கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1990.04

Page 1
தபாற்பெட்டி இல, 77, = யாழ்ப்ப
SLLLMLMLSSLA MMLMMSMMMSMMSLLLSSMSSSMSSSMSeSMSASASASASLS AA SAASASASASASASASe q ASASASASAqSqSqSqSqSqSLSLS
SLSLSASeSeASASTSYSASSMSASS
கெளரவ ஆசிரியர்: திரு. க. சி. குலரத்தினம்
தமிழும், தமிழர் கூட்டமும், ! இ தமிழ்க் கலையும் கலாசாரமும் பு
தி நிலவத் தம் தவப்பயனைப் பயன்ெ
蓝
---- s - 그
ண்டகாலம் பன்முகப் பணிபுரிந்து
கவியோகி சுத்தா6
அவர்க
 
 
 

23233 தொலைபேசி ההתחלתה ח
* சித்திரை 1990 * இதழ்-172
■
தமிழ் பேசும் நல்லுலகமும், துப்பொலிவும் வலுவும் பெற்று சய்தவாறு தம்மை அர்ப்பணித்து
சமாதிப் பேறெப்திய பெரியார் Obj5 TITUTUGUETTíf எரின்
சிறப்பிதழ்

Page 2
AAAAAAAAAAAAAAAAAAAAYVW
சுந்தரமூர்த்திநாயனுர் தேவாரம்
திருவாமாத்தூர் பண்-கொல்லிக் கெளவாணம்
திருச்சிற்றம்பலம் காண்டவன் காண்டவன் காண்டற்கரிய
- sL-6, 6uralj நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன்
தேடவே ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும்
எனையுமாட் பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல்
- புரளவே.
திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எங்கள் சிவஞர் தம்மடியார்களுக்கு எளிதில் காணப்படுபவர், ஆளுல் திருமாலும் பிரமனும் தேடியபோது காண்டற்கரியவ ராய் நீண்டவர். அவர் திருமாத்தூரையும் ஆண்டவர் அடியேனையும் ஆளாக்கி ஆட கொண்டுள்ளவர். ஞானக் கண் எனப்படும் முப்புரிநூலாய பூணுரலைத் தம்மார்பில் புரளுமாறு பூண்டவர்.
நன்றியிற் செல்வம் அற்றர்க் கொன்று ஆற்றதான் செல்வம் மிகநலம் பெற்றுள் தமியன்மூத் தற்று
tár விளம்பரமில்லாத தான
 
 

வந் செய்தி 1-4-$0
ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கமாட்டாத இயல் புடையவனுடைய செல்வமானது, அழகுமிகுந்த கன்னிகை யொருத்தி கணவன் இல்லாமல் தனியாய் வாழ்ந்து மூப்பு அடைந்தாற்போலுமாப .
Wasted Weath
The wealth of a man who does not help the poor and needy is like the beauty and endowment of a woman remaining single and getting old.
We bow our heads
Siva is the symbol and goal of all the six old religiors Ve das and Agamas conceive Him as imper Scinal. Inner knowledge knows him as grace He is the Mother and Father of creatures. He is ever as He is in His different aspects. We bow
our heads at his saviour - feet. ఎభజి
ത്ത
... . Y.
The Silent Master
Under the Banian Academy. He sits in plenum silence and instructs the four sages who are adepts in Veda and by anches. He is the all ànd Nihil. He is himself as he is, His wordless peace speaks his self - existence Thought - free let us meditate upon him and cut the bonds of birth and death.
Thou art my all
Thou art my Father, my Mother, my Master my fond uncle and my aunt. Thou art amiable women, glittering treasure, my family, kith and kin kindred and nation Thou providest the means of my life and enjoyment. Companion of my existence . Thou leadest my path and openest my heart to Thy love. Thou art this gold, this gem, this pearl and this wealth, Thou art, Oh Bull - rider my ord, my God.
We are subject to none Subject we are to none. Death we fear not. liell we suffer not. We are not weaklings. We w know no dise ase. We are serfs to none. We enjoy eternal bliss; no misery for us. For we are i servitors of the king of all beings who is bound to cone. He wears white chanks in his ears. Shan kara - we are His and we take refuge at His lotusfeet. . . . لنه کهn ۔ه
s . அவர்கள் -
ாம் உண்மையான தர்
ܪ

Page 3
1:1-90 மில்க்வைற் ெ
கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள்
தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் உணர்ச்சிக்கவி என்றும் அன்புக்கவி என்றும், ஆவேசக்கவி என்றும் யோ “சுவிசனன்றும், புதுமைக்கவி என்றும் புகழ்பெற்ற -uடத பாரதியார் அவர்கள் பல்லாயிரம் 'ர்ட்ல்கள் பாடியமையோடு, நூற்றுக்கணக்கான நூல் ^க்ளும் எழுதிய பாரகவியாவர்
மகரிஷி எனவும் வழங்கிய பெரும்புலவர் இயல் இசை நாடகம் அறிந்தவர் பலவாய மொழிகளறிந்தவர், அறுப தாண்டுகளுக்கு மேல் அருந்தவம் புரிந்தவர். ஒரு சமயம் பன்னிரண்டாண்டுகள் மெளனதவம் புரித்தவர்.
யோகத்துறையில் வெகுவாக ஈடுபட்டுப் பல்வேறு ஆசனங்களையும் நன்கு பழகிப்பயிற்சி செய்து, தமது உடம் பைக் கடதாசி மடித்தாற்போல் மடிக்கவும் ஒடுக்கவும் அறிந்தவர். உள்ளத்தை ஒடுக்கி உள்ளொளி பெருக்கி உணர்ச்சியில் அறிந்தவற்றை உலகினர்க்குப் பலமொழி களில் தந்தவர்.
சுவாமிகள் ஒரு காலத்தில் இராமச்சந்திரபுரத்து ஆனந் தாச்சிரமத்திலும், புதுச்சேரியில் அரவிந்தாச்சிரமத்திலும் பெருஞ்சாதனைகள் புரிந்தவர். அரவிந்தமா முனிவரோடு நெருங்கிப் பழகியபோது ஹடயோகமும் கைவரப் பெற் றவர். இவருடைய பெருமையையும் பேறுகளையும் கண்டு பொருமை மிகுந்தவர் ஒரு சிலர் ஒரு சமயம் இவரை ஒழித்து விடக்கருதி விடங்கலந்த உணவைக் கொடுத்த தும் உண்டு. உண்டஉணவு வயிற்றை அடைவதன்முன் *இவர் தமது யோகாசனங்களின் பயிற்சி விசேடத்தால் உண்ட உணவை உவாந்தி செய்து ஊனமின்றி உயிர்தப்பி யதும் உண்டு.
அரவிந்தப் பெரியார் வங்காளத்திலும், பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் அவ்வப்போது எழுதி க் குவித்த ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிறைந்த பாடல் கள் உரைகள் அத்தனையையும் சுவாமி சுத்தானந்தர் செந்தமிழில் எழுதி வெளியிட்டதும் உண்டு. அரவிந்தப் பிரகாசம் என்பது சுவாமிகள் மாமுதிவரைப்பற்றி எழு திய வரலாற்றுநூல்.
அரவிந்தர் எழுதியவை அதிமனிதருக்கே அரு  ைம u Tos விளங்கக்கூடிய சங்கதிகள். அவற்றை எழுத்தெண் ணிப்படித்து விளங்கி, சாங்கோ பாங்கமாக மொழி
སྣ་
r
12- ":ثمة ثا శ్రీఫ్కే 兰岔
-vuss:==
யே கொடுப்பதில் மகிழ்ச்சி ெ
 

