கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்னி 1975.07

Page 1
மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனேக்களம்,
 
 

-—
95 சத ம்

Page 2
கண்டிால் அணியத் தூண்டுவது அணிந்தால் அழகு கூடுவது
*பிரகாஷ் நகைகள்
பிரகாஷ் நகை மாளிகை
106. செட்டியார் தெரு,
கொழும்பு-11.
தொலைபேசி: 29980
மல்லிகை களனி
I
சுப்பிரமணியம் கட்டிடம், 234 A, கே கே. எஸ். வீதி, கண்டி வீதி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, (பூணிலங்கா) (பூரீலங்கா)

அக்னியில் வெளியாகும் சிருஷ்டிகள் அதனே ப் படை த்த இலக்கிய கர்த்தாக் களின் பொறுப்பு என்ற கம்
பீர்யத்தைச் சார்ந்ததா கும்.
ஆசிரியர்:-
அக்னி 33, லோஹிஸ் ரோட், பம்பலப்பிட்டி,
கொழும்பு 4
புள்ளிகள்
பொட்டுகள் பூஜ்யங்கள்
நாங்கள் தீர்த்தக் கரையில் ஞானப்பிச்சை கேட்ட பிஞ்சுகள் அல்ல, ஒரு புதய சகாப்தத்தின் இளைய ரத்தங்கள். பிரபஞ்ச வீதியில் சமுதாயக் கூரை முகடு களை உலுப்பிவிடும் கொடுமைகளைக் காணும் போது எங்கள் ஆவேசம் கவிதையாகின்றது. புனருத்தாரணத்துக்காகவன்றி புதுயுகத்திற் காகவே நாங்கள் எழுதுகின்ருேம்.
உலக நதிக்கரை ஓரங்களில் எங்களுக்கு உறவுகள் உண்டு. எதிர்காலம் உருவாகுமா? என்ற சந்தேகம் எமக்கில்லை. உருவாகத் தான் போகின்றது என்ற நம்பிக்கை நட்சத் திரங்களை நாம் காணுகின்ருேம்.
புதிய உணர்வுகள், புதிய ராகங்கள், புயல் சுமந்த மெளனங்கள் எங்களுள் பதிவாகின் றன - நாங்கள் யுகமுகட்டின் நிமிஷக்கம்பி கள் அல்ல ஒரு புதிய சகாப்தத்தின் இளைய தலைமுறைகள்.
நவீனத்துவத்தை ஆகர்ஷிக்கும் அதே வேளை யில், நாங்கள உத்திகளுக்காக எழுதுபவர்கள் அல்ல, எங்கள் கவிகைகளில் புதிய உத்திகள் வார்ப்படமாக்கப்படுகின்றன.
எரியும் பிரச்சினைகள் எங்கள் எழுத்துக்கள்
ஆவதால் மகோன்னகங்களுக்காக அல்ல மக்களுக்காகவே நாம் எழுதுகின்ருேம். வார்த்தை ஜாலக் கொடியேற்றுபவர்களா கவோ, செய்யுள் வாதிகளாகவோ நாம் சோரம் போக மாட்டோம். இலக்கியக் களத்தில் சிலர் புள்ளிகளாக பொட்டு களாக, பூஜ்யங்களாக இருப்பதை நாம் உணர்வோம்.
முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய மனிதாபி மானம் எங்களுடையது. எங்களைச் சுற்றி நாம் வியூகம் அமைத்துக் கொண்டவர்கள் அல்ல. எங்கள் சித்தாந்தத்தில் கறைபடி யாத எழுத்துக்களுக்கு "அக்னி'களம் அமைக் கிறது.

Page 3
4
ஒர் அடிமையின்
மடல்
டானியல் அன்ரனி
என் இனியவளே! இது நமக்கு இலையுதிர் கால்ம் இன்னல்களை இடறல்களை இதயம் தீர்மானிக்கட்டும் விட்டு விடு
ஒட்டிய வயிற்றை உமிழ் நீரால் நனைத்து காசின்றிவீசும் காற்றினல் நிரப்பிக்கொள்
வானமுகட்டின் எரிகின்ற வெள்ளி விளக்குகள் வெளிச்சம் காட்ட சாலை ஓரத்து சாக்கடைகளில், தூசு நிலங்களில்
பள்ளி கொள்ளுங்கள்
மின்னல் வாள்கொண்டு ம்ேகம் கிழிபட கொட்டும் மழை, பனியில் உதிரும் சருகுகளே உடையாக்கிக்கொள்
எம் அரும்புகள தளிர்களை
இன்னல்களில் கருக்கிவிட்டு விடாதே!
இருட்சிறையின் இரும்புக் கம்பிகளின் இடிபாடுகளுள் கொடிய மனங்களில் நெடிய ஆக்கினைகளில் எம்ம்ை நெருக்கும் இவ் வேதனையில் எங்கேயோ, ஏகாந்தமாய்
வசந்தத்தின் வருகைநோக்கி புதுமைக் குயில்கள் குரல் எழுப்புவது துல்லியமாகக் கேட்கிறது!
வசந்தம் வரும் வசந்தம் வரும் கலங்கிடாதே கண்னே!
அ
தனிப்பிரதி பெற விரும்பு வோர் ரூபா 1/10 க்கு
முத்திரை அனுப்பி பெற் றுக் கொள்ளலாம்.
நிர்வாகி:-
அக்னி 33, லோஹிஸ் ரோட், பம்பலப்பிட்டி,
கொழும்பு 4.

தேர்தல் ?"...
A. நிலைத்து நிற்பது
நசம் பசி. (ԼՔԼԳ67վ :...";
லோகேந்திரலிங்கம்
நேற்று நடந்த நாட்டின் தேர்தலில் தியாகிகள் பதவியில் ஏறிய புதிய தலைவரும் வல்வை - நாட்டு மக்களை ۔ -۔ ۔۔۔ ۔* - á நன்றியுணர்வுடன் க. ஜெயசேகரம்பிள்ளை போற்றி மகிழ்ந்தார் ஆகா.
இதோ ஒரு தியாகி தேர்தல் நடந்து நிலை ஆக நின்று, நாட்கள் பல. பல. ఫీస్ పి సీతా ஒடிப் போயின வாடுகின்றது என்று
இக உலகோர்
தண்டினைப் பாராட்டுகின்ருர் . ஆக அவரறிவாரோ வேர்கள் அமிழ்ந்து,
முன்னர் இருந்த பழைய தலைவரே
அந்தச் சபையின் புழுங்கி, உயிர் எதிர்த் தலைவர் ஆக இலை, கணி, தண்டு அவரும் உடனே தனையுந் 'ಸಣ್ಣ
ய தலைவரின் அமைதியாக நிலத்தினடியில் புதிய தலைவரின் தியாகிகள் வரிசையில்
போக்கைக் கண்டு
όσον 2 தூற்றத் தொடங்கினர் இருப்பத
இந்த பயத்தின் மிகுதியினல் தொழிலாளர் பதவியில் ஏற்றிய メ {
மதிப்பான மக்களது மேமன்கவி தலைகளுக்குப் பதிலாக.
சாதிக்க வேண்டிய L (60), dhirr (60), 5687 í i 6l)
சேவைக்குப் பதிலாக. fÂdr புதிய தலைவரின் நாங்கள்; மனதில் என்றும் ஆனல். தோன்றி நிற்பது - எதிர்த் 姆
6QO Vö55EU LD s தலைவரின் தலைதான் உதைத்த காலின்
முகத்திலும்
ஆதலினல். . படுவது உண்டு.

Page 4
PoETS FROM HELL
மூலம் வியட்நாம் கோரியர் தமிழில்: எஸ். தவராஜா
எங்கள் தாயக
மக்களுடன் இனிய எங்கள் தோழருடன்
இருட்டறைகளில் வாழ்கின்ருேம் - நாம் இருட்டறைகளில் வாழ்கின்ருேம்!
O சாந்தி எங்கள் இதயத்தில் எதிரிகளின் சாவோஎங்கள் முகத்தினிலே!
இருட்டு அறைகளில் வாழ்கின்ருேம் - நாம் இருட்டு அறைகளில் வாழ்கின்ருேம்.
வாழ்வு எங்களுக்கு திறந்தவெளியரங்கு நீங்கள் எங்களை புதை குழியில் தள்ள முடியாது சவக்குழியின் அடியிலும் சந்தோஷ்ம் எங்களுடன் சல்லாபிக்கும்.
Os
பாளம்போட்ட வீதிகள் எங்கும் பருவ மலர்கள் பஞ்சனையாகும்.
அடங்கிக்கிடந்த
எங்கள் மக்கள்
ஆர்த்தெழுந்தனர் ஆவேசமாக.
O அணிவகுப்பு ஆடைகளுடனே கிராமத்தில் உள்ள வீடுகள் நோக்கி புறப்பட்டார்கள் ஆனந்தமாக
O ஆர்ப்பரிக்கும் அலைச்சுருளின் ஆவேசக் கூச்சல்கள் எங்கள் இதயத்தின் எதிரொலியாகும். எங்கள் இதயத்தின் எதிரொலியாகும்.
"பியூகோ தீவு" வேதனை வெஞ்சினந்துடனும் குழறிக்கொண்டு இருக்கிறது.
O எங்கள் தோழர்கள் கால மாற்றத்தைக் காண்கின்ருர்கள்.
முடிவற்ற அலைகள் வனந்தரத்தீவில் மூர்த்தண்யமாக மோதுகின்றது.
* பியூகோ தீவு"
குமுறிக்கொண்டு
இருக்கிறது.
i o
யுடனும்
என்னுயிர்த் தோழர்களே!
உங்கள் நிர்வாணப் பிரேதங்களே என்னையும் எழுதத் தூண்டுகின்றது.

