கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1994.01-03

Page 1
மலர்- 08 இதழ் - 08
 
 

ஜன-மார்ச்
AL 1994

Page 2

ᎦᎶᏱᎧu :
இலக்கிய இதழ்
சிரிக்கும் விலங்குகள் தேசம் என்பது மக்கள், உயிர்கள் துயரின்றி வாழும்போதுதான் தேசத்திற்கு மகிமை கிடைக்கின்றது. துவேச விதைகளை நட்டு வேச நீரூற்றி! விசக் காலத்தை நாம் படைத்துவிட்டோம். மனித மனங்களில் தீ வளர்க்கப்படுகின்றது. இருண்ட காலத்தினுள்ளே மிகநீண்ட இருளுக்குள் நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஓர் இனம் இன்னோர் இனத்தை சந்தேகக்கண் கொண்டுதான் நோக்குகின்றது. இதயங்களால் ஆன இலங்கைக்கு இப்படி ஒரு நிலையா?
கணவன் மனைவி உறவுபோல இனங்களுக் கிடையில் புரிந்துணர்வு மிக அவசியம். நாம் மனிதர்கள்! இலங்கையர்கள் என்ற ஓசை எம் இதயங்கள் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் கனவாகவே எம் காலங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. நினைவுகளில் நிஜம் வேண்டும் . போலித்தன்மைகள் எம்மைவிட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டும்.
இறைவனின் படைப்புகளிலேயே மிக உயர்ந்த உன்னதமான படைப்புத்தான் மனிதர்கள். சிரிக்கும் விலங்குதான் மனிதன். சிந்தனைப் பிராணிதான் மனிதன். இவைகள் எமக்கு இறைவன் அருளிய பெருங்கொடைகள் இவற்றைப் பயன்படுத்திநாட்டையும் வீட்டையும் நறும8ணங்கமழும் சந்தோஷச் சோலையாக நாம் மாற்ற வேண்டாமா?
இந்தத் தேசத்தாயின் பிள்ளைகள் நாம். செல்வங்களும் நாமே. நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம். இன்னும் விழிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறோம். மனிதத் தன்மையை மரிக்க வைத்துவிட்டு உதயத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். எரிபொருளின்றி வாகனங்களைச் செலுத்த முயல்வதைப் போல; ஒன்றைத் தெரிந்து கொள்வோம்! தேசம் என்பது வெறும் மண்ணல்ல,
(ஆர்)

Page 3
நமது வானத்தின் கீழ்.
நவீனன்
நடிப்புலகில் ஓர் இமயம்
இன்றைய நிலையில் திரைப் படம் மக்களோடு ஒன்றி இணைந்துவிட்ட ஒரு சாதனமாகிவிட்டது. ஆனால், அச்சாதனத்தோடு தொடர்பு கொண்ட கலைஞர் பலர், அதனைத் தமக்குப் புகழீட்டவும் பொருள் திரட் டவும் பயன்படும் ஒன்றாகவே கருதிச் செயற்படுவதுண்டு. மிகச் சிலரே அது ஒர் அருமையான கலைச்சாதனம் எனக் கருதி, தமது முழுத்திறமையையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பயன்படுத்த முயல்வதுண்டு. அவர்களுள் ஒருவரே தமிழ்த் திரைப்படவுலகில் நடிகர் திலகமாக விளங்கும் சிவாஜி கணேசன் ஆவார். அவரைத் தவிர்த்த தமிழ்த் திரைப்பட வரலாறொன்று இருக்கவியலாது. என்று கூறத்தக்க அளவுக்கு, அவரின் பங்களிப்பு அத்துறையோடு ஒன்றிப் பிணைந்துவிட்டது. அவர் ஏற்ற சிறந்த பாத்திரங்களின் பின்னணியில் அவர் 'படித்த' உண்மையான மனிதர்கள் உள்ளனர். எந்தச் சிறந்த பாத்திரத்தை ஏற்கும் போதும் அப்பாத்திரத்தின் இயல்பு கொண்ட உண்மையான மனிதர்களைப் "படித்துவிட்டே' அவர் நடிக்க முயல்வதுண்டு. அதனால், அத்தகைய பாத்திரங்கள் சுவைஞர் நெஞ்சில் நீங்கா இடம் பெறுவதுண்டு. சிவாஜி கணேசனைப் பொறுத்த வரையில் , தமது நடிப்புக்குச் சவாலாக அமையும் பாத்திரங்களை ஏற்கும் போதே அவர் ஜொலிப்பதுண்டு. சாதாரண பாத்திரங்கள் அவரை இனங்காட்டுவதில்லை. இத்தகைய சிறந்த நடிகரது மிகப் பெரும் பலவீனமாகவும் , குறையாகவும் விளங்குவது, அவரது மிகை நடிப்பாகும். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. உண்மையில், அவர் தமது நடிப்புத்துறையின் ஆரம்ப கட்டங்களில் இயன்றளவு இயல்பாகவே நடித்துவந்தார். ஆனால் தயாரிப்பாளரின் பணப் பொட்டிகள் போதியளவு விரிவடையவில்லை. எனவே, நிறைந்த நடிப்பாற்றல் கொண்ட சிவாஜி என்ற காய்க்கும் மரத்திலிருந்து இயன்றவரை உழைப்பைச் சுரண்டவே பட முதலாளிகளும், இயக்குனர்களும் விழைந்தனர். உண்மையில் சிவாஜியின் குறையைவிட முதலாளித்துவச் சுரண்டலே அவரின் மிகை நடிப்புக்குக் காரணமாகிவிட்டது. திறமை மலிந்துறையும் ஒரு கலைஞரை அது மிகை நடிப் பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டது. அதேவேளை சிவாஜியும் தமது முறையை உணரத் தவறிவிட்டார். பாரதிராஜாவைத் தவிர பிற இயக்குனர்கள் பெரும்பாலும் அவரது மிகை நடிப் பைக் கட்டுப் படுத்த தவறிவிட்டனர் திரைப் படவுலகில் தொழிலுக்கு மதிப்பு, நேரந் தவறாமை போன்ற விடயங்களைக் கடைப் பிடிப் போரில் அவர் முதன்மையானவர் அவா

நடிப் புத் துறையில் உயர்வதற்கு அவை முக்கிய பின் பலமாக அமைந்துள்ளன. தமிழ்த் திரைப் படத் துறையில் பி.யூ, சின்னப்பாவுக்குப் பின், கமலஹாசனுக்கு முன் ஆழமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் சிவாஜிகணேசனே யாவார். உலகின் தரமான நடிகர்களுள் ஒருவராகவும் , தமிழ்த் திரையுலகில் ஒரு இமயமாகவும் அவர் விளங்குகிறார். ஆயினும் அகில இந்திய ரீதியில் அவர் சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டும் கெளரவிக்கப்படாமை ஆச்சரியமே!
புதிய பாமரர்கள்
தமிழ் நாடு புகழ்பூத்த கலைஞர்களையும், கவிஞர்களையும் , எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் உலகுக்கு அளித்துள்ளது. அதேவேளை, திருஷ்டி கழிப்பதற்காக அறிவு பெற்ற பாமரர்களையும் ஈன்றெடுத்துள்ளது. அவர்கள் தங்களது அறியாமையை தங்களை அறியாமலே புலப்படுத்திக் கொண்டு, தாம் புதிய பாமரர்கள் என்பதை இணங் காட் டுவதுண்டு. இவ் வகையில் சிலவேளைகளில் தமிழகத்திலிருந்து இலங்கை வரும் அறிஞர்கள் கலைஞர்கள் சில உதிர்க்கும் பொன்மொழிகள் சுவாரசியமானவை. பல ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்படஇலட்சிய நடிகர் ஒருவர் தம்பதி சமேதராக இலங்கை வந்திருந்தார். அவரை யாழ்ப்பாணப் பத்திரிகையொன்றைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டார். பேட்டியின் போது, 'கலையரசு சொர்ணலிங்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று இலட்சிய நடிகரை அவர் கேட்டார். நடிகரோ எதுவித தயக்கமுமின்றி 'கலையரசு சொர்ணலிங்கம் கலையார்வம் மிக்க துடிப்புள்ள ஓர் இளைஞர் அவரை நான் பாராட்டுகிறேன்' என்று பதிலளித்தார். இத்தனைக்கும் கலையரசுக்கு அப்போது வயது சுமார் எண்பது இருக்கும். சொர்ணலிங்கத்தைப் பற்றி அறியாமலேயே இலட்சிய நடிகர் அவரைப்பற்றிய தமது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார். இதே போன்ற அனுபவம், நான் தமிழகத்தில் இருந்தபோது எனக்குக் கிடைத்தது. ஒரு முறை நானும், காலஞ் சென்ற இலங்கை எழுத்தாளர் ஒருவரும் பிரபல நாவலாசிரியை ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது 'கைலாசபதி பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் சற்றும் யோசனையின்றி, 'அவர் ஒரு நல்ல கவிஞர்' என்றார். நானும் எழுத்தாளர் நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டோம்.
வேண்டாமா, சமூக நாடகம்?
இலங்கையின் அரசியல்வாதிகள் மத்தியில் புதிய 'வியாதி ஒன்று பரவ ஆரம்பித்துவிட்டது போலத் தோன்றுகிறது. அதுவும் குறிப்பாகச் சில தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலேதான் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. சமூகப் பிரச்சினைகள் கலைவடிவம் பெறும் போது அவற்றைக் காணச் சகிக் காமையே அவ் வியாதியாகும் அதன்

