கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தடம் 1992.02

Page 1


Page 2
ஆசிரியர் -
யெம் பெளஸர்
உதவி ஆசிரியர்கள் - கருங்கொடியூர் கவிராயர் யெச் தாலிப்
அட்டைப் படம் -
யேவR தய்யூப்
ஒ" தொடர்பு MWV
ஆசிரியர் இல 27, AVV வீதி,
அக்கரைப்பற்று-02.
நன்றி -
ULA கபூர் MMA a fic
MH plösio MM 3, »apó i
MM 3 3ä.


Page 3
நீண்ட காலக் கனவு, மன எண்ணம். இன்று முயற்சி ஸ்நேகயூர்வமான மகிழ்ச்சியி
ஒரு தீர்மானத்துடனும், அழு கைத் துறையில் அனுபவம் கலையைப்பற்றி வித்தியாசம வாசகர்களினால் மேற் கொள்
படிதான் இந்த ஐப்பசி இத
நீண்ட காலமாகவே சூத்தி இலக்கியங்கள் ஒரு வித அல மவர்களிடையே மலிந்து கா6
மூன்றாம் தரமான, மந்தை கும் போலிகளின் உலகத் வானம்பாடிகளின் ராகங்கள்
வளமான இலக்கியத்தை வ
சூழலை ஏற்படுத்துவது இன் இந்த வகையில் இதன் பணி
இது தொடரும்,
என்றும் உங்கள் ஆதரவுடன்
 

01
தில் அழுத்தமாய் பதிந்திருந்த ஒரு யின் வடிவம் பெறும் போது ஆத்மா ல் திளைத்திருக்கிறது.
pத்தமான நம்பிக்கையுடனும், பத்திரி பெறாத முதிர்ச்சியற்ற நிலையிலும், ான பார்வை கொண்ட தீவிர இலக்கிய ாளப்பட்ட ஜீவ இலட்சியத்தின் முதற் 5.
ரப்பாங்கானதும், போலியான வறட்டு டையாளம் காணாத்தன்மையினால் நம் ாைப்படுவது கவலைக்குரியதாகும்.
மனோபாவத்திற்கு இட்டுச் சென்றிருக் தில் தொடர்ந்தும் வாழ விரும்பாத தான் இவை,
1ளர்ப்பதற்காக ஒரு ஆரோக்கியமான ண்றைய அவசியத் தேவைகளிலொன்று. மிகப் பெரிது. உலகு இருக்கும்வரை
ஆசிரியர் -

Page 4
ப்ரிய காதலி
காதலி ! உன் கண்களுக்குள் ஸ்வர்க்க ஜன்னல்களைத் திறந்து ஜாலம் காட்டாதே !
a -6ir
கண் வானத்தில் பகல் சூரியனைக் கொணர்ந்து
எrsன்
ஆத்ம நிலத்துக்கு வெப்பத்தையும் வெளிச்சத்தையும் தா !
அந்த வெப்ப வெளிச்சத்தில் என் சூழலை ஆக்கிரமித்துள்ள செயற்கை குளிரையும் - செயற்கை இருளையும் - தான் இனம் காணவேண்டும்.
காதலி ! நிலாவை கசக்கிப்பிழிந்து a -6ör உதடு கிண்ணத்தில் ஊற்றி நுரைநூரையாய் புழகிக்கும் போதை மதுவை முத்தப் பாதையூடாக எனக்குத் தராதே 1:

O2
* மாணிதம் நிலைக்க போராடி மரணித்தவர்களின் இறுதி மூச்சுக் குள்ளிருந்து Թ6խ6ifiմuւ ւ
வேண்டுதல்களை உன் மூச்சுக்குள் வாங்கி முத்தம் தா 1;
காதலி ! பெளர்ணமியை தோற்கடித்து நந்தவனத்தின் மணத்தை தென்றலுக்கு தாவணியாக்கி என்னைத் தேடிவரும் נLק60נg-6ör t/6ói &8[ht என் முன் உதிர்க்காதே !; நரகமாய் மாற்றப்பட்டிருக்கும் என் நிலத்தின் பச்சை நெருப்பினை - கண்ணிராக்கி அழு . அந்த அழுகை என்னிதய குளத்தை அக்னி பிரளயமாக்கட்டும்
() காதலி பணி துரங்கும்
புல் மெத்தையில்
பூங்காற்றை மட்டுமே ஆடையாக்கி அனுபவிக்கும் ஆனந்தங்கள் நமக்கு வேண்டாம் !
கண்ணிரும் ரத்தமும்
துரங்கும் எங்கள் பூமிக்கட்டிலில் புயலை மட்டுமே ஆடையாக்கி புரள்வோம் .
- ஈழக்கவி

Page 5
0:
மரண பயம் என்ற ஹிம்சை போ
ஒரே கும்மிருட்டு, அடிமனதிலிருந்து எழுந்து வரும் ஒரு பிரமை மனிதனை அசைத்து விடும் போலிருந்தது உலகமே ஸ்தம்பித்து விட்டதாய் ஒரு கனவு, எண்ண முடித் ததை முடிக்கப் பொறுக்காமல் மூர்ச்சை அடையச் செய்யும் எண்ணம்.
உடலெல்லாம் சில்லிட்டு மயிர்க் கால்கள் குத்தி நின்றன, இதை விட தூரத்தே தெரியும் ஆனால், இருளில் மறைந்திருக்கும் சூன்ய பிரதேசத்திலிருந்து நாய்களின் ஊளை நரக வாதிகளின் ஒப் பாரியாகக் கேட்டது.
கடந்து போன காலங்களில் இந்த சித்திரைவதையை நான் மட்டு ம ல் ல, என்னைச் சார்ந்துள்ள சூழலில் இருக்கும் மனிதர்களெல்லாம் அனுபவித்து வருகி றார்கள். காலம் எப்படி வேகமாக ஓடி விடுகிறது. நேற்று நடந்தது போலிருந்தது. அந்த நினைவுகள், மற்றவர்களுடைய இழப்புகள் தங்களைப் பாதிக்காவிட்டா லும் இன்றோ அல்லது நா  ைள யோ நாமும் அந்த நிகழ்வுகளின் கோரத் தன் மையில் சிக்கி உயிர்விட நேரிடும் எனும் போது மனிதர்கள் எல்லோரும் விறைத் துப்போயிருந்தனர். மரணத்தைப் பற்றி முன்பு ஒரு காலத்தில் நினைத்திராதவர் கள் இப்போது அதை பகலிலும், இரவின் இருளிலும், தூக்கத்திலும், கனவிலும் அதைப்பற்றியே அதிகம் பயப்பட்டனர்.
ஒரு இனிமையான க வி ைத  ைய ரசிக்கக்கூடிய மனநிலையிலேயா, காதலின் இன்பத்திலேயா, வேறு எதேனும் இன்பத்
 

யெம். பெளஸர்
திலோ என்னால் இருக்க முடியவில்லை. என் கண் களினுள் ளு ம் என் ஹிருத ய த் தி லும் ' மரணம் ' என்ற ஒரு வார்த்தை, அந்த சக்தி வாய்ந்த பிரம்மா வின் முடிவே என் மேல் ஆழ்ந்த பாவங் களை பாய்ச்சிக் கொண்டிருந்தது.
மனித ஆத்மா க ட ந்து போ ன ஆனால் மீண்டும் திரும்பி வராத காலங் களை அசைபோடத் தொடங்கியது ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு எங்கள் கிரா மம் எப்படி இருந்தது, நான் தெருக்களில் ஊரின் எல்லைகளில் ஆற்றங் கரை ஓரத் தில் எவ்வளவு சு த ந் திர மா க நடந்து திரிந்திருக்கிறேன். ஒரு வசந்த காலம் தொடங்கி இலையுதிர்காலம் வரும் வரை மனித மனங்கள் எப்படி ஆனந்த அபிஷே சத்தில் மூழ்கி இருக்கும். நினைக்கும்போது எதோவொன்று அடிமனதை நெருடுவதாக உணர்ந்தேன். பழைய நினைவுகள் ஆனா லும் மறந்துபோகாத மறக்க முயன்றும் தோற்றுப்போன பசுமையான நினைவுகள் அவை. ஒன்றாய் இருந்தவர்கள் ஒருவருக் கொருவர் உதவியாய் இருந்தவர்கள். எப்படி பிரிந்து போ னா ர் க ள் எப்படி விரோதிகளானார்கள் ? அந்த அளவுக்கு மக்களின் காதுகளிலும், க ன் களி லும், நாவுகளிலும், பிரிவினை, துவேஷம் ஆட் கொண்டிருந்தது.
நேற்றுக்கூட வயலுக்குக் காலையில் சென்ற ஏழு பேரை காணவில்லையென்று ஊரே பேசத் தொடங்கியது. மாலையா னதும் முச்சந்தியில் ஒரே சனக்கூட்டம். நானும் அங்கு சென்ற போதுதான் உயிரு.

Page 6
டன் போனவர்கள் பிணமாக வந்திருக்கி றார்கள் என்பது தெரிந்தது. அழுவதைத் தவிர வேறொன்றுமே செய்யமுடியவில்லை மீண்டும் ஒரே கும்மிருட்டு . மனித மனங் கள் குருடானது போல், நேற்று மனிதர் களை ஆட்கொணர்ந்திருந்த மரண பயம் இன்று மேலும் அதிகரித்தது.
எல்லா இரவுகளையும் போல் அன்றும் காலை புலப்பட்டது. பேசமறந்த நாவுக ள்ாக. சிரிக்க மறந்த உதடுகளாக. ஆனால், அழுவதற்கு மட்டும் திறந்த கண் களாக. ஒட்டுதல் உறவாடுதல் இல்லாமல் மனிதர்கள் அலைந்து கொண்டிருந்தனர்.
சதா மனித ஜீவிதத்தை அழித்துக் கொண்டிருக்கும் மரண பயத்தின் மேல் எனக்கொரு சலிப்பு ஏற்பட்டது ஒரு வே ளை வெறுப்பாகக் கூட இருக்கலாம். என் னுள் அல்லது என்னைச் சார்ந்துள்ளவர் களுள் ஏற்படுத்திய தாக்கத்தின் ஊற்று வாயாகக்கூட இது இருக்கலாம். மரணம் மனித உறவுகள்ை எவ்வளவு தூரத்திற்கு பிரித்திருக்கிறது. எத்தனை பேரை மண் ணறைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.
தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தவன் இப்போது எங்கே ? தொட்டிலில் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருக்கிறது அதன் தாய் எங்கே? எனக்கு அரிச்சுவடி படித்துத்தந்த என் ஆசான் எங்கே ? இவற்றையெல்லாம் விட என்னுடனேயே இருந்து என்னை மட்டும் இப்படிச் சித்திரவதைக் குட்படுத்தி சென் றிருக்கும் என் பால்ய நண்பன் எங்கே ?
அவன் மூன்று தினங்களுக்கு முன்னர் இறந்து போன்ான். மனம் அப்ப்டி சொல்ல

