கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானம்பாடி 1983.09

Page 1
இன்று நீர்
சிந்தும்
ரத்தம் ஓர் துளியும் நின்று யுகம் பலவும் நிகழ்த்துமே!
- மனுேன் மணியம் சுந்தரம் பிள்ளை
ஓவியம்: எம். ஆறுமுகம்
22 ா கவிதை மடல் =

(GFL, i 1955

Page 2
மகாகவி பாரதி
மிஞ்ச விடலாமோ?
e é . S அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணிர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ-- தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே-- தனிக் காட்டினில் பெண்கள் புழுங்குகின்றர். . . .
நாட்டை நினைப்பாரோ - எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ-- அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ - அவர்
விம்மியழவும் திறங் கெட்டுப் போயினர்
நெஞ்சம் குமுறுகிருர் கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம்- துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே- அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ?.....
(காலம் தோறும் தன்னைப் புதுக்கிக் கொள்ளும் பாரதி கவிதை ஈழத் தமிழரின் குரலாக ஒலிக் கின்றது)

ஈழத் தமிழ் இனம் இனப்படுகொலைக்கு இரையாகி வரலாறு காணுத கொடுமையைச் சந்தித்திருக்கிறது.
சிங்கள ராணுவமும் காவல் து  ைற யு ம் அரசும் மனித உரிமைகளை நசுக்கித் துவைத்து புதிய பாசிச வெறியின் திமிர் பிடித்த அவதாரங்களாக உருவெடுத்
துள்ளன.
சிறையில் விடுதலைப் புலிகளும் கா ந் திய வாதி களும் நாகரிக உலகம் நாணித் தலை குனியத் தக்கவாறு சிங்கள வேட்டை நாய்களால் சின் ஞ பின்னமாக்கப் பட்டுள்ளனர்.
கொள்ளை, கொலை, கற்பழிப்பு, தீக்கிரை, உடை மைக்கும் உயிருக்கும் நாசமென அலை அலையாய்த் துயரங்கள் அலைகடலுக்கு அப்பாலே.
கொதித்துப் போன தமிழகம் என்றும் காணுத அளவு சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாகும் வேதனையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. ஒடி உதவ முடியாது கொடுங்கடல் தடுக்கிறதே என்று குமுறிக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் ஓரணியாய்ப் பேரணி சேர்ந்துதனி நாடு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய அரசு நிதானத்தை அதிகமாகவே ஆபர ணமாய்ச் சூடிக் கொண்டு பேச்சுவார்த்தைப் பேரம் தொடங்குகிறது.

Page 3
நீலக்கடலுக்கு அப்பால் நிர்க்கதியாய்த் தவிக்கும் தமிழ்ச் சகோதரர்களுக்காக உண்ணு நோன்பிருந்தோம் -ஊர்வலமாய்ச் சென்ருேம். கறுப்புக் கொடி பிடித்தோம். - கண்டனங்கள் தெரிவித்தோம் - கையெழுத்து மலை குவித்தோம். தியாகப் பயணம் தென் கோடி வரை சென்ருேம், துன்ப நெருப்புக்கு இவையெல்லாம் துணை யாகுமா? நித்தம் நம் சிந்தனையில் பித்துப் பிடித்தலைந் தோம்.
சென்ற இதழில் தான் ஈழத் தமிழர் சிந்தனைக் கவிதைகளைப் படைத்துக் கொடுத்தது வானம்பா டி. அடுத்த இதழ் கண்ணிரும் ரத் த மு மாக வெளிவர நேர்ந்து விட்டதே வரலாற்றுக் கொடுமை.
டொமினிக் ஜீவா, அந்தோணி ஜீவா, யேசுராசா, எம். ஏ. நுஃமான், முருகையன், சண்முகம் சிவலிங்கம், கலாநிதி சிவத்தம்பி இன்னும் எங்கள் எழுத்துப் பட்டா ளம் இந்த ரத்தமழையில் எப்ப்டித் தவிக்கிருர்களோ என மனம் திகைத்துப் போகிறது. ஈழத் தமிழ்க் கவி தைச் சிறப்பிதழுக்கு உழைத்துதவிய அன்புத் தோழர் பத்மநாபனிடமிருந்தும் செய்தி இல்லை.
ஒடுக்கப்பட்ட குரல்களே! மானுடத்தின் நம்பிக்கை நாற்றுக்களே! தமிழ் ஈழச் செல்வங்களே! உங்களுக்காக நாங்கள் பேணுக்களை மட்டுமல்ல இதயங்களையும் ஈட்டி முனைகளாகத்தீட்டி வைத்திருக்கிருேம். இமை விளிம்பில் கண்ணிரும் கருமணியில் கனலுமாகக் காத்திருக்கிருேம் .
எங்களுக்குத் தெரியும் உங்கள் தடந் தோள்களின் வலிமை எங்களுக்குத் தெரியும் உங்கள் அசைக்க முடியாத ஆற்றல் எங்களுக்குத் தெரியும் உங்கள் நசுக்க முடியாத நம்பிக்கை எங்களுக்குத் தெரியும் ஈழம் வெல்லும்-தமிழ் ஈழம் வென்றே தீரும்!