Page 4
விளைவாக, இம் முறை தமிழ்த் தின விழாவுக்கான நாடகப் போட்டிகளிலிருந்து சமூக நாடகத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமூக நாடகம் சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பதால், அதற்கு முகங்கொடுக்கத் திரானியற்ற அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகளின் முகங்களை மாத்திரமே பார்த்துப் பழகிய அதிகாரிகளும் போட்டிகளில் சமூக நாடகத்தை இடம் பெறச் செய்யாமல் விடுவதன் மூலம் மிகப் பெரிய 'தொண்டை இந்நாட்டுக்குச் செய்துவிடலாம் என்று கருதிவிட்டனர் போலும்! 'தமிழ் நாடகம் வளரவில்லை வளரவில்லை' என்று மாரடிக்கிறோமே. ஏன் வளரவில்லை என்பதற்கு இவை போன்றனவையும் காரணங்கள்தாம். சிங்கள நாடக அரங்ற்ே காணக் கிடைக்கும் கருத்துச் சுதந்திரம், தமிழ் நாடக மேடைக்கு இத்தகையவர்களால் மிக அந்நியமாகிவிட்டது. எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் நா.க வளர்ச்சி பற்றி நோக்க விழையும் ஆய்வாளர்கள் , தமிழ் அரசியல் வாதிகள் சிலரும் கல்வியதிகாரிகள் சில ரும் ஈழத்தில் தமிழ் நாடகத்தின் 'வளர்ச்சிக்கு" ஆற்றிய 'தொண்டு' பற்றியும் ஆராயவேண்டியிருக்கும்.
வேண்டும் - ஓர் ஆங்கிலத் தினசரி இலங்கையில் இனப் பிரச்சினை என்றவொன்று இல்லையென்று எந்த மேதாவிகள் மொழிந்தாலும் இனவாதம் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாகப் பரந்துவிரிந்துள்ளது என்பதைச் சித்தசுவாதீனம் கொண்ட எவரும் மறைக்கவோ, மறுக்கவோ இயலாது இனவாதத்தைக் கொழுந்துவிட்டெரியச் செய்வதில் இந்நாட்டின் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. ஒரே இனம் ஒரே மொழி, ஒரே மதம் என்பதே அவற்றின் ஆதார சுருதி, சிங்களப் பத்திரிகைகள் கக்கும் இனவாதம் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், ஆனானப்பட்ட ஆங்கிலப் பத்திரிகைகளும் பேரினவாதத்தை முதலாகக் கொண்டு கடை விரிப் பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்நிலையில், இந்நாட்டுச் சிறுபான்மையினங்களின் நலன் கருதி, அவர்களின் ஆர்வங்கள் எதிர்பார்ப்புகள் உணர்வுகள், பிரச்சினைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தரமான ஓர் ஆங்கிலத் தினசரி வெளியிடுவது அவசியம் வீரகேசரி போன்ற பத்திரிகை நிறுவனம் ஒர் ஆங்கிலத் தினசரியை வெளிக்கொணர்வதில் அக்கறை காட்டவேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
*骨骨骨骨骨骨 வாசகர்கள் மணிஓடர்களை AC.RAHL என்ற பெயருக்கு அனுப்பவும்.

மின்மினிகள் *
தொகுப்பு: கே. முகம்மட்
* டாக்டர் சாமுவேல் ஜான்சன்: இவர்தான் ஆங்கிலத்தில் முதல் அகராதியைத் தொகுத்தவர். வறுமையோடு போராடியவர். இவரைப் பாராட்டி யாராவது பரிசு கொடுத்தால் கூட அதை மறுத்துவிடுவார். இறுதி வரை தாழ்வுணர்ச்சியுடையவராக இருந்ததால் தனக்கு யார் பரிசு கொடுத்தாலும் அதையெல்லாம் தனது வறுமைக்காக பரிதாபப்பட்டுக் கொடுக்கிறார்கள் என்றே புரிந்து கொண்டு மறுத்து வந்தார்.
* சர்வாதிகாரி ஹிட்லர்: இவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். சைவ உணவுக்காரர். புகை பிடிக்கும் பழக்கமற்றவர். குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியர். ஒரு ஓவியர்.
* தனக்கேற்பட்ட பண நெருக்கடி காரணமாக தனது அரச கிரீடத்தை அடகு வைத்தான் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன்.
* உலகிலேயே அதிக தொகைக்கு விலைபோன கையெழுத்து. உலக மகா ஆங்கிலக் கவிஷேக்ஸ்பியரின் கையெழுத்து.
* ஷேக்ஸ்பியர் தம் 18 ஆவது வயதில் ஹெக்வே எனும் 26 வயதுடைய பெண்ணை மணந்து கொண்டார். ராபர்ட் பிரெளனிஸ் தம் 34 ஆவது வயதில் எலிசபத் பேசட் என்னும் 38 வயது பெண்ணை மணந்து கொண்டார். டாக்டர் ஜான்சன் தம் 28வது வயதில் தன் னைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயதான விதவையை மணந்து கொண்டார்.
* அரசியல் தத்துவ மேதையான கார்ல்மார்க்ஸ், இவருடைய மனைவி ஜென்னி இவரைவிட 4வயது மூத்தவர். உலகப் புகழ் பெற்ற மாவீரன் நெப்போலியன் மனைவி ஜொசபின் அவரைவிட 6 வயது மூத்தவர். ஆண் டிரி மால் ராஸ் என்ற பிரேஞ்சு சிந்தனையாளர் தம்மைவிட 5 வயது பெரியவளான கிளாரா கோல்ட்ஸ்மிட்ச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எட்டாவது ஹென்றிதம்மைவிட6 வயது அதிகமான காதரின் என்ற பெண்ணை மணந்து கொண்டார். லார்ட் செஸ்டர்ஃபீல்ட் தன்னைவிட ஒரு வயது அதிகமான பெட்ரோனில்லா எனும் பெண்ணையும், ஹனோரி டி பால்காக் தன்னைவிட ஒரு வயது அதிகமான ஹான் ஸ்கா எனும் பெண்ணையும் பெஞ்சமின் டிஸ்ரேலி தன்னைவிட 12வயது அதிகமான ஆன்விண்ட்ஹாம் லூயி எனும் பெண்ணையும் மணந்து கொண்டார்கள்.

Page 5
6
* ஷேக்ஸ்பியர் 23.4.1564ல் பிறந்தார். அவர் இறந்தது 23.4.1616 அவர் இறந்தபோது அவருக்குவயது52. மாதமும் நாளும் ஒரே மாதிரி அமைந்துவிட்டது.
ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், பொதுமக்கள் முன்பாக மூக்குக் கண்ணாடி அணிவதை அகெளரவமாக கருதினார். ஆனாலும் பழக்க தோஷம் காரணமாக பொது இடங்களில் பேச ஆரம்பித்தவுடன் தன்னை அறியாமலேயே பாண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு கண்ணாடியை கையில் எடுத்துக் கொண்டு பேசுவார். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசும் போது கையிலுள்ள கண்ணாடியை மேஜைமீது அடித்து உடைத்து விடுவார். ஆகவே எப்பொழுதும் எக்ஸ்ட்ரா மூக்குக் கண்ணாடிகளை ரெடியாக வைத்திருப்பது அவரது வழக்கம்.
* ஷேக்ஸ்பியர் மொத்தம் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார். * சிறந்த பல இலக்கியங்கள் சிறைச்சாலையில் தான் உருவாகியிருக்கின்றன. தோமஸ் பெயின் அமெரிக்க மக்களுக்கு ‘சுதந்திரத்துக்குப் போராட வேண்டும் என்ற நூலை எழுதியது பிரேஞ்சு நாட்டு சிறையில் இருந்தபோது தான். ஓ ஹென்றி தமது புகழ் பெற்ற சிறு கதைகளை எழுதியது சிறைச்சாலையில் இருந்த போதுதான். ஹிட்லர் தன்னுடைய "மெயின் கேம்ப்" என்ற நூலை எழுதியது லாண்ட்ஸ் - பார்க் சிறையில்தான்.
* சார்ள்ஸ் டிக்கன்ஸ் ஆரம்ப காலத்தில் தான் எழுதிய கதைகளை தெருவின் முக்கிய இடங்களில் படித்துக் காட்டுவார். அதன் பிறகு இவரது கதைகளை கேட்க வரும் கூட்டத்திலிருந்து கட்டணம் வசூலித்துக் கொண்டு தனது புதிய கதைகளை நடித்தும் 85m Liq68TITIT.
* பெத்ரோவ், ஃபிரெஸ், துலின், கர்ப்போல், ஜாக்கோப் ரித்தர் இவையாவும் லெனினின் பல்வேறு புனைப் பெயர்கள்.
* 35 ஒஸ்கார் பரிசுகள் பெற்ற ஒரே மனிதர் "வால்ட் டிஸ்னிதான்'
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் ஏ.கார்ஃபீல்ட் ஒரு கையால் லத்தீன் மொழியில் எழுதிக்கொண்டேமற்றொருகையால் கிரேக்க மொழியால் எழுதக் கூடியவராம்.
* அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிக அதிக வயதில் பொறுப்பேற்றுக் குறைந்த காலமே பதவி வகித்தவர் ஒரேயொருவர்தான். அவர் வில்லியம் ஹெச். ஹாரிசன். இந்த ஜனாதிபதி தம்முடைய 68 ஆவது வயதில் (1841 ஆம் ஆண்டு) பொறுப்பேற்றார். பதவி ஏற்ற ஒரே மாதத்தில் அமரர் ஆகிவிட்டார்.

