கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இதயம் 1971.10

Page 1


Page 2

நினைவில் கொள்ளுங்கள்
இதயம் அடுத்த மாத இதழ் பெண்கள் மலர்
இலங்கையில் பெண் எழுத் தாளர்கள் எத்தனை பேர்? என்று கேட்டால் விரல் விட்டு எண்ணு கிருர்கள் சிலர்.
எண்ணிக்கையில் குறைந்த வர்களா அவர்கள் ?? இல்லை" என்கிறது "இதயம் ஏழாவது இதழ்.
புதிய - ஆனல் தரமான" பல பெண் எழுத்தாளர்களின் எண்ணக் கருவூலங்களைத் தாங்கி இதயம்" நவம்பர் இதழ் பெண்கள் மலராக மலர்கிறது,
நினேவிருக்கட்டும் இதயம் நவம்பர் இதழ்
p பெண்கள் மலர்'

Page 3
கலே, இலக்கியத் திங்கன் இதழ் ஆசிரியர் : சி. மகேஸ்வரன்
15/1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
அன்புள்ள வாசகருக்த, 11 O1971
வணக்கம்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மடல் வரைய வேண்டு மென்று நினைத்தேன். ஆணுல் எத்தனை பேருக்கென்று எழுதுவது ? அதுவும் தவிர என்மீது அன்பு கொண்டிருக்கும் நீங்கள் என் கை வலிப் பதை விரும்ப மாட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன்;
அதனுல்தான் தனித்தனியாக கடிதம் எழுதுவதைவிட "இதயம்" மூலமாக ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி வைக்கலாமே என்று தோன் றிற்று. எழுதுகிறேன்.
"கடிதங்கள் பலவகைப்படும்" என்று சிறுவயதில் படித்த ஞாபகம் இது எந்த வகை ? நிச்சயமாக இது “தெர்ல்லை கொடுக்கும் வகை யைச் சேர்ந்த கடிதமாக இருக்காது என்பதுமட்டும் உறுதி
ஆகவே இந்தக் கடிதத்தில் ஏதாவது ஒரு முக்கிய அம்சம் இருக் இP என்று நீங்கள் நம்பலாம். எனக்கும் உங்களுக்குமிடையில் பேசிக் கொள்ளப்படும் "இரகசியங்கள்” எப்போதும் "இதயம்" பற்றியதாகவே இருந்து வருகிறது.
இந்தக் கடிதம் மட்டும் அதற்கு விதி விலக்காக அமைய வேண்டுமா 6Tirso P
எனவேதான்"இதயம்" பற்றிய சில கருத்துக்களை இங்கும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்
"இனி வரப்போகும் இதயம் எத்தனையாவது இதழ்?" “இலங்கைப் பத்திரிகைகள்" என்றல் எட்ட நின்று பார்த்து "என்ன இருக்கிறது இதற்குள்?' என்று கேள்வி எழுப்பிவிட்டுப் போய்விடு வதையே வழக்கமாகக் கொண்டுள்ள ஒரு அன்பர் கேட்ட கேள்விஅது ! "இனி வரப்போவது "இதயம்" ஆறவது இதழ்.” என்றேன்.
அவர் சில நிமிடங்கள் சிந்தனையிலாழ்ந்திருந்தார். "சரி இனி நானும் இதயம்" படிக்கிறேன்." என்ருர், "என்ன, திடீர் மாற்றம் ?" என்றேன் சிரித்தபடி, "உன் துணிச்சல் எனக்கு நம்பிக்கையூட்டுகிறது" என்றர் அவர் நான் உடனே சொன்னேன்; Y.
 

*அந்தத் துணிச்சலை என்னுள் வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் "இத யம்" வளரவேண்டுமென்று ஆதரவு நல்கி வரும் அதன் அன்புள்ள வாச கர்கள்*
அவர் முகம் மலர்ந்தது, “நானும் அந்த வாசகர்களில் ஒருவனுக நின்று ஆதரவு தரு வேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.
"இதயம்" வளர - அது தன் பணியைத் தொடர - அதன் வாசகர் களாகிய நீங்கள் காட்டிவரும் ஆதரவே, "இதயம் மேலும் மேலும் சிறப் படைந்துவர காரணம் என்று சொல்லிக்கொள்ளும் போதெல்லாம் உங் களைத்தான் நான் நன்றியுடன்நினைவு கூர்கிறேன். காலம் நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறதா ? காலத்திற்கேற்ப நாம் மாறிக் கொண்டிருக்கிறேமா ? மாற்றங்கள் நம்மைப் பொறுத்தவை என்பதனுல் "காலத்திற்கேற்ப நாம்தான் மாறிக் கொண்டிருக்கிறேம்” என்பதே சரியாக இருக்கும் நேற்று நாம் சொன்ன கருத்துக்கள் - இன்று நாம் சொன்ன கருத் துக்களுக்கு முற்றிலும் மாறுபாடுடையதாகக் கூட இருக்கலாம்.
ஏனெனில்நாம் மாறிக்கொண்டிருக்கிறேம் நமது இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரையில் நேற்று நம்மை ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று நம்மைப் பார்த்து வியக் கும் அளவுக்கு
நாம் மாறிக் கொண்டிருக்கிறேம்நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறேம் கலை, இலக்கியத் துறையில் ! காரணம் எதுவாக இருக்கும் ? உண்மையைச் சொல்வதானுல் நம்மிடையே ஒரு விழிப்புணர்ச்சி உரு வாகிவிட்டது என்றே சொல்லவேண்டும்:
இந்த விழிப்புணர்ச்சி வேகம் பெற வேண்டுமென்றே இதயம்” விரும்புகிறது. கலை, இலக்கியத் துறையில் நமது பணியை நாம் இயற்ற வேண்டும்.
" "இதயம்" எதைச் சாதித்தது இதுவரை ?” என்று என்னிடம் யாரோ கேட்ட ஞாபகம்,
"இதயம்" ஒரு களமாகத்தான் இயங்கும். அதில் சாதனை புரிய வேண்டியவர்கள் இன்றைய படைப்பாளிகள்; அந்தச் சாதனைகளைப்பற் றிய கருத்துக்களைச் சொல்லவேண்டியவர்கள் வாசகர்கள்:
"இதயம்" உங்களுக்காக-உங்கள் சாதனைகளுக்காக-சாதனைகள் பற்றிய விமர்சனங்களுக்காக-துடித்துக்கொண்டிருக்கிறது.
இந்தக் கடிதத்திற்கான உங்கள் பதில்காண காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.
என்றும் உங்கள் சி. டிகேஸ்வரன்

Page 4
RO போக்கிரிப் பயல்
கம்ஸினின் ஒலி பெருக்கி தேன்குழைத்த கானங்களை அள் ளிச் சொரிந்து கொண்டிருந்தது. ரமீஸ் ஹாஜியாரின் மனை எழில் கோலத்தில் நகைக்கின்றது பட் டவர்த்தனத்தில் இவர் த் தி, அணைத்துவளர்த்த அ வரி ன் * யெளவன ரோஜாவின் வாழ் வின் இரண்டாவது திருமண விழா நாள் அன்று! இதனல் அவ்வகமே இன்ப ல யி ப் பி ல் லாவண்யமாகக் கிடந்தது:
மணவாளர் வரும் வரை சிரத்தில் மக்கத்துச் "சால்வை’ ஒன்று அலங்கரிக்க க ர த் தி ல் பன்னீர்ச் செம்பொன்று முறு வலிக்க, மற்ற க் க ரத் தி ல் மாலையொன்றும் த ரா ள |ா ட, முல்லை பூ த் த வதனத்துடன் *புது தினுசாக" வீட்டுத் தலை வாயில் காட்சிதருகிருர் ரமீஸ் ஹாஜியார்
பாதையில் அம ர் க்க ள ம்! "மாப்பிள்ளையாரும், "சலவாத்” தொலியுடன் உற்ருர் ஊரார் புடைசூழ சின்னநடைபோட்டு வருகிருர், இக்காட்சி ஹாஜி uLu nr 60) IT *கந்தர்வ Gantasis திற்கு ஈர்த்துச் சென்று விட்
--தி
டுமீல், டுமீல். .
னுள்,
“நீள்கரை நம்பி”
பட்டாசுகள் கொளுத்தப் பட்டன! தலைவாயில் மணவா ளர், ஏனையோரும் காலடிவைக் கின்றனர் ஹாஜியாரின் கரங் களில் இருந்த பன்னீர்ச் செம் பும், மாலையும் தத்தம் பணிக ளைப் புரிந்தன. தாலியும் மணப் பெண்ணின் கழுத்தில் ஏறியது புதுக்கோலப் போர்வையி எழில் தி ரை யி னு ஸ் நுழைந்து வந்தவர் வேறுயாரு மல்ல! திருநிறைச் செல்வர் சில்லையூர் கிராமசபை ஏழாம் வட்டார உறுப்பினர் நளிம் தர்ன்! கொழுத்த இட த் தி ல் மஹாராணி ஒருத்தியைக் கரம் பிடிக்கப் போகும் இன்பக் கிளு கிளுப்பு அவருக்கு!
மெம்பர் நளீம் ஒரு கட்சி பக்தர் ! ஆனல், அரசியலைப் பற்றி ஓர் இழவும் தெரியாது தேனீர்க் கடை ஓரங் களி ல் போடப்பட்டிருக்கும் வாங்குக ளில் அமர்த்து அரசியல் ஜென்ம சாபல்யமாகக் கருதித் துதிபாடு வதில் அலாதிப் பிரியம் !
மெம்பர் நளீம் கி ர r ம சபை உறுப்பினர் மா த் தி ர மல்ல ! அரசாங்கக் கொந்த ராத்துக் காரரும்கூட இந்த ஒரு உத்தியோகம்கூட அவரி L-th இல்லையேல், அவரது சாப்

பாட்டு க்கு "திரிகணதோம்’ போட முடியாது போகும். இத குல்தான் அரசாங்கக் கட்டிடங் கள் பல நிறுவியதன் மூலம் கிடைத்த பெருத்த லாபத்தி ஞல், இடி ந் து விழப்போகும் தன் மனையை வைகுந்தமாக்கிக் கொண்டார். இரவல் மூளை" படைத்த இவருக்கு ஒவ்வொரு ஐடியா’க்களையும் கொடுப்ப வர் ஆமாம். கரீம் நான தான் இதனல் தானே என் னவோ, அவரை ஊர் குள்ள நரிக் கரீம் என்று அழைக்கி ADğ50
பொருத்தமான டெயர் ! அப்பாவி மஹ்மூத் கிழவனின் கரணியைத் தன்னுடைமை" க்க அவரது பிறப்புப் பத்திரத் தைக் கிழித்தெறிந்த சமர்த்தர் இவர் !
மெம்பரின் திருமணமும் நடந்தேறியது 1 காலமும் ஒ ராண்டைத் தள்ளியது தந்தை யாகினர் மெம்பர் 4
என் இல்லற வாழ்வில் un p &av u 6ör பேரின்பத்தைக் கே செல்வமொன்றை “ரகு மான் தந்துள்ளானே" என்ற பூரிப்பு ஒரு பக்கம் ! என்னேடு ஒட்டிப் பிறந்த த ங்  ைக க் கு வாழ்வில்லையே" என்ற ஏக்கத் தின் கீறல்களும் மெம்பரின் உள் ளத்தில் விழாமலுமில்லை. "மக னே உன்ர தங்கச்சியின் விஷய த்தக் கவனிச்சுக்கோ" என்று தந்தை கூறிவிட்டுச் சென்ற அந்த வார்த்தையும் மெம்பரின்
கர்ணங்களில் ரீங்காரஞ் செய்து வதைக்கின்றது. என்ன செய்ய? நஸிம், தங்கையை வாழவைக்க அலைக்கழிந்தும் பலன் அணுக வில்லை. கடைசியில் வரதட்சி ணைத் தொகையை அதிகரிக்கப் பேசியும் ஜெயம் பெறவில்லை. பணப்பை கொழுத்து என்ன ? அழகு இல்லையே
*** مه
*"மச்சான். நளீம்! பாரு ங்கோ! ரமீஸ் ஹாஜியாரின் வீட்டில் உங்களின்ர விஷயத்த முடிச்சிக் கிட்டீங்க, அதுவும் பெரிய இடம். உங்களிடம் இருப் பது போல் செல்வாக்கு, பனம் கெளரவம், அந்தஸ்து அவரிட மும் இருக்கு. இனி, உங்களின்ர தங்கச்சிக்கு ஒருவனைத் தேடி அலைய வேண் டி கஷ்ட மும் வராது. ஊட்டுக்குள்ளே நெய்ய வெ ச் சிக் கிட் டு கஷ்டப்பட வேணுமா? உங்க மா ம ன் ட சொந்த மருமகன் ஜெப்பார் மாஸ்டருக்கு தங்கச்சின்ர விஷ யத்த செய்து கொண்டால் நல்ல தென நெனிக்கிறேன். பாருங் கோ சீதனம் கீதனம் என்று தொகையாக ஹாஜியாரு கேட் கமாட்டாரு இதை மாமனிடம் இன்டைக்கே கதைச்சுப் பாருங் கோ" என்று நல்லதொரு “ஐடி யா'வை மெம் பர் முன்னே வைக்கிருர் கரீம் நான
கரீம் நான சிறந்த ஆலோ சகர் மெம்பரின் இணைபிரியா நண்பரும் அவரே தான்3 தன்

Page 5
6
கொஞ்சம் கொண்டு, நடந்து வந்த களைப்"
ஈசிச்சேரியில் ஒரு தொப்
காரிய சித்திக்காக எவருக்கா வது ஒரு போடு போட்டா ரென்ருல் அதனல் வரும் பிரதி பலன் அவருக்குச் சாதகமாகவே அமையும்,
கரீம் நானவின் "ஐடியா? மெம்பருக்கு நல்லதாகவே பட் டது. *ஓம். உங்களின்ர யோ சனை நல்லது தான்" என்ற வாறு தன்னை "உஷார்’ படுத் திக் கொண்டு தன் வீட்டை நோக்கி ரொக்கட் வேகத்தில் பறந்தார்!
மனையில் எவரும் இருக்கவில்லை அண்டை வீட்டு ஹாசிம் முத லாளி 'பரமபதம்’ எய்திய "நாற் பதாம் கத்த’ வைபவத்திற்குச் சென்றிருந்தனர். 'வீட்டில் எவ ரும் இல்லையே” என்றதற்காக ஹாஜியார் மாத்திரம் சென்று "எச்சில் படுத்திக்
பால் கட்டிலில் ஒரு "கோழித்
தூக்கம்!
அமைதி மோனத்தவமியற்
துகிறது;
'இஹ"ம். இஹ"ம்
மெம்பரின் கனைப்பொவி அமைதியைக் கிழிக்கின்றது.
ஹாஜியாரின் சயனம் கலை கிறது. "சிங்க ராஜா அடவி போல் வளர்ந்த, தூங்கி வழிந்த மூஞ்சுடன் அருகில் இரு ந் த
• • ،!
மீண்டும் அமைதி தொடர் கிறது. .
அரைமணிநேர வேளைக்குப் பின்.
விண்ணப்பிக்கப் போகும் காரியம் சித்தி பெறுமோ என்ற பீதி மெம்பருக்கு,
முகியத்தீன் ஆண்டவர்நா கூர் மீரான் ஸாஹிப், பால்குடி பாவா ஆகிய குட்டி தெய்வங் களுக்கு நெஞ்சத்தில் காணிக் கைகள் அடுக்கப்படுகின்றன.
"பாருங்கோ மாமா! என்ர தங்கச்சிக்கு இப்போ எத்த னேயோ எடத்தில கலியாணம் பேசியும் ஒன்னுமே சரிவரல்ல; இது என்ர தலைவிதி 1 வாப் பாவும், உம்மாவும் கண்ணமூடி நாலு வருஷமாச்சி. வாப்பா வின் "ஒஸிய'த்தும் தங்கச்சிப் பத்தித்தான். ஆனதினல உங்க ளின்ர மருமகன் ஜெ ப் பார் மாஸ்டருக்கு என்ர தங்க ச் சி விஷயத்த செஞ்சி கொண்டோ மென்டால் 'ரெம்ப சந்தோஷ மாயிருக்கும். ஒண்டுக்குல ஒண்டு செய்தால் குற நிறைகளுக்குப் பயப்புடத் தேவயில்ல. இதற்கு நீங்க பின் நிற்கவேணும் மாமா! கொமருக் காரியத்த முடிச்சி வெச்சிட்டோ மென்டா மக் கத்துப் பள்ளி கட்டின தாவாபு கெடக்கும்"
கன்னத்தில் கரத்தைக்குத் தியவாறு இவற்றைக் கா தி ல் வாங்கிய ஹாஜியாருக்கு உல கமே இருட்டினற்போல் ஒரு பிரமை !

"என்ன நீங்க சொல்றீங்க அவன் டேனிங் கொலோஜில் இருந்து வந்து நாலு வருஷம் கூட பாயல்ல. அவனுக்கும் எத்தனையோ எடத்திலிருந்து பேசி வந்தாங்க நான் ஒன் னுக்குமே சம்மதம் கொடுக்கல்ல அடுத்த வீட்டு ஹாசிம் முத ல்ாளி மகள் விஷயத்த செய் யச் சொல்லி ஒரே புடி யில் இருக்காங்க அந்தச் சனியன் இருக்க நீங்களும் வந்து தொல்ல தந்தா பின்ன முடியுமோ என்டு யோசிச்சுப் பாருங்கோ ! உம் மா வும் வாப்பாவுமில்லாத ஜெப்பாரின் காரியத்த முடிச் சிப் போடத்தான் வேணும் ஆன. அதெல்லாம் இப்ப முடி யாது. பின்ன பாப்பம்" என்று கோடை ம  ைழ யாட் டம் பொழிந்து தள்ளினர் ஹாஜி ! rf חוש י
ஹாஜியாரின் வார்த்தைகள் மெம்பரின் விழிகளில் இருந்து நீர் மல்கச் செய்ய. அவரைத் "தஞ்சாவூர் பொம்மை ஆக் கின.
வந்த வழியாலே திரும்புகி முர். மனத்திலே சோகக் கேவ லின் கீறல்
தங்கையின் எதிர்கால வாழ் வைப் பற்றிய நெஞ்சினில் குமிழிட்டு குமுறும்
எண்ணங்கள்
அலைகளோடு சோகத்துமிலங் களை எழுப்பிக் கொண்டிருந்தன
கண்ணீர்த் தூரிகை கன்னத்தில்
ஒவியம் வரைகின்றது;
"என்ன மச்சான் பெஞ் சாதி செத்தவன் போல போன காரியம் முடிஞ்சி, பின்னே கலி யாணம் கிலியாணம் நடக்க es an 22a) G3unt” என்று மெம்பர் நஸிம் வரும் வரை காத்திருந்த தந்திரக்கார கரீம் நான, அவரைக் கண்ட
வேணுமென்ட
தும் வாயெ ல் லாம் பல்லாக நையாண்டி வார்த்தைகளைக்
கொட்டினர்g
"இல்ல மச் சான் என்ர இடி ஞ்சு போச்சு. மாமனும் "முறுவ சாதி மாதிரி இருந்திட்டாரு. இனி என்னல் இதைச் செய்ய முடியாதப்பா என்ர கால்தோ
மனக்கோட்ட எல்லாம்
லும் தேஞ்சி போச்சி" என்று பெருத்த பெருமூச்சுடன் கூறி ஞர் மெம்பர்:
se ** & ●●● を登職 ●●●●●● ***
கரீம் நானுவின் சிந்தனை சுரங்கம் வெட் டு கிற து. சில மணிக்குப் பின்.
"ஒமோம். நஸிம் பயப் புடாதேயுங்கோ இன்னுமொரு "குட் ஐடியா உண்டு, அதையும் போட்டுப் பாருங்கோ, சரிவரு

