கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.11

Page 1
50வது ஆண்டை நோக்கி.
& Ly66
ஆசிரியர்:ெ
இளந்த
Lasus
zonažbrž - 2oos
 

SSG
_G Зәул
தலைமுறையின்
உருவாக்கம்!
விலை - 30/-

Page 2
IV U Positive v U Plates
DATABASEPRINTIN(BR0(|URES (AIAI0GUISSOWENIRS, B00KMARKS GREETING (ARI)S, NAM; TAGS, ("I)/I)WI) ('()WERS (()() IR Bl() (DATA, STICKERS INVITATION (ARI)S, PROJECTREPORTSBOOK COVER, MEN CARDS, GARMENT TAGS, THANKING (ARI)S,("ERTIFICATIES, 30)()KS, POSITIERS, (TI) STOMMIER, TRANSPAREN(YSIIIET, 'LASTI(' (''ARI)S.SCRAT('] (''ARDS, VISITING ('ARDS.
(OHAPPY DIGITAL CENTRE(Pvt)Ltd.
Digital Colour Labs Digital offset Press
No. 75 l/1,Sri Sumanatissa Mauvatha, Colombo-12. Tel: +94 11 4937336, +94 114879566
web. www.happydigitalcentre.com e-mail happydigitalpotlidayahoo.com
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, : இலங்கை நாடாளுமன்றத்தில் மாத் திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப்பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் (04, 7. 2001) பதிவு செய்த துடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ; ஆவணப்படுத்தியுமுள்ளது.
50 -வது ஆண்டை நோக்கி.
நவம்பர்
2う4
ീറ്റ്ര میمz مج%///oہ
ഠർnർഗ്ഗ @ർഗ്ഗദ്ധe
|மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன்
வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர
மல்ல - அது ஒர் ஆரோக்கியமான
இலக்கிய இயக்கமுமாகும்.
201/4, Sri Kathiresan St,
Colombo - 13. Tel: 2320721
mallikaijeevaGyahoo.com
இளம் எழுத்தாளர் osapoởĆUvardẫgos Savašas வேண்டும்!
தேசத்தின் நாலா பகுதிகளில் இருந்தெல் லாம் இன்று இளம் படைப்பாளிகள் எழுதி வரு கின்றனர். இதில் கணிசமான பகுதியினர் யுவதிகளாகும். இந்த ஆக்கபூர்வமான இலக் கிய வளர்ச்சியை நாம் கண்கூடாகவே கண்டு மகிழ்கின்றோம். இதில் மனநிறைவு தரும் செய்தி என்னவென்றால், பல்வேறு பிரதேசங் களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் யுவதிகள் இன்று எழுத்து உலகில் பிரகாசித்து வருகின்றனர்.
இந்த இளந்தலைமுறையின் எழுத்து வளர்ச்சியைச் செம்மைப்படுத்தி, ஒழுங்கு படுத்த வேண்டும். இல்லாது போனால் இயல் பாகவே, இந்த இளம் மட்டத்தினரின் படைப்புத் திறன் திசை மாறிப் போய்விடவும் கூடும். அல்லது விரக்தி அடைந்து இந்தத் துறையை விட்டு ஒதுங்கிப் போய்விடவும் கூடும்.
இன்று பிரபலமாகப் பேசப்படும் அனைத்து எழுத்தாளர்களுமே, இளம் எழுத்தாளர்களாக இருந்து, தமது விடா முயற்சியாலும், தொடர் உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர்கள் என் பதை இளந்தலைமுறை தனது கவனத்தில் கொள்வது நல்லது.
எழுத்து ஆற்றலும், திறமையும், மனத் திண்மையும் நிறையப் பெற்ற இளசுகள் ஒன்று கூடி, தமக்கான ஒர் இலக்கிய அமைப்பை உருவாக்கி உழைத்தால், எதிர் காலத்தில் இந்த மண்ணில் பல தரமான படைப்பாளிகள் நிச்சயம் மலருவார்கள் என மெய்யாகவே நாம் நம்புகின்றோம்.
- முன் நின்று உழைத்துப் பாடுபட யார், யார் தயாராக இருக்கின்றீர்கள்?
- ஆசிரியர்

Page 3
ఫ్రీ மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள்
/ریتیلات تک تمھا
: டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) 250/= 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் 140/= 3. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் 175/= 4. மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக
மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 10/- 5. கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் 100/= 6. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் :
டொமினிக் ஜீவா(பிரயாணக் கட்டுரை) 110/= 7. முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் 150/. 8. ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா 135/- 9. இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் 150/- 10. அட்டைப் படங்கள் 175/- 11. சேலை (சிறுகதை) முல்லையூரான் 150/= 12. மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) 275/- 13. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் 350/= 14. நிலக்கிளி (நாவல்) பாலமனோகரன் 140/= 15. அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா 180/- 16. நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் 150/= 17 டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) 80/= 18. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) 100/- 19. முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா 120/= 20. தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் 150/- 21. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்):
செங்கை ஆழியான் 175/ 22. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப.ஆப்டீன் 150/= 23. அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் 120/= 24. அப்பா (வரலாற்று நூல்) தில்லை நடராஜா 120/= 25. ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் 140/= 26. சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் 150/= 27. டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு 350/= 28. Undrawn Portrait for Unwritten Poetry -
டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) 200/= 29. தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) 120/= 30. அக்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் 200/= 31. மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் 15Ofs 32. மல்லிகை முகங்கள் : டொமினிக் ஜீவா 150/= 33. பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா 120/= 34. எங்கள் நினைவுகளில் கைலாசபதி தொகுத்தவர் - டொமினிக் ஜீவா 90/= 35. காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் (இணுவையூர் சக்திதாசன்) 150/= 36. முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்) 200/= 37. மல்லிகை ஜீவா (மணிவிழா மலர் தொகுப்பு) 150/=
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்

இந்த நாடு, இந்தத்தேசத்தில் வாழும் SalbunsunuUbisofiqun bhsifmphenüh!
M
நீண்ட நெடுங்காலமாக பாராளுமன்றத்தில் மத்திய கொழும்புப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் அமைச்சராகவும் செயல்பட்டு, இன்று மருதானைச் சந்தியில் சிலையாக நினைவுருவம் பெற்றுத் திகழ்ந்து வருகிறாரே, தோழர் பீட்டர் கெனமன் -
வட பிரதேசத்தின் வரலாற்றிலேயே ஓர் இடதுசாரியாகப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பெற்ற தோழர் பொன். கந்தையா என்பவரின் நாமம் இன்றும் கூடப்
பிரஸ்தாபிக்கப்படுகின்றதே -
என்னதான் கருத்து வித்தியாசங்கள் இருந்த போதிலும், பெரியவர் என அழைக்கப் பெற்ற, அப்பழுக்கற்ற பொது வாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்த தந்தை செல்வநாயகம் இருக்கின்றாரே -
வெறும் உழைப்புக் கூலிகள் எனக் கருதப்பட்டு, நாடு கடத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை இன்று இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக வளர்த்தெடுத்த தொண்டமான் நம்முடன் இருந்துள்ளாரே, - -
மற்றும் முஸ்லிம் மக்கள் தலைவர்களாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டாக்டர் கலில், ராஸிக் பரீத், பதுருதீன் மொகமட், அஸிஸ், வெகுசனத் தலைவர் அஷ்ரஃப் -
மேலும் இந்த மண்ணின் பெயரை உலக அரங்கில் உரத்துப் பேசப்பட்ட வைத்தவரான முத்தையா முரளிதரன் -
மற்றும் கடந்த காலத்தில் இந்த மண்ணில் வாழ்ந்து, மடிந்து போன சிறுபான்மை
இனக் கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், ஆன்மீகவாதிகள் -
அத்தனை அத்தனை பேர்களுமே இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களே இல்லையா? - இனவாதம் பேசுவோர்களுக்கு மட்டுமே சொந்தமா?
நாம் தலை நிமிர்ந்து பிரகடனப்படுத்துகின்றோம். இந்த நாட்டில் வாழும் அனைவருமே இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்தான்!

Page 4
அட்டைப்படம்
Øගිශ්‍රිෆඩ්ඩිෆ්ෂිත්‍රීඩිළ ඉහ6%réශීන්"éඩිළහී φ6υαώώ Θουαυτοαρcόcναοί’’ கெக்கிறானுலஹறானா
- பண்ணாமத்துக் கவிராயர்
கெக்கிறாவ அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நான் சேவையாற்றும் போது, ஆறாம் ஆண்டு வகுப்பில் பயின்று கொண்டிருந்த ஒர் ஆற்றல் வாய்ந்த சிறுமி என் கவனத்தை ஈர்க்க, அவளுக்கு ஆங்கிலப் பேச்சொன்றை எழுதிக்கொடுத்து, அமைச்சு மட்டத்தில் அப்பிராந்தியத்தில் நடந்த இஸ்லாமிய விழாவொன்றில் அமைச்சர்கள், பிரமுகர்கள், அறிஞர்கள் வீற்றிருந்த மேடையில், அவளைப் பேசவைத்தேன். அன்று அனைவரதும் கவனத்தைப் பெற்ற அச்சிறுமிதான் இன்று ஈழத் தமிழிலக்கியத்தில் கவனிப்புக்குரியவராய்த் திகழும் முஸ்லிம் பெண் படைப்பாளி கெக்கிறாவ ஸ்ஹானா,
இவரின் தங்கைதான் பெண் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கெக்கிறாவ
சுலைஹா,
சுலைஹா ஆங்கிலத்திலும் கவிதையெழுத வல்லவர். காஸாவில் அகதி முகாமில் வாழ்ந்த அவுற்மத் குர்தி என்ற பதினொரு வயதுச் சிறுவன் தன் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒர் யூத வெறியனின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி குருதிச் சேற்றில் விழுந்து கிடக்கும் காட்சியை சுலைஹா பத்திரிகையொன்றில் பார்த்ததனால் 6JsbULLUTÉ)üSlsö SD55 96ugg|"TomorrOWThe Sun Will Rise" 676öTD sysjälsloë கவிதை islamic Perspective சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.
இவ்விரு சகோதரிகளும் வடக்கு நோக்கிப் போகும் A-9 வீதி ஊடறுத்துச் செல்லும் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த கெக்கிறாவ என்ற ஊருக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடிக்கொடுத்தவர்கள்.
விடுதலைப் போராட்டம், தலித்தியம், பெண்ணியம் போன்ற கருத்தியல்கள் தமிழிலக் கியத்தில் மேள்கிளம்பிய எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர் ஸஹானா,
1980களின் தொடக்கத்தில் வானலைகளில் தவழத் தொடங்கி, தொடர்ந்து எழுத்தில் தடம் பதித்து வரும் கெக்கிறாவ ஸஹானா வானொலி ரசிகர்களுக்கும், தமிழ்
மல்லிகை நவம்பர் 2008 4.

வாசகர்களுக்கும். நன்கு பரிச்சயமான பெயராகும்,
மல்லிகைப் பந்தல் வெளியீடான “ஒரு தேவதைக் கனவு" சிறுகதைத் தொகுதி (1997), தமிழக மாங்குயில் பதிப்பக வெளி யீடான "இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்" கவிதைத் தொகுதி (2004) ஆகிய இரு நூல்களும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் கெக்கிறாவ ஸ்ஹானாவின் முகவரியை உறுதிப்படுத்தியுள்ளன.
மல்லிகை அநுராதபுர பிரதேசச் சிறப்பு இதழில் (அக்டோபர் 2006), 'அநுராதபுரப் பிரதேச இலக்கிய அமைப்புகளும் வெளி யீடுகளும்" என்ற கட்டுரையில், "கெக்கி றாவ ஸஹானாவின் ஒரு தேவதைக் கனவு என்ற சிறுகதை நூலை இப்பிரதேசத்தில் வெளியிடப்பட்ட முதல் சிறுகதைத் தொகுதி யாகக் கொள்ளலாம்" எனக் குறிப்பிடுகின் றார் அன்பு ஜவஹர்ஷா,
இச்சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 'ஒரு பாடசாலையின் கதை" தமிழகத்தின் இதயம் பேசுகிறது' சஞ்சிகை யில் ஸஹானாவின் புகைப்படத்துடனும், அவர் பற்றிய அறிமுகக் குறிப்புகளுடனும் மீள்பிரசுரமாகியுள்ளது.
கெக்கிறாவ ஸஹானா ஜெயகாந்த னின் அபிமானம் பெற்ற பெண் எழுத்தாளர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
ஜெயகாந்தனின் எழுத்துக்களில் மோகங் கொண்ட ஒர் இரசிகை என்ற முறையில் ஸஹானா ஜெயகாந்தனுடன் கடிதம் மூலம் இலக்கியத் தொடர்பு கொண் டது மட்டுமல்லாமல் 1996ல் தமிழகப் பயணம் மேற்கொண்டு ஜெயகாந்தனை
நேரில் சந்தித்துமுள்ளார். நவீன தமிழிலக் கியத்தில் ஜெயகாந்தன் யுகத்தைத் தோற்றுவித்த அப்படைப்பிலக்கிய மேதைக்கும் ஒர் இளம் எழுத்தாளருக்கு மிடையிலான இச்சந்திப்பு 31 மார்ச் 1996 தினகரன் வார மஞ்சரியில் ஸஹானா எழுதிய "ஜெயகாந்தனைச் சந்தித்தேன்' என்ற கட்டுரையில் பதிவாகியுள்ளது.
பதினான்கு வயதிலிருந்து ஜெயகாந் தன் கதைகளைத் தேடிப் படிக்கத் தொடங் கிய ஸஹானா, குமுதத்தில் ஜெயகாந்தன் தொடராக எழுதி வந்த வாழ்க்கையனுபவங் களில் சொக்கிப் போய் அவரின் பரம ரசிகை யாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பத்து வயதுச் சிறுவனாகவிருந்த போது அவரது குடும்பத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் பற்றி ஜெயகாந்தன் குறிப்பிடு வது தனது பால்ய பிராயக் குடும்ப நினைவு களுடனும் பொருந்திப் போவதைச் சுட்டி விட்டு, ஜெயகாந்தன் படைத்துள்ள சில பெண் பாத்திரங்களை நயந்த பின், சரமாரி யாகக் கேள்விகளைத் தொடுக்கும் நீள் கடிதமொன்றை ஜெயகாந்தனுக்கு எழுதி 6OTIT.
'தமிழிலக்கியத்துறையில் தனக் கென ஒரு தனி உயரத்திலிருந்து, தனது எழுத்துக்களின் மூலமாகப் படிப்போர்கள் மனதில் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களோடு சமூகப் பிரச்சினை குறித்து ஓர் உரத்த விவாதத்தை நடத்திவரும் திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கு இலங்கை யைச் சேர்ந்த ஸ்ஹானா என்ற வாசகி எழுதிய கடிதத்தையும், அக்கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து திரு.ஜெய காந்தன் அவர்களோடு தொடரும் குழு வினர் நடத்திய உரையாடலையும் இங்கே
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 5

Page 5
தருகிறோம்' என்ற பீடிகையுடன் 'இலங்கையிலிருந்து வந்த கடிதமும், எழுத்தாளர் ஜெயகாந்தன் தந்த பதிலும்" என்ற தலைப்பில் "தொடரும் சிற்றிலக்கிய ஏட்டின் ஆண்டு மலரில் (1993) அக்கடிதம் பிரசுரங்கண்டது. தற்கால இந்தியா பற்றி சஹானா கேட்டிருந்த சில கேள்விகட்கு ஜெயகாந்தன் குமுதத்தில் எழுதிய "மறு படியும் நினைத்துப் பார்க்கிறேன்' என்ற பிறிதொரு கட்டுரைத் தொடரில், 'அன்புள்ள ஸ்ஹானாவுக்கு" என விளித்துப் பதிலெழு தியுள்ளார்.
ஸ்ஹானா என்ற படைப்பாளுமையின் உருவாக்கத்துக்கு ஜெயகாந்தனின் பாதிப் புடன், மல்லிகை ஜீவாவின் ஊக்குவிப்பும் முக்கிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடப் படல் வேண்டும்.
எண்பதுகளின் முற்பகுதியில் எழுத் துலகில் பிரவேசித்த ஸஹானா வானொலி யுடன் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத் தமிழ்ச்சேவை 1 - 11) அதிகத் தொடர்பு கொண்டிருந்தார்.
பி.எச்.அப்துல் ஹமீட் நடத்திய ஒலி மஞ்சரியில் ஸ்ஹானாவின் சிறுகதை களும், கவிதைகளும் ஒலிபரப்பாகின. 'ஒரு பொற்கனவின் முடிவில்', 'ஒரு தேவதைக் கனவு முதலிய சிறுகதைகள் எந்தவித மாற்றமுமின்றி பி.எச்சின் கம்பீரக் குரலில் ஒலிபரப்பானவை. கவிதைகளும் அப்படியே.
ஸ்ஹானா மல்லிகையில் எழுதத் தொடங்கியது எண்பதுகளின் பிற்பகுதியி லாகும்.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 6
மல்லிகை 1989 செம்டெம்பர் - அக் டோபர் இதழில் ஸஹானாவின் சிறுகதை முதன்முறையாக வெளிவந்தது. இக்கதை பிரசுரமாகும் முன்பே மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடன் ஸஹானாவுக்கு கடித மூலம் இலக்கியப் பரிமாற்றம் தொடங்கி விடுகிறது. ஸஹானாவின் திரு மண வைபவத்தில் ஜீவா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன் அமை யாமல், ஸஹானாவின் எழுத்துப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு மன மகனிடம் அன்புக் கட்டளை விடுக்கிறார். ஓர் இளம் கதாசிரியைக்கு வழங்கும் திரு மணப் பரிசு என்று ஆசிரியர் குறிப்புடன் ஸ்ஹானாவின் உள்ளிருக்கையிலே...!" என்ற சிறுகதையை ஜீவா மல்லிகையில் பிரசுரித்தார். இச்சிறுகதை 'தகவம் இலக் கிய அமைப்பின் பரிசையும் தட்டிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அந்நாட் களில் நாட்டில் பெரும் பீதியை உண்டு பண்ணிய ஜேவிபி ஹர்த்தாலின் பின்னணி யில் பிறந்த ஸ்ஹானாவின் ஊரடங்கு கவிதையும் மல்லிகையில் பிரசுரமா கின்றது. அன்றிலிருந்து சளைக்காமல் எழுதிக்கொண்டிருப்பவர் ஸ்ஹானா.
எழுத்துலகில் வெள்ளி விழா ஆண் டையும் தாண்டி இன்னும் ஈராண்டுகளில் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்யப் போகும் கெக்கிறாவ ஸஹானா ஆர்ப்பாட்ட மின்றித் தம் எழுத்துப் பணியை அமைதி யாகத் தொடர்வது அவர் சார்ந்துள்ள சமூகத்தைப் பொறுத்த மட்டில் ஆரோக்கிய மானதோர் நிகழ்வாகும்.
மல்லிகையைப் பிரதான களமாகக்
கொண்டு இலக்கியம் படைக்கும் ஸஹா னாவின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி,

தினத்தந்தி, அல்ஹஸனாத், வாழ்க்கை, விழிப்பு முதலான பத்திரிகை, சஞ்சிகை களிலும் அநுராகம், படிகள், ஜீவநதி, யாத்ரா போன்ற சிற்றேடுகளிலும் வெளிவந் துள்ளன.
‘இன்றைய வண்ணத்துப் பூச்சிகள் என்ற ஸஹானாவின் கவிதைத் தொகுதி யில் இடம்பெற்றுள்ள பிறநாட்டுச் சகோதர னுக்கு என்ற கவிதை 2007ல் தென்னிந் தியாவில் நடைபெற்ற அகில உலகத் தமிழ் இலக்கிய மகாநாட்டு வெளியீடான கவிதைத் தொகுதியிலும் மறுபிரசுரமாகி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் ரவுபூப் ஹக்கீம் தலைமையில் 2002ல் இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லா மியத் தமிழிலக்கிய மாநாட்டில் ஸஹானா இளம் கவிஞர் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டார்.
கதாசிரியையாகவும், கவிஞராகவும் தமிழிலக்கியத்தில் முகவரி பதித்துள்ள ஸஹானாவின் ஒரு கூடும் இரு முட்டை களும் குறுநாவலும், இன்னும் பெயரிடப் படாத முழு நாவலொன்றும் இவ்வருட இறுதிக்குள் வெளிவரவுள்ளமை மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இன்னுமொரு கவிதைத் தொகுதி, ஒரு சிறுகதைத் தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுதி முதலி யன பிரசுரங் காண்பதற்காக இவர் கைவச முள்ளன. அத்துடன் சிறுவர் இலக்கியத் தொகுதியொன்றுக்கான ஆக்கங்களையும் தயாராய் வைத்திருக்கிறார். இவை யாவும் அதிக தாமதமின்றி வெளிவருதல் கெக் கிறாவ ஸ்ஹானாவின் படைப்புகள் பற்றிய ஆய்வுக்கும் கணிப்புக்கும் வழிகோலும் என நம்பலாம். இவரது ‘இன்றைய வண்
ணத்துப் பூச்சிகள் கவிதைத் தொகுதியை பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், அளுத்கம கல்வியியல் கல்லூரி மாணவி ஒருவரும் ஆய்வு செய்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1991 ல் ஆங்கில ஆசிரியையாக நியமனம் பெற்ற ஸஹானா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவி யாகச் சித்தியெய்திய கலைப் பட்டதாரியு மாவார். அகில இலங்கை ரீதியில் திறமை சித்தியுடன் டிப்ளோமா பட்டம் பெற்று தற் போது தான் கல்வி கற்ற பாடசாலையான கெக்கிறாவ முஸ்லிம் மகாவித்தியாலயத் தில் பணிபுரிகின்றார்.
க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரி வில் கற்று குறைந்த புள்ளி வித்தியாசத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்படும் வாய்ப்பை இழந்த ஸஹானா மனித ஆன்மாவைப் பண்படுத்தும் மற்றொரு புனிதப் பணிக்குத் தன்னை அர்ப்பணித் துள்ளமை மகிழ்ச்சி தருவதாகும்.
ஸ்ஹானாவின் கணவர் ஜே.சுவுைறப் தீன் ஓர் வர்த்தகர். ஸஹானாவின் இலக் கிய இயக்கத்துக்கு உந்து சக்தியாகத் திகழ்பவர். "இன்றைய வண்ணத்துப் பூச்சி கள் தொகுதியைத் தன் கணவருக்கே சமர்ப்பணஞ் செய்துள்ளார். இத்தம்பதியி னர்க்கு நான்கு குழந்தைகள். துல் கர்னைன், ஷப்னம், சகீனத், மாரியத்துல் கிப்தியா.
ஸ்ஹானாவின் கல்விப் புலமையும், கலைத்துவமும், சிருஷ்டியாற்றலும் ஈழத் தமிழிலக்கியத்துக்கு இன்னும் கனதியான, காத்திரமான பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கின்றேன்.
மல்லிகை நவம்பர் 2008 率 7

Page 6
Fgöj DIGIG) GJGDTD (12) 1960 - 19TO
- செங்கை ஆழியான். க. குணராசா
黄 黄
taggjat it
1960 - 1970களில் வெளிவந்த 54 நாவல்களில் ஒரு நூல் மத்தாப்பு ஆகும். உண்மையில் இது ஒரு குறுநாவலாகக் காணப்படுகின்றது. ஈழத்து இலக்கியத்துறை யில் இது புதியதொரு பரிசோதனை முயற்சி யாகும். மத்தாப்பு என்ற தலைப்பில் ஐந்து எழுத் தாளர்கள் ஒன்று சேர்ந்து ஐந்து அத்தியாயங் களாக மத்தாப்பை எழுதியுள்ளனர். இநாகராஜன், கனக செந்திநாதன், சு.வே. குறமகள், எஸ்.பொன் னுத்துரை ஆகிய ஐந்து முன்னணிப் படைப் பாளிகள் இணைந்து இந்தப் படைப்பை உரு வாக்கினர். இவ்வாறான கூட்டு முயற்சி இலக்கி யத்தில் முன்னரும் நிகழ்ந்திருக்கின்றது. தமிழ கத்தில் சுதேசமித்திரன், உமா ஆகிய பத்திரிகை களில் பலர் இணைந்து ஆக்கிய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. கொலைக் குற்றம் சாட்டப் பட்ட மாரிமுத்துவின் கதையை மத்தாப்பு விபரிக் கின்றது. மாரிமுத்துவை மையமாகக் கொண்டு கதை விரிகின்றது. 1958 இனக்கலவரத்தையும் இக் கதை தன் னோடு சேர்த்துக் கொண்டு நகள் கின்றது. தன் காதலுக் குரிய அலிஸ் நோணாவை இழந்து போகின்ற மாரிமுத்து இறுதியில் வெறும் மத்தாப்புக் கொட்டாக செல்கிறான். கருகிய கொட்டுகள் இனி யாருக்குத் தேவை’ என கதையை பொன்னுத்துரை நிறைவு செய்கிறார். இந்த நாவலில் யாழ்ப் பாண மொழிப் பேச்சு வழக்கும், மலையக சிங்களக் கிராமிய பேச்சுக்களும், பாத்திரங்களுக்கும் களத்துக்கு ஏற்ப விரவிப் காணப்படுகின்றன. மிகச் சிக்கலான இந்த முயற்சியில் ஐவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். கதைப் போக்கைக் கலந்து பேசாது மல்லிகை நவம்பர் 2008 率 8
 
 

ஒவ்வொரு வரும் விட்ட இடத்திலிருந்து தொடர் சார்ந்ததாக அறியும் போது வியப்பு ஏற்படுகின்றது. எஸ்.பொன்னுத் துரையின் அத்தியாயம் மத்தாப்பில் தூக்கலாக நிற்கின்றது என்பதை மறுக்க (ԼpլԶեւ յT35].
வீடற்றவன்
1960 - 19 7 O த சாப் த த த ல எழுதப்பட்ட இன் னொரு நாவல் சி. வி. வேலுப்பிள்ளை யின் வீடற்றவன் ஆகும். இது மலை யகத் தோட்டத் * தொழிலாளரின் முதலாவது அரசியல்
கதையாகவும், நாவலாகவும் விளங்குகிறது. மலைய கத்தின் மூத்த தலைமுறை எழுத்தாளர்
சி.வி. வேலுப்பிள்ளை ஆவார். ஈழத்தின் ஆங்கில எழுத்தார்களில் ஒருவர். அவர் 61(p5u ' 'Born for labour' 616öim is, Éil கில நாவல் இவருக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது. இந்நாவல் மலையக மக் களின் யதார்த்த அவல வாழ்க்கையை சித்திரிக்கின்றது. அவ்வாறான நாவலின் வரிசையில் வீடற்றவன் அமைகின்றது. மலையகத் தொழிலாள மக்களின் அவல வாழ்க்கையை வீடற்றவன் நாவலில் வேலுப்பிள்ளை நுட்பமாகக் காட்டியுள் ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக் காகக் குரல் கொடுக்க தொழிற் சங்கம் அமைக்கக் கூடாது எனத் தொழிற்சாலை களின் நெருக்கடிகளுக்கு இடையே தங்களுக்கென அவர்கள் அமைத்துக் கொள்ள முயலும் சங்கத்தினையும் போராட்டங்களையும் வீடற்றவன் சித்திரிக் கின்றது.
1935இல் தொழிற் சங்கச் சட்டம் இலங்கையில் அமுலுக்கு வந்த போதி லும் தொழிற் சங்கங்களை தோட்டங் களில் அமைப்பதற்கு தோட்ட நிர்வாகம் பல விதங்களில் முட்டுக்கட்டை இட்டு வந்தன. அத்துடன் தொழிற் சங்கப் பிரதி நிதிகள் நுழைவதற்கும் தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பிறந்த நாட்டையும், ஊரையும் விட்டு அந்நிய நாட்டில் குடி பெயர்ந்த மக்களை மீண்டும் திருப்பி அனுப்ப நினைக்கும் ஒப்பந்தத்தால் பாதிப்புற்ற வீடற்ற அவல வாழ்க்கையை ஆசிரியர் தன் நாவலில் காட்டுகிறார். "தொழிற் சங்கத்துக்கு ஆள் சேர்க்க மாட்டேன்’ என்ற தொழிலாள ராமசாமி, பின்னர் அந்த வாக்குறுதியை மீறுகிறான். 'எனக்குப் போக வழி தெரியவில்லை. எனக்கு ஒரு எடமில்லையே?’ எனப் புலம்புகிறான். தொழிலாளர்களைப் பழி மல்லிகை நவம்பர் 2008 ஜ் 9

