கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1994.06

Page 1
கோபுரம்
N
密 密 - 密 స్టో தகவல் இதழ் *。 *్య ஆனி, 1994 ဒွ” 密 密
密 密 samos
இந்து TLDU, H, TFTU AB)I n

Tel
تیاتیاتی محتی محتی محتی محبت --
-F_F-ET
تھے۔
ல்கள் தினைக்கள வெளியிடு

Page 2
. பக்திப்ெ
பக்திப்பெருவிழாவில் கலாநிதி : அமைச்சர் பி. பி. தேவராஜ் ெ பதையும் சுவாமி ஆத்மகனாநந்த படத்திற் காணலாம்.
- அறநெறிக்
களுத்துறை இந்து அறநெறி போர்த்தி கெளரவிக்கப்பட்ட ே திருமதி சாந்தி நாவுக்கரசன், படத்திற் காணலாம்.
 
 

பருவிழா -
த. நடராஜா அவர்களுக்கு இராஜாங்க பான்னாடை போர்த்தி கெளரவிப் ா அவர்கள் உடன் இருப்பதையும்
கல்வி மாநாடு -
க்கல்வி மாநாட்டில் பொன்னாடை
தசிகர்களையும், பார்வையாளர்களில்
கவிஞர் இந்திரஜித் ஆகியோரையும்

Page 3
இந்துசமய, கலாசார திணைக்கள வெளியீடு
மலர்: 5 8 1994 8 இதழ்: 2
பவ வருடம், ஆனி மாதம்
எண் ண ம்
இந்துசமய, க லா சா ர இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருந்த பக்திப் பெருவிழா ஜூன் மாதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் மிக ச் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை நாற் பத்தாறு அருட்பெரியோர்கள் வாழ்த்திக் கெளரவிக்கப்பட்டனர். இராஜாங்க அமைச் சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பொன் னாடை போர்த்தி கெளரவிக்க, வெள்ள வத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்கள் விருதுகளை வழங்கினார். அன்றையதினம் காலை, நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த இந்து நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கருத்தரங்கு நடைபெற் றது. விழாவின் சிறப்பம்சமாக கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
 

இன்னுமொரு பிரதான நிகழ்வாக களுத்துறையில் இந்து அறநெறிக்கல்வி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னோடியாக களுத்துறை மாவட்டத் தில் பல ஆன்மீக நிகழ்ச்சிகள், கருத் தரங்குகள் என்பன நடைபெற்றன, ஜுன் மாதம் 26ம் திகதி மாநாடு குளோடன் தமிழ்வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகக் கவிஞர் திரு. இந்திரஜித் அவர்கள் இம்மாநாட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு மாவட்ட மட்டங் களில் நடைபெற்ற இந்துசமயப்போட்டி களுக்கான பரிசளிப்பு வைபவங்கள் தற் போது மாவட்டங்களின் பிரதான நகரங் களில் நடைபெற்று வருகின்றன.
இவ்விதழில் பிரதான செய்திகளோடு வழமையான திணைக்களச் செய்திகள், ஆன்மீகக் கட்டுரைகள் என்பனவும் இடம் பெற்றுள்ளன.
கோபுரம் இதழ் பற்றி வாசகர்கள் எழுதும் கருத்துக்களுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம். வ ழ மை போல வே தொடர்ந்தும் உங்க ள் எண்ணங்களை எழுதி உதவுமாறு வேண்டுகின்றோம்.
கோபுரம் இதழ்பற்றிய உங்கள் சிந்தனை களைத் தொடர்ந்தும் எழுதி அனுப்புமாறு வேண்டுகின்றோம்.
முகவரி:-
பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுவல்கள்
திணைக்களம் 'காப்புறுதி இல்லம்’ 9ம் மாடி, 21, வொக்ஷோல் வீதி, கொழும்பு - 02,

Page 4
பக்திப்பெருவி
இந்துசமய க லா சா ர அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்து நடத்திய இரண்டாவது பக்திப்பெருவிழா ஜூன் மாதம் 11ம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அன்று காலை நாட்டின் பல பாகங் களையும் சேர்ந்த ஆலய அறங்காவலர்கள், இந்துசமய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்துசமயக் கருத்தரங்கு நடைபெற்றது ‘சமயம் காட்டும் வாழ்
:பக்திப்பெருவிழா - இந்துசமயக்
சர் பி. பி. தேவராஜ் உரையாற்று திரு. கா. தயாபரன், பணிப்பாளர் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக் ரில் ஒரு பகுதியினரையும் படத்திற வியற் சிந்தனை’’ எனுந் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திணைக் களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார். இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வெ ள் ள வ த் தை இராமகிருஷ்ண மிஷன் ஞா யிறு பாடசாலை மாணவர்களின்
உனது சிறு செயலிலும், சிற்றறிவிலும்
R བས་ཁོང་ཚོར་
 

pI - 1994
தேவாரப்பண்ணிசையைத் தொடர்ந்து பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா அவர் களின் அருளுரை இடம்பெற்றது.
திரு. க. சண்முகலிங்கம் அவர்களின் த  ைல  ைம யு  ைர  ைய த் தொடர்ந்து புலவர் க. சிவானந்தன் அவர்கள் 'திருமந் திரத்தில் அன்புநெறி' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். கொழும்பு தேவாரப்பண்ணிசை ம ன் ற த் தி ன ர் 'நால்வர் கா ட் டி ய ந ன் னெ றி' எனும் இசை நடன நிகழ்ச்சியொன்றினை
கருத்தரங்கில், இராஜாங்க அமைச் கின்றார், இராஜாங்கச் செயலாளர் * திரு. க. சண்முகலிங்கம், பிரதிப் கரசன் உட்பட கலந்துகொண்டோ ற் காணலாம்.
வழங்கினர். திருமதி குமாரசாமி அவர்கள் தொகுத்தளித்த இந்நிகழ்ச்சியில், திருமதி கல்யாணி சுந்தரலிங்கம் அவர்களின் பரத அபிநயங்கள் இடம்பெற்றன. பண்ணிசைப் பாவலர் பி. வி. இராமனின் தேவாரப் பாடல்களுக்கு சோமாஸ்கந்தசர்மா வயலி னும், வி. ஜம்புநாதன் மிரு தங்க மு
இசைத்தனர்.
கூட பேராற்றல் மறைந்திருக்கின்றது.

Page 5
ஆணி 1994
பக்திப்பெருவிழாவில் ‘கண்டற சியில், இரா, நீதிராஜசர்மா அவர் மாராக வேடமிட்ட மாணவர்கை
தெமட்டகொடை விபுலாநந்த அற நெறிப் பாடசாலை மாணவர் களின் கும்மி நடனம், இராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு பாடசாலை மா ன வ ர் க ளின் வில்லுப் பாட்டு, மட்டக்களப்பு விபுலாநந்த இசை நடனக் கல்லூரி மாணவர்களின் பஜனை என்பன இடம்பெற்றன.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களின் உரையைத் தொடர் ந் து கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கருத்து ரைகள் இடம்பெற்றன. இக்கருத்துரை களுக்கு, அமைச்சின் இரா ஜாங்கச் செய லாளர் திரு. கா. தயாபரன்,திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம், பிரதிப்பணிப்பாளர் திருமதி சாந்தி
உண்மை இருக்கும் இடத்தில்
 

సీ لحمیانه =് sm go
− Yg VV ܥ ܝ
யாதன கண்டோம்' என்ற நிகழ்ச் ர்கள் பூசைசெய்வதையும் நாயன் ளயும் படத்திற் காணலாம்.
நாவுக்கரசன் ஆகியோர் விளக்கமளித் தனர். உதவிப்பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா அவர்களின் நன்றியுரை யுடன் காலைக் கருத்தரங்கு நிறைவு பெற்றது:
விருதுவழங்கல், கலை நிகழ்ச்சிகள்
விருதுவழங்கலும், கலைநிகழ்ச்சிகளும் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின. இரா ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், பூணூரீமத் ஆத்மகனாநந்தா, ஆகியோர் பிர தம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
தமிழிசை அரசு திரு. வி. மு. நவரெத் தினம் அவர்களின் தே வா ர த் து டன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பணிப்பாளர்
அழகும் இளமையும் பொழியும்.
3 -

Page 6
و غ؛ خمره به صاحب " " . هيثم
*ヘ, * * జ్ఞా கோபாம் -7- --܀ -------۔ جبهسسهس
ւյy --
திரு க. சண்முகலிங்கம் அ வர் க ளின் வரவேற்புரையைத் தொடர்ந்து கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க நால்வர் சமய பாடசாலை மாணவர்களின் 'உத்தமன் இராமன்' எனும் நாடகம் இடம்பெற் றது. அடுத்து, ஞானசிரோன்மணி திருமதி வசந்தா வைத்தியநாதன் ''கண்டறியா தன கண்டோம்' எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்தளித்தார்; திரு. வி.மு. நவரெத்தினம் , திரு. பி. வி. இராமன், திரு. வ. மாணிக்கவேல், திரு. வை. பழனி நாதன் ஆகியோர் பின்னணி இசைவழங் கினர். இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு பூசை செய் பவராக சிவபூg நீதிராஜசர்மா அவர்கள் கலந்துகொண்டார், கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் நான்கு குரவர்க ளாக வேடமேற்று நடித்தனர்.
இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா ஆகி யோரின் சிறப்புரைகளைத் தொடர்ந்து, விருதுவழங்கல் நிகழ்ச்சி இடம்பெற்றது. விருதுபெற்ற ஆன்மீக அருளாளர்களுக்கு அமைச்சர் அவர்கள் பொ ன் னா  ைட போர்த்தி, மாலையிட்டு கெளரவித்தார்.
தவ இருக்கு வேதத்தில் தபஸ் என்னுஞ் .ெ றோம். தபஸ் என்னுஞ் சொல் தமிழில் த வாகவே இவ்வுலகனைத்துந் தோற்றம் பெ தில் உள்ள நாசதீய சூக்தத்தில் காணப்படு உபநிடதங்கள் முதலியவற்றிலும் தவம் ட எனினும் இதிகாச புராணங்களில் இது த6 வழிபடும் வழிகளில் ஒன்றாய் உருவாயிற் எனப்பட்டான். இவன் பெறும் ஆற்றல் : கொள்ளுபவன் சலிப்புறாது தொடர்ந்து னிக்கின்றன. இவை, தவத்தில் வெற்றி கையாண்ட வழிகளைக் கூறுகின்றன. 'த தலைக் குறிப்பது. இச்சொல் உருவாகும் நீ உணர்த்தியது. புராணங்களில் தவம் கைய பொழுது, வேட்பவர் தவஞ்செய்து தவாக் தெய்வத்தைத் தகிக்கும் நிலையினை வருவி லாம். தவத்தின் சிறந்த அம்சங்களில் ஒன் தொடர்பு.
கர்மரகசியம் தெரிந்தவனுக்கு வ
- 4

1994 ஆணி - ܚܝܝ
பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்கள் விருதுகளைக் கையளித்தார்.
மட்டக்களப்பு விபுலாநந்த இ  ைச நடனக் கல்லூரி மாணவர்களின் ‘*தசாவ தாரம்' எனும் நாட்டிய நாடகத்தைத் தொடர்ந்து பிரதிப்பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் நன்றி யுரையுடன் விழா நிறைவு பெற்றது"
இராஜாங்கச் செயலாளர் திரு. கா. தயாபரன், திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம், பிரதிப்பணிப்பா ளர் திருமதி சாந்தி நாவுக்கரன், அமைச் சரின் பிரத்தியேகச் செயலாளர் திருமதி கீதா நித்தியானந்தன், உதவிப்பணிப் பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார்வடிவேல், திரு. ஏ. எம். நஹியா, திரு. எஸ். தெய்வநாயகம், கலாசார உத்தியோகத்தர்கள் திரு. மாத்தளை வடிவேலன், செல்வி எம் இராஜேஸ்வரி, திரு. என். தியாகராஜா ஆகியோர் உட் பட அமைச்சு, திணைக்கள உத்தியோ கத்தர்கள் அனைவரும் இணைந்து விழா வின் வெற்றிக்கு பணி செய்தமை குறிப்பிடத்தக்கது.
LAD
சால்லை முதன் முதலாகக் காண்கின் வம் என மருவிவரும் தவத்தின் விளை ற்றது என்னுங் கருத்து இருக்கு வேதத் கின்றது. அதர்வவேதம், பிராமணங்கள், பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. னிக்கருத்தினைப் பெற்றுத் தெய்வங்களை ]று. தவம் மேற்கொண்டவன் தயஸ்வி தபோபலம் எனப்பட்டது. தவம் மேற் இதில் ஈடுபடுவதைப் புராணங்கள் வரு காண இ த  ைன மேற்கொண்டோர் நப்' என்னும் வினையடி வெப்பமூட்டு லையில் வெறும் வெப்பப் பெருக்கையே ாளப்படும் சூழ்நிலையை நாம் நோக்கும் கினியைச் சுவாலை விடச் செய்து தம் Iத்தார் என்னும் வருணனையைக் காண ாறு அது யோக நெறியுடன் பூண்டுள்ள
ாழ்க்கை ஒரு விளையாட்டரங்கு!

Page 7
ஆனி 1994 - . r. r.
பக்திப் பெருவிழாவில் விருது
எான சிகாமணி
கலாநிதி. த. நடராஜா
வேதாகம மாமணி
சிவபூg ந. சோ மஸ்கந்தக் குருக்கள் சிவபூறரீ சுப்பிரமணியபட்டர் சிவபூரீ ச. பரமசாமிக் குருக்கள் சிவபூரீ லசுஷ்மி நாராயணக் குருக்கள் சிவபூg பா. வைத்தியநாதக் குருக்கள் சிவபூg சீனிவாசக் குருக்கள் சிவபூரீ வை. காமாட்சி சுந்தரேஸ்வரக்
குருக்கள் சிவபூணூரீ ப. பாலசுப்பிரமணியக் குருக்கள் சிவபூரீ இரா.இராஜராஜேஸ்வரக் குருக்கள்
ஆகமச் சூடாமணி
சிவபூருரீ சண்முகரெட்னக் குருக்கள்
- விஸ்வநாத ஐயர் சிவபூg பாலசுப்பிரமணிய ஐயர்
சிற்சபேசன் குருக்கள் சிவபூgரீ ஜெகநாதன் நாகராசர் குருக்கள் சிவபூரீ நடராஜ ஐயர் ருத்ராசர்மா
ஞானசிரோன்மணி
திருமதி பூமணி குலசிங்கம் திரு. வ. சிவராஜசிங்கம் திரு. தெ. ஈஸ்வரன் திரு. அ. செல்லத்துரை திரு. வ. செல்லையா திரு. மு. நவாக் தினம்
சிவநெறிச்செம்மல்
திரு. தேவமனோகரன் சுவாமிநாதன்
திரு. சு. கதிராமப்போடி திரு. பி. முத்துசாமிப்பிள்ளை
உலோபியின் செல்வமும் பாம்புப்
5

கோபுரம்
வழங்கி கெளரவிக்கப்பட்டோர்
சைவ நன்மணி
திரு. ம. சிவநேசராசா பிரம்மபூரீ சோ.நடராஜ ஐயர் திரு. ச. வேலுப்பிள்ளை திரு. சே. க. நடேச சர்மா திரு. கு. ஆறுமுகதேசிகர் திரு. சீ. வினாசித்தம்?
சிவஞானச் செல்வர்
திரு. க. இராஜபுவனேஸ்வரன் திரு. செ. நடராஜா திரு. செ. சிவப த சுந்தரம்
இறைபணிச்செம்மல்
திரு. ந. சுப்பிரமணியம் திரு. க. மயில்வாகனம் திரு. வை. செ. தேவராசா திரு கே. செல்லமுத்துப்பிள்ளை திரு. ச. விநாயகரத்தினம் திரு. செ. கணேசமூர்த்தி திரு. நா. இரத்தினசபாபதி திரு. ச. முத்தையாபிள்ளை திரு பெ. இராமநாதன்
இறைபணிக்காவலர்
திரு. வி. பி. பாலசுப்பிரமணியம் திரு. ச. சந்திரசேகரம் திரு. செ. சிதம்பரநாதன் திரு. பி. வி. இராமன் திரு. வ, மாணிக்கவேல்
புற்றிலிருக்கும் தேனும் ஒன்றே.

