கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொந்தளிப்பு 1994.04

Page 1
மலையகப் பெண்களி
 

II Մեi: 1 -」
ன் நிலை மாறுமா ?
S S SLSLSLS

Page 2

இதழ் 42
சந்தா விபரம்
12 மாதம் ரூபா 60
6 மாதம் ரூபா 30
ஆசிரியர்:
மு. நேசமணி
தமிழ் மக்கள் துன் பம் தீராத தொடர்
கதைதானா?
இலங்கையில் தமிழர் க ள் குறிப்பாக வடகிழக்கு மக்கள் துப் பாக்கி வேட்டுகளினால் தங்கள் மாமூல் வாழ்க்கையை இழ ந் து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது, நாட்டின் ஏனைய பகுதி
களிலும் வெளிநாடுகளிலும் வாழும்
இலட்சணக்கான தமிழர்கள் இது பற்றி பெரிதாக அ லட் டி க் கொள்வதாகத் தெரியவில்லை.
தமாஷாக்கள் திருவிழாக்கள் திருமணங்கள் பிறந்த நாள் விழா க்கள் போன்றவற்றை முன்னரை விட வெகு சிறப்பாகக் கொண் டாடி மகிழ்கிறார்கள் - கூத்தடிக் கிறார்கள். வெளியில் வாழும் . த மி ழ ர் களி ல் பெரும்பாலோர் இனப்பிரச்சினைக்கு எங்கே தீர்வு வந்து விடுமோ - தாங்கள் மீண்டும் ஊருக்குப் போ ய் வயல் உழ வேண்டியதாகப் போய் விடுமோ
எனப்,
கொந்தளிப்பு

Page 3
பயந்து வாழ்கின்றனர். பிரச்சினை க்குத் தீர்வு, வந்து, விடக் கூடாது 6tat ചേit கிட்வுள்" சுட் டத்துக்கெல்ல்ாம் நீேர்த்திக் கடன்
வைக்கிறார்கள். " " .'
பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச் சினை தீர நோர்வே, போ ன் ற
நாடுகள் முன்னின்று உழைத்ததை
அறிவோம். அந்நாட்டில் பாலஸ் தீனர் எண்ணிக்கையைவிட அகதித் தமிழர்கள் அதிகம். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இன்று தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களால் ஏன் தாங்கள் வாழும் நாடுகள் மூலம் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி எடுக்க கூடாது? சென்ற இடங்க ளிலும் கூட பல்வேறு அமைப்பு ளாகப் பிரிந்து நின்று தங்களுக் குள் வேட்டுகளைத் தீர்த்து க் கொள்வதில் காட்டும் முனைப்பை இவ்வாறான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டும்.
大 半 大
எதிர்கட்சிகளைக் கூறு போட்டு சாதித்துக் கொள்வதில் ஐக்கிய தேசிய கட் இவர்களது பார்வை மலையகத்தின் மீது இப் போது விழுந்து வி ட் ட து. கூறு போடும் வேலையும் கனகச்சிதமாக நிறைவேறி வருகிறது. பதவிக்கும் பணத்துக்கும் இனத்தைக் காட்டிக்
தங்கள் காரியத்தைச்
யினர் கில்லாடிகள்!
ஆக வேண்டும்.
கொடுக்கும் கும்பல், உலகெங்கிலும் உள்ளதைப் போல மலையகத்தி லும் இருக்கத்தான் செய்கிறது :
விசயம் தெரிந்தவர்கள் மலையக
மக்களில் அக்கறை உள்ளவர்கள், தங்கள் மெளனத்தைக் கலைத்து, மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும். எங்கோ நடக்கிறது. எப்படியும் போகட்டும் நமக்கென்ன? என்று இரு க் கு ம் நிலைமையை நாம் மா ற் றி யே அங்கு உ ஸ் ள
என்னமோ
அகதி நிலைமை இங்கேயும் ஏற் பட அதிக காலம் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்.
x- 女 X
சந்திரிகாவிற்கு சபாஷ்!
தென் மாகாண சபைக்கு" நடந்த தேர்தலில் சந்திரிகா தன் னந் தனியாக எதிரிகளை சமாளி த்து வெற்றி வாகை சூடியுள்ளது ஜனநாயகத்திற்குக் கி  ைட த் த வெற்றி! போட்டி, பிளவு, குழப் பம் நிறைந்து கிடந்த எதிரணியில் நம்பிக்கை ஒளியூட்டுவதாக தென் மாகாண சபை தேர்தல் முடிவு களின் பி ன் ன னரி யி ல் சந்திரிகா தெரிகிறார். நாகரீகமான அரசியல் செய்து வரும் இவரது போக்கு தொடர்ந்தும் அவ்வாறே இருக்க, வேண்டும்.
கொந்தளிப்பு

தொண்டமான் - செல்லச்சாமி அடிதடியால் மலையக மக்களின் பிரச்சினைகள்
மறைக்கப்படுகின்றன
இறுதியாக நடந்த மாகாண சபைத் தேர்தலின் போது மலை யக மக்களுக்கு எதிரணியினர் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள் இ. தொ கா அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளை இயன்றவரை எடுத் துக் கூறினார்கள்: விழலுக்கிரைத்த நீராய் அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காய் முடிந்தது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவதைப் போல இப்போது ஐயோ ! ஐயோ ! என்று வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது என்ன பயன்?
தொண்டமானும் செல்லசாமியும் நகமும் சதையும் போல கடந்த ஐம்பது வருடங்களாகக் கூடிக் குலவி, மலையக மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு முற்று முழுதாக மலையக மக்களை அடகு வைத்து விட்டு பாகப் பிரிவினை என்று வந்ததும் இன்று ஒலமிட்டு ஒப்பாரி வைக்கின்றனர்.
முட்டை தாறது ! கொட்டை தாறது ! (தானியம்) என 77ல் கூறிய ஜே. ஆரோடு பின்னிப் பிணைந்தார்கள். ஜே. ஆர். ஒருவரால் தான் மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்றார் கள். கொட்டகலை பூரீபாத கல்லூரி திறப்பு விழா அ ன் று தா ன் "பூரீபாத’ என்ற சிங்களப் பெயர் வைக்கப்பட்டதே தொண்டமானுக்குத் தெரியும். பெயரை உடனே மாற்றுவேன் என்றார். இன்று இக்கல்லூ யே பறிபோகும் நிலையில் இருக்கிறது ? விகிதாசார தேர்தல் முறையைக் கொண்டு வந்த ஜே. ஆர். சிறுபான்மையினர் குறிப்பாக இ. தொ. கா வைச் சேர்ந்தவர்கள் மாகாண, பிரதேச சபைகள் பாராளுமன்றத்தில் இடம் பெற்றதும் இப்போது பழைய தொகுதிவாரி தேர்தல் முறை சாலச் சிறந்தது என்கிறார். என்னே இவர்களது நட்பு?
இவ்வளவு கால இ. தொ. கா. - ஐ. தே. க கொஞ்சலில் நாடற்ற வர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு பிரஜா உரிமை வழங்கப்பட்டு வாக்குரிமை பெற்று விட்டனர் என்பதைப் பெருமையாகப் பேசுகின் றனர், ስ
::::s
கொந்தளிப்பு

Page 4
வாக்குரிமை வழங்கப்பட்டதால் ஒரு சில இந்திய முதலாளிகள் பதவிகளைப் பிடித்தார்களேதவிர இலட்சக் கணக்கானத் தொழிலாளர் கள் அடைந்த நன்மை என்ன?
வடகிழக்கு மக்கள் அனைவருமே வாக்குரிமை உடையவர்கள் தான். இன்று பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நாட்டை விட்டே துரத்தப் பட்டுள்ளார்களே? வாக்குச் சீட்டு அவர்களுக்கு வாழ்வளிக்கிறதா? அடிப் படை உரிமைகள் மறுக்கப்படும்போது வாக்குச்சீட்டு நாக்கு வலிக்கவும் உதவTது.
ஜே. ஆர். போனார் பிரேமா வந்தார். உடனே இசைத்தட்டு மற்ற ப்பக்கம் மாற்றிப் போடப்பட்டது. ஆஹ்ா! இவரல்லவோ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் என்று கும்மாளமிட்டனர். பிரேமா காலத்தில் மலையக மக்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்த்து வைக் கப்படும். அப்படித் தீராது போனால் என்றுமே பிரச்சினை மாற ப் போவதில்லை என்றார்கள். அவரது இறுதிப் பயணத்தின்போது இரங்க லுரை நிகழ்த்தக்கூட தலைவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் பேரினவாதி களின் இரட்டைவேடம் தொடர்ந்தே வருகிறது. பழுத்த அரசியல்வாதி என தம்மைக் கூறிக் கொள்ளும் தலைவரே இதுபற்றி பத்திரிகைகளின் பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
தற்போதைய பெரியவர் இரட்டைவேடம் போடும் ஒருவரல்ல என் பதை அவரது பேச்சுக்களும் நடத்தைகளும் தெட்டத் தெளிவாக உணர் த்தி நிற்கின்றன. சொல்லிலும் செயலிலும் சிறுபான்மையினர்க்கு எதிரான கருத்துக்களை பகிரங்கப்படுத்திய பின்னும் எட்டி எட்டித் தள்ளினாலும் ஒட்டி நின்று உறவாடுவது மக்களைக் காக்கவா? நாயின்மீது ஒட்டிக் கொள்ளும் ஒட்டுண்ணி என காமினி சொன்னதை இன்னமும் உண்மை தான் என உணர்த்தவா?
எந்தக் காமினிக்கு ஆதரவாக செல்லச்சாமியுடன் பகைக்க நேர்ந் ததோ அதே காமினி இன்று அரசுடன், மலையக மக்களின் பிரச்சினைக ளுக்கு என்ன பரிகாரம் கூறுகிறார்?
தொண்டமான், செல்லச்சாமி குழாயடிச் சண்டை நாடே அறிந்து
கைகொட்டிச் சிரிப்பதால் நாமும் அது பற்றிய விளக்கவுரையை இங்கே எழுதத்தேவை இல்லை.
கொந்தளிப்பு 争

^ தொண்டமான் அவரது மகன் இராமனாதனை முதற்தடவை மாகா ணசபைத் தேர்தலில் நிறுத்தி கல்வி அமைச்சராக்கிய போதோ, பேரன் ஆறுமுகம் தொண்டமானை நிதிப் பொறுப்பாளராக நியமித்த போதோ சத்தம் போடாமல் இருந்துவிட்டு இப்போது லபோ, லபோ - என்று செல்லச்சாமி அடித்துக் கொண்டு தானும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டிருப்பது ஏன் என மக்கள் பரவலாகப் பேசுகிறார்கள்.
メ
இவர்களது சண்  ைடயி ன் மூலம் மலையகத்தில் விழிப்புணர்ச்சி ஒன்று தோன்றி உள்ளது என்றே கூற லா ம். தொழிலாளர்கள் இரு கூறாகப் பிரிந்து இருவர் பக்கமும் உள்ள நியாய, அநியாயங்களை மிக விஸ்தாரமாக அலசுகிறார்கள். அப்படியே நாட்டின் அரசியல் பற்றியும் அவர்களது விவாதம் தொடர்ந்து செல்கிறது.
இருசாராருக்குமே தங்களது தலைவர்களின் வண்டவாளங்கள் நன் றாகவே தெரிந்திருந்த போதிலும் வேறு வழி தெரியாமல் பக்கம் சார்ந்து நிற்கிறார்கள். சண்டைகள் ஓய்ந்து சமாதானமோ அல்லது நிரந்தர பிரி வுகளோ ஏற்பட்ட பின் இத்தகைய விவாதங்கள் விடை பெற்று விடும்: ஆனால் முடுக்கி விடப்பட்ட தொழிலாளர்களின் சி ந் த  ைன க ள் ஒயப் போவதில்லை; தாங்கள் சா ர் ந் து நின்ற தலைவர்களிடமே கேள்விக் கணைகளைத் தொடுக்க முனைவார்கள். அப்போது வெற்று வேதாந்தம் பேசி தொழிலாளர்களின் வாய்களை அடக்கி விட முடியாது.
எப்போதுமே மக்களை மடையர்களாக எண்ணியே பழக்கப்பட்டுப் போன தலைவர்கள், அப்போது தடுமாறப் போகிறார்கள். மக்களுக்கு வழிகாட்டிட இந்த இடத்திலேதான் வழி தேட வேண்டும்.
எதிரணியினர் இந்த இடத்தில்தான் தங்கள் கவனத்தைச் செலுத்தி மக்களை சரியான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும். யார் அந்த எதிர ணியினர் என்று கேள்வி எழுகிறதா? என்ன செய்வது? அவர்களைத் தேடிப் பிடித்து உறக்கத்தைக் கலைக்கும் வேலையை நாம்தான் செய்ய வேண்டும்.
ாந்தளிப்பு 5

Page 5
தொண்டமான் செல்லச்சாமி போல மலையகத்தில் உள்ள எதிர் அணித் தலைவர்களும் அறுபது எழுபதுகளைத் தாண்டி விட்டவர்கள். நடேசன், ராமையா, கந்தையா என சிலரது பெயர்கள் கண்முன் தெரிந்தாலும் இவர்களும் ஒய்வெடுக்கும் வயதை அடைந்து விட்ட மையே மலையக அரகியலில் “சுறுசுறுப்பு பற்றாக் குறைக்குக் காரண
L DIT Gg5 Lb.
ஐம்பது வருடமாக ஒருவர் தலைவராக இருக்கிறார் என்றால் ஐம் பது வருடங்களுக்கு முன்புள்ள சிந்தனை ஒட்டம் தானே அவருக்கு இருக்க முடியும் என யாரோ ஒருவர் கூறியது இப்போது நினைவிற்கு வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 50 வருட காலத்தில் டி. எஸ். சேனநாய க்கா, டட்லிசேனநாயக்கா, கொத்தலாவை, ஜே. ஆர். , பிரேமதாச, காமினி, லலித், ரனில், விஜேதுங்க என பல தலைவர்களின் கருத்துக்களை சிந்தனைகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. ஏ ற் றுக் கொள் கிறோமோ இல்லையோ புதிய புதியமாற்றங்கள் நிகழ்ந்து தான் உள்ளன,
காங்கிரசில் காந்தி நேரு, லால்பகதூர்சாஸ்திரி, காமராஜர், இந்தி ராகாந்தி, சஞ்சைகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் என பலரது எண் ணங்கள் செயல் வடிவங்கள் பெற்றன. உலகின் பல நாடுகளை எடுத்துக் கொண்டால் இவ்வாறான மாற்றங்களை கடந்த ஐம்பதாண்டு காலப் பகுதியில் நாம் காண முடியும்.
ஆனால் மலையகத்தில் மட்டும் ஐம்பதாண்டு பெருமையை பேசிக் கொண்டே காலந்தள்ளுகிறோம், நிச்சயமாய் இன்னும் ஐம்பதாண்டுகளு க்கு இதே கதையை கூறிக் கொண்டிருக்க முடியுமா? மனிதர்கள் நினைத் தாலும் இயற்கை இதற்கு இடம் கொடுக்காது. x
எனவே தலைவர்கள் சண்டையால் மலையக மக்கள் மனந்தளர வேண் டியதில்லை. இந்தியாவில் நேரு மறைந்த போது தமிழகத்தில் அண்ணா மறைந்த போது இனி மக்களைக் காக்க நாட்டைக்காக்க எவர் இருக்கிறார் என்று மக்கள் பேதலித்து நிறைார்கள். இந்தியா இன்னமும் இருக்கிற 游 தமிழகமும் தலை நிமிர்ந்து தான் இருக்கிறது.
கொந்தளிப்பு 荔

தனிப்பட்டவர்களை நம்பி உலகமும் நாடும் இயங்குவதில்லை. ஏற்படப்போகும் வெற்றிடத்தை நிரப்ப மலையக இளைஞர்களும் யுவதி களும் இன்றே முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
மலையக மக்கள்மீது அக்கறை கொண்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில் சிறு சிறு குழுக்களாகவேனும் சேர்ந்து கருத்துப்பரிமாறல்கள் ஆலோசனைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்று சேர்க்க முயலவேண்டும். ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்திருப்பவர்களை அடையாளம் காண வேண்டும். ரிடர்ன் டிக்கெட்டு களைக் கைகளில் வைத்துக் கொண்டு, இங்கே ஆபத்து என்றால் அங்கே ஒடி செட்டிலாகத் தயாராக உள்ளவர்களால் மலையக மக்களுக்குத் தலைமை கொடுக்க முடியாது.
புதியு தலைமை வானத்தில் இருந்து குதித்து விட முடியாது. நமக் குள்ளேதான் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப் பிடிப் போம்! கூட்டுத் தலைமைகளை உருவாக்குவோம்! இருள் சூழ்ந்த எதிர்கள் லத்தை ஒளிமயமாக்க இன்றே விளக்கைத் தேடிப் புறப்படுவோம்.
- அரவிந்தன்
அப்பா! நீ எங்கே?
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நிச்சயம் தாயும், தந்தையும் இருப் பார்கள். ஆனால் நோர்வேயில் கடந்த வருடம் 1000 குழந்தைகளின் தந்தையர், தாங்கள் தந்தையரல்ல என மறுத்துள்ளனர். ஐரோப்பாவில் இத்தகைய பிள்ளைகளின் எணணிக்கை அதிகரிப்புப் பிரச்சனை பெருத்து வருகிறது. - எது எவ்வாராயினும் இந்தப் பம்மாத்துப் பருப்புகள், இந்த நவீன விஞ் ஞான உலகில் அவிவதில்லை. இரத்தப் பரிசோதனையும், டி என் ஏ பரி சோதனையும் யார் உண்மையான தந்தை எனக் கண்டறிய உதவுகின்றன. ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் தந்தையைக் கண்டுபிடிப்பது இலகுவானதல்ல. இவ்வாறான ஒரு சந்தர்ப் பத்தில் அண்மையில் ஒரு பெண்ணால் குழந்தையின் தந்தையாக இருக் கலாம் எனக் காட்டப்பட்ட எட்டு ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டனர். என்ன ஆச்சரியம்! அவர்களில் ஒருவருமே தந்தையாக இருக்கவில்லை.
நன்றி சுவடுகள்
கொந்தளிப்பு 7

