கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானம்பாடி 1982.12

Page 1
ܒ ܝܬܐ
--
※ "
 
 
 

ஈழத் துக்
க விை த ச
fÍO சிறப்பிதழ்
21
ld to Ji-'S2
போழ் நூலகம் 6ே காமராசர் சா
காந்தி புதுர் விபாளையம் (அஞ்)
வே. 15,
ஓவியம்: கைலாசநாதன்

Page 2
கல்யாண்ஜியிடமிரு
(b கடிதம்
மதிப்பிற்குரிய சிற்பி அவர்
இறுக்கமும் தற்செயலும் கூ இட்டுச் செல்லும் என்று
இன்றைக்குக் காலை கடம் மனிட்ட ராமகிருஷ்ண யை, இன்றுதான் முதலில் தேன். நிறையச் சலனங் இந்த இரண்டாம் வா சிட் ராமகிருஷ்ணனின் பேட்டியி பல திசைகளில் நான் டே திரும்பியிருக்கிறேன்.
இந்த அனுபவம் உ என்பதால், இந்த வானம் கிய உங்களுடன் இதை விழைந்தது.
நீங்கள் மறுபடியும் அவ்வப்போது தாருங்கள்.

) biji
EELeLCMMSLALASASqSqLqLALALSMSMLELELqSLEELqLqSLqLqLLLLLMMkLLqLLSLSLSSSSMSLSLSLSLSLSLSLqSLLSLSLLSLLLTLLLLL
களுக்கு ,
-ட நல்ல அனுபவங்களுக்கு படுகிறது.
யில், நீங்கள் வெளியிட்ட ‘ன் சிறப்பிதழ் வானம் பாடி
படிக்கிறது போலப் படித் களை உண்டாக்கியிருக்கிறது பு. அதுவும் கடம்மனிட்ட ன் வரிகளிலிருந்து துவங்கிப் ா து ம | ன தூரம் சென்று
உங்களால் சாத்தியமாயிற்று பாடியைத் தொகுத்துருவாக் பகிர்ந்து கொள்ள மனம்
இப் படிச் சில இதழ்களை
கல்யாண்ஜி
19 - 10 - 82

Page 3
நீண்ட இடைவெளிக்குப் வருகிறது.
எனினும் ஒவ்வொரு முறை போது கவிதை வரலாற்றுக் மாகவே உருவாகி விடுகிற
இந்த இதழ் தற்கால ஈழ வெளிவருகிறது.
அண்மைக்காலத்தில் புதுக்க புக்குரிய பல மாறுபட்ட இ பிரதிபலிக்கின்றது.
நேருக்கு நேர் பேசும் எல தேவைக்குமேல் படிமங்க3 காமை இன்ஞெரு சிறப்பு.
அலங்கார ஜிகினு வேலைக
செய்யாமல் சாதாரணச் செ மற்ருெரு தன்மை,
எல்லாவற்றுக்கும் மேலான ஆளுத்தோடு ஒன்றித்து நி1 இவைகளெல்லாம் தமிழகத் வைக்கும் என்பது வானம்

பின் வானம் பா டி வெளி
யும் வானம்பாடி வெளிவரும் க்கு அது கனமூட்டும் சம்பவ Dது
த்துக் கவிதைச் சிறப்பிதழாக
விதைத் .ویزلت بزند u3 st( வரவேற் இயல்புகளே ஈழத்துக் கவிதை
இதன் சிறப்பியல்பு. ாயும் குறியீடுகளையும் திணிக்
Zរា ឆ្នាំ குழந்தைத் தனமாகச்
Lib களுக்கு வலிமை ஏ ற்றுதல்
சுற்றிலுமுள்ள வாழககைத் ற்பது மேலுமொரு அம்சம் துக் கவிஞர்களையும் சிந்திக்க பாடியின் நம்பிக்கை.

Page 4
ஈழத்துக் கவிதைகளைத் தொகுத்து உருவாக்குவதற்கு கவிதைத் தெரிவு செய்து உதவியவர்கள்
எம். ஏ. நுஃமான் e9l . Ꮳu ] Ꮷi 9 Ꭵr # ᎥᎱ உ. சேரன்
ஆகிய நண்பர்கள். ஓயாது தூண்டி உற்சாக மூட்டியவர்
இ. பத்மநாபன். இவர்களுக்கு வானம்பாடி நன்றி தெரிவிக்கின்றது.
தொகுப்பில் விடுபட்டுப் போன ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் வரும் இதழ்களில் இடம் பெறும்.
O
இவ்விதழ் குறித்து இலக்கிய அன்பர்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிருேம்.
ஆசிரியர்
பே SôR>`R
மறைவு
O
இவ்விதழ் அச்சாகும் வேளையில் தமிழ் இலக்கியத்துக்குப் பேரிழப்பாக கலாநிதி கைலாசபதி மறைந்தார் என்ற பேரும் வேதனைச் செய்தி எட்டியது.
தமிழில் திறனுய்வுக் கலைக்கு ஆழமும் அழுத்தமும் தந்தவர்மார்க்சிய நோக்கில் விமர்சன இலக்கியத்தை வளம் செய்தவர்தமிழகத்தின் இன்றைய எழுத்துக்களைப் பெரிதும் ஆக்க சக்தியால் பாதித்தவர் - கலாநிதி கைலாசபதி,
இன்னும் அவரால் வலிவு ம் ஆற்றலும் பெற முற்போக்கு இயக்கங்கள காத்திருக்கையில் இந்த கனத்த துக்கம் நேரிட்டு விட்டது.
வானம்பாடி சிரம் தாழ்த்தி தன் அஞ்சலியைச் செலுத்துகின்றது.

மஹாகவி
சிறு புல்
கல்லடுக்கி மேலே கனத்த உருளைகளைச் செல்லவிட்டுச் செல்லவிட்டுச் செப்பனிட்ட நல்லநெடு
வீதி.
அதனில் வெகுண்டோடும் வண்டிகளில் மோதி நடப்போர் முடிவெய்தும் தீத கல
இட்டநடைப் பாதை .
இவை இரண்டின் ஓரங்கள் முட்டுகின்ற கோட்டின் முடுக்கினிலே பட்டவிழிக் கின்ப விருந்தாய், இருளில் ஒளிமின்னல் முன் பல்லைக் காட்டி முறுவலித்த பின் போய் ஒளியா ததுபோல் ஒரு புல் இருகைத் தளிர் நீட்டி நின்ருள்,
தலையில் மிளிர்கின்ற பூவொன்றைக் கூடப்
புதிதாய்ப் புனைந்திருந்தாள்.
காவிக்குயில் வாயில் காட்டிடையே பாவொன்று
கேட்டதனை ஒக்கும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கும்
பாட்டை இடை அப் பசுமையே!
நாட்டம் பிறவாகிச் செல்கின்ற பித்தர் உளத்தோடு உறவாடித் தந்தாள் உவகை.
இறவாது வேரிற் கிடந்து, வெடுக் கென்று மாரிவரப் பூரிக்கக் கண்டால், புளகம் மெய் ஊராதோ!
ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள் வாழ அவளுக்கென் வாழ்த்து.

Page 5
மஹாகவி
வீசாதீர்!
ஏதோ அவதியிலே ஏகுகிறீர்,
ஏனப்பா,
நீர்தாம் உலகு திலைமாறிப்
பாதாளத் தாழ விழாமல் அதன் வாழ்வைக் காப்பவரோ? வாழி, என் தாழ்மை வணக்கங்கள் !
ஆள்சுருளும்
வெய்யிலிலே நீர்போகும் வீதிநடைப் பாதையிலே உய்யும் வகை தெரியா ஒர் மனிதன், கை இல்லான், தூங்குகிருன் போல் கிடக்கிருன். துன்புறுத்தி வீங்கும் பசியால் விழுந்தானே!
ஆங்கயலிற் கொத்தவரும் காகத்தைப் பாரும் குறைஉயிரோ, செத்த உடலோ - தெளிவில்லை. சற்றெனினும்
நில்லாது, நெஞ்சில் நெகிழ்வேதும் காணுது. சில்லறையில் ஒன்றைச் செருக்கோடு செலுங்கால்
வீசி விடுதல் விரும்பினிர்;
வேண்டாம், ஒய். கூசும் அவமதிக்கும் கொள்கையேள்?
ஆசைமிக ஆதலினுல், காசு கணிரென்றிட அதிரும் காதுடையான; அன்னேன் கடுந்தூக்கம்
பாதியிலே
கெட்டுவிடக் கூடும்; கெடுக்காதீர். பாவம், இம் மட்டும் புலியை மறந்திருந்தான்;
கிட்டப்போய் மெல்லக் குனிந்து இடுக இல்லையெனில் உம்பாட்டில் செல்க.
இதுவே சிறப்பு.

முருகையன்
பழங்கதை
முந்தைய நாள் நாம் சில பழங்கதை கட்டினுேம்
உண்ட களைப்பால் உறங்கி எழுந்தபின் அந்தக் கதைகளை அவிழ்த்துப் பரப்பினுேம் . மேலதிகார மேம்பாடு உடையவர் பொழுதெலாம் ஏப்பமும் போதையும் நிரம்ப நடத்தும் வாழ்க்கையை நாற்பதாற் பெருக்கி, தேவ லோக சீவியம் வகுத்தோம்
மேலதிகார மேம்பாடற்ருேர் கந்தலும் பசியும் கண்களில் நீரும் -ஆகிய இவைகளே அனைத்துமாய் வாடி உழல்கிற வறுமைச் சுடுதுயர் கண்ட நாம் அத்துயர் நிலைமையை ஐம்பதாற் பெருக்கி நரக லோக நலிவினைப் புனைந்தோம்
அமரர், நரகர், அவுனர், இராக்கதர், இயக்கர் நாகர் என்பவரிடையே மன்னன். மந்திரி, பணியாள் முதலிய பதவிப் படிகளும் வகுத்துப் படைத்தோம் காதலன், காதலி. கயவன் முதலாம் சிக்கலும் சிடுக்கும் பிக்கலும் இயற்றினுேம் சதுரங்க சேனையாற் சண்டைகள் நடத்தினுேம் அஸ்திரம், ஆயுதம், சத்துரு, தோல்விகள் வெற்றிகள் மீட்சிகள் மிகவும் நிறைத்தே முந்தை நாள் நாம் சில பழங்கதை கட்டினுேம்
கட்டிய கதைகளை ஏட்டிலே தீட்டிய குருக்களோ ஏட்டையே கும்பிடத் தொடங்கினர் தூப தீபம் காட்டினர்
துதித்தார் இடையிடை அந்த ஏட்டையும் திருத்தினர் வசதிப்படி சில மறைபொருள் வாசகம் சேர்த்துப் புதுக்கினர் - சிறப்புகள் செய்தார்

Page 6
ஆட்சி ஆசனம் அமைத்தோர்க்கு இசைவாய் ஒரு சில ஷரத்துகள் ஒட்டியும் கொண்டார்
குருக்கள் ஐயா கொள்கைகள் பேசினுர் நேற்று நடந்த நிகழ்வுகள் இவையாம்
இன்று நம் குருக்கள் எம்மிடம் வருகிருர் முந்தைய நாள் நாமே கட்டிய கதைகளைக் கட்டளைச் சட்டம் என்று காட்டுவார் ஏட்டிலே உள்ளவை எவற்றையும் ஏற்பதே சீல நெறி எனத் திருவாய் மலர்கிறர் ஷரத்துகள் காட்டியச் சட்டம் பேசிக் கோட்டிலும் ஏறுவார் கொள்கையை நாட்ட!
வியாக்கியானங்களும் விருத்தியுரைகளும் மாபாடியங்களும் வகுத்து விரிக்கிருர்
அவரோ மிகவும் அடித்துப் பேசுவார் நெடுக நெடுக நம் செவிகளில் அவர் தம் ஆதரவாளரின் குரல்களும் அதைக்கும் முந்தைநாட் கட்டிய கதைகளை நாமே இன்று நம்பி வருகிருேம்

நீலாவணன்
D-D6)
மரணித்துப் போன எங்கள் மானுகப் போடிப் பெரியப்பா, நீர் ஓர் பெரிய மனிதர்தான்! பெட்டி இழைத்தும், பிரம்பு பின்னல் வேலைசெய்தும், வட்டிக்குளத்து வரால் மீன் பிடிக்கக் கரப்புகளும் கட்டி விற்றுக் காலத்தை ஒட்டும் ஒருகிழவன். என்றே நம் ஊரறியும் , நேற்றுவரை W
பத்துநாள் தொட்டுப் பகலிர வாய்ப் பாய்மீதில், வைத்தியமே இன்றி, வயிற்ருலடியோடும், சத்தி எடுத்தும், வாய் சன்னி பிசத்தியும், செத்தும் பிழைத்தும் கிடந்தீர்
சுவரோரம் .
"எட்டுநாளாக இரணம் எதும் குடலுக்குட் செல்லவில்லை!" என உருகி உம்மனைவி வள்ளி, புளுங்கல் அரிசவிந்த வெந்நீரை அள்ளி உமக்குப் பருக்குகையில், நீர் - அவளை,
ஐம்பது ஆண்டாய் அனுபவித்துக் கொண்டதற்கும், ஒன்பது பிள்ளைகளை உற்பவித்துப் பெற்றதற்கும்,
ஈற்றில் உமக்காய் இரவுபகல் கண்விழித்து, ஊற்றை அளந்ததற்கும், உம்குறைகள் கேட்டதற்கும் ஈடாக,

Page 7
ஒர்வார்த்தை யேனும் இயம்பாமல் போய்விட்டீராமே! புலம்புகிருள் வள்ளியம்மை!
நாய்படாப் பாடுமது நோயிலவள் பட்டதுண்மை என்ருலும் . . . .ஒர்வகையில் ஆனந்தம் வள்ளிக்கு! என்னவென்ருல் - தன் புருஷன் மானுகப் போடிக்கும் எத்தனைபேர் சொந்தம்! அதோ, எக்கவுண்டன், என்ஞ்சினியர் வைத்திய கலாநிதிகள் வர்த்தகர், பேராசிரியர் சத்தா சமுத்திரம்தான் சாதிசனம் என்பதனுல்!
தந்திகிடைத்து மிக நொந்துபட்டுவந்தார்கள் அந்தி வரைக்கும் எதும் ஆகாரம் தின்னுமல் குந்தியிருந்து, குளறி அழுதார்கள்! ஐந்தாறு காரில்
இரவே ஊர்போய் விட்டார்!
எத்தனைபேர் சுற்றமிந்த ஏழைக் கிழவனுக்கு! இத்தனைநாள் மட்டுமிது யார்க்கும் தெரியாது! உண்மையினைக் கண்டெங்கள் ஊர்-விரலை மூக்கில் வைக்கும் வண்ணம் மறைவாக வாழ்ந்தீர்! இறவாமல் . . . .
இன்னும் உயிரோ டிருந்தீரே யாமாகில் என்ன வகையாய் அறிவோம் உறவினரை! செத்தாலும் செத்தீர் நும் செல்வக் குடும்பத்தைப் பத்தியமாய்ப் பார்த்திந்தப் பாரில் வழங்கிவரும் உண்மை உறவறியும் ஊர்!

