கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1990.06

Page 1
حياته
தபாற்பெட்டி இல, 77, யாழ்ப்ட
கெளரவ ஆசிரியர்: திரு. க. சி. குலரத்தின்
៣១
ஏதோ "ஏர்த்டே" என்று ஒருதி என்பது மண், மண்ணை எங்கள் சமய வணங்கிப் பாடுகிறது.
தானியவகைகளேயும், பருப்புவகைகளேயும், பழவ!ை எண்ணெய் வகைகள், இரத்தினக்கற்கள், கரிவகைக இன்றது. மண்ணேக்காக்க மரங்கள் நடுவதில் அரசாங் ஒருவரை நீங்கள் அறிவீர்கள். எந்த விழாவையும் பு மானச் சவற்காரக் கட்டியேதான். உங்களுக்கு என்ன
யோகம் எல்லாச் சமயத்த
 
 
 

B)
-
- H.
= a
ானம், தொலைபேசி; 23233
(
எம் * ஆனி 1990 * இதழ் - 174
56O is
னெம் கொண்டாடப் பெற்றது. ஏர்த் பம் ஐம்பூதங்களிலொன்றம் மதித்து
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் என்று சிவனே மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளினுர், மண்ணில் நல்ல வண்ணம்
வாழலாம் என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனுர் பாடி யருளினுர், நிலம் சுரக்கும்
நிதியம் கணக்கில என்று கம் APRIL. பர் பாடுவர். மண் என்றும் மலடாவதில்லை என்று தமிழ
1990 கத்து இளம் புலவர்கள் கவி யரங்கத்தில் பாடியுள்ளார்கள்.
வெள்ளக்காரி ஒருத்தி oேod Earth நல்ல நிலம் என்று தாய் மண்ணேப் புகழ்ந்து கதை எழுதி புள் ளா ள். கிழங்குவகைகளையும் டிகளையும் வெளிவெளியாகத் தரும் நிலம் ள் இன்னும் பலவற்றை ஏன் பருகும் நீரையும் தரு கத்தையும் முந்திக்கொண்டு நின்று சேவை செய்யும் மரம்நாட்டும் விழாவாகக் கொண்டாடுவது உங்கள் அபி மரம் வேண்டும்? என்றும் மரம் நடலாம். நடுங்கள்.
வருக்கும் பொதுவானது ★

Page 2
2 மில்க்ை
சுந்தரமூர்த்திநாயனுர் தேவாரம் திருப்பாண்டிக் கொடுமுடி (நமச்சிவாயத் திருப்பதிகம்) பண்-பழம் பஞ்சுரம் திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நா நமச்சிவாயவே.
திருச்சிற்றம்பலம் கற்றவர்கள் வணங்குகின்ற திருப்பாண்டிக் கொடு முடியில் எழுந்தருளியிருக்கின்ற தவவடிவினரே, அடியே னுக்கு வேறுதுணையின்றித் தேவரீர் திருவடிகளையே துணை யாகக் கொண்டு பிறவியெடுத்தேன், அன்றி மீண்டும் பிறப்பில்லாத பேறும் பெற்றுள்ளேன். இனிநான் தேவ ரீரை மறந்தாலும் அடியேன் நா நமச்சிவாய மந்திரத் தைக் கூறமறக்கமாட்டாது. இடையருது சொல்லும்நமசிவாய.
ஒலிவலுத்தால் வயிற்றுக்குத்து உண்டாகுமாம்
ஒலிபெருக்கியை உச்சக்கட்டத்தில் முறுக்கி விட்டுச் சங்கீதம் என்னும் போர்வையில் பாடல்களைக் காது செவிடுபடும்படி பாடவிட்டால் கட்டாயம் வயிற்றுவலி உண்டாகும் என்கிருர்கள். அன்று பாழ்த்த குரலெடுத்து ஒருத்தி பாடக்கேட்ட ஒருவன் கழுதையெனக் கருதிஞன் என்பது ஒரு பழம் பாடல் - இன்றைய நிபுணர் 'குடற் புண்உண்டாவதற்கும் பெருஞ்சத்தம் காரணமாகும் GT där 6Gg?rf s6iv . (Noise is sounds that are felt to be unpleasant and irritating)
* யோகம் என்பது கடவுளே
 

வற் செய்தி 1-6-90
இவ்வாறு ஆய்ந்தவர்கள் மனதுக்கு ஒவ்வாத எந்த விதமான சத்தமும் உள்ளூறு விளைவிக்கும் என் கிருர்கள். சிலர் தாமாகவே தம் காதுகளைப் பொத்தும் போது அவர்கள் அந்த வேதனையை வெளிப்படுத்தக் காணலாம்,
பெருஞ்சத்தத்தால் உள்சுரப்பிகளின் வேகம் தடைப் படுதலால் சமிபாடு தடைப்படுகிறது. இதற்குப்பழங் கதை ஒன்று கைகொடுக்கிறது. மான்வேட்டையாடுவோர் பெருமளவில் பறையறையக் கேட்ட மான்கள் மேய்ந்த புல்லை இரைமீட்காது திசைத்து நிற்கவே அவை தம்பாட் டில் இறக்கின்றன. சத்தம் எங்களையும் கொல்லும்.
குடிசெயல்வகை (தான் பிறந்த குடியை அல்லது குலத்தை மேம்படுத் தும் வகை)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள் வினையால் நீளும் குடி.
சுறுசுறுப்பும், நிறைந்த அறிவும் ஆகிய இரண்டுங் கலந்த முயற்சி இடைவிடாது நெடி திருக்குமாயின் குடி யும் உயர்வு அடையும்.
Exalting One's Line
Manly endeavour and ripe wisdom make the house attain its elevation.
Right Words for the Wrong Words Written
1. The elephant Wondered through his farm 2. The lady rewarded the founder of her watch she
had lost. 3. A man of high principals never breaks his word. 4. They could not illicit any information from the
prisoner. 5. Because of a sceptic thumb she could not play
the piano. - 6. A basket was provided for the dispersal of waste
paper.
7. Why are you outstanding come in.
Correct Words
1. wandered 2. finder 3. principles 4, elicit 5. septic 6. disposal 7. standing out
ாாடு இணங்கி வாழ்வதாகும். -x