Page 6
நூல் அறிமுகம்
V சிறுவர் மாலை
(இசைக் கவிதைகள்)
ஆசிரியர்: மு. ராமச்சந்திரன்
52, கொட்டு கொடெல்ல வீதி, கண்டி,
பக்கங்கள் 52
விலை: 30/-
முதற்பதிப்பு: 1993. 04. 02
சிறுவர்க்கான பாட்டுக்கள் என்ற போதிலும் சமுதாய பார்வை யுடன் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பட்டுக்கோட்டையாரின் நினைவை பல பாடல்கள் ஊட்டுகின்றன. வெறும் பாட்டிக் கதைகளைப் பாடல்களாக்குவோர் மத்தியில் கவிஞர் ராமச்சந்திரன் வித்தியாசமாகத் தெரிகிறார்.
கவிதை மட்டுமன்றி சிறுகதை, கட்டுரை இலக்கியத்துறையிலும் இவர் வல்லவர் பல உள்நாட்டு வெளிநாட்டு இதழ்களில் இவரது ஆக்க ங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மலையக மக்களின் சரித்திரம்
ஆசிரியர்: எஸ். நடேசன் மலையக மக்களைப் பற்றி இதுவரை வெளிவந்த நூல்களில் வித்தி யாசமான புத்தகமாக பழம்பெரும் தொழிற்சங்கவாதி திரு. எஸ்- நடேசன் மிகப்பாடுபட்டு இதனை எழுதியுள்ளார்.
மலையக வரலாறு என்றால் தாங்கள் தான் என்று பெருமை பேசும் சிலரின் கூற்றுக்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது இந்நூல் வெளிவந்தபின் தெரிந்து விடும்.
ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூக்கு எங்கள் வாழ்த் துக்களை ஆக்கியோருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்கப் பயன்மிக்க இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும் முயற் சிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. விரைந்து இம்முயற்சி கைகூடி னால் மலையக மக்களின் சரித்திரம் பற்றி தமிழ் மக்களே உணர்ந்து கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும்.
S LSL LLL LSL S LSL LSL LSLS LS S LSL LSL LSL LSL LSL LS LSS LSL LSL LS ...་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་པ...} கொந்தளிப்பு 8
ن

செல்லசாமியுடன் சந்திரசேகரன் இணைவாரா?
மலையக மக்கள் முன்னணி - தலைவர் சந்திரசேகரன் பிணையில்
விடுதலையாகி வெளியே வந்தது நிம்மதி தரும் ஒரு செய்தி! நிரந்தர்
மாக அவருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர பார்ப்பாகும்.
அவர் வெளியில் வந்ததும் போதும், வதந்திகள் இறக்கை கட்டிக் கொண்டு நாலா திசைகளிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது.
* எதிர்சுாலத்தில் செல்லசாமியுடன் இணைய உள்ளதாகவும் வெளி யில் வந்ததும் முதல் மாலை அணிவித்ததே அமைச்சர்தான் என்று மலையகத்தில் தொண்டமானுக்கு எதிரான இடத்தை நிரப்ப சந்திரசேக ரனால் மட்டுமே முடியும் என அரசாங்கம் எண்ணுகிறது என்றும் கதை கள் உலாவுகின்றன. கல்யாணத்திற்கு அமைச்சர் வருகை தந்தது வேறு செய்திக்கு உரமூட்டுவதாக அமைந்து விட்டது.
இதே வேளை, ம .ம - மு தலைவர் பாதுகாப்பில் இருந்தபோது தொண்டமான் சார்பில் பலதடவை பலர் தொடர்புகொண்டு தங்கள் அணி யில் செல்லசாமியின் இடத்தை நிரப்புவதற்கு வருமாறு அழைப்புவிடுத்த னர் என்றும் இப்போதும்கூட அத்தகைய பேச்சுக்கள் பல்வேறு வடிவங் களில் நடைபெற்று வருவதாகவும் கதைகள் உலாவுகின்றன.
இ. தொ. கா. இரண்டாகப் பிளவு படும் நிலையில் சந்திரசேக ரன் ஏதாவது ஒன்றில் இணைவதுதான் நல்லது. இ. தொ. கா. வுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் பெரிதாக ஒன்றும் கொள்கை வேறுபாடு இல்லாத நிலையில் இப்படி ஒன்றில் இணைந்து விடுவது பல சிக்கல் களைத் தீர்த்து விடும்' இப்படியும் பலர் கூறுகிறார்கள்.
திரு. சந்திரசேகரன், அவர்களிடம் இவற்றுக்கான விளக்கங்களை இநரிலேயே பெற்றுவிட வேண்டும் என்று முயன்றதில் அவர் தந்த விளக்
Éጰ
နုံခံ 12ம் பக்கத்தில் இடம்பெறுகிறது.

Page 7
படுகொலை செய்யப்பட்ட முதல் பெண் போராளி
டாக்டர் அ. சாந்தகுமார்
குடும்ப அமைப்பு தோற்றத்துடன் ஆரம்பித்த பெண்ணின் அடிமை த்தனம் ஆணிற்கும் பெண்ணிற்குமிடையில் ஏற்பட்ட வர்க்கமுரண்பாடு சமுகத்தில் ஏற்பட்ட முதலாவது வர்க்கமுரண்பாடு: இது தனி சொத்து டமை அமைப்பில் மேலும் வலுப்பெற்று மூலதனத்துவ சமுக அமைப்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள அதை கட்டிக் காத்து வருகின்றது. என வே இம் மூலதனத்துவ சமுக அமைப்பு முறையும் அதனைச் சார்ந்த தனி ச் சொத்துடமையும் அழிக்கப்படும் வரையும் பெண்கள் தமது விடுதலைப் பயணத்தில் காலடி வைக்க முடியாது.
ஒரு யுகத்தில் சம அந்தஸ்த்தில் அல்ல கெளரவமான முதலிடத்தை சமுகத்தில் பெற்றிருந்த பெண் தனிச் சொத்துடமையின் தோற்றத்துட னும் ஆண் அதன் உரிமையாளனாகவும் ஆகிய நாள் தொடக்கம் பெண் அவளது அடிமையானாள்:
இதை எங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். வீடு வளைவுநிர் வாகத்தில் இருந்த பொதுத் தன்மை இல்லாது போய் அது சமுகத்தின் கடமை என்ற நிலை இல்லாது போய் அது தனியார் கோவையாக மாறியுள்ளது. சமுக உற்பத்தியில் பங்கெடுத்துக்கொண்ட பெண் அதிலி ருந்து அப்புறப்படுத்தப்பட்டு முதலாவது அடிமைச் சேவைக்கு உட்படுத்தப் பட்டாள். இதன்படி முழுப்பெண் குலத்தையும் மீண்டும் ஒருமுறை பொது உற்பத்தியில் ஈடுபடுத்துவது பெண்விடுதலைக்கான முதலாவது நிபந்த னையாகும் என்பது வெளிப்படையானது: அப்படியாயின் தனியார் குடு ம்பம் சமுகத்தின் பொருளாதார அலகாக கணிக்கப்படும் நிலை மாற்றப் பட வேண்டும்;
பொதுச் சொத்துடமையாக இருக்கும் ஒர்வர்க்கத்தை இன்னு மொரு வர்க்கம் சுரண்டாத பொதுவுடமைச் சமுதாயத்தை தவிர்ந்த வேறு எந்த சூழ்நிலையிலும் பெண்கள் தமது விடுதலைபாதையில் காலடி வைக்க முடியாது என்பதை சமுக விஞ்ஞான ஆய்வாளர்கள் திட்டவட் மாக முன்வைத்துள்ளனர். பொதுவுடமைச் சமுக அமைப்பு பெண் விருத லையின் முதற்படி மாத்திரமல்ல பெண்களின் பங்களிப்பில்லாது பெரிது வுடமை சமுக அமைப்பு பூரணுத்துவம் பெறாது என்பது அவர்களின் நிலைப்பாடாகும்.
"கொத்தளிப்பு 10

உலகெங்கிலும் வெற்றியை நோக்கி நடைபோட்ட அனைத்து விடு தலை இயக்கங்களும் புரட்சியின் வெற்றி அதில் பங்கெடுத்துக் கொள்ளும் பெண்களின் பங்களிப்பில் தங்கிகள்ளது என்பதை நிரூபித்துள்ளது என மாமேதைலெனின் கூறியுள்ளார்.
பொதுவான அரசியல் வாழ்க்கையில் மாத்திரமல்ல பொதுமக்கள் சேவையில் பெண்கள் சுயாதீனமான வேலைகளை திட்டங்களைக் கொண்டு வரும் வரையில் பொதுவுடமை அல்ல முழுமையான ஜனநாயகம் தொட ர்பாக் கதைப்பதுகூட பிரயோசனமற்றது என அவர் இன்னுமொரு சந்த ர்ப்பத்தில் கூறப்பட்டுள்ளார்.
இந்த சமுக விஞ்ஞானிகளில் நிலைப்பாட்டினையும் அதன் தாக்க ரீதியான நியாயங்களையும் புரிந்துகொண்டு உலக தொழிலாள வர்க் கத்தின் விடுதலை போராட்டத்தில் முதலாவது தொழிலாள வர்க்க அரசின் ஸ்தாபகர்களுடன் இணைந்து பங்காளியாக செயலாற்றிய முதல் பெண்மணி 1871ல் போலந்தில் பிறந்த றோசா லக்சம் பேர்க் ஆகும் இளம் வயதிலேயே புரட்சிகரபணிகளில் இணைந்து கொண்டார். இதனால் இவர் ஸார் மன்னரின் அதிகாரிகளினால் கொலை செய்யப்படுவதில் இருந்து, தப்புவதற்காக தனது 18 வயதிலேயே சுவிற்சலாந்தின் சூரிச் நகருக்கு இடம் பெயர நிர்பந்திக்கப்பட்டார். பத்தொன்பதாம் நூற்றா ண்டின் இறுதிப்பகுதியில் அவரது தேசமான போலந்தில் மட்டுமன்றி ரஷ்ய, ஜேர்மன் சமுக ஜனநாயக கட்சிகளிலும் பிரதான பாத்திரத்தை வகித்தார்,
போலந்தில் சர்வதேசவாத நிலைப்பாட்டில் சமரசமற்ற போராட் டங்களில் பிரபல்யமான அவர் 1893ம் ஆண்டில் போலந்து சமுக ஜனநா யகக் கட்சியை நிறுவினார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய வாதத்தின் நோக்கில் உறுதியாக போராடி வந்த அவர் 1897ல் ஜேர்மன் சோசலிஸ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டார். ஜேர்மன் மொழியை பூரணமாக க்கற்று இங்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் ஜேர்மன் அரசுக்கும் எதிராக இருந்து உறுதியாக போராடிய காலத்தில் உலக தொழிலாளவர்க்கத்தின் விடுதலைப்பாதைக்கு வடிகாட்டும் பல நூல்களை எழுதினார்:
1905ம் ஆண்டு மீண்டும் போலந்திற்கு திரும்பிய இவர் ஸார் ஆட்சியை குலுக்கிய புரட்சிகர எழுச்சிகளில் பங்கு கொண்டார். இத னால் சிறைவைக்கப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்ட இவர் பீட் ரோட்கிரட் எனனுமிடத்துக்கு சட்ட விரோதமாக பிரயாணம் செய்து புனைப்பெயருடன் சிறைவைக்கப்பட்டிருந்த தனது சக தோழர்களை சந் தித்தார்- ருஷ்ய புரட்சியல் பிரதான தலைவர்களான மாமேதை லெனின் செஞ்சேனையின் ஸ்தாபகர் ட்ரோஸ்கி போன்றவர்களுக்கு சமமான பங்க Oப்பை செய்துள்ளதுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் விடுதலை 4ாதைக்கும் அவர்களை போன்று வழிகாட்டிச் சென்றுள்ளார்"
(தொடர்ச்சி மே இதழில். . ) ,
காந்தளிப்பு LSL SLLLBS LSLL LLLL LL LLL LLLL LSL LLLLL LLLL LSL LLLLL LSL LLLLL LLLLT LLSLL LLLL LLL LLLL LSL 0SLLLLL LSL L LSL L LSL LCLL LSL zL SLSL LSL LS LSt w. ww. m war ο ί

Page 8
செல்லச்சாமியோடுள்ள உறவு பற்றி சந்திரசேகரன்.
செல்லச்சாமியோடு இணைவாரா? என்ற கேள்விக்கும் தொண்ட மான் பக்கத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதா? போன்ற கருத்துக் களுக்கும் விளக்கம் பெறும் முகமாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. பெ. சந்திரசேகரன் அவர்களோடு தொடர்பு கொண்ட போது பின்வரும் விளக்கத்தைத் தந்தார்.
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை மனு க் கள் நிராகரிக்கப்படலாமே தவிர பிணையே இல்லை என்று அர்த்தமல்ல, நீதிபதி விரும்பினால் பிணையில் ச்ெல்ல அனுமதிக்க முடியும், நாங்கள் பாதுகாப்பில் இருந்த நாள் தொடக்கம் பிணை கோரி மனுச் செய்த வண்ணமே இருந்தோம். அத்தகைய ஒரு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு நான் இப்போது வெளியில் வந்திருக்கிறேன். இதற்கு பல்வேறு காரணங் கள் பலராலும் கற்பிக்கப்படலாம் , ஆனால் எவரது தயவிலும் நான் பிணையில் வெளியே வரவில்லை என்பதே உண்மை.
எங்களுடைய செயலாளர் நாயகத்தின் வழக்கும் முடிவடைந்து அவருக்கும் விடுதலை கிடைக்கும் நிலை உள்ளதை அறிந்திருப்பீர்கள் மே மாதத்தில் எனது வழக்கிலும் இதே தீர்ப்பு வழங்கப்பட்டு எனக்கு விடுதலை சிடைக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது. சட்ட ரீதியாக வெளியில் வர சகல வாய்ப்புகளும் உள்ள நிலையில் பின்கத வால் வெளியில் வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அப்படி வரு வதாக இருந்தால் கடந்த 33 மாதங்களில் முயற்சித்திருப்பேன்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்தபோது அங்கு மாலை அணி விக்க அமைச்சர் செல்லச்சாமி வரவில்லை. மாலை அணிவிக்க அங்குதான் சந்தர்ப்பமே இருந்தது: ஆறாம் மாடியில் எவரும் மாலை அணிவிக்க முடியாது. உள்ளே இருந்தபோது பலரும் என்னை அணுகியது உண்மை தான். ஆனால் உள்ளே இருந்து என்ன முடிவு எடுத்தாலும் அது வெளி யில் வர நாங்கள் பேசும் பேரமாகவே முடியும் என்பதால், எந்த யோச னையைப் பற்றியும் நாம் எதுவும் கூறவில்லை.
கொந்தளிப்பு - 12

அநாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்வது தற்போதைய நிலையில் எங்களைப் பொறுத்த வரையில் அர்த்தமற்றதாகும். எங்களுக் குள்ள முதல் வேலை மலையக மக்கள் முன்னணியை புனரமைத்து பல முள்ள அமைப்பாகக் கட்டி எழுப்புவதே ஆகும். அதற்கான வேலைகளை உடனடியாகவே ஆரம்பித்து விட்டோம். எங்களது கொள்கைகளை எந் தச் சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
அதிகார துஷ்பிரயோகம் ஊழல் போன்றவற்றுக்கெதிராகத் தென் மாகாண மக்கள் தெளிவான அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளார்கள். நாட்டின் ஏனைய பகுதி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இது அமைந்துள்ளது. தென்மாகாண மக்களின் தீர்ப்பால் இனவாதம் இந்த நாட்டில் இருந்து ஒழிந்து விட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதைப்பற்றி மக்கள் இப்போதைக்கு அலட்டிக் கொள்ள
வில்லை. அவ்வளவே!
தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு குறித்து தொண்டமானின் மகிழ்ச்சி.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தென் மாகாண சபைத் தேர்தல் வெற்றி பற்றி தொண்டமான் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும்? தான் சார்ந்துள்ள அரசாங்கக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வில்லை.
ஆனால் எந்த காமினியை மத்திய மாகாண சபை முதல்வராகக் கும் நடவடிக்கையில் இறங்கினாரோ அந்தக் காமினியின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலில் அவருக்கு ஆதரவாக எதுவும் செய்யாதது மட்டுமல்லாமல் தோல்வியில் மகிழ்ச்சியும் கொள்கிறார். என்ன அரசியல் சாணக்கியமோ . . . . ?
கொந்தளிப்பு 13

