நாம அடியெடுத'துக கொடுக’க, திருத்தொணடர் வரலற்றைப் பெரியபுராணமாக சேக்கிழார் பாடியுள்ளாணி. அதனைக் கேட்டுப் பிறவிப் பயனைப் பெறு!’ என எழுந்த அசரீரி வாக கோடு கூதி தணிணி தணி டைச் சிலம்பொலியும் கூடவே பொன்னம்பலத்தில்
கேட்டது. எல்லோரும் இறைவனின் திருவருளைப் போற்றினர், சேக்கிழாரைப் புகழ்ந்தனர்.
செங் கோலணி உடனேயே
திருத்கொணர்டர்புராணத்தை அரங்கேற்றம் செய்வதற்கான ஒழுங்கு முறைகளைச் செய்யும்படி ஆணையிட்டான். ஆனந்தத் தாணிடவனுக்கு உகந்த பொன் நாளான சித்திரைத் திங்கள் திருவாதிரை நாளை அரங்கேற்ற நன்நாளாகக் குறிப்பிட்டான். திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்ததும் திருஞானப்பாலைப் பருகியதும் சித்திரைத் திருவாதிரை நாளே! புலவர்கள், சைவ மெய்யன்பர்கள், சிற்றரசர்கள் எனப் பலருக்கும் நாலாதரிசைகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன.
சித்திரைத் திருவாதிரை நாளன்று தில்லை எங்கும் வாழைமரம் தோரணங்களும், பூரணகும்பங்களும் காட்சியளித்தன. மங்கள வாத்தியங்கள் முழங்கின. வேதியர்களின் மந்திர ஓசையும், அடியார்கள் எழுப்பிய சிவ சிவ என்ற ஓசையும் இரணடறக் கலந்தன. தில்லைநகர் இந்திரலோக மோவெனக் காட்சியளித்தது.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 13

Page 9
கலப்பை
தை 2001
நல்ல நேரத்தில் தங்கப் பீடத்தின் மீது வைரக்கற்தட்டில் பசும்பட்டு விரித்து, மலர்தூவி, தூபம்காட்டி, திருத்தொண்டர் புராணத்தை வைத்தனர். அரசன் சேக்கிழார் திருவடி பணிநீது “தே வரிரே இத'த7ருத' தொணடத்தொகையைப் படித்து, பொருள் கூறி அருளவேணடும்’ என வேண்டிநின்றான்.
இலக்கிய வித தகரான சேக கிழார் நடராஜப் பெருமானை வணங்கிவிட்டு, திருத்தொண்டர்த்தொகையை விளக்கிப் பொருள்கூறினார். மூவர் தேவாரமும், திருமந்திரமும், காரைக்கால் அம்மையார் பாடியருளிய இரட்டை மணிமைைல அந்தாதி, மூத்தபதிகம் போன்ற திருப்பாடல்களும், சேரமான பெருமான நாயனாரினி பொன வணிணத தாதி போனிற அருட் பாடல்களுமி உறுப்பாகவும் , திருவிருத்தம் உடலாகவும், உட்பொருள் உயிராகவும் கொணர்டு, இடையிடையே பொருள் விரித்துக் கூறினார். தெய்வப் புலமைமிக்க சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் வரலாற்று விளக்கத்தைக் கேட்ட அனைவரும் பாலொடு பழம் பிழிந்து தேன் கலந்து உண்டாற்போன்ற சுவையைப் பெற்றனர். அவர் பாதம் பணிந்து வணங்கினர். திருத்தொண்டர்ப் புராணத்தை ஐந்தாவது வேதமெனப் போற்றினர்.
சோழமன்னனோ திருமுறையை வைத் திருநீத தட்டை பட்டாலி போர்த்தியெடுத்து, தன் பட்டத்து யானைமேல் வைத்தான். சேக்கிழார்பெருமானையும் யானைமேல் அமரச்செய்து தானும் அமர்ந்து, புரவலணி புலவனுக்கு களிப்புமேலிடக் கவரிவீசினான். இவ்வற்புதம் கணிட அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்தனர். ஆனந்தக்கணிணிர் சிந்தினர். அநபாயச் சோழமன்னனின் பெருந் தன்மையை வானளாவப் புகழ்ந்தனர். சமயக்குரவர் எல்லோரும் ஓர் வடிவாய், சேக்கிழாராக அவதரித்தனரோ என வியந்தனர். நாமகள் பூவை மறந்து, சங்கத்தமிழ் பாவை மறந்து, சேக்கிழார்பெருமானின் நாவில் குடிபுகுந்தனரோ
திருமுறையைச்
எனப் பேசியவர் ஏராளம், ஏராளம்
பட்டத்து யானைமீது பவனிவந்த மன்னனும் சேக்கிழார்பெருமானும் தில்லையம்பலத்தாரின் சந்நிதானத்தை அடைந்தனர். பெருமானார் பாடிய பெரியபுராணத்தைக் கனகசபையில் வைதீதான அரசன . அவருக் குதி தொண டர் சீர் பரவுவார் எனிற பட்டத்தையும் ஞானமுடியையும் சூட்டி சிந்தை குளிர்ந்தான். அவரது திருவடி பணிந்தான் அநபாயசோழன். வாழ்க! தொண்டர்சீர் பரவுவார் வாழ்க! என்ற கோஷம் விண்ணிலும் மண்ணிலும் எதிரொலித்தது.
திருவாதிரை நாளொன்றில் சேக்கிழார்பெருமான் அருளிச்செய்த திருத்தொண்டர்புராணத்தை நம்பியாண்டர் நம்பி அருளிச்செய்த பதினொரு திருமுறைகளுடன் சேர்த்துப் பன்னிரண்டாவது திருமுறையென ஆக்கினர் ஆணிறோர். இப்பணி னிரணடாவது செப்பேடு செய்து பொன்னம்பலத்தில் வைத்தனர். மன்னன் தலைநகரை அடைநீதானி. சேக் கிழார் பெருமானின சகோதரரான பாலநாவாயரை அமைச்சராகக்கொண்டு ஆட்சி செலுத்தி, சைவத்தை மேலும் மேலும் வளர்த்தானி . பாலநாவாயருக்குதி தொண்டைமான் என்ற பட்டத்தை அளித்தான். சைவத்தமிழ் வளர்த்த தரணிபுகழ் காவலன் அநபாயச்சோழன் பிறவிப் பயனைப்பெற்ற பேரின்பம் எய்தினான். பரமன் அருள்பெற்றுப் பல்லாண்டு பாரினில் வாழ்ந்தான்.
சேக்கிழார்பெருமான் தில்லையரசரின் பாதகமலங்களைப் போற்றிப் பணிந்து திருத்தொண்டுகள் பல புரிந்து சிவநூல்கள் தொகுத்தருளிய சிவனருட்செலவராக எம்பெருமான் திருவடிநீழலில் பேரின்பம் பெற்றார்.
சாந்தி/
- ராணி தங்கராசா ~
ஓம் சாந்தி/
4. சிட்னி
பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001 கலப்பை
ஈழத்தில் இசை வளர்த்தோர் கட்டுரை - 5
தவில் மேதை தட்சணாமூர்த்தி ( எழுதியவர் காலஞ்சென்ற கே. எஸ். பாலசுப்பிரமணிய ஐயர் )
ஈழத்தின் புகழை இசையுலகில் உயர்த்திய பெருமை வெகு சிலரையே சாரும். அத்தகைய சிறப்புப் பெற்றவர் தவில் வித்துவான் வி. தட்சணாமூர்த்தி. இணுவிலிலுள்ள பிரபல இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. தவில் வித்துவான்கள் சின்னராசா, நாச்சிமர் கோவிலடி கணேசபிள்ளை, நாதசுர வித்துவான்கள் இணுவில் உருத்திராபதி, இணுவில் கோதண்டபாணி, இணுவில் கோவிந்தசாமி, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன மிருதங்க வித்துவான் இணுவில் சண்முகம்பிள்ளை ஆகியோர் அவரின் நெருங்கிய உறவினர்.
தட்சணாமூர்த்தி சிறுவயதிலேயே மிகவும் நன்றாகத் தவில் வாசித்தார். பிரபல நாதசுர வித்துவான்கள் பலருக்கும் தவில் வாசித்தார். அவரது புகழ் தமிழ்நாட்டிலும் பரவியதன் பயனாக அங்குள்ள சிறந்த நாதசுர வித்துவான்களுக்குத் தவில் வாசித்து அவர்களாலும் தமிழ்நாட்டின் சிறந்த தவில் வித்துவான்களாலும் பாராட்டப்பெற்றார். தமிழ் நாட்டில் நடைபெறும் இசைவிழா வைபவங்கள், கோவில் உற்சவங்கள் ஆகியவற்றிலும் பங்குபற்றித் தன் லயத்திறமையை நிரூபித்துள்ளார். காலஞ்சென்ற நாதசுர வித்துவான்கள் திருவாவடுதுறை இராஜரத்தினம் காருக்குறிச்சி அருணாசலம் ஷேக் சின்னமெளலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், மதுரை சேதுராமன், நடராஜசுந்தரம் முதலிய தலையாய வித்துவான்களுக்கும் தவில் வாசித்துப் பெரும் புகழ்பெற்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரால் 1968ம் ஆண்டு கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்ட இசைவிழாவில் பங்குபற்றி அவ்விழாவினைச் சிறப்பித்தார். இலங்கை வானொலியில் நாதசுர வித்துவான் திருநாவுக்கரசு அவர்களின் இசைக்கச்சேரிகளுக்கு இவர் தவில் வாசித்து நேயர்களை மகிழ்வித்துள்ளார். “கடிகாரம் பிழைத்தாலும் தட்சணாமூர்த்தியின் லயம் பிழைக்காது’ என்று லயநுட்பம் தெரிந்தோர் இவரைப் பாராட்டுவர்.
இவ்வாறு பெரும்புகழ் பெற்ற தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்கள் சில காலம் நோய்வாய்ப்பட்டு, 13-5-1975 இல் இயற்கை எய்தியது இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 15

Page 10
கலப்பை
தை 2001
யாழ்ப்பானம் ஆறுமுக நாவலரின்
அடியொற்றி வருகின்ற நாவலர்கள்.
ஆறுமுக நாவலர் பெருமான யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து சைவமும் தமிழும் வளர்த்த காலம் இற்றைக்கு ஏறக் குறைய 175 ஆணிடுகளுக்கு முன்னதாகும். தமிழ் மொழியிலே பிரசங்கம் (சொற்பொழிவு) செய்யும் முறையை ஆரம்பித்து வைத்த பெரியார்களில் முன்னோடியாக விளங்கியவர் நாவலர் பெருமான். அவருக்குப் பின்னர் பலசைவப் பெரியார்கள் சொற்பொழிவாளர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் அவ்வழியே பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், ஆத்மசோதி ஆசிரியர் நா. முத்தையா அவர்கள் போன்றார் வாழ்ந்து மறைந்தார்கள். தற்காலத்தில் துர்க்ா துரந்தரி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் அவரைச்சார்ந்தவர்களும் நாலவர்வழிச் சென்று சைவமும் தமிழும் பேணிவருகிறார்கள். இவர்கள் அனைவரும் உலகளாவ வாழ்ந்து வரும் சைவத் தமிழர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். வாழையடி வாழையென வந்த இந்த மரபில் வந்தவர்தான் செஞ்சொற் செல்வன் ஆறு. திருமுருகன் அவர்கள். அவர் அவுஸ் தீதிரேலியாவில் பல சைவ சமயச் சொறி பொழிவுகளை நிகழ்த்தியவர். பலரது பாராட்டையும் பெற்ற இந்தச் சிறப்புச் சொற்பொழிவாளருடன் திரு. நா. மகேசன் நடத்திய செவ்வியை வாசகர்களுக்காகக் கீழே தருகிறோம்.
கேள்வி- திரு.ஆறு. திருமுருகன் அவர்களே நாணி இப்போதுதாணி முதன்முதலாக உங்களைச் சந்திக்கிறேன். நீங்கள் சமயச் சொற்பொழிவுகள் செய்வதில் மிகுந்த வல்லவராக இருக்கிறீர்கள். உங்களுடைய சில சொற்பொழிவுகளைக் கேட்டபின்தான் இப்படிச் சொல்கிறேன். இந்த ஆற்றலை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள் என்று நாம் அறியலாமா?
பதில் - எனது ஆற்றல் சிறப்பதற்குக் காரணம் , என னை வாழவைதீத கலிலுTரிகளும், எனது இனிய வழிகாட்டிகளும்தான். எனது ஆரம்ப கல்வி இராநாதன் அவர்களால் அமைக்கப்பட்ட மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் ஆரம்பமாகியது. பின் யாழ் இந்துக்கல்லூரி ஆரம்பப் பாடசாலையிலும், 1972 முதல் 1980 வரை எனது கல்லூரி வாழ்வு யாழ் இந்துக் கல்லூரியிலும் அமைந்தது. இக்காலத்தில் சைவத்தமிழ்ப் பாரம்பரியம் பேணும் இக்கல்லூரிகளின் தமிழ் வித்தகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கினார்கள். ஆரம்ப வகுப்பில் திருமதி அமிர்தவல்லி அம்மையார் மேடையில் ஏற்றினார். இந்துக்கல்லூரியில் ஆசிசியர் இ. தேவன் (தேவன் யாழ்ப்பாணம்) க. சிவராமலிங்கம், வித்துவான் சொக்கன், வித்துவான் ஆறுமுகம் பண்டிதர் தம்பையா போன்றவர்கள் எனது வழிகாட்டிகளாக விளங்கினர். எனது இணுவில் கிராமம் ஆன்மீக அரும்பூமி. அக்கிராமத்தின் சூழலும் இன்னும் என்னை ஆற்றுப்படுத்துகின்ற என் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி
16 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

6Ogb 2001
аљевери
தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது உரைகளும் சிறுவயதுமுதல் கேட்டு பேச்சுத்துறையில் உந்தப்பட்டேன். எனது பேச்சாற்றலை மேம்படுத்துவதில் கம்பன் கழகப் பிதாமகர் இ. ஜெயராஜ் அவர்களும் எனது வழிகாட்டியாக விளங்கினார். இவற்றுக்கு மேலாக இறைவனின் திருவுளம் என்னை இந்நிலைக்கு வர ஆட்படுத்தியது. இவ்வகையில் விளங்கும் யான் இன்னும் கற்றது கைம்மண் அளவு என்பதை என்பணியில் பூரணமாக விளங்கி கற்றுக்கொண்டு இருக்கும் மாணவன்தான்.
கேள்வி. நீங்கள் நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வநீதிருக்கிறீர்கள். உங்களது
வாழ்க்கையைச் சமயப் பணிக்காக நீங்கள் அர்ப்பணித்திருப்பதாக அறிகிறோம். அங்கே தற்போதுள்ள சைவசமய நிலையும், மக்களின் மனோநிலையும் எப்படி
இருக்கினறன என்று சற்று விளக்குவீர்களா?
பதில் - யாழ்ப்பாணத் தற்போதைய
சூழ்நிலையை வினவுகிறீர்கள். போரின் அனர்த்தங்களால் உடற் காயங்கள், உளத்தாக்கங்கள் என்பனவற்றோடும் எம் இனிய தேசத்தில் என்றும் வாழும் எம்மக்கள் நன்றிக்குரியவர்கள். குறிப்பாகச் சைவ மக்கள் இறைபக்தியைக் கைவிடவில்லை. எனினும் வறுமையின் அவல நிலையில் சிக்குண்டு அதனால் மதம் மாறுகின்றவர்களின் எண்ணிக்கையும் கடந்தகாலங்களில் அதிகரித்துள்ள உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். புனித திருக்கோயில்கள் பல போரில் அழிந்துள்ளன. மாவிட்டபுரம், நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் முதல் பல கோயில்கள் பெருத்த சேதமுற்றுள்ளன. புனித தீர்த்தமான கீரிமலையை மக்கள்
நித்தமும் தரிசிக் வாய்ப்பின்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேள்வி- அவுஸ்த்திரேலியாவிலே சிட்னி முருகன் கோயில் திருவிழாக் காலத்தில் நீங்கள் வந்து இந்தத் தலத்திலே சொற்பொழி செய்வது எமீ மெலி லோருக்கும் பெருமையைத் தருகிறது. இங்கே நீங்கள் பார்த்தமட்டில் சைவசமயத்தின் நிலை பற்றிய
உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் - அவுஸ்த்திரேலியாவில் சைவ எழுச்சியைக் கண்டு வியக்கிறேன். குறிப்பாக சிட்னி முருகன் கோயில், திருவிழா, ஆலய அமைப்பு, அடியார்களின் ஆர்வம் யாவும் நம்பிக்கையூட்டுகின்றன. எனினும் இங்கு பிறந்து வளர்ந்தவர்களின் சமய ஈடுபாடு மிகவும் குறைவாக இருப்பதை அவதானித்தேன். எனவே அடுத்த சந்ததி இன்று காணப்படும் சமய எழுச்சியை மேம்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.
கேள்வி- சைவ சமய வழிபாட்டு முறைகளிலே மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இடம் உண்டா? அப்படியாயின் எந்தெந்தத் துறைகளிலே மறுமலர்ச்சி ஏற்படுத்த நாம் முயல வேணடும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.
பதில் - சமய மறுமலர்ச்சி காலத்துக்குக் காலம் முன்னேற்றங்கள் ஏற்படுகிற நிலைமை குறிப்பிடத்தக்கது. காலம், சூழல், தேவை கருதி மறுமலர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். கூட்டு வழிபாடு, சமூகச் சிந்தனை, மதநம்பிக்கை பாரம்பரியம் பேணுதல் போன்றவற்றை நாம் முன்னெடுக்க வேணடும். கிரியைகள் ஆர்மாதித
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 17

Page 11
கலப்பை
தை 2001
கிரியையளாக மட்டும் நடைபெறாமல் பொது நோக்கான வழிபாடுகளாக மாற்றப்படல் வேண்டும். ஆலயங்களில் எல்லோருமாக ஒருமித்து இசை அர்ச்சனை செய்தல், நற்சிந்தனைகூறி மக்களை ஆற்றுப்படுத்தல், ஜீவசேவைகளை வளர்த்தல் இன்றைய முக்கிய மாற்றம் காணவேணி டிய மறுமலர்ச்சிக் கருத்துகள் என நான் கருதுகிறேன்.
கேள்வி- நேற்று நீங்கள் பேசியபோது, சைவதி திருமுறைகளைச் சாதாரணமானவர்கள் பார்க்கவோ படிக்கவோ கூடாது என்ற மரபுக் காகப் பூட்டி வைத்திருக்கிறோம் என்று தில்லைவாழ் அந்தணர்கள் சொன்னார்கள் என்றும் அதனை மறுத்து நம்பியாண்டார் நம்பி, இராச ராச சோழ மனனனுடைய ஆணையோடு வெளிக்கொணர்ந்து இன்று நாமெல்லாம் ஓதி உணரக்கூடியதாக உள்ளது என்று சொன்னார்கள். இப்படி மரபு, மரபு என்று சொல்லி சைவ சமய வழிபாட்டிலே தமிழ் மொழியை ஒதுக்கின்ற நிலை இன்றும் மாறவில்லை. இந்த நிலை மாறுமா? மாறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
பதில் - சைவ வழிபாட்டில் தமிழ் மரபு பேணவேணடும் எனற கருதி தை அடிப்படையாகக் கொண்டு இவ்வினாவைத் தாங்கள் தொடுப்பது எனக்கு விளங்குகிறது. தமிழில் இறை அர்ச்சனையை நடாத்தலாம். வேதம் தமிழ் இரண்டும் தெய்வீகமானவை. வேதம் நான்கும் மெய்பொருளானது என மணிவாசகர் குறிப்பிட்டார். வேதத்தை முன்னோர்கள் வெறுக்கவில்லை. மக்களிடம் கருத்துக்கள் போய்ச் சேரவேண்டும். எனவே தமிழில் இறைகருத்துக்களைப் பாட்டில்
பரப்பினர். ஆலயங்களில் மக்கள் உணரும்
வகையில் தமிழ் அர்ச்சனை, ஆன்மீகச் சிந்தனைகளை வெளிப்படுத்தவேண்டியது மிக அவசியம். இன்று இந்தியாவில் சில ஆலயங்களில் தமிழி அர்ச்சனை முன்னெடுக்கப்படுகிறது.
மேலும் வடமொழியை முறைப்படி கற்கும் சிவாச்சாரிய பாரம்பரியம் குறைந்து செல்வதால் எதிர்காலத்தில் தமிழ் அர்ச்சனையை சிவாச்சாரியர்கள் மற்றவர்கள் பின்பற்றப் போவது இயற்கை.
கேள்வி- தமிழ்க் கீறீஸ்தவ சமயத்தவர்கள் இலத்தீன்மெழியிலும், ஆங்கில மொழியிலும் உள்ள வேதங்களையெல்லாம் பலவருடங் களுக்கு முனி பிருந்தே தமிழில் மொழிபெயர் தீது தீ தமிழிலே ஆராதனைகளும், பாடற்பூசைகளும் நடத்துகிறார்கள். தமிழிலே உள்ள பழைய செபங்களில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டுச் சுத்தத் தமிழிலே செபங்களைச் சொல்லி வணங்குகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற தமிழ் உணர்வு நமது சைவ சமயத்தவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? இந்தக் குறைநீங்க வழியுண்டா?
பதில்- இவ்வினாவுக்கான முயற்சியை நாவலர் பெருமான் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கோயில்களில் தமிழ்ப் புராணப்படிப்பு முதன்மை பெற்றது. புராணக் கதைகள் கதாப்பிரசங்கங்கள் ஆலய வழிபாட்டில் முதனிமை
வேதத்துக்கு தமிழ்வடிவம் நேரடியாகக் கொடுக்க முடியாது என்பது பொதுவான கருத்து. குறிப்பாக வேதம் உச்சரிப்புத் தன்மையில் கருத்து அமைந்துள்ளது. எனவே அதைதி தமிழ் வடிவம் கொடுப்பதற்கு முன்னோர் முயலவில்லை.
18 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
கலப்பை
எனினும் தம் இயல்புக்கு அமைய வழிபடும் மரபையும் பேணினர்.உதாரணமாக சி செல்வச் சந்நிதியில் முருகனுக்கு அர்ச்சிப்பவர்கள் தமக்கு ஒரு முறையை மரபாகக் கொள்கின்றார்கள். எனவே வேதத்தை பொழிபெயர்த்து வழிபாட்டுமுறை கைக்கொள்ளல் என்ற கருத்தை விடத் தங்களால் இயன்ற வர்த்தைகளைக் கூறி கடவுளை வாழ்த்தி அர்ச்சிப்பதற்கு மக்கள் விளங்கும் வகையில எம்மொழியும் உகந்தது.
கேள்வி- நீங்கள் பல உலக நாடுகளுக்குச் சென்று சமயச் சொற்பொழிவுகள் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு நல்ல வரவேற்புக்கிடைத்திருக்கிறது என்று நான் அறிகிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சைவமக்கள் தமிழில் சைவ வழிபாட்டை வளர்த்துக்கொள்ளச் செய்யத் தக்கன, தாகதன பற்றி ஏதும் சொல்வார்களா?
பதில் - மேலை நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களால் ஆலயங்கள் பல சைவ அன்பர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுவதை யான் வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். இவ்வாலயங்கள் தொடர்ந்து பேணப்படுவதற்கு அடுத்த சநீததயை இவ்வாலயங்களோடு இணைக்கும் முயற்சி
திருப்தியாக இல்லை. குறிப்பாக ஆலயங்களை இன்று நடாத்துகிறவர்களின் வளர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் இன்று ஆலயங்களுக்கு வருவதாக, செயற்படுவதாக இல்லை எனப் பலரும் கவலையோடு இருக்கிறார்கள். இந்நிலை மாற சூழலுக்கு உகந்த வகையில் மேலை நா ட டி ல' வாழும் எம் பிள்ளைகளை கோயில்களில் இளைஞர் சங்கங்களாக இணைத்து அவர்கள் தமக்கு உகந்த மொழியில எமது சமயக் கருத்துக்களைப் பரிமாறித் தெய்வநம்பிக்கையில் அக்கறைப்படுத்த வேணி டியது மிகமிக அவசியம். இராமக்கிருஷ்ண மிஷன், சத்தியசாயிபா சங்கங்கள் உலகளவிய ரீதியில் தம் கருத்து வழிபாடுகளில் இளைய சமுதாயத்தை இணைத்து வருவது அவதானிக்கத்தக்கது. இந்த நிலையில் எமது சைவ ஆலயங்களில் இளைஞர்கள் இணையச் சில திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இச்செவ்வியை வழங்கியதிரு
ஆறு திருமுருகன் அவர்களுக்கும், செவ்வி கண்ட திரு நா மகேசன்
அவர்களுக்கும் கலப்பையின் சார்பில் எமது நன்றி. - ஆசிரியர்
என்பது எமது நம்பிக்கை.
கலப்பையின் புதிய மின்அஞ்சல் முகவரி kalappaiCyahoo.com என்பதை அறியத் தருகின்றோம். கலப்பை சந்தாதாரர்கள், வாசகர்கள் அனைவரதும் மின்அஞ்சல் முகவரிகளை சேகரித்து வருகின்றோம். உங்கள் மின்அஞ்சல் முகவரிகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம், நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக்கலாம். எதிர்காலத்தில் கலப்பை பற்றிய புதிய விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும், உங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும் (விமர்சிக்கவோ அல்லது விவாதிக்கவோ) இது மிகவும் உதவியாக இருக்கும்
- ஆசிரியர்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 19