கண்ணிர் எனக்கு வரவில்லை - என் இதயமே கண்ணிரால் தளும்புகின்றது.
ஒ. என் தோழர்களே!
வரப்போகும் எங்கள் நீண்ட இரவுகளுக்கு நீங்களே வழிகாட்டும் வானத்து நட்சத்திரங்கள்!
அமெரிக்க வல்லூறுகள் வியட்நாம் மக்களைக் கொத்திக் குதறிய போது 1963 நவம்பர் மாதம் *டியாம்ஸ் நகரம் தேசிய வீரர்களிடம் வந்தடைந் „ჭნ ჭ •
அங்கு இரகசிய நிலச்சுர ங்கம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட் 12 அரசி யல் கைதிகளில் மூவரே குற்றுயிராய் இருந்தனர். அந்த வீர இ%ளஞர்கள் கூறிய கவிதைகளே முதல் இரு கவிதைகளுமாகும். பிற கவிதைகள் அனைத் தும் போர் வீரர்கள், அர ரியல் கைதிகளின் இதயக் குமுறல்கள்.
இது நடக்கும்! வ வலீகரன் இந்க யுகத்தின் நெரிசலிடை முதலாளித் கவ நெருப்புக்கு விறகாகி எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களில் நானும் ஒருவன் அந்த நெருப்பில்
பூட்டுக்கள் உடைபடுகின்றன
ஜவாத்மரைக்கார்
எங்களுடைய வாய்கள்
இதுவரை பூட்டப்பட்டிருந்தன.
அவர்களின் கோர வாய்கள்
திறந்திருந்தபடியால். நாங்கள் செவிடர்களானுேம். அவர்களின் பணப்பசி எமது வயிற்றுப் பசியாகிக் காதை அடைந்ததால்...! எங்கள் கண்கள் குருடாகயிருந்தன. அக்கிரமக்காரரின் சூழ்ச்சி இருள் எமது பார்வையைத் திரையிட்டு மறைந்ததால்...! gair pl...... இழந்த சக்திகள்
கரங்களில் சேர இருளிலும் நோக்கும் சிந்தனை கூர
அவலட்சணங்களின் அநியாயங்களை . . . நிர்மூலமாக்கி っ : 「 ..。- நியாயங் காணம் புறப்பட்டு விட்டோம்.
வெந்த என் நெஞ்சில்
புதிய அலைகள்,
குமுறி எழுகின்றன! வறுமை, கடன், பசி
வைகளை
தனமாக வாரி வழங்கிய - அந்த முதலாளித்துவ நெருப்பை அணைக்க என் மனம்; என்றன் அன்புத் தோழர்களின் உறவை நாடி நிற்கிறது! அப்துல்லாவும், அப்புஹாமியும்
அழகையாவும், அலிஸ்நோனுவும்
பாய்நதோடி வருவார்கள்! நிச்சயமாய் - இது
நடக்கும் இங்கே!

Page 5
ஒரு காதல் கவிதை இராஜ தர்மராஜா
காதலை எழுதாத கவியும் ஒர் கவியா
காதல், அதை நானும் எழுதுகிறேன்! அவனவளை நோக்கினன்; அவளும் குழிவிழ புன்னகைத்தாள், அவன் கை பிடித்தான். அவளும் ஏற்றிட்டாள்! அவளின் உடலில், விதைத்த விதைகள் விந்தையாய் வளர்ந்தன!
வளரும் விதைகளை, வளமையுடன் பார்த்தான். அவளும் பூரித்தாள்; s இடையில் . அவளின் ஒலம் இவனைத் தாக்கியது யாகிதன வினவினன்? . இயற்கையென மொழிந்தாள். நோய் தாங்காமல், நோயுற்ற விதைகள் விழுந்தே மடிந்தன!
இவனின் கண்கள் அவளை நாடின. நான் ஏது செய்வேன் இயற்கையின் மாற்றத்துக்கு,
மாறுபவள் தானே. நில மடைந்தை என சொல்லாமல் சொன்ஞள் சில காலம் செல்ல
அவளை நோக்கினுன் அவள், குழிவிழ சிரித்தாள் **இயற்கையை மாற்றும்
காலம் வருகுது.காலம் வருகுது."
என்றே கூறி
அவளில் உழுது. விதைவிதைக்க
ஆயித்தமானுன் விவசாயிக்காதலன்;
பஸ்
எஸ். ஐ. எம். ஜபார்
பாரிலே வெள்ளைநாட்டுப் பாதைகள் பலவும் பார்த்து பாருளோர் போற்றுகின்ற
பண்புறு இலங்கை
நாட்டுப் Guris 24td.
சுமக்கநானும்
பெருமையாய் வந்தேனிங்கு தாரிலா வீதி யெல்லாம் தலைவிதி ஒடுகின்றேன்!
நீதிக்கண். . .
ஈழத்து நூன் தினமொருத்தியை
தன்னறையிலெடுத்து வயதுப் பசி தீர்க்கும்
பணப் பிசாசிடம்;
நான்கு வேளை வயிற்றுப் பசியால் வாடும் அவள் மெல்ல நடந்து பசி தீர்க்கக் கேட்டபோது; தன் வயதுப் பசிதீர்க்க அனுமதி கேட்டான்
உடனவள் * கற்புக்கரசி கண்ணகி" யானுள் இதன் பலன்
ஐந்தாவது வேளையும்
கடும் பசியால் சோர்ந்து
வீதியினில் நடக்கிருள்
பரம தயாளனே! உன் நீதிக்கண் இதுதாஞ?

காகிதப்புலிகள் அழிகின்றன
*வட அல் வை மகேஸ்"
32------ அமெரிக்க வெறியர்களே ஆக்கிரமிப்புப்பாளர்களே வீரமிகு வியட்ன மின் வீறன தாக்கத்தால் திகிலடைந்து தலைதெறிக்க ஓடிய உங்களால் மீண்டும் திரும்ப முடியாது உணர்வு பூர்வமான படையின் முன்னே கூலிப்படைகள் எம்மாத்திாம் ஏகாதிபத்தியமும் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள்
என்ற
மா-ஒவின் கருத்து எத்தனை தூரம் மெய்யான தென உலகுக்குக் காட் டிவிட்டீர் விடுதலைப்படைகள் என்றும்
வளர்ந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியமும் - அதன் அடிவருடிகளும்
அழிந்து கொண்டேயிருப்பர்.
பார்வை
கனக, பாலதேவி
அந்தக் குளத்தில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்குகளுக்குப் புரியவில்லை
இப்போது மீன்களெல்லாம்
.ே அடுத்த இதழில்

Page 6
O
இடைவெளிகள் இல்லாத தலைமுறை
வ 2. F. ஜெயபாலன்
G3 unr68) Tujtb
சுரண்டலையும் புறம் கண்ட தேசபக்தர்களின் குதூகலம் அவர்களது துப்பாக்கிகளைவிடவே பொறுப்போடும்
ஜீவனேடும்
பரந்துபட்டு ஓங்கியது
தீப்பொறிகள் தலைமறைந்த மத்தாப்புக் காடாகும் GeogrGirr Gofeb மகிழ்ச்சி கடலை விழுங்கும்
கூட்டு விளிம்பில் சிறகு விரித்த பறவைச் சிறுகுஞ்சாய் கிழட்டு மீனவனின் முரட்டு அரவணைப்பினுள் துரு துருக்கும் சிறுபேரன்
f'Lurrör
சர்வதேச சமுத்திரக் காற்றில் மீக்கொங் கரையின் சேற்றை மலர்களின் கமழ்வை தனித்தனியே இனங்கண்டு சுகித்தபடி இதழ்ச்சருகு அகட்டும் தாத்தாவுக்கு கூதல் காற்றிலும் குரல் மட்டுமே நடுங்கும்
**எனது மகனே. f5...... மண்ணில் சிந்திய வியர்வையும் ரத்தமும் மக்களின் வெற்றியாகி ம்கிமை பெற்றது. காதலில் சிந்திய
வியர்வையும் ரத்தமும்,
புரட்சியைத் தொடர தயாராகி வருகிறது.”* போராளிகள் முதுமை அடையும்போது புரட்சி இளமையடையும்.
கலங்காது வரலாறு கண்ட கண்களில் கண்ணிர் வரலாழுகும் காலந் தோண்டிய
கண்குழிகளுள்
பிஞ்சு விரல்கள் ஊற்றடைக்கத் துளாவும் *.பழைய நினைவுகள் பேரனே." நெடுமூச்சொன்று முந்திக்கொள்ளும் .
**உனது.
தந்தை தவழ்ந்த இதே மணற்கரைகளில் பிரெஞ்சுக் கப்பலில் ஹோ சீமின்னை வழியனுப்பி விடுதலையின் வித்துக்களையும் புரட்சி இலக்கியங்களையும் கடத்திக் கரை சேர்த்தோம். எ கிரிகளின் கைமுட்டிகளாலேயே அவர்களின் தாடைகளை மோதி நொருக்கிய மக்கள் யுக்கத்தின் தலைமகன் ஹோசீமின் தோற்ருேடிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுவடுகள் கலைகின்ற இதே கரைகளில் s எழுந்துவரக் காண்போமா. s
 

