கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்

Page 1
s
 


Page 2

6.
சிவமயம், சபாபதி நாவலர்
சரித்திரச் சுருக்கம்
டிையாரின் மருகர் வடகோவை - அ. சிவகுருநாதன் பதிப்பித்தது.
சபாபதி நாவலர் ஞாபக நிலையத்தின் வெளியீடு - க.
சென்னை: வித்தியாநபாலனயந்திரசாலே
1955.

Page 3
முதற்பதிப்பு. ஜனவரி, 1955.
வித்தியா துபாலனயர்திரசா?ல, செ. 300, தங்கசா?ல வீதி, சென்னை.

CA 61 oðD LT * மன்னனுமாசறக் கற்ருேரனுஞ்சீர்தூக்கின்
மன்னனிற் கற்முேன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்றேச மல்லாற் சிறப்பில்?லக் கற்ருேர்க்குச் சென்ற விடமெல்லாஞ் சிறப்பு.? என்பதல்ை கற்றேர் சிறப்புச் சொல்லியபடி, ஒருதேசத் கின் சீரும் சிறப்பும் அத்தேசத்தின் தவப்பயணுய்க் காலங் தோறும் அருமை பெருமையாகத் தோன்றும் நுண்மாண் நுழைபுலமுடையராகும் புலவர் பெருமக்களால் அளவிடப் படும்.
'அறம்பொரு வின்பம் வீடும் பயக்கும்
புறங்க் டை நல்லிசையு நாட்டு-முறுங்க வலொன் றுற்றுமியுங் கைகொடுக்குங் கல்வியினூங் கில்லைச் சிற்றுயிர்க் குற்ற துணை.” “ஈற்பொருள் செய்வார்க் கிடம்பொருள் செய்வார்க்கு
மஃதிடம்? என்ருர் உயர்ந்தோர். இதனுல் கல்வியின் சிறப்புக் கூறிய வாறு. கல்வியறிவினுல் சிறந்து கல்வியபிவிருத்தியின்பொருட் டுத் தமது வாழ்நாளைப் போக்கிப்போந்த தியாகசீலரான உத்தமர் % வாழ்க்கையினை ஏனையர் பலருமறிந்து பயனெய் தும்வண்ணம் அவர்கள் வாழ்க்கையைப்பற்றிய சரித்திரங் கள் வெளியிடப்படுகல் உலகவழக்காகும். கிற்க.
திராவிடப்பிரகாசிகையின் 2ம் பதிப்பு வெளிவரும் போது அந்நூலைப்பற்றி உலகப் பொதுமொழியாகும் ஆங்கிலத்தில் முன்னுரை ஒன்று எழுதியுதவும்படி காலஞ் சென்ற பேராசிரியர் பூரீ சு. சிவபாதசுந்தரம் (B.A.) அவர் களை வேண்டிக்கொண்டேன். அப்பெரியார் அழகிய முன்னுரை எழுதியதோடு நூலாசிரியர் வாழ்க்கை வரலாறும் எழுதிச்சேர்க்கும்படி எனக்குத் தெரிவித்தார்கள்.
*ஆர்த்தசபை நூற்ருெருவர் ஆயிரத்தொன் மும்புலவர்
வார்த்தை பதின யிரத்தொருவர்? என்பதற்கேற்ப நாவலம் நன்கமையப்பெற்ற சபாபதி நாவலரைப்பற்றிப் போதியபடி எனக்குத் தெரியாமையி
* கற்றவர்களுண்ணுங்கனியேபோற்றி. -(அப்பர் தேவாாம்) கற்றவர்விழுங்குங்கற்பகக்கனி. -(திருவிசைப்பா.

Page 4
笼 மு கவு  ைர.
ஞல், யான் வேண்டியபடி, நாவலரவர்களை நேரே சண்டு பழகிய திருமயிலை - தமிழ்ப்பண்டிதர் காலஞ்சென்ற சே. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் அப்போது சரிதம் எழுதக்கூடியதாய் வாய்க்சப் பெற்ருர், அதனைத் தழுவி மேலும் சில குறிப்புசஞடன் இப்போது இந்தச் சரித்திரச் சுருக்கம் வெளிவரலாயிற்று.
காவலரவர்கள் இயற்றிய சிதம்பரசபாநாதபுராணம் திருச்சிற்றம்பலவங்காதி முதலிய நூல்களில் வரும் பொருட் செறிவுடைய சில அருஞ்செய்யுட்களை இதன்கண் காண லாம். ஆங்கில அறிவுடையோருச்குப் பயன்படுமாறு திராவிடப்பிரகாசிகைச்கு ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற முன்னுரை இதில் அனுபங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இச்சரிக்திரம் அச்சாகும்போது அச்சுப்பிழைகளைத் திருத்தியும் நூலைப் பார்வைசெய்தும் துணையாயிருந்த எனஅ அரிய நண்பர் திருமயிலை - சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியுரியது. இணுவில் வித்துவான் அம்பிகைபாகர் பேரண ராகிய உபாத்தியாயர் திரு. வை. சதிர்காமநாதனும், மட்டுவில் உபாத்தியாயர் திரு. இ. சிதம்பரப்பிள்ளையும் இப்பதிப்புக் குரிய கையெழுத்துப் பிரதிசளை எழுதியுதவியது குறிப்பிடக் தக்கது.
வடகோவையில் அமைக்கப்படும் சபாபதிநாவலர் ஞாபகமண்டபம் அவர்சளியற்றிய நூல்களுக்கு நிலையமா மாறு வேண்டிய நன்முயற்சி நடைபெறுதற்குக் துணையாக அன்பர்களும் அபிமானிகளாகும் சனவான்சளும் இதனை மகிழ்ந்தேற்று இயன்ற பொருளுதவி ஊக்கமளிப்பரென நம்புகின்றேன்.
வடகோவை
ஜயடு) அ. சிவகுருநாதன். கதிர்த்திகைப்பூரணை

GNA
கணபதி துணை
சபாபதி நாவலர் சரித்திரச்சுருக்கம்
திருவாவடுதுறை யாதீனத்து பூமத் - இராம லிங்க சுவாமிகள் இயற்றியது.
வாய்ந்தபுகழ் திருக்கோண மாமலைமுற்
பலதலமு மாண்புற் ருேங்கி யேய்ந்தபெருஞ் செல்வமும்வான் கல்வியுமேன்
மேலும்வள ரீழ நாட்டி லாய்ந்தபல வளங்களுஞ்சால் வடகோவைப்
பொன்னகரி லளவில் சீர்த்தி தோய்ந்தநான் மறைச்சைவ சமயமெங்கும்
தழைத்தோங்கத் தோன்றி வாழ்வோன்.
எங்களா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகன்பா லெய்திக் தீக்கை அங்கமுற மூன்றும்பெற் றவனடியா
னெனப்பலருஞ் சொல்லப் பெற்றேன் பங்கமற வழிவழியே யுயர்சைவக்
குடியினிலுற் பவித்து மேன்மைப் புங்கவரும் புகழ்நீறும் கண்மணியு
மஞ்செழுத்தும் பொருளாக் கொண்டோன். 2
பவஞான, மகற்று புகழ்த், தென்கலையும்
வடகலையும் படிமே லோங்கத்
தவஞான வருணமச்சி வாயகுரு பான்மாபு தழைந்து மல்க

Page 5
2 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
வவஞான மொழித்தருளு மகத்தியமா
முனிவரத்தா லவத ரித்த
சிவஞான யோகியிரு திருவடியே
சிந்திக்குங் தியானச் சீறான். 多
சுவைபெருக வுரையெழுதுங் திறனுநாற்
கவிபாடுந் துணிவுங் கற்ருே? * ரவைபுகழப் பிரசங்கஞ் செயும்வலியுஞ்
சொற்போரி லளவை நூலா னவையறக்கற் முேரவைமுன் வாதிகள்கை
வாய்புகைத்து நடுக டுங்கிக் கவன்மருவி யோட்டெடுப்ப வென்றுகவ
மதகிறுத்துங் கணக்கின் மாண்பும். 4
நேயமிலா ரும்வேட்ப நெறிப்படச்சொற்
றெடுத்துரைக்கும் வலியு நேரில்
* பிரசங்கஞ் செய்யுமாறு வேண்டும்போது “ஆயிரம் தலை கண்டால் பிரசங்கஞ் செய்யலாம்’ எனச் சபாபதி நாவலர் கூறிய தாகப் புலவர் சொல்லிக்கொள்வர். இதன் கருத்து பெருங் கடட்டத்தில் கற்முேர் சிலரேனுமிருந்து பிரசங்கங் கேட்கக் கூடும் என்பதாம். அங்காளில் முறையாகக் கற்ருேரர் சபையில் காவலர்கள் கல்விமான்கள் கல்விப் பிரசங்கஞ் செய்வதில் புகழ் பெற்ருர், இக்காளில் பிரசங்கம் பிரசங்கம்’ என்று சொல்லப் படினும் அவ்வரிய வேலைக்கருகாாவாரைக் காண்பது எளி தன்று.
ான்னூலில் சொல்லியபடி எல்லாசிரியரிலக்கணம் சன் மாணுக்கரிலக்கணம் என்னும் இவைகளைப் பேணி, தமிழ்க் கல்வி கற்பதில் மிக்க வார்வமுடையோர் இருக்த காலத்தில் பிாசங்கம் இப்படி அருமையாய்க் கிடைத்துப் பயனளித்தது. குரு சிடக்கிாமத்தில் பெறும் முறையான கல்வி யருகிவரும் இக்காலத்தில் பிரசங்கத்தினுல் எய்தும் பயனைப்பற்றி என் சொல்வது.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
பாயதமிழ்க் கடனிலைகண் டுணர்ந்துவட
நூல்பயினுண் ணறிவும் பன்னூ
லாயசிறி துணர்ந்தாரு மெளிதுணர வருநூல்சொல் லறிவு மான்ற
மேயபுகழ் மண்ணினுறை புலவரெலாங்
அதியெடுத்து வியப்பப் பெற்றேன். 3
பன்னியவின் சொல்பொறுமை படக்கமுடன்
வாய்மைகொடை பண்பொழுக்க முன்னியநன் னடுவுகிலை கண்ணுேட்டஞ்
சான்ருண்மை முதிரு மன்பு துன்னியவொப் புரவுமுதற் பலநலமு
மொருங்குடைய தூய சீலன் மன்னியநட் பென்பாலும் வைத்தபுகழ்ச்
சபாபதிநா வலன்முன் மன்னே. &
திருமயிலை. சே. சோமசுந்தரம் பிள்ளை எழுதியது ஜனனம் :
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர், திருநாவுக்காக காயனர் ஆகிய இரு சமயாசாரியர்கள் அருளிச்செய்த திருப் பதிகம் ஒவ்வொன்றிலும் இடம் பெறத்தக்க கற்றவம் வாய்ந்த இராவணேசன் அரசுபுரிந்த நாடாகிய இலங்கையின் வடபாகமாகிய யாழ்ப்பாணத்து வடகோவையிலே, சைவு வேளாண் மாபிலே கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சுயம்புநாத பிள்ளை என்னும் சிவபக்தர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் கற்பிற் சிறந்த தெய்வயானை என்பவர். அவ்விருவரும் சிவனடியைச் சிறிதும் மறவாத பற்றுடை பவராகி இல்லறம் நடாத்திவரும் நாளிலே தமிழ்நாடு செய்த

Page 6
聲 சபாபதி நாவலர் சரித்திாச் சுருக்கம்.
அருந்தவப்பயனுக சாலிவாகன சகாப்தம் 1766ல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தை பின் சபாபதியினிடம் அன்பு பூண்டு புலவர் சபாபதியாய் விளங் கும் என்பதை முன்னுணர்ந்தேபோலும் அதற்குச் சபாபதி என்று காமகரணஞ் சூட்டினர்.
*இந்துசேகர னடியரை யவனென வீண்ப்ெ
புர்திசெய்குணச் சுயம்புவேள் புரிந்த மெய்த் தவத்தா லந்தண்மாநிலஞ் சபாபதி யறிஞனென் றேத்த வர்துதோன்றிய சைவகு ளாமணி மாதோ..?? இது, இவரியற்றிய ‘இயேசுமத சங்கற்பகிராகரணம்’ என் லும் நூலுக்கு நீதிபதி சி. வை. தாமோகரம் பிள்ளை அவர்கள் அளித்த சிறப்புப் பாயிரத்திற் கண்டது. *இன்னுமென் யாம் ப்லபுகற லியற்பெயர்கொண் டமைக்கேற்ப
பன்னுகலை ஞர்களவையிற் பதியாகும் பான்மையிஞன் துன்னுபா சமயநெறி துகைத்திறுத்துப் புவியின்மிசை மன்னு புகழ் நிறுவுசபா பதிநாவல வன்மாதோ..? இது, இவரியற்றிய சிதம்பர சபாநாத புராணத்துக்குச் திருவாவடுதுறை ஆதீனத்து பரீமத் ஆறுமுக சுவாமிகள் கொடுத்த சிறப்புப் பாயிரத்துக் கண்டது. இக்கவிகளால் இவர் தனது இடுகுறிப் பெயரைக் காரணப்பெயராக்கினர் என்பது பெறப்படும்.
கல்வி பயின்றது:
அவர் தாய் தந்தையர் உரிய பருவத்திலே விகிப்படி வித்தியாரம்பஞ் செய்தனர். அக்காலத்து வடகோவைப்
பதியிலே வடமொழி தென்மொழிக் கல்வியிற் சிறந்த பிரமயூரீ ஜெகங்நாதையர்பால் ஆரம்பக் கல்வி பயின்று

சபாபதி நாவலர் சரித்தியச் சுருக்கம். 5.
வந்தார். பிறகு ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் பெரும் புலமை வாய்ந்த நீர்வேலி - சிவசங்கரபண்டிதரிடம் வட மொழி கென்மொழி இரண்டையும் முறையாகக் கற்து வந்தனர். நன்மாணுக்கருக்குரிய இலக்கணங்களோடு கந்து வருங்கால் அரச பாஷையாகிய ஆங்கிலமும் சிலகாலங் கற்று அம்மொழியிலும் விற்பத்தியுடையாாயினர். வயதில் இளையவராயினும் இவரின் தருக்க அறிவின் திறமையைக் கண்ட நீதிபதிகளாகிய தென்கோவைக் குமாாகுசியரும், கதிர்வேற் பிள்ளையும் இவருக்கு ஆங்கில பாஷையை நன்கு பயிற்றுவித்துச் சட்டநூற் கல்வி புகட்டினுல் அரசாங் கத்திற் சிறந்த நிபுணராய் மதிக்கப்படுவர் என்பதை இவர் தந்தையாருக்குத் தெரிவித்தனர். இங்கிலீஷ் படிப்பதில் தம் பிள்ளையின் கருத்து எப்படியென்று தந்தையார் வின வினராக, அக்காலத்தில் இந்துக்கள் ஆங்கிலம் கற்றற்குரிய இந்துபாடசாலைகள் இல்லாமையானும், மிஷன் பாடசாலை களிற் கற்றல் தமக்கும் தம் சமயத்துக்கும் இழுக்காம் எனக் கொண்டும் அதற்குடன்பாடில்லாது விடுத்தனர். மெய்ஞ் ஞான வளர்ச்சிக்கும் சைவாசார ஒழுக்கத்துக்கும் மேனுட் டுக் கல்விமுறை பொருந்தாது என்பதை இனமையில் கன்குணர்ந்தார். இவ்ர் தமது ஞானுமிர்த பத்திரிகையில் *இந்து மாணுக்கருக்குக் கிறிஸ்தவர் பாடசாலைக் கல்வி எதமாம் என வருங் கட்டுரையில் மிஷன்பாடசாலைக் கல்வி முறையால் வரும் குறைபாடுகளை எடுத்துக் காட்டியுள்ளது இவரது மனப்பான்மையை விளக்கும். செந்தமிழ்ப் புலமைத் தலைமைபூணும் பெருநோக்கத்தோடு கலைபயின்று வரும் காளில் குன்மநோய் இவரைப் பீடித்துக் கொண்டது. வைத்தியத்தினுலும் அது தீர்ந்திலது. உணவுதானும் எற்றுக்கொள்ளக்கூடாத அளவு கோய் அதிகரித்துத் துன்