FüS 3
பெயர்த்துத்தத்த பெரும் புலமையையும் யோகசாதனை யும் சுத்தானந்த மகானின் பாற்பட்டவையாகும்.
சுத்தானந்த பாரதியார் அவர்களை நாமறித்த வகை யில் யாழ்ப்பாணத்தில் பழக்கி வியாபக முறச்செய்தவர் றெயில்வே திணைக்களத்துப் பெரும் உத்தியோகத்தரா யிருந்த சைவப்பெரியார் உயர் திரு. க. இராமச்சந்திரன் அவர்களாவர்.
இற்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் இராமச்சந்திரன் அவர்கள் யாழ்ப்பாணம் விக்ரோறியா வீதிச்சந்தியில் வாழ்ந்தபோது, இத்தியாவின் இணையற்ற ஆனந்தாச்சிர மத்துப் பெரியவர்களின் படங்கள் வைத்துப் பூசித்துப் பஜனை செய்து சிற்றுண்டி வழங்கியவர். அவருடைய பிள்ளைகள் யாவரும் இளமையிலேயே பக்தி நெறியில் பயிற்சி பெற்றுப் பணிசெய்ய ஆளானவர்கள். அவரு டைய வீட்டின் மண்டபம் அனய பூசை அறையிலே அர விந்தர், இரமணர், இராம்தாஸ். அன்னை கிருஷ்ணுபாய். சுத்தானந்தர் முதலானேரின் படங்கள் கொலுவிருந்தன. சுத்தானந்த பாரதியார் முதன் முதலாக யாழ்ப்பாணம் வந்தமை வரலாற்றுப் பெருமைக்குரியதாயுமிருந்தது நீராவியடி நாவலர் மண்டபத்தில் அவர் கால் வைத்த தும், எங்கிருந்தோ மேகங்கள் கூடிப்பெருமழை பெய்து வெள்ளம் பெருகியது. வரவேற்புரை பேசிய புறக்ரர் அ. அருளம்பலம் அருமையாகக் கூறிஞர். யாழ்ப்பாணத் துக் கமக்காரர் வயலை உழுது விதைத்த பின் சுவாமி அவர்களை வரவேற்றிருந்தால், நாட்டில் பெருவிளைச்சல் உண்டாயிருக்கும்.
இவ்வாறக சுவாமிகள் பேசுவதன்முன் ஆறுமுகநாவ லர் படத்துக்குப் பஞ்சாலாத்தி காட்டிக் கும்பிட்டுக் கண்ணிர் பெருக்கியதும் உண்டு. சுவாமிகள் நாவலர் பெருமான் என்ருெரு நூல் எழுதியதும் உண்டு. ஆனல் அந்த நூலில் அவர் குறிப்பிட்ட தகவல்கள் சில தாம் தம் ஆசிரியர் தெய்வசிகாமணி என்பாரிடம் அறிந்த தாகக்குறிப்பிட்டார்.
அக்குறிப்புகள் நாவலர் - இராமலிங்கம் அருட்பா. மருட்பா சம்பந்தமானவை. உண்மையில் தவருனவை, எனவே சிலர் அபிமானங் காரணமாகக் குரல் எழுப்பி யதும் உண்டு. சுவாமிகளிடம் நாம் தணிப்பட்ட முறை யில் விளக்கம் கேட்டபோது, அவர் அதில் உள்ள நான்கு பக்கங்களை மறுபதிப்பில் நீக்கி விட லா ம் என்றும் விரும்பிஞல் புத்தகப் பதிப்புரிமையை யாழ்ப்பாணத் தாரே ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சொன்ஞர். நாங் கள் நூலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் எவ்வித கசப்பும் இல்லை.
சுவாமிகள் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் சமரச ஞானம் பேசியபோது, புறமதத்தவர்களும் பெருமளவில் செவி கொடுத்துத் தலையசைத்தார்கள் சுவாமிகளுக்கு நாளடைவில் நாடெங்கும் நல்லவரவேற்புக் கிடைத்தது. அவர் எங்கள் நாட்டுக்கு மீண்டும் மீண்டும் வருகை புரிந்துள்ளார்கள்.
வன்னியில் வவுனியா நகரத்தில் சுத்தானந்தர் பெய ரால் மண்டபம் ஒன்றும் வேறு நிறுவனங்களும் உள்ளன. அந்த மண்டபம் ஆலயம்போலமைந்திருப்பதாகப் பிற
கொள்பவனே மனிதன் 'r

Page 4
4. மில்க்வை
மொழியும் புறமதமும் தழுவிய படைவீரர் கருதித் * தேவாலய" என்று கூறி ஊறுபுரியாமற் போனர்கள் என்று கேள்வி.
சுத்தானந்த ரோடு நெருங்கிப் பழகியவர்கள் சிலர். அவர்களை நாயறிந்த வகையில் குறிப்பிட்டால் மணிய காரன் சதா. பூரீநிவாசன், எஞ்ஜினியர் இ. வைத்திலிங் கம், அதிபர் ச. அம்பிகைபாகன், தொழிலதிபர் க. கனக ராசா முதலானேராவர். இவர்களுள் தொழிலதிபர் கனகராசா சுவாமிகளோடு விடாப்பிடியாய்த் தொ டர்ந்து பழகி வந்தவர். சுவாமிகள் இவரை அன்பு கனிய கனகநாயனர் எனக்குறிப்பிட்டு அழைப்பதும், வரவேற் பதும், கடிதபெழுதுதலும் வழக்கமாகும். பால் வெள் ளைச் சவுக்காரத்தை தமிழ் நாட்டில் தமது நாற்பது பரப்பு நிலத்தில் தொழிலகம் அமைத்துத் தயாரித்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யுங்கள் என்று ஆவேசமாகக்கூறி ஆசிவழங்கியதும் உண்டு. ஒரு சமயம் தாம் வழிபட்ட நட ராசர் படத்தை எடுத்து வந்து இவரிடம் கொடுத்ததும் alsif ().
சுவாமி அவர்கள் தாம் எழுதிய நூல்களுக்குப் பதிப் புரிமை முதலியன பதியவைத்ததாகத் தெரியவில்லை. அவர் கவியரங்கில் தலைமைதாங்கிப் பாடியபாடல்கள் நூற்றுக்கணக்காக வெளிவநதுள்ளன. இன்னும் ஆடிப்பாடு வதற்கான கீர்த்தனைகள் பலவும் இசை நுணுக்கத்தோடு தந்துள்ளார்.
சுவாமிகள் ஐம்பதாண்டுகளுக்குமுன் நடத்திய கிருக லட்சுமி என்னும் சஞ்சிகை அன்று பெருமதிப்புடைய தாய் சித்திரசகிதமாய் வெளிவந்தது. கண்ணனைப் பற்றி யும், புத்தரைப் பற்றியும் கனிவான பாடல்கள் பாடி யமை நல்விருத்தாயிருந்தன. சுவாமிகளின் பாரதசக்தி காவியம் உச்சமானது. அதற்குத் தமிழக அரசாங்கம் காலங்கடந்து வழங்கிய போதிலும் லட்சக்கணக்கான ரூபா வழங்கிப் பெருமைப் படுத்தியது. சுவாமிகளின் யோகசித்தி மற்ருெரு பெரிய நூல். சுவாமிகள் செய்த நூற்றுக்கணக்கான நூல்களே ஒரு தனியார் நூலகத்துக் குப் போதுமானவை.
சுவாமிகள் அவ்வப்போது எங்கள் நாட்டையும் எங் கள் புலவர்களையும் எங்கள் படைப்புக்களையும் இருதய பூர்வமாக வாழ்த்திப் பாடியுள்ளார். அன்று திக்கெட்டும் புகழ் பரப்பிய ஈழகேசரி பர்மா மலேசியா, தென்னுபி ரிக்கா எங்கும் செந்தமிழ் பரப்பியது. ஈழகேசரி பத்திரி கையின் பெருமையையும் பணியையும் சுத்தானந்த பாரதி யார் பெரிதும் மதித்துப் புகழ்ந்துள்ளார்.
சென்னையில் ஒருநாள்
தமிழ்த்தாதா உ. வே. சாமிநாதஐயர் அவர்களும், சுத்தானந்த பாரதியார் அவர்களும் சுவாமி விபுலானந்த அடிகளாரும். ஒரு நாள் சென்னையில் பேச்சு. அன்றைய பேச்சுக்களில் விபுலானந்தர் பேச்சு உச்சக் கட்டத்தை அடைந்தது. ஐயா அவர்கள் வாயூறி, "பிராமண குலத் தில் பிறக்க வேண்டிய நீங்கள்” என்று பாராட்டினராம். படிப்பும் பாட்டும் ஒரு காலத்தில் பிராமணரின் ஏகபோக உரிமையாய இருந்ததாம் என்பர்.
-X யோகம் நல்ல ܘ