மு. பொன்னம்பலம்
வேட்டை
சந்தி விளக்கோ இருட்டைத் தறித்து வேட்டை ஆடும், அங்கு பறக்கும் ஈசல் ஆவி கொறிக்க வெளவால் வந்து பறக்கும்; கீழே வாயில் எச்சில் ஊற குந்தி இருக்கும் பூனை குறித்து வெளவால் உயிரை! ஒன்றின் உயிரில் ஒன்று உலகே வேட்டைக் காடு.
LÓGÖTGOTG)
யன்னல் இடுக்கிடையே மின்னல் தெறிக்கிறது! பருக விழிவாயின் கதவு திறபடுமுன் நழுவும் அணில் வாலா? அரவின் எயிற்றிடையே நெரியும் தவளையின்கால் கிண்ணி நடுக்கமென. இல்லை, அச்சத்துக் கழகெங்கே? சாவுக்கு ஒளியேது? c9}gb] · சா வின் நிழலல்ல! நினைவிற்குள் நிற்காது நெஞ்செல்லாம் தாணுகி உருவில்லா மன்மதனுய் ஒளிந்தும் தெரிந்தும் கஞ்சத்தனம் தன்னைக் காட்டப் புரிவதனுல் தன்பால் எமையிழுக்கும் இன்பப் புதுக்கவியா? மின்னல் கவிதையா? கவிதைக்குள் சிக்காது கவிநெஞ்சு புரிகின்ற காலத்தின் நேரத்தின் கட்டுக்கு மேலாக நிற்கும் ஒரு துடிப்பின் நிழலாய், வானப் பெருநீரில் வெட்டும்
நீர்க்கோடு!

Page 8
மு. பொன்னம்பலம்
சுய ஆட்சி
நிழல் விழுத்தாத தென்னகக் கோவில் உயர்ந்து நிற்கிறது
தனது நிழலைத் தன்னிலேயே பெய்து உள்ளழித்து தென்னகக் கோவில் உயர்ந்து நிற்கிறது
என்னை ரசி என் நிழலை ரசிக்காதே என்னிலேயே தஞ்சம் புகு, என் நிழலிடமல்ல என்னிலேயே என் ரசிப்பு, என்னிலேயே என் தஞ்சம்
மனித வாழ்க்கை கலை நிழல் விழுத்தி நீண்டு கிடக்கிறது கலை நிழலில் ரசிப்பு, கலை நிழலில் தஞ்சம் வாழ்க்கையிலல்ல வாழ்க்கையில் கலை இல்லை ரசிப்பில்லை கலையில் தான் வாழ்க்கை ரசிப்பு தன்னைவிட்டுத் தன்னைக் காண (தன்னை ரசிக்க) நிழலிடம் ஒடும் மனிதன்
மனிதச் செயல்கள் குண நிழல் விழுத்தாது தென்னகக் கோபுரமாய் எழுந்து நிற்கும் போது மனித வாழ்க்கையின் ரசிப்பிடமாய் முன்னீளும் கலை நிழல் உள்ளழித்து வாழ்க்கையிலேயே பெய்யப்படுகிறது
இப்போ, மனித இருப்பே கலை
கலை எனப்பட்ட நிழல் இருப்பெடுக்கப்பட்டுக் கணக்கு முடிக்கப்படுகிறது
கலைப்பேரேடு மூடப்படுகிறது சுய வாழ்க்கை தொடங்குகிறது.

தா. இராமலிங்கம்
GTÜLu 6îip Ulqüh?
துணைவி துயில்கின்ருள்!
குயில் இருந்து குரல் வழங்க இசை பொழிவாள்;
எழும்பாளாம்!
உறக்கம் உள்ப்புகுந்து குயிலைத் துரத்திவிட்டுக் குறட்டை கிளப்புகுது
பொழுதும் போகாதாம்! சட்டியெங்கும் ஒட்டியுள்ள அமிழ்தமெலாம் நாய்
நக்கிநக்கி நீர்வடிக்க ஒறுவாயால் ஒழுகூது
நாறுகுதே!
எழுப்பினேன் என்ன? என்ருள்.
துயில் புகுந்து
நக்கியது!
எழும்பு! கழுவு! என்றேன்
விடியட்டும் விடுங்கள் என்ருள்.
எப்ப விடியும்? இப்பானே முதற்கோழி கூவுகுது

Page 9
தா. இராமலிங்கம்
சில எழுப்பி என்ன பயன்?
மோதுரது புயல்! மூசி elpj? w மோதுரது புயல்!
கொளுத்தக் கொளுத்த விளக்கும் நூருகுது!
பெட்டியிலோ குச்சில்லை!
ஆராய்ந்து என்ன பயன்? கிலுக்கினுல் . . . . . . வெறும் பெட்டி! தடவினுல் . . . . . குறங்குச்சி!
O
ஒடியுது முறியுது நிலத்தோடு பாறுகுது ஒதுங்க இடமில்லை ஒட வழியில்லை கோழி மூலைக்குள் ஓடிப் பதுங்கூது! குஞ்சு செட்டைக்குள் ஒடுங்கி நடுங்கூது!
கூடலாய்க் கொப்பெறிஞ்சு
பந்தலிட்ட ஆலமரம் குறுக்காலே முறிஞ்சுபோச்சு அடிவாழ்ந்த குடும்பங்கள் குடிபெயர்ந்து போயிற்று
குடிபெயர்ந்து போயிற்றே!
}
தோட்டம் பயிரிட்டோம் உள்ளதெல்லாம் அள்ளிஅள்ளி இறைத்து வருந்துகிருேம்!
விளைந்ததென்ன?

வயிற்றிலே வளர்வதெல்லாம் கூன் குருடு செவிடு முடம் கனவிலே காண்பதெல்லாம் சாப்பிள்ளை சவப்பெட்டி!
வலுவிழந்து போனுேமே!
ஒடுகிற இரத்தமெல்லாம் கெட்டு வெளிறிவிட்டால் . . . . . .
செத்த சவம் மீது சிலை எழுப்பி என்ன பயன்?
O
வறளுது வறளுது பாலைவனம் ஆகிறது! குளப்பள்ள நிலவெல்லாம் பிளந்து கிடக்கிறது! நிலாவரையில் நீர் மட்டம் இறங்கூது! இறங்கூது! சுடலைக் குருவி முகட்டில் அழுகிறது நெஞ்சிலே பல்லி அடித்துச் சொல்லுகுது!
Γ
மூக்கும் முழியுமாய் வலிச்ச எலும்புருவம்
சுருண்டு மடிந்தனவே!
வெயில்வெந்து பனங்கூடல் வட்டுதிர்ந்து போயினவே!
கறையானின் கடுமுயற்சியாலே நிலம்எழுந்த கோபுரமோ முடிஉடைந்தும் அடிபிளந்தும் உருக்குலைந்து கிடக்குதுவே!
இனி என்ன? செத்த சவம்! சிலை எழுப்பி என்னபயன்?
O
உண்மை உணராமல் உள்ளதெல்லாம் வாரி உறிஞ்சியெழ விட்டிட்டு மூன்றுகுறிபூசி o முணுமுணுத்து ஆவதென்ன?

Page 10
யாழில் நரம்பு தொய்ந்தால் இசை நாதம் எழும்பாது கூடி இருக்கும் அவை குலைந்து மறைந்துவிடும்
இந்த இளம்வயதில் குறுக்காலே போய்விட்டால். . . . . .
செத்த சவம்மீது
சிலை எழுப்பி என்ன பயன்?
தூரவிடக் கூடாது துரவுகளைத் தோண்டிடுவோம் மண்ண்ை வளப்படுத்திச் சத்துப் பயிர் விளைப்போம்
சத்துப் பயிர் விளைப்போம் நெத்துப் பரப்பிடுவோம்!
ö5IT 6)ğGèg5íf
‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன் *நன்று! நன்று!’
அன்று தன்
காலத் தேரினைக் கடுவிசைப்படுத்திச் சென்றவன் மீண்டனன் சிரித்தனன் இன்று போனவன் நேற்று வந்தனனே
-மஹாகவி "பொருள் நானூறு'

சண்முகம் சிவலிங்கம்
மென்மையின் தளைகளிலிருந்து.
இருட்டில் மிதந்த இசை எங்கோ தூரத்தில் ஓர் வானுெலி படிப்பு அறுந்து விழ.
பூர்வ ஜென்ம உணர்வுகள். ஓர் பூ மொக்கு அவிழ்ந்தது
தங்க மகரந்தத் தூள்கள் பிள்ளையார் கோயிலின் முன்னுள்ள வெண்ணிற பூ வாசனை
இந்த உணர்வால் என்ன பயன்? இந்த கனவுகள் எதுவரை?
பாலைவனம் சுடுமணல்
வெட்டுக்கிளி
தார் ருேட்டு வாகனங்கள்
நிதானம்
சமநிலை தளம்பாத சைக்கிளின் ஹெண்டல்... இந்தக் கத்தி விளிம்பிலே எப்போது கால் வைத்தோம்?
புருவைப் பொத்திப் பிடித்து கூட்டினுள் அமுக்கியபின் புத்தகத்தைத் திறக்கிறேன் இருட்டிலே இன்னும் அந்த இசை கேட்கிறது நீண்டு மெலியும் புகைக் கோலம் அது இப்போது மரண கீதம் புரு இறந்த ஊர்வலம்
என் விழி நனைகிறது கறுத்த எழுத்துகள் கரைகின்றன
மல்லிகை, நவம்பர் 171

Page 11
சண்முகம் சிவலிங்கம்
நண்டும் முள் முருக்கும்
சிவப்புப் பூக்கள் முள் முருக்கம் மைனுக்கள் வரும் , போகும்.
இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன்.
நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள்.
அடியில் உள்ள பெரிய பூக்களை மைனு கோதும், அவை பின்னரும் கோத, நுனியில்,
வரவர, சிறிய நலிந்து நீண்ட மொட்டுகள், நண்டின் பூப்போல ஆமாம் நண்டின் பூப்போல அம்மா சொன்னுள்; நண்டு சினைக்க பூக்கும் முள்முருக்கு, முள்முருக்கு பூக்க சினைக்கும் நண்டுகள்
நாளைக் காலை சந்தைக்குப் போகலாம்
(அலை-14)

எம். ஏ. நுஃமான் நேற்றைய மாலையும் இன்றைய காலையும்
நேற்று மாலை நாங்கள் இங்கிருந்தோம்.
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில் வாகன நெரிசலில் சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்ருேம்
பூபால சிங்கம் புத்தகநிலைய முன்றலில் நின்ருேம். பத்திரிகைகளே ப் புரட்டிப் பார்த்தோம்
பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப் பார்த்தவா றிருந்தோம் பலவித முகங்கள் பலவித நிறங்கள் வந்தும் சென்றும் ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்
சந்தைவரையும் நடந்து சென்ருேம் திருவள்ளுவர் சிலேயைக் கடந்து தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி பண்ணை வெளியில் காற்று வாங்கினுேம் *றிகலின்’ அருகே தேனீர் அருந்தி - சிகரெட் புகைத்தோம் ஜாக் லண்டனின்
*வனத்தின் அழைப்பு திரைப்படம் பார்த்தோம்
தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில் சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினுேம்,

Page 12
இன்று காலை
இப்படி விடிந்தது. நாங்கள் நடந்த நகரத் தெருக்களில் காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன குண்டுகள் பொழிந்தன: உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன
பஸ்நிலையம் மரணித் திருந்தது மனித வாடையை நகரம் இழந்தது கடைகள் எரிந்து புகைந்துகிடந்தன குண்டு விழுந்த கட்டடம் போல பழைய சந்தை இடிந்து கிடந்தது வீதிகள் தோறும் டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன.
இவ்வாருக இன்றைய வாழ்வை நாங்கள் இழந்தோம். இன்றைய மாலையை நாங்கள் இழந்தோம்
அலை-10 மார்கழி, 1977
ESGOT 60cfff
O
முன்னை இட்ட தீ அடிமை வாழ்விலே பின்னை இட்ட தீ தேயிலைத் தோட்டத்திலே இன்னும் இட்ட தீ இனவெறுப்பிலே அன்னை லங்கையின் ஆத்மா வேகுதே
-சிற்பி

எம். ஏ. நுஃமான்
6յf Աւն ճնմI
மன்னுதி மன்னன் மண்ணில் இறங்கினுன் மந்திரிமார்கள் வாழ்த்துப் பாட மதகுரு மார்கள் மந்திரம் ஒத அதிகாரிகள் சாமரம் வீச அரச தூதுவர் அமர்ந்ததைக் காண மன்னுதி மன்னன்
மண்ணில் இறங்கிஞன்.
முடியினைக் கழற்றி ஒருபுறம் வைத்தான் உடைகளை எல்லாம் உருவி எறிந்தான் கச்சையை மட்டும் இறுக்கிக் கட்டி சேற்றில் இறங்கினன். . . ஏர்பிடித் துழுதான்.
சேற்றிலே இறங்கி ஏர்பிடித் துழுதான்
னிநமக் கென்ன! இனிநமக் கென்ன!
வெள்ளி விதைக்கப் பொன்னே விளையும் அட்சய பாத்திரம் அமுதம் இறைக்கும் வானம் இருண்டு மழையாய்ப் பொழியும் வயல்வெளி எங்கும் பசுமையாய் நிறையும் கிழவிகள் எல்லாம் குமரிகள் ஆவர் கிழவர்கள் எல்லாம் குமரர்கள் ஆவர் வாலிபமே, இனி வசந்த காலமே!
மன்னுதி மன்னனே ஏர்பிடித் துழுதான்
இனிநமக் கென்ன! இனிநமக் கென்ன!
ஆடுக ஆட்டம் பாடுக பாட்டு மன்னுதி மன்னனே மண்ணில் இறங்கினுன் இனிநமக் கென்ன இனிநமக் கென்ன
ஏர்பூட்டு விழா: *வக்மருள்' என்ற சிங்களப் பதத்தின் தமிழ் வடிவம். இதுபண்டைய சிங்கள மன்னர்கள் செய்தஒரு விவசாயச் சடங்கு. அரசன் ஏர்பிடித்து உழும் இச்சடங்கின் மூலம் அமோக விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இலங்கை அரசு இதற்கு புத்துயிர் அளிக்க முயல்கிறது. W
O

Page 13
அ. யேசுராசா,
கல்லுகளும் அலகளும்
அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன எங்களது பெண்கள் குழந்தைகள், முதியோர் *வேட்டை நாய்களால் விரட்டப்பட்டனர் “கைப்பற்றப் பட்ட பூமியில் அந்நியப் படைகளாய் அபிநயித்த சக்திகள்’ ஒன்பது உயிரின் அநியாய இழப்பு ஓ..! அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
துயர்நிறை நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினுேம்: சிந்தப்பட்ட இரத்தத் துளிகளாய்ச் சிவந்த ‘செவ் விரத்தம்பூக்கள்' நாள்தோறும் சின்னத்தி னடியில், எதையோ எமக்கு உணர்த்திக் கிடக்கும்.
மறுபடியும் இரவில் கொடுமை நிகழ்ந்தது செத்த உடலை
ஒநாய்கள் சிதைப்பதாய், மரச் சின்னத்தை
"அவர்கள் அழித்தனர் மக்கள் வலியவர்கள் மறுபடியும் வெளியிடை எழுப்பினர் கற்றுாண்; தம் நெஞ்சின் வலிய நினைவுகள் திரண்டதாய்!
மீண்டும் ஒரு முறை 'காக்கியின் நிழல்' கவிழ்ந்து படிந்தது, "அதிகர்ரசக்திகள்’ கற்றுணை விழுத்தினர் அலைகள் ஒய்வதில்லை மறுபடியும் மக்கள் எழுப்பினர் சின்னம்: கல்லுகளில் ஒன்பது மெழுகு திரிகள்

