கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1989.10

Page 1
புத்ெ
* ஐப்பசி 1989
itsar. இ முரு திருமதி நிரஞ்சனே இன்பன் திருகுனூ GLOG SIJI
யோகி பாரதிதா
மற்று

6
|- -
5185, Li göT கோகிலா மகேந்திரன்
த்தானந்த பாரதியார் FGür
TI
ம் பலரின் படைப்புக்கள்
விலை: ரூபா 6.00

Page 2

ஆங்கில மருந்து வகைகள் தமிழ் மருந்து வகைகள்
எண்ணை வகைகள்
மருந்துச் சரக்குகள்
குழந்தைகளின் பால்மா
ஒடிக்கொலோன்
பவுடர் வகைகளும்
பொருட்கள் பாடசாலை உபகரணங்கள்
அழகுசாதனப் பொருட்கள்
அனைத்தையும் நியாயமான விலைக்குப் பெற
நாடுங்கள்!
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
JIbj} ! IIÎIf6lỦ பஸ் நிலையம்
அச்சுவேலி

Page 3
எம்மிடம் பாடசாலை உபகரணங்கள்
அன்பளிப்புப் பொருட்கள்
அழகுசாதனப் பொருட்கள்
என்பவற்றை மலிவாகப் பெற்றுக் கொள்வதற்கும் பல வர்ண வாழ்த்து மடல்களும் தினசரி பத்திரிகைகள் பெறவும்
அத்துட்ன்
பாட்டா பாதணிகள்
பிளாஸ்ரிக் பொருட்கள் * எவர்சில்வர் பாத்திரங்கள்
* லாஸ்ரிக் நூல் வகைகள்
என்பவற்றை மலிவாகப் பெற்றுக்கொள்ள
நாட வேண்டிய ஸ்தாபனம்
விநாயகர்
ஸ்ரோர்ஸ்
புத்துார்

இந்த இதழில்
எத்தகைய முயற்சிகள் எடுக்கின்றபோதிலும் நாம் நினைப் பது போன்று 67 ல்லாம் அமைந்து விடுவதில்லை . ஏதாவது ஒரு வகையில் நாம் நினைத்ததற்கு மாறக அமைந்து விடும் என்பது நியதி போலும் அந்த வகையிலேயே எமது புத்தெழிலும் சிறிது இடைவெளியைச் சந்திக்க நேர்ந்தது. ஆயினும் வாசக அன்பர் களிடமிருந்து வந்த கடிதங்கள் தடைகளையுந் தாண்டி முன்னேர உற்சாகம் அளிக்கின்றன. இத்தகைய பேராதரவு கண்டு மலேயை யும் புரட்டும் வேலைக்கு ஒப்பான காரியங்களைச் செய்யலாம்.
முன்னைய இதழ்கள் தாங்கி வந்த தரமான விடயங்களைப் போன்று இந்த இதழும் தரமான விடயங்களைத் தன்னகத்துே தாங்கி
வருகின்றது,
ஈழத்துக் கவிஞர்கள் வரிசையில் தமக்கென முத்திரை பதித்த கவிஞர் திரு. முருகையன் அவர்களின் 'வெறுவெளிச் சுடலை மேட்டில்' என்ற கவிதை வெறுங் கற்பனையாக இல்லா மல் உண்மையின் உருவமாக நடைமுறை வாழ்க்கையின் வெளிப் பாடாக அமைகின்ற வகையில் இதில் இடம் பெறுகின்றது.
நாவல் சிறுகதை, உலகில் என்றும் தனித்துவத்துடனும், நிலைத்து நிற்கும் எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர் கள். இவர் எமது இதழில் எழுதிவரும் 'முதுகில் ஊரும் தம்பலப் பூச்சி தொடர் நவீனம் எம்மவர் நிலையில் ஒரளவு எடுத்துச் செல்லும் வகையில் இந்த இதழிலும் இடம் பெறுகின்றது. அவ ரது தொடர் நாவலின் சிறப்புக்கு வருங் கடிதங்களே சான்று.
சென்று இதழில் “பெண்ணின் பெருமை' எனுங் கட்டுரை மூலம் அறிமுகமான 'தமிழினி’ அவர்கள் இந்த இதழில் 'நீறு பூத்த நெருப்பாய் இன்னமும்' எனும் கதையைப் படைத்திருக்கி றர். சமுதாயத்தில் வக்கரித்த சாதிக் கொடுமைகளைத் தம் கதை யில் கூறியுள்ளார்.
இவரைப் போன்று யாழ்ப்பாணத்துச் சமுதாயத்தின் வாழ்க் கைநிலையினை சமூகக் குறைபாடுகளை "முகாரிதான் பாடு எனுங்
سے 3 ۔۔۔

Page 4
கவிதை மூலம் 'இன்பன்' அவர்கள் இந்த இதழில் தெளிவாக்கி யுள்ளார்.
* நிரப்ப முடியாத இடைவெளி' என்ற சிறுகதையை எமது இதழில் முன்பு எழுதிய 'திருன' அவர்கள் எழுதிய நெஞ்சில் உரமுமின்றி. என்ற கதையும் இதில் இடம் பெறுகின்றது. சுய தலப் பேய்களாய் நாடு விட்டுச் செல்லும் மாந்தரைப் பற்றிக் கூறும் வகையில் இவரின் இக்கதை அமைகின்றது.
இந்த இதழ் மூலம் பாடம் படிப்போம்' எனும் தொடர் நாடகம் ஆரம்பமாகின்றது.
வழமை போல் இந்த இதழிலும் புதிய எழுத்தாளர் அறி முகம் இடம் பெற்றுள்ளது. செலவி கு. நிரஞ்சனே எனும் மாண வியே இவ்வறிமுக எழுத்தாளர். இவர் தற்போது உயர்தர வகுப் பில் படிக்கின்றர். கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். “பல்லவி தொடங்கு முன் கரணம் முடிந்தது' எனுங் கதை இவரை அறிமுகப்படுத்துகின்றது அன்புள்ள வாசகர்களே எம்மால் அறி முகப்படுத்தப்படும் எழுத்தாளர்களுக்கு தீங்கள் வழங்கும் ஆதரவும் வாழ்த்தும் இவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
செல்வி, மேகலா சிவப் பிரகாசம் எனும் இளம் எழுத்தாளர் எழுதிய புலணுகாத தடைகள்' எனுஞ் சிறுகதையும் இந்த இதழில இடம் பெறுகின்றது.
இவற்றை விட யோகி சுத்தானந்த பாரதியார் முன்பு எழுதிப் பிரசுரமான பிரநாட்டாரின் தமிழ்த்தொண்டு' எனுங் கட்டுரை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை ரஷ்ய எழுத தாளர் ‘பாப் டைலான்' அவர்களின் பலத்த மழை பெய்யப் போகின்றது எனுங் கதை. இவை மறுபிரசுரம7 கப் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
முடிந்தளவு தரமான படைப்புகளுடன் வரும் இம்மாதப் புத் தெழிலையும் உள்ளன்போடு ஏற்றுவந்து கருத்துக்களை எழுது மாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
- ஆசிரியர்

புத்தெழில்
என்னை நன்றய இறைவன் படைத்தனன் தன்னை நன்றக தமிழ் செய்யுமாறே திருமூலர்
எழில் 1 ஐப்பசி 1989 துளிர் 7
உதவிக்கரம் நீள வேண்டும்
ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகள் குறிப்பாகச் சஞ்சிகை கள் உயிரைக் கையில் பிடித்த வண்ணம் வெளிவருகின்றன. இதற்குக் காரணம் பொருளாதார நிலையும், எழுத்தாளர், வாசகர் களின் ஒத்துழைப்பு இன்மையும் என்று கூறலாம். இன்னமும் எம்மவர்களுக்கு வெளிநாட்டு மோகம் இருப்பது போன்று தமிழ் நாட்டில் வெளிவருஞ் சஞ்சிகைகள் மட்டுமே இனிக்கின்றனவாக உள்ளன. எமது நாட்டில் தமிழ்ச் சஞ்சிகைகள் பல தோன்றி சில இடையில் நின்றுவிட்டன. சில இன்னமும் பகீரதப் பிரயத் தனத்துடன் வெளிவருகின்றன. அவையும் குறைந்தளவு பிரதி களாக பொருள் நட்டத்தில் வெளிவருகின்றன. தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலை மகள் முதலான சஞ்சிகைகள் எமக நாட்டில் விற்பனையாகும் அளவிற்கு எமது நாட்டுச் சஞ்சிகைகள் விற்பனையாவதில்லை. இவற்றைவிட பொம்மை, ஜெமினி சினிமா, பேசும் படம் போன்ற சினிமாப் பத்திரிகைகள் அமோகமாக விற்பனையாகின்றன. இவை விற்பனயாகும் அளவிற்கு எமது நாட்டுச் சஞ்சிகைகள், பத்திரி கைகள் எம்மவர் மத்தியில் விற்பனையாகாததை எண்ணும்போது மிக வேதனைப்பட வேண்டியுள்ளது.
தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள், வார மலர் இதழ்களை அதிக விலைக்கு வாங்கும் தமிழ் வாசகர்கள், ஈழத்துச் சஞ்சிகைகளை குறைந்த விலைக்கு வாங்கக்கூட முன்வரு கிருர்களில்லை. வியாபாரிகளும், தென்னிந்திய வெளியீடுகளுக்கு
un 5 -

Page 5
அளிக்கும் மதிப்பினை ஈழத்து வெளியீடுகளுக்கு அளிப்பதில்லை. சில முகவர்கள் தென்னிந்திய வெளியீடுகளை மட்டுமே விற்பனை செய்கின்றனர். இதற்குக் காாணம் அவை அதிகம் விற்பனைய வதேயாகும்.
ஏனைய நாடுகளில் இந்தியா உட்பட பத்திரிகைத்துறைக்கு அரசின் பேருதவி கிடைக்கின்றது. இவ்வுதவியினுல் வெளிவரும் பத்திரிகைகள் வாசகர்களின் ஆதரவையும் பெற்றுவிடுவதனல் நிலைத்து நிற்கின்றன.
ஆணுல் எம்மைப் பொறுத்தவரை அரசின் உதவியும் இல்லை வாசகர் உதவியும் இல்லை. இந்நிலையில் எவ்வாறு ஈழத்து எழுத் தாளர்களும் சஞ்சிகைகளும் வளரமுடியும். அரச உதவி கிடை யாத போதிலும் வாசகர், எழுத்தாளர் ஆதரவு .ே தியளவு கிடைத்தாலே போதும்,
எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் புதிய சஞ்சிகை களுக்கு எழுதுவதற்கே தயங்குகின்றர்கள். தமது பிரபலம் குறைந்துவிடும் என்ற தயக்கமோ என்னவோ? புதிய சஞ்சிகை களுக்கு புதிய எழுத்தாளர்களின் பேராதரவு அதிகம். ஆயினும் வளர்ந்தவர்கள் புதிய சஞ்சிகைகளுக்கு எழுதி அவற்றின் வளர்ச் சிக்கு உதவ வேண்டும்.
- ஆசிரியர் -

காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் . பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் . அங்கு கேணியருகினிலே - தென் ஆன மரத்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு - தென்ஆனமரம் பக்கத்திலேவேணும் - நல்ல முத்துச் சுடர் போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்பட வேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே . நன்றயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே . அங்கே யொரு
பத்தினிப் பெண் வேணும் . எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும் . அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா ஜின்றன்
காவலுர வேணும் - என்றன் பரட்டுத் திறத்தாலே . இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்.
பாரதியார்

Page 6
தங்கைக்கு ஒர் so L6)
அன்புத் தங்கை மணிமேகலைக்கு, எனது அன்பு வணக்கம்
தவிர்க்க முடியாத காரணங்களால் உன்னுடன் இடை யில் தொடர்பு கொள்ன முடியவில்லை அதற்காக என்னை மன் னரிப்பாயாக. அன்பின் ஊற்றிடம், பண்பின் உறைவிடம், கருணை பின் உருவம் பெண்மை என்பதற்கிணங்க உன்னை நான் காண் கிறேன். உனது உயர்ந்த இயல்புகள் உன்மீது எனக்கு பெரு மதிப்பை ஏற்படுத்துகின்றது.
மண்ணில் பிறந்தார் ஒவ்வொருவரும் மாண்புடன் வாழ வேண்டும், எம்மால் பிறர் வாழ வேண்டும் என்பது உனது தாரக மந்திரம். வெறும் அலங்காரப் பதுமைகளாக, ஆடம்ப ரப் பிரியர்களாக, நகை சுமக்கும் பெண்களாக இன்றைய பெண் கள் வாழுகின்ற போதிலும் அவர்களில் எல்லாம் விதிவிலக்காக நீ விளங்குகின்ருய். உன்னை நான் பாரதி கண்ட புதுமைப் பெண் ணுய்க் காண்கின்றேன். பெண்மை மென்மையானது பூப் போன்ற வள் பெண் என்றெல்லாம் இலக்கியங்கள் கூறியுள்ளன. ஆனல் அவை கூறியது போன்று பெண்கள் பூவாக மதிக்கப்படுகின்றர் களா? அற்ப புழுவாகவல்லவா மதிக்கப்படுகின்றர்கள். எத் தனை எத்தனை பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங் கொடுக்கின் றர்கள். ஆனல் இப்பெண்கள் அப்பாவித்தனமாகத் தம் பிரச் சினைகளை உணராதவர்களாகவே உள்ளனர். இவர்கள் வாயிருந் தும் ஊமைகளாக இருப்பதனுல் தொடர்ந்தும் பல துன்பங் களுக்குள்ளாகி வருகின்ருர்கள்.
பெண்கள் மென்மையானவர்களாயினும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அவ்விலக்கியங்களை நீ படித்திருக் கின்ருய். தொடர்ந்தும் படி. அப்போதுதான் பெண்மையின் பெருமையை முழுமையாக அறியமுடியும் என்று கூறி அடுத்த மடலில் தொடர்கின்றேன்.
இங்ங்ணம் அண்ணு தமிழ்தாசன்