பற் செய்தி 1 0 (گیت 4 سے
பூர்வாச்சிரமப்புதிர்
சுத்தானந்த பாரதியார் இன்னும் ஏழாண்டுகள் வாழ்ந்தால் நூருண்டு கண்டவராவர். அவர் பரம்பரை பரம்பரையாகப் புகழ் பெற்றுவந்த வைதிக அந்தணர் குலத்தவர். வேதம்வல்ல சங்கரஐயர் பதினெட்டாம் நூற் ருண்டில் புகழ்பெற்ற வேதியர். சிவகங்கை என்னும் திவ்வியம் பழுத்த ஊரில் குடியேறிய அவர்தம் குடும் பத்தில் வந்தவர். அழகிரி சாஸ்திரிகள். சாஸ்திரிகள், அவர் மைந்தன் சாம்பமூர்த்தி, சாம்ப மூர்த்தியார் மைத் தன் ஜடாதர், ஜடாதர் காமாட்சி அம்மையார் என்னும் பெண்ணை மணந்து பெற்ற மைந்தன் வேங்கட சுப்பிர
மணியம் தோன்றிய நாள் 1-5-1897.
வேங்கட சுப்பிரமணியம் இளமையிலேயே துடியாட் டம் உள்ளவர். அவரைக்கண்ட பெரியவர் ஒருவர் அவ ரிடம் ஒரு மாம்பழம் கொடுத்து, " நீ சுத்தன் ஆனந்தன்' என்று கூறிச் சக்தி மந்திரத்தை உபதேசித்து ஆசிவழங் கவே, வேங்கட சுப்பிரமணியம் சுத்தானந்தர் ஆயினர். பாடிக் குவித்த பாவலர் w சுத்தானந்த பாரதியார் அவ்வப்போது பாடிய பாடல்கள் பல தொகுதிகளாகி வெளிவந்துள்ளன. சக்திப் பாடல் என்பது ஒரு தொகுதி. பக்திப் பரவசம் மற்ருெரு தொகுதி. இன்னும் பேரின்பம், அன்புறுதி என்பன யோக சாதனம் எனவுள்ளவை.
அடுத்து சமயசாரம் என்பது இன்று நிலவும் சமயங்களின் தத்துவங்களையும் அநுட்டான விதிகளையும் கூறு வது குழந்தையுலகில் குதூகலமாகப்புகுந்து பாடி ய தொகுதி குழந்தை இன்பம் என்பதாகும். தமிழர் என் னும் இனத்தவரை முன்னேற்றுவதற்காக ஆவேசப்பாடல் களேக் கொண்டமைந்தது தமிழ்க்கணல். காலங்கழியும் போது உலக மாற்றத்துக்குத்தக்கதாக சமூகமும் மாறி
ழியைக் காட்டுகிறது. <
༄་་་་

Page 5
tSléibéitear 4-90چl
யமைதல் வேண்டும் என்பதை விளக்கிப்பாடிய பாடல் களின் தொகுதி முன்னேற்றம் என்பதாகும். சுத்தானந்த பாரதியார் சக்தி உபாசகராய்ப் பாரத சக்தியைப் பர விப்பாடிய பாடல்கள் எந்தாய் என்னும் தலைப்பில் தொகுக்கப் பெற்றுள்ளன. பாரதநாடு இன்ப நிறைவு காணல் வேண்டுமென்பதே கவியோகியாரின் அபிலா சையுமாகும் மனிதவாழ்வு மாசு மறுவற்றதாய்ப் பூரண மானதாய்ச் சிறக்கவேண்டும். அமரவாழ்வு திவ்வியம் பழுக்க வேண்டும் என்பது அவர் அபிலாசை,
பெரியவர்கள் பாராட்டு
சுத்தானந்தர் காலத்துக்குக்காலம் செய்த நூல்களை அவர் தம் சமகாலப் பெரியோர் பலரும் வெகுவாகப் urrant queir6TTrisoir. Gug rr&hur asnt. arti 9g LD6ushu பிள்ளை, பெரும்புலவர் தேசிகவிநாயகம்பிள்ளை, பெருந் தொண்டர், பெரியார் கலியாணசுந்தரஞர், பேரறிஞர் உ. வே. சாமிநாதஐயர் முதலானேர் பாராட்டிய உரை assir ' “akru-laauarib.
~ക്നർ அன்பு நிலையத்தார் சுத்தானந்தபாரதி யாரின் நூல்களையே மாலைபோலத் தொடர்ந்து வெளி யிட்டு வந்தார்கள் பாரதியார் அவர்களின் எல்லா நூல் களுமே நாயகமானவை. அவரின் பாரதசக்தி மகாகாவி யம் பன்னிராயிரம் பாடல்கள்வரை பயின்று வந்ததாகும். அவர் இதனே இருபதாண்டுக் காலத்தில் இயற்றிஞர் என்ப. இக்காவியத்தில் கவியோகியாரின் சிந்தண் ஊற் றுக்கள் மிகத்தெளிவாக ஆற்றேட்டம்போல வந்தமைத் துள்ளன. பாரதநாடு பழம்பெரும் நாடு. வேதம், வேதாங் கம், உபவேதம், உபநிடதம், ஆகமம், திருமுறை, திவ் வியப்பிரபந்தம், குமரகுருபரம், தாயுமானவம் முதலியன யாவும் இந்தியசிந்தனே யென்ருற்போலச் சுத்தானந்தர் சிந்தனைகளும் இந்திய சிந்தனைகளேயாம். அவருடைய சிந் தனகளைப் புதுச்சேரிப் பிறெஞ்சுக்காரர் நிறைய உண்டு உய்திபெற்று உயர்ந்தும் உள்ளார்கள்.
ஈழகேசரியில் மலர்ந்தவை
அன்று 1938ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழகேசரி ஆண்டுமலரில் சுத்தானத்த பாரதியார் பாடிய தமிழர் காலைப்பாட்டு முன்பக்கங்களை அலங்கரித்தது. அவர் பாடிய ஆறு பாடல்களுள் மூன்றையாவது நினைவுபடுத் தலாம்.
'இன்னி சைக்குழல் வீணை யேத்தொலி
யெண்டி சையு முழங்கின பன்ம தத்தின ரொன்று கூடிப்பல்
லாண்டு பாடித் துதிக்குனர் மன்னு மாதவர் ஆசி கூறுனர்
மன்னர் வாகைகொண் டுற்றனர் பொன்ன ரியிணை யேற்றி யன்னையைப் போற்றி செய்ய எழுந்திராய்
,யோகம் உடம்பையும் உள்ள

வற் செய்தி 5
தெய்வக் காலே புலர்ந்த தன்பர்கள்
திருவெம் பாவை யிசைக்குனர் சைவர், வைணவர், சாக்தர், பெனத்தர்,
சமணர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஐவகை நில மக்கள் யாவரும்
அன்னையின் பணி செய்யவே உப்வ கையெனக் கண்டு கொண்டனர்
ஊக்க மோடெழு வீரனே.
கோயிற் பூசை மணி யடிக்குது
கொட்டு மேளங்கள் கொட்டுன வாயி லிற்பசுந் தோரணங் கட்டி
மண்தொறும் அணி செய்தனர் பாய் மதக்கரி, பரி, ரதப்படை
பாண்டில் கொட்டி நடக்குன தாய் பவனி வரும் தருணம்
தனய னேயெழுந் தோடிவா!
செந்தமிழ் வளர்ப்பதில் தீவிரமாகவும் ஆவேசமாக வும் உழைத்த சுத்தானந்தர் 'எந்தாய் வாழியவே எமக்கின்னுயிர் வாழியவே” என்று என்றும் தமிழை வாழ்த்தியவராவர். அவர் என்றும் செத் தமிழ் ப் பாட்டும் உரையும் தீட்டியவண்ணம் சேவைசெய்தவர். "மலரவனும் வண்டமிழோர்க் கொவ்வான்" என்பது பழமொழியாயும் நிலவுகிறது.
சித்தாந்தம் முழக்கியவர் சுத்தானந்த பாரதியார் வடநாட்டு அரவித்தமகான் திருக்கூட்டத்தில் அறநண்ந்து வேதாந்தம் முதலியன அறிந்தவர். அவர்தம் உள்ளம் சித்தாந்தத்தையே முழக்கியது என்பதை அவரின் பாடல் ஒன்றில் அறிந்து கொள்ளலாம். அவர் மலேசிய சைவசித்தாந்த மன்றத் தில் 1952ஆம் ஆண்டில் முழக்கியதை அறியலாம்.
9. Gap I முப்பொருள் உண்மை காட்டி
முழுப்பரம் பொருளைக் காட்டி அப்பொரு ளறிவி னுக்கே
அருளொளி காட்டுகின்ற ஒப்பறு சித்தாந் தத்தின்
உயர்நலம் இனிது போற்றி இப்பெரு முலக மக்கள்
இன்புறத் தொண்டு செய்வோம்.
எல்லாம் சிவமயம்
எல்லாம் சிவமயம் என்னும் உண்மை வல்லோர் கண்ட வாய்மை யாகும்மே பரமனை யன்றிப் பாருல கிலேயே உயிரில் லாமல் உடலா டாதே சிவமில் லாமல் சீவணு டாதே.
த்தையும் சுத்தமாக்குகிறது *