04
மறுத்தது. பிரிந்து போனான் அவன் திரு ம்பி வரமாட்டான் என்ற உண்மையே என்னைப் பைத்தியக்காரன் போலாக்கியது. சில காலங்களுக்குமுன் என்னுடன் பாடிக் கொண்டிருந்தவன், கவிதை எழுதியவன் இன்று என்னுடன் மனித ஜடமாக என் அருகில் இல்லையெனும் போது, கண்ணீர் கனத்தது. ஒரு இரண்டு நிமிடம் அவனுக் காக அழுவது உலகத்தில் எல்லாவற்றை யும் விட சுகமாக இருந்தது.
அவன் எவ்வளவு கனவுகளையும் இலட்சி யங்களை சுமந்திருந்தான் என்பது எனக்குத் தெரியும். அவற்றின் வழியிலேயே 2یHتl முற்றுப் பெறாமலேயே அவன் இறந்து போய்விட்டான். வாழ்க்கையை அவன் எந்தளவிற்கு அனுபவித் திருப்பான் ?
பாடலை ரசித்தவன், இயற்கையை ரசித்தவன், குயிலின் ஒசையில் லயித்துப் போனவன் ரம்யமான மாலைப்பொழுதைப் பற்றி கவிதை எழுதியவன், ஒரு கோடை காலத்து மாலைப் பொழுதிலேயே காணா மல் போய்விட்டான். இவைகள் அவன் வாழ்வை அனுபவிக்க போதுமானவையாக இருந்திருக்குமா ? இளமை ஆயுளில் செத் துப் போவதென்பது மிகக் கொடூரமான தென்பதை நான் இப்ப்ேது உணர்கிறேன் என் நண்பனின் பிரிவின் மூலம் .
இறுதியாக அவன் மரணிக்கும் போது என்ன நினைத்தானோ தெரியாது சிரித்துக் கொண்டிருந்திருப்பானோ ? அல்லது அழுது கொண்டிருந்திருப்பானோ ? அல்லது மூச்சி ரைக்க ஓடி மரணத்தில் மூழ்கியிருப்பா னோ?. இப்படி இருக்குமோ என எண்ணிப் பார்ப்பதில் ஒருவித ஈரமிருப்பதாக உணர்கி. றேன். அந்தளவிற்கு அவ்னில்லாததனிமை

Page 7
என்னைப் பாதித்திருக்கிறது.
நாளையோ அல்லது இதன்பிற்பாடே இதிலிருந்து விடுபடுவது எனக்கு சாத்தி மாகப் படவில்லை. இப்படியே வாழ்வ: லும் வாழ்வில் ஒரு அழுத்தம், பிடிப் இருப்பதாகக் காணப்படவில்லை * பொன்றிருந்தது ஏன் பிறந்தோம் எல் றாகி விட்டது.
ஆனால் ஸத்யம் போல் .
இன்றிரவு எந்த வடிவத்திலும் மரண பயம் என்னை ஆட்கொண்டு விடும் நான் மட்டுமோ ? எல்லோரையும்தான். ஒே கும்மிருட்டு. நாய்களின் ஒலம் நெரு கிக் கேட்கிறது ஏதோ சப்தம், இ ை அசைவதா ? சப்பாத்துக்களின் ஒசையா வேறு ஏதாகவும் இருக்குமோ ? கூர்ந்: கேட்டதில் தெளிவாகப் புரியவில்லை அ னால் மரண பயம் மட்டும் அதிகரித்து கொண்டே வந்தது எல்லா இரவுகளையு போல்.
நாளை நான் இருப்பேனோ இல்லையோ நிச்சயமாக நாளை காலை புலப்படும்.
* கலைகளால் மனிதனுடைய பசியைத் தீ த்துக் கொள்ள முடியுமா ? என்று சிலபே கேட்கிறார்கள். பசியைத் தீர்த்துக் கொ? வதோடு வாழ்க்கையின் நோக்கம் முடி டைந்து விடுமென்றால் மிருகங்கள் போன் ஜீவராசிகளைவிட உயர்ந்ததாக மணி னைக் கருதமுடியாது.”*

J 05"
பூர்வீகம்
லாவண்ணா லத்தீப்
பூர்வீகம் இல்லாத, பொருள் ஒன்றும் பூமியிலே இல்லை என்று புரிய வைத்த இறைவனுக்குப், பூர்வீகம் என்னவென்று
புரியாமல் தவிக்கின்றேன்.
கார் மேகம் முதற் கொண்டு, கருவில் வளர் சிசுவுக்கும், காணகத்து மானினத்தை, கன தூரம்
இழுத்து அலைக்கும், கானலுக்கும்
மூலமுண்டு.
b
மூலம் என்றும்
வித்து என்றும்
முளுப் பொருளும் ஆயிருக்க, மூலமும் வித்துமாய் இருக்கின்ற, முழு முதற் பொருளுனக்கு, மூலம் எது? வித்து எது? என்றறிய முடியாமல் தவிக்கிறேன்.

Page 8
பலஸ்தீனக் கவிதை
எதிர்ப்பு
மூலம் : மஹ்மூத் தர்வீஷ்
நீ என்னைச் சுற்றிக் கட்டலாம்! வாசிப்பதற்கும்; புகைப்பதற்கும் நீ தடை விதிக்கலாம்! எனது வாயில் நீ மண் இட்டு நிரப்பலாம் ஆயினும் என்ன ?
கவிதை என்துடிக்கும் இதயத்தின்குருதி என் ரொட்டியின் உப்பு; கண்ணின் திரவம் நகங்களால், கண் இமைகளால் கத்தி முனையால் அதை நான் எழுதுவேன்.
சிறைச் சாலையில் குளியலறையில்
குதிரை லாயத்தில் நான் அதைப் பாடுவேன்!
சவுக்கடியிலும் சங்கிலிப் பிணைப்பிலும் கைவிலங்கின் வேதனை இடையிலும் நான் அதைப்பாடுவேன்!
போரிடும் எனது பாடலைப்பாட
என்னுள் ஒருகோடி வானம்பாடிகள் உள்ளன.!
OO6
---

இன்றைய சேதிகள்
- வெளிமடை ரபீக்
இன்றைய நாளும் நேற்றைப் போன்று புலர்ந்தது. சூரியனெழுந்து வந்து புற்பணி துடைத்துப் போயிற்று. துப்பாக்கிகள் பெருஞ்சத்தத்துடன் வெடித்து புகை கக்கின. சமாதானம் வரவில்லை ஆயினும் ; உண்டியும் குளிர்பானமும் நிறைந்த
மேசை முன்னமர்ந்து சமாதானம் பற்றிப் பேசப்பட்டது இன்று புதிதாய் நடந்ததென்று எழுதி வைப்பதாயின் மழை பெய்தது மட்டும்தான்!
எழுதுவது என்பது ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல், நெற்றியில் பொருத்திய விளக்கோடு சுரங்கத் தின் ஆழத்தினுள் இறங்குவதாகும். அந்த விளக்கின் தெளிவற்ற ஒளி ஒவ்வொரு பொருளையும் உருமாற் றிக் காட்டக் கூடியது, அதன் சுடர் எப்போதும் வெடிக்கும் ஆபத்திலிருப் L.Jĝ5l • .
( Blairs Sendrars)

Page 9
சொற்பொழிவு
மூலம் : பனபூல் தமிழாக்கம் : புஸ்பவேணிகோவி
* கோக்கா ஏந்திரிடா, ரேஷன் வாங்க வேண்டாமா? கடை அடைத்துவிடுமேடா. நீ என்னத்தை எழுதிக் குவிக்கிறே ?" கோக்கனது கவனம் முழுமையும் அவன் எழுதுவதில் லயித்திருந்தது.
* நீ என்னத்தைடா குனிஞ்சு உட் கார்ந்து எழுதிக் குவிக்கிறே?"
"நாளைக்கு ஆகஸ்ட் பதினைந்து. எங் கள் கல்லூரியில் நடக்கப் போகும் விழா வில் படிக்க ஓர் கட்டுரை எழுதிக் கொண் டிருக்கிறேன். இன்றைக்கே முடிக்க வேண் டும். நாளைக்கு நேரம் இருக்காது."
“எத்தனை ஆகஸ்ட் பதினைந்து வந் தாச்சு, எத்தனை போயாச்சு. என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் நடந்தாயாச்சு. எத்த னையோ வீரப்பிரசங்கமெல்லாம் கேட்டா யாச்சு. இத்தனைக்கும் பிறகும் நம்ம துன்பத்துக்கும் கஷ்டத்துக்கும் குறைவில் லையே. விழா நடத்தி என்ன புண்ணியம்? உம், எப்படியோ போகட்டும். நீ ஏந்திரி. பிறகு வேணுமானா எழுதிக்கோ. வீட்டி லே ஒண்ணுமேயில்லை மவவே !”
ஒன்றுமே யில்லையா ?”
"எங்கே இருந்து இருக்கும்? அரிசி எவ் வளவு கிடைக்கிறது. அதுவும் போன வாரம் பூரா கிடைக்கலே !" பேனாவைக் கீழே வைத்துவிட்டு கோக்கன் சிறிது நேரம் தன் தாயின் முகத்தையே பார்த்தான்.

te
‘சரிதிான். நீாட்டில் இப்போது என்ன. தான் நடக்கிறது. எத்தனை நாளாயிற்று மீன் சாப்பிட்டு? நாளைக்கு ஆகஸ்ட் பதி னைஞ்சில்லையா? கொஞ்சம் மீன் கிடைக் குமா என்று பார்க்க வேணும். என்னம்மா? காலையிலேயே போய் க்யூவில் நிற்கணும்." * நீ போய் ரேஷன் வாங்கிட்டுவா. நாளைக் காரியம் நாளைக்குப் பார்க்கலாம். ஒரு சேர் ஆறேழு ரூபாய் விற்கும் மீனை வாங்க எங்கே இருக்கு காசு அரிசி பூரா வையும் வாங்கவே கஷ்டம். ஏந்திரி இன் னும் தாமதிக்காதே !
"இதோ முடிந்து விட்டது : கோக்கன் துணிப் பையையும் கார்டை யும் எடுத்துக் கொண்டு தெருவில் இறங் கியபோதே குழப்பம் ஆரம்பமாகி இருந் தது. ஜனங்கள் அங்குமிங்கும் ஒடிக்கொண் ருந்தனர். அவன் மேலும் ஒறிது முன்னேறி
ான், ரேஷன் க-ை அடைக்கப்பட்டிருந் , தது. மற்ற கடைக்காரர்களும் வேகமாகக் கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். யாவரது முகத்திலும் பீதியும் படபடப்பும் தென்பட்டன. கோக்கனது நண்பன் பிண் டுவின் கடை முன்னரே அடைக்கப்பட்டு விட்டது. கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஆண்டு தன் கடையைத் தொடங்கி இருந் தான். வியாபாரம் மெல்ல வளரத் தொ டங்கி இருந்தது.
கோக்கன் எல்லா இடங்களையும் பார்த் தான். தெருவில் யாரையும் காணவில்லை. ஜக்சு மட்டும் சிறிது தூரத்தில் உட்கார்ந் திருந்தான். அவன் ஓர் பழக்காரன். பாதை ஒரத்தில் அமர்ந்து பழங்களை விற்பான். பேரிக்காய், வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா ஆகியவற்றை அடுக்கிவைத்து ஜக்சு மாத்திரம் காத்திருந்தான்.
'கோக்கா, நீ என்ன செய்கிறாய் அங் கே? இங்கேவா நான்கு பக்கத்திலும்