Page 8
。※※※灘婆婆灘 ※※ ※※ နွှ နွှဲန္တီး”” களுதது a 。遂潑
*ஆன்மீக அறே
器
களுத்துறை மாவட்ட த் தி ல் நடை பெற்ற இரண்டாவது இந்து அறநெறிக் கல்வி மாநாட்டிற்கு முன்னோடியாக கலந் துரையாடல்களும், ஆன்மீக அறநெறி விழாக்களும் வலய மட்டங்களில் நடை பெற்றன. இவற்றில் இப்பிரதேச இந்துப் பொது மக்களும், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
கலந்துரையாடற் கூட்டம்
மாநாடு தொடர்பான முதற் கலந் துரையாடற் கூட்டம் மார்ச் மாதம் 5ம் திகதி மத்துகம சென் மேரீஸ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது,
தொடங்கொ.ை பிரதேச சபை உறுப் பினரான திரு, எஸ். டி. சதாசிவம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இவ்வைபவத்திற்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனாந்தா, உதவிப்பணிப்பாளர் திரு. வீ. விக்கிரம ராஜா. க லா சா ர உத்தியோகத் தர்கள் மாத்தளை பி வடிவேலன், இராஜேஸ்வரி முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்ட ଜ8T [''t'' . ".
கொழும்பு கல்வித் திணைக்களத்தின் சார்பில் பிரதிப்பணிப்பாளர் திரு. எஸ். நல்லையா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
காலத்தை பயனுள்ள வழியிற் பயன்படுத்தா

\ ”” နွှန္တီး றையில்
நறிவிழாக்கள் "
※※※※※※※※※※※※※※潑
yo
72 SN:
S. ها
AMAZA RA
У А.
裘
திணைக்கள அதிகாரிகளின் மாநாடு பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்து மத்து கம, புளத் சிங்கள ஆகிய இரண்டு வலய ஆன்மீக அறநெறி விழாக்களுக்கான குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
இவ்விழா மே மாதம் 8ம் திகதி மில்லா கந்த தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
புலாத்சிங்கள ஹொரண ஆன்மீக அறநெறி விழா
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ், இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் ஆத்மகனாநந்தா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்வலயத்தின் அமைப்பாளர் திரு. பொ. இராமலிங்கம் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் சுமாமி களின் ஆன்மீக அரு ஞ  ைர , தியானம், பஜனை என்பன இடம் பெற்றன.
புலவர் க. சிவானந்தன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. திணைக்களத் தின் சார்பில் உதவிப்பணிப்பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார்வடிவேல், கலாசார உத்தியோகத்தர்கள் திரு. மாத் தளை பி. வடிவேலன் , செல்வி. எம். இராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண் டமை குறிப்பிடத்தக்கது.
தவர்களுக்கு காலமும் காலனும் ஒன்றுதான்.
6

Page 9
ag 63f 0000 SAAAAS Sy ySyS h h Syyy S SS hShSي
மத்துகம தொடங்கொட வலய ஆன்மீக அறநெறி விழா
இவ்விழா மே 15ம் திகதி மத்துகம சென் மேரீஸ் மகாவித்தியாலய மண்டபத்
தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் 5e, L5i. தேவராஜ், இராமகிருஷ்ண மி ஷ ன் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்த ஆகி யோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண் டனர்.
திணைக்களத்தின் சார்பில் திணைக் களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார்வடி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேல் மாகாண பிரதிக் கல்விப் பணிப் பாளர் திரு. எஸ். நல்லையா, அவர்களும் களுத்துறை மத்துகம பிரதிக் கல்விப் பணிப் பாளர் ஜனாப் சம்சுதீன் அவர்களும் சிறப்பு தினர்களாக கலந்து கொண்டனர்.
சுவாமிஜி அவர்களின் ஆன்மீக அரு ளுரை, பஜனை, தியானம் என்பவற்றை தொடர்ந்து புலவர் க, சிவானந்தன் அவர் களின் சிறப்புச் சொற்பொழிவும் இடம் பெற்றது.
ஆன்மீக அறநெறிக் கருத்தரங்கு
இந்து அறநெறிக் கல்வி மாநாட்டிற்கு முன்னோடியாக மே மாதம் 25ம் திகதி புதன்கிழமை காலை குளோடன் தமிழ் மகா வித்திய லயத்தில் ஆன்மீக அறநெறிக் கருத்தரங்கு நடைபெற்றது.
திணைக்களப் பி ர தி ப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கர சன் அவர்கள் தலைமையில் ஆசிரியர்களுக்கான கருத் தரங்கு ஆரம்பமானது. மேல் மாகாண கல்விப் பிரதிப் பணிப்பாளர் திரு. எஸ்.
நமது சொந்தச் சுகதுக்க

eeeSAehAhAShAhh AhA hAeA AAAA SSAAAAS S TTTTT
நல்லையா, திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம், உதவிப்பணிப் பாளர் திரு. வீ. விக்கிரமராஜா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
புலவர் க. சிவானந்தன், பண்ணிசைப் பாவலர் பி. வி. இராமன் ஆகியோரின் செயல்முறை விளக்கம், பண்ணிசை என்பன
இடம் பெற்றன.
தொடங்கொட பிரதேச சபை உறுப் பினர் திரு. சதாசிவம் அவர்களின் வர வேற்பு உரையுடன் கருத்தரங்கு ஆரம்ப மானது. சுவாமி விபுலானந்தர் அறநெறிப் பாடசாலை ஆசிரி ய ர் ஆ. சுகேந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
தேசிகர், அர்ச்சகர்களுக்கான கருத் தரங்கு
இப்பிரதேச ஆலயங்களிற் கடமை புரியும் தேசிகர், அர்ச் ச க ர் க ஞ க் க ஈ ன கருத்தரங்கு உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் அவர்கள் தலைமை யில் நடைபெற்றது.
சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் திரு வீ. விக்கிரமராஜா, கலாசார உத்தியோ கத்தர் திரு. மாத்தளை பி. வடிவேலன், புலவர் க. சிவானந்தன், பண்ணிசைப் பாவலர் திரு. பி. வி. இராமன் ஆகியோர் உரையாற்றினர்.
இவ்வைபவத்தில் தேசிகர்கள், அர்ச் சகர்களுக்கான நூ ல் கள், தமிழ் அர்ச் சனைத் தொகுப்பு எ ன் பன வழங்கப் பட்டன.
இந்துசமயக் கருத்தரங்கு
களுத்துறை மா வட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், ஆலய தேசி கர்கள், அர்ச்சகர்களுக்கான இந்துசமயக் கருத்தரங்கு ஜூன் மாதம் 5ம் திகதி
களுக்கு நாமே காரணம் ,

Page 10
கோபுரம்
றைகம தமிழ் வித்தியாலய மண்டபத்தில் திணைக்கள உதவிப் பணிப்பானர் திரு. எஸ். தெய்வநாயகம் அவர்களின் தலைமை யில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில், திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா "அறநெறிப் பாடசாலை களும் நடைமுறைகளும்’ எனுந் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
பிரதேச சபை உறுப்பினர் திரு. எஸ். சிவ கணேசமூர்த்தி வர வே ற் பு  ைர நிகழ்த் தினார், புலவர் க. சிவானந்தன் பண்ணி சைப் பாவலர் பி. வி. இராமன் இருவரும் ‘ஆலய வழிபாட்டு நடைமுறைகளும் பண் ணிசையும்’ எனும் பொருள் பற்றி செயல் முறை விளக்கமளித்தனர்.
இவ்வைபவத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள், தேசிகர்கள் கலந்து, சிறப்பித்தனர்.
திரு. இராமலிங்கம் அவர்களின் நன்றி யுரையுடன் வைபவம் நிறைவுபெற்றது கலந்து கொண்ட அனைவருக்குப் நூல்கள், அறநெறிப் பாடசாலை தினவரவு இடாப் புகள் என்பன வழங்கப்பட்டன,
புதிய அறநெறிப் பாடசாலை
மத்துகம ரெங்கலாந்த தோ ட் ட பூgரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிய அநெறிப் பாடசாலை ஒன்று ஜ"ன் மாதம் 19ம் திகதி அங்குரார்ப்பணம் செ ய் து வைக்கப்பட்டது. தொடங்கொடை பிர தேச சபைத் தலைவர் திரு. எஸ். டி. சதாசிவம் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்திற்கு இந்துசமய கலாசார திணைக்களத்தின் உதவிப்பணிப் பாளர்களான திரு. வீ. விக்கிரமராஜா, திரு. எஸ். தெய்வநாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு. எஸ். பக்கிரிசா மியும், செயலாளர் திரு. எஸ். சுப்பிரமணியமும் இதற்கான ஏற் பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
w
பண்புகள் குறைந்துள்ள இ
8

1994 وهي
மத்துகம, தொடங்கொடை அறநெறிப் பாடசாலைகள்
களுத்துறை இந்து அறநெறிக் கல்வி மாநாட்டிற்கு முன்னோடியாக இப் பிர தேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகள் பலவற்றிற்கு திணைக்கள உதவிப்பணிப் பாளர்களான திரு. வீ. விக்கிரமராஜா, திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோர் விஜயம் செய்தனர்.
மத்துகம, தொடங்கொடை வலயத் திலுள்ள அறப்பலாகந்த சுவாமி விபுலா னந்தர் அறநெறிப் பாடசாலை, குளோ டன் அபிராமி அறநெறிப் பாடசாலை, கொலன்ராப்வாணி அற நெறி ப் பா ட சாலை, பயாகலை நாவுக்கரசர் அறநெறிப் பாடசாலை, கொடையேன கலைமகள் அறநெறிப் பாடசாலை, மலபட கலை வாணி அறநெறிப் பாடசாலை, எலதுவ ஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை, சென் - ஜோர்ஜ் மாணிக்கவாசகர் அற நெறிப் பாடசாலை, மத்துகம உதயசூரி யன் அறநெறிப் பாடசாலை, ஆகிய பாட சாலைகளிற் ப யிலும் மாணவர்களுக்கு தேவையான அ ப் பி யா ச கொப்பிகள் , இந்துசமய நூல்கள் என்பன உதவிப் பணிப் பாளர்களால் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திரு. எஸ். டி. சதாசிவம் அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.
அக்குரோணி
அக்குரோணி எ ன் பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக் கப்படும் ஒரு படையளவு. 21,780 தேர்களும் 21,780 யானைகளும், 68,610 குதிரைகளும், 1,09,350 வீரர் களும் கொண்ட படைப்பிரிவு ஒர் அக்குரோணி எனப்படும். இவ்வெண் னிக்கை நிகண்டுகளில் வெவ்வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது.
டத்தில் தருமமில்லை.

Page 11
களுத்துறை
இந்து அறநெர்
இந்துசமய, க லா சா ர இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இரண்டா வது அறநெறிக் கல்வி மாநாடு ஜூன் 26ம் திகதி குளோடன் த மிழ் வித்தியாலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இவ்வைபவத்திற்கு இந்து சமய கலா சார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மக னந்தா அவர்கள், தமிழகச் சொற்பொழி வாளர் கவிஞர் இந்திரஜித் ஆகியோர் பிரதம விரு ந் தி ன ர (ா க க் கலந்து கொண்டனர்,
அன்று காலை குளோடன் பூரீமுத்து மாரியம்மன் ஆலயத்தில் விழாவின் சிறப் பிற்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் தெய்வ ஆசி வேண்டி விசேட பூசைகள் நடைபெற்றன. தேசிகர் திரு. கணேஸ் அவர்கள் அழகான முறையில் பூஜைகளை நடாத்தி வைத்தார். தொடர்ந்து குளோ டன் தமிழ் வித்தியாலயத்தில் விழா நிகழ் வுகள் ஆரம்பமாகின.
பிரதேச அறநெறிப் LIIT L. 5FTT63) G.) மாணவியர் மங்கள விளக்கேற்றிவைத்த தைத் தொடர்ந்து பண்ணிசைச் செல்வன் திரு. வி. கணேசலிங்கம் அவர்கள் தேவாரப் பண்ணிசைத்தார். வெள்ளவத்தை இராம கிருஷ்ண மி ஷ ன் ஞாயிறு பாடசாலை மாணவியர் தமிழிசை நாதம் - ஓங்கார நாதம் என்பவற்றை இசைத்தனர்.
தொடங்கொடைப் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் திரு. எஸ். சதா சிவம் அவர்கள் தமது வரவேற்புரையில்
நல்லதாயினும் அது நல்லோர்க

க் கல்விமாநாடு
கண்டியில் நடைபெற்ற முதலாவது இந்து அறநெறிக் கல்வி மாநாட்டின் பெருமை களைக் கண்டு தாம் இத்தகைய ஒரு விழாவை களுத்துறையில் நடத்தவிருந்த தாகக் குறிப்பிட்டதோடு தமது ஆர்வத் துக்கு அமைச்சர் தேவராஜ் அவர்களும் அமைச்சு, இந்துசமயத் திணைக்கள அதி காரிகளும் அளித்த பேராதரவு காரண மாகவே இந்த மாநாடு சிறப்புற நிகழ் கிறது என்றும் குறிப்பிட்டார்.
மாநாட்டின் முதல் அமர்வு பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களின் அருளுரையுடன் ஆரம்பமானது. சுவாமி அவர்கள் வழமை போலவே எளிமையான கதைகளுடன் தமது உரையை நிகழ்த்தி னார். பூg இராமகிருஷ்ணர், சுவா மி விவேகானந்தர் ஆகியோரின் தத்துவங் களை சிறுகதைகள் மூல ம் விளக்கினார். அவரது அருளுரை மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை அடிநாதமாகக் கொண்டி ருந்தது.
அதனைத் தொடர்ந்து களுத்துறைப் பிரதேச தோட்ட ஆலயங்களில் தேசிகர் களாகக் கடமை புரியும் ஏறத்தாழ இருபது அர்ச்சகர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களும், சுவாமி ஆத்மகனாநந்தாஜி அவர்களும் பொன் னாடை போர்த்தி அவர்களின் ஆலயப் பணிகளை வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக் கள உதவிப் பணிப்பாளர் வீ. விக்கிரம ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
அடுத்து திரு. கணேஷ லிங்கம் தலை மையில் தமிழில் அர்ச்சனை ஒதல் இடம் பெற்றது. அடுத்ததாக அன்று பிரதம
ளிடத்தில் இருந்து வரவேண்டும்.
9

Page 12
(3&ուկՍւb
களுத்துறை இந்து அறநெறிக் கல்வி பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா ஆகிே ஜாங்க அமைச்சர் பி. பி. தேவரா பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜ யோர் பார்வையாளர்களுடன் இருப்
அதிதியாக கலந்து கொள்ளவிருந்த சுற் றுலா, கிராமிய தொழில்துறை அபி விருத்தி அமைச்சர் எஸ். தொண்டமான் அவர்கள் அனுப்பிய செய்திவாசிக்கப்பட் டது. இவ்விழாவுக்கென த மி ழ க த் தி ல் இருந்து வந்து கலந்து கொண்ட கவிஞர் இந்திரஜித் அவர்கள் தமது வாழ்த் துரையில் களுத்துறையில் இந்து மக்கள் திரண்டிருப்பது கண்டு தாம் பெரும் மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்து இடம்பெற்ற திருமதி சுலோ சனா பாலசுப்பிரமணியம் குழுவினர் பக்தி இசைவிருந்து அனைவரையும் கவர்ந்தது. முதல் அமர்வின்போது களுத் துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சரத் ரணவக்க அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது, இவர் களுத்துறை பிரதே சத்தில் உள்ள இருபத்திநாலு ஆலயங் களுக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதி யான நாதஸ்வரம், மேளம் என்பவற்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உன்னை உன்வசப்படுத்தினால் ம
- 10
 

1994 shدہ
மாநாட்டில் கவிஞர் இந்திரஜித், யோர் உரையாற்றுவதையும், இரா ஜ், திணைக்கள உதவிப் பணிப் ா, திரு. குமார் வடிவேல் ஆகி
பதையும் படத்திற் காணலாம்.
மதிய போசனத்தின் பின் இரண்டாம் அமர்வு ஆரம்பமானது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு பாட சாலை மா ன வ ர் க ள் "அறநெறிப் பாடசாலை" எனும் தலைப்பில் வில்லுப் பாட்டு இசைத்தனர். தமிழகக் கவிஞர் இந்திரஜித் அவர்களின் ஆன்மீகச் சொற் பொழிவும், இராஜாங்க அமைச்சரின் சிறப்புரையும் இடம்பெற்றன.
கலை நிகழ்ச்சிகளில் அபிராமி அற நெறிப் பாடசாலை மாணவியரின் கும்மி நடனம், விபுலானந்த அறநெறிப் பாட சாலை மாணவி ந. ஜெயகெளசல்யாவின் துர்க்கை நடனம், மாணிக்கவாசகர் அற நெறிப் பாடசாலை மாணவியரின் கும்மி நடனம் பாந்திய அறநெறிப் பாடசாலை செல்வி, எஸ். ச கு ந் த லா தே வி யி ன் கரகாட்டம் என்பன இடம்பெற்றன.
சிறுவர் சிறுமியர் இணைந்து அளித்த ஆன்மீக உ  ைட ப் போட்டியும் இடம்
ற்றவர்களும் வசப்படுவார்கள்.