Page 7
வாங்க அதிகாரி கள் போடும் பொய்க் குற்றச் சாட்டுகள், பெண் களிடம் நடந்து கொ ள ஞ ம முறை தவறிய செயப் கை களர் , வறுமைப் பட்ட தொழிலாள மக் களைப் பாதித் தது. அவற்றை வேலுப்பிள்ளை தன் நாவலில் சித்திரிக்கிறார். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தம் உரிமைகளுக்காகப் போராட தொழிற்சங்கங்கள் மூலம் போராட வேண்டுமென ஆசிரியர் அவாவு கிறார். மலைநாட்டின் அக்கால சூழ்நிலை இடமளிக்கவில்லை. ராமலிங்கத்தின் முடிவு துன்பமாக அமைகிறது. நாவலை அது புண்பட்ட மனித வர்க்கத்தின் ஊமைக்குரல் என நிறைவு பெற வைக் கிறார்.
வேலுப்பிள்ளையின் வீடற்றவன் ஆற் றொழுக்காகச் செல்கின்றது. மலையக மக்களின் பேச்சு வழக்கு நன்கு பயன் படுத்தப்பட்டிருப்பதால் உரைநடை மிகச் சிறப்பாகவுள்ளது.
மலைக்கொழுந்து
ബി. 19605ണിൺ ഥങ്ങണ யகத்தைக் கள மாகக் கொண்டு எழுத Lப் பட ட நாவல களில
மு த ன  ைம யானது நந்தியின் மலைக்கொழுந்து
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 10
ஆகும். இக்கதை தினகரனில் தொடராக வெளிவந்தபோதே பலரின் வாதப் பிரதி வாதங்களுக்கு உட்பட்டது. வாசகர்களுக் குப் அதுவரை அதிகம் பரிச்சயமில்லாத களத்தை ஒரு யாழ்ப்பாண எழுத்தாளர் நந்தி யதார்த்தமாகப் படைத்திருந்தார். 1959இல் நந்தி குறுக்குவழி என்ற சிறு கதையை எழுதினார். அதனைப் பலரும் முழு நாவலாக்கலாமென அபிப்பிராயப் பட்டனர். குறிப்பாக அன்புமணி அந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். அந்த வேண்டுகோளிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட நந்தி, 1963களில் அச் சிறுகதையைத் திருத்தங்களோடு மலைக்கொழுந்து நாவலாக்கினார். உரைநடைச் சிறப்புக்காக மூன்று தடவை கள் இந்த நாவலைத் திருத்தி எழுதினார். மலைக்கொழுந்து மெல்லிய காதலுணர் வைச் சித்திரிக்கும் கதை ஆயினும், மலைப் பிரதேசத் தொழிலாளர் அனுப விக்கும் துயரங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. மலையப் பன் என்ற நிஜ மனிதனுாடாக அவனுக்
 
 
 

கும் வீராயிக்கும் இடையிலான நேசத்தை விபரிக்கும் போது மலையக மக்களின் இன்னல்களைக் கண்முன் கொண்டுவர முயல்கின்றது. இந்த நாவலின் கதாநாய கனான மலையப்பன் கூறுகின்றான் “இது எனது மலைநாட்டுக் கதை. எனது மூதாதையரின் எலும்புரத்திலே வேர் விட்டுச் செழித்து வளர்ந்து செல்வப் பசுங் கொழுந்துகளை தளிர்விடும் தேயிலைச் செடிகள் இதில் பேசுகின்றன. அவற்றை நாம் காதிலிக்கின்றோம். எங்கள் அன்னையர் வயிற்றில் நாங்கள் கருவாக இருந்த காலம் தொடக்கம் பூமாதேவியின் வயிற்றில் நாங்கள் கருவாக வளரும் காலம் வரை நமக்கும் பணி ஆடை உடுத்திய தேயிலைச் செடிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.” என்கிறார்.
நந்தியின் நாவல்களில் மலைக் கொழுந்து தனித்துவமானது. மலை நாட்டில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களும், அவதானித்த தெளிவும் அந்த நாவலை உயிரோட்டமாகச் சித்திரித்துள்ளது. உள் ளடக்கத்திலும் உருவத்திலும் மிகுந்த கவனம் எடுத்திருப்பது இந்த நாவலைப் படிக்கும்போது புலனாகின்றது. இந்த நாவலில் அவர் படைத்துள்ள பாத்திரங் கள் காத்திரமானவையாகவுள்ளன. பாத் திர வார்ப்புகளும், உரையாடலும் அவ தானமாக அமைந்துள்ளன. இப்பாத்திரங் களிடையே பங்காளியாக அவர் அந் நாவலில் காணப்படுகிறார். அனிமையும் எளிமையும் நிறைந்த உரைநடையில் நாவலை நகர்த்திச் செல்வது இந்த நாவலின் இன்னோர் சிறப்பு.
நீண்ட பயணம்
சாதரிய த தனி அடக்கு முறை களையும் அதற் கெதிரான போராட் ட ங் க  ைள யு ம நாவல களி ல பொருளாக க கொண்டவர்களில் சொக்கன் (1963), செ.கணேசலிங்கன் (1965), செங்கை ஆழியான் (1971) கேடானியல் (1972), தெணியான் (1973), செ.யோகநாதன் (1976), தி.ஞானகேரன் (1977), சோம காந்தன்(1989), ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். கால வரன் முறையில் நாவ லிலக்கியத்தின் நவீன வடிவத்தில் சாதியப் பிரச்சினையை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் சீதா வாகும். சீதாவையடுத்து செ.கணேச லிங்கன் சாதியத்தின் எரியும் பிரச் சினைகளை நீண்டபயணம், போர்க் கோலம், செவ்வானம் முதலான நாவல் களில் காட்டியுள்ளார். சாதியத்துக்கு மிக்க அழுத்தம் கொடுத்து பல நாவல் களைப் படைத்துத் தந்தவர் டானிய லாவார். கணேச லிங்கனும் டானி யலும் மார்க்சி யக் கருத்துக் களுக்கு தம் நாவல் களில முக்கியத்துவம் கொடுத்திருப்ப தோடு சாதியத் தின் அழிவுக் கும், அடக்கி
மல்லிகை நவம்பர் 2008 & 11
ίνι. .

Page 8
யொடுக்கப்பட்ட மக்களினது விடிவுக்கும் சமூகப் புரட்சியொன்றின் மூலமே விடை காணலாமென நம்பினர். இவர்களது நாவல்களில் யாழ்ப்பான சமூகத்தின் சாதிப் பிரச்சினைக் களங்கள் பொதுவாக ஒத்த பண்பினடியாகச் சித்திரிக்கப்பட் டுள்ளன. கோயில்கள், பொதுக் கிணறு கள், பொதுவிடங்கள், பாடசாலைகள், தொழில் தாபனங்கள் என்பனவற்றில் பஞ்சமர்கள் அனுபவிக்கின்ற ஏற்றத் தாழ்வுகளையும், அவமானங்களையும், மனக்காயங்களையும், சமூக அநீதிகளை யும் இருவரும் தமது நாவல்களில் காட்டி யுள்ளனர். கணேசலிங்கன் தனது நாவல் களில் யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்திற மக்களை ஆக்கவிலக்கிய கர்த்தாவின் சமநிலை தளும்பா நிலையில் சித்திரிக்க, டானியல் பஞ்சமர்களுக்கெதிராகச் தொழிற்பட்ட பாத்திரங்களை மட்டுமன்றி, அப்பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட சமூகம் முழுவதையும் காறி உமிழ்கிறார். சாதி யத்தினால் பஞ்சமர்கள் மட்டுமன்றிப் பிராமணர்களும் பாதிப்படைந்துள் ளமையை சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது என்ற நாவலும், தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலும் நன்கு சித்திரித்துள்ளன.
கணேசலிங்கன், டானியல் என்போர் சாதியத்தின் அழிவுக்கு அல்லது சமூக மாற்றத்துக்குத் தமது நாவல்களில் சுட்டிக்காட்டிய வழிமுறை ஒரு சமூகப் புரட்சியாகும். 1960-1970 பத்தாண்டுகளில் செ.கணேசலிங்கம் நீண்ட பயணம், சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968), போர்க் கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) முதலான நாவல்களைப் படைத் துள்ளார். அவற்றில் அவரது முதல் நாவ
மல்லிகை நவம்பர் 2008 * 12
லான நீண்ட பயணம் பல வகைகளில் மிகச் சிறப்பான நாவலாகும். சுரண்டல், ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்க வெறி ஆகியன மனிதரிடை நிலைக்கும் வரை போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மனித உரிமைப் போராட்டம் ஒரு நீண்ட பயணம் என்பது கணேச லிங்கத்தின் கருத்தாகும். ஒடுக்கப்பட்ட வர்கள் இன்றும் போராடி வருகின்றனர். பயணம் நின்று விடவில்லை என அவர் கருதுகிறார். அதனை நீண்ட பயணத்தில் சித்திரித்துள்ளார். இந்த நாவலுக்கு பிரபல்யமான எழுத்தாளர் அகிலன் முன்னுரை வழங்கியுள்ளார் என்பது சற்று வியப்பாகவுள்ளது. ஏனெனில் கணேச லிங்கனின் இன்றைய இலக்கிய நோக்கு அகிலனை விட்டு எவ்வளவோ விலகி விட்டது.
நீண்ட பயணத்தின் கதைத் தலை வன் மரமேறிக் கள் வடிக்கும் செல்லத் துரை ஆவான். அவனின் நண்பண் புரட்சிச் சிந்தனை கொண்ட மாதவன். இவர்களைச் சார்ந்து வரும் பல்வகை இச்சமூக பாத்திரங்களோடு வள்ளி, கற்பகம், சரஸ்வதி, அன்னம் முதலிய பெண் பாத்திரங்கள் வருகின்றன. யாழ்ப் பாணத்தின் பகைப்புலமும் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் சிறுமைகள், சாதிக்கட்டுப் பாடுகள் முதலான துயரங்களையும் இந்த நாவலில் அற்புதமாகக் காட்டியுள்ளார். பாத்திரங்கள் கூடியவரை பேச்சு வழக் கினை தம் உரையாடல்களில் கையாளு கின்றன. பாவனைப் பொருட்களின் பெயர் கள் சரிவர ஆங்காங்கு வருகின்றன. ஆசிரியரின் சிறப்பான அவதானிப்பை இந்த நாவலில் காணமுடிகின்றது. சாதி யக் கொடுமைகள் இன்றும் உள்ள போதிலும் நீண்ட பயணத்தில் வருவது

போன்ற சம்பவங்கள் இன்று இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய நாவல்கள்
1960-1970 ஆகிய காலகட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி 50க்கு மேற் பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மூன்று நாவல்கள் சரித்திர நாவல்களாகவுள்ளன. கச்சாயில் இரத் தினம் எழுதிய 'வன்னியின் செல்வி, செங்கை ஆழியானின் நந்திக்கடல், அருள் செல்வநாயகம் எழுதிய “பாசக் குரல் என்பனவாம். கமகேசன் அந்தரத் தீவு என்றொரு சிறுவர் நாவலையும் க.நவசோதி ஓடிப்போனவன்' என்றொரு சிறுவர் நாவலையும் தந்துள்ளார். மார்டின் விக்கிரமசிங்கவின் கிராமப் பிறழ்வு என்ற
புகழ் பெற்ற நாவலை ம.மு.உவைஸ் என்பவர் தமிழில் தந்துள்ளார். பேராசிரியர் பாவையின் பரிசு என்றொரு நாவலை எழுதியுள்ளார். ஈழத்தின் முதலாவது நகைச் சுவை நாவலான செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள் இக்காலகட்டத்தில் தான் வெளிவந்தது. இவற்றை விட பா.பாலேஸ்வரியின் 'சுடர் விளக்கு (1966), நா.செல்லத்துரையின் முகைவெடித்த மொட்டு (1967), பெனடிக் பாலனின் சொந்தக் காரன் (1968) என்பனவும் 1960-1970களின் குறிப்பிடத் தக்க படைப்புகள்.
இனி 1970-1980 பத்தாண்டுகளில் பெருமை சேர்த்த நாவல் களைப்
LITTLj(3LITÍ.
- தொடரும்
ஆண்டுச் சந்தா 450/- தனிப்பிரதி 30/-
ge6dioTC6 LD6QJifr 200/-
- O
மல்லிகை ஆண்டுச் சந்தா
- -
(மலருக்கான தபாற் செலவு 65/= ரூபா) வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 5305014, Hatton national Bank Sea Street,Colombo - 11. 43- வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்.காசோலை அனுப்புபவர்கள் 100minic Jeeva எனக் குறிப்பிடவும்.காசுக்கட்டளை அனுப்புபவர்கள் 100minic Jeeva. K0tahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
Y
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 13

Page 9
வாயைத் திறந்ததும் கொட்டிவிடுகிறது வாழ்க்கை முழுவதுமாக என் தேசத்து மண்ணில். நாவுகளுக்கு மட்டும் சங்கிலி போட்டுப் பூட்டி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம், விடியலுக்கான அஸ்தமனம் நோக்கி. திரண்டெழுந்த கைகளில் எல்லாம் நிறைந்திருக்கிறது பணமும், முடையும்.
தூரத்து ஒளிப்பொட்டுகளை நம்பி புறப்பட்ட பயணம் கடலுக்குள் முடிகிறது. நிறைதலும் பின்னர் தளம்பலும் வழக்கமாகி அலுத்துப்போய்விட்டது. சிறுவர்கள் அருந்திய மதுபானப் போத்தல்களில் தெளிவாகத் தெரிகிறது என் சமுதாயத்தின் முகம்.
நன்கு படிப்பதாலும் நாங்கள் உணர்வுகளை இழந்து விடலாம் என்று எச்சரிக்கிறது எனது எருமைத்தேசம்.
நாவுகளின் சங்கிலி மாத்திரம் சரசரத்துக் கொள்கிறது - மண்
கால்களை மடக்கி கைகளால் முகத்தைப் பொத்தி மனசுக்குள் அமர்ந்து கொள்கிறோம், அவர்கள் பேசிமுடியும்வரை. எப்போதும் அவிழ்த்துவிடப்படலாம் சாய்வு நாற்காலியில் என்று ஊளையிடுகின்றன ஒய்வெடுத்தபடி கனவு காண்கிறேன். மன()ேநாய்கள். நாவுகளின் சங்கிலி அகற்றப்பட்டு
கைகளுக்கு விலங்கு மாட்டப்படுவது போல. பேசவேண்டும் உன்னைப்பற்றி ஆசையாய் இருக்கிறது எனது எருமைத் தேசமே...!
பருக்கைகளில் மழைத்துளி விழுதல் போல.
பந்துகள் சுவர்களில் எறியப்பட்டு மீண்டும் சிறுவர்களாலேயே பிடிக்கப்படுகின்றன.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 14
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் அந்தப் பத்திரிகை விற்பனையாகும். தேசியப் பத்திரிகை
வாழும் நினைவுகள் 05
GES) O @ களையே வாசித்துப் பழக்கப்பட்ட
GUITGADT மக்களுக்கு இது ஒரு வித்தியாசமான
பாணி. ஆம் 'இன்ஸான் வாரப் பத்திரிகை
O தான். முஸ்லிம் மக்களின் பிரச்சினை
@Iう@ களோடும், பேச்சுவழக்கோடும் நெருங்கிச்
செல்லும் தன்மை, இலக்கியத்தையும் அரவணைத்து நகரும் போக்கு.
மனிதன்
1965களில் என்று ஞாபகம்.
அப்போது நிலவிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தது. ஆனால் நேரடிக் கட்சிச் சார்பை முத்திரை குத்தி இயலாமலுமிருந்தது.
- திக்குவல்லை கமால்
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஏ.ஏ.லத்திஃப் என்றும், அவர் எமதுருக்கு வந்து சென்றாரென்றும் சொல்லக் கேட்டேன். அதன் பின்புதான் அவர் ஏன் வந்தாரென்று நான் தேடலாயினேன்.
திக்குவல்லையிலிருந்து அப்பத்திரிகையின் நோக்கையும் போக்கையும் புரிந்து கொண்டு பங்களிப்புச் செய்பவர்களை சந்திப்பதற்காக வந்தாராம். அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். எழுத்துத்துறையில் ஆரம்ப கட்டம். இலக்கியத் தொடர்புகள் இன்னும் ஏற்படாத காலம்.
அபூதாலிப் அப்துல் லத்தீஃப் ஒரு சிறந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட. சில பேர் அவரை மையத்து லதிஃப்' என்று சொல்வார்கள். ஏனென்றால் மரகதத்தில் அவர் மையத்து என்று சிறந்த சிறுகதையை எழுதினார். கவிதைகள், விவரணக் கட்டுரைகளும் எழுத வல்லவர். சிறந்த ஆங்கிலப் புலமையாளரும்
gril-.
பிற்காலத்தில் நண்பர்களாகிய பலர் எனக்கு முதன்முதலில் இன்ஸான் மூலமே அறிமுகமானார்கள். பண்ணாமத்துக் கவிராயர், எஸ்.எம்.ஏ.றகீம், கலைவாதி கலீல், எஸ்.எல்.எம். ஹனிபா, வை. அவற்மத், எம்.எல்.எம்.மன்சூர், மொயீன் ஸ்மீன், எம்.பீ.எம்.றிஸ்வான், சாரணாகையூம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 15

Page 10
பின்னர் "அல்வதான் என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் லத்தீஃப் நடாத்தினார். எனினும் இன்றுவரை அவரது ஆக்கத் தொகுப்பொன்று வெளி
வராமை பெரிய இடைவெளியே.
முஸ்லிம்களை அல்லது இஸ் லாத்தை இழிவுபடுத்தும் எழுத்துக்களை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். பெரும்பாலும் ஆங்கில அச்சு ஊடகங் களில் இத்தகைய கருத்துக்கள் வெளி வந்தால் அவர் சுடச்சுட பதில் கொடுப்பார்.
இவர் இலங்கை, சோவியத் யூனியன் தானிகராலய தகவல் பிரிவான நொவஸ்தி யில் கடமையாற்றினார். எழுபதுகளில் அவரது செல்வாக்கு மிகவும் மேலோங்கி யிருந்தது. கூட்டரசாங்கத்தில் அவர் சார்ந்த கட்சியை அங்கம் வகித்தமை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஒருமுறை அவரது கொஸ் வத்த இல்லத்திற்கு அவரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். ஒரு பட்டாளமே அங்கே இருந்தது கண்டு பிரமித்தேன். 'மண்ணி லிருந்து விண்ணுக்கு என்ற கட்டுரைத் தொடரை எழுதி பின்னர் புத்தகமாக்கிய டாக்டகர் க.இந்திரகுமாரும் அவர்களில் ஒருவர்.
நொவஸ்திக்கு அவரைச் சந்திக்க அடிக்கடி செல்வதுண்டு. ஒவ்வொரு முறை யும் தடவித் தேடி புத்தகக் கட்டொன்றை முன்னே வைத்த பின்பே பேச ஆரம்பிப் பார். மார்க்ஸிய தத்துவார்த்தங்கள், மற்றும் சோவியத் பல்துறை அபிவிருத்தி பற்றி யதாகவுமே அவையிருக்கும்.
மல்லிகை நவம்பர் 2008 率 16
ஒருமுறை சோவியத் யூனியனில் முஸ்லிம்கள்' என்ற வி.பொன்னம்பலத் தின் சஞ்சிகையில் வெளியிட வேண்டியிருந்
நேர்கான லொன்றை 69 (5
தது. இதற்காக சில புகைப்படங்களைப் பெறுவதற்கு அவரை நாடிய போது அவர் பல புகைப்பட புளொக்குகளையே தந்து விட்டார்.
இலங்கையில் லெனின் சர்வதேச விருது பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் முஸ் லிம் கலாசார அமைச்சராகவிருந்த போது நடைமுறைப்படுத்திய வாழ்த்துவோம்’ விருதுத் தொடரில் லத்தீஃபுக்கும் பட்டமளிக்கப்பட்டது. இவருக்கு அந்த விருது வழங்கியதும் அதை அவர் ஏற்றுக்கொண்டதும் ஒரு முரண்நிலை அதிசயம்.
வாழ்வோரை
முீ லங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ் என்ற அமைப்பை ஒரு கட்டத் தில் சிலர் உருவாக்கினர். எம்.எஸ். எம்.இக்பால், ஏ. இக்பால், எம்.எச்.எம். சம்ஸ் போன்றோர் அதன் முன்னணிச் செயற்பாட்டாளர்கள். இருந்தும் சங்கம் நீண்ட காலம் செயற்படவில்லை. அதைக் கலைத்து விட்டதாக அறிவிப்புச் செய்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூல் விமர் சனம்' என்ற புத்தகம் அதன் அடையாள மாக இன்று காணப்படுகிறது.
அவரது மரணம் புனித நோன்பு காலத்திலேயே நிகழ்ந்தது. அவரது விருப்பத்தின் பேரில் சொந்த ஊரான மாத்தளையில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

ஏதோவொரு உள்ளுணர்வு காரண மாக இறுதிக் காலகட்டத்தில் இன்ஸான் பைண்டுகள் இரண்டையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு, சம்ஸிடம் கையளித் தார். அதிலிருந்து பல விடயங்களைத் தொகுத்து, நூலாக்க வேண்டுமென்றும், இன்ஸான் பற்றி முழுமையான அறிமுகத் தொடரொன்றை எழுத வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருந்த சம்ஸம்ை இன்று எங்கள் மத்தியிலில்லை.
சம்ஸ் நூலகத்தில் இன்ஸான் பைண்டுகளை காணும்போது லத்தீஃப் - சம்ஸ் இருவரையும் ஒன்றாகக் காணும் உணர்வு எனக்கேற்படுகிறது.
வாழும் நினைவுகள் 06
தேசாபிமானி - பி.ராமநாதன்
சில ஆண்டுகளுக்கு முன்பு பி.ராம நாதன் காலமாகிவிட்டார் என்ற பத்திரி கைச் செய்தி என் கண்ணில் பட்டது. நீண்ட காலமாக அவர் எங்கே இருக்கிறாரென்ற தகவலே எனக்குத் தெரியாமலிருந்தது. வத்தளையில் என்றார்கள்; களுத்துறை யில் என்றார்கள்; மகளோடு மட்டக்களப் பில் என்றார்கள். அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறாத ஆசையாக மனதிலே நெடுநாள் கிடந்தது. கடைசியில் மரணச் செய்திதான் வந்து சேர்ந்தது. அதுவும் அவரது இறுதிக் கிரியைகளெல்லாம் நடந்து முடிந்த பின்னர் தான்.
யார் இந்த ராமநாதன்? என்ற கேள்வி எழலாம். இடதுசாரி இலக்கியவாதிகள்,
பத்திரிகையாளர் மத்தியில் இவர் நன்கு பிரபலம். சிறந்த பத்திரிகையாளராகச் செயற்பட்டவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வமான பத்திரி கையான தேசாபிமானயில் கடமை யாற்றும்போது நான் அவரை பொரளை கொட்டா ரோட்டிலுள்ள காரியாலயத்திற்குச் சென்று அடிக்கடி சந்திப்பதுண்டு. அதன் பிறகு சிலகாலம் புதுயுகம் வெளிவந்த போது அதிலும் கடமையாற்றியிருப்பா ரென்றே நம்புகிறேன். இப்பத்திரிகை களுக்கு நான் எழுதியதால் என் படைப் பாக்கம் மீது அவருக்கொரு கண்ணோட் டம் இருக்கவே செய்தது.
அலுவலகத்தில் மாத்திரமன்றி கொட ஹேன தொடர்மாடியில் வாழ்ந்தபோதும் கூட நண்பர்களோடு பலதடவை சென்றி ருக்கின்றேன். நிறைய இலக்கியத் தகவல் களை வைத்திருப்பார். அமைதியாக சுருட்டைச் சுவைத்துச் சுவைத்துச் சொல்
6.
இப்படிப்பட்ட மனிதன் ஏன் குறிப்பிட்ட காலம் எந்தத் தொடர்புமில்லாமல் ஒதுங்கி யிருந்து விட்டார் என்பதே எனக்குப் புரி யாத புதிராகவிருந்தது. சோவியத் யூனி யனின் வீழ்ச்சி, ஏகாதிபத்தியத்தின் விசுவ ரூபம், இலங்கையின் யுத்தச் சூழல், இலங்கை இடதுசாரிகளின் மந்தநிலை போன்ற விடயங்கள் அவரைப் பாதித்து ஒருவித விரக்தியுணர்வோடு ஒதுங்கி நின்றாரோ என்றெல்லாம் சிந்தித்தேன்.
இவரை நான் படித்துக் கொண்டிருக் கும்போதே முதன்முதலில் சந்தித்தேன். என் கவிதைகள் சிலவற்றோடு தர்கா நக ரில் ஏ.இக்பால் ஸேரை சந்திக்கச் சென்றி மல்லிகை நவம்பர் 2008 ஜ் 17

Page 11
ருந்தேன். அங்கே இரண்டு புதுமுகங் களைக் கண்டேன். ஒருவர் எம்.எஸ்.எம். இக்பால், அடுத்தவர் பி.ராமநாதன். அவர்க ளோடு கதைக்குமளவுக்கு எனக்கு இலக் கிய ஞானம் இருக்கவில்லை. இருந்தும் ஒரு ஞாபகார்த்தத்திற்காக என்வசமிருந்த குறிப்பேட்டை அவருக்கு நீட்டினேன். அதில் இல்லாமையையும் கல்லாமையை யும் இல்லாதொழிப்போம்' என்று எழுதித் தந்தார். அது இன்றுவரை என் நெஞ்சில் எழுதியது போல் நினைவிலிருந்து வருவது மாத்திரமன்றி, ஒரு தாரக மந்திரமாய் என் இலக்கியப் பாதையை நெறிப்படுத்தியது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புடையவராகவும், முற்போக்குச் சிந்தனைக்காக உழைப்பவராகவும் அவர்
காணப்பட்டார்.
புதுமைப் பித்தனையும், சிதம்பர ரகு நாதனையும் பற்றி நிறையவே கதைப்பார். நம்மவரான சில்லையூர்ச் செல்வராசன் மீது தனியான பற்றுதல் வைத்திருந்தார். ஏ. ஏ. லத்தீஃபை மிகவும் மதித்தார். அவர் நடாத்திய இன்ஸான் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்.
ஒருமுறை குணசேன விதானவின் அழைப்பின் பேரில் பொரளையில் ஒர் இலக் கியக் கூட்டமொன்றுக்குச் சென்றிருந்தேன். பி.ராமநாதனும் அங்கு வந்திருந்தார்.
கூட்டம் முடிந்து வருகையில், 'கமால் நீர் இன்னும் ஐந்து வருடத்திற்கு கல் யாணம் கட்டக்கூடாது" என்று சடுதியாகச்
சொன்னார்.
நான் வியந்து போனேன். ஒன்றும் பேசாமல் சிரித்தேன்.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 18
எழுத்தின் மீது நான் வைத்திருக்கும் ஈடுபாடும் உழைப்பும் திருமணத்தின் மூலம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொன்னாரா? அல்லது படைப்பாக்கத்துறை யில் நான் பக்குவமடைய இன்னும் ஐந் தாண்டாவது தேவையென்பதால் சொன் னாரா? என்பது பற்றி எனக்கு விளங்க வில்லை.
இது 1975 அளவில் நடந்ததாக ஞாப கம். உண்மையில் அவர் சொன்னதற்காக என்றில்லாவிட்டாலும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் எனக்குத் திருமணம் நடந்தது.
அறுபதுகளின் பின்கூற்றிலேயே நான் இலக்கியப் பிரவேசம் செய்தேன். சமகாலத் தில் ஆஹா ஒஹோவென்று எழுதப் புகுந்த பலர் இன்று காணாமலேயே போய்விட்டார் கள். இன்னும் சிலர் எதை எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோமென்று தெரியாமல் எதையெதையோ எழுதிப் பிரபல எழுத் தாளர்களாக, பொன்னாடைக்கும், பூ மாலைக்கும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் கூலி எழுத்தாளர்களாக சொல்வதெழுதல்" செய்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படாமல் என்னை நெறிப்படுத்தியவர்கள் பலர். நின்று நிலைத்துச் சிந்திக்கும் போது, அந்த வழிகாட்டலும், அங்கீகரிப்பும் பி.ராமநாதன் மூலமாகவும் எனக்குக் கிட்டியிருப்பதை யிட்டு நான் நிறையவே பெருமிதமடை கிறேன்.
நல்லவர்கள் ஏற்றி வைக்கும் தீபங் கள் என்றும் பிரகாசித்துக் கொண்டேயிருக் கும், அவர்கள் இருந்தாலும் இல்லா விட்டாலும்.
- தொடரும்