சுத் தானந்த பாரதியர்
பிறநாட்டார் தமிழ்த் தொண்டு
உலக மொழிகளில் தமிழுக்குச் சிறப்பான இடம் உண்டு. கீதையைப் போற்றும் அயலார் குறளையும் போற்றுகின்றனர். ஏன் ஐரோப்பிய யாத்திரையில் ஒவ்வொரு நாட்டிலும் தமிழை விரும்பும் நண்பரைக் கண்டேன். நான் பேசிய கூட்டங்களில் தமிழ்ப் பாடல்களைச் சொல்லி ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழி பெயர்த்தேன். அப்போது ஐரோப்பியர் ஆர்வத்துடன் கேட்டனர்; "உங்கள் மொழி அருவி முழக்கம்போல் இருக்கி றது' என்றனர். பாரிஸ் பொது நூலகத்தில் சங்க இலக்கியங் கள் பல கண்டேன், லண்டன் நூலகத்தில் அரிய தமிழ் நூல் கள் உள்ளன. ரோமில் வாடிகன் கோயிலைக் காணவந்த ஒரு பெரியார் ‘திருக்குறளில் பைபிளைக் காண்கிறேன்" என்ருர்,
‘இனிய உளவாக இன்னத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று' என்ற குறளையும் சொன்னர். ஒரு ஜேர்மன் அறிஞரை டிரெஸ் டனில் கண்டு பேசினேன்; அவர் ' மூன்ரும் பேரைத் தடுக்க ஒரேவழி திருக்குறள் வழியே வாழுதல்' என்ருர்,
2
தமிழ் வளர்ச்சிக்குக் கிறிஸ்தவப் பாதிரிமார் செய்த தொண்டு தமிழ் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. டாக்டர் (3ւIITւն, தெ நோபிலி, கால்டுவேல், பர்தலோமியோ, ரேனியர், வீரமாமுனிவர் முதலியோர் ஆற்றிய தமிழ்ப் பணியை உலகம் அறியும். பர்தலோமியோ ஃஜேகென்பேக் - டென்மாக்கியர்; அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். டேனிஷ் மன்னன் பிரெட ரிக் TV அவரைத் தரங்கம்பாடிக்கு அனுப்பினுன். அங்கே அவர் 1706ம் ஆண்டு வந்து டேனிஷ் மிஷனைத் தொடங்கினர்; <毁g} ஆண்டுகளில் தமிழ் கற்றுப் புலமை பெற்ருர்; உடனே தமிழ் இலக்கியம் ஒன்று எழுதினர்; பைபிளைத் தமிழாக்கினர்; ஓர் அச் சகம் நாட்டினர்; பைபிளை வெளியிட்டார்; தமிழைக் கொண்டு சமயப் பணியில் அவர் வெற்றி பெற்றர். ரேனியர் எனும் பாதிரி யார் 1853ஆம் ஆண்டு தமிழ் இலக்கணம் செய்தார்; தமிழின் இனிமையை உலகிற்கு விளக்கினர்.
ராபர்டு நோபிலி என்ற சாமியார் தமிழும் வடமொழி யும் கற்றறிந்தார். காவியுடுத்து அந்தண ஒழுக்கம் பற்றித் 'தத்
= 9 ہے

Page 7
துவ போதசாமி என்று புனைபெயர் பூண்டு, பல் லக்கேறி, ஊர் ஊராகச் சென்று ஏராளனமான தமிழரை கிறிஸ்தவர் ஆக்கினர். இவர் சுமார் லட்சம் பேர்களை மதம் மாற்றினர். இவர் வேத முழக்கத்துடன் தேவார முழக்கமும் செய்து சென்ழுர்,
இவர்களைவிடப் பெரும் புலமை பெற்றவர் டாக்டர் 8. Ա. போப்பையர். இவர் 1802 ஆம் ஆண்டு நோவா ஸ்காசி பாவில் பிறந்து, ஹோக்ஸ்டன் கல்லூரியில் கற்றுப் பட்டம் பெற் (ηri. 1839 ψιb ஆண்டு வெஸ்லியின் கோயில் பாதிரியாகத் திரு நெல்வேலிக்கு வந்தார். அங்கே இங்கிலாந்து சர்ச்சில் பணி புரித்தார். இவ ருக்குத் தமிழில் அடங்காத காதல் வளர்ந்தது. தமிழ் மொழியை நன் முகப் பயின் ருர். 1849ல் இவர் லண்ட னுக்கு வந்து ஆக்ஸ் போட்டில் தமிழின் அருமையைப் பற்றிப் பேசினர். திரும்பி வந்ததும் இவர் 1851 இல் தஞ்சையில் ஒரு கல்லூரி கண்டார். உதக மண்டலத்தில் இருந்தபோதே இவர் திருக்குறளேயும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் உலகிற்கு தந் தார்; பங்களூரில் இருந்தபோது, மணிமேகலைக் கதையை ஆங் கில உரைநடையில் எழுதினர்; பிறகு நாலடியாரை ஆங்கிலமாக் கினர். நானும் முதலில் போப்பின் மொழி பெயர்ப்பைப் படித்தே திருக்குறளின்பத்தை ஆழ்ந்தறிந்தேன்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் பெற்ற
தமிழரின் கலே வளத்தைப் போப்சாமியார், ஐரோப்பியர் வியக் கும்படி விளக்கினர். ஆங்கில இலக்கிய இதழ்களில் இவர் தமி ழின் பெருமையைக் கட்டுரைகளாக எழுதினர். ராயல் ஆசியாட் டிக்குவார்ட்டர்லி (FR yal Asia , ic Quare foly), StG) g)GồT : q u Josir 52 ft (†he indian Antiquay), இன்டியன் மாகஜின்
ஆண்டி (It's an Magoze) முதலியவற்றில் இவர் எழுதிய கட்டுரை
கட்டுரைகள் இன்னும் ஆராய்ச்சியாளருக்குப் பயனுகின்றன
சைவத் திருத்கொண்டரைப் பற்றியும் கவிஞரைப் பற்றி பும் இவர் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினர். புறப்பொருே வெண்பா பாலை, புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களின் தயத்தை இவரே உலகிற்கு விளக்கினர். இவர் எழுதிய சிற்றி லக்கணத்தையே நாங்கள் சிறுவயதில் படித்தோம். இன்னும் அது மாணவருக்கு பயனுகிறது டாக்டர் வின்ஸ்லோ என்பவர் தமிழ் ஆங்கில அகராதி பாத்தார். அதையே போப்பையர் வளப் டுத்தினர். அப்போது சென்னையில் அகராதிக்குழு (லெக்ஸிகன்) மிட்டி) இருந்தது இந்திய மந்திரியே அந்தக் குழுவுக்கு மேற் சொன்ன அகராதியை அனுப்ப வெளியிடச் செயதார். இந்த அகராதியே சிறுவயதில் எங்களுக்குப் பயனுனது. இவ்வாறு பல
جی۔ { }1-۔
 
 

வழியில் தமிழ்ப் பணியாற்றிய போப் பைய7ை மத்திரி ஜான் மார்லி பிரபு பெரும் புலவர்மணி" எனப் போற்றினர். இவர் மொழி பெயர்த்த திருக்குறளை விக்டோரியா மகா ர ரிையார் கூடப் படித்தார்.
அயராத் தமிழ்ப் ! ; ரிையாற்றிய இப்புலவர்மணி க்கு 1906ம் ஆண்டு ஆசிய அரசவைச் சங்கம் (ராயல் ஆசியாட்டிக் சொஸை ட்டி) தங்கப் பதக்கம் வழங்கியது. 1880ம் ஆண்டு இவர் தமிழ் கத்தைவிட்டு இங்கிலாந்து சென்றபோது நமது புலவர்மணிகள் போற்றி செய்து வழியனுப்பினர். ஆக்ஸ்போர்டு கழகம் இவருக்கு எம். ஏ. பட்டம் வழங்கியது. இவர் இறுதிமட்டும் பாலியன் கல் லூரியில் ஐ. சி. எஸ். (இந்திய ஊழிய) மாணவருக்குத் தமி (பூம் தெலுங்கும் கற்பித்தார். தமிழ் பணியை இவர் தவமாகக் கொண்டார். 1907ம் ஆண்டு இவர் பரமபிதாவின் திருவடி சேர்ந்தார். அப்போதும் இவர் அருகே திருவாசகமும் திருக்குற ளும் பைபிளுடன் இருந்தன. தமிழ் மாணவனுக வாழ்ந்த gណf தமது நடுகல்லிலும் தமிழ் மாணவன் என்றே குறிக்கச் செய், ர்.
3
கால்டுவெல் பாதிரியார் மதுரையிலும் திரு நெல்வேலியிலும் அரிய சமயப்பணியுடன் தமிழ்ப்பணியும் செய்தார். தொல்காப் பியம் முதல் திருக்குறள் வரையில் அவர் பல காப்பியங்கள் ஆராய்ந்தார். பல மொழிகளில் தமிழ்மொழி கலந்து பயில்வதை அவர் கண்டு பிடித்தார். தமிழ் வரலாற்றை அவர் ஆராய்ந் தார். கிராம மக்களுக்கு அவர் தமிழறிவு புகட்டினர். அவர் செய்த தமிழ் தொண்டுகளை தமிழர் என்றும் எப்போதும் மறக்க முடியாது.
4
அனைவருக்கும் சிகரம்போல் தோன்றினர் வீரமாமுனிவர். பாதிரிமார் பணிகளுக்கு பொன்முடி கவிழ்த்ததுபோல் இவரது பணி நலம் துலங்குகிறது. தமிழ் உள்ள மட்டும் இவர் நூல்க ளும் புகழோங்கி விளங்கும். இவரை தமிழ் வளர்த்த தந்தை என் முல் மிகையாகாது. வீரராமுனிவர் 1680ம் ஆண்டு பெருங்கவி விர்ஜில் )Virgil) பிறந்த இத்தாலியில், வெனிஸ் நகரில் ஒரு செல்வ குடும்பத்தில் தோன்றியவர். இவரது இயற்பெயர், கான்ஸ் டன் ஸியஸ் பெஸ்கி. பெஸ்கி என்பது குடும்பப் பெயர். கான்ஸ் டன் ஸியஸ் என்ருல் உறுதி, வீ ர ம்,  ைத ரி யம், வைராக்கியம் என்று பொரு ள |ா கும். ஆ த லா ல் இவர் தமிழ் நாட்டில் வீரமாமுனிவராகவும், தைரியநாதராகவும் விளங்கினர். இவர் ரோமில் கலையும் சமய சா ஸ் தி ரங் களு ம் பயின்று
ܕܗ ܐ 1 ܗ

Page 8
30ம் ஆண்டில் குருக்களானர். இலத்தீன், இதாலிபம், பிரெஞ்சு, கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய ஐரோப்பிய மொழிகளில் தேர்ச்ஓ பெற்ற இப்புலவர் பிரான்சிஸ் முனிவர் போன்ற கிறிஸ்து பக்தி யும், சாவேரியார் போல் சிவை தொண்டார்வமும் கொண்டு போப்பாண்டவர் கட்டளையைத் தாங்கி மதுரைக்கு வந்தார்.
பாண்டிநாடு இவர் உள்ளத்தைக் கவர்ந்ததுடன், தமிழ் இவர் மனத்தைக் கொள்ளை கொண்டது. சுப்ரதீபக் கவிராயர் என்னும் பெரும் பாவலரிடம் இவர் இருபத்தைந்தாண்டுகள் தமிழ் மொழியை நிறைவாகக் கற்றுணர்ந்து ஐந்திலக்கணமும் அறிந்த பாவலரானுர், 67 வயது வரையில் தமிழகத்திலிருந்து சுமார் நாற்பதாண்டுகள் பொதுநலம் புரிந் நார் இப்புண்ணிபர். இவர் எப்போதும் சிற்றுார்களிலேயே அடக்கமாய் இருந்து பொது மக்களுக்குத் தமிழும் அறநெறியும் பயிற்றினர். கோணுன்குப்பம் என்னும் சிற்றுாரிலே அழகான மாதாக் கோயில் கட்டி, அங் கேயே கலைத்துவம் புரிந்து இவர் தேவாம்பாணி அருளினர். மது ரைத் தமிழ்ச் சங்கத்தில் தேவாம்பாணி அரங்கேறியது. அதைச் செவிமடுத்த புலவர்களே இப்பாவலருக்கு 'வீரமாமுனிவர்" என்ற காரணப் பெயரை கட்டிப் பெருமை செய்தனர். இதைத் தவிர இவர் திருவாரூர்க் கலம்பகம், அன்னை அமுங்கல் அந்தாதி, அடைக்கலமாலை, சித்தரின் அம்மானை முதலிய பல செய்யுள் நூல்களை செய்தார். தமிழ் உரைநடைக்கு வழிகாட்டியவர் இவரே. இவர் எழுதிய பரமார்த்த குருகதை நகைச்சுவையில் இணையற்றது. வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம் என்னும் இவ ருடைய இரண்டு நூல்களும் சிறந்த சன்மார்க்க விளக்குகளா கும். நிகண்டை உருத்தள்ளி வருந்திய அக்காலப் புலவருக்குச் சதுர அகராதி வகுத்தளித்தவர் இம்முனிவரே. இவர் வகுத்த அகரா தியைத் துணைக்கொண்டே பிற்காலத்தில் பல அகராதிகள் எழுந் தன தமிழ் இலக்கணத்தை இவர் தொன்னூல் விளக்கமாகச் செய்து அளித்தார் இத்தொன்னுால் எழுத்து, சொல், யாப்பு, பொருள், அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் தழுவிய நன் னுரலாக விளங்குகிறது. அந்நூலே மதுரைப் புலவர் வியந்து இவ ருக்குத் "திருமறைச் செந்தமிழ்த் தேசிகர்’ என்ற பட்டமளித்த
g
தைரியநாதர் இலக்கிய - சமயத் தொண்டு மட்டும் செய்ய வில்லை. அவர் அரிய தி பாகி தம்மையே பொது நலத்திற்குத் தந்து தூப துறவி. சன்மார்க்கத்தை நிலைநாட்ட இவர்பட்ட இடர்கள் பலகோடி. போரும் பொருமையும் நிறைந்த அந்தக் காலத்தில் துரோகிகளாலும், பகைவராலும், திருவிலிமூடரா ஆலும் இப்புண்ணியப் புலவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமன்று.
ー12ー

வீரமாமுனிவர் கயிற்ருற்றின் அருகே குருக்கள்பாடியில் அருட் பணி செய்திருந்தார். ஒரு கயவன் அன்பன்போல் நடித்து அவ ரிடம் பெறவேண்டியதெல்லாம் பெற்றுக்கொண்டு. பக்கிரிவேடம் போட்டுத் தப்பி, அலங்குளத்துக்குச் சென்ருன். அங்கே மதுரை நாயக்கர்படை வரிவசூலுக்காக முகாம் போட்டிருந்தது. கயவன் படைத் தலைவரிடம் கண்டபடி கோளேற்றி, குருக்கள் பாடி கிறிஸ்தவச் சாமியார் தன்னை அடித்து விரட்டியதாகவும், ஏராள மான பணம் புதைத்து வைத்திருப்பதாகவும், பாமரர்களை ஏமாற் றுவதாகவும் பொய் கட்டிவிட்டான். முரட்டுப்படை சினந்து வந் தது. கயவன் முனிவரைக் காட்டிக் கொடுத்தான். படைவெறி யர் முனிவரைப் பிடித்துக்கட்டி சிறையிட்டு வருத்தினர். திரு மடத்தைக் கொள்ளையிட்டனர். ஆனல் அங்கே சிலுவைத் தகடு களே இருந்தன. முனிவர் பொறுமையைக் கண்டு வெறி தணிந்த படைவீரர் மன்னிப்புக் கேட்டனர்,
அவ்வூரில் அவர் சபைகூட்டி, சிலுவையடியாரைச் சேர்த்து அரிய பணிசெய்தபோது, சந்தாசாகெபு படையெடுத்தான். ஊர் நடுங்கியது, பொது மக்களுக்கு அஞ்சலமளித்து, வீரமாமுனிவர் தாமே பகைவரிடம் சிறைப்பட்டுச் சந்தாசாகெபுவிடம் சென் ருர், சந்தாசாகெபுடன் அவர் பாரசீக மொழியிற் பேசினர். அவர் அறிவை வியந்த சந்தாசாகெபு தைரியநாதரைத்தன் மத் திரியாக்கி, விருதுகளும் பல்லக்குகளும் வழங்கி பெருமைப்படுத் தினன். அந்தக் காலம் எங்கும் போர் வெறியும், படுகொலையும் கொடுமை செய்தன. நாம் இருந்த ஊர்களில் எல்லாம் தைரிய நா பூர் பொது மக்களுக்குப் புகலளித்து சன்மார்க்க போதனை செய்து கடவுளை நம்பும்படி வழிகாட்டினர்.
5
கலைக்கோயில் பொதுக்கோயில். சாதி மத வேறுபாடே அதில் இல்லை. உலக ஒற்றுமைக்கு கலைப்பண்பு பெரிய சாதன மாகும். தமிழ்க் கலைக்கோயிலில் மேற்கும் கிழக்கும் இணைந்து விளங்கும். சைவர், வைணவர், சமணர், பெளத்தர், இஸ்லாமி யர், கிறிஸ்தவர் அனைவரும் அக்கோயிவில் அன்புத் தொண்டு டுசய்திருக்கிருர்கள்; அறிவு விளக்கேற்றி வைத்திருக்கிருர்கள்; ஆர்வமாலை சூட்டி அணி செய்திருக்கிருர்கள். இந்த அணிமணி மாலைகளில் ஒரு வாடாக் கற்பகமாலை காண்கிறது. அதுதான் விரமாமுனிவரின் "தேவாம்பாணி" என்ற பெருங் காப்பியமாலை. 36 படலங்களும், 3615 செய்யுட்களும் கொண்ட இக்காப்பியம் புலவருக்கும் கடவுளடியாருக்கும் அரிய சிந்தனை விருந்தாகும். என்றுமுள தென்றமிழ் இயற்றி இசை கொண்டான்? என்று
-- ز I --