Page 7
5 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
பத்தைக் கொடுத்தது. “இந்நோயினுல் வருந்தி வாணுன் விணுள் ஆவதிலும் உயிர் விடுதல் நன்று. அதிலும் சிவ சங்கிதானத்தில் உபவாசமிருந்து உயிர் துறத்தல் மிகவும் கன்று’ என தீர்மானித்து உடனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையடைந்து முருகப்பெருமான வணங்கி “புண்ணிய புராண முழுமுதல்வரான சண்முகநாதனே சுப்பிரமணிய சுவாமீ" தமியேனைப்பற்றிய இந்நோய் தீர்த்து அடிமை கொண்டருள வேண்டும்” என்று பிரார்த்தித்து, கந்தபுராண தோத்திரப் பாக்கள், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தச் கலிவெண்பா, திருப்புகழ் என்னும் திவ்விய பிரபந்தங்களைப் பாராயணஞ் செய்துகொண்டு அங்கே சிலகாலம் இருந்தார். இவ்வாறு ஒரு மண்டலத்துக்குமேல் அரிய உபவாசம் அநுட்டித்து வரும்போது ஒருநாளிரவு சொப்பனத்தில் அர்ச்சகர் பாயசங் கொடுத்தருளப் பெற்றுண்டு ஆனந்த பரவுசராய்த் துதி யெடுத்து;
*அந்தமி லொளியின் சீரா லறுமுகம் படைத்த பண்பால் எச்தை கண் ணின்றும் வர்த வியற்கையாற் சத்தியாம்பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையாற் றனிவேற் பெம்மான் கந்தனே யென்ன மின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம்.? எனப் பலவாறு திருவருளின் திறத்தை வியந்து கந்தவேள் திருவடிப்பற்று மேன்மேலும் ஓங்கி வளர அப்பெருமான் இன்னருள் பழுத்த சங்கிதானத்தில் சிலபகல் தொண்டு செய்து வந்தார். இதுமுதல் இவரது எதிர்காலச் சரித்தி சத்தினை ஆராயும்போது இவர் பாராயணம் பண்ணிவந்த கந்தர்கலி வெண்பாவின் இறுதிக்கண்ணதாகிய,
v» so ao ao 9 9 UA 48 e un o .உள்ளமுவக் -
தாறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன் கூறுமவர் சிச்தைகுடி கொண்டோனே-சாறுமலர்க்

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
கந்திப் பொதும்பரெழு காரலேக்குஞ் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்குஞ் செவ்வேளே-சந்ததமும் பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும்-பல்கோடி பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசமடற் பூதமுந்தீ நீரும் பொருபடையும்-தீதகலா வெவ்விடமுர் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம்வக் தெம்மை யெதிர்த்தாலும்-அவ்விடத்திற் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும் அச்சமகற்று மயில் வேலும்-கச்சைத் திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையு மீரா றருள்விழியு மாமுகங்க ளாறும் -விரிகிாணம் சிந்தப் புனைந்த திருமுடிக ளோாாறும் எந்தத் திசையு மெதிர்தோன்ற-வந்திடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி எவ்வாமுங் தந்து புகுச் துல்லாச மாக வுளத்திருந்து-பல்விதமாம் ஆசுமுத ஞற்கவியு மட்டாவ தானமுஞ்சீர்ப்
பசுமியல் பல்சாப் பியத்தொகையும்-ஒசை எழுத்துமுத லாமைச் திலக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்-தொழுக்கமுடன் இம்மைப் பிறப்பி லிருவா தனையகற்றி மும்மைப் பெருமலங்கண் மோசித்துத்-தம்மைவிடுத் தாயும் பழையவடி யாருடன் கூட்டித் தோயும் பாபோகம் துய்ப்பித்துச்-சேய கடியேற்கும் பூங்கமலச் கால்காட்டி யாட்கொண் டடியேற்கு முன்னின் றருள்.”
என்னும் வரிகளில் குமரகுருபா சுவாமிகள் வேண்டியபடி பலவரங்களைச் பெற்றுச் சுகமாய் வாழ்ந்து வந்தார். நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் இவர் செய்த பிரபந்தங்களில் ஒன்ருகும். அது சுப்பிரமணியக் கடவுள் திருவிளையாடலை விள க்குவது. குருநாதனும் முருகப்பெருமான் இவரது

Page 8
8 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
உபாசனமூர்த்தியாம். இவர் செய்த நூல்களில் சுப்பிா மணியப் பெருமானுக்குப் பாடிய வணக்கச் செய்யுட்கள் இதனை விளக்கும்.
“கற்பக நாட்டும் வைவேற் கந்தவே ைெணவிண் ஞேர்க்குக்
கற்பக நாட்டில் வாழ்வு கண்டவ விடுவ சேனன் கற்பக நாட்டி யத்திற் காதல வென்னிற் றில்லைக் கற்பக நாட்டின் றேகுஞ் சமன்வலி கடப்பிக் கும்மே. இது, இவரியற்றிய சிதம்பர சபாநாத புராணத்தில் வரும் காப்புச் செய்யுள், இதில் மூத்தபிள்ளையார் துதியும், இளைய பிள்ளையாராகும் சுப்பிரமணியர் துதியும் கூறப்படுகின்றன. நாவலாவர்கள் சிவபூசைக்குரிய பாத்திரங்களுள் முக்கிய மான வெள்ளிக்குடமானது சுழிபுரம் பருளைக் கந்தசுவாமி கோயிலுக்கு 40 வருடங்களுக்குமுன் நன்கொடையாக உதவப் பெற்று அக்கோயிலில் அபிடேகங்கள் நடைபெறும் போது உருத்திரம் ஸ்நபனங்களுக்கு விசேட கும்பமாக வைத்தாளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இப்பெரியார் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியா சாலையில் ஆறுமுகநாவலரவர்கள் விரும்பியபடி சிலகாலம் தலைமைத் தமிழ்ப் போதகாசிரியராக அமர்ந்திருந்து அந்த வித்தியாலயத்தை அந்நாளில் நடைபெறச் செய்தார்.
அருளுபதேசம் பேற்றது:
பின்பு திருவாவடுதுறையை அடைந்து அவ்வாதீனக் துப் பதினுழுவது மகாசங்கிதானமாய் விளங்கிய பூரீ சுப்பிர மணிய தேசிக சுவாமிகள் அருளுபதேசம் பெற்று அவர்கள் முன்னிலையில் 12 வருடகாலம் ஞானநூல்களையெல்லாம் மரபாற் கற்று வல்லராய் இலக்கிய, இலக்கண, தர்க்க,

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 9.
வேதாந்த, சித்தாந்த சாகரமாய் அவ்வாதீன வித்துவசிகா மணியாய் விளங்கி மிக்க புகழும் தக்க வரிசையும் பெற்ருர், சுப்பிரமணிய உபாசனையினுல் இங்கிலையைப் பெற்ருரர் எனலாம். மேலும் நோய்தீர்த்தருளிய அப்பெருமான் திருநாமம் இவருக்கு உபதேசம் செய்த தேசிக சுவாமி களுக்கு அமைந்திருத்தல் வியப்புடைத்து.
விவாகம் செய்தது:
f
இவர் நன்மாமனுர் சுழிபுரம் க. சரவணமுத்து என்பவ ருக்குப் பல ஆண்மக்கள் பிறந்தும் பெண்மகவு இல்லாக் குறையினுல் அவரும் மனைவியும் பெருமான ப்லகாலம் வேண்டியிருந்தனர். சபாபதியானவர் இளம்பருவத்திற் படித்துவரும் நாளில், அவர் ஆற்றலைக்கண்டு மகிழ்ந்து மருமகனுக்குக் கொடுக்கக்கூடிய தகுதியான வெகுமதி இல்லையே என்றிருந்த நினைவின் பயணுகப் பின்னுளில் இவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. இளைஞராகிய சபாபதி என்பார் கென்னிந்தியாவுக்குச் சென்று திருவாவடுதுறை ஆதீனத்தில் பலவருடகாலம் கலைகள் பயின்று தமிழ் நாட்டிலே பிரசங்கங்கள் செய்தும், நூல்களியற்றியும், கன் "மாணுக்கருக்குக் கல்வி புகட்டியும் பொழுது போக்கினுர். இவர் நெடுங்காலம் யாழ்ப்பாணம் வரவில்லையே, விவாகம் கடக்கவில்லையே என்று பெற்ருேரும் உறவினரும் இவர் வாவை எதிர்பார்த்திருந்தனர். இவர் மாமன் மகள் ஒரு வித்துவான மணம்புரிவாள் என்று சோதிடம் வல்லார் கூறினர். தமக்கு இப்படி விவாகம் நடக்குமென்றறிந்த இவர், யாழ்ப்பாணம் வந்தபோது இவருக்கும் மாமன்
மகளுக்கும் விவாகம் நடந்தது. சிலகாலம் இல்வாழ்க்கையி

Page 9
26) சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
லிருந்து மீண்டும் தமிழ்நாட்டுக்குச் சென்று முன்போலச் சற்கருமங்களைச் செய்யத் தொடங்கினர்.
காவலர் பட்டம் :
அவையோர் வியக்கச் சொல்லும் உரைவன்மையினை யும், நிகழ்த்தும் சைவப்பிரசங்கப் பிரவாக மகிமையினையும், மாயாவாதி முதலிய குதர்க்கர்களும் பிறரும் நாவடங்கச் செய்யும் நியாயவாதச் சொற்போர் வென்றியினையும் குறித்துச் சுப்பிரமணிய யோகீந்திரர் இவருக்கு, "நாவலர்' என்னும் பட்டத்தினை மனமகிழ்ந்து அளித்து ஆதரிக்க, ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மகா வித்துவத் விசேட ணத்தோடு நிலையிட்டு ஆசீர்வாதஞ் செய்தருளா கின்ருர்கள்.
மெய்கண்ட சாத்திரமாகிய சிவஞானசித்தியார் சுபக் கம் இருவருாையுடன் தென்னிந்திய சைவசித்தாந்த நூற். பதிப்புக் கழகம் 15ம் இலக்க வெளியீடாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தப் பதிப்பில் நூலாசிரியரான அருணங்தி சிவாசாரியார் சரித்திரச் சுருக்கமும், உரையாசிரியர்களான சிவஞான யோகிகள், சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் சரித்திரச் சுருக்கங்களும் அடங்கியுள்ளன. மகாசங்கிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் சரித்திரத்தில் வரும் விசேடக்குறிப்பு, “நாவலரேறு' என்று சொல்லப்படும் யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதி நாவலாவர்கள் கமது தேசிக சுவாமிகளிடத்தே உபதேசம் பெற்று ஆதீன வித்துவானக விளங்கினர்கள்’ என்பதாம். சபாபதி நாவல *ரவர்கள் குருபத்தியிற் சிறந்தவர்கள். இதனை இவர் செய்த நூல்களில் சுப்பிரமணிய தேசிக சுவாமிகளுக்குச் செய்த வணக்கத்தால் அறியலாம்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 1董
*தாவநெற் றிருக்கயிலைத் திருஈர்தி மா புனிே
தழைக்கப் போந்து
தேவடுவொன் றில்லாத மாதவத்தோ ரக விருளைச்
சீக்கும் பானு
மாவடுவின் வரென்ன கண்ணிவழி படமாசின்
மணிதான் மேவு
மாவடுதண் ைெறசையிற்சுப் பிரமணிய தேசிகன்ரு
ளடைந்துய்க் தேனல்.’
இது இவர் பாடிய திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தக் தாதியிற் கண்டது.
நாவலரவர்கள் வித்துவ மாட்சியினையும், கேட்டார்ப் பிணிக்குங் தகையவாய பிரசங்க வன்மையையும்பற்றி மடாலயத்துக் கூடும் புலவர் பெருமக்களும் பிறரும் வியந்து பேசும்போது சுப்பிரமணிய தேசிகர் அதற்குப் பதிலாக, ‘பூரீசபாபதிகள் சிவஞான யோகிகள் உபாசகர்' என்று தந்துணிபு கூறுவார்கள். அதுமட்டோ, சுப்பிரமணிய தேசிகர் சபாபதி நாவலர்பால் கொண்ட அன்பின் மிகுதி யால் அவரைத் தமது அபிமான புதல்வராக வைத்து உபசரித்து வேண்டுஞ் சன்மானங்கள் செய்து கொண்டாடி வந்தனரென்பது பலரும் நன்கறிந்த விஷயமே. நாவலாவர்க ளியற்றிய நூல்களுள், சிவஞானமுனிவர் வணக்கம் பெரிதுங் கறப்படுதலால் அம்முனிவர் இவரது உபாசணு குரவர் என்பது பெறப்படும்.
*தவமுந் தவமுடையார்க் காகும்’ என்ருற்போல இவர் சிவஞான யோகிகளை உபாசித்ததனுற் போலும் *சபாபதி நாவலாவர்கள் உரைநடை சிவஞானமுனிவர் உரைநடைபோலச் சிறந்து நிலவும் பெருமை வாய்ந்தது’ எனப் புலவர் புகழ்ந்து போற்றுவர்.

Page 10
12 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
திராவிட மாபாடியம் பெற்றது:
சர்வகலா ரூபமாய் விளங்கும் திராவிட மாபாடியக் தினை துறைசை ஆதீனத்தார் அதிதீவிர பக்குவமுடை யார்க்கே வாசிக்கக் கொடுப்பது வழக்கமாகவும், மகாசங்கிதா னம் நமது புலவர் பெருமானிடம் கொடுத்து வைத்திருக் தார்கள். அவ்வாறு கொடுத்து வைத்தது நமது வித்துவ சிாோமணியிடம் அவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பையும், பூண்டிருந்த அன்பையுங் காட்டுகின்றது. நாவலாவர்கள் அப்பாடியக் கலையைக் கைக்கொண்டு தமது ஆதீன ஞான நிதியாக வைத்துப் பூசித்து ஆராய்ச்சி செய்து வந்தார்கள்.
தேசாபிமானமும், பாஷாபிமானமும், சமயாபிமானமும் : " .
நாவலரவர்கள் சுதேச நன்மையை நாடியும், ஆரிய மதாபிவிருத்தி நாடியும், சைவசமயாபிவிருத்தி நாடியும், சென்னையின்கண்ணமர்ந்தும், திராவிடதேசமெங்கும் விஜயஞ் செய்தும், பிரபல கிரந்தங்களாலும், பத்திரிகைகளாலும், பிரசங்கங்களாலும் பிரபல சற்கருமங்களைச் செய்து வந்தார் கள். அவற்றைக் குறித்துத் திராவிட தேசாபிமானிகளும், ஆரியமதாபிமானிகளும், சைவசமயாபிமானிகளுமான எல் லோரும் பாராட்டினர். இராமநாதபுரம் பூரீபாஸ்காசேது பதி அவர்கள் நாவலரவர்கட்கு எழுதிய கிருமுகங்களில் “சைவசிகாமணியாயும், பரசமய கோளரியாயும் விளங்கா கிற்கும் கனம் நாவலரவர்களுக்கு’ என்றும், "சைவப்பயிர் த்ழைக்கப் பிரசங்க இடிமுழக்குடனும், விபூதி ருத்தி ாாட்சப் பொலிவாகும் மின்னலுடனும் ஒங்கி வளரும் ஒரு முகிலாகிய கனம் நாவலாவர்களுக்கு' என்றும், 'தங்களை

... a . . . . சபாபதி நாவலர் சரிக்கிரச் சுருக்கம். 13
யாம் அழைத்துவந்த காரணம் தங்கள் பிரசங்க அமிர்தத் தினை நுகருமாறும், நம் சமஸ்கானத்திலுள்ள சகல பிரஜை கள் சைவசமய உண்மைகள் தேறுமாறும், திராவிட சைவ சித்தாந்த வித்தியா போதஞ் செய்து போதரும் கடப் பாட்டினைத் தாங்கள் மேவுதல் வேண்டுமென்றே என்றும் வாைந்துள்ளார்கள். இவை சைவசமயாபி விருத்தியிலும், டாஷாபி விருத்தியிலும் அவருக்கிருந்த ஊக்கத்தினை அறி விக்ன்ெறன. மதுரை ஆதீன மடாதிபதியாய் வீற்றிருந்த தி ஞானசம்பந்த சுவாமிகளும், திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியாய் வீற்றிருந்த பூரீ சுப்பிரமணியதேசிக சுவாமிகளும் அவ்வாதீன மடாதி பதியாய் வீற்றிருந்த பூரீ அம்பலவாணதேசிக சுவாமிகளும், சூரியனுர் கோயில் ஆதீன மடாதிபதியாய் வீற்றிருந்த பூரீ முத்துக்குமாரதேசிக சுவாமிகளும், நாவலரவர்கள் செய்து போந்த சைவசமயோத்தாாண சற்கருமத்தினை திருவாய் மொழிகளாலும், பூரீமுகங்களாலும் எடுத்து வியந்து பாராட்டி அவர்களை ஆசீர்வதித்தருளிய வரலாறு கள் தமிழ் நாட்டு மேன்மக்கள் எல்லாம் நன்கு அறிந்து போற்றற்பாலன. நூல்கள் இயற்றியது:
நாவலாவர்கள் சிதம்பரத்தைத் தமது வாசஸ்தான மாகக் கொண்டு அங்கு வசித்துவரும் நாளில் பல தலபுரா ணங்களையும் ஆராய்ந்தார்கள். அதன்பயணுகச் 1, ‘சிதம்பர சபாநாத புராணம்’ பாடினர். இஃது சிதம்பர மான்மியம் ஐந்தனுள் ஒன்றன ஏமசபாநாதமான்மியத்தின் மொழி பெயர்ப்பாயுள்ளது. தொல் ஆசிரியர் செய்யுள் நடைத்தாய் நடராஜமூர்த்தி தலம், தீர்த்த வரலாறு உணர்த்துவது.

