கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தடம் 1993.02

Page 1
போய்க் கடந்த சர் பயனில்லாத தூனிச
பழிந்துரை செய்ே
காணுக நம்முன் மனித இனத்தின் உன்னதமான அக்
"தனிப்பட்ட சுற்றுக்காக ம
 
 

ད། ༡༩༥༤ ཤོ་ ঠী”। ৩৯৭ 芥ゆみ、3ー
காப்தமொன்றின் யும், அழுக்கையும் լIIլr l
உள்ளொளிமுட்டிய னிேக் கோபுரம் "
- ரீழg -

Page 2
'ಟ್ವೆಣ್ಣಿ"..?'
ஃஅக்கரைப்பற்று 02
'படைப்புக்கு படைப்பாளிகளே பொறுப்பாவர்"
வெளியீடு:- இன்றைய வானம்பாடிகள்
 
 
 

影 ஆசிரியர் கருத்து 滨
யுத்தமேகம் சூழ்ந்த இன்றைய ஈழத்தில், இலக்கியத்துறையில் ஒரு ஆரோக்கியமான பார்வையே ஏற்பட்டிருக்கிறது! குறிப்பாக கவிதை யின் தரம் அதிகரித்துக் காணப்படுகிறது. போர்க்கால சூழ்நிலையின் தாக்கத்தால் பிறக்கும் இலக்கியப் படைப்புகளில் பெரும்பான்மையா : னது உயிர்த்துடிப்புள்ளதாகவே இருக்கிறது. ஆயினும் இன்றைய நிலை யில் கவிதை, நாவல் இலக்கியத் துறையில் அதிக ஆர்வம் காட்ட பட வில்லை. இது கவலைக்குரியது, இடைக்கிடையே எமது சூழலில் இருந்து வெளிவரும் சிறுகதை, நாவல் இலக்கியங்களில் ‘இலக்கிய அந்தஸ்து"
讓
குறைவாகவே காணப்படுகிறது.
கவிதைச் சூழலைப் பொறுத்த வரை தோற்கடிக்க முடியாத இலக் கிய அந்தஸ்துப் பெற்ற கவிதைகள் நிறையவே படைக்கப்படுகிறது இருந்தும் இன்றைய கவிஞர்களும் சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசி ரியர்களில் எத்தனை பேருக்கு தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய தமிழக எழுத்தாளர்சளான சி, சு. செல்லப்பா, பிச்சமூர்த்தி, க. நா. சுப்ரமணியம் (மயன்) லா. ச. ரா, அசோகமித்தி ன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், நா. பார்த்தசாரதி மெளனி, σπέρ 85 τ. பாலன், ஜெயகாந்தன், தோப்பில் மீரான் பலகுமாரன் போன்றவர் களின் படைப்புகளை தரிசிக்க முடிந்திருக்கும் என்று கேட்டால் அது பூஜ்ஜியமாகவே இருக்கும். இந்நிலை ஒரு படைப்பாளனுக்கும், இல9 கி யச் சூழலுக்கும் ஆரோக்கியமானதாக இருக்காது,
உண்மையான இலக்கியவாதிக்கு படைப்புகளின் மீது ஆழ்ந்த பார்வை பரிச்சயம் இருத்தல் வேண்டும். ஒரு படைப்பின் கலையழகு வெகு இயல்பாகவே உள்ளடக்கத்துடன் ஒட்டி நிற்பதற்கு எழுத்தாளர் களின் சிந்தனைத் தெளிவு, படைப்புசளின் மீது அவனது பார்வைக் கோணம் என்பனவே காரணமென்பர் மேனாட்டு இலக்கிய விமர்சகர்
assir.

Page 3
புதுக் கவிதைச் சூழலைப் பொறுத்தவரையில் வார்த்தைகளை ஒன்றுக்கு கீழ் ஒன்று வரிசையாக எழுதுவதில் புதுக் கவிதை உருவாகி விடும் என "தியரி" வைத்திருக்கும் கவிஞர்கள் இங்கு அதிகம். இடறி விழுந்தாலும் கவிஞர்களில்தான் இடறிவிழ வேண்டும் என்ற நிலை காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது.
புதுக் கவிதையை விடுத்து, ஆர்வமுள்ள நமது படைப்பாளிகள் சிறுகதை, நாவல், இலக்கியம் போன்ற துறைகளில் நமது கலைப் பணியை விஸ்தரிப்பது இன்றையகாலத்தின் தேவையாகும். சிறுகதை நாவல் இலக்கியத்தில் ஆரோக்கியமான சூழலை தோற்றுவிப்போமே யானால், தமிழக இலக்கிய சூழலை நாம் நாளை எட்டிவிடலாம். சழத்து இலக்கிய சூழலுக்கு இப்பணி இன்று அவசியமாகும்.
அன்புடன் ஆசிரியர்
4 YOU GO N YOUR WAY
GO N MY WAY
F AT ALL WE MEET
IT IS OK?
அனாவசியமாக ஒருத்தரை ஒருத்தர் கட்டுப்படுத்தாமல்; பாரம் ஏற்றாமல் தொந்தரவாக இல்லாமல், மனசை ரணப் படுத்திக்காமல்; வார்த்தைகளால் வலிக்கச் செய்யாமல்;
தண்டவாளங்கள் போல் போய்க் கொண்டே இருப்போம்.
(படித்த ஒரு நாவலிலிருந்து)

1)
ப ர ஸ் ப ர ம்
- சசிதரன் -
கடைசியில், உன்னை வெறுப்பதற்கான காரணங்களை கண்டு பிடித்தேன் ! உன் முன்னே வெறுக்கவில்லை என்பதல்ல உயரத்தில் செல்லும் மெலிந்த மின்கம்பியின் புலப்படாததரை நிழலாய் எனக்குள் இருந்தது உன்மேல் வெறுப்பு எனினும் இப் பொழுதுதான் காரணங்கள் . .
2) பிறகு அதை உறுதிப்படுத்திக்கொண்டேன்
நம்பவும் தொடங்கினேன். நிம்மதியும் உண்டாயிற்று தெரிந்தவர்களிடமெல்லாம் அதையே சொன்னேன் சொல்ல சொல்ல வன்மம் பெருகியது பாம்புத் தோலாய் புதிய காரணங்கள் உரிந்தன
3) ஒரு நாள்
தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினார்கள்
எனக்கு முன்னரே
pổ
காரணங்களை கண்டு பிடித்து விட்டாயென
(கணையாழி)
"பாலு மகேந்திரா" ஒருவித்தியாசமான கலைஞன்;மசாலா நாற்றமெடுக்கும் தென்னிந்திய திரை உலகில் இடைக்கிடையே தன் இருப்பை இனிய சுகந்தங்களால் வெளிப்படுத்தும் ஒரு உள
துவர்த்தி!
ஈழத்து இலக்கியத்திற்கு அடிக்குறிப்புகள் தேடு : நக்கி மகேஷ்வரர்கள் நிறைந்த இந்தியச்சூழலில் அழியாத கோலங்கள். வீடு சந்தியாராகம் மூன்றாம் பிறை போன்ற கலைக்காவியங் களை எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி வெளிக் கொணர்ந்த
படைப்பாளி, (பிரம்மபூரீ)

