கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.12

Page 1
50வது ஆண்டை நோக்கி.
@age Qesos.ó a
டிசம்பர் - 2008
 

O CeCQ تهوع e و e و چیهوه
விலை - 30/-

Page 2
(Dealers in Video Cassettes, Audio Cassettes, CD's, Calculators, suxury &
fancy Goods
152, Bankshall Street, Colomb0 - 11. Tel: 2446028, 2441982 FaX: 3234.72
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத் திரம் தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப்பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை, இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் (04, 7, 2001) பதிவு செய்த துடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது.
50 -வது ஆண்டை நோக்கி. 96(9ՍՊ 355 ീഗ്ഗഢ منابoمگر لرير الQ @ർn// ഠ/ീറ്റർthe
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர
; மல்ல - அது ஒர் ஆரோக்கியமான
இலக்கிய இயக்கமுமாகும் .
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 2320721
| mallikaiJeeva@yahoo.com
s
அடுத்த இதழ் ஆண்டு மலர்
44-வது ஆண்டு மலர் வேகமாகத் தயாராகி வருகின்றது.
சுவைஞர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வழக்கமான சந்தா தாரர்களுக்கு மலர் கிடைக்காது. ஏனெனில் மலரின் விலை ரூபா 200/- அத்துடன் தபாற் செலவு வேறு.
முன்னரே மலருக்காப் பதிவு செய்தவர் களுக்கு மாத்திரமே ஆண்டு மலர் அனுப்பி வைக்கப்படும்.
மல்லிகை இதழ்கள் சும்மா படித்து விட்டுத் தூரப் போட்டு விடக் கூடிய இதழ் களல்ல இதழ் இதழாகச் சேர்த்து வைத்துப் பாதுகாத்து வைத்து, அடுத்த உங்களது கல்வித் தலைமுறையினருக்குச் சேமித்து வைத் திருக்கக் கூடிய இலக்கியத் தகவல் நிறைந்த இதழ்களாகும்.
இதுவரையும் 354 இதழ்கள் வெளிவந் துள்ளன. இலங்கையில் 43 ஆண்டுகளாத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இலக்கியச் சிற்றேடு மல்லிகை ஒன்றேதான். இதுதான் மல்லிகை இதழின் தனிப்பெரும் பெருமையாகும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இத்தனை உள்நாட்டு யுத்த நெருக்கடிகளுக் குள்ளும், உள்ளூர் புலம் பெயர்வுகளுக்கு மத்தியிலும் தளராமல் தொடர்பு விடாமல் ஒரு மாத சஞ்சிகையை இத்தனை ஆண்டுக் காலங்களாக வெளியிட்டு வருவதென்றால் அதற்கு எத்தனை உழைப்பும் மன ஓர்மமும் வேண்டும். இதைப் புரிந்து கொள்ளுங்கள்!
இதை நீங்கள் மனதார மெச்சுகின் நீர்களா? மல்லிகையைத் தொடர்ந்து படி யுங்கள். சந்தாதாரராகுங்கள்.
- ஆசிரியர்

Page 3
gہے தகிசன”ே தலினிைத ஆளுைையின் ஓர் ஆவணல்.
— Clс-л65a, aio)л
என்னை நெஞ்சார நேசிக்கும், கடந்த ஆறு தஸாப்தங் களுக்கு மேலாக இலக்கியத் துறையில் எனது அர்ப் பணிப்பு உழைப்பை மெய்யாகவே புரிந்து கொண்ட ஆத்மார்த்திகமான நண்பர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுகின்றேன். இதயத்திலிருந்து பேசுகின்றேன்.
முதுமை என்னை வந்தடைந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அதை நான் என்றுமே என்னை அண்ட விடுவதில்லை. இன்றும் கூட, நான் நினைவி னால் இளந்தலைமுறையினன். எனது சுறுசுறுப்பையும், தினசரி செயல்பாடுகளையும் நேரில் பார்த்தவர்கள் வாயுற வாழ்த்துகின்றனர். இருந்தும் இயற்கையை என்ன சூரத்தனத்தைக் காட்டியும் வென்றுவிட முடியாது. இது எனக்கு நன்றாகவே தெரியும். இயற்கை தனது கடமையை ஒழுங்காகச் செய்து முடிக்கும்.
எனவே, என் வரையும் எனது இருத்தலுக்கான ஓர் இலக்கிய ஆவணத்தைப் பதிவு செய்து, அதனை எதிர்காலச் சந்ததியினருக்காக விட்டுச் செல்ல விரும்பி, உழைப்பைத் தொடர்ந்து விட்டேன். இதற்கு எனக்கு மேலதிகமாகப் பணம் தேவை. இதனை ஒப்பேற்றி முடிக்கச் சில இலட்சம் தேவை. இந்தப் பணத்தைத் தந்துவும் வண்ணம் உங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். இப்படி நெஞ்சார்ந்த உணர்வுடன் உதவி கேட்பதற்கு எனக்குப் பரிபூரண உரிமை உண்டென்றே நம்புகின்றேன். முடியுமென்றால் உதவுங்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாக நான் கொழும்பு மாநகர் வந்தடைந்த சமயம் எனது கை யில் இருந்த மொத்தப் பணம் 120/- ரூபாய்கள்தான்! அந்த எனது அவல நிலையிலும் என்னை எனது இலக்கிய நண்பர்கள் கைவிட்டு விடவில்லை. இந்த உண்மையை 2009 ஜனவரியில் மலரப் போகும் 44-வது ஆண்டு மலரே சாட்சியமாக மலரும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக என்னை இந்த நாட்டின் இலக்கிய உலகத்திற்கே ஒப்புக்கொடுத்துத் தினசரி உழைத்து வருகின்றேன்.
பணம் பண்ணவில்லை. ஆனால், பவித்திரமான நண்பர்களின் நட்பைப் பெற்றிருக்கும் முதல் எழுத்தாளன், நானேதான்! அதன் பெறுபேறுதான் இந்த 43 ஆண்டுகள்.
வருங்கால இளந்தலைமுறையினருக்கு அர்ப்பணிக்கப் போகும் இந்த இலக்கிய ஆவணத்திற்கு உதவுபவர்களின் பெயர்களை மல்லிகை இதழ்களில் பதிய வைக்க பெருமுயற்சி எடுத்து வருகின்றேன். இப்படியான இலக்கிய நெஞ்சங்களும் அந்தக் காலத்தில் இருந்திக்கின்றனர்!’ எனப் பிற்காலச் சந்ததிக்கு ஒரு கல்வெட்டாக அமைய வேண்டும் என்பதே எனது வேணவாவாகும். இது ஓர் இலக்கிய முயற்சியாகும்.
 

f
ՑհետճմյhՑhկմ, հՑnԱմհպ!
இந்து மகா சமுத்திரத்தின் முத்து என ஒரு காலத்தில் வியந்து வர்ணிக்கப்பட்ட இந்த இலங்கைத் திருநாட்டின் தலை நகரமாகப் பல்லாண்டுக் காலங்களாக விளங்கி வந்து கொண்டிருப்பதுதான் இன்றைய கொழும்பு மாநகரம். வீதியெல்லாம் பள்ளம். மழை பெய்தால் ஒரே சேறும் சகதியும்தான்! தெருவெல்லாம் வெள்ளம்
அதேசமயம் இன்றைய இந்த மாநகரம் இருக்கும் நிரந்தரச் சீர்கெட்ட நிலையைப் பார்த்து மனம் வருந்தாதவர்களே இல்லை எனச் சொல்லி விடலாம்.
எங்கு பார்த்தாலும், திரும்பினாலும் ஒரே குப்பைக் காடு. வீதிகளெல்லாம் சீர்கெட்ட நிலை. சுகாதாரம் பற்றிப் பேசவே வேண்டாம்.
ஒருகாலத்தில் பெருமையுடனும், சிறப்புடனும் விதந்து பேசப்பட்ட மாநகரமா இது? எனப் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் நிலையில் இன்றையத் தலைநகரின் மோசமான நிலை. தேசத்தின் புத்திரர்கள் நாம் மட்டும்தான் எனக் கூப்பாடு போடும் பெரும்பான்மை இனக் கோவடிமெழுப்பிகள் சிரமதானம் செய்து நகரைச் சுத்தப்படுத்தலாமல்லவா?
தொடர் யுத்தத்தின் மோசமான எதிரொலிப்புத்தான் இந்த மாநகரின் சீரழிவு என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
இந்தக் குப்பை, கஞ்சல் சுவாத்தியத்தை இன்னும் இன்னும் சீரழிக்க உதவி செய்கின்றது, இன்றைய பொலித்தீன் பரம்பல். அதை முற்றாகத் தடை செய்தால் மாத்திரமே, நகரத்தின் சுவாத்தியத்தை ஒரளவு மட்டுப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம்.
இதற்கு அரசாங்கத்தையும், மாநகர சபையையுமே நம்பியிராமல், ஒவ்வொரு பிரஜையும் தமக்குத் தமக்குரிய கடமையைச் சரிவரச் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். ஒத்துழைக்க வேண்டும்.
மேலை நாடுகளில் ஒரு துண்டுக் காகிதம் வீதியில் கிடந்தால், வழியில் நடந்து வரும் அந்நாட்டுப் பிரஜை ஒருவன், அதை எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டு விட்டே திரும்ப நடப்பான். அவன் தனது மண்ணைப் பற்றிப் பேசுவது நியாயம்.
இந்தப் பழக்க வழக்கங்கள் ஒருபோதும் நம்மிடமிருந்ததில்லை. குறைந்த பட்சம் நமது சூழலைச் சுத்தமாகவும், துப்பரவாகவும் வைத்திருக்கப் பழகிக்கொள்வோமே.

Page 4
அட்டைப்படம்
'சித்தம் அழகியார்’
(பேராசிரியர் சிவலிங்கர7ஜ7 பற்றிய ஒரு நட்புக் குறிப்பு)
കിപീ இ.ஜெ.ராஜ்
உண்மையில் சற்றுத் திகைத்துத்தான் போனேன். நாணினேன் என்றும் சொல்லலாம். அவரின் முகம் நிறைந்த சிரிப்பு அகத்தைக் காட்டியது. நெருங்கியிருந்து என் கை பிடித்தார். அதில் உண்மை அன்பின் உணர்வு தெரிந்தது. “உங்களுக்குத்தான் காட்டவேணுமெண்டு கொண்டு வந்தனான்’ என்று சொல்லியபடி கைப்பையினுள் இருந்து ஒரு படத்தை எடுத்துக் காட்டினார். அவரது மகளும், மகனும் டாக்டர் உடையுடன் அப்படத்தில் இருந்தார்கள். “அவையளுக்கு படிப்பு முடியப்போகுது, சும்மா எல்லாருமாய் இருந்து எடுத்தனாங்கள், சின்னணில இருந்து அவையளை நீங்கள் வாழ்த்தினனிங்கள் இப்ப அவையளிட வளர்ச்சியப் பாத்து சந்தோஷப்படுவியள், சந்தோஷப்படக் கூடிய ஆக்களுக்குத்தானே இதைக் காட்டவேணும்” வெற்றிப் பெருமிதம் கண்களில் மின்ன ஒரு தந்தையாய்ப் பேசினார். “சுளிரென’ சவுக்கடி பட்டாற்போல் சிலிர்த்து அடங்கியது.
உடலல்ல, புத்தி சில நாட்களின் முன்புதான். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு எழுதிய கடிதத்தில், சிவலிங்கராஜாவைப் பெயர் சொல்லிக் கண்டித்திருந்தேன். சற்றுக் கடுமையான கண்டனம் அது அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த சிலப்பதிகார விழாவில்தான். அக்கண்டனத்தின் பின்னான எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது நேருக்கு நேர் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்? எழுதும்போது இருந்த புத்தித் துணிவை,
LD6ö6660)& L9subUft 2008 率 4.

சந்திப்பின்போதான பண்பாட்டு முனைப்பு சங்கடப்படுத்தியது. மனத்துள் சங்கடப்புழு நெளியத் தவித்தேன். ஆனால், என்னைக் கண்டதும் அதே பழைய அன்பாரவாரிப்புடன், உறவு காட்டிய சிவலிங்கராஜா, பண்பால் என்முன் உயர்ந்தார். அச்சந்திப்பின்போது நிகழ்ந்ததுதான் மேற்சொன்ன உரையாடல். நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், தேடி வந்த பெருமைகள் என, அத்தனையும் ஒருங்கே வாய்த்தமை, அவர் பண்புக்கு இறைவன் கொடுத்த பரிசுகள் போலும்.
米 米 米
மேற்சொன்ன கண்டனக் கடிதத்தை நான் எழுதிய ஓரிரு மாதங்களில், கொழும்பில் கம்பன்விழா நடைபெற்றது. யாழில், சிவலிங்கராஜாவிடம் வெளிவாரியாய் “எம்.ஏ.’ கற்கும், பாலசண்முகன் என்ற மாணவன், அவ்விழாவில் கலந்துகொள்ளவெனக் கொழும்பு வந்திருந்தான். “உங்கள் பேராசிரியர்கள் என்மேல் கடுங்கோபத்தில் இருப்பார்கள், இந்த நேரத்தில நீ கம்பன்விழாவில கலந்துகொள்ள வந்திருக்கிறாய், ‘எம்.ஏ. பாஸ் பண்ணுகிற நோக்கம் இல்லைப்போல.” என் வழக்கமான கிண்டல் கேட்டுச் சிரித்தான் அவன். வெளியில் சிரித்தாலும் அவன் கண்களில் மிரட்சி தெரிந்தது. கிண்டலாய்க் கேட்டாலும், அவன் பாதிக்கப்படக்கூடுமென நானும் நினைந்தது உண்மை.
அவன் யாழ். திரும்பியதும், சிவலிங்கராஜாவின் முதல் வகுப்பில் நடந்ததை எனக்குத் தொலை பேசினான். “எங்கட பாலசண்முகன், கொழும்புக் கம்பன்விழாவில் கலந்துகொண்டிட்டு வந்திருக்கிறார். இண்டைக்கு வகுப்பில, கம்பன்விழா அனுபவம் பற்றி அவர் முன்னுக்கு வந்து பேசட்டும்’ பாலசண்முகன் கம்பன்விழாச் சிறப்பை 40 நிமிடம் உரைக்க அனுமதிக்கப்படுகிறான். முடிவில் மாணவர்களுக்கு சிவலிங்கராஜாவின் கருத்துரைப்பு. “எனக்கும் ஜெயராஜாவுக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கிறது. ஆனாலும், அவற்ர கெட்டித்தனத்தில எனக்கு எப்பவும் மதிப்புத்தான். ஒரு சின்ன விஷயத்தையும் கவனிச்சு விழா நடத்த, அவரைப்போல வேறு ஒருத்தராலும் முடியாது.” பாலசண்முகன் சொன்னபோது ஆச்சரியப்பட்டேன்.
என் கண்டனம் கண்டு, அக்கண்டனத்தை வெளியிட்ட பத்திரிகையில், தான் எழுதி வந்த கட்டுரைத் தொடரையே ஒரு கலாநிதி நிறுத்தியிருந்தார். விமர்சனம் விமர்சனம் என்று வாய்கிழியப் பேசிய பலரும்,
தம்மேலான விமர்சனம் கண்டதும் அட்டையாய்ச் சுருண்டதை அறிந்திருந்தேன். மற்றவர்கள் மேலான விமர்சனத்தில் “நக்கீர”த்தனமும், தம்மைப் பற்றிய விபரணத்தில், “யாவும் கற்பனைத்தனமும் கொண்டு, உள்ளொன்றும், புறமொன்றுமாய்த் திரியும் கற்றோர் மத்தியில், பல்கலைக்கழகப் பிரதிநிதியாய், “மாற்றுக்கருத்தை உட்கொண்டு மற்றவர்மேல்
மல்லிகை டிசம்பர் 2008 & 5

Page 5
காழ்ப்புச் செலுத்தாமல் எங்களாலும் இருக்கமுடியும்” என்று காட்டி நின்ற, சிவலிங்கராஜாவின் அறிவாண்மை எனக்கு நிறையப் பிடித்தது.
米 米 米
1986ஆம் ஆண்டோ 87ஆம் ஆண்டோ ஞாபகம் இல்லை. பாண்டிச்சேரிக் கம்பன்விழாவுக்கான அழைப்புப் பெற்று, கம்பன்கழகக்குழு பாண்டிச்சேரி புறப்பட்டது. அதில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, பேராசிரியர் பாலசுந்தரம், பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோருடன், சிவலிங்கராஜாவும் இணைந்திருந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு அது எல்லோரும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பணத் தட்டுப்பாடு எல்லோருக்கும் இருந்தது. இங்கிருந்து சில பொருள்களைக் கொண்டு போனால், இந்தியாவில் நல்ல விலைக்குக் கொடுக்கலாம் என்று சிலர் ஆலோசனை கூற, எல்லோரும் “சூட்கேஸ“களை நிரப்பியிருந்தோம். உடன் வந்த இரண்டு பேருக்குக் காலம் சரியில்லை. இந்தியச் சுங்க அதிகாரிகள் அவ்விருவருக்கு மட்டும் வரியிட்டனர். இலாபம் தேட நினைந்தவர்களுக்கு நஷ்டம். அவர்கள் முகம் வாடிச் சுருண்டு போனது வரியின்றி வெளிவந்த எங்களுக்கு, தப்பிவிட்டோம் என்பதில் பெரு மகிழ்ச்சி அந்நேரத்தில் நண்பர் சிவலிங்கராஜா என்னருகில் வந்தார். “ஜெயராஜ், எல்லாரும் ஒண்டா வந்தனாங்கள்.
<డ్డి,
மல்லிகை டிசம்பர் 2008 6
பாவம், அவங்கள் இரண்டுபேருக்கு மட்டும் நஷ்டமாய்ப் போச்சு, சரியாக் கவலைப்படுறாங்கள் போல, பேசாம எல்லாருமாச் சேர்ந்து அந்த வரிப்பணத்தைப் பிரிச்சுக் கொள்ளுவம், அவங்களும் சந்தோஷமாய் இருக்கட்டும்” என்றார். கற்றவர்கள் என்றாலே சுயநலக்காரர்கள் என்ற கருத்தை உடைத்து, என் இதயத்தில் இமயமாய் சிவலிங்கராஜா உயர்ந்த தினம் அது.
米 米 米
சைவப்புலவர், பாலபண்டிதர், தமிழ்ச் சிறப்புப் பட்டதாரி,
முதுகலைமாணி, கலாநிதி போன்ற பட்டங்களையும், உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர். பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், நுண்கலைத்துறைத் தலைவர், கிறிஸ்தவ, இஸ்லாமிய நாகரிகத்துறைத் தலைவர், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், அன்னை தெரேசா பல்கலைக்கழகம், மனோண்மணியம் சுந்தரனார்ப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் வெளிநிலைப் பரீட்சையாளர். தேசியக் கல்வியியற் கல்லூரி ஆலோசகர், ஈவ்வின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவன இயக்குனர், போன்ற பல பதவிகளையும் வகித்த, ஒரு பேராசிரியர் பற்றி எழுதும் கட்டுரையில், அவருடைய அறிவின் விரிவு பற்றி எழுதாமல், பண்பின் விரிவு பற்றி எழுதுவது முறையா? ஒருசிலர் கேட்கக்கூடும் என்னைப் பொறுத்தரை புத்தியை விட இதயம் (all lify,
எல்லோரி மும் ஏதோவொரு வித்தை இருக்கத்தான் செய்கிறது.

இது என் கருத்தல்ல. எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது என மூதாட்டி அன்றே உரைத்தாள். புத்திச் சிறப்பில் வித்தை வெளிவரும். இதயச் சிறப்பில் மானுடம் வெளிவரும். இரண்டாவதுதான் பெரிய விஷயம். அதனால்தான் எங்கள் யுகக் கவிஞனான பாரதி கூட, கவிச்சக்கரவர்த்தி கம்பனை, அவனின் விரிந்த வித்தையால் இனங்காட்டாமல், கம்பன் என்றொரு மானுடன் என மானுடத்தால் இனங்காட்டினான். சிவலிங்கராஜாவையும் அப்படி இனங்காட்டத்தான் எனக்குப் பிடிக்கிறது. எல்லோருக்குமான பெருமைகளை உரைப்பதில் என்ன சிறப்பு இருக்கமுடியும்?
米 米 米
நம் தமிழ் மூதாதையர்கள் கல்வியின் நோக்கத்தை, தெளிவு பட வரையறை செய்துள்ளனர். கல்வியின் பயன் அறிவு அறிவின் பயன் ஒழுக்கம். ஒழுக்கத்தின் பயன் அன்பு அன்பின் பயன் அருள். அருளின் பயன் துறவு, துறவின் பயன் வீடு. இப்படிகளில் ஒன்றைத்தானும் சரியாகக் கடக்காது, அறிஞர் எனத் தம்மைத்தாமே சொல்லித் திரியும் பலரை அறிவேன். அன்பு வரை வந்து அருள் நோக்கி முயற்சிக்கும் சிவலிங்கராஜா, அவர்களுள் விதிவிலக்கானவர்.
米 来 米
சொந்த ஊர் கரவெட்டி மிகச்சாதாரண குடும்பம், இயற்கையாய் வாய்த்த தமிழாற்றல், அக்காலத்தில் இவரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளிலும் ஏறவைத்தது. அரசியல் தலைவர்களால் ஆற்றலாளன் என அடையாளம் காணப்பட்டவர். “ ‘பஸ் கொண்டெக்டராய்’ வந்தால் போதும்’ இது சிவலிங்கராஜாவின் ஒரு கால இலட்சியம். அவரே சொன்ன செய்தி இது. இழிவு படுத்தச் சொல்வதாய் சிலர் நினைக்கக்கூடும். வானம் தொட நினைக்கும் வரம்பிலா ஆசை கடந்த, அவரின் எளிமையைச் சொல்வதற்கே இப்பதிவு இறைச் சித்தம் வேறாய் இருந்து, பல்கலைக்கழகம் புகுவித்தது. அங்கு பேராசிரியர் சண்முகதாஸின் அன்புக்கு ஆளாக, விரிவுரையாளர் பதவி மடியில் விழுந்தது. சிவலிங்கராஜா உயர்ந்த கதை இது
米 米 米
சிவலிங்கராஜாவுக்குப் பல்கலைக்கழகம், கல்வியை மட்டும் தரவில்லை, கல்விக்கு அதிபதியான கலைவாணியையும் தந்தது. பல்கலைக்கழகம் அளித்த மற்றொரு பரிசாக மனைவி சரஸ்வதி வாய்த்தார். அண்ணலும் நோக்க அவளும் நோக்க, சண்முகதாஸ் விசுவாமித்திரராய் விவாகம் செய்வித்தார். அளவுக்கதிகமான ஆசையின்மை, படாடோபம் விரும்பாமை, கணவன் நிழலில் காலம் தள்ளும் விருப்பம்,
மல்லிகை டிசம்பர் 2008 & 7

Page 6
குடும்பத்தில் தன்னைக் கரைத்து, கணவனதும், பிள்ளைகளதும் உயர்வில் மகிழும் மனம், எவ்வளவு உயர்ந்தும் ஆகாயத்தில் பறக்க நினைக்காமல், எளிய இல்லத்தரசியாய் இருக்க விரும்பும் இயல்பு இவையெல்லாம் திருமதி சிவலிங்கராஜாவின் தனித் தகுதிகள். இன்றைய பெண்கள் பலரிடம் இல்லாத தகுதிகளுமாம். மங்கலமாய் மனைமாட்சி அமைய, நன்கலமாய்ப் புதல்வர் அமைந்ததில் வியப்பில்லை.
எச்சத்தால் தக்கார் என இனங்காணப்படும் தகுதி, சிவலிங்கராஜாவுக்கு, குடும்பத்தளவில் வாய்த்தது மறுக்க முடியாத உண்மை. என்னைக் கேட்டால் சிவலிங்கராஜாவுக்கு, தமிழ்த்துறைத் தலைமைப் பதவியை விட, இல்லத் தலைமைப் பதவி, எழுச்சியுடன், எச்சம் காட்டி இனிது வாய்த்தது என்பேன்!
米 米 米
கூத்தின் குடியிருப்பாய் விளங்கிய பிரதேசங்களில் ஒன்று வடமராட்சி
அம் மண்ணின் மைந்தர் என்பதற்குச் சான்றாய்,
இயல்பாய் அவரிடம் நாடக ஆற்றலும் வாய்த்திருந்தது. எங்கள் கம்பன்விழா மேடைகளில் சூர்ப்பனகையாய்த் தோன்றி, அவர் காட்டிய நளினம் இன்னும் கண்முன் நிழலாடுகிறது. பின்னர் ஒருதரம் இராவணனாயும் மேடையைக்
மல்லிகை டிசம்பர் 2008 & 8
கலக்கினார். கல்வியும், கலையும் கலந்திருந்த ஓர் அற்புத மனிதன்.
米 米 米
பண்டித மாணவர்களுக்குக் கவிதை வகுப்பு எடுக்கவேண்டுமென்று கேட்டபோது, ஏழாலைப் பெரும் பண்டிதர் கந்தையா அவர்கள், குலுங்கிக் குலுங்கிச் சிரித்துச் சொன்னது இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. “கன்று ஈனாப் பசுவிட்ட பால் கறக்கிற முயற்சியல்லோ இது” என்ற அவர், “தமிழைச் சரியாப் படியுங்கோ கவிதை தானே வரும்’ என்றார். சிவலிங்கராஜாவுக்கு அத் தமிழ் முதிர்வின் தகைமையாய், கவியாற்றல் இயல்பாய் வாய்த்திருந்தது.
சொல்லினால் கவி மாளிகை கட்டினான் சுடர் விளக்குகள் சிற்சில ஏற்றினான் வெல்லலாம் உலகைத் தமிழாலென்ற வேதம் ஓதிய பண்டிதனாம் க.வி. கல்வி மான்களும் கண்டு வியந்திட காட்டினான் புது இலக்கண நுட்பங்கள் வல்லமை தனை வாழ்த்தி வணங்கி நான் வைத்தனன் இந்நூல் அவன் தாளினில்.
என்று, தன் மரபுத்தமிழ்க் குருவான, பண்டிதர் க.வீரகத்திக்குச் செய்த வணக்கப் பாடலும்,
நந்திக்கலம்பகமும் நான் படிக்கும் மேகலையும் சிந்தை உருக்கும் திறன் அறியார் - வந்தபடி

காட்டு விலங்காய் கவி எழுதும் காரணத்தால் பாட்டு எழுதல் விட்டேன் பயந்து.
என்ற அவரது கிண்டற் பாடலும்,
சீறும் கடலில் சிறு தோணி கால்வைத்து ஏறி வரும் அடியார் இன்னலெலாம் - நீறாக போகும் படியருளும் புஷணி நாகம்மை எந்தன் ஆகம் தனில் உறைகின் றாள்.
ஆறு வளைந்து அங்கோட அதிலே பாவம் கரைந்தோட நூறு கதிரின் ஒளி நல்கும் நுண்மையுடைய வேலோனும் நீறு படரும் நுதலோடும் நீல மயிலின் சதிரோடும் ஆறு முகமும் அருள் அள்ளி அளிக்கும் இடமே கதிர்காமம்.
போன்ற பக்திப் பாடல்களும், அவரின் கவிய்ாற்றலுக்காம் சான்றுகள்.
米 米 米
சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து அடிபட்டு எழுந்தவர்.
பண்டிதர் வீரகத்தி போன்ற மரபு அறிஞர்களுடன் நெருங்கியிருந்தர். வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி போன்ற பெரும் பேராசிரியர்களிடம் கற்றவர். யார் சொன்னாலும் நல்லவற்றைக் கேட்டு இரசிப்பவர். கல்வியில் இயல்பான ஆர்வம் வாய்த்தவர் என, இத்தனை தகுதிகள் இருந்தும், தமிழ்த்துறையைத் தன் வயப்படுத்தி
உயர்த்தாமல், கல்விக் கயமை செய்து பொய் எழுச்சி கொண்டிருந்த, சமூக அக்கறையில்லாக் கல்வியாளர் சிலரின் வயப்பட்டு வழிநடந்தமைதான், அவர் மேலான என் கோபத்தின் காரணம். இன்னும் சற்றுச் சுயத்தோடு அவர் இயங்கியிருந்தால், பிரிந்து கிடந்த சமூக, பல்கலைக்கழக அறிவுப் பிளவின் பாலமாய் அமைந்திருப்பார். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்ப் பதவியை அவர் ஏற்றபோது, நிறையச் சாதனைகளை எதிர்பார்த்தேன். பின்னர் என் ஏமாற்றமே சினமாய் மாறிக் கண்டனமாய் வெடித்தது.
米 米 米
இன்னும் எவ்வளவோ எழுதலாம். விரிவஞ்சி விடுகிறேன்.
சமூகத் தொடர்பு, அறிஞர்களுடனான அன்புத் தொடர்பு, இலக்கியவாதிகளுடனான ஈடுபாடு, பேச்சு, எழுத்து, கவிதை, நாடகம் எனப் பல்துறை ஆற்றல்கள், நல்லவை போற்றும் நயப்பு, தூற்றுவாரையும் போற்றும் நாகரிகம், இவையெல்லாம் ஒருங்கே அமைந்திருந்த சிவலிங்கராஜா,
அடுத்த ஆண்டில், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியிலிருந்து, ஓய்வு பெறப்போகிறார் என அறிகின்றபொழுது, அவ்விடத்தை நிரப்ப இனி அங்கு யார்? மனத்தில் எழும் வினா விடையின்றித் தவிக்கவே செய்கிறது.
米 米 米
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 9

Page 7
இலக்கை நோக்கி.
- தட்சாயினி பஞ்சலிங்கம்
நேரான பாதை நீண்ட பயணம் வந்த பஸ்ஸில் இடமுண்டாம் - ஏறுவதற்கு கூவி அழைக்கிறார், நடத்துநர்
கொஞ்சம் நில்லுங்கோ! நில்லுங்கோ! - ஏறவேண்டாம்!” தடுக்கின்றன, பல குரல்கள்
அடுத்த முறை சொகுசு பஸ் வருமாம் - நிற்பாட்டி ஏற்றுவினம்" சொல்லுபவர்களுக்கென்ன?
foil Lusoils தந்த களைப்புடன் சுமையும் சேர்ந்து அழுத்துகிறது என்னை
வந்த பஸ்ஸை விட்டு - வரவுள்ள சொகுசு பஸ்ஸை ரசிக்கும் நிலையில் A65606 676ct Lo60TLs).
இதோ ஏறிவிட்டேன் நான் தொடர்கிறது பயணம் இலக்கை நோக்கி. மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 10

ஈழத்து நாவல் வரலாறு 1970 - 1980 (13)
செங்கை ஆழியானின் நாவல்கள்
1970 - 1980 காலகட்டத்தில செங்கை ஆழியானின் பிரளயம், சித்திரா பெளர்ணமி, முற்றத்து ஒற்றைப்பனை, வாடைக்காற்று, இாவின் முடிவு, கங்கைக்கரையோரம், காட்டாறு, யானை, கொத்தியின் காதல் ஆகிய ஒன்பது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் சித்திரா பெளர்ணமி, யானை என்பன தவிர்ந்த ஏனைய அனைத்தும் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தன. பிரளயம் ஒரு சாதிய நாவலாகும். கணேசலிங்கன், டானியல் சார்ந்தோர் சாதி யத்தின் அழிவுக்கு அல்லது சமூக மாற்றத்துக்குத் தமது நாவல்களில் சுட்டிக்காட்டிய வழிமுறை ஒரு சமூகப் புரட்சி யாகும். செங்கை ஆழியானின் சாதிய நாவல்களான பிரளயம், அக்கினி முதலியன யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்வேறு கொடுமைகளின் பல்வேறு வடிவங்களைத் தனது நாவல்களில் சித்திரிக்கின்ற அதேவேளை, சமூக மாற்றமானது கல்வி, தொழில் மாற்றம், செல்வந் தேடல் என்பன மூலம் ஏற்படுமெனச் சித்திரித்துள்ளார். வாடைக்காற்று செங்கை ஆழியானின் புகழ் பெற்ற நாவல். காட்டாறு ஈழத்தின் தரமான தொரு நாவலாக் கணிக்கப்படுகின்றது.
காட்டாறு நாவலில் பல்வேறு விதங்களில் சுரண்டலிற்கும், பாதிப்புக்கும் உள்ளான மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போர்க்குணம் கொள்வது சமுதாய இயல்பான விழிப்புணர்வுடன், கலையழகுடன் சித்திரிக்கப் பட்டுள்ளது. காட்டாறு நாவல் வன்னிப் பிரதேச நாவல் என்ற வரையறுக்குள் விமர்சகர்கள் அடக்கி விடுகின்ற போதிலும், அதில் விபரிக்கப்படும் கதா மாந்தர்கள் அப்பிரதேசத்தில் ஆதிக்கமும், அதிகார மும் செல்வமும் கொண்டவர்களால் எவ்வாறு
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 11

Page 8
அடக்கியொடுக்கப்படுகின்றார்கள் என்பதையும், ஒரு கட்டத்தில் அந்த அடக்குமுறைச் சங்கிலி எவ்வாறு உடைக்கப்படுகின்றதென்பதையும் விபரிக்கும் நாவலாகவுள்ளது.
பஞ்சமர் நாவல்கள்
சாதியத்துக்கு மிக்க அழுத்தம் கொடுத்து பல நாவல்களைப் படைத் துத் தந்தவர் டானியலாவார். டானியல் மார்க்சியக் கருத்துக்களுக்கு தன் நாவல்களில் முக்கியத்துவம் கொடுத் திருப்பதோடு சாதியத்தின் அழிவுக்கும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களினது விடிவுக்கும் சமூகப் புரட்சியொன்றின் மூலமே விடை காணலாமென நம் பினர். இவரது நாவல்களில் யாழ்ப் பாண சமூகத்தின் சாதிப் பிரச்சினைக் மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 12
களங்கள் பொதுவாகச் சித்திரிக்கப்பட் டுள்ளன. கோயில்கள், பொதுக் கிணறு கள், பொதுவிடங்கள், பாடசாலைகள், தொழில் தாபனங்கள், என்பனவற்றில் பஞ்சமர்கள் அனுபவிக்கின்ற ஏற்றத் தாழ்வுகளையும், அவமானங்களையும், மனக் காயங்களையும், சமூக அநீதி களையும் தனது நாவல்களில் காட்டி யுள்ளார். டானியல் பஞ்சமர்களுக்கெதி ராகச் தொழிற்பட்ட பாத்திரங்களை மட்டுமன்றி, அப்பாத்திரங்கள் சம்பந்தப் பட்ட சமூகம் முழுவதையும் காறி உமிழ்கிறார். இங்கு ஆக்கவிலக்கிய கர்த்தாவுக்கு இருக்க வேண்டிய சம நிலைப் பார்வை அற்றுப்போய், அந்த சமூகத்தையே அழித்துவிட வேண்டும் என்ற போராட்டக் குணம் காணப்படு கின்றது. தலித் இலக்கியத்தின் பிதா மகர் என்று டானியல் கொள்ளப் படுவதற்கு அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது மட்டுமன்றி தலித் பக்க நியாயங்களுக்கு அவர் கொடுத் திருக்கும் அழுத்தங்களும் காரணமா கின்றன. டானியலின் பஞ்சமர் நாவல் கள் ஒரு கால யாழ்ப்பாண சமூகத் தைப் படம் பிடித்துக் காட்டு வன. அவர் சித்திரிக்கின்ற பாத்திரங்கள், பேச்சு வழக்கு என்பன யதார்த் தமாக உள்ளன. சமூக வரிய ல பணி பரினவாக வுள்ளன.
 