Page 11
54 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
893 செய்யுட்கள் கொண்ட இந்நூலை பார்த்திபடு வைகாசிமீ (1885) வெளியிட்டனர். இப்புராணத்துள்ள படலங்கள்:- திருநாட்டுப்படலம், திருநகரப்படலம், நைமிசைப்படலம், புராணவரலாற்றுப்படலம், பிச்சாடனப் படலம், தேவதாருவனப்படலம், அனந்தப்படலம், புண்டரீ கப்படலம், வியாக்ரபாதப்படலம், திருநடனப்படலம், ஏம வன்மப்படலம், தீர்த்தவிசேடப்படலம், யாத்திரோற்சவப் படலம் என்பன. இப்புராணத்துக் காப்புச் செய்யுள் வருமாறு: ஞானமிக வளரினஃ றிணையவுயர் திணையாகு நவிலஞ்ஞான வீனமிக வளரினுயர் திணையவஃ றிணையாகு மென்று தேற்றன் மானவஃறிணைமேலு மாண்டவுயர்திணைகீழும் வடிவிற்காட்டித் தேனமரும் பொழிற்றில்லைச் சிகரிவாழ் கற்பகத்தை வணக்கஞ்
செய்வாம்.
இது முதலாக இதன்கண் சபாநாயகர், சிவகாமியம்மை, தக்ஷிணமூர்த்தி, கற்பகவிநாயகர், வயிரவக்கடவுள், அறு முகக்கடவுள், அகத்தியமுனிவர், சமயகுரவர், தில்லைவாழக் தணர், அறுபத்துமூவர், சேக்கிழார்நாயனர், சந்தானகுரவர், ஏனைநாயன்மார், நமச்சிவாயதேசிகர் முதலிய குரவர், கிரா விடமாபாடியகாரர் வணக்கச் செய்யுட்கள் சொற்சுவை
பொருட்சுவை நிரம்பியுள்ளன.
சபாநாயகர்
பொன்பூத்த மணிமன்று ளானந்த சடங்காணப்
புகுவோர்க் கிந்தக்
கொன்பூத்த குஞ்சிதமென் பாத தரி சனத்தினே
கூடு முத்தி
மென்பூத்த பிறமுயற்சி வேண்டலெனுங் குறிவாதா
பயத்தின் மேவ

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 量每
மன்பூத்து சடங்குனிக்கும் பெருவாழ்வைப் பணிந்தேத்தி
வாழ்வா மன்னே.
சிவகாமியம்மை
கிறைந்திடும் பானைக் தொழின்முறை குயிற்ற
நிகரிலாச் சிவமுதலாக வறைக்திடு மேழு பேதமாய் மன்னி
யடைதாற் கேற்றிடத்தானு முறைக்திடு சத்தி முன்னெழு வகையா
யுயிரொடெப் புவனமுமளித்துச் சிறந்த சிற் சபையி னிருத்த சான்முகித்
நிகழ்சிவகாமியைப் பணிவாம்.
தில்லைவாழந்தனர் எல்லைகாண் டற்கரிய தியாகேசப் பிரான்சுருதி
யியம்பும் வாயால் தில்லைவா ழந்தணர்த மடியாற்கு மடியேனென்
றெடுத்த சீரார் ால்லவே தாகமங்கள் கரை கண்டோர் சாமிவரி
லொருவ சென்று சொல்லமா நடராசற் பெறுமூவா யிரமுனிவர்த்
தொழுது வாழ்வாம். t அவையடக்கத்துள் வரும் செய்யுள்களில் முதற் செய்யுள்:
*அருள் பெருக்கு மேமசபா நாதமான் மியமதனை
யாய்ந்து நீகற் பொருள்பெருக்கு முயர்தமிழாற் புராணமுறை கூறுசெனப்
புலமை சான்ற தெருன்பெருக்கு ஈடாாசன் றிருவடிக்கன் புடைமறையோர்
செப்பு மாற்ரு லொருவழிப்பட் டெழுமாசை கனிதூண்டத் தமியேனி
துரைக்க லுற்றேன்.”

Page 12
翼每 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
என்பது. திருநாட்டுப் படலத்துள் முதற்செய்யுள்.
கொன்றை யக்தொடை மிலைச்சிய சடைமுடிக் கூத்த சொன்று போருட் பிராட்டியொ லெகெலாமுய்ய கின்ற வம்பலத் தில்லையை யகந்தழீஇ டிே மன்றவோங்குறு பொன்னிநாட்டணிாலம் வகுப்பாம். என்பது. காவிரிநதி வளம் பொருந்துதலால் சோழ நாடா னது பொன்னிவளச் சென்னிநாடு என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றது. அங்கதியின் சிறப்பைக் கூறும் கவிகளில் ஒன்று: புண்ணியப் புனனட்டுள்ள பொருவிலாக் குறிஞ்சி முன்ன வெண்ணிடு நிலங்கள் யாவு மிவ்வகை குறும் பெறிந்து திண்ணிதி னடிப்படுத்துத் திருர்துறச் செங்கோ லோச்சித் தண்ணளி மிகுந்தெஞ்ஞான்று சராசா மோம்பும் பொன்னி,
என்பது. திருநகரப் படலத்தில் முதற்செய்யுள்.
திருவளர் பிரமாண்டத்துச் செறிந்த பல் புவனம்யாவு முருவளர் பலவுறுப்பா யொளிர்தா வுயருக்தில்லை பெரியவவ் வுறுப்பியாவுக் தொழிற்படப் பிரோகஞ்செய் யிருதயகமலமாமே லதன் புக ழெண்ணற் பாற்ருே. என்பது. தில்லையின் பெருமை கூறும் செய்யுட்களிலொன்று: திருவினற் கவினற் றேசாற் றிருத்தத்தாற் சிறப்பு வாய்ந்த வுருவிஞ லுயர்வான் மாண்பா லொழுக்கத்தா லோத வொண்ணு வருமையாற் புகழா னன்கா வாக்கத்தா னறிவா னன்ற பெருமையாற் றனக்குத் தானே யுவமையாம் பிறங்கு தில்லை. என்பது. நாற்பாதங்களில் நின்று அந்நெறிகளில் வழுவாது தருமபரிபாலனஞ் செய்வோர் இடங்களைப்பற்றி வருஞ் செய்யுட்களாற் கூறுகின்ருர்:-
அனுதி சைவனஞ் சிவபிரான் முகமைந்தி லடைந்து பினகி மாறின்றி யாகம மறைநெறி பேணி மனதி மூன்றினுஞ் சிவனருட் பணிபுரி மாண்பா ரினவ கன்றால் வேதிய ரிருக்கைக ளிண்டும்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம், 1
அரிய ஞானிக டிருமட மொருபுடை யனவும் பெரிய யோகியர் திருமட மொரு புடை பிறழுங் கிரியை பேணுகர் கிருமட மொரு புடை கெழுமுஞ் சரியை யாளர்க டிருமட மொரு புடை தழுவும்.
அன்னசா?லக ளொருபுடை யரியமா முனிவர் பன்னசா?லக ளொருபுடை பலகலை விதங்க ணன்னர் நான்மறை யாகம முறைப்பட நாடும் பொன்னின் மாமுடிப் பட்டிமண் டபமொரு புடையே, கீதமேம்படு நான்மறை யோது பல் கிடையு காதமேம்படு நால்வர்செக் தமிழ்பயில் களனும் போதமேம்படு தொண்டர்தம் புராணமு நடேசன் வேதமான்மிய மைந்துமோ திடங்களு மிகுமே.
உம்பர் நாயகனும் இறைவன் திருக்கோயிலின்கண் அமைந்துள்ள மண்டபங்களின் சிறப்புக்களை வரும் செய் யுட்களால் கூறுகின்றர்.
வேந்தரு மைந்தொழி னடத்த சாதனர் நவந்தரு பேதமாய் சண்ணிடச் சபை நவந்தசச் சமைக்தெனச் சிகரி நான்குமொண் ண வந்தரு கூடங்க ணண்ணி யோங்குமே.
ஆயிரக்கான்மண்டபம் அண்ணலார் திருவயி டேக மாடு சீர் வண்ணவா யிரமணிக் கால்செய்ம் மண்டபம் புண்ணிய முனிவருஞ் சுரரும் பூதரும் மண்ணகத் தடியரு நெருங்கு மாட்சித்தால்.
கல்யாணமண்டபம் கீற்ருெளி திகழ்தரு மேனி நின்மலன் மாற்றரு மறைநெறி யுயிாம ணந்திட வேற்றசீர்ப் பாைதனை ஞான மாமண மாற்று பொன் மண்டபங் கவினு மாங் கொர்பால்.
2

Page 13
盘8
சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
சிவகங்கை சூழ்மண்டபம் புங்கவ பாமிர்தினைப் பொதிந்த பெட்டியி
னங்கண னருள்வடி வாய்ம லப்பிணி சிங்கிடத் துமிக்குமொர் தீர்த்த மாஞ்சிவ கங்கை குழ் மண்டபங் கவினு மாங்கொர்பால்.
குமரவேள்கோட்டம் அமார்வாழ் வுறத்திரு வுளங்கொண் டன் ருெரு சமரம்வேட் டயிற்படை தாங்கு செங்கை 5ங் குமரவேள் சின்மயக் கோட்ட மன்பர் தந்
திமிரவெவ் வினைகெடத் திகழு மாங்கொர்பால்.
விநாயகர் கோயில் அாாமய னைங்கா னகு வாகனன் விநாயக னெம்பிரான் விமலக் கோயினன் மனதியின் வழிபடு மடியர் வாழ்வுற
விஞது.ாக் தருள்கொழித் திலங்கு மாங்கொர்பால்,
சிவகாமியம்மையார் கோயில்
அம்பிகை பரைசிவ காமி யன்னையா
ரிம்பர்வா ழடியரை யாத்திட் டின்னல்செய் வெம்புறு பிறவிநோய் வீட்டி மேவுசீர்ப் பைம்பொன லயமொளி பரப்பு மாங்கொர்பால்.
திருமூலட்டானம் பரசிவன் கருணையாலே பல்லுயிர்க் கருள் வழங்க வருவுரு வாயஞான மேனிகொண் டளப்பில்சாகைச் சுருதியொர் வடிவாயோக குந் துரயவா னீழன் மேவு மொருதிரு மூலட்டான முரையிறக் தொளிருமோர்பால்.
பேரம்பலம்
மாதவன் விரிஞ்சஞதி வானவர் முனிவரேனுே ராதாம் பெருகவேத்த வளப்பிலா ஞானனந்த

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 蓝蟹
சாதனே லக்கமேவு நலங்கிளர் தேவமன்றென் முேதுபே ரம்பலம்வா னுற்ருெளி விரிக்குமோர்பால். நிருத்தமண்டபம் கார்த்திரு மேனிமாயோன் முதலியோர் கலங்கியோட வார்த்தெழு மாலங்கண்டத் தடைத்தருள் சுசக்தவண்ண லூர்த்துவ நடங்குயிற்று மொருபெரு கிருத்தமனறம் வார்த்தை கட் கதீதமான திருவினல் வயங்குமோாபனல்.
தம்பக்கொடி
வேற்றுப்புன் சமயத் தெய்வம் யாவையும் வினையுட்பட்கித் தோற்றுத் தன் ஞணைதாங்கத் தொலைவின்றி நிலவலாலே சிற்றுச்செஞ் சடைப்பிாானே பதியென நிறுவுந்தம்ப மேற்றுச்சீர்க் கொடி வான்போகப் பொதுவின்முன் னெழுக்
(திலங்குன். தெய்வசபை
கவினெலா மொருவழிப்படத் திரண்டரோ காமர் சவமணிக் குவைகுயின்று சித்திர முயிர்டுண்ணச் சிவணியோர் பசும்பொற் சபைக் கெதிருரீஇத் திகழு மவதிதீா பெருக்தெய்வமா மண்டப மதுவே.
பொன்னம்பலம் சாதனந்தியம் பெருந்தகை காவல்வீற் றிருப்பாய் வேதமோதினர் தில்?லவா ழந்தணர் மிடைந்தே போதொாாறினு நிருத்தர்பூ சனைபுரி யிடஞய்ச் சோதிமேவு பொன்னம்பல மலவிரு ரெக்கும்.
தம்பங்கள்
சத்தமாயை முன்னன தத்துவம்பல குழ்போம் பித் நியாதிபல் லுறுப்புமாய்ப் பிறங்கிடப் பெரிய சத்தியொன்பதுந் தாபிக ளாகிமேற் றயங்க வித்தை யாவுமைம் பீடத்துக் தம்பமாய் மிளிர.