Page 9
கம்பர், அகத்தியரை சிறப் பித்த மொ மிக ளே தேவாம் பாணி அருளிய முனிவருக்கும் பொருந்தும். இம் முதுபெருங் கவிஞருக்கு அமரத்தன்மையளித்த இம்மாபெருங் காவியம் கம்பராமாயணம்' சிந்தாமணி, திருக்குறள் போன்ற சீரிய நூல்களைக் கற்றுணர்ந்த தால் எழுந்தது. இதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளும் காணும்; இயற்கையழகின் விளக்கமுங் காணும்: முதன்மையாகப் பேரின்பச்சுவை இக்காவியத்தில் பெருகக்காணும். ஆகிர்தமரியாள் எழுதி வைத்த சூசை முனிவர் கதையே இந் நூலுக்கு முதல் நூலாகும். உலகந்தரும் இடர்களேயெல்லாம் கடந்து கடவுளன்பர் மோட்ச வீடடைதலை இப்பாவலர்; மலே பருவிக்கு உவமித்து அரிய செய்புள் ஒன்று பாடியிருக்கிறர்:
**அஞ்சிலாஎதிர் அடுக்கிய கல்லெலாங்
கடந்தே, எஞ்கிலாஎழில் இமைத்த நீள் மருதமும்
− நீக்கித், துஞ்சிலாநதி தொடர்ந்தகல் கருங்கடல்
நோக்கல், விஞ்சையாரெல்லாம் வெறுத்துவீடடைகுதல் போன்றே
அற்று வெள்ளத்தை, அணைபோட்டுத் தடுத்துக் கால்வாய் களாக்கி, உயிரை ஊட்டும் பயிர்களுக்கும் பாய்ச்சுகிருர்கள். அது போல, துறவிகளும் பொறிபுலன்களைப் புறஞ்செல்லாமல், தடுத் தடக்கிப் புண்ணிய வழியில் செலுத்துகிருர்கள். இக்கருத்தை முனிவர் அழகாக விளக்கி இருக்கிருர்,
தெறியு லாம்புனல் சிறைசெய்து பயன்பட
ஒதுக்கி, வெறியு லாமலர் மிடைந்தல் வயல்விழி
விடுவார், பொறியுலாம் வழி போக்கிலது இயல்பட
அடக்கி, நெறியு லாவுற நேரவை நிறுத்தினர்
போன்றே தொட்ட இடமெல்லாம் இப்படித் தேனும் பாலும் கனி ரசமும் கசிந்து பேரின்பச் சுவை தரும் தேவாம்பாணியைச் செய்த வீரமாமுனிவர் வளர்த்த தமிழ் வாழ்க!
6 இவ்வாறு பிறநாட்டார் செய்த தமிழ்ப் பணியால் உந்தப் பெற்று, யானும் எந்தாயின் பெருமையை உலகிற்கு விளக்க
- 4 -

எழுந்தேன். முதலில் இந்தியில் இராமலிங்க சுவாமிகள் வரலா றும், அருட்பா மொழிபெயர்ப்பும் எழுதினேன். பிறகு ஆழ்வா ராதிகள் வரலாறும், திவ் வியப் பிரபந்தமும் இந்தியில் எழுதி னேன். இவை வட நா ட் டி ற் சிறந்து விளங்கு ம் 'கல் யாண் இதழில் வெளிவந்தன வடநாட்டு நண்பர் தமிழ்ப் பெரி யார் வரலாறுகளைக் கேட்டனர். தமிழ் அளித்த அருட் செல் வத்தை அறிந்தனர். ஆங்கிலத்தில் மகாத்மா இராமலிங்கம், மகரிஷி தாயுமானர், மாணிக்கவாசகர், திருவள்ளுவர், திருக்கு றள் மொழி பெயர்ப்பு முதலியவற்றைப் பல பத்திரிகைகளில் வெளிவிட்டு நூலாக்கினேன். இந்நூல்களைக் கண்டு எனது நண் பரான மோனட் ஹெர்ட்ஸன், ரோமாரோலான் முதலியோர் தமிழ்ப் பெரியார் வரலாறுகளை முறையாக ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும், ஜெர்மனியிலும் வெளியிட ஊக்கினர். ரோமா ரோலான் எழுதிய மொழிகளே நான் மறக்கமுடியாது. அவற்றை இங்கே தமிழாக்கித் தருகிறேன்.
தங்கள் ஆங்கில நூல்கள் என்னத் தமிழகத்திற்குக் கொண்டு சென்றன. தமிழில் இத்தகைய ஆத்ம ஒளிகளும், அருட் செல்வங்களும் உள்ளன என்பதை இன்றே அறிந்தோம். அவற்றை முறையாக வெளியிட நாங்கள் விரும்புகிருேம். முதலில் திருக் 2 பிரெஞ்சில் சரியானபடி மொழி பெயர்த்து வெளியிடு வோம். பிறகு அருட்பாவரட்டும். அவை ஐரோப்பாவைப் பிடித்த இரத்தக் காய்ச்சலுக்குச் சரியான மருந்தாகும். எங்கள் எண் ணத்தைப் போர் வெறிப் புயல் 'குப் பென்று அணைத்துவிட்டது. ல்ை இன்றும் அந்த முயற்சி நடக்கிறது. தக்கார் கூட்டுற விருந்தால் உலகெலாம் அருள் முழக்கம் செய்யலாம்.
எனது ஜப்பான் செலவின்போது பாங்கொக்கில் ஒல நாட் கள் தங்கினேன். அங்கே மரகதபுத்தர் கோவிலில் இராமாயண ஒவியங்களைக் கண்டு வியந்தேன். அவை கம்பராமாயணத்தை ஒட்டி அமைந்தன சையாம் மந்திரி எனக்கு விருந்தளித்தார். அவரிடம் தமிழின் இனிமையைப் பற்றிப் பேசும்போதே ' கம்ப ராமாயணம் எங்களுக்கு விருப்பம். தாங்கள் சையாம் சங்கத்தில் கம்பராமாயண நயங்களைப் பற்றிப் பேசுங்கள். கம்பஜனப் பற்றி ஆங்கிலத்தில் விளகுக்ங்கள். நாங்கள் சையாமில் மொழிபெயர்த் துச் சுவைப்போம்' என்ருர், நான் அவ்வாறே ஒல சொற் பொழிவுகள் ஆற்றினேன் சுந்தர காண்டச் செய்யுஜாக் கே. டுக் கேட்டுச் சையாமியர் மகிழ்ந்து போனர்கள். என் சொற் பொழிவு பத்திரிகைகன்ல் வந்தது. சையாம் மந்திரி கம்பர யண மொழி பெயர்ப்பை வேண்டினர்; வ. வே. சு. ஐயரின் * கம்ப ஆராய்ச்சி Sudy of Kampan) என்ற நூலே அனுப்பி
ー15

Page 10
னேன். சையாம் மொழியில் இராமகீர்த்தி என்ற நூலும் உள் ளது. மலாய், சையாம், இந்தோசீனு, கம்போடியா, இந்தோ சியா முதலிய தென்கிழக்கு நாடுகளுக்கெல்லாம் இராமாயணக் கலை பரவியுள்ளது என்னலாம்.
7
சோவியத் ரஷ்யாவில் லெனின் கிராடு தலைநகரம். அங்கே ஆசியமொழிகள் டயிலும் கல்லூரியுள்ளது. அக்கல்லூரிப் புலவர் * கல்யாண்’ என்பவர் எனக்கு விருந்தளித்தார். ஒர் அம்மையார், மொழி பெயர்த்த பகவத் கீதையை எனக்கு தந்தார். அங்கே ஆரியப்புலவர் இருந்தனர். அவர்கள் சமஸ்கிருதத்தில் என்னுடன் பேசினர். நான், "சமஸ்கிருதத்திற்கு முன்பே இந்திய நாட்டில் வழங்கிய மொழி தமிழ். அது மிகச் சுவையுடையது' என்றேன்" எல்லோரும் செவி கொடுத்தனர். "உங்கள் கம்யூனிசம் உண்டா வதற்கு முன்பே, மார்க்சும், லெனினும் தோன்றுமுன்பே, எங் கள் வள்ளுவர் மாசற்ற சமதர்மம் பேசினர். பொதுவுடமைக்கு வித்திட்டார்" என்றதும் அவர்கள் வியந்தனர்:
" "பாத்தூண் மரீ இயவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது, பகுத்துண்டு பல்லுயிரோம்பு தல்நூலோர் தொகுத்தவற்று றெல்லாந் தலை, ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு. முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'
என்ற குறளை விளக்க விளக்க, அவர்கள் தமிழிடம் அன்பு கொண்டனர். நான் ஐந்து நிமிடம் தமிழில் பேசிப் பிரெஞ்சில் மொழி பெயர்த்தேன். இவ்வாறே ஐரோப்பிய நாடுகளில் தமிழை ஆர்வத்துடன் கேட்கிருர்கள். தக்க முயற்சி எடுத்து தக்காரை ஆதரித்தால் உலகில் வடமொழிக்குள்ள பெருமை தென் மொழிக் கும் எய்தும்.
ஜெநீவா, ஜூரிக், பிராகா, பெர்லின், பாரிஸ், லண்டன் சர்வகலாசாலைகளில் தமிழின் சுவையை அறிய ஆர்வமுள்ள புல வர் உண்டு. இங்கெல்லாம் சமஸ்கிருதமும், இந்தியும், மராட்டி யும் கூடப் பாடமாக உள்ளன. அவ்வாறே உலகப் பல்கலைக்கழ கங்களில் புகுத்தவேண்டும். அதற்குத் தகுந்த செல்வர் மானி யம் அளித்து புலவர்களை அனுப்ப வேண்டும்.
--16 كه

தமிழர் விழித்தெழுந்து முயன்று முன்னேறுக: தமிழ் நாட்டுக் கல்விமுறை தமிழர் கையில், தாய்நாட்டுத் தொழில்களெல்லாம் தனயர் கையில், தமிழர் வாணிகமெல்லாந் தமிழர் கையில், தமிழ்த் துறையில் இயங்குவதும் தமிழர் கப்பல்! தமிழ் சமுதாயத் தொண்டு தமிழர் கூட்டால், தமிழ்நாடு தமிழருக்கே தமிழர் சேமந், தமிழ் மக்கள் ஒற்றுமையே தமிழர் உள்ளம்; தமிழ் உள்ளம் எனில் வாழ்க தழைப்பதாமே!
வாசகர் பார்வையில்.
திங்கள் தோறும் புதுப்பொலிவுடன் எழில் சிந்தும் புத் தெழிலை இடைவிடாக வாசிப்பவர்கள் நாங்கள். உண்மையில் புத்தெழில் சஞ்சீவிக் கொடிபோல் அறிவென்னும் புதிய உணர் வோட்டத்தையும், புத்தூக்கமும் கொடுக்கும் உயிர் நாடியாக விளங்குகின்றது. தன் பெயருக்கு ஏற்றவாறே புத்தெழிலுடன் விளங்கும் இச்சஞ்சிகை இலைமறைகாயாக இருக்கும் திறமை படைத்த ஈழத்து எழுத்தாளர்களை வெளியுலகுக்கு அறிமுகப் படுத்துவதோடு பழந்தமிழ் இலக்கியங்களையும் கலைகளையும் வளர்த்து வரும் பெருமையினையும் பெறுகின்றது.
புத்தெழில் 'இந்த இதழில்’ என்னும் பகுதி மிகவுஞ் சிறந் தது. வேறு எந்தச் சஞ்சிகையிலும் இல்லாத சிறப்பு இது. இப் பகுதி எழுத்தாளர்களை வாசகர் அறிய உதவுவதோடு புதிய எழுத்தாளர்களுக்கு உற்சாக மூட்டுவதாகவும் அமைகின்றது. சித்திரை இதழில் ரீ. பாக்கியநாயகத்தின் மணியின் மகத்துவம், தமிழினியின் பெண்ணின் பெருமை எம்மை மிகவும் கவர்ந்த படைப்புக்களாகும். இச்சஞ்சிகை அணையாத அறிவுச் சுடராக ஒளிர எங்கள் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
இராமநாதன் கல்லூரி மாணவிகள்
இணுவில் செல்விகள் கலைவாணி த்ர்மலிங்கம் பலாலி சுதமசாந்தினி சிந்தாமணி பண்டத்தரிப்பு விஜயமலர் நாணு சங்கானை மதிமலர் செல்லப்பா தையிட்டி ராதிகா இராசையா
ح- 7 l =

Page 11
காரணம் யாதோ? --arc------ * பாஞ்சாலி
மங்கையர் பெருமை கூறவென யாழ்ப்பாணத்திலிருந்து நங்கை’ எனும் மாதர் மாத இதழ் அண்மையில் வெளிவந்துள் ளது. அதனை வரவேற்று ஆதரவளிக்க வேண்டியது அனைத்து வாசகர்களினதும் கடமை. ஆனல் நங்கையின் முதல் இதழைப் பார்த்ததும் நெஞ்சில் ஒரு நெருடல்.
rெண்க்ளுக்கு இருக்கும் பிரச்சனைகள் பல. அவற்றுள் பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகவும், விளம்பரப் பொருளாக வும் பயன்படுத்துவதும் ஒன்று. இவற்றுக்கெதிராகவும் போர்க் கொடி எழுப்ப வேண்டும். இதே வேளை "நங்கை அட்டைப்பட மும், பெண்களை விளம்பரப் பொருளாக்கியே வந்துள்ளது. தமிழ் நாட்டு நடிகையையும், ஈழத்து எழுத்தாளர் ஒருவரின் மகளையும் அட்டையில் போட்டிருப்பது காரணமற்ற ஒன்று எனவே தோன்று கின்றது. பெண்கள் அட்டையை அலங்கரிக்கக்கூடாது என்பது எனது வாதமல்ல. ஆனல் அது விளம்பரத்திற்காக அமையக் கூடாது. உண்மையை நோக்கும்போது தென் இந்திய சினிமாப் பத்திரிகைகள் போன்ற தன்மையை இது பெறுமோ என்று எண்ண வேண்டியுள்ளது. இவ்வாறு அட்டைப்படம் அமைந்தது. விற்பனையை மட்டும் குறியாக குறுகிய நோக்கம் கொண்ட சில ரால் வெளியிடப்படுகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்
Dது.
அதே இதழின் பின் அட்டையில் ஒரு வீடியோ நிறுவன விளம்பரம், அதில் யாழ்நகரில் கல்வி கற்கும் மாணவியொருத்தி யின் முழுப்படம் இடம் பெற்றுள்ளது. அம்மாணவியின் அணு மதி பெருது வெறும் விளம்பரத்துக்காகத் திருட்டுத் தனமாக படம் போட்டிருப்பது பெண்களைப் பெண்களே மானபங்கப் படுத்துவதற்கொப்பானது. சிறந்த எழுத்தாளர் 5ரின் படைப்புக் களை உள்ளடச்கிய இவ்விதழில் அட்டைகள் இப்படி அமைந்தது உண்மையில் மனவேதனையை ஏற்ப த்துகின்றது இனிமே லாயி னும் இவ்வாறு காரணமற்ற காரியங்களை ஆற்றி பெண்களை இழிவுபடுத்தமாட்டார்கள் மன நம்புகின்றேன்.
---- {_}.س----
r ! :) -