 

அவர்களுக்கு வயது வந்து விட்டது
W
ཀྱ|
ஈழத்து நாவல்களுக்கு வயது வந்து விட்டது என்று 1973களில் பலரையும் சொல்ல வைத்த நாவல் சு.அருள் சுப்பிரமணியத்தின் அவர் களுக்கு வயது வந்து விட்டதென்ப தாகும். அன்புமணியின் மலர் வெளி யீடாக வெளியிடப்பட்டு, வீரகேசரி தாபனத்தினால் விநியோகிக்கப்பட்டது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் விரி வான முன்னுரையைத் தாங்கி வெளி வந்தது. அருள் சுப்பிரமணியத்தின் அக்கரைகள் பச்சையில்லை என்ற நாவல் 'ஆனந்தவிகடன்’ நாவல் போட்டியில் முதற் பரிசினைப் பெற்று ஈழத்து படைப்பாளிகளின் ஆற்றலை
நிருபித்தது. பின்னர் அது போட்டி விதி களுக்குட்படவில்லையெனத் தவிர்க்கப் பட்டது. அவர் பின்னர் ஆனந்த விகடனில் எழுதிய சூரசம்ஹாரம் அவருக்குப் பெருமை சேர்த்த ஒரு நாவல். அவர்களுக்கு வயது விட்டது அவருக்குப் பெருமை சேர்த்த சிறப் பான நாவல்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி ஏராள மான புனை கதைகளுக்கு முன்னுரை வழங்கியுள்ளார். தன் திறனால் அந்நூல் குறித்துப் பூசிமெழுகிவிடுவார். அந் நூலைச் சிறப்பாக விதந்துரைக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டுணர்வது கவடிடம். ஆனால் இந்த நாவலுக்கு மட்டுந்தான் தனக்கு அப்படி ஒரு இடர்ப் பாடு நேரவில்லை எனத் திரிகரண சுத்தியுடன் ஒப்புக் கொள்கிறார். இவருடைய படைப்பில் வியக்கத்தக்க முதிர்ச்சியும் ஆக்கத்திறனும் காணப் படுவதாகப் பேராசிரியர் வியக்கிறார். தமிழ் இளைஞன் ஒருவன் சிங்களப் பெண்ணெருத்தியைத் திருமணம் செய்து கொள்ள நேர்வதனால் உருவா கின்ற சிக்கலையும், இரு இனங்களுக் கிடையிலான உறவு நிலைகளையும் இந்த நாவல் சித்திரிக்கிறது. டானிய லின் முருங்கையிலைக்கஞ்சி, சாந்த னின் ஒட்டுமா?, செங்கை ஆழியானின் தீம்தரிகிட தித்தோம் என்பன இவ்வா றான உறவு நிலை கதைச் சித்திரிப் பிலும் சுப்பிரமணியத்தின் நாவல் முற்றிலும் வித்தியாசமானது.
"அரியம், முத்தர், மொணிக்கா, மொணிக்காவின் தாய், மாஸ்டர், சிவ பாதம் யாவருமே இயற்கையான சூழ் நிலையில் பேசுகின்றனர், மோதிக் மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 13

Page 9
கொள்கின்றனர். தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றனர். நுாவலின் இச்சிறப்பே நாவலாசிரியரின் ஆக்கத் திறனுக்குச் சாட்சியாக அமைகின்றது. அவரின் பாத்திர வார்ப்புத்திறன், அவ தானிக்கும் பண்பு, கதை சொல்லும் பாங்கு என்பனவே நாவலாசிரியன் என்ற வகையில் அருள் சுப்பிரமணியத் தின் கவனிக்கப்படத்தக்க சிறப்புகள்" என்கிறார் பேராசிரியர். சிங்கள, தமிழ் உறவுகளைச் சித்திரிப்பதில் , குறிப் பாகச் சிங்களவர்களைப் பற்றித் தமிழர் கொண்டுள்ள கருத்துக்களை ஒழிவு மறைவின்றிச் சித்திரிக்கிறார். இந்த நாவல் தேசிய ஒருமைப்பாட்டைச் சித்திரிப்பதாகக் கருதுகிறார். சிங்கள - தமிழ் மக்களது உறவு நிலைகள் இறுக்கமடைந்துள்ள இக்கால கட்டத் தில் இனம் மாறிய திருமண உறவுகள் எவ்வளவு தூரம் இன ஒற்றுமைக்கு உதவும் என்பது ஐயமே.
விடிவை நோக்கி
நாடறிந்த படைப்பாளிகளில் ஒருவ ரான தெணி யான் 1973 இல் எழுதிய நாவல் வ பி டி  ைவ நோக்கி ஆகும். B5 (Lp (5 B, 6tr பொறி சபிறை யில் வாடும் புனிதர்கள், மரக் கொக்கு, காத் திருப்பு, கான லில் மான், -- சிதைவுகள் ,
தெணியான்
மல்லிகை டிசம்பர் 2008 $ 14
பரம்பரை அகதிகள, பனையின் நிழல் என்னும் நாவல்களைப் பிற்காலத்தில் எழுதினார். அடக்கியொடுக்கப்பட்ட மக் களின் உரிமைகளுக்காக இலக்கியம் படைக்கும் தெணியான், சாதியம், வர்க்கியம் ஆகிய உணர்வுகள் இப் புனைகதைகளில் மிக்கு நிற்கின்றன. குடும்ப உறவுகளை மென்மையான இறுக்கத்துடன் பிணைத்து எழுதுவதில் அவர் வல்லவர். யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றில் சாதியப் பிரச்சினைகளால் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளின் கல்வியில் ஏற்படும் மனிதாபிமானமற்ற தடைகளை விடிவை நோக்கி என்ற நாவலில் விபரிக்கின்றார். உரிமை களைப் பெறும் போராட்டங்களில் இரு தரப்பினரிடமும் மனிதாபிமானமும், நிதானமும் செயற்படாமை ஆசிரியரின் இந்நாவலலில் முக்கிய அம்சமா கின்றது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அப்பாடசாலையில் சாதியப் பாகு பாட்டால் எதிர்கொள்ளும சங்கடங் களும் அவமானங்களும் காட்டப்பட் டுள்ளன.
செ. கணேசலிங்கன் போன்றோ, கே.டானியல் போன்றோ கோட்பாட்டு முறையாக சாதியத்தை அணுகாமல் இயல்பான பிரதேச யதார்த்தமாகவும், சமுதாயப் விமர்சனப் பார்வை கொண் டதாகவும் விடிவை நோக்கி அமை கின்றது.
நிலக்கிளி
1970 - 1980 கால தசாப்தத்தில் வெளிவந்த ஈழத்து நாவல்களில் 1973 இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளி வந்த "நிலக்கிளி” தனித்துவம் பெறுகின்றது.
 

அதனால் பலரதும் கவன ஈர்ப்பக் குள்ளாகியது.
1. ஈழத்தில் முதன் முதல் வன்னிப் பிரதேசத்தை நாவலிலக்கியத்துக்குரிய களமாகத் திறந்துவிட்டது. முளளிய வளை தண்ணியூற்றுக் கிராமத்தை அதன் உயிரோடு அறிமுகம் செய்து வாசகனுக்குப் புதியதொரு தெரியாத களத்தை அறிமுகப்படுத்தியது.
2. ஈழத்தின் பட்டினங்களைச் சுற்றி வந்த நாவலிலக்கியத்தை பிரதேச நாவலின் முதல் தோற்றத்துக்கு வழி திறந்து விட்டது.
3. அக்களத்தக்கேயுரிய சொற்களஞ் சியத்தை வெளிக்கொணர்ந்தது.
4. நாடறியாத ஒரு படைப்பாளனை யும் முதலாவது படைப்பிலேயே நல்ல தொரு நாவலையும் அறிமுகமாக்கியது.
5. மண்ணேடினைந்த வாழ்க்கையின் இயல்பான உணர்வுகளைக் கொண்ட கன்னிமை நீங்காத காட்டுக் கிராம மணம் நிறைந்த நாவல்.
இன்று வன்னிப் பிரதேச நாவல் கள் பல வெளிவந்துள்ளன. அப்பிர தேச புராண மக்களும், குடியேறிய மக் களும், அப்பிரதேச சமூக வாழ்க்கை யும், அப்பிரதேசக் காட்டு மரங்களும், விலங்குகளும், பழக்க வழக்கங்களும் இந்த நாவல்களில் சித்திரிக்கப்பட் டுள்ளன. செங்கை ஆழியானின் பெரும்பாலான நாவல்கள் வன்னிப் பிரதேசப் பின்னணியைக் கொண் டவை. தண்ணியூற்றுக் கிராமத்தில் வெளியுலகம் அறியாமல் வாழ்ந்து
வருகின்ற பதஞ்சலி என்ற கிராமப் பெண்ணை இலகுவில் பிறரால் கைப் பற்றக் கூடிய நிலக்கிளியுடன் ஒப்பிட்டு சித்திரித்துள்ளார். இது ஒரு சுவையான கதை. இந்த நாவலில் தணிணி முறிப்புக் குளம் சார்ந்த காட்டுக் கிராம வருணனையுடன் தொடங்குகிறது. பதஞ்சலி, கதிராமன், கோணாமலை யார், பாலியார் முதலான பாத்திரங் களை அவற்றின் இயல்பான சிறப்பு களுடன் முரண்படாது இக்கதையில் காட்டியுள்ளார். உரையாடல்கள் வன்னி மண்ணுடன் இணைகின்றன. பதஞ்சலி யின் வாழ்வில் சுந்தரலிங்கம் ஆசிரியர் குறுக் கிடுவது இயற் கையோடு இணைந்த செயலாகப்படுகின்றது. நிலக்கிளியின் பின்னர் பாலமனோகரன் எழுதிய குமாரபுரம், கனவுகள் கலைந்த போது என்பன அவர் திறனை வெளிப் படுத்தவில்லை.
சிறப்பான சில நாவல்கள்
1970-1980களில் வெளிவந்தவற் றில் சி சுதந்திரராஜாவின் மழைக்குறி, எஸ்.ழரீ.ஜோன்ராஜனின் போடியார் மாப் பிள்ளை, கே.ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது, நந்தியின் தங்கச்சியம்மா என்பன குறிப்பிட்டு விதந்துரைக்கத்தக்கன. சி.சுதந்திர ராஜாவின் மழைக்குறி ஒரு வர்க்கிய நாவல். முதலாளித்துவச் செயல் களுக்கு எதிராக தொழிலாளர் போர்க் குரல் எழுப்புகின்றனர். சமகால அரசி யற்பிரச்சினைகள் உரையாடல்களில் அலசப்படுகின்றன. கிழக்கிலங்கைப் பிரதேச நாவலாக ஜோன்ராஜனின் போடியார் மாப்பிள்ளை திகழ்கிறது. மலையக நாவல்களில் முற்றிலும் LD6bs$lsobas Lç5LbLuñ 2008 霹 15

Page 10
வித்தியாசமான சித்திரிப்புள்ள நாவல் கே.ஆர்.டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டதாகும். இலங்கையின் இனப 'பிரச்சினைச் சம்பவங்களை முதன் முதல் நாவலில் சித்திரித்தவர் அருளர் என்பவராவார். அவரின் லங்கா ராணி அத்தகைய ஒரு நாவலாகும். 1970-1980களில் தி.ஞானசேகரனின் இரண்டு நாவல்களான புதிய சுவடுகள், குருதிமலை என்பன இரண்டும் குறிப் பிடத்தக்கன. சாதிய நாவல்கள் வரிசை யில் புதிய சுவடுகளுக்கு முக்கிய பங்குள்ளது.
கடந்த ஐந்து தசாப்த ஈழத்தமிழ் நாவல் வரலாற்றில் தோட்டத் தொழி லாளரின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கனதியான நாவல்கள் சில வெளிவந்துள்ளன.
1962இல் வெளி
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 16
வந்த நந்தியின் மலைக் கொழுந்து மலையக நாவல் கதவுகளைத் திறந்து விட்டதெனலாம். மலையகத் தொழி லாளரின் துன்ப துயரங்களையும் தொழிலாளரின் எழுச்சியையும் எழுச்சி யைச் சித்திரிப்பனதாகக் குருதி மலை அமைந்துள்ளது. இது மலையக நாவல் களில் தனித்துமான பின்னணியைக் கொண்டது. தேயிலைத் தோட்டங்கள் அந்நியரிடமிருந்து தேசிய மயமாகிய காலத்தில் தொழிலாளரின் நம்பிக்கை யான எதிர்பார்ப்புகளையும், அரசியல் வாதிகள் சிலரின் சந்தர்ப்பவாதங்களை யும் அதன் காரணமாக இரு இனங் களுக்கிடையிலான உறவு விரிசல் களையும், அதனால் ஏற்படுகின்ற இழப்புகளையும் யதார்த்தமாக குருதி மலை சிறப்பாகச் சித்திரிக்கின்றது.
1980 ஆம் ஆண்டு காலத்தினுள் ஈழத்தில் 275 நாவல்கள் நூலுருவில் வெளிவந்திருப்பதாகப் பட்டியலிட முடி கின்றது. எனினும் தேராயமாக 500 நாவல்கள் ஈழத்தில் இதுவரை வெளி வந்திருப்பதாகக் கொள்ள முடியும். எனினும் கவனத்தில் கொள்ளத்ததக்க ஒரு சோக அம்சமாகக் கருதக் கூடியது யாதெனில் இந்த 500 படைப்புகளில் நாவல்கள் எனக் கருதக்கூடியதாக எத்தனை தேறும் என்பதுதான். ஒரு இருபத்தைந்து கூடினால் ஐம்பது நூல்கள் தேறும் என்ற உண்மை நமக் குக் கசக்கத்தான் செய்யும். பெரும் பாலானவை குறுநாவல்களாகத்தான் தேறுகின்றன
- முற்றும் -
 

அமுத சுரபியாகப் பாலைச் சுரந்து பசுமைக் காடாக, வளப்பமாக; வானத்தைத் தொடு வேன் என்ற ஆணவ வெறியில் நீண்டு உயர்ந்து, பரந்து பெருத்து கிளை பரப்பிக் கம்பீரமாகக் காட்சி தந்த 'வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட இறப்பர்த் தோட்டம் இன்று வரண்டு பால் வற்றி எலும்பும் கூடுமாகக் காண்பவர் கண்களுக்குப் புலப்படும் 'பசுமாட்டு'க் கூட்டம் போல், சகாரா'ப் பாலைவனம் போல் பொலிவிழந்து மலடு தட்டிக் கிடந்தது. நிரந்தரமான வேலை இல்லை. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் அந்தத் தோட்ட மக்கள் படுகிற அவதி, அல்லல், அடக்குமுறை அது சொல்லிமாள முடியாத சோகக் காவியம். முத்துச்சாமியும் கிழடு தட்டிப் பட்ட றப்பர் மரமாக மூலையில் முடங்கிப்போய்க் கிடக்கிறான். அவனுக்கு நிரந்தர நோய். மாதத்திலே பத்து நாள் வேலை என்றால் இரண்டு நாள் வேலைக்குப் போவதும் அபூர்வம். அவனது பொஞ்சாதி வேலம்மா பல்லைக் கடித்து பத்து நாள் வேலை கிடைத்தால் பசியும் பட்டினியுமாக வேலைக்குப் போய் 'றப்பர் பாலை"க் கஷ்ரப்பட்டு வெட்டிக் கொடுத்து அதனால் கிடைக்கும் சொற்ப ஊழியத்தால் குடும்பத்தை ஒட்டி வருகிறாள். ஒட்டி வருகிறாளா? மரணப் போராட்டம் நடத்துகிறாள். முத்துசாமிக்கு நித்திரையும் இல்லை, நிம்மதியும் இல்லை. அவனது மனக்குதிரை எந்த நேரமும் பழைய சம்பவங்களை மறக்க முடியாத நினைவுகளை அசை போட்டவாறு வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும். தனது ஒரே மகள் பசியால் அழும்போது அவனும் குமுறிக் குமுறி அழுவான். அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்? அந்தத் தோட்டத்தில் தமிழ்ப் பாடசாலை இல்லை. தங்களது பிள்ளைகள் படிக்க விரும்பினால், சிங்களப் பள்ளிக் கூடத்துக்குத்தான் போக வேண்டும். தன் புனிதமான தமிழ் இனம் திட்டமிட்டுச் சிங்கள இனமாக மாற்றப்படுவதை வேதனையோடு அசைபோட்டவாறு எப்பொழுதோ நிகழ்ந்த பழைய சம்பவத்துக்குள் புதைந்து சங்கமமாகிறான் முத்துச்சாமி.
சிலுவை சுமக்கப் பிறந்தவர்கள்
- ஆரையம்பதி ஆதங்கராசா களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு றப்பர்த் தோட்டமது. ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தியும், தேர்தல் நடந்த பிறகும் ஒருவித அச்சம் கலந்த பீதியும், நீங்காத அந்திமச் சூழல் நிறைந்த மரண உணர்வும் அந்த றப்பர் தோட்ட மக்கள் வாழ்விலே புகுந்து விளையாடு கிறது. ஒழுங்கான சாப்பாடு இல்லாமல், குடிப்பதற்குத் தூய தண்ணிர் இல்லாமல், ஒழுங்கான சுகாதார வைத்திய உதவி இல்லாமல், நிம்மதியான தூக்கமில்லாமல், இறப்பர் மரங்களிலே பால் வெட்டப் போகாமல் அந்தப் பழங்காலத்து ஒட்டையும் உடைசலுமான 'லயங்களில் பயந்து போய், வேதனைகளின் மொத்த உருவங்களாக முடங்கிப் போய்க்
கிடக்கிறார்கள்.
அடிமை விலங்கு பூட்டப்பட்ட சிறுபான்மை இனங்களான தமிழர்கள் அவர்கள். மொழி, மத கலாசாரத்தைப் பேண முடியாமல் பேரினவாதிகளின் மரணக் கோட்டைக்குள் மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 17

Page 11
அடைபட்டுத் தவிப்பவர்கள். உழைப்புக் கேற்ற ஊதியமில்லை. தொடர்ச்சியான தொழில் செம்மையாக ஒட்டக்கூடிய வருமான
இல்லை. வாழ்க்கையைச்
மில்லை. பேரினவாதிகளின் சொல்படி நடக்க வேண்டும். அவர்கள் எதைச் செய்யச் சொல்கிறார்களோ அதனைச் செய்ய வேண்டும். மீறினால் அடி, உதை, கொலை, கற்பழிப்பு, லயங்களை உடைத் துத் தீ வைத்து நாசமாக்குதல். வெள்ளைக் காரன் தோட்டத்தைப் பராமரித்துப் பேணிக்காத்த காலத்தில் பசுமையாக மிளிர்ந்த அந்த றப்பர்த் தோட்டம், சிங்கள அதிகாரிகளின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்ட இன்னாளில் பசுமை முற்றாகக் குன்றி, பால் வற்றி வரண்டு போய்க் காய்ந்து கிடக்கும் தோட்டங்களாகவே காட்சி தருகிறன. ஒழுங்காக உரம் போட்டு, மருந்து வகைகளை அடித்து, செம்மை யாகத் துப்பரவு செய்து பவித்திரமாகக் முதிர்ந்த பால் குறைந்து போன றப்பர் மரங்களை வைத் துக் கொண்டு தோட்டத்தை நாசமாக்கி னால், தொழிலாளர்களுக்கு எங்கே ஒழுங் கான வேலை கிடைக்கப் போகிறது. பணந் தான் ஒரே நோக்கமென்றால் ஏழைத் தொழிலாளி வேலை இன்றிச் சாகத்தான்
கண்காணிக்காமல்,
வேண்டும். முத்துச்சாமியின் மனக்குதிரை வேகமாக ஒடிக்கொண்டே இருக்கிறது.
தேர்தல் நெருங்க நெருங்க அவர் களது வாழ்வே அழிபடும் பயங்கரம் 'பிரளயம் வரும்போல் மக்கள் அச்சத்தால், மழை பெய்தாலே வெள்ளத்திலே மிதக்கும் அந்த நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முந்திக் கட்டப்பட்ட ஒட்ட ‘லயங்களிலே பயந்துபோய் பதுங்கிக் கிடக்கிறார்கள்.
மல்லிகை டிசம்பர் 2008 18
இரவு நேரங்களிலே கும்பல் கும்பல்களாக தோட்டத்தை அண்டிய சிங்களக் கிராமங் களிலிருந்து வரும் காடையர் கூட்டம், 'நீங்கள் வாக்களிக்கப் போகக் கூடாது. போனால், ஒட்டுமொத்தமாக "லயங்களும்' அழிக்கப்பட்டு நீங்களும் சாவீர்கள்' என்று சிங்களத்திலே உரத்த சத்தமாகக் கூறி அச்சுறுத்திக்கொண்டு போவதும், வாக் களிப்பு அட்டைகளையும், அடையாள அட்டைகளையும் ஆண்கள் இல்லாத இடங்களில் பறித்துக்கொண்டு போவதை யும் அவர்களால் எப்படி மறக்க முடியும்? ஆனால், அந்தத் தோட்டத்திலுள்ள மக்கள் தங்கள் தொழிற் சங்கங்களின் வேண்டு கோளின்படி, குறிப்பிட்ட ஒருவரை வெல்ல வைக்க வேண்டுமென்ற குறிக்கோளில் இருந்தவர்கள். தேர்தலன்று கூட்டம் கூட்ட மாகச் சென்று பின்விளைவை யோசிக் காமல் குறிப்பிட்ட நபருக்கு வாக்குப் பண்ணி விட்டார்கள். அவர்கள் வாக்குப் பண்ணியவர் தோற்று விட்டார். இதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிங்களக் காடையர் கூட்டம் நகரங்களுக்குச் சாமான் வாங்கப் போனவர்களுக்கும், ஆஸ்பத்திரி மற்றும் முக்கியமான கருமங்களுக்குச் சென்றவர்களுக்கும், இன்னும் வேறு தேவைகளுக்குப் போனவர்களுக்கும் சரி யான அடி உதை கொடுத்ததோடு, வாள் வெட்டு, மண்டை உடைப்பு இப்படியெல் லாம் நடந்திருக்கிறது. அந்தத் தோட்டத்துக் கோவிலிலும், பிள்ளை மடுவத்திலும் லயங் களை விட்டுக் கூட்டமாக இரவு நேரங் களிலே பயந்துபோய் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.
'அம்மா ரொம்பப் பசிக் குதம்மா. றொட்டி சுட்டுத் தருவியா?" பத்து வயதுப் பெண் குழந்தையான பாப்பாத்தி பசியால்

வயிற்றைத் தடவியபடி தாயைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்கிறாள். 'பொட்டைப் புள்ளைக்கு பசி வந்திட்டுதா? புளுத்த மா கூட இல்ல. தேங்காயோ ஊட்டுச் சாமாங் களோ எதுவுமில்லாம தவிச்சிக்கிட்டுக் கிடக்கன். எங்கடி அம்மா றொட்டி சுட்டு ஒனக்கு பசி ஆத்தட்டும்" தாய் வேலம்மா ஒப்பாரி வைக்காத குறையாக மகளைப் பார்த்துப் புலம்புகிறாள். 'எம்புட்டு நாள் வெளியே தல நீட்டி, கையிலே ஒரு சல்லிக் காசுமில்லை. காசுதான் இருந்துக்கிட்டா லும் டவுணுக்குப் போய் ஒரு தம்படிச் 5ITLDITSDjub 6urTraja 8600T500TT 3sLDT6öT 6urala, டவுனுக்குப் போனவக வாள் வெட்டாலும், மண்ட ஒடைப்பாலும் உசிருக்குப் போராடி ஆஸ்பத்திரியில கிடக்காக" தகப்பன் முத்துச்சாமி விரக்தியான எண்ணக் கருக் களைக் கொட்டித் தீர்க்கிறான்.
'இந்தப் பாழாப் போன தேர்தலும் வந்தாலும் வந்தது, நம்மளப் போல தமிழப் பேசிக்கிடும் ஏழபாழங்களுக்கு வாழ்வும் போச்சி, மிஞ்சிக் கிடந்துக்கிட்ட உசிரும் போச்சி. தோட்டத்தில றப்பர் பால் வெட்டப் போயித்தான் எம்புட்டு நாள் ஆவுது. வேலைக்குப் போனாத்தானே பாப்பாத்தி நம்மக்கிட்ட துட்டுப் பொறஞம்' வேலம்மா நெருப்புக் காங்கையாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறாள். "தோட்டமே நாறிக் கிடக்கு. எப்ப வந்து லயங்கள ஒடைச்சு அனுமான் லங்கைய பொசிக்கின மாதிரி நெருப்புத்தானம் செஞ்சிக்கிடுவானுக எண்டு பசந்து போய் கிடக்கிறம் அல்ல. இந்தப் பாழப் போன எலக்ஷன் வந்துக் கிட்டதால நம்ம தோட்டமே பூண்டோடு கசிலாயம் போமாப் போல கிடக்கல்ல' முத்துச்சாமி பயத்தால் பிதற்றத் தொடங்க,
'அவனுக வெண்டுக்கிட்டான். சிங்களக் காடையனுக நம்மள கசக்கிப் புளியி றானுக. நம்மள வோட்டுப் போடச் சொன்ன சங்கங்கள் எல்லாம் தூங்கிகிட்டுக் கிடக் கானுகளா. மாரி ஆத்தா ஒன்னக் கும்புடுற தோட்டக்காட்டானுக்கு நீ தரும் வாழ்வு இம்புட்டுத்தானா தாயே" ஆதங்கம் பொங்கி வழிய வேலம்மா களுகங்கை ஆவேசப் புனல் கக்கி புரண்டு வருவது போல் பிரட்டி எடுக்க, "முத்துச்சாமி அண்ணா, முத்துச் சாமி அண்ணா' என்ற சத்தம் கேட்க பயந்து போய் மூச்சிழந்த கிடக்கும் அந்தக் குடும்பம் சத்தமே போடாமல் முடங்கிப் போய் மெளனம் பூண, "அண்ணே நான் தான் அண்ணே ஓங்க தம்பி வேலுச்சாமி." "அடே! வேலுச்சாமி தம்பியா' என்று கூறிக் கொண்டே வெளியே வருகிறான் முத்துச் சாமி. அவனைத் தொடர்ந்து பொஞ்சாதி வேலம்மாவும், மகள் பாப்பாத்தியும் வெளியே வருகிறார்கள். "என்னடா தம்பி நாட்டு நிலம? ஒண்டுமே புரிஞ்சிக்கிடாம இருட்டுக்க தவிச்சுக்கிட்டிருக்கண்டா தம்பி." "நிலம ரொம்ப மோசமாத்தான் போய்க்கிட்டிருக்கு அண்ணாச்சி. வாள் வெட்டுப் பட்டுக்கிட்ட சின்னச்சாமியும், சிங்காரமும் செத்துக் கிடக்கானுகளாம். எப்படியோ தப்பிக்கிட்டு வந்த ஒருவன் சொல்லியிருக்கான். பொஞ்சாதி புள்ளங்கள் அங்கிட்டுப் போவ முடியாம கத்திமாயுதுக. என்ன கொடுமங்க அண்ணாச்சி நம்ம தோட்டக்காட்டானுக்கு" முத்துச்சாமி வேலுச்சாமியின் சோகக் கதையைக் கேட்டதும், நாலு நாள் பட்டினியால் சோர்ந்து கிடந்தவன், மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகிறான். அவனைத் தண்ணிர் தெளித்து ஒருமாதிரியாக கறுப்பையா அங்கே ஓடிவருகிறான்.
எழுப்ப
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 19