Page 4
இறவாப் புகழ் பெற்ற
இலக்கியவாதி 'கோகக்"
Gurrahut “3st së ’’ (Prof. V.K. Gokac) sait aru srapë steri கவிஞர். விமர்சகர் அது மட்டுமல்ல ஞானபீட விருது பெற்றவரும் கூட இலக்கியத்துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டி சென்ற ஆண்டுகளின் அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அந்த இலக்கிய மேதை இன்று நம்மிடையே இல்லை : கடந்த ஏப்ரலில் இயற்கை எயதினர்._(1992-04-28) ஞானபீட விருதை ஐந்தாம் முறை யாக ஏன் டை இலக்கியத்திற்கு தந்த பேராளர் 'கோகக்" இதற்கு முன் K. V. புட்டப்பா (1967), டி. ஆர். பின்ரே (1974) கோட்ட சிவ ராம தர நத 1977) மாஸ் தி வெங்கடேச ஐ பங்கர் (1983) ஆகியோர் ஞானபீட விருதை கன்னட இலக்கியத்திற்கு பெற்றுத்தந்தவர்கள்.
இ7ண்டு இலட்சம் ரூ 1ாயும், ஒரு பாராட்டு விருதும் கொண்ட ஞானபீட விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தவர் பிரபல எழுத்தாளர் அமரர் அகிலன் அவர்கள்.
கோகக்" அவர்களின் எழுத்துக்கள் கற்பனை உலகிலிருந்து சேக ரித்த சனவுகள் அல்ல; யதார்த்தத்தின் கண்ணிர் இறுதி மூச்சுவிடும் வரை அவர் எழுதி ககொண்டே இருந்தார் என்பது குறிபபிடத்தக்கது: சன்னட இலக்கியத்தில் புதுக் கவிதையின் மலர்ச்சி + கு காரணமான "கே சக்" மனிதன் இன்னும் செதுக்கப்பட வேண்டிய சிற்பம் என் பாத உம் முடைய கவிதை ஒன்றில் அழகாக உணர்ததுகிறார். தம்மை பிரதிநிதிய க வைத்து அவர் எழுதிய கவிதையொன்று.
நான் வெறும் கல் வாழ்க்கையின் வேகவெள்ளம் என்னை வடிவாக்கியது. வெண்ணெய்க்கல்லாய் மென்னயப்படுத்தியது சுய சிற்பத்திற்காய் இங்கே கரையில் ஒதுக்கியது இது தெய்வச் சிலையாக வேண்டுமென்று விரும்புகிறேன் ஒவ்வொரு காலையும் நான் காத்திருக்கிறேன் என்னில்
- 4 അ

எந்த வடிவத்தை அது செதுக்கப் போகிறது என்று பார்ப்பதற்காக
அதிதி தெய்வங்களின் தாய் வடிவத்தை பாவனை செய்கிறாள் சூரியன் தன் நீண்ட முன்மாதிரிக் கிரணத்தால் என் மீது அந்த உருவை வரைவான்
காற்று
தன் கூரிய உளியால் அதைச் செதுக்குவான் இந்திரன்; வான மனத்தின் தலைவன் வர்ணங்களால் அதை நிரப்புவான் பூமியில்; வானத்தின் உருவாக விண் மாயத்தின் வெளிப்பாடாக நான் இருப்பேன்.
அந்த வடிவை
என் க ைவை என் உன்னத இலட்சியத்தை நான் நயந்து வேண்டுவேன், வழிபடுவேன்
நான்தான் அந்த வடிவத்தை தாங்கும் கல் as6d
அந்த சிற்பத்தில் மறைந்து போகும்?
'கோகக்” இலக்கியத்தில் தன்னை ஒரு நினைவுச் சின்னமாக பதித்துக் கொண்டவர் அவருக்கு "தடம்" தனது அஞ்சலியை தெரி வித்துக் கொள்கிறது.
பெரும்பான்மையான கவிதைகள் வாசகர்களைப் பாதிக்கும் சக்தியற்று வீழ்ந்து விடுகிறது. ஒரு இலக்கியப் படைப்புக்கு பிர தானமாக வேண்டியது உயிர்த்தன்மை தான்.
(ஈழத்து வாசகன்)

Page 5
( புரியாத யாத்திரை
- எம். பெளஸர் -
வாழ்வு முழுதும் கனவுகள் நிரம்பி வழிந்தன. உறங்கும்போது நானொருவன் உறங்கி விழிக்கும் போது வேறொருவன் நான் யார் ? காலையில் எனது முகம் வேறு இரவில் வேறு முகம் எனது நிஜமுகம் எது? கவிஞன் என்பது எனது முகமா ? பைத் தியக் காரன் என்பது எனது முகமா ? மனிதனுக்குரிய முகமாவது என்னிடமுள்ளதா ?
யெளவனம் அழிந்துபோன சோகம் வாழ்வை கவிழ்த்த பூகம்பம் இவைகளையும் தாண்டி என் நிஜமுகத்தை தேடுகிறேன் கனவுகள், ஆசைகளை கலைத்து. முடியவில்லை ! யாத்திரை தொடர்கிறது. நான் பலவீனமானவனா ? பலசாலியா ? தேடித் தேடி அலுத்து வீழ்ந்தேன், இன்றும் ஒருவன் 'நான் மனிதனில்லை என்றான்? நான் யார் என்பது இன்னும் புலப்படவில்லை.
இன்றைய நிலையில் ஒரு தரமான எழுத்தாளனின் சிருஷ்டி களுக்கு அர ங் க மைக் க நம்நாட்டு பத்திரிகைகளுக்கு தரம் போதாது என்று முடிவு கட்டலாம்.
ஈழத்து வாசகன்

பரிபூரணமான படைப்பு என்று இதுவரை நான் என் 1cனத்திற்கு நினைவு தருகிற எதையாவது எழுதியதாக எனக்கு நினைவிலலை. இலக்கியத்திற்கு இரண்டு முனைகள உண்டு; ஒன்று படைச் கிறவனின் ஆத்ம திருப்தி, இரண்டாவது அனுபவிக்கிறவனுடைய அபிப்பிராயம் முதல்முனை ஆரம்பம்தான். இரண்டாவது முனை தான் இலச்கியத்தி னுடைய சரியான முடிவு. இரண்டாவது முனையிலிருந்துதான் அந்தப் படைப்பின் இலாப நஷ்டமே தெரிகிறது.
* பாலகுமாரனின் பக்கம்
ஆண் பெண்ணால் ஈர்க்கப்படுவதும், பெண் ஆனால் ஈர்க்கப்படுவதும் இயற்கை இ யல் பு, இந்த இயல்பை இயல்பாய் இந்த தேசத்தில் வெளிப்படுத்த முடியாததுதான் சோகம்; காதல் என்பது வேட்டையாடு டில் போலவும்: ராஜதந்திர மிக்க செயல் போலவும திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய விதம் போலவும் யாரால் மாற்றப் பட்டது என்பது தெரியவில்லை. காதல் சூழ்ச்சியற்றது. எங்கே சூழ்ச்சி இல்லையோ அங்கே விளைவது.
ஆனால் இங்கே எல்லா ஜனங்களும் சூழ்ச்சியின் நடுவே சூழ்ச்சி யாய் சூழ்ச்சிககாக வளர்க்கப்பட்டிருக்கிறாாகள். அவர்கள் எல்லோரும் சூழ்ச்சியுடன் இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.
(எனது அபிமான எழுத்தாளர்)
*சத்தியஜித்ரே' * - திரை உலகின் யுக புருஷன்
"சத்தியஜித்ரே” உலகின் முதல்தர திரைப்பட மேதை தனது 70வது வயதில் சித்திரை 23ம் திகதியன்று காலமானார், க.ந்த சில மாதங்4ளுக்கு முன்பே ‘சர்வதேச கெளரவ விருது (Horobaly Academy Award) திரைப்படத் துறையில அவரது சேவையைப் பாராட்டி வழங் கப்பட்டது. அவர் தயாரித்த படங்களுள் ஒன்றைத் தவிர மற்றதனைத் தும் வங்காள மொழியிலானது. 'அபு' என்பவனின் குழந்தைப்பருவம் முதுமைப் பருவம் ஆகியவற்றை சித்தரிக்கும் தொடர் வரிசைப் படங் களில் விதியின் பாடல் எனப்படும் "பதர் பாஞ்சாலி” 1956ம் ஆண்டு பிரான்ஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் சர்வதேச விருதினையும் ஏனைய பதினைந்து விருதுகளையும் பெற்றது.
~سے۔ 7 -------۔