Page 3
1-6
மில்க்வை 90۔
ஒருவரிப் பழமொழிகள் ஒரு சில
1. சிவனை நினைந்தவர் இயமன அஞ்சார். 2. துணிந்தவருக்குத் துயரம் இல்லை. 3. ஊர்கூடினுல்தான் தேர் இழுக்க முடியும் 4. சாது மிரண்டால் காடு கொள்ளாது. 5. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. 6. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை. 7, பள்ளிக் கணக்குப் புள்ளிக்குதவாது. 8. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு. 9. நாய் வாலை நிமிர்த்த முடியாது. 10. தனிமரம் தோப்பாகாது. 11. புலி பசித்தாலும் புல்லைத் தின்னது. 12. யானை படுத்தால் குதிரை மட்டம். 13. நெருப்பில்லாமல் புகையாது. 14. கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. 15. பல் போனல் சொல் போகும். 16. கடவுளை நம்பினேர் கைவிடப்படார். 17. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 18. எறும்பு ஊரக் கல்லும் தேயும். 19. குந்தித் தின் ருல் குன்றும் மாளும். 20. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
ஒரு வரியில் ஒரு நொடி 1. கையில் தவழும் பையில் உறங்கும். 2. உயர்ந்த கொம்பில் மலர்ந்த பூ 3. அள்ளலாம் கிள்ள முடியாது. 4. எள்ளிலும் சின்ன இலை. 5. செம்பு நிறைய சிவப்பு மாணிக்கம் 6. நான்கு கால் உண்டு நடுவில் உடல் இல்லை 7. பறக்கும் ஆணுல் பறந்து போகாது 8. தண்ணீரில் நீந்தும் தரையில் தத்தும் 9. உச்சிக் கிளையில் ஒரு முழக் குச்சி 10. குட்டி போடும் குவலயத்தில் பறக்கும் 11 சின்னப் பையனுக்குப் பெரிய தொப்பி 12, முத்துப் பல்லழகி முகங்காட்டி நிற்கிருள் 13. வெயிலில் உண்டாகி, காற்றில் உலரும் 14. முதுகு கூனல், வயிறெல்லாம் பற்கள் 15. மணியடித்தால் மலைப்பாம்பு நகரும்
- விடைகள் -
I. Sf75 2. சூடை 3. தண்ணிர் 4. விடத்தல் இலை 5. மாதுளம் பழம் 6. கட்டில் 7. பட்டம் 8. தவளை 9. முருங்கைக்காய் 10. வெளவால் 11. தீக்குச்சி 12. சோழன்பொத்தி 13. வியர்வை 14. அரிவாள் 15. றெயில்வண்டி
சித்தவைத்தியத்தில் குழுக்குறி மொழி
16.
162 , 163.
164.
65.
சிவதடி வெள்ளரிக்காய் சிவம் w w Փ-ւնւկ சிவயோகி O வசம்பு
சிவன் வைடூரியம் சிறுமான் P சிறுகள்ளி
k
ஆசனங்கள் பிராணுயாமம் ே

ற் செய்தி 3
166. இன்னி pá இலவங்கம் 167. சீதை பொன்னுங்காணி 168. சீலம் m சீத்திற்கொடி 169. சீறல் came பெருங்காயம் 170. சுகந்தம் வாழை 171. சுக்கிலம் - வெண்ணெய் 172. சுடுகாடுமீட்டான் - முடக்கொத்தான் 173. சுண்டி m வேர்க்கொம்பு 174. சுமங்கை - ஆடுதின்னுப்பாலை 175. சுயோகி கள் 176. சுள்ளி was. tortiss frt 177. சூதன் kama பாதரசம் 178. சூரி amp எருக்கு 179. சூலி wns சதுரக்கள்ளி 180. செட்டி m மூக்கரட்டை 18 1, சேகரி m நாயுருவி 182. சேந்தகனி கருவாடு 183. சேலை MARS அசோகமரம் 184. சொண்டி na வேர்க்கொம்பு 185 சொர்ணம் கரும்பு 186. Gertrudlb mano ser 187. G.FITLD5Itih இந்துப்பு 188. சோமவல்லி சீந்தில் 189. Gynt pair நீலபாஷாணம் 190. செளண்டி Zha- திப்பிலி 191. செள பாக்கியம் சுக்கு 192, ஞாலமாது to ஊமத்தை 198. ஞானமாது KO I A பொன்னுவரை 194. தங்கை des குவளைப்பூ 195. தச்சன் * ● * மிளகு 196. தட்டான் -e os புடோலங்கொடி 197. தட்டை O. O. O. மூங்கில் 198. தருமராசன் a Lumrðavu oprub 199, தலைவிரித்தான் - - - சாறனை 200. தனிவலிப்பெருமாள் - குப்பைமேனி
புலவர்கள் புகழ்ந்த புரவலன்
புலவர்கள் புகழ வாழ்பவர், விசும்பில் வலவன் ஏவா வானவூர்தியிற் பிரயாணஞ் செய்த புகழுடையவன். பைலட் செலுத்தாது தானே இயங்கும் ஒருவகை யெற் விமானத்தை நினைத்துப் பார்க்கலாம். உடுப்பிட்டி சிவ சம்புப் புலவர் அறுபது பிரபந்தங்கள் செய்தவர். தமிழ் நாட்டுச் சேதுபதிகளின் பரிசும் பெற்றவர். எங்கள் நாட்டின் பெரியவர்களுள் நாகலிங்கம் என்னும் புகழ் பெற்ற அப்புக்காத்தரையும் புகழ்ந்து பாடியவர். அப்புக் காத்தர் நாகலிங்கம் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை செய்தவர். இராமேஸ்வரத்துப் பெருஞ் செல்வஞய இப்ராஹிம் என்பாரின் நண்பன். முஸ்லிம் பெரியார் இராமேஸ்வரத்தில் பல தருமங்கள் செய்தவர். அவரைப் போல் நாகலிங்கம் திருக்கேதீஸ்வரத்தில் நிலையான பணி செய்வதற்கும் முயன்றவர். சிவசம்புப்புலவர் நாகலிங்கம் செய்த நல்லறங்களை நற்றமிழ்ப் பாடல்களிற் பாடியவர், (தொடர்ச்சி 4 ஆம் பக்கம் பார்க்க)
யாகத்துக்குத் துணையானவை *