நிர்மலா நித்தியானந்தன்
சபதம்
கரு ‘*சபதம்’ என்ற இத்தாலியக் கவிதை
எப்படிப் பாடுவோம்? அந்நியன் கால்கள்- எங்கள் நெஞ்சில் பதியும்போது எப்படிப் பாடுவோம்?
பனிக்குளிரில் விறைத்து நிற்கும் பச்சைப் புற் சதுக்கங்களில் மரித்தோர் சடலங்கள் மத்தியில் எப்படிப் பாடுவோம்? - -
குட்டியாட்டுக் கத்றல் தொனிக்கும் பச்சைப் பாலரின் புலம்பல் தந்திக் கம்பத்தில் அறைந்து கிடக்கும் தனையனைத் தேடும் தாயின் கரிய ஒலம்
கரிய ஒலம் கேட்கும் நாங்கள் கேட்கும் நாங்கள் எப்படிப் பாடுவோம்?
மரக்கிளைகளில் நாம் தூக்கிலிட்ட கின்னரங்களைத் தொடவே இல்லை இது எங்கள் சபதம் சோகம் நிறைந்த காற்றில் மெதுவாய் கின்னரங்கள் ஆடின "எப்படிப் பாடுவோம்"
(ஈழத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தீவிரவாதி களில் ஒருவர் நிர்மலா நித்தியானந்தன்)

Page 4
சேரன்
ஒரு கவிதை
துப்பாக்கிகள் சுடுவதற்காகவா? அல்லது குத்துவதற்கா? வெயில் தொட, மினுங்கும் கத்திமுனை ஒன்று அதில் இருப்பது உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன். இம்முனையிலிருந்து அம்முனை வரையும் மனிதர்கள் திரிகிற தெருவில் நடுவில் விறைப்பாய், நீட்டிய துவக்குடன் நிற்கிற அவனைக் கேட்கலாம்.
ஆணுல், அவனே இறுகிய கையுடன் நகர்கிற மனிதரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிருன்உடனே என்றில்லா விட்டாலும் ஒரு இளைஞன், அல்லது வேட்டியுடனுன, நரை விழுந்த ஒரு மனிதர்,
அல்லது பாடசாலைப் பயல் யாரென்றில்லை யாரைவாவது அவன் சுடலாம் என்றுதான் தோன்றுகிறது. . . அவனை கேட்பது உசிதம் இல்லை, நல்லது. இரண்டாம் உலகப் போர்க்காலத்து யப்பானியச் சிப்பாய்களைக் கேட்டாலோ,
**நிராயுத பாணிகளான மனிதரை நெடு நேரம் சுடுதல் இயலாது; சலிப்புத்தான் எஞ்சும்;
இன்னும், குழந்தைகள் பெண்கள் இவர்களைப் பொறுத்தும் ஒரு மாறுதலுக்காகக் கத்தி முனையைப் பாவிக்கலாம்' என்று இடுங்கிய கண்களுடன் அந்த நாளைய இரத்தம் தோய்ந்த நினைவுகளோடு அவர்கள் சொல்லக் கூடும்!
எல்லா இராணுவத்தானும், சிங்களவனுே யப்பானியனுே ஜேர்மனியனுே

துவக்குடன் ஒருவித நட்பை ஆரம்பித்துக் கொள்கிருர்கள்!
இது உண்மைதான் அந்த தெருவின் நடுவில் நிற்கிற அவனையும் அவன் பின் தொடர்கிற மற்றையவர்களையும் UT ITA5g5 , இது முற்றிலும் உண்மை என உணருங்கள்.
ஒரு பிரியமான ஆட்டுக்குட்டியைப் போல அல்லது ஒரு வளர்ப்புப் புருவைப்போல அதனைத் தாங்குகிருர்கள். . . அனல் தெறிக்க அதனைப் பற்றவைக்கிற போது அவர்கள் தங்கள் அரசுக்கு எவ்வளவோ நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். அப்படி ஒன்றுமல்ல. . .
அலவன்சுகளும் வசதிகளும் இங்கே நெடுங்காலம் அவர்களைத் தங்க வைக்க முடியாது.
புரிகிறதா?
OWJT GOT 6T600TLo
அன்று, வானை நோக்கி எலும்புகள் நீட்டிச் செத்துப்போன ராட்சத மரமாய் நெருப்பில் கருகி நின்றது வீடு. . .
உனது வீட்டை இரவில் கொளுத்தினர்.
சூரியன் பிளந்து சிதறும் குருதியாய் கிடுகுகள் விலகி ஒளிரும் கதிர்களை
தெருவில் நின்று பார்க்க நேர்ந்தது.
உனது நிலத்தை அவர்கள் பறித்தனர். இன்று,
உன்னைக் கொன்றனர். உன்னை அவர்கள் கொன்றனர்.