வெறுவெளிச் சுடலை மேட்டில்.
- முருகையன
நீல வான் வெளியே, நீ நம் நினைப்பிலே அமைதியின்பப் பால் பொழிகின்ருய் என்று பாட்டுகள் தரவா?
வேண்டாம், கூறுகிறதிலே நேர்மை குறைவதா உறுமலோடும் சிறுதல், சுடுதல் என்னும்
செய்கைகள் பழகிக்கொண்டாய்.
திசை எலாம் மணக்கும் பூவே, சிவந்த உன் இதழின் ஈரம் தசையில் ஓர் வெதுவெதுப்பைத் தரும் என்று பாடலாமா? குருதியின் சிதறல் மண்மேற் கும்பலாய்த் தெரிய, வெந்த கருகலின் நாறல் அன்ருே? காற்றிலே படர்ந்து நீந்தும்!
வண்ணப்பூங் குடையின் கீழே வாத்தியம் இசைக்கும் வண்டே எண்ணத்தேன் கீதம் தந்தாய் என்று நாம் பாடலாமா? சொல்வதில் நேர்மை வேண்டும் தோய் துயர்ப் புலம்பல் அன்றி மெல்லிசை கேட்பதுண்டோவெறுவெளிச் சுடலை மேட்டில்?
- 19، ص

Page 12
தொடர் நவீனம் 4
முதுகில்
2-,-1 2-87
தம்பலப்பூச்சி
. கோகிலா மகேந்திரன் -
பு க் கு அர்த்தமாகிப் بھی 9Hکہ போன அஞ்சுகா,
என் மனதில் போய்ப் பாரமாய் இருந்த எல் லாவற்றையும் உன்னிடம் கொட் டித் தீர்க்கிறபோது எனக்குள்ளே ஒரு ஞான மகிழ்வு மிதக்கிறது. அந்த நிறைவான உணர்வு முழு வதையும் நெற்றியின் புருவ நடு வில் கொண்டு வந்து இருத்தி. ஒரு குழையலான சந்தனப் பொட்டுப் போட்டது போலக் குளிர்ந்து போக முடிகிறது.
ஒரு போர் வீரனை உருவாக் கும் செலவில் எண்பது குழந்தை களுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்று நான் எங்கோ வாசித் தேன். இங்கே குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதையே முற்ரு கி நிறுத்திவிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நிறைந்து
கடந்த மூன்று மாதமாக இங்கு எந்தப் பாடசாலையும் நடக்கவில்லை. இப்போது பாட சாலை திறந்துவிட்டது என்று பிரச்சாரம் செய்கிருர்கள். ஆனல் பாடசாலைகளில் பி ஸ் ளை க ள் இல்லை.
ஆக, இங்கு காய்ந்தவைக ளும் சரிந்தவைகளும் மாட மாளி
கைகளும் மண் குடிசைகளும் மலர்ச் செடிகளும் மட்டுமல்ல மக்கள் மனங்கள். நம்பிக்கை கள் !
பெண்களின் மார்புச்சட்டை களில் "கிரனேட்டுகள் ஒளித்து வைக்கப்படுகின்றன என்ற சந்தே
கம் ஏற்பட்டுவிட்ட ஒரு இடத் தில் பெண்கள் எப்படி வாழ Głf b?
மனிதப் பண்பு எங்களிடமே கூட இல்லாமற் போன பின்
-سه 20 حسـ

, ) அவர்களிடம் எப்படி
எதிர்பார்க்க முடியும்?
ப தி னை ந் து வருடத்திற்கு இருக்கலாம். சிரித்திரன் இதழ் ஒன்றிலே ஒரு மாத்திரைக் கதை படித்தேன். நீ படித்தி ருக்க மாட்டாய்! படித்திருந்தா லும் மறந்திருப்பாய் . சொல் கிறேன் கேள்!
புன்
'உலகத்துக் குத் தனதுபாடல் கேட்காத தூரத்திலே, வானத் தின் உச்சியில் ஒர் ஒதுக்குப் புறத்தில் போய்நின்று அருமை யாக இசை மீட்டிவிட்டுப் பூமிக் குத் திரும்பிய வானம்பாடியைப் பார்த்து ԱՎ, மியிலிருந்த கிளி, தோழா, இந்த உலகில் நீ ஒர், ஒப்பற்ற கலைஞன் இசையிலே பேர் போன மகான் நீ உன்னை ாரிப்பதற்கு யாருமே இல்லாத வான உச்சியில் நின்று எதற்கா #5 i Luft (GG)(o? illu? o GöT I J Tổi) பயனற்றுப் போகிறதே’ என்று வி. ருத்தத்துடன் கூறியது.
வானம்பாடியின் கலை தோய் ந்த விழிகள் இரண்டும் ஒரு நிமி
ம் நெருப்பை உமிழ்ந்தன.
'உலகத்துக்கு என் பாடல் '?68T 60T மண்ணுங்கட்டிக்கு ו, ான்று வானம் பாடி கேட்டது. அப்புறம் அது கிளியைப் பார்த் துக் கூறியது.
'நண்பா, வானத்தில் என் பாடலை ரசிக்கிறவர்கள் இல்லை ான்று நீ சொல்கிருய் அந்த இடத்தில் என் பாடலைக் கிண்
டல் செய்கிறவர்களும் இல்லை என்பதை நீ தெரிந்து கொள்ள
வேண்டும்
இதுதான் கதை
* உனக்க மட்டும் இந்தக் கதை இத்தனை வருடங்களுச்குப் பிள் எப்படி வரி கு வரி நினை விருக்கிறது?' என்று நீ சற்றுப் பொருமையுடனும் வியப்புடனும் கேட்பதற்கு முன்னுல் நானே பதில் சொல்லிவிடுகிறேன்.
மறதி எல்லாருக்கும இயல் பானது!
கந் தோர்களில் மேலே வைக் கப்படும் டைல்’கள் நாள்கள் செல்லச் செல்லக் கீழே போய் விடுவது போல், நாம் வாசித்த விடயங்கள் பதியப்பட்ட "பைல் கள்" மூளைய மேற்பட்டையில் மடிப்புகளில் அமிழ்ந்து விடுகின் றன. அவை அடிக்கடி மீட்கப் பட்டு மேலே கொண்டு வரப்பட்
டாலன்றி முற்ருகவே மறக்கப்
பட்டுவிடும்.
ஒரு வயதில் ஒடித்திரிந்து
* அம்மா, அப்பா' சொன்ன
போது, விழுந்ததை இப்போது நீ முற்ருகவே மறந்து விடவில் 3) unt ?
ஒருவர் படிப்பதில் ஏறத் தாள ஐம்பது வீதம் இருபத்து நாலு மணி நேரத்தில் மறக்கப் பட்டு விடுவதாய் உளவியலாளர்
கூறுவர். 6 raig), 60 L-ty மூளைய மேற்பட்டை ஒன்றும் இதற்கு விதிவிலக்கானதல்ல.
- 21 -

Page 13
ஆஞல் என்னிடம் ஒரு பழக் கம் இருக்கிறது . வாசிப்பது எதுவாயினும் அது எனக்குப் பிடித்துக்கொண்டால் . அதை எழுதி வைப்பேன். அவ்வாறு எழுதி வைக்கப்பட்டவற்றை அடிக்கடி பாடம் படிப்பதுபோல் படிப்பேன். அவ்வாறு எழுதி வைக்கப் பட்டுள்ளவற்றுள் இக் கதையும் ஒன்று
சரி, இந்தக் கதையை இப் போது நான் ஏன் உனக்குச் சொல்கிறேன்?
எங்களுடைய ஊரிலே ஒரு சனசமூக நிலையம் உண்டு. எல்லா ஊரிலும் சனசமூக நிலையம் இருக் கும் தானே என்று பிற்பாட்டுப் பாடாமல் நான் சொல்வதைக் கேள்
முன்னெரு காலத்திலே இக் கிராமத்திலே வாழ்ந்த ஒரு பெரி யாருக்குக் கண்பார்வை குறைந்து போயிற்ரும், அவர் சிலகாலமாக இங்கு வீற்றிருந்த வைரவப் பெரு மானை மெய்யன்போடு வணங்கி வர, அவரது கண்பார்வை முன்
போல ஒளி பெற்றதாம். அத ஞல் இக்கிராமத்தின் நடுவில் அமைந்த வைரவப் பெருமா
னுக்கு விழிதீட்டி ஞான வைர வர் என்ற பெயர் உண்டாயிற் {{Gib.
விழிதீட்டி என்பதும் விழி சிட்டி என்பதும் ஒரே கருத்து டைய பெயர்களே என்பார் அப்பா
இந்த ஞான வை. வர் கோயி லுக்கு அருகிலேதான் சனசமூக நிலையம்
வீடுகள், வேலிகள் எல்லாம் ஷெல் நெருப்பில் கொல்லப்பட் டுச் சாம்பல் காடாகச் சூனியம் காட்டி நிற்க நாங்களெல்லாம் ஊரைவிட்டே ஒடித்திரிந்த கார ணத்தால் போனவருடம் இதன் வருடாந்தக் கூட்டமும், சிறுவ ருக்கான பே ாட்டிகளும், பரிச ளிப்பும் நடைபெறவில்லை.
இந்த வருடம்!
வருடாந்தக் கூட்டத்திற்கு ஒரு சிறிய நடனமும், குறுநாட கழம் போடுவ தென்று நிர்வாக சபை தீர்மானித்தது.
கடந்த சில வருடங்களாகப் பத்மா ரீச்சர்தான் நடனம் பழக் குவார்
ஏதாவது கிராமிய நடனம் காவடி அல்லது கும்மி "கன்னு பின்ன' என்று நடக்கும்.
எனக்குள் ஒரு குறுகுறுப்பு !
செய்பவற்றைத் தரமாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு அறிவூட்டக்கூடிய, விளிர்ப்புணர் வைத் தரக்கூடிய எதையாவது செய்ய வேண்டும்.
இளமையின் வெறியுந்தான்
எனக்கு வட இலங்கைச் சங் கீத சபை ன் நடன ஆசிரியர் தரத்துக்குரிய பத்திரம் இருக்கிற தென்று உனக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கிட . . இனி உனக்கு அ ன, ஆ வென்னு எல் லாம் சொல்லித்தர முடியாது.
حصه 22 ح

"மீண் டு ம் தொடங்கம் இருக்கிறது. அதுவாயினும் தெரி மிடுக்கு’ என்று மகாகவியின் யுமா? இழவு. சொல்கிறேன் அருமையான கவிதை ஒன்று கேள்
மப்பன்றிக் கால மழை காணு மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏழுது ; காளை இழுக்காது; எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைப்பான் என்னுாரான் ஆழத்து நீருக் ககழ்வான் அவன் நாற்று வாழத் தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு தங்க நகைகள் தலைக்கணிந்த பெண்களே கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல், முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும், பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும் அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல் உண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி உள்ளம் ந்ெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொத்தாகக் கிள்ளி முகர்ந்தான்; கிறுகிறுத்துப் போகின்றன் வாடும் வயலுக்கு வார்க்கா முகில, கதிர்கள் துடும் சிறுபயிர்மேல் 'சோ' வென்று நள்ளிரவில் கொட்டும்; உடன் கூடும் கொலைக் காற்றும் தானுமாய் எட்டுத் திசையும் நடுங்க முழங்கி எழும் ஆட்டத்து மங்கையர்போல் அங்கு மொய்த்து நின்ற் Ծաջ՝ հ, பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே கொள்ளை போல் வந்து கொடுமை விளைவித் வெள்ளம் வயலை விழுங்கிற்று. பின்னர் அது ܝܫܝܚܝ வற்றியதும், ஒயா வலக்கரத்தால் மண்வெட்டி பற்றி அதோ பார், பழையபடி கிண்டுகிறன் சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வானத்தைப் பார்த்தயர்ந்து நிற்கும் பழக்க மற்றேன் வாழி, அவன் ܐ ஈண்டு முதலில் இருந்தும் முன்னேறுதற்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு.
இந்தக் கவிதையின் அழகு திருந்தது. என்னை நீண்ட காலமாகக் கவர்ந் மகாகவி மீண்டும் வருகிறர்.
--سے 23 حس۔

Page 14
தெல்லிப்பழைச் சந்தியில் இருந்து அளவெட்டி நோக்கி நடந்து வரு கிருர்,
பல குக் கி ரா மங்களை க் கொண்ட பெரியதோர் கிராமம் தெல்லிப்பழை. யாழ்ப்பாண நக ரில் இருந்து ஏறத்தாழப் பதினறு கிலோ மீற்றர் வடக்கே வந்தால் தெல்லிப்பழைச் சந்தி வரும் சந் திக்கு நாலு திசைகளிலும் கிரா மம் பரந்துள்ளது.
சந்தியில் இருந்து மேற்கே ஒரு மைல் தூரம் வர அம்பனைச் இன்னும் மேற்கே ....... (953ی போளுல் அளவெட்டி மேற்கே வந்தால் விழிசிட்டி,
அஞ்சுகா ஒரு வேளை. இக்கடிதங்களை எல்லாம் வாசித்த பிறகாவது என்னிடம் வர வேண் டும் என்ருெரு ஆவல் உன்னிடம் கிளர்ந்தெழுந்தால். .
நீ வருவதற்கு வசதியாகவே இவற்றைச் சொல்கிறேன்.
பூமியில் வந்து இறங்கும் போது மகாகவியின் முகத்தில் இருந்த மலர்ச்சி மொத்தமும் அழிந்து முகம் இருள்படிவதைக் கண்ணுடியின்றியே அவரால் உணர முடிகிறது
பாவலர் துரையப்பா பிள்ளை பின் உடைந்துபோன தலையைக் கண்டவுடன் உதடு மெல்லிய தாய்க் கோண அவருக்கு அழு கையே புறப்பட்டுவிட்டது.
நெல்மணிகள் நெருப்புடன் போராடித் தியாகத் தீயில் குளித்துவிட்டதால் ஒட்டிப் போன வயிற்றுடன் பலர்.
ஒவ்வொருவராய் வந்து அவ ரைப் பார்த்து, அடையாளங் கண்டு.....
அளவெட்டிக்கு வரும்போது அவரை ஒரு சூழ்ந்து கொள்ளுகிறது
அவருக்கு ஒரு சந்தோஷமுந் தான். ஒரு பாரிப கவ%லயுந் தான் தூரத்தில் நாய்கள் யாரையோ துரத்துகின்றன
த ம து அவரி ம் சொல்
பெரிய கூட்டம்
ஒவ்வொருவரும் “ ‘ulunTG) 3.3smt ”” லிப் புலம்புகின்றனர்
அம்புகளுக்குத் தப்பி அகழி யில் குதித்து முதலைகளோடு போராட்டம் நடத்திய மகன் களைப் பற்றி . .
அழிந்து போன வீடு நளைப்
பற்றி.
பேன கற்புகளைப் لیتھ ظلمP![3
பற்றி .
குருதி ஆகுதியில் குளித்து
விட்ட பல குஞ்சுகளைப பற்றி. "மிக் விமானங்களின் பயங்
கர உறுமல் பற்றி.
எல்லாவற்றையும் பற்றி. அமிலம் ஏற்றும் பல விஷயங்கள் மகாகவியின் காதுகளில் விழு கின்றன
காற்று இல்லாத செம்மை யைப் பூமி கக்கிற்று.
மகாகவி ஒரு சின்ன அவஸ் தையில் நெளிந்தார்.
கொஞ்சம் பொறு! யாரோ வருகிருர்கள்!
பிறகு சொல்கிறேன்,
அன்பு மறவாத
குயில்
--- 24 س