Page 4
i மில்க்ை
(3 ஆம் பக்கத் தொடர்ச்சி)
புலவர்கள் . . . வாழ்த்தியவர். சிவசம்புப்புலவரின் மாணுக்கன் சுன்னுகம் முருகேசபண்டிதர். முருகேசபண்டிதரிடம் முறையாகப் படித்தவர் சுன்னகம் குமாரசுவாமிப்புலவர். பண்டிதமணி கணபதிப்பிள்ளையை உருவாக்கியவர் குமாரசுவாமிப் புலவர். குமாரசுவாமிப்புலவர் நாகலிங்கம் அவர்களின் நல்லபணிகளைப் பாராட்டியுள்ளார். நாகலிங்கம் தாம் கற்கத்தாவில் வாங்கிவந்த வடமொழி இராமாயணம் முப்பத்திரண்டு தொகுதிகளைக் குமாரசுவாமிப் புலவருக்கு அன்பளிப்புச் செய்தவர்.
வைகறை
மகான் அரவிந்தர் அருளியவை வாழ்வு அனைத்துமே யோகம் இறைவன் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற் புதானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.
தெய்விக உண்மை ஒன்றே நமது இலட்சியம். தேவி பராசத்தியிடம் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தால் இறையருள் விரைவில் வந்து சேரும்
வாழ்வுஎல்லாம் இறையருளைப் பெறுதற்காக வாய்த்த தாகும்.
நமது துறவு உள்ளத்துறவாக இருத்தல் வேண்டும். பற்றுக்களையும் ஆசைகளையும் முற்ருகக் களைதலே முழுத் துறவாகும். எண்ணங்களிலும் செயல்களிலும் சுயநலம் இருக்கலாகாது. அகந்தையை அறவே களைதல் அவசியம். (அரவிந்தர் வங்காளத்துப் பெரிய ஞானி. இளமை யிலேயே இங்கிலாந்தில் வாழ்ந்து கற்று இந்திய சிவில் சேவையில் திறமைச் சித்தி பெற்று, இந்தியாவுக்கு மீண்டு, பெரும் உத்தியோகத்தைத் தொட்டுப்பார்த்து, அதில் மணஞ் செல்லாது, இறையருள் என்ருல் என்ன என்பதை அறிவதற்காகத் தவஞ் செய்தவாறே இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தமையால், புரட்சிக்காரரின், புகலிடமாய பாண்டிச்சேரியை அடைந்தவர்)
வைகறை அன்னையின் அருள்மொழிகள்
வைகறைக்கு முந்திய சாமம் எப்போதும் மிக்க இருண்
• {jت سL போற்றி போற்றி எம்மனே போற்றி! இடையூறெதையும் வெல்லவல்லவனே போற்றி நின்பணி புரியும் எமக்கு இடையூறு புரியாது அருள்வாய் போற்றி. திருக்கோயில்களின் கதவுகளுக்குத் திறவுகோல் விசுவாச முள்ள நேர்மையேயாம். எல்லாவற்றையும் இறைவனுக்கே நிவேதனஞ் செய்தால் அமைதி நீடிக்கும் காத்திருக்கக் கற்றவனுக்குக் காலம் கைக்குள். மானுடசாதனங்கள் எவ்வளவு, எவ்வளவு சக்திவாய்ந்தன வாயினும் நாம் அவற்றை நம்பியிருக்கவில்லை. இறை வன் திருவருளையே நம்பியுள்ளோம்.
யோகம் திருவருை