Page 13
ஆணி 1994 -
பெற்றது. ஒளவையார், சம்பந்தர், அப்பர், சுந்தரர் வடிவம் தாங்கி சிறு வர் க ள் போட்டியில் கலந்துகொண்டனர். அடுத்து இந்துசமயத் திணைக்கள உதவிப் பணிப் பாளர் திரு எஸ். தெய்வநாயகம் அவர்கள் விளக்கமளிக்க, பண்ணிசைப் பாவலர் திரு. பி. வி. இராமன் பண் ணிசைப் பாட 'தமிழோடு இசை பாடல்’ எனும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இறு தி வைபவ மா க பரிசளிப்பு இடம்பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமயப் போட்டிகளில் இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்ற மாண வர்களுக்கும், இம்மாநாட்டினை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் பரிசுபெற் றோருக்கும் முறையே திரு வீ. விக்கிரம ராஜா, திரு. குமார்வடிவேல், திரு. எஸ். தெய்வநாயகம், திரு. என். சதாசிவம் , திரு. எம். சிவகணேசமூர்த்தி, திரு. எஸ். நடராஜா, செல்வி. எம். இராஜேஸ்வரி ஆகியோர் நூற் பரிசுகளை வழங்கினர்.
இந்துசமயத் திணைக்களத்தின் சார் பில் பிரதிப் பணிப்பாளர் திருமதி, சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார் வடிவேல், திரு. எஸ். தெய்வநாயகம், கலாசார உத்தியோகத்தர் செல்வி. எம். இராஜேஸ்வரி ஆகியோரும் உத்தியோகத் தர்களும் கலந்து கொண்டனர்.
மாநாடு பற்றிய முயற்சிகள் ஆரம்பிக் கப்பட்ட நாளிலிருந்து பூரண ஆத ர வு நல்கிய கொழும்பு கல்வித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திரு. எஸ். நல்லையா அவர்களும், அன்றைய விழாவிற் கலந்து சிறப்பித்தார்.
மாநாட்டு அ மை ப் பா ள ர் க ளா க கடமை செய்த திரு. எஸ். டி. சதாசிவம் திரு. எம். சிவகணேசமூர்த்தி, திரு. பொன் இராமலிங்கம் ஆகியோர் உட்பட பிரதேச பாடசாலை அதி பர் க ள், பிரமுகர்கள்
தர்மத்திற்கு இருக்கும் அதே ஆ
11

கோபுரம்
அனைவரும் விழாவின் வெற்றிக்கு தமது பூரண உதவிகளை நல்கி இருந்தனர்.
விழா நிகழ்வுகளை இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவுக் கட்டுப்பாட்டாளர் திரு. வி. என். மதியழ கன் அவர்கள் அழகாகத் தொகுத்தளித் தார். ஒரு புறம் இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் சடய நூல்களின் விற்பனையும் இடம் பெற்றது.
ஹொரனை பிரதேச சபை உறுப்பினர் திரு எம், வி. சிவகணேசமூர்த்தி அவர் களின் நன்றியுரையுடனும், திரு வி. கணேச லிங்கம் அவர் க ளின் தேவாரத்துடனும் மாநாடு இனிதே நிறைவு பெற்றது
அங்காளம்மை அங்காளம்மை சக்தி வழிபாட்டிற் கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும். அங்காளி, அங்காளதேவி எ ன் னு ம் பெயர் களும் இத்தெய்வத்திற்கு உ ண் டு, இத் தெ ய் வத் தி ன் வடிவமைப்பினைப் பற்றி, "தியான சுலோகம், என்ற சிற்பநூலில், சிவந்த திருமேனி, சுடரிதழ் மகுடம், நான்கு திருக்கரங்கள் சூலாயுதம் ஏந்திய நிலை, கோர வடிவம்" என்பன கூறப் பட்டுள்ளன.
கண்ணகியே காளி வடிவெடுத் துப் பழி தீர்த்துக்கொண்டாள் என் னும் தெருக் கூத்தின் நிகழ்ச்சி வழக் காக, அங்களாம்மை கண்ணகியின் கோர வடிவென்றும் கூறுவர்.
பொற் கொ ல் ல ரு ம் அம்மர பினைச் சார்ந்த கம்மாளரும் குல தெய்வமாகக் கொண்டு இத் தெய்வத் தினை வழிபட்டு வருகின்றனர்"
தஞ்சைத் தெற்கு வீதி, குடந் தைக் கம்பட்ட விசுவநாதன் தெற்கு வீதி, கீழ்வேளூர் தெற்குத் தெரு ஆகிய இடங்களில் உள்ள இவ்வம்மை யின் திருக் கோயில்கள் வரலாற்றுச் சிறப்புடையனவாகும்.
யுள் அதர்மத்திற்கும் இருக்கும்.

Page 14
※灘談談談談灘談灘灘藻激灘
繁
திணைக்கள
※※※灘灘談激激灘
இலங்கையில் இந்துசமயப் பண்பாடு பற்றிய ஆய்வுகள்
グ
இலங்கையில் இந்து சமயத்தின் வர லாறு, சமய நம்பிக்கை, வழிபாட்டு முறை, சமயக் கருத்தியல் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றியும், சமயத்தோடு இணைந்து வளர்ச்சி பெற்ற கட்டடக் கலை, விக்கிரக வார்ப்புக் கலை, இசை, நடனம், கூத்து ஆகிய கலை வடிவங்களின் வளர்ச்சி பற்றி யும் ஆய்வு க ள் மேற்கொள்வதற்கான திட்டத்தினை இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சு செயல்படுத்த நட வடிக்கை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்குச் செ ய ல் உருவம் கொடுக்கும் நோக்கத்தோடு இத்துறை அறிஞர்களைக் கொண்ட கூட்டமொன்று ஏப்ரல் மாதம் அமைச்சு அலுவலத்தில் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் தலைமையில் நடைபெற்றது, பேராசி யர்கள் கா. சிவத்தம்பி, சி. பத்மநாதன் ஆகியோரும் திரு. ஆ. தேவராஜனும் இக் கூட்டத்தில் பங்குபற்றித் தம் ஆலோசனை களை வழங்கினர்.
இலங்கையின் இந்து சமயப் பாரம் பரியம் பற்றியும் அதைச் சார்ந்து வளர்ச்சி யுற்ற கலைகளைப் பற்றியும் ஆய்வு நூல்கள் போதியளவு வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் கூட இவ்விடயம் பற்றி த் தகுந்த ஆய்வு நூல் க ள் அரிதாகவே உள்ளன. இதனால் எமது சமயம், பண் பாடு பற்றிய தவறான கருத்துக்களும் மேலோட்டமான அபிப்பிராயங்களும் பரவு வதற்கும் நிலை பெறுவதற்கும் இ ட ம்
சுயநலம் கருதிய கடமையும் சேவை

戀激激灘灘擦擦灘灘灘灘灘灘激
ச் செய்திகள்
藥激灘灘灘灘灘灘灘
ஏற்பட்டுவிடும் என்றும் இக் கூட்டத்தில்
சுட்டிக் காட்டப்பட்டது.
ஆய்வு நூல்களை வெளியிடுவது மட்டு மன்றி எமது முன்னோர் எமக்கு இட்டுச் சென்றுள்ள கலைச் சின்னங்கள், நூல்கள், ஆவணங்கள், கல்வெட்டுக்கள், வரலாற் றுச் சா ன் று க ள் ஆகியன பேணப்படு தலும் பாதுகாக்கப்படுத்தலும் அவசியம் என்பதும் இக்கூட்டத்தில் சமூகம் அளித்த பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்துக் கோ யி ல் க ளின் வரலாறு, கிடைத்தற்கரிய தமிழ் நூல்களை மறு பதிப்புச் செய்தல் ஆகிய இரு செயற் திட்டங்களும் அமைச்சினால் செயற்படுத் தப்பட்டுள்ளதை அ  ைம ச் சர் குறிப் பிட்டார். இத்திட்டங்களோடு பின்வரும் ஆறு செயற் திட்டங்களை உடன் ஆரம் பிப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
1. இலங்கையில் இந் துக் களி  ைட யே நில வும் கலைகள், கைவினைத் தொழில்கள் பற்றிய தரவுகளை கள ஆய்வு மூலம் தொகுத்தலும், வகைப் படுத்தலும், ஆய்வு செய்தலும். 2. இலங்கைத் தமிழ் இலக்கியத் தொகுப்பு ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப் பினைப் பதிப்பித்து நூலாகப் பிர சுரித்தல், 3. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆங்கிலக் கட்டுரைத் தொகுதி யொன்றை வெளியிடல், 4. இலங்கையில் இந்து சமயம் என்னும் தலைப்பிலே வரலாற்று நூல் ஒன்றை எழுதி வெளியிடல்,
i. துன்பத்திற்கு காரணமாகிவிடும்.
-س- 12

Page 15
ஆனி 1994
5. இந்து சமய வழிபாட்டு முறைகள், சமயக் க ரு த் தி ய ல், கோயில்சார் கலைகள் ஆகிய விடயங்களை உள் ளடக்கிய ஆய்வுத் தொகுதியொன்றை "இலங்கையில் இந்துப் பண்பாடு' என்னும் தலைப்பில் வெளியிடுதல்,
6. இலங்கையின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள இந்து விக்கிரகங்கள் பற்றிய தரவுகளை காலவரிசைப்படி கோவைப்படுத்தி இந்து விக்கிரகக் கலையின் வளர்ச்சி பற்றி விளக்கும் ஆய்வு நூல் ஒன்றை எழுதி வெளியிடு தல். இதுபற்றி அதிக கவனம் செலுத் தப்படுவதன் அவசியத்தை அமைச்சர் தேவராஜ் சுட்டிக் காட்டினார்.
முதற் கட்ட வேலையாக மேற்குறித்த ஆறு செயற்திட்டங்கள் ப ற் றி ய திட்ட அறிக்கைகளை உடனடியாகத் தயாரிப்பது எனவும் இத்திட்டங்களுக்கு வேண்டிய நிதி யினைப் பெறும் வழிவகைகளைச் செய்தல் வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நவீன கால மதம்
திணைக்களம் நடத்தும் இந்துப் பேரு ரைத் தொடரின் அறுபத்தேழாவது சொற் பொழிவு மே மாதம் 25ம் திகதி இராஜாங்க அமைச்சின் கே ட் போர் கூடத்தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச் சொற்பொழிவு நிகழ்ச்சியில், இராம கிருஷ்ண மிஷன் நிலையத்தின் அகில உலக செயலாளர் பூரீ ம த் சுவாமி ஆத்மஸ் தானந்தா அவர்கள், நவீனகால மதம் எனுந் தலைப்பில் உரை நிகழ்த்தினார்
திணைக்கள உதவிப் பணிப்பாளர்
திரு. குமார் வடிவேல் அவர்கள் நன்றி யுரை வழங்கினார்.
ஒழுக்கம் குறைந்த சமுதாயம்
1

கோபுரம்
மாமாங்கத்தில் மகா சிவராத்திரி விழா
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரி விழா மார்ச் மாதம் 10 ம் திகதி மட்டக் களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆல யத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அரச அதிபர் இ. மோன குருசாமி அவர்கள் தலைமையில் விசேட நான்கு சாமப் பூசைகள் நடைபெற்றன.
தமிழகத்திலிருந்து வ ரு  ைக தந்த வி. கே. மாதவன் குழுவினர் பக்தி இசை நிகழ்ச்சி அளித்தனர். கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டிமன் றம், இசை நடனக் கல்லூரி மாணவர் சளின் பஜனை உட்பட சிறப்பான பக்தி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இவ்வைப வத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத் தமிழ்ச் சேவை நேரடி அஞ்சல் செய்தது.
நாத் தழுதழுப்ப உள்ளங்கசிந்து நாணமின்றிச் சில சமயம் மிகுதியாக அழவோ, சிரிக்கவோ உரக்கப் பாட வோ ஆடவோ செய்யும் என் பக் தன் உலகத்தையே தூய்மையாக்கு கிறான்.
புடமிட்ட பொன் மாசு நீங்கித் தன் சுயநிலையை மீண்டும் பெறு வதுபோல, என் மீது செலுத்தும் ஒரு முகப்பட்ட பக்தியால் மனம் கரும இச்சையை எறிந்துவிட்டு என்னையே அடைகிறது.
ஐம்புலப் பொருள்களைத் தியா னிப்பவனது உள்ளம் அவற்றிற் பற் றடைகிறது; ஆனால் எ ன் னை யே நினைப்பவனது உள்ளமோ என்னிலே மட்டும் ஒன்றிவிடுகிறது.
- பகவான் கிருஷ்ணர் -
3
கெட்டபாலுக்குச் சமமாகும்.

Page 16
கோபுரம்
விழாவிற்கான ஏற்பாடுகளை திணைக் கள உதவிப் பணிப்பாளர் திரு. குமார் வடிவேல், கலாசார அலுவலர் செல்வி, தங்கேஸ்வரி கதிராமர் ஆகியோர் மேற் கொண்டிருந்தனர்.
பெருந் திரளான இந்து மக்கள் இவ் விழாவிற் கலந்து கொண்டமை குறிப் பிடத்தக்கது.
சேர் முத்துக் குமாரசாமி பற்றிய சொற் பொழிவு
திணைக்களம் நடத்தும் இந்துமதப் பேருரைத் தொடரின் அறுபத்தாறாவது உரை மே மா த ம் 7ம் திகதி மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்ச்சியில் திரு. சி. குமார சாமி அவர்கள், 'சைவ சித்தாந்த தத்து வமும் சேர் முத்துக்துகுமார சுவாமியும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சைவத் தமிழறிஞரான சேர். முத்துக் குமாரசுவாமியின் 115-வது நினைவு தினத்தை முன்னிட்டு இப்பேருரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரதி - புதுமைக் கவிஞன்
திணைக்களத்தின் தமிழ் அலுவல்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த வழக்காடு மன்றமொன்று ஏப்ரல் மாதம் 2ம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
'பாரதி புதுமைக் கவிஞன்' என்ற கருத்தில் தமிழ்நாடு திண்டுக்கல் பேரா சிரியை திருமதி. புனிதா ஏகாம்பரம் வழக் காடினார். தூத்துக்குடி திரு. பழனி கிருஷ் ண ன் இக்கருத்தை மறுத்துப் பேசினார்.
ஏழைமக்களைப் பற்றி நினையாத இ
- 1

1994 s whيه
இந்நிகழ்ச்சிக்கு தமிழகப் பேராசிரியர் திரு. பா. நமசிவாயம் அவர்கள் நடுவ ராகக் கடமையாற்றினார்.
கோமல் சுவாமிநாதன் சொற்பொழிவு
தமிழகத்தின் பிரபல நாடகக் கலை ஞரும் சுபமங்களா இலக்கிய இதழின் ஆசிரியருமான கோமல் சுவாமிநாதனின் *தமிழ் அரங்கியல் மரபும் புத்தாக்கமும்' என்றசீ ற ப் புச் சொற்பொழிவொன்று ஏப்ரல் மாதம் 7ம் திகதி மாலை அமைச் சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திணைக்களப் பணிப் பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். உதவிப் பணிப்பாளர் திரு. ஏ. எம். நஹறியா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
குளிர்த்திப் பாடல்கள்
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி. சி. மெளன குரு அவர்களின் தலைமையில், தமிழ்த் துறை விரிவுரையாளர் திரு. பாலசுகுமார், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கிழக்கிலங்கையில் மிகவும் புகழ் பெற்ற பாரம்பரிய இசை நிகழ்ச்சியான குளிர்த்திப் பாடல்கள் இசை வடிவத்தை ஜுன் மாதம் 4ம் திகதி திணைக்களக் கேட்போர் கூடத்தில் செய்து காட்டினர். இராஜாங்க அமைச்சர் பி. பி தேவராஜ் அவர்கள் இந் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
கிழக்கின் கண்ணகி அம்மன் கோயில் களில் இசைக்கப்பட்டுவரும் இப்பாரம் பரியப் பாடல்களைப் பாட மரபுவழி அண் ணாவிமார், உடுக்கிசைக் கலைஞர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுயத்தில் இறைவன் நுழைவதில்லை.
4.