நீறுபூத்த நெருப்பாய் இன்னமும் . . .
சிம்பாள் கோவிலடியில் ஒரே அமர்க்களமாக இருந்தது. சனங்கள் கோவிலை நோக்கிப் டோவதும் வருவதுமாக இருந்த னர். என்ன விஷேசமென்றும் தெரியவில்லை. விஷயம் என்ன என்பதை அறியும் ஆவலுடன் அருகே நின்ற பெரியவரைக் கேட் டேன், பெரியவர் உங்கை என்ன நடக்குது? என்று அவர் ஒரு நிமி டம் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு மிடுக்குடன் ‘அன்னதா னெம் நடக்குது தம்பி இண் டைக்கு ஆரும் எங்கடை கோயி விலை வந்து சாப்பிடலாம் . . நீயும் வாவன்' என்று சொன்
ωo) if.
எமக்குச் சிறு தடுமாற்றம் 1ற்பட்டது. முன்பின் பழக்க மில்லாத இடம். ஆனலும் துணி வுடன் என் கால்கள் கோயிலை நோக்கி நடந்தன .
கோயிலின் உள்ளே பார் வையை ஒடவிட்டேன். மூலஸ் தானத்திலே குருக்கள் அம்பா
தமிழினி
ளின் உருவச் சிலையைப் பாலா லும் தேனலும் வேறு பல பொருட்களாலும் குளிப்பாட்டி அடியவர்க்கு விளங்காத பாஷை யில் முணுமுணுத்துக் கொண்டி ருந்தார்.
வெளியே சமையல் வேலை கள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கோயில் தர்ம கர்த் தா என்றழைக்கப்படும் பருத்த சரீரத்தையுடைய ஒரு வர் வந்து சனங்களை நோக்கி அடியார்களே கொஞ்ச GiButth பொறுமையாக இருங்கோ. சமை யல் முடியுது. குருக்கள் gur சுவாமிக்குக் குளிப்பாட்டி முடிஞ் திதும் உங்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். உணவை உண்டு அன்னையின் அருளைப்பெறுங்கள் • என்று ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார் சனங்கள் மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றனர். சிலர் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர். மீண்டும் தர்மக
ர்த்தாவின் குரல்ஒலித்தது."புளி
யடியைச் சேர்ந்தோர் வேப்ப
ܣܝ 5

Page 15
மரத்தடிக்குப் போங்கோ உள்ப் பந்தி முடிஞ்சதும் உங்களுக்குத் தரலாம்' என்ருர்
பலர் தொங்கப் போட்ட முகங்களோடு வேப்ப மரத்தை நோக்கிச் செல்வதை என்னல் அவதானிக்க முடிந்தது. ஆனல் ஒரு பதினன்கு வயதுச் சிறுவன் மட்டும் அசையாமல் கோயில் படியில் நின்றன். அவனை வேப்ப மரத்தடியில் நின்ற ஒரு நடுத்தர வயதுக்காரன் ஓடிவந்து இழுத் தான். 'தம்பி கண்ணன் படியை விட்டு இறங்கிவா. எங்கடை பந்திக்கு நேரம் கிடக்குது நீ உதிலை நிற்கிறதைக் கண்டால் தோலை உரிச்சுப் போடுவாங்கள் கெதியாவ:ா" என்று அவதிப் படுத்தினுன்.
< கண்ணன் அசையாமல் நின் முன். 'கந்தையாண்ணை என்னை உள்ளுக்கு வராதையெண்டு கட வுள் சொன்னவரே. வாய் பேசாத கடவுளுக்கு இவையள் பாலும் தேனும் ஊத்திக் குளிப் பாட்டுகினம் கடவுள் இதெல் லாம் வேணுமெண்டு கேட்ட வரா? நீங்கள் போங்கோ நான் வரமாட்டன்' அவன் உறுதியாக நிற்கின்ருன்.
என் கண்களில் வியப்பு. ஒ! வயதில் சிறியவனஞலும் எவ்வ ளவு துணிச்சல்? மனதுக்குள் அவ னைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உறுதியான உடல், தீவிரமான பார்வை, சுத்தமான உடைகள் அவனை வேப்ப மரத்
தடியில் இருப்பவாகளுடன் ஒப் பிட என்னல் முடியவில்லை ந7 ன் உயர் குடியில் பிறந்த ஒருவனுக இருந்த போதிலும் அவன் கூறு வதில் நியாயம் இருப்பதை என் ஞல் மறுக்க முடியவில்லை. வேலை மும்மரத்தில் ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை. ஆணுல் நான் அவனது செய்கைகளைக் கண்கா ணித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென சனங்களிடையே சலசலப்பு, திரும்பிப் பார்க்கி றேன். சனங்களைப் பந்தியில் அம ரச் செய்து தம் கையிலிருந்த இலையளைப் போட்டபடி ஒருவர் வந்து கொண்டிருந்தார். தயவு செய்து அமைதியாய் இருங்கோ. இப்ப சோறு கொண்டு வருவி னம்’ ’ என்று கத்தியபடி சனங் களை அடக்கினர் நானும் அவர் களுக்கருகில் அமர்ந்திருக்கிறேன். எனக்கெதிரே கண்ணனும் அம ர்ந்திருந்தான் என் மனதில் திடீ ரென ஒ , நடுக்கம். 'இந்தச் சிறுவன அவர்கள் கண்டு கொண் டால் அவன் தோலை உரித்து விடுவார்களே? "அம்மா தாயே, எந்த விதமான ஆபத்தும் நடக் கக் கூடாதென அம்பாளை வேண் டிக் கொண்டேன்,
எல்லாருடைய இலைகளும் உ ண வு வைக்கப்பட்டிருந்தது. கண்ணனுக்கும் உணவு வைக்கப் பட்டிருந்தது. கண்ணன் உண வைப் பிசைந்து வாய்க்குக் கிட் டக் கொண் டு வரும்போது "டேய், எளிய சாதிப் பயலே உன்னை ஆர் இஞ்சை வரச்சொன்
- - 26 -

னது பொறுக்கி எழும்பிப்
போடா அங்காலை'
கோயில் குருக்கள் ஆத்திரத் தால் முகம் சிவக்க அவனுடைய காதைப் பிடித்து இழுத்து எழுப் ப்னர். என்னல் பொறுக்க முடிய வில்லை. 'ஐயா போடட + ப் பா ட்  ைடத் திண்டாப்பிறகு எழுப்புங்கோவன்' என்றேன். குருக்கள் காக்கை வலிப்புக்கார ஃனப் போலத் துள்ளினர். "நீர் ஆர் இதைக் கேட்க? இந்த எளிய நாயளை கோவிலுக்கை விட்டால் கோயிலின்ரை புனி தத்தன்மை கெட்டுப் போகும். நீர் வாயை மூடிக் கொண்டிரும்’ நான் மெளனமானேன்.
கண் ண னை ப் பார்த் து போடா வேப்ப மரத்தடிக்கு நாலு மணிக்குச் சாப்பிடுற உங் களுக்கு அதுக்கிடையிலை பசிசசுப் போட்டுது என்ன? வடுவா ராஸ் கல்" குருக்கள் பொரிந்து தள்ளி ஞர். சனங்கள் வேடிக்கை பார்த் தனர்.
இதுவரை பொறுமையாய் இருந்த கண்ணன் பொங்கி எழுந் தான். குருக்களைப் பார்த்து, "தூா. நீரும் ஒரு ஐயரா? உம்முடைய மனதிலுள்ள அழுக் குகளைக் கழுவாமல ஏன் சாமி யைக் குளிப்பாட்டிறீர்? கடவுள் சொன்னவரே குறைந்த சாதிக் காறர் உள்ளுக்கு Gau TÜ-sT தெண்டு. கல்லாய் இருககிற கட வுளுக்கு எல்லாத்தையும் படைக் கிறீr; மனிசனுக்கு ஒரு நேரச் சோத்  ைத க் குடுக் முடியாத உமக்குக் கடவுள் நல்ல தணடனை தான் தருவார்.
"நான் மரியாதை தாற் வைக்குத் தான் மரியாதை குடுப் பன்' என்று படபடத்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வாயடைத்துப் போய் நின்றேன். சில பெரியவர் கள் அவனுக்கு அடிக்க வந்தனர். உ ன க் கு வாய்க்கொழுப்பு மிஞ்சிப் போச்சுது. நேற்றுப் பெய்த மழைக்கு முளை ச் ச காளான் நீ. எங்களே வெருட்டு ருய், நாம்யில ரெண்டு போட் டாத்தான் சரிவரும்’
என்ன நடக்கப் போகுதோ என்று நான் பயந்து கொண்டி ருநதேன். அவன் அவர்களை முறைத்துப் பார்த்தான்.
*ஒருதரும் எனக்குக் கிட்ட வரப்படாது. நீங்கள் போட்ட
சோத் தை நீங்களே தின் னுங்கோ’
படபடவெனப் பேசிவிட்டு
திரும்பிப் பாராமலே அவன் வேக மாக நடக்கத் தொடங்கினுன் அனைவரும வா ய  ைட த் துப் போய் நின்றனா. குருக்களும் அப்படியேதான் நின் ருர்.
இதற்கு மேலும என்னல் உணவை உண்ண முடியவில்லை. பிசைந்த உணவை அப்படிமய விட்டுவிட்டுத் தலை குனிந்தபடி மெளனமாக அவனைப் பினதொட ரலானேன். வேப்பமரத்தடியில் இருந்தவர்களும் உணவு வாங் கம பல திரும்பிச் மசனறனர். 'அட்டார் பெரியோர்
இடாதோர் இழிகுலத்தோர்" என்ற முது மொழி எனக்கு அப் போது ஞாபகத்திற்கு வந்தது. அப்படியானல் இந்தக்குருக்களும் அவரைச் சார்ந்தவர்களும் .
- 27 -

Page 16
முகாரிதான் பாடு
இன் பன் -
யாழ் நங்கையே பாழடைந்து போன வளே
உனது
விரையை எடு குட.ா நாடெங்கும் சுற்றிததிரிந்து இன்னமும் நீ
முகாரிதான் பாடு
உனது
மக்களைத் தண்டிக்க
நீதி மீண்டும் படையெடுக்கின்றது வீட்டைச் சுற்றி அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்து கிடுகு வேலிகள்போல் உனது மக்களுக்கு மனது சிறிதுதான்
எமது தெருக்களில் குப்பை கூழங்களாய் அழுகிக் கிடந்த பிணங்களைப் போல
உனது
அகதி முகாம்களிலும் தீண்டாமை மணம் மனதைக் குமட்டியது ஊழலும் பதுக்கலுமல்லவா கண்சிமிட்டி
நக்கலாய்ச் சிரித்தன
- 28 -

உனது மக்களை வரலாறு இனிமேலும் மூர்க்கமாய்த் தண்டிக்கும் தண்டனைக்குரியவைகளை சொத்தாய்த் திரட்டி வைத்திருக்கும் உனது மக்கள் யாழ்ப்பாணத்தவர்கள் என்னதான் சிந்திக்கிறர்கள் தன்வினை
தன்னைச்சுடும்
ஒட்டப்பம்
வீட்டைச்சுடும்
என்று
எச்சரித்து
முகாரிதான் υτα.
பாடசாலை மாணவர்களுக்கு வேண்டிய
உபகரணங்கள்
* அப்பியாசப் புத்தகங்கள்
* பாடப் புத்தகங்கள் என்பவற்றை மலிவு விலையில் மெறுவதற்கும்
ஈழத்து, தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நூல் களும், சஞ்சிகைகளும், சலுகை விலையில் பெற்றுக் கொள்ளவும் ·
நாட வேண்டிய நிறுவனம் புத்தெழில் புத்தகசாலை சங்கான வீதி அச்சுவேலி
..............., 29 سینے

Page 17
நெஞ்சில் உரமுமின்றி.
நேரம் இரவு பதினுெரு மணி இருக்கம் சுற்றுப்புறம் எங் கும் நாய்களின் குரைப்புச்சத்த மும் அதனை மீறிய வெடிச் சத தங்களும் ஊரையே அல்லோல கல்லோலப்படுத்தின. இந் தீ * களே. ரத்தினல் விழித் துக் இாண்ட ஊர்ச்சனங்கள் பெருந் திகிலடைந்தாலும் பழக்கப்பட்காரணத்தால் பயத்தை வெளிக் காட்டாமலும் அதே வேளை வெளியில் இறங்காமலும் தொட ர்ந்தும் படுக்கையிலேயே புரண் டனர். ஆனல் அவர்களின் மனம் எண்ணுத எண்ணங்களை 768 னினT என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியோடு, என்று தம் த%ல விதியை நொந்தவராய அடங்கியிருந்தனர். அவர்களுள் ளும் வயது வந்த ஆண்பிள்ளை as an it; th டுபண்பிள்ளை களையும் வீட்டில் வைத்திருக்கும் தாய் தந்தையரின் ஏக்கம் சொல்லும் தரமன்று. நாளும் பட்டு அணு பவித்தவர்களுக்கு அனுபவித்து
- திருளு -
வருகின்றவர்களுக்கு இந்த ஏக் கம் இயல்பானதுதான்.
**குறுக்காலை போனதுகள் யாரோ சும்மா கிடந்தவனுேடை சொறிஞ்சு போட்டுதுகள் போலை அதுதான் அவன் பொழிஞ்சு தளளுருன். சுமமா கிடக்கமாட் டாமல் ஒண்டைத் தொடக்கிப் போ ட் டு சனத்தையெல்லோ அழிக்கிறன்கள். வேலையில்லாத பொடியளாலை வீணுச் சனந்தான் அழியுது" பொன்னம்மா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினுள். அந்த அசாதாரண சூழலிலும் அவள் அப்படிச சொன்னதில் அவளைப் பொறுத்தவரையில் பெரும் நியாயம் பொதிந்து கிடந்
Dġi
"அ மை தி யாக இருந்த நாட்டை கெடுத்துக் குட்டிச்சுவ ராக்கிப் போட்டான்கள்'
என்று (PGMil முணுப்பவர்களில் இந்தப் பொன்னம்மாவையும் அ வ ள்
குடும்பத்தையும் அடக்கலாம்.
--30 ۔