Page 14
リ சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்,
எற்றமாகுமைஞ் செழுத்துமைம் படிகளா விலங்கள் சாற்ருெரணுமனு ரகசியஞ் சதாசிவ பீட மேற்றிகழ்ந் திடமகேச னைங்கான் சூலிவிசாக ஞற்றனந்திசண் டேசுர னகன்புடை யடுப்ப.
J. J. G.) L ஆடகப்பெருங் கிரிமிசை யணவு தென் சிகர மாடொர்சிற்சபை விளங்குமற் றதன்பெரு மகிமை நாடியிற்றென வுரைப்பரி தெவர்க்குமெய்ர் நடன மாமெப்பொது நியதமா வளப்பருஞ் சிவமே,
திருநகரப் படலத்தின் இறுதிச் செய்யுள் மோனஞானிக டேறிடு முடிவில்சீர்த் தில்?ல மாநகர்ச்சிறப் பெனது சிற் றறிவிற்கு வசமோ வானவாதரத் தொருசில வறைந்தன னணிப்பொன்” ஞானமன்றுடை நாதன் மான்மியமினி நவில்வேன்.
நைமிசப் படலத்துள் முதற் செய்யுள் பூமகட்கொரு நிலயமாய்ப் போர்க்க று சீர்த்தி ராமகட்கணி யாங்கமாய் நவிலுமெண் ணுன்காஞ் சேமநல்லறக் குயிரதாய்ச் சிறப்புறுங் த கைத்தான் மாமலர்த்திருப் படப்பைகுழி நைமிச வனமே. ஐத்ருெரு செய்யுள்:- r- தேவபாடையின் மாதவச் சிறுவர்களோதும்
பாவுமூவறு வித்தையும் பலமுறைகேட்டுக் காவின்மேவுறு பூவையுங் கிள்ளையுங்கனிவா ஞவினேதிடக் கிளர்வுறு நைமிசாரணியம்.
புராணவரலாற்றுப் படலத்துள் சில செய்யுட்கள் 3. அரியபல் கலையு மங்கமோ ராறு
மரிறப வுணர்ந்தனை ஞானம் பெரிதுநன் கடைந்தே வுரைசெய வல்ல
பெரியருட் சிறந்தனை பிறங்கு

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
மிருவகை யாகிப் பாவுறு காண்டத்
தியலும்வே தாகம புராணம் வான்முறை தெரிந்து மேம்படு புலமை
மன்னினை மாதவ ாேறே. ஆதலிற் பெரிது மேம்படு பொருளா
யனைத்தினு முயர்ந்ததா யாய்ந்திட்
டோதுதற் களிதா நுண்ணிய பொருளொன்
றுன் வயிற் கேட்டினி துணருங் காதன்மிக் கடைந்தே மாயினம் வார்த்தைக்
கதீதமாய்க் கதித்துயர்ந் தோங்கு மேதகு தெய்வத் தலங்களுட் கலியை
வென்றுமேம் படுமுயர் தலத்தே. மறைமுடி புணர்ந்த ஞானிக ளறிந்து
வழிபடுந் தாத்ததா யாண்டு . முறை தரு மெல்லாப் பொருளினு மடங்கா
துயர்ந்ததாய்த் தனதிய லுணர்ந்து முறையுளி வழிபா டாற்றுார் வேட்ட
வேட்டவா றுடன்முழு தருளுங் குறைவிலா னந்தம் வழங்கருண் மூர்த்தி
யாதுநீ கூறெமக் கென்ருரர். அவ்வுரை கேட்டு வசிட்டன மேலோ ன கமகிழ்ந் தாரிடர் வதனஞ்
செவ்விதி னேக்கு முனிவிர்நீர் கேட்ட
சிவா46 சியமுரைக் கின்ரு மிவ்வக லிடத்துப் புண்ணியம் பயக்கு மெழிற்சிவ தலங்களுள் வீடுக் திவ்விய போகர்தானு சன்களிக்குங் திருக்
கோயில் சிதம்பா மாமால். அத்தகு த லத்தி னுேங்கு சீர்த் தேவர்க்
கரியமெய்ஞ் ஞானவா காய கித்திய மன்றிற் சிவபிரா னியத
வானந்த கிருத்தான் கியற்றுஞ்
密篮

Page 15
宠宠 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்,
சித்தநற் கமலத் தேமறை பொருளாய்ச் சிறந்தகா ரணமதாய் வேதாந்
தத்தினுற் றெரிக்குஞ் சோதிபுண் டரீக
புரத்திடைத் தரிசிக்கப் படுமால்.
ஆசிரியர் இப்புராணத்தில் சைவாகமங்களின் நுண் பொருள்களை வகுத்து வேண்டியவாறு போதிக்கும் வழக் குடையார். அதனுல் இப்புராணம் சைவசித்தாந்தத் தனிப் பொருள் தெரிப்பது.
இப்புராணத்துக்குச் சிறப்புப்பாயிரங்கள் திருவாவடு அதுறையாதீனத்து பூரீமத் இராமலிங்க சுவாமிகளும், பூரீமத் ஆறுமுகசுவாமிகளும், இந்நூலாசிரியர் மாணுக்கர் சிதம்பரம் அ. சோமசுந்தாம் முதலியார் அவர்களும் இயற்றியுள்
ஓரார்கள்.
2. சிவகர்ணுமிர்தம் :
இது அப்பய தீக்ஷித யோகிகள் வடமொழியில்: இயற்றிய சிவகர்ணுமிர்தம் மொழிபெயர்ப்பாயுள்ள வசன கிரந்தம். பூர்வபக்கம், சித்தாந்தமென இருபகுதித்தாய்ச் சிவபாத்துவம் நுதலுவது. இந்நூலை, திருப்பனந்தாட் காசி மடாதிபதி, பூரீமத் குமாரசுவாமிச் சுவாமிகள் கட்டளை பிட்டருளியபடி நாவலாவர்கள் இயற்றி, பார்த்திபடு) ஆவணிமீ (1885) வெளியிட்டனர். இந்நூலுக்குச் சிறப் புப்பாயிரங்கள் திருவாவடுதுறை ஆதீனத்து பூரீமத் இராம லிங்க சுவாமிகளும், பூரீமத் ஆறுமுக சுவாமிகளும், பூரீமத் பழனிக்குமாா சுவாமிகளும், கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் உ. வே. சாமிநாதையரவர்களும், சேற்றுார்ச் சமஸ் தான வித்துவான் சுப்பிரமணிய கவிராசர் அவர்களும்

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 2数
திருவாவடுதுறை ம-ா-ா-பூரீ பொன்னுச்சாமிப் பிள்ளை அவச் களும் இயற்றியுள்ளார்கள். இந்நூலின் தற்சிறப்புப்பாயிரம்:
வாகை மாடுடற் முெழுதுமாதவச் சிவஞான யோகிசுப்பிரமணிய தேசிகனை யுண்ணிறீஇத்தே மீகொளப்பதீக் கித னருள் சிவ கர்ணுமிர்தத்தை யூகமார் தமிழ்ப் பெயர்த்து நாவலர் பொருட்டுரைப்பாம்.
3. சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்:
இது வடமொழியில் அாகக்காசாரியர் இயற்றிய சதுர் வேத காற்பரிய சங்கிரக மொழிபெயர்ப்பாயுள்ள வசன கிரந்தம், பரமசிவனே நான்கு வேதங்களானும் எடுத்தோதப் படும் பரம்பொருளென்று சாதிப்பது. நாவலரவர்கள் இதன் முதற்பதிப்பை தாது(டுெ) சிக்கிரைமீ"லும், இரண்டாம் பதிப்பை சர்வசித்துளு) வைகாசிமீலும் (1887) வெளி பிட்டனர். அம்மொழிபெயர்ப்புப் பிரதிகள் கிடைத்தல் அரிதாதல் பற்றி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார் இரத்காட்சி(u) ஆவண்மீல் (1924) அந்நூலை மூன்றும்பதிப்பாக வெளியிட்டனர். கழகப் பதிப் புரையில் சுருதிசூக்திமாலை யென்னும் சதுர்வேத காற்பரிய ங்கிாகத்தின் மகிமையைக் கூறுமிடத்து வரும் விசேடக் தறிப்பு வருமாறு:-
“இத்துணைச் சிறப்பு வாய்ந்த அந்நூல் வடமொழியில் இருத்தலின் அஃது அம்மொழிவல்லார்க்கே பயன்படுவ நாகின்றது. வடமொழிக் கல்வி அருகிவரும் காலகிலையைக் கருதி அந்நூலைப் பல்லோர் தமிழில் மொழிபெயர்த்தார்கள். அவற்றுளெல்லாம் சிறந்ததும், முதனூற்பொருளைத் தெளிவு

Page 16
24 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
பெற விளக்கித் தமிழ்ச்சுவை ததும்பி நிற்பதும், திருக் கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து LAs விக்குவானுய் இருந்த யாழ்ப்பாணம் வடகோவைச் சபாபதி
காவலரவர்கள் செய்த மொழிபெயர்ப்பே. s
தற்சிறப்புப்பாயிரம்
மதியணி சடைமுடி வானவ னளித்த கதிதரு களிற்றின் கண்ணரு ஞரீஇச் சற்குரு நாதன் பொற்கழல் வணங்கி வரம்பெறு க?லயெலா மொருங்குமுழு துணர்ந்த விரதத் தாரடி புனைந்த மேலோ னாதத் தாசா ரியகு ளாமணி சிவனே பரனெனத் தேறிய யாவரும் வட மொழி யதனிற் றிடமுற வருளிய முதிர்போதங் காட்டு முதனூ லான சதுர்வேத தாற்பரிய சங்கிர கத்தினை யம்முறை மொழிபெயர்த் தரும்பொரு டோன்றச் செம்மைசேர் கடாவிடை சேர்கத் தியமாத் திருந்த நுனித் தெணிச் செய்குவ னருக்தமிழ் சாவலோ ர றிதற் பொருட்டே.
சிவவணக்கம்
"எவன் வணக் கத்தினுக் குரியனெவன் குணங்களா னிறைந்தோ னெ வன்வழி பாடியம்புாே ராயணமென் னுபநிடத
மெவனம்முயிர்ப் பிரோகன் மற்றெவன் வேள்விக் கெலாமிறை னவஞகுமீச வுனைக்க தி யிலியான் சரணடைந்தேன். [ar
வேதத்து மற்றதனுக் கவிரோத தந்திரத்தும்
விமல வுன்னைப் 's
போதிக்கும் வாக்கியங்க ளெவற்றினையு மறிந்தவற்ருற்
போந்த மூட

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 愛5
வாதத்துக் கிடமாகாத் தாற்பரியத் தினைச்சுருக்கி
வகுப்பா னுற்ற பேதைக்குட் பேதையா மெனக்கருளி மெய்ச்செறியிற்
பிரேரி யெந்தாய்.
நூல்
“வேதமாவது: மந்திரம், அருத்தவாதம், விதிவாக்கிய மென மூவகைப்பட்டுப் பிறவாக்கியங்களைப் பற்ருது தானே பிரமாணமாகி, விமற்சார்க்கன்றிப் பிறர்க்கறியப்படாத மெய்ப்பொருளினையுடைத்தாய் ஈசுரனையே அறிவிப்பதாம். இனி ஈசுர சத்தம் யோகத்தாற் பிறகடவுளரையு முணர்த்து மேனும், யோகரூடியினுற் சிவபிரானையே யுணர்த்தலின் அஃதவர்க்கேயுரிய பெயராம். யோகத்தினும் ரூடிவவி யுடைத்தென்பது மீமாஞ்சை வழக்கென அறிக. இது பற்றியன்றே நிகண்டு நூலுடையார் சிவாதி நாமங்கள் போல இதனைச் சிவநாமமாகக் கொண்டோதுவாாாயிற்
றென்க.’
இந்நூல் 60-பக்கங்கள் கொண்டது. இந்நூலிறுதியில் வரும் வசனங்கள் வருமாறு:-
“இந்நூலைப் படித்து இதன்பொருளை உள்ளவாறுணரப் பெறுவார்க்குக் கொள்ளற்பாலது பிறிதொன்றில்லை; அறிதற் பால,தும் பிறிதொன்றில்லை; எல்லாப் பேறும் இதனுல்ே யுண்டாம். இந்நூல் சிவபிரானுக்கோராரமாக மக்களுக்கு வேத சிவாகமப் பற்றை விளைக்க பசு நூற் பற்றைக் கெடுக்க சிவபிரான் திருவடிப் பற்றை வளர்க்க”
சான்பதாம்.

Page 17
26 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 4. பாரத தாற்பரிய சங்கிரகம்: 5. இராமாயண தாற்பரிய சங்கிரகம்:
இவ்விரண்டும் வடமொழியில் அப்பய தீக்ஷித யோகி கள் இயற்றிய பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம் மொழிபெயர்ப்பாயுள்ளன. பாரதத் தானும் இராமாயணத்தானும் நுகலப்படும் பாம்பொருள் பரமசிவனென்பது அறிவுறுத்துவன.
தற்சிறப்புப்பாயிரம்
ஆரியத் துயரப் பதீக்கிதன் முனமறைந்த பாரதத்தின் முற்பரிய சங்கிரகத்தைப் பாடற் சீரியற் றமிழா லுரைசெய வருள்செய்ய வீரமும்மதக் குஞ்சாப் பிரானடி விழைவாம்.
-பாரத தாற்பரிய சங்கிரகம்,
எங்குமொரு தானுகி நிறை ைகலைச் சிவக்களிறன்
றிமையச் சாாற் அங்கவருட் பிடிதழி யளித்தவொரு கயமுனிதா
டொழுது போற்றிப் பொங்கு புகழ் வடமொழியிற் பூசுரர்கோ னப்பதீக்கி
தன்முன் செய்த சங்கையிலி ராமாயணத்தின் முற்பரிய சங்கிரகங்
தமிழாற் செய்வாம்.
-இராமாயண தாற்பரிய சங்கீரகம். இந்நூல்களை நாவலரவர்கள் காரணஞ்டு) புரட்டாதிமீ"ல்
(1884) வெளியிட்டனர். இராமாயண காற்பரிய சங்கிரகம் இரண்டாம் பதிப்பு உரையுடன் துறைசையாதீன வெளி

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 27;
பீடாக சித்திரபானுடு) தைமீல் (1943) வந்துளது. பாரத தாற்பரிய சங்கிரகம் உரையுடன் விகிர்தி(Su) தைமீ’ல் (1951) அவ்வாதீன வெளியீடாக வந்துள்ளது. ia
6. யேசுமத சங்கற்ப நிராகரணம்:
இது யேசு மதத்தர் கொள்கை பூர்வபக்கமாதலைத் தருக்கத்தினற்றெரிப்பது.
சைவமாகிய தாமரைத் தடமொளி தழைப்பப் பொய்வரும் விவிலிய கயிரவம் பொலிவிழப்ப மெய்வரும் புலவோ ரளிகூட்டுண விவனுரல் தெய்வஞா யிமுென் றெழுக்தெனத் திகழ்ந்ததையன்றே.
இது நீதிபதி சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் உதவிய சி றப்புப் பாயிரத்துட் கண்டது.
நாவலரவர்கள் 168 செய்யுட்கள் கொண்ட இந்நூலினை பிரமாதிடு) மேடாவியில் (1879) இயற்றினர். அதனைச் சித்திரபானு(u) வைகாசிமீ”ல் நல்லூர் சிற். கைலாசபிள்ளை வெளியிட்டனர். (1882)
7. இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு:
இஃது இலக்கண விளக்கச் குருவளியின்மேல் சிலர்
நிகழ்த்திய பழியை மறுத்து அதன் சிறப்பைக் கூறும் வான நூல்.
8. வைதிக காவிய தூஷண மறுப்பு:
இது பெரியபுராணம், இராமாயணம், தணிகைப் புராணம் என்னும் வைதிக காவியங்களை புறக்கணித்துச் சிந்தாமணி என்னும் அவைதிக காவியம் பாராட்டினரை