Page 9
கன்ஷிராம் இந்திய பிரதமராவ ITJ IT?
இந்திய அரசியலில் தீவிர மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காங் கிரஸ் அசைக்க முடியாமல் ஆட்சி செய்த மாநிலங்களில் எல்லாம் இன்று தலை கீழ் மாற்றங்கள்! காங்கிரசுக்கு சவால் விட்ட காவி உடை பாரதீய ஜனதா கட்சியும் மதவெறியால் தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டிருக்கிறது. பாபர் மசூதியைத் தகர்த்ததன் மூலம் இந்துக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று விடலாம் என்று பா. ஜ. க நினைத்தது.
இந்துக்கள் என்று மத வெறியை மூட்டிக் கொண்டு உயர் ஜாதி என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் இக்கூட்டம்’ எந்த வித த்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்படும் ஒடுக் கப்பட்ட இந்துக்களை மேலெழாதவாறு நசுக்குவதிலேயே கவனம் செலு த்தினர். பா. ஜ. க வின் உயர்மட்ட தலைமைகளில் தாழ்த்தப்பட்டவர் கள் பங்கு பெறாமல் தடுக்கப்பட்டனர்; ராமர் கோயிலைக் காட்டி கோடிக் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை என்றைக்கும் அடிமைகளா க்கும் அவர்களது முயற்சி அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தவிடு பொடியாகியது. இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உத்தி ரபிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கூட் டுச் சேர்ந்து காங்கிரசையும் பா. ஜ. க வையும் ஓரங்கட்டி விட்டு ஆட்சி
யைக் கைப்பற்றி விட்டனர்.
இந்த மாற்றத்திற்கு வழி அமைத்தவ்ர் அம்பேத்காரின் வாரிசாக க் கணிக்கப்படும் கன்ஷிராம் ஆகும். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இயங்கி வரும் கன்ஷிராம் அரசியலில் ஒருபிடிவாதக்காரர். இந்திய அர சியல் இன்று சாதி அடிப்படையில் தான் நடக்கிறது என்ற "அசைக்க முடியாத கருத்தைக் கொண்டவர். இந்தியாவின் ஆட்சி தொடர்ந்து உயர் ந்த ஜாதியினரின் கையில் தான் இருந்து வருகிறது: இதை மாற்ற வேண் டு: மிகவும் பிற்படுத்தப்பட்போர் அல்லது தாழ்த்தப்பட்போர் பதவிய்ை பிடிக்க வேண்டும் : அப்போது தான் நாடு உருப்படும்’ என்கிறார்
இந்திய மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர்கள் மிகவும் பிற் படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகும். இவர் களு  ைட ய ஒட்டுக்களைப் பெற்றால் நாட்டின் ஆட்சியைப் பிடித்து விடலாம் என் பது கன்ஷிராம் போட்டிருக்கும் கணக்கு:
அடுத்து வரப்போகும் தேர்தலில் காங்கிரசையும் பாரதிய ஜனதாக் கட்சியையும் சாதி அடிப்படையில் முறியடித்து டில்லி ஆட்சியைச் கைப் பற்றி பிரதமராக வேண்டும் என்பது இவர் திட்டம்:
கொந்தளிப்பு − 14

கன்ஷிராமுக்குக் கிடைத்த முதல் வெற்றி உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவை முதல்வராக்கியதுதான்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக, உத்தர பிரதேசத்தில் பா. ஜ. க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும். முலாயம் சிங்யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கூட்டுச் சேர்ந்தன. இதன் விளைவாக இந்த இரண்டு கட்சிகளும் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடிந்தது. கன்சிராம் பதவிக்கு ஆசைப்படாமல் முலாயம் சிங்யாதவை முதல்வர்ாக்கி விட்டார்.
ஆக, கூட்டுச் சேர்வதன் மூலமாக தன் கட்சியைப் பலப்படுத்த முடியும், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று கருதுகிறார். இவர் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பீகார், ஆந்திரா கர்நாடகம் போன்ற மற்ற மாநிலங்களுக்கும் பிரச்சாரம் செ ய் ய ப் புறப்பட்டு விட்டார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அம்பேத்காருக்கு அடித்தபடியாக இன்று இயங்கி வரும் மாபெரும் தலைவர் இவர்தான் என்று இந்திய பத்திரிகைகள் பலவும் வர்ணித்துள்ளன.
இவருடைய விஜயத்தைக்கண்டு ஒவ்வொரு மாநில முதல்வரும் எந்த அளவுக்கு அஞ்சுகிறார்கள் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்.
கன்சிராம் பம்பாய் நகரின் சிவாஜி பார்க்கில் பேசுவதாக இருந் தது. அவர் பேசுவற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே மராட்டிய முதல் வர் சரத்பவார், பிரபல மராத்வாடா பல்கலைக் கழகத்தின் பெயரை * பி. ஆர். அம்பேத்கார் பல்கலைக் கழகம்’ என மாற்றி விட்டார்.
குஜராத்தின் தலை நகரான காந்தி நகருக்கு இவர் வரப் போகி றார் என அறிந்ததும் குஜராத் முதல்வர் சிமன்பாய் படேல் தாழ்த்தப்பட் டவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பத்து சத விகித இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக உயர்த்தி விட்டார்.
ஹைதராபாத்துக்கு இவர் விஜயம் செய்தபோது, முதல் வர் விஜயபாஸ்கர ரெட்டி, உடனே அரசுப் பணிகளில் 60 சதவிகிதத்தை தாழ்த்தப் பட்டவர்களுக்கும் மிக வும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தர வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
கொந்தளிப்பு A 15

Page 10
பீகார் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் கன்சிராமின் செல்வாக்கை கண்டு மிகவும் அஞ்சுகிறார். பீகாரில் உள்ள அரிஜனங்களுக்கு இலவச மாக முடி வெட்டிவிடவும், ஆடைகளைச் சலவை செய்து கொடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வளவும் நடந்திருப்பதால் கல்கத்தாவிற்ரு இவர் இரகசியமாக சென்றிருக்கிறார். ஆனால் வங்காள முதல்வர் ஜோதிபாசுவுக்கு விஷயம் எட்டி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மருத்துவ, பொறி யியல் கல்லூரிகளில் அதிக இடம் கொடுக்க என்ன செய்யலாம் என்று அதிகாரிகளிடம் யோசனை கேட்கிறாராம்.
கன்சிராம் ஒர் இலட்சியவாதி. இவர் அகமதாபாத்தில் வி. பி. சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர். அமேதியில் ராஜீவ் காந் தியை எதிர்த்து நின்று தோல்வியைத் தழுவியவர். ஆனால் தோல்வி களை வெற்றிக்குப் படிகள் என்று கருதி செயல்பட்டவர்.
இவர் பஞ்சாபில் உள்ள கவாஸ்பூர் என்னும் கிராமத்தில் சீக்கிய இனத்தில் பிறந்தவர், அம்பேத்கார் எழுதிய சில நூல்களைப் படித்ததும் வாழ்நாள் முழுவதும் அரிஜனங்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணி க்க முடிவு செய்துவிட்டார்.
இவர் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெற வேண் டும் என்பதற்காகத் தன் சொந்த நலன்களைத் தியாகம் செய்து விட் டார். திருமணம் செய்து கொள்ளவில்லை, தன் குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது என்றார். இதன் விளை வாக இவரது தந்தை இறந்து போனபோது கூட, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. தன்னலம் கருதா உழைப்பு நீடித்தால் இந்தி யாவின் எதிர்கால பிரதமர் இவர்தான் எ ன் கி றா ர் க ள் அரசியல் அவதானிகள்.
- மு. நேசமணி -
எண்ணம்
எண்ணம் மனிதனுக்காக மட்டுமே அமைந்தது. மனத்தைப் பெற் றதனாலேயே மனிதன் என்னும் பெயர் பெற்றான் எண்ணத்தால் ஆக்க
ப்படுபவன் தான் மனிதன்.
கொந்தளிப்பு - 6

சாயிபாபாவின் சாயம் வெளுக்கின்றதா?.
1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆந்திராவிலுள்ள புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப் படும் நான்கு பேர் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சாயிபா பாவின் உதவியாளர்கள் இருவரைக் கொன்றபின் அந்நால்வரும் சாயி பாபாவின் அறையை நோக்கிச் சென்றனர் என்றும் சாயிபாபா பின் கதவு வழியாக ஒடிச் சென்று தப்பினார் என்றும் தகவல்கள் வெளியாகின. கொல்லயாளிகள் என சந்தேகிக்கப்பட்ட நால்வரும் மடக்கிப் பிடிக்கப் பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒர் அறைக்குள் பூட்டப்பட்ட ன்ராம். ஆனால் உயிரோடு அவர்களை விசாரணை செய்வதைத் தவிர் த்து பொலீஸார் அறைக்குள் கட்டப்பட்ட நிலையில் இருந்தவர்களை வீராவேசத்துடன்? கொன்று ஒழித்து விட்டனர்.
மாதங்கள் பத்தாகி விட்ட போதும் இதுவரை புலன் விசாரணை யில் எவ்வித பலனும் இல்லை. பதவியில் உள்ள அரசியல்வாதிகளின் தகிடு தத்தங்கள் எவ்வாறு மூடி மறைக்கப்படுமோ அவ்வாறே சாயிபா பாவின் பிரசாந்தி நிலைய கொலைகளின் மர்மங்களும் இதுவரை வெளிச் சத்துக்கு வராமல் தடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் இந்திய ஜனாதிபதி புட்டபர்த்திக்குச் சென்றிருந்த போது "எல்லாவற்றிக்கும் காரணம் ஒரு பெண்தான்’ என கூறியது சாயிபாபா நிலையத்தின் திகில் கதைகளை அம்பலத்துக்குக் கொண்டு வருவதாக உள்ளது.
பிரசாந்தி நிலையத்தில் பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளே அடக்க ஒடுக்கமாக சாயிப்ாபாவின் பாதங்களில் விழுந்து கிடப்பதால் உண்மையை வரவழைப்பதில் எவருக்கும் துணிவு வரவில்லை எனக் கூறப் படுகிறது.
புட்டபர்த்தியில் நடைபெற்ற இக் கொலை சம்பவங்களுக்கு சொத் துக்களும்; பெண்ணுமே காரணம் எனத் தெளிவாகத் தெரிகிறது. கொலை முயற்சி சம்பவத்துக்கு 15 நாட்களுக்கு முன் 18 வயது "மதிக்கத்தக்க" இளம் பெண் ஒருத்தி பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைந்த பின் வெளியே வர் வில்லை எனக் கூறப்படுகிறது.
கோந்தளிப்பு 17

Page 11
சாயிபாபாவின் ஆசிரமத்தின் சொத்துக்கள் சுமார் ஆயிரத்தைந் நூறு கோடி ரூபாயையும் தாண்டும் எனக் கூறுகிறார் ஒரு பத்திரிகை யாளர். நடைபெற்ற சம்பவங்கள் சாயிபாபாவும் ஒரு சாதாரண ஆள் தான் என்பதையே தெளிவு படுத்துகிறது. هر
பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை ப குத் தறி வா ள ர் இயக்கத் தலைவர் டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் சாயிபாபாவிற்கு விடுத்த சவால் இப்போது நினைவிற்கு வருகிறது கொழும்பில் விவாதத்துக்கு கோவூர் அழைத்தபோது பின்வாங்கி தோற்றுப் போனவர்தான் சாயிபாபா.
ஆகாயத்திலிருந்து பொருட்களை வரவழைப்பது விபூதி தருவிப்பது போன்றவை சித்து வி  ைள யா ட் டு க் க ள் என்பதை அப்போது ஒத்துக் கொண்டவர் சாயிபாபா. அண்மையில் விபூதி வழங்கும்போது எடுக்கப் பட்ட வீடியோ படம் ஒன்றில் வேறு ஒரு வ ரின் கை சாயிபாபாவின் கையோடு தெரிந்ததாக இந்தியப் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டி ருந்தன.
புட்டபர்த்தி கொலை சம்பவத்தை எடுத்துக் கொண்டால் கொலை
யாளிகளுக்கு பயந்து பாபா ஒடி ஒளிந்தது ஏன்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுகின்றது. வெட்ட வெளியில் இருந்து தாலிகளையும் கடி காரங்களையும் தருவிக்கும் ஆற்றல் மிக்க பகவானால் கொலையாளி களின் ஆயுதங்களை மாலைகளாக்கிக் கழுத்தில் அணிந்து கொள்ள முடி யாமல் போனது ஏன்? தன்னைத் தாக்க வருபவர்களை தனது ஞானக் கண்களால் பார்க்க முடியாமல் போனது ஏன்? 1
J is
* பகைவனுக்கருள்வாய் நெஞ்சே. ... ' என்றெல்லாம் பக்தர்களு குப் போதனை செய்து விட்டு கட்டி வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் துடி துடிக்கக் கொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தாதது ஏன்?
இப்படி பல ஏன்களை இக்கால இளைஞர்களும் யுவதிகளும் கேட் கிறார்கள். பொழுது போகாமல் சமுகத்திற்கு எதையும் செய்ய மனமில் லாதவர்கள் கூடி நின்று கும்மாளமடிக்கும் இடமாக மாறிவரும் பஜனைக் கூடங்களின் சொந்தக்காரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
ஐந்து நட்சத்திர ஹ்ோட்டல் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட செல்வச் செழிப்புமிக்க அறையொன்றில் ஏழு வகைக் கறிகளுடன் சாயிபாபா உண வருந்தும் படம் ஒன்றினை 2 - 03 - 94 ஜூனியர் விகடன் வெளியிட்டுள்
இந்து சமய பெரியார்கள் எவராவது இல்வாறு வாய் ருசி கண் டவர்களா? இனியாவது சமூகத்தில் உள்ள நலிந்தோர்க்கும் நலமிழந் தவர்க்கும் உதவிக்கரம் நீட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வேடதாரிகளின் வெற்று வேதாந்தத்தை நம்பி வீண் போவதை எம்ம வர்கள் தவிர்ப்பார்களா?
- லட்சுமி -
கொந்தளிப்பு 18

உறவு கொள்ள ஒருவர்.
ஃ கோ. அண்ணாதுரை, 4, மாரியம்மன் கோயில் தெரு,
கு. நா. பாளை யம், சந்தை புதுப் பாளையம், தி. ச. மா. 606705. தமிழ்நாடு.
ძზ. காஞ்சி. வனஜா, 231, கிருஷ்ணன் தெரு, அம்பத் தூர், சென்னை- 53. தமிழ்நாடு
ஃ எம். கோவிந்தன். 77. தந்தை பெரியார் நகர், அயன்புரம், சென்னை - 600023
பி. இராஜேந்திரன் மேலத்தெரு, இராயநல்லூர், திருத்துறைப் பூண்டி வட் டம், நாகை, காயிதே மில்லத் - 6.14715 தமிழ்நாடு.
ஃ ஆர். கெளரிசங்கர் 14, வேங்கையர் தெரு, செளகார் பேட்டை, சென்னை - 600079 தமிழ்நாடு.
ஃ பத்மா பூபாலன்
9D, மருதம்பட்டினம், புளியமரத்
தடி, திருவாரூர் தமிழ்நாடு.
ஃ டி. சிவரஞ்சனி
70, பிக்கரிங் ரோட், கொழும்பு - 13
ஃ எஸ். செல்வக்குமார் ; 50-4, சேர்ஜ் ரோட், கொழும்பு 15
kk大
ou கோந்தளிப்பு
óó V. Mahendran Kenzlei Str 231 8004 Zurich, Switzerland.
ஃ எஸ். நிமலன் 133, பரமனாதன் ரோட்,
புத்தளம்.
ஃ எஸ். சுரேஸ்குமார் 269, நாவலர் ரோட், யாழ்ப்பாணம்.
ஃ எம். பிரமிளா 40, பேராதெனியா ரோட், கண்டி.
ó% V. Gowrrey 940, Cale Donia Road, A. D. T. 908, Urth York-Canada
ởồ K. Sivapatharajah Umar i Travel & Trade (PVT) LTD, Lainoofaru Magunaarannu Male 20-02, Maldives.
os D. Manoharan
P. O. Box 66, Dubai
o% A. L. Nizarudeen - P o. Box 48480, Sabahya Kuwaith.

