கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படி 1993.03

Page 1
பங்குனி 1993 ପୌ);
 
 
 

千ち=*・っっ 7-سی
ہے جسے انیس sq ہے)<ے
ーleeー
ത6) || [[ ][0

Page 2
படி க்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன. ஆக்கங்களையும் கருத்துக்களையும்
எழுதி அனுப்புங்கள்
LI LIS
ஆசிரியர் குழு
வெ. தவராஜா
கே. லோரன்ஸ்
ஜி. நிர்மல்ராஜ்
அட்டைப்படம்
அருந்ததிசபாநாதன்
முகவரி
இல: 22 செபத்தியார், விதி
மட்டக்களப்பு
இலங்கை,
நெஞ்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(9 до 5 (3 5 7 й.
மெளனத்தின் அடியில் மானுட ஆளுமை விம்மலுற தன்னைச் சுடப்போகிற மனிதனை சுடப்போகிற துப்பாக்கியை பார்த்தபடி நின்றான்
ஊரின் கிறவல் தெருக்களும் பசிய மரங்களும் பழகிய முகங்களும் புழுதியும் காற்றும் போகவிடை தரவில்லை
மீதமுள்ள வாழ்க்கை சமுத்திரம்போல் விரிவுகொள்ள
அவன் போகாத இடங்கள்.
சொல்லாத சேதிகள். سے அடையாத இலக்குகள். கொடுக்காத முத்தங்கள்.
- ஆயிற்று! திரேநிண்டுவிட்ட துப்பாக்கிக்குழல் முன் பிரமாண்டமாய் விரிந்த கணங்களில் வாழ்வின் அர்த்தமும் அழைப்பும் பொங்கி வழிய, அவன் பேசி முடிப்பதற்குள். தன்னை புரியவைப்பதற்குள். தீர்ந்தது வெடி
செட்டையடித்துச் சிதறிக் கரைந்தன ஒரு நூறு காக்கைகள்
- வாசுதேவன்

Page 3
է 1ւգ. 2
கி.மு. 3ம் நூற்றாண்டு காலத்தி கிரேக்க நாட்டவர் தியோனிஸ் தே தையை மகிழ்விப்பதற்காக சிரமத்துடனு பக்தியுடனும் செய்த பூஜையே முறையா நாடகக் கலையின் ஊற்றாகும்.
அரிஸ்டோட்டில் முதல் யூ ரி பி டி சொபொக்லிஸ் வரையிலான கிரேக்க நா கக் கலைஞர்களும், பரதமுனிவரும் நா கக்கலையினை ஆர்வமுள்ளவர்களுக்குக் க றுக் கொடுத்த அன்னியர்கள் வரிசையி முன்னணியில் இருப்பவர்கள்.
சிங்கள நாடகத்துறைக்கு த ன் ை முழுமையாக அர்ப்பணித்து பல தசாப்த க ளா க நாடகக்கலையை உபதேசித்து கொண்டிருக்கும் இலங்கையின் பரதமு: uJITri ?
ஆம், அவர்தான் நாடக தர்மத்தி வழி நின்று நாடகக் கலைக்கு புத்துயி கொடுத்த இலங்கையின் பரதமுனிவ பேராசிரியர் எதிரிவீர சரத் சந்திர அவ தனது நீண்ட கலைப் பயண அனுபவ களை மனம் திறந்து கூறுகிறார்.
"சிறு வயதிலேயே கலை உங்கள் உ ளத்தைக் கவர்ந்ததா?
"எனது தந்தையின் ஊர் அக்மீமன தாயாரின் ஊர் ரத்கம கம்மத்தகொட நான் பிறந்தது அம்மாவின் ஊரில், அே கமாக எனது விடுமுறை நாட்களைக் க! த்தது ரத்கமயில் உள்ள எனது குடும் இல்லத்தில் எனது தாயாரின் வீட்டிற்க கில் சிங்கள பாடசாலை ஒன்று இருந்தது இந்தப் பாடசாலையின் தலைமையாசி யர் சிங்கள மொழி, தூதுக் கவிதை ஆ
யவற்றில் நிறைந்த அறிவு படைத்த ஒ

சிங்கள நாடக உலகில்
தமுனி எதிரிவீர சரத் சந்திர
சிங்களமூலம் அனுர பண்டார ராஜகுரு தமிழ் பெயர்ப்பு: மகேஸ் சோமசுந்தரம்.
鷹
வர். இவர் எனது மூ த் த மாமனாரின் நெருங்கிய நண்பர். மாமா அடிக்கடி அவ ரைச் சந்திப்பதற்குச் செல்வார். நானும் மாமாவுடன் போய் வருவது வழக்கம் நங்கணவாய் விடு தூதுக் கவிதைகளைக் கேட்பதற்கே அவ்வாறு போய் வந்தேன்? தலைமையாசிரியர் தூதுப் பாடல்களை மனனஞ் செய்து மிகவும் அழகாகப்பாடி நங்கணவாயின் பயணத்தை விபரிப்பார் நான் சிறுவனாக இருந்த போதிலும் இலக் கியத்தின் மீது புதுவிதமானதொரு காதல் அதன் மூலம் எனக்கேற்பட்டது. அவ்வா றான திறமையான ஆசிரியர்கள் இந்தக் காலத்தில் கிடைப்பது என்பது சந்தேகமே. அது தற்கால ஆசிரியர்கள் வாழும் சூழலின் தவறே தவிர அவர்களது தவறல்ல என்றே நம்புகிறேன்.
சங்கீதம் என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது எனது தாயாரையே. மிகவும் இனிமையான குரல் படைத்தவர்.
அந்த நாட்களில் அம்மாவும், அப்பாவும்,
தங்கையும் நானும் இரவில் சாப்பிட்ட பின்பு கிழமையில் ஒரு தடவையாவது மண் டபத்தில் அமர்ந்திருந்து பாட்டுப்பாடு G8a u Tob
எனக்கு நாட்டுப் பாடல்களில் மிகுந்த விருப்பம் ஏற்பட்டதற்கு வின்சன்ட் ஒல்ப் ரேஸ்ட் என்பவரே காரணம். எங்களுடைய வீட்டில் கிராமஃபோன் ஒன்று இருந்தது.
சார்ள்ஸ் டயஸ்,ஜோன் டீ சில்வா போன்ற
கலைஞர்களின் நாட்டுப்பாடல்கள் இசைத் தட்டுக்களில் இருந்தன. அப்பொழுது எனது ஒரே பொழுது போக்கு இந்தப் பாடல் களைப் போட்டுக் கேட்பதுதான்.
திரு ஒல்ப்ரேஸ்ட் தொலைபேசி பரிவர் த்தனை நிலையத்தில் பணி புரிந்தார்.

Page 4
Lilj. 2
எனது தந்தையின் தபால் நிலையமும் அ ற்கு அருகிலேதான் இருந்தது. ஒல்ப்ரேஸ் சுவையான கதைகளைச் சொல்வதில் தி பை யானவர். குரலினிமையும் அவரிட ருந்தது.தொலைபேசி நிலையத்தின் மேை யில் தாளம் தட்டிப் பாட்டுப்பாடுவதுஎம வீட்டுக்கு எப்போதும் கேட்கும் சில வேை களில் தொலைபேசியிலும் அவர் பாடுவா
அவரது பாடல்களில் நான் வசமா விட்டேன் பகலில் நீண்டநேரம் அவர அலுவலக அறையில் இருந்து பாடல்களை கேட்பேன். தினமும் புதிய புதிய பாட களை அவர் பாடுவார். எனது மகிழ்ச் க்கோ எல்லை இல்லை.
ஒல்ப்ரேஸ்ட் பாடல்கள் எழுதி வை திருந்த புத்தகமொன்றை நான் பி ர செய்து கொண்டேன்.
அவர் என்னை கண்டி கட்டம்பேக் அழைத்துச் சென்று கரோல் வண்டியை காண்பித்தார். ஒல்ப்ரேஸ்ட்டுடன் கட்ட பே கரோல் வண்டிக்குப் பின்னால் சென். கற்றுக்கொண்ட பாடல்களை நான் சார் னாவில் இசைக்க அவர் இனிமையாக பாடினார்.
பேராசிரியர் சரத்சந்திர தமது இ மைக் கால பசுமை நினைவுகளில் மீண் மொருமுறை மூழ்கினார். "என்னை ப கலைக் கழகத்துக்கு அனுப்புவதில் என தந்தை மிகவும் ஆர்வம் கொண்டிருந்தா அப்போதிருந்த பல்கலைக் கழக பிரவேச பரீட்சையாகிய லண்டன் மற்ரிக்குலேச பரீட்சையில் நான் தேறினேன்.
மகாகவி ரவீந்திரநாத் தாகூர்இக்கால பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார்.அவ தயாரித்த "சாபமோச்சன? எனும் நவீ நாடகத்தைப் பார்த்த போது, நான் இ வரை அறிந்திருக்காத ஒரு உலகத்தை த சிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏ பட்டது.
தாகூரின் சாபவிமோச்சனம் மேன யேற்றப்பட்டபோது, அவர் பின்னர் அமர்ந்து இசையின் ராகத்திற்கேற்ப தாள தட்டி தனது ஆக்கத்தை ரசித்ததை நிை க்கும் பொழுது இன்றும் சுவாரசியம இருக்கிறது.

属
g
அந்த நேரத்தில் தாகூர் அ வர் க ள் தனது குழுவினருடன் லேக் ஹவுஸ் நிறுவ னத்தின் ஸ்தாபகரான திரு. டீ. ஆர். விஜ யவர்த்தனா அவர்களின் இல்லத்திலேயே தங்கியிருந்தார். தாகூரின் சாந்திநிவே தன் ஐப் பற்றி பல கட்டுரைகள் அ ந் த நாட்களில் "டெய்லி நியூஸ்" பத்திரிகையில் வெளிவந்தன. அவற்றை ஒன்றும் விடாமல் மிகுந்த ஆர்வத்துடன் நான் வாசித்தேன். "சிங்கள நாடக வம்சக் கதையில் மலர் ந்த தங்கத் தாமரை என்றழைக்கக் கூடிய மனமே" நாடகத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது? மனமே நாடகத்தை இலங்கை யின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பமாக தாங்கள் கொள்வது ஏன்!"
"மனமே" கதை என்ற முறையில் நாட் டார் இலக்கியத்தில் வரும் மக்கள் ஜாதக கதைத் தொகுதியில் வரும் 'சுள்ளதனுக்கக ஜாதகமாகும் ஜாதகக் கதையில் இந்தக்குமா ரனின் பெயர் சுன்னதனுத்தர" என்பதாகும் கிராமியக் கதைகளில் அவன் "மனமே" குமா ரன் என்றழைக்கப்படுகிறான். மனமேயின் கதை இலங்கையின் தென் மாகாணத்தில் கோலம் நாடகம் முறையில் வெளிப்படுத்தப் பட்டு வந்தது. மனமே கதையில் இருந்து இசை நாடகமொன்றை தயாரிக்க முடியும் என்று ஜப்பானில் இருந்த காலத்தில் என க்குத் தோன்றியது. ஜப்பானிய சினிமாக் கலைஞர் அக்கிரா குரு சோவாவின் ரஷோ மன்" திரைப்படத்தைப் பார்த்த பிறகே எனக்குள் இந்த எண்ணம் உருவ கியது *ரஷோமன் கதையின் சராம்சம் எமது நாட்டின் மனமே கதையுடனும் அன்னத்த னுக்கக ஜாதகக் கதையுடனும் ஒத்ததாக இருக்கிறது,
மனமே பிரதியை நான் எழுதிய வேளை யிலும் தயாரித்த வேளையிலும் சாள்ஸ் குணசிங்க அவர்கள் எனக்குத் துணையாக எனது வீட்டில் தங்கி இருந்தார். குறிப் பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குறித்த வித த்தில் மெட்டு அமைய வேண்டும் என்று நான் கூறினால் அவர் சில பாடல்களைப் பாடுவார். எனது விருப்புக்கேற்ப நான் தெரிவு செய்து கொள்வேன். பழைய கதை யின் கருப் பொருளிலும் பாத்திர அமைப் பிலும், பெண் தெய்வத்தின் பெருமை

