கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலர் 1970.07

Page 1
*曇
 

|- |-

Page 2
; , , ; , ; . “in soi” சஞ்சிகையில்
ஏன் விளம்பரம் செய்யவேண்டும் ” என்பதற்குச் சில காரணங்கள்
ஈழத்திலே மிகச் சிறப்பான முறையில் வெளிவரும் இலக்கிய ஏடு "மலர்" . கண்ணைக் கலுரும் அமைப்பில் வண்ண ஓவி யங்களுடனும் எண்ண எழுச்சிகளுடனும் வெளிவருவது இச்சஞ்சிகை,
எவ்வித சார்புமற்ற நடுநிலை ஏடாய் விளங்குவதன் காரணத் தால் ஈழத்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலையும் அபிமானத்தையும் பெற்றுள்ளது இச்சஞ்சிகை.
ஈழமெங்கும் விநியோகமாகும் இச்சஞ்சிகை, பாடசாலைகள், பயிற்சிக்கல்லூரிகள், அலுவலகங்கள் எங்கும் மிகுந்த செல் வாக்குப் பெற்றுள்ளது. ஆசிரியர், மாணவர், அலுவலர் முதலியோர் இதன் நிரந்தர சந்தாதாரராக உள்ளனர்.
தினசரிப் பத்திரிகை விளம்பரங்கள் படமுடியாத பார்வைக ளில் 'மலர்" விளம்பரங்கள் படுகின்றன. தினசரிப்பத்திரிகை
. . . .
விளம்பரங்களை விட முப்பது மடங்கு கூடிய காலம் 'மலர் விளம்பரங்கள் உயிர் வாழ்கின்றன.
தினசரிப்பத்திரிகைகளின் விநியோகம் (circulation) இடம் (space) முதலிய அம்சங்களை விகிதாசாரப்படி ஒப்பிடுகையில் 'மலர்” விளம்பரவிகிதம் மிக மிகக் குறைவானதாகும்.
வியாபார நோக்கமற்று, இலக்கியப்பணி குறித்து நடாத்தப் படுவது "மலர்'. இச்சஞ்சிகையில் விளம்பரம் செய்வதன் மூலம் ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்குக் குறிப்பிடத்தகுந்த சேவை செய்கிறீர்கள் - அதாவது உங்கள் பங்கைச் செய் கிறீர்கள்.
(பின்புற உள் அட்டையைப் பார்க்கவும்)
,蛙

கல்முனையிலே பெயர் பெற்ற ஜவுளி ஸ்தாபனம்
K. K. M. STORES
REST HOUSE ROAD, KALMUNAI.
உங்களுக்குத் தேவையான, கைத்தறி ஆடைகள், நைலெக்ஸ்
சாரிகள், வொயில் சேலைகள், சிறுவர்களுக்கான உடுப்புகள்,
"ஹென்ட்லி, "டிப்ளோமட்," "மான்ஹட்டன்", பென்ஹர் சேட்
வகைகள், கூப்பன் துணிகள், இன்னும் பல குறைந்த விலையில் ~~~~\__A பெற்றுக்கொள்ள சிறந்த இடம் -
K. K. M. STORES
REST HOUSE ROAD, KALMUN AI.
BRANCH :
M A R KA RS
Main Street - KALMUNAI.
கல்முனையில் நம்பிக்கையான தங்க நகைகளுக்கு உகந்த இடம்
லலிதா நகை மாளிகை
பிரதான வீதி, கல்முனை.
ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்.
ஒருமுறை விஜயம் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் எங்களையே நாடி வருகிருர்கள் LALIITTIHA JEVVELLERS
MAIN STREET. KALMUNAI.

Page 3
பொது மக்களே ! − இன்றே நாடுங்கள்!! immm. LTSSMSSSLSSSSSSLSSSSSS LLLLLSSLSSLSLSSLSLSSLSGSSSLSSSMMLSLS
மட்டக்களப்பின் பிரபல வர்த்தக ஸ்தாபனமான V
"டிப்டொப்" ஸ்தாபனத்திற்கு!
உங்களுக்குத் தேவையான ஆங்கில மருந்து வகைகளைக் கட்டுப் பாட்டு விலைக்கும், பாடசாலை உபகரணங்கள், அன்பளிப்புப் டுபாருட்கள், பாலுணவு வகைகள், மற்றும் சாய்ப்புச் சாமான்கள், ஆகியவற்றை மலிவான விலைக்கும் பெற்றுக்கொள்ளச் சிறந்த
ஒரே ஸ்தாபனம் ---
S 6 AA nr i 99 AA
டிப்டொப்' - மட்டுநகர்!
*டியுரோல் விட்டமின் டானிக்,
ஒவல்டின் சத்தூட்டப் பெற்ற பாலுணவு
ஆகியவற்றிற்கு மட்டுநகரின் ஏகவிநியோகஸ்தர்கள்:
A P. M. bT5Galla)
* டிப்டொப் ’ நிர். 4, பிரதான வீதி - மட்டுநகர்.
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஹார்ட் வெயார் ஸ்டோர்ஸ்
A ARMA Ab AA 4. , 6)filb|| ?)III 68)|III (LII6l) இல, 26 , பஸார் ஸ்ட்ரீட் - மட்டக்களப்பு உங்களுக்குத் தேவையான கட்டிட சாமான்கள், லக்ஸால் பெயின்ட் வகைகள், எஸ்-லொன் பைப்ஸ், யானை மார்க் அஸ்பெஸ்டோஸ் முதலியவற்றைக்
குறைந்த விலையில் நாங்கள் தருகிருேம்.
சிலோன் சீமென்ட் கோப்பரேஷன் சிலோன் ஸ்டீல் கோர்ப்பரேஷன் சிலோன் ஸ்டேட் ஹார்ட் வெயார் கோர்ப்பரேஷன் சிலோன் செரமிக்ஸ் கோர்ப்பரேஷன் பொருட்களுக்கு அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள்
LANKA HARDWARE STORES
No. 28, Bazaar Street,
:8A "ALA.

fழத்தில் மிகச் சிறப்பான முறையில் வெளிவரும் இலக் இய மாதஏடு "மலர்". இச்சஞ்சிகைக்கு உங்கள் பாராட்டுதல் களைச் ச்ெ யல்மூலம் தெரிவிப்பதற்கு ஒரேவழி உடனடியாக "மலர்” சந்தாதாரர் ஆகுவதுதான். அதேபோல், உங்கள் நண்பர்களையும், மற்றும் சுற்றத்தவர் களையும் 'மலர்’ சத்தாதாரர் ஆக்குவது, நீங் கள் இச்சஞ்சிகைக்கும், ஈழத்து இலக்கிய உலகுக்கும், உங்கள் சக்திக்குட்பட ஆற்றும் மகத்தான பணியாகும். அதுமட்டுமல்ல, உங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு நீங்கள் அளிக்கக்கூடிய மிகச்சிறந்த - நிலையான ஞாபகமுள்ள ஒரு பரிசு “மலர்” ஆண்டுச் சந்தா ஆகும்.
கீழே உள்ள விண்ணப்பப்படிவததைப் பூர் த் தி செய்து அனுப்புங்கள். - ஆசிரியர்.
நிர்வாகி 'மலர்' 21, மத்திய வீதி,
மட்டக்களப்பு.
அன்புடையீர்,
** மலர்' இலக்கிய மாத ஏட்டினுக்கு ஆண்டுச்
சந்தாவாக ரூபா 6/- இத்துடன் காசோலையாக / மணி
ஒடராக / போஸ்டல் ஒடராக அனுப்புகிறேன்.
s ... . . . மாதம் முதல் ஒரு வருடத்திற்குچ
** மலர்' பிரதிகளை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி
வைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
இவ்வண்ணம்
LLL00 0LLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLL0L0L0L0L00LLLLLLLLLLL0LL0LL
கையொப்பம்
திகதி.
LSLLLLLLLLLLL00LLLL000LLL0LL0L00L000LS 0L00L0LLLLLLL0LL LL0LLLLL0LLLL0LLLL L00LLL0LL00L LL

Page 4
లై?
G) 600) is 5
இந்த இதழைப் பார்த்ததுமே வாசகர் களுக்கு ஒரு 'பிரமிப்பு’ எற்பட்டிருக்கும் ஆம்; அநேக வாசகர்களின் நீண்டநாள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் முகமாக இம் மாதம் முதல் ** மலர்' ஏட்டினை இப்புதிய தோற்றத் தில் வெளிக்கொணருகிருேம்.
உள்ளூர் முயற்சிகளை ஊக்குவிக்கும் எண் ணம் கொண்ட புதிய அரசாங்கம் தோன்றியுள் ளது. இலக்கியத் துறையிலும் அதன் தாக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 'மலர்' போன்ற இலக்கிய சஞ்சிகைகளுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்று எதிர் பார்க்கிருேம்.
நாம் ஏற்கனவே அறிவித்திருந்த தொடர் அம்சங்களில் மூன்று இந்த இதழில் ஆரம்பமாகின் றன. மேலும் பல புதிய அம்சங்கள் இடம்பெற விருக்கின்றன. எப்படியான புதிய அம்சங்களைச் சேர்க்கலாம் என்பதில் வாசகர்கள் கருத்துக்களை யும் அறிய விரும்புகிருேம்.
ஈழத்தின் சிறப்புமிக்க இலக்கிய ஏடான * மலர்' ஈழத்தின் மூலை முடுக்குகளெல்லாம் பரவு
வதற்கு வாசகர்கள் துணைபுரிய வேண்டும்.
- -ஆசிரியர்.
:
{

மலர் உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்-பாரதியார்.
ଭ<: l
9ಶಿ, 1970 LBGÖi
மகரந்தம்
கதை பக்கம் உள்ளம் ஒன்று S LLSLLLL LL LLLLLL S LLL0LLLL0L LLLSLL SL0LLLL m» « « A Q P P R A நிவேதிதா . 16 ஆதாரம் . . எம். ஐ. எம். தாஹிர் . 33 உள்ளும் புறமும். ............ FinrT6) JB nr 6ör ... 35 O SLLLLLLLL LL LSLLSLLLLLLLLLL S 0SLSL SL LL SL LSLLLL LCLL0 LL CLLLLLLLLC CL TT LL L SLLLCL L0 LLLLLLL வேதாந்தி . 41 &Opüsoluur............................. மருதூர் மஜீத் . 55 மலைப்பாம்புடன். எஸ். சிதம்பரப்பிள்ளை . 58 கவிதை
இளம் வாலிபரே. காரை. செ. சுந்தரம்பிள்ளை 6 மரணமும் வாழ்வும். குமார. இராமநாதன் . 25 வேண்டுதல் வேண்டாமை . பாண்டியூரன் . 32 சங்கமம் . கணேஷ் . 40 முழக்கினேன் குரல். பண்ணுமத்தான் . 45 நானும் நாலு. . .நிதானி . 53 கட்டுரை
வி. சி. மெம்பர். அம்மாச்சி ஆறுமுகம் . 23 வீதியெல்லாம் . . கலைமேகம் இப்ருஹீம் . 46 கொசுமருந்து . எடுத்தாளன் . 61 பிற
கன்னத்தில் . திமிலைத்துமிலன் . வணக்கம் . op இலக்கிய வளர்ச்சிக்கு . ... 7 dis&bo Flupih..................... ................................ ... 14 fišljistih..................... ... 26 90 up spill alth............................................. ... 27 Ubišleis T............ ••••••••••••• LLLLLLLL0L0LLLSLLL0LLLLLS0LLS S LSLLSLS S SL0LLLLLLLL LSL . . . . . . . . . . 48 ஈழத்து ரத்தினங்கள் . ... 63
கதைகள் யாவும் கற்பனை. கட்டுரை கவிதைகளில் உள்ள
கருத்துகளுக்கு அவற்றின் படைப்பாளிகளே உரிமையாளர்.
-ஆசிரியர்.

Page 5
96TD GT ICT
செ. အဖါး3ai။ 2am.
--------س- قهگد-س----
Ο Ν
பட்சமுள்ள இளம் வாலிபரே உங்கள்
பாரிய தோள்களைத் துரக்கி - உள்ள வீரியம் யாவையுந் தேக்கி - இந்த
எட்டுத் திசையிலும் ஈழப் புகழினை
ஏற்றி வைப்பீர் பொருள் ஆக்கி - நாட்டை மாற்றி வைப்பீர் தொழில் ஊக்கி.
பட்டினிக் கோலத்தில் பாராளு மன்றப்
படியினில் ஏறி இறங்கி - எம். பி அடியினில் வீழ்ந்து வணங்கி - ஒரு
குட்டித் தொழிலேனும் எட்டிப் பிடித்திடக்
கோடி தவஞ் செய்வதேனே - உளம் வாடி அவஞ் செல்வ தேனே?
தென்னை பனையுண்டு தேமா பலாவுண்டு தேயிலை ரப்பரு முண்டு - திறம் போயிலை வாழையுமுண்டு - நல்ல கன்னல் விளைந்திடச் செந்நெல் செழித்திடக்
காடு கழனிகள் உண்டு - பசு மாடுகள் ஆடுகள் உண்டு. வேட்டிகள் சேலைகள் பானைகள் சட்டிகள்
வேண மட்டும் செய்யலாமே - இதால் மானமுடன் உய்ய லாமே - இந்த நாட்டினில் ஆயிரம் நல்ல தொழிலுண்டு நாண மெதற் கடா தம்பி - அஞ் ஞான மொழியடா நம்பி.
ஆழக் கடல் சென்று மீனைப் பிடித்திடும்
அன்னிய நாட்டவர் போல - பொருள் மன்னிய நாட்டவர் போல - எங்கள்
ஈழப் புதல்வர்கள் ஏறிப் படகினில்
ஈட்டலாமே பெருஞ் செல்வம் - நிலை நாட்ட லாமே புகழ் வெல்லம்.
 

岛
t (LNG|Í
இலக்கிய வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் உதவி,
ழ நாடு சுதந்திரம் 9, 60-liig, u9 6ör øor f, பொருளாதார அபிவி Iருத்தியிலும் விவசாய, தொழில் விருத்தியிலும் முக்கிய கவனம் செலுத்துவதற்கான திட் டங்களை அரசாங்கம் மேற்கொண் t-gils
காலக்கிரமத்தில், நா ட் டி ல் இலக்கிய வளர்ச்சியும் அரசாங்கத் தால் பேணப்படவேண்டிய ஒன்றே என்பதை உணர்ந்து, அதற்காகவும் சில திட்டங்களை அரசாங்கம் மேற் கொண்டது.
தமிழ் இ லக் கி ய த் தை ப் பொறுத்தவரை சாகித்திய மண் டலம், இலங்கைக் கலைக்கழகம் முதலிய அமைப்புகள் தமிழ் இலக் கிய, தாடகவளர்ச்சிக்கான பணி களை மேற்கொண்டிருந்தன. பல வருடகாலம் இ வை ஆற் றி ய சேவையின் "அறுவடையைச் சீர் தூக்கிப் பார்க்கும் போது நாம் மகிழ்ச்சியடைவதற்கில்லை என்ற வருந்தத்தக்க உண்மை தலைநீட்டி நிற்கிறது. மேலும், இவ்வமைப் புகளில் நிலவிய ‘தில்லுமுல்லுகள்’ பற்றியும் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் அதிருப்தி நிலவுவது யாவ ரும் அறிந்ததே.
இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. இப் புதிய அரசாங்கம், கலாச்சார விவகாரங்களைக் கவனிப்பதற்குத் தனி அமைச்சு நிறுவியதும், சாகித் தியமண்டலம், கலைக்கழகம் முத லிய அமைப்புகளைப் புனருத்தார ணம் செய்ததும், சகல துறைகளி லும் உள்ளூர் முயற்சிகளுக்கு ஊக் கம் கொடுத்து வந்துள்ளமையும் ஈழத்து இலக்கிய உலகில் புது நம் பிக்கையைத் தோற்றுவித்திருக்கி ይወò] •
ஈழத்து இலக்கியப் படைப்பா ளியும், ஈழத்து இலக்கிய உலகும், நிச்சயம் அரசாங்கத்தின் உதவியும், ஊக்கமும் பெற்றுத் தழைக்சமுடி யும் என்ற நம்பிக்கையைப் புதிய அரசாங்கம் ஊட்டியிருக்கிறது.
அரசாங்கத்தின் எண்ணங்களை யும், திட்டங்களையும் செயல்படுத் தும்போது 'நேர்மை' கடைப்பி டிக்கப்பட்டால் மட்டுமே இந்த நம்பிக்கை பலிதமாகும் இதற்குப் பொறுப்பாக இருக்கப் போகிற வர்கள் இதைக் கருத்தில் கொள் ளவேண்டும்.
எந்த எந்த அம்சங்களில் கவ னம் செலுத்தினுல், ஈ ழ த் தி ல் தமிழ் இலக்கியத்தில் - படைப்பி
7

Page 6
லக்கியத்தில் குறிப் பிடத் தக்க வளர்ச்சி ஏற்படும் என்று நாம் கருதுவதைக் கீழே தருகிருேம்:-
(i)
(ii)
(iii)
ஈழத்தில் எத்தனையோ இலக் கியப்படைப்புக்கள் அச்சில் வெளிவர முடியாத துர்ப் பாக்கிய நிலையில் இருக்கின் றன. இவற்றில் தரமான வற்றைத் தெரிவு செய்து, அரசாங்கமே அச்சேற்றவும் பாடசாலை நூல் நிலையங்கள், அலுவலக நூல் நிலையங்கள் முதலியவற்றுக்கு அவற்றை விநியோகிக்கவும் ஒழுங்கு செய்ய வேண்டும். தரமான படைப்புகளைத் தெரிவு செய் யும் குழு, பேர் பிரபலத் துக்கோ, பிரதேசச் சார் புக்கோ, கோ ஷ் டி ச் சார் புக்கோ இடம் கொடாது நடுநிலையில் நின்று கடமை யாற்ற வேண்டும்.
எத்தனையோ சிரமங்களுக்கு ம த் தி யி ல் வெளி வரும் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் விநியோகம் ஆவ தில் சிரமம் இருக்கிறது. தரமான நூல்களைத் தெரிவு செய்து அரசாங்கமே மேற் குறித்த முறையில் விநியோ கம் செய்வதற்கு முன்வர வேண்டும்.
பிறநாட்டுத் தூதரகங்கள் மூலம், தரமான ஈழத்து இலக் கி யப் படைப் புக ள்
(மொழி பெயர் ப் பு கள்)
(1ν)
வெளிநாடுகளிலும் விநியோ கமாவதற்கு அர சாங் கம் ஒழுங்கு செய்யவேண்டும்.
வியாபார நோக்கற்ற, தர மான இலக்கிய சஞ்சிகைக ளுக்கு அரசாங்கம் ஆதரவு கொடுக்கவேண்டும். இச்சஞ் சிகைகளை, பாடசாலை அலு வலக நூல் நிலையங்களில்
விநியோகிக்க ஒழுங்கு செய் வதன் மூலமும்; அரசாங்க திணைக் களங்கள் கூட்டுத்தா பனங்கள் முதலியவற்றின் விளம்பரங்களை இவற்றுக்கு அளிப்பதன் மூலமும் அரசாங்
(w) பாடத் திட்டத்தில்
கம் இதைச் செய்யலாம்.
இலக்கியப்பாடத்தில் றையப
உயர் வகுப்புகளில் இது ஒரு தனிப்பாடமாகவே கப்படலாம்.
-\- .
ஈழத்து எழுத்தாளர் வெளியிடும் நூல்களுக்கு இலவச விளம்பரம்.
ஈழத்து எழுத்தாளர் கள், தனிப்பட்ட முறை யில் ஈ ழ த் தி ல் வெளி யிடும் நூல்களுக்கு 'மலர்”
ச ஞ் சிகை யில் இலவச
மாக விளம்பரம் வெளி யிடப்பட்டு வருகிறது . இவ்வாறு விளம்பர ம் பெறவிரும்பும் எழுத்தா ளர்கள், தாங்கள் வெளி யிடும் நூலின் ஒரு பிரதி யுடன் ண் ணப்பிக்க வேண்டும். 1 - 1 - 70 முதல் வெளிவரும் நூல் களுக்குமட்டுமே இத்திட் டம் அமைவதாகும்.
- ஆசிரியர்.
உள்ள
இன் படைப்பிலக்கியம் ஒரு முக்கிய அம்சமாக ச் சேர்க் கப்பட வேண்டும்.
GF rifj;

IOTæv வேளை.
வானை நோ க் கி உயர்ந்திருந்த மலைச் சிகரங்களை மையலால் தழு விக் கொண்டே குழை ந் து கிடந்தன மழைமுகில்கள். மஞ் சள் வெய்யிலிலே தங் கப் பாளங்களாக,
முகடுகளிலிருந்து "தத் திமித்தோம்" எனத் தா ள மி சை த் துத்
தன அருவிகள்.
பறித்த தேயிலைக் கொழுந்தை நிறுத் துக் கொடுத்துவிட்டு, வீடுகளைநோக்கி வரி சையாக ந ட ந் து கொண்டிருந்தார்கள் பெண்கள். எல்லோ
பீர நடைபோட்டு, து ஸ் ளிச் செ ன் Աl கொண் டி ருந்தா ள் ஒரு இளநங்கை. ஆம்: அவளொரு குறும்புக் காரி.
- துடிப்புள்ள பெண்.
அவள் பாடத் தொடங்கிவிட்டால்,. மற்றவர்கள் பின்பற்று வதைத்தவிர வேறு வழியில்லை. கற்பாறைகளினுட்ாக, அவள் துள்ளிச் செல்லும் வேகத்திலேயே பாடலும் துள்ளித்துள்ளி மிதந்துகொண்ருந்தது.
器*斷
9

Page 7
கூடைகட்டித் தொங்கவிட்டுக்
கொழுந்தெடுக்கப் போகையிலே சாடையாகக் கண்ணடிச்சான்
முத்துக் கங்காணி - அதில் தன் மனதை ஏங்கவிட்டாள் செல்லவீராயி!
"தென்றலும்தெம் மாங்கும்போல
தேயிலைக்குச் சீனிபோலே
ஒன்றிவிட்டோம்' என்று சொன்னன் முத்துக் கங்காணி - "மச்சான்!
உண்மைதானே?" என்றுகேட்டாள் செல்லவீராயி.
தேயிலைக்கன் ருேரத்திலே
தேன் குடித்த மந்திபோல
வாயிலே ஈ மொய்க்கநின்றன்
முத்துக் கங்காணி - "ஐயா!
வந்ததென்ன சொல்லு?" என்ருள் செல்லவீராயி,
கண்ணே! கற் கண்டேன்னைக்
கவர்ந்துவிட்ட கோகுலமே!
வண்ணமயில்! வாடி யென்ருன்
முத்துக் கங்காணி! - மச்சான்!
மாலையிலே வாறேனென்ருள் செல்லவீராயி,
நரியை நம்பிப் போன நண்டாய் நங்கையவள் ஒடிவந்தாள்
** அரிவையே நீ அஞ்சேல்' என்ரு ன் முத்துக் கங்காணி! - பாவம்
அவன் மொழியில் தனை மறந்தாள் செல்லவீராயி,
UTடலை இன்னும் முடிக்கவில்லை அவள். ரோசம் பெங்கிய வீராயி இடையிலே சேலையை இறுகச் சுற்றினள். கூட்டத்தை இடித்துக் கொண்டு முன்னுக்கு வந்தாள்.
"அது என் விருப்பமடி! நீ யாரடி கேட்க?' என்று எரிந்து விழுந்தாள். ஆனல் அந்தப் பூங்கொடி சிரித்தாள்.
வீராயி! வீராயி!
வெகுளுவதேன் வீராயி? ஓரிரவு உனையணைத்தான்
முத்துக் கங்காணி - வேருேர் உத்தமியை மணமுடித்தான் உண்மைவீராயி..."
வீராயிக்கு ஆத்திரம் வெடித்தெழுந்தது. அவள் உதடுகள் துடித் தன. கண்களிலிருந்து கங்கையாறு பொங்கிற்று. வரம்பு மீறியவார்த் தைகள் கனலெனத் தெறித்தன. : " ० १ .५ :
O

விராயி:
அவள்:
síffrtru:
உத்தமி பெரும் உத்தமி யிவள்
ஊர் சிரித்திடு முத்தமி
எத்தனை தர மேகினும் நீ
என்னையாரடி கேட்பவள்?
சுத்தமுள்ளவள்! பத்தினியிவள்;
தோற்றமே யது செல்லுதே.
ஒட்டவெட்டுவன் நாவினையினி
ஓர்மொழியெனக் கூறினல் .
என்னையாரென எண்ணினுயடி
எருமைமாடுபோல் துள்ளுருய்! சொன்னவாயினுள் மண்ணையிட்டுளி
சொருகுவேன்பல் திருகுவேன். கன்னியா? அடி காமுகி ஒரு
கட்டிலாதசி நுக்கிநீ இன்னுமென்னடி பேசிருய்? பல்
இளிக்கிருய்கண் விழிக்கிருய்!
வீரமோ இது தீரமோ அடி
வேல்விழிதனி ஞேரமோ? காரமாய் எனப் பேசிருய் உன்
காதல் தோற்றதில் ஏசிருய்! 'நாரியே! அடி நங்கையே இவை
நானுரைத்தது மோசமோ? வாரிபோல் வசை வீசுருய் ஏன்
வம்புவார்த்தைகள் பேசிருய்?
என்னை ஏன்டி இழுக்கிருய் அடி!
ஈனமற்றவள் மூடடி கன்னம் வாங்கத் துடிக்குதோ? என்  ைகருசியறி யாயடி! முன்னம் ஓர்முறை என்னை வீண் பழி
மூட்டினய் கதை தீட்டினய் அன்னையாணையுன் மன்னை பீறுவன்
அஞ்சவா அடி வஞ்சகி!
கேலி செய்து நகைக்கிருய், வா
யாடியே வெறும் பேடியே! வேலிகட்ட நீ யாரடி என
மேய்க்கிருய் உயிர் மாய்க்கிருய்? தாலி கட்டுதல் யாரடிசா
முண்டியேவனப் பன்றியே நீலிநீயொரு பெண்ணிலை? யென்ன
நேர்மையோ உனக் கோர் மையோ?
ll

Page 8
அவள்: வேலையற்றவள் மூடடிவாயை
வீணிலே கோபம் மூட்டுருய் நாலு சொத்தையில் வேண்டுமோ? சீ;
நாய்போல் ஏனடி கத்துருய்? வீராயி: வேலையற்றவள் நீயடியெனை
வேண்டுமென்றே யிழுக்கிருய் சேலை கட்டிய கன்னி! வாடி நீ
. தீர்க்கிறேன் உனைப் பார்க்கிறேன்.
வாய்ப்பேச்சு இறுதியில் கைப்பேச்சாக முடிந்தது. இருவரும் ஒரே வயதுக்கன்னியர். அந்த மலைச் சாரலிலே மல்யுத்தம்! பேச்சுமூச்சின்றி வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் மற்றப்பெண்கள். கற்பாறை யிலே கட்டிப்புரண்டு மோதியெழுந்தனர். காதணிகள் சிதறின. கைவளை கள் நொருங்கின. குழல் அவிழ்ந்தது. சேறும் சுரியும் எங்கும் புரண் டது. இறுதியில் அழுதுவடித்துக்கொண்டு வீடுநோக்கி ஓடினுள் வீராயி மற்றவள் ஒரு வீரப்புன்னகையோடு எழுந்து நின்று இடுப்பிலே சேலையைச் செருகினள், பாவம் வீராயியின் கன்னம் வீங்கிப்போயிருந் தது. மற்ற வீராங்கனயோ பீடு நடை போட்டு வீட்டையடைந்தாள். அடுத்த நொடி அவள் குளிக்கும் ஆடையோடு அந்த நீர் வீழ்ச்சியை நோக்கி நடந்தாள்.
அப்போது கறுப்பன் அங்கே வந்தான். கறுப்பன்: மீனச்சி! மீனச்சி! எங்கபோரு? கொஞ்சம் நில்லு புள்ள. மீனு: குளிக்கப்போறன். ஏன் மாமா? கறுப்: இஞ்சபாருபுள்ள ஒனக்குக் கையிப்ப நீண்டு போச்சி. கறுப்ப
னெண்ணு இந்தத் தேயிலைத் தோட்ட மே நடுங்கும். ஆமா. மீனு: என்ன மாமா; இதுக்குத்தானு என்னை நிக்கச்சொன்னே? கறுப்: ஆமா கதையப்பாரு; அவ அப்பன் மவ; ஏம்புள்ள ஒனக்கு
முதுகு ஒளையுதா? மீனு: (கோபமாக) மாமா! கறுப்: ஆளப்பாரு. கோபமா: கோபம்; பொத்துத்து வருதில்லே;
பெரிய சண்டியன் மவ: மீனு: மாமா! வீணு என்னுட கோபத்தக் கிண்டுரு: ஆமா. கறுப்: ஏம்புள்ள ஒன்னுட கோபம்; ஒம்மட்டுல. என்ன என்ன செய் யப்போவுது? வீராயிய அடிச்சிப்போட்டியாமே: ஒங்கப்பன் சோறு சீல குடுத்தா வளத்தே? மீனு: நான் சோறு சீல குடுத்தா இப்படியா விடுவேன்; நொறுக்கு நொறுக்கிண்ணு நொறுக்கி, சூட்டுக்கோல் வைப்பேன்; சூட்டுக் கோல்: ஆமா முதுகொளைஞ்ச சாரப்பாம்பு பட்டிக்காரன்கிட்டப் போவுமாம். மாமா! மீனச்சி நல்லவளுக்கு நல்லவ, கெட்டவ ளுக்குக் கெட்டவ. பேசாமப் போயிடு. கறுப்: என்ன புள்ள பாக்கப்பாக்கத் தலைக்குமேலே போவுது? மீன: மாமா! இந்தப் பயறை இந்தப் புள்ளக்கிட்ட வெதைக்காத; ஆமா. ஒன்ட மெரட்டலுக்கு முத்துக் கங்காணிதான் நடுங் கணும்.
12 .