மீண்டும் சந்தித்தேன்.
- கெக்கிறாவ ஸஹானா
ஜெயகாந்தனை மீண்டும் சந்தித்தேன்.
26.08.2008 அன்று காலையில் தொலைபேசியில் பேசி அனுமதி வாங்கியிருந்தேன். மாலை ஆறு மணிக்கு வருவதாக கூறியிருந்த போதும், போக்குவரத்து நெரிசல் காரணமாக, கலைஞர் கருணாநிதி விதி யில் இருக்கும் அவரது வீட்டைக் கண்டுபிடித்து சேர்வதற்குள் ஏழரை மணியாகிவிட்டிருந்தது. வீட்டு முன் வாசலில் அவரது மனைவியுடன் அறி முகப்படுத்திக் கொண்டோம். "ஒ. ஸஹானாவா. வாங்க. வாங்க." என்று வரவேற்றவர், தொடர்ந்து "he is Waiting from Six" என்று கூறி வெளிமாடிப் படிகளைச் சுட்டிக்காட்டினார்.
படிகளில் ஏறி, மாடியில் ஒலையால் வேயப்பட்ட குடிசையை அடைந்தோம். பிரகாசமான விளக்கொளியில் மேஜையருகே அமர்ந்திருந்தார், ஜெயகாந்தன். கைகூப்பி வரவேற்றார். தளர்ச்சியும், முதுமையும் துலாம்பரமாகத் தெரிந்தபோதிலும், அதையும் மிஞ்சிய மகிழ்ச்சியும் புன்முறுவலும் எனக்குத் தெம்பு ஊட்டிற்று.
"உங்களது மடத்திற்கு வந்ததில்லை. உங்கள் ஆசிரமத்திற்குத்தான் என்னால் வர முடிந்திருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கூறினேன். கேஜே அகலமாகப் புன்னகைத்தார். "சார், இவள்தான் உங்களது பிறந்த தினத்திற்கு அடுத்த நாள் பிறந்த எனது மகள்' என்று எனது மூன்று வயது கடைக்குட்டியை அறிமுகப் படுத்தினேன். குழந்தையை மடியில் இருத்திக் கொண்டார். அவ்வாறே புகைப் படத்திற்கும் போஸ் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவள் சிணுங்கிக் கீழே இறங்க, "அம்மாதான் கிட்ட இருக்காங்களே..? ஏன் அழறே?" என்று அன்போடு கேட்டார்.
நான் ஆகஸ்ட் மாத 'மல்லிகை"யில் வெளிவந்த எனது 'எங்கள் ஜெயகாந்தன் Sir" கட்டுரையைக் கொடுத்தேன். முதலிரண்டு, மூன்று பந்திகளைக் கவனமாகப் படித்தார். பிறகு மூடிவிட்டு நிமிர்ந்தார். அத்துடன் விதாலி பூர்ணிகா படத்தையும் மல்லிகை நவம்பர் 2008 ஜ் 19

Page 12
(computer print out) gairugiliustosé கொடுத்தேன். சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டார்.
சமீபத்தில் நான் படித்த அவரது நூலாகிய 'சிந்தையில் ஆயிரம் (1987) பற்றி பேச்சைத் தொடங்கினேன். அந் நூலின் இறுதிப் பகுதியில் கேஜே பின் வருமாறு கூறினார் 'இப்போதும் இந்தியாவிலிருந்து நல்விடை பெற்றுச் செல்லும் இலங்கை நண்பர்கள் என்னை அழைக்கின்றார்கள். இப்போதும் நான் சொல்கிறேன். எனது படைப்புகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் ஒன்றே நான் இலங்கை வருவதற்கான பாலமாக
அமையும்!'
இதைப் படித்த பின்பு உடனடியாக இதுபற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, கவிஞர் மேமன்கவி, இளைய தலைமுறை எழுத்தாளர் ரஸ்மின் ஆகியோருடன் ஏலவே பேசி யிருந்தேன். கேஜே அனுமதி கிடைத்த பிற்பாடு மொழிபெயர்ப்பு வேலை களைத் தொடங்கலாம் என்று ஜீவா கூறியிருந்தார். மொழிபெயர்ப்புக்கு உரிய நூல் பற்றியும் யோசித்து வைத் திருந்தேன். 'தேவன் வருவாரா?”
நான் கேட்டதும் உடனே சம்மதம் தெரிவித்த கேஜே, எந்த நூலை வெளி யிடுவது என்று சிறிது யோசனை செய் தார். "சுதந்திரச் சிந்தனை', 'சிந்தையில் ஆயிரம்’, ‘ஓர் இலக்கியவாதியின் அர சியல் அனுபவங்கள் ஆகிய நூல்களில் இந்தியா பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெறுவதால் அவை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு அதிகம்
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 20
பொருந்தா எனக் கூறி, "தேவன் வரு வாரா மிகப் பொருத்தம் சார். அதில் நீங்கள் கூறியுள்ள சிறுவர் பிரச்சினை கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன’ என்றேன். “அதையே போடலாம்' என்று ஒப்புக்கொண்டார். அதுமட்டு மல்ல, தனது நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு வரும்போது அதன் வெளி யீட்டு விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் கூறினார். தள்ளாத வயதிலும் அவர் அப்படிக் கூறும்போது, எதிர்காலம் பற்றி அவர் கொண்டிருக் கும் நம்பிக்கை தெள்ளென ஒளிர் வதைக் கண்டேன்.
“கி.பி. 2000இல் நாடுகளிடையே சுரண்டல் ஒழிந்து போகும் என்று கூறி யிருக்கிறீர்கள். இப்போது அதுபற்றி உங்கள் கருத்தென்ன?’ என்று கேட் வெற்றி யடைய வேண்டும்" என்று சுருக்கமான விடை வந்தது. ஒளிமயமான எதிர் காலத்தை விசுவாசிக்கின்ற ஒரு Optimist ஆக அவர் மீண்டும் எனக்குத் தரிசனமானார்.
டேன். 'வெற்றியடையும்,
"குழந்தை இல்லாமல் குடும்பம் நடத்துகிற வாழ்க்கையைத் சொல்லித் தருகின்ற கயமைக்கு ஆட்படாமல் இளைய தலைமுறையினர் வாழத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி யிருக்கிறீர்கள். இதுபற்றி "கரு" என்ற தலைப்பில் ஒரு கதையும் எழுதியிருக் கிறீர்கள். எனக்கு மிக விருப்பமான கருத்து இது. இது எப்படி உங்களுக்குள் வந்தது?" என்று வினவினேன்.

“நானே யோசிச்சி சொன்னதுதான். குழந்தை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?" என்று திருப்பிக் கேட்டார்.
"சினிமாவுல கீழ்த்தரம் இல்லாத நகைச்சுவை வழங்கியவர் என்று என். எஸ்.கிருஷ்ணன் பற்றிக் கூறியிருக் கிறீர்கள். இப்போதைய சினிமா நகைச் சுவை பற்றி என்ன சொல்லலாம்?" இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறு வார் என்பதை ஏறத்தாழ ஊகித்தபடியே வினவுகிறேன்.
"நான் இப்போது சினிமா பாக்குற தில்ல. அந்தக் காலத்துல அவங்க அப் படி செஞ்சி காட்டினாங்க. அப்பவும் அதற்கு எதிர்மாறான விஷயங்கள் இருந்தது. எல்லாக் காலத்துலயும் அப்படி ஒருபகுதி இருந்துகிட்டுதான் இருக்கும்" என்றார்.
"அந்தக் காலத்திலேயே அப்ப டின்னா இப்போ எப்படி? என்று கூறிச் சிரித்த நான், தொடர்ந்து கேட்டேன்.
"அந்தக் காலத்துல நீங்க செஞ்ச சாதனை மாதிரி இந்தக் காலத்துல ஒருத்தர் செய்ய முடியும்னு நம்பறிங் களா சார்? இப்போ தொழினுட்பம் ரொம்பவும் வளந்திருக்கு. நிறையப் பேர் எழுதுறாங்க. இதையெல்லாம் தாண்டி...'
சிறிது யோசித்துவிட்டு சொல் கிறார்.
"ஆமா. என்னைப் படித்தவர்கள், என்னைப் பயின்றவர்கள். என்னைப் போலவே எழுதணும்னு ஆசைப்பட்டு
எழுதுறவங்க இருக்காங்க. என்னை
மிஞ்சியும் எழுதுறாங்க. சாதனை செஞ் சிருக்காங்க."
இவ்வாறு அவர் கூறும்போது அதில் எந்தச் செயற்கைத்தனமும் கலக் காத அடக்கத்தை இயல்பாகவே உணர முடிகிறது. ஒருகாலத்தில் “தமிழ்நாட் டில் ஒரே ஒரு ஜெயகாந்தன்தான் உண்டு" என்று முழங்கியவர், இன்று இப்படிச் சொல்வதும் ஒருவகை பரி ணாம வளர்ச்சிதான் என்று எனக்குப்
பட்டது.
அவரது ஆசிரமத்தை சுற்றுமுற்றும் பார்த்தேன். பல்வேறு புகைப்படங்கள், நடுவே காமராஜர் படம்.
“உங்களுடன் அரசியல் பேச எனக் குத் தகுதியில்லை. தெரிந்து கொள்வதற் காகக் கேட்கிறேன்" என்ற பீடிகை யுடன் தொடங்குகிறேன்.
A.
“காமராஜர் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்"
உடனே சொல்கிறார்.
"அவர் ஒரு சிறந்த மனிதர்; அப் பழுக்கற்ற தலைவர்; உயர்ந்த அரசியல் வாதி. அவரைப் போன்ற தூய்மையான மனிதர்களை இப்போ காண முடியாது. அதுவும் அரசியல் அறவே கிடையாது. அப்படி ஒரு சிலர் இருந்தாலும், அவங் களுக்கு அரசியல் வரவில்லை."
"மூதறிஞர் ராஜாஜி பற்றி.?"
'அவரும் நிறைந்த சேவை உள்ளம் கொண்டவர். அவங்கள்ளாம் மக்களுக்காக அதிகம் பாடுபட்டிருக் காங்க, '
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 21

Page 13
“இந்தியா - பாகிஸ்தான் பிரி வினையை ஆதரிச்சவர்னு சொல்லி முன்பு அவரை எதிர்த்துப் பேசி யிருக்கீங்க.." திரும்பி வினவுகிறேன். எந்தத் தயக்கமும் இன்றி அவர் உடனடி யாக விடை சொல்ல, எனது விழிகள் ஆச்சரியத்தால் விரிகின்றன. எப்போதும் அவருடன் கூடவே வருகின்ற நேரிய நோக்கு இப்போதும் அவருடன் ஒட்டிக் கொள்வதைக் காண எனக்கு வியப்பு மேலிடுகின்றது.
"ஆமா, அப்போ இருந்த குழப்ப நிலையில அப்படி அவங்க நடக்கும் படியா ஆயிடுச்சி. இந்தியாவும், பாகிஸ் தானும் பிரிஞ்சாதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்கிற நிலை இருந் தப்போ, இரண்டும் பிரிய வேண்டி வந் தது. ஆனா, பிரிஞ்சி போன பாகிஸ் தானிலயும் அமைதி நிலவல்ல. முஹம்ம தலி ஜின்னா இறந்து போனாரு. வியாகாத் அலிகான் சுடப்பட்டாரு..."
"முஹம்மதலி ஜின்னாகூட பாகிஸ் தான் பிரிவினைக்கு உண்மையான காரணியா இருக்கல்ல. அவரு அதற் குத் தூண்டப்பட்டாருன்னு நா புதுசா படிச்சேன்." என்று நான் சொல்ல, “பா.ராகவன்னு ஒரு ரைட்டர் இது சம்பந்தமா ஆழமாவும், விபரமாவும் குமுதத்துல எழுதியிருக்காரு..” என்று எனது சாச்சா பாத்திமா மைந்தன்
கூறினார்.
மீண்டும் வினா தொடுக்கிறேன். "இன்றைய இந்தியா..! அமெரிக்
காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்..!! இதுபற்றி உங்கள் கருத்தென்ன?”
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 22
“ஒரு அரசாங்கம் எப்பவும் நல்ல தையே செய்யும். நாட்டு முன்னேற்றத் துக்காக அது போடுற திட்டங்கள நாம எதிர்க்கக் கூடாது. பொறுப்பில்லாம கருத்து சொல்லக் கூடாது. அதுவும் நான் சொல்லக் கூடாது."
"சொன்னா அதையே பெரிய topic ஆக்கி பத்திரிகைகள்ள போட்டுரு வாங்க. இல்லையா சார்?’ என்று சிரித் துக் கொண்டே கேட்கிறேன். கேஜே
புன்னகைக்கிறார்.
"தி.மு.க. - அ.தி.மு.க. என்ன வேறுபாடு-" குமுதம் அரசு பதில்கள்' ரீதியில் இவ்வாறு கேட்டுவிட்டு, அவ் வாறு நறுக்கென்று கேட்பதன் நாகரிக மின்மையை உடனே உணர்ந்து, விபர மாகக் கேட்கிறேன்
"தி.மு.க.வுடன் விரும்பிச் சேர்ந்து கொள்கிறீர்கள். அ.தி.மு.க.வுடன் என்ன வெறுப்பு?
"தி.மு.க.வுக்கு ஒரு கொள்கை உண்டு. அ.தி.மு.க.வுக்கு கிடையாது. தி.மு.க.வை எதிர்க்கிறதைத் தவிர...'
தொடர்ந்து பேசியதால் கேஜே சிறிது ஆயாசதுமுற்றவர் போலக் காணப்பட்டார். எனவே, வேறு திசை யில் தொடர்ந்தேன்.
"நீங்களும் காணாமப் போயிருக் கீங்க. நானும் காணாமப் போயிருக் கேன். உங்களுக்கும் குறத்திகளைப் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்'
இடையில் பாத்திமா மைந்தன் சொன்னார்,

"ஒரு பொண்ணப்பத்தி நீளமா எழுதிட்டு வந்து, அவ சம்பந்தப்பட்ட கடந்தகால அனுபவங்களை விபரிச்சி, கடைசியில அடி நினைவிருக்கிறதான்னு கேட்டு முடிச்சிருக்கீங்க. ரொம்ப அருமை சார். எதிலயோ சமீபத்துல படிச்சேன்."
நான் குறுக்கிட்டு கேட்டேன்.
"அப்படின்னா..?"
ஜெயகாந்தன், பாத்திமா மைந்தன் இருவருமே சேர்ந்து விளக்கினார்கள்.
“உரிமையோட பேசும்போது அடி யேன்னு சொல்லுவாங்க இல்லையா? அப்படி உரிமையோட விளிச்சதுதான் அது." இவ்வாறு ஜேகே கூறும்போது, எவ்வளவு பெரிய மனிதர். தனக்குச் சமதையாக என்னைக் கருதி விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற பிரமிப்பு என்னுள் ஏற்பட்டது.
அவருக்கு ஞாபகமிருக்குமோ என்ற சந்தேகத்துடன், அவர் குறத்தியின் பின்னால் சென்ற கதை, ஒருமணி நேரம் கிணற்றுக்குள் தவித்த கதை பற்றியெல்லாம் எனது சிற்றன்னையிடம் விலாவரியாகக் கூறினேன். இடை யிடையே மலர்ந்த புன்னகையுடன் கேஜேயும் சேர்ந்து கொண்டார்.
நாம் பேசிக்கொண்டிருப்பதை தரையில் அமர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர்கள் மீது எனது பார்வை செல்ல, "இவங்கள் ளாம் சாருடைய உதவியாளர்களாக அல்லது ரசிகர்களாக இருக்கலாம். இவங்களையும் படம் எடுத்திடுங்க?"
எனது மாமாவிடம் சொன்னேன். உடனே கேஜே, "இல்ல உதவியாளர்கள் தான்." என்று திருத்திச் சொன்னார்.
"கீழ இறங்கி போறதும். வாறதும் உங்களுக்கு லேசா இருக்கா?"
"ஆம்" என்று தலையசைத்தார்.
அவரைப் பிரிய மனமின்றி மனம் நெகிழ்ந்து விடைபெற்று வரும்போது, எனது குழந்தையின் கையைப் பற்றி 'குதா ஹாஃபிஸ்" (இறைவன் பாதுகாப் பானாக! என்பதைக் குறிக்கும் (உருது வாசகம்) கூறினார்.
கீழே இறங்கி அவரது மனைவி யிடம் வந்தனம் சொல்லிக் கொண் டோம். எம்முடனே விதிவரை வந்த ஜெயகாந்தனின் உதவியாளர் எதிர் வீட்டைச் சுட்டிக்காட்டி "இது கேஜே சாருடைய பொண்ணோட வீடு'
என்றார்.
"யார் காதம்பரியா?"
“இல்லை, தீபலசுடிமி"
இந்த வயோதிப காலத்தில் கேஜே சாருக்குத் துணையாக எதிர் வீட்டி லேயே அவரது மகள் குடியிருப்பது ஆறுதலாக இருந்தது. நேரே சென்று தீபலசுஷ்மியைச் சந்திக்க இஷ்டப்பட் டாலும், நேரம் இடம் தராததால், மன தில் ஞாபகக் குமிழிகள் நிறைந்து மோத காரில் ஏறினேன்.
அறைக்குத் திரும்பியதும், கே ஜே., அவரது முதுமைத் தோற்றம். அவரது வீட்டின் கோலம் எல்லாம் மனதை அலைக்கழிக்க, உடனே மல்லிகை நவம்பர் 2008 ஜ் 23

Page 14
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ". உங்களையும் உங்களது வீட்டின் வறுமைக் கோலத்தையும் கண்டபோது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. ஊர் திரும்பியதும் உங்களுடன் பேசு வேன்." என்று எழுதி முடித்து தபா லிடச் செய்தேன்.
சில தினங்களுக்குப் பிறகு, 'தினத் தந்தி செய்தி ஆசிரியராக நாற்பது வருடங்கள் கடமையாற்றிய நாதன் (சண்முகநாதன்) அவர்களை அவரது புரசைவாக்கம் இல்லத்தில் சந்தித்தோம். தற்போது 'தினத்தந்தி நிர்வாக இயக்கு னரின் ஆலோசகராக இருக்கும் நாதன் தற்போது அப்பத்திரிகையில் ‘வரலாற் றுச் சுவடுகள்’ எனும் பகுதியை எழுதி
வருவதுடன், சினிமா வரலாற்று ஆவணம் ஒன்றையும் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.
இவரது 'ஒரு தமிழனின் பார்வை யில் இருபதாம் நூற்றாண்டு (பூம்புகார் பதிப்பகம்) எனும் நூல் குறிப்பிடத் தக்கது. இந்நூலைப் பற்றி இந்தியாவின் Gs gu is TassypirSu THE HINDU' மதிப்புரை செய்யும் போது, "What distinguishes this book is the balanced and unbiased presentation covering events and personalities and an eye for scoops a sign of the matured journalist'
என்று கூறியுள்ளது.
"இது நல்ல முயற்சி சார். இதுல Luisd: J-Till Gigsfua). the hundred' GTGăgou Michel H. Hart 6TQpSGIT LIš53 giš தின் தமிழாக்கத்தை சமீபத்தில் படிச் சேன். அதுல இல்லாத விபரங்கள்கூட
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 24
இதுல இருப்பது ரொம்ப நல்ல விஷயம். உதாரணமாக சொன்னா, பிரான்ஸிய வீராங்கனை ஜோன் ஒஃப் ஆர்க் பற்றியோ, புரட்சித் தலைவர் சேகுவரா பற்றியோ அதுல ஏதும் தகவல் இல்ல. கொர்பச்சேவ் பற்றி அவர் கூறியுள்ள விடயங்கள் கூட அமெரிக்க நலன் சார்பானவை" என்று நான் கூறியதை உன்னிப்பாகக் கேட்டுக்
கொண்டிருந்தார்.
'நாமெல்லாம் ஜெயகாந்தன் சாரைக் கண்டா எப்படி பயப்படு றோம்.! இவங்க எந்தப் பயமும் இல்லாம அவரோட சரி சமமா உட் அவரும் பொம்ப இயல்பா விடை சொல் (OTCU5. . . என்னைப் பற்றி விபரிக்க,
கார்ந்து கேள்வி கேட்க,
' என்று பாத்திமா மைந்தன் “ஜெய காந்தன் சார் எப்படியிருக்கார் இப்போ..?' என்று கரிசனையுடன்
விசாரித்தார்.
லசுடிமி கணேஷ் எம்.ஏ., எம்.எட். 6Tairl (DL6ir gapgooris, "World History - from Stone age to computer age என்ற ஆங்கில மொழி நூலையும், (Books india பதிப்பகம், முதற் பதிப்பு 2007) எழுதி வெளியிட்டுள்ளார். இந்திய விலை ரூபா 500 பெறுமதி யுள்ள இந்நூலை "பெருமதிப்புக்குரிய சகோதரி திருமதி. கெகிறாவ ஸஹானா அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்" என்று எழுதி கையெழுத்திட்டுத் தந்தார். தனது தமிழ் நூலுக்குக் கிடைத்த வரவேற்பே இந்நூலை எழுதுவதற்குரிய பலத்தைத் தந்தது என்று குறிப்பிடும் நாதன், அதன் (pairgrgoguía, you might have read

history books written by many. But, this one is special, since i have depicted a bird's eye view through an Indian perspective' என்று எழுதியுள்ளார். இதில் இலக்கியம், அரசியல், தத்துவம், கலாசாரம், சமயம் மற்றும் பல விட யங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
பத்து வருடங்களுக்கு முன்பு எழுத் தாளர் மாலதி பாலனுடன் இணைந்து 'மனோரஞ்சிதம்' எனும் வார இதழை அவர் ஆரம்பித்து நடாத்திக் கொண்டி ருந்தார். "மனோரஞ்சிதம் என்ன ஆச்சு சார்?' என்று கேட்டேன்.
“ரெண்டு, மூணு வருசம் செஞ் பின்னாடி loSS ஆயி நின்னு
விளம்பரங்கள் கொஞ்சம்
சேம்,
போச்சு. கெடச்சிருந்தா கொண்டு போயிருக்
கலாம்." என்றார்.
பத்திரிகை ஆசிரியராகவும், எழுத் தாளராகவும் பணியாற்றுகின்ற நாதன், பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளார். தான் அண்மையில் வெளியிட்டுள்ள 'உலக வரலாறு’ எனும் DVDயை இயக் கிக் காண்பித்தார். “இந்தத் தகவல்களை யெல்லாம் எப்படிப் பெற்றீர்கள்?" என்று கேட்டேன். "இதை உருவாக்கு வதற்கே எனக்கு ஐந்து வருடங்கள் சென்றன’ என்றார் புன்முறுவலுடன்.
மிக அன்பாகவும், மென்மையாக வும் பழகி எனது குழந்தையின் இதயத்தையும் கவர்ந்து கொண்ட, நவீன தொழினுட்பத்துடனும் தன்னை வளர்த்
எழுபத்திரண்டு வயது இளைஞராகிய நாதன், நான் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது எப்படி இருந்தாரோ, அதுபோலவே இன்றும் இருக்கிறார். மாஷா அல்லாஹ்!
துக் கொண்டுள்ள,
பி.கு:
இதை எழுதிக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் ஜேகேயுடன் தொலைபேசி யில் தொடர்பு 'ஊருக்குப் போய்ச் சேந்துட்டீங்
கொள்கிறேன்.
களா..?” என்று அன்புடன் விசாரித்தவர் பின்பு உற்சாகமாகக் கூறுகிறார்,
“உங்க கடிதம் கிடைச்சுது. நான் அப்படி வாழ்றதுக்குக் காரணம் வறுமை யில்ல. அது எளிமையின் அடையாளம், எழுத்தாளர்களிலேயே செல்வந்தனா இருப்பவன் நான்தான். காந்தி கோவ ணத்துடன் நிக்கிறாருன்னா, அதுக்குக் காரணம் வறுமையில்ல. எளிமைதான்."
“இப்படி நீங்க சொல்றதக் கேக்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார். பெரிய செல்வம், மல்லிகைக் கட்டுரை
மனதுதான் இல்லையா?. வாசிச்சிட்டீங்களா சார்.. ?
யிருந்ததா?”
நல்லா
"நல்லாயிருந்தது. மனசுல பட்டத எழுதினா நல்லாவே இருக்கும்."
"ஆமா சார் எந்த ஒளிவு மறைவும் இல்லாம எழுதியிருக்கிறேன். அன்றைய எங்கள் சந்திப்புப் பற்றியும் எழுதவா gFITsj2'
“நல்ல சந்திப்பு. எழுதுங்க” என்று அனுமதி தருகிறார்.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 25

Page 15
அங்கு பிரசன்னமாயிருந்தாள்.
இது இன்று நேற்று ஏற்பட்ட பணி யல்ல. யாழ்ப்பாணத்தில் இருந்தபோதே, யுத்தம் தொடங்கிய நாளிலிருந்து அவள் இதைத்தான் செய்து வந்திருக்கிறாள். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் படித்த காலத்திலேயே அவளுக்கு இப்படியான சமூக சேவைகளே மேலானதாகத் தோன் றும். அவளின் அப்பாகூட, அந்தக் காலத் தில் ஒரு தீவிர சமூகத் தொண்டர்தான். அவர் வழியில், அவளுக்கும் இப்படியான பற்றற்ற தொண்டு வாழ்க்கையே மேலான ஒரு தெய்வப் பணியாகப் பட்டது. அந்தள வுக்கு மக்களை நேசிப்பவள், அவள்.
சண்டை மூண்டு, படிப்பும் இடையிலே தடைப்பட்டு போன பின், அவளுக்குத் தன்னை முழுவதுமே அர்ப்பணித்து, மக்கள் சேவை செய்ய அதுவே வாய்ப்பான ஒரு பொற்காலமானது. அவள் இன்னும் கல்யாணமே செய்துகொள்ளவில்லை. சரா மல்லிகை நவம்பர் 2008 ஜ் 26
ன்ெனியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பித் தங்களைக் காப்பாற்றிக் கொள்வ
தற்காக,
வவுனியாவின் தற்காலிக
முகாம்களிலும், முகாமில்லாத தெருவோர மர நிழல்களிலும் ஒன்று திரண்டு வந்து குழுமியிருக்கிற அப்பாவி அகதி மனிதர்களைப் பார்ப்பதற்காக வேணி அங்கு வந்திருந்தாள். அவர்களை வேடிக்கைப் பார்த்துக் குசலம் விசாரித்து விட்டுப் போகவல்ல; அதிலும் மேலான, மிக உத்தமமான, மனிதநேயமென்கிற சமூகப்பணியின் நிமித்தமே, அவள் தன் உயிரையும் துச்சமெனக் கருதி அவர்களைக் கண்டு குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் துயர் துடைக்கும் புண்ணிய காரியம் கருதியே அவள் தன் ஏனைய தொண்டர்களுடன்
சரி பெண்களைப் போலவே, வெறும் உடம்பு வாழ்க்கை ஒன்றையே கருத்தில் கொண்டு சுயநலமாக வாழ்ந்து மடிவதை அவள் என்றைக்குமே விரும்பியதில்லை.
வெளிநாட்டுத் தொண்டு நிறுவன மொன்றில்தான், இப்போது அவள் ஒரு பணியாளராக இருக்கிறாள். அவர்கள் உண்மையில், மக்கள் தொண்டு ஆற்றத் தான் இங்கு வந்தார்களோ? அல்லது வேறு உள்நோக்கம் கூட இருக்கலாம். அவர் கள். அந்த வெள்ளைக்கார மேல்மக்கள் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்.
இது என்னுடைய நாடு, என் மக்கள், என்னுடைய உடன்பிறப்புகள், அல்லாதவர் கள், இவர்களெல்லாம் சோறில்லாமல், வீடில்லாமல், வாடி அழியும்போது, எனக்குப் புறம்பான ஒரு வாழ்க்கை ஏன்? பட்டிலும் பொன்னிலும் மிதந்து கப்பல் விடத்தான் மனம் வருமா?
 