ஓட்டமாவடி அறபாத்,
நீண்ட இடைவெளிக்குப் பின் என் தாயகத்தைப் தொட்டுப் பார்க்கின்றேன். ஒரு பச்சைக் குழந்தையை வருடுவதான சுகானுபவம். கொடூரத்தின் எச்சங்கள் ஆங்காங்கே மிச்சமாகி கிடந்தன. என் வீட்டின் முன் ஓங்கி வளர்ந்து, கிளைபரப்பி நிழல் தரும் புளியமரத்தின் கீழ் அமர்ந்து கொண்டேன். "78இல் வீசிய சூறாவளிக்கும் இந்த மரம் அசையவே இல்லையாம்” வாப்பாவின் வார்த்தைகள் மனதில் மோதி ஞாபகங்களை உசுப்பிவிட்டன. 87இல் இந்த மரத்தில் வாப்பாவையும், தம்பியையும் கட்டித் தூக்கி வெட்டியதாக வந்த வதந்தியும், அந்தக் கணத்தில் துடித்ததுடிப்பும் இலேசாக எட்டிப்பார்த்தன.
இந்த மண்ணின் ஒவ்வொரு சிதிலங்களிலும் பல்லாயிரம் நிகழ்வுகள். இடிபாடுகளுக்கிடையே நசுங்கிக் கிடக்கும் என் வீட்டின் அவலம், எனக்குள் சோகத்தை கிளறவில்லை. நான் தொலைந்து போன சொத்துக்களையும் தேடவில்லை. என் தாயகம் கிடைத்தது போதும் இதன் மேல் ஒரு மர நிழலிலும் வாழத் தயார். பலாமரம் ஏராளமாய் காய்த்து கிடந்தது. மாதுளையும் , தோடம்பழமும் "ேட்பாாற்றுக் கிடந்தன. யாரோ வருடா வருடம் பலன் அணு வித்திருக்க வேண்டும். காலடிகளும், வெற்றுக் கழிவுகளும் சாட்சியம் கூறின. ஒரு காலத்தில் உருண்டு பிரண்ட மண். இப்போது காலடி வைக்கவும் அச்சமாய் இருந்தது. மனிதர்கள் தென்படமாட்டார்களா? என்ற ஆதங்கத்தில் குளத்துப் பக்கம் நடை போட்டேன்.
தூரத்தில் சின்னச் சின்ன உருவங்கள். தமிழரோ, முஸ்லிமோ தெரியாது வேகமாய் நடந்தேன். வாடிகளில் விளக்குகள் மின்னின. ஒரு வாடியின் படலையை தட்டினேன். பொட்டுவைத்த முகங்கள் திகைத்து நின்றன. 'தம்பி நீங்கள் சாவல் காக்காட மகன் தானே.” “ஓம் அக்கா”, “கடவுளே ஏன் தம்பி இப்ப வந்தீங்க, இன்னும் பிரச்சின முடியல’, அவள் கலவரத்துடன் பேசினாள். குரலில் தொனித்த மரணத் தடவல் என்னை உசுப் பிவிட்டதாகவும் தெரியவில்லை.
'தம்பி உள்ளுக்குவாங்க நான் போய் பாயில் அமர்ந்து கொண்டேன். அவள் அடுப்பை எரிய வைத்து தேனீர் தயாரித்தாள். 'அக் கா எங்க அண்ணரை காணல் ல. ' 'வல போடப்

Page 6
போயிருக்காரு, 'தம்பி வாப்பா, உம்மாவெல்லாம் நல்லா இருக் காங்களா..?’ “ஓமக்கா,’ ‘தங்கச்சிக்கு கலியாணம் முடிஞ்சிருக்கும் போல,” “இன்னும் இல்ல, வார மாசம்தான் முடிவு கட்டுவம்” “எல்லாரையும் பார்க்க எவ்வளவு ஆசையா இருக்கு, ஆனா வாரத்துக்கு பயமா இருக்கு தம்பி,” “ஏன் வீணா பயப்படவேணும். இப்படியே ஒவ்வொரு மனிசனும் பயந்து சந்திக்காம வாழ்ந்தா நெலமை என்னவாகும். நீங்க பயப்படாம வாங்க, நாங்களும் உங்கள ஒரே கதப்பம். பெருநாள் வந்தாலும் உங்கட நெனப்பு வரும் , நான் ஆதங்கமாய் பேசிக் கொண்டிருந்தேன்.
இருட்டாகி விட்டது. என்மனம் பூராவும் மகிழ்ச்சி, எத்தனை வருஷம் உருண்டுவிட்டது. இவர்களைப் பார்த்து பேசி, ஒன்றாக உலாவி, இன்று பரிபூரண திருப்தி, "இப்ப போக வேணாம் தம்பி. ராவக்க தங்கிட்டு, காலயில நான் கூட்டிப் போய் எல்லையில் விட்டுர்றன்.” எனக்கு சிரிப்பாய் இருந்தது. 'எல்லை என்று அவள் குறிப்பிட்ட அந்த எல்லையின் அளவை மதிப்பீடு செய்ய என்னால் முடியவில்லை. ஒவ்வொரு இனமும் அவரவர் குறிப்பிட்ட எல்லைக்குள் தான் வாழவேண்டுமா? அதை தாண்டினால் அவன் துரோகி, அல்லது கோடாரிக் காம்பு, ஈற்றில் கிடைப்பது மரண தண்டனை, இந்த சமூகம் விதித்த கோடுகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த குடிசைக்குள் புரண்டு புரண்டு உருண்டேன். தூக்கம் பிடிக்கவில்லை. திடீரென கதவு தட்டப்படும் ஒசை. நான் சடாரென எழுந்து தாழ்ப்பாள் விலக்க, முன்னேறினேன். அவள் எதிர்பார்த்து படுத்திருப்பாள் போல் என்னை முந்தி என் கரம்பிடித்து படுக்கையில் தள்ளினாள். "யாரது?” “நாங்கதான்.” அவளுக்கு விளங்கிவிட்டது வந்திருப்பது யாரென்று. 'கடவுளே இந்த புள்ளய காப்பாத்து முருகா!'. துணிச்சலாக சொன்னாள் "ஆம்புள இல்ல" "மீன் எடுக்க போயிருக்காரு, பொரகு வாங்க” வெளியே இருந்து குரல்கள் சீறின. "ஏய் சும்மா கத்தாத, இண்டக்கி வந்த சோனிய வெளியே விடு' அவன் ஆமிக்கு தகவல் கொடுக்க வந்திருக்கான். நான் காதை கூர்மையாக்கினேன். முன்பு என்னுடன் தோழனாய் இருந்து, இன்பதுன்பங்களில் சமமாய் பங்கிட்டு வாழ்ந்த மதனின் குரல்தான் அது.
"பொடியன் மாரே அது முஸ்லிம் ஆளில்ல, என்ட கமலித்தின்ர புருஷன்தான் கண்டியிலிருந்து அவளைத் தேடி வந்தவர், யாரோ உங்கள ஏமாத்திப் போட்டானுகள்," அக்கா வாய் கூசாமல் பொய் சொல்ல, 'யாரெண்டாலும் பார்ப்போம் படலையைத் திறவுங்க."
(22ம் பக்கம் பார்க்க)

9
(பஞ்ச(ப்) பாண்டவர்கள்)
ச. மணிசேகரன்
தேர்தல் காலங்களின் திடீர் பிரம்மாக்கள் அரசியல்வாதி
உரிமைகளைப் பேசி சந்தாவின் உரிமை பெற்ற தொழிற்சங்கங்கள்
ஏழ்மையை ஏற்றி இலட்சங்களைப் இறக்கும்
கலியுக நடிப்பு
சாரணாகையூம்
தலைவராய் நடிப்பார் தனக் கொன்றும் தெரியாது மேடையில் ஏறிநின்று சவாலை சவால்” என்பார், நிர்வாகத்தை. ‘நிர்வாணம்’ 6T60Ts, பொருள் அறியாமல் பிதற்றுவார் பித்தர்போல்; அவர் பின்னால்,
சமூக நிறுவனங்கள் மாலை மரியாதை
எடுபிடி வேலை உழைப்பின் ஊக்கு சக்தி செய்வதற்கு உயிரின் எமன் எப்போதும் ஒருகூட்டம் Լճ5! சுற்றியே நிற்கும்;
எச்சிலைத் தேடும் பள்ளிச் சிறார்களை பாழடிக்கும் குக்கலைப் போல! uT6) epi 60- இதுவே, சினிமாக் (ரீவி) கொட்டகை, கலியுக நடிப்பு
சிரிப்பிற்கு அது சிறப்பேடு அறிவிற்கு அதனை நாடு! மீன்பாடும் தேனாட்டின்
நகைச்சுவை பல்கலை ஏடு
சுவைத்திரள் (ஆசிரியர்-திக்கவயல்) 48, பார்றோட்,
மட்டக்களப்பு

Page 7
மிழ் கூறும் உலகெங்கும் “உங்கள் அன்பு அறிவிப்பாளர்" என்ற வார்த்தைகள் வானொலியில் கேட்டதும், சட்டென்று எவரும், செவிகளில் "செந்தமிழ்த் தேன் வந்து பாயப்" போகிறது என்று காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வைக்கும் மணிக்குரலுக்குரிய பீ.எச். அப்துல் ஹமீத் என்னும் பாவா ஹசன் அப்துல் ஹமீத், வானொலிக் கலைத் துறையில் இன்று ஒரு தனிப்பெரும் சாதனையாளராகத் திகழ்கிறார். திருவாட்டி மோனி எலியாஸ் என்னும் பெருமாட்டி, இலங்கை வானொலிக் கல்விச் சேவையில் பணிப்பாளராக இருந்த போது, சிறுவர் நாடக வரிசை ஒன்றை எழுதும்படி என்னைப் பணித்தார். அவை அனைத்திலும் கதாநாயகனாக நடித்தவர் ஹமீத். அப்போது அவர் பள்ளி மாணவர். இன்றோ, தன் கலைப்பணி வாழ்க்கையில் வெள்ளி விழாக் கொண்டாடும் பருவம் வந்துவிட்ட ஹமீத், பன்முகத் திறமைகள் வாய்ந்த பண்பட்டதமிழ்க் கலைஞராகத் திகழ்கிறார்.
அவரை, வானொலி அறிவிப்பாளர், நேர்முக வர்ணனையாளர், செய்தி வாசிப்பவர், அரசாங்க நிகழ்ச்சித் தொகுப்பாளர், பேட்டியாளர், சஞ்சிகை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, விவரணச் சித்திரம், நாடகம் போன்றவற்றின் தயாரிப்பாளர் என்ற வகையில் மட்டுமல்ல; வானொலி, மேடை, திரைப்பட நடிகராகவும் , இசைப் பாடல் ஆசிரியராகவும், பல புதுமையான கலை நிகழ்ச்சிகளையும், கலைஞர்களையும் தமிழ் அரங்கியல் துறைக்கு அறிமுகம் செய்து வைத்த முன்னோடியாகவும், தமிழுலகம் நன்கறியும்.
"பொப்' இசையை நம் நாட்டில் அறிமுகப்படுத்தி. "பொப்பிசைப் புயல்” என்ற மேடை நிகழ்ச்சி மூலம், அந்த “மக்கள் இசை”க்கு வெகுஜனங்கள் மத்தியில் அமோக ஆதரவைத் தேடித் தந்தவர். பல "மக்கள் இசை'க் கலைஞர்கள் அவரால் அறிமுகமானவர்கள்.
“பாட்டுக்குப் பாட்டு” என்ற அவரின் புதுமை நிகழ்ச்சி மூலம் இன்றைய பல மெல்லிசைப் பாடகர்கள் இலங்கையில் தோன்றினார்கள். இசைக் குழுக்கள் பிரசித்தமாயின.
 