Page 12
"அண்ணே லயம் வழிய ஒத்தரும் இருக் காதுங்க. மொக்காடு போட்டுக்கிட்டு ரகசிய மாக சாமான் வாங்கப் போன கறுப்பாயி பொடிச்சிய டவுண்ல காடையனுக எம் மாந்தோ கண்டுபுடிச்சிக்கிட்டு அவளக் கொண்டு கெடுத்துக்கிட்டு, காசு பணத்தை யெல்லாம் திருடிக்கிட்டு பத்திரமாக எவருக் கும் தெரியாம சவத்த எறிஞ்சிக்கிட்டானு களாம். பொலிசுக்காறனுகள் தோட்டத் துக்க வந்து விசாரிச்சிக்கிட்டுப் போறானு களாம். நாம வோட்டுப் போட்டம் இந்தத் தொழிற் சங்கத்தின்ர கதையக் கேட்டுத் தானே. மாசம் மாசம் நம்புட சந்தாப் பணத்தப் புடுங்கிக்கிட்டு வசிறு வளர்க்கிற நாய்ப் பசங்க எங்கண்ணாச்சி ஒடிப்போய் ஒளிஞ்சிக்கிட்டானுக" கறுப்பையா வார்த் தைகளை முடிக்கவில்லை, பணியக் கணக்குத் தோட்டத்திலிருந்து தொழிலாளர் கள் கத்திக் கதறிக்கொண்டு மேல்கணக் குத் தோட்டத்துக்கு ஓடிவரும் ஆழி அலை போன்ற சத்தம் கேட்கிறது.
றப்பர் மரங்களின் இலைகளைத் தாவி பெரும் பூதமாக அனல் பரப்பும் தீப்பிழம்பு கருகிய இறப்பர் பால் மணத்தை எங்கும் பரவி இறைத்தவாறு ஏனைய மரங்களிலும் பரவி ஓங்காரமாகத் தாவி வரும்பொழுது, வெறும் உடுத்த உடைகளோடு ஆண்கள், பெண்கள், கிழவர்கள், கிழவிகள், குழந்தை கள் என்று பேதமில்லாமல் கத்திக் கதறிக் கொண்டு மாரி அம்மன் கோவிலை நெருங்க, ஒருவன் மூச்சு வாங்க வேகமாக ஓடிவந்து, “ஏன் இங்கிட்டு நிக்கிய, வோட்டுப் போட்டத்துக்கு பரிசு தந்திட்டானுக. லயம் வழிய இருந்த குமர் குட்டிகளை இழுதிட்டு காடையர் கூட்டம் ஒடிப்போக, மற்றத் தறு தலைங்க "லயங்களை இடிச்சுத் தகர்த்துக் கிட்டு நெருப்பு வைச்சுக் கொழுத்திக்கிட்டு மல்லிகை டிசம்பர் 2008 霹 20
வாறானுக. ரீ. வி. , றோடியோ, உடு புடவைகள், தட்டு முட்டுச் சாமானுக மிசின் பெட்டிகளிலே ஏத்திக்கிட்டு எம்புட்டு வேக மாகப் பறக்கானுக, வக்காட ஒளிமவனுக நம்மிட குமர்க்குட்டிகளப் பதம் பார்க்கல்ல இழுத்துக்கிட்டுப் போறானுக" சொல்லும் போதே கண்களால் தாரை தாரையாக வெட்டப்பட்ட றப்பர் மரத்திலிருந்து பால் வடி வது போல் கண்ணிர் சொரிய இராமையா கூறிக்கொண்டே, 'இம்புட்டுப் பேரும் காட் டுப் பக்கம் ஒடுங்க. சண்டாளப் பசங்க இந்த லயங்களையும் நெருங்கிக்கிட்டானுக்க. இளம் பொட்டப் புள்ளங்கள நாசமாக்கிப் போடுவானுக' சொல்லிக் கொண்டே இராமையா காட்டுப் பக்கம் ஓடுகிறான். பிறகு அங்கே யார்தான் இருக்கப் போகிறார் கள். கைகளில் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு, பசி மயக்கம் தலையைச் சுற்ற நடக்க முடியாமல் நடந்து தொழிலாளர்கள் ஒட்டம் எடுக்க, முத்துச்சாமி வேலம்மா குடும்பமும் வேலிகளாகப் பரந்து செறிந்து கிடக்கும் றப்பர்த் தோட்டத்தைத் தாண்டி உயிரையாவது காப்பாற்றிக் கொள்வோ மென்ற நப்பாசையில் காட்டை நோக்கி ஒடுகிறார்கள்.
மூலையிலே முடங்கிப் போய் படுத்துக் கிடந்த முத்துச்சாமி திடுக்கிட்டுக் கண் விழிக்கிறான். வேர்வை மேனியெங்கும் ஆறாகப் பெருகி வழிகிறது. உடம்பு தெய்வம் பிடித்தவன் போல் ஆடிக்குலுங்க, "என்னடா இந்த இழவுகள் இன்னும்மா விட்டுப் போகாம உலுக்கி எடுத்துக் கிண்டிருக்கு. ஆமா அந்தக் கொடுமைங்க எம்புட்டுக் காலம் போனாலும் நெஞ்சை விட்டு மறையாதுங்க" முத்துச்சாமியின் வாய் முணுமுணுக்க கண்களை மீண்டும் மூடிக்கொள்கிறான்.

வாழும் நினைவுகள் 07
லோத் கவியரங்கு
- திக்குவல்லை கமால்
சர்யதிருப்தி வளர்ச்சியின் எதிரியென்று சொல்வார்கள். தனது படைப்பொன்று வெளி வரும்போது, அதையிட்டு திருப்தியடையாதவர்கள் எவருமிலர். ஏராளமான படைப்புக் களிலிருந்து ஆசிரியர் குழுவால் தெரிந்தெடுக்கப்பட்ட பின்பே, பிரசுரம் பெறுகிறதென்ற நிலைப்பாடே அந்தத் திருப்திக்குக் காரணமாகலாம்.
அதேநேரம் ஒரு படைப்பு குறித்த விமர்சனமே உண்மையில் குணாம்ச ரீதியாக, ஆக்க ரீதியான வளர்ச்சிக்கு ஒரு படைப்பாளியை இட்டுச் செல்லும். இதற்கான சாத்தியப்பாடு எல்லாப் படைப்பாளிகளுக்கும் கிட்டுகின்றதா? என்பதே அடுத்த கேள்வி.
விமர்சகர் என்ற பெரிய அந்தஸ்து சாத்தியப்படாதது பற்றி அலட்டிக் கொள்ளாமல், பரஸ்பரம் படைப்பாளிகளே விமர்சகர்களாக மாறி செயற்படுவது ஒரு சாத்தியமான, வெற்றி
கரமான முயற்சி எனலாம்.
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் இதனைச் செய்தது.
தலைவரும் செயலாளரும் அப்போது பள்ளி ஆசிரியர்களாக இருந்தனர். சனி, ஞாயிறு தினங்களில் அவர்களுக்கு விடுமுறை.
ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். இந்த ஒன்று கூடலின் போது பல்வேறு இலக்கிய விவகாரங்கள் பற்றி கலந்துரையாடுவோம். புதிய சஞ்சிகைகள், புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, குறிப்பிட்ட வாரத்தில் எமது படைப்பு எதுவும் வெளிவந்திருந்தால் அதுபற்றி காரசாரமான கலந்துரையாடல் நடத்துவோம். குறைநிறைகளை எடுத்துப் பேசுவோம். இதன் மூலம் எமது படைப்பு மேலும் பண்பட வழி திறந்தது.
மிகப் பிரயோசனமான ஒரு காலகட்டமாக இதனை இன்றும் நான் கருதுகிறேன். எம்.எச்.எம்.சம்ஸ் மிகவும் நாசூக்காகப் படைப்புக்களை விமர்சிப்பார். சமூகக் கண் ணோட்டம் ஒரு படைப்புக்கு எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவார். அக்காலகட்ட
மல்லிகை டிசம்பர் 2008 霹 2

Page 13
திக்குவல்லைப் படைப்பாளிகளின் ஆக் கங்கள் ஒரு குறித்த நெறியில் சென்ற மைக்கு இந்நடவடிக்கைகளும் ஒரு காரண மாயிற்று.
திக்குவல்லை எழுத்தாளர் சங் கத்தை தாபித்து ஓராண்டு நெருங்கி யிருந்தது. சுயவிமர்சனக் கூட்டங்களை மாத்திரம் நடாத்திக் கொண்டிருக்க முடி யாது. அதற்கு மேலும் எமது பணி செல்ல வேண்டுமென்ற அபிப்பிராயம் முன்வைக் கப்பட்டது. சங்கத்திற்கு வெளியே நேச சக்திகளின் ஆதரவும் எமக்கு ஊக்கமூட்டா மலில்லை.
இதனடிப்படையில் சற்று விரிவாக வும், பொது மக்களை அரவணைத்தும் இயங்குவதென திட்டமிடப்பட்டது.
முதல் நடவடிக்கையாக சங்கத்தின் ஓராண்டுப் பூர்த்தியை கவிதைத் தொகுதியொன்று வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. சங்க அங்கத்தவர் களின் கவிதைகள் மாத்திரமன்றி, பொது அறிவித்தலோடு இன்னும் பலரது கவிதை களையும் தொகுத்து 'பூ' என்ற தொகுப்பு 1962ல் வெளியிடப்பட்டது. திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தின் முதல் வெளி யீடென்று இதனைக் குறிப்பிடலாம். இத் தனைக்கும் இது கல்லச்சு (ரோணியோ) வெளியீடுதான்.
முன்னிட்டு
இதற்குக் கிட்டிய ஆதரவு எமக்கு நம்பிக்கையபூட்டியது. அடுத்த கட்டமாக மீலாத் கவியரங்கொன்றை நடாத்துவது பற்றி ஆலோசித்தோம். 'கவியரங்கிற்காக மாத்திரம் சனம் வருமா?" என்ற நியாய மான கேள்வி எழுந்தது. 'கவியரங்கென்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 22
றால் என்னவென்று தெரிந்து கொள்வதற் காகவாவது வருவார்கள்' என்றுமொரு கருத்து முன்வைக்கப்பட்டது.
திக்குவல்லை எழுத்தாளர்களோடு மிகவும் நெருக்கமான கவிஞர் ஏ.இக்பால் தலைமையில் கவியரங்கு நடப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. தலைமைக் கவிஞர் முதல்நாள் மாலையிலேயே வருகை தந்து அந்த இரவை இலக்கிய விருந்தாக்கினார். என்ன இருந்தாலும் நாளைய நடப்புப் பற்றி எனது இதயம் 'திக்திக்கென்றது.
அடுத்தநாள் கவிரயரங்கு மண்டபத் தில் ஒலிபெருக்கி ஒலித்தது. என்ன ஆச்சரியம் எமது எதிர்பார்ப்புக்கு அப்பால் சனம் வந்தவண்ணமிருந்தது. கவியரங்கு
களை கட்டியது.
இலக்கிய பூர்வமாக எதையும் இனி இந்த மண்ணில் செய்யலாமென்ற மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் மிதந்தது.
வாழும் நினைவுகள் 08
முதல் நியமனம் தந்த செய்தி
எனக்கு ஆசிரியராக முதல் நியமனம் கிடைத்து இற்றைக்கு முப்பத்தேழு ஆண்டுகளாகின்றன. கண்டி மாவட்டத் தில் நியமனமென்றபோது மனதுக்கும் உடலுக்கும் நல்ல குளிர்ச்சிதான்.
இலக்கியத்துறையில் தீவிரமாக ஈடு படும் காலம். வாழ்க்கையில் என்ன நடந் தாலும் இது இலக்கியச் செயற்பாட்டுக்கு

குந்தமாக அமைந்துவிடக் கூடாதென்பதே ஒரே பிரார்த்தனை.
இலக்கியச் எவரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய தில்லை. மனம் போல் செலவு செய்ய
செலவுக்கும் இனி
காலம் கனிந்து விட்டது.
கிராமப்புறப் பாடசாலையொன்றி லேயே எனக்கு நியமனம் கிடைத்தது. சனி, ஞாயிறு என்றால் நண்பர்களோடு கண்டிக்கு வந்துவிடுவேன். உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதே அவர்களது எதிர் பார்ப்பு. எனக்குள் நிலவும் இலக்கியத் தாகத்தை அவர்கள் எவரும் பொருட்படுத்த வில்லை. நான் தனிவழியில் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில் தான் செய்தி என்ற பத்திரிகை என் கண் களில் பட்டது. புதிய பத்திரிகை, சஞ்சிகை கள் கண்ணில் பட்டால் விடுவேனா
என்ன?
மலையகம் சார்ந்திருந்தாலும், பன் முகத்தன்மையும், கைதேர்ந்த தயாரிப்பும் மனதைத் தொட்டது. இலக்கியத்தை மிகைத்துக் காணப்பட்டது. சிறுகதை, கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
அடுத்தவார இறுதியில் அந்த முகவரி யைத் தேடிக்கொண்டு சென்றேன். அதன் ஆசிரியர் முகமலர்ச்சியோடு என்னை வர வேற்றார். என்னை நான் அறிமுகப் படுத்திக் கொண்டேன். ஒரளவுக்கு அறிந்து வைத்திருந்தார் போலும்.
"நீங்களும் செய்திக்கு சிறுகதைகள் எழுதலாமே?" என்றார்.
"எழுதுகிறேன்!" என்றேன்.
எழுதினேன்.
பல சிறுகதைகள் வெளிவந்தன.
பின்னர் வெளிவந்த எனது தொகுப்புக் களிலும் அக்கதைகள் சேர்க்கப்பட் டுள்ளன.
செய்திக் காரியாலயத்தோடு ஏற்பட்ட தொடர்பை நான் வளர்த்துக் கொண்டேன். அதன் ஆசிரியர் கே.ஜி.மகாதேவாவின் பண்புகளும் அவருடைய பத்திரிகை நோக்கும் அவர் அவாவிய விடயங்களும் அவர் மீது மிகுந்த ஈடுபாட்டை ஏற் படுத்தின.
செய்திக் காரியாலயத்தில்தான் மலை யக எழுத்தாளர் தொ.சிக்கன்ராஜைைவ சந்தித்தேன். அவர் குறுநாவலொன்றை வெளியிட்டதாக ஞாபகம். பின்னர் இந்தியா வுக்கு புலம் பெயர்ந்துவிட்டதாகக் கேள்விப் பட்டேன்.
அதே காரியாலயத்தில்தான் இன் னொரு நாள் மிக முக்கியமானதொரு எழுத்
சந்தித்தேன். எஸ்.அகஸ்தியரைத்தான் சொல்கிறேன். அப்போது அவர் கண்டி இராணுவப் பிரிவொன்றில் கடமையாற்றியதாகச்
தாளரைச் eldTib.
சொன்ன ஞாபகம்.
அப்போது மல்லிகையில் வெளிவந்த அவரது 'பிரசாதம்' என்ற சிறுகதையைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்தேன். அந்த வேளையில் இடதுசாரி எழுத்தாளரான அவர், பொருள்முதல் வாதம், கருத்து முதல் வாதம் பற்றிய தெளிவான விளக்க மொன்றை முன்வைத்தார்.
மல்லிகை டிசம்பர் 2008 奉 23

Page 14
'நீ என்ற உணர்வூற்றுருவகச் சித்திர மொன்றை சமகாலத்தில் அவர் வெளி யிட்டிருந்தார். 'ஒரு புதிய இலக்கிய உருவம். பரிசோதனை முயற்சி என்று
ਲ66.
'விளங்கிக்கொள்ள & J LDLDT as
இருக்கே” என்றேன்.
'திரும்பத் திரும்ப வாசிக்கும்போது விளக்கமேற்படும்'
எனக்கு விளக்கமேற்பட்டதோ இல்லையோ, அதற்குப்பின் அந்த உரு வத்தை அவரோ வேறு எவருமோ தொடர வில்லை.
கண்டியில் ஒரு வருடமும் மூன்று மாதத்திற்கு மேல் நான் கடமையாற்ற வில்லை. இடமாற்றம் கிடைத்துவிட்டது. அதன் பின்பு செய்தி ஒழுங்காகக் கிடைக்கவில்லை. ஒழுங்காக வெளிவரவு மில்லை. சில காலத்தின்பின் நின்றுபோய் விட்டதாக அறிந்தேன்.
சுமார் ஓராண்டுக்குப் பின்பு யாழ்ப் பானம் போகும்போது தற்செயலாக புகை வண்டியில் கே.ஜி.மகாதேவாவைச் சந்தித் தேன். தான் ‘ஈழநாடு’ பத்திரிகையில் வேலை பார்ப்பதாகச் சொன்னார். அதன் பின்னர் தொடர்பற்றுப் போய்விட்டது.
என்னைப் பொறுத்தமட்டில் செய்தி யில் சில கதைகள் எழுதினேன் என்பது முக்கியமல்ல. அதனூடாக சில இலக்கிய நெஞ்சங்களின் தொடர்பு கிட்டியதென்பதே முக்கியமானது.
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 24
Excellent Photographers Modern Computerized Photography For
Wedding Fortraits &
Child 5ittings
Photo Copies of ldentity Cards (NIC), Раеeport & Driving Licences Within 15 Minutes
300, MOdera Street, Colombo - 15. Tel: 2526345

பித்தன் கதைகள்
- எஸ்.எச்.எம்.ஜமீல்
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை முன் னோடிகளுள் ஒருவரான பித்தன் கே.எம். எம்.ஷாவின் சிறுகதைகள் 16இனை உள்ளடக் கியது 'பித்தன் கதைகள்' எனும் நூலாகும். மேமன்கவியின் முயற்சியினால், 1995 மார்ச் மாதத்தில் இது டொமினிக் ஜீவாவினது மல்லிகைப் பந்தலின் பத்தாவது வெளியீடாகப் பிரசுரமானது. தனது சிறு கதைகள் நூலாக வெளி வரவேண்டுமென மிகவும் ஆசையோடிருந்த பித்தன் ஷா அவர்கள், அதற்கு மூன்று மாதங் களுக்கு முன் அதாவது 1994 டிசம்பர் 15ம் திகதி காலமானது துரதிர்ஷ்டமானதே.
1921ஆம் ஆண்டில் மட்டக்களப்பு கோட்டைமுனையில் பிறந்த இவரின் பெயர் மீரா ஷா என்பதாகும். மிக இளம் வயதிலிருந்தே ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரை சாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மையார், பங்கிம் சந்தர், சரத் சந்தர், தாகூர் ஆகியோரின் நூல்களைத் தேடித் தேடி வாசித்தார். அத்துடன் புதுமைப் பித்தன், காண்டேகர் ஆகி யோரின் கதைகளிலும் லயித்தார். இவற்றின் மூலம் இந்தியா மீது அதீத பற்றுக் கொண்டு வீட்டிலுள்ளோருக்கும் சொல்லாமலே தனது பதினொட்டாவது வயதில் சென்னை பயண மானார். லிங்கிச் செட்டித்தெருவிலிருந்த ஸ்டார் பிரஸில் எடுபிடிப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். இங்குதான் புதுமைப்பித்தனைச் சந்தித்து, அவருடன் நெருங்கிய நட்பினை வளர்த்துக் கொண்டார். பி.எஸ்.ராமையா, சீனிவாசன் போன்றவர்களின் தொடர்பும் இவ்வச்ச
கத்திலேயே கிடைத்தது.
சென்னையிலிருக்கும் பொழுது ஒய்வு நேரங்களில் சென். ஜோர்ஜ் கோட்டைப்பக்கம் காலாறச் செல்வார். இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டி ருந்த காலமது. இராணுவத்திற்கு ஆட்சேர்த்துக் கொண்டிருந்தனர். கோட்டையருகில் நடை பெறும் இராணுவப் பயிற்சிகளையும், இராணுவத்தினரின் உடை நடையில் மிடுக்கினையும் பார்க்கும் பொழுது ஏன் தானும் அதில் சேரக்கூடாது?’ எனும் ஆவல் மேலிட்டது. அதனால் இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் வரிசையில் ஒருநாட் காலை இவரும் போய் நின்றார். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பெங்களுரில் ஒன்பது மாதம் பயிற்சி மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 25

Page 15
யின் பின்னர், யுத்தமுனைக்கு அனுப்பப்பட் டார். ஈரான், எகிப்து, பலஸ்தீனம், தியுனி ஸியா, ஈராக், சைப்பிரஸ் ஆகிய தேசங் களின் யுத்த முனைகளில் போரிட்டு, லான்ஸ் கோப்ரல், சார்ஸன்ட் ஆகிய பதவி யுயர்வுகளும் பெற்று யுத்த முடிவில் இர்ாணு வத்திலிருந்து விலகி 1947இல் நாடு திரும்பினார்.
இவரது முதலாவது சிறுகதையான 'கலைஞனின் தியாகம்" 1948 ஜூலை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பித்தன்' எனும் பெயரில் அவர் எழுதிய இக் கதையை வாசித்த எஸ்.ரி.சிவநாயகம் அவர்கள் "தமிழகத்தின் புதுமைப்பித்தன் இறந்து விட்டான்; இனி நம் இலங்கையில் ஒரு பித்தன் பிறந்துவிட்டான்' எனக் கூறி னார். 1948லிருந்து 1958 வரையான பத்து வருட காலப்பகுதியுள் அவரது பல கதை கள் பிரசுரமாகின. அதற்குப் பின்னரும் 1968வரை அவ்வப்போது கதைகளை எழுதினார். அதற்குப் பின்னர் எழுது வதையே கைவிட்டு விட்டார். 1981இல் மட்டும் ஒருநாள் ஒரு பொழுது' எனும் கதை வெளிவந்தது.
பித்தனின் கதைகள் வருமாறு : கலை ஞனின் தியாகம், பயங்கரப் பாதை, ஆண் மகன், பாதிக் குழந்தை, அமைதி, தாம் பத்தியம், பைத்தியக்காரன், மயானத்தின் மர்மம், அறுந்த கயிறு, இருட்டறை, நத்தார் பண்டிகை, சாந்தி, சோரனை, திருவிழா, ஊதுகுழல், ஊர்வலம், நரகம், மனச்சாந்தி, விடுதலை, தாலிக்கொடி, ஒருநாள் ஒரு பொழுது என்பனவாகும். இவற்றுள் அநேக மானவை இத்தொகுதியுள் அடங்கி யுள்ளன.
மல்லிகை டிசம்பர் 2008 奉 26
மேற்கூறிய கதைகளின் பிரதிகளோ அல்லது அவை வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளோ எதுவும் அவர் கைவசம் இருக்க வில்லை. 1978ல் கிழக்கில் வீசிய சூறாவளி யும், அதனைத் தொடர்ந்து வந்த வன் செயல்களினாலேற்பட்ட இடப்பெயர்வு களும் அவற்றைப் பறித்துக் கொண்டு விட்டன. இறுதியாக, மேமன்கவி முன் னுறையிற் கூறுமாற் போன்று பித்தன் தனது குடும்பத்தினருடன் திஹாரிய அகதி முகாமில் வசித்த காலத்தில், கொழும்பி லுள்ள அரச சுவடிக் கூடத்திலிருந்த பத்திரிகைகளிலிருந்து, கையெழுத்துப் பிரதி தயார் செய்யப்பட்டது.
இந்நாட்டின் தலைசிறந்த ஆய்வாள ரான எம்.எம்.எம்.மவுற்ரூப் அவர்கள் இச் சிறுகதைத் தொகுதிக்கான நீண்ட விமர்சன நோக்கொன்றினைச் செய்துள்ளார். இதி லுள்ள கதைகள் எவ்வளவு சிறந்ததென் பதற்கு இவ்விமர்சன உரையே தகுந்த *ITLăune5b.
கதைகளின் தலையங்கங்கள் மட்டு மல்ல, உள்ளடக்கமும் கூடச் சோக உணர் வினை வெளிப்படுத்துபவையாயுள்ளன. சமுதாயத்தின் அடிமட்ட அபலைகளினதும், தொழிலாள வர்க்கத்தினரும் துன்பியலைப் படம் பிடித்துக் காட்டுபவையாகவே அவை அமைகின்றன. யதார்த்த பூர்வமற்ற காதல் கதைகளைப் பலர் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில், சமுதாய அவலங்களை எடுத்துக் காட்டும் வித்தியாசப் போக்கினை இவரது கதைகளிற் காண்கிறோம்.
எம்.எம்.எம்.மவுற்ரூப் அவர்கள் கூறு வது போன்று இங்கு சமுதாயப் பார்வை பளிச் சிடுகின்றது. தன்னுடைய துன்பத்திலும், அதற்கு சமூக, சமுதாய சால்ஜாப்புகள்

அளிக்கும் திறன் அவருக்கு இருக்கிறது. பித்தனுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இங்கு ஒரு வித்தியாசத்தைக் காண்கிறோம். புதுமைப்பித்தன் எதையும் சாடும், தகர்க்கும் கலையனுபவம் கொண்டவர். ஐரோப்பியக் கதைஞர்களான ஒஹென்றி, மாப்பசான் போன்றவர்களை புதுமைப்பித்தன் பின்பிற்றி யதன் விளைவு அதுவாகும். இந்தச் சிக்கலில் பித்தன் மாட்டிக் கொள்ளவில்லை.
இத்தொகுதியிலுள்ள முதலாவது கதை யான பாதிக் குழந்தை 1952ல் எழுதப்பட்டது. பிரசுரமான உடனேயே சமுதாயப் பிரச் சினையொன்றை ஏற்படுத்திய கதை. இக் கதையை எழுதியவன் யார்? யார்? என ஒரு கூட்டம் பல மாதங்களாகத் தேடித் திரிந்த தாம். அவ்வெழுத்தாளனுக்குத் தண்டனை வழங்குவதற்காக, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, இக்கதையைப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, இரு கோணங்களி லிருந்து இதனை அணுகலாம். ஒன்று தனி மனித உபாதைகள், பாதகங்கள்; மற் றொன்று சமூகக் கண்ணோட்டம். இக்கதை யில் வரும் சுபைதா, அவளது கிழ முதலாளி, அவளுக்கு அடைக்கலம் வழங்கும் ஏழைக் கிழவி என்போர் மூலம் அன்றைய சமூக அமைப்பினைக் காட்ட முயல்கிறார்.
கணவனை இழந்த செல்லம்மாளின் வாழ்வு இரண்டு விட்டத்தைப் பற்றியது. தாம்பத்தியம்' எனும் கதை, மனைவி தவறு செய்யும் பொழுது அந்தத் தவறுக்குக் காரணம் என்ன? என்பதை அறிந்து மேலும் தவறு செய்யாமல் இருப்பதற்கு வழிவகுத்துக் கொடுப்பதுதான் தாம்பத்தியத்துக்கு இன்றி யமையாதது. கணேசன் இதைச் செய்து கொடுத்ததினால் அவர்களுடைய தாம்பத்தி யமும் ஒழுங்கு பெற்றது.
சீதனக் கொடுமையினால் வாழ்விழக் கும் ஏழைக் குமர்களைப் பற்றிய கதை தாகம்’ என்பதாகும். பித்தன் கூறுகிறார்; "எழுந்து நின்று பிரசங்கம் செய்வது போன்ற தல்ல வளைந்து நெளிந்து வாழ்க்கை நடத்து வது. மனித சமுதாயத்தின் துன்பங்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றன என்பது தீர்க்கப்படாத விஷயம் மட்டுமல்ல, பரிகாரம் கிடைக்காத துர்ப்பாக்கியமும் கூட. மதமும் வாழ்க்கையும் இரண்டறக் கலந்து கிடக்கும் ஒரு சமூகத்தில் ஏழைகளின் கண்ணிர் துடைக்கப்படாத பிரசங்கங்களினாலோ, வேதாந்த விசாரங்களினாலோ எவ்விதப் பயனுமில்லை. இத்தகைய சிந்தனையோடு தான் தன் கண்களிலே துளிர்த்த நீரைப் பெருவிரலால் தொட்டுத் துடைத்து விட்டுப் புரண்டு படுத்தாள், செய்னம்பு. அவளுக்கு மாப்பிள்ளை பேசினார்கள். ஆனால், மாப் பிள்ளை வீட்டார் கேட்ட பணத் தொகையை அவளது நோயாளித் தந்தையால் கொடுக்க முடியவில்லை. எனவே, அவளது அடுத்த வீட்டு நுக்கியாவுக்கு இம்மாப்பிள்ளையைப் பேசி இன்று கல்யாணம் நடக்கிறது.
வெடி கிளப்பிய கிடுகிடுப்பு ஒருபுறம்; பெண்களின் குரலை ஒலி மற்றொருபுறம். மாப்பிள்ளை ஊர்வலம் அடுத்த வீட்டுக் கல்யாணப் பந்தலுள் நுழைந்து கொண்டிருக் கிறது. செய்னம்புவின் கண்களில் இருந்து கண்ணிர் வடிந்தது. அந்த இளம் உள்ளத் தின் ஆசைகள் எல்லாம் கரைந்து கண் வழியாக வந்து கொண்டிருந்தன. கேட்ட பணத்தைக் கொடுத்திருந்தால், அந்தக் கல்யாணத் திருக்கோலம் அத்தனையும் இந்த வீட்டில் அல்லவா நடந்திருக்கும்
இந்த நினைவில் அவள் உடல்
சிலிர்த்தது. நெஞ்சு விம்மித் தணிந்தது. நா வறண்டு தாகம் எடுத்தது. பக்கத்திலிருந்த
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 27

Page 16
தண்ணிர்க் குடத்தை இழுத்து அதை மூடி யிருந்த சிரட்டை நிறைய நீரை மொண்டு குடித்தாள். தாகம் தீர்ந்ததா? எப்படித் தீரும்? தாகம் நாவில் அல்ல, அவள் நெஞ்சில் இருந்தது எனக் கதையை முடிக்கிறார்.
எழுத்தையே நம்பி வாழ்பவர்களின் தரித்திர நிலையை எடுத்துக் காட்டும் கதை ஒருநாள், ஒரு பொழுது என்பதாகும். திரு வாளர் பரப்பிரம்மம் பின்வருமாறு எழுது கிறார்: “கடந்த காலத்துக்கும் எதிர்காலத் துக்குமிடையே உள்ள மேடு பள்ளங்களைக் கற்பனை மெருகோடு எவன் சமப்படுத்துகி றானோ அவனே எழுத்தாளன். உண்மைக் கும் அறிவு பூர்வமான சிந்தனைக்கும் இடையே நின்று தார்மீக அடிப்படையில் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்கு பவன் எவனோ அவன் எழுத்தாளன்." இக்கோட்பாடுகளைக் கொண்ட தனது சாம்ராச்சியத்தில் வாழ்பவர்தான் பரப் பிரம்மம். ஒருநாள் அவரைப் பேட்டி கான மூன்று பல்கலைக் கழக மாணவிகள் வரு கிறார்கள். அவருடைய சாம்ராச்சியத்தில் ஒரு நாற்காலிதான் உண்டு. எனவே வீட்டுக் குள் புகுந்து ஒரு பக்கீஸ் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தார். அது சங்கப் பலகை; மூன்று பெண்களையும் ஏற்றுக் கொண்டது. அவர்கள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் பெருமிதத்துடன் நெஞ்சை நிமிர்த்திப் பதில் சொல்கிறார். எழுத் தாளனின் சிறப்பு நாகரீகத்தின் தொன்மை, சிறப்பான பண்டைய வாழ்க்கை முறை, தமிழின் தொன்மை, காப்பியங்களின் சாகா வரத்தன்மை என்பன பற்றியெல்லாம் பேசு கிறார். மூவரும் விடைபெற்றுச் செல் கின்றனர். வாசல் வரை அவர்களை வழியனுப்பச் சென்ற அவரது நடையிலே ஒரு ராஜகம்பீரம், மிடுக்கு இருந்தது.
மல்லிகை டிசம்பர் 2008 率 28
மீண்டும் வீட்டுக்குள் வரும்போது அவரது மனைவி எதிர்ப்பட்டாள். "என்ன, உங்கள் இலக்கிய சபா மண்டபம் முடிந்து விட்டதா? இனி நம்மட சமையல் சபா மண்ட பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங் களேன்" என்றாள். சட்டைப் பையைத் துளா வினார். மொத்தமாக மூன்று ரூபாக்கள் அகப்பட்டன. அதை மனைவியின் கையிற் கொடுத்தார். இந்த வேளையில் பாடசாலை தவணைப் பணம் கட்டாததினால் அங் கிருந்து திருப்பியனுப்பப்பட்ட மகனும், வீடு வந்து சேர்ந்து பணம் கேட்கிறான்.
இப்பொழுது மாபெரும் எழுத்தாளர் பரப் பிரம்மம் தமது சாம்ராச்சியத்தின் சிம்மாசனத் திலிருந்து இறங்கி பூமிக்கு வந்திருந்திருந் தார். தலையணைக்குப் பதிலாக தமது இரு கரங்களையும் தலைக்குக் கீழே அணை கொடுத்துக் கூரை முகட்டைப் பார்த்தபடி படுத்திருந்தார். எழுத்தாளர் பண்டைய நாகரிகமும், பழம் பெரும் இலக்கியங்களும் அவர் சிந்தனையை விட்டு மறைந்து விட்டன. தமிழையும் தமிழின் நாகரிகத்தைப் பற்றிய கவலையும் இப்பொழுது அவருக் கில்லை. இருந்த கவலை ஒன்றுதான். இன்றைய பொழுது எப்படிக் கழியும்?
பித்தனுடைய கதைகள் அனைத்தும் இவ்வாறு மானுட சமூகத்தின் மீதான நேசிப்பின் வெளிப்பாடுகளாலும் அல்லலுறு வோரின் அவலங்களை எடுத்துக் காட்டு பவனவாகும். அதனாற்றான் ஆய்வாளர் மஹரூப் அவர்கள் குறிப்பிடுவது போன்று, 1950 - 60 ஆகிய கால கட்டங்களில் இலங்கைத் தமிழ் எழுத்துலகை, விசேடமாக சிறுகதைத் துறையின் வளர்ச்சியை எடை போடுவதற்குப் பித்தனின் கதைகள் முக்கிய மானவையாகும்.
(வானொலியில் வாசிக்கப்பட்டது.)