Page 5
ւմLգ. 2
கூறும் கதையாக மாற்றம் செய்து ம6 மேயை தயாரிக்க வேண்டும் என்று குை சிங்க அவர்களிடம் நான்கூறினேன். அதற் அவர் "இந்தப் பெண்களின் மீது ஏன் இ வளவு அனுதாபம்" என்று குறை கூறினார்
மனமே நாடகத்தின் வைபவரீதியான முதற்காட்சி லயனல் வென்ற் அரங்கி 1956 நவம்பரில் காண்பிக்கப்பட்டது தொடர்ந்து நான்கு நாட்களுக்குமனமேை காண்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட டிருந்தன. லயனல் வென்ற்றின் அப்பே தைய உரிமையாளராகிய ஹரல்ட்ஸ் பீரில் அவர்களுடைய அவாவின் காரணமாகே நான்கு நாட்கள் எனத் திட்டமிடப் பட டது. கிராமிய ரசனைக்கு ஏற்ப தயாரி கப்பட்ட சிங்கள நாடகமாகிய மனமே"ை லயனல் வென்ற்றில் காண்பிப்பதனை ஒ பரிசோதனை யாகவேநான் கருதினேன் அ வரங்கு ஆங்கிலேய வர்க்கத்தின் ஆக்கிரமி புக்கு உட்பட்டிருந்ததே அதற்குக் காரண திரு ஹரல்ட்ஸ் பீரிஸ் அவர்களினால்தான் நான் இந்த சங்கடமான நிலையில் இரு தேன். எனது ஊகத்தை உறுதி செய்வ: போல் ஜம்பது பேர் கூட முதல் நா? காட்சிக்கு வரவில்லை. திரு. குணசே6 கலப்பதி எனக்கு உதவி செய்யும் நோ கோடு எஞ்சியிருந்த நாட்களில் அயலி ருந்த பாடசாலைக்குச் சென்று மாணவ களை நாடகம் பார்க்க அழைத்து வந்தா மனமே உருவாகிய கால கட்டத்தில் சி கள நாடகங்களுக்கு மிகக் குறைந்த வ வேற்டே கிடைத்தது. இதையொட்டி சர, சந்திர நினைவு கூர்ந்த நிகழ்ச்சி இது:
இடம்:- லயனல் வென்ற் அரங்கு
தினம்: - 1956 நவம்பர் 4, அல்லது நேரம்:- இரவு 6 30 மணி இருக்கு
பேராசிரியர் சரத் சந்திர விறாந்ை யில் அமர்ந்திருக்கிறார்.நாகரீகமாக உை யணிந்த எடுப்பான தோற்றத்தையுடை பெண்மணி ஒருவர் வருகிறார். நாடக தின் வைபவ ரீதியான காட்சி தொடங் சிறிது நேரம் கழிந்து விட்டிருந்தது.

h
š
பேராசிரியர் : அம்மணி, த ரா நீங்க ள் வந்திருப்பது நாடகம் பார்ப்பதற்க் காகவா? அப்படியானால் உள்ளே செல்லுங்கள்,
பெண்மணி: இது என்ன நாடகம்?
பேரா: மனமே
பெண்; இது சிங்கள நாடகமா?
பேரா: ஆம்
(பெண்மணி முகத்தை சுளிக்கிறார் மீண்டும் ஒரு கேள்வி)
'இது எத்தனை மணிக்கு முடிவடை யும்'
"எட்டு மணியளவில்"
"இருக்க முடியாது" (அந்தப் பெண் ணுக்கு அதிசயமாக இருக்கிறது)
'உள்ளே சென்று பாருங்கள். டிக்கட் தேவையில்லை'
(பேராசிரியரின் பதிலைக்கேட்டு பெண் கோபமடைந்து விட்டார்) ச்சீ.நான் ஒரு போதும் சிங்கள நாடகங்களை பார்ப் பதில்லை, நான் வந்தது எனது வேலைக் காரியை அனுப்புவதற்கு கூறிவிட்டு அந் தப் பெண் திரும்பிச் சென்று விட்டார்,
அன்று அந்த கறுப்பு நிற வெள்ளை யர்களது ஆதரவு இல்லாமல் இருந்த சிங் கள நாடகத் துறை இன்று இத்துணை வளர்ச்சி கண்டிருப்பதில் பேரா. சரத்சந் திரவின் பங்களிப்பு எத்தகையது?
சிங்கள நாடகத்துறைக்கு புதிய பரி மாணங்களைக் கொடுக்க அவர் செய்த அர்ப்பணிப்புக்கு அவர் பெற்றுக் கொண்ட கைமாறு என்ன?

Page 6
L J Lq 2
இது கேட்கப்பட வேண்டிய ஒரு ே வியாகவே தெரிகிறது?
இப்பொழுது எனக்கிருக்கின்ற ஒ யொரு ஆசை எனது சொந்த நா பீடம் ஒன்றை ஸ்தாபிப்பதாகும். இது மூலம் நாடகத்துறை பற்றி என்னிட் இருக்கும் அறிவு, பொருட்கள் யாவற். யும் இளைய தலைமுறையினருக்கு ந தாரைவார்த்துக் கொடுத்து விடலாம்,
அது ஒரு வகையில் தேசிய நாட கலையின் நூதனசாலையாகவும் அமை! என்னிடமுள்ள நாடகத்துறை பற்ற பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்ை பேணிப் பாதுகாத்து எதிர்காலச் சந்த யினருக்குக் கிடைக்கச் செய்யக் galg clug மையமாக இது அமையும் இந்தப் புனி பணிக்காக எனது வேறு அலுவல்கை 6 ਫਫi வாழ்வின் மிகுதிக் காலத்ை கழிப்பதற்கு தயா ரா க இருக்கிறே ஆனால் எங்களுக்கு உதவியளிக்க யா இருக்கிறார்கள். எனது ஆசையை நிை வேற்ற உதவும்படி நான் சில நிறுவன களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறே எமக்குப் பின்பு கலை ஆர்வம் உள்ள பு ணமான பரம்பரையொன்று உருவாவை நான் காண விரும்புகிறேன். நடிப்பு. கா சியமைப்பு தயாரிப்பு போன்றவறறில் : பட விரும்பும் இளைய தலை முறையின கான ஒரு பயிற்சிக் களமாக எனது நாட பீடம் அமைய வேண்டும் என்பது என இறுதி ஆசை.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் கன் சாரப் போதனாசிரியராகப் பணியாற் மாறு அண்மையில் உப வேந்தர் பேரா ரியர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் எனக் அழைப்பு விடுத்தார், நான் அங்கே செ றேன், மாணவர்களும் மிகுந்த பக்தியு னும் மரியாதையுடனும் சந்தோஷத்து னும் என்னச்ை சூழ்ந்து கொண்டனர் மாணவர்கள் சந்தோஷமடைந்த போ

தள்
ரே
55 நன் _ம்
D), יס
Tr
கத் ւյւb at
o D தி 2005 தப்
() ଜ[["
தை ன்,
Tri
r
T
த
ஈடு ருக்
லும் சில பேராசிரியர்கள் சந்தோஷமடை யவில்லை எனது நியமனத்தின் விளைவால் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கிடை யி ல்
கலகம் ஏற்படுமளவுக்கு நிலைமை மோசம
டைந்தது. நான் ஆசையோடு போன போதிலும் சுயாதீனமாக சேவை செய்ய முடியவில்லை, நான் அப்பதவியை இரா ஜினாமாச் செய்து விட்டேன். எனது நாட கங்களில் இருக்கின்ற தேசியச் சிந்தனை பெறுமதியானது. நான் அதைப் பேணிக் கொண்டு விலகி விட்டேன்.
உங்களது நாடகங்களுக்கு இன்றைய மாணவர்களிடையே நிறைய ー塾●『G's
இருக்கிறது, அல்லவா?
ஆம் எனது நாடகங்கள் பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்ப தால் மாணவர்களிடையே அவை பிரபல் யம் அடைந்து வருகின்றன. மேலும் நானும் எனது மனைவி லலிதாவும் இணைந்து தூரப்பிரதேசங்களில் எனது நாடகங்களைக் காண்பிக்கின்றோம். சேவை நோக்குடனேயே அவ்வாறு செய்கிறோம்.
"நீங்கள் இந்த நாட்களில் புத்தகங்கள் எதுவும் எழுதவில்லையா?
*பிங் அத்திசரசவிவறமக் தென்னே என்ற நூலுக்குப் பின் நான் பெற்ற அனு பவத்தையும், கண்ட நிகழ்வுகளையும் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன்" இதனை 'பிங் அத்தி குணதேவி நுவணக் தென்னே" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட இருக்கிறேன்."
சிங்கள நாடகத்துறையின் சரித்திரமா கிவிட்ட இந்தப் பெளர்ணமி மறைவதற்கு முன்பே அவரது நாடகப் பீடமமைக்கும் ஆசை நிறைவேற வேண்டும் என்று
பிரார்த்திக்கின்றோம்.
நன்றி சரசவிய
ܝܵ

Page 7
ւյւգ. 2
சு டு நெரு ப் பும்
2ரெடங்குச் சட்டம் எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்று வாரங்கள் என்றாலும் சனங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது குறைவு.
றோட்டில் தனியாகச் சென்ற ஒரு
'திடீரென்று எ ங் 編 ரு ந் தோ வந்த வான் இருவரைக் கடத்திச் சென்றது.
"கல்லடிப் பாலத்தின் கீழ் மூன்று சட
இப்படியாக வந்துசேரும் செய்திகள் னால் ஊரில் இன்னமும் பதட்டம் தணிய வில்லை. வீட்டின் உள்ளேயிருந்து முற்றத் திற்கே வருவதற்குக்கூட அச்சமாகவிரு ggle
O O
தங்கம்மா வீட்டு முற்றத்தைப் பார்த் தாள்.
குப்பைக் கா டா க க் காட்சி தந்து கொண்டிருந்தது, அது.
விறாந்தையிலிருந்து எழுந்து சென்று முற்றத்தைக் கூட்டத்தொடங்கினாள்.
அவளது சிந்த னை வீட்டினுள்ளே இருக்கும் மகன் குணம் பற்றியதாக இரு தது. அவன் வயதினை ஒத்தவர்கள் பாது காப்பிற்காக வேறிடங்களுக்குச் சென்று விட்டனர். முன்பின் அறியாத இடங்களுக் குச் சென்றிருப்பதைவிட மகன் தன்னுட னிருப்பது பாதுகாப்பானது என்று தங் கம்மா நம்பினாள். தன்னால் நடக்க இய லாதபடியால் மகனை அழைத்துக்கொண்டு தூர இடம் செல்லவும் அவளால் முடிய வில்லை.