“நவரசக் கோவை’, ‘இசைக் கோவை” போன்ற அவரின் வானொலி நிகழ்ச்சிகள் பரீட்சார்த்தமான பல அம்சங்களை உள்ளடக்கி, இசைத் துறையின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தின.
'இறைதாசன்” என்ற பெயரில் அவர் எழுதிய இசைப்பாடல்கள், வானொலி, மேடை, தொலைக்காட்சி, திரைப்படங்களில் ஒலித்து வருகின்றன.
இவற்றுக்கு எல்லாம் மேலாக, ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தமிழ்க் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்த முதற் சாதனை அவருடையது. 1988ல் தனிக் கலைஞராக முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளுக்குக் கலை விஜயம் செய்து, தொடர்ந்து ஒவ்வோராண்டும் நம் நாட்டுக் கலைஞர் குழுக்களைத் தன் முயற்சியால் தலைமை வகித்து அந்நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிறப்பு நிகழ்சிகளை நடத்திய சாதனையாளர் ஒறமித்.
19 வயதில் அறிவிப்டாளராகப் பணியாற்றத் தொடங்கி மூன்றே ஆண்டுகளில் மிகச் சிறந்த ஐந்து செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராகத் தெரிவ பெற்று, ஆறு ஆண்டுகளின் முன் நெதர்லாந்து நாட்டில் வானொலி சம்பந்தமான புலன:eப் பரிசில் பெற்றுச் சென்று, ஐந்து மாதப் பயிற்சி முடிவில் ஆகக் கூடிய புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்த அப்துல் ஹமீத், வானொலிக் கலையில் தொடாத அம்சம் இல்லை. தொட்டுத் துலங்காத அம்சமும் இல்லை.
மகாராணியின் இலங்கை விஜயமா, மகா வலி ஆரம்ப விழாவா. வெளிநாட்டு தலைவர்களின் விஜயங்களா சார்க் மகாநாடா, சாப் விளையாட்டு விழாவா? நேர்முக வர்ணனைக்கு கூப்பிடு அப்துல் ஹமீதை!
சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய ‘ஒரு வீடு கோவிலாகிறது’ நாடகமா? என்னுடைய புகழ் பெற்ற "றோமியோ - ஜூலியட்' போன்ற ஒரு மணிநேரச் சிறப்பு நாடகங்களா? தயாரிப்பாளர் அப்துல் ஹமீத்!
அரசாங்க விழாக்கள், கலாசார விழாக்கள் திரைப்பட விழாக்கள் நிகழ்ச்சித் தொகுப்பு பீ.எச். அப்துல் ஹமீத்
பல கலைத் துறைகளில் அப்துல் ஹமீத் ஒர் சாதனையாளர், வானொலிக் கலையிலோ ஒரு சகாப்தம்!
பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன்

Page 8
முன்அட்டையில்
SSS SS SS SS SS SS SS SS SSL SS பீ.எச். அப்துல் ஹமீட்”
பேட்டி காண்பவர்-நிந்ததாசன்
கேள்வி: உங்களது இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்.
பதில் உள்ளூர் பத்திரிகையொன்றில் பேட்டி இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன். அதற்காக பத்திரிகைத்துறையை விட்டு ஒதுங்கி இருப்பவன் என்று அர்த்தமல்ல. பத்திரிகை, தொலைக் காட்சி, வானொலி இம்மூன்று துறைகளும் கைகோர்த்து இயங்க வேண்டியவை. நாங்கள் காற்றில் கலை படைப்பவர்கள். அச்சுவாகனம் என்பது அப்படிப்பட்டதல்ல. எழுதிவிட்டால் தலையெழுத்தாகிவிடும் , ஒலிபரப்பாளர்களை விட சக்தி வாய்ந்தவர்கள் பத்திரிகையாளர்கள்.
நான் வறிய குடும்பத்தில் பிறந்தவன். மிக இளவயதில் தந்தையை இழந்தவன். என்தாய் கடுமையாக உழைத்து என்னை வளர்த்தார். நான் பட்டப்படிப்பெல்லாம் படிக்கவில்லை.
கேள்வி: வானொலியோடு உங்களுக்கு எப்படி சம்பந்தம் ஏற்பட்டது? பதில் சிறுவர்மலர் நிகழ்ச்சிக்கு ஒரு கடிதம் எழுதினேன். வானொலியில் அது வாசிக்கப்பட்டதும் துள்ளிக் குதித்தேன். அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். அடுத்த வாரம் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என் நண்பருக்கு அழைப்பு வர நானும் அவருடன் சென்றேன். அப்போது நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டன. என் நண்பரான ராமதாஸ் அன்று சுகபினம் காரணமாக நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவர் நடிக்கவிருந்த நாடகத்தில் அவருக்குப் பதிலாக பொன்மணி குலசிங்கம் அவர்களால் எனக்கு சந்தர்ப்பம் தரப்பட்டது. பள்ளிக்கூடத்தில் நாடகம் நடித்த அனுபவம் இருந்ததால் திடீர் என்று கிடைத்த சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்தினேன். இதனால் ராமதாஸ் அவர்கள் அவருடைய சந்தர்ப்பத்தை இழந்தார்.
தமிழில் ஒரு வெறியே எனக்கு இருந்தது. ஒருமுறை றேடியோ மாமாவாக இருந்த வி.ஏ. கபூர் லகரத்தை ழகரமாக உச்சரித்ததன் காரணமாக மூன்று வாரங்கள் நிகழ்ச்சியில் பங்குபற்ற சந்தர்ப்பம் தராமல் தண்டனை வழங்கினார். அந்த நிகழ்வு எனக்கு ஒரு அவமானமானது. வைராக்கிய உணர்வுடன் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கக் கற்றுக் கொண்டேன். இதற்குக் காரணமான வி.ஏ. கபூர் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கு மொழியறிவைக் கற்பித்த ஆ. பொன்னுத் துரை, பண்டிதர் சிவலிங்கம் ஆகியோருக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். அகில இலங்கை ரீதியில் ஆறுமுக நாவலர் பற்றிய ஒரு பேச்சுப் போட்டியில்

நான் முதலாம் இடம்பெற்றேன். இப்படியாக தமிழ்உணர்வும், இலக்கிய உணர்வும் என்னுள் வளர்ந்தது. நான் அறிவிப்பாளனாக இணைந்தது வர்த்தக சேவையில் பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு நடைபெறப்போகிறது அதற்கு விண்ணப்பிக்கவில்லையா என மூத்த ஒலிபரப்பாளர் வி.எ. சிவஞானம் அவர்கள் கேட்டு பின்னர் என்னை விண்ணப்பம் எழுத வைத்து அதனை அவரே ஒப்படைத்தார். குரல் பரிசோதனையை முடித்த பின்னர் அதில் தெரிவு செய்யப்பட்டதை அறிந்தேன். ஆறுமாதங்கள் பயிற்சி நடைபெற்றது. சானா என அழைக்கப் படும் சண்முகநாதன் அவர்கள் அப்போது கட்டுப்பாட்டாளராக இருந்தார். அப்போது மூத்த அறிவிப்பாளர்களாக இருந்த மயில் வாகனம், பரராசசிங்கம் ஆகியோரின் அன்பிற்குப் பாத்திரமானேன். இவர்கள் இருவரும் எனக்கு வழிகாட்டியாக இருந்தனர்.
விளம்பரதாரர்கள் விளம்பர அறிவிப்புக்களை என் குரலில் ஒலிப்பதிவு செய்யவேண்டும் என விரும்பிய போது கூட மயில் வாகனம் அவர்கள் என் மீது பொறாமை கொள்ளாமல் விட்டுக் கொடுத்தார் . ஓராண்டுக்குள்ளேயே விளம்பர நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் வாய்ப்புகள் வந்தன. முதல் வாய்ப்பாக நவரசக் கோவை எனும் பதினைந்து நிமிட நிகழ்ச்சி வந்தது. இந்நிகழ்ச்சியில் குறுநாடகம் தயாரித்து வாராவாரம் வழங்கினேன். மூன்று ஆண்டுகள் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகி ஜனரஞ்சகம் ஆனது.
கேள்வி: வாலிபவட்ட நிகழ்ச்சியும் உங்களுக்குப் புகழைத் தந்தது. அதுவும் நீங்கள் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதானே? பதில் இல்லை. அந்நிகழ்ச்சியை விமல் சொக்கநாதன் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் இல்லாத வேளையில் நான் அதனை நடத்தியுள்ளேன். நவரசக்கோவை, இசையும் கதையும், இசைக்கோலம், ஒலிமஞ்சரி, வானொலி மலர் , விளம்பர நிகழ்ச்சிகளான ஏழு கேள்விகள், பாட்டுக்குப் பாட்டு, வினோத வேளை, மீனவ நண்பன் போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை செய்து இருக்கின்றேன்.
கேள்வி: உங்களை மிகவும் பிரபல்யப்படுத்திய நிகழ்ச்சியாக பாட்டுக்குப் பாட்டினை குறிப்பிடமுடியுமா? vn
பதில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் மட்டும் என்னை இனங் காண்பதை நான் விரும்பவில்லை. இது என்னுடைய தாழ்மையான கருத்து. க.பொ.த. உயர்தர மாணவர்களுக்காக நட்சத்திர அறிவுக்க ளஞ்சியம், பரராசசிங்கம் அவர்கள் நடத்திய இலக்கிய தரத்தினைக் கொண்ட இதய ரஞ்சனி என்பன அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருந்தன. ஆனால் குளியலறை சங்கீத ஞானமுடையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்குடைய நிகழ்ச்சியாகவே பாட்டுக் குப் பாட்டினை ஆரம்பித் தோம் இந்நிகழ்ச்சிமூலம்