Page 17
ஆனி 1994
இவ்வருட தமிழ் சாகித்திய விழாத் தொணிப் பொருளான 'தமிழ் அரங் கியல்' நிகழ்வின் முன்னோடியாக இந் நிகழ்ச்சியினை திணைக்களத்தின் தமிழ் அலுவல்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந் தமை குறிப்பிடத்தக்கது.
இந்துப் பேருரை
திணைக்களம் ந ட த் தும் இந்துப் பேருரைத் தொடரின் 65 வது சொற் பொழிவு மார்ச் மாதம் 1ம் திகதி மாலை இந்து கலாசார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச் சொற்பொழிவில் மலேஷியாவிலுள்ள உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரம்மகுமாரி ஜானகி பத்மநாதன் அவர்கள், 'மனித வாழ்க்கையின் நேரடிக் காரணிகள்' எனுந் தலைப்பில் ஆங்கி லத்தில் சொற்பொழிவாற்றினார்.
பி. கே. மாதவன் இலங்கை விஜயம்
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் தமிழ் நாடு, இன்னிசைக் கலைஞரான பி. கே" மாதவன் தமது குழுவினருடன் மார்ச் மாதம் இலங்கை வந்திருந்தார்.
திரு. மாதவன் தமிழ க த் தி ல் வாரியார் சுவாமிகளால் 'தேமதுரத் தெய்வீகத் தமிழிசைத் தென்றல்' எனப் LfTJTIT L.L.-L.JUIL-L-6)]ff,
இவரது பக்தி இ  ைச நிகழ்ச்சிகள் மட்டக்களப்பு மாமாங்கேசுவரர் ஆலயத் திலும், கொழும்பு, மயூரபதி பத்திரகாளி யம்மன் ஆல ய த் தி லும் கொழும்பு பூரீ பொன்னம்பலவாணேசுவரர் ஆலயத்தி லும், பம்பலப்பிட்டி பூரிமாணிக்கவிநாயகர் ஆலத்திலும் கொழு ம் பு 15, பூஜீமத்
தவப்பயனுக்கு பிரமச்சரியம் எ

X-ra கோபுரம்
அருணாசலேசுவரர் ஆல ய த் தி லும், பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத் திலும், வவுனியா பூரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், திரு கோ ண ம லை பூரீ
பத்திரகாளியம்மன் ஆலயத்திலும் நடை பெற்றன.
இவரது குழுவில் வயலின் திரு. இராதா கிருஷ்ணன், மிருதங்கம் திரு. சங்கரன், மோர்சிங் திரு. கிருஷ்ணன் ஆகியோர் பின்னணி இசை வழங்கினர்.
திரு. மாதவன் அவர்களின் நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை உதவிப்பணிப் பாளர் திரு. குமார்வடிவேல், கலாசார உத்தியோகத்தர் இராஜேஸ்வரி முத்துசாமி ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப் பிடத்தக்கது
விபுலாநந்த இசைநடனக் கல்லூரி சான்றிதழ் வழங்கும் வைபவம்
மட்டக்களப்பு விபுலாநந்த இசை நடனக் கல்லூரியின் டிப்ளோமாச் சான் றிதழ் வழங்கும் வைபவம் மே மாதம் 28ம் திகதி சனிக்கிழமை காலை கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் பி, பி. தேவராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மட்டக் களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் அஜிராத்மானந்தாஜி மாவட்ட அரசஅதி பர் திரு. இ. மோனகுருசாமி, மாநகர முதல்வர் திரு. செழியன் பேரின்பநாயகம், ஆகியோர் சிறப் பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அமைச்சின் சார்பில் இராஜாங்கச் செயலாளர் திரு. கா. தயாபரன் திணைக் களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் பிரதிப்பணிப்பாளர் தி ரு ம தி சா ந் தி நாவுக்கரசன், உதவிப்பணிப்பாளர் திரு.
ன்ற பத்தியம் அவசியமாகும்.
5

Page 18
கோபுரம்
எஸ். தெய்வநாயகம் கலாசார உத்தி யோகத்தர்கள் செல்வி, த ங் கே ஸ் வி ரி கதிராமன், திரு. என். தியாகராஜா ஆகி யோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி அதிபர் திருமதி தட்சணா மூர்த்தி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து திரு. க. சண்முகலிங்கம் அவர் களின் தலைமையுரை இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் 1993ம் ஆண்டு நான்காண்டு கற்கைநெறியை முடித்துக் கொண்ட 7 மாணவர்களுக்கு டிப்ளோமாச் சான்றிதழ் வழங்கினார்.
அமைச்சரின் சிறப்பு  ைர  ைய த் தொடர்ந்து மாணவமாணவியரின் நாட் டியநாடகம், பிருந்தகானம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கல்லூரி ஆசிரியை திருமதி கமலா ஞான தாஸ் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
இந்துகலாசார நிலையத் திறப்பு விழா
இந்துசமயக் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பல லட்சக் கணக் கான ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு நொச்சிமுனை இந்து கலா சார நிலையம், மே மாதம் 28ம் திகதி சனிக்கிழமை காலை சு ப நேர த் தி ல் மாண்புமிகு அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களினால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் இ ரா ம கி ரு ஷ் ன மிசன் சுவாமி அஜிராத்மானந்தா, மாவட்ட அரச அதிபர் திரு. இ. மோனகுருசாமி மாநகர முதல்வர் செழியன் பேரின்ப நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஹிஸ்புல்லா உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர், அமைச்சின் சார்
ஞானியின் அறிவு یوه
-

1994 of ؟ جو نسی...................................................................بس سستیتیس سے
பில் இராஜாங்கச் செயலாளர் கா. தயா பரன், பணிப்பாளர் திரு சண்முகலிங்கம், பிரதிப்பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம், கலாசார உ த் தி யோகத்தர்கள் செல்வி. த ங் கே ஸ் வ ரி திரு. என். தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையம். இந்துகலாசார பண் பாட்டு வளர்ச்சிகளுக்கு உறுதுணையாகத் திகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துசமயப் போட்டி மாவட்ட பரிசளிப்பு விழாக்கள்
இந்துசமய கலா சா ர அலுவல்கள் திணைக் களம் கடந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் நடத்திய இந்துசமயப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவங்கள் அவ்வம் மாவட் டங்களிலேயே நடைபெற்றன.
கொழும்பு
கொழும்பு மாவட்டப் பரிசளிப்பு வைப வம் மே மாதம் 12ம் திகதி கொழும்பு-2 சைவ முன்னேற்றச் சங்க நால்வர் மணி மண்டபத்தில் சங்கத் தலைவர் திரு. சி. தனபாலா அவர் க ள் தலைமையில் நடைபெற்றது.
திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்கள் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்,
இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்ட பரிசளிப்பு விழா மே மாதம் 12ம் திகதி காவத்தை “தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் அற
(இதன் தொடர்ச்சி 24ம் பக்கம் பார்க்க)
கண்ணாக இருக்கிறது.

Page 19
வேதங் காட்டும்
பேராசிரியர், கா. கை
இந்தியாவிற் பெருமளவில் அநுட்டிக் கப்பட்டுவரும் மதத்தை இந்து மதமென வெளிநாட்டவர் கூறுவர். பல உட்பிரிவு களைக் கொண்டு உள் அமைப்பில் வேறு பாடுகளையுங் கொண்டமைவதாக இம் மதம் தோற்றமளிக்கின்றது. த ம் முட் பெருமளவில் வேறு படும் இயல்புகள் பொருந்திய இடத்தும் எந்த உட்பிரிவும் இந்து மதமாகவே குறிக்கப்படும் மரபு தோன்றி வளரலாயிற்று. சைவர்களா யினும் வைணவர்களாயினுஞ் சாக்தர்க ளாயினும் இந்துக்களெனவே சுட்டப்படு கின்றனர். இவ்வாறு உட்பிரிவுகளாகக் கருதப்படும் மதங்களுள் முக்கியமானவை ஆறு எனலாம். இவை, காணபத்யம், கெளமாரம், செளரம், வைணவம், சாக் தம், சைவம் எனப்படுவன. இம்மதங் களைத் தழுவிச் சமயக் கருத்துக்களுந் தத்துவக் கருத்துக்களும் வளரலாயின. இவ்வாறனுட் சைவத்திற்குத் தனிச்சிறப் புண்டு. இ ன் று அநுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் இம்மதம் ஏனைய ஐந்தினையும் தனது உள் ளு று ப் புக் க ள |ா க ஏற்றுத் தன்னுள் அடக்கிப் பரந்து விரிந்த பெருமத மாக அமைந்து விளங்கு வது இதன் பெருமை. மேனாட்டவர்கள் சூட்டிய இந்து மதம் என்ற பெயருக்குத் தனி உரிமை வாய்ந்ததாகச் சைவம் பல வகைகளில் விளங்குகின்றது. எனவே இந்து என்றால் சைவம், சைவம் என்றால் இந்து என்று உணரும் நிலை பிறந்துள்ளது.
இவ்வாறு தனித்தனி வெவ்வேறு மதங் களாகக் குறிப்பிடப்படும் உள்ளுறுப்புக் களாகிய, பலவற்றையும் ஒன்றிணைத்து ஒரு மதமாகப் பேசவைப்பதற்கு வேதமே சுரகாரணமாக விளங்குகின்றது, உள்ளே ஊடுருவி நிற்கும் நூல் மறைந்து நின்று பல முத் து க் க  ைள ச் சிதறவிடாது
இறைவன் என்பது மத நம்பிக்கையாள
1.

இந்துப் பண்பாடு
லாசநாதக் குருக்கள்
பிணைத்து ஒரு முத்துமாலை என்ற பெயரை வருவிப்பதுபோன்று வேதம் பல மத வகைகளை ஊடுருவிப் பிணைத்து நின்று எல்லா மதங்களையும் ஒன்றினைத்து இந்து மதம் என்று பெயர் சூட்டிப் பேச வைக்கின்றது. எனவே எல்லாத் தெய்வங் களையுந் தன் வழிபாட்டு முறைக்குட் பரிவாரங்களாக உள் அடக்கிய மதாநுஷ் டானச் சிறப்புப் பெற்ற  ைச வம் வேத பாரம்பரியத்தின் அடிப்படையில் இயங்கும் காரணம்பற்றி வைதிக சைவம் எனப்படும். இச்சைவம் வேதநெறி நிற்பதாகத் திரு முறைகள் சுட்டுகின்றன.
வேதங்களிற் பல தெய்வங்கள் உயரிய நிலையில் விதந்து கூறப்படினும் இவ்வாறு பலவாகக் கூறப்பட்டவை ஒன்றின் பல வகைத் தோற்றமே என வேதவாக்கியமே கூறுவதைப் பிரமாணமாகக் கொ ன் டு வேதங் கூறுவது சிவனையே என அறிஞர் விளக்கங்கள் கூறுவர். வெளிப்படாது உருக் கரந்து உறையும் இயல்பினர் தேவர்கள் என்பது சுருதிவாக்கியம். சிவ பி ரா ன் வேதங்களுக்கும் எட்டாதவன் என்பது அருளாளர் அநுபவ வாக்கு.
வேதங்களுக்கு மறை என்ற சிறப்புப் பெயர் வழங்குகின்றது. இது மறையாக இருந்து அறிவை மறைமுகமாகவே உணர்த் தும். எனவே ஆழமாக உற்று நோக்கும் ஞானியர்க்கு மட்டுமே வேதங்கள் உணர்த் தும் உண்மைப்பொருள் விளக்கம் பெறும். இஞ்ஞானியர்கள் காலத்துக்குக் காலந் தோன்றித் தமக்கு வெளிப்பட்ட விளக் கங்களை மறைவழி நின்று தோத்திரங்க ளாகவும் சாத்திரங்களாகவும் திருமுறை களாகவும் அருள்வாக்குகளாகவும் வழங்கி வந்துள்ளார்கள். மறைகளை வழங்கிய இறைவனே ஆகமங்களை விளக்கவடிவில் தெளிவாக உணர்த்தப்படுவோர் உணரும்
ார்களின் கற்பனைப் பொருள் அல்ல.
7

Page 20
கோபுரம்
வகையில் அருளியிருப்பதாகப் பாரம்பரியம் கூறும். வேதங்கள் ம  ைற ந் து நிற்பன. ஆகமங்கள் அண் ணித் து நிற் பன. ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்பது அருள் மொழி,
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வழிகளை உணர்த்தும் முதல் நூலாக, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நா ன் கு லட்சியங்களை அடைவிக்கும் வழிகாட்டியாக, விளங்கும் வேதங்கள், மக்கள் செவ்விதாக இம்மையிற் பண்பட்டு வாழவும், மறுமையில் இதை விடச் சிறந்ததொன்றுமில்லை எனச் சுட்டப்படும் உயர் கதியாகிய மோட்சப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறவும் வழி காட்டியுள்ளன. எனவே வேத நெறி நின்று ஒழுகும் இந்து மக்கள் பெரும் பண்பட்ட வாழ்க்கைச் சிறப்பு வாய்ந்தவர்களே. இவ்வாறு சிறப்புற வாழ்ந்த ஆன்றோர்கள் தம் நுண்ணறிவால் வேதப் பொருளை உணர்ந்து வாழ்ந்ததோடு நின்றுவிடாது அவ்வாறு வாழும் மு  ைற  ைய ஏனை யோர்க்கு உணர்த்தும் முகமாக அறநூல் களாகவும், பொரு ஸ் நூல்களாகவும், இன்ப நூல்களாகவும், வீடுணர்த்தும் ஞான நூ ல் க ள ஈ கவு ம் உருவாக்கியுள் ளார்கள். இந்துக்களுக்கு வழங்கப் பெற்ற இப்பேறு தனிச் சிறப்பானது. ஏனெனின் இவ்வாறு வ குத் து ரை க் க ப் பெற்ற பேற்றினை இந்துக்களொழிந்த வேறெ வரும் இவ்வளவிற்குப் பெற்றிலர். இதுவே வேதங் காட்டும் இந்துப் பண்பாட்டின் பெரும் சிறப்பு.
ஒவ்வொரு சமயத்திலும் முக்கியமாகக் கருதப்படுவது அதன்வழி நின்று அநுட் டிக்கும் முறையேயாகும். இவ்வநுட்டானத் தின் இன்றியமையாத அமிசம் கிரியை. இந்துக்களின் கிரியைகள் பற்றி முதன் முதல் வழங்கப்பட்ட நூல் வேதங்களின் பகுதிகளாயமையும் பிராமணங்களாகும்.
இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்தால்
இந்து மதம் என்பதற்கு இன்னெ
1

ஆனி 1994
இவையே பாரதத்தில் தோன்றி இன்று வரை விளங்கிவரும் கலைகள் யாவற்றிற் கும் மறைமுகமான மூலங்களாக, வித்துக் களாக, அமைந்திருப்பதைக், காணலாம். கணிதம், வான விஞ்ஞானம், இலக்கியம், இலக்கணம், யாப்பு, மொழி இயல் முதலியன முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. மேலும், கட்டிடக்கலை, சிற்பக் கலை, இசைக்கலை முதலிய கலைகளின் பிறப்பிடமாகவும் இவற்றைக் குறிப்பிட
லாம்.
வேதப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு மேனாட்டு ஆராய்ச்சியாளர் அக்காலமக்கள் வாழ்க்கைப் பற்றி விமரி சித்து வருணித்துள்ளார்கள். இவர்கள் தரும் வரலாற்றை அவதானிக்கும்பொழுது வேதங்கள் காட்டும் பண்பாட்டுச் சிறப்பு
மேலும் ஓங்கிநிற்பது தெளிவாகத் தெரி
கின்றது. .
பொது நூலாக விளங்கும் வேதங்கள், சிறப்பு நூல்களான ஆகமங்களால் விளக்கம் பெறுகின்றன. ஆகமங்களுஞ் சமயம், தத் துவம் ஆகியவற்றை வளம்பெற வைத்துப் பண்பாட்டைச் சிறப்பிக்கின்றன. ←ቌ�.. மங்கள் வழங்கிய அறிவின் வெளித்தோற்ற மாக இருப்பனவே பாரத நாட்டில், விசேட மாகத் தென்ன்ாட்டில் வானளாவி விளங் கும் கோபுரங்களையும் விமானங்களையும் ஏனைய கலை வெளி ப் பா டு களை யும் கொண்டமைந்த திருக்கோயில்கள் . இக் கோயில்கள் கட்டடக்கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நாட்டியக் கலையான நுண்கலைகளையும் ஏனைய கலைகளையும் பேணி வளர்த்து வந்துள் ளன, ஆகம மரபு காட்டுங் கிரியைகளே இக்கலை வள ர் ச் சிக் கு க் காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல் தாமும் சிறந்த கலையம்சம் மிகு ந் து விளங்குகின்றன.
தொகுத்துக் கூறுமிடத்து, சமயம், கத்துவம், கலைகள், வாழ்க்கைச்சிறப்பு, சமுதாய வளர்ச்சி ஆகியன இந்துக்களிடை வளர்ந்த அளவிற்கு வேறு எங்கணும் வளர வில்லை என்பது தெளிவாகின்றது.
'சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், என்னும் நூலிலிருந்து.
ாாரு பொருள் சனாதன தர்மம்.