Page 6
6 மில்க்வை
பிரெஞ்சுமொழி அறிந்தவர்
புதுச்சேரி வாழ்வில் பிரெஞ்சு மொழியைக் கருத் தூன்றிப் படித்தறிந்த கவியோகியார், அம்மொழியில் தலையாய நூலாய - விக்ரர் ஹியூகோ எழுதிய ஏழை படும்பாடு என்னும் நூலே நல்ல தமிழில் பெயர்த்துள்ளார்.
யோகசித்தி
பாரதசக்தி மகாகாவியத்துக்கு அடுத்தாற்போல் எதைக்கூறலாம் என்று ஒன்றைத் தெரிந்து கொள்வது கடினமாகும். நாநூற்று நாற்பது பக்கங்கள் வரையில் நிறைந்த யோகசித்தி என்பது பூரண வாழ்க்கை. இந்த நூலில் பெருஞ்சித்தர்ாயிருந்த கவியோகி பந்த மறுக்கும் செந்தமிழ்க் கோயிலாகக் கட்டியெழுப்பியுள்ளார் என்பது திரு. வி. க - அவர்கள் கருத்தாகும். உலகவாழ்வின் உண் மையை உணர்த்தி இகபரசுகங்கள் இரண்டையும் தரும் குணந்திகழ் ஞானக் குரவனை யொத்தது இந்நூல் என்பர் கவிமணி. கவியோகியை வற்ருத இனிய தமிழ் ஊற்று என்று தமிழ்த்தாத்தா உ. வே. சா. பாராட்டியுள்ளார். ‘எல்லா உடலும் இறைவன் ஆலயமே" என்பது கவி, யோகியாரின் உயிர்ப்பான கோட்பாடு
யோகசித்தி வெறும் புத்தகம் அல்ல. யோகம் வெறும் அப்பியாசம் அல்ல. இந்நூல் கமகம எனக்கமழும் வாசனை யுள்ள கற்பகமலர் அமைதியும் இன்பமும் அருளும் ԱՄ ணத்துவமும் இன்ன பிறவும் காண்பதற்கு அமைந்த ஒரு சேமநிதி. மனத்தெளிவு, சித்தகத்தி பெறுவதற்கு தெய் வக்கனலை அடைவதற்கான வழிகாட்டியாயும் உள்ளது. வண்டமிழின் தரத்தையும் இங்கே கண்டு இன்புறலாம் இறுமாந்து இருந்தும் கொள்ளலாம். ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டால் இறுமாப்பு தாணேவருந்தானே.
மலமாசுகளில் கட்டுண்ட பாசான்மா, அவற்றை நீக்கிச் சுத்தான் மாவாகிச் சுகம்பெறும் வகையை இது காட்டுகிறது. புறவாழ்வில் காணமுடியாத பேறுகளை அகவாழ்வில் காணலாம் என்று கண்டுகாட்டுகிறது இத் நூல்.
தூய உள்ளம்
W− அண்மைக் கா லத் தி ல் தொண்ணுருண்டுகளுக்கு
மேலாக வாழ்ந்து, தொட்டகுறை விட்டகுறை என்ருற் போல ஏதோ முற்பிறவியில் விட்ட இடத்தில் தொட்டுப் பல துறைகளையும் துலங்க வைத்தவர் தவமுனிவர் சுத் தானந்த பாரதியார். சுத்தானந்தரின் தூய உள்ளத்தைப் படம் பிடித்துக்காட்டவல்ல படச்சுருள்கள் அவரின் பாடல்கள். உதாரணத்துக்கு எம் உள்ளத்தைத் தொட்ட இரண்டு மூண்று அடிகளை இங்கே படித்தறியலாம். இவை அன்ருெருநாள் பாலப்பருவத்தராய இரமணர் கட்டி
* யோகம் உள்ளத்தை இன

} செய்தி 1-4.90
யிருந்த வேட்டியையும் கழற்றிச் சுழற்றி எறிந்துவிட்டு கெளட்பீனத்தோடு திருவண்ணுமலைக் குகையில் ஊறுசெய் யும் உயிரினங்கள் மத்தியில் தவஞ் செய்தாரே, அந்தக் காட்சியைக் கவியோகி உள்ளன்போடு காட்டுகிறர்.
பாலொழுகும் பைம் முகமும் பாராமல் பார்த்திருக்கும் கோலத் தவவடின்வக்
கூறுதுங்கள் அம்மானை கோலத்தவ வடிவைக் கூறுதுங்களாமாயின் ஏலாந்த முத்தியெல்லாம் நண்ணுதுங்காண்
syuh Lområkor.
தியானம் கைவந்தவர்
கவியோகியார் தம்மையொத்த மெய்ஞ்ஞானியர் கூட்டத்தை நாடி, அவர்கள் பத்தியில் தொண்டு செய்து அவர்களிடம் தாம் பெற்ற அநுபவங்களே நாங்களும் பெறுதல் வேண்டும் என்று கருதிப் பல நூல்கள் எழுதியுள் ளார். அவற்றுள் ஒன்று புதுச்சேரியில் பூரீ அரவிந் சரிடம் பெற்ற ஆத்மானந்தம். அது அரவிந் **-- மலர்ந்துள்ளது. சிவப்பிரகாசம், தத்துவப்பிரகாசம்ப்ோல் அரவிந்தப் பிரகாசமும் உண்மை நெறியை உணர்த்துவ தாகும். ஒரளவு வேதாந்தமும் கமழ்கிறது. அதன் தெளிவு சைவசித்தாந்தம் என்பதை அனுபவத்தில் கண்டின்புற லாம்.
இன்று எங்கள் அரசாங்கம் ஏதேதோ திட்டமிடல், வேலைவாய்ப்பு வழங்கல், கிராமநிர்மாணப்பணி செய்தல் சர்வோதயத்துக்கு பாதயாத்திரை செய்தல், பொருளா தார சுபீட்சத்துத்கு ஏதேதோ செய்தல் என்றெல்லாம் வெளிப்பகர்ப்புச் செய்கிறது. இவற்றையெல்லாம் கவி யோகியார் எவ்வித விளம்பரமோ ஆடம்பரமோ இல்லா மல் ஆச்சிரமங்கள் அமைத்து. அன்பர்பணி செய்வதற்குப் பலரை ஆளாக்கிவிட்ட இன்ப நிலையைக் கண்டவராவர்.
இவர் பல்வேறு சமயதத்துவ நூல்களையும் நன்கு பயின்று, அவ்வப்பெரியார்களைத் தமது உள்நோக்கிற் கண் டவர் என்பதும் நாம் அறிதல் வேண்டும். இத்தகைய அனுபவ ஆற்றல் கொண்டு இவர் பல்வேறு சமயத்தவருக் கும் உண்மையை உள்ளபடியே விளக்கியவருமாவர்.
கலைக்கதிர்வீச்சு
கவியோகியாரது வாழ்வு பல்கதிர் வீசிய வாழ்வாகும். கலைவாழ்வு, யோகவாழ்வு, பொதுநலவாழ்வு என்பன இவரின் வாழ்வில் பிறர்கண்ட கதிரொளிகளாம். திரு வள்ளுவர் அறம் உரைத்தவர். அவர் வழியில் சென்று இவரும் அறநூல் ஒன்று செய்துள்ளார். இன்னும் தருமம் என்ருெரு பொருளுண்டு என்று கந்தபுராண கலாசார நெறியில் இவர் தருமசாதனம் என்ருெரு நூல் செய்துள் enrtrff.
இத்தகைய தவப்பணிகள் செய்த தமிழனய இவரை இன்னெரு பெருந்தமிழனய வ. வெ. சு. என்னும் அதிமனி தன் வாழ்வைத் தவத்திற்கே நிலைக்களன் ஆக்கியவர்' என்று பாராட்டியுள்ளார். நிற்க
றவனுடன் இணைக்கிறது ( x_s
V.