Page 12
கலப்பை
தை 2001
அவன் அத்திசையை நோக்கியபடி
சிலையாக நின்றான்
கடந்த கலப்பை இதழ் இரு வேறுவேறு சந்ததிகள் என்ற கருவுடன் வெளிவந்திருந்தது. பாராட்டத்தக்க ஒரு முயற்சி ஒரு தனி மனிதனுக்குள்ளேயே வெவ்வேறு சந்ததிகள் இருக்கின்றன. இருபத்து முன்று வருடங்களுக்கு முன்னர் ஓர் உயர்கல்வி மாணவனாக இருந்தபோது என்னால் எழுதப்பட்ட 62Gb சிறுகதையை எண்ணிட்டார்த்தேன் அதை அப்படியே எதுவித மாற்றமும் இல்லாமல் கலப்பையில் தருகிறேன் ஒரு உணர்ச்சிபூர்வமான அந்த அனுபவத்தை இப்போது உள்ள எனது மன உள வளர்ச்சியையும் காண எனக்குள்ளேயே இரு வேறு சந்ததிகள் இருப்பதை கான முழகின்றது.
அவனுக்கு அன்றுதான் இறுதிப் பரீட்சை முடிந்தது. அவனது குடும்பம் அன்று திருகோணமலைக்குப் புகையிரதம் மூலம் செல்வதென்ற முன்கூட்டிய திட்டத்தின்படி ஒரு வார இறுதியில் புறப்பட்டது. அவனுக்குப் புகையிரதத்தில் பிரயாணம் செய்வதென்றால் கொள்ளை ஆசை. அதைவிட அவனுக்கு இன்னொரு இன்பம். காத்திருந்து அடுத்தமாதம் பண்டாரநாயக் கா சர்வதேச விமானநிலையத்திற்குச் சென்று தனது மலேசியப் பெரியதாயாரைக் கூட்டிவரச் செல்வதாகும்.
அவனையும் அறியாமல் யோசனையில் ஆழ்கிறான். ஆமாம். என் பெரியம்மா எப்படி இருப்பார்? அம்மாவைப்போலவே இருப்பாரா?
என்னுடன் அன்புடன் பழகுவாரா? - அவனது சிந்தனையைப் புகையிரதச் சத்தம் குழப்பியது.
அவன் திருகோணமலையால் திரும்பி வந்து ஒரு வாரமாகிறது. அவன் இன்னும் ஒரு வாரத்தில் தனது பெரியதாயாரைப் பார்க்கக் கொழும்பு போகிறான். கொழும்பு செல்வதற்குரிய நாளும் வந்துவிட்டது. தனது தாயாருடனும், தம்பியுடனும் கொழும்புக்குச் சென்றான். குடும்பத்தினர் மறுநாள் விமானநிலையம் செல்வதற்குரிய ஆயத் தங்களை மேற்கொண்டனர். சுங்க அதிகாரியாக அவனது தந்தையாரும் இவர்களுடன் விமானநிலையத்திற்குச் செல்கிறார். அங்கு மலைநாட்டில் ஆசிரியத் தொழில் புரியும் அவனது சிறியதாயாரும் குடும் பத்தினரும் வந்திருக்கிறார்கள்.
அவனது eᎸᏏ 60Ꭷ Ꮷ 600u] நிறைவேற்றும் நோக்கத்துடன்போலும் விமானம் குறித்த நேரத்திற்கு முன்பதாகவே வந்துவிட்டது. அவனால் தனது பெரியதாயாரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவனது தாயாரும் சிறிய தாயாரும் பெரியம்மாவைக் கட்டியனைத்து ஆனந்தக் கண்ணிரையும் சொரிந்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
அவனது பெரியதாயார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்
20
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞ്b 2001
аљевари
திருமணம் முடித்து தற்போது தனது கணவருடன் மலேசியாவில்
வசிக்கின்றார். அவர் தனது தாயாரையும் மற்ற உறவினரையும் பார்ப்பதற்காக வந்திருந்தார்.
அவனும் அவர்களைக் கூட்டிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு புகையிரத மார் க்கமாக வந்து கொண்டிருந்தான். பெரியதாயாரும் அவனுடன் அன்பாகப் பழகினார். வரும் வழியில் அவன் தனது கல் வி அறிவிற்கேற்ப பெரியதாயாருக்கு காடுகளின் வனப்பையும், நதிகள் பற்றியும், புனித ஸ்தலங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்தான்
அவனது பெரியம்மாவிற்குத் தனது பெறாமகனின் மீது பாசம் அப்போதிருந்தே ஏற்பட்டுவிட்டது. அவன் தனது பெரியம்மாவைக் கூர்ந்து கவனித்தபோது அவரின் கண்கள் குளமாயிருந்தன. அதன் கருத்தைப் பெரியதாயார் அவனுக்குக் கூறமுன்பே அவன் அதனை அறிந்துகொண்டான். "இன்னும் நாற்பது நாட்களின் பின் மீண்டும் நாம் சென்று கொண்டிருக்கும் திசைக்கு எதிரே திரும் பிச் செல்லவேண்டுமே" என்ற கவலையில் ஏற்பட்டிருக்கும் என்ற அவனது சிந்திக்கும் ஆற்றலை அவன் பெரியதாயார் பாராட்டினார்.
எல்லோரும் ஊரிலுள்ள வீட்டிற்கு வந்து மூன்று நாட்களை எப்படிக் கழித்தார்களோ தெரியவில்லை. அவன் நினைத்தபடியே அவனுக்குப் பெரியம்மாவில் பாசமும் பெரியம்மாவுக்கு அவனில் பாசமும் கரைகொள்ளாது நின்றன. அவனது பெரியதாயார் இதயநோயாளி. தினமும் அவன் பாடசாலை செல்லுவதற்கு முன்பு பெரியம்மா குளிப்பதற்காக நீர் அள்ளி
ஊற்றிவிட்டுச் செல்வான். அவருடைய வேலைகளை அதிகம் அவனே செய்து வநதான.
அவனுடைய உயர்கல்விப் பரீட்சை முடிவுகள் வந்து அவன் சிறந்த சித்தி எய்தியிருந்தான். ஆகவே மேலதிகமாக பெரியம்மாவிடம் அவன் பாராட்டும் பாசமும் பெற்றான். அவனைப் பெரியதாயார் கட்டி யணைத்து முத்தமிடும்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை ஏது!
நாடகள நகா நதன. அவனது பெரியதாயார் தனது தம்பியின் வீட்டில் சில நாட்கள் தங்குவதாகச் சென்றார். செல்லும்போது பெறாமகனை விட்டுப் பிரிவதற்குக் கஷ்டப்பட்டு அழுதார். இந்த ஒரு வாரப் பிரிவைத் தாங்காதவர்கள் இன்னும் சில வாரங்களில் ஏற்படும் நீண்ட பிரிவை அவர்கள் எவ்வாறு தாங்கப்போகிறார்களோ?
அன்று மாலை அவன் தனது பெரியம்மாவைப் பார்ப்பதற்காக மாமன் வீடு சென்றிருந்தான். எல்லோருடனும் கதைத் துக் கொண்டிருந்தான். திடீரெனப் பிரமை பிடித்தவன்போலத் தேம்பித்தேம்பி அழுதான். அவனது பெரியதாயாரும் அழுதார். அவர்களிருவரையும் தவிர வேறொருவருக்கும் அந்த அன்புப்புதிர் விளங்கியிருக்காது. ஏனென்றால், அடுத்த மாதம் பெரியதாயார் மலேசியாவிற்கு மீண்டும் திரும்பிச் செல்கிறார்.
காலம் ஓடிச்சென்றது. பெரியதாயார் கொழும் பிற்குப் புகையிரதத்தில் செல்வதற்காக ஊரில்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 21

Page 13
bøMSÜMaps
தை 2001
எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு கொழும்பு சென்றார். அன்றொரு நாள் வரும்வழியில் அவன் தான் செல்லும் திசைக்கு எதிரே செல்வோம் என்ற சிந்தனையில் கொழும்பை அடைந்தனர். மறுநாள் விமானநிலையம் செல்லவேண்டும் அல்லவா?
ஆமாம், அன்றுதான்
அப்பிரிவை நோக்கும் அந்தத் தினம். அது ஏன் வந்ததோ அல்லது அவன் அறியாமலிருந்த அந்த பெரியதாயார் ஏன் 6Ꭷl (lb 60Ꭷ éᏏ தந்தார் ? விமானநிலையத்திற்குச் செல்வதற்கு எல்லோரும் தயாராக இருந்தபோது பெரியதாயாரிற்குச் சிறிது தண்ணித் தாகம் எடுத்தது. அத்தாகம் அவனின் கோப்பியால் மாறியது. தனது பெரியதாய்க்கு உதவி செய்தேனே என்று அவன் மகிழ, பெறாமகனின் கையால் கோப்பி பருகினேனே என்று மகிழ்ந்தார் பெரியதாயார்.
அன்று விமானநிலையம் சனக் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அழுகிறார்கள், அழுகிறார்கள், எவ்வளவு நேரம் அழுவது? ஆமாம், இறுதியாக அவனைக் கட்டியணைத் து முத்தமிட்டு அன்பைச் சொரிந்தார். எல்லோரிடமும் பிரியா விடை பெற்றுக்கொண்டு, சுங்கப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு சோதனை எல்லாவற்றையும் முடித்து, கடைசியாக எல்லோருக்கும் அன்பு வணக்கம் தெரிவித்தார்.
அவனுக்கு இதயம் பிளந்துவிட்டதுபோல ஏக்கமும் விரக்தியும் உண்டாயிற்று. ஆம், அன்று ஒருநாள் இதே விமானநிலையத்தில் இதே விமானத்தில் வந்திறங்கியவர், இப்போது அதே விமானத்தில் திரும்பி ஏறுகிறார் . இதுதான் வாழ்க்கையல்லவா! சேர்ந்தால் பிரிவது இயற்கையல் லவா ! விமானத்தின் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. விமானம் நகரத்தொடங்கியது. பேரிரைச்சலுடன், அவனைச் சுற்றிவருவதுபோல, இருமுறை மைதானத்தைச் சுற்றிவிட்டு, அவன் நின்ற பக்கமாகப் புகையைக் கக்கிவிட்டு மேலெழும்புகிறது. ஆம், அப் புகையினுTடாக அவனுக்கு அன்பையும் பாசத்தையும் விட்டெறிந்துவிட்டு விமானத்தில் பறக்கிறார் அவனது பெரியதாயார். ஆனால் அவனே எதுவும் தெரியாதது போல் விமானம் செல்லும் 9.அத்தரிசையை நோக்கச் சிலையாக நிற்கின்றான்"
(18 ஆண்டுகளின் பின்னர் அவன் பட்டதாரியாக மலேசியாய் பகுதியில் பணிபுரியச் சென்ற போது மீண்டும் அந்தப் பெரியதாயாரைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டுகின்றது. அன்று அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அது ஒரு சுகமான உணர்வு)
22 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
கலப்பை
சோதி அணைந்து விட்டது
இருபது ஆண்டுகளுக்கு
மேலாகத் தமிழர்களை அணை தீது வழிகாட்டிவந்த அந்தச் சோதி அணைந்து விட்டது. கணிதமேதை, மாமனிதர் பேராசிரியர் வி.ஜே.எலியேலர் அவர்கள் போய்விட்டார் என்ற சேதி, அவரது குடும்பம், அவர் பிறந்த, வாழ்ந்த நாடுகளில், ஏன், உலகெங்கினுமுள்ள தமிழினத்தையுமே உலுப்பிவிட்டது. படுக்கையில் கிடந்து அழுந்தாமல், திடீரெனவந்த இறைவனது அழைப்பை ஏற்று அடங்கிவிட்டார். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது இனிமேல் முடியாத காரியம்.
தானும் குடும்பமும் சீரும்சிறப்புடன் வாழ்ந்து, பேரும்புகழும் பெற்றுச் செலி வநீத னாக ஒதுங்கி வாழ்ந்திருக்கக்கூடியவர். அப்படியான வாழ்க்கையை வெறுத்து எளிய வாழ்க்கையைக் கைக்கொணி டு, பாமர மக் களையுமீ அநாதைகளையும் கைதுாக்கிவிடும் சேவையில் பெரிதும் பாடுபட்டார். முக்கியமாகத் தமிழகதிகளுக்கும், புலம் பெயர்ந்து வந்தோருக்கும் ஒன்றாத்துணையாக நின்று அவர்களுக்கு வழிகாட்டி அரிய சேவை ஆற்றினார். மனிதனி மனிதனாக எப்படி வாழவேணடும் என்பதற்கு ஒரு உதாரணபுருஷனாகத் தானே வாழ்ந்து காட்டினார்.
பெருமகன் எலியேஸர் அவர்களை ஒரு சோதிக்கு ஒப்பிட்டால், நாங்கள் எல்லாம் அந்தச் சோதியில் பற்றவைத்த அகல்விளக்குகள் எனக்கூறலாம். அந்தச் சோதி அணைந்ததும் தமிழர்களாகிய நாம் அரைஇருட்டில், அகல்விளக்காக நின்று, வழிதேடித் தவிக்கின்றோம். பெரியவிளக்கு, சிறியவிளக்கு எந்த விளக்கும் அந்தச் சோதிக்கு இணையாகாது.
எம்மிற் பலர் அவரது அறிவின் ஆழத்தைத் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், குடத்தினுள் எரியும் விளக்கினைப்போல, படாபோபமீ , பிரசிதீத மீ , சுயநலமீ ஆகியவைகளைத் தவிர்த்து, ஒதுங்கி வாழ்ந்த மனிதன் அவர். ஆனால், தனது எண்ணம், சொல், செயல் யாவற்றையும் தமிழரின் நலத்துக்காகவே, அவர்களினி மேம்பாட்டுக்காகவே அர்ப்பணித்தவர்.
பேராசியர் எலியேஸர் ஒரு கணிதமேதை. ஒரு சிறந்த விஞ்ஞானி: ஒரு உண்மையான நாட்டுப்பற்றாளன். உருவத்தில் சிறியவராயினும் அவரின் சாதனைகளோ மலையளவு. அந்த அளவுக்குப் பெரிய மேதையாக இருந்தாலும் எப்பொழுதும் எளிய வாழ்க்கையையே நாடுவார். தன்நலம் கருதாது பாமரமக்களினதும் , அநாதைகளினதுமீ நலத்தையே கருத்திற் கொணர் டவர். முக்கியமாக, தமிழக திகள் விஷயத்திலி மிகவும் சிரத்தையெடுத்துத் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்துவந்தார். அடுத்துச் செய்வதென னவெனிறு தெரியாது தவித்தவர்களுக்குப் புத்திமதியும் கூறி மற்றும் வேண்டிய உதவிகளையும் வழங்கியவர்.
Doctor of Science gist பட்டம்பெற்ற இவர் அவுஸ்திரேலியா உட்பட மூன்று வெவி வேறு தேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் Professor of Maths., Actg. Vice-Chancellor, Dean of the Faculty of Science ஆகக் கடமையாற்றியிருந்தார். கணக்கில் நிபுணனான இவர் “எலியேலர் தேற்றம்” என்ற அவரது கட்டுரையை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் பல்வேறு அரங்குகளில் மேடையேற்றி வெற்றிகணிடார். 1955ல் உலகப் புகழி பெற்ற விஞ ஞானியான
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 23

Page 14
abAsiapu ഞ്b 2001
Dr.Einstein அவர்களுடன் கணக்கியல் (வாரஇறுதி) தமிழ்வகுப்புகளை நிறுவுவதற்கு சமீபநிதமாக உரையாடி, அவரின அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து அதில் வெற்றியும் நன்மதிப்பையும் பெற்றார். அத்தோடு, கணிடார். பள்ளிக்கூடங்கள் நடத்தத் பிரசித் திபெற்ற பெரிய விஞ ஞானி தேவையான பணத்தில் ஒரு பெரும்பகுதியை Dr.R.A. Oppenheimer உடனி அரச மானியமாகக் கிடைக்கவும் வழிசெய்தார்.
கூட்டாய்வுவேலை செய்யும் பாக்கியத்தையும் பெற்றிருந்தார்.
ஈழத் தமிழர் சமுதாயத்துக்கு அவர் செய்த அளப்பரிய சேவைகளிலி பினி வருவனவும் அடங்கும்:-
- இலங்கைத் தமிழ்ச் சங்கத்தை 1978 இல் ஸ்தாபித்து, அதன் முதற்தலைவராகக் கடமையாற்றினார்.
- 1979ஆம் ஆண்டு விக்டோரியா ஒலிபரப்பு pisodouglaci S.B.S. (Special Broadcasting Services) 960) so 6 food Fusas முதல்முறையாக தமிழ்மொழி ஒலிபரப்பைப் புகுத்தி, தொடர்ந்து 1982 வரை அதன் பிரதம ஒலிபரப்பாளராகச் சேவைசெய்தார்.
- அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது 1988வது ஆண்டில். 1983 ஜூலை மாதம் இலங்கையில் தமிழருக்கு நடநீத அட்டூழியத்தைக் கேள்விப்பட்டதும் மனம் குமுறினார். ஆழ்ந்த கவலைக்குள்ளானார். உடனே இலங்கைத் தமிழ்ச்சங்கம் மூலமும், அரசாங்கத்துக்கு மனுக்கள் செய்தும் தமிழினம் இலங்கையில் படும் அவஸ்தையை அம்பலப்படுத்தி, அந்தக் கொடுமைகளைக் கண்டிக்கும்படியும், அதனாற் பாதிக்கப்பட்ட தமிழரை உடனே ஒஸ்ரேலியாவுக்கு வந்து குடியமர அனுமதி வேணி டியும் பல கோணங்களிலிருந்தும் பிரயத்தனங்கள் மேற்கொணர்டார். அரசாங்கம் அதை உணர்ந்து, இணங்கியதும், அதன்பின் வந்த தமிழகதிகளுக்கு இங்கிருக்கவும் வாழவும் வழிசமைத்து, அவர்களுக்கு வேணிடிய உதவிகளையும் பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் செய்தார்.
- புலம்பெயர்ந்து வந்தவர்களின் பிள்ளைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான
போராசிரியர் தன்னினமக்களில் அளவுகடந்த பற்று வைத்திருந்தார். அவர்களின் உரிமைகளையும் பேணி, அவர்கள் சுதந்திரமாகவும் தனியினமாகவும், மரியாதை, சமஉரிமை உள்ளவர்களாக வாழவும் உரித்துள்ளவர்கள் என்னும் கொள்கையை ஆணித்தரமாக ஏற்று, அதை அடைவதே இலக்காக இரவும் பகலும் பணிபுரிந்தார். 1984இல் இங்குள்ள தமிழ் அமைப்புக்களை ஒன்றுகூட்டி தெண்துருவத் தமிழிச் சங்கங்களின் சமீ மேளனம் எனினும் நிறுவனத்தை அமைத்து அதன் தலைவராக தனது கடைசிக் காலம்வரை பணியாற்றிய
பெருமையுடையவர். அமரர் வணயிதா தனிநாயக அடிகளுடன் சேர்ந்து அகில உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு
ஸ்தாபித்து, புதுடில்லி, சென்னை, மலேசியா, பரிளம், யாழ்ப்பாணம் முதலிய நகரங்களில் தமிழாய்வுக் கூட்டங்களை ஒழுங்குசெய்த பேரறிஞன், அவுஸ்திரேலியாவில் தமிழ்க் கிறிஸ்துவ பேரவையையும் நிறுவினார்.
1998ஆம் ஆணிடில் பிரிட்டிஷ் மகாராணியினால் அவரின் சமுகசேவைக்கும், கணிதவியலிலி அவர் ஆற்றிய தொண்டுக்குமாக அவருக்கு Order of Australia என்ற விருதும், தமிழ் மக்களுக்குப் பேராசிரியர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் எலியேஸர் அவர்கள் தமிழர்மேல் கொண்டிருந்த பற்றையும், தமிழர் தலைநிமிர்நீது சுயமரியாதையுடனும், கெளரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ வேணடுமென்று இடைவிடாது, அயராது உழைத்த அவரது உயர் சேவையையும் மனதிற் கொண டு, அணி னாருக்குச்
34ம் பக்கம் பார்க்க
24 6
பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001
கலப்பை
5256VAVJgé 2225gallassini
வாயின் முக்கியத்துவம்
கடவுள் படைத்த சீவராசிகளுக்கு அமைந்த புலன்களுள் கட்புலனி தானி முக்கியமெனி பது பெரும்பாலாருடைய கூற்று. இன்னும் சிலர், செவிப்புலன், (சுவாசவழி) மூக்கு, வாய், கை கால் முதலிய அவயவங்கள் என்று வேறு வேறு உறுப்புகளே பிரதானமென்று வாதாடுவார்கள். சிலர் வயிற்றைமட்டும் தனிமைப்படுத்தி, வயிறு இல்லாவிடில் மற்றெந்த உறுப்புகளும் இயங்கமாட்டா என்று பொருத்தமாக விவாதிப்பார்கள். எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தைக் கேட்டால், உயிருள்ள பிராணிகளுக்கு அமைந்த உறுப்புகளில் வாய்தான் அதிமுக்கியம் வாய்ந்ததென்று சொல்லுவேன். எனது கூற்றை நிலைநாட்டப் காரணங்கள் உதவுகின்றன.
1. 2 uli QITyp இன்றியமையாதது
முதலிலி மனிதர்களை எடுத்துக்கொண்டால், செவிப்புலனற்றவர்கள்
அநேகம் பேரை நாம் வாழ்க்கையில்
6)
சந்தித்திருக்கிறோம். அநேகமாக, படுசெவிடாக உள்ளவர்களுக்கு வாய்ப்பேச்சு வராது. ஏனெனில், சாதாரணமாக,
முன்னால் நின்று பேசுபவர்களின் சத்தம் கேட்டு, அவர்களின் வாயசைவிலிருந்து வரும் சொற்களின் தன்மையைக் காதால் கேட்டுக் கேட்டுத்தான் குழந்தையின் வாய் அச்சொற்களைத் திரும்பச் சொல்ல முயற்சிக்கின்றது. உதாரணமாக, அம்மா என்ற சொல்லை ஒருவர் சொல்ல அதைத் தன் காதாற் கேட்டு, சொல்பவருடைய வாயசைவையும் கூர்ந்து கவனித்தபின், தன்
திரும்பத்திரும்பச் சொல்லி சொல்லைப்
பிடித்துக்கொள்ளுகிறது. கஷ்டமான சொற்களைத் தனது மழலை மொழியில் வெளிப்படுத்துகிறது. ஆனால்
செவிப்புலனற்ற குழந்தைக்கு மற்றவர்கள் பேசுவது ஒன்றுமே கேட்காதபொழுது அக்குழந்தை எதைத்தான் தன் வாயால் திரும்பச் சொலி லிப் பழகுவது? பேசுபவரின் வாயசைவைமட்டும் “கொப்பி’ பண்ணி அதே மாதிரிச் செய்யக்கூடும். ஆனால் சொற்களை உருப்படுத்தத் தெரியாது. ஏதோ தானும் வாயை அசைத்து, குரலுமெழுப்பும். ஆயினும், நாம் கவனிக்க வேண்டியது ஒன்று. இந்தக் குழந்தையும் வளர்ந்து பெரிய ஆளாகி, மற்றவர்களைப்போல் இன்பதுன்பங்களில் பங்குபற்றி, வாழ்க்கையை வாழ்ந்துதான் முடிக்கிறது. காது கேளாத, வாய் பேசாத முடியாத குறைபாடே தவிர, சங்கடமான சீவியமென்றாலும் வாழ்ந்தே தீர்த்துவிடுகின்றது. வாழ்க்கை கஷ்டமாக இருக்குமேதவிர வாழமுடியாமலில்லை.
அதேபோல, வாய்பேச முடியாதவர்கள், கணிபார்வையற்றவர்கள், கை கால் உறுப்புகளில் எதையேனும் இழந்தவர்கள், முகருமி உணர்ச்சியில்லாதவர்கள், இவர்கள் யாவரும் வாழும் வாழ்க்கை கஷ்டமும் விசனமும் நிரம்பிய வாழ்க்கையாகத்தான் இருக்கும். அவரவருக்குள்ள அங்கக்குறைபாடுகள் அவர்களுடனேயே கூட இருக்கிறபடியால் அவர்கள் அக்குறையை உணராதபடி ஏனோதானோவென்று வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகிறார்கள். கடவுள் அவர்களுக்கு வேறுவிதத்தில் ஏதாவது
வாயாலி அதே சொறிகளை தி ಛಿ: சக்தியை, ஆற்றலைக்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 25