Page 21
9), ii) LI
- பூனிமத் சுவாமி
ஆலயம் என்பது உடல் என்னும் ஆலயத் தின் வெளிஉருவமேயாகும். இதை நமக்குத் தோன்றிய விதமெல்லாம் அமைத்துவிட முடியாது. மூலஅமைப்பான நம்முடைய சரீரத்தின் தத்துவங்களை அது ஒத்திருக்க வேண்டும். ஆகையினால்தான் ஆலயங் களை இன்னின்ன விதத்தில் கட்ட வேண் டும் என்று ஆகமங்கள் ஆணையிடுகின்றன. அத்தகைய அமைப்பிலிருந்து நம்முடைய உடம்பின் உண்மையான தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவுக்கேற்ப வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்வதும் நமது கடமை யாகும்.
இராஜகோபுரம்
ஆலயத்தில் பெரிய பிரகாரம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் வாயிலில் இராஜ கோபுரம் அமைக்கப்படுகிறது. கோயிலுக் குள்ளே இருக்கும் கோபுரங்கள் எல்லா வற்றையும்விட இது உயர்ந்ததாக இருக் கும். வெகுதூரத்திலிருந்தும் இதை ப் பார்க்கலாம். ஆகையால் இதையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்கலாம். அத னால் இதற்கு ஸ்தூலலிங்கம் என்றும் பெயர். எட்ட இருப்பவர்களுக்கும் கட வுளைப் பற்றி ஞாபகப்படுத்துவதற்கே அது அமைந்திருக்கிறது.
இராஜகோபுரத்தில் கணக்கற்ற வடி வங்கள் இருக்கும். மானுடர்கள் இருப் பார்கள்; அவர்களுடைய வாழ்க்கைமுறை இருக்கும். தேவர்களும், கந்தர்வர்களும் இருப்பார்கள்; அவர்களுடைய அதிசய வடிவங்களும் காணப்படும். விலங்கினங்
அழுக்கு நிறைந்த மனதை ெ
- 1

வழிபாடு
சித்பவானந்தர் -
களும், பறவை இனங்களும் இருக்கும்; அவை பலவாறாகவும் இடம்பெறும் இப் படி உலகில் உள்ள அனைத்துயிர்களும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இடம்பெறுகின்றன என்பதையே அவை காட்டுகின்றன.
இராஜகோபுரத்தில் அசுசியான சில வடிவங்கள் அமைந்திருப்பதையும் காண லாம். மனதில் மேலான கருத்துக்களை ஊக்குவிக்க அவை உதவ முடியாது. பின் அவை எதற்கு? உலகியலான எல்லாமே, உலகியல் வாழ் வின் புறச்சின்னமாக அமைந்துள்ள கோயிலில் இடம்பெற வேண்டும் என்பதே அதன் தத்துவம். நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படை யானது, உ ள் ளே மறைக்கப்பட்டது இரண்டுமே உண்டு. நம்முடைய அவைய வங்களிலும் இப்படி உண்டு. அதுதான் இயல்பு என்றும், உடல் அமைப்பு என் றும் நாம் எடுத்துக் கொள்கிறோம். உடல் அமைப்பையே ஒட்டி அமைந்துள்ள இராஜ கோபுரத்திலும் இந்த இருவிதங்களையும் நாம் காணுவதே இயற்கையானது.
எவவளவு பெரிய மாளிகையானாலும் நம்முடைய வீட்டிற்கு ஒரே ஒரு வாயில் தான் இருக்கிறது. அதன் வழியாகத்தான் உள்ளே நுழைகிறோம். ஆலயத்துக்கு மட் டும் இத்தனை வாயில்கள் ஏன்? அதன் தத்துவம் என்ன?
335 T. Ur வாயில் கள் பொதுவாக ஒற்றைப்படையில் அ மை ந் தி ரு க் கும். மூன்று, ஐந்து, ஏழு , ஒன்பது, பதி
தய்வீக ஒளி கவர்வதில்லை.
9

Page 22
கோபுரம் E --
னொன்று - இங்ஙனம் அதில் அமைந் துள்ள வாயில்கள் ஒன்றன்மேல் ஒன்றாக பெருகிக் கொண்டே போகும், அத்தகைய வாயில்கள் தத்துவத்துக்கு விளக்கமாக அமைந்துள்ளன. மூன்று வாயில்கள் ஜாக் கிரத, சுவப்ன, சுகூடி"ப்தி என்னும் மூன்று அவஸ்தைகளைக் குறிக்கின்றன. ஐந்து வாயில்கள் ஐம்புலன்களைக் குறிப் பிடுகின்றன. இத்துடன் மனம், புத்தி ஆகிய இரண்டையும் சேர்த்துக்கொண் டால் ஏழு வாயில்களின் தத்துவம் விளங் கும். ஒன்பது வாயில்கள் உள்ள இடத்து, சித்தம் - அகங்காரம் என்னும் இரண்டு தத்துவங்கள் மேலும் சேருகின்றன. இங் ங்ணம் நம்முடைய உடலை ஒட்டிய தத்து வங்களே கோபுர வாயில்களின் சின்னங்க ளாக விளங்குகின்றன.
இவ்வளவு இருந்தாலும் ஒரே ஒரு மூல வாயில் வழியாகத்தான் நாம் உள்ளே செல்கிறோம். இதன் மூலம் ஒரு கருத்து புகட்டப்படுகிறது. புறக்காரணங்களும், அகக்காரணங்களும் இத்தனை இருந்தா லும், கடவுளிடம் நாட்டம் கொள்ளும் போது மனம் என்னும் வாசல் வழியாகத் தான் உள்ளே போக வேண்டும் என்ற தத்துவத்தையே அது காட்டுகிறது. மற் றவை எல்லாம் வெளிஉலகை அறிந்து கொள்ளவே பயன்படும். மனத்தை மட் டும்தான் நாம் துணையாகக் கொண்டு, பரம்பொருளிடம் உள்முகமாகப் பயணம் போக வேண்டும் என்பதை இராஜகோபு ரம் வழியாகப் பிரவேசிக்க வேண்டும் என்பது காட்டுகிறது.
துவஜஸ்தம்பமும் வாகனமும்
இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும் நம்முடைய கண்ணிற்படுவது பலிபீடம். அதன் அ ரு கி ல் விழுந் து வணங்க வேண்டும். அப்படி வணங்கும் போது நம்முடைய மனத்தில் தோன்றும் எண்ணமே முக்கியமானது. கீழ்மையான
உரிமை இல்லாத இடத்தில் உரித்து
20

ஆனி 1994
எண்ணங்களும், கீழான இயல்புகளும் அந்த இடத்தில் பலி கொடுக்கப்பட வேண்டும்; அங்கே கீழே விழுந்துவிட வேண்டும். எழுந்திருக்கும்போது, மேலான எண்ணங்களே மிஞ்சி இருக்கின்றன என்ற நினைவுடன் மேலே எழவேண்டும். இப் படிப் புதியதாக வருவித்துக் கொள்ளும் எண்ணத்தைத் தெய்வசந்நிதியில் தெய் ಙ್ಗಣಕೆ ಅ. உரியதாக மாற்றிவிட வேண்
sê) ,
அடுத்த படியில் இருக்கும் துவஜஸ் தம்பம் உள்முகமாகத் திரும்பிக்கொண்டு இருக்கிறது. கொடி உள்முகமாகத் திரும் பிக் கொண்டிருக்கிறது. கோயிலைச் சுற்றி நடக்கும்போது பக்தன், உள்ளிருக்கும் தெய்வம் தனது வலப்புறம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். இதையே நாம் வலம் வருதல் என்கிறோம். இப்படி வலம் வரும்போது கீழான எண்ணங்கள் பின் தங்கிவிடுகின்றன. மேலான எண்ணங்களே முன்கொண்டு செல்லுகின்றன.
துவஜஸ்தம்பத்துக்கு அடுத்தபடியாக இருப்பது தெய்வத்துக்கு உரிய வாகனம். சிவபெருமானுக்கு நந்தி வாகனம் மகா விஷ்ணுவுக்கு கருட வாகனம். அம்பிகைக்கு சிம்ம வாகனம். இவை தெய்வஉருவை நோக்கி அமைந்திருக்கின்றன. வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவையே குறிக்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவையே நோக்கி நாடுவதையே வாகனம் கடவு ளைப் பார்த்த வண்ணம் இருப்பது காட்டு கிறது. பரமாத்மா ஜீவாத்மாவை அடக்கி அதன் பகுதியாக இறுதியில் இடம்பெறு கிறது. கடவுள் வாகனத்தின்மீது அமருவ தும் இதனையே குறிக்கிறது.
பக்தன் கடவுளையும் வாகனத்தை եւ4ւն சேர்த்தே வழிபட வேண் டும்; குறுக்கே நுழைதல் முறையல்ல. பிறர் வழிபடுவதற்கு நாம் இடைஞ்சலாக இருக் கக்கூடாது. பிறருக்கு இடைஞ்சல் தரும்
டன் பேசி விரோதத்தைத் தேடாதே.
D

Page 23
5 1994 -ܚܟ - --
போது, நாமே கடவுள் வழிபாட்டுக்குப் புறம்பாகப் போய்விடுகிறோம். பிறர் வழி பட உதவும் பக்தன், தானும் அந்த வழி பாட்டின் நலனைப் பெறுகிறான். பிறருக் குப் பணிவிடை செய்து யாரும் முன்னே றலாம். இக்கோட்பாடு ஆலய வழிபாட் டிலும் அடங்கி இருக்கிறது. கர்ப்பக்கிருகம்
கர்ப்பக்கிருகத்தில் இருள் சூழ்ந்திருப் பது ஏன்? காற்றோட்டமும் வெளிச்சமும் அங்கே கிடைக்க ஆகமவிதி ஏன் இடம் தருவதில்லை? இந்தச் சந்தேகம் நமக்கு எழக்கூடும். இறைவனை நாடி நாம் தியா னம் செய்யும் போது, கருவி கரணங்களை ஒடுக்கி மனத்தை உள்முகமாகத் திருப்பு கிறோம். அதன் சின்னமாகவே ஆல யத்தின் கர்ப்பக்கிருகம் அமைந்திருக்கிறது. உடலுக்குள் நம் மு  ைட ய நெஞ்சத்தில் மற்ற உண ர் வு க ள் எல்லாவற்றையும் மறந்து, இறைவனைத் தேடிக் கண்டு பிடிக்க முயலும் முனைப்பையே, கர்ப்பக்கிரு கத்தில் மூலவிக்கிரகத்தை - உற்று நோக்கிக் கண்டறிய முயலும் செயல் காட்டுகிறது. அதனால் புற உலகிலிருந்து அங்கே காற் றும் வெளிச்சமும் வருவதில்லை.
கர்ப்பக்கிருகத்தின் அருகில் சென்று பக்தன் தரிசனத்துக்காகக் காத்திருக்கி றான். திரை மூடப்பட்டிருக்கிறது, சிறிது நேரத்துக்கெல்லாம் மணி ஒசை கேட் கிறது. இனி விரைவில் தரிசனம் கிட்டும் என்று பக்தன் தெரிந்துகொள்ளுகிறான். திரையை நீக்கி, உள்ளே கற்பூர தரிசனம் காட்டப்படுகிறது. அதன் வெளிச்சத்தில் பக்தன் விக்கிரகத்தைத் தரிசிக்கிறான். அதையே கடவுளின் வடிவமாக உணர்ந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறான், இதன் தத்துவம் என்ன?
மனத்தகத்து நிகழ வேண்டிய ஞானக் காட்சியின் புறத் தோற்றமே ஆகும் இது. மனத்தினுட் புத் தி  ைய ஒருமைப்படுத்த முயலும் சாதகன் முதலில் கார் இருளையே காணுகிறான். அவன் அறிய விரும்பும் பரமாத்மாவைக் காணமுடியாமல் அஞ்
- அடிமைகள் வாழ்ந்தாலும் நலன்

கோபுரம்
ஞானத்திரை மறைத்துக் கொண்டிருக் கிறது. ஆயினும், அவன் பிடிவாதமாகத் தனது முயற்சியில் ஈடுபடுகின்றான். படிப் படியாக ஆழ்ந்த தியானத்தில் அவ னுடைய மனம் ஒன்றுகிறது.
அப்படி மனத்தை ஒடுக்கி ஈடுபடும் போது அவனுக்கு ஓர் அனுபவம் கிடைக் கும். தனது உள்ளத்தின் உள்ளே அவன் ஒர் இனிய ஓசையைக் கேட்டான். அங்கே ஒளி நடமாடும்; அங்கே இனிய நறுமணம் போன்ற நல்ல உணர்வுகள் மலரும். படிப் படியாக அவனுடைய உணர்வுகள் ஒன் றாகக் குவியும். இறுதியில் ஞானதரிசனம் கிட்டும். இப்படி ஞான ஒளி தரிசனமாகக் கிடைப்பதையே கர்ப்பக்கிருகத்தில் நடை பெறும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. மணி அடிக்கிறது; திரை விலகுகிறது; தீப தூபங்களை அடுத்து இறை உருவத்தைத் தரிசிக்கிறோம்.
LD 6On L (T 6öT 6onLD
ஆலயத்துக்குள் சென்றால் ம ன ம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியும் ஏற்படும். ஆலயத்துள் நுழையும்போது மற்றக் கவலைகள் மறைந்து விடுகின்றன. மனம் அமைதி அடைகிறது. பதைபதைப் புக்கோ, வேகமான நடமாட்டத்துக்கோ அங்கே இடமில்லை. ஆகையால் மன உணர்வுகள் மெ ன் மை அடைகின்றன. கோயிலுக்குள் கூச்சலிட்டுப் பேசக்கூடாது. அப்போது திரும்பி வந்ததும் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்வதற்குரிய உள்ளப்பாங்கும் உண்டாகும். வழிபடுபவன் அமைதியுற்று அமர்ந்திருப்பானாகில், அந்த உயர்ந்த எண்ணங்கள் அவனது மனத்துள் பிரதிபலிக்கும். அதுவே ஆலய வழிபாட்டி னின்று வழிபடுபவன் பெறுகின்ற பெரிய பேறு ஆகும். இத்தகைய மனப்பான்மை யுடன் எத்தனை பேர் ஆலயத்துக்குள் வந்து வணங்குகிறார்களோ, அதற்கேற்ப ஆலயத்துக்குள்ளும் ஏற்கெனவே அமைந் துள்ள அருள் பன்மடங்கு பெரிதாகின்றது. அதனால் ஊரும், நாடும் ஒப் பற்ற உயர்வை எய்துகிறது. (சுவாமி சித்பவானந்தரின் ‘கடவுள் வடி வங்கள்" என்ற நூலிலிருந்து.)
பெறுவதற்கு எதுவுமே இல்லை!
21

Page 24
மனத் தூய்மை ! *
சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க் கையில் திருப்தியும் சந்தோசமும் நிறைந் திருந்தன. அவர்கள் எப்படி நடந்துகொண் டார்கள் என்று பார்த்து, அ  ைத நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும் சந் தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.
பேரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டு மில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில் கூட, ந ம க்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழி காட்டி யிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவுசெய்து நடத்திக்கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?
இந்தக் கா லத் தி ல் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷ னும், வெளி வேஷமும் அப்போது இல்லை, ஆனால் அந்த நாளில் தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவி செய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலி யாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்ப வருக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.
ஒரு கூட்டத்திலே பல ர் கொஞ்சம் கொஞ்சம் கொ டு த் தாலு ம் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்தத்தில் கணிசமாகக் கிடைக்கும்.
தமக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம்
2

※ ※ 雞 ※ S. S. S毅
27.S ※ ※ YS
இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம் , அவன் ஒரு கலியாணம் செய்ய வேண்டும் அல்லது அபர காரியம் செய்ய வேண்டும்
என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்
சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை ந ட த் தி க் கொடுத்துவந் தார்கள். முன்னாட்களில் பந்துக்களுக்குள் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப் பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிற வனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.
ஆனால் இன்று எல்லம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர் களுக்கு இல்லை. ஏழையான உறவினர் களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போ ன் ற பணக் காரர்களுக்காகவே பார்ட்டி - ஃபீஸ்ட்டு வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படி பணமும் பண்டமும் செலவா கின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவுமே இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒரு த் த  ைன க் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்ட்டும் வைக் கிறான். பார்ட்டிகொடுத்து, இதில் சாப் பிட்டவர்களை ஏமாற்றிவிட்டதாக நினைக் கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்கும் தெரியும், ‘இவன் பிரிய த் தி ன் பேரில் தனக்குச் சாப்பாடு போடவில்லை காரி யத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்' என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் எ ன் றா ல் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு
2
இல்லாமல் வாழப்பழக வேண்டும்.