 
 
 
 
 
 
 
 
 

தான் ஒரு பெண் என்பதே இப்போது அவளுக்கு ஞாபகமில்லை. வருந்தி அழு கிறவர்களின் சுவடு காண்கிற போது, உள் ளுக்குள் தானே கருகி அழிந்து கொண்டி ருப்பதாகவே அவள் உணர்வாள். இதை யெல்லாம் மறந்துவிட்டு, வாழ நினைப்பதே பாவம் என்றுதான் அவள் யோசிப்பாள். வன்னியிலிருந்து வெளியேறச் சொல்லி, அரசு கட்டளையிட்ட போது, அவளுக்குச் சிறிது மனவருத்தம்தான். அதனாலென்ன, நாடு முழுவதுமே தீப்பற்றி எரிகையில், எங்கு போய் யாருக்குச் சேவை செய்தா லென்ன? புண்பட்ட காயங்களுக்கு மருந் திட வேண்டும். அழுகிற கண்ணிரைத் துடைத்தெறிய வேண்டும். அது யாராயிருந் தாலென்ன?
இது என்னுடைய நாடு. என் மக்கள். எங்கோ, எவரோ பெருங்குரலில் ஒப்பாரி வைத்து அழும் குரல் கேட்டது. அவள் அக் குரலை இனம் கண்டறிந்து, நீண்ட தூரத் திற்கு வந்து சேர்ந்திருந்தாள். கூடவே அவ ளுக்குத் துணையாக கண்ணனும் வந்தி ருந்தான். அவன் அவளுக்கொரு நல்ல சகோதரன் மாதிரி, யாழ்ப்பாணத்துப் பாவப் பட்ட மண்ணிலிருந்து தோன்றிய, வாட்ட சாட்டமான ஒரு தமிழ் இளைஞன். உண்மையான மக்கள் சேவகன். அவர் களிருவரும் வந்து பார்க்கும்போது, மரநிழ லிலும் ஒரே அகதிக் கூட்டமாக இருந்தது.
மரத்தின் அகன்ற வேர் மீது, தலை கவிழ்த்துக் குப்புறப்படுத்தபடி, ஓர் இளம் பெண் கதறி அழுது கொண்டிருந்தாள். அவள் ஏன் அழுகிறாள்? இடம் பறி போன தற்கா? அதற்காகவா? என்னவென்று கேட்பது? எப்படிக் கேட்பது? அவள்தான் முகம் நிமிர்ந்து பார்க்கிறாளில்லையே.
அவர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்து வந்த உலர் உணவுப் பார்சல் வேறு கை யில் கணக்கிறதே. எனினும் சூழ்நிலை இறுக்கத்தால், கொடுக்க முடியாத நிலை. இந்த இரண்டும் கெட்டான் நிலையில், முத லில் அவள் அழுகையை நிறுத்த வேண் டும். ஏன் அழுகிறாளென்பது அறிந்தால் தான், இதற்குப் பரிகாரமாக, ஏதாவது 6)&մյա (լpւջuւյլb.
வேணி அவளுக்கருகில், கீழே குந்தி யிருந்து அவளின் தோள் மீது, கை போட் டுப் பரிவுடன் தடவியவாறே, துயரம் மேலி டக் கேட்டாள்.
"ஏன் அழுகிறியளக்கா? என்ன நடந் தது?" அவள் பதில் சொல்லுமுன், அருகி லிருந்த ஒரு வயதான பெண் கூறினாள்,
"ஷெல் விழுந்து, இவளின்ரை கைக் குழந்தை மோசம் போட்டுது."
வேணி அதைக் கேட்டு அப்படியே சமைந்து போனவள், தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்தபோது, அவளையறி யாமலே கண்களில் மடை திறந்த வெள்ளம் போல், கண்ணிர் பெருக்கெடுத்து ஒடு வதைக் கண்ட உணர்வில் கண்ணன், பதறிப்போய் கேட்டான்.
"வேணி இஞ்சை வந்து இதையெல் லாம் பார்த்தால் அழுகை வரத்தான் செய்யும். அதற்காக இப்படியா? இப்படி எத் தனை சுடுகாடுகளைப் பார்த்திட்டம். மறந் திட்டியே?’
"ஒன்றையும் நான் மறக்கேலை. ஏன் இப்படியெல்லாம் நடக்குது கண்ணன்?"
"இதை எத்தனை தரம்தான் கேட்டி ருப்பாய். எங்கடை தலைவிதி இல்லை மல்லிகை நவம்பர் 2008 ஜ் 27

Page 16
சாபம். இதுக்கு மேலே இன்னுமொரு கார ணமும் இருக்கு. இப்ப அதைச் சொல்ல நேரமில்லை. பிறகு சொல்லுறேனே!"
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆர்வத்தோடு கேட்டாள் "ப்ளிஸ் கண்ணன்! என்னென்று சொல்ல
மாட்டியளே?"
"அது ஒரு பெரிய கதை. ஆரம்பத்தி லேயிருந்து சொல்லாட்டால், உனக்கு விளங்காது. இருந்தாலும் சுருக்கமாகவே சொல்லுறன். இந்தச் சண்டை எதுக்காக நடக்குது தெரியுமோ?"
'உரிமை பெறத்தானே!"
"ம்! அப்படியும் சொல்லலாம். இதுக்கு மேலேயும் ஓர் ஆழமான காரணம் இருக்கு. ஒன்றுக்கொன்று சங்கிலிக் கோர்வை மாதிரி இது பிணைந்து போயிருக்கு. இது தான் இப்ப உள்ள நிலைமை. இதுகள் அகதிகளாய் வந்தால்தான், அங்கை பருப்பு வேகும்."
'6T60s...?'
"என்ன வேணி? இது கூடவா உனக் குத் தெரியாது?"
'எனக்கு எவ்வளவோ மூளைக் குள்ளை இருக்குது. நான் எதையென்று யோசிக்கிறது?"
'இது அப்படியொன்றும் யோசித்துப் பார்க்கிற அளவுக்குப் பிடிபடாத விடய மில்லை. எங்கடை ஒவ்வொரு தமிழனும் அங்கை, அந்த வெள்ளை மண்ணிலே அகதி முத்திரை குத்திக் கொண்டுதான் கொடி கட்டிப் பறக்க நேர்ந்திருக்கு. இதிலே
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 28
எவ்வளவு பேர் கப்பல் விட்டுப் போகினம். கொழும்பிலே போய்ப் பார்த்தால், எல்லாம் உனக்குப் பிடிபடும். வீடென்ன, வாச லென்ன. இந்த அதி உச்சகட்ட ஆடம்பர வாழ்க்கையென்ன. இதெல்லாம் ஆராலே? எப்படி வந்தது? சொல்லு வேணி!"
அவன் மூச்சிரைக்கப் பேசிவிட்டு, அவளை மாறுபடாத கண்களின் திரையி னுாடே புல்லரித்துப்போய், ஆழ்ந்து நோக் கினான். அவள் தெளிவற்ற நிலையிலேயே அறிவு மயங்கி இன்னும் நின்று கொண்டி ருந்தாள். அவனிடம் இதைப் பற்றி இனியும் கேட்பது முறையல்ல என்று அவளுக்குப் பட்டது. ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. அதனால், குரலைச் செரு மிக்கொண்டு மீண்டும் அவளே கேட்டாள்,
‘என்ன கண்ணன், குழப்பிறியள்?"
‘சரியான மக்கு இவ்வளவு தெளி வாகச் சொன்ன பிறகுமா உனக்கு விளங் கேலை?"
"அங்கை என்று சொன்னால், நான் எங்கையென்று யோசிக்கிறது?"
"சரி! எனக்கு விளங்கிற மாதிரியே சொல்லுறன். எங்கடை கண்ணிலை வெளிச்சம் காட்டிக் கொண்டு நிற்குதே, வெளிநாடு. லண்டன், கனடா என்று சொல் லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும். அங்கை அகதியென்று எடுபட்டால்தான் எங்களுக்கு வாழ்க்கை என்றாச்சு. இது நிலைத்து நிற்க வேண்டுமானால், இரு ளடைந்த காட்டிலே, இந்த இருப்பும், இழப்பு களும் அவசியம்தான். இப்ப விளங்குதே? ஏன் இந்த நிலை என்று?"

அவள் அறிவுப்பூர்வமாகவே அதைப் புரிந்துகொண்ட பாவனையில், தலை ஆட்டி னாள். இதைப் புரிந்து கொண்டதற்காக மேளம் தட்டிக் கொண்டாடவா முடியும்? அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. இதிலே சுயகெளரவம் எப்படிப் போனா லென்ன? நாடு, இந்த மக்கள், என்ரை மண் எப்படிப் பற்றியெரிந்தாலென்ன? எங்களுக் குப் பணம் வேணும். அதனால்தான் இதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட தாய், இப்படியொரு ரணகளம். இது நின் றால், எங்கள் மூச்சும் நின்று போகும். அப்படியாகிவிட்டதே, எங்கள் நிலைமை
"சொல்லுங்கள் கண்ணன், நீங்கள் போட்ட கணக்கு ஒன்றுக்கொன்று சரியாத் தானிருக்கு. வெறும் மனக்கணக்கு என் றால் மறந்துவிடலாம். இது நமக்குக் கேவல மில்லையா?"
'நீ அப்படி நினைக்கிறாய். ஆர் இதைப் பற்றியெல்லாம் யோசிச்சிருப்பினம்.
அப்பவெல்லாம், இப்படி அகதிகளாய் போய்
ஆராய்ந்தது.
திக்குவல்லை கமால்
தெடுக்கப்பட்டார். செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழு சமீபத்தில் கொழும்பில் கூடி
சங்கத்தின் கடந்த இடைக்கால இயக்கமற்ற சூழ் நிலையையும், தேசத்தில் தமிழ் எழுத்தாளர்களின் இன்றைய நிலையையும், பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றதனால் ஏற்பட்டுள்ள சூழலையும் கவனத்திலெடுத்து நீண்ட நேரம் விவாதித்து, ஆராய்ந்து இறுதியில் கொழும்பிலிருந்து இ.மு.எ.ச. தொடர்ந்து இயங்குவதாகவும் முடி வெடுத்தது. பொதுச் செயலாளராக திக்குவல்லை கமால் ஏகமனதாகத் தேர்ந்
இறங்குவதை எங்கடை ஆட்கள் எவ்வளவு மனம் பூரித்துக் கதைச்சிருக்கினம். இப்ப சண்டை நிற்க வேணுமென்று எவ்வளவு பேருக்கு மனப்பூர்வமாக விருப்பமிருக்கு? வெளிப்படையாகக் கூறமுடியாவிட்டாலும், மனசுக்குள்ளை இதுதான் பிரார்த்தனை யாக இருக்கு. ஏதோ நானும் நீயும் ஆசைப் பட்டால் மட்டும் முடியப்போகுதே?”
"என்ன சொல்லிறியள் கண்ணன்? நீங்கள் சொல்வதைக் கேட்டால், நிச்சயம் அவர்கள் வாழ, இது அவசியமென்று தானே படுகுது. காசு வேணும்தான். அதுக்காக இப்படியா?"
'சரி விடு வேணி! நாங்கள் இதை மறக்கப் பார்ப்பம். எது நல்லதென்று படு கிறதோ அதைச் செய்து முடிப்பம். வா! வந்த காரியத்தைப் பார்ப்பம்." அதன் பிறகு அவர்கள் பேசவில்லை. பேச்சிழந்த மெளனமே இப்போதுள்ள நிலையில் சிறந்த தென்று பட்டது. அவர்கள் வழி அவர் களுக்கு. அதுவே முடிவுமானது.
ノ
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 29

Page 17
தமிழ் அகராதிகள் வரிசையில் க்மியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் திரு. து.குலசிங்கம் அவர்களின் பங்களிப்பு
- பா.இரகுவரன்
சென்னை "க்ரியா நிறுவனத்தின் வெளியீடான "க்ரியா"வின் தற்காலத் தமிழ் அகராதி - விரிவாக்கிய, திருத்திய பதிப்பாக மே - 2008ல் வெளிவந்துள்ளது. இதன் முதற் பதிப்பு 1992ல் வெளியாகி பலதரப்பட்ட மக்களின் கணிப்பைப் பெற்றிருந்தது. 2வது பதிப்பில் இலங்கையில் புழக்கத்தில் இருக்கும் 1700 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் சேகரித்து பொருள் விளக்கம் மற்றும் விளக்க வாக்கியங்கள் என்பனவற்றுடன் தொகுக்க உதவியவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இலக்கியச் சோலை திரு. து.குலசிங்கம் அவர்கள் ஆவார்.
இந்த அகராதியின் முதலாவது பதிப்பில் இலங்கையில் பாவிக்கப்படும் 436 சொற்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பேரா. நுஃமான் உதவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த அகராதியிலும் இலங்கையில் பாவிக்கப்படும் சொற்கள் சேர்க்கப்பட்ட தில்லை. இலங்கையில் பாவிக்கப்படும் சொற்களை இனம் காண அடைப்புக் குறிக்குள் (இல) எனக் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் உரித்தான தொன்றல்ல. இலங்கை மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழருக்கும் உரித்தானது என்ற வகையில் சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் பயன்தரத்தக்க முயற்சியாகும்.
அகராதி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களுக்கு பொருள் அறியும் நோக்குடன் அகர வரிசையில் உருவாக்கப்பட்ட நூலாகும். அகராதியின் ஊடாக பொருள் விளக்கம் சொல்லுக்குரிய அதே மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தமிழில் சொற்களுக்குப் பொருள் அறியும் நூலாக முற்காலத்தில் நிகண்டு நூல்கள் காணப்பட்டன. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு என்பன குறிப்பிடப்படுகின்றன. நிகண்டு நூல்கள் செய்யுள் வடிவத்தில் அமைந்த சூத்திரங்கள் மூலமாகவே சொற்களுக்கான பொருளை வெளிப்படுத்தின.
மல்லிகை நவம்பர் 2008 30

நவீன முறையிலான உலகின் முதல் அகராதி 1612ல் இத்தாலியில் உருவாக்கப் பட்டது. தமிழில் நவீன முறையிலான அக ராதியை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ் தவப் பாதிரியாரான வீரமா முனிவரால் (Constatine Joseph Beschi) 1732si) உருவாக்கப்பட்டது. இது சதுர் அகராதி என அழைக்கப்படுகிறது. தமிழ் சொற்களுக்கு, தமிழ் மூலமான பொருளை அறிந்து கொள் ளக் கூடிய முறையிலான தமிழ் - தமிழ் அக ராதியாக இது உருவாக்கம் பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பல தமிழ் - தமிழ் அகராதிகளும், தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதிகளும் பின்னாளில் வெளி வந்துள்ளன.
* யாழ்ப்பாண அகராதி (வணபிதா நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பின் சந்திர சேகரப் பண்டிதரால் 1842ல் பூர்த்தி செய்யப் பட்டு வெளியாகியது.)
* வின்ஸ்லோவின் (Winslow) தமிழ் - ஆங்கில அகராதி (1862ல் வின்ஸ்லோ என்பவரால் விரிவாகத் தொகுக்கப்பட்டது.)
* தமிழ்மொழி அகராதி (1899ல் சதாவதானி கதிரவேற்பிள்ளையவர்களால் ஆக்கப்பட்டது. 1911ல் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இது தமிழ் பேரகராதி என்றும் அழைக்கப்படுகிறது.)
本 அபிதான சிந்தாமணி (1910ல் வெளி யிடப்பட்டது.)
* மதுரை தமிழ் பேரகராதி (1937ல் கோபால கிருஷ்ண கோணார் என்பவரால் தொகுக்கப்பட்டது.)
* மெட்ராஸ் தமிழ் லெக்சிக்கன் பேரக ராதி (1939ல் மெட்ராஸ் (சென்னை) பல் கலைக் கழகத்தால் தொகுத்து வெளியிடப் பட்டது. 06 தொகுதிகளும், 01 உதவி நூலும் கொண்ட மிகப் பெரிய அகராதி யாகும்.)
* கழகத் தமிழ் அகராதி (1964ல் வெளி ul-‘Ull-gl.)
* நர்மதாவின் தமிழ் அகராதி (தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதியாகும். 2002ல் வெளிவந்தது.)
இவற்றை விட அறத்தமிழ் அகராதி போன்ற பல அகராதிகள் பெரியதும், சிறியதுமாக வெளிவந்துள்ளன. ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் பொருளறிய லிப்கோ அகராதி 1950களில் வெளியானது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - திருத்திய பதிப்புக்காய் பொருத்தமான எழுத்தமைப்பு (Font) புதிதாக வடிவமைக் கப்பட்டு, கட்புல ரீதியான உடன் தெளிவு ஏற்படத்தக்கதாக உள்ளமை சிறப்பம்ச ιOπεδιb.
"க்ரியா ராமகிருஷ்ணன் குழுவினர் பல ஆண்டுகளாக முயன்று கடின உழைப்பால் இவ்வகராதியை வெளிக் கொணர்ந்துள்ளனர். 75 இலட்சம் தமிழ் சொற்களைக் கொண்ட சொல் வங்கியின் உதவியுடன் இந்தப் புதிய பதிப்பு உருவாக் கப்பட்டுள்ளது. 21,000 தலைச் சொற்கள், 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 342 சொற்களுக்கான சித்திரங்கள் என்பன வற்றை உள்ளடக்கியுள்ளது.
இதில் து.குலசிங்கம் அவர்களால் தொகுத்து அனுப்பப்பட்ட 2000ற்கும் மேற் மல்லிகை நவம்பர் 2008 ஜ் 31

Page 18
பட்ட இலங்கைச் சொற்களில் 1700 சொற் கள் இடம்பெற்றுள்ளன. சமகால வாழ்வில் இருந்தும்; சிறுகதைகள், நாவல்களில் இருந்தும் இச்சொற்கள் தொகுக்கப்பட்டு குறிப்பிட்ட புனைகதை இலக்கிய ஆசிரியர் களுடன் தொடர்பு கொண்டு இலங்கையின் வெவ்வேறு பிரதேசத்துக்குரிய சொற்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திரு. து.குலசிங்கம் அவர்களின் 05 வருட அகராதி முயற்சி மிகப் பயனுடையதாக அமைந்துள்ளது.
திரு. து.குலசிங்கம் அவர்கள் எடுத் துக்காட்டு வாக்கியங்களை அமைக்கும் போது அதனூடாக பயனுள்ள அறிவைப் பெறும் வண்ணம் உருவாக்கியுள்ளார். 2- b :
அடிகொடி - ஒருவரின் குடும்பம், பரம்பரை அந்தஸ்து பற்றிய தகவல் விபரம் - வெளி நாட்டிற்கு போய் தங்கிவிட்டவர்களும் அடி கொடி பார்த்துத்தான் சம்பந்தம் செய் கிறார்கள்.
அப்பத்தட்டி - காலை நேரத்தில் அப்பம், தோசை என்பன சுட்டு விற்கும் வீடு. எந்த நாளும் அப்பத்தட்டியில் வாங்கினால் குடும்பம் உருப்பட்டாப் போலைதான்,
கருப்பனிர்க்கஞ்சி - பதநீரில் அரிசி, பாசிப் பயறு, தேங்காய்ப்பால் ஆகியன சேர்த்து தயாரிக்கும் கஞ்சி. (பதநீர் எப்படித் தயாரிப் பது என்ற விளக்கம் இதனுாடு தெரிய வருகிறது.)
1990களுக்குப் பிறகு சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தமிழ் உள் வாங்கிக் கொள்ளும் முயற்சியில் மொழி
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 32
யின் இறுக்கம் குறைந்து; அதன் எல்லை களும் விரிவடைந்தது. சமுகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் தமிழ் மொழியில் புதிய கருத்தாக்கங்களையும், அவற்றிற்கான சொற்களையும் உருவாக்கியிருக்கின்றன. பழைய சொற்களுக்குப் புதிய கருத்துக் களையும் சேர்த்திருக்கின்றன.
இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு இந்த அகராதி சிறப்பான முறையில் தொகுத்து வடிவமைக்கப் பட்டுள்ளது.
திரு. து. குலசிங்கம் அவர்களைப் பற்றி அகராதி முன்னுரையில் விதந்துரைக் கப்பட்டுள்ளது. இத்துடன் நின்று விடாது தனது பரந்த வாசிப்பு அனுபவத்தினூடாக மேலும் பல இலக்கிய சேவைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற இவர் தம் நண்பர்களின் விருப்பினை நிறை வேற்றுவார் என நம்புகிறோம்.
சந்தா செலுத்தி விட்டீர்களா?
தயவு செய்தது மல்லிகையுடன் ஒத்தழையுங்கள்.
SJFL as 6 OL
செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறத்தப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஞ்ஞானத்தில்
பிறந்கு விண்ணாணம்
- முருகபூபதி
(அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த மகாஜனாக் கல்லுாரி முன்னாள் அதிபர் திரு. பொ.கனகசபாபதி அவர்களின் திறவுகோல் நுால் அறிமுக விழாவில் முருகபூபதி நிகழ்த்திய மதிப்பாய்வுரை.)
"வாணி, உன் வீடும் வளவும் அறிவேன். அக்காணி முழுவதும் கலகலப்பே அல்லவோ?. கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி எழுதியிருக்கும் இந்தக் கவிதை
வரிகள், யாழ். மகாஜனாக் கல்லுாரியை நினைவு கூருகிறது.
இன்றைய யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணி யாற்றும் நண்பர் என். சண்முகலிங்கன், “சமூக மாற்றங்களிடையும் பணி பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப் புலத்தின் சிறப் பினைக் கண்டுதான் படைப்புச் சக்தி யாயப்ப் பண்பாடு கண்ட கலைத் தெய்வமான வாணியும் தன் வீடாக மகாஜனாவைத் தேர்ந்தெடுத்து, தென் தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக் கிறாள்" என்று தமது கட்டுரையொன்றில் பதிவு செய்துள்ளார்.
சமூக மாற்றங்களுக்குப் பிரதான மாகத் திகழும் கல்வியும், கலை இலக்கி யங்களும் உருவாகும் - வளரும் ஸ்தா பனம் மகாகவி குறிப்பிடும் கலகலப்பான கலாசாலைதான். இலங்கையில் தமிழ்,
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 33

Page 19
கலை, இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக் கியமான செழுமையைத் தந்த பாட சாலைகளின் - கல்லூரிகளின் வரிசை யில் மகாஜனாவும் ஒன்று என்பதில் அபிப்பிராய பேதமிருக்காது.
எனக்கு - எனது தாயகத்தில் பல பாடசாலைகளுடன் நீண்டகாலமாக தொடர்புகளிருந்த போதிலும் மகாஜனா வுடனான உறவு சற்று வித்தியாசமானது. அதற்குக் காரணம் பலவுண்டு. 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங் கரித்த படம் மகாஜனாக் கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடையது. அந்த இதழில்தான் எனது முதலாவது சிறுகதையும் வெளி யாகி ஈழத்து இலக்கிய உலகிற்கு அறி முகமானேன். ஒவ்வொருவரது வாழ் விலும் முதலாவது நிகழ்வு மறக்க முடியாததல்லவா?
யாழ்ப்பாணத்தில் 1975 1986 காலப்பகுதியில் பல இலக்கியக் கூட்டங் களில் பேசியிருந்த போதிலும் அந்தக் குடாநாட்டில் முதலும் - இறுதியுமாக நான் பேசிய ஒரேயொரு கல்லூரி மண்ட பம் மகாஜனா மாத்திரமே. 1984ஆம் ஆண்டு அச்சமயம் அங்கே அதிபராக விருந்த எழுத்தாளர் த.சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் அக்கல்லூரி யில் நடந்த திருமதி. கோகிலா மகேந் திரனின் முரண்பாடுகளின் அறுவடை கதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா வில்தான் இந்த முதலும் இறுதியுமான நிகழ்வு நடந்தது.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 34
மகாஜனாவின் இலக்கியப் பாரம்பரி யத்தை பார்த்தோமேயானால் அது ஒரு நீண்ட வரலாறாக விரியும். க.சின்னப்பா, நா.சிவபாதசுந்தரன், செ.கதிரேசர்பிள்ளை, அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், மகாகவி, சண்முகசுந்தரம், மயிலங் கூடலூர் பிநடராசன், சிவநேசச்செல்வன், சோமகாந்தன், பார்வதிநாதசிவம், சண் முகலிங்கன், குகசர்மா, குரும்பசிட்டி சிவகுமாரன், மாவை நித்தியானந்தன், கோகிலா மகேந்திரன், சேரன், ஆதவன், விஜயேந்திரன், சபேசன், ஊர்வசி, ஒளவை, த.கனகரத்தினம், க.சண்முக லிங்கம், முரீரஞ்சனி விஜேந்திரா இப்படி யாக முதலாம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை கலை - இலக்கியவாதி களும், இந்த வரிசையில் இணைந்துள்ள சிட்னி எழுத்தாளர் பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா, மகேந்திரராஜா பிரவீணன், அவுஸ்திரேலியாவில் கலப்பை சஞ்சிகை வெளியிடும் டொக்டர் கேதீஸ்வரன், இங்கே எம் அருகில் இருக்கும் சகோதரி திருமதி. உஷா சிவநாதன் இவர்கள் அனைவருக்குள் ளும் ஒருவராக இருக்கும் இந்த நுாலின் ஆசிரியர் மதிப்பிற்குரிய பொ.கனக சபாபதி அவர்கள் அனைவருமே இலக் கிய ரீதியாகவும், வாழ்வுறவு ரீதியாகவும் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களே.
நான் அந்தக் கல்லூரியில் படித்தவ னில்லை. ஆனால், அக்கல்லுாரியின் கல்வி மற்றும் கலை இலக்கிய பாரம் பரியத்தை செழுமையுடன் வளர்த்த சிலருடனாவது இலக்கிய நட்பைத் தொடர்ந்து பேணிவருகின்றேன். அதிபர் கனகசபாபதி எனது இனிய நண்பர்.

அவரை நான் இதுவரையில் இரண்டு சந்தர்ப்பங்களில்தான் கண்டு பேசியிருக் கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவில் மகாஜனா விழாக்களுக்காக வந்திருந்த சமயம் அவர் மெல்பனில் தங்கியிருந்த ஒரு நண்பரின் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக் கிறேன் . ஏற்கனவே அவரது எழுத்துக்களை மாத்திரம் படித்து வைத்துக்கொண்டு அவரைச் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டேன்.
இது முதலாவது சந்திப்பு. கடந்த ஆண்டு இறுதியில் கனடா சென்றிருந்த பொழுது மீண்டும் சந்தித்தேன். இது இரண்டாவது சந்திப்பு. அவரிடமிருந்த அதேசமயம் அவர் மீது மற்றவர்கள் கொண்டிருந்த சிறப்பான குணாதிசயங் களை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாக விருக்கும் என நம்புகிறேன்.
முன்மாதிரி - சுயவிமர்சனம் என் றெல்லாம் நாம் அடிக்கடி எழுத்தூழியத் தின் போது பாவிக்கும் இரண்டு முக்கியமான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கின்றன.
மெல்பனில் நான் அவரை முதல் முதலில் சந்தித்து உரையாடிக் கொண்டி ருந்த பொழுது. ஒரு இளம் யுவதி அவரைப் பார்க்க வந்து "சேர் நான் உங்களிடம் படிக்கவில்லைத்தான். ஆனால் என்னை ஆசீர்வதியுங்கள்”-எனச் சொல்லிக் கொண்டு நின்றார்.
கனகசபாபதி அவர்களுக்கோ இந்தப் பிள்ளை யார் என்று தெரிய
வில்லை. "நீங்கள் யாரம்மா?. எனக் (885 LIT.
உடனே அந்தப்பிள்ளை, "சேர், நான் உங்களிடம் பாடசாலைப் போட்டி யொன்றின் போது பரிசு வாங்கியிருக் கிறேன்" என்றார்.
"ஆ! அப்படியா. மகிழ்ச்சி. எங்கே இருந்தாலும் எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு” எனச் சொல்லி அவர் அந்த யுவதியை வாழ்த்தினார்.
பின்னர்தான் நான் அறிந்து கொண் டேன் அவர் வேறு யாருமில்லை. எங்கள் நண்பர் கலப்பை ஆசிரியர் டொக்டர் கேதீஸ்வரனின் மனைவி சிவரதி. அவர் தற்பொழுது சிட்னியில் பல் மருத்துவ ராகப் பணியாற்றுகிறார்.
கனடாவுக்குப் போயிருந்த பொழுது அவருக்கு நாங்கள் வெளியிட்ட அவுஸ் திரேலியா எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பான உயிர்ப்பு நூலைக் கொடுத் தேன். அதில் உஷா சிவநாதனும் எழுதி யிருக்கிறார். அதனைப் பார்த்து விட்டு யார் இந்த உஷா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு என்னிடம் அவரது தொலைபேசி இலக்கத்தை கேட்டுப் பெற்றுக் கொணி டு உஷாவுடன் தொடர்பை ஏற்படுத்தி உரையாடியிருக் கிறார்.
சற்று யோசித்துப் பாருங்கள். இது சிலருக்கு சின்ன விடயமாகவிருக்கலாம். வழக்கமாக என்ன நடக்கும். இவவம் எழுதுறாவோ என்று அலட்சியமாக ஒரு குறுஞ்சிரிப்பை உதிர்த்துவிட்டு போய் விடுபவர்களும் எம் மத்தியில் இருக்
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 35