خلاله تا
- ஆனந்தி
வெள்ளவத்தையில் மிகவும் பிரபலமான, அந்தக் கல்யாணச் சந்தைக்குச் சாரு வருவது இதுதான் முதல் தடவையல்ல. ஏற்கெனவே, பல எல்லைகள் கடந்த, ஒரு யுகமாக அங்கு வந்து போய்க்கொண்டிருப்பதாக அவளால் நினைவு கூர முடிந்தாலும், மாறுபட்ட கோணத்தில், முற்றிலும் நிலையிழந்துவிட்ட வெறும் நிழற் கோலமாய், இன்று அவளின் இந்தப் பிரவேசம் அடிக்கடி திறந்து மூடப்படுகிற வாசல் கதவருகே சன்னமாய் நிலைகொண்டு நிலைத்திருந்தது.
அவள் அப்படி வந்து நிற்க நேர்ந்து வெகு நேரமாகிறது. மூன்றாவது மாடி வரை, கால் முட்டி வலிக்க ஏறி வந்ததால், மூச்சு வேறு வாங்கியது. வாழ்வில் தவிர்க்க முடியாமல் நேர்ந்து விடுகின்ற இந்த உடல் ரீதியான வருத்தங்களும், வலிகளும் பொருட்படுத்தாத, உளம் சார்ந்த கடமை வேள்வி ஒன்றிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிற அவளுக்கு உணர்ச்சிப்பூர்வமான, அறிவின் ஆளுமைக்குட்பட்ட தெளிவான வாழ்வின் சித்தாந் தங்களே, மிக அதிகமாகப் பிடிபடும். அதனால் எந்தப் பின்னடைவுகளிலும் சிக்காத தானே தனித்து நின்று பிரகாசிப்பது போல், அவளுள் பிறர் கண்ணுக்குப் பிடிபடாத ஆத்ம தரிசன மான ஒரு விழிப்பு நிலையே இருந்த போதிலும், அதை மறந்துவிட்டுச் சராசரி பெண் போலவே அவளின் வெளிப் பிரக்ஞையாய் வருகின்ற இந்த நடைமுறை வாழ்வனுபங் களையே ஒரு கர்மயோகமாய் அவள் ஏற்று வாழ்கிற நிலையில்தான், கடைசிப் பெண்ணுக்கு ஒரு வரன் தேடி மீண்டும் அவள் இங்கு வர நேர்ந்திருக்கிறது. இதற்கு முன்பும் பலமுறை அங்கு வந்துபோன ஞாபகம் இன்னும் மறக்கவில்லை.
அக்கல்யாணச் சந்தையில, கனகச்சிதமாகக் கடை விரித்து, வியாபாரம் பண்ணிப் பணம் கறக்கும் புரோக்கர் சதாசிவத்தோடு அவளுக்கு நெடுங்காலப் பழக்கம். அவர் ஏனைய புரோக்கர் போலன்றி, முழுவதும் மாறுபட்ட தோரணையில், களை கட்டி நிற்கும் தனது அந்தக் கல்யாணக் காட்சி அறைக்கு ஏற்ப, அவரும் கம்பீரமான ஒரு கனவான் மாதிரியே, ஆடம்பர உடையலங்காரங்களுடன், சதா சிரித்த முகத்தோடு, பளிச்சென்று தோன்றுவார். சிரித்துச் சிரித்து நிறையப் பேசுவார்.
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 29

Page 17
அவரின் அந்த அறை சின்னதாய் இருந்தாலும், சுவர் அலுமாரிகளில் தரம் பிரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வர்ண வர்ணப் பைல் அடுக்குகளோடு ஒரு கலைக்கூடம் மாதிரியே அவரின் கை வண்ணத்தால் மெருகூட்டப்பட்ட அழகோடு சோபை கொண்டு நிற்பதாய்ப் படும். அதனோடு ஒட்டாத வெறும் நிழல் போலச் சாரு இன்னும் வாசலிலேயே நிலை தளர்ந்து நின்றுகொண்டிருந்தாள். அவள் அப்படி வந்து நிற்பதைக்கூடக் கவனிக்க மறந்து அவர் போனில் யாருடனோ வெகு சுவராஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருந் தார். அப்படிக் கதைக்கா விட்டால், பணம் மீது கொண்ட குறியே தவறிப் போகும். அவருக்கு அது ஒன்றே இலக்கு. அப்படியிருக்கும் வரை, மற்றவையெல் லாம் வெறும் நிழல்களே. எவருக்கும் வாழ்க்கை கொடுப்பதற்காக அவர் இதை நடத்தவில்லை.
போன் பேச்சு முடிந்த பிறகுதான், அவரின் கவனம் சாரு மீது திரும்பியது.
"என்ன அன்ரி, நிக்கிறியள்? வந்து கனநேரமே?” என்று கேட்டவர், யாரோ ஒர் இளம் பெண்ணைத் திரும்பிப் பார்த்துக் குழைந்து கூறினார்,
'தங்கச்சி! உந்தப் பைல்களைக் கீழே வைக்கிறியளே, இந்த அன்ரி இருக்க வேனும்”
அவளும் பைல் கவனம் கலைந்து, அப்படியே செய்து விட்டுச் சாருவை நிமிர்ந்துச் சிரித்தவாறே கூறினாள், "வந்து இருங்கோ, அன்ரி"
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 30
அவள் அப்படிக் கன்னம் குழிவிழச் சிரிக்கிற போது, மிகவும் அழகான ஒரு தேவதை போல் தோன்றினாள். அதைக் கண்குளிரப் பார்த்தவாறே, சாரு அவசர மாக நடந்து வந்து அவளருகே அமர்ந்து கொண்டாள். இனிப் புரோக்கர் அவளுக் கான பைல் எடுத்துக் கொடுத்தால்தான் அவளும் பைல்களினுள் தலை நுழைத்து எதையும் தேடலாம்.
இந்தத் தேடல், அவசியமானது மட்டு மல்ல, வாழ்வின் கடைசி வழிக்கும் விதி எழுதிய ஒரு கணக்காய் அது முடிவாகும். இது பிழைத்தால் எல்லாமே பிழைக்கும். உயிர் விட்ட வாழ்க்கைதான். எப்படியிருந் தாலென்ன? வாழ்க்கையைத் தேடுவோம் என்ற நிலைதான். சாரு அப்போது கூட, விழித்துக் கொண்டுதானிருந்தாள். நெருப் பில் நிற்பது போல, எது சுட்டாலும் இந்த விழிப்பு நிலை தொடரும். அவள் சடா ரென்று கண்கள் மலர விழிப்புற்று அருகிலி ருக்கும் அப்பெண் மீது கவனம் கொண்டு (385L LIT6it,
'நீங்கள் ஆருக்குப் பார்க்கிறியள்?"
'ஏன், எனக்குத்தான், அன்ரி பார்க் கக் கூடாதா?" என்றாள் அந்தப் பெண். எப்படிப் பார்த்தாலும் இது சகஜமான ஒன்றாகப் படவில்லை. பெரும்பாலும் இந்த மகத்தான பொறுப்பைப் பெரியோர்களே வந்து பார்ப்பதுண்டு. இதற்கு மாறாக, இவள் வந்து பார்ப்பதாகச் சொல்கிறாளே! அதுவும் எவ்வளவு வெளிப்படையாகத் தனக்கு என்று தலை நிமிர்ந்து சொல் கிறாளே! ஏன், இவளுக்கென்று பார்க்க வீட்டில் பெரியவர் ஒருவர்கூட இல்லையா?

இதை இவளிடம் போய் எப்படிக் கேட்க
(Լpւջայլb?
"என்ன அன்ரி, யோசிக்கிறியள்?"
"இல்லை, உங்களிடம் ஒன்று கேட்க லாமென்று யோசிக்கிறன்!"
"தாரளமாகக் கேளுங்கோவன்!"
'ஏன்? இதை நீங்கள் பார்க்க வேனும்? அப்பா, அம்மா வந்து பார்க்க surr bgrC36012'
"கிழிச்சினம். அவையள் பார்த்த விதி தான், இப்ப எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு!"
“என்ன சொல்லுறியள், நீங்கள்?"
"அதுதான் அன்ரி, நான் வாழாத கதையைச் சொல்லுறன். அப்பா பார்த்துப் பார்த்து ஒரு வைத்தாரே, எனக்கு அதைப் பற்றிச் சொல்லுறன்!"
கல்யாணம் செய்து
"ஏன்? என்ன நடந்தது?"
"ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கு - அதுவும் அமெரிக்காவிலே என் றால் கேட்க வேணுமே? நல்லாய் படிச்ச வன்தான், கை நிறையப் பணம் சம்பாதிக் கிறவன்தான். இருந்துமென்ன, அவனை நம்பி நான் ஏமாந்து போனதுதான் மிச்சம். ஒன்றும் எனக்கு மிஞ்சேல்லை. உணர்வு களாலே அவனோடு வாழலாமென்பதே வெறும் கனவாகிப் போச்சு. துளிகூட என் மீது அன்பில்லாத ஒருவனோடு வாழவே பிடிக்கேலை. அவன் ஒரு மிருகம். குடி காரன், பொம்பிளைப் பொறுக்கி, அவ னோடு வாழ்ந்ததே தீட்டுக் குளித்த மாதிரி
இருக்கு, எனக்கு. இப்ப எல்லாம் போய், நான் புது மனுவழி. எனக்கு ஒரு வாழ்க்கை வேனும், அது ஒரு நல்லவனோடு நான் வாழ வேணும். அதுக்காகத்தான் இப்ப நானே எனக்குத் தேடுறன்."
அவள் உணர்ச்சி முட்டிப் பேசி முடித்துவிட்டு மீண்டும் பைலில் மூழ்கிப் போனபின், நீண்ட அமைதி நிலவிற்று. சாருவிற்கு அவள் பேசியதெல்லாம் ஜீரண மாகவே வெகுநேரம் பிடித்தது. ஏனென் றால் அவள் உலகம் வேறு. என்ன நடந் தாலும், கற்பே வாழ்வென்று நம்புகிற ஒரு மறு துருவம், அவள். அதனால்தானோ என்னவோ உணர்வுகள் எப்படிப் போனா லென்ன, மனம் அழிந்து சாம்பலாகிப் போனால்தானென்ன? அவள் வாழ்வது போன்றே ஒரு பாவனை, வெளி வேஷம், வெறும் நடிப்பு.
இதையெல்லாம் நினைக்கச் சாரு விற்கு அழுகை குமுறியது. இழப்பு வாழ்க்கை ஒன்றே முடிவாகி அவள் தனித்துப் போய்விட்ட மாதிரியும் பட்டது. ஒன்றும் மிஞ்சாத, உயிரையே குடித்து விட்ட, வெறும் நிழல் வாழ்க்கைதான் இப்போது அவளுக்கு. எனினும், சமூக அளவில் அவளின் பொய்யான இந்த இருப்பு கூட மெய்யாகவே படும். இழப்பு வாழ்க்கையில் அவள் எப்படித் தோலுரிந்து போனாலென்ன அவள் தலையில் ஒளி பளிரிட்டு மின்னுகிறதே, இன்றுகூட ஒரு கிரீடம். கற்பின் சிகரத்தை எட்டிப் பிடித்த தாகவே நம்ப வைக்கிற அந்தக் கிரீடம் அதற்கான கெளரவ விருது, ஒரே ஒரு தாலி. ஒன்றுபுட்டு வாழ்வது போல் காட்ட முனையும் ஒரே ஒரு வாழ்க்கை
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 31

Page 18
யாருக்காக, எதன் பொருட்டு இந்த முட் படுக்கை?
“என்ன அன்ரி யோசிக்கிறியள்? நான் எடுத்த இந்த முடிவு சரிதானே? சொல் லுங்கோ, அன்ரி" மீண்டும் அந்தப் பெண் னின் குரல், காற்றில் அலை மோதி அடங் கிப் போனது. இதற்குப் பதில் சாருவிட மிருந்து வெகு நேரத்திற்குப் பிறகு சற்று மெதுவாகவே வந்தது.
"உன் முடிவுக்கு வாழ்த்துக்கள்!"
இதை அவள் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏனென்றால், அவளைச் சுற்றி வேலி போட்ட உலகம் இருக்கிறது. வாழ்க்கை பற்றிப் பெரிதாகவே யோசிக்கிற மனிதர்கள் கூட, இருக்கிறார்கள். இதோ இருக்கிறார்களே! ஒன்று, இரண்டல்ல மனித வெள்ளக் கணக்கில் நீண்டு நிலைத்த அவர்கள் முகங்கள், அதில் தொங்கி வெறித்த பார்வைகளோடு, ஆளையே சூறையாடி விட்டுப் போகும் விழிகள், இதிலெல்லாம் அகப்பட்டு மாய்ந்து போகவே, சாருவிற்கு இப்படி யொரு கிரீடம். அதுவும் குத்தி வருத்துகிற முட் கிரீடம். ஆனால், இப்பெண்ணோ இப்பார்வைகளை விட்டு, எங்கோ பிரிந்து போன மறு துருவமாயல்ல. அதிலும் மேலான துருவ நட்சத்திரமாகவே, உயிரில் ஒளிக்காந்தியேறி நிற்பது போல்பட்டது. சாருவிற்கு முன்னால், அவள் மட்டுமே காணக் கூடியதாக இந்த ஒளிமுகம். அதற் கொரு மெய்யான சாட்சி தேவதையாகவே அவளும், அவள் கொண்டிருக்கிற அப் போதைய இருப்பு நிலையும். சாருவின் கண்களை விட்டகலாத நித்ய சோதிப் பிழம்புகளாகவே, ஒளி கொண்டு மின்னு மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 32
புத்தாண்டு பிறக்கிறது
சந்தா செலுத்தி விட்டீர்களா? தயவு செய்தது மல்லிகையுடன்
ஒத்தழையுங்கள்.
6 Far EOL
செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும்,
வது போல் அவள் அப்படியே புல்லரித்துப் (SunsOTITs.
அவளைச் சூழ்ந்து, மூடி மறைக்கிற வாழ்க்கை பற்றிய இருளினுாடே பார்த்த போதே, அப்படிப்புரிந்தது. இந்தப் புரிதலும், அதனோடு தொடர்பான எல்லையற்ற மகிழ்ச்சியும் அவளுக்கு மட்டுந்தான். சூழ்ந்து வேடிக்கை பார்த்து, மேளம் கொட்டிச் சந்தோஷம் கொண்டாடுகிற வெளியுலக மனிதர்களைப் பொறுத்தவரை, இப்பெண்ணின் கதையல்ல, அவளின் பெறுமதி மிக்க உயிரே, அவர்களின் மன உலையில் வீழ்ந்து, வெந்து மடிந்து போகிற வெறும் நிழல் துரும்பாகவே உறுத்தி விட்டு மறைந்து போகும். அதை ஒரு பொருட் டாகவே கருத்தில் கொள்ளாமல், மனம் ஒன்றி, அவள் தேடுகிற அந்தப் புது வாழ்க்கை, நன்றாகவே விடியுமென்று சாரு நம்பினாள். ஏனென்றால் ஒரு முள் பயணத் தின் தொடக்கம் அவளுடையது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஆக்கப்படைப்பாளிகள் எதிர்நோக்குல பிரச்சினைகள்"
- ஏ.எஸ்.எம்.நவாஸ்
"மனிதநேயம் ஒற்றுமையின் மூலமே பிறக்கிறது. அவ்வாறான ஒற்றுமையும் ஒன்று கூடலும் இலக்கியவாதிகளிடத்தில் தோன்ற வேண்டும்” என்று ஒரு இலக்கிய ஒன்றுகூடல் நிகழ்வில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா சொல்லி வைத்தது ஞாபகம் வருகிறது. அவர் முன்வைத்த அக்கருத்தைக் கொண்டே கருக்கொள்கிறது இக்கட்டுரையும்.
'கலைகளிலே எழுத்தின்பம் பேரின்பம்’ எனக் குறிப்பிடுகிறார் தனது பேட்டியொன் றில் ஜெயகாந்தன். ஜே.கே. சொன்னதில் நூறிலும் நூறு உண்மையே படைப்பாக்கம் புரி கின்றவன் மற்றெல்லா கலைஞர்களிடமிருந்து உயர்ந்தவனாகிறான். சிந்தனை மட்டத்தில் வந்துலவுகின்ற செய்திகள் சிறுகதையாகவோ, கவிதையாகவோ, கட்டுரையாகவோ பிறக் கின்றன. அவ்வாறு பிரசவிக்கின்ற வேளை, வாசகனின் இதயத்தில் அவை சிம்மாசன மிட்டுக் கொள்கின்றன. அவை கடல் கடந்தும் வியாபிக்கின்றன. பொதுவாக ஒரு நாடகக் கலைஞன் ஒரு நாடகத்தை மேடையேற்றுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவை குறிப்பிட்ட ஒரு நகரிலே நடைபெறுகிறது. நாடகம் நடைபெறும் அரங்கிலே ஒரு சில ரசிகர்களே அமர்ந்து அந்நாடகத்தை ரசிக்கின்றனர். அவற்றோடு சரி. மிஞ்சிப் போனால், அந்நாடகத்தை வேறு ஒரு ஊரிலும் அரங்கேற்றலாம். ஒரு நாட்டிலே பல்தொகையான மக்கள் வாழுகின்ற அதேவேளை குறிப்பிட்ட அந்நாடகத்தை குறுகிய வட்டத்தினரே ரசிக்க முடியும். எவ்வளவுதான் முயன்றாலும் அந்த மேடை நாடகத்தை ஐந்து ஊர்களில் நடத்த முடியும். அதற்கு மேல் முடியாது. அதேபோல் வானொலியை எடுத்துக் கொள்வோம். அதில் ஒலித்த குரல்கள் மறைந்த பின் காணாமல் போய் விடுகின்றன. மறைந்தவர்கள் தயாரித்த நிகழ்ச்சிகளைக் கூட நம் வானொலிகள் மறுஒலிபரப்பும் செய்வது கிடையாது. காலப்போக் கில் காற்றில் அடிபட்டுப் போகின்றன, அந்த நாமங்கள். அந்தப் பதிவுகளுமே இல்லாமல் போய்விடுகின்றன. தொலைக்காட்சிக்கும் இதே நிலைதான். தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலே பங்கு கொள்ளும் கலைஞர்கள் எவ்வளவு பெரிய கொம்பர்களாக இருந்த போதும் அவர்களது தோற்றங்களும், அசைவுகளும் சிறிய காலத்தில் மக்களால் மறக்கப்பட்டு விடு கின்றன. 'அந்தக் காட்சிகள். ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டாவது ரசிகனின் மன தில் நிற்குமா? என்பதே சந்தேகம்தான். காலம் மாறி விடும். காட்சிகளும் மறைந்து விடும்.
அவ்வகையில் எழுத்துப் பதிவுகள் அதிக ஆயுள் கூடிய ஒரு அம்சமும், மக்கள் மனதில் காலம் வென்றும் நிலைத்திருக்கும் தன்மையையும் கொண்டவை. அந்த எழுத்துக்கள் உள்ளூர்களிலும், வெளிநாடுகளிலும் கூடப் பயணிக்கிறன. எங்கெல்லாம் வாசிப்புத் தேடல் மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 33

Page 19
உண்டோ, அங்கெல்லாம் இலக்கியவாதி யின் எழுத்துக்களும், படைப்புகளும் பயணம் செய்கின்றன. எழுத்தாளனைப் பதிவு செய்கின்றன. என்னைப் பொறுத்த வரை எழுத்துக் கலையை விட வேறொரு கலை பெரிதாக இருக்க முடியாது! அவ்வா றான சிறப்பம்சம் பொருந்திய எழுத்தை ஆள்பவர்களிடத்தில் ஒற்றுமை என்பது தான் இல்லாமல் போய்விடுகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலேயே எழுத்தாளர் சங்கங்களும் இயங்காமல் இருந்து வருகின்றன. மீண்டும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடைபயிலப் போகும் சாத்தியங்கள் தென்படுகின்ற அதே வேளை, நம்மிடையே இன்றும் வாழ்ந்து வரும் மூத்த எழுத்தாளர்கள், இன்றைய இளம் எழுத்தாளர்கள் மற்றும் புதிய எழுத் தாளர்கள் என வெவ்வேறாய் பயணம் செய் யும் இவ்வகையான எழுத்தாளர்கள் மத்தி யில் ஒன்றுகூடல் உற்சாகங்கள் அற்றுப் போய்க் கிடக்கின்றனவே எனப் பார்த்தால் அவற்றுள் மறைந்து கிடக்கின்ற நோக் கங்கள் 'முரண்பாடுகள்தான். அவை :-
1. அதி மேதாவித்தன செயற்கை
பாவனைகள்
2. இளம் எழுத்தாளர்களை மதிக்காமை
3. தன்னையும் மிஞ்சி விடுவானோ என்ற
எழுத்தாளர்களின் அச்சம்
4. சமகாலத்துக்கு பொருத்தமில்லாத
வாதங்கள், விவாதங்கள் 5. சுயபுராணக் கோளாறுகள் 6. பழம் எழுத்தாளர்களை இளம் படைப்
பாளிகள் மதிக்காமை எனச் சுட்டலாம்.
கம்பராமாயாணமும், பகவத்கீதையும், திருக்குறளும், மகாபாரதமும், ஒளவை யாரின் ஆத்திசூடியும் அச்சுப்படுத்தப்பட்டி மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 34
ருப்பதால்தான் இவை இன்றும் தமிழ் வீசும் திசைகளிலெல்லாம் நிலைத்து நிற்கின் றன. அவ்வாறான அரும் வரத்தைப் பெற்ற நமது எழுத்தாளர்களின் படைப்புகளும், அச்சுப் போக்குகளும் எப்படியிருக்கின் றன? குறித்த ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர, ஏனைய எழுத்தாளர்களின் படைப் பாக்கங்கள் எந்த ஒரு இலக்கையும் தொட வில்லை என்றுதான் சொல்லவேண்டும். முக்கிய காரணம், ஒற்றுமையின்மை, சமூக விமோசனத்திற்கான கருத்தாடற் களங்கள் ஆரோக்கியமான இலக்கியப் பயிர் வளர வழி செய்யும். கருத்துளி கொண்டு செதுக் கப்படும் தேவையற்ற சர்ச்சை உருவங் களால் எப்போதும் படைப்பழகைப் பெற
(UpLQU JITgl.
குறிப்பாக ஒரு எழுத்தாளனின் நூல் வெளியீட்டு நிகழ்வாகட்டும், அல்லது வேறு ஒரு இலக்கிய நிகழ்ச்சியாகட்டும், ஏனைய எழுத்தாள நண்பர்கள் அங்கு நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பினும், மேடையில் பேசப்படுகின்ற கருத்துக் களையோ, விமர்சனங்களையோ காதில் போட்டுக் கொள்ளமாட்டார்கள், அருகில் ஒரு இலக்கிய ரசனையாளன் அமர்ந்திருந் தால் அவரோடு மெல்லச் சிரித்துப் பேச்சுக் கொடுத்து குசுகுசுத்துக் கொண்டிருப் பார்கள். அந்த ரசனையாளனின் LD60T lib விழாவில் பதிவதைக் கலைப்பார்கள்.
ஒரு சிலரை அவதானித்திருப்பீர்கள். விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கும்போதே, அடிக்கடி எழுந்து செல்வ தும், வந்து உட்காருவதுமாய் எந்தவித குறிக்கோளுமின்றி நடந்து கொள்வார்கள். எனது இருபத்திரண்டு வருட எழுத்துப் பயணிப்பில் பத்திரிகைக்கு குறிப்பெடுக்கும்

அனுபவத்தினூடாக நான் கண்ட காட்சிகள் இவை என்பதை மறைக்காமல் எழுதத் தான் வேண்டியுள்ளது. சில விழா நிகழ்வு களில் முதுகில் தட்டல்கள், கை குலுக்கல் கள் கூடப் போலியாக இருப்பதுண்டு. புனிதமான எழுத்துப் பணியை மேற்கொள் கின்ற சில எழுத்தாளர்கள், அவையிலே நடிகர் திலகமாகவும், மக்கள் திலகமாகவும் மாறிவிடுவதுண்டு. நாம் அரங்கில் பார்ப்பது சினிமாவா? அல்லது இலக்கிய நிகழ்வா என்பதுகூட நமக்குப் புரியாமல் போய்விடு வதுமுண்டு. பணமும், அரசியலும் ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட ஒரு நல்ல இலக் கிய விழாவையும் அவற்றால் கெடுத்துவிட முடியும் என்பதற்கான அடையாளங்களைப் பல இலக்கிய நிக்ழ்வுகள் நமக்கு பாடம் புகட்டியிருக்கின்றன. இவையெல்லாம் நமது இலக்கியவாதிகளிடத்தே ஆவேச மான உணர்வில்லாமையே காரணமாகும். பணத்துக்கு ஆட்பட்ட படைப்பாளிகளுக்கு இவ்வாறான நிலைகள் ஏற்படுவது இயல் பானதொன்றே!
பணச்சடங்குகள் கொட்டி விசிறி வீசும் விழாக்களிலோ நமது இலக்கியவாதிகளின் நிலை மிகப் பரிதாபமாகவே இருக்கும். இவர்களை வாழ்த்தவோ, வர்ணிக்கவோ வாய் இருக்காது. எங்கோ உள்ள ஒரு 'வாலை"ப் பிடித்துக்கொண்டு வாழ்த்திக் கொண்டிருப்பார்கள். உரையாற்றுவதற் கும் வாய்ப்பற்று அந்த ஏழை எழுத்தாள னின் தனித்துவம் பறிக்கப்படுவதைப் பார்த் தும், ஏனைய இலக்கியவாதிகள் வாய் மூடி மெளனிகளாாக இருப்பதும் நமது தமிழிலக் கிய உலகில் நடைபெறும் அசிங்கமான அக்காட்சிகள் சினிமாவுக்கு நிகரான காட்சி களே சிலவேளை அந்த நிழல் காட்சிகளே தோற்றுவிடுமளவுக்கு புகழ் பாடும் காட்சி
கள் நிழலை வென்று நிற்கும். இறுதியில் விழாவின் ஆணிவேரான பணத்தலை வரும், அரசியல்வாதியும் தான் அவ் விழாவை ஆக்கிரமிப்புச் செய்திருப்பார்கள். ஆக்க இலக்கியவாதி அசைவற்று நிற்பான் ஒரு மூலையில்.
ஏற்கனவே நான் கூறியதற்கு மாறாக, மிக எளிமையாக நடைபெறுகின்ற இலக் கிய விழாக்களிலேயே காத்திரமான விமர் சனங்களும், கருத்துப் பகிர்வுகளும் இடம் பெறுவது உண்மை.
எந்த ஒரு இலக்கிய நிகழ்வை எடுத் துக் கொண்டாலும் அந்த நிகழ்வில் எழுத் தாளன் - வாசகர் பகிர்வுகள் கூட, மிக அபூர்வமானவையே உண்மையான வாச கர்கள் இரண்டு பேராவது நமது எழுத்தாளர் களின் நூலை மேடையில் ஏறி வாங்குவ தென்பது, தமிழ் இலக்கிய விழாக்களில் நடக்க முடியாத ஒன்றுதான். தமிழ் வாசனையற்றவர்கள்தான் பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கி ஒரு மூலை யில் வைத்துவிடுவதுதான் மரபு. எத்தனை வாசகர்களை நமது எழுத்தாளர்களின் நூல் படைப்புகள் சென்றடைகின்றன? திருப்தி படுத்துகின்றன என்பதின் விடை வெறும் கேள்விக்குறியே எழுத்தாளர்கள் - வாசகர் கள் ஒன்று கூடல்கள் அருகாத காரண மொன்றே எழுத்தாளர்களின் பரண் மேல் தேங்கி நிற்கும் நூல்கள் என்பதைக் கோடிட்டுச் சொல்ல முடியும். இன்னொரு வகையில் எழுத்தாளர்கள் - வாசகர்கள் நெருக்கமின்மை, தொடர்பின்மை என்ப வற்றையும் இவற்றுக்கு காரணங்களாக சொல்லி வைக்க முடியும். இவ்வகையி லாவது நமது எழுத்தாளர் அணிகள் ஒன் றிணைந்து வாசகர் சங்கத்திற்கான அமைப்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 35

Page 20
புப் பணிகளுக்கு உற்சாகத்தை கொடுக்க வில்லை என்ற குறையை எழுத்தாளர்கள் பக்கம் நீட்டுவதே நியாயம் என்பேன், நான்.
இலங்கையில் முறையாக ஒரு பதிப் பகம் இல்லாத குறை இன்றுவரை இருந்து வருகிறது. யாராவது அவ்வாறாக வெளியிட முன்வரினும் நம்மிடமிருந்து பாதித்தொகை யை நூல்களை பதிப்பிப்போர் எதிர்பார்க் கின்றனர். அவ்வாறு வெளியிட்டாலும் எழுத் தாளனின் பணம் போய் நூல்கள் எஞ்சி விடு கின்றன. விரைந்து செல்லும் விஞ்ஞான வளர்ச்சியில் வெளிநாட்டில் உள்ள தமது உறவினர்களின் உதவியைக் கொண்டு சில எழுத்தாளர்கள் தமது எழுத்துப் படைப்புகளை நூலாக்கிக் கொள்கிறார்கள். மல்லிகைப் பந்தல் பல படைப்பாளிகளை நூலாசிரியர்களாக வெளிக்கொணர்ந்தது. தற்போது 'புரவலர் புத்தகப் பூங்கா ஒருபடி மேலே போய் இதுவரை நூல் படைப் பொன்றைக் காணாத எழுத்தாளனுக்கு இலவசமாக நூலை அச்சிட்டுக் கொடுக் கிறது. முன்னரே கல்ஹின்னை 'தமிழ் மன்றமும் எழுத்தாளர்களின் படைப்பு களை நூல்களாக வெளியிட்டு வைத்தது எனலாம். இருந்தபோதும் முறையான பதிப் பகம் ஒன்று நமதிலங்கையில் தோன்ற வில்லை என்று குறைபாடு இன்றுவரை இருந்து வருகின்றது. பூபாலசிங்கம் புத்தக சாலையும் சில நூல்களை வெளியிட்ட போதும், தனிப் பதிப்பமாக செயல்பட வில்லை என்ற கருத்தே மேற்கூறியவற் றுக்கு பதிலாக அமைகின்றது. நமது எழுத் தாளர்களின் ஆக்கப் படைப்புகளை அச்சுப்படுத்தி, அவ்வகையில் உற்சாகப் படுத்திய போதும், தேங்கி நிற்கும் எழுத் தாளர்களின் படைப்புகள் குறைந்தபா டில்லை. ஒரு நூலைக்கூடக் காணாத
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 36
எழுத்தாளர்கள் நம்மத்தியில் இல்லாமலும் இல்லை.
நூல்களை ஆர்வக் கோளாறினால் வெளியிட்டு வைத்தபோதும், அந்நூல்களை முறையாகத் தபால்களில் வெளியூர் வாசகர் களுக்கு அனுப்பி வைப்பதிலும் எழுத்தாளர் களுக்கு இன்று பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. இன்றைய ஆளும் அரசு இது பற்றியெல்லாம் அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை. தபால் பொதி விலையேற் றப் பிரச்சினைதான் எழுத்தாளர்களை வாட்டும் விடயமாக உள்ளது. இருநூறு ரூபாய் பெறுமதியான ஒரு நூலை தபாலில் அனுப்புவதானால் அதன் செலவு நூலின் பாதி விலையை எட்டி விடுகிறது. மலர் போன்ற பெரும் நூல்களை அனுப்பி வைப் பதில் எத்தனையோ சிரமங்கள் நமது எழுத் தாளர்களை அழுத்தும் விடயமாக உள் ளன. குருவித் தலையில் பனங்காய் சுமத்தப்பட்ட கதைதான் இது
சஞ்சிகைகள், சிற்றிதழ்கள் நடத்து வோரின் அநுபவங்கள் இத்தகைய சூழலைக் கொண்டதாகவே உள்ளன. இவ்வாறான நிலையில் சக எழுத்தாளர் கள், வாசகர்கள் அவற்றுக்குத் தருகின்ற ஆதரவு கூட, மிகவும் பின்தங்கிய நிலையி லேயே உள்ளது. இவ்வாறான சவால்களை தோற்கடிக்கவோ, அதிலிருந்து வெற்றி கொள்ளவோ முடியாத ஒற்றுமையற்ற தன்மை ஒன்றே நம்மிடம் வளர்ந்திருக் கின்றது என்பதும் நாமறிந்த உண்மை.
இறுதியாக."மனிதநேயம் ஒற்றுமை யின் மூலமே பிறக்கிறது. அவ்வாறான ஒற்றுமையும் ஒன்றுகூடலும் இலக்கிய வாதிகளிடத்தில் தோன்ற வேண்டும்"
முற்றிலும் இது உண்மையே!