Page 6
பிரச்சனையிலிருந்து தப்பி ஒடவைக்கும் மசாலாப்படங்களி லிருந்து அவருடைய படங்கள் வேறுபட்டனவாக இருந்தன. காதலும், சண்டையு! கூத்தும் கும்மாளமுமே திரைப்படமென வர்த்தக மயமாக்கப்பட்ட இந்திய திரைப்பட உலகில் இவருடைய படங்கள் பரிணமித்தன.
பழமைக்கும் புதுமைக்குமிடையிலான முரண்பாடுகள் விரைவான சமூக பொருளாதார மாற்றங்கள் தனி மனிதனால் ஏற்படுத்தும் தாக் கேங்கள் குறித்த வெளிப்பாடாக அவரின் கதைச்சுருக்கம் அமைந்தன. அனைத்துக்குமி மேலாக அவருடையதிரைப்படங்களில் மெல்லிய மனித உணர்வுகள ஊடுறுவி இருந்ததோடு மிகச் சாதுரியமாக கலைவெளிப் படவும் செய்தன, ஒரு விமாக்க: குறிப்பிடுவது போல் அவரது படங் கள அடக்கமான முறையில் முழு உலகையே வெளிப்படுத்தின.
இவரைப் பற்றி மலையாள திரைப்பட முதன்மை இயக்குனரான அடுர் கோபாலகிருஷ்ணன' சொல்கையில் "சத்யஜித்ரே நவ சினி மாத துறையின மகா புருஷன் என்றும், நிஜவாழ்வோடு நெருங்கிய திரைககாவியங்களையும் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை தனக்கு பன்வந்த பல இளம் இயக்குனர்களுக்கு கொடுத்தார் என்கிறார்.
* 'உகண்டா” கவிதையொன்று.
லுவாங் முவான்ஜ் -
பெரிதோ சிறிதோ எண் வேலையைச் செய்வேன் என் வியாவை நடனத்தில் பெருமிதம் கொள்வேன் விதைகளை விதைத்து களை பிடுங்க மழைக்காக நான் காத்திருப்பேன். நிலத்தை உழுது. உழைப்பின் பயனை அறுவடை செய்வேன். என் கைகளிலிருந்தும் = முயற்சி நம்பிக்கையிலிருந்தும் - கடமை வழிவிலிருந்து எழும் வேலையை செய்வேன் ஆழ்மணம் அதை என் வேலை என சொல்லும்
( புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை )
سم 8 مـسـ

* குறிப்புகளுள் இது கவனிக்கத்தக்கது
கலை என்பது வெறும் உயிர் வாழ்தல் என்ற தத்துவத்திற்கு கட் டுப்படாதது. அதனால்தான் கலைக்கும் நடைமுறை உண்மைக்கும் ஒத்துவராமல் இருக்கிறது. முதிர்ச்சி பெற்ற கலைஞனின் கலை ரீதியான வெளிப்பாட்டை உணர்ந்து கொள்ள முடியும். உண்மைக் கலைஞனது இதய ஒளியைக் காண சக்தியற்ற குருட்டு ஆந்தைகளிடமி ருந்துதான் எதிர்ப்புக் கிளம்புகிறது.
மு. தளையசிங்கம் (நவீன விமர்சகர். எழுத்தாளர்)
நேரத்தைப் போக்குவதற்காகவும், கவலைகளிலிருந்து தப்புவதற் காகவும் எழுதப்படும் கதைகள் அல்ல இலக்கியம்.
இதை உணர்ந்த புதிய ப ம்பரை இப்போதுதான் வளரத் தொட ங்கி இருக்கிறது. ஆனால் ஆரம்பத்திலே அது தன்னை நிச்சயமாக பிரித்துக் கொண்டே வளர்கிறது. இப்போது சாகித்திய விருதுபெற்ற எழுத்தாளர்கள் அதன் சாதனைகள் அல்ல: அதன் விளைச்சல்கள் இனித்தான் வளர வேண்டும்.
எல்லோருக்கும் சம அந்தஸ்து சம உரிமை என்ற கொள்கைக்கு இலக்கியத்தில் இடமில்லை இலக்கிய நொண்டிகளுக்கும், இலக்கிய குருடுகளுக்கும் சமஉரிமை இலக்கியத்தில் கிடையாது!
* எம். வேதசகாயகுமார் (தமிழ்நாட்டு ஆய்வாளர் விமர்சகர்)
மயக்கம் தரும் மாயைகளை பிளந்து கொண்டு உண்மையைத்தேடி செல்கிறான் கவிஞனும் கலைஞனும். நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப் பாரிப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி. சிறுகதையாகினும் சரி இவைகளை விஸ்தரிக்கும் போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.
மேல் எழுந்தவாரியாக பார்க்காமல் சமூகம், தேசம், பாசை மதம் இவைகளைக் கடந்து மனித ஹிருதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கு பங்கிட்டுக் கொடுப்பதே இலக்கிய ஆசிரியரின் வேலை.
மின்னல் போல் விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அநுபவங் களை நிரந்தரமாக்கி விடுகிறது கலை.
-س- 9 سسسسه

Page 7
* 'பாரசீகக் கவிதைகள்’’ இரண்டு
'பிர்தெளவS’ கவிதை
உன் அழகிய முகத்தோடு எந்த ரோஜாவும் போட்டியிட முடியாது ! உன் கண்ணிமைகளின் அம்புகள் எந்த பலமான கவசத்தையும் துளைக்கும்.
"நிஜாமின்’ கவிதை
உன் உணர்ச்சி உன்னையே குறிபார்க்கும் போது நீ குறிபார்க்காதே !
நீ குதிரையாய் இருக்கும்போது சவுக்கை உபயோகிக்காதே !
இனி சோம்பியிருக்கலாகாது உன் இதயக் கதவுகளைத் திற ! உடைத்துத் திற !
உன் புலன்களை கொல்வோர் நட்பை விடு !
உன் இதயத்திற்கு வழி தெரியும் உனக்கு உன் இதயத்தை தெரியுமா ?
ஒருவன் தான் அமரத்துவம் அடைய வேண்டுமென்று நினைப்பது மிகப் பெரிய தவறை காலம் காலமாக நீட்டிக் கொண்டு போவதற்கான விருப்பாகும்.