மெழுகு திரிகள் குறியீடாய் நின்றன: தியாகச் சுடரைத் தம்முள் கொண்டதாய். . . . .
கற்களின் புறத்தில் மக்கள் தம் சுடுமூச்சு நாளும் நாளும் பெருகி யேவரும் அடக்கு முறைகள் நிகழ நிகழ உஷ்ணவட்டம் விரிவடை கிறது!
உஷ்ண வட்டம் நிதமும் தாக்கையில் கல்லும் உயிருறும், நாட்கள் வரும்; கல்லும் உயிருறும் நாட்களும் வரும்!
கற்கள் உயிர்த்துச் சுடரை வீசையில் அடக்கிய சக்திகள் தப்பமுடியுமா? அடக்கிய சக்திகள் தப்பமுடியுமா?
சோதிச் சுடரில் தூசிகள் பொசுங்கல்,
நியதி.
கற்கள் உயிர்த்துச் சுடரை வீசையில் மக்கள் சும்மா படுத்துக் கிடப்பரா? கற்கள் உயிர்க்கையில். . . . கற்கள் உயிர்க்கையில் . . . . மக்களும் அலையாய்த் திரண்டே எழுவர்!
மக்கள் அலையாய்த் திரண்டு எழுகையில் பொசுங்கிய தூசிச் சாம்பல்கள் யாவும் அந்த அலையிற கரைந்துபோகும்! அந்த அலையிற் கரைந்தே போகும்!
O 1974 6), 10
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் அன்று கூடியிருந்த ஐம்பதினுயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீது பூரீலங்கா பொலிசார் பெரும் தாக்குதலை நிகழ்த்தினர். அதனுல் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

Page 14
அ. யேசுராசா
LÉu 6 ÜLIT 586ûT ão
சமாந்திரமாய்ச் செல்லும் கரிய தார் ருேட்டில், நடந்து செல்கிறேன். கண்களில், பிரமாண்டமாய் நிலைகொண்டு கறுத் திருண்ட டச்சுக் கற்கோட்டை, மூலையில், முன்னுேரைப் பய முறுத்திய தூக்கு மரமும் தெளிவாய்
பரந்த புற்றறை வெளியில் துவக்குகள் தாங்கிய காக்கி வீரர்கள்: அரசு யந்திரத்தின் காவற் கருவி என்றும் தயாராய் வினைத்திறன் பேண அவர், அணிநடை பயின்றனர்: சூழ்ந்த காற்றிலும், அச்சம் பரவும்
முன்னூறு ஆண்டுகள் கழிந்தனவாயினும் நிறந்தான் மாறியது: மொழிதான் மாறியது: நாங்கள் இன்றும், அடக்கு முறையின் கீழ்......

சேரன் ஈழத்துக் கவிதையின் அடிச்சுவட்டில் "கவிதாநிகழ்வு" பற்றிய சில குறிப்புகள்
யாப்பு வழிக் கவிதைகளின் செல்வாக்கு மிகப் பரந்த அளவில் இருந்தபோது கவியரங்குகள் அதிகளவிலும், பெரும்பாலும் ஒரு மரபு போலவும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இலங்கையில் எழுபதுகளின் தொடக்கதுள்) வரையில் கூட இந்தப் பாதிப்பு அதிகம் இருந்தது. குறித்த தலையங்கங்களுக்கு அமைய-கீறிட்ட இடம் நிரப்புதல்-போலத் தயாரிக்கப்படும் பெருந் தொகையான கவிதைகளுக்கே இவை வழிவகுத்தன. (இவைகளைக் கவிதைகள் என்றும் அழைக்கலாமா? என்பது வேறு ஒரு விஷயம்) அரங்கில் வாசிக்கப்படும் போது, வரசிப்பவரின் முகபவத்தாலும், உணர்வு வெளிப்பட்டாலும் தொற்ற வைத்தலில் வெற்றி பெறுகிற சில ஆரங்கக் கவிதைகள், அச்சில் படிக்கக் கிடைக்கிறபோது, எல்லாவற் றையும் இழந்துபோய் அவலமாகத் தரிசனம் தருவதையும் காண நேர்கிறது.
அரங்கில் வாசிக்கப்படுகிற ஒரு கவிதை செவிப் புலன் வழி யாக நம்மீது இறங்குகிறது. இத்தகைய கவிதைகளில் பிரதான அம்சமாகச் சப்தம் விளங்குகிறது. எனினும் இத்தகைய சப்தத்தி லும் பல்வேறு படிநிலைகள் (degrees) உண்டு. சிந்து வகைகளையும் சந்தப்பாக்களையும் வெற்றுத்தனமாக எழுதி வாசிப்பதில் கிடைக் கிற சப்தத்திற்கும்
வேலியில் முள்ளில்லாத வெண்டியை மெல்லத் தாண்டக் கோழிகள் விழித்துக் கொண்டு குசுகுசுத்தன மாங்கொப்பில்.
என்ற வரிகளில் கிடைக்கிற சப்தத்திற்கும்,
இருந்தது எங்கள் தாத்தாவுக்கோர் யானை இருந்தது கொம்பன் யானை. . .
என்று தொடர்கிற வரிகள் தரும் சப்தத்திற்கும் உள்ள வித்தியாசம்
இப் படிநிலைகள் ஒன்றிரண்டைச் சுட்ட உதவலாம். சந்தவிகற் பங்களையும் சிந்துகளையும் மீறி எமது அன்ருடப் பேத்க வழக்கிற்கு
மிகவும்_அண்மியடநிலையில் கவிதையின் மொழியினே அரங்ே

Page 15
கவிதைகளூடாகவும் கொண்டு வந்தவர்களையும் எம்மால் காணக் கிடக்கிறது. இவர்கள் சிந்து வகைகளையும் சந்தப்பாக்களையும் தவிர்த்து ஆகவல் கலிவெண்பா போன்றவற்றுலும் இறுக்கம"வி" வரையறை தேவைப்படுகிற கட்டளைக் கலிப்பாக்கள் போன்ற வற்றிலும் கூட இவற்றைச் செய்துள்ளனர். மாதிரிக்கு, மஹாகவி, முருகையன், நீலாவணன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் இதனை ஒரு தளத்திலும், கந்தவனம், ஜீவா, ஜீவரத்தினம், சடாட்சரம், பாண்டியூரன், பார்வதி நாதசிவம் போன்றவர்கள் இன்னெரு தளத்திலும் இதனைச் சாதித்துள்ளனர்
ஆணுல் இன்றைய கால கட்டத்தில் கவிதையானது கட்புலன் வழி பாதிப்பு ஏற்படுத்தும் கட்புலக் கலையாக்கமாகவே பெருமளவு மாறிவிட்டது. சப்தத்தின் முக்கியத்துவம் கு  ைற ந்து (அல்லது அற்றுப் போய்) மனதால் வாசிப்பதன் மூலம் அறிவார்ந்த ரீதியாக உணர்வு பரிமாற்றம் நிகழ்த்துகிற ஒரு நெறியாக இது அமை கிறது. கட்புலக் கலையாக்கத்தின் போதுகூட இன்றைய கவிதை களில் சப்தம் இயங்குகிறது. ஆணுல் மிகவும் மெல்லிய ஒரு இழை யாகவே அது சாத்தியம். கவிதை முழுவதும் சேர்ந்த ஒரு ஒத் தசைவு மூலம் மட்டுமே இது வும் சாத்தியம். கவிதை முற்று முழுதாக சப்தத்தை உதறி விட்டு வசனமாவது சாத்தியமில்லை. என்றுதான் நினைக்கிறேன். கவிதை சப்தத்தை முற்ற முழுதாக உதறி "வசனத்தின் வலிவைப் பெற்றுவிட வேண்டும்’ என்றபடி எழுதிய க. நா. சு. போ ன் ற வர் கள் கவிதைகளே எழுதாமல்
வசனம்தான் எழுதியுள்ளார்கள். அநாகரிகமான உதாரண ம் கணையாழி யில் க. நா. சு எழுத முயற்சித்த சுயசரிதை.
இலங்கைக் கவிஞர்கள் சிலரின் விசேஷ கவிதா இயல்புகளுக்கு அவை அரங்கினூடு வெளிப்பாடு பெற்றமையும் ஒரு காரணமாக அமையலாம் என்பது போல செ. யோகராசா ஒரு முறை “அலை" யில் எழுதியிருந்தமையை இங்கு குறிப்பிட்டு, செவிப்புலன் வழி யாகவும் கூட கவிதைகளாக வெற்றி பெற்றவை சிலவற்றை உதாரணிக்கிறேன். நீலாவணனின்' 'பாவம் வாத்தியார்’ நுஃமானின் ‘அதிமானிடன், தாத்தாமாரும் போர்களும்.’ இப்படி. எனினும் இவை எண்ணிக்கையில் மிகவும் அதிகம் என்று சொல்ல முடியாது.
தமிழ்க் கவிதை வரலாற்றில் கணிசமான அளவு காலம் செவிப் புலன் வழிக் கவிதைகளின் ஆளுகைக்குள்ளேயே இருந்தது. கவி தையின் தோற்றம், மிகவும் நீண்ட தமிழிலக்கிய மரபு ஊடாக அதன் படிநிலை மாற்றங்கள் அனைத்தும் கூட செவிப்புலன் வழிக்

கவிதைகளை இயல்பானதாகச் செய்துள்ளது. இத்தகைய செவிப் புலன் வழிக் கவிதைகளின் உயர்ந்த பேருகப் பாரதியைக் கொள் ளலாம் கணிசமான அளவு பாரதிதாசனும், கலைவாணனும் கூட, மொழியாட்சியும் கவித்துவமும் தரிசனமும் உடைய கவிஞர்களின் இருப்பால் செவிப்புலன் வழிக் கவிதைகளும் தமக்குரிய உன்ன தங்களை அடையவே செய்யும். துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் இவ்வகைக் கவிதை பரிணுமம் பெருமல் ஒரு Blind Alley யிலே முடிவுற்று விட்டது. அதன்பின் இன்றுவரை நாம்பார்க்க நினைக் கிற போதெல்லாம் ஓசையை முற்றும் அல்லது பெருமளவு உதறிய குறியீட்டு படிமம் சார்ந்த 'புதுக் கவிதைகளைக் காணமுடிகிறது. க்விதையை இன்று தமிழ்நாட்டில் இவற்றுக்கிடையேதான் காண,
செவிப்புலக் கலையாக்க நெறி சில குறிப்பிட்ட நிலைமைகளில் அழுத்தம் பெறுவதும் சாத்தியமானதாயிருக்கிறது. சமூக இயக்கங் களின் எழுச்சி, சமூக வாழ்நிலையில் ஏற்படுகிற போராட்ட காலங் கள் போன்ற காலகட்டத்தில் கவிதையை உணர்ச்சியோடு பரி மாறுவதற்குரிய சூழல் இருக்க நேரிடுவதால் செவிப்புலன் வழிக் கவிதைகளின் விகசிப்பும் அத்தகைய சூழலில் இயல்பானதே. எனினும் வேறு சந்தர்ப்பங்களிலும் கவிதை எழுதுபவர்களின் Involvement ஐப் பொறுத்தும் இத்தகைய கவிதைகள் சாத்தியம். சாதாரணமான வாழ்க்கை நிகழ்வுகள், அன்ரு ட அலுவல்கள் போன்றவற்றைக் கவிதைகளில் கையாள நேர்கிற சந்தர்ப்பங்களி லும் இத்தகைய செவிப்புலக் கலையாக்கமே ஆதிக்கம் செலுத்தி வந்ததாலும், இக்கால கட்டத்தமிழ்க் கவிதை யாந்திரிகமாகவும் மரபு. யாப்பு இறுக்கங்களைப் பேணியதில் அர்த்தங்கள் சிதையவும் உயிரற்ற பிறப்புக்களாக அமைந்தமையால்- முற்று முழுதாக இதை உதறிய டிராப்பற்ற கவிதை பிறந்ததைக் காண்கிருேம்.
ஆனல் ஈழத்தைப் பொறுத்தவரை கட்புலன்வழிக் கவிதைக ofsór நோக்கம் அல்லது கட்புலக் கலையாக்க நெறி மரபார்ந்த கவிதைகளிலிருந்து இயல்பாகவே பரிணுமம் பெற்று வந்ததை அவதானிக்க முடிகிறது. ஈழத்தில் இந்நெறியைத் தோற்றுவித்து ஒர் குறித்த பரிணுமம்வரை அதனை முன்னெடுத்துச் சென்றவராக மஹாகவி கருதப் படுகிறர். இத்தகைய கட்புலக் கலையாக்கம் அதன் மறுபுறமாக பேச்சுச் சந்தத்தை அல்லது பேச்சோசையைப் பிரதான_பண்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகையதொரு களிதா சூழ்நிலையிலே கவியரங்குகளில் ‘கவிதை"கள் சாத்தியமாகி உள்ளன. பேச்சோசைக் கவிதைகள் என்று பெருவழக்காக நாம் குறிப்பிடுகிற கவிதைகள் செவிப்புலன் வழியாகவும் பாதிப்புள்ள னவாக அமைந்தன என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

Page 16
புதுக் கவிதைகளின் வரவின் பின் ன ர் இத்தகைய செவிப் புலக் கலையாக்கம் ஏறத்தாழ அற்றதாயிற்று. உயர்ந்த வசனத் திற்கு அல்லது யாப்பை உதறிய கவிதைக்கு சப்தம் மிகவும் மிகவும்
மெல்லிய தொனியிலேயே சாத்தியம் என்பதை முன்பே எழுதியுள்
ளேன். பெரும்பாலான புதுக்கவிதைகள் இம் மெல்லிய தொனியும் அற்றன. எனவே புதுக் கவிதைகளை அரங்க நிகழ்வாகக் கொண்டு வருதல் கவியரங்கை-உரையரங்காக மாற்றி விடுகிறது. என்னுல் கேட்க முடிந்த திருச்சி வானுெலிக் கவியரங்குகள் சில. இவற்றை விட ஈழத்தில் கேட்க முடிந்தசில - எல்லாம் இதனையே எனக்குச் சொல்லியுள்ளன.
உண்யிைல் ஈழத்தில் எமது சூழ்நிலையில், காலத்தின் தேவை யில் கவிதைகள் மிகவும் பொதுவான் வாசகர்களுக்கும் கேட்போ ருக்கும் அண்மையில் செல்ல வேண்டிய அவசியம் உணரப் பட்டுள் ளது. இன்றைய ஈழத்தின்சமூக, அரசியல் நிலை இத்தகைய நிலை நோக்கி எம்மை நகர்த்தியுள்ளது, ஒடுக்கப்படுகிற, ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்ற அடியில், எமது அன்ருட ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அவசரகால நிலை துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் நமக்குள்ளேயே பாரளுமன்ற - இப்போதைய அரசியல் தலைமையின் இயலாத் தனத்தை வெளியிடவும்- இத்தகைய தளங் களில் எழுதப்படுகிற கவிதைகள், அச்சிடப் படுகிற பொதுசனத் தொடர்பு சாதனங்கள் சென்றடைய கூடியக் வட்டங்களை மீறி மிக வும் நெருக்கமாய்ப் பொதுசனங்களைச் சென்றடைய வேண்டியிருக்
கிறது.
பாரம்பரியமான கவியரங்குகள் இயல்பிழந்து போனதாலும், இப்போதும் பழைய கவிஞர்களே ஆங்காங்கு அறுசீர் விருத்தங் களையும், ஆசிரியப்பாக்களையும் ஓதி வருவதாலும் இதனை மீறிய ஒரு கவிதை மொழிதலின் தேவை உணரப்பட - கவிதா நிகழ்வு எனும் ஒருபுதிய நிகழ்ச்சி முதன் முதலில் 1981 வைகாசியில் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.
2
நூறு வீதமும் அரசியல் கவிதைகளை உள்ளடக்கிய இக்கவிதர் நிகழ்வில் எம். ஏ. நுஃமான், கவியரசன், ஆதவன் ஆகிய மூன்று கவிஞர்கள் பங்கு கொண்டனர். ஏனைய கவியரங்குகளிலி ருந்து இந்நிகழ்வு பின்வரும் முறைகளில் வேறு பட்டிருந்தது. ஒன்று, குறித்த பொதுத் தலைப்பு எதுவும் கிடையாது. இதுவரை காலமும் தாம் எழுதிய கவிதைகளில் தாம் விரும்பிய கவிதைகள் சிலவற்றை வாசிப்பிற்கெனக் கவிஞர்கள் தெரித்தனர். இரண்டா