Page 9
எத்தனையோ கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். புதிய இசையமைப்பாளர்கள் உருவானார்கள். அவர்களுக்கு இரசிகர்கள் உருவானார்கள். இதற்கு அடித்தளம் அமைத்தது பாட்டுக்குப் பாட்டு. அதைப் பலர் மறந்து விட்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த விளம்பரதாரர்களுக்கே நன்றி சொல்ல வேண்டும்.
இப்போது இன்னுமொரு பரம்பரை வந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்தது பாட்டுக்குப் பாட்டு மட்டுமே. இப்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி செய்ய நேரமோ அவகாசமோ இல்லை. பாட்டுக்குப் பாட்டு மட்டுந்தான் என்னை இனங்கான வைக்கிறது. அது தவிர்க்க முடியாத ஒன்று கேள்வி: நீங்கள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற இசை விழாவினை | Syr Lo'r 6ööT Ll- off 6toT முறையில் தொகுத்தளித்ததனை ஒளிப் பேழை மூலம் பார்க்கக் கிடைத்தது. அந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்
பதில் இந்திய சுற்றுலா பிரகடனப்படுத்தப்பட்டு அவ்வாண்டினை சிறப்பிக்கும் வகையில் தைப்பொங்கல் தினத்தன்று இசைவிழா அங்கு ஏற்பாடாகி இருக்கிறது என்று உத்தியோகபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நான் அங்கு சென்றேன்.
ஐந்தரைக் கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டிலே நிகழ்ச்சி நடத்துவதற்கு இலங்கையிலிருந்து ஒரு அறிவிப் பாளனை அழைக்கின்றார்களே என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் ஒளிப்பேழையில் பார்த்த முகங்கள் கொஞ்சம் நான் அங்கு பார்த்த முகங்கள் ஏராளம் 1940களில் இருந்து 90வரை பல வகைகளிலும் பங்களிப்புச் செய்ய கலைஞர் குழாமே அங்கு திரண்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக முதல்நாள் இரவுதான் அங்கு போய்ச் சேர்ந்தேன். டார் யார் பங்குபற்றப் போகிறார்கள் என்ற பூரண விளக்கமும் எனக்கு அங்கு இல்லை. அவர்களைப் பற்றிய தகவல்களும் என் கைவசம் இல்லை. மேடையில் ஏற்றிவிட்டார்கள். அந்நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகி அடுத்தநாள் அதிகாலை 1 1/2 மணிக்கு முடிவடைந்தது. பிறகு அந்த ஒளிப்பேழை உலகெங்கும் வெளியிடப்படப் போகிறது என்பதைக் கேள்விப்பட்டதுடன் சந்தோசம் அடைந்தேன். அதில் என்னுடைய அறிவிப்பையும் சேர்த்துத்தான் வெளியிடப் போகிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டு அவர்களுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை யாராவது பொறுமையுடன் பார்ப்பார்களா என நான் வாதம் செய்தேன். அதனை வழங்கிய என்னுடன் அன்பு கொண்ட தொழிலதிபர் பி.கே.ஜி. பாலன் அவர்கள் அந்த ஒளியிழையில் பெறுமதி வாய்ந்ததாக இருக்கப் போவது நீங்கள்தான் என்றார். அவருடைய வாதம் எவ்வளவு சரியாக இருந்தது என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
நான் கனடாவுக்கு அழைக்கப்பட்டு எனக்கு அங்கே ஒரு பாராட்டு விழாவும் செய்தார்கள். அங்கே ஒவ்வொரு இல் லத்திலும் அதன் ஒரிஜினல் பிரதியை பொக்கிசம் போல் பாதுகாத்து வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் சொல்வதைக் கேட்ட பின்புதான் அதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அங்குதான் நான் அதனைப்

பார்த்தேன். ஒரு புதுமனிதனாக இரசிகனாக இருந்து நான் என்னையே ரசித்தேன்.
சிங்கப்பூரில் எனக்கு ரசிகர்கள் இருப்பார்கள் என்று எனக்கு எதிர்பார்க்க முடியாது. அதனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது. கோயில்கள் அமைந்திருக்கும் அந்தப் பாதையிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஊர்வாசிகள் நடந்து வந்து என்னை இனங்கண்டு எங்கள் கடைக்கு வாருங்கள் எங்கள் கடைக்கு வாருங்கள் என்று உபசரித்தார்கள் எப்படி சாத்தியமானது என்று பார்த்தால் மதுரா இசை விழா ஒலிப்பேழைதான் . அப்படி நீங்கள் சொன்ன ஒலிப்பேழை ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்னொன்றைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், 92ம் ஆண்டு ஒலிப்பேழைதான் - நீங்கள் பார்த்தது. 93ம் ஆண்டும் ஒரு விழா நடந்தது அதைவிடப் பிரமாண்டமான விழா. ஐந்து மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் அதிகாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றது. இந்தியாவிலே அத்தனை கலைஞர்கள் ஒன்று சேர்ந்த காட்சியை யாருமே பார்த்திருக்க முடியாது. தமிழ்ச் சினிமாவின் முதலாவது இசையமைப்பாளர் எஸ்.பீ. வெங்கட்ராமன் அவர் தான் முதல் பாடலைப் பாடினார். அதாவது அவரை ஒரு தள்ளும் நாற்காலியில் உட்கார வைத்து தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். முதல் பாடல் அவர் பாடியது 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் றஹீம்' என்று ஆரம்பித்து நபி நாயகமே என்றபாட்டு, அந்தப்பாடல் முடிந்ததும் அடுத்த பாடல் என்ன பாடல் என்று நினைக்கிறீர்கள்? சின்னச்சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை. இப் படிப் பழமையையும் புதுமையும் அன்றைய தலைமுறையையும் இன்றைய தலைமுறையையும் கலந்த அனுபவம் அது.
சுரதா போன்றவர்களும் நான் அந்த மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பாங்கினைக் கண்டு கவிஞர் வைரமுத்துவிடம் சொன்னாராம், இவருக்கு ஒருவிழா எடுக்க வேண்டும் என்று. அதை நான் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்னைப் பற்றித் தலைக் கனத் தோடு சொல்வதல்ல. வைரமுத்து அதை என்னிடம் சொன்ன போது என் உடம் பெல் லாம் புல்லரித்தது. இப் படி அந்தத் தலைமுறையின் அன்பையும் பெறுமளவுக்கு இறைவன் வாய்ப்பினை வழங்கினான். அந்த வாய்ப்பு இலங்கை வானொலி மூலமாக கிடைத்தது. ஆகவே தான் வெளிநாடுகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தும் கூட இப்பொழுது உலக நாடுகள் அனைத்திலுமே எப்.எம் . வானொலி ஒலிபரப் பாகி கொண்டிருக்கின்றன. பெரும்பாலான எப்.எம். வானொலி நிலையங்கள் என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தான் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அத்தனை இடங்களிலும் இருந்தும் அழைப்பு வந்தும் எனக்கு இந்த நாட்டை விட்டுப் போகவோ இலங்கை வானொலியை விட்டுச் செல்லவோ முடியாத ஒரு நிலை. நன்றி மறந்தவனாக இருக்கக் கூடாது என்பதால் இப்பொழுது ஏற்படும் சிறுமைத்தனங்களையும் பொறுத்துக் கொண்டு தொழில் ரீதியான போட்டி பொறாமைகளையும் சகித்துக் கொண்டு தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றேன்.

Page 10
16
கேள்வி: நீங்கள் சின்னச் சின்ன ஆசை எனக் குறிப்பிட்டவுடன் வித்தியாசமான கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. அண்மையில் ஏ.ஆர். ரகுமான் அவர்களைப் பேட்டி கண்டீர்கள். பேட்டி கண்ட விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது அதைப்பற்றி கொஞ்சம் கூறுங்கள்?
பதில் ரகுமான் ஒரு அற்புதமான 23 வயது இளைஞன். உலக சாதனையாளராக அவர் உயர்ந்திருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. அவருடைய பலம் இறைவன்தான் என்று நான் சொல்வேன். ஏனென்றால் அவர் இறைபக்தி மிக்கவர் அவர் இசையமைக்கும் விதத்திலே ஒரு அதீதமான இறை ஈடுபாட்டை நான் அவதானித்தேன். இது பலருக்குத் தெரியாத விஷயம். நள்ளிரவில் அவரது வீட்டில் இருக்கும் கலையகத்துக்குள்ளே ஒரு பெரிய மெழுகுதிரி ஒன்று இருக்கிறது. கலையகத்தில் உள்ள விளக்குகள் அனைத்தையும் அனைத்துவிட்டு இருளில் இருந்துதான் அவர் மெட்டுக்களை உருவாக்குகிறார். இது அதிகாலை வரை தொடரும். அவரது பாடல்கள் உலக அரங்கு வரை போய் விட்டது. பி.பி.சி நிகழ்ச்சியொன்றை தொலைக்காட்சி ஒன்றில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது பாரிஸ் நகரில் நடைபெறும் ஒரு பெசன் அணிவகுப்பிலே பின்னணியில் என்ன ஒலிக்கிறது எனப் பார்த்தால் ஒட்டகத்தைக் கட்டிக்கோ. தமிழில் இந்த அந்தஸ்த்து யாருக்குமே கிடைக்கவில்லை. ரகுமான் திரையுலகிற்கு வருமுன் உலகளவிலே மற்றவர்களால் இனம் காணப் பட்டார் மற்றும்படி திறமையாகப் பாடக்கூடியவர். அதனால்தான் அவருடைய இசை நுணுக்கங்களை எஸ் பி. பாலசுப் பிரமணியம் அவர்கள் பொறுமையாக இருந்து இசையைப் புரிந்து பாடிக் கொடுக்கிறார். மிக எளிமையானவர் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கொண்டு இருப்பார். அவர் முதல் படத்தின் மூலம் தேசிய விருதினைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கேள்வி. நீங்கள் அறிவிப்பாளர் மட்டுமல்ல ஒரு கவிஞரும் கூட. இறைதாசன் என்ற புனைப் பெயருக்குள் மறைந்திருந்து கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் எழுதி வருகின்றீர்கள். நேயர்களுக்கு தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. அதைப்பற்றிக்
காஞ்சம் கூறுங்கள்.
பதில் நான் கவிஞனல்ல. பாடல் ஆசிரியர் என்று இனம் காண்பதில் கூட எனக்கு சற்றுப் பயம் அதனால் தான் இறைதாசன் என்ற புனைப்பெயருக்குள் நுழைந்து இயங்கி வருகின்றேன். அன்னைபற்றிய பாடல்கள், காலைப் பொழுது பற்றிய பாடல்கள் எழுதியிருக்கின்றேன். அனிச்சமலர் என்ற நாடகத்தையும் எழுதியிருக்கிறேன் 97 நாட்கள் தொடர்ந்து ஓடிய கோமாளிகள் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கின்றேன்.
நல்லதொரு தொலைக்காட்சி நாடகத்தை இயக்கவேண்டும் என நினைத்திருக்கின்றேன். நண்பர் ராமதாஸ் கடந்த தீபாவளியன்று அந்த சந்தர்ப்பத்தைத்தரமேஜர் சுந்தரராஜனை வைத்து குறுநாடகம் ஒன்றினை இயக்கினேன். திரையுலக நுணுக்கங்கள் பலவற்றை அனுபவம் மூலமாக பார்த்தும் தெரிந்தும் வைத்திருக்கின்றேன்.