Page 6
மென நெனைக்கிறேன் பாருங் கோ! நீங்க ஹாஜியர், வீட்டில் கலியாணம் முடிச்சி ஒன்னர வருஷமாச்சி இப்போ பொஞ் சாதியோட சேராம ரெண்டு நாலு கெழம தனிச்சிருங்கோ செலவு ஒன்னும் கொடுக் க வேணும் அப்போ கேள்வி வரும் மறு மொழி அனுப்ப வேண்டி யது தான்.
"ஐடியாப் புலி கரீம் நான வின் சிந்தனைச் சுழற்சியிலிருந்து வந்தவை இவை!
மெம்பரின் உச்சியில் முல் லிைகள் பூத்தன. மனதுக் குள் ஒரு திருப்பம். ச தைரியம்.
gւգաn அமுல்.
மெம்பர் மனையாளோடு
உராயும் தாம்பத்திய உறவை ரத்துச் செய்கிருர்,
இரு வாரங்களுக்குப்பின்.
ஹாஜியாரை பீதி கவ்வி யது. தீனும் தண்ணிரும் தொண் டையினுள் இறங்கவில்லை. கால மெல்லாம் கண்ணீரில் துவைந்து, ஸ்மரணையற்றுக் கிடந்தார்;
r; ʻi,ʻ "நானும் என் பிள்ளைக்கு இன்னெரு புருஷன அலஞ்சு திரிஞ்சு தேடிப் பெற்றுக் கொடுத்தேனே" என்ற வேத னைத் தணல் ஒருபக்கம் முரட்
படி இறங் கி ச்
徽
டுக் குணத்தின் காங்கையின் தாக்கம் மறுபக்கம் !
"மகளின் இல்லறம் நல்லற மாக ஒளிவீச வேண்டுமே ! ஊராரின் ஊதாரிப் பேச்சுக்கு இலக்காகி குடியே அடிவாங்கிப் சீரழிந்து போகுமே ! இத்தனை எண்ணங் களும் ஹாஜியாரின் உள்ளத்
:தில் நெளிகின்றன.
ஜெப்பார் மாஸ்டரின் விவா கத்திற்கு “பஜகோவிந்தா” போடு கிருர் ஹாஜியார்.
எவ்வாறயினும், ஹாஜியா ரின் "காட்டு ராஜாக் குணம்’ விஸ்வரூபமெடுக்காமலில்லை;
இதன் விளைவு குடும்பத்தில் பெருத்த பிளவு !
இப்பிளவில், ஹாஜியாரின் கோபத் தணல், மெம்பர், கரீம் நானு ஆகியோரின் களிப்பின் கனிச்சாறு அத்தனையும் நிை கின்றன,
"தான் வழங்கிய "பாயிண்டு? "ஜய" கோஷத்துடன் முடிகின் றது" என்ற திருப்தி தந்திரக் கார கரீம் நானுவுக்கு !
ஆமாம். . . கரீம் நான போன்ற விஷமிகளால் சமுதா யம் உருப்படாது. இப்போக் கிரிப் பயல்களால் பரந்த தரை யில் கோடை இடிதான் மீதி

அட்டைப் படச் சிறுகதை
reer
சிங்கள மூலம்: ஜி. பி. சேனநாயக்கா
விசாக
விளக்கு
தமிழில்: தம்விஜயா தேவதாஸ்
எட்டு மூலைகள் கொண்ட பெரிய விசாக விளக்கொன்றை உருவாக்கும் எண்ணம் என் அண் னனின் உள் ளத் தி ல் தான் முதன் முதலில் உதித்தது. அப் படிப்பட்ட விளக்கொன்றைச் செய்வதற்கு அம்மா அனுமதி தரமாட்டிாள் என் ரு லும், நானும் தங்கையும் விளக்கைச் செ ய் து தான் ஆகவேண்டு மென்று அண்ணனைத் தூண்டி னுேம்.
மூங்கில் மரத்துண்டொன் றைக் கொண்டு வந்த அண்ணன் விளக்குக்கூட்டின் நடுப்பகுதி யைச் செய்ய முனை ந் தா ன் அவன் சாப்பாட்டு அறையில் மேசையொன்றிற்கு அரு கி ல் நிலத்தில் கடதாசியொன்றை விரித்து இருந்துகொண்டு மூங் கில் மரத் துண் டொ ன்  ைற வெட்டி மெல்லிய ஈக்குத் துண் டுகளைப் போன்று சீவுவதற்கு ஆரம்பித்தான். அப்பொழுது அவனின் வயது பதின் நான்கா கும். தங்கையின் வயதோ ஆறு. எனது வயதோ ஏழு, மூங்கில் மரத்துண்டுகளை ஒன்ருக்கி எட்டு மூலைகள் கொண்ட விளக்குச் செய்வது எப்படி என் ப ைத
நானுே தங்கையோ அறியாதி ருந்தோம் அதனுல் அண்ணன் மூங்கில் மர துண்டுகளைச் சீவும் விதத்தைப் பார்த்துக்கொண்டி ருந்த நாங்கள் வித்தைக்கார ணுெருவனைப் பார்ப்பவர்கள் போல் கூர்ந்து நோக்கிக்கொண் டிருந்தோம்.
அவன் அப்படி விளக்குக் கூடு செய்வை த ப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் தங்கை க்கும் இடையில் அடிக்கடி சண் டை மூள ஆரம்பித்தது. மூங்கில் மட்டைகளிற் சிலவற்றை அண் ணனுக்குப் பக்க த் தி விரு த் த நான் வைத்துக் கொண்டிருந் தேன். அப்படி அவைகளை நான் வைத்துக் கொண்டிருப்பதை த ங்  ைக யா ல் பொறுத்துக் கொண்டிருக்க மூடிய வில் லை. விளக்குச் செய்வதற்காகவைத் திருந்த ஈக்கொன்றை எனக்குத் தெரியாமல் மெதுவாக எடுத் துத் தன் கால் கலூருக்குக் கீழ்
மறைத்து வைத்து விட்டாள்.
நிலத்தில் எனக்கு அரு கி ல் அமர்ந்திருந்த அவள் நான் சக் கைப் பார்த்து வி டு வேனுே
என்ற சங்தேகத்துடன் தான்
அணிந்திருந்த கவுணினுல் தன்

Page 7
10
இரண்டு கால்களையும் பரபரப் புடன் மூடினுள். அவள் அப்படி பரபரப்படைந்தது எனக்குச் சந் தேகத்தை ஊட்டியது. மூங்கில் ஈக்கொன்றின்முனை அவளுடைய இரண்டு முழங்கால்களுக்கும் இடையில் இருப்பது வெளியே தெரிந்தது. நான் அதைப்பி டுங்கி எடுத்து என்னிடம் வைத் துக்கொண்டேன். தங்கையின் செந்நிறமுகத்தில் கீழ் உதடு கோபத்தால் நீண்டு விட்டது. அவளின் இரண்டு கண்களும் கண்ணிரால் நிறைவது எனக்குத் தெரிந்தது.
உள்ளத்தையும், க ன் க்ளை யும் ஒன்ருக விளக்குக் கூட்டின் மேல் செலுத்திநின்ற அண்ணன் தங்கை மூங்கில் ஈக்கை மறை த்து வைத்ததையோ நான் அவற்  ைற ப் பிடுங்கிக்கொண்டதை யோ காணவில்லை. தங்கையின்
நின்ற கண்ணிர் படிப்படியாக கன்னங்களினூடாக வழிய ஆரம் பித்தது. தங்சையின் தாங்க முடியாத கோபமே அப்படிக் கண்ணிர் வழிந்ததற்குக் காரண மாகும். அவள் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து எனது பின்பக்கத்திற்கு வந்து என்னு டைய தலையில் ஒருமுறை பல மாக ஓங்கி அடித்துவிட்டு வீட் டிற்குள் ஓடிவிட்டாள். என்னை ஏசி தங்கையை அனுதரிக்கும் அம்மாவின் குரல் எ ன க் கு க் கேட்டது.
அண்ணன் மூங் கி ல் ஈக்குக் களை ஒன்முகச் சேர்த்து பெரிய
சதுரமாகச் செய்து அவற்றை ஒன்றுடன் ஒன்ருகப் பொருத்தி எட்டு மூலைகளைக் கொண்ட விள க்குக் கூடொன்றைச் செய்தான். அது ஒரு பெரிய விளக்குக் கூடா கும். இருபது சிறிய கூடுகளுக்கு நடுவில் வைப்பதற்காகவே அது அமைக்கப்பட்டது. அதன் உய ரம் விழுங்தையில் உள்ள சாப் பாட்டு மேசையினளவாகும். அண்ணன் அதை மேசைக்கு அரு கில் கொண் டு போ ய் வைத் தான். உள்ளங்க்ை வரை நீண் டிருந்த தனது சேட்டின் கைப் பந்தத் துணியால் நெற்றியில் உள்ள வியர்வையை ஒருமுறை துடைத்துக்கொண்டான். மீண் டும் விளக்குக் கூட்டை நோக்கி ஞன். அவனது தலைமுடிகளின் கற்றையொன்று நெற் றியி ல் சரிந்து விழுந்திருந்தது. சுருக் கிய புருவத்துடனும், உதடுகளை
வாயிள்ை மடித் பற்களால் இரண்டு கண்களிலும் நிறைந்து 3)| lg-g5gil tufD 5
கடித்துக்கொண்டும் அவன் அந் தக் கூட்டு விளக்கை பார்த்த விதம் நீண்ட காலமாகக் கஷ்டப் பட்டுச் செதுக்கிய சிலையொன் றைப் பார்த்து நிற்கும் சிற்பியை எனக்கு நினைவுபடுத்தியது.
தங்கை சமையல் அறைக் குள் சென்று அம்மாவை அழை த்து வந்தாள். விசாக விளக்கை அண்ணன் செய்து முடிக்கும் வரை நானும் தங்கையும் மிக ஆவலுடன் பார்த்துக்கொண்டு நின்ருேம்.
நடுக்கூட்டைச் சுற் றி த் தொங்க விடுவதற்காக நான்கு சிறு கூடுகளும் அவற்றைச் சுற்றி

தொங்க விடுவதற்காக இன்னும் பத்து மிகச் சிறிய கூடுகளும் செய்யப்பட்டிருந்தன:
தென்னங் கிடுகினல் வேயப் பட்ட குடிசை ஒன்று எங்கள் தோட்டத்தில் இருக்கின்றது. எங்களைப் பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டியை நிற் பாட்டுவதற்காகவே அது செய் யப்பட்டிருந்தது. ஆனல் அங்கு வண்டியைத் தவிர உடைந்த சாய்மனைக் கட்டில் ஒன்றும் முறிந்தசோபாவொன்றும் பல கைகள் சிலவும் வைக்கப்பட்டு இருந்தன.
விளக்கின் நடுக் கூட்டிற்குக் இ2ள பொருத்தினல் அதை வீட் டினுள் இருந்து வெளியே கொண்டுவர முடியாத அளவு பெரிதானதாகும். கிளைபொரு த்துவதற்காக அதை தோட்டத் தில் உள்ள குடி  ைசக் குக் கொண்டு சென்ருன் அண்ணன். குடிசையினுள் பாயொன்றை விரித்து அதன் மேல் வைத்து இ8ளகளைப் பொருத்த முயன் ருன்
அந்தக் கூட்டிற்கு கிளை கட் டுவதற்காக அண்ணன் சிலவே ளைகளில் அதனுள் இறங்குவ
துண்டு. அவன் உயரத்தில் என்
னைவிட பத்து அங்குலத்தால் கூடிய உயரமுடையவன், அக் கூடு அவன் உள்ளே இறங்கி நிற்கும் அளவிற்கு பெரிதாக இருந்ததால் எங்கள் மகிழ்ச் சிக்கு எல்லையே இல்லையென லாம்
1.
கூடுகளில் கடதாசி ஒட்டிய தன் பின் அதில் வன்னங்கள் ஒட்டுதல் ஆரம்பிக்கப்பட்டது. வன்னங்கள் செய்யப்படுவது சதுரமாக வெட்டப்பட்ட கட தாசித்துண்டுகளின் மூலைமுனை களை ஒன்ருக மடித்து அதன் மேல் வெள்ளிநிறத்தாள் ஒட்டு வதன் மூலமாகும். இது எனக் கும் தங்கைக்கும் இலேசாகச் செய்யக்கூடிய காரியமாகை யால் வன்னக் கடதாசி செய் தல் எங்கள் இருவரிடமும் தரப் பட்டது.
நாங்கள் சிலமணி நேரமாக மிக ஒற்றுமையுடனேயே வேலை செய்தோம். தங்கைமாலையில் முகம் களுவிவிட்டு பவுடர் பூசிக்கொண்டு அழகாக சுருக்கு வைத்துத்தைக்கப்பட்ட கவுண் ஒன்றை அணிந்து கொண்டு வன்னக் கடதாசி ஒட்டுவதற் காக எனக்கருகில் வந்தமர்ந் தாள். அவளின் புதியகவுணைக் கண்ட எனக்கு உ ண் டா ன பொருமையோ எ ன் ன வோ அவளைக் கோபமடையச் செய்ய நினைத்தேன். நான் ஒட்டிக்கொ ண்டிருந்த கடதாசித் துண்டை பின்னே வைத்துவிட்டு மூக்கை ஒருமுறை சுளித்து சரியான நாற்றம்" என்றேன். அழகாகப் பவுடர் பூசியிருக்த முகத்தைத் திருட்பியவாறு என்னை வெறுப் புடன் பார்த்தாள் சகோதரி.
பவுடர் பூசியதுமே முகத் திலிருந்து நாற்றம் அடிக்கிறது” என்றேன் நான். தங்கையின் செல்ல் முகம் கோ பத்தால் சிவந்து விட்டது.

Page 8
i2
அவள் தான் இருந்த இடத் திலிருந்து பாய்ந்து வந்துஎன்னை ஒருமுறை அடித்துவிட்டாள். நானும் அவளுக்குத் திருப்பி அடித்தேன். அவள் என்னு டைய இரு தோள்களிலும் பிடி த்துத் தொங்கியவாறு என் முக த்தை விராண்ட ஆரம்பித்து
விட்டாள். கோபமடைத்தநான்
அவளைத் தள்ளினேன். அவளும்
என்னைத் தள்ளினுள். நிலத் தில் உருண்டவாறே நானும் அவளும் மல்லுக்கட்ட ஆரம் பித்து விட்டோம் செ ய் து
குவித்திருந்த வன்னக் கடதாசி களும் வன்னங்கள் செய்வதற் காக வெட்டப்பட்டிருந்த கட தாசிகளும் மினுங்கல்க் கடதாசி களும் மல்லுக் கட்டும் எங்க ளுக்குக் கீழ் அகப்பட்டு தூளா கியது. நாங்கள் சண்டைபிடிக் கும் சத்தத்தைக் கேட்டு அண் ணனும் ஒடி வந்தான். அம்மா சத்தமிட்ட படி ஓடிவருவதைக் கண்ட நானும் தங்கையும் சண் டையை நிறுத்திவிட்டு குடிசை யிலிருந்து வெளியே ஒடிளுேம்.
அம்மாவிடம் அடி வாங்கி அழத்தொடங்கிய நாங்க ள் விருந்தையில் இரண்டு வெவ் வேறு மூலைகளில் இருத்தப்பட் டோம், மூலையில் ஒரு மணித்தி யாலமாக கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த தங்கை மெது வாக எழுந்து என்னிடம் வந்து,
'அண்ணு, கூட்டைப் பார் க்கப் போவோமா ?" என்று அன்பாகக் கேட்டாள்
நான் ஒன்றுமே பேசாமல் இருந்த இடத்திலிருந்து எழு ந்து அம் மா நிற்கின்ருளா என்று சுற்றும் முற்றும் பார் த்துவிட்டு தங்கையையும் கூட் டிக்கொண்டு முற்றத்திற்கு இற ங்கினேன். அண்ணன் எங்களை விரட்டி விடுவானே என்று பய ந்து குடிசைக்குப் போகாமல் நின்ருேம், உயரமாக வளர்ந்த எலுமிச்சை மரமொன்று குடி சைக்கு அருகில் நிற்கின்றது. சத்தம் எழுந்துவிடுமே என்று எண்ணியவாறு மெதுவாகப் பாதங்களை வைத்து எலுமிச்சை மரத்திற்குக் கீழே சென்ளுேம். அங்கே அண்ணன் பெரிய விளக் குக் கூடொன்றிற்கு முன் இரு ந்து கொண்டு அதில் வன்னக் கடதாசிகளை ஒட்டிக்கொண்டி ருந்தான்;
குடிசையில் அரிக்கன் லாம்பு ஒன்றைத் தொங்க வைத்துக் கொண்டு அன்றைய இரவு முழு வதும் அந்த விளக்குக் கூட்டைச் செய்துகொண்டிருந்தான். அத ஞல், அவன் எங்களை குடிசைக்கு
நெருங்கக்கூட விடவில்லை. நாங்
கள் நித்திரைக்குப் போ கும் போதுகூட அவன் குடிசையில் இருந்துகொண்டு அந்த விளக் குக் கூட்டைச் செய்துகொண் டிருந்தான்.
தங்கையையும் என்னையும் ஒன்ருகவே நித்திரையாக்குவது அம்மாவின் வழக்கம்,
*" எங்கள் கூட்டைப் போல் அழகான கூடு வேறு எங்குமே இல்லை; இல்லையா அண்ணு?"