வதாக, அவரவர் கவிதையை அவரவரே வாசித்தல் என்று இல் ஃாது மூவரும் ஒவ்வொருவருடைய கவிதை வாசிப்பிலும் சற்றே றத்தாழ ஒரு நாடக பாணியில் பங்கு கொண்டனர். சில நேரங் களில் கூட்டாகவும், சிலநேரங்களில் தனித்துத் தனித்தும், இடை யிட்டும், மாறி மாறியும் கவிதையின் மொத்தப் பாதிப்பும் கேட் போருக்கு இறங்கும்படியான ஒரு முயற்சியாக இது அமைந்தது. மூன்ருவது இத்தகையதொரு நிகழ்விற்கு ஆரம்ப ஒத்திகைகள் வேண்டியிருந்தது. இத்தன்மைகளில் இது மரபு வழிக் கவியரங்கு களிலிருந்து வேறுபட்டதால் 'கவிதா நிகழ்வு’ என்ற பெயரையும் சூட நேர்ந்தது. நிகழ்வின் முடிவில் கேட்போர்களின் அபிப்பிரா யங்கள், விமர்சனங்கள் இடம் பெற்றதன்படி இம் முயற்சி மிகவும் தாக்கமானதாகவே அமைந்தது என உணரக் கூடியதாக இருந்தது. 'ன்னரும் பாரதி கவிதைகள் சிலவற்றை ஒரு ஒழுங்கு முறையில் தொகுத்து பாடல் இடையிட்ட ஒரு நிகழ்வாக அமைத்து கல்லூ சிகளிலும், பாரதி நூற்ருண்டு விழாக் கூட்டங்களிலும் அறிமுகப் படுத்தப்பட்டபோது மேலும் கவிதா நிகழ்வினுடைய வட்டம் பெரி தாயிற்று. மு மு வது ம் பாலஸ்தீனக் கவிதைகளைக் கொண்ட நிகழ்வு இன்றும் நிகழ்த்தப் பட்டது.
இதன் பிறகும், பல்வேறு சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களில் த னித் து ம் , நாடகங்களுடனும் கவிதா நிகழ்வு இடம் பெற்றபோது எமது கவிதைகள் மிகவும் இலகுவா கவும், உரத்தும் கேட்போர்களை அவர்கள் மிக வும் சாதாரண ஜனங்களாக இருப்பினும் தொற்றிக் கொள்வயை அவதானிக்க முடிந்தது. கிராமங்களில் நிகழ்த்தப்பட்ட கவிதைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. குறிப்பாக மஹாகவி நுஃமான், யேசுராசா, கவியரசன், ஹம்ஸத்வனி, ஆதவன், சபேசன், ரவி, போன்றவர்களதும் மொழி பெயர்க்கட்பட்ட பாலஸ்தீனக் கவிதை கள் ஒன்றிரண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டன மேற்குறிப்பட்ட எல்லாக் கவிஞர்களும் நிகழ்வுகளில் அடிக்கடி பங்கு கொள்ளா விட்டாலும், பங்கு கொண்ட கவிஞர்களோடு, கவிதை வாசிப்பதில் தேர்ச்சியும் பயிற்சியும் கொண்ட வேறு சிலரும் இணைந்து கொண் டனர். கவிதையின் நிகழ்த்திக் காட்டலே பிரதானமாக இடம் பெற் றது. இறுக்கமான அவசர நிலை பிரகடனத்திலிருந்த போதும் உச்ச கட்ட ராணுவக் கெடுபிடிகளின் போதும் கூட பல இடங்களில் இவற்றைச் செய்ய வேண்டியிருந்தது; செய்ய முடிந்தது.
நிகழ்வில் இடம் பெற்ற மிகப் பெரும்பான்மையான கவிதைகள் ஈழத்துச் சிறு சஞ்சிகைகளில் பிரசுரமானவை என்பதும் தற் செய லானது அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து நவீன கவி தையில் இன்றளவும் இழக்கப் படாமல் புதிய வடிவங்களூடாக

Page 17
வருகிற சப்த்ததின் தொடர்ச்சி இதனைச் சாத்தியமாக்கிற்று. கிட் டத்தட்ட வசனம் போன்ற ஒன்றை மிகவும் சுலபமாக அரங்கில் வெற்றிகரமாக வாசித்து விட முடியும், ஆனல் அது கட்புலனுக் கூடாகவரும்போது ஏற்படுத்துகிற பாதிப்பு எவ்வளவு தூரம் இருக் கிறது என்பதைப் பொறுத்தே அக்கவிதை, எல்லா அர்த்தங்களிலும் கவிதையாக உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியலாம்
தீவிரமான அரசியல் சூழல், துரித நடவடிக்கை வேண்டி நிற் கிற காலம்-இத்தகைய பின்னணியில் கவிதை எவ்வாறு இயங்க வேண்டுமென்கிற பிரச்சனையில் எங்களுடைய அனுபவம் கவிதையை ஒரு குறுகிய வட்டத்தினுள் அல்லாது அதற்கப்பாலும் கொண்டு செல்ல வேண்டியதை உணர்த்திற்று. இத்தகைய சந்தர்ப்பங்க ளில் உண்மையாகவே ஒரு கவிதைக்கு இருக்கிற வலிமையையும் நேரடியாக உணர்த்திற்று.
யதார்த்தத்தில் கவிதை எத்தகைய சூழலிலும் இவ்வாருன நெருங்கி வருதலைச் செய்யத் தவறுகிற இடத்தில் தமிழ்க் கவிதை மியூஸியத்திற்க்குப் போகிற அபாயம் உண்டுதான் என்று கருது வதிலும் அவ்வளவு தவறில்லை எப்படியிருப்பினும் ஈழத்துக் கவிதை இன்னும் வெகு காலத்திற்கு இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள் ளாது என்பதற்கு உரிய அறிகுறிகள் மிகத் தெளிவாகவே உள்ளன.
போதிய அளவு ஈ ழ த் து க் கவிதைகளின் பரிச்சயமின்மை, வாசிக்கக் கிடைக்காமை போன்ற காரணங்கள், இவ் விஷயங்க ளைத் தமிழக, மலேசிய வாசகர்கள், சுவைஞர்கள் உணர்வதில் ஒரு தற்காலிகப் பிளவை ஏற்படுத்தக் கூடும். ஈழத்துக் கவிதையோடு ஓரளவிற்கேனும் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இத் தன்மைகளை அவதர்னிக்கக் கூடியதாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன், இறுதியாக, இந்தக் குறிப்புகள் அறிமுகம் மட்டுமே என்பதையும் நான் சொல்லி ஆகத்தான் வேண்டும்.
景 景

சி, சிவசேகரம்
இலையுதிர் கால அரசியல் நினைவுகள்
உலர்ந்த காற்று மரங்களை உலுப்பும் மெலிந்த கிளேகளில் முளைத்துப் பழுத்த இலைகள் மெல்ல மரத்தின் நீங்கி வலிய காற்றின் வழியில் ஒடும் பிரிந்த இலைகள் தரைமேல் வீழ மரங்கள் மேலும் செழுமை நீங்க விழுந்த இலைகள் சருகாய் மாறப். பூங்கா மெல்ல இடு காடாகும் பறவைகள் போவன அணில்கள் அகல்வன இரவில் மரங்கள், பேய்கள் கையில் எந்த நிற்கும் துடைப்பம் போல. இலையுதிர் காலம் இத்தனை கொடிதோ?
நாட்கள் குளிர் மிக மரங்கள் மீதும் மண்ணின் மீதும் வெண்பனி வீழ வெண்பனிப் படலம் பூமியை மூட, பறவைகள் இன்றி. அணில்கள் இன்றி மரங்கள் மட்டும் நேராய் நிற்க கம்பளி உடைக்குள் மேனி நடுங்கினும் வெண் பனி அழகை மறுத்தற் கில்லை
மீண்டும் மலர்கள் மண்ணைப் பெயர்க்கப் பறவைகள் மெல்லப் பாடத் தொடங்க அணில்கள் தாவ வசந்தம் வந்தது மரங்கள் மீது இலைகள் போர்த்தன.
இலையுதிர் காலம் கொடியது தானுே?

Page 18
சி. சிவசேகரம்
மக்களப் பிரிந்த அறிவாளிகள்
புதரின் இருளில் மின் மினியின் வால் விளக்கு தன்பாட்டிற் சைகை செயும்
ஒளிரும்; ஒய்ந் தொளிரும்
இரவின் திரையில் கடலின் நெடுந் தொலைவில் துள்ளும் அலைகளிடைத் தோணி விளக்கினுெளி xமின்னும், விழி சிமிட்டும்
மின் மினி போற் தோணி விளக்கொளி போன் வானப் பெரு வெளியில் புவியின் வெகு தொலைவில் கோடி பலகோடி தொகை தாரகைகள் மூழ்கி யெழும் அவற்றுட் பலகோடி பரிதியினும் ஒவ்வொன்றும் பன் மடங்கு ஒளி பெறினும்
அத்தனையும் ஒரு சேர்ந்தும் அருகில் ஒளிர் நிலவின் இரவல் ஒளியினுெரு சிறு அளவை உலகினுக்குத் தருவதற்கு முடிவதில்லை!
மக்களுக்கு அருகிலிலா அறிவும் அறிஞர்களும் தொலைவில் ஒளிர்கின்ற தாரகைகள் போன்றனவே!

வ. ஐ ச. ஜெயபாலன்
நம்பிக்கை
துணை பிரிந்த குயிலொன்றின்
சோகம் போல
மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம்
காற்ருடும் நாணலிடை
மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள்
ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது
என்னருகே
வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கிறேன்.
என்ருலும்
எங்கோ வெகு தொஃலவில்
இனிய குரல் எடுத்து
மாரி தனைப் பாடுகிருன்
வன்னிச் சிருன் ஒருவன். O

Page 19
வ. ஐ. ச ஜெயபாலன்
வைகறைப் பூக்கள்
நெடு நாளின் பின் சன்னலைத் திறந்தேன் இனிய வசந்த இளைய ஞாயிறின் புத்தொளி தன்னை எதிர் கொள்வதற்காய் துன்பச் சிலந்தி வலைகள் சிதைய தூசிகள் கனக்கும் சன்னலைத் திறந்தேன் எங்கும் எங்கும் மலர்கள் சிரித்தன எங்கும் எங்கும் பரவி நிறைந்த வசந்த நாளின் வைகறைச் செக்கல் இருளின் தீட்டைப் புனிதம் செய்தது மனிதனை விடவுமோர் மகத்துவம் உண்டோ? வாழ்வை மிஞ்சுமோர் இழப்பும் உண்டோ நினைவின் விரல்கள் ஓயாதுருட்டும் விரக்தி மணிகளின் செபமாலையினை பாதாளத்துள் வீசி எறிந்தேன் நொறுங்கிப் போன ஊர்களின் நடுவில் நொடித்துப் போக மறுத்து நிமிர்ந்த மட்டக் களப்பு : மானிடன் போல என்னையும் உணர்ந்து குதூகலமடைந்தேன் புத்துணர்வோடு தென்றலை நுகர்ந்தேன் எங்கே அந்த வானம்பாடி? அடைத்துக் கிடந்த அறையின் வெளியே பள்ளியெழுச்சி பாடிய பறவையே இதோ இதோ எனது கதவுகள் திறந்தது ஈடன் பூங்கா நடுவில் அமர்ந்து விலக்கப் பட்ட கனிகளைச் சுவைப்போம் எமது வைகறை ஒளியைத் தடுத்தால் கைலயங்கிரியின் மருப்பையும் தகர்ப்போம்
ஆ 1979 இல் மட்டக்களப்பைப்
புயல் அழித்தது.

கவியரசன்
Les Go GUIT (golf Loy GDOT to
ஒவ்வொரு நாளும்
இரவு, எல்லோரும் படுத்த பிற்பாடு நாய்களின் அரவம் குன்றி நட்சத்திரங்கள் வெறும் வானுடன்
தனித்த
போது
தூங்கப் போவேன்.
சனங்கள் நெருங்கிய சந்தடியில் ஓடவும் முடியாது இருக்கவும் தெரியாது மூச்சு வாங்கிச் சரிகிறதான ஒரு கனவில், பாதி இரவில்விழிப்பு வரும்.
ஒரோர் சமயம் கடலும்- நதியும் மஞ்சளாக, கார்த்திகைப் பூக்கள் புறம் புறம் விரிய நடத்தலும் வரும்.
காலையில் எழுந்ததும் கைகள் ஒருபுறம்
கால் ஒரு திசையில் முகமும் தான் எங்கோ சிதறிக் கிடக்கும் அனைத்தையும் பொருத்தி நிமிர்ந்து வந்து எனது பகலை உன்னிடம் விற்கிறேன்.

Page 20
கவியரசன்
புதிய கிடுகுகள்; பழைய வேலி
முன்பே சொல்லியிருக்கலாம் உனது வீட்டின் பின் இவ்வளவு நீலமான கடல் என்று. "அல்போன்ஸோ' என்று கூப்பிட. மூக்குக் கண்ணுடியைச் சரி செய்தபடி நீ வருகிருய், நாம் நடக்கிருேம். தென்னைகள் நிறைகிற கரை எப்போதும் அனைத்துக்கொள்ள என்று இருக்கிற கடல் அமர்கிருேம் முழங்கால் அழுந்த . மார்புக் குவடு நெளிந்தபடி எதிரே இருந்து, கிடுகு பின்னுகிற பெண் ஒருத்தி; உலகத்தைக் காலடியில் மிதிப்பதென சலனமற்று-நேராய் ஒரு கணப் பார்வை பிறகு, தொடர்ந்து பின்னுவாள் பழைய கிடுகு வேலிகளை மீளவும் புதுப்பிக்க எண்ணங் கொண்டாள் போல. எப்போதும் சுற்றிவர வேலிகள் தான் "அவர்கள்’ வெளியில் நின்று அடைப்பார்கள் சிறகு வெட்டிய பறவையாய் நீயோ உள்ளிரு. கிடுகுகளையும் பின்னிக் கொடு.
ஒரு நூருண்டுகள் இவளைப் போல எத்தனைபேர்கள் என்பதாய் ஒருமுறை திரும்பிற்று கவனம் "என்ன சொன்னுய்? என்று கேட்கிறேன் அல்போன்ஸோ மீண்டும் சொல்லத் தொடங்குவான். 'பரந்தனில் இருந்து...”*

மு. புஷ்பராஜன்
அகலிப்பு
இரவே! இதயம் படிந்த தடைகள் துடைக்க ஏக்கமாக
நானிங்கு.
ஒளியிலோ அமைதியின் சிதைவு இரைச்சல்கள் வேகங்கள் இதயத்தின் கீற்ருெளி உயிர்ப்பை அணைக்க முயலும்
ம்ென் கருந் துகிலை எங்கும் வளரவிடு இரைச்சல்கள், வேகங்கள் எல்லாம் மடிய இரவின் சங்கீதம் உலகை நிறைக்கட்டும்
விண்மீன்கள் கண்ணசைவில் நிலவின் பாலொளிப் படர்வில் காற்றின் மென் தழுவல் உயிர்ப்பில் என் கீற்ருெளிச் சுடர் அலைப் புருமல்
அகலித் தெழும்.