Page 18
28 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
நியாயத்தினுல் மறுத்து வைதிக காவிய மாட்சிகிலை நாட்டும்
வசன கிரந்தம்.
9. ஞானசூடாமணி:
இது சிரவணமாதி நான்கும் பாாபா ஞானமாய் அடங்குமாறு நிரூபிப்பது. இந்நூலின் இரண்டாம்பதிப்பு துறைசையாதீனம் 19ம் வெளியீடாக வந்துளது.
10. ஞானுமிர்தம் :
இது சமயங்களெல்லாம் முழுமுதற்கடவுள் ஒருவன் ஆணையிற்முேன்றி அதிகாரி பேகம் பற்றித் தாாதம்மிய முற்று நிற்கும் முறைமையுணர்த்தும் வசன கிரந்தம்.
ஞானமிர்தம் - சமயம். இது குவாலாலம்பூர் சைவ சிக்காந்தசங்கத்தின் முதல் வெளியீடாக அக்ஷய(u) கார்க் திகைமீ (1926) சென்னை சாது அச்சுக்கூடத்தில் (பிரதிகள் 2000) பதிப்பிக்கப்பட்டது. மேலும் இந்நூல் துறைசை யாதீனம் 25ம்வெளியிடாகவும் பதிப்பிக்கப்பட்டது (1949). முன்னரே சித்தாங்கப்பத்திரிகையில் 1920ம் ஆண்டிலும் வெளிவந்துமுளது.
11. திருச்சிற்றம்பல யமகவந்தாதி:
இதன் சிறப்புப்பாயிரம்
ரோர் தென்னீழ வடகோவையான் சிவன் சேவடிக் கீழ் சாரார் சுயம்புமன் பெற்ற சபாபதி எல்லறிஞ
னேரார் சிற் றம்பல வந்தாதி மா?ல இசைத்தணிந்தான் காாார் பொழிற்புலி யூர்மன்ற வாணன் கழலிணைக்கே.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 29.
இந்நூலிலுள்ள சில அருஞ்செய்யுட்கள்:-
திருத்துங்க வந்த ரோம்புதல் வேள்வித் திருமறைய கிருத்துங்க மானசிற் றம்பலம் பாடத் தமியனுளர் கிருத்துங் கருணைக் கடலே யடைக்கலங் கங்கை சிாத் திருத்துங்கண் மூன்றுடைத் தேவே கையிலைப் பருப்பதனே,
மாணிக்க வாசகமார் வயற்றில்?லச் சிற்றம்பலவ மாணிக்க வாசகர் காணரின்முேய் மறைத் தாதையைக்கொன் மாணிக்க வாசகலச் செய்த சங்கர வாக்கிற்பிா மாணிக்க வாசகப் பொய்யர்க்குப் போல மறையலெற்கே. சித்தாக் தலைவற் புலியூர்ச்சிற் றம்பலஞ் சென்று த ரி சித்தார் த?லவைத்த தேவசதாசிவ வென்று பழிச் சித்தாங் தமையவன் றன்னடி ஞானத்திற் சேர்த்தொன்று செய் சித்தாந்த சைவான் ருே பிற வாமுத்திச் செல்வர்களே.
சிற்றம்பலம் விளைக்கும் பொருளிந்து சிறுமியரெச் சிற்றம்பலம் பகாப் பெறுவார் கொல்சிச் சீயினருட் சிற்றம்பலம் மைசிவ காமியோதி சிவனடஞ்செய் சிற்றம்பலப் பணிசெய்திடிற் சேரும்பே ரம்பலமே.
போம்பலத் தில்?லச் சிற்றம்பலவன் பிறங்க றிவுப் போம்பலத் தைப்பெற வருள்செய்யும் பெருங் தகைத்துப் போம்பலத்த னரிள வலிற் கொண்டவன் வேணிக் கங்கைப் போம்பலத்தைத் துரக்கும் பிறையொ டணிந்தவனே.
சபாபதியாக ம வேதக் தரும்பதி சார்பவாே சபாபதியாகும் தி?லப்பதி சிற்றம் பலப்பதிவஞ் சபாபதியானங் கெடுத்தடியேன் மனந்தன்னிலின்னே சபாபதியாவுனைப் பாடத்திருவரு டந்தருளே.
சத்துச்சித் தானந்த மாகிமுப் பத்தறு தத்துவவா சத்துச்சித் தானந்த லின்றி விளங்குஞ் சதாசிவகே சத்துச்சித் தானங் தவரு திடவரு டாவிடமே சத்துச்சித் தானந்த ஞர்க்கருள் சிற்றம் பலத்த வெற்கே.

Page 19
O
சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
விண்டல மண்டருய நஞ்சமுண்ட கண்டனிவை விண்டல மண்டரு செற்குவை யென்ன விரிதில்?லயான் விண்டல மண்ட வுயருஞ்சிற் றம்பல மேவினர்க்கு விண்டல மண்டலம் வாழ்த்திட நல்கு மிளிர் திருவே.
12. திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி:
மத்தியார்ச்சுனம் என்று சொல்லப்படும் திருவிடை
மருதூர்க்குச் சென்று மகாலிங்கப்பெருமான் நன்முலை நாயகியை வணங்கி திருவிடைமருதூர்ப் பகிற்றுப் பத்தங் தாதி என்னும் பிரபந்தம் பாடினர். இதிலுள்ள
காப்புச் செய்யுளொன்று:
மதிவளரு மணிமாட வரிசைதிகழ் தருமருத பதிவளர்மா லிங்கே சர் பதமலரி னணிபாக்குத் துதிவளரும் பதிற்றுப் தந்தாதி தொடுக்க மத சதிவளருங் க ச டகய முகப்பெருமா னடிநயப்பாம்.
மற்முெரு செய்யுள்:-
தேவார வானந்தத் தெள்ளமுத மகித்ததிருச்
செவிக்கா கெட்டே
னவாரப் புழுத்த பு?ல நாயினேன் பிதற்றுமிந்த
நலமில் புன்சொற்
பாவாரப் படுங்கொலோ வெம்பெருமான் பரமேட்டீ
பரம முத்தக்
கோவாரக் களபமுலைக் கோமாட்டிக் கொருகொழுக
மருத வாழ்வே.
இதனுல் அருட்புலமையுடைய சமயகுரவர் முதலான
மெய்யடியார் திருவருட்பாக்கள் வேறு; இலக்கணப்புலவர் பாக்கள் வேறு என்பது தெளிவாகும்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 3.
திருவிடைமருதூருலாவில் மகாவித்துவான் மீனுட்சி கந்தரம்பிள்ளை 'வல்லார் திருவருட் பாவோடு உலகிற்சேர் பக க்கள் பாவும் திருவருட் பாவெனச் செல்லுமே” என்று பாடியிருப்பதும் இக்கருத்தையே கொண்டதாம்.
இந்நூலின் இரண்டாம் பதிப்பு துறைசை ஆதீன வித்துவான் பார்வையில் திருவிடைமருதூர்க்கோயில் அதி அாரியாரால் 1952ல் வெளியிடப்பட்டுளது.
13. மாவையந்தாதி:
14. சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக்
GasTapa): 15. வடகோவைச் செல்வ விநாயகர்
இரட்டை மணிமாலை: 16. நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம்: 17. வதிரிநகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம்: 18. புறவார்பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம்: 19. சிவஞானயோகிகள் குருபூசைமகோற்சவம்:
'குறியமுனி யருளியமெய் வாத்தின லவதரித்துக்
கோதின் ஞானத் துறைசைநமச் சிவாயகுரு வருட்கடலும் வடமொழிதென்
மொழிப்பேர்த் gsst சிறை கடலு முண்புெனி தாத்துவித சித்தாந்த
நிலவப் பூமேன்
மறைமொழிமெய்ச் சிவஞான பாடியக்தென் மொழிவகுத்த
யோகி வாழி.?

Page 20
32 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
இது நாவலாவர்கள் இயற்றிய சிதம்பரசபாநாதபுரா ணத்து வரும் வணக்கச் செய்யுள்களில் ஒன்று.
2O. திராவிடப்பிரகாசிகை
இதன் தற்சிறப்புப்பாயிரம்
மன்னு மாமுதற் கடவுளை மனத்திடை நிறுவி
என்னை யோர்பொருளாக்கொண்டாள் குரவனை யிறைஞ்சை
இன்ன மாண்திரா விடப்பிர காசிகை யென்னும்
தன்னை நேர்தருங் தமிழ்வா லாறுசாற் றுவனல். *
Li Jib
மாயிரு ஞாலத்து மன்னுயிர்த் தொகுதியு ளூறுஞ் சுவையு நாற்றமு மொளியு மோசையு மென்னப் பேசுமைம் புலத்தொடு ால்லத னலனுந் தீயதன் மீதும் பகுத்துணர் காட்சி யகச் துணர் வுளப்பட வாறறி வும்முடை வீறு சால் சிறப்பின் மக்களுயிர்த் தொகுதி மனவிரு விரீஇ மிக்கபே மாறிவு விளக்க மேவிய வினையி னீவகி விளங்கிய வறிவின் முனை வனன் றருளிய வெனை வகை மொழியுளு ளறம்பொரு வின்பம் வீடெனு நான்குக் திறம்பா மரபிற் றெளியவறி வுறுத்தலிற் கடவுண்மா மமாழியெனப் புடவிசன் நேத்தச் சீரியல் வரம்புடை யாரிய மமாழியு மமிழ்தியல் வரம்புடைத் தமிழ்வள மொழியு * கடவுள் வணக்கம் குருவணக்கம் செய்து இந்நூலைத் தொடங்கிய ஆசிரியர் முடிவில், “திருவாவடுதுறை மாதவச் சிவ ஞானயோகி சுப்பிரமணிய தேசிகன் அருளுபதேசம் பெற்ற சபாபதி நாவலர் இயற்றிய திராவிடப் பிரகாசிகை முற்றிற்று” என் மேலுங்கூறினர்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 33
விகருரீஇச் சிறந்து நிலவுவ வாலவை கலிகெழு திசைவிரீஇக் கலன்பல மாய்க்கும் வலிகெழு முவரி வளைஇய மாட்சிக் குறுகுார் மனங்கண் புய்க்கல் கூடாஅ ரிறும்பூ துறானி பொன்மய மியற்றுச் தேவலஞ் சான்ற சாவலம் பொழிலகத் தொன்பான் வருடத் தோங்குபா மாதமெனுங் கரும பூமி மருவுகண் டங்கிளு ளாத்த னருள்வே தாகம வழக்குஞ் சாதி வரம்புச் தீர்த்தமுந் தலனு மேதகத் தழுவி விளங்குக் தெய்வக் குமரி கண்ட்ங் குலவுரீஇ மற்றதன் வடாதுச் தெனது மாபுளி மன்னூஉப் பயிலு மாலைய பன்னு மிாண்ட்ெ டமிழ் வரலாறு தகைபெற வெடுத்தீண் டமைவுறக் கூறுதற் கமர்ந்தது தன்னைத் தமிழின் றெய்வப் பழமை மரபே புலக்கண மமலு மிலக்கண மரபே க?லக்குவை சிவணு மிலக்கிய மரபே யேத்தருஞ் சிறப்பிற் சாத்திர மரபென சால்வகைப் படுத்து மேலவற் ருெழிபும் வரன்முறை நிறுவி யரிறப வகுப்பாம் புாைதபு தமிழ்முறை திகழ்தாற் பொருட்டே.
பாயிரத்தில் ஒரு சிலவருமாறு:-
தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண
மரபினேயும், அதனிலக்கிய மரபினையும், சாத்திரமாபினையும், ால்லாசிரியர் வழிகின்று தெளிதாற்குரிய நற்றவ அறிவு மாட்சியுடையால்லாதார் சிலர் இக்காலத்துத் தாம் தாம் அறிந்தவாற்றல் முறை பிறழக் கொண்டு தமிழ்மொழியி அறும் பிறமொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம் பழிக்கலானும் அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத

Page 21
34 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
பேதைரோர் அவற்றினை மெய்யெனக் கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப்புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் தாாதம்மிய முறையினும் வான்முறை போற்றது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடுகுழுத லானுந் தமிழுலகமற்றவற்றின் உண்மைதேறி உறுதிப்பயன் எய்துதற்பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கிக் 'திரா விடப் பிரகாசிகை’ என்னும் பெயரினுல் இவ்வசன கிரந்தம் இயற்றுவேமாயினுேம். இந்நூல், தமிழின் தெய்வப்பழமை மரபியல், இலக்கணமரபியல், இலக்கியமாபியல், சாத்திர மரபியல், ஒழிபியலென ஐவகைப்பட்டதென்பது.
இவரது உபாசன குரவரான சிவஞானமுனிவர் லோகோபகாரமாக திராவிட மாபாடியம் என்னும் பெயரி னல் சிவஞானபாடியம் இயற்றிப் புகழ் படைத்தவாறு நாவலரவர்கள் ‘அறிவுக்களஞ்சியம்' என்று அறிஞர் போற்றும் திராவிடப் பிரகாசிகை என்னும் பெயரினல் இவ்வசனகிரந்தம் இயற்றிப் புகழ்படைத்தனர் என்பது.
தமிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப் போதிப்பது இத்திராவிடப் பிரகாசிகை. அருந்தமிழறிஞரால் மருங்கெனப் போற்றப் படும் இந்நூலை நாவலாவர்கள் தமது சித்தாந்த வித்தியாது பாலன அச்சியந்திரசாலையிற் சாலிவாகனசகம் 1821ல் செல்லாகின்ற விகாரிஞ) கார்த்திகைமீ (1899) பதிப்பித்து வெளியிட்டனர். இந்நூற் பிரதிகள் காலாந்தரத்திற் கிடைப்பதருமையாதல் குறித்து நாவல்ரவர்கள் மருகர் அ. சிவகுருநாதபிள்ளை பிரபவளுல் வைகாசிமீ (1927) சென்னை சாது அச்சுக்கூடத்தில் அதனை மீட்டும் இரண்
டாம் பதிப்பாக வெளியிட்டனர்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 35
நாவலாவர்கள் தமது திராவிடப் பிரகாசிகையில் கடைச் ாங்கத்து நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, கல்லா உம், திவாகரம், பதினெண்கீழ்க்கணக்கு, காவியவிலக்கியம், சிங்காமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களைப் பற்றி எழுதிய விஷயங்களை மானிப்பாய் - ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய ‘தென்மொழி வரலாறு’ என்னும் நூலின்கண் அவ்வண்ணமே எடுத்து அச்சிட்டுள்ளார். (தென்மொழிவாலாறு பக்கம் 70 முதல்
91 வரை பார்க்க.)
மட்டக்களப்பு ச. பூபாலபிள்ளை திராவிடப் பிரகாசிகை யைப் பெரும்பாலும் பின்பற்றியே 'தமிழ் வரலாறு என்னும் நூலை இயற்றியுள்ளார்.
இதன் இரண்டாம் பதிப்புக்கு யாழ்ப்பாணத்துச் சுழி புரம் விக்முேறியாக் கலாசாலைத் தலைவராய் விளங்கியவரும் *கசைவபோதம் முதலிய பல நூல்களின் ஆசிரியருமான புலோலி பூரீமத் சு. சிவபாதசுந்தரம்பிள்ளை அவர்கள் B. A. எழுதிய முன்னுரையில் சிலவருமாறு:-
*பதி வாக்கும் பதி ஞானிகள் வாக்கும் விளங்குகலா லும், முதலெழுத்தாகிய அகரம் சத்திவடிவுடையதாக வ*னய எழுத்துக்கள் அதனுல் இயக்கப்படுதலாலும் முதலிலக் சனம் செய்தோர் பதியருட்பேற்றினாாதலாலும், தமிழும் ஆரியமும் தெய்வமொழிகள் எனற்பாலன. இவற்றுள் ஆரியம் பாதகண்டத்தின் பொதுமொழியாகவுங் தமிழ் தென்மூனுட்டின் சிறப்பு மொழியாகவும் விளங்கின. ஆயினும், தமிழ் புனேய சிறப்பு மொழிகள் போலாகாது இலக்கண வரம்பினுங் காவியச் சிறப்பினும் அருட்பாப் பெருமையி ஆறும் வடமொழிக்கு இணையாகவே கிலவுகின்றது. இத்