பிரதான வீதியோடு அமைந் *து அந்தக் கிராமம். அந்தக் கிராமததில் பெருஞ் செல்வத் தோடு விளங்கும் ருடும்பம் பொன்னம்மாவின் குடும் பந் தான். இயல்பிலேயே வசதியான குடும்பந்தான். செல்லத்துரையர் இவர்தான் பொன்னம்மாவின் கணவன். இவர் தோட்டப் பாட சாலையென்றில் ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் பொன்னம்மாவின் கொழுத்த சீதனத்துடன் தோட்டப் பாட சாலையில் படிப்பித்ததால் ஆசிரி யர் சம்பளத்துடன் வேறு வழி களிலும் அங்கு சம்பாதிக்க முடிந் தது இதனுல் அவர்களிடம் அக் கிராம மக்கள் ஒருவித பயம் வைத்திருந்தனர் சுருக்கமாகச் சொன்னல் அந்தக் கிராமததில் பொன்னமமா வைத்ததுதான் சட்டம. இன்று இவள் சஞ்சலப் படுவதற்கு முதல வது காரணம் ஒன்றுண்டு கனடாவிலிருந்து மூத்த மகன் வீட்டுக் கு வந்து இரண்டு வாரந்தான் ஆகின்றது. அவன் வந்ததிலிருநது ஒரு வித சலசலப்பும் இருக்கவில் ல இன் றைக்கு ஏறபட்டிருக ம் நிலயில் மகன் மிரண்டு விடுவானே என்ற பயம். கனடாவுக்கு ஜேர்மன் வழியாக அகதியென்று போன மகன் ஐந்து வருடங்களாகியும் வராததால் கடிதங்களுக்கு மேல் கடிதங்கள் போட்டே வரவழைத் துள்ளார்கள். முன்பு கடிதம் அனுப்பியபோதெல்லாம் நா ட் டில் பாதுகாப்பு இல்லை. வந்து சாகிறதோ? மூளையற்றவன்கள் தான் மண்மண்ணென்று சாவான்
கள் என்று பொருள்படவே அவன் பதில் அனுப்பினன். இப் போதும் அப்படியே மறுத்த போதிலும் கூட நிற்கும் இரண் டாவது தம்பியார் பக்கததில் நின்று வற்புறுத்தியதால்தான் இங்கு வந்துள்ளான்.
பொன்னம்மாவுக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்க ளுமே பிள்ளைகள் மூன்று ஆண் களும் வெளிநாட்டில்தான். நாட் டில் நடந்த பிரச்சனையைச் சாட் டாகக் கொண்டு அகதிகளாய் வெளி நா டு போனவர்களில் பொன்னம்மாவின் மூத்த மக னும் ஒருவன் இலங்கையிலிருந்து செல்லும் அகதிகளுக்கு ஆரம்பத் தில் வெளிநாடுகளில் ஆதரவு இருந்ததைப் பயன்படுத்தி \ம்ஜர் மன் வழியாகக் கனடா சென்ற வன் அங்கிருந்து கொண்டு தன் வீடு வாசல் அழிந்தது. இராணு வத் தாக்குதலால் தந்தை இறந்துவிட்டார் என்ற பொய் யையும் கூறி அதற்குப் போலிச் சான்றையும் தாய் நாட்டில் பெற்று போன இடத்தில் நிரந் தரமாகிவிட்டவன் ஒரு வருடத் தின் பின் இரண்டாவது தம்பி யையும் தன்னுடன் அழைததுக் கொண்டான். இருவரின் உழைப் பும் வீட்டில் மேலும் வசதி பெரு கச் செய்ததோடு பெண்கள் இரு
6 ரையும் இளையதம்பியாரையும்
தலைகால் புரியாமல் நடக்கச் செய்தது. செல்லத்துரையருக்கு ஒரு மகனையாவது படிக்க வைக் வேண்டும என்று ஆசை. அத னல் இளைய மகனை அனுப்பாமல்
- 1 3 ܒܒܗ

Page 18
வைத்திருந்தார். ஆனல் நாட்டுச் சூழ்நிலையும் மனைவியின் நச்சரிப்
பும் அவர் ஆசையை நிராசை
யாக்கின. "இஞ்சை இருக்கிற
நிலையிலை பிள்ளையை வைச்சிருக் கேலாது அருமந்த பிள்ளையை வீணுய் பலி கொடுக்க நான் சம்மதிக்கமாட்டன் அவனையும் அண்ணன்மாரிட்டை அனுப்பு வம். பெட்டையள் படிக்கிரு ளவைதானே" தன் பிள்ளைகள் மட்டுந்தான் பிள்ளைகள் ஏனை யோர் பிள்ளைகள் மண் என்று நினைத்திருக்கும் பொன்னம்மா வின் கூற்றுக்கு மறுப்பில்லாமல் இளைய மகனும் பலத்த முயற்சி யால் சுவிசுக்குச் சென்றுவிட் டான். பொன்னம்மா சொன் னது போன்று பெண்கள் இரு வரும் படித்தாலும் உயர் வகுப் பில் மீண்டும் மீண்டும் தங்கி மாறி மாறி ரியூசனுக்கு வாரோடு கிருர்கள்.
எமது நாட்டில் பொருட் களின் விலை யேற்ற த் துடன் போட்டிபோட்டு உச்ச ர னிக் கொப்பில் ஏறி இறங்கமுடியா திருப்பது மாப்பிள்ளை விலையா கும் அதிலும் கனடா மாப் பிள்ளையென்ருல் அவ னு க் குத் தனி மவுசு, பெண்ணைப் பெற்ற வர்கள் இந்த மாப்பிள்ளைகளுக்கு இலட்சம் இலட்சமாய்க் கொட் டிக் கொடுக்கத் தயாராக உள் ளனர். முன்பு சுற்றிக் கொண்டு திரித்ததோடு வீதியில் நின்று காடைத்தனம் புரிந்தவர்கள் எல் லாம் நாட்டு நிலைமையைச் சாதக மாகக் கொண்டு வெளிநாடு
போன இளைஞர்களின் பெற் ருேர்க்கு கொண்டாட்டந்தான். பொன்னம்மா வீட்டாரும் தம்
வீட்டில் கனடா மாப்பிள்ளை இருப்பதால் பெருமை. ஊரில் நிற்கும்போது கண்ட கண்ட
பெண்களுக்குப் பின்னல் சுற்றித் திரிந்தவன்தான் இவன். இவன் மட்டுமென்ன இவனைப் போன்று பலர் இப்படித்தான் முன்னேய தமது வண்டவாளங்களை மறை த்து, மறந்து வெளிநாட்டு மாயையால் எல்லோரையும் ሠD ህ! ❖ ó5 முற்படுகின்ற "கள் தங்கள் பிள்ளைக்கும் பெரிய தகுதி உண்டு என்ற இறுமாப் ல் பெரிய இடத்தில் கல்யாணம் பேசி எல்லாம் முற்ருன நிலையில் காஜலயில் பெண் பார்க்கப் போவ தாக இருந்தது. இதனல்தான் பொன்னம்மாவுக்கு நடந்த சம் பவம் மிகுந்த எரிச்சலைக் கொடுத் தது. எவ்வளவு கஸ்டத்தின் மத்தி யில் மகனை அழைத்திருக்கிருேம். வரமறுத்து முரண்டு பிடித்தவன் மனம்மாறி வந்த வேளையில் இப் படி நடந்தால் அவன் உடனேயே பயணமாகலாம் என்ற tuub அவளுக்கு. இந்த ஆரவாரத்தில் மகன் விழித்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணியவளுக்கு மகனின் குரல் திகைப்பைக் கொடுத்தது.
"என்னம்மா ஒரே பயங்கர மாய்க் கிடக்குது. பட்டிக்காட்டு ஊர். நாகரிகம் இல்லாமல் இப் படி நடந்து கொள்ளுகிறவன்கள் உள்ள நாட்டுக்குத்தான் என்னை வரச் சொல்லி அழைத்தீர்கள்.
عدد 2 3 كـ

இப்ப எப்படி இந்த நிலையில் ஆராவது இஞ்சை இருப்பான் களோ ? நாளைக்கே நான் கொழும் புக்குப் போகப் போறன்’’ இதைக் கேட்டதும் ஏனையோர் தி கைப் படை ந் தனர். அவன் சொன்னபடி Gurr tigol Lirdi) என்ற அச்சம். அதனுல் அவனைச் சமாதானப்படுத்த முனைந்தனர். அவர்களுக்கும் அவன் சொல்வது நியாயமாகவேபட்டது.
முன்பொருமுறை நட ந் த பிரச்சனையின்போது இவர்களின் கிராம ம் பாதிப்புக்குள்ளாகு முன்பே குடும்பமாக இந்தியா விற்கு ச் சென்றுவிட்டார்கள். பிரச்சனை தணிந்து எவ்வளவு காலத்தின் பின்தான் திரும்பினர். ஊரவர்கள் அங்குள்ள கோயில் களில் தஞ்சம் புகுந்தனர். தம் கண் முன்னலேயே பயங்கரத்தை
அனுபவித்தனர் எத்தனையோ பேரைத் தம் முன்னுலேயே சாவு கொடுத்தனர். காயப்பட்டவர்
கள், இன்னமும் ஊன் உடம்பு டன் காணப்படுகின்றனர். அம் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள்
பாரதூரமானவையாக இருந்த போதிலும் அவற்றைக் கண்டு மனந்தளராமல் தம் விதியை நொந்த வண்ணம் விடிவை
நோக்கி உள்ளனர். இவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ளவோ துன்பங்களைப் பகிர்ந்து கொள் ளவோ பொன்னம்மாவும் குடும்ப மும் தயாராக இல்லை. அம்மக் களைவிடத் தாம் புத்திசாலிகள்
என்ற எண்ணமே அவர்களிடத்தி ருந்தது.
'அம்மா என்னலே இஞ்சை இனிமே இருக்கமுடியாது. இனி மேல் இஞ்சை வரவும்மாட்டன். இந்த மாதம் மட்டும் நிற்கிறன் என்னுடைய கல்யாணம் முடிய நான் போயிடுவேன். நீங்களும் இஞ்சை இருக்க வேண்டாம். முடிஞ்சால் எ ங் க ளே "  ைட கனடா வாருங்கோ இல்லை யெண்டா கொழும்பிலையோ இந் தியாவிலையோ போயிருங்கோ. நாங்கள் காசு அனுப்புறம் இந்த நாடு என்ன நாடே சுடுகாடு' இதைக் கேட்டதும் தங்கைமார் இருவருமே அதுதான் சரியென்று உடனேயே சொ ன் ன த r ல் தாயும் தகப்பனும் மறுப்புச் சொல்ல முடியவில்லை இதனல் மகனின் கல்யாண அலுவலுடன் ஏனையோரின் இடமாற்றத்துக் கான அலுவல்களும் பார்க்க ஏற் பாடாகியது.
பயங்கரம் நிறைந்த இரவு நீங்கி விடியல் புலர்ந்த வேளை வழமையை எதிர்பார்த்த மக்கள் உள்ளத்தில் பேராச்சரியம் எழுத் தது. நடக்க வேண்டியது நடக்க வில்லை என்பதில் ஒரளவு மகிழ்ச்சி தான். ஆனல் அதற்கான காரண
மறியாதது மனதில் ஏதோ போலிருந்தது ஆயினும் அவர் கள் பெரியதொரு விடியலை காணத் துடித்தனர். பொன்
னம்மா வீட்டில் மட்டும் இரவுத் தீர்மானம் உறுதிபெற்றது.
- 33 ܗ

Page 19
பலத்த மழை பெய்யப் போகின்றது
- Lindsint-SUTHör
நி என்ன கண்டாய், என் நீலவிழி கொண்ட மகனே நீ என்ன கண்டாய் என் ஆசைக்குரிய இளம்குழந்தாப் ? நானே
அன்று பிறந்த குழந்தையைக் கண்டேன் சுற்றிலும் கொடிய ஓநாய்க் கூட்டம் ஒரு தங்க நெடுஞ்சாலையைக் கண்டேன் அதன்மீது எவருமே நடக்கவில்லை; ஒரு கறுப்பு மரக்கிளையைக் கண்டேன் அதிலிருந்து வடிந்தது சொட்டு சொட்டாய் ரத்தம், மனிதர்கள் நிறைந்த அறையைக் கண்டேன் அவர்களது சம்மட்டிகளில் ரத்தம் வடிந்தது: ஒரு வெண்ணிற ஏணியைக் கண்டேன் அது முற்றகத் தண்ணிரில் மூழ்கியிருந்தது. பத்தாயிரம் பேச்சாளர்களைக் கண்டேன் அனைவரது நாக்குகளும் துண்டாகியிருந்தன; இளம் குழந்தைகளின் கரங்களில் துப்பாக்கிகளையும் கூரிய கத்திகளையும் கண்டேன் இங்கே ஒரு பலத்த பலத்த பலத்த இன்னுமொரு பலத்த மழை பெய்யப் போகின்றது.

党
வாசகர் பார்வையில்.
என் உள்ளங் கவர்ந்த புத்தெழிலைத் தொடர்ந்து வாசித்து வரு கின்றேன். அது தாங்கிவரும் படைப்புக்கள் அனேத்தும் உளத்தில் நிலைக்குத் தன்மை வாய்ந்தன.
சித்திரை இதழில் தமிழ்ப்பிரியையின் 'உயர்ந்தவன்' என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்துளது. தமிழ்ப்பிரியைக்கு எனது பாராட்டு கஅ , புதிய இதழில் புதிய எழுத்தாளர்கள் எழுதி வரு வதைக் காண முடிகின்றது. இதிலிருந்து வளர்ந்த இதழகள் பத் திரிகைகளால் மட்டுமன்றி புதிய வளரும் எழுத்தாளர்கனாலும் தர மான படைப்புக்களைப் படைக்கமுடியும் என்பதையும் புத்தெழில் நன்கு வெளிப்படுத்துகின்றது. மேலும் சிறப்புடன் பொலிவுற வாழ்த்துகின்றேன். பொ. சிவஈஸ்வரி
நீர்வேலி
உங்களுக்குத் தேவையான சொகுசான பாதணிகள்
பெற்றுக் கொள்வதற்கு
நியூ தீபாவை நாடுங்கள்!
மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தேவையான
சப்பாத்து வகைகளும்,
நவநாகரீக நங்கையர்க்கு ஏற்ற காலணிகளும் பெற்றுக் கொள்வதற்கு தீபாவை நாடுங்கள்.
நியூ தீா
கிளே நியூ பிரசாந்
பஸ்தரிப்பு நிலையம் அச்சுவேலி
حے 35 سے