Page 10
dos
onunr 1” ,
கொள்ளை நடக்கிறது வழியில் நிற்காமல்
இரண்டாம் மாடியில் குடியிருந்த அவ னது நண்பன் சுரேன் அவனை அழைத் தான். சுரேன் வசிக்கும் இரண்டாம் மாடிக் குச் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான் கோக்கா. அப்போதுதான் கொள்ளைக் காரரது கூக் குரல் கேட்டது.
ʻʻ gi3 03uDG36n) GQumr. ʼ
கோக்கன் சுரேனது வீட்டிந்குச் செல்ல மாடி ஏறினான். அங்கிருந்து தெருவில்
நடப்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தது. ”
உன்மத்தம் பிடித்த ஜனங்கள் வீதியின் இரு புறத்திலும் கூக்குரலிட்டுக் கொண்டு வந்துகொண்டிருந்தனர். வீதி விளக்குகளை պմ, கண்ணாடி ஜன்னல்களையும் உடைத் தெறிந்து கொண்டு ஜனக்கூட்டம் முன்னே றிற்று. ஏழை ஜக்சுவின் பழக் கூடை ஒரே நிமிடத்தில் தவிடுபொடியாயிற்று. ஜக்சு கதறி அழுதுகொண்டே ஓடினான். பட்டப் பகலில்தான் நடந்தது. பொலீஸின் அறி குறியே தென்படவில்லை. கண்ணெட்டும் வரை தேடிப் பார்த்தான். ஒரு பொலீஸ் காரன்கூடத் தென்படவில்லை.
ஜனக் கூட்டம் இப்போது பிண்டுவின் கடையை நோக்கிப் பின்னேறியது. கடை பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. அடுத்தாந்
ருந்த கொல்லன் பட்டறையினின் றும் ஒருவின்ஆடளியும் சுத்தியலும், எடுத்து
வந்தான். பூட் டைத்தெறியப்பட்டது.
கடை திறக்கப்பட்ட்து. எல்லாம் பகல்
நேரத்தில்தான். நட்ட நடு வீதியில், ஜனக் கூட்டத்தை எதிர்க்கவோ தடுக்கவோ யாரும் துணியவில்லை.
:

'கோக்கன் பதட்டத்தோடு தான் இருந்த” இடத்தை விட்டு எழுந்தான். சுரேனது வீட் டில் டெலிபோன் இருந்தது. கோக்கன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்ய முனைந்தான். "ஸ்டேஷன் எங்கெய்ஜுடு" என்று எக்ஸ்சேஞ்சிலிருந்து பதில் கிடைத் தது. மீண்டும் இரு முறை முயற்சித்துப் Lார்த்தான். ஒரே பதில் "ஸ்ரேஷன் என்கே ஜ"டு. பின் சூப்ரென்டை அழைத்தான். எஸ். பி. கிடைத்தார்.
"ஸ்டேஷனில் கூப்பிட்டுச் சொல்லுங் கள்" என அவர் பதிலளித்தார்.
‘மூன்றுமுறை போன் செய்தேன். ஸ்டே ஷன் கிடைக்கவில்லை. லைன் என்கெய் gorrib.”
அப்படியானால் நீங்கள் சிறிது நேரம் பொறுத்திருங்கள் ,
“இங்கே இவர்கள் கடைகளைக் கொள் ளை அடிக்கிறார்கள் ஏதாவது நடவடிக் கை எடுங்கள்.,
மறுமுனையினின்றும் ஒரு பதிலும் இல் லை. சூப்ரெண்டு அதற்குள் போனைக் ேேழவைத்துவிட்டார்.
பிண்டுவின் கடையினின்றும் சாமான். கள் எடுத்து எறியப்படுவதைக் கோக்கன் கண்டான். மிட்டாய், சோப்பு, வாசனைப் பொருள், ஜாடி, பூஜாடி. பலருக்கும் பல பொருட்கள் கிடைத்தது.
ஜனக்கூட்டம் ஆர்ப்பரித்து முன்னேறி பது. ஓரிடத்திலும் பொலீஸ் காணப்பட பில்லை. சிறிது நேரத்துக்குப்பின் தெருவில் ஒருவருமே இல்லை. வழியில் ஓர் ஆள் டிடத் தென்படவில்லை.
சாமான்களின் விலை எவ்வளவோ rறிக்கிடக்கிறது. ஜனங்கள் கோபப்படுவ
ல் என்ன ஆச்சரியம் ? نیت- بی نیز

Page 11
O
கொள்ளை லாபம் அடிப்பவர்களையும் கருஞ்சந்தைக்காரர்களையும் மட்டுப்படுத்த வேண்டியதுதான். ஆனால் அவர்கள் எதற் காக ஏழை ஜக்சுவின் கடையையும் பிண்டு வின் கடையையும் கொள்ளையிட வேண் டும். அவர்கள் என்ன குற்றத்தைச் செய் தார்கள் ? பின் டு இ னி எப்படித்தான் நிமிர்ந்து நிற்கப் போகிறானோ ?’ என்று கோக்கன் தனக்குத்தானே கூறிக்கொண் டான்.
கோக்கன் வீதியிலிறங்கி நடந்தான். யாருக்கு என்னென்ன நஷ்டம் எற்பட்டுள் ளது என்று சுற்றிப் பார்த்தான். கறுப்புச் சந்தைக் காரர்களுக்கும் கொள்ளைலாபம் அடிப்பவர்களுக்கும் பெரும் நஷ்டம் ஒன் றும் ஏற்படவில்லை, குற்றமற்றவர்களுக் கும் ஏழைகளுக்கும்தான் நஷ்டம்-பிண்டு ஜக்சு முதலானோர்க்கு
 ோக்கன் அமைதியாகத் தனி யே நடந்து சென்றான். நாட்டில் கொடுங் கோன்மை தலை எடுத்துவிட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். சட் டென்று பின்னால் லாறி வரும் சப்தம் கேட்டது. பட்டாள லாறி.
கோக்கனைக் கண்டவுடனேயே லாறி நின்றது.
இதோ ஒரு போக்கிரி "
லாறியினின்றும் ஆயுதம் தாங்கிய ஒர் பொலீஸ் காரன் குதித்திறங்கினான்.
நீட்டா, நட" கோக்கனது கையைத் தாவிப்பிடித்த போலீஸ்காரன் கூக்குரலிட் டான்.
நான்: ஒன்றுமே செய்யவில்லை. கொள்ன்ை அடித்தவர்கள் ஓடிவிட்டார்
 
 

*ロ
}
S.
)
கள்" என்று கையை விடுவித்துக்கொண்டு
--கோக்கன்-கூறியதும் துப்பாக்கி மட்டை
அவனுடம்பில் பலமாக அழுத்தப்பட்டதும் ஒன்றாகவே நடந்தன.
கோக்கன் தரையில் குப்புற வீழ்ந்தான், மூக்கினிலும் காதினிலும் ரத்தம் வடிந்தது: தளர்ந்த கண்கள் இரண்டையும் உயர்த்தி ஒரு முறை ஆகாயத்தை நோக்கினான். முடிந்துவிட்டது. கோக்கன் மூச்சடங்கி lJS).
ஆகஸ்ட் பதினைந்தன்று கல்லூரி விழாவில் வாசிக்கவேண்டிய சொற்பொழிவு அவனது சட்டைப்பையில் இருந்தது, கட் டுரையின் ஆரம்பம் இவ்வாறுருந்தது : எத்தனையோ ரத்த சாட்சிகள் உயிர்த் தியாகம் செய்தும் பெருந்தலைவர்கள் பல கொடுமைகளைச் சகித்து, தியாகங்கள் செய்தும் சம்பாதித்த சுதந்திரத்தை நிரந் தரமாக நமக்குக் காக்க முடியவில்லை uurt Gornr 6)...
கட்டுரையின் மீதிப்பாகம் ரத்தத்தில் மூழ்கியிருந்தது.
வாஸந்தியின் கதைகளில்.
'அமுக்கி வைத்திருந்த துயரமெல்லாம் வடிகாலைத்தேடி பாய்ந்தாற்போல் அழுகை யாய் வெடித்தது. பெருகிய கண்ணீரில் நினவுைகளும், ஏக்கங்களும் தாபங்களாய் நுரை நுரையாய் நுரைத்து பொங்கி எழுந் தன அதில் அவள் அமுங்கிப் போய்விட்ட கையாலகாத்தனத்துடன் வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.

Page 12
O 10C
ஒரு நூற்றாண்டின். பத்து நாவல்
நாவல்கள் சமுதாயத்தின் சரித்திர மாகும் சரித்திரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன. சரித்திரத்தை புதிதாக உருவாக்கும் ஆற் றல் படைத்த மனிதர்களை உருவாக்கும் சக்தியும் அவைகளுக்குண்டு. மனிதனின் சமூக வாழ்வை நாவல்கள் சித்திரிக்கின்றன. சமுதாய மாறுதல்களை நாவலாசிரியர்கள் மிகக் கூர்மையாக அவதானிக்கிறார்கள். அதனால் அவர்களது ப  ைட ப் புக ள் காலத்தை கணக்கெடுக்கும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.
இலங்கையில் தமிழ் நாவல் துறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்றது. நமது தமிழ் நாவலின் வரலாறு சித்திலெல்வை மரைக்கார் எழுதிய ‘அசன்பே சரித்திரம்” ( 1885 ) என்ற நாவலுடன் நாவலின் வரலாறு தொடங்கியிருக்கிறது மி ஸ ர் தேசத்து அரச குமாரனான அசன்பே என் னும் சிறுவனின் கதை சித்தி லெவ்வை தனது புனைகதை 'அஸன் பேயுடைய கதை' என்ற தலைப்பிலேயே 1885ம் ஆண்டில் கொழும்பில் முஸ்லீம் நேசன் அச்சகத்தில் பதிப்பித்துள்ளார். இந் நூல் பின்னர் இந்தியாவில் வெளியிட்ட போது ** அசன்பே சரித்திரம் ' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழகத்தின் தமிழ் நாவல் துறை யின் ஆரம்ப காலத்தில் ' சரித்திரம் ’’ என்ற சொற் பிரயோகம் நாவலோடு இணைந்திருந்தமையும், இப்பெயர் மாற் றத்திற்கு காரணமாய் இருந்திருக்க கூடும். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம் பாள் சரித்திரம் முதலிய நாவல்களை பின்
(19 நீல
நாள் தை ''g
நிகழ்

66T.
- அந்தனிஜிவா -
) றி அசன்பேயுடைய சரித்திரத்தை முகப்படுத்தியிருக்க கூடும். என்கிறார் }. எம். கமால்தீன் ( நூல் . அசன்பே த்திரம் )
இலங்கையில் தமிழ் நாவல்கள் வெளி து ஒரு நூற்றாண்டை தாண்டிவிட்டது ம்ப சால நாவல்களில் அற்புதத் தன் களும் வீரசாகஸ நிகழ்வுகளுமே கரு க அமைந்தன. முதல் நாவலை தொ ந்து 'மோகனாங்கி’ (1895 ) விஜய ம் (1916) இப்பண்புகளை காணலாம். ழகத்திலும் ஆரம்ப காலங்களில் இதே லமைதான் "ஆங்கிலத்திலுள்ள அற் சம்பவக் கதை’ களைத் தழுவித் தமி எழுந்த கதை நூல்களுடன் வேதநா ம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் த்திரம்", சுகுண சுந்தரி என்பனவும், ய நாராயண சாஸ்திரியார் எழுதிய திவாணன்' என்பனவும் விஷேடமாக ாடுக் குறிப்பிடத்தக்கவை. ராஜமையர் திய கமலாம்பாள் சரித்திரம் திரிகோ மலைச் சாவணப் பிள்ளை எழுதிய ாகனாங்கி என்பதும் ஆங்கிலத்திலுள்ள கியற் கதைகளடங்கிய நாவல்களைத் வித் தமிழிலெழுதப்பட்ட நாவல் சளா என்கிறார் வி. செல்வநாயகம் ால்: தமிழ் இலக்கிய வரலாறு 1960)
ஆனால், நொறுங்குண்ட இதயம் 14) சுதந்திரம் செய்த தந்திரம் (1018) கண்டன் (1925) சோமாவதி அல்லது ங்கை இந்திய நட்பு (1931) ஆகிய பல்களில் சமூக உணர்வின் மாற்றத் க் காணலாம் இதற்கு முக்கிய காரணம் லங்கையில் ஆங்கிலேயர் வருகையால்
ழ்ந்த மாறுதல்களுள் முக்கியமானது