Page 12
“மலையகத்தமிழர்
- தனியானதொரு தேசிய சிறுபான்மையினரா?”
கலாநிதி அம்பலவாணர் சிவராசாவின் கட்டுரைபற்றிய மறுப்புக் குறிப்புகள். - ஜெயராமன் ட்ரொஸ்கி
உலக மக்கள் அனுதாபப்பார்வையினை ஈர்ந்த ம  ைல ய க மக்கள் தென்னித்தியாலிருந்து கொடுமையான முறையில் கூலி அடி மைகளாகக் கொண்டுவரப்பட்டனர் என்ற வரலாற்று உ ண்  ைம யி  ைன கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது இன்றுவரையும் அவர்கள் பல் வேறு வகையிலும் வடிவிலும் சமூக-பொருளாதார - அரசியல் ரீதியான ஒடுக்குமுறைகளை சந்தித்துள்ளனர், சந்தித்துவருகின்றனர் எ ன் ப ைத அனைவரும் அறிவர். இவ்விடயத்தை - வரலாற்று உண்மைகளை கண்டு பின்வாங்குபவர்கள் மட்டுமே மறந்து விடமுடியும் என்ற அடிப்படை யில் மலையக அறிவுஜீவிகள் பலர் இம்மக்களின் தேசிய உரிமைப் பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்து அதனை உறுதிபடுத்தவும் முயன்றிருக்கின்றனர்.
அண்மையில் இம்மக்கள் தொடர்பாக கண்ணோட்டம் செலுத்திய சிலர் இம்மக்களின் தனித்துவத்தினை இனங்கண்டு, அதனை கருத்திற் கொள்ளாது, இந்த மக்களை இன்னொரு இனத்துடன் சங்கமிக்க வைப்பதன் ஊடாகவே ஒடுக்குமுறைக்கு எதிராக தமது அரசியல் உரி மைகளை வென்றெடுக்க முடியும் என்ற பொருள் பட சில ககருத்துக்ளை முன்வைத்துள்ளமை அவதானத்திற்குறியதே!
இந்த வகையில் அண்மையில் "மேர்ஜ்’ என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலாநிதி அம்பலவாணர் கிவராசா அவர்கள் ‘மலையகத் தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினரா?" என்ற தலைப்பில் நிகழ்த்திய ஆய்வுக் கட்டுரை தொடர்பான சில கருத்துக்களை முன்வைப் பது அவசியமானதும் அவசரமானதும் எனலாம்.
கொந்தளிப்பு V 20

மலையகம் தொடர்பான மலையக புத்திஜீவிகளின் நிலைப்பாட்டி லிருந்து வேறுபட்ட ஒரு கருத்தோட்டத்தினை இக்கட்டுரை கொண்டிரு ப்பதே பிரதான காரணமெனலாம்.
இது விடயத்தில் 'பாட்டாளி வர்க்கத்துக்கு பணிபுரிய விரும் புவோர் எல்லா தேசிய இனங்களையும் ஒன்றுபட செய்ய வேண்டும்." தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத அதற் காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்கு முறையையும், சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடாத எவரும் மார்க்ஸிய வாதி அல்ல, ஜனநாயகவாதியும் கூட அல்ல" என்ற லெனினு டைய கருத்தின் அடிப்படையில் சிலகருத்துக்களை முன்வைக்கலாம் எனக் கருதுகின்றேன்.
இங்கு இரண்டு பிரத்ான அம்சங்களை அவர் முன்வைத்து ஆராய் கின்றார். R
1. மலையகத் தமிழர் சுயமாக ஒரு தேசிய சிறுபான்மை
இனத்தினர் என்ற தகுதியுடையவர்களா?
2. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களை விட மலையகத் தமிழர் வேறுபட்டவர்களா?
முதற்கட்டமாக மலையகத் தமிழர் சுயமாகவே ஒரு தேசிய சிறு பான்மை இனமா? என்ற வினாவிற்கு விடைகாணுவோம்.
'உறுதியான இனமத அல்லது மொழி மரபுகளை அல்லது இயல் புக்ளை அங்குவாழும் மற்றைய மக்களிடமிருந்து வேறுபட்டுக் கொண்டி குப்பதோடு அவற்றைப் பாதுகாக்கவும் விரும்பும் ஆக்கிரமிப்பு செலுத்தாத குழுவினையே சிறுபான்மை என்ற பதம் உள்ளடக்குகின்றது. ’’
'அண்மைக்கால எண்ணக் கருவொன்று பொது இயல் புக  ைள க்
'கொண்ட ஒரு குழு தம்மைத்தாமே தனியான ஒரு சிறுபான்மை இனம்
எனக் கொண்டால் அந்தக் குழுவினை ஒரு தேசிய சிறுபான்மை இன மாகக் கொள்ளுதல் வேண்டும் எனக்குறிப்பிடுகிறது’
மேற்குறிப்பிட்ட கலாநிதி அம்பலவாணர் சிவராசா அவர்களின் மேற்கோள்களின் அடிப்படையிலேயே மலையகத் தமிழர் இந்திய வம்சா வளியினர் தேசிய சிறுபான்மை இனமா என்பதனை நாம் அடையாளம் காணுவோம்.
al கொந்தளிப்பு

Page 13
தென் னி ந் தி யா விலிருந்து திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் இடங்களிலிருந்து மிகவும் கொடூரமான முறையில் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டனர் மலையகத் தொழிலா ளர்கள் ஆனால் பெருந்தோட்டத்துறையின் வரலாறானது இந்திய வம் சாவளித் தொழிலாளரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கொள் ளையடித்த காட்டுமிராண்டித்தனத்தையே கொண்டிருக்கின்றது எனலாம்.
**ஆங்கிலேய நிர்வாகத்தில் தென்னிந்தியாவின் கீழ்ஜாதியினt எமது தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டனர்’’ இது இலங்கை வரலாம் றில் பொன்னெழுத்துக்களில் தன் பெயரை பொறித்தவர் என்று கருதப் டும் அனகாரிக்க தர்மபாலவின் கருத்தாக மாத்திரமன்றி முழு இலங் கையிலும் பெரும்பாலோரின் கருத்தாகவே கொள்ளலாம்.
1970ம் ஆண்டுப் பஞ்சம், 1977ம் ஆண்டு 83ம் ஆண்டுகளில் இனக்கலவரம், எல்லாவற்றையும் விட 1948ம் ஆண்டு குடியுரிமைப் பறிப்பு என்பன, தனது உடலை எருவாக்கி, அதன்மேல் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரச் செய்தவனுக்கெதிராக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு மனித உரிமைகளை கல்லறைக்கு அனுப்பிய நடவடிக்கைகள் எனக் குறிப்பிடுவதே பொருத்தமுடையதாகும்.
மலையகத் தொழிலாளர் இலங்கை வரும் போது இங்கு கிராமிய சுய தேவை பொருளாதாரமே நெல் உற்பத்தியை அடிப்படையாக கொண் டமைந்திருந்தது என்பது வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட உண்மை. எனவே கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேற்பட்ட மலைப்பகுதி யில் குளிரின் காரணமாக நெல் உற்பத்தியோ அல்லது அதனை அண் டிய குடியிருப்புகளோ நிகழ்ந்திருக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள் ளப்படவேண்டிய உண்மையாகும். இம்மக்கள் இங்கு குடியேறுவதற்கு முன்னர் வேறுமக்கள் வாழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகளும் இல்லை, எனவே உடலை உழைப்பை இம்மண்ணுக்கு அளித்த உரிமை மலையகத்தவர்க்கே உண்டு. ஏனெனில் உலகில் பெரும்பாலான நாடுக களில் இந்த அடிப்படையிலேயே மக்கள் வாழ்கின்றனர் உதாரணம் அமெரிக்கர்கள் பிரித்தானியாவிலிருந்து சென்று குடியேறியவர்களே. இன்று அமெரிக்காவில் இருந்து அமெரிக்கர்களால் விரட்ட முடியாதல்லவா?
ஒரே மொழியை பேசுகின்ற வெவ்வேறு தேசிய இனங்களை உலகில் நாம் அடையாளம் காணலாம். இங்கிலாந்துகாரரும், அமெரிக்கரும் ஐரீஷ்காரரும் ஆங்கில மொழியை பேசியபோதும் அவர்கள் வெவ்வேறு
கொந்தளிப்பு 22

தேசிய இனங்களே, எனவே மலையகத்தவர் தமிழை பேசிய போதும் அவர்களும் தனியான வளர்ந்து வரும் தேசிய இனமே!
w மலையகத்தில் பெரும்பாலானோர் பெருந்தோட்டத் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதே!
எனவே, ‘பொதுவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு, நாம் ஒரு வேறுபட்ட குழு என்ற உணர்வு’ என்பன அவர்கள் தேசிய சிறுபான்மை இனம் என்பது மட்டுமல்ல வளர்ந்துவரும் தேசிய இனம் என்பதற்கே போதுமான ஆதாரங்களாக விளங்குகின்றன எனலாம்.
அடுத்த கட்ட அம்சமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ் கின்ற தமிழர்களிலும் மலையகத் தமிழர்கள் வேறுபட்டவர்களா? என்பதை நாம் நோக்கும் போது பின்வரும் விடயங்கள் முக் கி ய த் துவ ம் பெறுகின்றன.
மலையகத்தமிழர் தங்களுடைய பூர்வீக வாழ்விடமான இந்தியா அண்மையில் இருப்பதாலும், தேயிலை பயிரிடுவதற்கு முன் நிரந்தரக்குடி களாக இல்லாமையும் (அடிக்கடி சென்று வந்தமை திருச்சிராப்பள்ளி குடியகழ்வு காரியாலயம் மூடும்வரை) இந்திய சினிமா, சஞ்சிகை, தம்முடைய அரசியல் தலைவர்கள் இந்திய அரசுடன் கொண் டு ஸ் ள தொடர்புகள் என்பன இன்னும் அவர்களை பூர்வீக தாயகத்துடனான தொடர்பை இம்மக்கள் கைநெகிழவிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகின் றது. ஆயின் இலங்கை தமிழ் பேசும் மக்களிடம் இவ்வாறான ஒரு தொடர்பைவிட தாம் தனியான ஒரு இனம் என்ற உணர்வே காணப் படுகின்றது.
)
அலையலையாக இங்கு வந்து குடியேறிய இந்தமக்கள் ஏனைய இனங்களுடன் கலந்துவிடாமல் தம்மை ஒரு தனியான குழு என்ற உணர்வுடன் தம் இன அடையாளங்களை பேணி வருகின்றனர்:
பிரதேச அமைவிடமும் அவர்களை ஏனைய தமிழரிடம் இருந்து வேறுபடுத்துகின்றது. அடர்த்தியாக செறிந்து வாழும் அவர் களுக்கு ஏனைய இனங்களுடன் கலக்காமல் தான் செறிந்து வாழும் பிரதேசம் தன்னுடையது என்ற பிரதேச உணர்வையும் ஏற்படுத்துகின்றது.
23 கொந்தளிப்பு

Page 14
தென் னி ந் தி யா வி லிருந்து திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் இடங்களிலிருந்து மிகவும் கொடூரமான முறையில் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டனர் மலையகத் தொழிலா ளர்கள் ஆனால் பெருந்தோட்டத்துறையின் வரலாறானது இந்திய வம் சாவளித் தொழிலாளரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கொள் ளையடித்த காட்டுமிராண்டித்தனத்தையே கொண்டிருக்கின்றது எனலாம்.
'ஆங்கிலேய நிர்வாகத்தில் தென்னிந்தியாவின் கீழ்ஜாதியினர் எமது தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டனர்' இது இலங்கை வரலாற் றில் பொன்னெழுத்துக்களில் தன் பெயரை பொறித்தவர் என்று கருதப் டும் அனகாரிக்க தர்மபாலவின் கருத்தாக மாத்திரமன்றி முழு இலங் கையிலும் பெரும்பாலோரின் கருத்தாகவே கொள்ளலாம்.
1970ம் ஆண்டுப் பஞ்சம், 1977ம் ஆண்டு 83ம் ஆண்டுகளில் இனக்கலவரம், எல்லாவற்றையும் விட 1948ம் ஆண்டு குடியுரிமைப் பறிப்பு என்பன, தனது உடலை எருவாக்கி, அதன்மேல் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரச் செய்தவனுக்கெதிராக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு மனித உரிமைகளை கல்லறைக்கு அனுப்பிய நடவடிக்கைகள் எனக் குறிப்பிடுவதே பொருத்தமுடையதாகும்.
மலையகத் தொழிலாளர் இலங்கை வரும் போது இங்கு கிராமிய சுய தேவை பொருளாதாரமே நெல் உற்பத்தியை அடிப்படையாக கொண் டமைந்திருந்தது என்பது வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட உண்மை. எனவே கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேற்பட்ட மலைப்பகுதி யில் குளிரின் காரணமாக நெல் உற்பத்தியோ அல்லது அதனை அண் டிய குடியிருப்புகளோ நிகழ்ந்திருக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள் ளப்படவேண்டிய உண்மையாகும். இம்மக்கள் இங்கு குடியேறுவதற்கு முன்னர் வேறுமக்கள் வாழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகளும் , இல்லை, எனவே உடலை உழைப்பை இம்மண்ணுக்கு அளித்த உரிமை மலையகத்தவர்க்கே உண்டு. ஏனெனில் உலகில் பெரும்பாலான நாடுக களில் இந்த அடிப்படையிலேயே மக்கள் வாழ் கின்றனர் உதாரணம் அமெரிக்கர்கள் பிரித்தானியாவிலிருந்து சென்று குடியேறியவர்களே. இன்று அமெரிக்காவில் இருந்து அமெரிக்கர்களால் விரட்ட முடியாதல்லவா?
ஒரே மொழியை பேசுகின்ற வெவ்வேறு தேசிய இனங்களை உலகில் நாம் அடையாளம் காணலாம். இங்கிலாந்துகாரரும், அமெரிக்கரும் ஐரீஷ்காரரும் ஆங்கில மொழியை பேசியபோதும் அவர்கள் வெவ்வேறு
கொந்தளிப்பு 2 و

தேசிய இனங்களே, எனவே மலையகத்தவர் தமிழை பேசிய போதும் அவர்களும் தனியான வளர்ந்து வரும் தேசிய இனமே!
மலையகத்தில் பெரும்பாலானோர் பெருந்தோட்டத் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதே!
எனவே, **பொதுவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு, நாம் ஒரு வேறுபட்ட குழு என்ற உணர்வு’ என்பன அவர்கள் தேசிய சிறுபான்மை இனம் என்பது மட்டுமல்ல வளர்ந்துவரும் தேசிய இனம் என்பதற்கே போதுமான ஆதாரங்களாக விளங்குகின்றன எனலாம்.
அடுத்த கட்ட அம்சமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ் கின்ற தமிழர்களிலும் மலையகத் தமிழர்கள் வேறுபட்டவர்களா? என்பதை நாம் நோக்கும் போது பின்வரும் விடயங்கள் முக்கிய த் துவ ம் பெறுகின்றன.
மலையகத்தமிழர் தங்களுடைய பூர்வீக வாழ்விடமான இந்தியா அண்மையில் இருப்பதாலும், தேயிலை பயிரிடுவதற்கு முன் நிரந்தரக்குடி 'களாக இல்லாமையும் (அடிக்கடி சென்று வந்தமை திருச்சிராப்பள்ளி குடியகழ்வு காரியாலயம் மூடும்வரை) இந்திய சினிமா, சஞ்சிகை, தம்முடைய அரசியல் தலைவர்கள் இந்திய அரசுடன் கொண் டு ஸ் ள தொடர்புகள் என்பன இன்னும் அவர்களை பூர்வீக தாயகத்துடனான தொடர்பை இம்மக்கள் கைநெகிழவிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகின் றது. ஆயின் இலங்கை தமிழ் பேசும் மக்களிடம் இவ்வாறான ஒரு தொடர்பைவிட தாம் தனியான ஒரு இனம் என்ற உணர்வே காணப் படுகின்றது.
. . அலையலையாக இங்கு வந்து குடியேறிய இந்தமக்கள் ஏனைய இனங்களுடன் கலந்துவிடாமல் தம்மை ஒரு தனியான குழு என்ற உணர்வுடன் தம் இன அடையாளங்களை பேணி வருகின்றனர்:
፳ ; " பிரதேச அமைவிடமும் அவர்களை ஏனைய தமிழரிடம் இருந்து வேறுபடுத்துகின்றது. அடர்த்தியாக செறிந்து வாழும் அவர் களு க் கு ஏனைய இனங்களுடன் கலக்காமல் தான் செறிந்து வாழும் பிரதேசம் தன்னுடையது என்ற பிரதேச உணர்வையும் ஏற்படுத்துகின்றது.
23 கொந்தளிப்பு