இரவில் கட்டிலில் எனக்கு அரு கில் படுத்திருந்தவாறே தங்கை என்னிடம் கேட்டாள்.
**ஆமா தங்கச்சி, எங்களின் கூட்டைப்போல் அழகான கூடு வேறு எங்கும் இல்லை" நித்திரை செய்வதற்காக கண்ணைமூடிக் கொண்டே ப தி ல் கூறினேன் நான் .
அடுத்த நாள் விசா க நாளாகிய பெளர்ணமி தினமா மாகும் அன்றையதினம் அம்மா எங்களை வழமைக்குமாருக அதி காலையிலேயே எழுப்பிவிட்டாள் அப்பொழுது பான்சா லை யி ல் அடிக்கப்படும் மேளச் சத்தம் எங்களுக்கு கேட்டுக்கொண்டி ருந்தது. விசாக விள க் (க க ள் தொங்கவிடுவதிலும் கொடி தோரணங்கள் கட்டுவதிலும் ஊர் முழுவதுமே முனைந்து நிற் கின்றது என்பதை நான் உணர்ந் தேன். நாங்கள் இருவரும் கட் டிலிலிருந்து எழுந்ததும் விளக் கைப் பார்ப்பதற்காக குடிசை யைநோக்கி ஓடினுேம், ஆனல் அங்கு அவைகளைக் காணவில்லை. தொங்கவைப்பதற்காக அவை கள் பிரதான வீதிக்குக்கொண் டுவரப்பட்டிருந்தன. எங்கள் வீட்டு வேலைக்காரன் உயரமான இளைஞன். அவனே பெரிய கூட் டைக் கொண்டு வந் தி ருக் க வேண்டும் அண்ணன் சிறிய கூடு களைக் கொண்டு வந்திருந்தான் பெரிய கூட்டின் நான்கு கிளை களிலும் சிறிய நான்கு கூடுக ளும் அதேகிளைகளில் மிகச்சிறிய கூடுகள் சிலவும் தொங்கவிடப்
13
பட்டிருந்தன. விளக் கைப்பார்க் கவந்த பையன்களையும் பெண் களையும் அதில் கைவைக்காத வாறு பார்த்துக்கொண்டிருப் பதே எங்கள் விஷேச கடமை யாகவிருந்தது.
முன்தின இரவில் காரன் வீதியின் அருகில் உயர் ந்த மூ ங் கி ல் மரமொன்றை நாட்டியிருந்தான். வீ தி யி ன் பெரிய இடத்தை அடக்கி இரு
வேலைக்
ந்த அந்த விசாக விளக்கு மூங்
கில் மர உச்சியில் கயிற்ருல் கட் டப்பட்டிருந்தது. பளபளக்கும் பொன்நிறக் க ட தா சி களும் வெண்நிற ரிசுக்கடதாசிகளின லான குஞ்சங்களும் காற்றினல் ஒன்றுடன் ஒன்று உரஞ்சுப்பட்டு *" சர சர " என்றசத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன இது எனக்கு குஞ்சுகளினுல் சூளப் பட்ட பெரிய பறவை ஒன்றை நினைவுபடுத்தியது.
பகல் முழுவதும் தங்கை யும் நானும் அடிக்கடி வீதிக்கு ஓடிவந்து ஆகாயத்தில் தொங்கு கின்ற விளக்கின் அழகைப்பார் த்து பரவசமடைந்தோம் விசா கவிளக்கு பூரண அழகைத்தரு வது அதில் மெழுகுதிரிகள் ஒளி ரும் போதே. விளக்கில் மெழுகு திரி ஏற்றுவதற்காக இருள்வரும் வரை நானும் தங்கையும் ஆவ லுடன் காத்து நின்ருேம்,
இருள் சூழ ஆரம்பித்தது" மலர்களையும் எண்ணைப் போத் தல்களையும் பான்சா லை க் குக் கொண்டு செல்வேரர் வீதியில்

Page 9
14
நிறைந்து நின்றனர். அண்ணன் வேலைக்காரனை அழைத்து மெழு குதிரி பற்றவைக்க ஆயத்தமா ஞன். தங்கையும் நானும் விரு ந்தையில் இருந்த மெழுகுதிரி களை வீதிக்குக் கொண்டு வந் தோம் வேலைக்காரன் கயிற்றின் மூலம் விளக்குக் கூட்டை மெது வாக கீழே இறக்கினன். முத லாவதாக விளக்குக்களில் மெழு குதிரி ஏற்றப்பட்டது. அதன் பின் மெழுகுதிரிகள் பற்றவைக் கப்பட்டன.
அண்ணன் பெரிய கூட்டில் மெழுகுதிரிகளை ஏற்றிப் பற்ற வைத்துவிட்டு சிறிய கூடுகளி லும் மெழுகுதிரிகளைப் பற்ற வைத்தான். - பற்றவைக்கப்ப ட்ட மெழுகுதிரிகளைக் கையில் ஏந்தி நின்ற எனக்கு சிறியகூடு களுக்கு மெழுகுதிரிகளைப் பற்ற வைப்பதற்கு ஆசை உண்டாகி யது. அண்ணனுக்குத் தெரியா மல் சிறிய கூடொ ன் றி ற்கு மெழுகுதிரியொன்றை ஏற்றிப் பற்றவைத்தேன். இன்னுமொரு கூட்டிற்கு மெழுகு திரியை ஏற் றிப் பற்றவைக்கும் பொழுது அதில் தொங்கிய கடதாசிக் குஞ்சமொன்றில் தீப்பிடித்து விட்டது. வாயால் ஊதி அதை
அணைத்துவிட நான் எடுத்த
முயற்சி வீணுனது. கடதாசிக் குஞ்சத்திலிருந்து கூடொன்றிற் கும் தீபரவிவிட்டது; நான் பயந்து கத்துவதற்கு ஆரம்பித் துவிட்டேன்; எனக்குச் சிறிது தூரத்தில் நின்ற வேலைக்காரன் தீயை அணைக்க ஓடிவந்தானயி
னும் அவனுல் உடனேயே அதை அணைக்க முடியவில்லை. அந்தக் கூட்டிலிருந்து மற்றக் கூடொன் நிற்கும் தீ பரவிவிட்டது.
அப்பொழுது அண்ணன் ஓடி வந்து தீப்பிடித்த கூடுகளை மற் றக் கூடுகளிடையேயிருந்து வே ருக்க முயற்சி செய்தான் அண் ணன் குனிந்து நின்று கொண்டு கூடொன்றைப் பெரிய கூட்டி லி ரு ந் து விலக்கும் பொழுது அவன் அணிந்திருந்த பெனிய னில் தீப்பிடித்து வி ட் ட து. அவன் கூடுகளிடையே நின்று வெளியே ஓடிவந்து கையால் தேய்த்தவாறு அதை அணைக்க முயன்ருன். ஆணுல் அவனல் அதை அணைக்க முடியவில்லை. அண்ணனின் பெனியன் எரியும் தீச்சுடரைக் கண்டநாங்கள் பல மாக சத்தம் போட்டு அழுது எழுப்பிய சத்தத்தைக்கேட்டு அம்மாவும் அப்பாவும் வீட்டிற் குள்ளிருந்து வெளியே ஓடிவந்
தார்கள்.
அப்பா அண்ணனின் பெனி யனைக் களட்டி வேருக்கினுர்,
பெனியனைக் க ள ட் டி த் தீயை
அணைத்தபொழுது சிறிய கூட்டி லிருந்து எழுந்த தீ பெரிய கூட் டிற்கும் பரவிவிட்டது; அதன் பின் கூட்டை அணைப்பதற்கு எவரும் முயற்சி எடுக்கவில்லை.
அண்ணனின் பெனியன் தீப் பிடித்த பொழுது நானும் தங் கையும் ஆரம்பித்த அழுகையை இ ன் னு ம் நிற்பாட்டவில்லை. அண்ணனின் கை எரிந்து விட்ட

தனல் அவனை வைத்திய சாலைக் குக் கொண்டுபோக வேண்டும் என்று அப்பா கூறினர் கை எரிந்துவிட்டதனல் அண்ணன் இறந்து விடுவானே என்றபயம் என் உள்ளத்தில் வேதனையை உண்டாக்கியது விளக்குத் தீப் பற்றி எரிந்ததற்குக் காரணமே நான் தான் என்று நினைக்கும் போது என் வேதனை இன்னும் அதிகமானது. வேலேக் காரன் எமது கூடார வண்டியை முற்றத் திற்குக் கொண்டு வந் த ர ன். அப்பா அண்ணனை வண்டியில் ஏற்றி வைத்திய சாலை க் கு க் கொண்டு சென்ருர்.
விசாகவிளக்குத் தீப்பற்றி எரிந்தது என்னுல்தான் என்று அம்மா அறிந்திருந்தும் அவள் என்னை ஏசவில்லை. அவள் அவ் வாறு பேசாமல் இருந்தது ஏற் கனவே பயந்துள்ள எ ன் னை மீண்டும் பயப்படுத்தக் கூடாது என்பதற்காகப் போலும். அழுது கொண்டிருந்த தங்கை அம்மா வின் மடியிலேயே நித்திரை யாகி விட்டாள். ''வைத்தியர் வீடு" என்று ஊர்வாசிகளால் கூறப்படும் அப்போதிக்கரியின் வீடு எங்கள் வீ ட் டி லி ரு ந் து இரண்டுமைல்க ளு க் கப் பா ல் இருக்கிறது. அங்கு போய் வருவ தற்கு ஆகக்குறைந்தது ஒரும ணித்தியாலத்திற்கு மேல்க்கூட ஆகாது. அண்ணன் திரும்பும் வரை விழுந்தையில் தூண் ஒன் றிற்கு அருகில் அமர்ந்திருந்த எனக்கு பலமணித்தியாலங்கள் கழிந்து விட்டதைப்போல் உண
15
ர்ந்தேன். பான்சாலையில் அடிக் கப்படும் மேளச்சத்தம் இடைக் கிடை கேட்டுக்கொண்டிருந்தது மாட்டுவண்டிச்சத்தம் கேட்கிற தா என்று காதுகளைக் கூர்மை யாக வைத்திருந்த எனக்கு அந் தச்சத்தம் பெரும் இடைஞ்ச லைக் கொடுத்தது. மேளச்சத்தம் சற்று ஒய் ந் த தும் வீதியை நோக்கிக்காதுகளைக் Enrifood Lo யாக்கினேன்.
அண்ணன் இறந்து விட்ட தனுல் தான் வண்டிவரச்சுணங்கு கின்றதோ என்று எனக்குள் ளேயே நினைத்துக் கொண்டேன். இப்படி நினைத்ததும் ஏற்கனவே நனைந்திருந்த எனது கண்கள் மீண்டும் கண்ணிரால் நிறைந் தன. வீதியை நோக்கி காதை வைத்துக் கொண்டிருந்த நான் விருந்தையில் சாய்மனைக்கட்டி லில் அமர்ந்திருந்த அம்மாவின் முகத்தை நோக்கினேன். அவள் அமைதியுடன் க ன் ன த் தி ல் கையைவைத்தவாறு அமர்ந்தி ருந்தாள்.
மாட்டின் கழுத்தில் கட் டப்பட்டிருக்கும் சதங்கைச் சத் தம் கேட்பது போலிருந்தது: நான் மிகவும் கூர்மையாக வீதி யில் கேட்கும் சத்தத்தை அவ
தானித்தேன் அது சதங்கைச்
சத்தமேதான். ஒடுகின்றமாட் டின் கால் குழம்புகள் நிலத் தில் படும்சத்த மும் வண்டிற் சில்லு வீதியில் கற் களு க்கு மேலால் ஒடும் பொழுது உண் டாகும் சத்தமும் தொடர்ந்து கேட்டன,

Page 10
16
**ஆ ஐக்" வேலைக்காரன் பலமாக க் கு ர ல் எழுப் பி க் கொண்டே பிரம்பால் மாட்டை அடிக்கும் சத்தமும் அடுத்துக் கேட்டது. வண்டி நெருங் க அண்ணன் இறந்து விட்டானே என்ற பயமும் என் உள்ளத்தில் அதிகரித்தது அண்ணனின் பிரே தத்தைத்தான் கொண்டு வருகி ரு ர் க ளோ
வண்டி யில்
என்று எனக்குள்ளேயே எண் னினேன்,
அம்மா அண்ணனை வண்டி யிலிருந்து இறக்கிவீட்டின் அறை யொன்றிற்குள் அழைத் து ச் சென்ருள் அண்ணனின் கையில் முழங்கைக்கு கீழே உள்ள பகுதி கள் யாவும் பஞ்சு வைத்துச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது நான் அறைக்குள் செல்ல முயற் சிக்கவில்லை. விருந்தையில் சாய் மனக் கட்டிலில் நித்திரை செய் துகொண்டிருக்கும் அருகில் நீண்ட நேரமாக அமர்க் திருந்தேன். அண்ணன் இறந்து விடுவானே என்ற பயம் இன் உள்ளத்திலிருந்து
சாய்மனைக்கட்
தங்கைக்கு
னும் என்
மறையவில்லை. டிலிலிருந்து எழுந்து அண்ணன் இருக்கும் அறைக்குள் சென் றேன். அறையினுள்ளே பெரிய கட்டிலொன்றில் அண் ண ன் படுத்திருந்தான். அம்மாவும் அதே கட்டி லில் இருந்து
கொண்டு அவனின் மருந்து கட் டிய கையைத் தன்கையில் தாங் கியவாறு இருந்தாள்
'டிங்கிரியிடம் சோற்றை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நித் திரை கொள்?? அறையினுள் வந்த என்னைக் கண்ட அம்மா மெல்லிய குரலில் கூறினுள்.
அவள் கூறியதை கேட்காத வன் போல் மெதுவாகச் சென்று அவளின் கால்க ளு க் கரு கில் நிலத்தில் அமர்ந்து கொண் டேன். அண்ணன் இடைக்கிடை முனகும் சத்தத்தைக் கேட்ட தும் அவன் இறந்து விடுவானே என்ற பயம் மீண்டும் என் உள் ளத்தை உறுத்தியது நான் அம் மாவின் இரண்டு கால்களையும் பற்றிப் பிடித்தவாறு அழ ஆரம் பித்தேன்;
அண்ணன் மருந்து கட்டி யிருந்த தன் கையை அம்மா வின் மடியிலிருந்து எடுத் து எனது தலையை ஆதரவுடன் தடவினன்.
**தம்பி’ என்னை மெதுவாக அழைத்தான் அவன்,
"தம்பி, கூடு எரிந்து விட் டதற்காக அழாதே நாங்கள் அடுத்த வருடம் இதைவிடப் பெரிய கூடொன்றைச் செய் Gauntuh'

தன்னு  ைடய கையின் நோவையோ தான் இறந்து விடுவேன் என்பதைப்பற்றியோ கூருமல் கூட்டைப்பற்றிக் கூறி யதால் அவன் இறந்து விடு வானே என்றபயமும் துன்ப மும் என்னுள்ளத் தி லிருந்து சிறிது நீங்கியது:
முற்றத்தில் பலாமரமொன் றில் கட்டப்பட்டிருந்த மாடு சதங்கையை அசைக்கும் சத்தம் எனக்குக் கேட்டது:
கொஞ்சம் நில்" கூறிஞன் வேலைக்காரன்
என்று
எரிந்து முடிந்தபின் மிகுதி யாகக் கிடந்த கூட்டிலுள்ள மூங்கில் துண்டுகளின் சாம்பல் ஏதோ பெரியதொரு பறவை யின் எலும்புக் கூட்டைப்போல் பிரதான வீதியில் பரவிக்கிடந் தது. விசாக விளக்கு ஏற்றி வைப்பதற்கு முன்பே எரிந்து சாம்பலாகிவிட்டதே என்ற எண்ணம் என் உள்ள த்தை உறுத்தியது:
"இதயம்" சந்தா விபரம் வருட சந்தா ரூ. 600 ஆறுமாதசந்தா ტ. 3-00
(தபால் செலவு உட்பட) அனுப்பவேண்டிய முகவரி:
*இதயம்'
17
1511, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்
நவரஸம் ததும்பும் நல்லதொரு தொடர் நவீனம்
விரைவில் ஆரம்பமாகிறது
X
68 பலவீனங்கள்’
இளம் எழுத்தாளர் *எஸ்*
எழுதுகிறர்:
உங்கள் அபிமான
"இதய ü” இதழில்
长
எதிர்பாருங்கள்! TTTssSkTkkSSSLSSSkSSSLLLL LSLLMJSS00SSSSSLSSSSSSLSSSSMMMMMTSTSS
16 பலவீனங்கள்'

Page 11
5 புதுக்
கவிதைகள்
என் வீடு
அதோஅங்கே தெரியும் மூன்றடுக்கு மாளிக்ையில் என் வாசம்!
கீழே
கீழ்த்தட்டில்
பின் புறம் மூலை அறையில் குடியிருக்கிறேன்வாடகைக்கு
*ஸ் கூட்டர்
அப்பர். "ஸ் கூட்டர் வாங்கித் தருவேன்" என்ருர், "அது நல்லது" என்ருள் அம்மா.
வேண்டாமெனக்கு” என்று சொன்னேன்; ld 60-ti (69), நான்? Rush hours sis இடித்துப் புடைத்து நெருக்கியடித்துபஸ்ஸில் ஏறுஞ் சுவை! ஆ! அதை விட்டு ஸ் கூட்டரா வேணும்? நான் முடையனில்லை!
- சாது விரல்கள் இருளில் விரல்கள்-1 கும்பலில் 9. -س / ஆ
அவை தாமே அப்போது இன்ப உறிஞ்சிகள்?
புதிய காதல்
புதிது.
புதிய காதல்! அவனுக்கும், ஏன்-அவளுக்கும் தத்தமது பழைய தொடர்பெலாம் மறந்து போச்சு ஆ!
அதனல்
புதிது!
சீதா.ராமன்
இடிபடுங் கும்பலிலே அழகான பெண்ணுெருத்தி என்னருகில் என்ருல்நான்-ராமன், அவள்-சீதை!
ஆளுல்வேருெருவன் அவளருகிலானல், அவள்-சீதைதான்! எனினும் அவன்-ராவணன் என்னப்யா, என் கண்கள்.

ஃபோர் த ரைம் பீயிங்.
(FOR THE TIME BEING...)
பஞ்சநாதன் பம்பலப்பிட்டி
யிலுள்ள தனது வாடகை க்
குடியிருப்பிலிருந்து வெளியே உலாப்போகும் காட்சி விபரிக்க விபரிக்க ஆனந்தம் தருவதொன் ருகும் சரியாகப் பி ற் ப க ல் மூன்றரை மணிக்குக் க்ாரியால யம் விட்டதும் மூன்றரை மணி க்கே கோட்டையிலிருந்து பா ணந்துறைக்குப் புறப்படும் கரை யோரப் புகைவண்டியில் பாய் ந்து ஏறிவிடுவான். காலி, அழுத் கம, மாத்தறை போன்ற தூர இடங்களுக்குச் செல்லும் புகை .யிரதங்களும் பம்பலப்பிட்டியில் நிறுத்தப்படுவதால் பஞ்சநாத னுக்கு எப்போதும் புகைவண்டி நேரத்திற்கே கி  ைடத் த து. மூன்று நாற்பது அல்லது நாற் 'பத்தைந்துக்குத் தன் அறையில் பிரசன்னமாகும் அவன் திடீ ரென்று ஒரு "வாஷ்" எடுத்துக்
கொண்டு கிறீம் தடவிய தலை
யில் நெளிவை விட்டுக்கொண்டு புதிய ஹிந்தி அல்லது த மிழ் சினிமா மெட்டைச் சீழ்க்கைய டித்தவாறே லேட்டஸ்ட் நவ நாகரீக உடைகளுடன் புறப் பட்டு விடுவான். அவ ன து
அறை நண் பன் பரஞ்சோதி
- நெல்லை க. பேரன்
காரியாலயத்திலிருந்து வரவும்
இவன் புறப்படவும் சரியாக இருக்கும்.
"என்ன பஞ்சன். இண்
டைக்கு எங்  ைக டியூட்டி ** என்பான் பரஞ்சோதி.
"மச்சான். இண்டைக்கு பாமன்கடை ஈரோஸ் தியேட் டருக்குப் போறன் மச்சான் அண்டைக்கு கோல்பேஸ் பீச் சிலை ரக்கிள் பண்ணின சரக்கு இண்டைக்குப் பட த் து க் கு வாறன் எண்டு சொன்னவள். எனக்கு டைம் ஆச்சுது மச் சான். நான் போட்டுவாறன்’ என்றுவிட்டுப் போய்விடுவான்
பஞ்சநாதன் ஒரு நாளைக்கு ஈரோஸ், இன்னெருநாளைக்கு ரொக்சி. மற்ருெருநாள் மரு
தானை சென் ட் ர ல் என்று கொழும்பு மாநகரின் சினிமாக் கொட்டகைகள் ஒவ்வொன்றி லும் ஒவ்வொரு நா ளை க்கு ஒவ்வொருத்தியுடன் நிற்பான் பஞ்சநாதன். காரியாலயத்தில் அவனுக்குக் காதல் மன்னன்’ என்று பட்டம் கொடுத்திருந் தார்கள் மத்தியானம் சாப்

