கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1981.01

Page 1

ப்பானம். தொலேபேசி: 7233
青 தை 1981 青 இதழ் - 6
ராய்ச்சி மாநாட்டு நினைவுச் சிறப்பிதழ்

Page 2
திருநாவுக்கரசுநாயனுர் தேவாரம் திருவையாறு - திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம் பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர் அரிய பாடலர் ஆடலர் அன்றியும் கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம் அரியர் தொண்டர்க் கெளியரை யாற்றே.
திருச்சிற்றம்பலம் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள இறைவன் பருப் பொருளாய்ப் பருமையிற் பருமையர். அன்றி, நுண்மையில் நுண்ணிய நுண்பொருளாயவர். அவர் பசு ஞானத்தா லும் பாசஞானத்தாலும் பார்த்துக்கொள்ள முடியாதவர். அருமையான பாடல்களைப் பாடுபவர். ஆடல்புரிபவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கரவுடைய பிறரால் காணமுடியாதவர். ஆணுல் அன்புடைய தொண்டர் களுக்கு எளிதிற் காட்சி கொடுத்தருள்பவர்.
wA. 彰 RUVA L I U VAR'S 4%éž mr-i RUKKU RAL
ܒ
நன்றியில் செல்வம்
தனக்கும் பிறர்க்கும் பயனில்லாத செல்வத்தின் இயல்பு.
ஈட்டம் இன்றி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
தேடிய பொருளைச் செலவிடாது இறுகப்பிடித்து வைத்து, ஈகையால் வருகின்ற புகழை விரும்பாத மணி தர் பிறந்திருத்தல் பூமிக்குப் பெரிய பாரமாகும்.
* தமிழரின் சிற்பக்கலை
 
 

செய்தி
HOARDED WEALTH Men bent on hoarding and desire not fame are a burden to the earth.
1981 ஜனவரி மாத நிகழ்ச்சிகள் 12 வியாழன் æma ஆங்கிலப் புது வருடம் 2; வெள்ளி anman ஏகாதசி விரதம்
33 சனி பிரதோஷ விரதம்
5. திங்கள் - அமாவாசை விரதம் 14. புதன் na தைப்பொங்கல் 15. வியாழன் பட்டிப்பொங்கல்
கார்த்திகை விரதம்
16. வெள்ளி Ummmm ஏகாதசி விரதம் I 7. Førs பிரதோஷ விரதம் 193 திங்கள் varp பூரணை விரதம் 20. செவ்வாப் - தைப் பூசம் 31 sasst Alu ஏகாதசி விரதம்
மங்கலங்கள் பொலிய
மனையிலிடும் பொங்கல்
மனையறஞ் சிறக்க வாழ்வு நலம் பெறத் தமிழகம் எங்கும் தழைத்து மலர, வயலில் விளைந்தவை வாழ்வுக் குதல, ஏரும் எருதும் ஏற்றம் பெருக, விளை வைப் பெருக்கிய வெய்யவன் மகிழ, பழமை மீண்டும் புதுமை யிற் பொலிய பொங்கலோ பொங்கல் 1 பொங்குக பொங்கல் 11
பண்டிகைகளும் விழாக்களும் நாட்டின் நாகரிகத்தை வளர்ப்பவை, பேணிக்காப்பவை என்பதை பொங்கலில் காணலாம். மண்என்றும் மலடாவதில்லை. மண்ணில் விண் வில்லாமல் மன்னுயிர் வாழமாட்டாது, விளைவைத்தரும் மண்ணுக்கு விண்ணின்றுதவும் கதிரவனும் பெய்யும் நீரும் ஆதாரம், மண்ணில் மாடில்லாமல் எருவும் ஏரும் சிறக்கமாட்டா என்றெத்தனை கருத்துக்களை உள்ளடக்கி எம் முந்தையோர் பொங்கலைக் கண்டனர். எத்தனை ஆயிரமாண்டுகள் கழிந்தும் நம்மவர் இத்தனை காலமும் பொங்கலை விடவில்லை. வீட்டுக்கொரு பசுவை விரும்பி வளர்ப்போம்.
மஞ்சளும் இஞ்சியும் மாவிலையும் தோரணமும் சந் தனமும் குங்குமமும் தாம்பூலம் கதலிப்பழம் செங் கரும்பும் தித்திப்பும் தேனும் இவையெலாம் மங்கையர் தம் கற்பும், மாதவர்கள் நோன்பும், வாழ்விளைஞர் வீரமும் கல்வியும் முயற்சியும் ஓங்கிப்பொலிய பொங்குக பொங்கல்: புத்தாண்டு மலரப் பொங்குக பொங்கல் என்று பொங்கலைப் போற்றி உங்களை வாழ்த்துகிருேம் வாழ்வுமலர மனையறஞ் சிறக்க மக்கள்குழ வாழ்வீராக.
மதுரைத் தமிழ் சங்கம் நான்காம் தமிழ்ச்சங்கம் என வழங்கும் மதுரைத் தமிழ்ச்சங்கம் 1901 ஆம் ஆண்டு நிறுவப்பெற்று, 1946 ஆம் ஆண்டில் பொன்விழாப் பொலிவு கண்டது.
உலகப் புகழ் பெற்றது *

Page 3
2 «- மில்க்ை
央央央央央央央央央央央央央央央央央央央央央火
ஐந்தாவது அனைத்துலக
大 நினைவுச் G
செய்யனே! திருவாலவாயுறை மெய்யனே! நின் திருவருளால் பாண்டிநாடே பழம்பதி எனப் பழம் பெருமை வாய்ந்த மதுரை மாநகரிலே, மூவேந்தர்களும் பாவேந்தர்களும் பைந்தமிழ் வளர்த்த கூடல்மாநகரிலே, முன்னர் முச்சங்கங்களும் பின்னர் நான்காம் சங்கமும் போற்றிவளர்த்த பசுந்தமிழை, இன்று ஐந்தாம் சங்கம் நிறுவி, உலகந்தழுவிய ஒட்பத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பீடுசால் பூட்கையில் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மகாநாடு மங்கலம்பொலிய நடைபெறுகிறது.
உலகெங்கும் உள்ள தமிழ்ப்புலவீர் எல்லீரும் வம்மின், வம் மின் 11 நும் வரவு நல்வரவாகுக. வருகைபுரிந்த எல்லீரும் எல்லோருக்கும் ஏற்ற மிக்க இடந்தரும் கன்மாப் பலகையில் ஏறுமின் ஏறுமின், எட்டினுேடு இரண்டறியாதவரையும் பட்டிமண்டபம் ஏற்றிய பரமனே தமிழறிந்த பெரும்புலவன். அவன் இளைய மைந்தன் தமிழறிவுறுத்தும் தகைமையன். இவன் மாமன் மல்லரை மாய்த்தமாயன் பைந்தமிழரின் பின்சென்ற பச்சைப்பசுங் கொண்டல். இறைவன் வளர்த்த தமிழே இனிது வாழ்க!
தமிழ்விழாச் சிறப்புக்காணத் தேவலோகத்தவர் எல்லோரும் ஏற்கெனவே வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோரும் ஆரவாரத்தோடு அவனியெல்லாம் மகிழ அங்கே வந்து அவரவர்க்குரிய ஆசனங்களை அழகுற அலங்கரித்துள்ளார்கள். ஆரார் வந்தார் அணியுடை மகாநாட்டை அலங்கரிப்பதற்கு என்று கேட்கின்றனயா! சொல்கிறேன் கேள்.
கரிமுகக் கடவுள் வந்தான், கந்தனும் வந்தான் அங்கு அரியொடு பிரமன் வந்தான், அகத்தியமுனிவர் வந்தார், திரிபுரம் ஒருகாற்செற்ற தேவனெம் கோமாகன் தந்த தெரிவைக்கு விழாநாளென்னத் தேவரும் கோவும் வந்தார். வள்ளுவப் புலவன் வந்தான், வரகவிப் புலவர் வந்தார், வள்ளல்கள் பலரும் வந்தார், வாய்ந்த நற்கவிகள் வந்தார், உள்ளம் மெய்சிலிர்க்கப் பாடும் உமாபதிக்கு அன்பராகித் தெள்ளியமறைகள் தந்த திரு முறைப்புலவர் வந்தார்.
இவ்விதமாக உள்நாட்டவரும் புறநாட்டவருமான கொங்கணர் கலிங்கர், கோசலர், மஞலர், சிங்களர், தெலுங்கர், சீனர், குச்சலர், வில்லவர், மாகதர், விக்கவர், செம்பியர், பல்லவர் முதலாப் பார்த்திபர் யாவரும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துகூடினர்.
இத்தனைபேரும் இவ்வளவு தூரங்கடந்து ஏன் வந் தார்கள்? உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் மொழி, தமிழிலக்கியம், தமிழ்க்கலைகள், தமிழ்ச்சமு தாயம், தமிழ்நாகரீகம் என்பனபற்றி ஆராய்வதற்கும், ஆராய்வதற்கு உதவுவதற்கும் இவர்கள் வந்தார்கள்.
* குரவையும் கூத்தும் வ

வற்செய்தி 1-1-8t
决央央央央央央央央央央央央央央央央央央央央央 த் தமிழாராய்ச்சி மாநாடு சிறப் பி த ழ் Ar Sவுரை
இவர்கள் வரவால் தமிழுறவு மிக நெருக்கமாக அமைவ தோடு பரந்த அமைப்பிலும் செறிந்து வளரும்:
தமிழ்வல்லார் பலரும் கூடி அற்புதமாகப் பற்பல ஆராய்வுகளை நடத்துவர். ஆய்ந்தவற்றைக் கட்டுரை களாகவும் நூல்களாகவும் எல்லோரும் அறியத்தருவர். முன்னர் நடைபெற்ற நான்கு மகாநாடுகளின் ஆய்வு போல இந்த ஐந்தாம் மகாநாட்டின் ஆய்வும் பரந்த முறையில் பன்முகமாக இடம்பெறும்.
பதின்மூன்ருண்டுக் காலமாகத் தமிழாராய்ச்சி மகா நாடு பன்முகமாகச் செய்த பணி பெரிது. தமிழைப் பற்றித் தமிழர்தான் அறிவர், தமிழர்தான் அறிய வேண்டும். என்று கருதிய காலம் மறைந்துவிட்டது? தமிழரல்லாதவர் தமிழைப் படித்துத் தமிழாராய்வு செய்கிறர்கள். ஆங்கிலேயரிற் பார்க்க ஆங்கிலம் பேசிய தமிழர் பலர் அன்றிருந்தார்கள். தமிழரிற்பார்க்கத் தமிழறிந்த ஐரோப்பியர் பலர் இன்றிருக்கிறர்கள்.
உலகப் பெருநகரங்களிலுள்ள பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ்த்துறை ஒருபாடமாக இருக்கிறது என் ருல் தமிழுக்கு இதைவிடப் பெருமை வேறென்ன வேண்டும். பண்டைத் தமிழ்ப் பண்பாட்டை இன்றைத் தமிழர் மறந்துபோகும் நிலையில் வெளிநாட்டவர் அதனைப் பேணிக்காத்து வருகின்றர்கள். தமிழ் நடையுடைபாவனை சிந்தனை வாழ்வு எல்லாம் ஐரோப்பியர் பலரிடம் தஞ் சம் புகுந்துள்ளன. ஐரோப்பியர் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் வைப்பதைக் கண்ட ஐரோப்பிய இளைஞர்கள் சிலர், தமிழர் முறையில் திருமணச் சடங் குகளைச் செய்கின்றனர். உள்ளம் பூரிக்க முகமலர்ச்சி யோடு வணக்கம் என்கிருர்கள். ஐரோப்பியரிடையே தமிழ்ப்பற்றும் அபிமானமும் அதிகமாகும். திறமான புலமை தமிழ் ப் புலமை எனக்கண்ட பிறநாட்டார் தமிழை வணங்குகின்ருர்கள். பழைய உரோமரோடும், எகிப்தியரோடும், சீனரோடும் உறவாடியவர் எல்லோ ரிலும் மூத்த தமிழர் என்பதை இன்று உலகத்தவர் கண்டுகொண்டார்கள். எத்தனையோ ஐரோப் பியர் தேவாரமாதிய திருமுறைகளிற் பெரிய ஈடுபாடு கொண் டுள்ளார்கள். தே வாரத் தை மொழிபெயர்க்கலாம்: பண் &ண மொழிபெயர்க்க முடியாது என்றுகண்டு தமிழைப் படித்து வருகிறர்கள். தமிழ் வாழும்.
தமிழ் வளர்க்கும் ஈழம் தமிழ் தாவிப் படர்த்த ஈழம் தமிழை நன்ரு கவளர்ச் கிறது. தமிழ்த்துறை இங்கே தழைத்துவருகிறது. கவிதை இசைப் பாடல், நாடகம் நடனம், கணிதம், வான நூல், பொறியியல், வைத்தியம், வ ர ல (ா று, பொருளியல், அரசியல், பெளதிகம், இரசாயனம், வர்த்தகம், ஆராய்ச்சி முதலிய பல துறைகள் ஈழவள நாட்டில்
மேம்பட்டு வருகின்றன.
ரியும் தமிழர் கண்டவை *

Page 4
1-1-81 மில்க்வை
史史史虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫史 முகப்பு விளக்கம்
உலகத்தமிழ் மி கா தாட் டி ன் ஐந்தாம் பெருவிழா கோலாகலமாக நடைபெறுகின்ற மதுரை மாநகரம் பழைய பாண்டியர் தலைநகரம், தேன்பாண்டிநாடே சிவலோக மேன முன் வாதவூரர் மொழிந்தனர். மதுரையென்றதும் சேந்தமிழ்ச்சொக்கர் மீனுட்சிசமேதராய் எழுந்தருளியுள்ள திருவாலவாய் என்னும் திருக்கோயிலே நினைவுக்கு வரும். அன்ருெரு பெருவெள்ளத்தால் அழிந்த மதுரையை ஆலம் (பாம்பு) ஊர்ந்து அடையாளங் காண்பித்தமையால் ஆல வாயாயிற்று. ஆலவாய்ாவதும் இதுவே என்று ஆளுடைப் பிள்ளையும் அருளிச்செய்தார்.
திருவாலவாய்த் திருக்கோயிலும் கோபுரங்களிலொன் றும் சுவர்ணகஞ்சம் என்னும் பொற்ருமரை வாவியும் அதில் கன்மாப்பலகை என்னும் சங்கப்பலகையும் இன்ன பிறவும் முகப்பிலலங்கரிக்கின்றன. உலகத் தமிழாராய்ச்சி இலச்சினையும் உலகப் பொது நூலான திருக்குறளும் உலக முய்ய ஆடல்புரியும் வெள்ளியம்பலவாணனும் மேலே உள்ளன. துவாசபாலகர் இருவரும் என்ன அற்புதமென் றும், உலகுக்கொருவன் இறைவனென்றும், உலகில் மூத்த மொழி ஒருமொழி தமிழ்மொழி என்றும் காட்டுகின்றனர்,
மில்க்வைற் செய்தி அறுபத்தொன்றவது இதழ் ஐந் தாவது உலகத் தமிழாராய்ச்சி நினைவிதழாக வெளியிடு -வதில் பெருமகிழ்ச்சியடைகின்ருேம். மாதமொருமுறை வெளிவரும் எங்கள் செய்தி, செந்தமிழ் சைவம் கமழ்வ தோடு, சுகாதாரம், நீதி, வரலாறு, விவேகம், பொது அறிவு, விவசாயம், வைத்தியம் முதலிய பல துறைகள் அலம்பிவருவதாகும். மில்க்வைற் தயாரிப்புகளுக்கு விளம் பரம் என அமைந்தபோதிலும், விளம்பரப்பகுதி எங்கே னும் ஒரு மூலையில் சிறிதளவே இடம்பெறுகிறது.
மில்க்வைற் செய்தியின் மதிப்பும் வியாபகமும் வளர்ந்து வரும்போது, மில்க்வைற் தயாரிப்புகளுக்கு அபிமானிகள் ஆதரவும் அதிகரித்துவரவே மில்க்வைற் என்னும் பெயர் ஒவ்வொருவீட்டிலும் பழகிய பெயராய் நிலைத்துவிட்டது என்பதில் பெருமகிழ்ச்சி உண்டாகிறது. வாழ்க, வளர்க என்று பெரியவர்கள் வாழ்த்தொலி கேட்கும்போது உள்ளம் பூசிக்கிறது நன்றி. மில்க்வைற் தயாரிப்புகளுக்கு ஆதரவு பேருகுந்தோறும் அறப்பணியும் அன்பர் பணியும் அடியார் சேவையும், செய்திப்பிரசுரமும் பெருகும் என்பதைக் கூறத்தான் வேண்டும்.
0yOOyOOy OyOyykyyk Oy OOykykOkkOOOOOOkkOkkkOkOkkO
Wonton destruction of forests means:
Soil erosion and silting of rivers Flash floods al Damage to farm and field Drying up of underground streams.
- Forest Department.
* பழந்தமிழே இந்திய

ற் செய்தி 3
இராமக்கிருஷ்ண பரமஹம்சர் திருநாமத்தால் உலகநாடுகள் ஒன்றிணைக்கப் பெறுகின்ற அ  ைம ப் பில் இலங்கையும் இராமகிருஷ்ண மடம், இராம கிருஷ்ண வித்தியாலயம், விவே கானந்தசபை, விவேகானந்த வித்தியாலயம் முதலியன பல இடங்களிலும் அமைத்து மக் ' ' ' '; ; ..., , :} கள் பணி செய்கின்றது. இரு பதாம் நூற்ருண்டில் சுவாமி விவேகானந்தர் ஈழம் வந் தமை ஈழத்தவருக்குச் சிறப்பாகத் தமிழருக்கு வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது.
'పi
★ yr
Sri Ramakrishna’s message was unigue in being expressed in action...... Religion is not just a matter for study; it is something that has to be experienced and to be lived, and this is the field in which Sri Ramakrishna manifested his uniqueness. His religious activity and experience were, in fact, comprehensive to a degree that had perhaps never before been actained by any other religious genius in India or elsewhere. −
– Arnold Toynbee
ஈழத்திலும் ஐயர் ஒருவர்
பழந்தமிழிலக்கிய ஏடுகள் பலவற்றைத் தேடி ஒப்பு நோக்கிப் பிழை திருத்திப் பகீரதப் பிரயத்தனம் போல் அச்சிட்டு உலகுக்குபகரித்த உ. வே. சாமிநாத ஐயர் அவர்களைப் போல், பழைய சைவ நூல்கள் பலவற்றை அச்சிட்டு உபகரித்த ஐயர் ஒருவர் ஈழத்தில் யாழ்ப்பாணம் குப்பிழான் செந்திநாதர் என்பவராவர். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் வல்லவராய்க் காசி, திருவனந்த புரம் ஆகிய தலங்களிலிருந்து ஆராய்வுகள் செய்தவர். ஏகாம்பர முதலியார் மனைவி ஆண்டாளம்மை என்பார் இவரிடம் கல்வி கற்றுச் சைவசித்தாந்தம் பேசுவதில் பெருந் திறன் உள்ளவராயினுர். பாண்டித்துரை தேவர் அவர்கள் விரும்பியவண்ணம் ஐயரவர்கள் செந்தமிழ் பத்திரிகையில் எழுதிய சைவக்கட்டுரைகள் மிகப்பல. அவர் செய்த பூரீ நீலகண்ட பாஷிய மொழிபெயர்ப்பு பகீரதப்பிரயத்தனம்.
சென்ற நூற்றண்டில்!
மின்சாரம் வந்தது கொழும்பு மாநகர சபையின் காஸ்லயிற் இரவைப் பகலாக்கிய காலத்துக்குப் பின், 1895 ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாக மின் சார வெளிச்சம் ஒளியூட்டத் தொடங்கியது.
மொழிகளின் தாய் 女