Page 20
கின்றனர். ஆனால், கனகசபாபதியிடம் ஈகோ இல்லாத உயர்ந்த பண்புகள் இருந்தன. ஒரு மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆசான், தனக்குத் தெரிந்த இளம் தலைமுறைப் பிள்ளை எழுத்துத் துறையிலும் ஈடுபட்டிருக்கிறார் என அறிந்ததும் உடனே தொடர்பு கொண்டு சுகம் விசாரிக்கின்றார். இதுதான், நான் முதலில் குறிப்பிட்ட முன்மாதிரி.
அவர் முன்மாதிரியான ஒரு ஆசான் என்பதனால் தானே இன்று அவர் இல்லா மலேயே அவரது மாணாக்கர்களினால் வேறு ஒரு நாட்டில் அவரது நூலுக்கு அறிமுகம் நடத்தப்படுகிறது. எனவே அவர் எப்படி எங்களுக்கெல்லாம் முன் மாதிரியானவரோ, அப்படியே மகாஜனா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களும் முன்மாதிரியானவர்களே எனச் சொல் வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
கனகசபாபதி அவர்கள் தாம் கற் பித்த கல்லுாரியில் விலங்கியல் (ZOOLOGY) ஆசிரியராகப் பணியாற்றி யவர் என அறிகின்றேன். அதனால்தான் அவரால் இந்த திறவுகோல் என்ற நுாலுக்குரிய பல கட்டுரைகளை எழுத முடிந்திருக்கிறது.
மூத்த இலக்கியவாதிகளின் எழுத் திலும், பேச்சிலும் கேலியும், கிண்டலும்,
குசும்பும், நகைச்சுவையுணர்வும் இருப்
பதை அவதானித்திருக்கிறேன். அந்த வரிசையில் கனடாவிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம், கவிஞர் அம்பி, லண்டனிலிருந்து எழுதும் இளவாளை அமுது, எங்கள் எஸ்.பொ. இப்படியாக சிலரைச் சொல்ல முடியும்.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 36
அவர்களின் வரிசையில் கனகசபாபதியும் இடம்பெறுகிறார்.
கல்வித்துறையில் கணிதம், விஞ் ஞானம் ஆகிய பாடங்களில் நகைச்சுவை யுணர்வு மிகவும் அரிதாகத்தான் வெளிப் படும். தமிழ், இலக்கியம், வரலாறு, அரசியல், சமயம் முதலான கல்வித் துறைகளில் நகைச்சுவைக்கு குறைவே இருக்காது. கணித, விஞ்ஞான, உயிரி யல், இரசாயனவியல்,பெளதிகவியில், தாவரவியல், விலங்கியல் முதலான பாடத்துறைகளில் போதிக்க வருகின்ற ஆசிரியர்களிடம் இந்த நகைச்சுவை யுணர்வு இல்லையென்றால் அவர்களிடம் கற்கின்ற மாணவர்கள் மிகவும் பரிதாபத் திற்குரியவர்கள்தான். இது என்னடா விண்ணாணம் பேசுகிறான் என்று யோசிப்பீர்கள்.
கனகசபாபதி அவர்களின் இந்த திறவுகோல் நுால்கூட, இந்த நுாலை எமக்குப் பதிப்பித்து தந்திருக்கும் வெற்றி மணி வெளியீட்டக பதிப்பாளர் திரு. சிவகுமாரன் சொல்லுமாப் போல் ஒரு விண்ணாணம்தான். இந்த விண்ணாணம் என்ற சொற்பதம் இலங்கையில் தமிழர் கள் மத்தியில் பேசுபொருள். நீங்கள் தமிழ்நாட்டில் இதனைச் சொன்னால் அது அவர்களுக்குப் புரியாது. அர்த்தம் தெரியாது.
இதுபற்றி கனகசபாபதி அவர் களுடன் உரையாடினேன். தாம் நீண்ட காலத்துக்கு முன்னர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கத்தின் இலக்கிய இன்பம் நுாலைப் படித்திருப்பதாகவும், அதிலே ஓரிடத்தில், விஞ்ஞானம் என்ற சொல்லி

லிருந்து தான் விண்ணாணம் பிறந்திருப் பதாக குறிப்பிட்டிருப்பதாகச் சொன்னார். எதனையும் துருவித் துருவி ஆராய்ந்து தீர்மானத்துக்கு அல்லது முடிவுக்கு வரும் முயற்சியையும் விண்ணாணம் என்று பொருள் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்த விணி னானம் என்ற சொல்லைப் போன்று, அந்த நாட்களில் எனது சிறு வயதில் வானொலி - மற்றும் மேடை நாடகங்களில் மற்றுமொரு சொற் பதம் அடிக்கடி கேட்டிருக்கின்றேன். அதாவது அடியடா புறப்படலையில எண்டானாம். எனக்கு இன்று வரையில் இதற்கான அர்த்தம் தெரியாது. பிரதேச மொழி வழக்குகள் தொடர்பாக இலங்கை யில் இது வரையில் ஒரு முழுமையான அகராதி வெளிவரவில்லை என்று நினைக்கின்றேன்.
சரி, விண்ணாணம் என்றால் என்ன? சிவகுமாரன் தரும் விளக்கம் - ஊரிலே புரியாத தெரியாத விடயங்களைப் பேசும் போது என்ன விண்ணாணம் பேசுகிறாய் என்பார்கள் என்று அவர் தரும் விளக்கத்தை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். விஞ்ஞானம் தொடர்பான விளக்கங்களை புரிந்து கொள்ளத்தக்க தாக சொல்லும் பொழுது, விஞ்ஞான ரீதியாகவே முயன்றால் படிப்பவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு விடும்.
ஒரு விஞ்ஞான, விலங்கியல் துறை ஆசிரியராக திரு. கனகசபாபதி அவர்கள் பணியாற்றியிருந்தமையால் இந்தத் தொடர் கட்டுரைகளை எழுதும் பொழுது, பாயசத்துக்கு முந்திரிப்பருப்பு சேர்த்தது
போன்று சுவைகூட்டி மெருகேற்றி யுள்ளார்.
அவரது மாணவரும் இன்று இலக் கிய உலகில் நன்கு அறிமுகமானவரு மான எழுத்தாளர் பேராசிரியர் ஆசி.கந்த ராஜா, இந்நூலுக்கு மதிப்புரை வழங்கி யிருக்கிறார். மிகவும் பொருத்தமான ஒருவரைத்தான் நுாலாசிரியர் மதிப்புரை எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கந்தராஜா அவர்களும் ஒரு உயிரியல் தொழில்நுட்ப பேராசிரியர். சிட்னியில் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றுகிறார்.
அவர் சொல்கிறார் - "சிக்கலான விஞ்ஞான கோட்பாடுகளை விளக்க கனகசபாபதி ஆசிரியர் அன்று கை யாண்ட உதாரணங்களும், நகைச்சுவை கலந்த மொழிநடையும் எனது பல் கலைக்கழக விரிவுரைகளுக்கு பெரிதும் உதவுகின்றன.”
நூலாசிரியரின் மற்றுமொரு மாணவ ரான எழுத்தாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் சொல்கிறார்: "விண் தொட நிமிர்ந்த மனிதர். ஆதலால் பல அரங்கு களை அணி செய்யும் தலைவர். சொல்வதெல்லாம் பயனுள்ள சொல்லா கச் சொல்லிட வந்ததால், இன்று எழுது வதெல்லாம் பயன் உள்ள எழுத்தாய் அமைகிறது.”
இந்நுாலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமது ஆக்கங்களைப் பற்றிய மதிப்புரையையோ, எண்ணங் களையோ பதிவு செய்வதற்கு அந்நியப் பட்ட எவரையும் நுாலாசிரியர் நாட வில்லை. தமது மாணவர்களிடமிருந்தே மல்லிகை நவம்பர் 2008 ஜ் 37

Page 21
கருத்துக்களை கேட்டறிகிறார். இது ஆசிரியர் - மாணவர்களுக்கிடையே நெருக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான முன்மாதிரி.
எழுத்தாளர்களாக, கலைஞர்களாக வளரும் - உயரும் பல கல்வித்துறை ஆசான்களிடம் இந்த நல்ல குணாம் சத்தை அவதானித்துள்ளேன். நண்பர் கவிஞர் அம்பி அவர்களும் இதற்குச் சிறந்த உதாரணம். நண்பர் மாவை நித்தியும் அம்பியின் ஒரு மாணவர். அவரும் ஒரு கவிஞர் - கலைஞர். அம்பி - மாவை நித்தியின் புரிந்துணர்வு மிக்க நட்பை அருகிருந்து பார்த்திருக்கின்றேன். இதுபோன்ற வாழ்வியல் குணாம்சங்கள் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன்.
எவ்வளவோ எழுதியிருப்பவர் கணக சபாபதி அவர்கள். விஞ்ஞானம், அறி வியல், இலக்கியம் என்று அடிக்கடி எழுதியும் பேசியும் வரும் இவர், இந்த நுாலில் தமது என்னுரையின் இறுதி வரி களை இப்படி முடிக்கின்றார் -"வாசகர் களாகிய உங்களுக்கு எனது அன் பினைத் தெரிவிக்கின்றேன். நீங்கள் இல்லாவிட்டால் நானில்லை." ஒரு நிறை குடத்திடமிருந்துதான் இத்தகைய வார்த்தைகள் வரும்.
பெரும்பாலும் இந்த நுாற்றாண்டின் தொடக்கத்திலும் கடந்து சென்ற காலங் களிலும் அறிவியலில் தோன்றிய மாற்றங்களையும், மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனைகளையும் தொடர்ச்சி யாக வாசித்தும் கேட்டுமறிந்து தானும் அவை குறித்த தீவிர தேடுதல்களிலும்,
மல்லிகை நவம்பர் 2008 辜 38
ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு இக்கட்டுரை களை எழுதியிருக்கிறார். வானொலி - தொலைக்காட்சி பத்திரிகைகள் - இணையத்தளங்கள் ஊடாக தினமும் புதிய புதிய செய்திகளும் சுவாரஸ்ய மான தகவல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. நாங்களும் பார்க்கின்றோம் - கேட்கின்றோம். பார்த்த வர்களும் கேட்டவர்களும் சொன்ன வற்றை அறிந்து ஆ! அப்படியா, என்று ஆச்சரியமுடன் புருவம் உயர்த்துவோம். அல்லது இது கலிகாலம், உலகம் அழியப் போகிறது என்று சுடலை ஞானம் பேசுவோம்.
மனித முட்டைகள் விற்பனைக்கு வருகிறது என்ற செய்தியைப் படித்த வுடன், ஆண் இல்லாமல் ஒரு பெண் பிள்ளை பெற முடியும் என்ற தகவல் வெளியானவுடன், பிள்ளையை சுமக்க வாடகைத் தாய் வேண்டும் என்ற விளம் பரம் வந்தவுடன் உலகம் அழியப் போகிறது என்ற விண்ணாணம் பேசுபவர் களைப் பார்த்திருக்கிறோம். இங்கு நான் சொல்லும் விண்ணாணத்திற்கு வேறு அர்த்தம். ஆனால் கனகசபாபதி என்ன செய்கிறார்? ஒரு விஞ்ஞான பூர்வமான கண்டுபிடிப்பைப் பற்றிய தகவல் அறிந் தவுடன் அது தொடர்பாக தேடுதலில் ஈடுபடுகிறார். அதற்காக பல உசாத் துணை நூல்களை கருத்தூன்றி கற் கின்றார். பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வந்து தமது இலக்கிய மொழிநடையில் தமிழ் வாசகர்களுக்கு பதிவு செய்கிறார்.
இந்த நுால் எமக்கு மட்டுமல்ல இலங்கையில் - தமிழகத்தில் மற்றும் தமிழ் கற்கும் தேசங்களிலெல்லாம்

மாணவர்களுக்கு பெரிதும் உதவக் கூடிய நூல். நிறையத் தகவல்கள் இருப் பதனால் வெறும் தகவல் தொகுப் பாகவோ, தகவல் களஞ்சியமாகவோ அவர் இந்நூலைப் படைக்கவில்லை. தேவைப்படும் அளவுக்கு எமது முன் னோர்களின் சிந்தனைகளையும் மிகவும் பொருத்தமாகச் சேர்த்துக் கொள்கிறார்.
திருஞான சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சர்வதேச சகோதரத்து வத்தை தாரக மந்திரமாகச் சொன்ன கணியன் பூங்குன்றனார், பாரதியார், அருணந்தி சிவாச்சாரியார், திருவள்ளு வர் முதலானோரின் கருத்துக்களையும் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளுடன் ஒப்புநோக்குகிறார்.
முளைவகையாக்கள் அதாவது CLONING முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு ஒரு செம்மறி யாட்டை உருவாக்கிய போது - இது போன்று மனித உயிரிலும் செய்து பார்க்க முடியுமா என்ற சிந்தனை எழுந் ததும் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுசனைக் கடிக்கும் முயற்சி என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். தேனிக்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது ஆண் தேனீக்கள் படுசோம்பேறிகள் என்ற தகவலைச் சொல்கிறார். உடனே எனக்கு நண்பர் அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதையொன்றுதான் ஞாபகத்துக்கு வந்தது. அதிலே அவர் பெண் தேனிக் களுக்குத்தான் கொட்டும் இயல்பு உண்டு என்று எழுதியதுடன் நின்றிருக் கலாம். அவர் அதற்கும் மேலே சென்று பெண் உயிரினங்களுக்கெல்லாம் இந்த
இயல்புதானோ? என்றும் எழுதியுள்ளார். குளிர்காலத்தில் கூட்டுக்கு வெளியே வந்த ஆண் தேனிக்கள் குளிரில் விறைத்து தனது சிறகுகளை இழந்து இறந்துவிட, வசந்தகாலம் வரும்போது ராணித் தேனீக்கு ஆள் தேவைப்படு கிறது. உடனே ராணித்தேனி சில முட்டைகளை இட்டு ஆண்களாக்கி தேவையை பூர்த்தி செய்து கொள்கிற தாம். நூலாசிரியர் அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார்: "எப்படி இருக்கிறது கதை. ஆண் இனம் அந்த அளவு கேவலமாகப் போய்விட்டது.”
படித்துக் கொணி டு போகும் பொழுது பல இடங்களில் நீங்கள் வாய் விட்டுச் சிரிக்க முடியும்.
2050 ஆம் ஆண்டுகளில் மரண வீதம் குறைந்து விடலாம் என்ற ஆராய்ச்சி தொடர்பாக எழுதும் பொழுது, "அப்பொழுது மனித குலம் வாழ்வதற்கு மற்றுமொரு கோள் அவசியமாகலாம்" எனச் சொல்லி விட்டு கட்டுரையை முடிக்கவில்லை. அதற்கும் மேலே ஒரு படி சென்று, இடையிடையே அவதார புருஷர்களாகிய ஒஸாமா பின்லேடன், ஜோர்ஜ் புஷ் போன்றோர் தோன்றி துஷட நிக்கிரக பரிபாலனம் செய்து பூமாதேவி யின் பாரத்தைக் குறைப்பார்கள் என நம்புவோமாக என்று முடிக்கிறார். அந்த இருவருடன் மேலும் சிலரது பெயர்களை யும் அவர் சேர்த்திருக்கலாம்.
எனது வயது பதினைந்து கோடி என்றால் நம்புவீர்களா? என்ற கட்டுரை தான் இந்த நுாலின் மகுடமான கட்டுரை என நான் கருதுகிறேன். மனித இனம்
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 39

Page 22
தோன்றிய காலம் முதல் இன்று நாம் வாழும் காலம் வரையில் முதல் மனிதனுக்கும் இன்று வாழும் எனக்கும் உங்களுக்கும் ஒரே உயிர்க்கலம் தான் என்ற உணர்மையைச் சொல் லி ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து வளர்ந்த இனமே மனித இனம் என்ற முடிவுக்கு ஆதாரங்களுடன் வருகிறார். இடையில் வந்ததுதான் மொழி, மதம், சாதி, பிரதேச வாதம் ஏற்றதாழ்வு நிற வேற்றுமை, இனப்பாகுபாடு முதலான குறுகிய சிந்தனை வயப்பட்ட வாழ்வுக் கோலங்கள் என்ற தெளிவை இந்த ஆக்கம் மிகவும் நுட்பமாகவும் அற்புத மாகவும் வெளிப்படுத்துகிறது. இன ரீதி யாக - மொழி ரீதியாக - நிற ரீதியாக
சாதி ரீதியாக பிரதேச ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து அரசியல் ஆதாயமும், சொந்த நலன்களும் பேணு பவர்களுக்கு இந்தக் கட்டுரையை சமர்ப் LJ625OTILDfTöd56DTLib.
படித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு கட்டுரையும் அறிவுத் தேடலின் வெளிப்பாடு. அதற்கான உழைப்பில் ஈடுபட்டு இந்த அரிய நுாலைத் தந்திருக்கும் மதிப்பிற்குரிய கனகசபாபதி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி எனது அன்பையும் நன்றி யையும் வணக்கத்தையும் தெரிவிக் கின்றேன்.
※:冰 ※:冰 ※※※
E. Mail:- letchumanann) Cègmi.com
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 40
Excellent Photographers Modern Computerized Photography For Wedding fortraits & Child 5ittings
Photo Copies of ldentity Cards (NIC), Рааарort 8. Driving Licences Within 15 Minutes
300, MOdera Street,
ColombO - 15. Tel: 2526345

பாலஸ்தீனிய அடையாளச் சின்னம் மஹற்மூட் தர்வீஸ்
பாலஸ்தீனிய கவிஞர் மஹற்மூட் தர்வீஸ் அண்மையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக “தேனி’ இணையத்தளத்தில் எஸ்.எஸ்.எம்.டரீர் என்பவர் எழுதிய அஞ்சலிக் குறிப்பு இது.
அரபுலகை கலங்க வைத்த ஒரு அகால மரணம்
பாலஸ்தீனிய அடையாள சின்னம் மஹற்மூட் தர்வீஸ்
- எஸ். எஸ். எம். பர்
எங்களை வரலாற்றிலிருந்து வெளி யேற்றும் திட்டத்திற்கெதிராக வெற்றி கொண்டுள்ளோம்
- மஹற்மூட் தர்வீஸ்
பாலஸ்தீனிய கவிஞர் மஹற்மூட் தர்வீஸ் அவர் களின் அகால மரணம் இந்த மாதம் முதல் வாரத்தில் (9.8.2008) அரபுலகை அதிர்ச்சிக்குள் ளாக்கிய ஒரு முக்கிய நிகழ்வாகும். எகிப்திய ஜனதிபதி கமால் அப்துல் நாசரின் மரணத்தின்
மல்லிகை நவம்பர் 2008 : 41

Page 23
பின் இன்னிகழ்வு அரபுலகை கலங்க செய்த நிகழ்வாக கருதப்படுகிறது. இவ ரது கவிதைகளும் உரைநடை ஆக்கங் களும் 40 ஆண்டுகாலம் பாலஸ்தீனிய மக்களை கட்டிப் போட்டிருந்தது. தர்விஸ் அரபுலகின் நிகரற்ற கதாநாயகனாவே கருதப்பட்டார். அரபுலகிற்கு அப்பாலும் இவரது தாக்கம் விரவிக் காணப்பட்டது. திறந்த இருதய சத்திர சிகிச்சையின் போது ஐக்கிய அமெரிக்காவின் ஹவுச் டொன் வைத்தியசாலை ஒன்றில் தனது 67 வயதில் காலமானார். 1941ல் லெபனா னுக்கு அன்மியதான அல்-பிர்வா எனும் பாலஸ்தீனிய குக்கிராமம் ஒன்றில் பிறந்தார். 1948ல் யூத ஆயுததரிகளின் ஆக்கிரமிட்குட்பட்டு இவரது குடும்பமும் லெபனானுக்கு தப்பி ஒடியது. மீண்டும் இவரது குடும்பத்தினர் தமது கிரா மத்திற்கு அண்மிய கிராமமொன்றிற்கு இரகசியமாக இடம்பெயர்ந்து வாழ்ந் தனர். எனினும் இஸ்ரேலிய இராணுவ சட்டத்தின்படி அவ்வாறு திரும்பியவர்கள் உள்நாட்டு அகதிகள் எனக் கருதப்பட்ட துடன் “ஆஜரான சமூகமளிக்காத 966fluja,6i" (Present-absent aliens) என வகைப்படுத்தப்பட்டு அவர்களது ஆதனங்கள் மீதான உரிமை மறுக்கப் பட்டது. இவரது முதல் கவிதை நூல் இவரது 19வது வயதில் வெளிவந்தது. அவற்றில் அதிகமான கவிதைகள் அரசியல் கவிதைகளாக காணப்பட்டன. பிரபல்யமான இவரது கவிதைகளில்:
"எழுதிக் கொள் நான் ஒரு அரப் என் அடையள அட்டை இலக்கம் 50000"
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 42
இக்கவிதை அடையாள அட்டை இல்லாது இஸ்ரவேலுக்குள் பிரவேசிக் கும் பாலஸ்தீனியர்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறது. இவர் இஸ்ர வேலின் கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப் பினராக இருந்ததுடன், அதற்காக பல தடவை கைது செய்யப்பட்டுள்ளார். 1970இல் மாஸ்கோ பல்கலைக்கழகத் தில் ஒராண்டு கல்வியின் பின் இஸ்ர வேலுக்கு திரும்பாமல் எகிப்துக்கும், பின்னர் லெபனானுக்கும் சென்று வாழ்ந் தார். லெபனனில்தான் இவருக்கு பாலஸ் தீனிய விடுதலை இயக்கத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. 1973ல் பா.வி.இ (பி.எல்.ஓ) சேர்ந்தார். ஆரம்ப கால அரசி யலில் ஆக்கிரமிப்பிற்கெதிரான கவிஞ ராக திகழ்ந்தார்.
இவர் பாலஸ்தீன விடுதலை இயக் கத்தின் நிறைவேற்று உறுப்பினராக தெரிவு செயயப்பட்டார். எனினும் 1993ல், ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தினை யசிர் அரபாத் கையொப்பமிட்டவுடன் தனது கட்சிப் பதவியிலிருந்து இராஜினமா செய்தார். பாலஸ்தீனியர் களின் உண்மையான சுதந்திரத்தினை யும், இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப் பினையும் முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் நாங்கள் உண்மையான சமாதானத்தினை அடைவதற்கான வாக் குறுதியை இந்த ஒப்பந்தம் வழங்காது என்பதை நான் புரிந்து கொண்டேன் என இவர் குறிப்பிட்டார். ஒஸ்லோ ஒப்பந்த அனுகூலங்களை வெளிப்படையாக சுட்டிக் காட்டவும் இவர் தவறவில்லை. ஹமாஸ்-பதாவின் உள்சண்டையைக் கண்டு கவலைகொண்டு வெளிப்படை

யான தெருத் தற்கொலைத்தனம் என்று கண்டித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 1974ல் யசிர் அரபாத் தொடங்கிய உரையில் கூறிய வார்த்தைகள் தர்வீஸ் உடைய தாகும். இன்று ஆலிவ் கிளையையும் ஒரு சுதந்திரப் போராளியின் துப்பாக்கி யையும் சுமந்து வந்திருக்கிறேன், ஆலிவ் (மரக்) கிளையை எனது கையி லிருந்து விழுந்து விட செய்யதீர்கள் என 1988ல் தர்வீஸ் பாலஸ்தீனிய சுதந் திர பிரகடனத்தை எழுதினர். பாலஸ் தீனிய தலைவர்கள் ஒருதலைப் பட்சமக சுதந்திர பிரகடனம் அல்ஜீரியவில் செய்தபோது இப்பிரகடனத்தினையே வாசித்தார்கள். சென்ற வருடம் ஹமாசும், அல்கதாவும் சண்டையிட்டுக் கொண்டபொழுது இது தெருவில் செய்யும் தற்கொலை என கண்டித்தார். இவர் 30 கவிதை தொகுதிகளையும் பல உரை நடை நூல்களையும் வெளி யிட்டுள்ளார். இவரது கவிதைகளில் பல பாடல்களாகவும் வெளிவந்துள்ளன. "எனது தாயின் ரொட்டிக்காக ஏங்கு கிறேன்” என்கிற கவிதை தாய் என்பது பாலஸ்தீனத்தை குறிப்பிடுவதாகவே கருதப்படுகிறது.
இவரது மரணத்தையொட்டி பாலஸ் தீனத்தில் இஸ்லாமிய மரபின்படி மூன்று நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. கவிஞர்களில் பலர் காலத்தில் வாழ் கிறார்கள். ஆனால் சிலர் காலத்தை வாழ வைக்கிறார்கள். அந்த வகையில் தர்வீஸ் காலத்தை வாழ வைத்த கவிஞர் ஆகவே கருதப்படவேண்டும். பாலஸ்தீனத்தில் இவரது கவிதைகள்
மட்டுமல்ல இவரது அரசியல் நிலைப் பாடும், கருத்துக்களும் பாலஸ்தீனத்து வரலாற்றிலிருந்து பிரித்து பார்க்கப்பட முடியாததாகி விட்டது என்பது மிகை
யாகாது.
"எல்லா அராபியர்களையும் உலகத் திலுள்ள எல்லா நேர்மையான மக்களை யும் வருத்தும் பாலஸ்தீனிய காயத்தின் கவிஞராக மட்டுமல்லாது இவர் ஒரு கவிஞர் திலகம்” என எகிப்திய பிரபல இரு மொழிக் கவிஞர் (அரபு - ஆங்கிலம்), அஹமட் புவாட் நையிம் குறிப்பிட்டமையும், பிரெஞ்ச் வெளி விவகார அமைச்சர் - மஹற்மூட் தர்வீஸ், முழு மக்களதும் நிலத்துடனான இணைப்பினை, அவர்களது சமாதானத் திற்கான அவாவினை எவ்வாறு வெளிப படுத்துவது என்பதனை தெரிந்து இருந் தார். அவரது சக சீவியத்துக்கான அழைப்பு விடுக்கும் செய்தி எதிரொலிக் கும் இறுதியில் கேட்கப்படும் என்கிற செய்தி இவரது மரணத்துடன் மறைந்து விடாது. உதவி ஜோர்ஜ் கிஸ்மி (வாஷிங்டன்) நன்றி - தேனி இணையத்தளம் (www.Thenee.com)
தர்வீஸின் கவிதைகளை தமிழில் பரவலாக அறிமுகப்படுத்தியவர்களில் இலங்கையர்களின் பங்கு கணிசமானது. அந்த வரிசையில் பண்ணாமத்துக் கவி ராயர், எம்.ஏ.நு.மான் ஆகியோரின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் எம்.ஏ. நுட்மான் அவர்கள் தொகுத்த "பலஸ் தீனக் கவிதைகள்” எனும் தொகுப்பு முக்கியமானது. அத்தொகுப்பில் தர் வீஸின் கவிதைகள் நுட்மான் அவர்
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 43

Page 24
களின் மொழிபெயர்ப்பில் முதன்மை பெற் றுள்ளன. அத்தொகுப்பில் இடம்பெற் றுள்ள தர்வீஸின் பிரபலமான கவிதை யான “வாக்குமூலம் இங்கே தருகிறேன்.
வாக்குமூலம்
எழுதிக்கொள் இதனை நான் ஒரு அரேபியன். எனது அட்டையின் இலக்கம் 30,000 எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு ஒன்பதாவது அடுத்த கோடையில் கோபம7 உனக்கு? எழுதிக்கொள் இதனை நான் ஒரு அராபியன் தொழிலாளருடன் கற்கள் உடைக்கிறேன் கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன் எனது எட்டுக் குழந்தைகளுக்கும் றொட்டித் துண்டினைப் பெறுவதற்காக புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக ஆயினும் கருணை கேட்டு நான் இரந்திடமாட்டேன் உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ் முழந்தாள் இட்டு நான் Loofb951 LOTI (6, 607 3.5/11 IIs T 2 60/45g, 2 எழுதிக்கொள் இதனை நான் ஒரு அராபியன் பேர் புகழ் அற்ற ஒருவனே நான் மூர்க்க உலகில் நிலைபேறுடையவன் யுகங்களுக் கப்ப7ல் காலத்துக் கப்பால் மல்லிகை நவம்பர் 2008 率 44
எனது வேர்கள் ஆழச்செல்வன. உழவர் குலத்தின் எளிய மகன் நான் ом о வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான் எனது தலைமுடி மிகவும் கருப்பு எனது கண்கள் மண் நிறமானைவை எனது அரபுத் தலை அணி ஆக்ரமிப்பாளர்களின் கைகளைப் பிறாண்டும் அனைத்துக்கும் மேலே தயவுசெய்து இதனையும் எழுது யாரையும் நான் வெறுப்பவன் அல்ல யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல ஆயினும் பட்டினி வருத்தும் போதிலோ, என்னைக் கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
(7562/60/If/
எனது பசியை அஞ்சிக் கவனமாய் இருங்கள் எனது சினத்தை அஞ்சிக் கவனமாய் இருங்கள்.
("பலஸ்தீனக் கவிதைகள்” தமிழாக்கம் எம்.ஏ.நு.மான். இ.முருகையன் முற்பதிப்பு - நவம்பர்-1981 வெளியீடு - வாசகர் வெளியீடு, வாசகர் சங்கம், நூறி மன்ஸில், கல்முனை - 6, இலங்கை)
அடுத்து மஹற்மூட் தர்வீஸ் அவர் களின் மறைவொட்டி அண்மையில் காலச்சுவடு இதழில் எழுதிய குறிப்பில் எம்.ஏ.நு.மான் அவர்கள் மொழி பெயர்த்து தந்துள்ள தர்வீஸின் இன் னொரு கவிதை இது.