க ட் டெனு ம் புக ளு ம்
கருணையோகன்
இந்நிலையில் ஊரடங்கு அமுலில் இல் லாமை அவளுக்கு நிம்மதியளித்தது.
* "g, Libl?’ ”
- மகனைக் கூப்பிட்டாள்
'அம்மா ?
குணம் வீட்டினுள்ளிருந்து பதிலளித் தான்.
'தேத்தண்ணி வை மேனை. ஆச்சி குடிப்பா, நான் இ ப் படி விட்டிட்டு வந் தால் இ ண்  ைடக் கும் கூட்டி முடிக்க ஏலாது'
O O
தேநீர் வைப்பது அவனுக்கு எரிச்ச லூட்டும் செயல். தனக்குச் சரியாகத் தேநீர் வைக்கத் தெரியாது என்பது அவனது அபிப் பிராயம். அது மட்டுமன்று. அடுப்பிற்கு முன்னால் குந்தியிருந்து நெருப்புக் குச்சி க  ைள த் தட்டிக் கொண்டிருப்பதென்பது அவனுக்கு அறவே பிடிக்காத விடயமுங்
én. L.- .
எனினும், மறுக்க முடியாத சூழ்நிலை.
எங்கெங்கொ சென்றுவிட்ட தனது நண்பர்களைப் பற்றி எ ன் னி ய வ ர று நெருப்புக் குச்சி ஒன்றினைத் தட்டினான் அது பற்றவில்லை. அடுத்த குச்சியைத் தட்டியபோது ச டு தி யா கத் தீப்பொறி பறந்து அவனது விரலைச் சுட்டுவிடுகிறது. அதனைத் தாங் க முடியா து ஐயோ, அம்மா' என்று சத்தமிட்டான்.
தங்கம்மாவிற்குக் காது கே ட் பது குறைவு இல்லாவிட்டால் பதறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்திருப்பாள்.
ஒருவாறு தேநீர் தயாரித்து ஆச்சிக் குக் கொடுக்கவும் தாய் மறுபடி கூப்பிடவும் சரியாக இருந்தது.

Page 8
Lւգ. 2
'வீட்டுக்கு பின்னாலை இரு க் கி பழைய குப்பைகளுக்கு நெருப்பு லை சிட்டுபோ, மகன்'
O O
குணம் குப்பை குவிக்கப்பட்டிருக்கு இடம் நோக்கிச் சென்றான்.
மாமரத்தின் கீழே குப்பைக்குன்று முன்னாலே சென்று குந்தியவன் பைக் குவியலை உற்றுக் கவனித்தான்
இலை குழைகளின் மேலாக கட்ே றும்புகள் வருவதும் போவதுமாகக் கான LJETL GOT.
சிறுவயதிலே அவன் எழுதிய கவி ஒன்று நினைவுக்கு வருகிறது.
"எறும்புகளே எறும்புகளே எங்கே நீர் செல்கின்றீர்? நிரையாக நிரையாக நேர்கோடு சுவரிட்டு விரைவாக விரைவாக எங்கே நீர் செல்கின்றீர்?
குறும்புசெயும் என் தம்பி வருகின்ற நேரம் பார்! கருணையின்றி உம்மையெலாம் நசித்திடுவான் பாவம், நீர்"
"ஐயோ குப்பைக்குத் தீ வைத்த இந்த எறும்புகளும் செத்துவிடுமே.சு. லையில் கணப்பொழுதில் கருகிச் சா லாகி விடுமே ஐயோ அம்மா.எப்படி ல்லாம் துடிதுடிக்குமோ?."
- என்றெல்லாம் எண்ணிக் கவலை மூழ்கினான் குணம்.
குப்பையைக் கொளுத்த முடியாது,
எறும்புகளைக் கண்டால் இனிப் போடுவது என்பது அவனது சிறுவய பழக்கம் மட்டுமல்ல.
இந்தக் கஷ்ட காலத்திலும் - ஏன் ே றுங் கூட - சீனியை எறும் பு ப் புற்று

T 6)
LћLI யெ
916) 1
புப் துப்
நற் க்கு
மேல் கொட்டிவிட்டுத் தாயிடம் ஏ ச் சி
வாங்கியிருந்தானே அவன்.
குப்பையைக் கொழுத்தாமல் வீட்டிற்
குள் சென்று விட்டான் குணம்.
O Ο
பின்னேரம் ஐந்துமணியிருக்கும். சடுதியாக மூன்றுபேர் வீட்டுக்கேற் றினை இழுக்கின்றனர்.
பதட்டத்துடன் எழுந்துசென்று கேற் றினைத் திறக்கிறாள் தங்கம்.
அவர்கள் முதலில் ஏதோ விசாரித்து விட்டுப் பின்னர் வீட்டிற்குள் இருப்பது யார்? என்று அதட்டிக் கேட்பது குணத்திற் குத் தெளிவாகக் கேட்கிறது:
தயங்கியவாறு அவர்களை நோக்கிச் செல்கிறான் குணம்.
அவர்கள் கதைத்ததெதுவும் தங்கத் திற்கு விளங்கவில்லை : - - குணம் பலத்துக் கூறியது மட்டும் அவ ளுக்கு விளங்கியது:
*நான் இவர்களுடன் சென்று பெயர் பதிந்து விட்டு உடனே வாறன்"
O Ο
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.
அயல் வீட்டார் வேலியினால் எட்டிக் கூப்பிட்டு தங்கம்மாவிற்கு ஏதோ சொன் GOTITrig; GF .
எதையும் விளங்கிக் கொள்ளும் நிலை யில் அவள் இல்லை.
எதனாலோ இனம் புரியாத வேதனை நெஞ்சில் படபடப்பு.
சற்றுத் தொலைவில் ஏதோ வெளிச் σειρ.
காற்றில் கலந்துவரும் ஒருவித மணம்
ஒரு தடவை கார்த்திகை விளக்கீட்டு வேளையில் வேடிக்கையாக மகன் டயர் ஒன்றினைப் போட்டுக் கொளுத்தியபோது எழுந்த மணத்தினை தங்கத்திற்கு நினை வுப்படுத்துவது போலிருந்தது, அது

Page 9
Լւգ. 2
 ெக  ைல யு ண
தன் பெண் டா
அவன் தின்ன
@
 

6T 66. D 6T to
函rā5Gar
போய் விழுங்கள் கடலில் ܢ ܢܝ . என் மனதில் குடியிருந்த தும்பியே, புழுவே, விழுந்து இறவுங்கள் நெருப்பில், கொன்றுவிட்டார் என் மனதை இலையாய், பூவாய், குருத்தாய், என் மனது
செத்துச் சுடு வெயிலில்!
என் மனதை வெட்டியவன், ட்டியை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். அவளை யும் வெட்டுவான் குத்துவான், குடைவான், துண்டு துண் டாய் உடம்பை
அரிவான்.
தொப்புளைத்
துளைப்பான். அவளை அப்படியே அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டி வறுப்பான்.
என் மனதை வெட்டியவன், தின் பிள்ளையை பச்சையுடன் தின்பான்,
ாது போனாலும் அவன் பிள்ளை ஒருநாளும்
நிம்மதியாய் இராது
கூனா கி இடறும்.
ழங்கால் வரைக்கும் அவிந்து புழுத்தெறித்து
தவளைபோல் துள்ளும்
argör LD@rsh ー வானத்தை விழுங்கக் கனவு கண்டு நாளும் புதுப் புதுக் குருத்தாய் கக்கி வளர்ந்த என் மனம் - ஆம், கொலையுண்ட
சந்திப் பூவரசு
7-8 - 92

Page 10
O
է 1ւգ 2
விடுதலை வேண்டினும்
அ. சங்கரி
6765Fಷ್ರ! ஒராயிரம் சிறகுகளை விரிக்கவும் விண்ணிற் பறக்கவும்
ਸੰਫਫ
நட்சத்திரங்களையும்
சூரியனையும் தொட்டுப் பார்க்க அவாவிற்று என் ஆன்மா
பூமியின் பரப்புக்கு
அப்பால்
"ஸ்பேஸ் ஒடிசியின் விண்கலம் போலு எல்லையின்றிச் சூழலவும்
6 .
வானிற் பறக்கும் புள் எல்லாம் நானாக மாறவும் எண்ணினேன்
ஆனால் -
காலில் பிணைத்த இரும்புக் குண்டுகள் அம்மியும் பானையும் தாலியும் வேலியும்
நிலத்திலும் நிலத்தின் கீழே பாதாள இருட்டிலும்
அழுத்தும்
நன்றி சொல்லாத சேதிகள்

மு. மேத்தா
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்
நன்றி கண்ணிர்ப்பூக்கள்
மார்ச் எட்டு சர்வதேச பெண்கள் தினம் ஆண்வழிச் சிந்தனைகளால் உருவாகி இறு கிப் போன சமூக அமைப்பு இது. இதில் பெண்கள் தமது எல்லாச் சுதந்திரங்களை யும் இழந்து அடிமைகளாக (அப்படி அடி மைகளாக இருக்கிறோம் என்பதை அறி யாமலேயே) வாழ்ந்து வருகிறார்கள் இந்த சமூக அநீதியைச் சுட்டிக்காட்டி பெண்க ளின் விடுதலையைக் கோரி நிற்பதே பெண் நிலை வாதமாகும். பெண் ஆணுக்கு எந்த வகையிலும் குறைந்தவள் அல்ல என்பதை தெளிவுற நாம் மனித குல வரலாற்றிலி ருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. அப்போதுதான் ஒவ்வொரு வரலாற்று வளர்ச்சிக் கட்டத்திலும் எப்படி ஆணின் கை மேலோங்கியது எப்படி பெண் அடுப் படிக்குப் போனாள் என்பதெல்லாம் தெளி வாகும். ஆதலால் தம் கண்முன் நிலவுகிற இன்றைய சமூக அமைப்பை மட்டும் மன தில் வைத்துக் கொண்டு மேலோட்டமா கவே சிந்திக்கும் இன்றைய எமது பெரும்
பாலான டெண் சளுக்கு இப்டெண் ணிை வாத கருத்தோட்டங்களை உள்வாங்குவ தும் புரிந்துகொள்வதும் அவ்வளவு சுலபத் தில் இயலக் கூடிய காரியம் அல்ல . எனி னும், ஒரு சிறு வட்டத்துக்குள்ளேனும், இச் சிந்தனை வேரூன்ற ஆரம்பித்துள்ளது.