Page 20
器 9!ሿluፆ5 எழுத்தாளர்
பல்லவி தொடங்குமுன்
==జజ**
இனிய தென்றலின் சுகத்தை அனுபவித்தபடி அன்றிருந்தாள்
ஜனனி, தன் முன் பிரியா கட
தாசியுடன் நிற்பதைக் கண்டதும் வாங்கிப் பிரித்தாள்.
அக்கா!
தான் ஒருவரை நேசிக்கிறேன். அவர் தான் பக்கத்து வீட்டு திரு. தயவுசெய்து என் ஆ ைசயை நிறைவேற்றி வையக்கா,'
ஜனனியின் இதயத்தில் ஆயிர மாயிரம் இடிமுழக்கங்கள்; மின்னி கண்ணீர் மழை பொழிந்தது. திரும்பிப் பார்த்தாள், தங்கை யைக் காணவில்லை. அவளது
பழைய கால நினைவுகள் தான் !
Jill -66.
ஜனனி ஒரு இளம் விதவை.
சிறு வயதில் தந்தையை இழந்து தாயுடனும் ஊமைத் தங்கை t யாவுடனும் வாழ்க்கை நடத்தி வந்தாள். இந் நிலை யி ல் தான் தாயின் அவசரத்தால் ஜனனிக்கு ஒருவரை நிச்சயம் செய்யப்பட் Lது. கல்யாண பதிவு முடிந்தது. பதிவு முடிந்த அடுத்த நாளே வெளிநாடு செல்லவிருந்த கண வன் விபத்தில் இறந்த  ைத அறிந்து விதவைக் கோலம் பூண் டவள்தான் ஜனனி, தன்மகளின் விதவைக் கோலத்தைப் பார்த்து
சரணம் முடிந்தது!
sapierw*
பிறப்பிடம் தானே!
* கு. நிரஞ்சன
பார்த்தே அவள் தாய் @D应g விட்டாள்.
இருள் சூழ் ந் தி வெண்ணில வான ஜனணியின் வாழ்வில் மீண் டும் ஒர் இனிய தென்றல் வீசிற்று அந்தத் தென்றல்தான் திரு.
திரு பக்கத்து விட்டை விலைக்கு வாங்கி தாயுடன் வந்து திபி மர்ந்திருந்தான். அவன் சீர்திருத் தவாதி ஆகையினலோ ஏணுே ஜனனியின விரும்பி விட்டான், மனம் என்பது சலனத்தின் அதுவும் பெண்களின் மனம் என்ருல் பேச வேண்டுமா! மீட்டாத ്ഞ് யான ஜனணியின் மனத்திலும் பல சலனங்கள் ஏற்பட்டு திருவை விரும்பி விட்டாள். இந்நிலையில் தான் ஊமைத் தங்கை Siut தன் ஆசையைத் தெரிவித்திருந் தாள்.
பிரியா ஊமை யென்ருலும் அழகும் பண்பும் நிறைந்தவள் தானே! அப்படிப்பட்டவள் அழ கான தி ரு  ைவ விரும்பியதில் என்ன தவறு? அவளது உலகம் இந்த வீடும் அயலும் தானே! அடிக்கடி திருவின் தாய்க்கு உதவி செய்யப் போகும் போது திரு வைக் கண்டு இவன் விரும்பி யிருக்கலாம். கொண்ட பசியைக் கூடக் கூறமுடியாத இவளின் ரை
دست 36 سه

ஆசையை நிறைவேற்ற வேண்டி யது என் கடமைதானே." இல் வாருகப் பலவிதமாக வினுக்க ளும் விடைகளும் ஜனனியின் மனத்தில் எழுந்தன.
ஏதோ ஒரு தீர்மானத்துடன் கண் ணிரைத் துடைத் துக் கொண்டு திருவின் வீட்டிற்கு ஜனனி புறப்பட்டாள்.
** தயவுசெய்து எனக்காகச் சம் மதிங்க; நீங்க சீர்திருத்தவாதி; எனக்கு வாழ்வு த ர நினைத்த உங்களால் நிச்சயம் என் தங் கைக்கு வாழ்வு கொடுக்க முடி யும், நான் வேறை, அவள் வேறையில்லை. உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். நாளை காலையில் உங்கள் முடிவைச் சொன்னல் போதும்.'
பல போராட்டங்களின் மத்தி யிலும் உறு தி யா க திருவுடன் கதைத்தாள் ஜனனி.
மறுநாள் விடிந்ததும் குழப்பத் துடன் ஜனனி விட்டிற்கு வந் தான் திரு. அங்கே ஜனனியின் மரணித்த உடலைத் தான் சில னல் காண முடிந்தது.
நீ எப்படியம்மா இந்த முபி வுக்கு வந்தாய்! " என ம் குதிே றிற்று.
அக்காவின் உடலுக்கு அருகி லிருந்து அழுது கொண்டிருந்தார் பிரியா, அக்கா தன்னல்தான் இறந்தாளென்பது கூடத் தெரி யாத குழந்தை இவள், துன்பும் வரும்போது வாய் விட்டு கத்த பேதை இவள்!
திரு பிரியாவின்  ைகை ህ ! LU பற்றி அவளி ன் கண்ணிரைத் துடைத்து விட்டான்.
※
சகல விதமான
※
பஸ் நிலையம்,
* ரெடிமேட் ஆடைகளுக்கும்
புடவை வகைகளுக்கும்
x குழந்தைகள் சிறுவர்களுக்கான
ஆடை வகைகளுக்கும்
சிறந்த ஸ்தாபனம் காவேரி ரெக்ஸ் ரைல்ஸ்
அச்சுவேலி,

Page 21
நெஞ்சு பதைக்கும் நிலை
YAr பாரதிதாசன் நூற்ருண்டை முன்னிட்டு அவரது 'தமிழியக்கம்' என்னும் கவிதைத் தொகுப்பி லிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டது.
பாரதிதாசன்
கரும்பு தந்த தீஞ்சாறே
கணிதந்த நறுஞ்சுனேயே கவின்செய் முல்லை அரும்பு தந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
அன்பே, கட்டி
இரும்பு தந்த நெஞ்சுடையார்
துறை தோறும் நின்னெழிலை
ஈடழித்து எடுத்து மகிழ் இளங்குழந்தாய் இசைத்து மகிழ் நல்யாழே இங்குள்ளோர் வாய் மடுத்து மகிழ் நறுந்தேனே
வரைந்து மகிழ் ஓவியமே
அன்பே, வன்பு தொடுத்து மகிழ் நெஞ்சுடையார் துறை தோறும் நின்னெழிலைத்
தோன்ரு வண்ணம் தடுத்து வரல் நினைக்கையிலே நெஞ்சு பதைக்கும் சாற்ற
வாய் பதைக்கும் பண்டு வந்த செழும் பொருளே பார் அடர்ந்த இருட்கடலில்
படிந்த மக்கள்

கண்டு வந்த திருவிளக்கே
களிப்பருளும் செந்தமிழே,
அன்பே, வாழ்வில் தொண்டு வந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
துளிர்க்கா வண்ணம் உண்டுவரல் நினேக்கையிலே
உளம் பதைக்கும் சொல்வதெனில்
வாய் பதைக்கும் உடலியக்கமும் நல்லுயிரே
உயிரியக்கும் நுண்கலையே
மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டே
கண்ணுன செந்தமிழே
அன்பே நாட்டில் கெடல் இயக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக்
கெடுக்கப் பாடு படல் தன்னை நினைக்கை பிலே
நெஞ்சு பதைக்கும் பகர
வாய் பதைக்கும் வையத்தின் பழநிலவே
வாழ்வுக்கோர் புத்துணர்வே
apudý?Gav, GaoGovori ஐயத்திற் கறிவொளியே, ஆடல்தரும் செந்தமிழே.
அன்பே, தீமை செய்யத்தான் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தீர்க்க எண்ணும் மெய்யைத்தான் நினைக்கையிலே நெஞ்சு பதைக்கும் விளக்க
வாய் பதைக்கும்.
سے k39س۔

Page 22
இ8 நாடகம்
பாடம் படிப்போம்
Up. திருஞானசேகரம்
பாத்திரங்கள்: சிண்முகம் தகப்பன்) இலட்சுமி (தாய்) சுமதி (மகள்) தாரணி, சிவராசா, கத்தையா.
(படலையில் மணிச் சத்தம் கேட்டல்) சண்முகம்: பிள் ளை பிள்ளை சுமதி படலேக்கை மணி அடிக் குது போய் என்னண்டு பார் தபாலோ தெரியாது.
(சுமதி போய்க் கடிதத்துடன் Gipfei )
சண்முகம், என்ன கடிதம் போலை கிடக்குது. ஆருக்குக் கடி தம்?
சுமதி: ğ?ULunr.
சண்முகம் எங்கையிருந்து வர் ਛ leir? ருந்து வந் சுமதி: (கடிதம் பிரித்துப் படித் தல்) எங்களுக்கு நல்ல காலம் வந்திட்டுது.
சண்முகம் என்ன . என்ன. என்ன சொல்லுருய்?
சுமதி ஒம் ஐயா. வேலை கிடைச்சிட்டுது.
சண்முகம் உண்மை தானே lair&T 6T6irgor Gaiah) Larr?
சுமதி: நாங்கள் எதிர்பார்த் தது போல ஆசிரியத் தொழில் $(tଙt',
அது எனக்குத் தா ன்
எனக்கு
தின்ரை அருமையை.
சண்முகம் வாத்தித் தொழிலோ
நல்லதாய்ப் போச்சு. எங்கையாம்
வேலை போட்டிருக்கு.
சுமதி பட்டதாரிகளுக்கு எப்
படியும் சொந்த மாவட்டத்திலை
தான் கிடைக்கும் திணைக்களத் திலைதான் போய்ப் பார்க்க வேணும்.
சண்முகம்: ஏதோ கடவுள் கண் திறந்திட்டான். பட்ட கஸ்ரம் எல்லாம் தீரப் போகுது. உங் கட்ை அம்மா அறிஞ்சதும் வலு வாச் சந்தோசப்படப் போகின்ரு இலட்சுமி (வந்தபடி) என்ன திகப்பனும் மகளுமாய் ஏதோ கதைக்கிறியள்.
சண்முகம்: இலட்சுமி எங் கடை கஸ்ரம் தீர கடவுள் கண் திறந் திட்டான் பிள்ளை க்கு வேலை
கிடைச்சிருக்கு. நீ சொன் ஞ ய்
பெண்பிள்ளையஞக்கு. ஏன் படிப்பு எண்டு. இப்ப பாத்தியே படிச்ச பட்டப் படிப்புப் படிச்ச கையோ  ைட வேலை கிடைச்சிருக்கு.
இலட்சுமி என்ன வேலை பிள்ளை கொப்பர் ஒரேயடியாய் குதிக்கி ருர்,
- 40 -

சுமதி எல்லாரும் விரும்பின மா தி ரியே வாத்தியாரம்மா வேலேதான் கிடைச்சிருக்கு,
இலட்சுமி. அப்படியோ? எப்ப தொடக்கயாம். ... w
கமதி: வாற முதலாந் திகதி ப' லிருந்து வேலை செய்யவேணும்
இடத்தைப் பற்றிய விபரங்களை
கல்விக் கந்தோரிலை கேட்கவேணும்.
இலட்சுமி கிட்டக் கிடைச்சு ( தண்டா எவ்வளவு நல்லது.
போய்க்
சண்முகம் படிக்கவிட வேண் டாம் எண்டு சொன்னவ இண் டைக்குப் பிள்ளைக்கு வேலை கிடைச்சிட்டுது எண்டதும் அவ ன் சந்தோசத்தைப் பாரன்.
இலட்சுமி பிள்ளை படிக்கிறதிலை
எனக்கு மட்டும் விருப்பமில் லையோ? ஊர்ச் சன்த்தின்ரை கதையளாலையெல்லோ நானும் அபபடிக் கதைச் சஞன். முன்னேறப் பொறுக்காத தாயும் இருப்பாளோ?
சுமதி இனி எனக்கும் வேலை கிடைச்சிட் இதுதானே எங்களுக்கு ஒரு குறையுமில்லை.
சண்முகம் பிள்ள்ை நீ படிச்சு வந்த மாதிரி உன்னுடைய மற் றத் தங்கைமார் மூண்டு பேருமே நல்லாப் படிச்சு வ:ாருளவை. அவளவையும் உன்னைப்போலை வேலை செய்வாள்கள் தானே?
சுமதி: ஓம் ஐயா. சாந்தி இந்த வருசம் A, சோதனை எடுக்கப் போருள் அதிலே அவள் கம்பஸ் சுக்கு எடுபடுவாள் மற்றவள்
பிள்ளை பேரும் இப்ப சண்டை பிடிக்கிறி
தேவியும் இரண்டு வருசத்தில சிம்பசுக்குள்ளை போயிடுவாள்
govu guf: கடைக்குட்டி பாரதி யும் படிப்பில் படுசுட்டி, அவ ளும் படிச்சு முன்னுக்கு வரு
சண்முகம் அப்ப எனக்கு ஒரு குறையும் இல்லை எண்டு சொல்லு பெட்டையளைப் பெ ற்ருலு ம் படிப்பிச்சு ஆளாக்கியிருக்கிறன். இலட்சுமி, உப்படிக் குதிக்கா தையுங்கோ. பொம்ப8ளப்பிள்ளை யள் படிச்சு உத்தியோகம் பார்த் தீாலும் ஒருத்தன்ரை கையிலை பி டி ச் சுக் குடுக்கேக்கைதானே எல்லாந் தெரியும். .
சண்முகம் அதெல்லாம் அப்ப பார்ப்பம். என்ன படிச்சு உத்தி யோகம் பார்க்கிற பிள்ளை யெட்டை யார் என்ன கேட்கப்
போருன்
சுமதி: ஏன் நீங்கள் இரண்டு
யள் எல்லாம் நடக்கிறபடி நடக்
.குந்தானே -ح
சண்முகம் அப்புடிச் சொல்லு பிள்ளை.
இலட்சுமி என்னவோ எல்லாம் நல்லபடி முடிஞ்சால் சரி. எதுக் கும் என்ரை பிள்ளைக்கு வேலை கிடைச்சால் நல்லதொரு பொங் கல் பொங்குறதாய் பிள்ளையாடரை
வேண்டினனன்.
சுமதி: ஏனம்மா. பிள்ளையாரே வேலை தேடித் தந்தவர். எங் கையோ இருக்கிய அந்தப் பிள் ளைய ரைவிட முன்னலை இருந்து கஸ்ரப்பட்டு எங்கடை முன்னேற் றத்தைக் கண்டு மகிழும் தாய்
4 1 :

Page 23
தந்தைதானம்மா எங்களுக்குக் கடவுள்.
சண்முகம்; அது சரி தான்
பிள்ளை இந்த காலத்திலை Girčiny யள் தாய் தகப்பனையும் மதிக் ஒறதில்லை. காலம்மாறி கலியுகம் முத்திப்போச்சு
இலட்சுமி, தகப் லும் மகனும் என்ன சொன்னலும் எங்கடை
குடும்பத்துக்கு மட்டுமில்லை இந்த
ஊருக்கே படியளக்கிறவர் அந் தப் பிள்ளையார்தான் அவர் விட்ட வழிப்படிதான் எல்லாமே நடக்கும். W
கமதி சரி அம்மா ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாய்க் கட அனக் காணுகின் ெ நாங் ள் :ய் தந்தையர் வடிவில் க. வுளைக் காணுறம்.
சண்முகம் அதாலேதான் பெரி யவையும் மாதா, பிதா குரு, தெய்வம் எண்டு சொல்லி, தாய்
தந்தையரைத் தெய்வத்துடன் ஒப்பிட்டிருக்கினம்,
சுமதி அது மட்டுமில்லையப்பா அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் எண்டுஞ் சொல்லிப் போயிருக்கினம். அ  ைவ ய  ைவ தாங்கள் விரும்பியபடி கடவுளைக் காணலாம்.
சண்முகம் சரிபிள்ளை கொம்மா விரும்பிறபடி செய்யட்டன்.
சுமதி அது அம்மாவின்ரை விருப்பம். அதை யாரும் தடுக்க முடியாது. அம்மாவின் நம்பிக்கை
s. இலட்சுமி. அப்ப சரி நாளைக்கே செய்வம்.
சுமதி சரி அம்மா. நான் கமலா வீட்டுக் கொருக்கா ப் போய் வாறன். போதல்)
திரை
(தொடரும்)
அறிமுக எழுத்தாளர் கவனத்திற்கு.
புத்தெழில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதை மகிழ்ச்சியுடன் செய்வது கண்டு பலர் தமது படைப்புக்களை எமக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர். அவற்றுள் மிகவும் தகுதியா னவை பிரசுரிக்கப்படும். ஆனல் படைப்புக்கள் அனுப்பும்போது
உங்களின் பெயர்,
முகவரி, முதலான விபரங்களைத் தவருது
குறிப்பிடவும். இவ்விபரங்கள் இல்லாது புனைபெயருடன் மட்டும் வரும் படைப்புக்கள் பிரசுரிக்கப்படமாட்டாதென்பதை வருத்தத்து
Lன் தெரிவிக்கின்றேம்,
- ஆசிரியர் .
سے 42 سے