Page 15
‘இவங்கைத் தமிழர் பல்வேறு அம்சங்களிளும் முன்னேறியகளாக இருப்பதனால் மலையகத்தமிழர் தம்மை அவர்களோடு இனங்கண்டால் தமக்குரிய இடத்தை இழந்து விடக்கூடும் என அஞ்சுகின்றார்கள்' என அவர் குறிப்பிடுவதும்.
‘அதாவது இலங்கைத் தமிழர்களோடு போட்டியிடமுடியாமல் மேம்படுத்திக் கொள்ள முடியாமல் மேம்படுத்த முடியாதிருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இந்நிலை தற்காலிகமானதே மலையகத் தமிழர்களும் மற்றவர் சமமான நிலையினை அடையும் போது இலங்கைத் தமிழர் அளவுக்கு வளர்ச்சியடைந்தால் தம்மை தனியாக அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது அப்போது அவர்கள் தம்மை இலங்கைத் தமிழரோடு சேர்ந்து தமிழர் என அடையாளம் காணுவர். "
மேற்கூறிய இரண்டு கருத்துகளும் முன்பின் முரணான தன்மை கொண்டவை, அதாவது மலையகத் தமிழர் தம்மை தனியாகவே இனம் காணவிரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் இலங்கை வந்த போது இலங்கையில் இருந்த ஏனைய இனங்களோடு தமிழர்களும் இன்று போல் அவர்களை தமிழர்களாக காணவில்லை அடிமைகளாகவே கண்டனர். தவிரவும் மலையகத்தவர் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார பிரச் சினைகளும் வேறுபட்டவை. புவியியல் அமைவிடம் என்பன இம்மக்கள். இவ்வாறான ஒரு வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இட் டு ச் செல்கின்றது என்ற உண்மையை சுட்டிக்காட்டாமல் மலையகத்தமிழரின் தனித்துவத் தினை அடையாளம் காணலாம் இரண்டு இனத்தினரையும் இணைக்கும் அவரது கருத்து முயற்சி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பவவந்தமே எனலாம்.
தவிரவும் மலையத்தமிழர் ஒரு தனியான தேசிய சிறுபான்மை யினரா? என்ற வினாவிற்கு ஆம், இல்லை. என்றவிடையினை அவர் அளிப்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. ஏனெனில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எவ்வாறு தன்னை ஒரு தேசிய இனம் என்று உரிமை கோரமுடிகின்றதோ அதே அளவிற்கு மலையகத் தமிழரும் தன்னுடைய அரசியல் உரிமையைக் கோரும் தகமையுடையவர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளாமையே காரணம் எனக் கொள்ளலாம்.
இந்த இரு தமிழ்தேசிய இனங்களும் இதர இனங்களும் எந்த அடிப்படையில் தேசிய அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிணைய முடியும் என்பதையும் அவர் தெளிவு படுத்தாமை குறைபாடுடைய அம்சமெனலாம்.
கொந்தளிப்பு 26

சாதி அமைப்பே இந்தியாவின் பலம்! சொன்னவர் காந்தி!
இஇஇ இ
காந்தியின் மறுபக்கத்தை இங்கே அலசி ஆராய இருப்பவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். 1945 இல் வெளியான காங்கிரசும் காந்தியாரும் நீண்டத் தகாதோருக்குச் செய்தவை என்ன? என்ற நூலில் ‘காந்தியம்’ என்னும் அத்தியாயத்தில் டாக்டர் அவர்கள் எழுதியுள்ள கருத்துக்கள் சில இங்கு தரப்படுகின்றன.
காந்தியின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து குல்லாய் அணியும் பலருக்கு அவரைப் பற்றி குத்தலான கருத்துக்களைக் கூறும் இக்கட்டுரை கோபத்தைத் தூண்டக் கூடும் (காந்தியம் என்றால் கிலோ என்ன விலை? என கேட்கும் காங்கிரஸ்காரர்கள்தான் இப்போது இருக்கிறார்கள் என்கிறீர்களா?) . . ܪ . . "
காந்தியம் என்பது என்ன? சமூகப்பிரச்சினைகள் குறித்து அதன் போதனைகள் என்ன?
காந்தியவாதிகள் சிலர் செப்பிடு வித்தையான ஒரு காந்தியக் கருத் தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். இத்தகைய கருத்தோட்டம் கலப்பட மற்ற கற்பனைத் தன்மை உடையது. இக்கருத்தோட்டத்தின்படி காந்தியம் என்பது பழைய கிராமிய நிலையைக் கொண்டு வருவதும் கிராமத் தன்னிறைவு கொண்டதாக ஆக்குவதும்தான். அது காந்தியத்தை வட்டார வியல் குறித்தான செய்தி மட்டுமே என ஆக்கி விடுகிறது வட்டாரவிய லைப்போல காந்தியம் எளிமையானதுமல்ல, களங்கமற்றதுமல்ல. வட்டா ரவியலைக் காட்டிலும் மிகப்பெரிய உள்ளீட்டைக் கொண்டது காந்தியம் காந்தியத்தின் ஒரு சிறிய, அற்பமான பகுதியே வட்டாரவியலாகும். காந்தியத்திற்கென ஒரு சமூகத் தத்துவம் இருக்கிறது. காந்தியத்திற்கென ஒரு பொருளாதாரத் தத்துவம் இருக்கிறது. காந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக தத்துவங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஒதுக்குவது காந்தி யத்தை வேண்டுமென்றே தவறாகப் படம் பிடித்துக் காட்டுவதாகும். எனவே முதலாவதும் மிக முக்கியமானதுமான தேவை காந்தியத்தின் உண்மையான சொரூபத்தைக் காட்டுவதுஆகும். ܖ
Gull T T 6ớluLu 6v - (Reglo nalism) தொடர்ச்சி 30ம் பக்கம்.
27 கொந்தளிப்பு

Page 16
5 штѣ й.
ஆணினத்திற்கே!
குயில் அடைகாப்பதில்லை; காகத்தின் கூட்டில் முட்டை யிடும். காகத்தின் கூட்டில் முட்டையிட ஆண் குயில் உதவி செய்கிறது. ஆண் குயில் காகத்தின் கூட்டருகில் செல்ல, காகங்கள் அதை விரட்டிக் கொண்டு போகுமாம். அப் போது பெண் குயில் அவசரமாய் முட்டையைக் காகத்தின் கூட்டிலிட்டுவிட்டுச் சென்று விடும்.
வெள்ளைக் கெளிறு மீன்களில் ஆண்கள், பெண்கள் இடும் முட்டைகளைத் திறந்த வாய்க்குள்ளே வைத்துக் கொண்டு? அவை பொரிக்கிறவரை உணவு உண்பதில்லை.
மயில் உள்ளான், சில இனக் காடைகள் போன்ற ப fD வைகளில் அடைகாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளைச் சேரும்.
மருத்துவச்சி தேரை என்னும் ஒருவகைத் தேரை இனத் தில் பெண் இடும் முட்டைச் சரங்களை ஆண் தன் பின் னக்ங்கால்களில் கணுக்களுக்குச் சுற்றிக் கொண்டு விலங்கு போட்டது போலக் காணப்படும். இப்படிச் செய்வதால் முட்டைகளைத் தன்னுடனேயே  ைவத் துப் பாதுகாக்க நேரிடுகிறது. 2000 ஆண்டுக்குப் பின் மனித இ ன த் தி லும் பெற்றுத் தள்ளுவது மட்டுமே பெண்களின் பொறுப்பாகவும் உணவூ ட்டுவது, வளர்ப்பது கல்வி யூட்டுவது கட்டிக் கொடுப்பது வரை 90 வீதம் ஆண்களே செய்ய வேண்டிவரும் என ஒரு ஆய்வு கூறுகிறது. ஆண்களே மெழுகு போல் தியாகம் செய்வது நீங்கள் மட்டுமே!
LLLLLL LL LLL LLL LLL LLL LLLLLLL gq LLLL LLLLLLLLLL LLLLLLL L S SLLSLLLLLLSLLL0L0L LL LLL CLLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLSLTT TL0L L CS M CLLLL CLLLLLLLSLL LL LLL LLLL LL LL LM LLL LLS LL LLL LLLLLL SSqqSSq Lq LSL SLA LSL qLLLLLSSSSSSSSSSSS ww.
கொந்தளிப்பு 28

மலையகத்தின் தனித்துவத்னை புலப்படுத்துவதென்பது வெறுமனே ஒரு குறுகியவாதமன்று.
‘அனைத்து தேசிய இனங்களுக்கும் முழுமையான சம உரிமை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளர்களின் ஐக்கியம். இதைத்தான் ‘மார்க்ஸியமும் உலக முழுவத ன் அனுபவமும்', 'ருஷ்யாவின் தொழிலாளர்களுக்கு கற்பிக்கும் தேசிய இன வேலைத்திட்டம்' என்ற வி. இ. லெனினின் கூற்றின் அடிப்படை ல் தேசிய இனங்கள் சகல ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து போராடி . தொழிலாளர்களின் ஐக்கியத்தை வலுப்படுத்துவதென்பது சமகாலத்தில் மிகவும் பொருத்தப்பாடும் அவசியமுமுடையதென்றும் அதுவே அடிப்படை யான தீர்வென்றும் கருதுகின்றேன். eeOOOeeeeOeOOeOeeOekOeeOeOe0eOeeOeOeOO00ssssssssssCsH0eTeeMeSS
எ முத் தா ள ன்
'நிகழ்கால வ ர ல |ா ற்  ைற எழுதும் ஒரு வரலாற்று ஆசிரியன் தான் கூறிய கருத்துக்களுக்காகவும் தாக்கப்படுவான். தான் கூறாமல் விட்ட கருத்துக்களுக்காகவும் தாக் கப்படுவான். உ ன்  ைம  ைய யு ம் சுதந்திரத்தையும் விரும்பி எ த் தகைய பிரதிபலனையும் எ தி ர் பார்க்காமல், எதற்கும் அ ஞ் சா
மல் எதையும் தனக்காகக் கேட்டு அடைய விரும்பாமல் பண்பட்ட
ஒரு எழுத்தாளனாக ஆவ  ைத மட்டுமே குறிக்கோளாகக் கொண் டுள்ள ஒருவனுடைய ஆர்வத்தை இத்தகைய குறைபாடுகள் குறைத்து விடாது. ’’ r
- வால்டர் -
சேரனை சோழனை
கம்ப இராமயணம் உயர் ஒழுக்க விளக்கத்துக்காக மட்டு மே எழுதப்பட்டு, உயர்ந்த ஒழுக் கமுள்ளவர்களை மக்கள் வணங்க வேண்டும் என்ற முறையிலே எழு தப்பட்டிருப்பின், இராமன் பூசைக் குரியவனாக பரதன் வெ று ம் ஆழ்வாராகக் காரணம் என்ன? <916Al தார மகிமைக்காகவே கம்ப இரா மாயணம் எழுதப்பட்டதனால்தான் இராமர் கோயில்கள் எழுந்தன, இந்தச் சிறப்புக்காகவே, கம் பர் இராம கதை எழுதியதால்தான் இமயம் வரை சென்று ஜெயித்த செங்குட்டுவனையும், பர்மா வரை சென்று புகழ் பெற்ற இராசேந்தி ரனையும் தமிழர் மற ந் த ன ர். அயோத்தி மன்னன் மகனை, ஆண் டவனவதாரம் என்று வரைக்கும் ஆரியத்துக்கு அடிமையாயினர்.
அறிஞர் அண்ணா
29
கொந்தளிப்பு

Page 17
சாதியமைப்பு
இந்தியாவில் மிக முக்கியமான சமுதாயப் பிரச்சினையாக அமைந் திருப்பது சாதியமைப்பே (இந்தியாவில் மட்டுமல்ல இந்துக்கள் எங்கெல் லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்தச் சாதிச் சனியன் இன்னும் தொல்லைகளை அள்ளித் தருவது கண்கூடு!) இந்தச் சாதியமைப்பு குறித்த காந்தியாரின் நோக்குகள் நவஜீவன் என்கிற குஜராத் இதழில் 1921-22 இல் மிகத் தெளிவாக அவரால் பின்வருமாறு விரித்துரைக்கப் படுகின்றன.
1. இந்துச் சமுதாயம் சாதியமைப்பை அடிக்களனாகக் கொண்டு நட்டப்பட்டிருப்பதால் தான் நிலை கொண்டு இருந்து வருகிறது என நான் நம்புகிறேன்.
2. சுயராஜ்யத்துக்கான வித்துக்களை சாதியமைப்பிலே காண முடி யும், வெவ்வேறு சாதிகளும் இராணுவப் படையின் வெவ்வேறு பிரிவு களைப் போன்றவை. ஒவ்வொரு படைப்பிரிவும் முழுப்படையின் நலனுக் காகப் பணியாற்றுகிறது. -
3. சாதியமைப்பை உருவாக்க முடிந்திருக்கிற ஒரு சமுதாயம் தன்னை அமைப்பாக்கிக் கொள்ளும் இணையற்ற ஆற்றலைப் பெற்றிக்கிறது என்றே கூறியாக வேண்டும்,
4. தொடக்கக் கல்வியைப்பரப்புவதற்கான ஆயத்தமானதொரு வழி வகையை சாதி பெற்றிருக்கிறது. ஒவ்வொரு சாதியும் அந்தச் சாதியி லுள்ள குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை ஏற் று க் கொள்ள முடியும். சாதி ஒரு அரசியல் அடிப்படையைக் கொண்டது. சாதி ஒரு தேர்தல் தொகுதியாகச் செயல்பட்டு பிரதிநிதித்துவ அமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரே சா தி யி ன் உறுப்பினர்களுக்கு இடையேயான பூசல்களைத் தீர்ப்பதற்குச் சிலரை நீதிபதிகளாகத் தேர் ந்தெடுப்பதன் வாயிலாக நீதி மன்றச் செயல்பாடுகளை மேற்கொள்ள சாதியால் முடியும், சாதிகள் இருப்பதைக் கொண்டு ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு பணியை ஆற்றச் செய்வதன் மூலம் ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்திக் கொள்வது எளிதாகிறது. . . .
5. தேச ஒற்றுமையை வளர்ப்பதற்கு கலப்பு மணம், சுலந்துண்ணல் ஆகியவை தேவையற்றவை என்றே நான் நம்புகிறேன். கலந்துண்னல் நட்பை உருவாக்குகிறது எனக் கருதுவது, அனுபவத்திற்கு மாறாக உள்ளது. கலந்துண்ணல் நட்பை வள ர் க் கும் எ ன் பது உண்மையென்றால் ஐரோப்பாவில் யுத்தமே இருந்திருக்காது. இயற்கையின் அழைப்புக்குப்
கொந்தளிப்பு . 30

பதிலளிப்பது (மலசலம் கழிப்பது) எவ்வளவு அருவருப்பான செயலோ அ வ் வ ள வு அருவருப்பானதே உணவருந்துதலும். இரண்டிற்குமுள்ள வேற்றுமை என்னவென்றால்இயற்கையின் அழைப்புக்குப் பதிலளித்தபின் நமக்குச் சாந்தி கிட்டுகிறது. உணவருந்திய பின்னரோ நமக்கு சங்கடமே உண்டாகிறது. இயற்கையின் அமைப்புக்குத்தனிமையில் விடையளிப்பது போலவே உணவையும் தனித்தேதான் உட் கொள்ள வேண்டும்.
6. இந்தியாவில் அண்ணன் தம்பதிகளின் குழந்தைகளுக்கு இடையே திருமணம் செய்வதில்லை. அக்குழந்தைகளுக்கு இடையிலே திருமணம் இல்லையென்பதால் அவர்கள் தங்களுக்குள் நேச ம் பாராட்டுவதை நிறுத்திக் கொண்டு விட்டனரா? வைணவர்களில் பல பெண்கள் மிக வைதீகமாயிருக்கிறார்கள் (Orthodox) அவர்கள் குடும்பத்தாருடன் ஒன் றாக உணவருந்துவதில்லை: பொதுவான தண்ணீர்க் குடத்திலிருந்து நீர் அருந்துவதும் இல்லை அவர்களுக்குள் நேசம் இல்லையா? பல்வேறு சாதி களிடையே கலப்புமணம் கலந்துண்ணல் ஆகியவற்றை சாதியமைப்பு அனுமதிப்பதில்லை என்பதற்காக அவ்வமைப்பு கெடுதலான ஒன்று எனக் கூற முடியாது
7. கட்டுப்பாட்டின் மறு பெயரே சாதி! சாதிஅனுபவித்தலுக்கு (Enj0 yment) ஒரு வரம்பு கட்டுகிறது. அனுபவித்தலுக்காக ஒரு மனிதன் சாதி எல்லைகளைத் தாண்டுவதை சாதி அனுமதிப்பதில்லை. கலந்துண்ணல், கலப்புமணம் போன்ற வற்றி ன் மீதான சாதியக் கட்டுப்பாடுகளின் பொருள் இதுவே!
8. சாதியமைப்பை அழித்துவிட்டு மேற்கத்திய ஐரோப்பியசமூக அமைப்பை மேற்கொள்வதன் பொருள் என்ன? சாதியமைப்பின் ஆத்மாவான குலத்தொழில் கொள்கையைக் கைவிட்டு விட வேண்டுமென்பதே! குலவழிக் கொள்கை என்பது ஒரு உள்ளமைப்புக் கொள்கை. அதை மாற்றுவது ஒழுங்கின்மையை உருவாக்குவதே ஆகும். ஒரு பிராமணனை பிராமணன் என்று நான் கூப்பிட முடியாதென்றால் பிராமணனால் என் வாழ்க்கைக்கு ஒரு பயனுமில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு பிராமணன் சூத்திரனாகவும், ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட வேண்டும் என்றால் அது ஒரு பெரும் குழப்பமாகும்.
9. சாதி அமைப்பு என்பது சமூகத்தின் இயற்கையான ஒரு ஒழுங்கு முறை இந்தியாவில் சாதி அமைப்புக்கு ஒரு மதப்பூச்சு தரப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் சாதி அமைப்பின் பயனளிக்கும் தன்மையைப் புரி ந் து கொள்ளாததால் அங்கெல்லாம் சாதி அமைப்பு ஒரு தளர்ந்த நிலையி லேயே நின்று நிலவியது. எனவேதான் சாதி அமைப்பால் இந்தியா நன்மை அடைய முடியவில்லை.
கொந்தளிப்பு 3.