Page 5
4 மில்க்ை
திரும்பிப் பார்த்தவை:
முதல் உலகத் தமிழ் மகாநாடு
தமிழ்கூறும் உலகத்தவரைத் தட்டியெழுப்பிய மூதல் உலகத் தமிழ் ம கா நாடு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கில் உதிக்கும் சூரியன்போல் அது கிழக்கு நாட்டிலே 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆந் திகதி முதல் 23ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்க்ா, பிரித்தானியா, சுவிற்சலாந்து, சுவீடின், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், யப்பான், அவுஸ்திரேலியா, ஹொங்கொங் முதலிய இருபத்தைந்து நாடுகளிலிருந்தும் தமிழ்வல்லார் தமிழார்வங்கொண்டார் அங்குக்கூடினர். மலேசியாவில் மந்திரி உத்தியோகம் பார்த்த மதிப்புக்குரிய மாணிக்க வாசகம், சம்பந்தம் முதலானுேர் வந்தவர்களை வரவேற் றுபசரித்தார்கள். محی
ம் லே சி யப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வணக்கத்துக்குரிய கலாநிதி தனிநாயக அடிகளார் மகா நாட்டின் மூளையும் கண்ணும் முதுகெலும்பாகவும் பணி புரிந்தார். மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் தமிழ்த்துறை மகாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றிச் சிறப்பித்தார்.
தனிநாயக அடிகளார் யாழ்ப்பாணத்துக்கு மீண்டதும் உடனடியாக மில்க்வைற் தொழிலதிபரிடம் "அன்பரே!" என்று அழைத்தவாறு வந்து அமர்ந்து ஒருபகலெல்லாம் உலகத் தமிழ் மகாநாட்டைப்பற்றிப் பேசிப் பல நூல்களை உபகரித்து, யாழ்ப்பாணத்தில் தமிழ் வளர்க்குமாறு ஊக்குவித்தார்.
* தமிழ் இன்றமிழ்,
 

ற் செய்தி 1-1-81
உலகத் தமிழாராய்ச்சி ம க ரா நா டு கோலாலம்பூர், சென்னை, பாரிஸ் முதலிய நகரங்களில் நடைபெற்ற பின் 1974-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்ரும் நாள் தொடக்கம் ஒன்பதாம் நாள்வரை இலங்கையில் யாழ்ப் பாணத்தில் நடைபெற்றது. இம் மகாநாடு இலங்கைப் புரவலர் பலரின் பொருளுபகரிப்புதவியில் நடைபெற் றது. மகாநாட்டை எதுவிதத்திலும் ந ட் த் தி யே ஆக வேண்டும் எனக் கங்கணங்கட்டி நின்றவர்களில் ஒருவ ரான மில்க்வைற் தொழிலதிபரின் திருவாலவாய் என் லும் மனை, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்க்கெல்லாம்
அடையா வா ச ல  ைமந் திரு ந் த து. வெளிநாட்ட வருக்குப் பன்ம்பண்டம், இராசவள்ளிக்கிழங்கு முதலிய சிறப்புச் சிற்றுண்டிகள் வழங்கியதோடு, மகாநாட்டுச் சின்னம் பொறித்த பொலித்தீன் பையில் பிரசுரங்களும் வழங்கியது. வரலாற்றுச் சிறப்புள்ள முக்கியகட்டங்கள் உயிருள்ளவகையில் நடமாடும் மேடையேற்றிய பெருமை யும் மில்க்வைற் தொழிலதிபரைச்சாரும். திருவாலவாய் மனையில் ஐரோப்பியர் பலர் உரையாடிப் போஞர்கள்:
ஈழத்துப் பத்திரிகைகள்
ஈழத்தில் காலத்துக்குக் காலம் தோன்றி நிலைபெற்ற னவும் மறைந்தனவுமான பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியீடுகள் பல. தமிழ் வளர்க்கவும் சைவம் வளர்க்க வும் வெளிவந்தனவும், தமிழ் வளர்க்கவும் கிறிஸ்தவம் வளர்க்கவும் வெளிவந்தனவும், தமிழ்மூலம் சமூகசீர்திருத் தஞ்செய்ய வெளிவந்தனவும் என இவற்றை வகுக்கலாம். உதயதாரகை, இலங்கைநேசன், சைவ உதயபானு, சத்திய வேத பாதுகாவலன், இந்துசாதனம், இலக்கியக் கண்ணுடி, இலங்காபிமானி முதலியன காலத்தால் முற்பட்டவை. தென்கோவை எனவழங்கும் யாழ்ப்பாணத்துக் கோப்பாய் தெற்கைச் சேர்ந்த ச. கந்தையபிள்ளை அவர்கள் நடத்திய பத்திரிகை வித்தகம் என்பதாகும். இதனுல் இவர் பெயர் வித்தகம் கந்தையபிள்ளையாயினர்.
சென்ற நூற்றண்டில்:
தொலைபேசி ஏகபோகம் முன்னர் ருேபேட்சன் கொம்பனியாரின் பொறுப்பில் இயங்கிய தொலைபேசிச் சாதனத்தை 1-1-1896 முதலாக இலங்கை அரசாங்கம் கையேற்று ஏகபோகவுரிமையாக்கிக் கொண்டது:
ண்தமிழ், தீந்தமிழ் *

Page 6
திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனிகளிற் சூக்கும் மானதும் சிறப்பானதும் சிவலிங்கம். அதேபோல் திருக் கோயிலில் வெளியே தெரியும் அமைப்புக்களுள் அால மானதும் சிறந்ததும் கோபுரம். கோபுரம் தூலலிங்கம் கோபுரதரிசனம் பாபவிமோசனம், கோடி புண்ணியம்: திருக்கோயில் விமானத்தின் பின் எழுந்த கோபுரம் வேதத்தின் பின்னெழுந்த ஆகமம், திருமுறையின் வழி யெழுந்த சித்தாந்தம் மூலத்தை விஞ்சிய விளக்கங்களா உளளன;
மதுரையைத் தலைநகரமாகக்கொண்ட தமிழ்நாட்டிற் பிற்காலப் பாண்டியர் காலத்திற் பெரும் சிறப்புப்பெற்ற கோபுரம் நாயக்கர் காலத்தில் உச்சக்கட்டம் அடைந்தது. திருக்கோயிலின் புகுமுகவாயிலாயமைந்த கோபுர ம் தூரத்தேவருபவரை வாருங்கள் என அழைத்து வழி காட்டியாயுள்ள கலங்கரைவிளக்கமாகும். துன்பக்கடலில் தோணி செலுத்துவோர் இன்பப் பெருநிலையம் அடைய வழிகாட்டும் கோபுரம் அண்டத்திலுள்ளனவற்றின் பிண் டப்பொருளாகும்.
மதுரை, பூரீரங்கம், திருவாரூர், இராமேஸ்வரம், சிதம்பரம், திருநெல்வேலி, திருவண்ணுமலை, பூgவில்லி புத்தூர் தஞ்சைப் பெரியகோயில் முதலிய திருக்கோயில் களின் கோபுரங்கள் அழகானவை, அற்புதமானவை.
மதுரைப் பெருங்கோயில் மீனுட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருள இரணைக்கோயிலாயமைந்து எழில்ததும்புவது. நாற்பெருங் கோபுரங்களும் நான்கு திசைகளையும் விளக் கஞ்செய்வன. முன்னர் கூடல் எனப் பெயர்பெற்ற திருவாலவாய் நான்மாடக்கூடல் என்றே வழங்கியது. மதுரையில் எல்லாமாக ஏழு கோபுரங்கள் எழுந்துள்ளன. அவற்றுள் தென் கோபுரமே மிகப்பெரியது. மீனுட்சி அம்மனுக்கு வழிகாட்டுவது. திராவிடக்கலை ஒளிவிடுவது. அறுபது மீற்றருக்கு அதிக உயரமுள்ளது.
(அன் ருெ ரு நாள் காஞ்சிகாமகோடிப் பெரியாரின் அருளாணையால் மில்க்வைற் தொழிலதிபருக்குக் கோபுரம் எழுதிய கொடியொன்று கிடைத்தது. இவர் அதன் யொப்ப நூற்றுக்கணக்கான கொடிகளைச் செய்வித்து ஈழ
நாடெங்கும் உபகரித்ததோடு தூர கிழக்குநாடுகளுக்கும்
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கும் அனுப்பிஞர். இன்று
* தமிழில் தக்க செ
 

பற். செய்தி 5.5
காமகோடிப் பெரியார் தந்த கோபுரம் எங்கள் நாட்டில் சைவம் பரப்பவெழுந்த சஞ்சிகைக்குப்பெயராகி, தமிழ் நாட்டில் பெரும்புலவர் முருகவேள் அவர்களை ஆசிரியராகக் கொண்ட திருக்கோயில் சஞ்சிகைபோலத் திங்கள்தோறும் 'சைவசமய விளக்கஞ் செய்யப்போகிறது)
* கோலக்கோபுர கோகரணஞ் சூழாக்
கால் களாற் பயனென்?
- திருநாவுக்கரசுதாயனூர்
பார்ப்பனர் ஒதுக!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழர் மத்தியில் வேதம் வல்லவர்கள் வாழ்ந்தார்கள். தமிழ்ப் புலவர்கள் பார்ப்பனரை வெகுவாக மதித்துப் பார்ப்பார் ஓதுக என்று பாராட்டியுள்ளார்கள். மூவேந்தர்களும் பார்ப்பாருக்குப் பலவகைத்தானங்கள் செய்துள்ளார்கள். பார்ப்பனர் வீ டு கள் ஊர்கள்தோறும் துலாம்பரமாக விளங்கின. அங்கே கோழி, நாய் உலாவுவதில்லை. பார்ப் பனர் காலை, நண்பகல், மாலை ஆகிய மூவேளைகளிலும் சந்தியோபாசனஞ் செய்தார்கள். பார்ப்பனரால் மக்கள் நல்ல வாழ்வுபெற வழிகண்டார்கள். மன்னர்கள் பார்ப் பனரை முன்னிட்டே சற்கருமங்கள் செய்தனர். தமிழ்க் கடவுளாய முருகனை வணங்க முற்பட்டவர்கள் அந் தணரை முன்னணியில் விட்டு அவர்பின் தாம்புகுந்தனர்; இன்னும் பல சொல்லி அலுக்கவைக்காமல் அந்தணர்கள் ஊரையும் நாட்டையும் வாழச்செய்யும் வழியில் தாம் வாழ்வாராக. பாவினங்களிற் சிறந்த வெண்பாவைப் பார்ப்பனக் கவி எனக் கெளரவித்த தமிழர் நாகரிகம், பார்ப்பனரைப் பூசுரர் எனக் கொண்டாடியது. கொண் டாடும். கொண்டாட வாழ்வது அந்தணர்தம் பெருங்
கடன். வேதநெறி தழைக்க சைவத்துறை விளங்க!
மந்திரம் நினைப்பவரைக் காப்பது திருமூலர் தமிழில் தாம் செய்த நூலுக்குத் திருமந்திரமாலை என்றே பாடி னர். மந்திரமாவது நீறு என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் மந்திரத்தை விளக்கினர். மந்திரங்கள் ஏழு முடிபுள்ளன. முடிபு என்பது கோடி எனவும் வழங்கும்;
மந்திரங்கள் எழுகோடியானமையால் தேவாரத் திரு முறைகளும் ஏழு தொகுதிகளாக வகுக்கப்பெற்றன:
ஏழுகோடி மந்திரங்கள் வாழ்க, வெல்க, ஒங்குக, அருளுக, நிலைக்க வணக்கம் என்பனபோன்ற கருத்தில் அமைந்தன. பெரியமந்திரமான நமச்சிவாய வாழ்க என்றே திருவாசகம் ஆரம்பிக்கிறது. எனவே நமஹ, சுவாதா சுவாஹா, வஷட், வெளஷட் பட், ஹ"ம்பட் என ஏழுவகையாக முடிவுபெறும் மந்திரங்களை அந்த னர் அட்சரசுத்தியாக ஒதி நாட்டை வாழவைப்பார்களாக வேதம் ஒதும் வேதியர்க்காக மழைபெய்யும். மழைபெய் தால் நிலம் குளிரும். நிலம் குளிர்ந்தால் பயிர்கள் விளையும் பயிர் விளைந்தால் பசி நீங்கும். பசி நீங்கினல் மக்கள் வாழ்வர்.
வாழ்க! மலர்க!
ாற்கள் நிரம்ப உண்டு

Page 7
6 - மில்க்வை
0. 敬 வைகையும மதுரையும
வையை என்றும் பெயர் பெற்ற பொய்யாக்குலக் கொடியாய வைகை நதியே மதுரைமாநகரை வளம் படுத்தி வாழ்விப்பதாகும். அது வற்றிவரண்டு பொருக்கு லர்ந்து புழுதி படிந்திருந்தவேளையிலும் கையால் வறுகி ஞல் நீர்சுரக்கும். கைவை என்பதை வைகை என்றும் ஏவற் சொல்லாகக் குறிப்பிடுவர். அது பொய்க்காத நதி என்பது புலப்படும். மேற்குத் தொடரில் ஏலமலை என் னும் இடத்தில் உற்பத்தியாகி மதுரை. இராமதாத புரம் ஆகிய பிரதேசங்களுக்கூடாகப் பாயும் வைகை நதிக்கு வராகததி, சுருளியாறு, வெத்திலைக்குண்டு முத லியன துணையாகப் பாய, அது 180 மைல் நீளம் பரவும் பாக்ஸ் நீரிணையிற் படுக்கும்.
தமிழும் கலையும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகளுள் கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை என்பன கிறப்பிடம் வகிக்கின்றன.
தமிழும் இசைக்கருவிகளும்
தமிழர் கண்ட இசைக்கருவிகளுள் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்பன சிறப் பானவை. தோற்கருவி என்பன பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, குடமுழா, கணப்பறை, தமிருகம், தண்ணுமை, தடாரி, முழவு, முரசு, தகுனிச்சம், துடி என்பனவும் பிறவுமாம் துளைக்கருவி என்பனவற்றுள் வங்கியம் என்னும் குழல், நாதசுரம், மகிடி என்பன பழைமையானவை. நரம்புக் கருவி என்பனவற்றுள் யாழ் சிறப்பானது. அது பலவித வடிவங்களிலமைந்து பலவாய நரம்புக் கூட்டங்களேக் கொண்டது. பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் என்பன சிறப்பிடம் வகிப்பன. இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழின் அமைப்புக்களை விஞ்ஞானப் பட்டதாரியாய பண்டித மயில்வாகனம் என் னும் சுவாமி விபுலானந்தர் கண்டு விளக்கியுள்ளார். யாழின் பெருமையை ஈழவளநாட்டின் வடபகுதி நினேவு படுத்துகிறது. அன்று யாழ்ப்பாணம் பாணர் கையில் யாழ் பயன்பட்ட பழங்கதை இன்றும் இங்கே நின்று நிலைக் கிறது. கஞ்சக்கருவி என்பன தாளம், சாலரா, சப்பளாக் கட்டை முதலியனவாம்.
தமிழும் தமிழ்ச்சங்கங்களும்
தமிழ் சங்கங்களில் வளர்ந்த சிறப்பால், சங்கத்தமிழ் எனப் பெயர்பெற்றது. பழைய சங்கங்கள் மூன்றென்பர் அவை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என் பனவாம். மூதற்சங்கம் தென்திசையில் முன்னிருந்த மதுரையிலமைந்தது. அதில் 549 புலவர்கள் தமிழ் வளர்த்தனர். அவர்களுள் ஈழத்து முரஞ்சியூர் முடிநாகர் என்னும் புலவரும் ஒருவர். அவர்களின் சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்தது என்பர். இரண்டாம் சங்கம் கபாடபுரம் என்னும் இடத்தில் 3700 புலவர்களைக் கொண்டதாய் 3700 ஆண்டுகள் நிலைத்ததென்பர். மூன்றம் தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையிலே 449 புல வர்களைக்கொண்டு 1850 ஆண்டுகள் நிலைத்திருந்தது.
* தமிழை என்றுமுள

b செய்தி --8t
அதில் சழதாட்டைச் சேர்ந்த பூதன்தேவன் எசினும் புலவர் வீற்றிருந்து தமிழ் வளர்த்தார், அவர் பாடியன வாக அகதாநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய தொகை நூல்களில் ஏழுபாடல்கள் கிடைத்துள்ளன சங்கம்பற்றிப் பிற்காலத்தவர் சொன்னவை "நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி நற்கனககிழி தருமிக்கருளினேன் காண்" என்று திருநாவுக்கரசர் சிவபெருமானைப் போற்றுவர். "உயர்மதிற் கூடலின் ஆய்ந்த வொண்டீந்தமிழின் துறை" என்று மாணிக்க வாசக சுவாமிகள் தமிழருமையைத் திருக்கோவையாரிற் பாடுகிருர், 'சங்கத் தமிழ்மாலை" என்று திருமங்கை யாழ்வார் தமிழைப் போற்றுகின்ருர் ஏழிசை நூற்சங் கம் என்பர் புகழேந்திப் புலவர். சங்கத்தமிழ்மூன்று என்பர் ஒளவையார்.
தமிழ் திராவிடமொழிகளின் தாய்
திராவிடமொழிகள் என்னும் கூட்டத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், துளுவம், குடகம், தெலுங்கு என்னும் மொழிகள் உள்ளன. இவற்றுக்கு முன்தோன்றி மூத்தமொழியாய் உள்ளது தமிழ். "கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாளமும் துளுவம் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பலவாயிடினும்" என்பர் மனுேன் மணியம் சுந்தரம்பிள்ளை.
ஐவகை நிலனும் பண்ணும் இசையும் பறையும் தமிழில் வழங்கும் நிலம் ஐந்து. அவை குறிஞ்சி, முல்லை, பாலே, மருதம், நெய்தல். இவற்றுக்குரிய பண் முறையே குறிஞ்சிப்பண், முல்லைப்பண், பாலைப்பண், மருதப்பண், நெய்தற்பண் என்பனவாம். இவற்றுக்குரிய இசை முறையே யாம யாழ், முல்லை யாழ், பாலை யாழ், மருத யாழ், விளரி யாழ் என்பனவாம். இவற்றுக்குரிய பறை தொண்டகப்பறை, ஏறுகோட்பறை, நிறைகோட் பறை, மணமுழவு, மீன்கோட்பறை என்பனவாம். இப் பண்ணுக்குரிய பொழுது முறையே யாமம், விடியல், நண்பகல், மாலை, ஏற்பாடு. முல்லைப்பண்சாதாரி என வும், நெய்தற்பண் செவ்வழி எனவும் பெயர்பெறும் என்பர்
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் என இன்று வழங்கும் செய்யுள்கள் மூன்றம் தமிழ்ச்சங்கத்தில் எழுந்தன. அவை தொகையும் பாட்டும் என இரு பகுப்பானவை அவற்றுள் தொகை நூல்களே முதலில் எழுந்தன எனக் கூறுவாருமுளர்
தொகை நூல்கள் - தொகை நூல்கள் என்னுந்தொகுப்பில் எட்டு நூல் கள் உள்ளன. ஒவ்வொரு நூலும் பல புலவர்களாற் பாடப்பெற்றது. ஒவ்வொரு நூலின் பெயரையும் அதன் பாடல் தொகையினையும் வகுத்துள்ளார்கள். நற்றிணை 399 பாடல்கள், குறுந்தொகை 400, ஐங்குறுநூறு 498, பதிற்றுப்பத்து 80, பரிபாடல் 22, கலித்தொகை 150, sy sp5nTTgy 400. Listop5nTLESITgy 398.
(தொடர்ச்சி 16ஆம் பக்கம்)
தென்தமிழ் என்பர்