எங்களிடம் ஒரு தாய் நாடு இருந்தது
ஆங்கில மூலம் : முஹிம்மத் ஸாலிஹ் யூனிஸ் தமிழ் வடிவம்: எம். கே. எம். ஷகீப்
என் தாய்த் தேசத்தில் ஒரு சிறு பிள்ளையாய் தான் இருந்த போது, மலைச் சிகரத்தில் மலர்ந்திருக்கும் ஓர் அழகான பூவைப் போலிருந்தேன்: அப்போது எனக்கு ஒரு வீடு இருந்தது: தாயும், தந்தையும் இருந்தனர். உற்றார். உறவினர்கள் இருந்தனர், நண்பர்கள், இன்னும் இன்னுமானவர்கள் எல்லாம் இருந்தனர்,
என் தாயகத்தில் நான் சிறுவனாய் இருக்கையில் இவர்களெல்லாம் இருந்தனர்.
என்ன பாவம் செய்தேன்" என தெரியாத நிலையில் நான் துரத்தப்பட்டேன். எனக்குத் தெரிந்ததெல்லாம். அந்தப் பயங்கரமான நாளில் மேகத்தைப் போலிருந்த ஒரு கூடாரத்திற்குள் ஆயிரமாயிரம் அநாதை அகதிகளுடன் ஒன்றுமறியாத புதியவனாய் இருந்ததுதான் !
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் அழிவுக் குண்டுகள்.
-a 1 -

Page 8
என் தந்தையையும். தொடர்ந்து என் தாயையும் அநியாயமாகக் கொன்றன. அவர்கள். என் மாமனை எஞ்சிய என் சகோதரர்களையெல்லாம் கொன்றார்கள். s நான் அதிர்ந்து போனேன். என் கண்ணீர் கூட இறந்து போனது, என்னைத் தாங்கும் கால்கள் வழி தெரியாது நிலைத்து நின்றன! அவர்கள்
என் அனைவரையும் கொன்றார்கள், !
ஒரு தேசம் சோபையிழந்தது அவர்களுக்குப் புனிதமாய்ப்பட பாதம் பதித்து முன்னேறிச் சென்றார்கள்; நாங்கள் -
ஆட்டு மந்தைகளைப் போல் அலைந்து திரிந்தோம் !
அனைத்தும் நடந்தேறிய பின் லட்சக்கணக்கான எங்களின் விழிகள்
தூக்கத்தைத் துறந்தன!
"நாம் ஏன் அந்நியமானோம்" என அவளைப் போல் இன்னும் பலருக்கு தெரியாது ! ஏன் நாம் அந்நியர்களானோம் ? ஆயிரக்கணக்கான ஏன்’கள் என்னிதயத்தை எரித்துக்கொண்டிருக்கின்றன !
நாங்கள்தான், அனைவரும் பார்த்திருக்க ஆடுகளைப் போல் விரட்டப்பட்டவர்கள்:
சதிகார அதிகாரிகளுக்கு
- ست 12 است.

அவர்கள் என் வீட்டைக் கொடுத்தனரி, பின்பு. அவர்கள் என்னைப் போன்ற சிறுவர்களை அழுக்கு நிறைந்த கூட்டுக்குள் தூக்கிப் போட்டனர். அந்த சோகமிகுநாள் எனக்கு ஞாபகமா. 1? எங்கள் பாதைகளை இரத்தச் சமுத்திரங்கள் நிறைத்து விட்ட. :
ராங்கள் -
ஆடு - மாடுகளைப் போல் அலைந்து திரிந்த. நாங்கள் அகதிகளாய் மாறிய. அந்த சோகமிகு நாள் 67697&šGg5 (E3TUS Dmt...? காயப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் வினவிக் கொள்கிறது. "நாம் ஏன் அந்நியரானோம்?" ‘நமக்கேன் இந்த வாழ்வு?
மனிதனைப் பற்றிய 'கவிக்கோவின்" மதிப்பீடு
எல்லாவற்றிற்கும் விலைவாசி ஏறிக்கொண்டு போனாலும் நாளுக்கு நாள் விலைகுறையும் சரக்கு ஒன்று உண்டு மனிதன்!
--س- 13 حسس

Page 9
தூக்குமரத்தின் சுமைகள்
- யெம் - பெளஸ்ர் -
முகத்தில் நெருப்பால் விசிறி அடித்தாற் போலிருந்தது அவளின் வார்த்தை, வார்த்தையா அது?
வார்த்தைக்குள் இப்படியொரு அக்னி ஜுவாலையா? பெரும் புயற்காற்றை விடவும்: பேரழிவுதரும் வெள்ளத்தை விடவும் அழிவு களை சுமந்துவரும் துப்பாக்கி ரவையைவிடவும்; மரணத்தின் கொடிய தன்மையைவிடவும், வார்த்தை சக்தி வாய்ந்ததா? யோசித்து முடிப் பதற்குள் அவள் போய்விட்டாள்.
நான் நினைத்ததை சொன்னவள் அவள், இலக்கியத்தின் மீது அவளது பார்வை என்னோடு கைகோர்த்து வந்தது, கனவுகளை யும் கலர்கலரான தாவணிகளையும் நேசித்துக் கொண்டிருந்த போது; வாழ்வின் யதார்த்தத்தை அவளது விழிகளின் மூலம் எனக் குப் புரிய வைத்தவள். 'போலியாய் வாழாமல் மனிதனாய் வாழ்' என எனக்குப் போதித்தவள் சராசரியாக எந்த ஆணும் பெண்ணும் ஏங்கும் மலிவான இச்சைக்கு நாங்கள் ஒருபோதும் ஏங்கியதில்லை. அவளை விட என்னை அவள் நேசித்தது அதிகம்.
இப்போது அவள் இல்லை; போய்விட்டாள், 1992 ஏப்ரலில் எனது செளந்தர்யம் இடிந்து போன ஒரு மாலைப்பொழுதில்; எது வும் பேசாமல் போய்விட்டாள். நான் இடிந்து போனேன்; அந்த வேதனையால் இப்படியொரு கவிதை எழுதினேன்,
மனமெங்கும் பரந்த வெளி ஒரு நிழல் கூட இல்லாத வெளி! சர்வமும் அடங்கிப் போன ஏகாந்தம். வெட்ட வெளிதனில் சூரியன் சுடும் வெளி சூரியன் தலைக்கு மேலே
سد 14 تس