Page 11
இன்றைய ஈழத்து இலக்கியம் என்பது முயற்சிகளையும் உள்ளடக்கியதாகவே உசி மதிப்பீடுகளும் இடம் பெற வேண்டியது அவ்வகையில் மேற்கு நாடுகளிலிருந்து சஞ்சிகைகள் பற்றிய ஓர் அறிமுகதொடரா:
"இவை என் முகத்தின் சில பக்கங்கள், பதிவுகள் நினைவுப் பரணில் இருந்து
என்ற 'என்னுரை' யுடன் அண்மையில் வெளிவந்துள்ளது பிரான்சில் புகலிடம் தேடி வாழும் கி. பி. அரவிந்தனின் இரண்டா வது கவிதைத் தொகுப்பான முகங்கொள் (நவம், 92 )
"என் முகத்தின் சில பக்கங்கள் என்று கூறப்பட்டாலும் இங்கு ஒரு அரவிந்தனின் முகம் மட்டுமல்ல. பல அரவிந்தர்களின் முகங்கள் ஒரு அரவிந்தனின் பதிவுகள் மட் டுமல்ல, பல அரவிந்தர்களின் பதிவுகள் அதாவது தனிமனித அனுபவம் சமூக அனு பவமாகியுள்ளது எனலாம்.
மூவகை அனுபவங்கள்-யாழ்ப்பாணம், தமிழகம், பிரான்ஸ்,இங்கு பேசப்படுகிறன.
இங்கு பேசப்படும் யாழ்ப்பாண அணுப வங்கள் வழமைபோல் யுத்த அழிவுக
ஷ்டங்கள் பற்றியவை அல்ல. விடுதலைப்
 

65T மு க ங் கொள் அபிமன்யு
2%)
புலம் பெயர்ந்து சென்றோரின் இலக்கிய
rளது. எனவே அவைபற்றிய அறிமுகமும் ம் அவசியமென எ தி ர் பார்க்கின்றோம்.
வெளியாகும் ஈழத்தவரின் நூல்கள், இப்பகுதி அமையும்.
போராட்டத்தின் தோற்றம், வளர்ச்சிப் போக்குப் பற்றியவை: கவிஞன் நோக்கி லான விமர்சனங்கள் அவை,
இடைக்காலத்து தமிழக அனுபவங்கள் சொற்பமே. நன்றியுணர்வு கலந்தவை அவை
புகலிட அனுபவங்கள் பன்முகப்பட் டவை பிரிவுக் கொடுமை, நிறவெறி, அந் நியம், இயந்திரவாழ்வு, (நம்மவர்) சாதி வெறி, பண்பாட்டுச் சீரழிவு முதலியன ତ୍ରି, JIT 5.
இத்தொகுப்பின் தனித்துவம் - சிறப்புஎன்ன? அது; அனுபவங்கள் கவிதா அனுப வங்களாகியுள்ளமையே நீண்ட நாட்களின் பின் கவிதை' களைத் தரிசிக்க முடிகிறது.
"காற்றும் நெருப்புமாய் வாழ்வும் இறப்பும். கரைந்துருகும் மனிதம் உயிர்த்துளிகளாய்த்
கந்தகப் பூமியின்
வெக்கையின் வீச்சம்,
காற்று சுழல்கின்றது

Page 12
12
L9.
சருகுகள் பறக்கின்றன சாசரத்த இரைச்சலுள் கற்பகத் தருக்களும் முறிபட்டு வீழ்கின்றன:
என்பது தொடக்கம்,
'நிழலும்
குறுகிக் கரையும்
பார்வை தாழ நெஞ்சுக்குள் சுசும். கறுப்பிலும் மாற்றுக் குறைந்த
பூனைக் கண்கள் உரிக்கும், எலும்பு மச்சைக்குள்ளும் Ցյլքn 6չյւՒ .
இரத்தம் கறுப்பாய் இல்லையோ? இகழ்ச்சி கொப்பளிக்கும்"
என்பது வரை:
'வெளிக்கிட்டாயிற்று
நில் என்பார் எவருமிலர் செல் என்கின்றது காற்றும் முகத்திலடித்தபடி. பனங்கருக்குச் சிராய்ப்பினால் காப்ச்சுப் போன நெஞ்சாங் குழி. நெஞ்சுக்குள் சரசரக்கும் பனைமரவெளி
என்பது தொடக்கம்
'மலர்கள் தூவிய
பீடங்கள் ஒவ்வொன்றிலும் கூர் வாள் உயர்த்திய வீரரைத் தாங்கும் பாயும் புரவிகள் . தேசங்கள் வென்றவர் சிலையிலும் முறைப்புடன் தீப்பற்றும் குரல்களால் செவிகளில் அறைவர் 'வெளியேறு!!

சிலைகள் உயிர்க்கும் வாள்முனை மினுங்கும் தாயகம் துறந்தவனே உனக்கு ஏது இருப்பிடம்?.
என்பது வரை அனுபவங்கள் கவிதா அணு பவங்களாகியுள்ளமையைக் காணலாம்.
சந்தமும், எளிமையும், கட்டுக்கோ " பும் இயல்பான படிமங்களும் அமைந்த புதுக்கவிதைகளையும் நீண் ட காலத்தின் பின் தரிசிக்க முடிகிறது.
பழமொழிகள் ஆங்காங்கே கச்சிதமாக வந்து விழுகின்றன, ஏனைய கவிஞர்களது கவிதைகளை விட, எ - டு (பாலுணாெ வெளிப்பாடு பற்றி):
"கும்பி கூழுக்கழ
கொண்டை பூவுக் கழுத தாம் இது
துெ எதற்கமுகின்றது இடம் வலம் தெரியாத இடத்தில்"
"முகங்கொள் என்ற தலைப்பே கவி ஞனின் கவிதா ஆற்றலை உணர்த்தி நிற் பதைக் காணலாம்.
அது இடர்களை முகங்கொள், கஷ்ட ங்களை முகங்கொள், உண்மையை முகங் கொள், நம்பிக்கையுடன் முகங்கொள், காலத்திற்கும் இடத்திற்குமேற்ப முகங் கொள், பல்வேறு - கோபம், ஏக்கம் ஏமாற் றம் என- முகங்கொள் என்றவாறு பற்பல பரிமாணங்களைத் தரும் அர்த்த புஷ்டி பொதிந்த தொடர் அல்லவா? தொகுப்பின் உள்அடக்கத்தின் அடிநாதமே அவைதான்!

Page 13
II q. 2
13
இந்திய சிற்ப ஓவியக் ಹಾ।
இந்தியாவில் பண்டைய காலத்திலிரு ந்தே படைப்பாளியின் வெளிப்பாட்டிற்கு ஊடகங்களாய் களிமண்ணும் கருங்கற்க ளும் பயன்படுத்தப்படும் மரபு இருந்து வந் துள்ளது. இம்மரபால் தோன்றிய பிரமிப் பூட்டும் கற்கோயில்களிலிருந்து ஐயனார் சுடுமண் சிற்பங்கள் வ  ைர பெரும்பாலா னவை மதத்தை அடிப்படையாகக் கொண் டவை. ஆனால் இன்றைய சென்னை இயக் #š566) (Madras movement) (Lpáj, GULUL DIT GOT வரும் சென்னையிலும் இலண்டனிலும் ஒவியத்தை வரண் முறையுடன் பயின்றவ ருமான C. தட்சணாமூர்த்தியின் படைப் புகள் அவ்வாறல்லாமல் மனித உணர்வுக ளுடன் தொடர்புடையன. தட்சணாமூர்த் தியின் பழைய ஊடகத்துடனான புதிய அணுகு முறையின் விளைவே இன்றைய அவரின் படைப்புகள் எனலாம்.
1945 ல் தமிழ் நாட்டிள்ள கூடியார்த் தத்தில் பிறந்த C. தட்சணாமூர்த்திக்கு சிறுவயதிலிருந்தே ஒவியத்திலார்வம் இரு ந்தது ஆரம்ப காலங்களில் அவரின் வீட் டின் அருகாமையிலிருந்த குயவர்களின் பட் பொம்மைகளாலும், கிராம எல்லைகளிலும் வாசல்களிலும் உள்ள கிராமிய தெய்வவு ருக்கள், ஐயனார் சிலைகள், ஐயனார் குதி ரைகள் என்பவற்றால் கவரப்பட்டார் பள் ளிப் படிப்பின் போதே உருவமாக்கலிலும் நீர்வர்ண படவாக்கத்திலும் துணிச்சலு உன் ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் யப்பானிய பதிப்போவியங்கள், ஆபிரிக்க சிற்பங்கள், இந்திய சு வ ர் ஒவியங்கள் ஐரோப்பிய சிற்பங்கள் என்பவற்றை மீண் டும் மீண்டும் பார்க்க முடிந்தது. பின்ன 60 களில் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பயிலும் போது உலகின் முக்கிய படை பாளிகளின் படைப்புகளைப் பார்க்க முய ந்தது. இவை அவருள் பாதிப்பை ஏற்ப த்தியது.

லஞர் சி. தட்சணாமூர்த்தி
தா. சனாதனன்
1960 இல் சென்னை ஓவியக்கல்லூரி யில் பயிற்சி பெற்று வெளி வந்த இவருக்கு அன்றைய கல்லூரி முதல்வரும் சென்னை ஒ வி ய இயக்கத்தில் முன்னோடியுமான பணிக்கரின் (K.C.S. Pantker) ஊக்கமும் நடத்தையும் ஊக்கமளிப்பதாய் அமைந்தது அதுவே சோழமண்டல ஓவியகிராம உரு வாக்கத்தில் தட்சணாமூர்த்தியையும் ஈடு படுத்தியது எனலாம்.
சோழமண்டல கிராம வாசியாக இரு ந்தபோதே சுடுமண் சிற்பங்களில் முதல் முயற்சியை மேற்கொண்டார்.
ணின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும் Sy Y tS S S S 0 T00 தன்மையும் அவர் நினைத்ததை 6) հյ6յիլն படுத்த முடிந்தது. இதனால் தன்னைப் பொறுத்தவரையில் தனது வெளிப்பாட்டி ற்கு சுடுமண் சிற்பங்கள் கூடிய சுதந்திரம் தருவதாக கருதும் இவரின் படைப்புகள் பொதுவாய் உணர்வுகளை வெளிப்படுத் தும் மனிதவுருக்கள் .
களி மண்ணின் உடையும் தன்மையும் கருங்கல்லின் கடின, தன்மையும் 1987 ல் சோழமண்டல ஒவியர் கிராமத்தில் நிக ழ்ந்த சர்வதேச சிற்ப கலைஞர்களின் முகா மில் தட்சணாமூர்த்தியை கருங்கல்லில் படைக்கத்தூண்டின. அன்றிலிருந்து தொட ர்ந்து கருங்கல்லில் படைத்து வருகிறார். கல்லைப் பார்க்கையில் அது தன்னுள் எழு ப்பும் உணர்வையே உருக்களாக அ தி ல் குறைக்கழித்தலுடன் சிற்பமாக (მე-16iჩ|''}L_j டுத்துகிறார். கல்லின் பெரும் பகுதியை தக்கவைத்து சிறிய பகுதியை அகற்றி அவ ற்றுள் மறைந்துள்ள உருக்களை கொணர்ந்துள்ள அவரின் படைப்புகளில் இதனால், ஆரம்ப கல்லில் உள்ள நெழிவு கள், வெட்டுகள் என்பன பிரக்ஞையுடன் இடம் பெற்று விடுகின்றன. ஒர் | 15,5) LL'