Page 12
20
போட்டு நேரத்தில் மற்றவர்கள் எல்லோரையும் சாப்பிட விட் டுத் தான் மாத்திரம் டெலி போனும் ரிசீவருமாக உட்கார்ந் திருப்பான்; அவனது டைரியில் இருக்கும் நம்பர்களில் குறைந் தது ஒன்பது பெண்களுக்காவது ஒருநாளேக்கு டெலிபோன் பண் இணுவான். சிலவேளைகளில் அவ னேத்தேடி டெலிபோன் கோல் கள் வருவதுமுண்டு
கொழும்பின் பல் வேறு திணைக்களங்களிலும் கடமையா ற்றும் பெண்கள் முதற்கொண்டு தனியார்துறைகளில் 56) யாற்றும் பெண்கள் வரையில் அவன் பழக்கம் பிடித்து வைத் திருந்தான். சாதாரணமாகப் பாதையில் போகும் பெண்களில் கொஞ்சம் பார்வைக்கு லட்சண மாக வாளிப்பாக அல்லது நாக ரீகமாக இருக்கும் பெண்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்ருல் பஞ்சநாத னைப் பிடித்து ஐஸ் அடித்தால் போதும், சோளங்கொட்டை பொரிவது போல ஒரு நிமிடத் திற்குள் படபடவென்று பொரி ந்து கொட்டுவான். அடேயப் பா! இவ்வளவுதூரம் தெரிந்து வைத்திருக்கிருனே என்று ஆச் ரியப்படவேண்டி வரும். காரியா லய அலுவல்களைப் போன்று ஒவ்வொரு பெண்களுக்கு ஒவ் வொரு "பேர்சனல் பைல்" தனி is வைத்திருக்கிருன், அவர் களது பிறந்தநாள் வைபவங்க ளில் த வருது கலந்து கொள் துெ, கொண்டாடவைப்பது
பரிசுகள் வாங்கிக்கொடுப்பது, படத்திற்குக் கூட்டிச் செல்வது கதைப்புத்தகங்கள் தேடிச் சப் ளேசெய்வது, புகைவண்டிப் பய ணச்சீட்டு, பேர் த்வ ச திகள் செய்து கொடுப்பது, ஊருக்குப் போகிறவர்களுக்குச் சூட்கேஸ் முதலியன தூக்கிக்கொடுத்து வழியனுப்பிவைப்பது போன்ற இன்னுேரன்ன காரியங்களைப் பெண்களுக்குச் செய்யும் தொண் டாகக் கருதிப் பஞ்சநாதன் செய்து வந்தான், பெண்களுக்கு உதவி செய்து அவர் களை முகம் மலரவைத்துப் பார்த்து அவர் க ளிட மிருந்து ஒரு "தாங்ஸ்’ பெறுவதில் அவனுக் கோர் அலாதிப் பிரியம். பஞ்ச நாதன் தான் எடுக்கும் சம்ப ளத்தின் ஒரு பகுதியைப் பெண் களுக்குக் கடிதங்கள் அனுப்ப வும் அவர்களுக்குப் பிடித்தமான பரிசுகள் அனுப்புவதிலும் செல வளித்தான். பத்திரிகைகளில் எங்காவது பேணு நண்பர் பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தால் அதில் *செல்வி என்று போட்டிருக் கும் பெண்களுக்கு உடனே கடி தம் எழுதுவான். முதலில் அவர் களுடைய விருப்பங்கள், பொ ழுதுபோக்கு என்பனவற்றைக் கேட்டுச் சாதாரணமாக ՓT(Աբ51 வான். பதில்கிடைத்ததும் மறு கடிதத்தில் போட்டோவும், குடும்ப விபரங்களும், வயதும் கேட்டு எழுதுவான். அல்லது வருகின்ற பதில்களுக்குத் தக்க மாதிரி ஏதாவது எழுதி அவர் களை எப்படியும் தன் காதல்

வகிக்குள் இழுத்துவிடுவான். தன்னுடைய புகைப்படத்தை யும் பின்னல் கையொப்பமிட்டு அவர்களுக்கு அனுப்பி வைத்து விடுவான்; அவனுடன் தொ டர்புகொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் அவன் தன்னை மட் டும் மனதாரக் காதலிக்கிருன் என்ற நினைப்பில் உருக்கமான காதல் வசனங்களை எழுத்தோ வியமாக வடித்துக் கொண்டி ருப்பாள் கொழும்பிலே இப் படிக் கடிதத் தொடர்பு அல் லது தொலைபேசித் தொடர் புள்ள யாராவது பெண் கள் அகப்பட்டால் எப்படியா து
அவர்கள் வீட்டிற்குப் போய்
பெற்ருேர் அல்லது சகோதரர் கள் இருந்தால் அவர்களையும் வசமாக வளைத்துப் பி டி த் து விடுவான். போகும்போது பிஸ் கட்ஸ், கேக்வகை என்று ஏதா வது வாங்கிச் செல்வான். குழை யக் கு  ைழ யப் பேசு வான். பெண் ணின் பெற் ருே ரு க்கு அளவுக்கு மீறிய மரியாதை காட்டுவான் அவர்களும் °பை யன் தங்கமானவன்” என்று நம் பிச் சினிமா, நாடகங்களுக்குக் கூடத் தங்கள் பெண்களை அவ னுடன் தனியாக அனுப்புவார் கள் இந்த வகையில் வத்தளே, கொட்டாஞ்சேனை, உணுப்பிட் டியா போன்ற இடங்களில் அவ னுக்குப்பல பெண்கள் பழக்கம்.
பஞ்சநாதனின் தகப்பனர் யாழ்ப்பாணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் தலைமையாசிரியராக இருந்து மாணவர்களுக்கு ஒழுக்
约 逐
21
கம் கற்பித்துக் கொண்டிருந் தார். மகனுடைய ஒழுக்கத்தை மாத்திரம் அவரால் மாற்றிய மைக்க முடியவில்லை. ஒவ்வொ ருமாதமும் அவர் பஞ்சநாதனு க்கு ஐம்பதுருபா அனுப்பி வந் தார். இல்லாவிட்டால் உடனே பணம் தேவை என்று அவனிட மிருந்து தந்திவரும் . அதற்கும் கவனம் எடுக்காவிட்டால் "உங் கள் மகன் இறந்து விட்டான் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று கடிதம் வரும். "ஐயை யோ. ஒரேயொருமகன் . தவ மிருந்து பெற்றபிள்ளை. ஏதே னும் மருந்து மாயத்தைக் குடிச் சாலும்" என்று தகப்பனர் மகனது தந்தியும் கடிதமும் வரு முன்னரேயே ஒழுங்காகப் பண த்தை அனுப்பி வந்தார்.
பஞ்சநாதன் நன்முகக் குடிக் கவும் பழகியிருந்தான் கொழும் பிலுள்ள மதுக்கடைகள், இரவு கிளப்புகள் எல்லாம் அவனுக் குத் தலைகீழ்ப்பாடம். சில கிளப் புகளுக்குப் பெண் களை யும் அழைத்துச் சென்று டான்ஸ் ஆடுவான். அழகிலும் ஆடம்ப ரத்திலும் மயங்கிய பெண்கள் வெகு சுலபமாகவே அவனது காதல் வலையில் சிக்கிப் பிறகு காமக்களியாட்டங்க ளு க் கும் உடன் பட்டனர். அவனுடன் பழகும் பெண்களிற் பலருக்கு அவன் மதுபானம் பாவிக்கப் பழக்கியிருந்தான் மேலும் கொழும்பில் கிளப்புகளுக்கு வரும் பெண்கள் நன்ருகவே மது வகைகளை அருந்துவார்கள் இல்

Page 13
22. .
லாவிட்டால் அவர்களால் அழ காக நடனமாட முடியாது. மது போதை ஏற ஏற வெட் கத்தை மறந்து காமக்களியாட் டங்களில் ஈடுபடவும் உதவியாக இருக்கும்:
பஞ்சநாதனின் இந்த நடத் தையினல் அவனது உடல்நலம் பாதிக்கப்பட்டு வெகு விரை வில் இறந்து விடுவான் என்று பரஞ்சோதி எவ்வளவோ தூரம் பயமுறுத்தி வந்தான். அவனது ஆலோசனை களை யும் ம ரு ட் டல்களையும் கேட்டுப் பஞ்சநா தன் கடக ட வென்று சிரி ப் பா ன் போடா பைத்தியக் காரா. மனிதன் வாழப் பிற ந்தவன்; சாகு முன்னர் இந்த உலகத்து இன்பங்களையெல்லாம் அனுபவித்துவிட்டுச் சாகவேண் டும். எனது இந்தக் களியாட் டங்கள் கூட நெடுநாளைக்கு நிலைக்காது இதெல்லாம் சும்மா "போர் த ரைம் பீயிங்” மச்சான். யூ டோன்ட் வொறி உனக்கு விருப்பமில்லையென்ருல் என் பக் கமே நீ வரவேண்டாம். யூ கரி யோன் என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டான். அதன் பிறகு பரஞ்சோதியும் அவ்வள வாக வற்புறுத்துவதில்லை. ஒரு நாளைக்குத் தானகவே அடங்கு வான் என்று பேசாமல் இருந் தான்
ஒரு ஞாயிற்றுக்கிழமை, பஞ் சநாதன் வழக்கம் போலத் தன் திருவிளையாடல்களுக்குக் கிளம் பிவிட்டான்3 அன்றை க் கு
a. ፳
யாரோ ஒரு டைப்பிஸ்ட்டுடன் மருதானைக்குச் சினிமா பார்க் கப் போய்விட்டான். பரஞ் சோதி மட்டும் அறையில் இருக் தான். வெளியில் யா ரே ரா பெண்ணின் குரல் பஞ்சநாத னின் பெயர் சொல்லி விசாரிப் பது கேட்டது. யார் எ ன் று கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து றுாம்காரர்தான். பஞ் ச நா த ன் இப்போதுதான் வெளியே போய்விட்டதாக நம ட்டுச் சிரிப்புடன் பதில் சொல் லிக்கொண்டிருந்தார். L{עr(Gל சோதியைக் கண்டதும் "இவர் அவருடைய நெருங்கிய நண்பர் தான். இவரிடம் கேளுங்கள்" என்று விட்டு அவர் போய்விட் டார். பஞ்சநாதனத்தான் எப் படியும் சந்திக்க வேண்டும் என் றும் தான் மட்டக்களப்பிலிரு ந்து வருவதாகவும் அப் பெண் கூறினுள். மிக வும் அழகாக இருந்தாள், ஐயோ பாவம். இவளும் பஞ்சநாதனது வலை யில் அகப்பட்ட ஒருத்திபோ லும் என்று பரிதாபத்துடன் நோ க் கி ய வ ர றே அவளை உள்ளே அறைக்குள் வந்து உட் காரும்படி பரஞ்சோதி அழைத் தான். அவளும் தயங்காமல் உள்ளே வந்துவிட்டாள். பஞ்ச நாதன் போடிங்கில் இரு ந் த சமையல்காரப் பையனிடம் தே நீருக்கு ஏற்பாடு செய்தான். அந்த இளம் பெண்ணின் அழ கிய முகத்தில் ஏமாற்றம் நிரம் பிய வேதனைக் கோடுகள் திரை யிட்டிருந்ததைப் பரஞ்சோதி அவதானித்தான்.

"எதற்காகப் பஞ்சநாத னைக் காணவந்தீர்கள்"
*அண்ணு” என்று அந்தப் பெண் அழைத்துவிட்டுக் குலுங் கிக் குலுங்கி அழுதாள்
* 'அவர் என்னை ஏமாற்றி விட்டு ஓடிவந்து விட்டாரண்ணு நீங்கள்தான் அவரிடம் எடுத் துச் சொல்லி என்னைக் காப் பாற்ற வேண்டும். மட்டக்களப் பில் உத்தியோக அலுவலாக ஒருமாதம் வந்து தங்கியிருக் தார். எங்கள் வீட்டுக்குத்தான் சாப்பிடவருவார். எப்படியோ என்னேடு இனிமையாகப் பேசி வார்த்தைகளால் மயக்கித்தன் உயிருள்ளவரையும் எ ன் னை க் கைவிடமாட்டேன் என்று தலை யில் அடித்துச் சத்தியம் செய்து கொடுத்தாரண்ணு நா னு ம் அவரும் என் பெற்றேருக்குத் தெரியாமல் பலதடவைகள் சினி மாவுக்குச் சென்றிருக்கிருேம், என் பெற்றேர் இல்லாதசமயம் பார்த்து வீட்டுக்கு வந்து என் னுடன் காதல் மொழிகளைப் பேசி என்னை நிலை தவற வும் செய்து விட்டாரண்ணு. எப்ப டியும் என் கணவராகப் போகி றவர்தானே என்ற நினைப்பில் அவருடன் பலதடவைகள் உட லுறவு கூட வைத்திருக்கிறேன் இப்போது அவரது குழந்தை என் வயிற்றில் மூன்றுமாதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது: வீட்டில் யாருக்குமே தெரியாது தெரிந்தால் என்னைக் கொன்று போட்டு விடுவார்கள். இவர்
23
எனக்கு வாழ்வு தராவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லைஎன்று அவள்கலங் கிய கண்களுடன் விம்மல்களுக் கிடையில் சொல்லி முடித்தாள்,
பரஞ்சோதிக்கு நிலைமை தர் மசங்கடமாக இருந்தது. சிறுக தையில் அல்லது சினிமாவில் வருவதைப் போன்று இவள் தன்னிடம் வந்து கதைக்கிருளே. இவள் சொல்வதை நம்பலாமா என்று கூட யோசித்தான் ஆன லும் நண்பனின் கு ண த்  ைத நன்கு அறிந்தவனதலால் அப் பெண் சொல்வதுதான் உண் மையாக இருக்கும் என எண்ணி னன். "பெண்கள் சமுதாயத்தின் விதை நெல்லைப் போன்றவர் கள்” என்று யாரோ ஒரு தமிழ் நாவலாசிரியன் எழுதியது ஞாப கத்திற்கு வந்தது. விதை நெற் களையே மிகவும் கெட்டித்தனமா கப் பழுதாக்கி வருகிறர்கள் என்று நினைத்தான்.
"தங்கச்சி உங்களை நினைத்
தால் பரிதாபமாக இருக்கிறது பஞ்ச நா த ன் இ ப் போ து
வெளி யே போயிருக்கிருன்; இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை. எத்தனை மணிக்குத் திரும்பி வருவானே தெரியாது பஞ்சநாதனைப்பற்றி எனக் கு நன்ருகத் தெரிந்தபடியால்தான் உங்களைப் பற்றி ப் பரிதாபப் படுகிறேன். அவனுக்கு இதெல் லாம் சர்வசாதாரணம் பஞ்ச நாதன் வரும் வரைக்கும் உங் களை எங்கே தங்கவைப்பது என்

Page 14
24
பதுதான் எனக்குத் தெரிய வில்லை. இது ஆண்கள் வசிக் கும் போடிங். இங்கே இளம் பெண்கள் இருப்பது சரியல்ல அது வும் பஞ்சநாதனுடைய ஆள் என்று தெரிந்தால் மற்ற வர்கள் உங்களைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாக எண்ணித் தவழு கவும் நடக்க முற்படுவார்கள். இதுவரையில் என்னையும் உங்க ளையும் பற்றிக்கூட ஏதாவது குசுகுசுப்பார்கள்" என்றுவிட் டுத் தீர யோசித்தான் அவனது தர்ம சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட அவளும் "சரி யண்ணு . நான் உங்களுக்குத் தொந்தரவு தரவில்லை. எனக் குக் கொள்ளுப்பிட்டியில் சினே கிதி ஒருத்தி இருக்கிருள். அவ ளிடம்போய்விட்டுப் பின் னே
ரம் வருகிறேன். அவர் வந்தால்
எ ங் கே யும் போகவிடாமல் வைத்திருங்கள். எப்படியாவது அவரிடம் பேசி எனக்கு வாழ்வு கொடுங்கள் அண்ணு” என்று விட்டு அவள் போய்விட்டாள்.
அன்று பின்னேரம் அவள் வந்தாள். அவன் வரவில்லை, சில இரவுகளிலும் சில தினங்களி லும் பஞ்சநாதன் தொடர்ந்து அறைக்கு வராமல் விடுவதும் உண்டு. அவனது தாமதமான வருகைகள், திடீர் திடீர் மறை வுகள் குறித்து யாரும் ஆச்சரி யப்படுவதேயில்லை. எல்லாம் பழகிப்போன விஷயங்கள். அப் பெண் மறுபடியும் காலை வருவ தாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்
அன்றிரவு அறையில் பரஞ் சோதி எதையாவது படிக்க லாம் என்று புத்தகங்களைத் தேடினன். பஞ்சநாதனுடைய மேசையில் ஆங்கில துப்பறியும் நவீனம் ஒன்று இருந்தது; மெது வாக அதை எடுத்துப் பிரித் தான். உள்ளிருந்து போஸ்காட் அளவு புகைப்படம் ஒன்று விழுந்தது. அதுவும் ஒரு பெண் னின் படம். அப்போது வந்த வளல்ல. இவள் இன்ஞெருத்தி, படத்தின் பின் புறத்  ைத ப் பார்த்தான், "என் உள் ள ம் கவர்ந்த கள்வனுக்கு இனிக்கும் முத்தங்களுடன் மங்கிளா” என்று
அழகாக எழுதப்பட்டிருந்தது,
பாவம் மங்களா என்று பரஞ் சோதி மனதுள் நினைத் துக் கொண்டான்
இதையும் விடப் பஞ்சநா தன் தனது பிறந்த ஊரில் ஒரு பெண்ணை ஏமாற்றிக் கெடுத்த தும் இப்போதும் அப்பெண் திருமணமாகாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதும் பரஞ் சோதிக்கு மிக நன்ருகத்தெரி யும். இதைப்பற்றியேல்லாம் எப்போதாவது பேச்சு வந்தால் *சும்மா விளையாட்டுக்கு மச் சான் இதெல்லாம் எனக்குப் பொழுது போக்குகள். யஸ்ட் த ரைம் பீயிங்" என்று நாசுக் காகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவான்.
காலையில் வரு கிறேன் அண்ணு "என்று கலக்கத்தோடு கூறிச்சென்ற மட்டக்களப்புப்

பெண்ணை நினைத்த போது பரஞ் சோதிக்கு ஒன்றுமே புரியவில்லே பஞ்சநாதன் இவளை மாத்திரம் ஏமாற்றியிருந்தால் சேர் த் து வைக்கலாம் ஆளுல் இவளைப் போல எல்லாப் பெண்களுமே வந்து நின்ருல் என்ன செய்வது என்று திகைத்தான். பஞ்சநா தன் தன்னுடைய பொழுது போக்கிற்காகப் பெண்களையே கெடுத்து அபலை க ளா க் கி க் கொண்டிருக்கிருனே என்று எண் ணியபோது அவனைப்பற்றிய ஆத்திரமும் அவன் ஒரு "கொடி யசமூக நோய்' என்ற அருவருப் பும் பரஞ்சோதிக்கு ஏற்பட்
60
25
மறுநாள் அதி காலை யில் அறைக்குச் சமீபமாகவுள்ள பம் பம்பலப்பிட்டி கடற்கரையோர மாக இரயில்வே தண்டவாளத் திற்கு "அருகே யாரோ த்ெ துக்கிடப்பதாகக் கே ள் ,נ"ו (5ת பட்ட பரஞ்சோதிக்கு நெஞ்சு பகீரென்றது. அந்தப் பெண் தானே என்ற சந்தேகத்துடன் இடப்போய்ப் பார்த்தான் அவனுக்கு இரத்தமே உறைவது போல இருந்தது: செத்துக்கி டந்தது வேறு யாருமேயில்லை : பஞ்சநாதன்தான். பெண்களைக் கெடுப்பது போலவே சாவை யும் விளையாங்.ாக • GLísrif S ரைக் பீயிங் காகக் கருதிவிட் டான அவன்?
புங்குடுதீவு மக்களுக்கு
ஒரு புதிய செய்தி
சிறந்த முறையில் றைக்கிளின் செய்வதற்தும்
ஆடைகளைச் சுத்தம் செய்வதற்தம் ததந்த இடம்.
சசிகலா லோன்றி
உரிமையாளர்: கு. சண்முகலிங்கம்
பிரதான வீதி
»gonom
பெருங்காடு
- புங்குடுதீவு"
சசிகலா லோன்றி உங்களை அழைக்கிறது.