Page 15
a5ésů apu
தை 2001
இதுவரை நாம் கூறிவந்த இந்த அங்கக்குறைபாடுள்ள எவருக்கும் வாழ்நாளில் சீவிக்கமுடியாத நிலை எப்பொழுதாவது ஏற்பட்டதுண்டா? கண்ணில்லாதவர் தனது குறைந்த அளவு அலுவலி களையாவது தினமும் செய்துகொண்டு சீவிக்கவில்லையா? காது கேளாதவர், முடமானவர், தாமும் ஏதாவதொரு முயற்சியில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தவில்லையா? மூக்கு இல்லாத சீவராசியைப் பற்றிக் கேள்விப்பட்டதே கிடையாது. ஆண்டவன் தானி படைத்த உயிர்கள் மூச்சுவிடக்கூடியதாக உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் இரண்டு துவாரங்களாவது
வைத்திருப்பார்.
இதே விவாதநிலையில், வாய் இல்லாத - அதாவது வாய் படைக்கப்படாத - ஒரு மனிதனை அல்லது வேறு சீவராசியைப்பற்றிக் கற்பனை பணிணிப்பாருங்கள். கணி இல்லாமற் சீவிக்கலாம், செவிப்புலன், கை கால் வேறு உறுப்புகள் அற்றவர்கள் உயிரோடு வாழலாம். ஆனால வாய்படைக்காத ஒரு சீவன் வழமுடியுமா? அது பிறந்தவுடன் இறந்துவிடாதா? தாய்ப் பாலிலிருந்து உணவு வரை வாயினால்தானே உட்கொள்ளவேண்டி இருக்கிறது. வாயற்ற வணி உணவற்றவனாகிறான். உணவில்லாமல் உயிர்வாழ முடியுமா? மற்ற அவயவங்கள் இல்லாதவர்களை நேரில் கண்டிருக்கிறோம். வாயில்லாத ஒரு பிராணியை நாம் காணவில்லை. கற்பனைபண்ணவும் முடியவில்லை. இப்போது புரிகிறதா வாய் ஆனது சீவராசிகளுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்று?
2. பேசும் ஆற்றல்
மிருகவர்க்கத்துக்கும் பறவைகளுக்கும் பேசத் தெரியாது. பேசத்தெரியது என்று நாம் பொதுப்படச் சொல்வது நூற்றுக்கு நூறு சரியல்லவென்றே தோன்றுகிறது. ஏனெனில் அவைகளும் குரல் எழுப்பிச் சத்தங்கள் செய்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அவை வேறுவேறு தொனியில் சத்தங்களை எழுப்பித் தமது சகாக்களுக்குச் செய்தியைத் தெரிவிக்கின்றன. உதாரணமாக, ஆபத்து வந்தபோது ஒரு மாதிரியும், உணவு கிடைக்கக் கூடிய இடத்தைக் காட்ட இன்னொருமாதிரியும், காதலை உணர்த்த வேறு விதமாகவும், கோபத்தைக் காட்டப் பிறிதொரு மாதிரியும் மிருகங்கள், பறவைகள் தங்கள் தங்கள் சகாக்களுடன் தங்கள் பிரதி தியேக பாஷைகளில் பேசிக்கொள்ளுகின்றன. இந்தப் பாஷைகள் ஒரு முறையான, ஒழுங் கமைந்த, நிரந்தரமானதா என்பதை மனிதர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் அவை மனிதர் பேசும் பாஷைகள் போன்றவையல்ல, வித்தியாசமானவை, ஒழுங்கற்றவை.
மனித சமுதாயத்தில் வெவ்வேறு மொழிகள் ஆயிரக்கணக்கில் உண டு. உலகத்திலுள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில், பெரும்பாலும் ஒவ்வொரு நாட்டிலும், பல பாஷைகள் பேசப்படுகின்றன. ஆதிகால மனிதன் சைகைகளின் மூலம் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். அதனையடுத்து வந்த மனிதன் கற்பாறைகளில் கீறியும் குகைகளில் சித்திரங்கள் வரைந்தும் மற்றவர்களுக்குச் செய்தியைப் பரப்பினான். நாகரீகம் வளர வளர மனிதன் தனது வாயால் வேறுவேறு சத்தங்களை உண்டாக்கி தன் சகாக்களுடன் “சம்பாஷித்துக்” கொண்டான். ஆனால் சொற்கள் உருப்படியாக அமையவில்லை. காலப்போக்கில் மனிதன் தன் வாயால், உதடுகள், நாக்கின் உதவியுடன் சொற்களை
26
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
arbørsửapu
உருவாக்கிப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு பொருளுக்கும், செயலுக்கும் ஒவ்வொரு சொல்லைப் பிரயோகித்து அதன்பின்னர் அவைகளை வசனமாகக்
கோதீது, முழுமையாகப் பேசதி தொடங்கினான். இப்படியாக, ஒரு சமுதாயத்தினரிடையே வழங்கிய
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வசனங்கள் காலப் போக்கில ஒரு மொழியாக நெறிப்படுத்தப்பட்டு, அச்சமுதாயத்தினர் தமீமிடையே உணர்ச் சிகளைப் பரிமாறிக்கொள்ளவும் செய்திகளைப் பரப்பவும் உதவின. வாய்ப்பேச்சில் மட்டுமிருந்த மொழிக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினார்கள். கல்லிலும் இலைகளிலும், ஓலைகளிலும், ஏடுகளிலும் எழுதிவைத்தார்கள். அவை பின் சந்ததியினருக்குப் பயன்பட்டன.
இந்தக் கட்டத்தில் நாம் கவனிக்கவேணடியது, மனிதன் தன் வாயால் பேசும் ஆற்றல் பெற்றிருப்பதைப் பற்றியதேயாம். மனிதன் தனது வாயால் எத்தனை விதமான சொற்களை உதிர்த்து விடுகிறான். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு சொற்றொடரும் அவனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவனவாக அமைந்து விடுகின்றது. ஒருவரின் வாயிலிருந்து வரும் ஒரு சொல்லு அதைக் கேட்பவருக்குக் கீழிப் படிவை உண்டாக்குகிறது, இன்னொரு சொல் கோபத்தைக் கிளப்புகிறது. அதேபோல், பிறிதொரு சொல் இரக்கத்தையும், இன்னுமொரு சொல் சந்தோஷத்தையும், வேறொரு சொல் துக்கத்தையும் கேட்பவர் மனதில் உதிக்கச்செய்கிறது. வாய்ச் சொல்லினால் எத்தனையோ விஷயங்களைச் சாதிக்கலாம். அன்பான வார்த்தையால் கோபத்தைத் தணிக்கலாம், குளப்படி செய்யும் பிள்ளைகளை அதட்டி அடக்கலாம் முரண்டுபிடித்து நிற்பவனுக்கு நியாயத்தை
விளக்கி 9663) 60T வழிக் குக் கொண்டுவரலாம், பேச்சு வன்மையுள்ள (Orator) ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் விதத்தில் அக்கூட்டத்திலுள்ளவர்களின் மனநிலையை மாற்றி அமைக்கலாம், மாறாக, கூட்டத்தில் ஆக்ரோஷமாகப் பேசி அவர்களை வணி செயலில் இறங்கத் தூண்டிவிடலாம், பாட்டுக் கச்சேரியில் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்திவிடலாம், அநியாயத்துக்கு எதிராக வாதாடி நியாயம் பெறலாம், துக்க சம்பவங்களை விபரிக்கும் முறையில் கேட்போரை அழவுமி வைக் கலாம், அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தாலாட்டி நித்திரையாக்கலாம் அல்லது பராக்குக் காட்டிச் சமாதானமாக்கலாம், தான் கற்ற விஷயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லிப் பயணி பட வைக்கலாம், சமயப்பிரசங்கங்கள் செய்து பிறர் மனங்களைத் தூய்மைப் படுத்தலாம், பாட்டுக்கள் பாடியும் ஸ்லோகங்கள் சொல்லியும் மந்திரங்கள் உச்சரித்தும் மக்களின் மனக்கிலேசத்தைக் களையலாம், தேவையான போதெல்லாம் குரலை உயர்த்திக் கட்டளைகளைப் (commands) பிறப்பிக்கலாம், இரகசியம் பேசிப் பிறரறியக் கூடாத விஷயங்களை உரையாடலாம் - இத்தனை செயல்களும் வாய் ஒன்றினால்தான் செய்யமுடியும் என்பதை இங்கு நாம் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு ஊமை மனிதருக்கு இவற்றை நடை முறையிற் செய்வது மிகமிகக் கடினமாக இருக்கும். செய்ய முடியாது வாயும், வாயிலிருந்து வரும் சொற்களுமி எதி துணை ஆற்றலுடையன, பலம் பொருந்தியன எனபதை நாம் சொல்லித் தானி தெரியவேண்டியதில்லை! 3. வாய் ஒரு சங்கிதக் கருவி சங்கீதகீ
கச்சேரிகளுக்குப் போய் பாட்டுகளை
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
2
7

Page 16
கலப்பை
தை 2001
ரசிக் காதவர்கள் நம்மிடையே இல்லையென்றே சொல்லலாம். வாய்ப்பாட்டுப் பாடுபவர் நடுநாயகமாக வீற்றிருக்க அவருக்குப் பக்கபலமாக இருமருங்கிலும் பக்கவாத்தியகாரர்கள் இருப்பர்கள். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், கடம், கெங்சிரா, மோர்சங், தபேலா என்பவற்றின், அல்லது அவற்றுள் முக்கியமான சில பக்கவாத்தியங்களின், துணையோடு பாட்டுக்
கச்சேரி சோபிக்கும்.
சங்கீதம் என்பது (எந்த நாட்டுச் சங்கீதமாயினும் சரி) ஏழு (ஸ்வரங்களை) சுரங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஏழு சுரங்களின் அத்திவாரத்திலேயே சங்கீதம் என்னும் பாரிய கலைக்கட்டிடம் கட்டி எழுப்பப்படுகிறது. அடிப்படையான ஏழு சுரங்களைப் பெருக்கியும் அவைகளை வேறு வேறு விதங்களில் கையாள்வதனாலும் வெவ்வேறு இராகங்கள், இசைகள், மெட்டுக்கள் முதலிய விதி தியாசமான உருப் படிகளை சாஸ்திரரீதியாக சங்கீத மேதைகள் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சுரங்களைப் பாடுவதற்குத் திட்டங்களும், கட்டுப்பாடுகளும் சட்டங்களாக வரைந்து வைதீதிருக்கிறார்கள். பாடுபவர் இவற்றிலிருநீது அணுவளவும் விலகமுடியாது. இன்ன இராகத்துக்கு இன்னஇன்ன சுரங்கள்தான் பாவிக்கலாம், அந்தச் சுரங்களைக்கூட ஸ்ருதியுடன் அணைத்தே பாட வேண்டும், மயிரிழை தப்பினாலும் சுரபேதம் வந்து விடும் என்று கடும் விதிகள் விதித்திருக்கிறார்கள். வாப்பாட்டு அப்பியாசம் பணினுபவரோ பக்க வாதி தியக் காரரோ சங்கீதம் கற்கும்பொழுது இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் கற்றுக்கொள்ளுவார்கள். வாயின் பகுதிகளான
உதடுகள், நாக்கு, அண ன மீ,
தொண்டைக்குழாய், தொண்டை நரம்புகள், உள்நாக்கு இவற்றினூடாகப் புறப்படும் சத்தம் சொற்களாக உருவெடுக்கின்றன. பாடும்பொழுது சொற்களுடன் இசையும் கலந்து சங்கீதமாகப் பரிணமிக்கின்றது. சங்கீதத்தில் நரம்புக் கருவிகளையும் துளைக்கருவிகளையும் பாடுபவருக்குத் துணைக்கருவிகளாகப் பாவிக்கின்றார்கள். நரம்புக் கருவிகளில் இராகம், பாட்டு, சுரவரிசை இவற்றைக் கையாளுவதற்கு ஒரு கை விரல்களால் நரம்புகளை மீட்டிக்கொண்டு மறுகை விரல்களால் நரம்புகளை அழுத்தி அவற்றின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் இனிய சங்கீதம் உண’ டா க" கு கபினட் றாா க ள’ . துளைக்கருவியில் ஒரு குழல் இருக்கும். அதன் குறுகிய தலைப்பின் துவாரத்தில் வாயில் வைத்துக்கொணிடு காற்றை ஊதினால் அது குழாய்வழியே போகும். அடுத்த பக்கம் அடைபட்டிருக்கும். இடையில் துவாரங்கள் இருக்கும். 7, 8, அல்லது 9 துவாரங்களில் எல்லாவற்றையும் அடைத்துக்கொண்டு ஒன்றைமட்டும் திறந்தால் ஒரு சுரம் பேசும். அதை அடைத்துவிட்டு வேறொன்றைத் திறந்தால் இன்னொரு சுரம் பேசும். அப்படி, தேவைக்கேற்பவும் சுரங்களுக்கு ஏற்றபடியும் துவாரங்களை மாறிமாறித் திறந்தால் அந்தந்தச் சுரங்கள் பேசும். பல சுரங்கள் சேர்ந்து பாட்டாகும். ஒவ்வொரு இராகத்துக்கும் தோதாக வேறுவேறு துவாரங்களைத் திறக்க, மூட, குறித்த இராகம் பேசும், பாட்டும் உருவாகும். ரசிகர்களும் அனுபவிப் பார்கள் . து வாரங்களை நுணுக்கமாக, அரைமாத்திரை, கால்மாத்திரைக்குமட்டும் திறக்கவேண்டிய தேவைகளும் உண்டு.
இனி, விஷயத்துக்கு வருவோம். வாத்தியக்கருவிகளை மனிதன்
கண்டுபிடித்தான். வாயையும் வாய்க்குள்
28 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
a5ésůapu
உள்ள பகுதிகளையும் கடவுள் படைத்தார். இரண்டுக்கும் ஒற்றுமை இருக்கிறதா என்பது கேள்வி! ஆம் நிறைய இருக்கிறது. நரம்புக்கருவியாயினும் துளைக்கருவியாயினும் அவற்றை உற்பத்தி செய்பவர்கள் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும், அளவுகளுக்கமையவும்
செய்து, ஒவ்வொரு சுரமும் இசைக்கும் பொழுது மயிரிழைகூடத் தப் பாது சரியான சதீத தி தைக்
கிளப்பக் கூடியதாகவும் செய்வார்கள். அத்துடன் பலமுறை அவற்றைப் பரிசோதித்துப் பார்த்து, நூற்றுக்குநூறு சரியென்றால்தான் வெளியே விற்பனைக்கு விடுவார்கள். இது இப்படியிருக்க, மனித உடம்பில் - அதாவது வாயையும் அதன் பகுதிகளையும் பொறுத்தவரையில் - யார் இந்த அளவுகளையும் நுணுக்கங்களையும் மனித வாயினி இதரபாகங்களுக்குள் செய்துவைத்தது? நரம்புக் கருவிகளின் கம்பிகளுக்குப் பதிலாக தொண்டையின் நரம்புகள், தொண்டையிலிருந்து வரும் சத்தத்தை அளவுபடுத்தி, தேவையான அசைவுகளுடனும், கமுக்கங்களுடனும் வெளியே அனுப்ப உதவுவது நாக்கும், அண்ணமும், உள்நாக்கும், பற்களுமாகும். இயற்கையாகவே சத்தம் எழுப்புகின்ற இவ்வுறுப்புகளைப் பழக்கி, தொடர்ந்து அப்பியாசம் செய்வதன்மூலம் மனிதன் கஷ்டப்பட்டு நுணுக்கமாக உற்பத்திசெய்து வெளிக்கொணர்ந்த நரம்புக்கருவிகள், துளைக் கருவிகளின் சங்கீதத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஸ்ருதிசுத்தமான சங்கீதத்தை மனிதரின வாய் வெளிக் கொணர்வதானாலி இது அதிசயத்திலும் அதிசயமல்லவா? அத்தோடு நில்லாமல், பாடுபவர் தாம் முன்னோடியாகப் பாட டுகளை இசைக்கவும், இசைக் கருவிகள் துணையாகப் பின் செல்பவர்களாகவும் அமைந்து
விடுகிறது. என்னே கடவுளின் நுட்பமான படைப்பு!! இசைக்கருவிகள் சகிதம்தான் ஒருவர் பாடும் பாட்டுக் களை ரசிக்கக்கூடியதாய் இருக்கின்றனவாயினும் பாடுபவருகி கே முதனிமை அளிக்கப்படுகிறதென்பதை எவரும் மறுக்க முடியாது!
4. பேச்சின் வன்மை
பெரிய பதவியிலிருப்பவர்கள் கூட்டங்களில் பொறுப்பில்லாமல் திரு வாய் மலர்ந்து அருளும் சில சொற்கள் சில வேளைகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அச்சொற்களை அவர்கள் தெரிந்து சொன்னாலென்ன, தெரியாமற் சொன்னாலென்ன, அவற்றால் ஏற்படும் விளைவுகளை எதிர்பார்க்கமலோ அல்லது மறைமுகமாகவோ சொன்னாலெனின, அதனால் வருமி விளைவுகள் அனர்தீதமாகவே இருக்கும். பாராளுமன்றத்திலோ அல்லது முக்கியமான கூட்டமொன்றிலோ பொறுப்புள்ள ஒருவர் வாயினாற் கூறும் சில வாக்கியங்கள் ஒரு சமுதாயத்தையே சின்னாபின்னமாக்கும் விளைவுக்குக் கொணிடு வரக்கூடும். அதற்குமாறாக, மனிதாபிமானத்தில் திளைத்த ஒருவர் அவரது அடியார்கள் கூட்டத்திற் செய்யும் பிரசங்கமும் அன்பு வார்த்தைகளும் லட்சக் கணக்கான மக்களை நல்ல மார்க்கத்துக்கு இட்டுச்செல்லவும். சில சிக்கலான சந்தர்ப்பங்களில் ஒருவரின் வாயிலிருந்து புறப்படும் ஒரு சொல் அவரின் இரத்த உறவுகளையே நிரந்தரமாகப் பிரித்து வைத்திருப்பதையும் நாம் அறிவோம். அப்படியிருக்கும்போது தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சு எவ்வளவுக்கு மக்களைப் பாதிக்கும் என்பதை நாம் கணி கூடாகக் காணக் கூடியதாக இருக்கிறதல்லவா!
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 29

Page 17
கலப்பை 6O)5 2001
மாகாவாராயினும் ந7 அனுப்புகின்றன. அதுமட்டுமல்ல, கடினமாக காக்க என்றார் தெய்வப் புலவர் இருக்கும் உணவுப்பகுதிகளைப் பற்கள் திருவள்ளுவர். நன றாக அரைத்து உள்ளே நாவடக்கம் அமரருள் உய்த்துவிடும். அனுப்புவதனால் வயிற்றுக்கு வேலை வாயைத் திறந்தால் அதிலிருந்து குறைவாகின்றது. அதனால்தான்
உதிரும் சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அச்சொற்கள் பிறருக்கு நன மை பயக்க வேணுமே தவிர, இமீசை தரக் கூடாது. வாய்ச்சொற்கள்தாம் எத்துணை பலம் கொண்டவை
5. வாயில் காப்போன்
வாய்வழியே போகும் எந்த உணவும் வயிற்றைச் சென்றடையும். வயிறு விரும்பா விடினும் வரும்பொருளை ஏற்றுக்கொண்டே ஆகவேணும். சப்பிய உணவு வாயிலிருந்து கிடைத்ததும், மேல் வாசலை மூடிவிட்டு வயிறு அதைச் சீரணம் பணிணத் தொடங்குகிறது. சீரணிக்க முடியாததை மேலால் (வாயால்) அல்லது கீழ் வாசலால் தள்ளிவிடுகிறது. தான் வயிற்றுக்கு அனுப்பும் உணவு சீரணிக்கத்தக்கதா, வயிறு ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த உணவு போகின்றதா என்பதைக் கவனித்து, உணவைத் தகுந்த நிலையில் உள்ளே அனுப்புவது வாயின் முழுப்பொறுப்பாகும். உதாரணமாக சாப்பாட்டில் காணக்கூடிய எலும்புத்துண்டு, மீன்முள்ளு, முருங்கைக்காய்த் தோல் முதலிய கடினமான பொருள்களை பற்களும் நாக்கும் சேர்ந்து அலசிப்பார்தீது வெளியே துப்பிவிடும். வயிற்றினி வேலை லேசாகின்றது. உணர்ணும் உணவின் சூடறிந்து உள்ளே அனுப்புவதற்கு நாக்கே போதுமானது; வேறு உஷ்ணமானி (Thermometer) தேவையில்லை. அத்துடன் உணவு சீரணிப்பதற்கு உதவும் ஒரு திரவத்தை (Salaiva) வாயினுள் உள்ள சுரப்பிகள் உணவுடன் சேர்த்தே வயிற்றுக்கு
சாப்பாட்டை நன்றாக மென்ற பிறகுதான் விழுங்கவேணும் என்று தெரிந்தவர்கள் சொல்லு வார்கள். அதிகம் சூடான பதார்த்தங்கள் வயிற்றுக்குப் போய்ச்சேர்ந்தால் வயிற்றின் சுவர்களிலுள்ள மென்சவ்வுகளை நாசப்படுத்திப் போடும் என்றதனால் நாக்கு ஒரளவு சூடுள்ள உணவுகளைத்தான் உள்ளே அனுமதிக்கும். அதேபோல, மிகவும் குளிரான உணவுகளைக் கீழே அனுப்ப நாக்கு இடங்கொடாது. இருந்தும், ஐஸ் கிரீம் போன்ற குளிர் உணவுகள் இனிப்பாக இருக்கிறபடியால் மனிதனுடைய அவாக்கொண்ட மனம் நாக்கையும் மீறி அவற்றை உள்ளே அனுப்பிவிடும்.
6. நாக்கினர் நீளம் நாலு அங்குலம்
இதுவரை வாயினதும் வாயினி உறுப்புகளினதுமீ நல ல தொழில்களைப்பற்றிச் சொன்னோம். ஆயின், வாயில் முக்கியமான உறுப்பாகிய நாவுக்கு ஒரு நலமற்ற குணமும் உண்டு. அதாவது, மற்றவேலைகளைச் செய்யும் அதேவேளை உணவை ருசிபார்த்தல் என்று ஒரு முக்கிய பணியும் அதற்கு உண்டு. ஆடு, மாடு, பன்றி, கோழி இவற்றைக் கொண்று அவற்றின இறைச்சியை யந்திரத்தின் உதவியுடனும் ரசாயனப் பொருள்களைச் சேர்தீதும் பதப்படுத்தித் தயாரித்து, நாவுக்கு ருசிதரும் எத்தனையோ விதம்விதமான உணவுப் பொருட்களாக தகரடப்பாக்களிலும் ப்ளாஸ்ரிக் பெட்டிகளிலும் அடைத்து, குளிரூட்டும் வசதிகளுடன் உள்நாட்டிலும் உபயோகித்து,
30 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
கலப்பை
வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். கடலில் பிடித்த மீன் வகைகளையும் அவ்வண்ணமே செய்கிறார்கள். எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாப் பழங்களும் கிடைப்பதரிது. ஆனால் பழமரங்களைப் பயிரிடும் நாடுகள் தங்கள் பழங்களைப் பக்குவமாக, குளிர்சாதன முறைகளைப் பாவித்து, பெட்டிகளில் அடைத்துப் பிறநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அதனால் வருடம் பூராவும் கிட்டத்தட்ட எல்லாப் பழங்களும் எலி லா நாட்டுச் சந்தைகளிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. மேற்சொன்ன உணவுப்பொருள்களை இவ்வளவு பிரயாசைப்பட்டு, நிறையப் பணத்தையும் செலவு செய்து, சந்தைகளுக்கு தீ தருவிப்பதற்கு மூலகாரணம் மனிதரின் நாக்குருசிதான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னதுபோல, இனிப்பு, சொக்கலேற், கேக், அல்வா, தேன்குழல், ஜலேபி, பாயஸம் போன்ற இனிப்புப் பண்டங்களும், வடை, முறுக்கு, கடலை, பொரியல், வகைகளும். ரோல்ஸ், பிஸ்ஸா, கொத்து ரொட்டி, Take-away முதலிய வாயூறும் சுவையான உணவுகளும் நாவில் பட்டவுடன் மிகவும் ருசியாகத்தான் இருக்கின்றன. ருசியைக் கண்டால் நாவுக்குக் கட்டுப்பாடு கிடையாது: உடம்பு கெட்டுப் போனாலும் பரவாயில்லை. அவற்றை மென்று, தின்று, வாயிலிருந்து இரைக்குழாய் வழியாக (கீழ்நோக்கி) வயிற்றைநோக்கிப் போகும்வரை அந்த ருசி தொடரவே செய்கிறது. அதனி பிறகு. 2 பின்னரும் ஒரு நிமிடம் வரை வாய் அசைபோட்டு, சப்புக்கொட்டி, பொச்சடித்து, அந்தச் சுவையை நீடிக்கச் செய்யப்பார்க்கும்: ஆனால் தொடர்ந்தும் நாவில் அந்தச் சுவை
நின்று நிலைக்காது. சற்று நேரம் செல்ல அந்தச் சுவை என்னவென்று தெரியாமலே அது மறைந்துவிடும். ஆகவே, இந்த ருசியான பண்டம் நாக்கின் நுனியிலிருந்து அடிநாக்குக்குப் போகும்வரைதான் நாங்கள் சுவையை அனுபவிக்கிறோம். அதாவது, நாவின் நாலு அங்குல நீளத்தைக் கடக்க எடுக்கும் சுமார் 10 விநாடிகள்தான் (10 Seconds) அந்த ஆனந்தமான அனுபவம் எங்களுக்கு இந்தக் குறுகிய நேர இன்பத்தைப் பெறுவதற்கு எத்தனை மனிதரின் பிரயாசைகள், எவ்வளவு பணச்செலவு, எத்தனை மனத்தாங்கல்கள், எல்லாவற்றையும் கடந்து அந்த ருசி எங்களை வந்து அடைகிறது! நாக்கின்சுவை என்னும் அம்சம்தான் நாம் உண்ணும் உணவையும், அதனூடு உடம்பின ஆரோக் கியத்தையும் நிச்சயிக்கிறது என்று யாரும் சொல்லும் போது எங்களால் நம்பமுடிகிறதா?
வீடுகளில் தைப்பொங்கல் நாளிலும் ஏனைய சமயசம்பந்தமான விசேஷ நாட்களிலுமீ சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதற்குப் பொங்கலும் அதனுடன் வைப்பதற்கு ஏற்ற இதர உணவுப் பணி டங்களும் தயாரிக்கும்பொழுது, (மனச்சாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள்) எதை மனதில் வைத்துக் கொண்டு சமையல் செய்கிறோம்? சுவாமியின் விருப்பத்தையா அல்லது உண்பவரின் விருப்பத்தையா? புற்கைக்கு நெய், சர்க்கரை, பயறு முதலியவை, வடைக்கு இஞசி, கருவேப்பிலை சேர்த்தால்தான் சூரியன் விருப்பமாகச் சாப்பிட்டு எங்களுக்கு அருள்செய்வர் என்று நினைப் பார்களா அல்லது தங்கள் வாய் ருசியைத் திருப்திப்படுத்தவா? பிள்ளையாருக்கு மோதகம் செய்யும்
34ம் பக்கம் பார்க்க
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 31

