கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தடம் 1992.03

Page 1
ன்றைய வா
- 9
 
 


Page 2
ILLI, IIIIIIIIIIIIIIIIII
േ
Կենտ ॥
 
 
 


Page 3
"மனிதம்' என்ற விலகாத பு
உரத்து முழங்கும் போலிகள் பிரச்சினையானது மக்களையும் தள்ளியுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கான
னெடுத்து செல்லப்பட வேண்டுே டிருப்பதனால் சமாதானத்திற்க ஒரு நாளும் எட்டிவிட முடியாது
இந்தச் சூழ்நிலையில் கலைஞ பங்கு என்ன? கலைஞன் என் காதும் மனச்சாட்சியுமாவன் எ பிரஞ்ஞை பூர்வமாக சிந்திப்பா பானது இன்றைய நிலையில்
அறியாமல் இருப்பதற்கான நிய தியங்கள் காலப்போக்கில் மறை பகுதியில் நாம் இன்று வாழ்ந்
உக்கிர வாழ்நிலை தொடரும் இ பெரிதும் மெளனமாக இருப்பது அமையாது.
எழுத்தாளர்கள் கலைஞர்களாகிய வரலாற்றுப் பணியை முன்னே( நமது மனித சமூகத்திற்கு நா இந்தமண்ணில் முஸ்லீம்களும், சமாதானம் செளஜன்யத்துடன் தோற்றுவிக்க வேண்டும்.
நாளைய பரவசப் பொழுதுக்கு நாம் ஒருமித்து முன்வரல் வே

01
frsful 6áv . . .
ரினிடையே, இன்று தேசிய இனப் நாட்டையும் பாரிய பின்னடைவுக்கு
தீர்வுகள் செயல் ரீதியாக முன் மென வெறுமனே பிதற்றிக்கொண் T 6δI உன்னத நிலையை நம்மால்
s
ர்களினதும், எழுத்தாளர்களினதும் ாபவன் ஒரு சமூகத்தின் கண்ணும் ான்பதை ஒவ்வொரு கலைஞனும் னேயானால்; அவனது பங்களிப் அவசியமானது என்பதை அவன் ாயங்கள் இல்லை. தீர்வுக்கான சாத் ந்துவிடும் என்ற சூழ்நிலையின் பிற் து கொண்டிருக்கிறோம்.
Nந்த மண்ணில், தொடர்ந்தும் நாம் இந்த பிரளயத்திற்கான முடிவாக
நாம், நம்மீது கவிந்துள்ள பாரிய
}த்துச் செல்லல் வேண்டும், இதுவே
ம் செய்யும் தார்மீக பங்களிப்பாகும்.
தமிழர்களும், சிங்களவர்களும் வாழும் சூழ் நிலையை உடனடியாக
நம்மால் இயன்ற பணியை செய்ய |ண்டும்.
ஆசிரியர்.

Page 4
O
எழுவான் கதிரின் ஒரு நாள் பொழுது!
அன்புடீன்
திசை தெரியாத பறவைகளாய் திசை மாறி -م ஓடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவனாகி நானும் ஒடிக்கொண்டிருக்கிறேன். . .
என்ன நடந்தது? நடந்தது என்ன?” எவருக்கும் எதுவும் தெரியவில்லை!
உயிரின் விலை?
மரணம்! மரணத்தின் விலை? சொர்க்கம்! அல்லது நரகம்!
விலையில்லாத உயிருக்கு விலை பேசும் படலம் ஆரம்பித்து விட்டது
உடலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாத உயிரை உடலில் வைத்துக் கொண்டு எங்கே ஒடுவது. . .? எப்படி ஒடுவது. . .? எத்தனை தூரம் ஓடுவது. . . . .?
அறிந்த முகங்கள் கூட அந்நிய முகங்களாகி அவசரப் படுகின்றனவே . ஜீப் வண்டியின் இரைச்சல் சப்பாத்து கால்களின் சப்தம்

12
கதவடைப்பு கடையடைப்பு கண்ணிர்ப்புகை
புற்றிசல்களாய் புறப்பட்டு வந்த தனியார் வாகனங்கள் கூட புகை கக்காமலும் புழுதி கிளம்பாமலுமா புறப்பட்டுப் போயின. . .?
விலை இல்லாத உயிருக்கு விலை பேசும் படலம் ஆரம்பித்து விட்டது
உடலின் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாத உயிரை உடலில் வைத்துக் கொண்டு எங்கே ஒடுவது. . .? எப்படி ஒடுவது. . .? எத்தனை தூரம் ஓடுவது.
* மரணத்துக்குப் பயமில்லை உயிரைப் பற்றியும் கவலையில்லை. . நேற்று பேச்சுவாக்கில் சொன்ன இந்த வார்த்தைகள்தான் எவ்வளவு பொய்யானவை; போலியானவை! இன்று அவை இரண்டுக்காகவுமே திசை தெரியாத பறவைகளாய் திசை மாறி ஒடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவனாகி நானும் ஒடிக் கொண்டிருக்கிறேன். , . . .
99
1990 - 06 - 11

Page 5
O
நானும், தமிழக முன்னோடி எ
"தடம் கிடைக்கப் பெற்றேன். அதன் எளிமையான கோலம் மனதிற்கு பரவசமூட்டியது. கலை என்பதின் முழுமை யான அர்த்தம் அவற்றை அனுபவிக்கின்ற வாசகனுக்கு விடுதலையையும் பரவசத்தை யும் அளிப்பதுமட்டுமல்ல, அதனுTடாக ஏதோவொரு செய்தியையும் எத்திவைக் கின்ற தர்மமும் வேண்டும். S.
மாறாக இலக்கியத்தில் பிரகடனங்களும், ஒப்பந்தங்களும் தேவையில்லாத சமாச் சாரங்கள், ச த் தி ய மு ம் கலைத்துவமும் கலை இலக்கிய சுவைத்தலுக்கான சுரப்பி களாகும். அந்தவகையில் எழுத்துலகில் இன்று ஒரு பொறியாக திகழ்பவர் திரு வாளர் சுந்தரராமசாமியாகும். அண்மை யில் அவர் எழுதி வெளியிட்டுள்ள ந. பிச்ச மூர்த்தியின் 'கலை இலக்கிய மரபும் மனித நேயமும்’ எனும் நூல் படைப்புலகில் ஆய்வு ரீதியில் ஒருபுதிய கண் திறப்பாகும். கவிதை பற்றி தமிழில் இதுவரை யாரும் தொடாத ஆரோக்கியமான பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
இவற்றை ஏன் எழுத வந்தேன் என்றால். வானத்தைக் கீறி வைகறையில் பறித்தெடுப் போம் மோனக் கூரைக்குள் முழங்கும் இடி விதைப்போம். சூரியனைக் கண்களால் சுட்டெரிப்போம். நமது சிறகசைப்பில் ஞால நரம்பதிரும்.
என்றெல்லாம் பெரும் இடி முழங்களுடன் சிறகடித்த வானம்பாடிகள்பின்னாட்களில் ஆளுக்கொரு திசையில் திக்குத்தெரியாமல் - தங்கள் முகங்களைத்

3
ழுத்தாளர் லா. ச. ராவும்
ஒட்டமாவடி எஸ். எல் எம். ஹனிபா
தாங்களே தொலைத்துக் கொண்டது மட் மல்லாது இலக்கிய கூட்டங்களில் கூள் முட்டை வீசும் புதிய பிரகடனங்களையும் தமிழ் இலக்கியப்பரப்பில் இறக்கி வைத் தார்கள்,
அத்தகைய வானம்பாடிகளின் வழிநமக்குப் படிப்பினையாக அ  ைம ய வேண் டு மே யொழிய பாதையாக இரு ந் து விட க் கூடாது.
மற்றப்படி "தடம் எல்லாவகையிலும் ஒரு புதிய தோற்றத்தின் தரிசன அவசியத்தைக் கோடிகாட்டுகிறது. ஆனால் அந்த எண்ணம் ‘இன்றைய வானம்பாடிகள்’ என்று முன் டக்க அட்டையில் பொறிக்கப்பட்டுள்ள பிரகடனத்தைப் படித்தும் சிதறுன்று போய் விட்டது. நமக்கு இர வ ல் தேவையில்லை ந ம து "ஒரிஜினை எந்த நிலையிலும் சோ ர ம் போக விடக் கூடாது. அடுத்து, ‘பெளசரின்” கதையைப்படித்ததும் அண்மையில் தினமணிக்கதிரில் லா, ச. ரா. எழுதி வெளிவந்துள்ள ‘சங்கு புஸ்பம் கதையின் நிகழ்வு பொறியில் சிக்குண்டது" சென்ற ஜனவரியில் - சென்னையில் நான் லா. ச. ராவைக் சந்தித்த போது - எமது பேச்சு எங்கெல்லாமோ சுற்றிப்பார்த்து முடிவில் மரணம் பற்றிய ஸ்தாயியில் சங்க மித்தது.
மரணத்தை எதிர் கொண்டழைக்கத் தரு ணம் பார்த்து காத்திருக்கும் அந்தக் கலை ஞன் கூறிய வார்த்தைகள் முழுவதையும்

Page 6
:04
இங்கு எழுத்தில் கொண்டுவர இயலவில்லை எங்கள் பேச்சின் முடிவில் அவர் இப்படிச் சொன்னார். 'உங்களை வைத்து ஒரு கதை எழுதப் போகிறேன்’ என்றார். சொல்லி யதைப்போல் மேலே நான் கூறிய கதையை எழுதி வெளியிட்டிருந்தார். ஒரு கதையில் அவர் மூன்று கதைகளை இணைத்திருந் தார். அந்தக்கதை “பெளஸரின்* கதையின் இன்னொரு அங்கமாக அமைந்துள்ளது விசித்திரமானதோர் உணர்வின் ஒன்று கூடலோ?
கதையின் ஒரு பகுதி இதுதான் படித்துப்
பாருங்கள்.
ஒரு பூரீலங்கன் என்னைப் பார்க்க வந்திருந் தார். பேச்சு அவர் நாட்டு நிலமை பற்றித் திரும்பாமல் முடியவில்லை ‘நான் இந்தியாவுக்கு வந்து இரண்டுமாதங் கள் ஆகின்றன. மகனைப்பள்ளியில் சேர்க்க வந்தேன்.
'என்ன படிக்கின்றான்' 'பத்தாவது சேரப் போகிறான்' *பத்தாவதுக்காக வந்தீர்கள்? ஏதாவது காலேஜுக்குப்ரயத்னம் பண்ணுகிறீர்கள் என்று நினைத்தேன்."" **காலேஜா பள்ளிகளெல்லாம் எப்பவோ மூடியாச்சு பையன்களுக்குப் படிப்புக்கிடை யாது. எல்லோரும் போருக்குப் போகிறார் கள். *
பேச்சை மாற்றும் மு  ைற யி ல் 'உங்கள் நாட்டு இலக்கியம் எப்படியிருக்கிறது?’’ **உரைநடையைக் காட்டிலும் கவிதை நன் றாயிருக்கிறது. அங்கே புதுக்கவிதை மிகச் செழிப்படைந்து இருக்கிறது’. 'அப்படியா?’ (கவிதையில் நான் சூனியம்)

