கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1988.09

Page 1

தெல்லியூர் செ. நடராஜன்
சொக்கன்
க, சச்சிதானந்தம்
கோகிலா மகேந்திரன்
அன்புமணி
வரதர்
எஸ். இராஜன்
தமிழ்த் தொழிலாளி
மற்றும் பலரின் படைப்புகள்
வை தமிழ்ச் சங்கம்
விலை ரூபா. 7-00

Page 2

புத்தெழில் சிறப்பாக வெளிவர வாழ்த்துகிறேம்
ஆண்டு 4 முதல் A/L வகுப்புவரை தரமான கல்வியூட்டும் தன்னிகரற்ற நிறுவனம்

Page 3
O “சாயி ரெலி ரேப்" O
அச்சுவேலி
பாடல்பதிவிலும் வீடியோ படப்பிடிப்பிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுக் கொண்டதும்
மற்றும் அன்பளிப்பு செய்வதற்கு தேவையான அன்பளிப்புப் பொருட்களும்
கேக் தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்வதற்கும்
மற்றும்
மங்கள நிகழ்ச்சிகளை சிறப்பிக்கும்
மணப்பந்தல்களை அமைத்துக் கொள்வதற்கும்
நாடவேண்டிய இடம்
“சாயி ரெலி ரேப்” பஸ்நிலையம் முன்பாக
அச்சுவேலி

இந்த இதழில் .
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள் ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற் றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் பிதிய உயிர் தருவோணுகிருன்' எனத் தன் உள்ளக் கிடக்கையைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆலோ சனையாகவும் அறிவுரையாகவும் வெளியிட்டதுடன் நிற்காமல், தானே வழிகாட்டியாகவும் விளங்கிய தமிழ் மறுமலர்ச்சியின் தந்தை மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மாதமாகிய இம் மாதத்தில் ‘புத்தெழில்' தோன்றுவது பொருத்தமானதென நினைக்கின்ருேம்.
பாரதியாரின் கவித்துவத்தை முதன் முதலில் இனங்கண்ட தமிழறிஞர், "யாழ்நூல் தந்த விபுலானந்தர் பிறந்த மட்டக் களப்பிலே பண்டைத் தமிழ்ச் சொற்கள் இன்றும் மக்களின் நாவிலும் பாவிலும் நடமாடி வருவதை ஆதாரத்துடன் கூறு கின்ருர், எழுத்தாளரும் கழுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதி பருமாகிய 'அன்புமணி', பல்வேறு புனைபெயர்களுள் மறைந்து நின்று, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப்பணி புரிந்துவரும் தெல்லியூர் செ. நடராஜா அவர்கள் தனது எழுத் துலக அனுபவங்களைச் 'சொல்லேருழவர்' மூலம் விபரிக்கின்ருர்,
ஈழத்தின் மிகக் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான பண்டிதர் க. சச்சிதானந்தன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாள ராகக் கடமையாற்றி ஒய்வு பெற்றவர்; சிந்தனை வளமும் புல மையும் மிக்கவர். 'கா ஒதிருந்தார்’ என்பது கவிதையிலே அவர் சொல்லும் கதை.
சிறுகதை, கவிதை, நாடகம், நாவல் போன்ற பல துறை களிலே தன் கைவண்ணத்தைக் காட்டிவரும் 'சொக்கன்' தரும் சிறுகதை 'கனவுகள் கலையட்டும்' ஈழத்துப் பெண் எழுத்தா ளர்களுட் குறிப்பிடத்தக்க ஒருவர். 'கோகிலா “மகேந்திரன்' கடந்த சில ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழலைப் பின்னணியாக்கி 'நம்பிக்கைச் சிறகுள்ள பூச்சிகள்' என்ற சிறு கதையை எழுதியுள்ளார். காலத்துக்குக் காலம் பல்வேறு சஞ்
3

Page 4
சிகைகளை நடத்திப் புதுமைகள் செய்த "வரதர்' பல ஆண்டு களுக்கு முன்னர் எழுதிய 'வெறி'யை இக்கால வாசகர்களுக் காக மீண்டும் வெளியிடுகின்ருேம்.
புதிய எழுத்தாளர்களுக்கும் 'புத்தெழில் களமமைக்க முன் வந்துள்ளது. இந்த இதழில் ‘பைத்தியங்கள் வாழட்டும்" கதையை எழுதிய 'எஸ். எஸ். எஸ். ராஜா' யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சித்த வைத்தியத் துறையைச் சேர்ந்தவர். இக் கால இளைஞர்களுடைய உணர்வோட்டத்தின் திசையை இக் கதையிற் காணலாம். இவை அனைத்தையும் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்,
- ஆசிரியர் -
தேவி அரிசி ஆலை Thevi Rice Mills
T. W. R அரிசி மாவு T. W. R. நாட்டரிசி, தீட்டல் பச்சை சேரல் விற்பனையாளரும், விநியோகஸ்தரும்
புதிய விநியோகம் நவீன முறையில் ஸ்ரீம் போயிலறில் தயாரிக்கப்பட்ட
முத்தரிசி தேவி கிறைண்டிங் மில்
ச க3) விதமான தானிய வகைகளும் அரைத்துக் கொடுக்கப்படும் குறை இருந்தால் எம்மிடம் கூறுங்கள்
நிறை இருந்தால் பிறரிடம் கூறுங்கள்
4.

புத்தெழில் என்னை நன்ரு ய் இறைவன் படைத்தனன் தன்னை நன்ருய்த் தமிழ் செய்புமாறே - திருமூலர்.
எழில்: 1 புரட்டாதி: 1988 துளிர்: 1
புத்துலகம் கண்போம்
புது வாழ்வு காணத் துடிக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்க ளின் பொற்கரங்களிலே 'புத்தெழில்’ இதழைத் தவழ விடுவ திற் பெருமகழ்வடைகின்ருேம்.
மொழியாற் பெயரும் புகழும் பெற்ற பழம் பெரும் இனங் களுட் தனிச் சிறப்பு வாய்ந்த இனம் தமிழ் இனம். மொழியே தமிழினத்தின் விழி; அதுவே வாழ்க்கையின் வழி.
தமிழ் மட்டும் தெரிந்தவனுக்கு அணுவைப் பிளக்கும் நுணுக் கம் தெரியாமலிருக்கலாம்; விண்ணிற் பறந்து வேற்றுக் கிரகங் களிற் கால் பதிக்கும் விந்தை தெரியாமலிருக்கலாம்.
ஆணுல், வையத்துள் வாழ்வாங்கு வாழ அவனல் முடியும்"
தமிழின் உயிரிலக்கியங்களும் சமய, தத்துவப் பனுவல்களும் அத்தகைய வாழ்க்கைக்கு அடிகோலும் சால்பின. அவை அன் பின் பிறப்பிடம்; அறத்தின் நிலைக்களம்; வீரத்தின் விளைநிலம்; ஈரத்தின் ஊற்றுக்கண்; பக்தியின் வதிவிடம்; தியாகத்தின் உறைவிடம்.
அவை உணர்ச்சிக் களஞ்சியங்கள் மட்டுமல்ல; உண்மையின் ஒளி விளக்குகளுமாகும்.
காலத்தின் கோலத்தினல், சொந்த நாட்டானல் ஒதுக்கப் பட்டு, வந்த நாட்டானல் வஞ்சிக்கப்பட்டு, தமக்குள் தாமே முரண்பட்டு, தாழ்வுற்றுப் பகைமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுத் தடுமாறி நிற்கும் ஈழத் தமிழினம் மீண்டும் எழுச்சி யும் ஏற்றமும் எழிலும் புகழும் பெறவேண்டுமெனில் இலக்கி யத்திற் காணப்படும் இவ்வுயர் பண்புகளெல்லாம் அவர்களின் ஊனேடும் உயிரோடும், உதிரத்தோடும், உணர்வோடும் கலந்து செறிந்து துலங்க வேண்டும்.
நல்வாழ்வின் வித்துக்களாகிய அம் முத்துக்களை இனிய தமி ழில், இலகு நடையில், புதிய வடிவில் தரும் புனிதப் பணியே. **புத்தெழில்' மேற்கொண்டுள்ள புதுமைப் பணியாகும். இப் பணியில் எம்முடன் இணைந்து புத்துலகை நோக்கிப் புறப்படு மாறு அனைத்துத் தமிவ் மக்களையும் அன்புடன் அழைக்கின்றேம்.
5

Page 5
புத்தெழில் புகழ் பரப்ப வாழ்த்துகின்றேம்
الهلا ہے A
S go
プ。
S
குகன் இன்ஸ்ரிரியூட் அச்சுவேலி
இடைக்காடு
A : 1. கலை, வர்த்தக விஞ்ஞான
வகுப்புகளுக்கும் O/L வகுப்புகளுக்கும் சிறந்த நிறுவனம்

மகாகவி பாரதி காலமி தந்த கவிஞர்,
மக்கள் கவிஞர், கவிதை உலகின் விடிவெள்ளி. கற்றேர் மட்டுமன்றி பாமரரும் படித்துணரும் விதத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய முதற் கவிஞர் - செப்ரெம்பர் மாதத்தில் முதன் முதலாக வெளிவரும் ‘புத் தெழில் பாரதியாரின் “தமிழ்மொழி வாழ்த்தை” வெளியிடுவதில் மகிழ் வடைகிறது,
தமிழ்மொழி வாழ்த்து
1) வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே!
2) வான மளந்தனைத்தும் அளந்திடும்
வான்மொழி வாழியவே!
3) ஏழ்கடல் வைப்பினுந் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
4) எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
5) சூழ் கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
6) தொல்லை வினைதரு தொல்லையகன்று
சுடர்க தமிழ் நாடே!
7) வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
8) வானம் அறிந்த தனத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
- பாரதியார் .

Page 6
விமர்சனம்
புத்தெழிலில் இடம் பெறும் ஆக்கங்கள் பற்றியும் புத் திெழில் பற்றியும் வாசகர்களிடமிருந்து விமர்சன மி எதிர்பார்க்கின் ருேம். சிறந்த முதல் மூன்று விமர்சனங்களுக்கும் 1-வது 1 வருட சந்தா 2-வது அரை வருட சந்தா
3-வது 3 மாத சந்தா சந்தாவாக இதழ்கள் இலவசம் ஏனையவற்றுள் தரமானவை பிரசுரிக்கப்படும் அனுப்ப வேண்டிய முகவரி
மு. திருஞானசேகரம்
ஆசிரியர் புத்தெழில் அறிவொளி வீதி
புத்தூர்
விரைவில் வெளிவருகிறது.
செந்தமிழ் வளர்த்த
செம்மல்கள்
ஆசிரியர் பல்கலைப் புலவர் க. சி. குலரத்தினம் *சென்ற நூற்ருண்டில் எங்கள் நாட்டில் வாழ்ந்த பெரியார்கள் பலர் எந்த அரசியல் போக்கிலும் ஈடுபடாது தங்கள் தாய்மொழியாக தமிழ் பலவகையாலும் வியாபகமுற்று நின்று நிலவ வேண்டும் என்று அரும்பாடுபட்டார்கள். அவர்கள் வரலாற்றைச் செய்யும் நூலே செந் தமிழ் வளர்த்த செம்மல்கள்.
வெளியிடுபவர்கள் சுடிரொளி வெளியீட்டுக்கழகம்
யாழ்ப்பாணம்
8

எழுத்துலக வாழ்க்கை
சொல்லேருழவர்
நிலத்தைப் பண்படுத்தி, உரமிட்டு, விதை விதைத்து, விளைந்தபின் அறுவடை செய்து மக்களுக்கு உணவளித்து வாழ் பவர் உழவர். “உழுதுண்டு வாழ் வாரே வாழ்வார்' என்ற வள் ளுவப் பெருந்தகையின் கூற்று எக்காலத்துக்கும் பொருந்தும் சால்புடையது.
உண்டி வழங்கும் சக்தி படை த்த உழவர்களை மட்டுமன்றி வேறு இருவகை உழவர்களையும் பற் மி வள்ளுவர் கூறியுள்ளார். ‘வில்
கொள்ளாதொழிக"என்று பூமன் னருக்கு அன்று எழுத்துலக மன் னன் தெரூட்டியுள்ளான்.
'சொல்லேர் உழவர்' என்ன, மாபெரும் சக்தி படைத் தவர்களா? அவர்களால் என்ன செய்ய முடியும்? - இப்படிக் கேட் பவர் இவ்வுலகில் நல்வாழ்வு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந் ததில்லை. இப்படிக் கேட்கி முனைந் த வர் தம்முனை பே முறிந்து முடிந்தும் விட்டனர் இருப்போ ரும் தம் முடிவைத் தாமே தேடி யும் விட்டனர். முடிசூடியவர்
லேர் உழவர்" - ஒரு வகை; "சொல்லேர் உழவர்?? - இன் முதல் மண்ணை ஆண்டவர் யாவ னெரு வகை. ரும் அந்தச் சொல்லேர் உழவரு டன் தாக்குப் பிடித்து வாழ வாழ்க்கைக்கு வழிகாட்டி, வில்லை. அவர்கள் அழிந்தது மட் *வையத்துள் வாழ்வாங்கு வாழ" டுமன்று. அவர்களைப் பற்றிய இலக்கணம் வகு சரித்திரக் குறி த்த திருவள்ளு ப்புகளிலும்இச் வர், அன்றைய தெல்லியூர் செ. நடராசா சொல்லே கால அரசியலில் வர் திறனையே
அரசனுக்கு அவசியப்பட்டதைத் தெரிந்து கூறுகையில் “மாணுப் பகை' பற்றித் தெருட்டியவி டத்து ஆண்டுள்ள அழகிய சொற் ருெடர் "சொல்லேர் உழவர்' என்பது
"பலமும் வீரமும் பொருந் திய வில்லாளியின் பகைமையை நீ கொண்டாலும் சொல்லை டிராக உடைய உழவரோடு பகை
காணக் கூடியதாகவுமுள்ளது.
சொல்லேருழவர் சக்திக்கு ஈடாக இன்றுள்ள எந்தச் சக்தி யையும் ஒப்பிட்டுக் கூற முடியாது அணுச்சக்தி கூட அதற்கீடாக (Լpւգ-Այո ցy:
"செல்லேர் உழவர்' நுணுக்
கமான கனவுகளையெல்லாம் எழு த்திலே வடிப்பர். மென்மையான

Page 7
இசைகளை எழுப்பிக் கவிதை களைப் பாடுவர் உலகத்தின் அடித் தளத்தையே அசைத்து - சமுதா யத்தையே உருமாற்றி சமூகத் துறை' ல், அரசியற் துறையில், பொருளாதாரத் துறையில், எந் திரத்துறையில், மின் துறையில் இன்னும் எல்லாத் துறைகளிலும் அதளபாதாளத்துள் வீழ் ந் து கிடக்கும் உலகைத் தட்டியெ ழுப்பி, தமது எழுத்தின் சக்தி யால் மகோன்னத நிலை க் கு கொண்டுவருதற்கு இந்தச் சொல் லேருழவரால்தான் முடி யும். உலக வரலாற்றிலே இந்தச் சொல்லேருழவர் சக் தி  ையப் பரக்கக் காணலாகும்.
*சொல்லேர் உழவர் பகை' வில்லேர் உழவர் பகையிலும் பார்க்கப் பயங்கரமானது ஆக் கவும் அழிக்கவும் சொல்லேர் உழ வர் தம் எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கொண்ட வரலாறுகள் அற்புதமானவை.
"வில்லேர் உழவர் பகைகொளி லும் கொள்ளற்க சொல்லேர் உழவர் படை' என்று வள்ளுவப் பெருந்தகை கூறிய எண்ணுற்றெழுபத்திரண் டாம் (872 குறள் எழுத்தையா ளும் சொல்லேர் உழவரின் வலி மையைத் தெருட்டியுள்ளமை அன்றைக்கு மட்டுமல்ல - இரண் டாயிரத்திற்கு மேற்பட நிலவி இன்றைக்கு மட்டுமல்ல - நாளைக் கும் அது சாலவே பொருந்தும் என்பது வெள்ளிடையாகும்.
அன்று 1933ல் தமிழ்மொ ழிப் பாடத்தில், எந்தமிழாசான்
10
பண்டிதமணி இளமுருகனர் இத் திருக்குறளை எடுத்து விளக்கிய போது மாணவப்பருவத்திருந்த எமக்கு ‘எழுத்துக்குரிய வலிமை இத்துணையா?" என்னும் வியப் பையேதான் தோற்றுவித்தது. சொல்லுக்குரிய வலிமை இத்து ணையா? என் நெஞ்சில் உரமேற் றியது. ஆசிரியமணியின் வழி காட்டலுடன் அன்று ஆரம்பித்த எழுத்து - எழுதுகோல் இன்றுந் தான் எழுதுகின்றது. ஒயவில்லை. எத்தனையோ இரும்புத் திரை களைக்கூட இப்பேன எதிர்த்து நிற்க, புதுப்புது வழிகளையும் கண் டறியவேண்டியும் வந்தது எழுத் துலகிலே அன்றுமுதல் எத்தனை யோ நண்பர்களையும் பகைவர் களையும் அழிப்பவர்களையும் ஆக்க உதவுபவர்களையும் சந்தித்துள் ளது சொந்த ஆக்கங்களை வெளிக் கொணர்ந்த வர் க ளே யும் பிற இடங்களில் எழுத்துக்கொள்ளை" அடித்தவர்களையும் சந்தித்துள் ளது. எனது ஆக்கங்ளை அதே பத்திரிகைகளில் தம் சொந்தப் பெயர்களில் பலமாதங்கள், ஆண் டுகள் கழித்து பிரசுரித்தவர்களை யும் பத்தரிகையாளர்களையும் கூட இனங்கண்டு தெருட்டியுமுள்ளது. 1949ல் எம்மால் ருே பத்திரிகை யில் வெளியிடப்பட்ட ஒருவிட யத்தை நூற்ருண்டு மலரொன்று முப்பதாண்டுகள் கழித்து அப்ப டியே பிரசுரித்தது மட்டுமல்லாது அதனை எழுதியவர் ஒரு பிரபல ஆக்கத்தார் என்றும் காட்டியுள் ளதையும் மறக்க முடியவில்லை. இன்று எழுத்துலகில் பிரகாசிக்
கும் நட்சத்திரங்கள் படியேறக்

கைகொடுத்துமுள்ளது. தாக்கிய வர் ளுக்கு - அப்படிப்படியேறிய வர்கள் தாம்மேலேறிய ஏணியை உதைத்துத்தள்ளியதையும் கண்டி ருக்கின்றது. ஆசிரியர், சமுதாய க்தோர், சமூகத்தொண்டர், அர சியலார், எழுத்துத்துறையினர், இந்நாட்டினர், பன்னுட்டினர் இப்படியாக பலரோடும் தொடர் புகளை ஏற்படுத்தியுள்ளது. தொட ர்புகள் நன்முறையிலும் இருந் தன - வன்முறையிலும் அமைந் தன. சேர்ந்துமுள்ளன - பிரிந் துமுள்ளன. பண்போடு பிரிந்தோ ருமுளர் - பண்பற்றுப் பிரிந்தோரு முளர் உநன்றியுடன் பிரிந்தோரு முளர் - நன்றி கெட்டலைந்தோரு tpளர்.
1933ல் ஆசிரிய மணி க் கு அளித்த வாக்குறுதி - அன்றே எம் அன்னைக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்காக, அர சாங்க தில் வகித்த உடர்பதவி யைக் கூட துச்சமென தூக்கியெ றிய ஒரு காலத்தில் வைத்தது. இதற்கு உடந்தையாக இருந்து ஆக்கமளித்தவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராக இரு ந்து சமீப காலத்தில் காலஞ் சென்ற திரு முத்துவேற்பிள்ளை, யூனியன் கல்லூரியின் எங்கள் அதிபராக இருந்துவரும் தெல்லி பூர் வாசியும் சமீபத்தில் காலமா னவருமான திரு. ஐ. பி. துரை ரத்தினம், கட்டுடை காலஞ் சென்ற ஆசிரியப்பெருந்தகையும் உறவுமுறையில் எமக்கு சகோத அனுமாகிய திரு. சண்முகதாசன் எமது மைத்துனராக மாமன்
வழிவந்த இலக்கிய, இலக்கண வித்துவான் ஆசிரியப் பெருந் தகை திரு. அ கார்த்திகேசு எமது பெரியதாயார் மகனும் ஆசிரியரும் சில ஆண்டுகளுக்கு முன் இயற்கையெய்தியவருமான திரு. சங்கரப்பிள்ளை கந்தையா எமது சிறியதாய்மார் திருமதி பரிமளம் வேலுப்பிள்ளை, திருமதி பொன்னம்மா தம்பு (இருவரும் ஆசிரியர்கள்), எமது வகுப்பாசிரி யராக இரு ந் து காலஞ்சென்ற திரு. அருமைநாயகம், வறுத்தலை விளான் ஆசிரியர் திரு சீவரத் தினம், அவர் மூலம் செய்தியறிந்த எங்கள் தமிழ்முனிவர் வித்துவான் கணேசையா, ஆசிரியமணி பண் டிதர் இளமுருகனுர், தங்கள் தாத்தா ஆகியோர் இக்காலக் கட்டத்தில் எமது தாயார் எழு திய கடிதவாசகத்கையும் ஈண் டுக்குறித்தலவசியமாகும்; குடியி ருந்த கோயில் மனங்குளிர்ந்த சம் L-u@) u ħb.
"கைநிறைந்த சம்பள ம் பெற்று அனுப்பியிருந்தாய் மக னே. எல்ல க் கோயில்களுக்கும் உனது மனம் நிறையட்டுமென வாழ்த்தி அர்ச்சனைகள் செய்து பி ர சா தம் அனுப்பியிருக்கின் றேன். என்மனம் நிறைய வேண் டில் எனக்கு 1933ல் அளித்த வாக்குறுதியை நிறைவேற்று. இதுவெறும் மட்பாண்டம். எந் தக் காலத்தும் மந்திரத்தை மற வாதே. பூவும்பொட்டும் நிறைய நான் நிறைந்து விடுவேன். மந் திரத்தை மனம்நோகாது பாது காத்து உன் கடமைகளைச் செய்
1