Page 18

விருக்கின்ற இந்த இளை
கூட்டு வழிபாடு இளைஞர் உரைகள், சிறப்புரைகள், சி
செயற்:

Page 19
கலப்பை
தை 2001
31ம் பக்கத் தொடர்ச்சி
பொழுது, அதனுள் பயறுடன் சீனியிலும்பார்க்க சர்க்கரைபோட்டால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று நினைக்காமல் பிள்ளையாரின் நெய் வேதி தியத்துக்கு மோதகமீ அவிப்பவர்களை நாம் காண்பது அரிது. கடவுளைச் சாட்டி, எங்கள்
வாய்ருசியைத்தான் திருப்திப்படுத்துகிறோம்
కిణ్ణి உபயோகம்!
ஒருவரின் துப்பல் மற்றவில் தற்செயலாகக்கூடப் பட்டுவிட்டால், பின்னவர் அருவருத்து ஒதுங்கி நிற்கவோ, அல்லது துப்பல்பட்ட இடத்தைச் சுத்தம் செய்யவோ முனைகின்றார். மேற்கத்திய அநாகரீக சீர்கேட்டின் ஒரு அங்கமாக, காம உந்துதலுக்கு ஆட்பட்ட இருவர் தத்தம் உணர்ச்சிகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மேலும் முன்னேறுவதற்கு வாய்உதடுகள் மிகவும் பிரயோசனத்துக்கு உள்ளாகின்றன. லீலையிலி இறங்க முனினர் இது
முதற் படியாக அமைந்துவிடுகிறது. மேலைநாடுகளில் தயாரிக்கப்டும் ஏறக்குறைய எல்லாச் சினிமாப்படங்களிலும் இருவர் உதடுகளிற் கொஞ்சும் (kissing) காட்சியைப் படமாக்குகிறார்கள். அதிலும் ஒரு போட்டி கொஞ்சும் காட்சி எந்தப் படத்தில் கூடியநேரம் நின்றுபிடிக்கிறது என்று ஒரு பந்தயம் - அதாவது எவ்வளவு நேரம். எதி தனை விதத்திலி, எதி தனை கோணங்களில் அகீகாட்சியைப் படமாக்குகிறார்களே அவ்வளவு நேரத்துக்கு கொஞ்சுதலும் தாக்குப் பிடிக்கவேணுமாம். உதட்டில் அல்லது வாயில் தொற்றுவியாதி ஏதாவது இருந்தால் அவ்வுதட்டில் கொஞ்சுகிற மற்றவருக்கு அவ்வியாதி பரவக்கூடுமென்பதும் வைத்தியர்களின் எச்சரிக்கை எல்லாம் வாயால் வந்த வினைதான்!
வாசகர்களே! இப்போதாவது நான் சொனின வாயே பிரதானம் என்ற கூற்றை ஒப்புக்கொள்ள உங்கள் மனம் இசையுமா ?
கலைவண்ணி
24ம் பக்கத் தொடர்ச்சி செய்யவேண்டிய நன்றிக்கடன் என்னவெனில், அவர் விட்டுப் போன இடத்திலிருந்து தொடர்ந்து செயலாற்றி அவரது கனவை நனவாக்க வேண்டிய தட்டிக்கழிக்கமுடியாத கடமை புலம்பெயர்ந்து வந்திருக்கும் தமிழராகிய எம்மைச் சார்ந்தது என்ற உணர்மையை என்றும் நினைவிற்கொண்டு அவர் காட்டிய இலக்கை அடையும்வரை நாம் தொடர்ந்தும் செயலாற்றவேண்டியது அவசியம்.
இப்பெருமகனின் மகிமையை ஒரு வரியிற் சொல்வதானால் நணபனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பணியிலே தெய்வமாய், என்று இவரை நினைத்தே (கண்ணதாஸன்)
L//#o)ovu?ấov &z6)/đsew/ruỹ
எழுதிய பாடல்போல மிகவும் பொருத்தமாக இருக்கிறது
பேராசிரியர் அவர்களின் தமிழ்த் தொண்டுகளிற் பெரிதும் பங்கு பற்றி அவருடன் கூடவே பணியாற்றிய அவரினி அன்பு மனைவியாருக்கும், அவர்களினது பிள்ளைகளுக்கும், மற்றும் உறவினர்கள், நணி பர்களுக்கும் எமது ஆழி நீத அனுதாபத்தையும் கூறி ஆறுதல் சொல்லவும்
ஏனையோருடனி சேர்நீது நாமும் விழைகின்றோம்.
அண்ணாரின் பேராத்மா சாந்தியடைவதாக!
சிசு. நாகேந்திரன்
34 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
AZ) AS JU
66
நெருங்கதை
காக்கைச் சிறகினிலே நந்தலாலா’
yrITurfdyryf”
முதலாம் பகுதி
திருச்சி நகரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. மாலை நேரத்தில் அலுவலகம் விட்டு வருவோரும் போவோருமாக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் வீதி நிறைந்து வழிந்தது. தாயுமானவர் ஸ்வாமி கோயில் சந்நிதியில் சுற்றுலாப் பயணிகள் சிலருக்கு, வழிகாட்டி ஒருவர் அங்குள்ள சிற்பங்களுக்கு விளக்கம் கூறிக்கொண்டிருந்தார். அதில் சிறிதும் ஆர்வமில்லாத ஜோசப் அதிலிருந்து விலகித் தனி பார்வையை அங்குமிங் கும் அலையவிட்டான்.
தற்செயலாக அவன் பார்வை அங்குள்ள படிக்கட்டுக்களில் பதிந்தது. அங்கே ஒரு பெண் தலையில் முக்காடிட்டுக் கொண்டு அவசரமாகப் படிகளில் ஏறினாள். அவள் பார்வையில் ஒரு பயம் தெரிந்தது. அவள் அடிக்கடி கீழே திரும்பிப் பார்த்தாள். அத்திசையில் பார்த்த ஜோவுக்கு அவளை யாரும் தொடர்வதாகத் தெரியவில்லை. அப்படியானால் அவளின் செய்கைக்கு என்ன காரணம்? ஜோவுக்குத் திடீரென ஒர் எண்ணம் தோன்றியது, சிறிது முன்னர்தான் அவன் மேலே போய் உச்சிப்பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு அதிலிருந்து திருச்சி மாநகரின் அழகையும் ரசித்துவிட்டு வந்தான். அப்பொழுது அந்த வழிகாட்டி அங்கிருந்து தவறி விழுந்த யாருமே உருப்படியாக மீட்கப்படவில்லை: சரித்திர காலத்திலிருந்து எத்தனை உயிர்கள் அதற்குள் மாண்டனவோ எனக்கூறினார். ஜோ அதிர்ந்தான். அப்படியானால் ஒருவேளை இவளது எணணம்
அதுவாக இருக்கலாமோ என்று நினைத்ததும் அவன் அனைத்தையும் மறந்து படிகளில் மெதுவாக அவள் பார்வையில் படாதவாறு ஏறினான்.
மேலே சென்ற மதி என எல்லோராலும் அழைக்கப்படும் மதிவதனி உச்சிப்பிள்ளையாரை வலம் வந்து மனமுருகிப் பிரார்த்தித்தாள். அதன் பின் மலையின் விளிம்பில் கம்பிகளுக்குப் பின்னால் நின்று திருச்சி நகரின் அழகைக் கடைசித் தடவையாக அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள். திருச்சி நகரின் பசிய வயல்களும் பூரீரங்கம், திருவானைக்காவல் கோபுரங்களும், காவேரி நதியும் அவளுக்கு ரம்மியமாகத் தெரிந்தன. அவள் கண்கள் கலங்கின. ஆனால் அழக்கூடாது எனத் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாள். இரக்கமற்ற இந்த உலகில் வாழ்வதைவிட இறைவைா என னை உணினிடம் சேர்த்துக்கொள் எனக் கண்மூடிச் சிறிது நேரம் பிரார்த்தித்தாள். அப்பொழுது, “இங்கிருந்து பார்க்கும் போது திருச்சி நகரம் மிக அழகாக உள்ளது, இல்யைா மேடம்?” என ஒரு குரல் ஆங்கிலத்தில் கேட்டது. சிவபூசையில் கரடி மாதிரி யார் இந்தப் பிரகிருதி என நினைத்துக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்து எரிச்சலுடன் "ஆமாம்” என்றாள், அவனை அனுப்பிவிடும் நோக்கத்துடன். ஆனால் அவனோ அசைவதாக இல்லை. “நீங்கள் அடிக்கடி இங்கு வருவீர்களா?” என்றான். மதி மீண்டும் எரிச்சலுடன் “ம்” என்றாள். ஜோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 35

Page 20
கலப்பை
GO5 2001
அப்பொழுது கீழேயிருந்து யாரோ “ஜோ நாங்கள் போகின்றோம்” என்றது. அதற்கு அவன் “சரி, ஹோட்டலில் சந்திப்போம்” என்றான். திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்திய மதி “ஏன், அவர்களுடன் நீங்கள் போகவில்லையா?” என்றாள். அவன் “இல்லை” என்றான் ஒரு நமுட்டுச் சிரிப்புடன்.
மதி அவசரமாக “இனி இங்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? இன்னும் சிறிது நேரத்தில் கோவிலை மூடி விடுவார்கள். பின்னர் நீங்கள் வெளியே போக முடியாது”
என்றாள்.
“பரவாயில்லை நீங்கள் போகும் போதே நானும் போகிறேன். எப்படியும் கோவில் மூடுவதற்கு முன் நீங்கள் போவீர்கள்தானே’
என்றான்.
சரியான நந்தி தான் எனத் தனக்குள் மதி அலுத்துக் கொண்டாள். “என் பெயர் ஜோ” என்று அவளைப் பார்த்துக் கரங்குவித்தவன் “நீங்கள் ஏன் இந்த மலையின் ஒரத்தில் நிற்க வேண்டும்? தற்செயலாகத் தவறி விழுந்தால் ஒரு எலும்புகூடக் கிடைக்காதென்று சற்று முன்னர் தானே சுற்றுலா வழிகாட்டி சொன்னார், நாங்கள் அந்தப் படியில் போய் இருப்போமா?” என வினவினான்.
வேறு வினையே வேண்டாம், தற்போதுள்ள தொல்லைக்கு ஒரு முழுக்குப் போட வந்தால் இவன் புதிதொன்றைச் சேர்க்கிறானே என்று நினைத்தவள், “எதுவும் வேண்டாம் நான் போகிறேன்” என அவனை விட்டு விலக முயன்றாள். ஆனால் தன் கைகளை நீட்டி அவளைப் போகவிடாது தடுத்தவன்,
“உங்களுக்கு என்ன பிரச்சனையென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கின்றேன்” என்றான்
கண்கள் கனலாக, தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள் “பிரச்சனையென்று சொன்னேனா?” எனச் சீறினாள்.
“சொல்லவில்லை, புரிந்தது” என
மெதுவாக இழுத்தான்.
“எது?” எனக் கோபமாகக் கேட்டவளுக்கு அவனுக்குத் தன் நோக்குப் புரிந்துவிட்டது: அது தான் தடுக்கின்றான் என்பது உறைத்தது. அவள் விழிகள் உடைப்பெடுத்தன. அவனைவிட்டு விலகிப் படிகளில் போய் இருந்து விம்மி விம்மி அழுதாள்.
ஜோ சிறிது நேரம் அவளை அழவிட்டான். பின் “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் பகவான் பூஞரீ சத்ய சாயி பாபாவின் ஒரு பக்தன். ஸ்வாமி எப்பொழுதும் பிறருக்கு உதவி செய் என்று சொல்கின்றார். உங்களுக்கு என்ன கஷ்டம்? நான் ஏதாவது உதவி செய்யலாமா?” எனக் கேட்டான்.
“நானே ஒரு கஷ்டம். நான் பிறந்தது எல்லோருக்கும் கஷ்டம்” எனச் சரளமான ஆங்கிலத்தில் கூறியவள். “எதற்கு விஷப் பரீட்சை, ஜோ? என் முகத்தைப் பார்த்ததும் நீங்கள் பயந்து ஓடுவதை விட இப்பொழுதே
போய்விடுங்கள்” என்றாள் .
“நன்றாக ஆங்கிலம் பேசுகின்றாய், நன்கு படித்த பெண்ணாக இருப்பாய் போல் தெரிகிறது. D அழகைப் பெரிதுபடுத்துகின்றாயே, இது என்ன
36 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001
கலப்பை
மடைத்தனம்” என ஜோ அலுத்துக் கொண்டான்.
“மதியின் கோபம் இன்னும் கிளர்ந்தெழுந்தது. நான் ஒன்றும் அதைப் பாராட்டவில்லை. இங்குள்ளவர்கள் தானி அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவே விடுகின்றார்கள் இல்லை. சாவதற்கு வந்தால் இங்கே நீ தடுக்கிறாய். உனக்கேன் வீண் வம்பு, ஜோ தயவு செய்து பேசாமல் போய்விடு” என்றாள்.
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “இன்னும் நீ என் கேள்விக்குப் பதில் சொல்லவில்ேைய?’ என இழுத்தான்
“ஓ! என் பெயர் மதிவதனி, மதிவதனி என்றால் அர்த்தம் என்ன தெரியுமா? சந்திரன் போன்ற முகத்தையுடைவள்” எனக் கோபம் தொனிக்கக் கூறியவள், “ஆனால் என் முகத்தைப் பார்த்தால் எல்லோருக்கும் பயம். நான் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் தங்கப் பதக்கம் பெற்ற ஒரு பட்டதாரி. ஆனால் என்ன பரிதாபம் தெரியுமா, ஜோ? எனக்கு ஆரம்பப் பாடசாலையில் சத்துணவு வினியோகிக்கும் ஓர் ஆயா வேலை கூடக் கிடைக்கவில்லை. என் முகத்தைப் பார்த்துப் பிள்ளைகள் பயந்து விடுவார்களாம். படிக்கும் வரை யார் என்ன கேலி செய்தாலும் பொருட்படுத்தாமல் படித்தேன். படித்துவிட்டால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. உலகம் என் திறமையை மதிக்கும் என நம்பினேன். ஆனால் வேலை தேட ஆரம்பித்ததும் எனி நம்பிக்கையெல்லாம் சுக்கு நூறாகியது. நீ வேலை பார்த்தது போதும், கல்யாணம் செய்து வைத்து உன்னை ஒழித்தால் போதும் என எண் சகோதரர்கள் ஜாதகத்தைத் தூக்கினார்கள். அம்மாவிடம்
அழுது என்ன பிரயோசனம்? எதுவோ நடக் கட்டும் , அவர்களாவது சந்தோஷப்படட்டுமென நினைத்து அந்தக் காட்சியில் நான் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்தேன். நீ நம்ப மாட்டாய் ஜோ, நிழலுக்காகவேனும் பாடசாலையில் ஒதுங்குபவன் கூட என் முகத்தைப் பார்த்ததும் ஓடிவிடுவான்’ எனக் கேலியாகக் கூறினாலும் அவள் வார்த்தைகளிலிருந்த வேதனையை ஜோவினால் உணர முடிந்தது. ஜோவின் ஆர்வம் அதிகரித்தது. அப்படி அந்த முகத்தில் என்ன குறை? அதை அவள் இனினும் காட்டவில்லை. முக்காட்டைத் திறக்கவே இல்லை. நிறம் கறுப்பாக இருந்தது. அது கண்ணனின் நிறந்தானே! அதில் என்ன குறை? என நினைத்தவன். “மதி நான் உன் முகத்தைப் பார்க்கலாமா?” என்றான் மிகவும் பவ்வியமாக.
“பார்த்துவிட்டுப் போய்விடு, ஜோ!” முக்காட்டை எடுத்தாள். அவள் கண்கள் கொப்பளித்துக் கன்னங்களில் வழிந்தது. அந்தப் படியில் இருந்த வெளிச்சத்தில் ஜோ உற்றுக் கவனித்தான். நீண்ட முகம் கருநிறம். அது இயற்கை. ஆனால் இடையிடையே நெருப்புப் பட்டதுபோல் சிறு சிறு தழும்புகள். அவைதான் அழகை மேலும் குறைத்தன.
660
“போதுமா?’ எனக் கேட்டு முக்காட்டை மீணடும் போட்டுக் கொணி டவள் மளமளவெனப் படிகளில் இறங்கினாள்.
“தயவு செய்து போகாதே மதி. இதெல்லாம் ஒரு குறையே அல்ல. உனக் கொரு வேலை தந்தால் சரியா?” எனக் கேட்டான்.
அதிர்ந்து நின்று அவனை நிமிர்ந்து
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 37

Page 21
arbøLapu
தை 2001
பார்த்தவளின் இதழ்களில் அரும்பியது.
இளநகை
அவசரமாக அவளருகே இறங்கி வந்தவன், தன் சட்டைப் பையில் இருந்த தனது விலாச அட்டையை அவள் கையில் கொடுத்து, “மதி நான் ஒரு கம்ப்யூட்டர் அலுவலர். ஆஸ்திரேலியாவில் ஒரு சிறு கம்பனியின் சொந்தக்காரன். நீ என்னுடன் ஆஸ்திரேலியா வந்தால் உனக்கு நான் ஒரு வேலை தருகின்றேன். இருவருமாகச் சேர்ந்து பாடுபட்டு முன்னேறுவோம். பணம் இருந்தால் உன் முகம் ஒரு பிரச்சனையே இல்லை. இப்போதுள்ள மருத்துவ வசதிக்குச் சத்திர சிகிச்சை செய்து சரிப்படுத்தலாம் வருகிறாயா?” என்றான்.
மதியின் விழிக்குளங்கள் உடைப்பெடுத்துத் தனி வழியே ஓடின. அவனையே மெளனமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஜோ தொடர்ந்தான். “என்னுடன் வந்தவர்கள் எல்லோரும் பகவான் பாபாவின் பக்தர்கள். நாங்கள் இங்கே ஹோட்டல் ரங்காவில் தங்கியிருக்கிறோம். நாளைக் காலை புறப்பட்டுப் பெங்களுர் போய் ஹைஃபீல்டில் ஸ்வாமியைத் தரிசித்துவிட்டு மும்பை (பம்பாய்) வழியாக ஆஸ்திரேலியா செல்கின்றோம். நீ எங்களுடன் வந்தால் பம்பாயில் உனக்கு விசா, பிரயாணச்சீட்டுப் போன்ற ஒழுங்குகளைச் செய்துகொண்டு எல்லோருமாகப் போகலாம்” என்றான்.
மதி முதற்தடவையாக வாயைத் திறந்து “அவி வளவு விரைவில விசா கிடைக்குமா?’ எனக் கேட்டாள்.
“உனக்குத் தெரியாது மதி. உன் கல்வித் தராதரங்களுக்கு அடுத்த பேச்சுப் பேசாமல்
விசா தருவார்கள். நீ உலகில் எங்கே வேலை தேடினாய்? இந்தியாவில் மட்டுமே தேடிவிட்டு இப்படி முடிவெடுக்கலாமா? உலகில் திறமையை மதிப்பவர்களும் இருக்கின்றார்கள். வேண்டுமானால் வந்து பார், செலவைப்பற்றி ஒன்றும் யோசிக்காதே, எல்லாம் என் பொறுப்பு” என்றான்.
மதிக்கு ஒரே ஆச்சரியம். எதிரே தெரிந்த தாயுமான ஸ்வாமியைப் பார்த்துத் தாயாகி மகப் பேறு பார்த்த அன்னையே சாவதற்கு வந்தவளுக்கு உன் சந்நிதியில் வைத்து வாழ வழி காட்டுகின்றாயா? என நினைத்தாள். ஜோவை எவ்வளவுக்கு நம்பலாம் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சரியென ஒப்புக் கொண்டு காலையில் ஹோட்டலில் சந்திப்பதாகக் கூறிச்
சென்றாள்.
மதி வீட்டுக்குப் போகும் போது ஒவ்வொன்றாக நினைத்தாள். பெற்றோரின் கடைக் குட்டியாகப் பிறந்து அவர்களின் செல்வ மகளாக வளர்ந்தது. அவள் பிறந்த பின்னர்தான் அதிர்ஷ்டம், பூgரங்கநாதரே என் பெண்ணாகப் பிறந்திருக்கிறார் என்று அப்பா சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார். அவளது அந்தக் கருநீல நிறம் அவருக்கு ஒரு குறையாகவே தெரிந்ததில்லை. சில சமயம், “இப்படி வந்து பிறந்திருக்கிறாளே, பின்னுக்கு என்ன கஷ்டமோ?’ என்று அம்மா அங்கலாய்ப்பார். அதற்கும் “என் பெண்ணை அடையவன் அதிர்ஷ்டசாலி. எவனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ’ என அப்பா சொல்லிக் கொள்வார்.
ஆனால் அப்பா திடீரென இறந்து போனார். போதாக்குறைக்கு ஒருநாள் முகத்தில் கொதி எண்ணெய் தெறித்து திட்டுத் திட்டாக
38 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

GO)5 2001
636
அடையாளங்கள் ஏற்பட்டுவிட்டது. அவளைப் பார்ப்பவர்கள் மறுமுறை பார்க்க விரும்புவதில்லை. படிக்கும் போது மதி அதை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.
அவளைக் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “கணனா, கார் முகில் வனனா” என்று கேலி
செய்தவர்களையெல்லாம் தன் திறமையால் தலை குனிய வைத்தாள். கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் பல புதிய யுக்திகளைக் கையாணி டு அனைவரையும் கிறங்க வைத்தாள். ஆசிரியர்களுக்கு அவளிடம் ஒரு மதிப்பு இருந்தது. சில சமயம் அவர்களால் தீர்க்க முடியாத கணக்குகளுக்கு அவள் தீர்வு கண்டாள். இதனால் மதிக்குத் தன் திறமையில் அதீத நம்பிக்கை இருந்தது. அதைக் கொணி டு பல சாதனைகள் படைக்கலாமெனக் கற்பனையில் மிதந்தாள்.
ஆனால் படித்து முடிந்து வேலை தேடியபோதுதான் ஒரு பெண்ணுக்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது, அழகும் அவசியம் எனப்புரிந்து மனம் சோர்ந்து போனாள். வேலை தேடியபோதும், பின்னர் சகோதரர்களின் திருப்திக்காகத் திருமணத்திற்குக் காட்சிப்பொருளாக இருந்தும், மனத்தில் விழுந்த அடிகளால் மதிக்கு வாழ்வே வெறுத்து விட்டது. போதாக்குறைக்கு அணிணாக்களின் வெறுப்பு, அணிணிகளின் ஏளனம், அம்மாவின் கண்ணிர் எல்லாமாகச் சேர்ந்து அவளை அந்த முடிவுக்குத் தள்ளியது.
இத்தனைக்கும் அவளுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அவள் அருமைத் தோழி சித்ராங்கி தான். கல்லூரியில் கேலி செய்தவர்களிடம் சண்டை போட்டதும் இன்டர்வியூவில் வேலையில்லை எனக்
கடிதம் வந்ததும் ‘எலி லோரும் மடையணிகள் இவங்களுக்கெல்லாம் அதிர்ஷ்டமே இல்லை, மதி” என்று ஒருபாட்டம் திட்டித் தீர்த்ததும் அவள் தான.
அப்பொழுதெல்லாம் மதி “உனக்கு மட்டும் ஏன் இந்த அன்பு சித்து” எனக் கண்கலங்கக் கேட்பாள். “அவள் நீ பாரேன் கடவுள் உனக்கு ஒரு வழி காட்டத் தான் போகின்றார். உன் திறமையை இந்த உலகமே பாராட்டும் போது இவர்கள் மூக்கில் விரலை வைக்கப் போகின்றார்கள்” என்பாள். “இருந்தாலும் உனக்குப் பேராசை தானி , சித்து’ என பாள். “இதொன்றும் பேராசை இல்லை, என் நியாயமான ஆசை மதி. என்றைக்காவது உன் திறமை மதிக்கப்படும். அன்று பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும் போது என்னை மறந்திடாதே’ எண் பாள். “அதெப்படிச் சித்து நீ இல்லாமல. அங்கே யாரும் கண்ணன் பாட்டுப் பாடினால் பல்லவி நீதானே பாட வேண்டும்” என்பாள். “போயும் போயும் உனக்காகப் பேசுகின்றேனே! எனக்கு இதுவுமி வேணடும் இனினமும் வேண்டுமடி’ எனச் செல்லமாகக் கடிந்து கொள்வாள்.
சித்து சொன்னது போல் கடவுள் கண் திறந்துவிட்டாரா என்ற நினைவலைகளுடன் வீட்டை அடைந்தாள். அம்மா வழிமேல் விழிவைத்து வாசலிலேயே நின்றார். அவளைக் கண்டதும் “எங்கே மதி போயிருந்தாய்?” எனக் கவலையுடன் வினாவினார். அப்பொழுது தான் செய்ய இருந்த வேலையை நினைத்து அவள் கண்கள் கலங்கின. காக்கைக்கும் தணி குஞ்சு பொண் குஞ்சு என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. “சும்மா கோவில்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 39