1.
கண்ணீரில் வளரும் மெளனப் பயிர்களின் மறைப்பில் அர்த்தங்கள் ஆயுதபாணிகளாக இருக்கும் **சைக்கோன் இனி ஹோசீமின் மாமாவின் நகரம் ஹோசீமின் நகரம் வெல்க. • அமரிக்க குண்டு வெடிப்புகளில் கலையாத வுெண்பட்டுக் கடற்கரை சிறுவரின் வெற்றிக் களிப்பில் தூளிபறக்கும். எழுந்தோடும் பேரனுக்கு அணைத்திருந்த கைகள் அகன்று வழிவிடும் ஏதோ சொல்ல இதழ்கள் துடித்தபோது இமைகள் சொருகிக்கொள்ளும் பேராளிகள் ஆத்மசாந்தியே அடைவார்கள் இளவரசர்கள் தங்கள் நாட்டில் என்றும் அணுதைகள் ஆவதில்லை.
பட்டம் பெற்றள்
ஷண்
அவனது உடற் பசிக்கு விருந்தாகித் - தன் வயிற்றுப் பசி போக்கியதால் நடுநிசிப் 'பள்ளி"யிலே ைேசி எனும் பட்டம் பெற்ருள் பாதையோரப் பஞ்சையவள்
இருபக்க நிதர்சனங்கள்!
மு. பஷிர்
சோற்றுப் பருக்கைகளுக்கு கனவுகாணும் ஜீவன்கள் பசிநெருப்பின் அவஸ்தையில் விழிசோரும் குழந்தைகள் பாணுக்கும் மண்ணெண்ணெய்க்கும் வழியற்ற பக்கீர்கள் உடலுழைப்பால் தீராத
வாழ்க்கைப் பிரச்சினைகள்
வெடிக்கும் இதயங்கள்! வேதனைக் குமுறல்கள்!
வறுமைச் சுமைகளால் வீதிக்குவந்த பத்தினிகள் நோயில் வீழ்ந்த உழைப்பாளியின் பிச்சைப் பாத்திரங்கள் ! கிருமி நாசினிகளால் கதை முடித்த மானஸ்தர்கள் கரைசேரா ஏழைக்குமர்களின் கண்ணீர்த் திவலைகள் வெடிக்கும் இதயங்கள்! வேதனைக் குமுறல்கள்"
பணப் பிசாசுகளே ! இவை நீங்கள் அறியாத பாடங்கள் உங்கள் சுகபோக இராச்சியத்தின் சுந்தரப் பயணங்கள் எதுவரை? காலியாக்கிய மதுப்போத்தல்கள் நிர்வாணமாக்கிய வேசிகள்!
வெடிக்கும் இதயங்கள் ! வேதனைக் குமுறல்கள்!
உங்கள் இதயத்கை துளை க்கும் ஈட்டிகள் எங்கள் கிராமங்களில் சேரிகளில் புழுதிகளில் Gurr ff5;  Gorm uiu
தயாராகின்றன ! சுகபோக இராச்சியக்தின் சுந்தரப்பயணங்கள் எதுவரை? வெடிக்கும் இதயங்கள்! வேதனைக் குமுறல்கள்! "

Page 7
12
செ. செல்வ ரத்தினம்
நான் கருவுற்றிருக்கிறேன் வயிற்றில் ஒரு நோஞ்சான்
அன்பரே, நான் பெற்றதெல்லாம் நோஞ்சான் இளம்பிள்ளை வாதத்தில் முடமான குழந்தைகள்
அம்மா சொல்வாள்; அடுத்த வீட்டுக்காரி
ஒரு மலட்டுச் சனியன்
மலடி
ஒரு
S6ft 6irr W பெத்துப் போட்டுள்ளாள்
அவளின்
காலடியில்
காறித்துப்பி என்னத்தைக் கண்டோம் அன்பரே!
நாளை, எங்கள் வரப்பிரசாதங்கள் மலடியின் கிளிப்பிள்ளைகளைப் பார்த்து பொருமைப்படப் போகின்றன,
நோஞ்சான் கருவை க%லப்போம் அன்பரே !
பக்கத்து
வீடுகளில்
மரபு -- & =ഠ
படுத்துறங்க அனுமதி
தந் தால் குறைஞ்சா போகும் குசேலர் பெருமானே!
விட்டில்
இரா. நாகராசன்
நோய்த்தடுப்பு நிவாரணியாக பிரீதிகள்
Puhlic Lavatorv நிறைந்து வழிகிறது
இது
பழைய தொழில்
அடிமை நிலவுடைமை, முதலாளித்துவம் ஜனநாயக சோசலிசம் இடையீடின்றி தொடரும் கதை, இதுவும் ஒரு தொழில்.
அவளும் ஒரு தொழிலாளி உணவுத் தேவைக்கு உடல் தேவையை பூர்த்தி செய்பவள்
Penshion,
P.F. இல்லாத தொழில் ஒப்பந்தம். தீர்வு காண முயலும் 6?GI5 Geometrical Problemo. சமுதாய அவலங்களின் மொத்த சி(ஈட்டி. தலைவர்களின் ஒழுக்க ஒலங்கள், LD5556fair Noble Purposes air எவற்ருலும் குணமாக்க - (புமடியாத நோய். நெஞ்சை நெருடும் நெருஞ்சி முட்கள்.
?
அவை
அக்னி மலர்கள் மலரும் நாளில் அணலில் கருகும் விட்டில்கள்.

13.
தேசிய கீதம் பாடும் துப்பாக்கிகள் திக்குவல்லே - கமால்
எட்டுத் திசையிருந்தும் இதய பலத்தோடு, தாயகத்தை வென்றெடுக்கச் சமர்புரியும் தோழர்களே! விதேசிய ஒப்பாரிக் குரல்வளை நசுங்கட்டும், தேசிய கீதம் துப்பாக்கிகள் பாடட்டும்! வெடிகுண்டு எச்சத்தால் தாய்த்திருப் பூமியை, அசிங்கப் படுத்த . . . ஆயுதப் பறவைகள் அசைந்தங்கே வரல்கண்டு ஆயிரமாய் நாமெழுந்து ஆத்மப் பீரங்கிகளை அதிரச் செய்கையில் . . . உலகெங்கும்வெற்றிப் புயங்களின் வரலாறு விரிகிறது . , ! பரவட்டும்;
விடுதலை மகரந்தம்
வித்தூன்றி . . . வித்தூன்றி . . .
ஆதிக்கச் செடிகள் அழியட்டும்! அழிந்தொழிந்த ஆதிக்கச் சமாதியின்மேல், விடுதலை விருட்சம் வேரூன்றி, தேசியப் புஷ்பங்கள் சுடர்கையில் கம்போடியக் குயில்களாய் . . வீரம் செறிந்த வியட்நாம் குயில்களாய் : . தேசிய கானம் இசைக்கின்ற குரல்கேட்டு இன்னுமின்னும் உயர்ந்த ஸ்தாயியில், சர்வதேசிய விடுதலை பாட எம் கவிதை நெஞ்சங்கள்
காத்திருக்கின்றன. அதுவரையில்தோள்விம்மப் படைசாடும் எனதன்புத் தோழர்களே. விதேசிய ஒப்பாரிக் குரல்வளை நசுங்கு மட்டும், தேசிய கீதம் துப்பாக்கிகள் பாடட்டும்!
LDJ 600I பேதங்கள் லதாபாரதி
யமுணுவை விட ஈர நதிக்கரைகள் இல்லாமல் இல்லை. அடிமடியில் துயில் கொள்ள மும்தாஜைக் காட்டிலும் அழகிய மலர்கள் அரும் ராமலும் இல்லை! இருந்தாலும் இங்கே எழுப்பப்படும் கல்லறைகளெல்லாம் தாஜ்மகால்களில்லை காரணம்
எங்களில் யாரும்
ஷாஜகான்களில்லை.
மூலதானம் சரவணையூர் சுகந்தன்
நாங்கள் இந்நாட்டின் முதுகெலும்புகள் ஏனெனில் நாட்டின் பொருளாதார சுபீட்சம் காணும் மூலதானம்
எங்களிடம்தான் உண்டு.

Page 8
14
கூதது
குப்பிழான்-ஐ- சண்முகன்
இருண்ட பிரபஞ்ச
ஏகாந்தப் பெருவெளியில் சலனத் திரள்கள்! சலனத் திரள்கள்!! S. உலகம் பலவாய் உருப்பெற்று எழுந்தன;
g2. GBLAD பலவாய்
உருப்பெற்று எழுந்தன.
கணத்தின் அசைவில்
காலச் சுழல்வில் வானும் தீயும் w வளியும் புனலும் வையத்து உயிர்களை வழிப் படுத்தின;
வையந்து உயிர்களை வளப் படுத்தின.
ஒன்ருய் இரண்டாய் பெரிதாய் பலவாய் உயிரோடு இணைந்த உடல்கள் தோன்றின; உடலோடு இணைந்த உயிர்கள் தோன்றின.
உலகம் உயிரின் இயக்கம் பெற்றது: உலகம் உயிரால் உலகமானது;
உலகம் உயிரால் வனப்பு மிக்கது: உலகம் உயிரால் உயிர்ப்பைப் பெற்ற க உலகே உயிராய் guGSpT உலகாய்.
காலம் வெளியில்
உயிரின் கூத்து தோற்றம் இயககம்
மறைவு என்ருங். மறைவு தோறறம் இயக்கம் 67 657 (pů... ... காலம் வெளியில் உயிரின் சுத்து ssrabb வெளியில்
உயிரின் கூத்து,
நாணல்
10-A, கருமாயா எக்ஸ்டனசன் 6, கோபிசெட்டிபாளையம் 638452 தமிழ்நாடு.
உலே
என். சண்முகலிங்கன்
9oGour
உணவோ காணுத மனிதர்கள் உலை வைத்துப்
பசியாற அயராத உழைத்கார்கள் என்ன கொடுமை!
அவர்கள் உழைப்பால் உருப்பெற்றபான யாரோ ஒருவன்
வயிருகியக
தேடிய தெல்லாம் பானையட் சென்றது கூடினர் பசிக்க மாந்தர் கொதித்தனர் ** அக்னி" யாகி பானையன் உலையாஞன்
பசித்தவர் இனித்தான்-உண்பார்