வeடமாகி வeடமுமாகி.
எனது வட்டம் எவரையும் உள்ளே அனுமதிக்காது - யார் வரைந்தார்கள் என்பதையும் தாண்டி அனுமதிக்கான வரைவிலக்கணங்களுக்காக மட்டும் 62/TCapub 62/LLLog/.
நண்பர்களையும், நேசிப்பவர்களையும்
அனுமதிக்கும் - பின்னர் பெண்களையும் அனுமதித்து اللہ பிரிகையடைந்து பரிதியிழந்து போனது. ܐܶܙ
நண்பர்களானவர்கள் துரோகிகளானபோது طلا6ر அஃறினையாகி அனுமதித்தது.
ஆரைகளிலிருந்தும்,
மையத்தில் இருந்தும்,
கண்ணிரும் கம்பலையுமாய்
புள்ளிகள் புறப்பட்டு
சதுரங்களும், செவ்வகங்களுமாகி காணாமல் போயின கரைகள் தேடி.
வட்டத்தின் எல்லைகளைத் தாண்டி, இட்டத்தின் இயல்புகளை மேவி, பிரபஞ்சப் புள்ளியொன்று மையத்தில் குடியேற மையல் கொண்டது.
வட்ட விதிகளை மீறி
அனுமதியளித்ததில் கோணலாகிப் போனது. கோனலைச் சரிசெய்ய முயன்ற
மல்லிகை டிசம்பர் 2008 * 37

Page 21
வட்டத்தின் கேத்திர கணிதத் தோழர்கள் நானல்களாகிப் போயினர். நாணிப் போய்க் கீதையில் சரணடைந்து நீள்வட்டமானது வட்டம்
பரிதியில் சுழன்றன வால்வெள்ளிகள் - வாயிலும் வாலிலும் தூசிகளுடனும் துணிக்கைகளுடனும்
ஒளியாண்டுகளின் முடிவுகளில் சிதறாமல், பழிவாங்கக் காத்திருந்தது வட்டம் மையத்தில் குடியேறிய 602ւOայ55e; 6ճ1602&60շա.
வட்டத்தின் விந்துகளும் பிரபஞ்சப் புள்ளியின் குல்களும் கருக்கட்டி, கவிதைகளைப் பிரசவித்து கண்ணிர்த்துளிகளை நிறைத்தன மதனமாகவும், மெளனமாகவும் நிறைவடைந்தது வட்டத்தின் வாழ்க்கை. தோன்றியது, புதியதோர் வட்டம்
புயலினதும், புழுக்களினதும் மையத்தில் இருந்து,
பரிதி விரித்து பகல் முழுதும் அழுதாலும் குஞ்சுவட்டத்தின் - குழைந்த
பிஞ்சுக் குரலானது வட்டமும் அதன் புள்ளிகளும்,
அழுவதால் பயனில்லை என்று அப்பட்டமாகி எல்லாமுதிர்ந்து எளிமையானது வட்டம் - உள்ளே மையந8ணக்கு விசையும் குஞ்சு வட்டமும் குந்திக்கொண்டிருந்தன.
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 38
குடும்ப வாழ்க்கையில் வட்டம் நீள்வட்டமாகி
செவ்வகமாகி, சதுரமாகி இறுதியில் வாய்திறந்து செங்கோணமாகி சுடலைக்குப் போகிறது.
குஞ்சுவட்டம் குதித்தெழுந்து 6/14-6 o6traillags. நீள்வட்டங்கள் சிரிக்கின்றன.

வடிகால்
http://authoor.blogspot.com/
பகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்
எழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், எனினுள் நானிர் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது எனும் அறவிப்புடனிர் சென்னையில் பதிப்புத்துறையில் இருக்கும் கிருத்திகா எனும் பெணி வலைப்பதிவாளர் வடிகால் எனும் பெயரில் ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார். அதில் தோப்பில் மீரானினி சாய்வு நாற்காலி நாவலை
பற்றி எழுதிய குறிப்பு இது.
சாய்வு நாற்காலி - தோப்பில் முவுறம்மது மீரான் -
வாசிப்பானுபவம்
சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப் போடும், சில ஏங்க வைக்கும், சில மறுக வைக்கும், சில உருக வைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோட வைக்கும். ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச் சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச் செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 39

Page 22
ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் 'சாய்வு நாற்காலி' (கசேர்) என்னை அவ்வாறு வாழச் செய்தது.
சுற்றம் மறந்து, தன் இருப்பு மறந்து, நான் என்பதும் மறந்து தென்பத்தன் கிராமத்தில் ஒருத்தியாய், சவ்தா மன்ஸி லின் ஒரு குடியிருப்பாய் நான்கு நாட்கள் என்னால் வாழ முடிந்தது என்று சொன் னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். கசேர், மய்யத், பவுரீன் பிள்ளக்கா வம்சம், எக்க வாப்பா, வாப்பும்மா, பரக்கத், அவுலியாக்கள், ஜின்னு, தங்களுமார், சாயா, வலிய அங்கத்தை, செந்தரையம்மா, ராத்திபு, . சவ்தா அவருக்கெ உம்மா, மன்ஸில் ஆருக்கெ உம்மா?. மன்ஸில் எண்ணு சொன்னா அரபி யெலெ ஊடு எண் ணாக்கும் அர்த்தம். இப்படியாக புன்னகைக்க வைக்கும் வரிகள் இப்படி எத்தனையோ வார்த்தைகள் என்னுள் இன்னும் ரீங்கார மிட்டுக் கொண்டிருக்கிறது. பால்ய வயதில் கண்டிருந்த ஐஸ்வர்யம் அழிந்த எத்தனையோ மாளிகைகளின் கதை களை நமக்கு மீட்டுத் தருகிறது சவ்தா மன்ஸில். தென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் இராஜியத் தின் அரசியல் ஆளுமைகளும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்த குந்தகத்தையும் விளைவிக்க வில்லை. முஸ்தாபகண்ணின் மனஓட்டத் தோடு நாமும் அந்த கேரளக் கரைகளில் மிக எளிதாக பயணம் செய்து மீள முடிகிறது.
உண்மையின் முகத்தை கண்டுணர முடியாத ஒரு பழம்பெருமை பேசி அதன் மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 40
இன்பத்திலேயே இன்றும் வாழ்ந்திருக்கும் முஸ்தபா கண்ணு இன்றைய நிலை தெரிந்தும் அதிலிருந்து மீளுவதற்குண் டான மனத்தைரியம் அற்ற ஆசியா, இவை எல்லாம் கண்டுணர்ந்தும் ஏதும் செய்ய வழியற்று அன்பை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் மரியம்தாத்தா, இந்த இறந்த காலத்திலிருந்து தப்பித்துச் சென்று விடும் சாகுல் ஹமீது, எரிந்த வீட்டில் பிடிங்கியது ஆதாரம் என்று இந்த சூழலை தனக்கு சாதகமாக் கிக் கொள்ளும் இஸ்ராயில் ஆனாலும் கடைசி சில பத்திகளில் தன்முக அடை யாளத்தை மாற்றிக் காட்டக்கூடிய ஒரு படைப்பு, இதனிடையே கண்ணுக்குத் தெரியாமல் பொங்கி வழியும் காமம், தறவாட்டுப் பெருமை காக்கும் சந்தன அலமாரி, பட்டு உறுமால், பப்புவர்மனின் வாள், வெள்ளித்தட்டு, வீட்டின் ஒவ்வொரு சன்னலின் விஜாவரிகள், இப்படி ஒவ் வொரு சேதன அசேதனப் பொருட்களும் இந்த நாவலில் பாத்திரமாக நம்மோடு வாழ்கிறது.
காமமும் காமம் சார்ந்த விழைவு களும் ஒரு பழம்பெரும் தறவாட்டின் பெருமையை எங்கணம் புரட்டிப் போடுகிற தென்பதையும், கிணற்று நீரில் மிதந்து கழியும் எத்தனை கன்னிமாரின்’ சாபங் களின் வடிகாலாக சவ்தாமன்ஸில் உருக் குலைகிறதென்பதையும், இத்தனைக்கும் சாட்சியான அந்த கசேரின் கதையும், கதியும் உணர்த்தும் உன்னதமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. இஸ்ராயிலின் நாவிலிருந்து வரும் கடைசி நேர சொற்றொடர்கள் இன்றைய வகுப்பும் வர்க்கமும் சாரா வாழ்வியல் நடை முறையை சுட்டுக்காட்டுவதில் மட்டுமே படைப்பாளியின் வெளிப்பாடு தெறிகிறது

அதுவரை கதைசொல்லி மட்டுமே கதை சொல்லாடல் மட்டுமே நிகழ்கிறது.
எதனால் இந்தப் புத்தகம் நம்மை அதோடு வாழ வக்கிறது என்று சற்றே தெளிந்த மனதோடு ஆராய முற்பட்டோ மானல் அங்கு ஒங்கியர்ந்து நிற்கிறது வட்டாரவழக்குன எந்த சமரசங்களுமற்ற நெடுந்தீர்க்கமான வட்டார வழக்கில் தொடர்ந்து ஒலிக்கும் மொழி நடை, பாசாங்குகளற்ற கதைப்பாங்கு இவைகள் மட்டுமா காரணம் அதையும் மீறிய ஏதோ ஒன்று. எல்லா உள்ளுணர்வுகளுக்கும் காரணமறிய முடியுமானால் நாம் ஏன் இன்னும் எழுத்தோடும் புத்தகங்களோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என நம் தேடுதல்களுக்கு ஒரு காரணி யாய் நம்மை உந்திச் செல்லும் சக்தி யாய் நல்ல வாசிப்புகள் மட்டுமே துணை யாக முடியுமென்பது உண்மையானால் இப்புத்தகமும் ஒரு காரணிதான். எத் தனையோ வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள புத்தகமானாலும் எனக்கு படிக்க கிடைத்ததென்னவோ இப்போது தான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இவர் முகமூடிக் கவிதைகள் எனும் தலைப்பில் சில கவிதைகளும் இவ்வலைப்பதிவில் எழுதி இருக்கிறார் அவையும் உங்கள் பார்வைக்கு
O1.
குறுக்கும் நெடுக்கும் கோடுகள்
ஏதுமின்றி நீண்டு செல்கிறது நெடுஞ்சாலையின் மஞ்சள் கோடு வாழ்க்கை அதுபோலில்லை.
O2.
நாய்களோ பூனைகளோ குதிரைகளோ எனக்கு நெருக்கமில்லை உருகப்படுத்த விலங்கினம் தேடினேன் என்னுள்ளிருக்கும் தாழ்திறவா ஆரண்ய கதவுகளில் 'இடமில்லை’ அட்டைகள்.
O3.
பயணங்கள் தன் இலக்குகளை இன்றில்லாவிடினும் நூளை அடையலாம் சுமரசங்களற்ற போது
O1.
சமாதனங்கள் ஆசுவாசங்கள் இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கர்ைனர்
E621606) இவைகளின் இடையே இன்றைய சந்தோஷம்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 41

Page 23
O2. இலக்கியம் புடலங்காய் கவிதை கத்தரிக்காய் கதை அவரைக்காய் கட்டுரை வெண்டைக்காய் இவையெதையும் செய்தது நானில்லை பின்னெப்படி உப்புக்கும் சுவைக்கும் நான் பொறுப்பு
O3.
കി உணர்வுகள் வார்த்தைகள் எப்போதும் உடனிருக்கும் அன்பு
காதல் துரோகம் இடைவெளி
(5776/
கோடரி
சம்பத் நிழல்கள் நவீனன் போல
S:)So)o)))e)8)))o)
நடைமேடை தூணர்களுக்கு இடயே
தெரியும் விரைத்த கால்களும் அதை சுற்றி நின் கால்களில் இருந்த தயக்கங்களும்
தரும்
அச்சத்தை
மல்லிகை டிசம்பர் 2008 & 42
தாண்டியும் மனம் நிம்மதித்தது
-9/62/IT
நமக்குத் தெரிந்தவரில்ல என்பதில்.
SQ)S)S)SOS)&DSQ)S)S)S)
வாழ்க்கை
மிகவும் சிக்கலாகித்தான் போனது வாழ்த்துக்களின்
தடமும்
புரிந்தபோது,
S)&DS)&D&D&D&OS)S)S)
இயலாமை
பரிதாபங்களை யாசித்தல் கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது. இயலாமைகளை உரத்துச்சொல்வதை தடுக்கிறது சுயமரியாதை நடப்பின் இருப்புகளை உதறவோ உடைக்கவோ முடியாத இயல்பின் மனநிலையில் கரம் நீட்டித்தரும் உதவியின் கோப்பைகளை உடைத்தெறியத்துடிக்கிறது மனது
ஏனெனில் யாசித்தலின் எதிர்மறையாய் இதையேனும் செய்வதில் நிம்மதிக்கிறது இயலாமை'

முல்லிகையின் முனஸ்ந்தல்
- நாச்சியாதீவு பர்வீன்
ஒருநாள் இரவு 10 மணியிருக்கும். என் செல்போன் அலறுகிறது எடுத்துப் பார்க் கிறேன், ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் முஸ்லிம் கலாசார பண்பாட்டு அலுவல் கள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் அஸ்லாமு அலைக்கும் பர்வீன் என்றார். நானும் பதில் கூறினேன். அல்ஹாஜ் அஸ்வர் அவர்கள் டொமினிக் ஜீவா அவர்களின் 83ம் அகவையை முன்னிட்டான பாராட்டு விழா வைபவத்தில் வைத்து எனக்கு அறிமுகமானார். நான் தொடர்ந்தும் மல்லிகையில் எழுதிவரும் 'பேனாவால் பேசுகிறேன்" தொடரை வாசிப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்தும் எழுதும்படியும் ஆர்வமூட்டி னார். பின்னர் தர்கா நகர் றம்ஸியாவின் சிறுகதை நூல் வெளியீட்டு விழா தர்கா நகரில் நடைபெற்ற போது அதில் எம்.எப்.பைரூஸ் அவர்களும், அஸ்வர் ஹாஜியார் அவர்களும் வந்திருந்தார்கள். அதில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டோம். அதன்போது இன்னும் நெருக்கமாக அஸ்வர் ஹாஜியாருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் மிக நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த பெருமையும், முஸ்லிம் அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் அஸ்வர் ஹாஜியார் இருப்பது குறிப்பிடத்தக்கது. மல்லிகையை யும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் பாராட்டி, அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவ்வுரை “ஹன்ஸார்ட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஸ்வர் ஹாஜியாரின் தொலைபேசி அழைப்புக்குக் காரணம், அந்த மாத மல்லிகை இதழில் நான் எழுதியிருந்த 'பேனாவால் பேசுகிறேன்' கட்டுரையாகும். அம்மாதக் கட்டுரை யில் கட்டாரில் நான் இருந்தபோது கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை குறிப்பிட்டிருந்தேன். அங்குள்ள நிர்வாகிகளின் பொறுப்பற்ற நடத்தைகளை விவரித்திருந்தேன். அதுபற்றி கேட்கவும், அந்த அதிகாரிகள் இன்னும் அங்கே வேலை செய்தால், அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுமே அவரது அன்றைய அழைப்பு இருந்ததை அறிந்து நான் புல்லரித்துப் போனேன். எந்த அரசி யல்வாதி இரவில் ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு உடனே, அந்த கட்டுரை பற்றிய தனது ஆதங்கங்களை வெளியிடுவான். அந்த வகையில் ஏனைய அரசியல்வாதிகளின் மத்தியில் சமூகம் பற்றி அந்த இரவிலும் சிந்தித்திருக்கும் அஸ்வர் ஹாஜியாரை பற்றிய என் மனப் பிம்பம் உயர்வாக இருந்தது அதுமட்டுமல்லாமல், எனது கட்டுரை உயர் மட்டம் வரைக்கும் சென்றுள்ளது என்பதனை நினைக்கும் போது மிகுந்த ஆனந்தமாகவும் இருந்தது.
Losib656)as ņsbi 2008 率 43

Page 24
கம்பன் விழாவில் ஒரு நாள் டாக்டர் ஜின்னாவுற் சரீப்தீன் மற்றும் இன்னும் ஒரு சிலருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். மூத்த எழுத்தாளர்கள் பலர் அங்கேயிருந் தார்கள். அப்போது ஒருவர் வந்து எம்மோடு இணைந்து கொண்டார். டாக்டர் ஜின்னாவுற் சரீப்தீன் எனக்கு அவரை அறிமுகப்படுத்தி னார், கே.எஸ்.சிவகுமாரன் என்று. நான் அசந்து போனேன். கே.எஸ்.சிவகுமாரன் எத்துணை பெரிய ஆளுமை. எனது மல்லி கைக் கட்டுரைகள் பற்றி தனது கருத்துக் களைச் சொன்னார். கட்டுரையாளர், விமர் சகர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர் என்று பல்வேறு பரிமாணங்களில் தனது ஆளுமைகளை வெளிக்காட்டி, முத்திரை பதித்து வெளிக்காட்டிக் கொண்டிருக்கும்
சிவகுமாரன் அவர்களின் அறிமுகம் கூட, மல்லிகையின் மூலம் கிடைத்ததே மனசு மல்லிகைக்கும், மல்லிகை ஜீவாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இன்றுகளில் வசந்தி, தயாபரன், முறிதர் பிச்சையப்பா, ராவுப் ஹசீர், வெளிகம றிம்சா, வதிரி சி.ரவீந்திரன் என்று நீளும் பட்டியலில் என்னோடு அறிமுகமாகியவர் களில் பலர் இந்த மல்லிகை கட்டுரையின் வாயிலாகத்தான் என்னை அறிந்து கொண் டார்கள். எனது கட்டுரைகள் எனக்குத் தெரிந்த நிறையப் பேரையும், என்னைத் தெரியாத நிறையப் பேரையும் சென்றடைந் துள்ளது. மல்லிகையின் மணம் என் மனசு பூராகவும் சந்தோஷத்தை விதைத்தது. இந்த நினைவுகள் என்றும் அழியாதவை.
- (மலருக்கான தப்
ܚܐܠ
மல்லிகை ஆண்டுச் சந்தா
ஆண்டுச் சந்தா 450/- தனிப்பிரதி 30/- gey,6difoTG6 LD6A)ñr 200/-
ற் செலவு 65/= ரூபா) வங்கித் தொடர்புகளுக்கு ・・・・ 。 Dominic Jeeva 5305014, Hatton national Bank SeaStreet,Colombo - 11. 43 வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்.காசோலை அனுப்புபவர்கள் Dominie Jeeva எனக் : குறிப்பிடவும்.காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva, ,
K0tahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். :
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13.
தொலைபேசி : 2320721
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 44
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளவத்தை கடற்கரை. மாலை 5.30 மணியைத் தாண்டியிருக்க வேண்டும். நெருப்புப் பந்து வடிவமான அந்தச் சூரியன் தன்னை முற்று முழுதுமாக காட்டி, மெல்ல மெல்ல கீழ் இறங்கிக் கொண்டிருந்தான். அதன் அழகினை ரசித்து மகிழும் நிலையில் அந்த இடத்தில் யாரும் இல்லை சடகோபனைத் தவிர.
கடலில் குதித்து, நல்ல நீச்சல் நீந்தி களைத்துப் போன அந்தச் சிறுவர்களின் உற்சாகத்தை சடகோபனால் கணக்கிட்டுக் கொள்ள முடியவில்லை. அப்படி ஆனந்தமாய் ஒடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள், அவர்கள்.
நான் மட்டும் இதில் இருந்துகொண்டு எதைச் சாதிக்கப் போறன்? என்னிலும் பார்க்க வயசில் குறைந்த ஆடவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் மனைவியருடன் கூடவே, ஒன்றோ. இரண்டு பிள்ளைகளுடனும், அந்தக் கடற்கரையின் மணலில் கால் புதைத்து புதைத்து வலு ஆனந்தமாய் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படிப் பலவாறாக சடகோபனின் உள்ளம் கடல் அலை என வந்து வந்து முட்டி மோதிக்கொள்ள அமைதி யின்றி குழம்பிக் கொண்டிருந்தான்.
அவன் என்ன நடமாடும் சடமா..? அவனுக்குள்ளும் எத்தனை எத்தனை ஆசைகள், எவ்வளவோ கற்பனைகள்! அத்தனையும் வெட்டிப் புதைத்து வாழ நினைப்பதென்பது எல்லாராலும் முடியாத ஒன்றுதானே...!
இப்படி நாளுக்கு நாள் தாழ்ந்து கொண்டு போகும் அவன் எண்ணங்கள், இப்பொழுது பின்னோக்கி பறந்து, சிறகடித்துக் கொள்கின்றன.
உயர்ந்த பனை மரங்களும், வளைந்து நெளிந்த தென்னை மரங்களின் சோலையும், மா, பலா மரங்களின் சுவைகளும் அவன் சொந்த ஊரின் அடையாளங்கள் எனலாம். இத்தனை இயற்கை அழகுகளுக்குள்ளும், அகல விரிந்த வேப்ப மர நிழலின் கீழ் அவனின் வீடு அமைந்திருந்தது. கல் வீடுதான். நவீன காலத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு அந்த விடும் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளித்துக்கொண்டு இருந்தது.
அந்தக் குடும்பத்தில் சடகோபன் மூன்றாவது பிள்ளை. அவனின் மூத்த அண்ணன் லண்டன் சென்று பத்து வருடங்களும், அவனின் அக்கா சுவிஸ் சென்று நான்கு வருடங் களும் கடந்த நிலையில் இவனின் வயதும் முப்பது முடிந்து முப்பத்தொரு வயதாகிக் கொண்டிருக்கிறது.
ஓர் அன்னையின் ஆத்மா அமைதி பெறுகிறது.
- சீனா.உதயகுமார்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 45

Page 25
தன் தங்கைமார்களில் ஒருத்திக்கு இருபந்தைந்தும், மற்றவளுக்கு இருபத் தொரு வயதும் ஆகிக்கொண்டிருந்தன. மூத்த தங்கச்சிக்கு நல்லதொரு இடத்தில கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் தானும் ஒரு கல்யாணம் செய்து கொண்டு, தன் இளையவளுக்கும் அடுத்தடுத்த வருடங்களில் கல்யாணம் செய்து வைத்து, பெரியதொரு மனநிம்மதியினை அடைய லாம் என நாளுக்கு நாள் ஏங்கிக் கொள் வான்.
தன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க கந்தசாமிப் புறோக்கரோடு ஒடு ஒடென்று ஒடி சலித்துப் போய்விட்டான். தன் பெண் சகோதரங்களில் அதீத பற்றுடையவன், அவன்.
சடகோபன் நல்லதொரு ஆங்கில பாட ஆசிரியன். ஆசிரிய நியமனம் பெற்று இன்று எட்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன. அவனுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயது இருக்கும் போதே எத்தனை எத்தனையோ நல்ல நல்ல இடங் களில் இருந்தெல்லாம் நல்ல அழகான பொம்பிளைப் பிள்ளைகளின் சாதகக் குறிப்பும், போட்டோவும் வந்திருக்கும். அவன் அப்ப எடுத்த ஒரே முடிவு,
'அக்காவுக்கு ஒரு பாருங்க. பிறகு, தங்கச்சிக்கும் ஒரு மாப்பிள. அடுத்தபடியாகத்தான் எனக்கு" என்று ஒரே பேச்சாக சொல்லி முடித்து விட்டான்.
זו6תו נם זו פו.
சடகோபனை வைத்துப் பெரிய உழைப்பொன்று உழைத்து விடலாம் என ஒடித் திரிந்த புறோக்கர்கள், இப்போ அவன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வென ஒடித் திரியத் தொடங்கி விட்டனர்.
தமக்கையின் கல்யாண விடயம் நல்ல படியாக சரிவரவே அவளும் சுவிஸ் சென்று சேர்ந்து விட்டாள். அந்த நேரம் மல்லிகை டிசம்பர் 2008 & 46
அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே யில்லை. அப்படியொரு நீண்ட மகிழ்வில் அவன் திளைத்திருந்தான்.
சடகோபனின் அப்பா பொன்னம்பலத் தார் சிறு வயல் ஒன்றின் சொந்தக்காரர். அதில் நொல்லோ, தினையோ காலத்துக்குக் காலம் போகம் பார்த்து விதைத்து, அதில் இருந்து வரும் வருமானங்கள் மூலம் தன் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக காத்து வந்தார்.
தான் படும் கஷ்டங்கள் தன் பிள்ளை களுக்கும் வரக்கூடாது என்ற குறிக் கோளில், தன் பிள்ளைகளைப் படிப்பித்து நல்ல தொரு நிலைக்கு ஆளாக்கி விட வேண்டுமென தன் எண்ண ஆசைகளில் அடிக்கடி மகிழ்ந்து போவார்.
சடகோபனின் மூத்த அண்ணன் ஏ.எல். படித்தவன். ஆனாலும் அவனின் கூட்டுக்கள் உதவாக்கரை என்பதால் இவனும் படிப்பைக் குழப்பிப் போட்டான்.
“டே. ஒருக்காலெண்டாலும் ஏ. எல். சோதனையை எடுத்து பாரன்டா.." என்று தன் மகன் மேல் உள்ள கருசனையில் அடிக்கடி மூத்தவனை வேண்டி நிற்பார். மூத்தவன் தகப்பனின் எந்தவொரு சொல்லையும் கேட்காதவனாக, அவரின் அறிவுரைகளைத் தட்டிக் கழித்து நடபபான.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அப்பா நல்லாக மனம் நொந்து போனார். நாட்டின் போர்ச் சூழலும் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. தன் வயல்
உறுதியினை வட்டிக்கார ஆறுமுகத்திடம்
பிணை வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தன் மூத்தவனை வெளிநாடு அனுப்பி வைத்து விட்டார்.
மூத்தவன் லண்டன் போன அடுத்
தடுத்த வருடமே, பொன்னம்பலத்தார்