Page 8
யப்பா' என்று எழுதியிருந்த கடிதம் சிந்திக்க வைத்தது. தொ டர்ந்து நான் எழுதிய கடிதத் துக்கு கிடைத்த பதில், 'பத்தி ராதிபராக 'இருப்பேன்" என்று நீ எழுதிய கட்டுரைப்படி நடந் தால் எம் மனம் நிறையும்?" என்று கிடைத்தது. எல்லோரது ஊக்கமும் ஆக்கமான பதில்களும் பத்திரிகைத் தொழிலில் புகவைத் தது
தமிழ்த்தினசரி 'தினகரன்' பத்திரிகையில் அன்று ஆசிரிய ராக இருந்து எமது எழுத்துக் சளுக்கு ஊக்கமளித்த திரு தங் கராசா என்பவர் நேரடியாக எம்மைச்சந்தித்து தங்களது பத் திரிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாரென்ா?லம் அ க ற் கு முன்னதாக வீரகேசரி காரியாலய அழைப்பு வந்துவிட்டதை அவ ருக்கு தெரிவித்து அவர் மன ஒருப்பாட்டுடன் வீரகேசரியில் உதவி ஆசிரியனுக 1943 ல் சேர்ந் தோம். தொழில் நுணுக்கங் கள் பழகுதற்கு மூன்றுண்டுகள் வேண்டுமென்று எழுதும் திறன் மதிப்பீடு செய்யப்படல் வேண்டு மென்றும், மூன்ருண்டு காலம் 'பயிற்சிக் காலம்" என்று ஆரம் பத்தில் கூறியவர்கள் மூன்ருவது வாரமே பத்தாண்டுகளுக்கான ஒரு ஒப்பந்தத்தை நீட்டி ஒப்ப மிடும்படி கோரினர். அந்த ஒப் பந்தமோ ஒரு சார்பானது - கிட் டத்தட்ட அது ஒரு அடிமைச் சாதனம் என்றுதான் கூறவேண் டும். வேறு பத்திரிகைகளுக்கு எது வும் எழுதக் கூடாது என்பதும்
2
முக்கியமான நிபந் த னை களி ல் ஒன்று. எமது குடியிருப்புக்குக் கூட அவர்கள் தங்களது இடத் திலேயே ஏற்பாடுகளும் செய்து எமக்கு வேண்டிய இதர வசதி களையும் அமைத்துத் தந்தனர். சுதந்திரப்பறவைக்கு பின்தொ ட ர்ந்து கண்காணிக்க ஆட்களும் வைக்கப்பட்டனர் எமக்கு எழு துவதற்குப் போகிய சகல வசதி களும் இப்பத்திரிகையிலேயே அளிக்கப்பட்டதால் வேறு பத்தி ரிகைகளுக்கு எழுதவேண்டுமென் னும் ஆர்வமோ நோக்கோ ஏற் படவேயில்லை. ஒரே நாளில் பல புனைப்பெயர்களில் பல்வேறுபட்ட விடயங்களையும் தினசரி யாக எழுதக் கிடைத்த வாய்ப்பை நான் ந ன் கு பயன்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு புனை பெயர்களை கையாளவேண்டிய நிலைமையும் அமைந்தது, தாயா ரின் மனமும் நிறைந்தது. பெற் றவயிறு குளிர்ந்தமை எனக்கும் நிறைவைத்தந்து எழுத வைத் தது. எழுதியவை அதிகமாக - இரவுபகலாக - இருந்தமையால் இடைக்காலத்தில் வெளிப்பத்திரி கைகளுக்கும் புதியபுதிய புனை பெயர்களில் விடயதானம் செய் யத்தொடங்கினேன். அக்காலக் கட்டத்தில் 1933 முதலாக இந்து சாதனம், உதயதாரகை, ஈழகே சரி போன்ற எங்கள் உள்நாட் டுப் பத்திரிகைகளில் கையாண்ட புனை பெயர்களையே பெரிதும் பயன்படுத்த நேர்ந்தது. மேலும் தினகரன் பத்திரிகை ஆசிரியர் திரு. தங்கராசாவும் எமக்குப் பல வழிகளிலும் உதவியும் ஊக்க

மும் அளித்ததுடன் எமது விட யங்களை, பாடசாலைக் காலத் தைப் போன்று தொடர்ந்து பிர சுரித்தும் வந்தார். சமீப காலத் தில் யாழ் பல்கலைக்கழக ஆய்வுத் துறையினர் சிலர் பழைய இந்து சாதனம், வீரகேசரி, ஈழகேசரி, உதயதாரகை, தினகரன் பத்திரி கைகளை எம்மிடத்திற்கு 'போட் டோஸ்ராற்' பிரதி செய்யக் கொண்டுவந்தகாலையில் அவற்றின் கண் எனது கட்டுரைகள் இருப் பதைக் கண்டு அத்தேதிகளையும் கு:த்து வைத்துளோம். சந்தர்ப் பம் வருங்கால் மாதிரிக்கு அத் தமிழ்நடையை எடுத் தாண் டு வாசகருடன் பகிர்ந்து கொள்ள லாம் என்ற சிந்தையுண்டு. அவை கள் 1934 முதல் 1947 வரையி லானவைகளாகும்.
இக்காலகட்ட ஆரம்பத்தில் (அதாவது 1933ன் பின்னர்) பல் வேறுபட்ட கட்டுரைகளும் கதை களும் கவிதைகளும் தொடர் கதைகளும் ஆய்வுரைகளும் சரித் திரவரலாறுகளும் சமயக் கட்டு ரைகளுடன் ஆலய வரலாறுகளும் புராண விளக்கங்களும் மாணவப் பருவத்தில் பாடசாலையில் எம் மால் எழுதப்பட்ட ‘அறஞ்செய விரும்பு' முதலாம் வாக்கியங் களை மகுடங்களாகக் கொண்ட மாணவ சமுதாயக்கட்டுரைகளும் சங்கநூல் கட்டுரைகளும், இன் னும் குழந்தைகளுக்கான கதை கள் கட்டுரைகள், கவிதைகள், மாதருக்கான பல்வேறு துறைப் பட்ட, விடயங்கள், திரவியந்தே டல் முதற்சொண்டு திரைப்பட விமர்சன மீருகவும் எழுதினேன். இன்னும் காய்ந்தவர்மீது கண்ட
னத்தைக் காட்டவேண்டியபோ தில் காட்டியுமுள்ளோம். சிலர் மீது பச்சைபச்சையாக எழுதிய வற்றுக்கு, பிற்காலத்தில் நாம் வேதனைப்பட்டதுமுண்டு. அந்த இடங்களில்எழுத்தின் வலிமையை அறிந்து சந்தோஷமடைந்த விடத் தும் அத்தகைய நிலையைத்தாங்க மாட்டாத பணம் படைத்த சில 'புத்திஜீவிகள்' பட்டபாடுகளை, பின் நினைந்து கவலையுமடைந் தேன். கொண்டகுறிக்கோளுக்கு வடுவிழைகது விட்டேனேயென்று கலங்கியதுமுண்டு. இந்த இடங்க ளில்தான் எம்முடைய தாயாரது அறிவுரைகள் எம் நெ ஞ் சைக் குத்தின.
'தம்பி, உனக்கு நான் தேடித் தேடி நல்ல உணவைப் பாகஞ் செய்து தருகின்றேன் சத்துணவை உருசியாக, உண்ணும் உனது வயிற்றுத் தேவையறிந்து உனது விருப்பு வெறுப்பறிந்து சமைத்துத் த ரு கி ன் றே ன். அந்தவிதமாக எழுத்தும் இருக்க வேண் டு ம். பொழுது போக்குக்காக காசுக் காக எழுதுவது இலக்கியமுமல்ல நீடித்து உலகில் அத்தகைய இலக் கியங்கள் நிலவப் போவதுமில்லை; நல்ல ஆக்கங்கள் தான் உலகில் நின்று நிலவும். உனது எழுத்துக் கள் எக்காலமும் சமூகத்தின் நல் வாழ்விற்கு அர்ப்பணிக்கப்படல் வேண்டும். விளம்பரத்துக்கோ, புகழுக்கோ எழுதவேண்டாம் புக ழுக்காகவும் விளம்பரத்துக்காக வும் எழுதுபவர்கள், அவர்களது எழுத்துக்கள் நின்று நிலவமாட் டாவென்பதை மறக்காதே நீ சில புத்தகங்களை, பிரசுரகர்த்தாக்களு டைய பணத்துக்காகப் புனைபெ

Page 9
யர்களில் எழுதிக் கொடுத்து களுக்குப் பணத்தேவைக்கு அனு ப்புவதாக நான் உணருகின்றேன். அவை சமுதாயத்தைக் கெடுத்து, நாம் கருதும் நற்பலன்களை அழித் தும் விடலாம் எழுத்துக்காக, 2.ழ வணுக, சமுதாயத்துக்காக நீ எழுது, என்றும் நினைவோடு வாழ் வாய் வாழ்த்தவும் படுவாய், புகழுக்காக உன்னைப் பத்திரிகை பில் சேரும்படி நான் கேட்டிருக்க வில்லை. புகழைவென்று சமுதா யத்துக்கு நல்வழிகாட்டுவதற்கா கத்தான் எழுத்தை ஆளும்படி எழுதினேன். வருங்காலம் வாழ் த்த வாழ்க. சமீபத்தில் உனது எழுத்தில் தொக்கி நின்ற கண்ட னமொன்றைக் கண்டேன். எனக் கே அது கொடூரமாகப்பட்டது. இத்தகைய கண்டனக்கணைகளைத் தொடுக்காதே ஆண்டவனுக்கு அப்பணியை விட்டுவிடு. சரியெ ன்று உன் மனச்சாட்சி கூறுவ தைத் தயங்காது எழுது, மனச் சாட்சியைக் கொன்று விடாதே, மனிதன் மனிதனை மன்னிப்பது மட்டுமல்ல, அந்த மன்னிக்கும் பண்பு உன் இதயத்தில் என்றும் நிறைந்திருக்க வேண்டும். பத்து மாதம் சுமந்தேனென்று புத்தகங் களை எனக்கு சமர்ப்பணம் செய்வ திலும் பாாக்க மனம்நிறைவாக யாவரும் வாழ்த்த வாழ்க’’ என்று ஒருகால் எழுதியிருந்தார். அவற் றை இன்றும் பொன்னெனப் போற்றி வாழ்கின்ற போதிலும் இடையிடை ஒரு சிலரால் கையா ளப்பட்ட கொடுமைகளைச் சாட கண்டன அலைகளைத்துரக்கியெறிந் தும்விட்டேன் மாதாவின் வாக் கையும் அந்த இடங்களில் மறந்து எழுத்தின் வேகத்தைக் காட்டி
1 4
யும் விடடேன. எழுத்து மட்டு மல்ல, பேச்சிலும் கூட சில தரு ணங்களில் என்நிலைமறந்து கனன் றும் பதிலளித்துமுள்ளேன் இவற் றை நினைக்குங்கால் கவலையடை வதுமுண்டு, இத்தகைய எழுத் துக்களை இலக்கியத்தோடு சேர்ப் பதற்கு எம்மனம் இ.ந்தரவு மில்லை, சிலசந்தர்ப்பங்களில் இவ் வித எழுத்துக்களை - கண்டணங் களைத் தொடுக்க வேண்டிய நி%ல மைகள் எமக்கு ஏற்பட்டுள்ளன. அத்தகைய நிகழ்வுகளை இப்பொ ழுது கூடியவரை கட்டுப்படுத்தி யும் வருகின்றேன்.
இன்றைய சமுதாயத்தில் சொல்லேர் உழவர், மழைநீர் வாய்க்கால் வழியோடிக் கேணி குளங்களை நிரப்புவது போன்று நிரம்பி வழிகின்றனர், ஆக்கம் தேக்கமடைந்துள்ளதா? ஆக்கம் விரிந்து தொடர்கின்றதா? சிந்தி க்கவேண்டிய நிலையில் உள்ளோம். மொழி வளர்கின்றதா? தேக்கம டைந்துள்ளதா? சொல்லேருழவர் வாழ்கின்றனரா? அவர்தம் வாழ் வுக்கு நிதியம் கிடைக்கின்றதா? பொழுதுபோக்குக்கு உழுபவர்கள் அதிகமா?அல்லது வாழும் படைப் புக்களை ஆளும் உழவர்கள் அதி கமா? பணம் அவசியம். ஆனல் பணத்தால் மட்டும் உயர்வு கிட் டாது பணமும் வேண்டும். பண் பும் வேண்டும், எங்கள் சமுதாய உயர்வுக்காகச் சொல்லேருழவர் தம் எழுத்தின் சக்தியைப் பயன் படுத்தல் வேண்டும் அதற்கான உறுதி  ைய மேற்கொள்ளுதல் வேண்டும் சமுதாயத்திலே புரை யோடிக் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்கள், வேற்றுமைகள் தகர்

க்கப்படல் வேண்டும் அப்படி யான தகர்ப்புக்காலங்களிற்கூட எமது பண்பு கெடப்படாது. பண் பை மறந்துவிடாது கடைப் பிடிக்க வேண்டும்.
* 'இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் ஒரு விடயத்தை மட் டும் கூறிவிட்டு இக்கட்டுரையை முடிக்கின்றேன். இ ல ங்  ைக த் தமிழ் மக்களிடம் அறிவும் சிறந்த கல்வியும் திறமையும் ஆற்றலும் உழைப்பும் வேண்டிய மட்டு ம் இருக்கின்றன. ஆன ல் ஒன்று மட்டும் இல்லை. அவர் களு க் குள் ஒற்றுமையில்லை. ஈழநாட் டுத் தமிழர்கள் மட்டும் தங்களுக் குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் நின்று. என ஒருவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ள வசனங்கள் நெஞ் சைச் கட்டெரிக்கின்றன. ஒவ் வொரு தமிழனும் சிந்திக்கவேண் டியவை. அயல்நாட்டுச் சொல் லேருழுவன் உண்மை மதிப்பீடு
தை அழிக்கும் நாசகாலிகளுக்கு இனத்தைக் காட்டிக்கொடுக்கும் கோடரிகளும் இன்று துணைபோ வதை நினைக்கும்பொழுது நெருப் பிலே நிற்பதுபோல நினைவோடு கின்றது சுயகெளரவத்துக்காக இல்லாது சமுதாய நலன்சளுக் தாக நாம் வாழவேண்டும் எமது எழுத்து வாழவேண்டும். எம்மக் கள் உரிமையோடு வாழ்வதற்கு எங்கள் உழவுத் தொழிலை நாம் முறையாகக் கையாளுவோம் என் னும் திடசங்கற்பத்தை இனியா கு த ல் சொண்டொழுகுவோம். எழுத்து சமுதாய முன்னேற்றத் விக்காக, கொள்கையுடனும் பண்
புடனும் கிடiைtiபுணர்வுடனும் அமைய வேண்டும்.
சொல்லேருழவனின் வலியை கடமையுணர்வோடு,அந்த உணர் வுத்தெளிவோடு அமையவேண்டு மென்னும் அன்னை வாக்கிற்கமை வாகக் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கதிகமாக - சிந்தித்து சமூகத்தில் உழலும் மக்களின் விடிவுக்காக அவர்கள் வாழ்வில் ஒளிபிறக்க வேண்டும் என்பதற் காக மற்றவர்கள் அதிகம் நாட் டங் கொள்ளாத புதிய புதிய துறைகளிலெல்லாம் ஒளிபிறக்க வேண்டுமென எழுதி வரு கி ன் றேன். அன்னை சொற் கட்டு 魏வீரகேசரி' து ணையாசிரியனுகி அப்பத்திரிகை ஆசிரியச் செம்மல் களோடு பெருங்கடனுற்றி பின்
சுதந்திரன்' தினவே ட் டி ன்
தொண்டனகி, கலைஞானி "
書本下ホーーーャー・一
10 (ா த வே டு 'இளைஞன்",
"தமிழ்மணி' 'யாழ்பாடி' வா ரவிதழ்களின் மூலமும் ஜோதி டம்' மாதெ வளியீட்டாளனுகி. பலநூல்களை வெளியிட்டும் மொ
பூழிபெயர்ப்புக்களை மக்கள் முன்
படைத்தும் 'இந்துசாதனம்' பத்திரிகையைப் புனரமைத்தும்இப்படியாக உழவனுகக் கடந்த காலத்தில் வாழ்ந்துவிட்டேன்
இப்பொழுதும் அவ்வாழ்க்கையை யே வாழ்கின்றேன். தமிழன் சரித் திரம் முதல் சமயம் ஜோதிடம் பலவும் எழுத்திலே இருக்கின்றன. இதுவரை முப்பத்தேழு புனைபெ யர்களைத் தாங்கி விடயங்கள் வெளிவந்துள்ளன. ஒரே நாளில் ஐந்து புனை பயர்களில் ஐந்து விதமான விடயங்களும்கூட வந துள்ளன. புனைப் பெயரிலேயே
5

Page 10
அதிகமாக வாழ்ந்தாயிற்று. இக் காலக்கட்டத்திலே என்னுடன் வாழ்ந்தவர்கள், சந்தித்தவர்கள், நல்லவர்கள், மற்றவரால் மதிக் கப்படும். இப்படியானவர்கள் எல்லோரும் இந்த எழுத்துலக வாழ்வில் எதிர்ப்படுவர். விருப்பு
வெறுப்பு ஏதுமின்றி உள்ளதை எடுத்துக் கூறவேண்டுமென்னும் உயரிய நோக்கோடு ஆரம்பித் துள்ள இத்தொடர் நிறைவுறச் சொல்லேருழவர் ஆக்க வு த வி யைப் பெரிதும் வேண்டி முதலு ரையை நிறைக்கின்றேன்;
எங்களிடம்
●
& Lu TLT
புதிய வீடியோ பெறவும்,
வும் நாடுங்கள்.
புத்தெழில் சிறக்க மினிப் பிரியாவின் அன்பு வாழ்த்துக்கள்
எவர்சில்வர் பொருட்கள்
* பாடசாலை உபகரணங்கள்
* அழகுசாதனப் பொருட்கள்
மேலும் தேவையான அன்பளிப்புப் பொருட் களையும் பெற்றுக் கொள்ளலாம்.
கசட்டுக்களை வாடகைக்குப்
உங்கள் வீடுகளில் நடைபெறும் மங்கள வைப வங்களுக்குக் கதிரைகளை வாடகைக்குப் பெற
மினிப் பிரியா ரேடேஸ்
பாதணிகள்
பருத்தித்துறை வீதி, அச்சுவேலி.
16