ஆ. தி. சித்திரவேல்
ஏழெட்டு அறை மாளிகையில் இரண்டொருபேர் வாழ்ந்துவர சேரிக்குடிசையில் ஏழெட்டுப்பேர் வாழும் தீப்பெட்டி வாழ்க்கையடா! அங்கேதந்தைக்கும் தாய்க்கும் "அந்தரங்க அறை ஒன்று பெண் பிள்ளை, ஆண் பிள்ளைக்கு வெவ்வேறு அறைகள். வரவேற்று வம்பளக்க, உணவருந்த தனி அறைகள் இங்கேபெற்ருேரின் "கலவி? பிள்ளைக்குச்
சினிமா
மக்கள் கலை ஆகசி
அகம் அழுக்கு அழகான அலங்காரம் அதுபோதும் என்றுசிலர்! அகம் சுத்தம் அலங்காரம் தேவையில்லை அதுவே போதுமென்று வேறு சிலர்! அழுக்கற்ற அகமும்
அழகான புறமும் சேர்ந்துதான். . . . . மணப்பெண்ணிற்கு மவுசைக் கூட்டுறது! அலங்காரம். . . . எப்படியும் இருக்கலாம்! மரபுவழி வந்தாலும்சரி • புதிய வழி போனலும் சரி . . . கவர்ந்தால் சரிதான்!
காவிகளும் ஒட்டுண்ணிகளும் அன்பு ஐவ ஹர்ஷா
சேர்ந்தே வருகின்ற துன்பத் துகள்கள்வெடிக்கும் . . . - ஒரு நாளில் . . . அதை இன்றையதாக்க " " "ஆர்ட்” பேப்பரில், செந்நிற தூரிகையால் கத்தி அரிவாள்களை ஆடம்பரமாய்ப் போட்டோம். ஹொட்டேல் * இன்ரர்சொன்ரினென்ரல்" *ஹொட் ரிங்ஸுடன் மார்க்ஸ், ஏங்கல்ஸ் பற்றி
பெரிய" டிஸ்கவுன்ஸ் செய்தோம். ஓபிண் எயர் தியேட்டரில் ஒபரேஷன் பற்றி *லெக்ஷர்? வைத்தோம். சே . . . . இந்த தொழிலாள, விவசாயிகள் சுத்த மோசம்.
ஈகோ விழித்துக்கொண்டது. அனுபவ மென்சூடு” **மெய் முதல்வாதம்' "சமுதாய ஆன்மிக பார்வை' இவைகளையும் . . . ஒரு கை பார்த்தாலென்ன . .

Page 9
16
பிரகடனம் பண்ணுமத்துக்கவிராயர்
நானெரு கவிதை - நானெரு கருத்து ஊழியை வென்று வாழ்வதற்காக உள்ளங்கள் தோறும் ஊன்றிய ஒரு விதை இருள் அண்ட அஞ்சும் பேரொளிப் பிழம்பு நெற்றியில் வரைந்த நெருப்பு ரேகை, விழித்த மனங்களின் வீரியப்பெருக்கு, வேகந்தணிந்திடா வெஞ்சின வெள்ளம், வாழ்க்கை வேள்வி வளர்த்திடும் அக்னி, வல்லரக்கரின் தீராப் பெரும் பகை ஈனத் தனங்களைத் தாக்கிடும் ஈட்டி தீமையைத் தகர்க்கும் தோள்களில் தாங்கிட வகைவகையாக வலிய கருவிகள் அள்ளிவழங்கும் ஆயுதக் கிடங்கு பூமியை உலுக்கிக் குலுக்கிடும் பூகம்பம் -
நாஞெரு கவிதை நானெரு கருத்து!
பாரதி, இக்பால்,
Durr 656i 63), நஸ்றுல் இஸ்லாம்
விவஸ்ளத்தோள், நஸிம் ஹிக்மத், ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் சொல்லியடங்கா ச் செழிய பரம்பரை
பூமியின் மார்பைப் புரட்டி உழுதிடதமிழில் பூத்தவோர் புரட்சிப் புதுப்பயிர்! சாம்ராஜ்யங்கள் சமைந்தும் சரிந்தும், நாகரீகங்கள் தோன்றியும், நசிந்தும் சகாப்தம், சகாப்தமாய் சதி பல நடந்தும் சாவின் பிடியிலே சிக்காத பிறவி, Y சங்கிலிக் கட்டுகள் சிதறி நொறுங்கிட சரித்திரச் சிறைகளை சாடிச் சரித்த சங்காரச் சுழல் - விடுதலை மூச்சு,
ஸினுயில், ஸிலியில் வியத்ஞம மண்ணில் ரணகளம் தோறும் ரத்தநீர் பாய்ச்சி கருகிவீழாமல் காத்துவளர்த்திடும் கதிர்கள்-மானுடக் கழனியில் செழித்திட,
கசிந்த நெஞ்சம
கொட்டிடும் குருதி,
சன்னம் சன்னமாய்
சுட்டுத் துளைத்தும்,
சந்து சந்தாய் சிதைத்து வீசியும், தூக்குத் தொட்டிலில் தூங்க வைத்தும் துவண்டு சுருண்டு மடிந்து விடாத - மனிதசிந்தனை மாணிக்க முத்துகள் மார்பில் அணிந்து மன்றத்தில்ஏறிம
நானெரு கவிதை நானெரு கருத்து!

பீற்றல் வலைகளும் பெருஞ்சுருக்களும் -மருதுரர்க்கனி
சுருக்களைப் பிடிப்பதற்காக வலைகள் வீசப்படுகின்றனவாம்! பாவம். அகப்படுவதோ நெத்தலிக் குஞ்சுகள்! **இது அநியாயமில்லையா?* என்று கேட்டால், *’ என்ன செய்வது நெத்தலிக் குஞ்சுகளும் அகப்படத்தானே செய்யும்?" என்று, எங்களுக்கு சமாதானம் சொல்லுகிறீர்கள்! சரிதான். நெத்தலிக் குஞ்சுகளையாவது உங்களால் பிடிக்கமுடிந்ததே! மஹா கெட்டிக்காரர்கள்! உங்களுக்கு, VK. *ஜே. பி. பட்டங்களே தரலாம்! * சுருக்களைப் பிடிக்கத்தானே நீங்கள் வலைகளை வீசினீர்கள் அவைகளைப் பிடித்து விட்டீர்களா..??? என்று கேட்டால் - ஏன் முளிக்கிறீர்கள்? அவைகள்தான் உங்கள் வலைகளையே கிழித்துக்கொண்டு தப்பி விடுகின்றனவே.?! இதற்கு, என்ன பதில் சொல்வீர்கள்? "ஏன் வாயைச்
சப்புகிறீர்கள்? உங்களிடம் பதிலிருக்கிறது; ஆனல், அதை நீங்கள் சொல்லவே மாட்டீர்கள்! நாங்கள் மக்கள் சொல்லுகிருேம். * உங்களிடமிருக்கின்ற வலைகளெல்லாம் இத்துப்போன பழைய பீற்றல் வலைகள்!! வலைகளை மாற்ருமல் நீங்கள், சுருக்களைப் பிடிக்கவே மாட்டீர்கள்! ஒன்று செய்யுங்கள், இந்த, சுருபிடிக்கும் வேலைகளை மக்களிடம் விட்டுவிட்டுங்கள்; நாங்கள், சுருக்களென்ன..? திமிங்கிலங்களையே பிடிப்போம்!!
N
விடியல்
21 A, குட்டிமேஸ்திரி வீதி, சென்&ன - 600001 தமிழ்நாடு.
நிலவென்ற கர்ப்பிணியாள்!
தர்ம - புவணு
வானரசன் சோறுதின்ற வாழையிலை வானமதில்
மின்னி மின்னித் தெரிகின்ற எச்சில் பருக்கைகளை.
மேகமென்னும் ஏழையவன் மெல்லமெல்ல எடுத்துண்ண முயலுகையில்
மின்னலென்ற கத்தியினை வீசிஎறிந்திட்டு வானத்துப் பருக்கையெலாம் தின்றுதின்று வயிறுாதி மெல்ல உருளுகிருள் நிலவென்ற கர்ப்பிணியாள்!