Page 8
1-1-81 மில்க்ை
மனிதவாழ்வில் மாதர் பங்கு மிகப்பெரியது. தாயாய் தாரமாய்த் தருமவழி பழக்குபவர் மாதர். என்னுடைய வாழ்வுக்கு உதவியாக ஏதுவாக உனக்கு நான் இதனை அணிகின்றேன் என்று கூறித் தாலிகட்டுதல் முறையான சம்பிரதாயம் மனைவி சகதர்மிணியாய் இல்லறத்தை நல்லறமாக்குபவள். மனைவியில்லாதவர் விருந்து முதலிய நல்லறங்கள் செய்யமுடியாதவராவர். விரு ந் தெ தி ர் கோடல் இழந்த என்ன என்று கலங்கிய கண்ணகியும், விருந்து வந்தபோது என்ன செய்யுமோ என்று வெதும்பிய சீதையும் விருந்தின் மேன்மையை விளக்கியுள்ளார்கள். இளையான்குடிமாற நாயனரின் மனைவியார், அப்பூதியடி களின் மனைவியார், சிறுத்தொண்டநாயனரின் மனைவி யார், சிறுத்தொண்டர் வீட்டுப் பணிப்பெண் முதலானுேர் விருந்தின் மகத்துவத்தை விளக்கியுள்ளார்கள்.
மலேசியாவில் இந்துசமயம் சி. வேலுசுவாமி மலாயாத் தீபகற்பத்துக்கு இந்தியர்கள் வந்தபோதே இந்துசமயமும் உடன் வந்துவிட்டது. பலமொழிகளைப் பேசுகின்ற இந்தியர்கள் இங்கு சமயச்சார்பான கோயில் களை எழுப்பி இறைவழிபாட்டை எவ்வித இடையூறு மின்றி நடத்திவந்திருக்கின்றனர்.
1957-ஆம் ஆண்டு மலாய் நாடு சுதந்திரமடைந்து பின் னர் மலேசியாவாகியது. மலேசிய மொழி தேசியமொழி யாகியது. அரசாங்க மதம் இஸ்லாமாகியது. எனினும், இத்துசமயம் இங்கு இருப்பதற்கும் வளர்வதற்கும் தடை கிடையாது. இதற்குத் தக்க சான்று அரசாங்கம் இந்துக் கோயில்களுக்கு நிதியுதவி அளித்துவருவதேயாகும். புதிய ஆலயங்களை நிறுவுவதற்கும், பழைய ஆலயங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் அது நிதியுதவி வழங்கி வருகின்றது. முக்கியமான திருவிழாக் காலங்களில் அர சைச் சார்ந்த பிறமதத்தவர்கள்கூட வேறுபாடின்றிக் கலந்துகொள்வதும், உரை நிகழ்த்துவதும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்ருகும்;
மலேசியாவில் இந்துக்களுள் பெரும்பான்மையினர் தமிழர்கள். இவர்கள் மலேசியாவிலுள்ள பட்டணங்களி லும், ரப்பர், எண்ணெய்ப்பனைத் தோட்டங்களிலும் பணிபுரிகின்றனர். வணிகர்களாகவும், உத்தியோகஸ் தர்களாகவும் வேலைபார்ப்பதுடன் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு உழைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர் கள் வாழ்கின்ற இடங்களில் சிறிய பெரிய அளவிற் கோயில்களை அமைத்து வழிபாடாற்றிவருகின்றனர். சிவன், முருகன், பிள்ளையார், மாரியம்மன், காமாட்சி, இராஜராஜேஸ்வரி, பெருமாள், ஆகிய தெய்வங்களை வணங்குகின்றனர். தோட்டங்களில் வாழ்பவர்கள் மாரி
* தமிழ் இயல் இசை

வற் செய்தி 7
யம்மன், முனியாண்டி, முனீஸ்வரர் போன்ற தெய்வங் களை வணங்கிவருவதும் காணக்கூடியதாக இருக்கிறது: மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சிறப்பும் வரலாற்றுப் பெருமை யுமுள்ள கோயில்கள் உள்ளன. கோலாலம்பூரின் மத்தியில் அழகின் சிகரமாக அமைந்துள்ளது பூரீ மகா மாரியம்மன் கோவில். அதற்கு அடுத்து அத்தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது கோட்டுமலைப் பிள்ளையார் கோவில். கோட்டு மலைப் பிள்ளையார் கோவிலைத் தள்ளி அமைந்துள்ளது, காசி லிங்கேஸ்வரர்கோவில் ஸ்காட் ரோட்டில் இலங்கைத் தமிழர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் கந்தசுவாமி கோவில் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட தாகும், பங்சார் சாலையில், இராமர் கோவில், கிருஷ்ணர் கோவில் என்னும் இரு சிறு கோவில்கள் இருக்கின்றன.
கம்பொங்பாண்டான் பகுதியிலும் பாசார் சாலை யிலும் கெத்துல் பகுதியிலும், பெட்டாலிங் ஜயா பகுதி யிலும் பிள்ளையார் கோவில்களும் சிவன் கோவிலும் உள்ளன. செந்துலிலுள்ள தண்டாயுதபாணி கோவில் பெரியதும் சிறப்புக்குரியதுமாக முக்கியசாலையோரத்தில் அமைந்துள்ளது. காமாட்சியம்மன் கோவில், பத்திர காளியம்மன் கோவில் என்பனவும் சிறிய உருவில் உள்ளன. இங்கு குறிப்பிட்டது போன்றே மலேசியா வின் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இங்கு வாழும் இந்துக்கள் தத்தமக்கு விருப்பமான மூர்த்தத்தை வழிபாடு செய்கின்றனர். சைவம், வைன வம் என்ற பேதம் இங்கு இல்லை; எனினும், சைவ சமயமே முதலிடம் பெற்றுள்ளது எனலாம்.
சமயத்தை வளர்ப்பதற்கு ஆங்காங்கு இயக்கங்கள் உள்ளன. இந்து மதத்தைப் பரப்பும் நோக்கத்தைக் கொண்ட ‘மலேசிய இந்து சங்கம், சைவ சமயத்தை விளக்கிப் பரப்பும் குறிக்கோளைக்கொண்ட "அருள் நெறித் திருக்கூட்டம்", இதே நோக்கம் கொண்ட ‘திரு வருள் தவநெறி மன்றம்’, ‘அப்பர் திருநெறிக் கழகம்’ ஆகியவற்றுடன் "கிரியா பாபாஜி சங்கம்’, ‘தெய்வீக வாழ்க்கைச் சங்கம்" வள்ளலார், ரமணர், ஆகியோர் பெயர்களைக் கொண்ட சங்கம் போன்றவையும் இருந்து வருகின்றன
மேற்கண்டவை இயன்ற அளவில் சமய விழாக்களை யும், குருபூஜை போன்றவற்றையும் நடத்திவருகின்றன: திருவருள் தவநெறி மன்றம் தேவார திருவாசக திருப் புகழ் பாடல்களைப் பயிற்றுவிப்பதிற் பெரும்பணி செய் கின்றது; இந்து சங்கம் சமய வகுப்புக்களை உயரிய முறை யில் நடத்திச் சமய அறிவை ஊட்டிவருகின்றது. அருள் நெறித் திருக்கூட்டம் குரு பூசைகளைத் தவருமல் நடத்து வதுடன் சித்தாந்த வகுப்புக்களை நடத்திச் சித்தாந்த விளக்கம் கொடுக்கிறது. தேவாலயங்கள் அவ்வப்போது திருமுறை மாநாடு, சைவசமய மாநாடு போன்றவற்றை நடத்தி வருவதுடன், சிறு சிறு சமய விளக்க நூல்களை வெளியிட்டுச் சமய அறிவை வளர்ப்பார்க்கு உதவுகின் றன.
இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிலிருந்து அவ் வப்போது இங்கு வரும் சமய அறிஞர்களின் நல்லுரை (8 ஆம் பக்கம் பார்க்க)
நாடகம் என நிலவும் *

Page 9
8 மில்க்வை
ஒளவை
அருந்தமிழ்
X
அழகு எனப் பாடியது ஒருநாள் சோழமன்னன் ஒளவையாரிடம் அழகுபிர காசிக்கும் இடங்கள் எவை? எவருக்கு எதனல் அழகு என்று கேட்டான். அதற்கு ஒளவையார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையில் அழகுண்டு. குடும்பத்துப் பெண்ணுெ ருத்தி, திருமணஞ் செய்து மக்களைப்பெற்றுப் பாலூட்டி வளர்த்துத் தாய்மையாயிருக்கும் களையில் ஒரழகுண்டு, நன்மைதரும் நோன்பினை அநுட்டித்து வாடிய உடம்பில் ஒரழகுண்டு, எக்காலத்திலும் இல்லாதவருக்கு நிறையக் கொடுத்து வாடிய வள்ளல் ஒருவனிடம் ஒரழ குண்டு, கொடுமையான போரில் காயமுற்றுக் கிடக்கும் வீரனி டத்தும் ஒரழகுண்டு என்று கருதப்படும் என்ருர், சுரதந் தனிலிளைத்த தோகை சுகிர்த விரதந் தனிலிளைத்த மேனி - நிரதம் கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட Na வடுத்துளைத்த கல்லபிரா மம்.
அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுள் நடுவில் உள்ள பொருள் அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதார மானது. பொருளைத் தருமவழியிலே தேடித் தருமவழி யிலே செலவு செய்தல் வேண்டும். அது எவ்வாறு என்று அறியவிரும்பிய சோழன் ஒளவையாரைக் கேட்டபோது அவர் நன்று என்று கூறிப் பாடினர்.
சிவபெருமானது தொண்டர்களுக்கு அளிக்கப்படாத பொருள் சூனியமாகிய மாரணவித்தைக்குப் பயன்படும், பிசாசுவழிபாட்டுக்குப் போகும். பொது மா த ரு க் குக் கொடுக்கப்படும், வீண்செயல்களில் செலவாகும், கொள்ளை யடிப்புல:டம் போகும், கள்ளுத்தவறணையில் செலவாகும் அரசன் அறவிடும் வரிக்கு வசமாகும், மரணச்சடங்குக் காகும் திருடர் வசமாகும், தீவைக்கப்பட்டு நாசமாகும், நம்ப டிையவர்க்கு நல்காத் திரவியங்கள் பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம் கொள்ளக்காங் கள்ளுக்காங் கோவுக்காஞ் சாவுக்காம் கள்ளர்க்காம் தீக்காகுங் காண்.
(7ஆம் பக்கத் தொடர்ச்சி)
மலேசியாவில்.
Այւb இந்நாட்டுச் சமய உணர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக் கும் துணை நிற்கின்றது. இப்படிப் பல்வேறு வகைகளி லும் மலேசியாவில் இந்து சமயம் வளர்க்கப்படுகின்றது: அடுத்து இங்குள்ள ஆலயங்களும், சமய நிறுவனங்களும் சமயத்துக்கு ஆற்றும் தொண்டினைச் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் காணப்புகுவோம்,
* பழந்தமிழ் நூல்கள் ெ
 

b செய்தி 1-1-8.
செந்தமிழ் வளர்த்த தேவர்கள் பொன்னுச்சாமி தேவர் முடியுடை மூவேந்தர்களும் அவர்களுக்குப் பின்வந்த பல்லவர் நாயக் கர் முதலானவர்களும் போனபின், ஐரோப்பியர் நாட்டை ஊடுருவியபோது தமிழகத்தின் தென் பகுதியைப் பண்டைத் தமிழ்ப் பண்பாடு மணக் கப் பரிபாலித்த அரசர்கள் தேவர்கள் என்னும் பெயர் பெற்ற தலைவர்களாவர். செந்தமிழும் சைவசமயமும் சிறக்க இவர்கள் பரிபாலித்த காலத்தில் சேது பரிபாலன மும் செய்தவர்கள், இராமேஸ்வரத் திருக்கோயிலைச் செப்பனிட்டவர்கள்.
பொன்னுச்சாமி தேவரும் அவர் மைந்தர் பாண்டித் துரைத் தேவரும், முத்துராமலிங்க சேதுபதியும் அவர் மைந்தர் பாஸ்கர சேதுபதியும் பெருந்திருவும் திறலும் படைத்த பெரியவர்கள். செந்தமிழ் வளர்த்த தேவர்கள் எனப் புலவர் பெருமக்களாற் போற்றப்பெற்ற இவர்கள் கலை வளர்த்த கண் ணிய மும் வாய்ந்தவர்கள், பொன்னுச்சாமி தேவர் 1870 இல் மறைந்தபோது, அந் தக் காலத்திலேயே இருபது இலட்சம் ரூபா விட்டுச் சென்ருர் என அறியக்கிடக்கிறது. பொன்னுச்சாமி தேவ ரும் முத்துராமலிங்க சேதுபதியும் சிவஞானத் தேவரின் மைந்தர்கள் என்ப. பொன்னுச்சாமி தேவர் பெரிதும் அபிமானித்த அறிஞர்களுள் ஆறுமுகநாவலர் தனியிடம் , வகித்தவர். தேவரவர்கள் நாவலரவர்களுக்கு ஏடு தேடிக் கொடுத்ததுவுமன்றி அவற்றை அச்சிட்டு வெளியிடவும் ஆவன செய்தவர். பொன்னுச்சாமி தேவர். வேண்டு கோளுக்கிணங்கி நாவலர் பதித்த நூல்கள் பல.
நாவலரவர்களிடம் அபிமானம் அதிகமுள்ள தேவர். நாவலரைக் கொண்டு சைவ சமயமே சமயம் என்னும் பொருள்பற்றிப் பேசுவித்து அவரைப் போற்றியதோடு, புலவரைப் போற்றுதல் கலைவாணிக்குப் பூசை என்று கூறிமகிழ்ந்தார். நாவலரின் பதிப்புகளின் சிறப்பை சேது சமஸ்தான வித்துவான்கள் வெகுவாகப் பாராட்டியுள் ளார்கள். தேவர் அவர்களை மகிழ்விப்பதற்காக அந்நாளில் வித்துவான்கள் புலவர்கள் நாவலரின் பதிப்புக்களுக்குச் சிறப்புப்பாயிரம் பாடுதலைத் தமக்குக் கெளரவமாகக் கருதி ஞர்கள் உள்ளன்போடு உருக்கமாகப் பாடினர்கள். அவை வலிய வந்த பாடல்கள் என்பதை ஆராய்ச்சியா ளர் அறிந்துகொள்ளுதல் தமிழ்ப் பண்பாட்டுக்குத் தகுதி யும் மேன்மையுமாகும். "முற்காலத்திலே பாண்டியர் களைப் போல இக்காலத்திலே இப்பிரபு அவர்கள் தமிழை வளர்ப்பார்கள் என்று உறுதியாகக் கருதியிருக்கின்றேன்" என்று நாவலரவர்கள் எழுதியுள்ளார்கள்
நாவலரவர்களின் சுத்தமான பதிப்புக்களைப் பெற விரும்பிய தமிழறிஞர்கள் தேவரவர்களைப் புகழ்ந்து பல விதமான பாடல்களிற் கடிதமெழுத அவர் புலவர்களுக் கெல்லாம் இலவசமாகப் புத்தகங்கள் அனுப்புதல் வழக்கி மாய் நிலவியது. புலவர்களின் புகழ்மாலைகளில் நாவ லரவர்களின் முயற்சியையும் நுண்ணறிவையும் வெகு வாகக் காணலாம். 'போஜராஜனின் சபையோ பொன் னுச்சாமி சபையோ’’ என்றெல்லாம் புலவர்கள் பொன் (தொடர்ச்சி 15ஆம் பக்கம்)
f
சய்யுள் வடிவானவை ?

Page 10
1-1-81 மில்க்வை
கலாநிதி சு. நடேசபிள்ளை அவர்கள் (21-5-1895 - 15-1-1965)
நடேசன் என்றும் நடேசபிள்ளை என்றும் வழங்கிய பிள்ளேயவர்கள் சேர். இராமநாதன் அவர்களின் மருகர், பரமேஸ்வராக் கல்லூரியில் 1924 ஆம் ஆண்டில் ஆசிரி யராயமர்ந்து, அதிபராகி, அரசாங்கசபையில் 1934 தொடக்கம் 1947 வரை காங்கேயன்துறைத் தொகுதிப் பிரதிநிதியாயிருந்தவர். பின்னர் 1952ஆம் ஆண்டுமுதல் பாராளுமன்றப் பிரதிநிதியாயிருந்து தபால் தந்தி வானுெலித்துறை கெளரவ மந்திரியாயிருந்தவர்.
பின்னர் கொத்தலாவல அவர்கள் கோலாகலமாகக் களனியாவில் தனிச்சிங்களம் பற்றிய மகாநாடு கூட்டிய தைத் தொடர்ந்து நடேசன் அவர்கள் தமது மந்திரிப் பதவியைப் பரித்தியாகஞ் செய்திருந்தவர்.
யாழ்ப்பாணத்தில் இராமநாதன் கல்லூரியையும் பர மேஸ்வராக் கல்லூரியையும் இணைத்து இந்துப்பல்கலைக்கழ கம், அமைப்பதற்காகத்தாம் மேற்சபையுறுப்பினராயிருந் தால் அநுகூலமாகும் எனக்கருதி பூரீமாவோ அரசாங்கத் தில் மேற்சபையை அலங்கரித்தவர்.
தமிழார்வந்ததும்பிய நடேசன் அவர்களையும், ஜனுப் ஜயா அவர்களையும் அரசாங்க சபையில் வகுப்புவாத இரட்டையர்கள் எனப் பழையகாலத்தவர் கிண்டல் செய் வது வழக்கம். அவரைத் தமிழ்த்துரோகி என நாங்கள் சொல்லவும் அவர் அதனையும் பொறுத்துக்கொண்டு தமிழ்த்தொண்டு செய்துவந்தார். தமிழை நன்ருகக் கற்றுணர்ந்த தஞ்சாவூர்க் குடும்பத்தில் பிறந்த அவருக் குத் தமிழ்ப்புலமையும் ஏவல் செய்தது. அவர் இயற்றிய பாடல்கள் பல. கதிர்காமநாதன் திருப்பள்ளி எழுச்சி முன்னர் மில்க்வைற் செய்தியில் வெளிவந்தது, அவர் செய்த சகுந்தலை வெண்பா முன்னர் 1934 ஆம் ஆண்டு முதல் கலாநிலைய வெளியீடாகிய ஞாயிறு என்னும்
* பண்கள் நிலத்தையும் கா
 
 