Page 18
மச்சான பாத்தீங்களா?
ஏழைகளின் தோழனென்று எக்கி நின்று சொன்னவரு
பாட்டாளியின்
கூட்டாளி யென்று
பக்குவமாய் சொன்னவரு
அன்னிக்கு பாத்ததுங்க அப்புறமா பார்க்கவே இல் . . . லீங்க அவரு தானுங்க
ஒட்டு கேட்டு வந்தவரு அதிர் வேட்டு போல பேசினாரு ஏனுங்க அந்த மச்சான பாத்தீங்களா, ?
கங்காணி மார்களுக்கு வைர கத்திகளும் வாங்கிருவோம்
தங்கா. . . உன் தலைக்கு
தங்க கொங்காணி கேட்டிடுவோம்
குமரி பெண்கள் குலுங்கி நடை போட பிலாஸ்திக்
கூடைக்கு குரல் கொடுப்போம்
பாங்கான பார்வதிக்கும் பூங்காவன்த்திற்கும்
இடை மினுங்க பொன்னாடை கேட்டிடுவோம்’ ’
வீரம்மா பாவாயி வீசி விளையாட
வெள்ளியினால் 'மட்ட கம்பு’’ - வெகு
வீரியமாய் கேட்டு வாங்க
விரும்பி நீங்க ஒட்டு தாங்க
இகாந்தளிப்பு 32

அவரு தானுங்க ஆளையே காணலையே ஏனுங்க அந்த மச்சான பாத்தீங்களா. . . ?
நாட்டு நடப்புகளை
நன்னயமாய் எடுத்துச் சொல்லி
உழைப்பவருக்கு ஊதியம்
உயரும்படி செய்திடுவோம்
தோட்டங்களை தொலைத்து விட்டு
கிராமங்களாய் ஆக்கிடுவோம்
மாற்றங்களை கொண்டு வந்து ஏற்றமுடன் வாழ்ந்திடனும்
வாக்களிக்க சொன்னவரு
வாக்கு வாங்கி 'வந்தவரு'
அவரே தானுங்க ஏங்க
அந்த மச்சான பாத்தீங்களா.. . . ..?
எஸ். சந்திரசேகர்
S S S S S S HCH HLL C CCC C i qqqq qq LL qBqMq qSLLALAALLLLLLLLqL LL LLLLL LL LSMMLLLLLSLLLSq qSq M qqLq qSSq L q q qq q LLLS q qqqqq qqq qqq qqSqqqqMSMAMqqqAASSLSqqqqqqq qqqqq q q q qqqq qq qqq qqqqLLqqq q
சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் நீதியின் முன் குற்றவாளியாகி விடுவதில்லை.
- கலைஞர் கருணாநிதி -
கொந்தளிப்பு 33

Page 19
பரதனுக்குக் கோவிலுண்டா?
3ଞ:
இராமாயணத்தை எடுத்துக்
 ெகா ன் டா ல் இர ா ம  ைன
விடப் பரத னி ட ம் உ ய ர் ந் த
ஒழுக்கங்கள் இருந்தன என்பது விளங்குகிறது. இராமன் அரசு தனக்கு முடிசூட்டு விழா வைத் ததை ஒப்புக் கொண்டு இராச் சியம் ஆள இசைகிறான். தனக் குச் சொந்தமல்லாததை அனுப விக்க இசைவது ஒழுக்கமாகாது. பரதனோ தனக்கே சொந்தமான அரசையும் அண்ணனுக்குத் தந்து தனக்கு அரசாள விருப்பமில்லை என்பதைக் கூறி அரச போகத் தைத் தன் அளவு துச்சமாக மதிப்பவன் என்பதைக் காட்டுவது
மதுக்கடைகளும் சினிமாக் கொட்டகையும் சாதிகளும் இங்கே! வாண வேடிக்கைகள்.
C) பக்த கோடிகள் மக்கள் தான் ஆனால் அபயமளிப்பவர்கள் மட்டும் வேட்பாளர்கள்.
ச. மணிசேகரன்
போல், ‘இராமா, உன் பாதுகை யைக் கொடு: அவை அரசாளட் டும்” என்று கூறிய உயரிய ஒழு க்கமுடையவன். இன்று வரை
இவ்வளவு ஒழுக்கமுள்ள பரதனு
க்கு கோயில் கட்டிக் கும்பிட்டவர் யாராவது இராமா, இராமா என்று கூறுவது போல் பர்தா, பரதா, என்று கூறுபவர் உண்டா?
உண்டா?
- அறிஞர் அண்ணா -
புகழே நீ பனிக்கட்டி உன் னைக் கைக்குள்ளே வைத்து கெட்டி யாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து ம  ைற ந் து விடுகிறாய் புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன் பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை. புகழே! நீ நிழல் உன் னைப் பற்றிக் கவலைப் படாதவர் களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்
கலைஞர் கருணாநிதி
இ
கொந்தளிப்பு
ઈ4

கொந்தளிப்பு கோடிக்கணக்கில்.
-K s
O Sa
இதய கொந்தளிப்பை எடுத்துரைக்க
எதிர்பார்த்தேன் உதயமான தங்கள் வெளியீடு உள்ளத்தை
கவர்ந்தது ஏமாற்றப்பட்ட மலைநாட்டார் மத்தியில்
இன்னும் ஏமாறாமல் இருக்கும் அன்புள்ளங்களின்
இதயத்துடிப்பை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும்
கேள்விக்கேற்றபதில் உள்ளத்தை தொட்டு உண்மைகளை உணரச்
செய்தது பல ஆண்டுகளாக வெளியான தங்கள்
ஆக்கத்தின் சிலவற்றை கண்ணுற்ற நான் மகிழ்வடைந்தது
மட்டுமின்றி நிந்தனை செய்யும் நீதி அற்றவர்களின்
முகமூடியை கிழித்தெறிந்து அவர்களின் கீழ்க்குணத்தை
காட்டும் அழுத்தமான உண்மைகளை அச்சமின்றி
வெளியாக்கும் கொந்தளிப்பு பிரதிக்கு வந்தனம்
செய்வதோடு
மங்களமாய் மலர்ந்து மணம் வீச
கொந்தளிப்பு பிரதிகள் கோடிக்கணக்கில் வெளிவர நாடி
துதிக்கின்றேன்
ஆடிடும் தில்லையம்பலத்தானை அனுதினமும்
என் மனதில்
எம். எஸ். சங்கிலித்தேவன்"
கொந்தளிப்பு 34

Page 20
‘நமக்கென்னானு போயிடுவது.'
ஏழ்மை, படிப்பில்லாம இருக்கிறது; நல்லவங்க நமக்கென்னானு போயிடுவது; இதுதான் காரணம். இரன்டு உலகம் இருக்கு டாக்டர் இரண்டு இருக்கு: ஒண்ணை ஒண்ணு கேலி செய்து கிட்டு, விரோதிச் சிக்கிட்டு. காமம், குடி, களவு, கொலை, கலகம் யாவும் இரண்டு உலகிலேயும் உண்டு. அதான் பணக்காரன். ஏழை என்று பாரில் இரு வேறு உலகம் இருக்கு. பணக்காரங்க உலகத்துச் சமாசாரம். வெளியிலே சுலபத்திலே வராது. ஏனெனில் பணம் அங்கு நடக்கும் எ  ைத யும் பக்குவமாக்கிவிடும். ஆனால் ஏழைகள் விஷயம் ஊர் பூராவும் பரவி விடும். ஏன்னா ஏழ்மை, அங்குத் தாண்டவமாடுவதால்.
ஏழைக. வீட்டிலே உலகத்துக் கெட்ட நடவடிக்கை மொந் தையிலே இருக்கிற கள்ளுமாதிரி பொங்கி வழியறது. பணக்கார உலகத் துக் கெட்ட நடவடிக்கை. கார்க் போட்ட சீசாவிலே ஊத்தி ஊத்தி அனுப்பற ஒசத்தி சரக்கு மாதிரி, மங்கி வாழ்றது!.
(ஜமீன்தாரைத் தேடி "ராப்பள்ளி பக்கம் டாக்டர் சேகர், ரத்தினம் இருவரும் செல்கின்றனர் இரவில். அப்போது அங்கு நடை பெறும் அரிய காட்சிகள்.)
இடம் : Lu T605. இருப்போர் : சேகர், ரத்தினம். சேகர் : இரவு நேரத்திலே, என்னென்ன கன்றாவிக் காட்சிகள் ரத்னம்.
ரத்னம் நீங்களென்ன கண்டீர்கள். இராத்திரி வேளைன்னா, சங்கீதம் சரசம், குடும்பத்தில் சந்தோசம் இவைகள்தான் இருக்குமென்று நினைக்கிறீர்கள் இவைகளைதான் பார்த்திருப்பீர்கள். இரண்டு உலகமல்லவா இருக்கிறது. உங்க உலகிலே இர வு பத்துமணி அடித்தா, தீர்ந்தது; சந்தடி கிடையாது. எங்க உலகமிருக்கே அதுக்கு, இரவு மணி பத்தானாத்தான் பொழுது விடியுதுன்னு அர்த்தம், தெருக் கோடிச் சண்டை, வீட்டு மேலே கல் வீசுவது கலகம், கத்திகுத்து, எல்லாம் அப்போதுதான் ஆரம்பமாகும்" நீங்களெல்லாம் காலையிலே காப்பி சாப்பிட்டுவிட்டதும் சுறுசுறுப் பா வேலைசெய்வீங்க. எங்க உலகத்திலே சுறுசுறுப்புராத்திரி பத்து அடிச்சதும் கள்ளோ, சாராயமோ போட்டு கிட்டா, தீர்ந்தது கோட்டை எல்லாம் தூளாகும்.
கொந்தளிப்பு

(தொலைவிலே கலகக் கூச்சல் கேட்கிறது)
கேட்குதா, அதுதான் சங்கீதம், (ஒருவன் குடிவெறியாலே ஆடிக்கொண்டு வருகிறான்) பார்த்தீங்களா ! இதுதான் எங்க உலகத்து டான்சு. பாருங்க வேடிக்கையை, (வந்தவனை வழிமறித்து) ரத்னம் : யாருடா அவன். வந்தவன் : (முறைத்து விட்டுக் கூச்சலிடுகிறான்) டே :
யாருடா நீ ! நான் யாரு தெரியுமாடா. (மடியிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுக்கிறான்) ரத்னம் : (சேகரைப் பார்த்து) க த் தி மடக்கி இருப்பது கூடத் தெரி யலை பயலுக்கு. அவ்வளவு போதை .
(வந்தவனை ஒர் அறை கொடுக்கிறான். வந்தவன் கூச்சல் அழுகுர லாகிறது. ) ரத்னம் : (சேகரைப் பார்த்து) இவ்வளவுதான் இந்த உலகத்து வீரம்! ஆரம்பத்திலே, வீராவேசமாக இருக்கும் முதல் அடி நம்மதாயிட்டா, பய காலிலே விழுவான். வந்தவன் : அண்ணேன் ! நான் யாரோன்னு பார்த்தேன், உங்க தம்பி அண்ணே நானு, உங்க கையாலே அடிபட்டா எனக்குக் கெளரவத் தாண்ணேன், நாம்மரெண்டு பேரும் மாமன் மச்சான் மாதிரி பழக னவங்கதானேண்ணேன், நீங்க பெத்த புள்ளே மாதிரி அண்ணேன். நம்ம குரு நீங்கதானேண்ணேன்.
ரத்னம் : டாக்டர் 1 பார்த்தீங்களா ? நானு அவனுக்கு அண்ணன் , மாமன், அப்பன், குரு இவ்வளவு பந்துவுமாயிட்டேன், ஒரே அறை
கொடுத்ததிலே.
(வந்தவனைப் பார்த்து)
GLlunt Lint ! G3 , ! G3 untu IT !
(அவன் தள்ளாடி நடந்து கொண்டே) வந்தவன் ; டே! நம்ம குரு கிட்ட எவனாச்சம் வாலாட்டினா, தீத்துப் பூடுவேண்டா, தீத்துப் பூடுவேன், அண்ணேன்! நான் போயிட்டு வாரேன். தெரியாம அடிச்சிவிட்டேன். கோபிச்சிக்காதேண்ணேன்.
(போகிறான்.)
கொந்தளிப்பு - - - 36 ܚ . . - -܀

Page 21
ரத்னம் : ஒரு தடவை டாக்டர் , ஒரு ட்ராமாவிலே, புத்தர் கதை காட்டினாங்க. புத்தர் பெரிய ராஜா பிள்ளை இல்லையா? சுக போகத்திலேயே இருந்தவரு. ஒருநாள், ஊரைச் சுற்றிப் பார்த் தாராம், நோய் பிடிச்சவன், ஏழை, நொண்டி, குருடன், பிணம் இப்படிக் கண்றாவிக் காட்சியாகப் பார்த்தாரு. உடனே அவரு மனமே குழம்பிப்போச்சி. சே! என்னா உலகம்பா இது ! இதிலே இவ்வளவு ஆபத்தும் ஆபாசமும் இருக்கான்னு ஆயாசப் பட்டாராம்
ஒரு இரவிலே, எங்க உலகிலே நடக்கிற கோரத்தைக் கண்டா, உங்களாட்டம் இருக்கறவங்களெல்லாம், புத்தரு மனசு பாடு பட்டு துன்னு, ட்ராமா கட்டினாங்களே அது போலே, ஆய்விடுவீங்க.
அவ்வளவு கோரம், கொடுமை ஆபாசம் தாண்டவமாடும்.
சேகர் : ஆமாம் ரத்னம் ! பார்த்தாலே.
ரத்னம் : வாந்தி வரும்! ஆனா, எல்லாம் எதனாலே வருதுன்னு நினைக் கிறீங்க. ஏழ்மை, படிப்பில்லாமெ இருக்கிறது; நல்லவங்க நமக்கென் னானு போயிடுவது; இது தான் காரணம். இரண்டு உலகம் இருக்கு டாக்டர். இரண்டு இருக்கு ஒண்ணை ஒண்ணு கேலி செய்துகிட்டு, விரோதிச்சிக்கிட்டு, காமம், குடி, களவு, கொலை கலகம் யாவும் இரண்டு உலகிலேயும் உண்டு. அதான் பணக்காரன், ஏழை என்று
பாரில் இருவேறு உலகம் இருக்கு. . பணக்காரங்க உலகத்துச் சமா சாரம், வெளியிலே சுலபத்திலே வராது. ஏனெனில் பணம் அங்கு நடக்கும் எதையும் பக்குவமாக்கிவிடும். . . ஆனா ல் ஏ  ைழ க ள் விஷயம் ஊர்பூராவும் பரவிடும். ஏன்னா, ஏழ்மை அங்கு தாண்டவ மாடுவதால். . .
ஏழைக உலகத்துக் கெட்ட நடவடிக்கை மொந்தையிலே இருக்கிற கள்ளுமாதிரி, டொங்கி வழியறது. பணக்கார உலகத்துக் கெட்ட நடவடிக்கை, கார்க் போட்ட சீசாவிலே ஊத்தி அனுப்பற ஒசத்தி சரக்கு மாதிரி, மங்கி வாழ்றது !.
- அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன மலர்களிருந்து -
இரகசியம் ஏதாவது ஒரு விஷயத்தை ஒரு ஆணிடம் சொன்னால் அது ஒரு காதில் நுழைந்து மறு காதில் வந்து விடுகிறது. ஆனால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அது இரண்டு காதிலும் நுழைந்து வாய்வழியே வந்து விடுகிறது.
ஜான்சன்
கொந்தளிப்பு 37