Page 10
நான் ஒரு விவசாயி
மேட்டூர் - கவிராஜன்
எண்ணிப் பார்க்கின்றேன் எதுவும் புரியவில்லை என்ன காரணம்
இன்னும் தெரியவில்லை!
சேற்றுக் களனியில் இரத்தநீர் பாய்ச்சி மாடாக, மாட்டோடு கூட்டாக உழைத்தேன்! உழைத்தும் என் வீட்டில் உலை உறங்கிக் கிடக்கிறது!
நிம்மதி இழந்து நிற்கும் குடிசையில் நாளைப் பொழுது வந்தும்
விடிவு தரப் போகிறதா?
நிலையில்லா வாழ்வில் நிம்மதிவேண்டி மனைவியெடு மகிழ்வு Lorrahuai கண்டதனல் செல்வங்களாக வீட்டில் uair&Mrs Gir பிறந்தன.
சிரிக்க முடியாமல் அழுகிறது என் சின்னக் குழந்தைகள்!
அள்ளி அணைக்க
அருகில் சென்ருலும் பசி, பசியென்று
g!
பதைபதைத்து நிற்கிறது!
வர்க்கமது இரண்டு இருக்கிற வரைக்கும் வாழ்க்கை
சிறப்பில்லை!
என்று பல பேர்கள்
எனக்குச் சொன்னர்கள்!
இவற்றை இன்னும் எண்ணிப் பார்க்கின்றேன்!
எதுவும் புரியவில்லை.
ஏனென் ருல் நானே எழுதப் படிக்கத் தெரியாத
விவசாயி!
மூலம் : சிங்களம் சுனில் குணவர்தன
தமிழில்: செந்தீரன்
சூம்பிய முலையை பற்றியிழுத்து பசிதாங்காது
பிஞ்சுக்குழந்தை தாயின் மடியில் அழுது புரள,
யாசகஞெருவன் நடைபாதையில் குந்தியிருந்த வயிற்றைத் தடவி பிச்சைகேட்க,
நிர்வாணச் சிறுவர்கள் எச்சிலுணவுக்காய் முட்டிமோதி குப்பைத் தொட்டியை ஆவலோடு கிளறிப்புரட்ட,
நாய்கள், காகங்கள் வாய்களைத் திறந்து கோபநெருப்பை கண்களில் தேக்கி துர ரயிருந்து பார்த்திருக்கும்பொருமையோடு!

வல்லிக்கண்ணன்
'தீபம்’ இதழில் புதுக்கவிதை யின் தோற்றத்தையும், வளர்ச்சி யையும் புற்றி 38 கட்டுரைகள் எழு திய வல்லிக்கண்ணன் தமிழ் இலக் கிய வளர்ச்சியை மிகக் கரிசனையோடு ப.ர்ப்பவரைப் போன்று 37வது கட் டுரைக்கு 'ஈழத்தில் புதுக்கவிதை”* என்ற தலைப்பிட்டுள்ளார்.
தீபகாந்தன்
இக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொழுது
'தமிழ் இலக்கியத்தின் வளர்ச்
சிக்கும் வளத்திற்கும் ஈழத்து எழுத்தாளர்களும் அரும்பணி யாற்றி உள்ளார்கள், ஆற்றி
வருகிறர்கள்.எனவே ஈழத்து எழு த்தாளர்களின் சாதனையைக் கவ
தையா?
னத்திற்குக் கொண்டுவராத எந்த இலக்கிய வரலாறும் பூரணத்து வம் ஆகாது என்பது என் கருத்து என்ற உண்மையையும்.வலியுறுத் திள்ளார். &
ஆனல், இந்த உண்மையை எவ் வாறு ஊர்ஜிதப் படுத்தியுள்ளார்? ஈழத்துப் புதுக்கவிதையின் 32 வருடகால வளர்ச்சியை எந்த அள வில் ஆராய்ந்து உன்ௗார்? இன் றைய நிலையை எப்படித் துலாம்பர மாக்கியுள்ளரார்? என்பதைப் பார்க் கும் பொழுது 'ஈழத்தில் புதுக் கவிதை' என்ற அவரது கட்டுரை ஓர் இலக்கியக் கண்துடைப்பாகவே தெரிகின்றது.
"பழைய செய்யுள் மரபில், நவீன கவிதைக்குரிய இயல்புகளைப்
புகுத் திச் சாதனை புரிந்த மறுமலர்ச் சிக் குழுவினரே ஈழத்தின் புதுக்க
விதை ஆரம்பகர்த் காக்களும் கூட
என்று குறிப்பிட்டுள்ளார்.
* பழைய செய்யுள்' என்னும் பொrமது அது யாப்பிa க் +ணத்துள்
அடங்கியவைகளையே குறிய கா கும். அப்படியென்ருல் யாப்பிலக்
கணம் கொண்ட பழைய செய்யுள் மரபில் நவீன கவிதைக்குரிய இயல் புகளைப் புகுத்துவது தான் புதுக்கவி
புதுக்கவிகை எது என்று ஆராய்ந்த அறிவு, ஞானம் பழைய செய்யுள் மரபில் நவீன கவிதைக் குரிய இயல்புகளைப் புகுத்துவதே புதுக்கவிதை என்று கூறுகிறது. இவ ரது 38 கட்டுரைகளிலும் இவர் குறிப்பிட்டு வந்த "புதுக்கவிதை கள் எல்லாம் பழைய செய்யுள் மரபில் நவீன கவிதைக்குரிய இயல்
புகளைப் புகுத்தியவைதாளு? இதைத் தான் வல்லிக்கண்ணன் புதுக் கவிதை என்று மயங்குகின்
முரா?
i

Page 11
20
தமிழகத்துப் புதுக்கவிதையின் தோற்ற வளர்ச்சியில் ந. பிச்ச மூர்த்தியில் இருந்து, இன்றைய அக்னிபுத்திரன் வரை- ஈழத்தில் வரதரில் இருந்து, இன்றைய கவி ஞர்கள் வரை எழுதும்‘புதுக்கவிதை" என்பவைகள் பழைய செய்யுள் மரபில்நவீன் கவிதைக்குரிய இயல்பு களைப் புகுத்தியவை தான் என்பதை புதுக்கவிதையாளர்கள் ஒப்புக் கொள்வார்களா? வல்லிக்கண்ணன் விளக்குவாரா? ‘வசன கவிதையை' வரதர் எழுதியிருந்தார் என்று கூறி ""முதல் புதுக்கவிதை இது என்று கூறலாம்" என்று கூறுவதில் இருந்து ‘வசன கவிதைதான் புதுக்கவிதை” என்பதை வல்லிக் கண்ணன் ஒப்புக்கொள்கின்ருஜரா? வசனம் கவிதையாக முடியுமா? கவிதை வசனமாக முடியுமா?
ந. பிச்சமூர்த்தி ‘கலாமோகினி" யில் ‘மழைக்கூத்து" என்ற கவிதை யை எழுதியிருந்தார். அந்தக் கவிதை வரதருக்கு இயற்கைக் கூத் துக்களை விவரிக்கும் கவிதையை எழு தத் தூண்டுதலாக அமைத்திருக்க லாம்.ந.பியின் கவிதை வியப்புணர்ச் சியுடன் அதிசயிக்கிறது. வரதர் கவிதை இயற்கைக் கூத்தை அச்சம் கலந்த அனுபவ உணர்ச்சியுடன் விவரிக்கிறது" என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
பிரக்ஞை
8, மகாலட்சுமி தெரு, Gଗଣfର୍ଦrଥିୟt-1.7. தமிழ்நாடு.
எண்ணுகின் ருரா?
சகஜம்.
g)sts,
ந. பிச்சமூர்த்தியின் கவி தையை வரதர் திருடினர் என்று
அல்லது ‘நகல் எடுத்தார் என்று குறிப்பிட முனைந்
görarprrr ?
ஒரே காட்சியை இரண்டு கவி ஞர்கள் பார்த்து ஒருவர் அதிசயப் படுவதும் ம்ற்றவர் அச்சப் படுவதும் இதுதான் வல்லிக்கண் ணன் கூறுவதுபோல் "இரண்டு கவி தைகளும் வேறுபட்ட உணர்ச்சி களின் வெளிப்பாடுகள் ஆகும்.
ஆனல் ஒரு கவிஞன் எழுதிய பின் அதே கவிதையைப் பார்த்து அவன் அதிசயத்துடன் எழுகியிருக் கிருன் நாம் அச்சத்துடன் எழுது வோம் என்று நினைத்து ஒரு கவி  ைதயை மற்றக் கவிஞன் "நகல்" எடுப்பது அப்பட்டமான இலக்கி யத் திருட்டு ஆகும். அப்படித்தான் வரதர் எழுதியிருக்கின்ருர் ந.பி.யின் கவிதையை வரதர் திருடியி ருக்கின்ருர், இலக்கியத் திருட்டு நடைபெற்றிருக்கின்றது, ஈழத்தின் முதல் புதுக்கவிதையே திருட்டுப் படைப்பு என்று மறைமுகமாகக் கூறுவதற்குத்தான் வல்லிக்கண் ாைன் அப்பந்தியில் ந. பி. யின் கவி தையுடன் வரதரின் கவிதையை ஒப்புநோக்குச் செய்திருக்கின்ருரா என்ற ஐயம் எழுகின்றது.
ஒரு கவிஞனின் கவிதை இன் ைெரு கவிஞனுக்குத் "தூண்டுகோ இருந்தது என்ருல் இரண் டாவது கவிஞனின் "சுயத்தில்", கணித்துவத்தில் நம்மைச் சந்தே கிக்கச் செய்கின்றது.
*"தூண்டுகோலாக இருந்திருக் கலாம் என்று கூறுவதின் மூலம்
*ஈழத்து இலக்கியச் சாதனைகளை
யும் சுட்டிக்காட்டியே தமிழ் இலக் கிய வரலாற்றைப் பூரணப்படுத்த வேண்டும்" என்ற வல்லிக்கண்ண ணின் உயர்த்த நோக்கு, கரிசனை யோடும், பொறுப்புணர்ச்சியுட னும் ஆற்றவேண்டிய பணி சந்தே கத்துடனும்-ஐயத்துடனும், யூகத் துடனும், தன்னம்பிக்கை அற்றும்