Page 25
gif| 1994 --
விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தை யாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக் குப் பயன்படவில்லை.
ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும்போது இரண்டு பக்கத் திலும் உண்மையான சந்தோஷமும் பிரிய முமே நிரம்பியிருந்தன. இப் போ து பார்ட்டி நடத்தும் போது அங்கே உண்மை யான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதி யில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷ மும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக் கூடாது என்பதற்காக இவ் வளவு சொன்னேன்.
'வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?' என்று மற்ற வர்கள் எண்ணக் கூடாது. சரீரத்தால் மற்வவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண் ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல் லாதவர்களும் இவ் விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்யமுடியும்.
ஒவ்வொருத்தரும் - பிறருக்குக் கூடத் தெரியவேண்டாம் ஏதோ ஒர் ஒற்றையடிப் பாதைக்குப்போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்குப் பெரிய உதவி: இது மாதிரிச் சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டை யில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.
‘ஈசுவர அநுக் கி ர கம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால் தான், சித்த சுத்தி
உன் குற்றம் மற்றவ
2

கோபுரம்
உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலங்கின ஜலத்தில் பிம்பம் தெரியாதது போல், நாம் மனசைக் கலக்கிக்கொண்டு ஈசுவரஸ்வரூபம் தெரியாதபடி செய்து கொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளி வாகும் போது ஈசுவர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக்கொண்டு, அவனுடைய அநுக் கிரஹத்தைப் பெற முடியும்.
காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் நன்றி - தெய்வத்தின் குரல் பாகம் 1
அக்கிரகாரம்
அக்கிரகாரம் என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனருக்குக் கொடையாக வழங்கப்பெற்ற பகுதி என்று பொருள்படும். வேள்விகளைச் செய்த பார்ப்பனருக்குக் கொடை யாகக் கொடுக்கப்பட்ட நிலங்களி லிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக் கலாம். வேதங்களைக் கற்று த் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார் ப் பன ர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொ டு க் கப் பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கெளடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடு கிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத் துக்கொள்ளுதற்குப் போது மா ன உணவுப்பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்தவேண் டியதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப் பணிகளின் பொருட்டு வழங்க ப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிர காரம் என்ற சொல்லாலேயே குறிப் பிடப்பட்டுள்ளன.
- வாழ்வியற்களஞ்சியம் -
ர் குற்றமாவதில்லை.
3

Page 26
கோபுரம்
(16ம் பக்கத் தொடர்ச்சி. )
நெறிப் பாடசாலை ஆசிரி  ைய செல்வி வே. அம்பிகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திணைக்களத்தின் சார் பி ல் உதவிப் பணிப்பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார் வடிவேல் இருவரும் கலந்து சிறப்பித்தனர்.
கேகாலை
கேகாலை மாவட்ட ப் பரிசளிப்பு வைபவம், மே மாதம் 25ம் திகதி தெஹி யோவிட்ட மாஹின்கந்த பாடசாலை மண்டபத்தில், இளந் தென்றல் அற நெறிப் பாடசாலை ஆசிரியர் திரு. எஸ். இரவிச் சந்திரன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது:
திணைக்களத்தின் சார்பில் உதவிப் பணிப்பாளர்கள் வீ. விக்கிரமராஜா, திரு. குமார் வடிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதேச பிரமுகர்கள் பொது மக்களும் கலந்து வைபவத்தை சிறப்பித் தனர்.
அம்பாறை
அம்பாறை மாவட்டப் பரிசளிப்பு விழா ஜூன் மாதம் 5ம் திகதி காலை தம்பிலு வில் மத்திய மகாவித்தியாலயத்தில் நடை பெற்றது, அம்பாறை மாவட்ட கலாசார அலுவலர் திரு எஸ். தியாகராஜா அவர் கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
திருநாவுக்கரசு நாயனார் குருகுலம், அக்கரைப்பற்றுத் தொகுதி இந்து மாமன் றம் என்பனவற்றின் அநுசரணையோடு விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருமலை மாவட்டப் பரிசளிப்பு வைப வம், ஜ"ன் மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை திருமலை மாவட்ட இந்து இளை ஞர் பேரவையின் மகேஸ்வரி மண்டபத்தில்
மதம் வாழ்க்கையின் தி

ஆனி 1994
பேரவைச் செயலாளர் திரு. செ. சிவபாத சுந்தரம் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
திணைக்களத்தின் சார்பில் உதவிப் பணிப்பாளர் திரு. குமா ர் வ டி வே ல்
அவர்கள், பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
கண்டி
கண்டி மாவட்டப் பரிசளிப்புவிழா ஜூன் மாதம் 12ம் திகதி, கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் அநுசரணையுடன் இந்து சிரேஷ்ட பாடசாலை மண்டபத்தில் மன்ற த் த லை வர் இறைபணிச்செம்மல் பெ. இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திணைக் களத்தின் சார்பில் பணிப்பா ளர் திரு. க. சண்முகலிங்கம், உ த வி ப் பணிப்பாளர் திரு. குமார்வடிவேல் ஆகி யோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங் கினர் .
வவுனியா
வவுனியா மாவட்டப் பரிசளிப்புவிழா சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத்தின் அநுசரணையுடன் ஜ"ன் மாதம் 22ம் திகதி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் திரு. சொ. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் திணைக் களத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர் களாக உதவிப்பணிப்பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார்வடிவேல் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
வவுனியா மாவட்ட கலாசார உத்தி யோகத்தர் திருமதி ஜெ. தெய்வேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கருத்ரங்கு
திணைக்களத்தின் தமிழ் அலுவல்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'தமிழ்
திசையறி கருவியாகும்.
24

Page 27
ஆனி 1994
சிங்கள மொழிகளில் மரபும் புத்தாக்கமும்’ எனுந்தலைப்பிலான கருத்தரங்கொன்று ஜூன் மாதம் 25ம் திகதி திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக சிங்களத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜே. பி. திசாநாயக்க " " சிங்கள மொழியின் மரபும் புத்தாக்கமும்' எ னு ந் தலைப்பிலும், பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிங்களத் துறைப் பேராசிரியர் ஏ. வி. சுரவீர 'சிங்க ளப் படைப்பிலக்கியத்தில் பேச்சுமொழி யின் பிரயோகம்’ எனுந் தலைப்பிலும் பேராதனைப் பல்கலைக்கழக சிங் க ள த் துறைத் தலைவர் பேராசிரியர் கே. என். ஒ.தர்மதாஸ, 'மொழித்தூய்மை வாதம்சில சிந்தனைகள்’’ எனுந் தலைப்பிலும் ஆய்வுரைகள் நிகழ்த்தினர்.
இலக்கியச் சொற்பொழிவுகள்
திணைக்களத்தின் தமிழ்ப்பிரிவு ஏற் பாடு செய்திருந்த இரண்டு இ லக் கி ய உரைகள் ஜூன் மா த ம் 24ம் தி க தி மாலை திணைக்களக் கேட்போர் கூடத் தில் இடம்பெற்றன.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அண் ண |ா கலைக்கல்லூரி பேராசிரியர் மு. சாய்பு மரைக்கார் ‘இலக்கியத்தில் ஒருமைப் பாடு' எ னு ந் தலைப்பிலும், அவரது துணைவியார், பேராசிரியை நசீமாபானு ** கவிமணியின் கவித்திறன்' எ னு ந் தலைப்பிலும் இலக்கிய உரைகள் நிகழ்த் தினர்.
இ ஸ் லா மிய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அ  ைம ச் சர் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களும் இவ்வைபவத்திற் கலந்துகொண்டனர்.
உதவிப்பணிப்பாளர் திரு. ஏ. எம்:
நஹியா அவர்கள் நன்றியுரை வழங்கி GBT mTrio".
பண்பாடு என்பது தர்ம நெறியிலிருந்து புடம்

கோபுரம்
அகப்பேய்ச் சித்தர் அகப்பேய்ச் சித் த ர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவர்; வேளாளர் குலத்தில் தோன்றியவர். த ம து மனம், பேய் போன்று ஒரு நிலைப் படாது அலைதலினால், அதனையே பேயாக உருவகித்து ‘அலையாது நிற்க' என்று அறிவுரை கூறிப் பாடி யுள்ளார். இவருடைய பாடல் 90 கண்ணிகள் கொண்டது. அதன் ஒவ் வொரு கண்ணியிலும் * அகப்பேய்" என்னும் சொல்விளியாக இ ட ம் பெற்றுள்ளது. இச் சிறப்பினாலேயே இவர் அக ப் பேய் ச் சித் த ர் என அழைக்கப் பெற்றார். சங்க காலத் தில், குப்பைக் கோழியார், தொடித் தலை விழுத்தண்டினார், செம்புலப் பெயல் நீரார் போன்றோர் தாம் பாடிய பாடலில் அமைந்த தொடர் காரணமாகப் பெயர் பெற்றவராவர். இவரும் தாம் பாடிய பாடலிலமைந்த அகப்பேய் என்னும் தொடர் காரண மாக அகப்பேய்ச் சித்தர் என்னும் பெயர் பெற் று ஸ் ள |ா ர். இவரது இயற் பெயர் தெரியவில்லை, இவர் L II TL - Gi) ஏனைய சித்தர் LufT L— ĉiy களைப் போலவே மறைபொருட் சொற்களைக் கொண்டுள்ளது. இவ ரது பாடல் சித்தர் ஞானக் கோவை என்னும் சித்தர் நூற்றொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தன்னை அறி யும் அறிவே மெய்யானது என்றும், பின்னை அறிவதெல்லாம் பேயறி வென்றும் கருதும் தம் கருத்தினைத் 'தன்னையறியவேணும் அகப்பேய்,
சாரா மற் சாரவேணும், பின்னை அறிவதெல்லாம் அகப்பேய் பேயறி வாகுமடி’ எ ன் று சாடியுள்ளார்
இவர். தானற நின்றவிடமே சைவம்' என்று கூறுகின்றார்.
வாழ்வியற் களஞ்சியம் - 1
பண்ணி எடுத்த நல்லதோர் பழக்கவழக்கt .
5 -

Page 28
~< அங்கும்
அறெ நறிப்பாடசாலை en un fآ கருத்தரங்கு
திணைக்களத்தின் அநுசரணையோடு கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க ம் கொழும்பு மாவட்ட அறநெறிப் பாட சாலை ஆசிரியர்களுக்கான முழுநாள் கருத் தரங்கொன்றினை ஏப்ரல் மாதம் 30ம் திகதி சங்கத்தின் நால்வர் மணி மண்ட பத்தில் நடத்தியது.
சங்கத்தலைவர் திரு. சி. தனபாலா ஜே. பி. அவர்கள் தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்திற்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயிற்சியிற் பங்குபற்றியோருக்கு சான்றிதழ் களை வழங்கினார்,
திணைக்களத்தின் சார்பில், பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் கலாசார உத்தியோகத்தர் செல்வி எம். இராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்
டனர்.
இக்கருத்தரங்கில், " *தியானப்பயிற்சி' எனுந்தலைப்பில் பூரீமத் சுவாமி ஆத்ம கனாநந்தா அவர்களும், ‘கற்பித்தல் முறைகள்' எனுந்தலைப்பில் திருமதி பூமணி குலசிங்கம் அவர்களும் ‘கதைகள் மூலம் அறநெறிக்கருத்துக்கள்’’ எ னு ந் தலைப்பில் திருமதி என். வேதநாயகம் அவர்களும் “கோயில் வழிபாடும், அதன் முக்கியத்துவமும்’ எனுந் தலைப்பில் திரு. வ. சிவராஜசிங்கம் அவர்களும், 'பக்தி மார்க்கமும் பண்ணிசையும்’ எனுந்தலைப் பில் திருமதி ம.கைலாசநாதன் அவர்களும், 'இந்துசமய வாழ்வும் அதன் விழுமியங் களும்' எனுந் தலைப்பில் திரு. கு. சோம சுந்தரம் அவர்களும், விழாக்களும் விர
பக்தி என்பது மனதைக் கடந்த விளக்

صحیح صح<9bl(ti
தங்களும்’ எனுந்தலைப்பில் திரு. கு. குருசுவாமி அவர்களும் உரை நிகழ்த்தினர்.
திருமதி சாந்தி நாவுக்கரசன் அற நெறிப் பாடசாலைகளின் செயற்திட்டங் கள் பற்றி விளக்கினார்.
சைவ முன்னேற்றச் சங்க அறநெறிப் பாடசாலைச் செயலாளர் திரு. கு. நாகேந் திரன் அவர்களின் நன்றியுரையுடன் வைப வம் நிறைவுபெற்றது.
காரைதீவு சாரதா மகளிர் இல்லம்
காரைதீவு பூரீ இராமகிருஷ்ண மிசன் சாரதா மகளிர் இல்லம் மே மாதம் 27ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. அகில உலக இராமகிருஷ்ண மிசன் பொதுக் காரியதரிசி பூரீமத் சுவாமி ஆத்மஸ்தாநந்தா அவர்கள் கலந்து கொண்டு  ைவ பவ ரீதியா க இல்லத்தைத் திறந்துவைத்தார்.
காரைதீவு வந்த சுவாமிஜி அவர் களுக்கு பிரதேச மக்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. சு வா மி யுடன், இலங்கைக் கிளையின் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா, மட்டக் களப்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் பூரீமத் சுவாமி ஜீவானந்தா, கல்கத்தா * உத்போதன்' இதழின் ஆசிரியர் சுவாமி பூரணானந்தா , மட்டக்களப்பு மே ய ர் செழியன் ஜே. பேரின்பநாயகம், ஆ கி யோரும் வரவேற்பில் கலந்துகொண்ட
፳፰፻ ፫ኽ ̈ •
சு வா மிக ளை வரவேற்பதற்கென காரைதீவு கிராமமே விழாக்கோலம் பூண்
டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்பாடு
திணைக்களத்தின் ஆய்வு இதழான பண்பாடு 94 வைகாசி இ த ழ் வெளி
:முடியாத அற்புதமான ஆத்ம சுகம் .
ہش

Page 29
ஆனி 1994
வந்துள்ளது. இவ்விதழில் எம். நுஃமானின் 'நாட்டார் இ லக் கி ய த் தி ல் காதற் பாடல்கள்’’, சி. பத்மநாதனின் 'தட்சின கைலாச புராணம் ஒர் ஆய்வு'' சுரேஷ் கனகராசாவின் தமிழ் இலக்கிய விமரிசனம் ஒர் மதிப்பீடு', பெ. சு. மணியின் சுதேச மித்திரனில் பாரதியார், ஆகிய கட்டுரை களும் மேலும் பல தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பண்பாடு தனிப்பிரதியின் விலை ரூ. 251- ஆகும். இவ்விதழை, திணக்களத்தின் கருமபீடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விவேகானந்த சபையின் சைவசமயப் பரீட்சை
கொழும்பு விவேகானந்த சபை அகில இலங்கை ரீதியாக நடத்தும் சைவசமய பாடப் பரீட்சை நவம்பர் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்:னது.
இப்பரீட்சை தொடர்பான விபரங் களை கெளரவ பொதுச் செயலாளர், விவேகானந்த சபை 34, விவேகானந்த மேடு, கொழும்பு - 13. என்ற விலாசத் திற்கு எழுதிப் பெறலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பாரீஸ் சைவத்தமிழ் மாநாடு
உலக சைவப் பேரவையின் மூன்றா வது சைவத் தமிழ் மாநாடு பாரீஸ் நகர் பூரி சித்திவிநாயர் ஆலய மண்டபத்தில் இம் மாதம் 25, 26ம் திகதிகளில் (ஜூன்) தடைபெற உள்ளது.
இம் மாநாட்டுக்கு இலங்கை ஆலோ சனை சபையின் பிரதிநிதிகளாக, உலக சைவ பேரவையின் இலங்கை கிளைத் தலை வரும் இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சின் செயலாளருமான திரு. கா. தயாபரன் அவர்களும் கிளையின் உபதலை வர்களான இந் து ச ம ய திணைக்களப்
தேனில் ஊறும் பலாச்சுனை போல இறைசி
Yo d

கோபுரம்
பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம், அவர்களும் கலந்து கொள்கின்றனர்;
இம் மாநாட்டிற்கு பிரான்ஸ், இங்கி லாந்து, தமிழ் நாடு, மலேசியா, தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர், மொரிசியஸ் உட் பட பல நாடுகளையும் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடுகின்றனர். மாநாட் டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக சைவ பேரவையின் பாரீஸ் கிளை யும், பாரீசில் இரு ந் து வெளியாகும் ‘தமிழன்' பத்திரிகை நிறுவன மும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
உலக சைவப் பேரவையின் தலைவராக திருபனந்தாள் ஆதீன முதல்வர் பூரீலபூரீ காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பி ரான் சுவாமிகளும், பொதுச் செயலாள ாாக லண்டன் மெய்கண்டான் ஆதீன முதல்வர் தவத்திரு சுவாமி சிவநந்தி அடி களாரும் விளங்குகின்றனர்.
மாநாட்டினை ஒட்டி சைவத் தமிழ் கருத்தமைந்த பேச்சு, கட்டுரை, திருமுறை ஒதுதல் ஆகிய போட்டிகள் உலகளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளன. மாநாடு தொடர்பாக சிறப்பு மலர் ஒன்றும் வெளி யிட்டு வைக்கப்பட உள்ளது.
கொழும்பில் இயங்கும் உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையின் தலைவ ராக திரு. கா. தயாபரன் அவர்களும் செயலாளராக 'இந்து கல 1ா சா ர ம்' இதழின் ஆசிரியர் திரு, ஏ. எம். துரை சாமி அவர்களும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடா சைவ சித்தாந்த மாநாடு
கனடா இந்து கவுன்சில், கனடாவில் உள்ள ஏனைய இந்துசமய நிறுவனங்கள்
இணைந்து ஏற்பாடு செய்கின்ற நான்காவது சர்வதேச சைவ சித்தாந்த ம க ரா நா டு
感
ந்தனையில் ஊறும் மணமும் கெட்டுவிடாது.
2.