மரணம் கண் முன்னே புதைகுழி காலடியில்; உணர்ச்சியற்ற வெளிதனில் எனது வெறும் உடம்பும்; நானும் இந்த வாழ்வு சகிக்கவில்லை. யெளவனம் முழுதும் பாரம் சுமந்த ஜீவனம் நீதான் எனக்கொரு நிழலாய் இருந்தாய்! நிழல் முறிந்து தலை உடைந்த கதையாய் நீ மாறினாய்! அறுந்த வீணையாய் நான் கிழிபட்டுக் கிடக்கிறேன்; இன்றோ நாளையோ வெளியேறி விடும் உயிரி.
இன்றும் அந்த டைரியின் பக்கத்தின் மீது எனது கண்ணீர்த் துளிகள் காயவில்லை, நினைத்தது அனைத்தையும் இக் கவிதையில் எழுதவில்லை என்பதால் அழுதேன்.
உன்னைத் தேடி நான் எங்கெல்லாம் அலைந்தேன்; உன்னைத் தேடிய கதையை உன்னருகில் அமர்ந்து நாட்கணக்காக சொல்லி யிருக்கிறேன் அல்லவா? விழிகளை உருட்டி உருட்டி நாடியில் கையை வைத்து எவ்வளவு சுவாரஸ்யமாகக் கேட்டாய்?நீண்டஇடை வெளிக்குப்பின் அன்று ஒரே வார்த்தைதான் பேசினாய். (என்னை உன்னில் ஆகர்ஷிப்பது உனது கனதி கூடிய பதில்கள்தான்) சொன் னாய் "உங்களை நான் காலகாலமாய் தேடியே கண்டுபிடித்திருக் கிறேன்" என்றாய்.
எனது தேடலின் தூண்டிலில் உனது ஆத்மா வந்து விழும் என நான் தூண்டிற் காரனாய் காத்திருந்தேனா? வந்து விழுந்தாய் இரையாக நான் எண்ணவில்லை.
மார்க்சின் கவிதைகள் சொன்னாய், இலக்கியப் படைப்புகளின் தரம் சொன்னாய்; ஜென்னியின் துன்பத்தைப்பற்றி சோன்னாய்; மார்க்சிக் காய் அவள் வடித்த கண் ணிரை நீ வடிப்பதற்கும்; துன்பத்தில் உழல்வதற்கும் தயாராய் இருப்பதாய் சொன்னாய்; உன்னைப் போல் நீ சொன்ன ஜென்னியின் கவிதையும் எனது ஆத்மா எங்கும் வியா பித்திருக்கிறது. ஜென்னி அழுது கொண்டு மார்க்ஸிக்காக
- 15 -

Page 10
இக் கவிதையை எழுதினாளோ என்னவோ தெரியாது. நீ அழுது கொண்டே அழுத்தி அழுத்தி வார்த்தைகளை அறிந்து புரிந்து அனுப வித்தது போல் சொன்னாய். இப்போது என் முன்னே உனதுகுரலுடன் அந்தக் கவிதை; ஒவ்வொரு விழி மூடும் இரவிலும் என்னை அலைக் கழிக்கிறது.
* உனது குழந்தை பிறந்த போது அதை வளர்ப்பதற்கு தொட்டிலும் இல்லை ! உனது குழந்தை இறந்த போது அதைப் புதைப்பதற்கு சவப்பெட்டியும் இல்லை’
என்ற கவிதை; இதுதான் வாழ்வியலின் மூச்சான கவிதை என்றாய்; உனது பார்வையின் ஆழத்தை உனது வார்த்தை சொன்னது,
நீ இப்படியெல்லாம் அடிக்கடி பேசுவாய்! ஒரு பல்கலைக்கழக பேராசிரியரைப்போல்; நீ எனக்கு வாழ்வை கற்பிக்க வந்த தேவதை போல் உன் உதட்டு அசைவையே நான் பார்த்துக்கொண்டிருப்பேன். மனித வாழ்வு என்றால்.உயிர்வாழ்தலும் இனவிருத்தியும்தான் என நீ ஒரு நாளும் என்னிடம் சொல்லியதில்லை. உன்னைப் பற்றி நான் கட்டிய நிஜமான கனவுகள் ஒரு மாலைப்பொழுதில் பொய்த்துப்போய் விட்டது. நீ போய் விட்டாய்!
*உன்னதமான வாழ்வு" என்றால் என்ன என்று ஒரு நாள் நீ என் னிடம் கேட்டாய்? நான் சொல்வதற்குள் நீ சொன்னாய். ‘மனதுக்கு பிடித்தவுடன் வாழ்வதை விட உன்னதமான வாழ்வு வேறில்லை என் றாய்”அப்படிஎன்றால் என் மணவீட்டைவிட்டு நீ ஏன் பறந்துபோனாய்! நான் உன்னை ஹிம்சைப்படுத்தினேனா? இல்லையென்றால் உன்னத மான வாழ்வு என்னால் தர முடியாது என நீ நினைத் தாயா? வாழ்வு என்பது சித்ரவதைமிக்கது என்பாய்" அதன்படி நீ என்னை வருத்துவ தன்மூலம்உன்னை வருத்திக்கொள்ள நினைத்தாயா? எல்லாம்புரிந்தது நீ; புரியப்படாதது போல் போய் விட்டாய்.
கித்திரவதைமிக்க ஒரு நாளில், உன்னைத் தேடி மனம் அலை பாய் ந்து கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில் உனது கடிதம் வந் தது. சோகமான பாடல்களை எல்லாம் உனது கடிதம் சுமந்து வந்தது. நானொரு கவிஞன் என்பதை நீ ஏற்றுக்கொண்டாய்; அனைத்து புகழ் மாலைகளையும் விட உனது அங்கீகாரம் அவசியமாய்பட்டது. அந்த நாளில் எனது பாடல்கள் யாவும் உன்னையே அழைத்தது,
سے 16 مسس۔

இன்று உன்னைத் தேடியே எனது கால்கள் அலுத்து வீழ்ந்தது. நாவு கள் வரண்டது. இருந்தும் நீ எங்கேயோ இருந்து 'கலில் ஜீப்ரானின்' முறிந்த சிறகுகளையே எனக்குப் பரிசாய் தந்தாய் !
பிரியமுள்ள எதையும் நான் இழக்கும் போது அழுது கொண்டே பிரிந்திருக்கிறேன். எங்குமே இருள் ! தேடியதும், ஹிருதயம் பிரியப் பட்டதும் கிடைக்கவில்லை. கலில் ஜீப்ரான் தேவதாருமரங்களிடையே, லெபனான் பள்ளத்தாக்குகளில் செல்மாவை தேடி அலைந்தான். நான் எங்கே அலைவேன்...? என்றோ ஒரு நாளில் ஏன் போனாய் என்று தெரியாத உன்னை சந்திப்பேன்; நம்பிக்கை இன்னும் அற்று விட வில்லை. அத னால்தான் உன்னைத் தேடியே எனது பாடல்கள் அலை கிறது. எல்லாவற்றையும் மீறி இன்றோ நாளையோ உயிர் போய் விட்
(-69. . . . . .
எந்த ஜீவனாவது என் மீது பிரியப்படுமா ?
y w a 9 p. A
. இதுவும் புரியவில்லை!
சந்தர ராமசாமியின் " ஜே. ஜே. சில குறிப்புகளிலிருந்து'.
மேதாவிலாசத்திற்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ; அதிலும் இந்த நாற் பதை எட்டிய வயதுகள்; விசேடமாக வறுமை பிடுங்கும் இந்தி யாவில் எழுத்தாளர்களுக்கு சோதனையாகவே இருந்தி நக்கின் றன; தமிழில் பாரதி, புதுமைப்பித்தன், கு. ப , அழகிரிசாமி மு. தளையசிங்கம் இந்த வரிசையில் இன்று ஜே ஜே
நாய்போல் மூச்சிரைக்க - சில எட்டுகள் மேலும் ஒடி நின்று விட்டேன். உலகத்து புழுதியை மறைத்துக் கொண்டிருந்தார் கள் பெண்கள். மேகங்களை கலைப்பவன் அவன் என் காதலி யின் புன்முறுவலில் நான் மதிமயங்கி நிற்கு போது இது புன் முறுவல் அல்ல! பொய் என்று அவன் சொல்லக் கூடுமென்
سمس (6"DIT
-- 17 س--