Page 22
bass)
தை 2001
வரையும் போயிருந்தேன்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள்.
இரவு தனக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்து விட்டு அணி னையிடம் “பெங்களுரிலுள்ள ஒரு தோழி வரச் சொல்லியிருக்கிறாள். அங்கே ஒரு வேலை கிடைக்கும்போல் இருக்கிறது. நாளைக் காலை பஸ்ஸில் போகின்றேன். போனபின்னர் அண்ணாக்களிடம் சொல்லு. இப்பவே சொன்னால் அங்கே பெரிதாக என்ன கிடைக்கப் போகிறது என்பார்கள்’ என்றவள் “அம்மா ஒன்றுமட்டும் நினைவில் வைத்துக் கொள். உண பெண எங்கிருந்தாலும் மானம் மரியாதையுடன் தான் வாழ்வாள். அப்படி எனக்கு ஏதாவது களங்கம் ஏற்பட்டால் அந்த நிமிஷமே உயிரை விட்டுவிடுவேன” என அன்னையின் மடியில் முகம் புதைத்துக் கணிணிfவிட்டாள். “உன் கடைசிக் காலத்தில் உன்னை நான் நன்றாக வைதீதிருக்கக் கடவுள் அருள வேண்டுமம்மா’ என்று அழுதாள். “என்ன மதி, என்னென்னவோ சொல்கிறாய்” என அம்மா அவளை இறுக அணைத்துக் கொண்டார்.
“ஒன்றுமில்லை நீ போய்ப் படு” என அன்னையை அனுப்பியவள், சித்ராங்கிக்கு விபரமாகக் கடிதம் எழுதினாள். “திக்குத் தெரியாத காட்டுக்குள் போகின்றேன், சித்து திசை தெரிந்தால் தெரிவிக்கின்றேன். அம்மாவை எப்படியாவது சமாளித்துக் கொள்” என எழுதி மறுநாள் காலை தபாலில் சேர்க்க என வைத்தாள்.
மறுநாள் அதிகாலை புறப்பட்டு ஜோ சொன்ன ஹோட்டலுக்குப் போய் வரவேற்பில் சொன்ன போது, “இங்கே இரம்மா, இன்னும்
எலி லோரும் கணக்குகளைப்
சிறிது நேரத்தில புறப்படுகின்றார்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றேன்” என அந்த முகாமையாளர் கூறினார். அப்பொழுது மாடிப்படிகளில் சிலர் இறங்கி வந்தனர். அவர்களில் ஒருவராக ஜோவும் வந்தான்.
அவளைக் கணிடதும் “மதி நீ வந்து விட்டாயா எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான்.
பின்னர், வா எல்லோரையும் அறிமுகம் செய்து வைக்கிறேன் என அழைத்துப் போய் பீட்டர். மார்க், கீதா, கண்ணன், ஜேன், என ஒவ்வொருவராக அறிமுகம் செய்தவன் “இவங்கதான் நான் இரவு சொன்ன மதி: எங்களுடன் வருகிறார்கள்” என்றான். எல்லோர் வதனங்களிலும் தெரிந்த இரக்கத்தின் சாயலைக் கண்டு மதி வெட்கித் தலை குனிந்தாள்.
அவர்கள் அனைவரும் அவளை மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினர். பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்தில் இருந்த ஜேன் “மதி, நீ தப்பாக நினைக்கவில்லை என்றால் ஒன்று கேட்கவா? உன் முகத் தழும்புகள் நெருப்புச் சூட்டாலி வந்தவையா? எவ்வளவு காலமாகிவிட்டது?, ஏனென்றால் நான் ஒரு டாக்டர், அதை மாற்ற முயற்சிக்கலாம்” என்றாள். மதி “அது கொதி எண்ணெய் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பறந்ததால் ஏற்பட்டது” எனறு கூறினாள். “ஆஸ்திரேலியாவில் இப்பொழுது ஒரு வகைக் கழிம்பு இருக்கிறது. புதிய காயங்களை ஆற்றியுள்ளது. அங்கே போனதும் முயற்சிப்போம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ப்ளாஸ்ரிக் சர்ஜரி. நீ ஒன்றுக்கும் கவலைப் படாதே’ என அவள் கைகளை அன்புடன் அழுத்தினாள். அந்த அன்பில் நெகிழ்ந்த மதியின் கண்கள்
40 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
கலப்மை
கரைந்து அவள் கைகளில் தெறித்தது. “அழக்கூடாது மதி, அது கோழைத்தனம். மற்றவர்களுக்கு ஒரு சவாலாக நீ வாழ்ந்து காட்ட வேணும். இந்த உலகில் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இல்லை. அதையெல்லாம் அன்பினால் வெல்லலாம் என்று ஸ்வாமி சொல்கின்றார். எல்லா ஜீவராசிகளிலும் அன்பு வைத்தால் பின்னர் நமக்கு எதிரிகளே தெரிய மாட்டார்கள். பிரச்சனைகளும் இருக்காது தைரியமாக இருந்து கொள்” என்றாள்.
பெங்களுரில் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். ஜேன் எந்தவித விகல்பமும் இல்லாமல் எனக்கும் மதிக்கும் ஒரு அறை போட்டுவிடுங்கள் என்றாள். அதற்கிடையில் 0ைஃபீல்டில் ஒருவர் போய் விசாரித்துவிட்டு வந்து பகவான் பாபா அங்கே வந்துள்ளார் என்று சொன்னதும் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லோரும் குளித்துச் சிரம பரிகாரம் செய்து கொண்டு ஸ்வாமியின் தரிசனத்திற்காகச் சென்றனர். மதியும் அவர்களுடன் சென்று எதுவித இலக்கும் இல்லாமல் ஒரு மூலையில் நின்றாள். தரிசனத்துக்காகப் பகவான் வந்த போது அவள் உடலெல்வாம் மயிர்க்கூச்செறிந்தது. கண்கள் கலங்கின. அவள் அருகே வந்த ஸ்வாமி அவளுக்கு யூனிரங்கநாதராகத் தோன்றினார். அவள் கைகள் அவரை நோக்கித் தாமாகவே குவிந்தன.
மும்பைக்குப் போய் அங்கு வேண்டிய சம்பிரதாயங்களை முடித்து விசா எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். மும்பையில் ஜோ விசா கிடைத்தது என்று சொல்லும் வரை மதிக்கு நம்பிக்கையே இல்லை. அதன் பின் திறமையை மதிப்பவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள் என
நினைத்து ஆறுதல் அடைந்தாள்.
மும்பையிலும் சிங்கப்பூரிலுமாக எல்லோரும் அவளுக்கு உடைகளை வாங்கிக் குவித்தனர். அங்கே சிங்கப்பூர்வாசியான கீதா “நான் அம்மாவைப் பார்க்கப் போகின்றேன். நீயும் வா மதி” என அவளை அழைத்துச் சென்றாள். அந்தத் தாய் கருணையே வடிவானவராக இருந்தார். மிகவும் கனிவுடன் பழகினார். கீதாவிடம் “மதிக்கு வேண்டிய உதவிகளைச் செய்’ எனச் சொன்னார். ஒரு பட்டுப் புடவையைப் பகவான் பாதங்களில்வைத்து நமஸ்கரித்து மதிக்குக் கொடுத்தார். “அவன் அருள் இருக்க உனக்கு எந்தக்குறையும் வராது. தைரியமாக இரு” என ஆசீர்தித்து அனுப்பினார். வழிநெடுகலும் இப்படியும் மனிதர் இருக்கிறர்களே! இதுவரை யாரும் ஏன் என் கண்ணில் படவில்லை? என்று மதி நினைத்தாள்.
கிட்னி விமானநியைத்தில் இறங்கியதும் அவரவரே பிரிந்தனர். மதி ஜோவுடன் ஒரு டாக்சியில் அவனது வீட்டை அடைந்தாள். மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டில் ஜோ "இது என் அறை, இது அலுவலகம் மற்றது உன் அறை” எனக் காட்டினான். அலுவலகம் என அவன் காட்டிய அறைக்குள் ஒரு பழைய கம்ப்யூட்டரும் சில வெற்றுத்தாள்களுமே இருந்தன. மதி திகைத்து நின்றாள்.
பின் தன் அதிர்வை மறைக்க முடியாமல் “இதுதானா உன் அலுவலகம்? ஜோ” என்றாள். “ஆமாம் ஆரம்பித்து ஆக இரண்டு மாதங்கள் தானே. கம்பனியைப் பதிவு செய்தேனர், பிஸினெஸ் காட் அடித் தேனி. புட்டபர்திதிக்குக் கிளம்பிவிட்டேன். இப்பொழுது பகவான் ஓர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 41

Page 23
abØLửapu
தை 2001
உதவியாளரையும் தந்திருக்கிறார். இனி இருவருமாக உழைக்க வேண்டியதுதான்” என்றான். மதி கிழிஞ்சுது போ என்று தனக்குள் முணுமுணுத்தாள் இவனை நம்பி வந்தது தவறோ என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் வராவிட்டால் அங்கே பெரிதாக எனின நடநீ திருக்கும். ஆகக் குறைந்தது அமீமா சகோதரர்களுக்காவது நிம்மதி. அத்துடன் கையில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது அதுவும், தன் அறிவும், கடவுள் அருளும் கை கொடுக்கும் என நம்பினாள்.
அவள் மனத்தைப் புரிந்தது போல் “என்ன, வியப்பாக இருக்கிறதா?’ என்று ஜோ கேட்டானி , பின் “என்னைப் பற்றி உனக்கொன்றும் தெரியாதில்லையா, மதி. நாணி உன்னைப் போலி ஒன்றும் பட்டதாரியில்லை. தொழில் நுட்பக் கல்லூரியில் ஒரு ஆறு மாதங்கள் கம்ப்யூட்டர் படித்தேன். ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடினேன் யாருமே தரவில்லை. சமூகநலத்துறையில் ஒரே தொல்லைப்படுத்தினார்கள். வங்கிக் கடனெடுத்துச் சொந்தத் தொழில் தொடங்கு என்றார்கள். சரியென்று கடனெடுத்துக் கம்ப்யூட்டர் வாங்கினேன் அவர்கள் கண்களைத் துடைப்பதற்காக. ஆனால் நாளைக்கு அங்குதான் போய் நிற்கப் போகின்றேன். வேலை கிடைத்தால்தானே அவர்கள் பணம் தருவதை நிறுத்த முடியும்” என்றான்.
மதிக்கு அவனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. “அரசை ஏமாற்ற இது ஒரு வழியா?” என்றாள். "ஆமாம் மதி, அரசு மக்களைச் சோம்பேறியாக்குகின்றது. பெற்றவர்களும் பிள்ளைகளும் பிரிய வழிவகுக்கின்றது. நானெல்லாம் பெற்றோரால்
கைவிடப்பட்ட ஒரு ஜாதி, தெரியுமா? என் எட்டு வயதிலிருந்து பதினாறு வயதுவரை வாரத்தில் அப்பாவிடம் இரண்டு நாட்கள், அம்மாவிடம் ஐந்து நாட்கள் என்று பந்தாடப்பட்டு, பின் பதினாறு வயதில் அரசிடமே விட்டு விட்டார்கள். அதனால் தான் எனக்கு இந்தியரின் விடா முயற்சியும், தனி னம் பிக்கையுமி, கூட்டுக் குடும்ப முறையும் ஸ்வாமி எப்போதும் சொல்லும் எல்லோரிடமும் அண்பு காட்டு என்பதும் மிகவும் பிடிக்கும்” என்றான்.
எல்லாம் சரிதான், அன்பு எங்கே வாழ்கிறது? என மதி தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
“ஆனால் இந்த வீடு மட்டும் என் சொந்தம். என் தாய் வழிப் பாட்டி எனக்கு விட்டுச் சென்றது. அதைக்கூட என் அம்மா பறிக்கப் பார்த்தார். ஆனால் பாட்டியின் உயில் மிகவும் உறுதியாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றான்.
“என்னை என்ன துணிவில் இங்கு கூட்டி வந்தாய் ஜோ? இவ்வளவு கஷ்டப்படும் நீ என் ரிக்கற் பணத்துக்கு என்ன செய்தாய்?” எனக் கேட்டாள். இதழ்களில் இளநகைபடர அவளைப் பார்த்தவன், “என்னை நம்பியா உன்னைக் கூட்டி வந்தேன்? இல்லை மதி நம் சுற்றுலாக் குழுவையும், உண் திறமையையும் நம்பியல்லவா. அந்த நேரம் உனக்குக் காட்டுவதற்காவது என் பெயர் அட்டை பயன் பட்டதே என்று மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். நம் நாடு அகதிகளுக்குப் புகலிடம் கொடுப்பது. நான் அதற்கு பகவானால் பயன்படுத்தப்பட்ட ஒரு வெறும் கருவிதான் மதி. நீ என்னுடன் இருக்க வேண்டுமென்பதில்லை. வெளியே போய் வேலை தேடு உனக்கு நிச்சயம்
42 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001
Asiapu
நல்ல வேலை கிடைக்கும்” என்றான்.
“இல்லை, ஜோ” என அவசரமாக மறுத்தவள். “நான் உனக்கு வேலை செய்யத்தான் வந்தேன். நீ திருச்சியில் சொன்னது போல இருவரும் சேர்ந்து பாடுபடுவோம். வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்கான முக்கிய சாதனம் பத்திரிகைதான். நீ அதைப் போய் வாங்கி வருகிறாயா?” என்றாள்.
“இப்போதே வேலை தொடங்க வேண்டியதில்லை மதி. ஆனாலும் நான் மற்றைய பொருட்கள் வாங்குப் போது பத்திரிகையும் வாங்கி வருகின்றேன்” எனக் கூறிச் சென்றான்.
வெளியே போன ஜோ திரும்பி வர வெகு நேரமாகிவிட்டது. அதற்கிடையில் மதி வீட்டை ஒழுங்குபடுத்தினாள். கம்ப்யூட்டரைத் துடைத்து அதை இயக்கிப் பார்த்தாள் அது நன்றாக வேலை செய்வது கண்டு பேருவகை அடைந்தாள். அதை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற தனினம் பிக்கை அவளுக்கிருந்தது. மாலையில் ஜோ ஒரு லாரியில் கட்டில் மெத்தை கதிரை மேசை என்று பல பொருட்களைக் கொண டு வந்து இறக்கினான். நான் இவ்வளவு நாளும் தனித்திருந்தேன். அதனால் கவனிக்கவில்லை இப்பொழுது நீயும் இருப்பதாலி இதையெல்லாம் வாங்கி வந்தேன் என்றான்.
ஜோ கொண்டு வந்த பேப்பரைப் புரட்டி ஏதாவது வேலை இருக்கிறதா என்று பார்த்தாள். அதிலே சில சிறு வியாபார நிறுவனங்கள் தங்கள் வியாபார அறிக்கைகளை வைத்திருப்பதற்கும் வரவு
செலவுக் கணக்குப் பார்ப்பதற்குமான ஒரு ஸாஃப்ட்வேர் (Software) கேட்டிருந்தது. அப்படியான ஒன்றுக்கு மிகவும் மதிப்பு இருக்கும் போல் தெரிந்தது. எப்படிச் செய்யலாம் எனத் திட்டம் போட்டு மறு நாள் குறித்த ஒரு நிறுவனத்திற்கு தான் தயாரித்த Software உடன் ஜோவை அனுப்பினாள். சிறு திருத்தங்களுடன் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். மதி அதைச் செய்வதில் முழு மனத்துடன் முனைந்திருந்தாள்.
சனிக்கிழமை காலை ஜேன் வந்தாள். “மதி இந்தக் கிறீமைப் பூசிப்பார். உன் முகத்திலுள்ள அடையாளங்கள் குறையலாம்: அல்லது வேறு ஏதாவது செய்வோம்” என்றாள். அத்துடன் பாணி, பால், பிஸ்கட் என நிறைய உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து “இன்று ஓய்வு நாள் தனித்திருந்து உண்ண ஒரு மாதிரி இருந்தது. அது தான் எல்லோருமாகச் சாப்பிடலாம் எனக் கொண்டு வந்தேன்” என்று கடையைப் பரப்பினாள்.
அப்பொழுது ஜோ “உனக்குத் தெரியுமா மதி? ஜேனும் எண் ஜாதி தானி ! பெற்றவர்களால் கைவிடப்பட்டவள். ஆனால் அவள் எப்படியோ படித்து டாக்டராகிவிட்டாள்” என்றான். மதிக்கு அவர்களைப் பார்க்க இரக்கமாக இருந்தது. அன்புக்காக ஏங்கும் குழந்தைகளாகத் தெரிந்தனர். கருணையுடன் அவர்களைப் பாாத்து “ஜேனுக்கு நாங்கள் இருக்கிறோம் ஜோ, பிறகென்ன கவலை?” என்றாள். “நன்றி மதி. அன்பு தான் எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து. அதனால் தான் அன்பே தெய்வம் என்கின்றோம். ஆனால் பலருக்கு அது புரிவதில்லை.
புரம் பக்கம் பார்க்க
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 43

Page 24
staf
ഞg, 2001
INDIAN CIVILIZATION, HINDUSM AND THE DOS
Indian Civilisation is one of the four pioneering civilisation which have laid the foundation of the Human civilisation as we see it today. Fifty centuries ago (3000 B.C), four gifted races distinguished themselves by their culture and civilisation. The Hamitic Race founded an ancient empire in Egypt, The Semetic Race conquered Chaldea united Sumir and Accad, The Turanian Race founded a kingdom in China and The Aryan Race flourished in India.
The Indian Civilisation was one of the first civilisation to have the wheel. Excavation in Harappa and Wohenjo Daro have revealed seaports, water and sanitation systems, and streets of brick-built houses laid out in a grid pattern. Thousands of small inscribed seals show that the people had developed methods of writing and calculating, though their script has not yet been deciphered. And who can forget the concept of 'nothingness' given by India to the world. Its not surprising that wheel and the zero have got the same shape.
The history of modern India is closely linked to the history of Hinduism, which is The Greatest legacies of the Indus Valley civilisation. It is this legacy alone which has developed a Indian Society which has kept its
individual character during 4000 years of conquest. It is Hinduism alone and its way of life which has remained constantly in India providing unparalleled continuity in spite of so many invasions, many periods of apparent anarchy and rise & fall of many great empires.
Elements of Hinduism can be traced back to the dawn of Indian Civilisation around 2500 B.C. Different period of Civilisation of India starting from Pre-Vedic Age, Vedic Age (2000 to 1400 B.C.), Epic Age (1400 to 800 B.C.), Age of Laws and Philosophy (800 to 315 B.C.), Rise of Buddhism (522 B.C.), Buddhist Age (315 B.C. to A.D. 500), Puranic Age (A.D. 500 to 800), Age of Rajput Ascendancy (A.D.800 to 1200), Age of Afghan Rule (A.D. 1206 to 1526), Age of Moghal Rule (A.D. 1526 to 1707), Age of Mahratta Ascendancy (A.D. 1718 to 1818) and subsequent Age of British Raj which ended in 1947 has brought to the fore the great strength of Hinduism for survival. The way in which the modern Indian Society consisting of 85% Hindus has responded to the pressures of modern world is testimony to the vigour of beliefs, the far reaching strength of various practices as embedded in this religion of great antiquity providing complete rule of life and guiding soul's journey through earthly time.
Hinduism's great strength is that it rejects little. As a result it has never been supplanted in India by other religion, but has instead absorbed
44 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg 2001
கலப்பை
them. Putting it differently, Hinduisms greatness lies in its eclecticism. Throughout its long history it has been great proselytising system yet unlike other religion it has had few missioners. It has accepted something from its opponents, but still kept them at arm's length. Hinduism is a complete rule of life, and every act of the orthodox Hindu's existence rising in the morning, bathing, eating, praying, eventhesex act - is regulated by rituals.
Hinduism has got many more dimension than the simple definition of religion in the Western World; where religion is confined to creed and worship. Hinduism is both a religious and a social system. It is a culture quite as much as a religion. Hinduism is an eventrather thana static system.
The rules of all embracing Hinduism may be interpreted one way in one community and quite a different way in another. At its highest level it is high minded speculative philosophy, mystic and monotheistic, which enjoins an ascetic, rejection of the world of flesh because it considers man's earthy span as only a passing moment in the soul's long journey through time. At its worst it is amuseum of primitive superstition which separates men at birth and for the rest of their lives limits their ambitions and opportunities by its institutions of caste. At its noblest the Hindu mind is philosophical, richly cultured and capable of serene detachment that not only impresses but in a mysterious manner seems to shed a peaceful
radiance on those who come under its influence.
But the same traditions which can make a superior mind philosophical, may make an ordinary one merely contentious. Instead of being tolerant, the mind may be narrowly parochial, and instead of detached and serene it may be indifferent and smug. These contrasting and widely diversified interpretations of the similar beliefs and practices are the results of Hinduism not being leaders or prophet driven rather it is much more individual oriented religion. This results in individual driven people's movement. All other major religion are leader-driven. Judaism had leader like Moses, Christianity had Christ and his disciples, Islam had Muhammad. Under the broad guidelines of the Social Systems, individuals are free to chose the God whom they will like to pray, be monotheists or be polytheists or be atheist, be a rationalist using God as a concept etc. And that's why this people-based dynamic process have always made Hinduism absorb much and reject little. This distinctive feature of Hinduism alone is the secret of its everlasting dynamic continuity.
It was preceded by primitive beliefs which have been called Animism. Hinduism has developed by taking up those beliefs into its articles, speculating freely in its own way, learning much and unlearning nothing. It has undergone never-ceasing changes and is still unchanged. Inside the social structure of Hinduism can
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 45