Page 22
3 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
துணைச் சீரிய தமிழ் நூல்களுட் சிறந்தவற்றைச் ‘செவ்வ குடியிற் செறித்தினிது விளக்கி அவற்றின் முறைமையை யும் பயனையும் எடுத்துக்காட்டுவது இத்திராவிடப் பிரகாசிகையாகிய அரிய நூலாகும். இதனை இயற்றியோர் ஈழநாட்டின் முடியாகிய யாழ்ப்பாணத்திலே ஐம்பது வருடங்களுக்குமுன் திகழ்ந்து தமிழ் நாடெங்கும் ஒளி வீசிய இரத்தினங்களுள் ஒருவராகிய சபாபதி நாவலரே. இவர் தென்மொழிக் கரைகண்டு வடமொழி நன்கு கற்ற விசாலித்த அறிவினரென்பதும், அறிவை வகுத்து வேண் டியவாறு சேர்த்துப் பயன்படுத்தும் நூன்முறை கைவந்த நுண்மதியினரென்பதும், ஆராய்வில் நிறைகோன் மாண்பின ரென்பதும் இந்நூலாற் பெறப்படுகின்றன.
திருமுறைகட்கும் சங்க காவியங்கட்கும் நடுகிற்பகாகிய திருக்குறளை ஆராயுமிடத்து, ஆசிரியர் அதன் முதற் செய்யுளுக்கு ஒரு விருத்தியுரையை உதவினர். இஃது இவரது குருமாபில் விளங்கிய மாதவச் சிவஞானயோகிக ளது மாபாடியத்தை ஒருபுடை நிகர்த்து வேதாகம சாத்திரக் கருத்துகளும் மேற்கோள்களும் கிறைந்து தனித்து கின்று ஒரு நூலாக விளங்கத்தக்கது. இது அவரது அகலக்காட்சியையும் அறிவின் கிட்பநுட்பத்தை
புங்காட்டுகின்றது.
இப்பிரகாசிகை நூல்களின் தன்மையைக் கூறுவதோடு கில்லாது அவற்றிலுள்ள அரிய பொருள்களையும் விளக்கும். இலக்கணவியலிற் பொருளதிகாரத் தொகுதியும் இலக்க ணத்து வரும் ஐயந்திரிபுகளின் களைவும், இலக்கிய வியலிற் சமயாசாரியர் நிரூபணமும் சிவபரத்துவமும், முதற் குறள் விருத்தியிற் சைவசித்தாந்த வாய்மைகளும், சாத்திரமாபிற்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். зъ
சட்டரிசன முடிபும் ஏகான்மவாதவகைக்கொள்கைகளும் நாற்பாதத் தெளிவும், இன்னபலவுங் காணப்படும். ஆதலின் இஃதோர் அறிவுக்களஞ்சியமாம். * அன்றியும் நூல்களில் இசை விளைவித்து அவற்றைக் கற்க ஏவுதலும் கற்குங்கால் வரும் படுகுழிகளில் வீழாது காத்தலும் அவற்றையும் வேறெப் பொருளையும் எண்முறை யிகவாது ஆராயும் வழியும் உரைநடை வரையறைப்படாத இங்காளில் அதற் கோர் முன்வடிவமாதலும் இதிலுள்ளனவாதலின், இது தமிழ் மக்கள் யாவரும் ஒரு விளக்காகவுங் குன்ருத செல்வ மாகவுங் கருதுந் தகுதியினையுடைத்து’
திராவிடப் பிரகாசிகை பண்டித பரீட்சைக்கும்,
லண்டன் பி. ஏ. பரீட்சைக்கும், இலங்கைச் சர்வகலாசாலை பி. ஏ. பரீட்சைக்கும் பாடப் புத்தகமாகவுள்ளது.
சித்தாந்த வித்தியாநபாலன யந்திரசாலே நிறுவியதும்; பத்திரிகைகள் நடத்தியதும்:
நாவலரவர்கள் கரடு) (1891) சித்திரைமீ"ல் சிதம்பா மகா கும்பாபிஷேக காலத்தில் சிவனடியார்களோடு கூடி கடராசப் பெருமான் தரிசனத்தின் பொருட்டு அங்குக் தங்கினர். அக்காலத்தில் மாட்சிமை தங்கிய பாஸ்கர
* அறிவுக்களஞ்சியம் என அருந்தமிழறிஞர் போற்றும் இல் வரிய நூலினை சபாபதி நாவலர் மருகர் அ. சிவகுருநாதன் 2ம் பதிப்பாக பிரபவளுதி வைகாசிமீ7ல் (1927) வெளியிட்டனர். இதன் 8ம் பதிப்பைச் சுத்தமாகச் செய்ய விரும்பும் அபிமானி கள் வடகோவை - சபாபதி காவலர் ஞாபக கிலேய பரிபாலச ரோடு கலந்து அனுமதி பெறலாகும்.

Page 23
3S சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
சேதுபதி அவர்களும் விஜயஞ் செய்திருந்தார்கள். நாவல ரவர்கள் சேதுபதி மகாராசாவைச் சந்தித்துச் சற்சம்பா ஷணைகள் செய்தபோது சைவப்பிரசங்கஞ் செய்யுமாறு: காவலரவர்களை வேண்டிக்கொண்டனர். அவ்வேண்டு கோளுக் கிசைந்து ஆயிரக்கான் மண்டபத்தில் பல்லாயிரவர் கூடிய மகாசபையில் சேதுபதி அவர்கள் தலைமையில் நாவல ாவர்கள் அரியானை' என்னுந் தேவாரப் பொருளைப் பிரசங் கஞ்செய்தனர். அப்பிரசங்கத்தில் எடுத்துக் கொண்ட விஷயங்களுள் ஒன்று வருமாறு:
அஃதாவது ‘அரியானை' என்பதன் சொற்பொருள் துட்பம் எடுத்துரைக்குமிடத்து, பெரியபுராண நூலாசிரியர் நான்மங்கலத்தில் “உலகெலா முணர்ந் தோதற் கரியவன்’ என்றெடுத்துக்கொண்டு அச்சொற் ருெடரைப் பெரிய புராணத்தில் எந்த எந்த இடத்தில் எடுத்தாண்டனரோ அந்த அந்தச் செய்யுட்களை எல்லாம் ஒவ்வொன்முக விளக்கிப் பிரசங்கமாரி பொழிந்தனர்.
சேதுபதியவர்கள் சிதம்பாத்தில் தங்கியபோது, நாவல ரவர்கள் ஞானுமிர்த பத்திரிகையை முறையாக நடத்தும் பொருட்டுத் தமது சமஸ்தானத்திலிருந்து பொருளுதவி புரிந்தனர். மற்றும் சிதம்பரம், செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் வீதியில் நாவலாவர்கள் தங்கியிருந்து அச்சுக்கூடம் வைத்து நடத்த இடவசதியும் அமைத்துக் கொடுத்தார்கள். காவலாவர்கள் சென்னமாநகரில் ஸ்தாபித்து நடாத்தி வந்த சித்தாந்த வித்தியாதுபாலன அச்சியந்திரசாலையைச் சிதம் பாத்தில் புதிதாக ஸ்தாபித்து ஞானுமிர்த பத்திரிகையை நடாத்தி வந்தனர். அப்பத்திரிகை அரிய நூன்முறையாய் கடைபெற்று வந்தது. ‘பிரமவித்தியா’ பத்திாாதிபர் தமது

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 39
2ம் புத்தகம் 12ம் இலக்கப் பத்திரிகையில், “ஞானமிர்தம் என்னுமோர் அமிர்தம், புத்தி என்னும் மந்திரத்தாற் கடைய ஓர் நாவலர் என்னும் திருப்பாற் கடலிற் பிறந்து உலாவுகிறது. இப்பத்திரிகை உதித்து இத்தென்னுட்டை அலங்களிப்பது எமக்குப் பரமானந்தமே. பத்திரிகாசிரியர் கற்றமிழ் கடந்த நாவலர். ஆரிய பாஷையின் வரன்முறை
அறிவார். ’ என வியந்து கொண்டாடினர்.
மேலும் பிலவடு) (1901) சுதேசவர்த்தமானி' என்னும் மாதப்பத்திரிகையைத் தொடங்கிச் சிலகாலம் நடாத்தினர். சித்தாந்த வித்தியாதுபாலன யந்திாசாலையில் பல நூல்களும் வெளியிடப்பட்டன. மேற்படி யந்திரசாலை சென்னை, எகவல்லியம்மன் கோயில் விதியிலிருந்த காலம் விரோதி(u)(1889)சித்திரைமீல் சுழிபுரம் பருளை விநாயகர் பள்ளுப் பிரபந்தம் முதலாம் பதிப்பாக வெளியிடப் பட்டது. சபாபதி நாவலர் கட்டளைப்படி அவர்கள் யந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டதென்முல் பருளைப் பள்ளு மிகச் சிறப்புடையதென்பது தேற்றம்.
விஜயடு) (1893) கார்த்திகைமீ” மாதவச் சிவஞான யோகிகள் இயற்றியருளிய “சிவசமவாத உரை மறுப்பை”, பூரீ அம்பலவாண கேசிக சுவாமிகள் கட்டளைப்படி பரிசோ தித்துத் தமது அச்சுக்கூடத்திற் பதிப்பித்தனர். இப்பதிப் பில் நாவலாவர்கள் எழுதிய ‘சமயவாலாறு ஆறு பக்கங்கள் கொண்டன.
இவ்வாருகத் தமிழ் நாடானது தமிழ்ப் பயனும் சைவப் பயனும் எய்தும் வண்ணம் நாவலாவர்கள் சிதம்பாத்தில்
சேதுபதி அவர்கள் ஒழுங்குபண்ணி வைத்த இடத்தைத்

Page 24
40 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்,
தமது வாசஸ்தானமாகக் கொண்டு சற்கருமங்களைச் செய்து வந்தனர்.
ஸ்தல யாத்திரை:
நாவலரவர்கள் காடு) சித்திரைமீ (1891) சிதம்பாத் தில் தங்கியபோது அங்கு விஜயஞ் செய்த பாஸ்கா சேதுபதி அவர்கள் நாவலரவர்களைத் தம்முடன் இராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அரண்மனையில் நாவலாவர்கள் தங்கியிருந்த காலத்து, “நமது சமஸ்தானத்தில் சிலகாலம் தங்கி சுத்தாத்துவித சைவசித்தாந்த சமயக்கொள்கைகளை ஸ்மார்த்த சாஸ்திரிக ளெதிரில் நிறுத்திப் போதித்து வால் வேண்டும்.’’ என்று மகாராசா அவர்கள் கேட்டுக் கொண் டார்கள். நாவலாவர்கள் அதற்கிசைந்து சிலகாலம் அங்கு தங்கி அங்குள்ளார்க்கு சைவசமய உண்மை போதிக்க உடன்பட்டார். ‘தமிழ் வித்வ சிகாமணியாயும் சுத்தாத்வித சித்தாந்த சைவசமய பரிபாலகராயும் விளங்கும் கணம் பொருந்திய சபாபதி நாவலரவர்கள் தக்ஷிண சிவஸ்தல யாத்திாையில் ஐந்துமாதகாலம் போக்கிச் சற்சங்கல்பம் சில முடித்து அங்கங்கு சிவசுப்பிரமணிய திவ்விய பிரசாதங்கள் பெற்றுச் சென்னைமாநகர்க்கு மீட்டும் வந்து, தாம் மேற் கொண்டு நடாத்திவந்த சற்கருமங்களை முன்போலச் செய்து போதாத் தொடக்கஞ் செய்தார்கள்.
நமது நாவலாவர்கள் யாத்திரையில் வைதிக சைவ மகா சனங்கள் அனுகூலத்தின் பொருட்டுச் சற்கருமங்களும், உபங்கியாசங்களும் அங்கங்கு பற்பல செய்து போந்தார்கள். அவ்வரலாற்றை அங்கங்கு நேர்ந்த சம்பவங்களோடு இங்கு சுருக்கிப் பிரசுரம் செய்கிறேன்.”

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 41
இப்படி, ‘சிவஸ்தலயாத்திரை’ என மகுடங்கொடுத்து நாவலாவர்கள் மாணுக்கர் பூரீ க. சிங்காரவேலு முதலியா ாவர்கள் வெளியிட்ட யாத்திரை வரலாறு ஒரு புத்தக ரூபமாகவுள்ளது.
சேதுபதி மகாராசாவிடம்
சன்மானம் பெற்றது:
நாவலாவர்கள் காடுல்(1891) ஐந்துமாதகாலம் சிவஸ்தல யாத்திரை செய்தபோது மகாராசா அவர்களும் அங்கங்கு நாவலரவர்களைச் சந்தித்து திவ்விய ஸ்தலங்களைத் தரிசனை செய்தார்கள். அச்சமயங்களில் அங்கங்கு கூடிய மகா சபை களில் சேதுபதி அவர்கள் சபா நாயகராக விருப்ப நாவல ாவர்கள் பிரசங்கஞ் செய்தார்கள். இப்படிப் பலமுறை கந்தமிழ் வேந்தர் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்த புவி வேந்தர் மீளவும் அவர்களை இராமநாதபுரத்துக்கு அழைக் அறிச் சென்று, தாம் அக்காணி கொண்டு வீற்றிருக்கும் உத்தியான மண்டபத்தில் உயராசனத்திருத்தி நண்பினுல் இனிய உரைகள் தனிமையின் குடி (புரட்டாசிமீ 4உ சனி வாரம் முற்பகலில்) சன்மானமாக ரூபா மூவாயிரமளித்து, *வேண்டும் உதவி மேலும் செய்து போதருவோம்’
எனறாகள.
*பாஸ்கர சேதுபதி மகாராசா அவர்கள் சமுகத்திற் பிரசங்கஞ் செய்தும், பிரபந்தம் பாடியும் புலமையின் வலிமை காட்டிப் பரிசிலும் வரிசையும் பட்டமும் பெற்ற புலவர்களுக்கோர் அளவு முண்டோ? யாழ்ப்பாணப் புலவர்களுட் சபாபதி நாவலர், சிவசம்புப் புலவர் என்னும்
இருவரும் பெருந்தொகைப் பரிசில் பெற்றதை மறந்தவர்

Page 25
42 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
யாவர்”
என்பது சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர்
இயற்றிய தமிழ்ப் புலவர் சரித்திர உபக்கிரமணிகையிற் கண்டது. காவலர் மாணுக்கர்:
சென்னைமாநகரிலும், சிதம்பரத்திலும் நாவலாவர்கள் 35 வருடகாலம் வசித்து வந்தவராதலின் அவர்களிடம் கல்விகற்றவர்-சிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார், விழுப்புரம் இராமசாமிப்பிள்ளை, மாகறல் கார்த்திகேய முதலியார், மயிலை க. சிங்காரவேலு முதலியார், மாவை' வே. விசுவநாதபிள்ளை, சிதம்பரம் சிவராமச் செட்டியார், திருமயிலை பாலசுந்தா முதலியார், சுழிபுரம் சிவப்பிரகாச பண்டிதர், வதிரி-சி. தாமோதரம் பிள்ளை, சிதம்பரம்-முத்து வேலாயுதபிள்ளை முதற்பலர். இவர்களுட் பாலசுந்தா முதலி யார் நாவலாவர்களைத் தமிழ்த் தெய்வமாகக் கொண்டு வழி பாடு செய்தவர். இவரும் சிவப்பிரகாச பண்டிதரும் ஜீவந்த ராக இருந்தபொழுது இச்சரித்திரம் வெளிவந்திருக்குமாயின் அது வேறுவிதமாகவே இருந்திருக்கும். W
மாவை விஸ்வநாதபிள்ளையால் திருமந்திரம் அரிய குறிப்புரைகளுடனும் சிறந்த முன்னுரையுடனும் 1912ல் அழகுபெறப் பதிப்பிக்கப் பெற்றது. பிள்ளையவர்கள் பதிப்புரையிற் கண்டது வருமாறு: அஃது “ திருமந்திரம் அறிஞர் பலர்க்கும் இன்றியமையாப் பெருஞ்சிறப்பின காதலாலும், ஆசிரியர் திருக்கயிலாய பரம்பரைத் திருவா வடுதுறை ஆதீனத்துப் பிரபல மகாவித்துவ சிரோமணியாய் விளங்கிய யாழ்ப்பாணத்து வடகோவை பூரீலபூரீ சபாபதி காவலரவர்கள் முன்னிலையில் பழைய ஏட்டுப் பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துக் கூடியவரையில் சுத்தப் பிரதி