கனவுகள் கலையட்டும்!
அன்று காலையில் அதிபர் பொன்னுத்துரையின் வீட்டுக்கு வந்த நண்பர் செல்லப்பா அவ ரோடு பல விஷயங்கள் பற்றிப் பேசினர். ஆனல் அவர் சொன்ன ஒரே விஷயத்தைச் சுற்றித்தான் பொன்னுத்துரையின் சிந்தனை சுழன்ற வண்ணம் இருந்தது.
அது அவரை வெகுவாகப் பாதித்தது. ஐம்பத்தெட்டு வயது வரை எந்தவிதப் பொறுப்பும் இன்றித் தாம் உண்டு, தம் பாட சாலை உண்டு என்று இருந்து வந் தவருக்குத் தமது குடும்பப் பொ றுப்பின் பாரச்சுமையை உணர் வதற்குச் செல்லப்பா வழிவகுத் துச் சென்றுவிட்டார்.
"இங்கைபார் பொன்னுத் துரை, நீ பெரிய அறிவாளிதான். சிறந்த அதிபர்தான். நான் மறு க் கே ல் 2) ஆனல்." செல்லப்பா தாம் சொல்லவந்ததைப் பூர்த்தி செய்யாது தயங்கினர்.
'ஆனல். ஏன் தயங்கிருய் நீ எனக்கு நெருங்கிய சினேகிதன்
எதெண்டாலும் மறைக்காமல் சொல்லு ”
செல்லப்பா செருமினர்.
“எப்படிச் சொல்வது?" எ ன் ற தயக்கத்தின் தொடர்ச்சிதான் அந்தச் செருமல், ஆனலும் இனி பும் மறைக்கக் கூடாது. உண்மை
சொக்கன்
யான நண்பனுக்குரிய கடமை யைச் செய்துதான் ஆகவேண்டும்.
'உனக்கு மூண்டு குமர்கள் வீட்டிலை இருக்கிறதைப் பற்றி எண்டைக்காவது நினைச்சுப் பார் த்தியே? ஒண்டு படிச்சு முடிச்சிட் டுப் பட்டதாரி ஆகியும் வேலை யில்லாமல் வீட்டிலை இருக்குது. மற்றதுகளும் இரண்டொரு வரு சத்திலை படிப்இப முடிச்சுப் போ டும் மூத்தவளுக்கு என்ன வயசு?
'வாற மார்கழி யோ டை இருபத்தொன்பது முடிஞ்சு முப் பது தொடங்கிவிடும்.'
*அந்தப் பிள்ளைக்கு ஒரு கலி பாணம், கார்த்திகை நடத்திப் பார்க்கிறது பற்றி எப்டவாவது யோசிச்சுப் பார்த்தியே?’’
பொன்னுத்து  ைர சிரித்தார். "அவளுக் கென்ன? இரண்டொரு மாசத்திலை வேலை கிடைச்சிடும் பட்டதாரி ஆசிரியருக்கு இப்ப சம்பளம் இரண்டாயிரத்துக்கு மேலை, படிச்ச பெம்பிளையை ஆர் வேணுமென்று சொல்லுவான்? அவளுக்கு வேலை கிடைக்கட்டும் பிறகு நீ சொன் னது பற்றி G3a fir fil Lub.” ”
செல்லப்பாவிற்குப் பொன் னுத்துரையின் அப்பாவித்தனமும் அநுபவமற்ற பேச்சும் எரிச்சலை மூட்டின. “நீ ஒரு படிச்ச மடை

Page 11
நேச்சர் ஜனக்குத் و قشلاق سفهٔ ه ibfهٔ فق தெரியாது தொழில் கிடைச்சா லும் மா ப் பி ளை கிடைக்கிறது அபூர்வம். வயசு ஏறஏறப் பெம் பிளைக்குக் கலியாணமாக்கட்டிலை மதிப்புக் குறைஞ்சு குறைத் * தான் வரும், ஒன மீட்டரோ (ஆமேலை ஏறிக் கொண்டு போகும்.நீ என்ன லட்சாதிபதியே சாதாரண பாடசாலை அதிபர். ண்ங்காசெண்டு சேர்த்து வங்கி டிஜ போட்டு வட்டியை எண் பார்க்கிற தொழிலே வாத் தித் தொழில்? என்னவோ சொல் லவேண்டியதைச் சொல்லிட்டன்
இனி உன்ர பாடு."
செல்லப்பா போய்விட்டார்.
இதுநாள்வரை எ ந்த வி த பாரமுமின்றி இலேசாக இருந்த பொன்னுத்துரையின் நெஞ்சிலே பாருங்கல்லைச் சுமத்தி விட்டு அவர் போய்விட்டார்.
அவர் போகும்வரை காத்தி ருந்தவள் போல ப் பொன்னுத் துரையின் மனைவி இராஜேஸ்வரி மொலுமொலு வென்று Grgië செடி லப்பாவின் பிரேரணையை வழிமொழிந்து அவரைச் சித்திர வதையே செய்து விட் டா ள். நோன் எத்தனை நாள் 3gFfrisii) a யிருப்பன்? நான் அழுது குளறித் தலையிலை அடிச்சதெல்லாம் உங் கடை செவியிலை ஏறெல்லை. இப்ப அந்தப் பெரிய மனிசன் சொன் னதாவது உங்கடை மண்டைக் குள்ளை ஏறிச்சுதே? நான் என்ன சொன்னலும் அதட்டி வெருட்டி அடக்கிப் போடுவியள் உங்களுக் கென்ன ? காலமை பள்ளிக்கூடத்
துக் கெண்டு வெளிக்கிட்டால் பின்னேரம் ஐந்து மணிக்குத்தான் வீடு திரும்புவியள். இதுகளோ எ ட உத்தரிக்கிறது நானல்லோ. ஒண்டையெண்டாலும் க ைசேர் த்தாலாவது கொஞ்சம் நிம்மதி. அதையாவது .ெ லு ப் பாய் ச் செய்யப்பாருங்கோ,' "
இராஜேஸ்வரியின் பேச் சு எஞ்சியிருந்த கொஞ்ச நிம் மதி யையும் போக்கடித்து விட்டது!
இருந்தாலும் ஒரு நப்பாசை, 1ாடசாலை அதிபர் என்ற வகை யிலே எனக்கு ஒரு சமூக அந் தஸ்து இருக்கிறது. என் மகளோ பட்டதாரி. அழகி என்று இல்லா விட்டாலும் அவலட்சணம் என் றும் சொல்வதற்கில்லை. வீடு, நகை வேறு இருக்கிறது. சீதனம் என்று பெருந் தொகைக்காசு கைவசம் இல்லாவிட்டாலும் கடனே உடனுேபட்டுச் சமா ளித்துவிடலாம் பார்ப்போம்."
இவ்வாறு சிந் தி த் துப் பொன்னுத்துரை Lp nrr 96irësit தேடும் படலத்தில் இறங்கினர்.
ஆனல் சம
பற்ருத கம்பளியால் போர்த் திக் கொள்பவன் படும் அவஸ்தை போல ஒரு பக்கம் சரிவந்தால் மறுபக்கம் சரிவராது. அவர் அடைந்த ஏமாற்றங்கள் கொஞ்ச மல்ல. 'கல்கி'யின் வரலாற்று நாவலாய் அவரது ஏமாற்ற வர லாறு அத்தியாயமாக நீண்டு கொண்டே சென்றது.
8

:பாருங்கோ எல்லா ப் பொருத்தமும் நல்லாய்த்தான் இரு க் குது, ஆனல் பாவப் பொருத்தந்தான் உதைக்குது. ஆணின்ரை சாதகத்திலை பாவம் ஐம்பத்திரண்டு. பெண்ணின்ர சாதகத்தில் பாவம் இருபத் தைஞ்சு. உது சரிவராது. வேறை இடம் பாருங்கோ' இராமலிங் கச் சாத்திரியார் தமது சோடாப் புட்டிக் கண்ணுடியை மூக்கு நுனிக்கு வரச்செய்து கொண்டு, கண்களை மேலே உயர்த்தியபடி அனுதாபம்  ெச ர ற் களிலே இழையோடக் கூறியவை இதுவே. களத்திரதோஷம் , யே r னரி ப் பொருத்தம் அது இது என்று ஆறு மாதங்களிலே சாத்திரியார் பொன்னுத்துரையை அ  ைர ச் சோதிடர் நிலைக்குப் பயிற்றி உயர்த்திவிட்டார். இப்பொழுது பொன்னுத்துரை, தாமே பஞ் சாங்கத்தையும் சாதகக் குறிப்புக் க%ளயும் வைத்துக் கொண்டு பொருத்தம் பார்ப்பதால் அவ ருக்கு ஒவ்வொரு தடவையும் இருபது ரூபா மிச்சம்!
* சாதகப் பொருத்தம் மிகத் திறந்தான். ஆனல் பொடியன் உங்கடை பிள்ளையளவு படிச்சவ னல்ல. உத்தியோகமும் அவ் வளவு உயர்வில்லை. பொடியன்ர தாய் தகப்பன் மிகோதரங்களுக்
குச் சம்மதம் எண்டாலும் பொடியன் தன்னிலும் கூடின படிப்பு உள்ள டொம்பிளை
எனக்கு வேண்டாம் எண்டு பிடி வாதம் செய்யிருன். நான் என்ன செய்யிறது?’ இவை கலியாணத் தரகர் கந்தையாவின் அலுப்புச் ஈலிப்பு நிறைந்த சுற்றுக்கள்.
ন তো দুটা গোটা படிச்சென்ன S. air 26T (; 5 5, கிட்டடியில உத்தியோகம் கிடைக்கப் போற தில்லை. எங்க-ை மோனுக்கு
உத்தியோசம் பார்க்கிற பிள்ளை தான் தேவையாம்' என்று தட் L qliġħ கழிக்கிறவர் சிலர் என்ருல், 'உத்தியோகம் பார் ப் ப தே தவறு. நாளேக்கு உங்கடைபிள்ளை உத்தியோகம் பார்க்கப் பிடி வாதம் பிடித்தால் என்ன செய் யிறது?’ என்று சாட்டுச் சொல்
பவர்களும் பலரான பொழுது பொன்னுத்துரையால் இந்த வேடிக்கை மனிதரைப் புரிந்து
கொள்வது கடினமாகத்தான் இரு ந்தது. ‘உலக நேச்சர் உனக்குத் தெரியாது, நீ ஒரு படிச்ச மடை யன்’ என்ற செல்லப்பாவின் கூற்றுக்கள் அ வ் வே ளை க ளில் பொன்னுத்துரையின் நினைவித் தரங்கிலே பெருங் கோஷத்துடன் அலை எறிகையில், அவர் அது உண்மைதான் என்று அங்கீகரிக் கக்கூடிய நிலையிலேதான் இருந் தார்.
குலம் கோத்திரத்தால் கூடி யது, குறைந்தது. சீதனம் போதாது, இன்னும் வேண்டும் என்ற காரணங்களாலே கைவிட் டுப்போனசம்பந்தங்களும் பொன் னுத்துரையைப் பெரிதும் ஏமாற் றத்திற்கு உள்ளாக்கி அவரை வேதனையால் சாம்ப வைத்தன. உலகம் முழுவதுமே தமக்கு எதி ராகவும் தம் மகளுக்கு எதிராக வும் சதி செய்வதுபோல அவருக் குத் தோன்ற அவர் விரக்தியின் விழிப்பிலே நின்று தவித்தார்.
வீட்டிலே சிறிது நிம்மதிக்
கும் இடமில்லாது போய்விட்
نراً

Page 12
b.து. மனைவியின் ஏக்கப் பார்வை யும் கலங்கிய கண்களும் அவரைச் சந்நியாச நிலைக்கு விரட்டியடித் தன. மகள் தாரிணியின் சிடுசிடுப் பும் தங்கைமாரோடு அவள் காரணமில்லாமல் பிடிக்கும் சண் டைகளும் அளவு கடந்த கோபத் தை ஏற்படுத்தினலும், அவர் அதை வெளிப்படுத்தாமல் நெஞ் சுக்குள்ளேயே மறு க லான ர். "பாவம் காலாகாலத்தில் செய்ய வேண்டியதைச் செய்து வைத்தி ருந்தால் என் மகள் திடுசிடுப்பான சுபாவத்திற்கு உள்ளாகியிராள். தந்தையாகிய எனது கையாலா காத் தனத்திற்கு நான் என் ஜனயே நோக வேண்டும். அவளே நோவது பெரும் பாவம்' என்ற ஞானத்தை அடைந்த அவர், எவ்வளவுதான் வீட்டில் அமளி துமளி நடந்தாலும் மெளனத் தையே தமது கவசமாகக் கொள் எத் தொடங்கினர்.
ஒரு காலத்தில் பொன்னுத் துரை பெரும் புத்தகப் புழு, ஒரு புத்தகத்தையோ, பத்திரிகை யையோ, சிஞ்சிகையையோ, கையில் எடுத்தால் அவருக்கு உல
கமே மறந்துவிடும். முதற் பக்கத்
திலிருந்து கடைசிப் பக்கக் கடை
இச் சொல்வரை படித்த பின்பு
தான் மீண்டும் அவர் உலகுக்குத் திரும்புவார். அந்த நேரத்தில் யாராவது பேசினலோ, இரைந் தாலோ அவருக்குக் கெட்ட கோபம் வரும். இராஜேஸ்வரி இப்படியான சமயங்களில் ஏதா வது அவசிய கருமமாய் இருந் தால், அவருக்கு அருகிலே தயங் கித் தயங்கி வந்து ‘இஞ்சாருங் சோகொஞ்சம் இறங்கிவாங்கோ’
20,
என்று மன்ருடும் குரலில் வேண் டிக் கொள்வது வழக்கம். அவ் வேளையில் பொன்னுத்துரை சீற் றத்துடன் அவளை நிமிர்ந்து பார் த்து, அவளின் அசட்டுச்சிரிப்புக்கு இாங்கி இந்த உலகத்துக்கு இற
ங்கி வருவார்!
செல்லப்பரின் இடிப்புரை யைக் கேட்ட் நாளிலிருந்து அவர் தமது வாசிப்புப் பித்திலிருந்து சிறிதுசிறிதாக விடுபடலானர். வாசிக்க நேரம் இல்லாது மகளின் சம்பந்த விஷயமாக அலைந்து திரிய வேண்டியிருந்தது ஒரு கார ணம் என்ருல், அதிலும் காத்தி ரமான பலவேறு காரணங்களும் இருக்கத்தான் செய்தன. அமை தியாகவும் மெய்மறந்தும் வாசிப் பதற்கான மனநிலை அவரை விட் டுக் குடிபோய் விட்டது. வாசிக் கக் கிடைக்கும் விஷயங்களிலே பெரும்பாலானவற்றில் கலியா ணமாகாது கன்னிகளாய் இருந்து பெருமூச்சுவிடும் பெண்கள் பற் றிய பரிதாபமான செய்திகளும் சீதனப் பசாசின் கொடுரம் பற் றிய சங்கதிகளும் தலைகாட்டி அவ ரைப் பெரிதும் பயமுறுத்தின.
* பெண் சமத்துவத்துக்காக பாரதி குரலெடுத்த காலத்திலி ருந்து இன்றுவரை எத்தனையோ பேர் எவ்வளவோ சொல்லி விட் டார்கள்.இன்று கல்வியிலும்தொ ழிற்றிறமைகளிலும் பெண்கள் ஆண்களை எவ்வளவோ பின்தள் ளிவிட்டு முன்னேறிக் கொண்டே யிருக்கின்ருர்கள். ஆனல் எங்கள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் எவ்வளவுதான் படித்து முன்னேறி வந்தாலும் பெண்

களைச் சீ தன க் கொடுமைக்கு ஆளாக்கி அவர்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்குவதில் படித்தவர் கள் என்று பெருமை பேசும் யாழ்ப்பாணச் சமூகத்தினர் மும் முரமாகவே இருந்து வருகின்ற னர். ஒட்டு மொத்தமாகத் தமி பிணத்தையே எடுத்துக் கொண் டால் தமிழ் நாட்டிலே வரதட் சணையும் யாழ்ப்பர்ணத்திலே சீத ணமும் எமது தாய்க்குலத்தைப் பெரிதும் வாட்டி வதைத்து வரு கின்றன. இந்த உண்மையை எவ ராலும் மறுக்கவோ, மறைக்க வோ, முடியாது ' என்று பெண் ணெருத்தி உள்ளங்குமுறி எழு திய கட்டுரையின் ஒருபகுதியை வாசித்தது தான் பொன்னுத் துரை கடைசியாகப் பத்திரிகை யில் வாசித்தது இதனை வாசித்த அன்று அவருடைய மனத்தில் ஏற்பட்ட குழப்பம் இன்றுவரை ரெஞ்சீவியாகவே இருந்து வரு கின்றது,
ஆனலும் அதற்காக அவர் தமது முயற்சியைக் கைவிட முடி புமா? வானத்தில் எ வ் வ எ வு கான் உயர உயரப் பறந்தாலும் பருந்து தனது இரைக்காக மண் ணுக்குத்தானே வரவேண்டியிருக் கிறது?
பருந்தை நினைத்த பொழுது தாமும் ஒரு காலத்தில் பருந்தைப் போலவே இலட்சிய வானத்தில் பிறகடித்துப் பறந்ததெல்லாம் அவருக்கு நினைவில் அன்பு அலை யாக எழுந்தன.
பொன்னுத்துரையின் ஒரே மகன். அவன் தொழில் நுட்ப தவியாளனுக அரசாங்கத்தில்
உத்தியோகம் R. GF i 1.3 FT3F தி யே T க ய் மனேயில் ந்த யைக் காதலித்துக் கன் பற்றித் தந்தைக்குக் கடிதம் எழு தின்ை. உலகமே கீழாகி விட்டது டோசி)
சிங் ஜாப் 1ெ
இராஜே யை ஒப்17ரி :த்ெதுப் புலம்பி அழவைத்த அந்தக்கடிதம் @ rឆ្នាំ னுத்துரையில் எவ்வித மாற்றத் தையும் ஏற்படுத்தலில்:
综
'உனக்கு ଜୋତ ଓ || '_'[' .. '-୬! # !! T ଦ! ମୁଁ;
FK? ஜனக் கட்டுப்பு?
iിങ് റ്റില്ല.
உன் விருப்பத்
ಟ# gåTLಟ್ರಿ!
க்கும் உரியவள்
உனது நம்பிக்கையா கேநிற்க மொழி என்ற
அதற்குக் குறுக்
à7 3ío 3horizio மனிதன்
1. ή ,
ک
ஏற்படுத்திக் 3 ស្វី ...} T னே? ஆளுல் ஒரு
யாவரும்
குலம் 61 : 4) நம்பிக்கை
உடைய நான் , 2. எதிர்கா )
奇 : , , ‘ மனைவி ஆக இருப்பவள் : ளத்தி என்பதற்காக அவ rே
வெறுக்க டா!
என்
s
6 இர்கால பகுதிகளுக் எனது நல்வாழ்த்
Fer, so '' 6f 6f)
அவர் 10 கg :தம் எழு தியதோடு, ! எவ்வளாே
.5 ಕ್ಲಿ;((
ஒ () ஐந்து ஈல்
தடுத்தும்
ளை : க்க: ஊருககு!!
方。 、翌s?」エ
11 (T്ഞ$ !, லாசியும் கறித்
i
. . . . . திரு toji) i .
エcml。リ
エリー ಬಿ೧

Page 13
யிலை போகிாமல் தடுத்திருந்திய ளெண்டால் இண்டைக்குக் கொ ழுத்த சீதனத்தோடே, தாரிணி க்கு டொனேஷனும் வாங்கி அவ னுக்குக் கலியானம் செய்துவைச் சிருக்கலாம் அவனுக்கு முப்பத் தொரு வயசுர்ானே? குறைந்தது மாற்றுச் சம்பந்தம் எண்டாலும்
செய்திருக்கலா: . நாய்ப்பயல். இப்ப அவன் எங்களுக்கு ஒரு கடிதம் கூடப் போடுறதில்லை. ' என்று இராஜேஸ்வர் அடிக்கடி சோல்வதை ஆரம்பத்தில் மறுத் துத் தாம் இலட்சியவாதி என்று நிலைநாட்ட முற்பட்ட பொன் லுத்துரை, அண்மைக் காலத்தில் 'மனைவி சொல்வது நியாயந் தான்' என்று அங்கீகரிக்கவும் தொடங்கிவிட்டார்!
சென்றகிழமை தான் தாரி னிக்கு ஒரு சம்பந் ம் பேசி வந் தது. மாப்பிளேயும் ஒரு பட்ட தாரி, ஆசிரியர்; வயது முப்பத் திரண்டு; சாதமும் நல்ல பொரு த்தம்.
எல்லாம் சரிதான். ஆனல் அவன் பக்கத்தார் கேட்ட சீத னந்தான் பொன்னுத்துரையை நிலைகுலையவைத்தது. வீடு வளவு இருபது பவுண் நகை, மாப்பிள் ளையின் தங்கச்சிமாருக்கு ஒருலட் சம் டொனேஷன், கலியாணச் செலவாக ஐம்பதினுயிரம் இதை விடச் சீதனமாக ஒரு லட் சம் ரொக்கம்!
(ல்வளவும் வேண்டுமாம்!
இராஜேஸ்வரி இந்தச் சம்ப ந்கத்தை எவ்விதமாவது முடித்து விடவேண்டும் என்று ஒரே பிடி
வாதமாய் இருந் நாள் பொன்னு த்துரைக்கோ " " இவ் வ ள வும் கொடுக்க:ேண்டும8ா, கொடுக்கத் தான் வழி உண்டா?" ஒரே கலக்கம்
என்று
அவர் தமது நண்பர் செல் லேப்பாவிடம் சென்று தமது மனப் போராட்டத்தையும் கலக்கத்தை யும் ஒரு பாட்டம் கொட்டிக் தீர்த்தார்,
"இங்கைபார் மாப்பிளை பக் கத்தாரையும் குறைசொல்ல முடி யாது. அவை மா ப் பி ளை யி ன் & ழை ப் பை நம்பியிருந்தவை அலன் தனிக்குடும்பமாய்ப் பிரிஞ் சுபோனுல் அவன்ரை தங்கைமா ருக்கு என்ன கதி? அதுகளின் ரை எதிர்காலத்தையும் அவை யோசி க்கத்தானே வேணும்? எப்படியா வது அவை கேட்கிறதைக்குடுத்து உந்தச் சம்பந்தத்தை முடிச்சுப் போடு’ என்று செல்லப்பா அமை தியாகச் சொன்னர்
'நீ சுகமாய்ச் சொல் லி ப் போட்டாய். நான் இரண்டரை லட்சத்துக்கு எங்கே போறது?’’ பொன்னுத்துரை 'உன்ரை வள வுக் காணியிலை மூண்டு பர்ப்பை வித்தாவது பணத்தைப் புரட்டப் | fr fj ' '
'மூண்டு பரப்புக்கு எவ்வ ளவு காசு வரப்போகுது'
இண்டையில் நேச்சர் உன க்குத் தெரியாது வெளிநாட்டுக் காசுகள் இங்கை தாராளமாய்ப் புளங்கிறதாலை சீதன றேற் போலை காணியளின் ரை றேற்றும் உச்சாணிக்கொப்புக்கு ஏறியல்லே
22