Page 15
ஒற்றைத்
தென்னை
பிரபஞ்ச வெளியை ஊடுரு விக் கொண்டு நிமிர்ந்து நிற்கி றது அந்த ஒற்றைத் தென்னே.
தொலை தூரத்தில் தெரியும் தீவுக் கூட்டங்களுக்கும், எட் டத்திலே வரும் இயந்திர வள் ளங்களுக்கும், பாய் கட்டிஒடும் படகுகளுக்கும் குருநகர் -"ஜெ ட்டி'- இறங்கு துறையைக் காட் டும் கலங்கரை விளக்கம் அந்த ஒற்றைத் தென்ன.
வரிசையாக இறங்குதுறை யோரம் நிற்கும் இயந்திர வள் ளங்கள் நீர் சுளிப்பில் நர்த்தன மிட்டுக்கொண்டிருந்தன:
கடலின் முள்ளந்தண்டாக நீண்டு கிளைவிட்டு, சுட்டியல மைப்பில் மல்லாந்து கிடக்கும் அந்த இறங்குதுறை ரோட்டின் மருங்கில். குவிக்கப்பட்டுக் கிடக் கும் மீனை ஒரு வ ன் பிழந்து, பிழந்து எறிய, குடல்களையும், கழிவு ப் பதார்த்தங்களையும் அலசி, அலசி, மே லே வீசுகி முன் மற்றெருவன்.
எறியப்படும் மீனை ரோட் டில் சாக்கைப் பிரித்துக் கொட் டியிருக்கும் உப்புக் குவியலில் பிரட்டி எடுத்து அடுக்குகின்ருன் இன்னெருவன்,
'நந்தினி”
தொலைதூரம் நீரைக் கிழித் துக்கொண்டுவரும் ஒரு வள்ளம் இறங்குதுறையை அண்மி நிற்கி (1) gil.
கயிற்றை எறிந்து இறங்கு துறைக் குத்துக் கல்லில் கட்டும் சந்தியாக் கிழவன்.
"மருமோன். மருமோன்” என்று குரல் கொடுத்தான். அவன் முகத்தில் பூரண திருப் தியின் சாயல்,
செவத்தி என்கிற செபஸ் தியாம்பிள்ளையும் அவனேடு வள் ளத்தை விட்டு வெளியில் வந் தான்
'மிச்சம் நல்லாய்.இருக்கு ...செவத்திக்கு நல்ல மலிவு"
இறங்கு துறையில் மீன்பிடிக் கும் அல்போண்சனைப் பார்த்து முனகினன் சந்தியாக் கிழவன். அந்த வள்ளத்தை அவர்கள் பருத்தித்துறையிலிருந்து வாங்கி யிருந்தார்கள். வெள்ளோட் டத்திற்காக அந்த வள்ளத்தை கெளதாரி முனைவரை ஒட்டிச் சென்று அவர் கள் இருவரும்
திரும்பியிருந்தார்கள்.
வள்ளத்தின் அமைப்பும், இயந்திரங்களின் பாவனையும்
சந்தியாக் கிழவனுக்கு நன்ருகப் புரியும்

அல்போண்சன் சந்தியாக் கிழ வனைப் பார்த்து,
"அம்மான். நீ. போனல் சும்மா சாதாரணமே. எடுப்
untul f”
என்று சிரித்தான்.
வெய்யிலின் அகோர எறிப் பிலும் கிழவன் அவர்களோடு தொழில்பாடுகளைப்பற்றியே ப்ே சிக்கொண்டிருக்கிருன்.
செவத்தியின் மனைவி தூர த்தில் நின்று குரல் கொடுப்பது கேட்கிறது
"ஒ.அம் மான். உந்தாளை யும் கூட்டிக் கொண்டு. தே த் தண்ணி குடிக்கவா."
அவளின் கு ர ல் மெதுவாக ஒலித்தடங்குகிறது:
"அம்மான். தான் இந்த நேரம் தேத்தண்ணி குடிக்கும் ? அக்கை சும் மா சாட்டுக்குக் கூப்பிடுது.’ என்ருன் நீரு ள் மீனை அலசியபடி நிற்கும் ரொ பேட்.
அவன் கூறியதில் நியாயம் இருப்பதுபோல் சிரித்த சந்தியா தலைப்பாகையை அவிழ்த்து முக த்தைத் துடைத்தபடி . பிரதா ன வீதியை நோக்கி நடக்கத் தொடங்கிஞன்.
இறங்கு துறையில் நிற்கும் அநேக கண்கள் அவனை அனுதா பத்தோடு நோக்கின.
27
பெருமூச்சுகள் வெடித்துச் சிதறுகின்றன. அவன் நடக்கிமூன்.
* * 용
சந்தியாவுக்கு அறுபத்தை ந்து வயதிருக்கும். ஆன லும் கட்டுமஸ்தான தேகமும் வலி மை மிக்க மன உறுதியும் அவனை இன்னும் உசுப்பவில்லை.
குரு நகர் வாழ் மீன்வர்க ஒருக்கும் மற்றைய சமூகத்தின ருக்கும் அவனைப்பற்றி ஒன்ரு கத் தெரியும்.
இன்றுவரை அவன் யாருக் குமே பணிந்ததுமில்லை இனி யும் பணியப்போவதில்லை.
சிறுவயதிலிருந்தே சுருக்குட்
டியைப்போல் சுறுசுறுப்பாக எதிர்நீச்சலிட்டுப் பழகியவன் அவன்.
இன்றுவரை அவனே அசரப் பண்ணியவர்கள் எவருமில்லை,
பெரிய சம்மாட்டிகள், முத லாளிகள் எத்தனேயோ பேரை எதிர்த்துநின்ற ஒரே ஒரு நேர் மையான தொழிலாளி குருநக ரில் உண்டென்ருல் அது சந்தி யாக் கிழவனேதான்
எத்தனையோ முறை பொலி சாரைக் கொண்டு அவனுக்கெதி ராகப் பல வித நடவடிக்கை களைப் பணமுதலே கள் செய்தன.
ஆணுல் அவைகளினுல் அவ னை ஒன்றுமே செ ய் ய மு டி ய வில்லை.
நெஞ்சுரம் பெற்றவன் சத்தி யாக் கிழவன்.

Page 16
28
அவனது குடும்பமே அழிந் தொழித்த போதும் அவன் gaf ராதவன்,
சுமார் ஒரு வருடத்திற்கு
முன் நிகழ்ந்துவிட்ட அந்த நிக
பூழ்ச்சி.?
அவன் இப்போது இருப்பது போல்தான் அப்போதும் கலகல ப்பாக இருந்தான்.
மீன்களைப் பிழந்தெறியும் கைங்கரியத்தில் லா வ க மா க அவன் ஈ டு படும் பொழுது அதைப் பார்க்க சிலருக்கு ஆச் சரியமாகக் கூட இருக்கும்.
எ ன் ன வேகம் . எ ன் ன வேகம்!
இன்றும் அவ ன் இறங்கு துறையில் நிற்கிருன் . அவஞேடு கூட வேலைசெய்தவர் சள் , ..?
விக்ரர்,டேவிட் அதிரியார் ..? விக்ர்ரும், டேவிட்டனும் இன்று உயிரோடு இல்ல்ை.
அதிரிய்ார்.?
"அம்மான். அம்மான். ஐயா வைக் கண்டியளே.'
வேகமாக நடக்கும் சந்தி யாக் கிழவன் மூன் அலங்க மலங்க ஓடி வந்தாள் மாகிறற்
'ஏனடி பிள்ளை. எங்கை போனவன். ? ??
பதறினுன் கிழவன்,
*நான் கைவேலையாய் . இருந்தன் . அப்ப அந்தாள் பட லையைத் திறந்துகொண்டு வெளி யிலை வந்திட்டுது.”
ஆணுல்
தூண்டலில் சிக்கிய மீனப் போல் அவள் துடித்தாள்
“பயப்பிடாதை உங்கை கிட்டடியிலை. எங்கையேனும் நிப்பன் நான் பாத்துக் கூட்டி வாறன்.?
என்று கூறிய சந்தியா திரு ம்பி நடந்தான்:
அவன் நினைத்தது. வீண் போகவில்லை
கடற்கரையின் கிழக்குப்புற ஒற்றைத் தென்னையில் சாய்ந்து கொண்டு கடலை வெறிக்கப் பார்த்தபடி உட்கார்ந்திருந் தான் அதிரியார்க் கிழவன்.
சந்தியா அவனை அனுதா பத்தோடு பார்த்தான்.
அதிரியாரின் எலும்புகள் துருத்தும் உ ட லம் மேலும் காய்ந்து கருவாடாகி இருப்பது அவனுக்குப் புரிகிறது,
அதிரியாருக்குச் சந்தியா வை விட மூன்று தான்கு வயது குறைவாகத்தான் இருக்கும்.
சக்தியாவுக்கும். அவனுக் கும் உன்ள வித்தியாசம்..?
முன்பு அதிரியாரும். நல்ல வாளிப்பான தேகக்கட்டுடைய வனகத்தான் இருந்தான்.அதெ ல் லாம் சிதைந்து உருக்குலைந் தது.!
அந்த ஒருவருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சியினுல்தான்.
அந்த நிகழ்ச்சி.?
“என்னடா. இப்படியே. நெடுகலும். யோசித்து. கவலை

ப்பட்டு. சும்மா மனதை அல ட்டாதை பொடிச்சி உன்னைக் காணுமல் தவிக்கிருள் எழும்பு”
குரலில் சற்று அனுதாப மும் கண்டிப்பும் தொனிக்க அலையாக அடித்தான் சந்தியா.
உப்பு நீரைக் குடித்துவிட் டதுபோல் முகம் சுருங்கிக்கிடக் கும். அதிரியார் விம்மினர்.
*அண்ணை. அண்ணை " அவனுக்குக் குரல் அடைக் கிறது.
யோசியாதை மேனை. யோசி யாதை. நடந்தது நடந்திட் டுது. இனி என்ன..?.”
குரலில் எந்தவித சலனமு மின்றி உரத்த தொனியில் Gug ஞன் சந்தியாக்கிழவன்.
இரண்டு கிழங்களும் ஒரே தாக்கத்துள் சிக்குண்டவைதான் ஆனல் இரண் டும் இப்போது இருக்கும் நிலைமிகமிக வித்தியாச Lost CTS
பெரிய கோவில் சவக்கா லையை வெறிக்கப் பார் க் கும் அதிரியார் பலத்து அழுதார்.
பாலைதீவுப் படகு விபத்தில் அவரது மகன் விக்ரர் இறந்து போகாதிருந்தால் அவர். இப் படி இருப்பாரா..?
*அழாதையெடா.தம்பி. அழாதை."
அதிரியாரைத் தேற்றும். சந் தியாவுக்கும் சற்று உடல் நடுங்
29
குகிறது. ஆனல் அதை அவன் சமாளிக்கிருன்.
ஒரு மகனை இழந்து பயித் தியமாகிவிட்ட அதிரியாருக்கு அந்தவிபத்திலே தனது மனைவி . மக்கள். தமது குடும்பத்தை யே இழந்து நிற்கும்- அசையாது நிற்கும் அந்தத் தனி மரம் - ஒற் றை மரம் ஆறுதல் கூறுகிறது.
படகு விபத்தில் அவரது மனைவி, மக்கள், பேரக் குழந் தைகள் அனைத்தையும் இழந்து விட்ட அந்த மனிதன் மற்றவ னுக்கு ஆறுதல் கூறுகிருன்.
கல்லூரிக்குச் செல்லும் சிறு வர்களைக் காணும்போதும், கண வன் மனைவியாக சோடியாக நடக்கும் தம்பதிகளைக் காணும் போதும்சந்தியாவுக்கு மக்களின் மருமக்களின் பேரக் குழந்தை களின் நினைவு வரத்தான் செய் யும். அவன் ச மா வித் து க் கொள்வான்.
அவன் நெஞ்சுரம் பெற்ற
வன் !
"உவற்றை நினைவுக்குத் தான். உப்பிடி வந்தது. ஆள்பாடு தொப்பி.”
என்று சந்தியாவின் பழைய கம் பீரிய நடவடிக்கைகளைப் பார்த்துப் பொருமை வலைபின் னிய சிலர் கூறத்தான் செய் தார்கள். ஆனல் கிழவன் இன் றும் பழைய சந்தியாவே !

Page 17
30
பெரிய கோவில் சவக்காஆல யைத் தாண்டி சாராயத் தவற ணையை நோக்கி நடக்கும்போது கிழவன் கவலையோடு BL -Lýt:1 துண்டு. அவரது குடும்பம் சில வேளை அவரை கெதிகலக்கும் ஆனல் கணநேரம். தவறணையில் இரு ந்து திரும்பும்போது "சந்தியாக் கிழவன் பழைய மனிதனுகிவிடு வான்;
தனிச் ச  ைம ய ல் தனித்
தொழில்.எல்லாருக்கும் உதவி.
தொழில் ஆசான். மதிட்பிற் குரிய சீவன்,
'அம்மான்"
சிறு தோல்விகளைக் கண்டு கலங்கி தற்கொலை செய்பவர்க ளும், தம்தோல்விகளால் விரக்தி யுறுபவர்களுமான, இளம் சந் ததியினர்க்கு ஒரு உதாரணம் கட்டக் கூடிய மனவலிமை மிக்க சலிக்காத உழைப்பாளியான நேர்மைத் தொழிலாள வர்க்க வாரிசுதான் -
சந்தியாக்கிழவன் ,
ஆணுல் அதிரியார். ?
,"ம். எழும்பு. வீட்டை போ பொடிச்சி அந்தரப்படு
வள்.
மீண்டும் உ லூப்பினுன் சந் தியா
அதற்குள் உறங்கும் ,
ஒற்றைத் தென்னையில் கையை ஊன்றி எழுந்திருக்கும் அதிரியார் சந்தியாவின் பின்னே தள்ளாடி நடக்கிருன்.
பன்னிரண்டுமணி வெய்யில் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக் கிறது.
ஓடிவரும் மாகிறற் தகப் பனை கையில் பிடித்து வீட்டுக் குள் கொண்டு செல்கிருள்.
'அம்மான் சாப்பிட வா
ருங்கோவன்.”*
"வேண்டாம் பிள்ளை, நான் சோறு காய்ச்சின்னன், உதிலை போட்டு வந்து.தான் சாப்பிட வேணும்??
மாகிரற்றைப் பார்த்துக் கூறும் சந்தியாக் கிழவன் தவ றணையை நோக்கி கம்பீரமாக நடக்கிருன்.
மாகிரெற் தொலைவில் தெரி யும் ஒற்றைத் தென் னை  ைய வெறிக்கப் பார்க்கிருள் அந்தத் தென்ன. அது, ?
எத்தனையோ மிழைபுயலுக் கும் அசையாது நிலைத்து நிற் கும் அத்தனி மரம்.?
குருநகரில் எதற்குமே அசை யாத இரண்டு தென்னைகள்.
ஒன்று அது. மற்றது.?
சந்தியாக் கிழவன் !
அவளுக்கு உடல் சிலிர்க்கி றது. O

கனவுக் கன்னி
கே. ஏ. ஹாஜா முகைதீன்.
இணைமலர்த்தாள் சிலம்பிடை இசைபயில
எரிசுடராய் கைவளையல் கதிர்செய்ய கணையெனப் பாய்கண்கள் சுழன்ருட
கொழுங்கலை மேனியெல்லாம் சதிராட எழுதரிய ஓவியமாய், எழில்மேவும் காவியமாய்
இருங்கவின் இயைந்த பொற்சிலையாய் பழுதற்ற பாவை நல்லாள் என்னருகில்
பொலிவுடனே வந்து நின்ருள். கயல் பழிக்கும் விழியுடையாய்; செங்
கமலமென சுடர்விரிக்கும் முகமுடையாய் அயிலேந்து மறவரும் மயல் கொள்ளும்
அழியாப் பேரழகின் உருவத்தாய் அள்ளிருள் கவிந்த நடுநாட் பொழுதினிலே
ஆரணங்கே வந்தனை ; காரணம் சொல்லுதியோ கள்ளவிழ் மொழியெடுத்து மெல்லெனக் கேட்டேன்
கனிமொழி நாவினள் உரைக்கலுற்ருள் தாரணி போற்றுமுயர் திருக்குறள் என்
தங்கக் கழுத்தின் பொன்னுரம் ஆருக் கற்பின் திறன் காட்டும்
அழியாச் சிலம்பு என் காற்சதங்கை செழுநிதியாம் "சீரு" என் செவியகத்தே சுடர்கின்ற குண்டலம்; குவலயத்தே கொழும்புகழ் நிறுவிய என் பெயரோ
கன்னித் தமிழென்ருள் கோலமயிலனையாள் உயிர்த்தமிழே ! உலவாக்கிழியே
உனை மறவேன் எஞ்ஞான்றும் குயிலாய்ப் பண்ணிசைத்து நீ என்றன்
சிந்தையில் சதிராட வருவையோ மாற்றுயர் பொன் வேண்டேன்
முத்து மஞ்சமும் யான் வேண்டேன் வேற்றவரும் போற்றும் பொற்றமிழே
வையத்தே வேண்டுவன் வைகலும் உன்னை தீந்தேனும், தெள்ளமுதும் பூந்தமிழே நின்
தவிட்டாச் சுவைதனக்கு நிகராமோ காந்தள் மலரனைய கவிஞர் மேனியளே
கண்ணிரங்கி என்னருகே வாராயோ இன்பத்தின் பேரலை இதயத்தே அலைமோத
எழுச்சி மிடுக்கோடு யான் எழுந்தேன் நள்ளிரவில் ஏனே எழுந்தன என
அன்னைசாற்ற கண்டதெல்லாம் கனவென்று ஒர்ந்தேன்.


Page 18
சில நினைவுகள்
செத்து மடிகின்றன
ரஜனி மணுளன்
பியதாஸ் எதுவும் Gug: வில்லை:
என் கரங்களைப் பற்றிய
வாறு என்விழிகளையே சில நிமி டங்கள் உற்றுப் பார்த்தான் அவன்: அவன் தங்கை சுகுளு வைப் பார்த்தேன். கண்களில் துளிர்த்து நின்ற நீர்த்துளிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடி யாமல் அவள் தி ணறு வ  ைத என்னல் புரிந்து கொள்ள முடிந் 卢安 ·
இரண்டு வருடங்க்ளுக்கும் மேலாக நான் அவர்களது வீட் டின் அறையொன்றில் குடியிருந் தவன் அந்தக் குடும்பத்தில் ஒரு வணுகவே அவர் க ள் என்னை நடத்தி வந்தார்கள். அன்புக் குத் தான் ஜாதி, மத, மொழி பேதம் எதுவுமே தெரியாதே. அதனுல் தான்போலும் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சிறிய தொரு தீவில் பிறந்து வளர்ந்த நானும் பட்டணத்தில் வாழ்ந்த அந்தக்குடும்பத்தில் ஒருவனுகக் கலந்து கொள்ள முடிந்தது
"...நான் போயிற்று வர வா?" என்று சிங்க ளத் தி ல் நான் கேட்டபோது, பியதாஸ் என் கரங்களை விட்டுவிட்டுத் தங்கையின் பக்கம் பார்வை
யைத் திருப்பினன்;
"மகே புறப்படுகிருளும் சுகுணு" என்ருன்
அவளது கண்களிலிருந்து பொல, பொலவென வழிந்த நீர்த்துளிகள் என் மனதை எது வோ செய்தன. அவள ரு கே நெருங்கி நின்றேன்;
"யாழ்ப்பாணம் eh 60 pro தானே போ கிறேன் சுகுணு விடுமுறைகிடைக்கும் போதெல் லாம் உங்களைச் சந்திக்க வரு வேன்.”
"யாழ்ப்பாணம் உங்க்ளுக் குக் கிட்டடியில் இருக்கலாம்: ஆணுல் நீங்கள் இந்த வீட்டிலி ருந்து வெகுதூரத்தில் தானே இருக்கப் போகிறீர்கள்? அவள் குரல் தழுதழுத்தது.
"வீட்டை விட்டு வெகு தூரத்திலிருந்தாலும் என் இத யம் என்றும் இங்கேதானே இருக்கும்!"
அவள் உதடுகள் சிரிப்ப தற்கு முயன்றன,
"நன்முகப் பேசத் தெரிந்த வர் நீங்கள்,"
*பேசமட்டும் தான் தெரியு மென்பதில்லை சுகுணு மனம் விட்டுப் பழகவும் தெரியும்."
"ஆனலும் உங்களுக்குக் கல் மனதுதான் மசே."