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 43,
யாக்கிக் குறிப்புரைகளுடன் கூடியதால் இதனைப் பிரகடனஞ் செய்யவேண்டுமென இடைவிடாச் சிந்தனைப் பெருமுயற்சி வயத்தணுய் இருந்த தமியேன். ’ 30 பக்கங்களில் நூன்முகம் எழுதிய வேதாாணியம் டாக்டர் பிரம்மபூரீ" வை. வே. இாமண சாஸ்திரிகள் குறிப்புரை வருமாறு:
*இத்தகைய அரும் பெரும் சிறப்பு வாய்ந்த இந்நூலைத், தமிழ் நாட்டினர்க்கு எளிதில் உபயோகமாகும்பொருட்டுக் குறிப்புரையுடன் வெளியிட்டுதவிய திருக்கயிலாய பாம்ப ரைத் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் யாழ்ப்பா ணத்து வடகோவை பூரீமத் - சபாபதி நாவலாவர்கள் மாணுக்கர் பூரீ வே. விசுவநாதபிள்ளை அவர்களுக்கு நம் தமிழ் நாட்டினர் நன்றி பாராட்டுதல் அவசியமன்ருே. y - என்றும், திருமந்திரப் பதிப்புக்குச் சிறப்புப்பாயிர முகவிய மகாமகோபாத்தியாயர் உ. வே. சாமிநாதையரவர்கள் தமது
பாயிரத்தில்,
* தேவாரம் பெறு சிவதல மிரண்டுரீஇ வாட்டமி லீழ நாட்டினுக் கணியாய்
மானமர் புகழ்யாழ்ப் பாணமென் றியம்பும் பெருாக சைச்சார் தருவட கோவைப் பதியஞ கியசபா பதிநா வலன்பால் இருர்தே பலநாள் அருந்தமிழ் பயின்ருேரன்
காவைமே வித்திகழ் மாவை யம்பதியான். sy
என்றும், அந்நாற்பகிப்புக்குச் சுவாமிகாத பண்டிதருதவிய
சீண்ட பாயிரத்துள்:
w “Lu reorg. Lysår 6orf............
விண்டிடாப் பத்தியின் மிக்கவர் வாழும் வடகோ வைப்பதி திடமுற வச்து வடகோ வைப்போல் வயங்கிய சபாபதி

Page 26
44 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
காவலன் பாலு கலத்தகு பன்னுரன் மேவாக் கற்று விளங்கிய விற்பனன்.? என்றும், நாவலரவர்கள் மாணவராகிய விசுவநாத பிள்ளையை
வியந்தார்கள்.
திருமயிலையிற்செய்த பிரசங்கம் :
*பிலவ, சுபகிருது வருடங்களில் நாவலாவர்கள் (19911902) திருமயிலையில் தங்கியிருந்தார்கள். அக்காலங்களில் எமது வேண்டுகோளுக்கிரங்கி பூரீகபாலீசுரர் சந்நிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்திலும், திருவள்ளுவநாயனர் திருக் கோயிலிலும் பெரும் புலவர்கள் வியந்து பாராட்ட பத்திச் சுவை மலிதா பெரும் பிரசங்கங்கள் செய்தார்கள். பூரீகபா லீசுறர் உற்சவ காலத்தில், ‘கற்றுக்கொள்வன வாயுளநாவுள' என்னுந் தேவாரச் சுருதியின் பொருளை விரித்துக் கேட் டோர் சிவபக்தி பரவசாாக ஒரு பெரும் பிரசங்கஞ் செய் கார்கள். வேருேர் சமயத்தில்,
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வ?லப்பட்டார் மற்றை யவர்.” என்னும் திருக்குறளைப் பிரசங்க விஷயமாகக் கொண்டு சபையினர் எழுது சித்திரம்போலாகச் சுவைபடத் தமிழ் மாரி பொழிந்தார்கள்.
மற்றேர் அமையத்தில்; ‘மறை முடிவிற் பயில் கருத்தும்' என்னும் சிவதத்துவ விவேகச் செய்யுளின் முற்கூற்றை மூலமாகக் கொண்டு வைதிக சைவ சித்தாந்தத் தேன் மாரி பொழிந்தனர்.
இப்படிப் பன்முறை அந்த மகாப்பிரபு மயிலைவாசிக ளாகிய எங்களுக்கு ஞான உண்டியாகிய நல்விருந்தளித்தனர்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 45.
இனியவுரைகள் தனிமையின் ஆடும்போது, “செந்தமிழ் வளர்ச்சியும், சித்தாந்த சமயாபிவிருத்தியும் தலையெடுத்து மிகவோங்க நவாச புஞ்ச மெனப்படும் பெரிய புராணத்தின் கண், ஆன்ருேரர் வகுத்த வருணுச்சிரம வழக்கும், புறநெறிச் சமய பூர்வபக்க வழக்கும், அகநெறிச் சமய ஆசார வழக்கும், வைதிக சைவ மெய்ந்நெறி வழக்கும், உண்மைச் சரியை, கிரியை, யோக ஞானங்களின் வழக்கும், குருலிங்க சங்கம வழிபாட்டு வழக்கும், ஒட்பமும், திட்பமும், நுட்பமும் பொருந்தியுவம னின்ருமாறு ஒதப் பெற்றிருத்தலைக் தெள்ளிதின் விளக்கி அத்திருமுறைக்கு நல்லுரை யொன்று எழுதியுதவச் சித்தமாயிருக்கின்றேம்,’ என மொழிந்தனர். இச்சற்கருமத்தினைத் தொடங்குமுன் பூரீ மகா நடராஜ தரிசனஞ்செய்து வருவதாகக் கூறிச் சிதம்பரஞ் சென்றனர். சென்றவர் அங்குச் சிலமாககாலம் தமது இல்லத்தில் தங்கி யிருந்தார்.
சிவானந்தப் பெருவாழ்வு எய்தியது:
1903ளுல் சிதம்பரத்தில் தங்கியிருக்கையில் நடராஜப் பெருமானுடைய குஞ்சிதபாதகிழலை யடையுங்காலம் சமீபித்ததான குறியொன்று இவருக்குத் தெரிந்ததனுற் போலும் தமது தமையனுர், தமது மைத்துனருளொரு வரும் தமிழ்ப் புலவரும் எமது அன்பார்ந்த ஆசிரியருமான சிவப்பிரகாச பண்டிதர், F, பொன்னம்பல பிள்ளை, சுவாமி நாத பண்டிதர் முதலியோரைத் தருவித்து அவர்கள் கேட்ப *பவனமாய்ச் சோடையாய்’ என்னுந் தேவாரச் சுருதியின் பொருளுரைத்து அவர்களை இன்புறச் செய்து சுயம்புநாத பிள்ளையின் அரும்பெரும் புதல்வராய்த் தோன்றி சிவஞான
யோகிகளின் தவச்செல்வராய் விளங்கிய எங்கள் “வித்வ

Page 27
46 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
கோல’ நாவலரவர்கள், 'மாசில்விணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் விங்கிளவேனிலும் மூசுவண்டறை பொய் கையும் போன்று இன்பந்தரும் திருச்சிற்றம்பலவனுடைய இணையடி நீழலையடைந்தார்.
நாவலாவர்கள் உத்தரகிரியைகள் நடந்த சமயத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தார் அனுப்பிய பட்டுப்பீதாம் பாம், மாலை, பரிவட்டம் முதலியவைகள் சாத்தப்பட்டன.
அப்போது அவருக்கு வயசு 58.
முடிவுரை:
எங்கள் நாவலாவர்களை, வாய்ந்த பெருந்தவ மருவம் முனிவரன் போலுரை யெழுதும் வலிமையாளன்’ என்றும்; ‘எர்பரவு மெந்நூலும் பிரசங்கஞ் செயுந்திறலா லிணையிலா தான், சீர்பாவிப் புவிக்கருக்கும் புலவர்களுக் கெல்லாமோர் சிங்கம் போல்வான்’ என்றும், “சைவ சூளாமணி’ என்றும், *அனைவளரு மிடப்பாகக் கமலனரு ளாகமநூ லாய்வினுே தன்’ என்றும், ‘கிசைபரவு நாவலர்கள் பலருமுளம் வியந்து பல்காற்’ போற்றும் பெருமைபெற்ற காரணத்தால், *நாவலரேறு' என்றும் பல்வகைத்தாய பட்டப்பெயர்களால் அழைத்துப் பெரியோர் மகிழ்வுறுகின்றனர். அப்படி அழைத்துக் கொள்வதற்கு எமக்கொரு பெயருந் தெரியா மையினலே பரிமேலழகர், சேணுவரையர், சிவஞானயோகி கள் என்னும் தமிழாசிரியர் வரிசையில் சபாபதி நாவலர் என்னும் பெயரினை ஈற்றிலெழுதி தமிழாசிரியர் நால்வ ரென்று சொல்லத் தகும் புகழொடு தோன்றினர் எங்கள் நாவலரென மகிழ்வுறுவாம்.

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 47
*நீண்டுயர் சோ?ல வடகோவை நற்பதி மேவுதமிழ்
மாண்புடைச் சைவன் சபாபதி காவலன் வான்சிறப்ப ஆண்டுயர் சோபகிரு தானிமாத மமரபக்கம் வேண்டிய பஞ்சமி வான்பதம் புக்கான் விருந்துகக்தே.?
சோபகிருதுடு) ஆனிமீ அமாபக்கம் பஞ்சமிதிதி, அவிட்ட நட்சத்திரம் (1903)
இது சபாபதி நாவலரோடு நட்புடையாாயிருந்த இணுவில் வித்துவான் அம்பிகை பாகனூர் மகன்-மகன் திரு. வை. கதிர்காமநாதன் செய்தது.
காவலரவர்கள் ஞாபகச் சின்னங்கள்:
சுயம்புநாதர் என்பவர் வடகோவையில் ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் வீரகத்திப்பிள்ளையார் கோயிலுக்கு உபயோக மாதற் பொருட்டு ஒர் நந்தவனம் அமைக்க விரும்பி மேற்படி கோயிலுக்கணித்தாயுள்ள தமது சொந்தமான வயற்காணிக் குள் ஓர் நந்தவனம் அமைத்து அதில் பலவகைப் பூஞ்செடி களைப் பயிரிட்டு அப்பூஞ்செடிகளால் வரும் புஷ்பங்களைக் குறித்த கோயிலுக்கு உபயோகித்து வந்தார். கோயிலில் நடைபெறுவதான நித்திய பூசையின் உபயோகத்திற்கு
குறிப்பு: உருவப்படங்களில் அளவு கடந்து மனம் வைக்கும் இன்றைய உலகில் சபாபதி நாவலர் படமுண்டோ என்பாரு முளர். வித்வகோலம் பூண்டு புகழுடம்புபெற்ற சபாபதி சாவலர் இயற்றிய நூல்களும் சற்கருமங்களுமே அவர்கள் உண்மையான படம் என்பா அறிஞர்.
(கம்பீரமான தோற்றப் பொலிவுள்ளவர், அஞ்சா நெஞ்சி
னர்? என்பதனல் அவர் படம் இன்னதென்று ஊகித்துக் கொள்ளலாகும்.)

Page 28
48 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
அந்நந்தவனம் அவசியம் தேவையாக இருப்பதால் (சுயம்பு காதர் மகள் காமாட்சிப் பிள்ளையின் மகன்) அப்பாப் பிள்ளை சிவகுருநாதன் என்பவர் அதனைத் திருத்தி அமைக்க விரும்பியவாறு, அப்பூவணம் சிவபூசாவாணுகிய சுயம்புநாதர் மைந்தரும், கிர்வாணதீக்கைப் பேறுடைய சிவபூஜா துரந் தாருமான சபாபதி நாவலர்’ என்பவரின் ஞாபகச் சின்ன மாக, ‘சபாபதி நாவலர் நந்தவனம்’ என்னும் பெயருடன் எக்காலத்தும் விளங்கும்படி வெகுகானியடு) (ஜனவரி 1938)ல் தர்மசாதனஞ் செய்யப்பெற்றது. குறித்த தரும சாதனம் கோப்பாய் கொத்தார் சி. கங்காதர ஐயரால் எழுதப்பெற்றது. தருமசாதன இலக்க ம் 10967 2-1-1938, மேற்கூறிய வடகோவைப் பிள்ளையார் கோபி லுக்கும், அதற்குரிய நந்தவனத்துக்கும் அணித்தாகவுள்ள திருக்குளத் திருப்பணி நாவலாவர்கள் மைத்துனராய திரு ச. அப்பாப்பிள்ளை உபாத்தியாயரால் பல வருடங்களுக்கு முன் செய்யப்பெற்றுளது. இப்போதும் அத்திருக்குளம் சுத்தநீர்ப் பிரவாகம் பொருந்தியுளது. ‘குலம்படைத்தான் குணம்படைத்தான் குலவுவட கோவைதணித்
கோயில்கொண்ட பொலம்படைத்த கயமுகன்றன் பொற்கோயின் முன்றில்தணிந்
புதுநீர்க்கங்கை ாலம்படைத்த தடம்படைத்தான் சல்லோர்கை தரப்படைத்தான்
சாளுமன்பின் புலம்படைத்த விவனன்ருே புகழொடுபுண் ணியம்படைத்த
புனிதனம்மா’
என வருங் கவியும் நோக்கத்தக்கது.
(இது சுழிபுரம் திரு. இ. தம்பையா உபாத்தியாயர் செய்தது.)

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 49.
‘செந்தமிழ்க்கடல்' என விளங்கிய கோவைநகர் செல்வன் சபா பதிநாவலன் ஞாபகசின்னமாக அவர் செய்த நூல்களை வெளி யிட்டுத் தமிழுலகிற்குப் பயன்படுத்த முயலுதல் அபிமானி கள் கடனுக, அப்பணியில் ஒருவாறு ஈடுபடும் நோக்கமாக வடகோவையில் நாவலரவர்கள் ஞாபகமண்டபம் ஒன்று அமைக்க முயன்றிருக்கும் அ. சிவகுருநாதன் அவர்களுக்கு அபிமானிகள் பலரின் ஆசிகள் உண்டாவதாக, நாவலாவர் கள் ஞாபகமண்டபம் என்றும் நிலைநிற்கும்படி அவரால் வழங்கப் பெற்ற தரும நன்கொடைச் சாதனத்தில் நீர்வேவி கொத்தார் ஆறுமுகம் எழுதிய பாயிரம் வருமாறு: யாழ்ப் டாணம் கோப்பாய் வடக்கு சுயம்புநாத முதலியார் வழித் தோன்றலாகிய சுயம்புநாதருக்கும் அவர் மனைவியார் தெய்வ யானைப்பிள்ளைக்கும் 1845ம்இல் அருந்தவப் புதல்வராய்த் தோன்றியவரும், தென்மொழிக் கரைகண்டு வடமொழி நன்கு கற்றவரும், திருக்கைலாய பரம்பரைத் திருவாவடு துறை மாதவச் சிவஞானயோகி, சுப்பிரமணியதேசிக சுவாமிகள் அருளுபதேசம் பெற்றவரும், அவ்வாதீனத்தில் விக்திவானெனவும், நாவலன் எனவும் பட்டங்கள் பெற்று அவ்வாதீன விக்வசிகாமணியாய் விளங்கியவரும், பாஸ்கா சேதுபதிமகாராசா அவர்களால் நன்கு மதிக்கப்பெற்றவரும் எனது மாதுலருமாகிய நாவலாவர்கள் ஞாபகசின்னமாக மண்டபம் ஒன்றமைக்தூ அம்மண்டபம் அவர்களியற்றிய நூல்களுக்கு நிலையமாக என்றும் நிலைபெறும் வண்ணம் அதன் நயத்துக்கும் உபயோகத்துக்குமாக எனது சொந்த மும் இதனடியிற் காணும் அட்டவணையில் விபரித்திருப்பது மான ஆதனத்தையும் மூலதனமாக ரூபாய் ஆயிரம் (1000) தருமநன்கொடையாகக் கொடுக்க கான் விரும்புவதாலும்.”
என்பது.