Page 30
GS85, T u q Jtir
ஜூலை மாதம் 1ம் திகதி முதல் 10ம் திகதி வரை மொன்ட்றில், டொரன்டோ நகரில் நடைபெறுகின்றது.
இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் இந்துசமய கலாசார இராஜாங்க அமைச் ஊடாக வி டு த் தி ரு ந் த கோரிக்கைக்கு இணங்க நான்கு இலங்கை அறிஞர்கள் இம்மாநாட்டின் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு தருமபுரம் சர்வதேச சைவ சித்தாந்த ஆய்வு மையத்தின் அனுசரணை யோடு நான்காவது மகாநாடு ஒழுங்கு செய்யப்படுகின்றது.
உலகளாவிய ரீ தி யி ல் வாழுகின்ற சைவமக்களின் தத்துவமான சைவ சித்தாந் தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள் வதே மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
கனடா இந்து கவுன்சில், கனடா இந்து ஆலய சங்கம், நிர்வாண கலாசார சங்கம், கியுபெக் சைவ மிஷன் என்பன இணைந்து மாநாட்டிற்கான ஒழுங்குகளை மேற்கொள கின்றன. ஆங்கிலம், தமிழ், பிரென்ஞ் ஆகிய மொழிகளில் மாநாட்டு அமர்வுகள் இடம்பெற உள்ளன.
மாநாட்டிற்கென இந்தியா, இலங்கை மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் , இந்தோனேசியா, தாய்லாந்து. நேபாளம், இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பலநாடு களில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது
கோமல் சுவாமிநாதன் விஜயம்
பிரபல நாடகக் கலைஞரும் ‘சுபமங் களா' இதழின் ஆசிரியருமான கோமல் சுவாமிநாதன் மார்ச் மாதம் இலங்கை தேசிய க  ைல இலக்கியப்பேரவையின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந் girrri.
சமயமென்பது கடைந்தெடுத்த வி
2

asi 1994
இலங்கையில் இர ண் டு வாரங்கள் தங்கியிருந்த காலத்தில் கொழும்பு, மட் டக்களப்பு, யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், க ண் டி, திருகோணமலை, இராகலை, நாவலப்பிட்டி ஆகிய பல இடங்களிலும் அவரது சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
மண்ணுலக வாழ்வையோ, விண் ணுலக வாழ்வையோ நாடாதே; வாழ இச்சையுறுவதே மயக்கமாம். வாழ்வு அநித்தியமானது என்பதை உணர்ந்து, அறியாமைக் கனவினின் றும் விழித்தெழு; மரணம் உன்னைப் பற்றுமுன் ஞானத்தையும் முத்தியை யும் அடைய முயல்வாயாக.
- பகவான் கிருஷ்ணர் -
புலவர் இ. பெரியதம்பிப்பிள்ளை முத்திரை வெளியீடு
கிழக்கில ங்  ைக யி ன் தமிழறிஞரான புலவர் மணி இ. பெரியதம்பிள்ளை அவர் களின் ஞாபகார்த்த முத்திரையொன்று மேமாதம் 22ம் தி க தி தேசியவீரர்கள் தினத்தன்று இலங்கை தபால் திணைக் களத்தினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.
1899ம் ஆண்டு மட்டுநகர், மண்டூரில் பிறந்த பெரியதம்பிப்பிள்ளை, மிகச்சிறந்த தமிழறிஞர்களிடம் கல்விபயின்றார். தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் எழுதிய தமிழ்ப் பா ட ல் க ள் தமிழ்ப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவரது 'பகவத் கீதை வெண்பா’’ எனும் நூல் சாகித்திய மண்டலப் பரிசுபெற்றது.
1951ம் ஆண்டு மட்டக்களப்பு தமிழ்க் கலைமன்றம் ‘புலவர் மணி’ எனும் பட்ட மளித்து கெளரவித்தது. அர சக ரு ம
ாழ்க்கைத்திட்டத்தின் பெட்டகம்.
8

Page 31
ஆனி 1994
மொழிகள் ஆலோசனைச் சபை, இலங்கை வானொலி கல்விச் சேவை ஆலோசனைச் சபை எ ன் பவ ற் றி ல் உயர்பதவிகளை வகித்த புலவர்மணி அவர்கள் 1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி அமர σπεστ Γτή".
*அகிலம்" வெளியீடு
கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றத் தின் அங்குரார்ப்பணமும் “அகிலம்" என்ற சஞ்சிகையின் வெளியீடும் ஜூன் மாதம் 5ம் திகதி கண்டி இந்து கலாசார நிலை யத்தில் நடைபெற்றன.
இதழாசிரியர் திரு. கே. வி. இராம சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த் தினார். அசோகா வித்தியாலய அதிபர் திரு. செ. நடராசா அவர்கள் நூலின் அறிமுக உரையும், கலாநிதி துரை மனோ கரன் அவர்கள் வி ம ரி ச ன உரையும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், கலாசீர்த்தி, பேரா சிரியர் எஸ். தில்லைநாதன், தொழிலதிபர் எஸ். முத்தையா, சமூக சேவையாளர் திரு. வி. பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆற்றும் கலை, சமூக ப் பணிகளுக்காக வாழ்த்தி கெளரவிக்கப்பட்டனர், விழாவின் இறுதியில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபன தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளர் திரு. எஸ். விஸ்வநாதன், செல்வி. கவிதா தில்லைநாதன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தனர். மதங்கள் பற்றிய சிறப்புரைகள்
'மதங்களின் பாராளுமன்றம்’ எனும் பொருளில் மே மாதம் 29ம் திகதி மாலை
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண் டபத்தில் சிறப்புரைகள் இடம் பெற்றன.
தியானத்திலிருந்து

SLLSSLLSiiSSLS SSSSAASAASSAASS SSSqqqqqSSSSqqSqSSqqSSSqSSMSSq qSqSLqLLLLLS கோபுரம்
இந்நிகழ்ச்சியில் இர 1ா ம கி ரு ஷ் ண மிஷனின் அகில உலக பொதுச் செயலாளர் பூரீமத் சுவாமி ஆத்மஸ்தானந்தாஜி மஹ ராஜ், கொழும்பு வஜிராராம பியதஸ்ஸி நாயக்க தேரர், சமய சமூக நிறுவனப் பணிப்பாளர் திரு. திஸ்ஸ பாலசூரிய, கல்கத்தா உத்போதன்’ இதழின் ஆசி fuurir சுவாமி பூர்ணாத்மானந்தாஜி கொழும்பு காதிகள் சபை உறுப்பினர் ஆர். எம். ஸ்ரூக் ஆகியோர் பெளத்த, இந்து கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் சார்பில் சிறப்புரைகள் நிகழ்த்தினார்.
கனடாவில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத் தின் 6ம் மகாநாடு இவ் வருட ம் ஆகஸ்ட் 19, 20, 21ம் திகதிகளில் டொரொன்டோ நகரில் நடைபெற உள்ளது.
உலகின் அனைத்துப் பாகங்களி லும் வாழும் தமிழ்மக்களின் பண் பாடு பிரச்சனைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் முகமாக கூட்டப் படும் இம்மாநாடு இதற்குமுன், தமிழ்நாடு, மலேசியா (இரு த ட வைகள்) மொறிசியஸ், அவுஸ்ரேலியா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. மாநாட்டினை ஒட்டி, சிறு கதை, கட்டுரை, க வி  ைத ப் போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பழந் தமிழ் நூல்கள், தமிழ் ஏடுகள் என் பனவும் மறு பி ர சு ர ம் செய்யப் படவுள்ளன.
தமிழ்ப் பண்பாட்டை கனடா மக்களுக்கு உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்திகளின் பவனி, பரத நாட்டியம், கும்மி, நடனம் என்பன வும் இடம் பெறவுள்ளன.
பெருஞ் சுகம் வரும்.
29

Page 32
80 ) --:----
ஊவா மாகாண தமிழ்சாகித்திய விழா
இந்துசமய க லா சா ர இராஜாங்க அமைச்சுடன் இணைந்து ஊவா மாகாண சபையின் கூட்டுறவு இந்துசமய கலா சார அலுவல்கள் அமைச்சு , இரண்டாவது தடவையாக தமிழ் சாகித்திய விழாவை ஜூலை மாதத்தில் சிறப்பாக நடத்த ஏற் பாடுகளை மேற்கொண்டுள்ளது. : “ ''
விழாவினை ஒட்டி, சிறு க  ைத ப் போட்டி, தமிழ்மன்றங்கள், பாடசாலை மாணவர்களுக்கிடையே ந  ைட பெறும் நாடகப்போட்டி என்பன அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன.
விழாவின்போது இலக்கியக்கருத்தரங்கு, கவியரங்கு, பிரதேச எழுத்தாளர்களைப் பாராட்டும் வைபவம் என்பன நடைபெற உள்ளன.
சிவராத்திரி விழா
மகா சிவராத்திரி விழாவை மு ன் னிட்டு புத்தளம் இந்து இளைஞர் ம ன் றம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை மார்ச் மாதம் 10ம் திகதி சிறப்பாக நடத்தியது.
இவ்வைபவத்திற்கு இந் து ச ம ய த் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா அவர்கள் பிரதம அதிதி யாகக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த் தினார். திருமதி சுலோசனா பாலசுப்பிர மணியம் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி யும் இடம்பெற்றது.
புத்தளம் பிரதேச தமிழ்ப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு. வீ. சண்முகவேல் செயலாளர் திரு. கனக சபை ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சான்றே{ர் மணம் புண்பட நட
30 ----۔

Lost 1994
சுவாமி விவேகானந்தர் மோட்டார் பவனி
சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ பேருரை நூற்றாண்டினை ஒட்டி கொழும்பு விவேகானந்த சபை ஏற்பாடு செய்திருந்த விவேகானந்தரின் உருவச் சிலை தாங்கிய மோட்டார் பவனி மே மாதம் 29ம் திகதி காலை சபை வாசலிலிருந்து ஆரம்ப Lost 681 gi,
கொழும்பின் பிரபல வீதிகளூடாக இடம்பெற்ற இப்பவனி அன்று ம தி ய வேளையில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் வாயிலை வந்தடைந்தது.
கொழும்பின் இந்துசமய அ  ைம ப் பு களைச் சார்ந்த உறுப்பினர்கள் பெருந் தொகையானோர் இவ்பவனியிற் கலந்து கொண்டனர்.
இந்துசமய இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இரத பவனி வர
எட்டாவது தமிழாராய்ச்சி மாநாடு
எட்டாவது அனைத்துலகத் தமி ழாராய்ச்சி மாநாடு 1995ம் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் 5ம் திகதி வரை தமிழ் நாடு தஞ்சாவூரில் நடை பெறவுள்ளது. இம் மா நா ட் டி ற் கலந்துகொள்ள எழுபதுக்கும் மேற் பட்ட இலங்கை அறிஞர்கள் அழைக் பட்டுள்ளனர்.
இம் மாநாட்டின் ஆய்வுக் கட்டு ரைகள் படிக்க விரும்புவோர் பேராசி ரியர் டாக்டர் எஸ். இராஜாராம் தலைவர் மொழியியற் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 613005, தமிழ் நாடு எ ன் ற விலாசத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
ந்தால் அதுவே பிரம்ம சாபம்,

Page 33
gif 1994
வேற்பு நிகழ்ச்சி காப்புறுதிக் கூட்டுத் தாபன வாயிலில் இடம் பெற்றது. இவ் வைபவத்தில் இர (ா ஜா ங் க அமைச்சர் பி. பி. தேவராஜ் அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன், பணிப்பாளர் திரு, க. சண்முகலிங்கம், உதவிப் பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்தவர்.
அமரத்துவம்
கடந்த ஆண்டு பக்திப்பெருவிழாவில் முறையே ஞானசிரோன்மணி, சிவநெறிச் செம்மல் ஆகிய விருதுகளைப் பெற் ற கு, குருசாமி, ம. திருப்பதியாப்பிள்னை ஆகியோர் அண்மையில் அமரத்துவமடைந் தனர்.
இம்முறை ஜசன் மாதம் 11ம் திகதி #ம்பலப்பிட்டி கதிரேசன் 10ண்டபத்த்ல் நடைபெற்ற பக்திப்பெருவிழாவில், இவ் விருவருக்கும், வாரியார் சு வா மி கள், அமரர் வி. என். சிவராஜா ஆகியோருக் கும் இரண்டு நிமிட நேரம் மெளன அஞ் சவி செலுத்தப்பட்டது.
புதிய கட்டிடம்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கான கால்கோள் விழா ஜூன் மாதம் 10ம் திகதி காலை தமிழ்ச் சங்க வளவில் நடைபெற்றது.
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் கொழும்பு மாநகர முதல்வர் க. கணேச லிங்கம், மொரீசியஸ் நாட்டின் இலங்கைத் தூதுவர் தெ. ஈஸ்வரன் ஆகியோர் இந் நிகழ்ச்சியிற் கலந்து சிறப்பித்தனர்.
ஈழம் தந்த நாவலர்
பேராசிரியர் பொ. பூ லே T சிங் கம் அவர்கள் எழுதிய 'ஈழம் தந்த நாவலர்' " என்ற நூலின் வெளியீடு ஏப்ரல் 10ம்
பக்குவம் அடைந்தோர் மனம், உலக
3

கோபுரம்
திகதி அகில இலங்கை இந்து மாமன்ற புதிய கட்டிட மண்டபத்தில் நடைபெற் ، [jتHO
இவ் வைபவத்திற்கு இராஜாங்க அமை சர் பி. பி. தேவராஜ், பிரதம அதிதியாகச் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்துமாமன்றத்தின் பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா தலைமை வகித்தார். முன்னாள் எம். பி. யான திரு. மு. சிவ சிதம்பரம், வீரகேசரி பி ர த ம ஆசிரியர் திரு. ஆ. சிவநேசச் செல்வன், இந் து மாமன்றச் செயலாளர் திரு. க. நீலகண் டன், வித்துவான் க. ந. வேலன், தேசிய கல்வி நிறுவகப் பிர தி ப் பணிப்பாளர் திரு. கு. சோமசுந்தரம், புலவர் ஈழத்து சிவானந்தன், 'தினகரன் பிரதம ஆசிரியர் திரு ஆர். சிவகுருநாதன், கொழும்பு விவேகானந்த சபைத் தலைவர். டாக்டர், க, வேலாயுத பிள்ளை ஆகியோரும் உரை நிகழ்த்தினர். நூலாசிரியர் பொ. பூலோக சிங்கம் அவர்கள் பதிலுரை வழங்கினார்.
தெமட்டகொடையில் அறநெறிப்
(TL3FT606)
கொழும்பு தெமட்டக்கொடை விபுலா நந்த மகா வித்தியாலயத்தில் அறநெறிப் பாடசாலை ஒன்று மார்ச் மாதம் 27ம் திகதி புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ், கொழுப்பு மாநகர முதல்வர் கே. கணேசலிங்கம், மேல்மாகாண சபை உறுப் பினர் திரு, ஆர். யோகராஜன், இராம கிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்ம கனாநந்தா ஆகியோர் இவ்வைபவத்திற் கலந்துகொண்டனர்.
மாளிகாவத்தை இந்துப் பொதுப்பணி மன்றம் இதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
த் துன்பங்களால் கொந்தளிப்பதில்லை.
1.