அவன் அமைதியாக இருக்கிறான்
நானும்தான் அவன் அமைதியாக இருக்கிறான் நானும்தான் அவன் எலுமிச்சைத் தேநீர் அருந்துகிறான்
நான் கோப்பி குடிக்கிறேன் (எம்மிடையுள்ள வேறுபாடு இதுமட்டும்தான்.) அவன் என்னைப் போலவே ஒரு தொளதொளத்த சேட் அணிகிறான் நான் அவனைப் போலவே ஒரு மாத சஞ்சிகையைக் கூர்ந்து பார்க்கிறேன் நான் அவனை ஆவலுடன் பார்ப்பதுபோல் அவன் என்னைப் பார்ப்பதில்லை அவன் என்னை ஆவலுடன் பார்ப்பதுபோல் நான் அவனைப் பார்ப்பதில்லை அவன் அமைதியாக இருக்கிறான் நானும்தான்
அவன் பரிசாரகனிடம் ஏதோ கேட்கிறான் நான் பரிசாரகனிடம் ஏதோ கேட்கிறேன் ஒரு கறுப்புப் பூனை எங்களுக்கிடையே செல்கிறது நான் அதன் இருணிட ரோமத்தைத் தொடுகிறேன் அவன் அதன் இருண்ட ரோமத்தைத் தொடுகிறான் நான் அவனிடம் சொல்லவில்லை: இன்று வானம் தெளிவாக உள்ளது அதிக நீலம் அவன் என்னிடம் சொல்லவில்லை: இன்று வானம் தெளிவாக உள்ளது அவன்தான் காட்சியும் அவன்தான் காண்பவனும்
நான்தான் காட்சியும் நான்தான் காணர்பவனும் நான் என் இடது/ காலை நகர்த்துகிறேன் அவன் தன் வலது காலை நகர்த்துகிறான் நான் ஒரு பாடலின் இசையை மீட்டுகிறேன் அவன் ஒரு பாடலின் இசையை மீட்டுகிறான் எனக்கு ஆச்சரியம்: நான் என்னைப் பார்க்கும் கண்ணாடியா அவன்? பின் நான் அவன் கண்களை நோக்குகிறேன். அவனைக் காணவில்லை நான் அவசரமாகக் கோப்பிக் கடையை விட்டுச் செல்கிறேன் நான் நினைக்கிறேன். அவன் ஒரு கொலையாளியாக இருக்கலாம்
அல்லது அவன் ஒரு
வழிப்போக்கன7கவும் நானே கொலையாளியாகவும் இருக்கலாம்
நன்றி : காலச்சுவடு - செப்டம்பர்-2008
அடுத்து உயிர்மை சஞ்சிகையில் யமுனா ராஜேந்திரன் கவிஞர் மஹற்மூட் தர் வீஸைப் பற்றி "காத்திருத்தல் எனக்குப் பிடிக்காது" எனும் தலைப்பில் ஓர் அஞ்சலி குறிப்பு எழுதி இருக்கிறார். அக்குறிப்பில் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“மஹற்முத் தர்வீஸின் நினைவுப் பிரபஞ்சம் அவரது பெயர்ந்தலையும் வாழ்வினோடும், அழிக்கப்பட்ட அவரது கிராமத்தின் தெருக்களுடனும், ஆறை
மல்லிகை நவம்பர் 2008 45

Page 25
யாடப்பட்ட அவரது மூதாதையர்களின் சவக்குழிகளுடனும், சிதைந்த வார்த்தை களுடனும் தொடர்புபட்டது. பெயர்ந் தலைவது என்பது அவரளவில் நிலத்தி னோடு சம்பந்தப்பட்டது மட்டுமன்று. அவர் தேசத்தையும் தேசத்துடன் பிணைந்த வார்த்தைகளையும், தான் எங்கு சென்றாலும் சுமந்தலைகிறேன் எனக் குறிப்பிடுகிறார். அவர் சுமந்து திரியும் தேசம் ஒரு நூற்றாண்டு ஆக்கிர மிப்பின் வரலாறு கொண்டது. அவரது வாழ்வைப் போலவே அவரது கவிதை களும், சதா தனது எதிரிகளான இஸ் ரேலியர்களுடனான உரையாடலையும் இணக்கத்தையும் வேண்டுவதாகவே உள்ளதை நாம் அவரது படைப்பின் தடத்தைத் தொடர்ந்து செல்கிறபோது கண்டடைய முடியும்."
மேலும் யமுனா ராஜேந்திரன் அக்குறிப்பில் மஹற்மூட் தர்வீஸின் மரணம் குறித்த வாக்குமூலத்தை மொழி பெயர்த்துள்ளார். அக்குறிப்பும் உங்கள் பார்வைக்கு
மரணம் குறித்த வாக்குமூலம்
- மஹற்முத் தர்வீஸ்
நான் மரணத்தை இருமுறை எதிர் கொண்டேன். 1984ஆம் ஆண்டு ஒரு முறையும், 1998ஆம் ஆண்டு பிறிதொரு முறையும். 1998ஆம் ஆண்டு மருத்துவ அறிவின்படி நாம் மரணமடைந்து எனது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. 1984ஆம் ஆண்டு வியன்னாவில் நான் மாரடைப்புக்கு ஆளானேன். அது மிக ஆழமானது,
மல்லிகை நவம்பர் 2008 : 46
தெளிந்த வெளிச்சத்தில் மேகங்களின் மேல் உறங்குவது போல் இலகுவாக இருந்தது. அது மரணம் என நான் நினைத்திருக்கவில்லை. நான் வலியை உணரும் வரையிலும் நான் மிதந்து அலைந்தேன். வலிதான் நான் வாழ்வுக்கு மீளவும் திரும்பி விட்டேன் என்பதற்கான சமிக்ஞையாக இருந்தது. நான் இரண்டு நிமிடம் இறந்து போயிருந்தேன் எனப் பின்னால் எனக்குச் சொல்லப்பட்டது. 1998ஆம் ஆண்டு மரணம் மிகக் கொடுர மாகவும் வலி நிறைந்ததாகவும் இருந் தது. அது அமைதியான தூக்கம் இல்லை. எனக்கு பயங்கரமான துர்சொப் பனங்கள் வந்தன. அது மரணம் இல்லை. அது வலி மிகுந்த யுத்தம். மரணம் தன்னளவில் வலிப்பதில்லை. நான் அதற்குத் தயாராகவே இருக் கிறேன். அதற்காக நான் காத்திருக்க வில்லை. காத்திருத்தல் எனக்குப் பிடிக்காது. காத்திருத்தலின் துயரைச் சொல்கிற எனது காதல் கவிதை ஒன்று உண்டு. அவள், எனது பிரியத்துக்குரி யவள், அவள் வரத் தாமதமாகியது, அவள் வரவில்லை. எங்கே ஆரிய வெளிச்சம் இருக்கிறதோ அங்கே அவள் சென்றிருக்கலாம் என நான் சொன்னேன். சிலவேளை அவள் கடைத்தெருவுக்குச் சென்றிருக்கவும் கூடும். அவள் கண் ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தன் மீதே காதலில் வீழ்ந்து அவள் சொல்வாளாக இருக்கலாம், நான் எனக்குரியவள். பிறர் என்னைத் தொடு வது மிகக் கொடுமை என அவள் சொல்லலாம். அவள் சிலவேளை ஒரு விபத்துக்கு உள்ளாகி மருத்துவமனை யிலும் இருக்கலாம். நான் மலர்களும்

திராட்சை ரசமும் வாங்கி வரப் போயி ருந்து, நான் இல்லாத அந்தக் காலை நேரத்தில் அவள் எனக்குத் தொலைபேசி செய்திருக்கவும் கூடும். சிலவேளை அவள் இறந்திருக்கவும் கூடும். ஏனெனில் மரணம் என்னைப் போன்றது. அது காத்திருக்க விரும்புவதில்லை. நான் காத்திருக்க விரும்
பவில்லை. மரணமும் காத்திருப்பதை
விரும்புவதில்லை. மரணத்தோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் நான் அதற்குத் தயாராகவில்லை என்பதை அதனிடம் நான் தெளிவுபடுத்தி யும் இருக்கிறேன். எனக்கு இன்னும் எழுத இருக்கிறது. எனக்கு இன்னும் செய்யக் காரியங்கள் இருக்கிறது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது, எங்கெங்கும் யுத்தங் கள், மரணமே, உனக்கு நான் எழுதுகிற கவிதைகளுடன் எந்தச் சங்காத்தமும் இல்லை. அது உன்னுடைய சமாச்சாரம் இல்லை. நாம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு
செய்துகொள்வோம். காலம் இருக்கும் போதே முன்கூட்டியே சொல்லிவிடு. நான் தயார்படுத்திக் கொள்கிறேன். நான் உடை உடுத்துக் கொள்கிறேன். நாம் கடற்கரை யோரத்திலுள்ள ஒரு தேநீர் விடுதியில் சந்திப்போம். இருவரும் ஒரு கோப்பை திராட்சை மது அருந்துவோம். அப்புறம் நீ என்னை எடுத்துச் செல்லலாம். நான் பயந்து கொண்டிருக்கவில்லை. மரணத் தினால் நான் ஆட்கொள்ளப்பட்டிருக்கவும் இல்லை. அது வரும்போது அதனை எதிர் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். தீரத் துடனும் வீரத்துடனும் அது வரும்போது வரட்டும், ஒரே "விச்சில்" அதனை முடித்துக் கொள்வோம். இதய நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற வழிமுறைகளில் அல்ல, ஒரு திருடனைப் போல அது வரவேண்டாம். ஒரே வீச்சில் அது என்னை எடுத்துக் (olab FT6ĩ6T (BLfo. 2007
நன்றி : உயிர்மை - செப்டம்பர்-2008
ஒரு கருத்து
உங்களது இலக்கியச் சிரமங்களை எம்மால் ஒரளவு புரிந்து கொள்ள முடிகின்றது.
கடந்த இதழில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி "மல்லிகைப் பந்தலின் அடிப்பசளையில் தான் மல்லிகை மலர் மாதா மாதம் பூத்துக் குலுங்கி, வாசமாகி வருகின்றது எனக் குறிப்பிட்டிருந்தது எனது மனதைத் தொட்டது.
நான் ஒரு மாணவி. அப்பா, அம்மா தரும் சிறு சிறு பணத்தையெல்லாம் உண்டியலில்
போட்டுச் சேமித்து வருவது வழக்கம்.
எனது பிறந்த நாளன்றுதான் அந்த உண்டியலைத் திறப்பேன். எனது சிறு சிறு தேவைகளுக்கு அந்த உண்டியல் சேமிப்பைப் பயன்படுத்தி வருவேன்.
உங்களது மனந் திறந்த அனுபவத்தைப் பார்க்கும்பொழுது,
இனிமேல்
உண்டியலைத் திறந்ததும், அதிலுள்ள பணத்தைக் கொண்டு மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையே வாங்குவது என தீர்மானித்துக் கொண்டேன்.
wrS2Vivrayvo
செல்வி. ரஞ்சிதமலர்
மல்லிகை நவம்பர் 2008 : 47

Page 26
ஜீவாவின் மல்லிகைத் தோட்டம்'
செ. கணேசலிங்கன்
சொல்லும் செயலும்
‘புத்திஜீவிகள் சமூக வளர்ச்சியைக் காணார்.
செயல் வீரரே மனித மேம்பாட்டை நோக்குவர்' என இத்தாலிய மார்க்சிய அறிஞர் கிராம்சே கூறி
யுள்ளார்.
இதே கருத்தை ஒட்டியே வளர்நிலைக்கும் சொல்லுதல் யாவர்க்கும் எளிது; அரியன வாம் சொல்லிய வண்ணம் செயல்" (664) என்பார்கள். இக்கூற்றுகளின் உண்மையை எத் துறையில் நோக்கினும் காணலாம்.
தமிழ் இலக்கிய சஞ்சிகை வெளியீடுகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆர்வமுள்ள அறிஞர்களும், இத்துறை ஆபத்தானது என அறிவுறை கூறுவர். ஒரு சிலர் அப்போதும் முயல்வர். இடையில் பல காரணங்கள் கூறி நிறுத்தி விடுவர்; சிற்றிதழ்கள் பலவற்றைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம்.
இத்தகைய சூழலில் ஜீவா ஒரு செயல் வீரன் என்றே கூறவேண்டும். மல்லிகைத் தோட்டத்தை மரிக்க விடாது 50வது ஆண்டை நோக்கி மன உறுதியுடன் முன்னேறி வருபவர். கலை இலக்கியத்துறை பல துறைகளிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இடம் தந்து மேம்படுத்தி வருபவர். பல்வேறு அரசியல் சூழல்களிலும், நெருக்கடியிலும் சோர்ந்து விடாது முன்னேறி வருபவர்.
ஈழத்துக் கலை, இலக்கியத்துறையில் முற்போக்கு வழியை இன்றும் காட்டி நிற்பவர்.
ஜீவாவின் மூச்சு
மல்லிகைத் தோட்டம் ஜீவாவின் உயிர்மூச்சு. படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரால் பண்படுத்தப்பட்டு வளர்ந்து வருவது. ஆரம்ப காலத்திலிருந்து அன்னார் எழுதிய சிறுகதை மல்லிகை நவம்பர் 2008 ஜ் 48
 

கள் தொகுதியாக வெளிவந்தவை, அவரது படைப்பாற்றலைச் சுட்டி நிற்கும். அவரது சிறுகதைகள் யதார்த்தமானவை. கற்பனை குறைந்தவை. வேகம் பெற்றவை. யதார்த்த மாக மனித வாழ்வைக் கூறத் தயங்குபவர் களே கற்பனையை, அதீத கற்பனையை நாடுகின்றனர் என்பது என் கருத்து. மார்க் சிய அறிஞர் கருத்துமாகும். உழைக்கும் மக்களை மேம்படுத்துபவை அவையே. கற் பனை, அதீத கற்பனைகள் பூர்ஷ்வா வர்க் கத்தவரது பொழுதுபோக்கிற்கே பயன்படு பவை. ஆகவே ஜீவா பாட்டாளிகளின் எழுத் தாளனாக முற்போக்கு அணியில் நிற்பவர். எம்மைப் போலல்லாது, தமிழ் மொழி மூலம் வளர்ந்தவர்.
மல்லிகைத் தோபட உரங்கள் :
ஜீவாவின் ஆசிரிய தலையங்கங்கள் பல்வேறு துறைகளில் ஆணித்தரமாக நிற்பவை. மற்றவர் சஞ்சிகைகளில் இத் தகைய துணிச்சலைக் காணமுடியாது.
தூண்டில் பதில்களில் ஜீவாவின் தனி மனித செருக்கைக் காணலாம். இது அவ ரது தற்புகழ்ச்சி அல்ல, அவரது ஆளுமை.
அடுத்து, அவரது சிறப்பு மல்லிகைத் தோட்டத்தின் நிர்வாகத் திறமை. அது நீண்ட கால அநுபவத்தின் தேர்ந்த நிலை. நிர்வாகம் என்பதும் தனியாக கற்க வேண் டியதொரு துறையாகும். கட்டுரை, கவிதை களைப் படித்து, தேர்ந்து செப்பனிட்டு உரிய முறையில் அச்சிட்டு வெளியிடுபவர். பத்தி ரிகைத் தாள், புரூப் பார்த்து பக்கங்கள் ஆக் குதல், அச்சிடல், அட்டையை அழகுபடுத் தல், கட்டுதல், இவற்றுக்கும் மேலாக சிக் கனம், விற்பனை, விளம்பரம் சேகரித்தல், அவற்றின் பணம் பெறுதல், விற்பனைப்
பணம் சேகரித்தல். இவ்வாறான துறை களில் அவர் அநுபவமும் தேர்ச்சியும் பெற்றுள்ளார். இவையே அவரின் திறமை. வெற்றி இரகசியங்கள்.
திரும்பிப் பார்க்கிறேன்
ஆறு தசாப்தங்களுக்கு மேலாகப் பின் னோக்கிப் பார்க்கிறேன். யாழ். கஸ்தூரியார் வீதியின் குளத்தோரமான ஒரு முடி திருத் தும் சலூன். அங்கே அத்துறையிலும் சிறப் புறப் பணியாற்றும் ஜிவா, நாமெல்லாம் வாங்குகளிலும், நாற்காலிகளிலும் உட் கார்ந்து கலை இலக்கியங்கள் பற்றி அரட்டை அடிப்போம். விவாதிப்போம். அப் போதும் ஜீவாவின் உற்சாகமான குரல் இன்று போலவே எதிரொலிக்கும். தெரு வாகனங்களின் ஒலியினை மீறிய நிலை யில் கேட்கும். அறையில் முடிகள் குவிந்து விடின், நாமே தும்புத்தடியில் ஒதுக்கி விடு வதுமுண்டு.
வெற்றுப் பேச்சாடல் தொடரும் வேளையிலும், சொல்வதைச் செய்தல்' போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டோம். சாதி ஒழிப்பு, கோவில்களை அனைவருக் கும் திறந்து விடல், கோவில்களில் உயிர்ப் பலி ஆகியவற்றையும் இயக்கம் அமைத்து எதிர்ப்பதில் ஈடுபட்டோம். அவ்வேளை கொம்யூனிஸ்ட் கார்த்திகேசனை ஜீவாவே அறிமுகப்படுத்தினார். அவர் சார்ந்த இயக் கத்திலும், கூட்டங்களிலும் பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டோம்.
சாதி ஒழிப்பை நோக்கி யாழ். முற்ற வெளியில் நாம் ஏற்பாடு செய்த பரபரப்பான கூட்டம்; கார்த்திகேசன் வீட்டு மேசை, கதிரைகளுடன் மேடையில் ஏறியவேளை
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 49
ধ্ৰুর্গ

Page 27
சோனாமாரியான மழை கொட்டியது.
இன்றும் மனநோ ஏற்படுத்துகிறது.
6.5ITLi GBuTITITLeLib
ஆயினும் ஜிவாவும் மற்றும் தோழர் களும் நானும் சோர்ந்துவிடவில்லை. மீண்டும் அதே இடத்தில் மாபெரும் கூட்டம் நடத்தினோம். பின்னர் யாழ். இந்துக் கல் லூரியிலும் நடத்தினோம். கந்தர் மடத்தி லுள்ள பிள்ளையார் கோவிலை அனை வருக்கும் திறந்துவிட ஏற்பாடு செய்தோம். ஜி.ஜி.பொன்னம்பலம் வந்து திறந்து வைப்ப தாக விளம்பரம் செய்தோம். கடைசி நாள் அவர் மறுப்புத் தெரிவித்ததைச் சார்ந்து, சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றதாக, வேட்டையாடத் தொடங்கினர். அக்கூட்டத் திற்குத் துண்டுப் பிரசுரம் வழங்க தோழர் குலவீரசிங்கமும் நானும் சுன்னாகப் பகுதி யில் சைக்கிளில் விநியோகித்த வேளை, எம்மைத் துரத்தி, சந்தி மூலையில் நின்ற வர் ஓடிவந்ததும் நினைவில் வருகிறது.
பொலிஸார் எங்களை
இவற்றை எல்லாம் கடந்து ஜீவா நமது ஊருக்கும் வீட்டுக்கும் வந்த நாட்களும் மறக்க முடியாதவை.
பின்னர் கொழும்புக்கு வேலைக்குச் சென்ற போதும் யாழ் வாரும் காலமெல்லாம் கலை, இலக்கிய வெறியிலிருந்து ஜீவாவோ மற்றும் தோழர்களோ ஒதுங்கிவிடவில்லை.
நெருக்கடிகளிடையேயும்
அரசியல் மாற்றங்கள் வேகம் பெற்றன. பல்வேறு இயக்கப் போராட்டங் களிடையே பின்னடைவும் ஏற்பட்டன. நான்
தனியாகக் 'குமரன்” என்ற மாத மார்க்சிய
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 50
KT:
இதழைத் தொடங்கினேன். 77 இதழ்கள் மட்டுமே வெளிக்கொணர முடிந்தது. பின் னர் அகதி நிலையில் தமிழ்நாடு சென்றேன்.
ஜீவா கொழும்பிற்கு வந்தும் மல்லி கையை விட்டுவிடவில்லை. எத்தனை
நெஞ்சழுத்தம், இன்னல்களுக்கிடையேயும் மல்லிகைத்
உழைப்பு, மனநோ,
தோட்டம் வளர்ந்து வருகிறது. எவராலும் எட்ட முடியாத சாதனை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
பற்பல பசுமையான நினைவுகளும், கசப்பு நினைவுகளும் ஏற்பட்ட போதும், ஜீவா ஒரு ஜீவநதியாக ஒடிக்கொண்டிருக் கிறான். பெரிய தீரச் செயலே.
அன்று யாழ்ப்பாணத்தில் நடந்தது
- டொமினிக் ஜீவா
எனது அறுபதாண்டுக் காலப் பொது வாழ்க்கையில் நான் ஏராளமானவர்களைச் சந்தித்திருக்கின்றேன். நெருங்கிப் பழகி யிருக்கின்றேன். இதில் பல்வேறு வகைப் பட்ட குணாம்சம் கொண்டவர்களும் அடங் குவர். இலக்கியம், தொழில், அரசியல், இன - சன உறவினர் எனச் சொல்லப்படும் வட்டத்தினர் பலருடன் எனக்கென நட்பு மற்றும் மல்லிகை உறவுகள் வேறு. பொதுவாகப் பல்வேறு வகைப்பட்டவர்களுடன் நான் நேசமாக நெருங்கிப் பழகி வந்த போதிலும் கூட, இலக்கிய நண்பர்களுடன்தான் நான் நெருங்கிய பாசம் கொண்டு பழகியிருக் கிறேன். நெஞ்சார நேசித்து வந்திருக்கின் றேன். அதில் நால்வர் முக்கியமானவர்கள்.
வட்டம் விரிவுபட்டதொன்று.

இது ஒரு வரலாற்று ஆவணப் பதிவுக்குரி யவை. ஒருவர் செ.கணேசலிங்கன். அடுத்த வர் எஸ்.பொன்னுத்துரை; மூன்றாமவர் ரஸிகமணி கனகசெந்திநாதன், இறுதியான வர் கனகரட்னா. கணேசலிங்கத்தை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய வரே எஸ்.பொன்னுத்துரை அவர்கள்தான்.
இந்த நால்வருமே நான் ஆரம்பத்தில் தொழில் செய்த சலூனுக்கு வந்து என் னுடன் சகோதரர் போல நேசமாகப் பழகி வந்தவர்கள். நட்பென்றால், அப்படியொரு நட்பு
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் னர் என நினைக்கின்றேன். ஒரு சனிக் கிழமை காலை நேரம்.
ஜோசப் சலூனில் நான் தொழில் செய்து கொண்டிருக்கின்றேன். தொழில் அழுத்தம் என்னைச் சோர்வடையச் செய்து விட்டது. அன்றைக்கென்று சக தொழிலாளி கள் இருவர் லீவெடுத்து, நின்று விட்டனர்.
நண்பன் கணேசலிங்கன் உரும்பிரா யிலிருந்து சைக்கிளில் என்னைக் காண வந்திருந்தார். அவர் அப்பொழுது எழுது வினை ஞராகத் திருகோணமலையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே வந்தவர், எனது அவல நிலையின் பரிதாபத்தைப் பார்த்துவிட்டு, "டேய், ஜீவா காலைச் சாப்பாடு சாப் பிட் டிட்டீயே" என்று கேட்டார்.
'இல்லையடாப்பா! காலமையில யிருந்து ஒரே வேலை. இடைவெளி இல்லை. சாப்பிட முடியேல்லை!" இது எனது பதில்.
"சரி. சரி. பொறு வாறன்!"
அரை மணித்தியாலம் சென்றிருக்கும்.
ஒரு கையில் மசாலாத் தோசைப் பார் சலுடனும், சோடாப் போத்தலில் கோப்பியுட னும் காட்சி தந்தான் நண்பன். ஒரே குடலுக் குள் கிடந்து பிறந்த சகோதரன் ஒருவனுக் குக் கூடத் தோன்றியிருக்காத பரிவு, அது
உண்மையாகவே நான் நெகிழ்ந்து போய்விட்டேன்!
"சரி. சரி. நான் கடையைப் பாத்துக்
கொள்ளுறன். நீ போய்ச் சாப்பிட்டுட்டு வா!"
பசி என்னை உடன் உடன்பட வைத் தது. சோர்வு தீர்ந்து, உள்ளே வந்தால், நான் வெட்டிக் கழித்த மயிர்க் கத்தைகளைத் தும்புத்தடியால் கூட்டிப் பெருக்கிக் கொண்டி ருந்தான், அந்த நண்பன். எனக்கோ நெஞ்சு சிலிர்த்தது.
'கணேஷ், சாப்பாடு கொண்டு வந்து தந்தாய். அது சரி. இப்ப செய்ய நினைக் கிறியே இந்த வேலை, இது எங்கட நட்பை நீ கொச்சைப்படுத்திற காரியம். இதுவே போதும். போதும். நிறுத்து!" என்று கத்தினேன். இந்த ஆத்மார்த்த நட்பின் மொத்த உருவம்தான், கணேசலிங்கன்.
மேலைத்தேய இலக்கிய உலகில் பாரிஸ் என்பார்கள். லண்டன் மாநகர் எனப் பொச்சடிப்பார்கள். மாஸ்கோ என மயங்கு வார்கள். இத்தகைய இலக்கிய நண்பர்கள் சந்திப்பு இப்படியும் அங்கு நடக்குமா?
இது யாழ்ப்பாணத்தில் ஒரு சலூனுக் குள் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இன்று இருவருமே சாட்சிகளாக இருக்கின்றோம்.
- எங்களது இளமைக் கால நட்பு அத்தனை பவித்திரமானது. அற்புதமானது. என்றுமே மறக்க இயலாதது.
மல்லிகை நவம்பர் 2008 & 51

Page 28
நினைவழியா காமகள்ா 20
மறுவாசிப்பு
– coọ6ã
அடையா நெடுங்கதவமாகத் திறந்திருக்கும் “சமறிக்” கதவு அன்று மூடி யிருந்தது. ஒருவரது சிலமனையும் காணவில்லை. 'எங்கே போய்த் தொலைந்திருப் பார்கள்?’ என்று யோசித்தபடி, உள்ளே போனேன்.
சாப்பாட்டு மேசையைச் சுற்றி எல்லோரும் நின்றிருந்தார்கள். சாமியார் மட்டும் ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தான். அவன் தலை குனிந்தபடி இருந்தது.
“என்ன நடக்கிறது. இங்கே?"
“தேவன் முதலிலை நீயும் இரு." என்றபடி ஒரு கதிரையை என்பக்கம் தள்ளினான், ஈசன்,
‘சாமியாருக்கு என்ன நடந்தது?. சுகமில்லையா..?”
"இவனுக்காக...? நல்லாத்தான் இருக்கிறான். அதுவும் வலு உசாராயிருக் கிறான். ' குகன், கோபத்தோடு சொன்னான்.
“என்னடா..? ஒரு மாதிரி மறுமொழி சொல்லுறியள்.?” ஏதோ பிரச்சினை என்று விளங்கியது.
'மிசஸ். சில்வா வந்து எல்லோரையும் ஏசிப்போட்டுப் போறா. ' சத்தி, மெதுவாகப் பதில் கூறினான்.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 52

பிரச்சினை என்னவாக இருக்க லாம்? என்பதை ஊகிக்க முடிந்தது. வழக்கம் போல, “சோமாவதி சம்பந்தப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அதில் ‘சாமியாருக்கு சம் பந்தம் இருக்க முடியாது. அவன் ஒழுங்கானவன். ஒருவரோடும் வம்புக்குப் போகாதவனாச்சே!
"சரி விசயத்தைச் சொல்லு.?” என்று ஈசனைக் கேட்டேன்.
‘விசயம் தலைக்கு மேலை
போட்டுதடா..!"
"ஏன்.? என்ன?”
"சோமாவதி. "எக்ஸ் பெற்றிங் காம். இவன் சாமியார்தான் குழப் படிக்காரன் என்று மிசிஸ் சில்வா சத்தம் போட்டா. நாங்கள் எல்லாரும் தறுதலையளாம். நம்பி வீட்டிலை இருக்க விட்டால். நாயஸ் மாதிரி நடக்கிறமாம். எல்லாம் இவனாலை வந்த வினை' ஈசனின் கோபம்
அவனது முகத்தில் தெரிந்தது.
உச்சந் தலைக்குள் என்னவோ செய்தது. விசயம் இவ்வளவு தூரம் போயிருக்கிறது, எனக்குத் தெரியாமல். அதுவும் சாமியார். நம்பவே முடிய வில்லை. மிகவும் ஒழுங்கானவன். தன் வேலை உண்டு, கோயில் உண்டு என்று திரிபவன். பெயரை விட, 'சாமியார்’ என்ற அவனது பட்டம்தான் நடை
முறையில் இருந்து வந்தது.
"நான் நம்பமாட்டன்..! டேய்
சாமியார்! நீ என்னடா சொல்லு
றாய்.. ???
“தேவன், நான் சொல்லிறதெல் லாம் சொல்லிப் போட்டன். சத்தியமா எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! ஆனா, இவங்கள் நம்புறாங் கள் இல்லை. சோமாவதி பொய் சொல்லுறாள். ' சாமியாருக்குத் தொண்டை அடைத்தது. குரலும் கூடத் தழதழத்தது.
“டேய். நீங்களெல்லாம் ருத்தி ராட்சப் பூனையளடா" குகன் மோச மாகத் திட்டினான்.
வழக்கமாகச் சோமாவதியைப் பார்த்துப் பல் இளிப்பவன், அவன் தான். அவனுடைய சேட்டை தாங் காமல் மிசிஸ் சில்வா என்னிடம் பல தடவை குறைப்பட்டிருக்கின்றா.
மிசிஸ் சில்வா வீட்டின் பின்புறத் தில் இருக்கும் வளவில் உள்ள பழைய வீடுதான் எங்கள் சமறி. அதன் சொந் தக்காரியும் அவதான். சோமாவதி, மிசிஸ் சில்வா வீட்டு வேலைக்காரி. சினிமாக் கதாநாயகி மாதிரி இருப் பாள். வழக்கமாக அவளுடன் சேட்டை விடுவது குகன்தான். ஈசனும் இடைக் கிடை பல்லைக் காட்டுவான். இருவரை யும் திட்டி மேய்ப்பது என் வேலையாக இருந்தது.
மிசிஸ் சில்வாவைத் தேடிப் போனபோது, கணவரும் கூடவே இருந்தார். ஒய்வு பெற்ற பொறியிய
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 53

Page 29
லாளர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். இன்று வாயைத் திறக்கவில்லை. சிரிக்கவும் இல்லை.
‘சாமியாராலைதான் பிரச்சனை என்று சொன்னீர்களாம். நான் நம்பவே மாட்டேன்...!" என்றேன்.
"நானும் முதலில் நம்பவில்லை. சோமாவதி விடாப்பிடியாகச் சொல் கிறாள். அவள் வீட்டை விட்டு ஒரு இடமும் போவதில்லை. உம்முடைய நண்பன் அடிக்கடி நைற் டியூட்டி செய்து விட்டுப் பகலில் சமறியில் நிற் கின்றான். நானும் பகலில் பாட சாலைக்குப் போய்விடுகிறேன். எனவே அவள் சொல்வதை நம்பவேண்டித்தான் இருக்கிறது."
“சோமாவதி சொன்னால் நம்பி விடுவதா? சாமியார் நல்ல பொடியன். ஒரு குழப்படியும் செய்யமாட்டான். அதிகமாய் பேசவும் மாட்டான்.
அப்படியிருக்க."
"அமுசடக்கியா இருப்பவங்களை நாம நம்பேலாது!’ மிசிஸ் சில்வா இடைவெட்டினா,
““Fif?..
விசாரிச்சுப் பார்க்கவா..?'
நான் சோமாவதியை
'நீரென்ன விசாரிக்கிறது? இவ்வளவு தூரம் நடந்த பிறகும். உங் களை விட்டிலை வைச்சிருக்கிறது எங் கடை பிழை. உடனை வீட்டாலை வெளிக்கிடுங்கோ...' எஞ்சினியர்
சில்வாவுக்கும் கோபம் வருமென்பதை
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 54
அன்றுதான் அறிந்து கொண்டேன்.
“தேவன், உம்மை நம்பித்தான் வீட்டைத் தந்தன். இது வெளியிலை தெரிந்தால், பள்ளிக்கூடத்திலையும் எனக்கு மரியாதை கிடைக்காது. சோமா வதியின்ரை பிரச்சினையை எப்படி யாவது சமாளிச்சுக் கொள்ளுவன். இன்னும் ஒரு கிழமைக்
குள்ளை எல்லோரும் வீட்டை விட்டுப்
ஆனால்,
போயி டோணும். சாமியாரை இண்டைக்கே அனுப்பி விடும். அவ்
வளவுதான். நீர் போகலாம்."
மிசிஸ் சில்வாவுடன் தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கவில்லை.
சமறியில் இருந்து வெளிக்கிட்ட சாமியாருடன் பஸ் ஸ்ராண்ட் வரை போனது நான் மட்டுமே.
நீ இதைச் செய் திருக்கமாட்டாய். எனக்கு நம்பிக்கை
இருக்கிறது. இருந்தாலும். ஏதாவது வித்தியாசமா நடந்ததா?."
"சாமியார்.
“தேவன். நீயுமா இப்படிக் கேட் கிறாய்? என்ன விளங்கிக் கொண்ட
ஒருவன் என்று உன்னை நான் நினைச்
சிருந்தன். ' சாமியார் அழுதே விட்டான்.
"நீயுமா, புரூட்டஸ்?" என்ற
கேள்வி போல் அது என் மனதைக் குடைந்தது.
"சரி. அடுத்த கிழமை உன்னை
வந்து சந்திக்கிறன்” என்றபடி புறப் பட்டேன்.