11 ச்சு? நீ ஒண்டுக்கும் ய்ோசிக் :1தை உன்ரை காணியைப் பர ப் ஒரு லட்சத்துக்குக் குறையா மில் வித்துத் தா ற து என்ரை பொறுப்பு. நீ போய் மற்றக்காரி பங்களைப்பார்’ என்று அவரின் தோளில் மெல்லத் தட்டியபடி செல்லப்பா சொன்னர்
பொன்னுத்துரையின் கண்
நன்றிப்பெருக்கால் நிரம்பி வழிந்தன. "நீ தெய்வம் அப்பா என்ரை மகளைக்கரை யேத்தியது
கள்
நியூ
உங்களுக்கு சொகுசான பாதணிகள்
பெற்றுக் கொள்வதற்கு நியூ தீபாவை நாடுங்கள்!
மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்கு தேவையான
சப்பாத்து வகைகளுக்கும் நவநாகரீக நங்கையருக்கு ஏற்ற காலணிகளுக்கும் பெற்றுக் கொள்வதற்கு தீபாவை நாடுங்கள்.
பஸ் தரிப்பு நில யம் அச்சுவேலி
நீ தான். இதை நான்
tİ) ?) ë; ï; LT.L. បំ*
61 ன்று தளதளத்த குரலில் அவர் சொன்ன பொழுது அநுபவசாலியான செல்லப்ப அதனுல் மகிழ்ச்சியடையவில்லை.
'டிந்த அளவில் சந்தோஷப் படாதை கலியானம் ந ட ந் து உன்ரை மகளின் ரை கழுத்திலே தாலி ஏறும்வரை எதையும் நம்! முடியாது. இப்ப நடக்க வேண் டி தைப் போய்ப்பார்.
፩
ప్గా
※ s
23

Page 14
காத்திருந்தார்.
s சச்சிதானந்தன்
அவளோ இளமையின் ஒரு சிலை அவனுே காளைமையின் சின்னம். அவள் அவனுக்காகக் காத்திருந்தாள்; அவனும் அவளுக்காகக் காத்திருந்தான். அவளின் தந்தையோ மறுத்தான். தாயோ அழுதாள். அவனுக்காக எத்தனையோ பெண்கள் தவங்கிடந்தார்கள்; அவளுக்காக எத்தனையோ ஆடவர்கள் சுற்றி அலைந்தார்கள். ஆணுல் . அவளோ அவனுக்காக; அவனுே அவளுக்காக; காத்திருந்தார். ஒரு நாள் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். அப்பொழுது.
அவளோ
உலைபொங்கி வழிகின்ற தறியாள்
ஓங்குகனல் அவிகின்ற தறியாள்
மலை பொங்கி மனம் பாரமாக
மலர் விழியில் நீர் வழிய நின் ருள்.
அன்பான மணியாட்டுக் குட்டி
அதையன்றிக் கதைசொல்ல யாரோ
முன்பாக நீள்வெளியைப் பார்ப்பாள்
முத்தாகக் கன்னத்தில் உருளும்.
திருநாமம் அவன் பெயரை யன்றித்
திறவாத அகக் கோயிற் பூசைக்(கு)
ஒருநாளும் வேறு மலர் காணுள்
உளமான மலர்ச் சோலை தனிலே,
தூங்குகின்ற ஆணழகுத் தோள்கள்
சு மக்குமிந்தச் சட்டையென்று பின்ன
வாங்கி வைத்த நூற்கோவை நூறில்
வண்ண மொன்று தெரிந்தெடுக்க மாட்டாள்
24

கட்டான காளையிளந் தோளில்
கனமான மாலையிட முல்லை மொட்டாகக் கோடி தரும் என்று
முறிந்திடையில் நீர் சுமந்து வந்தாள்.
தேன் போல அம்பலவி நட்டாள்
தின் றிடுவோம் அன்ருெருநாள் என்றே
தான் போட்ட கைக் குட்டைப் பூவைத்
தனியாக அவர் மணப்பார் என்றே,
 ைதத்து வைத்த தலையணையை யிட்டுத்
தான் சாய்ந்து மாசுறுத்த மாட்டாள்
வைத்திருப்பாள் அன்று வரும் என்று
வண்ண வண்ணப் பெட்ட கத்தினுள்ளே,
ay auGgo:
சேலையொன்று வாங்கவென்று சென் ருன்
தெருக்கடைகள் திரிந்து கா லோய்ந்தான்
நூலான சிற்றிடைக்குப் பொருந்தும்
நுண்ணுரலிற் பட்டெங்கும் காணுன்.
காப்புக்குப் பொன்வாங்க வென்று
கந்தோரிற் பின்னேரம் உழைப்பான்
பூப் போட்ட பாதரசம் வாங்கப்
புது வருட நாளன்றும் உழைத்தான்.
நாட்பட்ட தோசையுடன் காரம்
நாவெரியும் சம்பலுடன் தின் ருன்
ஆட்பட்ட மங்கை மலர் கி கையால்
அமுது தர நாள்வருமே யென்று,
போட்ட தன் சட்டையிலே பொத்தல்
புதுக்காது மூக்குமணி வாங்கக்
கேட்டவிலை கேட்டபடி கொடுத்துக்
கிடையாத வயிரமொன்று சேர்ப்பாள்.
25

Page 15
கண்டவொரு பூம்பட்டு வாங்கக்
காசில்லே யென்று செல்வர் போவார்
உண்டிய வேளையினே விட்டும்
ஒரு காலமி வருமென்று பெறுவான்.
ஒடியிதழ்க் கோணத்தின் ஒரம்
ஒளிக்குமொரு புன்னகைக்காய் யானே :
B .
கனவெல்லாம் சோலேயாய்ச் சென்ருன்,
பொண் ணிரையைப் பார்த்தவரின் பின்னே
பிடி நடையைப் பார்க்கின்ற கண்கள்  ைஎண்ணிரையைக் கூட்டினவே என்ருே
இவள் நடையைப் பார்ப் பேரோ என்று
காத்திருக்க மாட்டா மற் கந்தோர்க்
கதவுகளைப் பூட்டுமவன் பூட்ட
ஆத்திரத்துக் காளாவான்; அவளின்
அன்பிருக்கும் காத்திருந்தே யென்று.
அ கந்தோரில் நிரையாய கூட்டல் கனக்குகள்.
அவனைச் சுற்றிய கன்னிகள்:
கண்ணுக்கு மையூட்டிக் கரைக்குக்
காதலெனும் நஞ்சூட்டி வாயின்
வண்ணத் துவர்ச் சிவப்பிற்றேனே
வார்க்கின்ற மங்கையரோ கோடி
பெயர்த்த அடி எடுத்த சைய உள்ள ம்
பின் போகும் அன்னங்கள் கோடி
உயர்த்தி இடை அசைப்பினிலே நெஞ்சை உட்செருகும் மயிற் கூட்டம் கோடி
சாதகங்கள் ஓடிவரும் காலே
தரகர்களின் வரிசை வரும் மாலே
ஆதரவாய் விருந்துண்ணச் சீட்டு
அழைப்புவரும் அடுத்துவரும் பையன்
 

முத்தடுக்கு மாடிகளாம் முன்றில்
மூவர் பணியாட்களாம் பெண்ணுே
சித்திரத்துப் பூங்கிளியின் குஞ்சாம்
சிந்திப்ப தென்னவெனக் கேட்பார்
வங்கிப் பணத் தக்குப் கட்டும்
வரிப்பன் நே சிதன்மோர் பிள்ளே
பங்குகளிற் பாதிவரும் பத்துப்
பத்தாக வட்டி வரும் என் பார்
கட்டழகுத் தோர் மஃபயிற் சாய்ந்து கண் பூக்கத் தவஞ்செய்வார்
தொட்டரும்பும் மீசையிலே பட்ட
சுகந் தேடித் துடிப்பவரோ கோடி
அவளேச் சுற்றிய காளைகள்:
வளவுதனேச் சுற்றிவரும் வேலி
வரியிரண்டு சுட்டியவள் தந்தை
களவு பறி கொடுத்தவா மீளாக்
காளேயரைத் தெ ழிவலேய விட்டார்,
நீட்டி வளர்த்தமுழு மீமுை:
நீள் வரும் கே டாகச் செய்வார்
கூட்டி வரு குஞ்சிதனே சர்றே
குறுக்குகிருர் இவர் பார்வைக் கென்றே
கண்ணுடி பார்க்காத சில்லோர்
கடிகரிகயொரு மூன் க நின்று
பண்ணுக வரவில் லே பென் று
படிந்த கலே குலேத்திழுப்பார் மீண்டும்
ஐந்தடிக்குப் பாய்ந்தவர்கள் ஆருய்
அதற் கடுத் ப் பாய்ந்தவர்கள் பள்ளி'
பந்தடிக்குப் போட்டியியே உயிரைப்
பனயமெ ச வைத்தார்கள் சில்லோர்,
2

Page 16
பட்டப் படிப்பிருந்த8 ற் ருனே
பரிசாகும் இவளென்று சாபம்
கிட்டப் படித்தவர்கள் பல்லோ
கிட்டாத தென் றிருப்பார் சில்லோர்
தங்கநகை வேண்டா மாம் வீடு
தான் வேண்டாம் என்றுவரு வோர்கள்
தங்களுற வென்று சொல்வர் இன்னும்
சாதகமே சரியென்றும் சொல்வார்
ஆளுல்ை அவள்.
கேட்டிருந்து கண்கலங்கு மல்லால்
கேட்டவர் க்கு வார்த்தை சொல மாட்டாள்
கூட்டடைத்த பைங்கிளியைக் பேபல் வாள்
கூருது நெடுமூச்சு விட்டாள்
தந்தைய வர் கடித்து கொண்டார் பெற்ற
தாயோ கண்ணிரி விட்டு மறுத்தாள்
சந்தித்தும் பேச முடி யாதே
தவிக்கின்றேன் என்றெழுதி விட்டாள்
அவன் சொன்னுன்,
ஒரு காலம் வருமெ மீமைச் சேர்க்கும்
உத்தமியே அத்தனைக்கும் பொறுப்பாய்
உருகாத தந்தையவர் உள்ளம்
உருகவொரு தவஞ்செய்வேன் என்ருள்
காத்திருப்பேன் வாசலிலே உங்கள்
கைவந்து கோக்குமட்டும் காதல்
பூத்தொடுத்து நெஞ்சகத்து நினக்குப்
பூசை செய்வேன் அவ்வளவுத் என்ருன்
காணியொன்று வாங் கிடுவேன் என்றன் கையாலே கல்லுடைத்துத் திருத்தி
கேணியொன்று செப்பனிட்டு வீடு
கீழ்மாடி மேல்மாடி வைப்பேன்.
28

மூல்லை மலர்ப்பந்த ரொன்று செய்வேன்
முன்னுக அல்லிமலர்த் தொட்டி
நில்லென்று உன்னிடையைப் பற்றி
நிற்பாட்டிச் செய்திடுவேன் மே.ை
மாந்தளிரின் மெல்விரலால் வீணை
வாசிக்கும் உன்னிசை சுயக் கேட்கப்
பூந்தளிரும் செமீபங்கிப் பூவும்
போய்வளைந்த காதுகளை நீட்டுமி
காணியொன்று வாங்கிவிட்டேன் கண் எேன
கல்லுடைக்க நாட்டார்க்கச் சொன்னேன்
தோணி யொன்று காதலுக்குச் செய் வாய் சுந்தரியே என்றெழுதி விட்டான்
சித்திரை நாள் சேர்ந்திடு:ோ மீ என்று
செல்வி சிறை காத்திருந்தாள் அன்று
சித்திரையின் தென்றலெனும் துரது
தெருவோரம் வந்தசைந்த போது
வழக்கொன்று காணிக்கு வைத்தார்
வைகாசி மாதத்தில் முடியும்
அழுக்காறு கொண்டார்கள் சில்லோர்
ஆவணியில் நாட்பார்ப்போம் என் குன்
ஆவணியில் வந்த கடி தத்தில்
அப்பாலே தவணை யொன்றும் தையில்
பூவணையில் நாம் சேர நல்ல
புகு வருட நாட் சிறப்பாம் என் (ரன்
மாசிவரும் தைபோ கும் வாடை
மார் கழியும் கார்த்திகையும் போகும் வீசுமிளம தென்றலுறும் மாரி
வேனிலுறும்; காத்திருந்த சஸ் பேதை
ஏற்பட்ட தரணியுடை வாசல்
இரவுபகல் நடந்துவரு கின் ரூன் தோற்பட்டை காற்செருப்பிற் றேயும்
சு கமொன்றும் கண்டிருக்க மாட்ட சன்
29

Page 17
கோட்டுக்கு முன்னிருந்த கோப்பிக்
குடிசைக் கடைகள் மர்டி யாகும்
கேட்டிருந்த தரணியரின் விடுகி.
கிார்ந்தெழுந்து மூன்றடுக்காய்ப் போகும்
ஆசைகளர் நெஞ்சுக்கோ இன்னும்
அடிகோலக் காலமிலை உள்ளம் பூசையிடும் பைங்கிளியோ கின்னும்
பொறுத்திருந்தாள் காலமுறு மென்து
மேற்கோடு போய்விட்ட தென்ருர்
மேமாதம் முடிந்து விடும் என்றர்
மேற்கோடு நெற்றியிலே உழுதான்
விரைவான காலமெனும் உழவன்,
ஆண்டாண்டு சென்னுருண்ட தந்தை
அவர் கால மாகிவிட்டார்; இன்னும் ஆண்டானைக் காத்திருந்தாள் மங்கை
அவனுெருநாள் வந்து கையைக் கோத்தான்
தான் முடித்த வீட்டு முன்றில் மேடை
தனியாக அவளோடு கூடி
வான் முடியில் வெள்ளிமதி கூச
மங்கை முகம் நிலவென்று பார்த்தாள்
வெள்ளிநரை கூந்தலிடை மேவி
முழுநிலவிற் சிரிப்பதனைக் கண்டான்
துள்ளுமிளம் அவன் தோளிற் காலம்
தொட்டெழு. ம் சுருக்கிடையே சாய்ந்தான்

. . . . .
பூச்சிகள்
முற்றத்தில் நின்ஆஜா சுற்றிக் கெரண்டிருந்த வண்ண்த் துப் பூச்சிகளைப் போர்த்தான் ராஜன்.
"இதுகளுக்கு இந்தச் சத்தம் ஒண்டும் கேக்காதோ?** தீண்ட நேரமாய் உருப்புரியாத அலைகள் பல செவிப்ன்றன்யத் தோடு
கின்றன.
அஸ்திா அம்மோய்.வன்
ஞத்திப் பூச்சிக்குக் காதில்லை
யோ?" அம்மாவுக்கு அன்று டைய கேள்வி
றத்ர்வ்ற் தெரிய
வில்லை. அவளது : மெல்லியமுனகல் சத்தம் அவ
- its, f
மேலே மிகவும் மேலே க்ரின் த்தில் வட்டமிடும் விமானங் கள் அவைக்ஸ்போடும் சத்தங் கள், வ்சந்த் காலத்து வ்ண்ணத்
துப் பூச்சிகளங்கி மனதில் பந்ந்த எண்ண்ங்கள் அனைத்தையும் கெர்
s
ன்று விடுகின்றனர்.
இரண்டுக்குங்களுக்கு முன் வர்ை, பச்ச்ை"சிவப்பு மஞ்சள் நிறவேளிச்ச்ங்க்ளுடன் அழகான்
பூச்சிக்சுப் க்ரீனில் தேசின்றி.
மகேந்திரன்:
விமானங்களும் ஹெலிகளும்
வித்தி"ேகில்ே இன்று ஆன் யூதகழுகுக
களாங் வட்டமிடுகின்றன.
விமானம் ஒன்று திடீரென பதிந்து வருகிறது. அதுபோடப் ப்ோகும் "அமுத்தாரை யை வச வேற்க் அவனது செவிமடல்கள் சிவ்ந்து கிண்ணங்களாகின்றன. பயத்தில் முகம் முழுவதும் வெளு த்துப் போவதற்குப் பதிலாகக் கோபத்தில் முகம் முழுவதும்
சிவத்துப் போகிறது.
பக்கத்துக் காணியில் ருக்கும் ஆயுதக் கிடங்கைச் சுற்றிச் சுற் றித்தான் அவை
!னவோ? அவன்
வயதுக்குரிய சின்னக் கால்களை வீசி எறிந்து கிடங்கை நோக்கி ஒடுகிறன், விறுவிறென்று உள்ளே இறங்குகிறன்.
உள்ளே வரிசை வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் எறிகுண்டுகளை
யும் பலமுறை பார்த்த பரவசத் துடன் இன்றும் பார்க்கிருன் துரு
ப்பிடித்த அந்த ப் பெட்டியில் என்ன இருக்கும்?
ச*அண்ணை. அதுக்குள்ளே
-என்ன இருக்கு? இன்று யாரும்
இந்தப் பக்கம் வத்தால் கேட்க
3菲

Page 18
வேண்டும் ஆணுல் இ ன் று 11 Trib ani trênri Larri 35Git!
'அண்ணைமாரை எல்லாம் அ வங்கள் தேடிருங்களாம் ** வெளியே காற்றும் தூறலுமாக இருக்கிறது. மேலே இன்னும் வட்டமிடும் கழுகுகள்!
இந்தக் கிடங்கைச் சுற்றித் தான் வட்டமிடுகிறன் போல் இருக்கிறது! சீ. அப்படி இருக் காது! மேலே விமானத்தில் இரு ந்து பார்க்க இங்கே கிடங்கு இருப் பது தெரியாது என்று அப்பா சொன்னவர், வெறும் மண் மூடியிருப்பது போல்தான் தெரி யுமாம்!
பக்கத்து ஊர்ப் பிள்ளையார் கோயிலில் பொது மக்கள் அனை வரையும் ஒன்று கூடுமாறு யாழ்ப் பாண வானெலி காலையில் அறி வித்தவுடன் அப்பா அந்தக் கோ யிலுக்குச் சென்று விட்டார். அம் மாவிடம் இயலாமையின் அழுத் தங்கள் இருந்தன அம்மாவுக்குத் தம்பி பிறக்கப் போகிமுனம்!
பெரு மழையில் அடிபட்ட அல்லி மலர் போல் சோர்ந்தது. கண்களை மூடிப் படுத்திருக்கிருள் அம்மா. மூன்ரும் வீட்டு முத்துக் கிழவியை இடையிடை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போவதாக அப்பா சொன்னுர், கிழவி இன்னும் வரவில்லை.
"நானும் அம்மாவோடை. ‘' என்று ராஜனும் நின்று விட் டான். 'எட்டு வயதுக் குழந் தைப்பிள்ளை தானே நிக்கட்டும் நிண்டால் உனக்கும் துணையாய்
இருக்கும் . எண்டாலும் சவ் னம்." என்று சொல்லிவிட்டுப் போக மனமின்றிப் போளுர் அப்பா
வானத்தின் விமானத்தைக் கr ன வில் லை. இடங்கிலிருந்து வெளியேறி முற்றத்திற்கு வரு கிருன் ராஜன். வீட்டின் முகப்பு ஒழுங்கையில் சைக்கிள் ஒன்று வந்து நிற்கிறது, 'அண்ணு " ஒருவர் நிலத்தில் காலூன்றி நிற் கிழுர், யார் என்று தெரியவில்லை.
'ராஜன்"
** stଦର୍ତtଙr
*கோயில்லை வந்து சுத்தி வளைச்சு எல்லா ஆம்பிளேயையும் கொண்டு போருங்கள். உங்கடை அப்பாவையும் கொண்டு போருங் கள். அம்மாட்டைச் சொல் லுங்கோ. ”*
சைக்கிளை வேகமாய் மிதித் துக் கொண்டு அவர் போய்விட் ш-тпї.
சொற்கள் காய்ச்சிய இரும் புத் துளிகள்போல் ராஜனின் காதில் மீண்டும் மீண்டும் வி கின்றன.
'தம்பி பிறந்த பிறகு உன் னையும் கூட்டிக் கொண்டு நயினு தீவுக்குப் போகவேணும் . நேத் திக்கடன் ' என்று அப்பா சொல்லியிருந்தவர். இனி.?
ாஜன் ஏறியிருந்த கற்பனை விமானம் படாரென்று மோதிச் சுக்குச் சுக்காய் உடைந்துவிட் டதுபோல் அவன் உணர்ந்தான்.
32