ற் செய்தி 9
முத்திங்கள் வெளியீட்டில் வெளிவந்து பின்னர் நூல் வடிவில் தமிழகத்தில் அரங்கேற்றப்பெற்றது: ஆங்கிலப் பாடல்கள் பலவற்றை அழகு தமிழில் மொழிபெயர்த்த நடேசனவர்கள் வடமொழியும் நன்கறிந்தவர்.
எந்தக் கூட்டத்திலாயினும், பேரவையிலாயினும் எடுத்த எடுப்பிலே எதைப்பற்றி வேண்டுமாயினும் ஆறு தலாக சலவைக்கல்லுருவச் சிலையெனநின்று ஆடாமல் அசையாமல் அருமையாக மணிக்கணக்காகப் பேசவல்லவர் என்பதை அவரின் அரசியல் விரோதிகளும் ஒப்புக் கொண்டனர். -
செந்தமிழன்பும் சிவநேயமும் பொருந்திய நடேசன் அவர்கள் கலாநிலையத்தலைவராயும், ஆரிய திராவிடாபி விருத்திச் சங்கத்தலைவராயும் இருந்து தமிழ் வளர்த்தவர். அவரின் கட்டுரைகள் பல ஞாயிறு, கல்கி முதலிய ஏடு களில் காலந்தோறும் வெளிவந்தன.
அரசாங்க சபையில் கல்விக்குழுவில் அங்கம் வகித்த நடேசனவர்கள் முயற்சியாலேதான் இந்துசமயம் கல்விப் பொதுத்தராதரப்பத்திர பரீட் சைக்குரிய பாடமாக இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் அமைந்தது. நடேச னவர்கள் 1924 தொடக்கம் 1964 வரை நாற்பதாண்டு கள் யாழ்ப்பாணத்தில் கலங்கரை விளக்காகத் தமிழறிந்த பெரியாராகப் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங் கியவர்,
முன்னர் 1951ஆம் ஆண்டில் பரமேஸ்வராக் கல்லூரி வளவில் பென்னம் பெரிய பந்தலமைத்துத் தமிழ்விழாக் கொண்டாடிய சிறப்பும், சென்னை சைவசித்தாந்த SFlf) fT ஜத்தார் தங்கள் பொன்விழாவினைப் பொலி வுற ச் சிதம்பரத்திற் கொண்டாடியபோது தலைமைதாங்கிய சிறப்பும், சென்னையில் தமிழ்விழா நடைபெற்றபோது பேருரை நிகழ்த்திப் பேருவகைபூக்கச்செய்த சிறப்பும், ஆண்டுதோறும் சென்னையில் நிலவும் இசைவிழாவுக்குச் சென்று சிறப்பித்த சிறப்பும், சென்னைப் பல்கலைக்கழகச் சொர்ணம்மாள் ஞாபகார்த்தப் பேருரை நிகழ்த்திய சிறப்பும், தமிழகத்துக் கலேக்களஞ்சியத்தை உருவாக்கிய வர்களுக்கு உற்சாகமளித்த சிறப்பும், உலகத் தமிழா ராய்ச்சி ம க ரா நா ட்  ைட உருவாக்கியவர்களுக்குத் தோளோடு தோள்கொடுத்து ஊக்கிய சிறப்பும், மதுரை நான்காம் தமிழ்ச்சங்கப் பொன்விழாவில் தலைமைதாங்கிய சிறப்பும், இலங்கைச் சாகித்திய விழாக்களிற் பேசிய சிறப்பும், உலகப்புகழ்பெற்ற சரித்திராசிரியர் ஆணுேல்ட் ரொயின்பி யாழ்ப்பாணத்திற் பேசியபோது தலைமை தாங்கிய சிறப்பும், யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்தி களைப் பற்றிய ஆய்வுச் சிறப்பும், தென்கிழக்காசியாவில் இந்துமதம் பற்றிய ஆய்வுச்சிறப்பும், மாணிக்கவாசக சுவாமிகள் பற்றிய ஆய்வுச்சிறப்பும் அன்று 15-1-1965ல்
நடேசன் அவர்கள் கண்மூடியபோதே மறைந்தன.
நடேசன் அவர்கள் ஆசிரியராய், அதிபராய், முகா மையாளராய், புலவராய், எழுத்தாளராய், பேச்சாள ராய், புரவலராய், பிரபுவாய், சிந்தனையாளராய், பிரதி நிதியாய், மந்திரியாய், மூதவையில் முதுகண்ணுய், கலா நிதியாய், தீர்க்கதரிசியாய் ஊழில் நம்பிக்கை உள்ள (தொடர்ச்சி 10 ஆம் பக்கம்)
லத்தையும் மருவி வந்தவை *

Page 11
10 மில்க்கை
பஞ்சதந்திரம்
செல்வம் கொழித்துச் சுகபோகத்தில் வாழ்ந்தவன். பின்னல் தன் செல்வத்தை இழந்து துயரம் அநுபவிக்கி றதுபோல் பிறவி ஏழை அவ்வளவு துயரம் அனுபவிப் பதில்லை.
கொடைகள் எ து வும் வழங்காமல், விபத்துக்கள் மட்டும் வந்து சேரும்படி செய்துகொண்டிருக்கிற அரசனை விட்டுத் தூர விலகிவிடவேண்டும். அப்ப்டிப்பட்ட அர சனைப் படைவீரர்தான் முதலில் விட்டுச் செல்லவேண்டும்.
வறியவன் வார்த்தையை அவனது உறவினரும்மதித்து நடப்பதில்லை. அவனுடைய நற்குணம் என்னும் சந்திரன் ஒளி மங்கிவிடுகிறது. பிறர்செய்த பாவங்களுக்குப் பழி அவன் மேல் சுமத்தப்படுகிறது.
ஒருவன் வறுமைக்கும் ஆளாகி, விதியின் சோதனைக் கும் இலக்காகிவிட்டால் அவனது நண்பர்களே அவனுக்கு விரோதிகளாகி விடுகின்றனர். அன்பே வெறுப்பாக மாறி விடுகிறது. V.
தோல்வி, விபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்த போதிலும் தன் மானம் உள்ளவன் நெஞ்சு நிமிர்ந்து நடக்கிருன். தன்மானத்தைக் கைவிட்டு அவன் பணப் பெருக்கின் முன்னே தலைவணங்குவதில்லை.
முற்ருெடர்:
அடுக்குமொழிகள் சில பொங்கிப் பொருமி பொருமையும் பொச்சரிப்பும்
பொங்கி வழிந்து பொன்னும் பொருளும் பொத்தலும் கிழிசலும் போக்குச் சாக்கு பொந்தும் புதரும் போக்கு புகல் பொய் பித்தலாட்டம் போக்கு வரவு பொய் பிரட்டு போக போக்கியம் பொய் புரளி போட்டா போட்டி பொய்யும் புளுகும் போட்டி பொருமை பொய்யும் வழுவும் போரும் பூசலும் பொலிவும் வலுவும் போற்றிப் பரவி
போற்றிப் புகழ்ந்து
* தமிழரின் இசைக்கருவி
 
 

ற் செய்தி 1-1-8
9 ஆம் பக்கத் தொடர்ச்சி) கலாநிதி சு. நடேசபிள்ளை. வராய், தெய்வ தம்பிக்கையுள்ள சீலஞய் நாமறிய நாற். பதாண்டுகள் நல்லபணி செய்தவர்
நடேசன் அவர்கள் 1933ஆம் ஆண்டில் புலவர் பெரு மக்களைத் தமிழ்ப்பணி புரிவதற்கு வருமாறு விடுத்த வேண்டுகோள் பண்பாடு ததும்பிய வரவேற்பாகவும் அமையும்.
"தமிழகம் யாண்டுமுள்ள தமிழ்ப்புலவீர் எல்லீரும் வம்மின். தமிழ்த்தெய்வத்துக்குரிய பணிகள் செய்வதற்கு வாய்த்த தருணம் இதுவென்றுணர்வீர். தொன்மையா னும், பிறமொழித் துணையின்றித் தானே இயங்குந் தன்மையானும், இலக்கண அமைதியானும், இலக்கிய உணர்ச்சியானும், தமிழ்மொழி இக்காலத்து வழங்கும் . ஏனைய இந்திய மொழிகள் எல்லாவற்றினும் சிறந்த தென்பது ஒருதலை. சங்கப்புலவர் காலத்திலும், சமயா சாரியார் காலத்திலும், சேக்கிழார் கம்பர் காலத்திலும், திருவோலக்கம்கொண்டு வீற்றிருந்த தமிழ்த் தெய்வம் மீண்டும் திருவோலக்கம் கொள்கின்ற காலம் பிறக்கின் QD göl • ,
ஞாயிறு இந்திரன் திசையை அணுகினன். முத்தமிழ் புலவீர்காள் வம்மின் விசித்திர வன்னங்களுடன் அலர்ந்த மலர்போன்ற கவிதைகளைக் கொணர்மின், நாடகங் களைக் கொணர்மின், பொருள் பொதி கட்டுரைகளைக் கொணர்மின், புதுச்சாத்திரங்களைக் கொணர்மின், பழஞ் சரிதங்களைக் கொணர் மின்.
ஓவியர்களே சிற்பிகளே நீவிரும் வம்மின் தமிழ்த் தெய்வத்துக்குப் புதுக்கோட்டங்களை எழுப்புமின். தமிழ் வீரர்களே அணிவகுமின். தமிழ்ப் புலவர்களே நீவிர் முன்னணி புகுமின். தமிழ் மக்களது பூர்வீகக் கலைத் திறம் புத்துயிர் பெறுக! தமிழ் த் தெய்வம் வாழ்க தமிழகம் வாழ்க!!
நாகபட்டணத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் தஞ்சாவூரில் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்னும் பெரியார் குடும்பத் தொடர்புகொண்டு பெற்ற மைந்த னுக்கு நாகநாதன் என்று பெயரிட்டார். பத்தொன்பதாம் ஆண்டுப்பராயத்திற் பட்டதாரியான நாகநாதன் சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பின ராஞர். மூத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்னும் பெரியா ரிடம் சமயஞானம் பயின்று தரிசனத்திரயம் என்னும் ஞானநூலை உருவாக்கினர். இலக்கணம் இராமசாமிப் பிள்ளை என்ற இவர் போனுர் ஞானமார்க்கத்தில் அருள் பரானந்தசுவாமி என ஒழுகிய காலத்தில் அவருக்கு ஆட் பட்ட சேர். இராமநாதனும் சேர். அருளுசலமும் நாக நாதனை நன்கறிந்தனர். நடேசன் இங்கே வா என்று சேர். இராமநாதன் நாகநாதனை அழைத்த அன்றே இவர் பெயர் நடேசன் என வழங்கியது. இராமநாத னின் ஆஸ்தான அவையில் இலக்கியப் பகுதிக்குச் செய லாளராக 1923ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த நடேசன் 1924இல் ஆசிரியராகி, 1926ல் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணஞ்செய்தார். இராமநாதன் குடும்பத்தரானுர். இராமநாதன் நடேசனை உருவாக்கி உபகரித்தார்.
பிகள் நான்குவகையின *

Page 12
1-1-81 LRobéa
சிறுவர் பகுதி
தாய்மொழியும் தமிழ்நாடும்
(மணி. திருநாவுக்கரசர்)
தமிழ்மொழி
ஆதியில் உலகம் போற்ற உலவிய அமிழ்தெனும் தமிழ் மொழியே
மாதொரு பாகன் மகிழ்ந்தெமக் கீந்த
மதுரத் தமிழ்மொழியே!
காதுக் கினிய ஓசை யுடைய
கன்னித் தமிழ் மொழியே ஒதற் கினிய நூல்கள் ஈன்றே ஓங்குந் தமிழ் மொழியே! தாயுந் தந்தையுங் கொஞ்சி என்னைத்
தழுவிய தமிழ் மொழியே ஆயும் புலவர் கூடி நாடி
அறிந்த தமிழ் மொழியே!
தெலுங்கு கன்னடந் துளுமலை யாளம் தோற்றிய தமிழ் மொழியே!
இலங்குங் கோயில் எங்குந் தங்கும் இசைமிகு தமிழ் மொழியே
என்றன் செந்தமிழ் என்றன் செந்தமிழ்
என்று மகிழ் வேனே
என்தாய் மொழியென என்தாய் மொழியென
என்றும் புகழ் வேனே!
தமிழ்நாடு
அழகு நிறைந்த தமிழ்நாடு தேவர்
ஆலயஞ் சிறந்த தமிழ்நாடு ஒழுகு காவிரி வைகை பொருனை
ஒடிப் பாய்வது தமிழ்நாடு. வள்ளுவர் பிறந்த தமிழ்நாடு பெரு
வள்ளல்கள் வாழ்ந்த தமிழ்நாடு ஒள்ளிய தரும நீதிகளை யாரும்
ஒப்ப வகுத்த தமிழ்நாடு
* நரம்புக் கருவிகளு
 

வைற் செய்தி 1
g
அவ்வை பிறந்த தமிழ்நாடு முடி
அரசர் ஆண்ட தமிழ்நாடு செவ்வைசெய் நாவலர் சங்கத்திலே உயர்
செய்யுள் செய்த தமிழ்நாடு. கலைகள் விஞ்சிய தமிழ்நாடு பெருங்
கட்டடம் ஒளிரும் தமிழ்நாடு மலைகள் வணங்கும் பொதியமெ ஜந்தனி
மன்றம் அமரும் தமிழ்நாடு. கண்ணியம் பரந்த தமிழ்நாடு கல்விக்
கம்பர் உதித்த தமிழ்நாடு புண்ணிய நாயன் மார்ஆழ் வார்கள் புகழை விரித்த தமிழ்நாடு.
முற்றெடர்;
தமிழில் வழங்கும் வடமொழிகள் சில் துரோகம் - வஞ்சனை துர்க்கதி - தீயநடை துர்க்கந்தம் - தீநாற்றம் துர்ச்சனர் - கெட்டவர்கள் துர்நிமித்தம் - தீக்குறி
துர்மதி - கெட்ட எண்ணம் துர்லபம் - முடியாதது அரிது துவஜம் - கொடி
தொனி - ஒலி
குவாதசம் • - பன்னிரண்டு துவாந்தம் - இருள் துவாரபாலகர் - வாயிற்காப்போர் துவாரம் - துளை, புழை குவிதம் - இரண்டு துவேஷம் - வெறுப்பு குவைதம் - இரண்டு
யாதும் ஊரே யாவருங் கேளிர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழன் சிந்தனை யில் உருவான வாக்கியம் இன்று உலகந்தழுவிய ஐக்கிய நாடுகள் தாபனத்தில் 154 நாடுகள் ஏற்றுக்கொண்ட மகா பாக்கியமாகும். யாதும் ஊரே யாவருங் கேளிர் என்பதே
ஐக்கியநாடுகளின் அடிப்படைக் கோட்பாடாகும்
எல்லா நாட்டினரும் சகோதரர்போல் ஒற்றுமையாய் வாழவும், சாதி, மதம், நிறம், தேசம், மொழி முதலிய நியமங்களால் வித்தியாசங்காட்டாது, மனிதனை மனித னக மதித்து வாழ்தலே மானிடத்தன்மை யாகும் என்பர் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்பெற்ற தமிழருக்கு யாதும் ஊரே யாவருங் கேளிர்.
ள் யாழ் தலைசிறந்தது .

Page 13
12 மில்க்வைற்
தமிழும் யாழ்ப்பாணமும் யாழ்ப்பாணம் இலங்கையைச் சேர்ந்ததாயினும் இது தமிழ்நாட்டின் ஒரு பகுதியெனக் கருதக்கூடியவகையில் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது.
தமிழ் நாட்டுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் உள்ள தொடர்பு நேற்று முந்தைநாள் வந்த தொடர்பல்ல, இது நெடும் பண்டைக்காலம் முதலாக நிலவிவந்ததா ாரும், w
யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக்கொண் டமைந்த தமிழரசு ஐந்நூருண்டுகள் இலங்கையில் வலிமை பெற்றிருந்ததோடு தமிழகத்தில் பெருமையும் புகழும் தொடர்பும் கொண்டு நிலவியது;
முன்னர் பாண்டிய மன்னர் காலத்துத் தமிழ்ச் சங் கங்கள் போல யாழ்ப்பாணத்து மன்னர்கள் தமிழ்ச் சங் கம் அமைத்ததோடு கவியரங்கேறிய புலவர்களாயும் புரவலர்களாயும் இருந்தார்கள்.
இராமேஸ்வரத்தோடு நெருங் கி ய தொடர் பு கொண்டிருந்த யாழ்ப்பாணத்து ஆரிய சக்கரவர்த்திகள் சேதுகாவலன் என்னும் சிறப்புப்பட்டமும் பெற்றுத் தங் கள் நாணயங்களில் சேது எனப் பொறித்தும் வந்தார்கள். இராமேஸ்வரத் திருக்கோயில் பரிபாலனஞ் செய்த மன்னர்கள் யாழ்ப்பாணத் தீவுகளிலிருந்து அபிடேகத்துக் குப் பாலும் தயிரும் அனுப்பியதோடு அர்ச்சனைக்குப் பூவும் அனுப்பினர்கள். பால்பழுதாகுமுன்னரும் பூ வாடி விடுவதற்கு முன்னரும் அவை அங்குபோய்ச் சேர் வ தற்கு விசையுள்ள வங்கங்கள் இருபதுமைல் தூரத்தை இலகுவில் கடந்தன. எம்பெருமான் திருவருளால் எமக் குண்டாகும் ஆக்கம் போதும் எனக்கருதிய, பொன்செய் மனத்தவர்கள் யாழ்ப்பாணத்து மூதாதையர்.
யாழ்ப்பாண அரசுக்கு எல்லாவகையாலும் உபகரித் தவர் பாண்டிய மன்னரேயாவர். பாண்டிய நாடே பழம் பதி. பாண்டி நாடே பழம்பதி எ ன் பது சங்க இலக்கியங்களாலும் திருமுறை, திவ்வியபிரபந்தம் முத லிய பக்தியிலக்கியங்களாலும் பரக்கக்கண்ட பழம்பெரும் உண்மை. .
யாழ்ப்பாணத்து முதலரசன் முன்னர் பாண்டியனின் இழ் அரசகாரியம் பார்த்த இள வர சன் ஒருவன் என்
பதில் பாண்டி நாட்டு உபகரிப்பு யாழ்ப்பாணத்திற்குக்
கடவுட் கொடையெனக் கருதப்படுகிறது.
முன்னர் சேர சோழ பாண்டியர் கொண்ட விற் கொடி, புலிக்கொடி, மீன்கொடிபோல் யாழ்ப்பாணத் தரசர் நந்திக் கொடியுயர்த்தியவர்களாவர், நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர் யாழ்ப்பாணம் வந்து ஆரியச் சக்கரவர்த்தியை வாழ்த்திப் பரிசு பெற்ற வரலாறும்
யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரன், செக ராசசேகரன் காலத்து வரலாற்றைக் குறிக்கும் வைபவங் கள் நிகழ்ச்சிகள் இன்றும் பசுமரத்தாணிபோல் யாழ்ப் பாணம் எங்கும் நிலவுகின்றன. நினைவில் நிலைக்கின்றன. பரராசசேகரன் காலத்தில் யாழ்ப்பாணத்தில் go-6іот
டான பெரும் பஞ்சத்தைப் போக்கத் தமிழ்நாட்டுச்
யாழினுற் பெயர்பெற்ற جھx

சய்தி. 1-1-81
*டையப்பவள்ளல் புதுவையிலிருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் நெல் அனுப்பி உதவினர்.
சிதம்பரத்திலே ஆனந்தத் திருநடனஞ் செய்யும் 5டராசப் பெருமானையும், பூணீரங்கத்திலே பள்ளி கொள் விரும் பெருமானையும் நினைவிற்கொண்டு பரராசசேகரன் Fடையப்ப வள்ளலை வாழ்த்தி நன்றி கூறிய செய்தி புல வர் க ள் கொண்டாடும் செய்:புளாகவே மலர்ந்ததில் வியப்பொன்றுமில்லை. -
இரவுநண்பகல் ஆகிலென்பகல் இருளருஇர வாகிலென் இரவியெண்திசை மாறிலென்கடல் ஏழுமேறிலென்
வற்றிலென் மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலென் ஆகிலென்
வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை
- காரணமாகவே கருதுசெம்பொனின் அம்பலத்திலோர் கடவுள்நின்று -
நடிக்குமே காவிரித்திரு நதியிலேஒரு கருணைமாமுகில் துயிலுமே தருவுயர்த்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன் சங்கரன்தரு சடையன் என்றெரு தருமதேவதை
a வாழவே. யாழ்ப்பாணத்தரசர்களுக்குப் பாண்டியர்கள் யுத்த உதவிகள் செய்தமைபோல, யாழ்ப்பாணத்தரசர்களும் பாண்டியருக்குப் படையுதவிபோன வரலாறு ஹொய்சல வரலாற்றிலறியலாம்.
மாறவர் மன்குலசேகரபாண்டியனின் மூத்த மைந்தன் சுந்தரபாண்டியனுக்கு யாழ்ப்பாணத்தரசன் வரோதயன் ான்பர்ன் ஆதரவு நல்கினுன் என்ப. இவன் கல்வி கேள்வி களிற்சிறந்து வேதாகம விற்பன்னணுக விளங்கியதோடு தட்சணகைலாச புராணத்தைத் தமிழ்ப்படுத்திப் பாடிய
u Gör.
இவ்வாருக ஆலய வழிபாட்டிலும் தர்மச் செயல் களிலும் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தரசர்களுள் கனகசூரி பன் என்பான் பதினைந்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் படைவலிமை குறைத்திருந்த காலத்தில் கோட்டே மன் னஞன ஆரும்பராக்கிரமபாகு தன் சேனைத்தலைவன் செண்பகப்பெருமாள் என்பானைப் பெரும் படையோடு அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் பதினேழு ஆண்டுகள் அரசாளவைத்தான்.
போரில் தோற்ற கனகசூரியன் பகைவரிடம் சிக்கா மல் தமிழ்நாட்டுக்குச் சென்று திருக்கோவலூரில் தங்கிப் படைத்துணை பெற்று மீண்டபோது, இவன் மைந்தர் பரராசசேகரனும் செகராசசேகரனும் சிறந்த படைப் பயிற்சிபெற்று மிடுக்குடன் மீண்டனர். t
தந்தையும் மைந்தரும் வலிமையோடு மீண்டு தங் கள் அரசினை மீண்டும் பெற்றுச் சிறப்புடன் செங்கோல் செலுத்தினர். ፳
கனகசூரியன் மீட்சி யாழ்ப்பாணத்து வரலாற்றின் பொற்காலம். அழகுக்கு அழகு செய்தாற்போல் நல்லூர் இராசதானியின் நாற்றிசைகளிலும் காவற் தெய்வங் களுக்குக் கோயில் சமைத்தனர். வடக்கில் சட்டநாதர் (தொடர்ச்சி 13ஆம் பக்கம்)
னி ஊர் யாழ்ப்பாணம் A