Page 29
50 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
அம்மண்டபத்தில் நடைபெறவேண்டிய தருமங்களும் அவைகளை நடத்தும் முறைகளும் குறித்த சாதனத்தில் அடங்கியுள்ளன. கர்மசாதனம் சர்வசித் துடு) தைமீ"ல் (21-1-1948) நிறைவேறியது.
தருமநன்கொடைச் சாதன இலக்கம் 17160.
சிதம்பரம் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் வீதியில்
சபாபதி நாவலர் வசித்துவந்த வீட்டையும் அச்சுக்கூடம் வைத்திருந்த இடத்தையும் நன்முறையில் வைத்துப் பரிபாலனம் பண்ணும்படி தமது மாணவரும் மைத்துனரு மான சுழிபுரம் ச. சிவப்பிரகாச பண்டிதருக்கு நாவலரவர் கள் அந்தியகாலத்தில் (Will) மரணசாதனம் எழுதியிருந் தார். சிவப்பிரகாச பண்டிதர் நாவலரவர்கள் நோக்கத்தின் படி அந்த இடக்கைச் செவ்வனே வைத்து நடத்தும் ஏற்பாடு செய்வதாக இருந்தும் செய்யாது காலஞ் சென்றர். சென்ற ஐம்பது வருட காலமாக அந்த இடம் அங்கியரிடம் விடப்பட்டுக் கிலமடைந்து இருப்பது கவலைக்கிடமானது. அன்றியும் பொது5ன்மை நாடி நாவலரவர்கள் தங்கியதும், தில்லைவேதிபரும் தம்பிரான்களும் குருக்கள்மாரும் அறிஞ ரும் நாவலாவர்களிடம் போய்க் கொண்டாடி வந்ததும், நாவலரவர்கள் சிவபூசை செய்து வந்ததுமான அந்த இட மானது சிவபூசை அறையில் காடி புகுந்தபடியிருப்பது முறையாகாது. நாவலரவர்கள் தங்கிப் பொது விஷயங்கள் செய்யுமாறு சேதுபதியார் உபகாரமாகக் கொடுத்துதவிய இந்த இடம் பொதுத் தரும மடமாக இருக்கலே தக்கது. ஆதலின் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் வீதியில் நாவல ரவர்கள் வாசஞ் செய்த இடம் அவர்கள் பெயரினல் ஓர் பொதுத் தருமகிலையமாக இருக்கச் செய்தல் நாவலர்

சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம். 5
மாணவரான சிவப்பிரகாசம் பிள்ளையின் வழிவங்தோரின் கடனுகும். நாவலாவர்களும் இது ஒரு குடம் பாலுக் கொருதுளிக் கொப்பானது என்று சொல்லிப் போந்தார்.
*நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.? என்னும் நீதிவாக்கியம் நோக்கத்தக்கது.
சைவப் பேரறிஞர்களின் ஞாபகம் :
யாழ்ப்பாணத்துச் சைவப் பேரறிஞருட் சிலர் தமது அந்திய காலக்கைச் சிதம்பரத்திலேயே போக்கி அப் புண்ணிய திருப்பதியில் மரணமடைந்ததைத் தமிழ் நாடு நன்கறியும். அத்தகையாருள் இயம்பத்தக்கவர் சபாபதி நாவலர், அம்பலவாண நாவலர், உரையாசிரியர் வேலுப் பிள்ளை உபாத்தியாயர், சுவாமிநாத பண்டிதர், இலக்கண சுவாமிகள் எனப்படும் முத்துக்குமாாக் தம்பிரான் முதலியோராவர். சிதம்பாத்தில் இவர்கள் இருந்த இடங்கள் இப்போது அங்கியரிடத்திலுள்ளன. அரசியலில் மாட்சிமை பெற்றவர்களாகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் வசிக்க இடங்களில் அவர்களின் ஞாபகசின்ன மாக நிலையங்கள் நிறுவப்பட்டு ஆண்டு விழாக் கொண்டாடு வதுபோல், சைவப் போர் வீரர்களாகிய மேற்கூறிய வித்துவ சிரோமணிகளின் ஞாபகம் கிலவும் பொருட்டு அவர்கள் குடியிருந்த வீடுகளில் நிலையங்களை ஏற்படுத்த வேண்டியது மேற்படி புலவர்களின் உறவினர் கடமையன்ருே?
நாவலரையாவின் (ஆறுமுக நாவலர்) ஞாபகம் அவர்கள் சிதம்பரத்தில் நிறுவிய சைவப்பிரகாசபாடசாலையாலும்,

Page 30
52 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.
மற்ற அறநிலையங்களாலும் போற்றப்படுகின்றது. ஞானப் பிரகாசரின் நினைவு அச்சுவாமிகள் பெயராலுள்ள குளத்கா லும் மடத்தாலும் தெருவாலும் எப்போதும் உளது.
இதைச் சிவநேயர்கள் கவனிப்பார்களாக. ஆங்கிலப் புலவர்கள் இருந்த வீடுகளும், அவர்களின் பொருள்களும் ஆங்கிலேயரால் எவ்விதமாகக் காப்பாற்றப்படுகின்றன:
என்பதை யாம் சிந்திக்கவேண்டும்.
(Extract from 3.5.373-3, 33, Li S-551. 32, SajduS2, சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை எழுதியது.)
இப்பெரியார் சரிதையை எழுதும் பெரும் பாக்கி யத்தினை யாம் எய்தும் வண்ணம் இச்சரித்திரத்திற்கு இன்றியமையாத பல குறிப்புக்களையுதவிஎம்மைத் தூண்டிய வரும் நாவலாவர்கள் மைத்துனராய சுழிபுரம் ச. அப்பாப் பிள்ளை உபாத்தியாயர் குமாரருமான சிவகுருநாத பிள்ளை அவர்களுக்கு எமது மனமார்ந்த வந்தனம் செலுத்து கின்ரும்.

- Introduction by Sri, S. Shivapadasundaram, B. A.
Emeritus Principal, Victoria College, Chulipuram.
ബത്തത്ത
SABAPATI-NAVALAR was one of the foremost of a galaxy of Tamil geniuses that shone in Jaffna nearly half a century ago. Jaffna was then preeminently the land of Tamil and was looked up to by the rest of the Tamil world. Besides Sabapati Navalar, there were among others, Arumukha Navalar, the great Samskrita and Tamil Scholar Sankara Pandithar of Neerveli, the talented poet Sivasambu Pulavar of Udupitti, the Siddhanta Scholar Nadaraja Aiyer of Inuvil, the Agamic Scholar Sentilnatha Iyer, Widvasiromani Ponnam bala Pillai, the Grammarian Sambantha Pulavar, and the not well-known but really great Narasinga Sastriar of Puloly, an ancestor of Siddhanta Sarapam and Sathavadanam Katiraivel Pillai. Our Navalar has left the mark of genius in every work of his, especially in his great work Dravida
Prakasikai.
The very idea of such a work spells originality. A work of this kind had not existed in Tamil. At first sight, this would appear to be an encyclopaedia of the standard works of the Tamil language classified into Grammar, Literature and Philosophy, of which Literature is subdivided into Saint's works,

Page 31
2.
Sangam literature, the kavyas, the puranas, the it.haaas and miscellaneous literature. Each work is given either an introduction or a summary and a critical review. Looking more closely, one finds the work to be an indispensable guide to the study of Tamil. It discusses and illumines various conflicting theories, setting its seal of approval on those that stood the test. Extensive original commentaries also are given for some passages, of which that on the first stanza of Tirukural fills over fifty pages.
In the chapter on the Tamil Language, the author distinguishes letters from sounds, the former as a product of Suddha Maya and the latter as being caused in space. The difference corresponds to that between the form of a body and the light that helps the sensing of the form. It is also held that letters can be produced only by rational beings, and that other animals converse either by sounds or by signs. Tamil is said to be divine as it contains divine and inspired writings and as the first Grammarian Agastyar got his knowledge of Grammar by the Grace of God. There is divinity even in the written form of the letters, the first letter A, having in it the symbol of the Ambika Shakti, which may be differentiated into Vamai, Jyeshtai & Raudri. Coming to the various interpretations given to the words, Tamil and Thenmozhi, all are rejected except the meaning “sweetness' for the former and 'beautiful language' for the
latter.
The first work on grammar known to us is that of Sage Agastyar, who was a teacher of Tamil and world-Guru of the Saiva religion. His grammar spoke of Iyal Tamil, which was literature, of Isai

3
Tamil or Tamil music, and of Natakam or the science and art of acting and dancing. As the: Tamil Language is radically different from Samaskritam, the idea that Agastyar was indebted to some Samaskrita Grammarian is easily exploded. But his work is practically lost.
His disciple, Tholkappier, wrote a grammar which has lived these thousands of years, and bids fair to remain for ever. He seems to have written only on Iyal Tamil. But his chapter on Porul is a rich mine of very valuable information. It treats of the purushartas, duty, wealth, pleasure and bliss, which one has to attain in one's life. As the same kind of life cannot suit different types of people, this part of Tholkappiam is based on Geography.
This Geography does not speak of bays and capes, or areas and boundaries, but is real scientific Geography. It classifies lands into tablelands, forests, grasslands, deserts, and maritime regions. It gives the fauna and flora of each kind of land, the diet, occupation, worship, amusements, music, and the degree of advancement of the people of the land. In other words, it had reached the latest advancement in the idea of Geography in the west and Tholkappier anticipated several thousands of years ago what the western scientist has just attained. The Ego, the Me and the I, is treated in one part of porul grammar called Ahapporul which also portrays religious life, and the Non-Ego including the various branches of political and military sciences is treated in Puraporul. The author of the Prakasikai devotes
* Deserts are dry tablelands and sparsely populated regions.

Page 32
4.
nearly fifty pages to this immortal book giving a Succint but clear and thought-provoking account of it. He also refers to Sivagnana Muniver's wide commentary on the preface and the first sutram of the book.
Coming to Ilakkiyam, the author places the twelve groups of religious literature before sangam literature, as some of these were composed earlier and they were sung by sanctified sages. The conversion of jackals into horses, which took place in Manikkavachakar's time, is mentioned by Appar. But Manikkavachakar makes no reference to Appar. -or Sambandar, but speaks of Kannapar who is praised by Sambandar himself. Again Nambiandar Nambi says that a grand sangam was established by the Pandian whose minister was Kulachirai Nayanar. Even if this sangam was the last one, it is evident that the time of Sambandar who was a friend of Kulachirai Nayanar, was anterior to the disappearance of the third sangam. It, therefore, follows that Manikkavachakar's time was much earlier than the sangam period. But Sambandar's Devaram is placed before Thiruvachakam, not on account of its antiquity but because of the superior personality. of the author, who is an avathar of an Apara-Subrahmanya. The works of Appar and Sundarar, being also Devaram, were placed immediately after Sambandar's. The authpir shows that Manikkavachakar's time. must be very near the beginning of the present yuga. It is noteworthy that the same conclusion has been arrived at, from different data, by the Hon.
An Apara-Subrahmanya is a soul that has attained one of the forms of Pada Mukti of Subrah
manya •

5
Sir P. Ramanathan. If this view is accepted, the Buddhist priest who conducted a controversy with Manikkavachakar should be a follower of an earlier Buddha. The author next proves that the works of the saints are equivalent to the Vedas, inasmuch as saints were illumined by the Arulshakthi of God, and their words were therefore as much the embodiment of Arul as the Vedas themselves. But he objects to the appellation of Arulpa being given to the songs of imperfect seers, and rightly holds it a blasphemy to do so. While quoting Avvayar's famous Venpa which identifies the substance of Arulpa with the Vedas, the interpretation he gives to the term "Munimozhiyum' as 'sung my Manikkavachakar' is different from the traditional view. His chief reason for rejecting the meaning “Vedanta Sutra' is that the work is not so well-known as a Saiva hastra to be denoted by a name compounded ..of two words, each of which is a general name. The ground of the supporters of the view is that Kova and Tiruvachakan are easily identified without the author's name.
The term Tiruchittambalam uttered at the beginning and close of the Tamil Vedas is identified with the Pranava and is shown to be very comprehensive. Chit is Gnana and Ambalam means AkasaSo the term illeans the space of Gnana, which is the Lotus of the Heart and which includes the thirty-six
tatvas and other products of Pranava. The souli identifying itself in its contemplation with Siva, who resides in the Lotus, finally becomes Advaita with Him or, in other words, atttains Mukti. The
term Tiruchittambalam is thus identical with Pranavas
but is more sthula and tangible in its form.

Page 33
The author devotes considerable space to Peria Puranam which he interprets as the Puranam. of greatness (of saints). This work was intended to replace Jivaka-Chintamani, the study of which would be waste of time, according to the sacred dictum of Appar, "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல் 60s is 9 past 5T (617. "But the Puranam is far more than a literary Work, embodying the philosophy and practice of religion, devotional songs, varnashrama dharma. and creeds of other religions. Chintamani thus pales to insignificance before Periapuranam as a glow-worm before the rays of the midday Sun. The author’s commentary on the first stanza of the Puranam is a model exposition showing the need for scientific-thinking and extensive knowledge of religious philosophy in tackling sacred Songs of this kind. Many commentators come in for severe adverse criticism, the merit of which cannot be considered here.
The next important work reviewed by the author is Tirukural, which forms a connecting link between religious literature and Sangam literature. As this work is more ethical than philosophical, it is readily accepted by all religionists, and happens to be the most popular Tamil work in the West, having been translated into many European languages. The Jains and even Christians claim Tiruvalluvar as their co-religionist. The Navalar's commentary on the first Kural, which covers fiftyfive pages, is a wonderful performance, containing extensive quotations from the Vedas, the Agamas, and the Shastras. It is the whole Saiva religion in a nutshell, educed from the tiny couplet by the author's massive genius, which has left a true: impression on it.

7
In the Sangam literature are included PathuPattu, Ettuthokai, and Pathinenkeel-Kanakku: The so-called five Sanga, Kavyas are rightly placed by the author as post-sangam works. Chintamani was written probably four or five centuries after the dissolution of the last Sangam. Kandapuranam is placed at the top of Puranic Literature, and here too the author strikes an original note regarding the agglutination of the first pair of words in the Kappu Whereas the traditional view is that Weerasozhium is an authority for it (53553-55-3), it is contended that the change is authorised by Tholkappier in his Sutram of exceptions and that Buddha Mitranar, whose claim for infallibility cannot be upheld, had no right to make a rule against Tholkappier and against the usage of the Sangam Literature and the works of other great authors. The only possible justification for him could be the use by Kachiyappar, who then must have preceded the author of Weerasozhium.
In Shastraic Literature are included eighteen kinds of philosophy and science:-the Vedas, Vedicmusic, Vedic-rituals, Vedic-grammar, Vedicphilosophy, Wedic-prosody, Astronomy, the eighteen Puranas, Logic, Natural and Religious philosophy, Law, Medicine, Military science, Music and Politi cal Economy. Of the six Vedic Shastras which are misnamed “the six systems of philosophy”* Vaise shika is treated in Tarka\Paripadai of Sivaprakasa Muniver, and Nyaya in Taruka Sangraham of Sivagnana Muniver. The Vedanta is expounded in many Tamil works such as Kaivalyam of Thandavamurti
* These are supplemntary and form a single system. The apparent differences in them are due to narrow views of them.

Page 34
8
and Gnanavasittam of Weerayalavanthar. Agamic Shastras are classified into those that treat of the first three padas as Sivadharmothara, and Gnana . Shastras like the fourteen Siddhanta Shastras. A long account is given of Sivagnanabodham. It is the most authoritative work in Tamil, as it is a translal tion and exposition of the Sivagnanabodham of the Rourava Agama and is the Gnanasurya that qives light to the whole Tamil Siddhantic Literature. A very elaborate commentary on this work was written by that illumined intellectual giant, Sivagnana Muniver, in whose sishya line the author of the Prakasikai had the privilege to be.
The concluding chapter of the Prakasikai begins Wiih a section on the importance and value of learning, and proceeds to give an account of the right methods of teaching and learning, some of which are yet new to the pedagogic works of the west. It ends with a course of studies in threeprogressive grades the last of which includes reli gious literature and philosophy
The Tamil World must be ever grateful to the Navalar for this Magnum opus of his. He has presented the whole Tamil Literature as in a mirror and has made this book out of the beauties of all the standard Tamil - works. Dravida Prakasikai is thus the Tilottamai of the Tamil land, and everyone who takes a pride in being afamil will find it a privilege to feast his eyes on 1he peerless beauty of this exquisite work.
Jajna, S. SHIWAPADASUNDARAM, B. A. 13th Chittirai of Principal, Victoria College, &
Prabhava. Author of 'Saiva Botham' (1927) Series in Tamil.


Page 35