"இதோ பாருங்கள் ஒரு புதுக் கவிதை, துப்பாக்கியை தூக்கி விட்ட ஒரு குழந்தை வாயில் கவிஞன் தன்வார்த்தைகளை வைக் கிறான்.
‘என்விரோதிகளை என் நண்பர்கள் எனக்குக் காட்டுவார்கள் அப்போது நான் சுடுவேன்’’.
இதில் பாருங்கஅந்தப் பிள்ளைக்கு தன் விரோதிகள் யார் என்று கூடத்தெரியாது.
ஆனால் துப்பாக்கி தூக்கிவிட்டது. இதை
விடப் பரிதாபம் என்ன வேண்டும் எங்கள்
நிலமை இப்படித்தானிருக்கிறது. நண்பர்
கூட யாரென்றறியோம். இந்தக் கவிதை
யில் அதுவும் சூசகமாக உணர்த்தப்பட்டி
ருக்கிறது. அல்லது நாம் அறிய வேண்டும்”,
அவர் கொடுத்த விளக்கம் எனக்குத் 'திக்"
கென்று ஆகிவிட்டது.
தொடர்ந்தார். ‘நண்பர் யார்? விரோதியார்? அறியாமலே தினம் மரணத்துடன் புழங்கிக் கொண்டிருக் கிறோம். மரணம் அண்டை வீட்டில் தங் கியிருக்கின்றான். எந்தப் பக்கத்து அண்டை வீடு? முன் வீடா? பின்வீடா? பக்கத்திலா? Gascoid, Gas IrguSart? “Death is my Neigh bour' அவ்வப்போது கதவைத் தட்டுகி றான். உடைக்கிறான் அதனால் திறந்து விட முடியுமா? ஆயினும் அண்டை வீட்டு உறவாச்சே!
சிரித்தார் - ஆனால் அந்தச் சிரிப்பில் கசப்பு இல்லை. எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
“இத பாருங்க மனைவி சமையல் செய்து கொண்டிருப்பாள். திடீரென்று அபாயச் சங்கு ஊளையிடும். அடுப்பை தணிக்கக்கூட

Page 7
O (
நேரமிருக்காது. ஒடி ஒளிந்து கொள்வோம் All Clear ஒலித்து வெளிவந்து பார்த்தால் வானவியில் பண்டம் தீர்ந்து போயிருக்கும் அடுப்பு எரிஞ்சுட்டிருக்கும் சில சமயங்களில் குண்டு விழாமலே அடுப்பிலிருந்து தீ இசை சேடாய்ப்பற்றிக் கொள்ளவும் வழியுண்டு இதுதான் மரணத்தின் அண்டை வீட்டு உறவு.
மரணத்திற்குத் தனிப்பயம். அதன் மேல் சீற்றம் எல்லாம் எங்களுக்கு விட்டுப்போச்சு தினம் அத்துடன் வளையவருகிறோம். அது தான் தெரியும் . இது உறவுதானே! வீட் டுள்ளேயே தகப்பன் மகனுடன் பேசாமல் மகன் தாயோடு பேசாமல், சகோதரர்கள் பேசிக் கொள்ளாமல் குடும்பங்கள் இல் லையா? காரியங்கள் நடக்கவில்லையா?. egy 5) GuTGörp p-pay. "Death my Brother whowill not Speak to me but is wai ting to embrace me.
நான் ஒரு வீடு கட்டினேன். நாலுலட்ச
ரூபாயில் வட்டிக்கு வாங்கிக் கட்டினேன். பால் காய்ச்சிக் குடித்தாயிற்று. நாளைக்கு குடிபுக வேண்டும். மறுநாள் மூட்டை முடிச் சுகளுடன் போய்ச்சேர்ந்தால் வீட்டைக் கானோம்.
ஒரு சுவர் கூட அ  ைட யா ள த் துக் கு இல்லை. தரைமட்டம்.
‘எப்படியிருந்திருக்கும் உங்களுக்கு?’ 'என்னால் நினைத்துப் பார்க்க முடியல்லே அசட்டுக் கேள்வி, மன்னித்து விடுங்கள்” "அதைத்தான் சொல்ல வருகிறேன். நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. புது வீட்டுக்கு அண்டைக்காரன் Bomb விழுந்ததில் இறந்து போனான். மோசம் போயிட்டான் நான்

5 O
உயிருடன் இருக்கிறேன் அல்லவா! அது நன்றிக்குரிய விசயம் அல்லவா! அடுத்து அதே மூச்சில் ஆவேசத்துடன் அப்பவும் நாங்கள் லா. ச. ராவைப்படிப்போம் . அதிர்ந்து போனேன். என்னை அறியாமல் s *ன் கைகள் கூப்பிக் கொண்டன. எனக்குக்
குரல் தழுதழுத்தது.
‘என்னையும் உங்களையும் சேர்த் துச் சொல்லாதீர்சள் நீங்கள் செயல் வீரர்கள் நான் என் மூலையில் உட்கார்ந்து கொண்டு தட்டான் சுத்தியால் எழுத்தைத் தட்டிக் கொண்டு என்னத்தைச் செய்து விட்டேன்? 'நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. எங்கள் நாட்டில் நிறைய மக்கள் எழுதப்படிக் கத் தெரிந்தவர்கள் தல்வியை மேலும் மேலும் படித்துக் கொண்டிருப்பதுதான் எ ங் கள் முதலீடு. எங்களுக்கு மனிதர்கள் வேண்டும் உறவு வேண்டும் மரணத்தின் அருகாமையே எங்கள் உறவை இன்னும் இறுகப் பிணைத்து விட்டது. எழுத்தைக் காட்டிலும் ம னி த உறவுக்கு பிணைப்பு எது?
கால், இடம், கடல் தாண்டியும் எழுத்தால் தானே நாம் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்ள முடிகிறது! இதோ இந்தப்புத்தகம் உங்கள் நாவல் 'கழுகு' புத்தகத்தை எடுத்து ஆட்டினார். விலை 20 - 50 போட்டிருக் கிறது. எங்கள் நாட்டில் இது போல் நாலு பங்கு விலை. அப்படியும் கிடைத்தால் வாங்கிப்படிப்பவர்கள் இருக்கத்தான் இருக்
கிறார்கள்.
இது "நான் இன் ஆவேசம் இல்லையா? நம்பிக்கையின் தரிசனம்,

Page 8
Oé
நம்பிக்கையிலிருந்து விளைவது தைரியம்.
GaïDuolaïvGau 605flu 5605 (Cour Age is).
"Grace Under Pressure' 6T6örspitair. வீ டு எழும்பினதும் சாரத்தைத் த ட் டி விடுவது போல நம்பிக்கை ܫ - ܚ தைரியம் விரக்தி. துல்லியமான நான்
கையைத் துறந்து
அன்பானவளுக்கு ஒர் அஞ்சல் . . .
மாமி மகனே! மருக்கொழுந்து ராசாவே! கொத்தன் பூவாய், இங்கோர் . . . மச்சி துடித்திருக்க மச்சானே! ஒங்க நெஞ்சக் கல்புக்குள் என்னெனவு மண்ணில் அளவேனும் இல்லைபோல் தெரிகிறது.
པའི་་་་་་་
போன வருசம் கிணத்தடியில் நாம மண் கூட்டி வச்ச மல்லிகையும் பூத்திருக்கு ஆகையினால், மன்னவரே ! மாராப்புக் கொண்டையில மல்லிகைப்பூச் சூடுதற்கு கட்டாயம் நீங்கள் வாசலுக்கு வந்திடணும், என்று நீ தொடுத்த , , , அன்பான அஞ்சலுக்கு . . . !
சொல்லால் புரியாத பணியொன்றைச்
i

இலங்கை நண்பர் இதைத்தான் சித்திரிக் கிறார். அல்லது அதுவாவே விளங்குகிறாரா? (24.3-91 தினமண்க்கதிர்) இதுவே கதை. இரண் டு கதைகளையும் இணைத்து படியுங்கள். அபூர்வமான ஓர் உணர்வு பொங்கி எழும்.
கருங்கொடியூர் கவிராயர்
செய்வதற்கு புறப்பட்டுப் போனதினால் வரமாட்டேன் எனும் பதிலை வரைகின்றேன்.
போன வருசம் பூத்துக் குலுங்கையிலே சோத்துக் கையோடு சனங்கள் ஓடியதும் பட்டாசுச் சத்தம்போல் துவக்கு வெடில் கிளம்பியதும் வயல் வரம்பு காடு எல்லாம் மெசின் பெட்டி கொண்டு சென்று மையத்துத் தேடினதும், ாந்தன் நினைவினிலே இன்னுந்தான் இருக்கிறது.
ாங்கள் இனத்தவரின் சூடு பொரை
ாத்தனையோ ! பறண்கள் கட்டு எத்தனையோ தீயிட்டுக் கொழுத்தியதும்
W»

Page 9
புட்டம்பை நகரத்து பொண்டுகளும் பிள்ளைகளும் மண்ணையிழந்து மண்டியிட்டு அகதிகளாய் முறாவடைக்குள்ள கொண்டு வந்து நிறுத்தியதும் எந்தன் கல்பினிலே கங்குல் பசலாக கடும் சாபம் இடுகிறது. ஆ ை யினால் மல்லிகையே! மாமி பெத்த நங்கணமே! மூணாம் பொறை அழகே! வரமாட்டேன் எனவுரைத்தல் மனமாறியில்லையடி.
དཊ་
முந்திப் போலுந்தன் வாசலில் நான்வந்து பின் னிலவு நேரம் பாயில் அமர்ந்திருந்து உந்தன் தாவணியில் மின்னல் போல் பாய்து பின்னல் மயிர் கோதி கன்னத்தில் முத்தமிட்டு சாமக் கோழியது கூவுகிற நேரம்வரை மடியில் தலை வைத்து மயக்கத்தில் நாமிருக்க மறுமொழிக்கு நீ முனக மச்சி இப்போது உண்மையில நேரமில்ல.
女
நேத்திரவு பூத்த நெருஞ்சிப் பூப் பல்லழகி