21
தேன்மழை
1/16 A, ஸ்டெர்லின் சாலை, சென்னை-34 தமிழ்நாடு.
செய்யப்பட்டிருக்கின்றது. தனது தவறுகளை மட்டும் உதவியவர்க ளின்மேல் போட்டுவிட்டு தான் "நளுவிக்" கொள்ளும் முயற்சியும் தென்படுகின்றது.
1960 அளவில் "எழுத்து பத் திரிகை ஈழத்தவர் பலரை புதுக் கவிதைப் படைப்பில் ஈடுபடச் செய்தது. தரும-அரூப் சிவராம், இ. முருகையன், நா. இராமலிங் கம், மு. பொன்னம்மூலம் போன்ற வர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
"ஒரு கால் நூற்ருண்டுக் கவிதை வரலாற்றில் தென்னகமும் -ஈழமும்" என்ற தலைப்பில் முருகை யன் எழதியுள்ள கட்டுரையில் * புதுக்கவித்ைகள் என்ற இத்து னுைக்குக%ள எழுதிர்ைகள், எழுது கிருஜர்கள், கமிழோசையுணர்வுத் தட்டுப்பாட்டில்ை ஒலிக் குழாம்பல்களாகவும், காதுரா விகளாகவும் உள்ள இவை புதிர்களா கவும், நொடிகளாகவும், கணக்குகள் போலவும் உள்ளவை?? என்று புதுக்கவிதையையும், ந.பிச்ச மூர்த்தி, தருமசிவராமு, வைத்தீஸ் வரன், சி. மணி போன்றவர்களையும்
விமர்சித்துள்ளார் முருகையன், ஆனல், வல்லிக்கண்ணனே முருகை யன் புதுக்கவிதை எழுதினர் என்று
கூறுகிருர், இது அப்பட்டமான பொய்யாகும். இவ்வாறே புதுக் கவிதை எழுதாதவர்களை புதுக்
கவிதை எழுதினர்கள் என்று மயங் கிக், குழம்பி, தெளிவற்று - புதுக் சவிதை எழுகியவர்களை எழுதிவருப வர்களை இருட்டடிப்பும் செய்துள்" ளார் வல்லிக்கண்ணன்.
ஈழத்துங் புதுக்கவிதை வரலாற் றில் இன்றுவரை வெளியாகி உள்ள புதுக்கவிதைத் தொகுப்புக்களையும் இன்றுவரை தொடர்ந்து எழுதி வரும் புதுக்கவிதையாளர்களையும் விடுத்து, ஒரே ஒரு இதழையும், நான்கே நான்கு பேர்களையும் குறிப் பிட்டு பொறுப்புணர்ச்சியுடன் அணுக வேண்டிய ஒரு பணியை இப் படிக் கைநஞவ விட்டிருப்பது வல்
லிக்கண்ணன் அவர்களின் ஈழத்து இலக்கியக் கரிசனையை தெளிவு படுத்தியுள்ளது.
இனிமேலும் இதுபோன்ற பணி
களில் வல்லிக்கண்ணன் போன்ற
பொறுப்புணர்ச்சி உள்ள எழுத்தா ளர்கள் நியாயமாக நடந்து கொள்ளு வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
UN L L turrr6ør
தந்திரக்
தெறிகள்
UMA PATHY Prime Rose Villa, 20, Water Tank Road, Nagercoil 629001.

Page 12
22
- SSiiiiS SSSiiSSSS SASqSii SS q qi iiSiiiSS SiSASSS SSSSS SiSAiAi qSqqSqSAA ASSiiS iiSiDBDBLSiMS * ***, *M' KWN
சுவடுகள்
விடிவு
சமுதாயவிதியிலே
நூன்கவிதைகள்
ச ர வணை யூ ர் சுக ந் த ன் தொகுத்த "சுவடுகள்’ தொகுப் பில் டானியல் அன்ரனி எழுதியிருக் கும் குறிப்புகள் குறிப்பிடத்தகுந் தவை:-
** சமுதாயத்தில் சமகாலங் களில் நிகழும் அவலங்களைப்பற்றிய ஈன இரக்கமற்ற விமர்சனங்கள் புரையோடிக்கிடக்கும் சமுதாயப் புண்களுக்குச் சத்திர சிகிச்சை செய் வதற்கான தயாரிப்புகள், உலகி யல் பிரக்ஞையின்றி உணர்வுகள் மரத்துப்போய் உறங்கிக்கொண் டிருக்கும் உலக கொழிலாள வர்க் கத்தின் எழுச்சிக்காக.
ஒட்டிய வயிறும், உலர்ந்த உத டுகளுமாய் பட்டினிச் சாவுகளை நோக்கி பாதையோரங்களில் படுத் துறங்கும் இந்நாட்டு மன்னர்களுக் காக, அரசியல் விபசாரிகளின் அந் தரங்க ஆசைகளை அம்பலத்துக்குக் கொண்டுவந்து வெளிச்சம் போட் டுக்காட்ட, நித்திய துயர்களான எரிகின்ற பிரச்சினைகளை அநீதிக்கு எதிரான புளுக்கங்கள் னைக்தடத் தில் எழுப்பும் மிக நுண்ணிய அதிர் வுகளை தெளிவாக்கவும், இந்த சமூக அமைப்பை மாற்றியமைக் கக்கூடிய தெம்புகோலாக ". புதுக் கவிதை பயன்பட யேண்டும், இது வரவேற்கத்தக்கதே.
பூநகர் மரியதாஸ், சரவணையூர் சு சந்தன், திருமலை சுந்தா த. புஷ்பராணி, ஆகசி கந்தசாமி, மாவை நித்தியானந் தன் ஆகியோர் இன்றைய இளைஞர்களின் விரக்தி
யைத் தெரிவிக்கின்றனர். ஷெலி தாசன், அன்பு ஜவஹர் ஷா, நா லோகேந்திரலிங்கம், ராஜ பூரீ காந்
தன், அன்பு டீன், கல்முனை பூபால்,
சபா சபேசன், பாண்டியூர் க. ஐ. யோக்ராசா, முல்லை வீரக்குட்டி, ! ஆகியோர் சமூக அமைப்பை மாற் றப் போர்க்கொடி பிடிக்கின்றனர். சில அடிப்படை உண்மைகளை வகிரி சி. ரவீந்திரன், வ. ஐ. ச . ஜெயபாலன் (** நனவு’* மரபுக் சவி  ைதயாகவும் இதனை அடக்கலாம்) ஆகசி கந்தசாமி, கோ. வோக நேசன், தேவி பரம விங்கம், பொன் பொள் ராசா, ஆகியோர் எடுத்துக் கூறியுள்ளனர். சிலருடைய கவி தைகளில், ஏளனமும், கிண்டலும் தொணிக்கின் mன. மு பாக்கிய நாதன், நியாஸ் ஏ. கரீம், தாரலி,
சரவணைப்பொய்கை பிரபா, ஆக வன், இரா. நாகராசன், கனக பாலதேவி, வன்னி வளவன் ஆகி
யோர். ஒருவிதத் தயக்கமும், மயக் கமும், இயலாத் தன்மையும் கோப் பாய் சிவம், வானுவாவுன்னு செளமினி ஆகியோரின் கவிகை
கே. எஸ் சிவகுமாரன்
களில் காணலாம் சமரசப்போக்கை சேரன், நிருத்தன் (ஓசை நயமு டைய நல்ல கவிதையிது), பால முனை பாருக் ஆகியோரது கவிதைகளில் காண முடிகிறது. இது "சுவடு ' என்ற தொகுப்பில் இடம்பெற்
நறவை. **செந்தீரன்" எழுதிய **விடிவு" என்ற தொகுப்பைப் பார்ப்போம்.