Page 21
நீண்ட ஆண்டுகளின் பின் சந்தித்த போது இதழ் நுனி வழிந்த புன்னகை இறுகிக் கொள்ள, முகமறியாதவள் போல் கடந்து சென்குய்
கையில் குழந்தை
சிறு இடைவெளியில் கணவன் s?...
கொடியும்; கொடிபடரும் கொம்பும்
“கல்லானுலும் புல்லானுலும்'" சமூகம் திணித்த ஒழுக்கக் காற்றில்
நீயோர்
அலையும் பஞ்சு
இவற்றினிடையும் நூல் நிலைய வேப்பமரமும் நீண்ட தூர பஸ் பயணங்களும் உயிர்ப்புற உன் மன அலையில் என் கலம் ஆடும்.
மு. புஷ்பராஜன்

சு. வில்வரத்தினம் நிலவுக்கு எழுதல்
யாரிட்டார் சாபம் இந்த நிலவுக்கு? கறையோடு உடன் பிறந்தும் கண்ணை உறுத்தாது காலமெலாம் பொழிந்து நிலவுக்கு நேர்ந்ததென்ன? காவிய காலக் கனவே சிதைந்ததென இன்று வெறுங் குறுமதியாய்... யாரிட்ட சாபமோ? காலங் காலமாய் கன்னியர்க்கு உதாரணித்தும் ** நிலவின் துகிலைக் கலை’’யென்று உடுத்தியும் உரித்தும் வேசையாடித் தீர்த்த கவிஞரின் வெறித்தனம் ஒய “காவிய நிலா’ வின் காலம் தேய்ந்தது கால வளர்ச்சியில்
காத்திருந்து,
இதோ பாரென்று கற்றை விரித்தது விஞ்ஞான நிலா மனிதக் காலடிச் சுவடுகள் ஏந்தி **சுவடு பற்றி எழுக!’’ என்ருர்த்தார் எழுந்தவர் என்ன கண்டோம்? விண்ணிலும் வேலி போடத் தொடங்கினர் விஞ்ஞானத்தார் நிலவின் குண்டு குழிகள் எங்கள் நெஞ்சிலும் கொண்டேகி நிலவுலாவிய நிகழ்வு என் செயும்? அன்று ஆதி சிவன் சூடினுன் இன்று நாம் சூடுவோம் என்று வல்லரசுகள் எழுந்து வல்லூருய்ப் பறக்க வாழுகின்ற பூமியிலேவிஞ்ஞான யுத்த காண்டம் விளைவித்த மனுச்சாம்பல் புழுதி கண் மறைக்க நிலவெங்கே தோன்றும்? நிலவின் கிரகணமே நித்திய தரிசனமாச்சுநிலவுக்கு எழுதலே இவரின் நீசத்தனங்களை
மறைக்க எழுப்பும்
மாயையாச்சு
மாயை முகில் திரை கிழித்து கறையிலா நிலவினிக் காலிக்குமோ?
நாமெல்லாம் தூவெண் மதி சூடும் நாளென்ன வெகு தொலைவோ?

Page 22
சு. வில்வரத்தினம்
9-UITW6)
கோளங்கள் நகரும் போது ஒன்ருேடொன்றுராய்ந்து கீதம் ஒன்றெழுப்புவன,
மானுடரின் காதுகளை எட்டாத கோள கீதம் கடவுளர்க்கே கேட்கும் என்ருர் கிரேக்கர்.
ஞாலமே தூங்கும் ஓர் நள்யாமம் தூங்காத நகூடித்ரங்கள் நாள் முற்றத்தில் நிற்கிறேன். மனமோ முகையவிழ்ந்து பால்வழி முற்றத்தில் பவனிக்க
அதிர்ந்தது
திடீரென்றென் உட்செவி நரம்புகள் பேரண்ட ரீங்காரம் உள்ளுராய்ந்து கோள கீதம்
மனங் கிழிந்து போன அக் கணங்களில் நான் மானுடன் அல்லன்; மானுடனே அல்லன்
நீங்களும் நின்று பாருங்களேன் ஓர் நக்ஷத்ர ரர்வில் ஒரு கணம் உள்ளுருவிச் செல்லும் கோள முட்டிகளின் கள்ளிரைச்சல்.

உமா வரதராஜன்
வரும் நேரம்
ஒரு மரங்கொத்திப் பறவைபோல் என் மனசில் அந்த மனுேஹரி
DT2, ஐந்தரைக்கும், ஆறுக்கும் இடையில் இந்தப் பாதை வழியாய் கண்ணுக்குத் தெரியாப் பூக்கள் நோகாமல் அவள் செல்வ*ள்.
இரண்டு கொப்பிகளையும் கொம்பாஸ் பெட்டியும் தொட்டுப் போய்.
முழங்கால்
வேண்டாம் . . . . . . . . வேண்டாமென விலக்கி விடினும் ரகஸியம் சொல்லியே தீரும் கூந்தல் .
கோது தகர்த்து, பறக்கக் காத்திருக்கும் கூடொன்றின் குஞ்சு மாதிரி பஸ்ஸில் இருந்து இந்தப் பாதை வழியாய் மறுபடியும் மனுேஹரி என்னை கடக்கிறபோது வெயிலும் துன்பத்தில் மாயும்.
சாம்பல் பறக்க விழித்துக் கொண்ட நெருப்பு மாதிரியும்
set -- இது என் நெஞ்சா, மத்தளமா? என்றும் எண்ண வைக்கும் என்னை
ஒரு மரங்கொத்திப் பறவையாய் என் மனசில்
அந்த மனுேஹரி. O

Page 23
எச்செம் பாறாக்
5 T6ùû
அந்த மழை கால நாளில் போம் பொழுது பார்த்தேன். இளம் பச்சை! பொடித் தூவலாய் மண் உரோமக் கண் சிலிர்ப்பாய் அந்த இடத்தில் குழந்தைப் புல்லுகள் தலை வந்த பிரசவம்.
விடுமுறைக்காய்ப் போய்விட்டேன்.
மழைகால முடிவில் மீண்டும் வந்து சேர்ந்தேன் சின்ன இலைகள், இது பெண்பிள்ளைகள் புல்லுகள் எல்லாம் ஆண் பிள்ளைகள்!
நான் அங்கு நடந்தேன்; திரிந்தேன்.
மீண்டும் ஒரு நாள் பார்த்தேன்.
சருகாய், சவமாய் கைகளை மண்ணுள் விட்டுப் பிடித்தபடியே செத்துக் கிடந்தன.
விம்மலுடன் அந்த மழைகால நாளை நினைத்து மீண்டும் போவேன்.

ஹம்சத்வனி நண்பர்களுக்கு
தினம் தினம் எமைக் காவலர் துரத்தவும் தோட்டங்கள் கிழித்து புகையிலை பொடிபட ஒடும் எம் கால்கள் உறுதி பெறவும் எழுதுக கவி என்ருெரு ஆணை. சிறைக்குள் இருந்து வருகிறது.
நண்பஈ.
வெஞ்சிறைக்குள்ளிருந்து விழி நீருக்கும் என்னை நினைத்து ஏங்காதே! பிரிவு என்பது கொடுமைதான் அழுவதால் இனி ஆவதொன்றில்லை கருக்கு மட்டைகளால் வரியப்பட்ட யாழ்ப்பாணத்தின் வேலிகளை மீறி வெளியே பார்,
காக்கி ராணுவம், கண்கள் சிவந்து, கொலைவெறி பிடித்து ஏவி விட்ட வேட்டை நாய்கள் போல்...
தினம்தினம் வெந்து சாவதைக் காட்டிலும் அந்தியை உலுக்கும் ஊழிக்காற்றில் கலந்து நீ போராடுவானுெடு விண்முகடும்
'66). D, வதைசெயும் வெஞ்சிறைச் சுவர்களும் வேரொடு அறுத்து நீருய்ப் போக...
ஆயிரம் ஆயிரம் இளைய தமிழர்கள் குருதிச் சேற்றில் மடிந்தாலும் எழுக! நண்பனே. . .
t

Page 24
ஊர்வசி
வேலி
நட்சத்திரப் பூக்களை எண்ண முடியாமல் மேலே கவிழ்ந்தபடி கூரை. ஒட்டடைகள் படிந்து கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட உயரமாய், ஆனலும் திறந்தபடி அதனூடே காற்று; எப்பொழுதும் மிகவும் இரகசியமாய் உன்னிடம் என்னை அழைக்கின்ற காற்று. என்னை சூழவும் சுவர்கள்தான் . *நச். நச்" என்று ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிற பல்லிகள் ஊர்கிற சுவர்கள் அவையும், ஒட்டடைகள் படிந்த எப்போதோ கறுத்துப் போனவை.
உனக்காக நான் தனிமையில் தோய்ந்தவளாய் இங்கே காத்திருக்கிறேன் பழைய பஞ்சாங்கங்களில் புதிதாக,
நம்பிக்கை தருவதாய் ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி,
எப்போதுதான் என்னுல் நீ வசிக்கின்ற அந்த திறந்த வெளிக்கு வரமுடியும்? உன் இருப்பிடம் இங்கிருத்து வெகு தொலைவோ? உன்னிடமிருந்து இரண்டு சிட்டுக்குருவிகளை இங்கே அனுப்பேன்!
அல்லது இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது...!

ஊர்வசி
96) bij6) LU g)J6)
நிழலே இன்றி
வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம் இரங்கி அழுகிறது.! வேலி முருங்கையும் மெளனமாய் இலையுதிர்க்கும் அரவ மொடுங்கிய நள்ளிரவுகள். ஆள் காட்டி மட்டும் ஒற்றையாய்க் கூச்சலிடும் சேலைக் கொடியில் அவனது வேட்டி ஆடும். நெஞ்சில் திகில் உறையும் விழித்தபடி, தனித் திருத்தலில் மனம் வெந்து தவிக்கும். அன்றைய முன்னிரவில் நெஞ்சில் ஆழப் பதிந்தவை மீண்டும் கருக் கொள்ளும்; அச்சம் சுண்டியிழுக்கும். அந்த இரவில் இருள் வெளியே உறைந்து கிடந்தது. ஐந்து ஜீப்புகள் ஒன்ருய்ப் புழுதி கிளப்பின. சோளகம் விசிறி அடித்தது. என் ஆழ் மனதில், அச்சம் திாளாய் எழுந்து புரள அவனை இழுத்துச் சென்றனர். பல்லிகள் மட்டும் என்னவோ சொல்லின . . கூரைத் தகரமும் அஞ்சி யஞ்சி மெதுவாய் சட சடத்தது. காலைச் சுற்றிய குழந்தை வீரிட்டழுதது;
விடுப்புப் பார்க்க அயலவர் கூடினர். . நீட்டிய துவக்குகள் முதுகில் உறுத்த அவன், நடந்தான் அவர்களுடன், அந்த இரவில், ஐம்பது துவக்குகள் ஏந்திய கரங்கள் என்னுள் பதித்த சுவடுகள் மிகவும் கனத்தவை. அந்த இரவு, அவர்களுடையது..! O

Page 25
ஆதவன்
வெளியிலிருந்து ஒரு குரல்
யன்னலின் வெளியே தலையசைக்கும் இரு தென்னைகள் சற்று நிமிர்ந்தால்
சுழலும் ஃபான்.
பக்கத் தறையில், மிதந்தபடியே மெல்ல மோதுகின்ற நகையொலிகளும் பேச்சுகளும் படிக்கட்டுகளில், செருப்படிக்கும் டொடக், டொடக் . கல கல வென ஃபைல்களும் நோட்சுகளுமாய் பெண்பாலும், ஆண்பாலும்
வெறித்தபடி வெறிச்சோடி என விழிக்கும் நீலவானம் , தகித்தபடி எறித்தபடி எரிக்கின்ற வெய்யில்
எல்லாம் வெளியே..,
உள்ளே நான் தனித்தபடி சகித்தபடி புத்தகங்களோ விரிந்தபடி
இது என்ன இருப்பு? இதில் என்ன இருப்பு?
புத்தகங்களை மூடு வா வெளியே சுலோக அட்டைகளும் கோஷங்களுமாய் அதோ.. அதோ நீள்கிறதே ஊர்வலம்
உள்ளே உனக் கென்ன இருப்பு வா வெளியே.

பாலகுரியன் நெருக்கம்
இன்னுெரு தடவை மேலே பார்க்கிறேன் வாடையின் சிலிர்ப்பில் தேக்கம் இலைகளூடே 6. f6 D,
கரு முகில்கள்
y Tri, 95 fib(56řir எவ்வளவு மாறிவிட்டது. நேற்றும் இங்கேதான் சந்தித்துக் கொண்டோம் நிலம் நனைந்திருக்கவில்லை வானம் கூடத் தெளிந்தே இருந்தது. எறுமபுகளதான புற்றிலிருந்து தலையை நீட்டி வளைந்த கோடுகளை விழுத்தியது எவ்வளவாய் அந்த அழகை வியந்தோம்
இன்னும்
ஏதோ சொல்கிருய் காதலின் அர்த்தத்தை @6ుడి நிதர்சனத்தையே கண்டுவிட்ட மாதிரிப் பேசுகிருய்
அட? என்னவாய் மாறிப் போனுய்
மரங்கள் இலை சொரிந்தகாலம் உச்சி வெயில் தலைக்கு மேலும் சிலவேளை கன்னத்திலுமாக நடக்கையில்
எ0க்குள் ஏதோ இன்னதென்றே இல்லாமல் பேசத்தான்
மனதுள் உருக்கொள்ளும ஆணுலும்
சருகுகள் நசிந்து நொறுங்கிய ஒலிதான் எழுந்துதேய விடை பெறுவோம்
நாளையும்
இங்கு வருவோம்
வருகையில் வானம் கருமுகில்கள் எல்லாமே எம் தலையில் முட்டிக் கொள்ளலாம்...! Ο

Page 26
நா. சபேசன்
5 TG) lo
மஞ்சளாய் பழுத்த இலைகள் சொரியும் பூவரசவேலிகளும், வயல் வெளியெலாம் ஓரங்காட்டும் பனைகளும் நிறைகிற
எனதுரரில் காகங்கள் கூட கதந்திரமாய்த் சிரித்த காலமொன்றுண்டு.
செம்பாட்டு மண்ணிலும் மிளகாயும், வெண்காயமும் நிறைய, நிறைய விளைந்திருக்கும் சாமம் வரையும் திருவிழா நடக்கும்; கலகலத்தபடி நடந்து செல்வர் எமது பெண்கள் நிலாமுற்றத்தில் எமதன்னையர்
பாடலிசைத்தனர்
அந்நிய மணம் வீச ஆரம்பித்த எமதுாரில் மக்களுக்கே தெரியாத கால்களெமது ஒழங்கைகளை ஆக்கிரமித்தது.
நிழலையும் பூவையுந் தந்திருந்த குடைவாகை மரத்தின் கீழொருநாள் இளைஞர் இருவர் குருதியில்கிடந்தனர் அவர்களின் உடல்களை கொம்புலுப்பிப்பூக்கள் அஞ்சலி செய்தன.
சுவாமிகாவிய பக்தர்கள்மீதும் திருக்கைவால் பட்டது. வாகனத்தினது தலை தூரவிழுந்தது. திருவிழா போய் பூசை மட்டுமே நடக்கத் தொடங்கியது;
அதுவும் போயிற்றுப்போ.