Page 13
பழைய நிலமானிய அமைப்பில் ஏற்பட தொடங்கிய வெடிப்பாகும். புதிய ஆங்கி கல்வியும் பதவிகளும் புதிய மத்தியத வர்க்கத்தின் தோற்றத்திற்கு வழியமை தன. கல்வி முறையின் விரிவும், நாட்டி: எங்கும் ஏற்பட்ட பொது விருத்தியுப் சிங்களத் தமிழ் சமூகங்களில் இப் புதி மத்தியதர வர்க்கத்தை தோற்றுவித்தன மேலும் வர்த்தகம் கைத்தொழில் என்பன வற்றில் சுதேசிகள் ஈடுபட்டனர். கிறி தவ மதப் பரம்பலினால் ஓர் அன்னி கலாசாரமும் எம்மிடையே வேரூன்ற தொடங்கியது இதனால் புதிய எண்ண களும், புதிய சிந்தனைகளும் தோன்று தற்குரிய ஒரு சமூக சூழ்நிலை உண்ட யிற்று என்னுயிர் சித்திரலேகா மெள6 குரு (ஈழத்து நாவல்களில் சமூக உணர்வில் தோற்றம் சிந்தனை தொகுதி 1 தை 1976
முதல் தமிழ் நாவல் வெளிவந்: அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர் நாவ இலக்கியத் துறையில் மாற்றமும் மறு லர்ச்சியும் ஏற்பட்டது. ஐம்பதுகளுக் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட தேசி விழிப்புணர்ச்சி காரணமாகவும், இலங்ை யில் 'மணிக்கொடி’ எனத் திகழ்ந்த ம மலர்ச்சி சஞ்சிகையின் மறுமலர்ச்சி குழு ன ரில் முக்கியமானவராக கருப்பட் அ. ச. முருகானந்தம் எழுதிய 'புகையி தெரிந்த முகம்’ (1950) கதை செந்தி நாதனின் "விதியின்கை” ஆகிய நாவல்கள் யாழ்ப்பாண மண் ணி ன் சிறப்பையு வ. அ. இராச ரத் தி என த் தி ன் " கொ( கொம்பு ' கிழக்கிலங்கையின் மாண்ை யும் எடுத்து கூறியது இதே காலகட்டத்தி இளங்கீரனின் படைப்புகள் "தென்றலு புயலும்’ (1955 ) * நீதியே நீ கேள் (1959) நாவல்கள் சாதி சமூக பொருள தார ஏற்றத் தாழ்வுகளை சுட்டிக்காட் யது. . . . .

11-O -
;
ம்
I
சோக வாழ்வு நந்தியின்
அறுபதுகளுக்கு பின்னரே நாவலிலக்
கிய துறையில் விடிவெள்ளி முகிழ்ந்தது. "இழிசன வழக்கு” என்று பண்டிதர்களால் பரிகாசம் செய்யப்பட்ட பேச்சு வழக்கு மொழியை எழுத்தாளர்கள் கையாண்ட் னர் தேசிய இலக்கியம், மண் வாசனை என்ற எண்ணம் வலு வ ைட ந் த து செ. கணேசலிங்கனின் 'நீண்ட பயணம்” (1965) என்ற நாவலைத் தந்தார். இன் னொரு குறிப்பிட்டுக் கூறவேண்டிய நாவல் எஸ். பொன்னுத் துரையின் " சடங்கு ' (1966) "செ. கணேசலிங்கனின் நாவலில் பிரதேச வாரியான மாந்தரின் பாரம்பரி யங்களும் அடக்குவோரின் கொடூரங்கள், அடக்கப் படுவோரின் இன்னல்கள் அவர் களது போராட்டங்கள், முன்னேற்றங்கள் என்பன கூறப்பட்டுள்ளன. என குறிப்பிடு கிறார் துரை மனோகரன் ( கட்டு  ைர பிரதேச நாவல்கள் 1976 )
எஸ். பொ. வின் சடங்கு நாவல் மத்திய தரத்து மக்களின் பிரச்சினையை சுட்டிக் காட்டியது. இதே காலத்தில்தான் மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர்களின் துயரம் நிறைந்த * மலைக் கொ ழுந்து ' (1992) கோகிலம் சுப்பையாவின் ( 1964 ) ' தூரத்துப் பச்சை ’ தழுவிய நாவல்கள் மூலம் எடுத்து காட்டப்பட்டன மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை கருவாகக் கொண்ட முதலாவது நாவல் மலைக் கொழுந்து. அதனை அடுத்து வெளிவந்த 'தூரத்துப் பச்சை' நாவல் தமிழகக்திலிருந்து இந்திய மக்கள் புலம் பெயர்ந்து வந்த குடும்பத்தின் கதை, குடியுரிமையற்ற தோட்டத் தொழிலாளர் க ளின் வாழ்க்கையை விவரிக்கின்றது. முப்பதுகளில் தமிழகத்து 'மணிக்கொடி’ இதழில் இலங்கை தோட்டத் தொழிலா
தொடர்ச்சி 15ம் பக்கம்.

Page 14
ロ12口
மனிதன் எழுதிய விதியென்ற க
இந்த அக்கிணி நட்சத்திரத் தகிப்பு தெய்வ சாபமா? முன்பெல்லாம் இயற்கை இப்படி சீ ற் ற மா ய் சுட்டதில்லையே. நிலவும் சுடலாம் இங்கே. கண் முன் தெறிக் கும் கானலில் கொடியாய் துவண்டுபோய் அந்த நாற்பதுதாண்டிய மாது தனது சின்ன மகனுடன் பிச்சையை சுமந்த வண் ணம் தெருத்தெருவாய் சுற்றி வீடுவீடாய் ஏறி இறங்கிக்கொண்டிருந்தாள். அவர் கள் பிச்சைக்கு பழக்கப்படாத புது முகங் கள். இப்போதெல்லாம் புதிய பு தி ய பிச்சைக்காரர்களை வீதியெங்கும் தாரா ளமாய்க் காணலாம். நிலைமை அப்படி,
மரியமும் அவள் மகனும் பழக்க மான ஆண்டிகள்போல் அல்லது ஒதுங்கி ஒதுங்கி கூனிக் குறுகி வீட்டு வாசல் கதவு களைக் கடந்து வாயைத் திறந்து யாசிக் காது தங்கள் வருகையை அமைதியின் நாணிப்பில் தெரு வித்து நின்றார்கள் இந்தக்காலத்தில் தாராள மனது மட்டும் தான் உண்டு. தாராளமாய்க் கொடுக்க சனங்கள் வக்கற்றவர்களாகி விட்ட பொல் லா த காலமிது. மரியம், கால்கடுக்க காத்துநின்று ஏமாற்றத்துடன் திரும்பிய வேளைகளில் அவள் இதயம் தன் விதியை நொந்து சலித்துக் கொள்ளுமே தவிர யாரையும் சபித்துக் கொள்ளாது. இப் போது எல்லா ஊரிலும் பஞ்சம் வாட்டு கிறது அவளுக்கு இது தெரிந்த புள்ளி விபரம் காலையிலிருந்து பெருங் குடல் சிறுகுடல் போராட்டம் நடத்தும் அந்த வயிற்றுக்காய் வருந்தியாசிக்க அவள் இஷ்டப்படவில்லை. அதற்காய் எவரையும் மனம் நொந்து சாபமிட அவளால் முடி யுமா? எய்தவன் இருக்க அம்பை நோகக்

தை.
- அக்கரையூரான் -
கருதாமல் மரியம் "கொஞ்சம் தண்ணீர் பருகக் கேட்டாள். வீட்டுக்கார குழந்தை குடுகுடு"வென்று ஓடிப்போய், " உம்மா பாவம்மா அந்தப் பிச்சைக்கார ஆக்கள் தண்ணி கேக்கிறாங்கம்மா ? என்று தன் தாயிடம் வினயமாக விண்ணப்பித்தது. மனிதன் குழந்தையாக இருக்கும்வரை அவன் மனம் தெய்வீக மனம் கமழ்கிறது. முதுமைப் பருவம்வரை இந்த உள்ளம் இப்படி இருந்தால், மண்ணும் விண்ணா கலாம். வீட்டுக்காரிக்கு தன் குழந்தையின் மீது பற் றோ பற்றிக்கொண்டுவந்தது. உனக்கு பொறுப்புத் தெரியாது. காசிக்கு அரிசி வாங்கி, பிச்சைக்கார ஆட்களுக்கு சோறு போடக் கட்டுமா? அந்த இதயமும் கோடைபோல் வரண்டுவிட்டது. அதில் கசிவதற்கு ஈரமில்லை. அநேக கல்வீட்டு இதயங்கள் இப்படிக் கல்லாகி இருப்பதை அவள் அறிந்தவள். மரியத்திற்காய் பரிந்த அந்தப்பிஞ்சு தண்ணிர்க் கோப்பையை கையில் ஏந்திவந்து மரியத்துக்கும் மகனுக் கும் ச்ொடுத்து தாகம் தீர்த்தது. களை ஆறிப்போன அவள் இறைவனைப் புகழ்ந்த பின் “வாறன் மகன்' என்று கூறி அந்த சிறுசின் தலையைத் தடவி அங்கிருந்து வெளியேறினாள். ஏராளமான வ ய ல் நிலங்கள் விவசாயிகள் உயிருக்கு பயந்த தால் தரிசாக விடப்பட்டதால் ஜீவனோ பாயத்தின் உயிர் நாடியை பறிக்ொடுத்த ஊர்மக்கள் முன்பிருந்த சோபயை இழந்து பரிதவிக்கிறார்கள். பசி, பட்டினி மரியத்துக் கும் அவள் மகனுக்கும் மட்டும் பழக்கப் பட்டதல்ல. இப்போது பசித்துக்கொண் டே பலர் வாழக் கற்றுக்கொண்டார்கள். அவர் கள் கடனென்ற போர்வையில் கெளரவப் பிச்சை எடுத்து அ  ைத யும்

Page 15
O. 1
தீர்க்க வழி தெரியாது புதுக்கடன் பட்டுக் கிடக்கும் சங்கதி ஊரறியும். மரியம் தன் சருகாய்ப்போன உடம்பை மூடியிருந்த சேலைத் தலைப்பால் தன் ம க ன ன் எண்ணெய் ததும்பிய முகத்தை பரிவுடன் துடைத்து அவனை அணைத்துக் கொண் டே ஒரு கல் வீட்டு மதிலை தம் பசிதீர்க் கும் நம்பிக்கையின் அடையாளமாகக் கருதி அவ்வீட்டுவாசலை மிதித்தாள். கத்தா நிழல் ஆறுதலாய் இருந்தது. அயர்ந்தால் இன்னும் சுகமாக இருக்கும் அவளுக்கு. அந்த நிழலில் விளையாடிக் கொண்டிருந்த வீட்டுக்கார குழந்தை யொன்று தன் தா ய் க் கு செய்தியை மழலையில் எட்டிவைத்தது. "ம்மா. ம்மா.. பிச்சைக்கார மனிசு வந்திரு சா? "சில்லறைக்காசு இல்ல போக்கிற்று வரச் சொல் மகன்’ பகலுணவு தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வீட்டுக்கார மாது எதைப்பற்றியும் கவலைப்பட சித்த மில்லாதவளாக சமயலறைக்குள்ளிருந்து சத்தமிட்டாள். மரியத்திற்கு கத்தா நிழ லில் தீமிதித்தது போலாயிற்று. தனக்கும் மகனுக்கும் பகலு ண வு அவ்வீட்டில் கிடைக்குமென்ற நப்பாசை வீண்போயிற்று அவள் அந்த யாசகத்துக்காய் இரக்கத் துணியவில்லை. ஆயிரக் கணக்கான வீடுகளை சுமந்துள்ள அவ்வூரில் மரியத் திற்கும் அவள் மகனுக்கும் சோறு போட எவருமில்லாமலா போவார்கள். அந்த நம்பிக்கையை அவளும் இழக்காமலில்லை. மனிதர்கள் இந்த மண்ணில் முற்றுமுழு தாக கெட்டுவிடவில்லை. ம ரிய த் தி ன் குழந்தை அவளோடு அவளது நிழலில் போய்க் கொண்டிருந்தது. மரியம் இப்ப டித்தன் குழந்தையோடு தெருத்தெருவாய் சுற்றித்திரியவிருக்கும் பரிதாப வாழ்க்கை யை நினைத்துக்கூட பார்த்திருக்கமாட் டாள். அவள் வாழ் ந் த சீர் இந்த ஊருக்குத் தெரியுமா ? வீடென்று வய