Page 7
மில் க்வைற் 4-90حيج
இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கவியோகி யார் வாழ்த்திய வாழ்த்தை இன்று பார்க்கும்போது நேற் றுப் பாடியது போன்றிருக்கிறது.
"இறைவனருட் குடைக்கீழ் எல்லாரும் இன்ப
நிறைவெய்தி வாழ்க நிதம்"
சுத்தானந்தம் சுத்தானந்தர் தொண்ணுாழுண்டுகளுக்கு மேல் பூரணமான நிறைவான பெருவாழ்வு வாழ்ந்தவர். அவருக்கு கையறு நிலையில் கவி, சரமகவி எதுவும் தேவையில்லை. அவர் கூறியவண்ணம் நாம் வாழ்ந்தால் போதுமானது
என்ருலும் மற்ருெரு முதியவர் இவரை அப்போதே சிந்தை மகிழ்ந்து பாடிய சீரிய கூரிய செந்தமிழ் அடிகள் சிலவற்றைச் சிந்தையிற் கொள்ளலாம். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் கவியோகிதந்த யோக சித்தி என்னும் நூலை நயந்தபோது கூறியவை இவை.
,~உற்றுமி யுதவும் யோக சித்தியாம் (eo. _Tல் யொப்பருந் தவத்தோர்,
དེ་ཁོ་ཚོ་7ara உள்ளவா றுணர்ந்த உரவோர்
சுத்தமெஞ் ஞானச் சுடரெனப் பொலிவோர் அரிய பெரிய அறவோர் உறவால் சகச நிட்டையால் சாதன நெறியால் தானே பொங்கித் ததும்பிய அறிவால் முன்னை வழக்கம் முற்றுமா ராய்ந்து பின்ன வழக்கம் பிழையறத் தேர்ந்து போக்குதற் குரியவை போக்கியும் ஆதரித் தாக்குதற் குரியவை யாக்கியும் அழகாய் இக்கா லத்துக் கிசைந்தநன் மூறையில் கற்றவர் தமக்கும் கல்லா தவர்க்கும் எழிதில் விளங்கிட இனிய மொழியால் அந்த ஞளன் அருந்தவன் புதுவை கத்தா னந்த சுவாமி யன்பொடு குறளு முரையுமாய்க் கூறின னென்றும் அந்தமி வின்ப மடைந்திச் செந்தமிழ் நாடு சிறப்புற் ருேங்கவே.
இன்னும் பல செய்திகள் சுத்தானந்த பாரதியார் இசைத்துறையும் கைவந்த வர்கள். அவர் அவ்வப்போது பாடிய இசைநலஞ் சார்ந்த பாடல்கள் நூற்றுக்கணக்கானவை. அவர் இனிய மிடற்ருேசை வாய்க்கப்பெற்றவர். பலவித தோற்கருவி க3ள முழக்கவும் வல்லவர்.
அவர் பாடிய இசைநயம் ததும்பிய பாடல்களுள் கவிக்கனவுகள் என்னும் தலைப்பில் வந்தவை தாற்பத் தெட்டு. அவை 1941ஆம் ஆண்டிலேயே வெளிவந்துள் ளன. அன்புநிலையத்தார் அவர் எழுதியவற்றையும் பாடியவற்றையும் தேடித் தொகுத்துப் பெருமளவில் செந்தமிழ்ப்பணி செய்தவராவர்.
கவிக்கனவுகள் இயற்கையோடு உறவாடிப் பாடிய வையாகும். கவிச்சுவையும் கலைச்சுவையும் உள்ளவை. மனிதவாழ்வை விமர்சனம் செய்த பாங்கிலும் பாடல்
* யோகம் ஆன்மாவுக்கும்

கள் மலர்ந்துள்ளன. அவற்றைச் சித்திர சகிதமாய் அன்பு நிலையத்தார் வெளியிட்டபோது சித்திரம் தீட்டிய நிபுணர் R. T. கிருஷ்ணமூர்த்தி என்பவராவர். அவர் கவியோகி அவர்களின் உள்ளக்கிடக்கையை ஊடுருவிப் பார்த்துத்தான் படம் வரைந்தாரோ எனக் கருதவேண்டி யிருக்கிறது. சுத்தானந்தரின் கவிக்கனவுகளில் மயிலாடும், குயில்கூவும், கிளி மழலைபேசும், மேகம் அமுதம் சொரியும் காற்று கீதமிசைக்கும், பாரததேவி தரிசனம் அளிப்பள் மரங்கள் கதைபேசும், மலர்சள் மக்கள் மனதை மலர்த் தும். நிலா சிந்தனையைத் தூண்டும், கடல் காலவரலாற் றைக் கூறும். தென்றல் கொஞ்சிப்போகும், நிலா விளை யாட்டுக் காட்டும். வானம் விளக்கம் தரும். இவ் வாருக இயற்கையே உருவெடுத்துத் தோன்றி எதிர் நின்று உற்றதுரைக்கும்.
பொற்கூண்டில் வாழும் கிளி. பறந்துதிரியும் குயி லுடன் பேச்சுக்கொடுத்தது
'தங்க மனையினைப் பாரடி அடியென்
தங்கக் கொலுசினைப் பாரடி எங்கும் அலையாமல் வாழ்கிறேன் இவர் ஈந்த கணிகளே உண்கிறேன் இங்கெனக் கென்ன குறையடி என்னே டிருந்திசை பாடடி!" இதுகேட்ட குயில் தன் சுதந்திர வாழ்வைப்பற்றிப் பாடியபோது,
"திக்கெல்லாம் தாவிப் பறந்திட நீள்
சிறகைக் கொடுத்தவன் மூடனே?" என்று கேட்டபின், தமிழயிமானம் தலைக்கேறப் பாடு கிறது. X
"தீந்தமிழ் போன்ற மனத்தென்றல் வீசுந்
தீங்களிச் சோலை உனக்குண்டோ? காந்தருடன் கூடிக் குஞ்சுகள் வளர் காதல் இனிமை உனக்குண்டோ?
பயிற்சி அளிக்கிறது

Page 8
8 − fédéšaosa
சாந்தவிண் ணேறிப் பறந்திடும் அந்தச் சந்தோஷ வாழ்க்கை உனககுண்டோ? மாந்தரை நாமொரு கூட்டிலே வைத்து மாங்கனி தந்தால் இருப்பாரோ? குயில் மேலுங் கூறுகிறது.
'காலையிலே இரை தேடுவோம் பசுங் காடுகளிற் கூடிப் பாடுவோம் அந்தி மாலையிலே விளையாடுவோம் பின்பு மங்கல நன்மனை சேருவோம்."
இவற்றையெல்லாம் கேட்ட கிளிக்குச் சுதந்திர தாகம் உண்டாகிறது.
"உண்மை இது உண்மை குயிலக்கா
கூண்டை ஓங்கி உடைக்குதென் ஆத்திரம் ஒரு மண்ணும் பயனின்றி இப்படி நான் மாய மயக்கினில் வாழ்வதோ கண்ணுல கெல்லாம் என்வீடடி அதில் காற்றினைப் போலே உலாவுவேன் விண்ணெட்டச் சென்று மகிழுவேன் இதோ விடுதலைக் கேவழி செய்கிறேன்”.
சுந்தானந்தர் பறவைகளின் குணவியல்புகளைக் கூறி அவை சொன்னவண்ணம் பல செய்திகளைச் சொல்கிறர்
"பஞ்ச மெனக்குண்டோ வயிற்றுப்
பார மெனக்குண் டோ வஞ்ச மெனக்குண் டோ விசன வாடை எனக்குன் டோ அஞ்சாது காதலிப்பேன் என் அன்புப் பெடையுடனே குஞ்சுக் கிரைகொடுப்பேன் சுதந்திரக் கூடுகட்டி வளர்ப்பேன்
கவியோகியாரின் கற்பனையும் புலமையும் சொற் பதங்களும் உச்சமடையும் ஓரிடம்.
"கொக்குத் திருக்குலங்கள் விமானக்
கூட்டமெனப் பறக்கும் அந்த திக்கினில் என்மனமும் எதையோ தேடிப் பறக்குதம்மா".
திவ்விய ஜீவனம் என்பதாகும். பாரதியார் அவர் கள் தாம் அறிந்த ஆத்மானுபவத்தை இன்பமாலை என்னும் தொகுதியில் தந்துள்ளார். நாடகமே உலகம் என்று உலகமனைத்தும் கூறும் ஒரு சிந்தனையை விளக்கி காலத்தேர் என்னும் தொகுதியில் பல பாடல்கள் தந் துள்ளார். உலகில் காலத்துக்குக் காலம் தீர்க்கதரிசிகள் தோன்றிப் போனசெய்திகள் அருட்பெரியார் என்னும் தொகுதியில் அமைந்துள்ளன.
SGiu IJI ia i)
சுத்தானந்த பாரதியார் அவ்வப்போது கவியரங்கு கள் பட்டிமண்டபங்களில் பாங்கறிந் தேறித் தலைமை தாங்கிப் பாடிய பாடல்கள் பலவிதமானவை. அவை த்மிழ்விருந்தாய்த் தித்திப்பனவாயுள்ளன.
Yr யோகம் உண்மையா