வற் செய்தி I-6-90
(அன்னை என்பவர் யாவர்? அவர் மிகப்பெரிய பழைய கத்தோலிக்க மதநாடாய பிரான்ஸ் தேசத்திலிருந்து இந்து மதச் சூழலை நாடி வந்தபெண். வங்காளத்து ஞான சூரியனப் ஒளிவீசி, பாண்டிச்சேரியில் புகலிடம் தேடிய அரவிந்த மகானிடம் ஞானம் பெற்ற பெண் குலவிளக்கு.)
நாங்கள் பெரியவர்கள்
நாங்கள் பெரியவர்கள் எங்கள் வாழ்க்கையோடு சமயம் பின்னிப் பிணைந்துள்ளது. எங்கள் இறைவன் மரத்தின் வேர்போல மறைந்து நின்றவாறே எமக்கு வாழ்வளிக்கிருர், அவர் எமக்குத் தோன்றத்துணையாக உள்ளார். நாம் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பது அன்று தொடக்கம் இன்றுவரையும் எம்மிடையே புகுந்து வாழ்ந்து வருபவர்களை நாம் ஆதரித்துவருதல் கொண்டு அறியவுள்ளது.
னங்கள் தெய்வம் மறைந்திருந்தவாறே வேண்டும் போது வெளிப்பட்டு வேண்டப்படுவதறிந்து ஈய்ந்தரு ளுவர். அவர் பாரிடை ஐந்தாய், நீரிடை நான்காய், தீயிடை மூன்ருய், வளியிடை இரண்டாய், வெளியிடை ஒன்ருய் விளங்குவர். அவரில்லாமல் உலகில் எதுவுமில்லை. எங்கள் வாழ்வில் சமய அடிப்படையில் கலைகள் மலர்ந்துள்ளன. அவை பொருளாதாரம், உணவு, உடை அணிகலன்கள், பொழுதுபோக்கு, உறக்கம் முதலியன சம்பந்தமாக அறுபத்து நான்காக ஒளிவீசுவன புராதன மான கருத்தை வெளியிடுகின்றன.
எங்கள் வாழ்க்கைத் தத்துவம் இறைவன் ஒருவன் இருக்கிருர் என்றும், உயிர்கள் பலவாக இருக்கின்றன என்றும் புலணுகியுள்ள உலகம் உயிர்களைப் பந் தித்து நிற்கிறது என்றும் கருதுவதேயாம். எங்கள் பெரி யவர்கள் இவற்றைப் பதி, பசு, பாசம் என்னும் முப் பொருளுண்மை என ஆராய்வார்கள்.
இலந்தைக்காட்டு எறும்புகள் பாடு அவை கூடிய மாநாடு (பாரத்துவாச கோத்திர பால்வண்ண சாஸ்திரியார்)
அன்று இலந்தைக் காட்டில் எறும்புகள் மாநாடு காட்டிலுள்ள எறும்புகள் யாவும் உணவுப் பருக்கை ஏந்தியவாறு நிரைதவருமல் ஊர்ந்து போயின. காட்டி லுள்ள பலசாதி எறும்புகளும் தங்கள் பிரதியாளர்களைப் பார்வையாளர்களாயும், பிரதிநிதிகளாயும் அனுப்பி யிருந்தன.
எல்லா எறும் பினங்களும் ஏற்றுக்கொள்ளும் வகை யில் ஒழுக்கொறும்புகளின் தலைவராய் வந்த சாது என் னும் எறும்பஞர் தலைமை தாங்கி வரவேற்புரையும் பேசியது. அதைத் தொடர்ந்து தலைமையுரையும் பேசியது. எல்லா எறும்புகளும் அடையாமல் இருந்து கேட்டன. கேளும் மகாஜீவராசிகளே! இது மக்களாட்சி என்று கூறி மனிதப் பூச்சிகள் மாநாடு கூடி, மந்திரியாய் வர வும் மற்றவரை முந்திடவும் எந்தவிதத்திலும் ஏற்ற மதைத்தான் விரும்பி ஓயாமல் ஓடுகிறர்கள், ஒடித்திரிந்து (தொடர்ச்சி 5 ஆம் பக்கம் பார்க்க)
ா உறுதிப்படுத்துகிறது ÀY

Page 5
16-90 மில்க்வை
(4 ஆம் பக்கத் தொடர்ச்சி) இலந்தைக்காட்டு . . . உதவி செய்தவர்களுக்கு வாயார ஒருதவி வாக்களிக்க மாட்டார்கள்,
ஐயகோஅரசாங்க சபைக்கு அவர்கள் அத்திவாரம் போடுவதில் ஒருவருடம் முன்னிருக்க ஓயாமல் ஓடுவார் கள். அவர்கள் கட்சிகள் கூடுவார்கள் தங்கள் கள்ளத் தனம் வெளுக்க, அவர்கள் பட்சிகள் கூட்டங்களைப் பார்த்தும் இருக்கமாட்டார்கள். அவர்கள் கள்ளுச்சாராயம் கலன்கணக்காய்க் கொண்டுவந்து, மெள்ளக்கடைவாயில் மெதுவாகப் பருக்குவார்கள். அவர்கள் முன்னர் வர்ணக் கொடி கட்டி வாகனங்கள் கொண்டுவந்து, வாசல்தனில் நிறுத்தி வாருங்கள் ஐயா, அம்மா , ஏறுங்கள் காரில் இப்போது ஏறி அங்கே போன பின்பு மாறி நீங்கள் வாக் களித்தால் மன்னிப்பும் தாம் தருவோம். இவ்வாறெல் லாம் எத்தனையோ கூத்து இயன்றவும் தாமாடி, சித்தம் தெளிய தெரிவில் வெற்றிபெறுவர். இதனுல் உள்ள பணம் முழுவதும் ஊரில் அபிடேகமாயினதும் உண்டு.
கேளுங்கள் எனதன்புக்குரிய எறும்பினங்களே! எங்கள் மனிதர் இருக்கிருர்களே, அவர்கள் கல்தோன்றி மண் தோன்றக் காலத்திலே முன்தோன்றிய மனிதப் பூச்சிக ளாம். மனிதராகப் பிறந்தும் என்ன? எறும்பினங்களாய எம்மவரைப் பார்த்தே உழைப்பு, சுறுசுறுப்பு, சிக்கனம் பிற்காலத் தேவைக்கு ஈட்டிவைத்தல் எல்லாவற்றையும் பழகினுர்கள்.
இந்த இலந்தைக்காடு மிகப்பழையகாடு. உங்களுக்குத் தெரியுமா? பஞ்சபாண்டவர், நூற்றுவர் ஆகியோரின் பாட்டனுராய வியாசமாமுனிவர், வியாசர் என்னும் பெயர் பெறுவதன் முன்பே, இங்கேதான் தவஞ் செய்த வர். அவர் இலந்தைக்காட்டில் தவஞ் செய்து இட்ட சித்திகள் பெற்றமையால் வாதராயணர் எனப்பெயர் பெற்றவர். எங்கள் காட்டினல் அந்த மகான் பெயர் பெற்றபின்னரே சிதறிக்கிடந்த வேதங்களை நான்காகத் தொகுத்து; இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனப் பெயரிட்டவர். இவற்றைத் தொகுத்த காரணத்தினுலே தான் அவருக்கு வியாசர் என்னும் பெயர் வழங்கலா யிற்று.
பாரதகாலத்துக்கு முற்பட்டவர்களாய எங்கள் பண் பாடு பெரிது. எங்கள் ஒழுக்கத்தைக் கண்டுதானே அவர்கள் Q வரிசையில் போகிருர்கள். அவர்கள் சங்கக் கடையிலும் பென்சன் பெறுகையிலும் நடக்கும் வரிசை யைக் கோயில் கும் பிடும்போது விட்டுவிடுகிருர்களாம். ஐயகோ மனிதராம், மாடுகள், ஆடுகள் மேய்ந்த பின் பட்டியை நோக்கி வரிசையாய் வருகின்றன. பள்ளிக் கூடம் விட்ட பிள்ளைகள் முட்டி மோதிக் கொண்டோடு கின்றன. பெண்கள் வரிசை தவறி ஐவர் கை விரித்துக் கூந்தலசைய சவாரி போடுகிருர்கள். நீங்கள் எங்கள் பிள்ளைகள் இந்த பண்பாட்டைப் பழகாமல் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். எறும்புக் குஞ்சுகள் கவனம்.
கேளுங்கள் மகாஜீவராசிகளே! நாங்கள் அன்னை பூமி தந்த மண்ணே நனைத்து எங் கள் புற்றுகளைக்கட்டுகிருேம், எங்களைப் பார்த்தே மனி தர் மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் கட்டுகிறர்கள்.
யோகத்தால் ஒழுக்கத்