நான் கிரித்தேன் என் அன் புள்ள சுகுணு என்னைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவள் மென்மையான என்மனஉணர்வு களைத் தெரிந்து கொண்டவள்; அவளே சொல்கிருள் எனக்குக் கல்மனதாம். இப்படிச் சொல் லியாவது தன்னைத் தேற்றிக் கொள்ளட்டும் என்று அமைதி யாக நின்றேன்
**ரெயினுக்கு நேரமாகிறது மகே." என்ருன் பியதாஸ்.
குட் கே ஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். சுகுணு சில அடிகள் பின் தொடர்ந்து
வந்தாள் பியதாஸ் எனக்கு முன்பாக நடந்துகொண்டிருந் šsnrárs
போய்விட்டு வருகிறேன்
சுகுணு உன் கல்யாணச் சாப்
பாட்டிற்குக் கட்டாயம் Ghair'
அவள் கண்கள் குளமாயின. ஏக்கத்தோடு அவள் பார்த்த Lurias) 6
வரு
அவள் எதையோ சொல்ல முயன்ருள். பியதாஸ் திரும்பிப் பார்த்தான்.
அவள் பேசவில்லை,
தல்யசைத்து விடை தந் தாள்.
ဏွှိ;•
ஊர் மண்ணில் காலெடுத்து வைத்தேன்.
எனக்கென்று யார் இருக் கிருர்கள் இங்கே !”
33
ஏதோ ஒரு அன்னிய நாட்
டிற்கு வந்துவிட்டது போன்ற உணர்வு. -
என்னை முழுமையாகப் புரி ந்து கொள்ள இங்கே யாருமே இல்லை;
சுகுணுவின் முகம்தான் என்
மனதில் நிழலாடிற்று.
இந்நேரம் அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்.
அழுதுகொண்டிருப்பாளா ? சிரித்துக்கொண்டிருப்பாளா ?
சுகுணுவைப்பற்றி எனக்கு நன்கு தெரியும். என் பிரிவுக் காக அவள் அழுது கொண்டு தானிருப்பாள்.
புகையிரத நிலையத்தில் பிய தாஸ் மனக்திறந்து சொன்ன் வார்த்தைகள் என் றினை வில் மோதின.
*மகே நீ இன்றைக்கு எங் களைவிட்டுப் போகிருய். சுகுணு என் தங்கைதான். ஆனல் அவ ளது எண்ணம் எனக்கும் புரியும் உன்னையே கணவனுக அடைய வேண்டும் என்று அவள் ஆசைப் பட்டாள் உனக்கும் அப்படி யொரு எண்ணம் இருந்திருக்க லாம் . ஆனல் இருவருமே கட் டுப் பாட்டோடு ந - ந் து கொண்டீர்கள். மகே நீ என் தங்கையைக் கல்யாணம் செய்து

Page 19
34
கொள் என்று உன்னை நா ன்
வற்புறுத்த மாட்டேன். ஆனல் அப்படியொரு எண்ணம் வந் தால் நீ இங்கே திரும்பிவா. சுகுணு நிச்சயம் உனக்காகக் காத்திருப்பாள்."
பியதாஸ் என்னிடம் எதை யுமே மறைக்கவில்லை. தன் மன திலுள்ள எதையுமே ஒளிக்கா மல் அவ ன் பேசியதிலிருந்து அவனது தூய நட்பின் ஆழத் தைத்தான் என்னுல் தெரிந்து கொள்ளமுடிந்தது.
"யோசிக்கிறேன் பியதாஸ்
கடிதம் எழுதுகிறேன்" என்று சொல்லி
ஊருக்குப் போனதும்
விடை பெற்றேன். W
ஆஞல் அவனுக்கோ சுகு ணுவுக்கோ நல்லதோர் பதிலே மகிழ்வைத்தரும் பதிலைக் கொடு க்க என்னல் முடியாது என்ப துமட்டும் எனக்கு மிக நன்ரு கத் தெரியும்.
சில நினைவுகள்.
எனக்குமட்டுமே சொந்தமான சில அந்தரங்க நினைவு க ள்என்னை அலைக்கழித்துக் கொண் டிருக்கும் உண்மை சுகுணுவுக்
கோ, அவள் அண்ணன் பியதா
ஸாவுக்கோ தெரியவே தெரி யாது.
அந்த நினைவுகளை மறைத் துக் கொண்டுதான் நான் அவர் களோடுபழகினேன்.
இளமை நெஞ்சின் துயர நினை வுகள் அவை,
என்னை நேசித்து ஏமாற்றிவிட்ட
ஒருத்தியைப் பற்றி ய அந்தப் பழைய நினைவுகள்.?
*பிடித்தமான ஒன்றைச் செய்வ
தன் மூலம் இறந்த காலம் தந்த புண்ணை நிச்சயமாக மாற்றலாம்.
ஆனல் வடு மட்டும் மறையாது.
அது பதித்த சுவடு மட்டும் அழி யாது . இருக்கட்டுமே! நெருடிப் பார்த்தால்தானே வேதனையைத்
தரும்,'
என்னுள் ஒருகுரல் எதிரொலித் துக் கொண்டிருக்கிறது.
நடக்கிறேன்.
இதுவரையில் என்னை உலைத்துக் கொண்டிருந்த.
அந்தச் சுமை நிறைந்த நினைவு dair.........
ஓ! அந்தச் சில நினைவுகள். இப்போதுசெத்துக் கொண்டிருக்கின்றன.
கறைபடிந்த ஒரு ஓவியத்தின்
மீது புதிய களங்கமற்ற-ஒவியத் தை வரைய முயல்கிறேன்.
அன்புக்காக ஏங்கும் சுகுணுவின் முகமே என் நெஞ்சில் நிழலாடு கிறது. O

"இதயம் தொடர்ந்து தரமான விடயங்களைத் தரு வதைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு தமிழனின் இதயமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது. வளர்க இதயம் ! யாழ்ப்பாணம்: - "வான்மதிச் செல்வன் தரமான படைப்புக்களுடன் ஈழத்தில் பவனி வரும் இதயத்தின் ஏழாவது இதழ் பெண்கள் மலராக வெளி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிருேம். பெண்களின் எழுத்தாற்றலைத் தூண்ட இதயம் எடுத்த முதலாவது நடவடிக்கை யைப் பாராட்டுகிருேம். பிரீகாஸல். - நயீமா அன்வர்கான்
ஈழத்தின் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குக் களம் அமைத்துச் செயல்படும் இதயம் இலக்கிய உயர் படியில் வீற்றிருக்கும் நெஞ்சங்களை நித்திய நினைவில் வருடிக் கொண்டிருக்கிறது.
*இதயத்துக்கான எனது தொண்டுகள் என்றும் தொடரும். அக்கரைப்பற்று. - எம். ஏ. ஆதம் லெப்பை,
இலக்கிய மணம் கமழும் நல்ல தரமான இதழாக இருப்பது கண்டு மிக மிக மகிழ்ச்சியடைகின்றேன். ஏழாவது இதயம் "பெண்கள் மலராக மலர இருப் பது இதயத்தின் தரத்தை மேலும் உயர்த்துவதோடு, ஈழத்துப் பெண்களின் எழுத்தார் வத்திற்கு உரமாகவும் அமைகிறது. கல்முனை-25 - நோ. இராசம்மா
ஈழத்தில் வெளிவரும் இலக்கிய இதழ்கள் சிலவற் றுள் "இதயம்" தனிச் சிறப்புடன் வெளிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இதயம் மேன்மேலும் சி ற ப் புட ன் நீடித்து வெளிவரவேண்டுமென வாழ்த்துகின் ருேம்.
மாவனெல்லை - கே. தியாகேஸ்வரி

Page 20
நோக்கு
*ழம் வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மலர்ந்து மணம் வீசும் எண்ணற்ற இலக்கிய ஏடு கள் மத்தியில் சிறந்த கருத்தோ வி யத்தால் நிறைந்த பலனைத் திர ட்டித்தரும் தரமான இ லக் கி ய ஏடொன்று சிந்தனைக்கு விருந்தாக வெளிவருகிறதென்ருல் அது இதய மாகத்தான் இருக்கும். "இதயம்” உள்ளடக்கிய உயர் ஆக்கங்கள் இத யம் முற்றிலும் தரமான ஏடென் பதை சொல்லாமல் சொல்லி இருக் கின்றன.
இலக்கிய ஏடென்ற போர் வையில் பல ஏடுகள் தோன்றியு ள்ள இந் நேரத்தில் அவைகள் சில இருந்த இடந்தெரியாமல் மறைந் தும் போய்விடுகின்றன. இதற்குப் பல காரணங்களைக் கூ ற லா ம். குறிப்பாக வாசகர்களின் ஆதரவு இல்லாமையையும் ஒரு காரணமெ னக் கூறலாம். "வளமான பத்தி ரிகைகள்’ என்ற வாழ்த்துடன் மட் டும் நம் பணி நின்றுவிடக் கூடாது **இதயம்’ போன்ற ஏடுகள் வளர நமது ஆதரவுகள் பெரிதும் வேண்? டும். தர மற்ற சினிமாக் குப்பை களை தலையில் வைத்து தாலாட்டப் படுவது போன்றவைகள் இன்றைய நம் வாசகர் மத்தியில் மறைய வேண்டும். தரமான இலக்கிய ஏடு களை வாங்கி ஆதரிக்குமாறு வாச கர்களை கேட்டுக்கொள்கிறேன்.
கவிஞர் கே. எம். பாறூக்
(ஆசிரியர் "சுடர்")
சோலை எழுத்தாளன் மன்றம்
பதியதளரவ

கவிதைத்துறையுள்:
தா. இராமலிங்கத்தின் பார்வை.
சென்ற இதழ்தொடர்ச்சி)
Re
--மு. புஷ்பராஜன்
ஈழத்து இலக்கியத்தில் ஒருவித தீட்டு மனப்பான்மையுடன் சில பிரச்சனைகளை சில எழுத்தாளர்கள் ஒதுக்குவதை அவதானிக்கலாம். எஸ். பொ. வையும் ஒரிரு எழுத்தாளர்களையும் தவிர மற்றவர்கள் பார்க்கக் கூடாத பார்க்க நினைக்காத துறைகளில் எல்லாம் மூழ்கி எழுகிருர் இராமலிங்கம் ஒரு சமுதாயத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சம்பிரதாயங்களுக்கு விருப்பற்று அடிமைகள்போல் பணி ந்து போகின்ற துயரமான பெண்ணினை காட்டுகிருர், "பலி" என்ற கவிதையில், தளையசிங்கம் கூறியதுபோல் "எதிர்ப்பின்றிச் சமூகத் தின் போலி ஆசாரங்களுக்கும் வலுவற்ற ஒரு ஆண்மைக்கும் கொடு க்கப்பட்ட இரையாகவும் ஆக்கிக் கொள்கிருள்’. சுதந்திரத்துடன் பிறக்கும் மனிதன் எங்கும் தளை பட்டுக்கிடக்கிருன், அதுவும் ஒரு பெண் இன்னும் கூடுதலாக விலங்கிடப்படுகிருள். தன் கணவன் என்ற காரணத்திற்காக தன் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் அடக்கி சமுதாயத்தில் உருவாக்கப்பட்ட ஆசாரங்களுக்கு தன்னை பலாத்காரமாக உட்படுத்தி கணவன் என்ற லேபிளுள்ள சில காம வெறியர்களின் தீராத நோய்க்கு - தளையசிங்கம் கூறியதுபோல் வலுவற்ற ஆண்மைக்கு தன் வாழ்க்கையையே பலியாக்கிய எத் தனை பெண்களை இந்த சமுதாயம் மூடி மறைத்திருக்கிறது. இதே கருத்தை எஸ். பொது அவர்கள் தனது "தீ" என்ற நாவலில் புனி தம் என்ற பாத்திரத்தின் மூலம் அழகாக கையாளுகிருர்: "நான் பிஞ்சிலேயே சுடலை சென்றேன் என் நிலைக்கு என் கணவரும் கார ணம்தான்." என்று அழகாக கூறுகிருர் இதே நிலைதான் "பலியில் வரும் பெண்ணுக்கும்.
ஒரு இரத்தமும் ஒரே மாமிசமுமாக கணவன் மனைவிகளின் கூட்டு வாழ்க்கையில் மனைவி கணவனை பிரிந்துவிட்டால் சமூகம் தனது கூச்சல்களை, அவள்மீது வீசி ஓங்காளிக்கின்றது. ஆனல் இதே தவறை ஒரு கணவன் செய்தால் அ  ைத ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இப்படிப்பட்ட கோர நிலைக்கு ஆளாக்கப்பட்டவள் தான் "பலி”யில் வரும்தாய்

Page 21
38
தாலிதான் பெயருக்கு கழுத்திலே தொங்குது பெற்றபொழுது, மகளே உன் தகப்பன் விட்டுவிட்டு போய்விட்டான்.
என்று கூறுகிருள்: யாழ்ப்பாண நாகரீகத்தின் உச்சநிலையில் தாலியின் மதிப்பு வெறும் சமூக மதிப்பிற்காகவே பயன்படுத்தப் பட்டு வருகிறது. கணவன் இறந்த பின்பும் தாலிபோட்டுக் கொள் ளும் பெண்கள், சினிமாவிற்கு போகும் பொழுது அடுத்த வீட்டு பெண்ணிடம் இரவல் வாங்கி போடும் பெண்கள் எத்தனை பேர்கள் இவர்களுக்கெல்லாம் தாலி மதிப்பிற்கு. இங்கு கணவன் இறந்தால் தான் தாலி கழற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. கணவன் மனை வியை விட்டுப் பிரிந்தாலேயே தாலி தேவை அற்றது என்பதை கூறுகிருர் ஆசிரியர். அதனுல்தான் பேருக்கு என்ற சொல்லை பொருத்தமாக பெய்திருக்கிருர், அந்த நிலையில் ஒரு கணவன் மனை வியை விட்டுப் பிரிந்தால் அவள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள் என்பதை "நான் பட்டபாடு” என்ற ஒரு வரியில் அழகாக விளக்கு Scipiis
"கோவில் இடிந்தால் கட்டலாம் குமர் இடிந்தால் கட்ட முடி யாது” என்ற வாக்கியம் ஒரு பருவப் பெண்ணின் நிலையை அழகாக விளக்குகிறது அவ்வாரு ன அந்த குமர் இடியாமல் இருப்பதற்கு எவ் வளவு கண்காணிப்புடன் இருக்கவேண்டும்
பெரிய பிள்ளை ஆணுய் நீ ஆபத்து நெருப்பு என்ருர் ஒலை குடிசை பொறிபட்டால் போதும் கோடை வெய்யிலில் மிளாசி எரியுமென் ருர்,
ஆனல் என்ன செய்வது; சிலர் பெற்றேரின் கண் காணிப்பில் இருந்தும் பருவ உணர்ச்சிக்கு அடிமையாகிவிடுகிருர்கள். அவர்க ளுக்கு விளைவு தோன்றுவதில்லை. செயல் ஒன்றே முக்கியம்.
ஓர் இரவு நள்யாமம் வீட்டுக் கோடியிலே மெதுவாய் அடிவைத்தல்

39
கேட்டு தான் போய்பார்க்க பனங்காயை நாம்பன் பிய்த்துத்தின்னுகுது;
இதில் "பனங்காயை நாம்பன் பிய்த்துத்தின்னுகுது' என்றவரி கலவி நிலைக்கு கொடுக்கப்பட்ட ஆழமான அர்த்தமாகும் நாம் பன் தின்ற பனங்காய் எப்படிப்பட்டது. எவ்வளவு மதிப்பற்றது மதிப்பற்றபனங்காயை என்ன செய்யமுடியும்? பெண்ணை நடுக்கூடத் தில் இருத்தி தலையில் தண்ணீரை ஊற்றி விட்டால் பிரச்சனை தீர்ந்து விட்டதா? இந்த நிலையில் ஒரு சாதாரண தாய் மார்கள் என்ன செய் வார்களோ அதையே அவளும் செய்தாள். எப்படி?
இனிக் காவோலை காற்றில் சலசலத்தாலும் கண்ணுறங்க முடியாமல் கலங்கியெழல் வேண்டுமெனப் பெருமூச் செறிந்து வரன் தேடிக் குறுக்குவழி நடந்து விட்டன் 5
ஆம் குறுக்கு வழியில் நடந்து விட்டாள். ஆனல் நடந்தது என்ன “பெண் என்பவள் ஒரு அற்புதமான வீணை நயமாக வாசிக் கத் தெரிந்த ஒருவன் நரம்புகளை மீட்டினல் நாதம் எழத்தான் செய்யும். ஆனல் வாசிக்க முடியாதவன், வாசிக்கத் தெரியாதவன் நரம்புகளை பிழையாக மீட்டினல் - . அப்படி" பிழையாக மீட்டிய வன் தான் அவள் கணவன்.
முதல் இரவு மெய்புகழ்ந்து மெய் தொட்டு நாணம் உரித்து விட்டுச் சுளைதின்ன தெரியாது கசக்குமென்று அறியான் தோலோடு சப்பிவிட்டான்! பூட்டைத்திறப்பதற்குத் திறப்பினை தேர்ந் தெடுக்கான் இடித்து பிழந்து விட்டான் இரத்தம் கசிந்ததம்மா. இந்த நிலையில் ஒரு பெண்ணுல் என்ன செய்யமுடியும் வாய் விட்டுத்தான் கூறமுடியுமா? கணவன் என்ற மரபு அந்தஸ்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிருன் ஆனல்

Page 22
40
மறு இரவும் முதல் இரவின் துன்பியல்தான் தொடர்ந்து நடந்ததுவே என்ன அநியாயம் கொத்திய புண்மீது
மீண்டும் கொத்துவதோ காகம்
இந்த நிலையில் எஸ். பொவின் "தீ" நாவலின் வரிகளை இங்கு இணைத்தல் இன்னும் இந்நிலையை விளங்க உதவியாகும்
"ஓயாத (ჭრიuგ%)**
அளவுக்கு மீதமாகி அருவருப்பைதரும் பைசாசவேகம். LD 60p இல்லாவிட்டால் பயிர் வாடிக்கருகிவிடும் ஆனல் அளவுக்கு மீறி வெள்ளம் வந்தால்"
என்கிருர் எஸ். பொ. இதே நிலை இங்கும். இறுதியாக “குதி கம்" என்ற பெண்ணினத்தின் பாதுகாப்பு இடைவெளியை கூறி மூன்று நாட்கள் தட்டி கழிக்கிருள். மறுநாள் அதே நிலை.
சம்மதிக்கவில்லை சண்டை தொடங்கிற்று என் மகளே சாகும் பொழுது என்னைச் சபித்து புலம்பினையோ புழுக்குத்தாப் பொன்மேனி அணு அணுவாய் பிய்த்துப் பிடுங்குவதோ என்பதன் மூலம் அளவுக்குமீறி வெள்ளம் பாய்ந்துவிட்டது; பைசாச வேக இறுதி நிலை பற்றி எஸ்.பொ. மீண்டும் கூறுகிருர்; *கண்களை மூடியபடி என் சிற்றின்ப வெறிக்கு எப்படி எல்லாம் தன்னுடைய வேதனைகளையும் உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு தன் உடலை இரை தந்து படுத்துக் கிடந்தாளோ அ தே நிலை" என்று மரணத்தின் நிலையை கூறுகிருர், இதே நிலைதான் இராம லிங்கத்தின் பெண்ணுக்கும். இறுதியாக அந்த தாயின் குரலாக
உயிர்வாழ முடியாமல்
Զ)ւնւմւգպtծ அணியாயம் பண்ணிறதே
என்று சமுதாயத்தை பார்த்து கேட்கிருள். இப்படி அவள் கேட்பதன் மூலம் அவளுக்கு இனி எதுவும் வரப்போவதில்லை. ஆனல் சமுதாயத்தில் அவள் மகள்போல் இருக்கிற பெண்களுக்காக இனி வரப் போகிற அப்படிப்பட்ட பெண்களுக்காக - நாணம் உ ரி த் து விட்டு தின்னத் தெரியாதவர்களுக்கு பலியாகப் போகும் பெண்க ளுக்காக குரல் கொடுக்கிருர் இராமலிங்கம்
- தொடரும் -