Page 14
1-1-81 w மில்க்வை
(12ஆம் பக்கத் தொடர்ச்சி) தமிழும் யாழ்ப்பாணமும். ஆலயமும் கிழக் கில் வெயிலுகந்த விநாயகராலயமும் தெற்கில் கைலாசநாதர், மேற்கில் வீரமாகாளி கோயி லும் கட்டப்பெற்றன.
பரராசசேகரன் ஆட்சிக்காலம் இலக்கிய இலக்கண வைத்திய சோதிட நூல்கள் எழுந்த காலமாகும். தமிழ கத்திலிருந்து பழம்பெரும் நூல்கள் பலபடியெடுத்து வந்தனர். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தைப் புனரமைத் தனர். நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் அறுபத்து மூன்று நாயன்மாருக்கும் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்தனர். அங்குள்ள தாமரைக்குளத்தருகே மாடிக் கட்டடம் அமைத்து நூல்நிலையமாக்கினர்.
அரசகுடும்பத்தவரான அரசகேசரி என்பார் தமிழும் வடமொழியும் நன்குபயின்று புலமைபெற்றுக் காளி தாசரின் இரகுவமிசகாப்பியத்தைத் தமிழிற் பெயர்த் துப் பாடினர். தமிழில் எழுந்த கடின நூல்களில் இதுவு மொன்ருகும்: X
பரராசசேகரனுக்குப் பின்வந்த மன்னர்களுள் எதிர் மன்னப் பரராசசேகரன் புலவர்களைப் புரக்கும் புரவல ஞயிருந்ததோடு தானே பெரும் புலவஞயும் நூலறிந்த வனயுமிருந்தான். இவன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்த அந்தகக் கவி வீர ராகவ முதலியார் இவனைப் புகழ்ந்து பாடிப் பெறற்கரிய பரிசில்கள் பெற்றுப் பேரு ~வகையுற்ருர் என்பது அவர் பாடிய பாடலாலறியக் கிடக்
கிறது: :
பொங்குபிடி யின்பந்தம் போயதே என்கவிக்கு எங்கும் விருதுபந்தம் ஏற்றதே - குங்குமம்தோய் வெற்பந்தம் ஆனபுய வீரபர ராசசிங்கம் பொற்பந்தம் இன்றளித்த போது. பெரும்புலம்ை பெற்றிருந்த எதிர்மன்னப் பரராச சேகரன் தன் மீது கவிபுனைந்த பாவாணரை நெஞ்சாரப் புகழ்ந்து தானும் ஒருசில கவிகள் புனைந்தான் என்பர்: வீரராகவன் பாடலைக் கேட்டுத் தலையசைப்பதற்கு ஆயி ரந்தலைகளும், கைகொட்டுவதற்கு ஆயிரம் கரங்களும் வேண்டும் என்னும் பொருளில் அவை அமைந்தவர்களாய ஆதிசேடனையும் பாணுசுரனையும் குறிப்பிட்டுப் பாடிஞன் போலும் .
விரகன் முத்தமிழ் வீர ராகவன் வரகவி மாலையை மதிக்கும் போதெல்லாம் உரகனும் வாணனும் ஒப்பத் தோன்றினுல் சிரகர கம்பிதம் செய்ய லாகுமே,
பரராசசேகரன் வழியில் வந்த மன்னர் காலத்திலே போத்துக்கேயர் இலங்கைக் கரைநாடுகளைப் பதம்பார்த்து வந்தார்கள். அவர்கள் 1505 ஆம் ஆண்டில் கொழும்பில் கரைகண்டு சூறையாடத் தொடங்கிய போதிலும் 115 ஆண்டுகளுக்குப் பின்னரே யாழ்ப்பாணத்தைக் கையா டக் கூடியதாயிருந்தது. போத்துக்கேயரை இறுதிவரை வீரா வேசத்துடன் எதிர்த்து நின்ற சங்கிலி மன்னனின் வலிமை புகழ்பெற்ற வீரர்வரலாற்றில் இடம்பெற வேண்டியதாகும்.
* பண்களிலிருந்து பிற

ற் செய்தி 13
தமிழும் பாண்டிநாடும்
வரலாற்றுக் காலத்தில் அன்றும் இன்றும் பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. ஈழநாட்டின் அரசபரம்பரை ஆரம்பித்ததும் முடிவுற்றதும் மதுரை உபகரித்த தமிழ ரோடு என்பது வரலாறு கூறும் உண்மை. முன்னர் சிங் கள மன்னர் பரம்பரை சிறப்புறச் சிங்காசனம் ஏறிய போதும், பின்னர் 1815 ஆம் ஆண்டில் கண்டியரசன் சிங்காசனத்தை விட்டிறங்கியபோதும் தமிழ் நாட்டுப கரிப்பு மிக்கிருந்தது, தமிழ் மயமாயிருந்தது. இந்த வர லாற்றுக் கட்டத்தில் எத்தனையோ நாகரிகங்கள் ஊடுரு விய போதிலும் ஆரம்பத்திலும் முடிவிலும் தமிழ் நாகரி கம் நீண்டகாலம் நிலேத்து நிலவியது. இவ்வாருக 2500 ஆண்டுக் கால வரலாற்றிலே தமிழர் படை எழுச்சிகள் என்னும் அத்தியாயங்கள் இலங்கைச் சரித்திரத்திலே இடையிடை நிகழ்ந்தபோதெல்லாம் இலங்கையின் தலை நகரங்களும் காலத்துக்குக் காலம் பிரதேசங்கள் தோறும் இடம் பெயர்ந்தன. புதிய தலைநகரங்களில் அரண்மனை களையும் கோயில்களையும் விகாரைகளையும் அமைத்தவர் கள் தங்கள் கட்டடக்கலையில் திராவிடக் கலையை எங் கெங்கும் எடுத்துச் சென்ற னிர் இன்று காடடர்ந்து அழிந்துகிடக்கும் இடமெங்கும் திராவிடக்கலை அழியாது நிலவுகிறது. விகாரைகளினமைப்பு திராவிடக் கோயில் களின் விமானத்தின் அமைப்பின் வழிவந்தது.
நான்காம் தமிழ்ச் சங்கம்
முன்னர் தென் மதுரை, கபாடபுரம், மதுரை ஆகிய நகரங்களில் முதல் இடை கடை எனப்பட்ட முதற்சங் கம், இரண்டாம் சங்கம், மூன்ரும் சங்கங்கள் போய் மறைந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றபின் இந்த நூற்ருண்டின் ஆரம்பத்தில் 1991 ஆம் ஆண்டு செப்ரம் பர் மாதம் பதினுன்காம் நாளன்று பாண்டித்துரை தேவர் இன்றைய மதுரையில் நான்காம் தமிழ்ச் சங் கத்தை நிறுவினர். அதற்கு இன்று எண்பதுவயதாகிறது.
நான்காம் தமிழ்ச்சங்கத்தையொட்டி சேதுபதி ச்ெந் தமிழ்க் கலாசாலை, பாண்டியன் புத்தகசாலை, நூலாய்ச் சிச்சாலை, முதலியனவும் அதேசமயம் நிறுவப் பெற்றன. பூரீ பாஸ்கரசேதுபதி அவர்கள் முதலான புரவலர்களும் அக்காலத்துப் பெரும் புலவர்களும் அங்குகூடி மூன்று நாட்கன் பெருவிழா எடுத்தனர். இச்சங்கம் 1948 ஆம் ஆண்டுவரை நற்பணிகள் செய்து வந்தது.
செந்தமிழ் என்னும் திங்கள் ஏட்டினை வெளியிட்ட தோடு சங்க முத்திரை பொறித்துப் பென்னம்பெரிய நூல்களையும் சிற்றிலக்கியங்கள் சிறந்த சிறு பிரபந்தங் கள் என்பனவற்றையும் வெளியிட்டு வந்தது. ஆண்டு தோறும் விழாக்கள் எடுத்துத் தமிழ் பரப்பியது. அரிய முறையில் பண்டிதர் பலரை உருவாக்கித் தமிழாசிரியப் பணிபுரியவைத்தது:
பாண்டித்துரை தேவரின் உதவியால் வெளிவந்த அபிமானசிந்தாமணி கலைக்களஞ்சியத்தைப் போன்றதா கும். இதனைச் செய்தவர் சென்னை பச்சைகப்பன் கல் லூசிப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியாராவர்.
(தொடர்ச்சி 14ஆம் பக்கம்)
ந்தவை திறங்கள் என்பர் *

Page 15
வழிபாட்டுக்குரிய பச்சிலையாகிய துளசி வைத்தியத் துறையிலும் சிறப்பிடம் வகிக்கின்றது. இதற்குப் பலவாய திருநாமங்கள் வழங்குகின்றன. திருமாலோடு சம்பந்தப் பட்ட திருவாதலால் இதனைத் திருத் துழாய் என்றே வழங்குவர். இது புனிதமும் தெய்வீகமும் மூலிகைவளமும் உள்ளது. வணக்கத்துக்குரியது. லட்சுமி எனப்படுவது:
துளசியை அலங்கை, குமுலி, கெவுரா. கோழை விந்து, சாணங்கி, சிங்கப்பெருமாள், சீர்த்துளாய், Ցltքhվ, பவானி முதலிய பல திருநாமங்களால் வழங்கு வர். மருத்துவர் கூறும் அட்டமூலங்களில் துளசியும் ஒன்று.
துளசியில் மூன்றுவகையுண்டு. அவை கருந்துளசி, வெண்துளசி எனப்படும். பச்சைத்துளசி, ஊதாவர்ணத் துளசி. எல்லாத் துளசிகளும் சிறந்தனவாயினும் கருந்துளசி விஷேசமானது.
துளசி இறந்த உடம்பையும் நாற்றம் எடுக்காமல் பேணிக்காப்பது. தினமும் பச்சையாகச் சில இலைகளை மென்றுவந்தால் கபத்தைப்போக்கும். பலத்தைத் தரும்" கபத்தாலும் சளியாலும் துன்பப்படும் குழந்தைகளுக்கு இதன் சாற்றைத் தேன்விட்டுக் கொடுக்கச் சுகமுண்டா கும். காமாலை நோய்க்குத் துளசி கைகண்ட மருந்து. இதை உட்கொள்வதோடு காலை, நண்பகல், மாலை இதனைத் தலையில் தேய்த்தலும் பயன் தருவதாகும்:
மலேரியா, க ச ம் முதலிய நோய்களுக்கும் அரிய மருத்தாகும். துளசி விஷகடிகளுக்கும் விஷேட மருந்தாகும். விஷத்தீண்டிய இடங்களிலும், தலையிலும், கண்ணிலும் இதைப்பிழிந்து விடுதல் நன்று.
துளசியின் குணம் அஸ்திசுரம், அரோசகம், ரணம், சுவாசகாசம், சுரமாந்தம், தா கம், வயிற்றுளைச்சல், முதலியவற்றில் நன்மை தருவதோடு, பலவித புண்களுக் கும் மருந்தாகும்.
சர்பத்
துளசி, வில்வம், வேப்பிலை ஆகிய மூன்றையும் நன்ருக நறுக்கிப் பானையில் நீரிட்டு வற்றக்காய்ச்சி இறக்கி வடி கட்டிச் சீனியிட்டு மறுபடி காய்ச்சிப் பா கா க இறக்கி ஆறவிட்டுப் போத்தலில் அடைத்துவைத்து, வேண்டும் போது நீர்பெருக்கிப் பருகிவந்தால் பலவித நோய்கள் நீங்கும் வாதரோகிகளுக்கும், மலேரியா நோயாளருக்கும் மிகவும் நல்ல மருந்தாகும், பானமாகும். பருகிப் பயன டையுங்கள்:
食 தமிழர் கண்ட பண்கள்
 

ற் செய்தி -1-81.
{13ஆம் பக்கத் தொடர்ச்சி) தமிழும் பாண்டிநாடும்.
நான்காம் சங்கப் புரவலர் பாஸ்கரசேதுபதி அவர்களின் மைந்தன் ராஜராஜேசு வர சேதுபதி அவர்கள் நான்காம் தமிழ்ச் சங்கத்தைப் பரிபாலித்துப் பொருளுதவி புரிந்து புரவலஞய்ச் சிறந் திருந்த காலத்தைச் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் அருமையாகப் பல பாடல்களில் விளக்கியுள் ளார். (அவற்றிற் சில பாடல்கள் முந்திய செய்தியில் வெளிவந்துள்ளன ஆங்கே காண்க)
சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் தா மிய ந் றிய தமிழ்ப் புலவர் சரித்திரம் என்னும் நூலை வெளியிட உத விய ராஜராஜேசுர சேதுபதி அவர்களைப் புகழ்ந்து பாடிய பாடல் அருமையானவை எதுகை மோனை நயந்ததும்பு
6.
வாழ்த்து விருத்தம் ஒது தமிழ்ப் புலவர்சரித் திரமா மிந்நூல்
உயர்ச்சிபெற உபகரித்த செல்வச்சீமான் தாதுமலி தளவமலர் மாலை மார்பன்
சயவீர ராசரா சேசுரப் பேர்ச் சேதுபதி நரபாலன் பலநூல் கற்ருேள்
செய்ய தமிழ் வளர்க்குமபி மானசீலன் மாதுபதி ராமேச னருளால் வேண்டும்
வரங்க ளெல்லாம் பெற்றினிது வாழிமாதோ சேதுபதியவர்கள் இராமேஸ்வரத் திருக்கோயில் பரி பாலனஞ் செய்த சிறப்பைப் புலவரவர்கள் ஒரு கட் டளைக் கலித்துறையிற் காட்டுவர். சீதை காவல ஞதியி னுட்டிய
தேவராலயம் போற்றிடுங் காவலன் நீதி காவலன் தொன்னெறி காவலன்
நீடு முன்னவர் செய்தரு மங்களின் பாது காவலன் பாவலர் காவலன்
பழைய வைதிக சைவர்கள் காவலன் சேது காவலன் செந்தமிழ் காவலன்
சீர்த்தி ராஜரா சேசுர மன்னனே.
t agos i மில்க்வைற் செய்தி மில்க்வைற் செய்தி தேவையாஞேர் பின்வருவன வற்றுள் ஏதாவது ஒரு தொகுதியை அனுப்புங்கள். நாங்கள் தபாற்செலவு கட்டிச் செய்தியை அனுப்புவோம். நீலசோப் மேலுறை 10, நீம் சோப் மேலுறை 2, பார் சோப் மேலுறை 2, மெடிக்கேட்டட் , 2, சலவைப் பவுடர் மேலுறை 2 மில்க்வைற் த.பெ. இல77, யாழ்ப்பாணம்.
முதன்மைய ானவை Ar

Page 16
மில்க்ை 81 س--
史史史史虫虫虫虫虫虫虫虫 திருக்குறளின் பெருமை
***********
முதற்பெருமை திருக்குறள் ஒன்றே ஒன்று, அதைப்போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் எழுந்ததில்லை. அது ஒன்று.
இரண்டாம் பெருமை திருக்குறள் இரண்டில் ஒன்று. அந்த இரண்டு என் பன பலவிதமாயமையும். அங்ங்ணம் அமையும்போது அவ் விரண்டில் திருக் குறள் ஒன்று. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் போது நாலடியார் ஒன்று, திருக் குறள் ஒன்று. இவையிரண்டும் தமிழிலுள்ள தரமான நீதி நூல்களாகும். தமிழுக்குக் கதி கம்பராமாயணமும் திருக் குறளும் என்பவர்கள் க என்ருல் கம்பரையும், தி என்ருல் திருவள்ளுவரையும் குறிப்பிடுவர் xa*- உலகில் அதிகமாகப் பரந்த நூல் பைபிளும் திருக் குறளுமாயின் இரண்டு பெரிய நூல்களுள் திருக்குறள் ஒன்றென்னும் பெருமை பெற்றதாகும்.
மூன்ரும் பெருமை மூன்றும் பெருமை மூன்றில் ஒன்று என்பதாகும்: தமிழில் மிகச்சிறந்த நூல்கள் மூன்று என்று இலக்கணக் கொத்து செய்த வைத்தியநாதர் கூறுவர். வேறு நூல் களில் விளங்கிக்கொள்ள முடியாத விடயங்கள் திருக்குறள், தொல்காப்பியம், திருக்கோவையார் என்னும் மூன்று நூல்களிலும் முழங்கும் என்பர். எனவே திருக் குறள் முதல் மூன்றிலும் ஒன்ரூக விளங்குகின்றது.
தாமறிந்த புலவருள்ளே வள்ளுவர்போல், இளங் கோவைப்போல், கம்பரைப்போல் பூமிதனின் புலவர் பிறக்கவில்லை என்று கூறிய பாரதியார், தம் கூற்றை வற்புறுத்தி உண்மையென வலியுறுத்துவர். மூவர் செய்த நூல்களுள் வள்ளு வர் செய்த நூல் ஒன்று என்னும் பெருமை உடையது. உண்மை இது புனைந்துரையன்று
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
செந்தமிழ். V னுச்சாமி தேவரவர்களைப் புகழ்ந்துள்ளார்கள். தேவரவர் கள் தம்மைக் கன்றுக்குட்டியாகவும் நாவலரைத் தாய்ப் பகவாகவும் பாவனை செய்ததும் உண்டு;
பாண்டித்துரை தேவர் பொன்னுச்சாமி தேவர்களின் மைந்தர் பாண்டித்
துரை தேவர் தம்பெயருக்கமையப் பாண்டிய மன்னரா கவும் மக்களிடையே தேவராகவும் வாழ்ந்தவர். செந்
* தமிழ் கலை வளத்
 