17
கேள்வி: தற்பொழுது வானொலியின் பல இளம் அறிவிப்பாளர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
பதில்: அறிவுரை கூறும் அளவிற்கு நான் பெரிய ஆசான் அல்ல. இப்பொழுது பொழுதுபோக்கும் சாதனங்கள் ஏராளமாக இருக்கின்றன. கொஞ்ச நேரத்திற்குள்ளேயே ஒருவன் வானொலி கேட்கின்றான் என்றால் அதனை எப்படியும் ஆகர்ச்சிக்கக் கூடிய அளவு அதீத திறமையுடன் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும் வெறும் வாசிப்பாளர் நமக்குத் தேவை இல்லை. நிறைய விடயங்களைப் படித்து அவற்றைக் கிரகித்து தேவைப் படும் நேரத்தில் நேயர்களுக்கு வழங்குபவனாக இருக்க வேண்டும்.
ஒரு அறிவிப்பாளர் படைப் பாளனாகவும் திகழ வேண்டும் ஒலிபரப் புத் துறையில் ஒவ்வொரு அம்சங் களையும் கற்றுணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும். சினிமா அறிவு மட்டுமன்றி உலக அறிவினையும் தெரிந்து நேயர்களுக்கு வழங்குபவனாகவும் இருத்தல் வேண்டும். இதுதான் நான் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு கூறும் அறிவுரை. கேள்வி: ஒருமுறை சிவாஜி கணேசனே உங்களுடைய ரசிகன் என்று புகழ்ந்திருக்கின்றார். அதுபற்றிக் கூறுங்கள்?
பதில் சிவாஜிகணேசன் எனது ரசிகனானது தற்செயலாக ஏற்பட்ட சம்பவம். நான் தயாரித்துநடித்த 'ஒரு வீடுகோயிலாகிறது என்ற தொடர் நாடகத்தினை தற்செயலாகக் கேட்டு பலவாரங்கள் முடியும் வரை தொடர்ந்து கேட்டாராம். அது ஒரு வருடம் ஒலிபரப்பானது, பின்பு அவரின் குடும்ப நண்பராகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சென்னைக்கு செல்லும் போதெல்லாம் அவரது இல்லத்தில் தங்கி உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்தது. கேள்வி: என்னுடைய பேட்டியில் இருந்து வித்தியாசமான கேள்வியை கேட்க விரும்புகின்றேன். உங்கள் குடும்பத்தைப் பற்றி நேயர்கள் அறிய ஆவலாக இருப்பர் அதுபற்றிக் கூறுங்கள்?
பதில் எனது மனைவியின் பெயர் சாமிலா என் மகனின் பெயர் சிறாஜ் ஒரு முறை ஆனந்தவிகடன் பத்திரிகையில் தவறுதலாக பூரீ ராஜ் எனப் போட்டுவிட்டார்கள். என்னுடைய திருமணம் ஒரு கலப்புத் திருமணமான போதிலும் எனது மனைவி இஸ் லாத்தை தழுவி சாமிலாவாக வாழ்ந்து வருகிறார். விசாலாட்சி குகநாதன் என்ற சகோதரி பின்னாளிலே சாகுல் ஹமீத் என்ற தொழிலதிபரை திருமணம் புரிந்து தனது பெயருடன் அவரது கணவரின் பெயரையும் இணைத்து பகுதிநேர அறிவிப்பாளராகச் சேர்ந்து விசாலாட்சி ஹமீத் என்று சொல்ல ஆரம்பித்தார். எனது ரசிகர்கள் தோழன் பத்திரிகையைப் படித்து இந்த தப்பான அபிப் பிராயத்தை விட்டும் நீங்கிக் கொள்வார்கள் என எதிபார்க்கின்றேன்.
* தோழன் சஞ்சிகைக்கு பேட்டியினைத் தந்ததற்கு மனப்பூர்வமான நன்றிகள்

Page 11
NANANANANANNANANANAN N
கடல்கடந்து வந்த ஒரு கைதட்டல்!
வல்லிக் கண்ணன் (சென்னை) R
NANANANANANANANANAN
அன்பு நண்பர் நிந்ததாசன் அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் 31.1.94 கடிதமும், "தோழன்’ 2,3,4,6,7 இதழ்களும் சில தினங்களுக்குமுன் கிடைக்கப்பெற்றேன். சந்தோஷம். உங்களைப் பற்றிய தகவல்கள் தந்ததற்கும், பத்திரிகையின் 5 இதழ்களை அனுப்பியதற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "தோழன்’ இதழ்களை முழுமையாகப் படித்தேன் "தோழன்". பாராட்டப் பட வேண்டிய, தரமான இதழாக விளங்குகின்றது.
சமூகம், கலை, இலக்கியம் , அறிவியல் முதலிய பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி, பயனுள்ள கட்டுரைகளைத் தரும் பல்சுவை ஏடு ஆக "தோழன்' தயாரிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆசிரியர் கருத்துக்களைக் கூறும் தலையங்கப் பகுதி முக்கியமான பிரச்சினைகளைக் குறித்து நல்ல யோசனைகளை அறிவிப்பது வரவேற்புக்கு உரியது. 6,7இதழ்களில் இடம் பெற்றுள்ள 'நமது வானத்தின் கீழே’ எனும் பகுதி ரசமான அம்சம். பல்வேறு பொருள்கள் பற்றியும் சூடாகவும் சுவையாகவும் அபிப்பிராயங்களை ஒலிபரப்பும் நவீனனுக்கு என் பாராட்டுக்கள். நிந்ததாசன் கதைகள் ரசனைக்கு விருந்து. அவருக்கென ஒரு தனிநடையும் சொல்லும் முறையும் கொண்டு கதைகளை நயமாக எழுதியிருக்கிறார். 6,7இதழ்களில் காணப்படுகின்ற கதைகள் சமூக நோக்குடனும் மனித நேயத்துடனும், சமாதான சக வாழ்வை - மத நல்லிணக்கத்தை ஒற்றுமை உணர்வை வலியுறுத்தும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளன. மகாகவி பாரதியார் கொள்கைகளைப் பின்பற்றுவதில் "தோழன் ஆர்வம் கொண்டிருப்பதும் போற்றுதலுக்குரியது. "தோழன் தன் இலட்சியப் பாதையில் முன்னேறி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
அன்பு
6). 35.
 

19
மல்லிகைப் பந்தலும் மலர்ந்த பூக்களும் ஒரு மதீப்பீடு (தொடர்கட்டுரை)
கலாநிதிதுரைமனோகரன்
அட்டைப் பட நாயகர்களைப் பற்றி எழுதியோருள் கே.ஜி. அமரதாஸவும் ஒருவர். பெண் எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில், அட்டைப்பட நாயகியாகக் குறமகளும், அட்டைப்படக் குறிப்புக்களை எழுதியோராக கே. ராஜேஸ்வரி, கோகிலா மகேந்திரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்நூலில் இடம் பெற்றுள்ள குறிப்புகளுள், ஒன்றுக்கு மேற்பட்டவற்றை எழுதியோராக டொமினிக் ஜீவா கார்த்திகேசு சிவத்தம்பி, தங்கதேவன் ஆகியோர் விளங்குகின்றனர்.
அட்டைப்பட ஓவியங்களில் இடம்பெற்ற பெருமைக்குரியோர் ஈழத்து இலக்கிய உலகிலும், பரந்த தமிழ் இலக்கியப் பரப்பிலும் தமது பங்களிப்பினை நல்கியவராவர். சிலர் சர்வதேச ரீதியாகவும் கணிப்புப் பெற்றவர்கள். இந்த வகையில் இந்நூல் ஈழத்தின் இலக்கியச் செல்வர்கள் பற்றிய பொதுமதிப்பீடாகவும் விளங்குகின்றது.
அட்டைப்பட ஓவியங்களை எழுதிய ஒவ்வொருவரும் தத்தமது கோணத்திலிருந்து குறிப்பிட்ட அவர்களைப் பற்றி நோக்கியுள்ளமை புலனாகின்றது. ஒவ்வொருவரினதும் ஆளுமைகள் முழுமையாக அவற்றை எழுதியோரால் வெளிக்கொணரப்பட்டுள்ளன எனக் கூற முடியாதாயினும், அவரவரது ஆளுமை வீச்சில் சில பகுதிகளையாவது இனங் காண முடிவது குறிப் பிடத்தக்கதே. அதேவேளையில் எழுதியோரின் ஆளுமைகளும் அவரவர் எழுத்தின் மூலமாகப் புலப்படுகின்றன என்பதும் மனங்கொள்ளத்தக்கது.
இந்நூலிற் காணப்படும் முக்கிய குறைபாடு, அட்டைப்படங்க ளுக்குரியவர்களது படங்கள் இடம்பெறாமையாகும். அதனால், அழகாகத் தன் னை அலங்கரித்துவிட் டு திலகமிட மறந்த பெண் னைப் போல் நூல் காட்சி தருகின்றது. அடுத்த பதிப் பில் இக்குறையை நீக்குவது நல்லது. அதேவேளை நூலின் தொகுப்பாசிரியர் டொமினிக் ஜீவா குறிப்பிட்டுள்ளமை போன்று. 'பகுதி பகுதியாக எல்லா அட்டைப் படங்களையும் அச்சு வாகனம் ஏற்றி அழகான நூலாக்கும் எண்ணம்’ எதிர்காலத்தில் நிறைவேற வேண்டும்.
அட்டைப்பட ஓவியங்களைப் போன்று, துண்டிலும் தனித்துவம் மிக்கதொரு முயற்சியாகும். தூண்டில்' என்ற பெயரிற் பொதிந்துள்ள ஆழமான அர்த்தம் சிந்தனையைத் தருவதாக உள்ளது. ஒருவகையில் இந்நூல், மல்லிகை ஆசிரியரின் ஆளுமை வீச்சின் பிரதிபலிப்பாக விளங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. அபார உழைப்பும் ,