Page 25
கலப்பை
தை 2001
be found philosophic mystics, who have no belief in personal deity; pluralist's, ranging from crude animists mainly interested in local godlings (such as the village-mothers or the jungle spirit) topolytheists. And betweenthese two extremes, fervent monotheists, who address their devotion to a single personal God. yet even those Hindus who declare themselves monotheists often justify polytheism for the multitudes, on the ground that it stresses the multitude aspect of deity; and the most spiritual of Indian Mystics will often be ready to defend idolatry by saying that deity is worshipped through the symbol or image, which is an aid to simple mind. This defence of idolatry and Hindus idol worshipping has made Hinduism a religion of the ancient practices in the eyes of comparatively new religions like Judaism, Christianity, Islam. Even Buddhism which brought a religious revolution in India by promoting a casteless society did not think much of idol worshipping. Buddha preached that the salvation of man lay - not in sacrifices and ceremonials, nor in Idol worshipping or penances - but in moral culture and holy life, in charity, forgiveness, and love.
Idolatry in any form is absolutely forbidden by Judaism. The second of the Decalogue runs: "Thou shalt not make unto thee a graven image: (and) by no visible shape in heaven above, or in the earth beneath, or in the water under the earth, shalt thou bow down or render service."
One capital argument of the Christians was the absurdity of a man making an idol and then adoring or being afraid of the work of his own hands. Idols were systematically defaced, disrespected and destroyed during Islamic Jihads in India.
Idol or image worshipping, in the early stages of development of the religious consciousness can be defended as an outcome of Animism now known to represent a type of religion arising subsequently to its really primitive form. So in the higher stages, when men have attained loftier spiritual ideas, how come idolatry survives and is defended by even the hard core rationalists.
This obvious absurdity can only be explained by examining the attitude of reverence by the two religious votaries before an image or an idol. The one may regard it as merely an image, picture, or representation of higher being and in itself void of walue or power. Its value is that of mere resemblance or some kind of acquired association.
But the other may regard it as the tenement or vehicle of the God and fraught with Divine influence. Or may be the religious votary is moving in the grey area of these two extremes. In any case the religious ceremonial is much more hopeful and efficacious for a worshipper who thus has means of approaching the God he worships in visible and tangible form. May be Idol worshipping in Hinduism may have
46 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
s
more dimension than these apparent contrasting extremes. Hindus always pray Lord Ganesha before start of any religious ceremony or even start of anything new. In the eyes of the nonbeliever this reverence toward an impossible image is an height of absurdity, further strengthening the view that Hinduism is a primitive religion.
Let us look at idol worshipping from individual point of view. A devotee of Lord Ganesha by concentrating on this impossible image instils within himself a faith which gives him complete peace of mind which in turn allows him to have the clear thinking for the task ahead.
Through this faith in and devotion of Lord Ganesha what Hinduism is emphasising that image does not matter, but the process matters with an aim towards one's objectives or goals.
Through this idol worshipping Hinduism has provided the tool in the hands of individuals to acquire serenity in their daily life and a method of goal orientation through clear thinking which comes because of the trust & the faith in one's future which comes out of this worship. Not only this the real devotees do not fall prey to their egoism or pride and thus colour their thinking for the task ahead as they ascribe all their achievements to Lord Ganesh.
-Ashok Bansal
43ம் பக்கத் தொடர்ச்சி
வீணான கர்வம், பொறாமை, எரிச்சல் என்று தங்கள் வாழ்வையே வீணாக்குகின்றார்கள்” என்றவள், நான் போக வேண்டுமென அவசரப்பட்டாள்.
“இப்பொழுதுதானே ஒய்வு நாள் என்றாய், ஜேன்?” என்றான் ஜோ வியப்புடன்.
“ஓய்வுதான்; ஆனால் என் தாய்வழிப் பாட்டியைப் போய் முதியோர் இல்லத்தில் பார்க்க வேண்டும். அவரும் அவரது சினேகிதிகளும் அந்த இல்லத்தின் வாசலிலேயே காதி திருப் பார்கள். எல்லோருக்கும் நான் பேரப்பிள்ளைதான். சிலருக்கு யாருமே இல்லை. சிலரை யாரும் வந்த பார்ப்பதில்லை. அணி புக்காக ஏங்குபவர்கள். அவர்களுடன்தான் இன்று என் பொழுது போகும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பரிசு வைத்துக் கொண்டு காத்திருக்கும் போது அழுகை வரும். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் வெறும் அணி புதான அணி பான இரணடு வார்த்தைகள், அது அவர்களுக்குப் பாலை வனத்தில் பசும் சுனையைக் கண்டது போல் இருக்கும். அதனால் தான் ஸ்வாமி நாளை அன்புடன் தொடங்கி அணியினால் நிரப்பி அன்புடன் செலவு செய்து, அண்புடனேயே முடிவுறச்செய். அது தான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி என்கிறார். நீங்களும் ஒரு நாளைக்கு என்னுடன் வந்து அவர்களைப் பாருங்கள்” எனக் கூறிச்
சென்றாள். மதியின் கண்கள் கசிந்தன.
- தொடரும்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
47

Page 26
கலப்பை
= Bilingual =
-கலாநிதி லுமினா ரைற்ராப்
அந்நிய நாட்டில் குடியேறி வாழும் நாம் எவ்வாறு இந்நாட்டில் நமது தாய் மொழி அழிந்துவிடாது பாதுகாக்கலாம்? எவ்வாறு இங்கு பிறந்து வாழும் நமது குழந்தைகள் ஆங்கிலத்துடன் சேர்த்து தாய்மொழியை - தமிழ் மொழியை - இரண்டாவது மொழியாகக் கற்கலாம்? அவ்வாறு இருமொழிகளையும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பவற்றை
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இக்காலகட்டத்திலே,வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களில், அவுஸ்திரேலிய நாட்டில் குடிபுகுந்து வாழும் நாம் ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலிகள்தான். ஏனெனில், ஆங்கிலம் முதலாவதாக இல்லாது வேறொரு மொழியை முதலாவது மொழியாக - தாய்மொழியாகக் - கொண்டவர்கள் தத்தமது மொழியில் நிலைத்திருப்பதற்கு மிகவும் ஊக்கம் ஊட்டப்படுகிறார்கள். அவுஸ்திரேலிய நாட்டில் 240க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகவும், சிட்னியையும் மெல்போணையும் எடுத்துக் கொண்டால் 25 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ஆங்கிலத்தைவிட வேறு மொழியையே வீட்டில் பேசுவதாகவும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
“இரு மொழி பேசுதல்” (Bilingua) என்பது ஒருவர் இரு மொழிகளையும் பேசுவதிலும்,
புரிந்துகொள்வதிலும், அம்மொழிகளில் தொழிற்படுவதற்குமி ஏற்புடையவராக இருப்பதாகும். இரு மொழிகளிலும் ஒரே மாதிரியாகச் சரளமாகப் பேசும் ஆற்றல் (fluency) கொணடிருக்கவேண்டும் என்பதில்லை. இது டாக்டர் கிளாக் (An "English as a second Language” Consultant and Director of the Free Kindergarten Association of Victoria) என்பவரின் கூற்று. அத்துடன் டாக்டர் கிளாக் என்பவர், ஒரு மொழியைக் கற்பதற்கு முதல் ஆறு வயதுவரை உள்ள பருவம் மிகவும் முக்கியமானதாகும் என்றும் கூறுகின்றார். அதாவது இநீதப் பராயத்தில்தான் மொழியைக் கற்கும் ஆற்றல் (language development) Lás oyuổ அதிகமாகக் காணப்படுகின்றது. ஒரு மொழியைக் கற்பதென்பது சிக்கலான பல படிகள் சேர்ந்த ஒரு செயற்பாடாகும். இதில் pligfin (Sounds), Gissipsoir (Words), இலக்கணம் (Grammar), எவ்வாறு சொற்கள் சேர்ந்து வசனமாவது என்பதுடன் எவ்வாறு வசனங்கள் ஒன்றாகச் சேர்க்கப்படுகினறன எனபது மீ, அம்மொழிக்குரிய விதிமுறைகளும் அடங்கி யுள்ளன. எனவே, குழந்தைகளும் சிறுவர்களும் பிறப்பிலிருந்தே நல்லதொரு மொழியைப் பேசுமி சூழலுக்கு வெளிப்படுத்தவேணி டியது மிகவும் அவசியமாகும்.
குழந்தைகள் சத்தங்களால்
48 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 
 
 
 

தை 2001
கலப்பை
மட்டுமல்லாது சைகைகளாலும் தொடர்பு கொள்வதற்கு இலகுவாகப் பழகிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். எனவே பெற்றோரு மீ குழந்தைகளைப் பராமரிப்போரும் கணி தொடர்பாலும் சைகைகளாலும் குழந்தைகளுக்குத் தாம் பேசும் வார்த்தைகளின் அர்த்தத்தை
இலகுவாகப் புரியவைக் கலாம். உதாரணமாக - குழந்தைக் கு உணவூட்டும் போதோ, அல்லது
குளிப்பாட்டும்போதோ என்ன செய்கின்றோம் என்பதை விபரித்துக் கூறுவது அக்குழந்தை அந்த சொற்களுக்குரிய பொருளை அறிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும். உதாரணம் - “இந்தா பிள்ளையின் பல்ப் போத்தலீ “இது உனது சட்டை' என்று சுட்டிக்காட்டிக் கூறும்போது குழந்தையானது அந்த சொறிகளுக்குரிய பொருளை அறிந்து கொள்கின்றது. இவ்வாறு சொற்களை அடையாளம் காணுவது ஒரு குழந்தைக்கு ஒரு வயதிலேயே செய்யக்கூடிய ஒன்றாகும். குழந்தையானது தொடர்ந்து வளரும்போது. 2-3 வயது ஆகும்போது தனது சிந்தனைகளையும் எணர்ணங்களையும் வெளிப்படுத்தத் தொடங்குகின்றது. தொடர்ந்து ஆறு வயதுவரை உள்ள பருவம் முன்பு குறிப்பிட்டதுபோல் மொழியைக் கற்கும் ஆற்றல் மிகவும் அதிகமாகக் காணப்படும் பருவமாகும்.
இதுவரை குழந்தைகளின் மொழியைக் கற்கும் ஆற்றல்பற்றி ஆராய்ந்த நாம், தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு பிறப்பிலிருந்தே இருமொழி பேசுபவர்களாக வளர்க்கப் படலாம் என்பதைப் பார்ப்போம். குழந்தைகள் இரண்டாவது மொழியை - அதாவது தாய்மொழியைக் - கற்பது முற்றிலும் பெற்றோரிலும் குழந்தையைப்
பராமரிப் போரிலுமே தங்கியுள்ளது: அம்மொழியைக் குழந்தையானது கற்பதில் இவர்கள் காட்டும் ஆர்வத்திலும், பற்றுதலிலும் இவர்களது செயற்பாட்டிலுமே தங்கியுள்ளது. அதாவது குழந்தை ஒரு மொழியைக் கற்பதில் பெற்றோர் காட்டும் ஈடுபாடானது அக் குழந்தை அம்மொழியைக் கற்பதை ஊக்குவிக்கின்றது. எனவே, பிள்ளைகள் இரு மொழி பேசுபவர்களாக வளர்வது, எவ்வளவுக்கு நாம் - பெற்றோரும் பராமரிப்போரும்எம்மை இதில் அர்ப்பணிக்கின்றோம் (commitment) என்பதிலும் எவ்வளவுக்கு அதில் நிலைத்து இருக்கின்றோம் (consistency) என்பதிலுமே தங்கியுள்ளது.
இவ்வாறு குழந்தைகள் இரு வேறுபட்ட மொழிகளைக் கற்கும்போது ஆரம்பத்தில சில வேளைகளில இரணடையும் கலந்து பேசலாம். இவ்வாறான மொழிக் கலப்பை ஒவ்வொரு மொழியையும் தனித்தனிச் சந்தர்ப்பங்களில் பேசுவதாலோ அல்லது தனித்தனி நபருடன் பேசுவதாலோ குறைத்துக்கொள்ளலாம். உதாரணம் - வீட்டில் தாய்மொழியையும் பாடசாலையில் ஆங்கிலத்தையும் பேசுதல், பேரணி பேதி தியுடன அல்லது முதியவர்களுடன் தாய்மொழியில் பேசுதல், இவ்வாறு வசதியில்லாத சிலர், ஆங்கிலம் முதலாவது மொழியாக இல்லாது வேறு மொழியைப் பேசும் குடும்பங்களில் சிலர், பிள்ளைகளுடன் தாய் ஒரு மொழியிலும்,
தந்தை மற்றைய மொழியிலும் உரையாடுவதை வழக்கத்தில் கொண்டுள்ளார்கள். அத்துடன் சில
குடும்பங்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் அனைவரும் இரண்டாவது மொழியில் - தாய் மொழியில்- உரையாடுகின்றார்கள். உதாரணம் - உணவு நேரங்களில்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 49

Page 27
asasinabu
தை 2001
இவ்வாறு செயற்படுவது குழந்தைகள் மொழியைப் பிரித்து அறிவதற்கும், பிரித்து உபயோகிப்பதற்கும் உதவியாக இருக்கும். இது மட்டுமனி றி குழந்தைகளினி Qasraoui sigti -gbipoi (Language development) வளரும்போது அவர்கள் தாமாகவே மொழிகளைப் பிரித்துப் பேசுவதற்குக் கற்றுக்கொள்ளுவார்கள்.
அடுத்ததாக, குழந்தைகள் இருமொழி கற்கும்போது ஏற்படும் பொதுவான படிமுறைகள் (Typical pattern) பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போம் - ஆதாரம், Pamphlet produced by Australian Advisory Council on Languages and Multicultural Education (AACLME). * பிறப்பிலிருந்தே இருமொழிகளுக்குப் பழக்கப்படும் குழந்தைகளும் ஒரு மொழியைமட்டும் பேசும் குழந்தைகளும் ஒரே வகையான மொழிவளர்ச்சிப் படிகளினூடாகவே வளர்ச்சி அடைகிறார்கள். அதாவது இவர்களின் வளர்ச்சிப் படிகளில் வித்தியாசம் இல்லை. * 12 மாதத்தில் குழந்தை கதைக்கத் தொடங்கும்போது இரு மொழிகளுக்கும் பழக்கப்படும் குழந்தைகள் சில பொருட்களை ஒரு மொழியிலும் வேறு சில பொருட்களை இரணடாவது மொழியிலும் பெயரிடுவார்கள். * தொடக்கத்தில் பெரிதாக சொற்கலப்பு இருக்காது. * சில வேளைகளில் எந்த மொழிக்குரிய சொல் என்பதைப் பிரித்து அறியாது, இரண்டு மொழிக்குரிய சொற்களையும் சேர்த்துப் பேசலாம் (indiscriminate), அத்துடன், எவருடன் எந்த மொழியைப் பேசுவது என்று தெரியாதும் பேசலாம். தொடர்ந்து வரும் மாதங்களில் ஏதாவது
ஒரு மொழியில் கூடிய சொற்களை உபயோகிக்கலாம். ஆனால் சிறிது சிறிதாகக் குழந்தைகள் இரண்டு மொழிகளையும் பிரித்து அறிந்து இரணடையும் தனித்தனியாகப் பாவிப்பார்கள். உதாரணம்:- “TGoric5th uédiéps' "I am hungry'. sk இதே வேளையில் யாருடன் எந்த மொழியில் பேசவேண்டும் என்பதையும் தாமாகவே அறிந்து கொள்வார்கள். உதாரணம் :- பெற்றோருடனி தாய்மொழியிலும், பிறமொழிபேசும் அயல் வீட்டுக்காரருடன் ஆங்கிலத்திலும் கதைப்பார்கள். * 2 வயதில் இரண்டு மொழிகளையும் அநேகமாகப் பிரித்துப் பாவிப்பார்கள்: முக்கியமாகப் பெற்றோர் இரணிடு மொழிகளையும் விடாது தொடர்ந்து பேசிவந்தால். * அநேகமான சிறுவர்கள் தாய்மொழியை -இரண்டாவது மொழியை- பாவிப்பதற்குத் தயங்கி ஆங்கிலத்தில் பதில் அளிப்பதைக் கூடுதலாக விரும்புவார்கள். இந்த வேளையிலே பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுவார்களேயானால் இரண்டாவது மொழி பெரும்பாலும் இழக்கப்பட்டு விடும். * பிள்ளைகள் தொடர்ந்து இரண்டாவது மொழியைப் பேசுவதற்கு உற்சாகப்படுத்தப் படாவிட்டால், அவர்கள் இரண்டாவது மொழியை விளங்கிக் கொள்பவர்களாக மட்டுமே வளர்வார்கள். அதாவது அவர்களுடன் இரண்டாவது மொழியில் உரையாடும்போது அவர்கள் அதை விளங்கி ஆங்கிலத்திலேயே பதிலளிப்பர்கள். (இதனை grid.louilloi) “Receiving Bilinguals என்று சொல் வார்கள்) இவ்வாறு இரண்டாவது மொழியை விளங்கிக் கொள்பவர்களாக மட்டும் இருக்கும் சிறுவர்கள், அம்மொழியை அதிகமாகப் பேசும் சூழலுக்கு வெளிப்படுத்தப்படும்போது,
50 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
DAMBJUOJ
அவர்கள் அம்மொழியில் உரையாடும் ஆற்றலையும் இலகுவாகப் பெறுவார்கள். உதாரணம்:- தாய்நாட்டுக்கு விஜயம் செய்தல்
இரணடாவது
மொழி கற்கு மீ
வகுப்புகளுக்குச் செல்வது.
குழந்தைகளின் இயற்கையான
மொழி வளர்ச்சிப் படிகளை ஆராய்ந்த நாம் அதற்கேற்ப எவ்வாறு நம் குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில், தாய்மொழியைக் கற்பதற்கு ஊக்குவிக்கப்படலாம் என்பதைப் பார்ப்போம்.
குழநீதை பிறந்ததிலிருநீதே தாய்மொழியில் குழந்தையுடன் உரையாடுதல், அதாவது, என்ன செய்கிறோம் என்பதை விபரித்துக் கூறுதல். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரே மொழியைப் பேசும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல். இங்கே ஏனைய சிறுவர்கள் பேசும் போது உங்களது குழந்தை கற்றுக்கொள்ளும். ஒரே மொழியைப் பேசுமீ இனத்தவர்களின் வைபவங்களில் குழந்தைகளுடன் கலந்து கொள்ளுதல் அங்கே தாய் மொழியில் உரையாடுதல். இரு மொழிகளிலும் குழந்தைகளின் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை அவர்களுடன் இருந்து, பார்த்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தல். நண்பர்களையும், ஒரே மொழி பேசுபவராக இருந்தால் குழந்தையைப் பராமரிப்போரையும், உறவினர்களையும் உங்களது குழந்தைகளுடன தாய்மொழியில் உரையாடும்படி கேட்டுக்கொள்ளுதல். சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்களைத் தாய்மொழியில் பாடுதல், படுக்கைக்குச் செல்லும் நேரம் இதற்கு
மிகவும் உகந்த நேரமாகும். வீடுகளில் இரு மொழிகளிலும் பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்களை சேகரித்து வைத்து இரண்டையும் உபயோகிப்பதுடன், பிள்ளைகளைக் கேள்வி கேட்கும்படி ஆர்வம் ஊட்டுவதும் பதில் அளிப்பதும். மொழி ஊக்குவிப்புப் போட்டிகளில் பிள்ளைகளைப் பங்களிக்க வைப்பதும் பரிசளித்து மகிழ்விப்பதும் அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும். தாய்மொழிப் பாடசாலைக்கு / வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவது. பயணங்களின்போது தாய்மொழியில் பாடல்களைக் கேட்பதும், சேர்ந்து பாடுவதும். வீட்டுப் பொருட்கள், கடைச் SILOToisofor '60L (shopping list) எழுதும்போது இருமொழிகளிலும் எழுதுவதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வாசித்து அவர்களையும் வாசிக்க உற்சாகப்படுத்துவது. சிறிய விளையாட்டுக் களைக் குடுமீபமாக ச் சேர்ந்து இரு மொழிகளையுமீ பாவித்து விளையாடுவது. உதாரணம்:- எண்ணுதல், பெயரிடுதல், நிறமிடுதல், உருவங்களை அடையாளம் காணுதல், என்பன. பிள்ளைகள் எழுதத் தொடங்கும்போது சிறிய கதைகள், கவிதைகளை எழுதத் துTணிடுவதும், அதனை ஏனையோருக்குத் தெரியும் இடத்தில் (e.g. Fridge) வைப்பதும் அவர்களை மகிழ்விக்கும்.
இவ்வாறு உங்களுடைய நாளாந்த
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
51

Page 28
assaf
தை 2001
வாழ்க்கைக்கு ஏற்ப எவற்றைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வது, பிள்ளைகள் இருமொழிகளையும் கற்பதற்கு ஏதுவாக அமையும். நாம் எதைச் செய்தாலும் அது பிள்ளைகளை மகிழி விப்பதாயும் அவர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவதாகவும் அமையவேண்டும்.
இப்படி, நம் குழந்தைகள் இரு மொழிகளை - அதாவது ஆங்கில தீதையும் தமிழையும் - கற்கும்போது அவர்கள் சமுதாய ரீதியில் நன்மை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. தாய் மொழியை அறிந்து கொள்வது நமது கலை, கலாச்சாரம், பண்பாட்டினை அவர்கள் மென்மேலும் அறிந்துகொள்ளவும் உதவும். அத்துடன் இவ்வாறு இருமொழி பேசும் சிறுவர்கள், வேறு மொழி பேசுபவர்களை மதிக்கவும், அவர்களது கலை, கலாச் சாரங்களைப் போற்றவும் கற்றுக்கொள்வார்கள். இருமொழி பேசும் பிள்ளைகள் ஒருமொழி பேசும் பிள்ளைகளை விட மொழி ஆற்றலில் -படைப்பில் (creativeness) சிறந்து விளங்குவதாக ஆய்வுகள் ஆதாரம் காட்டியுள்ளன. காரணம், அவர்கள் தங்களது எண்ணங்கள், ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும், உலகத்தை அறிந்துகொள்வதற்கும் வித்தியாசம் வித்தியாசமான வழிகள் இருப்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். அதீதுடன, பாடசாலை செல்லும் இம்மாணவர்களின் 'பிரச்சினை தீர்க்கும்’ $pgilis (problem solving skills), g50Tigig. 9ifyi' (Analytical skills) திறனும் ஏனையோரைவிடக் கூடுதலாகவே காணப்படுகின்றன. இவ்வாறு சிறு வயதில் இரண்டாவது மொழியைக் கற்றுக்
கொள்பவர்கள் பெரியவர்களாகும்போது இன்னுமொரு மொழியைப் படிப்பதும் இலகுவாக இருக்கும். அத்துடன், வெவ்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் ஆற்றலும், செயற்படும் ஆற்றலும் இருப்பதால் பிற்காலத்தில் தொழில்வாய்ப்பும் கூடதலாக இருக்கும். ஒரு சிறிய அளவிலேனும் இரண்டாவது மொழியை சிறிய பராயத்திலிருந்தே கற்பது ஒரு குழந்தையின் மொழியைப்பற்றிய அறிவை வளர்ப்பதன் மூலம் அக் குழந்தையின் முதலாவது மொழியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. எனவே, தாய்மொழியைக் கற்காது ஆங்கிலத்தை மட்டும் கற்கும் பிள்ளைகள் ஆங்கிலத்தைத் திறமையாகக் கற்பார்கள் என்னும் பழைய கொள்கை தவறானதாகும்.
எனவே, பெற்றோரும் குழந்தையைப் பராமரிப்போரும், பிள்ளைகள் ஆங்கிலத்தோடு தாய்மொழியையும் கற்று, இருமொழி பேசுபவர்களாக வளர ஊக்கம் ஊட்டுவது மிகவும் அவசியமாகும். ஏன்? நமது கடமையும் அதுவேயாகும் என்றால் அது தவறாகாது. நாம் இப்போது இவ்வாறு செயற்படுவோமேயானால், நாளை நமது குழந்தைகள் நம்மைப் பார்த்து “ஏன் எமக்கு 67//g/ மொழியைக கற்பிக்கவில்லை?” என்று கேட்பதையும் தவிர்த்துக்கொள்ளலாம். அத்துடன், நமது குழந்தைகள் தமிழன் என்று சொல்லித் தலைநிமிர்ந்து நிற்கவும் முடியும்
ஆதாரம் :- Australian Family: 2000/01, Vol.5. Pamphlet produced by Australian Advisory Council on Languages and Multicultural Education.
52 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001
abøMütapu
தமிழ் இனத்தின்
பரம்பலும் பிரச்சினைகளும்
- 2
- ജ്ഞീക്രമ മ്ഗrd%/് -¿-് മിഡ്വൈ് ശ്ലത്തിമ) -
தம்மாட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்மக்களை ஐரோப்பியர் புதிய காரணங்களுக்காகப் பதினெட்டாம் பதி தொன பதாம் நூற்றாண்டுகளிலே புலம்பெயர வைத்தார்கள். ஆங்கிலேய காலனித்துவ
ஆட்சியாளர் 1790களிலிருந்து சிறைக்கைதிகளை இந்தியாவி லிருந்து பினாங்கு தீவு, சிங்கப்பூர் தீவு, மலாக்கா ஆகிய மலேசிய பிரதேசங்களுக்கு நாடுகடத்தியுள்ளனர். இவ்வழக்கம் 1860கள் வரை இருந்திருக்கிறது. சுமாத்ரா தீவுக்கும் 19ஆம் நூற்றாண்டிலே அவர்கள் சிறைக் கைதிகளை நாடு கடத்தியிருக்கின்றனர். இச்சிறைக்கைதிகளிலே தமிழரும் காணப்படுகின்றனர். இந்திய விடுதலை இயக்கத்திலே ஈடுபட்டு ஆங்கிலேயருக்குத் தலையிடியாக இருந்த இந்தியத் தவப் புதல்வர் பலர் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பெற்று, அங்குள்ள சிறைக்கூடங்களிலே சித்திரவதைக்கு உள்ளாயினர். இப்பிரதேசங்களுக்குக் கைதிகளாகச் சென்றவர்களிலே பெரும்பான்மையோர் தாயகம் திரும்பாது, அவ்வப்பிரதேசங்களிலேயே தம் வாணாளைக்
கழித்திருக்கின்றனர்.
தென்னிந்து சமுத்திரத்திலுள்ளது மொரிசியஸ் தீவு. இந்திய கீழைக்கரையில் பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில் இருந்து 1732இல் பிரஞ்சு ஆட்சியாளர் மொரிசியஸுக்கு நுண் வேலைகள், கட்டிட வேலைகள், கைத்தொழில்கள் என்பனவற்றிலே வல்ல தமிழர் பலரைக் கொண டு சென்றுள்ளனர்.
ஆங்கிலேய காலனித்துவ
ஆட்சியாளர் தம் காலனிகளிலே கரும்பு, கோப்பி, தேயிலை, ரப்பர் முதலிய பெருந்தோட்டப்பயிர்களின் செய்கையை ஆதரித்தபோது, அவற்றிலே வேலைசெய்யத் தேவையான கூலிகளைத் தமிழ்நாடு உட்பட்ட இந்தியப் பிரதேசங்களில் இருந்து கொண்டுசெல்வது வசதியாக இருந்தது. காடுகளைத் திருத்தி, பயிர்களை நாட்டி, வழிகளை அமைத்து, வதிவிடங்களையும் தொழிற்சாலைகளையும் நிறுவி, அவற்றிலே வேலைசெய்யும் மனிதவளத்தைக் குறைந்த செலவிலே இந்தியாவிலிருந்து பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஒப்பந்தக் கூலிகளாகவுமீ, கநர் காணி முறைக் கூலிகளாகவும் தமிழ்மக்கள் “இக்கரைக்கு அக்கரை பச்சை” என்று நம்பிச் சென்றனர். இவர்களிலே பலர் தனியாட்களாக, அந்நிய நாடுகளுக்கு நல்வாழ்வினை நாடிச் சென்றனர்.
தென் இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள மொரிசியஸ்(1829), REUNION, RODRIGUES, SEYCHELLES, தென்னாபிரிக்கா(1860) பிரதேசங்களுக்குக் கரும்புத் தோட்டங்களிலே வேலைசெய்யும் கூலிகளாகத் தமிழர் பத்தொண்பதாம் நூற்றாண்டிலே சென்றிருக்கின்றனர். கிழக்கு ஆபிரிக்காவிலே காலனித்துவ ஆட்சியாளர் தேயிலை, ரப்பர், புகையிலை முதலாம் பெருந்தோட்டப்பயிர் உற்பத்தியிலே ஈடுபட்டபோதும் தமிழர் உட்பட்ட இந்தியமக்கள் அங்கெல்லாம் சென்று உழைத்திருக்கிறார்கள். பதி தொணி பதாம் நுாற் றாணி டினி நடுக்கூறிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை தமிழர் உட்பட்ட இந்தியமக்கள் கரீபியன் கடற்பிரதேசத்திலுள்ள AMAICA,
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 53