வற் செய்கி خه . م S
தமிழ்ப் பரிபாலனத்தையே சிறப்புரிமையாகக்கொண்டு மரபைப் பேணிவந்த இவருக்கு நாவலரவர்களிடம் ஞான நூல்களைக் கற்ற மதுரை இராமசாமிப்பிள்ளை என்னும் ஞானசம்பந்தப்பிள்ளை நல்லாசிரியராயிருந்தார்.
நாவலரவர்கள் வழியில் தமிழ் வளர்த்த வடகோப் பாய் சபாபதி நாவலர், சுன்னுகம் குமாரசுவாமிப் புல வர், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் முதலான ஈழத் தறிஞர்களின் புலமையைப் பாண்டித்துரைத் தேவர். நன் கறிந்து இவர்களை வெகுவாக ஊக்குவித்து வந்தார்3
சிவஞானமுனிவரின் திவ்வியம் பழுத்த நூல்களிற் பெரும் ஈடுபாடும் பயிற்சியும் பாண்டித்தியமும் பெற் றிருந்த சபாபதிநாவலர் அவர்களைக்கொண்டு தேவர் அவர்கள் சிவசமவாதமறுப்பு என்னும் நூலைச் சுத்தமான பதிப்பாக வெளிவரச்செய்தார்.
சபாபதிநாவலர் கோப்பாய் வடக்கைச் சேர்ந்தவர் சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் அவர்கள் நிறுவிய சைவ வித்தியாசாலையில் தலைமைத் தமிழ்ப் போதகாசிரியரா யிருந்தபின், திருவாவடுதுறை சென்று மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிகசுவாமிகளிடம் தீட்சை முதலியன பெற்று அவரோடு பன்னிரண்டாண்டுகள் நெருங்கிப் பழகி ஞான நூல்களை நன்கு கற்றவர். பிறரெவருக்கும் கைக்கெட்டாத ஏடுகள் சிலவற்றை மகாசந்நிதானம் இவரிடமே கொடுத்திருந்தது என்பர். இவரின் ஞான நூற்றிறமையை நன்கு மட்டிட்டு இவரை நாவலரேறு என்றும் அழைப்பது வழக்கம் என்ப.
பாண்டித்துரைத் தேவரின் அபிமானத்துக்குரிய மற் ருெரு ஈழத்தமிழ்ப் புலவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர். ஆறுமுகநாவலரவர்களால் புலவரே! என அழைக் கப்பெற்ற சிவசம்புப்புலவர் பழைய புலவர்களின் மரபிற் பிரபந்தங்கள் பாடும் பெரும்புலவராயிருந்தார். அறுப துக்கு மேற்பட்ட பிரபந்தங்களும் நூற்றுக்கு மேற்பட்ட தனிச்செய்யுள்களும் பாடிய சிவசம்புப் புலவர் பாண்டித் துரைத் கேவரை விட்டுவைக்கவில்லை. பாண்டித்துரைத் தேவர் நான்மணிமாலை என்னும் பிரபந்தம் பாடி அவ ருக்குச் சூடிப் பரிசுபெற்று மகிழ்ந்தார், 'துங்கமலி பாண்டித்துரைக்கினிது சூட்டுவிக்கு மங்கலமார் சொன் ஞன்மணிமாலை' என்று எடுத்த எடுப்பிலே காப்புப் பாடிய பிரபந்தத்தில் தேவரின் தமிழ்ப் பரிபாலனம் செவ்வனே கூறப்பெற்றுள்ளது.
பாட்டுடைத் தலைவன் பாஸ்கர சேதுபதி
செந்தமிழ்ப் பரிபாலனஞ்செய்த சேது பதிகளுள் பாஸ்கரசேதுபதியும் ஒருவர். திருவாவடுதுறையிலும் பல திருத்தலங்களிலும் சபாபதி தாவவர் அவர்களின் புகழ் மணக்கக் கேட்டறிந்த பாஸ் கர சேதுபதி அவர்கள் சபாபதி நாவலரைக்கொண்டு சைவப்பிரசங்கங்கள் செய்
வித்தார். "சைவசிகாமணியாயும் பரசமயகோளரியாயும் விளங்காதிற்கும் கனம் நாவலர் அவர்களுக்கு" என்று தம்கைப்படக் கடிதமெழுதிய சேதுபதியவர்கள். "நம்
சமஸ்தானத்திலுள்ள பிரஜைகள் சைவசமய உண்மை தேறுமாறும், தங்கள் பிரசங்க அமிர்தத்தை நுகருமாறும் (தொடர்ச்சி 17ஆம் பக்கம்)
தாற் சிறந்துள்ளது *

Page 17
16 மில்க்வை
... ,... ۔. د... ... ھمہ یہ ۰۰۰۰ح -*.'
அருள்விருந்து
(ஆதாரம் தர்மசக்கரம்
போலியைப் பொருளாகப் பார்ப்பது பேதைமை: கஷ்டகாலத்தைச் சமாளிப்பதே பெரிய வெற்றி:
ジ காலத்தைப் பயன்படுத்துபவன் மேன்மையுறுகிறன்
தேவைகளைப் பெருக்குவதால், முன்னேற்றம் தடைப்படும்: பண்பாட்டின் விளைவு திருப்தியான மனம் கஷ்டகாலம் மனத்தைப் பண்படுத்துகிறது. பேச்சைவிடப் பெரியது பணிவிடை: தீமையைக் குறைப்பதால் வாழ்வு திருந்தும்: தற்பெருமை நல்ல காரியங்களை நாசமாக்கும்; பதைபதைப்பவன் எதுவுஞ் செய்யமாட்டான்; உண்மையான வீரன் கர்வங்கொள்வதில்லை; சஞ்சலமின்றி இருப்பது நல்ல மெளனமாகும் பேராசை மனதை மலினப்படுத்துகிறது: பொய்வார்த்தை நாவைப் பலவீனப்படுத்துகிறது. மனவடக்கம் இல்லாதவனுக்குத் துக்கம் அதிகம். சுயநலமில்லாதவனுக்கு நேர்வழி விளங்குகிறது. உறுதி உள்ளவன் தீமை செய்யமாட்டான். இறைவனுேடு உறவாட ஏகாந்தம் வேண்டும். வீரனுக்குத் தோல்வியும் ஓர் ஆபரணமாய் அமையும்.
(6ஆம் பக்கத் தொடர்ச்சி) வைகையும்.
பத்துப்பாட்டும் பாடினுேரும் பாடப்பெற்றேரும் பத்துப்பாட்டு என்னும் பத்துநூல்களில் முதலில் நிற்பது முருகாற்றுப்படை என்றும் புலவராற்றுப்படை என்றும் புகழ்பெற்று அருள் மணக்கும் திருமுருகாற்றுப் பட்ையாகும். முருகக்கடவுள்மேல் நக்கீரர் பாடிய இந் நூல் 317 அடிகளைக் கொண்டது. முடமத்தாமக்கண்ணி யார் கரிகாற் பெருவளத்தானைப் பாடிய பொருநராற்றுப் பட்ை 248 அடிகளைக் கொண்டது. நத்தத்தனர் நல்லியக் கோடனைப் பாடிய சிறுபாணுற்றுப்பட்ை 269 அடிகள் உள்ளது. உருத்திரங்கண்ணணுர் தொண்டைமான் இளந் திரையனைப் பாடிய பெரும்பாணுற்றுப்பட்ை 500 அடிகளை யுடையது. பெருங்கெளசிகஞர் நன்னனைப் பாடிய கூத்த ராற்றுப்படை 582 அடி நீளமுள்ளது: மாங்குடி மருதனுர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது மதுரைக்காஞ்சி. இது பத்துப்பாட்டில் மிகப்பெரியதாய் 782 அடிகளைக் கொண்டது. மதுரையின் பெருவளத்தை நயமாகக்கூறும் இந்நூலைப் பெருகுவள மதுரைக்காஞ்சி எனப்புகழ்வர். புறத்திணை வீரத்துறைபோன தமிழர் அகத்திணைக் காதல் நுட்பங்களையும் நன்கறிந்தவர். ஹாவ்லொக்எலிஸ் காணுத நுட்பங்களைக்கண்டு பாடிய நூல்களுள் நப்பூதர் பாடிய முல்லைப்பாட்டு 103 அடி நீளமானது. சிறியது: கபிலர் பாடிய பெருங்குறிஞ்சி என்னும் குறிஞ்சிப் பாட்டு 261 அடி நீளமுள்ளதாய், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத்
* தமிழுக்கு அமுதம்

பற் செய்தி - 1-1-81.
தமிழ்ச்சுவை பருக்கியது: கனவொளுக்கத்தின் புனிதத் தைப் படிப்பித்துத் தமிழ்ப்பண்பாட்டைக் கூறுவது. உருத்திரங்கண்ணனூர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப் பித்து பாலைத்திணையை விளக்கி 30 அடி நீளத்தில் பாடிய வஞ்சிநெடும்பாட்டு பட்டினப்பாலே எனப்பெயர் பெற்றது. ஈழத்திலிருந்து உணவு ஏற்றுமதியான பெரு, மையைப் பாடுவது. உலகநாடுகளில் தமிழர் வணிகத் தொடர்புகொண்ட கடற்பிரயாணத்தையும் கூறுவது, அகமும் புறமும் கலந்து அகமோ 'புறமோ எனப் புல வர்களை மயங்கவைக்கும் நெடுநல்வாடை காதலனைப் பிரிந்த தலைவிக்கு ஒரு நொடிப்பொழுது ஒரு யுகமாக நிலைக்கும் என்பதை மனேதத்துவ நிபுணராய நக்கீரர் 488 அடிகளிற் பாடியது. .
சங்க இலக்கியச் சிறப்பு மதுரைப் பல்கலைக்கழக உபவேந்தர் பொய்யறியா மாணிக்கம் எனப் புகழ்பெற்ற கலாநிதி. வ், சுப. மாணிக்கம் அவர்கள் **நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நான மாகவும், கற்பாகவும் காமக்கூறுகளைச் செவ்வணம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு."
சங்கம் மருவிய நூல்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எனப் பதி னெட்டு நூல்கள் மேற்கணக்காயும், அவற்றின் வேருய்ப் பதினெட்டு நூல்கள் கீழ்க்கணக்கு நூல்களாயும் உள்ளன. பதினெட்டு நூல்களில் அறநூல்கள் பதினென்று. அகப்பொருள் பற்றியன ஆறு. புறப்பொருள் பற்றியது ஒன்று. அறனெனப்பட்டதே வாழ்க்கை. அறத்தின் வழியே ஏனைய புருடார்த்தங்கள். வீரமும் காதலும் இரு கண்ணுயின் அறம் தமிழனின் உயிர் அறநெறி யமையா வீரத்தையும், அறநெறியறியாக் காதலையும் தமிழர் கருதவில்லை, காணவில்லை, கையாளவில்லை அறம் உயிர் எனவே அறநூல்கள் வாழ்வு நூல்கள்; அறமே இருமைக்கும் இன்பந்தருவது.
பதினெண் கீழ்க்கணக்கில் தலையாயது உலகப்பொது மறையான திருக்குறள். இதனைச்செய்தவர் திருவள்ளுவர். இவர் அறத்துப்பால், பொருட்பால், ாேமத்துப்பால் என்னும் மூன்று பகுதிகளில் 133 அதிகாரங்களில் பத்துப் பத்தாக 1330 அருங்குறள்களைப் பாடியுள்ளார். அடுத்த அறநூல் சமண் முனிவர்கள் பாடிய நாலடியார் என்னும் 400 செய்யுள்களாம். விளம் பி நா ய குர் பாடிய நான்மணிக்கடிகை 101 பாடல்களைக் கொண்ட து. ஒவ் வொரு பாடலிலும் தான்கு கருத்துக்கள் கூறப்பெற்
கபிலர் என்பார் பாடிய இன்னு நாற்பது என்னும் நூலில் 41 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு துன்பங்கள் கூறப்படவே நூலில் பு துன்பங்"
(தொடர்ச்சி 19ஆம் பக்கம்)
என்றும் பெயர்

Page 18
1-1-81 மில்க்வை
நாவலர் ஞானபரம்பரை
ஆறுமுகநாவல்ர் மறைந்து இருபதாண்டுகளுக்குப் பின் பிறந்த இவர், நாவலர் தமையனர் புதல்வர்பூீரீமத் த. கைலாசபிள்ளை அவர்களாலும், நாவலர் கல்விப்பரம் பரை சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களா லும் நாவலர் காவிய பாடசாலையில் உருவாக்கப் பெற்ற வர், மதுரைத் தமிழ்ப் பண்டிதப் பட்டம் பெற்றபோது தங்கப் பதக்கமும் பெற்ற இவருக்கு இவர் ஆசிரியர் த. கைலாசபிள்ளை அவர்கள் தங்கச்சங்கிலி செய்து உப கரித்துப் பாராட்டியவர். நாவலர் நாமத்தைக் கனவிலும் மறவாத இவர் தமது கல்விப் பாரம்பரியத்தை 1600 ஆசிரியர்களுக்குப் பழக்கியவர். பண்டிதர்கள் பலரை உரு வாக்கிப் பழந்தமிழ்ப் பண்பாட்டை நிலவச் செய்தவர். யாழ்ப்பாணத்தில் தடக்கிவிழுந்தால் பண்டிதர்கள்மேலே தான் விழ வேண்டும் என்று விகடமாகப் பேசிய விக டனுசிரியர் கல்கி - கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இவரைப் பண்டிதமணி என வாழ்த்தியமை இன்று வரை இவர் பெயராயே நிலைத்துவிட்டது. இவரின் கட்டுரைகள் நூற் றுக்கணக்கானவை. நகைச்சுவை ததும்பக் கிண்டல் செய்து பேசும் சாமர்த்தியம் வாய்ந்த இவர் இலக்கிய ரசனையை விட்டு சமயத்துறையில் ஈடுபட்டுத் தட்ச காண்டத்துக்கு விரிவுரை எழுதியுள்ளார். இலங்கைச் சாகித்திய மண்டல உயர் உறுப்பினரான இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழ கம் கலாநிதிப் பட்டம் நல்கிக் கெளரவித்துள்ளது ஆயி ரம் பிறை கண்ட இவர் இன்றுவரை தமிழ்த் தொண்டு செய்துவருகிறார். h−
மதுரையும் சங்கப்புலவர்களும்
சங்கப்புலவர்களுள் மதுரைமாநகர் உபகரித்த பெரும் புலவர்கள் பலர். அவர்கள் மதுரையிலே பிறந்தும், மதுரை யிலே வாழ்ந்தும் பெருமை பெற்றதோடு சங்கத்தையும் அலங்கரித்தவர்கள் கவியரங்கேறியவர்கள். அவர்களின் பெயர்களின் முன் மதுரை எனப்படித்துக்கொள்ள வேண்டும்.
A. தமிழ் உலக அறிஞன்
 

ற் செய்தி 17
மன்னனுர், இளவேட்டனர், கோடங்கொற்றனர், சேந்தன்சாத்தனர், ஆயத் த ஞ ர், நல்வெள்ளையார், வெண்ணுகஞர், கணக்காயனூர், கண்டரத்தஞர், கண்ணத் தனர், நப்பாலத்தனர், கூத்தனர், கொல்லன்புல்லன், கொல்லன் வெண்ணுகஞர், சுள்ளம் போதனர், தத்தங் சுண்ணணுர், நாகன்தேவனுர், தமிழ்க்கூத்தனுர், படை மங்கமன்னியார், சேந்தங்கொற்றஞர், நப்பாலனுர், நற்மு மஞர், புல்லங்கண்ணனூர், பூதன் இளநாகனர், பூவண்ட நாகன் வேட்டனர், பெருங்கொல்லன், பெருமருதனுர், பெருமருதிள நாகனர், போ த் த னு ர், சொகுத்தஞர், பெருங்கண்ணனூர், இளம்போத்தன், வேளாசான்.
(15ஆம் பக்கத் தொடர்ச்சி)
செந்தமிழ். திராவிட சைவசித்தாந்த வித்தியாபோதஞ் செய்து போதரும் கடப்பாட்டினைத் தாங்கள் மேவுதல் வேண்டு மென்றே" எனத் தம்கருத்தைத் தேவரவர்கள் குறிப் பிட்டுள்ளார்.
முன்னர் 1891-ம் ஆண்டில் சிதம்பரத்தில் மகாகும்பா பிஷேகம் நடைபெற்றபோது, அங்கே தேவரும் நாவலரும் சந்தித்தபோது, தேவர் இவரைச் சைவப்பிரசங்கம் செய் யுமாறு கேட்டதும் இவர் அரியான என்னும் சொல்லைப் பீடிகையாகக்கொண்டு பெரியபுராணத்தில் சிவபராக்கிர மத்தை நுணுக்கமாக நீண்ட நேரம் பேசினுர், * பிரசங்கங்கேட்டுப் பெரும் பயனடைந்த பெருந் தொகையான பொதுமக்கள் ஒருபுறமிருப்பத் தேவரவர் கள் மகிழ்ச்சிப்பெருக்கில் மிதந்து நாவலரவர்களைப் பெரி தும் கொண்டாடிப் பொன்னும் பொருளும் உபகரித்த தோடு, சிதம்பரத்தில் நாவலரவர்கள் வசதியாக வாழ்வ தற்கு ஒரு வீடும் எழுதிக்கொடுத்தார். நாவலர் சித் தாந்த வித்தியாதுபாலன யந்திரசாலை நிறுவி ஞாளுமிர்தம் என்னும் பத்திரிகை நடத்துவதற்குத் தேவரவர்களின் உபகரிப்பு உதவியாயின.
பாஸ்கரசேதுபதி அவர்களைப் பாட்டுடைத் தலைவ ஞகக்கொண்டு புலவர் பெருமக்கள் பாடிய பிரபந்தங் களுள் உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் அவர்களின் பாடல் கள் வாடாமாலையாய் நிலவுகின்றன. செந்தமிழ் அபி மான சீலராகிய பாஸ்கரசேதுபதி அவர்கள்மீது சிவசம்புப் புலவர் கல்லாடக் கலித்துறை, நான்மணிம்ாலை, இரட்டை மணிமாலை என்பனவாய் பிரபந்தங்களும், பல தனிப் பாடல்களும் பாடிச் சிறப்பித்தார். இவற்றை இவர் தமிழ்ச்சிங்கம் எனப் புகழ்பெற்று விளங்கிய திரு' ரா. இராகவஐயங்கார் முதலான புலவர்கள் மத்தியில் அரங்கேற்றிப் பரிசும் பாராட்டும் புகழும் பூரிப்பும் பெற்ருர் என்ப.
சென்ற நூற்றண்டில்:
பெரிய தீ விபத்து
யாழ்ப்பாணம் முன் எப்பொழுதாயினும் கண்டிராத பெருந் தீ விபத்து ஒன்று 3-5-1879 இல் கரவெட்டி வெல்லனிற் பிள்ளையார் கோயிலில் நிகழ்ந்தது. அதனல் நூறுபேருக்கு அதிகமாக மாண்டனர். நூற்றுக்கணக்கா னுேர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பலாயிற்று.
ரை ஒன்றிணைக்கின்றதே

Page 19
1叙
மில்க்வை
IN ܗܐ
S
Nخ 妙 ଓଁ
停*
TTO
Ye who pass by and would raise
Your hand against me Harken ere you harm me
I am the heat of your hearth
in the cold dark nights
The friendly shade screening
You from the scorching sun
And my fruits are refreshing draughts
Quenching your thirsts as you journey on I am the beam that hold your house
The board of your table The bed on which you lie
The timber that builds your boat | am the handle of your hoe
The door of your home stead The wood of your cradle
and the cell of your Coffin - I am the bread of kindness
and the flower of beauty Ye: who pass by listen to my prayer
Harm me not.
.Forest Department - ـــــــــــــــــ
Protect our National Wealth
Please protect our forests They are our national wealthForests conserve soil and water Forests prevent flash floods Forests provide timber and wood Forests Provide amenity.
* ஒலி எழுத்தில் தமிழ்
 
 
 
 
 