Page 12
20
அளவற்ற நம்பிக்கையுணர்வும் அவரது பலமான இரு கால்கள் ான்பதைத் தூண்டில் உணர்த்துகின்றது. 'சரித்திரத்தில் எனது ழைப்பின் பெறுபேறு நிச்சயம் பதியப்படும்" (பக். 36) என்றும் 'என் மரணத்திற்குப் பின்னர்தான் என்னைப்பற்றிய சரியான மதிப்பீட்டு விமர்சனம் தெளிவாக வெளிவரும்" (பக். 31) எனவும் அவர் கூறுவன, அவரது பலமான அத்திவாரத்தின் பிரதிபலிப்பையே சுட்டுகின்றன. இன்னொரு வகையில் இந்நூல், ஜீவாவின் சுயபரிசோதனையாகவும், கலந்துரையாடலாகவும் விளங்குகின்றது.
மல் லி கையின் வளர்ச்சியினை ஒரு வகையில் தனிமனித ஆளுமையொன் றின் வளர்ச்சியாகவும் கொள்ள முடியும் "இலங்கையின் வரலாற்றில் தான் தயாரிக்கும் சஞ்சிகையைத் தானே சுமந்து சென்று விற்றுவருவதில் பெருமிதப்படும் ஒரே ஒரு ஜீவன் நான் தான் ' (பக் 57) என்று அவர் குறிப்பிடுவது நோக்கத் தக்கது. மல்லிகையின் அடிப்படை பற்றிக் கூறுமிடத்து, 'சாந்தி, சரஸ்வதி தொடர்ந்த பாதையைத் தான் மல்லிகை பின்பற்றி வருகின்றது என்பதை மல்லிகை தனது ரெலாற்றுட் பின்னணியாகக் கொண்டு இயங்கி வருகின்றது" (பக் 48} எனச் சுட்டியுள்ளார். மல்லிகையின் எதிர்கால வளர்ச்சி பற்றிய அவரது நோக்கு உண்மையிற பாராட்டப் பட வேண்டியதாகும். மல்லிகையை நான் சிரமப்பட்டு நடத்துவதால் மல்லிகை எனது தனிப்பட்ட சஞ்சிகை அல்ல. அது ஒரு மாபெரும் இலக்கிய இயக்கத்தின் பிரதிபலிப்பு. பிற்சந்ததி மல்லிகையின் 100 - வது ஆண் டைக் கோலாகலமாகக் கொண் டா டக் கூடியதாகவே மல்லிகையின் அமைப்பு உள்ளது என்பதை நான் நிச்சயமாகவே உங்களுக்கு கூறிக் கொள்கின்றேன். (பக் 21, 22) என்று அவர் குறிப்பிடுவன, வெறும் உணர்ச்சிகரமான வார்த்தைகள் அல்ல என்பதை, மல்லிகையின் இருபத்தைந்து ஆண்டுச் சாதனை உணர்த்துகின்றது.
துண்டிலில் ஆங்காங்கே விமர்சன ரீதியாகவும் கருத்துகளைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாரதி, பாரதிதாசன் , கைலாசபதி, சிவத்தம்பி, கனக. செந்தில்நாதன், நந்தி, டானியல், மு. தளையசிங்கம், காவலூர் ஜெகநாதன், கே. ஜி. அமரதாஸ், புலவர் கீரன், வலம்புரிஜான், தியாகராஜபாகவதர் முதலானோர் பற்றிய விமர்சன ரீதியான கருத்துக்கள் மனங்கொள்ளத்தக்கனவாக உள்ளன. பாரதி பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, "எத்தனைதான் முரண்பாடுகள் அவரிடம் இருந்தபோதிலும் கூட, அந்தக் காலத்தில் அவரைவிடச் சிறந்த மனிதாபிமானி, போராளி, தேசிய சிந்தனையாளன், மாகவிஞன் வேறொருவருமே இருந்ததில்லை. இதுதான் அவரிடம் உள்ள மிகச் சிறந்த சிறப்பம்சமாகும்’ (பக் 69) எனக் குறிப்பிட்டுள்ளமை, பாரதி பற்றிய ஜீவாவின் தெளிந்த சிந்தனையைக் காட் டுகின்றது. பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் பற்றி மதிப்பீடும் இந்நூலிற் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது. (பக். 50. 51) மணிக் கொடி சரஸ்வதி பற்றி ஒப்பீடும் மனங்கொள்ளத்தக்கதாக உள்ளது. (பக்.79)

21
புத்திளம் எழுத்தாளரை ஆதரித்து ஊக்குவிக்கும் டொமினிக் ஜீவாவின் பயன்தருபண்பினையும் நூலிற் காணமுடிகின்றது. பின்வரும் பகுதி அதனை எடுத்துக்காட்டுகின்றது; "புதிய புதிய இளம் குருத்துக்கள் இன்று ஈழத்து இலக்கிய உலகில் துளிர்விட்டுப் பிரகாசித்து வளர்ந்து வருகின்றனவே. அவைகளுக்குப் பசளையிட்டு வளர்ப்போம். நல்ல அறுவடை கிடைக்கும் ' (பக் 69) . அதேவேளை, இன்றைய இளந் தலைமுறை எழுத்தாளரின் குறைகள் பற்றி ஜீவா குறிப்பிட்டுள்ளமையும் (பக்.53,54) சிந்தனைக்குரியவை.
ஈழத்தின் இருபெரும் இனங்களுக்கிடையிலான இலக்கியத் தொடர்பும் உறவும் பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகவே இருந்துவருவதனையும் துண் டில் சுட்டிக் காட்டுகின்றது. இது தொடர்பான பின் வரும் கருத்து, பெரும் பான்மையின இலக்கியவாதிகளால் மனங்கொள்ளப்பட வேண்டியதாகும், 'தேசிய ஒறறுமை என்பது ஒருவழிப்பாதையல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். முற்போக்குச் சிங்களக் கலைஞர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு தமது தேசியக் கடமையை அவர்களும் பெரு வாரியாக நிறைவேற்ற முன் வரவேண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத்தக்கதான சிருஷ்டிகளை உருவாக்க அவர்கள் உழைக்க வேண்டும்.' பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர் கலைஞர்களே இத் தேசியக கடமையை உணர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். இதில் மல்லிகைக்கும் கணிசமான பங்குண்டு.
மல்லிகை ஆசிரியரின் உள்ளக்கிடக்கைகளும் தூண்டிலிற் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈழத்து எழுத்தாளர் பற்றி நூலொன்று எழுதும் திட்டமிருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார். அத்தகையதொரு முயற்சி உண்மையில் வரவேற்புக்குரியதொன்று 'இனிமேல் படைப்புத்துறையில் முழு நாட்டங்கொள்ள வேண்டும்' என்ற தமது பெருவிருப்பத்தையும் ஓரிடத்திற் தெரிவித்துள்ளார். அநேகமாக ஜீவாவின் எழுத்திலும் பேச் சிலும் ஒருவகைக் கடும் போக்குக் காணப்படுவதுண்டு. ஆயினும், அவரது நகைச்சுவையுணர்வுகளைப் புலப்படுத்தும் சந்தர்ப்பங்களும் தூண்டிலில் இடம்பெற்றுள்ளன. (பக். 49.58,105), ஒரிடத்தில் (பக் 55) மல் லி கையின் பின்னணி உழைப்பாளர் சந்திரசேகரம் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.
சுவையும், தகவல்களும் நிறைந்த இந்நூல், பல வாசகர்கள் பரந்த அறிவெல்லையுடனும், கூர்மையுடனும் சிந்திக்கின்றனர். என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. சில குறைகளை இந்நூல் தவிர்த் திருந்தால் மேலும் சிறப்பாக மிளிர்ந்திருக்கும் எனத் தோன்றுகின்றது. குறிப்பாக ஏறத்தாழ ஒரே வகையான பதில்களைக் கொண்டுள்ள பகுதிகளை தவிர்த்திருக்கலாம். ஒரு தூண்டிலும், மீனும் இருமுறை இடம்பெற்றுவிட்டன. (பக் 26.90). அச்சுத்தவறுகளும் ஆங் காங்கு விருப்பம் போல் இடம் பிடிக்க முயற்சித்துள்ளன. உண்மையில் இவை சிறிய குறைகளே.

Page 13
22
இதுவரை வெளிவந்த மல்லிகைப்பந்தல் வெளியீடுகள் அனைத்தும் ஒவ்வொரு வகையில் ஈழத்தின் இலக்கியப் போக்கை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. ஈழத்து எழுத்தின் தரத்தை நிர்ணயிப்பதற்கு இந்நூல்கள் தம்மளவிற்கு பங்காற்றியுள்ளன எனலாம். ஐந்து ஆக்க இலக்கிய நூல்களும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் பாதையிற் குறிப்பிடத்தக்கனவாக அமைந்துள்ள அதேவேளை, மற்றைய இரு நூல்களும் இந்நாட்டின் எழுத்தோடு தொடர்பான ஆளுமைகளையும், நோக்குகளையும் போக்குகளையும் உணர்த்துவனவாக விளங்குகின்றன. மல்லிகைப் பந்தலின் "மணத்தை மலர்ந்த இப்பூக்கள் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன. மலரவிருக்கும் பூக்களும் தமது தரத்தை நிச்சயம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை, இலக்கிய ஆர்வலரிடம் இயல்பாகவே உண்டு. வடக்கு - கிழக்கின் அமைதியற்ற சூழ்நிலை, 'மல்லிகைப் பந்த லின் மற்றைய பூக்கள் வெளிவருவதைத் தாமதப்படுத்திவிட்டன.
(8ம் பக்கத் தொடர்ச்சி) (முற்றும்)
அவள் ஓடிவந்து தன் மகளை எழுப்பி என் பக்கத்தில படுக்க வைத்து, நெற்றியில் திருநூறு பூசி, ஒரே போர்வையால் போர்த்திவிட்டு, படலை திறக்க என் மனம் பதறித் துடித்தது. பக்கத்தில் பருவ மங்கை என்னை நிமிடத்திற்கு நிமிடம் அண்ணா என்று அழைப்பவள், பூட்ஸ் சத்தம் குடிசைக்குள், இதயம் அறுபட்ட கிடாவாய் துடித்துக் கொண்டது. கமலா அவள் கரம் எடுத்து என்னை அணைத்து நெஞ்சில் தலைவைத்து ஆழ்ந்த தூக்கம் போல் கிடந்தாள். என் முகம் மறைத்த தாவணியை விலக்க மனமின்றிநான் சங்கடத்தில் நெளிந்தேன். புருஷன் - மனைவியின் நெருக்கம் கண்டு. அவர்கள் போக கமலா துள்ளி எழுந்து, ‘அண்ணா பயப்படாதீங்கோ, நாங்க உங்கள எங்கட உசிரக் கொடுத்தும் காப்பாத்துவம்.”
நான் அவள் கரம் பிடித்து அழுதேன். தம்பி "செக்கல் நேரமா ஊரைவிட்டுதாண்டுவம், இப்ப தூங்குங்க நான் உங்கள காப்பாத்த, அப்படி சொல்லிட்டன், மன்னிச்சிடுங்க". "இல்லக்கா நீங்க மனிஷப் பழம் , என்னை காப் பாத்தினத்திற்கு நான் தான் உங்களுக்கு ஊழியம் செய்யனும் 'என்ன தம்பி பெரிய வார்த்தையெல்லாம். நாம ஏன் வீணா சங்கடப்படனும். அம்மா! அண்ணா அழுவுறார் பாரேன்' அண்ணிட ஞாபகம் வந்துட்டு போல," கமலா சீண்ட நான் அவள் கன்னத்தில் செல்லமாய் தட்ட, அவள் என் ஆனந்தக் கண்ணிரை ஆதரவாய் துடைத்துவிட்டாள். வானம் சிவந்து கொண்டு வந்தது.
கற்பனை கொஞ்சம்