குடும்பம் வசதிகள் பெற்று நல்ல நிலையில் முன்னேறிக் கொண்டிருந்தது.
பொன்னம்பலத்தார் பிணை வைத்த உறுதியையும் எடுத்துப் போட்டார். அந்த வயலில் நெல் பயிரிட்டு தன் ஆரம்ப கால வாழ்க்கையினை தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். அப்படியொரு ஆனந்த மான நிலையிலேயே சடகோபனுக்கும் ஆசிரிய நியமனம் கிடைத்தது. பொன்னம் பலத்தாரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படியொரு ஆனந்தம்.
இப்படியாக, பொன்னம்பலத்தாரின் மகிழ்ச்சியின் ஆரவாரம் தொடர்ந்து
கொண்டேயிருந்தது.
இன்னொருவரின் மகிழ்ச்சி கண்டு யாரும் மகிழ்வதென்பது பொய்தானே...!
பொன்னம்பலத்தாரின் இந்த மாதிரி யான திடீர் முன்னேற்றம் ஊரில் ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல்தான் போலும். ஏனென்றால், அவர் தான் பட்ட கஷ்டங் களுக்கெல்லாம் இன்பம் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளை, அவருக்கு கால் முடக்குவாதம் வந்து, ஒரு மூலையில் அடங்கி ஒடுங்கி படுத்து ஒருசில வருடங் களில் செத்தும் போனார்.
அதன் பிறகு அந்த குடும்பம் சட கோபனின் நெறியாள்கையில் வழிநடத்தப் பட்டுக் கொண்டிருந்தது.
தன் மூத்த தங்கையின் கல்யாணம் பற்றிய தேடல்கள் நாளுக்கு நாள் சட கோபனை வாட்டி வதைத்துக் கொண்டி ருந்தது.
சடகோபனின் இளைய தங்கை சிறு பராயத்திலிருந்தே அதிக செல்லமாக வளர்ந்து விட்டாள். அவனின் அக்காவும், மூத்த தங்கச்சியும் வலு அமைதியான
சுபாவம். இளையவள் அப்பிடியில்லை. எதையும் படக்கென எடுத்தெறிந்து சரிக்குச் சரி கதைத்து விடுவாள். இது சடகோபனுக் குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. சில சமயங்களில் அவளின் உள்ளம் நோகும் படியாக, வலிகள் நிறைந்த வார்த்தைகளால் பேசிவிடுவான். அதேநேரம் அவனின் இரு கரங்களும் மள மளவென அவள் கன்னங் களைப் பதம் பார்த்து விடும். அதற்கு பிறகு அவள் எதையும் கதையாது, கொள் ளாது போய் கட்டில் மேல் விழுந்து படுத்து அழுது கொண்டிருப்பாள்.
தன் செல்லத் தங்கையை இப்படி மனம் நோகக் கதைத்து விட்டேனே என பிறகு அவளுக்காக அவன் தன் மனதுக்குள் இரங்கிக் கொள்வதும் உண்டு.
இந்த மாதிரியான தன் மொக்குத்தன மான செயலை நினைத்து விட்டால் போதும், அன்றிரவு எதுவுமே சாப்பிடாது உறங்கி விடுவான்.
தன் இளைய தங்கை பற்றிய ஏக்கங் கள் அவனுக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
"பிள்ளை நீ கொஞ்சம் கவனமாய் நடந்து கொள்ளடா. உன்ர கொண்ணன் ஒரு கோபக்காரன் என்று தெரியும்தானே..? அவன் ஏன் உங்கட மனசை அடிக்கடி நோகடிக்கோணும், எல்லாம் உங்கட நன்மைக்குத்தானே. உப்பிடி நடந்து கொள்கிறான். அவன் உங்களை நினைத்து ஏங்கும் ஏக்கங்கள் எனக்கல்லோ தெரியும். அவன் எது செய்தாலும் அது உங்கட நன்மைக்குத்தான்."
இப்படி அவள் தாய் அவளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள். சொல்லும் போதே அவளையும், அவள் தமையனையும் நினைத்து, தன்னை மறந்து அழுதுவிடு மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 47

Page 26
வாள். அழுதுகொண்டே தன் சேலைத் தலைப்பால் கண்களில் இருந்து வழியும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே,
“போன பிள்ள போ. கொண்ணன் சாப்பிடாமலல்லோ கிடக்கிறான். அவனை எழுப்பிச் சாப்பாட்டைக் குடுத்து, நீயும் சாப்பிடென."
இப்படி அவள் தாய் ஏக்கப் பெரு மூச்சாக ஒரு சில வார்த்தைகள் கதைத் ததும், அதைக் கேட்ட அவளும் ஒருசில நிமிடச் சிந்தனையின் பின், மனம் திருந்தி யவளாக எழுந்து சென்று தன் அண்ணனை யும் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு பின் உறங்கி விடுவாள்.
ஒருநாள் இரவு பன்னிரண்டு மணி யைத் தாண்டிய நிலையில், தன் தங்கை நித்திரை கொள்ளாது ‘கான்ட் போனுடன்" ஆருக்கோ எஸ்.எம்.எஸ். அனுப்புவதும், அதற்கான ஹிப்பிளையை அவள் எதிர் பார்த்து காத்திருப்பதும் இவனால் நன்கு அவதானிக்க முடிந்திருக்கிறது. இது அவனுக்கு கோபத்தையும், பலத்த அவ மானத்தையும் உண்டாக்கியதோடு, கூடவே எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகின்றது.
இந்த நிலையில் வலு வேகமாக பற்றிக்கொண்டு வந்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு அமைதியாக உறங்க முயற்சிக்கிறான். அது அவனுக்குப் பலத்த தோல்வியாகி விடுகின்றன. எப்ப விடியும், தங்கை மீதான தன் சந்தேகங்கள் எப்போது தெளியும் என்ற அவனது ஏக்கங்கள் அவனை இவ்வாறு தூங்க விடாது குழப்பி அடித்துக் கொண்டிருந்தன.
சட கோபன் படுக்கையிலிருந்து எழுந்து, காலைக் கடமைகள் முடித்துத் தன்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 48
மேசையில் அமர்ந்து கொள்கிறான். நேரம் காலை ஆறரை தாண்டி ஓடிக்கொண்டிருக் கிறது. வழமையாகத் தன் தங்கை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து தன் அக்கா கிருஷியுடன் சேர்ந்து விட்டுக்குரிய அத் தனை கடமைகளையும் ஓர் ஒழுங்கு முறை யில் நிறைவேற்றி வைப்பாள். ஆனால், இன்று அவள் இன்னும் படுக்கையிலிருந்து எழுந்துவிடவேயில்லை.
இப்ப தன் தங்கையைக் கூப்பிடு கிறான். அவளும் அருட்டிக்கொண்டு எழுந்தவாறு,
கூப்பிட்ட
"ஏன்? ஏனண்ணா
னிங்கள்...???
"உன்ர அக்கா எழும்பி எத்தனையோ வேலையள் செய்து முடிச்சுப் போட்டாள். நீ என்ன எப்போதும் இல்லாத ஒரு புதுப் பழக்கமாய் இத்தனை நேரம் கிடக் கிறது.?” என்று தன்னுள் இருந்த அத் தனைக் கோபங்களையும் அடக்கிக் கொண் டவனாக, தன் தங்கையை இப்படிக் கேட் கிறான்.
“இந்த வீட்டில ஒருநாளும் நிம்மதி யில்ல! எப்பப் பார்த்தாலும் அதையெடு, இதையெடு எண்டு புடுங்கிக் கொள்ளத் தான் தெரியும். அதை இதையென்று தாங்கள் எதுவும் செய்யமாட்டினம்." படக்கென பதில் சொல்லி விட்டு, தனக் குள்ளும் ஏதோ புறுபுறுத்துக் கொண்டு, அப்பால் சென்று விடுகிறாள்.
அவள் சொல்லிவிட்ட எதையும் கேட்டும் கேளாதது போல் அவன் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தான். எடுத்த எல்லாத்துக்கும் ஒரு குமர்ப் பிள்ளைக்கு அடித்துக் கொண்டிருந்தால், ஊர் சனம் என்ன நினைக்கும்? சனம்
நினைக்கிறதென்ன? அப்பிடி, இப்பிடி

என்று கண்டபடி கதைகள் கட்டிப்போடும். அதனால்தான் சடகோபனும் பொறுமை
யாக இருந்திருக்கிறான்.
தமையனின் பொறுமையின் கூடுதல் நிலையினையும், தன் மீதான கண்டிப்பில் குறை நிலையினையும் அவதானித்து வரும் அவள், நல்லாத்தான் உசார் அடைந்து விட்டாள், தன் தமையன் தனக்கு எதுவும் செய்ய மாட்டார் என்று.
அவள் இப்ப தன் வீட்டின் பின் வள வினை பெருக்கிக் கொண்டே, அந்த வீட் டின் சுவரின் ஒரத்தில் வைக்கப்பட்டுள்ள தன் கான்ட் போனினை இடையிடையே அவதானித்துக் கொண்டிருந்தாள். இன்று அவள் தன் கடமைகளில் கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை.
இதை இடையிடையே அவதானித்துக் கொள்ளும் சடகோபனுக்கு மீண்டும் மீண் டும் கோபத்தைத் தூண்டிக் கொண்டி ருந்தன. வந்த கோபங்களுக்கு கான்ட் போனினை உடைத்தெறிந்தாலும் அவனின் ஆத்திரம் தீர்ந்திருக்காது. கோபமென்றால்
அப்படியொரு கோபம்.
இப்ப கான்ட் போனின் றிங் ஒலி கேட்டதும் ஒடோடிச் செல்கிறாள். கான்ட் போனினை எடுத்து உற்று நோக்குகிறாள். எஸ்.எம். எஸ். இல் வந்திருந்த செய்தி பார்த்து தன் மனதுக்குள் சிரித்துக் கொள் கிறாள். பிறகு அங்கை இங்கையென்று தன் பார்வைகளால் ஒரு துளாவு துளாவி, தன்னை யார் யார் அவதானித்துக் கொள்ளு கினம் என்பதை அவதானித்துக் கொள் கிறாள். அவளின் எண்ணப்படி தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதே அந்தக் கணம் அவள் எடுத்த முடிவு.
நிறைவான சந்தோசங்கள் ஆட் கொள்ளும் போது, அருகில் நிற்பவர்
யாரும் தெரியாமல்தானே போகும். அந்த நேரம் அவள் மனநிலையும் அப்படித்தான் இருந்திருக்க வேணும்.
மிக மெல்லியதாக திறந்துள்ள அந்த சாளரக் கதவின் இடுக்கின் ஒரத்தின் ஊடாக இத்தனையும் அவதானித்த சடகோபன், எழுந்து விட்டான். நேராக தன் தங்கை யருகில் சென்று “போனை'ப் பறித்தான். மள மளவென 'மெசேஜ் பைலை" திறந்து 'இன் பொக்சினை அவதானிக்கிறான். அதில் எல்லாமே அழிக்கப்பட்டிருந்தது. ‘சென்ட் அயிட்டம் பொக்சைத் திறந்து அவதானிக்கிறான். அதுவும் அப்படித்தான். இப்போ கோபம் அதிகரித்துக் கொள்ள,
“என்னடி, கான்ட் போனும் ஆளுமாக இருக்கிறாய்...? சொல்லு இப்ப உனக்கு என்ன வேணும்? ஆ. பாரன் ஆள!" என்று மிகவும் உரத்த குரலில் சடகோபன் கேட்டு விடுகிறான்.
“கொக்காவைப் பார்! அவளும் இருக் கிறாள்தானே?" இப்பிடி எரிந்து விழும் தன் அண்ணனின் கோப நிலை தெரிந் திருந்தும் அவள் எதுவுமே கதைக்க விரும்பவில்லை. தருணம் பார்த்து அம்பு விடும் திறன் அவளிடம் நிறையவே
உள்ளது.
தமையனின் ஒவ்வொரு கேள்விக்கும் தடுமாறாமல் பதில் சொல்லிக் கொண்டிருந் தாள். ஒரு பொய் சொல்ல நினைத்த வளுக்கு, இப்ப சொல்வதெல்லாமே பொய் தான். இதை அவன் நன்கு அவதானித்து விடுகிறான்.
மீண்டும் 'கான்ட் போன் அலேட் ஒலி கேட்கிறது. மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. கான்ட் போன். அவள் என்ன செய்வ தென்று அறியாது ஏங்கிப் போய் நிற் கிறாள். தன் விழிகளை உருட்டி உருட்டி
சடகோபனின் கையில்
மல்லிகை டிசம்பர் 2008 率 49

Page 27
முழிக்கத் தொடங்கி விட்டாள். தமை யனிடம் கான்ட் போனைப் பறித்தால் என்ன? என நினைத்துவிட்டு அதை உடன் மறந்தும் விடுகிறாள்.
"தர்சி, என் வீட்டில் நெருக்குதல் கூடிப் போட்டுது. இனியும் என்னால் உன்னைப் பிரிந்து வாழ முடியாது. பிளிஸ், எனக்கொரு நல்ல பதில் சொல்லுங்க. உங்களை எப்ப நான் கூட்டிச் செல்வது?" இது வாசித்து முடிந்ததும் கோபத்தின் உச்ச நிலைக்குப் போய்விட்டான், அவன். பிறகு ஏதோ நினைத்தவன் போல, அவள் கன் னங்களில் மளார் மளார் என ஓங்கி அறைந் தான். அவள் ஓவென்றுதான் அழுதிருக்க வேண்டும். தன் இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள். இதற்கிடையில் தாய் என்ன ஏதென்று கேட்டு வருவதற்குள் சைச்சிளையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.
சடகோபனின் இளைய தங்கை தர்சிக்கு அவளின் அம்மாவும், இளைய அக்காவும் கட்டி யணைத்து ஆறுதல் கூறிவிட நினைத்து விடுகினம். அவள் அதை எடுத்தெறிந்து தன் தமையன் மீதான கோபத்தை வெளிக்காட்டுவதற்கு உசார் அடைந்து கொண்டிருந்தாள்.
அண்ணன் இல்லாத நேரம் பார்த்து அவனை தாக்க வெளிக்கிட்டாள். தன் தமையனை தர்சி திட்டிக் கொள்வதைப் பொறுக்க மாட்டாத கிருஷி அப்பால் சென்றுவிடுகிறாள். இந்தப் பிரச்சினையால் யாரையும் முறித்துக்கொள்ள அவள் விரும்பவில்லை போலும்.
ஆனாலும், தனக்கான தன் அண் ணனின் எந்தவொரு செயலையும் எண் னிப் பார்க்காதவளாக திட்டிக் கொண்டி ருந்தாள், தர்ஷி. அவள் அருகில் தாய் உள்ளம் யாரை அணைப்பது? யாரை மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 50
வெறுப்பது? என்ற பரிதாப நிலையில் அழுதுகொண்டிருக்கிறது.
வெளியே போன அண்ணன் வரு கிறான். யாரும் அவன் வருவதை இன்னும் கவனிக்கவில்லை. அவன் வரும்பொழுது,
"உவர் என்ன மனிசனா. மிருகமா..? அடிக்கிறதெண்டால் உப்பிடியே அடிக் கிறது? உவர் என்ன செய்தாலும், நான் விரும்பினவனைத்தான் கல்யாணம் செய் வன். விரும்பினால், தானும் ஒரு கல் யாணம் செய்து எங்கை எண்டாலும் துலைஞ்சு போகட்டும். இஞ்கை என்னத் துக்கு உவர் இருக்கிறார்?"
வானமே இவன் தலையில் இடிந்து விழும் போல் ஒர் உணர்வு. நெஞ்சம் எல் லாம் கனப்பது போன்ற அந்த உணர்வினை கடினமாய் உணர்ந்து கொண்டவனுக்கு, அழுதுவிட வேண்டும் என்றுதான் நினைத் திருப்பான். இப்படி அவன் மனம் இன்னும் இறுக்கமாக அறுத்துக் கொள்ள, சைக்கிளையும் திருப்பிக்கொண்டு மீண்டும் அந்த கோயிலின் ஆலமர நிழல் தேடிப் போய்க்கொண்டிருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பகல் முழுதும் வீடு போகவும் அவன் நினைத்திருக்கவில்லை. மாலை ஆறு மணி யிருக்கும். வீட்டின் உள்ளே வந்ததும் அவனைக் கட்டிப்பிடித்து ஒ. வென ஒப்பாரி வைத்து அழத்தொடங்கி விட்டாள் அவன் தாய். தாயுடன் சேர்ந்து அவனும் அழுது விடுகிறான். கிருஷி விம்மல் போட்டு அழுவதை உணர்ந்து கொண்ட வன், அவளை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான். தர்சி மட்டும் கல் நெஞ்சுக்காரி போல், அந்தக் கதிரையில் தன் மூஞ்சியை இருளாக்கிக் கொண்டி ருந்தாள். அவனும் அதைக் கண்டுகொள்ளா தவன் போலவே சென்று கொண்டிருந் தான்.

கிருஷி தன் அண்ணனுக்காக இன் னும் அழுகிறாள். அவனின் அப்பாவித் தனமான நிலையை அவளால் உணரும் பொழுது இன்னும் அழுதாள்.
மூவரும் ஒரளவு ஆறுதல் கொள்ள, கிருஷி எழுந்து சென்று சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறாள். தாயும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள மூன்று பேருமாக அன்றைய சாப்பாட்டினை மாலை ஏழு மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. தர்சி மட்டும் உட்கார்ந்த இடத்திலேயே இருந் தாள். அவள் சாப்பிட்டுவிட்டுத்தான் அதில் இருந்தாள்.
தர்சி சாப்பிட்டாளா? என்று அவன் கண்யாடையால் கிருஷியைக் கேட்க,
கிருஷியும் பதில்
கண்சயா டையால்
சொல்கிறாள். அதன் பிறகுதான் அவனும்
சாப்பிடத் தொடங்கினான்.
இதெல்லாம் நடந்து முடிந்த அடுத் தடுத்த நாள் அவன் கொழும்பு சென்று விட்டான். அவன் கொழும்பு சென்ற அடுத்த கிழமையே ஏ-9 பாதையும் பூட்டி விட, அவனும் அங்கே தங்கிவிட்டான். ஊருக்கு வர அவன் விருப்பம் கொள்ள வில்லை. கொஞ்சக் காலம் கொழும்பில் வேலை செய்வோம் என நினைத்துக் கொண்டான். தனது கெட்டித்தனத்தால் வேலை ரான்ஸ்வர் எடுத்து அங்கேயே வேலை செய்யத் தொடங்கினான்.
தொலைபேசி மூலம் தன் அம்மா வினதும், கிருஷியினிதும் சுகம் விசாரித்துக் கொள்வான். அவன் கொழும்பு சென்ற சில நாட்களில் தர்சி, தான் நினைத்தவ னோடு ஓடியதை நினைத்து முற்றாக மனம் உடைந்து போனான்.
இப்போ சடகோபனின் நெஞ்சில் பாரிய வலி கொண்ட நினைவுகள் அதி கரித்துக் கொண்டே சென்றன. தாயை கிருஷிதான் கவனிக்கலானாள். அவன்
கொழும்பு சென்ற நாளிலிருந்து அவன் தாய் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவனது கல்யாண விசயமாகத்தான் அவள் தினம் தினம் ஏங்கிக் கொள்வாள். இது நாளடைவில் தாயை ஒரு நோயாளி ஆக்கி விட, முந்திப் போல் எந்தவொரு அலு வலும் அவளால் செய்து கொள்ள முடி யாமல் போனது.
எல்லாக் கஷ்டங்களும் கிருஷி ஒருத் திக்குத்தான். இதற்கிடையில் தர்சியைக் கல் யாணம் செய்து கொண்டவனும், அவளை விட்டு விட்டுத் தன் தாய் தகப்பனுடன் சென்று விட்டான். வேலை வெட்டி தெரியாதாம் அவனுக்கு.
வயதுக் கோளாறினால் வந்து கல் யாணம்தான் அது. உண்மையானதல்ல. தாய் தகப்பனின் பணத்தைக் கொண்டு குஷி வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு, கல்யாண ஆசை. அந்த ஆசைக்குப் பலியானது தர்சி தான். ஒரு கைக்குழந்தையும் தானுமாக வந்து நிற்கும் போதே இருவரையும் அன் போடு அரவணைத்தவள் கிருஷிதான். பாவம் கிருஷி. எதையும் தாங்கிக் அர வணைத்துக் கொள்ளும் மனது அவளுக்கு.
இத்தனை நிகழ்வுகளையும் நினைத் துப் பார்த்த அவனுக்கு, கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக கொட்டுகின்றது. இப்போ அவன் தன் விடுதி நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றான். என்னதான் இருந் தாலும், என் அம்மாவின் நிலை அறிந்தும், இரண்டு பெண் பிள்ளையளையும் ஊரில் தனியே விட்டு விட்டு வந்தது என்னமோ தவறான செயல்தான் என உணர்ந்து கொண்டவன், விடுதியின் உள்வளவுக்குள் வருகின்றான்.
அந்த நேரம் சொல்லி வைத்தாற் போல் ஊரில் இருந்து அவனுக்கு அழைப் பொன்று வருகிறது. உடன் ரிசீவரைக் கை யில் வாங்கி, உரையாடத் தொடங்குகிறான். கிருஷிதான் கதைத்தாள். ‘அண்ணா, மல்லிகை டிசம்பர் 2008 密 51

Page 28
அம்மா இருந்தாப் போல மயங்கிப் போனா. வேலும்மயில் டொக்டர் வந்து பார்த்தவர். அவர் வந்து பார்த்து ஏலாது எண்டு சொல்ல, அம்மாவை மந்திகைக்குச் கொண்டு போக, அங்கையும் ஏலாதெண்டு பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போட் டினம். எனக்கென்னவோ பயமாய் இருக்கு. உடனே வாங்கோ." என அழுதழுது கிருஷி சொல்லிக் கொண்டிருந்தாள். இப்ப என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரிய வில்லை. ரிசீவரை வைத்துவிட்டு விடுதி யின் மனேஜரிடம் விசயத்தைச் சொல் கிறான். அவரும் அவனுக்காக அனுதாபப் பட்டுக் கொள்கிறார்.
'தம்பி, உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேணும்.? நான் நிச்சயம் உதவி செய்வன். என்னெண்டாலும் கேளுங்க? தம்பி." என்று உதவி செய்யும் நல்ல மனதோடு கேட்டுக் கொள்கிறார் மனேஜர்.
'இல்லை மனேஜர், நாளைக்கு நான் என் வீடு போய் ஆகவேணும். அதுக்குப் பிளைற் ரிக்கற் ஒண்டு செய்து தாங்க, பிளிஸ்." என்று அவன் கேட்டுக் கொண் டதும், உடனடியாக இதுபற்றி தனக்கு பழக்கமான இடத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்கிறார். இதுபோல இன்னும் இரண்டு மூன்று இடங்களில் விசாரித்துப் பார்க்கிறார். கடைசியில் சடகோபன், நாளைக்கு முதல் பிளைற்றில் ஊருக்கு போவது என்பது உறுதியாகி விடுகிறது.
அடுத்த நாள் மதியம் 12 மணியிருக் கும். யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியால யத்தில் அவன் வந்து இறங்கியதும், அவன் வருகைக்காகக் காத்திருந்த அவன் நண்பன் சிவநேசன், அவனைக் கண்டதும் கட்டிப் பிடித்து பலமாய் அழுது விடுகிறான். இப்போ சடகோபனுக்கும் விசயம் விளங்கி விடு கிறது. அவனுக்காகக் காத்திருந்த மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 52
அந்த "ஹை-ஏஸ்" வான் அவனையும் ஏற்றிக் கொண்டு அவன் வீடு நோக்கிப் பறக்கிறது.
அந்த இயற்கை எழில் கொண்ட ஊரின் ஊடாகச் சென்ற வான், அவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. உற்றார், நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் அவனைச் சூழ்ந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். அவனும்தான்.
அவன் அந்தச் சன நெரிசலையும் விலத்தி, தன் தாயின் உடல் வளர்த்தப்பட்ட இடம் நோக்கி நகர்ந்து, தன் தாயின் காற் பாதங்களைக் கொஞ்சிக் கொஞ்சி அழு கின்றான். இதற்கிடையில் கிருஷியும் ஒடி
வந்து, 'அண்ணா, அம்மா எங்களை யெல்லாம் விட்டு விட்டு போயிட்டா அண்ணா..!"
அவனும் தன் கவலைகள் எல்லாம் மறக்க உரத்து அழுகின்றான். இதற்கிடை யில் இவனின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு,
"என்னை மன்னிச்சிடுங்கண்ணா." என்ற விம்மல் கொண்ட அழுகையினைக் கேட்டு. குனிந்து நோக்குகிறான். அவன் தங்கை தர்சிதான் அது.
தர்சியின் கைக்குழந்தையை வாங்கி, இருண்டு போன அவளின் வாழ்வு ஒளி மயமாகும் எனும் நம்பிக்கையுடன், தர்சி
யையும் அணைத்துக் கொள்கிறான்.
நல்ல தாயால் அரவணைக்கப்பட்ட அவனின் உள்ளமும், எதையும் தாங்கும் இதயமாய் மாறிவிடுகிறது. இனி இவன் தன் இரு தங்கைகளுக்கும் அண்ணனல்ல. நல்லதொரு தாயாக உள்ளம் உருவெடுத்துக் கொள்கிறது.
இப்பொழுது கால் நீட்டி, கண் மூடி
உறங்குவது போல படுத்திருக்கும் ஓர் அன்னையின் ஆத்மா சாந்தி பெறுகிறது.

திக்குவல்லை
GoalTGfdôT
மொழிபெயர்ப்பில்
"ge9Rg 9RgöGeylip'
சிங்களச் சிறுகதைகள்
- தருமசீலன்
திக்குவல்லை ஸப்வானின் சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியான ஒரே இரத்தம் அண்மையில் வெளிவந்துள்ளது. இது மீரா பதிப்பக வெளியீடாகும்.
இத்தொகுப்பில் சிங்கள எழுத்தாளர்களான யஸரத்ன ருத்ரிகு, ஜயசிங்க கோரளகம, தெனகம சிரிவர்தன, தர்ஸனா தம்பி விஜேதிலக, எரெவ்வல நந்திமித்ர, விமலதாஸ் அமரசிங்ஹ, பந்துதாஸ் தஸ்நாயக, ஹேமரத்ன லியனாரச்சி, குணசேன விதான, நிஸ்ஸங்க ரணவக, நந்தஸேன் ஹேரத், சிட்னி மகாஸ் டயஸ், பியசிரி கொடிதுவக்கு, உபாலி வணிகசூரிய ஆகிய பதினான்கு எழுத்தாளர்களின் இருபது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை அவ்வப்போது தினகரனிலும் மல்லிகையிலும் வெளிவந்தன
வாகும்.
சில எழுத்தாளர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் இடம்பெற்றுள்ளமைக்கு விசேட காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதைத் தவிர்த்து இன்னும் சில எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
இரு மொழி பரிச்சயமிக்க ஸப்வானின் மொழியாற்றல் இடர்பாடுகளின்றி சரளமாகச் செல்கின்றது. இரு இன கலாசார மரபுகளை கருத்திற் கொண்டும், மொழித்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 53

Page 29
தனித்துவத்தையும் பேணியும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை ஆசிரியரின் வெற்றியைக் காட்டுகிறது.
ஆக்க இலக்கியப் படைப்புக்களில் ஆசிரியர் நடையும், கதாபாத்திரங்களின் நடையும் கலந்தே இருப்பது தவிர்க்க முடியாததாகும். மூல ஆசிரியர்களின் நடை மொழிபெயர்ப்பாளருக்குப் பிரச்சினை யாக அமைவதில்லை. கதாபாத்திரங் களின் பேச்சு வழக்கை மொழிபெயர்க்கும் போது சிக்கல் தோன்றுகிறது. அதைப் பேச்சு வழக்கிலேயே மொழிபெயர்க்க வேண்டியிருப்பதுடன், எந்தப் பேச்சு வழக்கை கையாள்வதென்பதே சிக்கலைக் கொண்டு வருகிறது.
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கா? மலை யகப் பேச்சு வழக்கா? முஸ்லிம் பேச்சு வழக்கா? எதுவுமேயில்லாத ஒரு பேச்சு வழக்கா? இதைச் சம்பந்தப்பட்ட மொழிப் பெயர்ப்பாளரே தீர்மானிக்க வேண்டும். இந்தச் சிக்கலிலிருந்து திக்குவல்லை ஸப்வானும் தப்பிக் கொள்ளவில்லை என்பதை அணிந்துரை எழுதியுள்ள இரா.சடகோபனும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிறமொழிப் தமிழுக்குக் கொண்டு வரும்போது,
படைப்பொன்றைத்
தமிழுக்கு அதன் தேவையென்ன? என்பது முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அல்லது அப்படைப்பு தமிழ் வாசகர் புலத்திலே அறியப்படாத உயர் கலாசாரத் தனித்துவங்களை அறிமுகப் படுத்துவதாக அமைய வேண்டும். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இவ்விரு விடயங்களையும் கருத்திற் கொண்டு
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 54
சிறுகதைகளைத் தெரிவு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
ஆனால் இக்கதைத் தெரிவு அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. இன்று தமிழ்ச் சூழலிலே இனப் பிரச்சினையும், யுத்தமும், சமாதானத்தின் தேவையும் நிலவி வருகின்றது. இதுபற்றி எழுத்தாளர்களின் மனிதாபிமானப்
él Bissm
பார்வை, பிரச்சினை தீர்வுக்கான சுவடுகள், இன உறவின் அடிச்சரடுகளை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளைத் தேடித் தமிழ்ப்படுத்தி யிருந்தால் அது பொறுப்பு மிக்கதொரு மொழிபெயர்ப்பாளரின் பணியாக அமைய
(upLQugb.
"ஒரே இரத்தம்' என்ற மகுடக் கதையே, மாற்று இனத்தவருக்கு இரத்த தானம் செய்யும் ஒரு மேலோட்டமான
கதையே,
சிங்கள எழுத்தாளர்களால் எழுதப் பட்டுள்ள பெரும்பாலான கதைகள் தமிழ் எழுத்தாளர்களாலும் எழுதப்படும் கதைகளாகவே இருக்கின்றன. ஆக கதைப்புலம் மாத்திரமே வித்தியாசப்படு கின்றது.
மொழிபெயர்ப்பாளரின் வளமான மொழிநடை, தமிழின் தேவைகளைக் கருத்திற் கொண்டு, சிறுகதைகளைத் தெரிவு செய்து பிரயோகிக்கப்படுமாயின் தமிழுக்கும் நல்லது திக்குவல்லை ஸப்வானுக்கும் நல்லது.