7 O
கன்னடத்துப் பைங்கிளிபோல் கதை பேசும் என்னவளே! கையோடு கைபற்றி . . . பெளர்ணமியில் கடற்கரையில் உலாவி வர ஆசை எனக்கிருந்தும்; என்ன செய்வேன் நம் சமூகப்பாதை இருளில் கிடக்கிறது குன்றும் படுகுளியும் வழி நெடுகும் இருக்கிறது நம்மவரின் எதிர் பார்ப்பு எத்தனையோ நான் செய்ய உள்ளதினால் வரமாட்டேன் எனும்பதிலை மறுபடியும் எழுதுகிறேன்.
བའི་
என்பாதம் போவதிப்போ பூப்போட்ட பாதையல்ல, கல்லாலும் முள்ளாலும் கரடு முரடானதுதான்; இத்தனையும் தெரிந்த பின்பும் என்னுடன் கை பற்றிவர முடியுமெனில் வந்து விடு இல்லையெனில் என்னெனவ
இன்றோடு விட்டு விடு,
女
எங்கோ ஒரு மூலையிலே ஏங்கும் என் காதலியே! மச்சானைக் கைப்பிடித்து மகிழப்பூ வாசனையில் மெத்த சுகமடைந்து பொறந்த போற்றுக்கு பிள்ளை குட்டி பெற்று

Page 10
கூடி வாழ்ந்திடலாம் கட்டாயம் நீங்கள் வந்திடனும் வாசலுக்கு என்று நீ தொடுத்த அன்பான அஞ்சலுக்கு வரமாட்டேன் எனும்பதிலை மறுபடியும் எழுதுகிறேன்.
সুষ্ঠা
பகலிரவாய் நாங்கள் கூடிக்கதைப்பதையும் போஸ்டர்கள், பிரசுரங்கள் ஒட்டி வருவதையும் பத்திரிகை என்று கதை, கவிதை எழுதுவதை பகடி பண்ணி புலம்பி எழுதியுள்ளாய் , , , !
戏
உந்தன் மடியினிலே தலை வைத்துப் படுப்பதுவும் நகை நட்டு வாங்கி அலங்கரித்துப் பார்ப்பதுவும் எந்தன் பெரு வேலை என்றோ நீ கருதுகிறாய்! உன்னை அணைத்து உள்ளூர்க் கதை பேசி மெல்லச் சிரித்து மேனியெல்லாம் இதழ் பதித்து கிள்ளி விளையாட ஆசை எனக்குமுண்டு நாளை நம் சமூகம் புலர் பொழுதைக் காண வைக்கப் புறப்பட்டுப் போனதினால் வரமாட்டேன் எனும் பதிலை வரைகிறேன்!
i-.
O OE

O
கண்ணே! என் கண்மணியே நான் செல்லும் பாதையில் இடர்கள் நிறைந்திருக்கு, ஆகையினால் சேதி வரும் செத்தனென்று இல்லையெனில் . . . காலம் வரும் காத்திருப்பாய் நேரம் வரும் சேர்ந்திடலாம். நாளை ஒரு பொழுதில் நம் சமூக விடுதலையில் நீயும் என் கரம்பற்றி நாணமுடன் தோள்பற்றி மேனி சிலிர்ப்படைந்து மெத்த சுகம் பெறுவாய் பூத்திருந்த விழிகள் ராத்திரியை எண்ணி ராகங்கள் பாடும்; காலம் வரும் கண்ணே! பொறுத்திருப்பாய் . . சேதி வரும் உன்னைத் தேடி வரும் ஒலை,
இகழ் - 02 27 - பங்குனி 1992
சந்தா விபரம்
1 ஆண்டுச் சந்தா 6 இதழ் - 90.00 முத்திரை - 10, 00
அரையாண்டுச் சந்தா 3 இதழ் - 45.00 முத்திரை - 500
50.00

Page 11
யுகங்கள் கணக்கல்ல
கதவு சிறிது திறந்திருக்கிறது. அதன் வழியே மீரா கட்டிலில் குப்புறப் படுத்திருப்பது நன் றாகத் தெரிகிறது. அவளை அந்த நிலை யில்தான் பார்ப்போம் என்று நான் எதிர் பார்க் 1ாமல் இல்லை. ஆனாலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வரத்தான் செய்தது. கீழுதட்டைப் பற்களின் இடையே கடித்துக் கொண்டு ‘மீரா ...' என்று கூப்பிட்டேன். எவ்வளவோ முயன்றும் அந்தக் குரலில் இருந்த தேவையில்லாத பதட்டத்தை மறை க்க முடியவில்லை.
பரபரவென்று வெள்ளை பேப்பர்களையும் பேனாவையும் தலையணைக்கடியில் திணித் துவிட்டு “ஏனம்மா .' என்று சேட்டபடி அவள் எழுந்து வந்தாள். அவள் குரலிலும் அதே பதட்டம் தொனித்ததை நான் கவ னிக்காமல் இல்லை.
தம்பி அப்படியே சிமெண்டில் சாய்ந்து நித் திரையாய்ப் போயிருக்கிறான் சுவாமி அறைக்கு விளக்கேற்றச் சொல்லி எத்தனை நேரமாய்ப்போயிற்று? ஒன்றையும் கவனிக் காமல் அங்கே என்ன பண்ணிக்.ொண்டி ருக்கிறாய்?’ என்று கேட்டேன், ஏதோ கேட்டேனே ஒழிய, கேட்டுவிட்ட பின் தான் மீரா உண்பையை என் முகத்துக்கு நேரேயே கூறிவிடுவாளோ என்ற பயமும், அப்படிக் கூறிவிடக் கூடாதே என்ற தவிப் பும் ஏற்பட்டன.
'மத்ஸில் ஒரு பிரா ப் ள ம் அம் மா, நாளைக்குச் செய்து வரும்படி ஒரு ஸ்ரூ

கவிதா
டன்ற் தந்தாள் - அதுதான்.” என்று இழுத்தபடி மீரா நிற்காமல் நகர்ந்தாள். நான் அதிலேயே விறைத்து நிற்கையில் மீரா தோளில் துவஞம் குழந்தையைத் தூக்கிய படி படுக்கையறைக்குப் போவது தெரிகி றது’ நான் விரும்பினால் ஒரு நொடியில் அவள் அறைக்குப் போய் அவள் செய்து கொண்டிருந்த 'மத்ஸ்" ப்ராப்ளத்தின் சிக் கலை விடுவித்துவிட முடியும் ஆனால் அதன் பின்..? இவ்வளவு நாளும் என் அந்தரங் சித்துக்குள்ளேயே புதைத்துவிட விரும்பிய உண்மையை, எனக்குத் தெரியும் என்று அவளுக்கு முன்னால் நிரூபித்துக் கொண்டு அதன் மூலம் உவளை இந்தச் சிக் க லில் இருந்து மீட்டுக் கொள்ளும் ஒரேவழியை அடைத்துவிட நேருமா? இவ்வளவு இங்கித மில்லாதவளாக நடந்து கொண்டு விட்ட பிறகு எந்த முறையில் என்னால் அவளைத் திருத்திவிட முடியப்போகிறது?
பின்னேரம் கிணற்றடிக்குச் சென்ற போது மீரா இணற்றுக்கட்டின்மீது படுத்திருப்பது தெரிந்தது. அவள் இதழ்களில் இலேசான புன்னகை, ஒரு கையைத் தலைக்கடியில் வைத்து, மறு கையைக் கிணற்றினுள் விட்ட படி படுத்திருந்த அந்த நிலையிலும், சுற் றிலும் இருண்டு கொண்டு வருகின்ற அந் தச் சூழலிலும் அவன் நினைவுகள் இல்லை! கிணற்றினுள் நெளியும் வட்ட வட்டமான அலைகளில் யார் முகத்தைக் கண்டு அவள் அப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறாளோ? யார் முகமோ? எனக்குத் தெரியாதா? för T ! உன் சாதி என்ன? குலமென்ன? அவன்.?

Page 12
10
உன் மா மா எப்படியடி இதற்குச் சம் மதிப்பார்? அவர்கள் வேண்டாமே நான் தான் எப்படி சம்மதிப்பேன்? சம்மதித்து விட்டு மற்ற பெண்ணை எங்கே கொண்டு போய்த் தள்ளுவேன்? வேண்டாம் மீரா, மறந்துவிடு! நீ.நீயா க வே உண ர் ந் து அவனை மறந்துவிடு. நான் உன்னைப் பழைய மீராவாகவே நினைக்கிறமாதிரி நடித் தக் கொண்டிக்கிறேன். நீயும் உன் ம ன தி ல் இடையே முளைத்த அந்த சலனத் தை இடையிலேயே மறந்துவிட்டு பழைய மீரா வாக மாறிவிடு!
மனதுக்குள்ளாகவே பேசிக்கொண்டு மெது வாகப் பின் வங்கினேன். இருட்டி வெகு நேர மான பின்தான் மீரா வீட்டுக்குள் வந்தாள்.
ஒரு நாள் - வெள்ளிக்கிழமை - நான் கோயி லுக்குப் போய்விட்டு வந்தேன். மீராவைக் கண்ணில் காணவில்லை. சின்னப் பெண் னிடம் 'அக்கா எங்கே?...? என்று கேட் டேன். 'மாட்டுக்கு வைக்கோல் போடப் போனாள்' என்று கூறினாள். வீட்டுக்குள் எல்லாப் பொருட்களும் ாேட்டது போட் டபடியே கிடந்தன. எனக்கு ஆத்திரமாய் வந்தது நான் வெளியேறிய நேரம் தொடக் கம் மீரா உள்ளே இல்லை என்பத தான் அதற்கு அர்த்தம். வெளியே இவ்வளவு நேரம் என்ன லயிப்பு வேண்டிக்கிடக்கிறது?
எங்காவது தனியாக உட்கார்ந்து சொண்
டிருப்பாள் என்று தெரியாத எனக்கு? சாதல் கண்மூடிக் காதல்! டாக்டரின் மனைவியாகி விடலாம் என்ற நினைவில் ச திவிட்டுச் சாதி போய்த் திருமணம் செய்து கொண்டு அம்மா, தம்பி, தங்கை, சுற்றம் எல்லாம் மறந்து தனக் காச மட்டும் மகிழ்ச்சியை எதிர் பாத்துக்கொண்டிருக்கிற கேவலமானவளாக நான் பெற்ற மகளைப் பற்றி நினைப்பது
l.