கறுப்: இந்தாபாரு புள் ள முத்துக் கங்காணியை இழுக்காதே.
நாளைக்கு வேலைக்கு சீட்டுக் கிழியும். சொல்லிப்புட்டன் மீனு: ஐயே; ஒனக்குத்தான் மாமா, இந்தப் பிச்சக் காசி பெரிசு
விடிய அஞ்சுமணியிருந்து ராத்திரி ஆறு மணிபொறுக்க வேலை செஞ்சா, காவயத்துக்கே பத்தாது கூலி. சீட்டுக்கிழியுமாமே சீட்டு. முத்துக் கங்காணி ஒனக்குத்தான் ராசாத்தி மவன்; எனக்கில்ல. ஒசத்தியப்பாரு, ஒசத்திய, கறுப்: (கோபமாக) மீனுச்சி! மீனு: இந்தாபாரு மாமா; மீனுச்சிய அறியாம வாலாட்டாத
அப்புறம்: ஆமா. கறுப் யாரடி என்னைக் கேலியா பேசுழுப்
untitig- syug Lungtigதலைபோயிடும் அடிபேதையே
மரியாதையாய்க் கதைபேசடி (யாரடி ..) பாரடி எனப் பார்த்துமா பேசிருய்
பாரடி அடி பாரடி மலையாவினும் பெயர்கேட்டதும்
தலை கூனுவர் இதை நீயறி (யாரறி.) மீனு: (சிரிப்பு) ஆ; கா, கா, கா. கா. - பேசாதே பேசாதே தங்கமாமா
என் , சிங்கமாமா! - நாளை
பெரிய போத்தலொன்று வாங்கித் தாறேன்-நானும் (பெரிய) கறுப்: போத்தலெடுத்து நீ வாங்கிவந்தால் - உன்
புத்தியை மெச்சுவன் மீனச்சி - அடி ஆத்திரம் தீரும் வழியதடி - என
அன்பாயழையடி மீனச்சி மீனு: கத்தி பிடிக்குமுன் கையினிலே - மாமா! கையினிலே
கஞ்சி குடிக்கவும் காசியில்லே - பாவம் (கஞ்சி) முத்துக் கங்காணியை வால்பிடித்தால் - மாமா
வால்பிடித்தால் மூன்று முறையும் குடித்திடலாம் - மாமா மூன்று முறையும் குடித்திடலாம். கறுப்: கேலியர் பேசிருய் மீனச்சி - எனக்
கெட்டவனென்று நீ ஏசுகிருய்? நாலு முழத்திலோர் கம்பிருந்தால் - உன
நாய்போலடித்து நொறுக்கிடுவேன். மீனு: ஆ1 ஐயோ! அம்மா! (காலக் கையால் பிடித்துக்கொண்டே
கூச்சல் போடுகிருள்.) கறுப்: ஆ! என்னபுள்ள காலெல்லாம் ரத்தம்? மீளுற அம்மா! ஐயோ! கறுப்: என்ன காலுல? எடுபுள்ள கையால மூடிவச்சிக்கிட்டுக் கூச்சல் போடுறியே! எங்கே கையை எடு . (கையை எடுக்கிமுள். ஒரே நேரத்தில் இருவரும் பயங்கரமாக அலறுகிருர்கள்.)
(அடுத்த "மலரி'ல் "எதிரொலி')
e 13

Page 9
‘வேதாளம் சொன்ன கதை" (கவிதை நாடகம்)
கிடந்த 16-6-70ல் பம்பலப் பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் 'நிழல்’ நாடகக் குழுவினர் அளித்த வேதாளம் சொன்ன கதை?? என்ற கவிதை நாடகம் அரங்கேறியது. தமிழர்களும் மு ஸ் லி ம் களு ம் இணைந்து நடாத்திய இந்த நாட கத்திற்கு கல்வி அமைச்சர் கெளரவ ஜனப் பதியுதீன் முகமது அவர் கள் தலைமை வகித்தது மிகவும் பொருத்தமாக அமைந்தது. நாடக உலகைச்சேர்ந்த பலர் இந்த நாட கத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிதை நாடகத் தொடரில் இது இரண்டாவது முயற்சி. முதல் கவிதை நாடகமாகிய "மகாகவி' யின் 'கோடை" பெருவெற்றி யளித்தது. "வேதாளம் சொன்ன கதை நாடக உலகிற்குச் சற்றே புதுமையானதாகவும் இருந்ததென லாம். சுஹேர் ஹமீட் அவர்களின் நெறியாள்கையில் உருவாகிய பல நாடகங்கள் வெற்றியடைந்திருக் கின்றன. "வேதாளம் சொன் ன
கதை"யும் இதற்கு விதிவிலக்காக
இருக்கவில்லை.
நாடகம் ஆரம்பத்தில் சற்றே "போர்" அடித்தாலும் "பசாசின்"
4.
வருகைக்குப்பின் சூடு பிடித்துவிடு
கின்றது. சில நிமிட நேர மே மேடையில் தோன்றும் இந் த ப் பிசாசின் வேடத்தை லடிஸ் வீர
மணி ஏற்று எந்தப் பாத்திரத்தை யும் தம்மால் சிறப்பாக நடித்துக் காட்டமுடியும் என்று நிரூபிக்க, இரசிகர்களும் அதை ஏகமனதாக ஆமோதித்தார்கள். லடிஸ் வீர மணியைத் தவிர அந்தப் பாத்தி ரத்தை வேறு எவருமே அத்தனை லாகவமாகக் கை யா ன் டி ருக்க முடியாது. உண்மையாகப் பசாசு தோன்றியபொழுது பல பெண்க ளும், சிறுவர்களும் பயந்து நடுங் கியதை நான் அவதானித்தேன். வேதாளமாக நடித்த பிரான்சிஸ் மிகவும் அடக்கமாகவும், சிறப் பாகவும் தனது பங்கைச் செய்து பெயரைத் தட்டிக்கொண்டு போய் விடுகிருர். ‘நிர்மலர்" ரகுநாதன் முனிவராகவும், அரசகுருவாகவும் தோன்றினுர். முன்னதைவிட பின் னது எடுப்பாக இருந்தது. கதா நாயகனுக நடித்த ஜவாகர் வழக் கம் போலவே தனது சிறந்த நடிப் பை வெளிக்காட்டிப் பாராட்டுப் பெற்றதைக் குறிப்பிடத் தா ன் வேண்டும். ஆஞல் இடையிடையே
சிவாஜி கணேசனை ஞாபகமூட்டி
யது ஒரு குறையே. பிராமணனுக ந டித் 点 அமீரும் இயற்கையா நடிததாா.
மற்றும் ஜெயந்தி, தேவராணி சிசுநாகேந்திரா ஆகியோரும் தத் தம் பாகத்தை செய்து முடித்த னர். மொகமட் சாலியின் இசை யும், மர்குக்கின் ஒப்பனை யும் ,
 

போல் திலகநாயகத்தின் பின்னணி சையும் நாடகத்திற்கு மேலும் மருகு ஊட்டின.
‘ வே தா ள ம்
சொன்ன கதை’ நாடகம், நாட
கப்பண்பு தவருத , ஒரு புதுமை ான, சலிப்பில்லாத நாடகமாக
மைந்திருந்தது.
மொத்தத்தில்
-கூத்தன்.
崇
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி வைரவிழா - நாடகவிழா
--ساس-2 س
தெல்லிப்பளை மகாஜனக் கல் லூரியினர் இம்மாதம் 25ம் திகதி
வைரவிழா நடத்து கின்றர்கள். தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடை பெறும் இவ் விழாவில் தினமும் ஒவ்வொரு நாடகமும் இடம்பெற ஒழுங்குகள்
தொடக்கம்
செய்யப்பட்டிருக்கிறது.
கடைசி மூன்று தினங்களிலும் கொழும்பிலிருந்து மூன்று நாட
கங்கள் வரவழைக்கப்படுகின்றன? ஜுலை மாதம் 2ம் திகதி சிவதாசன் குழுவினரின் வாடகைவீடு” என்ற நகைச்சுவை நாடகமும், 3ம் திகதி கமலாலயம் அளிக்கும் “ஞான ஒளி” என்ற நாடகமும், கடைசித் தின மான 4ம் திகதி கொழும்பு யாழ் கலையரங்கத்தினரின் “பித்தலாட் டம்’ என்ற நகைச்சுவை நாடக மும் நடைபெறுமென்று எதிர்பார்க் கப் படுகின்றது. “பித்தலாட்டம்” என்ற நாடகம் கடந்த 27-2-70 பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் ம்ேடையேறி பலரின் பாராட்டைப் பெற் றது குறிப்பிடத்தக் கது.
நாடகப் போட் டிகள் பலவற்றில் பரி சு களை த் த ட் டி க் கொண்ட மகாஜனக் கல்லூரி, தனது வைர விழா வை யொட்டி இப்படி ஒரு நாடக விழாவை ஏ ற் பாடு செ ய் த து மி கப் பொருத்த மானதும், வரவேற்கத் த க்க து
DIT (gub.
سلاس۔
மட்டுநகர் வேனில் விழாவில் இடம்பெற்ற ஐயோ பாவம்’ நாட கத்தில் ஒரு காட்சி.
༣

Page 10
l6
ரத்தின
வல்லித் தோட்ட த்தின் வ லப் புறத்தில் பரந்துள்ள சிங் களக் கிராமத் தின் ஆரம்ப விா சல்தான் அந்த முனை. பள்ளத் தாக்கில் அமைந் துள்ள தேயிலைத் தொழிற் சாலை, துரை பங்களா,
மற்றும் தொழி
லாளர் குடியி ருப்புகள் அனைத் தையும் மேலே
மலைச்சிகரத்தின் நெற்றியில் நெ
ளித்து செல்லும் தார் ரோடுடன் இணைக்கும் பிர த்தியேக சரளைக் கல் ரோட்டின் 'இஸ்ட்" வளைவு கள் வரிசையில் இரண்டாவது
வளைவின் தலை மாட்டில் வந்து
தொடும் முனை அது அந்த எல் லையின் காவலன் போல் இறுமாப் புடன் நிற்கிறது அத்த இரட்டை மரம். இரட்டை ԼՔն (Մ) - ծ (3, இரட்டை மரத் துக்கடை, என் றெல்லாம் தன்
 

இனச் சுற்றியுள்ள பொருட்களுக் குப் பெயர் தானம் செய்ததோ பல்லாமல், ஒரு பெரிய (மற்றத் நிற்குக் குளு குளு நிழலை யும் காடையாக வழங்கிக்கொண்டு, குடையாக விரிந்து நிற்கும் அந்த மரத்தின் தோற்றமே ஒரு அதிச யம் ஆமாம் ! நம்மவர்களிடம் அரசையும் வேம்பையும் அருக ருகே நட்டுவளர்க்கிற ஒரு சம்பிர தாயம் உண்டல்லவா? அதுமாதிரி யாரோ ஒரு பண்டைய கிராம Gurrá) அரசங்கன்று ஒன்றையும், ஆலங்கன்று ஒன்றையும் ஒன்ருக நட்டுவிட, அவை ஒரே கதியில் வளர்ந்து அர்த்த நாரீசுவர வடி வில் இணைந்து, வேற்றுமையின்றிப் பிணைந்து நலாபுறமும் கிளைகளைப் டர்ப்பிக்கொண்டு விசுவரூபமாக நிற்கிற கோலம் பார்க்க வியப் பாக இருக்கும். ஆல மர த் தின் விழுதுகள் அரச ம் ரத் தை யும் தாங்கிக்கொண்டிருக்கிற அருமை யான காட்சி மனதைச் சிலிர்க்க வைக்கும்.
அந்த இரட்டை ம ர த்தின் விசாலமான நிழல்படுக்கையின் 3. புற ம் ஒரு சிறிய புத் த காயில் - என்றே அழகு ட ன் நிகழ்ந்து இப்போ அண் த் தும் சிதைந்துவிட்டதற்கு அடையாள மா க ச் சிற்பவேலைப்பாடமைந்த கற்தூண்கள் சிலவும், துண்டு துண்டு களாய் நிற்கும் சுவர்ப்பகுதிகள் சிலவும் காட்சியளிக்கின்றன. இன் ஞெரு புறத்தில்தான் லொக்கு பண்டா முதலாளியின் கடையும் இருக்கிறது. லொக்குபண்டா முத லா ன் அருமை ம க ள் தா ன் சுமித்திரா. பண்டையாவுடைய கடையின் சின்ன முதலாளியாக விளங்கி, சித்திரப் பதுமையாய் நடந்து, சின்ன முயல்குட்டிபோல் ஒடித்திரிந்த அவள்தான் இன்று
இடிந்துபோன கோவிலைப் போல் சிதைந்துபோன மனதுடன், சிந்திக் கவும் திராணியின்றி அந்த இரட் டைமரத்தின் அரசமரப் பகுதியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
தோட்டத்து மக்கள் அந்த *நாட்டுத் தொங்கலுக்கு’ வேலைக்கு வரும்போதெல்லாம் பகல் நேரத் தில் வீட்டுக்குச்செல்லச் சங்கடப் படு வா iர் கள். பெண் க ள் கூ ட *ரெட்டை முடக்கு' ரோட்டிலே க ண க் க ப் பிள் ளை கொழுந்தை நிறுக்க, லொறிவந்து ஸ்டோருக்கு ஏற்றிச் சென்றதும், உஸ் அப் பாடா' என்று ரெட்டைமரநிழலில் வந்து ஓய்ந்து உட்கார்ந்து விடு வார்கள் வீட்டிலுள்ள சின்னஞ் சிறுசுகள் கொண்டுவரும் சுட்ட ரொட்டித் துண் டை யு ம், சூடு ஆறிய சா யா த் தண்ணியை யு ம் தொண் டை க் குள் இற க் கி க் கொண்ட சில ர் திருப்தியுடன் வெ ற் றி லை போ ட, க ங் கா னி மாருடன் மற்றும் சிலர் "ரெட்டை மரத்துக் கடை"யை முற்றுக்கை இடுவார்கள். அன்று கடையில் வியாபாரம் எதேஷ்டம்!
கடை என்ருல் கண்டி, கொழும் பில் உள்ள மாதிரிக் கண்ணைப் பறித் துக் கருத்தைப் பிடுங்குகிற 'நாக ரீகக் கடை"யல்ல. டவுனிலிருந்து பல மைல் தூரம் ஒதுங்கிக்கிடக் கும் தோட்டத்து மக்களின் அன் ருட-அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பலசரக்குக் கடை, பாக்கு வெற்றிலைக் கடை,
தேத்தண்ணிக் கடை, காய்கறிக் கடை முதலான பல "கடை"களை யும் உள்ளடக்கிய ஒரு சின்னக்
கடை! கடைக்குப்பின்னலேயே பண் டையாவின் வீடும் ஒட்டிக்கொண் டிருக்கிறது. அந்த வீட்டின் குசி னியை ஒட்டிய கொட்டிவில் ஒரு
6 66ağ51 )

Page 11
தண்ணிக்கடை" யும் உள்ளடங்கி இருக்கிறது என்பது பகிரங்க இர கசியம்.1 மொத்தத்தில் கடைக் குத் தனியாகப் பெயர்ப்பலகை இல்லை. ஆகவே மொத்த வியா பாரத்திலும் மோசமில்லை.
இத்தகைய சிறப்புக்களை எல் லாம் ஒருங்கே பெற்ற கடை முத லாளியின் தலைமகள்தான் சுமித் திராவதி. அவளைத்தவிர மற்றும் இரு ஆண்பிள்ளைகள் உண்டு. இரட் டைப் பிள்ளைகள், முக்கால் மைலு க்கப்பால் இருக்கும் பாடசாலையில் நலாம் வகுப்பில் படிக்கிருர்கள். இடையில் ஒரு பெண் இருந்தாள், "தயாவதி” என்று. அவள் பத்து வயதில் செத்துப்போனள். ஆகவே
சுமித்திரா பண்டா முதலாளியின் மூத்த மகள் மட்டுமல்லாது, ஒரே செல்ல மகளாகவுமிருந்தாள். இந்த இரட்டிப்புக் கெளரவம் அவளைத் துள்ளித்திரியும் சுதந்திர மான்குட் டியாக வளர்த்து விட்டிருந்தது. சுடடித்தனமும், கெட்டித்தனமும் கூடவே வளர்ந்திருந்தன. அவளும் எட்டாம் வகுப்புவரை படித்தவள் தான். பத்தாம் வகுப்பைப் புறம் கண்டோ, பல்கலைக்கழகத் திறம் க ண் டோ அவள் உத்தியோகம் செய்யவேண்டிய அவசியமில்லாது தோன்றியதால் முதலாளி அவளை வீட்டில் நிறுத்திவிட்டார். அதனல் நஷ்டம் எ துவும் எற்படவில்லை. மாருகக் கணிசமான லாபம்கூட ஏற்பட்டது. ஏனெனில், முதலாளி
சாமான் கொண்டுவர
'டவுனுக்குப் போ கின்றபோதும், அநேக மாக வா ர ம் ஒரு
நாள்-மற்றும் தினசரி மாலைகளில் அவர் தம். வீட்டின் குசினிப் பக் கம் மே ற் பார் வை யிடச் செல்லும்போ தும். (அங்கே வியா பாரம் செய்யும் முத எாளி சுமித் திராவின் அம்மா.) சு மித் ரா தான் முன்புறக் கடை யின் பொறுப்பாளர். அந்நேரம் கடை முத லாளி சாமான் கொ டுப்பவர்-கணக்கெழு துபவர்-காசு வாங்கு பவர் எல்லாமே சுமித் திராதான்.
இப்படியாக அவள் பார்த்த உத்தியோ கம்தானே, அவனை சந்திக்கவும் - இந்தச் சஞ்ச ல மடை யவும் வழிகோலிற்று.
இரண்டு வருடத் திற்குமுன் ஒருநாள்.
 

முற்பகல் நேரம் மூடிக் கவிந்த ல் குமுறிச் சிரித்துக்கொண் il.
அன்று காலை பண் டா மு த ாளி டவுனுக்குப் போயிருந்தார்.
டயில் சுமித்திரா ண்டொருவர் சுவரோர பெஞ் யில் உட்கார்ந்து பீடி புகைத்த டி ஏதோ பேசிக்கெண்டிருந்த ார். சுமித்திராவின் அம்மாவும் உள்வாசற்படியில் நி ன் ற வாறு வ் அவர்களுடன் சம் பா ஷித் து க் கொண்டிருந்தாள். வெளியே இடி மின் ன லு ட ன் சோ" வெனப் பொழியும் மழையில் நனைந்து, * கிளைகளை அசைத்துக்கொண்டிருக் கும் அந்த இரட்டை மரத்தை நோ க் கி ய படி உட் கார் ந் தி ரு ந் தா ள் கமித்திரா.அப்போ
retir .....
'பளி'ரென ஒரு ன்னல் சா ட் டை, மி ய திரும் இடி யாலி, க டை யி ன் தளமும் சுவர்களும் hL- இலேசாக gi 6 fìt ர்தன. அந்த அதிர்வு கட முற்ருக நிற்க வில்லை. ஏழெட்டு ப் பேர் திமுதிமுவென ஓடிவந்தனர் G5 Gð) Lயை நோக்கி. ஆளுக் கொரு இறப்பர் சீட்டு க்ளைத் தலையில் அணி தவண்ணம் யாரை யா கால்மாடு தலை frt-st séð தூக்கிக் கொண்டு வந்தார்கள் அவர்கள். கொண்டு வந்து பெஞ்சின் மேல் கிடத்தினர்கள். ரெட் டை மரத்துத் துண் டிலே முள்ளு குத்திக் கொ ன் டி ருந்தார் களாம். காற்றில் ஒடி ந்த மரக்கிளை ஒன்று
அவன் மீது விழுந்துவிட்டதாம் ! தலையில் இரத்தம் கசியும் ஒரு கட்டு, தோளில் ஒரு உருமால். பல அடிகள் பட்டிருக்கவேண்டும். அவன் நினைவற்றுக் கிடந்தான். பார்க்கவே நெஞ்சு வலித் த து சுமித்திராவுக்கு. வாழும் பருவம், வஞ்சகமின்றி வளர்ந்த உடல். . அவனுடைய முகம் அவளை அடிக் கடி பார்க்கத் தூண்டியது.
தோட்டத்து லொறி வந்து கடைவாசலில் நின்றது, அவனை அள்ளிப் போட்டுக்கொண்டு ஒரு சிலர் உடனே சென்றனர். மீதிப் பேர் த மக்குள் அதிர்ந்து, அந்த
அவலநிகழ்ச்சியைப் பற்றி விமரி சனங்கள்
செய்துவிட்டு ஆளு க்
9