Page 34
(శిష్(Tutb -EE
பொல்கஹாவெல அறநெறிப்
FT696)
பொல்கஹாவெல பூரீசித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் அநுசரணையில் நடத்தப்பட்டுவரும் அறநெறிப் பாட சாலை தனது முதலாவது ஆண்டு பூர்த்தி யினை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது,
இது தொடர்பான கருத்தரங்கொன்று பொல்கஹாவெலை அல் இர்பான் முஸ்லீம் வித்தியாலய அதிபர் எம். சீ. எம். நளிர் அவர்கள் தலைமையில் மே மாதத்தில் நடைபெற்றது.
பொல்கஹாவெல பூரீ சித்தி விநாயகர் ஆலய குருக்கள் சிவபூg கலைச் செல்வன்
மஹாபி பஞ்சாமிர்தம், பால், இளநீர் முதலி அபிஷேகம் செய்து ஸ்நபனாபிஷேகம் செ பின் ஆசார்ய பூஜை நிகழும். சிவாசா பூலங்கள் வழங்கி நமஸ்கரித்து அவர்களது கும்பாபிஷேகம் நிறைவுபெறும். இரவு க நிகழும்.
LDST L6) st கும்பாபிஷேகம் நிகழ்ந்த நாளிலிருந்து மண்டலத்துக்கு விசேஷ அபிஷேக ஆராத சங்கள் கொண்டது) ஒரு மண்டலம், ஒ நாற்பத்தைந்து நாட்களே மண்டலாபிே
சங்காபி
நாற்பத்தைந்தாம் நாள் சங்கா பிவே னேங்களுள் சங்கு மிகத் தூய்மையானது. தத்திற்கு நிகராகிறது. நூற்றெட்டுச் சங் ஆயிரத்தெட்டுச் சங்கினாலும் (அஷ்டே சங்கா பிஷேகம் நிகழும்.
பிரதான கும்பத்தில் வலம்புரிச் சங் உபயோகிக்கப்படும்.
தெய்வம் உன்னைக் காபே
- 32

3 ஆணி 1994
அவர்கள் இதற்கான ஒழுங்குகளை மேற் கொண்டிருந்தார்,
பிரதேச இந்து மக்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சி யில் அறநெறிப்பாடசாலைப் பொறுப் பாளர் திரு. ஐ. அழகிரிசாமி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். பதுளையில் அறநெறிப் பாடசாலை
பதுளை ரொக்ஹில் பூரீ காளியம்மன் கோயில் பரிபாலனசபையின் அநுசரணை யுடன் பதுளை இந்து மகளிர் பேரவையி னால் புதிய அறநெறிப்பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. முறையே ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் பதுளை சரஸ்வதி கனிஷ்ட பாடசாலையில் இவ்வகுப்புகள்
நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
ஷேகம்
ய சகல பொருட்களாலும் மூலமூர்த்திக்கு ய்வது மஹாபிஷேகம் எனப்படும். இதன் fயார்களை உபசரித்து தகSணை தாம் ஆசி பெறுவதுடன் பிரதிஷ்டா மஹா ல்யாண உற்சவம், திருவூஞ்சல் என்பன
பிஷேகம்
நாற்பத்தைந்து நாட்கள் கொண்ட ஒரு நனைகள் நிகழும் , திரிபட்சம் (மூன்று பட் ஒரு பட்சம் பதினைந்து நா ள். எனவே ஷேகத்திற்கு உரிய காலமாகும்.
ஷேகம்
#கம் நடைபெறும், பூஜைக்குரிய உபகர
சங்கில் விடப்படும் நீர் புண்ணிய தீர்த் கினாலும் (அஷ்டோத்தர சத சங்கம்), .ாத் தர சஹஸ்ர சங்கம்) வசதிக்கேற்பச்
தம் ஏனையவற்றிற்கு இடம்புரிச் சங்கும்
ாழுதும் கைவிடுவதில்லை;

Page 35
இலங்கையின் இந்
இலங்கையின் இந்துக் கோயில்களின் வ கொண்ட நூலாக வெளியிடுவதற்கான கொண்டுள்ளது.
இந்நூலின் முதலாவது பாகம் தற்போது களின் வரலாறுகளும், களுதேவாலயக் கி பற்றிய விளக்கமும் இடம்பெற்றுள்ளன. ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படு
நூலின் இரண்டாவது பாகத்தில் கீழ்வரு பெறவுள்ளன
திருக்கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் திருக்கோவில் சித்திரவேலாயுது மண்டூர் கந்தசுவாமி கோயில் பழுகாமம் திரெளபதி அம்மன் நல்லூர் கயிலாய பிள்ளையாr வண்ணார்ப்பண்ணை வைத்தீவி இணுவில் பரராஜசேகரப் பிள் வற்றாப்பளை கண்ணகியம்மன் 10. ஒட்டுச் சுட்டான் தான் தோன் 11. பூரீ வல்லிபுர ஆழ்வார் கோயி 12. நயினை நாகபூஷணி அம்மன் 13. கண்டி கட்டுக்கலை செல்வவி 14. கப்பித்தாவத்தை சிவன், பிள் 15. சம்மாங்கோடு மாணிக்க விநாய 16. திருகோணமலை சிவன் கோய 17. உடப்பு திரெளபதி அம்மன் (
இக்கோயில்கள் பற்றி எழுத விரும்புவே கின்றன.
கோயில்கள் வரலாறு பற்றிய கட்( ஆவணங்கள், இலக்கியக்குறிப்புகள், தொல்ே ஏடுகள் என்பவற்றை ஆதாரமாகக் கொன் தல வரலாறு, ஐதீகங்கள், நித்திய, நை முறை, கட்டிட, சிற்ப, ஒவிய அமைப்புகள் திணைக்களம் நியமிக்கும் அறிஞர் குழு டரிசீலிக்கப்படும், அத்துடன் அறிஞர் குழு எழுதப்படவும் வேண்டும்.
சுய முகவரி எழுதப்பட்ட தபாலுறை பெற்றுக்கொள்க.
பணிப் இந்துசமய, கலாசார அ 9 íib Lo: Lq , . ʻé51Til 21, வொக்ஷோல் வி
ir saba
3

துக் கோயில்கள்
ரலாறுகளைத் தொகுத்து பல பாகங்கள் நடவடிக்கைகளைத் திணைக்களம் மேற்
அச்சில் உள்ளது. இதில் ஒன்பது ஆலயங் கல்வெட்டு, கோவிற் கல்வெட்டு என்பன * மார் 200 பக்கங்களையுடைய இந்நூல் |ம்.
கும் ஆலயங்களின் வரலாறுகள் இடம்
5 சுவாமி கோயில்
கோயில்
ர் கோயில் ஸ்வரர் கோயில் r6zo6mrul ft rio G3a5rTuĥai) ன் கோயில் ரீயீசுவரர் கோயில்
பில்
கோயில் நாயகர் கோயில் ாளையார் கோயில்கள். பகர் கோயில்
பில்
கோயில் பாரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படு
டுரைகள், பெளராணிக மரபுகள், அரச பொருட்சின்னங்கள், நடைமுறை வழமைகள், ாடு ஆய்வு நோக்கில் எழுதப்பட வேண்டும். மித்திய கருமங்கள், விழாக்கள், வழிபாட்டு
போன்றவை விளக்கப்படுதல் வேண்டும். வினால் விண்ணப்பதாரரின் தகைமைகள் வின் வழிகாட்டலுக்கமைய கட்டுரைகள்
பினை அனுப்பி மேலதிக விபரங்களைப்
L1/T6T ff லுவல்கள் திணைக்களம், புறுதி இல்லம்’ தி, - கொழும்பு - 02.
kk .aa. sux-AEå:3*'''
3 -

Page 36
ஆன்மீகம் -
சுவாமி சின்
ப0 னிதர்கள் ஒய மாட்டார்கள், அறிந்து கொள்ளாத வரைக்கும் அறிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும் என் பது தான் மனிதனை என்றென்றைக்கும் படுத்தி வந்திருக்கும் பசிகளுள் மிகக் கடு மையானது.
வரலாற்றின் - உதயந்தொட்டே இப் படித்தான். மனிதன் அக உலகம், புற உலகம், இவற்றை அறிந்து கொள்ளவும், ஆராயவும், உண்மைகளை மேன் மேலும் கண்டு பிடிக்கவும் விழைந்திருக்கிறான்.
நமது புலன்களால் உ ண ர ப் படு ம் பொருள்களும் உயிர்களும் அடங்கிய புற உலகத்தைப் பற்றிய அறிவுத் தொகுப்பே விஞ்ஞானம்; அகவுலகத்தைப் பற்றி ய ஆராய்ச்சிகளும், கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகளும் வாழ்க்கைச் சாத்திரமாகத் தொகுக்கப்படும் போ து அது தத்துவம் ஆகிறது.
எண்ணிலடங்காத வித ம் விதமான பொருள்களையும் பிராணிகளையும் கண்டு பிடித்து ஏற்றமடைந்த விஞ்ஞா ன ம் , பொருளின் தன்மை என்ன என்பதை இறுதி வரை பகுத்து ஆராயப் புகுந்தது, பதினெட்டாம் நூற்றாண்டிலே, t_J{{5 tử பொருளின் மேற்கொண்டு பகுக்க முடியாத பகுதி அணுதான் என்றும், உலகத்திலே தொண் ணு ற் றொ ன் பது வெவ்வேறு தாதுக்கள் இருக்கின்றன என்றும் அறிவித் g5 Trray, 67.
இருபதாம் நூற்றாண்டிலோ, அணு வையும் பகுக்க முடியும் என்றும், இறுதி யில் அந்த அணுவுக்குள் இருப்பது சக்தி யைத் தவிர வேறல்ல என்றும் கண்டுபிடித் தார்கள். ஆகக் கடைசியில், அணுவின் உள்ளீட்டைப் பற்றிய முடிவான ஆராய்ச் சிப்படி, முன்பு தொண்ணுரற்றொன்பதாக இருந்த தாதுக்கள் இப்போது மூ ன் றே மூன்றாக எ ல க்ட் ரா ன், ப்ரோடான், நியூட்ரானாகக் குறுகிவிட்டன.
弱
பக்கங்களின் அடியிலுள்ள அரு கங்காதரானந்தா அவ
34

விஞ்ஞானம் மயானந்தர்
எவ்வாறு அறிவுத் தாகம் கொண்ட விஞ்ஞானம் புற உலகப் பொருள்களின் இயல்பையும் நடத்தையையும் கண்டுபிடிப் பதில் ஆழ்ந்திருக்கிறதோ, அது போ ல் அக உலகத்தையும் அதிலுள்ளவற்றின் நடத்தையையும் கண்டுபிடிக்கத் துவக்க முதல்முயன்று வந்திருக்கிறது தத்துவம். ஆகவே, தத்துவ ஞானிகள் வெறும் பகல் கனவு காண்பவர்கள் எ ன் றே (ா, கையாலாகாக் கவிஞர்கள் என்றோ, ஏட் டுச் சுரைக்காய்கள் என்றோ எவன் ஏசி னாலும் அவன் தனது அறியாமையையே அம்பலப்படுத்தியவன் ஆகிறான்.
கவைக்குதவாத தத்துவம் என்றும் , வாழ்க்கைக்கும் அ த ற் கு ம் நேரடித் தொடர்பு இல்லையென்றும் சுமத்தப்படும் குற்றச் சாட்டு ஒரளவுக்கு மேலை நாட் டாருடைய தத்துவத்துக்குப் பொருந்தக் கூடும். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை லட்சிய வாழ்க்கையைப் பற்றி ய ஒரு கற்பனை தான் தத்துவம், மேலை நாட்டுத் தத்துவம், பொருத்தமான சூழ் நிலை ஒருகால் வா ய் க் க நேர்ந்தால், அப்படி வாய்க்கும் பொழுது வாழ்க்கை முறையே இப்படி இப்படி அ  ைமி க் க வேண்டும் என்று ஒவியம் தீட்டுவதோடு திருப்தியுறுகிறது.
வெள்ளைக்காரத்தத்துவ அ றி ஞ ர் சோபாவிலே சாய்ந்துகொண்டு, தொலை விலுள்ள ஒரு படத்தைச் சுட்டிக் காட்டு கிறார். எட்டத்தில் இருக்கும் அந்த லட்சிய வா ழ் க்  ைக மனிதனுக்கு என்றைக்கே னும் கிட்டும், என்ற நம்பிக்கை அவருக்கே இல்லை. அவரது கற்பனையின் கவர்ச்சி யைப் பிறர் கண்டு ரசித்தாலே அவருக்கும் போதும். நேர்மாறாக நிற்கின்றன இந்து மத தத்துவத்தின் ஆறு சமயங்களும், இவற்றில் எதுவுமே வெறும் லட்சியத்தை வர்ணிப்பதோடு நின்று விடவில்லை. வாழ் வியல் அம்சங்களையும் பிறவியின் தாத் பரியத்தையும் அவை உணர்த்துகின்றன.
ள் வசனங்கள் பூஜர்மத் சுவாமி ர்கள் அருளியவை:
sing

Page 37
பக்திப்பெரு
பக்திப்பெருவிழாவில் கெளரவம் யினர், இராஜாங்க அமைச்சர் பி. நந்தா ஆகியோருடன் காணப்படுகின்
பக்திப்பெருவிழாவில், மட்டக் கல்லூரி மாணவியர் வழங்கிய க பார்வையாளர்களில் ஒருபகுதியின
அட்டைப்படம் : பேலூர், கேசவ ஆலயத்திலுள்ள கிருஷ்ண 12ம் நூற்றாண்டுச் சிற்பம். (இண்டியன் மைதோலோஜி எனும் நூலிலி படங்கள் உதவி : எஸ். மயூரன்
 
 

நவிழா - '94 -
பெற்ற அருளாளர்களில் ஒரு பகுதி பி. தேவராஜ், சுவாமி ஆத்மகனா ன்றனர்.
களப்பு விபுலாநந்த இசைநடனக் லை நிகழ்ச்சியின் ஒரு காட்சியையும், ரையும் படத்திற் காணலாம்.
னின் வடிவினைக் குறிக்கும்
ருந்து)

Page 38
விற்ப னைக்குள்ள
தமிழ்நாட்டு வரலாறு
ਜੰਗ - ।।।। தமிழ்நாட்டு வரலாறு
சங்க காலம் = அரசியல் கல்குதிரை - 10
(தற்கால உலகச் சிறுகதைக் திருவாசக ஆராய்ச்சியுரை
(சு அருளம்பலவனார்) நேற்றிருந்தோ ம் அந்த வீட்டினி (நாவல் - செ. யோகநாதன் இந்திய விஞ்ஞான வரலாற்றுச்
(பி. திருஞானசம்பந்தன்) சோழர்கள் - பாகம் 1
(கே. ஏ. நீலகண்டசாஸ்தி சோழர்கள் - பாகம் 2
(கே. ஏ. நீலகண்டசாஸ்திரி யாழ்ப்பான சரித்திரம்
(முதலியார் செ இராசநா தமிழர் நாட்டுப்பாடல்கள்
(நா. வானமாமலை) தமிழக சுற்றுலாத்தலங்கள்
(அ. ராம்கோபால் தமிழ்ச்சுருக்கெழுத்து அகராதி
(தமிழ்நாட்டுப்பாடநூல் நீ
عتي
மனோன் பணியம் - (விளக்கவுரை
(பேராசிரியர். சுந்தரம்பிள்
எரிநெருப்பில் ਕ) ਕੋਲ இல் (நாவல் - எஸ். அகஸ்தியர்,
பஞ்சம் பசியும்
( T - ।
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்ந்துை
கள வெளியீடுகள் என்பன தினை விற்பனைக்குள்ளன. காரியாலய ந
பிற்பகல் 3 மணிவரை இவற்றைப்
Printed by, RAJAN PRINTERS, Co
 
 

நூல்கள்
i
வே 扩J
சுருக்கம்
F)
பசும்
றுவன வெளியீடு)
புடன்)
கைா)
13:3} +1}
卤·
து.
ற சார்ந்த நூல்கள், ாக்கள விற்பனை நிலையத்தில் ாட்களில் காலை 9 மணிமுதல் பெற்றுக்கொள்ளலாம்.
ES 8 7 8 0 0
|DITT ENCO — 02. T. P.
8 OOO
1 OOOO
1 62 , 50
19 OOO
18O, OO
8O, O.O.
2OOOO
2O.O.O.
48.5C)
2OOOO
87, 50
112.5 O
W0. OO
87.50
75 OO
8ൽ ഝൂ',