மனதுக்கே என்னவோ போல்த்தான் இருந் தது. தற்செயலாக ஜன்னலடிக்குச் சென்ற போது மாட்டுக்கொட்டகை தெளிவாகத் தெரிந்தது. கட்  ைட த் தென்னங்கன்றின் ஒலையைப் பிடித்தபடி வானத்து நிலவையே பார்த்தபடி மீரா நின்று கொண்டிருந்ததும் தெரிந்தது. என் மனதில் எழுந்த கணநேர குருட்டு வெறியின் ஆக்ரோசத்தில் அவளை அப்படியே இழுத்து வந்து அறையலாமா? ான்று தோன்றியது. உள்ளே வருகிற நேரம் பரட்டும் என்று காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
ன்ன மகளும் மகனும் எ ட் டு மணிக்கு பந்தார்கள். "அக்கா எங்கே?' எ ன் று ன்னப் பெண்ணிடம் மறுபடியும் கேட் டன். 'அறையில் இருக்கிறா' என்றாள் அவள். வழக்கத்தில் இவர்களுடனேயே ாப்பிட வந்து விடும் அவள், வராதது என் }னதுக்கு நெருடலாகவே இருந்தது. ஒரு மிடம் அவள் தென்னங்கீற்றைப் பிடித் படி ஏக்கத்துடன் நின்ற காட்சி நினை |க்கு வந்தது. மனம் வக்கரித்துக்கொண் து. ஏன் இவளுக்கு இந்த வேண்டாத ாதலும் ஏக்சமும்? இவளுக்குக் காதலைப் ற்றி என்ன தெரியும்? வெறும் மனமயக் த்தைக் காதல் என்று எண்ணிக்கொண்டு ாழாப் போகத்தான்" என்று மனதோ டயே எண்ணிக்கொண்டு தேரே அவள் புறைக்குச் சென்றேன்.
y
னைத்தபடி அவள் குப்புறப் படுத்து எழு க்கொண்டுதான் இருந்தாள். பக்கம் பக்க ாக எழுதிக் குவிப்பதற்கும் தனித்தனி ாகப் பிரிந்துபோய் யோசித்துக் கொண்டு ற்பதற்கும் அவளுள்தான் எத்தனை அந் ரங் மோ? மீரா " என்று குரல் கொடுத்தேன். அவள் தறித் துடித்து எழவில்லை. என்னை ஒரு

Page 13
O
முறை ஏறிட்டுப் பார்த்து விட்டு மறுபடி யும் எழுதத் தொடங்கினாள். இரண்டு மூன்று வரிகள் எழுதியதும் கடிதம் முடிந் திருக்க வேண்டும். "என்றும் உங்கள் மீரா” என்று கையெழுத்திட்டதை நான் பார்த் துக்கொண்டுதான் நின்றேன். அவள் தாள் களை ஒன்றாக்கி நிதானமாக மடித்தாள். பொங்கிவந்த ஆத்திரத்துக்கு அணையிட்ட வாறு நின்றேன் நான். மடித்த கடிதத்தை ஒரு கவரில் செருகினாள். 'முடிவில் எல் லாம் முடி ஞ் சு போச்சும்மா' என்றால் பெருமூச்சுடன்.
எனக்கு ஆத்திரம் மாறி அந்த இடத்தைக் குழப்பம் எடுத்துக்கொண்டது. வார்த்தை எழும்பாமல் ஆயிரம் கேள்விகளைக் சண் களிலேயே வைத்து அவளைப் பார்த்தேன்.
'உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று ஏனக்குத் தெரியும் அம்மா. இனி எதுவும் இல்லை. எ ல் லா ம் முடிஞ்சு போச்சு", மீராவே பேசினாள்.
"தெய்வமே என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தயே” என்று கடவு ஞ க் கு நனறி செலுத்தலானேன் நான் . மீரா தொடர்ந்து பேசினாள். •
'நீங்களும் ஏன் அவரும்கூட நினைப்பது போல சாதி என்ற அர்த்தமற்ற சம்பிரதா யத்துக்காக நான் இந்த முடிவு க்கு வர வில்லை. காதல் என்பது ஒருவனுடையதும் ஒருத்தியுடையதுமான இதயங்கள் சம்பத் தப்பட்ட விஷயந்தான். ஆனால், அந்த இரண்டு இதயங்களின் மலர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கடமையைப் புறக் 4 னிக் கும் போது கா த ல் காமமாகிவிடுகிறது. அம்மா’ அம்மா நான் அவரைத் திருமணம்

ם 1ן
செய்வது எவருக்குமே விரும்பமில்லை; ஐயாவும் இல்லாமல் இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கியிருக்கிறீர் கள். இவ்ளளவு காலமும் திரும்பிப் பார்க் காமல் இருக்கிற உறவுக்காரர்களை நம்பி உங்களையும் தம்பி, தங்கைகளையும் நிர்க் கதியாக்கிவிட்டு அவருக்குப் பின்னால் நான் போயிடமாட்டன்.""
நான் அவசரமாக ஏதோ கூற வடயெடுத் ததும் அவள் ஒரு உயிரற்ற சிரிப்புச் சிரித் தாள். −
"தெரியும் அம்மா; எந்த விதத்திலும் என் வாழ்வை நீங்கள் பலி கேட்கமாட்டீர் , ஸ் என்று எனக்குத் தெரியும் பி ர ச் சி  ைன இங்கே மட்டுமல்ல்: எ ன் னைக் கடமை அழைப்பதுபோல அ வ  ைர யு ம் கடமை அழைக்கிறது. உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெண் எனபதைத் தவிர, ள்ன்ே கூட ஒரு சதத்தையும் சீதனமாகக் கொண்டு செல்ல என்னால் முடியாது. அவருக்கு நான்கு தங் கைகள் தங்கள் சொத்தை எல்லாம் அண் ணன் படிப்பதற்காக விட்டுக்கொடுத்து விட்டு வாழ்வுக்காக அண்ணனையே எதிர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். இப் போது அவர் காதலுக்காக அவரையும் தியாகம் செய்து விட முடியுமா அம்மா? முடிந் தாலும் அப்படிப்போவது சரியா அம்மா? அவருக்கு இது புரியவில்லை. இதில் அதைத்தான் புரியவைத்திருக்கிறேன் இனிக்குழப்பமில்லை."
இவ்வளவையும் ஒரே மூச்சில் கூறி விட்டு “வாருங்கள் சாப்பிட' என்றால் மீரா இதை அவள் எத்தனை துக்கத்தோடு கூறி னாளோ அத்தனைக்கு நான் அதை உண ர வி ல்  ைல! இது ஒரு இளமைக்கனவே

Page 14
O 12
என்றும் காலப்போக்கில் மறந்துவிடுவாள் என்றும் எண்ணியவளாக அவளுக்குச் சாப் பாடு போட அழைத்துச்சென்றேன்.
அதன் பிறகு ஒருநாள் என்மாமனார் எங்கள் வீட்டிற்கு வந்த போது மீராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை ஒருவன். இருக்கிறான் என்றும், பார்க்கலாமா என்று கேட்டார் நான் 'மீராவிடம் கேளுங்கள்’ என்று தூண்டினேன். என்ன சொல்லிவிடுவாளோ என்று உள்ளூர எனக்குப் ப யம் தா ன். மாமா சொல்லச் சொல்ல மீரா பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். எதிர்த்து எது வும் சொல்லவில்லை. அந்தத்தைரியத்தில் நாலுவார்த்தை மாமாவுக்கு அனுசரணை யாகப் பேசினேன். மாமா போய்விட்டார்
அன்று மீரா மீண்டும் குப்புறப் படுத் த க் கொண்டு விட்டாள். சா  ைட யாக விம்மிக் கொண்டிருக்க வேண்டும். நான் போய் “மீரா” என்று கூப்பிட்டதும் ஹோ என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
பழைய ஞாபகம் மறக்கவில்லை. என்று தெரிந்தது. என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அழுகையும் விம்மலுமாக வெடித்தாள்.
'அம்மா அவர் தாழ்ந்த சாதிக்காரர் என் பதால் என் கைபிடிக்கத்தான் மறுத்தீர்கள். ஆனா, அதே காரணத்துக்காக என் இத யத்தில் வாழுகிற தகுதிகூட அவருக்கு இல்லை என்று நினைக்காதீங்க அம்மா. அவரை மறந்துட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் செய்துகொள்வது இந்த ஜன் மத்தில் என்னால் முடியாது.' பெரிய விம் மல் ஒன்  ைற ச் சமாளித்துக் கொண்டு பேசினாள் .
t

கிரிதரனையே நினைத்துக்கொண்டிருந்த ராவை ராணாவுக்கு கட்டிவைத்தாங்களே ன்னத்தக் கண்டாங்க? அவளைச்சாகடிக் த்தான் முடிந்ததே தவிர அவன் னைவைப் பிடுங்கிவிட முடிந்ததா அம்மா? றிது நேரம் என் கைசளைப் பிடித்தபடி ம்மினாள். பின் சிறிது சிறிதாக விம்மல் ணிந்தது. என் கைகளை விடுவித்துவிட்டு அழுகைக்கலப்பற்ற கு ர லில் எங்கேயோ ார்த்துக்கொண்டு பேசினாள்.
நான் பச்சைக்குழந்தையில்லையம்மா Iட்டத்தட்ட என் வயதில்தான் திலகவதி ார் கலிப்பகையாரை இழந்திருக்கலாம். அவருக்கிருந்த மன உறுதியையும் நியமத் தையும் அந்த யுகத்துக்கே சாசனமெழுதி பாச்சாம்மா? வழிகாட்டிகள் என்று அவர் களையெல்லாம் உயர்த்தி வைத்து விட்டு கண் மறைவில் நின்று கொண் டு தவறு செய்யும் படி கேட்பது நியாயமாகுமா அம்மா?"
எனக்கு மீராவின் முகத்தைப்பார்க்கத் தைரியமில்லை இவள் எவ்வளவு தெளிவா கச் சிந்தித்திருக்கிறாள்? இத்தனை பெரிய மனப்பக்குவம் இத்தனை சிறிய மீராவிடம் வாய்த்திருக்கிறதை வியந்த அதே சமயம் வாழ்க்கையின் மிச்சமிருக்கிற பகு தி யி ன் மேடு பள்ளங்களிலெல்லாம் தன்னந்தனிய வளாக மீராவை எண்ணிய போது எனக்கே மிரட்சியாய் இருந்தது. தி ல க வ தி யார் வாழ்ந்த யுகமா இது? "உன் உள்ளத்தி பிருக்கிற உன்னதத்தைச் சமுதாயம் புரிந்து கொள்ளாதே மீரா. பழி சுமத்தி வீழ்த்தி விடுமே” என்று மட்டும் சொன்னேன்.
அவள் சிரித்தாள்.