23
தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் அவை தோட்டத் துறை உற்பத்தி, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை முதலியவற்றில் பாதிப்புக்களையும் ஏற்படுத்தியது.
அத்துடன் பெற்றோல், டீசல், மண்எண்ணை முதலிய எரிபொருள் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், விமானங்கள், புகையிரதம், முதலியவற்றின் உற்பத்தி, அவை முதன் முதல் தோட்டப்புறங்களுக்கு அறிமுகமான பொழுது தொழிலாளர்கள் அடைந்த வியப்பு, அச்சம். முதலாம் இரண்டாம் உலக மகாயுத்தங்கள், அவை உலக அரங்கில் ஏற்படுத்திய பாதிப்புகள் முதலியவற்றையும் ஏற்ற ஏற்ற சந்தர்ப்பங்களில் நாவலாசிரியர் காட்டிச் செல்லத் தவறவில்லை.
முதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தொழிலாளர் மத்தியிற் சிறிது சிறிதாக விழிப்புணர்ச்சி ஏற்படத் தொடங்கியதையும் முதன் முதல் தொழிற் சங்கங்கள் அறிமுகமாகியதையும் இளைய தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்துடன் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது தோட்ட அதிகாரிகள் அவற்றை முளையிலேயே கிள்ளி நசுக்கி விட முனைந்ததையும் அதிகாரிகளின் கையாட்களாக விளங்கிய தொழிலாளர்கள் சிலரும் இதற்கு உடந்தையாக விளங்கியதையும் முதிய தலைமுறையினர் இவை பற்றி ஏதுமறியாது வியப் பும் , அச்சமும் கொண் டதையும் அறியாமையினாலும் அச்சத்தினாலும் இளைய தலைமுறையினரின் நடவடிக்கைகளை நிறுத்த முனைந்ததையும் இரண்டாம் உலக மகாயுத்த காலத்திலும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் தொழிற்சங்கங்கள் படிப்படியா வளர்ச்சியுற்றுத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் பலம் வாய்ந்த நிறுவனங்களாக பரிணமிக்கத் தொடங்கியமையையும் பொருத்தமான முறையில் நாவலாசிரியர் பல்வேறு உத்திகளைக் கையாண்டு விளக்கியுள்ளார்.
1920கள் முதல் 1940கள் வரை தேசபக்தன் கோ. நடேசய்யர் மலையகத் தொழிலாளர்களின் வாழ்வில் விடிவினை ஏற்படுத்தவும் அவர்களை அறியாமையிலும் அடிமைச் சகதியிலுமிருந்து விழிப்புற்றெழச் செய்யவும் சொற்பொழிவுகள் ஆற்றியும் பத்திரிகைகள் வெளியிட்டும் ஆட்சியாளருடனும் தோட்டத்து அதிகாரிகளுடனும் வாதாடியும் போராடியும் தொழிற் சங்கம் நிறுவியும் சட்டசபை அங்கத்தவராக நின்று போர் தொடுத்தும் தொழிலாளரின் விமோசனத்துக்காகத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டிருந்த காலமாகும். (சாரல் நாடன், 1988, தேசபக்தன் - கே. நடேசய்யர்)

Page 14
நடேசய்யரது நடவடிக்கைகளையும் நாவலாசிரியரின் மேற்கண்ட விளக்கங்களையும் ஏனைய விடயங்களையும் ஒப்பு நோக்கும் போது அவற்றின் உண்மை புலப்படும்.
தொழிற் சங்க நடவடிக் கைகளில் மாரிமுத்து லட்சுமனன் முதலியோர் முதன் முதல் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய நிலையை நாவலாசிரியர் பின்வருமாறு காட்டியுள்ளார்.
திரியிரானாமே. கங்கானியார் அதேதான் இப்போ சொல்லிக்கிட்டு வந்தாரு'
“ஆளா? . எதுக்கு' என்றாள் வள்ளி, ஒன்றும் விளங்காதவளாய்
’’ - - - - - - - நம் பலட்சுமணன் என்னமோ ஆள் சேர்த்துக் கிட்டுத்
என்னமோ ஹட்டனிலே இந்த வேலையை விட்டு நிப்பாட்டிட்டவங்களுக்கு ஒருவழி செய்யோணும்னு ஒருத்தர் ஏதோ இந்தியர் சங்கம்னு ஒன்று ஆரம்பிச்சிருக்காராம். அதே பத்தி நான் முதலை கேள்விப்பட்டிருக்கேன்
நீ சொல்றது ஒன்றும் விளங்கலியே?
அதுதான் ஒரு சங்கம் ஆரம்பிச்சு அங்கே இந்த வேலையில்லாதவங்களுக்கு ஊருக்குத் திரும்பிப் போவ அரசாங்கம் மூலம் உதவி வாங்கி என்னமோ செய்யிறாராம்' (தூரத்துப் பச்சை 1964, பக். 270) மேற்கண்ட பகுதியில் இடம்பெறும் அந்த ஒருத்தர்' நடேசய்யராக இருக்கலாம்.
மலையகத்தில் தொழிலாளர்கள் குடியேற்றப் பட்ட ஆரம்ப காலப்பகுதியில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வசதி அறவே மறுக் கப்பட்டதையும் காலப் போக்கில் தொழிலாளரின் பிள்ளைகளால் தோட்டப் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாதிருக்கப் பாடசாலை' என்ற பெயரில் ஆங்காங்கே சிறு கட்டிடங்கள் நிறுவப்பட்டுப் பகல் நேரங்களில் பிள்ளைகள் அங்கு அடைக்கப்பட்டு, கல்வி கற்பதற்குப் பதில் தோட்ட அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பணிவிடை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டமையையும் பாத்திர உரையாடல் கள் மூலம் நாவலாசிரியர் துல் லியமாக வெளிப்படுத்தியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
மலையகத்திற் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது பெருந்தோட்டங்களைச் சூழவிருந்த கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்கள் தோட்டங்களிற் கூலிவேலை செய்ய அதிகம் விரும்பாதிருந்த போதும் வறுமை காரணமாகக் காலப்போக்கில் கொழுந்து மிகுதியாக ஏற்படும் காலங்களில் கிராமப் புறங்களைச் சேர்ந்த சிங் களத் தொழிலாளர்களும் வந்து தோட்டங்களில் வேலை செய்தமையும் தமிழ் தொழிலாளர்களுடன் அந்நியோன் மியமாகப் பழகியமையையும் முதலிற் கோப்பிச் செய்கையும் பின்னர் தேயிலைச் செய்கையும் மேற் கொள்ளப் பட்டமையையும் கதைப் போக் கோடு ஒட்டி நாவலாசிரியர் விளக்கியுள்ளார்.
(அடுத்த இதழில் தொடரும்)

ஒரு நிமிடமேனும்
இங்கே
நில்!
2-4iT ... உள்ளத்தைத் தொட்டு உண்மையைக் கொஞ்சம்
சொல்!
என் ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்து பேரெடுத்துத் தந்தவள்
si !
நட்பின் எல்லைக்குள்
* தை" குலுக்கிய நம்மை பிரித்துப் பார்ப்பதற்கு ஒற்றைக் காலில் ஊஞ்சலாடியது இந்த சமூகம் !
உன் பெயரை எனக்கும் என் பெயரை உனக்கும் மாலையாகப் போட்டவர்கள் வேறு யாருமல்ல
நம் நண்பர்சுள்தான்!
இந்த நண்பர்களின் எரிகின்ற விளக்கிற்கு எண்ணெயை ஊற்றியவள்
நீ தான்!
r SA A MAAA S AAAAA AAAA AAALAAAAALMMMMMALLS MMMAqA Aq qLAAASA SAAMMMMAASS
- எஸ். வை. பூஜீதர்
இதைச்செய்
இதைச் செய்யாதே என்று கோடு போட்ட நீ
வா என்று. சொல்லி
வழி மேல் விழி வைத்துப் பார்த்திருந்து
வந்த போதோ
வாசலை மூடி
போ என்று சொல்லாமல் சொன்னவளும் நீ தான் !
இருந்தாலும் பரவாயில்லை
என் ஆக்கங்களுக்கு உாக்கம் தந்து பெயரெடுத்துத் தந்தவள் நீ ! அதனால் பொறுக்கின்றேன் ! இப்போது
போய்வா !

Page 15
சுத்தமான பன்ன போன்றவற்றை
கம கம மனத்
பெற்றுக்கொள்
பஸ் மிலா இ
அரசடித் ே நிந்த:
இல, 23 நயாவல மாவனல்லைய என்பவரால் மாவனல்லை M.J. வெளியிடப்பு

ரீர், ஒமவாட்டர்
த் தரமாகவும்
துடனும்
॥
இன்டஸ் ரீஸ்
தாட்டம், |
in T.
SLLL LSLS வில் வசிக்கும் A. G. றாஹில்
M அச்சகத்தில் அச்சிட்டு
-5).