6lв. (3иллеѣлтдrт *ழத்தின் புதுக் கவிதை வளர்ச்சிஒரு கண்ணுேட்டம்
ஆரம்பகாலம்
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் தோற்றம், ஏறத்தாழ நாற்பதுகளிலே தோன்றிய மறுமலர்ச்சிக் குழுவினருடனேயே ஆரம்பமாகிறது; ஈழத்துப் புது க் கவிதையின் தோற்றத்தினையும் இவர்களுடனேயே தொடர்பு படுத்த வேண்டியுள்ளது.
மறுமலர்ச்சிக் குழுவினரின் எழுச்சிக்கான காரணிகள் விரி வஞ்சி நிறுத்தி, இவர்களது புதுக்கவிதை முயற்சிகட்கு உந்துசக்தி யளித்த சமகாலத் தென்னிந்திய இலக்கிய ப் போக்கை மட்டும் இங்கு விதந்துரைக்கலாம்.
புதுக்கவிதை முயற்சிகட்குக் களமமைத்த "மணிக்கொடி’ *சூருவளி’ முதலியவற்றைத் தொடர்ந்து ‘கலாமோ கினி’ (194) யும், ‘கிராம ஊழிய’ (1943}னும் வெளிவரத் தொடங்கின. கிராம ஊழியன் வெளிவரத் தொடங்கிய காலப் பகுதியிலேயே ஈழத்திலும் யாழ்ப்பாணத்தில் மறு மலர்ச்சிச் சங்கம்’ உதயமாகிறது. இச்சங் கத்தினர் வெளியிட்ட 'மறுமலர்ச்சி' சஞ்சிகையிலும், 'பாரதி' சஞ் சிகையிலும், 'ஈழகேசரி’ பத்திரிகையிலும் எழுதிவந்த இலக்கியப் படைப்பாளிகட்கு மேற்கூறிய தென்னிந்தியச் சஞ்சிகைகளோடு நெருங்கிய உறவு ஏற்பட்டது. இவர்களது ஆக்கங்களும் அவற் றிலே வெளிவந்தன. புதுக்கவிதை பற்றிய கலாமோகினி விவா தங்களிலே ஈழத்தவர்களும் பங்கு பற்றினர். ஆக, இங்கு நாம் வலி யுறுத்துவது ஈ ழத் தி ன் ஆரம்பகாலப் புதுக்கவிதை முயற்சிகட்கு சமகாலத் தென்னிந்திய இலக்கிய முயற்சிகளும் உந்து சக்தியும் களமும் அமைந்திருந்தன என்பதேயாம்.
ஆரம்பகால ஈழத்துப் புதுக்க வி ைதய ஈ ள ருள் "வரதர்’ (தி, வரதராசன்) "சோதி" (கோ. தி யா க ரா சா ) 'விஜயன்’ தங்கம்' "ராம்" முதலியோர் குறிப்பிடத் தக்கவராவர். ஈழகேசரி யிலும் மறுமலர்ச்சியிலும் வெளிவந்த இவர்களது புதுக் கவிதை களுள் பெரும்பாலானவை வாழ்க்கை பற்றிய சிற் சில சிந்தனைக ளையும், இயற்கை பற்றிய அனுபவங்களையுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. இக்காலப் பகுதியிலேயே தென்னிந்தியாவில், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா. முதலியோர் இத்தகைய உள்ளடக் கங்களைக் கொண்ட புது க் கவிதைகளையும் எழுதி வருகின்றமை கவனிக்கத் தக்கது.

Page 27
ஈழகேசரியில் (13-06-1943) ஒர் இரவினிலே’ என்ற தலைப்பில் வரதர் எழுதியிருந்த புதுக் கவிதையை ஈழத்தின் முதற் புதுக்கவிதை என்று (இதுவரையிலான புது க் கவி  ைத ஆய்வு நிலையில்) கருத வேண்டியுள்ளது.
இருள்! இருள்! இருள்!
இரவிலே நடு ஜாமத்திலே
என்கால்கள் தொடும் பூமி தொடங்கி
கண்பார்வைக் கெட்டாத மேக மண்டலம் வரை
இருள்! இருள்!
பார்த்தேன்,
பேச்சு மூச்சற்று
பிணம் போல கிடந்தது பூமி’’ எனத் தொடர்ந்து செல்லும் இந்நீண்ட புதுக்கவிதை. இவ்வேளை யிலேயே "மழைக்கூத்து’ என்ற புதுக் கவிதையினை ந பி " யும் 'கலாமோகினி'யில் எழுதுகின்ருர். முன்னவர் கவிதை இயற்கை அனுபவங்களை அச்சங்கலந்த உணர்ச்சியுடன் வெளியிட்ட இவ ரது கவிதை அவ்வனுபவங்களை வியப்புணர்ச்சியுடன் தருவதைக் கவனிக்கலாம்
* சோதி”, "க" முதலியோர் வாழ்க்கை நிலையாமை பற்றிய கருத்துக்களை வெளிப் படுத்துகின்றபோது, விஜய ன் ' "ராம்’ "தங்கம் முதலானேர் வாழ்க்கை பற்றிய நம்பிக்கைக் குரல் எழுப் புகின்றனர். சிரஞ்சீவி குரல் கொண்டு’ என்ற தலைப்பில் எழுதிய புதுக்கவிதையின் ஒருபகுதி இவ்வாறு அழைக்கின்றது:-
'நீலக் குமிழ் விடும் ஆழமான நதிகள் நவமான செல்வமணி திரளும் கனிகள் இவற்றின் மேல் புதுயுகம் பூத்தது அதன் சிகரம் உயர்ந்துயர்ந்து உழைப்பும் வியர்வையும் இனிது என்று முழக்கம் செய்கின்றது சிரஞ்சீவிக் குரல் கொண்டு!!.
உலகத்தை இன்பச்சுரங்கமாகக் கண்டு கவிதை படைத்தார் தங்கம் ‘வெட்ட வெளியாகத் தெரிந்த இடம் இன்று விண்ணையெட்டும் சொர்ண பூமியாகத் தெரிகிறது அந்தகாரத்தின் குகையிலே அதிசய தீபம் அதன் ஒளியிலே அகிலமே இன்பச் சுரங்கம்’ என்று அவரது புதுக் கவிதையின் ஒருபகுதி அமைகிறது. இதே காலப் பகுதியில் கு. ப. ரா. வின் சில கவிதைகளும் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. இவ்விடத்திலே,

* வாழ்க்கை ஒரு வெற்றி ஒரு துடிப்பு ஒரு காதற்பா ஒரு இசை'
எனத் தொடங்கும் கவிதை நினைவுக்கு வருகிறது.
எனினும் ஆரம்பகாலப் புதுக்கவிதையாளர் பெரும்பாலும் இயற்கை பற்றி யு ம் வாழ்க்கை ப ற் றி யும் உள்ளடக்கமாகக் கொண்டே புதுக்கவிதை படைத்தனர் என்றில்லை. ஈழகேசரி மறு மலர்ச்சி முதலியவற்றில் எழுதியோர் இவ்வாருக, "பாரதி' யில் சமூகச்சார்புடைய, முற்போக்கு சார்ந்த கருத்துக்களையும் உள்ள டக்கமாகக் கொண்ட புதுக்கவிதைகளை எழுதியிருந்தமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, "வேலை நிறுத்தம்’ என்ற தலைப்பிலே "வித்யா' எழுதியிருந்த கவிதையை இங்கே நினைவு கூறலாம்.
'ஜில் என குளிர்ந்த ஆழமிருந்த ஆறு அதன் கரையிலே அசையாத சமாதி போல தன்னந்தனியே நிற்கும் தொழிற்சாலைக் கட்டிடம் உதவாத சிமிந்திக்கூடு. எத்தனை ஜன்னல்கள். அர்த்தமற்ற விண்வெளிகள். ஒளிகெட்ட ஒணுன் கண்போலத் திருதிரு என்று விழிக்கின்றன. புகை மண்டிமண்டி வேகமாகக் கனிந்த இருள்மூட்டம் நர்த்தனம் செய்யும் புகைக்கூண்டு இன்று மத்தியான சங்கு ஊதவில்லை அப்பா வேலைக்கு போகவில்லை வேலை நிறுத்தமாம்'
தென்னிந்தியாவிலே, வானம்பாடிக்குழுவினர் புதுக்கவிதை யின் உள்ளடக்கத்தைச் சமுதாய சார்புடையதாக மாற்றுவதற்கு முன் ஈழத்திலே அத்தகைய முய ந் சி கள் ஆரம்பித்துவிட்டமை குறிப்பிடத்தக்கதேயாம் இவ்வாறே மீரா, நா. காமராசன் முதலி யோர் புதுமையான உவமைகளைக் கையாளுவதற்கு முன் ஈழத்தி லே இத்தகைய முயற்சிகள் தொடங்கியிருந்தன எடுத்துக்காட்டாக,
* சூரியன் வந்த வேலையைச் செய்யட்டும் கூட்டுபவளைப்போல பணக்காரன் ஏழையை வதைக்கட்டும் அரிவாளைப்போல உடம்பெடுத்தவன் உயிரோடு போராடட்டும் நண்பர்களைப்போல’’ என்ற அடிகளை இங்கு சுட்டலாம்.
இருட்காலம்
இத்தகைய ஆம்பகாலப் புதுக்கவிதை முயற்சிகள் தொ
டர்ந்து வளர்ச்சியடையவில்லை; சென்று தேய்ந்திருந்தமைக்குக்குச் சில காரணங்களுள் புதுக்கவிதை எழுதவேண்டுமென்ற ஆர்வம்

Page 28
பிரக்ஞைபூர்வமாக ஏற்பட்டிருக்கவில்லை. அத்துடன் புதுக்கவிதை கள் வெளிவந்துகொண்டிருந்த சஞ்சிகைகளும் நின்று விடுகின்றன தவிர, இத்தகைய புதுமுயற்சிக்கு "உயர்மட்டத்தில்’ போதிய வர வேற்பிருக்கவில்லை. என்பதும் கவனிக்கத்தக்கது. ஈழகேசரியில் வெளிவந்த புதுக்கவிதையொன்று பற்றி அதன் உதவி ஆசிரிய ருக்கு, அதன் முன்னுள் ஆசிரியரான சோ. சிவபாதசுந்தரம் ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதினர்: இன்னென்று. இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பது என்ற பெயரில் தகுதியற்றவைக்கு இடங்கொடுத்து பத்திரிகையின் கெளரவத்துக்கு மதிப்புக்குறைப்பது. இதில் மிகவும் கவனஞ் செலுத்தவேண்டியது அவசியம். எரின் வசனகவிதை மட்டமானது என்பது என் அயிப்பிராயம். இங்கு பல நண்பர் களும் அப்படித்தான் கருதுகின்றனர்', மேலும், தென்னிந்தியப் புதுக்கவிதையாளரிடமும் புதுக்கவிதை எழுதுவதில் ஒர் அசமந்த போக்கு இப்போது நிலவியது. புதுக்கவிதை முன்னுேடிகளுள் ஒருவரான ந பி பதினறு வருடங்கள் (1946-1961) புதுக்கவிதை முயற்சிகள் எதிலுமே ஈடுபடாத ஒரு விடயத்தை மட்டும் இங்கு நினைவு கூர்வோம்.
இனி, ஆரம்பகாலப் புதுக்கவிதைப் பண்புகள் சிலவற்றை பின் வருமாறு தொகுத்துக் கூறலாம்; (அ) ஆரம்பகாலம் புதுக்கவி தைகள் ‘வசனகவிதைகள்’’ என அழைக்கப்பட்டமை. (ஆ) ஆயி னும், வசன நடைக்குரிய இயல்புகளிலிருந்து விடுப்படாதிருந்தமை (இ) தென்னிந்தியாவில் பிரக்ஞை பூர்வமான முயற்சியாக தோன் றியது போன்று இங்கு அமையாமை (ஈ) படிமம், குறியீடுகள் முதலியன அருகியும் உவம, உருவகத்தொடர்கள் அதிகமாயும் és T6ÖÖT I. i l i i - t 6ÖT
புத்தெழுச்சிக் காலம்
மீண்டும் இருண்ட இடைக்காலத்தினுள்ளே தென்னிந்திய *எழுத்து சஞ்சிகையின் ஒளிக்கதிர்கள் நுழைந்தன. அறுபதுகளை யொட்டி இது நிகழ்கிறது. ‘எழுத்து’, ஈழத்தவர்கட்கு, புதுக்கவி தை பற்றிய கட்டு68)ரகள் மூலம் உந்து சக்தியளித்தது மட்டுமன்றி சிலர் எழுதுவதற்கு களமமைத்துக் கொடுக்கிறது எனலாம். நை யாண்டி நோக்கிலே எழுதிக்கொண்ட இ. முருகையன். மிகச்சில கவிதை ஸ் எழுதிப் பார்த்த கே. எஸ். சிவகுமாரன் முதலியோரைத் தவிர்த்து நோக்கும்போது, தருமு சிவராம், தா. இராமலிங்கம், மு. பொன்னம்பலம் முதலானேர் இக்காலக் கட்டத்தின் முக்கியக் கவிஞர்களாக விளங்குகின்ருர்கள்.
அன்று ஈழத்தின் முதற் புதுக்கவிதைப் படைப்பாளராகி விளங்கிய பின் இந்திய வாசியாகி, பல புதுக்கவிதைகள் எழுதி அனைவரஈலும் அறியப்பட்ட தரும சிவராமின் கவிதைகள் பற்றி