Page 15
"என் மனதில் இருக்கிற உன்னதத்தைச் சமுதாயம் உதாசீனம் செய்யும் என்பதற் காக அது திரைபோட்டு முடிவைக்கிற பல வீனங்களுக்கு நான்தோற்றுவிடவேண்டுமா அம்மா? ஆயிரம் இதயங்களின் பலவீனங் களுக்கு வக்காலத்து வாங்குகிற விதத்தில் தான் இந்தக் காலத்துச் சமுதாயம் இருக் கிறதே ஒழிய, ஒரு சில இதயங்களின் பலத் துக்கு மதிப்புக் கொடுக்கிற வி த த் தி ல் இல்லையே! எல்லாச் சராசரி இதயங்களி னுடையவும் பலவீனங்களுக்குப் போடப் படுகின்ற திரை எனக்குத் தேயிைல்லையம் மா. என் மனதுக்கும் ஆத்மாவுக்கும் சரி என்று படுகின்ற இந்த வழியில் வாழ்ந்து கடைசிக்கட்டத்தில் ஆண்டவன் முகத்தைத்
கவிதா! ஈழத்து சிறுகதை உலகில் பரவலாக விமர்சிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பெண் எழுத் தாளர்களுள் இவர் முக்கியமானவர், கலக்கமு றாத, கொந்தளிப்பற்ற உணர்ச்சிவடிவம் தாங் கிய, மொழியின் கையாள்கையை இவரது
சுந்தர ராமசாமியின் குறிப்புகளிலிரு
எனக்கொரு பயம் - அதென்ன பயம், அத என்ற பயம் மேகங்களை கலைப்பவன் அவன்
மயங்கி நிற்கும் போது இது புன்முறுவல் அல்
காலத்தின் இறுதியில் மிக மோசமா ளால் பிழியப்பட்டு, கனவுகள் வெளியே வழி ளாக என்னால் இவர்களுடன் உறவாட முடி
"ஆண்டவன் பாவத்தை மன்னித்து விடுகி இல்லாவிட்டால் சுவர்க்கம் முழுவதும் காலி

3 O
605fupra argórarmów urfść cyp 4: u b என்றால் எங்களுக்கோ சமுதாயத்துக்கோ என் ஆத்மாவை விற்றுவிடுவதில் எந்தவித நியாயமுமே இல்லையம்மா!
நான் மீராவைப் பார்த்தேன். "ஆண்டவன் சந்நிதியில் யுகங்கள் கணக்கல்ல அம் மார் மனங்கள்தான் கணக்கு” என்று சொல்கிற திலவதியாராக அவளை உணர்ந் தேன். ஆசையுடன் வளர்த்த பெண் சந்நியாசினி போல் போகிறாளே என்ற துயரத்தையும் மீறி, இந்தத் தலைமுறையிலும் மென்மை யான பெண்மை தனக்கே உரிய பலத்தோடு வாழ்கிறது என்று உணர்ந்த திருப்தி அலை யாக எழுந்தது.
கதைகளில் நாம் காணலாம் நீண்ட இடை வெளிக்குப்பின் இலக்கிய வீதிக்கு எம்மால் கொண்டு வரப்படுகிறார். இவரது சிறுகதை தொகுதியொன்று விரைவில் வெளிவரவிருக் கிறது -ஆசிரியர்
ந்து . . . ன் மூலம் என்னை, இல்லாமலாக்கி விடுவானோ என் காதலியின் புன்முறுவலில் நான் மதி பல பொய் என்று அவன் - செல்லக் கூடுமென்
pTo...... ன கட்டத்தில் வந்து நிற்கிறேன். இயந்திரங்க ந்து போனதில் இறுகிப் போன சக்கை மனங்க urg
TAår,
பாகத்தான் இருக்கும்"
- ஜேர்மள் •

Page 16
ロ14
நானுமொரு கனவாய்ப் போவேன
நேற்று முடிந்து விட்டது. இன்று இப்
போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று முடியும் போது நாளை தொடரும் . முடி வற்ற ஜீவிதத்தின் மடியில் நான் உழன்று கொண்டிருக்கிறேன் . வாழ்வை எழுதிய பிரம்ம தேவன் அப்படியென்ன எனக்கு மட்டும் இந்த வாழ்க்கையை தந்தானா? இக்கேள்வி என்னுள் வியாபித்து எழும்; நெஞ்சு நோகாது ஆனால் வெடித்துவிடும் போல் இருக்கும்; சர்வமும் அடங்கிப்போக நான் மட்டும் தனியாக எத்தனை இரவு களில் அழுது கொண்டிருப்பது.?
போன வருஷமும் இதே பெளர்ணமி இரவில், அலை அடிக்கும் இந்த கடற் கரை மணலில் இதைப்பற்றியே சிந்தித் துக் கொண்டிருந்தேன்; இன்றும் இதைப் பற்றியே சிந்திக்கிறேன். போன வருஷத் திற்கு முந்திய வருஷமும் அதற்கு முன்பும் எங்கேயோ ஒரு இடத்தில் கால்மாட்டில் தலையைப் புதைத்துக் கொண்டு மணிக்க ணக்காக இருந்து சிந்தித்ததாக ஒரு ஞாப கம்; இல்லை உண்மை. இருந்தும் என் னையே நான் ஏமாற்றிக் கொள்பவனாக இருக்கிறேனே தவிர, இதற்கொரு முடி வைக் காணவில்லை. முடிவென்பது எது என்பதுதான் பிரச்சினை,
மரணம் முடிவாகுமா என நான் நினைக்கும் போது "மரணம் முடிவல்ல அது உண்மை வாழ்வின் ஆரம்பம்" என்ற தத்துவம் என்னை அந்த முடிவிற்கு வரா மல் தடுத்திருக்கிறது; அப்படியாயின் எது முடிவு? முடிவைத் தேடியே என் கால்களும் நானும் இருபத்தி மூன்று வருஷங்களாக
:
ܕܶ

st . . . . .
* யெம். பெளஸர்
யணித்திருக்கிறேன். இன்னும் நீ முடிவைக் ாணவில்லையா? என்று நீங்கள் கேட்க ாம் நான் தேடும் முடிவை கண்டிருந் ால் இன்று இப்படி இருப்பேனா? என ான் உங்களிடம் ஒரு எ தி ர் க் கேள்வி கட்க நேரிடும்.
மாறாக நான் முடிவைத்தேடி பய ணித்திருந்த இந்த இருபத்திமூன்று வரு 1ங்களில் எனக்குத்தேவைப்படாத அல்லது ான் ப்ரியப்படாத பல விடயங்களை சந் க்க நேர்ந்தது; அவைகள் என்னை பயங் ரமாக பயமுறுத்தின; நான் நினைத்ததை ல்லாமலாக்க அவை துணைபுரிந்த க'; ாழ்வின் உண்மையான அர்த்தம் இவை ளை கடந்து போவதில்தான் இருக்கிறது ன நான் ஒரு நாளும் எண்ணியதில்லை ல்லாமே இங்கு மாறிப்போய் விட்டன; ாற்று, கடல், இயற்கை, பிரபஞ்சம் இந்த
னிதன் வரை மாறிப்போய் விட்டான்.
இவைகளெல்லாம் வெறும் போலிகள் ாயை என்று நான் சொல்ல வில்லை, தற்கெல்லாம் ஒரு உண்மை விம்பம் ருக்கிறது அது எப்படி இருக்கும் என ண்ணியே நான் சுவாசித்துக் கொண்டி க்கிறேன்; உண்மை விம்பம் என்றால், து இங்கு நேரடியாக இல்லை என்றால் னிதனிடம் இருக்கும் உண்மையான ம்பம் எது? வெளியில் புனனகைத்து" லங்கரித்து, தேனமுத வார்த்தைகள் பசி திரிகிறானே அது இல்லையா?
நேற்றுக் கூட நான் ஒரு மனிதனிடம் மாந்தேன், ஏமாற்றமென்றால் சாதாரண

Page 17
ஏமாற்றமல்ல யுகங்களின் முடிவிலும் மறக்க முடியாத ஒரு ஏ மாற் றம், நான் இறைவனிடமும் ஏமாந்திருக்கிறேன். நேற் று த் தா ன் மனிதனிடம் ஏமாந்ததாக இல்லை; இதற்கு முன்னேயும் ஏமாந்தி ருக்கிறேன். மனிதன் என்ன அப்படி மோச மானவனா? என்று நீங்கள் என்னிடம் கேட்க லாம்; என்னைப் பொறுத்தவரையில் அப்ப டித்தான் ஆண் என்றால் என்ன? பெண் என்றால் என்ன? எல்லோரும் ஒரே மாதி ரிதான், இந்த உலகிலிருக்கும் போலிகளை நான் வெறுப்பது போல் வெறும் எலும்பா லும், சதையாலுமான இந்த மனிதர்களை யும் வெறுக்கின்றேன். அவன் என்ன அப் படி நேசிக்கக்கூடிய ஜீவாத்மாவா? நானும் மனிதன்தான் ஆகவே நான் என்னையும் ஒரு கணமும் நேசித்ததில்லை, எ ன்  ைன நான் முற்றாக வெறுப்பதன் மூலம் எங் கேயோ எனது தேடல் அடைபட்டுக்கிடக்கி றது. இதன் பயனு11 வெறுப்பு முற்றிய தன் மையும் தான் என்னை எங்கேயோ ஒரு தனி மைக்கு ஒவ்வொரு நாளும் இழுத்துவரும்.
இப்போது நான் இங்கேயும் தனியா சுத்தானிருக்கிறேன். மெல்லிய இருள் சூழ் -ந்த மண்படுக்கை, வானத்திலோ பெளர் ணமியின் பிரதிபலிப்பு, கடல் அலைகள் நிசப்தமான உறக்கத்தில், இந்த ஏகாந்த மான சூழ்நிலையை நான் விரும்புகிறேன். நாள்முழுதும் இப் படி யே இருக்கலாம் போலத் தோ னு து. 'இரவே நீ புலரக் கூடாது! என மனம் சொன்னது, காலங் கள் என்ன எனக்கு மட்டுமா சொந்தம்? பகலையும் அதன் தன்மையை விரும்புகி றவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள் ; அப்படியென்றால் வாழ்வைப் போ லும் இந்த இரவு நிச்சயமற்றது. முடியுமானால் இன்றையே நீ முழுவதையும் அனுபவித்துக்