Page 29
கலப்பை
தை 2001
GUADELOUPE, MARTINIQUE, ST. LUCIA, STVINCENT, GRENADA, TRINIDAD, TOBAGO, GUYANA, SURINAM, FRENCHGUYANA, ST KITTS, NEVIS, ST.CROIX போனிற தீவுகளிலும் பிரதேசங்களிலும் கரும்புத் தோட்டங்களிலே வேலைசெய்யச் சென்றிருக் கின்றார்கள். தென்பசிபிக் பிராந்தியத்திலே பிஜித் தீவுகள், NEWCALEDONIA, TAHITI oscolish தமிழர் கரும்புத்தோட்டங்களுக்குக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
பத்தொண்பதாம் நூற்றாண்டிலே, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மலாயா பிரதேசத்திலே அறிமுகமாகியபோது, தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தக்கூலிகளாகவும் கங் காணிமுறைக் கூலிகளாகவும் காங்காணிகளாகவும் பெருந்தொகையினர் அங்கு சென்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறிலே ஆங்கிலேயர் இலங்கையிலே கோப்பித் தோட்டங்களையும், பின்பு தேயிலை, ரப்பர் தோட்டங்களையும் ஆரம்பித்தபோது தமிழ்நாட்டில் இருந்து மக்களை ஒப்பந்தக் கூலிகளாகவும், கங் காணி முறைக்கூலிகளாகவும் கொண்டுசென்று மத்திய இலங்கையிலுள்ள மலை நாட்டின் காடுகளை அழித்து, தேயிலை, ரப்பர் தோட்டங்களாக மாற்றினர்.
தமிழ்நாட்டிலிருந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்குக் கூலிகளாகச் சென்ற தமிழரைத் தொடர்ந்து, ஏனைய தொழிலிகளைச் செய்யும் திறமைசாலிகளும் வர்த்தகரும் மொரிசியஸ், தென்னாபிரிக்கா, கிழக்காபிரிக்கா, மலாயா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமன்றி இலங்கையிலிருந்தும் தமிழ்மக்கள் பலர் தோட்ட உத்தியோகத்தவராகவும், புகையிரத உத்தி யோகத்தவராகவும், பொது மராமத்து ஒவசீயராகவும் ,
ஆசிரியராகவும், அரசாங்க இலிகிதராகவும் மலாயாவிலே சென்று தொழில் பார்த்தனர்.
ஆரம்பத்திலே மொரிசியஸஉத் தமிழர் தங்கள் மொழியையும் கலாசாரம், பண்பாட்டையும் போற்றிப் பேணமுடிந்தது. ஆயினும் இரண்டு மூன்று சந்ததிகளைக் கடந்தபோது, தம்முடைய தனித் துவத்தினை இழக்கும் அபாயத்தினை எதிர்நோக்கவேண்டி வந்தது. ஆபிரிக்க அல்லது பிரஞ்சு ஆபிரிக்க இனத் தோடு ஏற்பட்ட கலப்பினால் அவர்களுடைய கலப்பு (CREOLE) மொழியினைத் தமிழ்ச் சந்ததியினர் பேச்சுமொழியாக ஆக்கிக்கொண்டனர். பிற்காலத்திலே, வட இந்தியாவிலிருந்து - சிறப்பாக பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து - வந்திருந்த கூலிகள் முதலானோர் தொகை பெரும்பான்மையாகி விட்டதால் இந்துஸ்தானி (இந்தி) மொழியைத் தமிழர் உட்பட்ட இந்தியர் (LINGUA FRANCA) QUIS GNafursīši, கொள்ளவேண்டியிருந்தது. பிரஞ்சு, ஆங்கில மொழிகளைக் கற்கும் வசதிகளும் அவற்றின் அநுகூலங்களும் இளைய சந்ததியினருக்குத் தமிழை ஒதுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தின. ஆயினும் மொரிசியஸ் தீவிலே தமிழ் ஆரம்பப்பள்ளிகளும் திருக்கோயில்களும் கலாசார சங்கங்களும் தமிழர் பண்பாடு முற்றாக அழிந்துபோக விடாமற் காப்பாற்றி வந்தன. ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர் தனிப்பட்ட அமைப்புகள் ஆரம்பித்துவைத்த தமிழ் ஆரம்பப் பள்ளிகளுக்குச் சலுகைகள் தந்து அவற்றை உயிர்ப்புடன் நிலவ உதவியிருக்கின்றனர்.
தென்னாபிரிக்கா சென்ற இந்திய மக்களிலே பெரும்பான்மையோர் தமிழ்மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று NATAL மாநிலத்திலே தமிழர் பெருந்தொகையினராகக் காணப்படுகின்றனர். TRANSVAAL மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவு தமிழர் தொகையுண்டு.
54 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

தை 2001
கலப்பை
CAPE PROVINCE 6ssiph slip, சிறுதொகையினராகக் காணப்படுகின்றனர். நிறக் கட்டுப்பாட்டினாலே அளவிலா இன்னல்களை அனுபவித்த தமிழர் உட்பட்ட இந்தியர்சமூகம் தம் பாரம்பரியத்தைப் பேணப் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள். 56)Tylyly அமைப்புகள் தென்னாபிரிக்காவிலே ஆரம்ப தமிழ்ப்பள்ளிகளைத் தோற்றுவித்துப் பேணி வந்தன. திருக்கோயில்கள் தமிழர் கலைகளும் கலாசாரமும் அழிந்துபோகாமல் காப்பாற்றின. இளைய சந்ததியினர் தம் மூதாதையரின் மொழிப் பற்றினாலோ பணி பாட்டினி அபிமானத்தினாலோ, தாங்கள் தென் ஆபிரிக்காவில் முன்னேற முடியாது என்று கருதி ஆங்கிலக்கல்வி கற்று முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆயினும், தமிழ் மொழியைப் பேணமுடியாதபோதும், அவர்கள் தமிழர் கலாசாரத்தையும் பண்பாட்டையும் தம்மாலியன்ற அளவுக்குப் போற்றிவந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.
கரிபியன் தீவுகளிலே தமிழ்மொழி ஆரம்பப் பள்ளிகளிலே போற்றிப் பேணப்படவில்லை. மூதாதையர்தம் பண்பாட்டினையும் சமயாசாரங்களையும் சில சந்ததிகள் தொடர்ந்து போற்றின. கறுப்பு அல்லது கலப்புச் சந்ததியினருடன் சில பிரதேசங்களிலே சங்கமம் அதிகம் ஏற்பட்டது: சில இடங்களிலே வடஇந்தியரினி பெருந்தொகை க்கு முன்னே தமிழர் சிறுதொகையினராக ஒடுங்கிவிட்டனர். ஆங்கிலமும் CREOLE மொழியும் இந்துஸ்தானி(இந்தி)யும் தமிழர் உட்பட்ட இந்திய சமூகத்தினரின் பேகம் மொழிகளாக கரிபியன் பிரதேசத்திலே காணப்படுகின்றன.
தென்பசிபிக் பிராந்தியத்து பிஜித் தீவுகளிலே வாழும் இந்திய வம்சாவளியினருள் தமிழர் சிறுபான்மை இனத்தவர்: வடஇந்தியர் பெரும்பான்மையினர். இதனாலே இந்துஸ்தானி(இந்தி) இந்தியர்
Feyp Fløi (LINGUA FRANCA) பொதுமொழியாக நிலவுகின்றது. மேலும் பிஜித் தீவுகளுக்குத் தமிழர் பின்பே வந்திருக்கின்றனர். 1926ல் தென்னிந்திய சன்பார்க்க ஐக்கியசங்கம் ஒன்று உருவாகி, அது ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைகளை நடாத்ததி தொடங்கியது. இப்பாடசாலைகளிலே தமிழ் போதிக்கப்பட்டது.
ஜப்பானிய யுத்தத்தின்போது பல தமிழர் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் மீண்டபோதும், மலாயா, சிங்கப்பூரிலே குறிப்பிடத்தக்க தொகையினர் தொடர்ந்தும்
வாழ்ந்து வந்தனர். மேலும் இந்திய வம்சாவளியினரிலி தமிழர்களே பெரும் பாணி மையினர் எண்பதுமி
குறிப்பிடத்தக்கது. மலாய், சீன இனங்களை அடுத்து காத்திரமான சிறுபான்மை இனமாகத் தமிழினம் நிலவியதாலே தமிழ் உணர்வுகளை மங்காமல் மடியாமல் ஆரம்பித்திலிருந்தே காத்துவரமுடிந்தது. திருக்கோயில்களும் ᏧᏏ Ꮫu IᎢ Ꮷ IᎢ Ꮨ அமைப்புகளும் ஆரம்பபாடசாலைகளும் பொதுசன சாதனங்களும் மலேசியா, சிங்கப்பூரிலே தமிழர் பண்பாடு நின்று நிலவ உதவியுள்ளன.
விடுதலைக் காலத்தை ஒட்டி மொரிசியஸ் தீவிலே எழுந்த சுதேசிய விழிப்புணர்ச்சி, அந்நாட்டிலே ஏழாவது அனைத்துலகதி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை 1989ல் நடாத்துமளவுக்கு வேகம் கொண்டிருக்கிறது. தமிழர் சமூகம் இன்று அங்கு உயிர்ப்புமிக்க சமூகமாக மறுமலர்ச்சி கண்டுள்ளது. ஐக்கியநாடுகள் அரங்கிலே தமிழருக்காகக் குரல்கொடுக்கவும் மொரிசியஸ் துணிந்து செயற்பட்டதை மறக்கமுடியாது. திருக்கோயில்களும் தமிழ்க் கலாசார அமைப்புகளும் மாலைவேளைத் தமிழ்வகுப்புக ளோடு நுணர் கலைகளையும் வளர்க்கப் பெருமுயற்சி எடுக்கின்றன. 60 தமிழ்ப்பிள்ளைகள் உள்ள பாடசாலைகளிலே
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 55

Page 30
aastabu
தை 2001
இன்று தமிழ் ஒரு பாடமாக மொரிசியஸில் படிப்பிக்கப்படுகின்றது. தமிழ் மொழிக்கும் ஏனைய மொழிகளுக்கும் அங்கு தனித்தனிக் கல்வி அதிகாரிகள் பணிபுரிகின்றனர். தமிழ்ச் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் அங்கு தோன்றி மறைந்துகொண்டே இருக்கின்றன.
REUNION, RODRIQUES, SEYCHELLES தீவுகளிற் குடியேறிய தமிழர் அத்தீவுகளின் ஏனைய இனங்களோடு சங்கமமாகி விட்டனர்போலும் sufigpń SEYCHELLES நாட்டிலே சில வருடங்களுக்கு முன்னே ஒரு இந்துக்கோயில் கோலாகலமாக அமைக்கப்பட்டது.
நிறக்கட்டுப்பாட்டின் கீழ் பரிதவித்த தமிழர் சமூகம், ஆங்கிலக் கல்வியளித்த வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்று தென்னாபிரிக்க தமிழரிலே எத்தனையோ பேர் பாக்டர், லோயர், நுண்பொறியியலாளர், ஆசிரியர், அரசாங்க அதிகாரிகள், தொழிலதிபர்களாக விளங்குகின்றனர். ஆயினும் தமிழ்க்கல்வி அங்கு கிராமிய மட்டத்திலேதான் இருக்கிறது: தமிழ் உயர்கல்விக்கு அங்கு காலம் வரவில்லைப்போலும் எனினும் தமிழர் தம் கலாசாரம் சிற்சில வேறுபாடுகளுடன் இன்னும் அங்கு நிலைத்திருக்கிறது. தென்னாபிரிக்கா அநுபவிக்கும் சமத்துவ நீழலிலே தமிழ் இனத்திற்கும் இடம் இருக்குமா?
கிழக்கு ஆபிரிக்காவிலே காலனித்துவ ஆட்சிகள் நீங்கியபோது அங்கு பெரு நீ தோட்டப் பயிரிச் செய்கைக் கூலிகளாகவும் அவர்களைச் சார்ந்த வேலையாட்களாகவும் வர்த்தகர்களாவும் சென்ற வர்கள் இனத்து வேஷத்திற்கு முகங்கொடுக்கவேணி டி ஏற்பட்டது. உகண்டா நாட்டிலே இடிஅமினின் சர்வாதிகார ஆட்சியின்போது இந்தியமக்கள் முற்றாக
அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
கரிபியன் கடற்பிரதேசத்திலே 1967இலே எழுபது வயதுக்குமேற்பட்ட 20 பேர்களே தமிழ் பேசக்கூடியவர்களாக GUADELOUPE, MARTINIQUE தீவுகளிலே இருந்திருக்கிறார்கள். ஆயினும், ரங்கனி, மாரிமுத்து, பெருமாள், வீரப்பணி, தங்கம்மா, முத்தம்மா போன்ற பெயர்கள் அவர்களுடைய வம்சாவளி யினைக் காட்டிக்கொடுக்கின்றது. மாரியம்மனி, மதுரைவிரண், நாகதம்பிராணி வழிபாடுகள் மாற்றம்பெற்று வழங்குகின்றன. பழைய சந்ததியினர் கட்டிய கோயில்கள் ஆங்காங்கே தோட்டங்களிலே பொலிவிழந்து கிடக்கின்றன. மூதாதையரின் திருமண, மரண ச் சடங்குகளைப் போற்றும் இன்றைய சந்ததியினரும் அங்குண்டு. தாலியணிவதும், பூச் சூடுவதும் பெண களிடையே தொடர்ந்துவரும் வழக்கமாக அறியப் படுகின்றது. GUADELOUPE, MARTINIQUE É656sîGou LomshuhLDIG தாலாட்டினை இந்திய விழாக்களின் போது, ரோமானிய லிபியிலே எழுதிப்படிக்கும் வழக்கம் அண்மைக் காலம்வரை காணப்பட்டது.
NEWCALEDONIA, TAHITI தீவுகளில் காணப்படும் தமிழர் வம்சாவளியினரை அவர்களுடைய பெயர்கள் மூலமே அறியமுடிகிறது. பவளக்கொடி, மரியகுசை, ராயப்பணி, சாமிநாதணி, வீராசாமி எண்ற பெயர்கள்தாம் அவர்களுடைய பூர்வீகத்திற்கு இண்று சாட்சி அந்த அளவிற்குத் தமது தனித்தண்மையை அவர்கள் இழந்து நிற்கிறார்கள்.
பல்லினமத்தியிலே ஓர் இனம் மேலோங்க எடுத்த முயற்சியில் உருவான இனஉணர்வுகளும் தேசியவிடுதலையை ஒட்டி எழுந்த விழிப்புணர்ச்சியும் பிஜித் தமிழரிடையே
தம் பண்பாடு, கலாசாரம் பற்றிய உணர்வுகளை
56 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞ് 2001
abøMửapu
வெளிக்கொணர்ந்தன. தமிழ்மொழியும் கலாசாரமும் உயிர்ப்புப்பெறத் தொடங்கின. தமிழ்நாடு அரக தமிழ்க்கல்வி விருத்திக்கும் தமிழ்க்கலைகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உதவி வந்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிஜித்தீவுத் தமிழ்மக்களின் அவலத்தைப் பாடி அம்மக்கள்மீது பெரும் அநுதாபம் தமிழ்மக்களிடையே தோன்றக் காரணமானார். ஆயினும் பிஜி நாட்டிலே தலைவிரித்தாடும் இனத்துவேஷத்திற்குமுன்னே அங்கு தமிழ் இனத்திற்கு விமோசனம்?
சுதந்திரத்தின் பின்பு " பூமிபுத்ர" கோட்பாட்டினால் தமிழர் மலேசியாவிலே பாதிப்புக்குள்ளாகிய போதும் தம் கலாசாரத்தையும் பண்பாட்டினையும் மூர்க்கமாகப் போற்றிவரும் தனியினமாக அங்கு தொடர்ந்து வாழ்நீது வருகின்றனர். பெரும்பான்மையான இரு வேறுபட்ட இனங்களின் நடுவே தம் தனித்துவத்தைப் பேணவேண்டிய தேவைக்கு, இந்திய வமிசாவளியினரிலே பெருமி பாண்மையானவர்களாக இருப்பதுவும் தாயகங்களோடு அவர்களுக்கு இருந்த நெருக்கமும் பெருமளவு உதவியுள்ளன. இரண்டு அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைப் பிரமாண்டமுறையிலே சிறப்பாக நடத்திய பெருமை மலேசியாவுக்குண்டு. தமிழ்மொழி மலேசியாவில் வீட்டுமொழி, கலாசாரமொழி. அதனைப் பாடசாலைகளிலே தனிப்பாடமாகவே கற்கமுடியும்; ஏனைய பாடங்கள் யாவும் மலாய் மொழியில் கற்க வேணடும். அதுவே அங்கு உத்தியோகமொழி. 1956இலே மலாயா
பல கலைக் கழகத்திலே இந்தியக் கல்விகள் துறை ஒன்று கலாசார அமைப்புகளினி நிதியுதவியோடு அமைக்கப்பட்டது. அதிலே தமிழ்க்
கல்விக்குச் சிறப்பிடம் தரப்பட்டது. அதிலே இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட பாக்டர் எக்ஸ். எஸ். தனிநாயகம் அடிகள் முதல்
பேராசிரியர் தவிசினை 1981இலே பெற்றனர். Lo G36uo fuu T ons (636uo பொதுசனத் தொடர்புசாதனங்களாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்பன தமிழருக்குக் கிடைக்கின்றன. சங்கீத அபிவிருத்திசபை போன்ற கலாசார அமைப்புகள் கலை வளர்ச்சியிலே முக்கிய இடம் வகிக்கின்றன. மலேசியாவில் இருந்து சிறந்த சிறுகதை, நாவல், கவிதை என்பன வெளிவந்திருக்கின்றன. தமிழ் இனம் இன்று நிலைக்கக்கூடிய பூமியாக மலேசியா தோன்றினும் அங்கு அதற்குச் சமத்துவம் கிடைப்பதரிது.
சிங்கப்பூர் குடியரசிலே தமிழினம் சிறுபானமையினமாகக் காணப்படினும், இன ஒதுக்கல் முதலாம் கோட்பாடுகளினாலே பாதிக் கப்டாது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. தமிழர் தம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப்பேணி தனியினமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வந்த இந்தியத்தமிழர் தாயகத்திற்கு அண்மையில் வசிப்பதாலும் ஒருசேர தனித்து வாழ்ந்து வந்தமையாலும் இனமதமொழிகளால் வேறுபட்ட மக்களால் சூழப்பட்டு இருப்பதாலும் தம் கலாசாரத்தையும் பணி பாட்டையும் போற்றிப் பேணி இருக்கமுடிந்தது. சுதந்திர இலங்கையில் தமது வாக்குரிமையை இழந்தும் சிங்களப் பேரினவாதத்தினாலே பெருமி பாதிப்புக்குள்ளாகியும் சொல்லொணாத் துன்பத்திற்காளாகியும் நலிந்தபோதும் இலங்கையின் குறிப்பிடத்தக்க சிறுபான்மை இனமாக அவர்கள் விளங்கிவந்தார்கள். அவர்களுடைய ஒற்றுமையிலே இன்று ஏற்பட்டிருக்கும் விரிசல் அவர்களுடைய பலத்தைச் சிதைத்துவிடக்கூடாது.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 57