Page 5
இன்ருே, பழைய கதையை மீண்டும் பார்க்கிறேன் ஆவரஞ் செடி, அதன்புறம் கள்ளி ஆட்களே இன்றிச் சூரியன் மட்டும் தனித்துப் போன இவ்வெளியில்
இன்றும், ஆள்காட்டிகளே கூக்குரல் எழுப்ப உன்னை எரித்துத் திரும்பினர். பிறகு நாங்களும்!
நெருஞ்சி மலர்கள் மஞ்சளாய் நிமிர்கிற மண்ணில் ஒருபிடி கூட உனக்குச் சொந்தம் இல்லை. உனது அப்பன், பனையில் இருந்து தவறி வீழ்ந்ததில் ஒரு கணப்பொழுதில் வார்த்தைக ளிழந்து ரத்தமாய் உறைந்தவன்.
அவனது அப்பன்,
செத்துப் போனதும் "காய்க்கும் நன்ருய்' என்பதனுலே
மாதுளம் பாத்தியுள் ஆழப் புதைந்தவன். இன்று ஒன்றுமேயில்லை. உன்னையும் வெட்டினர் ஆயிரம் விரல்கள் உன்னை நோக்கித் துவக்கு முனைகளாய் நீண்ட போதும் கோடையில் வெடிக்கிற யாழ்ப்பாணத்தின் பாலை மண்ணில் உறுதியாய் நிமிர்ந்தாய்... உன்னைக் கொன்றனர் . . உன்னை அவர்கள் கொன்றனர்.
எழுதப்படாத சரித்திரம், துயர் சூழ்ந்து, ரத்தம் சிந்திய நிலங்களின் மீது நெல் விளைகிறது; சணல் பூக்கிறது. மழை பெய்கிறது...!
நீ துயில்க!
அந்நியர்கள் வந்து விட்டார்கள் என்பதையாவது நான்,
அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
(ஈழக் கவிஞர் சேரனின் "இரண்டாவது சூரிய உதயம்' நூலிலிருந்து)

ப. சிதம்பரநாதன்
இலங்கை எரிகிறது
உள்நாட்டுப் பிரச்னையாம் உலகயுத்தம் வந்திருமாம் ஊர் வம்பு நமக்கெதற்காம் உருப்படியா பேசனுமாம் யார் பேச்சு இவையெல்லாம்?
தமிழ்நாட்டுத் தற்குறிகள் தடம் புரண்ட பத்தினிகள் கொட்டி அளக்கின்ருர் - அவர் கொடுக்கைப் பிடுங்கி வாயில்
கொழுக்கட்டை கட்டு அடை
மலைக்குதான் போனுராம் விலைக்குத்தான் போனுராம் பிழைக்கத்தான் போனுராம் பிரிவினைக்குப் போகலையாம் யார் பேச்சு இவையெல்லாம்? எச்சி இலை மிச்சங்களை வழுச்சு வழுச்சு நக்கும் பிச்சைக்கார நாய்களுக்கு தாய்நாடும் ஒன்றுண்டோ! தங்க மொழி என்றுண்டோ! ஆணவத்தைப் பாருங்களேன் ராணுவத்தை சுட்டானும் சாணளவு இருந்துக்கிட்டு முழத்தோட மோதலாமா பேசறவன் யாருன்னு-நம்ம வீட்டுக்குள்ள வீரனுக சக்களத்தி சண்டையல்ல சரிக்குச்சரி கேட்கும் சகோதரச் சண்டையல்ல தூக்கணுங் குருவிக் கூட்டில் ஒணுன் கள் புகுந்திருச்சு குருவிக்குக் கூடுவேனும் நெருப்பு வெச்சுக் கொளுத்தி வனத்தை அழிப்பதுபோல் இனத்தை அழிக்கிருனே! நெட்டை மரம் போல நின்னுக்கிட்டுப் பொலம்புநியே! தூக்கி எறிந்து விட்டு துணிச்சலா வந்திருந்தா பாக்கிச் சங்கதிகள் பம்பரமா நடந்திருக்கும்
O