Page 11
இன்றைய குறிப்பு
- எம். பெளஸர் --
இன்றும் புதிதாய் ஒரு கனவு 'இறக்கை விரித்து மனவானில்
கண்ணை மூடிய கடும் வார்த்தைகள் நெஞ் சைத் துளைக்கும் பிசாசுப் பார்வைகள் நேயமித்க் த பார்வையொன்று கிடைக்குமா ? ஏங்கி ஏங்கி ஹிருதயம் கனத்தது.
#"܀
உணர்வுகள் கலைக்கேறி மனம் விகாரமானது அனுபவித்தது அனைத்தும் கசந்தது செத்துப் போ வென அசரீரி கேட்டது எது பிழை ? எது சரி ? யார், !பாருக்காக இலக்கணம் வகுத்தது? கேள்விகள் சிறைகளாகியது.
* * சொர்க்கம் நாகம் எது கிடைத் தாலென்ன சொர்க்கத்தில் மகிழ்ச்சியாகவா வாழப் போகிறோம் ? எழுதியதுதான் தீர்ப்பாக இருக்குமென்றால் அழித்துவிடத் துணிகிறேன் என்ன திட்டம் போட்டாலும் வேறென்னவோ நடக்கிறது.
ஒருவன் தான் அமரத்துவம் அடையவேண்டும் என்று நினைப் து; மிகப் பெரிய தவறை காலம் காலமாக நீட்டிக் கொண்டு போவதற்கான விருப்பமாகும்.
(ஆர்தர் ஷேபன் ஹவர்)
ساحت 18 سیسی.

சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற கவிதை நூல் ஒரு கண்னோட்டம்
மேமன் கவியின் “நாளையை நோக்கிய 65 pi5i...”
- மு. பஷிர் -
மனித மேம்பாட்டுக்கு கலை இலக்கியம் பயனுள்ள ஊக்க சக்தி யாய், விளங்கி வருகின்றது. அறிவின், பரிணாமமும் டரி டாணமும் திசை பிரிந்து, அழிவு, ஆக்கம், இரண்டிலும் ஊடறுத்துச் செல் கிறது. நமது வரலாற்று, இலக்கிய இதி 51 ச, ஏங்களை ட புரட்டி னால், மனிதநேயம் கலந்த விழுமிய வ: ழ்க்கை ப - ன்பு x ன் குறித்தே உரத்துப் பேசப்பட்டு வந்துள்ளன. இன்றைய சராசரி பட00தன் ஆன்மாவை தொலைத்து விட டு பொருளாதார ட if ( i ) ... Gör, கைகுலுக்கி மகிழவே வருமபுகிறான். இது நவீன பனித்ததைப் பற்றிக கொண்ட பெருநோய்.
இந்த சுயமிழந்து, காயப்பட்டு, வீரியமிழந்து. சோரப் போகும், மனிதா சளின் இயந்திரத் தலைகமயா68 ல் ழ்க் ஃ க அபாய கதைக் கண்டு, தனது கவிதைக் கண்களால் சிண் ணி. ( 4 : கியூர் மேன கவி. இவரது த ளை யை நே 3கிய இனம், ட், கவிதை த தெ குப்பு சமகால நிகழ்வுகளை, எதிா கால ட த ப்புகளை , பூட சம கவும், புத்த பூா வமாகவும் விளக்கும நல்லதொரு கவிதை நூலக அமைந் துள்ளது.
மேமன்சவி என்ற இளம் கலித்துவ சிந்தனை:ாளனின் ஆற்றல், அனுபவம, ஆளுவம, ஆகியவற்றின் வெளிப்பாட்டை ஆழமாய் அணுகுவதற்கு, அடையாளமாய் இந்நூலைக் கெ: ஸ்ளலாம், சிறந்த கவிதை நூலுக்கான இலங்கை சாகத் தய ஆண்ட ல 2தின் பரிசை நாளைed ய நோக்கிய இன்றில் ஆண்பை யில் பெற்றிருபபது இங்கு குறிபபீடத்தக்கது.
82-தொடக்கம் 88 வரையிலான காலப்பகுதியில் இலங்கை இந்திய சஞ்சிகைகளில் வெளியான 52 கவிதைகளை உள்ளடக்கிய இந்நூலுக்கு கவிச்கோ-அப்துல் ரஹ்மான் அணிந்துரை வழங்கியுள் ளார். அழகிய அட்டைப் படத்துடன் மிகச் சிறபபாக வெளியிட்டி ருக்கிறார்கள், சென்னை நா படி? பதிப்பத்த" , "யுர: துங்கள்'ஹிரோ ஷி (ாவின் ஹீரேn க்கள் "இயநதிரச்சூடின் 'டோல் ற கவிதைத் தெ குப்புகளுக்கு ஆசிரியரான இவர் தனது இலக்கிய ஆசான் மறைந்த கவிஞர் ஈழவ்ாலை விகவகளுக்த நூலை சமர்ப்டனம் செய்துள்ளார். புதுக்கவிதையுலகில் படியச் குயி: ய் சிறு கடிக்கும் இவர், பலரது கணிப்பிற்கும் கரிசனைக்கும், ஆளாகி கவிவானில்,
-يوس- 19 ډصسه