3 O
லென்று கணவன் குழந்தை குட்டிகளுடன் வாழ்க்கையை இயற்கையை செழிப்பான ஆதரவுடன் ரம்மியமாக அனுபவித்து வந் தவளுக்கு எங்கிருந்தோ வந்த ஒரு கொள் கைப்போராட்டம் இந்தப் பொல்லாத விதி யைச் சுமந்து வந்து விபரீதமாக விளை யாடி விட்டது நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லை. யாரோ வீட்டுக் குள்ளிருந்துவாழ்ந்து சுகிப்பதற்காக அவள் வாழ்வைப் பறிகொடுத்து பரிதவிக்கிறாளே
பாவம் மர்யம்.
காசீம் ஹாஜியாரின் நீண்டகால வயல்காறன் இந்த மீரான் அதனால் தானோ அவரின் ஆஸ்த்தான செய்கைக் காறனாக அவன் பட்டாபிஷேகம் பெற் றுள்ளான். தன் கனவிலிருந்த மரியத்தை தன் வாழ்வில் நிஜமாக இ  ைண த் துக் கொண்டான். அது ஊர் அறிந்த திரும ணம்.
தேசத்தில் அமைதியின்மை, உயி ருக்கு உத்தரவாதம் தர எவர்தான் முன் வரமுடியும். விவசாயத்தை சுதந்திரமாக செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை. அந்த விவசாயிகள் எங்கே போவார்கள். குடும் பத்தைச் சுமக்க ஆபத்தை எதிர்நோக்க வேண்டியதுதான் விதியா!
தம்பணத்தை முதலீடு செய்த போடிமார் வயல் செய்கைக்காரனை களத் துக்கு அனுப்பிவிட்டு அறுவடைப் பயனை எதிர் நோக்கி வீட்டில் முடங்கிக்கிடக்க லாம். இது அவர்கள் பாக்கியம். அன்று மீரானுக்கு வயல் வேலைகள் இறுதிக் கட்டத்தில் போய்க் கொண்டிருந்ததை நினைக்க ஒரளவு நிம்மதிதான். 10 ஏக்கர் காணியையும் தனி ஒருவனாக நின்று பரிபாலித்துக் காத்து ஒரு நெல் களஞ்சிய

Page 16
ロ14
மாக அதை மாற்றி கண் முன்னே மலை போன்ற மூன்று சூடுகளையும் கண் டு ம கி ழ் ந் தா ன். மனக் கல்குளேட்டரில் தனக்குரிய வருமதியை அனுமானித்துப் பார்த்தான். எப்படியும் மரியத்துக்கும் மக்களுக்கும் இம்முறை அவர்கள் விரும் பிய தங்க மாலைகளை வாங்கிக் கொடுக் கலாம். அடுத்த போ கம் 3 ஏ க்கர் காணிக்கு தனியாக முதல் போட் டு ப் பார்க்க வேண்டும். குத்தகைக் காணியில் { செய்கையின் லாபம் பெறுவது முயற்சி யின் பலன். மனக் குதிரை தறி கெட்டுத் தன் பாட்டில் போய்க் கொண்டிருந்தது திடீரென எதிர் பாராமல் துப்பாக்கியின் வெடியோசை 1 நவீன துப்பா க் கி கள்
சராமாரியாக ரவைகளைக் கக்கின. எங்கி
ருந்தோ யாரை நோக்கி இது இப்போது அவர்கள் இந்த அப்பாவிகளையும் வைப் பதில்லை, இவர்களது மரணத் தாக்குத லுக்கு குறி வைக்கப் பட்டவர்கள் உயிர் பிழைத்த கதைதான் உண்டா? மீரான் கனவுகளைப் பறிகொடுத்து, தான் நேசித்த அந்த வயல் பரப்பின் வரம்பிலே உயிரற் றவனாக குப்புறக் கிடந்தான். இன்னும் பலர் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இரத்த வெள்ளத்தில் வெற்றுடலாகக் கிடந்தனர்.
i
'இத்தா” சிறைக்குள் எ த் த  ைன பேரை இந்தக் கொலை கார ர் கள் அடைத்துவிட்டனர். மரியம் இத்தா ? மறைப் புக் குள் அடைக்கப்பட்டாள். காசிம் ஹாஜியார் மனைவி மக்கள் ஒரு சில நாட்கள் மரியத்தின் இத்தா வீட்டுப் பக்கம் தலை காட்டிவிட்டு பின்னர் அடி யோடு மறைந்துவிட்டனர். மரியத்திடம் அவர்களுக்கு மகிழ என்ன இருக்கும். என்ன விசித்திரமான உலகம் இது. இலாப நட்டத்தில் உறவை வளர்க்கும் அதிசய மனிதர்கள் எல்லாமே பொய்முகங்கள்.

ஆத்மார்த்த உணர்வில்லாத இந்த இயந் திரப் பிறவிகளிடம் இதயத்தை தேடுவது என்ன முட்டாள்தனம். இவர்களுக்காகத் தான் பலர் உயிரைப்பணயம் வைத்தார்
கள். பாவம் அந்த அப்பாவிகளின் விதி !
இத்தாவிலிருந்து வெளியேறிய மர்யம் "
தன் ஜீவனோபாயத்துக்காய் ஒரு ஆணைப் போல் வாழ முடியுமா ? அவளால் இந்த உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்க" முடியுமா? ஒரு வருடத்துக்குள் அவள் களைத்தும் விட்டாள். இனி எங்கே
போவாள் ? குடும்ப பாரம் சுமக்க ஊர்
ஊராய் கிளம்பி விட்டாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும் ! .
( யாவும் கற்பனை )
அசோக மித்திரனின் விமோசனம் " என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து.
எஸ் - வைதீஸ்வரன் தனக்கும், பிறருக்கும் தீங்கிழைத்துக் கொண்டு வாழ்வைத் துன்பமாக்கும். தன் பலவீனத்தைக் கண்டு பல முறை வெட்கப்படு கிறான், விபரீதமான சம்பவங்களின் மூலை பில் வாயடைத்து நிற்கிறான் அகங்காரமான காரியங்கள் செய்துவிட்டு அசடனாய் திரும்பு கிறான். வழி தெரியாத ஊருக்கு பயணம் தொடங்கிவிட்டு, இடையில் பெரிய குற்றச் சுமையுடன் ஒரு கொலைஞனின் பிரமையில் தலை குனிய நிற்கிறான். மிகச் சாதாரண மான விஷமச் செயல்கள் மகா பாதகமாக மாறி தன்னை கொலையாளியாக்கி நிற்க வைக்கும்போது அவனுக்கு வாழ்வு நியதி பின்மேல் ஆத்திரமும், இன ம் புரியாத குழப்பமும், ஆனால் அதுவே ஒரு தெளிவின் ஆரம்பமாகவும் தெரிவதை உணர்கிறான். வாழ்க்கை இவனை ஏமாற்றுவதும் இவன் வாழ்க்கையை ஏமாற்றுவதும் இவரது கதை களில் இழையோடும்.

Page 17
15
ஒரு நூற்றாண்டின் பத்து நாவல்கள்.
ளர் வாழ்வை "துன்பக்கேணி’ என்ற குறு நாவலை எழுதியுள்ளார். இதனை ஒரு நீண்ட சிறுகதை என்றும் குறிப்பிடுவார் கள். புதுமைப் பித்தனின் படைப்பு வெளிவந்த ரால் நூற்றாண்டு+ளுக்கு பின் னரே மலையக மக்களைப் பற்றிய படைப் புகள் தோன்றின. மலையக மக்களின் பிரச்சினைகளைப் பற்றி யதார்த்தபூர்வ மாக வர்க்க முரண்பாட்டையும், தொழிற் சங்க முயற்சிகளைப் பற்றியும் எடுத்துச் சொன்ன நாவல் யோ, பெனடிக் பாலனின் 'சொந்தக்காரன்" (1968)
எனவே, இ த  ைன த் தொடர்ந்து எழுபதுகளில் நாவல் இலக்கியத் துறையில் நல்ல பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடியன வாக பல நாவல்கள் வெளிவந்துள்ளன. சாதி அமைப்புகளையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சுட்டிக்காட்டும் கே. டானியலின் "பஞ்சமலர்' ( 1972 ) ஓர் இன உணர்வு கொண்ட தமிழ் இளை ஞனின் மன உணர்வுகளையும், மனோ வளர்ச்சியையும் காட்டும் அருள் சுப்பிர மணியத்தின் “ அவர்களுக்கு வயது வந்து விட்டது” ( 1973 ) ஒரு பிரதேசத்தின் ச ட ங் கு , சம்பிரதாயங்களை கூறும் அ. பாலமனோகரனின் 'நிலக் கிளி" நகரம யமாக்சப்பட்ட வாழ்க்கை முறையின் சிதைவுகளும் கிராமங்களின் நிலைமையை சுட்டிக்காட்டும் " காட்டாறு ' ( 1987 ) தோட்டங்கள் தேசிய மயம் என்ற போர் வையில் துண்டாடப்படல், மொழி கடந்த காதல் போராட்டங்கள் ஆகியவற்றை மனித நேயத்துடன் எழுதப்பட்ட தி. ஞான சேகரனின் "குருதி மலை" தமிழ், சிங்கள, முஸ்லீம் ஊழியர்களின் வாழ்க்கை நிலை,

口
நாளாந்த பிரச்சினைகள், அவர்களிடையே ஏற்பட்டுவரும் அரசியல் விழிப்புணர்வு, போன்றவற்றை எ டு த் துச் சொல்லும் சி. சுதந்திரராஜின் மழைக்குறி * (1975)
எண்பது சளில் வெளிவந்த நாவல்க ளில் தமிழக விமர்சகர்களாலும் நம்மவர் களாலும் மிகவும் கவனத்துக்குரிய நாவ
லாக  ெ1ாள்ளப்பட்டது கே. டானியலின்
" கானல் ” ஆகும். இதே நாவலாசிரியரின் "பஞ்சமலர்" தண்ணீர் அடிமைகள், நாவல் களைவிட “சானல்’ நாவலே மிகச்சிறந்தது எ ன் பது பலரது அபிப்பிராயமாகும் **இந்த கானலில்வரும் ஞானமுத்து குரு வானவர் என்னுடைய அறிவறிந்த கால எல்லைக்குட்பட்டவர் பெயர் மட்டும் ' ஞானப்பிரகாசர் ” என்பதற்கு பதில் ஞானமுத்தராக இருக்கிறார். " சுப்பர் ” அது போல அல்லாமல் சுப்பராக வருகி றார் இவர்கள் இருவருடனும் நான் பேசி யிருக்கிறேன், நெருங்கி பழகியிருக்கிறேன் இதைக் சொண்டு எனது வயதுக்குட்பட் டவைகளையே சம காலம் என்று நான் கூறுகிறேன்" கானலைப்பற்றி படைப்பா ளியான கே. டானியல் குறிப்பிடுகிறார். ( கானல் - முன்னுரை 1986 )
இந்த காலகட்டத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய இன்னொரு நாவல் மலை யக மக்கள் கவிமணி என்றழைக்கப்படும் சி. வி. வேலுப்பிள்ளையின் 'இனிபாடமாட் டேன்” (1984) இந்த நாவல் 1977-ஆம் 78-ஆம் ஆண்டுகட்கு பின்னர் மலையகத் தொழிலாளர்கள் அனுபவித்த இன்னல் களை வெளிப்படுத்தும் வகையில் அமைந் தது. சிங்களப் பேரினவாதிகளின் தாக்கு தல்களுக்கு உட் பட் டு தோட்டங்களை விட்டு செல்வதா ? அன்றேல் வடக்கு - கிழக்கில் புகலிடம் தேடுவதா ? என்ற