எமது சிறு கதை
வே ர் க ளி ன் க  ைத
3&&t:&&&&&&&ଞ&&&&&&&&
சங்கு சப்தம் 12மணி என் பதை பறை சாட்டியது. வெயில் கோரமானதாக இருந்ததால் சீமெ ந்து தரையில் வெறும் உடம்போடு படுத்திருப்பது இதமானதாக இரு ந்தது.
டேய். . . சந்தநொ த ம் பி பீளிக்கு போகுதானு கொஞ்சம்
பாரு' மகன் சிவாவுக்கு சொல்லி
விட்டு அவன் பதில் வரும் வரை கதவு பக்கமாக ஒருக்களித்து படுத் துக் கொண்டான் சிவனு என்ற சிவராமன்.
சந்தநொ அண்ணே இப்பதா பீளி க்கு போவுது ப்பா' சிவா வாசல் படியில் எ ட் டி நின்று சொல்லி விட்டு, செங்கரும்பை ருசி பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்
செவுனு எழுந்தான் கொடியில் கிடந்த ஏழு வயது டவலையும் சாரத்தையும் எடுத்துக் கொண்டு பீளிக்கு புறப்பட்டான்.
வாப்பா செவுனு. . . என்னா இன்னிக்கு ரொம்பவும் டல்லா இருக்கே! தப்பு ராசலிங்கம் இப் படி விசாரித்த படியே வரவேற் றான்.
இல்ல நாளக்கி நம்ம பொள ப்பு நடுத் தெரு வு ல தானோனு யோசிச்சேம்பா! ... செவுனு வட்ட கல்லின் ஒரு கங்கில் உட்கார்ந்தான் அவனுக்குள்ளிருந்து ஒரு பெ ரு மூச்சு வெளிப்பட்டது.
காரணம் புரியாமலே அங்கு ஒரு மெளனம் நிலைத்தது! ‘ராவு பி. பி. சி கேட்டிங்களா தலவர் அண்ணே? ' மெளனத்தைக் கலை த்து விட்டவன் தப்பு "ராஜலிங்கம் தான்.
* ‘சங்கத் தலைவர் ராஜி அவ சரமாய் தலையசைத்து மறுத்த படி இல்லப்பா! அக்கா மவ வய சுக்கு வந்துட்டா. நானும் அக்கா வும் போனமா! மச்சா மூக்க புடி க்க ஊத்திட்டாம்பா! சேதி கேக் கிறது எங்க!
"கட்சி இனி தேர்ரது கஸ்டந் தானா! ஊழல்கள் நெறஞ்சி தனி நபர் ஆதிக்கோ கூடி போச்சினு நமசிவாயாம் சொன்னாராம்! . தப்பு ராஜலிங்கம் செ ய் தி வாசிக்க வாசிக்க வயிற்றுக் குள் ஜூவாலை எழுந்தது.
' வெரிடாசுல கூட தலவர் தலைக்கு ஆபத்து. மலயகம் இனி கேள்விக்குறினு சொன்னாங்க ** சந்தனம் சொன்னதை கேட்டதும் அவர்களின் கோட்டை இடிவதாய் ஒருவித பீதி,
. 'இன்னிக்கு பேப்பர்ல ந ம சிவாயம் அறிக்கை வுட்டு இருக்கி றாமே தம்பி’ உடைந்த அல்லது கீறல் விழுந்த கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர் பற்றி செவனு விசாரி த்தான்.
கொந்தளிப்பு
38

Page 22
"ஆமாண்ணே! கட்சிக்குள்ள ஜனநாயகம் இல்லயாம் தல வர் பல லட்சம் ரூவாவ சுவிஸ் பேங் கில் போட்டு வச்சி இருக்காராம் தன்னோட சுய நலத்திற்காக கட்சி கொள்கைய அடகு வச்சிட் டாராம். இதல்லாம் பத்தி தோட் டம் தோட்டமா வந்து சொல்லப் போறாராம்.
அவர் க ள் நமசிவாயத்தின் கடந்தகால வாழ்க்கையை, நடத் தைகளை கோபத்தோடும் , எரிச் சலோடும் விமர்சித்தனர்.
பங்கில் பாதியை நமசிவாய திற்கு சேர்த்திருந்தால் இப்படி நடக்க இன்னும் ஒரு நூற்றாண்டு போய் இருக்கலாம்.
** அண்ணே பொம்பளைங்க மலைக்கு போறாங்க. ரெ ண் டு மணி யடிச்சிருச்சி போல, குளிப்
YA ) 39
L110
大 ★
மறு நாள் மாலை கூட்டம் கூட்டப்பட்டது. மற்ற சங்கத்து உறுப்பினர்களும் வந்திருந்தனர், ராஜி தலைவர் எழுந்து பேசினார்:
'தலவர் நமக்காக எததெயல் லாமோ உதறி தள்ளிட்டு உழைச்சி இருக்காரு இன்னோ ஒரு கெல மயில நம்ப தோட்டத்துக்கு லைப் போடுறது பத்தி கதைக்க வர்றேனு இருந்தப்பதான் . . . . இந்த . . : தலவர் மீது கடத்தல் வழக்கு போட்டு இருக்கானாம் நமசிவாயம்.
கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு 'அதனால நமசிவாயம் உடனடி யாக கட்சில இருந்து விலகி ப் போக, நாம ஸ்ட்ரைக் இருக்க ம்னு'
அவர்கள் அனைவரும் அதற்கு இசைந்தனர். தன் ஒரு நாள் வேலையை தமது உத்தமர்க்காக தியாகம் செய்ய ஆர்வம் காட்டி GTរំ »
‘எல்லாம் அந்த நமசிவாயம் செஞ்ச சதிதாம்பா! பதவி வெறி யில ஒரு உத்தமரு மேல நெருப்ப
கொட்டிட்டான்'
大 大 大
மறுநாள் ஸ்ட்ரைக் ஸ்ட்ரைக்கின் போது தலைவ ரின் புனிதத்தின் மீது கறை அப் பிய நமசிவாயத்திற்கு எ தி ரா ய் கோஷம் போடுவது, போஸ்டர்.
ஒட்டி சின்ன மீட்டிங் போடுவது
மாய் முடிவு.
அதற்கான ஏற்பாடுகள் ராஜி தலைவர் வீட்டில் சில அந்நியர் களின் அனுசரனையுடன், வரையப் பட்டது. பிரதி நிதி தந்த சில போஸ்டர்களும், கோச ங் களும்
பேசப்பட்டு ஒத்திகை பார்க்கப்
re
★ 大
அன்றிரவு அதே மாதிரி
காளிமுத்து கோட்டசில் ஒரு கூட் டம் கூடியது. ராஜி போ டுற கூட்டத்தில யாரும் கலப்பதில்லை அவர்களின் தல வ  ைர ஆதரிப்ப தில்லை: எ ன முடிவெடுத்தனர் அதிகமாக காளிமுத்துவின் வாடிக் கையாளர்கள்தான் இருந்தனர்.
39
கொந்தளிப்பு

காளிமுத்து எல்லோருக்கும் சாராயம் பரிமாறினான். உரப்பு கடலைதந்தான். ' ராஜி கெடக்குற ான் இனி காளிமுத்துதாந் தலவர்' **ஆமா அவர்தான் அடுத்த தலவர் பலர் உளரினார்கள்.
'தலவர் பெரிய திருடம்பா நம்ப நமசிவாயோ கட்சிய விட்டு விலகப் போறாராம் அப்பறமா நெறைய பேர் நமசிவாயத்தோட தான் சேந்து புதிய கட்சி உரு வாக்குவாங்களாம் நம்ப முந்திக் கனும் இப்பயில இருந்து ஆதரிச்சா நமசிவாயம் நேர்ல வந்து உதவி செய்வாரு'
காளிமுத்து ஆ  ைச காட்டி
னான் 'நெருப்பில்லாமல் புகை யாது’ என்று எதிர் பிரச்சாரம் ஒலித்தது.
★ 大 ★
வி டி ந் த து
ராஜி தன் ச கா க் களு ட ன் டவுன் வரை ஊர்வலம் போனான் லயத்து கோடி பெட்டி கடைகளின் முகம் எ ங் கு ம் நமசிவாயத்தை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்பட்டது கடைசியாக ஒரு கூட்டம் நடந்தது
காளித்துவின் ஆளுங்க வரா ததும் அவர்களின் ‘நெருப்பில்லா மல் புகையாது' என்ற கிண்டலும் ஊர் முழுவதும் பேசப்பட்டது.
ராஜி சங்க பொடியன்கள் காளிமுத்துவை எட்டப்பன், கருங் காலி எ ன் று கத் தி ச ப் த ம் எழுப்பினர்.
கூச்சல், பயம், ஆக்ரோசம் என்று ராவு கரைந்து போயிற்று,
40
சூரியன் உதிக்காத அந்த அதி காலையில் தோட்டம் முழுவதும் பரபரப்பும், ஆத்திரமும் நிரம் பி வழிந்தது.
இரவு தலைவரின் போஸ்டர் கிழிக்கப்பட்டிருந்தன தலைவரின் போஸ்டர் முக த் தி ல் சாணி 'நமசிவாயமே அடுத்த மலையக தலைவன் என்ற வெள்ளை பெயி ன்ட் வாசகம்
ராஜி எழுந்த போது அவனது வாசலில் ஒரு கோப்பி கத்தியும் பூவும், சட்டியும் இருந்தது ‘சாவு வாசலில்' என்று கிறுக்கி இருந் திதி
ராஜிக்கு ஆத்திரம் மு கடு உடைத்தது தன்னை வெட்டுவ தாய் அர்த்தப்படுத்திய கவ்வாத்து கத்தியை எடுத்தான்,
'காளிமுத்து சாவு ஒனக்கு தாண்டா நாயே ஏழு எழுத்து பச்சை தூசனம் மலைகளில் எதி ரொலித்தது.
‘எல்லா அந்த காளிமுத்து பயவுட்டு வேலதான்'
‘இந்த காளிமுத்து நேத்து மொலச்சவே நட்டா புட்டி நாயி அவே ராவு கூட்டம் போட்டு நம்மள்ள நாளு பேத்தயாவது வெட்டி புதைக்கிறதா சொல்லி இருக்கா’’
ஒருவன் பே சின ர ன்.
சுத்தமாய் பொய் நேற்று தண்ணி போட்டு கிட்டு அடுத்த தோட்ட த்து மடுவத்தில் சுயநெனவை இழ ந்து கெடந்தது பலருக்கு தெரிய ஞாயமில்லை.
கொந்த ளிப்பு

Page 23
'அவன சும்மா வி ட் டு ட கூடாதப்பா'
'உசுரோட புதச்சிடனும்: எச் சிநாய’’
‘நம்ம த ல வ ர மதிக்காம, மாட்டு புரோக்கருக்கா வாலாட்டூர இவனுகல சும்மா விடக்கூடாது அந்த உத்தமர் இல்லாட்டி இவ ணுக நடுதெருவுல நின்று. . . ’, பச்சையாய் ஒருவன் முடித்தான் கூட்டம் கொஞ்சம் அதிகரித் தது. எல்லோரது புஜங்களும் துடி த்தது. ஆக்ரோசம் முகடு உடைத் திது.
இன்னிக்கு வாசல்ல கத்தி நாளக்கி கழுத்தில கெளம்புங்கடா ஒரு கை பாத்திடலாம்' ராஜி தலைவரின் ஆக்ரோஷமான கட்ட ளையை தொடர்ந்து தொண்டர் கள் அணை உடைந்த வெள்ள
மாய், முஸ்டிகள் புடைக்க புறப்
பட்டனர்.
大 大 大
நடு நிசி
அந்த கருத்த ரோட்டில் அம் புலன்ஸ் தன் தலையில் சிவ ப் பு லைட்டை போட்டு கொண்டு அல றியபடி போய் கொண்டிருந்தது சந்தனம் றோட்டுக்கு ஓடினா ன். மனம் பதைத்தது “ராஜி தலவர்க்கும் காளிமுத்துக்கும் சண்டையாம்! ராஜி தலவர் க்கு தலையில வெட்டாம்' *ராஜீ தலவர் பொளக்க மாட்
L-IT fi LTL 1 FT ” ” 'தடுக்க போன*செவுனுக்கும் வெட் டாம். காளிமுத்துக்கு
ஒத்த கை இல்லப்பா! மூனு பேத்தையும் அம்புலன்ஸ் ஏத்தி கிட்டு போவுது. சந்தனத்திற்கு பூமி பத்தாய் நூறாய் உடை ந்தது அவன் இந்த விதைகளை எண்ணி மாரிவான மானான்.
大 大 大 ஒருவாரம் முடியவில்லை தினசரியில் அந்த செய்தி வெளியாகி இருந்தது *" கட்சி மோதலில் ராஜி தலை வர் என்பவர் மரணம்! அவரது நெருங்கிய நண்பர் செவுனு கவலை க்கிடம்! ஒரு கையை இழந்து காளி முத்து சிகிச்சை பெற்று வருகிறார்”* அதே தினசரியின் முன்பக்கச் செய்தி இப் படி இருந்தது, 'மலையகத்தின் பிரபல கட்சி பிளவு பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம்! இ ன் று கட்சித் தலைவர் மீண்டும் நமசிவாயத் திற்கு பதவி வழங்குகிறார்.
தலைவரும் நமசிவாயமும் சிரி த்தபடி இருக்கும் புகைப்படம் பத்திரிக்கையின் கால் பக்கத்தை நிறைந்திருத்தது.
எம். எச. எம். ஜவ்பர்
வி டி வு
சாதாரண மனிதர்களிடம்
இருந்து தான் ஒரு சகாப்த த்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது.
- கலைஞர் கருணாநிதி -
கொந்தளிப்பு
41

எம். வசந்தினி ஹெல்பொட.
ஃ கே: தொண்டர் நிறுவ
S L:
னங்களைப் பற்றி ‘எ மது மலையகம்’ குறிஞ் சிப் பரல்கள் போ ன் ற  ைவ நார் நாராகக் கிழித் து வருவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ஒரு கால கட்டத்தில் இவ்வாறுதான் தொழி ற்சங்கங்கள் தாக்குதலு க்கு ஆளாகின. அதன் பி ன் ன ர் புற் றீ ச ல் போல தோட்டத்தி ற்குப் பத்து தொழிற் சங்கங்கள் உருவெடுத் தன. அது போலதான் மக்களின் மடத்தனம் மழுங்க டி க் க ப் படு ம் வ  ைர தொண்டர்
கொந்தளிப்பு
TSGSGSGSSSMSSSLSSSLSLSLSLSLSLSLSLSLY
சுவடுகள் Herslebs Gate 43,
0578 OSLO NORWAY.
நிறுவனங்களும் எத்த னை புகார் எழுந்தா லும் பல்கிப் பெருகத் தான் போகின்றன.
எம். ராமனாதன், அட்டபாகை
ძზ Gშჟნ: அதிகாரிகளின் கடை
க்கண் பார்வை உள் ளவர்களுக்கு மட்டும் தான் அதிபர் பதவி, ஆலோசகர் பதவி, வசதியான இடமாற் ற ம் , குவார்டஸ் வ ச தி , டிப்ளமோ கிளா ஸ் செல்லும் வசதி போன்றவை கிடைக்குமா?
ப; ‘அதிகாரி வீ ட் டு க்
கோழி முட்டை அடி மை வீட்டு அம்மிக் கல் லையும் உடைக்கும்’’ எ ன் ப  ைத நீங்கள் கே ள் வி ப் பட்டதில் லையா? புற்று நோய் போல இதுவும் பரிகா ரம் காண முடியாத சமாச்சாரம்தான்.
4品

Page 24
ராஜேந்திரன், கந்தப்பளை
கே: 83 ஜ"லை போல மீண்டும் ஒரு இனக் வரம் தோன்ற இட (LpGðoT LIT?
இ ப; 58, 77, 81, 83 என்ற
கா ல அவகாசத்தில் இ ன க் கொலைகள் மு ன் ன ர் நடைபெற் றன. ஆனால் இன்று தினமும் இனக்கொலை நாட்டில் நடந்த வண் ணமே இருக்கின்றன. சிங்களவர்களை மட் டும் கொண்ட இரா ணுவம். தமிழரை மட் டும் கொண்ட புலிகள் என எ தி  ெர தி ரா க நின்று யுத்தம் புரிகி றார்கள். மடிகிறார் க ள் வித் தி ய |ா ச ம் இதுதான்! மு ன் ன ர் தமிழர்மட்டுமே அகதி முகாம்களில் இருந்த நிலைமா இ ன் று சிங்களவர்களும் முஸ் லிம்களும் தமிழருடன் அகதி முகாம் வாசத் தை வேதனையுடன் அனுபவித்து வருகின் றனர்.
செல்வி, கலைச்செல்வி, புசல்லாவ
O
O
கே: தொண்டா-செல்லா
குத் து வெட் டி ல் யாருக்கு வெற்றி?
இ ப; கா மி னி திசாநாயக்
காவுக்கு!
கே. சுசந்தன், ஆல்கரனோயா,
o O
கே: இலங்கைக் கிரிக்கட்
அணி வெளிநாடு களில் வெற்றி பெற வேண்டுமா ன ர ல் செய்ய வேண்டியது என்ன?
இ ப: இலங்  ைக யி ல் தங்க
ளோடு சேர்ந்து விளை யாடும் தங்கள் 'அம் பயர்' களில் இருவரை கூட வே அழைத்துச் செல்ல வே ண் டு ம் . இலங்கை அணிக்கு மட் டும் 'எல்பிடபள்யு'
வ ழ ங் க க் கூ டா து என ஐசிசி யிடம் அழுது அனுமதி பெற வேண்டும். இப் படிச் செய்தால் ஒரளவு இன் னிங்ஸ் தோல்விகளை யாவது தவிர்க்கலாம்.
கொந்தளிப்பு
44
 