'ஜதிகம் குறிப்பிடுவது அவசியமன்று. ஆயினும் அன்றைய நிலையில் வசனத்தன்மைமிக்க ஈழத்துப் புதுக்கவிதையின் போக்கினை மாற்றி படிமம் , குறியீடு முதலியவற்றைக் கையாண்டு, ஈழத்துப் புதுக் கவிதையை இன்னுெரு பாதையில் மாற்றியவர் என்பதை இவ்வி டத்தில் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
ஈழத்துப் புதுக்கவிதையாளருள், தா. இராமலிங்கம் மிக முக் கியமானவர்; தாமெழுதிய புதுக்கவிதைகளை புதுமெய்க் கவிதைகள் என்று குறிப்பிட்டார். அது எவ்வாருயினும் இவரது புதுக்கவிதைகள் பலவிதங்கள் குறிப்பிடத்தக்கன. தனித்துவம் கொண்ட படிமம், குறியீடு முதலியவற்றைப்பரவலாகப் பெற்றிருந்தன; பேச்சோசை, பேச்சு வழக்குச் சொற்கள், மண்வாசனை முதலான தன்மைகளைக் கொண்டிருந்தன. உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையிலே யாழ்ப் பாண மக்கள் வாழ்க்கையின் சிற்சில கூறுகளை யும் விமர்சனஞ் செய்தன. எடுத்துக் காட்டாக, இவரது புதுக்கவிதைகளின் சில பகுதிகளை இங்கு தருவோம்.
**துள்ளற் கன்றென்றும் பாராது கடிநாய்
விட்டுத் துரத்திப் போட்டுப் பிடுங்குதே சிக்! அடி நாயை
** கற்புக் கரசியாய் வாழ் என்று வாழ்த்திச் சிலப்பதிகாரமும் சீதனம் தந்தார்' (பலி)
* வேளாளர் குடிப் பிறந்து
பிறர்
ஆசார மூட்டையிலே மயிர் பிடுங்கும்
மேற்சாதி நான்’
('ஆசைக்குச் சாதியில்லை')
* அவள் குனிந்து
காமத் திரியினில்
திக்குச்சி தட்டி வைத்தாள்’’
( ஆசைக்குச் சாதியில்லை’)
சுருங்கக் கூறின், தென்னிந்தியப் புதுக் கவிதையிலிருந்து வேறு பட்டு ஈழத்துப் புதுக்கவிதை அமைவதற்கும், இன்றைய தலை

Page 29
முறையினருள் சிலா ஆற் ற ல் மிக்கவராய் அமைவதற்குமான அத்திவார முயற்சிகளை இங்கு காணலாம்.
அறுபதுகளின் பிற்பகுதி தொடக்கம் குறிப்பிடத்தக்க மரபுக் கவிதைகள் பலவற்றை எழுதி யு ள் ள மு. பொன்னம்பலத்தின், இயற்கை, உழைப்பு, ஆன்மீகம் மு த லா ன உள்ளடக்கங்களைக் கொண்ட புதுக்கவிதைகளும் கவனிக்கத் தக்கனவே.
தொகுத்துக் கூறின், இக்கால கட்டத்திலே புதுக்கவிதை எழுதியோர் சிலராயிருப்பினும் புதுக்கவிதை ஆரோக்கியமான வளர்ச்சியை எய்துவது; அதாவது புதுக்கவிதைக்குரிய சிறப்புப் பண்புகளான படிமம். குறியீடு முதலியன புதுக்கவிதையை வந்த டைவதோடு ஈழத்துக்குரிய தனித்துவப் பண்புகளுள் சிலவும்-பேச் சோசை, பேச்சுமொழிச் சொற்கள், மண் வாசனை என்பன-அமை வது நமது அவதானிப்புக்குரியதாகிறது,
வளர்ச்சிக் காலம்
மேற்கூறியவாறு சிறுவட்டத்தினருள் நிலையூன்றிய புதுக் கவிதை, தனது களத்தினைப் பரந்துபட விசாரிப்பதுடன் இன்னுெரு முக்கிய காலகட்டம் ஆரம்பிக்கிறது. இது எழுபதுகளை யொட்டி நிகழ்கிறது.
இக்கால கட்டத்தில் - எழுபதுகளின் பின் - பரவலாகப் பல் வேறு நிலைப்பட்டவரும் எழுதத் தொடங்குவதும் பல புதுக்கவிதைத் தொகுதிகள் வெளிவருவதும், புதுக்கவிதைச் சஞ்சிகைகள் ஆங் காங்கு வெளியிடப் படுவதும், புதுக்கவிதை பற்றிய விமர்சனங்கள் வருவதும், மரபுக் கவிதைகட்கே இடமளிக்கா வண்ணம் பத்திரி கைகளில் புதுக்கவிதைகளே பிரசுரமாவதும் நிகழ்கின்றன. எனவே இக்காலகட்டம் ஈழத்துப் புதுக்கவிதை வரலாற்றிலே முக்கிய காலப் பகுதியாக விளங்குவது வியப்புக்குரியதல்லவே?
இக்காலப் பகுதியில் பல ர் புதுக்கவிதை எழுத முனைந்த மைக்கான பின்னணியை பின்வருமாறு வகைப் படுத்திக் கொள்ள லாம் : (அ) நிகழ்ந்துவரும் சமூக, அரசியல் மாற்றங்களை வெளிப் படுத்த புதுக்கவிதை தகுந்த வடிவமெனக் கருதியமை (ஆ) கல்விப் போதனைத் திட்டத்தில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் முதலான பாடங்களின் நிலைமாற்ற முற்றமையும், மரபு வழிக் கல்விமுறை யின் பாற்பட்ட பண்டிதக்கல்விமுறை செல்வாக்கிழந்தமையும் ஆன சூழலில் எழுந்த இளந் தலைமுறையினர் கவிதை எழுத விரும்பிய போது புதுக்கவிதையின் சில இயல்புகள் - முக்கியமாக யாப்புப் புறக்கணிப்பு - பெரு வாய்ப்பாக அமைந்தமை. (இ) புதுக்கவிதை

யின் இயல்புகள் பரவலாகப்புரிந்து-படாமையினுலும், தவருகன்டை போட்டமையாலும் இலக்கிய நாட்டமுடைய இளந்தலைமுறையினர் புதுக்கவிதை எழுதின் இலகுவில் பிரபல்யமடைய வாய்ப்பிருந் தமை, (ஈ) முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் கல்வி கற்கும் ஆர்வ மும், இலக்கிய ஆர்வமும் வளர்ந்தமை (உ) தென்னிந்தியாவுடன் ஒப்பிடும்போது புதுக்கவிதை முயற்சிகட்கான எதிர்ப்பு குறைவாக இருந்தமையும், எதிர்த்த பண்டிதர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் முயற்சிகள் காலப்போக்கில் குறைந்து விட்டமையும் (ஊ) ஈழத்துச் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் ஆதரவளித்தமை (எ) தென்னிந்தியாவிலே ஏராளமான புதுக்கவிதை சஞ்சிகைகள் வெளிவரவே, அவை இங்கும் பரவலாகக் கிடைத்தமை.
இத்தியாதி காரணங்களினுல் புதுக்கவிதைத் துறையுள் பலர் நுழைவது சித்திக்கிறது. இவர்களுள், அன்பு ஜவகர்ஷா,திக்குவல்லை கமால், மு.கனகராசன், மேமன்கவி, செள மினி, சிவம், பேணு மனுேகரன், மூதூர்முகைதீன், யோகேந்திரலிங்கம் செந்தீரன், நல்லை அமிழ்தன், பூநகர் மரியதாஸ், சபா ஜெயராசா முதலியோரும் அ. யேசுராசா, வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம், மு.புஷ்பராஜன் சாருமதி, எச். எம். சம்ஸ் , அனல் அக்தர், ஜவாத் மரைக்கார் முதலியோரும் அடங்குவர். இவர்களுள் இறுதியாகக் கூறப்பட்ட எண் மரைத் தவிர ஏனையோர் தமது புதுக்கவிதைகளை நூல்வடிவி லே வெளியிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ஆயினும் இந்நீண்ட பட்டியலில், தனித்துவ அம்சங்கள் கொண்ட புதுக்கவிதைகள் எழுதியவர்களென குறிப்பாக அ. யேசுராசா, வ. ஐ. ச ஜெய பாலன், சபா ஜெயராசா முதலானவர்களையே விதந்துரைக்க இயலும். (இவர்களுள் சிலர் எழுபது கட்கு மு ன் பே எழுதத்
தொடங்கி விட்டனரெனலாம்)
ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டை சிறந்தமுறையில் வெளிப் படுத்துவனவாகவும் பே ச் சோ  ைசத் தன்மை மிக்கனவாயும் அ. யேசுராசாவின் கவிதைகள் அமைந்துள்ளன; சங்கம் புழைக்கும், மாயாகோவ்ஸ்கிக்கும் என்ற புதுக்கவிதையினை இங்கு சுட்டலாம்;
* சங்கம் புழை! உன் நெஞ்சை முட்கள் கிழித்த கதையறிவேன். "குளிர்ந்து போன என் நிராசை நித்தமும் மூடுபனியாக, உன் வீதியிற்படரும்’ என்றபடி துயரில் நீ செத்துப் போவாய். உயிர் தின்றது உன் காதல், 'நொறுங்கியது காதற் படகு வாழ்வும் நானும் பிரிந்தனம்...' ஓ’ மாயா கோவ்ஸ்கி,

Page 30
துயரினி லாழ்ந்தாய் குண்டுகளால் அதை வெல்லப் பார்த்தாய் காதலின் வளிகரக் கடுமை தாக்க நானும் உம்போல் மனமழிந்த கவிஞன்தான். 'இந்த வண்ணமெல்லாம் நமக்கேன் நிகழ்கிறது’ மெல்லிதயங் கொண்டிருந்தோம் என்ப தாலா? முதிரா இளைஞர் செயலென்று உம்மையெலாம்
எள்ளுவார் அணிசேரேன்;
என்ருலும்
உமது வழி தொடரேன் செய்வதற்கு இன்னும் பணிகள் மிக உளதே! செயலற்று வாழ்வில் ஒதுங்கமுடியாது; * பிறத்தியானெல்லாம் உள், நுழையுங் காலம்
முள்முடி குத்தும் சிலுவை உறுத்தும்தான். என்ருலும் சாவு வரை வாழ்வேன்!
சாவுக்கு அப்பாலும்
என் செயலிற் கவியில்
உயிர்த்தெழுவேன்
உயிர்த்தே எழுவேன்!’
உள்ளடக்கத்திற்கேற்ப பேச்சு வழக்குப் பிரயோகங்களும் இவரது கவிதைகளில் இடம் பெறுகின்றன. வ.ஐ. ச ஜெயபாலனின் புதுக் கவிதைகள், சிறுகதைக்குரிய சில தன்மைகள், ஓவிய வர்ணனைகள், மண் மணங்கள், உள்ளடக்கத்திற்கேற்றதான நளினமான சொற்ருெ டர்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. (உ-ம்: வசந்த காலம் 1971; சிறு பிராயத்து சிங்கள நண்பனுக்கு; நம்பிக்கையின் வேர் கள்) இவ்விடத்திலே "பாலி ஆறு நகர்கிறது' என்ற (ஆரம்ப காலக் கவிதையே) கவிதையைக் குறிப்பிடுவது பொருத்தமானது:
,அங்கும் இங்குமாய் ஏதேதோ சலசலக்கும். இடையிடையே வயல்வெளியில் எண்ணற்ற வகைப் பறவை உழவு நடக்கிறது எழுப்பும் சங்கீதங்கள
இயந்திரங்கள் ஆங்காங்கு துள்ளி விழுந்து இயங்குகின்ற ஓசை துழம் என்னும் வராமல் மீன்கள் இருந்தாலும் என்ருலும் அமைதியை எங்கும் ஒரே அமைதி. ஏதோ பராமரிப்பும்
ஏதுமொரு ஆர்ப்பாட்டம் அந்த வளைவை அடுத்து இல்லாமல் முன்நோக்கி கருங்கல் மறைப்பில் பாலி ஆறு நகர்கிறது. அடர்ந்துள்ள நாணல் அருகே
ஆங்காங்கே நாணல் மணற்கரையில் இருமருங்கும் அடங்காமல் காற்ருேடு ஒங்கி முகடுகட்டி இரகசியம் பேசி ஒளி வடிக்கும்.

மருத மர நிழலில் எங்கள கரா மதது எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்கு வேறு ஆணிவேருய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்ருய் ஆராய்ந்து சிரித்து
கேலி செய்து
சினந்து வாய்ச் சண்டையிட்டு துவைத்து w நீராடிக் களிக்கின்ருர் . ஆலுைம்
அமைதியாய்ப் பாலி ஆறு நகர்கிறது. அந்நாளில் பண்டாரவன் னியனின் படை நடத்த அடிச்சுவடு
இந்நாளும் இம் மண்ணில்
இருக்கவே செய்யும்.
9. Sa 63r
தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்குதலைத் திட்டமிட்டு புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினுல் நீரருந்தி வெள்ளையர்கள் பின்வாங்கும் வெற்றிகளின் நிம்மதியில் சற்றே கண்ணயர்ந்த தரைமீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும் அந்த வளைவுக்கு அப்பால் அதே மறைப்பில் இன்றும் குளிக்கின்ருச் ஏதுமொரு ஆர்ப்பாட்டம் -இல்லாமல் பாலி ஆறு நகர்கிறது.
O
சபா. ஜெயராசாவின் புதுக் கவிதைகள் மண்மணங்கமிழ கிரா மக் கோலங்களை நறுக் காகப் படம் பி டி த்து வெளிப்படுத்துகின்றன (உ-ம்: பசுமை) 'கு ட ங் கி ய தென்னை என்ற புதுக்கவிதையை
இங்கே குறிப்பிடலாம்.
'நீரில் நனைந்த கோழிகளாகி நினைவும் நனைந்தது சிறு வயதுள்ளே தோய்ந்தது. GUT (Ligi FIT ut எங்களூரிற் புகையிலை காய்ச்சும் புகைமணம் பரவும். ஊமலும் கொச்சியும் வேகும் நெருப்பிற் புகையிலை வெந்து புதுமணம் பரவும், குடிலின் கரையிற் குடங்கிய தென்னை தூறல் மழையிற்
சிணுங்கும் ஒலே. கூனல் முதுகுடன் குடிலைப் பார்த்துக் காவல் செய்வோர் வெற்றிலை கிழித்துச் சப்புத லோடு நித்திரையில்லா நீண்ட அழைப்பு நிசியிற் கரையும் இன்றும் அந்தக் குடிலும்
குடங்கிய தென்னையும், கூனல் மனிதனும் எங்களூரின் இறவா வரங்கள்’’