ற் செய்தி 5
ஒன்று சொல்லுவேன் எனதன்பர்களே! நாங்கள் கட்டிய புற்றுகள் புதர்களில் நாகர்கள் வந்து புகுந்து நாக வழிபாட்டுக்கு இடங்கொடுத்தன. நாகங்களுக்குப் பால்வார்க்கும் பெண்கள், எங்களுக்கு அரிசிக்கப்பியும் போடமாட்டார்கள். முன்னர் அரிசிமாவி ஞல் மார்கழி மாதத்தில் மாத்திரம் கோலம் போட்டவர் இன்று முருகைக்கல் மாவினல் கோலமிட்டார்கள் முன்னர் கோலங்கள் அழகுக்கலையை வளர்த்தவாறு எங்கள் வயிற்றையும் வளர்த்தன. இன்று நாகரிகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.
ஒற்றுமைக்குப் பெயர் போன எங்கள் நாகரிகம் நாட்டுப் பாடல்களிலும் நன்றக ஒலிக்கிறது. நாங்கள் யாவர் என்று உங்களுக்குத் தெரியுந்தானே. நாங்கள் எறும்புகள். எறும் பின் இனங்கள். நாங்கள் நாட்டில் மழைவந்தாலென்ன, வெயில் வந்தாலென்ன, வளம் நிறைந்தா லென்ன, வற்கடம் வந்தாலென்ன நம் ஊரையும் நாட்டையும் விட்டுப்போகமாட்டோம். எங்கள் உழைப்புசுயமுயற்சி புகழ்பெற்றவை.
எங்கள் ஒற்றுமையைக் குறித்து எங்கள் பெண்டுகள் மண் தோன்றிய காலத்தில் பாடிய ஒப்பாரி பாடலைக் கேட்டுப்பாருங்கள்.
* நாங்கள் கட்டெறும்புக் கூட்டமென
நாங்கள் கலந்து வர நிண்டமெல்லோ நாங்கள் ஒழுக்கெறும்புக் கூட்டமெண நாங்கள் ஒத்துவர நிண்டமெல்லோ நாங்கள் சிற்றெறும்புக் கூட்டமெணை நாங்கள் சேர்ந்துவர நிண்டமெல்லோ இப்படியாகச் சேர்ந்து சுணங்கிப்போன பெண்ணெ றும்புகள் அங்கே ஒர் இளம் சிற்றெறும்புச் சிங்காரனின் செத்த வீட்டில் தாயெறும்பு சொன்ன ஒப்பாரியை உருக்கமாகக் கேட்டன. இளம் பருவத்து எறும்பனை இழந்த தாயெறும்பு தர்ன் கட்டிய மணற் கோட்டை புழு தியாய்ப் பறந்ததைக் கூறி அழுதாள்.
*" வாலைப்பராயமல்லோ உனக்கு வயது மிகச்
சொற்பமல்லோ தாலிக்கு ஒருநாள் பார்க்க உனக்குச் சாவுக்கு நாளாச்சோ கூறைக்கோர் நாட்பார்க்க உனக்குக் கொள்ளிக்கோ நாளாச்சு மஞ்சளால் கோலமிட்டு உன்னை மணவறைக்கு விடும் வேளையிலே கரியாலே கோலமிட்டு உன்னைக் கட்டைக்கோ அனுப்புகிறேன் மணவறைப் பந்தலிலே உன் மணக்கோலம் பாராமல் பிணவறைப் பந்தலிலே நானும் பேரிழவோ கொள்ளுகிறேன் ஐயகோ என்னருமைத் தோழர்களே நாங்கள் தலை யெடுக்க வழியில்லையோ, எங்களுக்கு உதவி டரிய ஒரு வருமில்லையே என் செய்வோம்? எறும்புகளாய்ப் பிறந்த குற்றத்துக்காகப் பொறுத்திருந்து பார்ப்போம். வெள்ளைப் பறங்கியெறும்பின் பிரதிநிதியாக வந்த தம்பி நுள்ளான் சொல்லுகிருர், அது பறங்கிப் பாஷையில் Let us wait and See.
தூய்மை உண்டாகும் ★