ற் செய்தி 1-4-90
அன்பே கடவுள்
உலகில் புலவர்கள் பலர் தங்கள் மொழிகளில் அதிகமாகப் பாடிய பாடல்கள் அன்பு என்பதையே குறிக்கின்றன. பரிபாடல், திருக்குறள் முதலாய பழைய பாடல்களும் அன்பையே பாடுகின்றன. தாயுமான சுவாமிகள் உருகி உருகிப் பாடியவையும் அன்பெனும் பிடியில் அகப்படும் இறைவனையேயாம். அன்பேகடவுள் எனப்பாடிய புலவர்கள் வரிசையில் சுத் ܗ مع ஐந்து பாடல்களுள் இரண்டைப் படித்த்றியலாம்
பாடும் குயிலின் பாட்டினிலே
பசிய சோலைப் பழத்தினிலே ஆடும் மயிலின் தோகையிலே
அழகின் இயற்கை வனப்பினிலே வாடும் பயிரை மகிழ்வுறுத்த
வானம் வழங்கும் வண்மையிலே காடும் வீடு மிருந்துநிதம்
கண்ட பயனும் அன்பேதான்.
அன்பே கடவுள் என்றறிவேன்
அன்பே அவன்பேர் வடிவென்பேன் அன்பே கூடும் வழியென்பேன்
அன்பு மலரால் வழிபடுவேன் அன்பிற் பெரிய தொன்றறியேன்
அனைத்தும் அன்பின் விரிவென்பேன் இன்ப முண்மை யறிவாகி
யிருக்கு மன்புப் பரம்பொருளே!
கலையின் பெருமை
சுத்தானந்த பாரதியார் பெருங்கவிஞர், பெருங் கலைஞர். கலையின் பெருமையையும், கலைகொண்டு செய்யக்கூடிய சாதனையையும் பற்றி அவர் பாடிய பாடல்களில் ஒன்று இது. கலையி னுல்உல கொற்றுமை காணுவோம்
கலையி னற்கருத் தைவிரி வாக்குவோம் கலை மகளின் கவின்பெருங் கோயிலில்
கைகள் கோத்துக் களிப்புடன் ஆடுவோம் விலையி லாமல் விரைந்திடுங் காலத்தை
வீண்செய் யாது கலைவிளை வேற்றுவோம் நிலையி லாததி நேரிய வாழ்க்கையை
நீண்ட காவிய மாக்குவந் தோழரே.!
வாழ்வு வழியாகும்

Page 9
s4-90 மில்க்வைற்
தியான மாலை
சுத்தானந்த பாரதியார் அவர்களோடு ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய செய்தி யொன்று, தாம் பாரதநாட்டில் சமாதியான பெரியவர் கள் பலருடைய சமாதிக் கட்டிடங்களினருகே நீண்ட நேரம் தியானத்தமர்ந்து அவர்களின் தரிசனத்தை உள்மனத்திற் கண்டாரென்பதாம். சுத்தானந்தர் உரை நடையில் எழுதிய தியானமாலை என்னுந் தொகுப்பு 1988ஆம் ஆண்டில் வெளிவந்ததாகும். இது அவரின் Eல் பூத்தலர்ந்த மலர்கள் கொண்டு كمسح في حي سحاصي திொடுத்த மாலையாகும். இவை பெரும்பாலும் அவர் எழுதிவந்த நாட்குறிப்புகளிலிருந்து கொய்யப்பெற்றன என்பர். உறுதியான தியானமும் தூயவாழ்வும் இம் மாலையில் கமழ்கின்றன. பாரதியாரவர்கள் தியானகாலங் களில் அகக்கண்ணுற் கண்ட ஞானிகளைப்பற்றிப் பொது வாகப் பாடிய கீதமொன்றில் குறித்தமை குறிப்பிடத் தக்கது.
“பற்றறப் பாரி லுலாவிடுவார் - அவர்
படகு போல மிதந்திடுவார் முற்றிலு முள்ளத் தமர்ந்திடுவார் - ஜீவன்
முத்தரென் றேயறி ஞானப் பெண்ணே!" யானென் றகஞ்செய் மணமறிந்தார்-பர மானந்த சக்திக் கதிர்விரித்தார் மோனத்தி னின்றும் செயல்புரிந்தார்-ஜீவன்
முத்த ரியல்பிது ஞானப்பெண்ணே! தெய்வம் விளங்குத் திருக்கோயில்-அவர்
செம்மலர் வாய்மொழி நன்மறையாம் உய்வருள் ஞான வொளிதருவார்-தத்ஸ்த்
தோமெனச் சிந்தைசெய் ஞானப்பெண்ணே! சுத்தானந்தரின் தியானமாலையில் கட்டுண்ட மலர் ஒன்று மணம் பரப்புகிறது. அது வாழ்த்தாக உள்ளது. வாழ்க "தூயர் வாழ்க, கடவுளைத் துலக்குவர்
சத்தியர் வாழ்க, தருமங் காப்பர் நல்லோர் வாழ்க, நன்மை புரிவர், சாந்தர் வாழ்க, சக்தி பெறுவர் மாதவர் வாழ்க, மங்கலஞ் செய்வர் அறவோர் வாழ்க, ஆருயிர்க் கினியர் அறிஞர் வாழ்க, அகவிருள் ஒழிப்பர் வீரர் வாழ்க, வேதனை தீர்ப்பர். அன்பர் வாழ்க, அருட்பணி வெல்வர் யோகியர் வாழ்க, உள்விழி திறப்பரி,
* ஒரு நாளில் இருவே
 

செய்தி 9
மதங்களை நன்கறித்த மாதவர் சுத்தானந்தர் பல மதங்களின் உண்மையை அறிந்த சமரச ஞானி. அவர் எந்த மதத்தையும் தூற்றவும் இல்லைப் பரப்பவும் இல்லை. சொந்த மதத்தைவிட்டு அந்தமதம் இந்தமதம் என்று அலையவேண்டாம் என்று உபதேசித்துள்ளார். அவர்தம் நெஞ்சறி விளக்கமாகக் கூறியவை அபிமானிகள் அறியவேண்டியவை.
"இந்தமதம் அந்த மதம்
என்றலையேல் நெஞ்சே எந்தமத தூஷணயும்
எள்ளளவும் வேண்டாம்! சொந்தமதம் தந்தம் உள்ளே
தொந்த மற்ற சுகமே அந்தம்இல்லை ஆதியில்லை
ஆனந்தம் யானே!”
ஆரம்பகாலத்து அற்புதமான நூல்கள்
சுத்தானந்த பாரதியார் இளமைக் காலத்திலேயே எழுதவும் பாடவும் தொடங்கியவர். தமிழ் மொழியை வளர்ப்பதற்காக முதலில் பைந்தமிழ்ச்சோலை என்று கட்டுரைகள் எழுதினர். இன்பமாலை என்று இனிய பாடல் கள் யாத்தார் தருமசாதனம் என்று தர்மம் பற்றிக் கூறிஞர். உடம்பை வளர்த்தே திடம்பெற ஞானம் தேடு தற்கான உடலுறுதி பற்றி எழுதினர். திருக்குறள் பற்றி நன்ருக எழுதினர். இன்றைய மனிதனும் இனிவரும் மனிதனும் என்பன பற்றி எழுதினர். பசுமை பற்றியும் பழைமை பற்றியும் எழுதினர். தமிழுணர்ச்சி பற்றி எழு தினர். வாழ்வு தூய்மையாயிருத்தல் வேண்டும் என விளக்கித் திருநூல் எழுதினர். சிலப்பதிகாரச் செல்வம் என்று அக்காவியத்தை விளக்கினர். ܝ
பாரதசக்தி மகாகாவியம் கண்ட
63 AOÛL
நான்கு வேதங்களின் எழுந்த மகா பாரதம் ஐந்தாம் வேதம் என்னும் சிறப்புப்பெற்றது. சுத்தானந்தர் அரி தின் முயன்று ஆக்கிய பராசக்தி மகாகாவியம் இரண் டாம் பாரதம் எனப்பெயர் பெற்றது. அதை மகாத்மா காந்தியடிகள், மகான் அர விந்த மகரிஷி, அன்ளே பெசண்ட் அம்மையார் முதலாஞேர் பாராட்டியுள்ளார் கள். மாமன்னன் இராசராசனது தஞ்சைப் பல்கலைக்கழ கத்தார் பாரதசக்தி மகாகாவியத்தின் அருமை பெரு மைகளை அறிந்து ஒருலட்சம் ரூபா பரிசு கொடுத்துள்ளார் கள். பாரதபண்பாட்டைப் பைந்தமிழ்ச் சொற்களால் பாடிய பாரகாவியம் பாரதசக்தி மகாகாவியம் என்க.
திருவருட் செல்வம் சுத்தானந்த பாரதியார் சைவத்திருமுறைகளிலும் வைணவத்திவ்விய பிரபந்தங்களிலும் நன்ருக நனைந்தவர். அவர் நாயன்மார் ஆழ்வார்கள் அநுபவங்களை நல்ல முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழ் வேதம் GTsirgiub Giuuri Gastoss (Mystic Treasure) Galed u9 "Gairatri.
ள உணவு போதும் ܐ