Page 12
கடல் கடந்த திசைகளிலும் கூட இவர் பிரகாசிக்கின்றார். ஒற்றைக் குயிலின் உளளார்ந்த சோகங்களை இவர் கவிதை கொண்டிருந்தா லும், சொல்லாட்சி - படிமம் இவற்றுக்கே ஆழ்ந்த அழுத்தம் கொடுக்கின்றார்.
"ஆத்ம சுத்தமான நேசங்களின் சுழற்சியாலும் தேசீய சர்வ தேசீயங்களின் மீதான அக்கறை கலந்த அபிமானமிக்க உணர்வுக ளாலும் எனக்கு வந்துசேர்ந்த அனுபவங்கள் தந்த செய்திகளை பொதுத்தளத்திறகு எடுத்துச் செல்லவேண்டும் என்று அரிக்கும் அவஸ்ததை ஏற்படட வேளை தான்-தமிழ் இலக்கிய உலகில் என் எழுததுக குரல ஒலிக்கத் தொடங்கியது’’ என்று தனதுரையில் நூலா சிரியா குறிபபிடடுள்விாா' இன்றைய புதுக்கவிதையுலகின் மூவேந் தாகவ எனறு வ:னிககபபடுகினற, மூவர் மேமன் கவியின் கவிதைப் பங்களிபபு பறற, எண்ன செல்கறான்கள் எனறு பார்ப்போம்.
'மேமன கவியும் அவருக்கான ஓர் உலகத்தைப் படைக்க முயன்றி ருககிறா. மனித நேய தமதாடு ஸாவ ஆருதயங்களையும அதன் பிர மஞகளாக கிக கொளகிறார், யநதிர வாழ்ககையில புறச்சூழல அந்நிய மயக சமூகச சீரழிவின் விளைவாக உடைநத சுயமுகங்களுடன் திரியும் மனிதனுககாக அனுதாபப்படுகிறார். ரத்தா கிடபோன காசோலை பேய ல கழறது பே மண் மனித ஆறு ககாக காலத\தோடு சேர்ந்து அழுகி றபா. இங்கிக் காறலும் கூடத் த ைசுதநதியததை விற்று நிற்கும் அவ லடய கண்டு குமுறுகிற .ே கவிககவா சிசி ஏற்படுத்தாத அவருடைய வணிகச சூழலும அவருடைய கவிபபாாவை பட்டுப் பிரகாசிகதிறது." (தளையை நோகதிய ஆன்றல்)
காலத்தன் அடிவயிற்றிலிருந்து மேமன் கவி போன்ற கவிஞர்கள் வெடிதது விழுவதறகு அதன் மணனும அது பெற்ற புண்ணும் காரண மாகும. தமிழைத தாய் பொழியாகக கொள்ளாத ஒருவா தமிழ் கவி யாய மலா நதிருபபது தமிழுககுப அவருக்கும் கிடைத்த பெருமையா கும. இக கவிதைகளுககுள எரியும் கல்ை ஓர் அணையாத நெருப்பாக தன வெபடததை அவகுதூரத்துக்கு வீசுகிறது. உருவகங்களும் - படி மங்களும் அணிவகுத்து நிறை லுt; கருத்துகளின் முன்னால் அவை கை கட்டியே நிறகின்றன. கவிஞர் வைரமுத்து (இயந்திரச் சூரியன்) கலை இலககியங்களுககெல்லாம அஸ்த்திவாரம் எதுஎன்பதை அருமை நண்பர் மேமன்கவி அறிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் சமூக நதிக் கரையில் எனக்கு கலை மூலத்தை போதித்த மனித குலத்திற்கு எறுை தன் கவிதைத் தொகுதியை படையல் செய்கிறார். (ஹிரோஷிமாவின் ஹீரோக்கள்) மு. மேத்தா,
مس. {} " عميمي.

-அந்தியாய் விழுங்கும் நெருப்பு மாத்திரையே சிந்தி ஒடும் சமூக நோய்கள் தீர்த்துவிடு! புழுதித தெருவில் தனிமைத் தவமிருந்து அழுதே யாசிக்கும் முகங்கள மலர்ந்திடவும் உன் ஒளிப்படுக்கை சோற்று மணியாய் சின்ன விரலுக்காய் அவிந்திடவும் சூரிய அடுப்பே எழுமின் எழுமின் 1 கூறிய கதிரில் நவயுகக் கதை கூறி. எழுமின் (ஒளிப்படகுக்காரனுக்கு ஒரு விண்ணப்பம்)
'உன் ஒளிப்படுக்கை சோற்றுமணியாய்-சின்ன விரலுக்காய் அவிந் திடவும் சூரிய அடுப்பே எழுமின் ' உவமை உவமானங்களால் சிறந்து விளங்கும் அழகான கவிதை இது.
எல்லா இலக்கண வரம்புகளையும் உடைத்துக்கொண்டு பீறிட்ட புதுப்பிரவாகமே புதுக்கவிதை! என்று வாதிடுவோரும் உளர், உருவம், உள்ளடக்கம் உததி-படிமம் இறுக்கம், எளிமை சொல்லாட்சி கலைத் துவம் என்பன கவிதையின் சிறப்பிற்கு ஆதார சுருதியாய் அமையும் அடிப்படைக் கோட்டாடுகள் என்று தர்க்கிப்போரும் உளர் மேமன் கவியின் கவிதைகள் எந்த வகையைச் சார்ந்துள்ளது? நாளையை நோக் கிய இன்றில். வரும் பெரும்பாலான கவிதைகள் உருவம், உள்ளடக் கம், படிமம். கலைத்துவம். யதார்த்தம் போன்றவற்றின். அடிப்படை யில் எழுந்த கவிதைகளாகவே இடம் பெற்றுள்ளன. நடைமுறையில் சாத்தியப்படாத வெற்று கோஷங்கள். இதில் இடம் பெறாதது இந்நூலின் சிறப்பம்சம் என்று சொல்லலாம்,
தன்னைச் சூழ்ந்துள்ள மனிதர்களில் இருந்தே வாழ்க்கைத் தத்து வங்களையும், கவித்துவ கிளர்ச்சியையும், பெற்றேன் எ ன் கி றா ரி கவிஞர்.
"என் கலை இலக்கிய வளர்ச்சிக்கு எனது சயம் மட்டும் காரண மாக அமையவில்லை. அதற்கு அப்பால் சமூகத்தின் பல்வேறு தளங் களைச் சார்ந்த மனிதர்கள் தந்த ஊக்கமும்; செய்த உதவியும், அத் தோடு கூர்மை அடைந்த என் சூழல் எனக்கு பெற்றுத் தரும் அனுபவத் தின் தாக்கமும் சேர்ந்துதான் கலவையாகி என்னை உற்பத்தி செய்துள் ளன.’’ என்று குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவிடம் இப்படி கேட் கப்பட்டது,
கவிதை எழுதும் ஆற்றலை உங்களிடம் வளர்த்தவர் யார்? பதில். உயர்தினைகளை விட அஃறிணைகளுக்கே அதில் பங்கு அதிகம். இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒவ்வொரு கலை இலக்கியவாதியுள்ளும்,
۔۔۔۔۔ 21 مربس۔--سے