Page 12
கொரு தேத்தண்ணியும் குடித்து விட்டு மலைக்குச் சென்ற ன ர். இரண்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் “அவன்" இன்னுெருவரு டன் கடைக்குச் சாமான் வாங்க வந்தான். அவனைக் காண்கையில் அந்த இடியும், மின்னலும் அவள் ஞாபகத்துக்கு வந்த ன. இயல் பான ஒரு ஆதரவுடன் அவனை நோக்கிச் சுகம் கேட்டாள் சுமித் திரா,
“இப்ப எப்படி? நல்ல சொகமா நீங்க?"
அவள் தமிழ் பேசும் அழகை ரசித்தபடி அவன் புன்னகை செய் தான். தலையசைத்தான். அறிமுக மாயிற்று-தொடர்ந்து சில கேள்வி பதில்கள். கதை ஆரம்பமாயிற்று. அதற்குப்பின் அப்படிவான சந்தர்ப் பங்கள் எத் த னை எத்தனையோ ஏற்பட்டன. அவன் சு பா வ மே குறும்புத்தனம். அவள் அதற்கு நிக ரான துடுக்குக்காரி அவனுடைய
குறும்புத்தனம் அவளுக்கு மிகவும்
பி டி த் துப் போயிற்று, அவ ன் தேயிலைத் தோட்டத்தில் கூ வி வேலை செய்பவனுய் இருந்தாலும் கம்பீரமான தோற்றமும், கண்ணி யமான குணமும் கொண்டிருந்
தான். அதையும்விட அவனிடம்
அன்புமயமான ஒரு இதயம் இருந் தது. அதே அச்சில் தன்னிடமி ருந்த இதயத்தை அவ னி ட ம் கொத்துப் ‘பண்டமாற்றுச் செய்து கொள்ள விரும்பினள் அந்த அழகி. அவனும் அதற்கு உடன்பட்டு - அந்த "மாற்றமும்’ ஆகிவிட்டது. சுமித்திரா தன் தந்தையின் வியா பார தந்திரங்களைக் கடைப்பிடிக்க வில்லை. மாருகத் தனக்குத் தேவை யான புதிய தந்திரங்கள் சிலவற் றைக் கற்றுக்கொண்டாள். அவன் வரும் நேரங்களில் பிறர் அறியா மல் கண்ணுலேயே கதை சொல்லி விடுவது. ரஞ்சினியுடன் ஆற்றுக் குக் குளிக்கப் கோவதாகக் கூறி விட்டுப்போய், அங்கே புதிதாகக் * கொந்தரப்பு வெட்டும் அவனைச்
20
s
சந்திப்பது.இப்படியான சில தந் திரங்கள்தான்.
அவள் அவ னி டம் கெஞ்சி யாசித்தாள்.
"நீங்க என்னைய உட்டுட்டுப் போவ ஏலுமா? நாங் என்ன செய் யறது? வாணுங்க! இங்க பாருங்க..? நாங், நம்ப தாத்தா, அம்மா தாருக்கும் தெரியாம ஒங்ககூட வா ற ன். நாம் ப ரெண்டுபேருங் 'டவுங் பக்கம் போயிட்டு ஒரு சின்ன கடை வைச்சுக்கிட்டு நல்லா இருக்கலாங் காசு வேணுமென்ட நாங் கொண்டு வாறேன். நீங்க கவலைப்படாம சரி சொல்லுங்க.” அவளது கெஞ்சல் மொழிகள் காற் ருேடு போயின. அவள் அழுத கண்ணிர் ஆற்றேடு கலந்தது.
அவன் மரம்போல் நின்ருன், ஏன்? அவனுக்கு இதயமே இல் லையா? இருந்ததைத்தான் சட்ட மென்ற உ ரு வி ல் வந்த யமன் கொன்றுவிட்டானே! அவன் என்ன செய்வான்? பாவம், ஏழை பிறப் புரிமைகூட அற்ற அகதி!
அவள் அதையெல்லாம் புரிந்து கொள்ளவில்லை. அவளுக்குப் புரிய வைக்க அவனுக்கும் தெரியவில்லை. முதலில் அவனுக்கு ஒன்றும் புரிய
வில்லையே . ?
அவள் மனம் உடைந்து அவ னைச் சபித்தாள்.
*" என்னை ஏ மா த் தி ட் ட து தானே . .? நீங்க சந்தோசமா இருக்கமுடியுமா எங்கினேயும்?’
அவனுடைய சந்தோஷ வாழ் வைத்தான் பெற்றுப் பிறந்த சாபக் கேடு என்ருே சுட்டுச் சாம்பலாக்கி விட்டதே. இவள் சாபம் இனி என்ன செய்யப்போகிறது? என்ரு லும் அவன் உயிரெல்லாம் ஒடுங்க அவளிடம் காரணம் காட்டிஞன்.
** சுமி எனக்கு அப்பா இல் லைங்கிறது உனக் குத் தெரியும்

உன்னைமாதிரி
தங்கச்சிகள்
ரெண்டு
எனக்கு
எனக்குமட்டும் சந்தோச வேணும்னு ஓடிப்போறது  ைம் பெரியகாரியமில்லை. . சுமி! இவங்க எல்லோ 'இதே தோட்டத்திலேயாவது, 'லது இந்த சிலோன்லே எந்த லயிலேயாவது தொடர் ந் து இருக்கிறதாயிருந்தா கட்டாயம் பேவே வேணும்னுலும் நான் 'ன்னை எங்காவது - நீ சொல்றபடி 'ட்டிட்டுப்போயி, நாம ரெண்டு இரும் எப்படியாவது வாழலாம். * காசுகொண்டுவந்து கொடுத்தா Straat நான் காப்பாத்தணும்? ல்லை சுமி! இதோபார்! ந் த ரண்டு கைய, லேயும் பாடுபட்டு *ன்னைக் காப்பாத்துவேனே! ஆன அழி. நீ யோசிச்சுப்பாரு தகப் ல்ேவீக நாலஞ்சு பிள்ளைகளும் யசு போ ன ஒரு தா யு ம் - அகதிகளாக அந்நிய ஊருக்குக் கப்பலேறவேண்டிய ஒரு சந்தர்ப்பத் இலே நானும் கைவிட்டுட்டா ? சுமி சட்டம் ஒருவேளை என்னை மன்னிக்கலாம். ஆனல் தெய்வம் மன்னிக்குமா? அதுதான் மன்னிச் சாலும் என் மனம்..? அது என்னை ாப்ய்டி மன்னிக்கும்?"
** நீங்க பே ச ற து எனக்கு வெளங்கவே இல் லே நீங்க என்ன தாங் செய்யப்போ நீங்க..? அவள் தமிஞள் è ', *நீதான் எ ன் னை ம ன் னி க் எனும் சுமி?’
"அப்படி 6T6arrr'
'சுமி. சுமி. நீ இந்த ஊரில் சால்லா உரிமையும் உள்ளவர் எப் படி வேணுமானலும் வாழலாம். அதஞல.நீ என்னை மறந்துடு சுமி!”
"ஐயோ! ஓங்களுக்கு இந்த மாதிரிப் பேசவும் முடியுதா?’ அவள் அழுதாள். அவனும் சேர்ந்து அழு தான். அவளது கண் ணி  ைரத் துடைக்காமலே, தன் விழி நீர் காயுமுன்னமே, பேச முடி யா த ஊமையாகி எழுந்து நடந்தான். அவளோ "நில் லென்று கூவ ஆத் திரம் எழுந்தும் நிலைமயங்கி, மனம் புழுங்கி நின்ருள்.
நீரில் எழுதிய எழுத்துக் கண் ணுக்குத் தெரியுமா? கண்ணிரில் எழுதப்பட்ட கதைகளும் அப்படித் தான். அநேகமாக அவை பிறர் அறியாமலேயே அழிந்து போ ய் விடும்-அழிக்கப்பட்டுவிடும்.
ஆனல் மனதில் எழுதிவைத்த கதைகள்? அவற்றை அவ்வளவு சுலபத்தில் அழித்துவிட மு டி கி றதா என்ன? அப்படி அழித்துவிட முடிந்தால் ஒரு பெரிய சாதனை தான். அதே சமயம் அவை அழிவு படாமல் இருப்பதோ? அம்மம்மா! சொல்லவொண்ணு வேதனைதான்! அந்த இரட்டை மரததின் அரசிலைகளும், ஆலிலைகளும் எவ் வித வேறுபாடுமின்றிக் காற்றின் இதமான அலைப்பில் கலகலத்துச் சிரிக்கின்றன.
படைப்பில் உயர்ந்த மனித இனத்தால் சாதிக்கமுடியாத ஒரு ப்பை - ஒருமையை எத்த னையோ ஆண்டுகளுக்குமுன் - பூமி யிலிருந்து எழும்போதே சாதித்து விட்ட தன் செயற்கரும் செயலை எண்ணிப் பூரிக்கிறது போலும்! கேவலம் மரங்கள் கூட இனத் துடன் இனம், இணைந்து உறவு கொண்டாடி ம கி ழு கி ன் ற ன. பாழாய்ப் போன மனிதனுல் மட் டும் அதுமுடியுதில்லையே! அர்த்த மற்ற சட்டங்களையும், சம்பிரதா யங்களையும் உண்டாக்கிக்கொண்டு அந்த வலைக்குள் தன்னையும் சிக்க வைத்துக்கொண்டு துன்புறுவதில் மனிதனுக்கு ஏன் இத்தனை மோகம்? சுமித்திரா கடையுள் நின்ற படி அந்த "ரெட்டை மரத்தைப்
21

Page 13
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேல!
போயா விடுமுறை நாள். தந்தையார் வீட்டில் நின்ற படியால் பையன்கள் இருவ ருக்கும் ஒன்றன் பின் ஒன்ருக ஏதாவது தொட் டாட் டு வேலைகளை இட்டுக்கொண்டே இருந்தார். அலுத்துப்போன மூத்த புதல்வன் தன் தம்பி யிடம் கூறினன்:
'நம் அப்பா நாட்டில் பிரதமராக வந்தால் வேலை யில்லாத்திண்டாட்டமே இருக் காதுடா!”
“ “ TGör? ’ ”
**இந்தச் சின்ன வீட்டுக் குள்ளேயே நமக்குத் தருவ தற்கு இத்தனை வேலை வைத் திருக்கிருரே. நாடு முழுவதும் தன் கையில் இரு ந் தா ல் கேட்கவாவேண்டும்!"
y நான? நான? நான?
ரேடியோவில் பி ர பல
வித்வான் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். நெடுநேர
மாக ராக ஆலாபனை நடந்து
கொண்டிருந்து. பொறுமை யிழந்த நேயர் விருப்ப அபி மாணி ஒருவர் கூறினர்:
**இந்தப் பாகவதருக்குப் பாடுவது தான்தானே, வேறு யாரோ என்ற சந் தே கம் போலிருக்கிறது. அரை மணி
நேர மா க, "நாணு, நானு, நான’ என்று கேட்டுக்கொண் டிருக்கிருரே!’
- ஜனனி
22
பார்க்கிருள். எண்ணங்கள் புய லாகி, கடலாகி என்னென்னவோ செய்கின்றன. அவளுக்கு ஏதோ புரிகிறது. அதேசமயம் ஒன்றுமே புரியவுமில்லை.
ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.
இனி "அவன் வரமாட்டான்! அவனை இனிக் காணவும் முடியாது.
அவ னு ட ன் ஓடிப்போகவும் (pl. tlJf35).
அந்திப் பொழுது விடைகேட் டுக்கொண்டு - அவசர அ வ ச ர மாய்ப் புற ப் பட் டு க் கொ ண் டி ருந்தது. மங்கிய வெயிலின் ஒளி தூசிபடிந்தமாதிரி, நிழலு டன் இணைந்து நழுவிக்கொண்டிருந்தது.
"மறந்துவிடு' என்று மன்ருடிய அவன் குரலோசையும் அடங்கி விட்டது. அதில் தொனித்த ஏக்கம் அவளுள் நித்தியமாய் குடிபுகுந்து
கொண்டது,
க டை யின் பூஜா மாடத்தில் உள்ள சுவாமி படங்களுக்கு முன் ஞல் உள்ள விளக்கை ஏற்றிவைக் கிருன் அவளுடைய தம்பிகளில் ஒருவன், மற்றவன் சாம்பிராணி தூபம் போ டு கி ரு ன். லொக்கு பண்டா இரண்டு ஊதுபத்திகளைக் கொளுத்திச் சொருகுகிருர்,
யாரோ இருவர் குசினிப்பக்க மிருந்து குளறும் மொழிகளுடன் தட்டுத்தடுமாறிச் செல்கின்றனர்.
சமீபத்திலுள்ள ‘பண்சல"விலி ருந்து "பண" ஒலிக்கிறது. சுமித் திரா சாம்பிராணிப் புகையூடே, விளக்கொளியில் மினுமினுக்கும் புத்தபகவானின் முகத்தைப் பார்க் கிருள். அதில் கரு னை யி ன் உயி ரூற்று ஜவலிக்கிறது.
அ வ ளு டை ய கண்களிலோ கண்ணீரின் பெருவெள்ளம் மடை திறக்கிறது.

விருத்தந்த சித்திரம்-1.
நகைச்சுவை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, விருத்தாந்த சித்திரம் என்ற மகுடத்தின் கீழ் வெளியாகும் இந்தச் சிறப்பு அம்சம், தனிப்பட்ட எவரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட
வில்லை.
கட்டுரை ஆசிரியர்.1
வி. சி. மெம்பர் காசிநாதர்!
அம்மாச்சி ஆறுமுகம்.
ஆரெண்டு தெரியுமா..? என்ன, விளங்கல்லப் போல . ஒம் ஓம் எங்கட படுவான் கரையில
பேரான கிராமச் சங்கம்; அதில ஒம்
பதாம் வட்டாரத்துக்கு நான்தான் நம்பர்!
அதென்னத்தப் பேசி ஏதெண்டு சொல்லுவன்? ஒரு எலக்சன் நட த்தி முடிக்கிறத்துக்குள்ள , மணி சண்ட சீவன் போயிரப் பாக்குது: பின்னென்ன பின்ன . எத்தின நாளா எடுத்த எடுப்பிது. சோரு, தண்ணியா, வீடா, வாசலா, நித் திரையா நிமையா? நாயோட்ட்ம்! தொங்குகால் பாச்சல்! கடப்பேறி ஏறி, கால் பாதி தேஞ்சு போச்சி! ஹிம்.
என்னவோ ஆண்டவன் கண்ண முழிச்சான். இல்லாட்டிப் பின்ன அந்த ஆண்டவனும் பட்டினிதான் கிடக்க வேணும்! எலியும் வாலும் ஏறி நிறஞ்சு அரசாச்சி நடத்தின கோயில் கதவு துறபடுமா இல்லக் கேக்கிறன் . வாற வையா விப் பூரணைக்கு கதவு துறந்து பூச நடக்கப் போகுது. எலக்சனுகள்ள நான் தோத்துகள் இருக்கவேணும்.
கடவுளும் இல்ல கச்சடாவும் இல்ல.
எனக்குப் பெருங்கடலும் கைதர மாட்டாது! ஊர்க்கோயில் பூச
வெள
புனற்காரம் இல்லா மக் கிடக்கே எண்டு போட்டுத்தான்.அதுக்கு மட்டும் சுளயா ஐந்நூறு!
நான் எப்படி வெல்லாமப் போ ற ? என்ட சாதி என்ன, சன மென்ன . குலமென்ன கோத்திர மென்ன . ஊரெல்லாம் எண்ட அப்ப மச்சான் சாதியான் ஒய்! பருப்புப் போல முந் நூறு வோட்ட வச்சுப்போட்டு, அந்தக் கோப்பி குடியானுக்கு வி. சி. கதிரயக்குடுத் தா , நானும் எண்ட பணியாரந் தின்னிக் குடியானும் உசிரவச்சிருக் கிறதப் பாக்க உப்புச் சிரட்டைக் குள்ளதான் விழுந்து சாகவேணும்!
இடையால ராக்குடிச்ச குடியா ருக்கும், அந்த வி. ஸி. கதிரயில இருந்து பாத்திரவேணுமெண்டு ஒரு சோட்ட! வாரு கல் கட்டுக்குக் குஞ் சம் கட்டுனுப்பலதான்! அவியிர குலத்தில ஆர்ரா. தோழே, ஊர் உத்தியோகம் பாத்தாக்கள்? கட் டுக் காசும் சுவTகா! W
எண்ட இன சனம் சத்தா சமுத் திரம்! இது தெரியாம வாருனுகள் போட்டிபோட! விடுவஞ. இல்ல எண்ட சாதியான்தான் விடுவானே இல் லக் கேக்கிறன்.
பத்துப் பத்து ரூவா பசமுறி யாத பச்சப் பச்சத் தாளாக் கொ
23

Page 14
ண்டு நீட்டிப் பல்லக் காட்டிப் பாத் தாங்களே! என்ன பலனக் கண் டாங்க? எண்டபணியாரந்தின்னிக் குடியானிட்டயும் இந்தப் பாச்சாவு கள் பலிக் குமா டா தோழே! கொல்லு களுத்தறு எண்டு சொல் லிப் போட்டானுகள்!
நான் ஒருதுண்டுக்குப் பதினஞ்சு போட்டுத்தான் குடுத்த எண்ட அப்பன் மச்சான் சாதி எண்ட படி யாத்தானே அதையும் கை நீட்டி வாங்கினவனுகள். வாங்கின வாங் கினதுதான்! அங்கால இஞ்சால அசையாமல் கடைசி வரையும் ஒரே கையா நிண்டு வெத்தியக் காட்டி யும் போட்டானுகள்!
இந்த ஊருக்கு வீ. ஸி. நம்ப ராப் போறவன், ஒரு சாதி மகளு இருக்க வேணு மெண்டு, இந்தக் கஞ்சாங் கொத்திப் பஞ்சான் பயலு களுக்கு இன்னும் விளங்கல்ல. போ ட்டி போட வாருனுகளாம் போட் டி! அடேய். நீங்கெல்லாம் என் னப்பத்தி என்னதான் நினச்சுக் கொண்டு திரியுறயள்?
கட்டெண்டால்க் கட்டி, அடி யெண்டால் அடிச்சி, வெட்டெண் டால் வெட்டி விளையாட்டுக் காட் டின சாதியாண்டா நான்? னேடதானேடா இந்த ஊர்ப் பெ ரிய கையெல்லாம்!
Grr
சற்குணம் தருமலிங்கம் மாய்ற் றர், அந்தாள் ஒரு பெரிய தலம வாத்தி. இருபத்தஞ்சு வருசமாக இந்த ஊர்ப் பள்ளியிலே சறுவிஸ்! அந்தாள் படிப்பிச்ச பொடியனுகள் தானே, கல்லோயா பாமில இண் டைக்கு, மாசம் மாசம் சுளகள யாச் சம்பளம் எடுக்கானு கள். காடு வெட்டுறது தொடக்கம், கட்ட நாட்டிக் கம்பியடிக்கிற வேல ஈருக எம்லாம் அவனுகள்தானே. தறும லிங்கம் வாத்தியார்ர சகுனி மூளய உங்களுக்கென்னடா தெரியும்! வாத்தியார் எண்ட வலது கை!
24
இனி, விதானையார் வீரசிங்கம், தறுமலிங்கம் வாத்தியார்ர கைப் பிரம்பு! எனக்கு இடது கை!
அது மாத்திரமா, “உடையார்ர உடுப்பன் கணபதி! அவன மாட் டுக்கள்ளன் எண்டு நீங்க சொன்னுப் பல, அவனுக்கு என்ன குறஞ்சு போச்சு? அவன் குப்பையில கிடக் கிற குண்டுமணி! ஒரு முட்டிக் கள்ளு சொன்ன வேல செய்யும் அடிடா எண்டால் இடிப்பான்! கட்டெண் டால் வெட்டுவான்! அவன் பெரிய சண்டியன்.
ஈர்த்தலையன் இளையான் எண்டு பகிடி பண்ணுறயள். பண்ணுங்க வன்! அவண்ட தோலுக்க பூந்திரு மா அது? இல்லக் கேக்கிறன். அவன் ?" கோயில் துரத்தினகா றன்! நீங்க ஊர் கூடிக் டுத்த வேலையா இது? အခlé# வேல! ஆரக் கேக்கிற?
இளையாண்ட பெரியம் மயிர மகன், எங்கட வள்ளிக் கிழவியிர வன்னமணி வட்டவிதான!
இவ்வளவு பேரும் ஒரு கையில திரண்டு றிக்கானுகள் எண்னுேட! இதிர காரிய பாகம் கணக்கு வழக் குகள் தெரியாம, நீங்களும் வீ.ஸி. நம்டர் போட்டிக்கு வா ற ய ள்! ஆரெண்டு நினச்சயள் இந்தக் காசி நாதன?
சொல்லி அடிச்சன்! ஒரே ஒரு துண்டால! ஒரு துண்டு க்கு ஸ் ள தானே தோழே வெத்தியும் தோல் வியும். வெண்டு போட்டன்! இப்ப என்ன சொல்றயள்? இல்லக் கேக் கிறன் 兴”
அடுத்த இதழில். "போடி மகள்
Gust 6,60Tiblos'
(விருத்தாந்த சித்திரம்-2)

hlawa
மரணமும் வாழ்வும்
A.
குமார. இராமநாதன்.
பண்டாரவளே
一崇一
தழுவும் மரணமென் தலையை வருடி மிருது வாக முணுமுணுத்த திதனை .. 'ஏழைக் குழந்தாய்! யானே உன்னை வேதனை நீங்க விடுவித் துனது இழந்த மகிழ்வைப் புதுப்பித் தளித்து; மீண்டும் வரும்பெரு மகிழ்வை அடைத்து; கீத மிசைக்கும் பறவை யாக, தாமரை நாடும் தேனி யாக,
பெய்யும் மழையின் வெள்ளித் துளியாய்:
மயங்க வைக்கும் “சிரிஸ்ஸா வெளியின்",
பரிமள சுகந்த உருவாய்; இந்தக்
கான கத்துக் காற்றின் ஒலியாய்; தண்ணிர் அலையின் பண்ணுய்; மீண்டும் அவற்றை உனக்கே உவப்பாய்த் தரவோ? என்றது! யாஞே நன்றி யுரைத்தேன்! தாங்கள் எனக் காய் ஈங்கு கூறும் இதயங் குளிரும் கருணை என்றன் செவியை வெட்கம் கொளவைக் கிறதே! ஓவென் மரணமே! யானிவ் வளவாய் துணிவே யற்ற பிணம்போன் றவளோ? உள்ளம் நிறைந்த துன்பப் போதுமென் ஆவி நடுங்கி மாறுதல் கூறுமோ? - அன்றியும் . . எனது உடம்பே பயந்தான் கொள்ளுமோ? இன்பம் நிறைந்த என்றன் நாட்டின் தேவைக் காயென் "சேவை' பினதோ நாதங் கலந்தவென் கீதத் தினதோ, ஒப்பந் தத்தை முற்ற முடிக்கும் முன்னர் தானிங் கென்றன் தவறி விடுமோ? தவறி விடுமோ?
(கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் THE DSATH
AND LIFE என்ற கவிதையின் தமிழாக்கம்)
25

Page 15
O مہیہ“ (C
fiefs!Nyro.
ஆனந்த விகடனும், குமுதமும் இல்லா விட் டால் தமிழிலக்கியம் இற்றுவிடும் என்ற எண்ணம் இன் னும் ஈழத்துப் பாமர இலக்கிய இரசிகர்களுக்கும்,பொழுதுபோக்கு இலக்கியக்காரருக்கும் உண்டு . இந்த எண்ணம் தப்பானது. இலக் கியம் அவைகளல்ல என்று நெஞ்சு நிமிர்த்திவைத்த "மலருக்கு எனது வாழ்த்துக்கள். -புதுவை இரத்தினதுரை, புத்தூர்.
X X X
New Streams must be welcome with its dirts and rush; If it awakes and arouses the appreciation, it must be allowed into the sea of literature; If it demands the expulsisn of the traditions in literature, let it take its own turn and ending; If there is anything in literature that awaits outcasting, it shall be outcast by the influence of the inflowing materials.
– Sehu Issadeen, Kattankudy.
X X X இதுவரை இந்தியக் குப்பைப் பத்திரிகைகளில் வெளியாகும் கற் பனைக்கெட்டாத - ஆபாசம் பொ ருந்திய காதற் கதைகளைப் படித்த எமக்கு, மனித சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சி களை மையமாக வைத்துப் படைக் கப்படும் யதார்த்தக் கதைகளைப் படிக்கும்பொழுது 'மலர்' எமது இலக்கிய தாகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே எண்ணு கிறேன். --கி. பவானந்தன், திருகோணமல்ல.
X. X X
26
'மலர்' ஏட்டுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். 'மலரி'ல் காணக்கூடியதாயிருக்கும், நிதான மும், கட்டுக்கோப்பும் எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல அடையாளங்க ளாக உள்ளன. வாய்ப்புள்ள போ தெல்லாம் நண்பர்களிடையேயும், எமது கலாசாலைத் தமிழ் மன்றத் திலும் ஈழத்து இலக்கியங்கள், ஏடு கள் பற்றியும் 'மலர்' பற்றியும் பேசிவருகிழுேம்.
-மாவை. தி. நித்தியானந்தன்,
கட்டுப்பத்தை,
X X X
* மலரின் மெய்யான இலக்கி யப்பணியில் - மழையில் நனைந்த மலர்க்கூட்டம் புதுமலர்ச்சி காணு மே அத்தகையதொரு மலர்ச்சியில் என்மனமும் தோ ய் ந் தெ ழு ந் து சிலிர்த்துக்கொள்ளுகிறது. சிலிர்ப் பின் ரேகை செயலை நோக்கிற்று. நோக்கத்தின் முடிவாக பத்து இதழ் களையாவது பிறரையும் நுகரச் செய்வதன்மூலம் நாமும் "மலரின் இலக்கியப் பணியில் ஒன்றலாமே என்ற கனிவின் தவிப்பே இக்கடிதம். எனவே "மலர்" இதழ்கள் பத்து எனது வீட்டு முகவரிக்கு அனுப் புங்கள்.
-எஸ். எல். எம். ஹனிபா,
வாழைச்சேனை.
X X X
* மலரின் ஒவ்வொரு அம்சத் தையும் படித்துச் சுவைத்தவள் நான். நல்லதோர் எ தி ர் கால ம் "மலர்' சஞ்சிகைக்கு இருக்கிறதென் பதை அதன் ஒவ்வொரு ஏட்டிலும் இழையோடும் செழிப்பும், இலட் சிய உணர்வும் பிரதிபலிக்கின்றன. தென்னிந்தியச் சஞ்சிகைகளுக்குச் சவால்விடும் முறை யி ல் 'மலர்"
மலர்ந்து நிற்கிறது.
-சித்தி நபிஸா, சாய்ந்தமருது.
X Χ X

w Nes
* அதுவும் ஒரு
பாக்கியமே
Mew_www.uwp.
அம்பாறை நோக்கிச் செல்வ தற்குத் தயாராகிக்கொண்டிருந்த போ. ச. ‘பஸ்" ஒன்றினுள். நானும் என து தாயாரும் ஏறிக் கொண்டு ஒரு ஆசனத்தில் போய் அமர்ந்தோம்.
சிறிது நேரத்தில் . மெல்லிய ஓர் இசையும் அதைத் தொடர்ந்து “பொருளே இல்லார்க்கு” என்ற சோகமான, 'சி E மா ப்" பாட் டொன்றும் ‘பஸ்ஸி"னுள்ளே கேட் டது. அடுத்த ஊர்களுக்குச் செல் வதற்கு ‘பஸ்? ஏறும் ம க் களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான், அந்த ஓ  ைச கேட்டதும் பார்வையைப் "பஸ் ஸினுள்ளே செலுத்தினேன்.
அங்கே! இரண்டு கண்களும் குருடாகிய ஒரு பிச்சைக்காரன், அப்பாட்டை முணுமுணுத்தபடி, தட்டுத்தடுமாறி "பஸ்'ஸின் ஆச “னங்களைப் பிடித்துக்கொண்டு பிர யாணிகளின் அருகில் சென்று ஒரு தகரப் பேணியை ஒவ்வொருவரிட மும் நீட்டினன். தங்கள்முன் அவ னது பேணி நீட்டப்பட்டதும் ஒவ் வொருவரும் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு, த ங் க ள து வெறுப்பைக்காட்டிக்கொண்டிருந்த னர். அவர்களது வெறு ப் பை க் காணும் துர்ப்பாக்கியத்தை, நல்ல வேளையாக, கடவுள் அவனுக்குக் கொடுக்கவில்லை. ஆ ஞ ல் நான் அதைக் கண்டேன்.
ணிருந்தும்
உடனே, எனது ‘மணிபர்சைப் பார்த்தேன்; ‘பஸ் பி ர யா ன ச் செலவைவிட இருபத்தைந்து சதம் மேலதிகமாக இருந்தது. எழுந்து சென்று அந்தத் தகரப் பேணியி னுள் அதைப் போட்டேன். தலை நிமிர்ந்த பிச்சைக்காரனின் கண்க ளுக்கு, என்னைப்பார்த்து நன் றி கூறும் சக்தியைக் கடவுள் அளிக்க வில்லையே. எனவே அவன் ‘பஸ்ஸை விட்டு இறங்கினுன். ஆணுல், கண் "குருடர்களான அப் பிரயாணிகள் என்னை ஆச்சரியத் துடன் பார்த்தனர்.
--கோரை ஈஸ்வா? (* ஈழத்துநூல் அன்பளிப்புப் பெறும் துணுக்கு - ஆசிரியர்
X X X பெருந்தன்மை
தனிப்பட்ட ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில், அச்சுக் கோர்க் கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆரம்ப வேளையில் ஒருநாள்.
சஞ்சிகையின் எட்டுப் பக்கங் கள் பூர்த்தியாகிவிட்டன. “புரூவ்” பார்த்து முடிந்தபின், திரு த் தம் செய்வதற்காக, அச்சுக் கோர்த்த spGD Ludi 55 (Page setting)60s GLDg. வாக நகர்த்துகையில் அது தவறி நிலத்தில் வீழ்ந்துவிட்டது.
வெண்ணை திரளுஞ் சமயத்தில் தாழி உடைந்தால் எப்படியிருக் கும்?
ஆசிரியர் வந்து பார்த்தார்; 'தவறுதலாக நடந்ததற்கு என்ன செய்வது?" என்று சொல்லிவிட்டு
27