Page 14
படி 2
14
பாளி சூழலால் பாதிப்புறல் தவிர்க்க மு யாதது, எனது சூழல் மற்றெல்லாவற்ை யும் விட மனிதர்களே அதிகம் காண டுகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ே மும் மாறுபடும் உணர்வுடனும் வெ6 பாட்டுடனும் இருக்கிறார்கள். அவர்கள் யும் அவர்கள் உணர்வுகளையும் நா படைக்க முயல்கிறேன். இவ்வாறிருக் யில் இயற்கைக்காட்சியையோ, அரூர் தையோ, நில உருக்களையோ நான் ஏ படைக்க நாட வேண்டும்? என வி வெழுப்புமிவர் படைப்புகளில் பெரும்பா னவை பல்வேறு உணர்வுள்ள முகங்களு அரைவுருக்களும்,முழுவுருவங்களும் அல் உருவங்களின் கூட்டமும் ஆகும். இவ்வு களின் குறுகிய நெற்றியும், மடிக்கப்பட அவயவங்களும் வேகம் மி க் க கரங்களு உயிருள்ள கண்களும் மட்டுமன்றி அ4 றுடன் ஒன்றிணை யும் அலங்காலவுருக் உள் வெட்டுக்கள், விலங்குகள், பறவைக தாவரங்கள், இவை எல்லாம் ஒன்றிை ந்து அவர் உள்ளுணர்வை படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
"வன்மையான கருங்கல்லிலும் இே வான களியிலும் படைத்தலுக்கு அதிக வித்தியாசமில்லை, ஆனால் களியில் செ முடியாத சிலவற்றை கல்லில் செய்ய மு கிறது. உதாரணமாக உளியால் ஏற்ப தப்படும் வெட்டுக்கள் புள்ளிகள், கோடு என்பன" என்று கூறும் தட்சணாமூர்; பெரியதும் சிறியதுமாய் நூற்றுக்கும் ே பட்ட சிற்பங்களை ப் படைத்துள்ளார்
சிற்பம் மூலம் இந்திய கலைச்சூழ நிலைத்துவிட்ட இவர் தன்னை அடிப்பன் யில் ஒவியர் என்றே கூறிக் கொள்கிற எனினும் அவருடைய ஒவியங்களை ெ சிற்பங்கள் சக்தி வாய்ந்தவை. ஒவியங் லும் ஓர் வகை சிற்ப தன்மையுடன் ங்கார தன்மையும் காணப்படுகிறது : ளுணர்வின் உந்துதலினாலேயே அலங் ரங்களையும் நிறங்களையும் பிரயோகி

LAD
5 ア f
5) பத் ডেটা।
STIT
ம் ,
து ருக்
ரும் வற்
|fმმჭე
தாய் கூறும் இவரதுஒவியங்களில் வெள்ளை நிறப்பாவனையும் எ தி ர் வர்ணங்களின் பாவனையும் அதிகமாயுள்ளது. ஒவியத்தி லிருந்து பெற்ற பாதிப்பை சிற்பத்திலும் சிற்பத்திலிருந்து பெற்றதை ஒவியத்திலு மாய் தொடர்ந்து படைத்து வருகிறாா. ஒவியமோ சிற்பமோ எதிலும் நான் முன் கூட்டியே எந்தப் பொருளையோ, குறிக் கோளையோ கொண்டு படைக்கத் தொடங் குவதுமில்லை. எந்த தத்துவத்தையும் வெளி க்கொணர முயல்வதுமில்லை. எனது உண ர்வையே இவ்வூடகங்களினூடு வெளிக் கொணர விரும்புகிறேன். இதன் விளைவே மனித உருக்களும் அசைவுகளும் அவற்றின் அழகும்" என்னும் தட்சணாமூர்த்தி படை ப்புகளுக்குத் தலைப்பிடல் என்பது பார்வை யாளனின் வசதிக்கே" என்கிறார் .
"நான் சுதந்திரமானவன். எல்லா ஊட கத்திலும் என்னை வெளிப்படுத்த விரும் புகிறேன்" நீண்ட நாள் ஒர் ஊடகத்துட னான தொடர்பு தன்னைச் சலிப்படைய செய்வதாயும் கூறும் அவரின் சிற்பங்களில் மனித உருக்கள் மட்டும் நிலைத்த பொரு ளாய் உள்ளன. உலோ கத் தி லும், வெண்களியிலும் (செரமிக்) பதிப்போவியத் திலும் குறிப்பிடத்தக்கள விற்கு படைத்து ள்ள தட்சணாமூர்த்தி தற்போது சென்னை கலை மற்றும் கைவினைகள் கல்லூரியில் விரிவுரையாளராயுள்ளார். உல கி ன் பல பாகங்களிலும் இந்தியாவின் முக்கிய நகர ங்களிலும் பல சிற்ப ஒவிய கண்காட்சி கள் நடாத்தியும் பங்கு பற்றியும் உள்ளார்.
'அன்று வரலாற்றில் நிலைத்து விட்ட மகாவலிபுர சிற்பங்களையும் ஏ  ைன ய கோயில் சிற்பங்களைப் படைக்க முடிந்தது. அதே போல் இன்றைய காலத்து மகாவலி புரத்தை நாம் ஏன் ப  ைடக் க முயலக் கூடாது என்று வினவுவதோடு இப்பேற் பட்ட நிலையான படைப்பிற்காய் சதா முயன்று கொண்டிருக்கும் இத்துடிப்பு மிக்க கலைஞனின் தேடல் தொடர்கிறது.

Page 15
utg. 2
5
ம ஹ ப n ர த த்  ைத
மகாபாரதத்தை பேராசிரியர் வைய புரிப்பிள்ளை ஒரு வளர்ச்சி இதிகாசம் என் கிறார்.
வளர்ச்சி இதிகாசம் என்றால் என்ன
ஒரு கதை காலப்போக்கில் இதிகா முறையில் வளர்ந்து வருவது. காலத்துக்கு காலம் பலரால் அக்கதை சொல்லப்பட்ட ருக்கும். ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு விடயம் சேர்க்கப்பட அக்கதையும் சம் வங்களும் மெல்ல மெல்லப் பெருகி ஒ( முழு நிலையை அடைந்திருக்கும். முழு நிலையை அடைந்ததும் அதன் வளர்ச் நிறைவெய்தியிருக்கும். இது இராமாய ணத்திற்கும் பொருந்தும்.
படிப்படியான வளர்ச்சி நிலையை அறி யாது; ஆரம்பத்திலேயே இப்படித்தான் இருந்தது என்ற முடிவுக்கு வருவது இ! காசங்களை விளங்கிக் கொள்வதில் ப குழப்பங்களை ஏற்படுத்தும்.
இதிகாசங்களை சரித்திரமாக நம்புவ: பாமரத்தனமாகும்.
மஹாபாரதத்தின் மூலமொழி சம6 கிருதம். இது ஒரு லட்சம் சுலோகங்களா? ஆக்கப்பட்டது. உலகத்தில் மிகப் பெரி தொகுப்பு இது கிரேக்க ஆதிகாவியங் ளான இலியட், ஒடிஸியை விட எண்ப, மடங்கு பெரியது.
மகாபாரதக்கதையின் மூலக்கரு கி. 1500ம் ஆண்டில் கதைப்பாடல் வடிவி பாடப்பட்டது. குரு வம்சத்தில் தோன்றி இரு கிளையான கெளரவருக்கும் பாண் வருக்கும் இடையே நடைபெற்ற போட் யும், பிரமாண்டமான குருஷேத்ர யுத் மும்தான் கதைப் பாடலின் கரு, ஹஸ்தின புரத்தையும்,குருஷேத்ரத்தையும் காட்டு இடங்கள் இ ன் று ம் இந்தியாவிலுண் பாரதத்தில் குறிப் பி ட ப் படும் வி
 

ப் புரிந்து கொள் ஞ த ல்
到
கலாநிதி. சி. மெளனகுரு
யம் சம்பந்தமாக இன்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. பாண்டவர் வாழ்ந்த இடம் இது; சென்ற வனம் இது என்று மக்களால் இடங்களும் சுட்டப்படுகின்றன. இத்தனைக்கும் மேலாக இந்த இதிகாசம் இலங்கை, தாய்லாந்து போன்ற இடங் ளுக்கும் கடல் கடந்து பரவியுள்ளது. அங் கும் சில நிகழ்வுகள் சடங்கு ரீதியாக இடம் பெறுகின்றன:
மக்கள் மத்தியில் இக் கதைப்பாடல் மி சு ச் செல்வாக்குப் பெற்றிருந்திருக்க வேண்டும். இக்கதைப்பாடலிலிருந்து சர் என்பவர் - முனிவர் 24000 சுலோகங் களில் இதனை ஒரு கதையாக யாத்தார்.
வியாசர் மகாபாரதத்தின் ஒரு முக்கிய பாத்திரம். ஒருவகையில் இந்த இரு கிளை களினதும் மூல கர்த்தாவும் அவரே - மஹ" பாரதப்படி, "வியாசர்" என்ற பெயரில் பல சந்தேகங்களுமுண்டு. தொண்ணுாற்றொன் பது வீதமானோர் வியாசரை ஒரு முனி வராகவே ஏற்கின்றனர். ஆராய்ச்சியாளர் வியாசர் என்ற பதத்தை ஒரு ஆளாக அன்றி பாரம்பரிய தலைப்பாகவே (genetie title) கொள்கின்றனர். இதன்படி ஒருவரல்ல;பலர் என்பது இவர்கள் கருத்து அதாவது வியாசர் என்ற பெயரில் L3) si காலத்துக்குக் காலம் எழுதி முழுமை பெற்ற நூலே மகாபாரதம் என்பது இவர்கள் கருத்து.
வியாசரின் காவியம் மூலத்தில் "ஜெய' என்றே அழைக்கப்பட்டது. ஜெய என்றால் வெற்றி என்று அர்த்தம். பாண்டவரின் வெற்றியே அதன் கரு.இரண்டாவது நிலை யில்தான் ஜெய, என்பது பாரதம் என்று ஆகி; பெரிய கதை வடிவம் பெற்றதும் மகாபாரதம் என்று ஆகியிருக்க வேண்டும்:
வியாசரிடம் மகாபாரதத்தைக் கேட்ட வைஜம்பாயன முனிவர் ஜனமேஜய மக ராஜன் (பாரதப்படி இவன் பாண்டவர்