சமறிக்கு உடனே திரும்ப மன மில்லை. குணசிங்கத்தின் அறையை நோக்கி நடந்தேன். மனதில் இருந்ததை அவனிடம் கொட்டிய பிறகு ஆறுத லாக இருந்தது.
எல்லாவற்றையும் கவனமாகத்
திருப்பித் திருப்பிக் கேட்டான்.
'இதெல்லாம். ஆறப்போட்டு விசாரிக்க வேண்டிய விசயமடா...! வாடா இப்ப என்னோடு' என்று பம்பலப்பிட்டி ரெஸ்ரோரண்டுக்குக் கூட்டிப் போனான்.
சாமியார் செய்திருக்க மாட்டான் என்ற கருத்தை அவனும் ஆமோதித் தான். மருந்து உள்ளே இறங்க, உசார் ஏறியது.
“தேவன் ஒண்டுக்கும் யோசி யாதை... ! எனக்குப் பொலிஸ் ஒ.ஐ.சி"யைத் தெரியும். நான் கண்டு பிடிப்பன். நீ போ!' என்று அனுப்பி வைத்தான்.
சமறிக்குத் திரும்பியபோது மற்ற வர்களும் பெட்டி படுக்கைகளோடு
ஆயத்தமாய் இருந்தனர்.
மூன்றாம் நாளாக இருக்க வேண்டும். முன்விட்டில் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தேன். சோமாவதி அழுது குளறிக் கொண்டிருந்தாள். மிசிஸ் சில்வா பத்திரகாளியாக மாறிக் குதித் துக் கொண்டிருந்தாள். எனக்கேன் வம்பு என்று பேசாமல் வந்து அறைக்குள் படுத்துவிட்டேன்.
கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தபோது, மிசிஸ் சில்வா நின்றி ருந்தா. அப்படியொரு கோலத்தில் அவவை நான் கண்டமே இல்லை. தலைமயிர் குழம்பி, முகம் கறுத் திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. அழுதிருப்பா என்று பட்டது.
"வாங்கோ. மிசிஸ் சில்வா. எல்லாரும் போயிட்டினம். நானும் நாளைக்குப் போயிடுவன். இந்த மாத வாடகையை போவதற்குள் தாறன்.” அவவோடு வேறு எதுவும் பேச வேண்டுமென்று தோன்றவில்லை.
“தேவன். என்னை மன்னிச்சுக் கொள்ளும்.' சொல்லும் போதே மிசிஸ் சில்வா அழ ஆரம்பித்து
விட்டா.
'கவலைப்படாதையுங் கோ. மிசிஸ் சில்வா, இந்தப் பிரச்சினை களை மறந்து இருக்கலாம் எண்டுதான் நானும் பார்க்கிறேன்."
“இல்லை. தேவன். ஒரு பாட சாலை அதிபராக இருந்தும், இதை நான் சரியா விசாரிக்க இல்ல. உம்மடை பிரண்ட். . . இல்லை."
சாமியாரிலை பிழை
மனதில் இருந்து பெரிய பாரம் இறங்கியது போன்று இருந்தது. இப் போதாவது சாமியாரைப் பற்றி விளங்கிக் கொண்டாவே என்று சந்தோஷமாக இருந்தது.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 55

Page 30
'நான் சொல்லக்கை நீங்கள் இப்ப மாத்திரம் எப்பிடித் தெரிய வந்தது.?”
ஒத்துக் கொள்ளவில்லை.
“பொலிசாலை வந்து. சோமா வதியை இரண்டுநாள் விசாரிச்சவை. பிறகுதான் உண்மை என்னவெண்டு தெரிஞ்சுது. சோமாவதி முதலிலை
பொய் சொல்லி இருக்கிறாள்.'
"சாமியார். இல்லையெண்டால். காரணம் யாரெண்டு. கண்டு பிடிச் சாச்சோ..?' ஆவலை அடக்கமாட்
டாமல் கேட்டேன்.
மிசிஸ் சில்வா. குனிந்து நிலத் தைப் பார்த்தபடியே இருந்தார். கண் களில் இருந்து மீண்டும் கண்ணிர் வடிந்தது.
“இவர். என்னாலையும் நம்பவே முடிய
வில்லை. பொலிஸ் விசாரிச்ச பிறகு
எங்கடை இவர்தான்.
தான் சோமாவதி உண்மையைச் சொன் இவரும் ஒத்துக்
கொண்டார்.”
னாள். . .
கதைக்க முடியாமல் மிசிஸ் சில்வா விக்கி, விக்கி அழுதா. நாங்கள் பட்ட வேதனையை அவவும் படட்டும் என்று பேசாமல் இருந்துவிட்டேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்?
அடுத்தநாள் காலை. சமறித் திறப்பைக் கொடுத்தபோதுதான் மிசிஸ் சில்வாவைக் கடைசியாகப் பார்த்தேன். அந்தக் கம்பீரமான முகம் வாடிப் போய்க் கிடந்தது.
குகனும் . . . ஈசனும் விசயம் தெரிந்து மன்னிப்புக் கேட்டார்கள். அதன் பின்பு அவர்கள் தொடர்பும் விட்டுப் போயிற்று. ஆனால், சாமியார் இன்றுவரை என் நண்பனாகவே
இருந்து வருகிறான்.
7
சுற்றித் திரிந்து வருகின்றீர்கள்
எங்குதான் பிரச்சினை இல்லை?
நுவரெலியா
NAS
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 56
கழதம்
நீங்கள் எழுதியும் பேசியும் சும்மா சும்மா சுப்பற்றை கொல்லைக்குள்ளேதானே
கொஞ்சம் கொழும்பை விட்டு வெளியே காலடி வையுங்கள். பிரச்சினைதான்.
பல பிரதேசங்களுக்குச் சென்று வந்தால்தான் வாசகர்களின் மனநிலை தெரியும். மல்லிகையும் பல பிரதேசங்களுக்குச் சென்றடையும்.
நாடு பூராவும் உங்களது ரசிகர்கள், அபிமானிகள் பல பேர் இருக்கின்றனர். அவர்களையும் நேரில் பார்த்த மாதிரி இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
༄༽
எஸ். ஒானதேசிகன்

இருண்டாஉேலக டித்தத்தின் பின் ஜேர்கன் இலக்இம் வளர்ந்வுெ,ே சிவால்ப்ஷன்ஸ் Uோஷheடுே
- இப்னு அஸ்மத்
1945ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகள் வீசப் ட் 60. இதுகால வரையில் ஜேர்மன் பாரி யளவில் தோல்வி கண்டிருந்த நிலையில் ஹிட்லர் உட்பட்ட அவரது அதிகாரிகள் ஜேர்மனியர்களை தங்கள் 1 க்கம் ஈர்த்து வைத்துக் கொள்வதற்கான பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். (புத்தத்தின் தோல்வி கண்முன்னே தெரிந்தும் கூட ஹிட்லரின் நிர்வாகம் தனது படைகளின் ஆளணிப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அதுவரையில் நகரங்களில் எஞ்சியிருந்த பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களையும். ஏனையவர்களையும் புத்த களத்திற்கு அனுப்பும் செயற்பாடுகளில் இறங்கியிருந்தது.
இறுதியில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதுடன் நாசிக்களின் ஆட்சி கவிழ்ந்து விட்டது. இரண்டாவது உலக யுத்தமானது ஜேர்மனுக்குத் தோல்வியைத் தந்துவிட்டு, முடிவுற்றது.
1945ம் வருடம் ஜூன் மாதம் 5ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பர்லின் பிரகடனத்தின்படி அமெரிக்க ஐக்கிய குடியரசு, சோவியத் தேசம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஜேர்மனியின் ஆட்சியை ஏற்றுக்கொண்டன. நட்புசார் அரச பிரதிநிதிகளது தலைமையில் ஜூலை 17ம் திகதி முதல் ஆகஸ்ட் 12ம் திகதி வரை நடைபெற்ற POStdam (போஸ்ட்டாம்) மாநாட்டின் மூலம் ஜேர்மனை அரசியல் ரீதியாகப் பலப்படுத்து வதற்காக நாசி எதிர்ப்பு, அதிகாரப் பரவலாக்கல், ஜனநாயகத்தை நாட்டில் நிலை நிறுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் முன்பாக ஜேர்மன் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது. அரசியல் ரீதியிலும் நிலையற்றத் தன்மையைக் கொண்டிருந்ததுடன் அதன் இலக்கியத்துறையும் பின்னடைவு கண்டிருந்தது.
மல்லிகை நவம்பர் 2008 霹 57

Page 31
யுத்தத்தினால் மட்டுமல்லாது, நாசிக் களின் ஆட்சியில் பாதிக்கப்பட்டிருந்த மக்களது மனங்களை மீண்டும் கட்டி யெழுப்ப வேண்டிய நிலை அன்றைய ஜேர்மனிக்கு எற்பட்டிருந்தது. மனித
வாழ்க்கையானது சிதைவுகள், சாம்பர்.
தூசிகள் போன்றவற்றுக்கிடையே கை விடப்பட்ட நிலையே காணப்பட்டது. மக்கள் வாழ இருப்பிடங்கள் இல்லாமை, அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய உணவுப் பற்றாக்குறை போன்ற இவ் வாறான காரணங்களால் கறுப்புச் சந்தை வர்த்தகர்களினது சுரண்டல்களுக்கு உட் படுதல் போன்ற விடயங்களுக்கும் மக்கள் முகங்கொடுக்க நேரிட்டிருந்தது.
இதனிடையே சிதைந்து போயிருந்த நகரங்களை புனர் நிர்மாணம் செய்வதற் காக ஜேர்மன் பெண்கள் மிகுந்த அர்ப் பணிப்புடன் செயற்பட்டனர். இவர்கள் நகரங்களில் காணப்பட்ட சிதைவுகளை அகற்றுவதில் தொடர்ந்து ஈடுபட்டனர். Qg560IT6Ö O6Yffä56ff “Trummer frauen (ட்ரெமர் ப்ரவன்) சிதைவுப் பெண்கள் என்ற புனைப் பெயர் கொண்டழைக்கப் பட்டனர்.
ஜேர்மன் மொழியில் சிதைவுகளைக் (g5?II îL Trummer 66jp Glg|T6ö LJuJ6jI படுத்தப்படுகிறது. யுத்தத்தினாலும், நாசிக்களது குரூர ஆட்சியினாலும் உயிர் பிழைத்துக் கொண்ட குழந்தை கள் இந்தச் சிதைவுகளுடன் விளை யாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருப் பதை சர்வ சாதாரணமாகக் காணக் கூடிய நிலை உருவாயிற்று. நாட்டை பொருளாதார ரீதியில் மீளக் கட்டிெ யழுப்ப வேண்டியதுடன், இதற்கு மக் மல்லிகை நவம்பர் 2008 ஜ் 58
களின் மனநிலையை ஒருங்கமைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டி ருந்தது. இதன்போது இலக்கியத்தின் ஊடாக மக்களது மனங்களுக்குக்
கொடுக்க வேண்டியவை என்ன? என்பது
இலக்கியவாதிகளுக்குள் எழுந்த வினா வாயிற்று.
1949ம் வருடம் அதாவது யுத்தத் தின் பின் நான்கு வருடங்கள் கழிந்த நிலையில், ஜேர்மன் சமஷ்டி அரசாக மாற்றம் கண்டதையடுத்து, இக்கால கட்டத்தில் அரசியல் ரீதியில் அங்கு நிலையான தன்மைகள் ஏற்பட ஆரம்பித் திருந்தன.
இதிலிருந்து ஜேர்மன் தனக்கே உரித்தான அரசியல் மற்றும் இலக்கியப் பாதையை நோக்கிச் செல்லும் வழி ஏற் பட்டது. 1920களில் பிறந்து நாசிக்களின் தாக்கங்களால் ஜேர்மனை விட்டு வெளி யேறி இருந்த இளம் இலக்கிய கர்த் தாக்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் படிப்படியாக நாட்டுக்குள் வர ஆரம்பித் தமையே இதற்குக் காரணமாகும். இதன் போது சம்பிரதாய ஜேர்மன் இலக்கியம் மற்றும் வெளிநாட்டு இலக்கியம் என்ப வற்றுக்குப் பதிலாக யுகத்தின் தேவை கருதி அரசியல் காரணங்களை முன் வைத்து மன மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய வகையிலான படைப் புக்கள் குறித்து இந்த இளம் எழுத் தாளர்கள் கவனஞ் செலுத்தினர்.
இந்த வகையில் மாற்றம் கண்ட, இரண் டாம் உலக யுத்தத்தின் பின்னரான (8gi D6öT Solodia3ub Trmmer Kahls chiag(கால்ஷ லாக்) இலக்கியம் என்று அழைக்கப்படலாயிற்று.

இதன் கீழ் யதார்த்தம் மீள்நிர்மாண மாக்கப்பட்டது. யுத்தத்தின் பின் நகர்ப் பகுதிகளில் எஞ்சியிருந்த சிதைவுகளே இந்த இலக்கியத்தின் முக்கிய அடை யாளங்களாயின. இலக்கிய கர்த்தாக்கள், யுத்த காலம், யுத்த காலத்தின் பின்ன ரான காலம், நாசிகளின் ஆட்சியின் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் போன்ற வற்றைத் தங்களது படைப்புக்களின் கருப்பொருளாக்கிக் கொண்டனர். கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், வானொலி நாடகங்கள் போன்றவற்றில் கடந்தகால அனுபவங்களையும், நிகழ் கால சமூக விமர்சனங்களையும் கொண்டு வந்தனர்.
இப்பாரிய இலக்கியப் பொறுப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றிய இலக்கிய கர்த்தாக்களில் Albrecht Itaushofer (அல் ப்ரெஸ்ட் ஹவுஸ் GamBTUri), Walter Kolbenhoff (6)J6bgbli GebsT6öU6öT Gg)m3Tl), Ernst weichert (அர்னஸ்ட் வைஷர்ட்), போன்றவர் களுடன் Der Rufசஞ்சிகையின் ஆசிரி u uffa56Tst601 Alfried Andersch (S96òîý g96ÖTL'Lsĩ6mið), Hans werner Richter (ஹான்ஸ் வர்னர் ரிஷ்டர்) போன்றவர் களும் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
அதேநேரம் யுத்தத்தின் பின்னர் மனித வாழ்க்கை செல்லும் விதம், யுத்தம் மனித வாழ்க்கையின் மீது ஏற் படுத்திய பாதிப்பு, சிதைந்து போன நகரங்கள் தொடர்பில் இலக்கிய நயம் பொருந்திய படைப்புக்களை எழுத அநேகமான இலக்கியக் கர்த்தாக்கள் முன்வந்துள்ளனர்.
Ebg5 6J69Dabuî6ò Heinrich Boll (ஹயின்ரிஸ் போல்) எழுதிய Die Bots chaft (1947), Max frisch (LDdi56mö ĵiĵamö) 6I(Upgßu} Nun Singen Sie wieder (1946), wolfdierich schnurre (G6JT6ö Lu JL6mò 6ộGODI(Gb) 6T(ų gólu u AuZZug aus dem Elfenbein turm (1949), wolfgang Borchert (Q6)JT6òLJã56ölö (3LIT6)ộ Îl’) 6I(9gßu Drauben Vorder Tur, Das st unser manifest (3LJT6öB b|I6Öab60)6IIäb
குறிப்பிட இயலும்.
மேற்படி அனைத்து இலக்கியக் கர்த்தாக்களும் யுத்தத்தினால் பாதிக்கப் பட்டிருந்த மனித வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் கணிச மான பங்களிப்புக்களை நல்கியுள்ளனர். மனித வாழ்க்கைக்கு அந்நியமான மாயா ஜால உலகத்தை அல்லது சுவர்க்கப் புவியை அல்லாது யதார்த்தத்தை யதார்த்தபூர்வமான வகையில் மக்களி டத்தே எட்டச் செய்வதற்கு அக்கால கட்ட இலக்கியம் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
புகழ் பெற்ற இலக்கியவாதியான போஷர்ட்டின் சிறுகதைகளில் இக்கால கட்டத்தின் சிதைவுகள், பின்னடைவுகள், மற்றும் எதிர்பார்ப்புகள் சிதைந்த மன நிலை போன்றவற்றை மிகத் துள்ளிய மாகக் காண முடியும்.
இவர் இச்சிறுகதைகளில் தனக்கே உரிய தனித்துவத்துடன் சிதைந்த ஒரு சமூகத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும், உடைந்து விழுந்த மனநிலை பற்றியும் தெளிவான
மல்லிகை நவம்பர் 2008 辜 59

Page 32
விபரங்களை முன் வைக் கின்றார். எனினும் இதன் போது மிகுந்தளவில் வெளிப்படுகின்ற சூழல் மாற்றங்கள். வெளிச்சம், இருள் போன்ற எண்னக் கருக்களின் ஊடாக மிகவும் தெளிவான கருத்துக்கள் கூட ஆழமானதாகிப் போப்
விடக் கூடிய தன்மை காணப்படுகிறது.
1921 i 3) ICJ, ELLİ (3LD LAOTELİ 2()) திகதி போஷர்ட் நாடகங்கள். போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது தந்தை அரச ஆசிரியராகப் பணியாற்றியவர். தாயாரும்
பிறந்துள்ள வொல்ப்கன் வில்
சிறுகதைகள், கவிதைகள்
நாடகங்கள்
வானொலி
| T60 obsolt 16öišlo)
ஒர் எழுத்தாளராவார்.
| 938 f. G) (5 L Lř Hainburg — Eppendorf 2. Lifi UTLeFTs) olduğlai) J5003 கல்வியை முடித்துக் கொண்ட போஷர்ட் புத்தகம் கட்டுபவராகவும், நாடகக் கலை ஞராகவும் இருந்து இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் Մ6)Գ Ա.j եւ 55 அலுப்பப் பட்டுள்ளார். இதன் போது இவரது இடது கையில் துப்பாக்கிச் சூடு விழுந்து காப மடைந்த போஷர்ட் பின்னர் 1945ம் வருடம் மார்ச் மாதம் பிரான்ஸ் இராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு மே மாதம் ஹெம்பர்க் நகரில் விடுவிக்கப்
மு5ை0ாக்கு
J1 | Tfi.
பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் Die Hundeblume An diesen DienStage Draussen Vor der Tur. Laterne. Nacht and Sterne 3) U_ | 16ù b]] où360)671 3T(|f_|6Ť SITT ÍŤ.
p6i6SI6OD EE 5 GJ bLJft 2008
இவரால் எழுதப் பெற்ற சிறு கதைகள் பல்வகைப்பட்டன. ஏதேனும் ஒரு நிகழ்வு அதன் யதார்த்தத்திற்கு மிக அண்மித்ததாகவும் மிகவும் தூர (Iனதாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு உதாரணமாக அவரது Die kege1bahn எனும் சிறுகதையைக் #B5D|f.
போஷர்ட்டின் சிறுகதைகள் குறித்து அவதானிக்கும் போது, அவற்றில் காணத்தக்க இன்னுமொரு சிறப்பம்சம் அக்கதைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்ற இடங்களினதும் அவற்றில் வருகின்ற பாத்திரங்களினதும் வரையறைகளாகும். |)aS Brot fl}}|956)):H| | |T6ðÍ3}} {{3}}6ð}6Ýld,35ü) அவர்களது விட்டினுள் ஏற்படுகின்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறு சம்பவத்தினுள் அவர்களது உறவை மிகவும் விரிந்தளவிற்கு வெளிப்படுத்து வதற்கு அவர் குறிப்பிட்ட வரையறைக் குட்பட்ட வசனங்களை மாத்திரமே பயன் படுத்துகின்றார். அதேநேரம் இந்த வசனங்கள் குறுகியவையாகவும் சரள மானவையாகவும் இருக்கின்றன. குறு கிய வாக்கியங்களிடையே இந்தத் தம்பதியினரின் உலகத்தில் காணத்தக்க மெளனமானது சிறைப்பட்டிருக்கிறது.
கணவனுக்குமிடையில்
Stimmen Sind da–in der Luft – in der Nacht 615) f) குளிர் கூடிய நவம்பர் மாதத்தில் ட்ரம் வாகனத்தில் பயணிக்கின்ற பல்வேறு வயதுகளைக் கொண்ட ஆறு நபர்கள்
சிறுகதையானது
பற்றிக் கூறுகின்றது.
 
 
 

Radi எனும் சிறுகதை ரஷ்ய புத் களத்தில் இறந்த சிப்பாய் ஒருவரைப் பற்றிக் கூறுகிறது.
போஷர்ட் டின் சிறுகதைகளில் அநேகமாக புத்த கால கட்டம், யுத்தத் தினால் அங்கவினமானோரின் புத்தத்தில் பின்னரான காலகட்டத்தின் வாழ்க்கை. சிறைச்சாலைகள், ரஷ்யாவின் குளிர் காலத்தில் யுத்த முனை மற்றும் பாரிய நகரங்கள் என்பன கருட்ருெட்களாயின.
இவர் தனது படைப்புகளில் அநேக மாக புனர் ஜென்மத்தை மையமாகக் கொண்டிருந்தார். அதே போன்று மனிதர் களின் முகங்களில் காணப்படுகின்ற குணாதிசயங்கள், நிறங்கள் ஆடை அணிகலன்களின் தன்மை என்பவற் றுக்கு முக்கியத்துவித்துள்ளார். அநேக மாக ஒரு ந11ரைக் குறிப்பிடும் போது
கதை முழுவதிலுமாக சில வேளை களில் அந்நபரின் கன்னக்குழி, கால் ஒளனம் இல்லையேல் கைவிரல்களின் அமைவு போன்றவற்றில் ஒன்றையே குறிப்பிடுவார்.
மேலும் வெளிச்சம் மற்றும் இருள் என்பவற்றின் மூலம் கதையின் அர்த் தத்தை மிகைப்படுத்துவது அவரது தனித் தன்மையாக அமைந்திருந்தது. இதை அவரது Das Brot சிறுகதையில் தெட்டத் தெளிவாகக் காண இயலும்,
இவரது சிறுகதைகளை உற்று நோக்கும் போது யுத்தம், அக்கால கட்டத்தில் ஜேர்மனியில் ஏற்படுத்திய அழிவானது. இக்கால கட்டத்தில் எமது நாட்டுக்கும் பொருந்தக் கூடியதாக இருப் L J 53) 35 3D 6001J (LDLQL Liii).
மல்லிகை நவம்பர் 2008 : 61

Page 33
நான் முழுதாய் அப்படியே மாறிப் போயிருக்கிறேன். எப்படியெல்லாம் இருந்த நான். எனக்குள் இருந்த நான் கூட, தொலைந்து போயுள்ளேன்!
தாய்மையின் மகத்துவத்தை அனுபவித்து உணர்கிறேன். தனிமையில் பேசி. எதிர்பார்ப்புகளை சேகரித்து, வலிகளை சுகித்து. நிச்சயமாய் நான் நானாக இல்லை.
திசைமாறிப் போன என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருக்கிறது இந்த சிசு, என்னை ஆனந்தப்படுத்த மட்டுமே வந்த முதல் ஜீவன் இது.
இந்தக் குழந்தைக்காகவே என் உடையில், நடையில், உணவில், எண்ணத்தில் என்று நான் இத்தனை நல்லவளாகிப் போனது எப்படி..?
கர்ப்பமாய் இருக்கும் போது மனதில் குறைகள் இருக்கக் கூடாதாமே...! அப்படித்தானோ.
ஆனால் எனக்கும் குறையிருப்பதாய் நான் எண்ணத் தொடங்கியது ஒரு ஐந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான். அதுவும் யாருக்கும் தெரியாமல், இரகசியமாய்.
நான் எதையோ ஒன்றை அதிகமாக தேடத் தொடங்கியிருக்கிறேன். அந்த அது வேறு யாரிடமும் இல்லை. என்னவனிடம். என் கணவனிடம் மட்டுமே
அது இருப்பதை தெளிவாய் உணரத் தொடங்கினேன்.
நான் அபாக்கியசாலி. அது எனக்கு முழுமையாக கிடைக்கவில்லையோ..! தாகம் கூடுகிறது! தனிமை சுடுகிறது. சரியாக முதற் காதலின் செயற்பாடுகளைப்
போல.
e' இப்பொழுதெல்லாம் எல்லா தாய்மார்களையும் என் கண்கள் غ“ விட்டுவைப்பதில்லை. நன்றாக அலசி ஆராய்கிறது.
8 us o" 26 °" தம் கணவன்மாரை துணைக்கழைத்துக் கொண்டு சந்தோஷமாய் நடமாடும் நிறைமாதப் பெண்கள். §) கிளினிக் வருகையில் கணவனுடன் அமர்ந்திருக் கும் அதிர்ஸ்டசாலிப் பெண்கள். தன் 9 @აS
துணைவனின் தோளில், எல்லாக் 9 Sა
கவலையும் மறந்து சாயும் சில o
பெண்கள்.
-్యలో - பிரமிளா பிரதீபன் --*** IF
மல்லிகை நவம்பர் 2008 & 62