Page 16
நகர்ந்தார். மனங் கொதிக்கவேண் டிய இடத்திலும், மனம் கனிந்து வெளிவந்த அந்த வார்த்தை.
தவறு செய்தவன் மனமுடைந் து திருந்துவதற்கு, அது ஒரு நல்ல சந்தர்ப்பமல்லவா!
அறிவின் நிறைவிற்குள்ள ஒரு பூரணத்துவம். அது! அன்பின் சக் திக்கு அப்படியொரு வல்லமை!
இந்த அனுபவம், என் வாழ் நாளில் மறக்கமுடியாத ஒரு சம்ப empl ÐGia L.
-கண. மகேஸ்வரன்.
X X X
இப் படியும் ஒரு பஸ் அனுபவம்
'மலர்' இதழில் நண்பர் விவேகானந்தன் எ மு தி ய "பஸ் அனுபவத்'தைப் படித்த வாசகர் களுக்கு என்னுடைய பஸ் அனுப வம் ஒன்றையும் சொல்லிவைக்க விரும்புகிறேன்.
நான் தினமும் குருக்கள்மடத் திலிருந்து மட்டக்களப்புக்குப் பஸ் ஸில் பிரயாணம் செய்வது வழக் கம். ஒருநாள், பஸ்ஸில் மட்டக் களப்புக்கு வந்திறங்கி, அவசர அவ சரமாக அலுவலகத்தை நோக்கி நடந்தேன். எதிர்ப்பக்கமாக வந்த ஒரு பஸ் என்னைக் கடந்துசென்ற போது, "புளிச் சென்று என் நெஞ் சில் ஏதோ விழுந்தது. குனிந்து பார்த்தேன் சட்டையின் முன்பக் கம் அப்படியே வெற்றிலச் சாயத் தினுல் அபிஷேகம் செய்யப்பட்டி ருந்தது. பஸ்ஸில் சென்ற யாரோ ஒரு புண்ணியவாளன் துப்பிய தாம் பூலத் துப்பல்தான் அது என அறிந் ததும், நரகக் கிடங்கில் இறங்கு வதுபோன்ற ஒரு உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது. எல்லோரும் என்னையே பார்த்தார்கள். நகரின் மத்தியில் நான் ஒரு விநோதப் பொருளாக நின் றேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
28
அந்த நேரத்தில் பஸ் நிலையத் திலிருந்து புறப்பட்ட ஒரு பஸ் என்னை நோக்கி வந்தது. எப்படி யோ அவ்விடத்திலிருந்து மறைந் தால் போதும் என்ற மன நீ யில் இருந்த நான் ச ட் டெ ன்று அந்த பஸ்ஸஅக்குள் பாய்ந்து ஏறி னேன். அது எங்கு செல்லும் பஸ் என்பதைக்கூடக் கவனிக்கவில்லை.
நல்ல வேளையாக அது கல்முனை செல்லும் பஸ்ஸாக இருந்தது. பஸ் லில் உள்ளவர்கள் என்னை வேடிக் கை பார்த்தார்கள். எக்ஸ்பிரஸ்
அனுபவம புதுமை --- இம்மாத “மலர்” சஞ்சிகை யில் “ஒரு அனுபவம்” என்ற தலைப்பில் நான்கு துணுக்கு கள் வெளிவந்துள்ளன. இவை போன்ற நெஞ்சைத்தொட்ட அனுபவங்கள் உங்கள் வாழ்க் வகயிலும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படியான அனு பவங்களைச் சுவைபட எழுதி அனுப்பினுல் "மலர்’ மகிழ்ச்சி யோடு அவற்றை வரவேற்றுப் பிரசுரிக்கும். 'மலர்" சஞ்சி கைக்கு அனுப்பப்படும் "ஒரு அனுபவம்" சுவையுள்ளதாக, கருத்துள்ளதாக, பூள்ஸ் காப் தாளில் ஒரு பக்கத்தில் அடங் குவதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் பிரசுர மாகும் அனுபவத் துணுக்குக ளுள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் அனு பவ த் துணுக்கினுக்கு ஈழத்து இலக் கிய நூல் ஒன்று அன்பளிப்புச் செய்யப்படும்.
துணுக்குகளை அனு ப் ப வேண்டிய முகவரி:-
ஆசிரியர் 'மலர்' 21, மத்திய வீதி, மட்டக்களப்பு.

'udು ஆகையால் அரைமணி நேரத் தில் வீட் டு க்கு வந்துவிட்டேன். அன்று அலுவலகத்துக்கு ஒரு நாள் லீவு போட்டதுமல்லாமல், மன மும் குழம்பித் தவித்தேன். இது எனக்கு, மறக்கமுடியாத ஒரு அணு பவம்.
-கணபதி, குருக்கள்மடம்.
X X.
அசலும் நகலும்
இங்கு “ழுேமியோ ஜாலியட்” படம் நடந்துகொண்டிருந்த வேளை. எனது அறையில் வசிக்கும் நண்பர் ருவர் யா ழ் ப் பா ன த் துக்குப் போய் வந்திருந்தார். பல விஷயங் களைக் கதைத்துக்கொண்டிருந்த பின்னர் அவரை “ருேமியோ ஜூலி யட்’ படம் பார்த்துவிட்டீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் உடனே "நான் நினைக் கிறேன் , 'இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த பட விழாவில் இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட ‘* கம்பரெலியா ** வை வெள்ளைக்காரர்கள் பார்த் திருக்கிருர்கள். அது போல ஒரு படத்தை எடுக்கவேண்டும் என எண்ணித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிருர்கள்போலும்’எனக் கூறினர். இதை க் கே ட் ட என் னுடன் இருந்தோர் அ னை வரும் விழுந்து விழுந்து சிரித்தோம். இந்த விதமான ஒரு ஹாஸ்யத்தை இந் நாள்வரை நான் கேட்டதேயில்லை. பாவம், ஷேக்ஸ்பியரின் “ருேமியோ ஜுலியட்’ என்ற அமரகாவியம் தான் அநேகமான காதல் கதை களுக்கு வித்து என்பது அந்த நண்
பருக்குத் தெரிந்திருக்கவில்லை.
-எஸ். தர்மனுயகம்,
மட்டக்களப்பு.
X. X X
புதிய விட்டு மருமகள் --
புதிதாகக் கல்யாண
| மானதும் மருமகள் மாமி
யார் வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு முந்திரிப் பரு ப்பு என்ருல் மிகவும் பிடிக் கும். எனவே மாமியார் பார்க்காமல் இருக்கும் போது போகவர முந்தி ரிப் பருப்பை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலானள். மாமியா ருக்கு மருமகள்மீது சந் தேகம் ஏற்பட்டது.
தன் மீது மாமியார் சந்தே கப்படுகிருளெ னத் தெரிந்த மருமகள் ஒருநாள் வீடு பெருக்கும் போது கீழே கிடந்த ஒரு
முந்திரிப்பருப்பை எடுத்து
தன் மாமியாரிடம் காட்
டி ‘இதென்ன பருப்பு?’’ எனக் கேட்டாள்.
இதைப் பார்த் து .
விட்டு மாமியார் ‘அட பாவமே முந்திரிப்பருப்பு எது என்றுகூடத் தெரி யாத இவளையா நான்
முந் திரிப் பருப்பை எல்
லாம் திருட்டுத்தனமாக எடுத்துத்தின்றவள்என்று சந்தே கித்துவிடக்டேன்' என எண்ணி மருமகள்
நல்லவள் எனத் தீர்மா
னித்தாள்.
-திருமதி. இராமையா
களனியா.
29

Page 17
30.
வேண்டுதல் வேண்டாமை
உள்ளும் புறமும் ஒவ்வோர் இடமும் தெள்ளிய உணர்வாய்த் தெரியும் இறைவா!
எங்கே யுனது இருப்பிட மென்றே
எங்கும் தேடி இளைத்தவ ராஞர்!
எங்குந் தேடி இளையா மனிதர் இங்கே கோயில் எடுத்துள் ளாரே! இனிமை பரவும் இடமாய்க் கோயில் மனிதன் கண்ட மாண்பு பெரிதே!
எனினும் இறைவா இற்றைக் குன்னை மனிதன் கோயில் வாசலிற் காணேன்! உன்னைப் பரவும் ஒவ்வோர் கணமும் என்னுள் தீபம் ஏற்றிவைக் கின்ரு ய்.
என்னுள் பெருகும் இன்பச் சுரப்பை தன்னந் தனியே நானுண் டேன? பிறர்க்குப் பகிரும் பெற்றிய ஞக இறக்கும் வரைநீ என்னை நடத்த உறக்கம் இன்றி உன்னை நினைத்தேன்.
உவர்ப்புக் கடலை உண்டாக் கியதால் எவர்க்குக் கடல்நீர் இனிப்பா கியதோ? கடல்நீர் உப்பாய்க் கசந்தும் மழைநீர் அடடா! சுவையாய் ஆக்கியோன் நீயே!
எவர்க்கும் அதுபோல் இன்பம் பயந்தால் உவர்க்கும் வாழ்வொன் றுலகினில் உண்டோ? இருளைப் போக்கும் இறைவா விளக்கப் பொருளே யுன்னைப் போற்றுதல் செய்ய
நேரம் காலம் நிர்ணயித் துள்ளோர் பாரம் என்ருேர் பாவனை வைத்தார்! நேரம் காலம் நிர்ணயிக் காமல் பூரண மனதுள் புகுந்துள் ளாய் நீ!

தன்னுள் எதையும் தரித்தவ ஞன உன்னை நினைந்து ஒப்பனை செய்ய நேரம் காலம் நிர்ணயிக் கின்றர்! பாரம் என்ற பயமெனக் கில்லை!
பழகப் பழகப் பரமF னந்த அழகாய் உலகில் அமைந்தவன் நீயே! பெரும்பே ருள்ளம் பெற்றவ ருள் உன் உருவம் அன்பாய் ஒளிரக் கண்டேன்.
கண்ட அழகைக் கலைவடி 6) Η Πέ5 உண்டாக் கிப்பே ருவகை அடைவேன். துன்பம் அன்றி, தூய அக் கலையின் இன்பம் உலகில் எவர்க்கும் பொதுவே.
கோயில் குளத்தில் குடியிருந் தாலும் வாயில் லாத மற்றெல் வுயிர்க்கும் தாயா யுன்னைத் தரிசிக் கின்றேன். தாயா யுன்னைத் தரிசிப் பதனல் கோயில் வெளியே கொணர்ந்துள் ளேனே!
அளவுகோல் வைத்துனை அஞ்சலி செய்வோர் இளகிய மனதை எங்குவைத் தாரோ? மிருகம் பறவை வேறுபல் லுயிரைக் கருணை குறையக் கண்பார்க் கின்றர்!
கடமை யுன்னைக் கைதொழ லென்றே மடமை அற்ற மனிதர்கள் சொல்வர். உடம்பா டெமக்கும்; ஒமோம், ஆனல்; கைதொழ லென்ற கடமையைப் போல செய்கையும் இனிதே செய்வதும் கடனே!
என்னைச் சூழ்ந்து இருக்கும் மனிதர் உன்னுெளி பாயும் உளமுள்ளோர்கள் ான்பதனலே என்னு லிடர்கள் அன்னவர் தமக்கு ஆகா வண்ணம் என்னைக் காப்பதோர் இனிய கடனே.
சான்ருே ஞகச் சமுதா யத்தில் சான்றுகள் புெற்ற சாமியா ரெனினும் இலைகளைக் கிள்ளி எறிந்தபின் ஞலே மலர்களைப் பறிக்கும் மடமையொப் பேனே! மலர்களைக் கசக்கும் மடமையொப் பேனே!!
31

Page 18
32
விருந்துக் கென்ன வீட்டுக் கழைத்து அருந்தி அவரே ஆனந்திக்கும் ஒம்பல் எவர்தம் உளத்தை எரிக்கா ..? ஆம், பலபேரை அவையில் இருத்தி தாம் பொறுப் பேற்ற சமூகப் பணியை உதறித் தள்ளி உமையஞ் சலிக்க ஆலயம் செல்லும் அவசியம் ஏனுே?
சமுதா யத்தின் சகிப்பை யளந்து
அமுதா யுன்னை ஆலயத் துள்ளே
காணச் செல்லும் கண்வேண் டாமே! ஆணவம் சுமக்கும் அகம்வேண் டாமே!!
அறிவே யிறைவன் அன்பென் ருஞல் பிறரின் துயரைப் பேணு அறிவு அறவேவேண்டாம்! அறவே வேண்டாம்!! விறகாய் உடலம் வேகுதல் சிறப்பே
வெறியாற் பிறரை வேதனைப் படுத்தும் அறிவால் உன்னை அர்ச்சனை செய்ய பொன்னைப் பொருளைப் பொழுதை யழிப்போர் என்னை வருத்தும் எமனே! எமனே!!
புண்ணிய தலங்கள் போய்மீண் டுள்ள
கண்ணியன் என்ற கருத்துப் படநான் என்னை உயர்த்துதல், இறைவன் உனைநான் தன்னை மறந்து தாழ்த்துத லாமே!
என் போல் வயிறு எரிவோ ரிடத்தில் புண்ணிய தலங்கள் பொலியக் காண்பேன். என்போல் இன்னல் ஏற்போ ரிடத்தில் உன்பே ரன்பின் உயர்வைக் காண்பேன் எள்ளள வேனும் என்னுல் அவர்தம் உள்ளம் நோகும் உயில்வேண் டாதே! என்னல் அதனை எழுதுதல் ஏலா உன்னைப் பிறரின் உளத்தில் கண்ணுற் கண்ட கைப்பலன் அதுவே!
MMMMMM

உருவகக்கதை
ஆதாரம்
blú. 8. klú. öl)sósi.
‘ஹஹ்ஹா. ஹஹ்ஹா.’
பட்டாய்ப் பரந்து கிடக்கும் வெண்மணற்றிடரில் இழுத்து வைக் கப்பட்டிருக்கும் சிறிய தோணி யைப் பார்த்து, இரண்டுயார் நீள மான துடுப்பு நகைத்தது.
சிரிப்பில் எத்தனையோ வகை அவற்றில் ஒன்றன பைத்
யகாரச் சிரிப்பாகத்தான் இருக்
கும். இந்தச் சிரிப்பு என்று தோணி 咒恩 பொருட்படுத்தவில்லை.
‘ஹஹ்.ஹஹ்ஹஹ்ஹா. மீண்டும் துடுப்பு கெ க் கலி காட்டிச் சிரித்தது.
தோனியின் மெளனம் கலைய லே. அது கடுந்தவம் இயற்றும் மர்மயோகிபோல் இருந்தது.
துடுப்பின் சிரிப்பு ஒயவில்லை. பலமுறை வந்த ஓங்காரச் சிரிப்பு தாணிக்கு நாராசமாய்ப் பாய்ந் துே. ப்ொறுமைக்கும் எல்லையுண் உல்லவா?
"என்னப்பா. பைத் திய காரத்தன மாகச் சிரித்துக்கொ ண்டிருக்கிருய்?..”* கோபத்தின் காங்கை வார்த்தைகளில் தகி த்துச் சுழன்றது.
* யாருக்கு யார் ஆதாரம் என்ற ஆரா ய்ச்சியின் பிரதிபலன் தான் என் சிரிப்பு .' சர்வம் இழையோடி
Eil.
‘என்ன?. ஆதாரமா?.'
“ஆம் பெரிய உடலாக இருந்
தும், உன் இயக்கத்தின் சூட்சுமம்
சிறியவனகிய என்னிலேயே தங்கி யிருக்கிறதே என்று சிரித்தேன்".
*சீ. முட்டாளே! வெட்க மில்லையா உனக்கு. நான் இல்லா விட்டால் நீ எதற்கும் பயன்பட மாட்டாயே!. என்னைத்தவிர உண க்கு வேறு ஆதாரமும் உண்டா?.*
"ஒருக்காலமுமில்லை. நான் தான் உனக்கு ஆதாரம்..”*
"இல்லை நன் தா ன் ஆதா Մւն...'' தோணியின் குரல் ஒலித்தது.
இதுவரை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த கயிற் துத்துண்டு ஏனப்பர் இந்த வம்பு? அதோ மனிதன் வருகிருன்
Οι ருககு யார் ஆதாரம் என்பதை அறிந்துகொள்ளலாமே? என்று கூறியது.
இதைக் கேட்ட தும் இரண்டும் மெகா னமாகி, மனிதனின் வ ரு கை யை நோக் கின.
தூண்டிற் கயிற் ருேடுவந்த மனிதன் தோணியைத் தள்ளி நீரில் இறக்கினன். துடுப்பை எடுத் ğöl ஊன்றி வலித்து மறு கரை யை நோக்கிச்
செலுத்திஞன். நீரிலி 33

Page 19
ருந்து வெளியில் தூக்கும்போதெல் லாம் துடுப்பு தோணியைப் பார்த் துப் பெருமிதத்தோடு சிரித்துக் கொண்டது. தோணியும், எனக் குத்தான் வெற்றி என்பதுபோல்
துடுப்பை அடிக்கடி நோ க் தி க்
கொண்டது.
கரையை அடைந்த மனிதன் தோணியை இழுத்துப் பக்கத்தில் இருந்த கண்டல் மரத்தில் கட்டி ஞன். துடுப்பைத் தூக்கி தோணிக் குள்ளே வைத்துவிட்டு மீன்பிடிக்க ஆரம்பித்தான்.
சில கணம் மெளனத் தி ல் மடித்தது.
** என்ன தோணியாரே! யா ருக்கு யார் ஆதாரம் என்பதைக்
கண்டுகொண்டீரா?...' என்று மெளனத்தைக் கலைத்து அலட்சி யம் இழையோ டக் கேட்டது துடுப்பு.
**ஆம் கண்டு கொண்டேன். உனக்குத்தான் படுதோல்வி'
‘என்ன. எனக்குத்தான் படு தோல்வியா?. ’’ ஆச்சரியத்தோடு கேட்டது, துடுப்பு.
* வேறென்ன? பாடு என்னில் தங்கியிருந்ததைக் காணவில்லையா? ' குறுக்குக் கேள் வியில் மடக்கிவிட நினைத் த து தோணி.
திடீரெனச் சு ழ ன் ற டி த் த காற்று, தோணியை அங்குமிங்கும் ஆட்டி அலைக்கழித்தது. அதற்கு ஈடுகொடுக்கமுடியாத துண் டு க் கயிறு சொடுக்கென அறுந்தது. காற்றுடன் கலந்த நீரோட்டத்தில் எடுபட்டுச் சென்றது. இதனைக் கண்ட மனிதன் கடலில் பாய்ந்து நீந்தித் தோணியைப்பிடித்து ஏறிக் கொண்டான். மீ ண் டு ம் கரை நோக்கிச் செலுத்திவந்து, மணல் மேட்டில் இழுத்து வைத்துவிட்டுத் தன் கடமையில் ஈடுபடத் தொடங் கினன்.
ܠ ܐ
34
உனது பயன்’
-- -܀ --- .. •
“Itali” giljoj புதிய தோற்றம்
LAATTTLLLLSSSSSSSMSSSMSLMSSSLSSSMSSSS
இம் மாதம் முதல் * மலர் கைக்கடக்கமான அளவில், புதிய தோற் றத்துடன், அதிக பக்கங் களுடன் வெளிவருகிறது. ஆனல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.அநேக வாசகர்களின் ண் ட நாள் ஆவல் இதன் மூலம் பூர்த் தி யாகிறது என் பதை ம கிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்ளு கிருேம். -ஆசிரியர்.
ஒருசில நிமிடங்களில் நடந்து முடிந்த இவ்வளவும் துடுப்பையும், தோணியையும் சிந்திக்கவைத்தன. இரண்டும் ஏககாலத்தில் கயிற்றுத் துண்டை நோக்கின.
** என்ன... யாருக்கு, யார் ஆதாரம் என்பது புரியவில்லையா?”
“புரிந்துவிட்டது; ஆனல், தெளி வில்லை.” என்று கூறியது துடுப்பு. தோ னி யின் மெளனம் அதை ஆமோதிப்பதுபோல் அமைந்தது.
'அப்படியா?. உலகத்தில் யாவும ஒன்றுக்கு ஒன்று ஆதார மாகத்தான் அமைந்திருக்கின்றன. ஆனல், எல்லாவற்றுக்கும் நித்திய மான ஆதாரமாக வேறு ஒன்று அமைந்திருக்கின்றது. அதுதான் இறைவன்.'
துண்டுக் கயிற் றி ன் இந்த வார்த்தைகளில் பு தி ய தொரு ஞானம் ஒளிகாட்டியது. e

டிமண்ணைக் குழிக்குள்
போடும் கடைசிவேளை,
கண்கள் குளமாவதை அவ
னல் தடை செய்ய முடிய
வில்லை. வாய்விட்டே அழுது விட்டான்.
அவன் அழுவதைக் கண்
பேருக்கும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
அவன் தொட்டுத் தாலி கட்டிய மனைவி இறந்து, அவள் பிரேதத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று குழிக்குள் வைக்கும்போதும் இவ்விதம் தான் அவனுக்கு அழுகை பீறிட்டது.
அது நடந்து பத்து வருடங் களுக்கும் மேலாகி விட்டது.
அப்போது அவனுக்கு வைராக் கியம் அதிகம். அவன் பிறவிக் குணமே அப்படி. அவன் மனைவி சாகும் பரியந்தம் அது மாறவே யில்லை. தோட்ட நிர்வாகம் அவனை பழிவாங்கத் துடித்துக் கொண்டு நின்ற சமயம் அது அவன் சாதா ரண தொழிலாளிதான். கூடவே, தொழிலாளர்களுக்குத் தலைவனுக வும் அவன் இருந்தான்.
அவர்கள் செய்யும் அர்த்த மற்றதும், நி யா யம ற் றதுமான காரியங்களை அர்த்தமும் நியாயமு முள்ளனவாகக் கற் பித் து க் கொண்டு அவர்கள் சார்பில் தொழி லாளர்களின் உரிமைகளை உதா சீனப்படுத்தும் நிர்வாகத் தோடு 'வாதாடவேண்டிய நிலையில் அவன்
இருந்தான்.
கொக்குபோல அவனைக் கொத் தித் தீர்க்க காத்திருந்தது தோட்ட நிர்வாகம். நிர்வாகம் செய்யும் துரையின் கட்டளையை நிறைவேற்
றும் வழி தெரியாமல் விழித்தனர்
அவரது உத்தியோகத்தர்கள்.
உள்ளும் புறமும்
சாரல் நாடன்.
எழுத்தில் இருந்ததென்றல் யாரும் யோசிக்கப்போவதில்லை. சொன்னது நீ, செய்தது நான் எ ன் று தப்பித்துக்கொள்ளலாம். அதற்கு வழி இல்லாமல் செய்து விட்டார் பெரியதுரை.
எழுத்தில் இல்லை என்பதற் காக, தன்னிடம் நேரில் அவராகவே வாய் திறந்து சொல்லியதைச் செய் யாமல் விடுவதா என்று சிந்தித்துச் சிந்தித்து அந்தச் சிந்தனையே ஒரு சுமையாக, அந்த சுமையே வாழ் வாக அவர்கள் ஒவ்வொருவரை யும் வதைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு சுமையான வாழ்க் கையை வாழ்ந்து முடிந்த ஒருவருக் காகத்தான் இன்று அவனும், அவன் கூட்டத்தாரும் கண்ணிர் சிந்து கிறர்கள்.
தோட்ட உத்தியோகம் என் பது வாழ்க்கைச் சுமையை ஏற்கத் தைரியம் இருப்பவர்களுக்கு அல்ல், வாழ்க்கையையேசுமையாக ஏற்கத் தைரியமுள்ளவர்களுக்குத்தான் இலாயக்கானது. அவரிடம் அந்தத் தைரியம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இருபது வருட கால மாக அதனுல்தான் அவரால் அதே தோட்டத்திலேயே கண்டக்டராக "இழுத்து வரமுடிந்தது.
நிர்வாகம் இடும் சட்டத்தின் கோரத்தினல் தாக்குண்டு தவிக் கும் தொழிலாளர்களுக்காக மன துக்குள்ளாக மெளனமாக அழுது
35

Page 20
கொண்டு அவர்களின் தவிப்பை புரிந்து கொள்ளாதவராக புரிந்து கொண்டாலும் புறக்கணிப்பவராக நடந்து கொள்ளும் அசாத்திய துணிச்சல் அவருக்கிருந்தது.
மேலிடத்திலிருந்து ஆபத்தும், கீழிடத்திலிருந்து குழப்பமும் எதிர் பாராத எந்த வேளையும் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து சமாளிக்க அவருக்குத் தெரிந்திருந் 59.
ஆபத்தையும், துர்ப்பாக்கியத் தையும் எந்நேரமும் எதிர்பார்த் துச் சமாளிக்கப் பழகிபோன எவ ருக்கும் வாழ்க்கையின் அழுத்தச் சுமை தெரிவதே இல்லை.
"ஷோ கோஸ்" என்றும், "வார் னிங் லெட் ட்ர்" என்றும் எத்தனை க டி த ங் களை, அவர் செய்யும் தொழிலை ஆட்டுவிக்கும், அச்சுறுத் தும் கடிதங்களை துரை அவருக்குக் கொடுத்திருக்கிருர்,
அவைகளுக்குக் காரணங்கூற அவருக்கா தெரியாது? str&) மாலையென்று கடந்த இருபது வருட காலமாக நாள்தோறும் , இரவில் கண்மூடும் சில மணி நேரங் கள் தவிர்த்து அவரின் பார்வை
யில் வளர்ந்த தொழிலாளர்களும், !
பராமரிப்பில் செழித்த தேயிலைச்
செடிகளும் - ஆயிரம் காரணங்களை அவருக்குப் புதிதுபுதிதாய் எடுத் தன சொந்தக் குழந்தையின் வளர்ச்சி யில் அக்கறை கொண்ட தந்தை
துச் சொல்லப் போதுமே.
அதன் வளர்ச்சியின் ஒவ்வோர் அம்
சத்தையும் சிலாகித்து மகிழ்வது
போல அவர் மகிழ்ச்சி அடைந்த
நிகழ் ச் சிக ள் தாம் எத்தனை? கொழுந்து குறைந்தாலும் சரி,
"கோஸ்ட்" கூடினலும் சரி அவர் தான் துரைக்கு பதில் சொல்லு
வது, ஆக, மனிதனின் ஆசைக்கும்
அறிவுக்கும் கட்டுப்படாத இயற்கை யின் தட்பவெட்பம் விளைவிக்கும் அத் த னை க் கும் அவர் காரணம் காட்டியாக வேண்டும். w
36.
அவருக்கென்ன? அவர் சொல் வதை செவிமடுக்க ஒருவர் இருக்
கும் வரை.
ஆனல் இன்று அவரால் ஒன் றும் செய்ய முடியவில்லை.
துரைக்கு அவர் தந்த பதில் அர்த்தமற்றதாகி விட்டது.
தொழிலாளர்களுக்கு அவர் பேச்சு தேவையற்றதாயிருந்தது.
அவர் மலைத்துப் போனர். இரு பது வருட காலமாக இதே தோட் டத்தில் கண்டக்டராக இருந்தும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத அவரை துரை கடிந்து கொண்டார்.
அவர் என்ன செய்வார்? தொழி லாளர்கள் ஒரே பிடிவாதமாக இருந்தனர். தங்கள் கோரிக்கை களுக்கு நிர்வாகம் இணக்கம் தெர் விக்கும்வரை - எழுத்தில் இசைவு தரும் வரை யிலும் வேலைக்குப் போ வ தி ல் லை என்று அவர்கள் தீர்க்கமாக முடிவு செய்திருந்தனர். கொடுக்கவேண்டியதற்கே, எங்கே எழுத்திலிருந்தால் எதிர்தரப்பின ருக்குப் பிடிகிடைத்துவிடுமே என்று நினைத்துப்பயந்துஒதுங்கும்தோட்ட
நிர்வாகம் தொழிலாளர்களுக்குத்
தரவேண்டிய சலுகை களுக்கா எழுத் தி ல் இணக்கம் தர முன் வரும்?
தொழி லா ளர்களின் தீாக்க மான முடிவுகளுக்காக அவர் மனம் மகிழ்ந்திருக்கிருர். இப்போதும் அடி மனதில் அவருக்கு மகிழ்ச்சிதான். அவர் மனசோடு முயற்சித்தால் வேலைநிறுத்தத்தை உடைத்தெறிய முடியும் என்ருலும் அப்படிச்செய்ய அவருக்கு மனம் வரவில்லை. மாருக, நீரின் குளிர்மையாய் நெஞ்சில் நிறைந்திருக்கும் ம கி ழ் ச் சி யை வெளிக்காட்டிக் கொள்ளாமல் - வெளிக்காட்டினல் வீதியில் நிற்க வேண்டியது தான்தாம் என்பதை நன்குணர்ந்தவரான அவர், அவர் களின் உறுதி குலைக்கும் முயற்சி

பில் அவரை ஈடுபடுத்தும் முயற்சி யில் துரைகொடுத்த பேச்சுக்களுக் குப்பிடிகொடுக்காது பட்டுப்படாம அலும் ஏதேனும் கூறி சமாளிப்பார்.
அந்த முயற்சியில் அவரை ஈடு படுத்தும் துரை அவருக்குக் கூறு வது அச்சுறுத்தும் வார்த்தைகளைஆட்களிடம் கூறுவது ஆசை வார்த் தைகளை,
அச்சுறுத்துதலுக்கு அஞ்சாத வர்கள் கூட ஆசைக்கு மயங்கி விடுவதுண்டு என்பது மெத்தச் சரி யானதுதான்.
சொல்லளவில் தோட்டத் து நிர்வாகம் தருவதாகச் சொன்ன ச லு கை களை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் சிலர் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். சிலரைப் பலராக்கி வேலைநிறுத்தத்தை முறி யடிக்க முனைந்த வெள்ளக்காரத் துரையின் மூளை வெகுவேகமாக வேலை செய்தது.
அந்தச் சனங்களின் பழக்கவழக் கங்களையும், பாமர நம்பிக்கையை யும், பொருளாதார இடர்பாட் டையும், "யாரையாவது பிடித்து எப்படியாவது வாழனும்' என்கிற அர்த்தமற்ற வாழ்க்கைக் கோட் பாட்டையும் அவர் ஒரளவுக்கு அறிந்து வைத்திருந்தார். துரை யாகத் தொழில் புரிய அவரின் ஆரம்ப மூலதனமே அந்த அறிவும் அநுபவமும் தாம். அவை இரண் டும் தன்னைவிட தனது கண்டக் டருக்கு அதிகம் என்பதை அவர் அறிவார்.
அவை இன்று பயன் தரவில்லை என்றுதான் அவருக்கு ஆத்திரம்.
வாலிப மிடுக்கும், வாய்துடுக் கும் மிகுந்த ஒரு சிலருக்குக் கங் காணிவேலை கொடுக்கப்பட்டன. கொடுக்கச் சொன்னவர் துரை. கொடுத்தவர் கண்டக்டர் ஐயா. ஆக, இருதரப்பினருக்கும் ஆகா தானவர் அவர்தான்.
நான்கு நாள் வேலை நிறுத்தம் நீடித்திருந்ததே என்று அவரிடம் ஆத்திரப்பட்டார் துரை. நான்கு நாள் வேலை நிறுத்தம் இப்படி நாச மானது அவரால்தானே என்று கோபப்பட்டனர் தொழிலாளர்கள்.
ஆளோடு ஆளாக கூடி குனிந்து நின்று கூலிவேலை செய்தவர்களுக்கு கம்பும் கத்தியுமாக கைகளை ஆட்டி கதைக்கவைக்கும் கங்காணிவேலை கொடுத்தால் கசக்கவா செய்யும்? ற்றுமை உடைந்த காரணத் rá'íರ್Ï? வேலை நிறுத்தம் பிசுபிசுத்து விட்டது. அவர்களின் நியாயமான கோரிக்
கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்
‘கவிதைத் துறையில் ஈழம் முன்னணியில் நிற் கிறது’ என்ற நற்பெயர் நமக்குக் கிடைத்திருக்கும் அதே வேளையில், “பெண் ணையும், காதலையும் விட் டால் பாடுவதற்கு இவர் களுக்கு வேறு பொருளே இல்லை" என்ற அவப் பெயரும் நம்மை நோக்கி வருகிறது. இந்த நிலையை மாற்றவேண்டும். ஆகவே பெண்ணையும், காதலை
எழுச் சிக் குத் தேவை யான பொருள் பற்றிக் கவிதை எழு துங் க ள்
என்று நமது கவிஞர் களைக் கேட்டுக் கொள்ளு கிருேம். -ஆசிரியர்.
37

Page 21
கைகளுக்கு நிர்வாகத்தைப் பணிய வைக்கமுடியாது போயிற்று.
அவருக்கு அது குறித்து அடி மனதில் வேதனைதான்.
என்ருலும், அ வரி ட த் தி ல் ஆரம்பத்தில் துள்ளிக்குதித்த துரை இன்று தொழிலாளர்களின் ஒற் றுமை குலைந்ததையிட்டு, ஆத்திர மடங்கியிருப்பதில் அ வ ரு க் குத் திருப்தி,
அதற்கிடையில் தான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
வேலை நிறுத்தம் ஆரம்பித்து மும்முரமாக நடந்து கொண்டிருந்த இரண்டாவது நாள். முத்துவின் மனைவி இறந்து போனள்.
தொழிலாளர்கள் இறந்துபோனல், தோட்டச் செல வில் சவப்பெட்டி கொடுப்பது என் பது அங்கு சம்பிரதாயம். அந் தச் சம்பிரதாயத்தை வேலை நிறுத் தத்தைக் காரணம் காட்டி துரை மீறினர்.
தனக்கு எதிராகப்போகும் ஒவ் வொருவரையும் காத்திருந்து பழி வாங்கத் துடித்துக் கொ ண்டி ருந்த துரை இப்படி ஒரு சம்பவத்தை விட்டு வைப்பாரா?
வேலை நிறுத்தத்தில் ஈடுபடு பவர்கள் தோட்ட நிர்வாகம் தரும் சலுகைகளை பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் ஆவார்கள் என்று நோட்டீஸ் ஒட்டி வைத்தார். அப் போதாவது அவர்களின் உறுதி குலையாதா என்று.
தொழிலாளர்கள் முன்னிலும் அதிகம் ஆவேசப்பட்டார்கள், அவர் க்ளைப் பிரதிநிதித்துவம் செய்த அவனே குமுறும் எரிமலையானன். என்ருலும் அவனது ஆத்திரமும் ஆவேசமும் இறந்து போனவளின் இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவ வில்லை - அவ்ன் அதை அறிவான் எ ன் ப த 7 ல் தா ன் திகைத்துப் போனன்.
38
யாராவது
இடமாற்றத்தை அறிவியுங்கள்
பாடசாலையில் உள் ள
* மலர் சந்தாதாரரான ஆசிரியர்களின் 'மலர்' பிரதிகள் அப்பாடசாலை யின் தலைமையாசிரியரது முகவரிக்கே அனுப்பப் பட்டுவருகின்றன. ஆகை யால் "மலர் சந்தாதார ரான ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெறும்போது, புதிய பாடசாலை முகவரி யை உடனடியாகத் தெரி விக்கும்படி வேண்டுகின் ருேம். -ஆ-ர்.
அவனிடம் ஐ ம் பது ரூபா பணத்தைக் கையளித்த கண்டக் டர் ஐயா சொன் ஞர். "முத்து, உன்னுடைய நிலைமை எனக்குத் தெரியும். இருந்த பணத்தை எல் லாம் கட்சி என்றும் சங்கம் என் றும் செலவழித்துவிட்டு, மனைவி இறக்க கிடப்பது தெரிந்திருந்தும் உன் னு  ைடய சக தொழிலாளர்
களின் நன்மையே பெரிதெனக் கருதி நீ உழைத்துக்கொண்டிருக் சிருய். உயிரோடிருக்கும்போது
அவளுக்கு நீ செய்யத் தவறியதை சாவிலாவது செய்தாக வேண்டும். இந்தா இதை வைத்துக்கொண்டு ஆகவேண்டியதைச் செய்" O
அவன் நிலை குலைந்து போனன். அவனுக்கு அவரைப்பிடிக்காது என் ருலும் வேலை நிறுத்தத்தில் ஈடு படும் தொழிலாளர்களுக்கு இப்படி உதவி செய்வது தோட்ட நிர் வாகத்துக்கெதிரான செயல் என் பதை அவன் அறிவான். தனக்குப் பிடிக்காதவர் என்ருலும் தன்னல் அவர் சிரமப் படுவதை அவள்

விரும்பவில்லை. அவன் உணர்ச்சி களை புரிந்து கொண்ட அவர் பேசி ஞர்.
*முத்து, உனக்கும் எனக்கும் என்றைக்குதான் வாய்தர்க்கம் ஏற் படாதிருந்தது? ஆனல், அதெல் லாம் தொழில் செய்யும் இடத் தில், தொழிலாளர்களுக்கென்று நீ வாய்திறந்து பேசும்போது நீ சொல் வது சரியென்று பட்டாலும் அதை வெளிக்காட்டாதிருப்பதின் மூலம் நான் தோட்ட நிர்வாகத்துக்கு விசு மாசமாக இருக்க முயற்சிக்கிறேனே அல்லாது வேறில்லை.”
'உண்மையில் இப்போது நீங் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டிருப்பது எனக்கு உடன்பாடுதான். ஆனல், அது சரியான செயல் என்று ஆமோதிக்க நான் தயாராக இருந் தால் தலைவர் வேலைக்கு நீயும், கண்டக்டர் வே லை க்கு நானும் தேவையே இல்லை" அவர் பேசி முடித்தார். அவன் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினன்.
"'உங்கள் பக்கம் தான் நான் என்ருலும், நாளைக்கே துரை வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் முயற் சியில் முழுமூச்சோடு ஈடுபடு என்று என்னைக் கேட்கும்போது "ஆகட்டும் சரி? என்றுதான் சொல்வேன். அப்
ஈழத்து இலக்கியப் பூங்காவில் ஒரு புதிய மலர்
“T6)6) | (சிறுகதைத் தொகுதி) ஆசிரியர் : *சாந்தன்'
கிடைக்குமிடம்: யாழ் இலக்கிய நண்பர் கழகம் மாவிட்டபுரம், தெல்லிப்ப்ளை விலை சதம் -/50
படி ஒரு நிலைமை என்னுடையது. ஆக "உள்ளும் புறமும் ஒட்டி உற வாடாத உணர்ச்சிகளைச் சகிருதுக் கொண்டு வாழுகிறவர்கள் நாங் கள். **
அவன் அவருக்காக அநுதாபப் படத் தொடங்கினன். தன் துய ரத்தையும் ம ற ந் து அவர் தொடர்ந்தார்.
“முத்து,மோட்சம் என்றும் நர கம் என்றும் சொல்கிருர்களே எனக் கென்னவோ அவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. தன் மனசுக் குச் சரியென்று பட்டதை வெளி யில் தப்பென்று சொல்லி தடுத்து வைக்கவும், தன் உளமார விரும் பாத ஒன்றை வெளிக்கு ஆதரித்து மகிழ்ச்சி அடைவதுமான, இந்த தோட்டத்து உத்தியோகத்தைவிட வேறு ஒரு நரகம் இருக்கமுடியாது”
'நான் இறந்து போஞல், எனது ச வ க் குழி யை யாரும் வெறுப்போடு பார்க்காவிட்டால் அதுபோதும் எனக்கு" என்று அவர் சொல்லும்போதே அவன் இடை
மறித்தான் 'ஐயா, அப்படியெல்
லாம் பேசாதீர்கள்.”
ஆனல், இன்று. அவன் அவரை எது குறித்து
பேசவேண்டாம் என்று தடுத்தானே அது நடந்தேறிவிட்டது. அவர் போய் விட்டார்.
அவருக்காக அவனும் அவன் கூட்டத்தாரும் கண்ணிர் வடிக்கின் ருர்கள். ஆனல், அவர்களுக்குத் தான் எத்தனை வேறுபாடு?
அவர்கள் அழுவது அநுதாபத் தால்.
அவன் அழுவது பிரிவால்.
அவர்களுக்கு அவர் இருந்தது தெரிந்தது.
அவனுக்கு அவர் இல்லாததும் தெரிகிறது. 兴
39

Page 22
40
J 35D -부-
இளமைநிறை உரு, அவளின் இதழமுத கலசம்; இதழவிழு பருவமலர் எழில்நிறையும் பருவம்; நளினகலை பலவுமவள் நகையினிடை யாடும்; நங்கையிரு பொங்கு கல சங்களுட னடும்; தளருமிடை யொடியுமிரு விழிகளொளி வீசும். தளருடலில் படர்துகிலும் இளமைவெறி பேசும், களிபெருகு முளமிளமைக் கனவுபல காணும், கன்னிமையின் பொன்மலரும் இதழ்விரியும் காலம்,
காலமெனு மேட்டிலொரு கதைமுடிந்த தாலே கலைவளரு சிலையெழிலின் நிறைவுகொண்ட தாலே கோலமுலார் கொள்கையுயர் சீலர், சில முதியோர் கொடிபடர் கொம்புதரு வித்தனர்கள்; கடலில் மாலையொளி வீழுபொழு தாகியநன் னேரம் மாலையிடக் காளைமணப் பந்தலி லிருந்தான்; சேலையுடுத் தோவியத்தைத் தோழியர்கள் கூடிச் செம்மையுறச் செய்தனர் க ளோரறைக்கு ளோடி.
ஆடிவரு தென்றலவள் சாயல், இள மானும் அன்னமு மிரந்துநடை யவளிடத்தில் பயிலும்; பாடிவரு நதிகடலில் ஓடிவிடு முன்பு பாடல்மறந் தாடல்துறந் தோடல்குறைந்ததுபோல் சேடியர்கள் கூடிவரச் சீறடிகள் நோவச் செம்மைமுகம் மேவஇதழ் சிறுமுறுவல் நெளிய பாடுகவி கூறுநடை மீறிஅடி மெதுவாய் பாவைநடந் தேகினள்; கண் பார்வைபுவி மீதில்!
பறையதிர மறைபரவ நிறையொளியில் முன்பு பார்த்தசுப வேளை கழுத் தில் மஞ்சள் நாணை முறைகளுடன் ஏற்றினன்முன் கண்டறியா ஒருவன்; முதியவர்கள் வாழ்த்தினர்சம் பிரதாயப் படியே, பிறைதிகழும் வான்பார்த்தார் பெருமீனைக் கண்டார் பெய்வளையும் கைபிடித்த பெருமகனும் புவியில் நிறைவுபெற வாழ்வதற்கு எத்தனையோ செய்தார் நிலமகளும் நிலவொளியில் நினைவழிந்து கிடந்தாள்!
தனிமையில் இனிமையொன் றினியிலை யெனஅவள் தனிவழி யினிலொரு மனிதனைத் தள்ளினர்! இனியவள் விதியவன் விதியொடு இணைவழி எழில்மிகு மெனவுளம் எண்ணின ரோ அவர்?
- கணேஷ்.

லத்தின்பிடி அன்றுமுற் ருய்த் த ள ர்ந்து விட் டிருந்தது. அவன் வெட்டில் சாய்ந்த வாழைபோல தொண்டைக்குக்கீழ் உணர்வற்று மரத்துவிட அதற்கு மேலாய்திணறிக்கொண்டிருந்தான். அந்த , செய்வ வாக்கு ஊர்ஜிதர மாகிவிட்ட அறைக்குள் அவ ன் எதையுமே லட்சியம் செய்யாது மூச்சின் பரிபா ஷை நயனத்தின் அபிநயத்தில் உறுதிப்பட உணர்ச்சி களின் மயக்குநிலை கல ங் கா து, போலி வாழ்வை நிஜமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தனக்கு வேண்டிய, வேண்டாத உறவினர் புடைசூழ எதன் விதிக்கப்பட்டுவிட்ட யாத்தி ரையையோ வழிமறித்து இழுத் துப் பிடித்திருக்க விரும்பியவனப் போராடிக்கொண்டிருந்தான். நிஜ ஏக்கமும் வரவழைக்கப்பட்ட ஏக் கமும் தனித்தனியாய் த னித் த முகங்களுக்குரிய சண்கள் தன்னி டம் மிக இரகசியமான அம்பலத் தில் எதனை எதிர்பார்க்கின்றனவோ அதற்கு நேராயோ, எதிராயோ செயல் பட்டுச் சாதிக்கமுடியாத மனிதப் பலவீனத்தின் வக்ரமான அழுங்குப்பிடியில் வதங்கி, அதனைக் கூட அறியாது அவன் அல்லற்பட் டுக்கொண்டிருந்தான்.
இன்னும் சற்று நேரத்திற்குள் கண்ணிரை வரவழைத்து வெடித்து அழ அவன் உணர்வுகள் மங்காத இதற்குமுன்னருள்ள காலத் தி ல் வாழ்ந்த நாட்களில், அவனுக்காய்,
க ரி சனத் தின் திவலையைக்கூடக் காட்டாத ஒரு கூட்டமும், அவ னில் இன்னும் தங்கியிருக்கமுடி யாத சுயநோய்க் கைசேதத்தில் அழ வேறு ஒரு கூட்டமும், அவ னுக்குக் கொடுத்த கடனை நினைத்து எரிந்து அழ மற்று ஒரு கூட்டமும், நலத்தில் பங்கு கொண்டதற்காய் நலிவிலும் பங்குகொண்டு காட்ட ஒரு கூட்டமும், அவன் என்றே, எங்கோ அழுத்தமற்றுச் செய்த உதவிகட்காய் மனம் வருந்தி அழ ஒரு கூட்டமும், அவனுக்குத் தமது முழுச் சேவையையும் செய்யமுடி யாமல் போவதை நினைத்து விசிக்க ஒரு கூட்டமும், அவன் கண் ணை மூடிவிட்டால் அதிலுள்ள துயரைக் காட்டத் தாம் எப்படியெல்லாம் தோற்ற அளவில் மாற்றம் கொண் டு திரியவேண்டும் எ ன் றும் அழ அவனுக்கு மிக நெருங்கிய ஒரு கூட் டமும், அவனிடம் தாம் கடன் வாங்கியதை யாரும் அறிந்திடக் கூடாதே என்ற பொருளாதாரக் கவலையில் குமைய ஒரு கூட்டமும் இதைவிட்டு மிகச் சிக் க லா ன தனித்தனிப் பிரச்னைகள் கொண்ட ஒரு கூட்டமும் சிறுசிறு தொகை யில் தானிருப்பினும் அவை சேர்ந்து வெளியேற்றும் எச்சக் காற்றைத் தான் தானும் சுவாசிப்பதை அறி யாத ஆனல் இதைவிட இலகுவா கவும் ஆழமாகவும் சுவா சிக் க
4.

Page 23
வேண்டுமென்ற இகத்தின் பலமான கோரிக்கையை நிறைவேற்றச் சபத
կ ////ff/ |կ/////////////////////////իիիիիիի //////////////////////իիիիիիիիի
///////////////// ////// f
/////// ////////////////// ///////////////// C/I/III/III/III/II/O/I/O //IV/////////ff/ff/ III/III/III/III/III/III/III
மிட்டவனய், அவன்போல, அவ
னும் தன் சுவாசத்தைச் சுகப்படுத்
திக்கொள்ள தன்னை முற்ருக அறி யாத நிலையிலும் பிரயாசைப்பட் டுக்கொண்டிருந்தான்.
தன் நினைவுடன் ஐக்யமாகிக் கலந்துவிட்ட நிாழ்ச்சிகளை ஒரே யொரு முறை கடைசியாக எண் ணிப்பார்க்க வக்கில்லாமல், அந்த எண்ணமே வராமல், தனக்கென்று இந்த உலகிலுள்ள ஐசுவரியங்கள், பாசப்பிணைப்புகளை நினைக்கக் கொ டுத்துவைக்காமல், எல்லாருக்கும் பொது வான, நிச் ச ய் மா ன, தவிர்க்கமுடியாத அவஸ்தையின் உச்சத்தைத்தான் தானும் அநுப விக்கிருேம் எ ன் ற அளவில் ஒரு போலித் திருப்தியில் சமாதான்க் கவும் யோசனையில்லாமல், வாழ் வில் ஒரேயொரு முறை தன் அறி வையும் உணர்வுகளையும் ஒருமிக்க வைத்து தன்னை ஆசுவாசிக்கத் தன்
மூ ச்  ைசத் தன்ன்ைவிட்டும் போக
வைக்காமல், போன மூச்சை த் திரும்பத் திரும்பத் தொடரவைக் கும் வழிக்கு அவன் முழுமனதாய் முயன்றுகொண்டிருந்தான்.
இத்தனை காலமாகத் தன்னை வளர்த்த, தன்னுேடு ஊ டா டி ய தன் ஜீவ உணர்வுகளில் முதன்மை யான ஆசைகள்-நிறைவு காணுத வையும்-இந்தக் கடைசி காலத்தில் தனக்கு நன்றி மறவாமல் தன் உயி
42
ரை இன்னும் விடாது பி டி த் து வைத்திருக்கக்காலத்தோடு நடத தும் உக்ரப் போராட்டத்தையும் விளங்காது, அந்த நிறைவேரு து எஞ்சிவிட்ட ஆசை க ளா லே யே தான் இன்னும் இப்படிக் காலத் தோடு போராடித் துடிக்கவேண்டி யிருக்கிறது என்றும் அறியாமல், இப்படி வருமென்று அறிந்திருந் தால் ஆசைகளை அடியோடு நீக்கி விட்டு வாழ்ந்திருக்கலாமே என றும் உணராது. இதற்கு வருந்த வும் வராது அவன் ஊமைத் துடிப் பை அநுபவித்துக் கொண்டிருந்
தான்.
அவனை வெறும் சடப்பொரு ளாக்கிவிட, இத்தனை பருவ மாறு
படைப்பிலக்கியமும் படிப்பிலக்கியமும்
சமீபத்தில் ஒரு நண் பர் என்னைக் கேட்டார்; **முறையாகத் த மி ழ் பயின்று, பட்டம்பெற்று, ஒரு பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற் றும் நீங்கள், சிறுகதை, நாவல் என்றெல்லாம் எழுது கிறீர்களே, அது எப்படி?
இக்கேள்வி எனக்கு வியப் பைத் திரவில்லை. வியப்பைத் தரவில்லை என் பதே தமிழ் இலக்கியச் சூழ் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
-இந்திரா பார்த்தசாரதி. (நன்றி: "தீபம்’)

தல்களிலும் உயிரியாக்கி வைத் திருந்த ஜீவ ஆத்மா, தன் கூட்டை விட்டுப் புறப்படுவது அப்படிச் சுல பமானது அல்லவென்பதை பகிரங் கப்படுத்துவதுபோல ஜீவாத்மா,
அணு அணுவாகத் தன் யாருமே
அறிந்து விடாத இருப்பிடத்தை விடடும் புறப்பட்டுத்தன், யாருமே அறிந்திராத வெளிக்கு நகர்ந்ததில் அவன் தன் மூச்சைப் பிடிக்கத் திணறிக்கொண்டிருந்தான். அவன் உயிர்வாகனம் சுவாச உறுப் பு கொஞ்சம்கொஞ்சமாய் தன் அசல் இருப்பிடத்தைவிட்டு, சுவாச வழி யில் இடம்மாறி, இடம் நிலைத்து, 纜 பெயர்ந்து நாசியால் வெளிப்
ரபஞ்சத்திற்குத் தொண்டையூ டாய் நகர்ந்துகொண்டிருப்பதை நிறுத்தி அதன் அசல் இடத்திற்கு அனுப்பும் முயற்சியில் அவன் சுவா சிக்கத் திணறிக்கொண்டிருந்தான்.
ஜீவாத்மாவை உடலில் தரிக்க வைக்கும் அந்த ஜீவ மரணப் போ ராட்டத்தில் அவனது நிறைவே ருத ஆசைகள் தம் நிறைவேற்றத் தை அடையுமட்டுமாவது அவனை உயிரியாக வைத்திருக்க எடுத்த உளைச்சல் மிகுந்த யுத் த த் தி ல் காலத்தின் அரக்கத் தன்மைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஒவ்வொன் ருய்க் கடைசிவரையும் போராடி அழிந்ததும் அவனது இயக் கம் மூச்சின் பரிபாஷையையும், நயனத் தின் அபிநயத்தையும் நிறுத் தி நின்றது. அந் த க் கூட்டங்களில் அநேகம் அவனிடம் கடைசியாக எதிர்பார்த்ததை அவன் ஏமாற்ற வில்லை. இனி, சில கணங்கட்கு அவன் உடம்பில் சூடு இருக்கும். அவ்வளவுதான்.
அந்த அறையிலிருந்து எதற் குரியது எ ன் று தனித்தனியாக அடையாளம் கண்டுகொள்ள முடி யாத வகையில் பல குரல்களின் ஒழுங்கற்ற பிலாக்கணம் காற்றில் ஒரு வினடிக்கு சுமார் ஆயிரத்து நூற்று இருபது அடி வேகத்தில் பரந்தது. 米
JaDLûsîašßLuyi D12ůia 5Šupů
--
1970 ஜான் “மலர்” ஏட்
டில் வெளியான ஆசிரியத் தலேயங்கத்தையிட்டு சில ஆசிரியர்கள் ம ன க் குறை கொண்டுள்ளதாக நமக்குத் தெரியவருகிறது. ஆசிரியர் களைப் புண்படுத்தும் நோக் கம் துளி யும் நமக்கில்லை. படித்தவர்கள் படைப் பிலக்கியத்தில் அக்கரை காட்டவேண்டும் என்று யாசிப்பதே நமது நேரக் கம். இன்றைய எழுத்தா ளர்களில் பலர் ஆசிரியர்க ளாக இருப்பது யாவரும் அறிந்ததே. ஆனல் எழுத் தை வளர்க்கும் பணியில் - இலக்கியத்தை வளர்க்கும் பணியில், ஆசிரிய சமுதா யத்தில் பெரும் பகுதியினர் அக்கரை காட்டாமலிருப் பதை ஆசிரியர் கவனத்திற் குக் கொணர்வது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக் குப் பெரிதும் துணை செய்யும் எ ன் ற நம்பிக்கையிலேயே இத்தலையங்கத்தில் ஆசிரி யர்களைப்பற்றியும் குறிப்பிடப் பட்டது என்பதை மிகப் பணி வுடன் தெரிவித்துக்கொள்ளு கிருேம். -ஆசிரியர்.
43

Page 24
44
முழக்கினேன் குரல்!
பூமி, நெருப்பு, ரொட்டி, மா, சீனி, புஸ்தகம், கடல், காணிநிலம் - இவை
யாவருக்கும் பொது - யாவர்க்கும் சொந்தம் - ஆகணும் என்று நான் அவாவுற்றேன் - ஆகையால் வீதியில் நிற்கிறேன் வீடற் றலைகிறேன்.
விபீஷணத் துரோகியின் விஷம தீர்ப்பாளர் தேடுருர் என்னை - தெருத் தெருவாக - சீந்தி என் நாமத்தை சிதைத்துச் சீய்த்திட அட்டஹாஸ்மாய்
- அவன் கையாட்கள் - சேட்டைக் குரங்கெனக் கூட்டமாய் அலைகிருர்!
உதயப்பருதி மறந்து தான் விட்ட உதயப் பொழுதின் வனந்தரப் பாலையில், தலைவாயிற் சுரங்கத்தில் தலைவனே டாங்கு,
அல்லற் படும் - என் அன்புச் சகோதரர் முன்னிலே நின்று - நான் முழக்கினேன் குரல்:
'அழுக்குக் கந்தல் ஆடைகள் இனியும் அணிய மாட்டீர் - இனியொரு பொழுதும் - வயிற்றுக் குண வெதும் வழங்கிடா தும்மை வந்தெதிர் கொள்ள
வராதினி யொருநாள்!
**வணுந்தரத்தின் வசிய அற்புதங்கள் வனப்புகள் - பகிர்ந்தினி விருந்தென மாந்துவோம்!

'பாலகர்க்காய் - இனி பதைத்திடார் அன்னையர் - துளி கண்ணீர் சிந்தி அழாதினி தாய்க்குலம்!"
எனினும் அவர்கள் -
வியனன்பு காதலை, விரும் பிப் பகிர்ந்திட விருப்பம் சிறிதிலார், வழங்கலுற்ற பொய் வாக்குறுதிகளை நம்பலுற் றவனும் நலிந்திடுமாறு -
பட்டினி வாதையில்
படுதுயர் தியாகத்தில்
வீழ்த்தினர் - இருட்டில் வீழ்த்தினர் மனிதனை!
திரண்டோங்கி நிற்கும்
தேக்கு மரமென
வலிமை உறுதியும், இளகிடு மன்பும்
பெறுவான் - மீண்டும் உயர்வான மனிதன்!
அற்பரைச் சார்ந்தினி அவருடன் நில்லேன் - நாமமற்ற மனிதர்களோடு - மக்களோடு - மதர்ந்து நிற்பேன் யான்!
உரிய என் மக்கட்கு உரியதாகட்டும் - உரிய தாகட்டும் - என்னரும் நாடு! வீசும் கதிர்ச் சுட ரலைகள் தவழ்ந்து விளையாடட்டு மென் அன்னை மண் மீது! கலியழித்தின்பம் கலப்பை நல்குமால் - ஒளியின் மேல் காதல் மேவிட ஒப்பினேன்! மாந்தர்க் குணவு தான் மறுத்து - வெறுப்புடன
அவர் கீறும் கோட்டை அழித்துத் துடைத்திடத் துணிந்தேன் - மனம் கொண் டெழுந்தேன் தோழனே!
மூலம்: பாப்ள்ே நெருடா தமிழில்: பண்ணுமத்தான்
45

Page 25
வீதியெல்லாம் தமிழ் மணக்க வீடெல்லாம் ஏடு படிக்கச் செய்யுங்கள்.
Tಷ್ರಣೆ! ஈழநாட்டில் எல்லோ
ரும் எதுவரை உயர்ந்து விட்டார்கள்? சந்தித்துப் பேச சந் தியில் கூடுவதற்கும், தரம் கெட்ட மனிதர்களாய் வாழ்வதற்கும்தான் உயர்ந்திருக்கிருர்கள்.
நல்லதொரு நூலைக்கற்று நம் மவருக்குள் நற்பணிபுரியுமளவிற்கு நம் நாட்டில் உயர்ந்தவர் மிக மிகக் குறைவே. நாடுகள் தோறும் நூலகங்கள் அமைத்து அறிவு, கல்வி வசதியளித்தும் படிப்பவர் குறைவென்றே சொல்லலாம்.
மாணவர்கள் கூட ஆர்வ மற்.
றுக் கிடக்கின்றனர். வீணன கேளிக் கைகள், சினிமா போன்ற கெட்ட துறைகளில் உள் ளத் தை லயிக்க விட்டு படிக்கவேண்டியதை விடுத்து கற்க வேண் டி ய தை மறந்து காலத்தை வீணே கழிக்கின்றனர்:
தாய் தந்தையர்கள் போதிய படிப்பில்லாமையால் பெற்ற பிள் ளைகளுக்கு நல்ல படிப்பினைகளைப் போதிக்க சக்தியற்றிருக்கிருர்கள் முழுமூடன் சொன்னலும் முழுக்க நம்பும் உள்ளங்கொண்ட சில ர் தங்களது பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கவில்லை என்ருல், 'எதுக்கை
யா படிப்பு? என் மகன் படித்து பார் லி மெண் டு க்கா போகப் போகிருன்?" என்று எங்களையே
திருப்பிக்கேட்கும் அளவுக்கு அறி யாமை இருள் அவர்களைப் பீடித் திருக்கிறது.
46
கலைமேகம், இப்ருஹீம்.
அறியாமை இருள் போக்கி அறிவொளி பெற்று, அச்சம் நீக்கி, நல்லவர் வழி நடந்து நல்லவர்க ளாக, நாட்டைத் தேற்றக் கூடிய வர்களாக, சீரிய கருத்துள்ளவர் களாக சிறந்து விளங்க இவ்வீழ நாட்டில் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும்.
சினிமாப் பத்திரிகைகளையும், சினிமா நேசன்களையும் வாங்கிப் படியாது நல்லறிவூட்டும் நற்றமிழ் ஏடுகளை வாங்கிப் படிக்க வேண் டும்.
“Dali” சந்தா விபரம்
ஒருவருடம் ரூ. 6-00. தனிப்பிரதி சதம் -/50.
விளம்பர விகிதம்
பின்புற அட்டை ரூ.200/- உட்புற அட்டை ரூ.150/- முழுப் பக்கம் ரூ.125/- விபரங்களுக்கு 'to los' இல, 21, மத்திய வீதி,
மட்டக்களப்பு.

எமது நாட்டில் அறிவுப் பஞ்சம் பெருகி விட்டதால்தான், எழுத் தாளர்கள் எண்ணற்ற ஏடுகளை தம் மா லா ன ம ட் டு ம் முயற்சி எடுத்து வெளியிட்டும், வாங்கி வாசிப்பாரற்று உள்ளம் உடைந்து கொண்ட லட்சியத்தையும் விட்டு, இருந்த இடத்தையும் வி ட் டு ச் செல்ல நேர்கிறது.
எமது நாட்டவர்களுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்ளை நம்ம வர் என்று எண்ணி அவர்களின் வெளியீட்டையும் ஆதரியுங்கள். பிற நா ட் டு ப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பவர் பலர், எமது நாட்டுப் பத்திரிகையை வாங்கிக் கிழிப்பவர்களாக இருப்பது வருந் தத்தக்க வி ஷ ய மா கும். இது போன்ற செய்கைகளால் ஆற்றல் மிகு ஆர்வமுள்ள பத்திரிகை ஆசி ரியர்கள், எழுத்தாளர்கள் செத்து மடிய நேர்கிறது என்பதை ஒவ் வொரு வாசகரும் அவரவர் உள் ளக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாடு வளர, நல்லறிவு வளர நல்லறிஞர் வளர - ந ல் லா த ர வு வேண்டும். இதை உ ண ரா து உதாசீனம் செய்யும் மக்கள் கண் ணிருந்தும் க ரு த் தி ழ ந் த வர்
களாகவே கருதப்படுவர்.
ஈழநாடு கலைவீடாக, வீதியெல் லாம் தமிழ் மணக்க இன்றே கருத் துள்ள " " மலர் ' போன்ற நல்ல ஏடுகளை வாங்கிப் படியுங்கள்.
நல்லேட்டைக் கற்று த ல் ல றி வைப் பெற்று நாட்டைப் பெரு மைப்படுத்துங்கள்.
'678260T
போகாமலிருக்க .' --இ-
ஒரு பணக்காரர் தம் வேலைக்காரியை அழைத் துக்கொண்டு வெளியே புறப்பட்டார் வழியில் கறி காய் க் கடைப்பக்க மாகப் போக நேரிட் டது. உடனே அவர் தம் மூ க் கை க் கெட்டியாக மூ டி க் கொண் டா ர். வே லைக் காரி யும் அதே போலச் செய்தாள்.
‘'நீ எதற்காக மூக்கை மூடிக் கொண் டா ய்?* என்று பணக்காரர் அவ ளைக் கேட்டார்.
'நீங்க எதுக்கு மூடிக் கிட்டீங்க???
** எனக்கு கருவாடு நாற்றம் பிடிக்காது. மூக் கினுள்ளே அது நுழை யாமல் இருப்பதற்காக மூடிக்கொண்டேன், ?
** எனக்கு கருவாடு வாசனை ரொம்பப் பிடிக் கும். மூ க் கி னு ஸ் வோ புகுந்த வாசனை வெளியே போகாமல் இருக்கிறதுக் காக நானும் மூக்கை மூடிக்கொண்டேன்' என்
ருள் வேலைக்காரி.
திருமதி ராமையா
(களனியா)
47

Page 26
வெளியீடுகள்
நமக்குள் ஒரு வார்த்தை
விழிபனாச்சி வழியெடுப்பு
என்னும் பதங்கள் செயல்
ரூபத்தில் நடைமுறை உலகிற்கு வந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டம் ஈழத்து இலக்கிய ஊழல்? உடையவர்களின் நெஞ்சை உறுத்த வேண்டிய ஒன்று. நமக்கென்று ஒரு தனி வளையை அமைத்துக் கொள் ள ஆரம்பமாகியிருக்கும் இந்த இக்கட்டு சகாப்தத்தில் நாம் விரும்புவது, யாசிப்பதெல் லாம் ஒத்துழைப்பு, உபகாரம் என்பவைதாம். 58é தனிவளை, அடுத்தவனின் மாடமா ளிகையிலும் சகல ரசாநுணுக்கங் களையும் கொண்டிருக்கப்போகிறது என்பதற்கு நமது நிர்மாண வரிப் படங்களும், மாதிரி அமைப்புக ளும் ஆதாரங்கள்.
சுதேச உணர்வை பரிந்துபேசும் வக்கீலாக்கி எம்மவர் படைப்பில் நீதி காணும்படியும், பின் உத்ஸா ஹம் தரும்படியும் நாம் தொனி அமைக்கவில்லை. விதேசி வெளியீடு களோடு ஒப்பிட்டுப்பார்ப்பதற்கா யினும் ஒன்றிரண்டை - நம்மவர் ஆக்கங்களை - மனமுவந்து வாங்க வேண்டும் என்பதே எமது திவ் ய வேண்டுகோள். அதன்பின்னரும் உங்கள் தீர்ப்பு எதிர்ப்பக்கத்துக் குச் சாதகமென்ருல், நாங்கள் வற் புறுத்தவில்லை.
நன்றி.
48
ஒத்தாசை,
*அம ரத் துவ ம்?
யாழ்வாணனின் சிறுகதைத் தொகுப்பு - பக்கங்கள் 111
ச மு தா ய நல்லுணர்வோடு செய்யப்படும் காரியங்கள் எத்து றையைச் சார்ந்திருப்பினும் அவை எல்லாத்துறைகளாலும் வரவேற் ப்கபடுவது உண்மை. இந்த நல்லு ணர்வுகளின் பாற்பட்டு சமூக, சமுதாய நல்லுணர்வுகள் எனும் திரைச்சீலையில் தம் 'வ ண் ண் க் கலப்பை சிறுகதைகளாக்கித் தந்து விட்டிருக்கிருர் “யாழ்வானன்”. இலக்கிய ஊடாட்டம் நிறைய உள்ள யாழ்வாணனுக்கு சிறுகதை கள் தண்ணிர்ப்பாடாய் வந்திருக் கின்றன. எல்லாரச உணர்வுகளுள் ளூம்புகுந்து அவற்றில் திளைத்து ஒன்றி தனது அநுபவங்களுக்கு உணர்வுபூர்வமான சீர்திருத்த உரு வம் தந்து விட்டிருக்கிருர், அவர்.
*கண் கெட்டபின்' சூர்ய நமஸ்
காரம் பண்ணும் "ஞானி யின் மனைவியை "அமரத்துவத்திலும், மரியான் ‘கருங்காவி' ஆகிவிட்ட
தற்காக அவன் நோயாளி மனை வியை உதாசீனிக்காது இரத்தம் கொடுக்க அஸ்பத்திரி விரையும் அந்தோணியை ‘சங்கமத்திலும், தன் மொட்டைத் தலையை மிக அசாதாரணமாக நினைத்து தன் காதலன் கணேசனில் சரிகண்டு அவன் புது மளைவிக்கு-தன் ஸ்தா னத்தைப் பிடுங்கிக் கொண்டவ ளுக்கு, தனக்கெனக் கணேசனிட மிருந்து கிடைத்த பிறந்த நாள் பரிசை மனமாரக் கொடுக்கும் கதநாயகியை "மொட்டையிலும் இழவு வீட்டில் ‘கர்வம் கொலு விருப்பதாய் தான் அவமானிக்கப் பட்டதைச் சமாதானித்துத் திரும் பும் "முள்' கமலாவைபும், நடப் பவை நல்லவையாயிருக்கும் என தான் தாக்குப் படுமட்டும் திருந் தக் காந்திருந்ததாய் வாழ் ந் த "மலர்ந்த வாழ்வு' தியாகுவும், சீதாவின் கையால் தண்ணீரைக்
 

குடித்துவிட்டு அதன் மூலம் தன் பாவ மண்ணிப்பைக்கண்டு மரிக் கும் அறுவடை தெய்வானை அனை வரையும் அறியும் போது ஒரு பிரமை, உலகமே சீர்திருந்தி விட் டதென்று. அசாதாரண உணர்வு களோடு, அசாதாரண விவேகத் தோடு ஏறக்குறைய விபசாரிக்குப் பாவமன்னிப்பு வழங்கும் "புடத்' தின் தெய்வமனிதர் ஏ. சு போ ல அனைத்து பாத்திரங்களும் இருப்ப தைக் காண முடிகிறது.
ஒரு மலர்ச்சரத்தின் மலர்கள் போன்ற இக்கதைகளை இடைம றிக்கும் வேறுவகை மலர்கள்போல
'கோடை, "ஆதாரம், கொழு கொம்பு,' "பிரவாகம்" என்பன வேறு ஒரு கலாரசனை உணர்வுப்
பின்னணியில் உருவாக்கப்பட்டிருக் கின்றன.
பன்னிரண்டு சிறுகதைகளுமே சுவையை இழக்காத நல்ல நடை யி ல் பின்னப்பட்டிருக்கின்றன. *ரமணியின் முகப்பு அட்டை மிக வசீகரம். கைக்கடக்கமான அளவில் தெளிவான அச்சில் பிரசுரமாகி இருக்கிறது ‘அமரத்துவம்."
கிடைக்குமிடம்:-
தனலக்குமி புத்தகசாலை சுன்னுகம்.
விலை: ரூபா 2/50
ஆச்சி பயணம்
போகிருள்? - நாவல்.
("செங்கை ஆழியான்" பக்கங்கள் - 96.1
“எது நகைச்சுவை?" என்பதே ஒரு சிக்கல்தான். குழந்தைத்தன மான, அப்பாவிச் சேஷ்டைகள் நமது ஹாஸ்ய உணர்வைத் தீண் டிவிடும் அதே நேரத்தில், மிக நுணுக்கமான, அதிவேக நையாண் டிக் குறிப்புகளும் நமக்குச் சிரிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. “ஹாரெல்
லோட்ஸ், சார்ளி சப்ளின் போன் ருே ரின் அசட்டுத்தனமான சேஷ் டைகளை நாம் ரசிக்கும் போதில் ' Witty jokes's olh 15ub60LD S if is, வைக்கின்றன. அறியாமையைக் கைகொட்டி நகைப்பதுவும் அதி அறிவை வியந்து கெக் கலிப்பதுவும் நமது நகைச்சுவை ர ச னை யி ன் இருபக்கங்கள்.
இந்ந ரீதியானவற்றின் முதல் வகையைத் தெரிந்து எழுதப்பட்ட முழு நீள நகைச்சுவைப் பயண நாவல்தான் “செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிருள். கிணற் றுத் தவளையாய் உலகப் புதினங் களின் நேர டி ச் சம்பந்தமற்று வாழ்ந்து வந்த ஒரு ஆச்சியின், கல்யாணம் முடிக்கக் காத்திருக்கும் ஒரு பேரச் சோடியுடனுன கதிர் காமப் பயணமே 'ஆச்சி பயணம் போகிருள்."
"ஆச்சி பயணம் போகிருள்" வாசிக்கும்பொழுது பல சந்தர்ப் பங்களில் நாம் வாயாரா, மன மார நமது தனிமையை மறந்தும் உரக்கச் சிரித்து வி டு கி ருே ம். மெயில் வண்டி வருவதைத் தெரி விக்க மணி அடித்ததும் ஆச் சி “முருகா!' என்று கரம் குவிப்பது வும் "ஸ்டேஷனில் கோயிலும் இருக் கும் போல என்பதுவும் நினைக் கையில் சி ரி க்க வைக் கின்றன. மெயில் முதன் முதலாக நின்றதும் “என்ன நிண்டுட்டுது. சில்லுக்குக் காத்துக் கீத்துப் போட்டுதே.. என்று ஆச்சியின் விசாரணையில் அவளின் அறி யா மை நம் மை நகைக்க வைக்கிறது.
சின்னத்தம்பி முனிக்கு ஆணி அடிப்பதைத் தொடர்ந்து வரும் பேய்க்கதை மிக ரசனையானது. செல்வி சிவராசாவை "காவாலி என்று அழைப்ப தி ல் ஆபாசம் தென்படவில்லை. ஹாஸ்யம்தான் தொனிக்கிறது. இப்படி எத்த &am, Guur.
49

Page 27
இந்த முழுநீள நகைச்சுவை நாவலின் சிறப்பிற்கு பெரிதும் உறுதுணைத்திருப்பது செள’ வின் நய்மான சித்திரங்கள். சம்பவங்களை வாசிக்கையில் ஏற்படும் சிரிப்பு சித் திரங்களைப் பார்க்கையில் அடக்க முடியாது போய்விடுகிறது.
ஈழத்தின் மு த ல் ஹாஸ் ய நாவல் எனும் பெருமிதத்தைச் சுமந்துகொள்ளும் இந்த ஆச்சி பயணம் போகிருள் ஒவ்வொரு இலங்கையனும் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு.
கிடைக்குமிடம்:- தனலக்குமி புத்தகசாலை 27 - D, பெரிய கடை வீதி
யாழ்ப்பாணம்.
விலை ரூபா 2/-
த மி மு மு து இலக்கிய முத்திங்கள் ஏடு
6 லர்" முதல் ஏட்டின் தலை யங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம். "ஈழத்தில் இலக்கியத்தரம் வாய்ந்த பத்தி ரிகை இல்லாத குறையைப் போக்கு வதற்காக இந்தச் சஞ்சிகையை வெளியிடுகின்ருேம் என்று எல்லோ ரையும்போல் பீ ற் றிக் கொள்ள நாம் விரும்பவில்லை. ஏனெனில் அக்குறையை இந்தச் சஞ்சிகையி ஞல் மட்டும் போக்கிவிடமுடியாது. ஈழத்தில் இலக்கியத்தரம் வாய்ந்த பத்திரிகைகள் பல தோன்றவேண்டும் என்ற எமது ஆத்மா ர் த் த மான ஆசையின் முன்னுேடியாக இச்சஞ் சிகை வெளிவருகிறது என்பதை மட் டு ம் சொல்லிவைக்க விரும்பு கிருேம்.”
நமது ஆசை வீண்போகவில்லை. கொழும்பு வாசகர் பேரவை வெளியிட்டுள்ள "தமிழமுது” என்
50
னும் இலக்கிய முத்திங்கள் ஏடு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி யுளளது.
முதல் இதழிலேயே ஈழத்துப் பிரபல எழுத்தாளர்கள் பலரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. தரமான சிறுகதை, கவிதைகளுடன் கவிதை பிறந்த கதை, எழுத்தா ளர் வரலாறு, ஒருவரியில் வாத் தியார் பொன்னுத்துரை, எழுத் தாளர் பேட்டி முதலிய நல்ல இலக் கிய அம்சங்களும் இவ் வி த பூழி ல் இடம் பெற்றுள்ளன.
கவர்ச்சியான இருவர்ண அட் டையுடன் 56 பக்கங்கள் கொண்ட இச்சஞ்சிகையின் விலை சதம் -/60 ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டிய ஈழத்து வாசகர்கள் தம் கடமை யைச் செய்ய வேண்டும்.
(ஆசிரியர்: த. தனநாயகம் வெளியீடு: வாசகர் பேரவை
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: W.
சு. சோமசேகரம் (சரவணையூர் மணிசேகரன்) செயலாளர், வாசகர் பேரவை, 101, வேக்கந்தை வீதி, கொழும்பு - 2)
இசை அருவி
(மாத இதழ்)
சைக்கென ஒரு ஏடு! அது வும் ஈ ழ த் தி லேதா ன் வெளியாகியுள்ளது. பிரபல இசை ஆசிரியர்களின் இசைப்பாடல்கள், கவிதைகள், இசை, நடன, கலை ஞர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர் முகவரி, புதிய பாடல் ஸ் வர அ மை ப் பு, இ ரா கம், தாளம் சம்பந்தமான பயனுள்ள

கட்டுரைகள் முதலியன இடம் பெறும், இவ்விதழ், இசை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள சகலருக்கும், மற்றும் ரசிகர்களுக் கும் பயன்படக் கூடியது. இசை சம்பந்தமான விடயங்கள் தவிர, சிறுகதை, நாடகம் போன்ற இலக் கிய ரசிகர்களுக்குப் ப யன் படக் கூடிய விடயங்களும் இக்சஞ்சிகை இடம் பெறுகின்றன.
இசை உலககில் பி ர பல ம் பெற்றுள்ள 'நல்லைக்குமரன் அவர் களை ஆசிரியராகக்கொண்டுள்ளது ஒன்றே இச்சஞ்சிகையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
டிமை 1/4 பெரிய அளவில், கவர்ச்சியான அட்டையுடன், 12 பக்கங்களில் வெளிவரும் இச்சஞ்சி கையின் தனிப்பிரதி விலை சதம் -/25. வருடச் சந்தா ரூபா 4/- மட்டுமே.
பத் தி ரி கை அமைப்பிலும், அச்சிலும், இன்னும் திருந்த இட முண்டு. இச் சிறு குறை யை ப் பொருட் படுத் தாது , ஈழத்து இசைப்பிரியர்களும் இலக்கிய அன் பர்களும் ஆதரவு கொடுக்க வேண் டிய தனித்துவம் பெற்ற ஏடு 'இசையருவி,"
“ “ GIM) F uLugo?’’ ஆசிரியர் : நல்லைக்குமரன் முகவரி: வைரக்கண்டி,
கோப்பாய்.
ரோஜாப்பூ Isofluort Long gshi
ஒழத்திலிருந்து வெளியாகும்
சினிமா மா த இதழ் "ரோஜாப்பூ. நிறையப் பட்ங்களு
டனும், ஈழத்துக் கலையுலகு பற்றிய பல சுவையான செய்திகளுடனும், வெளிவருகிறது. சினிமாச் செய் திகள் மட்டுமல்லாது, சிறுகதை கவிதை முதலியனவும் இச்சஞ்சி கையில் இடம்பெறுகின்றன.
ஈழத்தில் வெளியாகும் பெரும் பத்திரிகைகள் செய்யாத அளவுக்கு, ஈழத்து திரை முயற்சிகளுக்கும். கலை முயற்சிகளுக்கும் முக்கியத்து வம் கொடுத்து செய்திகளையும் படங்களையும் பிரசுரிக்கும் இச்சஞ் சிகைக்கு ஈழத்துக்கலை அன்பர் களின் ஆதரவு நிச்சயம் கிடைக்க வேண்டும்.
கூடியவரை வெளிநா ட் டு ச் சினிமாச் செய்திகளையும் படங்களை பும்குறைத்து, ஈழத்து நாடகம், நட னம், கலைநிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளையும், படங்களையும் பிர சுரித்தால் பூரணத்துவம்பெற்ற ஒரு ஈழத்துக்கலை ஏடாக "ரோஜாப்பூ” அமையும.
வெளி அட்டையில் உள் ள கவர்ச்சியை பத்திரிகையின் உள் அமைப் பி ல் காணமுடியவில்லை இதில் கவனம் செலுத்தவேண்டும். டிமை 1/4 பெரிய அளவில் 24 பக்கங்களுடன் வெளிவரும் இச் சஞ்சிகையின் விலை சதம் -40.
"ரோஜாப்பூ ஆசிரியர்:
சுரேஷ் சுவாமிநாதன் நிர்வாக ஆசிரியர்: இ. பிரேமகாந்தன் வெளியீடு: ஞானகுருபர நிலையம், 82/3, ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு -13. T
நல்ல நாவலர் மாதப் பத்திரிகை
லழரீ ஆறுமுக நாவலர் VFa) LuijTirmai Go Gofu டப்பட்டுவரும் 'நல்லை நாவலர்'
5.

Page 28
என்ற மாத ஏடு, நாவலர் இலக் கியத்தைக் கட்டி எழுப்பும் ஒரு நல்ல முயற்சி எனலாம். ஆறுமுக நாவலர் பற்றிய பிரக்ஞையே இல்லாது தூங்கிக்கிடந்த தமிழ் மக்களை விழிப்புறச்செப்து, நாவ லர் பெருமையை உ ல க றிய ச் செய்த ஆறுமுக நாவலர் சபை, நாவலருக்கு மகத்தான முறையில் சிலை அமைத்ததுடன், நின்றுவி டாது, அவருக்கு ஒரு நிலையான ஞாபகச் சின்னமாக இச் சஞ் சி கையை வெளியிடு வது மி கப் பொருத்தமாகும்.
நாவலர், நாவலர் சபையின் பணி, பற்றிய செய்திகள் மட்டு மல்லாது நல்ல பல கட்டுரைக ளும் கவிதைகளும் இடம் பெறும் இச்சஞ்சிகை, காலக்கிரமத்தில் தர மிக்க ஒரு இலக்கிய ஏடாக அமை யும் வாய்ப்பு இருக்கிறது.
1/4 செ ய் தி ப் பத் தி ரி கை அய்ைபில் 8 பக்கங்களுடன் வெளி வரும் இச்சஞ்சிகையின் தனிப்பிரதி விலை சதம் -/25.
66 நோக்கு 99 *(* என்ற புது
(5) ק6 rחו_L மீண்டும் வெளிவந்துள்ளது.
கவிதை என்பது ஒரு சிலரின் ஈடுபாட்டுக்கு மட்டுமே உரியது" என்ற நிலையை மாற்றி, "பாவைப் படைப்பதும், பாவை நயப்பதும் பரந்துபட்டதொரு செயற்பாடாக விரிதல் வேண்டும்" என்ற எண் ணத்துடன் இந்த ஏடு பணியாற் றுகிறது. மக்கள் இதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
கவிதைத்துறையில் தமிழகத் தைவிட ஈழம் முன்னணியில் நிற் கிறது என்ற நற்பெயர் நமக்குக் கிடைத்திருக்கிறது. இங்குள்ள கவி
52
ஞர்களின் ஏராளமான படைப்பு களுக்கு விரிவான களம் அமைத் துக்கொடுப்பதற்கு கட்டாயமாகக் கவிதைக்கெனத் தனி ஏ டு கள் இருக்கவேண்டியது அ வ சி யம். * நோக்கு” நமது கவிஞர்கட்கு விரி வான களம் அமைத்துக்கொடுப் பதுமல்லாமல், நமது கவிஞர்களைப் புதுமைப் பாதையிலும் இட் டு ச் செல்கிறது.
சித்திரை இதழில் வெளிவந் துள்ள கவிதைகளைப் பார்க்கும் போது இ வ் வுண்  ைம ந ன் கு புலனுகிறது.
"நோ க் கு’ கவிஞர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது:-
"பாவினில் புதுமை செய்ய வல்ல பாவலரை அழைக்கின்ருேம். செய்யுட்களத்தில் சேர்ந்து பணி யாற்றுங்கள். புதியன படைத்து "நோக்கிற்கு அளியுங்கள். ஈழத் தில் புதியதொரு பாமரபைப் பரி சோதனை மு றை யி ல் ஏ ற் றி அமைத்து நிறுவ எ ல் லோ ரு ம் முயல்வோம். கூறும்பொருள் என் னவாயமையினும், பாநலத்தைப் பெரு நலமாகக்கொண்டு உழைக் கும் ஒர் அணியினர் நம்மிடை தோன்ற வேண்டும்.'
'நோக்கி”ன் தொகுப்பாளர் கள் ஈழத்தின் பிரபல புதுமைக் கவிஞர்களான இ. இரத்தினம் - . முருகையன் ஆகியோர் என் பதிலிருந்தே இவ்வேட்டின் சிறப்பை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம். விளம்பரங்கள் எதுவுமில்லா மல், புதுமையான இரு வ ர் ண ஆர்ட் அட்டையுடன், நல்ல காகி தத்தில், 32 பக்கங்களில் வெளி
வரும் 'நோக்கு” தனிப்பிரதியின்
விலை ரூபா 1-25. விபரங்களுக்கு:
செய்யுட்களம் 149/3, காலி வீதி, கொழும்பு - 4.

நானும் நாலு
நல்லவர்களும்
நானும், நாலு நல்லவர்களும், நற்றவம் செய்ய நல்லாயன் நடந்த நடுங்கும் குளிரிலும்; போதிமரப் புத்தனின் புண்ணிய பூமியிலும்; மகான் முகமதுவின் மக்காப் பாலையிலும்; கர்ம வீரன் காந்தியின் கால்பட்ட இடமெல்லாம்: ஒடியும் நடந்தும், நடந்தும் ஓடியும், போகாத காலத்தே போதி மரத்தடி வர.
மரம் சுற்ற
மரவேலி,
மரக் கொப்பில் பிச்சைக் காரன் உடுக்கையிலும் அரை, வெண்துண்டுகள், வேரோடும் மண்ணில் வேலாடும் மாதர் முகம், சிரசுகள்,
இளசுகள், புத்தம் சரணம் கச்சாமி. பொய்யாய் . மெய்யாய் . என்னவோ .
மஞ்சற் சாமி மலரலர் முகம், சங்கம் சரணமென சத்தமாய்ச் சொல்லியும் போதிமரத்தடியே புத்தனின் ரூபம் தான்; போதிமரத் தடியே புத்தனின் நாதமில்லை.
நல்லாயன் மந்தைதனை வேறு பலர் விரட்டக் கண்டு நல்லாயத் தரிசனம் நாடியோடுங் கால் ஞானஸ் நானம் ஞானுேபதேசம் எல்லாம் முடிந்தது. கொண்டாட்டம்;
கும்மாளம்: நல்லானுப தேசம் கேட்க, கூடியிருந்த மந்தைகள் கூக்குரல் விடவில்லை.
மக்காவின் பாலை மனிதப் பதர்களாய்,
வெறும்புகளாய், ஊர்ந்து,
53

Page 29
ஒடி.
குடிநீரில் முழுகி, . பாவம் மறைத் து
அன்று பிறந்த பாவமறியா பாலர் போல மறுபடியும் பிறக்கையிலே கறளகற்ரு பாவிகள்
சுறள் பிடிக்க கால் தடுக்கி . . ஐயையோ! . .
மாபெரும் மகாத்துமா, மண்ணுேடு கலந்து, மற்றுமொரு பத்தாண்டு, இரத்தம், கொலை, பாதகம், பாவங்கள் பிரிவுகள், பேதங்கள், தீண்டத் தகாதவன் இன்னமும் இருக்கின்றன். சத்தியம் சாகின்றது.
54
சன்மார்க்கக் கண்களிலே சதைவளர்ந்து மறைக்கின்றது. அண்ணலவன் நடந்து விட்டான் அவர்களும் . . விழுந்தார்கள். மகாத்துமா எரிந்த, மணல்மேடு மணக்கிறது. ஒடுகின்ருேம் . . . வழியில்லை
நானும் நல்லவர்களும், நாடிக்கிடைக்காத நாத சிருங்காரன்; நாகன்,
நானு?. .
என்னுள். நான?. --
நல்லவர்கள் . . பாவம் தேடட்டும். எங்கோ தேடிவிட்டு என்னில் கண்டுவிட்டு
நாலு பேரை விட்டுவிட்டு
நான் மட்டும் . . ஒடுகின்றேன் தரிசனம் முடிந்தபின் இரட்சிக்க ஓடுகின்றேன்.
一※一

6ЈШ6)шШ||
மருதூர் மஜீத்.
ITஇனிஐந்திருக்கும்: சிணு சிணுத்த மழை. கல் முனை பஸ் நிலையத்திற்குப் பக்கத் திலேயுள்ள வாடகைக்கார்கள் நிற் கும் இடத்தில் பத்துப்பன்னிரெண்டு வாடகைக்கார்கள் நிற்கின்றன.
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று 'மழை வெய்யில் எல்லாம் எனக்கு ஒன்றுதான்' என்று கூறுவதே போல் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றது.
தனிப்பட்டோர் வா கன ம் ஒன்று அம்பாரைக்குச் செல்லும் ஆட்களைச் சேர்க்க அடித்தொண் டையால் கத்திக்கொண்டு அலை கிறது.
பிரயாணிகள் தங்கு மி டம் ஒழுங்கில்லாததால் மழை க்காக *பஸ்" வருமட்டும் நடை ஓரங்களில் ஒதுங்கி ய வ ர்க ளு டன் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன்.
பாதையிலே ம  ைழ யை ப் பொருட்படுத்தாத கூட்டமொன்று. அவர்களுக்கு முன்னல் ஒரு தள்ளு வண்டி ஒருவரால் தள்ளப்பட்டு வருகிறது. அதற்குள் ஒரு மனித உருவம் கூனிக்குறுகிக் கிடக்கிறது; அந்த உருவம் அசைவதும் அவதிப் படுவதும் என் கண்களுக்கு நன் முகத் தெரிகிறது. ஆச்சரியத்தோடு அதை நோக்குகிறேன். அந்த உரு வம் உயி ரு க் கா கப் போராடிக் கொண்டு செல்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
வண்டியைப் பின் தொடர்கிற வர்கள் எல்லோரும் உழைத்து உருக்குலைந்தவர்கள் 'சக்கிலியர் கள்' என்று பிறரால் வர்ணிக்கப் படுபவர்கள். அவர்கள் எல்லோரது உள்ளங்களிலும் சஞ்சலம் நிழலாடு வது அவர்களின் முகங்களில் அப் படியே தெரிகிறது.
நகரமே அவர்களின் தள்ளு வண்டி ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கிறது. என்னைத் தாண்டும் போது நானும் பார்க்கின்றேன். இல்லை கூர்ந்து நோக்குகிறேன்.
அங்கே,
வண்டியின் மத்தியிலே சுருண்டு கிடப்பவன் - சாவோடு போராடிக் கொண்டிருப்பவன், எனக்கு நன்கு தெரிந்த கறுப்பையா. கல்முனை வாழ் மக்கள் அனை வ ரு க்கு மே தெரிந்த அதே கறுப்பையா. “சக் கிலியன்” என்ற பட்டத்தை எடுத்து விட்டு வேறு ஏதாயினும் பட்டத் தைக் கொடுத்திருந்தால் எந்த உத்தியோகத்திற்கும் பொருத்த மான பேர்சனலிட்டி பொருந்திய அதே கறுப்பையா, அவன் எந்த வண்டிக்குள் வாளிகளை வைத்துத் தள்ளித் திரிந்தானே அதே வண்
55

Page 30
டிக்குள் இப்போது கூனிக்குறுகிக் கிடக்கிறன்.
அவன் முக்கிமுனகுவது என் காதுகளில் நன்ருக்க் கேட்கிறது. அதோடு சேர்த்து பக்கத்தில் இரு இளைஞர்கள் பேசுவதும் நன்ருகக் கேட்கிறது. தெரிந்தவன் என்பத ஞலும் நடந்தது என்ன என்பதை அறியும் ஆவலினலும் அவர்கள் பேச்சை நான் செவிமடுக்கின்றேன்.
பாவம் கடைசி வருத்தம் கறுப்பையாவுக்கு. அதனுல்தான் அந்த வண்டியிலே வைத்துத் தள் ளிக்கொண்டு ஆசு பத் திரிக்கு ப் போகிறர்கள். பார்க்கப் பரிதாப மாக இருக்கிறது இல்லையா?*
"நாம் பரிதாபப்பட்டு என்ன செய்ய முடியும்? அது சரி இரண்டு மூன்று ரூபாய்க் காசைக்கொடுத்து ஒரு காறிலே கொண்டுபோய்ச் சேர்த்திருக்கலாமே ஆஸ்பத்திரிக்கு ஏன் இப்படித் தள்ளிக் கொண் டு அநியாயப் படுத்து கி ரு ர் கள்? குடித்து வெறித்துச் செலவு செய் வார்கள். இதற்கெல்லாம் செலவு செய்ய மாட்டார்கள்.'
*விஷயம் தெரியாமல் கதைக் காதே. காசு இல்லாமல் இவர்கள் இப்படித் தள்ளி த் தி ரியவில்லை, கார்க்காறனுகள் வர முடியா து என்று சொல்லி விட்டார்கள். காலை தொடக்கம் ஒவ்வொரு கார்க்காற னகக் கேட்டுப் பார்த்தார்கள். அசிங்கமான சக்கிலியனைத் தங் கள் காருக்குள் ஏற்றினல், மற்ற வர்கள் தங்களை ஹயருக்குக் கூப் பிடமாட்டார்கள் என்ற சாட்டைச் சொல்லி எல்லோரும் மறுத்து விட் t-Trifigeir. ' '
இளைஞர்களின் உரையாடல் என் உள்ளத்திலே சுமையாகிறது. அனு தா பத் தோ டு கறுப்பையா வைத் தள்ளிக்கொண்டு போகிற திசையை நோக்குகிறேன். கறுப் பையாவைப் பற்றிய நினைவுகள், என்னுள்ளே நிழலாடுகின்றன.
56
நான் கந்தோருக்குச் செல் லாது வீட்டிலே நின்றல் கறுப்பை யாவை வாளியும் கையுமாகச் சந் திக்கும் சந்தர்ப்பம் கிட்டும். அப் போதெல்லாம் அவைேடு கதைக்க ஆசைப்படுவேன்; காரணம் கறுப் பையா தமிழைப் பேசுவதே ஒரு தனி அழகு அதனல் நானே கறுப் பையாவைப் பேச்சுக்கிழுப்பேன்.
*" என்ன கறுப்பையா உன்னை இரண்டு மூன்று நாளாய் இந்தப் பக்கம்ே காணல்ல, ஏதும் முக்கிய மான வேலையோ?"
ஏன் சார் அப்படிச் சொல் றிய, உங்களைத்தான் காண்றது ருெம்ப அபூர்வமாய் இருக்கு கறுப் ப்ையா ஏதாயினும் அஞ்சு, பத் துண்ணு கேட்டுத் தொலச்சிடப் போருன்னு காலங் காத்தால எழும் பிக்கிட்டு ஆபீசுக்குப் போயிடிறிய, நான் வாற்நேரம் நீங்க வீட்டிலே
வள்ளுவர் வழியில் . . . பிறனில் விழையாமை. و ق. --سeره |
அறனெனப் படும் அனைத்தையும் கெடுத்து ஒருவனைக் கடைநிலைக்குக் கொண்டு செல்ல வல் லது பிறன் மனைவி யை ஒருவன் தன் காம நினை வொடு விரும்பத்தொடங் கும் மனநிலையாகும். தன் னைக் காக்காது இவ்வ செல்பவனிடத்தில் பகை யும், பாவமும், அச்சமும் பழியும் சேர்ந்து கொள்ளும். நல்லோரின் பார்வை இதற்குத் தூரத் தில் நிற்கும்.
- நாக. பத்.

இல்லீங்களே, அதனுலதான் காண முடியல்ல. அது அப்புடியிருக்க நான் வராட்டாத்தான் நீங்க வீட்டிலே குடியிருக்க முடியாதே. அதனுல கா ய் ச் ச லோ கறுப்போ, வந்து தானுங்க ஆகணும். நீங்க நாலு நாளைக்கு ஆபீசுக்குப் போகாம வீவுஎடுத்தாலும் ஒண்ணும் ஆகாது. லீவு மு டி ஞ் சு போ ய் வேலையக் கவனிச்சுப்புடலாம். ஆணு நாங்க ரெண்டு நாளைக்கு லீவு எடுத்தா அப்புறம் கேக்கணுமா? அதனுல தினசரி வந்து தானுங்க ஆகணும்.
வேறு ஒரு இடத்திலே வேலைக்குக்
கூ ப் பி ட்டி ரு க்கா ங் க. சம்பளம் கொஞ்சம் கூடத்தருவாங்க போலி ருக்கு. ஆணு கல்முனையை விட் டுட்டுப்போக மனமில்லாமயிருக்கு. டத்துப்பன்னிரெண்டு வருசம் இங் கேயே வாளிதுரக்கிப் பழக்கப்பட் டுப் போச்சு, அதனுல மனுசன் பெரிசா, சம்பளம் பெரிசா என்னு யோசிச் சிப் புட்டு இங்கே தான் சா கும் வரை கிடப்போமென்னு தீர்மானிக்சுப் புட்டனுங்க. இன் னும் பத்துப்பன்னிரெண்டு வீடு இருக்கு முடிச்சுப்புடனும் நம்ம கடம அது. போயிட்டுவாறன் சார். கடமையைப் பற்றியும், மணி தத் தன்மையைப் பற்றியும் பேசிய கறுப்பையா இப்போது -
என் கண்கள் கலங்குகின்றன. கண்கலங்கித்தான் என்ன செய்ய முடியும்? எனக்குள் நானே குமை கின்றேன்.
இதே ந கர த் தை ச் சுத்தப்
படுத்த எத்தனை பேருடைய கழிவு களைச் சுமந்திருக்கின்ருன் கறுப் பையா. ஒருநாளா இரண்டு நாளா எத்தனை வருடங்கள்; ஆனல் . அவனுடைய உடல் உயிருக்காகப் போராட்டம் நடத்திய போது அவனை ஆஸ்பத்திரிக்குச் சுமந்து செல்ல ஒரு வா ட  ைக க் கா ர் கிடைக்கவில்லை. பெருமூச்சு விடு வதைத் தவிர வேறு வழியே தென் படவில்லை எனக்கு,
米
95 busf G to
-O-
செழுங்கிளை பரப்பி தவம் இயற்றும் பொ லிவுட ன் நிமிர்ந்து நின் றது அந்தப் புளியமரம்.
உச்சிக்கு வந்துவிட்ட பக லவன் அதனைத் து ச் சமா க மதித்தான். '
* "என் ஒளியை உறிஞ்சிக் கொழுத்து நிற்கும் இந் த ப் புளியமரத்தின் அகம்பாவத் தைப் பாரேன்" என்றன். பக லவனின் கூற்று பூமித்தாய்க் கும் கேட்டது **ஆதவன் எப் பொழுதுமே பெருமை பேசு பவன். நான் இல்லாவிட்டால் என் தாய்மைச் செழிப்பு இல் லாவிட்டால் - இந்தப் புளிய
ம ர ம் தோன்றியிருக்கமாட்
டாது' என்ருள் அவள்.
இரு வ ரின் உரையாட லும் புளிய மர த் தி ற்கு க் கேட்டபோதிலும் மெளனஞ் சாதித்தது. மேகக்கூட்டங்கள் குவியலாயின. புயல் கோர மாக வீசத் தொடங்கியது. தொட ர் ந் து பேய் மழை.
வே ர் பா றிச் சாய்ந்துவிடுவ
தைப்போல புளியமரம் ஆடி
III.
பகலவனின் பேச்சு மூச் சைக் காணவில்லை. பூமித்தாய் மூச்சுத் திணறிய நிலை யி ல் மழை நீரைக்குடித்துக்கொண் டிருந்தாள்.
எஸ். எல். எம். ஹனிபா.
57

Page 31
உண்மைக்கதை,
மலப்பாம்புடன்
மல்யுத்தம்
எஸ். சிதம்பரப்பிள்ளை.
1951ம் ஆண்டு நவம்பர்
மா த ம் ஒரு வார இறுதி நாள் அன்று சாய் பொழு தில் சிறிது மழை பெய்தது. அம் பாரை நீர்ப்பாசன இலக்காவில் நான் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த காலம் அது.
எனது நண்பர் திரு. குருேச யர் நீர்ப்பாசன என்ஜினியர். அவர் அப்போது அங்கு வந்து, ஆகாயக் கப்பல் விடுவதற்காக அமைக்கப் படும் மைதானத்துக்கு அருகாமை யில் யானைகள் கூட்டம் கூட்டமாய் திரிவதாகவும், அவைகளைப் பார்க் கப்போகலாம் என்றும் கூறினர்.
நான் யானைக் கூட்டங்களைப் பார்க்கப் பெரிதும் விரும்பினேன். சிறிதுநேரத்தில் அவர் வசம் உள்ள ஜீப் வண் டியில் ஏறிக்கொண்டு இருள் அடைவதற்கு சற்று முன்பு சென் ருேம்.
நான் எனது துப் பாக்கியை எடுத்துப் போகத் தவறவில்லை.
எனது ந ன் பர் ஜீப் வண்டியை ஒட் டிச்சென்ருர். சில பகு திகளில் காடுகள் துப் ப ர வாக்க ப் பட் டு இருந்தன. ஜீப்வண்டி
58
வெளிச்சத்தில் மெள் ள மெள்ளப் போய்க்கொண்டி ருந்தோம்.
தற்போது இருக்கும் ஆகாய விமான இறங்கு துறைக்குக் கால்மைல் தூ ரத்தில் நன்ரு ய் துப்பரவு செய்யப்பட்ட இ ட த் தி ல் ஜீப் போய்க்கொண்டு இருக் கும்போது, பெரு மர ம் ஒன்று பாதைக்குக் குறுக்கே கிடப்பது ஜீப்வெளிச்சத்தில் தெரிந்தது. எனது நண்பர் ஜீப் வண்டியை வெளிச்சம் போட்டபடியே நிறுத் தி
விட்டு, இறங்கிப்போய் அக்கட் டையின் நுனியைப் பி டி த் துத் தூக்கினர். அப்போது கட் டை
ஒரு பக்க ம் வளைந்துகொடுப்பது போலவும் தெரிந்தது. ஒருவேளை பெரும் கொடியாக இரு க் கும். பாதையில் இருந்து அகற்ற நாமும் உதவிசெய்யலாம் என்ற நினைப்பில் ஜீப்பைவிட்டு இறங்கி அவர் அரு கில் போனேன். *
ச மீ பத் தி ல் போ ன து ம் திகைத்து என்னை அறியாமலே பின் வாங்கினேன். காரணம் எனது நண் பர் குருேசியர் தூக்கிப்படித்துக் கொண்டிருந்தது ஒரு பெரிய மலைப் பாம்பு, அவர் அதனுடைய கழுத் தில் பிடித்துக்கொண்டு ஜீப் வண் டிக்கு சமீபமாக இழுத்துக்கொண்டு வந்தார். பாம்பு என் ருலே எனக்கு நடுக்
கம். அதிலும் மலைப் பாம்பு என்ருல் எப் படி இருக்கும்?
அதன் வாய் திறந் தபடி இருந்தது. அவர் கையில் இரத் த ம் கசிந்தபடி இருந்தது. ஆளுலை அவா அதை விடமுடியாமல் அபா யமான சூழ்நிலையில் இருப்பதாக எனக்குப் பட்டது. நல்லவேளை யாக எ ன் னி ட ம்
 

துவக்கு இருந்தது. துவக்கை எடுத் துக் குண்டு தோட்டா ஒ ன் றை மாட்டியபடி **உ ங் கள் கையில் படாமல் அதன் தலையில் எப்படிச் சுடலாம்?” என்று கேட்டேன். அப் பொழுது அவர் பாம்பை ஜீப் வண் டிக்கு இரண்டு மூன்றடி தூரத்தில் இழுத்துவந்துவிட்டார். என்னைச் சுடவேண்டாம் என்ருர். 'இந்தப் பாம்பை உ யி ரு டன் பிடித்துக் கொண்டு போகவேண்டும்" என்று சொன்னர்,
அவர் நல்ல தை ரிய சா லி அதை எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்றே நின்ருர், மலைப் பாம்புடன் விளையாடலாமா? அவ ருக்கு எவ்வளவு தைரியம் இருந் ததோ எனக்கு அவ்வளவு நடுக்கம் இருந்தது. நான் அதை விட்டு விடும்படி எவ்வளவோ மன்ருடியும் அவர் கேட்கவில்லை. ஜீப்புக்கு அரு காமையில் இழுத்துவந்து விட்டார்
அப்போது மலைப்பாம்பு அவ ரைச் சுற்றி வளைப்பதுபோல் இருந் தது. என்னைச் சற்று தூரத்துக்குப் போகும்படி சொன்னுர், பாம்பு சுற்றியதைத் குலைத்துக்கொண்டு இருந்தது. பின்பு பாம்பைத் தன் பலம் கொண்டமட்டும் ஜீப்புக்குப் பக்கத்தில் இழுத்து பின் பக்க மாகப் பிடித்தபடி உள்ளே ஏற முயன்றர். எப்படியோ பிடி வழுக்கி பாம்பைத் திடீரென விட்டுவிட் டார்போல் தெரிந்த து. சற்று இருளானதால் தவறியது எப்படி என்று என்னுல் கூற முடியவில்லை. ஆணுல் பாம்பைக் காணவில்லை. எப்படி மறைந்தது என்றே தெயு வில்லை.
“கூட்டாளி ஓடிவிட்டார். நான் அவரைப் பிடிக்கவேண்டும்" என்று கூறியபடி ஜீப்பில் தாவி ஏறி வண்டி யை ஒட்டத்தொடங்கினர் அவர். நான் இருக்கிறேன் என்ற நினைவே அவருக்கு இல்லை. வண்டி அசைந்த தும் நான் உடனே குதித்து ஏறி விட்டேன்.
ஒன்றுமே பேச வி ல் லை
பாம்பு ஓடி யதை ப் பற்றி எல க்கு மிகுந்த சந்தோஷம். நான் வேண்டிய தெய்வங்கள் எனக்குக் கைகொடுத்தன. நான் அவரிடம் எனது துவக்கை தோளில் சாத்தியபடி பக்க த் தி ல் அமர்ந்திருந்தேன். வெறிபிடித்தவனைப்போல் அவர் எங்கும் சுற்றி வளைத்து ஜீப் வண் டியை ஒட்டினர்.
கிட்டின களிமண் நிலம். காடு களை வெட்டி எங்கும் துப்பரவாக்கி இருந்தது. அதனல் அவர் எத்த னையோ தடவைகள் சுற்றி வளைத் துக்கொண்டு இருந்தார். இந்த அவசரத்தில் அவரோ நானே பக் கத்தில் நின்ற யானையைக் கவனிக் கவில்லை. அவருக்குத் தை ரி யம் எனக்குப் பயம் தெளிந்த நிலைமை. 'நீங்கள் இவ்வளவு கோழையாக இருக்கிறீர்களே' என்று கேட்ட குழுேசயர் ஒரு மூலைப்பக்கம் வண் டியைத் திருப்பினர்.
திடீரென்று ஒரு பெரும் சத் தம் காடு அதிரும்படி கேட்டது. பக்கத்தில் நின்றி ரு ந் த யானை ஒன்று தன்னை வண்டி து ர த் தி வருகிறது என்ற ப ய த் தி ன ல், அப்பாவியான எங்களைத் தாக் கு வதை விட் டு, பிளிறிக்கொண்டு வெளிச்சத்துக்கு முன் ஓடியது.
என் மூச்சு நின்றுவிடும்போல் இருந்தது. ஆனல் என் நண்பர் குருேசியரோ “ஆகா! இக்காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது. யானை இவ்வளவு வேகமாய் ஒடி யதை இதற்குமுன் நான் காண வில்லை" என் முர்.
"திருப்புங்கள் ஜீப்பை.’ என்று கத்தினேன். குருேசியர் என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியாது ஜீப்பைத் திருப்பி விட் டார். அவருடைய நோக்கம் மலைப் பாம்பைத் தே டு வ தே யா கும். கொஞ்ச தூரம் போன பின் மீண் டும் பயம் தெ விரிந்து வ ரு ம் பொழுது எனது வலது தோளில்
59

Page 32
சாத்தியிருந்த துப்பாக்கிக் குழல் இடது தோளில் சாத்தியிருப்பது போல் தோன்றியது. நான் திரும் பிப் பார்த்தேன். கீச்சிட்டேன்.
அது துப்பாக்கிக் குழல் அல்ல.
மலைப் பாம்புதான். மலைப்பாம்பின்
பிளந்த வாய் என்ன விழுங்குவ தற்குக் குறிபார்த்து இருப்பதைப் போல் என் கண்களுக்குத் தெரிந் தது. **ஜீப்பில் பாம்பு' என்று கத்திவிட்டு, ஜீப் ஒட்டிய நண்ப ரைக் கட்டிப்பிடித்தேன்.
அவர் உடனே ஜீப்பை நிறுத்தி கீழே இறங்கி தந்திரமாக அதனு டைய கழுத்தைப் பிடித்து ஜீப் பிற்கு பின் ஆசனத்தில் இருந்து கொண்டு தன்னுடைய கைஅசைப் பினல் பாம்பை தன்பக்கம் இழுக் கத் தொடங்கினர்.
இம்முறை அவர் எனது உத வியை வா யாலே கேட்டுவிட்டார்.
வள்ளுவர் வழியில் . . .
வாழ்க்கைத்துணை நலம்
ع
---س-S பெண் ணின் நற் பண்பே வீட்டுக்கு மங்கல மாய் அமைகிறது. கற் பென் னு ம் திண்மை பூண்டு அவள் தன்னைக் காத்து தன்னைக்கொண்ட தன் கணவனின் நலனைப் பேணிக்காத்து, இருவர்க் கும் உரிய நற்சொல்லைக் காத்து, சோர் வி லா வாழ்க்கைத் துணையாகி நிற்கிருள்.
நாக. பத்.
60
இவைகள் அனைத்தும் சொற் பவேளையில் நடந்து விட்டதால், நான் மலைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ் வ ள வு தைரியமாக நண்பர் இரு க் கும் போது நான் இவ்வளவு கோழை யாய் இருக்கிறேன் என்று எனக்கே வெட்கம் வந்தது. என்னுடைய துவக்கின் உதவியால் ஒரு அள வாக எட்டி நின்று உதவி செய் தேன்.
பாம்பின் மூன்றில் ஒரு பங்கு இழுபட்டபின் ந ன் பரின் கை அசைப்பின் காரணமாய் பாம்பு தானகவே வளைந்து, வளைந்து தன் முழுப்பாகத்தையும் இழுத் து க் கொண்டது. அவருடைய முகத் தில் சந்தோஷக்குறி காணப்பட் டது, என்னை வண்டியை ஒட்டச் சொன்னர். எ ன க் கு அவ்வளவு பழக்கம் இல்லாவிட்டாலும் அவர் சொன்னபடி மெதுவாக ஒட்டிக் கொண்டு சென்றேன்.
நீர்பாசன ஊழியரின் குடிசை கள் சமீபத்தில் (உகனையில்) இருந் ததால் அவ்விடம்போய், ரணவீர எ ன் ற லொ றிச் சா ர தி யை அழைத்து அ வரை க் கொ ண் டு ஜீப் வண்டியை ஒட்டச்செய்து உக னையில் இருந்த சண்முகதாஸ் பங் களாவுக்குப் போய் அ வ ரி ட ம் இருந்த உறுதியான மரப்பெட்டி யில் பாம்பைத் தூக்கிப்போட்டு பெட்டியை அடைத்தோம். அதுவ ரையும் நண்பர் குருேசியர் பாம் பின் தலையைப்பிடித்தபடியே இருந் தார். அதன்பின் அம்பாரையில் உள்ள பங்களாவுக்குச் சென்ருேம். மலைப்பாம்பு ஏறக்குறைய 15 அடி நீளமானது. எனது நண்பர் இதை தெகிவளையில் உள்ள மிருகக்காட் சிச் சாலைக்கு கொடுத்தார். அதை இப்பொழுதும் மிருகக்காட்சிசாலை யில் பார்க்கலாம். எனது நண்பர் நீர்ப்பாசன இலாக்காவில் மெக் காணிக் எஞ்சினியராக இருந்து இப் பொழுது இளைப்பாறி இருக்கிருர்,
杀

கைத்தொழில் கட்டுரை - 1.
கொசு மருந்து
- (FLY SPRAY)
-எடுத்தாளன்
ண்ட கண்ட இடங்களிலெல்லாம் இருந்து வரும் ஈக்
85. நமது பாவனைப்
பொருட்கள்மீதும் உணவுப்
பண்டங்களின் மீதும் அமர்ந்துவிடுவதன் மூலமாக பல வித மான தொற்று நோய்க் கி ரு மிக ள் வெகு சுலபத்தில் பரவ
ஏதுவாகின்றது.
ஈச்களின் தொல்லைகளிலிருந்தும், இவை விநியோகிக்கும் நோய்களிலிருந்தும் விடுதலை பெற இதோ ஒரு மருந்து, இதை
ஆங்கிலத்தில் Fly Spray என்பார்கள்.
இதைத்தயாரிப்பது
எப்படி என்பதைப் பார்ப்போம்:-
நெடியற்ற மண்ணெண்ணெய்
− (Deodonizing Kerosene) 8 9 Lusius
பைரத்திரம் Pyrethrum
10 , ,
LS6056) F65&Gall' (Methyl Salicylate) I , ,
மண் ணெண்ணெ யைப் பற்றி எ ந் த வி த மா ன குறிப்பு ம் தேவையில்லை. ஆனல் "நெடியற்ற மண்ணெண்ணெய் என்று அடை மொழியொன்று போட் டி ருக் கி றேனே, அதைப்பற்றி கட்டாயம் கூறித்தானகவேண்டும்.
மண் ணெண் ணெய் எங்கு கொட்டினலும் சரி, அது எங்கே சிந்தியிருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துக்கொள்வீர்கள். மண் ணெண்ணெயிலுள்ள நெடி இதைக் காட்டிக்கொடுத்துவிடும்.இந்தநெடி அகற்றப்பட்ட எண்ணெயைத்தான் Deodorizing Kerosene от 6ёт др! சொல்லுவார்கள். பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு கலப்பதற் கென இந்த மண்ணெண்ணையை வடிகட்டி யுள்ளனர். நெடி மட்டுந்தான் இல் லாதிருக்குமே தவிர, மற்றபடி என் னென்ன குணம்சங்கள் நாம் பாவிக் கும் மண்ணெண்ணெய்க்குண்டோ அத்தனையும் இதில் உண்டு
பைரத்திரம் (Pyrethrum) பூச் சிக் கொல்லிகளுக்கென பயன்படுத் தப்படும் தூள் என்றதும் இது நச்சுப் பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்ற திட்டவட்டமான முடிவுக்கு உடனடியாக வந்துவிடா தீர்கள். இது நச்சுப் பொருளல்ல. பைரத்திரம் நச்சுப்பொருளெனத் தப்புக் கணக்குப் போட்டு கிலி கொண்டவர்களும் கிலி கொள்ப வர்களும் ஏராளம். மனிதனுக்குத் தீமைவிளைவிக்காது, ஆனல் கிருமி களுக்கும் பூச்சிகளுக்கும் எமனுக இருக்கும். இது செவ்வந்தி செடி யினத்தைச் சேர்ந்த ஒருவகைப் பூக்களின் பொடியாகும்.
பைரத்திரத்திற்கு பதிலாக செயற்கை மருந்தொன்று கண்டு பிடிக்கப்பட்டு பாவிக்கப்பட்டு வரு கிறது. இதற்குப் பெயர் Lethene என்பதாகும். இது பைரத்திரம்
6

Page 33
பூச்சத்தைவிட முப்பது நாற்பது மடங்கு சக்தி மிக்கதாகும்.
மிதைல் சலிசிலேட் (Methyl Sடிicylate) என்பது செயற்கைத் தைலமாகும். வின்டர்கிரீன் (Wintergreen) என்னும் தைலத்துக்குப் பதிலாக இதைப் பாவிப்பதுண்டு. கடைகளில் வின்டர்கிரீன் என்று கேட்டால், இந்தப் பெயரை எழுதி மி  ைத ல் சவி சி லே ட் தா ன் கொடுப்பார்கள். அசல் வின்டர் 6}rfsör, Gaultherie Proumbens 676ör/D இலைகளிலிருந்து வடித்தெடுக்கப் படுவதாகும். இச்செடிகள் அத்தி லாந்திக் சமுத் திர நாடு களில் விளைவதாகும்.
மிதைல் சலிசிலேட் என்னும் செயற்கைத் தைலம் சாலிசிலிக் அமிலம், மிதைல் அல்கஹோல், சல்பியூரிக் அமிலம் ஆகிய மூன்று பொருட்களின் கலப்படமாகும். அசல் வின்டர்கிரீனுக்கும், மிதைல் சலி சிலேட்டுக்கும் அதிகமான வித் தியாசம் இல்லை. இதை வாசனைக் காகவும், உணவுப் பண்டங்களி லும் சேர்ப்பதுண்டு.
பை ரத் திர ம் அபாயமற்றது என்றுரைத்தேன். மி தை ல் சலி சிலேட்டை உண்ணும் பொருட் களில் கூட கலக்குகிருர்கள் என் றேன். மண்ணெண்ணெயைப் பற் றிச் சொல்ல வேண்டி யதில் லை . எனவே, தைரியமாக சமையற் கட்டுகளிலும், சன்னல்களிலும் கதவுகளிலும் தெளித்துவிடலாம். பூசிவிடலாம்.
தயாரிக்கும் முறை இதுதான்: நெடியற்ற மண்ணெண்ணெயில், பைரத்திரந்தூளைப் போட்டு பின் னர் மிதைல் ச லிசி லேட் டைப் போட் டு க் கலந்துவிடவேண்டும். இரண்டு நாட்களுக்கு இப்படியே விட்டு வைக்கவேண்டும். இடை யிடையே க லக் கி யும் விட்டுக் கொள்ளவேண்டும். மூ ன் ரு வ து நாள் மஸ்லின் துணியொன்றின் மூலமாக வடிகட் டி க் கொள்ள
62
நாடெங்கும் * ம ல ர் ” விற்பனையாளர்கள் தேவை.
முற்பணம் கட்டவேண்
டிய அவசியம் இல்லை.
பிரதிமாதமும் பத்துப் பிரதிகளுக்குக் குறையா மல் பெறவேண்டும்.
விற்பனையாகாத பிரதி களைத் திரும்பப் பெற் றுக்கொள்ள (ԼՔւգ, Այո &l.
முந்திய மாதப் பிரதி களுக்குரிய பணம் அனுப் பாதவர்களுக்கு அடுத்த மாதம் "மலர்" அனுப் பப்படமாட்டாது.
விற்பனையாளர்களுக்கு 20% கழிவு உண்டு. எங் கள் செலவில் பிரதிகளை அனுப்பிவைப்போம்.
24 தனிப்பிரதி -/50 சதத் துக்கு மேல் விற் பனை செய்யக்கூடாது.
விற்பனையாளர்கள்
தொடர்புகொள்ளவேண்டிய
முகவரி:-
நிர்வாகி 'மலர்'
21, மத்திய வீதி,
மட்டக்களப்பு.
வேண்டும். பாவனைக்கு தயாராகி விடும்.
இறுதியாக, ஒர் எச்சரிக்கை. இந்த மருந்தை நெரு ப் பருகே வைத்துவிடாதீர்கள். மண்ணெண் ணெய் அதிகமாக சேர்த்திருப்பத னல் தீப் பற்றி க் கொள்ளும் அபாயம் உண்டு! 米

ம க் க ள் கிணற்றுத்தவளைகள்தாம் எல்லைச்
**யாழ்ப்பாணத்து
சண்டையிலும், சீதனம் சேகரிப் பதிலும், வீடு கட்டுவதிலும்தான் அவர்களுக்குக் கவனம். சிங்கள வர்கள் வாழ்க்கையை அனுபவிக் கிருர்கள்! அவர்கள் வாழ்வதற்காக உழைக்கிருர்கள் தமிழர் உழைப் பதற்காக வாழ்கிருர்கள்."
("ஆச்சி பயணம் போகிருள்' "செங்கை ஆழியான்")
சரியான நேரங்களில் கூறப் படும் சில வாக்கியங்களில் தான் எவ்வளவுசக்தி மண்டிக்கிடக்சிறது? அவை மெய்யாக இருந்தாலென்ன கற்பனையாக இருந்தாலென்ன. (*மலைக்கொழுந்து’ - நந்தி-)
- செளமினி - கோப்பாய்,
Lunt Fu பொறிக் கிடங்கு விரிந்தவிழ, அதற்குள் நான் அமிழ் கிறேன். (“முள்” - யாழ்வாணன்)
வேதனை நெஞ்சை மத்தாய்க் கடைகிறது. அதனுல் கண்களிற் காட்டாற்று வெள்ளம் உருவாக * கைத்துடைப்புக்கருமம்' எ ன் ற அணையையும் உடைத்துத் தகர்க் கின்றது (“முள்’ - யாழ்வாணன்) - மு. கணபதிப்பிள்ளை,
குருக்கள்மடம்.
o σ ύζ} o o
கங்கை மழலையின் குரலெழுப்பி கன்னித் தமிழின் நித்திய யெள வனப் பொலிவுடன், குழலவிழ, இடைதுவள, நீராடுங் கன்னியின்
உடற் கவர்ச்சி காட்டி, Lל2, עו $ கூத்திடும் நர்த்தகியின் காம்பீரி யத்துடன், வற்ருது, காலங்கால
மாக வளநீர் நிதியைச் சகலருக் கும் அளித்தவண்ணம் ஓடி கடல்
ராஜனுடன் சங்கமித்துக் கொண்
டேயிருக்கிருள்.
(எம். ஏ. ரஃமான் - “மரபு”
துவட்டியும் துவட்டாமலும், ஈரம் சொட்டச் சொட்ட இடுப் பளவு தொங்கும் கூந்தல்.
குடம் வைக்கச் சற்று இடம் கொடுத்து மறுபக்கம் நொடித்து நிற்கும் இடை, சற்றே ஒடிய அடி வைக்கும் அழகு நடை.
தோளிலே தொங்கும் துவைத் துப் பிழிந்தரவிக்கை உடலிலே ஒட்டிக் கிடக்கும் ஈரச்சேலை.
கதை: பீலிமேலே போகிறது!
- ஆசிரியர்: தெளிவத்தை ஜோசப். 6 - 7- 1967 சிந்தாமணி.
ஒரு போர்வீரனின் அழகிய மார்பினைப் போல் குவிந்து பரந்து கிடக்கும் அந்தக் கடற்கரையின் வெண்மணற்பரப்பை, பாக்கு நீரி னைக் கடற் கன்னி தன் அலைக்கரங்
63

Page 34
களால் வருடியபடி "அணை த் து மகிழ்கிருள். கீழ்வானப் பொன் னரங்கில், குங்கும வண்ணத்திரை யை நீக்கிக்கொண்டு க தி ர வன் அன்றைய நாடகத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. கிழக்கு வெளுக் கிறது. கதை: அகிலகள்?
- ஆசிரியர்: செ. கந்தசாமி.
2-4 - 1969 சிந்தாமணி.
ό o ᏨᏕᏨᏕ
காட்டிக் கொடுக்கின்ற கய மையிலேயே இன்பத்தையும் காசை யும் தேடுகின்ற ஊர் மக்களின் களிப்பைப்போல நேரம் ஓடியோடிக் களித்துக் கொண்டிருந்தது. கதை: "கடலும் கனவும்?
- ஆசிரியர்: கயிலாசநாதன்.
13 - 10 - 1968 of pr(8ggll.
இரவுப் பெண் அன்ன நடை போட்டுக்கொண்டிருந்தாள். தென் றல் அவள் முந்தானையை இழுத் துப்பிடித்தாள். கறுப்பு முந்தானை விரிந்து பறந்து உ ல கத் தை மறைத்தது. அந்தத்திரை மறை விலே எத்தனையோ அற்புத அக் கிரமங்கள்! இன்றுமட்டுமா? யுகம் யுகங்களாக நடந்து கொண்டிருக் கும் சம்பவம்இது.
கதை பாதிக்குழந்தை?
- ஆசிரியர்: பித்தன். நூல்: முஸ்லிம் கதைமலர்.
தொகுப்பு:
அபூஷனுTLT
ஓட்டமாவடி
64
ஈழத்து ரத்தினங்கள் ---
ஈழத்து எழுத்தாளர்கள் பலரது படைப்புகளில், கருத் துச் செறிவுள்ள உவமை, கச் சிதமான வர்ணனை, கலையழகு மிக்க சிந்தனை நிறைய விரவிக் கிடப்பதை வாசகர்கள் அவ தானித்திருப்பார்கள். எத்த னையோ ச ந் த ர் ப் பங்களில் அவை உங்கள் நெஞ்சைத் தொட்டிருக்கும். உ ங் கள் கருத்தில் பதிந்துவிட்ட அப் படியான பகுதிகளை எழுதி அனுப்பிவைத்தால் 'ஈழத்து ரத்தினங்கள்" என்ற பகுதி யில் அவற்றை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பிரசுரிப்போம். நீங்கள் அனுப்பும் பகுதி எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும் (உரிய பக்கத்துடன்)குறித்து அனுப்ப
வேண்டும்.
பத்திரிகை, சஞ்சிகைகள் முதலியவற்றில் வெளிவந்த, கதை கட்டுரைகளிலிருந்து பொறுக்கி எ டு த் த ரத்தி னங்களாக இருந்தால் குறி த்த கதை, கட்டுரை, பிரசுர
மான பத்திரிகைப் பெயர்,
திகதி ஆகியவற்றைக் குறிப் பிட்டு அனுப்பவேண்டும்.
* ஈழத்து ரத்தினங்கள் * அனுப்பவேண்டிய முகவரி :-
ஆசிரியர் 'மலர்' 21, மத்திய வீதி,
மட்டக்களப்பு

"மலர்' சஞ்சிகைக்கு ஏன் ஈழத்து வாசகர்கள் முழு ஆதரவு கொடுக்கி வேண்டும் என்பதற்குச் சில காரணங்கள் --—
1. ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்கு ஆக்கம் தரும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆத்மார்த்தமாக உழைக்கும் சஞ் சிகை ** மலர்' "
2. அரசியல் கலப்பற்று, காட்சிச்சார்பற்று, கோஷ்டிச் " afiltri பற்று, மதசார்பற்று, பிரதேசச்சார்பற்று, உண்மை, நேர்மை, நடுநிலை என்ற கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித்து வரும் சஞ்சிகை 'மலர்'
3. மட்டக்களப்பு எழுத் தாளர், யாழ்ப்பாணத்து எழுத்தாளர், மலைநாட்டு எழுத்தாளர் முஸ்லிம் எழுத்தாளர் என்ற பாகு பாடற்று, ஈழத்து எழுத்தாளர் படைப்புகளைத் தாங்கி வரு வது * மலர்'
4. பழம் பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளுடன், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இடமளித்து புதிய தலை முறையினரை வளர்த்துவரும் ஏடு "மலர்'
5. எழுத்தாளர்களை உரிய முறை யில் அறிமுகப்படுத்தியும், ஈழத்து எழுத்தாளர் நூல்களுக்கு இலவசவிளம்பரம் அளித் தும், ஈழத்து நூல்களை அன்பளிப்புச் செய்தும், ஈழத்து இலக் கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கூறியும், பணிபுரிவது 'மலர்'
6. எல்லா வகையிலும் ஈழத்து இலக்கிய உலகைப் பிரதிநிதித் துவப்படுத்த முற்றிலும் தகுதி வாய்ந்த ஒரே ஏடு "மலர்'
(முன்புற உள் அட்டையைப் பார்க்கவும்)

Page 35
- "
ஜாசப் பி. மறுே
- LST. G.T.
நாகவிங்கம்,
--- 으
வெளியீடு:- 'மவர்
եւ
மட்டக்கரைப்
கெளரவ
:ள்ப்பு,
- இரா.
II. ಇಂದಿಗೆ
 
 
 
 

ကြီး” ూడి 1970 பப்பட்டது. விலை சதம் =/50.
الى 婷 டிெ. if 'e') ಪ್ರ್ಯ
5ாகைவிரித்தாள் - வண்ண பிட்ட கன்மலர்ந்து துTதுவிடுத்தாள்.
கலைக்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு கன்னியின் இனிய சோகவரலாறு
துப் பிரபல நாவலாசிரியர்
Fr " நவ ம்
எழுதும் வைமிக்க தொடர்
கள் 'மலர்' சஞ்சிகையில்
ஆரம்பமாகிறது.
இன்றே சந்தரதாரராகச்
சேர்ந்துவிடுங்கள்
இ. 31 தந்தோலிக்கி அச்சகம், இல, 18, இலக்கியக்குழு, 21 மத்திய திே, மட்டத் 21 மக்கிய வீதி, மட்டககளப்பு