Page 10
10 மில்க்வை
உடலும் உயிரும்
'உடம்பால் அழிகுவர் உயிரால் அழிகுவர், திடம் படமெய்ஞ்ஞானம் தேடவும் மாட்டார், உடம்பை வளர்த் தேன்.உயிர் வளர்த்தேனே'என்பது திருமுறை. உடம்பை வளர்ப்பதற்கு உணவு மாத்திரம் போதாது அதற்கு என்ன என்ன வெல்லாம் வேண்டும் என்று யோகமறிந்த சுத்தானந்தர் ஒருநூல் எழுதியுள்ளார். அது நல்ல வழி காட்டியாகும். உடல் மணிக்கோயில் என்று தொடங்கி, "தெய்வம் விளங்கு மணிக்கோயில் - இந்தத்தேகம் உறுதி பெறவேண்டும். கை கால் வைரநெடுந்தூண்போல் நல்ல கட்டும் கனமுமுற வேண்டும் "
'வலிவு பிறப்புரிமையாகும் - இன்ப
வாழ்க்கை பொதுவுடைமை யாகும் மெலிவு கொடிய துயராகும் - வளர்
வீறு மனிதரியல் பாகும் குன்றைத் தகர்த்தெறியுந் தோளும் - கொடுங்
கூற்றிற்கும் அஞ்சாத நெஞ்சும் வென்றித் திருவுடைய விளையும் - பொழி
விண்போலக் கருணையும் வேண்டும்". இங்ஙனம் எல்லாம் பாடியவர் நாம் என்ன உண்ண வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி அங்காதிபாதம் அரிய முறையில் விளக்குகின்றர்.
நோயனுகா விதிகளையும்ஆசாரக்கோவையையும் உரிய இடங்களில் ஆண்டுள்ளார். அவரே சித்தராக வாழ்ந்தவ ராகையால் சித்தர் முறைகளை அனுபவத்திற் கண்டு
sit ”rysir Garmrtif.
பாலசந்நியாசி ஒருவர்
பண்டிதமணி கணபதிப்பிள்ளே அவர்களின் பரிபா ஷையிற் சொன்னுல் குஞ்சுமுனி - முனிக்குஞ்சு, சுத்தா னந்த பாரதியார் அவர்களின் பாடலிற் சொன்னுல், *பாலொழுகும் பைம் முகமும் பாராமல், பார்த்திருக் கும் கோலத்தவ வடிவு" ரிஷமூலமும் நதிமூலமும் ஆராய் தலாகாது என்பது வழக்காயினும் இவரின் வரலாற்று மூலம் தெரித்த உண்மையாயுள்ளது. தந்தை வழியால் மட்டுவில், தாய்வழி நீர்வேலி. இன்று உண்டியை வெகு வாகக் குறைத்து நீராகாரம், காற்ருகாரம் புசித்து வெள் காவத்தைக் கடற்கரையிலும், தேசீய சேமிப்பு வங்கித் திடரிலும் அவ்வப்போது காட்சிநல்கும் இவரிடம் அறிய வேண்டியவை பலவுள. இவர் மலர் வாய்ப்பிறந்த வாச கம் சிவவாசகம் எனவெளிவந்துள்ளது. விளம்பரத்தின் பாற்படாதது. தனிப்பட்ட அன்பர்கள் இதனைப்படித்துப் பயன் பெற்றுள்ளார்கள். சுவாமி அவர்கள் ரிஷிகேசம் கண்டவர். காஞ்சிப் பெரியவரிடம் காவிபெற்றவர். இளை ஞராய இவர் பூர்வாசிரமத்தில் கணக்காளர் பயிற்சி பெற்றுச் சில பகுதிகளில் சித்தி பெற்றவர். நீண்டநேரம் தியானத்தில் இருந்து, புன்சிரிப்போடு கண்ணைத்திறக் கிருர். சுருக்கமாக, இனிதாக, தெய்விக அநுபவத்தைக் கூறுகிருர். மெளனத்தையே பெரிதும் விரும்பும் இவரை மனேன்மணியம் பாடும் வகையில் 'வாழிய நின் மலரடி
食 ஒரு நாளுக்கு எட்டுக்கி

ற் செய்தி I-4-9
கள் மெளன தவ முனிவர்" என்று வாழ்த்த விரும்புகின் ருேம். வாழ்த்துவதும் நாம் வாழ்வதற்கேயாம் என்பது பெற்ரும்.
கிழவன் கிழவியரின் அருமை
இன்று பெரும்பாலான வீடுகளில் கணவனும் மனைவியும் வேலைசெய்ய வெளியேறி விடுகிறர்கள் வீட்டில் சிறு குழந் தைகளை வேலைக்காரரோடு நம்பி விட்டுப்போதல் நன்முக அமைவதில்லை.எனவேழுன்ரும்தலைமுறையினரான பாட்டி பாட்டா, தாத்தா அம்மம்மா இன்றியமையாதவர்களாகி வருகிருர்கள். மூன்ரும் தலைமுறையினர் இனிமேல் புதிய தலைமுறைக்கு உதவும் வகையில் தங்களைத்திருத்தி அமைத் தல் புத்திசாலித்தனமாகும் பழம்பெருமை பேசிக் கால நீட்டிக்கொண்டிராமல் பயனுள்ள வகையில் பேரக்குழந் தைகளே வளர்ப்பதில் உதவிக்கரம் நீட்டுதல் வேண்டும். இன்றும் சில இல்லங்களில் பாட்டனர் உருவாக்கிய புதிய தலைமுறையினர் தலையெடுக்கிருர்கள். எல்லோரும் பீஷ் மாசாரியராக இல்லாவிட்டாலும் உதவிபுரிபவராயிருக் disarth. tS
God is with YouT
In all the ways of life
God be thy guide
A flood of light is He
He is the Joy Supreme
He is thy heart's Beloved,
Slumber not when He calls
Awake and see him everywhere
He is thy true Friend, trust Him
And be ever free and blessful
– Swami Randas
Learn Your English
Give one word for each group.
An unmarried girl
The time from sunrise to sunset Unable to hear
1. 2 3. 4. A word battle 5. A space of ten years 6. To become rotten 7. To make up one's mind 8. To speak evil of 9. To protect 10. To put off for another time 11. No longer active 12. Net strong
13. To hand over
4. Pleasant to taste
15. To destroy 1. Daughter 2. Day 3. Deaf 4. Debate 5. De
cade 6. Decay 7 Decide 8. Defame 9. Defend 10. Defer 11. Defunct 12. Delicate 13. Deliver 14. Delicious 15. Demolish.
ண்ணம் நீர் தேவை