Page 31
abøLütapu
தை 2001
V
பத்தொண்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த மேனாட்டுக் கல்வி வசதிகளாலே அவர்கள் ஆங்கிலக் கல்வியை விருத்திசெய்ய முடிந்தது. இதனால் அவர்கள் மலாயா, சிங்கப்பூருக்குமட்டுமன்றி இந்தியாவுக் குமி சென்று அங்கு வேலைவாய்ப்புகளைப் பெற முடிந்தது. பத்தொண்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தென்னாட்டிலே இலங்கைத் தமிழர் பலர் சிறப்புடன் உயர்ந்தோங்கி நின்றிருக்கின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதி நல்லுTர் வேமாசிலாமணிப்பிள்ளை இந்திய அரசினாலே "திவான பகதூர் “ பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டவர்; இந்திய அரசின் ‘ராவ் பகதூர்’ பட்டம்பெற்றவர் பட்டியலிலே, புதுக்கோட்டை நீதிபதி, சிறுப்பிட்டி வை. 5.6Lonsulifloftsodon, B.A., B.L. (1832 - 1901), சென்னைப் பிரசிடென்ஸி காலேஜ் தலைவர், நல்லூர் ஜே.எம். சிந்தாமணி வேலுப்பிள்ளை, B.A கல்விப் பணிப்பாளர் லுயிஸ் ஸி. வில்லியம்ஸ் பிள்ளை, க. வைத்தியலிங்கபிள்ளை, ஸி. முருகேசம்பிள்ளை என்போர் இலங்கைத்தமிழர்: “ராவி சாகிப்’ பட்டம் பெற்ற செலிலையா கிறிஸ்மஸ்பிள்ளையும் இலங்கைத் தமிழரே. திருவனந்தபுரத்திலே பிரதமரீதியரசராக விளங்கிய ரி.ஏ.செல்லப்பாபிள்ளை ( 1902), உயர்நீதிமன்ற நீதிபதிகளாகத் திகழ்ந்த ஜி.எஸ்.அரியநாயகம்பிள்ளை, ( -1887), ஏ.எம்.முத்துநாயகம், கலால் ஆணையாளராக இருந்த ரி.ஏ.பொன்னப்பலம்பிள்ளை B.A., என்போர் இலங்கைத்தமிழர்: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களான ஜி.பீ. சவுந்தரநாயகம்பிள்ளை( -1882) , சங்குவேலி சாமுவேல் நெவின்ஸ்பிள்ளையும் அரசாங்க அஞ்சல்துறை மேலதிகாரி மல்லாகம் விகணக சபைப்பிள்ளையும் (1855 - 1906), காப்புறுதிப்
பதிவாள் சுதுமலை கறல் விகவநாதபிள்ளையும் (1820 - 1880) இலங்கைத் தமிழரே. கும்பகோணம் கவர்மெண்ட் காலேஜ் பிறின்ஸிபல் ஜேம்ஸ் ஹெண்ஸ் மண் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். சென்னையில் கல்வி வட்டாரங்களிற் பேர்பெற்றிருந்த த.கனகசுந்தரம்பிள்ளையும் (1863-1922), த.சரவணமுத்துப்பிள்ளையும் ( -1896) கீழ்மாகாணத்துத் திருகோணமலையைப் பிறந்தகமாகக் கொண்டவர்கள். மல்லாகம் கெலக் விசுவநாதபிள்ளை ( - 1884) அரசாங்க மொழிபெயர்ப்பாளராகப் பேரெடுத்தவர். இவர்களிலே பலர் தம் தாயகத்தோடு தொடர்பினை அறுத்துக்கொள்ளாமல் இருந்தபோதும் தமிழ்நாட்டிலும் ஏனைய தென்னாட்டுப் பிரதேசங்களிலும் தம் வதிவிடங்களை அமைத்துக்கொணர்டு வாழ்ந்தனர்.
இந்தியா 1947இலும் இலங்கை 1948இலும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. இந்தியத் தமிழ்மக்களுக்குப் பிரதேச சுயாட்சியுடைய தமிழ்நாடு, பாரம்பரியமாக, உரிமையும் ஆளுமையுமுடைய பூமியாகத் தொடர்ந்து வந்தது. இந்தியக் குடியரசின் பொதுக்கொள்கைகள் சிலவற்றினால் இந்தியத்தமிழர் பாதிப்படைந்தபோதும், தனியுரிமையை நிலைநிறுத்துவதிலே அவர்களுக்குப் பெருங்கவிடம் இருந்ததாகத் தெரியவில்லை. 1977இலே காவிரிநீர்ப் பிரச்சினையாலே, கர்நாடகத்தில் உருவான தமிழர் எதிர்ப்பினாலே, ஆயிரமாயிரம் தமிழ்மக்கள் தம்முடைய உடமைகளை இழந்து தாயகம் திரும்பியதுபோல், வேறொரு பாரதூரமான உள்நாட்டு அவலத்திற்கு இந்தியத் தமிழ் மக்கள் உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் இந்தியக் குடியரசின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழர் தொழில் காரணமாகவும் விருப்பின் காரணமாகவும் குடியேறி வாழ்கின்றனர். புதுதில்லி, கல்கத்தா,
58 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ഞg, 2001
abøMütarpu
மும்பாய் போன்ற நகரங்களிலே தமிழர் குறிப்பிடத்தக்க காணப்படுகின்றனர்.
தொகையினராகக்
விடுதலைக்குப் பின்பு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா முதலிய மேலைப்பிரதேசங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா முதலிய தெற்காசிய நாடுகளிலும், ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூலேண்டு முதலாம் தூரகிழக்கு நாடுகளிலும் காணப்படுகின்றனர். இவர்களிற் கல்விக்காகவும் தொழ ல வ ச த களு க" கா கவு ம புலம்பெயர்ந்தவர்களே அதிகமானவர்: தமி நாட்டு அல்லது பிரதேசத்துப் பிரச்சினைகளுக்காக இந்தியாவில் இருந்து நேராகப் புலம்பெயர்ந்த இந்தியத் தமிழர் இருப்ப தாகத் தெரியவில்லை.
இலங்கை 1948இலே இங்கிலாந்திலிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, மக்களாட்சி என்ற பெயரிலே, பெரும்பாண்மை இனமான சிங்களவரின் இனஒதுக்கலினால் சிறுபான்மையினங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. 1948-49இலே இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும் 1956இலே சிங்களம் தனி ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்தப்பெற்றபோதும், பின்பு சோல்பரி அரசியல் யாப்பிலிருந்து, சிறுபாண்மையினரைப் பாதுகாக்கக்கூடியதென்று, யாப்பினை அமைத்தோர் நம்பிய, 29ஆம் ஷரத்து நீக்கப்பெற்றபோதும், பிறிவிக் கவுண்சில் (PRIVY COUNCIL) sits of செய்யமுடியாது போன போதும் , சிறுபான்மையினரால் சட்டரீதியாக எதுவும் செய்யமுடியவில்லை.
1956இலே
இலங்கைதி தமிழருக்கு எதிராகக்
கட்டவிழ்க்கப்பெற்ற கொடுரம் 1958, 1981, 1970, 1977, 1981ஆம் ஆண்டுகளிலே பூதாகரமாகி, 1983ஆம் ஆண்டு ஜூலாய் மாதத்திலே விசுவரூபம் எடுத்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியின் பலாலி றோட்டிலே, 23 ஜூலாய் 83 சனிக்கிழமை நள்ளிரவு, கண்ணி வெடிக்குக் குருநகர்முகாமினைச் சேர்ந்த 13 துருப்பினர் பலியாகி, இருவர் படுகாயம் அடைந்தபோது, யாழ்ப்பாணத்திலே 20 பொதுமக்களுக்குமேல் கொல்லப்பட்டனர். மறுநாள் 24 ஜூலாய் ஞாயிறு கணத்தை யில் குமுறி, நள்ளிரவு பொறளை வழியாக, இனவெறி கொழும்பிலே கட்டவிழ்ந்து பரந்தது. வெள்ள வத்தை 25 ஜூலாய் திங்கள் காலை நிர்மூலமாக்கப்பட்டது. காலம்தாழ்த்தி அன்று பிற்பகலி 2 - 00 மணிக்குப் பிரகடனப்படுத்தப் பெற்ற ஊரடங்குச் சட்டத்தினை இராணுவமோ பொலீசோ நடைமுறைப்படுத்த வில்லை. வெலிக் கடைச் சிறையில் அன்று 35 தமிழ்க்கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டனர். சீனக்குடா முகாமில் இருந்த கடற்படையினர் திரிகோணமலையைத் தீக்கு இரையாக்கினர். ஐந்துநாள் மெளனம் சாதித்த ஜனாதிபதி ஜயவர்த்தனா, 28 ஜூலாய் வியாழன், நாட்டுமக்களுக்கு உரையாற்றியபோது, அவதிக் குள்ளாகி அந்தரித்துநின்ற தமிழ்மக்களுக்கு எவ்விதமான அநுதாபமும் காட்டாது, பயங்கரவாதிகளின் சண்டித்தனத்திற்குச் சிங்களமக்கள் பதில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும், இலங்கையை இரணிடுபட விடக் கூடாது எனுமி சிங்களமக்களின் அபிலாசைஷக்கு அரசின் ஆதரவு பூரணமாகவுண்டு என்றும் கூறினர். அமைச்சர் சிறில்மத்தியூவின் சிப்பந்திகள் கொடுத்த போலிச் சனத் தொகைப் படிவங்களைத் திருப்பிக் கொடுக்காதவர்களும், திருப்பி வாங்காமல் விடப்பட்டவர்களும், கொழும்பிலே தப்பிக்கொண்டார்கள். 1983
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 59

Page 32
கலப்பை
தை 2001
கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கிலே தமிழர் உடமைகள் சூறையாடிக் கொளுத்தப்பட்டன. வேலியே பயிரை மேய்ந்தது!
தம் பாரம்பரிய வதிவிடங்களிலே வசதிகள் இன்றியும் பாதுகாப்பிணி றியும் வாழவேணி டிய நிலைக்குத்தள்ளப்பட்ட இலங்கைத்தமிழர் ஐம்புதுகளின் கடைக்கூறிலிருந்து புலம்பெயரத் தொடங்கி விட்டபோதும், எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே ஆயிரக்கணக்கிலே புலம்பெயர்ந்தனர். ஏனெனில் எண்பதுகளில் கட்டவிழ்க்கப்பெற்ற இனவெறி, தமிழினத்திற்கு மனிதாபிமானம் மீது எஞசியிருந்த நம்பிக்கையையே அழித்துச் சிதைத்துவிட்டது: அவர்களுடைய அவலங்களை - பெரும்பான்மை இனத்தின் துவேஷத்தினாலே அவர்கள் பட்ட தாங்காத கொடுமைகளை - உலகம் அப்பொழுது நின்றுநிதானித்து அநுதாபம் காட்டியது. இலங்கைத் தமிழ்மக்களை அகதிகளாகத் தத்தம் நாடுகளிலே ஏற்றுக்கொள்ள மனதாபிமானம்கொண்ட நாடுகள் முன்வந்தன. கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்ஸலண்ட், ஐக்கிய அமைரிக்க நாடுகள், அவுஸ்திரேலியா, நியூஸிலண்ட், இந்தியா என்பனவற்றிலே புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர் தொகை குறிப்பிடத்தக்கது.
திறமைசாலிகள் என்ற அடிப்படையிலும் சில நாடுகள் தமிழ் மக்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தியா, இலங்கையில் இருந்துமட்டுமன்றி தமிழர் பரம்பரையினர் மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, கிழக்காபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பிஜித் தீவுகள் என்பனவற்றிலிருந்தும் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களிலே தொழில் வாய்ப்புகளையும் கல்வி
வசதிகளையும் விரும்பிச் சென்ற வர்களோடு அரசியல் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவருமுளர். மலேசியாவின் “பூமிபுத்ர" கொள்கையும், சிங்கப்பூரின்
எதேச்சாதிகாரமும், ஆபிரிக்காவின் நிறுத்துவேஷமுமி, பிஜித் தீவுகளினி இனஒதுக்கலும் கவனத்திற் கொள்ளப்படல்வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டிலே புலம்பெயர்ந்த தமிழ்ப் பரம்பரைகளை, தமிழ்மொழி பேகம் தமிழர், தமிழ்மொழி பேசாத தமிழர், தமிழ்மொழி தெரியாத தமிழர் எனப்பகுத்துக் கொணி டே போகலாம். இப்பகுப்பு, மொழியைமட்டுமே அளவுகோலாக வைத்து நோக்கப்பட்டது. இவ்வாறு செய்தல் சரியாகுமா என்ற சந்தேகம் எழாமலில்லை. மொழியானது பொதுசனத் தொடர்புச் சாதனங்களில் ஒன்றேஅன்றி வேறில்லை என்பார் கூற்றினை மறுப்பது கடினமாகும். ஒவ்வொரு இனத்தினையும் தனிப்படுத்திக் காட்டும் அடையாளங்கள் யாவை?
பிரதேச உணர்வு, சமய ஒற்றுமை, கலாசார அமைதிகள், ஒருமித்த பணிபாடு என்பன இனங்காட்டுவதிலே வகித்துள்ள முக்கியத்துவத்தினை, மொழிகள் பொதுவாக வகிக்கவில்லை என்றுதான் சொல்லவேணடும். மொழியைப் பல இனங்களும் தொடர்புசாதனமாகவே கருதியிருக்கின்றன. இதற்கு அவற்றிலே அதிகமானவை, காலனித்துவ ஆட்சியாளரின் மொழிகளைத் தொழில்வாய்ப்புகளுக்காகவும் சமுதாய அந்தஸ்துக்காகவும் விரும்பிக் கற்றுவந்ததே காரணம் எனலாம். இவை தாய் மொழியைப் பொதுவாக வீட்டுமொழியாக மட்டும் பயன்படுத்தி வந்திருக்கின்றன.
60 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

GOgb 2001
கலப்பை
உலகிலே யூதர்கள் தாம் மொழியை அடிப்படையாகக்கொண்டு தம் மத வழிப் பட்ட இனத்தை ஒன்றுபடுத்தியவர்களாக அறியப்படுகிறார்கள். எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா 1956 இலே சிங்களத்தினைமட்டும் உத்தியோக மொழியாகப் பிரகடனப்படுத்தியதன்மூலம் இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள தீவிரவாதிகளையும், பெளத்தமத குருமாரையும், ஆயுள்வேத வைத்தியரையும், சிங்கள வாத்தியாரையும், புதிய சிறு முதலாளிகளையும், சிங்கள லிகிதர் போன்றவர்களையும் ஒன்றுபடுத்திய பெருமைக்குரியவர். இலங்கைத் தமிழரிடையே 1956க்குப் பின்பே “தமிழுக்கும் அமுதென்று பேர்; அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற சுலோகம் செல்வாக்குப் பெற்றது. அரசியல் சூழ்நிலையாலே தாய்மொழிப்பற்று இலங்கைத் தமிழரிடையே விருத்தியடைந்தது. இதனாலே, உலகளாவிய நிலையில் இன்று தமிழரை இனங்காட்டும் பிரதான அடையாளம் தமிழ்மொழியாகிவிட்டது. தமிழ்மொழி சமூக அடையாளம் என்ற உணர்மையைப் புறக் கணிக்காது, அமீ மொழியின் தொண்மையிலும் வளமையிலும் பெருமிதம் அடைந்து, பலி லினச் சூழல்களிலே, தமிழ்மொழியினைப் போற்றிப் பேண வேண்டுமா இல்லையை என்பதைத் தமிழர் பரம்பரைகள் தீர்மானிக்கவேண்டும். எந்தவொரு இனமும் தனது தனித்துவத்தினையும் பாரம்பரியத்தையும் பேணத் தவறுதலி , தனினையே அழித்துக்கொள்வதாகும். ஐரோப்பிய இனங்கள் குடியேறிய நாடுகளிலே வாழ்ந்துவந்த சுதேசிகள் இவ்வுண்மையை நிதர்சனமாகச் சான்றுகாட்டி
நிறுவியுள்ளனர்.
தமிழ் பேசத்தெரியாதவரும் பிஜி, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் தம்
பாரம்பரியத் திண் பெருமையையும் வளத்தினையும் அறிந்துகொள்வதற்குத் தமிழ் இலக்கியம் பேருதவியாக அமையும் என்பதை மறுத்தலரிது. இலங்கை, இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கும் மசிேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் ஓரிரு சந்ததிகளைத் தமிழ் வட்டத்துக்குள்ளே கொணிடுவருதல் செயற்கரியதன்று. தாய்மொழி வீட்டுமொழியாக அமையும்போதும், வியாபாரநோக்கிலே மொழிக்கல்வி அணுகப்படாதபோதும், அண்மையிலே விலகிக் கொண்ட பரம்பரையை மீண்டும் அணைத்துக்கொள்ள முடியும்.
புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழருக்கு முதல்மொழியும் தாய்மொழியும் வேறுவேறானவை. இந்நியதியைத் தமிழர் அறியாதவர்களல்லர். ஆயினும் தத்தம் தாயகங்களில் தாய்மொழியைப் பேணியவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் அவ்வாறு பேணவேண்டிய அவசியத்தினை உணராமல் இருப்பதாகத் தெரிகின்றது. தமிழரின் பாரம்பரியத்திலே தமிழ்மொழியை ஒழித்துவிட்டு கலாசாரம், பண்பாடு என்று கருத்துரைத்தல் தறி காலிகமான விளக்க மேயணி றி நிரந்தரமானதன்று.
புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ்ச் சமூகம் தம் மொழித்தீபம் அணைந்துவிடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அடுத்துவரும் சந்ததிகள் தாம் சிறந்த பாரம்பரியம் உடைய இனத்தின் வாரிசுகள் என்று இறுமாந்து நிமிர்ந்து நிற்கக்கூடிய பெருமையை அவர்களுக்கு வழங்குவது, நம் இனத்தின் மீள் உயிர்ப்புக்கு இன்றியமையாதது என்பதை மறந்துவிடல் பெரும்பாவம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 61

Page 33
a5Asůabu ഞ് 2001
வருவாய் இறைவா
வருவாய் இறைவா வருவாய் இறைவா கருணை வடிவாய்ப் புவிமேல் வருவாய் தருவாய் இறைவா தருவாய் இறைவா அருளை நிறைவாய்ப் பாடிடத் தருவாய்!
வானின் அமுதே வளரும் மதியே வையமே வாழ்த்திட வைக்கோலில் வந்தாய் தெவிட்டாச் சுனையெனத் தித்திக்கும் திணையென தேனூறு சுவையெனத் தினமுமைப் பாடிட்டே மன்னவனே தாழ் பணிகின்றோம்!
வருவாய் இறைவா வருவாய் இறைவா கருணை வடிவாய்ப் புவிமேல் வருவாய் தருவாய் இறைவா தருவாய் இறைவா அருளை நிறைவாய்ப் பாடிடத் தருவாய்!
ஆயரின் குடிலில் அமலியின் மடியில் ஆவினம் கூடிட அமலனாய் மலர்ந்தாய் மாசறு பொன்னுடன் மடிநிறை வெள்ளியுடன் மணமுறு தூபமுடன் மணிமுடி தாழ்த்திட்டே மன்னவனே தாழ் பணிகின்றோம்!
வருவாய் இறைவா வருவாய் இறைவா கருணை வடிவாய்ப் புவிமேல் வருவாய் தருவாய் இறைவா தருவாய் இறைவா அருளை நிறைவாய்ப் பாடிடத் தருவாய்!
தெய்வீக ஒளியோடு தேமதுர வாழ்த்தோடு தேவனின் மைந்தனாய்த் திவ்வியனாய் அலர்ந்தாய் மாசில்லா மனதோடு மணமுறு உணர்வோடு மாண்புறு நினைவோடு மாதவம் புரிந்திட்டே மன்னவனே தாழ் பணிகின்றோம்!
வருவாய் இறைவா வருவாய் இறைவா கருணை வடிவாய்ப் புவிமேல் வருவாய் தருவாய் இறைவா தருவாய் இறைவா அருளை நிறைவாய்ப் பாடிடத் தருவாய்!
- மனோ ஜெகேந்திரன் -
62
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பை
தை 2001
இசைக்கலை
இயல், இசை, நாடகம் எனப்படும் விளங்குகின்றார். ஏழிசையாய் இசைப்
முத்தமிழில் இசை மிகவும் முக்கிய பயனாய் என்று வரும் தேவாரத்தில்
இடத்தைப் பெறுகின்றது. தொன்றுதொட்டு வந்துள்ள 64 கலைகளில், லலிதகலைகள் எனப்படும் நுண்கலைகள் நமது உள்ளத்தை ஈர்த்து, மேலான உணர்ச்சியையும், கலை இன்பத் தையும்
உணர்டாக்குவன: அனைவரையும் பரவசப்படுத்தும் இயல்புடையவை. நுணி கலைகளுள் இசைக் கலை
மிகமேன்மையான கலையாகும். இசை பயில்வதனால் ஒருவனிடம் நற்குணங்கள் விருத்தியாகி, துர்க்குணங்கள் ஒழிகின்றன. பலதேசத்து மக்களையும் ஒன்றுசேர்க்கும் சக்தி இசைக் கலைக் கே உணி டு. சங்கீதத்திற்குக் காந்தர்வ வேதம் என்று பெயர். காந்தர் வவேதம் நான்கு உபவேதங்களில் ஒன்று.
இசைக்கலை ஒரு தெய்வீகமான ஒரு
கலையாகும். ஏனைய கலைகளையும் சாஸ்திரங்களையும் கறி பதனாலி அடையக்கூடிய பயனை ஒருவன் நுணி கலைகளில் முதனிமையான இசைக்கலையை முறையாகக் கற்பதனால் பெறமுடியும். இறைவன் மனிதனுக்கு அருளிய குரல் பேசுவதற்கு மட்டுமல்லாது பாடுவதற்குமாகும். பாடும்போதுதான் ஒருவன் குரலின் முழுப்பயனையும் அடையமுடியும் இசை பயிலாத ஒருவன், இவ்வுலகில் இயல்பாகவே தனக்குக் கிடைக்கக்கூடிய கலை இன்பத்தையும் தெய்வீக உணர்ச்சியையும் இழக்கின்றான். இறைவழிபாடு செய்வதற்கும் இறைவனை அடைவதற்கும் இசை ஒரு முக்கிய சாதனமாகும். கடவுள் நாதப்பிரம்மாய்
சுந்தரமூர்த்திநாயனார் இறைவனைப்பற்றிக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் அநேக மார்க்கங்கள் இருந்தாலும் இசைமார்க்கம் இனிமையானதும் மிகச் சுலபமான மார் க்கமும் ஆகும். வார்த்தைகளால் வெளியிடமுடியாத அதிநுட்பமான கருத்துக்களையும் இசையின் மூலமாக வெளியிடலாம்.
தமிழ் மக்கள் பண்டைய காலத்தில் ஒரு உன்னதமான இசையை இசைத்து வந்தார்கள் எனபதைச் சிலப்பதிகாரத்திலிருந்தும் புராதன தமிழிசை நூல்களிலிருந்தும் அறியலாம். இந்தமுறை தற்போது வழக்கத்தில் இல்லாவிடினும் அதன் சிறந்த அம்சங்கள் பிற்கால இசையில் பின்னர் புறப்பட்டன. இசைக்கு ஆதாரம் நாதமே. நாதத்தினின்று சுருதிகளும் சுருதிகளினின்று ஸி வரங்களும், ஸ்வரங்களினினிறு இராகங்களும் உற்பத்தியாகின்றன. ஸ்வரம் எனினும் பதத்திற்கு இயல்பாகவே ரசனையைக் கொடுக்கும் த்வனி என்று பொருள். சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ளவை
ஸப்தஸ்வரங்களாகும்.
இந்திய இசையை இராக சங்கீதம் என்றும், மேல்நாட்டுச் சங்கீதத்தை சமவாத சங்கீதம் என்றும் அழைப்பர். இந்திய சங்கீதத்திலுள்ள நுண்மையான சுருதிகள், கமகங்கள் முதலிய அருமையான இசைத்தத்துவங்களை மேல்நாட்டு இசையில் காணமுடியாது. இந்திய சங்கீதம் மிகவும் பழமையானது. பண்டையகாலத்தில் இந்தியா முழுவதும்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 63

Page 34
asasinapu
ഞ9, 2001
ஒரே 66) is 6 இசை வழக்கத்திலிருந்தது. பின்னர் வடநாட்டு (பிந்துஸ்தானிய) சங்கீதம் என்றும், தென்நாட்டு (கர்நாடக) சங்கீதமென்றும் வேறுபாடு ஏறக்குறைய 600 வருடங் களுக்கு முன்புதான் ஏற்பட்டது. பின்பு இவை தனித்தனியாக வளர்ச்சிபெற்று வந்துள்ளன.
தென்னிந்திய சங்கீதத்திற்குப் புத்துயிரளித்து, நூற்றுக்கணக்கான அரிய உருப்படிகளை இயற்றி அநேக அபூர்வராகங்களைப் பிரசித்தப்படுத்திய மூன்று இயலிசைப் புலவர்களாகிய பூீரீதியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமித் தீக்ஷதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மகான் களாவர். இவர்களைச் சங்கீத த7ரிமூர்தத7கள் 66 அழைக்கின்றார்கள். புகழ்பெற்ற அநேக வாக்கேயகாரர்கள் இருந்தாலும் இம்மூவரைமட்டுமே இவ்வாறு அழைப்பதற்குப் பல காரணங்கள் உள. தற்காலத்தில் பாடப்பட்டுவரும் கிருதி என்னும் உருப்படிவகையைச் சிறந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவர்கள் இம்மூவருமேயாகும். ராகபாவம் ததும்பும் இம்மகான்களின் உருப்படிகளில் அநேக அபூர்வராகங்களும், புதிய ராகங்களும் காணப்படுகின்றன. முன்பெல்லாம், ஒரே வர்ண மெட்டில் பல ஸாகித்தியங்கள் கூடுதலாக வழக்கத்திலிருந்தன. சங்கீத திரிமூர்த்திகள்தான் முதன்முதலில் ஒவ்வொரு பாடலும் தனித்தனி வர்ண மெட்டில் அமையவேணடும் என்ற நியதியைக் கடைப்பிடித்தார்கள். இதனால் நாதரசனை வளரலாயிற்று. மனதைக் கவரும்படியான அநேக கிருதிகளை இவர்கள் இயற்றியுள்ளார்கள்.
உன்னதமான இசையை நாம் அடிக்கடி கேட்பதால் நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது. சங்கீத சாஸ்திர ஞானத்தை
எவனொருவன் பெறுகின்றானோ அவன் ஸாரூப்பிய பதவியை அடைகின்றான். பூனிதியாகராஜ சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:-
ஸங்கீத சாளப்திர ஞானமு ஸாரூப்ய லெளக்மதமே மனஸா,
இதன் பொருள். ஸங்கீத சாஸ்திர ஞானம், ஸாரூப்யம் என்னும் பேரின்பத்தைத் தரும், என்பது. அதாவது, வெறும் சங்கீதம் கற்றால்மட்டும் போதாது; அதனுடைய பூரண இண்பத்தையும் அனுபவிக்க வேண்டுமானால் அதன் அடிப்படையான
சாஸ்திரத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
இசைக்கலை ஒரு நிகரற்ற கலை எனலாம்.
-திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்
கலப்பையை (சநீதா) உங்களி நணிபர்கள, உறவினர்களுக்கு сJolarci பொருளாக்குங்களி
வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக் கணிற தமிழி ഥ്ട്ര பற்றுக்கொண்ட, உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக்குங்கள். வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில், அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற்கான வரினி னப் பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
64
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

PARK WEW
MEDICAL CENTRE
26/12-16 Toongabie Road ' ()()NGABIE
DR. JEY CHANDRAN DR. THAVA SEELAN
OPEN 7 DAYS
Monday - loriday 8am - 8 pm Saturday - Sunday - Public Holidays 9am - 4pm
BULK BLLING
* Emergency * ECG * Women’s Health * Child Health * Antenatal Care * Immunization * Minor Surgery * Stress Management
* Pathology Blood tests * Allergy Tests * Workers Compensation * In-House Physiotherapy * X-Ray Services Open 7Days next door
For Appointments Call
9656 7757
Car park spaces available at REAR

Page 35
ర్గా We catega weddings, birth പ്ര/ ånd other i マ We specialise in CD ം് vegetarian & no பலரும் பாராட் டும் این உண்டு மகிழ தெ
GLOBAL Shop 2,32–50 Rooty Hill (Parking Available, Next to
GLOBALS
For all your Indian, S Best Quality Tamil, F
MOOT - WF Thur - Sa Sundays
Open
GLOBALS
Shop 2, 32-50 Rooty IIiIIN (Perking Alwar ilah le, Next frea fi

rall occasions 4 lays Fanily parties ipccial evideñt *్చ. ܠܐ
ーブ。 CD
ܐ ܨܪܠܐ Indian, Sri Lே n-vegetarian foods.
அறுசுளிவ உணவை iபு கொள்ளுங்கள்
SHOPBEST |Rd North, Rooty Hill 2766 the Rooty Hill Railway Stamfor)
=്
Sri Lankan food items indi Movies for Rent
d: 9 –7 pma It: 9 -8 pm. : 9—6 pпп
7 Days
SHOPBEST orth, Rooty Hill, NSW 2766
'her Roro y Fill Railwr'any Station)
ta