இனிமேல் அவனுடைய பய
ணம் ஒளியின் மறுபக்கத்திற் குரிய பயணமாகவே இருக்கப் போகிறதா ?
வீட்டின் உள்ளே சென்ருன் ,
அம்மா நிலத்தில் பாய் விரித் துப் படுத்திருந்தாள் தரையை விரலால் அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கொள்கிருள்.
“JWidfon" .. அப்பாவைக் கொண்டு போருங்களாம் ஒரு அண்ணே வந்து சொல்லிவிட்டுப்
"ஐயோ நான் என்ன செய்ய ராஜன் ?’ என்று குழறி
அழுதபடி புரண்டு கிடந்தாள். உதடுகளைக் கடித்துத் துயரத்தை விழுங்கிக் கொண்டார்.
'தம்பி ராஜன் நீ வெளிலை போ அப்பு . நான் அம்மாவை பார்க்கிறன் .' என்று கூறியபடி அப்போதுதான் வந்தாள் முத்துக் கிழவி.
பக்கத்து வீட்டிற்கு ஓடிப் போய் ரவி மாமாவிடம் சொல் வோம் என்று நினைத்தான். அவர் கள் ஒருவரும் வீட்டில் இல்லை என்பது பிறகுதான் நினைவு வந் தது யாருமே. யாருக்காகவும் சுவலைப்படாமல், க வலைப் பட முடியாமல் இயங்குகிற நிலை.
உடலும் உள்ளமும் குதறப் பட்டு. நெஞ்சம் உமிழ்நீர் விழுங்க இல்லாமல் நோகிறது அவனுக்கு,
நான் கோயில பாத்திட்டு
'அம்மா. டிக்குப் போய்ப்
வரட்டே?” வீட்டுக்கு வெளியில்
நின்றபடி கேட்கிருன்
வார்த்தைகள் அழுகையில்
கரைந்து போகின்றன
*வேண்டாம் ராஜா. நீ குழந்தைப் பிள்ளை. உன்னைச் சுட் டுப் போடுவாங்கள் நீ தனியப் போகமாட்டாய் , '
அம்மா முனகலுடன் கூறு வது கேட்கிறது தொடர்ந்து முத்துக் கிழவி, ஆம்பிளைப்பிள்ளை எண்டாக் குழந்தைப் பிள்ளை எண்டாலும் சுட்டுப் போடுவங் களாம் .' என்கிருள்.
அம்மா இடையிடை இடை யிடை விட்டு வந்து கொண்டி ருந்த தன் மூச்சு ஒலிக்கிடையே
ராஜன் . அடுத்த அறைக் கொடியிலை பக்கத்து வீட்டுச் சுமிதாவின்ரை சட்டை ஒண்டு கிடக்கு . நீ அதை எடுத்துப் போட்டுக் கொண்டு நில் பொம் பிளைப் பிள்ளை மாதிரி இருக்கும் என்கிருர்,
அவனுக்கு கசப்பு மாத்தி ரையை விழுங்கினுற்போல் இருந் தது. தான் "ஆம்பிளைப்பிள்ளை' என்பதில் எப்போதும் பெருமை கொள்ளும் அம்மா கூட, இன்று அவனைப் “பொம்பிளைப்பிள்ளை" யாகச் சொல்கிருள்.
'இவங்களுக்குப் பயந்து இப் பிடியெல்லாம் செய்ய வேண்டி யிருக்கு .'
சிறு கற்கள் உள்ளச் சுவ ரைத் தாக்கிவிட்டு விழுகின்றன
33

Page 19
அந்த் அறையின் உள்ளே சென்று பார்க்கிருன். சுமிதாவின் சிவப்பு நிற ச் சட்டை கொடியில் தொங்கு கிற து. அம்மா யாருக்ேேகா சட்டை வெட்டிக் கொடுப்பதற்காகச் சுமிதாவின் சட்டையை ஒருநாள் மாதிரிக்கு வாங்கிப் பார்த்துவிட்டு இன் னும் கொடுக்கவில்லை.
இவன் தனது “சேட்டைக் கழற்றி எறிந்தான். காற்சட் டைக்கு மேல் அந்தச் சட்டை யைப் போட்டுக் கொண்டான்.
இப்போது அம்மாவின் முன கல் சத்தம் கேட்கவில்லை. அழு கைச் சத்தமும் கேட்கவில்லை. அவளது கண்ணிர் உறைந்து மண் டையில் கெட்டியாகத் தங்கிவிட் டதோ?
பனை வடலிகளுக்கூடாக, நிறையச் சத்தங்கள். புதுப்புது வகையான சத்தங்கள் எல்லாம் கேட்டன
"ஐயோ. எனக்குத தாங்க ஏலாது , " உள்ளிருந்து அம்மா வின் ஒலி!
"கொஞ்ச நேரம் . இன் னும் கொஞ்ச நேரந்தான் . அதுக்குள்ளை அறுவாங்கள் வந்தி டுவான்கள் போல கிடக்கு. என்று முத்துக்கிழவி பதில் சொல் வதும் கேட்கிறது.
அம்மாவின் அழுகை உடைந்து வருகிறது.
குரல்
இப்போது வெடிச் சத்தங் கள் மிக அருகாமையில் கேட்
கின்றன. ஒவ்வொரு ஒலிக்கும் யன்னல் கண்ணுடிகள் குலுங்கி அதிருகின்றன. ஒவ்வொரு இடி யும் நெஞ்சில் விழுவது போல நெஞ்சம் துடிப்பதை நிறுத்தி
மீண்டும் மறு வெடி கேட்பதற் கிடையில் துடித்துக் கொள் கிறது"
அப் பா . என்ன பயங் கரம்!
இவன் வீட்டிற்குப் பின்புறம் இருந்த பூநாறிகளுக்கிடையில் ஒளித்திருந்தான்.
ஐம்பது அறுபது கூலிப் படை அவர்களுக்கு முன்னுல் வரிசையாக வி லங்கு களி ல் பிணைத்தப்டி ஒரு கூட்டம் ஆண் கள் ஒருவரது இடது கை மற்ற 6) (565) L., ଗuତ!g) கையுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருப்ப தால் எல்லாரும் சேர்ந்தே அ  ைச ய வேண்டியிருக்கிறது! அவர்கள் அனைவரும் உயிருள்ள கவசங்களாக முன்னே செல்லக் கூலிப்படை பின்னல் அசைந்து கொண்டு வருகிறது.
கீழ்வானம் கத்தியாற் காயப் பட்டது போல் சிவப்புக்கோலம் காட்டி நிற்கிறது. அவர்கள் இப் போது ஆயுதக் கிடங்குக்கு அரு கில் வந்துவிட்டார்கள்.
அவன் பதுங்கியிருந்த பூநா றிப் பற்றையில் தென்றல்பட்டு விரிகிற சின்னச் சின்னப் பூக்க ளெல்லாம், ஒரு புயலை எதிர்த் துப் போர்க் கோலத்தில் இருப் பதாக ராஜனுக்குத் தோன்று கிறது.
34

பற்றைக்குள்ளே மறைந்தி ருந்த தலையை மெதுவாக வெளியே நீட்டி எட்டிப் பார்த் தான் ராஜன்"
அது யார்? அந்த வரிசை யில் இடது பக்கத்திலிருந்து மூன்
ருவதாக ? சந்தேகமில்லை அப் பாதான்!
* 'அம்மா . அ வ ங் கள்
கொண்டுவாற ஆக்களிலை அப்பா வும் இருக்கிறர்' என்று கத்த வேண்டும் போல் தோன்றிய ஆவலை மிக முயன்று அடக்கிக் கொண்டான்.
சொற்கள் நெஞ்சிற்குள் சிக் கிக் கொண்டன.
*அவங்கள் ஆயுதக் கி - ங் கைக் காட்டச் சொல்லிவெருட்டி அடிச்சு ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாருங்கள் போலை கிடக்கு. வெறியிலை வருவங்கள் . ராஜன் நீ எங்கை போட்டாய் உள்ளுக்கு வந்து குசினிப் புகைக் கூட்டுக்கை இரு க் கட்ட 7 ம்
og Th Lor ... “ ” ۔ ^
முத்துக் கிழவி சற்று உரப் பாகவே சொன்னர். அவ ன் மெளனமாய் அந்த இடத்திலே யே ஒளித்திருந்தான். அங்கிருந்து பார்க்க நடப்பவை யாவும் துல் லியமாகத் தெரிந்தன.
இப்போது அவர்கள் யாவ ரும் ஆயுதக் கிடங்கைக் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றனர். உள்ளே இற ங் கி ஆயுதங்களை எடுக்கத் தயங்குவது போல் தெரி ந்தது. விலங்குகளோடு நிற்பவர் களையும் அதற்குள் இறக்க முடி
யாது, ஒருவரின் விலங்கைக் கழ ற்றிவிட்டால் ஒருவேளை அவர் ஆயுதத்தை எடுத்து அவர்களுக் கெதிர, கப் பாவிக்கக்கூடும். வில ங்குடன் நிற்பவர்களில் யார் ஆயு தம் பாவிக்கத் தெரிந்தவர் யார் தெரியாதவர் என்பதில் அவர்க ளுக்குத் தெரியவில்லை. இந்தத் தெளிவில்லாமையால் தான் எல் லாம்.
ராஜன் மனதுக்குள்ளே பல கோலங்களைப் போட்டுப் போட்டு அழித்துக் கொண்டான்.
சிறிது பின்னர், அம்மாவும் முத்துக் கிழவியும் அறியாமல் பற்றையை விட்டு வெளியேறி ஞன். மெதுவாக ஆயுதக் கிடங் குக்கு அருகில் சென்றன்.
தங்களுக்கு முன்னே தைரிய மாய் வந்து நிற்கும் சிவப்புச் சட்டை "பேபியை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
**ஒயாட நம மொக்கத பேபி?' ஒருவன் கேட்டான். அப்பா அவசரமாகக் கண்களைத் தாழ்த்திக் கொண்டமை தெரிந் தது. அவர்கள் அனைவரையும் கெளவுவது போன்ற ஒரு பார் வையை அவர்களை நோக்கி வீசி விட்டு,
"அங்கிள். நான் உள்ளே இறங்கி எல்லாம் எடுத்துத் தரட் டே?' என்று மிகுந்த குழந்தைத் தனத்துடன் கேட்டான்.
தமிழ் தெரிந்த ஒருவன் இவ னது கேள்வியை மற்றவர்களுக்கு மொழி பெயர்த்தான்.
35

Page 20
இவனது முகத்தில் இணக்க 10:சீன மிக நெருக்கமான-சிரிப்பு இன்னும் நெளிந்தபடி இருக்கி நீ0ழி:
' ' ). ബt(ബt இறங்கிஒவ்வொரு ஆயுதமாக எடுத்துத் தாறதா? கண்கள் நிலைக்க வியப்புடன் கேட்கிறன் ஒருவன்.
3 婷 s
இவன் மிக வேகமாய் அழ காய் தலையாட்டுகிருன், Cup5 lb. கனமாகப் பொழிந்து தள்ளி நிறுத்திக் கொண்ட வானத்தை ஒத்திருக்கிறது தெளிவில்!
அப்பா இன்னும் நிலத்தைப் பார்த்தபடியே நிற்கிருர், 'தம்பி TTTGör GBG GTL-fifth இந்த விப ரீத வேலை ' என்று சொல்ல முடியாத நிலையில் அவர் நிற்பது அவனுக்குப் புரிகிறது.
'வழுவழுப்பும் மினுமினுப்பு
மாய்க் கழுத்தை வளைக்கும் பாம்பு இது ' என்று அவர்கள் துப்பரவாக எதிர்பார்த் திருக்க முடியாது.
‘ரீ’ வடிவில் வெட்டப்பட் டிருந்த அந்தக் கிடங்கினுள் மிக வேகமாய் இறங்குகிறன்
ராஜன், இறங்கியவன் அதன் உள் அந்தத்தில் போய் நின்று கொண்டான்.
அவன் எடுத்துத் தரப்போ கும் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அ வர் க ஸ் கிடங்கைச் சுற்றி வளைத்துக் காத் திருக்கிறர்கள். சற்றுத் தள்ளி
விலங்கிடப்பட்ட உயிருள்ள கவ சங்கள்
ஒரு கணப் பொழுதுதான்!
திடீரென்று உள்ளே இருந்த கிரனைட்டுகளைத் தூக்கி வில்லு களைத் தட்டிவிட்டு ஒவ்வொன் ருய் வெளியே எறியத் தொடங் குகிருன் ராஜன், தேள் கொட்டி விட்டாற் போன்று எதிர்பாரா மல் அதிர்ந்து நிமிர்ந்த கூலிப் விட சற்றுத் தாமதமாகக் கிடங்கை நோக்கிச் சுட்ட குடு கள் ஒன்றும் அவனுக்குப் பட முடியவில்லை.
வெளியே காத்திருந்தவர் களில் சிலர் இறந்து விழுந்த பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்ட ம்ற்றவர்கள் வேகமாய் அவ்விடத்தை விட்டு ஒடத் தொடங்கினர். ஒடும் போ gil விலங்குகளுடன் நின்றவர்களில் சிலரைப் படபடவெனச் சுட்டுத் தள்ள மட்டுமே அவர்களால்
முடிந்தது.
சத்தங்கள் யாவும் ஓய்ந்த பின்னர் கிடங்கிலிருந்து மெது வாக வெளியே வந்தான் ராஜன்.
கை விலங்குகள் அகற்றப் படாத நிலையில் சடலங்கள் கிடக்க இடையில் உயிருள்ளவர் களும் அவர்களுடன் விலங்கிடப் பட்ட நிலையில் படுத்துக் கிடந் தனர்.
'தம்பி, ராஜன் . எனக்கு ஒண்டுமில்லையடா அவங்கள் சுடத் தொடங்கின உடனை நாங் கள் விழுந்து படுத்திட்டம் ."
36

அப்பா சொல்வதும் கேட் له أسسا
குடி சையை நோ க் கி விரைந்து ஓடினன் ராஜன்.
உடலின் சாரமெல்லாம் அலி யாகிவிட்டாற் போன்ற தெம் புடன் அம்மா அங்கே படுத்துக் கிடக்கிருள். முத்துக் கிழவி அரு
கில் நிற்கிருர். குழந்தை ஒன் றின் "குவாகுவா ஒலி கேட் கிறது.
பொருள் பொதிந்த பார்வை யால் இந்த நிலையை மெளன மாய் அளந்தான் ராஜன்.
அம்மா அவனை அணைத்துக் கொண்டாள்.
"அப்பாவைக் காப்பாத்திட் டன் அம்மா ...”*
உயிர்க்குலம் அனைத்துமே தன்னை ஆதரவளித்து இதம் செய்தாற் போன்ற பரவச உணர்வு ராஜனுக்குள் ஏற்பட்
கண்களில் பொங்கும் நீரை நீர் விட்டுக் கரைத்துக் கழுவிக் கொள்கிருன்.
இதயத்தின் வயிறு நிறையம் வரை கழுவிக் கொண்டான்.
மெல்லிய காற்று இலைகளின் மீது நடந்து போனது.
ஆனல் அவனது குடிசை
நாளை எரிக்கப்படலாம்,
"தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை' மில்க்வைற் ஸ்தாபனம்
மில்க்வைற் உற்பத்திப் பெருட்களின் மேலுறைகளுக்கு பல வெகுமதிகள் கொடுக்கப்படும். நாளும் நற்பணி செய்தி. தங்கள் ஆதரவை நாடும்.
மில்க்வைற் சவர்க்கரத் தொழிலகம்
UT ப்பாணம்.
37

Page 21
பைத்தியங்கள் வாழட்டும்
அறிமுக எழுத்தாளர் - எஸ். எஸ். எஸ். TTA? --
விரிவுரை மண்டபத்தை விட்டு வெளியே வந்த நிஷாந்தி மணிக்கட்டைச் சற்று உயர்த்தி நேரத்தைப் பார்த்தாள் மணி மூன்று பத்து. இனி விரிவுரை எதுவும் இல்லை. ஆணுல், கெள ரிக்கு நாலு மணிக்குத்தான் விரி வுரைகள் முடியும். அவள் உயிரி யல் விஞ்ஞானப் பிரிவில் பயில் கிருள். அவள் வரும்வரை காத் திருக்கத்தான் வேண்டும். இரு வரும் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள் என்பது மட்டு மல்ல, இணைபிரியாத தோழிக ளும் கூட.
வழக்கம் போல வேப்பமரத் தடி சீமெந்து பெஞ்சை நோக் கிச் சென்று அமர்ந்து கொண்
டாள். ஆங்காங்கே மாணவ, மாணவிகள் இருவர், மூவராக அமர்ந்தும் நின்றும் சுவாரஸ் யமாகக் கதைத்துக் கொண்டி ருந்தார்கள். உல்லாசமும் உற்
சாகமும் நிரம்பிய அவர்களின் ஆரவாரமான உரையாடல்களுக் கிடையில் நாட்டு நிலைமையைப் பற்றிய அக்கறையும் இடையி டையே தலைதூக்காமலில்லை. கவ லையற்று வானம்பாடிகளாகப் பற ந்து திரியவேண்டியவர்கள், தம் உள்ளத்தில் இனம் புரியாத சோ கத்தையும் சுமக்க வேண்டியநிலை
38
எப்படி ஏற்பட்டது? என்று வியப் புடன் நினைத்துக் கொள்வாள் நிஷாந்தி.
இன்று நேற்றல்ல, சில கால
மாகவே அவள் தன்னைச் சுற்றி யுள்ள அந்த உலகத்தைக் கூர்ந்து
கவனிக்கத்தான் செய்கிருள். அநீ
திகளைக் கண்ட போதெல்லாம்
அதற்கெதிராக முதலிலே யே
குரல் எழுப்பிய அந்தப் பல்கலைக்
கழகத்துப் பிஞ்சு உள்ளங்கள் இன்
றும் குரல் எழுப்பத்தான் செய் கின்றன. போராட வேண்டிய நேரத்தில் போராட்டமும் மற்ற நேரத்தில் படிப்பும், சிரிப்பும்
கூச்சலும் கும்மாளமும் இடத்
தான் செய்கின்றன. ஆனலும்
அவற்றையும் மீறி அவர்கள் தமக் குள்ளே வெதும்பிக் கொண்டிருப் பது போன்ற பிரமை நிஷாந் திக்கு அடிக்கடி ஏற்படும். தன்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப் படுத்துவதற்குக் கையில் ஒரு புத் தகத்தை எடுத்துப் பிரித்து வைத்
துக் கொண்டு அந்த வேப்பமரத்
து ப் பெஞ்சிலிருந்து கொண்டு எத்தனையோ முறை அவள் மற்
றவர்களைக் கவனித்திருக்கிருள்.
கெளரிகூடப் பல தடவை கள் நிஷாந்தியைக் கேலி செய் திருக்கிருள். தமிழிலக்கியம் படிப்