Page 18
இரட்டை நிலையில் உழன்ற தொழிலா ளர்களின் நிலைமையை இந்நாவல் வெளிப் படுத்துகின்றது. அந் நிலையில் எங்கும் தப்பி ஓடுவதில் பயனில்லை என்பதையும் மலையகத்திலேயே உறுதியாக காலூன்றி நிற் கவேண்டும் என்பதையும் வலியுறுத் தும் பேர்க்கில் எழுதப்பட்டது’ (கட்டுரை 1978க்கு பின் ஈழத்தின் தமிழ் நாவல் இலக்கியம்-மல்லிகை 1988)
இது போ ன் று குறிப்பிடக்கூடிய இன்னொரு நாவல் மு. தளையசிங்கத்தின் "ஒரு தனி வீடு' ( 1985 ), இந் நா வல் நூலுருவம் பெறுவதற்கு கால் நூற்றாண் டுக்கு முன்னர் எழுதப்பட்டது. இலங்கை வட பிரதேசத்து தமிழர் வாழ்க்கையை கருவாகக் கொண்ட நாவல் 1950 - 60 காலப்பகுதியின் யாழ்ப்பாண பிரதேச புங்குடுதீவு கிராமியக் களத்தில் நிகழும் கதையம்சத்தை கொண்டது. இ ர ண் டு பாகங்களாக அமையும் இந் நா வலில் முதலாம் பாகம் அக்கிராமத்தின் உறவு நிலைகளில் ப்ெர்ருளாதார ஏற்றத் தாழ்வு களால் நிகழும் முரண்பாடுகளை எடுத்து காட்டுவது. இரண்டாம் பாகம் பரந்த சமூக நிலையில் தமிழர் சிங்களவர்கள் இடையிலான பிரச்சினைகள் 1958 இன கொலை என்பவற்றை கூறி அவற்றின் விளைவாக தமிழர் தமக்கென ஒரு அரச கூட்டாட்சியின் கீழ்ப்பெற வேண் டும் அல்லது தனி நாடு பெற வேண்டும் என்ற கருத்தை முன் வைப்பது இது போன்று
எண்பதுகளில் பல நாவல்களை காட்ட
லாம்.
எண்பது களில் செங்கை ஆழியனின் * காட்டாறு நந்தியின் 'நம்பிக்கை தரும்
 
 

5
ם
நாவல்களை குறிப்பிடலாம். இலங்கை எழுத் தா ள ர் களி ல் கே. டானியலும் செங்கை ஆழியனும் குறிப்பிடத்தக்கவர் கள். இவர்கள் தங்கள் நாவல்களில் இடம் பெறும் மனிதர்கள் பற்றிய சமூக ஆய்வு வரலாற்று வி ப ர ங் க ள் ஆகியவற்றை நிறைய தருவதில் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களைவிட சிறந்து இருக்கிறார் என ஞானி குறிப்பிடுகிறார்.
இலங்கையின் தமிழ் நாவலுக்கு நூறு *வயது தாண்டிவிட்டது இந்த நூற்றாண் டை கடந் நிலையில் சுவைஞனுக் பத்து orಳ್ರಲ್ಲಿ என என் மனம் வி  ைழ கி றது. இந்த நாவல்களும் காலங்கடந்து இலக்கிய வர லாற்றில் பேசப்படும் நாவலாக அமையும்.
செ. கணேசலிங்கத்தின் " நீண்ட
ய ண ம் ’ எஸ். பொன்னுத்துரையின் וץ 'சடங்கு' சி. சுந்திரராஜின் 'மழைக்குறி' செங்கை ஆழியானின் ' காட்டாறு '
தி. ஞானசேகரனின் ' குரு தி ம  ைல அருள் சுப்ரமணியத்தின் " அவர்களுக்கு வயது வந்து விட்டது * சி. வி. வேலுப் பிள்ளையின் ' இனிப்பாடமாட்டேன் ' மு. தளைய சிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நந்தியின் 'நம்பிக்கை” கே. டானியலின்
'கானல்’
இந்த பத்து நாவல்களும் எதோ ஒரு விதத்தில் தனித்துவமிக்கதாக திகழ் கின்றது. என்பதில் ஐயமில்லை. ۔۔۔۔
ஆராய்ச்சிக் கட்டுரைகளை நாம் எதிர்பாக்கிறோம். - ஆசிரியர் -

Page 19
எங்கே இவர்கள் ?
மருதமுனை எம் எச் ஏ கரீம்
வெள்ளாமை வெட்டிவர விடியக்குள்ள போனவரை காணவில்லையென்று
கலங்குகிறாள் இங்கொருத்தி
மாட்டுக்கு தவுடு வாங்க வண்டில் கொண்டுபோனவரு வீட்டுக்கு திரும்பலயாம் ': விம்முகிறாள் இன்னொருத்தி
சூட்டை போட்டுவாறனென்று சொல்லிற்றுப் போனவரை
காத்துக் காத்து நின்றுவிட்டு கலங்குகிறாள் அங்கொருத்தி
மீனுக்குப் போறனென்று மூணாம் நாள் போனவரு ஏனின்னும் வரல்லையென்று ஏங்குகிறாள் இன்னொருத்தி
பாண்கொண்டு விற்பனை செய்யும் பையனையும் காணவில்லையென்று கலங்குது அவன் குடும்பம்
ஊர் ஊராய்ச் சென்று
உடுப்பு விற்கும் ஆட்களையும்
ஆறுநாளாய்க் காணவில்லை அக்குடும்பமெல்லாம் ஒப்பாரி
பள்ளிக்குப் போன பாலகன் வரல்லையென்று சொல்லிச் சொல்லி அழுகின்றாள் சோகத்தோடு இன்னொருத்தி

17
பைத்தியகார உலகம்
6Tib 67 6ňv (psortů
கண்ணை
மூக்குக்கு கீழ் இறக்குகிறேன் என்கிறான் ஒரு வித்தைக்காரன்.
ஹிருதயத்தை இடமாற்றி வைக்கிறேன் என்கிறான் மனிதத்தை தொலைத்த வைத்தியன்.
காலால் நடப்பதை
மறந்துவிட்டு தலையால் நடவுங்கள் என்கிறான் முற்போக்குவாதி.
ஒருமை என்பது தனிமை என்கிறான் காதலிக்காக ஏங்கும் காதலன்.
ஆத்மா அழுகிறது என்கிறான் காலத்தால். ஹிம்சிக்கப்பட்ட கவிஞன்.
மரணமே தேவையில்லை என்கிறான் வாழ்வை வெறுத்த மனிதன்.
'ஒசோன்' படையில் "ஓட்டை விழுகிறது. என்கிறான் *உயிர் கொடுக்கமுடியாத.
விஞ்ஞானி
இவ்வளவும் போக, மனிதர்களை காப்போமென மனிதர்கள் சொல்கிறார்கள்.

Page 20
சுந்தர ராமசாமியின் "ஜே. ஜே.
“மனிதனை உருவாக்க அவன், குரல் வளையைப் பற்றிக் கொண் டி ரு க் கும் கொடிய கரங்களிலிருந்து அவனுக்கு விடு தலை தேடித் தர வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் சென்று, நீ எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறாயோ அப்ப டியே இரு என்று நாம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள், நிம்மதியின்மை, குற்ற உணர்ச்சிகள், பாவ உணர்ச்சிகள்- இவற் றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்க வேண்டும். அவன் இயற்கைப் பயணத்தை தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவை தான் நாகரிகம். அவன் பாய்ந்து பிடிக்க அடிவானத்திற்குப் பின்னால் ஏதோ தொங்கிக் கிடக்கிறது என்ற கற்பனை இனி வேண்டாம்.
.என் கனவுகள் உள்ளூர ஓங்கி திமு திமுவென்று வளர்ந்து கொண்டிருக்கின் றன. அவற்றின் சாயல்கள் வெளியே கசிகின்றன அவற்றின் ஈரத்தை நான் ஸ்பரித்து உணர்கிறேன், ஆனால் இந்த உணர்ச்சி ஒரு வடிவத்தை கேட்டு வதைக் கிறது. நடைமுறைக்கு வழி கேட்கிறது.
அந்தி மயங்கும் வேளையில் வீணை யின் சோக மீட்டல்கள் கேட்க ஆரம்பிச் கும். என் அறையின் ஒரம் வரையிலுப் வரும், "லம்போதர" என்ற வர்ணம் நீங் கள் அதை கேட்டிருக்கிறீர்களா? ஒரு தட வையாவது என்ன அற்புதமான வர்ணம் அது என் மனசை பிழியும். இருள் சூழ்ந்த

3ロ
சில குறிப்புகளிலிருந்து .
அறையில் குத்து விளக்கின் ஒற்றைத் திரி நிமிர்ந்தெரிய, சுவர்களில் மாய நிழல்கள் - அசைய அந்தப் பெண் வீணையின் விரல் களை அசைக்கிறாள். வீணை ஒலியோடு ஒரு சூட்சமான கணத்தில் அவள் குரல் இணைவதும், மற்றொரு சூட்சமான கணத்தில் அவள் குரல் நழுவ வீணை தனித்து ஒலிப்பதும், என்னை வாரிச் சுருட்டும்.
நானோ துடித்துக் கொண்டிருக்கிறேன் என்னால் ஒடிப்போக முடியாமல் இருக்க லாம், ஆனால் நிச்சயமாக நடந்து போய் விட முடியும் அவள் இருப்பிடம் எனக் குத் தெரியவேண்டும் அந்த வீணை ஒலி மீதேறி நான் போக முடியுமா?
..வாழ்க்கையில் பிடிப்பு என்பதே இல்லை. எதை நம்பி உயிர்வாழ? கடவுள் சரிந்துவிட்டார். சமயங்கள் சரிந்து விட் டன ஆலயங்கள் அழுகி மூடை நாற்றம் எடுத் துக் கொண்டிருக்கின்றன. வெறி பிடித்து அலைகிறான் மனிதன்.
கலில் ஜிப்றானின் எழுத்துக்களில்.
**செல்மா ! உடலும், ஆன்மாவும் அழகாய் அமைந்தவள், அவளை ஒரு நாளும் தெரி யாதவர்களுக்கு அவளைப்பற்றி நான் எப்படி விபரிக்க இயலும்? இறந்த ஒரு மனிதனுக்கு நைட்டிங் கோலின் பாடலையோ, ரோஜா வின் மணத்தையோ, சிற்றோடையின் பெரு மூச்சையோ எப்படி ஞாபகம் வைக்க
Փւգպմ"? ལར་ ཚོམས་ . . . .
:بعة-ޅި. . , -" "“