Page 6
நாவலர் நினைவு ஒன்று
இன்று பூரீல பூரீ ஆறுமுகநாவலர் அவர்களை நாம் நீள நினைப்பதற்கு நம்மிடையே நிலவுகின்ற நினைவுச் சின்னங்கள் எச்சங்கள் பலவாகும். அவை பாடசாலைகள் படிப்பகங்கள், பண்ணைகள், நூல்கள், உரைகள், பால பாடங்கள், விஞவிடைகள், வித்தியாசாலைகள், வீதிகள் என்றித்திறத்தனவாம்.
இவற்றுள் நாவலர் அவர்களே நாம் நீளநினைப்பதற்கு ஏதுவாயுள்ளது நீளமான ஒரு வீதியாகும். அதுதானும் கிழக்கில் அரியாலை மாம்பழச் சந்தியிலிருந்து மேற்கில் நாவாந்துறை வரை நீண்டதாகும்.
இன்றைய நாவலர் வீதி அன்று நாவாந்துறை வீதி என்றே பெயர் பெற்று நிலவியது. இதனூடாகப் போகும் றெயில் வீதியோரமாக அமைந்த ஒருதரிப்பு நிலைய மும் நாவாந்துறைத் தரிப்பு என்றேபெயர் பெற்றிருந்
இவ்வாருக நாவலர் பாடசாலையில் 1932, 1933 ஆம் ஆண்டுகளில் ஆரும் ஏழாம் வகுப்புகளில் பயின்று வந்த சரவணமுத்து முதலாய மாணுக்கர்களிற் சிலர் குறும்புத்தனம் உள்ளவர்களாப் மூன்றுசதத்துப் போஸ்ற் காட்டும் ஆறுசதத்து முத்திரையும் வாங்கித் தங்களுக்குள்ளேயே தபால்கள் எழுதி நாவலர் வீதி என விலாசமிட்டு, கீழே நாவாந்துறை வீதி என அடைப்புக் குறிக்குள் எழுதி வந்தார்கள். நாளடைவில் இவர்களின் அபிமானத்தைக் கேட்டறிந்த நகரமாவட்ட சபை (U. D. C. ) தலைவர் இ. சிவகுருநாதர், இளைஞர் களைப் பாராட்டி நாவலர் வீதி எனப் பொதுமக்கள் அறியப்பெயரிட்டார். சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேர்ந்தது.
அமெரிக்காவில் திருக்கைலாயம்
கோடிக்கணக்கான பணச் செலவில் திருக்கோயில். ஆனந்த நடனமிடும் நடராசர், ஸ்படிகலிங்கம் பாரத நாட்டில் பதினறு லட்சம் கொடுத்துப் பெறப்பெற்றது. பகலிரவு முழுவதும் திறந்திருக்கும் திருக்கோயில். என்றும் திருமுறை ஒலித்த வண்ணம், யாழ்ப்பாணம் கந்தமடம் நாகேஸ்வரி பிரமானந்த பதிவு செய்த பக்திப் பாடல் கள் ஒருபுறம் ஒலிப்ப, அமெரிக்க சாதுக்கள் நல்ல அட் சர சுத்தியான தமிழில் தேவாரமோதி வீதி வலம்வருதல். உடம்பெங்கும் வெண்ணிறு பரவிப்பூசி சந்தணங் குங் குமம் சூடி உருத்திராக்கம் அணிந்து சிவசிவ என்போர்
Y. யோகத்தால் தன்ன
 

பற் செய்தி 1-6-90
ஒருபுறம். சிவனுக்கு மூன்று வேளை அபிடேகம். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பசுக்கள் தனித்தனி நாள் தோறும் தொண்ணுாற்ருறு போத்தல் பால் பொழிவ தால் எங்கும் பாலாறு. விநாயகர், முருகன் சந்நிதிகள் பிரதமகுரு தினமும் ஐந்துமணி நேரம் சைவநற்சிந்தனை பேசுகிருர், எந்நாளும் எந்நேரமும் திறந்திருக்கும் திருக்கோயிலுள் சைவர் அல்லாதவர் போக விரும்பினுல் ஞாயிறு தோறும் சென்று பார்க்கலாம். விரும்பினுல் வணங்கலாம். எல்லாம் எங்கள் சிவயோக சுவாமிகளின் உபதேசமகிமையால் வந்த திருப்பமும் தெய்விக நிகழ்ச்சி களும் கோடீஸ்வரர்களான அமெரிக்கர் கூடும் அன்பினில் கூடிக் குனிந்து வணங்கிச் சிவனருள் பெற்றுய்தி அடை கிருர்கள்.
அறிந்து கொள்ளுங்கள்
சென்ற நூற்ருண்டில் இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டு களுக்கு மேலாகப் பாடிய பாவலர் வே ட்ஸ் வோர்த் என்பவராவர். அவர் 1770இல் தோன்றி 1850 வரை வாழ்ந்து பாடியவர். இயற்கைப் புலவர் வரிசையில் அவருக்குத் தனியிடம் உண்டு. அவர் இளமையிலேயே கற்பனையுலகிலும் புகுந்தவர். உலகம் இப்படியிருந்தால் அற்புதமாயிருக்கும் என்று பாடுவதும் கற்பனையின் பாற் படும். சாவாநிலை மூவாநிலை பாடிய மேற்கு நாட்டவ ருள் வேட்ஸ் வேர்த் பெரியவர். அவர் நெடும்பாக்கள் (Longer Poems) LunTq. uLu aÁögs(guionT GJITrř. 5 Dg5 g6MT மைக்கால நினைவுகளை ஏனையோருக்கும் பெருவிருந்தாகப் படைத்தவரும் அவரே தான். அவர் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தை அனுபவத்தில் அறிந்தவராகவே, மனிதாபி மானத்தையும் கண்டு பாடியவராவர். தாராள மனப் பான்மை (Liberal views) நிரம்பிய புலமையாளர் அவர். * கபில பரணர் போல அவரும் கோல்றிச் புலவரோடு இரட்டையர் எனமதிக்கப்பெற்ற நட்புறவாளருமாவர்.
Sp Ma As * リで S
1. வெள்ளைச் சுருட்டாயினும், கறுப்புச் சுருட்டாயினும் சின்னச்சுருட்டாயினும் புகைத்துச் சுதிகாண்பவர், கண்பார்வை குறையப் பெறுவர். 2. இங்கிலாந்தில் இசைத்துறைக்குப் பெரிய இடம் உண்டு. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து அரசர் கல் லூரி (King’s College) 1441இல் ஆரம்பமாயபோதே அரசர் நாலாம் ஹென்றி இசைக்கு முதலிடம் வகுத்தார். 3. ஆங்கிலப் புலவர்கள் வரிசையில் அருமையான பாடல்கள் பாடினேர் பட்டியல் பதினரும் நூற்ருண் டிலிருந்தே ஆரம்பித்துள்ளது. ஆயிரத்து அறுநூருண் டுகளுக்கு முன்னரே தமிழில் சங்கப்புலவர் வரிசை கணிக்கப்பெற்றது. 4. சேக்ஸ்பியர் பெரும்புலவர். அவர் முப்பத்தாறு நாடகங்கள் வரையில் எழுதியதோடு 154 சொனற் என்னும் பாடல்களும் பாடியவர். 5. ஆங்கிலப்புலவர்களுள் யோன்டொன் என்பார் (1572 - 1631) காதற்கவிகளும் பக்திக் கவிகளும் பாடியவர். அவரின் ஞானக் கவிகள் தரமானவை என்றுபலர் நயந்துள்ளார். அவர் பலவிதமானதுறை களில் தம் திறமையைக் காட்டிய பாவாணராவர்.
டக்கம் தானே வரும் 大