ப்தால் உன்னை நீ ஒரு இலக்கிய வாதியாசு நினைத்து விடாதே. மற்றவர்கள் நினைக்காதவற்றை யெல்லாம் நினைப்பதாகக் கற் பனை செய்து உன்னை நீயே ஏமாற் றிக் கொள்ளாதே'
கெளரி சொல்வதை நிஷாந்தி எ ன் று மே பொருட்படுத்திய தில்லை. ஆனல், இன்றைக்கு என் னவோ அவளுடைய மனம் ஒரு நிலையில் இல்லை. அதற்குக் கார ணம் சற்றுமுன் நடந்த விரிவுரை தான். சங்ககாலம், சங்கமருவிய காலம் என்பவற்றைப் பற்றிய விரிவுரை அது. விரிவுரையாளர் அவ்விரண்டு கால இலக்கியங்க ளைப் பற்றியும் மிக நல்ல முறை யில்தான் விளங்கப்படுத்தியிருந் தார்.
சங்க காலத்தில் போரும் காதலும் சிறந்து விளங்கின. ஆனல் அளவுக்கு மிஞ்சிய போர் வெறி பல ஆடவர்களின் உயி ரைப் பறித்தது, அந்நியர் வருகை தமிழரின் மதம், மொழி, கலாச்சாரம் இவற்றில் மாற்றங் களை ஏற்படுத்தியது. பெண்கள் பலவித கொடுமைகளுக்கு ஆளா கிஞர்கள். மொத்தத்தில் சமு தாய ஒழுக்கமே கெட்டழிய நேரிட்டது. இவையே சங்கமரு விய காலத்து இலக்கிய நூல் களின் தோற்றத்துக்கு காரண மாயின. இதுதான் நிஷாந்தி கிரகித்துக் கொண்ட விரிவுரை யின் சாராம்சம். அன்றும்சரி, இன்றும் ச ரி அப்பாவிகளான பெண்கள் குற்றம் எதுவும் செய் யாமலே துன்பங்களை அனுபவிக்க நேரிட்டிருக்கிறதே என்பதுதான்
39
பற்றி
அவள் மனக் காரணம்.
குழப்பத்திற்குக்
பத்து வருடங்களுக்கு முன் னர் அவள் இவற்றைக் கேட்டி ருந்தால் இப்படியெல்லாம் உல கத்தில் நடந்திருக்குமா? என்று தான் கேட்டிருப்பாள். ஆனல், இப்போது அப்படியொரு கேள்வி எழுவதற்கே இடமில்லை. பித்த ளைக்குத் தங்க முலாம் பூசும் இலக்கியகர்த்தாக்களைப் பாராட் டத்தான் வேண்டும். சமுதாயத் தில் தாம் காணும் அவலங்களை, அநீதிகளை இலக்கியம்
என்ற பெயரில் எவ்வளவு அழகாக வெளிக் கொணர்ந்திருக்கின்ருர் கள்.
அன்றைக்குப் புலவர்கள் செய்ததை இன்று எழுத்தாளப் பெருந்தகைகள் சிலர் செய்யாம லில்லை.
சமுதாயத்தில், குறிப்பாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நீக்கப்படுகின்ற னவோ இல்லையோ, அவை பல சிறுகதைகள், நாவல்கள், கவி தைகள் பிறக்கக் காரணமாகி விடுகின்றன என்பது உண்மை. தங்கமுலாம் பூசினலும் பித்தளை பித்தளைதான். அதுபோலத்தான் இலக்கியகர்த்தாக்கள் கொடு மைக்குள்ளான அல்லது அநீதி களுக்கு ஆளான பெண்களைப் எவ்வளவு எழுதினலும் அதனுல் பெரும் சமுதாய மாற் றங்கள் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவதற்கில்லை. க  ைத களி ல் தான் இலக்கியவாதிகள் தோன் றிக் களங்கப்பட்ட பெண்களுக் கும், அபலைப் பெண்களுக்கும் வாழ்வு கொடுக்கும் விந்தையைப்

Page 22
பார்க்கமுடியும் - ஆனல், நிஜ
வாழ்வில் ஆயிரத்தில் அல்ல. இலட்சத்தில் ஒரு வரைத்தான்
அவ்விதம் கான முடிகிறது. இன் றைய எமது நிலையில் இலட்சத் தில் ஒருவர் எந்த மூலைக்கு?
‘என்னடி புத்தகப்பூச்சி, இன்றைக்கு என்னத்தைப் பற் ിj; 55 i år? o ? என்ற குரல் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்து I gig576r நிஷாத்தி. அவளரு N கெளரி நின்றிருந்தாள் கோரி தனியாக வரவில்லை 9.162یہ 11-ன் இன்னுெரு ttாணவனும் விருந்தான். அவ இறு - ன் சிப் பழகவில்ஃயே தவிர, :ன் பெயர் ஜெயராம் என்ப அவனும் கெளரியுடன் உயி விஞ்ஞானப் பிரிவில் படிக் என்பதும் நிஷாந்திக்கு த் யும். மேலும் அவன் ஒரு பேச்சாளன், மாணவர் ளிேடையே நடக்கும் விவாத அரங்குகளில் அறிவு பூர்வமான கருத்துக்களை முன் வைப்பவன். நாட்டின் சூழ்நிலையால் பொது tter பாதிக்கப்படும்போதெல் லாம் அவர்களுக்கு உதவுவதில் முன் நின்றுசெயற்படுபவன் இவன் எதற்காகக் கெளரியுடன் வந்தி
ருக்கிழுன்?
நிஷாந்தியின் உள்ளத்தில் எழுந்த கேள்வியை உணர்ந்தது பே, )ே,-
** நிஷாந்தி மீற் மிஸ்டர் ஜெயராம் இவரை உனக்குத் தெரியும்தானே. இவர் முக்கிய மான ஒரு விஷயம் உன்னுடன் கதைக்க வேண்டும் என்ருர் அத
40
ற்காக அழைத்து வந்திருக்கி
றேன்' என்ருள் கெளரி.
"அப்படி என்னுடன்கதைப் பதற்கு என்ன விஷயம் இருக்கி Pது? என்பதுபோல ஜெயரா மைக் குழப்பத்மூடன் பார்த்தான் நிஷாந்தி.
‘பய்ப்பட வேண்டாம் மிஸ் நிஷாந்தி. இப்ப எமது நாடு இருக்கிற நிலை உங்களுக்லித் தெரி யுராதானே. இந்த நிலையில் எமது மக்கள் பல்வேறு வழிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள். s96)I ர்களுக்கு இறன்ற உதளிகளைச்
செய்ய வேண்டியது எமது கடமை. அதற்காக நாம் ஒரு "கொமிற்றி" அ  ைமத்து ச்
செயற்பட முடவு செய்திருக்கி ருேம். எமது செயற் குழுவில் இடம்பெறுவதற்கித் தகுதியான வர்களிலே உங்களையும் சேர்த்துக்
கொள்ள விரும்புகிறேம். அது தொடர்பாகவே உங்களுடன்
கதைக்க வந்திருக்கிறேன்' என்று நிஷாந்தியைப் பாக்த்துக் கூறி னன் ஜெயராம்.
அதைக் கேட்டதும் நிஷாந் தியின் முகம் சற்று மலர்ந்தது. ኁ **நல்ல முயற்சி. கட்டாயம் நானும் உங்களுடன் சேர்ந்து உதவி செய்கிறேன் ஜெயராம்" என்று மகிழ்ச்சியுடன் கூறிய நிஷாந்தி தொடர்ந்து,
எப்படி உதவி செய்யப் போகிறீர்கள்? பாதிக்கப்பட்ட வர்களுக்கு உணவு, உடை, நிதி யுதவி என்றெல்லாம் செய்வது அவசியந்தான். என்றலும் அது
 
 

utěrů பசிக்குச் சோளப்பொரி போலத்தான் அமையும்" என் ழுள்.
'நீங்கள் சொல்வது உண் மைதான். வாழ வழி தெரியா மல் தவிக்கும் மக்களுக்கு இரண்டு வாரத்துக்குத் தேவையான உண வுப் பொருட்களை வழங்குவ தாலோ அல்லது சொற்ப நிதி உதவியை வழங்குவதாலோ நாம் எதையும் சாதித்துவிடமுடியாது. அரசாங்கம் வேண்டுமானல் அவ் விதம் செய்துவிட்டு மார்தட்ட லாம். நாம் அவ்விதம் செய்ய முடியாது. மேலும் நாம் இன் றைய நிலையில் பொது மக்களிட மிருந்து உணவுப் பொருட் களையோ, உடைகளையோ அல் லது நிதி உதவியையோ அதிகம் எதிர்பார்க்கவும் முடியாது'
"அப்படியானுல் உங்கள் திட்டம்தான் என்ன?"
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்க சார்பற்ற பல பொது ஸ்தாட! னங்கள் இப்போது செயற்படு கின்றன. ஆனல், இவற்றிலிருந்து எவ்விதம் உதவிகளைப் பெற்றுக் கொள்வது என்று தெரியாத நிலை யில் பலரிருக்கிருர்கள் என்பது உண்மை. அத்தகையவர்களுக் குத் தகுந்த வழிமுறைகளைக் காட்டி உதவுவது எமது முக்கிய நோக்கம்"
'உண்மையிலேயே இது நல்ல நோக்கம். இவ்விஷயத்தில் நாம் முக்கியமாக, பாதிக்கப் பட்ட பெண்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்"
41
ராம்.
'ஏன் அப்படிச் சொல்கிறீர் கள் நிஷாந்தி? பாதிக்கப்பட்ட வர்கள் என்ருல் அதில் ஆண் பெண் என்று பேதப்படுத்துவது வீண் சச்சரவுகளைத் தோற்று விக்கத்தான் வழிவகுக்கும்' என்
முன் ஜெயராம்.
** அப்படிச் சொல்லித் தப் பித்துக் கொள்ளக்கூடதுே ஜெய பாதிக்கப்பட்ட ஆண் களுக்கு எத்தனையோ வழிகளால் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. அவ்விதம் உதவி கிடைக்காவிட் டாலும் அவர்களால் எப்படியோ சமாளிக்க இயலும். ஆணுல், பெண்களின் நிலை அதுவல்ல. கணவன்மாரை இழந்த மனைவி யர், காதலரை இழந்த காதலி யர், சகோதரர்களை இழந்த சகோதரியர், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், ஏன் இன்னும் பலவித கொடுமைகளுக்கு இலக் கான பெண்கள் இப்போது நம் மத்தியில் பரிதவித்துக் கொண்டி ருக்கிருரர்கள். இவர்களுக்கு முன் னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?’ என்ருள் நிஷாந்தி உணர்ச்சியுடன்.
*ஒரு தவறுமே இல்லை. ஆனல், நீங்கள் அவசரப்படு கிறீர்கள் நிஷாந்தி. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவுவது பற்றியும் நாம் சில திட்டங்களைச் செயற்படுத்தவுள்ளோம் அவர் களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்காகச் செயற்படும் பல நிறுவனங்களுடன் நாம் தொடர்பு கொள்வதாக இருக் கிருேம். மறுவாழ்வு என்று சொல்லும்போது சுயதொழில்

Page 23
வாய்ப்பு முதலியன மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்களில் எத் தனையோ பேர் இள வயதினர்; வாழ வேண்டியவர்கள் நடந்து போனவை கனவு என்றெண்ணி அவர்கள் வாழ வேண்டும். அவர் களுக்கு வாழ்வழிப்பதற்கு வழி வகுப்பதும் எமது நோக்கம்' என்ற ஜெயராமை இடைமறித் தாள் நிஷாந்தி.
'நீங்களும் கற்பணுவாதி யாகிவிட்டீர்கள் ஜெயராம். நீங் கள் கூறுவதுபோல எத்தனை பெண்களுக்கு மறுவாழ்வு அமைத் துக் கொடுக்கமுடியும்? எத்தனை ஆடவர் அதற்கு முன்வருவார் கள்? இலட்சியவாதிகளைக் கதை களில்தான் காணமுடியும். நிஜ வாழ்வில் எத்தனை பேர் அவ்வி தம் நடப்பார்கள்? சற்றுமுன்னர் நீங்களும் கெளரியும் வரும் போதுகூட நான் இதைப் பற் றித்தான் யோசித்துக் கொண்டி ருந்தேன்' என்று கூறிய நிஷாந்தி இலக்கிய விரிவுரை தனது மனத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றிக் கூறினுள்.
'நீங்களும் மிகவும் ‘ஸென் சிற்றிவ் ரைப்பாக இருக்கிறீர் கள் நிஷாந்தி. சங்ககாலம், சங்க மருவிய காலத்துப் போர்க்கால விளைவுகளைத் தற்காலத்துடன் நீங்கள் ஒப்பிடுவது அவ்வளவு சரியல்ல. குறிப்பாக எமது நாட் டைப் பொறுத்தவரை அது கொஞ்சம் கூடச் சரியல்ல என்றே கூறுவேன். இங்குள்ள இளைஞர்களைப் பொறுத்தவரை யில் அவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சுயமாகச் சிந்திக்
கத் தெரிந்தவர்கள்; சரியான வழியில் துணிந்து நடப்டவர்கள்.
பாரதி கூறியதுபோல மனதில் உறுதியுடையவர்கள்; உங்கள் பெண்மனம் சில விஷயங்களை
யிட்டுக் கலங்குவது இயற்கை'
* 'ஊருக்கு உபதேசம் செய் யப் போகிறீர்களா?'
* 'இல்லை, நீங்கள் அவநம் பி க் கை யு ட னிரு க் கிறீர்கள் நிஷாந்தி. நானும் எனது நண் பர்கள் சிலரும் எடுத்திருக்கும் முடிவை இப்ப உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்" பாதிக்கப்பட்ட பெண்களையே நாம் திருமணம் செய்து கொள் வதற்காக உறுதி பூண்டிருக்கி ருேம். இதை வெறும் பேச்சுக் காக நான் சொல்லவில்லை. இதற் காக எம்மைத் தியாகிகள் எ ன் றே, இலட்சியவாதிகள் என்ருே கூறி நாம் மார்தட்டித் திரியப் போவதில்லை. நாம் செய் செய்யப்போவது சமுதா யத் துக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. அவ்வளவுதான். எங்க ளைப் போன்று இலைமறை காயாக எத்தனையோ இளைஞர் கள் செயல் வீரர்களாக இருக்கி றர்கள். நீங்கள் கூறியதுபோல மேடைப் பேச்சுக்களிலும், எழுத் தாளர்களின் கற் பனை யிலும் காணக்கூடியதாக இருந்தவற்றை நடைமுறையில் காணமுடியாத காலம் ஒன்று இருந்தது உண்மை தான். ஆனல், இப்ப நிலமை தலைகீழாக மாறிவிட்டது. கற் பனையிலும் விஞ்சிய நிகழ்ச்சிகள் எமது வாழ்க்கையாக அமைந்து விட்டன" மிகுந்த உணர்ச்சி
42 -

யு-ன், சொற்பொழிவாற்றுவது போலப் பேசினுன் ஜெயராம்.
அவன் முகத்தையே பிமிரப் புடன் பார்த்துக் கொண்டிருந் தான் நிஷாந்தி. நிச்சயம் கர்லம் மாறிக் கொண்டுதாணிருக்கிறது.
'இவள்தான் பைத்தியம் என்று நினைத்தேன். அவளைவிட நீங்கள் பெரிய பைத்தியமாக இருக்கிறீர்களே ஜெயராம்" என்ருள் இதுவரை அமைதியாக இருந்த கெளரி.
உன்னை மாதிரி நடக்கிற தெல்லாம் நடக்கட்டும். நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண் டும்? என்று எண்ணுகிற பைத்தி யங்களும் எம்மத்தியில் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன’
கூறிச் சிரித்தாள் நிஷாந்தி. ஜெயராமின் முகத்தி லும் அதை ஆமோதிப்பது போல புன்னகை தோன்றியது" அதைக் கண்ட கெளரியும் அசட் டுச் சிரிப்புச் சிரித்தாள்.
எ ன் று
磅
器
இ9 விவசாய கிருமிநாசினிகள் இ உரப்பசளை வகைகள்
சயிக்கிள் உதிரிப்பாகங்கள் இ. இரும்பு வகைகள் சீமேந்து இ கோழித்தீன்
இ சாக்கு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள
சிறந்த
சாறேட்ஸ் சென்ரர்
அச்சுவேலி
இடம்

Page 24
மட்டக்களப்பு பேச்சு மொழியில்
இலக்கியச்
சொற்கள்
(அன்புமணி)
ஒவ்வொரு மொழியிலும் பேச்சு வழக்கு ஒன்ருகவும், எழுத்து வழக்கு வேருென்றகவும் இருப்பதை நாம் காண்கின்ருேம். எழுத்து வழக்கில் இலக்கண அமைதி செறிந்தும், கவிதைத் செழுமை நிறைந்தும் காணப் படும். ஒரு மொழி பேச்சுவழக் கில் திரிந்தும் பிறழ்வதும் பிறி தோர் உருவம் பெற்றிருப்பது எண்கூடு.
இருந்தபோதும் எழுத்து மொழிக்கு இல்லாத ஒரு தனித் தன்மை, உயிர்த்துடிப்பு, மண் வாசனை, பேச்சு மொழியில் உண்டு. ஒரு பிரதேசத்தின் தனித் துவம் அப்பிரதேசத்தின் பேச்சு மொழியிற் பிரதிபலிக்கும் பிர பல நாடகாசிரியர் பெர்னட்ஷா எழுதிய "பிக்மாலியன்’ என்ற நாடகத்தில் இத்தனித்தன்மை மிக நாசூக்காகக் கையாளப்பட் டிருப்பதை நாம் காணலாம். தமிழில் இத்தன்மை மிகத் தாரா ளமாக உண்டு. தமிழகத்திலேயே திருநெல்வேலித் தமிழ், தஞ்சா இர்த் தமிழ், மதருஸ் தமிழ், கொங்குநாட்டுத் தமிழ் என நூற் றுக்கணக்கான பிரதேசப் பேச்சு வழக்குகள் உண்டு ஈழத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத் தமிழ் மட்டக்களப்புத் தமிழ் என்பன பிரசித்தமானவை.
மட்ட க் களப்புப் பேச்சு மொழி, தமிழ் அறிஞர் பலரை 4ம் கவர்ந்த ஒன்று. ஏனைய பிர தேசப் பேச்க மொழிகளைவிட மட்டக்களப்பு பேச்சு மொழிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது தான் இப்பேச்சு மொழியில் கலந்துள்ள இலக்கியச் சொற் கள். கலித்தொகை, குறுந் தொகை, சிலப்பதிகாரம், திருக் குறள் போன்ற பல பழந்தமிழ் இலக்கிய நூல்களிற் பயிலும் சொற்கள். இங்குள்ளோர் பேச்சு மொழியில் இடம் பெற்றிருப்பது விந்தையே ஒண்ணு, மறுகா(ல்) மறுகி, கொள்ளை, அம்மை, அழுது, அதர், குழறு, கூத்து முதலிய இலக்கியச் சொற்கள் சர்வ சாதாரணமாக இங்குள்ள மக்களின் பேச்சில் அடிபடுவதைக் காணும் பிறர், வியந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை.
தமது வியப்பை, மட்டுநக ருக்கு வருகை தந்த அறிருர் பெருமக்கள் பலர் தாம் எழுதிய கட்டுரைகளில் அவ்வப்போது தெரிவித்துள்ளனர்.
அப்படியான சில சொற்களை இப்போது நாம் பார்ப்போம்.
ஒண்ணு' என்ற சொல் Փւգபாது? "இயலாது" என்ற பொரு
44