Page 11
194-90 மிஸ்க்வைற் ே
கீதா யோகம்
*திதானந்தப்ாரதியார் கர் மயோ க ரகசியம் என்னும் பொருள் பொதிந்த நூலை கீதா யோகம் எனப் பெயரிட்டு எழுதியுள்ளார். இது பகவத்கீதையின் தமிழ் விளக்கமாகும். பாண்டிச்சேரியில் சுதந்திர அச்சகத்தில் 24.4-1942இல் வெளியான இர்நூலுக்கு நல்ல வரவேற் பிருந்தது. கீதையைத் தமிழ் உச்சரிப்பில் தந்து விளக்க மும் தந்திருக்கிருர், இதில் உள்ள சிறப்பு என்னவென் முல் முதலில் விளக்கம் தந்த பின்னரே சுலோகத்தைத் தருகிருர்,
சுத்தானந்த பாரதியார்
அவர்தம் நினைவில்
நீமும் நாமும் உங்கள் அபிமானத்துக்குரிய நீம்சோப், நீம் சுகா தார தூபம், நீமியா பசளை என்பன வேம்பின் வளத் தாலானவை. தொழிலதிபர் கனகராசா வேம்பின் நண்பராவதற்குப் பாரதியாரவர் சளே காரணர் என
* ஒரு நாளில் ஒருமணி நேரம்
 
 

oppg
செய்தி
லாம். நீம்சோப் என்று பெயரிட்டு அதனைத் தயாரிக் கும் முறையையும் காட்டிக்கொடுத்தவர் கவியோகியார் அவர்களேயாம்.
இன்று தொழிலக நாற்றுமேடையில் பல்லாயிரக் கணக்கான வேம்பு முளைத்துக் குடாநாடெங்கும் வளர்வ தற்கு உந்துசக்தியும் சுத்தானந்தமேயாம் வேம்பு, நிம்பம், நீம் என்பன ஒரு கருத்துள்ளவை.
ஒரு சுலோக விளக்கம் காற்றலேயாத இடத்தில் விளக்கு ஆடாது எரிகிறது.
சித்தத்தை அடக்கிப் பரமாத்ம யோகத்தில் நாட்டிய யோகிக்கு அதுவே உவமை எனப்படுகிறது.
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா கோகினே யதசித் தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மன 11
ஆறுமுக நாவலர் வாழ்க செந்தமிழுய்ய சைவத் திருநெறி விளங்கவந்தோன்! அந்தமிழ் கல்விகேள்வி யாழியைக் கடைந்துநாளும் தந்தனன் அமுதநூல்கள் சாவிலா வரத்தைப்பெற்ற நந்தமி ழுள்ளமட்டு நாவலன் வாழ்கமாதோ!
கல்வியின் வரம்புகண்டோன் கடவுண்மாக் கலைகளுக்கிங் கெல்லையேயானேன் வான்போல் இன்னுயிருலகுக்
கெல்லாம் செல்வத்துட் செல்வமான சிவநெறிச் செல்வஞ்சேர்த்து நல்கிய வள்ளலான நாவலன் வாழ்க மாதோ
தமிழினைப் புதுக்கவந்த தத்துவப் புலவனென்கோ! தமிழ்ப்பணி தனமணந்த தவமணிச் சைவனென்கோ தமிழிசை பரவவந்த தாரகக்குழலே யென்கோ
அமிழ்தினு மினிய சொல்லான் ஆறுமுகநாவலோனே!
அப்பியாசம் அவசியம்

Page 12
重荔 மில்க்ன
A a ga a
9IIIQUITGOTOIC5b SC.56(3tsir
எவ்வித ஆடம்பரமோ விளம்பரமோ வெளிட் பகட்டோ காட்டாமல் அமைதியாக வாழ்ந்து அதிலும் பென்னம்பெரிய உத்தியோகம் வகித்தவாறே தமிழ்ப்பணி சைவப்பணி, சமூகப்பணி புரிகின்ருர்கள். கொழும்பில் பிரபல கொம்பனியொன்றின் நிர்வாகியாய பெரிய தமிழன் ஒருவர் பணிவன்புடன் பிறர் நலங்கருதிச் சேவை செய்கிறர். பிள்ளைகள், சகோதரர்கள் அற்ற நண்பர் ஒருவருக்கு இறுதிக்கிரியைகள் கூடச் செய்துள்ளார் சைவாசாரம் நன்கறிந்த இவர் திருமுறைகள் ஒதுவதி லும் வல்லவர். அன்று கொழும்பில் நடைபெற்ற அபர கிரியையொன்றில் அமைதியாக இருத்து திருமுறைகளு தோத்திரப் பாடல்களும் ஓதியபின் தமது காரில் அல் பர்களையும் ஏற்றி ம யான ம் வரை சென்று இறுதி மசியாதை செய்தார்.
சான்றேனுக்குதல்
பிள்ளையைப் பெற்றுவிடுதல் தாயின் தலையாய கட6 என்றும் அவனைச் சான்ருேணுக்குதல் தந்தையின் கடல் என்றும் நல்நடை பயிற்றி விடுதல் அரசின் கடமை எ6 றும் பழைய காலத்துப் பாடல் கூறும், பிள்ளே பிறந் தும் பிள்களயை எஞ்சினியராக்க, டாக்டராக்க, எக் அண்டன் ஆக்க என்றெல்லாம் பெற்றேர் விரும்புவr ஒரு பாத்திரத்தில் நீரையோ, மோரையோ, பாலேயே எண்ணெயையோ ஊற்றி நிரப்பலாம். ஆனல் பிள்ளையில் தலையில் எதனையும் ஊற்றி நிரப்பி அதுவாக்க வியலா அது செய்யவும் கூடாது. இயல்பலாதன செய்யே என்பது தாய்க்கிழவி சொன்ன வாசகம். பிள்ளையிட கண்டபடி விதைகளை விதைக்கலாகாது. பத்து ஏக்க வ ய லில் விதைப்பதை ஒர்ஏக்கரில் விதைத்தலாகாது எனவே பொழுதரித்து காலமறிந்து பருவமறிந்து எதை யும் காட்டல் நன்ருகும்.
உலகநேயராகுவோம்
உலக நேய ராகுவோம்
ஒருமை கொண்டு வாழுவோம்
கலகக் காட்சி ஏனினி?
கதிரவன் போல் வாழுவோம்
எந்தநா டிருப்பினும்
எவரிடை வசிப்பினும் அந்த தாட்டை அன்புடன்
அன்னேநாடென் றெண்ணுவோம்
வானஞ்சூழ் உலகம்
வட்டமான கோயிலாம்
ஞானவேள்விக் கூடமாம்
தவிது நல்ல வீடதாம்.
யாழ்ப்பாணம் சாத்தி அச்சகத்தில் அச்சிட்டவர்;திரு. தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் */
கெளரவஆசிரிய

išr
i
பிரானுயாமம்
சுவாசத்துடன் தொடர்புடையது பிராணுயாமம், எனினும் அது உடலின் பல்வேறு உறுப்புக்களுக்கும் உரிய ஒரு நல்ல பயிற்சியாக அமைகின்றது. எல்லா வியாதிகளையும் போக்கி ஆரோக்கியத்தை அபி விருத்தி செய்கின்றது. ஜீரண சக்தியை அதிகமாக்கு
கின்றது. நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் ஊட்டு
கிறது. காமத்தை அகற்றுகிறது. குண்டலினி சக்தியை எழுப்புகிறது பிராணு பாமம் பயிலுபவர் நோயினின்று விடுபட்ட லேசான உடற்கட்டை பெற்று விளங்குவர் அவரது தோற்றமும் அழகானதாக இருக்கும். குரல் இனிமையாக இருக்கும். சரீரத்திலிருந்து ஒரு இனிய மணம்பரவும் நல்லபசி,இனிமை, கவர்ச்சியான தோற் றம் நல்லாற்றல், வலிமை, ஊக்கம், ஆரோக்கியம் மன ஒருமைப்பாடு முதலிய அனைத்  ைத யும்
பிராணுயரமப்பயிற்சி
ஒருவருக்கு நல்கிறது. மில்க்வைற் மேலுறையிலிருந்து 25 திருக்குறள் அனுப்பி *பிராணுயாமம்’ என்னும் அரிய நூலைப்பெற்றுப் பயன்பெறுக.
தி. நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் வநெறிப்புரவலர்" க. கனகராசா ஜே. பி. அவர்கள் திரு க. சி. குலரத்தினம் 1.4.90