ற் செய்தி 1-1-8
(16ஆம் பக்கத் தொடர்ச்சி) வைகையும்.
கள் வருகின்றன. இவற்றை நீக்கி வாழ்தல் வாழ்க்கை யின் குறிக்கோளாகும். பூதஞ்சேந்தனர் பாடிய இனியவை நாற்பது என்னும் நூலில் இன்பத்தருவன கூறப்பெற் றுள்ளன. நூலில் எல்லாமாக 127 இன்பங்கள் கூறப் பெற்றுள்ளன. நல்லாதனுர் பாடிய திரிகடுகம் என்னும் நூலில் 101 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் மூன்று உறுதிப்பொருளைக் கூறுவன. திரிகடுகம் என்பன சுக்கு, மிளகு, திப்பிலி என்பது சித்தர் வாகடம். இவை உடலுக்கு உறுதிதருவனபோல், நூலிற் கூறப்பெறுவன உள்ளத்துக்கு உறுதிதருவன.
பெருவாயில் முள்ளியார் பாடிய ஆசாரக்கோவை 101 பாடல்களில் ஆசாரங்கள் கூறப்பட்டுள்ளன. முன்றுறை அரையஞர் பாடிய பழமொழி நாநூறு பெயருக் கேற்ப 400 பழமொழிகளை விளக்குவது. காரியாசான் பாடிய சிறுபஞ்சமூலம் கண்டங்கத்தரி, சிறுவழுதுளை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி என்னும் ஐந்தின் வேர்களும் பஞ்சமூலங்களாயிருப்பன போல 104 பாடல் கள் ஒவ்வொன்றும் உள்ளத்துக்கு உறுதிபயக்கும் ஐந்து கருத்துக்களேக் கூறுவது, குளம் தோண்டுதல், மரம் நடுதல், வயல் செய்தல் முதலியன நற்செயல்கள் என் பது இந்நூல்.
கபிலர் என்பார் பாடிய இன்னு நாற்பது பாடல்களில் நான்கு நான்கு என 184 துன்பங்கள் கூறப்பட்டுள்ளன. கூடலூர்க்கிழார் என்னும் மதுரைவாசி பாடிய முதுமொழிக் காஞ்சி பத் து அதிகாரங்களையுடையது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறட்டாழிசைகள் அறம், பொருள், இன்பம் கூறுவன. ஒதலிற் சிறந்தது ஒழுக்கம் என்பது ஒருகருத்து, கணிமேதாவியார் பாடிய ஏலாதி 80 பாடல்களைக் கொண்டதாய் ஒவ்வொரு பாட லிலும் மனநோய் தீர்க்கும் ஆறு கருத்துக்களைக் கூறுவது. ஏலாதி என்பது ஏலம், இலவ்ங்கம், நாககேசரம், மிளகு, திப்பலி, சுக்கு என்னும் ஆறினலும் செய்யப்பெறும் மருந்தாகும். -
மதுரைக் கண்ணங்கூத்தஞர் செய்த கார்நாற்பது நாற்பது செய்யுள்களில் கார் காலத்தின் அழகினைப் பல படியாகக் கூறுவது. மாறன்பொறையனர் செய்த ஐந்திணை ஐம்பது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை இயல்புகளையும் பத்துப்பத்தாக ஐம்பது பாடல்களில் அழகுறக் கூறுவது. மூவாதியார் செய்த ஐந்திணை எழுபது ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள்வீதம் 70 பாடல்கள்வரப் பாட்ப்பெற்றுள்ளது. ஏலாதி செய்த கணிமேதாவியார் செய்த திணைமாலை நூற்றைம்பது ஒவ்வொரு திணைக்கும் முப்பது பாடல் களாக 150 பாடல்கள் கொண்டது. புல்லங்காடனர் செய்த கைந்நிலை என்னும் நூல் ஒவ்வொரு திணைக்கும் 12 செய்யுள்கள்வரப் பாடப்பெற்ற நூல்: இதில் 60 செய்யுள்கள் உள்ளன. பொய்கையார் பாடிய களவழி நாற்பது புறப்பொருள் சம்பந்தமாக 40 செய்யுள்களைக் கொண்டது. போர்க்களத் துன்பங்கள் இந்நூலில்க் கூறப்பட்டுள்ளன.
எழுத்தே சிறந்தது. *

Page 20
மில்க் 181مk":
* ஈழத்துணர்வு ).
ஈழத்து உணவைப் பற்றிக் கூறும் சங்கப் பாட களுக்கு முந்தியே ஈழத்துணர்வு அங்குக் சென்றிருக்கில் றது. முதற்சங்கப் புலவர்களிலொருவரான முரஞ்சியூ முடிநாகராயர் என்ன பாடிஞர் என்பதை எவரும் அறி யார். ஈழத்திருந்து சென்ற பூதன் என்பார் மதுரையிலேயே தங்கி வாழ்ந்தவர். அவரின் மைந்தன் பூதந்தேவன அகத்துறைப் பாடல்கள் பாடுவதில் சமர்த்தர். இவ நற்றிணையில் ஒரு பாடலும், குறுந்தொகையில் மூன்று
பாடல்களும், அகநாநூறில் மூன்றுபாடல்களுமாக ஏழு LHrl -s &6ir Lin'g u6irønnrf.
காதல்வயப்பட்ட தலைவி தனக்குரிய தலைவனுே( உடன்போதலே தக்கது என்று மறைபொருளாகத் தோழ கூறும் பாட்ல் ஒன்று தனிச்சுவை தமிழ்ச்சுவை ததும் வது. மற்ருென்று காதல் நோயால் மெலிந்த தஃவவியின் நிலையை அறிந்துகொள்ள முடியாத பெற் ருே ரு பு உற்றேரும் வேலனை அழைத்து வெறியாடல்செய்ய ஒழுங்குசெய்ய முயன்றனர். அந்த வேடிக்கையைட பார்ப்பதற்கு மக்கள் கூட்டத்தில் தலைவனும் மறைவாய் போதல் வழக்கம். ஆனல் இங்கே அவனை வரவேண்டாட எனத் தலைவி தோழிமூலம் சொல்லுகிருள். காரணம் Tதலைவன் வந்தால் அவனைக் கண்டதும் தலைவிக்கு நோய
மாறிவிட்வே, நோய் நீக்கிய பெருமை வேலனுக்கு போய்விடும். எனவே அவன் வாராணுகுக என வாய மொழிந்த தலைவியின் உள்ளத்தைப் பூதந்தேவனு அருமையாகப் பாடியுள்ளார்.
தோழி! கேட்பாயாக. நான் இளைஞன் ஒருவனை கண்டதால் காதல் நோயுற்றதை என் அன்னை அறியாள் அவள் அது முருகளுல் வந்தது எனக்கருதி வேலனை அழைத்து வெறியாட விரும்புகிருள். இந்நிலையில் என் காதலன் இங்கே வெறியாடல் காணவருவானுயின் அவன் வந்துகாட்டிய அன்பால் என் நோய் நீங்கும் காதலன் வரவால் நோய் நீங்கியதை என்தாய் அறியா வளாய் வெறியாடலால் நோய் நீங்கியது எனவே கருதுவாள்
நிலைமை இவ்வாருயின் என் நோய்க்குரிய உண்மைக் காரணத்தை அவர்கள் அறியமாட்டார்கள். அதனள் திருமணமும் அண்மையில் ஏற்படமாட்டாது. எனவே என் காதலன் இன்று இங்கே வராதிருக்கட்டும். அவன் வாராணுயின் என் நோய் என்னைவிட்டு நீங்காதுதானே தான் வெறியாடல் புரிவித்தும் தன் மகளின் நோய் நீங்கவில்லை என்பதைக் காணும் என் தாய், இஃது அணங்கால் வந்தது. அன்று இஃது ஆண்மகன் ஒருவனல் வந்தது ஆகும். அவ்வாண்மகன் யாவன் எனவினவி அவனுக்கு என்னை மணஞ்செய்து கொடுக்க முயற்சி செய்வர். ஆகவே என் தலைவன் வராமையால் நான் இன்று ஒருநாள் வருந்தினும், அது என்றென்றைக்கும் நிறைந்த இன்பத்துக்கு வழிசெய்யுமாதலின், அவன் இன்று இங்கே வராதிருத்தலையே விரும்புகின்றேன்:
Nr தமிழரின் நடனக்கல
 

வைற் செய்தி
19
வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து
அறியா னுகுதல் அன்னை காணிய
அரும்பட் ரெவ்வம் இன்றுநாம் உழைப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் உண்கினி கடியுஷ் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலப் புஞ் சோலை இலங்குமலே நாடன் இரவி ஞனே.
- குறுந்தொகை குறிஞ்சி = 360
ஈழத்துப் பூதந்தேவனர் தம் காலத்துப் பாண்டியன் ஒருவன அகநாநூற்றிற் புகழ்ந்து பாடும்போது அவன் குடையையும் கூடல்நகர் என்னும் மதுரையையும் குறித் துள்ளார். தலைவன் தவழுது வருவான் என்று உறுதி
கூறும் பாலைத்திணைஇது:
"போரில்வென்ற கெடாதபுகழினையும் வானிடத்தும் அளாவுமாறுயர்ந்த வெண்கொற்றக் குடையினையும் உடையவன் பசும்பூண் பாண்டியன். அவனின் பாடல் பெற்ற மதுரையைப் போன்ற என்பது உவமை,
"வருவர் வாழி தோழி பொருவர்
செல்சமங் கடந்து செல்லா நல்லிசை
விசும்பு இவர் வெண்டுடைப் பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பிற் கூடலன்ன."
wennus அகம் - பால் - 23
கண்ணகியும் ஈழமும்
கண் ண கி வழி பாடு தமிழ்நாட்டிலிருந்தே ஈழ நாட்டுக்கு இறக்குமதியானது. சோழ பாண்டிய சேர
நாடுகளோடு தொடர்பான கண் ண கி க்
கு
தொடர்புடையதாயிற்று. கடல்சூழிலங்கைக் வேந்தன் சிலப்பதிகாரத்தின் காலத்தை ஆராய்வதற்கு
விளக்கமாயினுன்,
ஈழமுந் கயவாகு
சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகளின் இயலிசை நாடகம் ஈழத்துப்புலவர் பரம்பரையில் நிலைபெறலாயின கண்ணகி வழக்குரை என்னும் நூல் ஈழத்தெழுந்த காவிய மாகும். சகவீரன் என்பார் பாடிய இக்காவியத்தில் வெண்பா, சிந்து முதலிய பாவின்ங்களில் வந்த இக்காவியம் மாதவி யின் அரங்கேற்றத்தைக் காட்டும் கட்டம் ஓசையையும் நட்டுவனுரின் தாளவோசையையும் காதிலே
2219 பாடல்கள் உளவென்பர். அகவல்,
படியவைக்கிறது.
தானே இயலிசை வாரமும் பாடித்
தன்னிசை யின்வழி நின்றுமி யாழே
தேளூர் குழல்வழி நின்ற குழலும்
சிறந்து நின்றதோர் தாமந்திரிகை நாணு விதமன்னர் அந்தரங் கொட்ட
நன்னூல் வழியிந்த சீராகம் நிற்கக்
காஞர் குழலவள் மாதவி சற்றே
சலங்கை
கையோடு மெய்கால் அசைந்து நின்ருளே.
(தொடர்ச்சி 20ஆம் பக்கம்)
வேதத்துக்கு முந்தியது

Page 21
20 மில்க்வை
யாழ்ப்பாணச் சிறப்பு எந்நாட்டிலுஞ் சிறந்தது யாழ்ப்பாண தேசமே. அந்நாட்டில் வளர் கல்வி அதிகப்பிரகாசமே. அந்நிலத் தோரணைவருந் தேவபக்திக் குரியவர்களே: அறிவிலும் மிகப்பெரியவர்களே. வேதாகமங்களில் விசுவாசிகளே: மிகவும் அன்புள்ள நேசர்களே:
எப்படியெனில் யாம் பிறந்து வளர்ந்த நாற்பத்து மூன்று வருடத்துக்குள்ளே அநேக நாட்டைக் கண்டனம். அந்நாட்டுள்ளோர் சிநேகத்தையுங் கொண்டனம். யாழ்ப் பாணத்தார் பேசுந்தமிழ் மொழித்திறம்போலேனையோர் பேசக்கேட்டிலம். ஏனையோர் பேசும்மொழியெல்லாம்தமிழ் மொழியென்றே தீட்டிலம். ஏனெனில் யாழ்ப்பாணத்தார் தமிழொன்றே பேசித் தேறுகிறர்கள். மற்ற நாட்டார் தமிழ் தெலுங்கு கன்னடங் கலந்து கூறுகிருர்கள். யாழ்ப் பாணத்தார் எழுதுவனவெல்லாந் தமிழிற்கொப்பே. மற் றவர்கள் எழுதுவனவெல்லாம் தமிழிற்குத்தப்பே. ஆதலால் எந்நாட்டாருந் தமிழ் நன்குபேசவும் எழுதவும் பிரயாசப் படும்படி சிந்தித்துத் துதிக்கின்றனம். வந்தித்து மதிக்கின் றனம். எம்மை இகழ்ந்து ஏசினவர்களுக்கும், புகழ்ந்து பேசினவர்களுக்கும் இணக்கமாக வந்தனம் வணக்கமாகத் தந்தனம்,
- வேதகிரி முதலியார் (உதயதாரகை 9-3-1843)
லட்சுமீகரம் உண்டாகப் பிரார்த்தன.
சகல மங்கள வடிவமான தாயே! நீ எல்லாக் காரியங்களையும் சாதகமாகச் செய்கிருய். நாராயணி திரியம்பகே தேவி! உனக்கு வணக்கம். V−
ஆயகலைகள்
ஆயகலைகள் அறுபத்துநான்கு என்று அன்று அறுதியிட்டுள்ளார்கள். பதிணெட்டு இது மொழிகளை அறிதல், வேதம் முதலான அறிவு, நூலறிவு பெறுதல், சித்திரம் தீட்டுதல், ஆயுர்வேத சிகிச்சை முறை அறிதல், தனுர் வேதம் என்னும் யுத்தப்பயிற்சி பெறுதல், தர்மசாஸ் திரத்தை நன்குனர்தல், நீதிசாஸ்திரம், சோதிடம், மந்திரம், யோகம், நியாயம், தத்துவம், காரியாலங் காரம், நாடகம், வாத்தியங்கள் வாசிக்க அறிதல், விக்கிரகங்கள், மாலைகட்டுதல், வீடுகட்டுதல், கோயில் கட்டுதல் முதலிய கலைகளை அறிதல் முதலியனவும் இவை போன்றனவும் கலைகளாகும். அன்னை அறுபத்துநான்கு கலா வடிவமானவள். கலைகளின் அதிதெய்வமானவள் யாழ்ப்பாணத்தவர் பாரம்பரியமாகக் கலாவல்லுநர்களாக இருந்தவர்கள். இன்று எம்மவர் கலையார்வங்கொண்டு வருவது பெருமகிழ்ச்சிக்குரியதாகும்.
YA தமிழ் ஆதவன்போல்
 
 

செய்தி 1-1-81
* தர்மம் * இந்துநாகரிகத்தில் வாழ்க்கையின் அடிப்படை தர் மம். அவரவர்க்கமைந்த தர்மத்தைத் தவருது செய்தல் அத்தியாவசியம்; தர்மம் பிசகினல் பொருள்வழி பிச" கும். பிசகாகவந்த பொருளை அனுபவிக்கும் போது இன் பம் பிசகுபடும். அறம் பொருள் இன்பம் பிசகவே புரு டார்த்தத்தின் இறுதி இலக்கான முத்தி என்னும் மோட்ச வாழ்வும் பிசகும். (நாம் தபால் முத்திரையைக் குறைத்து ஒட்டினல் அதனை மறுகரையில் பெறுபவர் குறைந்த தொகையின் இரண்டு பங்குகட்டி எடுக்கவேண்டியுள்ளது. தவறின் அது நமக்குத் திரும்பிவந்து கட்டச் செய்கிறது. இது, ஒரு சிறிய உதாரணம்.)
தர்மத்தைக் காப்பவர் அதனைப் பிசகவிட்டால் தர்மத்தைக் காப்பதற்கு ஆளில்லை. தர்ம்த்திடம் சரண டைந்தவர் தாம் என்று கூறு ம் ஒரு வ ர், தாம் தர்மவழியில் ஒழுகுபவர், தர்மகர்த்தா என்று கூறிக் கொண்டு தான்தோன்றித்தனமாய் நடந்தால் தர்மம் தழைக்காது. தர்மம் குன்றவே வாழ்வும் சமூகமும் தாடும் குன்றும்.
தர்மம் என்பது இம்மை மறுமை ஆகிய இருமையி லும் இன்பம் பயப்பது. எல்லா உயிர்களுக்கும் திருப்தி தருவது. எ ல் லா உயிர்களையும் வாழவைப்பது. நாம் தினந்தோறும் செய்ய வேண்டிய கடமைகள் கன்மானுட் டானங்களைச் சரிவரச் செய்தல் தர்மத்தின் பாற்பட் டவை தர்மமானவை அறஞ்செய விரும்பு என்றும், ஈதல் அறம் என்றும் இலகுவாகச் சொன்ன ஒளவையார் வாக்கின்படி இல்லாதவர்க்கு ஏதாவது கொடுத்து மகிழ் வித்து, இசைபட வாழ்தல் தர்மத்தின் அடிப்படை ஈதலி விருந்து தானம், பூசை, தர்ப்பணம் முதலியன படிப் படியாக வள ரு ம். பூதயக்ளும் எனப் புகழ்பெற்றது அன்னமளித்தல். அன்னமளித்தல், விருந்து கொடுத்தல் உயர்ந்த நாகரிகமுமாகும். அவை கடமையின் உச்சக்க்ட் டம். பரம ஏழைக்கு அன்னபாளுதிகள் அளித்தல் பெரிய யாகத்துக்கு நிகராகும். எந்தப் பிராணிக்கும் துன்பஞ் செய்யாமல் இருந்தால் வாழ்வில் சிறந்த அம்சம்.
வேதம், ஆகமம், வேதாங்கம் முதலிய அறிவு நூல் களின் வரிசையில் தர்மசாஸ்திரம் இடம் பெற்று இந்து நாகரிகத்தை வளர்த்து வந்துள்ளது. தர்மவழியில் தடத் தல் வேண்டும் என்பது குருவுபதேசம், தர்மம்சர!
(19ஆம் பக்கத் தொடர்ச்சி) ஈழத்துணர்வு.
தத்தித் தோம் ததிக்கின தோம்
தக்குன தக்குண தக்குண தோம் தத்தித் ததிகுதி செய்திட தங்கிட்
செங்கிட் செங்கிட தாகிட் தோம் ஒற்றைச் சுற்றுடன் உய்ப்ப மூழாவொடு உற்ற கிடக்கை உடன் விதமும் வைத்துச் சித்திர வுற்ற நடிப்பொடு
மாதவி சோழன்முன் னுடினளே.
தன்னேரில்லாதது ர

Page 22
1-1-81 மில்க்ை
- விடைகள் வேறிடத்தில் -
சோல்பரி யாப்பை எழுதிக்கொடுத்தவர். மகா அலக்சாண்டரின் ஆசிரியர். சைன மதத்தைத் தாபித்த பெரியார். இந்தியாவில் கிறிஸ்தவ ஆலயம் அமைந்த முதலிடம் பலதிறப் பஞ்சுகள் உற்பத்தியாகுமிடம். கடல்படு திரவியங்களில் விலையுயர்ந்தது. பால் வீதி மண்டல நட்சத்திரத் தொகை. முதல் கண்ணிர் வடிக்கும்வேளை. ஆமென் என்னும் பதத்தின் பொருள். காற்றின் வேகத்தை அளவிடும் கருவி. ஒருகலன் சுத்தநீரின் நிறை. 12. தேவிக்கன் அதிகமாக விரும்பும் நிறங்கள். 13. சத்திர வைத்தியத்தில் பெயர்பெற்ற முன்ளுேடி. 14. இபிரியன் நாடுகள் எனப் பெயர்பெற்றவை. 15. கேம்பிரிக் துணியை முதலிற் செய்த நாடு. 19. வடகோனார்த்தத்தில் மாத்திரம்கிடைக்கும்மீனினம் 17. இந்துசீனம் என்பதின் தேசியப் பெயர். 18. அமெரிக்க கண்டத்தின் முழுநீளம். 19. மனித உரிமை என்னும் நூலை எழுதியவர். 20. சுத்த நீர்க்கடல் எனப் பெயர்பெற்றது.
தமிழியல் நினைவுத் துளிகள் மூன்றம் சங்கம்
s
ܓܚܟ
மதுரைமாதகரிலே முடத்திருமாறன் காலம் முதல் உக்கிரப்பெருவழுதி காலம் வரை நிலவியது என்பர். இச் சங்கப் புலவர் விட்டுச்சென்ற பாடல்களுள் தொகை யும் பாட்டும் என்னும் இருவகைத் தொகுப் பிலும் 2426 பாடல்கள் நெடியனவாயும் சிறியனவாயும் கிடைத்
sisi awawr.
ஏடுகள் தேடியவர்கள் பழைய நூல்களை ஏடுகளிலிருந்து நூல்கள் வடிவாகக் கோணர்ந்தவர்களுள் ஈடு இணையற்றவர்களுள் யாழ்ப் பாணத்துச் சிறு ப் பிட் டி வைரவநாதர் தாமோதரம் பிள்ளை என்பாரின் பெயர் தமிழகமெங்கும் வியாபகமுற் நிருந்தது. பிள்ளையவர்களுக்கு ஏடுதேடிக் கொடுத்தவர் களுள் மல்லாகம் விசுவநாதபிள்ளை கனகசபைப்பிள்ளை என்பார் அக்காலத்து சென்னைமாகாணத் தபாலதிபரா யிருந்தவர். தமிழரின் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டுச் சிறப்பை ஆங்கில்த்திலெழுதிப் புகழ்பெற்ற a Fř.
ஒப்பற்ற முயற்சி சங்கத்தமிழ் நூல்களையும் பல பழைய தமிழ் நூல் களையும் தனியொருவராயமர்ந்து அச்சேற்றி வெளியிட்ட
* இமயம் உருப்பெறமுன் தென
 