('இதயம்" இதழைப் புரட் டிக்கொண்டிருந்த நண்பர் யூரி "அடுத்த இதழுக்கான எங்கள் கலைஞர் யார்?" என்று என்னி டம் கேட்டார்: "ஒரு ஓவிய ரின் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என் றேன்; “unanohub"” at sir ay it ayayrito நான் சிரித்தேன்; "ஏன் சிரிக் கிறீர்கள்? என்று வினவிஞர் நண்பர் பூg "ஒவியர் மணியம் அவர்களையே பேட்டி கான லாம் என்று ஏற்கனவே நான் நினைத்திருந்தேன். அவரது பெயரையே நீங்களும் தெரிவு செய்திருக்கிறீர்களே' 'என் ஓவியர் மணியம் றேன். '' birth pavitassir தானே எப்படிக் கருத்துவேற்றுமை வரமுடியும் ?” என்று கேட் டுச் சிரித்தார் நண்பர் பூரீ.)
"இவர்தான் ஓவியர் மணியம்.” என்று நண்பர் பூரீ அறிமுகம் செய்து வைத்த அந்த மனிதரைப் பார்த்தேன். மலர்ந்த முகத் தோடு காட்சியளித்த அவரைப் பார்த்ததுமே என் மனதில் எழுந்த முதல் எண்ணம்
இவர் எதையும் மனம் விட்டுப் பேசக் கூடியவர். நாங்கள் அவரை நாடிவந்த காரணத்தை விளக்கினுேம் அவர் சிரித்துக்கொண்டே சொன்னர்-"நான் பரம்பரைக் கலைஞனல்ல" 'இருக்கலாம். ஆனல் பரம்பரையாகவே ஒவியக்கலையில் ஈடுபட் டிருப்பவர்களிடம் காணப்படும்திறமையிலும் பார்க்க உங்களிகம் அதிக திறமை இருக்கிறது’
மணியம் தன்னடக்கத்தோடு சிரித்தார்; *உங்களைப்பற்றி சில குறிப்புக்களைத் தந்துதவ முடியுமா? என்றுகேட்டேன். அவர் சொன்னுரி:
"ள்ண்னைப்பற்றிப் பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. நான் நல்லூரில் பிறந்து, இங்கேயே வாழ்பவன்; எஸ் எஸ். சி. வகுப்புவரை படித்திருக்கிறேன். பாடசாலை நாட்களே நினைவு கூரும் போதெல்லாம் அந்நேரம் நான்பட்ட கஷ்டங்கள் தான் என் நினைவுக்கு வருகின்றன. வறுமையின் நிமித்தம் ஏதா வது ஒரு தொழில் செய்தே நான் படிக்க் வேண்டிய நிலை. இரண் டாவது உலக மகாயுத்தம் நடை பெற்றுக்கொண்டிருந்த காலம் அது எனது பாடசாலை பருவ விடுமுறைகளின்போது இராணுவத்

Page 23
42
தில் நான் பணியாற்றினேன். அந்த வருவாயைக் கொண்டே நான் படிப்பைத் தொடர்ந்தேன். எஸ். எஸ். சி. வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு தொழில் துறையில் இறங்கினேன், பல தொழில் களில் சில வருடங்கள் கழிந்தன".
"ஓவியக் கலையில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?" இளமையில் - சிறுவனக இருந்தபோது - தியேட்டர்களின் முன்னல் போய் நின்று கொண்டு விளம்பரத்துக்காக ஒட்டப்பட்டிருக்கும் "சினிமா போஸ்டர்"களையெல்லாம் இமைக்காமல் பார் த் து க் 4 கொண்டிருப்பது வழக்கம்g அந்தப் போஸ்டர்’களில் இடம் பெற் றிருக்கும் வண்ணப்படங்களையெல்லாம் பார்க்கும்போது இதே போன்ற படங்களையெல்லாம் நானும் வரை ய வேண் டு ம் என்ற ஆசை எழும். ஆனல், அன்றைய நிலையில், அந்தத் துறையில் எனக்கு உற்சாகமூட்டவோ, ஊக்கமளிக்கவோ யாருமே இல்லை எனக்கு நானே குருவானேன்.
*ஒவியத்துறையே உங்களுடைய தொழில் துறையாகவும் மாறும் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை அப்படித்தானே?" சரியாகச் சொல்கிறீர்கள். அன்றைய நிலையில் எனக்கென ஒரு தொழில் தேவையாக இருந்தது. அது ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும் என்று நினைக்கி றேன். திடீரென எனக்கு மலேரியா வந்தது ஒன்றரை ஆண்டுகள் வரை நான் உடல் நலக்குறைவுடையவனுய் இருந்தேன். அதனல் நான் ஏற்கெனவே பார்த்துவந்த தொழிலைப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன். உடல் நலம் சீரடைந்தபின்பு புதிய தொழில்தேடும் முயற்சியில் இறங்கினேன், அந்நாளில் பிரபலமாக விளங்கிய, சுண் டிக்குளி மகேந்திரா தியேட்டரில் வேலைக்கு ஆள் தேவையாக இருப் பதாகத் தெரியவந்தது. அங்கே என்ன வேலைதரப்போகிருர்கள். என்று தெரி ய ர ம லே யே அங்கு நான் வேலைதேடிப்போனேன். எனக்கு வேலை கிடைத்தது.
"அங்கிருந்து கொண்டே ஓவியக்கலை பயின்றீர்களா’? ஆமாம் திரைப்பட விளம்பரங்களைக் கவனிக்கும் பொறுப்பை என்னிடம் அவர்கள் தந்திருந்தார்கள். ஒவியக் கலையின் மீது நான் கொண்ட ஆர்வம் வளர அதுவே காரணமாயிற்று. நானும் ஒவி யங்கள் வரைய ஆரம்பித்தேன். எனக்கு இந்தத் துறையில் வழி காட்டிகள் என்று யாருமே இல்லாததனலோ என்னவோ சாதார ணமான ஒரு ஓவியத்திற்குக் கூட நான் பலமணி நேரத்தைச் செல விட்டேன். நாளாவட்டத்தில் அது எனக்குக் கைவந்த கலையாகி விட்டது.
"இன்றைய உங்களது ஒவியங்கள்ைப் பார்க்கும்போது உங்களது கைத் திறனை நாங்கள் வியந்து கொள்கிறேம், உங்கள் ஒவியங்கள் அனைத் துமே எல்லோரையும் கவர்ந்து விடுகின்றன. நீங்கள் இதுவரை வரைந்த ஒவியங்களில் உங்களுக்கு மனநிறைவைத் தந்த ஒரு ஓவி யம் பற்றிக் குறிப்பிடமுடியுமா? அண்மையில் வெளியிடப்பட்ட ‘அடிமைப் பெண்” படத்திற் கென, எம். ஜி. ஆரின் உருவ ஒவியத்தைத் தயாரித்தேன். இதன் உயரம் ஐம்பத்தி நான்கு அடிகள். இது எனக்கு மனநிறைவைத்
ileقت5f5g

43
"தாங்கள் பெரும்பாலும் சினிமா சம்பந்தமான ஒவியங்களையே வரைந்து கொண்டிருக்கிறீர்களே. ஏனைய ஓவியங்களைப் பெருமள வில் வரைந்தாலென்ன?” சினிமா சம்பந்தமான ஒ வி யங் களை வரைவதுதானே என் தொழில். எனினும் ஏனைய ஒவியங்களையும் நான் அவ்வப்போது வரைந்து கொண்டே இருக்கிறேன்.
'ஒவியக் கலையில் நாட்டமுள்ள இளைஞர்கள் உங்களிடம் ஆலோசனை பெறவந்தால் அவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?" இந்தத் துறையில் பல இளைஞர்கள் ஈடுபடவேண்டும் என்பதே என் ஆசை. இது ஒரு புனிதமான கலைத்தொண்டு. இந்தத் துறை யில் ஈடுபடவிரும்பும் இளைஞர்கள் தமக்கென ஒரு ஆசான வழி காட்டியாகக் கொண்டு கற்பது சிறப்பு. வண்ணக்கலவைகளைத் தெரிவு செய்வது இலகுவான காரியமல்ல, எனக்கென ஒரு குரு இல்லாமல் நான் எவ்வளவோ சிரமப்பட்டேன். அந்த அனுபவத் தைக் கொண்டே இதைநான் சொல்கிறேன்.
* மொடேர்ன் ஆர்ட்" என்று குறிப்பிடப்படும் நவீன ஓவியங்கள்" பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" "மொடேர்ன் ஆர்ட்"டில் கலைத்தன்மை இருப்பதாகப் பலர் சொல்கிருர்கள்; எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஒரு மொடேர்ன் ஆர்ட்"டைப்பற்றி பிரபலமான ஒருவன் சொன்னதையே மற்ற வனும் சொல்கிருன். ஒவியத்தைப் பற்றி அவர்கள் எத்தகைய அபிப்பிராயம் கொண்டிருந்தாலும் அந்த ஒவியத்தைப்பற்றிய கருத் துக்களை தமது "மதிப்பு’க் கெடாதவாறு சொல்லிக் கொள்கிருர் கள், "மொடேர்ன் ஆர்ட்"டில் என்ன கலைத் தன்மை இருக்கிறது?
'தங்களது எதிர்காலக் குறிக்கோள் என்ன?" யாழ்ப்பாணத்தில் ஒவியம் சம்பந்தமான ஒரு கண்காட்சியை நடத்தி அதன் மூலம் நமது இளைஞர்களுக்கு இந்தத் துறையில் ஒரு நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நிரந்தரமான ஒரு ஓவியக் கலை யகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவவேண்டும். அதிலிருநது பலகலை ஞர்கள் உருவாக வழி செய்ய வேண்டும். வெளி நா ட் ட வ ரு ம் வியந்து போற்ற நம் கலைகள் சிறக்கவேண்டும். அதற்கான ஆக்க வேலைகளில் நான் ஈடுபட்டுள்ளேன்.
('மணியம்’ என்று சுருக்கமாகப் பெயர் வைத்துக் கொண்டிருக் கும் ஒவியக்கலைஞர் திரு. சுப்பிரமணியம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோதுதான் அவரைப் பற்றிய சில முக்கியமான விட யங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. திரு. மணியம் அவர்கள் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல; தொழில் வல்லுனரும் கூட அவர் மனதில் மறைந்திருக்கும் இலட்சியங்களை அவர் மனந் திறந்து சொல் லும்போது, நம்மால் காணமுடிவது ஒவியர் மணியத் தையல்ல; ஒரு உயரிய - தன்னலம் கருதாத - இலட்சியவாதியைத் தான் அவர் தொண்டு சிறக்க, மேலும் மேலும் அவர் புகழ் பரவ வாழ்த் தி விடைபெற்ருேம் நாங்கள். ஒவியர் மணியம் அவர்களை எங்கள் கலைஞர் என்று எண்ணும் போது எத்தனை பெருமையாக இருக்கிறது!)
(சிரமம் கருதாது பேட்டியளித்த எங்கள் கலைஞர் ஓவியர் திரு, சுப்பிரமணியம் அவர்களுக்கு எமது நன்றிகள்)

Page 24
தொடரும் நெடுங்கதை
சென்ற இதழ்களில் -
இதுவரை:-
சில இதயங்கள் அன்புக்காக ஏங்குகின்றன; அன்பைத்தரும் நிலையிருந்தும் கூட அவைகளைப் புறக் கணிக்கும் இதயங்களும் உண்டு அவனது அன்புக்காக ஏங்கித் தவித்தாள் பார்வதி "அத்தான்" என்று அவ னையே வலம் வந்தவளை ஏனே அவன் விலக்கி நடக்க முயன்ருன். ஏன்?" அதைத்தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை; இரண்டுவருடங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஒடிச் சென்ற போதுகூட "உன்நினைவோடுதான் போகிறேன் பார்வதி” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் போனவன் இப் போது மனம் மாறி நிற்கிருன்.
பார்வதியின் நெஞ்சம் அவனுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தும், ஒரு பெண்மனதை இப்படித் தவிக்க வைப்பது முறையற்றது என்று புரியாமலேயே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிருஞ? தெரியவில்லை.
அன்னையையும், தங்கையையும் மட்டுமே அவன் உற வாக நினைக்கிருன் மற்ற உறவுகளெல்லாம் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை" அம்மாவும் தன் கதை முடி ந்து போய்விட்டாள்; எஞ்சியிருந்தது தங்கை ஒருத்தி மட்டும்தான். அவளுக்கு ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத் துக் கொடுத்து விட்டால் அவனுக்கு மிக ப் பெரிய கடமையொன்று முடிந்து போய்விடும். பிறகு.
 

**அண்ணை இன்னுமா கிறே. . எழும்பு”
சரசு தட்டி எ மு ப் பி ய போதுதான் கண் விழித்துப் பார்த்தான் அவ ன். கா விடிந்து வெகுநேரமாகி விட்டி ருந்தது. வழக்கத்திற்கு மாரு க இன்றுதான் அ வ ன் வி டி ந் த பின்பும் படுக்கையில் கிடந்தி ருக்கிருன். இரவு வெகுநேரம் வரை உறங்காமல் அவன் விழி த்திருந்ததே அதற்குக் காரணம் என்பதும் அவனுக்குப் புரியா மலில்ல்ை;
இரவு முழுவதும் பார்வதி யைப் பற்றிய நினைவு க ளே அவன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. அவளைப்பற் றிய தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியாமல் த வி த் து க் கொண்டிருந்தான் அவன்,
சுவரில் அடித்தபந்து அடித் தவனையே நாடி வ ரு வ தி ல் லையா? அவனைப் பொறுத்தவ ரை பார்வதியும் அப்படித்தான் அவளை அவன் வெறுக்க, வெறு க்க அவள் அவனையே நாடி ஓடி வந்துகொண்டிருந்தாள்.
"அவளை என்னிடமிருந்து எப்படியாவது பிரித் து வி ட வேண்டும். ஆனல் அதே சமயம் அவள்மீதே அவளுக்கு வெறுப் பும் ஏ ற் பட் டு விடக்கூடாது என்ன செய்யலாம் ??
இதைத்தான் அவன் இரவு முழுவதும் சிந்தித்தான். எந்த வொரு முடிவுக்கும் வர அவனல் முடியவில்லை. என்மீது அளவு கடந்த காதல் கொண்டிருக்கும் அவளுக்கு இந் நிலை யி ல் எது சொன்னலும், அதை அவள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை."
தூங்
45
5
என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
**சரசுவை எங்கள் வீட்டில் விட்டுவிட்டுப் போங்கள்” என் கிருள் அவள் . முடியுமா அது ? சரசு என்ன சொல் வாள் அவள் சம்மதித்தாலும் இந்த ஊர் என்ன பேசும் ?
"மாமா அம்மாவின் செத்த வீட்டுக்கு ஆரம்பத்தில் வர மறுத்தவர் - வரவே மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றிருந் தவர் பார்வதியால் ம ன ம் மாறி அவர் தங்கையின் "பிணத் தைப் பார்க்க வந்தாலும், அவரது இதயம் இப்போதும் நல்ல நிலையிலிருக்கும் என்பதை எப்படிச் சொல்ல முடி யு ம் ? இன்றில்லாவிட்டாலும் என்ற வது ஒருநாள் சரசுவின் மனம் நோகும்படியாக அந்த வீட்டில் யாராவது பேசிவிட்டால்..?
அவன் அதற்கு மே லும் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. "சரசுவையும் அழைத்துக் கொண்டுதான் ஊரைவிட்டுப் போவது' என்ற முடிவுக்கு வந் தான் அவன் .
* 'பாயிலை இருந்தபடி என் 6or6öör &oor Guust g;&27 ?”
அவன் திடுக்கிட்டுத் திரும் பினன். ச ர சு அண்ணனையே ஆச்சரியத்துடன் பா ர் த் து க் கொண்டிருந்தாள்.
“என்ன வந்தது இந்த அண் ணனுக்கு."
அவன் படுக்கையைச் சுரு ட்டி வைத்துவிட்டு எழுந்தான். *குளித்துவிட்டு வருகிறேன் தங் கச்சி." என்று சொல்லியவாறு முற்றத்தில் இறங்கினன் அவன்.

Page 25
46
குளிப்பதற்குக் கூட முக்கால் கட்டை தூரம் நடந்தாக வேண் டியிருந்தது. இதுவும் உடம்புக்கு நல்ல அப்பியாசம்தான் என்று நினைத்தான் அவன். இல்லாமை யிலும் ஒரு தத்துவத்தை உரு வாக்கிக் கொண்டு ம ன  ைத த் திருப்திப் படுத்திக் கொள்ளும் "கலை"யை எண்ணிச் சிரித்த வாறே நடந்தான் அவன்.
கிணற்றுக் கட்டின்மீது உட் கார்ந்தவாறு நீரினுள் தெரியும் தன் பிரதி பிம்பத்தையே வெறி த்துப் பார்த்துக் கொண்டிருந் தாள் சரசு.
"அம்மா செத்து ஒன்றரை மாதமாகி விட்டது."
'அம்மா”
அம்மாவின் நினைவு வந்த போது அவள் நெஞ்சம் கலங் கிற்று. மிகுந்த சிரமப்பட்டுத் தன்னைத் தானே கட்டுப் படுத் திக் கொண்டாள் அவள் .
*அம்மா போய்விட்டாள்" இனி"அ ண் ண னை ப் பாதுகாக்க வேண்டியவள் நான். என்னைப் பாதுகாக்க வேண்டியவன் அண் னன்” .
"எங்களுக்கு வேறு யார் துணை ?"
சில சமயங்களில் கொ டு  ைம யாக நடந்துகொள்ளும் இயற்கை-சில சமயங்களில் ஆறு தல் வழங்கவும் தவறுவதில்லை. இர ண் டு வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டே ஓடிய அண்ணன் "இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே ஊருக்குப் போகலாம்" என்று நினைத்தி ருந்தால்.
அவன் அம்மாவை உயிரு டன் காணும் சந்தர்ப்பத்தை
இழந்திருப்பான்; ஆனல் இப் போது
அன்னையின் இறுதிச் சடங் குகளை அவனே நிறைவேற்றி வைத்தான்.
*மகன் திருந்திவிட்டான்." என்று அம்மாவின் ஆத் மா சாந்தியடைந்திருக்கும்"
"அம்மாவை நான் உயி ரே ஈ டு பார்த்துவிட்டேன் ? என்று அவன் மனம் அமைதி பெற்றிருக்கும்.
சரசு வீடுநோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
*"சரசு." என்று யாரோ அழைக்கும் குரல் கே ட் க வே நின்று திரும்பிப் பார்த்தாள் அவள். குழந்தை கண்ணனைத் தன் தோளில் கிடத்தி அணைத்த வாறு வந்து கொண்டிருந்தவள் மல்லிகா - பார்வதியின் அக்கா. சரசு மெல்லப் புன்னகைத் தாள்,
*கூப்பிட்டீங்களா அண் ணி”? என்ருள். மல்லிகா அவளை நெருங்கி வந்தாள். சரசுவை ஒருதடவை மேலும் கீழுமாகப் பார்த்தாள் அவள். சரசுவின் ஆ  ைட யி ல் உண்டாகியிருந்த மாற்றம் அவளுக்கு வியப்பைத் தந்தது.
கட்டைப் பாவாடை கட்டி ‘சிறுமி போல் தோற்றமளித்த அந்தச் சரசுவுக்கும், சேலை சர சரக்க” “பெரிய மனுஷி யாகக் காட்சிதரும் இந்தச் சரசுவுக்கு மிடையில்தான் எவ்வளவு வித் தியாசம்.
"சிறு மி" சரசுவைவிட இந் தச் சேலைச் சரசு" எவ்வளவோ அழகாக இருக்கிருள்.
மல்லிகா சிரித்துக்கொண் டே கேட்டாள்;
"பெரிய மனுஷியாகிவிட் டாய் போலிருக்கிறதே !”