Page 21
..
கிராமிய இலக்கியக் கருவூலம்
ஒதாதார் கவிகளின் ஒண்பான் சுவைகள்
கல்லா மாந்தரின் உணர்ச்சிப் பூக்க ளான கவிகள், நாட்டுப் புறத் தோட்டத் திலே மலர்ந்து, இன்பத்தேனை ஏந்தி நிற் பது மிகப் பழைய காலந்தொடக்கம் நடை பெற்றுவரும் நிகழ்வாகும், நாகரிகம் சென் றடையாத சிற்றுார்களே நாட்டுப்புறங்க ளாகின. நல்லவர்களின் வாழ்விடமாகவும் மாறின.
பழங்குடி மக்களின் பாடல்கள், அவர் தம் வாழ்வின் பல்வேறு உணர்ச்சிகளை உள்ளது, உள்ளபடியே எடுத்தோதுவன வாய்க் காணப்படுகின்றன. சற்று நாகரி கத்தின் தாக்கத்தைப் பெற்ற பாமர மக் களின் பாடல்களிலே, ஒலி வேறுபாடுகளை யும், வாழ்க்கைப் பிறழ்வுகளையும் ஆங் சாங்கே காணக்கூடியதாய் உள்ளது.
கிராமிய மக்களின் வாழ்க்கைச் சிறப் புகள், நம்பிக்கைகள், தாரதம்மியங்கள், கலாசார மரபு வழிப் பாரம்பரியங்கள் அனைத்தையும் பற்றிய விளக்கங்களையும் தம் உள்ளத்தின் உணர்ச்சி வடிவங்களான கவிகளையும் பற்றி இப்படியான சிறு கட் டுரையொன்றில் அடக்க முடியாது. அவற் றின் சிறப்புக்கென, செழிப்புக்கென பல பக்கங்களைக் கொண்ட பலவகை நூல் கள் எழுதப்படல் வேண்டும்.
கடந்த சில தசாப்தங்களாகக் கிராமிய இலக்கியத்துக்கு ஒரு தனி மதிப்பு ஏற் பட்டு வருவதை நாமறிவோம். அதன் கார ணியால், பல எழுத்தாளர்கள் இத்துறை

ஏயாரெம், சலீம்
யில் ஈடுபாடு கொண்டுள்ளனர், சிலர் மிக வேகங்காட்டுகின்றர். என்றாலும் இவர்கள் எழுதுவதெல்லாம் கிராமியக் கவிகளா ? கிராமிய இலக்கியங்களா ? என்பது விளங் கமுடியாத விடுகதைகளாயுள்ளது.
கிராமியக் கலை அவர்களைப் பொறுத் தவரை குரங்கின் கைப் பூமாலை யாகி விட்டது. கிராமிய இலக்கிய உலகுக்கு சிவப்புக் கொடி காட்டுவதைப் போன்றுள் ளது. இந் நிலை முற்றாய் மாறி, உரிய கலைப்படைப்புகள் ஆக்கம் பெற்றால்தான், கிராமிய இலக்கியத்துறை ஆரோக்கியமுள் ளதாக வாழும், வளரும், வளம் பெறும்.
சிலர் கிராமியக் கவிதைகள் காதல் சுவை பற்றியதாக மாத்திரமே காணப்படு கின்றன என்று நினைத்து அது பற்றியே எழுதி வருகின்றனர். இது தவறான ஒரு கருத்தாகும். ஒண்பான் சுவைகளான நகை அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை, சிருங்காரம் ஆகியவற்றைக் கருவாகக் கொண்ட கிரா மியக் கவிகள் அனேகமுண்டு. கரையில் இருந்து கொண்டு கடலின் அடியில் உள்ள முத்தைப்பெற முடியாது.
இது போன்று, ஆழமான ஓர் ஆராய் வின் மூலமாகவே, கிராமிய இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும், பிரத்தியேக நுட் பங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

Page 22
இலக்கிய உலகில் எல்லோராலும் விரும்பப்படும் காதல் சுவை பற்றிய பாடல் கள் அனேகம் காணப்படுவது போல், கிரா மியக் கவிகளிலும், கூடிய எண்ணிக்கை யுள்ள சிருங்காரச் சுவை கூட்டும் கவிகள் உள்ளன. ஏனைய எட்டுச் சுவைகளும் பல் நூறு கவிகளையும் நாம் காண்கிறோம்.
1 - 6 Jud
அவன் அடியே என்று தகாத வார்த் தையால் அவளை ஏசினான். அவள் அடா!
என்று பதிலுக்கு வைக்கிறாள். 1. அடியே! எண்டு சொன்னாய் அல்ப்பப் புத்திக்காறா - அடா ! மடையா நான் ஒன்ன - அடிக்கறது தப்பாது. 2.போடீ எண்டு சொன்னாய் பொல்லாத வள் என்டாய் - ஒன்ட காடத்தனத்தை - கருவறுத்துப் போட்டிடுவன். 3.நான் பொம்பளயெண்டு பொழையாக எண்ணாதடா ஒன்ட கொடுப்பைக் கிழிச் சிக் - கோடியிலே தொங்க வெய்ப்பேன் - இப்படியாக - ஏசல் படலம் தொடர்
கிறது.
2 - பெரு நகை
அவள் சிவப்பு நிறமானவள். றோசாப்பூச் சாயல் ஏனோ ? அவன் அவளை விரும்ப வில்லையென்று தெரியாது தவிக்கிறாள். அவன் ஒரு கறுப்பு மங்கையை விரும்புகி றானெனக் கேள்விப்படுகிறாள். விடயம றிந்த அவள் வெம்பிவாடுகிறாள் அவளது உணர்வுகள் ஒலமிடுகின்றன. 1.இலுமிச்சம் பழம் போல இலங்கையெல் லாம் பொண்ணிருக்க -அந்தக் கறுத்தப் பொடிச்சியிலே - நீங்க கண்போட்ட மாயமென்ன

O
2.கண் பழுதுதானோ கல்பு கறுத்துப் போ ச்சோ - நினைவு தடுமாறினதோ - நேசர் நிண்டழுவார் பார்மதினி
3. அம்மவாசையும் நிலவும் அடுத்தடுத்து நிற்பது போல்- அவளும் அவரும் அண் டிருந்தால் நல்ல செப்பம்.
3 9áš SFD
அவளின் கணவனின் தாய் அவளோடு கோபமாக விருக்கிறாள். மச்சியோ ஒரு படிமேல். அவளுடைய அச்சத்துக்கான காரணி பற்றிக் கூறுகிறாள். 1. மாமிற்ற போக மனப் பயமுமாயிருக்கஎன்ர மூத்த மதினி- மொறுமொறுத்துப் போயிருக்கா, 2.சீனிமாவும் வறுத்துச் சீப்புப் பணியாரம் சுட்டு-குலுக்கச்சும் போட்டிரிக்கி-மாமி கொம்புறாவாம் எங்களுக்கு 3.பொன்னால் கொடிப்பறந்து புகழ் விசி நிண்டாலும்-அல்லாட கட்டளைக்குஅடி பணிஞ்சி போகவேனும்
4 அற்புதம்
ஏழையொருத்தி பணக்காரியாக மாறிவிட் டதைக் கண்ட பெண் அதிசயப்படுகிறாள். 1.காலம் முழுக்கக்கக்கிசங்கள் பட்டழுதபாத்தும்மா மாமி-இப்ப பணக்காரி யாயிரிக்கா
2.மலட்டுத் தரையில் மஞ்சல் வெளஞ்சது போல்-பொலி அதிகமாயிரிக்கி-அது பெரும் புதினங்காராசா 3.இடுப்பை முறிச்சி இருதயத்தில் வாள் பாச்சி-அடிச்சி நொறுக்கினவர்-இப்ப அமைதிகொண்ட மாயமென்ன

Page 23
21
இக்கட்டுரை ஆசிரியர் எழுத்துலகில் பொ6 1963ல் சாகித்திய மண்டலப் பரிசு ெ உழைப்பின் பயனாக அக்கரைப்பற் வரலாற்று நூல் அக்கரைப்பற்று மண்ை இவரது முயற்சிக்கு எமது பூரண ஆ
5 இளிவரல்
ஒருவனின் அவலட்சண நிலை கண்ட பெண்ணொருத்தி அவனைப்பற்றி அருவ ருப்புக் கொள்கிறாள்.
1.செத்த முகமும் செகிழுழுந்த கால்தலை யும்-பாம்பு நடையும்-எனக்கிப் பாக்க வொண்ணா வானரியம்
2.கப்பல் கடல்தாண்டு காணாமல் போனா லும் - ஒப்பாரி வெய்க்கிறவர் - நல்ல ஒழுங்கான ஆம்புளையோ
3. ஊத்த உடுப்பும் ஒரு கட்டுப் பழங்கொ டையும் - போத்திய சாறனுமாய் அவர் போற கோலம் செப்பமில்ல
6 வெகுளி
அவன் அவளோடு சரசமாடுகிறான். அவ ளுக்கு வெறுப்பைத் தருகிறது. பொறுத்துப் பார்த்தாள். அவன் அகன்ற பாடில்லை பொங்கியெழுந்து பொரிந்து தள்ளுகிறாள்
1.கொரங்கு முகறா கொழுக்கட்டைத் தலையழகா-என்னத் தனகினது போதும் - தரவயால ஓடியொழி 2.ஒண்ட ஒடர்படிக்கி ஒருநாளும் நான் நடவேன் - என்ன ஆரெண்டு எண்ணி ருக்காய்-அதுநடக்கா வீண்கனவு 3.ஒண்ட வளிசல் கதையும் வக்கில்லா மாதி ரியும் - அறிஞ்சவள் தான் நானும் - இப்ப அதில இனி வேலையில்ல

བ་ཉ
ன் விழாவை எதிர் கொண்டிருப்பவர் பற்றவர். வெகு விரைவில் இவரது
றின் வரலாறு ' என்ற இவரது
ணை பெருமைப்பட வைக்கப்போகிறது,
தரவு. ( ஆசிரியர்)
7 கருனை
தலைவனில் துயர் சண்ட தலைவி உள்ளம் உருகி நிற்கிறாள்' அவனுக்கு வருத்தம் வேறு. இறைவனை மன்றாடி இரங்குமாறு வேண்டுகின்றாள் 1. பகல் இரவு பாக்காமல் பலபாடும் பட்டு வந்து - நொந்து கிடக்கிறயள் - மனம் நொந்தழுது வேகிறது 2. மனமிரங்கி நானும் மன்றாடிக் கேட்டிரிக் கேன் - ஒங்குட வருத்தங்குணமாகி - வந்துசேர வேணுமெண்டு 3.ஏழைக்கிரங்கி எளியவரைக் கைதுரக்கி - உதவி பல செய்யிறயள் - நமக்கு ஒரு குறையும் நேராது
8 அவலம்
ஏழைக் குமரிகளின் ஏக்கம், அவர்தம் வாழ் வில் அனுபவிக்கும் துயர்நிலை முதலியன சித்திரிக்கப்பட்டுள்ளன. 1.ஏழைக் குமரிருந்து ஏங்கியழுகிறது - பரிதாபமாயிரிக்கி - எனக்கிப் பா க் க வொண்ணா வானரியம் 2.வயசேறிப்போச்சி வாழ வழியுமில்ல - என்னைச் சோதிக்காய் ஆண்டவனே - நான் சுகம பெறுவதெப்போது 3.தாயில்லா மான்கள் தவிச்சழுது போறது போல் - நானுமிரிக்கேன் - ஒ ண் ட நாட்டமென்ன யாறகுமான் (தொடரும்)