6
கொள் என்றது மனம் . நான் ஒரு கவி ஞன் ஆவேசமாக எதையும் என்னால் அனு பவிக்க முடியாது! இது நான், இன்றுபோய் பெளர்ணமி எப்போது வருமோ? ஆகவே இந்த ரம்மியான இரவின் மடியில் என்னை யே நான் இழந்திருக்கிறேன்.
ஒரு விதமான மயக்கம், உர த் த ப் பாடனும் போல் இருக்கிறது; "பாடல்’ அது மிகவும் சக்திவாய்ந்தது பாடனும் போல் தோன்றும் போதெல்லாம் அவ ளின் நினைவுவரும், அவள் பாடுவாள், என்தேகம் முழுதும் மெய் சிலிர்க்கும் கால மெல்லாம் அந்த மோனகையின் பாடலின் சோகத்தில் உறைந்துபோய் கிடக்கலாம் போல் இருக்கும். இமைகள் மெல்ல இறங்கி விடும்.
நீங்கள் அந்தப் பாடலை கேட்டிருக்கிறீர் களோ இல்லையோ நான் கேட்டிருக்கிறேன் உலகின் நிச்சயமற்ற தன்மை அவள் பாடும் போது, மட்டும் எனக்கு ஏற்பட்டதில்லை என்ன குரல் அது, என் மனசைப் பிழியும்
அவளது பா ட  ைல மற்றவர்கள் பாடும் போது எனது ஆத்மா விறைத்துப் போய் விடும் நான் சொல்வேன். W
'குத்து விளக்கில் சிகரட் பற்றவைக்காதீர் கள்' என்று, அந்தளவிற்கு நான் அவளது பாடலை நேசித்தேன். நான் ம ட் டு மே அவளது குரலை ரசிக்க வேண்டுமென்று கர்வப்பட்டேன்; அவள் பாடாத பொழு களில் என் இமைகள் உறங்க மறுத் த து அப்படி என்னதான் அவளது குரலினுள் இருக்கிறது என்பது எனக்கு இ ன் னு மே புரியவில்லை.

Page 18
16
இந்த நிலையில்தான் அவளிடம் நான் பேசினேன். காலம் காலமாய் பிரிந்திருந்த
வர்கள் சந்தித்துக்கொள்வது போல் எனக்
கி ரு ந் த து மறைப்பதற்கு எதுவும் இல் லாத நிலை யி ல் 'உங்கள் பாடல்தான் எனது ஊண், உயிர் என்றேன்; அவள் சிரித்தாள் அந்த சிரிப்பு என்னை வசீகரிக் கவில்லை, அவளது பாடல்கள் தான் அவ ளது சிரிப்பை விட எனக்கு அர்த்தமாக விருந்தது; அவள் என்னிடம் சில நிமி டங்கள் இசையைப்பற்றி பேசினாள்; அத னுடைய தெய்வீகத் தன்மையைப்பற்றி சொன்னாள், ‘இசையை ரசிக்காதவனிடம் எங்கோ ஒரு குறைபாடு இருக்கிறது.’ என் றும் சொனனாள். இசையின் உயிர் எது என்றால். நான் உணர்ச்சிவசப்பட்டு சொன்னேன் "நீங்கள் தான் என்று ஒரு கனம் ஸ்தம்பித்துப்போய் விட்டாள். இப் போத இருக்கும் எந்த சினிமா இசைய மைப்பாளர் க்ளைப்பற்றியும். பாடலாசிரிய ர்களைப்பற்றியும், நாங்க ள் பேசிக்கொள்ள
ଜ
நமது வாழ்க்கை எந்தளவிற்கு நவீனத் துவம் பெற்றிருக்கிறதோ, நமது சிந்தனை களும், சண்னோட்டங் 7ளும் எந்தளவு நவீ ன த் துவ ம் கொண்டிருக்கின்றனவோ, அந்தளவுக்குத்தான் நமது கலைகளும் நவீ னத்துவம் பெறமுடியும் - இதை இன்னொரு மாதிரியும் சொல்லலாம் ஒரு சமூகத்தின்
சிந்தனைகளும், கண்ணோட்டங்களும் நவீ
ன முற்றிருக்கிறது. என்பதை அந்த சமூ தாயத்தின் தற்கால கலா முயற்சிகளிருந் தும், இ லக் கி ய சாதனைகளிலும் காண லாம். கலைகளின் உருவத்தில் மட்டுமல் லாமல் அதன் உள் ளோட்டத்திலும் அது புலப்படும். (ஜெயகாந்தனின் நாவலிலிருந்து)
அ
d
ତ!
t

ல்லை. போய்வருகிறேன். என கைக ாக் குவித்துக்கொண்டே போய்விட்டாள்
நான் அதனை இ ன் று வரை மனசு சிறடிக்காத வகையில் இரகசித்துக்கொண் நான் இருக்கிறேன்; என்ன அபிநயம், பண்களுக்குரிய லட்சணம் அனைத்தும் வளிடம் இருக்கிறது. என நான் நினை பதில் தவறில்லை, காலமெல்லாம் அவ து கால் மாட்டிலே இருக்க வேண்டும் 1ால் மனசு அழுத்தியது. இதனை நான் ாதல்’ என்று சொல்ல வில்லை, இந்த ற வுக் கு என்ன பெயர்தான் என்பது னக்கு இன்னும் புரியவில்லை.
அவள் எப்போது பாடுவதை நிறுத்து ாளோ அப்போது நான் இந்த உலகிற்கு ரும்புவேன்.
இப்போது நான் இங்கில்லை. .
ரபு பெண் கவிஞர் 'பத்வா நுகான்' இன்
கவிதையிலிருந்து . . . சுக்கப்பட்ட உன் நம்பிக்கையிலிருந்து டுக்கப்பட்ட உன் வளர்ச்சியிலிருந்து ருடப்பட்ட உன் குழந்தையின் சிரிப்பி லிருந்து ருடப்பட்ட உன் முறுவலிலிருந்து w தைவுகளிலிருந்து த்திரவதைகளிலிருந்து }ரத்தம் உறைந்த சுவர்சளிலிருந்து ாழ்வினதும், மரணத்தினதும், நடுக்கங்க ளிலிருந்து திய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

Page 19
17
இரு கலைஞர்களுக்கு அஞ்சலி
* கவிஞர் யுவன்
கவிஞர் யுவன் சில நினைவுகள்
அ. ஸ. அப்துஸ் ஸமது (B.A)
சமீப காலம் வரை நம்மத்தியில் "அருட்கவி’ யென விளங்கி அற்புதமான கவிதைகள் நாடகங்கள் செய்து அனைவர் உள்ளங்களையும் ஈர்ந்து நின்ற கவிஞர் யுவன், இன்று அமர கவிஞராகி விட்டார் அவரது நினைவுகள் என்றும் நம் நெஞ்சை விட்டகலாதன.
25. 08, 1935ல் பொத்துவிலில் கல்விசார் குடும்பமொன்றில் பிறந்த யுவன் 05. 04, 1991ல் இவ்வுலகை நீத்தார். இவ ரது இயற் பெயர் எம். ஏ. கபூர் எ ன் ட தாகும். இவர் மட்டக்களப்பு மத்திய கல் லூரியில் கற்கும் கால், கல்லூரியில் நடை பெற்ற 'யுவன்' இதழுக்கு ஆசிரியரா? விளங்கினார். அதன் பின் அதனையே தன் புனைப் பெயராகவும் ஆக்கிக் கொண்டார்
200க்கு மேற்பட்ட கவிதைகள் 50 நாடகங்கள் 100க்கு அதிகமான கட் டுரைகள், சில சிறுகதைகள் என்று எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுள்ள யுவன், உணர்ச் சிகரமான சமூகப்பார்வையில் எழுதினார்
− (இலங்கை வானொலி முஸ்லிம் பகுதியில்
கவிதை நாடகத்தை முதன்முதலில் எழுதி னார்.) "அருட்கவி’ என்ற அவரது கவிதா நாடகம் நேயர்களின் ஆதரவை பெரிதுப் பெற்றது. இவரது கவிதைப் பொழிவுகளுப் மிகுந்த ஆதரவை பெற்றன.
கவிதைத் துறையில் தன்னை முற றாக ஈடுபடுத்திக் கொண்ட யுவன் அதில் பெரிதும் இலயிற்று நிற்பார். நறுக்கு

ിഞ്ഞ
செலுத்துகிறோம்
*முகீதீன் பேக்
தெறிந்தாற் போன்ற கவிதைசார் வசனங்
களில் இவர் எழுதிய நாடகங்கள், சீதனக் கொடுமை, பெண்கள் எழுச்சி, சமுதாய சீர்திருத்தம், ப ற் றிக் கூறுவனவாகும். ா (நூாரன வஞ்ளும், அழாதே சிரி அருட்கவி * சீனத், தியாகத் திருமகன், வேறு சொர்க்க | மெதற்கு, திருந்தாத இதயங்கள் முதலியன
இவர் எழுதிய வானொலி நாடகங்களாகும் ) : அக்கரைப்பற்று விளாக்கிது (தற் பொழுது அல்முனவ்வறா) பாடசாலையில் இவர் ஆங்கில ஆசிரியராக இருக்கும் பொழுது மேடை நாடகங்கள் சிலவற்றையும் எழுதி அரங்கேற்றியுள்ளார்.
1957ம் ஆண்டு அக்கரைப்பற்றில் இயங்கி வந்த மட்டக்களப்புத் தெற்கு முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இவர் முக்கிய உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகள் என்றும் மறக்க இயலாதனவாகும் Cசங்கத்தின் ‘எழுத்தாளன்’ கையெழுத்துப் பிரதிக்கு பிரதம ஆசிரியராக இருந்து செவ்வனே செயலாற்றினார்) (1958ல் சங் கத்தினால் நடாத்தப்பட்ட கலை விஞ்ஞா னப் பொருட்காட்சிக்கு இவரும், ஜனாப் * எம்.ஐ ஜுனைதினும் அமைப்பாளர்களாக இருந்து செவ்வனே செயலாற்றினார். இவர் கள் அமைத்த "தாமரை மகளிர்” என்ற நூதனக் காட்சி இ ன் னும் மக்களால் நினைவு கூரப்படுகின்றது. )
எடுத்த வேலையை இரவு பகல் என்று பாராது அயர்ச்சியின்றி செய்து முடிக்கும் திறன் யுவனின் தனித்தன்மை ) யாகும். இரவு 3மணி வரை எழுதிக் கொண் ) டிருப்பது இ வ ரு க் குச் சாதாரணமான * விஷயம்.