புலகைாத தடைகள்
'இராசாத்தி போய்ப் படிக்கத் தொடங்கு. இப்படியே விளையா டிக் கொண்டு திரிஞ்சால் ஓ.எல். ரெஸ்ட் எப்ப டி ச் செய்ய ப் போருய்??
அம்மாவின் அறைகூவலால் நான் படிக்கும் அறைக்குள் வந்து உட்காருகிறேன்.
இன்று பாடசாலையில் தந்த வீட்டு வேலைகளையும், ரியூசனில் தந்த வீட்டு வேலைகளையும் கட்டா யம் ஒழுங்காகச் செய்து கொண்டு போகவேண்டும். எத்தனை நாட்
கள்தான் வீட்டுவேலைகளே ஒழுங்
காகச் செய்யாமல் சென்று பாதி நாட்கள் வளைந்து ஒழிந்து தப் பித்துக் கொண்டும் மீதி நாட்கள் பேச்சு வாங்கிக் கொண் டு ம் காலத்தைக் கழிப்பது?
நான் எடுத்த மன உறுதியுடன் பாடத்தில் ம ன  ைத ப் பதிக்க முயல்கின்றேன்,
* அக்கா ஸ்கூலிலை மிஸ் சொன் னவ நாளைக்கு எங்களை ஒரு கண்
மேகலா - சிவப்பிரகாசம்
காட்சிக்குக் கூட்டிக் கொண்டு போறன் என்று. நீங்கள் GLIT 35 வில்லையா?*
தங்கச்சி மாலாவின் குரல் என் கவனத்தை ஈர்த்தது,
ஒ! எங்கடை ஸ்கூலிலேயும் இதைப் பற் றிக் கதைச்சவை. ஆனல் ஒழுங்காக ஒண்டும் சொல் லவில்லை."
"அக்கா ரியூசனிலை இன்று எங் களுடைய தமிழ் ச் சேர் நள வெண்பா படிப்பித்தவர். ஒரே பகிடி. *
* மாலா! கொஞ்சம் சும்மா இரு அம்மா! இங்க மாலாவைப் பாருங்கோ. என்னைப் படிக்க
விடாளாம்."
'நீர் படியும் நான் போறன்’
தங்கச்சி ஆத்திரத்துடன் வெளி யேறுகின்ருள்.
- 43 -

Page 24
முதலில் விஞ்ஞான பாடத் தைப்படிக்கத்தொடங்குகிறேன். மனிதனின் உடல் அ  ைம ப் பு என்ற பாடப் பக்கத்தைப் ւթյ ւடினேன்.
ஆலயில் பாடசாலைக்குச் செல் லும் போது இரத்தம் வெள்ள ாகப் பரந்து கிடக்க கோரமாக கொலையுண்டு கிடந்த அந்தச் சட லம் மறக்கமுடியாத கோரமாக. அம்மா காலமை பள்ளிக் கூடம் போகேக்கை வழியிலே ஒரு அண்ணுவை யாரோ கொலை செய்து போட்டிருந்ததைக் கண் டனுன் ."
"உதை எல்லாம் நீ ஏன் பாத் தனி? அதை மறந்து போட்டு இப்ப படி.
அம்மாவின் குரலிலே அடுப்பி லிருந்த சொதியின் கொதி மாறி விட்டதோ!
நான் மீண்டும் படி க் க த் தொடங்குகின்றேன்.
*குருதி சிவப்பு நிறமான ஒரு திரவமாகும், சாதாரணமாக ஒரு மனிதனில் 55 இலிற்றர் குருதி அடங்கி உள்ளது. *
அந்த அண்ணுவைச் சுற்றி எவ் வளவு இரத்தம்.
இதென்ன திரும்பவும் அந்த நினவு. அம்மா சொன்ன மாதிரி அதைப் பார்க்காமலேயே இருந் திருக்கலாம்.
என்னென்று பார்க்காமல் இருப் பது? பாடசாலைக்குப் போகும் நேரம், பாடசாலைக்குச் செல்லும் வழியில் கொலை செய்திருந்தால்
பார்க்காமல் எப்படிப் போவது?
"இப்ப அதை விட்டுட்டுப் படிப் போம்.
அந்த அண்ணுவைப் பார்த் தால் ஒரு ஏ எல். ப டி க் கிற அண்ணு அளவாக இருந்தார். படிக்கிற அண்ணுவாக இருக்கும். நல்ல கெட்டிக்கார அண்ணுவாக இருந்தால் ஏதாவது சிந்திக்கா மல் கதைக்காமல் இருக்கமாட்
I. சீ திரும்பத் திரும்ப அதைப் பற்றியே நினைவு வருகி றது. படிக்க வேண்டும்.
அந்த அண்ணு இவ்வளவு பிரச் சனைக்கையும் எவ்வளவு பாடுபட் டுப் படிச்சிருப்பார். கடைசியாய் என்ன பிரயோசனம்?
*ராசாத்தி என்ன யோசினை? அந்த யோசினையே? அதை விட் டிட்டுப் படி.
அம்மா அருகே வந்தது கூட அவர்குரல்கேட்டதுத்தான் தெரி கின்றது.
அந்த யோசனையை எங்கே விடு வது? அந்த அண்ணுவுக்குப் பக் கத்தில் இருந்து அழுத அம்மா மைப் பார் த் திருந்தா ல் இவ இன்று முழுவதும் அழுதிருப்பா. திரும்ப 87 நினைவு இவவிற்கு வந் திருக்கும்.
ஒ 87லே எங்கடை அம்மம்மா வைச் சுட்டுப் போட்டுப் போக வும் அவ இப்படித்தான் கிடந் திருப்பா,
பிறகு நாங்கள் ஒரு த் த ரு ம் போய்ப் பார்க்க முடியாத நிலை யி%ல மெல்லமெல்ல உருக்குலைந்து எலும்பாகி .
- 44 -

அந்த எலும்பை ஒரு மாதத் திற்குப் பிறகு அம்மா போய்ப் பார்த்த போது எப்படி இருந் திருக்கும்
அப்பாவும் அம்மாவும் அதைப் போய்ப் பார்க்கக் கூட எங்களை விடவில்லை.
ஆனல் அந்த நினைவுகள் என்னை விடவில்லையே.
என் கண்கள் பனித்தன.
அக்கா" தம்பி எழுப்பிய சத்தத்தில் சுய நினைவிற்கு வருகின்றேன்.
அக்கா இந்தக் கணக்கைச் சொல்லித்தாநீங்களே?"
தம்பி பரிதாபமாக என்னைப் பார்க்கிருன்.
நான் கணக்கைச் சொல்லிக் கொடுத்து முடித்த பொழுது "ராசாத்தி சாப்பிட வா!'
அம்மா எங்களைச் சாப்பிட அழைத்தார்.
நாங்கள் மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு வந்த பொழுது மணி எட்டரைக்கு மேலாகிவிட்
l-gil
*அட எட்டரை மணியாகிவிட் டதா?
நான் ஏக்கத்துடன் கண்களைப் புத்தகத்தில் புரளவிடுகிறேன்.
உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பார்கள். சாப்பிட்ட பின் உறக்கம் விரைவில் வந்து விடும். உறங்காமல் எப்படியும் படிப்பது. சிறிது நேரம் படித்துக் கொண்டிருக்கின்றேன்.
அப்பாடா! ஒருவாருக விஞ் ஞானப் பாடத்தைப் படித்துவிட் டேன். தமிழ்ப் பாடத்தில் பாட சாலையில் தந்த வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்குகின்றேன்.
டும் டும் டும் தொடங்கி விட்டாங்கள். இனி எங்கே நிம்மதியாப் படிப்பது?
நாங்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த் துக் கொண்டு இருக்கின்ருேம்
ஸி"விச்சை அணையுங்கோ. பிரச்சினை இல்லை."
விளக்கை அணைத்து விட்டு சத் தங்கள் ஒயுமட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்ருேம்.
சற்று நேரத்தில் சத்தங்கள் படிப்படியாக நின்று விட்டன.
"அப்பா லேற்றைப் போட்டுப் படிக்கத் தொடங்கவா??
மெல்ல என் எண்ணத்தை வெளியிட்டேன்.
அப்பா அனுமதி வழங்கிவிடுப் படுக்கச் சென்று விட்டார்.
எனக்குத் தனியாக இருக்கும் பொழுது அடி மனதில் ஒரு பயம் எப்பொழுதுமே இருந்து கொண் டிருக்கும். சற்றுத் துணிவை வர வழைத்துக் கொண் டு தமிழ் வீட்டு வேலைகளை முடிப்பதில் கவ னத்தைச் செலுத்தினேன்.
*டொக் டொக்"
என்ன சத்தம்? யாரோ கத
வைத் தட்டுவது போல இருந் 35.
= 45 =

Page 25
இரவில் இந்தச் சத்தத்தின் நடுவில் நேற்றைய இர வி ன் நினைவு வருகிறது.
அம்மா தன் வேலைகளை முடித்து விட்டுப் படுத்த பின் நேற்று உட் கார்ந்து படித்துக்கொண்டிருந் தேன்.
"ஐயோ! கள்ளன்! கள்ளன்! முன் வீட்டில் தகரச் சத்தமும் நந்தாவின் அ ல ர ல் ஒலி யும் காதைந் பிளந்தன. அப்பா பத றிக் கொண்டு எழுந்து சகல மின் விளக்குகளையும் போட்டார்.
பக்கத்து வீட்டு செ ல் லை யா மாமா அப்பாவை அழைத்து
'தம்பி இந்தத் தகரத்தில் அடி யுங்கோ, என்ன பேசாமல் இருக் கிறியள்??
அவர் வார்த்தைகள் சற்றுச் சூடாக வெளிப்பட்டன.
அப்பாவும் அவரு மா கச் சேர்ந்து வாத்தியக் கச்சேரியில் ஈடுபட்டார்கள்.
நேற்றும் அந்தப் ப ய த் தி ல் படுத்து விட்டேன்.
டொர் டொக்"
மீண்டும் அதே சத்தம். இத யத்தில் டிக் டிக் ஒலி என் காத ருகே கேட்டது. எழுந்து போய் அப்பாவை எழுப்புவோமா?
படக் ஒரு அறைக் கதவு திறந் தது. என் இதயம் நின்றுவிட்டது போல் இருந்தது. எழும்பக்கூடக் கால்கள் வரவில்லை. "மியாவ் மியாவ்" கள்ளனல்ல பூனைதான். ஆனல் இனி படிக்க முடியும் போலத் தெரியவில்லை.
கண்களை உறக்கம் அழுத்து கின்றது. உறக்கம் கூட நிம்மதி யாக இருக்காதே பயங்கரக் கன வுகளுடன்
நான் படிக்காமல் விட்டால் கூடப் பரவாயில்லை, மனநோய் எதுவும் வந்து வி டு மே 7 என் னவோ! * . معه
சிந்தனையைத் தி  ைச திருப்பு மனம் பதறியது.
மாலை ஆறுமணியிலிருந்து இரவு பத்தர்ை மட்டும் விஞ் ஞானப் பாடம் மட்டுமா படித் துள்ளேன். அடக் கடவுளே!
தமிழ், கணிதம், ஆங்கிலம் அப் பப்பா நாளைக்கு ரீச்சரிடம் நல்ல மங்களந்தான் வாங்கி க் கட்ட வேண்டும். நாளைக்கு கட்டாயம் பள்ளிக்கூட, ரியூ சன் வீட்டு வேலைகளைச் செய்யவேண்டும். ஒவ் வொரு நாளும் பேச்சு வாங்க (up Lq.uL11 Tğ5I .
என் மனம் ஒலமிடுகிறது!
நாளை மட்டும் நடைமுறையில் விதி விலக்காய் இருக்கப் (βι ιπ 5 றதா?
படிக்க வேண்டும் என்ற grgös உறுதி ஒவ்வொருநாளும் குலைக் கப்படுவதை நினைக்கும் போது. கதறி அழவேண்டும் போல் இருக் கின்றது.
இதை யாரிடம் சொல்லி அழு வது? சொன்னல் கூட நிலைமை மாறப் போகிறதா?
ஆனல் ஒன்று மட்டும் நிச்சயம் இதற்காக நான் மட்டும்தான் அழுகிறேன் என்றுமில்லை. அழப் போகிறேன் என்றும் இல்லை.
= 46 س

விற்பனையாகிறது!
* தமிழறிஞர்களின் ஆய்வுக்கும் * மாணவர்களின் வரலாற்றுத் தகவல்களுக்கும்
சிறந்த நூல்
பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம்
ಔಟ್ಲಿ
சுடரொளி வெளியீட்டகம், tunքսtյոa&rlp.
விலை ரூபா 45எல்லா புத்தகசாலையிலும் கிடைக்கும் விபரங்களுக்கு
நிருவாகி, சுடரொளி வெளியீட்டுக் கழகம்,
121/4, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்

Page 26
சூரியா
பஸ் நிலைய முன்
எங்களிடம் சகல வி களே மொத்தமாகவும் சி. விலேயில் பெற்றுக் கொ
மற்றும் குழந்தைக
* பால்மா வகைகள் ஒடிக்கொலோன் * ஒலிவ் ஒயில்
* மற்றும் தேர்
நெப் * ஆயுள்ே விள்ே
என்பவற்றையும் மலிவான 5
கால்நடை வைத்தியர் கோழிக்குஞ்சுகள் வெள்ளே குஞ்சுகள், சேவற் குஞ்சுகள் பவற்றை நம்மிடம் ஒடர் ெ
உங்கள்
சூரியா
பஸ்நிலையம்
இச்சஞ்சிகை ஆசிரியர் திரு. சுடரொளி அச்சகத்தில் அச்சி

LITs LD5nm).
*பாக அச்சுவேலி
விதமான ஆங்கில மருந்து ல்லறையாகவும் நியாயமான ஸ்ாளலாம்.
ளுக்கான
7.
வத மருந்து வகைகள் yெதுடம்
விவேயில் பெற்றுக் கொள்ளலாம்.
ஒன்ராஜ் சிபாரிசு செய்யப்பட்ட
சேவிற்குஞ்சுகள், கறுப்புவரிக் பிறவுன் பேட்டுக் குஞ்சுகள் என் காடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
ரவிற்கு நன்றி
Ting
அச்சுவேலி
மு. திருஞானசேகரம் அவர்களால்
டப்பட்டு வெளியிடப்பட்டது.