Page 24
பூ மாலைகளில் ஒன்று .
உங்கள் அஞ்சல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி தடம் என்ற பெயரில் முற்போக்கு கலை இலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளி யிட முனைப்பு கொண்டுள்ள உங்களது முயற்சியை மனம் கொள்கின்றேன்.
நேற்றைய வானம் பாடி 'களிலிருந்து தான் கவிக்கோ அப்துர் றஃமானும், மு.மேத்தாவும், அக்கிணி புத்திரனும் இன் னும் இவர்களைப் போன்ற பலரும் சாத னை படைத்தனர் என்பது சரித்திரம்,
இன்றைய "வானம் பாடி களான நீங் கள் இவர்களைப் போலல்லாது, அதற்கு மேலாக இலக்கியச் சாதனைகளைப் படை க்க வேண்டும் என்ற எனது இன்றைய ஆசிப்பு உங்களுக்கு நான் வழங்கும் முதல் அச்சகாரம் என்பதை எற்றுக்கொள்க.
சஞ்சிகை வெளியிடுவதென்பது ஒரு சாதாரண காரியமல்ல. அது மாபெரிய சாதனை. இலங்கையை பொறுத்தவரையில் தொடர்ந்து சஞ்சிகை ஒன்றை வெளியிடுப வரின் பெயரை " கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம் என்பது எனது அபிப் பிராயம். அந்த வகையில் "மல்லிகை ஆசி ரியர் டெமினிக்ஜீவா எடுத்தாளத்தக்கவர் "சிரித்திரன்’ ஆசிரியரையும் இந்த வரிசை யில் வரிசைப்படுத்தலாம்.
நான் இப்படி எழுதுவது, உங்கள் உற் சாகத்தை தடுப்பதற்காக அல்ல, இப்பணி ஒரு பாரிய பெறுப்பு என்பதை உணர்த்து வதற்காகத்தான். இலங்கையில் கலைஇலக் கிய வரலாற்றில் "மரகதம் தந்த ஏமாற்

22
றம் இன்னும் மறந்து போகவில்லை. 'அஞ்சலி சஞ்சிகையை இலங்கை வாசகர் கள் ஏமாற்றிவிட்டால் அவர்களை ஆண் டவன் கூட மன்னிக்கமாட்டான் என்று "மலர்' சஞ்சிகை தமது ஆசிரியர் குறிப்பில் குறிப்பிட்டு எழுதியது இன்னும் ஞாபகத் தில் இருக்கிறது. இன்று அந்த இரண்டு சஞ்சிகைகளுமே இடைநிறுத்தப்பட்டுவிட் டன. ஆனால் அவைகள் இரண்டும் இலக் கிய உலகில் பதித்த தடம் இன்னும் தூர்ந் துபோன ரெயில் தண்டவாளங்கள் மாதிரி மனதில் நிலை கொண்டிருக்கிறது. இது போன்ற ஞாபகக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன
அவைகள் கடந்த காலங்கள், பழைய விஷயங்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கைதானே. அன்றைய வாசகர்கள், இலக்கிய நேசர்களின் தொ கையை விட, இன்றைய வாசகர்களினதும் நேசர்களினதும் தொகை பல் மடங்காகப் பெருகியுள்ளது அல்லவா .? திட்டமிட்ட தீர்க்கமான செயல்பாடுகள் நமக்கு வெற் றியைத்தர முடியும் என்ற நம்பிக்கை யானையின் தும்பிக்கை போல நெஞ்சில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன்.
தடம் ' என்றால் சுவடு, தடாகம், குளம் என்றெல்லாம் பொருள்படும் என்று நினைக்கின்றேன். உங்கள் "தடம்" எனும் தடாகம் நல்ல இலக்கியத் தாமரைகளை புஷ்பிக்க வாழ்த்துகின்றேன். அந்த புஷ்பங் களின் வாசனை பலமுள்ள சுவடுகளைப் பதிக்க ஆசீர்வதிக்கின்றேன்.
அன்புடன் Je4 Sörquesör

Page 25
، جہ، م~
புதுக் கவிதை இருவர் பார்வை
O ஆர் நடராசன். .
இன்றைய தமிழ் இலக்கிய உலகில் புதுக் கவிதைகள் பிரச்சினைக் குட்பட்டதொரு முயற்சி, இன்று புதுக் கவிதைக்கெதிராக எதிர்க் குரல் எழுப்பும் யாப்புக் காவலர் கள் பாரதி தாசனுக்குப் பிறகு ஏற்பட்ட கவிதை வெற்றிடத்தை நிரப்ப என்ன செய்தார்கள் ?
இன்று புதுக் கவிதைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் நாட் டுக் கவிஞர்கள் இலக்கணம் தெரியாதவர் களல்ல. புதுக் கவிதை எழுதிய ந. பா, கனவுகள் கற்பனைகள், காகிதங்கள் எழு திய மீரா, ஒளிப்பறவை எழுதிய சிற்பி, கவிக் கோ அப்துர் ரகுமான், அக்கினி புத்திரன், அபி போன்றோர் இலக்கணம் பயின்ற பண்டிதர்களே, கவிஞனை உரு வாக்குவது இலக்கணமல்ல, உணர்ச்சிப் பெருக்கே என்று நான் கூறுவேன்.
நல்ல கவிதைகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதார ணமான ஒரு பொருளைப் பற்றி, - ஒரு குண்டூசைப் பற்றிக்கூட ந ல் ல தொ ரு கவிதை எழுதலாம். தரமான புதுக் கவிதை கள் சமூதாய உணர்வை நேரடியாக
வெளிப்படுத்துகின்றன.
அதிஷ்ட வசமாகவோ, துரதிஷ்ட வசமாகவோ நான் கவிஞனல்லன். புதிய முறையாகவோ அல்லது பழைய மரபிலோ நான் கவிதை எழுத முடியுமானால் - நிச்சயமாக என்னால் இமயத்தின் எழி லைப் பற்றி, ஒரு அமர க்ாவியம் தீட்டு வதைவிட, - இன்று எம் முன்னே நிற்கும் ஒட்டிய வயிறும் உலர்ந்த வாயும் நடக்கும் எலும்புக் கூடுகளையும் ஜனநாயக தேவ தைகளின் பலி ஆடுகளாக இருக்கும் - இந்த நாட்டின் மன்னர்களைப் பற்றியுமே எழுதுவேன். இதே உலகிலிருக்கும் அவலம்.

27
பைத்திய காரத்தனம் போலிகளைப் பற் றியே எழுதுவேன். w
சமகால புதுக் கவிதைகள் சில வெற்று ஆபாசக் களஞ்சியங்களாக இருக்கலாம். இதற்காக நாம் புதுக்கவிதையை புறக் கணிப்பது நியாயமற்றது. தயவு செய்து எல்லாக் கவிதைகளையும் நாம் படிப்ப தால் இதைப் புரிந்து கொள்ளலாம். தர மில்லாததையும் விஷய மில்லாததையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தரமான புதுக் கவி தைகளை நாம் வரவேற்பது நமது கடமை புதுக் கவிதையில் நீர் கலந்தால் நாம் அன்னங்களாக இருந்து பாலை மட்டும் பருகுவோம்.
O றசிதா
இன்றைய புதுக் கவிதைகளில், சென்ற தலை முறையில் காணப்பெற்ற அளவு உயிரோட்டமோ, இலக்கிய நாட் டமோ காணுமாறில்லை, நவீன புதுக் கவிதைகளில் ஆதார சுருதியாக எத்தகை யதொரு பொது நோக்கும் புலப்படவில் லை, எதையும் எப்படியும் எழுதலாம் என்ற போலிச் சுதந்திர உணர்வு புறப் பட்டிருக்கிறது.
அரசியல், பொருளாதார, சமூக சமயத் தளங்களில் படர்ந்திருக்கின்ற துஷ் டங்களைத் தகத்தெறிகின்ற ஆற்றலோ சக்தியோ இவற்றிற்கு இல்லை, ஆழ்ந்த புலமைப்பாடு எடுத்துக் கொள்ளும் துறை யில் காணப்படாததால், நுனிப்புல் மேயும் சிந்தனா படைப்புகளும் கலை மெருகு பெற்று விடுகின்றன.

Page 26
O 24
பொதுவாக இன்றைய நவீன புதுக் கவிதைகள் வாசகர் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றால் இன்று காணப்படும் நானாவித பொழுது போக்குச் சாதனங்களைப் போன்று இக் கலை வடிவமும் கருதப்படுகிறது.
இ ன்  ைற ய படைப்பாளிகளும் படைப்புகளும் முரண்தொடையாகவே வாசகர்களுக்குத் தென்படுகின்றன. அத னால் அந்த நவீன இலக்கிய வடிவம் மெளசிழந்து விடுகின்றன.
துரதிஷ்டவசமாக இலங்கை போன்ற நமது நாடுகளில் இலக்கியக் கலை வடிவங் கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய னவா ? என்றதொரு கேள்விக்குறி காலா காலமாக தொக்கி வந்து கொண் டே இருக்கிறது,
அதன் தொடரில் இன்றைய நவீன புதுக் கவிதை வடிவமும் மரபை மாற்றாது காலத்தோடு இணைந்து அந்தக் கேள்விக் குள்ளாகிறது. இலக்கியத்திற்கு இலகுவான வடிவமைத்துக் கொண்டனவே தவிர, வாசகர்களின் இதயங்களை இலகுவாக கொள்ளை கொள்ளத் தவறிவிடுகின்றன என்ற முடிவுக்கு வந்துவிட வைக்கிறது.
படித்து முடித்து மறந்துவிட வைக் கும் பாரிய சக்தியைக்கொண்ட கலைவடி வமாக நவீன புதுக்கவிதை அமைந்து விடு வது கவலைக்கிடமானதாகும்.
இந்நிலை கடந்த தலைமுறைக் கவி தைகளில் குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது எனலாம். வாழ்க்கையோடு சேர்ந்து, வறுமையோடு இணைந்து துய

ரங்களோடு கைகோர்த்துக்கொண்டு போன இலக்கிய வடிவங்களின் தன்மையிலிருந்து நவீன புதுக்கவிதை மாறுபட்டு நிற்பதை யும் இன்றைய இலக்கிய கலாரசிகர்கள் உணர்வார்கள் என நினைக்கின்றேன்.
எனவே கலைக்கும், கலைஞனுக்கும் படைப்புக்கும் படைப்பாளனுக்குமிடையே உள்ள அந்நியம் உடைந்து நெருக்கம் ஏற் பட்டால்தான். எந்தவொரு இலக்கிய வடிவமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
ஒரு உண்மை வடிவம் உருப்பெரு கின்றபோது, அதன் அயல்சக்திகள் பூரண தாக்கம் பெறாவிட்டால், அதற்கு வடிவம் என்ற பெயர் கொடுக்க முடியாது என்பதே என்கருத்து.
நோபல் பரிசு பெற்ற அனடோல் பிரான்வமின்' எழுத்திலிருந்து -
" தாயிஸ்! நான் உன் கூந்தலை அலங்கரிக்கும் மலராக இருக்கக் கூடதா? உன் அழகிய உடலை மூடி இருக்கும் உ  ை. யா க இருக்கக் கூடாதா? என்னை உன் காலடியில் போ ட் டு க் கொள், எனது உடலை உடை யாகப் போர்த்திக்கொள், வா கண்ணே! என் வீட்டுக்கு வா .

Page 27
அரச அங்கீகாரம்
படப்பிடிப்பாளர்
(9rieants Stu
உங்களுக்குத் தேவையான
( கறுப்பு வெள்ளை,
( அடையாள அட்டை புகைப்படங்களை கச்சி
எம்மை நாடுங்கள்.
PHONE O67 - 7493
MAN STREET,
அடுத்த இதழ் மார்கழியில் வெளிவரவிருக்கிறது
உங்கள் ஆக்கங்களை நாம் எதிர்பார்க்கிறோம்
 

பெற்ற
di ルの少 Z●
( கலர் படங்கள்
பாஸ்போர்ட் )( 8 سـ
சிதமாக படம் பிடிக்க
AKKARADATTLI.
bi
- ஆசிரியர் هD

Page 28
அக்கரைப்பற்றில்
அத்தியவசியப் பொருட்களுக்
WHOLESALE AND REAL DEAE
VM/CDMA TQANA
GE eneral Merchants
DISTRICT ACENT FOR
REO KITT & GOLMAN OF GEyL
119, 120, MARKET,
AKKARA PATU
Printed by, PC Printe

கான முகவர் நிலையம்
RS
DING CENTO:
OW LTD.
PHONE: 067 - 7449
O67 - 7332
S, Akkaraipattu.