Page 6
தேனரசன்
சாம்பல் அணுக்களிலிருந்து.
ஈழத்துத் தமிழ் மகனே!
என்னரிய உடன்பிறப்பே ரத்த வியர்வை சிந்தி நீ நாடாக்கி வைத்த மண்ணில் சித்ரவதைக்குள்ளாகிச் செத்து மடிவதென்ன? யாதும் ஊர்? உனக்கு யாவரும் கேளிரோ? அதனுல்தான் யாது உம் ஊர்? யாவர் உம் கேளிர்? என அடையாளங் கேட்டுக்கேட்டு ஆத்திரத்தில் சுட்டனரோ? அன்னையாய்ப் பெற்றவளே அன்னியம் என்ருெதுக்கியபின் சர்வ தேச அணுதையாக நீ சாவதுதான் எல்லார்க்கும் சம்மதமோ? இல்லை தோழனே இல்லை இல்லை உன் சாம்பல் அணுக்களிலிருந்து ஒரு சத்தியப் படை பிறக்கும் அது சண்டாள இன வெறியின் கருவறுக்கும்.
சிற்பி யின் கவிதை நூல்கள்
புன்னகை பூக்கும் பூனைகள் மெளன மயக்கங்கள்
கிடைக்குமிடம்
事 அன்னம் சிவகங்கை-623560

இனி நான் புயலாவேன்
புத்தர் பிரானின் சொல்லுக்குச் சமாதி கட்டி பல்லுக்கு விழா எடுக்கும்
கபட மகாவம்சக் குருமார்கள்.
தமிழ் உடல் மீது துப்பாக்கிக் கத்தி முனைகளால் சிங்கள ரத்தச் சித்திரம் எழுதி க் களிக்கும் ஆண வ ராணுவம்.
நிர்வாணக் கதறல் வீறிட தமிழ் இளம் பூக்கள் விம்மிய உயிரின் அலறலை சங்கீத அணுக்களாய் ரசித்து எக்களித்த
மானுடக் கய மை.
கொழும்புத் தெருக்களில்தலைமுறைகளாக ரத்தம் உறிஞ்சிய தேயிலைக் காட்டு மலைமேடுகளில்முள் முருங்கைச் செம்பூ உதிரும் கிடுகு வேலிகளின் ஒரத்தில்இனவெறிப் பகைப் புகை நெருப்பில் எலும்பும் தசையும் எரிய ஊதி ஊதிக் குளிர் காய்ந்த கோணல் அரசு.
சர்வாதிகாரங்கள் தமக்குத் தாமே எழுதிக் கொள்ளும் கடைசி அத்தியாயம் இலங்கையில் தொடக்கம் படம் விரித்தாடும்
பாதகங்களுக்கு இப்படித்தான் இனி
J S›! .ግ!' க்கர்!

Page 7
நீலக் கடற்கரை மணல்ெ குருதி ஊற்றுக்கள் கொட் ஓலமிட்டழுத கடலிடம் காற்று ஓங்காரமிட்டு உன் அழுகையை நிறுத்து இனி நான் புயலாே சீறும் புலியாவேன்!
மண்ணின் புதல்வர்கள் த சத்தியம் சுடர்விடும் கண் சத்தத் தூளாய் உதிர்க்க புனிதமாய் மடியேந்திய பூமி சொல்லிற்று:
பொறுமையின் தாழ் நொறுங்கின விடுதலை நாட்கள் நெருங்கின!
Π
சட்டங்கள்
ஆயிரங்கால மொழிப் பயிர் மேயுமோ! துப்பாக்கிகள் துப்பும் மரணத்தால் வைரம் பாய்ந்த உணர்வுகள் தேயுமோ? தூக்குக் கயிறுகள் குரல்வளையை இறுக்குவ சுதந்திரத்தின் கீதங்கள் ஒயுமோ?
சரித்திரத்தின் தீட்சண்யப் பார்வையில் ஈழத்தின் தளைகள் தெறி தெறித்தே தீரும்! அலைகடற்கப்பால் ஒரு புதுச் சொர்ண ரேன் உதிப்பதல்லாது வேறென்ன நேரும்?
VAN AMBAD – FOR PRIVATE C 50, ALAG APPA LAY-OUT, POL SIRP PRINTERS POLLACH I .

வளிகளில் பளித்தபோது
ரைத்தது:
வன்
ம் கள் ப்பட்ட போது
கள்
தால்
க்கும்
IRCULATION ONLY R LACH I - 64 2 001 PRINTED
EDITOR: SIRP