எனக்கு எவ்வளவு பொறாமையாய் இருக்கிறது! இந்த விடயத்திலென்றால்
நான் கெட்டவள்தான்.
எப்பொழுது பார்த்தாலும் வேலை வேலையென்று ஒய்வே இல்லாத என்ன வன். என் துணைவன். பாவம், அவ னும் என்னதான் செய்வான். அத் தனை ஈடுபாடு, வேலையில் அவனுக்கு.
எத்தனை அன்பு என்மீது இருந் திடினும் அதில் என்ன பயன்.?
பசி நேரம் கிடைக்காத உணவு வேறு எப்போது கிடைத்தால் என்ன..? கிடைக்கா விட்டால் தான் என்ன..?
எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் பொறு, பிறகு சாப்பிடலாம் என்கிறான். இந்தக் காத்திருத்தல் அத்தனை உசித மானதாக எனக்குத் தெரியவில்லை.
எது என் தேவை...? எது என் குறை..? அதற்காக வேலை செய்யாமல்
இருந்துவிட முடியுமா..? அப்படியும் இல்லைத்தான்.
சதா என்னுடனேயே
ஆனால். சொல்லத் தெரிய வில்லை. புரிய வைக்கவும் முடிய வில்லை. ஏன்? எனக்கே கூட புரிய
வில்லை.
என்றாலும் தனிமையில் அழுகை வெடிக்கிறது. மனதில் தேம்புகிறேன். ஏங்குகிறேன்.
எப்படியாவது இவற்றை விளக்கி விட எத்தனிக்கையில்,
"என்னை ஏன் புரிஞ்சிக்கல்ல.?" என்கிறான்.
போகட்டும். புரிந்து கொள்கிறேன். உனக்கு என் நிலை புரியாததைப் புரிந்து கொள்கிறேன்.
எல்லாமே சமாளித்து நாட்களை நகர்த்துகிறேன். விடியமுன் கிளம்பி விடுகிறாய். இரவாகி. இரவாகி.
திரும்புகிறாய். அதையும் கூட சகிக்கிறேன்.
வந்ததும், நேரகுசியாய் நாலு
வார்த்தை உதிர்த்துவிட்டு, உண்டு பின் உறங்கி விடுகிறாயே..!!!
எத்தனை தடவைதான் நானும் எழுப்பி எழுப்பி கதைப்பது? உன் களைப்பு உன் வார்த்தைகளை கேட்க திரணியற்றவனாய் உன்னை ஆக்கி விடுகிறது.
சதா உனக்கு களைப்புத்தான்.
சில நேரம் மெலிதாய் என்னை கடிந்தும் கொள்கிறாய். உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எத்தனை இரவு களில் நான் தனியாக அழுகிறேன் தெரியுமா..? ، هر
எல்லோருக்கும் தெரியும். என் புறத்தேவைகளில் எதுவித குறையும் இல்லையென்று. நீ அதற்கு இடம் வைக்கவும் இல்லை. பின் ஏன் என் அகத்தேவை உனக்குப் புரியவில்லை?
பெரிதாய் ஒன்றும் வேண்டாம். தினமும் ஒருமணி நேரம் எனக்காக ஒதுக்கு. அன்பாய் ஏதாவது பேசு. ஆதரவாய் தலை தடவு. உன் மடியில் என்னை சாய்த்துக் கொள். ஒரு பிடி சோற்றை அன்பாய் ஊட்டி விடு. பழங்கள் வெட்டித்தா.
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 63

Page 34
இது போதும் எனக்கு. இது மட்டும் போதும் எனக்கு. அதற்காக நீ இவற்றை செய்யவில்லையென நான் முழுதாய் கூறவில்லை. உன் இயந்திரத்தனத்தை எனக்காக இல்லாமலாக்கு.
அழுவதற்கு பிடிக்கவில்லை. உன்னையும் என் குழந்தையையும் நிறையவே பிடிக்கிறது. முன்னிலும் அதிகமாக உன்னை நேசிக்கத் தொடங்கி யிருக்கிறேன்.
ஒருவேளை இது என்னையொத்த எல்லோருக்குமே கூட நடக்கலாம்.
இன்னும் இரு மாத இடை வெளிக்குள் ஒரு பிஞ்சு இந்த உலகிற் குள் பிரவேசிக்கப் போகிறது. அதுவரை யாவது என் தாகத்தைத் தணி.
எனக்குத் தெரியும் நீ நல்ல வ னென்று. என்னை உனக்கு பிடிக்கு மென்று. நம் குழந்தையை நீ நேசிக் கிறாய் என்று.
என்றாலுமே, அந்த அது நிறைவாக இல்லையே..!
இடை நேரங்களில் உன் தொலை பேசி அழைப்பிற்காய் தவம் கிடக் கிறேன். நீ அழைக்கத் தவறுவதில்லை தான், ஆனால், ம்னனம் செய்து ஒப்பிக்கும் சிறு பிள்ளையாய் தினமும் ஒரே வார்த்தைகளையே உதிர்த்துவிட்டு படாரென துண்டிக்கிறாயே..!
நானே துண்டிக்கப்பட்டு விட்டதாய் துடித்துப் போவேன்.
இத்தனைக்கும் அப்பால் என் பிரசவம் நடக்கத்தான் போகிறது. மல்லிகை நவம்பர் 2008 率 64
நானும், நீயும் ஏன், நம் உறவுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்நிகழ் விற்குப் பின் நான் தாயாகி விட்டதாய் பெருமைப்பட்டுக் கொள்வேன்.
நீ கூட தந்தை ஸ்தானம் பெற்றதாய் மார்தட்டி ஆனந்த கூத்தாடுவாய். எது வித வலிகளுமின்றி.
உன்னில் 6 60 /9ےa( . . .
தவறு இயற்கையில்.
மல்லிகைக்கெனத் தனியான காரியால யத்தையும், 'மல்லிகைப் பந்தல்" நிறு வனத்திற்கான சாதனங்களையும் சொந்த மாகப் பெற்று தினசரி இயங்கி வரு கின்றவன், நான்.
இதுவரை காலமும் இலக்கிய, புத்தக வெளியீட்டு விழா அழைப்புகளுக்கு வயதின் ஒத்துழையாமையையும் மீறி, கலந்து கொண்டு வந்திருக்கிறேன்.
பொதுவாக விழா நடப்பது வெள்ள வத்தையில், நானிருப்பதோ மோதரை யில், ஒரு தொங்கல் அது மறு தொங்கல் இது. போவதும் வருவதுமே பஸ்ஸில் தான் சில சமயங்களில் நெடுநேரமாகி விடும். தனிமை வேறு.
எனவே, ஒரு முடிவை இலக்கிய உலகின் கவனத்திற்கு முன்வைக்கின் றேன். விழாக்களுக்கு என்னை விரும்பி அழைப்பவர்கள் கண்டிப்பாக இனியாவது போக்கு - வரத்து ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்வது நல்லது.
- டொமினிக் ஜீவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மதியப்பொழுது நண்பகல் 12 மணி இருக்கும். நண்பன் நளிம் வந்து படுத்திருந்த என்னை எழுப்புகிறான். ஆம் இன்று பகலுணவைத் தயாரிக்கும் பணி என்னுடையதாகும். கட்டாருக்கு நான் சென்றதில் ஒரளவு சமைப்பதற்குக் கற்றுக் கொண்டேன். நளிம் காத்தான்குடியைச் சேர்ந்தவன். பெரும்பாலும் அவன் சமைக்கச் செல்லும் போது அவ்வப்போது என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். எங்களது மெஸ்சில் நானும், ஹெம்மாத்த கமயைச் சேர்ந்த அஹமட் அலியும், காத்தான் குடியைச் சேர்ந்த இஸ்மாயிலும் என மூன்று பேர்கள் இருந்தோம். நளிமுடைய மெஸ்ஸில் சுமார் ஐந்து பேர்கள் இருந்தார்கள். நாங்கள் பொதுவாக ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் சமைப்பது வழக்கம். எங்கள் மெஸ்"சில் என்றால் அஹமட் அலியும், இஸ்மாயிலும்தான் அனேகமாய் சமைப்பார்கள். இஸ்மாயில் நல்ல ருசியாக சமைக்கக் கூடியவர். அஹமட் அலியும் ஒரளவு சமைப்பான். நானென்றால் பெரிதாய் சமைப்பது குறைவு. எப்போதாவது வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் என்று சமைப்பது உண்டு. எப்படியோ ஒருவாறு சமைப்பதற்கு பழகியிருந்தேன்.
GUIIItallico Bufffithår- 20
- நாச்சியாதீவு பர்வீன்
அன்று அஹமட் அலியும், இஸ்மாயிலும் அவர்களது நண்பர்களின் விடுதிக்கு சென்றிருந்தார்கள். எனவே, எனக்கு அன்று சமைக்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. ஏலவே நான் நளிமிடம் சொல்லி வைத்ததற்கிணங்கவே, இன்று வந்து என்னை எழுப்புகிறான். அவசரமாய் சாமான்களை தயார் செய்து எடுத்துக் கொண்டு நளிமுடன் சமையலறைக்குச்
சென்றேன்.
நளிம் கலையார்வம் மிக்க ஒருவன். ரைவமுத்து கவிதைகளை மனப்பாடம் செய்து அவ்வப்போது எடுத்துவிடுவான். நல்ல குரல்வளம் உள்ளவன். அவனது கலையார்வமும், பாடும் திறனும் அவன் மீது ஒரு பற்றினை எனக்கு விதைத்தது! நாங்கள் சமையலறையில் இருக்கும் பொழுதுகளில் E.M. நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதங்களை இனிமையுடன் இசைப்பான். அன்றும் அப்படித்தான் நானும் நளிமும் பல்வேறு விடயங்களைப் பற்றி பேசிக்கொண்டே சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தோம். இடையில் என்து வேண்டுகோளுக்கிணங்க E.M.நாகூர் ஹனீபாவின் பெரியார் பிலாலின்' என்ற பாடலை அவன் பாடத் தொடங்கினான். இஸ்லாத்திற்காக பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மிக நெருக்கத்திற் குரிய ஒரு தோழர்தான் பிலால் என்கின்ற நபித் தோழர். அவரது இறுதி காலகட்ட வாழ்க்கையை உருக்கமாக அந்தப் பாடல் வரிகள் மூலம் அவன் பாடிய விதம் என்னை
மல்லிகை நவம்பர் 2008 率 65

Page 35
மெய்சிலிர்க்க வைத்தது. என்னையறி யாமலேயே என் கண்கள் பனித்துவிட்டன. அதேநேரம் எங்கள் பொறுப்பதிகாரி ஒருவர் எதேச்சையாக அங்கே வந்தவர் எனது கண்கள் பனித்ததைக் கண்டு விட்டார். அவர் ஒரு பாகிஸ்தானி ஆகும். பெயர் "சுஹைல்", மிகச் சிறந்த ஆளுமையும் தன் நம்பிக்கையும் கொண்ட மனிதர் அவர். என்னருகில் வந்து ஏன் அழுகின்றாய் என்று கேட்டார். நான் விடயத்தைக் கூறி னேன். என் முதுகில் தட்டிவிட்டு சென்று விட்டார். அந்த மேலதிகாரியை பார்த்து நான் பல தடவைகள் வியந்துள்ளேன். எந்த விடயத்தையும் அல்லது பிரச்சினை யையும் இலகுவாக தீர்க்கும் மிகச் சிறந்த ஆளுமை அவரிடமிருந்தது. தனக்குக் கீழுள்ள ஒவ்வொரு ஊழியனையும் அன்போடு நடத்துவார். மிகவும் பொறுப்பு வாய்ந்தவர். எங்கள் வேலைகளில் அவ்வப் போது ஏற்படுகின்ற தவறுகளுக்காய் தண்டனை தருவதிலும் பார்க்க, எம்மை மீண்டும் அந்தத் தவறுகள் நடந்துவிடாத வண்ணம் நாம் அவதானமாக இருக்கும் வகையில், புத்திமதிகளைக் கூறி புடம் போடுவார்.
இப்படியான மேலதிகாரிகளை காணுவது மிக மிக அரிதான விடயமாகும். இருந்தும் இப்படியான மனிதநேயம் கொண்ட ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
நான் கட்டாரிலிருந்து வந்ததன் பின்னரும் அவருக்கு அடிக்கடி மின்னஞ் சல்களை அனுப்புவது வழக்கம், ஆனால் அவர் இதுவரை எந்த பதிலும் எனக்கனுப் பியதில்லை.
மல்லிகை நவம்பர் 2008 & 66
கட்டாரிலிருந்து வந்தவுடனேயே, இங்கே ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிக மாகவே இருந்தது வந்து ஒருசில மாதங் களில் பல வேலைகளுக்கு விண்ணப் பங்களை அனுப்பினேன். நேர்முகத் தேர்வு களை வெற்றிகரமாக முடித்தேன். ஆனால், அவர்களது வேலை பற்றி நிபந்தனையில் எந்தவிதமான நெகிழ்வுப் போக்கும் இல்லை. அதனால் அந்த வேலைகளில் என்னால் பணியாற்ற முடிய வில்லை. காரணம் நான் சில வகுப்பு களுக்கு சனி, ஞாயிறு தினங்களில் செல்ல வேண்டியிருந்தது. எந்த நிறுவனமும் குறிப் பிட்ட காலம் அல்லது பயிற்சி காலம் குறைந்தது ஆறு (06) மாதங்களுக்கு எனக் கான விடுமுறைகளை தர தயாராக இருக்கவில்லை. எனவே, அந்த நிறுவனங் களில் என்னால் வேலைக்குச் சேரமுடிய வில்லை.
ஏலவே, நான் வெளிநாட்டுக்குப் போக முன் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளருடன் நான் கட்டாரில் இருந்த போதும் மின்னஞ்சல் மூலமாக தொடர்புகளைப் பேணி வந்தேன். எனது மின்னஞ்சல்களுக்கு அவர் எப்போதும் பதிலளிக்க தவறுவதில்லை. எனவே, நான் கட்டாரில் இருக்கும் போதே எனது வேலை விடயம் பற்றியும் அவரிடம் சொல்லியிருந் தேன். இலங்கைக்கு வந்தவுடன் தன்னை வந்து சந்திக்குமாறு அவர் கூறினார். அவரது பெயர் எம். முஹம்மது தஸ்லீம் என்பதாகும். குருநாகல் மாவட்டத்தில் பானகமுவயைப் பிறப்பிடமாகக் கொண் டவர். மனித நேயம் மிக்கவர். ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி விட்டு,

பின்னர் தனியார் முகவர் நிலையம் ஒன்றை நிறுவி இப்பொழுது நூற்றுக்கணக் கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கும் தொழிலதிபர். எனவே, அவரைச் சந்தித்து எனது விடயங்களைக் கூறினேன். ஏற்கனவே என் மீது இருந்த நல்லெண்ணம் காரணமாக என்னை உடனே வேலையில் சேர்த்துக் கொண் டார். அத்தோடு சனிக்கிழமைகளில் என்து வகுப்புகளைத் தொடருவதற்கு நிறுவாக ரீதியான விடுமுறையையும் எனக்குத் தந்துதவினார்.
நான் வியந்த ஆளுமைகளில் இவரும் ஒருவர். நான் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் அவர் பற்றி இன்னும் பல விடயங்களை அறியக் கிடைத்தது. வட மேல் மாகாண சபையின் முீ - லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினராக, ஒரு தொழிலதிபராக, ஒரு நிறுவனத்தின் அதிபதியாக இருந்து கொண்டு மிகவும் எளிமையுடன் நடந்து கொள்ளும் அவரது பாங்கானது இலகுவில் அனைவரையும் கவர்ந்துவிடும். முஸ்லிம் கள் எதிர்காலத்தில் சவால்களை கண்டு அஞ்சாமல் அவற்றைத் தைரியத்துடன் எதிர்த்து வீரியத்துடன் முன்னேற வேண்டு மெனின் கல்வியின் பால் கவனம் செலுத்த வேண்டும் என்ற அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களின் கல்விக் கொள்கையை முற்று முழுதாக பின்பற்றுகின்றவர். தனது கிராம மான பானகமுவயில் மத நல்லிணக் கத்தை ஏற்படுத்தும் முகமாக சிங்கள - முஸ்லிம் மதப் பெரியார்களை ஒன் றிணைத்து மத நல்லிணக்க சபையை நிறுவி இனப்பூசல்களை அப்பிரதேசங் களில் இருந்து இல்லாமல் செய்தவர்
என்று பல்வேறுபட்ட விடயங்கள் மூலம் அவர் என்னையும் கவர்ந்திருந்தார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு தூர நோக்கும், விரிந்த சமூகப் பார்வையும் அவரிடமிருந்தது. ஏனைய அரசியல்வாதிகளைப் போல சமூகம் பற்றி நீலிக் கண்ணிர் வடிக்காமல் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும் அவரிடம் தெரிந்தது.
எனது வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரையாகும். இந்த நாட்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் எமது நிறுவனத்தில் இவரைச் சந்திப்பதுண்டு. எப்போதும் சமூகம் பற்றி யும், சமாதானம் பற்றியும் என்னோடு கதைப்பார். எனது இலக்கிய நகர்வுகள் பற்றி விமர்சிப்பார். எனது ஆரம்ப கால இலக்கிய ஆர்வங்களையும், தனது நண் பர்கள் பற்றியும் சுவாரசியமாகப் பேசுவார். இப்படியே வேலை, படிப்பு என்று எனது நாட்கள் கழிந்து கொண்டிருந்தது. இந்த நாட்களில்தான் நான் முன்னர் குறிப் பிட்டது போல் எனது குடும்பத்தினரும், நண்பர்களும் எனது திருமணம் பற்றியே நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இறுதி யில் எப்படியாவது அவசரமாக திருமணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்திருந்தாலும், நான் எதிர்பார்க்கின்ற சில அடிப்படைத் தகைமைகளைக் கொண்ட அல்லது பூர்த்தி செய்யக் கூடியவகையில் யாருமே இருக்கவில்லை.
இந்த நேரத்தில்தான் மல்வானயைச் சேர்ந்த நவாஸ் என்பவரோடு தொழில் ரீதி யாக உக்கம் ஏற்பட்டது. அவரிடமும் எனக் கொரு பெண் பார்க்கும்படி கூறினேன்.
மல்லிகை நவம்பர் 2008 : 67

Page 36
அவரும் அவரது சொந்தத்திலிருந்து ஒரு முடியாத நபராக எங்கள் உறவினர் நசார் புகைப்படத்தைக் கொண்டு வந்து காட்டி தீன் அவர்களின் பின்னூட்டலும், ஆதரவும்
னார். ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை என்று ஞாபகப்படுத்தக் கூடியது. அவரதும், எல்லாம் சாதகமாகவே இருந்தது. அவரது பிள்ளைகளான நவ்சாத், நதீர், ஆனால், எங்கள் குடும்பத்தில் நிறையப் நசீகா ஆகியோர்கள் எனது திருமணம் பேர் இந்தச் சம்பந்தத்தை எதிர்த்தார்கள். பற்றிய நிறைய கனவுகள் வைத்திருந் காரணம், நாச்சியாதீவுக்கும் மல்வானைக் தார்கள். உண்மையில் எனது திருமணத்
கும் இடையிலான தூரம் மிக அதிகமென்ப தில் அவர்களும் சந்தோஷமடைந்தார்கள். தாகும். அவர்களின் வாதத்தில் நூறு
எனக மனைவி நஸ்மியா? கவிை விகித நியாயமிருந்தது. இருந்தும், மல் ës 邱 5
தெரியாத கவிதையவள். இந்தப் பந்தியின்
வானை கொழும்புக்கு மிக அருகாமையில் 8
முடிவில் என் வாழ்க்கையில் இணைந்து
இருந்தமையினால் எனது இலக்கியம் தொடர்பான தொடர்பாடலுக்கும், உயர் கல்விக்கும் ஏதுவாக மல்வானை சரி
கொண்ட புதிய நட்சத்திரம் அவள். இது வரைக்கும் என் பேனா எனது அநுபவங் களையும், கனவுகளையும், உணர்வு
என்mே எனக்கப்பட்டக. என பக்க
கு 剑 S களையும் தனிமையில் நின்றே பேசியது.
யாயங்களை என Libië
ருநத நி து குடும்பத்தி இனி இன்னொரு குயிலின் அதுதான் என் னருக்கு தெளிவுபடுத்தினேன். ஒருவாறு
நஸ்மியாவின் அரவணைப்போடு புதிய
g)6Jrtes 6T 6T60T 6060TL புரிந்து கொண்டார்
- A o திசைகளை நோக்கி எனது பேனா பேசப் கள். எனது திருமணத்திற்கு சம்மதம் போகின்
s 66) ES E LO
தெரிவித்தார்கள். றது. அது ரக்கும் திறந்து
வைத்த என் போனாவை மூடி வைத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி புதிய கனவுகளுடன் உங்களிடமிருந்து மிகவும் எளிமையாக குடும்ப உறவினர் தற்காலிகமாக ஒய்கிறேன், புதியதொரு களை மட்டும் அமைத்து எனது திருமணம் படைப்பை நோக்கி. நடைபெற்றது. இதில் என்னால் மறக்க இனி பேசமாட்டேன்)
NSNIS * S
鷺
| – ဂြိုးဖြုံး §§ŠRŞIN
S N
S
S
 

- டொசிே% ஜீவா
గగ gయDDDuర్ சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் கூட, நீங்கள் கையில் கொண்டு நீரிந்து,
D666)c5 60,056)6T 658 undsüUg grid OD585 66 (DDITED 666)6Dur?
966), ஆர், தவசீலன்
> சிலர் வெட்கப்படுவதற்கே வெட்கப்படாமல் நடமாடித் திரிவதைப் பார்த்திருக்கின்றேன். ‘எழுத்து செல்லப்பா என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இறுதிக் காலம் வரை தான் பதிப்பித்த நூல்களைச் சுமந்து கொண்டு சென்று, கல்லூரிகளுக்கு விநியோ கித்து வருவாராம், சுதந்திரப் போராட்ட காலத்தில் இயக்க வளர்ச்சிக்காக எத்தனையோ பெரிய தலைவர்கள் உண்டியல் குலுக்கிப் பணம் வசூலித்து இருக்கின்றனர். நமது யாழ்ப் பாணத்தில் கார்த்திகேசன், எம்.ஸி.சுப்பிரமணியம், ராமசாமி ஐயர், பூபாலசிங்கம், வைத்தி, டானியல் போன்றோர் 5 சதத்திற்குத் தேசாபிமானி பத்திரிகை விற்றவர்கள்தான்.
நான் மல்லிகையை ஆரம்பித்த காலத்தில் தினசரி 200 ரூபா சம்பாதிக்கும் கைத் தொழிலைச் செய்து கொண்டிருக்கும் வேளையில்தான், இருபது சதம் மல்லிகைக்காகப் பல்லாண்டுகள் செய்துவந்த தொழிலை விட்டுவிட்டு, தெருவில் இறங்கி இயங்கி, விற்கத் தொடங்கினேன்.
நாளை நீங்களும் நானும் இல்லாமல் போகலாம். உங்களது பேரனுக்குப் பேரனோ அல்லது என்னுடைய பரம்பரையைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவனோ எனது அர்ப்பணிப்புச் சேவையை ஆய்வு செய்யத்தான் போகின்றான். அப்பொழுதுதான் தெரியும் நான் தெருவில் இறங்கி இயங்கியதின் மகத்துவமும் சாதனையும்.
<> 9 stics.Org D666) is 0(U6)rict6T 6T66)?
நல்லூர், சி. நவநீதன்
> நிறைய நிறைய உண்டு. சந்தர்ப்பம் வரும்போது இந்தப் பகுதியில் உங்களுடன் மனம் திறந்து பேசுகிறேனே!
拳 彝 兼
மல்லிகை நவம்பர் 2008 ஜ் 69

Page 37
<> LUMILDŪLUIT OPTŪ f8õðið6BŪčĎ (DL5ð L60
DIT GDIDITÒ Dổið6f66DCD 56) LđöOfổið 63 LJ66õŪỗ
cß6DLüßổð696D8ULI, 6T6X6 CôTDOYD’?
சுன்னாகம், எம். சரவணன்
> போக்குவரத்துப் பிரச்சினைதான் மூல காரணம். கப்பல் மூலம் அனுப்புவதால் வீண் தாமதம். மல்லிகைச் செடி யாழ்ப் பாண மண்ணில் இருந்துதான் துளிர் கொண்டு தளைத்து வளர்ந்தது. இன்று அந்தப் பிரதேசத்துச் சுவைஞர்களுக்கு அந்த இதழ் ஒழுங்காகக் கிடைக்கவில்லை என்பதே பெரிய சோகம். முடியுமானால், மல்லிகையை மனசார நேசிப்பவர்கள் நேரடியாகவே சந்தாதாரர்களாகச் சேருவது தான் தகுந்த ஒரே வழி.
兼 赣 棘
<> 6Iổĩ6), Dỡbốồ6)ñ 6ồñññổI 96.66IIIổÎ6ồ)D
agu OSI556 Lab UT06 ia580T, 616x6) (DIUOTD?
கொழும்பு ே ச.முரளிதரன்
இன்று வாழ்ந்து வரும் புதுமைப் خز பித்தன், அவர்
拳 癖 兼 <> 45-65 ep65rd D6DT 61556T66) 96T6T05?
மருதானை, Gish), (5 EFTGiri
> திட்டமிட்டபடி வேலை நடந்து கொண் டிருக்கின்றது. மலருக்கு ஒழுங்காகப் பங்களிப்புச் செய்பவர்களின் ஆக்கங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மல்லிகையின் ஆண்டு மலர் வேலை களைச் செய்து கொண்டிருக்கும் தருணங் களில் ஏனோ தெரியவில்லை, என் நெஞ்சு
மல்லிகை நவம்பர் 2008 辜 70
எப்பொழுதுமே நிறைவாக இருப்பதுதான் வழக்கம்!
兼 兼 兼 <> யாழ்ப்பாணம் வந்து நீண்ட காலமாகி விட்டதே, ஒரு
öL6)6:UT65 ol55 Dõgpõ0 650 8J6Tób 6õ6)?
EbÚU5 EUJÚ, ஆர். தவேந்திரன்
> வருவேன், வருவேன். நிச்சயமாக வந்து போவேன்!
雜 灘 韃 <> 9Ēlī6)OTā foī bi)DUī DĪföööBx8,
(96).fabO550, 9 F556.75 &02fBDEDITS L566D66)?
losasysi, 5, GG5dar
> ஆக்கபூர்வமாகச் செயல்படும் எவ னொருவனுமே கடுமையான விமரிசனங் களைக் கடந்துதான் வெளிவருவான். விமரி சனத்திற்கு உட்படாமல் ஒருவன் செய லாற்றி வருவான் என்றால், அதில் உப்புச் சப்பே இருக்காது. கடந்தகால என்னுடைய வளர்ச்சியே விமரிசனத்திற்கு உட்பட்டது தானே? நான் முதன் முதலில் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்று யாழ்ப்பாணம் திரும் பிய வேளையில், கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைப் பண்டிதர் சொன்ன வார்த்தை இன்னமும் என் நெஞ்சில் வேர் பாய்ச்சி வலுவேற்றுகின்றது.
'உங்களுக்கு ஒரு புதினம் தெரி யுமோ? இந்தாண்டு சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளவன் ஒரு நாவிதனாம்! பாருங்கோ, கலிகாலம் எப்பிடிப் போகின்ற தென்று!"
இந்தச் சாதிவெறி விமரிசனம்தான் மல்லிகையின் பிறப்பின் அத்திவாரம்.

இத்தனை ஆண்டு அதன் வரவே, இந்த வலி தந்த உந்து சக்திதான்!
權 鞭 韃
<> 6T66), T65, 0.5s,60605(DfTaft,07 DoD Dricoofs
6TD50D.TBB606) 666fludbbis 6d.DU6fiosoft OUTDIGITCD
OldDiscbsTO's clotrict 86 GEB561576TOTDudb6.56060608),
fofDT Cribus5DDITSX 6ïLufficD6267 6TdD5J6ysicDobóDD 885 5606060DE5T6... 86).5i LBS 6T66), 60 IT66DD
8uffffffff6ff?
ஹட்டன். UrAS,filólios
> எழுதுவது எதில் என்பதல்ல, முக் கியம். எதைப் பற்றி எழுதுகின்றோம், என் னத்தைப் பற்றி எழுதுகின்றோம் என்பதே சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால்,
கவனிக்கத்தக்கது.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க இய லாது. எதில் எழுதினாலும், என்னத்தைப் பற்றி எழுதினாலும் அதில் அந்த எழுத் தாளனின் தனித்துவமும், எழுத்து நடையும் பதிந்திருக்க வேண்டும். அதுவே முக்கியம்.
豪 兼 肇