Page 31
இனி, ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியின் முக்கிய கால கட்டமான இக்காலப்பகுதியில் பெருமளவு வெளிவந்து புதுக்கவி தைகளின் முக்கிய பண்புகள் sாsை::ெ1ன மதிப்பிடுவது பொருத்த மானது. இவ்வழி பின் வருவனவற்றை அவதானிக்க முடிகிறது.
(அ) எளிமையும், பொருட்புலப்பாடும் கானப்படுகின்றமை. (ஆ) சொற்ஜ லங்களும் on - 6 ! ! !), ? - (45 sn: a, äs குவியல்களும் காணப்படா  ை:) (இ) புதுக் கவிதைக்கு : தனித்துவ இயல்புகள்-படிமம், குறியீடு முதலியன - அருகிக் கரைப்படுகின்ற1ை9 . (FF) பெரும்பாலானவை சமூகச் சார்புடைமை1ை:பும், மு ற் பே ா க் குக் கருத்துக்க ஃபும் கொண்டுள6 மை ; அதே சமயம் இற்ைறுள் பெரும்ப3 லா  ைவை: பே ா லி உணர்ச்சியும், மிகை புர்ைச்சியும் கொண்டனவாகவும், * அரைத்த மா  ைவ :ே அ  ை: க் கி ன் n ᏭᎼ: 32Ꮽ! Ꮿ, (Ꮼ5 Ꮌi ᏋYᎢ iᎫ Ᏸ, Ꮗj 1 * , கூற்றுக்களாகவும், கோஷங்களாகவும் அமைகின்றமை (கற்பஞ) அனுபவங்களையும், இரவல் அனுபவங்களையும் வெளிப்படுத்த முனே வதும் நவீன இலக்கியங்களிலே ஆழ்ந்த ஈடுபாடி ன் மை (பும் !!ழந் தமிழிலக்கியங்களில் பரிச்சயம் குறைவாயிருப்பதும், சமூக முன் னேற்றத்திலே போலி அக்கறையிருப்பதும், தென்னிந்திய கவிஞர் களுக்கு மேலைத்தேய நூல்கள் முன்ைேடிகளாக இரு க் கி ன் ற போது ஈழத்தவருக்கு அவ்வாறின்றி பெரும்பாலும் தென்னிந்திய நூல்கள் மட்டுமே முதலும் முடி மைாயிருப்பதும் இதற்கான g5 7 r if ாைங்களாகலாம்) (உ) ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டுத் தன்மை சிலவற்றிலே காணப்படும் அதே சம!1ம், பெரும்பால 1ை635) தனித் துவமின்றி விளங்குகின்றன. ம ('F' பகுதிக் காரணம் இங்கும் டொ ருந்தும்) (ஊ) சொற்செறிவும் சொற்கூர்மையும் குன்றியிருக்கின் றமை. (எ) பெரும்பாலானவை சிறுசிறு துணுக்குகளாக அமைத் துள்ளமை. (பிரசுர வசதி இதற்கு காரணமாகலாம்) (ஏ) சிலரது புதுக்கவிதைகளில் பேச்சே சைத் தன்பை பேச்சு வழக்குப் பி :ோ
கங்கள், மண் மணம், சிறுகதைக்குரிய இ ய ல் புக ள் முதலியன காணப்படுகின்ற ைம.
சுருங்கக்கூறின் இத்தியாதி பண்புகளே ஆழ்ந்து நோக்கம் போது பெரும்பாலும் ஆரோக்கிய மற்ற வளர்ச்சியையே கானக் கூடியதாயுள்ளது; இதன் தர்க்க ரீதியான ஈழத்துப் புதுக் கவிதை தேக்க நிலையை நோக்கிச் சென்றதேயாம்.
தேக்க காலம்
கடந்த சில வருடங்களாக, ஈழத்துப் புதுக்கவிதையில் ஒரு
தேக்கநிலையே நிலவுகின்றது. இதற்கேதுவான பின்னணியை விளங்கிக்கொள்வது பயனுடையதாகலாம். இதனைப் பின்வருமாறு
 

எடுத்துரைக்கலாம்:- (அ) முற்பட்டகாலப்பகுதியிலே புதுக் கவிதை ஸ்முதிய பலர் இப்போது அதிலே ஆர்வங் காட்டாமை அல்லது அவ்வப்போது எழுதுதல். (உ-ம்:- சாருமதி, திக்குவல்லை கமால் அன்பு ஜவகர்ஷா); 'தினந்தோறும் அவசரக்கோ லங்களை அள்ளித் தெளிக்கும்’ புதியவர்கள் கூட சடுதியில் ஒய்வுபெறுதல். (ஆ) தொடர்ந்து எழுதிவரும்பழைய புதுக்கவிதைப் படைப்பாளிகள் சிலரது புதுக்கவிதை முயற் ச் சிக ள் ஆரோக்கிய மற்ற விதத்தில் வளர்ந்து வருதல் (உ-ம்: - மே மன்கவி) (இ) புதுக்கவிதை வளர்ச்சிக்கு சாதகமான இலக்கிய சூழல் மாறுபடுதல் (1) தென்னிந்திய இலக்கியச்சஞ்சிகைகள் பரவலாகக் கிடைக்காமை (i) ஈழத்து விமர்சகர்கள் புதுக்கவிதை வளர்ச்சியில் போதியளவு ஆர்வங் காட்டவோ செம்மைப் படுத்தவோ முற்படாமை (iii) குறிப்பிட்ட சஞ்சிகைகளில் மாத்திரம் எழுதிவருகின்றவர்கள் அவை நின்று போகத் தாமும் 6T(ug|6}} 33 క్రియే குறைத்துக் கொள்ளல் (உ- ம்) குமரன் சஞ்சிகையும் தொடர்ந்து அ தி ல் 8 (பூதி வந்து சாருமதி அது நின்றுபோக அவ்வப்போது எழுதுதலும்) ( V கல்லுரரி மட் டத்திலே இலக்கியம் முதலியன ஒருபாடமாக அமையா  ைப; பல் கலைக்கழக மட்டத்தில் தமிழை ஒருபாடமாக எடுப்போர் தொகை அருகுதல் . (ஈ) புதுக்கவிதைத் தொகுதிகள் வெளிவருவது முன்காலப் பகுதி யுடன் ஒப்பிடுமபோது குறைவாக உள்ளமை (உ) தென்னிந்தியப் புதுக்கவிதையாளர் சிலரது புதுக்கவிதைகளை ஈழத்துச் சஞ் சகைகளும் (உ- ம் தீர்த்தக்கரை) பத்திரிகைகளும்
(உ-ம்: வீரகேசரி) மறுபிரசுரம் செய்தல் {உள) தென்னிந்தியப் புது க்க வி ைத த் தாக்கத்தின் வெளிப்பாடு எனும் வண்மை ஈழத்துப் புதுக் கவிதைகள் சில வெளிவருதல் (உ-ம்: கண் ணிச் ப் பூக்கள் - செள மினியின் க ன வு ப் பூக்கள் *கங்கை கொண்டா'னின் "சிலநைலோன் கனவுகள் எரிகின்றன’ * மேமன்கவி'யின் ‘அம்மா சொன்ன பொய்கள்') (எ) தரம் நோக்காமல், பிரசுர வசதியையும் எழுதுபவரையும் நோக்கிப் பத்திரிகைகளிலே புதுக்கவிதைகள் வெளிவருதல். (எ) பெரும்பாலானுேரது புதுக்கவிதைகள் தனித்துவமுடையதும்" சிறந்ததும் என்று கூறத்தக்க விதத்தில் அமையாமை. (ஒ) அரசியல் இயக்கங்கள், இலக்கிய வட்டங்கள் முதலானவை சுறுசுறுப்பற்றிருத்தல். (ஓ) முன்னரெப்போதையும் விட பொருளாதாரப் பிரச்சினைகளால் இப்போது எழுத்தாளர் அதிகம் பாதிப்படைதல்.
எனவே இத்தகைய சமாதானப் பின்னணியை அவதானிக் கும்போது, ஈழத்துப் புதுக்கவிதை தேக்கநிலையுறுவதன் தாற்பரி யம் நன்கு புலப்படுகிறது அல்லவா?

Page 32
மிக அண்மைக் காலம் d
|
ஆயினும் எண் பதுகளையொ ட்டி புதுக்கவிதைத் துறையில் மீண்டும் ஆரோக்கியமான சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன எனல் வேண்டும். அரசியல் பிரச்சினைகளில் பாதிப்புக் கூர்மைய டைவதும், நவீன இலக்கியங்களின் நேரடிப் பரிச்சயமும், "யாழ்ப் பாணப் பல்கலைக்கழகச் சூழலும், இலக்கிய ஆர் வல ர் சிலரது முயற்சியால் தென்னிந்திய 'நூல்களும் சஞ்சிகைகளும் பரவாலகக் கிடைப்பதும், தென்னிந்திய இலக்கியப் பயணங்களும் இம்மாற் றங்கட்கான சாத்தியப் ப? டுகளென லாம். இவ்விதத்தில், (எண்ப துகட்கு முற்பட எழுதத் தொடங்கிய) "கவியரசன்', ந. சபேசன் பாலசூரியன், ஹம்சத்வனி முதலியோரது புதுக்கவிதைகள் குறிப் பிடத்தக்கன வாகின்றன. மஹரகளி, நுஃமான், அ. யேசுராசர, வ. ஐ. ஜெயபாலன், முதலியோரது கவிதைகளின் சிற்சில போக் குகள் உட்கொண்டனவாய் ஆயினும் விரைவில் தனித்துவங்களைப் பெற்றுக்கொண்ட புதுக்கவிதைகள் இவர்களுடையன. சில எடுத் துக்காட்டுக்கள் தருவது இவ்விடத்தில் பொருத்தமாகும். ‘மழைக் காலமும் கூலிப் பெண்களும்' என்ற இக்கவிதை கவியரசனுடை
யதாகும்.
* வாகை மரம் பூச்சூடும் விரல்களுக்குச் சேறெடுக்கும் வயல் வரம்பை நெல் மறைக்கும் எப்போதும் போல் இவர்கள் மஞ்சள் வெயில் தெரியாது நாற்று நடுகையிலே
மழை முகில்கள் கவிந்து வரும் எல்லை வரம்புகளில் நெருஞ்சி தலைமயிரை விரல் கொடுத்து மலர் விரியும் நீவிவிடும் குளிர் காற்றில் மீண்டும் இவர்கள் வெண்கொக்கும் சிறகைகளும் திரும்பி வருகையிலோ வான் முழுதும் இறகசைக்கும் நெற்கதிர்கள் குலைதுள்ளும்
வெய்யிலுக்கு மேனிதந்து நீள்வரம்பு மறைந்து விடும் வெண்காயம் கிண்டவரும் என்றும் இவர்களது என் அழகுக் கிராமத்துப் பூமி இருள் தின்னும் பெண் களது, கால் பொழுது விடிந்தாலும் . . . . . . . . .
இனிமேல் வெள்ளத்துள் ஆழும் ‘இன்னும் ஒருமுறை என்பது நா. சபேசன் எழுதியதாகும்:-
* இன்னும் ஒருமுறை வைகறைத் துயிலெழல் துப்பாக்கிகள் நீண்டதில் ரத்தம் சிந்தி,

பூக்கள் சில உதிர்ந்து போனது, கறுத்த' வானம் விடிந்து வந்தது உதிர்ந்த பூக்கள் கண்ணில் தெரிந்தது. வைகறைப் பொழுதில் புட்கள் ஒன்றுமே சப்திக்க வில்லை
வேட்டொலி கேட்டு புதிதாய் சில பூக்கள் மலர்ந்துபோனது. . . . . . . கூடவே
வானத்தில் கூட
தீயின் பரவல்;
இந்த முறையும் எங்கள் சிலபேர் சிரித்தபடியே. . . . . . . . . .
"ஹம்சத்வனியின் "புத்தனின் நிர்வாணம்’ என்ற புதுக்கவிதை
யையும் குறிப்பிடலாம்:
*" போதி மரத்தின் கீழ் அன்று ஒருநாள் மூடிய விழிகளைத் திறந்தான் புத்தன். கால்களை நனைத்தது குருதி ஆறு அவனது தத்துவம் கிடந்து தவித்தது அதிர்ந்து எழுந்து ஒடிஞன். காற்ருய், கடலாய் திசைகள் தோறும் . . . . எங்கேயேனும் அவனது ஞானம் ஒரு துளியாவது.. ?, கால்கள் பதிக்க விரும்பாத மனதுடன்
உலகை வெறுத்துப் போதி மரத்தில் துக்குப் போட்டுச் செத்தான் புத்தன் பரிநிர்வாணமாய்'

Page 33
R
சமகால நிகழ்வுகளின் ே வீச்சுகளாய் முன்னெப்போதை வதை இங்கு கவனிக்க முடிகிற கள், குறிப்பாக தமிழ்த்தேசிய ( அண்மைக் காலத்தொடக்கம் மு: யினை இன்னுெரு பரிமாணத்திற் சனைகள் ஈழத்துச்சிறுகதை, நா வே பிரதிபலிக்கப்படுவது ஏன் மேலும் , * புதிசு’இலக்கியக் குழுவி என்ற பெயரில் கவியரங்கக் கவி: கவிதை வளர்ச்சியிலும், இயல்புக் கியமான சில மாறுதல்கள் ஏற்ப இதுமட்டுமன்றி, முற்பட எழுதத் கவிதைகள் (உ-ம்: மு. புஷ்பராஜ் அண்மைக் காலங்களில் மேலும் காலப் புதுக் கவிதைப் படைப்பா வதையும், (உ-ம்: தா. இராமலிங் வேண்டும்.
சிற்பியின் O புன்னகை 1 O மொன மய
அண்மையில் அன்னம் வழங்கியுள்ள அரிய கவிதை நூல்க
அன்னம்(பி) லிட்,

ந ர டி அனுபவங்கள் தனித்துவ பும் விட, இப்போது வெளிப்படு து; இப்போது அரசியல் பிரச்சினை இன ஒடுக்கு முறை இவற்றில் னப்புறுவது புதுக்கவிதை வளர்ச்சி கு இட்டுச் செல்கிறது; (இப்பிரச் வல் முதலியவற்றில் அருந்தலாக என்ற விஞவும் இங்கு எழுகிறது). பினர் முதலானுேர் கவிதா நிகழ்வு’ தை முறையிலே மட்டுமின்றி புதுக் 5ளிலும் காலப்போக்கில் ஆரோக் டுத்தும் எண்றெண்ண இடமுண்டு தொடங்கியவர்கள் சிலரது புதுக் , வி. ஐ. ஜெயபாலன், சாருமதி)
செழுமையுறுவதையும், ஆரம்ப ளிகள் மீண்டும் எழுதத்தொடங்கு பகம்) கூட, இங்கு குறிப்பிடத்தான்
பூக்கும் பூனைகள் க்கங்கள்
சிவகங்கை-623560

Page 34
புதிய கவிதை நூல்கள்
0 அரண்மனை திராட்சைகள்
0 நவகவிதை வரிசையில்.
புலரி - கல்யாண்ஜி மெய்ப்பொருள் - வ: சுதந்திரம் - நா. வி ஆகாசம் நீல நிறம் காற்றின் சந்தேகம் புதியதிசை - விஷ்ணு அடி வானத்திற்கு அ
0 வித்தியாபதியின் காதற் ச 0 அறைக்குள் வந்த ஆப்பி
அன்னம் (பி) லிமிெ
வெளி வருகிறது:
கவிஞர் சக் நீங்கள் ே
Ibjdip 60Lis I

க சிதம்பரநாதன்
ண்ண நிலவன் ச்வநாதன் - விக்ரமாதித்யன் - கி. விஜயலட்சுமி
று நாகராஜன்
ப்யால் - அகல்யா
கவிதைகள் - பாலா
ரிக்க வானம் - இந்திரன்
டட், சிவகங்கை. 623 560
திக்கனலின் கட்டவை
ாதிப்பகம். சென்னை.

Page 35
VANAMBAD - FOR PR
புதிய தமிழு புகழ் சேர்க்கு புத்தகக் கள அன்னம்
O
புத்தகச் செய்திகளு 'அன்னம் விடு தரது இப்போது வெளியி
(சந்தா ரூ. 5/-)
C
அன்னம் , பிரைவேட் ல 2, சிவன் கோ
சிவகங்கை -
(T: 18/3
சிங்காரத் தோ
Vanambadi, 50, Alagappi Printed at Sirpi Achagam

VATE CIRCULATION ONLY
க்குப் கும் ஞ்சியம்
க்காக ' மாத இதழ் டப்படுகிறது
5 (56,
யில் தெற்குத் தெரு, 623 56O
, L. K. S. style in
a Lay-out, Pollachi-642 001 i Polachi- 642001 O L O