ளில் இலக்கியங்களில் வழங்கும்? *இட்டவித்தி னெதிர்த்து வந் தெய்தி, ஒட்டுங்காலை யொழிக் கவு மொன்னு' (சிலப்பதிகாரம்) "தேடித்தேடொணுத் தேவனை என்னுள்ளே தே டி க் கண்டு கொண்டேன்" (தேவாரம்) இவ் வாறு பரவலாக இலக்கியங்களிற் காணப்படும் "ஒண்ணு" என்ற சொல் இதே பொருளில் மட்டக்
களப்பில் பயிலப்படும். என்னல் {ւՔւգ-Ամո ֆ] என்பதை எனக் கொண்ணு என்றும், ‘என்னல் நடக்க முடியாது" என்பதை
‘என்னல் நடக்கொண்ணு" என் றும் கூறுவர்.
மறுகா(ல்) என்னும் சொல் அப்புறம்" "பின்பு" என்ற அர்த் தத்தில் இலக்கியத்தில் வழங் கும். 'சிறுதினை மறுகால், கொழுங்கொடி யவரை பூக்கும்' எனக் குறுந்தொகை 82ம் செய் யுளில் வருகிறது. இதே போன்று மட்டக்களப்பில் "நான் பின்பு சொல்கிறேன்" என்பதை "நான் மறுகா சொல்லுவன்’ என்றும் *நான் பின்பு வருவேன்" என் பதை "நான் மறுகா வாறன்" என்றும் கூறுவர்.
"கொள்ளை” என்ற சொல் *மிக அதிகமாக' என்ற பொரு ளில் இலக்கியப் பாடல்களில் பயிலப்படும். மட்டக்களப்பின் பேச்சுத் தமிழிலும் இது தாராள மாகப் புழங்கும். “குளத்தில் தாமரைப்பூ கொள் ளை யாக் கிடக்கு" "சோறு கொள்ளையா வச்சிருக்கிரு’ என்றெல்லாம் மட் டக்களப்புப் பேச்சுத் தமிழில் குறிப்பிடுவார்கள்.
45
"அம்மா என்று தமிழில் எங்கும் பொதுவாக வழங்கும் சொல் மட்டக்க ளப் பில் 'அம்மை’ என்று வழங்குகிறது. *அம்மை அப்பன்" என இறை வனை இலக்கியப் பாடல்கள் குறிக்கின்றன. 'அம் மை யே அப்பா ஒப்பிலா மணியே' என் பது திருவாசகம். "அமுது படைத் தல்" என்பது பெரும் சாப்பாடு போடுவதைக் குறிக்கும் இலக்கி யச் சொல். மட்டக்களப்பிலும் அதே பொருளில், ஒருவர் இறந்த முப்பத்தொராம் நாள் தானம் கொடுப்பதை 'அமுது கொடுத் தல்" எனக் கூறுவர்.
இங்குள்ள விவசாயப் பெருங் குடி மக்கள் காட்டு வெளியில் காணப்படும் காலடிப் பாதையை "அதர்" என்று குறிப்பிடுவர். இச்சொல் ‘ஆக்கம் அதர் வினய்ச் செல்லும் என இலக்கியப் பாடலில் வருகிறது.
"அழுதல்" என்பதை 'குழறு தல்' என வழங்குவர். ‘ஏன்டா குழறு ரு ய்?" குழறினப்போல போனது வருமா?’ என்பது இங் குள்ள பேச்சு மொழி. இதே பொருணில் இச்சொல் திருவாச கத்தில் கோயில் மூத்த பதிகம் 10ம் பாடலிலும் “நயனநீர் மல்கா வாழ்ந்த வாய்குழரு’’ என வருவதைக் காணலாம்,
மட்டக்களப்பில் ஆடப்படும் கூத்தை வெளியூர்க்காரர் ‘நாட் டுக்கூத்து' எனக் குறிப்பிடுகின்ற னர். எழுத்திலும் இவ்வாறே அது பயிலப்பட்டு இன்று எங்கும் "தாட்டுக்கூத்து' என்றே இக்கூத் துக் குறிப்பிடப்படுகிறது. ஆனல்

Page 25
மட்டக்களப்புப் பேச்சு மொழி யில் நாட்டுக்கூத்து" என்றசொல் கிடையாது. அன்று முதல் இன் றுவரை *கூத்து" எ ன் றே இங்குள்ள மக்கள் கூறுவர். 'கூத் துப் பார்க்கப் போவோமா?? "இன்றைக்கு என்ன கூத்து’ என்றே உரையாடல் நிகழும்.
இஃது ‘சுத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ் செல்வம், போக்கு மதுவிழிந்தற்று" எனத் திருக்குறளில் வருவதைக் காண லாம். மேலும், "குரவைக்கூத்து’ தில்லைக் கூத்தன்' என 'கூத்து' என்ற சொல் இலக்கிய வழக்கில் பரவலாக வருவதைக்காணலாம்.
மேலும் சில சொற்கள் வருமாறு :-
"ஒரு அந்தையைக் கொண்டு போவது "
அந்தை - ஒரு பகுதி (உ-ம் (
ச னியை அப்பி
அப்புதல் - பூசுதல் ஒட்டுதல்
விட்டார்கள். அளைதல் - பிரட்டிக் கொள்ளுதல் (உ-ம்}
ஆக்கினை - தண்டனை (உ-ம்) ‘இதென்ன ஆக்கினை யாக் கிடக்கு இக்கட்டு - இடர், துன்பம் என்ற பொருளில் வழங்கும்.
(உ- ம்) "பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டான்." ஒய்யாரம் - சொகுசு, அலங்காரம் - நல்ல ஒய்யாரம் என வஞ் சப் புகழ்ச்சியாக வழங்கும். (உ- ம்) "அடை ஒப்யா ரத்தைப் பாரு' ஒள்ளுப்பம் - கொஞ்சம் - "எனக்கு ஒள்ளுப்பம் தா" கிறுக்கு - திரும்பு - (உ-ம்) "சந்தியில் கிறுகிப் போனன்? துமித்தல் - தூறுதல் - (உ-ம்) 'மழை துமிக்கிறது”) துமி என்பது
துளியின் சிறுபகுதி) பூணுரம் - நகைகள் - (உ-ம்; "மணப் பொண்ணுக்கு நிறைய பூணு
ரம் போட்டிருந்தார்கள்'
(உ-ம்) சுவரில்
'தம்பி புழுதி அளையி
இப்படி நூற்றுக் கணக்கான இலக்கியச் சொற்கள் மட்டக் களப்புப் பேச்சுத் தமிழில் உண்டு.
இவை தவிர, இருட்டோட (இருள் பிரியும் அதிகாலை) மாலை பட (மாலைபட்டு மறையும் நேரம்) எழுவான் (சூரியன் எழும் கிழக் குத் திசை) படுவான் (சூரியன் மறையும் மேற்குத் திசை உண் டென்ன (அதிகமாக) உள்ளநாளும் (ஒவ்வொரு நாளும்) என்பது போன்ற அர்த்தபுஷ் டியான சொற்கள் ஆயிரம் உண்டு மட்டக்களப்பு பேச்சுத் தமிழில்.
இதன் பின்னணியில் பெருமை மிக்க வரலாறு ஒன்று உண்டு என்பதில் சந்தேகமில்லை. முறையான ஆய்வு மேற்கொள்ளப்படின் அவ்வரலாற்றைக் கோடி காணுதல் சாலும்.
46

ஏன் பிறந்தேன்
தமிழ்த் தொழிலாளி
1ே ன க் கு இந்நாட்டில் அமைதியுடன் வாழ வழியில்க்ல யா? ஆட்சியாளர்களின் இனக் கொள்கையால் பாதிக்கப்பட் டேன். அல்லல்பட்டேன் ஆயிரக் கணக்கான எனது சகோதர தமிழ் தொழிலாளர்கள் வேலைத் தளத்திலும் வேலைக்குச் சென்ற போதும் சிங்களக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டகொடூர சம்பவங்கள் எத்தனை . அதனுல்
பாதிக்கப்பட்ட அவர்களது குடும்
பங்களின் பரிதாப நிலை விபரிக்க முடியாதவை.
இந்நாட்டில் 1956, 1958 1961, 1977, 1981, 1983 அதன் பின்னர் தொடர்ச்சியாக இடம் பெற்ற இனக்கலவரங்களாலும் வன்செயல்களாலும் பலி யான தமிழ்த்தொழிலாளர்களின் எண் ணிக்கை ஆயிரத்துக்கும் அதிக மாகி விட்டன. நிர்க்கதி ஆக்கப் பட்ட இவர்களது நல்வாழ்வுக்கு உதவ தொழிற்சங்க அமைப்புகள் எதுவும் முன்வரவில்லையே. தமிழ்ச் தொழிலாளிக்கு ஏன் இந்த நிலை ஐ. நா. சபையின் ஆதரவுடன்? இயங்கும் சர்வதேச தொழிற் சங்க நிறுவனத்திற்கு தமிழ் த் தொழிலாளர்களின் பிரச்சனையை எடுத்துச் சுொல்ல தொழிற் சங் கங்கள் முன்வராதது ஏன். தமிழ்ச்
47
தொழிலாளர் என்பதற்காகவா இப்புறக்கணிப்பு.
காடாய். கருங்கல் பூமியாய் மலைமேடாய் இருந்த நாட்டை பொன் கொழிக்கும் பூமியாக்கிய மலையகத்தொழிலாளி, நாடற்ற வன், வாக்குரிமை அற்றவன், குடி யுரிமை அற்றவன் ஆக்கி அடிமை யாக வாழ வைக்க 1948 இல் இலங்கை இந்திய பிரசாவுரிமை சட்டத்தை கொண்டு வந்த சிங் இனவாத முதலாளித்துவ அரசு இன்றுசகல அதிகாரத்து டன் ஆட்சிப்பீடத்தில் இருக்கி றது இந்த அரசின் ஆட்சிக்கா லத்தில் கொல்லப்பட்ட தமிழர் களின் எண்ணிக்கை எத்தனையா யிரம்.
SGT
இந்நாட்டுக்காக உழைத்து ழைத்து ஊருக்கு வந்த மலையக த்தமிழ் தொழிலாளிக்கு என்று தான் விமோசனம் கிடைக்கும்.
1983 இனக்கலவரத்தினலும்
தொடர்ந்து இடம் பெற்ற வன்
செயலாலும் பாதிக்கப்பட்டு தொ ழிலை இழந்த ஆயிரக்கணக்கான அரச கூட்டுத்தாபன, தனியார் துறை ஊழியர்களின் அவலநிலை யை எண்ணிப்பார்க்கிறேன். ஆண் டாண்டுகாலமாக இந்நாட்டின்

Page 26
அரசிற்கு உழைத்துக் கொடுத்த அரச ஊழியர்களுக்கு"ஓய்வூதியம் இல்ஜல" *சேமலாப நிதி இல்லை' *சேவைக் கால நலங்கள் இல்லை' வேலை இழந்தோர் அனைத்தையும் இழந்தோர் ஆகிவிட்டனர். இவர் களுக்காக 1983 இல் இருந்து குரல்கொடுத்து வரும் பாதிக்கப் பட்ட ஊழியர் இணைப்புக்குழு மேற் கொண்ட நடவடிக்கைக ளால் வேலை இழந்த ஊழியருக்கு ஒர் வழி பிறந்தது. ஆனல் அதன் பலனை அவர்கள் அனுபவிப்பதில் பல்வேறு தாமதங்களும் நடை முறைச் சிக்கல்களும் இருந்து வருகின்றன.
1956 இல் கொண் டு வரப் பட்ட சிங்களம் மட்டும் சட்டத் தால் வேலை இழந்த பதவியை விட்டு விலகிய தமிழர்கள் எத் தனையாயிரம்.
சிறிலங்கா சு. கட்சியின் ஆட் சிக்காலத்தில்கொண்டுவரப்பட்ட தேசியமயத்திட்டத்தால் ஆட் சேர்ப்பில் தமிழ்த் தொழிலாளி ஒதுக்கப்பட்டான் தமிழ்த் தொ ழிலாளியாக பிறந்த காரணத்தி ஞல் "அனைத்தையும் இழந்தான்' இழக்கின்ருன், இந்த நிலைதான்
எனக்கும்.
*புக்தெழில்?
எழுத்தாளர்களுக்கு சன்மானம்
எழுத்தாளர்களுக்கு சிறுதொகை
சன் மானம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின் ருேம். இதுவரையும் ஈழத்தில் வெளி வரும் மாத சஞ்சிகைகள் மேற் கொண்டு வருவது புது வழிகளைக் கடைப் பிடிப்பது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்குமே.
தரமான !டைப்புக்களை ஆக்குவதற்கு ஒரு தூண்டு கோலாகும்.
- ஆசிரியல் - புத்தெழில் சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா - ரூ. 100அரையாண்டு - ঢ়ে, 50||- தனிப்பிரதி - ரூ.7.50
48

தொkர்ந்து மாதந்தோறும்
வெளிவர இருக்கும்
புத்தெழில்
இதழுக்கு எழுதுமாறு எழுத்தாளர்களை வேண்டுகிறேம்
சமுதாய சூழலையும், தமிழர் கலாச்சார
பண்பாட்டு உயர்வுகளையும்
சமய நெறிகளையும், இலக்கிய ரசனைகளையும் வரலாற்றுண்மைகளையும் அடிப்படையாகக் சொண்ட படைப்புக்களை
ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்ருேம்,
அனுப்ப வேண்டிய முகவரி
மு. திருஞானசேகரம்
ஆசிரியர்
*புத்தெழில்’ அறிவொளி வீதி,
புத்தூர்
49

Page 27
புதுவையில் பிறக்கும் புத்தெழிலே வாழ்த்துகிறேம்
நீயூ அகுறேஸ்
உர வகைகளுக்கும், கிருமி நாசினிகளுக்கும் ஏனைய விவசாயம் சம்பந்தமான பெருட்களையும்
பெற்றுக்கொள்ள நாடுங்கள் e.
தரம் நாடுவோர் தவருது நாடும் இடம்
நீயூ அகுருேஸ்
வல்லை வீதி அச்சுவேலி
மங்கள வைபவங்களை
நான்கு கமெராக்கள் மூலம்
நவீனரக பிக்கர் சாதனம் மூலம் வீடியோ படம் பிடித்திடவும் S. M. T. மணப்பந்தல் கதிரைகள்
வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும்
இன்றே நாடுங்கள்
வீடியோ கலாமினி
மத்தியசந்தை உட்புறம் அச்சுவேலி
டச்சுறேட் சாவகச்சேரி

வெறி
வரதர்
கொஞ்சம் இங்கே பாருங்
கள். தலையைச் சாடையாக இந் கப்பக்கம் சாயுங்கள்; அந்தப்
இந் ஈப் Ligh
போதும் சரி சரி; .
சாடையாகச் சிரியுங்கள் ??
பக்கமல்ல,
} // Gএচ
பூவழகியில்ை இ கற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. நெஞ்சுக்குள்ளே நிறைந்து
கொண்டைக் குழியில் பொங்கிக் கொண்டு நின்ற சிரிப்பை இ ஈ வரையும் அடக்கி அடக்கி வைக் திருந்த "ஸ் சாடையாகச்சிரிக்கச் சொன்ன து
s, ୮t fit 5rtin rib,
டிரென்று சிரித்துக் கொட்டி விட்டாள். சிரிப்பு எப்போதம் தனிக் து, நிம் சில்?லயே! கத்தில் நின்ற பூவழகியின் தோழி தங்க மலரும் சிரித் காள்.
பக்
பெரிய கமெராவுக்குப் பின் ல்ை நின்று கொண்டு போட் டோ எடுக்கத் தயாராக நின்ற சம்மந்தன் - "சரியான நல்ல போ சைக் கெடுத்த விட்டீர்களே!" என்று கோபப்பட வேண்யவன், அவனும் சிரித்தான். பிறகு, 'நீங்கள் இப்படிச் சிரித்துக் கொண்டு இருந் கால் போட்டோ
எடுத்த மாதிரித்தான்; நான் டபிள் சார்ஜ் போட்டு விடு வேன்!" என்ருன் ,
"அப்படியால்ை உடனே 65 o Currusso); o rap p de பக்கம் கொங்க விடுங்கள் சிரிக்
கிறவர்களுக்கு அழுகிறவர்களுக்கு <到@pr母
சார்ஜ் என்று! - உங்கள் ஸ்ரூடி யோ அழது வடிந்து கொண்டி ருக்கும்" என்ருன் பூவழகி.
அதெைலன்ன, உங்களைப் போன்றவர்கள் அமதால் கூட
அகிலம் ஒரு நல்ல போஸ்" இருக்குமே!" என்ருன் சம்மந் கன்.
நம் வாயில்ை அவன் சொன்ன நினைத் காள். பூவழகிக்கோ அவை வெறும் வார்க்கைகளாகத்கோன் றவில்லை. அவன் கரும்பு வில்லை வளைக் துத் தொடுத்து விட்ட மலர்ப் பானங்களாகத்தோன் றின. அவள் கன்னங்களில் சிவப் பேறிற்று எங்கிருந்தோ ஒரு நாணம் ஓடிவந்த அவள் முகத் தில் படிந்து அழகு செய்தது,


Page 28
r
ஒரு வழியாகப் போட்.ே எடுத்து முடித்துக் கொண்டு தோழிகள் இருவரும் வீட்டுக்குப் புறப்பட் 1.7ர்கள். அவர்களு :ைt. 2: T1 இன நல்ல புரத்துக்குப் போகிற பஸ் சீக்கிரமே கிடைத் *து மல்லாமல் இருவருக்கும் r 35 ஒ (ரு ஆசன மு 1ம் و u و چپ به கிடைத்துவிட்டது!
‘என்ன பூ, உன்னேடு உயி ஸ்ர விடுகிறரே அந்த ஸ்ரூடியோ னேஜர் ! என்ன சங்கதி?" என்று கேட்டாள் தங்கமலர்.
"எ ன்ன செய்துவிட்டார் விப்படி? அவர் "பிஸ்னெஸ்' காரர்; எல்லோ ரோடும் அப்படித் தான் நடந்து கொள்வார்' என்ருள் பூவழகி.
'அது தான் பார்த்தேனே, நாங்கள் வாசலில் தலை காட்டிய வுடன் ஒடி வந்து உபசரித்தார் போட்டோ எடுப்பதற்கும் தா னே வந்தார். அத்தனை 'கிளாக்" மார் இருக்கவும் தானே வந்து பில் போட்டுத் தந்தார். இவை
தான் போகட்டும்; எங்களுக்கு முன்னுல் போட்டோ எடுத்தவர்
களுக்கு 5 து நாள் த வனே போட்!.ாரே, எங்களுக்கு மட்டும் Tப்படி மூன்றே நாட்களில் - சனிக்கிழமையே தருவதாகச் சொன்னுர்?' என்று தங்கமலர் கேட்டாள்.
தங்க மலர் சொல்லச் சொல்
லப் பூவழகியின் உள்ளத்தில் இனம் தெரியாத ஒரு மகிழ்ச்சி துள்ளிக்குதித்தது. வெட்கமா
5 l
கவும் இருந்தது. 'நான் முன்பும்
சில கடவைகள் அவருடைய ஸ் அருடியோ வில் வந்து போட்டோ எடுத்திருக்கிறேன். அதனல் கொஞ்சம் பழக்க முண் டு அகோடு எங்கள் வீட்டுக்குப்
பக்கத்தில் அவருடைய வீடு இருக்கிறது. எப்போதாவது அங்கே வரும்போது. ? ?
fort frr
'ஓ! அங்கே வரும் போது க ைதத்துப் பேசிக் டிா.""
*சி கம்பா இரு தங்கம், அப்படி யொன்று மில்லை. ஸ்ரூடி
யோவுக்கு வந்த போது தவிர ஒரு நாட்கூட அவரோடு நான்
கதைக் கதில்லே .??
இவ்வளவில் பூவழகிக்கக் கொள் ஈம் உசார் வந்துவிட்டது. கோழியிடம் சாடையாக மன தைச் திறக்கவேண்டும் போல் ஒரு புழுகம் ஏற்பட்டுவிட்டது அவள் தொடர்ந்து, "தங்கம், அவரைப் Lurrri jg5rrđiv f5 35 f5 iš sav Glasit &baru unr கத்தோன்றுகிறது!’ என்ருள்.
"ஓ! அதோடு மிக அழகா
கவும் இருக்கிருரே!' என்று கூறித் தங்கமலர் விஷமமாகச் சிரித்தாள்.
'போ, போ; உனக்கு எப்ப வும் கேலி ரன்" என்று அவளை முழங்கையால் இடித் தாள் பூவழகி
இ8 ற்கிடையில் 6 ந்துவிட்டது.
5 GIN' E' LU f)

தங்கமலரின் வீடு முன்னுக்கு வரவும் அவள் முதலில் இறங்கி விட்டான். அவள் பஸ்ஸை விட்டு இறங்கினளே தவிர, பூவழகியின் உள்ளத்தை விட்டு இறங்காமல், "அதோடு மிக அழகாகவும் இருக் கிருரே. அகோடு மிக அழகாக வும் இருக்கிருரே என்று ஓயாமல் குசுகுசுத்துக்கொண்டு இருந்தாள்
★ ★
இதற்குப் பிறகு இலங்கை யில் பத்துக்கோர மரணங்கள் நடந்து விட்டன : எழ!பத்தைந்து பேர்கள் வரை காயமடைந்து விட்டனர்.
அதாவது மூன்று நாட்கள் கழிந்துவிட்டன !
அன்று சனிக்கிழமை, தோழி
இரு வரும் யாழ்ப்பாணம் போய், போட்டோப் பிரதிகளை எடுத்துக் கொண்டு திருப் பி வந் ஈர்கள். 3ரும்போது தங் கமலர்
# នៅr
ஏதோ ஒரு விஷயத்தை அமுக்கி வைத்துக் கொண்டு அதன் சா ய%ல விஷமச் சிரிப்பாசச் சிரித் ' க்டொண்டேயிருந்தாள். 'என்ன சங்கதி? என்ன சங்கதி?" என்று பூவழகி இரண்டு மூன்று தரம் கேட்டாள். ‘ஒன்றுமில்லை" என்று தங்கமலர் மழுப்பினள். பிறகு "வீட்டுக்கு வா; சொல்கிறேன்" என்ருள்.
தங்கமலர் தன்னுடைய வீட்
டருகிலே இறங்காமல் பூவழகி யுடன் இறங்கி அவளுடைய வீட்டுக்குப் போனள். அறைக்
52
குள்ளே ாேனதும் மேசை மேல் shtrrr Görg 6 சொருகியிருந்த புவழ இ9ள் போட்டோவை எடுத் காள் பிறகு, தான் மறைத்து வைக் திருந்த ஒரு படத்கை எடுக்கி அதில் சொருகி மேசை மீது வைக் துவிட்டு. 'பூ, படம் எபிப டியிருக்கிறது!" என்ருள்.
பூவழகி பார்த்தாள். திரந்த கண்களை மூடமுடியாமல் பார்தி தாள்
அது சம்மந்தனின் போட் Gift
** (2) g grfremir தங்கம்* என்றுகேட்ட பூவழகியின் குரலில் வெறும் பயம் மட்டுமல்ல, உள் ளே ஒரு மகிழ்ச்சியும் ஒளித்தி நந்கது.
<கெவா? செரியவில்லையர்
செல்ன்ன் SSSESYSY SiSSS SSS0SSSi i Myq S MTlE0LLS ... ,r in fər, i r m i r r 6 r rhی * مrم ,str)
. r! 60 சியின் உள்ளத்
"போதும், போதும். உன்னு டைய ஆலாபனையை நிறுக்கிச் கொள். அது சரி தங்கம், இதர உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று பூவழகி கேட்டாள்.
திருடினேன்!" என்று uoi சென்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னுள், தங்மேலர், பிறகு "எனக்காகவல்ல. உனக்கா கக்கண்ணே . . .