Page 7
90م-6-1
அப்பர் உபதேசம் மக்கள் நோயால் வருந்தவேண்டி யதில்லை. நோய்கள் மாத்திரமல்ல இ ட ரிலும் தளரவேண்டியதில்லை, வெள்ளம், கொள்ளை, நெருப்பு, பகை படை எதுவுமே மக்களை நலிவு செய்ய மாட்டாது. எல்லாவற்றையும் போக்க மருந்துண்டு. நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் இறைவன் திரு நாமமாய திருவைந்தெழுத்தை ஒதுங் கள். அவர் திருநாமத்தை நியமமாக ஒதினல் தவத்தினலாய பயனைப் பெறலாம் . உய்தி அடையலாம்.
திருச்சிற்றம்பலம் இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதிஞல் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
பிறப்பு மூப்பு பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும் சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்துள் வைக்கவே.
திருச்சிற்றம்பலம்
நாடறிந்த நற்றமிழ் விழா
இது ஊரபிமானம், பேரபிமானம், தமிழபிமானம் நிறைந்த ஒருவிழா. நல்லூாரையடுத்த நாயன்மார்கட்டு பழைய ஆரியசக்கரவர்த்திகளின் அரசிருக்கையுமாகும். வெயிலுகந்த பிள்ளையார் திருவருள் பாலிக்கப் பெறும் இந்த ஊர் அரசகேசரி என்னும் புலவர் முதலானேரைக் கண்டது.
அன்று 2-6-90 சனிக்கிழமை நாயன்மார்கட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரபிமானம் நிறைந்த மக்கள் தங்கள் வீட்டுவாசல்களில் நிறைகுடம் வைத்து ஊர்வலமாக வந்த அறிஞன் ஒருவரை மாலை சூட்டி வாழ்த்தினர்கள். சுமக்கமுடியாத மாலைகளுடன் மகேஸ் வரி வித்தியாலயத்தை அடைந்த அறிஞனைக் கன்னியர் நிரையாக நின்று மலர் தூவி வரவேற்றனர். மன்றங் கள், சபைகள், ஆலயங்கள், ஆதீனம் முதலாகவுள்ளவர் கள் பட்டாடை பொன்னடை போர்த்துச் சுமக்கவைத் தார்கள். பாராட்டுரைகள், பாடல்கள் பாடிச் செவிக் கிணிமை செய்தார்கள். சாதாரண ஆசிரியர் தனது சுயமுயற்சியால் வித்துவான், முதுமாணி முதலாய பட் டங்கள், பரிசுகள் பெற்றுப் பலவாய நூல்களும் படைத் துத் தந்தார்.
இத்தகைய அறிஞரை மாணுக்கர்கள் அயலவர் அபிமானிகள் வாழ்த்தும் வேளை இவருக்கு அறுபதாம் ஆண்டு. நிறைகிறது என்று சாட்டுக்கூறி அரசாங்கம் இவரை ஒய்ந்திருந்து இன்னும் தமிழ்ப்பணி செய்க என வழிவகுத்துள்ளது. ஒய்வு பெறும் இவர் இளமை குன் ருமலே அறுபது கண்டவர். இவர் ஒய்ந்திருக்கலாகாது
* யோகத்தால் உடற்பயிற்சி
 