Page 20
18
கவிஞர் யுவனின் பாடல்கள் ஒரு வித வேகம் நிறைந்தவை. உணர்வு கொப் பளிப்பை அவர் பாடும் பொருள் பக்தி யாக, காதலாக, சமூக ப் பார்வையாக எதுவாக இருப்பினும், இந்தப் பண்புகள் வீறு பெற்று நிற்கும், ஒரு பாடலில் இஸ் லாத்தின் பால் ஒரு அழைப்பு விடுக்கிறார். அதில் மேலோங்கி நிற்கும் ஆவேசம் இங்கு நாம் நோக்கத்தக்கது.
'குத்துபவர் குத்தட்டும் கொடுமை செய்து கொல்லுபவர் கொல்லட்டும் ஏழைமக்கள் எத்திக்கும் தாழ்வுபெற்றுத் தவிக்கும் இன்று இணையற்ற இஸ்லாத்தின் பெருமை பேற்றி?
என்கிறார் கவிஞர். இவரது பாடல் களில் சமூக உணர்வு, பெண்மை உரிமை யும் பெரிதும் இடம்பெறுகின்றன (இவரது வானொலி க வி ைத ப் பொழிவென்றில் யூசுப் - சுலைகா காதலை அற்புதமான உணர்ச்சிக் காவியமாகச் சித்தரிக்கிறார்) அதில் காதலின் சிறப்பு, பெண்மையின் மேன்மையும் வெகுவாக விதந்தோதப் படு கின்றன. பெண்மையின் சிறப்பு : பற்றிய அவரது தனிப்பாடலொன்று வருமாறு:-
'மண்ணுக்குப் பெண் என்ற பெருமையுண்டு மானிலத்தில் மாதாவாய்ப் போற்றுகின்றோம் கண்ணுக்குள் ஒளியான பெண்ணினத்தை கடைச் சரக்காய் கருதுவது கொடுமையன்றோ புண்ணுக்கும் புணுகுதனைத் தடவுதல் போல் புதுயுலகு மாதரைநாம் புறக்கணித்தால் எண்ணத்தில் ஒளி எங்கும் வீசிடாது இருள்நிறைந்த குகையாக வையம் தோன்றும்
இப்படிப் பெண் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் தன் கவிதையாற்றலைப் பயன் படுத்தி பாடுகிறார் கவிஞர்.
lU,
d 6
压

கவிஞர் யுவனின் பாடல்கள் வேகமும், ர்ைவும் வீறு பெற்று விளங்கும் , அவர் "டும் பொருள் பக்தியாக காதலாக
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் றிவுடன் படைத்து விட்டாய் ல்லமை தாராயோ இந்த ானுடம் பயனுற வாழ்வதற்கே."
ன்று பாரதி தன் ஆற்றலால் உலகம் பயன் பற சக்தியை வேண்டுகிறார். அதுபோல விஞர் யுவனும் தன்வாழ்வைச் சூழ்ந்துள்ள யரமெல்லாம் அ க ல வேண்டும். தன் ;ற்றல் மேலோங்க வேண்டும் என்று இறை னை வேண்டுவது இவரது வ ழ க் கம்" ானொலிக் கவிதை பொழிவிலும் மேடை வியரங்குகளிலும், உணர்ச்சி பூர்வமான ர் இ  ைற வாழ்த்தைச் சொல்லியூே கவி தயை தொடங்குவார்.
ஒருநாள் பெளர்ணமி நிலவிலே இவர் ரிடத்தில் அமர்ந்திருந்து சிந் தி த் துக் காண்டிருக்கிறார். இவரைக்கண்ட புத்த ாது ஒருவர் இவரை அழைத்துச் சென்று கனே; உனக்கென்ன கவலை உ ன க்கு வண்டுவது என்ன? என்று கேட்டு புத்தி திகள் பல கூறுகிறார்.
காலத்தாய் கண்திறப்பாள் மகனே; வினோ வலை கொண்டு அணுவணுவாய் சிதைந்தி டாதே! லங்கனி தரும் வித்தின் உள்ளே உள்ள தி பெரிய விருட்ச மொத்த சிந்தனைகள் மலதிக எனக்குண்டு மேதையாவாய் மன்மைமிகும் எதிர்காலம் உனக்கு உண்டு ாலமாய் நீ மாறிப் பழமையோடு லர் போற்று புதுமைக்கு எழுது இன்றே!'

Page 21
புத்த சாது கூறிய இந்த அறிவுரை யால் உணர்வு பெற்ற கவிஞர், புதுமணி தனாய் புதுச்சிந்தனை பெற்றவராக வீடு திரும்புகிறார். கவிஞர் இவ்வாறான தன் னுணர்வுக் கவிதைகள் பலவற்றையும் பாடி தன்பாடல்களால் இந்த வையம் பயனுற வேண்டும் என்றும் தன் ஆற்றல் மேலோங்க வேண்டுமென்றும் அவாவி நிற் கிறார் கவிஞர். அவருடைய கனவுகள், கற்பனை சள் அவருடைய வாழ்வில் எவ்வளவுக்கு கை கூடிற்று என்ப்தை விட, அவருடைய உயர்ந்த சிந்தனைகள், நியாயமான ஆசை கள் அவரை உயர்ந்ததோர் கவிஞனாக இனம் காட்டிற்று எனலாம்.
(கருவிலே திருவுடையவர் கவிஞர் யுவன். அவருடைய தந்தையார் மீரா லெவ்வை உபாத்தியாயர் ஒரு கவிஞர் அவருடைய தம்பி, கவிவாணன் அ ஸி ஸ் ஒரு கவிஞர் ஆதலால் இவர் சிறந்தவோர் உணர்ச்சிக் கவிஞராகத் திகழ்ந்ததில் வியப் பில்லை.)
திருகோணமலை, யாழ்பாணம் அம்பாரை முதலாம் இடங்களில் வைத்திய சு கா தா ர அத்தியட்சகர் காரியங்களில் இலிகிதராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற யுவன், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற வராக விளங்கினார். இவருடைய ஆற்ற லுக்கும், சுபாவத்திற்கும் இவர் ஆரம்ப காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர் பணி சிறந்ததாகும். இப்பதவியில் இவர் நிலைத் திருந்தால் மாணவ உலகம் அ த ன் பய னைக் கூடியளவு பெற்றிருக்கும்.
தகவல்: எம்.எல்.ஏ. ஹசன் பொத்துவில்

s
* முஹிதீன் பேக்
- Jfro -
**டெய்சி டேனியல்” என்ற பெயர் தாங்கிய யாழ்ப்பாணத்து தமிழ் மாது ரு க் மணி தேவியாகப் பரிணமித்து சிங்கள இசையுல கில் கீர்த்தி பெற்ற குயிலாகி சிங்கள மக் களின் நெஞ்சத்தை சவர்ந்ததைப் பற்றி கருத்துத் தெரிவித்த நடிகர் காமினி பென் சேகா 'அவர் எங்களுடைய சகோதரி’ என்று கூறியது கலை பற்றியும் கலைஞர் கள் பற்றியும் கலைஞன் எவ்வாறு குறுகிய வரம்புகளுக்கு அப்பால் நின்று பார்க்கி றான் என்பதற்கு நல்ல உதாரணமாகும்.
ருக்மணி தேவிக்குள்ள ஸ்தானத்தை சிங்கள மக்கள் மத விசுவாசத்தில் முஸ்லி மான முஹிதீன் பேக்குக்கும் அளிப்பார். கள் என்பதில் சந்தேகமில்லை.
முஹிதீன் பேக் சிம்மக் குரலோன், அவரது ஆயிரக்கணக்கான சிங்கள பாடல் களில் அநேக பெளத்த பக்தி கீதங்களும் உண்டு. மெஹிதீன் பேக்தான் 'புத்தம் சர ணங் சச்சாமி’ என்ற பக்திப்பாடலைப் பாடி பெளத்த மக்களின் உள் ள த் தி ல் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியவர்
கடந்த மாதம் மற்று மொரு சிங் களப் பாடகர் 'மில்டன் பெரேரா மரண மானார்.
நான்கு பாடகர்களை முஹிதீன் பேக் குடன் இணைத்துப் பேசலாம் தர்மதாச வல்பொல, ஷெல்டன் பெரேரா எச். ஆர் ஜோதிபால மற்றும் மில்டன் பெரேரா இவர்களை ஒரு தகப்பனின் பார்வையில்

Page 22
Q 20 (.
மொஹிதீன் பேக் அனுகினார்,முதல் நால் வரும் இசை உலகை விட்டு போய்விட்ட னர். இன்று பிதாவும் மறைந்து விட்டார் அத்துடன் ஒரு யுகமும் மறைந்து விட்டது.
முஸ்லிம் மக்கள் மத்தியில் அவருக்கு
மதிப்பு இருந்ததா? அபிமானம் இருந்ததா? அவர் பெளத்த பக்தி கீதங்கள் பாடியது
இதற்கு தடையாக இருந்ததா? யார் யார்
என்ன நினைத்தாலும் மொஹிதீன் பே க் என்ற பாடகர் இந்த நாட்டின் சிங்கள
கலைஞ்சர்களை ஒரு சமூகம் மதிக்கத் தவறக் கூடாது. அவன் வாழும் போதும், அவ ன் இறந்த பின்னும் அவன் எம்முடனேயே வாழ்
கிறான். கலையை நேசிப்பவர்கள் கலைஞர் களை என்றும் ஆதரிக்க வேண்டும். நடை முறை சார்ந்த இலக்கிய முயற்சிகளில் அவர் களை நாம் நினைவு கூர்வது நிகழ்காலத் தில் அவர்களை நம்முடன் வாழச் செய்யலாம் அந்த வகையில் மறைந்த கலைஞர் யுவன் அவர்களும் ஈழத்து இசை உலகில் மதுரக் குரலோன் அல்-ஹாஜ் மொஹிதீன் பேக் அவர் களும் சலையுலகில் நினைவு கூரத் தக்கவர் களே!
தடத்தின் ஒவ்வொரு இதழிலும் மறைந்த கலைஞ்சர்களுக்கு அஞ்சலி செலுத்த
(g

Dஸ்லிம் மக்களுக்கிடையில் நட்பையும் செளகன்யத்தையும் நிலவுவதற்கு ஆற்றிய ங்கு வெகுகாலம் நிலைத்திருக்கும்.
கடந்த பெப்ரவரி மாதம் மர்ஹ"ம் புல் ஹாஜ் மொஹிதீன் பேக் அவர்களுக்கு Dஸ்லிம் கலாச்சார பண்பாட்டு அலுவல் ள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களின் இசையியல் துறைக்கு லாச்சார விருதும், பணமுடிப்பும் வழங்கி களரவிக்கப்பட்டார்.
ாம் எண்ணியுள்ளோம். உங்கள் பிரதேசத் Nல் மறைந்து போன கலைஞ்சர்களது விபரங் ளை எமக்கு நீங்கள் அனுப்பி வைப்பதன் pலம் நாம் இந்த பணியில் தொடர்ந்து செல்ல iங்கள் எமக்கு ஆதரவு வழங்குங்கள். உங்கள் கவல்களுக்காக நாங்கள் காத்திருக்கின் றாம்.
நடம் 2 இல் கவிஞர் யுவனைப் பற்றி கட் ரை எழுதிய எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ் ஸ்மது அவர்களுக்கும் "முஹிதீன் பேக்"கைப் ற்றி தகவல் தந்த தினகரன் 'களம் கலம்" குதி தயாரிப்பாளர் ராம் ரஹீம் அவர்களுக் 5ம் எமது நன்றிகள்,
- ஆசிரியர் -