Page 16
Լ1ւգ 2
களின் கொள்ளுப்பேரன்) கூட்டிய சபையி விவரித்துச் சொன்னார் வைஜம்பாயன சொல்லு  ைக யி ல் மகாபாரதம் 500 சுலோகங்களாக விரிந்தது.
மிகப்பின்னால் மகாபாரதம் பிரய னம் செய்வதில் விருப்பமுடையவரும் மு: வருமான செளதியினால் செளனக மு வருக்கும் அவர் குழாத்தினருக்கும் உரை கப்பட்டது. அவ்வமயம் இது ஒரு லட்ச சுலோகங்களாக இன்னும் விரிந்தது.
இதிலிருந்து தெரிவது என்ன? 1) வியாசர் எனப் பெயர் குறிப்பிடப்படு பலர் ஆரம்பக் கதைப்பாடலில் இருந் கா லத் து க் கு க் காலம் இதை வளர்த்து முழுமையாக்கியுள்ளனர். 2) வைஜம்பாயனர் மேலும் வளர்த்தா 3) செளதி மேலும் வளர்த்தார். 4) அரசர்கள், முனிவர், மக்கள் முன் 6 லையில் இக்கதை உரைக்கப்பட்டு GI J - இவ் வகையில் ஒவ்வொருவரும் தத்த காலத்து நிகழ்ச்சிகள், அரசியல், தத்துவம் சமய வாழ்க்கை,கொள்கைகள்,கோட்பா கள், விழாக்கள், விரதங்கள் அனைத்ை யும் மகாபாரதத்தில் சேர்த்துக் கொன டனர். இது முற்றுப் பெற்றகாலம் கி 400 கி.மு 1500 தொடக்கம் கி பி 40 வரை என்பது ஏறத்தாழ 1900 வருட களை உள்ளடக்கிய பகுதி. 1900 வருட களாக ஒரு கதை மெல்ல மெல்ல வளர் தெடுக்கபட்டு மகாபாரதம் என்று தர பட்டுள்ளது.
1900 வருடங்கள் வாழ்ந்த மக்களி வாழ்க்கை முழுதும் அதிலுண்டு. இதனா தான் அது மனித குல உணர்வுகளை பிரதிபலிக்கிறது பகவத் கீதையும் இ வாறுதான் பிற்கால வாக்கில் அதற்கு புகுத்தப்பட்ட ஒரு தத்துவமாகும் மகி பாரதம் 18 பர்வங்களைக் கொண்டது
புகழ் பெற்ற நளன், அரிச்சந்திரன் யயாதி போன்றோரின் கதைகள் மாத்தி மல்ல 1900 வருடங்கள் வாழ்ந்த மக்களி கதைகளும் அதில் உள்ளன. 1900 வரு தத்துவ சிந்தனைகள் அனைத்தும் தரப்ப டுள்ளன,வேதகாலச்சிந்தனை உப நிடத களுக்கு எதிரான சிந்தனைகள் அனைத்து வருகின்றன. பகவத் கீதை இவற்றி கொடுமுடி சாந்தி பர்வத்திலே அரசிய அறம் கூறப்படுகிறது. அது ஒரு கால அர யல் அறமன்று. 1900 வருடங்கள வளர்ந்து வந்த அரசியல் அறம்,
 

-
வேதங்களைப் பற்றி வேதகால வாழ் க்கை முறைக்கியையப் பேசும் ஒருவர் மிகப் பிற்கால மனு தர்ம சாஸ்திர நெறிமுறை களையும் பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்வது?
சத்திரியனே நாட்டை ஆளவேண் டும் என்ற மனுதர்ம சாஸ்திரத்திற்கு மாறாக தேரோட்டி மகனான கர்ணன் அரசனாக்கப்பட்டதை எவ்வாறு புரிந்து கொள்வது?
ஒரு பெண் பல கணவன்மாரை மணந்து சமூக அவதூறின்றி வாழ்ந்ததையும்(திரெள பதிக்கு 5 கணவன்மார் குந்திக்கும் 5 கண வன்மார்) அவர்களே கற்பு பற்றிப் பேசு வதையும் எவ்வாறு புரிந்து கொள்வது? வில்லையும், கதாயுதத்தையும், சூலத்தை யும், கல், மரம் ஆகிய புராதனமான ஆயு தங்களை வைத்திருந்த இக் குலக் குழுக்கள் வியூகங்களை அமைத்து ஒரு வளர்ச்சி பெற்ற பெரும் யுத்தத்தை நடத்தியதை எவ்வாறு புரிந்து கொள்வது?
இவ் வினாக்களுக்கான விடைகளை, மகாபாரதம் பல் நூற்றாண்டுகாலமாக வளர்ச்சி பெற்று வந்த வளர்ச்சிக் காவியம் என்று விளங்கினால்தான் புரிந்து கொள்ள முடியும்.
புராதன காலம் தொடக்கம் வளர்ச்சி பெற்ற காலம் வரையுள்ள சம்பவங்களும், தத்துவங்களும், வாழ்க்கையும், கதைகளும் சங்கமிப்பதாலேயே மேற் சொன்னவை அனைத்தும் அதனுள் அடங்குகின்றன. (9)ւնւսւգ-ւն பார்த்தால் மகாபாரதத்தை மேலும் புரிந்து கொள்ள முடியும்
குலம் - குழுக்களாக வாழ்ந்த புராதன நிலை அழிந்து அரசு தேர்ற்றம் பெற்ற காலத்தை மகாபாரதம் உணர்த்துகிறது என்பர் ஆராய்வாளர், தர்ம புத்திரனே ஒரு இடத்தில் இனி கலியுகம் தோன்று கிறது நாம் வைகுந்தம் செல்வோம், என் கிறான். கலியுகம் அரசு தோற்றத்தின் பின் ஏற்பட்ட அநியாய யுகம்.
பாரதம் மானிடவியல், வரலாற்றியல் பின்னணியில் விளங்கப்பட்டால் மேலும் பல கரிய உண்மைகளைக் காணமுடியும், இவ் வகையில் இந்தியவியலில் றொமிலா தாப்பர், கோஸாம்பி ஆகியோரின் முயற் சிகள் குறிப்பிடற்குரியன கோஸாம்பியின் நூல் ஒன்று பண்டைய இந்தியா என்ற பெயரில் தமிழிலும் வெளியாகியுள்ளது.

Page 17
II q. 2
7
எழுத்தாளர் வ.அ.இராசா
எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம்.
(கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் நாவ லும் கால் பதித்தவர்:ஈழத்திலே உள்ள சிறு 1925ல் மூதூரில் பிறந்து அம்மண்ணிலேயே படி சார்பில் திருகோணமலையில் நடைெ
மனோ:- நீங்கள் எப்போது எழுத ஆரம் பித்தீர்கள். வ அ இ - நான் 1946ல் மட்டக்களப்பு அரசினர் பயிற்சிக் கலாசாலையில் இருந்த போது நண்பர் சிவசுப்பிரமணியம் மூலம் திரு. சித்திவினாயகம் அவர்களின் அறிமு கம் கிடைத்தது. அவர் நிறையப் புத்தகங் கள் வைத்திருந்தார் எனக்கு வாசிக்கக் கூடிய வாய்ப்பு வாசிப்பதில் எனக்கு ஏற் பட்ட ஆர்வம் தான் என்னை எழுத்தா ளனாக மாற்றியது. இக்கால கட்டத்தில் தான் எழுத ஆரம்பித்தேன்.
மனோ:- ஏன் எழுத வே ண் டு ம் என நினைத்தீர்கள். ஏதாவது கொள்கைகள் இலட்சியங்கள் இருந்தனவா?
வ.அ.இ- இல்லை, நானும் எழுதினால் என்ன என்று தோன்றியது எழுதினேன் அதே வேளை தமிழகத்தின் பிரபல எழுத் தாளர் புதுமைப்பித்தனின் ♔ഞകൃ5ഞ@് படிக்கும் போது அவர் திருநெல்வேலி சூழலை வைத்து கதை பண்ணுவது எனக் குப் பிடித்தது. எனக்கு மூதூர் சூழலை எழுத்தில் கொண்டு வரவேண்டும் என ஆர்வமும் ஏற்பட்டது எழுதினேன். மனோ- ஆரம்பத்தில் எழுதியது ாவல சிறுகதையா? அல்லது கவிதையா?
வ.அ. இ:- நான் முதலில் எழுதியது சிறு கதைதான். மங்கிய விளக்கு' எனும் த6ை ப்பில் எழுதினேன். அது மழையால் இழ ந்த காதல்" என பெயர் மாற்றப்பட்டு ஈழகேசரியில் வெளிவந்தது
 

த்தினத்துடன் ஒரு பேட்டி
ல் குறுநாவல், சிறுகதை என சகல துறைகளி கதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தககவா? கல்வி கற்றவர். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர், பற்ற பேட்டியினை இங்கு தருகிறோம்.)
மனோ?- நீங்கள் தொடர்ந்து நாவல் சிறு கதை இரண்டும் எழுதி வருகிறீர்கள். விமர் சகர்கள் உங்களது சிறுகதைகள் வெற்றி நாவல்கள் தோல்வி σταδι σημο τίτσι οι நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
வ. அ.இ- நான் இன்னும் நல்ல நாவல் எழுதவில்லை. மேலும் ஈழத்திலே நாவல் எழுதுவதறகான களம் இல்லை. நல்ல நாவ லைப் பிரசுரிக்க ஆட்கள் இல்லை நிற்பந்த ங்களுடன் நாவல் எழுதலாமா என்ன! இத் தனை பக்கங்கள் தான் எழுத வேணும் காதல் இருக்க வேணும் இப்படியான குழி லிலே எப்படி நல்ல நாவல் எழுதுவது? அண்மையில் இலங்கையில் பிரபல பத்தி ரிகை ஒன்றுக்கு காதல் இல்லாத நாவல் σταρ 6) அனுப்பினேன் அதை பிரசுரிக்காமல் காதல் கதை கேட்கிறார்கள் .
மனோ - நீங்கள் எழுத்தாளர் மட்டுமல்ல அன்று தொடக்கம் இன்றுவரை அசுர வாசி கனாகவும் இருக்கிறீர்கள். தமிழக எழுத் தாளர்கள் வாசகர்கள் ஈழத்து எழுத்தா வார்கள் வாசகர்கள் இவர்களில் எத்தகைய வளர்ச்சிப் போக் இனை கண்டீர்கள்?
霹 வ. அ.இ- தமிழக எழுத்தாளர்களை வாசக ர்களைப் பொறுத்த வரை அவதானிப்பு கூர்மை பெற்றுள்ளது: மனோ? ஈழத்திலே இத்தகைய ஆரோக்கி யமான நிலை இல்லையே ஏன்? வ. அ.இ- ஈழத்தில் நல்ல எழுத்தாளர்கள் இல்லை, தேசிப்பு இல்லை, வாசிப்பு இல்லை கலாபூர்வமான பார்வை இல்லை இதனாலே தான் இந்நிலை.