பற் செய்தி 7
என்னும் பாரதி பாடலை அறிந்தவர். இவர் ஓயாது உழைத்துப் பழகியவர். இவர் தொடர்ந்து தமிழ்ப்பணி செய்வதற்குத் திருவருள் செய்யுமாறு சங்கப்புலவஞய முருகப்பெருமான வணங்குவோமாக. இவர் யாவர் என்று கேட்பீராயின் இவர் நாடறிந்தவர் சொக்கன் என்னும் வித்துவான் முதுமாணி சொக்கலிங்கம் ஆவார்.
நரகவேதனை
பாவஞ் செய்தவர்களுக்குத் தண்டனையாக நரக வேதனைகள் பெரிய பட்டியலில் உண்டு. இன்று பாவமறி யாதவர்களும் நரகவேதனைகளை அறிந்துள்ளார்கள்.பாதி யுடம்போடு வந்துள்ளார்கள். தண்டனைகளின் பழைய பட்டியல்.
1) செக்கிலே போட்டுத் திரித்தல் 2) இரும்புக்கம்பியை பிடிக்கச் செய்தல் 3) செவியிலே கொதிநீரை ஊற்றுதல் 4) பாம்புகளிடையே படுக்கவைத்தல் 5) நாயை ஏவுதல் 6) கைகள், கால்களைக் கட்டுதல் 7) தீப்பந்தத்தால் சுடுதல் 8) தூணிலே கட்டிவைத்து அடித்தல் 9) நகக்கண்ணில் ஊசியேற்றுதல் 10) நெஞ்சிலே சலாகையால் அடித்தல் 11) மூக்கிலே நச்சுப்புகையை விடுதல் 12) தலைகீழாகத் தொங்கவிடுதல் 13) மலசலம் தெளித்தல் 14) கண்ணைக் கட்டிச் சித்திரவதை செய்தல்
இன்று பட முடியாது இனி என்று நாம் வருந்தும் வேதனைகளை அவற்றேடு ஒப்பிட்டு நாம் என்ன பாவம் செய்தோம் என்று ஏங்குகின்ருேம். என் ப்ெவோம்.
Learn your English
I. Words and their meanings 1. function - predetermined use 2. multifarious - many and varied 3. sophisticalled — pseudo - civilised 4. Cottage economy - management of a rural
household 5. ludicrous - rediculous beliefs II. Words and their opposite meanings
(antonym)
1. transparant urm орасque 2. persuade -- disuade 3. benefit nത്ത determent 4. enthusiasm --- apathy 5. eminent r insignificant 6. fick le vo constant 7. lasting temporary 8. faith distrust 9. plenty voor scarcity 10. Assemble overne disperse
ம் மனப்பயிற்சியும் வரும் *

Page 8
மண்தினம் - செம்பாட்டுப் பூமியாகிய திருநெல்வேலி யில், நல்லூர்த் தொகுதி ஓய்வூதிய சங்கத்தார் கூட்டத் திலே, தொழிலதிபர் வந்த வர்களுக்கெல்லாம் மர வகைகள் கொடுத்து ஊக்கப்
படுத்தினுள்.
தக்க தமிழறிஞர் ஒருவர்
சைவமும் தமிழும் வளர்த்த வேலணைத் தீவைச் சேர்ந்த சரவணையூரின் அகத்தியர் எனவந்தவர் இளமையி லேயே தமிழார்வங் கொண்டு நன்முகத் தமிழ்பயின்று, மாணவ ஆசிரியராயும் பணிபுரிந்து சைவாசிரிய கலாசாலை யில் ஆசிரியர்க்கான பயிற்சிபெற்று, பயிற்றப்பெற்ற நல் லாசிரியராய், மேலும் தமிழ்பயின்று, தரமான தமிழ் பண்டிதராகி, தொல்காப்பியம் முதலாய இலக்கணங்களி லும் சங்க இலக்கியங்களிலும் நல்ல தாடன முற்றுச் சென் னைப் பல்கலைக்கழகத்து வித்துவான் பட்டத்தையும் நாற்ப தாண்டுகளுக்கு முன்பெற்று சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் அபிமானமுள்ள ஆசிரியராய், அதிபராய்ப் பணியாற்றி மாணுக்கர் பலரை மனிதராக்கி புன்முறுவல் மாருத முகத்தவராய், நண்பர்கள் பலரைக் கண்டவ ராய், உற்ற நண்பர்களை ' பிறவி ' எனப் பாசத்தோடு அழைத்து அரவணைப்பவராய்க்கடமைதவருது பணிபுரிந்து ஓய்வு பெற்று நீண்ட காலம் வாழ்ந்த அன்பர். நல்ல தமிழர், நண்பர் எங்கள் பொன்னையா இன்றில்லாமல் இயற்கையோடொன்ருயிஞர்.
சாந்தி! &frr fëg! சாந்தி!
நாடகத்துறையில் நல்வாழ்வு
செங்கோட்டையைச் சேர்ந்த கிட்டப்பா அவர்கள் நாடகம் வளர்க்கவென்றே பிறந்தவர். இங்ங்ணமே கொடு முடியைச் சேர்ந்த சுந்தராம்பாள் என்னும் மாதரசியு மாவர். இவர்கள் கலகலப்பாகப் பாடிய கூத்து இரவிர வாக நடைபெறுதல் வழக்கம். மேடையில் சுயமாகப் பாடல்களை உடனுக்குடன் இபாத்து உருக்கமாகப் பாடி யவர்கள் .
சுந்தராம்பாள் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபா பெற்றவர். அது அவருக்குப் பெரும் புகழாயிற்று. அவர் கலப்புத் திருமணஞ் செய்த மைக்கும், கைம்மை நோன்புக்கும் தனிப்புகழ் பெற்றவர்.
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் കെ
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் 'ச் கெளரவ ஆசிரியர் திரு.
 
 
 

வற் செய்தி I-6-90
சேரும் பணம் சிதறிப்போகாமல்
சிக்கனமாகச் சேமித்து உண்டியலில் சேர்க்கும்திறம் சிறுவயதில் உண் டானுல் உயர்கல்விக்கு உதவும். ஆக்கம் பெருக்கத் துணைநிற்கும் அறம்பல் செய்யும் நோக்கம் தரும்
மில்க்வைற் மேலுறைகளில் உள்ள 100
திருக்குறளை சேகரித்து எம்மிடம் நேரில் சேர்த்து உண்டியல் ஒன்றைப் பெற்று வளமான வாழ்வுக்கு வழி செய்யுங்கள்
தி. நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் வநெறிப்புரவலர்' க. கனகராசா ஜே. பி. அவர்கள்
க. சி. குலரத்தினம் 1.6-90