* மல்லிகைப்பூத் தூவி அர்ச்சிக்கின்றேன். !\ہ64-Gh4 ... شائ616‘
- டொலிக் &&ыл
“எடேய், சொக்கா!' என்று உரத்துக் கூறிய வண்ணம் மல்லிகையின் உயர்ந்த படிக்கட்டுகளில் தலைகுனிந்தபடி ஏறிவந்து அமர்ந்தார், ரஸிகமணி கனக செந்திநாதன்.
உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தவர், கைப்பையத் திறந்து, நீண்டதொரு தாவடிப் புகையிலையை எடுத்து, காம்பு கிள்ளத் தொடங்கினார்.
"என்னடாப்பா, புதினம்?' என்று என்னிடம் குரலெழுப்பிக் கேட்டார்.
நான் உள்ளே அச்சுக் கோப்பாளர் சந்திரசேகரத்துடன் மல்லிகைக்கான கட்டுரை சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
"அது கிடக்கட்டும். இப்ப எங்கிருந்து வாறியள்?" என நான் கேட்டேன்.
அப்பொழுது காலை பதினொரு மணியிருக்கும். "வேறை எங்கையிருந்து வருவன்? பண்டிதமணி வீட்டிலிருந்துதான் வாறன்!"
ரஸிகமணியிடம் மூன்று கட்ட ஒழுங்குமுறை இருக்கிறது. அதை வெகு நாட்களாக அவதானித்து வந்திருக்கிறேன். காலையில் பண்டிதமணியைத் தரிசிக்கச் செல்வார். மத்தி யானம் எப்படியும் மல்லிகைக் காரியாலயத்தை எட்டிப் பார்ப்பார். பிற்பகலில் றிகல் தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்த்து ரசிக்க நேரம் ஒதுக்கி விடுவார்.
"இவன் வீரகேசரிச் செல்லத்துரையைக் கனகாலமாகப் பார்க்க முடியவில்லை. நீ கிட்டடியிலை அவனைப் பாத்தனியே?" எனக் கேட்டார்.
நிருபர் செல்லத்துரை வேலை செய்யும் வீரகேசரிக் கிளை காரியாலயம் எனது வீட்டிற்குச் சமீபத்தில் உள்ளதென்பதை அவர் அறிந்திருந்தார். நான் வீடு போகும் வழியில் நிருபரைச் சந்திப்பது வழக்கம். இதுவும் அவருக்கு நன்கு தெரியும்,
'இல்லை மாஸ்டர். கனநாளாய் நான் நிருபரைக் காணேல்லை. இந்தக் கிழமை
எப்பிடியும் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்றுதான் இருக்கிறன்."
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 55

Page 30
அவர் இருக்கையில் சிக்காராகக் குந்தியிருந்த வண்ணம், சுருட்டிய கைச் சுருட்டைப் புகைக்கத் தொடங்கினார்.
நிருபர் செல்லத்துரை சிலகாலம் சுன்னாகத்திலிருந்து பல காலங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் "ஈழகேசரி’ என்ற வாரப் பதிப்பில் பகுதி நேர எழுத் தாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான், கனக செந்திநாதனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவ ரது பதிவுப் பெயர் செந்திவேள் என்பதும் எனக்கு அப்போதே தெரியும், மகா பண்பாளர். நேசம் நிரம்பியவர்.
நான் அந்தக் காலகட்டத்தில் முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ் கிளைச் செயலாளராக இருந்து ஊக்க முடன் செயலாற்றிக் கொண்டிருந்த கால 5...d5).
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரிய அளவில் பண்டாரநாயக்க மண்ட பத்தில் ஒரு இலக்கிய விழாவொன்றை நடத்த ஆவன செய்து கொண்டிருந்த கால sillb.
அந்த விழாவுக்கான ஆயத்த வேலை களைக் கிளைச் செயலாளர் என்கின்ற முறையில் செய்து கொண்டிருந்தேன்.
ஒரு சனிக்கிழமை. யாழ். மத்திய கல்லூரியில் ஆலோசனைக் கூட்ட மொன்றை ஏற்பாடு செய்திருந்தேன்.
காலை முதல் ஒரே காற்றும் மழை யும். ஒய்வதாகத் தெரியவில்லை. கூட் டத்தை ஒழுங்கு செய்தவன் என்கின்ற முறையில், மழை குறைந்ததும் சைக்கிளில்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 56
அவசர அவசரமாகச் சென்று கல்லூரி வாசலையடைந்தேன்.
'டேய். சொக்கா!' என்று குரல்
பம்மிப்போய்க் கேட்டது.
திரும்பிக் குரல் வந்த திசையைப் பார்த்தேன்.
அரைக் குடையை உயர்த்திப் பிடித்த வண்ணம், காகம் மழைக்குக் குறாவிப் போய்த் தெரிவதைப் போல, கனக செந்தி நாதன் கையை அசைத்துச் சைகை
EITL Lq60TrTir.
நான் உண்மையிலேயே பிரமித்துப் போய்விட்டேன்.
ஏன் இந்த மழைக்கை வந்தனிங்கள்?’ உங்களுக்கு
“ “ 6T 6öT 6oT Lo Tesino L fi
விசரே? எனச் சற்றுக் காட்டமாகத்தான் கேட்டு வைத்தேன்.
"என்னடாப்பா செய்யிறது? நீ கூப்பிட் டிட்டாய். முக்கியமான கூட்டமென்று நினைச்சன், வந்திட்டன்!”
என் தேகம் சிலிர்த்தது. புல்லரித்தது
திரும்ப அவரை அழைத்துக் கொண்டு, யாழ் பஸ் நிலையம் வந்து பஸ் ஏற்றி அனுப்பி வைத்தேன்.
இலக்கிய விழாவொன்றிற்காகக் குரும்பசிட்டிக்கு திருந்தார். சன்மார்க்க ஐக்கிய சங்கத்தில் நடந்தது அந்தக் கூட்டம். வீட்டில் மதிய உணவு பரிமாறி என்னைக் கெளரவிக்கத் திட்டம் போட்டிருந்தார்.
என்னை அழைத்
"நாகம்மா! எங்கட ஜீவா வீட்டுக்கு முதன் முதலில் வந்திருக்கிறான். மத்தி

யானச் சாப்பாடு இங்கைதான். வடிவாக் காய்ச்சு!" என பின்கட்டிலிருந்த மனைவிக் குக் குரல் கொடுத்தார், அவர்.
மத்தியானம் தானே தன் கையால் நட்டு வளர்த்தெடுத்த வாழை மரத்திலிருந்து குருத்து இலையைக் கொய்து வந்து என் முன்னால் பரப்பி வைத்துவிட்டுத் தானும் பக்கமிருந்து சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லிய வண்ணம் எனக்கு விருந்திட்டு மகிழ்ந்தார்.
ரஸிகமணியின் விருந்தோம்பல் இலக் கிய உலகில் தனிப் புகழ் பெற்றதாகும்.
இந்தக் கட்டத்தில் எனக்கு இன் னொரு சம்பவம் ஞாபகம் வருகின்றது.
கொழும்பிலிருந்து ஓர் இலக்கிய நண் பர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். படித் தவர். பட்டதாரி. நல்ல உத்தியோகத்திலு மிருந்தார். கருத்து உடன்பாடு கொண்டவர்.
அவர் வந்ததையறிந்து இலக்கிய ஆர்வம் மிகுதியால், நடந்து அவரது வீட்டை அடைந்தேன்.
இருந்தார்.
என்னைக் கண்டதும் ஏதோ பதட்டப் படுபவர் போல, அவர் அவசரப்படுத்தினார்.
அடுத்த நாளுக்கு அடுத்த நாள்.
அவர் என்னைத் தேடி என் இடத் திற்கே வந்து சேர்ந்தார்.
"ஜிவா, ஏதாவது என்னட்டை அலுவல் எண்டால் என்னைத் தேடி வீட்டை நான்
வராதை வேணுமெண்டால்
உன்னைத் தேடி வந்திட்டுப் போறன்!"
சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் எனது சகோதர எழுத்தாளர் எவர் மீதும் இது வரைக்கும் அவதூறு பொழிந்தவனல்ல. என்னை, எனது இலக்கிய உழைப்பை மிக நீதி கேடாக அவதூறு செய்தவர்களைக் கூட, நான் மன்னித்து விடுவதுண்டு. மதித்து மிருக்கின்றேன்.
இலக்கியப் பலம் வாய்ந்த - நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சஞ்சிகையின் ஆசிரி யர் என்கின்ற பின்பலம் இருந்த போதிலும் கூட, என் மீது அபாண்டம் கற்பித்தவர்கள் மீது நான் இதுவரையும் இலக்கியப் பாய்ச்சல் பாய்ந்ததில்லை. அவர்களது அன் பழைப்பை ஏற்று அவர்கள் முனைந்து நடத் திய இலக்கிய விழாவில் கலந்து கொண்டி ருக்கிறேன். அட்டைப் படமாக அவர்கள் உருவத்தை மல்லிகையில் பொறித்து மிருக்கிறேன்.
அந்தக் கெளரவத்திற்குரிய நண்பரின் வாய்மொழியைக் கேட்டு, நான் மனசுக்குள் புழுங்கிப் போய்விட்டேன்.
யாழ்ப்பான உயர் சமூக அமைப்பின் வலைப்பின்னலின் சீத்துவக் கேடுகளுக் குள் அந்தப் படித்த நண்பரும் சிக்கிக் கொண்டு விட்டார் என் நான் அவருக்காகப் பரிதாபப்பட்டேன். யாழ்ப்பாண உயர்குலச் சாதிச் சமூகம் எந்தக் கொம்பனையும் தன் னுள் மடக்கி, அடக்கிவிடும்.
அன்னாரது நட்புறவைப் பிற்காலங் களில் என்வரைக்கு சுருக்கிக் கொண்டே பழகினேன். புழங்கினேன்.
இந்தப் பின்னணியிலேதான் ஒரு யாழ்ப்பாணக் கிராமத்தில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வந்த ஒரு தமிழ்ச் மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 57

Page 31
சட்டம்பியான ரஸிகமணி என்மீது காட்டிய மனிதப் பண்பு நிரப்பிய நட்புறவை இன்று வரையும் நினைத்து நினைத்து உருகு கின்றேன்.
அவர் மறையும் வரைக்கும் நானும் அவரும் ஒத்த கருத்தோட்டமுடையவர்க ளல்ல. நேரெதிர் அபிப்பிராயம் கொண்டவர் கள். இடையிடையே சண்டை பிடிப்போம்.
யாழ்ப்பாணத்தில் சாஹித்திய விழா வில் கூழ் முட்டையடிச் சம்பவம் நடந்தது இலக்கிய உலகில் இன்று வரைக்கும் வெகு வெகு பிரசித்தம்.
அந்தக் கட்டத்திலும் இ.மு.எ.ச.வின் யாழ் கிளைச் செயலாளராக நானே கடமை யாற்றிக் கொண்டிருந்தேன்.
உண்மையிலேயே நாம் செய்த மிகப் பாரிய இலக்கியச் சண்டித்தனமது. கருத் துக்களைக் கருத்துக்களால் முறியடிக்க வேண்டுமே தவிர, இலக்கியச் சண்டித் தனத்தால் ஒருபோதுமே வென்று விட முடியாது என்பது திண்ணம். அன்றும் இதே கருத்துத்தான் என் நெஞ்சில் வேரோடி இருந்தது என்பது என்னமோ உண்மை.
துரதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் நடந் தேறி விட்டது. இதிலிருந்து நான் தப்பித்துக் கொள்ள முனைவது அல்லது கருத்துச் சொல்வது தப்பிலித்தனம். கூட்டுச் செயலை அது எத்தனைதான் கசப்பாக இருந்த போதிலும் கூட, பொறுப்பாக ஏற்றுக்கொள் வதுதான் உண்மையான அறிவுடமை, வரலாற்று நேர்மை.
இந்த விழாவிலிருந்து ஆக்ரோச உணர்வுடன் வெளியேறியவர்தான் கனக. செந்தி. எனக்கோ குற்ற உணர்வு.
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 58
இந்நிகழ்ச்சி நடைபெற்று அடுத்த நாளுக்கு அடுத்த நாள், "டேய் சொக்கா! எப்படியடா இருக்கிறாய்?" எனக் கேட்டுக் கொண்டு, அப்பொழுது மல்லிகைக் காரியா லயமாக இயங்கிய கஸ்தூரியார் வீதி யிலுள்ள ஜோசப் சலூன் படிக்கட்டுகளில் ஏறிவந்து உள்ளே என்னை விசாரித்தார், அவர். அங்கேதான் பல ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னுத்துரை அவர்களையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
உண்மையிலேயே நான் பிரமித்துப் போய்விட்டேன்.
இந்த மனிதன், ஆர்?' என என் குற்ற உணர்வு என்னைக் கேட்டுக் கொண்டது.
இவரது ஆலோசனையின்படிதான் மல்லிகையின் அட்டையில் நம் மண்ணின் தகைமையாளர்களினது உருவங்களைப் பதிப்பிக்க ஆரம்பித்தேன். இந்த முறை யைப் பழக்கப்படுத்தியவர், பெரியவர் வ.ரா. தமிழ்நாட்டுப் பெரியார்கள்’ என்ற வரிசை யில் அன்று நகைச்சுவை நடிகர் எனப் பெயர்பெற்றிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை அந்த வரிசையில் சேர்த்துத் தான் எழுதிய புத்தகத்தில் ஆவணப்படுத்தியவர். இந்தந் தகவல்களையும் ரஸிகமணியே எனக்குச் சொல்லி வைத்தவர்.
அந்த அற்புதமான இலக்கிய மனி தனைப் பற்றி நான் நினைக்காத நாளே usio606)
இந்த எனது இலக்கிய உலக ஆறு தஸாப்த காலங்களில் நான் என்றுமே மறக்க இயலாத ஒரு மனிதர் தான் ரஸிகமணி கனக. செந்திநாதன்.

புத்தாயிரமாம் ஆண்டுகளில் புத்தெழுச்சிபெறும் முலையகச் சிறுகதைகள்
- பிரகலாத ஆனந்த்
மலையக சிறுகதை வரலாற்றை நோக்கும் போது புத்தாயிரமாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து அது உத்வேகம் பெறுவதை அவதானிக்க முடிகிறது. மலையகக் கல்வி வளர்ச்சிக்கும், இந்த புத்தெழுச்சிக்கும் இடையே உள்ள தொடர்பினை மறுதலிக்க முடியாது. ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்கு, அச்சமூகத்தின் கல்வி அறிவு விருத்தி ஊக்கி யாக அமையும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இன்று மலையக சிறுகதைப் பரப்பில் பெண் எழுத்தாளர்களின் வரவும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணை அளித்துள்ளன.
மலையகத்தின் சிறுகதையின் ஆரம்பமாக புதுமைப்பித்தனின் துன்பக்கேணியைக் குறிப்பிடலாம். தீபம் நா.பார்த்தசாரதியும் இவ்வழியில் தமிழகத்திலிருந்து ஈழத்து மலையகத் தமிழர்களின் கதையை உருக்கமாக வடித்தவர். இலங்கையைப் பொறுத்தவரை சி.வேலுப் பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையா, கே.கணேஸ் போன்றோர் முதன்மையானவர்களாகக் குறிப்பிட வேண்டியவர்கள். இவர்களில் சி.வீ. ஆங்கிலத்திலே அதிகம் எழுதியவர். கணேஸ் அதிகம் கிறுகதைகளைப் படைக்காதவர் என்பதுடன் வடபுலத்தவர். எனவே என்.எஸ். எம்.இராமையாவை மலையக சிறுகதையின் முன்னோடியாகக் குறிப்பிடுவதில் தவறில்லை என நினைக்கிறேன். 1960களில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் உத்வேகம் ஏற்பட்ட வேளையில் மலையகத்திலும் இராமையாவுடன் தெளிவத்தை ஜோசப், மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, வடிவேலன், நித்தியானந்தன் முதலானோர் சிறுகதைகள் படைத்தனர். இவர்களைத் தொடர்ந்து மல்லிகை சி.குமார், மு.சிவலிங்கம், மலரன்பன், பன்னீர்ச்செல்வன் என இடைப்பட்ட காலத்தில் நிறையப் பேர் எழுதினர். பிற பிரதேசத்த
மல்லிகை டிசம்பர் 2008 霹 59

Page 32
வர்களும் மலையகச் சிறுகதைகளைப் படைத்தனர். அ.செ.முருகானந்தனுடன் ஆரம்பித்த இந்தப் பயணம் ச.முருகானந் தன் வரை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடையே நந்தி, ஞான சேகரன், பவரீர், ஆப்டீன், புலோலியூர் சதாசிவம் போன்றோர் குறிப்பிடத்தக்க
வர்கள்.
மலையகக் கல்வி பின்தங்கிய நிலை யில் இருந்தமையினால் ஆரம்பத்தில் மலையகத்திலிருந்து அதிக எழுத்துருவாக் கங்கள் வெளிவராத போதிலும், அங்கு பணியாற்றி கே.கணேஸ், நந்தி போன் றோரின் முன் முயற்சியும், ஊக்குவிப்பும், தொழிற் சங்க மற்றும் ஆசிரியர் வட்டத் தினரின் ஊக்குவிப்பும், கல்வியில் ஏற்பட்ட ஆர்வமும் என பல அம்சங்கள் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டன. அ.செ. மு.வின் அரசமரம் கதையோடு ஆரம்பித்த மலையகத் தொழிலாளரின் பிரஜாவுரிமை அதன் தாக்கங்களும் தொடர்பான படைப்புகளும், வாக்குரிமை
սն661 60» լDսկւք,
பறிக்கப்பட்டமை தொடர்பான படைப்பு களும், தொழிலாளரின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பான கதைகளும் நீண்ட காலம் எழுதப்பட்டு வந்தமை கண் கூடு. தான் வாழும் காலத்தைப் பிரதிபலிக் காத படைப்புகள் வரவேற்பைப் பெறமுடி யாது என்பதுடன், அடிப்படைகளின் சமுதாயப் பெறுமானம் காரணமாகவும், தவிர்க்க முடியாத நிலை காரணமாகவும் இவ்வாறான படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து நாடு கடத்தும் நிலையின் அவலங்களும், நாடற்றவர்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 60
களின் திரிசங்கு சொர்க்க நிலையும் இலக்கிய உருப்பெற்றன.
தீர்த்தக்கரை சஞ்சிகை வெளியீடு மலையக இலக்கியத்
தில் உத்வேகத்தை ஏற்படுத்தியது. அறுபது களின் பொதுவுடைமைப் பார்வையும்
எண்பதுகளில்
அதன் தொடர்பான ஆக்கங்களும் கூட மலையகத்தில் எண்பதுகளிலேயே வீச்சுப் பெற்றது. அந்தனி ஜீவா, சாரல் நாடன், நித்தியானந்தன், முரளி போன்றோர் இவ் வெழுச்சிக்கு உந்து கோலாக நின்றனர். இதனால் தொழிலாளர்கள் மத்தியிலிருந் தும் மல்லிகை சி.குமார், குறிஞ்சி தென்ன வன் போன்ற எழுத்தாளர்கள் தோன்றினர். எனினும் பெண் தொழிலாளர்களின் எழுத் துலக வரவு மெத்தனமாகவே இருந்தது. இதற்கு பெண் கல்வியின் தாமதமும் காரணம்.
மலையகத்தில் பணியாற்றிய மருத்து வர்கள் மலையகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். பேராசிரியர் நந்தி, டாக்டர் ஞானசேகரன், டாக்டர் சதா சிவம், டாக்டர் ச.முருகானந்தன் போன் றோரின் படைப்புகள் எண்பதுகளில் தரிசன மாகின. அதிகமாக மலையகம் சார்ந்த படைப்புகளை எழுதிய பிற பிரதேசத்தவர் களில் காவலூர் ஜெகநாதனும் குறிப்பிடத் தக்கவர். இவர்கள் மலையகத்தில் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் இவர்களது படைப்பு களுக்கு வழிகாட்டின.
எண்பதுகளில் வடக்கிலும், கிழக் கிலும் தனிநாட்டு கோரிக்கையும், யுத்தமும் வெடித்து இலக்கிய உருவாக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய வேளை, மலை யகத்திலும் இன்னொரு வகையான மாற்

றம் இலக்கியப் போக்கைத் தீர்மானிக்க ஆரம்பித்ததை அவதானிக்க முடிகிறது. கணிசமான நாடற்றவர்களுக்கு பிரஜா வுரிமை, வாக்குரிமை என்பன கிடைத் ததை அடுத்து மலையக மக்களின் அர சியல் பயணம் முனைப்புப் பெற்றதுடன், மீண்டும் மலையகத்திலிருந்து பாராளு மன்ற உறுப்பினர்கள் தெரிவானதுடன், அரசியலில் மலையகம் எழுச்சி கொண்டது. தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சி களும் பின்னிப் பிணைந்த ஒரு நிலையி லிருந்து மக்கள் தெளிவு பெற ஆரம்பித்த இக்காலம், புதிய பார்வையிலான எழுத்துரு வாக்கங்களுக்கு வித்திட்டது. அமைச்சர் பதவிகளும், அதனால் கிடைத்த சில பல சலுகைகளும் மலையகக் கல்வியின் வளர்ச்சியில் உந்து சக்தியாகிய போது, பரவலாக கல்வியில் ஆர்வம் ஏற்பட்டது. பாடசாலைகளும் அபிவிருத்தியடைந்தன. பெண்களும் கல்வி கற்பது அதிகரித்தது.
இனக்கலவரங்கள் வெடித்தபோது ஏது மறியாத மலையக மக்கள் சொல்லொனா இன்னல்களை அனுபவித்தனர். பெருந் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டும், பெரும்பான்மை இனமக்களுக்குப் பங் கிட்டுக் கொடுக்கப்பட்டும், மலையகத் தொழிலாளர்கள் வேலை இழந்ததோடு இருப்பிடங்களிலிருந்து விரப்பட்டதுமான நிகழ்வுகள் மலையக மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களது வாழ்க்கை நிலை அதள பாதாளத்தில் தள்ளப்பட்டது. பல்வேறு அடக்கு முறைகளுக்கு ஏற்கெனவே உட் பட்டிருந்த சமூகம், மேலும் புதிய அழுத்தங் களுக்கு இன ரீதியில் உள்ளாக்கப்பட்டது.
புதிதாக எழுத வந்தவர்கள் ஏற்கனவே புரையோடிப் போயிருந்த விடயங்களோடு புதிய விடயங்களையும் உள்வாங்கி எழுத ஆரம்பித்தனர். அத்துடன் தமது அரசியல் வாதிகளையே விமர்சித்து எழுதவும், தொழிற் சங்கங்களின் குத்துக்கரணங் களையும் கண்டித்து எழுதவும் தொடங் கினர். புதிய மிலேனியத்தில் எழுத்தில் ஒரு உத்வேகம் காணப்பட்டது. குறிப்பாக பெண் எழுத்தாளர்களும் எழுதினர். பெண் னியமும் பேசுபொருளானது. வாழ்க்கை பற்றிய யதார்த்தப் பார்வை, மாற்றங்களை அனுசரிக்கும் போக்கு, குடும்ப உறவுகள், பாலியல் சமாச்சாரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், வீடு காணியற்ற அவலம், வறுமை, அரசியல் மட்டத்திலும், ஆசிரியர் மட்டத்திலும் புதிய முதலாளி வர்க்க மனப் பான்மை, தொழிற் சங்கச் சுரண்டல், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் வெளிநாடு களுக்கு வேலை தேடிப் போதல், இடைத் தரகர்களின் கொடுமை என பல விடயங்கள் கருப்பொருளாகின.
கூடவே இக்கால கட்டத்தில் கருப் பொருளில் மாத்திரமன்றி, சிறுகதை உரு வத்திலும், புதிய நவீனத்துவப் போக்கிலும் வளர்ச்சிப் பாதை தென்பட்டது. முன்னை யவர்களில் மு.சிவலிங்கம், ச.முருகானந் தன் போன்றோர் தொடர்ந்தும் மலையகச் சிறுகதைகளை எழுதிவரும் அதேவேளை புதிய பரம்பரை ஒன்று வீறு கொண்டு எழுதி வருகின்றமை ஆரோக்கியமான விடய
DIT (5 b.
புதிய பல கவிஞர்களும் இதே காலத் தில் தரிசனமான போதும், சிறுகதைத் துறையில் சிலர் சுவடு பதித்தனர். பதுளை
மல்லிகை டிசம்பர் 2008 & 61

Page 33
சரஸ்வதி, சேனாதிராஜா, பாலகிருஷ்ணன், பாலா சங்குப்பிள்ளை, பிரமிளா பிரதீபன், புனித கலா, சிவனு மனோகரன், மாரி மகேந்திரன், இரா.சடகோபன், உன்னஸ் கிரிய கந்தையா, பன்பாலா, நித்தியானந் தன் முதலான சிலர் இன்று புத்தூக்கத் துடன் எழுதி வருகின்றனர். இவர்களில் சிலரது தொகுதிகளும் வெளிவந்துள்ளன. தேசிய ரீதியில் சிலர் பரிசில்களைப் பெற் றுள்ளனர். மலையக இலக்கியம் ஈழத்து இலக்கியத்தினோடு கைகோர்த்துச் செல் வதை இச்சிறுகதைகள் நிறுவி நிற்கின்றன. சுகிர்த மகாராஜனும் மலையப் பின்னணி யில் கதைகள் படைத்துள்ளார். ராணி சீதரன் இன்னொருவர். இன்னும் சிலர் என்னால் மறந்து விடப்பட்டிருக்கலாம். மலையக எழுத்தாளர்கள் தற்போது தமது பிரச்சினைகளை மாத்திரமன்றி, தேசியப்
பிரச்சினைகளையும், பொதுவான அம்சங் களையும் கூட, கருப்பொருளாக்குகின் றனர். தனிமனித மனவியல்புகளையும், சமூகப் பிரச்சினைகளையும் கதைகளாக்கி மனித மனங்களில் பதிய வைக்கின்றனர். மலையக மக்களின் வாசகர் வட்டப் பெருக்கம் இன்று கணிசமான அளவு உயர்ந்துள்ளமையும், மலையகச் சிறுகதை வளர்ச்சிப் பாதையை செப்பனிட வழி வகுக்கிறது. பல்கலைக்கழக மட்டத்திலும், வெளியேயும் மலையக மக்களின் இலக்கி யங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவ்வாய்வு களும் சிறுகதைப் போக்கை எழுச்சியுற வைக்கிறது. மல்லிகை, தாயகம், ஞானம் போன்ற சஞ்சிகைகளும், பத்திரிகைகளின் வார மலர்களும் இவ்வளர்ச்சிக்கு உதவுவதையும் மறுக்க முடியாது.
வாழ்த்துகிற்றோம்
முன்னை நாள் தினகரன் ஆசிரியரும், முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கியஸ்தருமான திரு. ராஜ ருநீகாந்தன் தம்பதிகளின் புதல்வி அனோஜா அவர்களுக்கும், திரு. வி. தவயோகநாதன் தம்பதிகளின் புத்திரன் சஜிதரன் அவர்களுக்கும் சென்ற மாதம் 29.10.2008 அன்று கொழும்பில் வெகு சிறப்பாக திருமணம் நடந்தேறியது.
மணமக்களை மல்லிகை மனதார வாழ்த்துகின்றது.
- ஆசிரியர்
மல்லிகை டிசம்பர் 2008 & 62

൧൧൧മr
சென்ற இதழில் உங்களது இளமைக்கால நண்பரும், இன்றைய பிரபல எழுத்தாளரு மான திரு. செ.கணேசலிங்களது கடிதத்தைப் படித்ததும் அப்படியே உருகிப் போய் விட்டேன்.
உங்களது இளமைக்கால நண்பர் என உரிமை பாராட்டிக் கொண்டே உங்களை மட்ட கரமாக அவதூற செய்து கருத்துகளைக் கூறும் திரு. எஸ்.பொ. அவர்களையும், கணேச லிங்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். இருவரிடையேயும் எத்தகைய வேறுபாடுகள்.
அத்துடன் கட்டுரைக்குக் கீழே உங்களது குறிப்பையும் அவதானித்துப் படித்தேன்.
சாதி வெறி உச்சக்கட்டத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில், உண்மையான இலக்கிய நண்பனாகத் தன்னை வெளிப்படுத்திய கணேசலிங்கனை எத்தகைய வார்த்தை கொண்டு பாராட்டினாலும் தகும். தகும்
நல்லூர் க.சிவநேசன்
மல்லிகையின் மீது திரும்பத் திரும்ப ஒரே குற்றச்சாட்டுத்தான் சொல்லப்பட்டு வருகின்றது.
அதாவது, நீண்ட நெடுங்காலமாகவே திரும்பத் திரும்ப ஒரே பேர்வழிகள்தான் மல்லிகை இதழ்களில் மாத்திரமல்ல, அதனது மலர்களிலும் எழுதி வருகின்றனர்" என்ற தொடர் குற்றச் சாட்டைக் கூறி வருகின்றனர். இதை யோசிக்கும் வேளையில் ஒரளவு உண்மை போலத்தான் என் மனசுக்கும் படுகின்றது.
புதிய தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் மல்லிகையில் இடம்தர வேண்டும். இல்லாது போனால், எதிர்கால இளந்தலைமுறைப் படைப்பாளிகளை உருவாக்க முடியாது.
மல்லிகைக்கு இந்த வகையில் பெரும் பொறுப்பும் கடமையுமுண்டு. ஒன்றை நீங்கள் மனசார உணர்ந்து கொள்ள வேண்டும், மல்லிகையில் வளர்ந்தவர்களில் பலர், அதை ஒரு மிதி கல்லாகப் பாவிக்கின்றனரே தவிர, அதன் மீது எந்தவிதமான விசுவாசமும் அற்றவர் களாகவே தென்படுகிறார்கள். இது உங்களுக்குத் தெரியுமோ என்னமோ, என் போன்றவர் களுக்கு இது சாடை மாடையாகவே நன்கு தெரியும்.
கவனம். இத்தகையவர்கள் உங்களையும் மல்லிகையின் பெறுமதியையும் இறுதி வரையும் பயன்படுத்தி லாபமடைவார்கள். கடைசியில் அரோகராதான். ஆட்களை எடை போட்டு, இடமொதுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
வெள்ளவத்தை. எம்.தவேந்திரன் மல்லிகை டிசம்பர் 2008 & 63

Page 34
“ஒரேடியாகப் பிடிவாதமாக நிற்காதை பிள்ளை. படிப்பு விஷயத்திலை பிடிவாதம் கூடாது. வாற கிழமை ரியூசன் காசு முழுவதும் கட்டலாம். இண்டைக்கு வெளிக்கிட்டுக் கொண்டு போ, பிள்ளை."
'நீங்கள் என்னதான் சொன்னாலும் நான் போகமாட்டன். உப்பிடி எத்தனை முறை சொல்லிச் சொல்லி என்னை அனுப்பினனிங்கள். இனி நான் அவமானப்
படமாட்டன்."
“பிள்ளை சொல்லுறதைக் கேள், பிள்ளை. மார்கழிச் சோதினை நெருங்கி வாற நேரத்திலை நீ இப்பிடிப் போகாமல் நிற்கிறது எவ்வளவு பாதிப்பு எண்டதை உனக்கு நாங்கள் சொல்லித்தர வேணுமே?”
"அம்மா பிறகும் பிறகும் விளங்காமல் கதைக்காதையுங்கோ. நேற்றும் ரியூட்டறிக் கிளாக்கன் என்னை வகுப்பிலை எழுப்பி காசு கேட்டு, என்ரை மானமே போயிட்டுது. காசில்லாமல் இனிப் போகவே மாட்டன்."
O/L பரீட்சைக்குத் தேற்றவிருக்கும் தன் மகளை எப்படியாவது ரியூசனுக்கு அனுப்பிவிட முயற்சித்தும் முடியாமல் தோற்றுப்போய் நிற்கும் மனைவியின் நிலையைப் பார்த்துவிட்டு கவனிக்காதது போல் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினான், தங்கராசா.
மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக ரியூசன் காசு கொடுக்காமல் எந்தப் பிள்ளைதான் போகத் துணியும்?
“பிள்ளையஞக்கும் தின்னக் குடுக்காமல் கோழி முட்டை யளை வித்து வித்து சின்னதாகச் சீட்டுக் கட்டினான், அந்தரம் ஆபத்துக்கு உதவுமெண்டு. கோதாரியிலை போவாள் பாறுவதி தாச்சிக்கு நிண்டிட்டு எங்கடை காசை எடுத்துத் தன்ரை அலுவல் பார்த்துப் போட்டாள். உவளை இணக்க சபைக்கு இழுக்காமல் விடமாட்
மல்லிகை டிசம்பர் 2008 & 64
 
 
 
 
 
 
 
 