Page 13
தனிப்பட்ட சொந்தக்கருத்துகள். வெவ்வேறானவை! என்பதை ஞாபக மூட்டவே; நாம் மிக அற்பமென ஒதுக்கித் தள்ளும் விஷயங்களைக கூட
ஜீவத்துவமுள்ள கவிதைகளாக ஒரு சிலவற்றை படைத்திருக்கிறார்
மேமன் கவி. ஆமர் வீதி நடைபாதை புத்தக வியாபாரியும், பல்லிகள்
பற்றிய கவிதையையும் நாம் மறந்திருந்தாலும் அந்தக்காட்சி தரிசனம்
எம் கண்ணுக்கு கிடைக்கும் போதெல்லாம் உயிர்த்துடிப்புன்ௗ அவ
ரது கவிதை வரிகள் நெஞ்சை வருடுகின்றன.
தன்னைப்போல பிறரையும் மதிக்கின்ற இரக்ககுணம் அநீதி யைக்கண்டு அச்சங்கொள்ளாது சாடுகினற மனவலிமை, சமூகத்தின் மீது பற்று கொண்டு டிேமடடத்து மக்ஃளின் இன்னல் தீர உழைப்பது, சககலைஞன் மீது ஆத்ம்ார்த்தமான ஸிதேஷ்ம் சொரிதல், இந்தக் காரணிகளால் உந்தப்பட்டவர்களே உண்tை க் கலைஞன் ஆவான். இது மேமன் கவியிடம் இயல்பாய் அமைந்துள்ள குணஇயல்புகள் என்பதை அவரே டு கருதது வித்தி: சிம் கொண்ட கலைஇலக்கிய நண்பர்களும் கூட ஒப்புக்கொள்:ார்கள், ஒரு கலைஞன் ஜவுளிக கடை வியாபாரியாகவோ, தெருக்கூட்டும் தொழிலாளியாகவோ இருப்பது காலம் அவனுக்கிட்ட உழைப்புக் கட்டளை.
தமிழ் இலக்கியத்திலே அழியாத சில தடங்களைப் பதித்த (பசுவய்யா) சுந்தரராமசாமி ஒரு ஜவுளிக்கடை வியாபாரிதான் தமிழ் நாவலிலக்கியத்தில் ஒதுக்கவே முடியாத உயர்ந்த ஸ்தானத் தில் வைத்து கணிக்கப்படவேண்டிய தோப்பில் மீரான (ஒரு கட லோரக் கிராமத்தின் கதை) திருவனந்தபுரம யலையாளத தமிழ் தந்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாவல்கள் பலவற்றைத்தந்த, ஆ-மாதவன் ஆகியோர் வியாபாரிகள்தான். இனனும் சொலெலாம். அவை தனி மனித விமர்சனம் ஆவதற்குள் தவிர்த்துக் கொள் கிறேன். -
கவிஞர் மேமன் கவியிடம் இருக்கும் கவித்துவம் சொல்லாட்சி சிதறல்களும், கிராமத்து மண்ணுககுள் ஊடுருவிப் பிரகாசிக்க வேண் டும். வெறும் காட்சி ரீதியில் கிராமங்களை அணுகுவதைவிட உள் ளார்த்தமாக கிராமத்தின் உயிர்துடிப்பேடு ஒன்றிவிட வேண்டும். அப்போது இவர் மூலம் தமிழ்க் கவிதையுலகிற்கு அரிய பொக்கிஷங் கள் கிடைக்கலாம். ஒரேவிதமான நடையை மாற்றி பல்வேறு உத்தி களில் இவரது கவிதைப் பயணத்தை தொடரலாம். இவரது கவிதை களில் எளிமையை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது. நிச்சயம் மாற்றம் தேவை. இதை வாசகர் உலகம் ஆவலோடு எதிர்பார்க் கிறது. நாளையை நோக்கிய இன்றில், ஜீவனுள்ள கவிதைகளால் சிறந்து விளங்குகின்றது,
سیسہ 22 ۔ ۔ ۔

கரைகளுக்கும் அப்பால்.
“சிற்றிதழ் செய்தி” g
ஆசிரியர் பொள்ளாச்சிநாசன்
தமிழ்நடு
தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை காலமும் வெளியிடப் பட்ட இலக்கிய சிற்றிதழ்கள் பற்றிய தேடல் முயற்சியில் நான் ஈடுபட்டிருக்கும் நேரம் உங்களுடைய தடம் இரு இதழ்களும் கிடைக்கப் பெற்றது மிக்க மகிழ்ச்சி.
ஈழத்தில் வெளிாகும் இலக்கிய சிற்றிதழ்களை எனது தேடல் முயற்சிக்காக அனுப்பி வையுங்கள் அந்தனி ஜீவா இம்முயற்சிக்கு எனக்கு உதவி வருகிறார் "தடம்" சிறப்பான போக்கை கொண் டிருப்பதை என்னால் உணர முடிந்தது ‘முனைப்பு" உங்கள் இலக் கியப் போக்கு இங்கிருந்து கொண்டே உங்களுடன் கைகோர்க்கத் துடிக்கிறது.
நிச்சயமாக "தடம்" தனது விலாசத்தை எதிர் காலத்தில் அகலப் படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது ஈழத்து இலக்கிய ஆர் வலர்கள் இம் முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும்.
S. RAMRAJ 71 00 Hei Bonn Germany
ஈழத்து அரசியல் நிகழ்வுகளால் புலம் பெயர்ந்தவர்கள் நாங் கள், நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர் “தயா" உங்கள் தடத் துடன் எனது கதவைத் தட்டினார் பார்த்தேன் உங்கள் ஆரம்ப முயற்சி பாராட்டுக்கள் இன்னும் இன்னும் வானம்பாடிகளின் சிறகு களை விரித்து உயரப்பறவுங்கள் அரசியலும் இலக்கியமும் பிரிக்க முடியாத துறைகள் என்பது எனது கருத்து
புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறோம் ஐரோப்பாவிலிருந்து தூண்டில், சுவடு மனிதம், அ ஆ இ போன்ற இலக்கிய சஞ்சிகைகள் வெளிவருகிறது. இவைகளையும் படியுங்கள் சமகால இலக்கியப் போக்கை புரிந்து கொள்வீர்கள்
அன்புடன் ராம்ராஜ்
- 23 అలా

Page 14
நேசத்தின் கண்ணிர்
- கவிப்பிரியா நிஷா -
உனது வார்த்தைகள் என்மீது மாலையாய் விழுந்தது உனது ஆசைகளுக்கு நான் தீனியானேன்.
பிறகு அபலையாய் அலைந்தேன் என் மீது இரக்கம் கொள்ள உன்னால் முடியவில்லை.
நீ பேசிய வார்த்தைகள் என்ன? நீ தந்த வாக்குறுதிகள் எங்கே?
உனது "நேசம்' கலந்த காதல் கடிதங்கள் இன்னும் என் மார்புக்குள்ளே!
வறுமை நிலையை கவர்ச்சிகரமாக காட்டும் போக்கு எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. வறுமையை நினைவு கூர்ந்து அதில்தான் சந்தோஷமாக இருந்ததாகக் கூறும் ஒரு ஏழையை, இதுவரை பார்த்ததில்லை.
என்னைப் பொறுத்தவரை வறுமை என்பது கவர்ச்சிகர மானதோ: மனிதனை உன்னதமாக்கும் ஒன்றோ அல்ல, சமூகக் கொள்கைகளை சிதைப்பதைத் தவிர, வறுமை எனக்கு வேறு எதையும் கற்றுத்தரவில்லை பணக்காரர்கள் யோக்யமானவர்கள் என்று போற்றப்படும் வர்க்கத்தினரின் மிகைப்படுத்தப்பட்ட பண்புகளை அறியும் நோக்கை வறுமை எனக்கு கற்றுத்தந்தது.
சார்லி சப்ளின்
- 24 -
 

இப்புத்தகத்தின் வளர்ச்சிக்கு இலக்கிய ஆர்வலர்கள்
கர்த்தாக்கள் ஆதரவு வழங்குவதோடு, புத்தக தருகை 12-வை எமக்கு கிடைக்க வழி செய்வது
-வானம்பாடிகள்

Page 15
With Best
அக்கரைப்ப
ஆடமபரமான ஆ
இன்றே எம
குமரன் அச்சகம் 201,
 

Compliments
STREET
AIPATTU
ற்று நகரில் பூடைத் தேவைக்கு து ஸ்தாபனம்
டாம் வீதி, கொழும்பு 12