Page 23
பாதுகாப்பு:
-யூ. எல். முகமட் அபார்
உன்னை - நீ
பத்திரப்படுத்திக் கொள்
இது - ஆசர்பாசங்கள் அதிகரித்த காலம்,
女
நம் நாட்டின் - அழகியெல்லாம் - இப்போது - தலைமறைவாகிவிட்டனர். தன் - கற்புக்கு பாதுகாப்பாய்.
நீ மட்டும் - இது -
சுதந்திர நாடு என்று எண்ணி உன் அழகை - வெளியில் அரங்கேற்றிக் கொள்ளாதே!
g கறுப்பாடையால் போற்றி இருட்டறைக்குள் உறங்கிககொள்.
நான் மட்டும் - நடுராத்திரியில் ஒரு தேவதூதன் போல் உன்னை வந்து - பார்த்துக் கொள்வேன்.
(ஒரு கற்பழிப்பு நிகழ்வுக்கா
எழுதப்பட்ட கவிதை இது

.
“Gutensit' இரு கவிதைகள்
இதுவுமொரு விதி
சர்வ வியாபகமும் உன் ஜெபம்தான் நீ மட்டும் ஏன் என் கல்லறைக்கு மலர் வளையம்
சாத்த விரும்புகிறாய்?
என் ஜெபமும்
உன் விருமபும்
ஒரு முரண் தொடை
என்றாலும் - - - -
நான் உன்னையே
என் தொட்டிலாக்கி கிடக்கிறேன்.
(நேற்று)
வாழ்க்கை
நியாய சபை திரித்த |
தூக்குக் கயிறில்
தொங்கித் தொங்கி
இந்த
கருப்பை தயாரித்த
எலும்பு விலங்கு
தினமும்
செத்துக் கொண்டிருக்கிறது.
(இன்று)

Page 24
O 22
வந்து விழுந்த பூமாலைகளிலிருந்
கிழக்கு மாகணத்திலிருந்து புதிய மொட்டு
இலங்கை சிறு சஞ்சிகை வரிசையில் ஒரு "த
கிழக்கு மாகாணத்திலிருந்து காலம் கா வெளிவந்திருக்கின்றன அந்த வகையில் ‘த சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிவர்த்தி வரலாற்றில் தடத்திற்கும் ஒரு இடம் கி நிட்சயமாக எதிர்பார்க்கலாம்.
இகற்காக "தடம்" குழுவினர் தரப உறவு நிலையினை வளர்த்துக்கொண்டு தட தெடுப்பதிலும் கவனம் செலுத்தினால் ஆர் களின் முயற்சி சிறப்பாக அமையும், இவர்க களது முயற்சிக்கு கலை இலக்கிய ஆர்வலர்ச கடமையாகும்.
தினகரன் . 1992
தாங்கள் "தடம் தனிற்காய் பூண்டுள்ள றத்தக்கதென்றே, இக்கொள்கைப்பாடானது காலத்தில் ஏற்றதொரு தடத்தைப்பதித்து க. வேண்டுகிறேன்.
பிரச்சனைக்குரிய கால கட்டங்களில், பி இலக்கிய சஞ்சிகை யதார்த்தங்களை சுமந், பெருமையாக கொள்ளல் வேண்டும், என்பது முக்கியமே. அந்த வகையில் நான் தட தடம் இலக்கிய உலகில் விட்டென பிரகா தார்மீகமான வெற்றிக்கு வழி வகுக்க வே ஆகும்.

து .
இதழ் விரித்திருக்கிறது.
அந்தனி ஜீவா (அறுசுவை) தினகரன்
டம்’ இது லமாக பல தரமான சிறு சஞ்சிகைகள் டம்' சஞ்சிகை நாம் சிநேகயூர்வமாக செய்து கொண்டால் சிறு சஞ்சிகை டைக்கும் என்பதை தடம் குழுவினர்
0ான பல சிறு சஞ்சிகைகளுடன் வாசக -ம் இதழுக்கான படைப்புகளை தேர்ந் வம் மிக்க, தேடல் மிக்க இவ் இளைஞர் ளது உழைப்பு வீணாகாதவாறு அவர் 1ள் ஆதர்வு வழங்க வேண்டியது முக்கிய
"தடம் பத்திரிகை விமர்சனத்தின் போது’ மேமன் கவி
கொள்கைப்பாடானது, மிகவும் போற்
வெற்றியளித்து நின்று நிலைத்து எதிர்
ாத்தீர இயல்புடன் மருவீச இறைவனை
.6r LDgi?t זn)f"רץ(D6ו சம் மாந்துறை
ரச்சினைக்குரிய பகுதியில் இருந்து ஒரு து வருகின்றது என்பதால் அதை நாம் ம் பாராட்டப்படல் வேண்டும் என்பதும் ந்தின் வெற்றிக்கு பிரார்த்திப்பதோடு, }க்க வேண்டும். தடத்தின் வெற்றி ஒரு ண்டும். என்பதும் என் பிரார்த்தன்ன
நிலாவாசன் (அஷ்ரப்கான்)
முர்தகாமுல்ல

Page 25
கிழக்கின் இலக்கிய வளர்ச்சி ஓகோ அடைந்திருப்பது கண் கூடு, நிறைய லெ மிகவும் கவலைதரும் விடயம் இது, இன் துணிந்து நின்று "தடம்" பதிக்க தாங்கள் காங்கிதம் அடைகிறேன். "தடம் இலக் ஆரம்பிக்க எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களும் வந்தனங்களும் தட மான தரமான முயற்சி, அமைப்பிலும் இலக்கிய ஆர்வலர்களால் அநேகம் விரும் இரண்டாவது இதழை எதிர்பார்த்து
உங்கள் பணி மேலும் வளர ஒரு இல வாழ்த்துகிறேன்.
"தடம்’ எதிர்பார்த்ததை விட திருப்திகர
தடத்தை படித்த அந்த நொடிகளினு முதலாக என்னில் திருப்தியான மாற்ற யே சாரும் தலைமுறைப் பிறவிகளை மட்டுமல்ல ஈழத்திலும் ரணங்கள் பதித்து
இது தரமான இலக்கிய முயற்சி, பாராட்டு

23 w - WM W
என்றிருந்த கதை இப்போது சற்று வீழ்ச்சி பளிவந்த இலக்கிய ஏடுகள் இன்றில்லை. ாறைய பயங்கரமான இந்த சூழ்நிலையில் ள் இறங்கி இருப்பதை எண்ணி நான் புள கியத்தில் மீண்டுமொரு அத்தியாயத்தை
எம். எம். நெளபாத் சம்மாந்துறை
டம் 1 ஐ பார்க்கக்கிடைத்தது. வித்தியாச ம் வித்தியாசம் ஓர் அழகு, பொதுவாக பி வரவேற்கப்படும் என நினைக்கிறேன்.
எம். கே. எம். ஷகீப் ஜாமியா நழிமிய்யா
)க்கிய ஆர்வலர் என்ற ரீதியில் உங்களை
செல்வி இரா ரோகினி கொழும்பு - 13
மாக இருந்தது.
யு. எல். நஜீமா
பண்டாரவளை
1ள் மனதில் இடம் பிடித்து விட்டது. முதன் அசைவுகளை ஏற்படுத்திய பெருமை இதை காத்திராது இரசிகர்களின் நெஞ்சத்தில்
நிலைக்க இறைவனை பணிகிறேன்.
எம். யே. றியாஸ் டீன்ஸ் விதி, அக்கரைப்பற்று - 01
கின்றோம், வாழ்த்துகின்றோம்.
எப். எம். பைறுாஸ் தினகரன் 1991

Page 26
O 24
போன அனுபவங்களுக்குப் பி
மெய் சிலிர்த்தும் இதமான காற்று மேற்கே நகரும் இளமஞ்சள் வெயில் பள்ளிப் புறத்து பசுமை வயல்வெளி எனக்கு மிச்சம் பிடித்துப் போகின்றன.
அந்தப் பிள்ளைகளுக்குப் பிடித்து விடுவ எனக்கும் பிடித்துப் போனவைதான் அலைவாய்க் கரையில் கால் கழுவுதல் காட்டு வட்டையில் பட்டம் விடுதல் ஒயாமல் பெய்யும் மழையில் நனைவதெ
எனக்கு இன்றும் மறந்திடவில்லை அலைவாய்க் கரையில் கால் கழுவுகையி அலையின் அகண்ட வாய்க்குள் அகப்பட காட்டு வட்டையில் பட்டம் விடுகையில் முந்திரியில் சிக்கி நூல் அறுந்ததும் ஓயாமல் பெய்யும் மழையில் நனைந்ததி தலையிடியும் காய்ச்சலும் ஒருமித்து வ!
இன்றைக்கு என்னதான் இருப்பினும் இதமான காற்றும் இள மஞ்சள் வெயிலும் பசுமை வயல் வெளியும் எனக்குப் பிடித் தப் போவதைத் தவிர வேறு ஒன்றிலுமே இப்போதைக்கு நாட்டம் என்பதற்கில்லி
ཏཊ་ சிறுகதை, கவிதை, கட்டுரை, ெ ஆக்கங்களை நாம் எதிர்பார்க்கி

டீன் கபூர்
தைப் போல
ல்லாம்
L-gilth
ல் ந்ததும்.
se
விமர்சனம், மொழிபெயர்ப்பு போன்ற கின்றோம். -ஆசிரியர்

Page 27
*毽 Gi
|
வேள் அனைத்திற்கும்
LIDAVAR ROAD. A
|
॥
।
 
 

||||||||||||||||||||||||||TT
EET
நாடவேண்டிய ஸ்தா
18 ܠܛ, 011ܓ 氹、。
|-

Page 28
WITH BEST COMPLIMENTS
fROዙተ
WHOLESALE AND RETAL DEALE
DHEENAD TRADI
NO - 97. 98 SUPER MARKE
A, KKARAIPATTTU.
SLLLLLLLL LLLL S S L S S L0L S LLLLL LLLLLLLLSS LLLLLL

RS
NG (CENTIO
T T.P. (67.7398
() (7 74.38
karai Datt Li.