"வீ ட் டி ல் பெரியவர்கள் இல்லையென்ருல் சிறியவர்கள் பெரியவர்களாகிவிட வேண்டி யதுதானே அண்ணி ?” என்ருள் சரசு. இதைச் சொன்னபோது அவள் குரல் சற்றுக் க்ரகரத் 凸gj。
தாயின் இழப்பை அவள் நினைவுகூர முயலுகிருள் என்பது புரிந்தது ம ல் லி கா வுக் கு. பேச்சை மறுபுறம் திருப்ப எண் ணிஞள் அவள். "அது சரி. தாங்கள் எப்ப கொழும்புப் பய ணம்” என்று வினவினள் மல் லிகா,
*யாரண்ணி?” என்று திருப் பிக்கேட்டாள் சரசு.
*உன்னையும் உன் அண்ண ரையும்தான் சொல்கிறேன்.” என்ருள் மல்லிகா.
"நான் போவதாக சொன்னர்கள் ???
ህ!!!ff I†
*"பார்வதிதான் சொ ன் ஞள்!” என்ருள் மல்லிகா.
சரசு சில நிமிடங்கள் சிந் தன வசப்பட்டாள். *அண் ணன் இதைப்பற்றி ஒரு வார்த் தைகூட என்னிடம் பேசவில் லையே ஏன் ? நான் கேள்விப் படாத இந்த ச் செய்தியைப் பார் வ தி கேள்விப்பட்டிருக்கி
ருள். அதுவும் அண்ணன் மூல மாகவே அப்படித்தானிருக்க வேண்டும்."
"என்ன யோசனை சரசு,"
-நடந்தபடியே கேட்டாள் மல்லிகா
47
ஒன்றுமில்லை அண்ணி." என்று மழுப்பிவிட்டு நடந்தாள்
FT Jr.
"உனக்கோ உன் அண்ண க்கோ ந்த ஊரில் உறவுக் ಣ್ಣಜ್ಜೈಣಕ್ಟಿ ா ருமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கி நீர்கள். நாங்களெல்லாம் உங் களுக்கு உறவுக்காரர்களாகத் தெரியவில்லை."
என்னண்ணி சொல்கிறீர் g r ? ””
'நீ எங்கள் வீட்டில் வந்து தங்கலாமே என்று சொல்கி றேன்."
* "எதற்கு அண்ணி. உங்க ளுக்கெல்லாம் வீண் சிரமம் தரு வானேன்?**
"அது சரி. எங்க ளு ட ன் சே ர்த் து வாழ உங்களுக்கு மனம் வருமா என்ன ? நீங்கள் தான் .?’ என்று இழுத்தாள் மல்லிகா,
'அப்படியில்லை அண்ணி ?? என்று எதையோ சொல்லஆரம் பித்த சரசு “சரி. அண்ணனிடம் நான் சொல்லிப் பார்க்கிறேன்" என்று முடித்தாள்.
முற்றத்துப் படலையைத் திறந்துகொண்டு சரசு போக நினைத்தபோது, அவளுக்கு எதி ர்ப்புறமாக ஓடிவந்தாள் பார் வதி. ஒரு நிமிடம்தான்.
பார்வதி அழுதுகொண்டே ஒடி வந்ததைப் புரிந்துகொண் டாள் சரசு, “பார்வதி. என் னடி ?’ என்ற சரசுவின் குர லுக்குப் பதி ல் தராமலேயே விம்மியபடி தன் வீட்  ைட நோக்கி ஒடிஞள் பார்வதிரு
சரசு சிலையாக நின்ருள் ‘எங்கள் வீட்டில் பார்வதி அழும் அளவுக்கு என்ன நடந் திருக்கக் கூ டு ம் ? ஊகித்துப் பார்க்க முயன்ருள் அவள்; சிந்

Page 26
48
தனக்கு எதுவும் புலப்பட மறுத் தது. சரி அண்ணனிடமே கேட் கலாம்.”
தாங்கி வந்த நீர்க் குடத்தை தாழ்வாரத்தில் இறக்கி வைத்து விட்டு வாசற்படியில் கால் வைத்தாள் சரசு.
*அண்ணன் என்ன செய்கி ლუyff 22»
அவள் பார்த்தாள் ; வெளி யே தி ட ந் த உடைகளையெல் லாம் இரண்டு மூன்று பெட்டிக ளில் போட்டு நிரப்பிக் கொண் டிருந்தான் அ வன். சரசுவைக் கண்டதும் “சரசு’ என்று கத் தினன்.
நடுங்கிப் போய்விட்டாள் அவள்.
"அண்ணனின் குரலா இது? "என்னண்ணை இ தெ ல் லாம் ?’-தயங்கித் த யங் கி க் Gall La Git egy 62 Gir.
"அதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம். வெளிக்கிடு’
வெளிக்கிடுவதா ?* அவ
ளுக்குக் குழப்பமாயிருந்தது.
* எங்கே அண்ணை ?” ‘எங்கையாவது தொலைந்து போகவேண்டியதுதான். வெளிக் கிடு!" சரசு பதில் எது வும் பேசவில்லை. அண்ணன் சொன் னதையெல்லாம் அமைதியாகச் செய்து முடித்தாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் "பய ணம் புறப்பட்டு விட்டார்கள். இருவரும் முற்றத்துப் பட லையைத் திறந்து கொண் டு தெருவுக்கு வந்தார்கள்.
சட்டெனஅவன் கையிலிருந்த பெட் டியை யாரோ பறித்தார்கள்.
கோபத்தோடு அவனும்
குழப்பத்தோடு சரசுவும் திரும் பிப்பார்த்தார்கள்,
"நெடும் பயணமா தம்பி? என்று கேட்டவாறே நின்றிருந் தாள் மல்லிகா
-இன்னும் வரும்
1. உனக்காகவே இதை எழு துகிறேன். என் உயிருள்ள வரை என்னல் மறக்கமுடி யாத நினைவுகள் இவை என்ற போதும் "மறந்து விடு, மறக் துவிடு" என்று என்னைச் சுற்றி உன்குரல் ஒலமிடுவதுபோல் பல இரவுகளில் நான் உணர்ந் ததுண்டு. நிச்சயமாக நீ என் னுள்ளேதான் இருக்கிருய். வெளியே உலவிக் கொண்டி ருப்பது உன் உடல் மட்டும் தான் அதை நான் புரிந்து கொள்கிறேன் நீ.?”
- விரைவில் -
*எஸ்* எழுதும் புதிய தொடர் நவீனம் "இதயத்தில் ஆரம்பமாகிறது
 

MYo مه
(J) 10 m i Uss
ஏணேவிலே தாலாட்டி மகிழ்ந்த தாரம் இறந்துவிட்டாள் எனைத்தனியாய் விட்டு விட்டே. போனவருடம் அதுவும் நடந்து நாளாய்ப் போயிற்று எனக்குள்ளே புழுங்கிக் கொண்டேன் ஏனென்ருல் என்துன்பம் எனக்குள். அன்றி இன்ஞெருவர் தலையிட்டு இறக்கலாமோ?. ஆனவைகள் ஆகி இங்கு அசமந்தங்கள் அதைவிடவா நேர்ந்துவிடும்
ஆகையாலே எனக்குள்ளே அழுகின்றேன். சிரிக்கின்றேன். பின் என்துன்பம் யார்க்கேனும் பகிர நெஞ்சில் எனக்கிஷ்டம் இல்லாத போது ஏன்நான்.
கல்முனைப் பூபால்
மண்டையினை நொறுக்கிடவும்;. வாளால் வெட்டி மற்றவனைத் தாக்கிடவும் துணிய வேண்டும்! என்துயரம் எனக்குள்ளே.
பிறர்க்கேன் அந்த இன்னல்களும் இடர்ஒலியும் கேட்க வேண்டும்;
காய்த்த மரம் பிறகோர்நாள் காய்ந்து. பட்ட சருகாகி காக்கைக்கும் வெறுப்பாய் நிற்கும் போய்த் தொலைந்த நாளெல்லாம் புதிய நாளாய் பூப்பதுவும் எங்குண்டு. போங்களப்பா! நாய்த்தொல்லை பணமிருந்தால். நச்சரிப்பு! நம்முடைய சனங்களுக்கோ அது விருப்பு. ஏய்த்தவர்கள் ஒருநாளில் இதயம் வீங்கி இரத்தமெனும் செவ்வாரி குளிப்பார் திண்ணம் போய்த்தொலையட்டும் இந்தப் புன்மை மாந்தர். புழுகாதே என்னிடத்தில் போ போ!
இன்னும் ஏய்த்தலுக்கு நான்மயங்க இருடி யில்லை என் துன்பம் என் இன்பம் எனக்குளப்பா
இன்பத்தைப் பகிர்ந்திடவும் இனிமேல் up tri 2AGl6ŵl இன்னலினைக் கொடுத்திடவும் விருப்ப மில்லை! என்நிலைமை எனக்குள்ளே: உனக்கேன் அந்த இடரெல்லாம். தீ போபோ. நான் போகின்றேன்.

Page 27
** esઢbuti*
கேள்வி
நீர்வை. இலக்கிய உலகில் இத யம்” இதுவரை செய்தவற்றை இரண்டுவரியில் சொல்லுங்கள்
unir rifu Guar b?
பதில்: "விதைப்பது மட்டுமே இதயத்தின் தொண்டு. விளைந்த வைகளை "அறுவடை செய்ய வேண்டியது வாசகராகிய நீங் கள் தான். இதயமல்ல. கோ. தெய்வேந்திரன்
வேலணை. கே: ஒர் பின் தங்கிய சமூகம் வளர்ச்சியுற சில சேவைகளைச் செப்தும் பயனளிக்கவில்லை. இனி அதற்கு யாது செய்ய வேண்டும்? ப: சமூக வளர்ச்சி காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பயன் கருதாத - பயனை எதிர்பார்க் காத உங்கள் தூய சேவைகள் மேலும் தொடர வேண்டும். கே: நான் சில நன்மைகளைச் செய்தும் தீயவனுகக் கருதப் படு வதற்குக் காரணம் என்ன? ப; உங்களைப் பற்றியே நீங்கள் எண்ணிக் கொண்டு செயல் புரி கிறீர்கள் போலிருக்கிறது. நன் மை செய்தால் நிச்சயம் அதன் பின் விளைவு நன்மையானதா கவே இருக்கும். பிறர் நம்மைப் பற்றிச் சொல் ப ைவ களை ப் பொரு ட் படுத் தா ம ல் நம் தொண்டை நாம் இயற்றிவந் தால் நலம் விளைவது உறுதி.
கே
கே. எம் கபிரியேற்பிள்ளை.
சேமமடுக
கே! ஒரு மனிதன் தன் பிழை யை எப் பொழுது உணர்கிறன்,
ப3 “மனிதன்” ஆகும் போது, கலாராணி. புங்குடுதீவு -6-
கே: "என்னதான் ந ட க் கும் நடக்கட்டுமே” என்று துணிந்து
விட்டால் அந்த வாழ்க்கை எப்
படி இருக்கும்? ப; எண்ணித் துணிந்திருந்தால் இன்பமாக இருக்கும். எண்ணு மல் துணிந்திருந்தால் நரகமாக இருக்கும், கே: ஒரு பெண்ணுக்கு ஈடில்லா இன்பத்தைத் தரக்கூடியது எது? ப உங்களுக்கு தெரிந்திருக்குமே. கே. நெருப்பு இல்லாமல் எரி வது எது? ப; வஞ்சகரின் நெஞ்சங்கள்
நம் பெண்களுக்கு கொஞ் சம் ஆங்கிலம் தெரிந்து விட் ட. ல் ஆங்கிலப் பெண்களைப் போலவே நடிக்கிருர்களே!
ப; "யாதும் ஊரே யாவரும் ᏣᏰᎦ6iflii**
ஆர். வி. முருகேசு
நிவிட்டிகலை கே. நாம் கல்வித்துறையில் மு ன் னே று வ த ந் கு எ ன் ன முறையைக்கையாள வேண்டும்?
 

ப: "கல்வி எதற்காக? என்ற கேள்விக்குரிய பதிலை ந ம து நினைவில் பதித்துக் கொண்டால் போதும். முன்னேறி விடலாம். கே: இலங்கையில் ஏன் தமிழுக்கு முதலிடம் இல்லை. ப; இலங்கையில் மட்டும்தான?
சொல்லின் செல்வன்,
கொட்டடி கே இஸ்ரவேல் பிரதமர்பற்றி தாங்கள் அறிந்தவற்றில் ஒன் றைக் கூறுவீர்களா? ப. திருமதி கோல்டா மேயோ வைப் பற்றிக் கேட்கிறீர்களா? அவரும் ஒரு பெண் தானும்3
கே ஒரு மனிதன் கெடுவதற்கு சூழ்நிலையும் ஒரு கார ண ம் எனக் கூறுகிருர்களே! இது சி.ண்மைதானு? ப; சூழ்நிலையைக் காரணம் கா ட்டித் தன் பலவீனத்தை மறை த்துக் கொள்ள முயலும் மனித னின் "பொன்மொழி அது.
வான்மதிச் செல்வன்
குருநகர் கே: உலகத்தில் சிறந்தது எது? ஓர் உருவமில்லாதது எது ? ப "பட்டனத்தில் பூதமல்ல
எஸ். விஸ்வநாதன் GL-305 கே இன்று எதற்கும் அஞ்சா இதயம் உண்டா ? ப: *அஞ்சுவது அஞ் சா  ைம பேதமை" என்பதை உணராத இதயங்கள் நிறைய உண்டு5 கே: இலக்கியம் வளர என்ன பசளை இடவேண்டும் "
Sl
ப; இத யங் களி ல் அறிவுப் பசியை விதையுங்கள். பசளை யைப் பற்றிப் பிறகு சிந்திக்க லாம்
கே: திருவள்ளுவரை தெரியாத தமிழர் அதிகமா ? திருக்குற ளைத் தெரியாத மக்கள் அதி
LD IT P
ப. இரண்டுமே குறைவுதான்.
ஆரென்னெல் லிங்கம்.
திருநெல்வேலி. கே. சத்திசாயிபாபாவைப் பற் றி உங்கள் கருத்தென்ன ப; நிச்சயமாக நீங்கள் கொண் டிருக்கும் கருத்தேதான்.
கே கடவுள் உங்களுக்கு "நித் திய வரத்தை அளித்தால்..? ப. எல்லோரும் என்னை நித் திய வரம் பெற்றவன்' என்று சொல்வார்கள்.
தே. செல்வராஜா
கொட்டாஞ்சேனை
கே; ஒரு பெண் என்னை ஏமா ற்றி விட்டாள் ? ப; அதனல் பாதகமில்லை5 இன் னும் பல பெண்கள் ஏமாற்றத் தொடங்கியதும் இந்தத் துன் பம் மறைந்து போய்விடும்3
கே: நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் ?
ப; எனக்கொரு சந்தே கம்: இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டிருப்பது நீங்கள்தான. அல்லது..?

Page 28
இதயம் கொடுப்பேன்
கவிஞர் எம். பி. சிராஜுடீன்
நாறிப் புடைத்து நாற்றம் வீசும் நயவஞ் சகனின் சேற்றில் தோய்ந்து சீரது கெட்டுச் செழுமை மாறி ஊறது கொண்ட உ(ள்)ளத்தை மாற்றி உண்மைத் தளத்தில் வேரது ஊன்ற, இதயம் மாற்ற விளைகின் றேனே!
+ + --
ஏதோ அவனும் இன்னுஞ் சிலநாள் இவ்வுல கினிலே சாதல் பொறியில் வீழ்ந்தி டாது தப்பி வாழ, தோதாய் நானும் இதயம் மாற்றித் தொண்டு என்ற தீதைச் செய்து நல்லோ ரணியிற் சேர மாட்டேன்!
حه مه 8܀
எத்தன், பிறர்க்கு இன்னல் தந்து ஏய்க்கின் றேனும், உத்தமன் போல வேடந் தாங்கி உலவு வோனும் செத்து மடிதல் கண்டால் குதித்துச் சிரிப்பேன்! ஆனல். இத்தரை மீதில் ஏழைக் கென்றல் இதயங் கொடுப்பேன்!

*இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்:
“இது எனதே"ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்.”
கலை, இலக்கியத் திங்கள் இதழ்.
துடிப்பு-1
ஆசிரியர்:
சி. மகேஸ்வரன்
அலுவலக முகவரி: *இதயம்’
u u gr gpíʼı t 1 RF 675}r öih,
ஒவியர் :
டி. பூீரீஸ் கந்தராஜா
கதை,
கவிதைகள் அனைத்தும் கற்பனையே. கட்டுரைகளின்
3)-مسrt 668Th$
விசாக விளக்கு
பி. சேனநாயக்கா
-தம்பியையா தேவதாஸ் ஃபோர் த ரைம் பீயிங்
-தெல்லை க. பேரன் சில நினைவுகள்.
ஒற்றைத் தென்னை
t"
-ரஜனி மணளன் -நந்தினி -நீள்கரை தம்பி -கல்முனேப் பூபால்
ஒரு போக்கிரிப் பயல் ஏமாற்றம் இதயம் கொடுப்பேன்
- கவிஞர் எம். பி. சிராஜூடின் -ஹாஜா முகைதீன்
این flir یا حس
கனவுக் கன்னி 5 புதுக் கவிதைகள் "எங்கள் கலைஞர்" -ஒவியர் மணியம் கவிதைத் துறையுள் . .
-மு: புஷ்பராஜன் அவள் இன்னும். -இளந்தீவகன் வெளிச்ச வீடு உங்கள் பார்வையில்.
துக்களுக்கு அவற்றின் படைப்பாளிகளே பொறுப்பாளர்கள்.

Page 29
EDHAYAM
அன்னை ப
A fai PO
IDealers in CF
(Prop: M. 21 218, Pore,
அச்சிட்டு வெளியிட்டவரும், 15 11, மின்சார நிலை அச்சுப்பதிவு ஆனந்த
 

வுல்ரி ஃபாம் ருகிரிய சி இல: 233 ultry Farm
CKS & EGGS RAMASAMY)
ATURU GRIYA,
Phone: 233
احم
, ஆசிரியரும் சி. மகேஸ்வரன், யே வீதி, யாழ்ப்பாணம்,
அச்சகம், யாழ்ப்பாணம்,