Page 18
rtg. 2
மனோ- தமிழக எழுத்தாளர்களில் 2 களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?
வ.அ.இ- இராஜநாரயணன் தொடர் கோணங்கி வரை பல எழுத்தாளர்கள் மனோ- ஈழத்திலே நீங்கள் மதிக்கின் எழுத்தாளர்கள்?
வ:அ. இ2- எஸ்.பொ. இலங்கையர் கே மருதூர்க்கொத்தன், எஸ். எல்.எம். ஹனி மனோ?- எழுத்தாளராக நீண்ட காலம இருக்கும் உங்களுக்கு பத்திரிகை தொ புகளும் நிறையவே இருக்கும். பத்திரி களைப் பொறுத்த வரை குழுஆக்கிரமி காணப்படுகின்றதே. இது பற்றி எ ன் நினைக்கிறீர்கள்?
வ. அ. இ:- இன்றல்ல, ஆரம்பத்திலிருந் இருக்கிறது. இலக்கியத்தில் ஒரு நசிவு' பட இந்நிலை காரணமாகிறது. இதன பல நல்ல எழுத்தாளர்கள் மறைக்கப்படுகி ர்கள். தகுதியற்ற சிலர் எழுத்தாளர்கள தங்களை இனம் காட்டிக் கொள்கிறார்க மனோ- விமர்சனத்தை விரும்பாத எழு தாளர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்? வ. அ. இ. - அவர்கள் இலக்கிய காரர்க அல்ல. இலக்கியச் செம்மைக்கு விமர்சன வேண்டும். ஆனால் விமர்சனம் நேர்ை யாக இருக்க வேண்டும்.
மனோ- இன்றைய நவீன இலக்கிய எழு தாளருக்கு ஏதாவது கூறவிரும்புகிறீர்கள வ. அ. இ. நவீன இலக்கிய வாதிகள் பழ தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும். பழ தமிழ் இலக்கியம் படிக்காதவர்கள் எழு 9in. LTTg5. மனோ- பழந்தமிழ் இலக்கியம் படிக் வேண்டும் என்பது சரி, பழந் தமிழ் இலச் யம் படிக்காமல் ஏன் எழுதக் கூடாது? அ படி எழுதுபவர்கள் எழுத்தாளர் ஆக மா LTröGrr? வ.அ.இ - பழந்தமிழ் இலக்கியம் படிக் தவர்கள் எழுதக் கூடாது. அவ்வளவுதா மனோ - சங்கீதம், நடனம் நாடகம் பண் வதனால் அவன் வரலாறு தெரியவேண்டு
 

L伝』
ன்ற
LIfr
தெரியாமல் பண்ணுபவர் பாமரத்தனமானவ ர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நீங்க ளும் இக்கருத்துடையவர்போலும் அப் படியானால் தங்களது கலை வரலாறே சரியாகத் தெரியாத சிலரால் தானே கிரா மியக் கலை வளர்கிறது, அவர்கள் கெை ஞர்கள் இல்லையா? வ. அ.இ. நான் அப்படிச் சொல்லவில்லை பழந்தமிழ் இலக்கியம் படிக்காதவர்கள் நவீன இலக்கியம் எழுதக் கூடாது என்று தான் சொன்னேன். மனோ:- நீங்கள் எழுத்தின் மூலம் இலக் கியப்பணி, சமூக சேவை செய்யலாம் என்று எண்ணுகிறீர்களா?
வ. அ.இ- இல்லை. மனோ- உங்களுக்கு ஈழத்திலே முற்போ க்கு எழுத்தாளர் என்று குறிப்பிடப்படுகி ன்ற பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத் தம்பி போன்றவர்களுடன் தொடர்பு இருந் தது, முற்போக்கு எழுத்தாளர்கள் எல் லாம் கொமினிஸ்ருகளா?
வ. அ.இ - ஒரு எழுத்தாளன் கொம்யூனி ஸ்ற் ஆக இருக்கலாம். ஆனால் கொம்யூ னிஸ்ற்காரர் எல்லாம் முற்போக்கு எழுத் தாளர்கள் அல்ல. ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கொம்யூனிஸ்ருக்கள் எல்லாரும் எழுத்தாளர் கள். தான் என்கிறார்கள். இதனாலேதான் எனக்கும் அவர்களுக்கும் கருத்து முரண் பாடு வந்தது. இவர்களிடமிருந்து வி ல கி விட்டேன்,
மனோ - நீங்கள் உங்களுடைய எழுத்தின் மூலம் கொம்யூனிஸ் கருத்துக்களை மக்க ளுக்கு கூறியுள்ளீர்களா? வ. அ.இ2- இல்லை அது அரசியல் வாதிகள் வேலை. நான் ஆபிரகாம் லிங்கனோ கால் மார்க்ஸ்சோ அல்ல. ஒரு சாதாரண எழுத் தாளன். மனோ - நீங்கள் தொடர்ந்து எழுதுவீர் g@rfr?
வ. அ.இ- எழுதுவேன் ஆனால் இனி சஞ் சிகைக்கோ பத்திரிகைக்கோ எழுதி அனுப்
(தொடர்ச்சி 20 ம் பக்கம்)

Page 19
II q. 2
19
Ce
இலக்கிய இரசிகர்களுக்கோர் எச்சரி
அண்மையில் நடந்த ஒரு புத்தக 6ெ எழுத்தாளர் ஒருவர் சொன்னார். 'புத் போன்றது' என்று. இலக்கிய இரசிகர்க போகும் போது கொஞ்சம் எச்சரிக்கைய பாட்டி மச்சான் முறை கொண்டாடினா QQT °芭。
இலங்கையும், துப்பறியும் நாவல்களு தெஹ்ரானில் உள்ள இத்தாலியத் து யாற்றும் பேராசிரியர் அஞ்ஜலோ மீஷல் என்ற பாரசிகப் பத்திரிகைக்கு அளித்த பிய மொழி ஒன்றுக்கு முதன்முதலில் (எட்டுச்சுவர்க்கங்கள்) என்ற கவிதை நூ சர்களின் துப்பறியும் துணிகரச்செயல்கள் ஐரோப்பிய துப்பறியும் நாவல்களின் தோ குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய துப்பறியு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது புதுக்கவிதையில் சிலேடை
மரபுக்கவிதையைச் சீரழித்த சிலேடை ஒரு உதாரணம்:
ஒருதையில் திருமணப் மறுதையில் குழந்தை இரு தைகளுக்கும் இ ஏதோ நடந்தது. இந்தப் புதுக்கவிதையில் ஒரு சொல் நாயக்கர் காலத்தில் நடைபோடத் தெ சிறையில் பிறந்த சினிமா
சிறையில் பிறந்த நாவல்கள், கவிை ளோம். அந்த வரிசையில் சிறையில் பிற எல்மாஜ்குனே துருக்கியில் சாதாரண 20 வது வயதிலே நாவல்கள் எழுதத் ெ கம் இந்தத் துருக்கி மண்ணில் என்று ம நாவல் ஒன்று துருக்கிமண்ணில் இருக்க, தையும் 18 மாதச் சிறைத்தண்டனையை மீண்ட இவன் சினிமாவைத் தனது போ

வளியீட்டுக் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய தக வெளியீடு என்பது பூப்பு நீராட்டு விழா ளே! புத்தக வெளியீட்டுக் கூட்டங்களுக்குப் ாக இருங்கள். இங்கு உங்களுக்கு மஞ்சள் குளிப் லும் கொண்டாடுவார்கள். மங்கல” மரபல்
தரகத்தில் கலாசார அதிகாரியாகக் கடமை பீமோண்டஸ் (50) அவர்கள் கேஹான்" பேட்டியில், பாரசிக மொழியிலிருந்து ஐரோப் மொழி பெயர்கப்பட்ட ஹஸ்தபெஹெக்ஸ்’ லில் இலங்கையைச் சேர்ந்த மூன்று இளவர பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுதான் ற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்று ம் நாவலின் தோற்றத்திற்கும் இலங்கைக்கும்
ஆச்சரியப்படத்தக்கதுதான்.
- புதுக்கவிதையையும் விடவில்லை என்பதற்கு
ம் நடந்தது. பிறந்தது. டையில்,
ஆங்கிலச் சொல்லாம் புதுக்கவிதை நவீன ாடங்குகிறதோ,
தகள், அரசியல் நூல்கள் பற்றி அறிந்துள் ந்த ஒரு சினிமாபற்றி:
குடும்பத்தில் பிறந்த ஒரு நாவலாசிரியன் தாடங்கினான். “பொதுஉடமை என்ற புதுயு லரும்' - என்ற கேள்வியுடன் முடியும் இவனது த் தகுதியற்ற கம்யூனிஸ்ட் என்ற பட்டத் பயும் இவனுக்குப் பெற்றுக் கொடுத்தது, சிறை ாட்ட ஆயுதமாக்கிக் 1970

Page 20
19
gaugir GTG.55 THEPOOR ONES, A துருக்கியை அதிர வைத்ததுடன் பாளி பயன் மீண்டும் சிறை. சிறையில் இரு கரித்து இந்தப் பாஸிஸ் ஆட்சிக்கெதிர ணிைலே தொடரும் எனச் சூளுரைத்தா ஸ்கிரிப்டை" எழுதினான். அது சிறைய நண்பர்களால் அவன் எழுதிய குறிப்பு வெளிவந்தது. THE WALL என்ற அந் னது பெயரைத்தாங்கியே வெளிவந்தது
களுக்கு முன்பே துருக்கிய இராணுவ அர திகம்பரக்கவிகள்
திகம்பரக்கவிகள் என்று தம்மை சொபண்டராஜி, ஜிவாலமுகி, பைரவ டளவில் ஆந்திராவை ஒரு கலக்குக் க என்ற மக்களிலக்கிய கதை மக்கள் ெ களது கவிதைகளை ஆபாசம் என்றும் சிறையிலடைத்தது இந்திய அரசு. சில டைந்த இவர்கள் கவிதைகள் விடுதை சில் பாதித்தது என்கிறார் தமிழ்நாட திகம்பர காவுலு வில்லிருந்து உதாரண
பாதிமரம் ஒரு துளி நிழல் தர காந்தி வழி ஒரு கரண்டிக் கஞ்சி
லந்தாண்டி இப்போ தெரு
இலங்கைத் தெருநாடகத்தின் (Sh கமா பல்கலைக்கழகப் பேராசிரியரான பொய்மை போலித்தனம் போன்றவற் ளுக்கு முன் இவர் தொடங்கிய தெரு பாடுகளைத் தகர்த் தெறிந்து நாடக அ லாத சாதாாண மக்களுக்காக நாடகப் ஒரு மணித் தியாலத்துக்குக் குறைவாக ஒரு நிகழ்ச்சியோ; இன்றைய நிகழ்வுகள் புதியதொரு நாடகத்தை உருவாக்க இ6 களில் உதாரணத்திற்கு ஒன்று.
ஐ. நா. உணவு விவசாயக் கழகப் வினர் உள்ளே புகுந்து அங்கேயுள்ள பு திருப்பதைக் கேலி செய்து ஒரு தெரு கம் இக்கருத்துக்களை ஏற்றுக் கொண் காலாண்டு இதழில் வெளியிட்டது
18ம் பக்கத் தொடர்ச்சி
புவதில்லை என முடிவு செய்திருக்கிறே சஞ்சிகையாளரோ பத்திரிகையாளரோ : னைக் கேட்டால் எழுதிக் கொடுப்பே மனோ- இன்றைய இளம் எழுத்தாள புளுக்கு ஏதாவது கூற விருத்புகிறீர்க வ. அ.இ- எந்த ஒரு எழுத்தாளனும் த
 