23
இவர் எழுதியவை பெரும் பாலும், அநீதியை எதிர்த்தெழும் ஆவேசத்தைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன, இவற்றின் மத்தி யிலும், சமூக நடத்தையின் சில
போக்குகளை கூர்மையாக ஆசிரியர்
அவதானித்திருப்பதையும் காண
முடிகிறது. உதாரணம் : (1) உற்ற
துணைவன் இறந்ததுக்ண்டு கலங்கா நெஞ்சம் செல்லநாய் கேட்டு கலங்கித் துடித்தது. (2) மறுமணம் விரும்பா எங்களூர் சீமாட்டிகள் நாளுக்கொருவனுடன் ஆடும் ஆட்டங்களைக் காணச் சகிக் காது (3) மையம்பின் செல்லத் தீரா வியாதியுட்ைாவர் சாப்பாட்டுக்கு மாத்திரம் அத்தர் மனக்க விரைக் திடுதல் (4) விடுதலைக்கு வழியின்றி பருவத் துடிப்புகளை ஒடுக்கியவன் உழைக்க "கதீப் மிம்பரில்", அணு தைகளைக் கொடுமைப் படுத்த வேண்டாம் என முழங்கல் (5) பரு வக் கடப்பில் மணக்காப்பூக்கள் Φ_6υστΓτσι, θ, ஞது வேலிக் கண்களால், பசிப்பார் வையை அலையவிட்டு நிர்வாணச் சூனியத்தில் துணைதேடி ஏங்குகின் றன. இவற்றைவிட வேறு நய மான வரிகளும் இத்தொகுப்பில் உள்ளன. பல்வியின் பசிக்கு இாை
யாகாது தப்பிப்பிறந்த "வண்ணப்
பூச்சி விளக்கொளிபட்டு கருகிச் செத்தது. (6F6fflu unr? Grrr?) நாளை, துணிவு, உழைப்பு, சேரி ஒழிப்பு, எச்சரிக்கை, பென்ஷன், வெறுமை, எதிர்காலம், நாளை மல ரும் சூரர்கள் போன்ற தலைப்புக களில் எழுதப்பட்டவை செந்தீர னின் வர்க்க உணர்வுகளின் வெளிப் பாடு. ஏனையவை அவல நிலையின் சித்தரிப்பு. இவர் அவதானிக்கத் தக்கவர்.
‘சமுதாயவிதியிலே..?? என்ற தொகுப்பின் மூலம், ஊழல்களையும், வேஷதாரித் தனங்களையும் சுட்டிக் காட்டுகிருர் கில்லை யடிச்செல்வன். கெளரவம், நிதி, லஞ்சம், அதிச யம், பட்டம், நடிகர், சந்தர்ப்பம், ஆஸ்தி, வழி, பிச்சை, பொய், சுய நலம், கண்ணிர், கண்டதும். கொழும்போ
செத்துக்
(கடைசலைத் தாங்கொ
விபரங்களுக்கு: விலை 5/- 1 மேகங்கள்
ஊத்துக்குளி R S. 638752 FF (Big TG. R. M. S. (தமிழ்நாடு)
கொழும்பு ஆகிய
தலைப்புகளில் எழுதப்பட்டவை மிக நேர்த்தியாக இருக்கின்றன. இவர் ஆய்வறிவு அடிப்படையில் தமது உணர்வை வெளிப்படுத் துவாரா யின் நல்ல எதிர்காலமுண்டு
ஈழத்து நூன் எழுதிய, “நூன் கவிதைகள்** மார்க்ஸியச் சிந்தனை களை உள்ளடக்கியவை. புதுப் பிர யா. க ங் கள் கோ ண் புட வை. (1) பைத்தியக்கார விடுதியையும் பாராளுமன்றத்தையும் சமன் செய் தல் (2) நிதியின் முன்னல் நீதியின் வாய் அடைபடுவதாகக் குறிப்பி டல், (3) சுரண்டப்பட்டு வாழ்ப வன் கம்யூனிஸ்டாக மாறுதல் எனக் கூறல் போன்றவை நன்று.
புதுக்கவிதைகளில் கூடுதலான கவித்துவத்தை, தமிழ் நாட்டுக் கவி ஞர்களிடந்தான் அதிகமாக இப் பொழுது காணமுடிகிறது என் பதை நமது இளைஞர்கள் மனகி லிருத்தினுல் இன்னும் கூரிய நுன் னைர்வையும், செழுமையையும் நமது கவிஞர்கள் பெறுவார்கள் என நான் நினைக்கிறேன்.
“மாறுதலுக்காக அல்ல மாற்றத் திற்காகவே எழுதுகிருேம் ள்ன்று
பிரகடனம் செய்யும் மேகங் களின் "
மின்னல்கள்
விரைவில் வெளிவருகிறது
தமிழக - ஈழ புதுக் கவிதையாளர் களின் சிருஷ்டி.
அன்பு ஜவஹர்ஷா 101, புத்தகயா மாவத்தை, அனுராதபுரம். (பூரீலங்கா)

Page 13
罗会
படைப்பாளர்களின் சிருஷ்டி கள் பற்றி படிப்பாளர்களின் கருத் துக்கள் இக்கு இடம் பெறும்.
முதலாவது இதழுக்கு நாம் கேட்ட கேள்வி **சிறிய இலக்கிய இதழ்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?' என்பதாகும்.
தொகுத்தளித்தவர்:
་་་་་་་་་་་་་་་་་ எஸ். தவராஜா
O பெரிய அளவில் வெளிவரும் மாதாந்தச் சஞ்சிகைகள், வார வெளியீடுகள் அதிகமாய் நடமாடும் இன்றைய சூழ்நிலையில், ஒரு சிறிய இதழ் புதிய பாணியில் வெளிவரு வது வரவேற்கத்தக்கது.
செல்வி சரோஜினி நமசிவாயம்
* அக்னி" போன்ற சிறிய இதழ்கள் ஒரு இலடசிய நோக்குடன் வெளியா வதால் அகன் பணி முக்கியமான தாக அமைகிற க. ஆழ்ந் f கருத் துக்களையும் அழகாகச் சொல்லும் பொழுது தான் அவை வாசகர் உள் ளத்கை கவர்வனவாகும். இதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இன்றைய சூழ்நிலையில் சிறிய அமைப்பையும், குறைந்த செலவை யும் கொண்ட வெளியீடுகள் பெரி தும் விரும்பப்படும்.
புதுக் கவிதைகளையும் தரமான எண் னக் குவியல்களையும் அக்னியில் எதிர்பார்க்கிருேம்,
செல்வி பத்மாவதி யோகராஜா
O எனக்குத் தெரிந்த வரையில் எத் தனையோ சிறிய இதழ்கள் தோன்றி மறைந்து விட்டன. ஆல்ை அதன் பிரதிகள் இன்னும் பலரிடம் இருப் பதைக் கண்டுள்ளேன். காரணம் சிறிய இதழ்களின் தரமேயாகும்.
இலக்கியம் வெறும் பொழுது போக் கும் சாதனமல்ல. அது ஒரு சமு தாய மாற்றத்தையம், புதிய உல கையம் தோற்றுவிக்கும் வலிமை கொண்டது. "அக்னி" போன்ற இதழ்களின் புதிய நோக்கும், இலட் சியப் பார்வையும் சமுதாயத்திற்குப் பயன் விளைவிப்பனவாகும்.
பழைய சுவடுகளிலேயே நடக்காமல் புதிய இலக்கியச் சுவடுகளை நீங்கள் பதியவையுங்கள். அது ஒரு புத் துலக யாத்திரையாக அமையட்டும்.
இன்றைய இருளை அகற்றும் அக்னிச் சுவாலைகளே எதிர்காலத்தை வெளிச்சமடையதாக்கும் என்பது எனது எண்ணம்.
 
 
 

வரும் புதுக்கவிதைகள் என்னை
கவர்வனவாகும். சிறிய சிறிய கவி தைகள் புதிய புதிய கருத்துக்களை வெகு அழகாகச் சொல்லுகின்றன.
O தமிழ் இலக்கியத்தில் வளர்ந்து க்
செல்வி ஜீவரஞ்சிதம்
புதுக்கவிதை ஏடாக அக்னி வரு வதைக் கேட்டு மகிழ்ச்சியடை கிறேன். . . இன்றைய எங்கள் வாழ்க்கைப் பிரச்சிரைசு?ளக் காட்டுவகோடு மட் டும் நில்லாமல், அப்பிரச்சினைகளின் தீர்வுகளுக்காகவும் கவிதைகள் எழு கப்படவேண்டும். சிறிய இதழ்களில்தான் எழுத்தா ளர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்கக்களை எழுக முடியும் என்று நம்புகின்றேன். ஆகவே சிறிய இதழ்கள் எழுத்தாளர்களுக்கும், இலக்கியக் கிற்கும், சமுதாயத்திற் கும் மிக மிகப் பயன் காம், அக்னி வருகை தமிழ் இலக்கியத்தில் ஒரு
புதிய தோற்றுவாயாக அமையட்'
டும். '
O எதிலும் புதுமையே நாடி இன்
றைய உலகம் செல்லுகின்றது. ஆணுல், நாகரீகம் கற்பித்துக் கொண்ட அனைத்துமே "புதுமை’
என்று கூறி விட மு டி யா த. புதுமை என்ற பெயரில் போவி களும், அநாகரிகச் சொல்களும் இடம்பெறுவகை நாம் சகிக்க முடி யாது. இலக்கியத்தில் "ஹிப்பிக் கவிதைகள்” நமக்கு வேண்டாம். ஒரு அர்த்தப் புஸ்டி உள்ள நவீன படைப்புக்களே எமக்கத் தேவை. புதுக்கவிதைகளை நான் வரவேற் கிறேன். நொடிகளாக விடுகதை
25
செல்வி லீலாவதி இராஜதுரை களாக இருப்பதை நான் வெறுக்
கிறேன். சிலர் தனக்கும் புரியா மல், பிறருக்கும் விளங்காமல் எழுதுகிருர்கள். 'இன்டலக் ஜ"வ லுக்காகவாம். இவர்கள் எழுதித் தான் இன்டலக் ஜ"வல்கள் புரிய வேண்டுமா? "லிட்டில் மெகஸின்" கள் மூலம் நல்ல இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க முடியும். அக்னி இதைச் சாதனையாக்க வேண்டும்.
isiak
திருமதி புஸ்பா நவரேந்திரன்
O "அக்னி" போன்ற சிறு இதழ்கள் நாட்டிற்கு நல்ல பயனை அற்ற முடியும். புதுக்கவிதைகள், விமர் சனங்கள் இடம்பெறுவதால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். "விமர் சனம் என்ற நாமத்தில் பிறரைத் திட்டித் தீர்க்காமல், நடுநிலைநின்று விமர்சிக்கப்படுபவர் உள்ளம் புண் படாமல் கருத்துக்களைச் சொல் வதே நன்று எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றி வாசகர்களின் கருத்துக்களை கேட்பது ஒரு நல்ல முயற்சி. சமைப்பவர்களேவிட அதைச் சாப் பிடுபவர்கள் நல்ல சுவையைக் கூறு வார்கள் அல்லவா?