தன்னுடைய பாட்டில் புறுபுறுத்துக் கொண்டிருந்த மனைவியின் புலம்பல் காதில் விழ, தன்னையறியாமலே சிரித்து விட்டான், தங்கராசா. அவன் சிரித்துத் உந்தச் சீட்டுக்கள் ஒன்றிலும் சேர வேண்டா மென்று மனைவியை எச்சரித்திருந்தான். இப்போது சீட்டுக் காசுக்குத் தினமும் அவள் அலைவது அவனுக்குச் சிரிப்பைத்தான் தந்தது.
தான் எத்தனை நாட்கள்.
é 舒 畿
A/L பரீட்சைக்குத் தோற்றி விட்டு முடிவுகள் வரும்வரை கணினி வகுப்புக் குப் போவதற்கு இரண்டாயிரம் ரூபாவை ஒரு மாதமாகக் கேட்டுக் கேட்டு அலுத்து, அந்த எண்ணத்தைக் கைவிட்டு, வாசிகசாலைச் சந்தியில் பொழுதை போக்கிவிட்டு, சாப்பாட்டு நோம் மட்டும் வீட்டுக்கு வந்து போகி றான், அச்சுதன். அவனுந்தான் இடைக் கிடை லிவு நாட்கள் வரும்போது தகப் பனுடன் வேலைக்குச் செல்வதற்கு எவ் வளவோ முயற்சித்தும் தங்கராசா மறுத்துவிட்டான். தான் படுகின்ற கஷ்டம் தன்னோடு போகட்டும். இடைக்கிடை தன்னனுடன் மகன் வேலைக்கு வந்தால் உழைப்பில் ஆசை வந்து, படிப்பில் ஆர்வம் குன்றிவிடும் என்பது தகப்பனது எண்ணம். ஆனால், இப்போது அவனுக்கே இல்லை.
வேலை
மூன்றாவது பிள்ளை கிருஷாந் தியை புலமைப் பரீட்சைக்குத் தயார் பண்ணும் விசேட வகுப்புகளுக்கு ஏனை
யோரைப் போலவே அனுப்பி வைக்கத் தங்கராசாவுக்கும், மனைவிக்கும் விருப் பம் இல்லாமலில்லை. அதற்கும் வசதி வேண்டுமே?
தீபாவளியும் வந்து ஆரவாரமில்லா மல் போய்விட்டது. ஒருவருக்கும் புது உடுப்பு எடுக்கவுமில்லை. போன சித்திரை வருடப் பிறப்புக்கும் புதுசு எடுக்க முடியாமற் போனபோது பிறகு இடையிலே காசு கிடைக்கும் வேளை யில் எடுத்துத் தரலாம் என்று பிள்ளை களுக்குக் கூறிச் சமாளித்து, தீபாவளிக் கும் அதேநிலையாகி விட்டது.
அக்கம் பக்கத்தில் ஐநூறு, ஆயிரம் என்று தங்கராசாவின் மனைவி அடிக்கடி கடன் கேட்டு வாங்கி வந்து இரண்டு நோம் ஒரு நேரம் எனச் சமைத்துப் போட்டதில் அந்தக் கடன்களும் அடைத்தபாடில்லை. இனிக் கடன் மாறவும் வழியில்லை.
தங்கராசா போன மாதத்தில் மட்டும் ஒன்பது நாட்கள் மாத்திரமே வேலைக் குப் போனான். இந்த மாதம் பிறந்து இன்றுடன் பன்னிரண்டு நாட்களாகி விட்டன. ஐந்து நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதுவும் அவனது தொழிலான பனை மரம் வெட்டும் தொழில் கிடைக்கவில்லை. விசாரித்து விசாரித்து தேடித் திரிந்ததில் தோட்ட வேலைதான் ஐந்து நாட்களும் கிடைத் தது. இந்த ஐந்து நாட்களில் இரண்டு நேரமும், பின்னர் மூன்று நாட்களில் ஒரு நேரமும் அவர்களது அடுப்பு நெருப்பைக் கண்டது. அதன்பின்
LD6)6S60) as Lips burr 2008 率 65

Page 35
தொடர்ச்சியாகப் பாணும் சம்பலும், இன்று அதற்கும் வழியில்லை.
தங்கராசா ஒன்றும் வேலைக்குப் போகப் பஞ்சிப்படும் ஆளல்ல. வேலை தொடர்ச்சியாகக் கிடைக்கின்ற நாட் களில் தனது கூட்டு வேலையாட் களுடன் தினமும் காலை, நேரத்தோடு போய் மாலை சூரியன் மறைய வரு பவன்தான். இப்போது கிழமையில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் மரம் வெட்டும் வேலை கிடைத்தால், ஏனைய நாட்களில் வேறு வேலைக்குப் போக முயற்சிப்பான். அனேகமாகத் தோல்வி தான்.
பாய் இழைத்துக் கொண்டிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்தான், தங்கராசா. அவளது கண்களிலிருந்து மகாவலி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. கணவன் தன்னை உற்றுப் பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள் தலையைக் குனிந்து, கண்ணிரை மறைக்க முயற்சித் தாள். தங்கராசாவும் தலையைக் குனிந்து கொண்டான்.
இந்த கவலைப்பட்டானே தவிர, வெட்கப்பட வில்லை. அவன் கையாலாகாதவன் என்றில்லையே. உடலில் வலுவிருக் கிறது. மனதில் தெம்பிருக்கிறது. பனை மரம் வெட்டும் தொழில் கடினமானதாக இருக்கலாம். மாதம் முப்பது நாட்களும் வேலை கிடைத்தாலும் போக அவன் தயார். ஆனால் வேலைதானில்லையே.
நிலைமைக்காக அவன்
மீண்டும் தங்கராசா தலையை நிமிர்த்தி மனைவியைப் பார்த்தான். அவளிடமிருந்த அழகும் கவர்ச்சியும் மல்லிகை டிசம்பர் 2008 & 66
எங்கே போயின நாற்பதைத் தாண்டாத அவளது தோற்றம் அறுபதுக்குரியதாய்க் காட்டியது. நல்லநாள் பெருநாளென்று ஆசையாய்ப் பெருமையாய் அவளுக்கு ஒரு சேலை தானும் எடுத்துக் கொடுக்க முடிகிறதா, அவனால். வீட்டில் இருக் கப் பிடிக்கவேயில்லை. சைக்கிளை எடுத்துக் கொண்டு சிவராசாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.
கோயில் மடத்துக்குப் பக்கத்தில் ஆலமரத்தின் கீழ் ஒரு கூட்டம் சீட் டாடிக் கொண்டிருந்தது. இன்னொரு கூட்டம் அதைச் சுற்றி வேடிக்கை பார்த் துக் கொண்டு நின்றது. வாசிகசாலைச் சந்தியில் ஏழெட்டு இளைஞர்கள் நின்று பத்திரிகைப் புதினங்களை அசை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் கள் வேறென்னதான் செய்வது? எவருக் கும் வேலை கிடைத்தால்தானே. யுத்தத் தின் கோரத் தாண்டவம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இயல்பு நிலையை அறவே மாற்றியிருந்தது.
தங்கராசாவின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும் சிந்தனை எங்கோ போய்க்கொண்டிருந்தது.
"உத்தியோகம் பார்க்கிறவனாவது ஐம்பத்தைந்து அறுபது வயதுடன் ஒய்வு பெறுகிறான். இந்தக் கூலி வேலை செய்கிற எங்கடை ஆட்கள் அறுபது அறுபத்தைந்தைத் தாண்டியும், இந்தக் கஷ்டமான வேலையைச் செய்யத் தயா ராகத்தான் இருக்கிறார்கள். வேலைதான் இல்லையே!”
‘வெளிநாட்டுக்குப் போனவர் களும், பிள்ளைகளை அனுப்பி வைச்ச

வர்களும் ஒரளவு தப்பி விட்டார்கள். இந்த நாடே தஞ்சமென்றிருந்த நாங்கள் சண்டையையும் தாங்கி நிண்டு இப்பிடியே பஞ்சத்திலை கிடந்து சாக வேண்டியதுதான்." *
சிவராசாவின் வீடு வந்துவிட்டது. தங்கராசாவின் சிந்தனைச் சங்கிலி அறுந்து தொங்கியது. நல்லவேளை சிவ ராசா வீட்டில் நின்றான். வீட்டு விறாந் தையிலிருந்து பீடியடித்துக் கொண்டிருந் தான். சிவராசா நல்லதொரு மேசன். தங்கராசா தொழிலில்லாத சமயங்களில் இடைக்கிடை சிவராசாவுடன் மேசன் வேலைக்குச் சென்றிருக்கிறான். இப் போதும் ஏதும் வேலை அகப்படுமா என்ற அங்கலாய்ப்பில்தான் இங்கு வந்திருக்கிறான்.
சிவராசாவுக்கு முன்னால் இருந்த வாங்கிலில் தங்கராசா உட்கார்ந்தான். வேலை பற்றி விசாரித்தான். சிவராசாவும் வேலையில்லாமல்தான் இருக்கிறான் என் றறிந்தவுடன் மனம் சோர்ந்து போனான். இனித் தொடர்ந்து பட்டினிதான். அது வும் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்?
“சிவராசா நீயும் உன்ரை மேசன் கோஷ்டியும் சீமெந்துத் தட்டுப்பாட் டாலைதான் வேலையில்லாமல் நிற்கிறி யள். சீமெந்து கப்பலிலை வந்தால் சுனாமி விடு, அரசாங்கக் கட்டிடங்கள் எண்டு இடைக்கிடை ஏதோ கிடைக்குது. அந்தச் சாட்டிலை எங்கடை வேலையும் கொஞ்சம் கிடைக்குது. மற்றும்படி எங் கடை நிலைமை வேற. ஏழையாய்ப் பிறந் தவன் ஒரு சின்னக் கொட்டில் போடு றதுக்கெண்டாலும் கூட பனை தறிக்கக் கூடாதெண்டு அரசாங்கம் கட்டுப்பாடு
போட்டிருக்கு. பரம்பரையாக பனைமரம் வெட்டுற எங்களின்ரை நிலைமையைப் பற்றி எவருமே கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கேல்லே?" ஒரே மூச்சில் கூறி முடித்தான் தங்கராசா.
உணர்ச்சி வசப்பட்டு
"நீ சொல்லுறது சரிதான் அண்ணை. ஆனால், காட்டையழிக்கக் கூடாது எண் டது போல பனை வளமும் அழிஞ்சு போகக் கூடாது எண்டுதானே கட்டுப் படுத்தியிருக்கினம். முற்று முழுதாக நிறுத்தவில்லைத்தானே அண்ணை' சிவராசா சமாதானப்படுத்தினான்.
"முற்று முழுதாக நிற்பாட்டேல் லைத்தான். ஆனால் அவை அனுமதிக் கிற பனைகளின்ரை தொகை எத்தனை? இந்தத் தொழிலை நம்பியிருக்கிற குடும் பங்களின் ரை தொகை எத்தனை? அதோடை இப்போதையில் இளம் பொடி யன்கள் இந்தத் தொழிலுக்கு இப்ப வாறதும் மிக அருமை. அப்படியிருந்தும் வேலைத்தட்டுப்பாடு. எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு நிகழ்காலத்திலை நாங்கள் பட்டினி கிடந்து உயிரை விடேலாது, சிவராசா."
"ஒமண்ணை! அதுவும் சரிதான். ஆனையிறவுப் பாதை மூடினப் பிறகு விவசாய உற்பத்தியளும் அங்காலை போகாமல், தோட்டத்திலையும் வேலை குறைவு. மீன்பிடியும் கிழமையிலை மூண்டு நாலு நாள்தாள். மேசன் வேலை யும் குறைவு. இப்படியே எல்லாத் தொழி லுக்கும் பாதிப்புத்தான். ஆனால் பனை மரம் வெட்டுறது ஆகச் சிக்கலாகிப் போட்டுது."
சொல்லிவிட்டு சிவராசா அடுத்த பீடியைப் பற்ற வைத்தான். சிவராசாவின்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 67

Page 36
மனைவி இருவருக்கும் தேநீரைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
“என்ரை வீடு மட்டுமல்லோ, என் னோடை வேலை செய்கிறவங்களின்ரை வீடுகளுக்குப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். அழுகையே வந்திடும். இப் பிடித்தானே இந்தத் தொழிச் செய் யிறவை இருக்கிற எல்லா ஊரிலையும் நிலைமை இருக்கும்" தங்கராசாவின் குரல் தளதளத்தது.
'அண்ணை பனை தறிக்கிறதைக் கட்டுப்படுத்திறது நல்லதுதான். ஆனால், கட்டுப்படுத்திறதுக்குச் சட்டம் போடு றவை அதோடை நிற்கக் கூடாது. அதை நம்பியிருக்கிற குடும்பங்களைப் பற்றியும் யோசிச்சிருக்க வேணும். ஐநூறு பனை தறிக்க அனுமதிக்க வேணும். அதேநேரம் ஐயாயிரம் பனம் விதை நடுகுறதுக்கு ஏற்பாடும் செய்ய வேணும்."
தங்கராசா இடையே குறுக்கிட்டுப் பேசினான், "அப்ப காடு வளர்ப்புத் திட் டம் மாதிரிச் செய்ய வேணுமென்டு சொல்லுறியள். அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலை ஒவ்வொரு ஏரியாவிலும் செய்ய வேணும். அப்பத்தான் நிகழ் கால மும் பாதிக்கப்படாது. வருங்காலத்திலை பனை வளமும் பாதிக்கப்படாது."
ஆழ்ந்த யோசனையின் பின் தங்க ராசா ஒரு முடிவுக்கு வந்தான். இப் படியே தானும் மற்றும் பனைமரம் வெட்டுற தொழிலாளர் குடும்பங்களும் பட்டினிச் சாவுக்குப் பலியாகிற நிலை மைக்கு விட்டுவிடக் கூடாது. இந்தச் தொழிலைச் செய்கிற எல்லாத் தொழி லாளர்களையுஞ் சேர்த்து ஒரு சங்கம் அமைக்க வேணும். சங்கத்தினூடாகத் தங்களின்ரை பிரச்சினையைப் பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் வரைக்கும் கொண்டு செல்ல வேணும் என்பதுதான் அது. தனது எண்ணத்தைச் சிவராசாவுக்குத் தெரிவித்தான்.
"மிக நல்ல திட்டம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. சங்கத்தை உருவாக்கி அதனூடாகப் பலமாக நிண்டு கோரிக்கையை வையுங்கோ. அவையாலே இயலாது போனால், மாதா மாதம் நிவாரணம் தரும்படி கேளுங்கோ."
சிவராசா சொல்லிக் கொண்டிருக் கும் போதே, தங்கராச எழும்பி விட் டான். எழும்பிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஏனைய தொழிலாளர்களைச் சந்திக்கப் போய்க்கொண்டிருந்தான்.
NMS Dr. K. F. 13 Mexiča. Faši
மல்லிகை டிசம்பர் 2008 & 68
இலக்கிய நண்பர் திரு. க.நாகேஸ்வரன் டாக்டர் பட்டம் பெற்றதற்காக மல்லிகை அவரை வாழ்த்தி மகிழ்கின்றது.
l
 
 
 
 

జ్ఞాజశీtఉు
- டொகிேக் ஜீவா
* உங்கள் மீது கடுமையாக அவதூறுக் கண்டனங்களைக் கொடிடி, விமர்சிப்பவர்களைப் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்? மெய்யாகச் சொல்லுங்கள்.
திருமலை, க.நவநீதராஜா
〉 விமரிசனம் என்பது வேறு. அவதூறு என்பது பொழிவதென்பது வேறொன்று. 'காய்க் கின்ற மரம்தான் கல்லடி படும்' என்பது முதுமொழி. அவதூறு என்பது அவுஸ்திரேலியாப் பழங்குடி மக்களின் வேட்டை ஆயுதம் 'பூமராங் போன்றது. இலக்குத் தப்பி விட்டால் எய்த வரையே திரும்பி வந்து தாக்கும். அவதூறுகளைக் கேட்டு மனசிற்குள் சிரித்து வைப்பேன். எந்த விதமான விமரிசனங்களையுமே தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவன், நான். செயல் மூலம்தான் அவற்றிற்குப் பதிலளிப்பேன். இதற்கு நான் வளர்ந்து வருகின்றேன் என்றே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும்.
எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை கடந்த காலங்களில் பல தடவை எழுத்தில் என்னை அவதூறு செய்து, அவமதித்து அதனை ஆவணப்படுத்தியுள்ளார். நான் ஒன்றுமே பேசாமல் மெளனம் காத்தேன். இத்தனைக்கும் எனது ஆசிரியத் தளத்தில் மல்லிகை என்றொரு மாத இதழ் இருந்தது. மாறாக, மல்லிகையில் அவரது உருவத்தை அட்டையில் பதித்து, நானே குறிப்பும் எழுதினேன். இதேபோல, எனது இலக்கியக் கருத்துக்கு முரண்பட்டவர் களைக் கூட, 220 பேர்களுக்கு அதிகமானோரை அட்டைப் படத்தில் உருவம் பதித் துள்ளேன். அவதூறுகளுக்கு நான் எந்தக் காலத்திலுமே பணிவு காட்டியவனுமல்ல. நான் கருத்துக் கூறுவேனே தவிர, யாரையுமே அவதூறு செய்து பழக்கப்பட்டவனுமல்ல. அப்படி நான் பயிற்றப்பட்டவனுமல்ல. அப்படி நான் அவதூறு பரப்பி வந்தால் 44 ஆண்டுகளாக ஒரு சிற்றிதழை வெளிக்கொணர்ந்திருக்க முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும்.
மல்லிகை டிசம்பர் 2008 & 69

Page 37
திரு. எஸ்.பொ.வின் நேரடிக் கடித அழைப்பை ஏற்றுச் சென்னை தியாகராஜ மகாலில் 10,11-01-2004ல் “மித்ர அமைத்த தமிழ் இலக்கிய விழாவில் நேரடியாகக் கலந்து கொண்டு ஈழத்தின் சார்பில் உரை யாற்றினேன். அம்மேடையில் எஸ்.பொ. வின் முகதாவில் பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கப் பெற்றுக் கெளரவிக்கப் பட்டேன். என்னைவிட, அந்த மேடையில் கெளரவம் பெற்றவர்கள் ஐவர், வல்லிக் கண்ணன், தி.க.சி., சிட்டி, விஜயபாஸ் கரன், லசுஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஆகியோ ராவர். அவர்களுடன் நானும் ஒருங்கு சேரக் கெளரவிக்கப்பட்டேன்.
தமிழ்நாட்டு இலக்கியப் பிரமுகர்கள் கெளரவிக்கப்பட்ட மேடையில், அந்த மா பெரும் "மித்ர' விழாவில் என்னை மனந் திறந்து பாராட்டி, விருது தந்ததன் மூலம் தான் இதுவரையும் எழுத்தில் என் மீது பொழிந்த வசைப் புராணங்களுக்குப் பிராயச் சித்தம் தேடிக்கொண்டார் திரு. எஸ்.பொ. இதுவே எனக்குப் போதும். எனது நேர்மைக்கும், இலக்கிய நேசிப்புக்கும், அர்ப்பணிப்பு உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இதை நான் கருது கின்றேன். அவதூறுகள் ஒரு திறமை யாளனைப் பட்டை தீட்டுமே தவிர, அது அவனைக் கொச்சைப்படுத்தாது. உண்மை மனிதனை வரலாற்றிலிருந்து அப்புறப் படுத்தி விடவும் இயலாது. எனது வாழ்க்கை யில் சென்னையில் நடந்த 'மித்ர'வின் பாராட்டு விழா என்றுமே மறக்க முடியாத விழாவாகும்.
<> நான்
சேர்ந்தவள். படதாரி. இளவயது எனக்கொரு
வசதியான குடும்பத்தைச்
மல்லிகை டிசம்பர் 2008 ஜ் 70
பழக்கமுண்டு. அதை உள்ளூர எண்ணி யெண்ணி மனசு மொந்து போயுள்ளேன். பொருடிகள் வாங்க கடை கண்ணிகளுக்குப் போனால்ா சிமிக்கிடாமல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏதாவது சிறு சிறு பொருடிகளைத் திருடி விடுவேன். அதில் எனக்கொரு ஆத்ம திருப்தி. இப்பொழுது எனது மனதில் பயம் தொற்றிக்கொண்டு விடீடது. உங்களிடம் இது பற்றி ஆலோசனை கேடீகிறேன்.
வெள்ளவத்தை, தேவகி இதுகூடப்
புனைப்பெயர்தான்)
> சகோதரி, இதற்காகப் பயப்பட்டு, மனசை அலைக்கழிக்க விடவேண்டாம். இது ஒரு மனநோய். "கிளப்டோ மேனியா என இந்நோய்க்குப் பெயர். இந்தப் பொருட் திருட்டின் நோக்கம் திருடுவதேயல்ல. ஒரு த்ரில் மனசைத் தூண்டும். அதன் வெளிப் பாடே இத்திருட்டு. இந்த மனநோய் உலகப் பெரும் புள்ளிகளிடமும், இருந்திருக்கின் றது. அரச குடும்பத்தினர், ஹாலிவுட் நடிகர் கள், துடுப்பாட்ட வீரர்கள் எனப் பலரிடமும் இம்மனநோய் இருந்திருக்கிறது. வெட்கப் படாமல், குற்ற உணர்வு தலைதுாக்காமல் ஒரு சிறந்த மனநல மருத்துவரை நாடுங் கள். நாட்பட விடவேண்டாம்.
<> இந்த முது வயதிலும் இளந்தாரியைப் போல, சுள்ளுச் சுறுப்பாகத் தினசரி ஒயங்கிக் கொண்டு வருகிறீர்களே, தொடர் வெற்றிகளை பதித்து வெற்றிநடை போடுகின்றீர்களே, அதன் உண்மையான
ஊண்டிப்
இரகசியம்தான் என்ன?
வல்வெட்ழத்துறை. சீனா உதயகுமார்

S. எனக்கொரு சங்கடம் அடிக்கடி ஏற்படு வதுண்டு. இப்படியான என்னைப் புகழும் கேள்விகளைப் பலரும் கேட்கின்றனர். இதனைத் தவிர்த்து விடுவது உங்களுக்கே நல்லது. இருந்தும் வடபுலத்திலிருந்து இத் தனை யுத்த நெருக்குவாரங்களுக்கு மத்தி யிலும் தூண்டிலை நினைத்து ஒரு கேள்வி எழுதியுள்ளிர்களே, அதை மனசார மதிக் கின்றேன். நான் இந்த மண்ணின் இலக்கி யக்காரர்களை மனசார நேசிக்கின்றேன். எனது சுள்ளுச் சுறுப்பின் அடிநாதமே அதிலேதான் பூரணமாகத் தங்கியுள்ளது.
<2- புதிய அமெரிக்க ஜனாதிபதியாகப் பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படிருள்ளது, எதிர்காலத் தில் உலகில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?
வத்தளை, சபெஞ்சமின்
> இருந்து பாருங்கள், அமெரிக்காவி லிருந்து இந்தக் கறுப்பின ஜனாதிபதியின் தேர்ந்தெடுப்பு உலகில் பல மாற்றங்களை நாளை கொண்டு வரலாம். அடுத்த இந்தி யப் பிரதமராக உத்தரப் பிரதேசத்து இன் றைய தலித் முதல்வர் மாயாவதி தேர்ந் தெடுக்கப்படலாம். ஆதிக்க சாதிகளின் இறு மாப்பும் நீண்ட கால ராஜதந்திரமும் இறுதி யில் நோற்கடிக்கப்பட்டே தீரும்
<> மறைந்த நண்பர் ர.ஜேகனகரடிடனாவை நினைத்துப் பார்ப்பதுண்டா?
IIgL/TõTö. க.நவநீதன்
5LBušälsi urryilun PTS Snåuluu
நண்பர்கள் ஒருங்கு சேர்ந்து அவரது இரண் டாவது மறைவு தினத்தை ருாபக தினமாக
அனுஷ்டித்தார்களாம். அவர் முதன்முத லில் எழுத்தாளன் என்ற ஹோதாவில் என்னைத்தான் சந்தித்து, நட்பு கொண்டார். எனது பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி யான தண்ணீரும் கண்ணிரும் நூலுருப் பெற வேண்டிய நல்லாலோசனைகளைத் தந்துதவினார். மல்லிகை மாத இதழ் தோன்றுவதற்கே முதல் ஆதரவாளனாகத் திகழ்ந்தவர், அவர். மல்லிகையின் அச்சுப் படிவங்களைப் பொறுப்புடன் திருத்தித் தந்த இவர், எந்தக் காலத்திலுமே என்னால் மறக்கப்பட முடியாதவர்.
<> தூண்டில் பகுதிக்குக் கேள்விகள் வந்து சேருகின்றனவா?
சிலாபம் எம்.தமிழ்மணி
கேள்விகளும், சிலவரிக் கவிதை خلال களும்தான் வந்து சேருகின்றன. அவை களில் பல மல்லிகையையும், ஆசிரியரை யும் புகழும் கேள்விகளாகவே இருக் கின்றன. இதிலிருந்து ஒன்று தெரிகின்றது. தமது பெயர் அச்செழுத்தில் வந்தால் போதும், என்ற மனப்பான்பைதான் அக் கேள்விகளின் தொனிப்பொருளாக அமைந் துள்ளன. அதேசமயம் இளந்தலைமுறை யினரின் இலக்கிய ஆர்வத்தையும் புரிந்து கொள்ள முடிகின்றது. இன்னும் இன்னும் முயன்று பாருங்கள்.
<> செள்ற நவம்பர் இதழில் உங்களது நண்பர் செ.கணேசலிங்கனுடன் இளமைக் காலத்திலிருந்த அம்ந்த நடிபுப் பற்றிய தகவலைப் படித்தறிந்தேன். அள்றைய யாழ்ப் 1ாளச் சமூகத்தில் நிலவிய சமூக - சாதி அகம் பாவச் கமலில், ஓர் இலக்கிய நண்பன் நடந்து
மல்லிகை டிசம்பர் 2008 率 71

Page 38
கொண்ட முறை உண்மையில் உங்களது வரலாற்றில் ஒடம்பெற வேண்டியதுதான். இந்த ஆழ்ந்த ஒலக்கிய நம்பு ஒன்றும் நிலவி வரு கின்றதா?
கொக்குவில் எஸ்.ரமணன்
> என் வரைக்கும் இந்த நட்பு மறக்க முடியாத நட்பு. அவர் இன்று சென்னையில் வசிக்கின்றார். கொழும்பு வரும்போது என்னை வந்து பார்ப்பார். சென்னை சென் றால் நான் அவரைப் போய்ச் சந்திப்பேன். இன்றும் அவர் என்னை ஆழமாக நேசித்து வருபவர். மறக்க முடியாதவர்.
<> நீங்கள் மலைநாடிருப் பக்கமாகச் சில காலம் வரவில்லையே? மலையகம் வந்து போனால் மல்லிகைக்குக் கணிசமான சந்தாக்
d5D615 byte LGUITLDGU6).JFT'?
நுவரெலியா, கநவசோதி
X> வரவேண்டும், வர வேண்டும் என நீண்ட நாட்களாக யோசித்துள்ளேன். சூழ் நிலை சரிவரவில்லை. ஏதாவது இலக்கிய விழாவுக்கு அழைப்பு வந்தால் எழுத்தாளர் கள் அனைவரையும் ஒருங்கு சேர காண வசதியாக இருக்கும். மற்றும்படி, தனிப்பட்ட நோக்கமெதுவும் நான் கொண்டிருக்க வில்லை.
<> 44-வது ஆண்டு மலர் தயாராகின்றது எனக் கடந்த இதழ்களில் படித்தேன். நான் சந்தா தாரணல்ல. அம்மலரை எப்படிப் பெற்றுப் படிப்பது?
ஹட்டன். ஆர்.குணசீலன்
* மலர் தபாலில் கிடைக்க வேண்டு மென்றால் மலரின் விலை 200/- ரூபா. தபாற் செலவு தனி. இப்பணத்தை அனுப்பி நேரடியாகவே பெற்றுக் கொள்ளலாம்.
<> தமிழகச் சஞ்சிகைகள் எல்லாவற்றையும்
தொடர்ந்து பரப்பதுண்டா?
புத்தளம் ஆர். குமணன்
தமிழகத்திலிருந்து வரும் எல்லா حX இதழ்களையும் படிப்பதில்லை. தேர்ந் தெடுத்த இதழ்களையே வாசித்து வருகின் றேன். மணிக்கொடி பரம்பரை, எழுத்துப் பரம்பரை, சாந்தி பரம்பரை, சரஸ்வதி பரம் பரை, தாமரைப் பரம்பரை எனச் சஞ்சிகை வரலாறு படைத்த தமிழகத்திலிருந்து இன்று வெளிவரும் பெரும்பாலான சஞ்சி கைகளைப் பார்த்தால் சினிமாக் கவர்ச்சிப் பரம்பரைதான் ஞாபகம் வருகின்றது.
அச்சமைப்பு, கவர்ச்சி, இதழ் தயாரிப்பு முறை பெருமைப்படும்படி வளர்த்திருந்தா லும், உள்ளடக்கம் என்னமோ வியாபாரப் புத்தி கொண்டவர்களால்தான் இன்றைய தமிழகத்து இதழ்கள் பெரும்பாலும் வெளி யிடப்படுகின்றன. பாரதி, புதுமைப்பித்தன் பரம்பரை இன்று சினிமாப் பரம்பரையாகப் பணம் பண்ணத் தொடங்கி விட்டதோ? என்ற கவலை என் மனசுக்குள் இந்தத் தேக்க நிலையைக் களைவதற்கு, இன் றைய சினிமாவில் இளந்தலைமுறையினர் புகுந்து பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டு, புதுப்பாதை வகுப்பது போல, இன்றைய இளைய தமிழகத்துப் பரம்பரையினர் சிற்றி லக்கிய ஏடுகளைத் தொடங்கி, புதுப் புது துறைகளில் புகுந்து வழி சமைத்துத் தர வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள Vanica Print Solutions அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

35
22.
23. 24, 25, 28, 27. 28,
29, 30. 31. 32. 33. 34.
,حشی کر リジ
الأمرين الكالسيد عنا மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள்
சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) : செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா தரை மீன்கள் (சிறுகதை) 1 ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப. ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு
elrivvi l’artrai lor l 'n written Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்)
Baionu Ü ựk B ft (LDù6ólaron Ji iš 560 GoUusÁ 56T) głów557fflad Dni LT w Qj poju i Uusculub மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் நிக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி தொகுத்தவர் டொமினிக் ஜீவா நினைவின் அலைகள் எஸ் வீ தம்பையா
S00SST LLLSTT S 00 LLLtTz LLLSS M LL T TTTTTTS
250 is 140; u 175.
10 m 1 OO sa
10s 150 = 135 = 150, 175. 150 is 275'- 350 = 140 = ܒܗܐܲ180ܼ 150 -
80. = 100 is 20s
ܗܩ܊܂150
175s 150 is 12O = 120 st 1 40; 150 - 350
200 = 120's 200, =
SO = 150, a 20 =
90
60, as ܩ ܃ 200

Page 39
Maikai
OUR PRODUCT
SYSSSK SSSSYSSSSSSYSSSSSLLYSSLSSLSSLS | ||FRE||I|XiKi ("MISIJ%, NA MATV (S, ["|}|}|}|'' ''}|{' NYTATION (ARIS, FK IT PIPORTSB 118 (I | TEIANK186 (ARIS (EIHCAES. 4KKSP 18. SSYSSLLSSSS S SSSSSSzSSSSLLLS
(). HAPPY DIGITA)
Digital Colour Lab & Ma. Fő 1y T:rikailasi Ilia falaika, Cel.: ku-.
wel. Irohasylglasernlr, im row,
 
 
 
 
 
 
 
 

DecembeT - 2008
RCARDS, MEMBERSHIP CARD., (FFICE DEHTITY CARD
S', 'R. S. * ("|||||||||||| A. S.K.E.R.,
i', 'IE:18, NEE%; }' ('','RIDS, (A.R.'! EN''|''|Ai:5, ES, I "11%" | MIMEEK, "If 'J', 'I', '(', ')',
L CENTRE(Pvt) Ltd.
Digital offset Press
73. Tel: # If f (F37:33, + y}{ f' 4 Y 7 Giff
crii: Malfoydfgif&&tilda'ya G. EMPI