Page 29
al 67 Alias or es u '' Gardir pu இராகம்
4.PAðalá Fífljšgirt Gir.
"யாராவது பார்த்திருந்தால் எப்படியிருக்கும்? நீ பெரிய மோசம்!" என்று தோழியைக் கண்டித்தாள் பூவழகி,
பயந்தாங் கொள்ளி . சும்மா மனசுக்குள் ளேயே நினைத்து ஆசைப்பட்டால் G°: rrg5/*rm7 ? 6rôi»an)T lb காரியத் கோடு தான் செய்திருக்கிறேன். இனி திங்கட்கிழமை வருவேன். ஏ*7வது புதின மிருந்தால் தெர ல்லு" என்று சொல்லிவிட்டு தங்கமsர் போய்விட்டாள்.
அவள் போனதும் பூவழகி கதவைச்சாத்திவிட்டு ஒடிப் Gurt uit சம்மந்தனுடைய படத் தைக் கையில் எடுத்தாள். அப்படி திருப்பிப் பார்த்தாள் இப்படித் திருப்பிப் பார்த்தாள். "அவரு டைய கண்ணும், பார்வையும், தலே இழுப்பும், கள்ளச்சிரிப்பும், s2.itunt it garri." என்று; மனதுக்குள் செல்லம் கொஞ்சி ஞள். பிறகு
★ * ★
திங்கட்கிழமை பூவழகிக்கு ஒரு கடிதம் வந்தது சம்மந்தன் எழதியிருந்தான்.
“6rsán sai G3 u, உமக்குக் கடிதம் எழுதலாமா எழுதலாமா என்று ஆசைக்கும் பயத்துக்கு மிடையே திண்டா டிக் கொண்டு இருந்த எனக்கு, சனிக்கிழமை நீர் செய்த துணி
štru97 687 G36178ny umráv, உறுதி வந்துவிட்டது. அந்த ஸ்ரான்டி விருந்த என்னுடைய படத்தை எடுத்துக்கொண்டு உம்முடைய 19ட-க்கை அதில் வைத்துச் சென் உமது மன விருப்பத் கை எவ்வளவு நுட்பமாகத்
தெரிவித் கிருக்கிறீர்!
சில நாட்களாக எனக்க எந்க நோமம் உமது எண்னந்தான். எக்களையோ பெண் ஈள் வருகி ரு?ர்கள், போ கிருர்கள். அவர் 5 (656ir , iħ6 punti u fiħ n 1 r t ' (E) (Bun என் சிக்கனை செல்வதை நினைக் து ஆச்சரியப் பட்டிருக்கிறேன் இரு வருடைய காதக்தும் ஒரு மிக் த போது கான் இப்படி ஒரு மனநிலை ஏற்படும் போலிருக்கிறது!
இப்போது என்ன எழுதுவ கென்று தெரியாமல் ଊ(Bot மகிழ்ச்சிக் குழப்பமாக இருக்
கிறது. நான் மாமா வீட்டுக்கு வரும்போது உமது வீட்டுக்கும் வரலாமா? எவ்வளவோ கதைக்க வேண்டும் போலிருக்கிறது.
அன்பான பதிலே மிக ஆவ லோடு எதிர் பார்த்துக் கொண் டிருக்கிறேன்.
otogs சம்மந்தன்
கடிதத்தைப் படிக்கப் படிக் கப் பூவழகி மேலே மேலே பறந்து கொண்டிருந்தாள் ஒரே புள கம்! திரும்பத் திரும்பப் படிக்கிருள், அவன் என்ன தேனுர றும் கவிதையா எழுதியிருக்கிருன்?
படிக்கிரு?ள்,
53

தங்கமலர் வந்தாள். முத லில் வெகு நேரம் கடிதம் வந்த விஷயத்தைப் பூவழகி மறைத்து லிட்டுக் கட்ைசியில் ஒரு மாதிரி ஒப்புக் கொண்டாள். ஆனலும் அந்தக் கடிதத்தைத் தங்கமலருக்
குக் காட்டவேயில்லை! பரவா யில்லை. நீ எனக்கு அதைக் காட்ட வேண்டாம ஆனல் ஒழுங்காக உடனே ஒரு பதில் எழுதிப் போட்டுவிடு. பாவம்,
அவர் தபாற்காரன் வரும் வழி மேல் விழி வைத்துக் கொண்டி ருப்பார்' என்ருள் தங்கமலர்.
பதிலா? எல்லாம் யோசித் துப் பார்த்துச் செய்யலாம்? என்று பூவழகி இழுத்தாளே
தவிர, அன்றைய தினமே பதில் கடிதம் தயாரித்து அனுப்பிவிட் டாள்.
இப்படியாகத்தானே இவர் களது காதல் நாளொரு கடித மும் வாரமொரு சந்திப்புமாக வளர்ந்து கொண்டு வருங்காலத்
திலே,
பூவழகியின் தகப்பனர்
உங்களுக்குத் தெரியுமே, முன்பு அரசாங்கத்திலே இளைப் பாறி இருப்பவர், இப்போதுநல்ல புரம் கிராமச் சங்கத் தலைவராக இருக்கிறவர், திருவாளர் நல்ல சிவம்பிள்ளை. அவர்தான் பூவழ இயின் தகப்பனர். புகழ்ச்சிக்கா கச் சொல்ல வேண்டியதில்லை. மிகப் பெரிய பணக்காரர் என்று சொல்லாவிட்டாலும் அந்த ச் சுற்று வட்டாரத்தில் கொஞ்சம் பெரிய மனிதர் என்று பெயர் வழங்கியவர். பூவழகி அவருக்கு
ஒரே பிள்ளை. அதனல் செல்லப் பிள்ளையும்.
இவ்வருடம் பூவழகிக்கு எங் கேயாவது ஒரு நல்ல இடத்தில் திருமணத்தை முடித்து விட வேண்டுமென்று நல்லசிவம் தீர் மானித்துக் கொண்டார். இரண் டொரு இடத்தில் பேச்சு வார்த் தைகளும் நடக்கத் தொடங்கின.
பூவழகிக்கு இது தெரிய வந் ததும் பகீரென்றது. எவ்வளவு தான் செல்ல மகளானுலும்
* அப்பா, நான் மிஸ்டர் சம்மந் தனைக் காதலிக்கிறேன்.
அவ ரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்"
என்று சொல்லு கிற அளவுக்கு வளர்ச்சி பெருத பேதம், என்ன செய்வாள்? நெஞ்சுக்குள்ளே கு  ைம ந் து குமைந்து வேதனைப்பட்டாள்.
இவள் வேதனைப்படுவது தங்கமலருக்கு எ ப் படி யோ மணத்துவிட்டது. அவள் ஒடோ டியும் வந்தாள்,
** நீ ஏன் யோசிக்கிருய் பூ? எல்லாம் ஒழுங்காக நடக்கும் சம்மந்தனைப் பற்றி எல்லா விப ரங்களும் நான் விசாரித்து வைத் திருக்கிறேன். அவருடைய தமக்கை ஒருத்தி எங்களுடைய சொந்தத்துக்குள் கல்யாணம் முடித்து மலாயாவும் இருக்கிரு. சாதி, சமயம், பொருள், பண் டம், அறிவு, அழகு எல்லா விதத்தாலும் உனக்குச் சம்மத் தன் மிகப் பொருத்தமானவர் தான். எப்படியாவது உன் அப்
டால் அவரே பேசிச் செய்து
54

Page 30
வைப்பார் *** என்ருள் தங்க
LOG).
'அப்பாவுக்குத் தெரியப் படுத்துகிறது! என்னல் முடியவே முடியாது!’ என்ருள் பூவழகி.
‘அதெல்லாம் நான் பார்த் துக் கொள்கிறேன். நீ ஒன்றுக் கும் கவலைப்படாதே!' என்று சொல்லிவிட்டுத் தங் க ம ல ர் போனள்.
"தங்கம், உ ன் G) Gð l- ti மனசு தங்கம்!’ என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள் பூவழகி.
தங்கமலர் சொன்ன மாதி ரியே செய்துவிட்டாள். பூவழகி யின் பக்கத்து வீட்டிலிருந்த எழுத்தாளர் சிற்றம்பலததின் LD 8äOT @S? மங்கையற்கரசியைத் தங்கமலருக்குத் தெரியும். மங்க யற்கரசி மூலம் சிற்றம்பலத்துக் குப் பாய்ச்சி, சிற்றம்பலத்திலி ருந்து நல்லசிவத்துக்குப் போக விட்டாள் செய்தியை. ஏழுத மேட்டுக்கு இரண்டு துலை என் பார்களே, அப்படி!
ஒரு வார காலமாக நல்ல சிவம் இதே வேலையாகத் திரிந் தார், "சம்மந்தனைப் பற்றிய விப ரங்கள் திருப்தியாக இருந்தன. போட்டோ எடுக்கிற சாட்டில் ஒருநாள் கலைஒளி ஸ்ரூடியோவுக் குப் போய் சம்மந்தனைப் பார்த் தார். அவனைப் பிடிக்காமலிருக் குமா? ஸ்ரூடியோவை நோட் டம் பார்த்தார். இருபத்தையா யிரமாவது பெறும் என்று மதிப் புப் போட்டார். வீட்டுக்கு வந் ததும் பூவழகியைக் கூப்பிட்டு,
'பார்த்தால் பூனை மாதிரியிருக் கிருய்; நீ சரியான ஆளடி. பிடித்தாலும் பிடித்தாய் புளியங் கொம்பாகப் பி டி த் திரு க் கி. ருயே!' என்று கேலி செய்தார். *போங்களப்பா!' என்று வெட் கமும் மகிழ்ச்சியும் துள்ளக்கூறி விட்டுப் பூவழகி உள்ளே gèL. ணுள்.
பிறகு மிக விரைவாகக் காரி யங்கள் நடந்தன. பூவழகிக்கு நாற்பதினயிரம் ரூபா பெறுமதி யான வீடு வளவும், பதினையா யிரம் ரூபா ரொக்கப் பணமும், ஐயாயிரத்துக்குநகையும் கொடுப் பதென்று பேசித் தீர்மானிக்கப் பட்டது. ஆனல் முகூர்த்தம் வைப்பதற்கு மட்டும் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டுமென்று சம்மந்தனின் தகப்பனர் கேட்டுக் கொண் டார். "மலாயாவில் இருக்கிற என்னுடைய மகள், தான் இல் லாமல் தம்பியின் கல்யாணம் நடக்கக் கூடாதென்று எழுதி யிருக்கிருள். அவள் ஆயத்தம் செய்து வந்து சேர நாலு மாத மாவது செல்லும். இப்போது கார்த்திகையா? மார்கழி, தை போனல், மாசி மாதம் கூடாது; பங்குனிக்கு நாள் வைக்கலாம்" என்ரு. நல்லசிவம் ஒத்துக்கொண் L-Птfi.
கல்யாணம் நிச்சயமானதும் சம்மந்தனுக்கும் பூவழகிக்கும் கட்டு அவிழ்த்துவிட்டது மாதிரி தான்,
*பண்டாரநாயக்கா மாண்ட லென்ன, தகநாயக்கா ஆண்டா லென்ன, என்று காதலரிருவரும்
55

தாமும் தம்முடைய உலகுமாக இருந்தனர். பாவம் தங்கமல ரைக் கவனிப்பாரேயில்லை!
இவர்கள் இப்படி இன்பமாக இருப்பது பிரமச்சாரி தகநாயக் காவுக்குப் பி டி க்க வில் லை போலும்! திடீரென்று அவர் பாராளுமன்றத்தைப் போட்டு உடைத்தார்.
ஆம், தேர்தல் வந்தது!
நல்லசிவம்பிள்னை போகிற வர்களிடமெல்லாம் தேர்தலைப் பற்றியே கதைக்கத் தொடங்கி னர். "தேர்தலில் போட்டியிடு வதைப்போல் மடைமைத்தனம் வேறில்லை. உண்மையாகத் தன் னுடைய ஊருக்காகப் பாடுபடு
கிறவன் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப்போகி முன்? இராமச் சங்க விஷயம் வேறு பாராளுமன்றத்திலே பேரும், புகழும், இலஞ்சமும், கட்சி வெறியுந்தானே கண்ட மிச்சம்!” என்டர்.
சில சமயம் 'ஒரு படிப்போ, அறிவோ, அந்தஸ்தோ இல்லாத வெறு ந் தடியன்களெல்லாம் கேட்கிருர்களே, இவர்களெல் லாம் நாட்டை ஆண்டால் நன் ருய்த்தானிருக்கும்!' என்பார்.
நல்லசிவத்தின் உள்மனதுக் கும் உள்ளே ஒரு பாராளுமன்ற ஆசை கிடந்து நெளிவதை, சில கழுகுக் கண்காரர்கள் கண்டு கொண்டார்கள். விடுவார்களா!
‘ஐயா, உங்களைப் போன்ற ஆட்கள் கட்டாயம் கேட்க வேண்டும்!" என்ருர்கள்.
56
சேச்சே!' என்று சொல்லி அவர் சிரித்தார். அடி மனத் திலே கிடந்து தெரிந்த அந்த ஆசையின் உருவம் அந்தச் Grflւն பிலே தெளிவாகத் தெரிந்தது.
* 'இதெல்லாம் Gର LJ fi tu · கோடி சீமான்கள் பார்க்க வேண் டியதில்லை. தேர்தல் என்ருல் சும்மாவா? இல்லையில்லையென் ருல் முப்பதினயிரம் நாற்பதின யிரமாவது வேண்டும். எங்கள் தரவளி ஆட்கள் இதில்ே தலை யிட்டால் நடுவழியில் கிடந்து மாய வேண்டும்’
கிராமச் சங்கத்தில் ஏதா வது அலுவல் பெற வந்திருப்ப வர் எப்படியாவது நல்லசிவத் தைப் "பிளிஸ் பண்ணுவதிலேயே கருத்தாக இருப்பர்.
* ஐயா, நீங்கள் கேட்கிறதா ஞல் அந்த மாதிரியெல்லாம் தேவையில்லை. ஆகக் கூடுதலாகப் பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபா போது மென்னப் போதும். நீங்கள் ஒரு சதம் செலவழிக்க வில்லை என்ருலும் எங்களுடைய பக்கம் முழுவதும் உங்களுக்குத் தான். நீங்கள் மட்டும் "ஓம்" ஒரு வார்த்தை சொல்லுங்கள். கட்டுக் காகக்குக் கூட நானே" நாலு ஐந்து பேரைச் சேர்த்துக் கட்டுகிறேன்' என்று தூ பம் போட்டார்.
சேசே' அப்படி ஒருவேளை" நான் கேட்கிறதெல்லாம் வேறு ஆட்களை ஒரு சதம் கூடச் செல வழிக்க விடமாட்டேன். எனக் கா கப் பாடுபடுவதுமல்லாமல் காசையும் செலவளிக்கலாமோ?"

Page 31
என்ருர் நல்லசிவம். பூவழகிக்குச் ஒதனம் பேசி வைத்த பதினையா யிரத்தை விட, வங்கியில் கிடந்த இன்னுெருபூத்தாயிரம் ரூபா அப் படியே உருண்டோடி வந்து அவருடைய நெஞ்சிலே கலகல வென்று சத்தமிட்டது.
ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார். "வென்றலும் சரி, தோற்றலும் சரி, ஆருயிரம் ரூபா வுக்கு மேல் ஒரு சதம் செலவ ழிக்கிறதில்லை’ என்று மனதுக் குள் சொல்லிக் கொண்டார். அடி மனத்திலே கிடந்து துடித்த ஆசை, வெளி மனத்திலே வந்து தாளம் போட்டது பிறகு பகி ரங்கமாக வெளியிலே வந்து கூத் தாடத் தொடங்கியது,
பூவழகியின் திருமணம் பங் குனியில் வருகிறதே" என்று ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமி ஷந்தான். பிறகு “தேர்தல் மார்ச் 19ம் திகதிதானே பங் குனிக் கடைசி என்றல் ஏப்பிறில் மாதமாகிவிடும்- அது நடத்தி விடலாம்’ என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்.
தை மாசத்தில் தேர்தலுக் குக் கட்டுப்பணம் கட்டியவுட னேயே, நல்ல சிவத்தின் தேர் தல் ஆசை பேராசையாக மாறி விட்டது!
ஆருயிரமென்ன, பத்தாயி ரமுமே போகட்டும்! பூவழகியின் திருமணம் முடிந்துவிட்டால் பிறகு எனக்கு ஏன் இந்தப் பணத்தை? சாகு முன்னர் ஒரு * எம்பி’ என்ற பெயரை எடுத்து விட வேண்டும் என்று நினைக்க லாஞர்.
தேர்தலுக்குப் பதினைந்து நாட்களிருக்கையில் இந்தப்பேரா சை ஆவேசமாக மாறிற்று பத்தா யிரத்துக்குமேல் இன்னும் மூன்று நாஇ ஆயிரம் கடன் வாங்க வேண்டுமென்று ஒடித்திரிந்தார். வசதியாகக் கிடைக்கவில்லை, Աձ! ழகின் சீதனப்பணம் பல் ஜல க் காட்டிச் சிரித்தது. "தேர்தல் முடியட்டும்; எங்காவது மாறிக்
கொடுக்கலாம்” என்று நினைத் துக் கொண்டு அதில் ஐயாயி ரத்தை எடுத்தார்.
O
அடுத்த இதழில் தொடரும்
இச்சஞ்சிகை புத்தூர் தமிழ் சங்கத்திற்காக இதன்
வெளியீட்டாளரும் ஆசிரியருமாகிய مہر
திரு. மு. திருஞானசேகரம் அவர்களால் 121/4 மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள சுடரொளி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

- w ཀྱང་ལས་ང་ལ་གང་མཚ་ཚ་: ;
புத்தெழில் பொலி எம்மிடம் பாடசாலை உபகரணங்கள், அன்பளிப்புப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பவற்றை லிவாக பெற்றுக்கொள்வதற்கும், பலவர்ண வாழ்த்து மடல்களுக்கும், தினசரிப்பத்திரிகை பெறவும் அத்துடன் பாட்டா பாதணிகள், பிளாஸ்சிக் பொருட்கள் எவர்சில்வர் பாத்திரங்கள், லேஸ், லாஸ்ரிக் நூல்வகைகள், இவற்றை மலிவாகப் பெற்றுக்கொள்ளவும் நாடவேண்டிய ஸ்தாபனம்
வினுயகர் ஸ்ரோர்ஸ் புத்தூர்.
haruarniranamununran amaanmaaarinn
புத்தெழிலே வாழ்த்துகின்றேம்
NEW SENE (O) Hairdressing Centre Atchuvely.
நவநாகரீக ஆண், பென இருபாலாருக்குமான சிகை அலங்கரிப்பாளர்கள்

Page 32
வாழ்த்துகி புத்தெ
★
சகல ஆங்கில மருந்து வகைக சில்லறையாகவும் பெற்.
மற்றும் குழந்தைகளுக்கான ஒடிக்கோலன், பவுடர் என் விலேக்கு பெற்றுக்கொ
★
சூரியா ப
(பஸ் நிலைய
அச்சுே

ன்ெறுேம்
ழி قشa(
ளேயும் மொத்தமாகவும் றுக்கொள்வதற்கும்
எ பால்மா வகைகள்
* பவற்றையும் நியாய
ாள்ள நாடுங்கள்