வற் செய்தி 2.
பெருமை இலக்கிய கலாநிதி மகாமகோபாத்தியாய உ. வே. சுவாமிநாத ஐயரவர்களுக்கு உரியது. ஐயரவர் களின் ஆராய்ச்சிக்கும் பிறவுக்கும் அருந்துண் புரிந்தவர் சேர். இராமநாதன் அவர்களின் அண்ணன் பொன்னம் பலம் குமாரசுவாமியாவர். *
கலித்தொகை தந்த பெருமை சங்க இலக்கியப் பரப்பில் எட்டுத்தொகை நூல்களுன் கற்றறிந்தாரேத்தும் கவி எனச் சிறப்புப் பெற்ற கலித் தொகை என்னும் நூலுக்குக் கண்ணிர் பெருக்கிய கலித் தொகை என்றும் பெயர். கலித்தொகையால் கண்ணிர் விட்டவர் யாழ்ப்பாணத்துச் சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம்பிள்ளை என்னும் பெரியாராவர். இவர் சென்னப் பட்டதாரிகளின் முன்னுேடிகளுள் முதல்வரி இருவருள் ஒருவர். தமிழ் நாட்டில் உயர் நீதிபதியாயும், தினவர்த்தமானிப் பத்திராதிபராயும் இருந்தவர். தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை, தமிழ் தாதா தாமோதரம் பின்ளே என்றெல்லாம் புகழ்பெற்றவர். தாமோதரத்துக்கு எவர்தாமோதரம் என்று சிலேடைப் புலவர்களின் சிந்தை யி விகுந்த வர். இவர் செய்த பெருமுயற்சியால் கலித் தொகை ஏடு கைக்கெட்டியதோடு அது அச்சேறி வெளி வந்தது. ۔۔۔۔
நற்றிணைப் பதிப்புக்கு நண்பன் எட்டுத்தொகையில் ஒன்ருன நற்றிணை நூல் தல்துரை எழுதி வெளியிட்டவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் என்பவராவர். நாராயணசாமி ஐயரவர்களுக்குத் திரு மறைக்காட்டிலிருந்து தமிழ்ச் சந்தேகங்களை விடுவித்தவர் பொன்னேயா உபாத்தியாயர் எனவழங்கிய வித் துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையாவர். இவர் ஆறுமுக நாவலரவர்களின் சகோதரியார் மகனும் மாளுக்கருமாவர்.
எந்நாட்டிலுஞ் சிறந்த தென்னுடு தென்னுடு, தமிழ்நாடு என்றெல்லாம் புகழ்பெற்ற நாடு பாண்டிநாடே. அது பழம்பதி, ப  ைழ யதா டு, பண்டையதாடு என்பதால் பாண்டி நாடாயிற்று. எத் நாட்டிலும் நிலவாத தமிழ்ச்சங்கம் அங்கேதான் நிலவியது.
தமிழின் வியாபகம்
தமிழ்மொழியின் வியாபகம் அகலமானது பரந்தது உலகமளாவியது. முன்னர் "வடவேங்கடம் தென்குமரியா யிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' எனப் பணம்பாரஞரும், "வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசையுள் விட்டு எஞ்சிய மூன்றும் வரைம்குள்புணரி நாடு" எனச் சிறுகாக்கை பாடினியாரும் வரையறை செய்த காலம் போய், இன்று தமிழ் எல்லைகடந்த உலகமெங்கும் வரை பறையின்றி வியாபகமுற்று விளங்குகின்றது, நிலவுகின்றது. 'தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக்கண்டார்" என்று பாரதியார் உலகத்தமிழரைப் பாடியுள்ளார்.
தலப்பாடு என்பது செயலில் அன்பே, நல்லவராயிருத் தல் மேன்மையானது. நலப்பாடே மிகச்சிறந்த அறம் ஒவ்வொரு நற்செயலும் சாவாமைக்கு அல்லது நித்திய வாழ்விற்கு விதைத் தானியம். -சுவாமி சிவானந்தர்
ானட்டில் தமிழர் வாழ்ந்தனர் *

Page 23
22 மில்க்வை
அகராதி நினைவுகள்
அகராதி நினைவுகள் என்றதும் சென்னை வையகம் வையாபுரிப்பிள்ளை அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவிற் கொள்ளவேண்டும். தமிழ்ப் பேரகராதிப் பதிப் பாசிரியராயமர்ந்து பெரியவராய் அவர் செய்த சேவை பெரிது.
வையாபுரிப்பிள்ளை அவர்களுக்கு முன்னர் அகராதி தொகுக்கும் பணியில் பெரிதும் ஈடுபட்டவர்கள் யாழ்ப் பாணத்துப் புலவர்கள் பலர் நாவலர் பெயரில் கோட்டம் அமைத்து அச்சகம் நிறுவிச் செந்தமிழ்ப் பரிபாலனஞ் செய்த ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அகராதியொன்று தொகுத்ததோடு, கலைக்களஞ்சியம் என அக்காலத்தில் அபிதான கோசம் ஒன்று வெளியிட்டவர். பாண்டித்துரை தேவர் நிறுவிய சங்கத்தில் பரீட்சகராயிருந்ததோடு, செத் தமிழ் வெளியீட்டில் பதிஞருண்டுகள் கட்டுரைகள் எழு தியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லெக் சிக் கன் பேரகராதித் தொகுப்பிலும் முத்துத்தம்பிப்பிள்ளை முன் னணியில் நின்றுழைத்தவர். V−
ஆறுமுகநாவலரின் ஆங்கில ஆசிரியரும் தமிழ் மாண வருமான பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அதிபராயிருந்தபோது அங்கே ஆசிரியராய் இருந்த உடுப்பிட்டி கு. கதிரைவேற்பிள்ளை அவர்கள் நியாயவாதியாகி நீதிபதியாயும் இருந்தவர். அவரின் நிலையான தமிழ்த்தொண்டு அகராதி வேலையாகும். அக ராதி வேலைக்காகவே அவர் 1898ஆம் ஆண்டில் பெரிய பதவியைவிட்டு இளைப்பாறினர். சுன்னகம் குமாரசுவாமிப் புலவர், வல்வெட்டி ஆறுமுகம்பிள்ளை, நல்லூர் சரவண முத்துப்பிள்ளை முதலானுேரைச் சேர்த்துக் கதிரைவேற் பிள்ளை அகராதி தொகுத்தார். அவர் தொகுத்த அகரா தியே பின்னர் மதுரைத் தமிழ்ச்சங்கப் பேரகராதியாக வெளிவர உதவியது.
யாழ்ப்பாணத்து அகராதிகளுள் அறிஞர் உலகில் பெருமதிப்புப் பெற்றது மேலைப் புலோலி நா. கதிரைவேற் பிள்ளை செய்த அகராதி எனலாம். அவர் செய்த பெயரக ராதியை வையாபுரிப்பிள்ளை பிற்காலத்திற் பெரிதும் பாராட்டியுள்ளார். காஞ்சி நாகலிங்கமுதலியார் அதனைப் பதிப்பித்ததும், யே. எம். நல்லசாமிப்பிள்ளை முகவுரை எழுதியதும் கதிரைவேற்பிள்ளை அகராதியின் சிறப்பைக் காட்டின.
**எனது நண்பன் மேலைப்புலோலி நா. கதிரைவேற் பிள்ளை அவர்கள் பதிப்பித்த அகராதியே இற்றைவரை வெளிவந்த அகராதிகளுள் தலைசிறந்தது' என்பது நல்ல சாமிப்பிள்ளை அவர்களின் நற்சாட்சியாகும். மதுரைத் தமிழ்ச்சங்கத் தாபகர் பாண்டித்துரைத் தேவர் இவ்வகரா தியை மதித்துப் பாடிக்கொடுத்த சிறப்புப்பாயிரத்தில் "இருந்த தமிழ்மொழியின் பொருளினை உலகோர் எளிதில் தெளிதரல் இன்றி வருந்துதலொழிய வோரகராதி மாண்புற வமைத்தனன் வளங்கள் பொருந்தி யாழ்ப்பாண மாநகர்க் கதிர்வேற் புலவனங் கதனையச் சியற்றி மருந்தென வளித்தான் சென்னை வாழ் நமச்சி வாயன மாமதி யவனே' என்று பாடியுள்ளார்.
முனிவர்களும் முத்த

ற் செய்தி 1-1-81.
சென்னைப் பல்கலைக்கழகத்து முதற்பட்டதாரிகளுள் . ஒருவரான யாழ்ப்பாணத்துச் சுதுமல் விசுவதாதபிள்ளை அவர்கள் தஞ்சாவூரில் அரசவுத்தியோகம் வகித்த காலத் திற் பதித்த ஆங்கில தமிழ் அகராதி பல பதிப்புகள் வெளி வந்து புகழ்பெற்று நிலவியது.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களை உருவாக்கிய சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களின் மொழி யறிவை முன்னமே கேட்டறிந்த சென்னை அகராதிக் குழுத் தலைவர் சாண்ட்லர் என்பவர் புலவர் அவர்களுக்கு தேரிற் கடிதமெழுதி அகராதி அமைக்கும் முறைகளை அறிந்ததும் ஆராமை மிகுதியால் யாழ்ப்பாணம் வந்து புலவரவர்க ளோடு இருவாரந் தங்கியிருந்து உரையாடிய பின்பும் தாகம் தணியாது இவரைச் சென்னைக்கு வருமாறு வேண் டிஞர் இவர் உடல்நிலை காரணமாக மறுத்து உரியமுறை யில் உதவிகள் செய்தனுப்பினர்.
இலக்கியச் சொல்லகராதி குமாரசுவாமிப் புலவரவர்க ளின் பேருழைப்பினல் ஈழத்தில் எழுந்த அகராதிகளுள் எழுந்த இலக்கியச் சொல்லகராதி என்பதும் ஒன்று. சங்க இலக்கியங்கள்போன்ற பேரிலக்கியங்களில் பயின்றுவந்த தமிழ்ச்சொற்களை விளக்க எழுந்த இந்த அகராதியை ராஜ ராஜேஸ்வர சேதுபதி முதலானுேர் பெரிதும் பாராட்டி யுள்ளனர். அது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் த. கைலாசபிள்ளை அவர்கள் விரும்பியவண்ணம் தொகுக்கப் பெற்றுச் சென்னை வித்தியானுபாலன யந்திரசாலேயில் 1915-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. அதிலுள் ன உபக்கிரமணி என்னும் பகுதியும், விகுதி விளக்கம் என்னும் பகுதியும் புலவர்களுக்குப் பெருவிருந்தாயமைந்தவை யாகும்.
ତ୍ରୈଷ୍ଣି
மகாத்மாவின்
அன்புக் கரம்
ତ୍ରୈତର୍ଭୁକ୍ତିତ
E ぐ A S
உலகமனைத்திற்கும் அன்புக்கரம் நீட்டிய மகாத்மா காந்தி அண்மையிலுள்ள ஈழத்தை வெகுவாக நேசித்தார். அவர் 1927ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைபுரிந்தமை ஒரே ஒரு தரிசனமாய் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கு கிறது. வாலிபர் மகாநாட்டினரின் முயற்சியால் யாழ்ப் பாணம் வந்த காந்தியடிகள் பெரிய கல்லூரிகளெங்கும் சென்று நல்லொழுக்கம், சிட்டாசாரம், சுதந்திரம், சு பீட் சம், மனநிறைவு முதலியனபற்றிப் பேசினர். இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் பேசிய அவர் கொழும்பில் சுதந்திரம் பற்றிப்பேசினர். தாம் கோகலேயின் வழியில் சுதந்திரப் போராட் டம் நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
மிழை வளர்த்தனர் *

Page 24
1-1-81 மில்க்
கொடுத்ததும் கொண்டதும்
厥翠 基省
நாவலர் பரம்பரையிற் கல்விகற்றுப் பெரியவரான மட்டுவில், க. வேற்பிள்ளை அவர்கள் உரையாசிரியர் எனப் பெருஞ் சிறப்புப்பெற்றவர். சிதம்பரம் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராயிருந்து தமிழறிஞர்களை உருவாக்கிய இவர் பெயரைத் துலங்கச் செய்தவர்களுள் தமிழ்நாட்டவர்கள் இருவர் மாணவர்கள். ஒருவர் வித்துவான் ந. சுப்பையபிள்ளை என்பவர், 1922ம் ஆண்டில் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் மறைந்த போது அவரிடத்தை நிரப்பி அலங்கரிக்க வந்தவர். ஈழம் வந்த சுப்பையபிள்ளை யாழ்ப்பாணத்தவராக இங்கே வித்து வான், புலவர், பண்டிதர் என்னும் தமிழறிஞர் பலரை இலக்கணப் புலிகளாக்கியவர். தஞ்சைவாணன் கோவை என்னும் நூலை ஆராய்ந்து பதித்ததோடு, யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் மூது கெலும்பாயும் இருந்து கலாநிதி என்னும் பத்திரிகையில் பலவாய உபகரிப்புக்களைச் செய்தவர்.
மற்றவர் தமிழ் தாட்டில் இருபெரும் ஆதீனங்களின் மகா வித்துவானுய், செந்தமிழ் மணியாய் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தையும் அலங்கரித்தவர். திருவாவடுதுறை ஆதீனத் தமிழ் சைவத் தொண்டுக்கு உறுதுணையாய் நூற்றுக்கணக்கான நூல்களை நுண்ணிதினய்ந்து வெளி வரச் செய்தவர், செய்துகொண்டிருப்பவர்.
உங்களுக்குத் தெரியுமா?
விடிைகள் 1. ஐவர்ஜெனிங், 2. அரிஸ்ரோட்டில், 3. மகாவீரர், 4. ஏனக்குளம், 5. ரூஷியா, 6. முத்து, 7. நூறுகோடி 8. உணவுண்ணும்போது, 9. அப்படியேயாகுக, 10. அனிமோ மீற்றர், 11. பத்துருத்தல், 12. பச்சை, மஞ்சள், 13. லிஸ்ரா, 14. ஸ்பெயின், போத்துக்கல், 15. பிருன்ஸ், 16. கொட், 17. வியட்னும், 18. ஒன்பதாயிரம் மைல், 19. தோமாஸ்பெயின் 20. பல்ரிக்.
* தென்னுடு புதைபொ
 

வைற் செய்தி w 23
Western Opinion of Tamil
it is not perhaps extravagant to say that in its poetic form the Tamil is more polished and exact than the Greek, and in both dialects with its borrowed treasures, more copious than the Latin. in its fullness and power, it more resembles English and German than any other living language.
- Dr. Winsley yw
ܥ݂ܳ
The mode of collocating its words follows the logical or intellectual order more so than even the Latin or Greek.
- Dr. Schimid
AS . . . A.
Perhaps no language combines greater force, with equal brevity, and it may be asserted that no human speech is more close and philosophic in its expression as an exponent of the mind. The sequence of things - of thought, action and its results - is always maintained inviolate.
- Rey. P. Percival
X
The Tamil Language is extraordinary in its subtlety and sense of logic. As it is known to us it is the
product of a very long period of a somewhat elaborate civilization.' m
- Dr. G. Slater
சென்ற நூற்றண்டில்:
கிழக்கும் மேற்கும் 'கிழக்கு கிழக்குதான் மேற்கு மேற்குதான்
கிழக்கும் மேற்கும் ஒருபோதும் ஒன்முகா' என்றுபாடிய மார்க் ருவெயின் என்னும் ஆங்கிலப் புலவர், 1896 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்து இரண்டு பேருரைகள் நிகழ்த்தினர்.
மில்க்வைற் தயாரிப்புகள் மில்க்வைற் தயாரிப்புகளில் ஒன்பது வகையான உற்பத்திப்பொருட்கள் நவமணிகள்போற் பெயர் பெற்றவை, சிறந்தவை, தரமானவை. உடம்புக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் அவை சுத்தம்தருவன. அவற்றின் பயனை அநுபவத்திற் கண்டறியலாம்.
- 9ങ്ങഖ - மில்க்வைற்நிலசோப், நியூ மில்க்வைற்சோப் மெடிகேட்டிற் சோப், பேபி ரப்பிளற், நீம்சோப், பார்சோப், சலவைப்பவுடர்,
நீம் தூபம், ஒலிவ் ஸ்நானப்பவுடீர்.
ருட் செல்வம் உடையது ?

Page 25
மில்க்வைற் தாப
மில்க்வைற் த 1927ஆம் ஆண்டில் கு ஆரம்பித்த தர்
sir?ar W
மில்க்வைற்
மில்க்வைற் தொழிற்சாலையைப் பன்மடங்காகப்
தருகை நீண்ட சிவதர்மவள்ளல் பாரியார் தடாத கை மங்கை நல்லா6
மில்க்வைற் செய்தி தனியொ முன்ஞன் பாடநூற்ச இந்துச
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு. தி.
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் "சிவறெ
கெளரவ ஆசிரியர்: திரு. க.
 
 
 
 

6 தம்பதிகள்
ாபனத்தை டிசைத் தொழிலாக நதை தாயர்
திருமதி மீனுட்சிப்பிள்ளை
பெருப்பித்துப் பன்முகப்பணிகள் செய்துவரும் b க. கனகராசா அவர்களும், # திருவாட்டி நாகம்மா அவர்களும்
ாருவராகத் தயாரித்து வெளியிட்டுவரும் கெளரவ ஆசிரியர், பை, கல்வி வெளியீட்டுத் திாைக்கன எழுத்தானர்,
LDuti, இந்துநாகரிகம் நூலாசிரியர் க. சி. குலரத்தினம் அவர்கள்
நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் குறிப்புரவலர்" க. கனகராசா ஜே. பி. அவர்கள். சி. குலரத்தினம் 1-1-81.

Page 26
影 மில்க் வைற் தயாரி 影 நல்லா தரவு தருகின்ற உங் 第 1ங்கள் இதயபூர்
நன்றி
5 、山
*
CIEEEEEEEEEEEEEEEJ): CEJIEE
ਏ । யாழ்ப்பு: 243 ம் இ 函曹
 

IEEEEEEEEEEEEEEEEEEE
T E.
്. ġb, fil III Iġ ETGħAT 77. JITIġIJFIEI ID
L களுக்கு s
ல்லோருக் LIL ইন্দ্র i EU LDTSII
趨
業界
毫
論錢幽幽
EIEEEEEEEEEEEEEEEI고
ங்கை) தொக்லபேசி முழ
E.
-
E. D
D
E.
L