பி. சுதாகரன், அக்கரபத்தனை.
ஃ கே. தற்போதைய தமிழ்த்
திரைப்பட வளர்ச்சி பற்றிய உங்கள் கரு த்து என்ன?
ப; அவனவன் தன் ஜாதி
களை பெருமைப்படுத் திப் புகழ்பாடுவதிலே யே காலந்தள்ளுவதை தொழிலாக்கி அ  ைல கிறா ன் க ள். ஒருத் தன் தான் தே வர் மகன்' என்றால் அடுத் தவன் தான் 'சின்னக் கவுண்டர்’ என்கிறான். பாட்டெழுதுற ப ய ல் களும் மு க் கு ல ப் பெருமை பற்றி தம் பட்டம் அடிக்கிறான் கள். தன்மானத்தை அடகுவைத்து விட்ட ரசிக ர் க ஞ ம் ஜாதி வெறியர்களைக் கோவி ல்கட்டி கும்பிடுகிறார் கள் . இப்படிப்பட்ட வ ள ர் ச் சி தே  ைவ தானா?
எஸ். கனகவல்லி, பொகவந்தலாவ
ஃ கே: தமிழ்நாட்டில் அ றி
ஞர் அண்ணா நினைவு நாள் அன்று ‘திமுக’ *அதிமுக' 'எம்ஜிஆர்
அதிமுக’ ‘கோபால் சாமி திமுக' என பல பிரிவுகளாகச் சென்று அ ண் ண T F LD தியில் அஞ்சலி செலு த்தினார்களே! அண் ணாவை அவமதிக்கும் செ ய ல |ா க இது இல்லையா?
ப; இல்லை. தனது பல்
கலைக் கழகத்தில் பயி ன்றவர்கள் எல்லோ ருமே த லை வர் க ள் ஆகும் தகுதி உடைய வர்களாக இருப்பது கண்டு அவர் பூரிப்பே அ  ைட வார். தமிழ் நா ட் டி ல் காங் கி ரஸ் மீண்டும் த  ைல தூக்காமலும் பாரதீய ஜனதா கட்சி, ஜனா த ள ம்; கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் செல் வாக்கை நிலை நாட் டாமலும் இருக்க இப் படி திமுக பல பிரிவு களாக இருப்பது அண் ணாவுக்கு பெருமை தான். காந்தி நினைவு நாளை இன்று எத்த னை பேர் இப் படி போ ட் டி போட்டுக் கொண்டு கொண்டாடு கிறார்கள்?
கொந்தளிப்பு
45

Page 25
சி. சிவச்செல்வி, மஸ்கெலியா. பற்றி அவர்கள் அலட் டிக் கொள்வதில்லை. தொழிலாளர்களின்
சந்தா பலருக்கு வெற் றியிலும் தோ ல்வி யிலும் கைகொடுத்து உதவுவதால் அரசியல் அவர்களுக்கெல்லாம்
ஃ கே: எதிர்வரும் தேர்தலி லாவது மலையகத் தில் எதிரணிக் கூட்டு ஏ ற் படும் எ ன் று நினைக்கிறீர்களா?
ப; தேர்தலுக்குத் தேதி
அறிவித்து நியமனப் பத்திரம் தாக்கல் செய் யும் கடைசி தி ன த் தன்று தங்கள் கும்ப க ர் ண த் தூக்கத்தில் இருந்து விழித்தெழும் எதிரணியின் பழக்கம் இம்முறையும் மாறப் போவதில்லை. எ தி ர ணியில் உள்ள பிரமு கர்களுக்கு வெவ்வேறு தொழில்கள் உள் ள தால் வெற்றி தோல்வி
ஒரு பொழுதுபோக்கு! இ. தொ. கா. வி ல் நடக்கும் உள்வீட்டுப் பிரச்சினை தீர வேண் டும். என்பதில் போட்டி போட்டுக் கொண் டு பிரார்த்தனையில் ஈடு படுவதுதான் தேர்தலை விட இவர்களுக்கு இப் போது முக்கிய பிரச் சினை! கூட்டு பற்றி நினைக்க இவர்களுக்கு நேரமேது?
கே' குணசீலன், பொகவந்தலாவ,
ஃ வெளிச்சம் வெளியே'இல்லை’ நாடகத்தை அட்டனில்
போட்டவர்களின் துணிச்சல் பற்றி...?
* கே. இவ்வாண்டு ‘சமுக நாடகத்தையே கல்வி அமை ச்சு எடுத்து விட்டது. அதைத் தட்டிக் கேட்பார் களா அந்த சட்டத் தரணிகள்...? கொழும்பிலே ந  ைட பெற்ற பரிசளி ப் பு விழ 1ா வின் போது த ங் க ப் பதக்கம் வழங்கப்படாமல் அவமதி க்கப்பட்டபோது சட்ட ந ட வ டி க்  ைக மேற் கொள்ள முயற்சி ஏதும் செய்தார்களா? . . . . செய்திருந்தால் பாராட்டலாம்.
கொந்தளிப்பு 46

தொண்டர் நிறுவனங்கள் மீது
தொடர் தாக்குதல் ஏன்?
அண்மைக்காலமாக மலையகத்தில் செயல்படும் தொண்டர் நிறுவனங்கள் பத்திரிகைகளில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றன குறிப்பாக வீரகேசரியின் குறிஞ்சிப் பரல், நமது மலையகம் ஆகியவை இவ்வாறான விமர்சனங்களுக்கு இடமளித்து வருகின்றன.
ஒரு காலத்தில் மலையகத்தின் தொழிற்சங்கங்களின் மீது இவ்வாறான தாக்குதல்கள் மிகவும் மும்முரமாக இருந்தன. ஆனால் ஒன் றாக இருந்தவை பல்கிப் பெருகினவேயன்றி ஊழல்களும் மோசடிகளும் இன்றுவரை இல்லாமல் செய்யப்படவில்லை.
மலையக மக்களைப் பொறுத்த அளவில் தொழிற் சங்கங் கள், அவர்களை ஒற்றுமைப்படுத்தி அணிதிரட்டுவதில் வெற்றி பெற்றுள் ளன. பொதுப் பிரச்சினை என்றால் தொழிலாளர்கள் சங்க பேதமின்றி ஒன்று சேர்ந்து விடுவதைக் காண்கிறோம். போராட்டங்கள் வேலைநிறு த்தங்கள் போன்ற நடவடிக்கைகளின் போது தொழிற் சங்க அமைப்பே மலையக மக்களை அணி திரட்டும் ஒரு சக்தியாக இன்னும் திகழ்கிறது, வேறு எந்த ஒரு சக்தியும் மலையக ம க் க ளி ன் பாதுகாப்பை - உரிமை களை முன்னெடுத்துச் செல்ல இல்லை எனபதே உண்மையாகும்.
இவ்வாறே அரச சார்பற்ற நிறுவனங்களும் மலையக மக்க ளின் அபிவிருத்தியில் பெரும் பங் கா ற் றி வருவதை மறுப்பதற்கில்லை. எழுபதுகளில் ஏற்பட்ட பஞ்சம் அதைத் தொடர்ந்த இனக்கலவரங்களின் போது மக்களின் உதவிக்கு வந்தவைகளே இந்த அரசுசார்பற்ற நிறுவன ங்கள் ஆகும்.
மலையகக் கல்வி அபிவிருத்தியில் பாடசாலைக் கட்டிடங்கள்,. ஆசிரியர் பயிற்சி, தளபாடங்கள் போன்ற பல்வேறு தேவைகளை கோடி க்கணக்கான ரூபாய் செலவில் வழங்கி வரும் சீடா நிறுவனமும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனம்தான். சுவிடிஸ் அரசாங்கம் இத்தகைய உதவிகளை வழங்க தொண்டர் நிறுவனங்களின் பல்வேறு நடவடிக்கை கள் கோரிக்கைகளே காரணம் என்பதை மறுக்க முடி யாது. பத்தனை கல்விக் கல்லூரியோடு மேலும் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஜிடி இசட் (GDZ) நிறுவனமும் அரசு சார்பற்ற ஒரு நிறுவனமே!
கொந்தளிப்பு 47

Page 26
அரசாங்கம் வழங்கும் உதவிகள் சலுகைகளை எவ்வாறு * J TuÉ) வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்து நிறுத்துமாப்போல இடைத் தரகர் கள் பல ர் கொள்ளையடித்து கொழுக்கிறார்களோ அதுபோலவே சில தொண்டர் நிறுவனங்களிலும் ஊழல்களும் மோசடிகளும் இடம் பெறலாம் என்பதை மறுப்பதற்கில்லை, கேட்டால் ‘தேன் எடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ போன்ற பொன் மொழிகளை பலர் உதிர்க்கத் தான் செய்வார்கள்.
ஆனால் ஒட்டு மொத்தமாக தொண்டர் நிறுவனங்களை சகட்டு மேனிக்கு காலை வாரும்போது புனிதமாக சமூகப் பணியாற்று வோரும் சமுகத்தில் கேலிப் பொருளாகி விடும் நிலைமை ஏற்பட்டு விடு கிறது.
இன்ன நிறுவனத்தில் இன்ன விசயத்தில் இவ்வாறு மோசடி இடம் பெற்றுள்ளது என பத்திரிகைகள் சுட்டிக் காட்டி எழுத வேண்டும். (குறிஞ்சப் பரல், பூஞரீ சண்முகநாதன், எமது மலையக ஆசிரியர் இதைக் கவனிக்க வேண்டும்.) பொதுவான முறையில் சகலரையும் திட்டுவதால் பத்திரிகைச் செய்திக்கு அழுத்தம் இல்லாமல் போய்விடும். ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆர் செய்த ஊழல்களைப் பட்டியல் போட்டுக் காண் பித்தும் கூட நடவடிக்கை எடுக்கப் பட்டதா? ஊழல் செய்து சொத்து சேர் ப்பவனே அரசியல்வாதி என்ற நிலைமை இன்று எல்லா நாடுகளிலும் ஏற் பட்டு விட்டது.
பிலிப்பைன்ஸில் இவ்வாறுதான் மார்க்கோசும் அவர் மனை வியும் இனி இல்லை என்ற வகையில் மக்கள் பணத்தை வாரிச் சுருட்டி தங்கள் வாழ்வை உயர்த்திக் கொண்டனர். இறுதியில் வெகுண்டெழுந்த மக்களின் கோபத்தால் நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை மார்க் கோசுக்கு ஏற்பட்டது. இறந்தபின் பிணத்தைக் கூட நாட்டுக்கு எடுத்து வர முடியாத நிலை!
இவை எல்லாம் பொதுப்பணத்தை சூறையாடும் தொண்டர் நிறுவன அமைப்பாளர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். மக்களுக் குப் பயப்படாவிட்டாலும் இறைவனுக்காவது அஞ்ச வேண்டும். தூய் மையானவர்கள் விமர்சனத்திற்கும் தாக்குதல்களுக்கும் என்றுமே பயம் கொள்வதில்லை!
- மு. நேசமணி -
48 கொந்தளிப்பு

ஒரே பார்வையில் ரஷ்யாவின்
s 93 தேர்தல்
-மோகன் சுப்ரமணியம்
1917 ஆம் ஆண்டு அக்டோபரில் சோவியத் தேசத்தில் ஏற்பட்ட மாபெரும் பாட்டாளி வர்க்க புரட்சியின் பின் 73 ஆண்டுகள் சோவியத் தேசத்தின் சோசலிச பொருளாதார அமைப்பு முறை நடை முறையில் இருந்தது. இப் புரட்சி உலக பாட்டாளி வர்க்கத்துக்கு நம்பிக்கையூட்டியது மட்டுமல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தது. அதேவேளை உலகக் கம்யூனி ஸ்ட் இயக்கத்துக்கு ஆதரவு நல்கி அனுசரணையாகவும் இருந்து தன்னா லான சகல உதவிகளையும் செய்து வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத் துக்கு சமபலத்துடன் சவால்விட்டு 15 குடியரசுகள் ஒரு கு  ைடயி ன் rடுங்கொடியின்) கீழ் இருந்தன. இது உலக பொலிஸ்காரத்தனம் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தமையை நாம் மறுப்பதற்கில்லை.
1985 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பொதுச் செயலாளராகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற் றுக் கொண்ட மிகயில் கோர்பசேவ் 'பெரெஸ்ரொயிக்கா’’ மறுசீரமைப்பு பொருளாதாரக் கொள்கையை அறிமுகப் படுத்தினார். 85ஆம் ஆண்டு முதல் பெரெஸ்ரொயிக்காவும் கிலாஸ் நோஸ் வெளிப்படை என்ற தத்துவ மும் அந்நாட்டு இளம் சமூகத்துக்கு கட்டவிழ்த்து விடப்பட்ட சுதந்திர மாக மாறியது. இதன் வளர்ச்சி போ க் கும் அமெரிக்காவின் (சிஐஏ) உளவுப் பிரிவு வேகமாக செயற்பட்டதன் காரணமாகவும் சோவியத் யூனியனின் ( கே.ஜி.பி. ) உ ள வுப் பி ரி வி ன் அசமந்தப் போக்கும் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சரிந்து சின்னாபின்னமாகி குடிய ரசுகள் தனிநாடுகளாக மாறின. (அதன்பின் பல இடங்களில் இன்னும் சகோதர இன மக்கள் மோதல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின் றன.)
சோவியத் யூனியனின் மிகப் பெரிய குடியரசான ரஷ்யாவின் மித வாத ஜனாதிபதி போரிஸ் எல்சின் பிரிந்த ரஷ்யாவின் ஜனாதிபதியானார்.
இவர் பாராளுமன்றத்தைக் கலைத்தபின் அதனை ஏற்றுக் கொள் ளாத முற்போக்குவாதிகள் பாராளுமன்றத்திற்குள்ளேயே சத்தியாக்கிரகம் இருந்தனர். இவர்களின் போ ரா ட் ட த்  ைத எல்சின் அரசாங்கம் இராணுவத்தை ஏவி பாராளுமன்றத்தை த க ர் த் து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அடக்கி ஒடுக்கியது.
கொந்தளிப்பு 49

Page 27
இந்த பின்னணியில்தான் 1993 டிசம்பர் 12 ஆம் திகதி ரஷ்யாவின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அதன் முழு பெறுபேறு கள் கீழே தரப்படுகின்றன. இப் பொதுத் தேர்தலில் 450 பாராளுமன்ற ஆசனங்களுக்கும் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
கட்சியின் பெயர் பெற்ற ஆசனங்கள்
1. ரஷ்யாவின் மாற்றுக்கட்சி 94 2. லிபரல் ஜனநாயகக் கட்சி 78
3. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி , 64
4. விவசாயிகள் கட்சி 1− 55
5. எல்சினின் மறு சீரமைப்புக்கான கட்சி 28 6. ரஷ்யாவின் பெண்கள் கட்சி 29 7. ஐக்கியத்துக்காகவும் சமாதானத்துக்குமான கட்சி 22 8. ரஷ்ய ஜனநாயகக் கட்சி 18 9. சிலிக யூனியன் 18
10. சுயேட்சைகள் 44
450
கட்சிகளின் கொள்கைகளுக்கமைய மூன்று குழுக்களாகக் கட்சிகள் கூட்டமைத்துக் கொண்டன. (தொடர்ச்சி அடுத்த இதழில் )
அதிகமாகத் திறக்காதீர்கள்
நாக்கையும், பணப்பையையும் அதிகமாகத் திறக்காதீர்கள். அப்போது தான் உங்கள் மதிப்பும் செல்வமும் வளரும். f
- பாரசீகப் பழமொழி
கொந்தளிப்பு 50


Page 28
Registerd as a News Paper in
(3
6. ن: تا:.' '
டம் இருந்து எதிர்பார் டயன் விளைக்கும் துறைக
L விக்துே பிரசுரமாகாதவை
படைப் பின் பிரதியை  ை(
(iT
கொந்தரிப்பின் வளர்ச்சிபில் வ பங்களிக்க வேண்டுகிறோம் கொ, அபிப்பிராயங்கஒைர 7 மக்கு எழுது
9H :א י 允 கொந்த6ரிப்பை நீங் 1) அறிமுகம் செய்யுங்கள். கொ
ԱՔ
க்திழைப்பு பெரிதும் 2.5
கொந்தளிப்புடனான பின்வரும் முகவரியை
ആയ്രൽ : &&പ്പ
இப் பத்திரிகை கி. தொ. 3.
அச்சகத்தில் அச்சிட்
 
 
 
 
 

Shri Lanka. 6ửì65)6) ệ5LIT 10.00
-
ப் பேசுவோம்
w ሥጎ 3° துெ LsÔ fī f} FD 5 GE) E O fully
ரதிகளைத் தவறாமல் பெற்றுக் ந
பிடத் தரமான படைப்புகளை உங் க்கிறோம். ஆக்கங்கள் சமூகத்திற்குப் 5ள் சார்ந்ததாய் இருப்பது விரும்பத் திருப்பி அனுப்ப்டடமாட்டா து
வத்துக் கொள் 27 ஆம் ,
தா சகர்கள் விமர்சனரீதியாகப் க்களிப்பு பற்றிய உங்களது ជំ៩ឆ្នាំ L
ள்
ாசியுங்கள் உங்கள் நண்ப ர்களுக்கும்
க்களிப்பைப் பரவலாக் உங்களது ம்.
சக ல தொடர்புகளுக்கும்
பயன்படுத்தவும்.
KONTHA LI PPU 88-2 Dunbar Road, HA TTON .
Sh r i Lanka T. P. 05 12-33.
-
செயலாளருக்காக அட்டன் சமன் டு வெளியிடப்பட்டது.