NXIETY, ELEGY என்ற மூன்று படங்களும் ஸ ஆட்சியாளர்களையும் பதற வைத்தது. இதன் ந்து தப்பச் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை நிரா ான எனது போராட்டம் இறுதிவரை இந்த மண் ன். இவன் சிறையிலிருந்தே ஒரு சினிமாவிற்கான பிலிருந்து பிரான்சுக்குக் கடத்தப்பட்டு அவனது க்களின் படியே படமாக்கப்பட்டு 1984 ம் ஆண்டு தப்படம் டைரக்டர் எழ்மாஜ்குனே என்ற அவ 1. இந்தப்படம் வெளிவருவதற்கு மூன்று மாதங் சு அவனைச் சிறையில் சுட்டுக் கொன்றுவிட்டது
அழைத்துக் கொண்ட நிகிலேஸ்வர், நக்னமுணி ப்யா, மஹாஸ்வரன என்ற ஆறுபேரும் 5ம் ஆண் லக்கிக் கொண்டிருந்தார்கள். ஜனபாதசாஹித்ய மாழியிலேபடைத்துக் கொடுத்தார்கள் இவர் தேசத் துரோகம் என்றும் கூறி இவர்களைச் மறக்கதவுகளை ஊடறுத்து மக்களைச் சென்ற லக்குப் பிறகு இந்தியர் முழுவதையும் ஒரு வீச் ன். இவர்களுடைய கவிதைத் தொகுதியான னமொன்று.
ിങ്ങെ',
ஊற்றவில்லை. நவில் வாராண்டி:
:et play) தந்தை காமினி - ஹேககொட்டுவெ
இவர் தெரு நாடகத்தின் மூலம் சமுதாயத்தின் றைக் கிழித்தெறிய முயல்கிறார் 17 ஆண்டுக
நாடகக் குழு மூடிய நாடக அரங்கின் கட்டுப் ரங்குகளுக்குச் செல்ல பணமோ, நேரமோ இல் நடத்தியது. இவர்களது ஒவ்வொரு நாடகமும் வே நடைபெறும் அண்மையில் நடைபெற்ற ளைப் பழைய கதைமூலம் விளக்கும் முயற்சியோ பர்களுக்கு உதவும். இக் குழு வினரின் சாதனை
நடத்திய ஒரு கருத்தரங்கின் போது இக்குழு ரதிநிதிகள் உயர்தர உணவுகளை உண்டுகளித் நாடகத்தை நடத்கினர். உணவு விவசாயக் கழ டு இந் நாடகத்தின் உரையாடல்களைத் தனது
– Glost (og
தனித்துவம் பேண வேண்டும்.தங்களுடைய சூழலை எழுத்தின் மூலம் வெளிக்காட்ட வேண்டும். தமிழகத்தில் புகழ்பெற்ற எழுத்
தாளர்களின் பெயரை இவர்கள் தம்முடை . Hങ്ങ് பெயராக கொள்ளக் கூடாதுgஈழத்து யாழ்பாணத்து. மட்டக்களப்பு. என்று
து பெயர்வைப்பதையும் தவிர்க்க வேண்டும்

Page 21
tuig
21
3FIT 3
நிமது காலத்தின் பிரபல நாவலாசிரி யரான விமல் மித்ரா தனது 79ம் வயதில் 1991ம் ஆண்டு காலமானார்.
இவர் ஒரு வங்காள நாவலாசிரியராக இருந்தும் இந்தியா முழுவதும் அறியப்பட் டிருந்தார். கல்கத்தாவில் காளிகட்டிற்கு அடுத்துள்ள கிராமத்தில் பிறந்தார். க ல் கத்தாவின் காதலன் என்று சிறப்பிக்கப் பட்டார். கல்கத்தா மாநகரை அ த ன் எல்லா நன்மை தீமைகளோடும் தனது நாவல்களில் சித்தரித்தார்.
ரவீந்திரநாத்தாகூர், பக்கீம் சந்திர சட்டர்ஜி, சரத்சந்திர சட்டர்ஜி ஆகி யோருக்கு பிறகு இந்தியா முழுவதும் அதிக மான வாசகர்களைக் கொண்டிருந்தவர் விமல் மித்ரா, தன்னை சுற்றியுள்ள மனிதர் களையும் அவர்களுடைய துன்பங்களையும் நிராசைகளையும் கலாபூர்வமாக சித்திரிப் பதில் அக்கரை கொண்டதுடன் அ தி ல் வெற்றியும் கண்டார்.
விமல் மித்ராவின் பாத்திரங்கள் நமது அண்டை அயலில் வசிப்பவர்கள் போல் பிரமையை உண்டாக்குவார்கள் அதற்கு காரணம் விமல் தனது சமகால மனிதர்
களை அவர்களின் நிறைகுறைகளோடு பாத்
திரமாகப் படைப்பது தான்,
அவருடைய பாத்திரங்கள் எல்லாம் கல்கத்தாவையோ காளிகட்டையோ சேர்ந் தவர்களாகவே இருப்பார்கள், கல்கத்தா விலோகாஸர் கோட்டிலோமனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் தான் அவர்களுடைய கனவுகளும் ஒரே மாதிரியானவை தான். அதனால்தான் அவருடைய பாத்திரங்கள்

நாரண நடையில் எழுதிய அசாதாரண எழுத்தாளர்
வி. ஆனந்தன்
பிரதேச, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லா வாசகர்களின் மனங்களிலும் இடம்
பிடித்துள்ளார்கள்.
சகேப் பீபீகுலாம் (பிரவுக்களும் பேரர் களும்) கடிதிய கின்லாம்(விலைக்கு வாங்கல்) ஆகிய நாவல்கள் மூலம் விமல் மித்ரா வங் காளத்தின் முதல்தர நாவலாசிரியராகப் பரிணமித்தார். ஜாகீர்தார்கள் பிரபுகளு டைய ஆடம்பர வாழ்வை சகேப்பீபீகுலாம் என்ற நாவலில் கலை அழகுடன் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அந்த பிரபுக்க ளின் குடும்ப உடைவையும் அழகாகச் சித் திரித்துள்ளார் விமர்சகர்கள் பலரும் இந்த நாவலை ஒரு மகத்தான படைப்பென க் கூறுகின்றனர்.
விமல் மித்ரா தனது 49 வயதில் தான் பார்த்த உத்தியோகத்தை ராஜிநாமா ச் செய்து விட் டு முழுநேர எழுத்தாளராக மாறினார். மாப்போசானுக்கு கிடைத்ததை போல விமல் மித்திராவுடைய ஒவ்வொரு துளிமைக்கும் பெரும் விலை கிடைத்தது.
சாதாரண மனிதர்களுடைய வாழ்வை சாதாரண நடையில் எழுதிய அசாதாரண எழுத்தாளராக அவர் படைப்புகளுக்கூடாக காட்சி தருகிறார்.
தம்மைச் சுற்றி இயங்கும் வாழ்வை கலை அழகுடன் எப்படி இலக்கியமாக்கு வது என்பதை வாசகர்களுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களுக்கும் விமல் மித்திரா கற் றுக் கொடுத்துள்ளார்

Page 22
| 1ід 2
22
ஒரு நூல் - இரண்டு வெளியீட்டு
ஒரு நூலுக்கு எத்தனை தடவையும் சலிக்கும் வரை) ஆனால் ஒரு தடவை த இது தான் இலக்கிய தர்மம்.
அண்மையில் ஒரு துறை சார்ந்த நூ நடைபெற்றது. முதல் தடவை யாழ்ப்ப டக்களப்பில், முதலாவது வெளியீட்டு ெ
யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் துரதில் சிரியர் சாதகமாக்கிக் கொண்டாரா? அல் விட்டாரா?. ஏதோ ஒரு தடவை சடங் நடப்பதுவும், சடங்காசாரம் இல்லாமல் 酚 நோக்கத்தில் ஒன்றுதான் - விளம்பரம்.
இளம்பிள்ளை வாதம்
இலக்கியம் என்பதற்கு பிரதேச வரைய கர்த்தா பிரதேச ரீதியாக பாகுபடுத்த கலை இலக்கிய முயற்சிகள் முனைப்பை புக்கள் நன்றிக்குரியவை வேதனைக்குரிய பிரதேசவாதம் கதைப்பதுதான்! "இவர் என் பிரதேசத்தவர்; எம் மண்ணின் பவர் அதனால் இவரை.
இந்நிலமை எமது இலக்கிய பார் 3
மட்டக்களப்பிலே அண்மையில் நடை
றிலே நாடகங்கள் எழுதுவது பற்றி ஒரு
"கடந்த தமிழ் தினப் போட்டியிலே தி நாடகத்தை மேடையேற்றியது இந்த ந தான் அந்நாடகத்தின் உத்தி, நடிப்பு, ! நாடகத்தில் தேர்ச்சி பெற்றவர் செய்தது என்றார்.
வேடிக்கை என்னவென்றால் இந்த விரி போல் கூறியதுதான். பார்க்காமல் இவர் இவரின் ஞான திருஸ்டி என்னே!.

ABANGUAS மை பார்த்தல் கு
鱷'烹.』
விழா
அறிமுக விழா நடாத்தலாம். (எழுத்தாளன் ான் வெளியீட்டு விழா இடம் பெற முடியும்.
லுக்கு இரண்டு தடவைகள் வெளியீட்டு விழா ாணத்தில் இரண்டாவது தடவைதான் மட் விழா விடயம் அனேகருக்கு தெரியாது.
ஸ்ட வசமாக துண்டிக்கப்பட்டிருப்பதை நூல" லது மட்டக்களப்பாரை மட்டமாக ড়ো ঠেটা ডেট্র্যােন্তী ாசாரங்களுடன் ஒரு நூலுக்கு வெளியீட்டு விழா ரு நூல் இரண்டு தடவை வெளியிடப்படுவதும்
பறை தேவையா? ஒருபடைப்பாளி, இலக்கிய ப்பட வேண்டியவனா? மட்டக்களப்பில் பல டந்துள்ளன. இந்த விடயத்தில் சில அமைப் விடயம் பரந்த இலக்கியம் பேசும் அனேகர்
மைந்தர் எம்மண்ணில் மலர்ந்து மணம் விக
வையை குறுக்குவதாக முடியாதா?
பெற்ற நாடகம் சம்பந்தமான நிகழ்வொன்
விரிவுரையாளர் குறிப்பிடும் போது,
நிலை நகரிலிருந்த ஒரு பாடசாலை சிறந்த ாடகத்தை ஒரு மாணவனே எழுதி தயாரித் பிரதியாக்கம், நெறியாள்கை இசை எல்லாமே போன்றிருந்தது. என்னைக் கவர்ந்துவிட்டது.'
வுரையாளர் நாடகம் பார்க்காமல் பார்த்தது
எப்படி கூறமுடியும்?
- சுந்தர்

Page 23
அழகிற் சிறந்த பவுண் தங்க நை
நம்பிக்கை நான
இவற்றிற்கு இல்
Ꮟ6ᏡᏰᎬ
39. பிரதான வி
s
క్ల్లో 0.65
With Best C
/ r o
el Murug
No, 19, U. D Mar BATTITT
 
 
 

ககளுக்கு நம்பிக்கையான இடம்
| UT
Turl Gbit so toll
ன்றே நாடுங்கள்
தி, மட்டக்களப்பு.
- 2 6 7 9
Ornpliments
韋
an Stores
. A. Building, ket, CALCOA
25°2

Page 24
3 est GPa
A.
!uam
R. KONESV)
S LI NELLINW,
TRINCO
BATTICA
pealers N.
PETROLEUM PRODU
A ND
| HOIST SERWICE STA
 
 
 

mp (imento
VARAN
I'll & W|\\
ROAD,
ALOA,
JCTS
TION
lill- ஆசிரியர் ୧୭ (4)',
அச்சகம் புனித செபத்தியார்
மட்டக்களப்பு