Page 14
26
"திக் கவிை தகளும் திகம்பரக் கவிகளும்
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநக ரான ஹைதராபாத்தில் ஆறு இளை ஞர்கள் தங்க*ளக் "கிகம்பரக் கவி கள்" என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்.
இந்த ஆறு இலைஞர்களும் தங்கள் இயற் பெயர்களை விடுக்து நிகி லேஸ்வர். நக்னமுனி, ஜிவால்ாமுகி, செரபண்டராஜீ, பைரவைய்ா, மகாஸ்வப்ன, என்ற புதிய புனைப் பெயர்களைச் சூட்டிக் கொண்டார்
56.
- - ܚ •ܫܝܚܐ ܗܝ ܘܚܙܚ
ஈழவாணன்
இவர்களத முதலாவது பகிரங்கப் பிரகடனத்தில் தங்களை இனங் காட்ட முனை ந்க இவர் கள் *உலகை மூடியுள்ள அறியாமை என்னும் முகமூடிகளைக் களைந்து, புதிய ரத்தத் ைகப் பாய்ச்சுவதற் காகத் சாங்கள் வந்ததாகவும், தங்கள் நெஞ்சில் பீறிட்டெழும் உணர்ச்சிக்%ளத் தைரியமாகவும், நிலைபெறும்படியாகவும், வெளியிடு வதாகவும் தங்கள் கவிதைகள் பழைய மரபுகளை மீறியதென்றும் கூறினர்கள்,
தெலுங்கு இலக்கியத்தில் இவர்க ளது கவிதைகள் ஒகு நவீனத் தன்மை கொண்டதான இக் கவிதை களுக்கு "திக்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்,
பேராசையுடன் முயன்று,
டுள்ளன்ர்.
*திச்" கவிதைகளின் சிருஷ்டித் தத் துவத்தைக் கூறும்போது "இந்தப் பூமியில் தான் வாழவேண்டும் என் பதற்காக ஒவ்வொரு மனிதனும் விடு கின்ற பெருமூச்சுகளில் இருந்தும், அவனது எதிர்காலத்தை நினைத்து அவனுக்காகச் சிந்தப் படுகின்ற கண்ணிர்த் துளிகளினின்றும் எமது கவிதைப் படைப்புக்கள் உயிர்த் தொழுகின்றன’’ என்று குறிப்பிட்
இவர்களது கவிகைகள் நசுக்கப் பட்ட மக்கள் குரல்களாகவும், சமு தாயச் சித்திரிபபுகளாகவும், உல கில் நடக்கும் கொடுமைகள், போர் வெறிகள் பற்றியும் . சில அடிமனத் துள்ளல்களாகவும், போலி நாகரிகச்
சாடல்களாகவும் உள்ளன.
'திக் கவிதைகள் சில புகிய உத்தி களாகவும், உருவகக் குறியீடுகள"
கவும் அமைந்திருப்பதால் கலையம் சத்கிலும், சிக்தனையைக் கிளm வ கிலம் வெற்றி பெறுகின்றன. சில கவிகைக்ள் கற்பலையத்திலும், அமைந்துள்ளன.
கவிஞன் கன் படைப்புக்களில் கற்
பனையைப் படைப்பது வேறு - கவி ஞனே கற்பனவாதியாக மாறுவக வேறு ஆனல் இவர்களில் சில கவி ஞர்கள் கற்பனவுாதிகளாக மாறி யும் விடுகின்றனர். இவர்கள் சமூக நிர்ப் ந்கங்களைக் களைந்தெறிந்த விட்டு கனிமனித ஆளுமையைக் கிளாறி அவனை விமிப்படையச் செய் யம்போதுதான் இந்நிலைக்கு ஆளா கின்றனர்.
இன்றைய உண்மைகளையும், விருங் கால மகோன்ன கங்களையும் எதிர் கொள்ளகம் இவர்களின் முதலாவது கவிகைத் தொகுப்பு *திகம்பா கவிலு? என்றபெயரில் வைm காா பாததில் "நம்பள்ளி பாண்டு? என் m ஒரு சிக்ஷாத் தொழிலாளியால் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப் Llull-51. V
༄།

· ፡7
இவர்களின் இரண்டாவதுகவிதைத் தொகுப்பு விஜயவாடாவின் தெரு வில் 'ஜங்கன் சிட்டி" என்ற ஹோட்டல் தொழிலாளியால் நல் லிரவு 12 மணிக்கு வெளியிடப் Lull-gill
"இன்றைய குஷ்டரோகம் பிடித்த அமைப்புகளைப்பற்றி திகம்பரக் கவி க"ள் என்ற இவர்களது மூன்ரு வது கவிதைத் தொகுப்பு விசாகப் பட் டினத்தின் தெரு ஒன்றில் நல்லிரவு 12 மணிக்கே வெளியிடப்பட்டது! இத்தொகுப்பை வாழ்வில் வஞ்சிக் கப்பட்டு, பரிதாபமான நோ ய் பிடித்த ஒரு பெண்மணியான ** எது மனுாரிய சோதா?’ என்பவரே வெளியிட்டு வைத்தார்,
இவர்களது கவிதைகளில் சில வற்றை இங்கு Lutri Gurth. "என்னைக் கூண்டிலேற விடுங்கள். என்ற 'செரபண்ட ராஜா'வின் கவிதையின் சில வரிகள்,
'மனிதன் மீது
நம்பிக்கை
இழந்த நீங்கள்
கடவுள் மீது
grudnr 600Tb
செய்யச்சொள்வது
ஏன்? صبر நிரபராதிக்கும் குற்றவாளிக்கும்
ஒரே சூத்திரம் மனப்பாடம் செய்து வாதிக்கிறீர்கள்!" நக்ன முனியின் 'சுகரோகி” என்ற கவிதையில் சில வரிகள்
* * g-b எழுந் திரு” s திறந்த கண்களை இனி மூடாதே! நீ யார் சொல்வதென்று கழுத்தை அமுக்க முயலாதே رநம்மிருவரிடையேயும் வலிவான பந்தம் உளது முதலில் நாம் மனிதர்கள்??
பைரவய்யாவின் ‘அக்னிபிரவேசம் என்ற கவிதையில் சில வரிகள்: பொம்மைக் கத்திகளின் கூர்முனையில்
உண்மைபோல
வான்தொடும்
தீக்கொழுந்துகளின்
முனையில் புகைபோல கண் சிதற மனம் பதற வந்தேன். மெளனத்தில் ஆதிமனிதன் கேட்ட ஆசி சப்தம்போல வந்தேன் தாயின் சருவில் பேச்சுக் கற்றுக் கொண்ட குழந்தை போட்ட முதல் கூக்குரலரக வந்தேன்.
பைரவையா "திகம்பரம்’ என்ருல் என்ன என்று விளக்குகின்றர். **திகம்பரத்துவம்
ஆடைகளை
வீசி எறிந்து
நடுவீதியில்
குதியாட்டம்
போடுவதல்ல
சொற்களால் துகிலுரிதலுமன்று, மனிதனிடம் வீழ்ந்து கிடக்கும் மனிதத் தன்மையை கரையேற்றுவது?" என்று கூறுகின்றர்.
(*திகம்பரக்கவிகள்" என்ற வானெலிப் பேச்சின் சுருக்கமும்-பிற குறிப்புக்களும்)

Page 15
புதுக்கவிதை விமர்சன ஏடான
அக்னி
மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களமாய் இருப்பது கண்டு மகிழ்ச்சி,
உங்கள் இலக்கியப் பிரவேசம் ஒரு புதுயுகத்தின் வைகறைக்கு வரவுகூற எங்கள் வாழ்த்துக்கள்.
வானவில் கலையரங்கம்
53, ரன்சிவில் லேன், பம்பலப்பிட்டி, கொழும்பு - 4.
بوهر

மனிதாபிமானப் படிைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக்களமான "அக்னி"
கலை . இலக்கிய உலகில் நல்ல பல சாதனைகளை நிலைநாட்ட
எங்கள் நல்லாசிகள்.
திருப்பாலை முத்தமிழ் நாடக மன்றம்
99, தலவத்துக்கொட ரோட், பிற்றக்கோட்டை,

Page 16
மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களமான
அக்னி
இந்நாட்டில் தரமான இலக்கிய கர்த்தாக்களையும் வாசகர்களையும் உருவாக்க வேண்டும் என வாழ்த்துகிருேம்.
எழுத்தாளர்களே உங்கள் நூல்களை சிறந்த முறையிலி. அச்சிடுவதற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
சாந்தி அச்சகம் 14/6, பெர்னந்து அவெனியு, நீர்கொழும்பு.
عینی
 

நவீன உடிை அணியும் நாரீக ஆடவர் நாடுவது ரவி டெய்லர்ஸ்
உங்களுக்கு உகந்த உடைகளை உரிய நேரத்தில் பெற விஜயம் செய்யுங்கள்
ரவி டெய்லர்ஸ்
11, பெளத்தலோக மாவத்தை, (புள்ளர்ஸ் ரோட்) கொழும்பு-4.

Page 17
"இயற்கையில் கடவுள் தன்மை உயர்ந்த நெறி. இயற்கையில் லும் மழை மிகச் சிறந்தது. உ6 நடக்கவேண்டிய வகையில் இ ஒரு பெரிய சக்தியை நினேத்து மாக உள்ளது"
=டாக்டர். மு
மனிதாபிமானப் பசுடப்பா சித்தனேக்கனமான "அக்ன எங்களின் இதயம் நிறைந்த
கிரவுன் கெமிக்
(சகலவிதமான பட்டிக் வர்ண
ஏ. வி. ஆர். ஏ
191), செட்டிய
கொழும் தொலேபேசி: 3 1282 -
Editor Eelavanan and Published by N. Logend Sri Lanka. Printed at Santhi Printers, NE
is

யைக் கண்டு போற்றுவது அமைந்துள்ள பலவற்றி பக வாழ்கை இடையருமல் இயற்கையை இயக்கிவரும் உருகுவதற்கு இது காரண
2. வரதராசன்
ாளிகளின் முற்போக்குச் சி' யின் வளர்ச்சிக்கு நல் வாழ்த்துக்கள்!
5) (6) "சாய விற்பனேயாளர்கள்)
கட்டிடம் பார் தெரு, 나-11.
தந்தி: "சிவிக்"
fralingam 33, Lauries Road, Colombo - נםbוחםק: