கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1990.10

Page 1
தபாற்பெட்டி இல. 77, யாழ்ப்பான
" | '' )
கெளரவ ஆசிரியர்: தி ந. க. சி. குலரத்தினம்
பருகியவ சைமன் ஆ இவர்கள் காலத்து
. வரலாற்றில் காந்தியடிகளைப் போல ஒருவரைக் காணமுடியாது என்று உலகப் பெரியோர்களே ஒரே மனத்தராய் எப்பவோ அறுதியிட்டுக் கூறி
விட்டார்கள்.
காந்தியடிகள் சிம்மாசனத்தில் இருக்க வேண்டியவர், அவர் அதை விரும்பாமல் துடைப் பம் ஏந்திச் சேரி துப்புரவாக்கிஞர். மைல் கணக் * காக நடந்து சென்று மக்களே நேரி நீ க எண் டு
கண்ணிர் துடைத்தார்.
பேராசிரியர்கள், பேரதிகாரம் உள்ளவர்கள் காந்தியடிகளின் காலடியில் அமர்ந்து தாங்கள் என்ன பணி செய்தல் வேண்டும் என்று இரந்து கேட்டார்கள்.
* எவரையும் வெறுக்காம
 
 

- 『-- тг. தொலைபேசி: 23233'
ஐப்பசி 1990 இதழ் - 178
காத்மா நினைவு
keLLeLLLLLLLLLLLL00L00000L0L0LL0LL0Le0e0L0L0TeLLLLLLTLLTLLLLLLL
ரு நாள் மகாகவி இரவீந்திரநாத்
காந்திமகானைப் பார்த்து, "நீங் மகாத்மா” என்றர். அன்றிருந்து யடிகள் உலகுக்கே ம காத் மா
T.
ாவீரர் பலர் பச்சை இறைச்சி தின்று இரத்தம் ர்கள். அற்றிலா என்னும் அவுனன், என்னும் பயங்கரவாதி. ஹிட்லர், இடியமின் வரலாற்றுக் காலத்து அரக்கர். இதிகாச அரக்கர், அவுனர், அசுரர் வேறணவர்கள்.
சர்வாதிகாரிகள் முடிமன்னர்களின் ஆனே இலவம் பஞ்சாய்ப்பறக்க காந்தியடிகளின் பணிப்பு பெரியவர்களேக் குற்துறவல் செய்யவைத்தது.
எல்லாச்சமயத்தவரும் காந்தியடிகளின் வாழ்க்கை தத் தம் சமயஞ்சார்ந்தது என்று கூறிமசிழ்ந்ததும் உண்டு. காந் நியடிகள் மனிதனுகவே வாழ்ந்தார். அவரை முனிவர் என் தா, அதிமனிதன், என்பதா யோகி என்பதா என்று அறிய முடியா திருக்கிறது. அவர் கடமையைச்செய்து அதனுல் மன நிம்மதி கண்டவர். அவரால் அவர் பிதந்தநாடு அல்ல. அவர் விதந்த ஒக்ரோபர் மாதம் தனிச் சிதப்படைந்து விட்டது. ஒக்டோபரா? அது காந்தி மாதம்.
இமயமும் புனிதம், கங்கையும் புனிதம், காந்தியும் புனிதம், காந்தி உள்ளத்தால் உண்மை, வாயால் வாய்மை உடம்பால் மெய்ம்மை கண்டவர். சத்தியம் ஒன்றுதான் வெல்லும் என்னும் உபநிடத மகாவாக்கியத்தை செயலில் கண்டவர். | ।
ல் வாழ்வதே நல்வாழ்வு *
*** - * * r.

Page 2
மில்க்வைர
. சிவமயம்
சுந்தரமூர்த்திநாயனுர் தேவாரம் திருக்கழுமலம் பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம் குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும் வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும் வாய்வெரு வித்தொழு தேன் விதி யாலே பண்டைநம் பலமன மூங்களைத் தொன்ருய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங் கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. திருச்சிற்றம்பலம் அடியேன் நித்திரையில், "குண்டலமும் குழையும் விளங்கும் காதினன்” என்றும், ஒலியுள்ள வன்மையான மழுப்படைதாங்கியவ னென்றும், வண்டுகள் ஒளக்கின்ற கொன்றைமலர் சூடியவனென்றும் வாய்பிதற்றியபின், விழித்ததும் ஒருமைப்பட்ட மனத்தினணுய் இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களை விசாரித்து அங்கெல்லாம் சென்றுவணங்கினேன். வணங்கி வரும்வழியில் தாழைகளை யுடைய கடற்கரையில் அலைகள் மோதுகின்ற திருக்கழு மலம் என்னும் தலத்தில் இறைவன் கைலையில் இருந்த வாறு எழுந்தருளியிருப்பக் கண்டுகொண்டேன்.
இரவு (நற்செயலுக்காகப் பிறர் உதவியை நாடல்)
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்னின்று
ས་
இரப்புமோ ரேனர் உடைத்து.
* என்றும் கனிவான
 
 

} செய்தி |- 10
ஈவதை ஒளியாத உள்ளமுடையராய் இன்னுர் இன்னு ருக்கு இன்னவாறு கொடுத்தல் தமது கடமை என்று கருதி இருக்கும் பெரியவர்களிடம் இரப்பதும் ஓர் அழ குடையதேயாம்.
Begging To beg standing before them that know their duty and have no hiding in their hearts- this has a grace.
மரம்நாட்டு விழா
நகரத்தின் பலபகுதிகள் சேதமுற்று விட்டன. நடந் ததையிட்டுக் கவலைப்படுவதால் உடம்பும் மனமும் தாக்கப் படலாம், அதனுல் சுறுசுறுப்பாக நாங்கள் எங்கள் சுற்ற டலைத் தூய்மையாக்கிப் பசுமையாக்குவோம். பலவித மரங்களை உடனடியாக நடுவோம். துன்பத்தில் இன்பம் காண மரங்களை நடுவோம். உங்களுக்கு என்ன மரக் கன்று தேவை? என்ன விதை தேவை? நாற்று மேடை கள் உங்களுக்காக கன்றுகளைத் தந்துகொண்டிருக் கின்றன. வாருங்கள் இலவசமாகத் தருவோம்,
வேம்பு, மலைவேம்பு, இலுப்பை, இப்பில் இப்பில் நெல்லி, மருது, விளா, பப்பா, திருவாத்தி வன்னி, கடம்பு, ஊர்த்தேக்கு, கொன்றை, மரமுந்திரி,
இன்னும்
வீட்டுத் தேவைக்கான செடிகொடிகள் விதைகள், வீட்டுத்தோட்டம் சிக்கன வாழ்வுக்கு அவசியம். கீரைப் பிடி விற்கிற விலையிலே வீட்டுக்கொல்லையில் அகத்திக்கீரை கையான்தகரை கைகொடுக்குந் தரமானவை.
மில்க் வைற் அனுதாபம்
அழுதாலும் தீராது. இது பழஞ்சலிப்பு என்ருலும் அண்மையில் உண்டான அசம்பாவிதமான தாக்கங்களில் துக்கம் துயரம் அனுபவித்த எல்லோருக்கும் எங்கள் அனுதாபங்கலந்த ஆறுதல்; என்ன செய்வோம்! விதி விளையாடிற்று. எல்லாம் இறைவன் செயல்.
*" எங்கள் பாவம் எங்கள் பாவம்
எங்கள் பாவம் ஈசனே ’
ஏறின விலை இறங்குகிறது
நல்ல காலம் வர்த்தகர்கள், வியாபாரிகள் பண்டங் களின் விலைகளை நாள்தோறும் குறைத்து வருகிருர்கள். சீனி, மா, அரிசி, பருப்பு, உளுந்து, பயறு, எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. இவை கிடையாமற் போன தும் உண்டு. ஒரு நெருப்புக்குச்சி பத்து சதம் விலை பெற்றதும் உண்டு. ஓர் அரிசிக்குறுணியும் ஒரு விலை பெற்றது தானே. ஒரு பிஞ்சு மிளகாய் ஐந்து சதத்துக்கு மேல் விலைபோனது. எட்டாத கொப்பெல்லாம் தாவி வந்த சங்கிலி, இறங்கிறங்கு சங்கிலி என நாம் கூறும் வகையில் இறங்குகிறது. வீக்கம் வற்றுகிறது. வேதனை குறைகிறது. வியாபாரிகளுக்கு வணக்கம்.
பான பேச்சு நன்மைதரும் *

Page 3
I. O-90 மில்க்வைற்
அறிந்து கொள்ளுங்கள்
1. மிகப் பழைய பல்கலைக்கழகம்
சேக்ஸ்பியர் நாடகங்களில் ஒன்றில் மொறக்கோ இளவரசர் ஒரு பாத்திரமாய் வருகிருர். மொறக்கோ ஆபிரிக்காவில் உள்ளநாடு. அங்கே பெஸ் என்னும் நகரத் தில் 859 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பிக் கப் பெற்றதாம் அதன் பெயர் கருயின் பல்கலைக்கழகம்.
2. பழைய வானசாத்திரி ஒருவர்
இரண்டாயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அனெக்சகோறஸ் என்னும் கிரேக்க ஞானி, சந்திரன் வளர்வின் தயும் தேய்வதையும், சந்திரகிரகணம் சூரியகிரகணம் என்பனவற்றையும் அருமையாக விளக்கி யுள்ளார்.
3. கமலாநேரு வித்தியாலயம்
நேரு குடும்பத்தாரின் அலகபாத்நகரில் நேருவின் மகள் இந்திரா தன் தாயார் கமலாவின் நினை வாக அமைத்த கல்விக்கூடம் துமலாநேரு வித்தியாலயம்.
4. பகிஸ்காரம்
பகிஸ்காரம் என்பது ஆங்கிலத்தில் போய்கொட் என்னும் பதத்திலிருந்து வந்ததாம். அதை ஒன்றி ஒதுக் கல் என்பர். யாழ்ப்பாணத்துத் தமிழர் 1931 ஆம் ஆண்டில் முதல் அரசாங்கசபைத் தேர்தலைப் பகிஸ்கரித் தனர். அத ன ல் யாழ்ப்பாணம், காங்கேயன்துறை, பருத்தித்துறை, தீவுப்பகுதிகளில் தேர்தல்கள் நடைபெற வில்லை.
இனி போய்கொட் என்பது 1880 ஆம் ஆண்டில் சாள்ஸ் கனிங்காம் போய்கொட் என்பவர் குத்தகை கார சிடம் வாடகைப் பணம் திருப்தியில்லை என்று கண்டு வாங்க மறுத்தாராம். அவர் பெயர் இவ்வண்ணம் உலகம் எங்கும் மறுப்புக்கு உரியதாகிவிட்டது.
5. சுமேரியர் தயாரித்த நூல்
உலகில் எழுதப்பெற்ற மிகப்பழைய நூல் 5488 ஆண்டுகளுக்கு முந்தியதாம் சுமேரியாவில் இனன் கோயில டியில் கண்டுபிடித்தார்களாம். இனன் சூரியன் அங்கே வாழ்ந்த தமிழரின் படைப்பாகலாம் எனக்கருத இட
* இன்ப துன்பங்களைச் சமமாக
 

செய்தி 3.
முண்டு. எழுத்துக்கள் சித்திரவடிவானவை என்பர். இத. தகைய நூல் ஈருக் நாட்டில் உள்ளது. ஈருக் என்ப பழைய மெசொப்பொட்டேமியா.
6.
மூலிகைகளும் மருந்துச்சரக்குகளும்
தமிழ்நாட்டுச் சித்தவைத்தியமும் வடநாட்டு ஆயுர்
வேதவைத்தியமும் மூலிகைகள் சாக்குகளோடு தொடர் புடையவை. இன்று ஐரோப்பிய வைத்திய நிபுணர்கள் இந்தியாவின் மூலிகைகளில் நல்ல ஆராய்ச்சி செய்து வருகிருர்கள். நெல்லி, சீரகம், ஆடுதின்னப்பாலை, கரு வேப்பிலை, கருஞ்சீரகம், கடுக்காய், சிறுகுறிஞ்சா, அதி மதுரம் என்பன பெரும் புகழ் பெற்றுள்ளன,
fi OJ5TL'LLGQIf 9'iLIlq. LIIíbG)J*T6ñI5))f856ir
10.
1.
2.
13.
14.
5.
எல்லோரையும் புகழ்பவன் எவரையுமே புகழ்வ தில்லை. இருளைத் திட்டுவதிலும் பார்க்க ஒரு மெழுகுதிரி யைக் கொளுத்துதல் மேல். சேற்றை அள்ளி எறிந்தகை அழுக்காகவே இருக்கும்
மகிழ்ச்சியைக் கொடுப்பதால் நாமும் அதை அடை கிருேம்.
அறிவாளிகளிடையே அறிவைக் காட்டலாம், மூட ரிடம் மெளனமே மேலானது. தீமை செய்வதை மறைக்கலாம், அதன் விளைவை மறைக்கமுடியாது. உதவி செய்யும் கரங்கள் மந்திரமோதும் உதடுகளிற் புனிதமானவை.
நீயே உன் நீதிபதியாயிருந்தால் மகிழ்ச்சி தானே வரும்.
மூடன் தன் மடமை தவிர எல்லாவற்றைய.) யோசிப்பான்.
தாய்மார் எல்லோரும் தத்தம் குழந்தைகள் அழகானவர்கள் என்றே கருதுவர். கண்ணுடி வீட்டில் வாழ்பவர் அயலாருக்குக் கல் எறிதலாகாது.
அன்பே வாழ்வு, வெறுப்பே மரணம்.
சிறிய சித்துக்களோடு திருப்திப்படுபவருக்குக் கடவுள் தம்மைக் காட்டுவதில்லை.
சூழலுக்குத்தக்கதாகத் தன்னை ஒழுங்குபடுத்துபவன் மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
இரக்கம் காட்டும்போது கொள்பவன் பயனடையா விட்டாலும், கொடுப்பவன் (காட்டுபவன்) பயன டைகிறன்.
ப் பாவித்தல் நன்மைதரும் *

Page 4
மில்க்வைற்
ag Gynuu
சரியையாவது ஆலயங்களில் திருவலகிடுதல், திருடெ ழுக்கிடுதல், நந்தவனம் வைத்தல், பூப்பறித்தல், மாஃ கட்டுதல், தமக்கு இஷ்டமான தெய்வ மூர்த்தத்தை நியமமாக வழிபடுதல், அடியார்களை வழிபடுதல் முதலி புண்ணியங்களைச் செய்தலாம்.
இவையாவும் புறத்தொழிலால் செய்யப்பெறுபவாய னும் இவற்றுள் நால்வகை மார்க்கங்களும் உள்ளனவ கும். திருமெழுக்கிடுதல் முதலியன சரியையிற் சரியை ஒரு மூர்த்தியை வழிபடுதல் சரியையிற் கிரியை. வழி டுங் கடவுளைத் தியானித்தல் சரியையில் யோகம். இ புண்ணியச் செயல்களால் ஓர் அனுபவம் வாய்க்க பெறுதல் சரியையில் ஞானம்.
சரியையிற் சரியை எனப் பெறும் புண்ணியங்கள் மிகப்பலவாம். அவை முன்னர் சொன்னவற்றேடு திருவிள கிடுதல் திருப்பாவோதல், சுவாமியைக் காவுதல், தீ, பிடித்தல், குடை பிடித்தல், அபிடேகத் திரவியங்க கொடுத்தல், வீதியைத் துப்புரவாக்குதல் கோபுரம், மதி முதலியவற்றில் செடிகொடிகளை நீக்கித் துப்புரவாக்குத முதலியனவாம். குளந்தோன்டுதல் பெரிய திருப்பன யாகும்.
கிரியை
கிரியையாவது புறத்தொழிலால் தொண்டு செய் தோடு, அகத்தே இறைவனைத் தியானித்து வழிபட்டு பூசைகள், விழாக்கள் செய்வதாம். இன்னும் உடையவ என்னும் இறைவனைப் பூசையில் எழுந்தருளச் செய்து நியமமாக அகத்தும் புறத்தும் இறைவனை வழிபடுதலாப இதனைச் சிவபூசை என்பர். இங்ங்ணம் அகத்தொழி புறத்தொழில் இரண்டாலும் இறைவனின் அருவுருவ திருமேனியாகிய சிவலிங்கப் பெருமான நோக்கிச் செ யும் வழிபாடு ஆன்மார்த்தமாயும் அமையும்.
இவ்வழிபாட்டினும் நால்வகை மார்க்கமும் அை யும். பூசைக்கு வேண்டுவனவாகிய திரவியங்களை தே தல் கிரியையிற் சரியை, புறத்திற் பூசித்தல் கிரியையி கிரியை, அகத்தில் பூசித்தல் கிரியையில் யோகம், இவ றில் ஓர் அநுபவம் வாய்க்கப்பெறுதல் ஞானம்.
யோகம்
யோகமாவது இயமம், நியமம் ஆசனம், பிராணுயாம பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னு
* பக்தியின முதிர்ச்சியே
 

செய்தி i-10-90
S.:
5
ப்
il,
டு சிற் 1ற்
ம்
ம்
எட்டுவகைகளிற் படிப்படியாக நின்று அகத்தொழி லால் இறைவனின் அருவத்திருமேனியைத் தியானித் தலாம்.
இத்தகைய அட்டாங்கயோகத்தில் இயமம், நியமம் ஆசனம், பிராணுயாமம் என்னும் நான்கும் யோகத்தில் சரியை. பிரத்தியாகாரம், தாரணை என்னும் இரண்டும் யோகத்தில் கிரியை தியானம் யோகத்தில் யோகம். சமாதி யோகத்தில் ஞானம்.
யோகமாவது அகத்தே தியானஞ் செய்து, மனத்தை அயைவிடாது ஒடுக்கி, புலன்களை அடக்கி, அந்தக் கரணங்களைச் சுத்தமாக்கி இறைவனையன்றி வேருென் றையும் நினையாமல் அவரை வழிபட்டு அருள்பெறுத 6)nt Li.
ஞானம்
ஞானமாவது ஞானகுருவின் உபதேசத்தைக் கேட் டலும், அதனைச் சிந்தித்தலும், உபதேசப்பொருளைத் தெளிதலும், தெளிந்தவண்ணம் நிட்டையில் அழுந்துத லுமாம். ஞானமாவது கடவுள், ஆன்மா, பாசம் ஆகிய முப்பொருளியல்புகளை முறையாக உணர்த்தலுமாம். இன்னும் அறிவால் இறைவனைச் சோதிமயமாகக் கண்டு அருள்பெறுதலாம்.
ஞானமார்க்கத்திலேயும் நால்வகை மார்க்கங்களும் அமையும். கேட்டல் என்பது ஞானத்திற் சரியை, சிந் தித்தல் ஞானத்தில் கிரியை, தெளிதல் ஞானத்தில் யோகம், நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞானம்.
நால்வகை மார்க்கம்
சரியை, கிரியை, யேர்கம், ஞானம் எனவுள்ள நால் வழிகளையும் முறையே தாசமார்க்கம், சற்புத்திரமார்க் கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் கூறுவர். இவற் றுள் முன்னது பின்னதற்குப் படியாய் அமைந்தது. இவற் றின் அமைவைத் தாயுமானசுவாமிகள் உவமைமூலம் அருமையாக விளக்கியுள்ளார்.
"விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனிபோல் அன்ருேபராபரமே’
Definitions for:
1. The Welfare State 2. Prefabs 3. Films 4. Floodlights 5. Television Set
1. A state in which socialist principles are used to
ensure the welfare of the people. 2. A house composed of inter-locking standard parts
made separately before hand. 3. Films are a series of moving pictures which tell
a story. 4. Strong beams of light, all directed at the same
point. 5. An apparatus for receiving pictures transmitted
electrically from a distance.
ஞானம் பெற்றதன் அறிகுறி *

Page 5
I-10-90 மில்க்வை
அரியலை என்னும் அருங்கலையூர்
யாழ்ப்பாணத்து அரசர்கள் காலத்திலும் அதற்குப் பி ந் தி யும் கலை யார் வந்த தும் பி ய மக்கள் தொகுதி வாழ்ந்து வந்தஇடம் அரியாலையாகும். அரச றிய வாழ்ந்த அந்த வூர் மக்களின் அறிவுத்திறன், ஆடல் பாடல் அருங்கலைத்திறன், உடலோம்பும் விளையாட்டுத் திறன் வித்தியா விருத்தித்திறன் அளவிட முடியாதவை
அரியாலை கதிரவேலு அவர்கள் பழைய உள்ளூர் சபையிலே கெளரவ அங்கத்தவராயிருந்ததோடு, சைவ பரிபாலன சபையிலும் பெரியவராயிருந்தவர். இன்னும் Gafri. இராமநாதன் அவர்களின் சேவையை வடபகுதிக்கு வாய்ப்பாகும் வண்ணம் வகுத்துத் திசைதிருப்பியவர். அன்றி 1896 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துப் பதினேழாம் நாள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்ற பெரிய தொரு வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் பதினைவருள் ஒருவராகத் தெரியப்பெற்றவர். அந்த நிறுவனம் 1000 பங்குகளைக் கொண்ட ஒருலட்சம் ரூபா மூலதனத்தில் ஆரம்பிக்கப் பெற்றது. இங்ஙனம் புகழ் பூத்த கதிரவேலு அவர்களின் மைந்தர்களே நகரபிதா C, பொன்னம்பலம் அவர்களும். பழைய மந்திரி C. சிற்றம்பலம் அவர்களு மாவர். சிற்றம்பலம் அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துக் கணிதத்துறையில் திறமைச்சித்தி பெற்ற முது மா னியுமாவர். அவர் இலங்கைச் சிவில் சேவையில் சிறந்து விளங்கி அரசாங்க அதிபராயும் இருந்தவர். இவர்கள் யாவரும் நாவலர் வழியில் நடந்தவர்கள்.
அரியாலையூர்க் கதிரவேலு அவர்கள் த ரமா ன ஆங்கிலம் கைவந்தவர். முன்னர் நீதியரசர் செல்லப்பா பிள்ளை அவர்கள் இந்துஒகன் நடத்தியபின், அப்புக் காத்தர் நாகலிங்கம் அவர்கள் தமது கற்கத்தா மறு மலர்ச்சிப் பாணியில் எழுதியதும் உண்டு. நாகலிங்கம் அவர்களுக்குப் பின் இந்துஒகன் பத்திரிகையை நடத்தி யவர் கதிரவேலு அவர்களாவர். இவர் கெளரவ சபாபதி யாரோடு சேர்ந்தும், தனித்தும் எழுதியவர். கதிரவேலு அவர்களைச் சைவம் வளர்த்த சான்ருேர் வரிசையிலே தான் காணவேண்டும்.
அரியாலை என்றதும் அங்கே திருவருள் பாலிக்கும் ஒத்திவிநாயகர் ஆலயமும், கல்விக் கண் திறக்கும் கண்க ரத்தின மத்திய மகாவித்தியாலயமும், பார்பதி விக்தி யாலயமும், பாடலொலிக்கும் ஏழிசைச் சூழலும், விளை யாட்டுக் கழகமும், மக்களுக்கு வாழ்வளிக்கும் மணியம் தோப்பும் இன்னபிறவும் நினைவுக்கு வருதல் வழக்கம்.
ஆனந்தன் வடலிமுதலாய பனந்தோப்புக்கள் அன்று பனட்டுக்குப் பெயரெடுத்துக் கொடுத்தவை. மொறட் டுவா நகரின் பிரம்பு வேலையிற் பார்க்கப் பெருமளவு திறமை வாய்ந்தது அரியாலை பிரம்புவேலை.
பலவிதமான தொழில்களை மகத்துவமாகச் செய்தும் உப்புவிளைவித்தும், உடுபுடவை செய்தும், சாயம் தோய்த் தும் பிறதொழில்களில் ஈடுபட்டும் உடல் உழைப்பால் நலிந்தும் உள்ளம் களைக்காமல் கலைகள் வளர்த்தவர்கள். அரியாலையூரினர்.
எதையும் இறைவன் பெயர

ற் செய்தி 5
சித்திரம், ஓவியம், நடனம், நாட்டியம், நாடகம் ஆகிய எத்திறக்கலைகளுக்கும் இடமளிப்பது அரியாலை. சட்டத்துறையா, மருத்துவமா, மனேதத்துவமா, விஞ் ஞானமா இரசாயனமா, கூட்டுறவா எதுவேண்டுமா ஞலும் அது மெத்த வளர்வது அரியாலையிலேதான்
6f6f6)[TLD •
பண்டிதர் இராசையா பழந்தமிழ் இலக்கிய இலக் கண வித்தகர். தேடிவந்த அதிபர் பதவியை "சள்ளுப் பிடித்த வேலை" என்று தட்டிக்கழித்தபின், பெரியவர் கள் வற்புறுத்திக் கொடுக்க ஏற்றுக்கொண்டவர். எவர் களோடும் இனிமையாகப் பேசிப்பழகி நகைச்சுவை கண்டஅவரின் வாகனம் ஒரு பழைய றலிசைக்கிள். எவ்வித ஆடம்பரமுமின்றிக் கம்பன் கழகத்தில் கம்பராமாய னத்தில் அயோத்தியா காண்டத்தை அவர் பேச, அறு நூறு பேருக்கும் அதிகமானேர் ஆடாமல் அசையாமல் அங்காந்திருந்து கேட்டார்கள். தலைவர் நீ தி ய ர சர் தம்பையா அவர்களும் கன்னத்தில் விரல் வைத்தவாறு காதுகொடுத்துக் கவனமாகக் கேட்டுமகிழ்ந்தார்.
இனி கூட்டுறவுத் துறைக்கு முன்னேடிகளுள் ஒரு ராய அப்புக்காத்தர் அருளம்பலம் அவர்களை என் சொல்லி எழுதுவது. தமிழன் கண்ட தலைப்பாகையைத் தவாது அணிந்து கொள்ளும் அவர் ஒரு பண்பாட்டுத் தலைவரு மாவார். (தொடரும்)
(விடைகள் வேறிடத்தில்)
உலகில் மிகவுயரத்திலுள்ள புகையிரதப் பாதை. மிகநீளமான மோட்டார் வாகன சுரங்கப்பாதை பெண்கள் அரசுரிமை பெறலாகாது என்னும் சட்டம் ஒலிம்பிக் போட்டியில் பிரதானமானவை அவுஸ்திரேலியாவில் உள்ள அரசுகள் ஓடிகோலோன் என்பது கள்ளிச் செடியினத்தின் தொகை தேனீக்களின் மொழி எனப்படுவது மண்டுகங்களின் நஞ்சு உள்ள இடம் ஒரு தலையை வெட்டினல் இருதலைகள் முளைக்கும் Lifrið ti.
11. ஹங்கோயில் உத்தியோகமொழி 12. ததாஸ்து என்பதன் கிரேக்க மொழி 18 சனிக்கிரகத்தின் சந்திரர் தொகை 14 லாப்லாந்து மக்களுக்கு ஆதாரமான மிருகம் 15, சிந்து நதி கலக்கும் கடல் 16. ஒல்லி நாட்டின் தலைநகர் 17. புகையிலையில் உள்ள நஞ்சின் பெயர் 18 பெல்ஜியம் நாட்டின் உத்தியோக மொழி
9. பூமியதிர்ச்சியை உணர்த்தும் கருவி 20. இஸ்ரேல் நாடு உதயமான ஆண்டு
ால் செய்வதே மேலானதாகும்

Page 6
அவனும் அவளும் ஒருவரை ஒருவர் நோக்கியமை உண்மை, அவர்களின் முதல் நோக்கிலேயே மங்கலகர மான அலுவல் நிறைவேறிவிட்டது. ஆனல் நாகரிகம், பண்பாடு, சால்பு என்பன அவர்களை அவசரப்படேல் என்று தடுத்தன. அவன் நோக்கியதும் அவள் நோக்கி யமை, தாக்கி வருத்தும் ஒரு தெய்வப்படையை அவள் கொண்டிருந்தாள் என்று எண்ணவேண்டியிருந்தது.
அதுதான் ‘* நோக்கினுள் நோக்கு எதிர்நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டு அன்னது உடைத்து ' என்று திருவள்ளுவரைப் பாடவைத்தது. அடுத்த நோக் கையும் திருவள்ளுவர் பாடியுள்ளார், அவள் நோக்கு அவனை அன்போடு நோக்கிய நோக்கு. அவள் நோக்கிய பின், மெல்ல நகைத்து நிலத்தைப் பார்த்தாள்; பணிந் தாள். அந்தப் பணிவு வணக்கம் போலமைந்தது. அந்நோக்கு இருவர் நோக்குகளாலும் காதலுண்டாக, அக் காதலுக்கு நீர் பாய்ச்சியமை போலாயிற்று. அதனுல் காதல் வளரும் என்னும் நம்பிக்கை பிறந்தது.
** நோக்கினள் நோக்கி இறைஞ்சினுள்
அது அவள் யாப்பினுள் அட்டிய நீர்"
காதல் என்பது ஒரு நெருப்பு விசேடம். சாதாரண நெருப்பைத் தொட்டால் சுடும். விட்டால் குளிர்வரும். ஆல்ை இந்தத் தீ கிட்ட இருந்தால் குளிரும், எட்டப் போல்ை சுடும். இந்த நெருப்பு அவளுக்குப் பிறவிக் கொடை. அது 'நீங்கின் தெறுாஉம் குறுகுங் கால் தண் ணென்னும்' இப்படியாக தீயான காதல் ஒரு நோயாகப் பற்றி முதிர்கிறது. அது முதிர முதிரச் சந்திரனின் நிலவு நெருப்பாய்ச் சுடும். அழகான வாசனையுள்ள மலர்கள் பட்டால் கொதிக்கும். மற்றவர்களுக்குச் சுகம் பேசும் தென்றல், காதல் நோயாள ரை எரிக்கும்.
இன்னும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் அவர் கள் எட்ட இருக்கும்போது இளவேனில் முறையறியா இளவரசன் போலிருப்பான். சந்திரன் செவ்வியணுய் இருக்கமாட்டான். அவளுக்குக் கூந்தல் குலைகிறது. காப்பு கழன்று விழுகிறது. கணையாழியாய மோதிரம் விரல்களை விட்டு நழுவுகின்றன. மோதிரத்தையே காப் பாக அணியலாம் போல உடல் மெலிகிறது. பாரதி தாசன் பாடிய வகையில் தணலைத் தான் வீசுகிருன் சந்திரனும் என்மேல் " என்கிருள் அவள் ’ அவளுக்குப் பாலும் கசந்தது. படுக்கையும் நொந்தது. "கோலக்கிளி மொழியும் செவியில் குத்தல் எடுத்தது” என்று பாரதி யாரும் பாடினர்.
தண்ணிர் மொண்டு வருவதற்குக் குடத்தோடு வெளியே போன மகள் தாமதித்து வந்ததோடு குடத்
* செய்யவேண்டியதைச் செ
 

செய்தி I-10-90
தில் நீரோடு, மனத்தில் காதலோடு மீண்டதை எப்படி அறிவாள். ஆனல் மகளுக்கு நீர் இல்லாத குளம் குளமா காதவாறு, காதல் இல்லாத மனம் மனமாகாது என்பது புரிந்துவிட்டது.
அன்று அவன் அவளைக்கண்டு காதல் கொண்டு பிரிந்து போனபோது, அவளை யே திரும்பித்திரும்பி பார்த்தவாறு போனன். அவள் அவனுடைய முதுகுப் புறத்தை உன்னிப்பாகப் பார்த்தாள். அது ஆமையின் முதுகைப்போல உயர்ந்தும், நல்ல மயிர் ஒழுங்கு உள்ள தாகவும் இருந்தது. அவன் வலிமைவாய்ந்த வீ ர ன் என்பது துணிபாயிற்று அங்கே எவ்வித வடுவினையோ காயத்தையோ காணவில்லை.
அவனும் தன்பாதையில் போனபோது அவளுடைய சின்ன நெற்றியை, பிறைபோன்ற நெற்றியையே நினைந் தவாறு போனன். சின்ன நெற்றிக்கு அஞ்சிய சிறுத்தை எனத் தன்புலிபோன்ற வீரத்தை எடைபோட்டான்" போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குரிய என்வலிமை, ஒளிபொருந்திய நெற்றியை உடையவள் பொருட்டு அழிந்து போயிற்று.
'ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணுரும் உட்கும் என்பீடு"
பசுமையும் வெண்மையும்
வீட்டுக்கு வீடு விவசாயம் செய்திடுவோம் வீண்பொழுது போக்காமல் விவசாயம் செய்திடுவோம். நாட்டுக்கு நன்மைதரும் நன்மரங்கள் நாட்டிடுவோம் நல்லோரின் அறிவுரையை நாளெல்லாம் போற்றிடுவோம் ஒட்டுக்குள் ஆமைபோல் ஒடுங்கி யிருக்காமல் பாட்டுக்கள் பாடிடுவோம் பழந்தமிழை ஆய்ந்திடுவோம் பட்டிபெருக்கிடுவோம் பனையின் பயன் பெறுவோம் மட்டித் தனமகற்றி கெட்டித் தனமுடனே சுட்டித் தனமாக சுந்தரமார் கமநலத்தை கட்டித் தழுவிக் கண்ணுக நேசித்தால் எட்டிப் பிடிக்க முடியாதே எம்மவரை என்று மில்க்வைற்ருர் எந்நாளும் கூறுகின்ற நன்றி தனநினைந்து நாமெல்லாம் ஒன்றிணைந்து இன்றி லிருந்து எடுப்போ மோர்சபதம் வென்றி கொள்வதற்கு வேகமாய்ச் செயற்பட்டு ஒன்றி வாழ்ந்திட்டால் உயர்வெல்லாம் நமக்கன்றே. பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் வழி
**விவசாயம் செய் திடுவோம்" *" வீட்டுக்கொரு பசு வளர்ப்போம்"
எம். எஸ். இராசையா
சாந்தி அச்சகம்
ய்யாமை சமூக விரோதம் *

Page 7
1-10-90 மில்க்வைர்
அத்திரிகை
அத்திரிகை என்னும் கந்தருவமாவது கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, அங்கே நீராடிநின்ற முனி வர் ஒருவரின் காலப்பற்றி இழுத்தாள். முனிவர் யோகப் பார்வையால் இவள் கந்தருவப் பெண்ணெனக் கண்டு மீனகப் போகுமாறு சபித்தார்.
சாபம் பெற்ற அத்திரிகை முனிவரை வணங்கி விமோசனங் கேட்டபோது முனிவர், ** நீ இரண்டு பிள் ளைகளைப் பெற்று உலகுக்கு ஈந்தபின் கந்தருவரிடம் போகலாம் எனக் கூறினுர்.
அத்திரிகை மீனுகி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த வேளையில் உபரிசரவசு என்பானின் தொடர்பால் கருப் பந்தரித்து ஆண்குழந்தை ஒன்றையும் பெண்குழந்தை ஒன்றையும் கருவுயிர்த்தாள்.
ஆண்பிள்ளையை அந்நாட்டு மன்னன் ஏற்று வளர்த் தான். பெண்குழந்தையை மீனவன் ஒருவன் வளர்த்து வந்தான். வலைஞன் வளர்த்த பெண்குழந்தை அழகு மிக்கவளாய் மச்சகந்தி எனப்பெயர் பெற்றுப் புகழ் பெற்ருள்.
நன்ருக நடந்த நல்லூர்த்திருவிழா
என்ன அதிசயம் இம்முறை கழுகுகளும் பருந்துகளும் அடிக்கடி பறந்து எச்சமிட்டு வேதனைக்குள்ளாக்கிய போதிலும், பருந்துகளையும் கழுகுகளையும் பொருட்படுத் தாது கோழிக்குஞ்சுகள் கொடிமரத்தடியில் பதுங் கி இருந்தபோது, தாய்க் கோழியாய முருகப்பெருமான் சிறகை அகலவிரித்து அத்தனை குஞ்சுகளையும் காப்பாற்றி ஞரே. உன்னலே ஏலாது. ஏலுமென்ருல் வந்துபார் என்றே முருகப்பெருமானின் கோழிக்கொடி கூவிற்று. பருந்துகள்வட்டமிட்டன. கழுகுகள் அவையும் பிறநாட்டுப் பெருங்கழுகுகள் சப்பரம் போலவும் சகடை போலவும் வந்துபோயின.
என்ன அதிசயம் முப்புரத்து அசுரர்கள் தங்கள் இரும்பு, வெள்ளி. தங்கக் கோட்டைகளை பறக்கவிட்டுப் பெரியவர்களை நலியச் செய்யச் சிவபெருமான் புன்சிரிப் பால் கோட்டைகளைத் தவிடு பொடியாக்கினர்.
* செய்யக்கூடாததைச் ெ
 

செய்தி 7
இப்ப கொஞ்சம் கொஞ்சம் இதிகாச காலத்துப் பழங்கதைகள் கட்டுக்கதைகள் அல்ல கட்டவிழ்த்த கதை களாகின்றன. நம்பினுல் நம்புங்கள் நம்பாவிட்டால் விடுங்கள் எல்லாம் சிவன் செயல். ஒரு பொல்லாப்பும் இல்லை.
சித்த வைத்தியத்திற் குழுக்குறி
36 கமதம் ad மணத்தக்காளி 362 கங்காளன் துரிசு
36 கசவம் கடுகு
364 கசற்பம் மஞ்சள்
365 கஞ்சும் முருங்கை
366 கடலாடி நாயுருவி
367 கடற்குருமி கடலுப்
368 கடிப்பகை கடுகு, வேம்பு 369 கடியடு சிற்றரத்தை 370 கடியிரத்தம் மூக்கிரட்டை 97. கடிலா மூக்கிரட்டை 372 கடிரோமம் கோரைக்கிழங்கு 37፰ கடுசரம் கடுகுரோகிணி 374 சுடுதீத்தா வெண்கடுகு 375 கடுநிம்பம் நிலவேம்பு 376 கடுநதி நாயுருவி
377 கருநாபி கல்லுப்பு
378 கருவுப்பி கல்லுப்பு
379 கனிமாசம் இந்துப்பு
380 கந்தம் வெங்காயம் 381 கரியமணி கருஞ்சீரகம் 382 கண்டம் கண்டங்கத்தரி 383 கண்டு கற்கண்டு
384 கரிசாரி கரிசிலாங்கண்ணி 385 கரந்தை சிவகரந்தை 386 கருடன்கிழங்கு பேய்ச்சீந்தில் 387 கருப்புக்கட்டி பனங்கட்டி 388 கடுப்பு ஊமத்தை
389 கடுப்பை வெண்கடுகு 390 கடுமலை
39 கடுமுள் கண்டங்கத்தரி 392 கடுவங்கம் இஞ்சி
393 கடுவன் மாவிலங்கு
394 கடுவிதித்தம் கடுகுரோகணி 395 கடேரிடம் மரமஞ்சள்
396 கணவம் syuta Logh
397 கனவீரம் அலரி
398 கணி வேங்கைமரம் 399 கணிகை முல்லை 400 கனை கரும்பு
-ജങ്ങ
சய்தல் பாவமான செயல் *

Page 8
| - | 0-90 மில்க்வைற்
பக்தியின் பாற்பட்டு மனமுருகித் திருக்கோயிற் பணி
சைவத்தொண்டர் மறைவு
:
புரிந்தவரும், சமூகத்தொண்டரும், நல்ல மனமுள்ளவரு மான நொச்சிகாமம் பொன்னுத்துரை அவர்கள் இன் றில்லை என்பதறிந்து மனம் வருந்துகிறுேம். அவர் ஆன்மா
இறைவன் திருவடிகளில் நித்தியானந்த சுகம் பெறப் பிரார்த்திக்கிருேம்.
s
À : «
இயன்றவரை ஏடுகள் கொடுத்தோம்
மில்க்வைற் தொழிலகம் விஜயதசமி நாளில் ஏடு தொடங்குவதற்கு அரிச்சுவடி விநியோகிக்கும் வழக்கத் தில் ஏடுகள் உபகரித்துள்ளோம். ஏடுகள் தயாரிப்பதற்கு ஒலைகள் தந்துதவிய அன்பர்களுக்கு நன்றி.
இம்முறையும் அமைதியான முறையில் போதிய
Meanings of Words
l. conjecture awtur guess 2. imbike - drink 3. elevate ܚ lift 4. prohibit vnns ban 5. terminate en“ end
உங்களுக்குத் தெரியுமா? இவை விடைகள்
1.
3.
9
10.
l I.
I 2.
13.
l4.
15.
16.
17.
பீரு நாட்டின் மத்திய புகையிரதப் போக்கு அல்ப்ஸ் மலையினூடாக பிரான்ஸ் இத்தாலி இணைப்பு சலிக்லோ (பெல்சியம், நோர்வே, சுவீடின் தாடுக ளில் இன்றும் நடைமுறையில் உள்ளது. நூறுமீற்றர் ஓட்டம், நீளப்பாய்தல், குண்டுஎறிதல், உயரப்பாய்தல், 400 மீற்றர் ஒட்டம், 110 மீற்றர், தடை ஒட்டம், டிஸ்கஸ் எறிதல், தண்டூன்றிப் பாய் தல், யவலின் எறிதல், 1500 மீற்றர் ஒட்டம். நியூசவுத்வேல்ஸ், விக்ரோறியா, தென் அவுஸ்திரே லியா, குவீன்ஸ்லாந்து, தாஸ்மேனியா, மேற்கு அவுஸ்திரேலியா, தலைமைப்பிரதேசம், வடபிர தேசம், என எட்டு, ஜேமனியில் கோலோன் நகரில் தயாரித்தநீர் ஆயிரத்து ஐந்நூறு அவை ஆடும் ஒருவகை நடனம் கண்களினருகில் உள்ள புடைப்புகள் கிரேக்கர் கதையில் வரும் ஹைட்ரு Lomtšuuntrř
ஆமென் ,
பத்து
துருவமான்
அராபியகடல்
சந்தியாகோ
நிக்கொட்டின்
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு. தி. நா
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் * சிவநெறி கெளரவ ஆசிரியர்: திரு. க. சி.

செய்தி d
!. 9Garulaiv I. GFG onreòGassmru
ஆயிரத்துத்தொளாயிரத்து நாற்பத்தெட்டு
மில்க்வைற் ஆதரவாளர்களுக்கு ஒர் நற்செய்தி
சவர்க்காரம் தட்டுப்பாடான வேளையில் நாங்கள் லவைப் பவுடராவது விநியோகித்து ஆதரவாளர்களுக்கு றுதல் செய்தோம். இனி விரைவில் வேண்டிய சவர்க் ார வகைகள் விநியோகித்துத் தங்கள் தேவையை றைவு செய்வோம். தங்கள் நீடித்த நிலையான பேரா ரவுக்கு எங்கள் நன்றி.
వ్లో థ్రో థ్రో # 1 N----- FER SER -od
蚌
A క్లీ 4ళ( م ۔ صحمسوری
භීති රිට් ශිපාෙහ්සාර sYesSeLeeeLLAALLALALALLLYYYSLLLLLAALLLLLLLLZS நீருண்டு நிலமுண்டு நீமியா உரமுண்டு - இனி ஏர்கொண்டு சீர்தேடல் எம் பண்பு நெற்பயிர் உட்பட அனைத்துப் பயிர்களுக்கும் உரிய அடிக்கட்டு உரம்
நிமியா உரமே. GDI LJОЊj) 45. 5/00 IDILI(II)
மொத்தமாக வாங்குவோருக்கு சகாயவிலை அரிய “விவசாயக் கைநூல்" அன்பளிப்பு
பயிர்களைப் பீடைகள் பூச்சிகளிலிருந்தும் பாதுகாக்கத் தீய விளைவில்லாதது வேப்பெண்ணெய் போத்தல் ஒன்று ரூபா 80-00 கொள்கலன் கொண்டு வரவும்
மில்க்வைற் - யாழ்ப்பாணம்
கரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் புரவலர் " க. கனகராசா ஜே. பி. அவர்கள் குலரத்தினம் 1-10.90